கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்

Page 1
1924i , "LLLL ஆ
 
 


Page 2

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
4.
چ
ஆக்கியோன்:
கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி மாணிக்க முத்தமிழ் மனை, நாவற்காடூர் - மட்டக்களப்பு, இலங்கை
மlவளியீடு:
பசிமுக நிறுவனம் (பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ் கழகம் இல, 2, வன்னியனார் தெரு, ம ட் ட க் க ள ப் பு
3-0-1997

Page 3
பதிவுத் தரவுகள்
தலைப்பு
665) is
மொழி
ஆசிரியர்
வெளியீடு
உரிமை
வெளியிட்ட திகதி:
அச்சகம்
அளவு
u &&5 lb
விலை
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம். சமூக வரலாறு
தமிழ். கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி. பசிமுக நிறுவனம் - மட்டக்களப்பு. ஆசிரியருக்கே,
1997 ஐப்பசி, சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
சைஸ்,
18 -- 92.
ரூபா 90/- (சலுகை விலை)
Bibiliographical Data
Title
Category Language
Author
Publisher
Copyright
Date of Publication:
Printers
Size of the Book :
Pages
Price
Maryvarum Maddakalappu Thamilagam. Social.
Tam i .
Kalasoori Vettivel Vinayagamoorthy. Pasimugam — Batticaloa.
Author|
1997 October.
St. Joseph's Catholic Press, Batticaloa.
.
8.-- 92. : Rs. 90/- (Concession Rate)


Page 4

என் இதயக்கனிக்குப் படையல் இந்நூல்
வெற்றிவேல் செல்வராசா (வெற்றி மகன் ராசா) அதிபர்.
இதயக் கனியாம் என்தம்பி இறைவன் தனையே முதல்நம்பி உதய மாக்குஞ் சிந்தனையே ஒவ்வொன்றுக்கும் வந்தனையே!

Page 5

இதயக்கனியின் இல்லறத்திட்ட இனிய குடும்பம்
இடமிருந்து வலம் :
வெற்றிவேல் செல்வராசா (அதிபர்) செல்வராசா அருழினி (மகள்) றிற்றா செல்வராசா (மனைவி) செல்வராசா அருள்தேவராசா (மகன்)

Page 6

10.
ll.
12.
13. 14. 15.
16.
7.
18.
19.
20. 21. 22, 23. 24.
25. 26.
27.
28. 29. 30. 31. 32. 33. 94. Ꮽ5.
6.
உள்ளுறை
என் இதயக்கணிக்குப் படையல் இந்நூல்.
பாரதிக்கு இணை யாருண்டு ?
தாரணி போற்றும் தமிழ்ப்பண்பாடு
அழியாத நினைவுகள்
31ம் நாள் கண்ணிரஞ்சலி நூலில்
இடம்பிடித்தவற்றில் சில
பதிப்புரை
என்னுரை
அணிந்துரை
எழுபது ஆண்டுக்குள் எத்தனை மாற்றம் ? மந்திரவாதிகளின் செல்வாக்கு விவசாயத்திலும் மூடச்செயல்கள் வளங்கள் பல கொண்ட மட்டக்களப்பு மட்டக்களப்பா ? மட்டுநகரா ? மட்டக்களப்பு மான்மியத்தில் மட்டக்களப்பு இராசதானி சமூகத்தில் சமயத்தில் போதனைச் செயல்கள் அண்ணா முதலியோர் அறிவியல் பரப்புரை நம்பிக்கை மந்திரங்கால் மதிமுக்கால் உதாரணமாக ஒருசிலர் ஆடும் பேயாட்டம் பேய் இல்லையென்றோனும்
இருப்பதாய்க் கண்ட கதை பிரிப்பு இணைப்பு Lu T T Sulu ft rif UT L. 6iv 6 av கவிமணி கவிதை சமயவொற்றுமைச் சமநிலை பாரதியாரும் பகுத்தறிவாளரே நல்ல சேவை செய்த நல்ல ஐயா வந்தாறுமூலை மத்திய கல்லூரி பட்டதாரிகளும் அரசியலாளரும் ஜனனாயகம் சிலவேளை தமிழரும் முஸ்லீம்களும் தற்கொலைகளும் தகாத செயல்களும் எம்மிடையே நடமாடும் பேய்கள்
பக்கம்
0.
02
04
05
09
19
17
01.
0.
0.
04
07
09
10
15
15
16
17
19
20
23
24
25
27
29
31
3.
32
33
35
37
38
39
40
42

Page 7
37. 38.
39.
40.
ه 4l
42.
43.
44。
45。
46.
47.
48.
49.
50.
51.
52。
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65。
66.
67. 68.
69. 70.
7,
72.
73.
74.
75.
76.
ஒரு பேராசிரியர் கூற்று wakg
கத்தோலிக்க கிறிஸ்து சமயக் கல்விகள் பல்கலைக்கழகமும் பல அபிவிருத்தியும் s கலைகளும் கலைஞர்களும் சுவாமி விபுலாநந்தஜீ pas கவிஞர், எழுத்தாளர் கலைஞர் சிலர் ums
பெரு வெள்ளமும் சூறாவளியும் al பிரேமதாசாவின் பெருஞ் சேவை இக்கால நிலைமை மறுமலர்ச்சிகள், மாற்றங்கள் மட்டக்களப்பு வாவி Itma கல்லடிப்பாலம் மறுமலர்ச்சிக்கு மேலும் உதவலாம் - அரசாங்கம் மாற்றமாகும் நடைமுறை மலர்ச்சிகள் பாங்கா இழுத்தல் ona கால், பல் காவலும் நாகரீகமும் s-am குறிப்பான சில சொற்கள் aஅனுபவம் பேசுகிறது atமலர்ச்சி கூடுதலுக்கு இன்னும் சில தேவை amamama இனசன மோதல் இடம்பெறா நடைமுறை தேவை - அரசியல் ar போடிமார் விசேட விழாக்கள் போடித் தரம் குறைந்துபோதல் ess
இரவெல்லாம் கட்டுக்காவல் வட்டைக்குள் பிரம்பு விடுதல் விவசாய நீர்ப்பாசன சட்ட திட்டம் -
காசு மாற்றிய காலம் · புதிய போடிமார் ஊர்த் தலைவன் aசகோதர பாசம் இனப்பற்று வேகம் பெற்றோர்க்கு வழக்கு · வீட்டு வேலைகளும், வெளிநாட்டு ஆசைகளும்
26.
காய்ச்சுப்பு (சீனியுப்பு) s-ema பத்திரிகை, பத்திரிகையாளர் aw மட்டக்களப்பில் சிலர் へ வாழ்வின் இறுதி மரணம் sy
பொன்விழா காணும் வந்தாறுமூலை மகா வித்தியாலயம்
4.
43
45
45
47 47
50
5 I
5.
53
54
56
57 58 60
6.
63
64
66
67.
67
69
71
7. 72
73
75
75 76 77 78 79 8.
82. 8 84
85 86
88
90

பாரதிக்கு இணை யாருண்டு?
பழங்காலப் பல்லவியைப் பாடிப் பாடி பயனுள்ள காலத்தைப் பாழாக் காது குலங் காணும் உயர்சாதி வகுத்துக்கூறி குவலயத்தில் சாதிபார்ப்ப தொழியும் வண்ணம் நலங்காண வழிகாட்டும் கவிஞர் ஏறாய் நமக்கெல்லாம் குருவாகிச் சென்று விட்டான் கலங்காத வுள்ளத்தோ டுறுதி கொண்டே கவிதையினால் புகழ்ந்தே நாம் போற்றுவோமே.
எத்தனையோ கவிதைகளைப் பாடி விட்டான் எதற்கும் அவன் கவிதையினை நிலவச் செய்தான் அத்தனையும் அறியாமல் இருப்போர் பலரும் ஆய்ந்தறிந்து படித்துணரச் செய்ய வேண்டும் இத்தரையில் கவிஞருள்ளே பாரதி போல் இணையாக யாருண்டு நாமறி யோம் வித்தகனை வியந்தேநாம் பாடிப் போற்றி வேண்டுவமே மீண்டுமவன் பிறக்குமாறு !
வெற்றி மகன் ராசா, மட்டக்களப்பு.

Page 8
தாரணி போற்றும் தமிழ்ப் பண்பாடு!
Lr_rrూలాల్కొ_ణ్కాూx
MRSMro-RA-M**R
* உயர்ந்தோர் மாட்டே உலகம்" என்பர் உயர்ந்தோர் என்போர் யாரா யிருப்பர் ? நேற்று இருந்தோன் இன்றே யில்லை நினைக்கும் பெருமை உலக மன்றோ ? காற்றுள் ளப்போ கண்ணிய வாழ்வு கருத்துடன் பண்பைக் கைக்கொண் டோரே ! என்பு தோலின் இவ்வுடல் வாழ்வில் அன்பே பண்புக் கடிப்படை யாகும் அடிப்படை யான அன்பில் இருந்தே படிப்படி யாகப் பல்கும் பண்பு படித்தோ ரென்றோ, படிப்பில ரென்றோ, இடித்தே யுரைக்கும் இக்குணப் பண்பு எத்தனை மொழிகள், எத்தனை தேசம் அத்தனைக் குள்ளும் அறிந்திடப் பண்பு செந்தமிழ் மொழிக்குள் திருக்குற ஞண்டே எந் தமிழ்ப் பண்பை இயம்பிட லாமே! வாழ்க்கை என்பது எவ்வா றமைய வழிகளைக் காட்டும் வாயுறை வாழ்த்து அழியும் யாக்கை ஒத்திருந் தாலும் அழியாப் பண்பே ஒப்பது வேண்டும் தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் தன்மை யோடறம் சேர்ந்திட வேண்டும் மக்கட் பண்பு என்பது என்ன? மாக்கள் பண்பு இல்லா திருப்பதே இன்னா செய்து இடர்கொடுத் தாலும் அன்னார்க் கன்பு காட்ட வேண்டும் பகைத் தோர் எனினும் நகைத்தோர் எனினும் பண்பின் செயலே அன்பின் செயலாம் ஒழுக்கம் என்ற ஒருவழிப் பாதை இழுக்குறா திருப்பது ஏற்புடைத் தாகும் ஆசை யடக்கி அறத்தைப் பெருக்கி மாசைத் தேடா மனையறம் வேண்டும்

பொய்யென் பதுவே புகழுக் கெல்லாம் பூலோ கத்தில் சத்துரு வாகும் பொறுமை என்பது இருந்துற வாட போட்டி பொறாமை இல்லா தோடும் இரக்கம் கருணை என்ப தெல்லாம் சுரக்க வேண்டும் சுயநல மின்றி அரக்கத் தன்மை வாழ்ந்தோ ருண்டு அறிவோ மதனை அருந்தமிழ் கொண்டு தாரணி போற்றும் தமிழ்ப்பண் பாடு பேரது புகழுறப் பெரும் பேறாகும் துன்பம் என்பது வந்த போதும் தூயோர் சான்றோர் தோன்றி மறைவர் கள்ள மில்லா நடத்தை கொள்ள உள்ளந் தன்னில் இறையுறை யட்டும் அமிழ்தினு மினிய அருந்தமிழ் மொழியில் தமிழ்ப் பண்பாடே தாரணி போற்றும்.
(கனடாவுக்கனுப்பிய பிரதி)
- வெற்றிமகன் ராசா,
இத்தகை நிலைகொள் இதயக் கணிக்கு புத்தகம் இஃது ஒன்று போதுமா நித்தம் வருந்தி நினைவோ டிருக்க உத்தமனே நீ உயிர்பிரிந் தாயோ !
-"வெற்றி மகன்'

Page 9
அழியாத நினைவுகள்
மட்டக்களப்பு அரசடிப் பிள்ளையார் கோயில் வீதி கனிஷ்ட வித்தியாலய அதிபர் வெற்றிவேல் செல்வராசா கடந்த 13-10-1996 அன்று மாரடைப் பால் காலமானார் .
பன்குடா வெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் " " கலாசூரி' வெற்றிவேல் விநாயகமூர்த்தியின் இளைய சகோதரராவார்.
கலா சூரி வெ. வினாயகமூர்த்தி மாஸ்ரரின் சகல கலை இலக்கிய மு ய ந் சி க ளு க் கு ம் அவர் தோள் கொடுத்து உதவுபவர்.
சிறந்த ஆசிரியராகவும், அதிபராகவும், மட்டக் களப்பு ஆசிரியர் கலாசாலையின் பகுதிநேர விரிவுரை யாளராகவும் கடயைாற்றியவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக் காக உழைத்த கல்விமான்களில் செல்வராசா மாஸ்ர ரும் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
பழகுவதற்கு மிக இனிமையான இவரின் முகத் தில் கோ ப த் தை க் கண்டதில்லை. அமைதியான சுபாவம், அடக்கமும் பண்பும் நிறைந்தவர்.
இவரின் மறைவு இப்பகுதி கல்வி வளர்ச்சிக்குப் பெரிய இழப்பாகும்.
- நன்றி: விடிவானம்.
 

31ஆம் நாள் கண்ணிரஞ்சலி நூலில் இடம் பிடித்தவற்றில் சில வரிகள்
உள்ளங்கவர் கள்வன் :
அதிபர் திருவாளர் செல்வராசா அவர்கள் இறைபதமடைந்த திடுக்கிடும் செய்தி சற்றுநேரம் எனது சிந்தனையையும், செயலை யும் இழக்க வைத்தது. அவர் தொடர்பு வித்தியாலய சேவையி லிருந்து விடுபட்டபின்னரும் தொடர்ந்திருந்தது பண்பாளர், இன் சொல்லர், தோற்றத்தில் சாதாரணமானவர் போன்றவர். ஆனால், தன்னுடன் பழகியவர்களுடைய உள்ளத்தில் நீங்காத ஒரிடத்தைப் பிடிக்கும் உள்ளங்கவர் கள்வன். எம்மையெல்லாம் விட்டகன்ற த னால் ஏற்பட்ட வெற்றிடம் மிகப்பெரிது. அவரது அண்ணா கலாசூரி விநாயகமுர்த்தி அவர்களுக்கு உற்ற நண்பன் போலவும், குடும்பத்திற்கு நல்ல வழிகாட்டியாகவும், காவலனாகவும் தனித்து நின்று சேவைசெய்த பெருமகன். ஆத்மா சாந்திய டைப் பகவான் பூரீ இராமக்கிருஷ்ண தேவரின் பாதாரவிந்தங்களை இறைஞ்சி நிற்கின்றேன்.
அன்புடன் சுவாமி ஜீவனானந்தா.
இராம இலட்சுமணர் :
பன்குடாவெளி என்ற பழம்பெருங் கிராமத்தில் பிறந்த இவர் கலாசூரி விநாயகமூர்த்தியின் இளைய சகோதரர், இராமனுக்கு இலட்சுமணண் போல் விநாயகமூர்த்திக்குத் தம்பியான இவர் அவ ரது எல்லாக் கலை இலக்கியப் பணிகளிலும் வலது கரமாக நின்று உழைப்பவர். இவரது மறைவு இப்பகுதிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிய இழப்பாகும், இவரைப்போலவே இவரது புதல்வர் அருள் தேவராசா கச்சேரியில் கணனிப் பகுதியின் பொறுப்பாளராகக் கடமையாற்றுகின்றார். தந்தையின் பெயரை நிலைநிறுத்தும் வகை
யில் அவரது வாரிசாக உருவாகும் இவர்
"மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல்" என்ற குறளுக்கு இலக்கணமாக உள்ளார். அமரர் செல்வராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைவதாக.
அ. கி. பத்மநாதன் அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், மட்டக்களப்பு.
- 5 -

Page 10
பிறர் நலம் பேணல் :
திரு. செல்வராசா எனது இனிய நண்பர். அவரது திடீர் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீரணித்துக்கொள்ள முடியாதிருந்தது. சிரித்த முகம், ஆடம்பர மற்ற போக்கு, அமைதி யாகப் பணியாற்றுந் திறன், மற்றோர் மனதைப் புண்படுத்தாத பண்பு, பிறர்நலம் பேணும் மனப்பாங்கு, அன்னாரது மறைவு குடும்பத்தார்க்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. அமரர் செல்வராசா வினது ஆன்மா நற்பேறடையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
அன்புடன் க. தியாகராசா *“ 9un sarrolb”, முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண கல்லடி, மட்டக்களப்பு: வித்தியாதிபதியும், 1996-11-05. கல்வி கலாசாரச் செயளாலரும்:
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் :
அமரர் செல்வராசா மிகவும் கண்ணியமானவர். சகலருடனும்
அன்பாகப் பழகுவார். அவரது புதல்வர் அருள் தேவராசாவும்
பண்பானவர். அன்னாரது மூத்த தமையனாருக்கு அரசாங்கம்
ஜனாதிபதி அவர்களால் மேலான ‘கலாசூரி' பட்டம் வழங்கி
யது. அமரர் செல்வராசா வாழ்ந்திருந்தால் அவரும் இதுபோன்ற
பட்டத்தைப் பெற்றிருப்பார். அவருடைய புகழ் நம்மத்தியில் என்
றும் நிலைத்திருக்கும். அன்னாரின் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் அனுதாபம் தெரிவிக்கின்றேன்.
இவ்வண்ணம் எஸ். சிவானந்தன் மேலதிகச் செயலாளர், திட்ட அமுலாக்கல் தேசிய ஒருங்கணைப்பு அமைச்சு.
இதைத் தாங்க ஏது இதயம் ?
காலம் மாறலாம், ஞாலமும் மாறலாம், உன் முகத்துப் புன்னகை மாறுவதில்லை, பழகுவதற்குப் பண்புள்ள நண்பனாய் ஒர் உயர்ந்த உறவினனாய் எமது செல்வமாய்ச் செல்வராசாவைக் கண்டோம்
- 6 -

சிந்தை மகிழ்ந்தோம், செல்லும் இடமெலாம் உன் ஒலி கேட்கிறது. புன்னகை பூத்த முகம் தெரிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பரே ! இதையும் தாங்க ஏது ராசா எமக்கு இதயம் ?
இ. மோனகுருசாமி முன்னாள் மட் / மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளரும், கொழும்பு உள்நாட்டலுவல்கள் பாராளுமன்ற 06-11-96. அலுவல்கள் அமைச்சு.
எவருள்ளத்தும் இடம்பிடிப்போர் :
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்' என்பது பொய்யாமொழி. அவ்வாக்கின்படி இப்பூவுலகில் வாழ்ந்து வானுயர்ந்தோர் மிகச் சிலரே. அச்சிலருள் 13-10-96 அன்று இறையடி இணைந்த வெற்றி வேல் செல்வராசாவும் ஒருவராவர். மட்டக்களப்பு நகரின் மேற்கே பன்குடா வெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமரர் செல்வ ராசா. மட் / ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும், கணித பாடப் பகுதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்தவர். எவராயிருந்தாலும் அவருள்ளத்தில் என்றும் அகலா இடம்பிடிக்கும் ஆற்றல் பொதிந்த சிறந்த பண்பாளர் அமரர் செல்வராசாவின் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மட்டக்களப்பு. எஸ். எஸ். மனோகரன் 06-11-96. மாவட்டக் கல்விப்பணிப்பாளர்.
பிறவாத பேறு பெற்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பில் காலை சைவநற்சிந்தனையை நான் முன்னர் எங்கோ, எப்போதோ, கேட்ட பழக்கப்பட்ட ஒரு குரல் வழங்கிக் கொண்டிருந்தது. அச் சைவநற்சிந்தனையைக் கூர்ந்து கேட்டபடி, இதை வழங்கிக்கொண்டிருப்பவர் யார் ? இவர் பெயர் என்ன ? அவர்தானோ இவர்? என்றபடியெல்லாம் என் மனம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தது. நற்சிந்தனை முடிவடைந்ததும் "வெற்றி வேல் செல்வராசா அவர்கள் வழங்கிய சைவநற்சிந்தனையை இப் பொழுது நீங்கள் கேட்டீர்கள்!' என்று வானொலி கூறிற்று.
-- 7"-

Page 11
ஓம்! ஓம்! இன்று நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து அமர ராகிவிட்ட செல்வராசா அதிபர்தான் அன்று வானொலியில் சைவ நற்சிந்தனையை வழங்கினார். இன்று நம்முடம் வாழ்ந்துகொண் டிருக்கும் பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞரும், நூலாசிரியரு மான " " கலாசூரி' வெற்றிவேல் விநாயகமூர்த்தி அவர்களின் தம்பி தான் நான் என்பதை அவரது நல்ல தரமான, சைவசமயக் கருத் துக்கள் நிரம்பிய உரை எடுத்துக்காட்டியது.
நல்ல சிந்தனையாளர், பழக இனியவர், பண்பாளர், உத்தம மான ஆசிரியர், அதிபர், சினமில்லாதவர், சீர்மையாளர், எதிரி களையும் வசீகரிக்கும் சிரிப்புடையவர், பெருங்குணத்தர், பேராசை யில்லாதவர் இனிப் பிறவாத பெரும் பேற்றைப் பெற்றுயர்ந்தார் என்றால் மிகையில்லை.
இங்ங்னம் 4/1, சூரிய ஒழுங்கை, வி, த. குமாரசாமி, B. A. மட்டக்களப்பு. தலைவர், 05-11-96. அகில இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
இமையோர் எடுத்தே ஏகினர்.
'பூதலத் தொண்டு போதுமே என்றா
ஏதேது மின்றி இமையோர் சூழ்ந்தனர் செல்வராசாவைச் செல்வமாய் ஏற்று இமையோர் எடுத்தே ஏகினர் இமையா நாட்டத்திறைவன் கழற்கே"
06-11-96. திமிலைத்துமிலன்.
 

பதிப்புரை
இப்போதைய எமது "பசிமுக, நிறுவனத்தால் 'மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்' எனும் நூல் உங்களின் பார்வைக்குள் ளாகின்றது.
எமது தொடர்ச்சியான வெளியீட்டில் இது ஐந்தாவது வெளி யீடாகும். எமது முந்திய "ப. மு. பா'வைச் சேர்ந்த திரு. வெற்றி வேல் செல்வராசா (வெற்றிமகன் ராசா) அதிபர் அவர்கள் கால மான ஒராண்டு பூர்த்தியிலே இந்நூல் வெளியிடப்படுவதால் ஒரு புறம் கவலையெனினும், மறுபுறம் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் அணிந்துரை பெற்று நூல் பெருமையுறுவதால் கவ லையையொழித்துக் களிப்படைகின்றோம்.
அன்னாரின் உரையொன்றே போதும் என்று நூலாசிரியர் கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி (பன்குடா வெளி மூர்த்தி, வெறறிமகன்) அவர்கள் கூறியதற்க மையப் பிறரின் பராட்டுரை முதலியன இடம்பெறவில்லை. எ னினு ம் பின் னுரையொன்று இறுதியிலுண்டு,
எதிர்பார்த்திருத்த நூலை விட்டு இந்த நூலை வெளியிடத் திடீரெனத் தீர்மானித்து ஆவன செய்ததால குறைபாடுகள் இருக் கலாம். அப்படியிருந்தால் குறையினைப் பொருட்படுத்தாமல் மேலும், நிறைவுற ஆவன செய்து உதவிகள் புரிந்தால் நலமாகும் எனத் தயவுடன் வேண்டுகின்றோம்.
ஆய்வுரையான - அறிவுரையான எழுத்தாளர்க்கு அறிவுறுத் தும் உரையான அணிந்துரை நல்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு நன்றி கூறிப் பாராட்டுகின்றோம்
இந்த நூலுக்குத் தேவையன சில தகவல்களைக் கொடுத்து உதவிசெய்த பலருக்கும் ந ன் றி கூறுகின்றோம். வருங்காலம் ** மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்' மதிப்புறும் நூலாகும். அதற்காவன செய்து உதவுவீராக.
(1) பாலர் பாமாலை (2) Go U T ég ü u mr LDT 60) Gav (3) கண்ணகையும் தன்னகையும் (4) கடவுள் எங்கே ? வி. த. வித்துகள் என்ற முந்திய நூல்களை ஆதரித்த மைபோன்று இதனையும் ஆதரியுங்கள்.
பசிமுக நிறுவனத்தார் (பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ் கழகம்)
2, வன்னியனார் தெரு,
மட்டக்களப்பு.

Page 12
என்னுரை
“மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்' எனும் பெயருடன் வெளிவரும் இந்நூல் சிலருக்கு வியப்பைக் கொடுக்கலாம். முக்கனி நூல் என்றுதான் முன்பு சிலருக்குச் சொல்லியிருந்தேன். என் இதயக்கனியாயிருந்த இளைய சகோதரன் இழப்பாலே முக்கனி யெனும் பெயரும் முன்னே தோன்ற அப்பெயரையே குறிப்பிட் டிருந்தேன்.
சமூகம், இலக்கியம், சமயம் எனும் முப்பிரிவுப் பேச்சுகள் முக்கணிக்குள் அடங்கின. தேவையான ஒருசிலரின் பார்வைக்குள் ளும் அகப்படுத்தித் தெளிவுபெற்றன. என்னுடைய கலாசாரக் கலைச் சேவைப் பொன் விழாவும், பருவகாலப் பவழ விழாவும் (75) இணைந்து கொண்டாடப்பட விருந்த விழாவிலேதான் முக்கனி நூல் வெளியிடப்படவிருந்தது. அக்கனி நூலை இதயக்கனியோ டிணைந்த இச்சிறப்புறு நூல் மிஞ்சிவிடக்கூடியதென்பதாலே வெளி யாகிறது. முக்கணியெனும் அக்கணி நூல் எக்காலமேனும் வெளி யாக எமது பசிமுக நிறுவனம் பாடுபடட்டும். அவற்றுள் மறைந்து உள்ளீடாக இருந்த மட்டக்களப்பு வளர்ச்சிகளே விரிவாக்கப்பட்டுப் பல துறைகளையும் பிரிவாகக்கொண்டு மாறிவரும் 'மட்டக்களப் புத் தமிழகம்’ ஆகி வெளியாகின்றது.
மாற்றம் :
நமது கிழக்குப் பல்கலைக்கழக வருகைப் பேராசிரியராகச் சிறப்புச் சேவையாற்றும் உலகறிந்த பேராசிரியர் மதிப்புக்குரிய கா. சிவத் தம்பி அவர்களின் அணிந்துரையொன்று பெற்றுவிட்டால் அதுவொன்றே போதும் என்று வாசித்து ஆலோசனையும் கூறட் டும் என்று அன்னார் தங்கும் விருந்தினர் விடுதியிலே ஒப்பபடைத் திருந்தேன். ஐந்தாறு தினங்கள் அன்னாரின் தங்குமிடத்திலே ஒய் வான நேரத்திலும், ஒய்வில்லாத பலரது கலந்துரையாடலுக்குள் ளும் எமக்கும் இடமளித்து இதயங் குளிரக்கூடியதாக அறிவுரை கலந்து பேசுவார். அவற்றைத் தொடர்ந்து அடுத்த பக்கத்தில் கூறுகின்றேன். w
என்னைப்பற்றியும் அன்னார் அறியத்தானே வேண்டும் என் பதை உணர்ந்து மேலும் சில தினங்களில் கலந்துரையாடலை நீடித்தேன். பேராசிரியருக்கு என்மேல் ஆசையுண்டா கட்டும் என்று நானே ஆசைகொண்டுவிட்டேன். அதனால் சிறிது விபரித்து நீட்டி யெழுதுகின்றேன்.

ஆசை :
ஆசையில்லையென்று போலியாாக் சொல்வோனை நான் மோசக்காரன் என்றும், பகல்வேஷக்காரன் என்றும் ஆதாரங் காட்டிப் பேசுவேன், விளக்குவேன். எவருக்கும் ஆசை அளவோடு இருக்கத்தான்வேண்டும், பேராசையாகக்கூடாது. படித்துப் பட்டம் பெற்ற பதவிகொண்டோரிலும் ஆசையுண்டு. மறைமுகப் பேரா சைக்காரர்களும், பொறாமையாளர்களும் இருக்கின்ற எமது சமூ கத்தில் நமது செயல் தவறாகுமா? என்னுரையிலே இயல்புகாட்டி யெழுதலாந்தானே! சில பத்திரிகையாளர்கள் தம்மைச் சேர்ந்தோ ருக்கு மட்டும் தகுதி குறைந்தபோதும் முதலிடமளித்துப் பணம் பெறச் செய்யும் நிலைகளும் நீடிக்கலாமா? கழுத்து போனாலும் எழுத்து உரிய விடத்தைப் பிடிக்க வேண்டும். நல்ல தகுதியிருந்தால் ஏன் நடிக்கவேண்டும்? பட்டமும் பரிசும் தேடிவரும்.
திறமையில்லாமல் பிறருக்குப் பின்னால் நின்று பெயர் பெறு வதையும், கோவில் நடைமுறைகளில் முன்னின்று புகழ்பெறுவதை யும் விரும்பாத நமது செயல் அத்தகையோருக்கு எத்தகைய தாகுமோ ? 1951லே ஆரம்பமான " " ஆசையின் வேகம்" என்ற பேச்சு ஒலிபரப்பாக்கி அதற்கொப்ப ஈடுபாடு கொண்டு "கலாசூரி? என்ற ஜனாதிபதியவர்களின் மதிப்பான பட்டமும் பெற வைத்தது. தொடர்ந்தும் கலை ஈடுபாடுகளைக் கைவிடலாமா ?
பட்டங்கள் பெறுதல் :
பட்டம், கலாசூரிப் பட்டம் பெற்றுவிட்டேன் என்று பேசா மல் படுத்திருக்கலாமா? பட்டங்கள் பல வகையானவைகளைப் பல வழிகளால் பெறுகின்றனர். தனிப்பட்டவர்கள், சமூக இலக்கியக் கலாமன்றங்கள், மதிப்புக்குரிய பெரியவர்கள், அரச கலாசார ச் சபைகள், அமைச்சவைகள், நாட்டின் பிரதமர், நிறைவேற்றதி கார ஜனாதிபதி முதலியோராலும், முதலியவற்றாலும் பட்டங் கள் வழங்கப்படுவதை நமது நாடு நன்கறியும்.
நிறைவேற்று ஜனாதிபதி அவர்களால் தேசிய வீரர் தின வரிசைக்குள் என்னையும் சேர்த்துப் பட்டம் வழங்கச்செய்தவன் என் தம்பியான இதயக்கனியெனும் வெற்றிவேல் செல்வரசாவே. ஜனாதிபதி மாளிகையில் மேற்காட்டிய பட்டங்களைப் பெற்றுப் பாராட்டுப் பெற கலைஞர்கள், பட்டதாரிகள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், அமைச்சர்களுங்கூடப் பட்டம் பெறுகின்றனர் என்பதை என்னுடன் பலர் பட்டம் பெற்றதாலறிந்தேன். இத னாலேதான் மேற்படி விழாவுக்கு என்னுடன் இருவர் பெயரைக்
ー11ー

Page 13
கேட்டபோது, இதய சுகனியெனும் தம்பி அதிபர் செல்வராசால்ை யும், மதிப்பான அதிபர் மருகன் தங்கத்துரை அவர்களையும் சேர்த்துக்கொண்டேன். மனைவி, மக்களை விட இவர்களுக்கே மதிப்பளித்தேன்.
ஜனாதிபதி மாளிகையில் பட்டம் பெற்றுப் பெரியார்கள் பலருடன் விருந்துபசாரத்தின்போது அளவளாவிக்கொண்டமையும், புகைப்படங்கள் பிடித்துக்கொண்டமையும், அன்புகலந்து நட்புறவு பூண்டமையும் பெரும் பேறென்றுதான் கருதினோம். வெளியே வரும்போது ‘அண்ணா இனிமேல் நீங்க செத்தாலும் பரவாயில்லை. நமது இனத்தார்க்கெல்லாம் பெருமை சேர்த்துவிட்டீங்க 1 இனி மேல் எலக்ஷன் எல்லாம் விட்டுப்போட்டு இலக்கியத்தில் ஈடுபாடு காட்டுங்க! புத்தகங்கள், கவிதைகள் நிலைத்து நின்று நமது பின் தங்கிய பகுதியினரின் பெயரைத் தூக்கும். வளர்ச்சியுறும் மட்டக் களப்புத் தமிழகத்தில் நமது இனத்தின் பெருமையையும் காட்டும்! என்றெல்லாம் சொல்லிய ஒளிகள் என் செவிகளில் கேட்கத்தான் செய்கின்றன. ..ان
அப்படியெல்லாம் சொல்லிய பின், சூறாவளியால் சீரழிந்த வீட்டைப் புதிய அழகு மனையாக்கி எனக்கான பொன், பவழ விழாக்களைக் கொண்டாடவென்று ஒர் அமைப்புக் குழுவையும் அமைத்து, முயற்சி மேற்கொண்டு வருகையிலே விழாவுக்கும் இன்றி, என் சாவுக்கும் இன்றி முந் திச் சென்றுவிட்ட இதயக் கணிக்கு சமர்ப் பணமாகும் இந்த நூல் மட்டும் ஈடாகுமா? படைக்கும் படையல் போதுமா?
பொன், பவழ விழாக் குழுவினர்:
பசிமுக நிறுவனத்தோடு இணைந்த விழாக்குழுவினர் பின்
வருவோர் :
திரு. காசுபதி நடராசா, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்.
, , ஆர். பாக்கியராசா, பதவிநிலை உத்தியோகத்தர். , , ஆர். இருதயநாதன் (கலைக்கோட்டன்), அதிபர். , , கே. கார்த்திகேசு, மு. நா. மாநகரசபை ஆணையாளர். , , எஷ . பொன்னம்பலம், பதவிநிலை உத்தியோகத்தர். , , எஸ். பத்மநாதன் B.A., பிரதி அதிபர். , , வ. குணரெத்தினம், போடியார், நாவற் காடூர். , , தெ. அழகுசுந்தரம், ஒய்வுபெற்ற உத்தியோகத்தர், , , சி. கந்தசாமி, ஒய்வுபெற்ற முதலாந்தர அதிபர். , , ச. சங்கரலிங்கம், பாற்சபையாளார் கல்லடி. , , சி. அருணாசலம், ஒய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர், செங்கலடி.
” سے 12 سے

இத்தனை பேரோடு இரண்டு மூன்று மாதங்கள் ஒடியாடித் திரிந்து வருகையிலே, புறப்பட்டுவரும் வருகையை எதிர்பார்த்து நானிருக்கையிலே, பாடசாலை ஆசிரியர்களும் வருகையினைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேதான் இதயத்துடிப்பை நிறுத்தி எமக் கெல்லாம் படிப்பைக் கொடுத்துவிட்டான். எத்தனை காட்சிகளை இதயத்துள்ளே நிறுத்திவிட்டான். தம்பி தான் அமைத்த மனை யிலே ஆவி பிரிந்ததும் ஒரு சிறு ஆறுதல். 1982ல் அன்றொருநாள்; வெள்ளவத்தைச் சரஸ்வதி மண்டபத்தில், அமரரான பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இரங்கற் கூட்டம். தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், எஸ். திருச்செல்வம் என் போரால் நடத்தப்பட் டது. மறைந்தோரின் மாமனார் திரு. இடைக்காடர் முதலியோ ருட்படப் பலர் இருந்தனர்.
மரணமில்லா மரணம் :
தினகரன் பத்திரிகைத் தொடர்பு 1946 லிருந்து தொடர் வளர்ச்சியால் திடீரென அவர்களின் உத்தரவு பெற்று "மரண மில்லா மரணம்' எனத் தலைப்புக் கொடுத்துப் பல பாடல்கள் பாடி இத்தகைய மரணத்திற்கு இம்மையில் மரணமில்லையோ. ஒ. வென்றலறிவிட்டேன். பங்குற்ற பார்வையாளருக்குள்ளே இருந்த என் தம்பி பலரின புகழ் மொழி கேட்டு, எந்தவூர் மட்டக் களப்பா என்று வினவியதுமறிந்து பாராட்டைக் காட்டிப் பாராட் டினான்.
அக்கூட்டத்திலேதான் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் படிக்குங்காலத்தே கொடுக்கும் பயணப் பணத்தையும், சிற்றுண்டிச் செலவுப் பணத்தையும் புத் த க ங் க ள் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட நேரந் தப்பிக் கால்நடையாகவே நடந்து, பிந்திவந்து சேர்வாராம் என்று மாமனாரான இடைக்காடர் அவர் கள் கூறிய வார்த்தை கேட்டேன். எமது மட்டக்களப்பு மாண வர்க்கெல்லாம் எழுச்சியூட்டக்கூடிய வார்த்தையல்லவா இவை. இவற்றையெல்றாம் நெஞ்சில் பதிப்புறச் செய்துகொள்ளும் சந்தர்ப் பத்தை ஆக்கிய தம்பியும் மரணமில்லா மரணத்துக்குள்ளாகிவிட் டானே! தம்பியின் மரணம் தந்த பாடம் படிப்பிலும் வலிமை dih.g. t1ugil.
உடல் அடக்கம்பண்ணும்போது பலவினத்துப் பல்லாயிர மக்கள் கூட்டத்துள்ளே பலர் உரையாற்றினார்கள். இறுதியாக நான் இரண்டொரு வார்த்தை கூறும்போது 'இலக்கியம் படித் தென்ன? இலக்கணம் படித்தென்ன? இத்தகைய இறப்பு எவரை
----.13 است

Page 14
யுமே வாட்டிவிடும். சகாதேவனும் இலட்சுமணனும் சகோதரனாய் இருந்த நிலை இலக்கியம் காட்டிப் பேசவிடாமல் இடர்ப்படுத்து கின்றதே! என்றேன்.
மேலும்,
இரு கண்மணிகளெனும் மக்கள் அருள் தேவராசாவுக்கும், அருளினிக்கும ஏதொரு திட்டமிடாமலும், மனையறம் மிக்க மனை யாளிடம் கூறாமலும் இருந்துவர மரணம் தனது மகத்துவத்தைக் காட்டி மார் படைப்பை ஏற்படுத்தியதே. புரட்டாதி மாதக் கடை சித் தினத்தன்று மறைந்த பெற்றோர்க்குக் கோவில் சென்று அர்ச் சனை செய்துவிட்டு, புரட்டாதி மாதக் கடமை செய்யும்படி மர ணத்தை வரவழைத்துக்கொண்ட இதயக்கனியை இலகுவில் மறக்க முடியுமா ? 'மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகமான' இநத நூலிலே கூற இன்னும் பல விருந்தும் மறந்தவனாகிப்போகும் நிலை கொண்டுள்ளேன். இந்த நூல் முக்கணி நூலைவிட நின்று பிடிக்கும் நிலை கொள்ளத்தக்க ஆக்க ஆலோ ச னை, அறிவுரைகளைக் கொடுத்த பேராசிரியரைக் காட்டாதுவிடுவேனா ? ஏற்கனவே சொல்லிவைத்தபடி அன்னாரைப்பற்றி என்னுரையில் இயம்புகின் றேன.
பெரும் பேராசிரியர் :
தங்கத்துரை " " எம்பி’யைப் போன்றோரையடுத்துப் படித்த சண்முகதாஸ் இப்போது பேராசிரியராக இருக்கின்றார். என் இதயக்கனியும் வந்தாறுமூலையின் மத்திய கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேதான் பேராசிரியராயிருக்கும் சண்முக தாசோடு, அமீர் அலி, மெளனகுரு முதலானோரும் முன் பின்னாகப் படித்தனர். அந்த வகையினாலும், வெகுசனத் தொடர்புச் சாதனங்களினாலும் பேராசிரியர் கா. சிவத்தம்பியவர்களை என் தம்பியும் அறிந்து கொண்டார். யாழ்ப்பாணத்திலிருந்தவர் எமக்காகத்தான் வருகைப் பேராசிரியராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வந்தாரோ ? சில மாதங்களுக்கு வந்தவரின் தருணத்தைத் தவறவிடலாமோ? என்றெண்ணம்கொண்ட நாம் ஏற்கனவே கூறியபடி ஆசைகொண்டு அண்டினேன். பேராசிரியரின் பெருந்தன்மை கண்டுணர்ந்து களிப் புறத்தக்கது. இத்தகையோரிடம் படிக்குங் காலம் அமையவில் லையே என்ற ஏக்கமும் கொடுக்கத்தக்கது. பலபேருடன் ஒருநாள் கலந்துரையாடலில் சீடனைக் குருவே வியந்து செப்புவதுபோல் "நெஞ்சில் ஒர் ஆலயம்' பார்த்துக்கொண்டிருந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனக்கிளையோன் நடிப்புத்
- 14 അ.

திறமை கண்டு, வியந்து, தன்னையே மறந்த நிலையில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாராம். அது தா ன் உண்மையான கலைத் திறன், அதுதான் கலைஞருக்கு இருக்கவேண்டிய அழகு! அது தான் படித்தோர்க்கும் இருக்கவேண்டிய பண்பு! அந்த நிலைமை தான் மற்றோரை ஊக்குவிக்கக் கலைஞர்களுக்குத் தேவை" என்று சைகைகள் காட்டி இனிய சுவையுடன் இதோபதேசஞ் செய்தார்கள்.
'மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்' என்னும் இந் நூலுக்கு அன்றுதான் உதய நாள் என்றெண்ணுகிறேன். அடுத் தடுத்துச் சில தினங்கள் சந்திப்பு நீடித்தது. விருந்தினர் விடுதிப் பொறுப்பாளர் திரு. ப. யோகராசா அவர்கள் அதற்காவனசெய்து உதவிவந்தார்.
உலகமே அறிந்தவராகியுள்ள பேராசிரியர் என்பதை நான் அறிந்துகொண்டு பயபக்தியுள்ள மாணவன் போலானேன். பேரா சிரியர் தொடர்பு பெருமையுறச் செய்தது. விளககமுறக் கூறினால் தானே வேண்டியோர்க்கும் பயனளிக்கும்.
முக்கனிகள் என்று முன்னர் குறிப்பிட்டேனல்லவா! அக்கனி கள் பேராசிரியருக்குச் சுவையூட்டின. எ ன் றா லும் அவற்றுள் அமைந்துள்ள மட்டக்களப்பின் வளர்ச்சி, மலர்ச்சி, மாற்றமெல் லாம் காட்டி வரலாற்றோடுடிணைந்த பன்குடாவெளிப் போடி யார் இனத்துதித்த நான் எழுதினால் நலம் எனக் காட்டாமல் காட்டி, சொல்லாமல் சொல்லிக்கொண்டே வந்தார். என்னை ஒரளவில் பேராசிரியர் மட்டிடாமல் இருப்பாரா ? அதனால்தான் இந்த வேண்டுகோளை விடுகின்றாரா? மட்டக்களப்பில் ஒரு பாசமா? இவையெல்லாம் எனது மனதுள்ளே சிந்தனை கொடுத்தன. செப் பியதைச் செவிமடுத்தன.
வடக்குக் கிழக்குப் பாகுபாடு வேண்டாம். இலங்கையில் தமிழன் என்றதும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு எனும் பிரதேசங் களே பெரும்பாலும் நினைவிலிடம் பெறும். மட்டக்களப்புபற்றிக் கூறப்போகும் நூலிலே பேராசிரியர் தொடர்பினால் யாழ்ப்பாணம் பற்றியும் சில வரிகள் இதோ.
*பண்பாடு" என்ற ஓரிதழில், "யாழ்ப்பாணத்தவர் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர்கள். கணிதத்தில் அவர்களுக்கு நிகரான வர் கிடையாது. யாழ்ப்பாணச் சமூக வரலாற்றை இவ்விதம் புத் திக்கூர்மையின் அடிப்படையில் விளக்குவோரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் சுயநல இயல்புதான் அச்சமூக வரலாற்றின் அடிப் படை என்பர். வேறுசிலர் அமெரிக்க மிஷனரிமார் கல்விக்கூடங் களை நிறுவியதான தற்செயல் நிகழ்வுதான் அதன் வரலாற்றைத்
جہ سے 15. -ستمے

Page 15
திசைதிருப்பிய செயல்முறை என்பர். இவை யாவும் மேலோட்ட மான விளக்கங்கள்' என்கிறார் பேரின்பநாயகம். The Social Foundation Educational and Economic Activity in Jaffna, Sri Lanka என்ற கட்டுரையிலிருந்து திரு. க. சண்முகலிங்கம் எடுத்துக்காட்டியுள்ளார். மட்டக்களப்பின் நிலைமைக்கும் சில தொடர்புறலாம் என்பதாலே எடுத்தாண்டேன். இந்த வகையால் எல்லாம் பேராசிரியரைப் போற்றலோடு தந்துள்ள அணிந்துரை யும் போற்றுதலைக் காட்டுகிறது. தமிழின் பெயர்ப்பட்ட இச் சேவைகளுக்கு நன்றி கூறு தலைவிட அன்னாருக்கு நான் பெரிதும் கடப்பாடுடையேன் என்று கண்ணியமாகக் கூறுகின்றேன்.
அன்னாரைப்பற்றி ,
** பேராசிரியர் கைலாசபதியைப்போன்றே ஆற்றலும், ஆய் அறிவுத்திறமையும் வாய்ந்த பிறிதொரு பல்கலைக்கழகத் திறனாய் வாளர் இவ்வருடம் மணிவிழாக் கொண்டாடும் பேராசிரியர் கா. சிவத்தம்பியாவர். அவரும் சமூகவியல் அடிப்படை கொண்ட அணுகுமுறையையே தமது திறனாய்விற் பயன்படுத்துகின்றார். தமிழ் இலக்கியம் முழுமையையும் தமது ஆழ அகலப் பார்வை யினால் அளந்து திறனாய்வு செய்யும் சிவத்தம்பி அவர்கள் பல சிறந்த நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியராக விளங்கும் அவர், தமது பயனுள்ள திறனாய்வுப் பங்களிப்புகளால் தமிழ்நாட்டிலும் கணிப்புப் பெற்றவராக விளங்குகின்றார்' (துரை மனோகரன். பேராசிரியர் - தமிழ் இலக்கியம். பக். 78).
நிற்க, "" பாட்டும் விளையாட்டும்" என்ற சுதேச விளையாட்டும், கிராமிய இலக்கியமும் இணைந்த எனது நூலொன்றை வடக்கு - கிழக்கு மாகாண சபை பிரசுரித்து வெளியிடப்போகிறது. அது எனது ஐந்தாவது படைப்பாகும். அதற்கிடையிலே ஆறாவது நூலான இதுவும் வெளிவந்து ஒரு கோணத்திலாவது மட்டக்களப் புத் தமிழகத்தின் நிலையைக் காட்டிக்கொண்டிருக்கும். இணை யற்ற பேராசிரியரின் உரை நல்லிதயங்கொண்ட அனைவருக்கும் நலனளித்து ஊக்குவிப்பதாகட்டும் ! அழகிய முறையில் அச்சிட் டுதவிய கத்தோலிக்க அச்சகத்தார்க்கும் எமது நன்றி உரித்தாகட் டும்.
கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி. (பன்குடா வெளி மூர்த்தி, வெற்றிமகன், வேவி, வள்ளி)
- 16 -

அணிந்துரை
திரு. வெற்றிவேல் விநாயகமூர்த்தியும், நமது இலக்கியப் பண்பாடும்
இலக்கியத்தின் சமூகவியல்பற்றிச் சிந்திக்கும்பொழுது யார் யார் எழுதுகிறார்கள்? எவற்றைப்பற்றி எழுதுகிறார்கள்? எழுதுவ தற்கு எவ்வாறு உந்தப்படுகிறார்கள்? பொதுவில் எவ்வெவை பற்றி எழுதப்படும்? யார் யார் வாசிக்கிறார்கள்? ஏன் வாசிக்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்படும்பொழுது நமது இலக் கியப் பண்பாடுபற்றி நாம் பேசத் தொடங்கிவிட்டோம் என்பது கிருத்து
ஈழத்தின் தமிழ் எழுத்துக்களை ஆராயும் பொழுது பல மட்ட எழுத்துக்கள் வெளிவருவதைக் காணலாம். எழுத்தாளர், புலமை யாளர் என்போருடைய எழுத்துக்கள் ஒரு மட்டத்தில் உலவுவ தைக் காணலாம். அவற்றையும் நுணுக்கமாக ஆராயும்பொழுது வரன்முறையான எழுத்தாளர் என்று தி காள்ளப்படாத சிலர் தமது. தொடர்ச்சியான ஆர்வம் காரணமாகத் தொடர்ந்து எழுதிவரு வதை அவதானிக்கலாம். இவ்வாறு எழுதுபவர்களில் கணிசமான வர்கள் ஆசிரியர்களாகவோ அல்லது ஏதேனும் ஒரு துறைபற்றிய தொடர்ச்சியான புலமை ஈடுபாடு உள்ளவர்களாகவோ, விளங்கு வதைக் காணலாம்,
திரு. விநாயகமூர்த்தி அத்தகைய ஒருவர். இவர் ஆசிரியத் தொழில் செய்தவர். சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். தன் னுடைய ஆளுமையின் வெளிப்பாடுகளில் ஒன்றாக எழுத்தைக் கொண்டவர். அரசியல் ஈடுபாடும் உடையவர்.
இத்தகைய எழுத்து ஆர்வலர்களை நாம் ஒவ்வொரு பிர தேசத்திலும் காணலாம். யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு ஆகிய இடங்களில் இத்தகைய ஆர்வலர்கள் உளர்.
இப்பண்பு நமது மொழிக்கு மாத்திரம் உரியதல்ல. ஒவ் வொரு மொழியிலும் இத்தகையோர் உள்ளனர் எனக்குத் தெரிந்த வகையிற் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் இவ்வாறு எழுதுபவர் கள் பலர் இருக்கின்றனர். இவர்களின் எழுத்துலகப் பயன்பாடு மிகவும் உன்னிப்பாக நோக்கப்படல் வேண்டும்.
ஒரு நிலையில் இவர்கள் நமது இலக்கியப் பாரம்பரியத்தின் அம்சமான 'அநுபவஸ்தர்களின் கருத்துரை" மரபினைத் தாடருகிறார்கள்
- 17 -

Page 16
இன்னொரு நிலையில் சாதாரண இலக்கிய எழுத்துக்கள் (புனை கதைகள், விமர்சனங்கள், இலக்கிய விவாதங்கள் வாசிக்கப் படாத மட்டத்தில் இவர்கள் எழுத்துக்கள் எமது சமூகத்தின் வாசிப்புப் பரிமாணங்களை அகட்டிப் பேணிக்கொள்ள வைக்கின் றன.
இவை யாவற்றுக்கும் மேலாக இத்தகையோர் மிக்க எழுத் தார்வம் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். இது எமது இன்றைய இலக்கியப் பண்பாட்டில் முதியோருக்கு உள்ள இடத்தை வற்புறுத்துகின்றது.
திரு. விநாயகமூர்த்தியின் உறவு எனக்குக் கிட்டியதும், நான் அவருடன் உரையாடும்பொழுது நமது எழுத்துப் பண்பாட் டின் இந்தப் பரிமாணங்களை அவரை உரைகல்லாகக் கொண்டு அறிய முற்பட்டேன். *
மட்டக்களப்பு இலக்கியப் பண்பாட்டின் கவனிக்கப்படாத தளிர்களில் ஒன்றை இவரிடத்துக் கண்டேன். (மற்றைய பிரதேசங் களிலும் நிலைமை இதுவே.) . . . ,י இப்படியானவர்கள் தங்கள் சமூகத்தைத் தாங்களே விவரிப் பது, அதன் வளர்ச்சி வளர்ச்சியின்மைகளை நோக்குவது சுவரா சியமானதாக இருக்கும் என்று கருதினேன். இப்பொழுது அவர் மூலமாக கடந்த 50-25 வருடங்களுக்கு முந்திய மட்டக்களப்பின் "ஒரு வெட்டுமுகம்" வெளிக்கிளம்புகிறது.
இத்தகைய எழுத்துக்கள் மட்டக்களப்பின் சமூக இலக்கிய வரலாற்றுக்கான ஆவணங்களாகின்றன.
திரு. விநாயகமூர்த்தியின் எழுத்தார்வம் நமக்குச் சில வர லாற்றுத் தரிசனங்களைத் தருகிறது. ''
அவருக்கு என் வாழ்த்துக்கள்! நாம் அதிகம் சிரத்தை செலுத்தாத ஒர் எழுத்து முறை யினை அவர் பிரதிநிதித்துவம் செய்து நிற்கிறார்.
மட்டக்களப்பின் ஒட்டுமொத்தமான இலக்கிய வரலாறு எழுதப்படுகின்றபொழுது இப்பிரதேசத்தின் இந்த எழுத்துச் செல் நெறியும் நன்கு பதிவு செய்யப்படவேண்டும்.
கார்த்திகேசு சிவத்தம்பி
வருகைப் பேராசிரியர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழக விருந்தினர் விடுதி, முகத்துவார (பார்) வீதி, மட்டக்களப்பு. 21-7-97.
- 18

மாறிவரும்
மட்டக்களப்புத் தமிழகம்
Tெமது தாயகமான, தமிழகமான மட்டக்களப்பின் எமது வாழ்காலத்தே ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள், மலர்ச்சிகள் என்பனவற்றைச் சார்ந்து இத்தால் ஒருசிலவற்றை எடுத்தியம்பு கின்றேன். எனது வாழ்வில், நானறிந்துகொண்ட எழுபது ஆண்டு கால வாழ்விலே எத்தனை மாற்றங்கள் !
எழுபது ஆண்டுக்குள் எத்தனை மாற்றங்கள்:
மாறிவரும் தமிழகமான இந்த மட்டக்களப்பில் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளேன். மட்டக்களப்பின் மலர்ச்சிக்கும், புகழுக்கும் , பெருமைக்கும் முன்னோடி முதல்வரான கவாமி விபுலாநந்த ஜி நாமத்தோடு அவர்கள் துறவுபூண்ட 1924ஆம் ஆண்டிலே புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிறந்தேன். எனினும் 1997 வரையுள்ள காலத்தில் எழுபதாண்டுகளில் நான் கண்டு, கேட்டு, அனுபவித்தவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறுவதில் பலன் உண்டெனக் கருதியே கூறுகின்றேன்.
மட்டக்களப்புத் தமிழகக் காரைதீவிலேதான் சுவாமி விபுலா னத்தஜீ எனத் துறவுப் பெயர்கொண்டவர் இளமையிலே மயில் வாகனன் எனும் பெயரும், பின்னர் பண்டித மயில் வாகனன் எனும் பெயரும் பெற்றுத் திறமைகளைக் காட்டிக்கொண்டிருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிக்கட்டத்திலும், இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதி வரையிலும் (1882 - 1947) சுவாமி அவர் கள் வாழ்க்கை அமைந்துள்ளது. இக்காலம் காரைதீவு, மட்டக் களப்பு மாவட்டத்திலிருந்து பிரிந்த அம்பாரை மாவட்டத்திற் குள்ளாகியிருக்கிறது. எனது வாழ்வின் கூடிய காலமும் அம்பாறை மாவட்டம் பிரிக்க முன்புள்ள காலமாதலால் பிரிவுபடாத மாவட் டம் என்ற வகையிலேதான், மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் எனத் தலைப்புக் கொடுத்து இதை வெளியிடுகின்றேன். மாற்றங்

Page 17
2 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
கள் பலவற்றைக் கண்டேன். வளர்ச்சி, மலர்ச்சிகளையும் கண் டேன். மட்டக்களப்பின் மறுமலர்ச்சி என்று சொன் னா லு ம் பொருந்தலாம் எனினும் மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் என்பதே மிகப் பொருத்தம் ஆகின்றது.
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டை எட்டிப்பிடிக்கின்ற இக் கா ல க ட் ட த் தி ல் எத்த னையோ மாற்றங்கள், அறிவியல் கலைக்கோலங்கள், சுகாதார நடைமுறைகள், மறைந்துசெல்லும் மூடச்செயல்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புச் சாதனங்கள், கணனி யுகமான கரும நடைமுறை கள் என்றெல்லாம் பற்பல. மட்டக்களப்பிலும் இவ் வளர்ச்சி அறி வியலை விருத்தியாக்கி எம்போன்றோரை மாற்றுகின்றது. இன் னும் அறிவியல் வளர்ச்சியும், சிந்தனை உயர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் கூடக்கூடப் புதுமைகளைக் காணத்தான் போகிறோம்,
மந்திரவாதிகளின் செல்வாக்கு:
நான் பிறந்து வளர்ந்து வந்த இளமைக்காலத்தே மட்டக் களப்பில் மந்திர தந்திரச் செயல்கள் தலைவிரித்தாடிக்கொண் டிருந்தன. நாங்கள் பிறந்த மைகூட மந்திரவாதிகளின் செயல்திற னென்றே பலர் கூறுவதுண்டு. அக்காலம் வைத்தியசாலைகள் மிக மிகக் குறைவு. சுகாதார நடைமுறைகள் அறியாத பகுத்தறி வில்லா நம்பிக்கைகள், மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் மந்திர வாதிகளையும், பூசாரிமார்களையும் போற்றி வளர்த்தன.
வீடுகளில் இடைக்கிடையே பொலிக்கொடி எனும் வைக் கோல்புரியும், வேப்பிலைக் கொத்துகளும் வளைத்துக் கட்டப்பட் டிருக்கும். அதிகாலைப்பொழுதில் சிலரது வீட்டுவாசல்களில் மந் திரவாதிகளின் பூமடைகள், செய்வினைக் கழிப்புகள் இடம் பிடித் திருக்கும். அந்த வழிகளால் போவதையும், விழிகளால் பார்ப்ப தையும் பெற்றோர்களும், பெரியோர்களும் தடைப்படுத்துவர். ஒரு சில வீடுகளில் இரவெல்லாம் தலைவிரித்தாடும் பேயாட்டமும், உடுக்கடித்தலும், பேரிரைச்சலும் இடம்பெறும். இன்னும் சிலரது வீடுகளில் குறிபார்த்தல், செய்வினை செய்தல், செய்வினை எடுத் த ல், கழித்தல் என்பனவெல்லாம் நடைபெறும். நாங்கள் என்ன செய்வோம்? பெரியோர்களைப்போல் பின்பற்றிப் பயந்து நடுங் கியவர்களாவோம் !
ஒரு வீட்டில் கருத்தரித்த கன்னிப்பெண் இருந்தால் அந்த வீட்டாருக்கு அவள் பிள்ளை பெறும்வரை பீடித்திருக்கும் பயம்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 3
அறிந்தோர்க்கே தெரியும். அதுவும் மந்திரவாதி, பூசாரி, பேயோட் டும் ஆசாரி முதலானோர் அக்கம் பக்கம் இருந்தால் ஓரளவு ஆறு தலைக் கொடுக்கும். அதுவும் சிலவேளை ஊருள்ளே பகைவரோ, பொறாமை கொண்டவர்களோ இருந்துவிட்டால் அரை உயிர் போன மாதிரியே வாழ்ந்துகொண்டிருப்பர். பிள்ளைப்பேற்றைத் தடைபண்ணுவர் என்ற பயமே அடிப்படையாகும். இந்த வகை யான எத்தனையோ மூடநம்பிக்கைச் செயல்கள் வலிமையுற்றிருந் தன அக்காலம்.
விவசாயத்திலும் மூடச்செயல்கள்:
கலாசூரிப் பட்டம்பெற்ற ஒரு விவசாயி என்ற வகையில் மாவட்ட விவசாய விழா வின் போ து மட்டக்களப்பில் அன்று *வில்லியம் ஒல்ற் மண்டபத்தில் என்னைப் பாராட்டும் அங்கமும் இடம்பெற்றது. அப்போது என துரையிலே மூட நம்பிக்கையெனும் பகுத்தறிவில்லாச் செயல்களைப்பற்றிப் பேசினேன். பயிர்ச்செய் கையிலும் பகுத்தறிவில்லாச் செயல்கள் பல.
வயல்வெளிகளிலும், சேனைப்பயிர்ச் செய்கைகளிலும், மாடு கன்றுகள் வளர்ப்பதிலும், திருமணம் முடிப்பதிலெல்லாம் மூடச் செயல்கள் நடமாடிக்கொண்டிருந்தன. வேளாண்மைச் செய்கை யில் மூடநம்பிக்கையிருந்ததைக் கண்முன்னாகவே கண்டுகொண்ட னர் இக்காலம்.
வயலுக்குள்ளே ஒரு புதிய கதிர் வேளாண்மையைக் கண்ட தும். வயல் காவல் வயிரவசுவாமிக்கு நேர் கடன் வைத்துவிட்டு, அந்த வாரத்து வெள்ளிக்கிழமையிலே வயலுக்குள் வயிரவர் சடங் குப் பூசை செய்வர்.
குருத்தோலை பின்னிப் பந்தல் போட்டு, பூமாலைகளிட்டுச் சோடித்துப் பொங்கலிட்டு உரொட்டி சுட்டுப் பூ சா ரி க ளை க் கொண்டு ஆவணசெய்வர். மதிப்புறு மயில் தோகைகளைக்கொண் டா சீர்வதித்துப் பூசைபண்ணி வயல் மூலை நான் கிலும் 'சுவாமி கதிரைவேல் சுவாமி கதிரைவேல்!" என்று வேளாண்மைக்குள்ளே கூக்குரலிட்டு நட்டுவைப்பர். எங்கள் அப்பா இவற்றில் முன்னோடி யாயிருந்து இறக்குந்தறுவாயில் உணர்ந்துகொண்டார். இறக்குந் தறுவாயில் உணர்ந்துகொண்டவர் எங்களுக்கும் சிலவற்றை உப தேசம் பண்ணினார். "பழகிவந்த பழக்கத்தாலே எத்தனையோ மூடச்செயல்களைத் தொடர்ந்து நாங்கள் செய்தமைபோன்று நீங்

Page 18
4. மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
கள் வருங்காலம் செய்யாமல் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டு செயற்படுங்கள் வேளாண்மைச் செய்கைக்குள்ளே எத்தனையோ மூடச்செயல்கள் உள்ளன. இவைபோல் மற்றமற்றச் செயல்களி லும் இருப்பதை உணர்ந்தறியவேண்டும். செருப்புப் போடாமலும், குடைபிடிக்காமலும் வயலுக்குள் மடைத்தனமாகத் தானே நடந்து வந்தோம். மெசின் வந்து வேளாண்மைச் செய்கையில் புத்தி புகட்டிவிட்டதே!" என்றெல்லாம் அப்பாவே சொன்னார். நாங் கள் சொன்னால் தப்பாகக் கொள்வர். அவர்களாகச் சொல்வது எங்களுக்கு வாய்ப்பாகிக்கொண்டுவந்தது. மட்டக்களப்பில் மட்டு மல்ல, மற்றைய இடங்களிலும் மாற்றம் ஏற்படத் தான் செய்தது. ஆனால் மட்டக்களப்பிலேதான் மாற்றங்களையும், மறுமலர்ச்சி களையும் அதிகம் கண்டோம்.
இங்கு மட்டுமல்ல இந்தியாவிலும் இவைபோன்றன உண்டு தான். இந்த மாதம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மலையடி வாரங்களில் வாழும் பழங்குடி மக்களிடம் நடந்த செய்தியொன்று பத்திரிகையில் வெளிவந்தது. தகப்பன் பலருக்கு மந்திரத்தால் நோய் நீக்கிச் செல்வாக்குப் பெற்றவர். காண்டுர் ஊரான் என்ற நபரே செல்வாக்குப்பெற்ற தந்தையை ம ந் தி ரத் தா ல் தனது நோயைத் தீர்க்கவில்லையென்று அடித்துக் கொன்றுவிட்டானாம் அவன் இப்போது அப்பனை அடித்துக்கொன்ற குற்றவாளியாகி நிற்கின்றானாம். பாருங்கள்! மத்திரத்தின் தந்திரச் செயல்களை
விவசாய நாடுதானே மட்டக்களப்பு. விவசாயத்திலேதான் கூடுதலான மூடச்செயல்கள் இடம் பிடித்து வந்துள்ளன. மட்டக் களப்பு மாறிக்கொண்டு வருகிறது; மறுமலர்ச்சியுற்று வருகிறது; மாற்றமாகி வளர்ச்சியுறுகிறது. இதனாலேதான் மாறிவரும் மட் டக்களப்புத் தமிழகம் எனத் தலைப்புக்கொண்டோம். மட்டக் களப்பென்பது இப்போது இடங்களாலும் மாற்றமடைந்துள்ளது. அதனால் மட்டக்களப்பென்பதைச் சிறிது விளக்கிக்கொண்டு மாற் றங்களைத் தொடர்ந்து காண்போம்.
வளங்கள் பல கொண்டது மட்டக்களப்பு :
நாடு என்பது நாடா வளத்தனவாயிருக்கவேண்டும் என்று திருவள்ளுவரே கூறிய கூற்றாகும்.
**நாடென்ப நாடாவளத்தன நாடல்ல
நாடவளந்தரு நாடு’’ என்று, இயற்கைவளம் உடைய நாடுதான் நல்ல நாடு என்றார் வள்ளுவர். இப்படி இப்படியெல்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 5
லாம் செய்தால்தான் நமக்கு நாடு நல்ல பயன்தருமென்று ஓடி ஆடி ஆவன செய்யவேண்டிய நிலையில்லாத நாடுதானே நமது மட்டக்களப்பு. ஆதலால் மட்டக்களப்பின் வளங்களைப்பற்றி நன் கறியவேண்டும். ஆகாயவிமானத்தில் இருந்து பார்த்தால் இயற்கை அழகு புலப்படும். அதனால்தானே இலங்கையிலும் அன்னியராட்சி ஏற்பட்டது. இராவணன் ஆட்சியின் பின் சீரழிந்த இலங்கையிலே சரித்திர வரலாறு காட்டும் விசயன் வருகையும், ஆட்சியும் மட் டக்களப்பையும் தொடர்புகொண்டதாகும். மட்டக்களப்பு மான் மியமும் மதிப்புறுஞ் செய்தி கொண்டிருக்கிறது.
'திரும்பியே படகு காற்றுச் சுவறலால டைந்து தெற்கு
அரும்பெரு மிலங்கைநாட்டுக் கரையிலே அடைந்துநிற்க விரும்பிய தோழரோடு விசையனு மிறங்கிமுன்னாள் பெரும்புக Nராவணன்றான் பேர்பெறு நகரமென்றான்.
என்றவன் விசயனென்போ னிலங்கையி லிறங்குங்காலம் கண்டவன் கலியுதிர்த்து யீராயிரத் தெழுநூற்றாறில் (இமு 483) வன்றிறல் திங்கள் மேட மாதமும் வாரம்புந்தி பண்டுநாள் விசயன்காலம் பாடினார் முன்னோர் தாமே.”*
விசயனுடைய மாதா கலிங்ககுலம் பிதா வணாகர்குலம், பிதா சிங்கர்குலத்தில் வந்தவர். இவையெல்லாம் மட்டக்களப்பிற் கும் பின்னர் தேவைப்படும் என்பதாலே இங்கு எடுத்துக்காட்டி னேன். சரித்திர இயலிலும், "மலையாளம் மலையர் குக நாடென் றும், நாகர் இயக்கர் நாகமுனையென்றும் , வங்கர் மட்டக்களப் பென்றும், கலிங்கர் உன்னரசு கிரியென்றும், சிங்கர் மண்முனை என்றும் பல நாமங்கள் குட்டப்பட்ட நாட்டின் விபரங்களைப் பின் கூறப்படும் மட்டக்களப்புப் புராதன சரித்திரம்" பின்னர் கூறுவோம் எனத் தொடர்ந்து பல கூறப்பட்டுள்ளன.
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் எனும் இந்நூலுக்கு இவையெல்லாம் சிறிது பாகமேற்று உதவி செய்யக்கூடியன. எனது பருவ 70 ஆண்டுகாலத்தில் நடந்தவைக்கு முன்னும் பின்னும் சில பின்னிப் பிணைந்துவரக்கூடும்.
மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூல்கள் நம்மிலும் அறிவில் கூடிய அறிஞர்களால் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றிலிருந்தும் தேவையானதை எடுத்துக்காட்டியே எழுதுகின்றோம். மட்டக்களப்பு மாவட்டம் இடைக்காலத்தில் பிரிக்கப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில்

Page 19
6 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
கூடிய காலம் பழைய மாவட்டம் ஆகவே இருந்திருக்கிறது. இப் படி மாறிவந்துள்ளதும் மு த லா வது மாற்றத்தில் இடம்பெற வேண்டியுள்ளது.
மட்டக்களப்பு நிலைமை, மற்றோர், இளைஞர், மாணவர் என்றோர்க்கெல்லாம் தெரியத்தானே வேண்டும். மட்டக்களப்பு மாவட்டம் அல்லது பிரதேசம். வடக்கே வெருகல் ஆறு தொடக் கம் தெற்கே குமுக்கன் ஆறு வரை கதிரவெளி, பொத்துவில், பாணமை, மகாஒயா என்றெல்லாம் பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இன்று மாற்றமடைந்த மட்டக்களப்பாகி, அர சியலுக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் அகப்பட்டுத் திக்குமுக் காடும் தேசமாகிக்கொண்டிருக்கிறது. வேண்டியதை விளக்கும் போது 70 ஆண்டுகால அனுபவ உரையும் கலந்து வெளிப்படுவது பிறரை வருத்தாதிருக்கவேண்டும்.
மறுமலர்ச்சிக்கு அடிகோலிய காரைதீவு மயில் வாகனன் அவர் கள் சுவாமி விபுலானந்த ஜி ஆகிய பின்னும் மட்டக்களப்பை முன் னும் பின்னும் மறந்தாரிலர். அன்னாரைப்பற்றிப் பின்பு விபரிக் கப்படுமெனினும் இப்போது அன்னாரின் பிரதம சீடர் நிலை கொண்ட புலவர் மணி அவர்களின் பாடலொன்றினைப் பாருங்கள்!
"தேன் பாயும் சோலையெ லாம் தீம்பால் பாய்ந்து
தித்திக்கும் கழனியெலாம் வாவி நீர்க்கீழ்
மீன்பாடும் நிறைமதிநாள் இடையா மத்தில்
வெண்ணிலவு பரந்த மைதி கூடும் வேளை
மான் பாயும் வனத்தினிலே மகவு கொண்டு
மத களிற்றின் முதுகில் மந்தி பாயும் மக்கள்
ஊன் பாயும் உதிரத்தில் தமிழும் பாயும்
உயிரனைய மட்டுநன் னா டென் தாய்நாடே' என்றும்,
"மோட்டெருமை வெண்தயிரும் முப்பழமும் கற்கண்டும்
போட்டினிய சீனிதேன் பொருந்து செந்நெல் வெண்சோற்றை கூட்டியொன்றாய்க் குழைத்ததனைக் குலக்குமரர் த மைக்கூவி கூட்டுணு வார் அமிர்தமெனக் குறைவில் செல்வ மவர்க்கம்மா" என்றும் அக்காலத்தே பாடியுள்ளமை மட்டக்களப்பின் வளத்தைக் காட்டுகின்றன. மட்டக்களப்புத் தமிழகத்திலும் குறிப்பாகச் சில கிராமியச் சொற்கள்,
*" குஞ்சு முகமும் கூர் விழுந்த மூக்கழகும்
நெற்றி இளம்பிறையும் கண்ணே, நித்திரையிற் தோணுது கா”*

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 7
**வில்லுக்கு வந்து கொம்பன், விடியளவும் புல் அருந்திக்
கல்லில் முதுகுரஞ்சிக் கொம்பன் காடேறிப் போகுது கா"
'புள்ளெலுக்கா புள்ளெலுக்கா - உன்ற, புருசன் எங்கே
போனது கா,
கல்லூட்டுத் திண்ணையில கதை பழகப் போனது கா" எனும் பாடல்களால் மிளிர்கின்றன. இதனால்தான் போலும் மட் டக்களப்பில் 'ஆடவர் தோளிலுங்கா, அரிவையர் நாவிலுங்கா", வென்று கூறுகின்றனர். இந்த வகையால் எல்லாம் மட்டக்களப்பை முன்னிலைப்படுத்தி நமது மட்டக்களப்பின் மறுமலர்ச்சி காணப் போகுமுன் மட்டக்களப்புப் பெயர் வரலாற்றையும் பார்ப்பது
நலமல்லவா ?
மட்டக்களப்பா? மட்டுநகரா?
மட்டுநகர் என்றும் . மட்டுமா நகர் என்றும் இடைகோலத் தில் குறிப்பிட்டாலும், மட்டக்களப்பென்றே வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. வழமையான பெயர் எதுவாயிருந்தாலும் அதனைச் சொல்லிவருவதே பொருத்தமாகும். அமிர்தத்தை அமுதம் என்று அழைக்கப்பட்டிருந்தால் அப்படியே வேறு காரணங்களைக் காட் டிப் பெயரை அழகுபடுத்தி அழைக்கக்கூடாது. படிக்கின்ற காலத் துத் தேசப்படங்களின் பெயரைக் காலத்திற்குக் காலம் மாற்றுவ தால் இடர்ப்படவேண்டியிருக்கிறது. காரணங்காட்டி மட்டுநகர் என்பதை விட மட்டக்களப்பென்பதே ஆதியிலிருந்து அறிந்த தா கட்டும். வித்துவான் F. X, C யின் மட்டக்களப்பு மான்மியம் உறுதியான அத்திவாரமான நூலாகும்.
மட்டக்களப்புத் தமிழகம், மட்டக்களப்பு மான்மியத்தை விடச் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருப்பதை அறிஞர்கள் பாராட்டுகின்றார்கள். என்றாலும், மூலக்கருவானது முந்தியதுவே. மகா வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா (B. O. I.) அவர் களும் ,
'தேன் பாய இசைபரந்து / சிறந்து பல கலையரங்கு
மீன்பாடு நீர்நிலைகள் / வியன் பொழில்கள் வயல் நிலங்கள்
மான் தாவும் எழில்வளங்கள் / மலரணங்கு களி நிறைந்து
தான் வாழு மட்டுவளர் / தமிழணங்கே நீ வாழ்க!' என்று பாடி முடித்துள்ளார்கள். வரலாற்றோடிணைந்து பாடல்களில் இடம்பெற்ற மட்டக்களப்பெனுஞ் சொல் வருகின்ற சில பாடல் களைப் பாருங்கள். யாழ் நூலில் சுவாமி விபுலானந்தர் அவர்கள்,

Page 20
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
ஆரியர் போற்றும் அணிசால் இலங்கையிலே சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர் புகழும ஏரார் இயன்ற செந்நெல் இன்சுவைத் தீங்கன்னலொடு தெங்கி னிளநீரும் தீம்பலவி னள்ளமிர்தும் எங்குங் குறையா இயல்புடைய நன்னாடு மட்டக்களப்பென்னும் மாநாடு. "" எனக் குறிப்பிட்
டுத் தொடர்ந்து பாடியுள்ளார்கள். மேற்கொண்டும் சுவாமி அவர் கள் செய்தி பின்னர் கூறப்படும் எனினும் அன்னாரைப்பற்றிக் குறிப்பிட்ட பாடல்களிலும் மட்டக்களப்பின் வளம் சிறப்புறக் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இரண்டொன்று:
"வாவி நீழ்புனல் பாடும் மீனொடு,
மானும் மஞ்ஞையும் ஆடிடும்
கூவுங்கிளி கோகுலத்துடன்,
கொஞ்சிடும் அணில் கெஞ்சிடும்
காவிலும் தயிர்பாலிலும்,
நிகர் காணொணா வளநாட்டிலே
ஆவிவந்து கொல் நீ பிறந்தனை,
ஆனந்தா விபுலாநந்தா !
வண்ணை நாரைகள் நன்னு நீர்நிலை,
வாளைமீன் விளையாடலால் கிண்ணை மேலுறு சின்ன மந்திகள்,
கீழ் விழுந் தெழுந்துடன் மேலெழும் புன்னை கிள்ளை பேசுதல்,
பூவையர் குரலோ வென அண்மி நோக்கிடு நாட்டிலே,
வளர் ஆநந்தா விபுலாநந்தா !
சாலி நீள்வயல் மேட்டிலே,
குளிர் தாவிடும் குயில் பாட்டிலே வேலி மூலையில் காதல் மங்கையர்,
வீட்டிலே அவர் கூட்டிலே காலி மேய்ப்பவர் ஆற்றிலே,
கதிர்கட்டி வைத்திடும் சூட்டிலே ஆலியும் கவி பாடிடும்,
ஆநந்தா விபுலாநந்தா !”

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 9
இவையெல்லாம் மாறிவரும் மட்டக்களப்புக்கு வளஞ் சேர்த் துக் கொடுக்காமல் மாறிவிட்டதே !
மட்டக்களப்பு மான்மியத்தில் மகாவித்துவான் F. X, C :
"மன்றலம் புகழ்ச் சேனன் மட்டக்களப்பில் செங்கோல்
அண்டர்கள் புகழோச்சும் நாளது கலியுதித்துச் சென்ற
எண்ணுற்று அறுபத்தெட்டில் (தோராயிரத்து தின்றிலம்பச் செங்கோல் செழித்துயர் தளைத்ததன்றே"
(பக்கம் 21)
"உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த உற்றவர் விழுந்து போற்றத்
தலைவனாய் எழுந்து மட்டக் களப்பினில்இருந்த காலம் கலைவளர் கலியுதித்து மூவாயிரத்தைந்நூறு கடந்த கசலம் புலவர்கள் பாடச் செங்கோ லோச்சினான் புரவலன்றான்.""
(குணசிங்கனாட்சி - பக்கம் 41)
இலங்கைக்கு ஈழம் என்ற சொல்லும் மட்டக்களப்போடு : ރ ر
'திரை செறிந் திலங்குமாழி திடலென வகுத்த யிழத்
தரைதனை அரசுசெய்யச் சைனிய வீரரோடு விரைவொரு கலிங்கதேசம் விட்டவன் வங்கலாடன் கரைநக ரெனுமிலங்கை கண்டனன் களறுவேனே.
கண்டன விலங்கை முற்றும் கலக்கின னரசர் கோவை பண்டு நாளுரிமை கேட்கப் பகுத்ததோர் முறைமை கூற வண்டிசை பாடும்மட்டக் களப்பினை வந்து கண்டு அண்டு நாளரசு செய்தான் என்றனர் புலவர் தாமே"'
(பக்கம் 44)
'மதிசொலிந் திலங்கும் மட்டக் களப்பினை மெளனிசூட்டும்
கதிர்சுதன் செங்கோ லோச்சும் காலமே கலியுதித்து முதிய நாள் நாலாயிரத்து ஒருநூற்றுப் பதினைந்தாண்டில் பதியர சாண்டானென்று பாடினர் புலவர் தாமே?”
(பக்கம் 47)

Page 21
O மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
"அலைசெறிந் துலகில் மட்டக் களப்பினி லரசு செய்ய
கலை வளர் நாதன் தானுங் கருத்து ஏந்துங்காலம் சிலை வளர் கலிபிறந்து நாலாயிரத் தெழுநூற்
றெண்பதாண்டில் பலர் புகழ்ந் திருக்கும் நாதன் பட்டமே தரித்ததன்றே"?
(பக்கம் 49)
மட்டக்களப்பு என்பதனைக் காட்டலோடு அழகு செந் தமி ழும், பொருளும் மிளிர்வதைக் காண்பிக்கவே பல பாடல்களைக் காட்டினேன். ஒருசில பாடல்களில் 'மட்டமாங்களப்பு', 'மட்ட மெனுங்களப்பு', 'மட்டம்புரிகளப்பு" என்றெல்லாம் பாடல் அமைவுக்காக வந்துள்ளதையும் பார்க்கலாம்.
** மட்டு மட்டடா, மட்டக்களப்படா'' என்று மட்டமான களப்பு வாவியெனுங் கருத்திலே வந்ததெனக் கூறுகின்றனர். எப் படியென்றாலும் பதிவான பெயராயிற்றே அதையே பாராட்டிப் போற்றுவோம். தொன்று தொட்டு மட்டக்களப்புப் பெயர் சாச னங்களில் வந்ததாகவும் தெரியவில்லையென்று கூறியிருந்தாலும் பாடல்களில் வந்துள்ளவையே போதும். நாமிப்போது மட்டக் களப்பின் மறுமலர்ச்சி என்றோ, மாறிவரும் மட்டக்களப்பு என்றோ 70 ஆண்டுகாலத்தே காட்டப்புகுந்ததால் தலைப்புக்கேற்றவற்றின் தொடர்பிலே தலையிடுவோம்.
மட்டக்களப்பு இராசதாணி :
முன்னர் மட்டக்களப்பும் இராசதானியாக இடம்பெற்று ஆட்சி செய்த வரலாறும், பல வளங்கள் நிறைந்திருந்த செய்தி யும் " " மட்டக்களப்பு மான்மியத்தால்' அறியக் கிடக்கின்றன. விஜயன் வருகையின் பின்னரும் நடந்த செய்திகளுமுள. சில ஆதா ரங்கள் போதியதாகவின்றி இடியப்பச் சிக்கல்போன்று முள்ளது. முப்பிரிவான ஆட்சிக்காலத்தில் எல்லாளனுடையதற்குள் அமை யாது கண்டி ராட்சியத்துள் அமைந்திருக்கிறது. கூத்திகன் (முத்த வன்) என்பவனுக்கு மட்டக்களப்பு உட்பட்ட பிரதேசமானதால் காட்டை வெட்டிச் சீர்திருத்தி மக்களையும் குடியேற்றி மாளிகை கள் அமைத்து ஆனந்த மடைந்தானாம். இதன் சார்பில் வீரமுனை, மல் கம்பிட்டி எனும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவனுடைய மகன் சேனன் மட்டக்களப்பையே இராசதானியாக்கிக்கொண்ட தும் கலிங்க, வங்க, சிங்கபுரமிருந்தெல்லாம் மக்களை வரவழைத் துக் குடியேற்றியுள்ளான். நான்கைந்து தலைமுறை மக்களாலே

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
ஆளப்பட்டது. இக் காலத்திலே மாட்புட்டி, மணற்பிட்டி, நாப் புட்டி, மலகவத்தை, உன்னாஞ்சை, தம்புட்டி, பங்கிடான் வெளி, அம்பிலாந்துறை முதலியன இராசாக்கள் சபை கூட்டுமிடமாம் எனக் காட்டப்பட்டுள்ளன. இவற்றாலெல்லாம் மட்டக்களப்பும் இராசதானிகளுள் ஒன்றாயிருந்ததென்பதையும், தமிழர்கள் மட் டுமே வசித் துவந்துள்ளார்கள் என்பதையும் அ றி ய மு டி கி ற து. * மேலும் இறுதிக் காலகட்டத்தில் எதிர்மன்னசிங்கன் நீர்நிலைகளை யும், கழனிகளையும் செப்பனிட்டு, சிவாலயங்களும் அமைத்து ஆறுகாலப் பூசை முதலியனவும் நடைபெறச் செய்தான். இவ னரசு சிறப்பானதெனக் காட்டப் பாடலுண்டு.
**கார் தொலைப் பானென விலங்கைக் கனகமுடி
மன்னரெல்லாங் களித்து வாழ்த்தச் சீரிலங்கு மட்டமெனுங் களப்பு நாட்டைச் சிறந்த
கலிபிறந்து நாலாயிரத்தறு நூற்று நாற்பதாண்டில் பார்செழிக்க முடிபுனைந்தான் தோப்பாவைப்
பண்டதாக்கி பருதிகுலன் பவினியாய தேரினிடம் வலந்திரிந்து செங்கோலோச்சு மதிப்பவரசர்
மரபனென்னும் எதிர்மன்ன சிங்கன்தானே' (பக்கம் 57)
இம்மன்னன் காலத்திலேதான் போத்துக்கீசர் முன்பும், ஒல் லாந்தர் பின்புமாக வந்து மட்டக்களப்பிலும் தலையிட்டனர். 44 ஆண்டுகள் ஆண்டு எதிர் மன்னசிங்கள் தே கவியோகமா சக் கண்டி யரசுக்குக் கீழானது. இந்தக் காலத்தில் போர்த்துக்கீசரால் கத்தோ லிக்க கிறிஸ்தவ மதமும் வளர்க்கப்பட்டது.
ஒல்லாந்தரால் பின்னர் கரையோரங்கள் ஆளப்பட்டன. மட்டக்களப்பு கண்டிக்குக் கீழ்ப்பட்டதாக இராசசிங்க மன்னன் கீழிருந்தது. இராசசிங்கன் 06-02-1687ல் இறக்க மட்டக்களப்பில் ஒருவருக்கொருவர் பகை கூட, மட்டக்களப்பும் கண்டிக்கு மூன்றி லொரு திறை கொடுப்பதென ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்த ரால் முற்கு கர், போடி முதலிய கல்வெட்டுகளும், நீதிச் சட்டங் களும் உண்டாகின.
போடி கல்வெடுட் (அதில் தேவையெனக் கண்ட சில) :
திங்கள் நேருலாவும் செகதல மனைத்தும் மங்குறா தழகொடு மண்முனைக் கதிபன்

Page 22
12
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
சிங்க வாகுவின் செல்மதி கொண்டு பங்கிடான் வெளியெனும் பதி தனி விருந்து கலிங்கர் குலத்துக் கண்ணனென் றொருவன் துலங்கி வாழ்நாளில் துதிபெறும் குகன் முறை குன்றா தரசு குடிபடை யோடு கண்டிமா நகர்க்குக் கதியென நடத்தி அண்டர்கள் வாழ்த்த அரசேற் றிருந்து குகன்குல வரிசை குவலயம் வழங்க மகம்பெரி தான மட்டக் களப்பினில் செந்நெல் முத்தானியம் சேர்பதி னெட்டும் கன்னல் கதலி கமுகொடு தேக்கு செழித்து இலங்கத் தேனினங் கூட்டி
மதுரமதனால் மட்டக் களப்பைச் சதுர மதிலாய்த் தரித்து முன்னாண்டு அன்னக் கொடையும் அண்டர்கள் மகிழ மன்னர்க் கதிபன் மட்டக் களப்பில்
இருந்தனர் குடிமுறை யன்றோ டென்றும்
மணற்றிடர் மன்னார் மட்டக் களப்பு இணற்றிரு கோண மலையொடு காலி கைவசம் கொடுத்துக் கப்பமே பெற்று
பார்த்து மகிழ்ந்து பரிவொடு கலிங்கரை சேர்த்து நிலைமையாய்ச் செய்திட இணங்கி சங்கமொன் றியற்றித் தலைமையாய் வைத்து போத்து நாட்டரசன் குகன் புகழ் பரப்பி காத்தனர் இராச குடும்பமாய் வைத்து
பொல்லாங் ககற்றிப் போடியாய் வைத்தால் செந்நெல் செழிக்கும் தேன்சொரிந் தொழுகும்
அறுமக் குட்டியை அழைத்திடச் செய்து பெறுமுன் னரசு பெருமையாய் வழங்க போடி யென்றுரைத்துப் புகழ் பெற்றுருந்து
பெருமை தரும் அருமைக் கவிதை.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 13
இந்தக் காலகட்டத்திலேதான் பிறவினத்தவர்கள் போரில் உதவி செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்குமாகக் குடியேறிக் கொண்டனர். இப்போதைய மட்டக்களப்பு தோப்பாவையெனப் பட்ட பொலநறுவை மாவட்டத்தையும், மொனறாக்கல மாவட் டத்தையும் எல்லையாகக் கொண்டதெனலாம். இதற்குள் ஆடக சவுந்தரி உன்னரசுகிரியிலிருந்து ஆட்சி செய்ததாகவும், குளக் கோட்டன் எனும் மாகோன் இலங்கை முற்றாக ஆட்சி செய்த தாகவும் கூறுவன ஆய்வாளரால் அறியவேண்டியன. எனவே மட் டக்களப்பாராகிய நாமும் ஆண்ட பரம்பரையைச் சார்ந்தவர் எனப் புகழுறக் கூறலாம். 'பங்கிடான்வெளி' யென்று எனது பிறந்தவூர் இருப்பதாலும் பெருமையுறலாந்தானே! மட்டக்களப்பு மாறிக்கொண்டு போகிறதே !
மட்டக்களப்புத் தமிழகம், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் வருகையின்போதும் பின்னரும், இராசதானியாகத் தமிழருக்கு இருந்துவந்ததைக் கட்டுக்கதையில்லாமல் நம்பக்கூடிய ஆவணங் கள் ஆதாரப்படுத்துகின்றன. மட்டக்களப்பு மான்மியம் முக்கிய மான அத்திவார ஆவணமாவதோடு, போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் போதிய ஆதார ஆவணங்களாகும். இதனைச் சுட்டிக்காட்டி ஒர் ஒப்பீட்டாய்வுக் கட்டுரையை மட்டக்களப்பைச் சேர்ந்த திரு. த. சிவராம் அவர் கள் 1993ல் ஒரு மலரில் வெளியிட்டுள்ளார்கள். அதனால் பாராட் டப்படவேண்டியவராவர்.
போடி கல்வெட்டில் "பங்கிடான்வெளி**யெனும் பன்குடா வெளியில் வாழ்ந்த கண்ணன் என்பான் மண்முனைத் தலைவன் என்றெல்லாம் தொடர்ந்து பல ஆதாரங்காட்டி மேலும் ஆய்வு கள் தேவையென்பதைக் கூறியுள்ளமை நோக்கத்தக்கன. இவை யெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு அப்பாற்பட்டவை யெனினும் பற்றுதல் விட்டபாடாயில்லை. மட்டக்களப்பை 1622ல் போர்த்துக்கீசரும், 1838ல் ஒல்லாந்தரும், 1796ல் ஆங்கிலேயரும் கைப்பற்றியதென்பதை ஓரளவிலே அறியமுடிகின்றது. இவைக ளால் தெரிவாகும் தெளிவான சாரம் மட்டக்களப்பு தமிழராண்ட as TL s BTG – 6ö uGg uut (süb. I“...... the Kingdom Batticaloa” என்ற வார்த்தை 1546 லே இடம்பெற்றுள்ளது. மன்னராக இருந் தாண்ட காலத்தையடுத்துப் பிறநாட்டரசின்கீழ் போடி, நிலமை, வன்னிமை என்பதெல்லாம் அரச பதவிகளைக் குறிப்பனவாகும். இடியப்பச் சிக்கல்போன்ற பல சிக்கல் இருந்தாலும் நமக்கொரு சாதகமான முடிவுச் சாரமாக இவற்றைக்கொள்ளலாம். எனது 70

Page 23
14 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
ஆண்டுகால வாழ்க்கையில் மாற்றங்கள், மறுமலர்ச்சிகள், வளர்ச்சி களைக் கூறிக்கொள்ளும்போது முன்பின் தொடர்பு தேவையாகின் றது என்பதை இடையிடையே கூறுகின்றேன்.
வள்னமையென்ற பதவி கொண்டவர் ஒரு பற்றுக்கு அதி பதியான நிலைமைக்காலத்தே நான் படிக்கும் சிறுவனாயிருந் தேன் இக்காலம் பொலீசார் பார்க்கின்ற ஒருசில பிரச்சினைகள், சச்சரவுகளையெல்லாம் வன்னியனார் விசாரணை பண்ணினார். இப்போதைய நிலையை விடப் பெரும் நிலப்பரப்பாக இருந்தது. g) Gay GåT GOT fiř “ “DRO” ”, “ “ AGA” ”, “ “DS”” GT 6ăr Gisp i Gay Tub மாற்றப்பட்டதெனக் கருதுகிறேன். இப்போதைய சிதைவுற்ற மட்டக்களப்பு மாவட்டம் 12 D.S. பிரிவுகளைக் கொண்டுள்ளது. அரசாங்க நடைமுறை மாறினாலும் மூடச்செயல் மாறவில்லை.
மேலும் மட்டக்களப்பார் பலவழிகளில் மூடச்செயல்களை
உணர்ந்துகொண்டனர். வேளாண்மைச் சூட்டுக்களத்திலே 'பரி பாசைச் சொல்" வினால் பொவி " , " " கலங்கல்" " , " " வெள்ளை யன்", "கணக்கன்' , 'வாரிக்காலி' என்றெல்லாம் சொல்லி
சுவாமி வணக்கத்தோடு, பேய் பூத வணக்கங்களும் செய்தமை யெல்லாம் மூடச் செயல்களெனக் கண்டனர். இப்போதெல்லாம் நினைத்தவுடனே உழவு இயந்திரம் முதலியவற்றால் கருமமாற்றிக் கூடிய விளைச்சலைப் பெறுகின்றனர். பஞ்சாங்கம் பார்த்துச் சுப தினங்களில் ஏர் நாளென்றும், விதை நாளென்றும், புதிர் நாள் என்றெல்லாம் நடத்தியவை மூடநம்பிக்கைச் செயல்கள் என்பதை யும் சிலர் உணர்ந்துகொண்டனர்.
சந்திரனில் மனிதன் கால் வைத்ததோடு இப்போது செவ் வாயிலும் ஆளில்லாத ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிற கால கட்டத்தில் இருக்கும்போது பகுத்தறிவைப் பயன்படுத்துவோர் மிகக் குறைவுதான். அறிவு வளர்ச்சியினால் எத்தனை ஆராய்ச்சி களைச் செய்து பயன் கண்டுவரும் உலகிலேதான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மழை குறைந்து பயிர்கள் வாடி வதங்கிய வேளைகளில் மழையை வேண்டிப் பொங்கல் பூசை நடத்துவதோடு ஊரவ ரெல்லாம் சேர்ந்து 'பொம்மை கட்டி'த் தெருவழியே 'மாரி மழை பெய்யாதோ ? மாபாவி சாகாளோ? கோடை மழை பெய் யாதோ ? கொடும் பாவி சாகாளோ ?' என்றெல்லால் கூக்குர லிட்டுப் பொம்மைக்கடித்து இழுத்துச்செல்வர். சிறுவர்களாயிருந்த நாங்களும் கூக்குரலிட்டுக் கொடும்பாவிக்கு அடித்த நிகழ்வெல்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 15
லாம் நெஞ்சில் நிழலாடுகின்றன. விவசாயச் செய்கையிலே இப் பேர்ப்பட்டனபோல் மற்ற மற்றச் செயல்களிலும் மூடச்செயல் கள் அறியாவண்ணம் நடந்துகொண்டேயிருந்தன. மந்திரம் அறிந் தோரும், தந்திரம் தெரிந்தோரும் இச்செயல்களால் மதிப்புடன் வாழ்ந்துவந்தனர். சமூக நடைமுறைகளிலும், சமய நடைமுறை களிலும், அவர்களிட்டதே சட்டம் ஆன நிலைமையும் வலிமையும் நிலவின.
சமூகத்தில் :
சமூக நடைமுறைகளில் திருமணம், பிள்ளைப்பேறு, பெண் பக்குவமடைதல், நோய்நொடி தீர்த்தல் முதலியனவற்றிற்கெல் லாம் மந்திர வாதிகளும், பூசாரிகளும் முந்திய இடத்தைப் பிடித்து விடுவர். பார்த்த பக்கமெல்லாம் வாடிவதங்கிய உடலும், அலங் கோலமான தோற்றமும், எலும்புருக்கி நோய் போன்றோரும் தென்படுவர். அவர்களைப்போன்றோர் மந்திரவாதிகளை வாழ வைத்தனர். தலையிடி, காய்ச்சலுக்கும் குறிபார்த்து நூல் கட்டும் பழக்கம் இருந்ததென்றால் பாருங்கள்! இவையெல்லாம் பின்பற் றிய நமக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகள் உதயமாகின. இக்கால வேளையிலே இந்தியாவில் தந்தை பெரியார், அண்ணா, ஈ.வே.ரா. போன்ற அறிஞர்களால் பகுத்தறிவைத் தூண்டும் அறிவுரைகள், ஆலோசனைகள், நாடகப் போதனைகள் பெருக்கெடுத்தன. ஒரு பக்கம் சுயமரியாதை இயக்கம் என்றும், இன்னொரு பக்கம் முற் போக்கு இயக்கம் என்றும், வேறொரு பக்கம் பகுத்தறிவியக்கம் என்பதோடு, பொதுவுடைமைக் கட்சியென்றும், சோசலிசக் கட்சி யென்றும் மூடக் கொள்கைகளைச் சாடும் நடைமுறைகள் உதய மாகின. மட்டக்களப்பிலும் சுயமரியாதை இயக்கம் என்ற பெய ரில் படித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து நமக்கு முன்னே அறிவு வளர முதல் செயல்படத்தொடங்கினர். சமூக நடைமுறைகளை விடச் சமய நடைமுறைகளில் மூடக் கொள்கை யெனச் சிலவற்றைச் சாடத் தலைப்பட்டனர்.
சமயத்தில் :
பேயாட்டுதல், பலிகொடுத்தல், தீப்பாய்தல், நோய் முத லியவற்றையிட்டுக் கழிப்புச் செய்தல், மரணப் படுக்கையில் சுட லைச் சடங்குகள் முதலானவையெல்லாம் சுயமரியாதை இயக்கத் தினரின் சாடுதலுக்கு இடமாகின. ஒருசிலர் கோவில் நடைமுறை

Page 24
16 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
களிலும் படித்தறிவுக்கொவ்வாதனவென்று சிலவற்றைக் குறிப்பிட் டுக் காட்டினர். அதற்குள்ளும் மிகச்சிலர் 'கடவுளாவதே தடா ? கருத்தில்கொண்டு பாரடா ? கனவுகண்டோரெனச் சொல்லி காசு பொருள் தேடுறார்" என்ற பல சொற்றொடர்களைக் கோவில் சுவர்களிலும், தெருவோரங்களிலும், பட்டணப்பக்கம் மறைமுக மாகவும் எழுதத்துவங்கினர். அப்படி எழுதிய பலர் எமது கண் முன்னே கள்ள வேலைகளால் பணக்காரராகி உள்ளம் பயந்து பயபக்திகொண்டு கோவிலிலே தஞ்சமடைந்து சாமிவேடம் போட் டுக்கொண்டோராயுமிருக்கின்றனர். இவ்வாறான பகுத்தறிவியக் கம் நடுத்தர வயதிலேதான் நம்மை நாடச்செய்தது; ஓரளவில் மூடச் செயல்களை ஓடச்செய்தது; உணரச்செய்தது.
சைவசமயத்திலும் சுயநலத்தாலான நடைமுறைகளும் மூட நம்பிக்கையினை மேன்மேலும் வளர்த்தலும் இடம்பெற அருமை யாகச் சில மறைமுகச் செயல்கள் எங்களைப்போன்றோரால் கைக் கொள்ளப்பட்டன. கடவுள் மனிதனிடம் வாங்கி உண்ணவும் ஆடம்பரமான பூசை வழிபாடு பண்ணவும் தூண்டமாட்டார். ""ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்பதனை இலட்சிய மாகக்கொண்டோர் எமக்கு மதிப்புக்குரியராயினர், வாழும் மனித னிடம் அதைத்தா, இதைத்தாவென்று ஆண்டவன் கேட்கமாட் டார். நேர்க்கடன் வைப்பதும், நேர்க்கடன் தீர்ப்பதும், தீப்பாய் தலும், அழகுடலில் அலகுகள், தூண்டில் கொழுக்கிகள் முதலான வற்றைப் பாய்ச்சி ஆட்டம் ஆடுதல் முதலானவற்றாலும் சிந்தனை பகுத்தறிவை நாடியது. முற்போக்கான சமயவெண்ணங்களில் மனம் ஓடியது, அறிவு போதனைகளைத் தேடியது.
போதனைச் செயல்கள் :
மந்திர தந்திரச் செயல்களின் பயபக்தியினாலேதான் தீப் பாய்தல் போன்ற புதுமைகள் நடப்பதாகக் காட்டி மேலும் தங் களின் செயல்களுக்கு வலுவூட்டிவருவதைக் கண்ட நாம் உண்மை களைச் செயல் நடைமுறைகளால் உணர்த்த முற்பட்டோம். இளைஞர்கள் பலர் எமது போதனைகளில் இழுபடத்தொடங்கினர். தீப்பாய்தல் முதலியன மந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டனவென் பதைத் திரு. ஆபிரஹாம் கோவூர் முதலியோரது கட்டுரைகளை வாசிக்கச்செய்து மறுப்புக் காட்டினர். சவால்விட்ட கோவில் பூசாரிமாருக்கும், வண்ணக்குமாருக்கும் அறிக்கையிட்டு வயல்வெளி யிலே பேயாட்டச் சடங்குத் தீக்குழியிலும், இரண்டு மூன்று பங்கு விறகுத் தீக்குழியமைத்து, தீமூட்டி, தீப்பாய்ந்து காட்டினர்.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 17
பார்த்திருந்த பெரியவர்களும், சிறுவர்களும்கூட அத்தீக்குழி யில் அமைதியாக நடந்துசென்றனர். அதிலே ஒருசில பிள்ளை களின் பெற்றோரான வண்ணக்குமாரும் தீப்பாய்ந்து பார்த்தனர். பின்பு நடைமுறையினை வெளிக்காட்டினால் தீப்பாய்தலால் சம யச் சடங்குகளின் மதிப்புக் கெட்டுவிடும் என்று மன்றாட்டமாக இளைஞரை வேண்டிக்கொண்டனர்.
கோவில் நடைமுறைகளையும், வருமானங்களையும் கெடுத்து விடாமல் தடுத்துவிடாமல் பெரியோர் பிள்ளைகளைக் கட்டுப் படுத்தினர். என்றாலும் பேயாட்டம் ஆடிப் பிணி தீர்த்தல், கட்டுச் சொல்லிப் பணம் பொருள்களோடு, ஆடு, மாடு, கோழி பலியிடக் கேட்டல் முதலியன குறையத் தான் செய்தன. ஒருசில அறிவாளி கள் உணர்ந்து இவற்றைத் தவிர்த்தனர். மட்டக்களப்பில் பிர சித்தமான திரு. பொன்னுத்துரை வைத்தியர் இளைஞர்களை அறிவுரை, ஆய்வுரை, நாடகம், நடிப்புகளுக்கு விட்டுக்கொடுத்து ஒரு முன்னோடியானார். கிட்ணப்பிள்ளைச் சாமியாரும் இப்பேர்ப் பட்டவரே.
அண்ணா முதலியோர் அறிவியல் பரப்புரை :
மூட நம்பிக்கைகள் பாமர மக்களோடு, படித்தவர்களையும் கூடப் பல வழிகளில் ஈடுபடவைத்தன. இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதியில் இளைஞர்களின் எழுச்சியும், அறிவியல் வளர்ச்சி யும் இணைந்துகொண்டன. தந்தை "ஈ.வே.ரா." எனப்படும் பகுத்தறிவுவாதி இராமசாமிப் பெரியாரால் வகுத்துக்கொடுத்த அறிவியல் பகுத்தறிவுச் சிந்தனைகள் எழுச்சியைக் கொடுத்தன; பேரறிஞர் அண்ணா முதலியோரால் வளர்க்கப்பட்டன. பட்ட ணம், கிராமம், பட்டிதொட்டியென்றெல்லாம் அறிவியல் சிந்தனை அலைகள் தொடர்ந்தன.
'இயமனுக்கு வாகனம் என்னவென்று கேட்டால் எருமைக் கடா வென்பர். இலங்கையின் தலைப்பட்டணம் எதுவெனக் கேட்ட போது தெரியாதென்பர். ஆனைமுகன் முருகனுக்கு யாரெனக் கேட்டால் அண்ணன் என்பது தெரியாதாவென்று நம்மையே திருப் பிக் கேட்பர். ஆனைமுகன் என்று எழுதச்சொன்னால் ஆனா ஆவென்னாத் தெரியாதென்பர். திருக்குறளைப் பாடியவர் யாரெ னக் கேட்டால் திருவள்ளுவர் எனச் சொல்லத் தெரியாது, தெரு வோரத்துக் கதை பேச்சிலே புராணக்கதைகளைப் புட்டுப்புட்டு வைப்பர். கையெழுத்துப் போடத்தெரியாமல் கையடையாளமிடும்

Page 25
8 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
போதும், சண்டை பிடிக்கும்போதும் மகாபாரதக் கதையெல்லாம் சொல்லி மண்ணள்ளிப்போட்டுத் திட்டுவர்." படிப்பறிவில்லாது போனாலும் பகுத்தறிவு இருக்கவேண்டுமல்லவா ? இந்த வகைகளில் பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள் எதிர்நீச்சல் போட்டு அறி வியலில் எழுச்சியுண்டாக்கினார். கோவில் நடைமுறைகளில்கூட சில குறைகளைக் காட்டிப் பேசினார். சுயமொழியில் பூசை வழிபா டிருக்கவேண்டுமென்று த வத்திரு குன்றக்குடி அடிகளார் போன் றோரும் வேண்டிக்கொண்டிருந்தனர். அவை ஒருபுறமிருந்தாலும் பகுத்தறிவுச் சிந்தனைகளும், செயல்களும் மூட நம்பிக்கைகளைக் குறைக்கவேண்டும் - மறைக்கவேண்டும்.
நடிகர் திலகம், நடிப்பின் சிகரமான சிவாஜிகணேசன் அவர் களது நடிப்பில் முதல் படமாகப் பராசக்தி வெளியாகிப் பாட மூட்டியது. அதுபோல் இப்போது தந்தை ஈ. வே. ரா. வைச் சினிமாப் படமாக்க நடிப்பில் சிவாஜி இடம்பிடிப்பார் என்ற செய்தியும் இனிமையூட்டுகின்றது.
மூடச் செயல்களை முற்றாக ஒழிக்காவிட்டாலும் முக்கிய மாகச் சிலவற்றைச் சிந்தனையிலெடுத்துச் செயற்படவேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் கூட முன்பு ஒருவேளை ஒன்பது கிரகங்களும் ஒன்றாகக் கூடுகின்றன, ஒரிடத்தில் சேர்கின் றனவென்று கிரகசாந்திக்கான யாகம் செய்ய வே ண் டு மென்று தொடர்புடையோர் கேட்க மறுப்புக் கூறியதையெல்லாம் சிந் தனை காட்டுகின்றது. நம்மையடுத்துள்ள சமயத்தவர்களின் நடை முறைகளும் போதனையூட்டுகின்றன. நாங்கள் சிறுவராகப் படிக் கின்ற காலத்திலே, இலங்கை சுதந்திரமடைய முன்பு 'ராஜா' எனப்படும் நமது நாட்டு மன்னர் பிறந்தநாளை ""ராஜா பிறந்த நாள்' கொண்டாட்டங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தவை மாற்றமடைந்து, நமது மக்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்துகின்ற நிலைமைபோல் பழையன மாற்றமடையவேண் டாமா ? எழுபது ஆண்டுக்குள் எத்தனை மாற்றங்கள் ? சமய, சமூகப் பழக்கவழக்கங்களில், நடையுடை பாவனைகளில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உள்ளன. என்றாலும் நம்பிக்கை யுடையோர் சிலரால் சில மா ற் ற ம டை யா ம லும், குறைந்து கொண்டே மறைந்துபோகாமலிருக்கின்றன, இதனால் சிலவேளை நன்மையுமுண்டு.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 19
நம்பிக்கை :
மனித வாழ்க்கையில் ஒருசில கருமங்களில் ம ன தில் நம்பிக்கை இருந்துவிட்டால் மாற்றுவது சிரமந்தான். இந்த நம்பிக்கை மூட நம்பிக்கையினையும் ஒருபகுதியில் கொண்டதாக இருக்கலாந்தானே! இதனால் நன்மையேற்படுவதும் உண்டு. உதாரணமாக ஒன்றிரண் டைச் சொல்லலாம்.
எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, எனது மனைவி மக்கள், சகோதரர்கள், ஒரு சகோதரனின் பிறவிடத்து மனைவி, எனது மாமன் முறையான இரு இளந் தறுதலைகள் வசித்துவந்தோம். கிராமப்பக்கமென்றால் கேட்கவா வேண்டும்! பற்றுப் பாசங்கள்கூட. எங்கள் வீடு பெரிய மண்டபத்துடன் ஐந்தாறு அறைகளைக் கொண்டது. இருந்தும் அம்மாவின் பெருந்தன்மையினால் ஒரு பானைச் சோறு கறிகளுடன்தான் நடைமுறை. பெரிய பண்ட பத்துள் நாற்பது ஐம்பது நெல்மூடைகள் அடுக்கப்பட்டிருக்கும். இதனால் ஒளித்து விளையாடும் சிறுவர் சிறுமியருக்கு வாய்ப்பான இடமானது எமது வீடு.
ஒருநாள் அம்மாவின் இரண்டு பவுண் தங்கக் காப்புக்கூட்டம் காணாமற்போய்விட்டது. பக்கத்து வீட்டவர் கைமாற்றாக வாங்கி யணிந்துகொண்டு அலுவல் முடிந்து திரும்பியதும் திருப்பிக் கொடுப் பது வழக்கம். அதன்படி அன்று திருப்பி வாங்கிய காப்புக்கூட் டத்தைப் பெட்டிக்குள் எடுத்துவைக்க மறந்து நெல்மூடை யடுக் கில் வைத்துவிட்டார். எமது மகளும், ஒத்த வயதிருக்கும் ஏழெட்டு வயதுப் பக்கத்துச் சிறுமியும் விளையாடிக்கொண்டிருக்கும்போது யாரோ காப்பைக் களவாடிவிட்டனர், நாங்கள் தேடாத இட மெல்லாம் தேடி ஆளையாள் ஐயங்கொள்ளத் துவங்கிவிட்டோம்.
அம்மாவுக்கு ஐயம் அப்பா மேலே எனக்கு ஐயம் அப்பாவோடு சகோதரன் மைத்துனர் மேலே சகோதரர்களுக்கு ஐயம் மாமா மார் மேலே; அப்பாவுக்கு யார்மேலேயும் ஐயம் இல்லை. காப்பு வைத்த நம்பிக்கையில்லை. அப்பா நகை ஈடுவைக்கும் பழக்கத் தால் அம்மா காப்பைக் கொடுக்க மறுத்த கோபமும் இருந்தது. அதனால் காப்பு நெல்மூடைமேல் இருக்கவில்லையென்ற வாதாட் டம். அம்மா வாங்கிவைத்த காப்பு, பின்பு வைக்கலாம் பெட்டி யிலே என்ற எண்ணம் மறதியானது. இரண்டு மூன்று நாள்சளாகி யும் காப்புக்கூட்டக் கதை இழுபட்டுக்கொண்டிருந்தது. காளி கோவில் நேர் கடன் கதையும், கையழுகும்படி நேர் கடன் கத்தோ லிக்கர் கோவில் கதையும், நாகதம்பிரான் நேர்கடன் கதையெனப்

Page 26
20 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பல கதைகள் வீட்டிலே கலப்புற்றன அந்த வாரம் எமது சிற் றுாரிலே ஒரு சாவீட்டுக் கடமைக்கு வந்தார் களுதாவளை பல கலையறிவு செறிந்த பூசாரி, மாந்திரீகர் ஆனைக்குட்டியென அழைக்கப்படுபவர். வரும்போதெல்லாம் வீ ட் டு ப் பக்க ம் வந்து அம்மாவிடம் பேசிக் கோப்பியாவது வாங்கிக் குடித்துவிட்டுப் போவது வழக்கம். அதனால் வீட்டிலே காப்புக்கூட்டம் களவு போனமையறிந்து ஒரு 'வெருட்டு வை' வெருட்டிப் பெரிய சத்த மிட்டு ""நாளைப் பின்னேரம் ஆறு மணிக்கிடையில் அந்தக் காப் புக்கூட்டம் உங்களுக்குக் கிடைக்கும். இல்லாத பட்சத்தில் எனது மையும், குறியும் ஆளைக் காட்டித் தரும். அதன்பிறகு நடப்பதை நான் சொல்லமாட்டேன். அதுவும் பசுபதியான, பதிவிரதையான பாலாத்தையம்மாவின் காப்புக்கூட்டம் படாத பாடு டடுத்தும்" எனக் கூறி இருமல் செருமல் எல்லாம் காட்டித் தோளில் துண்டை உதறிப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்.
'ஆனைக்குட்டியின் மந்திரம் பலிக்கும், அது தப்பாது " என்று வீட்டிலுள்ளாருக்கும் ஆளை ஆளையிட்டுக் கவலை கூடிற்று. அப்பாவுக்கு ஆனைக்குட்டிமேலே நம்பிக்கையிருந்தும் 'போன காப்புப் போனதுதான். ஆனைக்குட்டி மைபோட்டுப் பார்த்து அகப்படவா போகுது? சும்மா விட்டுப்போட்டுக் கிடங்க' என்றார்
9 i LufT.
"அப்படியானால் காப்புக்கூட்டத்திற்குக் கள்ளன் வரல்ல, ஊட்டில தான் கள்ளன்' என்று அப்பாவைச் சுட்டிக்காட்டி அம்மா பேசியதெல்லாம் அடுத்தவீட்டுக்காரருக்கு ஓர் ஆறுதலைக் கொடுத் தது. என்றாலும் ஆனைக்குட்டியின் மந்திரம் என்றதும் அவர் களை வாட்டத் தான் செய்தது. எனது மகளோடு விளையாட வரும் அடுத்தவீட்டுப் பிள்ளை காப்புக் களவு போன பின் அங்கு வரவில்லை. மந்திரங்கால் மதிமுக்ழுக்காலாகிறது.
மந்திரங்கால் மதிமுக்கால் :
மட்டக்களப்பின் மாந்திரீகம் நாலா பக்கங்களும் மதிப்புடை யது. அதுவும் வடபகுதி யாழ்ப்பாணத்திலும், மத்திய மலை நாட்டுப் பகுதியிலும் மதிப்புக் கூடியது; மரியாதைக்கும் உரியது. ""மட்டக்களப்பான் வலுபுரவி மரத்தைத்தோண்டித் தண்ணிரெடுப் பான்', 'படுத்த பாயை ஒட்டவைப்பான்' என்ற கதைகள் நிலவிய காலமும் ஒன்றிருந்தது. மலைநாட்டிலோவென்றால் படிப் பிக்கும் மட்டக்களப்பு ஆசிரியர்களுக்குப் பெரும் மரியாதையும்,

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 21
மதிப்பும். இதனை நான் இளைஞனாக 1950ல் நுவரெலியாவில் படிப்பிக்கின்ற காலத்தில் கண்டறிந்தேன், காலத்தாலுணர்ந்தேன், மந்திரவாதியாகவும் ஆக்கப்பட்டேன்.
எனக்கு அதிபராயிருந்தவர் பட்டம் பதவி கூடிய, தலைக் கர்வங் கொண்ட, கெட்டித்தனம் நிறைந்த, பண்டிதர் இராஜ ஐயனார் என்பவர். "பணி இராஜஐயன்" என்ற பட்டமும் உடையவர். நாலைந்து மொழிகளில் நன்கு பரிச்சியங்கொண்ட வர். தனித் தமிழ் ஈடுபாடு கூடியவர். இலங்கையில் நன்கு படித் தறிந்தவர்களின் சகவாசங்களும் கூடியவர். உதவி ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிபவர் பண்டிதராயிருந்தும் மேல் வகுப்புகளில் மெத மெற்றிக்ஸ் (Maths) எல்லாம் படிப்பிக்கும் ஆற்றலுடையவர்.
இந்நிலைகண்ட நான் இன்னுமின்னும் வாசிப்பறிவைக் கூட்டி னேன். "ஹொட்டல் அறையில் தங்கியதால் நன்றாக வாசிக்கக் குளிரும் உதவிசெய்தது. மட்டக்களப்பில் சிலரது மதிப்பைப்பெற் றவர். சுவாமி விபுலானந்தர், யா ழ் ப் பா ன க் காரைதீவில் பிறந்திருந்தால் இந்தக்காலம் தங்கச் சிலையே வைத்துப் போற்றி யிருப்பார்கள். புலவர் மணி பெரியதம்பியும் கிழக்கில் ஒரு பேரறி ஞர். கிழக்கில் மட்டுமென்ன ? வெண்பாவிற் புகழேந்தி என்ப தோடு, வெண்பாவில் பெரியதம்பி என்றும் ஆகிவிட்டது. என்றா லும் மட்டக்களப்பு மந்திரம், பட்டம் பதவியுள்ளோரையும் பய முறுத்துகின்றது என்றெல்லாம் கூறுவர். 'நீர் என்ன போடி பரம்பரையா? பூசாரி பரம்பரையா? போடிமாரைப்பற்றி நாங்கள் அறியவேண்டும்' என்று வேண்டியவிடத்து வினவிக்கொள்வர்.
மறைமலையடிகளாரின் தனித் தமிழ் நூல்களையே அஃதா வது பிறமொழிச் சொற்கள் சேர்ந்து கலப்படமில்லாத புத்தகங் களேயே பள்ளிக்கூடப் பாடப்புத்தகமாகவும் ஆக்கிவைத்திருந்தார். இக்காலத்தைப்போல் எங்கும் ஒரே பாடப்புத்தகமாக இருக்க வில்லை. பக்கமிருக்கும் நீர்வீழ்ச்சிகளை அறியாமல் திருக்குற்றால நீரையும் சூழலையுமா படிப்பிப்பது என்றெல்லாம் நான் வாதிட் டிருக்கிறேன்.
பாலர் கீழ்ப்பிரிவு வகுப்பிலே நால்வகையான உபகரணங் களைக் கொண்டு படிப்பிக்கச் செய்தவர். அவரிடம் யாவும் வைத் துப் படிப்பித்துக்காட்டியவர் “Kinder Gerden Dip’ படித்தவர். பலவகையான ஆற்றலும் நிறைந்தவர். அத்தன்மையானவர் என் னாலே உதவி ஆசிரியர்களின் பகை கண்டு மட்டக்களப்பான் என் றதனால் பயமுங்கொண்டு ஆதரவாக நடந்தவர். சிலவேளைகளில்

Page 27
22 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
தோட்டத்திலுள்ளவர்க்குத் "தண்ணீர் ஓதுதல்", "திருநீறு போடுதல்" அவர்களது தெண்டிப்பால் இடம்பெறச்செய்து எம் மையும் ஒரு மந்திரவாதியாக ஆக்கியவர். எனது செயல் நம்பிக் கையால் பலர் சுகப்பட்டனர். இவற்றையெல்லாம் இவ்விடத்துச் சொல்லவேண்டிய காரணம், மந்திரங்கால் மதிமுக்கால் என்ற பழ மொழியின் வலிமை கூடியது காட்டவே.
இந்த "மந்திரங்கால் மதிமுக்கால்' பழமொழியினருமை காட்ட மேற்காட்டிய செய்தியும், ஆனைக்குட்டியின் செய்தி யோடு இணைக்கவேண்டியதாயிற்று. சூனியம் செய்வதிலும், மை போட்டறிவதிலும், சுடலைச் செய்கைகளிலும் ஆனைக்குட்டி ஆள் கெட்டி என்பதை நாடே அறிந்த நிலை. இதனால் ஆனைக்குட்டி யின் அதட்டலறிந்த அடுத்தவீட்டுக்காரர் அப்பா பெயரே அடி படட்டும் என்றெண்ணி அடுத்த விடியற்சாமம் அப்பா குட்டாப் பெட்டி வைத்தெடுக்கும் வீட்டு விறாந்தையின் பின்பக்கச் சுவர்க் கட்டிலே நன்கு பளபளக்கும் வண்ணம் வைத் து வி ட் ட னர். ஏழெட்டு வயதுப் பிள்ளை எடுத்தாலும், தாய் ஏழெட்டுப் பிள்ளை பெற்றவள். களவு காட்டிக்கொடுத்து மானங் குறையாது தப்பிக் கொண்டாள். மந்திரங்கால் மதிமுக்கால் வலிமையே.
இந்தவிடத்தில் அக்கதையை விடலாமா ? அப்பா சண் டெடுத்து அம்மாவிடம் கொடுத்துச் சொன்னார். அம்மாவும் நாங் களும் அப்பாவிலே கொண்ட ஐயம் வலுப்பெற்றது. காலை உத யப் பொழுதில் பொழுதுபார்த்துக் கும் பிட்டுப் பூச்சூடிய ஆனைக் குட்டி செய்தியறியாமல், 'இரவைக்கு மைபோட்டுப் பார்ப்போம், தேவையான சாமான்களைத் தேடி எடுங்கள்' என்று அடுத்த வீட்டாருக்கும் கேட்கும் வகையில் கூறி, பின் கா ப் புக் கூ ட் டம் கிடைத்த செய்தி அறிந்து "மந்திரங்கால் மதிமுக்கால் நம்பிக்கை தான் வலிமை கூடியது' என்பதை ஆனைக்குட்டி அறிவாளியான படியால் விளக்கமும் கொடுத்தார். அப்பா கோவிலுக்குச் சென்று சத்தியம் பண்ண ஆயத்தமானார். நடந்திருக்கக்கூடிய செயலைச் சாத்திரம் பார்த்தமாதிரி ஆனைக்குட்டி விளக்கிக்காட்டினார். இது நடந்த ஒர் உண்மைக் கதையென்பதால் மட்டக்களப்பின் மறுமலர்ச்சி நிலைமைக்குள் இடம்பெற வைத்தேன். மட்டக்களப் பின் மறுமலர்ச்சிபற்றிச் சிறிது விளக்கமுன்பு மாந்திரிகம் சார்பில் ஆனைக்குட்டியவர்களை மட்டும் குறிப்பிட்டதோடு விட்டுவிடாமல் நானறிந்த இன்னும் சிலரைக் காட்டுகின்றேன். பட்டணத்தை விடக் கிராமப்புறங்களில் பலர் இருந்தனர்.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 23
உதாரணமாக ஒருசிலர் :
எமதுரரில் "கோவிந்தா' என்ற பட்டப்பெயர் கொண்ட வயிரமுத்துப் பூசாரி, மந்திரவாதி, வைத்தியர், அண்ணாவியார், கவிபாடும் புலவராகவும் இருந்தார். குடும்பிக் கொண்டையும், அகன்ற நெற்றியும், முன்னோக்கி வழிந்த தலையும் உடைய வயோதிபர். நாங்கள் சிறுபிள்ளைகளாயிருக்கும்போது அவரைக் கண்டால் பயந்து நடுங்குவோம். உடலெங்கும் புண்டரிக திருநீற் றுப் பூச்சும், சந்தனப் பொட்டும், வெற்றிலைக் காவிப் பொக்கை வாயும் உடைய தோற்றமுடையவர். பூசாரிக் கோலத்தில் உடுக் கடித்து நடுக்கத்தோடு பாடல் பாடும்போதும், மந்திரம் செபிக் கும்போதும் பிள்ளைகள் பயந்து ஒடுவர்.
படுவான் கரையெனப்படும் பல கிராமங்களில் பலர் இருந் தாலும் ஒருசிலரைக் காட்டுகின்றேன். நாகமணி வாத்தியார் என்ப வர் பரிசாரியாரும், பூசாரியுமாவார். அந்தக்காலத்து எழுத்தறி வூட்டும் ஆசிரியராகவும் இருந்தார். இடாப்படையாளம் இடும் போது ஒரு வாரத்திற்கு அடையாளமிட்டு அறையைப் பூட்டிச் செல்லும்போது பிடிபட்டு வேலையிழந்ததாக வதந்தி. கோவில் களில் மாரியம்மன், கண்ணகையம்மன் சடங்குகளையும், வீடுகளில் பூசாரி வேலைகளையும் செய்துவந்தவர்.
மட்டக்களப்புப் பட்டணத்தையண்டியுள்ள திமிலைதீவில் நாடறிந்த நல்ல கவிஞர், அறிஞர், கலைஞர் எனப்படும் திமிலைத் துமிலன், திமிலை மகாலிங்கம் ஆகியோரின் தந்தையார் மதிப்புக் குரிய மனிதர் திரு. சின்னையா விதானையாரும் பிரசித்தமான வர். இவர் நாடறிந்த நல்ல வைத்தியரும், பூசகருமாவார். இவ ரால் பேணப்பட்டுவந்த கிருஷ்ணன் கோவில் இன்றும் மதிப்புக் குரியதாகும். இவரிடத்தில் தங்கியிருந்து வைத்தியம் செய்யவும், பேய் முதலியன ஒட்டவும் வசதிகள் இருந்தன.
அன்னாருடைய இனத்தவர் சிலர் அவரிடத்தைப் பிடித் துக்கொண்டனர். கிருஷ்ணன் கோயில் கஞ்சன் வதை என்றால் படுவான் கரையோ, பட்டணமோ என்றில்லாமல் மாமாங்கம்போல் மக்கள் கூட்டம் கூடும். இவரும் போடியார் என்ற வகையில் இடம் பெறுவதால், போடியார் என்ற எமது அமிசத்தில் மேலும் விளக்க மறியலாம்.
அடுத்தது, இப்போது கல்லடியில் இருந்து பூசகராகச் சேவை செய்யும் இளைப்பாறிய அரச ஊழியரான திரு. கணபதிப்பிள்ளை

Page 28
24 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
அவர்களும் குறிப்பிடத்தக்கவர். இவர் படித்தவர்கள் சூழவுள்ள கோவில்களில் நடைமுறை கொண்டவராவார். மற்றும் பெரிய தம்பி, அச்சுதன்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, அருளானந்தம் , மாணிக்க ஐயர், அருளானந்தம் ஆகியோரும் இருக்கின்றனர்.
இத்தனையும் உதாரணமாகக் காட்டப்பட்ட ஒருசிலரே. எத்தனையோ பேர் இன்னுமிருக்கின்றனர். அவர்களை விட்டு விட்டு, அவர்களால் ஆட்டப்படும் பேய் பிசாசுத் தெய்வங்கள் பற்றிச் சிறிது பார்ப்போம்.
மரணமடைந்த ஒருவரின் சாவீட்டிலேயும் பேய் பிசா சென் றும், பஞ்சமிப்பேய் என்றும் பயமுறுத்துவர். தந்தை இறந்த சாவீட்டிலே கர்ப்பம் தரித்திருந்த மகளுக்கு ஆகாதென்று அடுத்த வீட்டுக்கெல்லாம் அனுப்பியமை கண்டால் பகுத்தறிவு வேலை செய்யாதா? நோய்நொடி வேளையில் பேய் பிசா சென்று சொல்லி கிட்ட நெருங்குவது கூடாதென்ற நிலை குறைந்தாலும் மாறிய தாகவில்லை.
ஆடும் பேயாட்டம் :
மாரியம்மன் சடங்கு, காளியம்மன் சடங்கு, கண்ணகையம் மன் சடங்கு, திரெளபதையம்மன் சடங்கு என்பவற்றோடு தனிப் பட்ட வகையில் வீடுகளிலும், வயல்வெளி, ஆலமரம், அரசமரத் தடிகளிலும் சடங்கு எனப்படும் பேயாட்டம் ஆடுவிப்பர். பெரும் பாலும் ஆண்களே ஆடினாலும் ஒருசில விடங்களில் பெண்களும் ஆடுவர் ‘அவனைப் பேய்பிடிச்சிருக்கு, அவளையும் பேய்பிடிச் சிருக்கு’ என்று ஆட்டம் ஆடுவித்து, என்ன பேயென்றும், தெய்வம் என்றும் கேட்டறிந்து அதற்காவன செய்வர்.
இவற்றில் காளியம்மன் கோவில் சடங்கு என்றால் பார்ப் போருக்குப் பயங்கரத்தைக் கொடுக்கும் தன்மையான தோற்றம் கொண்டு ஆடுவர். தலைவிரிகோலம், நாக்கு வெளியே நீண்டிருக் கும், கண்கள் ஆவேசக் கோபக்குறியையே அம்பலப்படுத்தும். ஆடு, கோழி பலியிடக் கேட்பர். நரபலி கேட்ட பேய்களும் உண் டாம். எமது காலத்தே திருமலை மூதூர்ப்பக்கத்தே ஒருவன் குடுத்பத்தில் மூத்த பிள்ளையான சிலரைப் பலிகொடுத்துப் பிடி பட்டதைப் பத்திரிகைவாயிலாக அறிந்துள்ளோம். இதனாலெல் லாம் மக்களுக்கு வெறுப்புக் கூடியது. வெறுப்புக் கொண்டாலும் ஒரளவில் நடுநிலை கொண்டவராகவே நாங்கள் சிலர் இருந்தோம்.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 25
நாத்திகனும் இல்லை, ஆத்திகமில்லை. காலம் செவ்லச்செல்லப் பகுத்தறிவு கூடக்கூட இந்துசமய நடைமுறைகளில் சிலவற்றைப் புறக்கணித்தோம். கோவில் தேவைக்கெனப் பணம் கேட்கும்போ தெல்லாம் மறுக்காமல் கொடுப்போம். வண்ணக்கர், மணியகாரன் முதலிய பதவிகளுக்கு உடன்படோம். காரணம், மறு மலர் ச்சி நடைமுறைகளை நடத்துங்காலம் ஆகவில்லை. கோவிலாலேயே வாழ்க்கையையோட்டும் ஒருசிலரும் இருந்தனர்; இப்போதும் இருக் கத்தான் செய்கின்றனர். வேறு வழியின்றி கோவில் விசயத்தை முன்னேற்றங்காட்டி அவற்றால் வயிறு வளர்த்துப் புகழ்பெறுவோ ருக்கும் மதிப்புண்டு. இலகுவான வழி இதுவெனக் கண்டோரு முண்டு. ஆனால் நாமோ பல மதப் பாடசாலைப் பிள்ளைகள் ஒரே பாடசாலையில் ஒன்றாகக் கூடிவாழக் கண்டிருக்கின்றோம். சரஸ்வதி பூசை செய்தோரை விடக் கூடிய புள்ளிகளைப் பெற்று முன்னேறும் பிற மதத்தினரைக் காணும்போது பகுத்தறிவு இயங் காதா ?
பகுத்தறிவை சமூக நலன்களோடு பயன்படுத்தினோ.ே ஒரு சிலர் எடுத்த எடுப்பிலே கண்டிப்பாக நடந்தனர். **கண்ட கண்ட கல்லையெல்லாம் கடவுளாக்கி வருமான ந் தேடலாமா? கருநாகப் பாம்பையும் கடவுளாக்கிக் கோவில் கட்டிக் கும்பிடலாமா? தெரு மூலைகளிலெல்லாம் தெய்வங்கள் எனக் காட்டிப் பொருள் தேட லாமா?' என்றெல்லாம் கேட்டெழுதலாகினர். நாங்கள் சிலர் காலங் கனியட்டும் பார்க்கலாம் என்ற தோரணையில் நடந்து கொண்டேவருகின்றோம், கவிகளில் தெய்வங்களைப்பற்றிப் பாடா மல் சமூகசேவைகளைப்பற்றிப் பாடுகிறோம். அப்படியெல்லாம் இருக்கும்போது நன்றாகப் படித்தவர்களில் சிலர்கூடப் பேய், பிசாசு, ஆவியென்றெல்லாம் இப்போதும் பேசுகின்றனர், எழுது கின்றனர். ஆனால் நாம் கேட்கின்றோம் ஒரு நீதிவானுக்கு, ஒரு ஏஜண்டுத்துறைக்கு ஒரு பட்டதாரிக்கு, ஒராசிரியருக்குப் பேய் பிடித்து ஆட்டியதாக நாம் காணவில்லையே என்று. இந்த விடத் தில் பேய் இல்லையென்றோனும் இருப்பதாகப் பயந்த உண்மைக் கதையொன்றுண்டு. அப்படியும் இப்படியும் அலசுவதாக எண்ணா தீர்கள். மாற்றமுறும் மட்டக்களப்பின் நிலைமை அத்தகையது.
பேய் இல்லையென்றோனும் இருப்பதாய்க் கண்ட கதை :
** என்னடா பேயும் பிசாசும் ? சுடலை வைரவனாம், சுட லைக் காளியாம், சவக்காலையில் இரத்தம் உறிஞ்சும் சவக்காலைப்

Page 29
26 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பேய் என்லெல்லாம் சொல்கிறார்களே, இதெல்லாம் பச்சைப் பொய். பேயுமில்ல பிசாசுமில்ல" என்றெல்லாம் சொல்லிச் சபத மிட்டனர் ஒரு கூட்டத்தினர்.
"எங்கடா பார்ப்பம்! நீயொருவன் மட்டும் தனியப்போய் இருத்தமாவாசை இருட்டில சவக்கால வாசல் கட்டை யில ஒரு ஆணியை அடித்துவிட்டு வா பார்ப்பம்' எனச் சொன்னான் ஒரு வன். அதற்குடன் பட்டான் சுனா மானா இயக்கத்து இளைஞ னொருவன். சவால் விட்டனர்; சபதம் போட்டனர்.
இருத்தை நாளும் வந்தது. கடும் இருட்டு. சவால் விட்ட வர்கள் சந்தோசப்பட்டனர். சபதம் இட்டவன் சந்தோசமாகவே சென்றான். போகும்போது நடுச்சாமம் கடும் இருட்டென்றபடி யால் நல்ல வெள்ளை ஆடையாக அணிந்துகொண்டான். அக் காலம் "வெல்ஸ்" இல்லை. தலைமயிர்க் கறுப்பையும் காட்டாது சால்வையால் மறைத்துக் கட்டிக்கொண்டான். போகும்போது பாடிக்கொண்டே சென்றான். பயத்தினால் அல்ல, வேறு யாரும், ஏதும் மோதிவிடக்கூடாதென்பதற்காகவே ! சைக்கிள் ஓட்டம் பயங்காட்டவில்லை.
"பேய் ஆவதே தடா? பிசாசு என்ப தேதடா?
நாய் பூனை வந்தாலும் நாலுகால் பேயோடா? எழுந்து ஒடக் காலில்லை என்னைப் பிடிக்க ஆளில்லை எலும்பு தோலாய் இருக்குமாம் இரும்பைக் கண்டால்
ஒடுமாம்."" சவக்காலை, ஊர் கடந்து காட்டுக்குள்ளே ஒரு மைலுக்கப் பால் இருந்தது. அதனால் சைக்கிள் வண்டியிலே சென்றான். பாடிக்கொண்டே செல்வது பயம் எனக்கொள்ளலாம். சைக்கிள் இரும்பு என்பதாலும், கையிலிருக்கும் ஆணியும் இரும்பு, சுத்தி யலும் இரும்பு என்பதாலும் 'தென்பு" கூடியது. பயம் வந்தா லும் ஓடியது. ጴ
குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் சைக்கிளை வைத்து விட்டு ஆணியை இடக்கையிலெடுத்து வாசல்கட்டையில் வலக் கையால் சுத்தியலைக்கொண்டு இரண்டு மூன்றடி இறு க் க மாக அடித்துவிட்டுத் திரும்பினான். அவ்விடத்தே மல்லாக்காய் விழுந் தான். "ஐயோ! பேயோ? பேயடிச்சுப்போட்டுதே!' என்றதோடு ஆள் பேச்சுமூச்சில்லை.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 27
பந்தயம்பிடித்துப் போனவன் வரவில்லையே என்று பார்க் கச்சென்றனர் மற்றவர்கள். அவர்களில் மூடநம்பிக்கையுள்ளவர்க ளோடு ஆணியடிக்கச் சென்றவனுடைய பக்கத்துப் பகுத்தறிவு வாதிகளும் இரண்டொருவர் இருந்தனர். அரைமணியாகியும் ஆள் வரவில்லையே என்ற கவலையுமிருந்தது களிப்புமிருந்தது சில ருக்கு. பயந்து பயந்து பக்கஞ் சென்றனர். பகுத்தறிவுவாதிகளும் உடன் சென்றனர்.
பக்கம் சென்றவர் கண்ட காட்சி பயத்தைக் கொடுத்தது. "பேயடித்துவிட்டது அவனை' என்றனர். பயத்தால் 'திரும்பு வோம்' என்றனர் சிலர். பகுத்தறிவுவாதிகள் விடாமல் அவன் பக்கம் சென்று பார்த்தனர். நெஞ்சுத் துடிப்பு சாடையாக இருந் தது அடித்த ஆணியில் தலையில் கட்டிய சால்வைத் தலைப்பும் சேர்ந்து அடிபட்டிருந்ததால் ஆளை விழுத்திவிட்டதை அறிந் தனர். உடனே முதலுதவியாக நெஞ்செல்லாம் தடவிக்கொடுத்து பேசிக் கதைக்கமுடியாத நிலையில் ஆளைக் கொண்டு வீடிசேர்த் தனர். அவனும் பேயடித்து விழுத்தியது என்று நம்பியதால் பயம் இரத்தோட்டத்தைப் பாதித்தது. இப்படியெல்லாம் நடந்தும் " பேயில்லையென்போர் இல்லையெனும் பல்லவியையும். பேய் உண் டென்போர் இருக்கிறதெனும் பல்லவியையும் பின்பும் தொடரத் தான் செய்தனர். இப்படியான சமூக நிலைமையால் மட்டக்களப்பு மண்டிக்கிடந்தது.
பிரிப்பு, இணைப்பு :
ஒருசில பூசாரிமாரும், பேயோட்டிகளும் மேற்காட்டிய நிசழ் வினைச் சாதகமாகப் பயன்படுத்தினர். குடும்பங்களைப் பிரித்தல், பிரிந்தோரைச் சேர்த்தல், பில்லி சூனியஞ் செய்தல் ஆகியவை களில் செல்வாக்குடையோர் குறைந்தாலும் இப்போதும் இருக் கத்தான் செய்கின்றனர். ஆணியடித்து ஆபத்தைத் தேடிக்கொண் டவனின் பெற்றோர் பேயோட்டிகளை வீட்டுக்கழைத்து அடித்த பேயையும், பிடித்த பேயையும் ஒட்டுமாறு வேண்டிக்கொண்டு நடைமுறைச் செயலில் இறங்கினர். பெற்றோரின் சொல்லுக்குப் பிள்ளையும் ஆட்டப்பட்டான். பகுத்தறிவிருந்தும் அத்தகைய சூழ் நிலைகளும் அறிவை மயக்குகின்றன. இத்தகைய பேயோட்டிகள் வேறு வேறு சாதிப் பாகுபாட்டிலும் இருக்கின்றனர். சமூகத்தில் பந்தியில் வைத்து உபசரிக்கமுடியாத பரம்பரைப் பழக்கவழக்க மும் இருந்தது. கிணற்றிலே தண்ணிரள்ளிக் குடிக்கத் தடையான காலமும் இருந்தது - சில இடங்களில் இப்போதுமிருக்கிறது. பூசாரி

Page 30
28 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
முதலியோர் இழிவான சாதியெனக் கொண்டாலும் தமது செயல் களை முடிப்பதற்காக அதிக மதிப்புக்கொடுத்தனர். சிலர் இழிவான சாதியெனத் தெரிந்தும் தம் இனத்தவர் போல் மதித்து நடத்தினர்.
பிரிந்த குடும்பத்தினரைச் சீனி ஓதிக்கொடுத்துச் சேர்த்து வைத்தல், சேர்வைக்கான மருந்து தயாரித்துத் தண்ணிரோடோ உணவோடோ உண்ணக்கொடுத்தல், உடைத்த சோடாப்போத்த லுள்ளேயும் மருந்து போட்டுக் கொடுத்தல் முதலியன நடைபெற் றுக் குறைந்து மறைந்துபோகாமல் தொடர்கின்றன. மிக விசேட மாகப் பிள்ளை வரம் கொடுத்தலில் பலர் ஈடுபாடு கொண்டிருந் தனர்.
உண்மையிலே ஒரு மந்திரவாதி நன்கு வசியப்படுத்தி, மற் றோரை நம்பிக்கைகொள்ளும் வகையில் நடந்து ஆறு ஏழு ஆண்டு களாகப் பிள்ளையில்லாதவர்களுக்குப் புருசனை வெறியால் மயக் கித் தானே பிள்ளையுண்டாக்கியதுமுண்டு.
மட்டக்களப்பில் 'சூனா மானா'' இயக்கம், எங்களைப் போன்றோரின் பகுத்தறிவு இயக்கம் முதலியன இயங்குகின்ற வேளையிலே மிகப் பிரசித்தமான சித்தானைக்குட்டியர் கதை அடிபட்டது. பெரும் மதிப்பும் அ ன் னா ரு க் க ளி க் கப் பட்டது. பிள்ளைவரங் கொடுத்தலிலே பிரசித்தி மெற்றவராய்த் திகழ்ந் தார். எப்படி நடந்ததோ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். சுவாமி விபுலாநந்தருடைய காரைதீவிலே, அவர் காலத்திலே வாழ்ந்தவர். சுவாமிக்குப் பிறகும் வாழ்ந்து 1951லே சமாதியுற் றிருக்கிறார். இவையெல்லாம் அறிவை மயக்க மயங்குவோருமுண்டு மலர்ச்சி கண்டு மாற்றமுறும் மட்டக்களப்பு மயங்கா திருக்கட்டும்
மந்திரவாதி, பூசாரி, வைத்தியர் கோலங்கொண்ட சா யெனப்படுவோர் பலருண்டு. இவற்றையெல்லாம் பகுத்தறி நடைமுறைகொண்டோர் கதைகளிலும், சினிமாப் படங்களிலும் நாடகங்களிலும் போதனையாக ஊட்டித்தான் வருகின்றனர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் வேலை காரி, பராசக்தி முதலிய படங்களும் போதனையூட்டின. அவ. களின் நூல்களும், சஞ்சிகைகளும் மேலும் அறிவூட்டுகின்றன இவற்றால்தான் ""முற்போக்கு' என்பது ஏற்பட்டதோ? நாம யோம். சாதியில் குறைந்தோர் எனப்பட்டவர்கள் முக்கிய இட பிடித்து, பட்டம் பதவி பெற்று, ஆதரவாளர்களால் ஆதரிக்க பட்டுவரும் நிலை இலங்கையிலேயும், குறிப்பாக மட்டக்களப் லேயும் நிலவுகின்றது.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 29
சாதி வேறுபாடு காட்டாது கலப்புறு நிலையேற்பட்டுவந் தாலும் பரம்பரை மாறாதிருக்கின்றது. மட்டக்களப்பில் தமிழ ரோடு முஸ்லிம்களும் இப்போது இடையிடையே சிங்களவரும் இன வேறுபாட்டுக்குரியோர் வேற்றுமையில்லாது வாழ்ந்தாலும், இனம் இனமாக இருந்துவிட்டுப் போகட்டும். சாதியென்று தமிழினத் துள்ளே பல இருந்துவருவதை நாம் கூறிக்காட்டாது விட்டாலும் பரம்பரைப் பாடல் மட்டக்களப்பு மான்மியத்திலிருக்கிறது.
** உழவர்க்குச் சிவனாம், உடுக்கு மாரியம்மன்
நளவர்க்கு வயிரவனாம், நாடார்க்குக் கண்ணகையாம் தொழு வார்க்குப் பிதிராம், தொண்டர்க்கு வேலவனாம் மழுவார்க்கு வீரபத்திரன், மறையோர்க்கு நான்முகனே வேந்தர்க்கு மாலாம், வேடர்க்குக் கன்னியராம் ஏந்துபணி செய்வோர்க்கு காளியாம் நேர்ந்து வைக்கின் முட்டன் முடுவன், முனிவர் வரினும் பட்ட மது கட்டிவைத்தான் பாண்டிமன்னன் நிச்சயித்து.”*
மட்டக்களப்பு மான்மியத்தில் இந்தப் பாடலோடு இன்னும் சில சாதிப் பாகுபாடுகள் நமது சமூகத்திலிருந்வருகிறது - முஸ்லீம் களுக்குள்ளும் இருக்கிறதாம்.
பாரதியார் பாடல் சில :
'ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை சாதியிம் இழிவுகொண்ட மனிதரென்போர்
இந்தியாவில் இல்லையே." என்ற அமரகவி பாரதியாரின் பாடலை 1948லே,
*" என்று சொன்ன பாரதியார் இறந்து விட்ட போதிலும் நன்று அவர் நாமங்கூறி நாமுங் கூட வாழ்த்துவோம் இந்தியாவில் மட்டுமென்ன இலங்கையிலும் அவ்விதம் சிந்தியாமல் செப்பியென்ன தேச மெல்லாம் அவ்விதம்' என்று சேர்த்துப்பாடி தினகரன் பத்திரிகையில் முன்பக்கம் கொட்டை எழுத்துக்களிலே வெளியாகிய இப்பாடல் சிந்தனையை நினைவுபடுத்தத் தொடர்

Page 31
30 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பான தேவையாகின்றது. இன்னும் சில பாடல்களையும் காட்டு கின்றேன்.
'மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் அறிவிலிகாள் - எத னுாடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோ தி யறியீரே ?" என்றும் ,
""குத்திரனுக் கொருநீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரம் அல்ல சதியென்று கண்டோம்" என்றும்,
"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணியிருப்போர் பித்த மனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்' என்றும் பாடியுள்ளவை பயனுள்ளதெனக் காட்டுகின்றேன். மேலும் காளி யம்மன் சார்பான எட்டு அவதாரக் காளியெனப் பிரித்துக் கூறிய ஒரு பாடலிலே,
*" விரித்த சடையும் வெண்ணிறப் பல்லும்
கடித்த பல்லில் காண்பது பிணமும் - சுற்றியே பூதங்கள் துணையாய் வரவும்
காலில் சிலம்பு கலீர் சலீர் எனப் பாதச் சிலம்பு பளீர் பளிர் என
எடுத்த குலமும் இலங்கிவரவே - துந்தி பம்பை தொடர்ந்து முழங்கக் குறும்பர்
வல்லர் சூழ்ந்து வரவே எச்சில் பசாசியை எட்டத்தில் ஏற்றி
வாழைப் பழத்தை வாரி விழுங்கி கஞ்சா அபின் கள்ளுடன் சாராயம்
கனவெறி யாகி மனைக்கு வாக்குக் கொடுத்து போவின் அம்மா தாயே !' என்றுள்ளது.
எட்டுக் காளி வகையினையுந் தொட்டுக் காட்டுகின்றேன் பாருங்கள்! பத்திரகாளி, வடபத்திரகாளி, வீரமாகாளி, கங்கைக் காளி, சுடலைக்காளி, அக்கினிக்காளி, ருத்திரகாளி, நரசிம்ம காளி என்ற எட்டுவகையாம். வீடுகளில் குடும்பச் சண்டைகள் வந்த போது பொறுமை, அடக்கம் இல்லாத பெண்களைப் "பத்திர காளி"யென்று ஏசுவது மட்டக்களப்பில் வழக்கம் என்று சொல்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 31
வது பொருத்தந்தானோ? ஒரு பத்திரகாளியே அப்படியென்றால் எட்டுப் பத்திரகாளியையும் எண்ணிப்பார்க்கப் பகுத்தறிவுண்டா? போகட்டும். மட்டக்களப்பில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா ? மாற்றமுற்றுவருகிறதா ?
கவிமணி குணரெட்னத்தின் கவி :
இப்படியான இயற்கைவள நாடு ஏற்றம்பெற்றுள்ளதா? மேலும் மட்டக்களப்புக் கலாசாரப் பேரவையிலே அன்புடைய நண்பன் அமிர்தகழியான் குணரெத்தினம் பாடிய பாடல்களில் சில.
'கூத்துகளும் குரவைகளும் கொம்புமுறி விளையாட்டும் பார்த்துப் பசியாறு தற்குப் பால் தயிரும் நெய்தேனும் சேர்த்துச் சுவைக்கின்ற சிங்கார வள்ளியெங்கள் பூத்த மலர் போலழகுப் பொன் நாடாம் எம்நாடு.
வித்தகராம் சுவாமியெங்கள் விபுலா நந்தருடன் முத்தமிழைக் காத்து நல்ல முறையாகத் தமிழணங்கில் பற்று வைத்த புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையவர்க்கு சற்றும் இளைத்திடாத சரீபுதீனும் வாழுராம்.
பச்சரிசி பயறுசீனி பொங்கித் திரண்டதுபோல்
முச்சங்கம் வளர்த்த தமிழ் மூன்றும் இணைந்ததுபோல்
பச்சமுடன் மூவினமும் பழகி உறவாடுகின்ற
பச்சைப் பசேலழகுப் பாய்விரிக்கும் எம்நாடாம்' என்று பல பாடல் தொடர்ந்து பாடியுள்ள நாடு எமது மட்டக்களப்பு மாநாடு. மூவின ஒற்றுமை மட்டுமல்ல, பலவித மதப்பட்சமும் érat-tu gó) •
சமய ஒற்றுமைச் சமநிலை :
முந்து சமய இந்து சமயமாயிருந்த மக்கள் அந்நியராட்சி யிலே பிற மதங்களுக்கு மாற்றப்பட்டாலும், அம்மதத்தினரின் கல்வியூட்டலால் சிறப்படைந்த நாடு. கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயங்கள் கணக்கற்றோர் வாழ்க்கையினை உயர்த்திவிட்டிருக்கின் றன. பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேதான் இராமகிருஷ்ண மிஷனின் தலையீட்டால் இந்துசமயப் பிரசாரமும், கல்வியும் பயனுாட்டின. இடைப்பட்ட இக்காலத்தில் முஸ்லீம் மக்கள் கல்வியில் முன்னேற்றமடையத் தமிழாசிரியர்களும், பிறரும்

Page 32
32 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
ஈடுபட்டுப் பாடுபட்டதை நாம் சொல்லாமலே அவ்வினத்தாரும் சொல்வர். 1960க்குப் பின்னர்தான் அவர்களினத்தவர்கள் கல்வி யிலே முன்னேற்றங்காண முயற்சியைக் கூட்டினர். தமது இனத் துக்கெனத் தனித்துவ சலுகைகளைப் பெற்று முன்னேறி எம்மை முந்தும் அளவில் இருக்கின்றனர். அவர்களின் இஸ்லாம் சமயமும் எமது பகுத்தறிவுக்குச் சார்பாகவுள்ளதையும் பாராட்டத்தான் வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் ஐந்தாறு சமயங்கள் இருந் தும் அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர். இப்போது அப்படி வாழ அரசியல் இடமளிக்குமா ? அரசாங்கம் வழிவகுக் குமா ? கடந்தகாலம் கண்ணாடியா கட்டும்.
பாரதியாரும் பகுத்தறிவாளரே :
மட்டக்களப்பின் மறுமலர்ச்சிக்கான நிலைமைகளை இனி மேல் தொடர்ந்து பார்க்கப்போகின்றோம். பகுத்தறிவுச் சிந்த னைக்குப் பாரதியை எடுத்துக்காட்ட இன்னும் இடமுண்டு. பாரதி யாரும் பகுத்தறிவு இயக்கத்தில் இணையாத அணைவுள்ள பகுத் தறிவுவாதி என்பதற்குப் பல காரணங்கள் கூறலாம். இக்காலம் எங்கும் பரவிக்கொண்டுவரும் சரஸ்வதி பூசையால் பாடசாலை களிலும் பகைமையேற்படுவதுண்டு. இதனால்தான் அக்காலத்தே கூறிய அறிஞனின் பாடலப் பாருங்கள்.
"செந்தமிழ் நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர் வந்தனம் இவட்கே செய்குவ தென்றால்
வாழி அஃதிங்கு எளிதன்று கண்டீர் மந்திரத்தை முணுமுணுத் தேட்டை வரிசையாக நிறுத்தி அதன்மேல் சந்தனத்தை மலரை இறைத்தல்
சாத்திரம் இவள் பூசனை அன்றாம் வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வி இல்லாதோர் ஊரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்"

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 33
பார்த்தீர்களா ! நான் பிறக்கமுன்பே 1921லே முப்பத்தொன் பது வயது நிறைவுற முன்பு இறந்த (இறப்பிலே 39 பேர்தானு மில்லாது) சுப்பிரமணிய பாரதியார் சொன்னவற்றை இன்னும் சொல்லிக்காட்டவேண்டியுள்ளதே. ‘மந்திரத்தை ஓதி வரிசையாகப் புத்தகங்கள், ஆயுத உபகரணங்கள் முதலியவற்றை அடுக்கிப் பூசுஞ் சந்தணத்தால், ஊதுபத்தி, கற்பூரக் குங்குலியப் புகையால் எல்லாம் பலன் காணமாட்டோம். கல்விச்சாலைகள் அமைத்துக் கல்வியையூட்டுதலே கலைமகள் வணக்கம் போன்றதாகும்' எனப் பாடியுள்ளார். இத்தோடு மலர்ச்சி என்றோ, மாற்றம் என்றோ நாம் கூறக்கூடியதையும் விளக்கக் கல்விச்சேவையையுங் காட்டுதல் நலந்தானே!
நல்ல சேவை செய்த நல்ல ஐயா நல்லையா :
இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதியளவில் மீட்டக்களப்பில் கல்வி மறுமலர்ச்சி ஒரளவு உதயமாகத்தொடங்கியது. பாரதியார் பாடலுக்கமையக் கல்விச்சாலைகள் எழத்தொடங்கின. இராமக் கிருஷ்ண மிஷன் சார்பான பாடசாலைகளை சுவாமி விபுலாநந்தர் மட்டக்களப்புக் கல்லடியிலும், வேறுசில கிராமங்களிலும் உதய மாக்கிக்கொண்டிருந்தார். அ ன் னா ரு க் கும் மேலான பொதுச் சேவை செய்ய அன்னா ரோடிணைவான சேவையிலிருந்த திரு. வி. நல்லையா B.A. (Hons) அவர்களுக்கு வாய்ப்புக்கிட்டியது.
டொனமூர் அரசியல் திட்டப்படி இயங்கிவந்த அரசாங்க v60 Luud) (State Council) M. S. C. 67 g), Li Liu 5 figuri 607 Tri. பின்னர் கற்குடாத் தொகுதியில் போட்டியிட்டுப் பாராளுமன்றத் திற்குப் (Parliment) பிரதிநிதி (M P.) ஆனார். முன்னர் மட்டக் களப்போடு திருமலையும் இணைந்த பெருநிலப்பரப்பான பகுதி தொகுதிகளாக்கப்பட்டதும் கற்குடாத் தொகுதிக்கே பிரதிநிதி யாகிப் பிறகு தபால் தகவல் அமைச்சராகவும், வெளிநாட்டலு வல்கள் பிரதி அமைச்சராகவும் இருந்து சேவைசெய்தார். அன்னா ருடைய சேவையின் திறமையினாலே விசேடமாகக் கல்வி, சுகா தாரச் சேவைகளினால் மட்டக்களப்பு மறுமலர்ச்சியடைவதில் வளர்ச்சிகண்டது. தமிழும் அரசமொழியாகப் பாராளுமன்றத்தில் பேசிச் சட்டமாக்கிய முதன்மையானவர் அவரே.
1945ல் ஆசிரியர்களில் பயிற்றப்பட்டோரையோ, பட்டதாரி களையோ அபூர்வமாகக் கண்ட மட்டக்களப்பு, 1960களில் பயிற்

Page 33
34 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
றப்பட்ட பல ஆசிரியர்களையும், 1970களில் பட்டதாரிகளையும் பரவலாகக் காணக்கூடியதாய் மறுமலர்ச்சி கண்டது. அதற்கான பள்ளிக்கூடங்களும், கலாசாலைகளும் அமைக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை, அரசினர் இந்துக்கல்லூரி இன்னும் பிற பாடசாலைகள், வைத்தியசாலை, காகிதாலை முத லியனவெல்லாம் மட்டக்களப்பார்க்கு எழுச்சிக்குரியதாகின. மட் டக்களப்பில் வடபகுதியை விடத் தென்பகுதி கல்வியில் மேலோங்கி யிருந்தது. இவற்றையறிந்தே வந்தாறுமூலை மத்திய கல்லூரி யமைக்கப்பட்டுக் கிராமங்களுக்குப் புத்தொளியூட்டப்பட்டது.
இந்தப் புத்தெழுச்சியோடு வலையிறவுப் பாலமும் திரு. இராஜன் செல்வநாயகம் அவர்களின் முயற்சியாலே கைகூடியதால் படுவான்கரைப்பகுதியெனப்படுவதில் சில கிராமங்களும் எழுச்சி யுற்றன. இதனாலேதான் நாவற்காடெனும் சிற்றுாரைச் சேர்ந்த தங்கத்துரை சாந்தராகவன் எனும் மாணவன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் படித்து G.C.E. (AIL) உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான கணிதத்திலே நான்கு ‘A’ எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலே முதல் மாணவனானான் எனும் பெருமைக்கும் இடமுண்டானது. ஆண்டுக் காண்டு ஆறேழு உயிர் க ளை ப் பலி யெடுத்த வலையிறவுத்துறைப் போக்குவரத்தால் மக்கள் பட்ட அவதி மாறிபோகவைத்த மகான் திரு. இராஜன் செல்வநாயகம் ஆவார். பட்டப்படிப்புக்குப் பாலம் துணையானது.
அன்னாரின் மறைவிலே நான் பாடிய இரங்கற்பாப் பிரசுரம்.
இராஜன் செல்வநாயகம் அவர்களுக்கு
இர ங் கற் பா
மீன்பாடும் தேன் நாடாம்
மோலோங்கி வரும் நாடாம் நான்பாடும் பாடலிது
நற்றொண்டன் ராஜனுக்கு நண்பன் எனும் வகையால்,
நாடறிந்த நற்செயலால், நல்லையா என்றவரின்
நற்றொண்டு தொடர்வதனால்,

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 35
வலையிறவுப் பாலத்தை
வரலாற்றில் பதித்ததனால்,
மட்டுநகர்ப் பட்டணத்தை
மற்றும் பல விருத்திகளை
திட்டமிட்டுச் செய்த
செயல்வீரா மறைந்தனையோ ?
வெற்றிவேல விநாயகமூர்த்தி
நாவற்காடுர் மக்கள் சார்பில்,
வந்தாறுமூலை மத்திய கல்லூரி திரு. நல்லையாவைக் காட்டு வதுபோல், வலையிறவுப் பாலம் திரு. இராஜன் செல்வநாயகத் தைக் காட்டி மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகமாக்கியது.
1980, 90களில் பட்டதாரிகளையும், எஞ்சினியர்களையும், எம். பி.பி.எஸ். (MBBS) டாக்டர்களையும், கணக்காளர்களையும், நிர்வாக உத்தியோகத்தர்களையும் காண்கிறோம் என்றால் அத்தி வாரமிட்ட சுவாமி விபுலாநந்தரையடுத்து, அமரர் திரு. வி. நல்லையா அவர்களே மட்டக்களப்யின் மறுமலர்ச்சிக்கு முதலில் வித்திட்டாரெனலாம். அவரிட்ட வித்து நடமாடும் அறிஞர்களை ஆக்கித் தந்தன.
வந்தாறுமூலை மத்திய கல்லூரி கனவிலே
பல்கலைக்கழகம் :
மாற்றமுற்றுவரும் மறுமலர்ச்சிக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு, இன்றைய கிழக்குப் பல்கலைக்கழகமான வந்தாறுமூலை மத்திய கல்லூரி முதலிடம் வகிக்கின்றது. 1952ல் புதிய கட்டடத் துக்குள் புகுந்த நாங்கள் சேவையாற்றிய வேளையிலே ஏதோ வொரு அசரீரி வாக்குப்போல் ஊர்மக்களின் பார்வையில் பல்கலைக் கழகம் என்றே பேசப்பட்டுவந்தது. அப்பேர்ப்பட்ட அமைப்புகள் இக்கல்லூரிக்கு அமைந்திருந்து அழகூட்டின. அக்காலம் ஆசிரிய பயிற்சியின் பின் திறமைமிக்க பண்டிதர் இராஜ ஐயனாரின் கீழ் நுவரெலியாவில் படிப்பித்தல் பயிற்சியுங் கூடி மத்திய கல்லூயில் மேல்வகுப்பும் படிப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இளைஞனா யிருந்த என்னையும் படிக்கின்ற மாணவனென்றெண்ணி வினவிக் கொண்டனர் ஊரவர்கள். ஐந்தாண்டுகள் படிப்பித்தேன். விவேகம் கூடிய மாணவர்கள் வேலைத்திறன் பெற்றனர்.

Page 34
36 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பெற்ற மாணவ மாணவி கள் மட்டக்களப்போடு திருகோணமலை, தற்போதைய அம்பா றைப் பகுதிகளெல்லாமிருந்து வந்து குவிந்தனர். கிழக்கு மாகா ணத்தில் ஒரேயொரு மத்திய பாடசாலையாக இது இருந்தது. தமிழ், முஸ்லிம் மாணவ, மாணவிகளோடு, சிங்கள மாணவ, மாணவிகளும் சிறுபான்மையாகச் சேர்ந்து படித்தனர். விவேகம் கூடிய மாணவ மாணவிகள் ஆசிரியர்களை மட்டந்தட்டிவிடுவர். எமது காலத்திலே பட்டணப் பக்கப் பாடசாலைகளில் படித்த வர்கள்கூட மேலதிகமாக வந்து சேர்ந்து படித்தனர்.
இப்போது கிழக்குப் பல்கலைக்கழகமெனும் வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்திலே பீடாதிபதியாயிருக்கும் கலாநிதி மெளனகுரு அவர்களும் இக்கல்லூரியிலே படித்து முன்னேறியவர். அன்னா ருடைய இக்கல்லூரிபற்றிய பத்திரிகைக் கட்டுரையொன்றை இத் துடன் வேறாக ஒரிடத்தில் அமைத்துள்ளேன்.
அந்த வேளை சுயமொழிக் கல்வி ஏற்படவில்லை. ஆங்கிலம் எனும் "இங்கிலீஷ், மொழிமூலம் கல்வியூட்டப்பட்டது. ஆறேழு பாடங்களுள் தமிழ், தமிழ் இலக்கியம், இந்துசமயம் எனும் மூன்று பாடங்களுக்கும் நான் பொறுப்பாகக் கடமையாற்றினேன். மாண வர்களை வானொலியில்கூடப் பங்குபெறச் செய்தேன்; விவாதம் நடத்தினேன். ஐந்தாண்டுக் காலத்தின் சேவை எனக்குப் புகழைத் தேடித்தந்தது. படித்துப் பாராட்டிய பல பட்டதாரிகள், பேராசிரி யர்கள், அரச அதிபர்கள், சட்டத்தரணிகள், பத்திரிகாசிரியர்கள், பாராளுமன்றப் பிரதிநிதிகள் என்று பலருள்ளர். -
'நீங்கள் ஊட்டிய தமிழறிவே எமது எழுச்சிக்கு வித்திட் டது' என்ற கடிதங்கள் பல என்னிடமுள்ளன. இவையெல்லா வற்றையும் திரு. வி. நல்லையா அவர்களின் கல்வித்தொண்டுக் குள்ளே சேர்த்து மறுமலர்ச்சியில் பங்குற வைக்கின்றேன். சுவாமி விபுலாநந்தருக்குப் பின் திரு நல்லையா அவர்களின் தொடர்ச்சி யான சேவையினைக் கட்சிபேதங்களால் பகைப்பட்டோரும், அவர் களின் இன சனத்தோரும்கூட அனுபவித்து அறிகின்றனர். இப் போது வாயால் சொல்லி மனம் வருந்துவோருமிருக்கின்றனர். வருவாயைத் தேட வசதியிருந்தும் வறுமையில் இருந்தவர். வறுமை யோடே மட்டக்களப்பின் வளர்ச்சிக்காவன செய்தார். வந்தாறு மூலை மத்திய கல்லூரி இதில் முக்கியமானதே. சேவைக்கெனப் புறப்பட்ட பலர் செல்வர்களாகிக்கொண்டிருக்கையில் இவர் இறக் குந்தறுவாயில்கூட இருக்க வீடில்லாத ஏழைபோன்றே இறந்தார்.
i

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 3.
பொதுச்சேவைக்கு மக்கள் அன்னாரை இழுத்துக்கொண்டு வரா விட்டால் அவரது படிப்புக்கும், தகுதிக்கும் மேலான பதவிகள் அவரைத் தேடிப்போயிருக்கும். அவர் அட்வகேற் ஆனார். சிறு தகுதிகூட இல்லாதோர் கட்சிகளினாலும், இயக்கங்களிளாலும் சேவையில் இடம்பிடித்துத் தங்களையும், குடும்பத்தையும் பணத் தால் உயர்த்துகின்றனர். ஐயோ! அன்னாரின் நிலைமை பரிதாபத் துக்குரியதாயிருந்தும் **நல்லையாவின் சேவை நாட்டுக்குத் தேவை** யெனுங் கருத்தும் நடைமுறையிலிருந்து மறுமலர்ச்சிக்கிடமானது.
பட்டதாரிகள் அரசியலாளரால் ஆட்டப்படலாமா ?
பல்கலைக்கழகம் இலங்கையில் ஒன்றாகத் தனித்து இருந்த நிலைமை மாறிப் பல பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. ஒரேயொரு பல்கலைக்கழகமாக இருந்தவேளையில் பற்பல பதவிகளைப் பிடிப்பவர்கள் அங்கிருந்தே வெளியாகிவந்த தால் அரசியல் தலையீடில்லாமல் அவர்களுக்குள் பலர் அறிமுக மான நிலைமையினால் ஆவன செய்துகொண்டுவந்தனர். எடுத்துக் காட்டாக: ஒரு எஞ்சினியர் ஒரு டாக்டரை அறிந்திருப்பார். டாக்டர் ஒரு நீதிபதியை அறிந்திருப்பார். நீதிபதி அமைச்ச ரையோ, ஏன் ஜனாதிபதியைக்கூட அறிந்திருக்கக்கூடும். இவ்வாறு அங்கிருந்து வெளியேறிய அந்தக்காலத்தவர் அரசியலுக்கு வால் பிடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
ஆனால் இப்போதைய நிலைமையில் பதினெட்டு இருபது பல்கலைக்கழகங்களில் எத்தனையோ பேர் பெரிய பட்டம், பதவி களைக் கைப்பற்றிக்கொண்டாலும், பேராதனையிலிருந்து தனித்து வெளியேறியோர்க்கிருந்த செ ல் வா க் கு இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இதனால் கிழக்குப் பல்கலைக்கழகம் எத்தனை பட்டதாரிகளை வெளியாக்கினாலும் மட்டக்களப்புத் தமிழகத் தின் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் அரசியலார்க்குப்பின்பு அலை மோதவேண்டிய நிலை ஏற்படாதிருந்தாலே மிக்க பலனுண்டு. இன்னும் மாறிவரும் மட்டக்களப்பின் மறுமலர்ச்சிக்கு மேலும் சில தேவைகளைக் குறிப்பிட்டு வேண்டலாம்; மாற்றமடையச் செய்ய லாம். கட்சி அரசியல் மோதக்கூடாது.
வாக்குரிமை
நான் பிறந்த காலத்தில் வாக்குப்பெட்டிகள் நிறமுடைய தாகவும், வாக்குச்சீட்டை மறைவான அறையிலே விருப்பமான

Page 35
38 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
வரின் நிறப் பெட்டிக்குள்ளே போட்டும், போடாமல் மறைத்துக் கெரண்டுவந்து குறிப்பிட்டவரிடமும் கொடுக்கலாம். அவர் பல ரிடம் அப்படிச் சேர்த்ததைக் கொண்டுபோய்த் தனது முறை வந்ததும் மற்றோருக்குத் தெரியாமல் போட்டுவரலாம். அவ்வாறு போட்டுப் பணக்காரர் வெற்றியீட்டிய காலமிருந்ததையும் மறு மலர்ச்சி காணும் நாம் மறந்துவிடக்கூடாது. இம்முறை மட்டக் களப்போடு மற்ற நகரங்களில் இருந்தாலும் படிப்பறிவு குறைந்த நிலையினால் இவை நடந்திருக்கலாம். குடிவெறியோடும் குடித்து நடித்திருக்கலாம். நமது ஜனனாயகம் சிலவேளைகளில் நமக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும். சர்வசன வாக்குரிமையும், ஜனநாய கமும் இணையும்போது இடர்ப்பாடுகள் சாதிக் கலப்புள்ள நாட் டில் ஏற்படுகின்றது.
வாக்குரிமையின் மதிப்பு சிலரைத் தூக்குகின்றது; ஒருசிலரை அவமதிப்புக்குள்ளாக்குகின்றது. அதுவும் இரண்டு மூன்று இனத்து மக்கள் பின்னிப்பிணைந்து வாழும் தொகுதிகளில் வாக்குரிமைப் பலன் ஜனனாயகம்தானா என்று பாருங்கள். ஓரினத்துள்ளேயும் சிறிய ஆபத்து. பத்துப்பேர் வாக்களிப்புக் கருமத்திற்கு மூன்று பேர் போட்டியிட்டால் 4 . 3 . 3 என்னும்படி வாக்குகளைப் பெற் றால் வெற்றிபெற்றோனுக்கு ஆறு வாக்குகள் எதிராகின்றது. இதை ஏன் சொல்கின்றேனென்றால் மட்டக்களப்புத் தொகுதி இனக்கலப்புற்றபடியாலேதான். உதாரணமாகப் பாருங்கள்
ஜனநாயகம் சிலவேளை :
ஒரு சிறிய கிராமசபைத் தேர்தலில் 100 வாக்குகள் உள்ள விடத்தில் ஆறுபேர் போட்டியிட்டதால் 20, 19, 18, 16, 15, 12 என வாக்குகளைப் பெறுகின்றனர். 20 ஐ எடுத்தவன் வெற்றி பெற்றால் 80 வாக்குகள் எதிராகின்றன. ஒரு வாக்குக் குறைந்த வன் உளம் வருந்தி வாடுகின்றான். அதுவும் சிலவேளைகளில் சிறுபான்மை இனத்தில் உள்ள அவர் மட்டும் தெரிவானால் ஊருக் குள்ளே என்ன நிலை உண்டாகும் ? கட்சிகளாலும், இனவகைக ளாலும் போட்டிகள் கூடக் கூட வாக்களிப்பினால் ஜனனாயகம் மதிப்பிழக்கிறது. இதனால் ஜனனாயகம் கூடாது என்று கூறவில்லை. கட்சிகள் கூடக்கூடாது.
இனக் கலப்பென்றபடியால் மட்டக்களப்பு முன்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாகவிருந்தது. இதனால் பெரும் தொல்லை சள் ஏற்பட்டன. புதிதாகப் போட்டிபோடுவோரை முந்தியவர் மற்ற இனத்தைக் காட்டி அவர்களுக்குச் சார்பாகவே இவர் போட்டி

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 39
யிடுகிறார் என்றும், புதியவருக்கு வாக்களித்தால் நமது வாக்குகள் குறைந்து மற்ற இனத்தவரே தெரிவுசெய்யப்படுவார் என்றும் பிரசாரம் பண்ணுகின்றனர். இக்காலகட்டத்தில் மா வட் டம் தொகுதியாவதால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு.
11-07-79 அன்று கொழும்பில் நடந்த மாவட்டத் தேர்தல் வரையறை ஆணைக்குழுவினர் முன்னிலையில் நான் மட்டுமே வேண்டியன பற்றித் தெளிவாக விளக்கினேன். அம்பாறை மாவட் டம், மட்டக்களப்பு மாவட்டம் நடைமுறையால் மட்டக்களப்பு பாதிப்புறும் என்றும்; பிரதிநிதிகளைக் கூட்டவேண்டும் என்றும் கேட்டேன். இவை பத்திரிகை, வானொலிகளிலெல்லாம் வெளி யாகின. கொழும்பிலிருந்தவர்கள், கூட்டணியெல்லாம் வரவில்லை.
ஏற்கனவே நான் கூறியபடி பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பதவிகளைப் பெற்று உயர்நிலையை அடைந்தாலும், இக்காலம் அன்னாரிலும் தகுதிகள் முதலியன குறைந்த அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் காலமாகிக்கொண்டிருக்கிறது. ஒரேயொரு பல்கலைக் கழகக் காலத்தில் இருந்த செல்வாக்கும் மதிப்பும் இப்போது கிடைப்பது அரிது. அரசியல் உரிமையைக் கொடுத்துவிட்டு அதி காரிகளை ஆட்டிப்படைக்கும் அரசாங்கத்தையும், அரசியல்வாதி களையும் மறந்துவிடலாமா ?
அண்ணன் மட்டக்களப்பில் தேர்தல் ஒன்றில் நின்றால் நேர்மையாளன் தம்பிக்கு மன்னாருக்கு மாற்றம் கொடுக்கலாமா? அப்படியெல்லாம் நடந்தமை கண்டு இப்படியெல்லாம் சொல்வ தால் எழுச்சி ஏற்பட்டதுமுண்டு. ஜனனாயகமும், கட்சியரசியலும் பின்னிப்பிணைந்தோடுவதால் ஜனனாயகத்தின் பெறுமதி குறைத்து போவதுமுண்டு. மட்டக்களப்பில் ஈரின மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதைக் கண்மூடித்தனமான கட்சியரசியல் வந்து புகுந்தமை யால் இன வேற்றுமையில் மட்டும் மலர்ச்சி குறைந்துள்ளதைக் கூறத்தான் வேண்டும்.
தமிழரும் முஸ்லீம்களும் :
மட்டக்களப்பு மாவட்டத்தை இடைக்காலத்தில் நான்கு தொகுதியாக்குவது இடர்ப்பாடென்று மூன்று தொகுதிகளும், நான்கு பிரதிநிதிகளும் என்ற வகையில் பிரித்தனர். அஃதாவது கற்குடாத் தொகுதி, பட்டிருப்புத் தொகுதி, மட்டக்களப்பு. இரட்டை அங்கத்தவர் தொகுதி என்று அரசாங்கம் வகுத்துக் கொண்டது. தமிழர்களும் முஸ்லீம்களும் தெரிவாகட்டும் என்றே

Page 36
40 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
இந்த முறை வகுக்கப்பட்டது. இந்த நிலைமை, ஒரு முறை இரண்டு முஸ்லீம்களைத் தெரிவுசெய்யும்படியும், இன்னொருமுறை இரண்டு தமிழர்களைத் தெரிவுசெய்யும்படியும் செய்துவிட்டது. இதனால் அக்காலகட்டத்தில் (இக்காலகட்டத்துப் பகைபோன் றில்லை) அக்கம்பக்கங்களில் அடிக்கடி மோதல்சள் ஏற்பட்டன. இதனைக்கண்ட புலவர் மணி அவர்கள் பாடிய பாட்டு இனங்களின் ஒற்றுமைக்கு முடிபுனைந்த மாதிரியாகும்.
'இருதயத்தின் ஈரிதழ்போல் இங்கு தமிழ் முஸ்லீம்
ஒருவயிற்றுப் பாலகர்போ லுள்ளோம் - அரசியலிற் பேராசை கொண்டோர் பிரித்துநமை வேறாக்கி ஆராயார் செய்வ ரழிவு'
இந்த வெண்பாகூடப் புலவர்மணியை "வெண்பாவிற் பெரிய தம்பி' என்றாக்கிவிட்டதெனலாம். இன்னும் "புட்டும் தேங் காய்ப்பூ" போன்று இணைப்பும், தொடர்பும் உடையோர் என்று உரைப்பதுமுண்டு.
தற்கொலைகளும், தகாத செயல்களும் :
மட்டக்களப்பின் மறுமலர்ச்சிக்கு மக்க ளி ன் அபிவிருத்தி யுடன், நோய்நொடி குறைந்து இயற்கை மரணமும் குறைந்துள் ளது. மனிதனது வாழும் வயது சராசரியாக 45க்குள்ளிருந்தமை 65க்கு மாற்றமடைந்துள்ளது. இருந்தும் தகாத செயல்களாலும், தற்கொலை நிகழ்வுகளாலும் மரணம் ஒருபக்கம் கூடுதலாகி வரு கிறது. நாட்டின் நிலைமையாலும், யுத்தக் கெடுபிடியாலும் இளை ஞர்களும், யுவதிகளும் ஒருபுறம் சுதந்திர தாக நோக்கச்செயலால் இறக்கின்றனர்; அதுதான் குடும்பத்தவர்க்கு அப்பாற்பட்டதெனக் கொண்டாலும், குடும்பங்களின் நடைமுறைச் செயலாலும் தற் கொலை கூடுகின்றதே.
குடும்பத் தகராறுகள் தற்கொலைக்கு ஆளாக்குகின்றன வென்றால், குழந்தை யெனும் நிலைகொண்ட நாலைந்து வயதுப் பிள்ளைகளும் "நஞ்சு குடிப்பேன்" என்று பயமுறுத்தும் நிலை யில் நடைமுறை பரந்துள்ளதென்றால் பாருங்கள் 1 சோறு கறி களிலும், உடுப்பு சப்பாத்து முதலியவைகளிலும், சினிமாப்படம் பார்க்கப் போவதிலும் சண்டையிட்டு நஞ்சு குடித்தோரும் உண் டென்றால் நம்பமுடியாதிருக்கும். நமது நாட்டுநிலைமை அவ்வா றாகிக்கொண்டிருக்கிறது. வெளிநாடு வெளிநாடென்று ஆண்களை

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 4.
விடப் பெண்களே போய்க்கொண்டிருப்பதாலும் தொல்லைகள் கூடுகின்றன. ஐயங்கள் தோன்றி ஆபத்தைக் கொடுக்கின்றன. வறுமையும், வாழ்கை நடைமுறைச் சீர்கேடுகளும் தற்கொலைக்கு இட்டுச்செல்கின்றன.
நஞ்சைக் குடிக்கின்றனர், அலரிக்கொட்டை முதலிய நச்சுப் பருப்பைக் கடிக்கின்றனர், D.D.T. முதலிய எண்ணெய்த்தூளைக் கரைத்து வாய்க்குள் ஊற்றுகின்றனர். விவசாயத்திற்கு உபயோ கிக்கும் களைகொல்லி கிருமிநாசினி மருந்துகளை வைத்திருந்து சபதமிட்டுச் சண்டை போட்டு மண்டையுடைத்தல் முதலியவற் றோடு நஞ்சான மருந்து வகைகளைக் குடிக்கின்றனர். சிலவேளை களில் எலிப்பாஷாணத்தைக்கூடக் குடித்து உயிரைப் போக்குகின் றனர். இப்படியான முறைகளில் தற்கொலை செய்துகொள்கின்ற னர். தற்கொலை செய்வதே சட்டப்படி குற்றமாகும். சிறிய சிறிய பேச்சுகளாலும், ஐயங்கொண்ட பார்வைகளாலும் குடும்பத் தில் சச்சரவேற்பட்டுத் தற்கொலைகள் கூடுகின்றன,
பல பருவத்தினர் ஒரு வீட்டில் வாழும்போது பல பிரச் சினைகள் ஏற்படுவதுண்டு. ஒருசில வீடுகளில் எங்களைப்போன்ற வயது கூடியோரும், வயதுமுதிர்ந்த கிழவன் கிழவியரும் இளைஞர் களாலும். பருவ மங்கையர்களாலும், மக்களின் மக்களாலும் அவ மதிப்புக்குள்ளாகின்றனர். அதனால் வெளிநாடு சென்றும் அங்கும் அதே நிலைகண்டு மனம்வருந்திக்கொண்டு 'பழைய குருடி கத வைத் திறவடி' என்று சொல்லாத நிலையில் வாழ்ந்து தற்கொலை களையும் தேடிக்கொள்கின்றனர். இதனால்தான் 'அப்பாவின் அப்பா மண்குண்டாம் சட்டி' எனும் கதை பாடமூட்டச் கூடியது. (இக்கதை பிறிதோரிடத்தில் இடம்பெறும்.) தனது அப்பாவை, அம்மாவை மதியாது நடப்போர்க்குப் பயன்பட நல்ல கதை எனினும் சாரம் இதுதான். அப்பாவின் அப்பாவைக் கவனியாது புறக்கணித்துக் குண்டாஞ்சட்டியும், வேறு குடிசையுமானதால் குண்டாஞ்சட்டியைத் தனது அப்பாவுக்கு என்று ஒளித்துவைத்து மகன் உணர்த்திய கதை. அப்பா அதனைத் தப்பாகக் கண்டார்.
ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, மக்கள், மக்க ளோடிணைந்த மற்றவர்கள் என்றெல்லாம் உறவுமுறைகளும், கடமைகளுமுண்டு. தந்தையும் தாயும் சண்டை பிடிக்கும்போது மகன் தலையிட்டுத் தந்தையைக் கத்தியால் வெட்டிய கதைகளு முண்டு. அப்பாவுக்கு அம்மா மனைவியாயிருந்துவருவதை உண ராமல் அம்மா பாசம் மிகுந்து அப்பாவோடு தப்பாக நடக்கும்

Page 37
42 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
மக்கள் பலருண்டு. இவையெல்லாம் மாற்றமாகி மறுமலர்ச்சி கூட வேண்டும், நல்லோராய் நடமாடவேண்டும். '.
எம்மிடையே இக்காலம் நடமாடும் பேய்கள் : (14-12-57ல் வானொலிப் பேச்சு)
""கடனுதவு பேர் வந்து கேட்கும் வேளையின்
கடுகடுக் கின்ற பேயும் கன மருவு பெரிய தனம் வந்தவுட னிறுமாந்து
கண்விழிக் காத பேயும் அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்
தகப்பட் டுழன்ற பேயும் ஆசை மனை யாளுக்கு நேசமா யுண்மை மொழி
யானதை யுரைத்த பேயும் இடரில்லா நல்லோர்கள் பெரியோர் களைச்சற்று
மெண்ணா துரைத்த பேயும் இனிய பரிதானத்தி லாசை கொண்டொருவற்
கிடுக்கண் செய்திட்ட பேயும் மடமனை யிருக்கப் பரத்தை யைப் புணர்பேயும்
வசை பெற்ற பேய்க ளன்றோ மயிலேறி விளையாடு குகனே புல் வயனிடு
மலைமேவு கும ரேசனே."
இத்தகைய பேய்களைத்தான் நாம் சமூகத்தில் இல்லாது ஒழிக்கவேண்டும். அதைவிடுத்து இல்லாத பொல்லாத பேய்பிசாசு களையெல்லாம் மனதிலிருந்து மறப்போம். இருக்கின்ற கோயில் குளங்களே போதும் என்ற எண்ணம் வரவேண்டாமா ? சமயத் தொண்டில் ஈடுபட்டுச் சடுதியான புகழ்பெறுவோர் பலருண்டு. அவற்றையெல்லாம் பார்ப்போம் பகுத்தறிவுக் கண்கள் கொண்டு.
ஒரு பேராசிரியர் கூற்று :
அகில உலக இந்துசமய மகாநாட்டு மலர் ஒன்றிலே, அளவு கணக்கில்லாமல் அரச பணத்தைச் செலவுசெய்து யாகம் வளர்த்து ஆண்டவன் பணியெனக் கொண்டிருக்கும் வேளையிலே வெளி வந்த செய்தி.
"இந்து மதத்தில் இடைக்காலத்தில் புகுத் தப்பட்ட சில பொய்மைகளும், புழுகுகளும், பொருந்தாப் புராணக் கதைகளும்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 43
மனிதர்களிடையே வேற்றுமையை வளர்த்தன. காலத்துக்குக் காலம் பல பெரியார்கள் தோ ன் றி ன ர். அண்மைக் காலத்தே மகாத்மா காந்திஜி, சுவாமி விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதி யார் முதலியோர் தோன்றிச் சமய, சமூகத் தொண்டுகளைப் புரிந்தனர். பாரதியார் ஆவேசங்கொண்டு பல பாடல்களைப் பாடினார். பாடல்களைப் பா டி ய தோ டு நில்லாமல் கொதித் தெழுந்து குரல் எழுப்பினார்.
தேசத் தொண்டெனச் சிலர், கோவில் சேவையையே தெரிவு செய்கின்றனர். சிலர் கோவில்களை மையமாக வைத்துக்கொண் டும், சாமி பெயர்களைச் சொல்லிக்கொண்டும் வயிறு வளர்த்து, சமயச் சடங்குகளின் பெயராலே தம்மைத் தேவதூதர் எனக் காட் டிக்கொள்கின்றனர். பிற சமயத்தவரின் கிண்டலுக்கும் இடமளித் தனர். பிறசமயத்துக்கு மாற்றங்கொள்ளவுஞ் செய்தனர்.
ஆயிரக்கணக்கான அப்பாவிச் சீவன்கள் வயிற்றுக் கொடுமை யால் வாடிவதங்க, இருக்கின்ற இலட்சக்கணக்கான கோவில்களும் , கோபுரங்களும் போதாதென இலட்சோபலட்சம் ப ண த் தை க் கொட்டி மேலும் ராஜகோபுரம் முதலியன அமைக்கின்றோம்; அழகு பார்க்கின்றோம் அதனால் பெருமையைத் தேடுகின்றோம்; ஆடம்பரமான விழாக்களை நடத்துகின்றோம்.
இன்னும் பேய்பிசாசு ஒட்டுதல், பிள்ளை வரங்கொடுத்தல் போன்ற மூடநம்பிக்கைகளைப் பெருக்கி அறிவைச் சுருக்கி வாழா மல், இந்துசமயப் பண்பு எழுச்சியுறச் செய்ய வேண்டாமா? மகே சன் சேவையோடு மக்கள் சேவையையும் எண்ணிப்பார்க்கவேண் டாமா? என்றெல்லாம் தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறியுள் ளார்கள். மட்டக்களப்பின் மறுமலர்ச்சிக்கு இவையெல்லாம் உதவி யுள்ளன. மற்ற மதங்களும் வழிகாட்டியுள்ளன. சிந்திப்போம்!
கத்தோலிக்க, கிறீஸ்தவ சமயம் கல்விக்கு உதவின :
எனது இளமைக்காலத்தில் அன்னியர் ஆட்சி நிலவிய வேளை யில் கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயக் குரவர்களும் , ஆசிரியர்களும் செய்த சேவைகளைப் பாராட்டித்தான்வேண்டும். சமயத்தைப் பரப்பும் நோக்கங்கொண்டாலும் நாடு முன்னேறி மறுமலர்ச்சி காண அவர்களின் கல்வி நடைமுறைகள் பயன்பட்டன. எனக்கு "ஆனா ஆவென்னா'ப் பாடப் பயிற்சி தொடக்கம் ஆசிரிய னாகும் வரையும் கத்தோலிக்க சமயத்தாசிரியர்களே கல்வியூட்டி னர். எடுத்துக்காட்டாகச் சிலர்:

Page 38
44 மாறிவருர மட்டக்களப்புத் தமிழகம்
மட்டக்களப்புப் பழைய வாடி வீட்டுத் தெருவிலே வயது சென்றும் பிறரின் சுக பலன் விசாரித்து உலவித்திரிகின்ற பி. எம். யோசேப் ஆசிரியர், டக்டர் ஞானப்பிரகாசம், கலைஞர் ஜவன் யோசேப் ஆகியோரின் தந்தை காலஞ்சென்ற அமிர்தகழி யூசமுத்து ஆசிரியர், உயர்ச்சிக்குரிய ஏணியில் என்னை ஏற்றி உயரச்செய்த கனடாவிலே வசித்துவரும் எஸ். எம், லீனா, மட்டக்களப்பின் வளர்ச்சியைக் காட்டக்கூடிய இரண்டு நூல்களை எழுதி வெளியிட்ட வரும், எனக்கு எழுத்தாற்றலூட்டிய வருமாகிய ஆசிரிய திலகம் எஸ். பிரான்சீஸ், 12 வயதிலே J. S. C, முதற்பிரிவில் சித்தி யடைய வைத்த காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை விறதர் ஆகி யோர் குறிப்பிடத்தக்க கத்தோலிக்கர்களே.
நானறிந்தவரையில் கத்தோலிக்கர் நல்ல சேவை செய்த தால் மட்டக் களப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சமய வளர்ச்சியோடு கலப்புற்றாலும் கல்வியும் பிறவும் பாராட்டப்பட வேண்டியன. ஆசிரிய கலாசாலை நடத்தினர். அச் சு க் கூட ம் வைத்து அனாதைப் பிள்ளைகளை ஆதரித்து, மட்டக்களப்பார்க் குப் பல உதவிகள் செய்துள்ளனர். பல ஆசிரியர்களை உருவாக்கி னர். அவர்களின் மதப்பாடசாலைகளில் படித்தும் நான் சமயம் மாறவில்லை. நான் இந்துவாகவே இருந்துலருகின்றேன். இவ்வாறு எமதுகாலத்தில் மட்டக்களப்பில் சமய வாக்குவாதங்கள், போட்டி கள் இல்லாமல் மறுமலர்ச்சியுண்டாகத்தான் செய்தது. திருநாவுக் கரசு நாயனாரது,
"கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் பொங்கு மாகடல் ஒதநீ ராடிலென் எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே' எனும் தேவாரத் தையும், சுவாமி விபுலாநந்தர் ஈசனுவக்கும் மலர்களிலே,
*" வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு
வாய்த்த மல ரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலரு மல்ல
உள்ளக் கமல மடி
உத்தம னார் வேண்டுவது' எனும் உள்ளக்கமலப் பாடலையும், திருமூல நாயனாரது.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 45
'தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே' எனுந் திருமுறை மந்திரத்தையும் பகுத்தறிவுச் சிந்தனைத் தூண்டு தலில் இயங்கவைத்துள்ளேன். அப்படியான நிலைமைகள் எல்லாம் பெருகிவருதல் கண்டு சமய மறுமலர்ச்சியும், வளர்ச்சியும் ஏற்பட்ட தெனக் கூறலாம்.
பல்கலைக்கழகமும், பல அபிவிருத்தியும் :
மிக விசேடமாகக் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக் கப்பட்டு சமூக, சமயக் கல்வி முதலானவையும் பிறவும் வளர்ச்சி யுறுவதையும் மலர்ச்சியினுள்ளே சேர்க்கலாம். இந்த வகையில் அமைச்சராயிருந்த திரு. கே டபிள்யூ. தேவநாயகம் அவர்களைக் கூட்டுறவுச் சேவையுடன் இணைத்துப் பாராட்டவேண்டும்,
கூட்டுறவுக் கட்டடமான அரசடி தேவநாயகம் கலையரங்கு மண்டபம் சேர்ந்த பெரிய நிறுவனத்தை அன்னாரது தலைமையில், என்போன்றோரும் சேர்ந்த கூட்டுறவுச் சேவையினை அங்குள்ள பெயர்ப்பலகைச் சட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது. அக்கட்டடம் கட்ட எத்தனிக்கும்போது 'பழையதை உடைக்கப்படாது' என்று ஒருசிலர் எதிர்த்தனர். எதிர்ப்புக்கு மத்தியிலும் பழைய கட்டடம் உடைக்கப்பட்டது. பழைய கட்டடம் உடைக்கப்பட்டதால்தான் இந்தப் பெரிய கட்டடம் கட்டப்பட்டு வருமானத்தையும், மதிப் பையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையாலும், நீதி மந்திரியாயிருந்த வகையாலும் திரு. K. W. தேவநாயகம் அவர் களின் சேவை பெரிதே இளைஞரைத் தட்டி உசுப்பிய, முந்திய கொள்கைமாறிய திரு. செ. இராசதுரை அவர்களும் சில சேவை களைச் செய்துள்ளார்கள். அத்துடன் மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்தை அமைத்து மக்களுக்கு மலர்ச்சியும், அபிவிருத்தியும் ஏற் பட வைத்த அமரர் இராஜன் செல்வநாயகம் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும். தேச சேவையில் சிறந்த சேவை நாட்டுத்தொண்டே எனினும் கலைச் சேவைகளும் சேவைதான்.
கலைகளும் கலைஞர்களும் : (வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள்)
பாடசாலையில் சிறுவராயிருக்கும்போது கூத்தாடும் கதை பேச்சைக் கேட்ட ஆசிரியர் சையில் நீண்ட பிரம் போடு அடிக்கவரும்

Page 39
46 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
போதிலே 'கூத்தாடிக் குண்டி நெளிப்பதும் வீட்டாளுக் கஞ்சி நடப்பதும் ஆத்தாதவன் செயல்' என்று தண்டிப்பது வழக்கம். ஆனால் வடமோடி, தென்மோடிக் கூத்துகளுக்கு மதிப்புக் கூட்டி யது மட்டக்களப்புதான்.
கூத்துகள் என்றால் இப்போதுங்கூடத் தொலைக்காட்சிப் படங்களையும் பார்க்காது பாய், வெற்றிலை, பாக்குகளோடு கூத்து வட்டக்களரியை வளைத்துக்கொண்டிருக்கும் வயோதிபரைக் காண்பதென்றல் பிறநாட்டார் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். கதாகாலாட்சேப நிகழ்ச்சிகளோ அவர்களுக்குக் கவர்ச்சியில்லா திருக்கும். பழங்காலக் கதைகளைப் புத்தகப் படிப்பில்லாமல் கூத்துகளாலே அறிந்திருப்போர், படித்தோர்களான எங்களைப் போன்றோரைப் பதம்பார்ப்பர் என்றால் பாருங்கள் கூத்துக்குரிய மகிமையினை !
கலைஞர்கள், நாடக நடிகர்கள், ஆடும் கூத்துப் பாத்திரப் பெயரையே பட்டப்பெயராகவும், கிராமத்துள்ளே பரவிய பெய ராகவுப் இருக்கும். சகுனி வயிரன், துரியோதனன் சின்னத் தம்பி, அருச்சுனன் சீனித்தம்பி, தருமர் அருணாசலம், வீமன் குஞ்சுத் தம்பி, அனுமன் வீரக்குட்டி, இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம். கூத்துக் கலைஞர்களுக்குத் தற்போதைய கலாசாரத் திணைக்களம் கூடிய மதிப்பளித்துக் கெளரவப்படுத்துகின்றது. இவர்களை விடக் கவிபாடுவோர், அண்ணாவிமார், பாகவதர்கள் முதலானோரும் மதிக்கப்பட்டுவருகின்றனர். என்றாலும் இதனைக் கொண்டு உயர்ச்சி பெறப் பலர் ஒடலாமா ? பணம் தேடலாமா ? வானொலியினரை அழைத்து முன்பு பலரைப் பேட்டிகா ணச் செய்தேன்.
மட்டக்களப்பு மறுமலர்ச்சி அடைந்துள்ளதென்பதற்காதார மாகப் பல கவிஞர்கள், எழுத்தாளர்கள், புத் தகாசிரிார்கள் ஆண் டுக் காண்டு அதிகரித்துவருகின்றனர். பரிசு களும், பட்டங்களும் பெற்றுப் புகழப்படுகின்றனர். முன்னர் தென்னிந்தியர் ஒருவர் "ஈழத்து எழுத்தாளர்கள் ஆழத்திலிருக்கிறார்கள். முன்னேற்றம் காணாது பின்தங்கியுள்ளார்கள்' என்று நாம் படிக்கின்ற காலத் தில் கூறியதாக எனக்கு ஞாபகம். இப்பேதைய நிலையை அறிய அவரில்லையென நினைக்கிறேன். இப்போது இலங்கையில் எழுத் தாளர், கலைஞர், கவிஞர் என் போர் உலகிலே போட்டியிடும் நிலையில் உயர்ந்துள்ளனர். மட்டக்களப்பும் அதில் பங்குறும். 19 ஆம் றூற்றாண்டிலும் பலர் இலைமறை காயெனும் நிலையி லிருந்திருக்கின்றனர். எனினும் இருவரைப் போற்றிப் புகழ்வதில் சிலர் முன்னிற்பர்; ་་༢༢་་

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
சுவாமி விபுலாநந்தாஜி : **
Y * عية" پہلا வித்துவான் ச. பூபாலப்பிள்ளை, அ. சரவணம் நீது: பண்டி தர் குஞ்சுத் தம்பி ஆகியோர் சுவாமி விபுலாநந்தருக்கும் 'முந்தியில், வர்கள். திரு. சரவணமுத்து அவர்களின் கவித்திறமை`க்ர்ட்டி கவிஞரான சுவாமி விபுலானந்தர் அவர்களே, ه
'சந்தப்பா விசைப்பாவும் தமிழ்ப்பாவில்
விழுமி தென்னத் தக்கோ ராய்ந்த எந்தப்பா வெனினுமிகு வெளிதிண்மைத்
திறமளிக்கு மியற்பா வாணன் கந்தப்பா வெமையாளக் கடிதப்பா
வருகவெனக் கவிதை பாடித் தந்தப்பா சுரவிசையுந் தமிழிசையும்
, பிறவிசையும் தரித்த சீலன்' எனப் பாடியுள்ளார்.
முன்பு உள்ளக்கமலம் பாடலோடு நல்லையா அவிகளின் சேவையையும் காட்டிய சுவாமி விபுலாநந்தஜி அவர்களை விட்டு விடலாமா ? அப்படி விட்டுவிட்டால் மட்டக்களப்பின் மகிமை யெங்கே? மறுமலர்ச்சி யெங்கே? மாறிவரும் வளர்ச்சி யெங்கே?
சுவாமி விபுலாநந்தஜீ அவர்கள் உலகமே அறிந்த, தமிழ் உள்ளளவும் மறையாத முத்தமிழ் வித்தகர் அல்லவா?
'புத்தக ஆசிரியனாகிப், புகழ்பெறு யாழ் நூலாக்கி
பத்திரிகை ஆசிரியனாகிப், பல்கலைக் கழகந்தன்னில் வித்தக ஆசிரியனாயும், விளங்கிய விபுலாநந்தன் செத்திலன் அமரனாகி, நித்தியம் வாழ்கின்றானே' என்று "தியாகி'யின் பாடல் செப்புகின்றதே! சுவாமியின் பலவகைச் சேவையும், திறமையும் மட்டக்களப்பை வளர்ச்சியில் மாற்றமுறச் செய்தன; மேலும் செய்வன.
இவர்களோடு செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவர், மருதமுனை சின்ன ஆலிம் வாப்பா, புலவர்மணி, வித்துவான் வீ. சி. கந்தையா ஆகியோர் நாமறிந்தவகையில் குறிப்பிடத்தக்க வர்கள். இவர்களைப்போல் இன்னும் பலர் இருக்கலாம்.
எழுத்தாளர், கவிஞர், கலைஞர் சிலர் :
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் என்பதற்கு மகத்தான சேவைகள், பணிகள், சாதனைகள் புரிந்தோர் பலபேர் இருக்கின்

Page 40
48 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
றனர். அத்தனை பேரையும் நான் அறிந்தவனாக இருக்கமாட்டேன். வெகுசனத்தொடர்பு, அறிமுகம் ஆன வழிகளால் அறிந்தோரைக் குறிப்பிடுகின்றேன். குறிப்பிடாமலிருப்போர் குறையென்னக்கூடா தென்று வேண்டிக்கொண்டே பெயர் குறிப்பிடுகின்றேன். அதுவும் பிரசித்தமான புனைபெயராகவும் இருக்கலாம். திருமணப் பந்த லில் தாலிகட்ட மறந்த மைபோன்று தேவையானோரைத் தவற விட்டிருக்கலாம். நமது 70 ஆண்டுகாலத்திற்குட்பட்டோருடன் முந்தியவர்கள் சிலரையாவது கூறித்தானாகவேண்டும்.
எடுத்த எடுப்பிலே சுவாவி விபுலானந்தஜீ அவர்களைக் கூறுவதற்கு முன்பு வித்துவான் பூபாலபிள்ளை, வித்துவான் சரவண முத்து சுவாமிக்கு இளமையிலே அறிவூட்டிய குஞ்சுத்தம்பி முதலி யோரையும் கூறத்தான் வேண்டும். அவர்களோடு எழுத்தாளர், கவிஞர், கலைஞர், புத்தகாசிரியர் என்றின்னோரன்ன பல பிரிவின ரையும் பிரித்தெழுத முடியாமல் கலந்து எழுதுகின்றேன். முதி யோர், இளைஞர், இறந்தோர், இருப்போர், பழையவர், புதிய வர் என்ற வகையும் பாராது எழுதுகின்றேன். மேலே குறிப்பிட் டோரையும், முன்னர் குறிப்பிட்டோரையும் தவிர்த்து எழுதுகின் றேன். (பலவகையாலும் அறிந்த வகையிலே.)
ஆசிரிய மணி செல்வநாயகம் ஆரையூர் அமரன் ஆரையூர் இளவல் ஆரையூர் தங்கராசா
elő Log5 Y. அப்துல்காதர் லெவ்வை அப்துல் சமது அ. ச. * அபூபக்கர், டாக்டர்
அஸிஸ் இராசதுரை செ.
அமீரலி இரா. பத்மநாதன் * அஷ்ரப் * இருதயநாதன் (கலைக்கோட்டன்) அன்புமணி இராசரெத்தினம் மு. அன்புடின் இராஜபாரதி அன்புமுகைதீன் இளங்கோ அமீரலி
ə96örəfFilm" rif அன்பழகன் குரூஸ் அருணாசலம் தேசிகர் அருள். செல்வநாயகம் அக்கரைப்பாக்கியன் அக்கரை மாணிக்கம் அழகேசமுதலி ஆனந்தன் வி. * 

Page 41
50
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பாக்கியநாயகம் ரி. பாக்கியராசா இ. பாலசுப்பிரமணியம் ? பாண்டியூரான் பாண்டிருப்புச் சிவா பாலமுனைப் பாரூக் பித்தன் ஷா ? பிரின்ஸ் காசிநாதர் பிரான் சீஸ் எஸ். புலவர் மணி
பெரியதம்பிப்பிள்ளை புலவர் மணி சரிபுதீன் * புரட்சிக்கமால் பொன். சிவானந்தன் பொன்னுத்துரை ஆ. மலர்வேந்தன் * மகேஸ்வர லிங்கம் க. மயில் வாகனம் ஆர். மட்டுநகர் முத்தழகு மண்டூர் கவி சோமு மண்டூர் அசோகா மண்டூர் குணரெட்னம் மருதூர்க்கொத்தன் மருதூர் மஜீத் மருதூர்க்கனி மருதூர் வாசகன் மருதூர் அலிகான் மருதூர் வாணன் மருதை மைந்தன் மணிக்கவிராயர்
மக்கத்தார் மஜீத் மாலா ராமச்சந்திரன் மாஸ்ரர் சிவலிங்கம் மூனாக்கானா
மோனகுருசாமி வண. சந்திரா பெர்ணான்ாடா வண. பற்குணராசா வாழையூர் ஜெகன் வாழைச்சேனை அமீர் வாழையூர் ஜெகன் வாழைச்சேனை அமீர் வாகரை வாணன்
வாசுதேவன் வித்துவான் வீ. சீ. கந்தையா விவேகானந்த முதலி வித்துவான் கமலநாதன் வித்துவான் ஜெபரெத்தினம் வெற்றிமகன் ராசா வெல்லவூர்க் கோபால் ரவிப்பிரியா
ராஜினி பு. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ரூபரா னி
றக்கீம் ஏ. எல். ஏ. ஜவ்பர் கான்
ஜின்னா சரிபுதீன் ஜ-0 னைதா சரீப் ஜோசப் பரராசசிங்கம்
பூரீதா ஸ்
ஹனிபா எஸ். எல். எம். *
ஆஹா இன்னும் எத்தனையோ? இத்தனை பேர் என்றால் மட்டக்களப்புக்கு என்ன குறைவு? வருங்காலம் பாருங்கள் மலர்ச்சி
யின் நிறைவு! இவர்களில்
ஆறிலொரு பங்கினர் இலங்கைக்கு
அப்பாலும் புகழ் நிலவ மட்டக்களப்பை மதிப்புறச்செய்கின்றனர். ( * ) புள்ளி அடையாளமிட்டு அறிந்தோரைக் காட்டியுள்ளேன்.
பெருவெள்ளமும் சூறாவளியும்
இலங்கை இயற்கைவளம் நிறைந்த நாடென்றால் அதற் குள்ளும் வளம்மிக்கது மட்டக்களப்பென்றால் மிகையாகாது. மட்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 51
டக்களப்பை மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல் எனும் நாணி லம் சூழ்ந்த நிலங்கள் இருந்தும் இடையிடையே இயற்கையின் நிலைமைகளால இடர்ப்பட்டதுமுண்டு.
1957ல் உன்னிச்சைக் குளம் முதலியன உடைப்பெடுத்துப் பெருகிய பெரும் வெள்ளத்தால் மட்டக்களப்பு மேட்டுநிலம் தவிர்ந்தவையெல்லாம் பாதிப்புற்றன. இறந்த மாடு, ஆடுகளின் எலும்புகள் மரக்கிளைகளில் தொங்கிக் காணப்பட்டனவென்றால் வெள்ளச் சேதம் சொல்லக்கூடியதா? இதைவிட மிகவும் பாதிப் புண்டாக்கியது 1978ஆம் ஆண்டுச் சூறாவளி. கடவுள் இல்லையென் றோன் கூடக் கடவுளே! கடவுளே! எனக் கூக்குரலிட்டு ஓடி ஒதுங் கியதையெல்லாம் நாமும் கண்டுகொண்டோம்.
எத்தனை வீடுகள் இடிந்தன. எத்தனை உயிர்கள் மடிந் தன. தந்தித் தூண்களெல்லாம் சுருண்டு சுருண்டு கிடந்த தென் றால் சொல்லக்கூடிய துன்பத் தொல்லைகளா ? அதுவும் அரை மணித்தியாலம் அடித்த அடி ! திசைமாறி எதிர்மாறாகத் திரும்பி யது புயல்காற்று. ஆலமரம்போன்ற விருட்சங்கள் எல்லாம் அடி தலை மாறித் தலைகீழாக வேர்ப்பகுதியெல்லாம் மேலாகி நின்ற காட்சியைக் கற்பனையில்கூடப் பார்க்கமுடியாது. கடும் பயம் தோன்றும். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். வேற்றுமை காட்டும் ஏழை, பணக்காரன் நிலையை மாற்றியது சூறாவளி. பணமிழந்தோருமுண்டு, பணம் சேர்த்தோருமுண்டு. எப்படித்தா னென்றாலும் இப்படியான இயற்கை நிலைத் தாக்கம் மறுமலர்ச்சி யையும் தாக்கியது.
பிரதமர் பிரேமதாசாவின் பெரும் சேவை பட்டண விருத்தி :
மறுமலர்ச்சியையும் தாங்கிய தென்று வாயால் சொல்லிவிட லாம் இலகுவாக, ஆனால் 1978ஆம் ஆண்டுச் சூறாவளி எண்ணிக் கணக்கிலெடுக்கலொண்ணாத் துன்ப துயரங்களைக் கொடுத்தது. தெருவெல்லாம் மரங்களும். படுகுழிகளும். அநேக வீடுசள் அழிந் தன. விவசாய விளை பலன்கள் ஒழிந்தன. மடுவாயிருந்த இடம் மேடாகியது. சோலையெனும் தென்னை மர ஒலைகளும் இல்லாம லாக்கிவிட்டது. இந்தக் காலத்தில் பிரதமராக இருந்தவர் பெருந் தயாளகுணம் படைத்தவரும், வெளியுலகம் சுற்றியவரும், இலங் கையை அபிவிருத்தியுறச் செய்தவரும், வீடு வீதி தெருக்களெல் லாம் அபிவிருத்தி காணச்செய்தவருமான கரும வீரன் பிரேமதாசா

Page 42
52 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
அவர்கள் ஆகும். இவர் மட்டக்களப்பிலும் மனம் வைத்தார். வீட்டுத் திட்டங்களும், நாட்டபிவிருத்தியுடன் நகர அபிவிருத்தி யும், வீதி அகட்டலும் விளம்பரச் சுற்றாடலும் என்று பல திட் டங்களை ஏற்படுத்தினார். இதனால் மட்டக்களப்பும் ஓரளவு மறுமலர்ச்சியுற்றது, மாறுதலாகிவருகிறது.
இக்கால நிலைமை !
மறுமலர்ச்சியின் இக்கால நிலைமைகளினால் மகிழ்ச்சியுறும் அதேவேளை, உள்நாட்டு அரசியல், அரசாங்க ஆயுத கலாசாரம், உள்நாட்டு இனவுணர்ச்சி ஆகிய நடைமுறைகளால் பாதிப்பும், வேதனைகளும் பங்குகொண்டு மட்டக் களப்பின் மறுமலர்ச்சியைத் தாக்குகின்றன. ஆனால் மட்டக்களப்பார் மற்றைய வடபகுதி யாழ்ப்பாணத்தவர் படும் துன்பங்களிலும், பா தி ப் புக ளி லும் குறைந்தவர்கள் என்றே கூறவேண்டும். இதை எழுதும் வேளை யில் அக் கம்பக்கத்தில் அழிவு சேதங்கள் ஏற்பட்டாலும் யாழ்ப் பாணத்தவர்களின் துன்ப வேதனைச் செயல்களை எண்ணிப் பார்த்துக் கவலைப்படவும், கருணைகொள்ளவும், மறுபுறம் பாராட் டவும் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே சூறாவளியைத் தொடர்ந்து மாறா வலிகளும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இருந்தும் மறுமலர்ச்சியடைந்துள்ளதை மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. உயிர்கள் அழிந்தும் ஒருசிலர் பணத்தால் உயர்ந்தனர்.
கல்வியைப் பாருங்கள்! நான் பிறந்த காலத்தில் இலவசக் கல்வி இல்லை. இடைக்காலத்திலே ஏற்பட்டது. சுயமொழிக் கல்வி யும் 1956க்குப் பின்னரே சட்டமாகியது. இதனாலெல்லாம் கல்வி வளர்ச்சிகண்டது. மட்டக்களப்பில் பட்டதாரிகளைப் பார்ப்பதே அரிது. ஆனால் இப்போது பட்டணம் மட்டுமல்லாமல் கிராமப் புறங்களிலும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களையும், பட்டதாரிகளை யும் , எஞ்சினியர்களையும், பட்டம் பெற்ற டாக்டர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும், கணக்காளர்களையும், அரச பதவியாளர்களையும் கா ண க் கூ டி ய நிலை மையென்றால் மறு மலர்ச்சியில்லையா? மட்டக்களப்பு மாறவில்லையா?
சுகாதார நிலைமைகளும் விருத்தியடைந்து நோய்நொடி களும், மரணமும் குறைந்து கூடிய ஆயுளுடன் வாழ்கின்றனர். சிலகாலம் மக்கள் பிறப்புக் கட்டுப்பாடென்று சொல்லி ரூபா 509 கொடுக்க அதனைப் பெற்று க் கொ ன் டு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டனர். ஆனால் இக்கால ஜனனாயகத்து நிலையினை எண்ணிப்பார்த்தால் இவையெல்லாம் மட்டக்களப்பார்க்கு உத

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 53
வாத செயலென்று கூறும் காலம் உதயமாகின்றது. தமிழர்மட்டும் குடிசனப்பெருக்கம் குறைவுபட நடவடிக்கை கொள்வதைவிட்டு
மற்ற இனத்தவர்களின் விருத்தியைக் கருதிப்பார்த்து மட்டக்களப்
பாரும் ஆவன செய்யவேண்டும். நாட்டுநிலைமையால் கணவனை
இழந்த இளம் விதவைகளைத் திருமணம் செய்யவும், பாதிப்புற்ற
குடும்பங்களை எழுச்சியுறச் செய்யவும் வேண்டும்.
நமது நாட்டுப்பக்கங்களில் பதினாறு பிள்ளைகள் பெற்றுச் சீரும் சிறப்பு மாக வாழ்ந்துமிருக்கின்றனர். மூத்த பிள்ளையின் உழைப்புக் கூடியதால் குழந்தைகள் பிறந்தும் இடர்ப்பாடில்லை. ஆண்டு மூன்றுக்கொன்றாக ஆறேழு பிள் ளை க ள் பெறலாம். "பதினாறும் பெற்றுப் பலவாண்டு வாழ்க" என்று வாழ்த்துவது பிள்ளைகளைக் குறிப்பதல்ல, பதினாறு பேறுகளையே குறிப்ப தாகும். இருந்தும் இரண்டு பிள்ளைகளோடு நில்லாமல் ஐந்தாறு பிள்ளைகளாவது பெற்று வளர்க்கும் நிலை ஜனனாயக அரசுக்குத் தேவையாகின்றது. மேலும் பெண்களில் அனேகர் அரச உத்தியோ கங்களில் ஈடுபடுவதாலும், நாகரீக நடையென்பதாலும் பிள்ளை களைக் குறைப்பதோடு பெற்ற பிள்ளைக்குத் தாய்ப் பாலூட்டாது புட்டிப்பால்களை ஊட்டுகின்றனர். ஒருசிலர் கந்தோர்களில் பால் சுரக்கத்தனம் பெரிதெனக் காட்டாமல் கழிப்பறைகளில் பாலைப் பீச்சிவிடுகிறார்களென்ற செய்தியையும் பத்திரிகையில் கண்டோம் . ஏனிந்த நிலைமை? தேவைக்களவாகப் பிள்ளைகளும் வேண்டும். அவற்றாலும் மறுமலர்ச்சி காணலாம். இன்னும் பல மறுமலர்ச்சிக ளுண்டு.
மறுமலர்ச்சிகள் மாற்றங்கள் :
இன்றைய காலகட்டத்தில் ஒருசில கிராமங்கள் பட்டணத் தின் நிலைக்கு மாற்ற மடை ந் துள்ளன. எங்கு பார்த்தாலும் ரேடியோ, ரீவீ முதலிய சாதனங்களோடு நடையுடை பாவனை யெல்லாம் மாற்றமடைந்துள்ளன. நான் பிறந்த காலத்தில் பாட் டுப் பெட்டியெனப்படும் கிராமபோன்தான் (Gramaphone) விழா வுக்கும், மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுக்கும் பயன்பட்டது. ஆனால் இக்காலமோ எங்கு பார்த்தாலும் சின்ன விழா நிகழ்ச்சி களுக்கும் ஒலிபரப்பிச் சாதங்ைகளும், வீடியோப் படக்காட்சிகளும், பிறவும் இடம் பிடிக்கின்றன. ஏன் கமத்தொழில் கருமங்களும் மாற்றமடைந்துதானுள்ளன.
வாணன் என்ற ஐந்தாறு மாதகால நெல்வகைகளை விதைத் துக் காவல் காத்துப் பாடுபட்டமையெல்லாம் மாற்றமடைந்து,

Page 43
54 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
மூன்று மூன்றரை மாத நெல்லினங்களாலே விளைவு கூடப் பெறு தலும், உழவு மெசின் கொண்டு கூடிய பலன் பெறுதலும் இக்காலத் தில் நடைபெறுகின்றது. அரக்குப் புதைத்தல், அரக்குக் கிழப்பு தல், அரக்குமாடு சேர்ந்த எருமைக்கடாக்களைக் கொண்டு 'தாயே பொலி, தம்பிரானே பொலி, பூமாதேவித்தாயே பொலி' என்ற பொலிப்பாட்டல்லாம் பாடி, "ஒகோகோ' வென்று விடிய விடிய வேலை செய்த மையெல்லாம் மாறிவிட்டன. அட்டாளை, பட் டறைகளில் நெல் கட்டியதோடு பரண், புரைகளில் இருந்து பாது காத்துக் கவிகள் பாடுவதெல்லாம் குறைந்துவிட்டன. நவீன முறை களால் கூடிய பலன்பெறும் மலர்ச்சிக்காலமாகிவருகிறது.
மீன்பிடி முறைகளிலும் நவீன இயந்திரப் படகுகள் கொண்டு கூடிய மீன்களைப் பிடித்து வளர்ச்சி கண்டுவருகின்றனர். முழு விசளம் பார்க்கிற முறைமையெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடைமுறையில் மறைகிறது. மரணவீட்டில் சாவுக்கடமைகளில் குடிவழமைகள் பார்ப்பது குறையாதிருப்பதுடன் சிலர் ஒலிபெருக்கி மூலம் ஆவன செய்வதும் இடம் பிடிக்கிறது. மரணவீட்டுக் கடமை களில் மற்றச் சமயத்தவர்களின் செலவினம் குறைந்த நடைமுறை களையும், மூடச்செயல் குறைந்த அறிவியல் செயல்களையும் இந்துசமயத்தவர் கைக்கொண்டொழுகிவருவது நலமெனக்கொள்ள வேண்டாமா,
மட்டக்களப்பு வாவியும் மட்டக்களப்பார்க்குச் செல்வம் கொழிக்கச்செய்யும் இயற்கைவளமாகும். இந்த வாவியை கரை கடந்த வயல் நிலங்களுடன் சேர்க்காமலும், சதுப்பு நிலமாக்காமலு மிருக்க ஆவன செய்யவேண்டும்.
மட்டக்களப்பு வாவி :
மட்டக்களப்பு மான்மியத்திலே ' பங்கிடான்வெளி**யெனப் படும் பங்குடா வெளி வடக்கே, கல்முனைக் கிட்டங்கி தெற்கே என நீண்டுள்ளது. மட்டக்களப்பு வாவியிலே எமக்கு முந்திய காலத்திலே 'எஞ்சின் போர்ட்" கச்சேரியின் ஒரமாகக் கல்முனைப் பக்கம் சென்று பிரயாணிகளை ஊர் ஊராக ஏற்றி இறக்கிப் பணி செய்ததாகக் கேள்வி. நான் நினைக்கிறேன், கல்லடிப்பாலம் திரு. E. R. தம்பிமுத்து அவர்களின் சிறந்த சேவையினால் 1924ல் அமைக்கப்பட்ட பின்பு நின்றுவிட்டதுபோலும். இருந்தும் எழுவான் கரையை விட்டுப் படுவான் கரைப்பக்கம் பயன்படுத்தியிருகலாமே. படுவான் கரையென்றதும் பட்டணப் பக்கமுள்ளோரால் அவமதிப் பாக நினைத்த காலம் எல்லாம் ஒடிப்போயிற்று. வாவியின் நிலை

யாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 55
மையிலும் இருக்கரைப் பக்கங்களையும் நோக்காது ஒருகரைப் பக்கம் பார்த்து ஆவன செய்யத் திட்டமிடுவது மாறவேண்டும். படுவான்கரைப்பக்கம் மட்டக்களப்பு வாவி ஆயிரக்கணகான காணி யைத் தன்னுள் சேர்த்து உப்புக்கரச்சையாக்கி வளர்ச்சியடைகின்ற தைத் தடுக்கவேண்டும். அரச அதிபர் திரு. பத்மநாதன் இதில் அக்கறைகொண்டுள்ளார்.
மாறிவரும் மட்டக்களப்பு என்பதுபோல் வாவியையும் மாறி வரும் மட்டக்களப்பு வாவி என்று சொல் ல வேண்டும் போல் தோன்றுகின்றது. இந்த வாவியே எழுவான்கரை, படுவான்கரை யெனப் பெயர்பெற வைத்தது. பட்டணப் பகுதியார் படுவான் கரையிலுள்ளோரைப் பரிகாசம் பண்ணிய காலம் போய். படுவான் கரையினரைப் பட்டணப்பகுதியார் திருமணம் செய்யும் காலம் வந்தது. படுவான் பகுதியைப் பின்னும் நன்கறியலாம்.
நிற்க.
இந்த வாவியின் நிலைமையினை இன்னும் சரிவர அறிந்தா ரிலர். படுவான்கரையெனும் மேல் கரைப் பகுதியை நன்கு ஆராய* . வேண்டும். வாவிக்குள் வந்து பாயும் 26 வாய்க்கால்களையும், சராசரி ஆழம் 4 மீற்றரென்றும் , 56 கிலோமீற்றர் நீளம், 418 ஹெக்டர் பரப்பு என்றெல்வாம் காட்டிய பத்திரிகைக் கட்டுரை யோடு இன்னும் ஆராய்வு கூடவேண்டும். அரச அதிபர் திட்டம் தொடர வேண்டும். "மன்று நிறுவனச் செயலும் தொடரட்டும்!
எத்தனையோ சிற்றோடைகளைத் தன்னகத்தே கொண்டுள் ளது. இந்த ஓடைகள் வாவி பெருக்கான நேரத்தில் சேறும் சகதியு மாகி ஆயிரக்கணக்கான நெற் காணிகளைப் பாழாக்கிக்கொண்டிருக் கின்றன. சில இடங்களில் சுரியாகிக் கால்வைக்கும் ஆளையே நின்ற நிலையிலே நிறுத்தி உயிர்போக வைக்கின்றன. எம்முடைய பகுதிக்குள்ளே 500, 600 ஏக்கர் காணிகளை உப்புக்கரச்சையாக வும், கண்ணாக் காடுகளாகவும் ஆக்கியுள்ளன . ஆனதால் இந்த ஓடைகளையும், கரையோரங்களையும் ஆவன செய்தாகவேண்டும். வாவியை முன்பு ஆழமாக்கச் செய்த செயல் தொடரவேண்டும். கரையோரங்கள், சுற்றாடல்கள் வாவியைப் பாழ்படுத்தாதிருக்கச் செய்யவேண்டும். மீன்பிடித் தொழிலால் வாழும் மக்களையும் நோக்கவேண்டும். அதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் ஈச்சந்தீவு, நாவற்காடு முதலிய இடங்களில் கரைச்சையாகின்றன.
நல்ல முறையில் பழையபடி காணிகளை வெளியே விட்டு உப்புநீர் அலையடித்து ஓடிக்கொண்டிராத வகையில் அணைக்கட்டு

Page 44
56 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
களைக் கட்டி, பெருங் கற்களையும் போட்டு, கண்டல், கண்ணா, கிண்ணை மரங்களையும் ஒரங்களில் நடவேண்டும். காணி உப்புக் கர ச்சையாகிப் பாழடைந்தும், பற்றைக்காடுகளாகியும் உள்ளதைப் பண்படுத்த உரிய பூமிக்காரர்களுக்கு அரசாங்கம் உதவிகள் செய்ய வேண்டும். அணைகள் கட்டித் தெருவாக ஆக்கலாம்.
மட்டக்களப்பு மான்மியத்திலே சிற்றரசர்கள் கூடிக் கலந் துரையாடித் திட்டமிடும் சில கிராமங்கள் கூறப்பட்டுள்ளன. அவற் றுள் சில கிராமங்கள் வாவியின் கரை உயர மில்லாதபடியால் வாவி அணைத்துக்கொண்டு அகலமாகின்றது. அதிலே குறிப்பிட் டுள்ள "பங்கிடான் வெளி**யெனப்பட்டுள்ள பன்குடா வெளிக் கிராமம் இந்த வாவியின் த ன் னி ச் சை யா ன அலைமோதலால் அரித்து அரித்து மக்களை அப்புறப்படுத்தும் நிலைக்குள்ளாகியிருக் கிறது. பழைய கோவிலை ஆறு அழித்துவிட்டது. எம்முடைய காலத்திலே அரைக்கட்டைக்கங்காலிருந்த ஆறு இப்போது எங்கள் காணியையும் தாண்டி எமது வீட்டுத் தெருவினாலே தடைப்படுத் தப்பட்டிருக்கிறது. அதுவும் கரைந்தால் வீடு வளவும் இல்லை. இந்த நிலை பலருக்கு இருக்கலாம். ஆனால் மீன்பிடித் தொழி லுக்கு ஆவன செய்யவும் வேண்டும். கமக்காரரின் விவசாயத் தொழி லுக்கு அடுத்தபடியான மீன் பிடித் தொழிலையும் நல்ல முறையில் பேணவேண்டும். போக்குவரத்துகளுக்கும் மேலும் மேலும் ஆவன செய்துகொண்டே வரவேண்டும்.
கல்லடிப்பாலம் மறுமலர்ச்சிக்கு மேலும் உதவலாம் :
கல்லடிப்பாலம் அமைக்கப்பட்ட பின்னர் தென்பகுதி மக்கள் மேலும் கல்வி முதலானவற்றில் முன்னேறினர். வடபகுதி மக்களை விட இடர்ப்பாடிருந்தும் முன்னேறிக்கொண்டனர். வடபகுதியினர் இனிமேலாவது உணர்ந்து முன்னேற்றங்கான முயலட்டும். அதே வேளை தென்பகுதி மக்களுக்குப் புகைவண்டிப் போக்குவரத்துச் சேவை மேலதிகமாக ஏற்படச்செய்து உதவக் கல்லடிப்பாலம் உறு துணையாக நின்று மட்டக்களப்பை இன்னும் மலர்ச்சியுறச் செய்ய லாந்தானே.
இப்போது அம்பாறை மாவட்டமாயிருந்தாலும் கல்முனைப் பகுதியினைச் சேர்ந்த முஸ்லீம்களோடு தமிழர்களும் முன்னேற்றங் காணப் புகைவண்டிப் பாதையமைப்பு அவசியந் தேவையாகின் றது. அரசாங்கம் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பதை மலர்ச்சி கண்டு வரும் மட்டக்களப்பு மக்கள் தட்டிக்கேட்டு ஆவன செய்யவேண்டும். பேச்சளவில் பேசி மூச்சுவிட்டுக்கொண்டிராமல் அஃதாவது உதை

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 5f
O ه ஃே . . . கால் கொடுத்து அரசாங்கத்துக்கு உதவுங்காலதிதே ஆன்னி செய் யாதுவிட்டால் தொண்டராகிக் கண்ட பலன் என்னாகும் ? அத் தோடு நாட்டின் நிலைகருதி நாமும் ஆவன செய்யத் தூண்டிக் கொண்டிருக்கவேண்டும். இத்தகைய சேவையில் கட்சியெதுவென் றாலும் அல்ஹாஜ் பதியுதீன் மகுமூத் அவர்கள், அவர்களினத்துக் காகச் சலுகைகள் பெற்று மலர்ச்சி காணச்செய்தமையெல்லாம் மற்றோருக்கும் படிப்பினையாகவேண்டும். மட்டக்களப்பு மக்க ளில் நல்லெண்ணங் கொண்டிருந்த கல்வி மந்திரியான அன்னா ருடன் நானும் ஒரு சபதப்படி சுயேச்சை வே ட் பா ள னா கப் போட்டியிட்ட 1977லே போட்டியாளராக ஆறுமுனைப் போட்டி யில் சிக்கிக்கொண்டோம். மறுமலர்ச்சி காணப்போகும் நிலை மைக்கு இடர்ப்பாடு தரும் இத்தகைய நிலைமைகள் ஏற்படாதிருக்க வும் நாம் ஆவன செய்ய வேண்டும். இனத்துடன் இனம் மோதா மல் இனப் பெருமையுடனிருக்கவேண்டும்.
அரசாங்கம் :
இனத்தோடு இனம் மோதிக்கொள்ளாத அரசியலும், அதற் கான அரசாங்கமும் தேவையென்பதைத் தேசமே உணர்ந்துவிட் டது. இதனால் யுத்தகளத்தையும் கண்டது. கண்டதோடில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவ்வேளை மட்டக்களப்பு என்ற வகையில் மலர்ச்சிக்காக, மனவேதனை குறைய, பட்டறிவுப் போதனை எண்ணங்கள் நிறையவுள்ள நாம் தேவையான, கூறக் கூடிய சிலவற்றையேனும் கூறலாம். இன்றைக்கு ஆட்சி நடத்தும் அரசு தமிழ்பேசும் மக்களுக்குக் குறைகளுண்டு என்று கூறிக்கொண்டு தான் வருகின்றது. சமதானப் புறா சண்டைப்புறாவாக மாறிய தாமோ? எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் எழுதுவதற் கஞ்சிக்கொண்டிருக்கும் காலமும் இணைந்துள்ளதாயிருக்கின்றது. அதனால் நாமும் அடங்கித்தான் போகவேண்டும். ஆனால் அடக்க அடக்க அளவுக்குமீறி சீறியெழுங் காலமும் வரா திருக்க வேண்டுமே! இருக்குமா ? ஈழம் என்ற சொல்லையும் எதிர்க்கின்றனரே சிலர்.
சிந்தனை வளர்ச்சியில் அரசியல், அரசாங்கம் என்பன நிழ லாட வைக்கின்றன. படிக்கின்ற காலத்தில் அன்னியராட்சியான ஆங்கிலேயராட்சி நடந்து கொண்டேயிருந்தது. ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் எமக்கெல்லாம் அரசனான நிலையில் மாண்புமிக்க மன்ன னாவார். அதன் பின்னர் உலகமே வியக்க, நம்பிக்கைகொள்ள முடியாத நிலையில் 1937ல் மன்னராகிய எட்டாவது எட்வேட் எனும் வின்சர் கோமகன் மன்னனாகியும் காதலுக்காக, தனது

Page 45
58 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
காதலிக்காக அரச பதவியைத் துறந்தார். உலக அதிசயமென்றே சொல்லக்கூடிய நிலையாயிற்று. இதனைப் பின்னர் காதலின் வலிமை காட்டித் தேவைப்படும்போது பேசத் தலைப்பட்டனர் நம்மவர்கள். மன்னர் பரம்பரையெங்கே? மக்களாகிய நாமெங்கே? என்றாலும் காலம் மாறிக்கொண்டது. சல்லி, சதம், துட்டு, காசி 5 சதம், பணம் 6 சதம் என்ற காலம் எங்கே?
அதனையடுத்து ஆறாம் ஜோர்ஜ் மன்னர் என்ற பட்டத் துடன் இளைய சகோதரனாயிருந்த இப்போதைய நமது இராணி யின் தந்தை ஆங்கிலேயர் ஆட்சிக்கு அதுவும் சூரியனே மறையாத இராட்சியம் எனப்படும் பரந்த தேசங்களுக்கு மன்னரானார். அக் காலத்தே தான் நமது நாட்டிலும் இந்தியாவை அடுத்துள்ளதால் சுதேச உணர்ச்சிகள் கொந்தளித்தன. அக்காலகட்டத்தில் யாழ்ப் பாணத்தவர்களே முக்கிய பதவிகளிலிருந்து சேவைசெய்து நல்ல பெயர்பெற்று அரசுக்கு ஆவன செய்தனர். பின்னர் வரப்போவது அறியாது ஒத்துழைத்தனர். அக்காலமெல்லாம் மட்டக்களப்பு முக் கிய இடத்தைப் பெறவில்லையென்றுதான் சொல்லவேண்டும். சேவையின் திறமையினால் சேர். பொன். இராமநாதன், துரை அவர்களைக் கெளரவித்து குதிரை வண்டியில் இருந்த குதிரைகளை அவிழ்த்து இழுத்துச்சென்றோர் இனப்பெருமை மாறிப்போயிற்றா? புகழ்ந்து பேசியோர் பொறாமை கொண்டனர். அதன் வளர்ச்சி இன்றைய நிலை.
மாவட்டத் தேர்தல் நடைமுறையால் ஏழெட்டு வாக்குகள் பெற்ற எம்பிமார் இருந்து ஆளும் அரசில் இருக்கும் காலமேன் : நம்மவரும் நம்பிக் கெட்டனர். பட்டறிந்தபின்னர் படி முறையில் தமிழின வேகம் கூடியது. சுதந்திர தாகத்தை நாடியது.
மட்டக்களப்பிலே அரசியலில் மலர்ச்சி உண்டு என்று கூற முடியாத நிலையே முந்திக்கொண்டிருக்கின்றது. சத்தியாக்கிரகம், ஹர்த்தால், அஹிம்சை என்பதெல்லாம் அறியாதிருந்த மட்டக் களப்பார்க்கு அறியும் நிலையேற்பட்டது. தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் போன்ற பலர் இருந்திருக்கவேண்டும். "சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டா" "தென்று பட்டவர்த்தனமாகப் பாராளுமன்றத்திலேயே சொன்ன தமிழினப் பற்றுடைய பெருந் தலைவர் அவர் .
* "சிறியை எதிர்ப்போம் சிறையை நிறைப்போம்' ""குண்டாந்தடி முருங்கைத்தடி' *நண்டெழுத்து வேண்டாம் நமக்கு" என்றெல்லாம் துடிக் கின்ற பருவத்தில் படிக்கின்ற மாணவர்களை வழிநடத்தியவர்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 59
களும் மாறிச்சென்றதுமுண்டு. வடபகுதியினரின் எழுச்சிச் செய்தி கள் மட்டக்களப்பாரையும் இழுபடச்செய்தன. அந்த வகையால் மலர்ச்சி காணத்துடிக்கின்ற மட்டக்களப்பு மக்களின் இலட்சியம் நிறைவேற இறையருள் நிறையட்டும்! மாறிவரும் மட்டக்களப்பை மக்கள் மதிக்கட்டும்! ஆயுதங்க ளின் பெயர் முதலியனவற்றை அறிந்துகொள்ளவைத்த காலம் மாறிவரும் என்றாலும், மனம் வருந்தும் காலமே. இனிமேல் மனம் வருந்தாமலிருக்க மட்டக் களப்பையும் சேர்ந்துதான் ஆவன செய்யவேண்டும். இணைந்த மாகாண இணையாட்சியாவது பெறக்கூடாதா ஆண்ட தமிழினம்?
மாற்றமாகும் நடைமுறை மலர்ச்சிகள் :
மட்டக்களப்பின் மறுமலர்ச்சியால் மகத்தான சில செயல் நடைமுறைகளும் மாறிவிட்டன. நாட்டுப்புறங்களிலும்கூட நவீன வாகன நடைமுறைகள் பெருகிவிட்டன. காத்தடியில் பால், மீன், மரக்கறி முதலியன தூக்கிச்செல்வோரை இக்காலத்தில் காண முடி யாது. மோட்டார் சைக்கிள் முதலிய பயன்படும் செலவுடன் கூடிய இயந்திரங்களின் பாவனை கூடி வளர்ந்துகொண்டே வருகின்றது.
ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி, கொட்டுக் கரத்தை, திருக்கல் கரத்தை, சவாரி வண்டி, வக்கி என்பன குறைந்துவிட்டன - சில மறைந்தும்விட்டன. பட்டணப் பக்கங்களில் கூலிக்கான சில வண்டிகள் காத்துக்கிடந்து உழைக்கின்றன. திரு மணம் போன்ற சுபகருமங்களுக்கும் நாலைந்து வண்டிகள் தொட ரச் சினிமாவில் காட்டுதல் போன்ற நடைமுறைகள் இருந்து மாறி விட்டன. வண்டிகள், மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, சலங்கை மணி யோசைகள் இன்னிசையெழுப்பச் செல்லுங் காட்கியெல்லாம் வலு விழந்துவிட்டன. வண்டியைச் சிலர் கரத்தை என்றுதான் கூறுவர். ஒருசிலருடைய திருக்கல் கரத்தை ஒற்றை மாட்டோட்டம், சைக் கிள் ஓட்டத்தையும் முந்திவிடும்.
பட்டறையில் நெல் கட்டும் செயலைப் பழமொழியாக்கி **வைக்கலில் விளைந்ததை வைக்கலில் கட்டுதல்" என்பதாகச் சொல்லிச் சொந்தத்திற்குள்ளே தி ரு ம ண ம் முடித்து வைப்பர். விசேடமாகக் குடிவழமை பார்க்கப்படும். ஆனால் இக்காலம் மாறிக்கொண்டே வருகின்றது.
மங்கல, அமங்கல நிகழ்வுகளில் இடம்பிடிக்கும் குரவை, அழுகை முதலியன குறைந்துகொண்டு போகின்றன. சிலப்பதிகார மான ஆதிகால இலக்கியத்திலிருந்து 'ஆய்ச்சியர் குரவை' , ' குன்

Page 46
60 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
றக் குரவை", எல்லாம் அறிகின்றோம். பண்டைய தமிழர் பரம் பரைக் குரவையிடு தற்கு இக்காலம் வெட்கப்படுகின்றனர். பெண் பக்குவமடைந்த விழா தேவையில்லையென்போர் பெண்ணின் எதிர் கால வாழ்வுக்குப் பலர் அறிய வைப்பதும், ஏழைகள் வாழ்வில் பிறர் உதவிபெறுவதும் நலமென்றறியலாமே!
தயிர்த்தேங்காய் என்பதும் சிலருக்குத் தெரியாது. நீண்ட பயணங்களில் தேங்காயில் தயிர் வார்த்துப் பயன்படுத்தியதெல் லாம் மாறித் தயிர் பரிமாறிக்கொள்வதும் குறைகின்றது.
பால் காய்ச்சி உறைய வைத்துத் தயிராக்கி, மத்தினால் மோர் கடைந்து வெண்ணெய் எடுத்து வேறாக்கி, நெய் எடுத்துப் போத் தலில் அடைப்பதெல்லாம் காண்பது அரிதாகின்றது. மோர் குடித் தால் உடல் வளர்ச்சியடையும், நாங்கள் பள்ளிக்கூடம் செல்லும் போது போத்தலில் கொண்டுபோய் வைத்திருந்து குடித்தமை, சிலர் கள வாடிக் குடித்துச் சண்டை பிடித்தமையெல்லாம் மனதை விட்டகலாதன .
கைக்குத்தரிசியென்றால் இக்காலம் மதிப்புக்கொடுத்துத் தேடி வாங்குகின்றனர். தவிடு போகாமல் உரல் உலக்கைமூலம் நெல் குத்துதல் பல படிமுறைகளைக் கொண்டது. இதனைக் கமக்காரன் கவிபோன்று 'அரிசி குத்தும் அரிவையர் அமனி' என்று வானொலி யில் கவியோடு காட்சி காட்டியமை மதிப்புப் பெற்றது.
மாற்றமாகும் நடைமுறைகளில் மக்கள், சமூகம், அரசாங்கம் என்றெல்லாம் கலந்தும் பிரித்தும் காட்டியுள்ளவையோடு என் னால் தவறவிட்டவை பல விருக்கலாம். ஒருசில நடைமுறைகள் பாராட்டத்தக்கன. அவை மட்டக்களப்புக்கு மட்டுமல்லாமல் கலந்திருக்கலாம். மின்சார உபயோகம் வந்த பின்பும் கச்சேரியிலும், நீதிமன்றங்களிலும் மேலைத்தேசத் து ரை த் த ன நடைமுறைச் சேவைகளிருந்தன.
பாங்கா இழுத்தல் :
பெரிய பட்டம், பதவி கொண்டோரைத் துரைமார் என்றே சொல்லப்பட்டகாலம் அக்காலம், துரைமார் என்போருக்குப் பய பக்தியாகக் கீழ்ப்பட்டோர் நடப்பர். பெரியதுரை என்போருக்குப் 'பாங்கா இழுக்கும் செயல் இருந்தது. G. A., A. G. A , பெரிய நீதிமன்ற நீதி வான், சுப்பிறீங்கோட் ராசா எனப் பெயர் கொண் டோருக்கெல்லாம் 'பாங்கா'" இழுக்கும் தொழில் இருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு துரைமாருக்கு மேலே

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 61.
தொங்கும்படி கட்டியிருக்கும் காற்று வீசச்செய்யும் சீலையைப் "பியோன் நிலைகொண்டிருந்தோர் இழுத்தனர். 'கோழி மேய்ப் பினும் கோர்ணமேந்துடா’ என்று பெருமையாகச் சொல்லிய காலம். அடிமைத்தொழில் அலிலவா ? அதுபோல்;
கழிப்பறைகள் சுத்தஞ் செங்வோர் அடிமையென்ற நிலை யில் கவனிக்கப்பட்டனர். பட்டணப்பக்கம் சிலவேளைகளில் அந்த வாகனம் வருகிறதென்று ஓடுவார்கள். மலம் ஏற்றிய வண்டிதான் அந்த வாகனம், தள்ளும் தகரவண்டியும் இருந்தது. ‘செடி நாத் தம்' என்று சொல்லிக்கொண்டு ஓடி மறைந்த காலமெல்லாம் ஓடிவிட்டது. நகரசபையார் 'நரகசபை'யென்றில்லாமல் நல்ல வற்றை நடைமுறைப்படுத்துகின்றனர். மனிதனிலே அப்படியான தொழில் செய்வோர் அடிமையென்ற நிலையின்றி அன்னியோன் னியமாகப் பழகுகின்றனர். இதைக்கூட மட்டக்களப்பிலே மாற்றம் என்று சொல்லக்கூடிய நிலையில், சட்டம் படித்த பட்டம் பதவி கொண்டோரின் கதிரைகளை இளமைத் துடிப்புடைய இளைஞர் கள் பிடித்து, படித்தும் நடித்தும் பட்டணத்தை விருத்தியாக்கு கின்றனர். இன்னும் எழுத்தாள நண்பன் செழியன் பேரின்பநாய கம் அவர்கள் மேயரான தெல்லாம் பாராட்டலாம்.
கால், பல் காவலும் நாகரீகமும் :
எடுத்த எடுப்பிலே எல்லாவற்றையும் சொல்லிவிடாமல் இடையிடையே சொல்லுவதிலும் சுவையுண்டு. மாற்றம் என்பது பல துந்தானே! கிராமப் பக்கம் சேனைப் பயிர் செய்வோர் 'கோப் பத்தை' என்பதை அளவாக வ்ெட்டிக் கயிறு போட்டுச் செருப் பாகப் பாவித்தனர். இப்போது காடுமேடெல்லாம் 'பாட்டா' எனும் செருப்பு உபயோகமாகிக்கொண்டது. உடுப்பில்லாவிட்டா லும் செருப்புத் தான் தேவையென்பர். தெருவோரங்களில் காணப் படும் அறுந்த செருப்புகள் அவற்றின் செல்வாக்கைக் காட்டுகின் றன. 19.90, 49.90, 99.90 என்றெல்லாம் உயர்ந்து 499.90 என்ற விலைகளையும், வியாபாரத் தந்திரங்களையும் காணக்கூடிய கால மாயிருக்கிறது. ஏன்? அறுந்த செருப்பைக் காண்பதுபோல் பல் விளக்கும் தூரிகைகளையும் கண்டபடி வீசிக்கிடப்பதையும் காண் கின்றோம். அவற்றை வேறெதற்கும் பயன்படுத்தாமல் வீசுகின் றார்களே! ஐயோ! பல் முளைக்கும் முன்பே பல் தூரிகை கொடுத் துக் குழந்தைகளை உஜார்படுத்துகின்றார்களே ! அக்காலத்தில் இருந்தனவா இவையெல்லாம் ? கண்டபடியெல்லாம் பாவித்துப் பற்களைக் கெடுக்கிறார்களே!

Page 47
62 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
**ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்பதுவும்,
'வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பற்றுலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுமே - ஆலுக்குத்
தண்டாமரை யாளும் சார்வளே நாயுருவி
கண்டால் வசீகரம் காண்" என்பதுவும் பல் விளக்கப் பயன்படுத்தியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. அதிகம் கூறிக் கொண்டால் வெறுப்போருமிருக்கலாம். பற்பசையையும் தூரிகை யையும் காட்டிக் கதைபேசுங் காலமாகி நாகரீகம் காட்டுகின்றனர். தேவைக்கதிகமாகத் தீட்டித்தீட்டிப் பிள்ளைகளின் பற்களையும் விழச்செய்து, நோய்களையுந் தேடச்செய்கின்றனர். எதுவுந் தேவை யெனக் கண்டாலும் அளவு கணக்கு வேண்டாமா?
இக்காலம் வேளாண்மை செய்வோர்கூட கைக்குத் தரிசி இல் லாமல் மில்குத்தரிசி வாங்கிச் சாப்பிடும் காலமாகிவிட்டது. உமலில் அரிசி கட்டித் தோளில் போட்டுச் சென்ற காட்சியெல்லாம் இக் காலம் காணமுடியாது. ஏன்? முன்பெல்லாம் காசுகளைக்கூட உம லில் போட்டும், குட்டாப்பெட்டியிலிட்டும் கொண்டுசென்றமை கேட்போருக்குப் புதுமையாகத் தென்படும். குடை பிடிப்பதுபோல் தலையிலே சுமைகளை வைத்து உச்சி வெய்யிலிலும் உல்லாச மாகச் சென்றனர்.
சலவைத் தொழிலாளிகள் கழுதையிலே இரண்டு பக்கமும் சீலை மாராப்புக்களைக் கட்டிவிட்டுச் சிலர் ஏறி உட்கார்ந்து சென்றதுமுண்டு. தூரப் பயணங்களுக்கு எருத்து மாடுகளில் சுமை களை எட்டுப்போல் மூடைகளில் இரண்டு பிரிவாக்கிக் கட்டிப் போட்டுக்கொண்டும் செல்வர். இப்படியான மாடுகளைக் காளை மாடென்றும் சிறப்புறக் கூறுவர்.
அக்கம் டக்கமுள்ள பற்றைக் காடுகளில் மான், மரை, முயல் முதலிய மிருகங்களை வேட்டையாடியும் (வில், அம்பு, நாய்), வெடிமருந்துகள் போட்டு இடித்து நீட்டுக் குழல் துப்பாக்கியால் சுட்டும் இறைச்சிகளை வீட்டிலே சூடு காட்டி உணர்த்துவர். இத் தகைய இறைச்சியை உணர்த்திறைச்சி, சூட்டிறைச்சி, வாட் டிறைச்சி என்றெல்லாம் கூறிச் சில காலத்திற்கும் வைத்துக்கொள் வரி. மீன்களைக் கருவாடாக்குவதுபோல், மாசியை உடைத்துச் சப்புவதுபோல் சப்புவர். இடத்துக்கிடம் சொற்கள் வேறுபடும்.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 63
குறிப்பான சில சொற்கள் :
நிலையம் எடுத்தல், கல் வைத்தல், நிலை வைத்தல், வளை வைத்தல், குடிபுகுதல் என்பன வீடு கட்டுதலோடு தொடர்புடை
6.
பிள்ளை பக் கு வ மடை ந் த தைப் புத்தி அறிஞ்ச, புள்ள சமைஞ்ச, புஸ்பவதியான, குமராப்போன, பெரிய பிள்ளையாப் போன, முதல் தலைமுழுக்கு என்றெல்லாம் பொருத்தமுறப் பல வாறு சொல்லி மஞ்சல் நீராட்டு விழாவை நடத்துவர். இதனைத் தண்ணிர் வார்த்தல் என்பர்.
தாலி, கூறை , மாப்பிள்ளை கேட்டுப் போதல், பெண் பார்க்கப் போதல், மோதிரம் மாற்றுதல், தாலிக்குப் பொன் னுருக்குதல், கலத்தில் போடுதல், கால்மாறிப் போதல் என்பன திருமணத்தோடு தொடர்புடையன.
கோடி மாடு பழக்குதல் முடிப்புக் கட்டுதல், அரக்குப் புதைத்தல், புதிரடித்தல், புதிருண்ணல், களப்பிச்சையிடுதல், ישנו - டறை கட்டல், அட்டாளை வேய்தல், கோட்டை காவுதல், ஒழிவுக் முதலியன கமத்தோடு சார்புடையன.
ஊறல், நசியம், வேதுவார்த்தல், வாசலில் புரி கட்டுதல், துவால இறைத்தல், அனுமானம், சரக்கு (சொர்ணம்) முதலியன வைத்தியத்தோடு சம்பந்தமுடையன.
குரவை போடுதல், மஞ்சள் குளிப்பு, கோலமிடல், நில பாவாடை விரித்தல், கண்ணுாறு கழித்தல், மடை வைத்தல், நிறைகுடம் முதலியன மங்கல கருமங்கள்.
களம், களவெட்டி, பரண், புரை, மாவரை, அவுரி, அரக்கு மாடு, வேலையாளன், வைரப்பொலி, அரைவயிறன், கந்துமுறி என்பன குடுபோடுமிடத்துப் பேச்சுக்குரியன.
மாவரை, மிலாறு, கிடுகு, பன்னாங்கு, தட்டி, வெகுளி, பொலிச்சடர், சிம்மாடு, காவல் சிறாம்பி வயலோடு தொடர்புடை
U GT.
அத்தாங்கு, கரப்பு, பறி, ஒடை கலைப்பு, சினை, பாழி, இரை, பாசி, முட்டு, அலம்பல், ஊசிக்கண் மீன்பிடித்தலோடு தொடர்புடையன.
நாகரீகம் என்பது குண நடைமுறைகளில் பிரதிபலியாது நடையுடை பாவனைகளில் பிரதிபலிக்கச் செய்துகொண்டுவருகின் றனா.

Page 48
64 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
இதுதான் நாடெங்கும் உள்ள நடைமுறையெனக் கொண்டாலும், ஆண் பெண் தன்மை காட்டும் இயல்போடு அமையவேண்டாமா? பெண்களின் வீட்டுடைகளில் கெளரவம் வேண்டாமா ? பிள்ளை களுக்கு வைக்கின்ற பெயர்களோ என்றால் உச்சரித்துச் சொல்ல வும் முடியாது கரடுமுரடாகவுள்ளன. நாச ரீகமான தேன்மொழித் தமிழ்ச்சொற்களைத் தேடிவைக்கலாமே! உ ண் மை யா ன நாக ரீகத்தை விட்டு உடை, நடை நாகரீகம் என்பது சரியா? உடல் கவர்ச்சி காட்டல் முறையா ?
அனுபவம் பேசுகிறது :
"" பட்டறி கெட்டறி, பத்தெட்டிறுத்தறி' என்பது பாட மூட்டும் பழமொழி. நடந்ததைச் சொன்னால் நலமுண்டல்லவா? பிள்ளை வளர்ப்பிலே பெற்றோர் கூடிய கவனம் எடுக்கவேண்டும். குமரப்பருவம் கூடிய தொல்லை கொடுக்கின்ற பருவம். பன்னி ரண்டரை வயதில் ஆசிரியர் பிரான்சீஸ் அவர்கள் கடும் முயற்சி யால் முதலாம் பிரிவிலே (First Division) அப்போது J. S. C. எனும் எட்டாம் வகுப்பிலே சித்தியடைந்த நான் ஆறு வருடங் கழித்தே S. S. C. சித்தியடையப் பருவகாலச் சேட்டைகளும், கூட்டங்களும், சுற்றாடலும் காரணமாகின வென்றால் காலத்தி னருமை பாடமாகவேண்டாமா? பகுத்தறிவுச் சிந்தனை, செயல் படவேண்டாமா ? -V
பாலியல் கோளாறுகளும், கற்பிழந்த நிலைகளும் இக்காலம் பத்திரிகைகளிலும், படங்களிலும் தண்ணிர் பட்ட பாடு. அந்தக் காலத்திலும் அந்தரங்கமாக ஓரினச் சேர்க்கை முதலியன இருக்கத் தான் செய்தன இருபாலாரிடமும். ஆசிரியர், துறவியர், குடும்பஸ் தர் என்போரிடமெல்லாம் மறைமுகமாக நடந்தன. அதனால் ஆராய்ந்து, உடலமைப்பை உணர்ந்து நாமும் சமயோசிதமாக நடக்கவேண்டும். படிக்கின்ற காலத்தில் இராணுவத்தாரின் ஓரினச் சேர்க்கைச் 'சுப்ரீங்கோர்ட்' வழக்கு மட்டக்களப்பில் நடந்த தைப் பலர் அறிவர். அதை எட்டிப்பார்க்கச்சென்ற செயல் பள் ளிக்கூடத்தை விட்டுப் போக்வைத்தது. பருவக் கோளாறுகளைப் பக்குவமாகக் கவனிக்கவேண்டும். அந்தக்காலத்தில் மங்கையர் மேற்சட்டையணிவது குறைவு. இருந்தும் கோளாறுகள் அதிகம் இல்லை. இப்போது சட்டையெல்லாம் அசட்டையாக அணியப் படுகின்றன; ஆசையூட்டப்படுகின்றன. அந்தக்காலம், பெண்கள் ஏத்தாப்புப் போடாமல் நெல் குத்துதல், மாவிடித்தல் போன்ற வற்றையெல்லாம் செய்த காலம்,

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 65
கோழிமுட்டை துட்டு அல்லது இரண்டு சதம். பால் தேனிர் மூன்று சதம். பால் ஒரு போத்தல் ஐந்து சதம். ஒரு ரூபாவுக்கு மூன்று மரக்கால் நெல். சில நெல் இரண்டு மரக்கால். 30 மரக் கால் நெல் ஓர் அவணம் (7, புசல்). அக்காலக் கணக்கொன்று.
25 ரூபாவுக்கு ஒர் அவணம் ரூபா பத்துப்படியும், இன்னோர் அவணம் பதினைந்துப்படியும் வாங்கி விற்கும்போது முதலாவது சேரட்டும் என்றெண்ணி இரண்டு ரூபாவுக்கு ஐந்து மரக்கால் நெல் லாக விற்றபின்பு இலாபம் இல்லாவிட்டாலும் போகட்டும் நட்டம் வந்துவிட்டதே என்று என்னிடம் வினவிய காலம். எவரைக் கேட் டாலும் வாங்கியபடி விற்ற வருக்கு நட்டம் எப்படி ஏற்பட்டது ? ஒரு ரூபா நட்டம் ஏன் வந்தது ?
இது கலவை விகிதக் கணக்கோடு இணைந்தது. மூன்றுக்கு இரண்டு கலவை விகிதக் கலப்புற்ற கணக்கு. இது தெரியாமல் நாட்டில் நடந்த அனுபவச் செய்தியும் மறுமலர்ச்சிக்குள் இடம் பெற்றமை ஏற்கக்கூடியதுதானே !! வாங்கிய விலைக்கு ற்றும் நட்டம் கண்டு ஏங்கிய மனதைத் தெளிவுறச்செய்தேன்.
இன்னும் திருமண விழாக்களுக்கு, சாவீட்டு மரணக் கிரியை களுக்கு வந்திருக்கும் உற்றார், உறவினர், அயலவர் போக்கு வரத்து, இருப்பிடவசதி, குழந்தை குட்டிகளின் நலன் முதலியன வெல்லாம் கருதி காலத்தை இழுத்தடிக்காமல் கருமம் பார்க்க வேண்டும்.
நாங்கள் பிள்ளைகுட்டிகளோடு யாழ்ப்பாணத்துத் திருமண வீட்டழைப்புக்குச் சென்றபோது இருளாகிவிட்டது. தாலி கட்டும் சுபவேளை 12.45 அஃதாவது 12 மணியுடன் அத்திகதி நாள் முடிந்து அடுத்த தினம் உதயமாகி 45 நிமிடங்களாகும். (இந்த வியாக்கியானம் சுவாமி வுபுலாநந்தர் சமாதியான நேரத்தையும் மாற்றுவதாகச் சிலர் கூறுவர்.) இந்துக்களது முறைப்படி பொழுது விடிந்தே அடுத்த தினமாகும். ஆனால் முற்பகல், பிற்பகல் என் றில்லாமல் 24 மணித்தியாலக் கணக்கிட்டு 12, 13, 14 மணிகள் என்று கணக்கிடுதலே நலம். 12க்குப் பின்பு இந்த முறைப்படி தான் 12. 15, 12.30, 12.45, 13.00 என்ற வகையில் கணக்கிட லாம். இது அப்பாற்பட்டதெனினும் எமது தேவையோடு இணைய வேண்டியதே. நிற்க, திருமணச் செய்தியைக் கூறுகின்றேன். சமய கிருத்தியங்களுக்குச் சந் த ர் ப் பம் பார்ப்பதில்லையா ? போய்ச் சேர்ந்த நேரத்தில் சமய ஆச்சாரிகள் வேண்டியதைச் செய்ய ஆயத்தப்பட்டதால் நாங்கள் சென்ற மோ ட்டா ர் வண் டி யே

Page 49
66 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழ்கம்
குழந்தை குட்டிகளுக்கு ஆதரவு அளித்தது. நடுச்சாமப் பிற்பகுதி இரண்டு மணியளவில் விருந்துபசாரம் நடைபெற்றது. அதுவரைக் கும் குடிக்கத் தண்ணிர் கேட்கவும் கூச்சப்பட்டிருந்திருக்கிறோம்
இக்காலம் மாற்றங்கள் கூடிவருகின்றன. கோவில்களில் தாலி கட்டும் முறையும், குறிப்பிட்ட காலநேரத்தில் விருந்துபசாரமும் இடம்பெறுவது வரவேற்கக்கூடியதே. நாட்டுப்புறங்களில் மூன்று தினங்கள் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டு வேதனைப்பட்டோ ரின் குறை நிறைகளைக் கூறத்தேவையில்லை. பணம் பரிசளிப் போர் பெயர் குறித்தெழுதியே பரிசளிக்கவேண்டும். வெறுமை யான என்பலப்பைக் கொடுத்துவிட்டு உள்வீட்டுப் பிள்ளைபோல் நிற்போரும் ஏராளமுண்டு; பலரைக் கண்டதுமுண்டு. மரண வீட் டிலும் மற்றோரின் நலன்கருதி நேரத்தைச் சுருக்கி, வந்தோர்க்கு வசதியான காலநேரங்களைக் கருத்திற்கொண்டு ஆவன செய்தல் நலமே ! வந்தோர் வீடு திரும்பவேண்டுமே.
கிராமப்புறங்களில் பட்டணங்களைப்போல் பெரிய மண்ட பங்கள் இல்லாவிட்டாலும் சிறிய ஒலைக்கொட்டில் மண்டபங்க ளாவது அமைத்தேனும் பொதுவிலே வைத்திருத்தல் வறிய குடும் பங்களுக்கு உதவியாகும். கிராமசபை மூலமோ, வேறு சபைகள் மூலமோ கோவில் தலங்களையடுத்து வசதியான இடத்தில் திரு மணம் முதலிய விழாக்களுக்குச் சிறிய தொகை வாடகைக்கு மண்ட பம் அமைக்கலாம். பிறவிடத்திலிருந்து வருவோர்க்கும், வறிய குடும்பத்தினர்க்கும், மன்றங்களுக்கும் இது உதவியாகுமல்லவா !
மலர்ச்சி கூடுதலுக்கு இன்னுஞ் சில தேவை :
இலவசக் கல்வி வந்த பின்பும், சுயமொழிமூலக் கல்வித்திட்ட நடைமுறையின் பின்பும், புத்தகம், சீருடைத்துணி வழங்கிய பின் பும் வறுமைக்கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் இன்னும் கூடிய மலர்ச்சி யுற, காசுகட்டிப் படிக்கும் வெளிக் கல்வி இல்லாதொழியவேண் டும். இதனால் பணமுள்ளோரே படிப்பிலும் முன்னேறிக்கொண்டு போகின்றனர். இலவசக் கல்விக்கு முன்பு பணமுள்ளவரே பட்டம் பதவிகளிலும் முந்தி இடம்பிடதத்துக் குந்திக்கொண்டனர். இக் காலம் அருமையாகச் சிலர் இடம்பிடித்தாலும் மட்டக்களப்பில் வளர்ச்சி காணாது. பணத்திற்கு வெளிக்கல்வி இல்லாத காலத்தில் வகுப்பு நேரம் போக மேலதிகமாக நின்று படிப்பித்திருக்கிறோம். இக்காலம் ஏழைகள் என் செய்வர்? 1.
மட்டக்களப்பு வட தென் பகுதிகளாகப் பார்த்தால் தென் பகுதி கல்வியில் கூடியது. அம்பாறை கல்லோயாத் திட்டங்கள்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 67
வந்த பிறகு விவசாயத்திலும் கூடியதாயிற்று. நல்ல நீர்ப்பாய்ச்சல் முதலியன. வடபகுதிக்கு உன்னிச்சை, உறுகாமம், வாகனேரிக் குளங்களின் நீர் கூடுதலாக ஆவன செய்யவேண்டும்.
கடல், வாவி, குளங்கள், ஓடைகள் முதலியவற்றில் மீன்பிடி பல வகைகளில் நடைபெறுகின்றது. பண்டைக்காலத்தில் மீன் பிடிப்போரே கூடிய பணமுடையோராம்; இக்காலமும் அப்படித் தான். ஆனால் நாட்டு நிலைமைகளால் பாதிக்கப்பட்டு வருகின் றனர். சும்மா இருப்போரும் சுகமடைகின்றனர்.
இனசன மோதலுக்கு இடங்கொடா நடைமுறை தேவை :
மட்டக்களப்பில் அரசியல் கோளாறுகள் அடிக்கடி தோன்றி னாலும் நிலைமைகள் சீரடைந்து இனவொற்றுமை நிலவித்தான் வருகின்றது. இனவெழுச்சி எல்லா இனத்தாருக்கும் இருக்கவேண்டி யது. ஆனால் இன்னொரு இனத்தைப் பாதிக்காமலும், உரிமை களைப் பறித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும்.
அரசியல் :
**ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை ?" - (காசி)
"ஆண்ட அவன்தானே மீண்டும் மீண்டும் வந்து
அநீதி யிழைப்பது என்ன முறை ?" - (வேவி)
1979ல் இவை போன்றவை தேர்தல் காலத்துப் பிரசுரங்களில் வெளி வந்தவை. மட்டக்களப்பு இலங்கையின் அரசுக்குட்பட்ட நிலைமை யினால் தனித்து சட்ட திட்டம் கூறமுடியா திருக்கின்றோம். என் றாலும் கட்சிகள் கண்டபடி தோன்றிக்கொண்டிராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இப்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட் டம் தேர்தல் தொகுதியாகக் கணிக்கப்படுகின்றது. இதனால் நன்மை சிலவுண்டு, தீமை பலவுண்டு. இப்போதைய மட்டக்களப்புப் பிரி வில் ஐந்து பிரதிநிதிகள் தெரிவாகின்றனர்; ஆறாகவேண்டும்.
மட்டக்களப்பாராகிய நமக்கு மட்டும் மாகாண ஆட்சி என்று கூறக்கூடா! யாழ்ப்பாணத்தவரின் கெட்டித்தனங்களை மறைக்க வும் முடியா! ஐம்பதுக்கைம்பது' கேட்டதெல்லாம், சிலர் நகைப் புக்கிடமானாலும் முன்னரே சிந்தனை கொண்ட தீர்க்கதரிசி திரு. G. G. பொன்னம்பலம் அவர்கள். அறுபதிற்கு நாற்பதும் மறுத்து

Page 50
68 மாறிவரும் மட்டக்களப்புத் த்மிழகம்
55 க்கு 45 ஐயும் மறுக்கலாமா ? சிறுபான்மை என்பது தமிழரை மட்டுமா குறிப்பிடும் ? இல்லையே! அப்படித்தான் 50க்கு 50 என் றாலும் ஜனனாயக வாக்குரிமை அப்படியாக அளிக்கப்படுமா? அண்மைக்காலத்தில் ஜனனாயகச் சிறு வாக்காலேதான் தமிழன் எதிர்க்கட்சித் தலைவனாகும் நிலையேற்பட்டதல்லவா ? எனவே ஜனனாயக வாக்கும் சட்டதிட்டங்களை மாற்றியமைத்துவிடலாம். பின்னர் தந்தை செல்வாவின் செயலையாவது நிறைவேறவிட வில்லை. இப்படியெல்லாம் தமிழர் பாதிப்புற்று இப்போதைய நிலையில் வந்திருக்கிறோம்? மட்டக்களப்பாரும் யாழ்ப்பாணத்தா ரோடு ஒத்துப்போனால்தான் நல்ல பலனைக் காணலாம். தாயகப் பகுதிகளையாவது தப்பவைத்துக்கொள்ளலாம். இவற்றையெல் லாம் விபரிக்கக் காலம் கண்ணாடியாகின்றது.
1948ல் சுதந்திரம் பெற்றது இலங்கை, அதன்பிறகே இரகசி யத் திட்டங்கள் ஜனனாயகத்துள் மறைமுகமாகச் செய்யப்பட்டன. கிழக்கு மாகாணத்திலும் சிங்களவர் குடியேற்றம் எம்மைத் தெரிந் தும் தெரியாமலும் இடம் பிடித்தது. நம்மவர்க்கும் இதன் பலா பலன் தெரியாது மறைக்கப்பட்டது. இதனால் இன்றைய நமது மட்டக்களப்பு மாவட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் நிலைக்குச் சென்றுகொண்டிராமல் ஓரளவில் தடைப்பட்டுள்ளது. எழுச்சிகொண்ட இளைஞர் செயலென்றுதான் சொல்லவேண்டும்.
கல்வி மந்திரியும் ஆசிரியனும் கட்டுக்கதை காட்டியதுபோல் மட்டக்களப்பில் தமிழ், முஸ்லீம் பிரச்சினை ஏற்படாமல் அரசிய லீடுபாடு கொண்டுவருவோர் ஆவன செய்யவேண்டும் முன்பும் ஓரி டத்தில் குறிப்பிட்டுள்ளேன். இரட்டைத் தொகுதியாக இல்லாமல் வேறு வழி காணவேண்டும். இதைவிடத் தமிழருக்குள்ளே குடிவழ மைப் போட்டியும் ஒன்றிருக்கின்றது. பட்டிருப்புத் தொகுதியை எடுத்துக்காட்டலாம். பட்டிருப்புத் தொகுதி மட்டுந் தான் மட்டக் களப்பில் எத்தகைய போட்டி என்றாலும் தமிழன் ஒருவன் வரக் கூடிய நிச்சய நிலையில் உள்ளது. இனிமேல் வருங்காலம் குடி வழமையெல்லாம் விட்டு இனம், மொழியென்பனவற்றை வலுப் படுத்தி இயங்கவேண்டும். கொம்புமுறியிலே குடிவழமைக் கொள் கையால் கணவன் மனைவியரிடையே கலகம் ஏற்பட்டதுமுண்டு. காலத்திற்கேற்ற கோலமாயினும் இலட்சியம் ஈடேறச்செய்யும் அரசியல் சாணக்கியம் ஆவன செய்ய இடம்பெறட்டும். அத்துடன் "" போடி’ எனும் இன்னொரு வகைப் பிரச்சினையும் ஏற்படுவ துண்டு. எனவே இதனைத் தனித்துச் சிறிதேனும் விளக்கமுற எழுதுவோம். · ·

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 69
Guriquorft :
போடிப் பட்டமும், நிலைமைப் பட்பமும் மறைந்துபோயின. போடிமார் என்றதும் முதலாளி வர்க்கம் என்று பேதங்காட்டிச் சொல்ல தொழிலாளிகளும், ஏழைகளும் முற்பட்டுவிடுவர். 'போடி மார்' என்பது இனமா, குடியா, சாதியுயர்வா என்றெல்லாம் பிறவிடத்துப் படித்தவர்கள்கூட வினவுவதுண்டு. ஏற்கனவே குறிப் பிட்ட பண்டித இராஜஐயனார் அவர்களும் என்னை வினவிய துண்டு. மட்டக்களப்புத் தொடர்புடையோர் ஓரளவில் அறிந் திருப்பர்.
போடிமார் நிலைமையினால் மதிப்புடையோரும் இருக்கின் றனர்; மதிப்பிலாரும் இருக்கின்றனர். நகைச்சுவையுடைய கட்டுப் பாடலொன்றைப் பாருங்கள்!
* ஊரிலே பெரியபோடி உழைப்பினால் உயர்ந்தபோடி ஏழைக்கு இரங்கும்போடி என்பெயர் பாலிப்போடி சாராயம் அடியாப்போடி சண்டைக்குப் பயந்த போடி கிடுகினால் கோடிகட்டி யறுத்து குழிக்கக்கூஸ் கட்டும்போடி"
எங்கயோ கண்டெடுத்த பாட்டு, கூத்து வரவுப் பாட்டுப் போல் தெரிகிறது. கோடி என்பது பின்பக்க மலசலக் கழிப்பிடம். *" போடி' என்று பெயர் சேர்ந்து வரப் பெயருடையோர் எல்லா ரும் போடி மாரல்லர். வழமையில் போடிப் பட்டப் பரம்பரையில் உள்ளோர் போக வேறுசிலர் கந்தப்போடி, வேலாப்போடி, கதிர் காமப் போடி, தோலிப்போடி, வீமாப்போடி, விளங்கிப்போடி, சீனிப்போடி, அழசிப்போடி, அலையாப்போடி என்பனவற்றுடன் சிலர் வெறும் பெயருடைய போடிகளாகவும் இருக்கலாம்.
1646ல் ஒல்லாந்தர் போர்த்துக்கீசருடன் சமாதானப்பட்டு மட்டக்களப்பை ஆளும்போது போடி ஆக் கொத்துக் கொடுபட்ட தெனக் கல்வெட்டும் உள்ள தாம். இதனாலெல்லாம் ‘போடியார்" என்பது வரலாற்றோடு மேன்மையுடையதாகக் கணிக் க இட முண்டு. மட்டக்களப்புக்கென முற்குகச் சட்டமும் 1876ல் இயற் றப்பட்டுள்ளதாம். போடியும் குடியும் புகழுடையன.
இக்காலம் போடி மாரில் சாதிபேதம் பிரித்துப்பார்கமுடியாது. பலவினத்திலும் இருப்பர்; பலவிடத்திலும் இருப்பர். விசேடமாகப் பட்டணத்தில் குறைவாகவும், கிராமப்புறங்களில் கூடுதலாகவும் இருப்பர். பரம்பரையிலும் இருந்து வருவர்; புதிதாகவும் தோன் றிப் போடியெனும் பெயருக்கு உரித்தாகுவர். பரம்பரைப் போடி

Page 51
70 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
T dS இருந்தவர் சிலவேளை தகுதியிழந்து பெயரளவில் வறுமை
யுற்ற போடியார் ஆவர். சரியான ஒரு வரவிலக்கணம் கூறுவதாய்
இருந்தால் இவ்வாறுதான் கூறவேண்டும்.
அந்தக்காலத்தில் :
ஒடுபோட்ட கல்வீடு வளவுகள், வளவு நிறைந்த நெல்லுப்
பட்டறைகள், இரண்டு மூன்று நெல் பட்டறை மூடிய அட்டாளை கள், அடுத்தாற்போல் ஆடு மாடு முதலியன, போக்குவரத்து
வண்டிகள். அங்கே இங்கே யென்று நடமாடும் வேலைக்காரர், காயவைத்திருக்கும் மீன்பிடி வலை, நெல்லுப்பாய் முதலியன.
இந்தக்காலத்தில் :
ஒடுபோட்ட கல்வீடு வளவுகள்: நெல்மூடை மண்டபங்கள், அட்டாளைகள் இருந்தாலும் நெல்லுப்பட்டறைகளைக் காண்பது அரிது. ஒன்றிரண்டு உழவு மெசின்கள், ஆயிரக்கணக்கில் நெல்மூடை கள், சாக்குகள், படங்குகள், பசளைப் பைகள், களைநாசினி, கிருமிநாசினி மருந்துவகைகள், இதற்கான சாதன ஸ்பிரேயர் முதலி யன. இத்தகைய நிலைமை கிராமத்துள்ளே. ஆனால் ஐந்தாறு வயல் காணிகள் இருக்கும். அவற்றிலே சூடுகள் எனப்படும் நெற் கதிர் உப்பட்டிக் கட்டுகள் நூற்றுக்கணக்கில் உள்ளடக்கிய உயர்ந்த விசாலமான சூட்டுக்களங்கள் இருக்கும். அந்தக்காலத்தில் அவசரப் படாமல் ஆறேழு சூடுகளைச் சுற்றிவளைத்து வேலி கட்டி நன்கு பாதுகாத்து அடுத்த போகத் தன்மையிலே நெல்லை வேறாக்கி எடுப்பர். இக்காலம் உடனுக்குடனே மெசினைக்கொண்டு சூட்டுக் களம் ஆக்காமலே சூடு அடித்துவிடுகின்றனர். கால நிலைமை அப்படியாக்கியது. மூடச்செயலையும் போக்கியது.
இந்தக்காலப் போடிமார் வீட்டில் மோட்டார் சைக்கிள் களும், மேட்டார் கார் வண்டிகளும், டிப்பர் வண்டிகளும்கூடப் பெரிய போடியார் என்பதைக் காட்டிக்கொண்டிருக்கும். நாட்டு அரசியல் குழப்பத்தாலும், அரசாங்க நடைமுறைகளாலும் சூடு களை வைத்துச் சிரமப்படுவது குறைவு. ஒருமுறை ஓர் அரசியல் கட்சியினர் "குடு சாம்பலாய்ப்போச்சு போடியார்' என்ற நாடக நடிப்பால் காட்டிய நிலைமையினை உணர்ந்தறியலாம். பெரிய போடி மார் குடும்பத்திலே சிறிய போடிமாராக மக்கள், மருமக்கள் இருப்பர். எப்படியும் போடியார் என்றால் நூறு நூற்றைம்பது அவண நெல்லும் அதனோடிணைந்த பணம் முதலியனவும் உடை யவராயிருப்பர். இவர்களைச்சேர்ந்து பல குடும்பங்கள் தொழில்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 7
செய்து வாழ்வதற்காக அக் கம்பக்கமிருக்கும். முல்லைக்காரன், வேளாண்மைக்காரர், கூலிக்காரர், நெல் குத்துவோர், மாவிடிப் போர் என்றெல்லாம் அணை துணையாகப் பலர் இருப்பர். கிட்டத் தட்ட நூறு நூற்றைம்பது பேருக்குள் ஒரு தலைவன் போன்றும், கிராமத்திற்கே சின்னராஜா (சிற்றரசன்) போன்றும் சிலர் இருப் பர். மேலும் சில :
விசேட விழாக்கள் :
போடியார் வீட்டில் விசேட தினங்கள், ஆண்டுக் கொண் டாட்டங்கள் என்பன இடம்பெறுவதுண்டு. சித்திரை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரைக்கும், சித்திரை வருட்ப் பிறப்பு விழா, சித்திரைக் கதை விழா, வைகாசி விசாக விழா, நவராத் திரி விழா, தீபாவளித் திருநாள், கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவாதிரை, தைப்பொங்கல் என்றெல்லாம் போடிமாருக்கு மட்டு மல்லாது சகல மக்களுக்கும் உள்ளவைதான். என்றாலும் பொது வாக சித்திரை வருடப் பிறப்பும், தைப்பொங்கல் பண்டிகையும் பெருங் கொண்டாட்டங்களாகும். மட்டக்களப்பில் தீ பா வளி கொண்டாடுவது குறைவு. தை ப் பொங் க லும், சித்திரையும் வேளாண்மை அறுவடையினைக் கலப்புறச் செய்வதால் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். இவற்றைவிடப் போடிமார் வீடுகளில் அடிக்கடி ஏற்படும் கொண்டாட்டங்களும் உண்டு. முஸ்லீம்களும் பல கொண்டாட்டங்கள் கொண்டாடுவர்.
பட்டறை கட்டுதல், அட்டாளை வேய்தல், வீடு, வளவு திருத்த வேலைகள், மாடுகளுக்குக் குறி சுடுதல், புதிதுண்ணல், மக்கள் பருவமடைந்த விழாக்கள், இப்போது பிறந்த தின விழாக் கள் என்றெல்லாம் கோடி உடுப்புகளும், குடிவெறியும் கலந்த கொண்டாட்டங்களாகும். நலமடித்தல் என்பது இக்காலம் சிலருக் குத் தெரியாதிருக்கும். வண்டி, உழவு வேலை செய்யும் எருது மாடு கள் கண்டபடி பசுப்பட்டிகளுக்கும், வேறுாருக்கும் ஒடாதிருக்க வலிமையான இரட்டைக் கிட்டிகளால் வி தை களை நசித்து ஆண்மை குறைய வைப்பதாகும். அதன் பின்னர் விதைகள் சுருங்கி விடும். பார்க்கப் பரிதாபமாகவிருக்கும். இக்காலம் வேறு வழி முறைகளாயிருக்கலாம்.
போடித் தரம் குறைந்துபோதல்
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம், மாறிவரும் போடி நடைமுறைகள் என்பதில் தொடர்ந்து மேலும் பல கூறவேண்டி

Page 52
72 மாறிதரும் மட்டக்களப்புத் தமிழகம்
யுள்ளது. 'வந்தாரை வாழ வைக்கும் மட்டக்களப்பு' என்றால் போடிமார்தான் முதலிடத்தைப் பெறவேண்டிய நிலையில் இருந்து, இக்காலச் சூழ்நிலைகளால் இரண்டு தசாப்தங்களாகச் செல்வாக் கிழந்துகொண்டிருக்கின்றனர். அப்பம் என்றால் புட்டுக் காட்ட வேண்டிய நிலையில் செப்பவேண்டியதில்லை. உழவர் பெருமகன் என்றும், உழவர் தலைவன் என்றும் புகழுக்குரிய போடி இனம் தளர்ந்துபோய்க்கொண்டிருக்கிறது.
பழங்கால வேளாண்மைச் செய்கையில் மாற்றங்கள் பல வற்றை மேலும் தொடர்ந்து கூறவேண்டித்தானுள்ளது. பட்டணப் பக்கமெல்லாம் இரவிலே மின்விளக்குகள் 'பளிச் பளிச்" என்பது போல் வயல்வட்டைக்குள்ளே சிறாம்பி வெளிச்சங்களும், தீனாக் களும், பரண் படுக்கை அடுப்புகளும் இரவைப் பகலாக்கிப் பன்றி முதலிய மிருகங்களை ஒட்டி வயலைப் பாதுகாக்க உதவுகின்றன. வயல்வட்டையென்பது சிறிய பரப்பல்ல. கண்ணுக்கெட்டாத தூர மெல்லாம் ஒரு வயல்வட்டையாகவும் இருக்கும். ஆயிரக்கணக் கான ஏக்கர்களைக் கொண்டதாயிருக்கும். வேளாண்மை கதிரான முக்கிய காலத்தில் காவல்தான் கூடுதலானதாகவிருக்கும். இதற் கான நீர்ப்பாய்ச்சல் சட்டதிட்டங்கள் இப்போதும் இருந்துவரு கின்றன.
வீடு வளவுக்கு வேலியடைத்துப் பாதுகாப்பதுபோல் வட் டையையே வேலியால் சூழ்ந்து இரவிலே பாதுகாப்பதற்கான *"பிரம்புவிடும்' நடைமுறையிருந்தது. அந்தக்காலத்தில் கதியால் கம்பு என்பதைக்கொண்டே வேலியாக்கி, ஐந்தாறு மாவரையெனும் வரிச்சுக்கணக்கில் வரிந்து இடையிடையே ஏறு கடப்புகள் வைத்துக் குறிப்பிட்ட அளவு எல்லையில் பிரித்துக் கொடுத்தபடி காவல் பரண்களும் அல்லது சிறாம்பிகளாவது அமைத்துக் காவல்காரன் இரவில் காவல் இருக்கவேண்டும். வட்டை விதானையாருக்குக் கீழ்ப்பட்ட அதிகாரி என்பவர் பிரம்பு விடும் செயலுக்குப் பொறுப் பாவர். அதைக் காவல் பிரம்பு என்றும் சொல்லுவர்.
இரவெல்லாம் கட்டுக்காவல் :
காவல் பிரம்பு வட்டையில் விடும் கதையென்றும் இதைச் சொல்லலாம். வேளாண்மைச் செயலின் உ ச் சக் கட்ட மா ன கதிர் வேளாண்மைப் பாதுகாப்பு முக்கிய இடம்பெறும், இல்லை யேல் 'சிறுபிள்ளை செய்த வேளாண்மை" என்று பெயர் பெறும். கதிர் முற்றிப் பழுக்கும் ஒரு மாதகாலம் முன் பின்னாக ஆறு வார காலத்திற்கு வேலிக் காவல்காப்பு இடம்பிடிக்கும். வேலியடைப்பு

மாறிவரும் மட்டக்களப்புத் தம்ழகம் 73
பற்றி முன்பு கூறியபடி சண்டத்து எல்லைவரை நீளமாகவும், சிலவேளைகளில் சுற்றிவர வட்டமாகவும் அமையலாம். வட்டமாக அமைந்துவிட்டால் வட்டைவிதானை யாருக்கும், அதிகாரியென்பவ ருக்கும் கடமை வேலை பாதி குறைந்த மாதிரி. இல்லையேல் குறிப் பிட்ட "தொங்கல்" வரை விடி பொழுதில் சென்று வரவே வேண் டும். கதையென்று கூறிவிட்டு "கதை விடாமல் கதைக்கு வரு கிறேன். கதிர் விளையுங் காலம் கவிபாடிக் களியாட்டமும் கூடுங் 95 IT 6).
பொழுதுபடும் வேளையிலே காவல் பரண், வயல் சிறாம்பி களில் நெருப்புத் தோணா பற்றத்தொடங்கிவிடும். அதற்கான விறகுக்கட்டைகள், கையிலே கொண்டுசெல்லத் தென்னோ லைப் பந்தங்கள் அல்லது தென்னம்பாளைக் கட்டுகள் ஆயத்தமாக வைத் திருப்பர். வட்டையிலே குறிப்பிட்ட எல்லையில் ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது பரண்களும்', அதற்கான காவல்கா ரன்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிலவேளைகளில் முல்லைக்காரன், வேளாண்மைக்காரன், கூலிவேலைக்காரன், குருவிக்காரன் என்ற படிமுறைகளுக்குள் அமையாமல், காவல்காரர் அ நே க மா க ப் "புறத்தியாளனாகத்தான் இருப்பர். ஏனென்றால் விடியவிடியக் கண்விழித்தவன் வயல்வேலை வேறு செய்யமுடியா திருக்கும். ஒரு சில வேளைகளில் காவல்காரன் கூலியைப் பெறுவதற்காக, செய் கையில் ஈடுபடுவோர் தம்முடைய மக்களையோ, அண்ணன் தம்பி யையோ நியமிப்பதுமுண்டு. இன்னொருவகையில் வயதான பெண் கள் கூடக் கூலியைப் பேசிக் கால் வாசி, அரை வாசியைப் பெற்றுக் கொண்டு வறுமையின் நிமித்தம் காவல்காப்பு வேலைக்குப் போவது முண்டு; தந்திரத் திட்டமிடுவதுமுண்டு. இனித்தான் பிரம்பு விடும் கதையும், பாலியல் இணைந்த கதையும் வரப்போகின்றன.
காவல் பிரம்பு எனப் பெயர்பெறும் பிரம்புகள் ஏழெட்டு களில் இரண்டு மூன்று வேறுபட்டு மணி கட்டியதாகவும், சீலை கட்டியதாகவும், கயிறு கட்டியதாகவும், சரசரக்கும் கொடி தகரம் கட்டியதாகவும் இடத்திற்கிடம் வேறுபட்டிருக்கும்.
வட்டைக்குள் பிரம்பு விடுதல் :
பிரம்பு விடுதல் நடைபெறுவதானால் ஓரிரவு முழுவதும் கண்விழித்தாகவேண்டும். 4 சாமங்களுக்குள் முதற்சாமமும், கடை சிச்சாமமும் பிரம்புகள் குறையலாம். இரவு 8 மணிக்குப் பிறகு தான் முதற் பிரம்பு வெளிப்படும். முதற்சா மத்தின் பிற்பகுதியில் முதலாவது பிரம்பும், அடுத்த இரண்டு சாமங்களுக்கும் இவ்விரண் டாக நான்கும், விடியற்சாமத்தில் ஒன்றோ இரண்டோ என்று

Page 53
74 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பிரம்புகள் வெளிப்படும். பிரம்பு அனுப்புபவர் வட்டை அதிகாரி எனப்படுபவர். அவரில்லாதபட்சத்தில் வட்டை விதானையாரோ அல்லது குடும்பத்தினரோ அந்தக் கடமையைச் செய்வர் அருமை யாகவே.
முதற்பிரம்பு காவல் பரண் A யிலிருந்து B, C, D என்பது போல் அடுத்தடுத்த பரண்களுக்குக் காவல்காரர் கொண்டுபோய்க் கொடுப்பர். அஃதாவது பிள்ளைகள் "ஹிலே ஓடுவதுபோன்றெனச் சொல்லலாம்; இது நடப்பது, ஒடுவதல்ல. முதலாவது பிரம்பு தொங்கலான கடைசிப் பரனுக்குப் போய்ச்சேர இரண்டு மணித்தி யாலம் கூடியோ குறைந்தோ அமையும். மூன்றாவது பிரம்பு முக் கிய பிரம்பாக நித்திரை கலைக்கும் சத்தமிடும் தகரங் கட்டிய பிரம்பாகவோ, மணி கட்டிய பிரம்பாகவோ இருக்கும். நடுச்சாம வேளையில் சத்தமிட அவை உதவும். அதனால் பன்றி முதலிய வற்றுக்கும், பக்கத்துக் காவல்காரனுக்கும் பயன்பாடாகும். தகரத்தி லடித்தோ, மணியோசை எழுப்பியோ பிரம்பு ஒவ்வொரு பர ணாகப் போய்க்கொண்டு கடைசிப் பரணில் இருக்கும். எங்கே யாவது இடையிலே தவறு நடந்தால், காவல்காரன் இல்லாதிருந் தால் கடைசிப் பரணுக்குப் பிரம்பு போகாது. ஒருசில வேளை களில் காவல் காரன் படுத்து நித் திரையென்றால் அவனைத் தண் டிக்கட்டும் என்று பேசாது பிரம்பை வைத்துவிட்டுச் செல்வர். அப்படியாகச் சில சேர்ந்த பிறகு விழிப்புற்றவர் எழுந்து எடுத்துக் கொண்டோடுவர். மற்றவர் விரும்பி ஏற் று க் கொ ன் டா லே தொடர்ந்து போகும். இடையிடையே அதிகாரியார் விசாரித்துக் கொண்டே அவரும் கண்விழித்திருப்பர்.
அவர் அந் தவேளையில் நுவரெலியாத் தேயிலைத் தோட் டத்துக் கங்காணி போன்று தலையில் தலைப்பாகையும், கறுத்தக் கோட்டும் அணிந்திருப்பார். விடிவானமாகும் வேளையில் கடை சிப் பரணுக்கு வந்து பிரம்புகளைக் கணக்குப்படி பார்த்தெடுப்பர். ஏற்கனவே க தை யெ ன் று சொன்னதை மறைமுகமாகத் தான் சொல்லவேண்டியிருக்கிறது. பெயரளவில் காவல் செய்வோரு முண்டு. விட்ட பிரம்புகளைக் சணக்கெடுத்துக்கொண்டு போகும் போது காவல் தொழில் பார்க்கும் பெண்களான நடுத்தர விதவை களும், வயோதிபர்களும் இடையிடையே பாலியல் பரிதாபத்துக் கிடமாவதுமுண்டு. அதனால் பக்கத்துக் காவலர்கள் பலன்கருதி ஒத்துழைத்துப் பிரம்புகளை அனுப்பிவிடுவர். ஒருசில வேளைகளில் அதிகாரியாகக் கடமை பார்ப்போரையும் கைக்குள் போட்டுக் கொள்வதும் உண்டு. எப்படியும் காவல்காரர் ஒற்றுமையாலே, தவறிய பிரம்பைக் காட்டிக்கொடுத்துத் தண்டனைக்குள்ளாகாமல்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 75
தப்பிக்கொள்வர். பிரம்பை அனுப்பாமல் படுத்திருந்தோன் பிடி பட்டால் பிரம்படித் தண்டனைக்குள்ளாவர். ஒருசிலர் கிராமக் கோடுகளுக்குச் சென்று தண்டனைக்குள்ளாவதுமுண்டு. இவற்றை யெல்லாம் இப்போதைய இளைஞர்கள் நம்பமாட்டார்கள். கால நடைமுறைகள் மாறிக்கொண்டு போகின்றன.
விவசாய நீர்ப்பாசனச் சட்ட திட்டம் :
விவசாய நீர்ப்பாசனச் சட்டப்படி தனது காணி விளைந்து விட்டதென்று முன்பு சூடடித்துக்கொண்டு போகவும் முடியாது. வட்டை வேலிக்குள் மாடுகளோ, மெசின்களோ கொண்டுபோக முடியாது. அதனால் மற்றக் காணிகள் பாதிப்புறும் என்பதாலே. இதற்காகத்தான் குறிப்பிட்ட கால நெல்லினங்கள் குறிப்பிடுந் தினங்களில் விதைக்க ஆலோசனை செய்து தீர்மானம் எடுப்பர். இதனை விவசாய ஆரம்பக் கூட்டம் என்பர். அரச அதிபர் முத லாகத் திணைக்களத் தலைவர்களும் விவசாயிகளோடு கலந்து பேசித் தீர்மானம் எடுப்பர். இப்படியான கூட்டம் இக்காலமும் இடம்பெறுகிறது. என்றாலும் உழவு மெசின் நடைமுறை வந்த தால் பழையன மாற்றமடைந்து போகின்றன. இரவோடிரவாகப் ** பெற்றோ மெக்ஸ்' எனும் வெளிச்சத்தோடு, மெசினாலே நெல் லையும் தூற்றி விடியுமுன் வீடு சேர்ந்துவிடுகின்றனர்.
முன்பென்றால் "பொலி’ எனும் நெல் தூற்றுவதற்குக் காலம் பார்த்து அடுத்தநாள் தூற்றுவதுமுண்டு. 'அவுரி"' எனும் உயர மான நாற்காலிக் கம் புக ளா ல் ஆக்கப்பட்டதன்மேல் நின்றே பொலி தூற்றுவர். 'கிரிகோலமாக ’க் கிடக்கும் களவட்டியைத் தூசிகூட இல்லாமல் துப்பரவு செய்தபின்னே மற்றத் தரம் சூட் டைக் கலைத்துப் போர் ஏற்றி வளிக்காலிகள் எனும் மாடுகளால் சூடடித்து நெல்லாக்குவர். வீட்டிலே நெல்லைக் கொண்டு சேர்த் ததும் பெண்களுக்கும் வாய்ப்புத்தான். தெரியாமலும் நெல்லை விற்றுக் காசாக்குவர். இதனாலே 'சிறகு முளைச்ச கா செல்லாம். இந்தப் போடியாரிட்டேயும், போடியார் பெண் சாதியிட்ட வேற யாயும் இருக்கும்" என்றெல்லாம் பேசக் கேட்கலாம். எடுத்துக் காட்டாகப் பண நோட்டுகள் மாற்றிய காலத்தைக் காட்டலாம்.
காசு மாற்றிய காலம் :
திரு. என். எம். பெரேரா இரட்டைப் பட்டதாரியாகவிருந்து
சமசமாஜக் கட்சியை ஆரம்பித்துப் புகழ்பெற்று வந்தபோதும், பாராளுமன்றத்தில் சிறந்த பேச்சைப் பேசிப் பாராட்டைப் பெற்ற

Page 54
76 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
போதும்கூட ஆளுங்கட்சியாகவோ, அமைச்சராகவோ ஆகமுடிய வில்லை. காரணம் பேரினத்து வாதமும், கட்சி நிலைமைகளும் தான். பொதுவுடைமையும், சோஷலிசமும் வளர்ச்சியுற்றுப் பெருக முடியா திருந்தது. கட்சி மோதல் நிலைமையால் சிறிலங்காக் கட்சி யோடு இணைந்து அரசமைக்கும் காலமானதால் நிதி அமைச்ச ரானார். ஆனதும் , தமிழின சிறுபான்மையினரின் சேவைகளை யெல்லாம் விட்டுவிட்டு எடுத்த எடுப்பிலே பழைய பண நோட்டு களையெல்லாம் மாற்றவேண்டுமென்று சட்டமாக்கி நடைமுறைப் படுத்தினார். அந்த வேளையிலேதான் போடிமாருடைய மூளை களும் குழம்பின. மூட்டை முடிச்சுகளும் கிளம்பின.
போடிமாரை விடப் போடிமாரின் மனைவிமார், அஃதாவது போடியம்மா மார் புருஷ னைத் தெரியாது சேர்த்து வைத்துவரும் பணம் சீட்டுப் பிடித்த பணம், வட்டிக்குக் கொடுத்து வாங்கிய பணம், சொந்தக்காரருடைய பணம் என்றெல்லாம் மறைமுகமாக வைத்திருந்தவையெல்லாம் வெளியாக வேண்டியதாயிற்று. இப்படி யான வேலைகளில் கிராமத்துச் சாதாரணப் பெண்களிடமும் பண மிருந்து வெளிப்படும். ஒருசிலர் அழுது புலம்பிக் கண்ணிர் வடித்த நிலைமையெல்லாம் ஏற்பட்டதுண்டு. போடிமார் என்று இனவழி யில் தோன்றுவதோடு புதிய புதிய போடிமாரும் உதயமாவர். .
புதிய போடிமார் :
'வேலிக்கட்டைக்குப் பிறந்தாலும் போடிப்பட்டம் போகா தென்பர்" . போடி வம்சம் முன்னர் தொடர்ந்திருந்தாலும் இக் காலம், குடிவழமைபோல், சாதிகுலப் பெயர் போல் " " போடி' என்பது குறிப்பிட்டோருக்கு மட்டும் இருப்பதல்ல. இக் காலம் புதிய போடிமாரும் உதயமாகலாம். சொந்தக் காணி, பூமிகளோடு பண மும், நல்ல குணமும், மற்றோரின் அணைவும் இருந்தால் ஆண்டுக் காண்டு முயற்சி கூடப் போடியாராகிக்கொண்டே வரலாம். போடி என்பது குடிபோல் நிரந்தரமல்லாமல் வறுமையுற்றுப் பெயர் மாறுவதுமுண்டு.
ஒருசில வேளைகளில் போடி மார் நல்ல ஆதன சீதனங்கள் கொடுத்துப் பதவி கூடிய உத்தியோகத் தரைப் பிறவிடங்களிலிருந்து தனது மகளுக்கு மாப்பிள்ளையாக எடுப்பர். இதனால் காலஞ் செல்லச்செல்ல அந்த மாப்பிள்ளையாரும் தொழிலாளிகளால் புதுப் போடியார் என்றோ, சின்னப் போடியார் என்றோ, ஐயா வென அழைத்து ஐயாப் போடியார் என்றோ அழைப்பர். ஒருசில போடி மார் இக்காலம் அரிசிமில், லொறிகலெல்லாம் வைத்தும், தொழி லாளிகளைக்கொண்டு ஏற்றுமதி இறக்குமதிகள் செய்தும் வருகின்ற

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 77
னர். எவ்வாறாயினும் ஊருக்குள் மிகச் செல்வாக்குக் கூடியவராகத் தான் இருப்பர்.
ஊர்த் தலைவன் :
அரசபதவி போன்ற நிலை குலைந்துபோக, செல்வாக்கும், இனசனமும், பணமும் கூடியவர்களே பிந்திய நாள்களில் ஊர்த் தலைவனான பெரிய போடியாராயிருந்திருக்கின்றனர். விதானை வேலை, வட்டை விதானை போன்ற அதிகாரப் பதவிகளைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.
விதானை மாரை முன்பு பொலிஸ் தலைமையென்ற பெய ராலே அழைத்துக் கெளரவிக்கப்பட்டனர். பொலீஸ்காரர் கிரா மங்களுக்குள் வந்து விதானை மாருடன் பல வ ற் றை யும் பேசி, விதானையாருடைய டயறிப் புத்தகத்தில் ஒப்பமிட்டுச் செல்வது வழக்கமும் கடமையுமாகும். பின்னர் கிராமத் தலைவர் என்று அழைத்தனர் (V. H.). இப்படியான பதவிகளையெல்லாமீ" போடி மாரே பிடித்துக்கொள்வர். அவர்கள் அண்ணன் தம்பி, மாமன் . மச்சான் என்ற வகையிலெல்லாம் ஐக்கியப்பட்டிருப்பர். போடி யார் விதானையாரென்றால் அடக்கமும்கூட இப்போதுபோன் றில்லை.
சில போடி மார் அக்காவையும், தங்கையையும் திருமணம் செய்திருப்பர். ஒருசிலர் ஆதன மெல்லாம் பிரிந்து அழிந்துபோகு மென்று மகள் மரணமடைந்தால் மருமகன் வேறு பெண்ணைத் தேடி ஓடாமலிருக்க அடுத்த சகோதரியை முடித்துக்கொடுப்பர். ஆதன சீதன விடயத்தில் மட்டக்களப்பைவிட யாழ்ப்பாணத்தில் வேறுபட்ட சட்டதிட்டங்கள் போலும்! இவ்வாறெல்லாம் போடி மார் என்போர் செல்வாக்குடனிருக்கத் தொழிலாளரும், இயற்கை யும் சாதகமாக வேண்டும். இயற்கைக் கோளாறுகளும், காலநிலை களும் போடிமாரையும் தொழிலாளரையும் கடுமையாகப் பாதிப் பதுமுண்டு. போடிமாரின் தொழிலாளர் கமத்துக் கடமையிலே கவலைக்கிடமாவதுமுண்டு; ம ர ண த் தை த் தழுவுவதுமுண்டு. இதனை நான் 1980ஆம் ஆண்டிலே கூட்டங்களில் பேசியதோடு அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கும், அமைச்சர்களுக்கும் அனுப்பி யுள்ளேன்.
எனது அறிக்கையைப் பிரசுரித்ததோடு 25-9-80ல் தினபதி ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அவர்கள் ஆசிரியத் தலையங்கமும் எழுதினார். அதன்பிறகு வந்த காப்புறுதித் திட்டமும் அவ்வளவு உகந்ததாக இல்லை. பிறிமியங் கட்டினால் போடியார் பின்பு

Page 55
78 மாறிவரும் மட்டக்களப்பித் தமிழ்கம்
பென்சன் எடுக்கலாம். ஆனால் இரவு பகலென்று பாடுபடும் பாட் டாளிக்குப் பயன் கிடைக்கவேண்டாமா? பாம்பு கடித்து, பன்றி வெட்டி, யானை அடித்து, நீரில் மூழ்கியெல்லாம் இறந்தால் அவன் குடும்பத்து நிலையென்ன ? போடியார் கொஞ்சம் கொடுத்தால் போதுமா ? அரசாங்கம் அவன் குடும்பத்துக்காவன செய்யச் சட் டங்கள் இயற்றவேண்டும். பிறநாட்டுப் பணமெல்லாம் எங்கே?
கோளாறுகளால் வேளாண்மை பாதிப்புற்று இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ந்தால் அவர் பா டு 'அரோ ஹரா'தான். ஒளவையின் பாடல் "வரப்புயர" "வென்று மன்னனை வாழ்த்திய தல்லவா ? அதனோடு தொடர்புறும் பாடலாக இதைக் காட்ட லாம். அந்தக் காலத்துக்குத்தான் பொருத்தம் என்றாலும் இந்தக் காலத்திற்கும் பயன்படுத்தலாம்.
"ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வரவனித்தாய்ச் செய்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது" என்பது வள்ளுவரையும் பார்க்கக் கூடிய நிலை . இந்த நிலையென்றாலே வேளாண்மை இனிதாகும். இல்லையேல் போடியாரும் பின்பு ஒடியா டி அலைய வேண்டும். இந்த நிலைமை எந்த இனத்திற்கும் உண்டெனலாம். தமிழர் என்றோ முஸ்லீம் என்றோ சிங்களவர் என்றோ வேற்றுமையில் லாது 'போடி' என்ற சொல்லும், பதவியும் தொடர்வதுண்டு. மட்டக்களப்பில் தமிழரை விடப் பெரிய முஸ்லீம் போடிமாரும் இருக்கின்றனர். தமிழரை விட உறவுமுறை இனவொற்றுமையில் அவர்கள் பேரானவர்கள். கோழிமுட்டை வாங்கிக் கோடி பணக் காரனாகி முயற்சி கூடியவர்கள்.
சகோதர பாசம் :
ஏறாவூரிலே அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு எடுத்துக்காட் டாக ஒரு குடும்பத்தைக் கூறுவர். நான் போட்டியிட்ட முறையில் மட்டக்களப்புத் தொகுதியில் இரண்டாவது "எம்பி ஆகிக்கொண்ட ஜனாப் பரீத் மீரா லெவ்வை அவர்களின் தந்தை குடும்பத்தின ரைத்தான் குறிப்பிடுவர். சகோதர பாசம் மிகுந்தவர்கள். சமூக நிலைமையில் மேன்மையாக வாழ்ந்து ஒற்றுமை இனப்பற்றுங் கூடியவர். முன்னர் ஒருமுறை நல்ல நோக்கத்தோடு அன்னியன் வந்து நமது வாக்குகளை அபகரித்துச் செல்லவிடாது, திரு. வி. நல்லையா அவர்கள் "எம்பி’ யாவதற்கு வாக்குப்பண்ணியபடி வாக் கைப் பிரித்தவர். ஊருக்குள்ளேயும் தமிழருக்குக் கூடிய உதவிகலெல்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 79
லாம் செய்துவந்தவர் அவர், ஏறாவூர் ஜனாப் மீராலெல்வை அவர் கள் வன்னியனார் குடுப்பத்தினராவர்.
ஏறாவூரையடுத்துள்ள தமிழ்க் கிராமங்கள் எங்கும் மீரா லெவ்வை வன்னியனார் குடும்பத்திற்கு மதிப்புண்டு. அவர்களும் ஏழைமக்களை வாழ வைத்து வந்தனர். அந்தக் குடும்பத்தினரே 1977ல் அறுமுனைப் போட்டிக்குள்ளாகியும் ஜனாப் பரீத் மீரா லெவ்வை "எம்பி யாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
மீராலெவ்வை வன்னியனார் குடும்பம் சகோதரபாசம் மிகுந்த குடும்பம் மட்டுமல்ல, ஈவிரக்கம் மிகுந்த குடும்பமுமாகும். தமிழர், முஸ்லீம் என்று பேதங்காட்டாது வாழ்ந்துவந்த குடும்பமாகும். காணி பூமிகளை ஏழைகளுக்கு விட்டுக்கொடுத்த பெருந்தன்மை யாளர். இலங்கையில் கட்சிபேத ஜனநாயக நடைமுறைகள் வந்து இவற்றையெல்லாம் பாழாக்கிவிட்டன. இல்லையேல் இன்னும் மலர்ச்சி கூடியிருக்கும் வளர்ச்சியான மாற்றமும் கூடியிருக்கும். மாறிவரும் மட்டக்களப்பென்பது வள ர் ச் சி யை யு ம் கீாட்டும், தளர்ச்சியையும் காட்டும் அல்லவா! எனவே இரண்டு வகையிலும் இன்னும் சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுவாம்.
இனப்பற்று வேகம் :
இனப்பற்று சிலவேளைகளில் வேகமாகிப் பண்பாட்டையும் மிஞ்சி நிற்கும் நிலையினை ஏற்படுத்தும். 1950 - 60 களில் முஸ்லீம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களே கூடுதலாகச் சேவை செய் தனர். படித்த முஸ்லீம் மாணவர், படிப்பித்த தமிழ் ஆசானுக்கு மாறாகவேண்டிய சூழ்நிலை. இதனை உண்மைக் கதைமூலம் விளக்குவது நலம்.
ஒரு தலைமை ஆசிரியர், அக்காலம் அதிபர் என்ற பெய ரில்லை. J. S. C. S. S. C. எனும் எட்டாம் , ஒன்பதாம் வகுப்பு மாணவர்க்குப் பாடவேளை தவிர்ந்த நேரத்திலும், இரவு வகுப்பு வைத்தும் சிறந்த பேறு காட்ட ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவைசெய்த பலன் என்ன தெரியுமா? " "நல்ல ஆசிரியர்' என்ற பெயர் மட்டுமே. பின்னர் 1965 அளவில் என்ன நடந்தது தெரி யுமோ? படித்துச் சித்தியடைந்த மாணவனே, பயிற்சிபெற்ற ஆசி ரியனானதும் முஸ்லீம் பாடசாலைக்குத் தமிழாசிரியர் ஏன் என்று ஊரிலே கிளர்ச்சியையுண்டாக்கிக் கூடிய சேவையால் குருவான மேலானவரை மாற்றிவிட்டுப் படித்தவன் இடம் பிடித்தான். இது வும் இனப்பற்றுத்தான் என்பது மாறிவரும் மட்டக்களப்பில் இடம்

Page 56
80 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பெறக்கூடியதே ! இதனால் குறையெண்ணக்கூடாது. இப்படிப் பார்க்கும்போது இன்னொன்றைச் சொல்லிக் காட்டலாந்தானே! பாருங்கள்! நான் 1948ல் பயிற்சிபெற்ற ஆசிரியனாக வெளியேறிய போது என்னைச் சூழ்ந்த எட்டுப் பத்துக் கிராமங்களில், பத்தா யிரத்திற்கு மேற்பட்ட குடி சனத் தொகையில் நான் ஒருவனே ஆசிரியன். மிஷன் பாடசாலைகள் இயங்கியதால் சமயஞ் சார்ந்த வர்க்கே உத்தியோக நிலை. இதனாலே எனக்கு அரச பாடசாலை வெளி மாகாணத்து வேலை. பின்தங்கிய பகுதியிலிருந்த எமக்கு இப்படியெல்லாம் வரக்கூடாதென்று இடைக்காலத்தில் இளைப் பாறி அரசியலில் ஈடுபடவும் சேவை செய்யவும் ஆயிற்று.
1977ன் பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்குக் கட்டுப் படாது தமிழினத்தின் நிலைகண்டு சுயேச்சையாக அறுமுனைப் போட்டிக்குள் போட்டியிட்டுக் கடைசியாகக் கச்சேரியில் வெற்றி பெற்றோரோடு தமிழருணர்ச்சி காட்டிப் பேசிவிட்டுத்தான் வெளி யேறினேன். ஆனால் எனக்கு இனி அந்த எண்ணமின்றி இறக்கும் வரை இனத்துக்காக இயங்கிக்கொண்டிருப்பேன். தேர்தல் பக்சம் திரும்பியும் பாரேன். தம்பியின் வாக்கு எனது போக்கு.
இப்பொழுது எமது பகுதியினர் எமது பகுதியிலே சேவை. யாற்றுகின்றனர்; சேவை செய்ய வைக்கின்றேன். இவையெல்லாம் பிறர் பார்வைக்கு உரிமையைக் காட்டுமல்லவா? நம்மவர்க்குள்ளே சேவைக்குத் தகுதியானோர் கூடிக்கொண்டு வருகின்றனர். பிற மாகாணத்தவர் வராமலே நம்மவர் ஆட்சி நடத்த அனைத்துப் பதவிகளையும் ஆட்கொண்டுள்ளனர். இவையெல்லாம் மாறிவரும் மட்டக்களப்பாகக் காட்டவில்லையா? பதவியிலுயர்ந்தோர் வடக்கி லிருந்தும் தெற்கிலிருந்தும் இப்பொழுது வருவது குறைவு.
இந்தியாவிலிருந்து வந்தோர் நகைக் கடைகளையும், வட்டிக் கடைகளையும், நாடகங்களையும் நடத்திய காலம் போய் நமது நாட்டவர்களே செட்டிமார் என்ற நிலையில் வட்டியும் குட்டி போட வழி கண்டுள்ளதெல்லாம் மட்டக்களப்பின் மாற்றந்தானே! மாடிக்கடைகள் மறுமலர்ச்சிதானே!!
இலங்கையின் நாலா பக்கங்களிலும் பார்வையிட்ட நான் மட்டக்களப்புப் பட்டினம் ஆசுக்கீழிருந்து இரண்டு மூன்றில் உயர்ந்த நிலையில் இருந்துவந்தது. அதைக்கூடச் சூறாவளி தாக்கிப் பாழாக் கியது. அதுவும் ஒரு வழியில் நன்மையாகி இலங்கைப் பட்டினங் களில் ஏழெட்டில் ஒன்றாக நிற்கும் நிலைக்கு வந்துகொண்டிருப் பதும் மாற்றந் தானே! நாட்டிலே கோளாறுகள் நடந்துகொண்

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 81
டிருப்பினும் நமது மட்டக்களப்புப் பட்டின்ம் விருத்தியடைந்து வருகின்றது. சனத்தொகையிலும் கூடி மதிப்புள்ள மாநகரசபை யாக மாறிவருகின்றது. கொழும்பு, கண்டி , யாழ்ப்பாணம் என்ற வகையில் ஏழெட்டில் இருக்கும் நிலைக்குள்ளாகலாந்தானே! எந்த வழியிலும் போக்குவரத்துக்குகந்ததாகிவிட்டது. அந்தக் காலத்தில் கத்தோலிக்கர் சுட்டிய அர்ச். மிக்கேல் கல்லூரி இன்னும் மதிப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தேவாலயங்கள் சிலவும் சேர்ந்தே பட்டினத்தை ஓரளவில் மதிப்புறச் செய்தன. ஆனால் இக்காலம் எத்தனையோ மாடிக் கட்டடங்கள் எழுந்து மாறும் மட்டக்சளப் பாக்கின. கோட்டையெனும் கச்சேரியும் மதிப்பைக் கொடுக்க மாறுபடாதிருக்கவேண்டியதே! அழியாமல் மறுசீரமைக்கலாம்.
மாறிவரும் மட்டக்களப்பு இன்னும் கூடிய நிலையில் உயருவ தற்குப் படுவான் கரையெனும் பகுதிகளுக்குப் பாலங்கள் அமைத் தாக வேண்டும். இப்பொழுது மூன்று திசைகளில் கல்லடிப்பாலம் , ஒட்ட மாவடிப் பாலம், பணிச்சங்கேணிப் பாலம், வலையிறவுப் பாலம் முதலியன பயன்பாட்டால் மட்டக்களப்பு மாறிவருகின்றது தானே!படிக்கும் மாணவர்க்குக் கூடிய பயனளிக்கப் பாலம் தேவை.
பெற்றோர்க்கு வழக்கு :
இக் காலக் கல்வி நடைமுறையில் மாணவர்க்கு இலவசக் கல்வி யுடன் புத்தகங்கள், சீருடைத் துணிகள் முதலியன வழங்கிவருவ தால் ஓரளவில் அபிவிருத்தியுண்டெனினும் வளர்ச்சி போதாது. நாங்கள் மாணவராகப் படிக்கின்ற காலத்தில் பள்ளிக்கூடம் சரி வரப் போகாவிட்டால் பெற்றோரை வழக்கு வைத்து ஆசிரியர் தண்டணை வாங்கிக்கொடுப்பர். ஒரு குறிப்பிட்ட தினங்கள் வராத போது ஆசிரியர்கள் தான் கிராமக்கோடுகளில் வழக்கு வைத்து எச்சரிக்கையுடன் தண்டனையும் வாங்கிக்கொடுப்பதால் பயத்தின் காரணமாகப் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பு வர். சிலர் ப ைகப்பட்டு ஆசிரியர்களைக் கண்டபடி பேசுவர்; ஒளித்திருந்து பிள்ளைகளே கல்லாலும் எறிவர். பின்னர் வரவு உத்தியோகத்தர் என்று ஏழெட்டுப் பள்ளிக்கூடங்களுக்கு நியமித்து வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை வரச்செய்வார் அல்லது வழக்கு வைப்பார். இடாப்படையாளம் பார்த்து வீடுவீடாகச் செல்வது JPY onuriř s L-600 LDuium (g5 d.
'அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும்
ஆடையும் ஆதரவாகக் கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும்
என்னைக் குறித்த தல்லால்

Page 57
82 மாறிவரும் மட்ட்க்களப்புத் தமிழகம்
துள்ளித் திரிகின்ற பருவத்திலே எந்தனது துடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்தில னேயென்
தந்தையாகிய பாதகனே' என்ற தனிப் பாட லொன்று இளமையில் தன்னையடக்கிப் பள்ளிக்கனுப்பிப் படிப் பிக்கவில்லையே என்று மனம் வருந்தும் நிலையைக் காட்டுகின் றது. அந்த நிலைமை மட்டக்களப்பில் இக்காலம் குறைவு. முஸ் லீம் மக்கள் தமிழரை விடக் கூடுதலாகப் பல பாடங்களைப் படிக்க வைத்து முன்னேற்றுகின்றனர். இளமையிலே மாறிமாறிப் பல வகுப்புகளுக்குச் செல்வதை நாம் காணலாம்.
அக்காலத்தில் அரிவரி வகுப்பிலிருந்து படித்தோர் எந்தப் புத்தகத்தையும் பொருள் விளங்காவிட்டாலும் வாசித்துக்காட்டு வர். இப்பொழுது ஏழெட்டுப் படிப்போருக்கும் சில எழுத்துக்கள் தெரியாமலிருக்கின்றது. மேலும் பருவமடைந்த ஆண், பெண் பருவத்தினர் கலவன் பாடசாலையில் படித்தலாலும் பாலியல் கோளாறுகள் ஏற்படுகின்றன. இனக் கலப்புற்றுப் படித்தல் நல மெனினும் இக்கால நிலை மைக்கு உதவாமல் போகின்றது. கார ணங்களை விளக்குவது கைப்புண்ணைக் கண்ணாடிகொண்டு பார்க் கச் சொல்வதொக்கும்.
வீட்டு வேலைகளும், வெளிநாட்டு ஆசைகளும் :
நெல்லை வீட்டுக்குக் கொண்டுபோனால் கோயிலுக்கும், புதிர் கொடுக்கவேண்டிய கடமையுடைய பூசகர், வயோதிபர், மருத்துவர், வண்ணார் முதலியோருக்கெல்லாம் கொடுத்துத் தான் புதிதுண்பர். நெல்ல வித்துக் காய வைப்பதெல்லாம் உடலுக்குப் பயிற்சியாகும். குனிந்து குனிந்து நெல்லைத் துலாவிக் கைகளால் மாறிமாறிச் செய்வர். அந்தக்காலத்தில் வாசல் கூட்டும்போதும் சிறிய கைவார்கள் கொண்டு குனிந்து நின்றே கால் அரை மணித்தி யாலங்கள் கூட்டுவர். இது பெண்களுக்கு விசேடமாகக் கர்ப்பந் தரித்த பெண்களுக்கு உறுதுணையான வேலையாகும். ஆனால் இப்போது கைகளை இடுப்பிலே குத்திக்கொண்டு கால்களால் நெல்லை விராண்டி விராண்டித் துலாவுகின்றனர். அம்மியிலே அரைப்பதெல்லாமில்லை. அந்தக்கால விவசாயிகள் கூடிய காலம் வாழ்ந்தமைக்கு அவர்களின் நாளாந்த வீட்டுவேலைகளும் உதவின தென்றால் ஏற்றுக்கொள்ளலாந்தானே! இன்னும் இவர்களுடைய நடைமுறைகள் நாகரீகம் என்ற போர்வைக்குள் இடமாகி விவ சாயத்தை விட்டு வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கின்ற

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 83
னர். கோவில்களில் அமுது படைத்து வீடுகளில் விருந்து கொடுத்து, பொதுவான அருவி வெட்டுதல், ஒலை கட்டுதல் முதலிய பரத்தை வேலைகளையெல்லாம் காண்பது குறைவாகி மறைந்துகொண்டே போகின்றன. வெளிநாட்டு மோகம் வேகமாக வளர்ந்துகொண்டே போகின்றது. " " கருமாரி"யான காலங்களிலும், சாவறுதிக் காலங் களிலும் சமூகமளியாமலே மங்கல, அமங்கல கருமங்கள் நடக் கின்றன.
வெளிநாடு சென்றோருடைய குடும்பங்கள் நிலைகுலைந்தும், சீர்கெட்டும் சென்றுகொண்டிருக்கின்றன. கற்பு என்பது என்ன வென்று தெரியாத நிலையும் தோன்றக்கூடும். அதற்கேற்றாற் போல் குடும்பத்திட்டம் என்ற வகையில் கருத்தடை செய்துகொண் டோர் " " கற்பாம் கற்பு" எனக் கேவலமாகச் சொல்லிக்காட்டிப் பாலியல் சேட்டைகளில் பலருடன் ஈடுபடுகின்றனர். தாய் வெளி நாடு செல்லக் குமர்ப்பிள்ளைகள் வீட்டிலிருக்க, சிலவேளை அவ ளும் அங்கே தாயாக இவர்களும் முறை தலையற்றுக் கர்ப்பற் தரிப்பதெல்லாம் நமது மட்டக்களப்பில் இடம்பெறாதிருக்கட்டும்.
96.
மட்டக்களப்புத் தமிழகம் என்றால் தமிழரையும் முஸ்லீம் களையும் சார்ந்ததாகும். தாய்மொழியாய்த் தமிழைக் கொண் டோர் தமிழர் என்ற தொகுப்புள் இடம்பெறுவர். பட்டக்களப் பிலே இக்காலம் நடையுடை பாவனைகளில் உடையே மிகவும் மாறிக்கொண்டு வருகின்றது. எட்டுமுழ வேட்டியும், 16 முழச் சேலையும், வண்ண வண்ணச் சாறன்களும் உடுத்த காலம் மாறிக் கொண்டு போகின்றது. மேலைநாட்டரசாங்கம் மொழியுடன் நாக ரீக மென்று உடையையும் மாற்றஞ்செய்யத் தூண்டிவிட்டது. ஆங்கிலம் எனும் இங்கிலீஷ் பாஷை யும் பேசி, நீலக் கால்சட்டை, சேட் , கோட் என்பன அணிந்தோர்க்குக் கூடிய மதிப்பும் மரியா தையும் இருந்தன. நாங்கள் படிக்கின்ற காலத்தில் கூட விளை யாட்டுக்கு மட்டும் அரைக் கால்சட்டை அணிவோம். இப்போ தெல்லாம் எங்கு பார்த்தாலும், எவரைப் பார்த்தாலும் பெரும் பாலும் தமிழர் நீளக் கால்சட்டை சேட்டும், தொடைக்குமேல் ஆகிய சட்டையும் நீளக் கால்சட்டை போன்ற உடை யு ட ன் இணைப்புகளும் கலந்து அணிகின்றனர். முஸ்லீம் பெண்கள் அவ் வளவாக மாற்றங் காட்டாமல் பண்புடன் உடையணிந்துவருகின்ற னர்.
இக்காலத்தில் கடுக்கன் காதோடு, கொண்டை கட்டிய தலை யோடு, ஏறக்கட்டிய வேட்டியும் நெஞ்சை மூடிய சால்வையுமாகப்

Page 58
84 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பட்டணப் பக்கம் காண்பதே அரிதாகும். நீளக் கால்சட்டை ஒரு வகையில் தொழிலுக்கு உபயோகமாகத் தானிருக்கிறது. ஆண்கள் சைக்கிள் ஒடுவதே ஆபத்தைக் கொடுக்கும் என்றிருக்கும்போது பெண்களுக்குப் பொருத்த மாகாது. மோட்டார் சைக்கிள் ஒட லாம். பெண்பிள்ளைகள் சைக்கிள் ஓடுவதற்கு நீளக் கால்சட்டை போன்ற உடுப்புகள் பொருத்தமாகும். இ ல் லை யே ல் அரைப் பாவாடை சட்டையும் , சீருடைகளும் சைக்கிள் ஓட்டத்தில் பிறர் கண்களுக்கு வேலை கொடுப்பனவாகும். வயல் அறுவடை வேலை களுக்கும் நீளக் கால்சட்டை பயனுள்ளதாகவே தென்படுகின்றது, சமத்துவத்தையுங் காட்டுகின்றது. 'சீலை பிடவை, சீலை பிடவை' என்று கூறிப் பொட்டணிகளைத் தூக்கித்திரிவோர் இப்போதிலர். நாங்கள் படிக்கின்ற காலத்தில் கைப் பாஷை காட்டிச் சீனன் முது கிலே பொட்டணியைப் போட்டு அழகான சில்க் துணிகளை விற் றமை ஞாபகம் ,
காய்ச்சுப்பு (சீனியுப்பு) :
உப்பு விற்பவர்கள் கடைப் பெயர்ப்பலகை வைப்பதற்கு முன்பே லைசன்ஸ் எடுத்து மாட்டப்பட்டிருக்கவேண்டிய சட்டம் அந்நாளில் இருந்தது. உப்பு விற்க " லைசன்ஸ்" இல்லாத கடை களில் இரகசியமாகத்தான் விற்பார்கள். அப்போது உப்பு ஒரு இறாத்தல் 02 சதம் , அப்படியிருந்தும் இரண்டு சதம் கொடுத்து வாங்காமல் மட்டக்களப்பு வாவிக் கரையோரச் சதுப்பு நிலங்களில் உப்புநீர் ஏறி வற்றிய வேளையில் அந்த மண்ணில் கைப்பெட்டி, கடகம், ஒலைப்பெட்டியென்றெல்லாம் அள்ளிக்கொண்டுபோய் கோடிப்பக்கம் வைத்தே அந்தரங்கமாக உ ப் புக் காய்ச்சுவர். இதையே 'காய்ச்சுப்பு" என்பர். மாச்சீனி போன்றிருக்கும்.
மண்பானை சட்டிகளில் த ன் னி ரூ ற் றி உப்புமண்ணைப் போட்டு நன்றாக ஊறிய பின் உப்புநீரை வேறாக்கிச் சூடு காட்டிக் காய்ச்சி வற்ற வைத்து சீனிப்பாகு ஆக்குவதுபோன்று ஆக்குவர். இதனையறிந்த அரசாங்கம் தடை செய்தது. சட்டி பானைகளை யெல்லாம் உடைத்தெறிந்தனர். ஏனோ தெரியாது? மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகமும் இதுபோன்றதோ நானறி யேன்! காய்ச்சுப்பு அழகாகவும், உருசியாகவும் இருக்கும். இன சனத்தார்க்கெல்லாம் கொடுத்து உபயோகிப்பர். அந்தக்காலத்தில் ஏழைப்பெண்கள் அதிகமாக ஈடுபட்டனர். பிச்சைச் சம்பளம் எனும் சமூகத் தருமப்பணம் ஆரம்ப நடைமுறைக்காலம் மாதச் சம்பளம் மூன்று ரூபா.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 85
**காச்சுப்பு காச்ச விடுறதுமில்ல, பிச்சைச் சம்பளம் வாறத் தத் தாறதுமில்ல' என்று பாட்டிமார் விதானை மாருக்கு ஏசுவர். அந்தப் பணம் எடுத்தால் ஊரிலே பிச்சைக்காரர் இருக்கிறாரென்ற அவமானம் என்றே தடுப்பதாக விதானை மார் எங்களுக்கு உப தேசித்த காலமது.
பத்திரிகை, பத்திரிகையாளர் :
நாடு வளர்ச்சியுறுவதற்குப் பத்திரிகைகளுக்கும், பத்திரிகை யாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. மட்டக்களப்பில் இப்பொழுது *" விடிவானம்' வந்து மறுமலர்ச்சிக்கு வளர்ச்சி காட்டுவதால் 'மன்று' வின் முயற்சி நன்று எனலாம். இரண்டு வாரத்துக்கொரு விடிவானமாயிருப்பதை நாளாந்த விடிவானமாக மாற்றினால் மாறிவரும் மட்டக்களப்பு நல்முறுவல்லவா ! இதற்குமுன்னரும் நாம் இளைஞனாயிருக்கையில் 'உதயம்’ என்ற சஞ்சிகையைத் ** தியாகி' எனும் புனைபெயர் கொண்ட எஸ். டி. சிலுநாயகம் அவர்கள் ஆசிரியனாகி வெளியிட்டார். அதிலே ஒரு உதயத்தில் நாம் எடுத்துக்காட்டியுள்ள திரு. வி. நல்லையா அவர்களைத்* *" தூங்காத பிரதிநிதி' என்று சுதேச உடைப் போ ட் டோ ப் படத்தை அட்டையிலிட்டு வெளியிட்டனர். மட்டக்களப்பின் கலை கலாசார வளர்ச்சியென்றால் திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்கள் கூடிய பங்கினுக்குரியராவர்.
அன்னார் கொழும்பு சென்று தினகரன், வீரகேசரி, சுதந் திரன், தினமணி, சிந்தாமணி, இப்பொழுது சூடாமணி எனும் பத்திரிகைகளின் ஆசிரியர். மட்டக்களப்பில் பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். நான் அதற்கு முற்பட்டவன் ஆனமையால் அன் பனும் நண்பனுமாவேன். ஆரம்பகாலத்தில் கிழக்குத்தபால் என்ற பத்திரிகை நமது புகழுக்குரிய புலவர் மணி அவர்களால் வெளியிடப் பட்டதாகக் கேள்வி. இடைக்காலத்தில் எத்தனையோ? என்றா லும் ஒன்றிரண்டைக் கூறுகின்றதால் குறையேற்படாதிருக்கவேண் டும்.
மலர், தொண்டன், கிழக்கொளி, சுமை தாங்கி, களம், தாரகை, அரங்கம் முதலிய பத்திரிகைகள் நாமறிந்தவை. இவை யெல்லாம் மாறிவரும் மட்டக்களப்புக்கு எழுச்சியூட்டின. இப் பொழுதும் 'தொண்டன்' பத்திரிகை தொண்டனாக இயங்கு வதைப் பாராட்டவே வேண்டும். இந் தவேளையில் கலை, கலா சாரத்தால் மட்டக்களப்புக்குப் புகழ் சேர்த்தவர்கள் சிலரை நானறிந்த அளவில் வெளியிட்டிருக்கிறேன்.

Page 59
86 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
மண்டூர், மருதமுனை, ஆரையம்பதி, அமிர்தகழி, காரை தீவு என்பன அநேக கலைஞர், கவிஞர்களைக் கொண்டதாகி மட்டக்களப்புக்கு மலர்ச்சி காட்டி நிற்கின்றன. இன்னும் சிலர், பலர் எதிர்காலத்தில் கூடி வரலாம். இத்தகைய தெரிவை வெகு சனத்தொடர்பு ஈடுபாடு கண்டே தெரிந்தெடுத்தேன். குறை யெனக் கூறினால் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு சிலர் தவறியிருக்கலாம். எழுச்சியூட்டத்தான் இவை வெளியாகின் றன. பகையை மூட்டுவதற்கல்ல.
மட்டக்களப்பில் சிலர் :
மற்றொரு வகையில் எமது காலத்தே வாழ்ந்த ஒருசில நிலைகளால் உயர்ந்து தகுதிபெற்றோர் சிலர். 'சானாக்கூனா' எனப்படும் முகாந்திரம் ச. குமாரசாமி (முதலாளியென்றும், பண் ணையாரென்றும் , கொந்திறாத்தர் என்றும் பலவாறு அழைக்கப் பட்டவர்) யாழ்ப்பாணத்தவர் என்னும் தனவந்தராவார். அவ ருடைய எச்சம் எனும் நிலை இப்போதும் மட்டக்களப்பிலுண்டு. மனைவி வள்ளியம்மை. ஆனைப்பந்திக் கோவில் தொண்டிற்கு உதவியவர்.
எஸ். ஏ. செல்வநாயகம் (முதலாளியார், பாடசாலை முகாமையாளர், ஏலதாரர், கொம்பனி ஏஜண்டர்). தகப்பனுக்குக் கிடையாத பாக்கியம் மகனுக்குக் கிடைத்த "எம்பி’யான சூழ் நிலைக் குடும்பம்.
முதலியார் சின்னலெவ்வை. பாராளுமன்ற சரித்திரத்தில் பெயரைப் பொறித்தவர்.
எஸ். எம். இராசமாணிக்கம், "எம்பி’யாகித் தமிழரசுக் கட்சியின் ஈடுபாட்டால் புகழடைந்தவர்.
கண்ணாடி சின்னத்தம்பிப் போடியார். மில் முதலாளி மக் கள் செல்வமுடையவர். மாவ்ட்டசபைத் தலைவராயிருந்த சம் பந்தமூர்த்தியின் தந்தை. உழைப்பாலுயர்ந்த தனவந்தர். ஏழை யும் தனவந்தனாகலாம் எனக் காட்டிய உத்தமர்.
கத்தோலிக்க பாதிரியார் வண. பொணல் சுவாமி தாடி வளர்த்த வெள்ளையர். அர்ச். மிக்கேல் கல்லூரி அதிபராயிருந் தும், சமய சேவைகள் செய்தும் , இனிமையாகக் கொச்சைத் தமி ழில் பேசியும் மக்களின் மனதைக் கவர்ந்தவர்;

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 87
அந்தக் காலத்தில் அத்தியாவசிய சேவையான முறிவு வைத்தி யம் செய்தோரான அண்ணன், தம்பி சரவணையர், சீனித்தம்பி ஆகியோராவர். இப்போது அரசாங்க வைத்தியசாலைகள் நடை பெற்றாலும், 'X'ரேப் படம் முதலியன இருந்தும் மூலிகை வைத் தியம் தொடரத் தான் செய்கிறது. விஷ வைத்தியமும் அவ்வாறே. எங்கள் பகுதி க. வேலாயுதம் இவற்றில் பிரசித்தமானவர். காலஞ் சென்ற வினாசிப்பரிசாரியார் பற்றியும் புகழுறக் கூறுவர்.
** கேவிஎம் ' சுப்பிரமணியம், சட்டத்தரணி. காணிகள், தோட்டமுடையவர். கதிர்காமத்தில் மடம் வைத்துப் பக்தர்களை ஆதரித்தவர்.
சந்தியாப்பிள்ளை (நியூ பேக்கரி உரிமையாளர்). ஆலய திருவிழாக்களில் முன்னின்று பணம் செலவிட்டுச் சிறப்பாக நடத்த உதவி செய்தவர். ஏழைகளையும் கவனித்தவர்.
எஸ். வி. ஒ சோமநாதர் (பாடசாலை அதிபர்). மட்டக் களப்பு சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகையில் வெளியிட்டவர்.
S. M. R ஆம்ஸ் ரோங், சுப்பிறிந்தர் உத்தியோகத்தோடு, தனவந்தராகவுமிருந்தார். இவருடைய வீடான மனையே இடிக் கப்பட்டு இப்போது கூட்டுறவுப் பெரிய கட்டிடமாக அமைந்திருக் கிறது. இந்தச் சுப்றீந்தர் பற்றி எங்கள் பக்கம் குடு மிதிக்கும் மாடு கதிர் சப்பாமலிருக்க வாய்களைக் கட்டியதாம் என்பதால் பிரசித்த மானவர். கல்லடித்தெருவில் பகுத்தறிவு, புத்த கறிவு மிகுந்த காலஞ் சென்ற மத்தேஸ் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.
மட்டக்களப்பில் மேல்நாட்டாட்சியால் பறங்கியர் எனும் இனம் இருந்துவருகிறது.
""ஒன் டு ரெண்டு மூன்று நாலு, அஞ்சி ஆறு ஏழு
ஏழும் ஏழும் போட்டடிச்சா, எல்லாம் பதினாலு. குண்டுமணித் தோட்டத்தில கூட்டம் என்னடி - அந்தக் குதிரைக்காரப் பயலைக்கண்டா, ஒட்டமென்னடி, நேத்து வெட்டின வயலுக்குள்ள
நெல்லுப் பொறுக்கிற நோனா
காத்து வந்து கவுணக் கிளப்புது,
கையால பொத்தடி நோனா'
என்றெல்லாம் 'பைலா'ப் பாட்டுப் பாடி நட ன மா டு கி ன் ற
பறங்கி இனத்தவரையும் ஒரு மலரிலிருந்ததைக் காட் டா து விடுவது தவறானதாகும். இக்காலப்போக்கில் ஒருசிலருடைய

Page 60
88 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
நடைமுறைகள் தமிழரைப்போன்றே வந்துகொண்டிருக்கின்றன. சிலர் கலப்புற்ற திருமணத்திலும் கலந்துவருகின்றனர். அவர் களிலே விசேடமாக தொழிலாளர்களும், ஆசிரியர்களும், சமயக் குரவர்களும் இருந்துவருகின்றனர். அர்ச். மிக்கேல் கல்லூரியில் நான் படிக்கின்ற காலத்தில் இவ்வினத்தோர் அநேகர் இருந்தனர். வித்துவான் கமலநாதன் படித்துக்கொண்டிருந்த காலமது.
மேலும் அக்கல்லூரியில் படிப்பித்த திரு. கனகரெட்ணம் எனும் தேசியவுடை தரித்த ஆசிரியர் நினைவுக்கு வருகின்றார். அன்னாருடைய மகனே இக்காலம் பிரதிப் பொலிஸ்மா அதிப ராகத் திறமையான சேவையினால் போற்றப்பட்டவர். மட்டக் களப்பிற்கும் புகழ் சேர்த்தவரெனலாம். இவ்வாறு புகழ் தேடித் தந்த வ. கி. மாகாண சபை முன்னைநாள் செயலாளர் திரு. கே. தியாகராசா அவர்களையும் பாராட்டவே வேண்டும்.
மாறிவரும் மட்டக்களப்பு நாட்டு நிலமைகளினாலும், வன் செயல்களினாலும் பாதிப்புற்றே வருகின்றது. இக்காலவேளையில் தமிழர், முஸ்லீம்களுக்கெல்லாம் சேவைசெய்த செயலினால் கோப தாபப்பட்டோர் துறவியென்றும் பாராது சுட்டுக்கொன்றமை நெஞ்சில் இடம்பிடித்த நெஞ்சுருக்கும் செயலாகும். கத்தோலிக்க சமயத் துறவியான வண. சந்திரா பெர்னாண்டோ அவர்கள் நம் கண்முன்னே வாழ்ந்து சமய, சமூக தமிழ்த்தொண்டுகள் புரிந்து 6-6-88ல் குண்டுகள் பாய்ந்த உடலாகி, புனித மரியன்னை தேவால யத்தில் மதிப்புக்குரிய வகையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ** மட்டுநகர் மாவட்டம் கண்டிராத சனக்கூட்டம்' எனப் பேசிக்
கண்ணிரஞ்சலி செலுத்தினர்.
வாழ்வின் இறுதி மரணம் :
மரணம் அடையும்போதும் மற்றோருக்கு உத வ லா மே . *"செத்துங் கொடை கொடுத்தான் சீதக்காதி" என்பதைக் கேள் விப்பட்டிருக்கிறோமல்லவா? மண்ணோடு மண்ணாகும் உடலென்று கவனியாதிருக்கின்றோமா? உயிர் வாழ உடல் தேவை. அதனால் உடலைப் பேணவேண்டும். பேணினாலும் இயல்பு மாறுமா? இந்து சமயத்தவர் மரணச் சடங்குகளில் மாற்றம் வேண்டும். காலத்திற் கேற்ற கருத்துகளுறைந்த, கவிதையொன்றை நமது நாட்டுக் கவிஞன் பாடுகின்றான். பாருங்கள்!
*" கறுப்பு மயிர்கள் நரையைக் கொஞ்சக் கவலை கொள்ளுது
கட்டவிழ்ந்து பல்லும் விழ முசமும் மாறுது வெறுப்பாக மனைவி மக்கள் கண்ணில் தோணுது
மினுக்கான உடலில் சுருக்கம் மிகவும் காணுது

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 89
இறுக்கமான தசையும் சற்று நுகைவு கொடுக்குது
இரவில் இருமல் வந்து தினமும் தூக்கங் செடுக்குது
முறுக்கான கால்கை இன்று தளர்ச்சி கொள்ளுது
முதுமை வந்து நாளும் பொழுதும் அடிமையாக்குது.
முள்ளந்தண்டு தொய்வு கொண்டு வளைவு கொடுக்குது மூன்றுநேர உணவை மனமும் தீண்ட மறுக்குது பிள்ளை வாயைப் போல உமிழ்நீர் தள்ளி வழியுது
பேசுகின்ற நாவுகூடத் தடம் புரளுது துள்ளித்திரி காளைப்பருவ காலந் தன்னையே
துப்புக்கெட்ட உணர்ச்சி தினமும் எண்ணித்தவிக்குது கொள்ளை போகும் இந்தவுயிர் எந்த நேரமோ
கோவணமும் கூடவரா வென்று ஏங்குது!"
ஆஹா கொத்தமங்கலம் சுப்புப் பாடல் போல் கொள்ளை கொள்ள வைக்குதே! இந்தப் பாடலுக்கு விளக்கங்கொடுக்க எனது சிற்றறிவுக்கே எட்டு மணித்தியாலம் கட்டாயம் தேவை. அவ்வா றான நிலைமைக்குரிய இப்பாடல் தமிழர், முஸ்லீம் வாழும் நமது மட்டக்களப்பாருக்குப் பா கு பா டி ல் லா த பாடலாயிருக்கிறது. " ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்பது பழமொழி. நூறு வயதினையடைவோர் நமது நாட்டில் குறைவு. பகுத்தறிவுச் சிந் தனை கொண்ட செயலுடையோர் பிறநாடுகளில் கூடிய வயதுடை யோராயுமிருக்கின்றனர்.
மரணவீட்டு நடைமுறைகள் தமிழரிடையே, அதுவும் சைவ சமயிகளிடையே விரும்பியவாறெல்லாம் கூடுதலாகச் செலவு செய்வ தெல்லாம் ஒழிக்கப்படவேண்டும். பணக்காரன் இறந்தாலும், ஏழை இறந்தாலும் ஆத்மா ஓரினமே. பிறசமயத்து நல்ல நடை முறைகளைப் பின்பற்றலாமே !
பணக்காரர் செய்யும் பணச்செலவும், பகட்டான செயலும் ஏழைச் சனங்களுக்கும் இடம்பெறக்கூடியனவா? இறந்தவரின் செல வுப் பணத்தைக் குறைத்து இருக்கின்றவர்களுக்குப் பயன்படுத்த லாம். பெறுமதி கூடிய உடைகளோடு எரித்தலும் , அ ட க் கம் பண்ணுதலும் என்ற அநியாய நடைமுறை மாறச் கூடாதா? நடை முறையென்று பகட்டுக் காட்டாது பலருக்கும் கொடுத்து உதவ
லாமே ! -

Page 61
90 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பொன்விழா காணும் வந்தாறுமூலை மகாவித்தியாலயம்
வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் நாளை பொன் விழாக் காணுகிறது. பொதுவாக இலங்கையின் கல்வி வரலாற்றி லும் மிக முக்கிய இடம்பெறும் கல்லூரி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயமாகும்.
இலங்கையின் கல்வி வரலாறு பல சாதனைகளைக் கண்டுள் ளது. இலவசக் கல்வி, சுயமொழிக் கல்வி, கிராமப்புறக் கெட்டித் தன மாணவர்களை நாட்டின் வழிகாட்டிகளாக மாற்றப் புலமைப் பரிசில் திட்டம், பல்வேறு கலாசாரங்களையும், பழக்கவழக்சங் களையும் கொண்ட பல் பிரதேச பல்லின மக்களிடையே உறவை ஏற்படுத்தும் மத்திய கல்லூரி அமைப்பு என்பன அச்சாதனை களிற் சில.
இச்சாதனைகள் பல்வேறு சோதனைகளையும், வேதனை களையும் ஏற்படுத்தினாலும் கணிசமான பலன்களையும் அவை தந்தன என்பதை யாரும் மறுப்பாரில்லை. இச்சாதனைகளினதும் சோதனைகளினதும் பிண்டப் பிரமாணமான உதாரணம் வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயமாகும்.
வந்தாறுமூலை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கட்கும், நலன் விரும்பிகட்கும் அப்பாடசாலை என்ற குறியீடு ஒருபுறம் உள்ளார்ந்த சோகத்தையும் கவலையையும் தரும். இதற்கான காரணம் அதன் வரலாற்றில தங்கியுள்ளது.
இக்கல்லூரிக்கான எண்ணக்கருவின் காரணகர்த்தா இலவசக் கல்வியின் தந்தையான அன்றைய கல்வி மந்திரி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா ஆவார். 1946 ஆம் ஆண்டு அவர் இட்ட திட்டம் 1952 இல் நிறைவேறியது. சகல வசதிகளும் பொருந்திய இக்கல்லூரியை அங்கமைத்த மூலகர்த்தா அன்றைய மட்டக்களப் புப் பாராளுமன்ற உறுப்பினர் வி. நல்லையா மாஸ்டர் ஆவார்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் 5 ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பெற்று மாணவர்கள் இக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். அரசாங்கச் செலவில் விடுதியில் இருந்து தம் படிப்பை மேற்கொண் டனர்.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் 91
1952 இல் வந்தாறுமூலையில் மிகப் பிரமாண்டமானதும் சகல வசதிகளையும் கொண்டதுமான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கல்லூரி அக்கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியது. வந்தாறு மூலை மத்திய கல்லூரி என்ற பெயரில் தன் பயணத்தை வேக மாக ஆரம்பித்த இம்மத்திய மகாவித்தியாலயம் 1981 வரை 29 வருட காலம் அப்பிரமாண்டமான கட்டிடங்களுக்குள் சாதித்த சாதனை கள் பிரதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் குறிப்பிடத்தக்கவை.
இக்கல்லூரியில் அப்பிரதேச மாணவர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தோர் வெளிப் பிரதேச மாணவர்களே. ஆண்களுக் கெனத் தனி வசதியும், பெண்களுக்கெனத் தனி விடுதியும் இருந் தமையினால் இது சாத்தியமாயிற்று. 5 ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பெற்றவர்களும் ஸ்கொலர்ஸ் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்களுமான கெட்டித்தனம் மிக்க மாணவர்களுடன் காசு செலுத்தி விடுதியிற் தங்கிப் படிக்கும் மாணவர்களும் இதிற் சேர்ந் தனர்.
வடக்கே குச்சவெளி தொடக்கம் தெற்கே பாணமை வரை யுள்ள மாணவர்களும், மாணவிகளும் கல்வி பயின்றனர். கிழக்கு மாகாணத்தின் வடபுலமிருந்த தோப்பூர், கிண்ணியா, சேனையூர் , கட்டைபநிச்சான், வெருகல் தொடக்கம் தென்புலமிருந்த கன்னன் குடா, குறுமண்வெளி, போரதீவு, வெல்லா வெளி, கல்முனை, காரைதீவு கிராமப்புற மாணவர்களைக் கொண்டதாக இக்கல்லூரி மிளிர்ந்தது. முஸ்லிம் மாணவர்கள் கணிசமான தொகையினர். மலைநாட்டு மாணவர்களும் கல்வி பயின்றனர்.
இவ்வண்ணம் இளம் வயதிலேயே பிரதேச, இன, மத வேறு பாடுகளின்றி வளருகின்ற ஒர் ஆரோக்கியமான சூழலை உள்ளடக் கியதாக அன்றைய வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் அமைந்திருந்தது.
ஒரு பரந்து விரிந்த சூழலில் இளம் குருத்துக்கள் பயிற்று விக்கப்பட்டன. அற்புதமான காலங்கள் அவை. பரந்த மனமும், விரிந்த நோக்கும், சகிப்புத் தன்மையும், பொதுநல நோக்கும் கொண்ட தலைமுறை உருவாகிய காலம் அது. அதனை உருவாக் கும் பட்டறையாக அன்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தி யாலயம் இயங்கியது.
பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கிராமியக் கலை களைப் புனருத்தாரணம் செய்தபோது மட்டக்களப்பு அவருக்குப் பெரும் கைகொடுத்தது. அன்று அவர் குறிவைத்த பாடசாலை

Page 62
92 மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
வந்தாறுமூலை மத்திய கல்லூரியாகும். 1959 இல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு இப்பாடசாலையி லிருந்து சென்ற "பாசுட தாஸ்திரம்" எனும் கூத்து அறிஞர் குழா முக்கு இப்பிரதேசக் கலைச்சிறப்பை அறிமுகம் செய்தது.
கிழக்கு இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க அர சாங்கம் நினைத்தபோது அதன் கண்ணிற்பட்ட கல்லூரி இது. ஒரு பல்கலைக்கழகத்தை உள்ளடக்கும் ஆரம்பக் கட்டிட வசதி களைக் கொண்டிருந்தமையே அதற்கான காரணமாகும்.
1981 இல் கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயக் கட்டிடத்தில் ஆரம்பமாகியது.
மெழுகு திரிபோல தன்னை அழித்துப் பிறருக்குப் பிரகாசம் தரத் தன் கட்டிடத்தைப் பல்கலைக்கழகத்தினருக்குக் கொடுத்து விட்டுச் சோகம் கலந்த பெருமிதத்துடன் சித்தாண்டிக் கிராமத் தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் தன் பணியைத் தொடங்கியது. இன்று அங்கேயே இயங்குகிறது.
இடம் மாறினாலும் வந்தாறுமூலை மத்திய கல்லூரியின் விடுதியில் இருந்தும் ஏனைய வகையிலும் கல்வி பயின்ற பழைய மாணவர்கட்கு இன்றைய கிழக்குப் பல்கலைக்கழகக் கட்டிடச் சூழல் தான் அன்றைய தமது வந்தாறுமூலை மத்திய மகாவித்தி யாலயமாகும் ,
தம் பாடசாலை பல்கலைக்கழகமாகப் பரிணமித்ததைக் காணுகையில் பெருமிதமும், பல்வேறு ஆளுமைகளை உருவாக்கிய ஒரு ஸ்தானத்தின் இல்லாமை சோகத்தையும் பழைய மாணவர்க் குத் தருகிறது.
எனவே தான் வந்தாறுமூலை மத்திய கல்லூரி என்ற ஒரு குறியீடு ஒருபுறம் பெருமிதத்தையும், ஒருபுறம் சோகத்தையும் தருகிறது என்று குறிப்பிட்டேன்.
இப் பொன்விழா அதன் எதிர்கால ஏற்றத்திற்கு உந்துசக்தி தரும் விழாவாக அமையவேண்டும் என்பதே அனைவரினதும் அவா.
- கலாநிதி சி. மெளனகுரு.

மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம்
பின்னுரை
அமரத்துவமடைந்த அதிபர் செல்வராசா அவர் களுக்குச் சமர்ப்பணமாகும் இந்த நூலிலே பதிப்புரை யிற் குறிப்பிட்டபடி ஒரு சிறிய உரையையேனும் கூற வேண்டித்தான் உள்ளது.
அதிபர் செல்வராசா அனைவரது உள்ளத்தையும் கொள்ளைகொள்ளும் நடைமுறை கொண்டவர். மாண வர்க்குக் கூட மதிப்புக்கொடுத்து நடந்தவர். எமக் கெல்லாம் தேடி உதவி செய்தவர். எம்மைவிட்டு முந் திச்சென்று கண்ணிர் சிந்த வைத்துவிட்டார். எமது நிறுவனத்தில் முக்கியமானவரை இழந்து தவிக்கின் றோம். அவர் மட்டக்களப்பென்றால் மதிப்புறச் செயல் திட்டங் கொண்டவர். அவர் அண்ணர் திரு. வெற்றி வேல் விநாயகமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு நிலை யினைக் காட்டி எழுதியது பொருத்தமெனலாம்.
மாறிவரும் மட்டக்களப்புத் தமிழகம் எனும் இந் நூலில் 70 ஆண்டென்றாலும் தேவையானவற்றைச் சிந்தனை கொள்ளச் செய்துள்ளார் எவருமே இது வரை குறிப்பிட்டெழுதாத கலைஞர் முதலானோரை ஒரளவிலேனும் வரிசைப் படுத் தி க் காட்டியுள்ளமை பாராட்டுக்குரியதுதான். எனினும் ஒருசிலர் பகையுறா திருக்க நிறுவனச் சார்பில் வேண்டுகின்றோம். பகுத் தறிவுச் சிந்தனையை வளர்க்கப் பாடுபடுவோம். எப் படியும் இந்த நூல் செல்வாக்குறும் என்ற நம்பிக்கை யுடையோம்.
616ðð d55LO.
சி. கந்தசாமி ஓய்வுபெற்ற அதிபர்.
மட்டக்களப்பு. 5-9-97

Page 63

vAMP
கொட்டும் மழை வளமும்
கூடும்பால் தேன் நிலமும்
விட்டும் உயிர் பிரிந்து
மீண்டும் உடல் எடுக்க
மட்டக் களப் பினது
மாறிவரும் நிலைமை யினை
பட்டம் பெற்ற கலாசூரி
பன்குடா வெளி மூர்த்தி
தெட்டத் தெளி வாகத்
தெரிந் துரைத்த இந்நூலில்
*வெட்டு முகம்' எனவே
'வெற்றி மகன்" காட்டியமை
எட்டவே நிற்போ ருக்கும்
இனிமை யேதான் கொடுக்கும்
கட்ட மெல்லாம் உளதென்று
கலைக் கோட்டன் வாழ்த்துகிறேன்.
LLLLLL LLLLLL

Page 64
அறிஞர் பலருடைய ஆய் மான "பாலர் பாமாலை
வில் நூலாசிரியரின் உன எடுக்கப்ப
புலவர்மணி பெரியதம்பிட் மையில் நடந்த நூல் 6ெ வான் F. X, C. நடராசா, சிற்றப்பா கண்ணாடி பண்டிதர் செ. பூபாலப் லீனா, நகரபிதா J. 1.
மேன
சென். ஜோசப் கத்தோ
Ĉar FFF C0 FF !
 

வுரையோடு 1964ல் ஆரம்ப " நூல் வெளியீட்டு விழா எர்ச்சிமிக்க உரையின் போது
பட்ட படம்.
பிள்ளை அவர்களின் தலை வளியீட்டு விழாவிலே, வித்து
அறிஞர் ஆறுமுகவடிவேல், சின்னத்தம்பிப் போடியார், பிள்ளை, அதிபர் எஸ். எம். திசவிரசிங்கம் முதலானோர் டயிலே.
སྤྱི་
afi
விக்க அச்சகம், மட்டக்களப்பு ή ν 5, 8ίτις Η Γαλάξι.