கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலண்டனில் 7 வாரம்

Page 1
ζλ لے 917.2 1
/ துர்க்காதுரந்தர்செல்வி
 
 

jötÖIDI giÚUrégig

Page 2


Page 3

சிவமயம்
இலண்டனில் ஏழு வாரம் (பிரயாண நூல்)
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்விப்பழை
அச்சுப் பதிப்பு மஹாத்மா அச்சகம் sJgmða
1988

Page 4

PREFACE
Champion Reformer of Hindus was the description given by Sir Ponnampalam Ramanathan of Sri La Sri Arumuga Navalar when Navalar Peruman passed away.
Selvi Thangammah Appakutty who is now sixty years of age follows in the footsteps of Navailar and both of them have common qualities with Saint Thirunavukkarasar. The similarity is not merely in regard to their renunciation and missionary zea! but also in their contribution to the common good of humanity.
- Using the temple as the medium of Social reform; - Chanelling temple resources for wider educational
social and charitable purpose; - Reprinting of religious texts; - Directing Social work; - Giving discourses for spirituai u plift ment are some of the means adopted by Sri La Sri Navalar and Thangamma Appakutty.
In 1879 Sir Pon, Ramanathan made a speech in the State Council while seconding a motion introduced by Hon. Mr. J. P. Obeyasekara regarding the publication of books in the vernacular. Ramanathan quoted a passage from the o Platonic Dialogues ''' where Meno asked Sokrates whether virtue was teachable. The answer was, it was not, and Sokrates explained the reason by saying that morality as then understood consisted merely of a collection of correct opinions

Page 5
iv
and that until those opinions were systematised and reduced to the precision and exactness of a Science they could not be taught effectively. Socrates, therefore, asked Meno to imitate good men as best as he might.
We the Saiva devotees imitate the life of Saiva Saints. In this context the reprinting of the prose work of Navalar Periya Purana Vasanam, and the Saiva Bhodam of Saiva Periyar Sivapathasundaram are significant as they help the reader to lead a good life. An ethical moral life is one of the primary means of social elevation and integration leading to the formation of a healthy homogenous society based on accepted norms.
Selvi Thangammah Appakutty’s contribution through. discourses covers a wider area as compared to that of Navalar, - from Colombo to Malaysiya and London.
Her contribution during the seven weeks stay in London has been briefly documented in this publication. It is a Diary, a Travel Literature while at the same time it is a book on the Hindu Temples of London, and the life of the London Hindus. This four dimensional publication brings within about sixty pages and fifteen pictures very rich information about the
London Wimbledon Pilliyar Temple High Gate Murugan Temple East London Murugan Temple
and also about the
Gnananandam Samayan Sai Manran
with the dates and topics covered in the discourses.

Vy
An ideal home is also a temple. During her stay she has reinforced this principle by conducting prayer tmeetings in the homes of devotees and one could imagine the benefit of this radiation to the home and then passing on to the children, specially in an alien
cultural setting.
Her modernity and wide interests are revealed by her visit to the Cambridge University.
She is a model for most of us to emulate as advised by Socrates.
This book is a very valuable contribution rich in its contents and refreshing in its presentation.
University of Jaffna, V. N. SIVARAJAH Sri Lanka. (Registrar) 01-07-88.

Page 6
FOREWORD
The consecration of the consoling Deity. cherishingly called ' ' Muruga' in the county of Middlesex in the lovely land of the Anglo-Saxons, at the specially selected site in High Gate, was an epochmaking event in the history of the Saiva way of worldly life.
Such a significant happening could not have been complete in its glory without a scholarly exponent of the spiritual excellence of Saivaism addressing the devotees on the import of the ceremon called Consecration.
The Trustees of the High Gate Murugan Temple, could not have, for this assignment, thought of a more competent student of Saiva Religion than Saiva Siddhantha Scholar Pandit Thangammah Appakutty, President of the Committee of Management of the revered . Thurkkai Devi Temple, in the focus point of Eelam’s spiritual re-awakening, THU RKKAPURA M.
Responding to the endearing call of the Trustees of High Gate, Lord Murugan Temple, Siva Thamil Chelvi Thangammah Appakutty, braved the intermittent inconvenience of an unsettled daily routine in her native land and arrived in the world-famous metropolis of the Britishers, a race that has not yet been rocked by the fluctuating revolutionary political ideologies that deny religion its due place, and defy its appropriateness in the affairs of human beings.

vii
Siva Than il Chelvi whose renown as a speaker of rare acumen had already reached the four corners of England, commenced her series of talks on a convivial note capturing the imagination of packed audiences by her silver-tongued oratory. Rhythm is the key - note of speeches in sweet Tamil. This then is the enlivening aspect of Pandit Thangammah's perorations. The bustled audiences that assembled in the various lecture - halls in Great Britain to list in to the learned Thurkka Thuranthiri throughout the month long lectures, had been kept spell-bound by a torrential flow of Tamil phrases, idioms, metaphors and hyperbaton. Lord Murugan of High Gate had opened the flood - gates of fluent Senthamil flowing from the lyric - laced lips of literator Thangammah Appakutty.
These lofty thoughts, these inspiring ideas and the ideals behind them should necessarily be preserved for posterity to ponder over.
Hence the publication of the London Talks of Pandit Thangammah Appakutty. The discourses numbering twenty-seven well form the chapters of a treatise on Saiva Siddantha. This publication is, therefore, a ready reckoner for students of Saiva Religion a reader's digest for those, interested in literary discourses.
To me, who has been zealously watching the widening growth of the intellectual capacity of Thurkka Thuranthari, it is exceedingly refreshing that I should have been called upon to introduce this valuable publication of rich information and profound learning to the reading public with a foreword.

Page 7
viii
May the Torch of Thurkka Thuranthari continue to illumine the Tamil speaking people of this wide world and help religious awareness become a way of life.
R. N. SVAPIRAGASAM Editor. Hindu Organ. Vice President
Managing Comunittee July 1988. Thurkkai Thevasthanan:

6. 87Gutouth
ஒரு வார்த்தை
திருச்சிற்றம்பலம் வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின் பார்த்தற்குப் பாசு பதம்அருள் செய்தவன் பத்தருள்ளீர் கோத்தன்று முப்புரம் தீவளைத் தான்தில்லை பம்பலத்துக் கூத்தனுக் காட்பட் டிருப்பதன் ருேநந்தங் கூழைமையே.
திருச்சிற்றம்பலம்
வாய்த்த எம் பிறவியை வாய்ப்புடைத்தாக்கி, பெரும் பேறு எய்துதலே வேண்டற்பாலது என அப்பர் அடிகள் அறுதியிட்டு ஆணையிடுகிறர்கள். அறிவியலை நாம் மூளையில் திணிப்பதால் மட்டும் பேராக்கத்தைப் பெற்றுவிட முடி யாது. அந்த அறிவை இதயத்துள் இறக்கி வாழ்க்கையின் உள்ளீடான அன்பையும் கருணையையும் பெற்று உய்வதணுலே தான் பிறவியின் பயனை எய்துகின்றவராவோம். வாழ்க்கை யின் உள்ளீடான அன்பையும் கருணையையும் மாசறு காட் சியர் அறிந்தும் உணர்ந்தும் குறியீட்டுக் குறிப்புகளாக வும், வெளிப்படையாகவும் தந்திருக்கிருர்கள், ஆலயக் கிரியைகள், இல்லத்துச் சடங்குகள் என்பவற்றில் இத்தகைய குறியீட்டுக் குறிப்புகள் தொனிக்கின்றன. திருமுறைகள், புராண இதிகாசங்கள், ஆழ்வார் பாடல்கள், சமயப் பிர

Page 8
سے 2 سست
சங்கங்கள் என்பவற்றில் வெளிப்படையாக எமது நல்லாக் கத்துக்கு உதவியிருக்கிருர்கள். அப்பெரியோர்கள் இனம், மதம், மொழி வர்த்தமானங்கள் என்பவற்றில் வேறுபட் டிருந்தாலும் அன்பிலும் கருணையிலும் வேறுபடுவதில்லை. புண்ணிய யாத்திரைகளினலும் சொற்பொழிவுப் பிரயா ணங்களினலும் இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள முடியும். *ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற உண்மையும் இதனுல் புலனுகிறது. -
நாமிருக்கும் நாடு ஒரு புனித பூமி. எத்தனையோ ஞானிகளாலும், சான்றேர்களாலும் பரிபாலிக்கப்பட்டு வந்த ஒரு ஞானப்பூங்கா. இந்தப் பூங்காவில் மணம் வீசி வாழ்ந்த எம்மவர்கள் எங்கு சென்ருலும் அங்கு ஒரு ஞானப்பூங்காவை அமைத்துவிடும் வல்லமை பெற்றவர் கள். அதனுல் அவர்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒருமைப்பாட்டில் ஒன்றிவிடுகிருர்கள். அங்கங்கெல் லாம் கோயில்களும், வழிபாட்டு நெறிகளும், அடியார் கூட்டமும் பெருகிநிற்பதை இன்று நாம் காணமுடிகிறது. காண்பது, நினைப்பது, செயலாற்றுவது அனைத்தும் நல்லவை யாக அங்கங்கு அமைகின்றன. சமயப் பணிகளுக்கும், சமயப் பிரசாரங்களுக்கும் மேலான மதிப்பை இன்று உலக நாடுகள் வழங்கி வருகின்றன. இம்மதிப்பைப் பெற்றவர் களின் அடியாளாகப் பணிபுரியும் பேறு எனக்குக் கிடைத் தமை துர்க்காதேவியின் திருவருளாலேயன்றி வேறு எந்தத் தகுதியினலுமன்று என்பதைப் பணிவோடு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சமயப் பிரசாரத்தின் மூலம் பல தடவைகளில் பயணம் செய்து பெற்ற அனுபவங்கள் காலத் துக்குக்காலம் நூலாக வெளிவந்துள்ளன. விஞ்ஞானப் பொலிவுடனும் நவநாகரிகப் பெருமையுடனும் விளங்கும் மேலைநாட்டுக்கும் சென்று இப்பணியை ஆற்றவேண்டும் என்று பலகாலம் விரும்பியதுண்டு. அவ்விருப்பத்தைத் துர்க்கை அம்பாளின் திருவருள் 1987ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறைவேற வைத்து இலண்டன் மாநகருக்குப்

--س۔ 3 حس~
பயணமாகும் வாய்ப்பினை அளித்தது. கீழ்நாட்டுக் கலா சாரத்துக்கும் மேல்நாட்டுக் கலாசாரத்துக்கும் மலையும் மடுவும்போன்ற வேறுபாடு உண்டு என்று பொதுவாகப் பேசிக்கொள்வார்கள். ஆனல் மெய்ப்பொருள் தரிசனம் கண்ட சுவாமி விவேகானந்தர், சத்திய தரிசனம் கண்ட மகாத்மா அடிகள், கலாநுட்பம் தெரிந்த கலாயோகி ஆனந் தக்குமாரசுவாமி என்பவர்களின் பொற்பாதம் வருடிய புண்ணிய பூமியாக இலண்டன் மாநகரம் என் அகக்கண் களில் காட்சியளித்தது. என்ருலும் புறக்கண்களில் அக் காட்சி எத்துணை அனுபவத்தைக் கொடுத்தது என்பதையும் அங்கு பெற்ற நல்லனுபவங்களையும் இச்சிறுநூல் வாயிலாக வடித்துத் தருவதில் பெருமை அடைகின்றேன்.
வணக்கம்
ரீ துர்க்காதேவி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

Page 9
பிரித்தானிய இந்துக்கோயில் அறநிலையக் குழுவினரின்
அழைப்பு
மனித ஆற்றல் வளமும், பொருளாதாரப் பெருக் கமும் ஒன்றுபட்டு மகோன்னத நிலையில் விளங்குகின்ற ஒரு நாடு பெரியபிரித்தானியா. ஆதவன் அஸ்தமிக்காத மாபெரும் சாம்ராச்சியமாக இருபதாம் நூற்ருண்டின் நடுப் பகுதிவரை இது விளங்கியது. இந்நாட்டின் தலைநகரமே இலண்டன் என்ற பெயருக்குரியது. உலகின் பல பாகங் களிலுமிருந்து உத்தியோகம் முதலிய பல்வேறு காரணங் களுக்காக மக்கள் அங்கு சென்று குடியேறியிருக்கிருர்கள். அப்படி அவர்கள் அங்கு வசித்தாலும் தங்கள் மதம், மொழி, பண்பாடு என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து வருவது பாராட்டத்தக்கது. இலங்கைத் தமிழர்கள், ஏனைய நாடுகளிலிருந்து குடியேறிய தமிழ்பேசும் மக்களோடு ஒன்று கூடி அமைத்துள்ள ஒரு சைவ நிறுவனமே 'பிரித்தானிய இந்துக்கோயில் அறநிலையக் குழு’ என்ற பெயரோடு விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் உயர்திரு. எஸ். சபாபதிப்பிள்ளை அவர்களே உரிய முறைப்படி அழைப்பு விடுத்து எனது இலண்டன் பிரயாணத்துக்கு ஆகவேண்டிய ஆவணங்களை அனுப்பியிருந்தார். கீழைத்தேச நாடுகளில் சமயச் சொற்பொழிவு ஆற்றி ஆற்றிப் பெற்ற அனுபவம்

- 5 -
எனக்கு மேலைநாட்டுச் சொற்பொழிவுப் பயணமும் இன்றி யமையாதது என்ற எண்ணத்தை ஊட்டியது. இதனுல் எனது பயணத்தைத் துர்க்காதேவியின் திருவருளை முன் வைத்து ஆரம்பித்தேன்.
நாளேடுகள்: ஒன்று
18-04-1987 புதன்கிழமை காலை ஐந்து மணிக்கு இங் கிருந்து கொழும்புக்குப் புறப்பட்டேன். நாட்டின் சூழ்நிலை காரணமாக அச்சம் ஏற்பட்டபொழுதும் அம்பாளின் அருளை முன்னிட்டுப் பிரயாணத்தை மேற்கொண்டமையினல் மிக அமைதியான முறையில் கொழும்பு சென்று இலண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள முடிந்தது. பிரித்தானிய தூதுவர் நிலையத்தில் விசா பெற்றுக்கொள் வதற்குச் சிறிது சுணக்கம் ஏற்பட்ட நேரத்திலும் அங்கு எமது சமயப் பணிகளுக்கு ஆவனவற்றை ஊக்குவித்துத் தரும் இந்து கலாசார அமைச்சினலும், சுங்க இலாகாவைக் சேர்ந்த சைவப்பெரியார் திரு. கா. க. சுப்பிரமணியம் அவர்களினுலும், சட்டத்தரணி திரு. எஸ். கே. பொன் னம்பலம் அவர்களினலும் சகல ஒத்துழைப்பையும் பெற்று ஒரு வாரத்துக்குள் அனைத்து ஒழுங்கையும் சீர்செய்ய முடிந் தது. 10-05-1987 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்குப் புறப் பட்டுச் சென்ருேம். அங்கு ஒருமணிநேரம் கழித்துப் பொதி கள் பரிசீலிக்கப்பட்டன. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்தபின்பு விமானப் பயணத்துக்குச் சிறந்த ஒரு வழி காட்டியாகவும், உதவியாளராகவும் பொறியியலாளர் திரு. விஜயகுமார் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் பதினைந்து ஆண்டுகள் இலண்டனில் பணிபுரிந்துவரும் ஒரு சிறந்த கிறீஸ்தவர். மிகவும் பண்பாடும் உதவிபுரியும் மனப்பாங்கும் கொண்டவர். அவருடைய உதவியால் விமானப் பயணத் தில் செலவழிக்கப்பட்ட பதினைந்துமணி நேரமும் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்தது. அன்று இரவு ஒன்பது

Page 10
حس۔ 6 سے
மணியளவில் புறப்பட்ட பிரிட்டிஷ் விமானம் பதினைந்து மணி நேரம் கழித்து இலண்டன் ஹீத்றுா விமான நிலையத் தைச் சென்றடையும் என்று முன்னமே அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் விமானமாக இருந்தும் பிரயாணிகளுக்குரிய உணவு ஒழுங்குகளை அவரவர் ஆசாரப்படியே பரிமாறும் முறைமையை மேற்கொண்டமை மிகவும் மகிழ்ச்சிக்குரியது. எமக்கெல்லாம் மிகச்சிறந்த முறையில் சைவ உணவுகளையே பரிமாறினர்கள். விமானப் பயணத்தில் முதல் நாலு மணி நேரம் கழிந்தவுடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்ருன * பாறேன்" என்ற நாட்டு விமான நிலையத்தில் தங்கி, எரி பொருள் எடுத்துத் தொடர்ந்து பிரயாணத்தை மேற் கொள்ளும் ஒழுங்கு இருந்தது. இன்று செல்வம் கொழிக் கும் செல்வ நாடுகளில் ஒன்றுஎன்று போற்றப்படும் இந் நாட்டின் வனப்பை இரவு நேரமாகையினுல் காணமுடிய வில்லை. என்ருலும் மின்னுெளி வெள்ளத்தில் அதனழகைக் கண்டனுபவிக்க முடிந்தது. தொடர்ந்து இலண்டன் நோக் கிப் பயணமானது விமானம். வெப்பம் மிகுந்த நாடுகளி லிருந்து குளிர் மிகுந்த நாடுகளுக்குச் செல்கின்றேம் என்ற உணர்வு ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண்கள் குளிர் தாங்கும் போர்வைகளை வழங்கினர். தெற்கு ஐரோப்பிய நாடுகளான துருக்கி, இத்தாலி ஆகியவற்றைக் கடந்து பிரான்ஸ் நாட்டினுாடாக ஆங்கிலேயக் கால்வாயை விமானம் அடைந்தபொழுது ஒரு அறிவித்தல் கிடைத்தது. அதாவது இன்னும் ஒருமணி நேரத்தில் இலண்டன் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பதாகும். அடுத்து இலங்கை நேரம் என் கைக்கடிகாரத்தில் முற்பகல் பதினெரு மணியாக இருக்கும்பொழுது இலண்டன் ஹீத் நூா விமானத்தளத்தில் நாம் பயணம் செய்த பிரிட்டிஷ் விமானம் இறங்கியது. இலங்கை நேரத்துக்கும் இலண்டன் நேரத்துக்குமிடையே ஐந்து மணி இருபது நிமிடம் வித்தியாசமாக இருக்கும் என்று அறிவித்தல் தந்தார்கள். அதற்கிணங்க எனது கைக் கடிகாரத்தைக் காலை ஐந்து மணி நாற்பது நிமிடமாக்கிக் கொண்டேன்.


Page 11
陶雪身L哥'à5恒T'”思uT昌シu』ga gQg』」シ **的au2(Surfurf 的역, 的. R事記a地理學的영역 3(Rufu''**a*****'-'**
 


Page 12

سس- 7 --
நாளேடுகள்: இரண்டு
கொழும்பிலிருந்து 10-05-1987 இரவு 9-00 மணியள வில் புறப்பட்ட எமது விமானம் 11-05-1987 திங்கள் காலை 5.40 க்கு (இலண்டன் நேரம்) ஹித்று விமானத்தளத்தில் வந்து இறங்கியது. இந்த விமானத்தளம் தனித்துவமான எல்லா வசதிகளையும் கொண்டு விளங்குகிறது. பார்ப்பதற்கே மலைப்பையும், வியப்பையும் தருகின்றது. ஒருநிமிடத்துக் கொருதரம் விமானங்கள் விண்ணில் ஏறுவதும் மண்ணில் இறங்குவதுமாக ஆச்சரியத்தை விளைவிக்கின்றது. எந்த விதமான ஆபத்துக்களுமின்றி நிகழும் இக்காட்சிகள் அங் குள்ள மக்களின் ஆற்றல் வளத்தை எடுத்துக்காட்டுகின்றன. பரந்த அளவில் விரிந்திருக்கின்ற இவ்விமானத்தளத்தில் நாம் இறங்கியதும் ஏறக்குறைய முன்னுாறு யார்வரை நடந்து சுங்கப்பகுதியை அடைந்தோம். ஆனல் இடை யிடையே தானியங்கிப் பாதைகளும் இருந்தன எனக்குத் துணையாக வந்த அன்பர் விஜயகுமாரைப் பின்தொடர்ந்து நான் சென்றதனுல் எனக்கு எவ்வித சிரமங்களும் ஏற்பட வில்லை.
சுங்கப் பகுதியில் அதிகாரிகளின் வினக் கணைகளுக்கு ஆளாகாமல் எனது கடவுச்சீட்டுப் பற்றிய விஞக்களை அதி காரிகள் வினவியபொழுது அவற்றுக்குரிய உத்தரங்களை அன்பர் விஜயகுமார் அவர்களே வழங்கினர், உடனே இரண்டுமாதகால விசா தரப்பட்டது. ? ? எவரால் எக்காரி யம் நிறைவேற முடியுமோ அவரால் அக்காரியத்தைப் பெற்றுக்கொள்ளுதலே ஏற்ற வழி' என்ற மறைமொழியை நினைவுகூரல் வேண்டும்.
அடுத்து, எனது பயணப் பொதிகளை உரிய இடத்தில் பெற்றுக்கொண்டு காரியாலயங்களுக்கு வெளியே சென்ற பொழுது எனக்கு அழைப்பு விடுத்த இலண்டன் உயர் வாசல் முருகன் ஆலய சமயப் பிரசாரப் பொறுப்பாளர் உயர்திரு. V. செல்லத்துரை அவர்களும், அவர்தம் பாரி

Page 13
ܚ 8 =ܗ
யாரும், இவர்களோடு பொதுப்பணி மன்றத்தினர்களும் இனிய முகத்துடன் புன்முறுவலோடு வரவேற்று என்னை மோட்டார் வண்டியில் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையிலும் இலண்டன் வரும்வரை எனக்கு உற்ற தோர் பெரும்துணையாக வந்த அன்பர் விஜயகுமாருக்கு மீண்டும் ஒருமுறை என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.
நான் ஏறிச்சென்ற கண்ணைக் கவரும் மோட்டார் வண்டியிற் புறப்பட்டு எழுபது மைல்வரை ஆட்டம் அசை வின்றிப் பிரயாணம் செய்தபொழுது இலண்டன் நெடுஞ் சாலைகளின் அழுத்தம், புனிதம், வாகனங்களின் பிரயாண ஒழுங்கு, வீதிகளின் பக்கங்களில் அமைந்த பூங்காவனங்கள், விண்முட்டிய அலுவலகக் கட்டிடங்கள், நெரிசலில்லாத போக்குவரத்து ஆகிய சிறப்புக்கள் எனது அனுபவத்துக்குப் புத்தொளியூட்டின.
நீண்ட வீதியில் சிலமணி நேரமே நாம் பிரயாணம் செய்து இல்வேட் என்ற பகுதியில் கிளேஹோல் (Clay Hall) என்னும் இடத்தை அடைந்து திரு. செல்லத்துரை என்பவரின் இல்லத்தில் சேர்ந்தோம்.
திரு. செல்லத்துரை என்பவர் தமது உத்தியோகத் துடன் உயர்வாசல் குமரன்கோயில் சமயப் பிரசாரப் பொறுப்பாளராகவும் பணியாற்றுகின்றர். சிறந்த சைவ சீலராக வாழும் நல்ல பண்புகள் பொருந்தியவர். நல் விருந்தோம்பும் நல்லியல்பு இவர் குடும்பத்தின் அழியரச் சொத்து என்றே கூறவேண்டும். சைவ போசனத்தையே தமது வழமையான உணவாக ஏற்கும் இந்தக் குடும்பத்தவ ரோடு தங்குவதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகவும் உவகைக்குரியது.
இந்த இடத்தில் நல்லதொரு செய்தியைக் கூறித்தான் ஆகவேண்டும். பாவமில்லாத, தீங்கு விளைவிக்காத நல்ல


Page 14

シ* シ * "圓上』 "TL電p Pren" *n 4*4白g屬*g me斗 シdg「」も gg』***re는國道덕T& T**a*
「劑*
:|-s.s.|-*,
! | || T--------
----|-----
Es!|- );

Page 15

س- .9 --
உணவு சைவ உணவு என்பதை உலகில் பல பாகங்களிலு முள்ள பெருமக்கள் பலர் சொல்வது மட்டுமன்றி வாழ்க்கை யிலும் கடைப்பிடிக்கிருர்கள். சைவ உணவு உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதோடு நல்ல ஆரோக் கியத்தையும் தருகிறது என்று வைத்தியர்களும், விஞ்ஞானி களும் ஒப்புக்கொண்டு அறிவுறுத்தல்களும் சொல்கிருர்கள். சகல ஆரோக்கியங்களையும் அளிப்பது சைவ உணவு என் பதை உணர்ந்து வாழ்க்கையில் அனுசரித்தல் வரவேற்கத் தக்கது.
நாளேடுகள்: மூன்று
பரபரப்பும், சுறுசுறுப்பும் உள்ள இலண்டன் போன்ற பெரிய நகரங்களில் மக்கள் தேனீக்கள்போல இடையருது உழைக்கிருர்கள். அவர்கள் உள்ளத்து அமைதியை இல் லங்களிலும் ஆலயங்களிலும் பொழுதுபோக்கு இடங்களி லும் பெற்றுக்கொள்கிறர்கள். ஒய்வு நேரங்கள் இவர்களது உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்துகின்றன. அடுத் தவரின் அமைதிக்கு இன்டயூறு இல்லாமல் தாமும் அமைதி யாக வாழும் இனிய பண்பை இவர்களிடம் காணக் கூடியதாக இருந்தது.
நான் தங்கியிருந்த பெரியார் செல்லத்துரை அவர்க ளின் இல்லமும் இதற்கு விலக்கல்ல. 12-05-1987 செவ்வாய்க் கிழமை இவரது இல்லத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.
சர்வ ழங்கள மாங்கல்யே சிவே சர்வார்ந்த சாதிகே சரண்யே த்ரியம்பகி கெளரி நாராயணி நமோஸ்துதே.
என்ற தோத்திரத்தை ஒன்பது தரம் கூறினுேம். தொடர்ந்து கூட்டுவழிபாடு செய்தோம். துர்க்காதேவியின் மெய்யடி யார்கள் பலர் இன்று என்னைச் சந்தித்தனர். அன்பில் மலர்ந்த அவர்களது இனிய தோற்றம் என்னை மிகவும் கவர்ந்தது. அம்பிகையின் அருள் எங்கும் பிரவாஹிப்பதை எண்ணி எண்ணி இறும்பூதெய்தினேன்.
2

Page 16
- 10 -
எனது பகலுணவு சைவ அன்பர், டாக்டர் நேமிநாதன் அவர்களது இல்லத்தில் வழங்கப்பட்டது. இவர் உரும்பராய் வீரசிங்கம் ஆசிரியர் அவர்களின் தவப்புதல்வன்; வைத் திய கலாநிதிப் பட்டம்பெற்று அத்துறையில் பெரும்பணி ஆற்றிவருகிருர், தமிழ்க்கலை ஆக்கத்திலும், ஈழத் தமிழரின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர். அற்ருர் அழிபசி தீர்த்தலைக் குறிக்கோளாகக் கொண்ட இவரின் ஆக்கபூர்வ மான உறுதியிஞல் இந்தியாவில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கான நிதிகள் அனுப்பப்படுகின்றன. இவர்கள் குடும்பம் அம்பாளிடத்தில் நிறைந்த பக்திகொண்ட குடும்பமாகும்.
'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்" என்ற மறைமொழியின் தெளிபொருளை இவ ரின் இல்லத்தில் கண்டு பெருமகிழ்வுற்றேன்.
நாளேடுகள்: நான்கு
/ எவர் எக்காரியத்தைச் செய்தாலும் அக்காரியம் விக் கினமின்றி இனிது நிறைவேற விநாயக வணக்கம் செய்வது இந்து மக்களின் வழக்கம். எனது முதற் சொற்பொழிவும் விநாயகப்பெருமான் சந்நிதியிலேயே ஆரம்பமாகியது.
13-05-1987 சித்திரா பெளர்ணமியன்று இலண்டன் பிம்பிள்டன் பிள்ளையார் கோவிலில் ஒழுங்கு செய்யப்பட்ட சமயக் கூட்டத்தில் "விநாயகனே சரணம்' என்ற பொரு ளில் எனது சொற்பொழிவு நிகழ்ந்தது.
ஆர்வம் மிகுந்த பல அன்பர்கள் திரண்டிருந்து சலன மின்றிக் கேட்டுப் பெரும்பயன் எய்தினர். தமது சரணுர விந்தத்தைத் தஞ்சமென்று அடையும் அடியார்களை அஞ் சல் எனக் காத்தருள் செய்பவன் ஆண்டவன். இத்தலை யங்கத்தின் தலைமைப் பொருளாக எமது பாவ புண்ணியக் கணக்குகளின்படி பிறவியும் அனுபவமும் வந்து சேரும்


Page 17

paegog siste gol uero praeuro soñ nego so dio si suos * n層員 &num真*唱g間世傷言。隱*占園』占白銅 .unereuw편(T후, rmi&#후에 g&ggmu軍go Jurmu원(高5T 후 TA: 5TTT&T

Page 18

என்ற விளக்கம் அளிக்கப்பட்டடு சித்திரபுத்திரனர் கதை யும் இடம்பெற்றது.
சைவப்பெரியார் ஏ. ரி. இரத்தினசிங்கம் அவர்களே கோயில் தர்மகர்த்தா, அல்வாய் முத்துமாரி அம்மன் கோயில் அறங்காவலர்களில் ஒருவர். நல்ல பண்பாளர். பிம்பிள்டன் பிள்ளையார் கோயில் இவர் தலைமையில் செவ்வனே பரிபாலிக்கப்படுகிறது. மூலமூர்த்தி பிள்ளை யார். இங்கே துர்க்கைக்குப் பிரத்தியேக சந்நிதி உண்டு. சிவசுப்பிரமணியர், நடராசர், நவக்கிரகங்கள் ஆகிய அனைத்து மூர்த்திகளையும் அமைத்துள்ளார். ஒரு கிறீஸ்தவ தேவாலயக் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் பக்கத்தே பூரீ சத்தியசாயிபாபா மண்டபம் உண்டு. அங்கே மாலை வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழன்மகளிலும் விசேட பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. ஞாயிறு நண்பகல் அன்னதானமும், வெள்ளி மாலை பிரசாதமும் அடியார் களுக்கு ஒழுங்காக வழங்கப்படுகின்றன.
எனது சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்ற சகல ஒழுங்குகளையும், கோயிற் குருக்கள் பூரீ வாகீசர் அவர்கள் மேற்கொண்டார். இவர் பருத்தித்துறையைப் பிறப்பிட மாகக் கொண்டவர். பக்தியோடு ஒரு பத்திரம் இட்டாலும் அது எம்பிரானுக்காகும் என்ற மெய்மொழிக்கு இலக்கிய மாக அமைந்து கோயிற் பூசைகளை இங்கே ஆற்றுகின்ருர்,
இந்தச் சமயச் சொற்பொழிவில் தலைவராக அமர்ந்து வழிநடாத்தியவர் சைவச்சீலர் திரு. இரத்தினசிங்கம் அவர்களே. இவர் யாழ்ப்பாணம், அல்வாயைச் சொந்த ஊராக உடையவர். கட்டிடப் பொறியியலாளராக இலண்டனில் கடமை செய்யும் இவர் ஒரு தன்னலமற்ற பேருபகாரப் பெரியாராவார். இவரின் கண்காணிப்பில் கோயிற் கட்டிடங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின் றன. இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட திரு உருவங்களின் அமைப்பு, அலங்காரங்கள் மிகமிக அற்புத

Page 19
ー 12ー
மாக இருக்கின்றன; அத்துடன் வழிபாடு செய்யும் அடி யார்களுக்குப் பரம சுகத்தைப் பாலித்தருள்கின்றன என்று கூறுவது மிகப் பொருத்தமானது.
குருக்களும் அந்தணர்களும் வேதமந்திரங்கள் சொல் லிப் பூசை செய்வதோடு தமிழ்த் தோத்திரங்களையும் சொல் லிப் பூசை செய்வது இங்கே ஒரு தனித்துவமாகக் காட்சி தந்தது.
அருச்சனை செய்யும்போது விநாயகப் பெருமானின் 108 நாமங்களை ஒதிப் பின் லலிதா நவரத்தின மாலையை யும் பாடிப் பரவசமடைகிருர்கள்.
அந்தணர்களும், அடியார்களும் மகிடாசுர தோத்திரம் துர்க்கையின் சந்நிதியில் தவறது ஒதும் வழிபாட்டு நிய மத்தைப் பூண்டிருக்கிருர்கள். -
தலைவரது வேண்டுதலின் பிரகாரம் இவ்வாலயத்தில் 19-05-1987 செவ்வாய் மாலை 8.00 மணியளவில் 'துர்க்கை வழிபாடு' என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற் றினேன். இச்சொற்பொழிவில் துர்க்காதேவியின் அருட் பாங்கையும் அவ்வருளின் மகிமையால் அடியார்கள் எப் தும் பெரும் பேற்றையும் எடுத்துரைசெய்தபோது அன் பர்கள் ஆவலோடு செவிமடுத்து ஆனந்தமுற்றனர். அத் துடன் எங்கள் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் அர்ச்சனைச் சந்தாதாரர்களாகவும் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
26-05-1987 செவ்வாயும் "அபிராமி அந்தாதி" என்ற தலைப்பில் அபிராமிப்பட்டரின் வரலாற்றையும் அவர் பாடியருளிய அபிராமி அந்தாதி என்ற திருநூலின் சிறப்பை யும் அவரின் அருட்பாடல்கள் வாயிலாக எடுத்து உரை "யாற்றினேன். இக்காலகட்டத்தில் அபிராமி அந்தாதி என்ற நூலின் அரியபெரிய சிறப்பினைச் சைவப் பெருமக்கள் அனைவரும் உணர்ந்து பாடிப் பெரும்பயன் எய்துகின்றனர் என்பது கண்கூடு.


Page 20

シg + $s surg) - zoolourie) legaes'ısığırılırī£ ginae sāns);

Page 21

- 13 -
இங்கே மூன்று தினங்கள் சொற்பொழிவாற்றிய பின் பாராட்டு வைபவம் ஒன்று நிகழ்ந்தது. இவ்வைபவத்தில் மெய்யடியார்கள் பலர் மனமார வாழ்த்துரை வழங்கினர். சைவப்பெரியார் திரு. க. கேதீஸ்வரன்பிள்ளை அகமும் முகமும் மலர நன்றியுரை கூறினர்கள்.
திருவருள் உணர்வு
ஆலய வழிபாட்டின் சிறப்பை இல்லங்களிலேதான் காணலாம். வழிபாடு அமைதியை நல்க ஒழுங்கு நெறியும் பெருந்திரு ஆக்கமும் இல்லங்களிலேதான் பரிணமிக்கின்றன. அறிவின் சிறப்பைத் தொழிலாற்றும் இடங்களிலேதான் நாம் கண்டு மகிழ்கின்ருேம். துன்பமில்லாத அழகு அமைந் தது நான் தங்கி இருந்த இல்லம், இங்கு மாலை வேளை களில் கூடி இருக்கும் அன்பர்களின் மத்தியில் கூட்டு வழி பாடு செய்து சில கருத்துக்களைக் கூறி மகிழ்வதில் எனக்கு ஆனந்தம். ஏனெனில் ஆலயங்களில் அடியார் கூட்டம் அடங்கி நின்று ஆண்டவனை மனத்தில் இருத்தித் தங்கள் தங்கள் அபிலாஷைகளை முறைப்பாடு செய்வார்கள். ஆனல், கூட்டுப் பிரார்த்தனையில் எல்லார் மனங்களும் ஒருமணமாக ஆண்டவன் நாமங்களை நினைப்பதும் சொல்லு வதும் இறைவனேடு ஒன்றிய ஒரு பெருநிலையைத் தந்து விடுகின்றது. இப்பாங்கில் நானும் அன்பர்களும் இறை வழியில் ஒருகுலமாகித் தொல்லைவினை அகன்று ஆறுதல் பெறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் பின் வரும் கருத்துக்களையும் எனது உரையில் தெரிவித்தேன்.
" "ஹரி நாம சங்கீர்த்தனம் செய்யும் பக்தன் ஒருவன் அரசனிடம் பட்டுச்சேலை ஒன்றைப் பரிசிலாகப் பெற்று வரும் பொழுது சலவைத் தொழிலாளி ஒருவன் அதனைக் கவர் வதற்காகப் பக்தனைத் தாக்கினன். பக்தனும் ஹரி ஹரி என்று ஒலமிட்டான். பூரீ வைகுண்டத்தில் மகாலசுஷ்மி யோடு வீற்றிருந்த எம்பெருமான் பக்தனைக் காக்கத் தம் இருக்கை விட்டெழுந்து உடன் அமர்ந்துவிட்டார். " சுவாமி நீங்கள் செய்த அதிசயம் அறியேன் என அம்மை ஆரா

Page 22
um- 4 -m
மைப்பட்டபொழுது ' என்னைத் தஞ்சமடைந்த பக்தன் இப்பொழுது தன்னையே தஞ்சமடைந்து விட்டான். நான் அமர்ந்துவிட்டேன்" என்ருர் பகவான். 'தஞ்சமடையவர் தன்செயலற்று இருக்கவேண்டும் ' என சத்யசாயி பக வான் இச்சிறுகதை வாயிலாக விளக்கியிருக்கிருர்.
'தன்செயலற்றுத் தனித்திருப்பவர் பகவானைச் சார்ந் திருக்கிறர்கள். பகவானும் அவர்களின் புறம்புறம் திரிந்து வழுவாது காத்தருள் செய்கின்ருர், h−
இறைவனை வழிபடவும் இறைவன் திருவருளே துணை என்பதை 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என மணிவாசகப்பெருமான் திருவாய்மலர்ந்தருளினர் . இறை நிலை எய்தியவரே இறைவனைக் காணமுடியும். இறைவ னேடு வாதிடும் மணிவாசகப்பெருமான்;
'தந்ததுன்தன்னைக் கொண்டதென்தன்னை சங்கரா
யார்கொலோ சதுரர்?" என் இறும்பூதொடு கேட்கின்றர். இறைவன் தன்னைத் தருதலாவது அவன் திருவருள் சேர்தலே. இறைவன் திரு வருள் சேர்தற்கு எமக்குத் தனு கரண புவன போகம் என்னும் நான்கையும் பரிந்து தந்திருக்கிருர். இஃது ஒரு கணிதம். இதற்கு விடை காண்பதுதான் எமது பணி. இதற்கு விடை காண்பதும் எளிது. விடையவனே அந்த விடை. தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் விடை. தியாகேசனகிய இறைவனைத் தியாகத்தின் வழியிலேதான் சென்றடையலாம். ஆன்மாக்களின் உய்வழிக்குக் காரண மும் காரியமுமாக விளங்குகின்ற திருவருளைச் சேர்தல் வேண்டும் என்பதை அனுபூதிமான்களும் திருவருட் செல் வர்களும் விளக்கியிருக்கிருர்கள். இந்தத் திருவருள் உணர்வு எமக்குக் கைவரப்பெற்ருல் ஒவ்வொரு இல்லத்திலும் தெய் வக் காட்சியைக் கண்டு கடைத்தேறலாம். துர்க்கை வழி பாடும் அபிராமி அந்தாதி ஒதுதலும் இல்லத்தில் திரு வருள் உணர்வைப் பெருக்கிக்கொண்டே இருக்கும். ' இவையே எனது உரையின் சாரமாக அமைந்தது.

60.
பொது வைபவங்கள்
இலண்டனில் வாழும் எம்மவர்கள் தம் தாய்நாட்டின் வழக்கங்களைத் தவருது அனுசரிப்பதால் நமக்கு இடவேற் றுமை என்ற மனுேபாவம் அகன்றுவிடுகிறது. ஒரு நாட்டு உணர்ச்சியே மேலோங்குகின்றது. திருவாதவூரடிகள் திருவாய்மலர்ந்தருளிய சிவபுராணம் எல்லார் இல்லங்களி லும், ஆலயங்களிலும், பொது வைபவங்களிலும் ஒதப்படு கின்றது. 'தாவரசங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன்" என வாதவூரடிகள் சீவகோடிகளின் பிரதி நிதியாக நின்று எமது முந்தை வினைமுழுதும் ஒய எடுத் துரைத்த அரும்பெரும் அருட்பாடல் சிவபுராணமாகும். இங்கு வாழும் எம்மவர்களுக்குச் சிவபுராணம் முழுவதும் நல்ல மனப்பாடம். அபரக் கிரியைகளிலும் இதனை ஒது கின்ருர்கள். அபரக் கிரியைகளை முன்னின்று சிவபுராணம் பாடி நடத்துபவர் உயர்திரு. எஸ். சபாபதிப்பிள்ளை அவர்
●gGY了。
நவநாகரிகமும் பண்பாடும் எங்கள் நாட்டைவிட இலண்டனில் வேறுபட்டிருந்தாலும் இவ்வேறுபாட்டில் எம் மவர்கள் மூழ்கிவிடவில்லை. இங்கு நிகழும் அபரக் கிரியை களில் திருமுறைகள், பொற்சுண்ணம் என்பன எம் நாட் டுக்கு ஏற்றவண்ணம் பா டி நிகழ்ச்சியை நிகழ்த்துகின்ருர் 莎夺了。
திருமண வைபவங்களும் எமது வழக்கத்தை அனு சரித்தே பெரும்பாலும் நிகழ்கின்றன. கோயில் மண்டபங் களிலேயே திருமண நிகழ்ச்சிகளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறர்கள். இன்னும் சிறப்பாகத் திருமணங்

Page 23
حسسه 6 - سیص
களிலேயே திரு ம ன நிகழ்ச்சிகளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிருர்கள். இன்னும் சிறப்பாகத் திருமணங் களைக் கொண்டாட விரும்புகின்ற சிலர் பொது மண்டபங் களிலே கோலாகலமாக நடாத்துகின்றனர்.
இலங்கையிலும் தமிழகத்திலும் சைவத் தமிழ் மக்கள் திருமணக் கிரியைகளே மேற்கொள்வது போன்று இலண்” டனிலும் நடைபெrவதை நேரில் கண்டு பேரானந்த முற்றேன். எமது நாட்டின் வழக்கத்தை ஒரளவு அனு சரிக்கும் மொறிசியஸ் வாழ் சைவமக்கள் தமிழ்த் திருமணத் தில் சில பாடல்களைப் பாடி மாங்கல்யம் பூட்டுவதை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சியையும் கண்டு மகிழ்ந்தேன். இது புரட்சித் திருமணம் போன்றது என்பது கண்கூடு. இத்தகைய நிகழ்ச்சிக்கு உயர்திரு. எஸ். சபாபதிப்பிள்ளையே முன்னின்று தலைமைதாங்கி நடாத்தி வருகிருர்,
நாளேடுகள்: ஐந்து
15-05-1987 வெள்ளிக்கிழமை மாலை முதன்முதலாக இலண்டன் உயர்வாசற் குன்று முருகன் கோயிலில் (High Gate) சொற்பொழிவு நடைபெற்றது. இக்கோயிற் பரி பாலனம்தான் என்னை இலண்டனுக்கு அழைத்த நன்றிக் குரியவர்கள். இங்கிலாந்திலே கட்டிடத்தாலும் திருவுரு வங்களாலும் மிகப்பெரிய கோயிலாக விளங்குவது இதுவே. வெள்ளிக்கிழமைகளில் இங்கு பெருங்கட்டம் கூடும். நம் நாட்டிலிருந்து அங்கு சென்ற இளைஞர்கள் ஒய்வு நேரங்களில் தொண்டாற்றுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அடியார் கள் அனைவருக்கும் வழங்கப்படும் அருட்பிரசாதம் இரவு உணவையே பூர்த்திசெய்து விடுகின்றது. வெள்ளிக்கிழமை உபயகாரரே பிரசாதப் பொறுப்பையும் மேற்கொள்கிருர்
எனது சொற்பொழிவு வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை இடம்பெற்றது. இதன்


Page 24

「シ『 ョ』『g dg」ng『』gこ シd* 』シg g Eg 』Eng」rg fosforirino oko Iso-TsNosae so segi!!! Trī grilir: "Ises) · Norm-a FシD シg 『*」e4ad Jシ
| | || || |:||

Page 25

- 17 -
பின்னரே விசேட பூசைகள் இடம்பெற்றன. ஆலயத்துள் எழுந்தருளியிருக்கும் மூலமூர்த்தி வள்ளி தெய்வயானை சமேதராகக் காட்சி கொடுக்கும் சிவசுப்பிரமணியப் பெரு மானே. இந்தத் திரு உருவத்தின் உயரம் ஏறக்குறைய நான்கு அடி இருக்கும். கோயிலின் உட்பிரகாரத்தில் தமிழ்நாட்டுக் கோயில்களைப் போலவே விநாயகர் சந்நிதி, பாலசுப்பிரமணியர் சந்நிதி, ஆறுமுகசுவாமி சந்நிதி, சிவ லிங்கம் சந்நிதி, துர்க்கை சந்நிதி, இடும்பன் சந்நிதி, நந்த கோபாலர் சந்நிதி, நவக்கிரகங்கள் சந்நிதி, வைரவர் சந்நிதி என்பன அமைந்துள்ளன. பூசைவிதிகளும் வணக்க முறைகளும் எங்கள் வழக்கத்துக்கு மாருனவையல்ல.
தற்பொழுது நடராசர் சிலையொன்றும் தமிழகத்தி லிருந்து தருவிக்கப்பட்டு அதற்கான பிராகாரக் கோயில் அமைக்கும் வேலையும் நடைபெறுகிறது. அத்துடன் உற்சவ மூர்த்தியாக வள்ளி தெய்வயானை சமேதராகச் சிவசுப்பிர மணியர் திருவுருவமும் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்டு முதன்முதலாக 03-07-1987 வெள்ளிக்கிழமை பிரதிட்டை செய்யப்பட்டுத் திருவுலாவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தில் முதற் சொற் பொழி வடிா க 15-05- 1987இல் அன்பர்களின் கூட்டம் அமைதியாக இருக்க 'கலியுக வரதன்’ என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றினேன். உரையின் தொடக்கத்தில் கோயிற் குருக்” கள் சிவபூரீ சச்சிதானந்தர் அவர்கள் காளாஞ்சி தந்து ஆசீர்வதித்தார். திருமதி சபாபதிப்பிள்ளை அவர்கள் மலர்க் கொத்து வழங்கினர்கள், அன்பர் திரு. V. செல்லத்துரை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தும்போது இங்கு எனது வருகை பற்றிய நோக்கத்தை எடுத்துரை செய்தார்.
சொற்பொழிவின்போது பெண்கள், பெரியோர், இளை ஞர்கள் இருநூறுக்கும் மேலாகத் திரண்டிருந்து கேட்டு மகிழ்ந்தனர். தமிழ் பேசத் தெரியாத ஆணுல் விளங்கக் கூடிய மொறிசியஸ் அன்பர்களும், வடஇந்திய அன்பர்களும்
3

Page 26
ཕམ། - 183 ཡ
அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது, உரையின் முடி வில் அன்பர்கள் பலரும் தனித்தனியாக வந்து தங்கள் அன் பின் பெருக்கை இனிய உரைகளால் வெளிப்படுத்தினர். அங்கு கூடியிருந்தவர்களுள் பெரும்பாலோர் எனது அன் புக்குரிய மாணவர்களும் துர்க்காதேவி அடியார்களுமாவர்.
"இவ்வாலயத்தில் இவ்வேளையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வந்து சொற்பெருக்காற்ற வேண்டும்" என்று அன்பர்கள் ஆரா உவகையோடு கேட்டதுமன்றி அதற் கான நிகழ்ச்சி நிரலையும் தயாரித்துவிட்டார்கள்.
இந்நிகழ்ச்சி நிரலில் ‘செந்தமிழும் திருமுருகனும்", *வாக்குக்கருணகிரி", " திருப்புகழ் ", 'நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்', ‘* அம்பிகையின் அருள்வெள்ளம் ?? என்ற தலைப்புக்கள் தரப்பட்டன. இவை பொருளாக ஒவ் வொரு வெள்ளியும் 19-06-1987 வரை என்னுல் பேசப் பட்டது. பக்தர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கோயில் வாசற் பெருந்தெரு ஒரம் மோட்டார் வண்டிகள் நிறுத்த முடியாத நெருக்கடியும் நிறுத்தியதை எடுக்கமுடியாத நெருக்கடியும் ஏற்பட்டது. அன்பர்கள் பலர் என்னைச் சூழ்ந்து தங்கள் இல்லங்கட்கு வரவேண்டும் என்று அன் பாக வேண்டினர். ஆனல் அவர்கள் அனைவரையும் திருப்தி பண்ண என்னுல் முடியவில்லை. காரணம் எனது பயணம் குறுகிய காலப் பகுதியாக இருந்தமையே. என்ருலும் அவர்களில் பலர் நானிருக்குமிடந் தேடிவந்து அளவளா விச் சென்றமை என்னுள்ளத்தில் நீங்காப் பசுமையாய் இருக்கிறது. ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேருென்றியேன் பராபரமே" என்ற தாயு மாணவரின் திருப்பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே யிருக் கிறது.
நாளேடுகள்: e.g
பரத்தை மறைக்கும் இலண்டன் போன்ற பாரிய நகரங்களில் பரத்தில் மறையும் ஞான இல்லங்களும் இருப்


Page 27

les folg nog pseudige sors, weg og senossoos ugi so sĩ quae uros)5
『『F* シEg』 『』『QEB se-IIaelelő

Page 28

--س۔ 19 -۔
பதைக் காண என்னுள்ளம் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கியது.
அந்த ஞான இல்லங்களில் ஒன்று திரு. V. செல்லத் துரை அவர்களின் இல்லம். 16-05-1987 சனிக்கிழமையன்று இந்த இல்லத்தில் ஞானனந்த சமாஜ கூட்டுவழிபாடு பிற் பகல் ஆறு மணிக்கு ஆரம்பமானது.
குருஜீ என்றழைக்கப்படும் பூரீஹரிதாஸ்கிரி அவர் களால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வொழுங்கினல் இலண்ட னிலும் வெளியேயும் ஞானனந்த சமாஜம் ஒன்று இயங்கி வருகிறது. இச்சமாஜ உறுப்பினர்கள் அனைவரின் இல்லங் களிலும் கூட்டு வழிபாடு தவருது நிகழ்வது அவர்களின் குருபக்தியை மேலாக எடுத்துக் காட்டுகின்றது. குரு வருளே திருவருள் என்ற திருமந்திரக் கருத்துச் சிந்திக்கற் பாலது. சனிக்கிழமைதோறும் கூட்டு வழிபாடு நிகழ் கின்றது.
இச்சமாஜத்தின் தலைவராக முன்னைநாள் பிரிட்டிஷ் இலங்கைத் தூதுவர் உயர்திரு. மூர்த்தி அவர்களும், செய லாளராகத் திரு. யோகநாதன் அவர்களும், பொருளாள ராகத் திரு. இராமநாதன் அவர்களும் உறுப்பினர்களாகப் பலரும் ஒன்றிணைந்து பயபக்தியுடன் பணியாற்றுகின்றனர். கூட்டு வழிபாட்டுப் பாமாலை ஒன்று புனைந்து குருஜீயின் நெறிப்படுத்தலில் வழுவாது நின்று வழிபாடு செய்கிறர் கள். பூரீ ஞானனந்த சமாஜத்தாரே வழிபாட்டுக்கு வருவோருக்கு இரவுணவையும் வழங்குகிருர்கள்.
இந்தச் சமாஜத்தின் வழிபாடு எல்லா உறுப்பினர்கள் இல்லங்களிலும் தூப தீப நைவேத்தியங்களுடன் இரவு ஒன்பது மணிவரை நிகழும். பூஜைக்குரிய திருவுருவப் படங்களில் பூரீ ஞானனந்த சுவாமிகளதும் பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகளதும் படங்கள் முக்கிய வழிபாட்டுக்கு வைக்கப் பட்டு 108 நாம அருச்சனை நடைபெறும்.

Page 29
سے 20-سس۔
பூரீ ஞானனந்த சுவாமிகளின் அருள் உருவத்தை எல் லாரும் அழகொழுக மனதில் அமைத்துக் கொண்டால், வழிபாடு மேலும் நல்ல பேற்றினை நல்கும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் திருக்கோவலூரில் நூற்றைம்பது ஆண்டுக்காலம் குருமூர்த்தமாக எழுந்தருளிக் கூடும் அன் பர்க்கெல்லாம் திருவருள் பாலித்துப் பூரணமெய்தியவர் பூரீ ஞானனந்த சுவாமிகள்.கவிாமி விவேகானந்தர் போன்று குருஜீ ஹரிதாஸ் சுவாமிகளும் ஞானனந்த சுவாமி களின் திருவருளைப் பெற்று, குருபீடத்தமரும் தகுதியை யும் உலகை வலம்வந்து உலப்பிலா ஆனந்தத் தேன் பொழியும் ஆற்றலையும் பெற்றிருக்கின்ருர், -
இச்சமாஜத்தாரின் ஆதரவில் இன்று பூரீ ஞானனந்த சுவாமிகளின் விழாவில் " " குருவருள்' என்ற பொருள் பற்றி எனது சொற்பொழிவு நிகழ்ந்தது.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
என்ற திருமந்திரப் பாடலின் கருத்தை அடி நாத மாகக் கொண்டு கருத்துக்களை விளக்கினேன்.
அன்பர்கள் எல்லாரும் செவிவாயாகக் கேட்டு, விட்டாது உள்ளத்தமைத்து இன்புற்றனர் என்பதை அவர்களின் முகப்பொலிவிலிருந்து உணர்ந்துகொண்டேன்.
இந்தச் சங்க உறுப்பினர்கள் எவரும் மாமிச போசனம் புசிப்பதில்லை. அவர்கள் இல்லங்கள் சைவபோசன இல்லங் களாகவே விளங்குவது ஒரு சிறப்பம்சமாகும். இதற்குரிய பெருமை பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகளையே சாரும்.
இதனைத் தொடர்ந்து “இல்வேட்" தமிழ்ச்சங்க விழா மற்ருே ரிடத்தில் நடைபெற்றது. மக்கள் சேவையே மகே

سے 21 سسس۔
சன் சேவை என்பதை மனதிற் கொண்டவர்கள் இச்சங்க அன்பர்கள். தமிழகத்தில் நாகபட்டினத்தில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகளின் நலனை முன்னிட்டு மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க இவ்விழாவின்மூலம் நிதி சேகரிக்கப் பட்டது என்பதை அறிந்தேன்.
இத்தமிழ்ச்சங்க விழாவில் சிறுவர் சிறுமியரும் கலந்து கொண்டு இசை, நடன விருந்துகளை எமக்களித்துப் பெரு மகிழ்வை விளைவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளேடுகள்: ஏழு
**நற்குஞ்சரத்தின் நளின மலர்ச் சேவடி சரணம்”, என்று தொடங்கிய நாளிலிருந்து இலண்டன் மாநகரில் உவமையில்லாக் கலைஞானமும் உணர்வரிய மெய்ஞ் ஞானமும் கலந்துறவாடிக் குலாவுவதைக் காணக்காணக் கண்கள் குளிர்ந்தன. -
இலண்டன் கிழக்கு ஈஸ்ற்காம் கோயிலில் இன்று 17-05-1987 நவக்கிரக சாந்தி நடைபெற்றது. நவக்கிரக சக்கரத்துள் உயிரினங்கள் சிக்கி உழலுகின்றன என்பது நமது சமய தத்துவ உண்மை. இம்மாயச் சூழலினின்றும் விலகி வாழ்வதற்காக நவக்கிரக வழிபாடும், நவக்கிரக சாந்தியும் நிகழ்கின்றன. மிக ஒழுங்காக நடைபெற்ற இவ் வைபவத்தில் நானும் கலந்து கொண்டு கோளறு பதிகம் பாடினேன்.
மங்கையர்க்கரசியாரின் அழைப்பை ஏற்றுத் திருஞான சம்பந்த சுவாமிகள் எழுந்தருள எண்ணியபோது அரு கிருந்த அப்பரடிகள் 'நாளும் கோளும் நலமில: எழுந்தரு ளற்க' எனக் கெஞ்சியபோது அடியார்களுக்கு ‘* நாளும் கோளும் நல்லநல்ல; மிக நல்லநல்ல" என்று திருவாய் மலர்ந்ததே கோளறு பதிகம். இப்பதிகத்தைக் காதலா கிக் கசிந்து கண்ணிர் மல்கித் தினம் ஒதுவார்க்கு வினை நீங்கி இன்பம் பெருகும்.

Page 30
حس '22 --
நாளேடுகள் எட்டு
19-05-1987 திங்களன்று இலண்டன் நகரின் தென் மேற்குப் பகுதியில் வசிக்கும் திரு. R. பாலதரன் அவர்கள் தமது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்ருர், மூன்று நாட்கள் தமது வீட்டில் தங்கவைத்துச் சரித்திரப் பிரசித்தி பெற்ற பல இடங்களைக் காட்டினர். -
மகாராணி வருகைதந்து பொருட்களைக் கொள்வனவு செய்யும் ஒக்ஸ்ஃவோட் (Oxford Street) வீதிக்கடைகளுக்குக் கூட்டிச் சென்ருர், அத்துடன் இலண்டன் மாநகரிலமைந்த சைவச் சிற்றுண்டிச்சாலையில் இரவுணவை ஒழுங்கு செய் தாா.
இலண்டன் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியைப் போக்குவதற்கும், வேகத்திற்கும், நேரச் சுருக்கத்திற்கும், மக்கள் வசதிக்குமாக நிலத்தின்கீழ்ப் புகைவண்டிப் பாதையை அமைத்திருக்கிருர்கள். இப்பாதையில் (Tube Train) பிரயாணம் செய்யும் அனுபவத்தையும் பெற்றுத் தந்த எனது நன்றிக்குரியவர் திரு. R. பாலதரன் அவர்கள்.
நிலக்கீழ்ப் புகையிரதம் நூறுமைல் வேகத்தில் மின்ன லெனச் செல்கின்றது. தரிப்பிடங்களில் தானே நின்று தானே புறப்படுகிறது. இவ்வண்டிகளில் பிரயாணம் செய் வர்கள் நேரத்தை வீணடிக்காது பெரும்பயன் விளைக்கும் வகையில் நூல்களையும் நாளிதழ்களையும் வாசிக்கிருர்கள். இரைச்சலுமில்லை; சலசலப்புமில்லை.
பிரயாணத்தின் பின் பாலதரன் குடும்பத்தவர்கள் கடை வீதிக்கு அழைத்துச் சென்றனர். திரு. பாலதரன் அவர்கள் இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்குமுன் இலங்கை விமானமோட்டியாக (Pilot) இருந்து பின் இலண்டன் சென்று அங்கு விமானக் கொம்பனி ஒன்றில் கடமை பார்த்து விமானமோட்டியாகவும் இருந்தவர். தெல்லிப் பழை மேற்கைச் சேர்ந்த ஒரு கெளரவமான குடும்பத்தில்


Page 31

『」』gg Jシコugg s』『gE』 gg ddggbug 國道之島城) 황rT&auTurgrTrT&sigg &

Page 32

سہ : 23 سے
பிறந்து கொழும்பில் உயர்கல்வி பயின்று விமானமோட் டும் பயிற்சி பெற்றவர்.
இவரின் தர்மபத்தினி ஜெயந்தி படித்த, சிறந்த பண் பாடுள்ள சோர்விலாத பெண்ணுவார். இவரின் அரும் பெறற் புதல்வி தாரணி துர்க்காதேவியின் ஆசி பெற்றவர். தெல்லிநகர்த் துர்க்காதேவி ஆலய மூலஸ்தானத்தின் திரு விளக்குக்குத் தினமும் இப்பிள்ளையின் பேரால் எண்ணெய் கொடுக்கப்பட்டு அணையா விளக்காகப் பிரகாசிக்கின்றது. இளைய குழந்தை சாயினியும் அம்பிகையின் அருள்பெற்ற தவச்செல்வி.
நாளேடுகள்: ஒன்பது
19-05-1987 செவ்வாய், இத்தினம் அம்பாளுக்குரிய நற் நறினம். திரு. பாலதரன் இல்ல்த்தில் என் நியமப் படி அம்பாள் பூசை செய்த பொழுது இவர்களும் என்னுடன் ச்ேர்ந்து துர்க்கை வழிபாடும் பஜனையும் செய்தனர். பின் னர் விம்பிள்டன் விநாயகர் கோயிலுக் குச் சென்று துர்க்கை சந்நிதியில் நவரத்தினமாலை பாடினுேம். அங்கு அடியார்கள் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபட்டதைக் கண்டேன்.
பரமனுக்காளாம் அன்பர் செய்பணி அனைத்தும் அந்தப் பரமற்கே உரியது என்ற மேலோர் சித்தத்தையும் சிந்தித் துணர்வார் சித்தமலம் அறுந்து உய்கதி பெறுவர் என் பதையும் புரிந்துகொண்டேன்.
பின்பு மறுநாள் புதன்கிழமை அவர்கள் தங்கள் இல் லத்தில் உபசார விழா ஒன்றைச் செய்து படம் பிடிக்கும் கருவி ஒன்றையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்து, பாராட் டிப் பட்டாடையும் பரிசாகத் தந்தனர்.
"அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.'

Page 33
ـــــ 24 سے
நாளேடுகள்: பத்து
21-05-1987 வியாழக்கிழமையன்று எனது இருப்பிடத்தி லிருந்து நூறு மைல் தூரத்திலுள்ள வரலாற்றுச் சிறப் பும் கல்விச் சிறப்பும் மிக்க கேம்பிறிஜ் சர்வகலாசாலைக்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பைச் சொலிசிற்றர் திரு.சிதம் பரப்பிள்ளை, டாக்டர், திருமதி மகேஸ்வரி சிதம்பரப்பிள்ளை ஆகிய இருவரும் தந்தனர்.
சமீபகாலம்வரை ஒக்ஸ்போர்ட், கேம்பிறிஜ் பல்கலைக் கழகங்கள் சிறந்த கல்விக்கழகங்களாக விளங்கின என்பதும் அவற்றில் சேர்ந்து கற்பது எல்லார்க்கும் இயல்வதன்று என்பதும் கற்று வெளிவந்தவர்கள் ஆற்றல் மிகுந்த மிகப் பெரிய கல்விமான்கள் என்பதும் உலகறிந்த விடயம். இக் கழகங்களின் தரிசனமே மிகப்பெரும் பாக்கியமாகும்.
இந்த அன்பர்களின் சொந்த வாகனத்தில் நாங்கள் செல்லும்பொழுது பெங்களூர் ரமணி அம்மாளின் ஒலிப் பதிவு செய்யப்பட்ட தெய்வத் திருஇசைப்பாடல்கள் மன திற்கு இன்பையும் அன்பையும் விளைவித்தன. இறவாத இன்ப அன்பை விளைவிக்கும் ஆற்றல் அம்மாளின் இசைப் பாடல்களின் ஒரு தனிச் சிறப்பாகும்.
மோட்டார்ப் பாதை (Motor Way)யாக இருந்தமை யால் வாகன நெருக்கடி ஏதுமில்லை. வண்டி சாவதான மாகச் சென்றுகொண்டிருந்தது. பாதையின் இருமருங்கும் கோதுமை வயல்களும் பசும்புற்தரைகளும் காணப்பட் டன. கோகுலங்களைக் கண்டதும் கோகுலனின் பிருந்தா வனத்தைக் கண்டேன்; களி கூர்ந்தேன்.
களிதுளும்ப மாலை ஐந்துமணிப் பொழுதில் சர்வகலா சாலை எல்லையை அடைந்து வாகனம் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்ருேம்.
கேம்பிறிஜ் பல்கலைக் கழகம் எடுத்த எடுப்பிலேயே அழ கான ஒரு கலைக்கோயிலாகவே கண்ணையும் கருத்தையும்


Page 34

“JQ*** シミュ』『g シミ シ ***(*.*F (義u事ung地re』 中 활력을T역*g每寸)
|-|- |-| –TTT T후의 ) :
--
*
sae ae (= 鱷 s!!!!!!!!!!!!!!!!! F'(± →
「瀨噴*■ |----|----+---+ | ~
|. . . .■■_響y
- |-

Page 35

ཕགས 25 ----
கவர்ந்தது. கடந்தகால நினைவுகள் அலைஅலையாக எழுந் தோங்கி உள்ளத்தைச் சிலிர்க்கவைத்தன. பழைய பாரம் பரியத்தை அழியவிடாது பேணிக்காக்கும் மரபினை இங்கு கண்டேன். இடையிடையே அழகான நந்தவனங்கள் அழ கிற்கு மேன்மேலும் மெருகூட்டிக்கொண்டிருந்தன. இக் கலைக்கோயில் ஒரு கவின்பூங்காவாகவும் காட்சியளித்தது. சலசல என்ருேடும் சிற்றறுகள் இக்கலைக்கோயிலின் பெரு மையை ஒலித்துக்கொண்டிருப்பதுபோல் ஓர் இன்பத்தை யூட்டின.
வீதிக்கும் பல்கலைக் கழக நுழைவாயிலுக்கு மிடையில் ஒடுகின்ற சிற்றற்றின்மேல் அமைக்கப்பட்ட பாலத்தின் மீது நடந்து உள்ளே சென்ருேம். பாலத்தின் இருமருங்கும் உள்ள ஆற்றில் அன்னம்போல் மிதந்துசெல்லும் சின்னஞ் சிறு ஒடங்களில் மக்கள் அமர் ந் து பொழுதுபோக்கிச் சுகம் அனுபவிப்பதையும் கண்டோம். “இன்பமே எத் தாளும் துன்பமில்லை" என்ற அப்பர் அருளுரையின் விளக் கம் எங்கள் மனதில் மலர்ந்தது.
இப்பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள கிங்ஸ் கல்லூரி (King's College), lstaffbsidi sai) 6Tifi (Trinity College) என்பனவற்றுள்ளும் சென்று ஆங்குள்ள போதன, சாதன முறைகளைக் கண்டு தெளிந்ததுமன்றி நிழற்படங்களும் எடுத்துக்கொண்டோம்.
இப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபகரின் சடலம் பழுதுரு? வண்ணம் ஏற்ற முறையில் பேணிப் பாதுகாத்து வைத்திருப் பது அவர்களின் நன்றி மறவாப் பண்பை எடுத்துக்காட்டு கின்றது. இதனை விளக்குமுகமாக ஆண்டுதோறும் ஸ்தா பகரின் நினைவு தினத்தில் இவரின் சடலப் பேழையை உலாக் கொண்டுவருகின்றனர். இதனுல் இக்கழகத்திற் பயில்கின்ற
வர்களுக்கும் வள்ளுவப்பெருமான் கூறியருளிய,
* நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று '
என்ற நீதியும்

Page 36
- 26 -
* உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”*
. என்ற நீதியும் நன்மை பயந்து நல்வழிப்படுத்தும் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.
சர்வகலாசாலை அமைப்பும் சூழலும் உண்மையிலே பட்டப்படிப்புக்குச் செல்லும் மாணவருக்கு மிக வாய்ப் பாக அமைந்துள்ளன. இலங்கைத் தமிழ் மாணவர்கள் நால் வர் சென்ற ஆண்டு இக்கலாசாலைக்குத் தெரிவுசெய்யப் பட்டது பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
இரண்டு மணி நேரமளவில் இங்கு தங்கிவிட்டு இரவு 7-00 மணிக்குப் புறப்பட்டோம். 8-00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
இந்த மாதத்தில் இரவு 9-00 மணிவரை பகலாகவே காட்சியளிக்கும் நிலை அங்கு உண்டு. அதிகாலையிலும் 4-00 மணிக்கு நிலம் வெளிக்கப் பகல் தொடங்கும். சுருக்க மாகச் சொன்னுல் மே, ஜூன் மாதங்களில் பதினெட்டு மணி நேரப் பகலும் ஆறு மணி நேர் இரவும் இங்குண்டு.
இந்த விபரங்கள் அனைத்தையும் திரு. சிதம்பரப்பிள்ளை அவர்கள் கூறக் கேட்டேன். இப்பெரியார் இலண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தில் பொறுப்பான பதவி வகிப் டவர். அங்கு ஞாயிறுதோறும் சைவ சமயபாட வகுப்பு களை நடத்துவதோடு சமயப் போட்டிகளையும் வைத்து மதிப்பீடு செய்பவர். புலோலியைச் சேர்ந்த இப்பெரியா ரின் மனைவி மகேஸ்வரி ஒரு வைத்திய கலாநிதி; சிறந்த பண்பாளர்; விருந்தினரை உபசரிப்பதில் தன்னேரில்லா தவர். பருத்தித்துறை வடை, பால் அப்பம், பனங்கட்டி ஆகியவற்றை எமக்கு மகிழ்வோடு பரிமாறினுர்.

ܚ 27 ܗ
நாளேடுகள்: பதினுென்று
22-05-1987 வெள்ளிக்கிழமை, அன்று இலண்டன் உயர் வாசற் குன்று (High Gate) முருகன் ஆலயத்தில் 'செந் தமிழும் திருமுருகனும்' என்ற பொருளில் உரையாற்றி னேன். w
முந்துதமிழ் மாலையை விரும்பி முற்பட அணிபவன் முத்தமிழ்க் குமரன் முத்துக்குமரன் முத்தமிழால் வைதாரை யும் அங்கு வாழவைப்பவன் தமிழ்முருகன். தமிழ் வேறு முருகன் வேறு அல்ல. உருத்திர சன்மராக அவதரித்து இறையனர் களவியல் என்ற நூலின் உரைக்குத் தீர்ப்பு வழங்கியவர் முருகப் பெருமான்,
தமிழிலுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பன் னிரண்டு திருக்கரங்களாகவும் பதினெட்டு மெய் எழுத்துக் களும் மூவாறு திருக்கண்களாகவும் அகச்சமயம் ஆறும் ஆறு திருமுகங்களாகவும் கொண்டு செந்தமிழ், முருகனுக ஞானவேல் ஏந்தித் தமிழ் ஞானப் பழமாக விளங்குகின்றர்.
“யான்', 'எனது' என்னும் அகந்தை மமதைகளை வலியடக்கி ஆன்ற சொரூபத்தமையும் நாதபிந்துக்களைச் சேவற்கொடியாகவும் மயில்வாகனமுமாக ஏற்றருளி வாழ் வின் நோக்கத்தை விளக்கி வைக்கின்ருன் எந்தை முருகன்.
பேராதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்துப் பேரா னந்தப் பேறு பெருக வழங்கும் செந்தமிழ் முருகன் கலியுக வரதனுக , குன்றிலமர்ந்து குளிர்ந்த அருளை வாரிவாரி வழங்குகின்ருன். குன்றுதோருடும் குன்றமர் முருகனை இங் கும் குன்றில் எழுந்தருளச் செய்தது மிகப் பொருத்தமே.
இக்கருத்துக்களை அருட்பாடல்கள் வாயிலாகவும், புரா ணங்கள் வாயிலாகவும் எடுத்துரை செய்தபோது அந்நாட் டில் வாழும் தமிழுணர் எம்மவர்கள் கேட்டு ஆனந்தமுற் றனர். தாய்மொழிப் பற்றுடையோர் பலருக்கு இது ஒரு

Page 37
- 28 -
விருந்தாக இருந்தது என்பதை அவரவர் கேட்ட அனு பவங்கொண்டு கூறினர். தமிழின் இனிமை தமிழ் இத யங்களைக் கவரும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை "யாமறிந்த மொழிகளில்ே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணுேம்' என்று தனிவீறு கொண்டு பாரதியார் பாடியதுமன்றித் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று ஆணையிட்டதும் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்ருகும்.
எனது சொற்பொழிவை ஒலிப்பதிவு நாடாவில் பத்து அன்பர்களளவில் பதிவு செய்துகொண்டனர். பதிவு செய் யாதோருக்குத் திரு. புலேந்திரன் என்ற பெயருடைய ஒரு அபிமான இளைஞர் பதிவுசெய்து தருவதாக உறுதிமொழி கூறினர். அன்று உரை முடிவில் எல்லோருக்கும் வடை, கடலை, கோப்பி, புளிச்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
நாளேடுகள்: பன்னிரண்டு
23-05-1987 சனிக்கிழமை, இலண்டனில் அன்றைய நாள் எனது பொன்னுள் என்றே பெருமைப்படுகின்றேன். எங்கள் பண்பாட்டினை அறிந்து இன்புற்ற ஒரு நன்னுள்.
அன்று நண்பகல் கட்டட வல்லுநர் திரு. எஸ். சபா பதிப்பிள்ளை அவர்களின் இல்லம் சென்றேன். இலண்டன் முருகன் கோயில் (உயர்வாசற் குன்று) அறங்காவலர் சபைத் தலைவர் இவரே என்றமையால் அவர்களதும் மனைவி மகேஸ்வரி அம்மையாரதும் அழைப்பை ஏற்று அங்கு சென்றேன்.
இத்தம்பதிகள் இருவரும் சைவப் பழங்கள்தான். நெற்றி நிறைந்த நீறும் சந்தன குங்குமப் பொட்டும் அவர் கள் திருமுகப் பொலிவும் பெரிதும் வியக்கத்தக்கது. முத லிலே தங்கள் பூசை அறைக்கு அழைத்துச் சென்றனர், கந்தபுராணம் ஆறு காண்டங்களும் அங்கே சிவசுப்பிர


Page 38

sĩaeso, suosoɛ sɑɑs suris -itoo@sourie,
logo.Hirtoko II são resnoe, LĒĶī£re ĝIī£® 『ショ」g ggF f Q 『も」 シ

Page 39

- 29 -
மணியப் பெருமான் திருமுன்னிலையில் வைத்துப் போற்றப் படுகின்றன. இதனல் இவர்களின் தமிழ் நெஞ்சகத்தையும் அறிந்து இன்புறக்கூடியதாய் இருந்தது.
கந்தபுராணத்தில் ஒருபக்கத்தை எடுத்து என்னை வாசிக்கும்படி மலர்ந்த முகத்துடன் அம்மையார் கேட்டார். வாசித்து முடிய “ ஒகோ இன்னும் அசுரபயம் எமக்குத் தொடரப்போகுது போலும் " என்று மலர்ச்சியோடு ஒரு வார்த்தை கூறினர். உண்மைதான். புறத்து அசுரர் பகைக்கு ஒரு முடிவுகாலம் உண்டு. ஆனல் அகத்து அசுரர் பகைக்கு முடிவு முருகன் கையில் தான் உண்டு.
பின்னர் சமயக் கருத்துக்கள் சிலவற்றை மனங்கலந்து பரிமாறிக்கொண்டு மதிய உணவையும் முடித்துக்கொண் டோம். இவர்கள் பரம்பரையாகச் சைவ உணவையே மேற்கொள்பவர்கள்; இரண்டாவது சிவதீட்சையும் பெற்ற வர்கள். ஆசாரசீலம் மிகுந்தவராய்த் தினமும் நைவேத் தியம் படைத்துப் பூசை செய்யும் நியமம் உள்ளவர்கள். பொதுவாக ஒவ்வொரு இல்லத்திலும் உணவை முதல் இறைவனுக்குப் படைத்து நைவேத்தியமாக உண்ணும் நியமத்தை மேற்கொண்டால் சைவ உணவே உண்ணும் பழக்கம் இலகுவில் நிலைபெற்றுவிடும்.
அன்றியும் இவர்களது இல்லத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வள்ளி தெய்வயானை சமேதராக சிவசுப்பிரமணி பப்பெருமானுடைய திருவுருவத்துக்கு அபிஷேகம் ஆரா தனை நடாத்துவர். இதில் கூட்டு வழிபாடும் சொற்பொழிவு களும் இடம்பெறும். இவ்விழாவில் ஐம்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கலந்துகொண்டு சிறப்பித்துப் பெரும்பேறு பெறுவர். 29-05-1987 வெள்ளி நாள் இவ்விழாவில் ஒரு உரையாற்றினேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.
தொடர்ந்து அன்று மாலையே ஞானனந்த சமாஜ விழாவுக்குச் சென்ருேம். திரு. ரகுநாதன், அவர் மனைவி

Page 40
mass og VJ mars
சோதி, பிள்ளைகள் பூரீ ஹரிதாஸ் சுவாமிகளின் நல்லாசியைப் பூரணைமாகப் பெற்றவர்கள் பரமானந்தத் தேன் பருகும். ஒரு ஞானபீடமென்றே இச்சமாஜத்தினைக் குறிப்பிடலாம்
அன்பர் ரகுநாதனுடைய இல்லம் “சறே" என்ற பகுதியில் கிங்ஸ்ரன் (Kingston) என்ற இடத்தில் அமைந் துள்ளது. இவர்கள் சிறந்த குருபக்தியுடையவர்கள். நானும் இவர்களது இல்லம் சென்று ஞானனந்த பஜனையில் கலந்து கொண்டதுமன்றி அங்கு உரையும் ஆற்றினேன். பின்ட நூற்றுக்கு மேற்பட்ட சமாஜ் உறுப்பினர்க்கு இரவுணவு வழங்கப்பட்டது. எல்லா நிகழ்ச்சிகளையும் முடித்து இரவி பதினுெரு மணிக்கு இல்வேட் கிளே ஹோல் இல்லத்துக்கு வந்து சேர்ந்தோம்.
நாளேடுகள்: பதின்மூன்று
24-05-1987 ஞாயிற்றுக்கிழமை, இன்று இங்கிலாந்தின் தென் கடலோரம் பிறைற்றன் (Brighton) என்ற நகருக் குச் சென்ருேம். உல்லாசப் பயணிகள் கோடை விடு முறையை உல்லாசமாகக் கழிக்கும் இடம் இக்கடலோரப் பட்டினமாகும். அழகான நகரம். பயணிகளின் கூட்டம் பெருமளவுக்குக் காணப்பட்டது. அழகே பூத்துக் குலுங் கியதுபோல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் காட்சி பளித்தனர்.
திரு. இராசசுந்தரம் என்பவரது இல்லத்தில் பூப்புப் புனித நீராட்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எம்மவர்கள் மாயாஜால நகரில் வசித்தாலும் குலவழக்கத்தினின்றும் மாரு திருப்பது பெரு மைக்குரியது.
மாலை நகரைச் சுற்றிப் பார்த்தோம். கண்ட காட்சிகள் மனத்திரையில் நிழற்படமாக நீங்காது இன்றும் தோற்ற மளிக்கின்றன. சென்ற வழி எல்லாம் மான்விழியார்போல மருண்டு துள்ளியோடும் மானினங்களைக் கண்டு மகிழ்வுரு


Page 41

シコシ」q園」gg osmae worlog ,,Teoso qi-TT, , seyre-Tlogos
|

Page 42

- !! -
மல் எவரும் இருக்கமுடியாது. பச்சைப் பசேலெனப் பொலி யும் புற்றரைகள், பச்சைக் கம்பளம் விரித்தாலன்ன மைதா னங்கள் இனிமையான காட்சி,
நாளேடுகள்: பதினுன்கு
25-05-1987 திங்கட்கிழமை, இத்தினத்தில் நான் தங்கி யிருந்த இல்லத்துக்கு எனது அன்பர்கள், அபிமானிகள், மாணவர்கள் வந்து என்னைச் சந்தித்து உரையாடிச் சென் றனர்.
வைத்தியகலாநிதி சிவஞானவேல் குடும்பத்தவரோடு தங்கும் ஒரு வாய்ப்பு மறுநாள் கிடைத்தது. இலங்கை யாழ். / அரசினர் வைத்தியசாலையின் முறிவு தறிவுப் பகுதி யில் உயரிடம் வகித்த இவர் இங்கிலாந்திலும் அதே தகுதி யோடு பெருமையாகக் கடமைபுரிவது குறிப்பிடத்தக்கது. இவர் மனைவி சாரதா சிறந்த பண்பாடுடைய பெண். பரிவான பேச்சும் உபசரிப்பும் அவர்கள் பிள்ளைகளின் ஒழுங்கும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
இவ்விடத்தில் எனக்குள் விளைந்த வள்ளுவத்தின் ஒரு அனுபவத்தினைச் சொல் லி மகிழவேண்டியிருக்கிறது. மக்களாய்ப் பிறந்தவர் இறக்கும்துணையும் கற்பது மட்டு மன்றி இறை பணியும் செய்தால் எல்லா நாடும் ஊரும் தன்னுடு தன்னுாராம் என்ற வள்ளுவப் பெருமானின் அருளிப்பாடு நெஞ்சைத் தொடுகிறது.
நாளேடுகள்: பதினைந்து
29-05-1987 வெள்ளிக்கிழமை,இன்று உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தில் 'திருப்புகழ்" பற்றி உரையாற்றி னேன், செந்தமிழ் முருகனல் தடுத்தாட்கொள்ளப்பட்டவர் அருணகிரிநாத சுவாமிகள், பக்தி ஞானமும் நிலையாமை யும் விளங்கத் திருப்புகழ்ப் பாடல்களை எமக்குத் தந்தவர்

Page 43
-- 32 س--
அருணகிரிநாத சுவாமிகள். இவரை வாக்குக்கு அருணகிரி என முருகன்டியார்கள் வாய் இனிக்க மனம் இனிக்க அழைப்பர். திருப்புகழ்ச் சந்தமும் கருத்தும் எவர் மனத்தை யும் முருகனேடு இசைவிக்கும் என்பதில் சிறிதும் gu மில்லை. இப்பாங்கில் திருப்புகழின் பெரும் புகழை எடுத் துரை செய்தபோது மக்கள் அமைதியுடன் கேட்டு இன் புற்றனர்.
இன்று மேலும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதா வது எனது மாணவப் பருவச் சினேகிதி சத்தியலட்சுமி (மல் லாகம்) வீட்டில் மதியபோசனம் இடம்பெற்றது. சற்சங்கப் பல அன்பர்கள் வந்து கூடும் நல்லதோர் இல்லம் அது.
நாளேடுகள்: பதினறு
30-05-1987 சனிக்கிழமை, தமிழகத்து அன்பர்கள் எங் கிருந்தாலும் தங்களுக்கே சொந்தமான முருகனைக் கோயில் கொண்டருளச் செய்வதில் பேராவல் கொண்டவர்கள். கந்தன் எங்கள் சொந்தம் என்பதில் தளரா உறுதி கொண்ட வர்கள்.
இலண்டன் மாநகரின் கீழைப் பகுதியில் அமைந்தது, ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், தமிழகத்து அன்பர்களின் பரிபாலனத்தில் இது அமைந்திருக்கிறது தலைவர் திரு. சம்பத்குமார்; மதுரையைச் சேர்ந்தவர்; பிரித்தானிய இந் திய தூதராலயத்தில் உயர்பதவி வகிப்பவர்; பேச்சிலும், செயலிலும் இனியவர். செயலாளர் அண்ணன் கணபதி என்று அழைக்கப்படுபவர்; அழகு தமிழில் பேசுவார். சிங்கப்பூரில் பலகாலம் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டவர். இவர்களின் அ ன் பு அழைப்பின்பேரில் அங்கு சென்று 'அம்பிகையைச் சரணடைந்தால் அதிகவரம் பெறலாம்' என்ற பொருளில் பேசினேன். m
அன்பர்கள், நண்பர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பை இங்கே திருவருள் கூட்டிவைத்தது. பூசை செய்யும் அத்


Page 44

シgEuコ」E* シ "コョミシ *Hr* 歸n官* * "白g mm真w總寬 **4m 44mé唱nu"# * 白屬 qimansgrē sogn Lae ggosoɛ ɖɛɛ sɑɑ ɑs loq'ae. Nonsores
- 다TT 「 「 「 「 「- 轟*
|-|-|-

Page 45

தணர் புலமை மிக்கவர். அவருடைய பூசை ஒழுங்கும் என் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இவ்வாலயத்தில் 05-06-1987, 09-06-1987 ஆகிய இரு தினங்களிலும் முறையே " "திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்', 'முருக நாமம்’ என்ற பொருள்களில் உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பக்தர்கள் ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது.
09-06-1987 வைகாசி விசாகத்தன்று இவ்வாலய அறங் காவலர்கள் எனக்குப் பொற்பதக்கமும் பொன்னடையும் பூமாலையும் சூட்டிக் கெளரவித்தனர். இப்பாராட்டு விழா வில் திரு. அழகப்பச்செட்டியார், திரு. ஞானசூரியன், திரு. இரத்தினசிங்கம் போன்ற இலண்டன்வாழ் சைவப் பிரமுகர் கள் வாழ்த்துரைகள் வழங்கினர். இப்புகழ்மாலைகள் அனைத் தையும் எம்பெருமாட்டி துர்க்கையின் திருவடிகளில் சமர்ப் பித்துக்கொண்டு இல்லத்துக்குத் திரும்பினுேம். அப்பொழுது நேரம் இரவு பதினெரு மணி. இடைவழியில் நாம் சென்ற வண்டி பழுதடைந்து நின்றுவிட்டது. செய்வகை தெரி யாத தர்மசங்கட நிலை ஏற்பட்டது. தொலைபேசி வாயிலா கத் தொடர்புகொள்ள 10p பணம் தேவைப்பட்டது. ஆணுல் அந்த நேரத்தில் பெரிய நாணயம் இருந்ததே தவிரப் 10p இல்லாததால் அவலப்பட்டு நின்ருேம். ஒரு நாற்சந்திக்கு வந்தால் ராக்ஸி (Taxi) எடுக்கலாம். எப்படி வருவது என்று நாம் மூவரும் ஏங்கிச் சாலை ஒரத்தில் நின்ருேம்.
இலண்டன் வீதிகளில் ஒடும் வாகனங்கள் நேராக விரைந்து செல்வன, குறிக்கப்பட்ட இடங்கள் தவிர மற் றைய இடங்களில் நிறுத்துவதுமில்லை; நிறுத்தப்படுவது மில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் பெரும் அபாயங்கள் மட்டு மல்ல; திருட்டுத் தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடும். இவை நிகழ்ந்தாலும் இதில் வெள்ளையர்கள் தலையிடுவதில்லை. ஆணுல் திருடுபவர்களும் அவர்களல்லர். அவர்கள் தங்கள் தங்கள் காரியங்களிலேயே புலன் செலுத்துகின்றவர்கள்.

Page 46
34
'தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு’ என்ற பொய்யாமொழிக்கு இலக்கியமாக அவர்கள் வாழ் வது என் நெஞ்சைத் தொட்டது.
f அகதிக்கு ஆகாயமே துணை; கடவுளை நம்பினேர் கை விடப்படார் என்ற ஆப்தர் வாக்கியங்கள் பொய்யானவை யல்ல. நாம் கலங்கிநின்ற சமயம் தெய்வத்துணையாக ஒரு வாகனம் வந்து நின்றது. அதனைச் செலுத்தி வந்தவர் ஒரு வடஇந்தியப் பெருமகன்.
இவர் தனது பெயர் பட்டேல் என்று கூறித் தனது வண்டியில் எங்களை அமரச்செய்து எங்களிடத்திற்கு அழைத் துச் சென்ருர், பழுதடைந்த இடத்திலேயே எங்கள் வண் டியை நிறுத்திவிட்டு வந்தோம். இறையருளைப் போற்றி விட்டு அவர் காலத்தினல் செய்த நன்றியையும், செய் யாமற் செய்த உதவியையும் பாராட்டி நன்ஜி கூறினுேம்.
அப்பொழுது அவர் ** உங்கள் தேசிய உடைகளைக் கண்டதும் நீங்கள் ஆலயவழிபாடு செய்துகொண்டு வரு கின்ற இந்துக்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். நானும் மகாலக்ஷ்மி உபாசனை செய்கின்றவன்” என்று முகமலர்ச்சி யோடு இனிய சொற்களை வழங்கி விடைபெற்றுச் சென்றர்.
'தன்புகழ் உரைக்க வெள்கல் தலைமக்களின் தலையாய பண்பு" என்ற இந்த உண்மை நிகழ்ச்சி இன்பத்தை நல் கியது. மேலும் உண்மையிலே அலுவலகத்தையும் ஆண்ட வன் சந்நிதானத்தையும் நடை உடைகளில் வேறுபடுத்தி, அததற்குரிய பெருமையை நிலைபெறச் செய்யவேண்டும் என்பதை இவர் கூற்றிலிருந்து புரிந்துகொண்டோம்.
நாளேடுகள் பதினேழு
06-06-1987 சனிக்கிழமை, இன்றைய எனது தங்கு மிடம் இதுவரை நானிருந்த பகுதிக்கு முற்றிலும் வேறு


Page 47


Page 48

--. 35 -سس
பட்ட ஒரு பகுதியாகும். அன்பர் செல்லத்துரை அவர் களின் இளைய மகள் றஞ்சி, மருமகன் மோகன் என்பவர் கள் என்னை இலண்டனிலுள்ள வெம்பிளி கடை வீதிக்கு அழைத்துச் சென்ருர்கள். இப்பகுதியில் நான் கண்ட சூழ் நிலை வட இந்தியச் சூழலை ஒத்திருந்தது. வட இந்தியா வில் நான் கண்ட் அனுபவம் இங்கும் காணப்பட்டது. வட இந்தியாவிலுள்ள குஜராத் முதலிய இடங்களிற் போன்று முக்காடிட்ட பெண்களின் பண்பாட்டை அவதா னித்தேன். மூக்கிலே மூக்குத்தி; காலிலே சங்கிலி, கை நிறைய வளையல்; பிஜாமா உடுப்பு: அணிந்திருந்தனர். இக்கோலம் தவிர ஐம்பது வீதத்தினர் சேலை சட்டையுடன் காணப்பட்டனர்.
இங்குள்ள கடைவீதிகள் எங்கும் இந்திய மரக்கறி, பெணுறஸ் , காஞ்சிபுரம் சேலைகள்; வட இந்திய மிட் டாய்க் கடைகள் காணப்பட்டன. ஒரே கலகலப்புத்தான் நாம் சென்ற வண்டியை அரைமைல் தூரம் சென்று நிறுத்தினுேம். அத்தனை வாகன நெருக்கடி.
என்னை அழைத்துவந்தவர்கள் தங்களுக்கும் எனக்கு மாகத் தேவையான சில பொருள்களைக் கொள்வனவு செய்தனர். பின்னர் வீடு திரும்பினுேம்.
அன்று இரவு திருவாளர் மோகன் அவர்களுடைய இல்லத்தில் அவர்களின் பெற்றேர், புதுமணப்பெண் றஞ்சி ஆகியவர்களோடு தங்குகின்ற வாய்ப்புக் கிடைத்தது. சறே என்ற இடத்தைச் சேர்ந்த இவர்கள் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் விளிசிட்டிப் பண்டிதர் கதிரிப்பிள்ளை அவர்களின் மகன் ஜெகதீஸ்வரன் என்பவருடைய இல்லம் அமைந்திருந்தது. இவர் எனது வருகையை அறிந்தவுடன் தனது இல்லத்துக்கு இரவுணவு வழங்குவதற்காக அன்பு டன் அழைத்திருந்தார். தமிழ்நாட்டுப் பாணியில் உணவு களைப் பக்குவம் செய்வதும் பரிமாறுவதும் இவர்களின் வழக்கம் என்பதை நான் நேரில் கண்டுகொண்டேன்.

Page 49
۔۔۔۔۔ 36 سحصہ
இவர்கள் சுத்த சைவ போசனத்துக்குரியவர்கள். அதற் கேற்ப இட்லி, சட்னி, வடை ஆகிய உணவுகளை எமக்கு வழங்கி மகிழ்ந்தனர். இவ்வில்லத்திலே நான் கண்ட ஒரு சிறப்பு தமிழ் மொழியில் மாத்திரம் பேசி உறவாடும் ஒரு அற்புதமாகும். அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் தமிழ் உரை நிகழ்த்தியும் திருமுறை பாடியும் எம்மை மகிழ்வித்தனர்.
நாளேடுகள்: பதினெட்டு
07-06-1987 ஞாயிற்றுக்கிழமை, ஞானனந்த சமாஜத்தை, தமது உயிரினும், மேலாகக் கட்டிக் காக்கும் ஒரு குடும்பம் தான் திரு. ரகுநாதன் குடும்பம். இந்தக் குடும்பம் குரு
பக்தியிலும் விருந்தோம்பலிலும் தன்னிகரற்றது. எதற் கெடுத்தாலும் ' ராதே கிருஷ்ணு' என்ற நாமம் இவர்கள் வாயில் ஒலித்துக்கொண்டிருக்கும். என்னை இன்றையதினம் தங்கள் இல்லத்துக்கு மதிய உணவுக்கு அழைத்திருந் தனர். 'நாலு விதத்தில் அறுசுவைத் திறத்தினில் " மதிய உணவு அமைந்திருந்தது. அன்பர்கள், நண்பர்கள் அவ் வுணவில் ஐம்பது பேரளவில் கலந்துகொண்டனர். அன்று மாலையும் முன்னைநாள் இலங்கை பிரிட்டிஷ் தூதுவர் திரு. மூர்த்தி வீட்டில் தேநீர் விருந்துபசாரம் கிடைத்தது. அன் றைய நாள் வயிற்றுக்கு இதமான உணவும் மனதுக்கு இதமான உபசரிப்பும் அமையக் கழிந்தது.
இதே இடத்தின் அணித்தாகவே கிங்ஸ்ரன் (Kingston) என்னும் இடம் விளங்குகிறது. இங்கு உல்லாசப் பயணி 56ir geplbJ Gör. Gas Till (Hampton Court), egy 5307 9G55 பூங்காவனங்கள் ஆகியவற்றைப் பார்வையிடச் செல்வது. வழக்கம். திருவாளர் மோகன் என்பவர் என்னையும் அந்த் இடத்துக்கு அழைத்துச்சென்று பார்வையிட வைத்தார். இவர் ஒரு கணக்காளர். ஆனல் எனக்காக அன்றைய நாள் ஒய்வெடுத்துக்கொண்டு அழைத்துச் சென்ருர்


Page 50

iso-osoɛɛ ŋmaeosoɛŋ yirmų glaenor's stori so (高5m.5%仁星r획g ....T*C#F TT「Tur.,有写了匾

Page 51

-- 37 س۔
அடக்கமும் நிதானமுமுடைய இவர் தனது தாயை எத்துணை அன்போடு அழைத்துச் செல்வாரோ அத்துணைப் பரிவோடு என்னையும் அழைத்துச்சென்று ஒவ்வொரு வர s0ாற்றுக் காட்சியையும் நல்லபடி காணவைத்தார்.
நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் படித்த பிரித் தானிய வரலாற்றுக் காட்சிகளில் எட்டாவது ஹென்றி முதலான பிரித்தானிய அரசர்களின் சிலை ரூபங்களையும், ஆட்சிச் சின்னங்களையும் நேரில் கண்டு நினைவுகூர்ந்தேன். பிரித்தானியர் இயற்கை வனப்பில் மட்டுமல்ல, செயற்கை வனப்புகளிலும் ஆர்வம் கொண்டவர்கள். அங்கு காணப் பட்ட அழகான பூங்காக்களும், துள்ளிக் குதித்தோடும் மானினங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. இன்பங்கள் பலவிதம். எல்லாவித இன்பங்களையும் அங்கு அனுபவிக்கக்கூடிய விதமாக இருந்தமையினுல் அந்த நாட் டைப் போகபூமி என்று அழைப்பதில் வியப்பில்லை, அதன் பின் நிறைந்த் பூரிப்புடன் இரவு ஒன்பது மணியளவில் இலண்டனில் நான் தங்கிய இருப்பிடமாகிய இல்வேட் இல் லத்துக்குச் சென்ருேம்.
h− நாளேடுகள்: பத்தொன்பது
10-06-1987 புதன்கிழமை, இன்றைய தினம் இலண்டன் சைவமுன்னேற்றச் சங்கத் தலைவர் வைத்தியகலாநிதி உயர் திரு. பாலசேகரம் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தேன். சிங்கப்பூரிலிருந்து இலண்டனுக்கு வந்து உயர்கல்வி பயில் கின்ற சைவசீலர்களும், பலகாலம் என்னுடன் தொடர் புள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிலரும் என்ன்ைச் சந் தித்து இனிய பாங்குடன் அளவளாவி மகிழ்ச்சியில் திணற வைத்தனர்.
தேமதுரத் தமிழோசை கேட்டு இன்புற நம் மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்ருர்கள் என்பதை இச்சந்திப்பு எடுத்துக்காட்டுவதில் மிகையொன்றுமில்லை. 'தேமதுரத்

Page 52
- 38
தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண் டும்" என்ற பாரதியாரின் பொன்மொழி எவ்வளவு தீர்க்க தரிசனமானது?
நாளேடுகள்: இருபது
11-06-1987 வியாழக்கிழமை, நான் இலண்டனில் தங்கியிருந்த குறுகிய காலத்தில் அங்கு நிகழ்ந்த பாராளு மன்றத் தேர்தலையும் நேரில் காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றைய தினத்திலேதான் தேர்தல் எவ்வித ஆரவாரமும் சந்தடியுமின்றி அமைதியாக நடந்தது. தேர் தற்பிரசாரங்களைத் தொலைக்காட்சியிலும் வானெலியிலும் பார்க்கவும் கேட்கவும் கூடியதாக இருந்தது. வாக்குச் சீட்டு அளிப்பதற்குரிய எல்லாப் பிரஜைகளும் தங்கள் உரிமையை இழக்காது வாக்களித்தனர். தொண்ணுாறு வயதுக்கு மேலான தளர்ந்தவர்கள்கூடத் தள்ளாடித் தள் ளாடி வந்து வாக்களித்த காட்சி நாட்டின் சுதந்திரத்தி லும் தனி உரிமையிலும் தங்கள் பங்களிப்பை அளித்தே தீரவேண்டுமென்ற அவர்களின் அபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது.
ஒழுங்கான முறையில் வாக்களிப்பு முடிந்ததும் அன் றிரவே தேர்தல் முடிவும் வெளியாகியது. திருமதி தட்சர் அம்மையாரே பிரதமர் என்ற செய்தியும் கிடைத்தது. கட்சிகள் வேறுபட்டிருந்தாலும் இம்முடிவு வெளியான போது எல்லா மக்களின் மனதிலும் வேறுபாட்டுணர்ச்சி யற்ற ஒரு நிதான நிலை நிலவியதை அவதானிக்க முடிந் தது. என்ருலும் குறை கண்டவிடத்து எந்தப் பெரியவரை யும் பகிரங்கமாகக் கண்டிக்கும் பேச்சுச் சுதந்திரம், எழுத் துச் சுதந்திரம் அந்த நாட்டில் இருப்பது மிகவும் போற்று தற்குரியது. அரச தரப்பினரைக் கண்டித்துப் பகிரங்கமாகப் பேசுபவர்க்கும் பாதிப்பு ஏற்படாமல் அரச தரப்புப் பொலீஸ் காவல் புரிவது அவர்கள் தங்கள் நாட்டுச் சுதந்


Page 53

는urTrww획rT的wr grmaggiog hefurios lae ɖe ŋsɛn ŋoo ŋoooof¡, saeo solaetho , soos
−±

Page 54

---- 39 س--
திரத்தை எவ்வாறு போற்றிப் பேணுகிறர்கள் என்பதையே காட்டுகின்றது.
பொதுவாக பாரம்பரியமாகவே ஆங்கிலேயர் பாராட் டுக்குரியவர்கள் என்ற பெருமை உண்மையில் அங்கு நிலை பெறுவதை நான் உணரமுடிந்தது.
இன்றைய இரவுணவு சொலிசிற்றர் சிதம்பரப்பிள்ளை வீட்டில் பரிமாறப்பட்டது. பாலப்பம், வெள்ளையப்பம் , தோசை என்றெல்லாம் தயார்பண்ணி என்னையும் என்னை அழைத்துச் சென்றவர்களையும் மகிழ்வித்தனர். பருத்தித் துறைப் பனங்கட்டி மற்றும் மாம்பழம் ஆகியவை அனைத் தும் கிடைத்தன.
நான் தாய்நாட்டிலிருந்து வேற்று நாட்டிலிருந்தா லும் அங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் உபசாரங்களும் தாய்மொழியும் உண்மையில் நான் தாய்நாட்டில் இருப் பதுபோலவே அமைந்திருந்தது.
நாளேடுகள் இருபத்தொன்று
12-06-1987 வெள்ளிக்கிழமை, இன்றைய தினம் திருஞான் சம்பந்தர் சுவாமிகளின் குருபூசைத் திருநாள். இந்நன்னுளை உயர்வாசல் குன்று முருகன் கோயிலில் பயபக்தியுடன் கொண்டாடினர்கள். இவ்விழாவில் 'நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்' என்ற தலைப்பில் என்னுல் உரை நிகழ்த்தப் பட்டது. பெருமளவில் சைவப் பெருமக்கள் கூடியிருந்து அமைதியாகக் கேட்டுப் பேறு பெற்றனர்.
மறுநாளும் * புகலியர்கோன் ? என்ற தலைப்பில் உலகம் உய்ய அவதாரம் செய்த ஞானசம்பந்தப் பெருமானின் திரு வாக்குகளின் திறம் எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தினேன். இவ்வுரை நிகழ்ச்சியை இலண்டன் சைவ முன்னேற்றச் சங் கத்தினர் ஒழுங்கு செய்தனர். இலண்டனிலே நால்வர்

Page 55
-- 40 سس
குருபூசை, நாவலர் குருபூசை ஆகியனவற்றை ஒழுங்காகக் கொண்டாடும் ஒரேஒரு சங்கம் இதுவாகும்.
சைவப் பெருமக்கள் எங்கு எப்படி வாழ்ந்தாலும் தங் கள் சைவ பாரம்பரியங்களை வழுவாது போற்றிப் பேணு வது சைவ உலகிற்கே பெருமை தரக்கூடியதொன்ருகும். இச்சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா 1987 ஆகஸ்டில் வெகுகோலாகலமாக நடைபெறுவதற்கு ஒழுங்கு கள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அறிந்தேன்.
குருபூசையையொட்டிப் போட்டித் தேர்வுகள் நடை பெற்றுப் பரிசில்கள் வழங்கும் பேறு எனக்குக் கிடைத்தது.
பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஆண் பெண் சிறுவர்கள் பேச்சு, பாட்டுக்களிலும், சமயோசித விஞ விடைகளிலும் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்றனர்.
குருபூசை முடிவில் எங்கள் நாட்டு வழக்கம்போல் எல்லாருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. , ,
எங்கள் யாழ்ப்பாணச் சைவமரபை ஒட்டியே இங்கும் பன்னிரு திருமுறைகளும் ஒதப்பட்டதும் நால்வர் திருவுரு வப் படங்கள் அலங்கரிக்கப்பட்டு முறைப்படி பூசைகள் நிகழ்ந்ததும் போற்றுதற்குரியது.
அன்றிரவு சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் செல்வ ராசா குடும்பத்தவர் அழைப்பை ஏற்று, கொறைடன் என்ற இடத்தில் தங்கினேன். மறுநாள் காலை அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த கூட்டு வழிபாட்டிலும் கலந்துகொண்டு மீண்டேன்.
நாளேடுகள் : இருபத்திரண்டு
14-06-1987 ஞாயிற்றுக்கிழமை, உலகாண்ட கோநகர மாகிய இலண்டனில் ஒரு தமிழ்ப் பாடசாலையைத் தரிசிக்


Page 56

wf–! 马* t불 s院 1
I :
·
■ *
唱 |- |-또 『』 院 여 ¡ | si 』 七[ 唱
* 同哑
『체 * 释 |- | |- |- |- 与 * 확r TITI ko
』國道 }} Įs 韃 Ĥ | 1후 嘎}* sss
■
sẽ w력湄
! 1 ss. |-
sae
匈

Page 57

حس--س- 41 س
கும் பெரும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. கிழக்கு இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்தேன். தமிழ்ப் பாடசாலை அதிபர் திரு. வீர சிங்கம் அவர்களும், திருமதி வீரசிங்கம் அம்மையாரும், சங் கத் தலைவர் திரு. தம்பிராசா அவர்களும் என்னை வர வேற்றனர். தமிழ்த்திருநாடு தன்னில் நிற்பதுபோன்ற ஒரு உணர்ச்சியில் லயித்து நின்றேன்.
* தாய்மொழி ? என்ற தலைப்பில் சிறியதோர் உரை நிகழ்த்தினேன். எண்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர் , கள் கூடியிருந்தனர். திருக்குறள் முதலிய நீதி நூல்களில் அவர்கள் தாம் பெற்றிருந்த பயிற்சியை எடுத்துக்காட் டியது பெருமகிழ்ச்சியைத் தந்தது. இனிய தமிழ்ப் பாவினுல் வரவேற்பளித்தனர் சிறுவர் சிறுமியர். விழா முடிவில் திரு. தம்பிராசா அவர்களது இல்லத்தில் இனிய மதிய உணவு வழங்கப்பட்டது. முதலில் செவிக்குணவு வழங்கப்பட்டது. பின்னர்சிறிது வயிற்றுக்கும் ஈயப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் இவ்விருந்து வைபவத் தில் பங்குபற்றினர். ஆங்கிலவாணி கோலாகலமாகக் கொலுவிருக்கும் இலண்டனில் தமிழ்த்தாயின் இன்னுேசை செவிக்குத் தேனென இனித்தது.
முக்கிய குறிப்பு
இவ்வைபவத்தில் தலைமைதாங்கிய சைவ நற்முெண் டர் தமிழ் அபிமான அன்பர்; எல்லார்க்கும் இனியவர் திருவாளர் தம்பிராசா அவர்கள் 03-08-1987 திங்கட் கிழமை சிவபதமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந் தேன். அன்னரைப் பற்றிய இரங்கலுரையை ஈழநாடு " * 'முரசொலி" ஆகிய பத்திரிகைகளில் எழுதி எனது நன் றிக்கடனுக வெளியிட்டு என் கண்ணிர் அஞ்சலியையும் பூசலுத்தினேன்.
15-06-1987 தொடக்க்ம் 18-06-1987 வரையுள்ள நான்கு தினங்களையும் ஒய்வு நாளாகவே கருதினேன். இத்
6

Page 58
ー42ー
தினங்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த சில அன்பர்களின் அழைப்பின் பேரில் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று பிரார்த்தனைகள் நடாத்தி அவரவர் குடும்ப வழிபாடுகளி லும் கலந்துகொண்டேன். -
நாளேடுகள்: இருபத்துமூன்று
19-06-1987 வெள்ளிக்கிழமை. உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்துக்கு அடிக்கடி செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது. அன்பர்கள் பலர் என்னைச் சந்தித்துத் திருவாசகம் பற்றித் தெளிவான விளக்கங்களுடன் நல்லுரை நிகழ்த்தவேண்டும் என்று விரும்பிக் கேட்டனர். V−
தொல்லை இரும்பிறவிச் சூழும் தழை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தமாக்கும் இனிய தேன் திருவாசகம், தேன் தானும் கெடாது தன்னைச் சேர்ந்த பொருட்களையும் கெடுக்காது காப்பதுபோலத் திருவாசகமும் தானும் அழி யாது தன்னை ஒதுவாரையும் சிவகதியில் சேர்க்கும் பெருமை வாய்ந்தது. ... "
ஊழிக்கால முடிவில் சிவன் தனித்திருக்கும்பொழுது
தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக இத்திருவாச
கத்தை மாணிக்கவாசகர் சொல்ல எழுதிக்கொண்டார் என்ருல் இதன் பெருமைக்கு வேறுசான்று வேண்டுமோ?
திருவாசகத்தின் பொருள் என்ன என்று தில்லைவாழ் அந்தணர் மணிவாசகப்பெருமானைக் கேட்டபொழுது அவர் அவர்களை அழைத்துச் சென்று நடராசப்பெருமானைச் சுட்டிக்காட்டி 'அவரே திருவாசகத்தின் பொருள்' எனப் பகர்ந்து சிவசோதியில் ஐக்கியமானர் என்பது வரலாறு.
இரும்புதரு மனத்தையும் பாகாய் உருக்கும் பான்மை யது, அழுதுஅழுது அண்ணலார் அடியை அடைந்த மணி

வாசகப்பெருமானின் திருவாசகம் ஆகும். திருவாசகத் துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பர். மனத்தை ஈர்த்து ஈர்த்துப் பெருமான் மலரடியில் தாழ வைக்கும் திருவாசகத்தை ஒருநாள் ஒதினலே விழிநீர் பெருகும்; அகம் குழையும்; அன்புருகும்.
இத்திருவாசக ச் செழும்பாடல்கள் சிலவற்றின் கொழும் சாற்றைப் பிழிந்து நறும் தேனுக நல்கியபோது பெருந் தொகையான பக்தர்கள் ஊன் உருகி, உள்ளம் ஒன்றித் தொல்லை வினை அகன்ற நிலையில் இன்பம் பெற்றனர்.
சிவபுராணத்தில் மணிவாசகப்பெருமானே 'முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான்’ என்று பாடியரு ளியதும் இங்கு நினைக்கற்பாலது.
அடுத்தநாள் 20-06-1987 அன்று ஈளிங் என்ற இடத் தில் ஞானனந்த சமாஜ வழிபாடு திருவாளர் நித்தியா னந்தன் வீட்டில் நடைபெற்றது. 'மணிவாசகருக்குக் கிடைத்த சற்குருதரிசனம்’ என்ற பொருளில் திருவாச கப் பாடல்களில் ஒருசிலவற்றைக் காட்டிப் பேசினேன். அந்த இல்லமே ஞானனந்தமயமாகக் காட்சியளித்தது. பதினெட்டு வயதுக்கும் இருபத்தைந்து வயதுக்குமிடைப் பட்ட இளைஞர்கள் பலர் இவ்விழாவில் பங்குகொண்டது அவர்களின் சமய ஈடுபாட்டை நன்கு எடுத்துக்காட்டியது.
நாளேடுகள்: இருபத்துநான்கு
21-06-1987 ஞாயிற்றுக்கிழமை, இலண்டனில் தென் கிழக்காக அமைந்த "கென்ற்’ என்ற இடத்தில் பணிபுரி பவர் வைத்திய கலாநிதி செல்லப்பா அவர்கள். இறை அன் பும், நல்லார் உறவும், ஒழுக்கசீலமும் வாய்ந்த இவரின் அன்பழைப்புக்கிணங்க அங்கு சென்றேன். பெரு மகிழ்ச்சி யோடு வரவேற்ற அவர்களின் இல்லத்தில் கூட்டுப்பிரார்த் தனையுடன் மதிய உணவும் பரிமாறப்பட்டது. நான் தங்கி

Page 59
- 44 -
யிருந்த மனையிலிருந்து ஏறக்குறைய நூறுமைல் தூரத்தில் இவரது இல்லம் இனிதுற அமைந்திருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.
அன்று மாலை ஆனந்தபரவசமான அமைதிச் சூழ்நிலை யில் அமைந்த வைத்தியகலாநிதி பசுபதிராசா அவர்களின் இல்லத்தில் நிகழ்ந்த சமய நிகழ்ச்சிகளில் சொல்விருந் தாற்றி நல்விருந்து பெற்றேன். இவர் யாழ். வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரமுகராவர். பசும்மரச்சோலைகள், பைம்புற்றரைகளின் மத்தியில் அழகோ வியமாக விளங்கும் இவரது இல்லம் "மோக்ஷம்" (Heaven) என்ற பெயரில் அமைந்திருப்பது இனிய நினைவுகளுக்கு இன்பமூட்டுகின்றது.
எனது சொல்விருந்து பூரீசத்தியசாயிபாபா மண்டபத் தில் இடம்பெற்றது. இவரின் தலைமையில் ஐம்பதுக்கு மேற்பட்ட வைத்தியகலாநிதிகள் இச்சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். பக்திபரவசமான சூழ்நிலையில் 'சிவபுராணம்’, ‘தெய்வீகநெறி' என்னும் தலைப்புகளில் உரை நிகழ்த்தினேன்.
அன்றைய மாலை மனத்தொல்லை அகற்றிய பேரானந்த வேளையாக இருந்தது.
நாளேடுகள்: இருபத்தைந்து
22-06-1987 திங்கட்கிழமை, இன்றுதான் உயர்வாசற் குன்று முருகன் கோயிலில் உற்சவ ஆரம்பம். பன்னிரண்டு நாள் திருவிழா, தினமும் அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, வீதியுலா, சொற்பொழிவு, கூட்டுவழிபாடு, பிரசாதம் வழங்கல் அனைத்தும் ஒழுங்காகவும் பயபக்தியுடனும் நடை பெறும். இரவு 8.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை எனது சொற்பொழிவு இடம்பெற்றது. சுவாமி வீதிவலம் வரும்போது அடியார்கள் எல்லோரும் தாளம் போட்டுப்


Page 60

głosios soo 『」ョg "ggg g電』『 ショE* シ 『シ『*上“モョd so-israelčj
ș }
sĩ

Page 61

- 45. --
1ஜனை செய்வார்கள். பெண்களும், ஆண்களும், இளைஞர் களும் மிக ஈடுபாட்டுடன் பஜனை செய்வர். வெள்ளைக் காரர், மொறிசியஸ்காரர் அதிகமாக இதனை உன்னிப் பாக நோக்கி நிற்பர். ஒவ்வொரு குடும்பத்தவர்களின் உபயமாகத் தினமும் திருவிழா இடம்பெறும். மத்தியானம் அன்னதானமும் இந்த நாட்களில் நடைபெறுவது வழக்கம். பன்னிரண்டாம் நாள் சங்காபிஷேகம், திருக்கல்யாணம், திருஊஞ்சல் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. எல்லாம் இன்பமயமே. .
எமது திருக்கோயில்களில் மஹோற்சவத்தின் பின் நிகழும் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறந்த ஓர் அம்ச மாகும். இறைவியாகிய அன்பும் இறைவனுகிய அறிவும் ஒன்றிணைவதால் தீங்குகள் அகலும்; இறைநாமம் நிறை யும்; வையகமும் துயர் நீங்கும். மன்னன் கோன்முறை சிறக்கும்; நான்மறை அறங்கள் ஓங்கும்; நற்றவம் வேள்வி மல்கும் என்ற உலகோபகாரமான மேன்மைகொள் கருத் தைக் கொண்டது இது.
நாளேடுகள்: இருபத்தாறு
27-06-1987 சனிக்கிழமை, இலண்டனுக்கு வடக்கே முன்னூறு மைல் தொலைவிலுள்ள 'பிளாக்பேண்' நகரத் துக்கு எனது பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய வைத்திய கலாநிதி இந்திரா சிவயோகம் அம்மையார் வருமாறு அன்பழைப்பு விடுத்திருந்தார். ஞானனந்தபக்தர் திரு. கனகசபை அவர்களும் பாரியாரும் இவ்வேட்டிலிருந்து மான்செஸ்ரர் விதிவழியாக என்னை அழைத்துச் சென்றனர். மூன்றரை மணி நேரத்தில் எங்கள் செலவு நிகழ்ந்தது.
குருஜி அவர்களின் பக்தை திருமதி இந்திரா குடும்பம் இனிய வரவேற்பை அளித்தது. அன்று மாலை ஞானனந்த பஜனையும்' எனது சொற்பொழிவும் நிகழ்ந்தன. யாழ்ப் பாணம், தெல்லிப்பழை ஆகிய இடங்களைச் சேர்ந்த பத்துக்

Page 62
குடும்பங்கள் இதில் கலந்துகொண்டார்கள். இராப்போசன மும் இனிய முறையில் நிகழ்ந்தது. பின்னர் அன்பர்கள் பலருடன் எமது நாட்டைப்பற்றியும், துர்க்கை அம்மன் கோயில்பற்றியும் அளவளாவிப் பேசினுேம்.
டாக்டர் இந்திரா தினமும் குருநாதருக்கு நைவேத்திய பூசை செய்து உணவுண்ணும் நியமம் பூண்டவர் என்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பண்பாடும் பக்தியும் ஒருங்கிணையப்பெற்ற இவ்வம்மையார் அமரர் உயர் நீதி மன்ற நீதிபதி பூரீஸ்கந்தராசா அவர்களின் திருமகளாவார். அன்றைய நாளில் இவை அனைத்தையும் நேரிற் கண்டு உளம் பூரித்து மறுநாள் இல்வேட் இல்லத்துக்குத் திரும்பி னேன்.


Page 63

-[]력, | 电TTu院事 : TT #闇 ****s. |wigmg |--

Page 64

6பிரியாவிடை நிகழ்ச்சி 28-06-1987 நாளேடுகள்: இருபத்தியேழு
இலண்டனில் இயங்கும் அனைத்துச் சைவமன்றங்களும் சேர்ந்து அடியேனுக்கு ஒரு பிரிவுபசாரவிழா வைபவம்
நடாத்தினர். உயர்வாசற் குன்று முருகன் கோயில், பிம்பிள்டன் பிள்ளையார் கோயில், ஈஸ்ற்காம் முருகன் கோயில், இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கம்,
பூரீ ஞானனந்த சமாஜம், மேற்கு இலண்டன் தமிழ்ச் சங்கம், கிழக்கு இலண்டன் தமிழ்ச் சங்கம், பிரித்தானிய இந்து ஆலய தர்மபரிபாலனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் வருகைதந்து உரையாற்றினர். பொதுமக்கள் பலர் கூடித் தமது மகிழ்ச்சியையும் பிரிவுபசாரத்தையும் தெரிவித் தனர். உயர்வாசற் குன்று 7ஆம் திருவிழா உபயகாரர் திரு. தெய்வேந்திரம், தர்மேந்திரம் குடும்பத்தவர்கள் ஒன்று சேர்ந்து பொன்னடை போர்த்தனர். ஆலய பிரதம குரு பூரீ சச்சிதானந்தர் குடும்பம் மலர்மாலை சூட்டிப் பட்டாடை பரிசளித்தனர். உயர்திரு. சோ. சபாபதிப் பிள்ளை அவர்களின் மனைவி மகேஸ்வரி அம்மையார் பொற் பதக்கம் சூட்டினர். 'சைவத்தமிழ்ப் பூஷணம்’ என்னும் பட்டம் இப்பதக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. ஏறக் குறைய 12,000 ரூபா பெறுமதியான இப்பதக்கத்தை உயர்வாசற் குன்று முருகன் கோயிலாரே அன்பளிப்புச் செய்தனர். அன்பர்கள் பலர் தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் முகமாகப் பல பரிசில்களை அளித்தனர்.

Page 65
- 48
இப்பரிசில் பலவற்றில் அவற்றை அன்போடு அளித் தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஒரு கடித உறையில் எந்த விபரமும் பொறிக்கப்படவில்லை. அந்த உறையில் ரூபா 5000/- பெறுமதியான காசோலை இருந்தது. அங்கே " " கொடுப்பவனும் ஈசன், பெறுபவனும் ஈசன்’’ என அதனை அளித்த பெருமகனர் குறிப்பிட்டிருந்தார்.
அவன் தந்த ஆக்கம்தானே இவை அனைத்தும் என்ற உணர்வு மேலோங்கியது. இதனை ஒவ்வொரு கணமும் மறவாமல் நினைக்கும் புண்ணியத்தையும் அந்தத் த்ேவி எனக்கு நல்கிவிட்டாள். அது ஒன்றே போதும்.
இலண்டனுக்குச் சென்ற கருமம் இனிது நிறைவேறி யது. பிறந்த மண்ணிலே ஏற்பட்ட அவலங்கள், வடம ராட்சிப் பாதிப்பு, தெல்லிப்பழையின் எல்லையை இராணு வம் தாண்டிவிட்டது என்ற செய்திகள், மாவிட்டபுரம் ஆலய மஹோற்சவம் நடைபெறவில்லை என்ற செய்தி அனைத்தும் என் உள்ளத்தைப் பெரிதும் உறுத்தியது.
யாழ்ப்பாணம் வந்துவிடவேண்டும் என்ற ஒரே ஆவல் மேலோங்கியது. இதனுல் விமானச் சீட்டை 04-07-1987 சனிக்கிழமைக்குப் பதிவு நிச்சயம் செய்தேன். அன்பர்கள் பலவித பிரிவுபசாரங்களை ஆங்காங்கே நிகழ்த்தினர். உள் ளத்தாலும் உரையாலும் நன்றி கூறினேன். அம்பாளை வணங்கி அனைவருடைய ஷேமத்துக்காகவும் அருச்சனை செய்து அனுப்புவேன் என்று வாக்குறுதியளித்தேன்."
அன்றைய தினம் பிரிட்டிஷ் Airwayக விமானம். இரவு மணி 8.50க்கு. என்னுடன் பல குடும்பத்தவர்கள் கூடிப் பயணமேற்ற வந்தனர். ஹீத்று விமான நிலையம் சென்ற வுடன் உரிய ஒழுங்கின்படி பயண ஒழுங்குகளைச் செய்து கொண்டேன். W−
'அரோகரா’ ஒலியுடன் படப்பிடிப்புக்கள், வாழ்த்துக் கள், பூமாலைகளுடன் விமான நிலையத்தில் ஒரு பகுதி


Page 66

s

Page 67

مست۔ 49 صs .
காட்சியளித்தது. எனக்கு ஏற்பட்ட நன்றி மேலிட்ட உணர்ச்சியினுல் கண்ணீர் மல்க விடைபெற்றேன். உவப் பத் தலைக்கூடினேன், உள்ளப் பிரிந்தேன்,
ஒரு தமிழ்க் குடும்பம் என்னுடன் கொழும்பு வரும் பிரயாணிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தமை தெரிந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். இனிய பயணம், எதுவித தடங்கலுமின்றிப் பதிஞன்கு மணி நேரத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்தது விமானம்.
கட்டுநாயக்காவில் வழி அனுப்பியோரே வருகைக்கும் காத்துநின்று அழைத்துச் சென்றனர். கொள்ளுப்பிட்டி 19ஆம் இலக்க ** அல்பிறட் இடத்தை" அடைந்தேன். எனது நன்றிக்கும் பாராட்டுக்குமுரியோர் பலர் வந்து எனது இலண்டன் பயண ஒலிப்பதிவு நாடாக்கள், ஒளிக் காட்சி நாடா ஆகியவற்றைப் பெற்றுத் தாமும் அனைத்தை யும் அறிந்து பாராட்டினர்.
மறுநாளே (08-07-1987) யாழ்ப்பாணம் புறப்பட்டு என்னை ஆட்கொண்ட துர்க்காதேவியின் திருக்கோயிலை அடைந்தபோது ஐநூறுக்கு மேற்பட்ட அன்பர்கள் கோயில் முன்வீதி வாயிலில் நின்று வரவேற்றனர். அன்னபூரணிம ண்ட பம் கோலமிட்டு மாலைகட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரியதொருவரவேற்பு விழாவாகத் திகழ்ந்தது; வாழ்த்து மடலும் வழங்கப்பட்டது.
1987 ஏப்ரல் 18க்கு முன்னர் நான் செய்த பணி களைத் தொடர்ந்தும் ஆற்றும் புண்ணியம் மீண்டும் கிடைத்தது. அதுவே திருப்தி,
இலண்டன் வாழ் சைவத்தமிழ் மக்களில் ஒரு சிலர் பெருமனத்துடன் எமது ஆலயத்துக்கும் எம்மால் நிர்வகிக்கப் படும் மகளிர் இல்லத்துக்கும் நன்கொடைகளை என்னிடம் மனமுவந்து வழங்கினர் அப்பணத்தைச் செலவு செய்து
7

Page 68
ー50ー
கோயிலின் முன்வாயில் தென்புறமாக ஒரு அகதிகள் முகாமைத் தேவஸ்தானம் நிர்மாணித்தது. காலத்துக் கேற்ற ஒரு சிறந்த பணி இது என்பதை அனைவரும் பாராட்டிப் பேசுவதை அறியும் போது எமது மனம் குளிரு கிறது.
பின்ன நின்றென்னே பிறவி பெறுவது முன்னை நன்ருக முயல்தவம் செய்திலார் என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்ன நன்முகத் தமிழ் செய்யுமாறே. *
-திருமந்திரம்
女 ● 女

நினைவு அலைகள்
நான் இங்கிலாந்தில் ஏழு வாரங்கள் தங்கி இருந்தா லும் அது எனக்கு எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் தந்தன என்பதில் பெருமைப்படுகின்றேன். நேரில் கண்ட காட்சிகளும், உணர்ச்சிகளும் எழுத்தில் வடிக்க முடியாதன எனினும் எனக்கு ஏற்பட்ட நினைவு அலைகளை ஒரளவு வெளியிட விரும்புகின்றேன்.
மேலைநாடுகள் விஞ்ஞான வளர்ச்சியில் பெரும் சாதனை களை வியப்பூட்டும் வகையில் ஆக்கி உள்ளன. மனிதனின் பேராற்றல் மேலைநாடுகளில் மகோன்னத நிலையை வெளிப் படுத்துகின்றது. எத்தனை கோடி இன்பங்களை ஆண்டவன் படைத்தாலும் அதற்கு ஈடாக, அத்தனை கோ டி இன்பங் களையும் அறிவாற்றல் படைத்த மனிதன் ஆக்கியிருக்கின் முன் என்பதைக் காணக் காண வியப்பாக இருக்கின்றது.
இதனுல் மேலைநாடுகளைப் போகபூமி என்பதில் எவ்வித ஐயமுமில்லை. என்னை அழைத்த அன்பர்கள் அனைவரும் செய்த அன்பு வெள்ளத்தில் என்னையே இழத்த நான் அங்குள்ள கலைக்கடலிலும் கரைகாணுது வியப்பில் மூழ்கி

Page 69
unus 54. Hans
நின்றேன். விந்தைகள் வினேதம் புரிந்தாலும் என் சிந் தையை அவை ஊறுபடுத்தவில்லை. *ぐ
விஞ்ஞானத்தின் மிகப்பெரும் வளர்ச்சியை மேலைநாடு கண்டால் மெஞ்ஞானத்தின் அதி அற்புத மகிமை என்ப தில் நாம் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது.
மேலைநாட்டில் அறிவுக்கடல் அலைமோதுகின்றது எனி னும் நமது நாட்டில் அன்பு வெள்ளம் அணைகடந்து நிற் கிறது.
"தந்தையர் நாடென்றும் போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்ற உன்னத கருத்து மேலைநாடாகிய தந்தையர் நாட்டுக்கு மிகப் பொருந்தும், அதே வேளையில் தாய்நாடாகிய எமது நாட்டில் இன்பத்தேன் வந்து பெருகுகின்றது என்பதும் மிகப் பொருந்தும்.
* தந்தையர் நாடாகிய அறிவுலகமும் தாய் நாடாகிய அன்புலகமும் சிவசக்தியாக விளங்க வேண்டும் என்பதை உள்ளம் தெளிவுற்ற ஞானிகள் எடுத்துரைக்கின்றனர்.
நிலையற்ற உலகத்தில் அழியும் பொருள்களில் ஆக்கம் காணும் மேலைநாட்டு விஞ்ஞானக் கொள்கைகையைவிட அழியாத மெய்ப்பொருளைக் காணும் மெய்ஞ்ஞானமே பிறவிப்பயனை நிறைவேற்ற வல்லது என்பது எம்மவர் கொள்கை. பொருள்கள் தோன்றி அழிந்துபடுகின்றன என்பதால் உலகம் சுடுகாடு என்பதும் அச்சுடுகாட்டில் பூதம் சூழப் பொலிந்தாடுகின்றர் பரமசிவனுர் என்பதும் எங்கள் திருமுறைகள் தரும் செய்திகள்.
பஞ்ச பூதங்களின் காரியமே இவ்வுலகம். இவை காரண நிலைக்குச் செல்லும்பொழுது சூக்கும் பூதங்கள் ஆகின்றன. பரசிவத்தின் குறட்பூதங்களே இவை. இச்சூக்கும பூதங் களே கூடுதல், பிரிதல் என்ற நிலைகளில் தோற்றமும் மறைவும் அடைகின்றன என்பது ஞானிகளின் கொள்கை.

سیسیس 3 5 جسے
இல்லது தோன்றது. உள்ளது அழியாது என்ற சற் காரியவாதம் எம் சிந்தனைக்குரியது. பொருள்களாக உரு வம் பெற்றவை வடிவம் அழிந்தாலும் அவற்றின் தர்மம் அழிவதில்லை. அந்தத் தர்மங்களே சூக்கும நிலைபெற்ற குறட்பூதங்கள். இதனை எமது மெய்ஞ்ஞானிகள் உணர்ந்து பொறிகள் அடங்கிப் புலன்கள் ஒடுங்கிப் புனிதமடைந்து புனிதன் பொற்கழலை அடைகின்றர்கள். r
பரத்தை மறைக்கும் பார்முதற் பூதங்கள் மேலே நாட்டில் பெருஞ்சக்தியாக உருவெடுத்துப் பற்றுக்களை வார்க்கும் அழியும் பொருட்களை ஆக்கிக்கொண்டிருக்கின் றன; அழிக்கும் பொருட்களையும் குவித்துக்கொண்டிருக் கின்றன. இதனல் அங்கு இன்பமும் பயங்கரமும் குடி குடிகொண்டிருக்கின்றன.
கீழைநாட்டில், சிறப்பாக எமது பாரதநாட்டில் பார் முதற் பூதங்கள் பரத்தில் 'மறைந்து நிற்க அழியாப் பொருளை அடையத் தவநிலை மேற்கொள்ளப்படுகிறது. அது நிலைக்க வேத, ஆகம, புராண, இதிகாசங்களும், திருமறை, திருமுறை நூல்களும், ஆலயங்களும், விழாக் களும், நோன்புகளும் மெய்ஞ்ஞானத்தை விளக்கும் வகை யில் பெருகிக்கொண்டிருக்கின்றன. அன்புநெறி தழைக்கின் றது; ஆண்டவன் சேவடியில் நிற்கின்ருேம் என்ற உணர்ச்சி ஏற்படுகின்றது; பற்றுக்கள் தாமாகவே நீங்குகின்றன.
மருளைத் தரும் பொருட்பற்றிலும் அருளைத் தரும் மெய்ப்பொருட்பற்றே சிறந்தது. நாம் பெரும்பற்ருகக் கொள்ளவேண்டியது பெருமான்மீது வைக்கும் பற்றே. சிதம்பரநாதன் தாண்டவம் ஆடும் சிதம்பரத்துக்குப் பெரும் பற்றப்புலியூர் என்ற திருநாமம் இவ்வுண்மையை விளக்கு கின்றது.
மற்றுப் பற்றுக்களை ஒழிக்க வள்ளுவப் பெருமான் அருளிய கருத்தும் நினைவுகூரத் தக்கது. "பற்றுக பற்றற் முன் பற்றினை' என்று முதற்கண் கூறுகின்றர். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் பற்றற்ருன் அவனது பற்

Page 70
- 54 -
றினைப் பற்றுக என்பதால் இறைவன் கொண்ட். பற்று எது என்பது ஒரு வின. - எங்கும் நிறைந்த இறைவன் எல்லாப் பொருள்களோடும் பற்றியிருந்தாலும் அப்பொருள்களால் பற்றப்படாது வேழுப் விளங்குகின்றன். பொருள்களில் அழுந்தி அவற்ருல் அழுத் தப்படாது இருத்தலையே பற்றுக என்கிருர் வள்ளுவர். பற் றப்படாதிருக்கும் பற்றினைப் பற்றினுல் மற்றுப் பற்றுக்கள் தாமாகவே விலகும் என்பது வள்ளுவனுர் கருத்து.
இக்கருத்தின் ஒரு பாங்கை இலண்டன் மாநகரில் நான் ஊடாடிய அன்பர்களின் இல்லங்களில் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் அலுவலகங்களில் தங்கள் அலுவல் களையும் இல்லங்களில் அவற்றை மறந்து அமைதியாக வாழ்வதையும் காண என் உள்ளம் மகிழ்ந்தது.
புறக்காரியங்களைப் புறத்தேயும் அகக்காரியங்களை அகத் தேயும் பற்றி ஒழுகும் பெருநெறி பிடித்து ஒழுகினல் பேரானந்த நிலை பெருக்கெடுக்கும் என்பது பேருண்மை. ஞானம் விளையும் ஞான பூமியிலிருந்து விஞ்ஞானம் விளையும் விந்தை நாட்டிற்கு நான் வந்து கண்ட காட்சி களில் என் உள்ளம் தொண்டரொடு கூடிய ஒரு ஞானப் பூங்காவை அமைத்து இன்பம் கண்டுகொண்டது.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம். எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை என்ற ஞானக்குழந்தை யின் வேதத் தமிழ் அவர்கள் இல்லங்களில் நிரந்தரமாகக் குடிகொண்டிருந்தது. கண்ணில் நல்லஃதுறும் காட்சிகளில் கடவுளைக் கண்ணிலொற்றி ஆராதிக்கும் அருமைப் பண்பும் இந்த ஞானப்பூங்காவின் சிறப்பம்சமாகும்.
நான் தங்கியிருந்த இந்த ஞானப்பூங்காவில் சிவமணம் கமழும் ஞானமலர்களையே தூவினேன்; குடினேன்; நுகர்ந் தேன்; ஆனந்தநிலை அடைந்தேன்.
*"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேருென் றறியேன் பராபரமே"

பாட்டிக் கதைகளால் தமிழ்ப் பண்பை வளர்த்த பாரம்பரியம் அழிந்திடுமோ?
சீமைப் பயணத்தின் பசுமை நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிருர் சிவத்தமிழ்ச் செல்வி.
இலண்டனில் இலங்கைத் தமிழர் வாழ்கின்ற சீர் சிறப்பையும் அவர்களின் சைவத் தமிழ்ப் பற்றையும் அன் போடு வரவேற்று உபசரிக்கும் கண்ணியத்தையும் எண்ணி என் இதயம் பூரிக்கிறது.
இலண்டனிலுள்ள பிரித்தானிய இந்துக் கோயில் அற நிலையக் குழுவினரின் அழைப்பின்பேரில் அங்கு சென்று ஏழு வாரங்கள்வரை தங்கியிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட சமய, சமூக, இலக்கிய விழாக்களில் கலந்து சொற்பொழி வாற்றியதுடன் பல பாராட்டு விழாக்களில் பங்குபற்றிப் பொன்னடைகள் போர்த்தித் தங்கப் பதக்கங்கள் சூட்டிக் கெளரவிக்கப்பட்டு அண்மையில் நாடுதிரும்பிய சிவத் தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது சீமைப் பயணத்தின் பசுமை நினைவுகளை என்னேடு பகிர்ந்து கொள் ளும்போது மேற்கண்டவாறு மகிழ்ச்சி தெரிவித்தார்.

Page 71
-56 -
இதே மூச்சில் அவர் சொன்ன இன்னெரு சேதியைக் கேட்டபோது முன் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் இன்னுெரு வேதனையும் சேரத்தான் செய்தது. −
"இலண்டனில் வசிக்கும் தமிழாகளன் நடைமுறை களைப் பார்க்கும்போது இந்தியத் தமிழர் வீடுகளில் தமிழே பேசப்படுகின்ற அதே வேளையில் இலங்கைத் தமிழர் வீடு களில் தமிழ் வாடை சற்றுக் குறைவர்கவே வீசுகிறது. பாட்டியின் மடியிலிருந்து பல தமிழ்க் கதைகளைக் கேட்டு மகிழ்ந்த எமது பரம்பரைக்கு இதைக் காணும்போது வேதனையாகவேயுள்ளது. இளைய தலைமுறையின் இதயங் களில் பாட்டிக் கதைகளால் தமிழை - தமிழ்ப் பண்பை வளர்த்தெடுத்த எமது 'மரபு அழிந்துவிடுமோ என்ற அச்சம் என் அடிமனதில் எழுந்தது' என அவர் நியாய மான விசனத்துடன் சொன்னர்.
இங்குள்ள (இலண்டனில்) இந்துக் கோயில்களில் முழு
விடுமுறைத் தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகளும் அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெறுவ தாகவும் எம் நாட்டவர்களில் மிகப் பெரும்பாலானூேர் இத்தினங்களில் இவ்வாலயங்களில் திரண்டிருப்பதைத் தான் அவதானித்ததாகவும் கூறிய அவர் "அதிகம் படித்தவர் களுக்கு அங்கே வேலை கிடைப்பது அரிதென்றும் சாதாரண மான கல்வித் தகைமை உள்ளவர்களே அனேகமாகத் தொழில் பார்க்கிறர்கள்' என்றும் சொன்னர்.
'அளவான ஊதியம் கிடைக்கிறது. அதைக்கொண்டு அழகாக வாழ்ந்துவரும் எம்மவர்கள் பணத்தைச் சேமிக்க முடியாதுவிட்டாலும் மனமகிழ்வோடு வாழ்கிறர்கள். வ்யோதிபர்களுக்கான நிவாரண நிதியாகக் கணிசமான தொகை வழங்கப்படுவதால் தமது பெற்றேரையோ மிக நெருங்கிய் உறவினர்களையோ பராமரிப்பதுபற்றி அவர் கள் கவலைப்பட வேண்டியதில்லை. சுகாதார வசதிகள் இங்கே மிக அற்புதமானவையாக இருப்பதால் இங்கே இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது"

سے 57 بسی۔
**இங்கே யாரும் எதையும் பேசவும் எழுதவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதுடன் இந்த நாட்டுக்குள் எவரும் போதைப் பொருளைத் தவிர வேறு எந்தவொரு பொருளையும் எந்த நேரத்திலும் எவ்வளவு தொகையாக வும் கொண்டுசெல்வதற்குச் சுங்க இலாகா அனுமதி அளிக் கிறது"
‘ஹீத்றுா விமான நிலையத்திலிருந்து நிமிடத்துக்கொரு தடவை நேரம் தவருமல் நேர்த்தியுடன் விமானங்கள் பறந்துபோகும் வேகத்தையும் வீதிகளில் விபத்துக்களின்றி விரைந்து செல்லும் வாகனங்களின் ஒழுங்குகளையும் அவர் வியந்து பாராட்டியதிலிருந்து இங்குள்ள பிரயான அனு பவங்கள் பற்றி அவர் மனதில் கசியும் உணர்வுகளை மிக நன்ருக உணர முடிந்தது.
இலண்டனிலுள்ள விம்பிள்டன் பிள்ளையார் கோயி விலும், உயர்வாசற் குன்றிலுள்ள முருகன் கோயிலிலும், இலண்டன் ஞானனந்த சமாஜத்திலும், சைவ முன் னேற்றச் சங்கத்திலும் பல சமய இலக்கியச் சொற்பொழிவு களை ஆற்றியுள்ள சிவத்தமிழ்ச்செல்வி இலண்டனிலுள்ள இந்தியத் தமிழன்பர்களினுல் ஈஸ்ற்காம் முருகன் கோவிலி லும், இலங்கைத் தமிழன்பர்களினல் உயர்வாசற் குன்று முருகன் கோவிலிலும் பாராட்டு விழாக்கள் நடத்தித் தங் கப் பதக்கங்கள் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். இதுபற்றி மிகுந்த நன்றியும் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்த அவர் **இங்கு பல இன்னல்கள், இழப்புக்கள் மத்தியில் மிக வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தம்மால் இயன்றவரை தாராளமான உதவிகளை விரைவில் செய்வதாக இலண்டன் மாநகரில் வாழும் தமிழ் மக்க ளிடம் வாக்குறுதி பெற்றதும் எமது தெல்லியூர் பூரீ துர்க்காதேவி ஆலயத்தின் மகிமையை மேலைத்தேசமெங் கும் பரவச்செய்ததும் அங்குள்ள வீடுகளில் நாடோறும் பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடைபெறுவதற்கான வழி வகைகளை மேற்கொண்டதும் எனது இலண்டன் பயணத்

Page 72
سس۔ 58 سے
தால் ஏழு வாரங்களில் ஏற்பட்ட சில நல்ல திருப்பங் களாக அமைந்திருக்கின்றன என நான் நம்புகிறேன்" என் றும் அவர் உறுதியோடும் உற்சாகத்தோடும் சொன்னர்.
துர்க்காதுரந்தரியின் சொல் வன்மையும் சரி, செயல் வன்மையும் சரி எமக்குப் புதிதானதல்ல. ஆணுல் மேற் குறிப்பிட்ட ‘தமிழ் வறுமை தவழ்கின்ற இலண்டன் மாநகரில் இவரின் சொற்பொழிவுகள் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியாக இல்லாவிட்டாலும் ‘நல்ல மழையாகக் கொட்டியிருக்கும் என்பதில் மட்டும் ஐயமில்லை. இங்குள் ளோர் படும் இன்னல்களை - இனப்பிரச்சினையை மட்டுமே அறிந்து துடித்துக்கொண்டு வருத்தத்துடன் வாழ்ந்து வரு கின்ற அந்தக் கடல் கடந்த தமிழருக்கு அவர் ஆற்றிய அறிவுரைகள், பிரசங்கங்கள் நிச்சயமாக ஓர் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தியிருப்பதை எம்மால் உணர முடிகிறது.
சிவத்தமிழ்ச்செல்வியோடு நடந்த இந்தச் சுவையான ஒருமணிநேர நேர்முக உரையாடலின்போது திரைகடல் ஒடித் திரவியம் தேடும் மனிதரையும் திரவியம் தேடித் திரை கடல் ஒடுகின்ற மாமனிதரையும், கடல்கடந்தும் தன்னையும் மண்ணையும் மறக்காத மனிதநேயமுள்ள மானிட ரையும் எம்மால் வெகு இலகுவாக இனம் காணக்கூடிய தாக இருந்ததுபற்றி மகிழ்கிருேம்!
பேட்டி கண்டவர்:
திரு. கே. பி. நடனசிகாமணி அவர்கள்
இப்பிரசுரம் 09-08-1987 வீரகேசரி வார இதழில்
வெளிவந்தது.

இலண்டன் மேற்கு தமிழ்ப் பாடசாலைகளில்
முத்தமிழ் விழா
31 - 05 - 87 ஞாயிற்றுக்கிழமை
இலண்டனைச் சூழ உள்ள நகரங்களில் வெம்பிளி என் பதும் ஒன்று. இது இலண்டனுக்கு மேற்கே அமைந்துள் னது. இங்கே உள்ள அன்பர்கள் சிறந்த ஒரு நகரசபை மண்டபத்தை இங்கு அமைத்துள்ளனர். என்றுமே spitalion மண்டபமாக அது காட்சி தந்துகொண்டிருப்பதாகும். 31-05-88 அன்று மிகப் பெரிய முத்தமிழ் விழா நிகழ்ந் தது. இயல், இசை, நடன. நாடகங்கள் அனைத்தும் இவ் வைபவத்தில் இடம்பெற்றன. இங்கு சிறப்புச் சொற் பொழிவு ஆற்ற என்னையும் அழைத்தனர். ‘தமிழ் இன்பம்" என்பது அவர்கள் எனக்குத் தந்த தலையங்கமாகும். சங் கத் தமிழ் தொடக்கம் பாரதித் தமிழ்வரை அமைந்த இலக்கிய இன்பத்தை ஆங்காங்கே சுட்டிக்காட்டி ஏனது உரையை ஆற்றினேன்.
கலாநிதி நித்தியானந்தன் அவர்கள் இவ்விழாவிற் கிான ஏற்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பாக இருந்தார். கள். மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலைகளின் ஒன் றிணைந்த அதிபராகப் பணியாற்றும் இப்பெரியாரின் தமிழ்ப் பற்றும் கலை நுகர்ச்சியும் மிகமிகப் பாராட்டுத லுக்குரியவை. இனிய தமிழில் உரையாற்றுந் திறன் இவருக்கு அமைந்த சிறப்பம்சமாகும். அங்கு ஒருமுறை தனது தந்தையார் அன்பளிப்புச் செய்த நூல் ஒன்றை எனக்குக் காட்டியபோது யான் வியப்படைந்தேன். "இருபத்தேழு சொற்பொழிவுகள்' என்ற எனது மலே சியப் பிரயாண நூல் அதுவாகும். பிறந்த நாட்டு அபி மானம் மிக்கவராகையாலும் த மிழ் அறிஞர்களைக்

Page 73
سے 60 سے
கெளரவம் செய்யும் பண்புடையராதலாலும் என்னை அந் தப் பெரிய விழாவில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைத்தார்கள் என்பதே உண்மை. இம்மண்டபம் கலா இரசிகப் பெருமக்களால் நிறைந்து முட்டி வழிந்து காணப் பட்டது. வந்திருந்தோர் அனைவரும் இல ன்டன்வாழ் பெருங்கலைஞர்கள், அறிஞர்கள், கலாநிதிகள், பொறி யியலாளர்கள், வைத்திய கலாநிதிகளாவர்.
முதலில் இடம்பெற்ற வரவேற்புரை நிகழ்ச்சியின்பின் பரத நாட்டிய வைபவத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. அண்ணுமலை இசைக்கல்லூரியிலும் சென்னை கர்நாடகக் கல்லூரியிலும் பல ஆண்டுகள் இசைப்பயிற்சியும், நடனப் பயிற்சியும் பெற்றவர்கள் மேடையை அலங்கரித்தனர். கலாநிதி நித்தியானந்தன் தனது அறிக்கையைச் சமர்ப் பித்துத் தமிழ்ப் பாடசாலைகள் ஆற்றிய பணியை முன் வைத்தபோது மண்டபத்தில் பலத்த கரகோஷம் எழுந் தது. அந்நாட்டுக் கலை கலாச்சார அமைச்சு முன்வந்து அனைத்துக் கலை கலாச்சாரங்களைப் பேணுவதோடு தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நிதி உதவும் பெருந்தன்மையை அந்த இடத்தில் எவரும் மெச்சாமல் இருக்க முடியாது.
இடைவெளிக்குப்பின் பரதநாட்டியம் நடைபெற்று அடுத்த நிகழ்ச்சியாக எனது சொற்பொழிவு இடம்பெற் றது. அந்த மேடையில் நின்று பேசியபோது முன்னுெரு முறை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நின்று பேசிய அனுபவம் மண்டபத்தைப் பொறுத்த அள வில் எனக்கு ஏற்பட்டது. நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து நாடகம் ஆரம்பமானது. நாடகத்தின் பெயர் "திருப்பம்" என்பது. இது சிறந்த சமூக நாடகம். சீதனக் கொடுமை, மாமியாரின் தொல்லை, வெளிநாட்டு மாப் பிள்ளையை விரும்பும் மோகம் அனைத்தும் தத்துவரூபமாக விளங்கவும் நல்லதொரு படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவும் இந்நாடகம் உதவியது. பூரீமதி யோகா தில்லைநாதனின் வர்ணனை அறிவிப்புக்கள் விழாவுக்குக்

- 61. --
கலகலப்பை ஊட்டியது என்ருல் அதில் மிகையொன்று மில்லை. 1.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்று கனவுகண்ட பாரதியார் இலண்டனில் இவ்விழாவின் பொலிவை நேரே கண்டிருப்பா ரென்ருல் எத்துணைப் பூரிப்படைந்திருப்பார்.
எம்மவரின் அயரா உழைப்பும், கலைப் பற்றும், தமிழ் மொழி அபிமானமும், புரிந்துணர்வும், நாட்டுப்பற்றும் ஆருயிரம் மைலுக்கப்பாற் சென்றும் பிரகாசிப்பதை என் ஞல் வியக்காமல் இருக்கமுடியாது என்பதால் இதைச் சிறப்புக் கட்டுரையாக்கினேன். இத்தகைய தமிழ் வளர்ச் சிப் பணிகளில் முன்னிற்போரைப் போற்றுவதும், பாராட்டு வதும் எம்போன்றேர் கடனன்ருே

Page 74
இலண்டனில்
圆&阅 ! 3-05- 87 15-05-87 I 6-05-87 19-05-87 22-05-87 23-05-87 26-05-87 27-05- 87 28-05-87 29-05-87 30 - 05-87 3 1-05-87
04-06-87 05-06 - 87 09-06-87
1 2-0 6-87 ·
இலண்டன் இலண்டன் இலண்டன் இலண்டன் இலண்டன் இலண்டன் இலண்டன்
蔡攀
卿黎 இலண்டன் இலண்டன்
இடம்
soli socii săi logiảm uiris Gaetusė
• uffourt off) && ru) (yp(556ör Göstuslov ·
ஞானனந்த சமாஜம் ∞ blokir_gir logiråru Trĩ (3 siruoši)
• uusi suiręs į gjøörgy (ip@sqir Gotruffáu ஞானனந்த சமாஜம் soublocitl_går logiråstuutif Gøtuoảo
• uff surro só gair my @p(556ör Gofruoši) rogh, föşirih (p(0,56ör Gæstuffà)
மேற்கு இலண்டன் முத்தமிழ் விழா வெம்பிளி நகர மண்டபம்
இலண்டன் இலண்டன் ? ?
இலண்டன்
• uffourrojů (56örgy (ip@sosoirĠærruolo ஈஸ்ற்காம் முருகன்(3#m uoffi)
o urtoutros) && s);ɑpɑ556ğrGastruoài
„sögðu Glæsb@unsas als Lajos,
10-05-87 - 03-07-87 வரையும்
சொற்பொழிவு ospituus@gur otrosurub கலியுகவரதன் குருவருள் துர்க்கையைத் துதிப்போம் (Ip(0,5 @ sh @på £516]qpib பூரீ ஞானுந்த கிரி அபிராமி அந்தாதி அபிராமி அந்தாதி மங்கையர்க்குத் தனியரசி திருப்புகழ் அம்பாள் கருணை தமிழ் இன்பம்
கூட்டு வழிபாடு திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் opcijos pirlois LITƯirl :-() offspn நற்றமிழ் வல்ல ஞான
*ibuți, șcăr («nororro espărub)

luđi soogã saoulog) spus urtersoon qılonogi@@ ự91įorto ongo@rī0 seyoga’wedî og qnodigo &qopī£o qigotown onge ofițe eggsø qafarų, Ji-l-īri qi@-i un uri qī@-ig – qifts@@ 1991.gooș-aceo sợi udgałę 19.ogg-Turm 1495 monooqaae uo? delo qingo v úHrsg qi&)aurīsfire og og gael qihmongolo30’ı duro georgian qnoș1959 fooqť-a quedou úhroug quosog/go与脚gs qise o urte @@ fđạora si ffugio) on lae 1,9 usog) ymụcoh
doğmuyog)
gegnuop qoaemuog)
藏卿
qosmuog)
qoaemuog)
1ņeo@đì) są9@ qs o urte grn-æ1,2-ușoaeae] qiễu/glo og ige@lo)Ingerig)? Lloffi Æsoof) sigoo qou'reyrn-a ugo-iagoas@
级翻* s;
1999@fī) sārņos@ qs.eure grn-æIgo-Tagegelőj
useos@fī) sārņo@ q'eurto grm-ae1,2-Tropode($ qiri-Turgovi ururismuo q'oooo qiễudio office@lo) șiųog 1999@fɔ się9@ q'euro grm-a go-ingeneto dollo-Turı sıđợio 19-il pode($ @ęđg Giorgio fa’q nsoțef) neous lys-ingene@
A 8 */, 0-£ 0 28-2 0-30 28-20-10 2,8-90-08 Z 9-90-63 Z 9-90-83 Z 8 -90-s, 3 Z 9-90-98
29-90~幻岛 Z 9-90–ý,
Z 9-90—的窗 A 8-90-33 48~90-T3 A 8-90-02 Z 8 - 90 -6 I Z 9-90-† I 28-90-8. I

Page 75
مج مع حب
uảsæsúb 15 28 45 52
uff?
the to a la
susî
ܠܬܪ ܢܓܕ ܗ ܘ .
பிழை திருத்தம்
பிழை திருமணங்களிலே கட்டிட வல்லுநர் இவ்வேட்டிலிருந்து
மகிமை என்பதில்
திருத்தம் திருமண மண்டபங்களிலே சட்டவல்லுநர் இல்வேட்டிலிருந்து
மகிமை எம் நாட்டில் உள்ளது என்பதில்

சிவத்தமிழ்ச்செல்வி
தங்கம்மா அப்பாக்குட்டி
அவர்கள் பற்றி.
"தாய் நாட்டிலும, சேய் நாட்டிலும் மலேசியா முதலிய தமிழ் நிலங்களிலும் உள்ள சைவ சமய ஸ்தாபனங்களி லும் தனிப்பட்ட ஸ்தாபனங்களிலும் பண்டிதை அவர்கள் செய்த சைவப் பிரசங்கங்கள் பல ஆயிரக்கணக்கானவை கள். ஆங்காங்கு அவர்களுக்கு வழங்கிய பட்டங்களும் பாராட்டுகளும் பிரசித்தமானவை. "
இலக்கிய கலாநிதி rigrao il 980 பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
“இங்கே பேசியவர் ஈழத்துத் தங்கம், ஈழத்துத் தங்க மென்ருல் மிகுந்த மதிப்புடையது; இருபத்திரண்டு கரட் பெறுமதியுடையது; நம்பிக்கைக்குரியது. இந்தத் தங்கத் தின் விளக்கத்தை நீங்களும் கண்டீர்கள். ஈழத்துத் தள் கம்மா ? "செயல் வல்லள் சோர்விலள் அஞ்சான் இவன் இகல் வெல்லல் எனக்கும் அரிது.”*
அண்ணுமலைப் பல்கலைக் கழக கோகலே மண்டபத்தில் நிகழ்ந்த விழாவின்போது gerů tíř 1965 Guyráfizů Gap. svůyLocaustru

Page 76
- 66 -
"இக்கால கட்டத்திலே இப்பாடசாலையிலே எனக்கு ஆரம் பக் கல்வி புகட்டி, உயர்தர வகுப்பிலே சித்தியடைய வைத்து, இப்பாடசாலையிலே தொழில் புரியவைத்துப் பின் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைவரை செல்ல அருகதையுடைய மாணவியாகிய பெருமை சிவச்செல்விக்கே சாரும். இதன் பின் என்போன்ற எத்தனையோ உயிர்களுக்கு ஒளி வழங் கிய தியாகியாவார்கள். **
அல் ஹம் ரு மகா வித்தியாலய முன்னேடி ஆசிரியை ஜனவரி 1985 திருமதி பாரி முலாபர்
"...நாவலர் தொடக்கிவைத்த பிரசங்க மரபினை இன் றைய தலைமுறையிலே பேணி நின்ற அவர் தமது சொல் வன்மையால் ஈழத்தில் மட்டுமன்றித் தமிழகத்திலும், மலேசியாவிலும், சிங்கப்பூர் முதலிய கீழைத்தேய நாடு களிலும் சைவப் பிரசாரஞ் செய்தவர். அத்திறமை காரண மாகப் பல உயர் விருதுகள் வழங்கப்பட்ட சிறப்புடைய வர் அவற்றின் பயணுக 'நாவலருக்குப் பின் தங்கம்மா" என்று பத்திரிகை ஒன்றினுல் விதந்துரைக்கப்பட்டவர் ”
ஜனவரி 1985 பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
" . . . . . .. அவரின் சைவ அறிவையும் , சொல்லாற்றலையும் மதித்து சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் முதலிய அயல் நாடுகளில் வாழும் தமிழர்களும் சைவச் சொற்பொழிவுக் காக அடிக்கடி அவரை அங்கு அழைப்பித்து அவரைப் பலதடவைகள் கெளரவித்துள்ளமை இலங்கைத் தமிழர் களாகிய எமக்குப் பெருமிதம் தருகின்றது. அவரின் ஆற்றலையும் சேவையையும் மதித்து அவருக்கு வழங்கப் பட்டுள்ள கெளரவப் பட்டங்கள் பல ...”*
முன்னுள் உயர் நீதிமன்ற நீதியரசர் பெப்ரவரி 1974 திரு. வி. சிவசுப்பிரமணியம் அவர்கள்

-- 67 --سسسس
"...சொற்பொழிவுகளுக்கும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் இவ்வளவு பணம் உதவவேண்டும் என்ற கோரிக்கையோடு தான் இந்நாட்டுக்கு அறிஞர்கள் பலர் வருகிருர்கள். ஆனல் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் எந்தவொரு கோரிக்கையையும் முன்வையாது தனது சைவப் பிரசாரப் பணியையே முன்வைத்து எமது நாட்டுக்கு வருகைதந்த பெருமைக்குரியவர் என்பதை எடுத் துக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்."
S. K. கணபதி செயலர் இலண்டன் பூரீ முருகன் கோயில் ger I 987 U. K.
"..ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு" எமது சங்கமும் இதுவரை காலமும் பொருத்தமான ஒரு அறிஞருக்குப் பட்டமளிக்கக் காத்திருந்தது. இப்போது தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது. செல்வி தங்கம்மt அப்பாக்குட்டி அவர்களுக்கு “திருவாசகக் கொண்டல்” என்ற பட்டத்தை இன்று மகிழ்ச்சியுடன் வழங்குகின்ருேம்."
Dr. க. கனகசபை
தலைவர் சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம்
கோலாலம்பூர் gagrd 1972 மலேசியா

Page 77
6.
எனது இதயபூர்வமான நன்றிக்குரியோர் :
இந்நூல் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த லண்டன்வாழ் சைவப் பெருமக்கள்
நூலுக்கு அறிமுக உரை வழங்கிய யாழ். பல்கலைக் கழகப் பதிவாளர்
திரு. வி. என். சிவராசா அவர்கள்
இந்துசாதனப் பத்திராதிபரும்,
எங்கள் சபை உபதலைவருமாகிய
திரு. நம. சிவப்பிரகாசம் அவர்கள்
சிறந்த முறையில் பிரதிபண்ணித் தந்த
கட்டுவனுார் திரு. க. நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள் சங்கீத கலாநிதி திருமதி த. சிதம்பரநாதன் அவர்கள்
நூலை உருவாக்குவதில் அவ்வப்போது உசாத்துணை
புரிந்து மேலும் அச்சுப் பிழைகளையும் திருத்திப்
பேருதவி புரிந்த
ஏழாலை, பண்டிதர் மு. கந்தையா, B. A. அவர்கள் மட்டுவில் கா. சிவபாலன் அவர்கள்
சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய
ஏழாலை, மஹாத்மா அச்சகத்தினர்
தங்கம்மா அப்பாக்குட்டி, , P.
தலைவர்
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை. 07-07-1988


Page 78


Page 79