கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்

Page 1
EEDITËTU, EDI EHE
94.213
լքելII):Iե SLE’R
Uli Flu, UjöIHL = 匣时由
 
 
 
 
 

globitibil SEDE,
இறுவல்கள் நினைக்களம்

Page 2

MUSIMS OF
MATARA DISTRICT
HISTORY AND HERITAGE
Editor: Alhaj M. M. M. Mahroof, B.A. (Hons)
A Presentation
of the
Ministry of Cultural & Religious Affairs
Department of Muslim Religious & Cultural Affairs, 34, Malay Street, Colombo O2, Sri Lanka.
1995

Page 3

மாவட்ட அறிமுக நூல் : 4
மாத்தறை மாவட்ட
முஸ்லிம்கள்
வரலாறும் பாரம்பரியமும்
பதிப்பாசிரியர் அல்ஹாஜ் எம். எம். எம். மஹரூப், பி. ஏ. (சிறப்பு)
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு
முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 34, மலே வீதி, கொழும்பு 2, இலங்கை. 1995

Page 4

This Book is Published
on the Occasion of the
National Meelad-un-Nabi Celebrations - 1995
held at Welligama
on October 29, 1995
A. H. 1416, Jama'athul Akhir 05
and Presented to
Her Excellency Chandrika Bandaranaike Kumaratunga
President of the Democratic Socialist Republic of Sri Lanka
by
Hon. Lakshman Jayakody Minister of Cultural & Religious Affairs

Page 5

பொருளடக்கம்
පෙරවදන : ගරු. ලක්ෂමන් ජයකොඩී.
සංස්කෘතික හා ආගමික කටයුතු අමාත්‍ය சிறப்புரை : எஸ். எச். எம். ஜெமீல்
Foreword: Hon. Lakshman Jayakody
Minister of Cultural & Religious Affairs முன்னுரை : மாண்புமிகு லக்ஷ்மன் ஜயகொடி,
பக்கம்
O9
3
15
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர்
பதிப்புரை : யூ. எல். எம். ஹால்தீன்
Editorial Preface: M. M. M. Mahroof
அத்தியாயம்
1. வரலாற்றுப் பாரம்பரியம் - கலாநிதி எம். ஏ. எம். ಆrá
மஸாஜித் - முக்தார் ஏ. முஹம்மத் கலை, இலக்கிய பாரம்பரியம் - எம். எச். எம். வடிம்ஸ் கல்வி - எம். எச். எல். ஏ. ஏ. சீ. நூஹா வாழ்வியலும் பண்பாடும் - எம். எம். ஸப்வான்
பொருளாதார நிலையும் தொழில்களும் -
எஸ். ஐ. எம். ஹம்ஸா இணைப்புகிகள்
1. மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக
வாழும் பகுதிகள் 11. பள்ளிவாசல்கள்
III. அறபுக் கலாசாலைகள் IV. முஸ்லிம் பாடசாலைகள் V. குர்ஆன் மத்ரஸாக்கள் VI. கட்டுரைகள் வழங்கியோர்
VII. மாவட்ட வரைபடம்
17
9
27
40
64
79
i8
144
60
161
64
65
66
168

Page 6
Title
Editor
Publishers
Printer
First Edition :
Copy Right
Muslims of Matara District History & Heritage
Alhaj M. M. M. Mahroof B.A. (Hons) Retired Assistant Director Department of Muslim Religious & Cultural Affairs
Ministry of Cultural & Religious Affairs Department of Muslims Religious & Cultural Affairs
34, Malay Street
Colombo 02
Sri Lanka
Department of Government Printing
October 1995
(C) Publishers

පෙරවදන
· 1995 වර්ෂයේ, වැලිගම දී මිලාද්- උන් - නබි උත්සවය අනුස්මරණය කරමින් පළ කරනු ලබන මෙම ප්‍රකාශනයට පෙරවදනක් ලිවීමට ලැබීම ගැන මම බෙහෙවින්
සතුටුවෙමි.
තම සාම පණිවුඩය මේ ලොවට දායාද කළ මොහමඩ් (සල්) නබී තුමාගේ ජන්ම දිනය සමරන මිලාදුන් නබී උත්සවය නිසා එතුමාගේ ආදර්ශමත් දිවිය සහ වැඩ කටයුතු ගැන මෙනෙහි කිරීමට මුස්ලිම් බැතිමතුන්ට අවස්ථාව උදා වේ. මොහමඩ්
(සල්) නබීතමාගේ ජීවිතය, මානව චර්යාවේ සියලුම ගේෂ්ඨ ගුණාංගවලින්
පරිපෝෂිත වන අතර, කරුණාව, පරාර්ථකාමය, තත්‍යාගශීලිත්වය, නිහතමානිකම,
සමාවදීමේ ගුණය, උදානය, තැන්පත්බව සහ මානව වර්ගයා සමග සහෝදරත්වය
· වෙත කැපවීම ද ඊට අයත් වන්නේ ය.
මගේ අමාතාන්‍යායංශය යටතේ පවතින, මුස්ලිම් ආගමික සහ සංස්කෘතික කටයුතු පිළිබඳ දෙපාර්තමේන්තුව විසින් මුස්ලිම් ජාතිය වෙනුවෙන් අර්ථවත් කටයුතු රාශියක් සැලසුම් කර තිබේ.
මාතර දිස්ත්‍රික්කයේ මුස්ලිම්වරුන් පිළිබඳව වූ, මෙම පොත එකී කටයුතු වලට ඒකාබද්ධ වූ පුයත්නයකි.
වසර දහසකුත් අඩක පමණ කාලයක සිට මෙරට වාසය කරන මුස්ලිම් ජනතාව, එකී කාලය මුළුල්ලේ තම ආගමික සහ සමාජයීය අනන්‍යතාව ආරක්ෂා කරගෙන සිටියහ. ඒ අතරම, ශ්‍රීලාංකික ජනතාවට තමන්ගේ ඇති භක්තිය මුස්ලිම්වරුන් විසින් අඛණඩව පවත්වාගෙන ගොස් ඇත. මේ කාලය තුළ ජාතියේ ප්‍රගතිය සහ අභිවෘද්ධිය සඳහා මුස්ලිම්වරුන්ගෙන් ලැබී ඇති දායකත්වය අති විශාල ය.
දිවයිනේ සතර දිග්භාගයේ ම මුස්ලිම් ජනතාව ජීවත්වන අතර, එක් එක් දිස්ත්‍රික්කයට ආවේනික වූ සුවිශේෂවූලක්ෂණ දක්නට තිබේ. එබැවින් ' දිස්ත්‍රික්කය හඳුනාගන්න ' නමැති ප්‍රකාශන මාලාවක් පළකිරීමට මුස්ලිම් ආගමික සහ සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව විසින් කටයුතු අරඹයා ඇත. මේ පොත එහි අලුත්ම කලාපයයි.
මාතර දිස්ත්‍රික්කය පිළිබඳ ලියා ඇති මෙම පොත, ශ්‍රීලංකාවේ මුස්ලීම් ජනතාවගේ වැදගත් කොටසක් පිළිබඳව විස්තර සපයයි. මාතර දිස්ත්‍රික්කයේ මුස්ලිම් ජනතාවගේ ඉතිහාසය, දේවස්ථාන සහ ආගමික ආයතන, ගම්බිම්, ජීවන මාර්ග, සංස්කෘතික සහ සාහිත්‍යමය දස්කම් ඇතුළු, දිවිපෙවෙත සහ උරුමය අළලා සමබර

Page 7
තොරතුරු, විද්වතුන් කීප පොලකගේ පැන් තුඩින් මෙහි සටහන් වී තිබේ. මේ පොත මුස්ලිම් සහ මුස්ලිම් නොවන පොදු පාඨකයාට මග පෙන්වන්නක් මෙන්ම, පර්යේෂණ කෘතියක් ද වන්නේ ය. එමෙන් ම, මේ සඳහා, මගේ අමාතාන්‍යාශයේ අතිරේක ලේකම් - එස්. එච්. එම්. ජමිල් මහතාගේ ද, මුස්ලිම් ආගමික සහ සංස්කෘතික කටයුතුදෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂයූ.එල්. එම්. හාල්ඩීන් මහතාගේද දිරිගැන්වීම්, මාර්ගෝපදේශ සහ ආධාර, උපකාර ද නොමසුරුව ලැබී ඇත.
ලක්ෂමන් ජයකොඩි, සංස්කෘතික සහ ආගමික කටයුතු පිළිබඳ අමාත්‍ය.
10

சிறப்புரை
இலங்கைக்கும் அறாபியருக்குமிடையேயான தொடர்பு ஈராயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு மேற்பட்டது என்றும் ; அதனைத் தொடர்ந்து இஸ்லாத்தின் தொடர்பு 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டாலும், இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு தெட்டத்தெளிவாக இதுவரை ஆராய்ப்படவில்லை என்றும் குறைகூறப்படுவதுண்டு. எனினும், சமீபகாலமாக இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஒரளவு எடுத்துக் கூறியோர் சேர். அலெக்ஸான்டர் ஜோன்ஸ்டன், சேர். எமர்சன் டெனன்ட், சைமன் காசிச்சிட்டி, ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் ஆகியோர் ஆவர். இவர்களுள் ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் அவர்களுடைய "இலங்கைச் சோனகர் இன வரலாறு" எனும் நூல் முக்கிய இடத்தை வகிக்கிறது.
1988 ஆம் ஆண்டில் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிய கருத்தரங்கும், அக்கருத்தரங்குக் 55 LIGGOMU 5GMGMT od 67 GMT ởfuu MUSLIMS OF SRI LANKA —AVENUESTO ANTIQUITY எனும் நூலும் இத்துறையில் மேலும் ஒரு படி விளக்கத்தைத் தருவனவாகும். சமீபத்தில் கலாநிதி லோர்னா தேவராஜா என்பவரின் முஸ்லிம் வரலாறு பற்றிய நூலொன்று வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயத்தில் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரச மட்டத்தில் தனது பங்களிப்பினைச் செலுத்தி வருகிறது. மாவட்ட ரீதியாக முஸ்லிம்களின் வரலாற்றினைத் தொகுத்தளிக்க வேண்டும் எனும் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே களுத்துறை, அநுராதபுரம், மாத்தளை என்பவற்றின் வரலாறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அல்ஹாஜ் எம். என். எம். ஷாஜஹான் அவர்களினால் எழுதப்பட்ட புத்தளம் மாவட்ட வரலாறு எனும் நூல் வெளி வருவதில் தனது உதவிகளையும் திணைக்களம் வழங்கியது.
தற்போது மாத்தறை மாவட்ட வரலாற்று நூல் வெளிவருவதனையும் சேர்த்து இதுவரை ஐந்து மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றினை நாம் மிக ஆழமாகவும் விரிவாகவும் அறியக் கூடியதாயுள்ளது. இப்பணி தொடர்ந்து இன்னும் சில வருடங்களுள் நாட்டின் சகல மாவட்டங்களினதும் வரலாறுகள் தொகுக்கப்பட வேண்டுமென்பதும் எமது நீண்டகாலத் திட்டமாகும்.
மாத்தறை மாவட்டத்தைப் பற்றி இந்நூலின் 2g) அத்தியாயங்களும் மிகத்
தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. அப்பிரதேசத்தின் இத்துறைகளில் அனுபவம் மிக்க ஆறு பேர் இக்கட்டுரைகளை வழங்கியுள்ளனர். கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி,
I

Page 8
அல்ஹாஜ் முக்தார் ஏ. முஹம்மத், எம். எச். எம். ஷம்ஸ், எம். எச். எல். ஏ. ஏ. சி. நூஹ", எம். எம். ஸ்ஃபான், எஸ். ஐ. எம். ஹம்ஸா ஆகியோர் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.
இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலுருவாக்கித் தருமாறு இந்நாட்டின் தலை சிறந்த ஆய்வாளரும், அறிஞரும், எழுத்தாளருமான அல்ஹாஜ் எம். எம். எம். மஹரூப் அவர்களை வேண்டினோம். அல்ஹாஜ் மஹரூப் அவர்கள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னைநாள் உதவிப் பணிப்பாளருங் கூட இப்பணியினை அவர் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார்.
இத்தகைய பணிகள் நடைபெறுவதற்குக் காலாயமைவது மாண்புமிகு கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயகொடி அவர்களினால் தரப்படும் உற்சாகமான உந்துதலேயாகும். கலை, இலக்கியம், பண்பாட்டியல் துறைகளிலும் மிகவும் ஆர்வங்கொண்டுள்ள இவர், இத்தகைய வெளியீடுகள் வருவதற்கான வழிகளைத் திறந்து விடுவதில் முன்னிற்பவராவார். இத்தகைய தலைமைத் துவத்தின் கீழ் மேலும் பல வெளியீடுகள் வெளிவரும் என்றும், கலை, கலாசார, சமயப் பணிகள் மென்மேலும் விஸ்தீரணமடையும் என்றும் நிச்சயமாக எதிர்பார்க்க லாம்.
அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல், மேலதிகச் செயலாளர், கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு.
2

FOREWORD
IT gives me great pleasure to write this Foreword on the occasion of the publication of this work commemorating the celebration of the Meelad-Un-Nabi, at Welligama, this year.
The Meelad-Un-Nabi, the birthday of the Prophet, Muhammed (sal) is the occasion for the Muslims to remind themselves of the life and work of Muhammad (sal) who brought to the world, his message of peace. The life of Muhammad (sal) stands for all that is noble in human conduct, and encompasses kindness, selflessness, charity, humility, forgiveness, whisdom, self-possession, and commitment to humanity and brotherhood.
The Department of Muslim Religious and Cultural Affairs, which comes under the purview of my Ministry, has planned a variety of purposeful activities for this year's celebrations.
. . . . GP This book on the Muslims of the Matara district, is an intergral part of these activities.
The Muslims of Sri Lanka, whose presence in this Island, goes back almost a millennium and a half, have preserved their religious and social identity, throughout these years. At the same time, they have been unremitting in their devotion to the Sri Lankan nation. Muslims have contributed immensly throughout this period to the progress and strengthening of the nation.
While the Muslims are found throughout the length and breadth of Sri Lanka, each district has its unique Muslim characteristics.
Hence, the Department of Muslim Religious and Cultural Affairs, has embarked on the publication of the "Know Your District Series'...of which this book is the latest volume.
This book on the Muslims of the Matara district, deals with an important segment of the Muslims of Sri Lanka. Several scholars deal,
in balanced detail, with the life and heritage of the Muslims of the
13

Page 9
Matara district, including their history, their mosques and religious establishments, their Villages their education, their way of life and their cultural and literary achievements.
This book is a guide to the general reader, both Muslims and nonMuslim, and also, a research work and owes much to the encouragement, guidance, and support of the Additional Secretary of my Ministry, Mr. S. H. M. Jameel and the Director of the Department of Muslim Religious and Cultural Affairs, Mr. U. L. M. Haldeen.
Lakshman Jayakody Minister of Cultural and Religious Affairs.
14

முன்னுரை
இவ்வருடம் வெலிகமையில் நடைபெறும் மீலாதுன் - நபி நினைவு தின பெருவிழாவின் நிமித்தம் வெளியிடப்படும் இந்த நூலுக்கு முன்னுரை வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
உலகினுக்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் இஸ்லாம் என்கிற மார்க்கத்தை முன்வைத்த காருண்ய நபி, முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் நற்போதனையையும் வைபவபூர்வமாக நினைவு கூரும் சந்தர்ப்பம், மீலாதுன் - நபி விழாவாக இருக்கின்றது. மானிட பண்புகளின் உச்சக்கட்டமாக, முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு அமைகின்றது. கருணை, பிறர் நலன் பேணுதல், தாராள மனப்பான்மை, மன்னிக்கும் சுபாவம், எளிமையான வாழ்க்கை, தன்னடக்கம், விவேகம், சகோதரத்துவம், மானிட நலம் பாதுகாப்பு என்பன அவற்றுள் முக்கியமானவை.
எனது அமைச்சின் ஓர் அங்கமாக இயங்கும் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், இவ்வருடத்தின் மீலாதுன் - நபி பெருவிழறிவைப் பல காத்திரமான நடவடிக்கைகளுடன் கொண்டாடுகிறது.
இற்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக இலங்கையில் வேரூன்றியிருக்கும் முஸ்லிம்கள் தமது சமய, சமூக தனித்துவத்தை என்றுமே பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர். அதே வேளையில் இலங்கைத் திருநாட்டுக்கு அவர்கள் செலுத்தும் ஈடுபாடு அசைக்கமுடியாததும் ஆணித்தரமானதும் ஆகும். முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்த, வாழும் இந்நீண்ட காலகட்டத்தில், இந்நாட்டின் முன்னேற்றத்துக்கும் உறுதிக்கும் அவர்கள் அளித்த பங்களிப்பு மகத்தானது.
இலங்கைத் திருநாட்டின் எல்லாத் திக்குகளிலும் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்ற போதிலும் ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம்களுக்கும், தமக்குரிய சில விசேட குணாதிசயங்கள் உள்ளன. எனவே தான், “மாவட்ட அறிமுக நூல்கள்" என்ற வரிசையை முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வெளியிட
முன்வந்துள்ளது. இவ்வரிசையில் இந்நூல் மிக அண்மையான வெளியீடாகும்.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களைப் பற்றிய இந்நூல், இலங்கை முஸ்லிம்களின் ஒரு முக்கிய தொகுதியினரைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. மாத்தறை முஸ்லிம்களின் வாழ்வையும், அவர்தம் பாரம்பரியத்தையும், தகுந்த விபரங்களோடு ஆய்வாளர்கள் நமக்கு அளிக்கிறார்கள். மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின்
15

Page 10
வரலாறு, அவர்களின் மஸ்ஜிதுகள், மார்க்க நிலையங்கள், கிராமக் குடியிருப்புக்கள், கல்வி நிலை வாழ்க்கை வழிமுறைகள், இலக்கிய, கலாசார சாதனைகள் என்பன
இந்நூலில் இடம் பெறுகின்றன.
முஸ்லிம், முஸ்லிம் அல்லாத வாசகர்களுக்கு இந்நூல் நல்லதோர் வழி காட்டியாகும். ஆராய்ச்சியாளருக்கு இந்நூல் தக்க ஆய்வுச் சாதனமாகவும் விளங்குகிறது. எனது அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜனாப் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களினதும் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஜனாப் யூ. எல். எம். ஹால்தீன் அவர்களினதும் ஊக்கமும், வழிகாட்டலும், ஆதரவும் இந்நூலின் ஆக்கத்துக்கு மிக்க துணை புரிந்தன.
மாண்புமிகு லசுஷ்மன் ஜயகொடி, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர்.
lo

பதிப்புரை
உங்கள் கைகளில் தவழும் " மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் " எனும் இந்நூல் தற்செயலாக உருவாக்கப்பட்ட ஒர் ஆக்கம் அல்ல. இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களது வரலாறுகள் கிரமமாக எழுதப்பட வேண்டும் என்பது எமது திணைக்களத்தின் நீண்ட கால சமுதாய ஆசையாகும். இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஜனனதினக் கொண்டாட் டங்களும், மற்றும் சில சமய நிகழ்ச்சிகளும் மாவட்டங்கள் தோறும் இடம் பெற்றவேளைகளில் அவ்வவ் மாவட்ட முஸ்லிம்களின் வரலாறுகள் நூலுருப் பெற்றன. இவ்வகையில் களுத்துறை, அனுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்கள் எமது நூல் வரிசையில் முதலிடம் பிடித்துக் கொண்டுள்ளன.
இந்நூல், மாவட்ட அறிமுகம் என்ற ரீதியில் கையடக்கமாகவுள்ளது. எனினும் இதில் கூறப்படும் கருத்துக்கள் நிகழ்வுகள் என்பன தகுந்த வரலாற்று ஆதாரங்களுடனேயே குறிப்பிடப்ப்ட்டுள்ளன. அத்துடன் புள்ளிவிபர அநுபந் தங்கள் மாவட்ட வரைபடம் ஆகியவை வரலாற்று மாணவர்களுக்கும் ஆய்வு சாதனங்களாக அமையும் என்பது எனது துணிபு.
இந்நூல் மாத்தறை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் ചെi് அறிஞர் களாலேயே எழுதப்பட்டதாகும். ஆறு அறிஞர்கள் எமது வேண்டுகோளை விரும்பி ஏற்று ஏனைய தமது கடமைப்பளுகளின் மத்தியில் இதனை எழுதியுள் ளார்கள். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும், வாசிக்கும் பொழுது தகவல்களைச் சேகரிப்பதில் இவர்கள் அடைந்த சிரமங்களை வாசகர்கள் ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
முஸ்லிம்களைப் பற்றி ஆங்காங்கே தகவல்கள் தரும் நூல்களைப்பரிசோதிப்பது, அவற்றின் வரலாற்று உண்மைகளை நிச்சயப்படுத்தி அறிவது, ஏனைய தகவலுடன் அவற்றை ஒப்பிட்டுப்பார்ப்பது, அவற்றை அத்தியாயங்களாகப் பிரிப்பது இவை அத்தனையும் எளிதான காரியங்கள் அல்ல.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் ஒரு விசேட நிலையைப் பெறுகின்றார்கள். நாட்டின் தலைநகரத்திலிருந்து தொலை வில் அமைந்திருக்கும் மாத்தறை மாவட்டம் சிங்கள மக்களை மிக அடர்த்தியாகக் கொண்டஒரு பிரதேசமாகும். அத்தகைய மாவட்டத்தில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் நெருங்கிய சகவாசமும் புரிந்துணர்வும் கொண்டுள்ள அதே வேளையில் தமது இன, சமய, சமூக தனித்துவத்தை தளராது பேணிப் பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள். மேலும் அரபு அரபுத்தமிழ், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள
17 -س3

Page 11
இவர்கள், தமது இனத்தின் கருத்துக்கள், அபிலாசைகளை வெளிக்கொணரும் ஊடகமாகவும் இம்மொழிகளைக் கையாண்டிருக்கிறார்கள். இது மிகவும் வியக் கத்தக்க, பெருமைப்படத்தக்க விடயமாகும்.
இந்த நூலை நாம் வாசிக்கும் போது பல அதிசய நிகழ்வுகளை - பல வீரச்செயல்களை - சகல துறைகளிலும் தமது முத்திரையைப் பதித்து நிற்கும் பெரியார்களை, அறிஞர்களை இனம் கண்டு கொள்ள முடிகிறது.
இறுதியாக, இந்நூலின் ஆக்கத்திற்குப் பூரண வழிகாட்டியாக நின்ற எமது அமைச்சின் மேலதிகச் செயலாளர் அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களுக்கும் இந்நூலைத் தொகுத்தளித்த அல்ஹாஜ் எம். க"ம். எம். மஹறுப் அவர்களுக்கும் இதை வெளிக்கொண்டுவருவதற்குப் பல்வேறு வழிகளிலும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எமது திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யூ, எல். எம். ஹால்தீன்
பணிப்பாளர்
IS

EDITORIAL PREFACE
THIS persent work in Tamil, entitled the "Muslims of the Matara District, is the latest entrant to the series "Know Your District' projected and subsequently published, periodically, by the Department of Muslim Religious and Cultural Affairs. In this way, volumes have appeared, uniformly, on the districts of Kalutara, Anuradhapura and Matale. These volumes have recieved acceptance from the Muslims, for whom they were primarily intended, as well as from others. The Department believes that the lives, heritage and special characteristics of the Muslims living in various districts of Sri Lanka should be recorded and presented in an authoritive but palatable form.
This book deals with the Muslims of the Matara district, one of the three districts (the other two being the Galle and the Hambantota districts) of the Southern Province. Set in Ruhuna, far from the administrative capital of Colombo, the Muslims of the Matara district have developed special charateristics, while totally committed to Islam and its way of life, which have their life-style, vibrancy and adequacy. Also, the Muslims of Matara district have shown, in the most practical way, how a minority could co-operate whole-heartedly with the majority community, among whom they live, while yet maintaining their social, religious and ethnic identity.
Six scholars, all of them, household words in the realm of Islamic literary activity, have contributed to this work.
Dr. M. A. M. Shukri, sometime Head of Department of Arabic Studies at the University of Peradeniya and presently Director, Naleemiah Institute of Higher Studies, writes on the history of the Matara district. He discusses, preliminarily, the geography and wind systems which enabled the carrying out of the Arab sea-bourne trade in Asia, during the Middle Ages. He details the importance to the Arab trade of the sheltered bays of the Matara district, which included Welligama, originally called 'Walugama'. This, in turn, facilitated the Arab settlement in the Matara district. He cites historical sources for this view.
19

Page 12
Basing himself on the record of the travels of the Morroccan traveller and jurist, Ibn Battutta, who visited Sri Lanka in 1344, Dr. Shukri states that south of Sri Lanka had an established corps of Muslim traders. Ibn Battuta, noted that great Muslim merchants lived in Devinuwara, known to him as 'Dinawar'. The presence and, significance of Muslims in the Matara district are, also, vouch safed; by literary classics of Sri Lanka and other documentation of the Middle Age and subsequent times. For instance, the "Kokila Sandesaya' and the "Gira Sandesaya' refer to Muslim ladies as “yonviya”; they mention Muslim settlements at “Maha Welligama”, i.e. the present Welligama.
Coming back to Portuguese times, Dr. Shukriciting Dr.Abeysinha, records that, the Portuguese cadastral sheets, (i.e. 'tombo') mention for instance, a Muslim grove called “Rua dos Mouros” in Welligama. And that a large number of Muslims lived in the Bazaar area of Matara. The Dutch adopted a policy of constraint against the Muslims. For instance, in 1659, a Dutch decree prevented the Muslims of Matara and other areas, from leaving their settlements for trade outside those limits. In the course of time, Dutch policy softened. Governor Van Imhoff, in 1733, appointed Moor Commissioners. However, the riguors of Dutch administration made the Muslims move into such areas as Kirinde, Miella, Godapitiya.
Because of the littoral nature of the Matara district, the Muslims of this region have been influenced by the intellectual and spiritual backdrop of the Arabian mainland and outlying districts such as Haudramauth.
Mr. Mukthar A. Mohamed, who is an Islamic theologian in addition to having held senior posts in teaching and in the Government Publications Department, writes the chapter on Mosques, religious establishments. Arabic Madarasahs (Arabic colleges) and Muslim religious dignitaries, past and present. He discusses the settlement of Muslims in the Matara district and the setting up of mosques. In the Islamic world, mosques do not function solely as places for congregational worship. They are, also, social centres, teaching establishments, meeting and adjudicatory places of the urban or rural elders, and centres for the distribution of charity. This statement is true of the Matara districts, as well. Mr. Mukthar A. Mohamed gives a
2O

succinct history of the principal mosques in the district, including the Welligama mosque, the Palathady mosques, Muhiyuddin Grand mosque, Meeran Sahib mosque, Buhary mosque, Welipitiya Jumma mosque, Kapuwatte Jumma mosque, Matara Kadai Veediya (Bazaar) Grand mosque, Sheikh Madar mosque, Matara Muhiyuddin mosque, Rifaiyy mosque, Dickwella Jumma mosque, Muhiyuddin Jumma mosque, Gandara mosque, Miyella Muhiyuddin Jumma mosque, Kirinde Jumma mosque, Horagoda Jumma mosque, Kapthura mosque and Hasan Husain mosque. The author is careful to source all his information about mosques. He also details some of the social activities of mosques. Regarding Arabic colleges (Islamic theological schools), Mr. Mohamed gives a detailed history of the Madrasat-ul Bari, at Welligama, which, established in 1884, is held to be the first Arabic college, to be institutionally set up in Sri Lanka. Besides, he deals with other Arabic colleges. He gives biographical sketches of Muslim dignitaries, either established there or visiting, Matara district. Matters concerned with Tariq (Sufi fraternities) receive a careful, balanced apprisal from Mr. Mohamed. Throughout the discussion of his subject matter, he does not forget to review the social dimension of the Muslims of the Matara district. گفته
*
The chapter on the arts and Literature of the Muslims of Matara comes from the pen of M. H. M. Shums. Mr. Shums wears many hats. He has been successively (and sometimes, concurrently), a trained teacher, a writer, editor and publisher of magazines in Tamil, critic and short-story writer in Tamil and rather startingly, a writer and singer of Islamic songs on the Muslim Service of SLBC. Hence, he brings to his subject, a multi-facetted experience.
Mr. Shums discusses the celebratory socio-religious incidents of the Muslims of Matara, with emphasis on their cultural affiliations. These incidents are important in the lives and work of the Muslims of the region. He writes, with particular reference, to the well-known kandoori (hortatory celebrations) in Porwa, Godapitiya.
He goes on to discuss the art of 'kalikambu' (or stick performance). In this art, the exponents, practice feints and thrusts with their sticks, in rotatory movements. Meanwhile, hortatory songs are recited. Shums gives a detailed analysis of this art. He, also, details, musical evenings and their typolology of performance. There is specific mention of "baith' or religious songs in Arabic, sung in tune.
2.

Page 13
The bulk of Shums' chapter is concerned with the literary works of the Muslims of the Matara district. He begins with the description of the life and work of Nooh Lebbe Alim, who wrote the Arabic-Tamil work ‘Ramadhan Maalai” in Welligama. Born in 1855, he lived till 1935. Jamaliya Syed Yasin Moulana wrote many works in ArabicTamil and Tamil. He was born in Dickwella in 1889. Among his principal works was in Arabic/Arabic-Tamil dictionary. In the course of time, the Muslim scholars of the Matara district went over from Arabic to Tamil, as regards their writing. Porwa Sultan Tamby Pavalar, Matara Kasim Pulavar, Dickwella Asana Marikar Omar Lebbe, Matara Abdul Aziz Marikar, Weligama Kottegoda Uvais Pulavar, were among those prominent in the last years of the 19th and the first phase of the 20th centuries. Sultan Tamby Pavalar became famous with his "Arana Muhammadar Karana Kummi’. Kasim Pulavar, who died in 1956, wrote effectively and extensively in Tamil and Sinhala.
There was a flourishing of literary activity among the Muslims of Matara, in the 1950s, consequent to the increase of members of the teaching profession. The literary men of those days are still active in the production of literature. In the 1960s toothere was a resurgence in literature, mainly in the fields of short story and poetry in Tamil. Recently, there is increased interest and activity among the Muslims of Matara district in writing in Sinhala.
The chapter on education and educational activities of the Muslims of the Matara district, is contributed by Mr. M. H. L. A. A. C. Noohu, a specialist in Arabic studies and who counts decades of teaching experience in this field. This subject matter deserves statistical formatting and Mr. Noohu, gives this in ample measure. He connects the educational efforts of the Muslims of the Matara district with the resurgence in educational thinking and practice of the Muslims of Sri Lanka, in the last phase of the nineteenth century. In passing, he touches on the education of the Matara district from early times to the present day. He discusses, the educational situation during the Protuguese, the Dutch and British times. He points out that the Tamil medium Quran school set up in Kapuwatte, Welligama in 1867, was the first step in the establishment of modern education in the Matara district and, indeed, in the Southern Province.
Mr. Noohu notes the role played by local as well as South Indian religious dignitaries in the early educational development of the Southern province. He notes, in some detail, the efforts of the people,
22

of this region. For instance, the Welligama Muslim Education Society came into being in 1926. Subsequent to the Donoughmore Constitution, the Executive Committee on Education, of the State Council, under the gentle persuasion, of its Muslim members, began to establish Muslim schools. So, in 1938, Swabasha schools were set up in Gandara, Miella and Welipitiya and in 1942, in Kottewagoda in Matara. The Matara district has the honour of having had the first Muslim trained teacher. He was Mr. T. S. Abdul Lathif, who emerged as a trained teacher in 1925. Later, Mr. Abdul Lathif went on to become a school principal. The Matara district had, also, the distinction of sending consistently the largest number of trainees to the Alutgama Muslim Training College, established in 1941. Considerable number of Muslims from Matara district, received appointments as Arabic teachers, too.
Mr. Noohu indicates that Muslim students of Matara district in early 1960s were large in number in GCE (OL) and (AL) classes and University Entrance classes. He states that this enthusiasm began to taper of in the mid-1960s and gives his reasons. He argues for a more pragmatic policy in regard to University admissions, seeing that the number of Muslim entrants to University is not satisfactory.
Mr. Noohu records the present state of education. There are 14 Muslim schools, out of 405 schools in the Matara district. These breakdown into I National school and 6 Maha Vidyalayas. The rest are primary schools. The number of Muslim students is 4355. Mr. Noohu, states the present drift to Sinhala-medium education. There are in the district, 4355 Tamil medium and 776 Sinhala medium students. In 1992, 26 Muslim students had the requirements to enter University; but only 5 received admission, and that too in Arts and Commerce streams. The number of Muslim teachers in the Matara district is 257. They can be classified into; graduate teachers (32); trained graduates (4); trained teachers (157); moulavi teachers (7); uncertificated teachers (7); teacher trainees (44); the rest (6). Mr. Noohu discusses the reasons for the rise of the number of drop-outs.
12 Muslim schools in the Matara district are discussed in
considerable detail by Mr. Noohu. In addition, he discusses the types. and scope of non-formal education in the Matara district. Notes are provided by him at the end of his chapter.
23

Page 14
A more traditional view of the Matara district is presented by Mr. Dickwella Safuan (It is perhaps, part of the tradition of the Matara district, that literary men prefix their birth place to their names). Mr. Safuan, a man of letters well known for his innovative contributions, writes that chapter on the life, the customs and the culture of the Muslims of the Matara district. He prefaces his chaper with a discussion of the nature of the settlement of the Muslims in the Matara district, in the course of which, he says that the cultures of South India, Persia, Kerala, Java, North India, Bengal, Yemen and Hadramauth, have influenced, the customs of the Matara Muslims. He traces the role and influence of Tariq such as Rifaiyya, Jiffriyya, SaZuliyya in the cultural landscape of the Matara district. Mr. Safuan shows the changing conception in female cducation. He gives the reasons for the existence of the practice of calligraphy in Arabic. While discussing the role of mosques, he draws attention to the ruleenforcing-duty of the mosque trustees. The mosque trustees, as surrogates for the Muslim community, used to enforce a variety of Sancations on those who broke religious or social customs. The recalcitrants and the rule-breaking accepted these punishments' voluntarily.
Mr. Safuan gives close descriptions of the cultural activities of the Mulsims of the Matara district. One of them is “kolattam (or ritual play with Sticks). These players are always accompanied by reciters of Specially composed Tamil (or Arabic) poems. Another, activity is 'silambam' (or quarter-staff fighting). This is both a cultural display as well as a martial art. Yet another art, is singing special songs called “padam at house functions.
Mr. Safuan devotes substantial space to the discussion of Muslim folk poetry as well as metaphor-laden common speech. He notes the presence of large number of Sinhala words in this Tamil-based speech. He details some of the articles of male and female wear, which were in Vogue, long ago.
The normal incidents bf life, such as birth ceremonies, wedding ceremonies, circumscision and puberty procedures and death rituals, are given in exuberant detail. Since some of these ceremonies are fast fading in the world of today, Mr. Safuan's description brings back a world lost and gone. He devotes considerable space to the description
24

of "kandoori', celebratory occasions in which splendid meals are served
as part of the process. Mr. Safuan's attention is, also, engaged by the
celebrations connected with Islamic festivals, as well as during the
fasting month of Ramadhan and the Meelad un Nabi. While Safuan is conscious of the role of these functions as agents of communityintegration, he does not fail to point out that excessive expenditure on these might be counterproductive. At the end of his chapter, Mr. Safuan Sources his viewpoints.
The chapter on the economic status and occupation of the Muslim of the Matara district is from the pen of Mr. S. I. M. Hamza, at present, attached to the National Institute of Education. Before entering his subject, he presents a discussion of the geographical features of the Matara district, as conducive to his analysis later in his chapter. According to the Census of 981, the Muslims numbered l 6,744 out of a total population of the Matara district of 644,000. Thus the Muslims of the Matara district (who live in eleven specified areas) were 2.6% of the total population of that district.
Hamza discusses the development of the gainful occupations of the Muslims, throughout the centuries. He emphasises the role of the carrying trade, (as regards local produce) of the Muslims of the Matara district, beyond that district to other areas. He assesses the changes in occupations, such as trade, agriculture, industry, Government service, medicine, animal husbandry and fishing. He estimates trade and commerce, including mobile sales, as 40% of the occupations of the Mulsims of the Matara district. Hamza gives the reasons for the weakening of fishing as an occupation among the Muslims. He analyses the impact of land redistribution among the Muslims. He discusses the rise of new occupations such as poultryfarming and apparel-oriented industries. Hamza, gives a breakdown of these occupations, statistically, relating them to each of the settlements of the Muslims of the Matara district. He provides maps to reinforce his statements.
This book is, naturally, the result of collective effort. All the contributors are Matara born-and-bred and have given of their cooperation most willingly. Mr. S. H. M. Jameel, the Additional Secretary, Ministry of Cultural and Religious Affairs has been at the beginning, middle and end of this publication. He has aided,
25

Page 15
encouraged, guided, counselled and Supported all those engaged in this project; he has even carried, at times the manuscripts from place to place. Mr. U. L. M. Haldeen, the Director of the Department of Muslim Relgious and Cultural Affairs, has placed all the resources of the Department at the services of this project. He has been most Supportive as have been all members of the Department, including staff officers, officers of other grades, Stenographers, typists and messengers and officers aides.
M. M. M. Mahroof
26

வரலாற்றுப் பாரம்பரியம்
கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி
இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழ்கின்றனர். சில மாவட்டங்களில் அவர்களது குடியேற்றம் செறிந்தும் வேறு சில மாவட்டங் களில் பரந்தும் காணப்படுகின்றது. முஸ்லிம்களின் இத்தகைய குடிசனப் பரம் பலுக்கும் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த அவர்களது வணிகக் குடியேற்றங்கள், சில வரலாற்றுக் காரணங்களால் நிகழ்ந்த குடிபெயர்ப்புகள் ஆகியவற்றிற்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
கீழைத்தேய நாடுகளுக்கும் மேற்குலகிற்கும் இடையில் பாரசீக வளை குடாவினூடாக இந்து சமுத்திரத்தை மையமாக வைத்து நடைபெற்ற வணிகத் துள், இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, ஆரம்பத்தில் பாரசீகரும், அவர்களைத் தொடர்ந்து அராபியரும் முக்கிய இடத்தை வகித்தனர். பாரசீக வளைகுடாவிற்கும், சீனாவிற்குமிடையில் அமைந்திருந்த இந்த வணிகப் பாதை யில் துறைமுகங்கள் வணிக மத்திய தலங்களாக விளங்கின. இந்த வணிக மத்திய நிலையங்களின் அமைப்பு, முக்கியத்துவம் என்பனவற்றை இந்து சமுத்திரத்தின் காற்றுவீசும் முறையே (Wind System) நிர்ணயித்தது. உதாரணமாது பாரசீக வளைகுடாவிலிருந்து சுமாத்திராவிற்கு ஒரு காற்றைப் பயன்படுத்திப் பயணத்தை மேற்கொள்வது சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. எனவே, இக்கப்பல்கள் தென் இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளிலுள்ள துறைமுகங்களிலோ அல்லது இலங்கைக் கரையிலுள்ள துறைமுகங்களிலோ தரித்துச் செல்ல வேண்டிய அவசிய நிலை காணப்பட்டது. இத்துறைமுகப் பிரதேசங்களில் வணிகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை, பாதுகாப்பான துறைமுகங்களாக இவை காணப் பட்டமை, உணவும், குடிநீரும் காணப்பட்டமை, கப்பல்களைப் பழுதுபார்ப் பதற்கான வசதிகள் ஆகியன இத்துறைமுகங்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோர் பங்குபற்றிய இந்து சமுத்திர வணிகத்தில் இலங்கையின் வடகிழக்கு, மேற்கு, தெற்குக் கரையோரங்களில் காணப்பட்ட துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. திருகோணமலை, மன்னார், புத்தளம், கற்பிட்டி, கொழும்பு, பேருவளை, காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற துறைமுக நகரங்கள் கால வளர்ச்சியில் கணிசமான முஸ்லிம் வணிகக் குடியேற்ற நகரங்களாக வளர்ச்சியடைந்தன. இலங்கையில் தெற்குக் கரையோரப் பகுதியானது காலி போன்ற இயற்கைத் துறைமுகங்களை மட்டுமன்றி பல பாதுகாப்பான குடாக்களையும் (Sheltered Bays) கடல்சார்ந்த உட்பிரதேசங்களையும் (Inlets) கொண்டுள்ளது. இந்த அமைப்பைப் பெற்றிருந்த தெற்குக் கரையிலுள்ள " நில்வளாதித்த " என சிங்கள இதிகாச வரலாற்று நூல்களில் அழைக்கப்பட்ட மாத்தறை, " வலுகாம் " என அழைக்கப் பட்ட வெலிகாமம், “ பீமாதித்த " எனப் பெயர் பெற்ற பெந்தொட்ட ஆகிய பிரதேசங்கள் முக்கிய துறைமுகக் குடியேற்ற நகரங்களாக (Port Settlements) விளங்கின.
27

Page 16
இலங்கையில் கி. பி. ஏழாம் நூற்றாண்டளவில் கணிசமான அரபுக் குடியேற் றங்கள் காணப்பட்டதை வரலாற்றாசிரியர் அல் - பலாஸாரியின் குறிப்புக்கள் உட்பட பல வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்குடியேற் றங்கள் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக துறைமுகங்களை அணித்தாகக் கொண்டே அமைந்திருந்தன. இந்தக் கரையோரத் துறைமுகங்களைப் பொறுத்த ளவில் ஆரம்பகாலப் பிரிவில் மாந்தை, திருகோணமலை போன்ற துறைமுகங் களும் கொழும்பு, பேருவளை போன்ற மேற்குக் கரையோரத் துறைமுகங்களும் முக்கிய இடத்தை வகித்தமையை வரலாற்று ஆவணங்களும் சிலாசனக் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் தென் மாகாணத்தைப் பொறுத் தளவில் குறிப்பாக மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆரம்பக் குடி யேற்றங்கள் எக்காலப்பிரிவில் இடம்பெற்றன என உறுதியாக நிச்சயித்துக் கூறுவதற்கான வரலாற்று ஆவணங்களோ, சிலாசன ஆதாரங்களோ காணப் படாமை, இம்மாவட்டத்தின் வரலாற்றை ஆராயும் போது ஒரு வரலாற்று ஆய்வாளன் எதிர்நோக்கும் முதலாவது இடர்ப்பாடாகும். இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிலாசனங்கள் அனைத்தும் காலியில் 1926 ல் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழிச் சிலாவனத்தைத் தவிர, வடமேல், வடகீழ், மத்திய மாகாணத்திலும், கொழும்பிலும் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் கொண்ட ஆவணங்களை நாம் பெறக் கூடியதாக உள்ளது. மாத்தறை, தேவந்துறை, வெலிகாமம் துறைமுகப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இம்மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய, ஆரம்ப குடியிருப்புகள் பற்றிய பல உண்மைகளைத் தெரியப்படுத்தும் வரலாற்றுத் தகவல்களை நாம் பெறக் கூடியதாக இருக்கும். இலங்கையின் ஏனைய மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிலாசனங்கள் கூட திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவன்றி, சிலரால் அவ்வப்போது யதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டவையேயாகும் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
இலங்கை வரலாற்றின் அநுராதபுர காலப் பிரிவிலேயே ஏனைய துறைமுக நகரங்களைப் போன்று தென் மாகாண துறைமுக நகரங்களான காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற இடங்களில் இஸ்லாத்துக்கு முந்தைய அரபுக் குடியேற்றங்கள் இடம்பெற்றிருத்தல் வேண்டும் என நாம் அனுமானித்தல் தவறன்று. ஆனால் இந்தக் குடியேற்றங்கள் அக்காலப் பிரிவில் மாந்தை, திருகோணமலை, கொழும்பு போன்று தேசிய துறைமுகங்களாக வளர்ச்சியடையவில்லை. அரபு வணிகர்கள் இலங்கையிலிருந்து பெற்றுக் கொண்ட வணிகப் பொருட்களில் “ கறுவா " மிக முக்கிய இடம் பெற்றதை அல் - இஸ்தக்ரி, இப்னு ஷஹ்ரயார் போன்ற அறபுப் புவியியலாளர்களின் குறிப்புகள் உணர்த்துகின்றன. மாத்தறை மாவட்டம் கறுவா விளைச்சலுக்கு மிகப் பெயர் பெற்று விளங்கிய பிரதேசங்களுள் ஒன்றாகும். எனவே, கறுவா, பாக்கு போன்றவற்றை முக்கிய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களாக இவை விளங்கியிருக்கலாம் என நாம் அனுமானிக்க இடமுண்டு.
கி. பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை அராபிய வணிகத்தில் வடமேற்கு, வடகிழக்கு, மேற்குக் கரையைச் சேர்ந்த துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. 13 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பொலநறுவை
28

ராஜதானியின் வீழ்ச்சியோடு இலங்கையின் அரசியல் தலைநகரம் தீவின் தென்மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்த மாற்றத்துடன் கடல் வணிகத்தின் மத்திய நிலையும் வங்காள விரிகுடாவிலிருந்து அராபியக் கடல் பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவே 13 ஆம் நூற்றாண் டளவில் இலங்கையின் அரசர்கள் தென்மேற்குப் பிரதேசத்தைச் சார்ந்த துறைமுகங்களால் கவரப்படலாயினர். இக்காலப் பிரிவிலேயே காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற தென் மாகாணக் கடல் துறைமுக நரகங்களில் (Sea Ports) அரபு வணிகர்கள் பெருமளவு குடியேற ஆரம்பித்தனர். இக்காலப்பிரிவில் சீனாவிலிருந்து பாரசீக வளைகுடா வரை பயணம் செய்த புகழ் பெற்ற பயணி மார்க்கோபோலோ இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெருமளவு அரபு வணிகர்கள் காணப் பட்டதாகக் குறிப்பிடுகின்றார். தென் மாகாணத்தின் முக்கிய துறைமுகமான காலித் துறைமுகத்துடன் இணைந்த துறைமுக நகரங்களாக வெலிகாமம், மாத்தறை, தெவுந்தறை போன்ற சிறு துறைமுகங்கள் விளங்கியிருத்தல் வேண்டும். உண்மையில் நோக்கும்போது மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்பது காலி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் ஆராயப்படுதல் எவ்வகையிலும் சாத்தியமன்று. ஏனெனில் தென்னிலங்கையின் துறைமுக நகரங்கள் ஒன்றோடொன்று இணைந்த நிலையிலேயே செயல்பட்டன. காலியில் காணப்பட்ட மிகச் செறிந்த முஸ்லிம் குடியேற்றத்திலிருந்து அவ்வப் போது பெயர்ந்து, நகர்ந்த மக்களின் குடியேற்றங்களாகவே வெலிகாமம், மாத்தறை ஆகிய குடியேற்றங்களை நாம் நோக்குதல் வேண்டும். பொதுவாக, மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு, தென் மாகாண முஸ்லிம்களின் வரலாற்றின் பின்னணியில் நோக்கப்படுவதே அர்த்தபூர்வமானதும், தர்க்கரீதியானதும் " வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து சாத்தியமானதுமாகும்.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு, 13 ஆம் நூற்றாண்டளவிலேயே மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஆதாரபூர்வமான ஆவண ரீதியான குறிப்புக்களை நாம் பெற முடிகின்றது. 1344 ல் இலங்கையைத் தரிசித்த இப்னு பதுரதாவின் பிரயாணக் குறிப்புகள் இவ்விடயத்தில் மிக முக்கிய வரலாற்று மூலாதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இப்னு பதூதாவின் குறிப்புகள் தெவிநுவர என அழைக்கப்படும் தேவந்துறை முஸ்லிம்களின் மிக முக்கிய வணிகக் குடியேற்றமாக விளங்கியதை உணர்த்துகின்றன. தேவந்துறையை "தீனவார்" எனக் குறிப்பிடும் இப்னு பதூதா அங்கு அரபு வணிகர்கள் நிறையக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். காலித் துறைமுகத்திலும் முஸ்லிம்களின் வணிகக் கப்பல்கள் நிறையக் காணப்பட்டதாகவும் காலியில்தான் இப்றாஹீம் என்னும் பெயருடைய கப்பல் தலைவரொருவரைச் சந்தித்ததாகவும் அவரது விருந்தினராகத் தான் தங்கியதாகவும் இப்னு பதூதா மேலும் குறிப்பிடுகின்றார். தனது பிரயாண நூலில் காலியைப் பற்றிக் குறிப்பிடும் இப்னு பதூதா அதனைத் தொடர்ந்து ஒரு முக்கிய வணிகத் துறைமுகமாக தேவந்துறையைக் குறிப்பிடுவ துடன், அவரது பிரயாணக் குறிப்புகளில் வெலிகாமம், மாத்தறை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அவரின் குறிப்புகள் மூலம் காலிக்கு அடுத்து மாத்தறை,
29

Page 17
வெலிகாமத்தை விட மிக முக்கிய துறைமுக நகராக தேவந்துறை விளங்கியதாக நாம் அனுமானிக்க முடிகிறது. அத்துடன் இப்னு பதூதா தேவந்துறை மிகப் பெரிய நகர் ("மதீன அளிம்") எனக் குறிப்பிடுவதிலிருந்து, தேவந்துறையானது கிழக்கில் மாத்தறையையும், மேற்கில் தற்போதைய திக்குவல்லைப் பிரதேசத்தையும் உள்ளடக்கிய ஒரு விசாலமான அரபுக் குடியேற்றமாக விளங்கியிருக்கலாம் என நாம் கருத இடமுள்ளது. தேவந்துறையில் வாவுஹ என்னுமிடத்தில் ஒருகாலப் பிரிவில் முஸ்லிம்களின் மையவாடி ஒன்று அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணப்படுகின்றன. முற்றிலும் சிங்களக் குடியேற்றமாக இன்று உள்ள வாவுஹ கிராமத்தில் ஒரு வயலுக்கு அண்மையில் இரண்டு மீஸான் களை இன்னும் காணக்கூடியதாக உள்ளது. இம்மீஸான் கற்கள் முற்றிலும் மண்ணில் புகையுண்டு, மிகச் சிறிய பகுதியே வெளிக்குப் புலப்படுவதால், அவற்றின் காலப்பிரிவ நிர்ணயிக்கத் துணை புரியும் வகையில் அதில் ஏதாவது குறிப்புக்கள் பதியப் பட்டுள்ளனவா என நிச்சயிக்க முடியாமல் உள்ளது. தேவந்துறை விஷ்ணு தேவாலயத்தில் ஒரு பகுதியில் அடித்தளங்களை சீர்படுத்தும் அகழ்வுப் பணிகளின் போது ஒமான் நாட்டைச் சேர்ந்த சில அரபு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது புதைபொருள் ஆய்வாளர் நாயகமாக விளங்கிய பேராசிரியர் பரண விதானவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்த நாணயங்கள் அனுராதபுரத்திலுள்ள தொல்பொருள் நூதனசாலையில் உள்ளன. ஆனால் இந்நாணயங்கள் பற்றிய ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படாததால் இவற்றின் காலப்பிரிவை நிர்ணயிக்க முடியாதுள்ளது. ஆனால் ஒமான் பிரதேசத்துடனான வணிகம் இத்துறைமுகத்தினூடே நடைபெற்றதற்கான சான்றாக இது விளங்கு கின்றது. மாந்தைத் துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற திட்டமிடப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தேவந்துறை, வெலிகாமம், காலி ஆகிய துறைமுகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டால் அரபுச் சிலாசங்கள், நாணயங் கள், மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்த மட்பாண்டங்களைக் கண்டுபிடிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. மாந்தைத் துறைமுகப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மட்பாண்டங்களுக்கும் பாரசீக வளைகுடாப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்டாண்டங்களுக்குமிடையில் ஒருமைப்பாடுகள் காணப்படுவதை அடிப்படையாக வைத்து மாந்தையின் பாரசீக வளைகுடாத் தொடர்பு ஆர்தர் பிரிகட் (Arther Prickatt) போன்ற ஆய்வாளர்களால் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது போன்று மாத்தறை மாவட்டத் துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்படும் அகழ்வாய்வு ஆதாரங்ளின் அடிப்படையில் இத்துறைமுகங்களுக்கும் செங்கடல் பிரதேச துறை முகங்களான யெமன், ஏடன் போன்ற துறைமுகங்களுக்குமிடையிலான வணிகத்
தொடர்பை உறுதிப்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளன.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை, தென் மாகாண முஸ்லிம் களின் வரலாற்றின் பின்னணியில் ஆராய்வதற்கும், 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் இப்பிரதேச வணிக நிலை, அதன் தன்மை பற்றி விளங்குவதற்கும் துணைபுரியும் முக்கிய மூலாதாரங்களுள் ஒன்று 1911 ஆம் ஆண்டு காலியில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழிச் சிலாசனமாகும். 1410 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து வந்த கப்பல் தளபதியான செங்ஹோ (Cheng Ho) வினால் பொருத்தப்பட்ட இச்சிலாசனம்
30

பாரசீகம், தமிழ், சீனம் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளது. இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்ட இக்காலப் பிரிவில் சோழ மண்டலக் கரையை ( Coromendal Coast ) ஒட்டி நடை பெற்ற வணிகத்தில் தமிழ் மொழி மிகமுக்கிய இடம்பெற்றதை இச்சிலா சனம் உறுதிப்படுத்துகின்றது. இச்சிலாசனத்தில் காணப்படும் " தேனா வரை - நயினார் " என்னும் பதம் தெவிந்துறைக் கடவுளைக் ( God of Devinuwara) குறிப்பிடுவதாகப் பேராசிரியர் பரணவிதான அபிப்பிராயப் படுகிறார் சீனாவரை பரந்திருந்த விஜய வணிக ஆதிபத்தியத்தில் தமிழ்மொழி வகித்த முக்கிய இடம் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோழ மண்டலக்
கரையிலுள்ள " மஃபர் ” பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும், கலாசாரப் பண்பாட்டு மொழியாகவும்கொள்ளும் வரலாற்றுச் குழ்நிலைய்ை உருவாக்கியது. இந்து சமுத்திர வணிகச் சொற்களில் கணிசமான அரபு, பாரசீக சொற்கள் இடம்பெற்றன. சிங்கள மொழியில் புடவையைக் குறிக்கும் " ரெதி " என்னும் சொல் " ரிதா " என்னும் அரபுச் சொல்லின் திரிபாக இருக்கலாம். சிங்கள மொழியில் பாரம்பரியமாக " வஸ்தர ” என்ற சொல்லே ஆடையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. சட்டையைக் குறிக்கும் திரிபாகும். தென்மாகாணத்தில் குறிப்பாக மாத்தறை மாவட்டத்தில் மிதப் பரவலாக
d y y
கமிஸ் " என்னும் சொல் " கமீஸ் " என்னும் அரபுச் சொல்லின்
வழக்கிலுள்ள சிங்களப் பெயர்களில் ஒன்றான “ ஸஹபந்து " என்னும் சிங்களப் பெயர் " ஷாஹ் பந்தர் ” என்னும் பாரசீகப் பெயரின் திரிபாகும் என்ற விடயமும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். பாரசீக மொழியில் அரசன் அல்லது தலைவன் எனப் பொருள்படும், “ பந்தர் " என்ற தம் துறைமுகத்தைக் குறிக்கும். எனவே, " ஷாஹ் பந்தர் " இது ஆரம்பத்தில் இப்பிரதேசங்களில் துறைமுகத்திற்குப் பொறுப்பாயுள்ள அதிகாரிகளைக் குறிக்கப்பயன்பட்ட ஒரு சொல்லாக வழக்கிலிருந்து, பிற்காலத்தில்
எனில் துறைமுகத் தலைவன் என்பது கருத்தாகும்.
அதனோடு தொடர்புடைய சிங்கள அதிகாரிகளைக் குறிக்கப் பயன்பட்டிருக்கலாம்.
கி. பி. 15 ஆம் நூற்றாண்டளவில் மாத்தறை மாவட்டத்தில் குறிப்பாக வெலிகாமம் பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பராக்கிரமபாகு மன்னனின் காலப் பிரிவில் (1440 - 1450) இயற்றப்பட்ட
“ ஸந்தேஸ் காவிய என்னும் தூது இலக்கியங்களில் காணப்படுகின்றன.
" கோகில ஸந்தேஸய " " கிரா ஸந்தேஸய " ஆகிய சிங்களத் தூதுப்
yy
பிரபந்தங்கள் " யொன்வியா " என்னும் சோனகப் பெண்கள் பற்றியும், " மஹா
வெலிகம ” (வெலிகாமம்) முஸ்லிம் குடியேற்றம் பற்றியும் குறிப்பிடுகின்றன.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களுக்கும், கீழக்கரை, காயல்பட்டணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தென்னிந்திய முஸ்லிம்களுக்குமிடையில் வணிக
ரீதியாகவும், கலாசார பண்பாட்டு ரீதியாகவும் நிலவிய தொடர்புகளும், அதனடியாக
31

Page 18
ஏற்பட்ட கலாசார பண்பாட்டுத் தாக்கமும் மிக ஆழமான ஆய்வினை வேண்டி நிற்கும் ஒரு துறையாகும். இந்து சமுத்திரத்தில் இலங்கையில் அரபுக் குடியேற்றங்கள் தோன்றிய காலப் பிரிவிலேயே தென் இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான மலபார் பிரதேசத்திலும், கிழக்குக் கரையான மஃபர் பிரதேசத்திலும் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன. இப்பிரதேசத்தின் பிரதான அரபு வணிகக் குடியேற்றமாக காயல்பட்டணம் விளங்கியது. சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய வணிக மத்திய தளமாக காயல்பட்டணம் வளர்ச்சியடைந்தது. பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டு களில் தென் இந்திய முஸ்லிம் வணிகர்கள் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர். கி. பி. 1505 ஆம் ஆண்டு நிகழ்ந்த போர்த்துகேயரின் வருகையோடு இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய உலக்குமிடையிலான கலாசார, பண்பாட்டுத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை முஸ்லிம் களுக்கும், தென் இந்திய முஸ்லிம்களுக்குமிடையிலான இறுக்கமான கலாசார, பண்பாட்டுத் தொடர்பே இலங்கை முஸ்லிம்களை கலாசார சூன்ய நிலையிலிருந்து பாதுகாத்தது.
கி.பி. 1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகை நிகழ்ந்த காலப் பிரிவில் இலங்கையின் தென், தென்மேற்குக் கரைப் பகுதிகளில் கொழும்பு, களுத்துறை, பேருவளை, அளுத்கமை, காலி, வெலிகமை, மாத்தறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் பரவலாகக் காணப்பட்டதை போத்துக்கேய வரலாற்று ஆவணங் கள் மூலமாக நாம் அறியமுடிவதை கலாநிதி டீ. பீ. அபயசிங்ஹ " போர்த்துக்கேயர் காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம்கள் " என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய முனையும் ஒருவர் இரண்டு முக்கிய இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக கலாநிதி அபயசிங்ஹ கருதுகின்றார். சிங்களவர்களுக்கு y ($$ ராஜவலிய ”போன்ற வரலாற்று இதிகாச நூல்கள்
* மஹாவம்ச காணப்படுகின்றன. தமிழர்களின் வரலாற்றை அறியத் துணை புரியும் " யாழ்ப்பாண வைபவ மாலை " தமிழ் மக்களுக்கு உள்ளது. ஆனால் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புடைய இத்தகைய ஒரு வரலாற்று இதிகாஸ் நூல் காணப்படவில்லை. அடுத்து இக்காலப் பிரிவு முஸ்லிம்களின் வரலாறு பற்றி
சூலவம்ச
அறிவதற்கு அவர்களின் பரம வைரிகளாக விளங்கிய போர்த்துக்கேயர்களின் ஆவணங்களிலேயே நாம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இது மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுக்கும் பொருந்தும் ஓர் உண்மையாகும். கி. பி. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய முஸ்லிம்கள் காரணமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை தெற்குப் பிரதேசத்தில் குறிப்பாக பேருவளை, அளுத்கமை, காலி, வெலிகம, மாத்தறைப் பகுதிகளில் அதிகரித்ததாகவும், இப்பகுதிகளில் கணிசமான முஸ்லிம்குடியேற்றங்கள் செறிந்து காணப்பட்டதையும் போத்துக்கேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலப் பிரிவிலேயே முஸ்லிம்களை கடல் வணிகத்தோடு தொடர்புபடுத்தும் * மரக்கல ” "ஹம்பயோ " போன்ற பதங்கள் சிங்களப் பிரதேசங்களில் குறிப்பாக, மாத்தறை
3.

மாவட்டத்தில் பரவலாகப் பயன்பட்டிருத்தல் வேண்டும் என நாம் அனு மானிக்கலாம். சார்ல்ஸ் கார்டர் (Charles Carter) தனது சிங்கள-ஆங்கில
அகராதியில் "ஹம்பங்காரய ' தென்னிந்திய முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.
என்ற பதம் சிங்களப் பிரதேசங்களில் குடியேறிய
ஹம்பயோ என்ற பதம் “ஹம்பன் " என்ற சொல்லினடியாகப் பெறப்பட்டதாகும். * ஹம்பன் "அல்லது "சம்பன்” (Champana) என்பது சிறு கப்பலைக் குறித்தது. ஸோரத தேரர் தனது"ஸ"மங்கல ஸப்தகோஷய' (Sumangala Sapdhakoshaya) என்னும் அகராதியில் "மரக்கல ” என்ற பதம் மாலுமியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார். மாத்தறை மாவட்டத்தில் ஒரு காலப் பிரிவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட “ மரைக்காயர் " என்ற பதமும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில் மாத்தறை மாவட்டத்தில் பலம்பெற்று விளங்கிய முஸ்லிம்கள் வெலிகமவில் தங்களுக்கென உரிய விதிகளைக் கொண்டிருந்ததாகவும், மாத்தறை நகரில் அவர்கள் செறிந்து வாழ்ந்ததாகவும் (56). TiGursil) Lunsfusrif 56rg Temporal and Spiritual Conquest Of Ceylon என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். இக்காலப் பிரிவில் மன்னார்ப் பகுதியில் தென்னிந்திய முஸ்லிம்கள் முத்து வியாபாரத்தில் ஈடுபட்டதற்கான வரலாற் றாதாரங்கள் உள்ளன. இந்தத் தென்னிந்திய வியாபாரிகள் தென்மேற்குப் பிரதேச முஸ்லிம்களுடனும் தொடர்பு கொண்டு செயல்பட்டிருத்தல் வேண்டும் என்ற அனுமானத்திற்கு இடமுள்ளது. போர்த்துக்கேயர் காலப் பிரிவில் ம்பத்தில் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டு வியாப்ாரத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் மாடுகளைப் பயன்படுத்தி அவற்றில் கரை நாட்டின் விளைபொருட்களை உள்நாட்டு பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அப்பகுதியில் காணப்படும் விளைபொருட்களுடன் பண்டமாற்றுச் செய்தனர். கரைநாட்டின் உப்பு, கருவாடு ஆகிய பொருட்களை எடுத்துச்சென்று உள்நாட்டிலிருந்து வெற்றிலை, அரிசி, வாசனைத் திரவியங்கள், பாக்கு ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டனர். போர்த்துக்கேய ஆட்சியின் ஆரம்பக் காலப் பிரிவில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வணிக முறை பற்றிய இக்குறிப்புகள், போர்த்துக்கேய ஆவணங்களான "தோம்பு” களில் காணப்படுகின்றன. துறைமுக நகரங்களான மாத்தறை, வெலிகாமம், தேவந்துறை போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவசாய நிலங்களைப் பெற்றிருந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப் படவில்லை. ஆனால் உள்நாட்டுப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. போர்த்துக்கேய ஆட்சியின் ஆரம்பத்தில் அவர்கள் தங்களது ஆட்சியை இந்து சமுத்திரத்தில் பலப்படுத்திக் கொள்ளும் வரை முஸ்லிம்களைப் பொறுத்தளவில் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை. ஆனால், 1517 ஆம் ஆண்டளவில் அவர்களது அதிகாரம் பலமடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம்கள் போர்த்துக்கேயரின் அடக்குமுறை களுக்கு ஆளாகினர். பொதுவாக நோக்குமிடத்து போர்த்துக்கேயரின் 150 வருட கால ஆட்சியில் முஸ்லிம்களைப் பொறுத்தளவில், அவர்கள் கடைப்பிடித்த கொள்கை காலத்திற்குக் காலம் பல மாற்றங்களைக் கண்டது. முஸ்லிம்கள் பல
4. 33

Page 19
சந்தர்ப்பங்களில் பல பகுதிகளிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதுடன், பல இம்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். ஆனால், இந்த அபாயம் நீங்கியதும் அவர்கள் போர்த்துக்கேய ஆதிக்கம் நிலவிய பகுதிகளில் மீண்டும் வந்து குடியேறி தங்களது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு மாத்தறையிலிருந்து வெளி யேற்றப்பட்ட முஸ்லிம்கள் பிரிவொன்று, மீண்டும் குடியமர்ந்து 1642 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயருக்கு எதிராக டச்சுக்காரரின் உதவியைக் கோரும் அளவிற்கு சக்திபெற்றிருந்ததாக கெய்ரோஸ் குறிப்பிடுகின்றார். கி. பி. 1658 ஆம் ஆண்டு இலங்கை டச்சுக்காரரின் *ஆதிக்கத்திற்கு உட்பட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில், போர்த்துக்கேயரின் கொள்கையையே டச்சுக் காரரும் பின்பற்றினர். வணிகத் துறையில் முஸ்லிம்களின் செல்வாக்கை முறியடிப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்தது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் வணிகம் முஸ்லிம்களின் பிரதான தொழில் முயற்சியாக விளங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கும் இலங்கைக்குமிடையில் கணிசமான வணிகத் தொடர்புகள் காணப்பட்டன. தென்னிந்தியாவில் ராமநாத புரத்தில் வாழ்ந்த பெரிய தம்பிமரிக்கார், சீதக்காதிமரைக்காயர் ஆகியோர் முக்கிய தமிழக வணிகர்களாக விளங்கினர். இலங்கையிலும், செங்கடல் துறைமுகங்களிலும் சீதக்காதி மரைக்காயர் பல வர்த்தகக் காரியாலயங்களை நிறுவினார். அவரது மரக்கலங்கள் கீழக்கரையிலிருந்து புறப்பட்டுத் தொண்டி, பாசிப் பட்டணம் முதலிய துறைகளைக் கடந்து இலங்கையை வந்தடைந்தது. மாத்தறை மாவட்டத்தில் குறிப்பாக வெலிகாமப் பிரதேசத்தில் தமிழக கீழக்கரைப் பண்பாட்டின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்த காலகட்டமாக இக்காலப்பிரிவை நாம் கருதலாம்.
கண்டி வணிகத்தில் முஸ்லிம்களது நிலை பற்றியும், இவ்வணிகத்தில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் ஆராய இது பொருத்தமான காலகட்டமாகும். கண்டியின் சிங்கள மன்னர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அவர்களது அரசியல் பலம் அதிகரித்து, வலுப்பெற்ற காலப்பிரிவில் அவர்களது மலைப்பகுதியில் ஒடுங்கியிருக்க விரும்பவில்லை. அவர்கள் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து நடாத்தவும், வெளியுலகத் தொடர்பைத் தொடரவும் விரும்பினர். 1658 ஆம் ஆண்டு டச்சுக்காரரின் ஆட்சி இலங்கையின் கரையோரப்பகுதியில் ஏற்பட்டபோது கற்பிட்டி, திருகோணமலை, கெர்ட்டியாரம் போன்ற துறை முகங்களின் வணிகத்தில் கண்டியர்களின் செல்வாக்குக் காணப்பட்டது. கொட்டி யாரத்திலிருந்து மகாவலி கங்கை தீரத்தோடு இணைந்து கண்டி வரையிலான தரைமார்க்கப் பாதை ஒன்று காணப்பட்டது. இந்தத் தரைப்பாதையைப் பயன்படுத்தி முஸ்லிம் வணிகர்கள் மூலம் கண்டி மன்னர்களின் கரையோரத் துறைமுகங்களுடனான வணிகம் நடைபெற்றது. இக்காலப் பிரிவில் தெற்குப் பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் டச்சுக்காரரின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து வந்ததால், இப்பகுதியிலுள்ள துறைமுகங்களுடன் நேரடியாக வணிகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு முஸ்லிம்களுக்குத் தடைப்பட்டது. எனவே, முஸ்லிம்கள் தங்களது "தவளம்" வணிகத்தை ருவன்வல்ல, ஸ்தாவக்க, கடுவன போன்ற எல்லை நகரங்களில் நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மாத்தறை
34

மாவட்டத்திலுள்ள கட்டுவன ஒரு பிரதான வணிக எல்லை நகரமாக இக்காலப் பிரிவில் விளங்கியது. தவளம் மூலம் முஸ்லிம் வணிகர்கள் பொருட்களைச் சுமந்து சென்று வியாபாரம் செய்த ஒரு முக்கிய நகராக அக்காலப்பிரிவில் கட்டுவன அமைந்தது. இங்கு "தவளம்" என்னும் பதம் பற்றிய ஒரு தெளிவு எங்களுக்கு அவசியமாகின்றது. உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் அங்கு அவர்கள்
பெற்றுக்கொண்ட வணிகப் பொருட்களை கரையோரத் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும், கரையோரத் துறைமுகத்திலிருந்து பெற்றுக்கொண்ட வியாபாரப் பொருட்களை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கும் தவளத்தைப் பயன்படுத்தினர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வியாபரப் பொருட்களைச் சுமந்து செல்ல முஸ்லிம்கள் மாடுகளைப் பயன்படுத்தினர். வணிகப் பொருட்களைச் சுமந்து செல்லும் மாடுகள் பிணைக்கப்பட்ட ஒரு மாட்டுக் கூட்டம் "தவளம்" என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நடைபெற்ற வணிகம் "தவள வணிகம்” (Tavalam Trade) எனப் பெயர் பெற்றது. தவள வணிக முறையை முஸ்லிம்களே அறிமுகப்படுத்தினர். இம்முறை மத்திய கண்டி ராச்சியப் பகுதியில் மட்டுமன்றி, தென்மேற்கு, தெற்குக் கரையோரப் பகுதியின் வணிகப் பொருட்களை உள்நாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இதற்கு மிகச் சிறந்த ஆதாரமாக மாத்தறை நகருக்கு மிக அணித்தாயுள்ள "மடிகே" என்னும் இடம் விளங்குகின்றது. மடிகே என்பது அரசாங்கத்தின் பொருட்களை எடுத்துச் செல்லும் ஒழுங்கை மேற்கொள்ள கண்டி ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு இலாகாவாகும். அரசாங்கத் திற்குரிய தானியங்களையும், ஏனைய பொருட்களையும் விளைச்சல் நிலங்களி லிருந்து களஞ்சியசாலைகளுக்கு எடுத்துச் செல்ல தவளங்களுக்கான மாடுகளை ஒழுங்கு செய்வது மடிகே இலாகாவின் பொறுப்பாக இருந்தது. இந்த மடிகேகளுக்குப் பொறுப்பாக முஸ்லிம்களே விளங்கினர். "மடிகே பத்த” ( Madige Badde ) என்னும் இந்த இலாகாவுக்குப் பொறுப்பான " மடிகே பத்த . நிலமே” இருந்தார். கீர்த்தி சிறீ ராஜசிங்ஹ மன்னனின் காலப்பிரிவில் (1747 - 81) ஷெய்க் ஆலிம் என்பார் மடிகே பத்த நிலமேயாகப் பணிபுரிந்தார். கண்டி ராச்சியத்தில் மட்டுமன்றி, கரைநாட்டுப் பகுதியிலும் முஸ்லிம்கள் தவளம் முறையிலான வணிகத்தில் ஈடுபட்டமைக்கும், “மடிகே பத்த" அமைப்பு முறை காணப்பட்டதற்கும் மாத்தறையை அணித்துள்ள, இன்றும் "மடிகே" என அழைக்கப்படும் கிராமம் மிகச் சிறந்த ஆதாரமாகும். இன்று மடிகே என அழைக்கப்படும் இந்த இடம் ஒரு காலப்பிரிவில் மடிகே அமைந்திருந்த இடமாக இருந்திருக்கலாம். இந்த மடிகே கடற்கரைப் பிரதேசத்தை அணித்து அமைந் திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். எனவே, துறைமுகத்திலிருந்து பொருட்களை உள்நாட்டுப் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் உள்நாட்டுப் பொருட் களைத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தவளங்களை ஒழுங்குபடுத்தும் இலாகா தற்போதைய மடிகேயில் ஒரு காலப்பிரிவில் அமைந்திருக்கலாம்.
காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் நெல், பாக்கு முதலிய பொருட்களை மத்திய மலைநாட்டுப் பகுதிக்கு, கண்டி ராச்சியப் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு மாத்தறை
35

Page 20
மாவட்ட முஸ்லிம்கள் உள்நாட்டு வியாபார சரக்குகளை வாங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை டச்சு ஆட்சியாளர் மேற்கொண்டனர். வெலிகாமம், மாத்தறையைச் சேர்ந்த முஸ்லிம்கள் நகர எல்லையை விட்டு வியாபாரத்திற்காக வெளி யேறுவதைத் தடுக்கும் ஒரு கட்டளை 1659 ஆம் ஆண்டு டச்சு ஆட்சியாளர்களால் பிறப்பிக்கப்பட்டது. வணிகத்துறையில் மட்டுமன்றி, மத விவகாரங்களைப் பொறுத்தளவிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் டச்சுக்காரரின் கீழ் பல பிரச் சினைகளை எதிர்நோக்கினர். டச்சு அதிகாரியான மட்ஸியுகெர் ( Matsuyeker ) " முஹம்மதிய " சமயத்தை ஒழித்துக்கட்டி கிறிஸதவ மதத்தைப் பரப்புவதைத் தனது முக்கிய கொள்கையாகப் பிரகடனப்படுத்தினர். இந்தப் பிரகடனத்திற் கேற்ப டச்சு அதிகாரியான வான் கொயன்ஸ் (Van Goens) மாத்தறை
多旁
முஸ்லிம்களை அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்ற அனுமதியளிக்க வேண்டாமென்றும், நகரத்திற்குட்பட்ட பிரதேசத்திலோ அல்லது வெளிப் பிரதேசங்களிலோ முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும், தனக்குக் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் கட்டளை பிறப்பித்தார். ஆனால் காலப்போக்கில் நாட்டின் யதார்த்த நிலையை உணர்ந்த டச்சுக்காரர் அவர்களது பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்துவதில் முஸ்லிம்களைப் புறக்கணித்தல் முடியாது என்ற உண்மையை உணர்ந்தனர். எனவே, முஸ்லிம் சமூகத்துடன் தங்களது உறவை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கோடு சில முயற்சிகளில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், முஸ்லிம் கிராமத் தலைவர்களை ( Head Men ) நியமித்தல் இந்நோக்கை அடைய அவர்கள் கையாண்ட ஒரு முறையாக அமைந்தது. கி. பி. 1762 ஆம் ஆண்டு கொழும்பில் முஸ்லிம் அதிகாரியாக உதுமான்கண்டு மேஸ்திரி அய்துருஸ் லெப்பை மரிக்கார் நியமிக்கப்பட்டார். 1789 இல் சின்னலெப்பை மரிக்கார் சீதக்காதிலெப்பை மாத்தறை முஸ்லிம்களின் கிராம அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வான் இம்ஹோப் (Van lmhobb) என்னும் டச்சு அதிகாரி 1733 இல் மாத்தறையில் முஸ்லிம் கமிஷனர்களை நியமித்தார். இவர்கள் (Moor Commissioners) என அழைக் கப்பட்டனர். இலங்கையில் டச்சுக்காரர்களின் வரலாற்றோடும், மலாயர் களின் வரலாற்றோடும் தொடர்புடைய ஓர் இடமாக மாத்தறை நகரிலிருந்து ஐந்து மைல் தூரத்திலுள்ள "ஸ"ல்ெதான்கொட” என்னும் கிராமம் உள்ளது. டச்சுக்காரர் மொலுகஸ், இந்தோனேஷியா போன்ற தங்களது ஆதிக்கத்தின் கீழிருந்த கிழக்கிந்தியத் தீவுகளில் தங்களது ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்த அரச பரம்பரையினர்களையும், பிரதானிகளையும் தென்னாபிரிக்காவின் கேப் பிரதேசத் திற்கும், இலங்கைக்கும் நாடு கடத்தினர். கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் ஜாவா பிரதேசத்தின் இளவரசர்கள் பலர் இவ்வாறு டச்சுக்காரர்களால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். கி. பி. 1709 இல் இவ்வாறு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஜாவா ஸால்தான் தடுத்து வைக்கப்பட்ட இடமே ஸால்தான்கொட எனப் பெயர்பெற்றது. V.
மாத்தறை மாவட்டத்திலுள்ள குடிசனப் பரம்பல் பற்றி நோக்குமிடத்து, இம்மாவட்டத்தின் உள்நாட்டுப் பகுதியில் காணப்படும் கிரிந்தை, மீயல்லை, யக்கஸ்முல்லை, கொடயிடிய போன்ற கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
36

இவற்றுள் சில கிராமங்கள் மாத்தறை மாவட்டத்துள் அடங்காவிட்டாலும் மாத்தறை மாவட்ட வரலாற்றோடு தொடர்புடைய கிராமங்களாக உள்ளன. இந்தக் கிராமங்களின் தோற்றம் இருவகையில் ஏற்பட்டிருக்கலாம். போர்த்துக்கேயராலும், டச்சுக்காரராலும் மாத்தறை நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் கொடுமைக்கும் இம்சைக்கும் ஆளாக்கப்பட்டனர். மாத்தறைப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த போர்த்துக்கேய தளபதி அன்டோனியா டி அமரல் டி மெனஸிஸ் ( Anotonic) De AmaralDe ManeZis) மாத்தறை முஸ்லிம்கள மீது பயங்கரமான கொடுமை களை இழைத்தான். 1643 ஆம ஆண்டு மாத்தறை முஸ்லிம்கள் வாழும் கடைவீதியை முற்றுகையிட்டு 200 க்கும் 300 க்கும் இடைப்பட்ட முஸ்லிம் ஆண்களையும், இளைஞர்களையும் வெட்டிக் கொலை செய்ததோடு, பெண் களையும், குழந்தைகளையும் கொழும்புக்கு அடிமைகளாக அனுப்பி வைத்தான். இத்தகைய பயங்கரச் செயல்களால் அச்சமடைந்த முஸ்லிம்கள் சிலர் உள்நாட்டில் சென்று தஞ்சம் புகுந்து, அப்பிரதேசங்களில் குடியேறியிருக்கலாம். இந்த வகையிலேயே இக்கிராமங்களின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.
இந்தக் கிராமங்களின் தோற்ற்த்தினைக் கண்டி ராச்சியத்தில் அதன் உள்நாட்டுப் பகுதியிலிருந்து, கரையோரத் துறைமுகங்கள் வரை அமைந்திருந்த வணிகப் பாதையில் தோன்றிய கிராமங்களோடு நாம் ஒப்பிட்டு நோக்கலாம். போக்குவரத்து வசதிகள் மிகவும் கஷ்டமான நிலையிலிருந்த அக்காலப் பிரிவில் “தவளங்கள்” பயணம் செய்வதற்கு பல நாட்கள் எடுத்தன. எனவே, சில இடங்களில் தங்கி இரவைக் கழித்து மறுநாள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தத் தங்குமிடங்கள் கால வளர்ச்சியில் முஸ்லிம் குடியேற்றங்களாக மாறின. மாத்தறை மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களான கிரிந்தை, மீயல்லை, யக்கஸ்முல்ல, கொடயிடிய, ஹொரகொட போன்ற கிராமங்கள் இந்த அடிப் படையில் தோன்றியிருக்கலாம். ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு திக்குவல்லை அக்காலப்பிரிவில் தேவந்துறையின் வணிக மத்தியதலத்தின் தொடர்ச்சியாக விளங்கியிருக்கலாம். அல்லது போர்த்துக்கேயர் காலப்பிரிவில் முஸ்லிம்கள் மாத்தறைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட போது பாதுகாவல் கருதி குடிபெயர்ந்து அப்பிரதேசத்தை நோக்கிச் சென்றிருக்கலாம். இக்கிராமங்களின் தோற்றம், பூர்வீகம் பற்றி நாம் இத்தகைய அனுமானங்களுக்கு வர முடிகின்றதேயன்றி ஆவண ரீதியான சான்றுகளுடன் உறுதியான முடிவுகளுக்கு வருதல் இன்றைய நிலையில் சாத்தியமன்று. இக்கிராமங்களின் தோற்றம், பூர்வீகம் பற்றி உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். இந்த ஆய்வு மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய இன்னும் பயனுள்ள உண்மைகளை நாம்
தெரிந்து கொள்ளத் துணைபுரியும்.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றோடு இணைந்து காணப்படுவது அவர்களின் கலாசாரப் பாரம்பரியமாகும். கிழக்காபிரிக்காவில் பண்டுமொழி (Bantu) பேசும் மக்களினதும், அறபு வணிகர்களினதும் இணைப்பால் உருவான
பண்பாட்டை "ஹஸ்ரமி கலாசாரம் எனப் பேராசிரியர் டிர்மிங்ஹம்
37

Page 21
(Tirmingham) sourg Islam in East Africa Tsirgilis 57.656 (5,5056&air prif. கிழக்காபிரிக்கப் பிரதேசத்தில் யெமனைச் சேர்ந்த ஹஸ்ரமி வணிகர்கள்,
ஸஜூபிகளின் தாக்கத்தினால் தோன்றியதே இந்தப் பண்பாடாகும். மாத்தறை மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தளவில், குறிப்பாக வெலிகாமத்தில் இத்தகைய கலாசாரப் பண்புகள் காணப்படுகின்றன. தென்னிலங்கையுடனான வணிகத்தில் மலபார், காயல் பட்டணம், கீழக்கரை போன்ற தமிழகத்தில் முக்கிய வணிக, பண்பாட்டு மத்திய தலங்கள் முக்கிய இடம் வகித்தன. இப்பிரதேசங்களுக்கும் செங்கடல் பிரதேசத்திற்குமிடையில் நிலவிய வணிகத் தொடர்பு காரணமாக யெமன் நாட்டின் ஹஸ்ரமி கலாசாரத்தின் தாக்கம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களின் பரம்பரையான "அஹ்லுல் பைத்” கள் வெலிகாமத்தில் கணிசமான அளவு குடியேறினர். இம்மாவட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஸலிபி
தரீக்காக்களின் செல்வாக்காகும். யெமன் நாட்டைச் சேர்ந்த ஸூபி மகான்களின் வருகையும், காயல்பட்டண, கீழக்கரை, மலபார் தொடர்பும் ஸலிபித்தரீக்காக்களின் செல்வாக்கிற்குக் காரணமாக விளங்கின. ஷெய்க் இஸ்மாயீல் இஸ்ஸதீன் யமானி என்னும் ஸஅபிமார்கள் யெமனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தார். அவரது புதல்வர் ஷெய்க் யெஹ்யா அல் - யமானி மாத்தறையில் வாழ்ந்து, சன்மார்க்கப் பணிபுரிந்தார். கீழக்கரையிலிருந்து வருகை தந்த ஸெய்யித் முஹம்மத் மாப்பிள்ளை ஆலிம் அவர்களின் சன்மார்க்கப் பணி மாத்தறை மாவட்ட
முஸ்லிம்களின் மத, கலாசார பணியின் உயர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைப் புரிந்தது. அவர்கள் கீழக்கரையில் ஏற்கனவே நிறுவியிருந்த மத்ரஸ்துல் அரூஸியாவின் அமைப்பில் 1884 ஆம் ஆண்டு வெலிகாமத்தில் "மத்ரஸ்துல் பாரி" என்னும் பெயரில் ஓர் அறபு மத்ரஸாவை நிறுவினார்கள். இதுவே இலங்கையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மத்ரஸாவாகும். மாத்தறையில் மன்ஹருல் ஸலாஹ், மஆலுல் ஹைராத் என்னும் பெயரில் இரண்டு தைக்காக்களையும் அவர்கள்
கட்டியெழுப்பினார். கந்தறை, திக்குவல்லை போன்ற கிராமங்களையும் அவர்களது
சன்மார்க்கப்பணி உள்ளடக்கியது.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் பெரும்பாலும் வணிகத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தார்கள். 1882 இல் ஒராபி பாஷாவின் வருகை, 1882 க்கும் 1887 க்குமிடையில் 'முஸ்லிம் நேசன்' பத்திரிகை மூலம் சித்திலெவ்வை மேற்கொண்ட சமூக சீர்திருத்தப்பணி போன்றவை மாத்தறை மாவட்ட முஸ்லிம்களில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். முஸ்லிம் நேசனில் மாத்தறையைச் சார்ந்த அய்துரூஸ் லெவ்வை மரிக்கார், மீராகண்டு மரிக்கார் போன்றோர் எழுதியுள்ள ஆசிரியர் கடிதங்கள் மூலம் சமூக விவகாரங்களோடு தொடர்புடைய ஒரு சிந்திக்கும் வர்க்கம், அது எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பினும், மாத்தறை மாவட்ட முஸ்லிம்களிடையே காணப் பட்டதை நாம் அறிய முடிகின்றது. 1904 ஆம் ஆண்டு ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் அவர்கள் கொழும்பில் துருக்கித் தொப்பி விவகாரம் தொடர்பாக நடாத்திய கூட்டத்திற்கு ஒவ்வொரு பிரதான முஸ்லிம் ஊர்களிலிருந்து இரண்டு பிரதி நிதிகளை அனுப்பும்படி வேண்டியிருந்தார். இதில் மாத்தறை மாவட்டத்திலிருந்து
38

பங்குபற்றியவர்கள் பற்றிய வவரமும் சரியாகத் தெரியவில்லை. 1925 ஆம் ஆண்டு மாத்தறை முஸ்லிம்கள் சங்கம் ( Matara Muslim Educational Society ) என்ற பெயரில் ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது பற்றிய குறிப்புக்கள் உள்ளன. 1945 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கல்வியின் மூலம் எழுச்சி பெற்ற ஒரு மத்திய தர வர்க்கத்தின் தோற்றத்தை நாம் அவதானிக்க முடிகின்றது. சட்டத்துறை, ஆசிரியத் தொழில் ஆகிய இரண்டு துறைகளையும் தழுவியே இந்தப் படித்த மத்தியதர வர்க்கம் இயங்கியது. கால வளர்ச்சியில் ஏனைய துறைகளையும் தழுவி இந்தப் படித்த மத்தியதர வர்க்கம் சமூகத்தின் புத்திஜீவிகளின் இடத்தைப் பெற்றது. இந்தப் புத்தி ஜீவிகளின் தோற்றத்தினடியாக மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. பாரம்பரியமாக வணிகத்தையே தனது பொருளாதார அடிப் படையாகக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், காலத்தின் மாற்றங்களை உணர்ந்து செயற்படுவதிலேயே அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் பெருமைப்படத்தக்க வரலாற்றுப் பாரம் பரியத்தை உடையவர்கள். போர்த்துக்கேயரினதும், டச்சுக்காரரினதும் அடக்கு முறை, கொடுமைகளை எதிர்கொண்டு தங்களது தனித்துவத்தை அவர்கள் பாதுகாத்துக் கொண்ட வரலாறு, அவர்களது இஸ்லாமியப் பற்றுக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு களுக்கு மேலாக பெரும்பான்மைச் சிங்களவர் மத்தியில் வாழும் மாத்தநீை மாவட்ட முஸ்லிம்கள் தங்களது மத, கலாசார, பாரம்பரியத்தைப் பேணிவாழும் அதே நேரத்தில் பெரும்பான்மை இனத்தவர்களுடன் புரிந்துணர்வுடனும், இணக்க மனப்பான்மையுடனும் இணைந்து வாழ்வதும் அவர்களது வரலாற்றினதும், பாரம்பரியத்தினதும் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
“ஒவ்வொரு சமூகமும் தனது வரலாற்றுச் சுமையை முதுகில் சுமந்து கொண்டே எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்கின்றது" என அல்லாமா இக்பால் குறிப்பிட்டது போன்று மாத்தறை மாவட்ட முஸ்லிம் சமூகம் கடந்த கால வரலாற்றில் காலூன்றி எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல அவர்களது வரலாறு ஒரு தூண்டுதலாக அமைதல் வேண்டும். இதுவே சமூகங்களைப் பொறுத்தளவில் வரலாற்றின் பணியாகும்.
39

Page 22
2
மஸாஜித்
முக்தார் ஏ. முஹம்மத்
பரந்த இலட்சியம்
பள்ளிவாசல் என்ற ஒருமைச் சொல்லுக்கு அறபு மொழியில் மஸ்ஜித் என்பது நேர்பொருள். " மஸாஜித் " என்பது மஸ்ஜிதின் பன்மை உருவமைப்பு, மஸாஜித் என்ற பன்மைச் சொல்லுக்குப் பதிலாக, பேச்சு வழக்கில் உபயோகிக்கப்படும் " மஸ்ஜித்கள் " என்ற பதம் சில சந்தர்ப்பங்களில் இங்கே எடுத்தாளப்படும்.
மாத்தறை மாவட்டத்திலே
தென்னிலங்கை முப்பெரும் மாவட்டங்களைக் கொண்டது. காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை என்பன அவை. காலி - அம்பாந்தோட்டை என்ற இரண்டு மாவட்டங்களுக்கும் இடைநடுவே அமையப்பெற்றிருப்பது மாத்தறை மாவட்டம். மாவட்டத்திலே கணிசமான அளவு முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் ஒவ்வொரு சிற்றுாரிலும் மஸ்ஜித்களும் கம்பீரமாகக் காட்சி தருகின்றன.
மஸாஜித் தோற்றம்
வரலாற்றுக் கண்ணோட்டத்திலே முஸ்லிம்களின் பிரவேசத்தைத் தொடர்ந்து பள்ளிவாசல்களின் தோற்றமும் இடம் பெற்றிருக்கலாம்.
இற்றைக்கு சற்றேறக்குறைய எட்டு நூற்றாண்டு கால வரலாறு இப் பள்ளிவாசல்களுக்கு என்று துணிந்து சொல்லலாம்.
ஆரம்பகால பள்ளிவாசல்கள் இன்றிருப்பது போல அளவில் பெரிதாகவும் அழகில் கூடியவாகவும் இருந்திருக்க மாட்டா. குடில்களாக அல்லது களிமண் சுவர்களோடு ஒலையால் வேயப்பட்டவையாகவும் இருந்திருக்கக்கூடும். காலப் போக்கில் படிமுறையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். பொதுவாக அமைந் துள்ள அனைத்துப் பள்ளிவாசல்களின் நிலையும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
இனி மாத்தறை மாவட்ட முஸ்லிம் ஊர்களில் அமையப் பெற்றுள்ள பள்ளிவாசல்களைத் தனித்தனியாக நோக்குவோம்.
40

மாவட்ட ரீதியாக மஸாஜித் மாத்தறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் 15 ஆக இருப்பதுபோல, அங்கே ஜும்ஆ நடைபெறும் மஸாஜித்களின் எண்ணிக்கையும் பதினைந்து. இவற்றுள் ஏழு மஸ்ஜித்கள் வெலிகமையிலும், இரண்டு மாத்தறையிலும், ஏனைய ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் மஸ்ஜிதும் இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் காணப்படும் ஏனைய அனைத்து மஸ்ஜித்களும் சாதாரணமானவை.
பாலத்தடி மஸ்ஜித் வெலிகம நகரத்திலிருந்து 2 கி. மீ. தொலைவில் பாலத்தடி என்ற ஊர் இருக்கின்றது. இற்றைக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காட்டு வழியினூடாகவும் வயல் நிலத்தினூடாகவும் அங்கு செல்ல வேண்டி இருந்தது. வெலிகமையில் முதன்முதலில் முஸ்லிம்கள் குடியமர்ந்த பகுதி பாலத்தடி என்னும் கிராமம். முதல் பள்ளிவாசலும் அங்கு கட்டப்பட்ட மஸ்ஜிதாகும். வெலிகம வந்த முஸ்லிம்கள் நகரத்தை விட்டுத் தொலைவிலிருந்த பாலத்தடியில் குடியேறியமைக் குக் காரணம் என்ன ?
பாலத்தடி என்ற கிராமம் பொல்வத்து கங்கை என்ற ஆற்றுப்படுக்கையோடு இணைந்த பகுதியாகும்.
கி. பி. 1200 இல் பாலத்தடிப் பள்ளிவாசல் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. வெலிகாமத்தில் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுதான். ஜும்ஆத் தொழுகை இங்கு நடாத்தப்பட்டது. வெலிகம கரையோரப் பகுதிகளில் பின்னர் குடியமர்ந்த முஸ்லிம்களும் ஜும்ஆத் தொழுகைக்காக இப்பள்ளிவாசலுக்கு ஆரம்பகாலத்தில் வந்தனர்.
வேர்வலையில் முஸ்லிம்கள் குடியேறியது கி. பி. 1024 இல் என மதிப் பிடப்படுகின்றது. வேர்வலையிலும் வெலிகம பாலத்தடியிலும் குடியேறிய முஸ்லிம்கள் ஹஸரத் உவைஸால் கர்ணியின் சந்ததியினர் என்று சொல்லப் படுகின்றது.
நாம் இன்று காணும் பாலத்தடி ஜும்ஆப் பள்ளிவாசல் 1915 ஆம் ஆண்டுக்குப்
பிறகு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாசலாகும்.
முஹியத்தீன் பெரிய ஜும்ஆ மஸ்ஜித் வெலிகம நகரத்தின் பிரதான ஜும்ஆ மஸ்ஜிதாக இது விளங்குகின்றது. கல்பொக்கையின் தெற்குக் கோடியிலே - புதுத்தெருவின் நுழைவாயிலிலே இப்பள்ளிவாசல் அமையப் பெற்றுள்ளது. அண்மைக் காலத்திலே புனர்நிர்மானம் செய்யப்பட்ட இம்மஸ்ஜித் நவீன அமைப்போடு பார்ப்போர் கண்ணைக் கவரும் வகையிலே இஸ்லாமியக் கலை நுட்பங்களோடு அமையப் பெற்றுள்ளமை வெலிகமை நகருக்கே பெருமை தருவதாகும்.
இம் மஸ்ஜிதின் வரலாறு 400 வருடங்களைத் தாண்டிச் செல்கின்றது. இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு மீஸான் கல்லிலே 1011 என்ற ஆண்டு பொறிக்கப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலே இப்பள்ளிவாசல் மிகச் சிறயதாக அமையப்
41

Page 23
பெற்றுள்ளதாக அறியக்கிடக்கின்றது. இப்பள்ளிவாசலைச் சூழவுள்ள பகுதிகள் முன்பொரு காலத்திலே மையம் அடக்குவதற்குப் பயன்பட்டதாகக் குறிப்புகள் உண்டு. இப்பொழுதும் இப்பள்ளிவாசலைச் சூழவுள்ள பகுதிகளில் மையம் அடக்கப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் இங்கு ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை. இப்பகுதி யில் வாழ்ந்த முஸ்லிம்கள் பாலத்தடி ஜும்ஆப் பள்ளிவாசலிலேயே ஜும்ஆத் தொழுகை தொழுது வந்தார்கள். கி. பி. 1787 ஆம் ஆண்டு பள்ளிவாசல் விஸ்தரித்துக் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கு ஜும்ஆத் தொழுகையும் இடம் பெற்றது. உமர்லெவ்வை முகத்தம் ஸெய்யத் மீராலெவ்வை முகத்தம் என்பவரே முதலாவது மத்திச்சமாகக் கடமை புரிந்துள்ளார்.
மீரான் ஸாஹிப் மஸ்ஜித் வெலிகம தலைநகரம், வெலிகம வளைகுடா கடற்கரை, வெலிகம பிரதான பஸ்தரிப்பு நிலையம், வெலிகம ஸாப்பர் மார்க்கட் இவற்றைச் சூழப்பெற்றதாக அமையப்பெற்றது மீரான் ஸாஹிப் மஸ்ஜித், “ பழைய தெரு பள்ளி " என்றும் இதனை அழைப்பர்.
இப்பள்ளிவாசலின் உட்புற மதில்கள் மூன்றடி அகலமுடையனவாகக் காணப் படுகின்றது. இப்பள்ளிவாசலின் தொன்மைக்கும் முதுமைக்கும் இது நல்ல ஆதாரம். 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பள்ளி கட்டப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.
அன்று உபயோகித்த சிற்பக் கலை வேலைப்பாடுகளும் அறபு எழுத்தணிகளும் அதனை மெருகூட்டுகின்றன.
புஹாரி மஸ்ஜித்
புஹாரி மஸ்ஜித் வெலிகம கல்பொக்கையில் அமையப் பெற்றுள்ளது. பொல்வத்து கங்கை எனும் ஆற்றங்கரையிலே அமைதியான ஒரு சூழலிலே அழகொழுகக் காட்சி தருகின்றது. இந்த மஸ்ஜித் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. அல்ஆலிமுல் அரூஸ் அறிஞர் திலகம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பெருமுயற்சியில் இம்மஸ்ஜித் 1884 இல் கட்டப்பட்டது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சாதாரண ஒரு மஸ்ஜிதாக விளங்கி வந்த இந்தப் பள்ளிவாசலில் இப்பொழுது ஜும்ஆத் தொழுகை நடாத்தப்படுகின்றது.
வாரந்தோறும் வெள்ளி இரவுகளில் “ஜலாலிய்யா" ராத்தியும், வெள்ளி காலையில் புர்தாவும் நடைபெறுகின்றன.
வெலிப்பிட்டி ஜும்ஆ மஸ்ஜித்
மாத்தறை மாவட்டத்திலே வெலிகம தொகுதியிலே வெலிப்பிட்டி என்ற முஸ்லிம்
கிராமமும் அமைந்துள்ளது. பாலத்தடியிலிருந்து ஏறக்குறைய அரைமைல் தொலைவில் இக்கிராமம் இருக்கின்றது. அமைதியான சூழலிலே அமையப்
42

பெற்றுள்ள இக்கிராமத்தின் மத்தியிலே ஒரு ஜும்ஆ மஸ்ஜித் கி. பி. 1871 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஜும்ஆப் பள்ளி இடவசதி போதாமையினால் அதற்கு முன்பக்கத்தே இன்னொரு பள்ளிவாசல் சகல வசதிகளுடனும் கட்டப்பட்டது. 1970 களில் கட்டப்பட்ட இப்புதிய பள்ளிவாசல் அல்ஹாஜ் எம். எம். கலில் அவர்களின் பெருமுயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது.
அஸ்ஸய்யது யூசுப் ரிபாய் ஜெம் மமெளலானா அவர்கள் 150 வருடங்களுக்கு முன்னர் இந்த ஊரில் மிக்க செல்வாக்குடன் வாழ்ந்தார்கள். இஸ்லாமிய "தஃவத்" பணியில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்கள்.
இன்று எழில் மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இப் பள்ளிவாசலில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருவதோடு தப்லீக் மர்கஸ் ஆகவும் இது திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கபுவத்தை ஜும்ஆ மஸ்ஜித்
வெலிகம நகரில் கப்புவத்த என்பது ஒரு முஸ்லிம் கிராமம். தெனிப்பிட்டி வழியாகப் பாலத்தடி நோக்கிச் செல்லும் போது இக்கிராமத்தை அடையலாம்.
றிபாய் தரீக்காவைப் பின்பற்றும் முஸ்லிம்கள் இங்கு வாழ்கிறார்கள். இங்கு கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதும் றிபாய் தரீக்காவின் அனுஷ்டானங்களுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதாக விளங்குகின்றது.
கி. பி. 1889 இல் கப்புவத்தைப் பள்ளிவாசலில் றிபாய்த் தரீக்கானுைச் சேர்ந்த ஸைய்யித் முஹம்மத் கோயா தங்கள் அவர்களால் றிபாய் ராத்தியும் கந்தூரியும் தொடங்கி வைக்கப்பட்டன. அன்றுமுதல் இன்றுவரை மிக்க விமரிசையாக அவை நடைபெறுகின்றன.
கி. பி. 1806 ஆம் ஆண்டிலே இவ்வூரில் பாரிய அளவில் மீலாதுன் நபி வைபவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வைபவத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் மீலாதுன் நபி வைபவத்திற்காக ஒரு காணி ஒதுக்கப்பட்டு ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இஃது ஒரு முன்னோடி நடவடிக்கை என மதிப்பிடப் படுகிறது.
ஆரம்பத்தில் இங்கு கட்டப்பட்ட பள்ளிவாசல் அளவில் சிறிதாக இருந்தது. இதனால் ஜும்ஆ இங்கு நடைபெறவில்லை. இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகைக்காகப் பாலத்தடி ஜும்ஆப் பள்ளிக்குப் போய் வந்துள்ளார்கள். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அதேநிலை நீடித்துள்ளது. பாலத்தடிக்கும் கப்புவத்தைக்குமிடையே அரைமைல் தூரமும் இல்லை. இதனால் இதில் நடைமுறைப் பிரச்சினை இருக்கவில்லை.
மதுராப்புர மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் மதுராபுரியில் வாழ்ந்து வந்த மக்கள் தெனிப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஹஸன் ஹாஸைன் பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றி வந்தனர்.
43

Page 24
1941 ல் தெனிப்பிட்டி பள்ளிவாசலில் ஏற்பட்ட தரீக்காப் பிரச்சினையை யடுத்து, மதுராபுரி வாழ் மக்களுக்கு தனியான ஜும்ஆப் பள்ளியமைக்கும் தீர்மானம் வந்தது. மர்ஹூம் ரீ. எஸ். அப்துல் லதீப் முன்னாள் அதிபர், பி. எம். அபுகாஸிம் வைத்தியர், பி. எம். அப்துல் கரீம் வைத்தியர், எஸ். டீ. ஸலாஹாத்தீன், எம். பீ. எம். ஸஹிது முன்னாள் அதிபர் இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டனர். பள்ளிவாசல் அமைப்பதற்குத் தேவைப்பட்ட காணியில் அரைப்பாகத்தை மர்ஹலிம் எஸ். டீ. அபுல்ஹஸன் அவர்கள் அன்பளிப்புச் செய்தார்.
1942 இல் பள்ளிவாசலுக்கான அத்திவாரக்கல்லை ஸர் மாக்கான் மாக்கார் அவர்கள் வைத்தார்கள். மர்ஹூம் அல்ஹாஜ் ரீ. எஸ். அப்துல் லதீப் அவர்களின் தலைமையில் "ஜம்மியத்துல் கைரிய்யதுல் இஸ்லாமியா" இயக்கத்தின் ஆதரவுடன் ஊர் ஜமாஅத்தார், மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவில் கட்டடம் எழுந்தது.
மஸ்ஜிதின் முதல் நம்பிக்கையாளர்களாக அல்ஹாஜ் ரீ. எஸ். அப்துல் லதீபு, டி. எம். அப்துல் கரீம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கலீபதுல் குலபா அல்ஹாஜ் மெளலவி எம். ஸஹ்றுதீன் ஆலிம் நிகழ்த்தினார்கள். மர்ஹலிம் அல்ஹாஜ் கே. பி. எம். மஹ்ரூப் அவர்கள் குர்ஆன் மத்ரஸாக் கட்டடத்தை அன்பளிப்புச் செய்தார். இந்தக் குர்ஆன் மத்ரஸாவில் 1946 முதல் 1980 வரை தொடர்ந்து பணியாற்றிய ஏ. டபிள்யூ. எம். ஹஸன் லெப்பை அவர்கள் பாராட்டுக்குரியவர். அவ்வாறே 1942 முதல் 1980 வரை முஅஸ்ஸினாகக் கடமை புரிந்த மர்ஹஜூம் ஏ. ஸி. தாஜுதீன் அவர்களும் நன்றிக்குரியவர்.
மாத்தறை கடைவீதி பெரிய பள்ளிவாசல் தென்னிலங்கையில் கரையோர மாவட்டங்களில் மாத்தறை மாவட்டமும் ஒன்று. மாத்தறை மாவட்டத்தின் தலைநகரமும் மாத்தறையே. ஏனைய கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் குடியேறிய காலை இங்கும் குடியேறினர் என்பது புலனாகின்றது.
ஆயின் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளிலாவது மாத்தறையில் முஸ்லிம்கள் குடியேறியிருக்க வேண்டும் என்பது தெளிவு. எனவே, அவர்களின் சமய அனுஷ்டானங்களுக்காக மஸ்ஜித்களும் எழுந்திருக்க வேண்டும். இப்பொழுது கடைவீதியில் நாம் பார்க்கும் ஜும்ஆ மஸ்ஜித் ஹி.1138 இல் கட்டப்பட்டதாகும். பின்னர் கி. பி. 1801 ல் இது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. மீண்டும் 1884 இல் விஸ்தரிக்கப்பட்டது. எனவே, இந்த இடத்தில் முன்னர் சிறிய அளவிலான பள்ளிவாசல் இருந்திருக்க வேண்டும்.
கொட்டுவகொடை ஜும்ஆப் பள்ளிவாசலும், கடைவீதி செய்குமார் பள்ளிவாசலும் முன்னர் கடைவீதி ஜூம்ஆப் பள்ளியின் நிர்வாகத்தில் இயங்கின. பின்னர் 1920 களில் கொட்டுவகொடை முஹியத்தீன் பள்ளிவாசலின் நிர்வாகம் அப்பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. (கொட்டுவகொடை முஹியத்தீன் பள்ளி வாசல பற்றிய தகவல் வேறிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.)
கடைவீதி ஜும்ஆப் பள்ளி மாத்தறையின் மிகப்பழைய பள்ளியாகும். கடைவீதி
வடக்கு, கடைவீதி தெற்கு, இஸ்தீன் நகரம், பொல்ஹேன முஸ்லிம் குடியேற்றத் திட்டம் என்னும் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் பிரதான பள்ளி இதுவாகும்.
44

ஷெய்கு மதார் பள்ளிவாசல்
கடைவீதி ஜமாஅத்தார்களின் மையித்துக்கள் அடக்கம் செய்யும் இடத்தில் இப்பள்ளிவாசல் நிறுவப்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இப்பள்ளிவாசல் 1950 களில் புதுப்பொலிவு பெற்ற பள்ளிவாசலாக அமைக்கப்பட்டது. கடைவீதி பெரிய பள்ளிவாசலின் துணைப்பள்ளிவாசலாக இது இருப்பதனால் இங்கும் இரு வாரத்துக்கு ஒருமுறை ஜும்ஆத் தொழுகை நடாத்த வேண்டுமென்ற கோரிக்கை பள்ளிவாசலின் புனர்நிர்மாணத்தின் பின் எழுந்தபோதிலும் முழு ஜமாஅத்தார் களும் கலந்து தொழுகை நடாத்தக்கூடிய இடவசதியின்மை காரணமாக மேற்படி கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
மாத்தறை முஹியத்தீன் மஸ்ஜித்
மாத்தறையில் இரண்டு ஜும்ஆ மஸ்ஜித்கள். பழையது கடைவீதி ஜும்ஆ மஸ்ஜித், புதியது முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித், மாத்தறை பிரதான பஸ் நிலையத்துக்கு அருகே நில்வள கங்கை பாய்ந்தோடும் ஆற்றங்கரையை ஓர் எல்லையாகக் கொண்டு அழகொழுக இம் மஸ்ஜித் காட்சி தருகின்றது. மாத்தறையில் ஒல்லாந்தர் கோட்டை கட்டி ஆட்சி செய்த காலத்திலே ஒல்லாந்தர் சைனியத்தில் மலே முஸ்லிம் வீரர்களும் கடமை புரிந்தார்கள். இவர்கள் ஐவேளைத் தொழுகைக்காக, கோட்டைக்குப் பக்கத்தே ஆற்றேரமாக ஓர் இடத்தைப் பாவித்து வந்தார்கள். இலங்கையிலிருந்து அவர்கள் போகும்போது அந்தத் தொழும் இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காக விட்டுப் போனார்கள். அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சிறிய அளவில் பள்ளிவாசல் அமைத்துத் தொழுது
வந்தார்கள்.
இப்பள்ளிவாசல் அலக்ஸாந்திரியாவிலுள்ள ஒரு பள்ளிவாசலை ஒத்திருக் கின்றது. முகப்புக்கள் மொகலாய சிற்பமுறையில் அமைந்துள்ளன. இம்மஸ்ஜிதின் தோற்றமும் அமைப்பும் பார்ப்போர் கண்களையும் கருத்தையும் கவர்கின்றன. 1920 களில் இப்புதிய அமைப்பு உருவானது.
றிபாய் மஸ்ஜித்
மாத்தறை பள்ளிமுல்லை என்ற பகுதியில் றிபாய் பள்ளிவாசல் அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டு முதல் இந்த இடத்திலே றிபாய் றாத்தீப் ஒதப்பட்டு வந்தது. றிபாய்த் தரீக்காவைச் சேர்ந்த முஹிப்பீன்கள் இதனை நடத்தி வந்தார்கள். வலிகாமத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் எம். எஸ். எம். ஸதகதுல்லா என்பவர் இதன் முக்கியஸ்தராக விளங்கினார். பின்னர் 1957 இல் இந்த இடத்தில் ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டது. வெள்ளி இரவுகளில் பதுர் மெளலூதும், திங்கள் இரவுகளில் றிபாய் மெளலூதும் வழக்கமாக நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் பாரிய கந்தூரியும் இடம்பெறுகின்றது.
45

Page 25
திக்குவல்லை ஜும்ஆ மஸ்ஜித் நீர்வளமிகு நில்வளா கங்கை பாயும் மாத்தறை நகருக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் வளமான கிராமமே திக்குவல்லை. நீண்ட கரையையுடைய கடல் இக்கிராமத்துக்கு அழகூட்டுவதனால் சிங்களத்தில் திக்வெல்ல - என்ற நாமம் பூர்வகாலத்தில் வழங்கப்பட்டது. படிப்படியாக இப்பெயர் மருவி இன்று திக்குவல்லை - என்று மொழியப்படுகின்றது.
மாத்தறை - யுடன் பெலியத்தையை - இணைத்து நிற்கும் பெருவீதி யோனகபுரத்தின் நடுமத்தியின் ஊடாகவே செல்கின்றது. இவ்வீதியை ஒட்டி சுமார் 325 வீடுகள் தொடர்ச்சியாக இரு மருங்கிலும் கட்டப்பட்டிருக்கின்றன.
கிராமத்தின் மத்தியிலே கம்பீரமாக விண்ணினைத் துளைத்துவிட உயர்ந்த மினராக்களைக் கொண்ட " முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் "இஸ்லாமிய கலா லட்சணங்களை உள்ளடக்கியதாக இலங்குகின்றது. பள்ளிவாசலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஷாதுலியாத் தரிக்கத்தின் சிறப்பினை எடுத்தோதும் " புத்துஹாத்துல் மகீய்யா " என்னும் ஸாவியா அமையப்பெற்றுள்ளது.
திக்குவல்லை பிற மஸ்ஜித்கள்
திக்குவல்லையில் சமீபகாலம்வரை ஜும்ஆ மஸ்ஜித் மாத்திரமே இருந்து வந்தது. 1990 களில் மஸ்ஜிதுல் அஸான் என்ற பெயரில் ஒரு சாதாரண மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமிய சிற்பக்கலை அலங்காரங்களோடு இது கட்டப் பட்டுள்ளது.
இங்கே ஜும்ஆ நடாத்தப்படுவதில்லை. அத்தோடு மறு கோடியிலும் ஒரு புது மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
போர்வை முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் 2000 முஸ்லிம்களைக் கொண்ட ஒரு சிறு கிராமம் போர்வை. தென்னிலங்கையில் ஆரம்பமாக முஸ்லிம்கள் குடியேறிய காலப்பகுதியிலே இங்கும் குடியமர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகின்றது. நாற்புறமும் சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட போர்வை தனது தனித்துவத்தைப் பேணிப் பாதுகாத்து வருவது குறிப்பிட வேண்டிய அம்சமாகும். இங்கு எழுப்பப்பட்டுள்ள மஸ்ஜித் ஆரம்பகால டஸ்ஜித்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இந்தப் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஸெய்யத் அஸ்ஸாதாத் பக்கீர் முஹியத்தீன் வொலி அவர்களின் கப்ரிஸ்தானம் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இங்கு ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது என்பது தெளிவு. கி. பி. 13 ஆம் நூற்றாண்டளவில் முதற் பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது.
46

கந்தறை பள்ளிவாசல் மாத்தறை - திக்வெல்ல பாதையிலே கந்தறை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலே தெவிநுவரை என்றழைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் போர்த்துக்கேயரின் அடாச் செயலினால் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து ஜாகவத்த என்னுமிடத்திலே குடியேறினர். பின்னர் ஜாகவத்தையிலிருந்து அடுத்துள்ள கந்தறையில் குடியேறினர். ஆரம்ப காலத்திலே நான்கு குடும்பத்தினரே அங்கு குடியேறினர். இன்று கந்தறையில் 100 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கிறார்கள். காலக்கிரமத்தில் அங்கு ஒரு மஸ்ஜிதையும் கட்டிக் கொண்டார்கள்.
இந்த ஊருக்கு வருகை தந்த ஸெய்யத் மசூர் மெளலானா அவர்கள், இப்பள்ளிவாசலின் இட நெருக்கடியைப் போக்கும் நோக்கத்தோடு அதனைப் புனர் நிர்மாணஞ் செய்தார்கள்.
1940 இல் இப்புதுக் கட்டிடம் எழுந்தது. இக்கட்டட வேலையில் பிரதான பங்கு எடுத்துக் கொண்டவர் " கிந்தோட்டை முதலாளி " என்ற சிறப்புப் பெயர் கொண்ட மீரா லெப்பை மரிக்கார் அப்துல் மஹ்மூது என்பவராவார்.
மீயல்ல முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மாத்தறை மாவட்டத்திலே ஹக்மன என்ற தேர்தல் தொகுதியிலே மீதுல்ல என்ற ஊர் உள்ளது. 225 முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்கிறார்கள். மீயல்ல என்ற ஊர் மூன்று கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. மீயல்ல, படபத்த, பணன்வெல என்ற மூன்று பிரிவுகள். 1 1/2 கிலோ மீட்டர் வரை நீளமுடைய இக்கிராமத்தின் இரு எல்லைகளிலும் இரண்டு மஸ்ஜித்கள் காணப்படுகின்றன. ஒன்று ஜும்ஆ மஸ்ஜித், அடுத்தது " அல்மினா மஸ்ஜித் ".
" அல்மினா மஸ்ஜித் " அல்மினா மஹா வித்தியாலய வளவுக்குள் அண்மைக் காலத்தில் 1985 இல் கட்டப்பட்டதாகும்.
இந்தச் சிறிய மஸ்ஜிதை " தைக்கா " என்றும் அழைப்பர். அரசாங்கப் பாடசாலை வளவுக்குள், அரசாங்க அங்கீகாரம் பெற்றுக் கட்டப்பட்டது. அப்போதைய அதிபர் ஜனாப் எம். ஜே. முஹம்மது அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள ஜும்ஆ மஸ்ஜித் கி. பி. 1855 வருடங்களில் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் குடி பெயர்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறினார்கள். தெவிநுவர மாத்தறை முதலான ஊர்களில் இருந்து பாதுகாப்பின் நிமித்தம் இப்பகுதிகளில் குடியேறினார்கள். இவ்வாறு குடியேறியவர்கள் மீயல்ல, பணன்வெல, படபத்த என்ற பகுதிகளில் குடியமர்ந் தார்கள். ஆனால் இப்பொழுது பணன்வெல என்ற பகுதியில் முஸ்லிம்கள் இல்லை. இங்கு வாழ்ந்தவர்கள் தமது வீடு, தோட்டங்களை விற்றுவிட்டு மீயல்ல என்ற பகுதிக்கு வந்து விட்டார்கள்.
47

Page 26
கிரிந்த ஜும்ஆ மஸ்ஜித்
இவ்வூர் மாத்தறை மாவட்டத்தில், கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதியில் கிரிந்த புஹால்வெல்ல என்று அழைக்கப்படும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 130 குடிகள் வாழ்கின்றனர்.
19 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் எமது முஸ்லிம்கள் வாழ்ந்த இடம் தற்போதைய ஊரிலிருந்து சுமார் 2 கி. மீ. தூரத்தில் உள்ள கஜமன்கொடை என்ற கிராமத்திலாகும். அக்காலப்பகுதியில் அங்கு முஸ்லிம் குடிகளும் ஒரு சிறிய பள்ளிவாசலும் இருந்தது. பின்னர் முஸ்லிம்கள் தற்போது உள்ள இடத்தில் குடியேறினர். இன்றும் கூட அந்த கஜமன்கொடைக் கிராமத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை "பள்ளியவத்த" என்ற பேரில் தான் அழைக்கப்படுகின்றது. அக்கால கட்டத்தில் இவ்வூரில் 25 அல்லது 30 குடும்பங்கள் மாத்திரமே வாழ்ந்து உள்ளனர். பின்பு (1888 ஆம் ஆண்டில் தற்போதைய பள்ளிவாசல் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. 20 X 40 = 800 ச.அடி நிலப்பரப்பைக் கொண்ட நிலப்பரப்பிலே பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. பின்பு அது விசால மாக்கப்பட்டு 35 X 40 = 1400ச.அடி நிலப்பரப்பை உள்ளடக்கியவாறு பள்ளிவாசல் கட்டடம் விசாலமாக்கப்பட்டது. பின்பு பள்ளிவாசலோடு சேர்த்து 30 X 80' மத்ரஸா ஒன்று கட்டப்பட்டு, குர்ஆன் மத்ரஸா நடாத்தப்பட்டது.) பின்பு 1990 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. மத்ரஸாவையும், பள்ளிவாசலையும் ஒன்று சேர்க்கப்பட்டு இன்று சுமார் 350 பேர் தொழுகையில் ஈடுபடத்தக்கவாறு புனர்நிர்மாணஞ் செய்யப்பட்டது. இதற்கு அரசாங்கத்தினால் சுமார் 1 லட்சம் ரூபா கிடைத்தது.
ஹொறகொட ஜும்ஆ மஸ்ஜித் மாத்தறை மாவட்டத்திலே 80 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமம் ஹொறகொட
மாத்தறையிலிருந்து தெலிஜ்ஜவலை வழியாகவோ அல்லது வெலிகமை யிலிருந்து தெனிப்பிட்டி, வலிகந்த, தெலிஜ்ஜவலை வழியாகவோ ஹொறகொட என்னும் கிராமத்தை அடையலாம். நாற்புறமும் மலைகள், காடு, வயல், நிலம் இவற்றால் சூழப்பட்ட இயற்கைச் சுற்றாடலைக் கொண்ட கிராமமே ஹொறகொட,
அந்தச் சிறு கிராமத்தை அலங்கரிக்கின்றது மீரா ஜும்ஆ மஸ்ஜித்,
மாத்தறை வெலிகம போன்ற கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் போர்த்துக்கேயரின் கொடுமை காரணமாக இப்பகுதிகளில் குடியேறி இருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. இங்குள்ள பள்ளிவாசலின் முகப்பில் ஹிஜ்ரி 1314 என்று பொறிக்கப்பட்டுள்ளது.
தெலிஜ்ஜவலையிலிருந்து மேற்குத் திசையிலேயே சுமார் 3 மைல் தூரம் வயல் வெளியிலே சென்று இவ்வூரை அடைய வேண்டும். அங்கு காணப்படும் வயல் நிலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. வெலிகம, மாத்தறை, போர்வை முஸ்லிம்கள் அதனை உரிமை கொண்டாடுவர். இங்குள்ள
48

காணிகள் பல முஸ்லிம் பெயர்களினால் அழைக்கப்படுவது உண்டு. உதாரணமாக"ஸைதாரியா வத்த" என்ற தோட்டம் ஒப்பணைப்படி "ஸையிது அலியார்" தோட்டம் எனப் பதிவாகியுள்ளது.
போர்த்துக்கேயரின் கொடுமைக்கு அஞ்சிய முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறினர். ஆரம்பத்தில் வந்தவர்கள் ஸிங்கான்குட்டி கொட ஸெய்யிது அலிவத்தை ஸெபெகெவத்தை போன்ற இடங்களில் குடியேறி உள்ளனர். இன்னும் இப் பெயர்கள் (தோம்பு) புத்தகங்களில் உள்ளதுடன் இப்பெயர்கள் திரிபு அடைந்து சிங்களப் பெயராக மாறும் நிலையில் உள்ளன. (உ+ம்) லெப்பெகெவத்தை (வப்பவத்தை) எனவும் ஸெயிது அலி அலிவத்தை (ஸைதாரியவத்தை) எனவும் திரிபடைந்து வருகின்றன.
இப்பொழுது இருக்கும் பள்ளிக்கு முன்பக்கத்தில் ஆரம்பக் குடியேற்றங்கள் இருந்துள்ளன. பின்னர் சனத்தொகை பெருகவே இப்பொழுது இருக்கும் அக்குரஸ்ஸ வெலிகம வீதியின் இரு மருங்கிலும் சென்று குடியமர்ந்துள்ளனர்.
கப்துறைப் பள்ளிவாசல்
காலியிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் பிரதான போக்குவரத்துப் பாதை வலிகமையை அடையும் முன்னர் எதிர்நோக்குவது கப்துறைப் பள்ளிவாசலாகும். கப்துறைப் பள்ளிவாசலைத் தாண்டிக்கொண்டே மாத்தறையை நோக்குவோம். இப்பள்ளிவாசலின் குப்பாவின் எழில் தோற்றம் அரை மைல் தூரத்துக்கு கம்பீரமாகக் காட்சி தருகின்றது. १
பெளத்த சிங்கள மக்கள் செறிந்து வாழும் அப்பகுதியில் ஒரு முஸ்லிம் வீடுகூட இல்லாத அப்பகுதியில் ஒரு மஸ்ஜித் - என்ற இயற்கை வளைகுடா பண்டுதொட்டு ஒரு துறைமுகமாகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. வெளிநாட்டார் இவ்வளைகுடா மூலம் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ளனர். இதனால் கப்பல் - துறை என்று பெயர் வழங்கலாயிற்று என்றும் பின்னர் கப்துறை என்று மருவிற்று என்றும் சொல்வர்.
இந்த மஸ்ஜிதில் ஸியாரம் கொண்டுள்ள ஷெய்க் இனாயத்துல்லா அவர்கள் இந்த இடத்தில் சமாதி கொண்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் அண்மைக்காலத்திலே புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டது.
இப்பள்ளிவாசல் கட்டுவதற்குக் காரணமாக இருந்தவர் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷெய்கு இனாயத்துல்லா அவர்களாவார்.
ஹஸன் ஹ"ஸைன் மஸ்ஜித் WW
வெலிகமவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் செல்லும் பிரதான பாதையின் இரு மருங்கிலும் முஸ்லிம்கள் நெருங்கி வாழ்கிறார்கள். வெலிகம தலைநகரில் இருந்து சுமார் 1 1/2 மைல் தூரத்துக்கான பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்த
49

Page 27
நெடுஞ்சாலை வழியே கல்பொக்கை, புதிய தெருவு, தெனிப்பிட்டி, மதுராபுரி என்ற நான்கு பகுதிகளும் இருக்கின்றன. புதிய தெருவின் கடைசி எல்லையிலே மதுராபுரியின் தொடக்கத்திலே தான் தெனிப்பிட்டி என்ற பகுதி இடம் பெறுகின்றது. ஹஸன் ஹாசைன் பள்ளி இங்கு அமைந்துள்ளது.
கி. பி. 1800 ஆண்டளவில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அறிய முடிகின்றது. அக்குறஸ்ஸ நோக்கிச் செல்லும் பிரதான பஸ் பாதை காலடிப் பாதையாக இருந்த அந்தக் காலத்திலே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அறிகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரன்மார்கள் இருவருடைய பெயர்கள் இப்பள்ளிவாசலுக்குச் சூட்டப்பட்டுள்ளன. அத்தோடு கர்பலாவை ஞாபகப்படுத்தும் வகையிலே முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் பாரிய கந்தூரி நடைபெறுகிறது. அன்னதானமும் கர்பலா பற்றிய சிந்தனையும் வழங்கப்படுகின்றன.
பதுரர் மஸ்ஜித் வெலிகம நகர சந்தியிலிருந்து சுமார் 72 யார் தொலைவில் இந்த மஸ்ஜித் அமையப் பெற்றிருப்பதால் வர்த்தக நிலையங்களில் தொழில் புரிவோர் தொழுகையை நிறைவு செய்வதற்கு ஏற்ற இடமாகக் காணப்படுகிறது.
1946 ம் ஆண்டில் - ஹிஜ்ரி 1385 ரபீஉல் அவ்வல் பிறை 28 இல் இப்பள்ளிவாசல் வக்ப் செய்யப்பட்டது. மர்ஹஅம் எஸ். எல். எம். ஹம்துன் ஹாஜியார் அவர்களின் சொந்தச் செலவில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலை அவரது வாரிசுகளே இதுவரை பராமரித்து வருகிறார்கள். ஹம்தூன் ஹாஜியாரின் மறைவுக்குப் பின்னர் அவர்களது சிரேஷ்ட புதல்வர் அல்ஹாஜ் ஷேக் அப்துல் காதர் (அல்ஹாஜ் எச். எச். முஹம்மத்) அவர்கள் கடந்த 39 வருடங்களாக இதனை நிர்வகித்து வருகிறார்கள்.
ஆரம்ப காலத்திலே இப்பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெற்று வந்தது. 1941 இல் மதுராபுரி முஸ்லிம்கள் தமக்கென புதிய ஜும்ஆப் பள்ளியைக் கட்டிக் கொண்டார்கள். அதன் பின்னர் இப்பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறுவதில்லை.
உமர் மிஹ்லார் மஸ்ஜித்
கோட்டகொட என்பது வலிகம முஸ்லிம்கள் வாழும் இன்னொரு பகுதி. அல்லாஹ்வின் அருளால் தண்ணீர் சுரந்தோடும் ஒரு பகுதி இது. முஸ்லிம்களும் அல்லாதோரும் நன்னீர் பருகித் தானம் செய்வதற்கு இக்கிராமத்தை நாடிச் செல்வர்.
1930 வரை இங்கு பள்ளிவாசல்கள் இருக்கவில்லை. இங்குள்ளோர் பழைய தெரு பள்ளிவாசலுக்கோ முஹிதீன் பெரிய பள்ளிவாசலுக்கோ போய் வந்தனர்.
அராபிய தீபகற்பத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள ஹழ்ற மெளத்
என்ற மாவட்டத்திலிருந்து வெலிகமத்துக்கு வருகை தந்த சங்கைக்குரிய அஸ்ஸய்யத் அபூபக்கர் மஷார் மெளலானா என்ற பெரியார் கோட்டகொட
50

பகுதிக்கு விஜயம் செய்த போது நன்னீராடி அங்கு ஓரிடத்தில் இளைப்பாறி தமது முஸல்லாவை விரித்துத் தொழுதார்கள். அப்பகுதிக்கு மஸ்ஜித் ஒன்றின் அவசியத்தை உணர்ந்த அப்பெரியார் தாம் தொழுத இடத்திலேயே ஒரு பள்ளிவாசலைக் கட்ட நடவடிக்கை எடுத்தார்கள். இந்த அடிப்படையில் 1933 ல் இங்கு மஸ்ஜித் உருவானது. இதுவே உமர் மிஹ்லார் மஸ்ஜித்.
மஸ்ஜிதுஸ் ஸலாம் நடை வருடம் 1994 இல் ஒரு புது மஸ்ஜித் அண்மைக்காலத்தில் வெலிகம கொரட்டுவப் பகுதியில் சனப்பெருக்கம் கூடி விட்டதால் ஒரு புதுப்பள்ளியின் தேவை உணரப்பட்டது. அந்த அடிப்படையில் எழுந்தது மஸ்ஜிதுல் ஸலாம்.
வெலிகம புகையிரத நிலையத்துக்குப் பின்புறமாகவும், பிரதான பஸ் நிலையத்துக்கு முன்புறமாகவும் இரண்டு பிரதான போக்குவரத்துச் சாலைகளின் நடுவே இஃது இடம்பிடித்திருப்பது பெரும் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். வெளி ஊர்களிலிருந்து தூரப் பிரயாணம் செய்து வருவோருக்கும் வெலிகம உள்பக்க தூர இடங்களிலிருந்து வெளியூர் செல்ல வருவோருக்கும் இந்த மஸ்ஜித் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொழுகையை நிறைவேற்றுவதற்கும் ஓய்வுபெற்றுச் செல்வதற்கும் இந்த மஸ்ஜித் பெரும் பேறாகும்.
மஸ்ஜிதுல் அஸ்மா
38 முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்களுக்காக ஒரு ஸ்ேஜித் எழுந்தது. ஆரம்பத்தில் பலகையினால் அடைக்கப்பட்ட ஒரு மஸ்ஜிதே எழுந்தது. 1991 இல் பலகை பள்ளி இருந்த இடத்தில் ஒரு புதிய பள்ளிவாசல் நிர்மாணிக்கப் பட்டது. இந்தச் சிறிய பள்ளிவாசலில் குர்ஆன் பள்ளிக்கூடத்துக்கான ஒழுங்கு களும் செய்யப்பட்டுள்ளன.
கப்துறை ஸியாரம்
இற்றைக்கு முன்னூறு வருடங்களுககு முன்னர் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதி வெலிகம வளைகுடாவை ஓர் எலலையாகக் கொண்டதும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 அடிகள் உயரங் கொண்டதுமான மலைப்பாங்கான ஒரு காட்டுப்பகுதி நூறு வீதமும் சிங்கள மக்கள் அப்பகுதியைச் சூழ வாழ்ந்து கொண்டு இருந்தனர். அந்த மலைக் குன்றிலே ஒரு ஸியாரம்.
அன்று காட்சியளித்த அந்த ஸியாரம் இன்றும் காட்சி அளிக்கிறது. அன்று அடர்ந்த காட்டிலே ஸியாரம். இன்று மிக்க கம்பீரமான காட்சி அடர்ந்த காடாக இருந்த அந்த மலையை ஊடறுத்துக் கொண்டு காலி - மாத்தறை பிரதான பஸ் வீதி அமைக்கப்பட்டுள்ளது. நாம் குறிப்பிடும் ஸியாரம் இடம் பெற்றுள்ள பள்ளிவாசலை ஒட்டியதாகப் பகிரங்கப் பாதை அமைக்கப்பட்டமை ஓர் அற்புதமான நிகழ்வாகும். ܚ
இவ்வழியே பிரயாணம் செய்யும் முஸ்லிம்கள் தமது வாகனத்தை நிறுத்தி * பாத்திஹா " ஒதிவிட்டுச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
5.

Page 28
அப்பகுதி சிங்களவர்கள் இந்தப் பள்ளிவாசலையும் ஸியாரத்தையும் மரியாதையாக மதிக்கின்றார்கள். அவ்வப்போது இந்த இடத்திலே பலவகையான " கறாமாத்கள் " " அற்புதங்கள் " நிகழ்கின்றன. சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது காணிக்கை இட்டுச் செல்வார்கள். ஒரு பக்கத்தில் ஆழிய சமுத்திரம். மறு பக்கத்திலே நெடுஞ்சாலை இரண்டுக்கும் இடையிலே இந்த ஸியாரம் இடம்பெற்றுள்ளமை விஷேசமாகும்.
போர்வை ஸியாரம்
மாத்தறை மாவட்டத்திலே அங்குரஸ்ஸ என்ற தொகுதியிலே கொடயிட்டிய என்ற ஊர். அங்கு 850 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஸியாரம் நில்வள கங்கை கங்கை என்ற ஆற்றுக்கரையை அடுத்த காட்டுப் பிரதேசத்திலே இந்த கப்ரிஸ்தானம் கண்டு பிடிக்கப்பட்டது.
ஈராக் நாட்டைச் சேர்ந்த பக்தாத் பிரதேச முஹியத்தீன் அப்துல் காதர் (ஜீலானி) அவர்களின் வமிச பரம்பரையைச் சேர்ந்த அஸ்ஸெய்யத் ஸாதாத் முஹியத்தீன் என்ற பெரியாரே இங்கு அடக்கம் கொண்டவர்கள்.
இப்பெரியாரின் கப்ரிஸ்தானம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே அந்த இடத்தில் ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டது. இப்புனித ஸ்தலத்தை "ஸியாரத்" தரிசனை செய்ய வரும் பக்தர்கள் - தம்மோடு " போர்வைத் " துணி சுமந்துவந்து, பெரியாரின் ஸியாரத்தைப் போர்த்துவர். இதனால், போர்வை என்ற பெயர் இந்த ஊருக்கே உரியதாகிவிட்டது. இங்கு அமையப்பெற்ற ஜும்ஆ மஸ்ஜித் போர்வை முஹித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் என்றே அழைக்கப்படுகின்றது.
இப்பெரியார் அவர்களின் ஸியாரத்தை அடுத்து இன்னொரு ஸியாரமும் காணப்படுகின்றது. பக்தாத் நகரைச் சேர்ந்த இவர்கள் இஸ்லாமிய பிரச்சார நோக்கத்தோடு காலி மாநகரம் வழியாக இங்குவந்து மரணித்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.
திக்குவல்லை Rயாரம்
திக்குவல்லை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள " மத்ரஸ்துல் றழியா " வின் ஸியாரம் இடம் பெற்றுள்ளது. சங்கைக்குரிய ஸய்யத் அப்துல்லாஹ் பாஹாசிம் பா அலவி மெளலானா அவர்கள் அங்கு சமாதி கொண்டுள்ளார்கள். இவர்கள் யமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களது சன்மார்க்க சேவையில் உறுதுணையாக இருந்தவர் " கைர் லெவ்வை அப்பா " அவர்களாவர்.
திக்குவல்லை முஸ்லிம்களின் வார்க்கையிலே கண்மார்க்க ஒளிபரப்பியவர்கள் இந்தப் பெரியார் வலியவர் எலியவர் என்ற பாகுபாடு காட்டாமல் அனைவரையும் சமமாக நடாத்தினார். இப்பெரியார் இறைபக்திமிக்கவராகவும், உலக இன்பங்களை நாடாதவராகவும் தஃலாப் பணியில் தம்மை ஆர்ப்பணித்துக் கொண்டிருந்தார். இவர்கள் தான் திக்குவல்லையில் புர்தாக் கந்தூரியை இற்றைக்கு நூறு
52

வருடங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். புர்தா மெளலானா " என்னும் இவர்களை சிறப்பாக அழைப்பவர் இவர்களது கண்மார்க்க சேவையில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார் " கைர் லெவ்வை அப்பா அவர்களாவர். கைர் லெவ்வை அப்பா திக்குவல்லை முஸ்லிம்களின் நெஞ்சங்களிலிருந்து அப்புறப்படுத்த முடியாதவர். தனது வாழ்க்கையை முஸ்லிம்களுக்காக அர்ப்பணித்தவர்.
掺》
ஸாவியா
" அல் புதுஹதுல் மக்கியா " என்ற பெயரில் இங்கு ஒரு ஸாவியாவும் உண்டு. இந்த ஸாவியாவை இணைந்தாற்போல குர்ஆன் மத்ரஸாவும் அமையப் பெற்றுள்ளது. மெளலவி முபாறக் ஆலிம் அவர்கள் இதன் அதிபராக இருந்து உழைத்தார். 1920 இல் இங்கு வருகை தந்த ஸேர் மாக்கான் மரைக்கார் அதன் வருவாய்க்கு வகைசெய்து கொடுத்தார்கள். 1939 இல் இக்கட்டடம் புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டது. திக்குவல்லை பிள்ளைகள் மார்க்க ஞானம் பெறும் மையஸ்தாபனமாக இது விளங்குகின்றது.
கந்தறை ஸியாரம்
பிரபல்யம் வாய்ந்த ஸியாரங்கள் இங்கு இல்லையெனினும் தெவிநுவரைக்கும் கந்தறைக்குமிடையில் "வாவ்வ " என்ற இடத்தில் ஒரு ஸியாரம் இருக்கின்றது. இது தவிர கந்தறைப் பள்ளிக்கண்மையில் இரு பெரியார்களின் மக்பறலக்கள், கட்டிடங்கள் எழுதப்படாத நிலையில் உள்ளன. அதில உள்ள மீஸான் கல் ஒன்றில் செய்கு ஹபீப் ஸாஹில் ஷா - ஹிஜ்ரி 1283 என்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஹிழ்ரிய்யாவில் ஸியாரம்
வலிகம மத்ரஸ்துல் ஹிழ்ரிய்யா அரபுக் கல்லூரியைச் சேர்ந்தாற்போல ஒரு ஸியாரம் உண்டு. ஹழ்ரமெளத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய மெளலானா ஸய்யத் முஹம்மத் பின் ஸய்யத் அபுபக்கர் மெளலானா அவர்கள் இங்கு சமாதி கொண்டுள்ளார். ஸய்யத் முஹம்மத் மசூர் மெளலானா என்று இவர்கள் அழைக்கப்பட்டார்கள். " அல் மசூர் " என்ற சிறப்பு பெயர் வரிசை இவர்களுடைய கபீலாக்களுக்குரியது.
ஆத்மீகத் துறையிலே - தஃவத் பணியிலே மிக்க விசேஷம் பெற்று விளங்கினார்கள். இப்பெரியார் இங்கே விவாகம் செய்து வாழ்ந்தவர்கள். இவர்களது தகப்பனார் ஸய்யத் அபூபக்கர் மசூர் மெளலானா அவர்கள்தான் கோட்டகொட என்ற பகுதியில் ஒரு பள்ளிவாசலைக் கட்ட காரணஸ்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருந்தை ஸியாரம்
கிருந்தை பள்ளிவாசலின் வலது கோடியில் ஒரு ஸியாரம் உண்டு. இறைநேசப் பெண் ஒருவரின் ஸியாரம் அது. அவர் பெயர் பீவி பாத்திமா கண்ணை. அவரது கணவன் மாப்பிள்ளை மெளலானா இவரது தகப்பனார் மதீனாவைச் சேர்ந்தவர். மதீனத்து மெளலானா " என அழைக்கப்பட்டவர். இந்த ஸியாரத்தைத் தரிசித்துச் செல்வதற்கு பிற மதத்தினர் கூட வந்து போகிறார்கள்.
53

Page 29
ஹொறகொட ஸியாரம்
முஸ்லிம் கிராமங்களின் பள்ளிவாசல்கள் இருப்பதுபோல ஸியாரங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் இறைநேசர்கள் வாழ்ந்து, தஃவா பணிசெய்து அங்கே இறையடி சேர்ந்துள்ளார்கள் என்பது தெளிவு. அந்த வகையிலே ஹொறகொட மஸ்ஜிதிலும் ஒரு ஸியாரம் காணப்படுகின்றது.
தரீக்காக்களின் வளர்ச்சி அரேபிய நாட்டு மதப் பெரியார்களின் வருகையினால், தென்மேற்கு இந்திய சாதசாதாத்மாக்களின் வருகையினாலும் மதப்பிரசாரங்கள் காரணமாக தரீக்காக்கள் வளர்ச்சியுற்றன. சாதுலிய்யா, காதிரிய்யா என்ற இரு தரீக்காக்கள் பின்பற்றப் படுகின்றன. பெரும்பாலான மக்களால் காதிரிய்யாவே ஒழுகப்படுகின்றது. இடையிடையே வந்து சென்றோர்களும் கேரளத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய அஸ்ஸெய்யது முஹம்மத் ஜிப்ரி தங்களும், ஸெய்யது அஹ்மத் தங்களும் ஜிப்ரி தங்களும் கொழும்பிலிருந்து காலிக்கு வருகை தந்ததால் அவ்லியத்துல் காதிரிய்யா தரிக்கா தென்மாகாணத்தின் பிரதான இடங்களாகிய காலி, மாத்தறை, கிரிந்தை ஆகிய இடங்களில் பரவலாயின. அவர்களின் நேரடிச் சமூகம் இங்கு வாழ் முஸ்லிம்களை இறைவழியில் இட்டுச் செல்ல உதவின. 1841 ஆம் ஆண்டு தென் இந்திய கீழக்கரையைச் சேர்ந்த அல்லாமா மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆவர்களின் வருகையால் காலியின் சில பகுதிகள், வெலிகாமம் மாத்தறையின் கொட்டுவகொடை பகுதி, கந்தரை, மீயல்லை, தங்காலை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகள் காதிரிய்யாத் தரிக்காவை பின்பற்றும் நிலையை அடைந்தன (14) அஸ்ஸெய்யது பாஸில் ஷெய்கு நாயகம் அவர்களின் வருகையால் தென் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் சாதுவிய்யா தரிக்கா வளர்ந்து வருகிறது. தரீக்கார்கள் பின்பற்றியொழுகும் திக்ருகள், றாத்திபுகள் யாவும் பள்ளிவாசல்களிலும் அதற்குரிய மத்ரஸாக்களிலும் ஒதப்பட்டு வருகின்றன. ஹழரமெளத்திலிருந்து வருகைதந்த சங்கைக்குரிய ஸெய்யது ஹாது முஹம்மத் இப்னு ஹாஸைன் அவர்களின் உபதேசங்களும் வழிகாட்டல்களும் இப்பகுதி மக்களை ஆத்மீக வழியில் கொண்டு செல்ல உதவின. துந்துவை பலப்பிட்டி, கிந்தோட்டை ஆகிய பகுதிகள் ஷெய்கு முஸ்தபா அவர்களின் வருகையுடன் காதிரிய்யா தரிக்கா விடயங்கள் போதிக்கப்பட்டன.
ஒவ்வொரு பள்ளிவாயலோடு மீளப்படும் குர்ஆன் மத்ரஸாக்கள் வளர்ச்சி யுற்றன. அவைகளின் வளர்ச்சி ஆலிம்களை உற்பத்தி செய்யும் அராபிய இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும் உயர்தர மத்ரஸாக்களாக பரிணமித்தன. இந்தவகையில் அல்லாமா மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்களின் சேவை குறிப்பிடத்தக்கது. 1884 ல் வெலிகாமம் வெலிபிடியிலுள்ள அருளிலிய்ய தக்கியா, 1884 இல் காலி மிரிதுவையைச் சேர்ந்த மஸ்ஜித் முஹியித்தீன். தக்கியா,1889 ல் மாத்தறை கொடுவகொட மஆலுல் கைராத் அருளிலிய்யா தக்கியா, 1944 ல் காலி மிரிதுவையைச் சேர்ந்த மஸ்ஜித் முஹியித்தீன் தக்கியா, 1888 ல் மாத்தறை கடைவீதியிலுள்ள மற்ஹறாஸ்ஸலாஹா இருளிய தக்கியா, ஆகியவைகள் அவர்களின் பெருமுயற்சியால் எழுந்தவையாகும். ஜிபிரி மெளலானா நாயகம் அவர்களின் வருகையால் காலி சோலையிலும், மாத்தறை கடைவீதியிலும் இரண்டு தக்கியாக்கள் கட்டப்பட்டு அல்மதுரஸதுல் ஜிப்ரிய்யா என்ற பெயரில் தற்போது இயங்கி வருகின்றன.
54

மாத்தறை எமியாரங்களும் தைக்காக்களும் மாத்தறை தைக்கா ஸாஹிப் ஸியாரம்
கடைவீதியில் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அருகே அமையப்பெற்றுள்ள மேற்படி தைக்கா பெரும்பாலும் " ஹாவல் ஆன கமாகான தைக்கா ஸாஹிப் தைக்கா " என அழைக்கப்படுகின்றது.
காயல்பட்டணம் செய்குல் ஆரிபீன் உமர் ஒலியுல்லாஹ் நாயகத்தின் புத்திரரும் ஷெய்குல் ஆஷின்ே முஹம்மத் ஸாலிஹ் ஆண்டகையின் தந்தையுமாகிய சுல்தானுல் ஆரிபின் அபஸ்ஸமான் குதுப் ஷெய்கு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிப்ஒலியுல்லாஹ் நாயகம் அவர்கள் 144 ஆண்டுகளுக்கு முன்னர் ஜிப்ரி நாயகத்தின் கலீபாவாக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள்.
பெரும் வணிகரும் மகா புனிதருமான அன்னார் மாத்தறைக்கு வந்தபோது இங்கு அவர்களுக்குக் கிடைத்த மரியாதையும் செல்வாக்கும் காரணமாக மாத்தறையிலுள்ள வீடொன்றிலே தங்கியிருந்தார்கள். ராத்தீப் திக்ரு மஜ்லிஸ் கேளையும் அவர்கள் அங்கு நடத்தினர்.
ஹாஜியார் அப்பா தைக்கா
காதிரிய்யா ஞானவழிமுறையைப் பாரெல்லாம் பரப்பும் நோக்கில் யெமனிலிருந்து மகான்கள் பலர் உலகின் பல திக்குகளிலும் பயணங்களை மேற்கொண்டனர். அவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த இரு மகான்களில் ஒருவர் ஷெய்கு இஸ்மாயில் அல்யமானி அவர்கள். ஞானப்புகழ்ச்சி பெற்ற அன்னாரின் திருக்குமாரரில் ஒருவர்தான் தென்னிலங்கை மக்களால் ஹாஜியார் தீப்பா எனப் போற்றிப் புகழப்படும் ஷெய்கு யெஹ்யா அல் யமானி என்பவர்.
இவர்கள் கடைவீதி மக்களிடையே சிறந்த ஞானபிதாவாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள். ஊரில் பிரச்சினைகள் எழும் சந்தர்ப்பங்களில் ஒர ஒதுங்கி நில்லாது, அவற்றைத் தீர்த்து சமரசம் செய்து வைப்பதில் முக்கிய பங்காளராகத் திகழ்ந்தார்கள்.
எப்போதும் தமது திருக்கரங்களால் புனித குர்ஆன் பிரதிகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். அச்சுப்பிரதிகள் இல்லாத குறையை அவர்கள் நீக்கி வைத்தார்கள்.-எப்போதும் எழுதிக்கொண்டே இருந்தமையால் கிராமன் காதிபின் என்னும் சிறப்புப் பெயரும் இவர்களுக்குண்டு.
அன்னார் மறைந்ததன் பின் பெரிய பள்ளிவாசலுக்கருகே அவர்களது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திலே அமைக்கப்பட்ட தர்கா,மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்று பொலிவுடன் திகழ்கின்றது.
மாத்தறை ஜிப்ரி தக்கியாவில் இயங்கிவந்த அரபு மத்ரஸாவின் அதிபராக விளங்கிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பிள்ளைத்தம்பி ஆலிம் அவர்களால் இந்த நாயகத்தின் மெளலூது ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
மேற்படி நாயகத்தின் பேரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் மெளலுது வைபவமும் கந்தூரியும் கடந்த 105 வருடங்களாக ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
55

Page 30
ஷெய்கு பரீத் (வொலி) தைக்கா
ஷெய்கு பரீத் வொலியுள்லா அவர்கள் தென்னிந்திய மாநில மலையான தேசத்தைச் சேர்ந்தவர்கள். அக்கால மக்களால் பெரும் ஞானியாகப் போற்றப்பட்டவர்கள்.
75 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட காலத்தில் மாத்தறைக கடைவீதியில் மலையாளர்கள் பலர் ஷெய்கு பரீத் வொலியுல்லாஹ்வின் அபிமானிகள். இன்று யெஹியா மாவத்தை என்றழைக்கப்படும் 3 ஆம் குறுக்கு தெருவில் ஒரு வீட்டில் அந்நாயகத்தின் பேரிலான மலையாள ராத்தீப்பை நடாத்தி வந்தார்கள். ஆண்டுதோறும் ஊர்மக்களின் ஆதரவைப் பெற்று கந்தூரியும் நடத்தினர்.
மழ்ஹருஸ் ஸலாஹ் தைக்கா ஆலிமுல் அரூஸ் மகான் மாப்பிள்ளை ஆலிம் அவர்களின் மறுமலர்ச்சிப் பணியின் ஓர் அங்கமாக மேற்படி தைக்கா கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மழ்ஹருஸ் ஸலாஹ் என்னும் பெயரிலான இத்தைக்காவை ஹிஜ்ரி 1305 இல் நிறுவிய பெரியார் அவர்கள் இங்கு தமது முயற்சியிலான இரண்டாவது அரபு மத்ரஸாவையும் இங்கு அமைத்தார்கள். இந்திய, இலங்கை உலமாக்கள் இங்கு பணியாற்றினர்.
ஜிப்ரி தைக்கியா சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் மாத்தறைக் கடைவீதி மூன்றாம் குறுக்குத்தெருவில் அதாவது இன்றைய யெஹ்யா மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதிய சோனகத் தெருவில் ஜிப்ரி தக்கியாவில் நல்லடக்கம் பெற்றுள்ள மகான் ஷெய்குல் ஜிப்ரி நாயகம் அவர்களால் அத்திவாரக்கல் இடப்பட்டுக் கட்டப்பட்ட இதனை, ஜிப்ரியா, தரீக்காவில் தற்போதைய ஷெய்காகிய சங்கைக்குரிய அல்ஹாஜ் ஸெய்யத் முஹம்மத் ஜிப்ரி மெளலானா நாயகத்தின் தந்தை சங்கைக்குரிய ஸெய்யத் ஷெய்க் ஜிப்ரி மெளலானா நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும்.
மனிலப்பள்ளி ஸியாரம் மலைப்பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளிவாசல். வெலிகம வெலிப்பிட்டியில் மிகவும் பழமைவாய்ந்த அந்தப் பள்ளிவாசல் இப்பொழுது இல்லை. அந்த இடத்தில் இருந்த ஸியாரம் மாத்திரம் இருக்கின்றது. ஹிஜ்ரி 1228 இல் இந்த ஸியாரம் கட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. மதார் வொலியுல்லாஹ் இங்கே அடக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஜமாதுல் அவ்வல் மாதத்தில் இங்கு கந்தூரி நடைபெறும். வெலிப்பிட்டி முஸ்லிம்களின் ஜனாஸா இங்குதான் அடக்கப்படுகின்றது. ஒரு மலையின் மேல் இந்தப் பள்ளியும் ஸியாரமும் இருந்து வந்தன. இதனாலேதான் மலைப்பள்ளி ஸியாரம் " என அழைக்கப்பட்டது.
வெலிப்பிட்டி பழைய ஜும்ஆப் பள்ளியிலும் இரண்டு ஸியாரங்கள் காணப் படுகின்றன. காயல்நகரைச் சேர்ந்த பெரியார் நூஹ" லெவ்வை ஆலிம் ஒருவர் ; அஸ்ஸெய்யத் யஹ்யா மெளலானா அவர்களின் ஸியாரம் மற்றையது. இப் பெரியார்கள் இருவரும் தூய்மையான தஃவா பணியில் ஈடுபட்டார்கள். இப்பகுதி வாழ் மக்களின் ஆத்மீக நல்வாழ்வுக்கு வழி செய்தவர்கள்.
56

கல்லடி பெண்கள் தைக்கா
வெலிகம நகரிலே கல்பொக்கை வீதியிலே கல்லடி தைக்கா அமையப் பெற்றுள்ளது. புஹாரி மஸ்ஜிதுக்குப் பக்கத்திலே ஆற்றுப் படுக்கையை ஓர் எல்லை யாகக் கொண்டு இந்த தைக்கா இடம் பெற்றுள்ளது. புஹாரி மஸ்ஜித்துக்கும் இந்த தைக்காவிற்கும் இடைநடுவில் உயர்ந்த மதில் எழுப்பப்பட்டு, தைக்கா தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா ? பெண்களுக்கென விஷேசமாக இது கட்டப்பட்டுள்ளது என்பதனால்தான்.
ஒருபக்கம் உயர்ந்த மதில் எழுப்பப்பட்டிருப்பது போல, மறு பக்கத்திலே உயர்ந்த கருங்கற்பாறை இயற்கையிலே அங்கு காணப்பட்டது. அதனால் கல்லடி தைக்கா " என்ற பெயரும் பெற்றது.
பெண்கள் தொழுவது - குர்ஆன் ஓதுவது, றாதீப், மெளலூத் நடாத்துவது போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஜமாதுல் அவ்வல் மாதம் செய்கு மதார் மெளலூத் ஒதி அன்னதானம் வழங்கும் வைபவமும் வழக்கிலிருந்து வந்தது. இடையிடையே மார்க்க உபன்னியாசங்களும் இடம்பெறும். பெண்களுக்கென தனிப்பட்ட தைக்கா அமைப்பு ஒரு முன்னோடி நிகழ்ச்சியாகும்.
கல்பொக்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரிய ஆலிம் என அழைக் கப்பட்ட அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மனைவியாரின் முயற்சியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது கட்டப்பட்டதாகத் தெரிகின்றது.
ختمة
கந்தூரி வைபவம் அன்றும் இன்றும் என்றும் Y பொதுவாக முஸ்லிம் பள்ளிவாசல்களின் பின்னணியிலே கந்தூரி வைபவம் என்ற ஓர் அம்சம் பின்னிப் பிணைந்திருப்பது போல மாத்தறை மாவட்ட பள்ளி வாசல்களோடும் இக்கந்தூரி வைபவம் இணைந்துள்ளமையை நாம் பார்க்கிறோம். மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரை பரவலாக இந்நிகழ்வு இடம் பெற்றிருப் பதானது வியப்புக்குரியதல்ல.
பள்ளிவாசல்களின் வரலாற்றிலே கந்தூரி அல்லது அன்னதானம் வழங்கும் வைபவம் ஒரு பிரதான நிகழ்ச்சியாக கடந்த காலங்களில் அமுல் நடத்தப்பட்டு வந்துள்ளது என்பதை பள்ளிவாசல்கள் பற்றிய விபரத் திரட்டுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
பள்ளிவாசல்கள் மட்டத்தில் மாத்திரமின்றி வீடுகளிலும் பொது இஸ்தானங் களிலும் கந்தூரி வைபவம் வழக்கிலிருந்து வந்துள்ளது.
புர்தா கந்தூரி, ஹஸன் கந்தூரி, மிஃறாஜ் கந்தூரி, புகாரி கந்தூரி, முஹியத்தீன் கந்தூரி, மீரான் ஸாஹிப் கந்தூரி, பதுர் மெளலூத் கந்தூரி, ஸமப்ஹான மெளலூத் கந்தூரி, றிபாய் றாத்தீப் கந்தூரி,ஜலாலிய்யா றாத்தீப் கந்தூரி, ஸில்ஸிலா கந்தூரி, மனாகிப் கந்தூரி, மஷாயிக்மார் கந்தூரி, தர்கா கந்தூரி, ஷைகு மதார் கந்தூரி, மர்ஸிய்யா கந்தூரி, ஆலிம் ஸாஹிப் அப்பா கந்தூரி, ஷெய்கு தாவூத் வொலியுள்ளா கந்தூரி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் கந்தூரிகள் நடைபெறுகின்றன.
57

Page 31
ஆரம்ப காலத்தில் கந்தூரிகளின் தோற்றத்திற்குப் பல அடிப்படைக் காரணங்கள் இருந்திருக்கலாம்.
将 அன்னதானங்கள் வழங்குவதன் மூலம் பொதுமக்களை பள்ளிவாசலில் ஒன்று சேர்த்தலும் அவர்களை மஸ்ஜித்களோடு தொடர்புகொள்ளச் செய்தலும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிம்களின் சுக துக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம். ஊர் மக்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் அவர்களிடையே அன்னி யோன்னியத் தொடர்பை வளர்த்தலும் சமூக உணர்வை வலுப்படுத்தலும். சமுதாய மக்களிடையே எளியவர் வலியவர் என்ற பேத உணர்வைக் குறைப்பதற்கு வழிவகுத்தல். ஏழைமக்களின் பொருளாதார கஷ்ட நிவர்த்திக்கு அன்னதானம் வழங்கல் வாயிலாக உதவுதல். உள்ளூர் வெளியூர் கலாசார நிகழ்ச்சிகளை ஊக்குவித்தலும் அரங் கேற்றலும். சன்மார்க்கப் பெரியார்களின் வாழ்க்கைத் தத்துவங்களை அறிந்து தமது வாழ்க்கையைச் சீரமைத்தல். பொது மக்களிடையே ஐக்கியம் கட்டுப்பாடு போன்ற உயர்பண்புகளை வளர்த்தல். இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்புகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் அறிவு ஆராய்ச்சிக்கு அத்திவாரமிடல். எளிய மக்களின் நிலையை உணர்வதற்கும், அவர்களுக்கு உதவவேண்டும் என்ற உணர்வை வளர்ப்பதற்கும் ஒரு ஏற்பாடு.
இவ்வாறு உயர்ந்த பல நோக்கங்களோடு கந்தூரிகள் தொடங்கப்பட்டாலும் இடைக்காலத்திலே சில விடயங்களில் இவற்றின் போக்கிலே மாற்றங்கள் ஏற்படலாயின. கந்தூரிகளை விமர்சிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் தலைப்பட்டனர். கலாசாரங்கள் என்ற பெயரில் அனாச்சாரங்கள் தலைதூக்கின. கூடு எடுத்தல், இசைக் கச்சேரி நடாத்தல், பெண்களும் ஆண்களும் நன்றாகக் கலப்பதற்குச் சந்தர்ப்பம் அளித்தல், பண விரயம் செய்தல் போன்ற இன்னோரன்ன வினோதங்கள் பெருகலாயின. அதன் விளைவால் கந்தூரியின் பால் வெறுப்புக் கொள்ளலாயினர். கந்தூரியின் தூய்மையும் இலட்சியமும் கெடலாயின.
என்றாலும் இன்று நிலைமை மாறி வருவதாக அறிய முடிகிறது. பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் தகவலின்படி இடைக்காலத்தில் நிலவிய அனாச்சாரங்களுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள். களியாட்டங்களோ, சங்கீதக் கச்சேரிகளோ, கூடு எடுத்தல் போன்ற வீண் விரயங்களோ இப்போது பள்ளிவாசல் முற்றவெளியை அலங்கரிப்பதில்லை என்று எழுதுகிறார்கள். பெண்கள் வருகைக்குக்கூட பல ஊர்களில் தடை விதித்திருக்கிறார்களாம்.
58

கந்தூரி என்ற பெயரால் ஒரு பிள்ளிவாசலில் பத்து தினங்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சாதாரண ஒரு காரியமல்ல. எத்தனையோ ஏழை எளிய மக்கள் இதன் மூலம் பாரிய நன்மை அடைகின்றனர். இவ்வாறு ஒரு வருடத்தில் வெவ்வேறான பல மாதங்களில் அன்னதானம் வழங்கப்படுவதும் உண்டு. வாழ்க்கைச் செலவு உச்சியைத் தொட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இதன் பயன் எண்ணிப்பார்க்கப்பட வேண்டியிருக்கும்.
எந்த உயர் இலட்சியங்களுக்காக கந்தூரிகள் ஏற்படுத்தப்பட்டனவோ அந்த இலட்சிங்கள் நிறைவுபெறும் வகையிலே கந்தூரி வைபவங்கள் நடாத்தப் படுவதையே யாவரும் விரும்புவர். தீமைகளை ஒழித்து நன்மைகள் மலரவேண்டும். இதுவே இன்றைய தேவை.
கந்தூரி வைபவங்கள் ஹோட்டல் உபசார வைபவங்கள் போல் இருக்கத் தேவையில்லை. அல்லது ஹோட்டல் கல்யாணங்கள் போல இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளிமையும் தூய்மையும் கொண்டதாக, பக்தி சிரத்தை யோடு அல்லாஹ்வின் பேரால் நடைபெறும் ஓர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியாக அது புத்துயிர் பெற வேண்டும். அல்லாஹ்வின் பெயருக்காக அளிக்கப்படும் அன்னதான நிகழ்ச்சியும் அதன்மூலம் பெறப்படும் பயன்களும் utes).T666.
அரபு மத்ரஸாக்கள்
மாத்தறை மாவட்டத்திலே நான்கு அறபு மத்ரஸாக்கள். இவற்றுள் மூறுே வெலிகம நகரத்திலும் ஒன்று மாத்தறையிலும் அமையப் பெற்றுள்ளன. இவற்ே,מןT)6 - தனியான ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா ஒன்றும், இன்னொரு ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா மத்ரஸதுல் பாரியிலும் நடைபெற்று வருகின்றன. இலங்கை வரலாற்றிலே முதன்முதலில் அரபு மத்ரஸாவின் தோற்றம் தென்னிலங்கையில் ஆகும். எனவே அங்கு அரபு மத்ரஸாக்கள் பெருகியிருப்பதில் நியாயம் உண்டு.
மத்ரஸ்துல் பாரீ
வெலிகம கல்பொக்கையில் அமைந்திருக்கும் மத்ரஸ்துல் பாரீ 110 வருடங்கள் மூப்புடையது. இலங்கைத் தீவிலே அரபு மத்ரஸா வரிசையிலே முதலில் தோன்றியது என்ற முத்திரையைப் பெற்றது. பன்மொழிப் புலவர், அரபுமொழி வல்லுநர் - மார்க்க அறிவு ஞானமேதையான அல்லாமா மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் அவர்கள் கி. பி. 1884 இல் இந்த மத்ரஸாவை ஸ்தாபித்தார்கள்.
புகாரி மஸ்ஜிதின் தோற்றத்தோடு பாரீ கலாபீடத்துக்கான தோற்றுவாயும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புகாரி மஸ்ஜிதின் ஒரு புறத்தே மத்ரஸா பாரியும் ஆரம்பமாயிற்று. அன்றுமுதல் இன்றுவரை அல்லாஹ்வின் அருளால் எந்தத் தங்குதடையுமின்றி சீரும் சிறப்புமாக அது வீறு நடைபோடுகின்றது.
பலநூறு உலமாக்கள் இங்கு பயின்று நாட்டின் நாற்புறங்களிலும் பணிபுரிந்து வருகின்றார்கள். அல்லாஹ்வுக்கே ஷாக்ரு.
59

Page 32
அல்ஹாபிஸ் அல்ஹாஜ் கைரிய்யா ஆலிம் அவர்களது சேவைக் காலத்திலே இரு மாடிக் கட்டிடமாக விசாலிக்கப்பட்டது. அல்ஹாஜ் எம். எச். எம். ஹபீழ் அவர்களின் பங்களிப்பும் இக்கட்டிடத்திற்குத் துணையானது. 1940 களில் இப்புதுக் கட்டிடம் உருவானது.
1984 இல் நூற்றாண்டு விழா கண்ட இந்த மத்ரஸாவின் முதலாவது அதிபராகக் கட்மை புரிந்தவர் கல்பொக்கையைச் சேர்ந்த முஹம்மத் இப்ராஹிம் ஆலிம் என்பவர். இவர் 1884 இல் அதிபரானார். “சின்ன ஆலிம்" என்றும் இவரை அழைப்பர். 1901 வரை இவர் கடமை புரிந்து இறையடி சேர்ந்தார். மத்ரஸாவின் ஒரு பகுதியிலே இவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
கடந்த வருடங்களில் 8 உலமாப் பெருமக்கள் பதவி வகித்து வந்துள்ளார்கள். அவர்களில் அல்ஹாபிஸ் ஸகரிய்யா ஆலிம் அவர்கள் 46 வருடங்கள் அதிபராகக் கடமை புரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் மத்ரஸாவுக்குப்
பக்கத்திலே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவ்வருட ஆரம்பத்தில் இருபதாவது பட்டமளிப்பு விழாவை இம்மத்ரஸா கண்டது. இதுவரை அரபு மத்ரஸாவாக இயங்கிய இந்த ஸ்தாபனத்திலே ஹிப்லுல் குர்ஆன் மத்ரஸா அண்மைக் காலத்திலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நூரானியா மத்ரஸா
நூரானியா அரபு மத்ரஸா மாத்தறையில் இயங்கி வருகிறது. 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம் மத்ரஸா தொடங்கப்பட்டாலும் 1965 ஆம் ஆண்டிலேதான்
புதுமெருகு பெற்றது.
மாத்தறை ஜும்ஆ மஸ்ஜித்திலே இம்மத்ரஸா ஆரம்பம் செய்யப்பட்ட்து. அண்மைக் காலத்திலே மாத்தறை கோட்டைப் பகுதியில் தனிப்பட்ட ஒரு கட்டத்திலே நடைபெற்று வருகின்றது. இம்மத்ரஸாவின் முதலாவது அதிபராக காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட மெளலவி ருஜிமுதீன் ஆலிம் அவர்கள் கடமை புரிந்து வந்துள்ளார்கள். இப்பொழுது வெலிகாமத்தைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹகீம் அவர்கள் அதிபராகக் கடமை புரிகிறார்கள். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கிறார்கள்.
புதிய தெருவில் அரபு மத்ரஸாக்கள் முஸ்லிம்கள் செறிந்து வாழும் புதிய தெருவிலே இரண்டு அரபு மத்ரஸாக்கள் * முர்ஸிய்யா " அரபுக் கல்லூரி ஒன்று " ஹில்ரிய்யா " அரபுக் கல்லூரி அடுத்தது. ஒரே தெருவில் இரண்டு மத்ரஸாக்கள் இப்பகுதியில் மக்கள் ஆத்மீகத்துறை அறிவுக்கு எந்தளவு முக்கயத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல ஆதாரம். பாரீ மத்ரஸாவையும் சேர்த்துப் பார்த்தால் வெலிகமையில் மூன்று அரபு மத்ரஸாக்கள் இயங்கி வருவதைப் பார்க்கலாம்.
புதுத்தெரு இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
60

அஹ்லுல் பைத் என அழைக்கப்படும் நபிகள் (ஸல்) அவர்களின் வம்சாவழியினர் அதாவது ஸய்யத் வம்சத்தினர் இங்கு நிறைய வாழ்கின்றனர். ஹழ்றல் மெளத். மக்கா, பக்தாத், யெமன், இந்தியா போன்ற பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் இங்கு வாழ்கிறார்கள். மெளலானா குடும்பங்கள் என்று சிறப்பாக இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
அல்ஹிப்சி, அல்பார், அல்முஷைக் அல்ஹாசிமி, அல்மக்பூர், அல்ஜமாலுல் ஷலஸ், அஸ்ஸக்காப் போன்ற கபீலாக்கள் இங்கு ஏராளம். இவர்களது வருகை 300 வருடங்களுக்கு மேற்பட்டது.
அரபு மத்ரஸாக்களும், ஸய்யத் வம்சத்தவர்களும், மஸ்ஜித்களும் ஹிப்லு மத்ரஸாக்களும் நிறையப்பெற்ற இப்பகுதி இஸ்லாமிய விழுமியங்கள் நிறையப்பெற்ற ஒரு பகுதியாகும்.
முர்ஸிய்யா அரபு கலாசாலை வெலிகம புதிய தெருவுக்குள் நுழைந்ததும் முர்ஸிய்யா அரபு மத்ரஸாவை நாம் பார்க்கலாம். தென்னிலங்கையில் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக தீனொளி பரப்பும் இம் மத்ரஸா பல உலமாக்களை உற்பத்தி செய்துள்ளது. இவ்வருடம் ஜனவரியில் இம் மத்ரஸாவின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா விமரிசையாக நடந்தேறியது. ്
" அஸ்ஸாவியதுல் ருத்ளிய்யது லிஷ்ஷாதுலிய்யதில் பாஸிய்யா " என்ற ஸாவியாவிலே ஹிஜ்ரி 1340 கி. பி. 1922 இல் இம்மத்ரஸா தொடங்கப்பட்டது.
ஷாதுலிய்யா தரீக்காவைப் பின்பற்றும் இஃவான்கள் நிர்வாகத்தில் இந்த மத்ரஸா நடைபெறுகின்றது. வெளியூர் மாணவர்களும் உள்ளூர் மாணவர்களும் இங்கு பயின்று வெளியேறுகின்றார்கள். மெளலவி ஸால்தான் முஹிதீன் ஆலிம் அவர்கள் இப்போது அதிபராகக் கடமை புரிகிறார்கள்.
மத்ரஸ்துல் கிழ்ரிய்யா
புதிய தெருவில் அமையப்பெற்றிருக்கும் இம் மத்ரஸா, காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த பெரியார்களின் நிர்வாகத்தில் இயங்குகின்றது. பொல்வத்து கங்கை கரையோரத்தில் அமையப் பெற்றிருக்கும் இந்த மத்ரஸ்ா அழகிய தோற்றத்துடன் புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டு அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது. மார்க்க அனுஷ்டான பயிற்சி நெறிகளுக்கு இம்மத்ரஸாவிலே முக்கித்துவம் கொடுக்கப்படுகின்றது. "தப்லீக் " நடைமுறைகளும் இங்கு கவனிக்கப்படுகின்றது.
இம்மத்ரஸாவில் தேர்ச்சியடைந்து வெளியேறிய உலமாக்கள் நாட்டின் பல பகுதிகளிலுமிருக்கிறார்கள். அவ்வப்போது பட்டமளிப்பு விழாக்களும் இடம்பெறுகின்றன. மெளலவி இக்பால் ஆலிம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றுகிறார்கள்.
6.

Page 33
அல்ஹாஜ் அல்ஹாபிஸ் கைரிய்யா ஆலிம் அவர்கள் கல்பொக்கை மத்ரஸ்துல் பாரியில் கடமையாற்றிக்கொண்டிருந்த அதேகாலத்தில் புதுத்தெரு மத்ரஸ்துல் கிழ்ரிய்யாவிலும் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். சம காலத்தில் இருவேறு மத்ரஸாக்களில் கடமை புரிந்த புருஷராகவும் ஸ்கரிய்யா ஆலிம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம்வரை இவ்வாறு கிழ்ரியாவிலும் அவர் அதிபர் பதவி வகித்துள்ளார்.
சன்மார்க்கப் பெரியார்கள் மாத்தறை மாவட்டத்தில் சன்மார்ககப் பெரியார்கள் வரிசையில் பலர் பிரகாசிக்கின்றனர். அறிவுத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் கலங்கரையாக விளங்கியவர்களுள் ஒரிருவரை மாத்திரமே இங்கு தருகிறோம்.
ஜாமாலிய்யா ஸய்யத் யாளின் மெளலானா
மாத்தறை மாவட்டத்தில் சன்மார்க்கப் பெரியார்கள் வரிசையில் பலர் அரபு மொழியிலே பா இயற்றும் புலவரானார். மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த திக்குவல்லை இவர்களது பிறப்பிடம். இவர்களது தகப்பன், வழி பக்தார், அஸ்ஸய்யித் முஹம்மத் பின் இமாம் அஸ்ஸெய்யித் ஜமாலுத்தீன் (ஜமாலிய்யா, மெளலானா) என்பவரே இவர்களது தகப்பன். ஹி 1317 இல் கி. பி. 1889 இல் இவர்கள் பிறந்தார்கள். வெலிகம பாரீ அறபுக் கல்லூரியில் தனது ஆரம்ப அறிவைப் பெற்ற இவர்கள், பிற்காலத்தில் வெலிகம வெலிப்பிட்டியில் திருமணம் முடித்து அங்கே வாழ்ந்து அவர்களது அந்திய காலத்தில் கல்பொக்கையில் குடியமர்ந்தார்கள்.
செய்கு இஸ்மாயில் இப்னு இஸ்ஸத்தீன் யமனி (அறபி அப்பா) அரபி அப்பா அரப்ஸாஹிப் அப்பா என அழைக்கப்படும் அல் குத்பு செய்கு இஸ்மாயில் இப்னு இஸ்ஸாத்தீன் யமனி அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் நேரடி வழித் தோன்றலும் சாதுலிய்யாத் தரீக்காவின் செய்கும் ஆவர். அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் வழித் தோன்றலில் பெண்ணெடுத்துத் திருமணம் முடித்தார்கள்.
அரபி அப்பாவும் அவரது தோழர் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகக் கனவானுமாகிய மஹம்மது காஸிம் பாய் என்பாரும் ஒரு கப்பலில் வரும்போது கடலில் ஏற்பட்ட சுழி காரணமாகக் கப்பல் உடைந்து அதன் மரக்கட்டை ஒன்றின் உதவியோடு வெலிகமைக்கரையை அடைந்தார்கள். அரபி அப்பா அவர்கள் வெலிகாமத்தில் மணமுடித்து வாழ்ந்தார்கள். 1848 இல் (ஹி 1262 இல்) இங்கே காலமாகி வெலிகம ஜும்ஆ பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார்கள். காயல்பட்டணத்தைச் சேர்ந்த செய்கு அஹம்மத் ஆலிம் அவர்கள் வெலிகாமத்தில் குர்ஆன் ஓதிக் கொடுக்கும்படி பணித்தார்கள். இவர்களிடம் ஒதியவர்கள்தான் உமர் லெவ்வை ஆலிம் அவர்கள். இவர்கள் அரபிஸாஹிப் அப்பாவின் சிஷ்யராகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் கண்டி, கலகெதர துந்துவை ஆகிய பகுதிகளிலிருந்தெல்லாம் குர்ஆன் போதனை பெற்று இஸ்லாமிய மார்க்க, அறிவு ஞானங்களையும் கற்றுள்ளார்கள்.
6.

அரபி ஸாஹிப் அப்பா அவர்களின் மகன் அஷ் செய்கு யஹியா ஹாஜியார் அப்பா அவர்கள் மாத்தறையில் சமயப்பணி ஆற்றியுள்ளார்கள். இவர்கள் 1882.03.02 இல் காலமாகி அவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு பாதிமா, ஆமினா, கதீஜா, ஹிக்மத் உம்மா போன்ற பிள்ளைகள் இருந்தார்கள். கதீஜா என்பவரை சட்ட நிருவாக சபை உறுப்பினரான எம். சி. அப்துர் ரஹ்மான் மணம் முடித்தார்கள்.
63

Page 34
3
கலை, இலக்கிய பாரம்பரியம்
எம். எச். எம். ஷம்ஸ் தென் இலங்கையின் தென் கரையில் அமைந்துள்ள மாத்தறை மாவட்டத்தில் 90 % க்கு மேல் சிங்கள மக்களே வாழ்கின்றனர். இப்பிரதேச கலை இலக்கியப் பாரம்பரியம் பற்றி இன்று வரை போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பாலும் வர்த்தக சமூகமொன்றில் பாரம்பரியக் கலைகள் போஷித்து வளர்க்கப்படுவது குறைவு. ஆனால் அவை சமய வைபவங்கள் சார்ந்தே வளர்ந்து வந்துள்ளன.
பள்ளிவாசல்களிலும் தக்கியாக்களிலும் நிகழும் கந்தூரி வைபவங்களில் கலை, இலக்கிய ரசானுபவங்களும் கலந்திருந்தன. இவை பொழுது போக்கு, அறநெறிப் போதம், மன இன்பம், அறிவு வளர்ச்சி போன்ற உலகாயத நோக்கங்களுக்காக மட்டுமன்றி ஆத்மீக நோக்கங்களுக்காவும் செய்யப்பட்டன. இந்தக் கலை நிகழ்ச்சிகளுள் சில சமய நிகழ்ச்சிகளாகவும் மற்றும் சில கலாச்சார நிகழ்ச்சி களாகவும் தோற்றம் காட்டின.
மெளலித், நிய்யத்து, தலைப் பாத்திஹா, ராத்திபு, ஹலரா, கூடுதுக்குதல், ஆசூரா போன்றவை பக்தி பூர்வமாகச் செய்யப்பட்டு வந்தன. கழிகம்பு, சீனடி, மேடை நாடகம், வாணவேடிக்கை, திருமணசோடணை, பதம்பாடுதல், பஜா (இசைக் கச்சேரி), ரபான், திருமண வாழ்த்து, நூர்மசாலா, கதாப்பிரசங்கம், வாணவேடிக்கை, தோரணம், போன்ற கலைகள் கலாசார நிகழ்ச்சிகளாக வழக்கில் இருந்தன. இவற்றுட் சில காலப்போக்கில் அழிந்துவிட்டன.
பள்ளிக் கந்தூரி நபிகள் நாயகத்தின் பேரில், அல்லது அவ்லியாக்கள் பேரில் பள்ளிவாசலில் நடத்தப்படும் உற்சவமே கந்தூரி. " கந்தூரா " என்ற பாரசீகச் சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம். பாரசீக மொழியில் இச்சொல், விரிப்பைக் குறிக்கும். அன்னதானம் வழங்குவதும் மெளலித் அல்லது களிதா ஒதுவதும் நிச்சயமான நிகழ்வுகள். கந்தூரிகள் பலவிதமான கலாசார நிகழ்ச்சிகளால் அலங்காரம் பெறுகின்றன. w
மாத்தறை மாவட்டத்தில் பண்டுதொட்டு பிரபல்யமான கந்தூரி (கொடயிட்டிய) போர்வைக் கந்தூரியாகும். பொதுவாகக் கந்தூரியில் இடம்பெறும் கலாசார நிகழ்ச்சிகள் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. போர்வைக் கந்தூரியில் இடம்பெற்ற
64

முக்கிய நிகழ்ச்சி சந்தனக் கூடு தூக்குவதும், ரபான் ராத்திபுமாகும். (கபுவத்தை கந்தூரியிலும் ரபான் ராத்திபு இடம்பெறுகின்றது.) வெலிகம, கிரிந்தை மீயல்லை ப்ோன்ற ஊர்களிலும் கூடு தூக்குதல் நடந்துள்ளது. இது இப்போது வழக்கிழந்து விட்டது. எண்கோண அல்லது அறுகோணச் சட்டங்கள் கூம்பு வடிவத்தில் அடுக்கப்பட்டு அவை வர்ண ஜரிகைகளாலும் வர்ணக் குமிழ்களாலும் அலங்கரிக்கப் படும். கைதேர்ந்த கலைஞர்களே இவற்றை செய்வர்.இந்த அலங்காரக் கூட்டைச் சக்தி வாய்ந்த நீண்ட தடிகள் போட்டுத் தூக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்வர். இந்த ஊர்வலத்தில் தமிழ் மக்கள் தப்பு அடிக்க, பாவாமார் ரபான் இசைப்பர். பெரும் முழக்கத்தோடு சந்தனக்கூடு ஊர்வலம் போகும். பாரசீகத்தில் முஹர்ரம் மாதத்தில் இவ்வாறான கூடுகள் தூக்கும் வழக்கம் இருந்தது. முஸ்லிம்களிடையே இந்தப் பாரம்பரியம் வழக்கத்தில் வர பாரசீகப் பழக்கம் காரணமா ? அல்லது தமிழ் மக்களிடையே உள்ள தேர்த் திருவிழாதான் காரணமா ? என்பது ஆய்வுக்குரியது. அறபு நாட்டுத் தொடர்போடு கூடிய புறுதா, கந்தூரி போன்றவற்றில் கூடு தூக்கப்படாமை அவதானிக்கத்தக்கது.
கழிகம்படித்தல், சீனடி விளையாட்டு, மேடை நாடகம், பதம்பாடுதல், வாணவேடிக்கை, தோரணம், பஜா (இசை) கச்சேரி போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் கந்தூரி வைபவங்களோடொட்டியே வளர்ந்தன. வாணவேடிக்கை இன்று வழக்கிழந்துவிட்டது. பல ஊர்களில் " சில குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. இவர்கள் பரம்பரை பரம்பரையாக வாணவெடி
வாணக்காரர் " என்று வழங்கப்பட்ட
வகையறாக்களை செய்து வந்துள்ளனர்.கந்தூரி வைபவங்களில் மட்டுமன்றி கல்யாண ஊர்வலங்களிலும் இவர்கள் தம் கைவரிசைகளைக் காட்டினர்.
கழிகம்பாட்டம்
இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக்கலை பெயரில், எஞ்சியுள்ள ஒரேஒரு கலை இதுவாகும். கள்ளி, கோலாட்டம் என்றெல்லாம் வழங்கப்படும் இக்கலை கேரளா விலிருந்து வந்திருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. தமிழ் மக்கள் ஆடும் வசந்தன் ஆட்டத்துக்கும் இக்கழிகம்பாட்டத்துக்கும் இடையே வேறுபாடுண்டு. கழிகம்பு மத்திய மலைநாட்டிலிருந்தே மாத்தறை மாவட்டத்துக்கும் வந்திருக்கிறது. இங்கு எல்லா ஊர்களிலும் கழிகம்பு வாத்தியார்கள் (அண்ணாவிமார்) இருந்துள்ளனர். ஒற்றைமல்லி, இரட்டைமல்லி, 5 வெட்டு, T வெட்டு, சுற்றுக்கள்ளி, மான்வளையம், கப்பற்பாட்டு, தேன்கூட்டடி என்று பல ரக அடிமானங்கள் கழிகம்பில் உண்டு. மான்வளையம், தேன்கூட்டடி என்பவை மாத்தறை மாவட்டத்தில் வழக்கில் இருந்ததல்ல. இவை குருநாகல் பகுதியில் வழக்கில் உண்டு.
ஓர் உரலைக் கவிழ்த்து அதன்மேல் லாந்தர் விளக்கொன்றை வைத்து வட்டமாக நின்று முதலில் சுற்றி நடந்து காப்புக்கவிபாட, அண்ணாவியார் தையாந்தை, என்று சொல்லி ஆரம்பித்து வைப்பார். இதனைத் தொடர்ந்து கழிகளைத் தட்டிப் பாய்ந்து பாய்ந்து விளையாடுவர். ஹம்ஸா புலவர் பாடல்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் பிரதேசப் புலவர்கள் புதிதாகக்
65

Page 35
கழிகம்புப் பாடல்களை இயற்றினர். கந்தூரி நாள் இரவுகளில் ஆண்கள் எண்மர் அல்லது பன்னிருவர் கூடி கழிகம்பாடுவர். கல்யாண வைபவங்களிலும் பெரியார் களது வரவேற்பு வைபவங்களிலும் இக்கலை நிகழ்ச்சி இடம்பெறுவதுண்டு.
திக்குவல்லையில் எம். எச். எம். அலி, எம். எச். எம். ஷம்ஸ், எம். ஹம்ஸா முகம்மது ஆகியோர் இன்றும் கழிகம்பாட்டத்துறை வளர்ச்சிக்கு உழைத்து வருகிறார்கள்.
பதம்பாடுதல்
இசைப்பாடல், முஸ்லிம்கள் மத்தியில் பதம்பாடுதல் என்ற கலையாக வளர்ந்தது. பதம் என்பது சிற்றிலக்கியத்தின் ஒரு வகை. இவற்றைக் கந்தூரி விழாக்களில் ராகம் சேர்த்துப் பாடினர். வீடுகளில் வழங்கும் தனியார் கந்தூரிகளில் மெளலித் ஓதி முடிந்த பின் உணவு பரிமாறப்படும்வரை பதம் பாடப்பட்டது. திருப்புகழ், சீறாப்புராணம், குணங்குடி மஸ்தான் பாடல், ஹம்ஸா புலவர் பாடல் போன்றவை முக்கியத்துவம் பெறும். பிரதேசக் கவிஞர்களின் பாடல்களும் பாடப்பட்டன. இது இப்போது முற்றாக அருகிவிட்டது.
பஜா (இசைக்) கச்சேரி
வாத்தியங்கள் இசைப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆதரவு குறைவாயிருந்த படியால் இசைத்துறை முஸ்லிம்களின் மத்தியில் அவ்வளவாக வளர்ச்சியடைய வில்லை. எனினும் இந்தியாவிலிருந்து அடிக்கடி முஸ்லிம் பாடகர்கள் வந்து கச்சேரிகள் நடத்தியமையால் இங்கும் இசையார்வம் ஏற்படலாயிற்று.
மாத்தறை மாவட்டத்தில் இசைக்கலைஞர்கள் பலர் இருந்துள்ளார்கள். குறிப்பாக மாத்தறை நகரில் ஹார்மோனியம், டபேலா, மெண்டலின் வாசிப்பதில் வல்லவர்கள் இருந்துள்ளனர். பெரிய வாத்தியக் கோஷ்டி இல்லாத ஊர்களிலும் கூட, குறைந்தது (ஜப்பான்) மெண்டலினும் கன்சுல் கட்டையும் வாசிப்போராவது இருந்துள்ளனர். (கன்சுல் கட்டை உடும்புத் தோலால் கட்டப்படும் ஒருவகை ரபானாகும்.) முஸ்லிம்களது பாரம்பரிய இசையான கவாலிக்கு இப்பகுதியில் ஆதரவு இருந்ததால் வயலின் போன்ற நரம்பு வாத்தியங்கள் அவ்வளவாக மலியவில்லை. ஹார்மோனியமே அதிகம் வழக்கில் இருந்தது. கந்தூரி வைபவங் களிலும் கல்யாணம், பெருநாள் போன்ற விசேஷ நாள்களிலும் கிராமத்து இசைக் கச்சேரிகள் அரங்கேறும்.
தெனிப்பிட்டி ஹஸன் - ஹாலைன் கந்தூரியின் போது ஹாசேன்தீன் போன்ற தென்னிந்தியப் பாடகர்கள் தருவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல.
ஏனைய பாடல் வகைகள்
திருமண வைபவங்களின்போது மணமகள் சோடனையில் வீற்றிருக்க, சிறுமிகள் குழுவொன்று வாழ்த்துப் பாடுவர். இதனை சோபனம் பாடுதல், மங்கள வாழ்த்து என்று வழங்குவர். பிரதேசப் புலவர் ஒருவர் இப்பாடலை இயற்றிக் கொடுப்பார்.
66

புலவர் இல்லாத ஊர்களில் முன்பு பாடப்பட்ட பாடலில் மணமக்களது பெயர்களைப் புகுத்திப் பாட வைப்பர். முற்காலத்தில் இவை களிதாக்களின் மெட்டுக்களில் பாடப்பட்டன, பின்பு சினிமா மெட்டுக்களில் இயற்றிப் பாடலாயினர். பாடும் சிறுமியருக்கு அன்பளிப்பு வழங்கப்படும். தற்காலத்தில் சினிமாப்பாடல் கெசெட்டின் இசையை எடுத்து "டப்' பண்ணி சோபனம் பாடும் புது முறை சில இடங்களில் வழக்கில் உண்டு.
மேடை நாடகம்
வேஷம் போட்டு நடித்தல் கூடாது என்ற கருத்து சமுகத்தில் இருந்ததால் முஸ்லிம்கள் மத்தியில் நாடகத்துறை வளர்ச்சி பெறவில்லை. பிற்காலத்தில் பெண் வேஷமின்றி ஆண்கள் மாத்திரம் நடிப்பதை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியப் பாரம்பரிய நாடகங்கள் சில இங்கு மேடை ஏறின. பாதுஷாஸ்பர், பஹதூர்ஷா, கமருஸ்ஸமாதன், தையார்சுல்தான் நொண்டி நாடகம் போன்ற வற்றினை கலைஞர் சிலர் சேர்ந்து நடித்தனர். பள்ளிக்கந்தூரியில் இரவில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளுள் ஒன்றாக இது இடம் பெற்றது. பள்ளி முற்ற வெளியில் மேடைகட்டி திரைபோட்டு நாடகங்கள் நடத்தினர். மாத்தறை காஸிம் புலவர் தயாரித்த சில பாரம்பரிய நாடகங்கள் சேகுமதார் பள்ளிக் கந்தூரிகளில் மேடையேற்றப்பட்டன. இவை படிப்படியாக அருகி வந்துள்ளன.
சமுகத்துக்கு சிந்தனாபூர்வமான கருத்துக்களை வழங்க நாடகம் நல்லதோர் ஊடகம். கோட்டகொட (வெலிகம), திக்குவல்லை போன்ற ஊர்களில் மீலாத் விழா நிகழ்வுகளில் நவீன நாடகங்கள் சிலபோது மேடையேற்றப்பட்டதுண்டு.
ஜோடனை சோடித்தல் என்ற சொல்லில் இருந்து பிறக்கும் சோடனை என்ற பெயர்ச் சொல் கல்யாணப் பந்தலைக் குறிக்கும். மணமகள் வீற்றிருக்கும் இடத்தைச் சோடிப்பது பண்டிலிருந்தே இருந்து வந்துள்ள ஓர் பாரம்பரியம். மணமகனும் அவரின் உறவினர்களும் மணமகளை முதலில் பார்க்கும்போது அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வழக்கம் உருவானது. முற்காலத்தில் மணமகள் வீற்றிருக்கும் கதிரை மாத்திரமே அலங்கரிக்கப்பட்டது. பிற்காலத்தில் இது ஒரு கலையாக வளர்ச்சி பெற்றது. ஓர் அலங்கார முகப்பு மேடையும், அழகிய மலர்க்கொத்து வேலைப்பாடுகளும் இந்தச் சோடனையில் இடம்பெறலாயிற்று. கலாநுட்பம் கொண்ட கிராமத்துக் கலைஞர்கள் வர்ண ஜரிகை, ஸியூகின்ஸ், பளபளப்பான பிடவைகள், பூக்கள் கொண்டு இவற்றை அலங்கரிப்பர். தற்காலத்தில் திக்குவல்லை எம். எச். எம். அலி மாத்தறை மாவட்டத்திலும், வெளியேயும் ஜோடனை செய்வதில் பிரசித்தி பெற்றவர்.
ஒவியம், கைப்பணி என்பவற்றோடு தொடர்புடைய இக்கலை பழங்காலத்தில் வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்புற்றிருந்தது. கந்தூரிகளுக்காகக் கட்டும் தோரணங்களில் அப்போது கிராமியக் கலைஞர்கள் அலங்காரக் கலையை வெளிப்படுத்தினர். பாக்கு மரத்தினால் கட்டப்படும் தோரணங்களில் தென்னங் குலைகளைத் தூக்கி அலங்களிப்பது அக்கால வழக்கம்.
67

Page 36
பைத்து பைத்து படித்தல் என்பதும் மாத்தறை மாவட்டத்தில் இருக்கும் பாரம்பரியங்களில் ஒன்றாகும். அறபு அறபுத் தமிழில் உள்ள பாரம்பரியப் பாடல்களே பைத்துக் களாகும். இவை பாரம்பரிய மெட்டுக்களிலேயே பாடப்படும். நோன்பு காலங்களில் (வைகறை) ஸஹர் வேளையில் தூங்கும் முஸ்லிம்களை எழுப்புவதற்கு ரபான் தட்டியவாறே பைத்து பாடி ஊர்வலம் வரும் கலைஞர்கள் பழங்காலத்தில் இருந்தனர்.
“ஊராரே ஊரு நாயன்மாரே - நாங்கள் உற்ற ஸலவாத்து பெற்றவரே நாட்டாரே நாட்டு நாயன்மாரே - நாங்கள் நல்ல பரகத்தும் உள்ளவரே "
என்பது இத்தகைய பைத்தாகும். மார்க்க விடயங்கள் சார்ந்த தொனிப்பொருளில் எளிமையான பைத்துக்களை ரபான் இசையோடு பாடி இவர்கள் மக்களை எழுப்புவர்.
மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரை பாரம்பரிய கலைகளில் கழிகம்பு மாத்திரமே பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நவீன கலை ஈடுபாடு ஒரளவு இருந்தபோதிலும் அவற்றுக்கான ஆதரவு வழங்கப்படுவது குறைவு. கலைகள் அற்றுப்போயின் அச்சமூகம் வரட்சி அடைவது நிச்சயம். இந்த வரட்சியை வர்த்தக பொருளாதார வளர்ச்சியாலும் ஈடுசெய்ய முடியாது.
இலக்கியம் சிங்களச் சூழலின் ஆதிக்கம் மிக்க தென்னிலங்கையில் இலக்கியத்துக்கான முயற்சிகள் எதிர்நீச்சலுக்கு ஒப்பானவை. எனினும் இலக்கியப் பங்களிப்பு இங்கு நிறைய நடந்துள்ளது. இப்பிரதேசப் படைப்புக்கள் விமர்சகர்களின் பார்வைக்கு உட்படாமை பெரும் துர்அதிர்ஷ்டமே.
மாத்தறை மாவட்ட இலக்கியப் பங்களிப்பை பாரம்பரிய சமய இலக்கியம் என்றும், நவீன பார்வை கொண்ட இலக்கியம் என்றும் பகுத்து இனம் காணலாம். செய்யுள் வடிவத்தை ஊடகமாகக்கொண்டு பாரம்பரியப் போக்கில் இலக்கியம் படைப்போர் இன்றும் சிலர் இங்குள்ளனர். இவர்களது முன்னோடிகளாகப் புலவர்கள் எனப் போற்றப்பட்ட பலர் இங்கு வாழ்ந்துள்ளனர்.
சென்ற நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து மறைந்த புலவர்கள் பற்றி போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமை வருத்தத்துக்குரிய ஒன்றே. அறபுத் தமிழிலும், தமிழிலும் செய்யுள் இயற்றிய அவர்களுள் பெரும்பாலானோர் சமய அறிஞர்களாகவே இருந்தனர். இவர்களுட் பலர் வெலிகமையில் வாழ்ந்துள்ளனர்.
பாரம்பரிய இலக்கியங்கள்
கி. பி. 1855 இல் காயல்பட்டணத்தில் பிறந்து வெலிகமையில் மணமுடித்த நூஹ்லெப்பை ஆலிம், ரமழான் மாலை என்ற அறபுத்தமிழ் நூலை இயற்றியதாக அறிய முடிகிறது. இவர் 1935 இல் காலமானார். கி. பி. 1889 இல் திக்குவல்லை
68

யில் பிறந்து வெலிகமையில் வாழ்ந்த ஜெமாலியா ஸெய்யித் யாஸின் மெளலானா பன்மொழிப் பாண்டித்தியம் மிக்கவர். அறபியிலும் தமிழிலும் செய்யுள் இயற்றினார். இவர் சமய நூல்கள் பலவற்றையும் எழுதினார். 1946 இல் அறபு - அறபுத்தமிழ் அகராதியை வெளியிட்டார். யவானிஉ அஸிமாருந் நிஉமாஉ (1958) நப்றது மத்ஹில் ஜமீல் அபில் ஹஸன் அலிய்யில் ஜலீல் (1959) கஸிதத்துல் முளரிய்யா (1959) ஆகியவை இவர் வெளியிட்ட அறபிச் செய்யுள் நூல்கள். 1959 இல் ராத்திபதுல் ஹக்கியாவையும் வெளியிட்டார். தமிழில் பக்திமாலை (1958) இல் என்ற செய்யுள் நூலை வெளியிட்ட இவர், ஹலாலும் ஹராமும் (1964) கலிமா விருட்சக கனிந்தகனி (1958) இராட்சண்ய பிரபந்தம் (1958) ஆகிய உரைநடை நூல்களையும் வெளியிட்டார். இவர் 1966 இல் காலமானார்.
மதுரஸத்துல் பாரி அறயிக் கலாசாலையில் நீண்டகாலம் அதிபராகப் பணிபுரிந்து ஸைக்கரியா ஆலிம் அவர்களால் " அல்ஹஜ் " என்ற நூல் வெளியிடப் பட்டது. இதே பாரம்பரியத்தில் வந்தவர்களே அஜ்வாத் ஆலிம், ஸித்தீக் ஆலிம் ஆகியோர். 1922 இல் கண்டியில் பிறந்து வெலிகமையில் மணமுடித்து 1988 இல் காலமான அஜ்வாத் ஆலிம் சுமார் 40 வருட காலம் அறபிக் கலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அறபு மொழியில் ஆழ்ந்த புலமை பெற்ற ஹஸ்ரத், செய்யுள் இயற்றுவதிலும் ஆற்றல் பெற்றிருந்தார். கைறுல் மவாலித் பிஅமலில் மவாலித் தஃலிக்குல் முஸ்லிம் அல் தஸ்ரிருஸ் முஜ்லிப் ஆகிய அறபு நூல்களை எழுதிய அன்னார் தஜ்வித் சட்டங்களை விளக்கி தும்பதுல் இஹ்வான் என்ற அறபித் தமிழ் நூலை வெளியிட்டார்
ஏ. என். ஸித்தீக் ஆலிம் தமிழ் மொழியில் கணிசமான ஆற்றல் பெற்றிருந்தார். மாணவர்களுக்கான பாடப்புத்தகமாக தஹ்ஸிலுல் அரபியா என்ற நூலை 1949 இல் வெளியிட்ட அன்னார், அல்ஹஜ் வல் உம்ரா (1951) என்ற அறபுத் தமிழ் நூலையும் வெளியிட்டார். அல் இர்ஷாத் என்ற அறபுத் தமிழ் பத்திரிகையை வெளியிட்ட அவர் இஸ்லாத்திலே வாழும் வழி (1980) நூறு ஹதீஸ்கள், உலகநபி ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.
வெலிகமையில் சமய இலக்கியப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து செய்த அறிஞர்கள் படிப்படியாக அறபு மொழியிலிருந்து தமிழுக்கு மாறிவந்ததோடு சமூக நோக்கு கொண்ட படைப்பாளிகளாக பரிணாமம் பெற்றதையும் நாம் அவதானிக் கலாம். இதற்கு ஆதர்ஷமாக அஹமது நெய்னா ஆலிம் அவர்களைக் குறிப்பிடலாம். டப்பிஆலிம் " என்ற பெயரில் மக்கள் மத்தியில் புகழ் பெற்ற இப்புலவர் வெலிகமை கல்பொக்கையில் பிறந்தாரெனினும் வாழ்வில் பெரும்பகுதியை மீயல்லையிலேயே கழித்தார்.
கற்பனை வளமும் கவித்துவ ஆற்றலும் கொண்ட இவர், பற்றிய பூரண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் " அறபுச் சிங்களத்தை " அறிமுகப் படுத்தியவர் டப்பி ஆலிம் எனலாம். இவர் எழுதிய தமிழ், சிங்களக் கவிதைகள்
69

Page 37
அரபி அட்சரத்திலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹஜ் கடமையை முடித்து மக்காவிலிருந்து வரும் ஹாஜிகளை வரவேற்று பாடிச் செல்லும் ஊர்வல பைத்து மிகவும் பிரபல்யமானது.
மிஸ்கின் வாடை மிகப் பெற்றீர் மினா சென்று கல்லெறிந்தீர் நுஸ்கில் கமால்/ஏந்தி வந்தீர்
நூறாயிரமே ஸலாம்.
என வரவேற்கும் ஹாஜி வரவேற்புப் பாடல் வெலிகமையில் இன்றும் வழக்கில் உண்டு. இவரது பல பாடல்கள் வாய்வழியாக வாழுகின்றன. இன்னும் பல கையெழுத்துப் பிரதிகளாகவுள்ளன. அறிவிற்பன விவேகசிந்து அப்துல்லா வொலி பேரில் சிந்து ஆகியவை தவிர்ந்த ஏனைய கவிதைகள் இன்னும் அச்சேறவில்லை.
தமிழ் படித்த புலவர்கள் சமய அறிஞர்கள் அல்லாத - தமிழ் அறிவு கொண்ட புலவர்கள் என்ற வகையில் போர்வை சுல்தான் தம்பிப் பாவலர், மாத்தறை காஸிம் புலவர், திக்குவல்லை அசனாமரிக்கார் உமர் லெப்பை, மாத்தறை அப்துல் அஸிஸ் மரிக்கார், வெலிகம கோட்டகொடை உவைஸ் புலவர் எனப் பலர் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர்.
இவர்களுள் மாத்தறை காஸிம் புலவரின் படைப்புப்பற்றி ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத ஏனைய புலவர்களுள் போர்வை சுல்தான் தம்பிப் பாவலர் குறிப்பிடத்தக்கவர். இவர் செம்மொழி இலக்கியப் படைப்பாளியாய் நிமிர்ந்து நிற்கிறார். இவர் வெளியிட்ட ஆரன முஹம்மதர் காரணக் கும்மி, (ஹி. 1309) இலக்கிய நயமும் சொல்வளமும் அணிச்சிறப்பும் மிக்கது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இப்புலவரது சகோதரர் முஹீதின் கண்டு மரைக்கார் என்பவர் பெரும் புகையிலை வியாபாரியாகத் திகழ்ந்தார். அவரே மேற்காட்டிய நூலை வெளியிட்டார். இந்நூலில் சுமார் 50 கீர்த்தனைகளும் உள்ளன. இவற்றுக்கு ராகம், தாளம் போன்றவையும் குறிப்பிடப்பட்டதிலிருந்து இவர் இசை ஞானமும் வாய்க்கப்பெற்றவர் என அறிய முடிகிறது.
1958 இல் மறைந்த மாத்தறை காஸிம் புலவர் சிங்களத்திலும், தமிழிலும் புலமை பெற்றிருந்தார். சிங்கள இலக்கிய மரபான 'கவிகொல ’ உத்தியில் பல கவிதைகளை இவர் எழுதினார். சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை இசைப் பாடலாக்கி கந்தூரி வைபவங்களில் அவற்றை விற்பனை செய்வார். நல்ல குரல் வளம் கொண்ட அபுல் ஹஸன் என்ற சீடர் இவருக்கு உறுதுணையாக இருந்தார்.
ஞானக்கண், காலிகேலியா கோட்டக் கோழியா, புத்திப்பாட்டு, தரீக்காச் சண்டை, கதிர்காமக்கும்மி, சோனகரேமுஸ்லிம் எனப் பல சிறு பிரசுரங்களை இவர் வெளியிட்டார். " இஸ்லாமிய வழி இருளகற்றும் ஒளி" என்ற சிங்களப்பாடல் நூல்
70

தமிழ், சிங்கள அட்சரங்களைக் கொண்டது. ரசூல் மாலையின் பெரும்பகுதியையும் சுப்ஹான மெளலிதின் ஒரு பகுதியையும் காஸிம் புலவர் சிங்களத்தில் வெளியிட்டார். கமருஸ் ஸமான் பாதுஷா ஸபர் ஆகிய நாடகங்களை இவர் மாத்தறையில் மேடையேற்றினார். திக்குவல்லை உமர் லெப்பை உள்ளறிவு மெய்ஞ்ஞானம் (1933) என்ற செய்யுள் நூலை வெளியிட்டார்.
மாத்தறை அப்துல் அளிஸ் மரைக்கார், கோட்டகொடை யூசுப் புலவர் ஆகியோர் பற்றிய போதிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மாத்தறை கொட்டுவேகொட பள்ளிவாசல் சம்பந்தமான வழக்கு விசாரணையொன்றை அடிப்படையாக வைத்து அப்துல் அளிஸ் புலவர் 1921 இல் பள்ளிவழக்குரை " என்ற கவிதையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் கோட்டகொட யூசுப் புலவர் 1934 இல் சுடர் மாணிக்க இரத்தினம் என்ற கவிதை நூலை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிப்பிட்டி கவுஸ் லெப்பை எழுதிய அதிபதிமாலை, பெருமையின் கேடு என்ற சிறிய நூல்கள் அச்சில் வெளிவந்தன.
பாரம்பரிய இலக்கிய மரபையொட்டி எழுதிவரும் மற்றுமொருவர் ஜமாலியா செய்யித் கலில் அவுண் மெளலானா. யாப்பிலக்கணக்கட்டோடு செய்யுள்கள் இயற்றும் இவர் 1964 இல் முதற் படைப்பான இறை வலி - செய்யித் முஹம்மது மெளலானா " என்ற நூலை வெளியிட்டார். மகானந்தாலங்கார மாலை, அருள்மொழிக் கோவை ? பரமார்த்த தெளிவு, நாயகர் பன்னிருபாடல் என்பன இவர் வெளியிட்ட கவிதை நூல்கள். சிறீ லங்கா சாகித்திய மண்டலம் இல் நடத்திய கவியரங்கில் பங்குபற்றிய இவர் பாடிய கவிதை, பின்னர் நூலுருப்பெற்றது. நூலாகும். பேரின்பப் பாதை போன்ற உரைநடை நூல்களையும் வெளியிட்ட இவர்
ஈழவளநாட்டில் பயிர் பெருக்கவாரீர் ' என்பதே அக்கவிதை
மறைஞானப் பேழை என்ற இந்திய சஞ்சிகையொன்றையும் வெளியிட்டுவருகிறார்.
நவீன இலக்கிய முன்னோடிகள்
1950 களில் சுயபாஷா ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததனால் இலக்கியப் படைப்பிலும் நுகர்விலும் ஆர்வம் பெருகியது. பாரம்பரிய செய்யுள் மரபிலிருந்து உரைநடைக்கு மாறி வந்ததை இக்கால கட்டத்தில் அவதானிக்கிறோம்.
திக்குவல்லை ஏ. விச். எஸ். முஹம்மது, எம். ஏ. முஹம்மது, வெலிகமை முக்தார் ஏ. முஹம்மது, போர்வை எஸ். ஏ. எம். அஷ்ரப், வெலிகமை ஏ. எம். எம். உவைஸ், எம்.எச். எம். ஜஉபர், மாத்தறை ஸாலி, கந்தற எம். ஐ. எம். ஜலீத் ஆகியோர் உரைநடையை ஊடகமாகக் கொண்டு எழுதினர். இக்குழுவுக்கு முன் எழுதிய டி. எஸ். அப்துல் லத்தீப் 1930 களில் ‘உலகரட்சகத் தூதர் " என்றநூலை வெளியிட்டார். அவரது அந்திம காலத்தில் 'திருக்குர்ஆனும் இயற்கையும்" என்ற சிறந்த நூல் வெளிவந்தது.
71

Page 38
இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் சமர்த்தரான எம். ஏ. முஹம்மது மேடை நாடகம், வானொலிநாடகம் போன்றவற்றிலும் பங்களிப்புச் செய்தார். சிங்கள மொழியில் முஸ்லிம் நாடகங்களை மேடையேற்றிய இவர் சூறாவளி என்ற தமிழ் நாடக நூலையும் வெளியிட்டார். பெளஸியா என்ற முதலாவது வானொலித் தொடர் நாடகத்தை எழுதியவரும் இவரே. பிற்காலத்தில் இவர் சமய இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார். " இஸ்லாம் தர்மய ', " இஸ்லாம் இதிஹாசய ", போன்ற நூல்களை சிங்களத்தில் வெளியிட்டார். இவருக்கு 1991 இல் தாஜால் பன்னான் என்ற அரச விருது வழங்கப்பட இருந்த வேளையில் இவர் காலமானார்.
1950, 60 களில் பல்வேறு துறைகளில் தனது எழுத்து வன்மையைக் காட்டிய போர்வை எஸ். ஏ. எம். அஷ்ரப், வானொலித்துறையில் அதிக பிரபல்யம் பெற்றிருந்தார். உரைச் சித்திரம், நாடகம், பேச்சு என நிறைய நிறைய எழுதினார். இவர், கதை, கவிதைகளும், ஆய்வுகளும் தந்துள்ளார். மாத்தறை ஸாலி சிங்கள மொழியிலும் ஆற்றல் மிக்கவர். கேசரி என்ற புனைப் பெயரில் தமிழ்ப்படைப்புக்களைத் தந்த இவர், நாடகங்கள் பலவற்றை மேடையேற்றினார். ஸங்ஸாரே " (உலகம்) என்ற சிங்கள சினிமாப் படத்துக்கு திரைக்கதை எழுதியவரும் இவரே.
1950 களில் முகிழ்த்த எழுத்தாளர்களுள் விடாமல் எழுதி வரும் ஒருவரே வெலிகமை முக்தார் ஏ. முஹம்மது. கட்டுரைத்துறையில் நிறைய ஈடுபாடு காட்டிய இவர் ஒரு போது அபூ அஹ்மது என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும் எழுதினார். கவிதைகளும் சில படைத்துள்ளார். ' புதுமைக்குரல் என்ற இஸ்லாமியப் பத்திரிகையின் (1965 - 70) ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இஸ்லாமிய நாகரிகம் (1975, 1993), இனிக்கும் இஸ்லாம் (1982), தற்காப்புக் கேடயம் (1992), ஆகிய நூல்களையும் வெளியிட்டார். 1992 இல் இவருக்கு கன்சுல் உலூம் ' என்ற அரச விருது வழங்கப்பட்டது.
திக்குவல்லை ஏ. எச். எஸ். முஹம்மது 1940 களில் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ஏ. எம். எம். உவைஸ், எம். எச். எம். ஜஉபர், எம். ஐ. எம். ஜலிது ஆகியோர் கட்டுரைத் துறையில் ஈடுபாடு காட்டிய போதும் பிற்காலத்தில் தொடர்ந்து எழுதவில்லை.
இலக்கியத்தில் புதுத்திருப்பம் மாத்தறை மாவட்டத்தில் இருந்து வந்த பாரம்பரியச் செய்யுள்துறை, சமயக் கட்டுரைத்துறை என்பவற்றிலிருந்து காலமாற்றத்திற்கேற்ப புதுத் தடம் பதிக்கும் முயற்சிகள் 1960 களில் மேற்கொள்ளப்பட்டன. இஸ்லாமியப் போதனைகளை பக்தி இலக்கியத்துக்குப் பயன்படுத்தும் போக்கை மாற்றி, சமூக மாற்றக் கருவிகளாகப் பயன்படுத்தவும், படைப்பிலக்கியத்தை வளர்க்கவும் இக் காலகட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
72

பாரம்பரிய சிந்தனைத் தடத்தில் எழுதிய ஒரு சில எழுத்தாளரும் இக்கால கட்டத்தில் இருந்ததை வெலிகம அபுல் ஹஸன் முஹம்மது, ஸஈத் முஹம்மத் இர்ஷாத் போன்றோர் கட்டுரைத் துறையில் ஈடுபாடு காட்டினர். அபுல்ஹஸன் முஹம்மது பாரம்பரிய மரபுகளையொட்டிய பொருளில் சிறு பிரசுரங்கள் சுமார் 10 வரை வெளியிட்டார்.
நல்ல சொற்பொழிவாளரான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி ஆரம்பத்தில் கவிதை, சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்களில் ஈடுபாடு காட்டினாலும் பின்னர் சமய இலக்கியத்தை நோக்கி தனது எழுத்தைத் திருப்பினார். காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்கள் பணியும் (1969) தக்வாவும் நவயுகத்தின் சவாலும் (1982) நளிம் ஹாஜியார் ; வாழ்வும் பணியும் (1993) ஹதீஸ் வரலாறும் முக்கியத்துவமும் (1993), பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி (1993) எனப்பல இஸ்லாமிய நூல்களை வெளியிட்ட இவர் 'இஸ்லாமியக் கல்வி’ (1979) என்ற ஆங்கில நூலையும் வெளியிட்டார். வரலாற்று அறிஞர்கள் பலரது கட்டுரைகளைத் தொகுத்து இலங்கை முஸ்லிம்கள் (1986) என்ற பெயரில் ஒரு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டமை பாரிய சமூகப்பணியாகும். வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகைகள் பலவற்றில் கலாநிதி சுக்ரியின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இஸ்லாமியச் சிந்தனை என்ற ஆய்வுச் சஞ்சிகைக்கும் இவர் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
1960 களில் முகிழ்த்த காலி ஏ. எச். எம். யூசுப் வெலிகமையில் மணமுடித்தவர். நடைச்சித்திரம் எழுதுவதில் வல்லவரான இவர் கவிதை, சிறுகதை, ஆய்வுக் கட்டுரை எனப் பல துறைகளையும் தொட்டவர். 1965 இல் நய்ைமலர் என்ற இவரது நடைச்சித்திர நூல் வெளிவந்தது. நூற்றுக்கணக்கில் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ள ஏ. எச். எம். யூசுப் 1983 இல் இந்தியாவில் 'குர்ஆனின் குரல் சஞ்சிகை நடத்திய வெள்ளிவிழாக் கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்தார். (கபுவத்தை கே. கே. மெக்காதர் 1960 களில் சிறுகதை எழுதிய பெண் எழுத்தாளர். இவர் இப்போது புனைக் கதைத் துறையிலிருந்து ஒதுங்கியிருப்பது துரதிர்ஷ்டமே.)
வெலிகம எம். எச். எம். நாளிரும் கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்திரிகைத் துறை எனப் பல்துறை ஈடுபாடு காட்டியவர். அஷ்ஷபாப் என்ற சஞ்சிகையை 1970 களில் இருந்து வெளியிட்ட இவர், இஸ்லாமிய நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1983) என்ற நூலை வெளியிட்டார். தாக்கம் மிக்க இவரது சிந்தனைக் கட்டுரைகள் நூலுருவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
சிறந்த ஓவியரான மாத்தறை எம். ஏ. மன்சூரும் 1960 களில் கதை, சிறுகதை, கட்டுரை போன்றவற்றை எழுதி, பின்னர் ஓய்ந்து விட்டார்.
முற்போக்கிலக்கியப் பிரவாகம்
1960 களுடன் சமூகப்பார்வையும் முற்போக்கு எண்ணமும் கொண்ட படைப் பிலக்கியப் பிரவாகம் திக்குவல்லையிலிருந்து எழத் தொடங்கியது. எம். எச். எம். ஷம்ஸ், யோனகபுர ஹம்ஸா, திக்குவல்லை கமால், எஸ். ஐ. எம். ஹம்ஸா, செந்தீரன் ஸத்தார், நீள்கரை நம்பி என சங்கிலித் தொடராகப் படைப்பாளிகள்
73

Page 39
உருவாயினர். 1980 களில் இவர்கள் திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி இயங்க ஆரம்பித்தனர். பூ - 1, பூ - 2 என்ற இதழ்களை வெளியிட்ட இவ்வியக்கம், பின்னர் பல நூல்களையும் வெளியிட்டது. கவியரங்கு, கருத்தரங்கு போன்றவற்றையும் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் நடத்தியது.
1959 இல் பாலர் கவிதையுடன் எழுத்துலகில் பிரவேசித்த எம். எச். எம். ஷம்ஸ், சுமார் 25 சிறுகதைகளை எழுதியுள்ளார். 300 க்கு மேல் கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியுள்ளார். சில ஆய்வுகள் பிரசுரமாக வெளிவந்தன. மாத்தறை காசிம் புலவர், ஹைக்கூ எழுதுவது எப்படி, இன்றைய புதுக்கவிதைகள் பற்றிய சில குறிப்புக்கள் என்பன நூலுருப்பெற்ற கட்டுரைகள், பதுர் ஒரு வரலாற்றுத் திருப்பம், நூல் விமர்சனம், விலங்குகள் நொருங்குகின்றன என்பன கூட்டு முயற்சியில் வெளியிடப்பட்ட நூல்கள்.
புதுக்கவிதை, சிறுகதை, விமர்சனங்கள், சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகள் என்பனவற்றையும் எழுதியுள்ள இவர், சிங்களச் சிறுகதை, கவிதை போன்ற வற்றை தமிழில் பெயர்த்தும் உள்ளார். இசைப்பாடல் இயற்றுவதில் ஈடுபாடு காட்டும் இவரது நாடகங்கள் வானொலியிலும், மேடையிலும் வெளிவந்துள்ளன. நேர்வழி, அஷ்ஷாரா, செய்தி மடல், பாமிஸ், ஆசிரியர் குரல் பிரதிராவய (சிங்களம்) போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1992 இல் இவருக்கு 'நஜ்முல் உலூம்" என்ற அரச விருது வழங்கப்பட்டது.
யோனகப்புர ஹம்ஸா 1960 களில் கவிதை, சிறுகதை, கட்டுரை, இசைப்பாடல் ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டியவர். 50 க்கு மேல் கவிதைகளும் 25 க்கு மேல் கட்டுரைகளும் எழுதிய இவர் 1979 இல் கொழும்பில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டுக் கவியரங்கிலும் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 1970 களின் பின்னர் இவர் மேடைநாடகத்துறையில் கவனம் செலுத்தினார். சொல்லாமல் வரும் முடிவு (1979) காலம் கடந்த முடிவு (1979), காலம் கதை சொல்லும் (1980), மனிதன் மறந்தால் (1993) என்பன குறிப்பிடத்தக்க நாடகங்கள், மறைந்த பெரியார் “ கைர்லெவ்வை " அப்துல் வஹ்ஹாப் பற்றி ஹம்ஸா முஹம்மது ஒர் ஆய்வு நூலை எழுதினார். 30 வருடங்களுக்கு மேலாக இது கையெழுத்துப் பிரதியாகவே இருந்து வருகிறது.
புனை கதைத் துறையில் பிரபல்யமிக்க எழுத்தாளரான திக்குவல்லைக் கமால் கோடையும் வரம்புகளை உடைக்கும் ' என்ற தலைப்பில் தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை 1984 இல் வெளியிட்டார். 1993 இல் குருட்டு வெளிச்சம் என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தேசியப்பத்திரிகைகளில் இவரது தொடர் நாவல்கள் ஐந்து, 1976 முதல் 1990 வரை வெளிவந்தன. அண்மையில் ஸவுத்ஏசியன் புக்ஸ் நிறுவனம் இவரது நாவலொன்றை இந்தியாவில் வெளியிட்டது, நிறையக் கவிதைகள் எழுதியுள்ள கமால் 1973 இல் எலிக்கூடு என்ற பெயரில் புதுக்கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டார். வானொலியில் 40 ஒலிக்கதைகளையும் 30 க்கு மேல் நாடகங்களையும் இவர் ஒலிபரப்பியுள்ளார். இனிமை என்ற சஞ்சிகையை இவர் 1978 முதல் வெளியிட்டார், மேடை நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ள கமால், விமர்சனத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.
74

திக்குவல்லை எழுத்தாளர்களுள் ஏ. ஏ. எச். இமாதுதீன் குறிப்பிடத்தக்கவர். நீள்கரைநம்பி என்ற புனைப் பெயரில் 1960 - 1980 களில் நிறைய எழுதிய இவர் புதுக்கவிதையிலும், சிறுகதையிலும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவரது சிறு கதைகள் தனிமனிதத் தாக்குதல் கொண்டவை என்று ஒரு போது விமர்சிக்கப்பட்டது. இஸ்திக்லால்' என்ற ஆயுர் வேதக் கல்லூரி மலருக்கு இவர் ஆசிரியராக இருந்தார். (சினிமா, வைத்தியம் போன்ற துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் இவர் எழுதினார்.) ዶ
எஸ். ஐ. எம். ஹம்ஸா, திக்குவல்லை ஹம்ஸா என்ற பெயரில் நிறையப் படைப்பிலக்கியங்கள் தந்தவர். சிறுகதைகள் சுமார் 10, கட்டுரைகள் சுமார் 30, கவிதைகள் சுமார் 30 இவரது அறுவடைகள். இவர் பிற்காலத்தில் பாடப் புத்தகத்துறையில் கூடிய கவனம் செலுத்தலானார். அபிவிருத்திப் புவியியல் என்ற உப பாடநூல் பலரது பாராட்டைப் பெற்றது. புவியியற் பாடப் பயிற்சி நூலொன்றையும் இவர் வெளியிட்டார். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் சஞ்சிகைக்கு இவர் ஆசிரியராக இருந்துள்ளார்.
செந்தீரன் ஸத்தார் 1965 களில் நிறையக் கவிதைகள் எழுதியவர். 1970 இல் ‘விடிவு " என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. சிங்கள மொழி பெயர்ப்பு
களையும் இவர் செய்துள்ளார்.
திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்துக்கு வெளியேயும் பல எழுத்தாளர்கள் உருவாகியமைபற்றி இங்கு குறிப்பிடப்பட வேண்டும். ஸ்ப்றுள்ளாகான், திக்குவல்லை ஹினாயா, திக்குவல்லை ஸப்வான், எம். ஏ. ஹனிபா, எம். எச். எம். அலி ரிஜா, எப். எம். அப்வான், எம். ஏ. ஸி. முஹம்மது ஆகியோர் பல்வேறு இலக்கியத் துறைகளில் ஈடுபாடு காட்டினர்.
ஸ்ப்றுள்ளாகான் சிங்களத்திலும் ஆற்றல் மிக்கவர். ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது" என்ற பிரபல்ய நாவலை இவர் சிங்களத்திற் பெயர்த்துள்ளார். கொழும்புப் பல்கலைக்கழக இலக்கிய மன்றமொன்று இதனை வெளியிட முன் வந்துள்ளது. சுமார் 10 மொழிபெயர்ப்புக் கதைகளை இவர் சிங்களப் பத்திரிகை களில் வெளியிட்டுள்ளார். தமிழ்க் கட்டுரைகள், கவிதைகளும் இவர் எழுதியுள்ளார். திக்குவல்லை ஹினாயா கட்டுரை, சிறுகதை என்பவற்றில் ஈடுபாடு காட்டியவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.
எப். எம். அப்வான் நல்ல சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். கவிதைகளும் சிங்கள மொழிபெயர்ப்புகளும் தந்துள்ளார்.
இக்காலகட்டத்தில் வெலிகம வாரிஸ் அலிமெளலானா நல்ல கவிதைகள் பலவற்றை எழுதிவந்தார். கட்டுரைகளும் எழுதியுள்ளார். போர்வையூரைச் சேர்ந்த வரதராசனின் ‘கள்ளோ காவியமோ" என்ற நூலை மொழிபெயர்த்து 1970 சாகித்திய மண்டலப்பரிசில் பெற்றுத் தென்னிலங்கைக்கு புகழ் சேர்த்துத் தந்தார்.
75

Page 40
மும்மொழி ஆற்றல் பெற்ற இவர் இலங்கைச் சோனகர் இன வரலாறு போன்ற மொழிபெயர்ப்புக்களையும் தந்துள்ளார். இவரது கவிதைகளும் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. 1993 இல் காத்திபுல் ஹக் என்ற அரச விருது வழங்கப் பெற்றார்.
போர்வை பாயிஸ் ஜிப்ரி 1950களிலிருந்து 40க்கு மேல் நீதிக் கதைகளை எழுதியுள்ளார். கவிதைகளும் எழுதியுள்ள இவர் ஒரு பாடகரும் ஆவார். போர்வையூர் ஜிப்ரி என்று வானொலியில் பிரபல்யம் பெற்ற எம். எஸ். எம். ஜிப்ரி 1960இல் இருந்து 50க்கு மேல் வானொலி நாடகங்களை எழுதியுள்ளார்.
மாத்தறை எம். ஏ. எம். அத்தாஸ், எம். ஏ. ஸி. முஹம்மது ஆகியோரும் கட்டுரைத் துறையில் ஈடுபாடு காட்டினர். அத்தாஸ் கவிதை, இசைப்பாடல் என்பவற்றிலும் ஈடுபட்டார். எம். ஏ. ஸி. முஹம்மது 30 ஆண்டுகளுக்கு மேல் பத்திரிகை நிருபராகப் பணியாற்றினார். இவருக்கு 1993 இல் ‘காத்திபுல் ஹக்' என்ற அரச விருது வழங்கப்பட்டது.
1970 களில் முகிழ்த்த படைப்பாளர்களுள் திக்குவல்லை ஸப்வான் குறிப்பிடத் தக்கவர். சிறுகதைகள் பலவற்றை எழுதிய இவர் நிறையக் கவிதைகளையும் படைத்துள்ளார். வானொலிக் கதை 15, ஊடுருவல் 25, வானொலி நாடகங்கள் 10 என்பன இவரது அறுவடைகள். மேடை நாடகங்களையும் எழுதி நடித்துள்ள ஸப்வான் இனிமை கவிமஞ்சரி என்ற சஞ்சிகையை 1980 களில் வெளியிட்டார். பிற்காலத்தில் இவர் உப பாட நூல்களை வெளியிடலானார். மாணவர்களுக்கான இலக்கிய நூல்கள் 3 இதுவரை வெளிவந்துள்ளன.
வெலிகம ஹபீபுர்ரஹ்மான் கட்டுரைகள் 50 வரை எழுதியுள்ளார். அத்தக்வா என்ற இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்தார். மாத்தறை ஸமீனா ஸஹித் நல்ல சிறுகதை எழுத்தாளர் ஆவார். கட்டுரைகளும் எழுதி யுள்ளார்.
மாத்தறை ஹஸினா வஹாப் பிரபல்யமான சிறுகதைப் படைப்பாளி. இவரது சிறுகதைத் தொகுப்பு 1994 இல் வெளிவந்தது. பல போட்டிகளிலும் இவரது சிறுகதைகள் வெற்றிபெற்றுள்ளன.
மதுராபுர நளீரா ஸாமீன் புதுக்கவிதைகள் பல எழுதியவர். தற்போது இவர் ஓய்ந்துள்ளார். திக்குவலை சும்ரி பல துறைகளில் ஆற்றல் மிக்கவர். சிறுகதை, கவிதை, நாடகம், வானொலித்துறை என நிறைய ஈடுபாடுகாட்டியவர். இவர் 200 க்கு மேல் ஊடுருவல் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வானொலியில் சாதனை படைத்துள்ளார். வானொலி நாடகமும் நிறையப்படைத்துள்ள இவர், ஒரு சிறந்த மேடையறிவிப்பாளரும் ஒவியரும் ஆவார்.
76

வெலிகம வாரிஸ் அலி மெளலானா கவிதையிலும், கட்டுரையிலும் ஈடுபாடு காட்டினார். 1984 - 1989 வரை கலைச்சுடர் என்ற மாணவ சஞ்சிகையை இவர் வெளியிட்டார். செயல் மூலம் கற்றல் (1994) என்பதும் இவர் வெளியிட்ட நூலாகும்.
கோட்டகொட ஸினியா நிஸாம் 25 க்கு மேல் கட்டுரைகளை எழுதியவர். வானொலியிலும் பங்களிப்புச் செய்துள்ளார். சிறுகதையிலும் ஈடுபாடு கொண்டவர்.
மாத்தறை மாவட்ட சிங்கள இலக்கியப் பங்களிப்பும் இங்கு அவதானிக்கப்பட வேண்டும். காஸிம் புலவருக்குப் பின் இத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுபவர் மாத்தறை நிலார் என். காஸிம் ஆவார். விவரண இதழின் உதவி ஆசிரியரான இவர் தமிழ்க் கவிதைகளை கலைமொழித்துவம் குன்றாது சிங்களத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். சிறுகதைகள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இசைப் பாடல் போட்டிகள் பலவற்றிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார். A.
மாத்தறை தஹ்லான் ஸலாஹாத்தீன் சிங்களக் கட்டுரைகள் 50 க்கு மேல் எழுதியவர். மாத்தறை ருகுணு ஒலிபரப்பில் நிறையப் பங்களிப்புச் செய்து வருகிறார். மாத்தறை ஹரீஸ், ஜெஸ்மின் சகோதரர்கள் காலம் சென்ற கலைஞர் ஸாலியின் புதல்வர்கள். இவர்கள், மேடைநாடகத் துறையில் சாதனை படைத்து வருகிறார்கள்.
VM
திக்குவல்லை எம். எச். எம். அலி, சிறுவர்களுக்கான உப பாடநூல்களை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இஸ்லாமியக் கலைகளில் ஈடுபாடு காட்டும் இவர் ' செயல் மூலம் கற்றல் ' என்ற நூல் வரிசையில் பல வெளியீடுகளைத் தந்துள்ளார். பாலர் பாடல், இசைப்பாடல் என்பனவும் இவர் எழுதியுள்ளார்.
திக்குவல்லை வை. எம். எஸ். ஐ. சியாம் 9DL தமிழ் மொழி பெயர்ப்பில் வல்லவர். பதுர் ஒரு வரலாற்றுத் திருப்பம், விலங்குகள் நொறுங்குகின்றன என்பவற்றின் கூட்டாசிரியராக இவர் பங்களிப்புச் செய்தார். ஹாஜிகளைப் பிளவுபடுத்தாதீர் ' என்ற சிறு பிரசுரத்தையும் இவர் வெளியிட்டார். ஆய்வு நோக்கு கொண்ட கட்டுரைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். (வெலிகாமம் எம். எஸ். பதுர்தீன் கவிதை, புனைகதை என்பவற்றில் ஈடுபாடு காட்டி வருகிறார்.)
புதுவெள்ளம்
1980 களின் பின் மாத்தறை மாவட்டத்தில் திகழ்ந்த இளம் படைப்பாளிகள் பலர்.
பாலத்தடி ஹிப்சி தவ்பிக் 40 க்கு மேல் கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறுகதை, நாடகம் என்பவற்றிலும் ஈடுபாடு காட்டுகிறார். அல்குர்ஆன் கூறும் ஆகார வகைகள் (1990) இவர் வெளியிட்ட நூலாகும். மதுராபுர மும்தாஸ் ஹபீள், கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, இசைப்பாடல் போன்றவற்றில் நல்ல பங்களிப்புச்
77

Page 41
செய்து வருபவர். இவரது கவிதைத் தொகுப்பொன்று ரோனியோவில் 1992 இல் வெளிவந்தது.
கந்தரை எம். கே. எம். றிப்கான், எம். அஸ்லம், வெலிப்பிட்டி ஸெய்னுல் ரிலா, மதுராபுர பைரூஸ் ஆகியோர் மாணவருக்கான உப பாடநூல்களை வெளியிட் டுள்ளனர். ஸெய்னுல் ரிலா பத்திரிகைகளில் விமர்சனக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். எம். மிப்றூன் கவிதையிலும் கட்டுரையிலும் ஈடுபாடுகாட்டுபவர். மாத்தறை நஸ்மியா, போர்வை ஹபீபா ஷாபி ஆகியோர் சிறுகதைகள் எழுதி வருகின்றனர். திக்குவல்லை நஸிஹா ஆமிரும் குறிப்பிடத்தக்க ஒரு பெண் எழுத்தாளர்.
1980 களின் பின்னர் பிரவாகித்து புதுவெள்ளத்தில் வந்தவை இரத்தினங்களா சரலைக் கற்களா ? என்பது ஆய்வுக்குரியது. மொழியாற்றற் குறைவு, வாசிப்புப் பழக்கம் அருகியமை மட்டுமன்றி பிரதேச ரீதியான கலை, இலக்கிய மன்றங்கள் செயல் இழந்தமையும் மாத்தறை மாவட்டத்தில் தரமான புதிய இலக்கியப்பரம்பரை உருவாகாமைக்குக் காரணம் எனலாம். எனினும் மீண்டும் கலையிலும், இலக்கியத் திலும் சாதனை படைக்கின்ற ஆர்வம் இளம் எழுத்தாளாடையே தற்போது முகிழ்ந்து வருகிறது. இந்த ஆர்வம் பூத்துக் காய்த்துக்கனியும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
78

கல்வி
- எம். எச். எல். ஏ. ஏ. ஏ. ஸி. நூஹ"
மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எப்போது குடியேறி வாழ ஆரம்பித்தார் களோ அன்றிலிருந்தே அவர்களின் கல்வி வரலாறும் ஆரம்பமாகின்றது. கல்வி கற்பதை வலியுறுத்தும் அல்குர் ஆனின் போதனைகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாக்குகளும் முஸ்லிம்களைக் கல்விபெறத் தூண்டின.
இலங்கையின் மதப்பிரச்சாரப் பணிக்காக கி. பி. பத்தாம் நூற்றாண்டில் பக்தாத் கலீபாவினால் அனுப்பப்பட்ட காலித் இப்னு அபூபக்காயா என்ற பெரியார் கொழும்புக் கோட்டையிலே முதன்முதலாக ஒரு பள்ளிவாசலை நிறுவி சமயப் பணியாற்றினார். இவர் இங்கேயே காலமாகி அடக்கஞ் செய்யப்பட்டார். அன்னாரின் அடக்கஸ்தலத்தில் நிறுவப்பட்ட நடுகல் ஆரம்பகால முஸ்லிம்களின் கல்விப்பணியை நினைவுபடுத்துகின்றது.
ஆரம்பகாலக் கல்வி முறை மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பகாலக் கல்விப் போதனை எவ்வாறு நடைபெற்றதென ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது. பக்தாதில் நிலவிய கல்வி முறை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு வட ஆபிரிக்கா முதல் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா வரை இஸ்லாமியக் கல்விப் போதனா முறையிலே ஒருமைப்பாடும் நெருங்கிய தொடர்பும் காணப்படுகிறது. "ஆரம்பமாக குர்ஆன் ஓதும் முறை கற்பிக்கப்பட்டது. இஸ்லாமியப் பழக்கவழக்கங்கள், சமயக் கட்டளைகள், நம்பிக்கைகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, நாயகத் தோழர்களான ஸஹாபாக்களின் வரலாற்றுச் சம்பவங்கள் என்பன போதிக்கப்பட்டன. எழுதுவதற்கு மரப்பலகை ஒன்றை உபயோகித்தனர். இதில் எழுதியதை அழிப்பதற்கு சுற்றாடலில் காணப்பட்ட மாலா என்ற் வெண் களிமண்ணைப் பயன்படுத்தினர். அரிசியை வறுத்துக் கரியாக்கி அதிலிருந்து தயாரித்த ஸாயின் மையினால், மூங்கில் அல்லது மரக்குச்சியினால் தயாரிக்கப்பட்ட கலம் என்ற எழுதுகோலினால் எழுதினர். OAT639st தனிமையாகவோ, சிறுசிறு குழுக்களாகவோ கற்பிக்கப்பட்டனர். வகுப்புக்களோ தரங்களோ இருக்கவில்லை. வயது கூடிய மாணவர் குர்ஆன் ஓதும் முறையைக் கற்பிப்பர்.”
மூன்று நான்கு வயது முதல் பன்னிரண்டு வயது வரையிலான ஆண்கள், பெண்கள் இருபாலாரும் இதில் கல்வி பயின்றார்கள்.
79

Page 42
ஆரம்ப நிலையில் முஸ்லிம் சிறார்களுக்கு புனிதகுர் ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிவாசலிலே வசதியானதாக அமைந்தது. கல்வியும் சமய அனுஷ்டானப் பயிற்சியும் அங்கு ஒருங்கே கிடைத்தன. தொடக்கத்திலே எழுத்துக் கலையும் குர்ஆன் ஒதலோடு இணைக்கப்பட்டது. இதனால் ஆரம்பப் பாடசாலை மக்தப் " என அழைக்கப்பட்டது. சமூகத்தின் சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்தலையே அது முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்ததால் அமைப்பிலும் பாடத்திட்டத்திலும் பள்ளிவாசலுடன் தொடர்புடையதாயிருந்தது. இதனால் பட்டணத்திலே, கிராமத்திலோ ஒவ்வொரு முஸ்லிம் பகுதியிலும் ஒவ்வொரு மக்தப் இருந்தது. அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் பெறாமலும், வேறு தாபனங்களால் வழிகாட்டப்படாமலும் மக்தாப்கள் தாமாகவே இயங்கின. அவற்றின் பாடவிதானம் வரையறுக்கப்பட்டதாயிருந்ததால் பெரியநூல் நிலையங் களோ வேறு உபகரணங்களோ தேவைப்படவில்லை. ஒரு முஸ்லிம் தனது சமய அனுஷ்டானத் தேவைக்காக குர்ஆனிலிருந்து மனனம் பண்ண வேண்டியவை களையும், வாசிப்பு, எழுத்து, இலகுவான எண்கணிதம் என்பவற்றையும் கற்பிக் கும் ஆரம்பப் பாடசாலை பள்ளிவாசலுடன் சேர்ந்திருந்தது. பிரத்தியேக வீடுகளிலும் ஆரம்பப் பாடசாலைகள் நடத்தப்பட்டன. இக்கல்வி அன்றைய வாழ்க்கைத் தேவைக்கும் போதுமாயிருந்தது.
தாய்மொழி :
கி. பி. 9 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் கரையோரத் துறைமுகப் பட்டி னங்களிலே முஸ்லிம்கள் அதிகமாகக் குடியேறி வாழ்ந்தனர். பாண்டியனின் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் இலங்கையிற் குடியேறிய மலபார் வாசிகள் சிங்களவரிடமிருந்து பொருட்களை வாங்கிவந்து அராபியருக்கு விற்றனர். இம்மலபார் வாசிகளுடன் அராபியர் தமிழிற்பேசியே வர்த்தகஞ் செய்ததாலும், சிங்களவர்களுடன் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருக்காததாலும் தமிழ் மொழியே அவர்களின் தாய்மொழியாக வளர்ந்தது" அராபியர் மலபாரிகளின் மொழியான தமிழைக் கற்று வர்த்தகஞ் செய்தனர். அவர்கள் மத்தியில் அராபியர் குடியமர்ந்த பின்னர் தம் சொந்த நாட்டுடனான சமூகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதேவேளை மலபாரிகளின் தொடர்பு அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் தமிழ் மொழியே முஸ்லிம்களின் தாய்மொழியாக வளர்ச்சியுற்றது.
அரபுத் தமிழ் :
இலங்கையில் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அரபு மொழி தெரிந்தவர்களாகவும், எழுத வாசிக்க நன்கு பரிச்சயமுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சமய அனுஷ்டானத்துக்கு அது அவசியமானதாகவும் இருந்தது. சில சந்ததிகளுக்குப் பின்னர் அரபு மொழி பரிச்சயங்குன்றி, பேச்சுவழக்கிலிருந்த தமிழ் மொழி ஆதிக்கம் பெற்றதால் அரபுத் தமிழ் முஸ்லிம்களிடையே வளர்ச்சியுற்றது. அத்துடன் பள்ளிவாசல்களில் சிங்களமோ, வேற்று மொழிகளோ பேசப்படக்கூடாதென்ற மனப்பாங்கும் நிலவி வந்ததால் அரபுத் தமிழ் துரிதமாக வளர்ச்சியடைந்தது.
80

தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் முஸ்லிம்களின் வழக்கிலிருந்து வந்த மொழி அரபுத் தமிழாகும். தமிழ் ஒலி வடிவம் அரபு எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் எல்லோரும் அல்குர்ஆனை ஓதத் தெரிந்தவர்கள். அரபு மொழியின் எழுத்துக்களை விளங்கி அதன் சேர்க்கைகளைப் புரிந்து வாசிக்கக் கூடியவர்களாயிருந்தமையால் அரபுத்தமிழ் முஸ்லிம்களிடையே நீண்டகாலமாக வழங்கிவந்துள்ளது.
அராபிய வியாபாரிகள், கப்பலோட்டிகள் தென்னிந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளுக்கு வந்தபோது தமிழ்மொழியிலே பேசி கொடுக்கல் வாங்கல்களைச் செய்துள்ளார்கள். கொடுக்கல், வாங்கல் பற்றிய செய்திகள், இடங்கள், பொருட்கள், வியாபாரம் தொடர்பாக பெயர் நாமங்கள் அனைத்தையும் அரபு மொழியில் குறித்துக் கொண்டார்கள். தனிப்பட்டவர்கள் பற்றிய குறிப்புக்கள், தினக் குறிப்புக்கான பதிவுகள், அந்தரங்கக் கடிதங்கள் என்பனவும் அரபுத் தமிழில் எழுதப்பட்டன. பள்ளிவாசல்களில் விடப்படும் அறிவித்தல்களும் அரபுத் தமிழில் எழுதப்பட்டன. இவ்வாறே அரபுத் தமிழ் தோற்றம் பெற்றுள்ளதென எம். எம். எம். மஹ்ரூப் தமது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளார்.
முஸ்லிம்கள் அரபுத் தமிழை வாசித்து விளங்கக் கூடியவர்களாயிருந்தனர். இஸ்லாமிய சன்மார்க்க நூல்கள் அரபுத் தமிழில் வெளியிடப்பட்டன. முஸ்லிம்களிடையே மார்க்க அறிவு விருத்தியடைய அரபுத் தமிழ் வழிவகுத்தது. அரபுத் தமிழில் இலக்கியங்களும் தோன்றி வளர்ச்சியுற்றன. 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அரபுத் தமிழ் முஸ்லிம்களிடையே கணிசமான கல்விப் பணியாற்றி வந்துள்ளதென்பதை மறக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் முதற் காற்பகுதியில் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் அரபுத் தமிழ் அதன் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. அரசாங்கத்தின் முயற்சியால் ஆரம்பப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டமையும், சமூக, பொருளாதார மாற்றங்களின் நிறைந்த தகவல்களை புறக்கணிக்க முடியாதிருந்தமையும், பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி 1945 முதல் அமுலுக்கு வந்ததும் அரபுத் தமிழ் வீழ்ச்சியடையக் காரணமாயிற்று. *
முஸ்லிம் வர்த்தகர்களின் செல்வாக்கு :
மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகாமம் ஒரு முக்கிய இறங்குதுறையாக இருந்து வந்துள்ளது. மகா பராக்கிரபாகு (1153 - 1186) காலத்தில் தென்னிலங்கையில் உருகுணப் பிரதேசத்தில் மாணாபரணன் தன் ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தான். இச்சந்தர்ப்பத்தில் மன்னனின் படைகள் உருகுணப் பிர
81

Page 43
தேசத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தாக்கின. வெலிகாமப் பகுதியில் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு வாழ்ந்த வானிஜயோ இனத்தவர்கள் இப்பிரதேசத்தில் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்றும், உங்களை நாம் மன்னனாக ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறி யுத்தம் பரவாது தடுத்தார்கள். இச்சம்பவம் வெலிகாமத்தில் முஸ்லிம் வியாபாரிகள் செல்வாக்கு மிக்கவர்களாக வாழ்ந்து வந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. கி. பி. பதினொராம் நூற்றாண்டில் தெற்கு, தென்மேற்குக் கரையோரங்களில் முஸ்லிம்கள் கணிசமான அளவு குடியேறியுள்ளார்கள். பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் அவர் களின் செல்வமும் செல்வாக்கும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. இலங்கையை ஆண்ட மன்னர்களிடமிருந்து முஸ்லிம்கள் பல சலுகைகளைப் பெற்றிருந்தனர். அவற்றுள் சட்டம் சம்பந்தப்பட்டதும் ஒன்றாகும். முஸ்லிம் கடலோடிகள், வணிகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் துறைமுகத்திலே தீர்க்கப்பட்டன. அதற்கான நியாய சபைகள் துறைமுகத்திலே இருந்தன. ஆலிம்கள், வணிகர்கள், முஸ்லிம் கடலோடிகள் அதில் அங்கம் வகித்தனர். தென்னிந்தியா - இலங்கை சிறு கப்பல்களில் வணிகம் செய்த முஸ்லிம்களின் சட்டம், கிழக்கு ஆபிரிக்கா, அராபியா, பாரசீக வளைகுடா - சட்டம், இலங்கை தொடர்பான சட்டம், மலாக்கா,கிழக்கிந்திய நாடுகள் இலங்கை தொடர்பான
சட்டம் என்ற வகையில் வழக்குகள் விசாரித்துத் தீர்க்கப்பட்டன. "
இக்கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்கள் வசித்துவந்த கரைசார்ந்த பெரும் நகரங்களில் கணிசமான தொகையினராக ஆலிம்கள் இருந்தார்கள் என்றும் அவர்களைப் பயிற்றுவிக்க மத்ரஸாக்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் துணியலாம். அதேவேளையில் பாரம்பரியமாக ஆலிம்கள் தாம் கற்ற கல்வியைத் தமது பிள்ளைகளுக்கோ, சினேகிதர்களின் பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ பயிற்றுவித்திருக்கவுங் கூடும். அவற்றைப் பற்றிய தடயங்கள் தற்பொழுது கிடைக்கவில்லை. *
மத்ரஸாக் கல்வி :
முஸ்லிம் சிறார்கள் முதலில் மக்தப் என்ற ஆரம்பப் பள்ளியில், பயின்று பின்னர் மத்ரஸா என்னும் உயர்கல்வி நிலையங்களில் கற்றனர். திருக்குர்ஆன், ஹதீஸ், ஷரீஆ பிக்ஹ், இஸ்லாமிய சரித்திரம், அரபு மொழி, இலக்கணம், கவிதை, எழுத்தணிக்கலை மட்டுமல்லாது எண்கணிதம், கேத்திரகணிதம், அட்சர கணிதம், புவியியல், வானியல், வைத்தியம் ஆகியவைகளும் கற்பிக்கப்பட்டன.
போர்த்துக்கேயர் வருகையினால் : போர்த்துக்கேயர் இலங்கை வரும்பொழுது (1505) நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தின் ஏகபோகம் முஸ்லிம்களிடமிருந்தது. அரசியல் விவகாரங்களிலும்
82

செல்வாக்குமிக்கவர்களாக இருந்தனர். மாத்தறை மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் செல்வத்திலும், கல்வி கலாசாரத்துறையிலும் முன்னேற்றகரமான நிலையில் இருந்துள்ளார்கள். போர்த்துக்கேயரின் வருகையோடு இந்து சமுத்திரத்தில் தனியாதிக்கம் பெற்றிருந்த முஸ்லிம் வியாபாரிகள் நசுக்கப்பட்டார்கள். வாசனைத் திரவியங்களைப் பெறவும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் வந்த போர்த்துக்கேயர், இலங்கையில் சிங்கள அரசர்களுடன் நட்புப் பூண்டு வியாபாரஞ் செய்யும் முஸ்லிம்களைத் தம் எதிரிகளாகக் கருதினர். போர்த்துக்கேயரின் அடாவடித்தனங்களால் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் மிகவும் இம்சிக்கப்பட்டார்கள். 1575 ஆம் ஆண்டு கரையோரத் தாக்குதலின்போது வெலிகாமப் பகுதியில் பெருந்தொகையான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 1646 இல் போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆதிக்க வேட்டையின் போது மாத்தறையில் முஸ்லிம்கள் பயங்கரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்களும் சிறுவர்களும் அடிமைத்தனத்திற்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இதனால் கரையோரத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். திக்குவல்லை, மீயல்ல, கிரிந்தை, கந்தரை, கொடயிட்டிய, ஹொரகொட போன்ற முஸ்லிம் கிராமங்கள் தோன்றின.
முஸ்லிம்களின் தனித்துவம் : முஸ்லிம்களின் வர்த்தகம், பண்பாட்டு மலர்ச்சி, செல்வாக்கு என்பன இக்காலத்தில் படிப்படியாக கீழ்நோக்கியே சென்று கொண்டிருந்தன. இதற்கு ஐரோப்பியரின் வர்த்தகப் போட்டியும், கப்பற் கைத்தொழிலில் அவர்கள் அடைந்திருந்த பெருமுன்னேற்றமுமே காரணமாகும். கரையோரப் பகுதிகளில், குறிப்பாக மாத்தறை, வெலிகாமம் ஆகிய இடங்களில் போர்த்துக்கேயரின் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்ததால் முஸ்லிம்கள் உள்நாட்டுப் பகுதிகளில் குடியமர்ந்தனர். " தாம் சென்ற இடங்களில் பள்ளிவாசல்களை நிறுவி சமய, பண்பாட்டு ஒழுக்கங்களைப் பேணிக் கொண்டனர். என்றாலும் முஸ்லிம் குடும்பங்கள் சிதறின. செல்வங்கள் அழிந்தன. கல்வி கலாச்சார விருதுகள் தேய்ந்தன. ஆனாலும் அவர்களது மார்க்க பக்தி, மார்க்க விசுவாசம் மட்டும் ஆணித்தரமாக வேரூன்றித் தழைத்து, துர்ச்செல்வாக்குப் புயல்களுக்கு இசைந்து கொடுக்காது நிமிர்ந்து நின்றது."
இதுகாறும் வியாபாரிகளாகவும், கப்பலோட்டிகளாகவும் விளங்கிய முஸ்லிம்கள் கமல்காரர்களாகவும், பண்டங்கூறி விற்பவர்களாகவும் மாறினர். எனினும் சிலர் தங்களுக்கும், தங்கள் சொத்துக்களுக்கும் விளையக்கூடிய ஆபத்தைப் பொருட் படுத்தாமல் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமிடையேயான காவு வியாபாரத் திலும், இலங்கையின் துறைமுகங்களுக்கிடையிலான கரையோர வியாபாரத்திலும் ஈடுபட்டனர். இவ்வியாபாரம் போர்த்துக்கேயரால் முற்றுகையிடப்பட்டிருந்த கண்டியரசனுக்குப் பெரும் உதவியாக இருந்தது."
83

Page 44
இலங்கையைப் பொறுத்தவரையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின்
காலத்தில் இஸ்லாமிய சமயப் பயிற்சி பல வகையில் நடைபெற்றது. திறமையும் ஊக்கமும் பெற்ற சிலர் அரேபியா, குடாநாடுகள் ஆகியவற்றுக்குப் பிரயாணஞ் செய்தார்கள். அங்குள்ள கலாசாலைகளிற் பயின்றார்கள். வேறு சிலர் மேற்கு, தென்னிந்தியப் பகுதிகளுக்குச் சென்று கலாசாலைகளிற் கல்வி கற்று வந்தார்கள். ஆனால் பரம்பரையாக அல்லது பிற நாடுகளில் கல்வி கற்று வந்த ஆலிம்கள் இலங்கையில் ஆங்காங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் தாபன ரீதியற்ற மத்ரஸாக்களை நடத்தினார்கள்.
ஒல்லாந்தர் காலத்தில் : போர்த்துக்கேயருக்குப் பின் ஆட்சிபுரிந்த ஒல்லாந்தர் காலத்திலும் நிலைமை மாறவில்லை. பெரும்பாலும் முஸ்லிம்கள் ஒதுங்கியே வாழ்ந்தனர். 1856 ஆம் ஆண்டு வெலிகாமம் முஸ்லிம்களின் இறங்குதுறையாக இருந்தது. அப்பொழுது வெளிநாட்டிலிருந்து பல முஸ்லிம்கள் இங்கு வந்தார்கள். அதைக் கட்டுப்படுத்து முகமாக டச்சு ஆளுனர் தமது மாத்தறை, திஸாவாலை, வெலிகம முஸ்லிம்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்களின் தொழிலைக்
13 o ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆணையிட்டார். ஆயினும் காலி, மாத்தறைப் பகுதிகளில் சுங்கப்பகுதி செயற்பட்டு வந்ததாலும் இதனைக் கண்காணிப்பது இலகு என்பதாலும் இம்முயற்சியைக் கைவிட்டனர். இவ்வாறு வெலிகாமத்தில் வந்திறங்கிய இம்முஸ்லிம்கள் நீட்ட சட்டையும், முதுகுப்புறமாகத் தொங்க விடப்பட்ட நீண்ட தலைப்பாகையும் அணிந்திருந்தமையால் ஒல்லாந்தரால் இலகுவில் இனங்காணப்பட்டார்கள். தென் அராபியப் பகுதியிலிருந்தும், இந்தியா வின் தென்பகுதியிலிருந்தும் வந்த முஸ்லிம் சமயப் பெரியார்களே இவர்கள் எனக் கருதலாம்.
ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்கள் கரையோரப் பகுதியில் காணிகளை உடைமையாக்கிக் கொள்வது சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களோடு சிநேக உறவு பூண்டு வாழ்ந்ததால் ஒல்லாந்தருக்கு முஸ்லிம்களை ஒடுக்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 1747 இன் பின்னர் காணி உடைமை பற்றிய கடுமையான சட்டங்கள் ஆதனவரி செலுத்துவதன் மூலம் தளர்த்தப் பட்டன. இதற்குப் பின்னர் ஒல்லாந்தரின் ஆதிக்கத்துக்குட்பட்ட பகுதிகளிலும், அவர்களின் கோட்டைக்கு அண்மையிலும் முஸ்லிம்கள் குடியேறலாயினர்.
ஆங்கிலேயர் காலத்தில் :
ஒல்லாந்தரிடமிருந்து இலங்கையின் கரையோர ஆதிக்கம் 1796 இல், எவ்வித யுத்தமுமின்றி இரத்தஞ் சிந்தாமல் ஆங்கிலேயருக்கானது. ஆங்கிலேயர் காலத்தில் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழ முடிந்தது. வியாபாரம் வளர்ச்சியடைந்தது. உள்நாட்டில் குடியேறிய முஸ்லிம்களுக்கும், கரையோரப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களுக்குமிடையே தொடர்புகள் அதிகரித்தன. போர்த்துக்கேயரா திக்கத்தின் பின் முஸ்லிம்கள் உள்நாட்டின் பல பாகங்களுக்கும் பிரிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் மத்ரஸாக் கல்வியும் பாதிப்புற்றது.
84

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் சீரிய கல்வி நிலையங்கள் எல்லாம் மறைந்து எஞ்சியிருந்ததெல்லாம் குர்ஆன் ஓதப்பள்ளிக் கூடம் மாத்திரம்தான். பள்ளிவாசல் திண்ணையில் அல்லது சில வீட்டு விறாந்தையில் லெப்பை, சிறார்களைக் கூட்டி பலகையில் அரிச்சுவடி எழுதியும் குர்ஆனின் சிலபகுதிகளைச் சொல்லிக் கொடுத்தும் வந்தார்." மத்ரஸா என்ற உயர்கல்வி முறை முற்றாகச் செயலிழந்திருந்தது. மதக்கல்வி தெரிந்த சில ஆலிம்கள் இருந்தனர். அவர்களும் தம்மிடம் பாடங்கேட்டு வந்தவர்களுக்கு அரபு இலக்கணத்தையும் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் போதித்தனர். இதனால் மதக்கல்வியில் மக்கள் அதிக அக்கறை காட்டவில்லை. பள்ளிவாசல்களுடன் குர்ஆன் பள்ளிக்கூடங்கள் இணைந்திருந்ததால் முஸ்லிம்கள் தம் சமூகத்தின் தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்துக் கொண்டனர்.
தற்காலக் கல்வியும் முஸ்லிம்களும் : போர்த்துக்கேய ஒல்லாந்தர் காலக்கல்வி கிறிஸ்தவ மதத்தையும், மேனாட்டுக் கலாச்சாரத்தையுமே வளர்த்தது. தொடர்ந்து வந்த ஆங்கிலேயரும் கிறிஸ்தவர்களாயிருந்தமையால் அவர்களின் கல்விமுறையும் முஸ்லிம்களின் சமய நம்பிக்கைகளுக்குப் பாதகமாக அமையும் என்று ஆங்கிலேயரின் புதிய முறைக் கல்வியையும் முஸ்லிம்கள் பயில மறுத்தனர். ஆங்கிலத் தேசாதிபதி பிரடரிக்நோத் கல்வித்துறையில் ஊக்கங் காட்டினார். உபாத்திகளுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டது. 1810 இல் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப எண்ணிய பிரெளன்றிக் தேசாதிபதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பித்து மிஷன்களிடம் ஒப்படைத்தார். 1834 இல் முதலாவது பாடசாலைக் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் இது கலைக்கப்பட்டு 1841 இல் இலங்கையரின் போதனைக்கான மத்திய பாடசாலை ஆணைக்குழு என்ற அமைப்பில் போதனா முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுங்கூட முஸ்லிம்களின் அச்சம் தீரவில்லை. இக்கல்வி முறைக்கு முஸ்லிம்கள் காட்டிய பலத்த எதிர்ப்பின் காரணமாக பொருளாதாரத்துறையில் முன்னேறிச் செல்ல வேண்டிய பல சந்தர்ப்பங்களை இழந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் புதிய உத்தியோக வாய்ப்புக்களையும் முஸ்லிம்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. முஸ்லிம் கள் கல்வித்துறையில் பின்தங்கியிருந்தமையே இதற்குக் காரணமாயிருந்தது.
முஸ்லிம்கள் மதத்திலே கொண்டிருந்த பற்றுதல் காரணமாக ஆலிம்களைத் தம் தலைவர்களாக ஏற்றனர். பள்ளிவாசல் இயக்கங்களுக்கும் மக்தப்களுக்கும் அவர்கள் மேற்பார்வையாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் கடமையாற்றினார்கள். இவ்வாலிம்கள் ஆங்கிலக் கல்விக்கு வன்மையான எதிர்ப்புக் காட்டினர். அரசாங்கத்தால் நடத்தப்பட்ட சுயமொழிப் பாடசாலைகளுக்குச் செல்வதைக்கூட ஆதரிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயம் தனது மாணவர்களுக்குக் கல்வி புகட்ட குர்ஆன் பள்ளிக்கூடங்களை மாத்திரமே கொண்டிருந்தது. பள்ளிவாசல்களில் அல்லது வீட்டுத் திண்ணைகளில் பள்ளிவாசல் தரும பரிபாலகரின் முகாமையின் கீழ் அவை இயங்கின.
85

Page 45
எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்'முஸ்லிம்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் se ab8uó கல்வித்துறையில் முன்னேறியிருந்தனர். மாத்தறை, வெலிகாமம், திக்குவல்ல ஆகிய பகுதிகளில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர்களாகவும், நொத்தாரிஸ்களாகவும், குமாஸ்தாக் களாகவும் கடமையாற்றியுள்ளார்கள் என்பது தெளிவு விதானைகள், முதலியார் போன்றவர்களும் கணிசமான தொகையினர் இருந்துள்ளனர்.
முதல் முஸ்லிம் பாடசாலை :
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் சுதந்திரமாக வர்த்தகத்தில் ஈடுபட்டுப் பொருளிட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பல இன்னல்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கிராமப்புறங்களில் குடியேறி தமது சமய, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்த முஸ்லிம்களிடையே இடம் பெயர்வுகளும், வர்த்தக முயற்சிகளும் மீண்டும் சமயக் கல்வியைப் பாதிப்புறச் செய்தன. கிறிஸ்தவ மிசனரிகளில் இடம்பெற்ற ஆங்கிலக்கல்வியும் சுயபாஷா போதனா முறைகளும் சன்மார்க்கச் சூழலைப் பாதித்துக் கொண்டிருந்தது. இந்நிலையிற்றான் வெலிகாமம் கப்புவத்தையில் 1887 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட குர்ஆன் தமிழ்ப் பாடசாலை தென்னிலங்கை முஸ்லிம்களின் கல்வி விழிப்புணர்ச்சிக்கு முதற்படியாக அமைந்தது.
சமயப் பெரியார்களின் வருகை :
இஸ்லாமிய சன்மார்க்க நெறிமுறைகள் மறுக்கப்பட்டும் கைவிடப்பட்டும் பிற கலாச்சாரத் தாக்கங்கள் முஸ்லிம்களிடையே தோன்ற ஆரம்பித்த கால கட்டங்களிலே வெளிநாடுகளிலிருந்து வர்த்தக நோக்கில் வந்த முஸ்லிம் பெரியார்கள் தமது நோக்கத்தை மறந்து சமயக் கல்வியை வளர்ப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. வெலிகாமத்தில் அல்குத்பு செய்கு இஸ்மாயீல் யமனி (ரஹ்) (மறைவு 1846), மாத்தறையில் அல்குத்பு செய்கு யஹ்யா ஹாஜியார் அப்பா (ரஹ்) (மறைவு 1882), தென்னிலங்கையில் காதிரிய்யாத் தரீக்காவை வளர்த்த மகான் அல்லாமா செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) (1818 - 1900), ரிபாயீ தரீக்காவை அறிமுகஞ் செய்த செய்யித் அஹமத் ரிபாயீதங்கள் (ரஹ்), 1868 ஆம் ஆண்டு இங்கு விஜயம் செய்த செய்யத் அஹ்மத் பின்ஸாலிஹால் யமனி ஷாதுலி (ரஹ்) ஆகியோரின் பணிகள் மகத்தானவை. இவர்களோடு தென்னிந்தியா கிழக்கரை, காயல்பட்டினம், மலபார் கண்ணனூர், அந்தோராத் தீவு போன்ற இடங்களிலிருந்தெல்லாம் காலத்துக்குக் காலம் முஸ்லிம் பெரியார்கள் சமயப்பணிகளில் ஈடுபட்டு சன்மார்க்கப் பணியாற்றியதை நாம் அறியக் கூடியதாயிருக்கிறது. இவர்கள் குறிப்பாகத் தரீக்காக்களை அறிமுகஞ் செய்து மக்களைப் பள்ளிவாசல்களுடன் தொடர்புறச் செய்தார்கள். இஸ்லாமிய அறிவைப் புகட்டி சன்மார்க்கப் பயிற்சியளித்தார்கள். பிற கலாச்சாரத் தாக்கங்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு பெரிதும் உதவியாயிருந்தார்கள்.
86

முஸ்லிம் பாடசாலைகளின் வளர்ச்சி :
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருளாதாரத்துறையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. 1885 க்கும் 1892 க்குமிடையே மொத்த இறக்குமதிப் பொருட்களின் பெறுமதி நான்கு கோடி ரூபாவிலிருந்து ஆறு கோடி ரூபாவாக அதிகரித்தது. இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களின் பெறுமதி இரட்டிப்பாகியது. இந்தப் பொருளாதாரக் காரணியால் உந்தப்பட்ட முஸ்லிம்கள் கல்வியில் தாம் அடைந்திருந்த பின்தங்கிய நிலையை உணர்ந்தனர். மார்க்கக் கல்வியும் வேண்டும். அதேவேளையில் புதுக்கல்வியும் தேவை' என்ற வகையில் சிந்திக்கத் தொடங்கினர். “ தம்மை இதுகாறும் ஏனைய சமூகங்களுடன் போட்டியிடவிடாது தடைசெய்தவற்றிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் " என்ற நோக்குடன் கெளரவ எம். ஸி. அப்துர் ரஹ்மான் எம். எல். ஸி. அவர்களின் செல்வாக்குடைய உதவியுடன் ஜனாப் எம். ஸி. சித்திலெப்பை அவர்கள் இடைவிடாது செய்த முயற்சியே கண்டி, கம்பளை, கொழும்பு ஆகிய இடங்களில் பாடசாலைகள் தோன்றக் காரணமாக அமைந்தன." இதேகாலப் பகுதியில் மாத்தறை மாவட்டத் திலும் இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் பெரியார்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக வெலிகாமத்தில் அறபா, மாத்தறையில் தாருல் உலூம், திக்குவல்லையில் மின்ஹாத் கலாநிலையங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன.
“ 19 ஆம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியிலிருந்து சில விசேட அரசினர் (முஸ்லிம்) பாடசாலைகள் மாத்தறை மாவட்டத்தில் இருந்தன. 1906 இல் வெலிகம முஸ்லிம் கலவன் பாடசாலையில் 51 சிறுவர்களும், 23 சிறுமியரும் கல்வி கற்றார்கள். கல்பொக்கை முஸ்லிம் கலவன் பாடசாலையில் முறையே 85 சிறுவரும் 28 சிறுமியரும் படித்தார்கள். "17 1903 முதல் 1912 வரை பொதுப் போதனைப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜே. ஹாவாட் அவர்களின் கல்வி அறிக்கை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளிலும் முஸ்லிம்கள் அரசாங்க சுயமொழிப் பாடசாலைகளில் அளிக்கப்பட்ட கல்வியைப் பயன்படுத்திக் கொண்டமையால் அரசாங்கத்தின் கல்வி விருத்திக் கொள்கையுடன் ஒத்துழைத்தனர் எனக் கருதலாம். 1906, 1907 ஆம் ஆண்டுகளின் கட்டாயக் கல்விச் சட்டமும் இதற்கு அனுகூலமாக அமைந்ததெனலாம். ஆயினும் கட்டாயக் கல்விச் சட்டத்தை அமுல் செய்வதில் இடத்துக்கிடம் வேறுபட்ட சிக்கல்கள் இருந்மையால் உறுதியாக அமுல் செய்யப்படவில்லை.
கல்விச் சங்கங்கள் :
ஏனைய சமூகத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முஸ்லிம்களின் கல்வி நிலை மிகவும் பின்தங்கியதாகவே இருந்தது. முஸ்லிம்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக பல சங்கங்கள் காலத்துக்குக்காலம் தோன்றின. உதாரணத்திற்காக அரசாங்க முஸ்லிம் சுயமொழிப் பாடசாலையில் ஆங்கிலக் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், வறிய முஸ்லிம் சிறார்களுக்கு ஆங்கிலப் பாடசாலை விடுகைப்பத்திர வகுப்புவரை இட்டுச்செல்வதற்கான கல்விச் சகாய நிதியை வழங்குவதற்காகவும் வெலிகம முஸ்லிம் கல்விச் சங்கம் 1928 ஆம் ஆண்டு
87

Page 46
ஆரம்பிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். இதன் கெளரவ செயலாளராகவும் பொருளாளராகவும் ஜனாப் ஏ. எச். எம். எம். ஹாஸைன் அவர்கள் விளங்கியுள்ளார்கள். இவர் மாத்தறை கல்வி மாவட்டக்குழு அங்கத்தவராகவும், பின்னர் மாத்தறை மாவட்டக் கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று மாத்தறையில் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கம் முஸ்லிம் சிறார்களின் கல்வி வளர்ச்சியில் அதிக ஊக்கமுடன் செயற்பட்டு வந்துள்ளது.
கல்விச் செயற்குழு :
1931 ஆம் ஆண்டு முதல் உயர்திரு ஸி. டபிள்யூ டபிள்யூ. கன்னங்கரா தலைமையில் இயங்கிய கல்விச் செயற்குழு பல்வேறு சமூகங்களுக்கிடையே கல்வியிலே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சம வாய்ப்பளிக்க முயன்றது.
குர்ஆன் மத்ரஸா தமிழ்ப் பாடசாலைகள் :
1935 இல் கிராமப்புறங்களில் கல்வி வசதியற்ற இடங்களிலுள்ள சமய வழிபாட்டோ டிணைந்து கல்வி போதிக்கும் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்க முன்வந்தது. குர்ஆன் பாடசாலைகளும் இதனால் நன்மையடைந்தன. 1935 ஆம் ஆண்டு கொடப்பிட்டி குர்ஆன் தமிழ்ப்பாடசாலை கலீபா என். எல். எம். அப்துல் மஜீத் மஹல்லம் அவர்களின் முகாமைத்துவத்தின் கீழ் அரசாங்கத் தமிழ்ப்பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. இதன் தலைமையாசிரியராக ஜனாப். ரீ. எஸ். தையிபு நியமிக்கப்பட்டார். ஹொரகொட பள்ளிவாசல் குர்ஆன் தமிழ்ப்பாடசாலையும் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதாகும். 1938 ஆம் ஆண்டு ஜனாப் ஏ. எச். எம். எம். ஹாஸைன் இதன் முகாமையாளராக நியமிக்கப்பட்டார்." ஜனாப், டி. பீ. எல். எம். காலித் இதன் முதல் தலைமையாசிரியரானார்.
கிராமப்புறப் பாடசாலைகள் :
1936 இல் அமைக்கப்பட்ட கல்விச் செயற்குழுவில் ஜனாப் ரீ.பீ. ஜாயா, ஜனாப் ஏ. ஆர். ஏ. ராளிக் ஆகியோர் அங்கத்துவம் வகித்ததால் முஸ்லிம்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள், வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றன. இதன் தலைவரும் கல்வி அமைச்சருமான உயர்திரு ஸ்ரீ டபிள்யூ டபிள்யூ. கன்னங்கரா அவர்களின் பரந்த மனப்பான்மையினால் முஸ்லிம் கிராமங்களிலே அரசாங்க சுயமொழிப் பாடசாலைகள் தோன்றின. இந்த நிலைப்பாட்டில் 1938 ஆம் ஆண்டு கந்தறை, மீயல்ல, வெலிப்பிட்டி ஆகிய கிராமங்களிலும் 1942 ஆம் ஆண்டு மாத்தறை கொட்டுவேகொடையிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நோன்புகால விடுமுறை : முஸ்லிம் சிறார்கள் புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொண்டு பாடசாலைக்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்பதை அரசுக்குணர்த்த (1935) வெலிகம முஸ்லிம் கல்விச் சங்கம் தூண்டுதலாக இருந்து வந்துள்ளது.
88

சட்டாம்பிள்ளை - மாணவ ஆசிரியர் நியமனம் : ஆரம்பத்தில் கல்வியில் ஒரு தரத்தையடைந்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டார்கள். ஏற்கனவே ஆசிரியர்களாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள் தம் பாடசாலையில் மேல் வகுப்பில் திறமைகாட்டும் மாணவர்களை சட்டாம்பிள்ளை களாக நியமித்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வர். பாடசாலைப் பரிசோதகர்கள் இவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி இலாகாவுக்குச் சிபாரிசு செய்வர். கல்வி இலாகா பரீட்சை நடாத்தி அதில் தேறுபவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும். 1929 வரை இவ்வாறு சட்டாம்பிள்ளை நியமனமுறை அமுலில் இருந்தது. வெலிகாமத்திலும் அரசினர் தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்ற ஜனாப்களான ரீ. எஸ். அப்துல் லதீப், ஏ. பீ. அப்துல் ஹக்கு ஆகியோர் 1921 ஆம் ஆண்டிலும், ஜனாப்களான எம். ஏ. எம். ரசீது, ஏ. எல். எம். ஸாலி, ரீ. எஸ். தையிபு, ஏ. எஸ். எம். ஹாசிம் ஆகியோர் 1924 ஆம் ஆண்டிலும் இவ்வாறு (மாணவ ஆசிரியர்) சட்டாம்பிள்ளைகளாக நியமிக்கப்பட்டவர்களாவர். அரசாங்கப் பாடசாலையில் ஆசிரியர் ஒருவரும் சட்டாம்பிள்ளைகள் பலரும் ஆசிரியர்களாகக் கடமையாற்றியதால் அரசாங்கம் ஆசிரியர்களை நியமிப்பதில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டன. (இக்கட்டுரையில் இடம்பெறும் வெலிகமி பாடசாலைக்கல்வி பற்றிய அதிகமான தகவல்கள் அறபா மத்திய கல்லூரியின் சம்பவத் திரட்டுப் புத்தகங்களிலிருந்து பெறப்பட்டவை.)
பயிற்றப்பட்ட முதல் முஸ்லிம் ஆசிரியர் : « 1910 ஆம் ஆண்டு வெலிகம அரசினர் முஸ்லிம் பாடசாலையிற் சேர்ந்த ஜனாப் ரீ. எஸ். அப்துல் லதீப், ஆசிரியர்களான ஜனாப் எஸ். ஏ. ஹன்னான், திரு. வல்லிபுரம் ஆகியோரிடம் கல்வி கற்று 1922 இல் இதே பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1923/24 கோப்பாய் ஆசிரிய கலாசாலையிற் பயிற்சிபெற்று 1925 இல் முதல் முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியாகி காலி, மாத்தறை, வெலிகம, திக்குவல்ல, களுத்துறை ஆகிய இடங்களில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். அல்ஹாஜ் ரீ. எஸ். அப்துல் லதீப் இலங்கையில் முதன்முதலாகப் பயிற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியர் என்ற வகையில் மாத்தறை மாவட்டத்துக்கே பெருமை தேடித்தந்திருக்கிறார்."
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை :
முஸ்லிம் கல்விச் சங்கம் ஆசிரிய கலாசாலை அமைக்கும் முயற்சியில் பலமுறை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. வெலிகாமத்தில் போதிய காணி வசதியைப் பெறுவதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் 1941 ஆம் ஆண்டு அளுத்கமையில் முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது.
1941 இல் அளுத்கமையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது போட்டிப் பரீட்சை மூலம் பத்தொன்பது பேர் தெரிவு செய்யப்பட்டார்கள். ஜனாப்களான எம். ஸி. எம். ஸலித், எம். ஐ. எம். முஹ்ளின், எம். எச். முஹம்மது, எம். பீ. எம். ஸஹீது, ஏ. ஆர். முஹம்மது, எம். ஏ. சி. எம். ஜிப்ரி, ஓ. எஸ். எம். ரவுப் எம். ஏ. எம். லியாவுத்தீன் ஆகியோர் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
89

Page 47
என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மாவட்டத்தின் கல்வித்தரம் சிறந்து விளங்கிய
தென்பதற்கு இது ஒரு சான்றாகும். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பயிற்சிக்காகப் பலர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அரபு ஆசிரியர் நியமனம் :
1942 ஆம் ஆண்டு அரபு ஆசிரியர் நியமனம் சம்பந்தமாக மாத்தறை முஸ்லிம் சங்கத்தினால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் நாள் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் அரசினர் தமிழ்ப் பாடசாலைகளில் அரபு ஆசிரியர்களின் நியமனம் பற்றி மாத்தறை முஸ்லிம் சங்கத்திடமிருந்து செயற்குழுவுக்கு ஒரு கடிதம் வந்தது. அடுத்த மதிப்பீட்டில் அதற்கு ஒழுங்குகள் செய்வதெனக் குழு தீர்மானித்தது என கல்விச் செயற்குழு அறிக்கை தெரிவிக்கிறது. * இதைத் தொடர்ந்து 1943 ஆம் 44 ஆம் ஆண்டு களில் அரசாங்கப் பாடசாலைகளில் அரபு ஆசிரியர்களாக மெளலவிகளான அஹ்மத் அலி ஆலிம், மதார் ஆலிம், ஹம்தூன் ஆலிம், செய்க் ஸாலி ஆலிம், அபுல் ஹஸன் ஆலிம், அபுல் ஹதா ஆலிம், ஏ. டபிள்யூ. எம். றலி ஆலிம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து அரபு ஆசிரியர் நியமனம்/ மெளலவி ஆசிரியர் நியமனம் இன்றுவரை இடம்பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். மெளலவித் தகுதிப்பத்திரங்களையும், மத்ரஸாக்களையும் அரசாங்கம் அங்கீகரித்தே இந்நியமனங்களை வழங்கி வருகிறது.
கல்வியில் ஆர்வம் :
கலாநிதி கன்னங்கரா அவர்களின் கல்வித்துறையிலான சேவை சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முப்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மலேரியா நோய்ப் பரவலினால் உண்டான கஷ்டங்களுக்கான நிவாரணத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏழைச் சிறுவர்களுக்கான இலவச மதிய உணவு இடைநிலை உயர்நிலைக் கல்வியை அடைவதற்கான வாய்ப்பை வழங்கியது. குடியேற்ற நாட்டுக் கல்விக் கொள்கைக்கு மாறாக ஒவ்வொரு தனியாளுக்கும் அவருக்குத் தேவையான உடன்பிறந்த ஆற்றல்கள் இருக்குமெனின் அவர் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வின் மிகக்குறைந்த நிலையிலிருந்து தன்னை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்ற ஜனநாயக் கொள்கை மலர்ந்தது. ஜனநாயக சமுதாயமொன்றின் கல்வி ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை போன்ற எல்லாக் கட்டங்களிலும் இலவசமானதாக இருத்தல் வேண்டும் என்ற கொள்கையும் 1945 இல் அமுல் நடத்தப்பட்டது. *
இலவசக் கல்வி :
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியூட்டும் சிறந்த இலட்சியத்தின் பயனாக நமது நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் மக்கள் அகவிருள் அகன்று அறிவொளி வீசப்பெற்றனரென்பது உண்மையாகும். இலவசக் கல்வியின் பயனாக இப்பகுதி முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலையும் 1945 க்குப் பின்னர் சிறப்படைந்துள்ளதென்பதை மறுக்க முடியாது. 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இதன் பிரதிபலிப்புக்களை உணரக்கூடியதாயிருந்தது.
90

1980 - 83 காலப் பகுதியில் க. பொ. த. ப. சாதாரண, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையும் பல்கலைக்கழகத்துக்கான அனுமதி யும் குறிப்பான அதிகரிப்புக் கோலமொன்றைப் பிரதிபலிக்கின்றது.
பல்கலைக்கழக அனுமதி : பல்கலைக்கழகத் தேர்வுக்கான மாவட்டப் பங்கு வீதம் பெரும்பான்மைச் சமூகத்தவருக்கு மாவட்ட ரீதியிலான கல்வி வாய்ப்புக்களின் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்குப் பயன்பட்டாலும் சிறுபான்மைச் சமூகத்தவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதெனலாம். 1970 க்கு முன்னர் பல்கலைக்கழக அனுமதி உச்சப்புள்ளி ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. 1970 ஆம் ஆண்டு இது மொழி அடிப்படையிலும், பின்னர் புள்ளி தரப்படுத்தல் முறையிலும் 1975 இல் பரீட்சார்த்தி பிறந்த மாவட்ட அடிப்படையிலும், அடுத்து பரீட்சை எழுதிய மாவட்ட அடிப்படையிலும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டது. எப்போது எந்த முறையை முன்வைத்து மாணவர் தெரிவு செய்யப்படுவர் என்பது புரிந்துகொள்ள முடியாத மர்மமாகும். * இது உயர்கல்வியில் மாணவர்களின் கவர்ச்சியை முற்றாகப் பாதித்தது.
தற்போது மாத்தறை மாவட்டம் கல்வித்துறையில் வளர்ச்சியடைந்த மாவட்டமாகக் கணிக்கப்பட்டு பல்கலைக்கழகத் தெரிவுக்கு உயர்ந்த புள்ளிவீதம் வகுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைச் சமூகத்தவரின் சிங்கள மீெரிழி மூலப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் வசதிகள் நிறைய இருக்கின்றன. உயூர் நிலைப் பாடசாலைகள், கல்விக் கழகங்கள், பிரத்தியேக வகுப்புக்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் எல்லாம் நிறைய இருக்க, சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரையில் உயர்கல்வித்துறை மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றது. விஞ்ஞானக் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. க. பொ. த. உயர்தர வகுப்பு விஞ்ஞானம் தற்போது ஒரேயொரு பாடசாலையில் மாத்திரமே கற்பிக்கப் படுகின்றது. அதுவும் உயிரியல் விஞ்ஞான வகுப்புக்களுக்கு நியமன ஆசிரியர்கள் எவருமில்லை. திறமைமிக்க மாணவர்கள் மிகவும் சிரமத்தையெடுத்து நான்கு விஞ்ஞானப் பாடங்களில் சித்தியடைந்தாலும் எல்லைப் புள்ளிக்கு அண்மையிற் கூட வரமுடிவதில்லை. இவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிப்பது எமது சமூகத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய பெருங் கடனாகும்.
மாத்தறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் : மாத்தறை மாவட்டத்தில் எல்லாமாக 405 பாடசாலைகளில் 14 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. மத்திய மகா வித்தியாலயம் 01. மகாவித்தியாலயங்கள் 06. கனிஷ்ட வித்தியாலயங்கள் 07. இம்மூன்று வகையான பாடசாலைகளிலும் முறையே 557, 2173, 1638 தொகையான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். எல்லாமாக 4368 மாணவர்கள் உளர். இவற்றில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் மொத்தத் தொகை 4355.
9.

Page 48
வகுப்பு ஆண்கள் பெண்கள் மொத்தம்
ஆண்டு - 1 234 215 449
ஆண்டு - 2 ‘ 210 230 440
ஆண்டு - 3 252 232 484
ஆண்டு - 4 202 200 402
ஆண்டு - 5 230 200 430
ஆண்டு - 8 223 175 398
ஆண்டு - 7 240 178 4.18
ஆண்டு - 8 200 185 385 ஆண்டு - 9 18O 120 300
ஆண்டு - 10 124 86 210
ஆண்டு - 11 179 116 295
ஆண்டு - 12 27 35 62
ஆண்டு - 13 44 38 82
மொத்தம் 235 2010 4355
சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் :
சிங்கள மொழி மூலப் பாடசாலைகளிலும் கணிசமான அளவு முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். மாத்தறை நகரிலேதான் சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் அதிகம். வெலிகம, திக்குவல்ல மற்றும் கிராமப்புறங்களிலும் உள்ள சிங்களப் பாடசாலைகளில் கற்போர் தொகை 86 ஆக உள்ளது. மாத்தறை நகரப் பாடசாலைகளில் மாத்திரம் 890 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். வகுப்பு வாரியாக அவர்களின் தொகை.
92

அட்டவணை 2
வகுப்பு ஆண்கள் பெண்கள் மொத்தம்
ஆண்டு - 1 41 24 65 ஆண்டு - 2 42 31 73 ஆண்டு - 3 38 33 71.
ஆண்டு - 4 33 32 65 ஆண்டு - 5 34 32 66 ஆண்டு - 8 27 25 52 ஆண்டு - 7 32 36 68 ஆண்டு - 8 33 29 62 ஆண்டு - 9 41 36 77 ஆண்டு - 10 . 34 37 71. ஆண்டு - 11 33 25 58
ஆண்டு - 12 O6 21. 27
ஆண்டு - 13 06 15 21
மொத்தம் 400 376
மாத்தறை மாவட்டத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் மொத்தத் தொகை
அட்டவணை 3
மொழி மூலம் ஆண்கள் பெண்கள் மொத்தம் தமிழ் 2345 2010 4355 சிங்களம் 400 376 776
மொத்தம் 2745 2386 51.31
93

Page 49
கல்விக் கோட்டம் :
இம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் 14 உம் 9 கல்விக் கோட்டங்களுக்குள் அமைந்துள்ளன.
அட்டவணை 4
கல்விக் கோட்டம் முஸ்லிம் பாடசாலைகளின்
தொகை
வெலிப்பிட்டிய 3 வெலிகம 2
மாத்தறை 2 திக்குவல்ல 2 அக்குரஸ்ல 1. கம்புறுப்பிட்டிய 1. தெவிநுவர 1. மாலிம்பட 1.
ஹக்மன 1.
பரீட்சைகள் : பொதுப் பரீட்சைகள் பாடசாலைகளின் கல்வித்தரத்தை அளவிடப் பெரிதும் உதவுகின்றன. ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசிற் பரீட்சை, க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை, உயர்தர்ப் பரீட்சை என்பன இந்த வகையுள் அடங்கும். க. பொ.த. பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளில் மீண்டும் மீண்டும் தோற்றுவோரும் இருப்பதால் அப்பாடசாலைகளின் நிலையைக் கணிப்பீடு செய்வதில் பல சிக்கல்கள் உள.
94

ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசிற் பரீட்சை :
இப்பரீட்சைக்கு 12 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தோற்றியுள்ளனர். 1990 முதல் 1993 வரையுள்ள விபரம் பின்வருமாறு :
அட்டவணை 5
வருடம் தோற்றியோர் சித்தியடைந்தோர்
1990 252 26 1991 256 12
1992 209 30
1993 30
* தகவல் பூரணமில்லை.
கடந்த நான்கு வருடங்களுள் மேற்படி பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தோரின் நூற்றுலீதத்தைப் பின்வரும் அட்டவணையிற் காணலாம். இவ்வட்டவணையில் எட்டுப் பாடசாலைகளே இடம்பெறுகின்றன.
கிரிந்தை முஸ்லிம் வித்தியாலயம், அல் அஸ்ஹர் கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றிலிருந்து எவரும் சித்தியடையவில்லை. கொட்டுவேகொட முஸ்லிம் க. வி. 1992 இல் எவரும் தோற்றவில்லை. ஏனைய வருடங்களில் எவரும் சித்தியடையவில்லை. மின்ஹாத் வித்தியாலயத்துக்கு அனுப்பப்பட்ட படிவம் கிடைக்கப்பெறவில்லை. திக்குவல்லைக்கு நேரில் சென்று பெற்றுக்கொண்ட தகவல்கள் மாத்திரமே இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
அட்டவணை 6
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசிற் பரீட்சையிற் சித்தியடைந்தோர் நூற்றுவீதம்
ul-T66) 1990 1991 1992 1993
அந்நூர் மு. வி. 07.14 22.2 28.5 50.0 அறபா க. வி. 18.75 03.5 15.9 16.6 தாருல் உலும் ம. வி. 13.04. 16.0 15.4 07.1 ஸாதாத் ம. வி. w 16.6 16.6 ஹொரகொட க. வி. 25.0 அல்மினா ம. வி. 05.0 area 10.0 லாஹிரா ம. வி. 11.7 10.0 07.4 அஸ்ஸபா க. வி. 16.6 10.0 10.0 17.6
95

Page 50
க. பொ. த. சா.தரப் பரீட்சை :
இம்மாவட்டத்தில் 12 முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
அட்டவணை 7
வருடம் தோற்றியோர் சித்தியடைந்தோர் சித்தி
தொகை தொகை வீதம்
1991 * 168 110 65.4 1992 209 95 45.4 1993 * 172 63 36.6
* மேற்படி அட்டவணையிலும் மாத்தறை உதவிக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து பெற்ற தகவல்கள் குறிக்கப்பட்டுள்ளன. 1992 இல் தோற்றியோர், சித்தி யடைந்தோர் தொகை மதிப்பீட்டுத் தகவல்களே. மின்ஹாத் ம. வி. தகவல் படிவம் கிடைக்கப்பெறவில்லை.
க. பொ. த. உ/தரப் பரீட்சை :
இம்மாவட்ட முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மொழி மூலம் ஐந்து பாடசாலைகளிலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
அட்டவணை 8
வருடம் தோற்றியோர் சித்தியடைந்தோர் சித்தி தொகை தொகை வீதம்
1992 51 35 68.6 1993 67 34 50.7
1992 ஆம் ஆண்டு 26 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களிலும் 5 பேரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப் பட்டதாக அறிய முடிகிறது. கலைத்துறையிலும் வர்த்தகத்துறையிலுமே பல்கலைக் கழக அனுமதி கிடைக்கின்றது. விஞ்ஞானத்துறையில் அனுமதிக்கப்படுவது மிகமிக அரிதாகும்.
சிங்கள மொழி மூலம் பரீட்சைகள் :
5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசிற் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் பரீட்சையில் தோற்றியோரில் 4 பேர் மாத்திரம் சித்தியடைந்துள்ளனர்.
96

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் 1992 இல் தோற்றிய 68 மாணவர்களில் 48 பேர் சித்தியடைந்துள்ளனர். 1993 இல் தோற்றிய 67 மாணவர்களில் 45 பேர் சித்தியடைந்துள்ளனர். மாத்தறை சென். மேரிஸ் மகளிர் பாடசாலையிலிருந்து கடந்த இரு வருடங்களில் தோற்றிய எல்லா முஸ்லிம் மாணவிகளும் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் 1992 இல் 21 பேர் தோற்றி 11 பேரும் 1993 இல் 12 பேர் தோற்றி 10 பேரும் சித்தியடைந்துள்ளார்கள்.
பல்கலைக்கழகத் தெரிவுக்குத் தகுதி பெற்றோர் 1992 இல் 8 பேரும் 1993 இல் 9 பேரும் உள்ளனர். இவர்களுள் 1992 இல் வர்த்தகத் துறைக்கு 5 பேரும் விஞ்ஞானத் துறைக்கு 2 பேரும் கலைத்துறைக்கு ஒருவரும் தகுதிபெற்று பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். 1993 இல் வர்த்தகத் துறைக்கு 6 பேரும் பொறியியல் விஞ்ஞானம் 2 பேரும் விஞ்ஞானத்திற்கு ஒருவரும் தகுதி பெற்றுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர் களின் பரீட்சைப் பெறுபேறுகள் மிகத் திருப்தியாக அமைந்துள்ளன. க. பொ.த.சா. தரத்தில் 1992 இல் 72%, 1993 இல் 67% மும் சித்தியடைந்துள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி வீதம் முறையே 52%, 83 % ஆகக் காணப்படுகிறது.
ஆசிரியர்கள் :
இம்மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் மொத்தத் தொகை 257 ஆகும். இதில் அதிபர்களும் உட்படுகிறார்கள்.
அட்டவணை 9
ஆசிரியர் பகுப்பு தொகை பட்டதாரி ஆசிரியர்கள் 32 பட்டப்பின் தகைமைபெற்ற ஆசிரியர் 4. பயிற்றப்பட்ட ஆசிரியர் 157 மெளலவி ஆசிரியர் 7 தராதரப்பத்திரமற்ற ஆசிரியர் 7 பயிலுநர் ஆசிரியர் 44 ஏனைய ஆசிரியர் 6
மொத்தம் 257
இம்மாவட்டத்தில் நியமனம் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் 16 பேர் கல்விப் போதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், சில விசேட பாடங்களுக்காகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் தொண்டர் ஆசிரியர்களை சேவையில் ஈடுபடுத்தி உதவுகின்றன.
97.

Page 51
சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் 17 பேர் கடமை புரிகிறார்கள். ஆறு சிங்களப் பாடசாலைகளில் ஆண் ஆசிரியர்கள் எட்டுப் பேரும் பெண் ஆசிரியைகள் ஒன்பது பேரும் உள்ளனர்.
ஆசிரியர் கல்வி : அண்மைக்காலங்களில் நியமனம் பெற்ற பயிலுநர் ஆசிரியர்கள் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக்கல்விச் சேவைப் பிரிவால் நடாத்தப்படும் பயிற்சி நெறியைப் பின்பற்றி வருகிறார்கள். இம்மாவட்டத்தில் மாத்தறை தாருல் உலூம் காவித்தியாலயம் இப்பயிற்சி நெறியின் மத்திய நிலையமாக உள்ளது. ஜனாப் ாம். எச். எம். ஸகா ஆசிரியர் இதற்குப் பொறுப்பாகக் கடமையாற்றுகிறார்.
பட்டதாரி ஆசிரியர்களாகக் கடமையாற்றுவோரில் தேசியக் கல்வி நிறு வகத்தின் ஆசிரியர் கல்விப் பிரிவால் நடாத்தப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா நெறியின் முதல் வருடப் பாடநெறியை 11 ஆசிரியர்களும் இறுதி வருடப் பாடநெறியை 7 ஆசிரியர்களும் பின்பற்றி வருகிறார்கள். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா முதல் வருடப் பாடநெறியை 12 பேரும் இறுதி வருடப் பாடநெறியை 2 பேரும் பின்பற்று கிறார்கள்.
அதிபர்கள் :
இம்மாவட்டப் பாடசாலைகளில் கல்விச் சேவையைச் சேர்ந்த அதிபர்கள் எவருமிலர். புதிய அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்கள் 7 பேரும், தரம் 2 ஐச் சேர்ந்தோர் 5 பேரும், தரம் 3 ஐச் சேர்ந்தோர் இரண்டு பேரும் பதிற்கடமை புரியும் அதிபர்கள் இரண்டு பேரும் கடமையாற்றுகிறார்கள்.
விஞ்ஞானகூடம் : மாத்தறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுள் ஆறாம் ஆண்டுக்கு மேற்பட்ட வகுப்புக்கள் உள்ள 12 பாடசாலைகள் உள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு இந்தப் பாடசாலைகள் அனைத்திலிருந்தும் மாணவர்கள் தோற்று கின்றனர். ஆயினும் இவற்றுள் மூன்று பாடசாலைகளில் மாத்திரமே விஞ் ஞானகூடங்கள் காணப்படுகின்றன. சிறுஅளவிலான விஞ்ஞானகூடங்களைக் கொண்ட பாடசாலைகள் நான்கு உள்ளன. ஏனைய ஐந்து பாடசாலைகளிலும் விஞ்ஞான பாட்ம் கற்பித்தலுக்கான பரிசோதனைக்கூட வசதிகள் இல்லை.
நூலகம் : t மாணவர்களின் கல்வியறிவை விருத்திசெய்வதற்கு நூலகங்கள் மிகவும் அவசியம். இம்மாவட்டத்தின் முஸ்லிம் பாடசாலைகளில் நான்கில் மாத்திரமே நூலக வசதிகள் அமைந்து காணப்படுகின்றன. நூலக அறை அல்லது சிற்றளவிலான நூலக வசதிகள் மற்றும் நான்கு பாடசாலைகளில் உள்ளன.
98

விளையாட்டுத்திடல் :
" மனித உடல் பாடசாலை என்றால் அதன் சுவாசப்பை விளையாட்டிடம் "
என்பார்கள். உளவளர்ச்சிக்கு எடுக்கப்படும் முயற்சியைப் போன்றே உடல் வளர்ச்சியிலும் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமாகும். இதற்கு விளை யாட்டுத்திடல் இன்றியமையாதது. இம்மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளுள் நான்கு பாடசாலைகள் மாத்திரமே விளையாட்டுத்திடல்களைக் கொண்டனவாக விளங்குகின்றன.
தொழில் முன்னிலைப் பாடங்கள் :
தொழில் முன்னிலைப் பாடங்கள் கற்பிக்கப்படக்கூடிய 12 பாடசாலைகளுள் வர்த்தகம் 9 பாடசாலைகளிலும், விவசாயம் 9 பாடசாலைகளிலும், மனையியல் 8 பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுகின்றன. மரவேலை ஒரு பாடசாலையிலும் மின் இலத்திரனியல் ஒரு பாடசாலையிலும் கற்பிக்கப்படுகின்றது. வாழ்க்கைத்திறன் என்ற பாடத்தில் நான்கு பாடசாலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.
வருடாந்த திருத்த வேலைகள் : 1993 ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாடசாலைகளில் வருடாந்த திருத்த வேலைகள் நடைபெற்றுள்ளன. இதற்காகன மொத்தம் ரூபா 1,77,652 செலவிடப்பட்டுள்ளது. பல வருடகாலமாக திருத்த வேலைகள் நடைபெறாத பாடசாலைகளும் இருக்கின்றன.
சஞ்சிகைகள் : இம்மாவட்டத்தில் சஞ்சிகை வெளியீட்டு முயற்சிகள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றுள்ளன.
1947 லிருந்து அறபா மத்திய கல்லூரியின் " அந்நூர் ” பருவ மலர் கையெழுத்துப் பிரதியாக வெளியாகியது. ஐம்பதுகளிலும் இக்கையெழுத்துச் சஞ்சிகை எழுதப்பட்டு மாணவர் மன்றத்தில் வாசிக்கப்பட்டு வந்துள்ளது. இது முஸ்லிம் மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டபோது அந்நூர் சிறப்பு மலர் 1961 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1965 ஆம் ஆண்டு அறபா மகாவித்தியாலய விஞ்ஞான மாணவர் கழகம் " அறிவொளி " என்ற பெயரில் ஒரு சஞ்சிகையைப் பிரசுரித்து வெளியிட்டது.
1958 ஆம் ஆண்டு வெலிப்பிட்டி ஸாஹிரா மகாவித்தியாலயத்தின் " அல்ஹிலால் " என்ற சஞ்சிகை கையெழுத்துப் பிரதியாக வெளியாகியது.
மாத்தறை தாருல் உலூம் மகா வித்தியாலயத்தால் மர்ஹாம் அல்ஹாஜ் ஏ. ஆர். முஹம்மது அதிபராகக் கடமையாற்றிய போது " அருணோதயம் " என்ற பெயரில் ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
கொடப்பிட்டி ஸாதாத் மகாவித்தியாலயம் ஐம்பதாவது ஆண்டு நிறைவை யொட்டி 1985 இல் "அஸ்ஸாதாத் " என்ற பெயரில் பொன்விழா மலரை வெளியிட்டது.
99

Page 52
திக்குவல்லை மின்ஹாத் மகாவித்தியாலயம் " தென்னமுதம் " என்ற பெயரில் ஒரு சஞ்சிகையையும், மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயப் பாடசாலை அதிபர் ஜனாப் ஏ. எஸ். எம். ஸயிதுள்ளா கல்வி அதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றுச் சென்ற போது " இளம்பிறை " என்ற ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டதாக அறிய முடிகிறது.
கப்புவத்தை அந்நூர் முஸ்லிம் வித்தியாலயம் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் போது 1992 இல் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது.
கந்தரை அல்அஸ்ஹர் கனிஷ்ட வித்தியாலயம் "செந்தேன் " என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிட்டது.
சீருடை : ஆரம்ப காலத்தில் முஸ்லிம் மாணவர்கள் குர்ஆன் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் முறையிலே உடையணிந்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சென்றார்கள். ஆண் பிள்ளைகள் சாரம், சேட்டு, தொப்பி அணிந்திருந்தார்கள். பெண் பிள்ளைகள் சட்டையும், அதற்கு மேலால் பிடவையும் அணிந்து தலையை மறைத்து முக்காடிட்டிருந்தார்கள். பாதணி அணியும் வழக்கம் அப்போதிருக்கவில்லை. 1930 - 40 க்கு இடைப்பட்ட காலத்திற்தான் பெண் பிள்ளைகள் நீட்டச்சட்டை மாத்திரம் அணிந்து பாடசாலைக்குச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. கிராமத்தை விட்டு வெளிச் சென்று கல்விகற்கும் ஆண் பிள்ளைகள் சேட், கோட், துருக்கித் தொப்பி என்பவற்றையும் பூரணமாக அணிந்து சென்றார்கள். ஐம்பதாம் ஆண்டுகளுக்குப் பின்னரே ஆண்கள் காற்சட்டையும், சப்பாத்தும் அணியும் வழக்கம் படிப்படியாக ஏற்பட்டது. அறுபதுகளுக்குப் பின்னரே வெள்ளை நிறச் சீருடை அணியும் வழக்கம் ஏற்பட்டது.
வருடாந்தப் போட்டிகள் :
மொழியாற்றலை வளர்க்கக்கூடிய தமிழ்த் தின விழா, ஆங்கிலத் தின விழாப் போட்டிகள் மாவிட்ட, மாகாண நிலைகளிலும், அகில இலங்கை ரீதியிலும் நடைபெறுகின்றன. தமிழ்த்தின விழாப் போட்டிகளில் கப்புவத்தை அந்நூர், வெலிகம அறபா, மாத்தறை தாருல் உலூம், திக்குவல்லை மின்ஹாத், மீயல்ல அல்மினா, கொடப்பிட்டி ஸாதாத், மதுராபுர அஸ்ஸபா, வெலிப்பிட்டி ஸாஹிரா, கந்தரை அல் அஸ்ஹர் போன்ற வித்தியாலயங்கள் பல வருடங்களிலும் மாகாண நிலைப் போட்டிகளில் வெற்றிகள் பல ஈட்டியுள்ளன. 1992 இல் அஸ்ஸபா க. வி. ஐந்து முதலிடங்களையும், அறபா கனிஷ்ட வித்தியாலயம், மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயம் என்பன முறையே இரண்டு முதலாமிடங்களையும் பெற்றுள்ளன. பாஒதல், பேச்சு, நடனம், குழுநடனம் ஆகிய போட்டிகளில் அறபா கனிஷ்ட வித்தியாலயம், மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயம், அந்நூர் மகளிர் மகா வித்தியாலயம் என்பன அகில இலங்கைப் போட்டிக்குக் கலந்துகொள்ளச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
100

ஆங்கிலத்தின விழாப் போட்டிகளில் அறபா கனிஷ்ட வித்தியாலயம் 1993 இல் நான்கு முதலாமிடங்களை வெலிகம வலயப் பாடசாலைகள் மட்டத்தில் ஈட்டிக் கொண்டதும், கந்தரை அல் அஸ்ஹர் கனிஷ்ட வித்தியாலயம் மாத்தறைமாவட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்க தாகும்.
" கம்உதாவ” பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் மாத்தறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் கலந்து கொண்டன. கிரிந்தை முஸ்லிம் வித்தியாலயம் 1991 இல் கட்டுரைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலயம் பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தையும், கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 1992 ஆம் ஆண்டு கிரிந்தை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது. " நெஸ்லே "நிறுவனத்தால் நடத்தப்பட்ட நெஸ்பிறே கட்டுரைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் மீயல்ல அல்மினா மகா வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
சமய அறிவுப் போட்டிகளிலும் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் மாவட்ட, மாகாண ரீதியில் பல பரிசுகளைத் தட்டிக் கொண்டன. தேசிய மீலாத் விழாப் பேச்சுப் போட்டியில் சிங்களப் பிரிவில் வெலிப்பிட்டி ஸாஹிரா மகாவித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்க தாகும்.
விளையாட்டுப் போட்டிகள் இம்மாவட்டத்தில் உள்ள சகல "ഗ്രസക്ഷ பாடசாலைகளிலும் வருடாந்தம் நடைபெற்று வருகின்றன. அநேகமான முஸ்லிம் பாடசாலைகள் மாவட்ட நிலையில் பிறஇன மாணவர்களோடும் போட்டியிட்டு பல வெற்றிகளையீட்டி வந்துள்ளமை கவனிக்கத்தக்கது. “ எல்லே " தேசிய விளை யாட்டில் அறபா ம.ம.வித்தியாலயம் பல வருடங்கள் அகில இலங்கைப் போட்டியில் கலந்து சிறப்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
கல்வியை இடைநிறுத்துவோர் :
இம்மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளிலும் கல்வியை இடைநிறுத்துவோர் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. அட்டவணை - 2 ஐப் பார்க்கும்போது சிங்கள மொழி மூலம் பாடசாலைகளில் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர்களின் தொகையில் ஒரு சீரான போக்கு காணப்படுகிறது. முஸ்லிம் பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் தொகையை அவதானித்தால் (அட்டவணை 1) நான்காம் ஆண்டுவரை ஆண்கள் பெண்கள் தொகையில் சீரான போக்குக் காணப்பட, 5, 6, 7 ஆம் ஆண்டுகளில் பெண்கள் குறைந்து கொண்டு செல்வதையும், வீச்சு அதிகரிப்பதையும் அவதானிக்கலாம். பெரும்பாலும் பெண் பிள்ளைகளில் ஒரு சுமாரான அறிவை, எழுத வாசிக்கத் தெரிந்த அளவில் படிப்பை இடைநிறுத்தும் ஒரு மனப்போக்கு இருந்துவருவதை உணரமுடிகிறது. 8 ஆம் ஆண்டிலிருந்து ஆண்கள் தொகையில் திடீர் வீழ்ச்சி காணப்படுகிறது. வறுமை, பொருளாதார மந்தம் போன்ற காரணங்களால் படிப்பை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்லும் போக்கை இங்கு உணரக்கூடியதாயிருக்கின்றது.
O

Page 53
பெற்றோருக்குக் கல்வியின் தேவையில் அக்கறையில்லாமை, கிராமப் புறங்களில் குடும்பத்தின் வறுமைச்சூழல், நகரப்புறங்களில் தொலைக்காட்சிகள் மாணவர்களின் பொழுதுபோக்காக மாறிவரும் போக்கு பெற்றோர் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதால் பிள்ளைகளின் பொடுபோக்குநிலை என்பன கல்வி இடைநிறுத்தலுக்கு முக்கிய காரணங்களாகவுள்ளன. வெலிகாமம் போன்ற பகுதிகளில் பெண் பிள்ளைகள் பருவ வயதடைந்ததும் கல்வியை இடைநிறுத்த சமய, பண்பாட்டு நிலைமையும் ஒரு காரணமாகும். வகுப்பேற்றப் பரீட்சைகள், பகிரங்கப் பரீட்சைகள் என்பனவற்றில் தோல்வியடைதலும் இதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள் மாவட்டப் பங்கு வீதத்தால் மட்டுப்படுத்தப் பட்டமையும், 1971, 1983, 1988, 1989 ஆண்டுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் கல்வியின் மேலிருந்த ஆர்வத்தைக் குறைத்து விட்டமையும் க.பொ.த. சாதாரண தர வகுப்போடு மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தக் காரணங்களாக அமைந்துவிட்டன எனத் துணியலாம். கல்வி வசதிகள் :
மாத்தறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி வசதிகள் மிகவும் குறைவே. கட்டிடம், தளபாடம், நூலகம், விளையாட்டிடம், விஞ்ஞான கூடம், தொழில் முன்னிலைப் பாட உபகரணங்கள் போன்ற வசதிகள் அனைத்தும் மிகக்குறைவே. பாடஆசிரியர் பற்றாக்குறை, தகுதிவாய்ந்த அதிபர்கள் இன்மை என்பனவும் முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றிலும் உள்ள பொதுவான குறைபாடேயாம். சிங்கள மொழி மூலம் கற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்குரிய வாய்ப்புக்களைவிட தமிழ்மொழி மூலம் கற்ற மாணவருக்கு உயர்கல்விக்கான வாய்ப்புக் குறைவாகவேயுள்ளது.
கல்வி என்பது அபிவிருத்திக்கான மூலகாரணியாக உள்ளது. இதற்காகச் செலவிடப்படும் பணம், அபிவிருத்திக்காகச் செலவிடப்படும் அதிகபட்ச மூல தனமாகக் கருதப்படுகின்றது. எனவே கல்விக்கான வாய்ப்புக்களை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அபிவிருத்தி முயற்சிக்கான ஒரு நடவடிக்கையாகும். * எந்த ஒரு கிராமமும் எந்த ஒரு குடும்பமும் புறக்கணிக்கப்படாது அபிவிருத்தியின் பயன்கள் அனைத்து மக்கட்பிரிவினரையும் சென்றடையக் கூடிய ஒரு நிலைமை உருவாக வேண்டும். அவசியமான சமூகப் பொது வசதிகள், மற்றும் தொழில்நுட்ப நிதியுதவி என்பன மிக வறியவரின் நிலைமையை உயர்த்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் மூலமும் தென்பிராந்திய மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் " என்பது பொருளியல் நோக்கு (டிசம்பர் 1990) ஆசிரியரின் கருத்தாகும். அதே கண்ணோட்டத்தில் “ இப்பிராந்தியத்தை அநேகமாக நாசமாக்கிவிட்ட கிளர்ச்சியொன்றிலிருந்து இப்பொழுது தான் அது மீட்சிபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைகளையும், பிரச்சினைகளையும், மக்கள் அபிலாசைகளையும், பிராந்தியத் தனித்துவங்களையும் கருத்திற் கொண்டே அபிவிருத்தித் திட்டமொன்று . . . . . " அமுல் செய்யப்படுவது அவசியமாகும் என்பதும் அவரது கருத்தாகும்.
முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ், சிங்களம் என்பவற்றுடன் சமய மொழியாகிய அறபு, சர்வதேச மொழியாகிய ஆங்கிலம் என்பனவும் கற்பிக்கப்பட வேண்டி யுள்ளது. தமிழ் மொழியில் சிறப்பாகவும், ஏனைய மொழிகளில் சுமாரான அறிவைப் பெற்றிருப்பதும் ஒவ்வொரு முஸ்லிம் மாணவனுக்கும் அவசியமாகும்.
O2

மாத்தறை மாவட்டத்தில் நாநூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் இருக் கின்றன. அதில் முஸ்லிம் பாடசாலைகள் மாவட்டத்தின் பல பாகங்களிலும் சிறியதாகவே அமைந்துள்ளன. மாத்தறை மாவட்டத்தில் மொத்த சனத் தொகையில் முஸ்லிம்கள் இரண்டரை வீதமாக இருந்தாலுங்கூட கிராம அமைப்பில் ஒன்றுபட்டு வாழ்வது பள்ளிவாசல், பாடசாலை என்பவற்றை அமைத்துக் கொள்ளவும் தனித்துவத்தைப் பேணிக்கொள்ளவும் வாய்ப்பாகவுள்ளது. 1981 ஆம் ஆண்டு கல்வி வெள்ளையறிக்கையிற் கூறப்பட்ட கல்விச் சீர்திருத் தத்துக்கான யோசனைகள் கொத்தணியமைப்பை விதந்துரைத்திருப்பதும் சமயக் கல்விபற்றி எவ்வித ஆலோசனைகளையும் கூறாது விட்டிருப்பதும் சிறுபான்மை முஸ்லிம்களின் தனித்துவத்தையும் பண்பாட்டு நிலையையும் பாதிக்க இடமுண்டு எனக் கருதலாம். இந்த வெள்ளை அறிக்கைபற்றி, இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட (1985 ஜன, 05) நிருபம் தேசிய ரீதியிலும், முஸ்லிம்களின் நிலைப்பாட்டிலும் ஏற்படக்கூடிய பாதகங்களைச் சுட்டிக்காட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது. வெள்ளையறிக்கையின் சில யோசனைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருப்பதால் முஸ்லிம் பாடசாலைகளை இது பாதிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
முஸ்லிம் பாடசாலைகளின் சுருக்க வரலாறு :
மாத்தறை மாவட்டப் பாடசாலைகளின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது இம்மாவட்டக் கல்வி வரலாற்றைப் பற்றிய ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் என்ற அடிப்படையில் பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.
அந்நூர் மகளிர் மகா வித்தியாலயம் :
இப்பாடசாலை வெலிகாமத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் தெனிப்பிட்டியில் கப்புவத்தை என்ற முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் சின்னலெப்பை என்பவரால் நடத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளிக்கூடம் மத்ரஸதுல் இஸ்லாமியா என்ற கந்தூரிக் கூடத்துக்கு மாற்றப்பட்டு, 1867 இல் அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரைப் பெற்றது. புதிய தெருவைச் சேர்ந்த மர்ஹாம் அல்ஹாஜ் எம். எம். இஸ்மாயில் இதனை நீண்ட காலம் நடத்தி வந்தார். 1910 முதல் திருவாளர்களான என். ரி. துரைசிங்கம், வை. எம். எலிஸபெத், வல்லிபுரம் ஆகியோர் இதன் தலைமை யாசிரியர்களாகக் கடமையாற்றினர். 1927 இல் இதன் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்ட திரு. எஸ். என். தேவநேசன் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. 1933 இல் பாடசாலைக்கான புதுக்கட்டிடமும் ஆசிரியர் விடுதியும் கட்டப்பட்டு 1937இல் திறந்து வைக்கப்பட்டன. 1936 இல் கனிஷ்ட பாடசாலைச் சான்றிதழ்ப் பரீட்சைக்கும், தோற்றச் செய்துள்ளார். மாணவர்களைப் பாடசாலைக்கு வரச் செய்வதில் அதிகம் முயற்சி செய்துள்ளார். இப்பாடசாலையின் அபிவிருத்தியிலும், கல்வி வளர்ச்சி யிலும் கணிசமான அளவு பங்காற்றிய அதிபர்கள் அல்ஹாஜ் எம். ஏ. சி. எம். ஜிப்ரி (1955 - 1962), அல்ஹாஜ் ஏ. எம். எம். உவைஸ் (1963 - 1970) மர்ஹாம் எம். எல். எம். எம். ஸலாஹாத்தீன் (1972 - 1983) அல்ஹாஜ் எம். எச். எம்.
03

Page 54
இஸ்மாயீல் (1983 - 1993) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இப்பாட சாலை 1992 ஆம் ஆண்டு 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி தற்பொழுது மாத்தறை மாவட்டத்திலே முதலாவது முஸ்லிம் பெண்களுக்கான கலாநிலையமாக உயர்வுபெற்று விளங்குகின்றது. இதன் அதிபராக ஜனாபா ஏ. எம். எப். மதனியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு 215 மாணவிகளும் 12 ஆசிரியைகளும் 4 தொண்டர் ஆசிரியைகளு
முள்ளனர்.
அறபா தேசியப் பாடசாலையும், அறபா கனிஷ்ட வித்தியாலயமும் : இவ்விரு பாடசாலைகளும் ஒரு தாய்வயிற்றுப் பிறந்த இரட்டைக்குழந்தைகள். வெலிகாமத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் இவையிரண்டும் அமைந்துள்ளன.
குர்ஆன் மத்ரஸாக் கல்வியே அகத்தியமானது என்ற நிலைப்பாட்டில் சன்மார்க்கக் கல்வி பயின்ற முஸ்லிம்கள், ஏனைய சமூகத்தவரின் துரித முன்னேற்ற நிலையைக் கண்டு இப்பகுதி முஸ்லிம் சிறார்களுக்கும் உலகாயதக் கல்வியைக் கற்பிக்க வேண்டுமெனத் துணிந்தனர். குர்ஆன் பள்ளிக்கூடத்திலேயே தமிழ்க் கல்வியையும் கணிதத்தையும் போதித்தனர். ஆரம்பமாக பெரிய நொத்தாரிஸ் என்றழைக்கப்பட்ட செய்யது முஸ்தபா நொத்தாரிஸ் ஹாஜியார் வீட்டில் இவ்வாறு ஒரு பாடசாலை இருந்து வந்துள்ளது. 1888 ஆம் ஆண்டு முதல் அவரது மூத்த மகன் அஹ்மது நெய்னா மரைக்கார் தமிழ், கணித பாடங்களைப் போதித்து வந்துள்ளார். கல்வியில் ஆர்வம் பெருகியதாலும், இடவசதி போதாம லிருந்ததாலும் இப்பாடசாலையை ஒரு தனியான இடத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் வாழ்ந்த பெரியார்களின் ஒத்துழைப்பினாலும் சங்கைக்குரிய ஸெய்யித் ஸாஹிர் மெளலானா அவர்களின் பெருமுயற்சினாலும் 1901 ஆம் ஆண்டு தற்போது அறபா கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ள இடத்தில் ஒரு தற்காலிகக் கட்டிடத்தில் அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மெளலானா அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக 1905 ஆம் ஆண்டு அங்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் எழுப்பப்பட்டு அதில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. அஹ்மது நெய்னா மரிக்காரே அங்கும் கல்வி போதித்து வந்தார்கள். அவரைத் தொடர்ந்து சின்ன நொத்தாரிஸ் அவர்களின் புதல்வர்களுள் ஒருவரான ஓ. எல். எம். ஹாமிம் மாஸ்டர் அவர்களும் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்கள். இவருக்குப் பின் ஜனாப் எஸ். ஏ. ஹன்னான் என்பார் இங்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். 1920 இல் திரு. ஜி. எஸ். எம். வல்லிபுரம், பின்னர் திருவாளர்களான எஸ். ஏ. அம்பலம் (1928), கே. தேவசகாயம் (1929), சீ. பொன்னையா (1933) ஆகியோர் வேற்று மதத்தவர்களாயிருந்த போதிலும் தன்னலங்கருதாது இக்கலையகத்தின் உயர்ச் சிக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். அடுத்து இதே பாடசாலையில் பயின்றவரும் இலங்கையின் முதல் தமிழ் பயிற்றப்பட்ட ஆசிரியருமான மர்ஹாம் அல்ஹாஜ் சீ. எஸ். அப்துல் லதீப் 1935 ஆம் ஆண்டு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். பதினொரு வருடங்கள் இவரது அயரா முயற்சியாலும், அவருக்குத் துணையாக இருந்து உதவிபுரிந்த திரு ஜீ. ஏ. ரோஸ்டிவாஸ் அவர்களின் உழைப்பினாலும் வருடாந்தம் சிரேஷ்ட பாடசாலைப் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைவது பெருகிக் கொண்டே வந்தது.
04

முதலில் இது அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலையாகவும் பின்னர் ஆங்கில சுயபாஷா பாடசாலையாகவும், மீண்டும் தமிழ்ப் பாடசாலையாகவும் பின்னர் துவிபாஷா பாடசாலையாகவும், சொற்ப காலத்தில் நாட்டுக்கல்வி முறைப் பாடசாலையாகவும் மாறிற்று. காலத்துக்கேற்ற கோலம் பூண்டுவரும் கல்விக் கொள்கையின் பிரதிபலிப்பாக இப்பாடசாலையும் விளங்கிற்று. 1946 இல் கனிஷ்ட பாடசாலை, ஆரம்பப் பாடசாலை என இரு வெவ்வேறு பிரிவுகளாக இரு தலைமையாசிரியர்களால் நிர்வகிக்கப்பட்டு 1951 ஆம் ஆண்டு மர்ஹாம் ஏ. எச். எம். எம். வெபா அவர்களின் தலைமையில் ஒரே பாடசாலையாக இணைக்கப்பட் டது. 1958 இல் சிரேஷ்ட பாடசாலையாகவும், 1961 இல் முஸ்லிம் மகாவித்தியா லயமாகவும் தரமுயர்த்தப்பட்டது.
இப்பாடசாலைக்கான இடவசதியை அதிகரிக்கும் பொருட்டு 1981 இல் இங்கி ருந்து நூறு மீற்றர் தூரத்திலிருந்த செட்டிவத்தையில் ஐந்து ஏக்கர் காணியை அரசாங்கம் எடுத்து, வகுப்பறை மாடிக் கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வுகூடம், தச்சுத் தொழிற்கூடம், மனையியல் அறை, நூல் நிலையம், அதிபர் விடுதி, மாணவர் விடுதி, கூட்ட மண்டபம், சமூக அறிவியற்கூடம், விளையாட்டுத் திடல், கணணி அறை என்பவற்றோடு பள்ளிவாசல் ஒன்றையும் கொண்டதாக தென்மாகாணத்திலே ஒரு முதற்தரப் பாடசாலையாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் பின்னணியில் நின்று சேவையாற்றிய அதிபர் மர்ஹாம் ஏ. எச். எம். எம். வெபா அவர்களும் முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் நன்றியுடன் நினைவுகூரத் தக்கவர்களாவர். 1980 இல் இது மத்திய மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட் டது. அண்மைக்கால அபிவிருத்திப் பணிக்கு தென்மாகாணசபை உறுப்பினர்களா யிருந்த ஜனாப் ஏ. சீ. எம். மஹ்ரூப், அல்ஹாஜ் எம். எம். ராளிக், ஜனாப் எம். எஸ். எம். அக்ரம் ஆகியோரும், தென்மாகாண இஸ்லாமிய செயலகப் பணிப்பாளர் அல்ஹாஜ் எச். ஏ. அப்துல் கப்பார் அவர்களும் ஆற்றிய பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கதாகும்.
1965 ஆம் ஆண்டு அரசாங்க மாற்றத்துடன் அதிபர் ஏ. எச். எம். எம். வெபா அவர்களும் இடமாற்றம் பெற்றுச் சென்றமை அறபாவுக்கேற்பட்ட துரதிஷ்டமிக்க ஒரு சம்பவமாகும். இவருக்குப்பின் அதிபர்களாயிருந்த ஜனாப்களான பீ. எம். நயீம் (1965), மர்ஹாம் எஸ். எம். ஏ. எம். முஸம்மில் ஆலிம் (1987), மர்ஹாம் கே. எம். அபூபக்கர் (1970), எம். வை. முஸ்லிம் (1973), எம். என். உமர்மிஹ்லார் (1975), எஸ். எப். ஏ. எம். நாளிர் (1976, மீண்டும் 1982) ஏ. ஆர். எம். ஹாஸைன் (1979) ஆகியோரின் சேவை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இதன் அதிபராக அல்ஹாஜ் எம். எச். எம். இஸ்மாயீல் (1993 முதல்) கடமையாற்றிவருகிறார்.
அறபா கனிஷ்ட வித்தியாலயம் 1988 ஆம் ஆண்டு மகாவித்தியாலயத்திலி ருந்து பிரிந்து தனியாக இயங்க ஆரம்பித்தது. அல்ஹாஜ் மர்ஹாம் ஓ. எஸ். எம். றவுப் முதல் அதிபராக இருந்தார். 1970 முதல் அல்ஹாஜ் ஏ. எம். எம். உவைஸ் அவர்களும் 1984 இல் சங்கைக்குரிய ஜமாலியா செய்யித் ஹாரிஸ் மெளலானா அவர்களும் அதிபர்களாக இருந்து பாடசாலை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார்கள். தற்காலிக ஓலைமடுவம் அகற்றப்பட்டு நிரந்தரக்கட்டிடம் ஒன்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பிரத்தியேகக் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டன. மேலும் இட நெருக்கடி காரணமாக பிரதான கட்டிடம் மேலும் ஐம்பது அடி விஸ்தரிக்கப்பட்டது. சிறுவர்களுக்கான பற் சிகிச்சை நிலைய
105

Page 55
மொன்றும் இங்கு அமைந்துள்ளது. விளையாட்டுத்திடல் இல்லாமை ඉල් பெருங்குறையாகும். தற்போது இதன் அதிபராக ஜனாப் ஏ. ஆர். எம். இர்சாத் கடமையாற்றி வருகிறார்.
அறபா கனிஷ்ட வித்தியாலத்தில் முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டுவரை 650 மாணவர்களும், மத்திய கல்லூரியில் ஆறாம் ஆண்டுமுதல் க. பொ. த. உயர் வகுப்புவரை 557 மாணவர்களும் கற்கின்றனர். இவ்விரு பாடசாலைகளிலும் முறையே 22 ஆசிரியர்களும், 34 ஆசிரியர்களும் கடமையாற்று கின்றனர். மேலதிகமாக ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்பட் டுள்ளார்கள்.
தாருல் உலூம் மகா வித்தியாலயம் : இப்பாடசாலை மாத்தறை பதூதா வீதியில் அமைந்துள்ளது. 1900 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாத்தறை புரோட்வே வீதியிலுள்ள கோயிற்பிள்ளை வீட்டில் (ஸ்கூல் வீடு) திண்ணைப்பள்ளிக்கூடமாக இயங்கிவந்துள்ளது. ஐதுரூஸ் லெப்பை மரிக்கார் நெய்னா மரிக்கார் பாடசாலை நிர்வாகத்தை ஏற்று நடத்தி வந்துள்ளார். பின்னர் நூஹா விலா என்ற இடத்துக்கு மாற்றப்பட்டு மர்ஹாம் எம்.எல். எச். எம். ஹத்தாத் அவர்களின் தலைமையில் இயங்கிவந்துள்ளது. பின்னர் பாத்திமா மாவத்தையில் அமைக்கப்பட்ட ஒரு நிரந்தரமான கட்டிடத்துக்கு இப்பாடசாலை மாற்றப்பட்டது. இது 1917 ஆம் ஆண்டு அறுபது மாணவர்களுடன் மர்ஹாம் ஏ. எம். எம். அப்துல் காதர் அவர்களின் தலைமையில் அரசாங்கப் பாடசாலையாக இயங்கிவந்துள்ளது. 1923 இல் திரு. எம். கார்த்திகேசு என்பார் இதன் தலைமையாசிரியராய் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மர்ஹாம் ரி. எஸ். அப்துல் லதீப் (1928 - 1935), திரு. சி. பொன்னையா (1935 - 1945) ஜனாப் எம்.ஐ. முஹம்மது (1945 - 1954) ஆகியோர் இப்பாடசாலையின் தலைமையாசிரியர் களாயிருந்து பாடசாலையின் உயர்வுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப் பாகப் பணியாற்றியுள்ளார்கள். மர்ஹாம் அல்ஹாஜ் ஏ. ஆர். முஹம்மது அவர்களின் காலத்தில் (1955 - 1960) பரீட்சைப் பெறுபேறுகளில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது. * அருணோதயம் " என்ற சிறப்பு மலர் வெளியிடப்பட்டதும் இவரது காலத்திலேயாகும். 1961 இல் இப்பாடசாலையின் அதிபராகக் கடமையேற்ற அல்ஹாஜ் எம். ஏ. எம். ஸ்பியத்தீன் இக்கலா நிலையத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்கள். பதுரத்தா வீதியில் உள்ள பிரதான பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டுத்திடல், சுற்றுமதில், விஞ்ஞானகூடம், நூல் நிலையம் என்பவற்றோடு பாடசாலை மகாவித்தியாலயமாகவும் தரமுயர்த்தப் பட்டதும் இவர் காலத்திலாகும். க. பொ.த. உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக் கப்பட்டன. இவர்களைத் தொடர்ந்து ஜனாப் எம். எஸ். எம். முனஷ்வர் (1979 -
1983 அல்ஹாஜ் ஏ. எம். எம். உவைஸ் (1984 - 1987) ஜனாப் எம். ஏ. எம். மன்ஸார் (1987 - 1990) ஆகியோரும் இப்பாடசாலையின் உயர்வுக்காக அரிய பணியாற்றியுள்ளார்கள். தற்போது ஜனாப் ஏ. எம். பாரூக் இதன் அதிபராகக் கடமையாற்றி வருகிறார். இப்பாடசாலையின் கனிஷ்ட O பிரிவுக்குரிய சில வகுப்புக்கள் பாத்திமா மாவத்தையிலுள்ள பழைய கட்டிடத்தில் இயங்கி வரு கின்றது.
இங்கு 427 மாணவர்களும் 30 ஆசிரியர்களும் உள்ளனர்.
106

மின்ஹாத் மகாவித்தியாலயமும் கனிஷ்ட வித்தியாலயமும் : திக்குவல்லையில் உள்ள யோனகபுர என்ற முஸ்லிம் கிராமத்தில் இவ்விரு பாடசாலைகளும் அமைந்துள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் காலஞ்சென்ற முஹம்மது காஸிம் என்பார் பள்ளிவாசல் காணியில் ஒலைக் கட்டிடத்தில் குர்ஆன் கல்வியோடு தமிழ்ப் பாடங்களையும் நடத்தி வந்துள்ளார். 1905 இல் பள்ளிவாசலுக்குச் சற்று தூரத்தில் உள்ள காணியொன்றில் பாடசாலை கட்டுவதற்கான அத்திவாரமிடப்பட்டது. கட்டிட வேலை தொடராமல் பல வருடங்கள் சென்றதால் அவ்விடம் காடடர்ந்த பகுதியாக மாறிற்று. 1917 ஆம் ஆண்டு பாடசாலையை அரசாங்கம் பதிவு செய்வதற்கு பள்ளிவாசல் காணி அல்லாத வேறு இடம் தேவைப்பட்டதால் முன்னர் அத்திவாரமிடப்பட்ட காணியில் ஒரு சிறிய கட்டிடம் எழுப்பப்பட்டு பாடசாலை இடம் மாற்றப்பட்டது. 1918 ஆம் ஆண்டு இது அரசாங்கப் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டதோடு திரு. எஸ். பி. கிருஷ்ணபிள்ளை தலைமை உபாத்தியாயராக நியமிக்கப்பட்டார். இவருக்குப்பின் திருவாளர்களான பி. ஜோர்ஜ், ரி. இம்மானுவேல், ஏ. ய. முருகேசு, பி. செல்லையா, எஸ். ஜோசப் ஆகியோர் தலைமையாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 1930 - 1937 க்கு இடைப்பட்ட காலத்தில் இப்பாடசாலைக்கான நிரந்தரக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. மர்ஹாம் ரீ. எஸ். அப்துல் லதீப், ஜனாப் ஏ. எச். எஸ். முஹம்மது, மர்ஹாம் ஏ. ஆர். முஹம்மது ஆகியோர் காலத்தில் கல்வித்துறையில் துரித முன்னேற்றம் காணப்பட்டது. சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் அநேகமான மாணவர்கள் தேறி தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஜனாப் ஏ. எச். எஸ். முஹம்மது அவர்களின் பெரு ழயற்சியால் மாணவர்கள் ஆக்க இலக்கியத்துறையில் ஆர்வங்காட்டலாயினர்.
தற்போது மின்ஹாத் மகாவித்தியாலயம் அமைந்துள்ள இடம் ஜனாப் ஏ. எல். எம். யெஹியா மாஸ்டர் அவர்களின் உறவுக்காரர்களால் அன்பளிக்கப் பட்டதாகும். 1963 ஆம் 26δυτιη αυ இப்பாடசாலைக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கல்வி மந்திரியாயிருந்த கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் அனுசரணையுடன் ஆசிரியர் ஜனாப் ஏ. எல். எம். யெஹியா அவர்கள் எடுத்த பெருமுயற்சியே காரணமாகும். ஒரு ஏக்கர் மூன்று ரூட் நிலப்பரப்பில் எட்டுப் பாடசாலைக் கட்டிடங்களுடன் மின்ஹாத் மகாவித்தியாலயம் சிறப்பாக இயங்கி வருகின்றது. சட்டத்தரணி சிங்கவங்ஸ் எஸ். எச். முஹம்மது, அல்ஹாஜ் இப்ராஹிம், மர்ஹாம்களான அல்ஹாஜ் ஏ. ஆர். முஹம்மது (அதிபர்), ஏ. எச். எம். எம். வெபா (கல்வி அதிகாரி) ஆகியோர் இம்மகாவித்தியாலயத்தின் வளர்ச்சியில் பின்னணியில் நின்று பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாடசாலையில் 1964 ஆம் ஆண்டு க. பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆசிரியரின்மையால் தற்போது விஞ்ஞான உயர்தர வகுப் புக்கள் நடைபெறுவதில்லை. மர்ஹாம் அல்ஹாஜ் எம். சி. முஹம்மது (1970 - 1973) அல்ஹாஜ் எம். ரி. ஹிதாயத்துல்லா (1973 - 1977) அல்ஹாஜ் ஏ. ஆர். எச். ஏ. ஜலீல் (1977 - 1987) இப்பாடசாலையின் ஒழுக்க மேம்பாட்டுக் காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பணியாற்றிய அதிபர்களாவர். தற்போது இக்கலையகத்தின் அதிபராக ஜனாப் எம். எச். எம். நிஃமத்துல்லா பணியாற்றி வருகின்றார்.
107

Page 56
மின்ஹாத் வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தில் தற்போது கனிஷ்ட வித்தியாலயம் இயங்கி வருகின்றது. 1966 இல் மின்ஹாத் வித்தியாலயம் தனி
யாகவும், மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயம் தனியாகவும் இயங்க ஆரம்பித்தன. இதன் முதல் அதிபராக மர்ஹாம் எம். பி. எம். ஸஹீத் (1966 - 1968), தொடர்ந்து பீ. கமால்தீன் (1988 - 1977) அவர்களும் இருந்து வந்துள்ளார்கள். தற்போது மாத்தறை மாவட்ட உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஜனாப் ஏ. எஸ். எம். ஸயிதுல்லா என்பாரும் இப்பாடசாலையின் அதிபராக 1977 முதல் 1992 வரை கடமையாற்றினார். தற்போது இதன் அதிபர் ஜனாப் எம். எச். எம். மக்ஸாத் ஆவார். இங்கு ஐந்தாம் ஆண்டு சித்தியடையும் மாணவர்கள் மின்ஹாத் மகாவித்தியாலயத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.
மின்ஹாத் கனிஷ்ட வித்தியாலயத்தில் 251 மாணவர்களும், மகா வித்தியால யத்தில் 327 மாணவர்களும் கல்வி கற்கின்றனர். கனிஷ்ட வித்தியாலயத்தில் 10 ஆசிரியர்களும், மகாவித்தியாலயத்தில் 20 ஆசிரியர்களும் பணிபுரிகிறார்கள்.
கிருந்தை முஸ்லிம் வித்தியாலயம் : மாத்தறை ஹக்மன பிரதான வீதியில் புஹால்வெல்ல என்ற இடத்தில் கிருந்தை என்ற முஸ்லிம் கிராமத்தில் இப்பாடசாலை அமைந்துள்ளது.
மர்ஹாம் எம். ஏ. சி. எம். ஸாலி மத்திச்சம் அவர்களின் பெருமுயற்சியால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. சங்கைக்குரிய செய்யித் அஹ்மத் பின் அப்துல் ரஹ்மான் ஜிப்ரி மெளலானா அவர்களால் இப்பாடசாலைக்கான அத்திவாரமிடப் பட்டு 1927 இல் ஆரம்பிக்கப்பட்டது. திரு. எஸ். கந்தையா முதல் தலைமை யாசிரியராக நியமிக்கப்பட்டு சுமார் இருபது வருடகாலம் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து திருவாளர்களான கே. சுப்ரமணியம், வீ. நடராஜா, எஸ். செல்லையா ஆகியோர் தலைமையாசிரியர்களாகப் பணியாற்றினர். காலஞ்சென்ற எம். ஏ. ஹபீள் தலைமையாசிரியராயிருக்கும் போது இங்கு க.பொ.த. பரீட்சைக்கு முதல்முறையாக மாணவர்கள் தோற்றிச் சித்தியடைந்தார்கள். அல்ஹாஜ் எம். ஐ. எம். ஜெலித், ஜனாப் எம். எச். முஹம்மது, மர்ஹாம் எம். சி. எம். ஸபுதி ஆகியோரும் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையோடு உழைத்த அதிபர் களாவர். தற்போது ஜனாப் ஏ. டப்ளியூ. முஹம்மது இதன் அதிபராகக் கடமை புரிகிறார்.
இங்கு 152 மாணவர்களும், 18 ஆசிரியர்களும் உள்ளனர்
ஸாதாத் மகா வித்தியாலயம் :
அக்குரஸ்ஸ நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் கொடப்பிட்டி (போர்வை) என்ற முஸ்லிம் கிராமத்தில் இப்பாடசாலை அமைந்துள்ளது. குர்ஆன் தமிழ்ப் பாடசாலையாக இயங்கிய இது 1935 இல் காலஞ்சென்ற கலீபா என். எல். எம். அப்துல் மஜீத் மஹல்லம் அவர்களின் முகாமைத்துவத்தின் கீழ் அரசாங்க உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் தலைமையாசிரியராக மர்த்ஹாம் ரி. எஸ். தையிபு நியமிக்கப்பட்டார். பின்னர் திருவாளர்களான சிதம்பரப்பிள்ளை, செகராசசேகரம், பீ. ஈ. டேவிட் ஆகியோர் தலைமையாசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். 1938 இல் இது அரசாங்கப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டது. மர்ஹாம் அல்ஹாஜ் ஓ. எஸ். எம். றவுப் (1945 - 1961) அதிபராக இருந்தபோது உதவியாசிரியர்களான ஏ. எம். எம்.
108

உவைஸ், எம். எம். இஸ்மாயில் ஆகியோரின் பெருமுயற்சியால் இப்பாடசாலை கல்வித்துறையில் துரித வளர்ச்சியடைந்தது. பெருந்தொகையான மாணவர்கள் சிரேஷ்ட பாடசாலைப் பரீட்சையில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பல்துறையிலும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றார்கள். 1963 முதல் 1984 வரை அதிபராகக் கடமையாற்றிய ஜனாப் ஏ. சீ. எம். பாரூக் அவர்களின் காலத்தில் தனிக்கட்டிடத்தில் இயங்கிய இப்பாடசாலை மேலதிகக் கட்டிடங்களையும் விளையாட்டுத்திடல் ஒன்றையும் பெற்றுக்கொண்டதோடு, மகாவித்தியாலயமாகவும் தரமுயர்த்தப் பட்டது. க. பொ. த. உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று கற்கும் வாய்ப்பையும் எய்தப்பெற்றது. இதன் வளர்ச்சிப் பின்னணியில் முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும், இப்பாடசாலையின் பழைய மாணவர் அல்ஹாஜ் எம். எஸ். முஹம்மது அவர்களும் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறார்கள். 1985 ஆம் ஆண்டு இப்பாட சாலைப் பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாடி * அஸ்ஸாதாத்” என்ற மலரையும் வெளியிட்டுள்ளது. இதற்குக் காரணமாயிருந்த ஜனாப் எம். எச். ஏ. பாரி அவர்கள் 1984 முதல் இதன் அதிபராக இருந்து நற்பணியாற்றி வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
இங்கு 335 மாணவர்களுக்கு 18 நியமன ஆசிரியர்களும் மூன்று தொண்டர் ஆசிரியர்களும் கல்விப் பணியாற்றுகிறார்கள்.
ஹொரகொட முஸ்லிம் வித்தியாலயம் : அக்குரஸ்ஸ வீதியிலுள்ள தெலிஜ்ஜவிலப் பகுதியில் ஹொரகொட என்ற் முஸ்லிம் கிராமத்தில் இப்பாடசாலை அமைந்துள்ளது. மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல். இங்கு முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். குர்ஆன் மத்ரஸாக்களே ஆரம்பத்தில் கல்விக்கூடங்களாக விளங்கின. 1936 இல் கொரககொட பள்ளி குர்ஆன் பாடசாலை என்ற பெயரில் தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதில் 55 மாணவர்களுக்கு மர்ஹாம் டீ. பீ. எல். எம். காலித் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். 1936.08.17 ஆம் திகதிய கொழும்பு கல்விக் காரியாலயத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மர்ஹாம் ஏ. எச். எம். எம். ஹாஸைன் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கென தனியான கட்டிடங்கள் இருக்கவில்லை. 1982 இல் கல்வியமைச்சராயிருந்த கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை இவ்வூர்ப் பிரமுகர்கள் சந்தித்ததன் பயனாக பாடசாலைக்கான காணி பெறப்பட்டதோடு பாடசாலைக்கான நிரந்தரக் கட்டிட மும், ஆசிரியர் விடுதியும் கட்டப்பட்டன. 1984 இல் இது வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் வளர்ச்சியில் அதிபர்களாக இருந்து மிக்க ஆர்வத்துடன் செயற்பட்டவர்களுள் ஜனாப்களான எம். ஐ. எம். முஹ்ஸின், அல்ஹாஜ் ஏ. எம். எம். உவைஸ், எம். ஐ. எம். ஹஸன், எம். எம். ஹாசிம், எச். எம். நளிம், அல்ஹாஜ் எம். ஐ. எம். ஜெலிது, ஏ. எச். எம். அமீர், எம். கே. எஸ். ஆப்தீன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். தென்மாகாண சபை உறுப்பினர்களா யிருந்த ஜனாப் எம். எம். ராளிக், ஜனாப் எம். எஸ். எம். அக்ரம், ஆகியோரும் வல்லான பெளத்த விகாரைத் தோரும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் உதவியுள்ளார்கள். கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்த சிடா நிறுவனத்தின் உதவியும் இதற்குக் கிடைக்கப்பெற்றது. விஞ்ஞானம், தமிழ் போன்ற முக்கிய
09

Page 57
பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாமை இப்பாடசாலையின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. தற்போது இப்பாடசாலையின் அதிபராக ஜனாப் எம். பி. முஹ்ம்மது கடமை புரிகிறார்.
114 மாணவர்களுக்கு 8 நியமன ஆசிரியர்களும் 4 தொண்டர் ஆசிரியர்களும் கல்விப் பணி புரிகிறார்கள்.
அல் அஸ்ஹர் கனிஷ்ட வித்தியாலயம் : மாத்தறையிலிருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்தில் கந்தரை என்ற முஸ்லிம் கிராமத்தில் இப்பாடசாலை அமைந்துள்ளது. 1938 ஆம் ஆண்டு இப்பாடசாலை 45 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட் டிருந்தார்கள். அவர்களுள் திரு. வீ. கோவிந்தசாமி தலைமையாசிரியராயிருந்தார். திருவாளர்களான பாக்கியம், ஏ. கந்தையா, வீ. தாமோதரம்பிள்ளை ஆகியோர் 1954 வரை தலைமையாசிரியர்களாகக் கடமை புரிந்துள்ளார்கள். ஜனாப்களான ஏ. டபிள்யு. எம். அமீர் (1958 - 1970) ஏ. எம். எஸ். முஹம்மது (1971 - 1980) அல்ஹாஜ் எம். ஐ. முஹம்மது (1984 - 1992) ஆகியோர் இப் பாடசாலையின் வளர்ச்சியில் கணிசமான அளவு சேவையாற்றிய அதிபர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாவர். தற்போது ஜனாப் ஏ. எம். அப்துல் ஜவாட் அதிபராகக் கடமையாற்றுகிறார்.
இங்கு 101 மாணவர்களும் பதினைந்து ஆசிரியர்களும் உள்ளனர்.
அல் மினா மகாவித்தியாலயம் :
மாத்தறையிலிருந்து சுமார் 32 கிலோமீற்றர் தூரத்தில் ஹக்மன - வலஸ்முல்ல பாதையில் மீயல்ல என்ற முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை 1938 இல் ஆரம்பிக்கப்பட்டதாகும். 62 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். திரு. வீ. பீ. ஆறுமுகம் முதல் தலைமையாசிரியராயிருந்தார். திருவாளர்களான ஏ. சுப்பிரமணியம், எம். என். ராஜா, வீ. கதிர்காமத் தம்பி, வீ. சுப்ரமணியம், அல்ஹாஜ் ஏ. எம். ஹாமீம் ஆகியோர் இதன் தலைமை ஆசிரியர்களாயிருந்திருக்கிறார்கள். ஜனாப் எம். ஐ. எம். ஹஸன் அவர்களது காலத்தில் இப்பாடசாலையிலிருந்து க. பொ. த. சா/த பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிச் சித்தியடைந்தனர். அல்ஹாஜ் எம். ஐ. முஹம்மது (1966 -1971) அவர்களின் காலத்தில் இப்பாடசாலை கல்வித்துறையில் அதிக வளர்ச்சி யடைந்தது. காலஞ்சென்ற ஜனாப் எம். ஐ. எம். முஸ்தபா இதன் அதிபரா யிருந்த போது 1974 இல் இப்பாடசாலை மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப் பட்டது. உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஜனாப் எம். ஜே. முஹம்மது அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக (1977 - 1989) இருந்த போது தான் க. பொ. த. 'உயர்தரப் பரீட்சைக்கு முதன் முதலாக மாணவர்கள் தோற்றிச் சித்தியடைந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரோய் ராஜபக்ஸ், தென்மாகாண சபை உறுப்பினர்களான ஜனாப் எம். எம். ராஸிக், ஜனாப் எம். எஸ். எம். அக்ரம், ஜனாப் ஏ. சி. எம். மஹ்ரூப் ஆகியோரும், கிராமத் தலைவராயிருந்த ஜனாப் ஐ. எல். எம். காஸிம் அவர்களும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் அதிகம்
10

சேவையாற்றியுள்ளார்கள். இதன் அதிபராக 1991 முதல் ஜனாப் எம். ஆர். எம். ஸ்வாஹிர் பணியாற்றி வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனாப் எம். சி. எம். நிஸார் இதன் உயர்ச்சிக்காக அதிக அக்கறையுடன் உழைப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு 288 மாணவர்களும் 22 ஆசிரியர்களும் உள்ளனர்.
ஸாஹிரா மகா வித்தியாலயம்
வெலிகம நகரிலிருந்து சுமார் இரண்டு கி. மீ. தூரத்திலுள்ள முஸ்லிம் கிராமமான வெலிப்பிட்டியவில் இப்பாடசாலை அமைந்துள்ளது. 1938 ஆம் ஆண்டு முப்பத்தெட்டு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் தலைமை யாசிரியராக இக்கிராமத்தைச் சேர்ந்த மர்ஹாம் அல்ஹாஜ் ஓ. எஸ். எம். றவுப் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஜனாப் எம். ஏ. எம். அவுப், அஸ்ஸெய்யித், வை. எல். எம். மவ்லானா, அல்ஹாஜ் எம். எச். முஹம்மது ஆகியோர் தலைமையாசிரியர்களாயிருந்தபோது படிப்படியாக பாடசாலை மாணவர் வரவும் அதிகரித்துக் கொண்டே வந்தது. மர்ஹாம்களான எம். பீ. எம். ஸஹிது, எம். ஐ. ஸெய்னுலாப்தீன், அல்ஹாஜ் எம். சி. முஹம்மது ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றியபோது இப்பாடசாலையின் பரீட்சைப் பெறுபேறுகள் முன்னேற்ற
மடைந்தன. ஜனாப் எம். ஐ. எம். முஹ்ளின் (1966 - 1976) ஜனாப் எம். பி. முஹம்மது (1977 - 1988) ஆகியோர் காலத்திலும் ஏனைய பாடசாலைகளுடன் போட்டியிடுமளவிற்கு இதன் கல்வித்தரம் வளர்ச்சியடைந்தது. தற்போது நான்கு பாடசாலைக் கட்டிடங்களைக் கொண்டதாகவும் சிறிய விளையாட்டுத்திடலைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. 1988 முதல் இதன் அதிபராக ஜனாப் எம். எம். ராஸிக் கடமையாற்றி வருகிறார். இது மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப் பட்டதுடன் க. பொ. த. உயர்தர வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சக உதவியாசிரியர்களின் ஒத்துழைப்பில் பாடசாலை துரித முன்னேற்றமடைந்து வருகிறது.
இங்கு 583 மாணவர்களும் 27 ஆசிரியர்களும் உள்ளனர்.
கொட்டுவேகொட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் :
மாத்தறை நகரசபை எல்லைக்குள் கொட்டுவேகொடப் பகுதியில் இப்பாட சாலை அமைந்துள்ளது. ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் பெருமுயற்சியால் 1942 ஆம் ஆண்டு 29 மாணவர்களுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஜனாப் எம். ஐ. எம். ஸ்லீம் முதல் தலைமையாசிரியராயிருந்தார். தொடர்ந்து மர்ஹாம் எம். ஏ. எம். ரசீத் (1948 - 1960) இப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுழைத்தார். ஜனாப் எம். சி. எம். ஸித்தீக், ஜனாப் எம். இசட். ஆப்தீன் ஆகியோர் அதிபர்களாயிருந்து இதன் உயர்ச்சிக்காகப் பணியாற்றி யுள்ளனர். மாத்தறையில் சிவில் சேவை அதிகாரியாயிருந்த ஜனாப் முஹ்ளின் அவர்களின் பெருமுயற்சியுடன் இப்பகுதிப் பெரியார்கள் ஆறாம் வகுப்பு முதல் க. பொ. த. வகுப்பு வரை நடத்த வழியமைத்தனரி இப்பகுதியில் வசதியான பல சிங்கள மொழிப் பாடசாலைகள் இருப்பதாலும், அதிகமான பெற்றோர் தம் பிள்ளைகளை சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கே அனுப்புவதாலும்
11

Page 58
இப்பாடசாலையில் பயிலும் மாணவர் தொகை மிகக் குறைவாகவேயுள்ளது. தற்போது ஜனாப் எம். பி. முஹம்மது இதன் அதிபராகக் கடமையாற்றுகிறார்.
இங்கு 45 மாணவர்களும் 08 ஆசிரியர்களும் உள்ளனர்.
அஸ்ஸபா கீனிஷ்ட வித்தியாலயம் :
வெலிகம அக்குரஸ்ல வீதியில் தெணிப்பிட்டிய பகுதியில் மதுராபுர என்ற முஸ்லிம் கிராமத்தில் இப்பாடசாலை அமைந்துள்ளது. இக்கிராமம் முஸ்லிம் பாடசாலை களிலிருந்து தூரத்தில் அமைந்திருந்தமையாலும், இப்பகுதிச் சிறுவர்கள் பாட சாலைக்குச் செல்வதில் பல கஷ்டங்கள் இருந்தமையாலும் இக்கிராமத்துக்குத் தனியான ஒரு பாடசாலை அமைவது அவசியமாயிற்று. பிரபல வைத்தியர் பி. எம். அப்துல் கரீம் அவர்கள் வித்தியாலயத்துக்கான காணியை அன்பளிப்புச் செய்த தோடு தேவையான நிதியுதவியையும் செய்தார். 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 115 மாணவர்களுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக ஜனாப் எஸ். ஏ. ஏம்.மல்லானா நியமிக்கப்பட்டார். எட்டு ஆசிரியர்களுடன் ஐந்தாம் வகுப்புவரை இயங்கியது. 1981 ஆம் ஆண்டு ஜனாப் எம். ஐ. எம்.ஹபீள் இதன் அதிபராக நியமிக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டு முதல் இடைநிலை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1990 இல் ஏழு மாணவர்கள் க. பொ. த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றி சிறந்த முறையில் தேறி உயர்தர வகுப்புக்குத் தகுதிபெற்றனர். 1986 ஆம் ஆண்டு ஒரு மேலதிகக் கட்டிடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டது. இப்பாடசாலையின் தோற்றத்துக்கு முன் னால் கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் கல்வியமைச்சில் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றியவருமான காலஞ்சென்ற ஜனாப் ஏ. எச். எம். எம். வெபா அவர்கள் மிகவும் பிரயாசை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடசாலையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் இவ்வூர்ப் பிரமுகர்கள் பக்கபலமாக நின்று ஒத்துழைத்துள்ளார்கள். மர்ஹாம் எம். பி. எம். ஸஹீது அதிபர் அவர்களும் ஜனாப் எம். சி. அபூதாஹிர் அவர்களும் பாடசாலை நிர்மான வேலைகளில் அதிக சிரத்தை கொண்டு பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு 325 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
முறைசாராக் கல்வி :
அரசாங்கப் பாடசாலைகள் முறைசாராக் கல்வி நிலையங்களாக இருந்து மாணவர்களின் அறிவு விருத்தியில் பெரும்பங்கு கொள்கின்றன. முஸ்லிம் இளைஞர்களுக்கு சன்மார்க்கப் பயிற்சியளிப்பதற்கும், இளைஞரின் ஆற்றலுக்கும் சமூகத் தேவைக்கும் ஏற்ப தொழிற்பயிற்சியளிப்பதற்கும் வளர்ந்தோருக்கான, பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வியறிவைப் போதிப்பதற்கும் தனிப்பட்ட கல்வி நிறுவனங்கள் பெரும் பணியாற்றி வருகின்றன.
ஆரம்பகால குர்ஆன் மத்ரஸாக்கள், மக்தப்கள் முஸ்லிம்களின் அறிவு வளர்ச்சியில் பெரும் பணியாற்றியுள்ளன. இன்றைய குர்ஆன் மத்ரலாக்கள் பகுதிநேரப் பயிற்சி நிலையமாகவே தொழிற்படுவதால் அன்றைய மத்ரஸாக்களின் பணியை ஆற்றுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. முழுநேர மத்ரஸாக்களே இப்பணியை ஆற்றி வருகின்றன.
12

தப்லீக் ஜமாஅத் :
மாத்தறை மாவட்டத்தில் சன்மார்க்கப் பயிற்சியளிப்பதில் தப்லீக் ஜமாஅத் முக்கிய பணியை ஆற்றி வருகின்றதென்பதை மறுக்க முடியாது. இளஞ்சிறார்களின் கல்வியைப் பாதிக்காத வகையில் சமய அறிவையும் சன்மார்க்கப் பயிற்சியையும் திட்டமிட்டு வழங்க முடியுமானால் அது ஒரு மகத்தான சேவை.
அஹ யாப் பாடசாலை :
ஐந்து வயதுக்கும் பதினெட்டு வயதுக்குமிடைப்பட்ட இளைஞர்களின் வளர்ச்சிக் காலம் அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயில்வதிலேயே செலவிடப்படுகின்றது. சிறுவர்களின் ஆற்றல், ஆர்வம், காலம் என்பன பாடசாலைக் கல்வியோடு மட்டுப்படுத்தப்படுவதால் சமய சன்மார்க்கக் கல்வி, இஸ்லாமியப் பயிற்சி என்பனவற்றில் இளைஞர்களிடையே பிற்போக்கு நிலை உருவாகின்றது. இந்தப் பிற்போக்கு நிலையைச் சீர்திருத்த அஹதியாப் பாடசாலைகள் உதவுகின்றன.
விசேடமாக மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்களில் 15 வீத மானோர் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயில்கிறார்கள். இம்மாணவர்களின் கல்விச் சூழல் இஸ்லாமிய சூழலிலிருந்து வேறுபட்டதாக அமைந்து விடுவதால் சமய அறிவின் பிற்போக்கு தீவிரமடைகிறது. இதற்கு வார இறுதி நாட்களில் நடைபெறும் அஹதியாப் பாடசாலைகள் சிறு அளவிலேனும் மாற்றீடாக அமைகின்றதெனலாம். இந்த வகையில் அஹதியாப் பாடசாலைகள் மாணவர்களின் சமய அறிவை வளர்ப்பதிலும், பயிற்சியளிப்பதிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாத்தறை அஹதியாப் பாடசாலை :
மாத்தறை நகரிலுள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளில் மாத்திரம் 890 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். மாத்தறையிலுள்ள இரண்டு முஸ்லிம் பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூலம் கல்வி பயில்வோர் தொகை 472 ஆகும். மாத்தறையில் அஹதியா இயக்கத்தால் நடத்தப்படும் அஹதியாப் பாடசாயிைல் சுமார் 400 முஸ்லிம் மாணவர்கள் பயில்கிறார்கள். இதில் 11 வகுப்புக்கள் சிங்கள மொழி மூலமும் நடத்தப்படுகின்றன. 1981 முதல் சுமார் 14 வருடகாலமாக இயங்கும் மாத்தறை அஹதியாப் பாடசாலை முஸ்லிம் சிறார்களுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளதை அறிய முடிகிறது. வருடாந்தம் இஸ்லாமிய சமய, அறிவு, கிராஅத், களிதாப் போட்டிகளையும், இல்ல விளையாட்டுப் போட்டிகளையும் வைத்துப் பரிசில்கள் வழங்கி வருகின்றது. வருடாந்தம் ஈதுல் பித்ர் தினத்தில் மாணவர்களின் ஆக்கங்களையுள்ளடக்கிய பத்திரிகையொன்று வெளியிடப்படு கின்றது. பெண் பிள்ளைகள் பர்தா அணிவதற்கான 10,0001- பெறுமதியான பொலியெஸ்டர் துணிகள் 1989 ஆம் ஆண்டு மாணவிகளுக்காக விநியோ கிக்கப்பட்டுள்ளன. விசேட தமிழ், சிங்கள, ஆங்கில வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள், உபகரணங்களை உதவியும், ஜனாஸா நலன்புரிச் சேவைகளைச் செய்தும், வசதி குறைந்த மாணவர்களுக்கு கத்னாவுக்கான உதவி வழங்கியும், சமய அறிவை வளர்ப்பதற்கான விசேட விரிவுரைகளை ஒழுங்கு செய்தும் பாலர் பாடசாலை
113 9

Page 59
நடாத்தியும், தென்னிலங்கை இஸ்லாமியச் செயலகத்தின் உதவியுடன் தட்டச்சுப் பயிற்சி, தையல் பயிற்சி வகுப்புக்களை நடாத்தியும், தெளபா, யாளின், தக்பீர் போன்ற பிரசுரங்களை சிங்கள மொழிபெயர்ப்புடன் அச்சிட்டு விநியோகித்தும் பரந்தளவு சேவையாற்றி வருவது பாராட்டத்தக்கதாகும். வெகுவிரைவில் அஹதி யாக் கட்டிடமொன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதே. இதன் தலைவரான ஜனாப் எம். எம்.ஏ. ரஹ்மி அவர்களும் செயலாளரான அல்ஹாஜ் எம். யு. எம். கரீம் அவர்களும் தன்னலமற்ற சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏனைய அஹதியாப் பாடசாலைகள் : மாத்தறை மாவட்டத்தில் மேலும் பல அஹதியாப் பாடசாலைகள் நடை பெறுகின்றன. வெலிகம பதுர் அஹதியாப் பாடசாலை 1989 முதல் பதுர் அஹதியா இயக்கத்தினால் நடத்தப்படுகின்றது. இதில் 350 மாணவர்கள் கல்வி பெறு கிறார்கள். கொடப்பிட்டி அஹதியாப் பாடசாலை கொடப்பிட்டி அஹதியா இயக்கத்தினால் இரண்டு வருடகாலமாக நடத்தப்பட்டு வருகின்றது.
LT6)f urf Lys6ms)assit : மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் சிறுவர்களுக்கென பாடசாலை புகுமுன் கல்வி நிலையங்களாகப் பாலர் பாடசாலைகள் பல இயங்கி வருகின்றன. பாடசாலைக் கல்விக்கான முன்னறிவையும் முன்னனுபவத்தையும் வழங்குவதில் இப்பாலர் பாடசாலைகள் உதவுகின்றன.
வெலிகம கிரஸன்ட் பாலர் பாடசாலை சுமார் பத்து வருடகாலமாக இயங்கி வருகின்றது. தற்பொழுது 44 முஸ்லிம் ஆண் பிள்ளைகளும், 41 முஸ்லிம் பெண் பிள்ளைகளும் இதில் கல்வி பெறுகிறார்கள். பாலர் கல்வியில் பயிற்றப்பட்ட ஆசிரியைகளால் நடத்தப்படும் இப்பாடசாலை வருடாந்தக் கதம்ப நிகழ்ச்சி களையும் பரிசளிப்பு விழாவையும் நடத்தி வருகின்றது. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வகுப்புக்கள் உள்ளன.
மீயல்ல என்ற கிராமத்தில் பள்ளிப் பரிபாலன சபையினரால் 1985 ஆம் ஆண்டு முதல் அல் மினா பாலர் பாடசாலை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் 30 பாலர் கல்வி பெறுகிறார்கள். கிரிந்தையில் 1990 முதல் தென்மாகாண சபையின் அனுசரணையுடன் அல் மீரான் பாலர் பாடசாலை இயங்கி வருகிறது. இதில் 35 பிள்ளைகள் பயிற்சி பெறுகிறார்கள். கொடப்பிட்டிய முஸ்லிம் வாலிபர் இயக் கத்தினால் 1992 முதல் நடத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையில் 45 ஆண் பிள்ளைகளும் 35 பெண் பிள்ளைகளும் கல்வி பெறுகிறார்கள். மாத்தறை அஹதியா இயக்கத்தால் முஸ்லிம் சிறார்களுக்கான பாலர் பாடசாலையொன்றும் நடத்தப் பட்டு வருகிறது. வெலிகாமத்தில் மாத்தறை மாவட்ட இஸ்லாமிய செயலகத்தினால் 30 சிறார்களைக்கொண்ட பாலர் பாடசாலை 1993 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
14

கல்வி தொழிற்பயிற்சி நிறுவனங்கள் : மாத்தறை மாவட்டத்தில் சில விசேட கல்வி நிறுவனங்கள் தேவைக்கேற்ப காலத்துக்குக்காலம் தோன்றி மறைந்துள்ளன. ஆங்கில, சிங்கள மொழிகளைக் கற்பித்து முஸ்லிம் சிங்கள மாணவர்களையுள்ளடக்கியதான சேனாநாயக்கா வித்தியாலயம் 1950 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஸ்தாபகரான ஜனாப் ஏ. சி. முஹம்மது சிறந்த அரசியல்வாதியும் கல்விமானுமாவார். இவர் 1984 இல் காலமாகும்வரை இக்கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
தென்னிலங்கை இஸ்லாமிய செயலகம் : அண்மைக் காலத்தில் முஸ்லிம்களின் பாரம்பரியத் தொழிலான வியாபாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, இப்பிரச்சினைகளுக்கு ஓரளவாவது முகங்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1981 ஆம் ஆண்டு அல்ஹாஜ் எம். எச். ஏ. அப்துல் கப்பார் அவர்களால் தென்னிலங்கை இஸ்லாமிய செயலகம் ஆரம்பிக்கப்பட்டது. பலப்பிட்டி முதல் அம்பாந்தோட்டை வரையான முஸ்லிம் இளைஞர்கள் இதில் தொழிற் பயிற்சி பெற்று நன்மையடைந்தார்கள். இன்னும் இதன் சேவை பரவலாக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மாத்தறை மாவட்ட இஸ்லாமிய செயலகம் :
மேற்படி இஸ்லாமிய செயலகத்தின் சேவையை சிறுசிறு கிராமத்தவர்களும், பெண்களும் தொலைவு காரணமாகப் பெறமுடியாதிருப்பதை உணர்ந்து இதன் சேவையைப் பரவலாக்கும் நோக்கத்துடன் 1990 இல் மாத்தறை மாவட்ட இஸ்லாமிய செயலகம் என்ற பெயரில் வெலிகாமத்தில் இதன் கிளையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முஸ்லிம் இளைஞர்களின் தேவைக்கும் தொழில் வாய்ப்புக்களுக்கும் ஏற்றவகையில் பாடங்களையும், பயிற்சி வகுப்புக்களையும் இது நடத்தி வருகின்றது. ஒய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் மெளலவி எம். எச். எம். ஜெஉபர் அவர்களின் தலைமையில் இது இயங்கி வருகின்றது. தென்னிலங்கை இஸ்லாமிய செயலகத்தினால் வழங்கப்பட்ட இயந்திர சாதனங்களின் உதவியுடனும், வெலிகம நகரசபை உறுப்பினர் ஜனாப் எம். எச். எம். ஹாஸைன் அவர்களின் உதவியுடன் வெலிகம நகரசபையால் கிடைக்கப்பெற்ற இரத்தினக்கல் மினுக்கும் இயந்திரத்தைக் கொண்டு தொழிற் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
தையல் பயிற்சி வகுப்புக்கள் கல்பொக்கை, மதுராபுர, புதியதெரு, வெலிப்பிட்டி, கோட்டகொட ஆகிய கிளை நிலையங்களில் நடைபெற்று இதுவரை 125 பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்கள். மாத்தறை நகரக் கிளையில் ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி பெற்ற 20 பேரும், மாவட்டக்கிளையில் ஜாக்கி தையற் பயிற்சி பெற்ற 8 பேரும், வீட்டு மின்னிணைப்பு பயிற்சி பெற்ற 11 பேரும், ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி பெற்ற 16 பேரும் தமிழ்த்தட்டச்சுப் பயிற்சி பெற்ற 5 பேரும் இதுவரை சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.
15

Page 60
தற்போது மாவட்டச் செயலகத்தில் சிங்கள மொழியில் 10 பேர், தட்டச்சு10 பேர், தையல் 59 பேர், அம்பிரோய்டரி 15 பேர், மாணிக்கக் கல் மினுக்குதல் 10 பேர், கணணி (கொம்பியூட்டர்) 15 பேர், வீட்டு மின்னிணைப்பு 10 பேர், மருத்துவப் பயிற்சி 12 பேர் எல்லாமாக 141 பேர். பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாத்தறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களின் கல்வி யார்வத்தைத் தூண்டும் வகையில் க. பொ. த. சாதாரண/உயர்தர விசேட பாடங்களுக்கான வகுப்புக்களையும் நடத்த முயற்சி மேற்கொண்டு வருவது போற்றத்தக்கதாகும்.
ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் இதுபோன்ற பயிற்சி வகுப்புக்களின் சேவை பரவலாக்கப்பட வேண்டியது இன்றைய "தேவையாகும். இன்ஷா அல்லாஹ் மாத்தறையில் நிறுவப்படவுள்ள அகதியா செயலகமும், உயர்பாடப் போதனை களையும், பயிற்சி வகுப்புக்களையும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு மாத்தறை மாவட்ட முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்
நம் முஸ்லிம் சமூகம் உயிரோட்டமுடையதாக நிலைத்திருக்க எதிர்வரும்
காலத்தைப் பற்றிய தெளிவான தூரதிருஷ்டியுடன் செயற்படுவதற்கு சிறந்த வழிகாட்டலும் முயற்சியும் அவசியமாகும்.
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் வினாக்கொத்துப் படிவங்கள்மூலம் மாத்தறை உதவிக் கல்விப் பணிப்பாளர்களிடமிருந்தும், பாட சாலை அதிபர்களிடமிருந்தும், ஒவ்வொர் கிராம முக்கியஸ்தர்கள் பெரியார்கள் நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை. இவற்றைக் கொடுத்து ஒத் துழைத்த கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், முக்கி யஸ்தர்கள், நண்பர்கள், இதற்கு உதவியாக இருந்தவர்கள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த நன்றியைச் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.
அடிக்குறிப்புக்கள் :
1. சேர் அலெக்ஸாந்தர் ஜோன்ஸ்டன், அரச ஆசிய கழக அறிக்கை - 1827. இலங்கைச் சோனகர் இனவரலாறு, இனவரலாறு, இலங்கைச சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய வெளியீடு - 1907. 2. ஏ. எம். ஏ. அஸிஸ், கல்வியில் முஸ்லிம் மரபு. இலங்கையிற் கல்வி
நூற்றாண்டு விழா மலர் - 1969. அத்.95. பக். 1313. 3. மே. நூ. பக். 1309. 4. முஹம்மத் எம். ஸபர், ஸேர் றாஸிக் பரீத் - வழியும் நடையும், பக். 38. 5. கம்புறுபிட்டிய வனரட்ன ஹிமி, மாத்தற மாணவங்ஸஹா புராவித்தியா
இதிஹாஸய. 8. ஸேர் அலெக்ஸாந்தர் ஜோன்ஸ்டன், அரச ஆசிய கழக அறிக்கை -1827.
இலங்கைச் சோனகர் இன வரலாறு, பக். 88, 95.
6

10.
11.
12.
13.
14.
15.
. எம். எம். எம். மஹ்ரூப், இலங்கையில் ஆரம்பகால அரபு மத்ரஸாக்கள்
வரலாற்றுப் பின்னணி - மிஷ்காதுல் பாரீ - வெலிகாமம் மத்ரஸ்துல் பாரி நூற்றாண்டு விழா மலர் - 1984, பக். 55. முஹம்மத் எம். ஸ்பர், ஸேர் றாஸிக் பரீத் - வழியும் நடையும். பக். 8.
. மே. நூ. பக். 9.
எம். ஏ. எம். அஸிஸ், கல்வியில் முஸ்லிம் மரபு - இலங்கையிற் கல்வி, நூற்றாண்டு விழா மலர் - 1969, பக். 1310. எம். எம். எம். மஹ்ரூப், இலங்கையில் ஆரம்பகால அரபு மத்ரஸாக்கள் வரலாற்றுப் பின்னணி - மிஷ்காதுல் பாரீ - 1984, பக். 56. ஆங்கிலத்தில் முஹம்மத் எம். ஸபர், “ஸேர் ராளிக் பரீத் - வழியும் நடையும் " பக். 9. எம். எம். எம். மஹ்ரூப், இலங்கையில் ஆரம்பகால மத்ரஸாக்கள் - மிஷ்காதுல் பாரீ - 1984, பக். 58. ஏ. எம். ஏ. அஸிஸ், கல்வியில் முஸ்லிம் மரபு - கல்வி, நூற்றாண்டு விழா மலர் - பக். 1314.
18, 17 ஆங்கிலத்தில்
18.
19.
20.
21.
ஏ. எம். எம். உவைஸ், பயிற்ற்ப்பட்ட முதல் முஸ்லிம் ஆசிரியர் "ஹிதாயத் ” வெலிகம இக்பால் நலன்புரிக் கழகம் - 1968, பக். 124, 125. சேர் ராஸிக் பரீத், கல்விச் செயற்குழு, இலங்கையிற் கல்வி -கல்வி நூற்றாண்டு விழா மலர் அத். 52, பக். 702. * ké” கலாநிதி சுவர்னா ஜயவீர, கல்வி வாய்ப்பை விரிவாக்குதல் நிறைவுபெறாத ஒரு பணி - தேசிய கல்வி நிறுவகம் - பக். 2, 3.
மே. நூ. பக். 7.
117

Page 61
5
வாழ்வியலும் பண்பாடும்
திக்குவல்லை ஸப்வான்
தோற்றுவாய்
தென்னிலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாத்தைத் தமது சமயமாகவும், தமிழைத் தாய்மொழியாவும் கொண்டவர்கள். மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய மூன்று மாவட்டங்களைக் கொண்டது தென்னிலங்கை
இப்பகுதியில் வாழும் முஸ்லிம்களது வாழ்வியலும், பண்பாடும் இன்றுவரை சரியான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
பின்பற்றுகின்ற சமயம், மொழி, வரலாறு, சூழல் போன்றவை பண்பாட்டில் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்துகின்றன.
மொழி, வரலாறு காரணமாக இந்தியப் பண்பாட்டின் தாக்கம் இங்கு இருக்கின்றபோதும் அவை இஸ்லாமிய அறநெறிகளினால் வழிப்படுத்தப்படுகின்ற தன்மையை இங்கு காணலாம்.
சூழல் காரணிகளான ஆட்சியியலும், பொருளாதாரமும் மாறும்போது வாழ் வியலும், பண்பாடும் மாற்றமடைகின்றன. இதனாலேயே பண்பாட்டுக் கூறுகள் வழக்கிழந்து போகின்றன.
இவ்வடிப்படையில் மாத்தறை மாவட்ட மக்களது பண்பாட்டுக் கூறுகளை அவதானிக்கும்போது தென்னிந்தியா, பாரசீகம், மலையாளம், ஜாவா, வட இந்தியா வங்காளம், யெமன், ஹளரமவ்த் போன்ற பல பிரதேசங்களது கலாசாரங்களது திரிபு வடிவங்களைக் காணலாம்.
சூழவர வாழ்கின்ற சிங்களவரின் பண்பாட்டுக் கூறுகளும் இங்கு செல்வாக்கு செலுத்தியுள்ளன. எது எப்படியிருப்பினும் இவையெல்லாம் சமயத்தின் வழிப் படுத்தலால் ஊட்டம் பெறுவதே இங்கு காணக்கூடிய சிறப்பம்சமாகும்.
இப்பிரதேச முஸ்லிம்களது வாழ்வியல், பண்பாடு என்பவற்றின் வெளிப் பாடுகளை சுருக்கமாகத் த்ருவதே எண்ணம்.
முன்பு வேற்றுநாட்டு மக்கள் பற்பல காரணங்களின் பொருட்டு தத்தம் நாடுகளை விட்டு வெளியேறினர். சிலர் அரசர்களினால் நாடுகடத்தப்பட்டனர். மற்றுஞ்சிலர் நாடு கண்டு பிடிக்கும் முகமாக கடற் பிரயாணங்கள் செய்தனர். இன்னும் சிலர் வணிக நோக்கமாகப் பல நாடுகளுக்குக் கடல் வழியே பிரயாணஞ்
118

செய்தனர். பிறிதுஞ் சிலர் சமயப் பிரசாரங்களுக்காக பல நாடுகளுக்குக் கடல் கடந்து செல்லலாயினர். இவ்வண்ணம் கட்டுமரங்களிலும், பாய்மரக் கலங்களிலும் பிரயாணஞ் செய்த மேற்கண்டோர் காற்றின் வழியே அறியாத பல நாடுகளையும் போய் அடைந்தனர். அவ்வாறே ஈழமணித்திருநாடாம் இந்நாட்டையும் வந்தடைந் தனர் எனச் சரித்திரம் எடுத்தியம்புகிறது. கடல்வழியே வந்தவர்கள் இத்தீவினைச் சூழ்ந்த கடற்கரைப் பகுதிகளை வந்தடைந்தனர் என்பதில் ஐயமில்லை.
மாத்தறை மாவட்டத்திலும் கடற்கரைப் பகுதிகளிலும் - சிறிது உள் நோக்கியும் இவ்வாறு வந்தவர்கள் குடியேறினர். தனிமையாகவும் வந்தனர் ; குடும்பத்துடனும் வந்தனர். இப்படி வந்தும், சென்றும் குடியமர்ந்தும் இருந் தவர்களில் அநேகர் வணிகர். மற்றும் சிலர் சமயப் பிரசார நோக்கமாக வந்தவர்கள். இவ்வாறே இந்தியாவின் தென்பகுதியில் இருந்தும், பாகிஸ்தான் முதலான நாடுகளிலிருந்தும் வந்துபோகவும், குடியேறவும் தலைப்பட்டனர். அநேகமாக மலபாரைச் சேர்ந்தவர்கள் மக்களோடு ஒட்டி வாழவும் முற்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியான ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற பிர தேசங்களிலிருந்து வந்தவர்களும், அராபியர்கள் சிலருமே இலங்கையின் மாத் தறை மாவட்டத்தில் குடியிருந்தனர் என்பதற்கான சான்றுகளும் உண்டு.
வெலிகமையைச் சேர்ந்த வெலிப்பிட்டி என்னும் கிராமத்திலே அரபு நாடுகளிலிருந்து வந்த அரபிகள் திருமணம்செய்து குடும்பத்துடன் வாழ்ந் துள்ளார்கள். யெமனைச் சேர்ந்த அரபியப்பா குடும்பமும் இப்பகுதியில் வாழ்ந் துள்ளது. இற்றைக்கு நானூறு வருடங்களுக்கு முன்பு பஃதாதிலிருந்து முஹம்மத் மெளலானா என்பவர் தன் மகளையும் அழைத்துவந்து வெலிப்பிட்டி என்னும் கிராமத்தில் பல காலங்கள் வாழ்ந்து அவ்வூரிலுள்ள மலைப்பள்ளி மலையிலே அடக்கஞ் செய்யவும் பட்டார்கள். வெலிகமையைச் சேர்ந்த கப்துறைபள்ளி என்னும் இடத்திலும் செய்கு இனாயத்துள்ளா (வொலி) அவர்களும் சீடர்களும் அடங்கியுள்ளனர். இவர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே. கொடப்பிடியில் (போர்வை) அடங்கியுள்ள ஸெய்யித் ஸாதாத் பகிர் முஹியத்தின் வொலியுள்ளாவும் மதப் போதகராக பக்தாதிலிருந்து வந்து இங்கே அடங்கப் பெற்றவராவார்.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள் வேறு பல காரணங்களாலும், சமூகச் சண்டைகளாலும் தெற்கே குடிபெயர்ந்தனர் எனவும் கூறப்படுகின்றது. அவர்கள் குடும்பம் குடும்பமாக பிரத்தியேகமான இடங்களிலே தனித்தனிச் சமூகங்களாகவும் குடியேறி வாழ்ந்து வந்தனர். மாத்தறை, கொடப்பிட்டிய, மீயெல்லை, கிரிந்தை, திக்குவல்லை முதலான பகுதிகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய அராபியரும் ஏனையோரும் தத்தமக்குத் தேவையான தொழில்களை அமைத்துக்கொண்டனர். இங்குள்ள பொருள்களுக்கு பண்டமாற்றுக்கள் செய்துகொண்டனர். அத்தர், பத்தி, சாம்பிராணி, அகில் முதலான வாசனைத் திரவியங்களை விற்பனை செய்தல் போன்ற மற்றும்பல வியாபாரங்களிலும் முன்னேறத் தொடங்கினார்கள்.
பல பகுதிகளிலும் குடியேறிய இவர்கள் தங்கள் தொழில்களுக்கும்,
வாழ்க்கைக்கும் மட்டுமன்றி தத்தமது மதத்திற்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தனர். இறைவணக்கத்திற்காகப் பள்ளிகள் கட்டிக்கொண்டார்கள். அவரவர் நாட்டின்
19

Page 62
கட்டிடக் கலைகள் அக்கட்டிடங்களில் பிரதிபலித்தன. வெலிகம கப்துறை மலையில் அடங்கியுள்ள பெரியாரின் அடக்கத்தலம் மேற்பக்கம் வளைவாக வர நீண்டதோர் அடக்கத்தலமாக அமைக்கப்பட்டிருந்தது. இன்று அது உடைக்கப்பட்டு அங்கே புதுப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் வந்து குடியேறியவர்களில் அதிகமானோர் வர்த்தகர் களாகவும் செய்குமார்களாகவும், ஸெய்யித்மார்களாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரியார்கள் வருகையினால் மக்கள் அறியாத வேத விதிகளையும் அனுஷ்டானங்களையும் அறிந்து திருந்திய வாழ்க்கை வாழ்ந்தனர். அதுமட்டுமன்றி மற்றோரையும் ஒழுங்குமுறைப்படி வாழவைத்த பெருமை இப் பெரியார்களையே சாரும்.
மனிதன் மனிதனாய் வாழ்வதே பண்பு. அதற்கேற்ற பயிற்சிகளை இத்தகையோர் தங்கள் நடையுடை பாவனைகளால் எடுத்துக்காட்டி மக்களை திருத்தியமைத்தனர் எனின் அது மிகையன்று. இஸ்லாமிய ஒழுங்கு முறை களுக்கும் நேரிய வாழ்வுக்கும் தரீக்காக்கள் மூலமாக செய்குமார்கள் ஆற்றிய சமயப்பணிகளுக்கு ஆணித்தரமான சான்றுகள் உண்டு. மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பல தக்கியாக்களைக் கட்டி அவற்றில் அரபிப் பள்ளிக்கூடங்கள் அமைத்தார்கள். அவற்றின்மூலம் அரபி கற்றவர்கள் அனேகர் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் அரபு மத்ரஸாவாகிய வெலிகம கல்பொக்கையில் அமைந்துள்ள மதரஸ்துல் பாரியும் இதற்கோர் அரிய சான்றாகும். எனவே மதப்பெரியார்கள் வருகையினால் இப்பகுதியில் மதம் எழுச்சிபெற்று, கலையும் தேர்ச்சி பெற்று வாழ்வியலும் பண்பட்டு மிளிர்ந்தது எனலாம்.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரமுன்பு பாரசீகக் குடாவை ஒட்டிய நாடுகள் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்பு பூண்டிருந்தன.
16 ஆம் நூற்றாண்டின் பின் அறபியர் தொடர்பு குறையவே தமிழ்நாட்டுச் சமய, கலாசார தொடர்புகள் வலுத்தன. குறிப்பாகக் கீழைக்கரை, காயல்பட்டணம், காரைக்கால், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து வந்த வர்த்தகர்கள் இங்கே குடியமர்ந்தனர்.
அறபியர் பண்பாட்டுக்குப் பதிலாக தென்னிந்தியப் பண்பாடு நம் முன் னோரிடம் பயின்றுவரக் காரணம் இதுவே. பாரசீகத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்த கலாசார கூறுகளும் நம்மிடையே வழங்கலாயிற்று.
கிராமங்களின் தோற்றம்
போர்த்துக்கேயர் காலத்தில் தெவிந்தரை (தெவிநுவர) முதற்கொண்டு தென்மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பாதுகாப்புக் கருதி சிறிது விலகியும் - உள் நாட்டுப் பிரதேசங்களிலும் குடியேறி வாழ்ந்தார்கள். ஒல்லாந்தர் காலத்திலும் முஸ்லிம்களின் வியாபாரம் ஒடுக்கப்பட்டது என்றாலும் கரையோரப் பகுதிகளில் குடியேறி
2O

பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் மீண்டும் முஸ்லிம்கள் இப்பகுதிக் கரையோரங்களில் அச்சமின்றி வாழ முடிந்தது. மீண்டும் பழைய வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டன.
இவ்வாறு குடியமர்ந்த கிராமங்களே மாத்தறை, வெலிகம, திக்குவல்லை, மீயெல்லை, கிரிந்தை, கந்தறை, கொடப்பிட்டிய, ஹொரகொட என்பனவாகும்.
வெலிகமையில் முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகா பராக்கிரமபாகு காலத்தில் மானாபரன் உருகுணைப் பிரதேசத்தில் தன்பலத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தபோது மன்னனின் படைகள் சில வருடகாலம் யுத்தம் புரிய வேண்டியிருந்தது. வெலகல பகுதியில் மன்னனின் படைகள் யுத்தத்துக்காக வந்தபோது இங்கு வாழ்ந்த - "வாணிஜயோ" என்ற இனத்தவர் யுத்தம் நடைபெறாது தடுத்தனர் என்று வரலாறு கூறுகின்றது. இந்த வாணிஜயோ இனத்தவர்கள் முஸ்லிம்களே.
வெலிகம ஒரு சிறந்த துறைமுகக்குடாவைக் கொண்டுள்ளது. கிழக்கிந்திய வர்த்தகக் கப்பற் பாதையில் இது அமைந்திருப்பதால் அராபிய வியாபாரிகள் இங்கு குடியேறி வாழ்ந்திருக்கலாம்.
திக்குவல்லை, கந்தறை போன்ற கிராமங்களில் முதலில் குடியேறிய முஸ்லிம் கள் நெவிநுவரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். போர்த்துக்கீசர் காலத்தில் முஸ்லிம்கள் அங்கிருந்து துரத்தப்பட ஒரு பகுதியினர் திக்குவல்லையிலும், மறுபகுதியினர் கந்தறைக்கண்மையிலுள்ள ஜாகவத்தையிலும் குடியேறினர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கந்தறையில் குடியிருப்பை ஏற்படுத்திக்
கொண்டனர்.
மாத்தறை தெவிநுவர போன்ற கரையோரப் பகுதிகளிலிருந்து போர்த்துக் கீசரால் விரட்டப்பட்டபோது சில முஸ்லிம்கள் உள்நாட்டுப் பகுதிகளில் குடியேறினர். அவ்வாறு குடியேறியவர்களே இன்று மீயெல்லை, கிரிந்தை, கொடப்பிடிய, ஹொரகொட போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். இக்கிராமங்கள் அக்காலத்தில் ஒற்றையடிப் பாதைகள் மூலம் மாத்தறையுடன் இணைத்திருந்தது.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு முஸ்லிம் குடும்பங்கள் தெனியாய, ஹாலந்தாவ, பிட்டபெத்தற, மொறவக்க போன்ற பகுதிகளில் குடி கொண்டுள்ளனர். இவர்கள் றப்பர், தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரிந்து வாழ்கின்றனர்.
மதுஹபும் தரீக்காவும்
மாத்தறை மாவட்டத்து முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஷாபிஈ
மதுஹபையே பின்பற்றுகின்றனர். குறிப்பிட்ட தொகையினரைத் தவிர
அதிகமானோர் காதிரிய்யா தரிக்காவைச் சேர்ந்தவர்களே. அதுவும் சங்கைக்குரிய
121

Page 63
குத்துபுஸ்ஸமான் அல் - ஆலிமுல் அரூஸ் அல்லாமா செய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "காதிரியத்துல் அருஸியா" தரீக்காவையே அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.
இவருக்குப்பின் இவரது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் காலத்திற்குக் காலம் வருகைதந்து ஞான உபதேசங்கள் புரிந்துள்ளதோடு "பைஅத்" வழங்கி முரிதீன்களாக்கிக் கொண்டுள்ளார்கள்.
ரிபாயிய்யா, ஜிப்ரிய்யா, சாதுலிய்யா தரீக்காக்களைச் சேர்ந்த பலரும் மாத்தறைப் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர்.
மெளலானாமார்களின் வருகை இப்பகுதியில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சங்கைக்குரிய ஜிப்ரி மெளலானா, மசூர் மெளலான போன்றவர்கள் குறிப் பிடத்தக்கவர்கள். இப்பகுதியில் பெற்றோர் தங்களுக்குப் பிள்ளைகள் கிடைத்ததும் மெளலானாமார்களிடம் சென்றே பெயர்வைப்பது உண்டு. இன்று இப்பகுதி முஸ்லிம்களின் பெயர்களில் 'ஜிப்ரி" என்ற சொல் அதிகம் சேர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
அன்று நஸியத் கொடுப்பதன் பேரில் மெளலானாமார்கள் வரும்போது பள்ளவாசலில் எல்லோரும் ஒன்றுகூடுவது சிறப்பம்சமாகும்.
ரிபாய் தரீக்காவைப் பின்பற்றும் மக்களும் வெலிகம, கபுவத்த போன்ற பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்.
கல்வி நிலை
இப்பகுதியில் ஆரம்ப காலத்தில் பாடசாலைகள் இருக்கவில்லை விரல்விட்டு எண்ணக்கூடிய சன்மார்க்க அறிஞர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள் போன் றோரே ஓரளவு எழுத வாசிக்கத் தெரிந்திருந்தனர். இங்குள்ள மக்கள் ஆரம்பத்தில் வீடுகளுக்குச் சென்று தெரிந்தவர்களிடம் கேட்டுப் படித்துள்ளனர். இன்னும் சிலர் சிங்களப் பாடசாலைகளுக்குச் சென்றே கல்வி கற்றிருக்கின்றனர்.
பாடசாலை செல்லாவிட்டாலும் ஆரம்பத்தில் இப்பகுதி மக்களில் சிலர் தமிழ், ஆங்கிலம், அறபு, சிங்களம் ஆகிய பன்மொழிப் பயிற்சி பெற்றவர்களாக வாழ்ந்துள்ளனர். இதனை அவர்களது காணி உறுதிகள், குத்தகை, ஒப்பந்தப் படிவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அறிவோடு செயல்பட்டு அதிகாரத்தோடு வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. ஜமீந்தார்களைப் போல இப்பகுதியின் கிராம நிர்வாகங்களும் ஆரம்பத்தில் இருந்துள்ளன. கிராமத் தலைவர் “விதானையார்' என அழைக்கப்பட்டார். விதானையாருக்கு மதிப்பும், செல்வாக்கும் சமூக மட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
இப்பகுதியில் வாழ்ந்த புத்தி ஜீவிகள் காட்டிய ஆர்வத்தினால் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு கல்வி போதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இத்திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வளர்ச்சி பெற்றதும் அரசாங்கம் பொறுப்பேற்று நடாத்தி வந்துள்ளமை தெரிகிறது.
22

கல்வி பெண்களுக்கு அப்பாற்பட்டது எனக் கட்டுப்பாடு விதித்த காலத்தில் 1950 களுக்குப் பிறகு இப்பகுதிப் பெண்கள் தடைகளைத் தாண்டி கற்றுத் தேர்ந்துள்ளார்கள்.
அரச பாடசாலைகளைத் தவிர குர்ஆன் பாடசாலைகளும் ஆண்களதும் பெண்களதும் கல்விக்கு அளப்பரிய சேவைகள் புரிந்துள்ளன. இதனால் இப்பகுதியில் சமய அறிவோடு ஒட்டிய கல்விஞானம் வளர்ந்துள்ளது. ஒழுக்கநெறி
கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டு ஆரம்பம் முதல் குர்ஆன் மதரஸாக்கள், பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லெப்பைமார்கள் மாத்திரமன்றி முதுமைப்பட்ட பெண்களும் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதியமோ லாபமோ கருதாது இந்த மகத்தான பணியை உளத்தூய்மையோடு செய்து வருகின்றனர். இன்று அது பல புதுமுறைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
அன்று இப்பகுதி மக்கள் அறபுத் தமிழிலும் கைதேர்ந்தவர்கள் என்பது அறபுத் தமிழ் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அறிய முடிகிறது. மேலும் உறுப்பெழுத்து, தத்தெழுத்துக்களும் குர்ஆன் மத்ரஸாக்களில் பயிற்றப்பட்டுள்ளன. இதனாலும் அரபு எழுதுவதில் லிபியில் இப்பகுதி மக்கள் மிகவும் கைதேர்ந்திருந்தனர். இதற்கான சான்றுகள் நிறையவே உண்டு. w w
என்றாலும் கல்வித்துறையைப் பொறுத்தவரை பாரிய முன்னேற்றமொன்று இங்கு ஏற்பட்டுள்ளதாக கூறமுடியாது. வைத்தியர்களோ, பொறியியலாளர்களோ, நியாயவாதிகளோ இப்பகுதியில் அதிகம் இல்லை. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் குறிப்பிடத்தக்கனவான பட்டதாரிகள் எனச் சிலர் உள்ளனர். இதனை ஊர்ந்து நோக்கின் கல்விக்கான சூழல் அமைப்பு இன்மையே காரணம் எனலாம்.
மக்களின் சமயம், வாழ்க்கை விவகாரங்களில் மஸ்ஜித்களின் பங்களிப்பு பள்ளிப் பரிபாலன முறையே அன்று நடைமுறையில் இருந்தது. தென்னிந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்த பஞ்சாயத்துப் போன்றது அது.
பள்ளிப் பரிபாலகர்கள் "மத்திச்சம்மார்கள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் உயர் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். பொருள் வளமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இவர்கள் திகழ்ந்தனர். பள்ளிப் பரிபாலனத்தை அச்சமின்றி செய்தார்கள். ܫܚ
முஸ்லிம்களிடையே நடைபெறும் பிரச்சினைகள் பள்ளிவாசல்களில் விசாரிக்கப்பட்டன. பெரும்பாலும் அவை பொலிஸாக்கோ, நீதிமன்றத்திற்கோ போகவில்லை. குற்றவாளிகளுக்கு 'தண்டம் விதிக்கப்பட்டது. பெரிய குற்றமாயின்
19

Page 64
ஊர்ப்பிரஷ்டம் செய்யப்பட்டனர். விபச்சாரக் குற்றமானால் முஅத்தினாரைக் கொண்டு ‘ஹத்து " க் கடமை நிறைவேற்றப்பட்டது. இப்பகுதியில் சில கிராமங்களில் விபச்சாரம் செய்தவர்கள் மரணித்தால் அவர்களை அடக்குவதற்கென்று மையவாடியில் தனியானதொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
சில சமயம் பள்ளிப் பரிபாலன முறையில் பட்சபாதங்கள் தலை காட்டின. அதனால் சிலர் இச்சபையை மீறலாயினர். இதற்குக் கல்வி அறிவு விருத்தியும் ஒரு காரணம் எனலாம். இது கடந்த 30, 40 ஆண்டுகளாக முற்றாக அருகிவிட்டது.
ஊரின் பாதுகாப்பு, அரசியல் அல்லது நிர்வாகப் பிரமுகர்களை வரவேற்பது போன்ற விஷயங்களும் பள்ளிவாசல்களிலேயே நடைபெற்றுள்ளன.
தென்னிந்தியாவிலிருந்து அடிக்கடி வருகைதரும் மதப் பிரசாரகர்கள் 10, 15 நாட்கள் தொடர்ந்து " பயான் "நிகழ்த்துவர். அக்காலத்தில் சமய அறிவைப்பெற
இந்த பயான்களே வழி வகுத்துள்ளன.
வருடாந்த கந்தூரிகள் மக்களது சமூகக் கட்டமைப்பை இறுக வைத்திருக்க உதவின.
குண ஒழுக்கங்கள்
குண ஒழுக்கங்கள் எனும்போது ஒருவனுடைய சொல் செயல்களுக்கும், ஒழுக்கத்திற்கும் பொதுவாய் உள்ளதொன்றைக் குறிக்கின்றது. ஒருவனுடைய எண்ணங்களும், இவ்வெண்ணங்களைக் காட்டும் செயல்களும் பண்பின் முத்திரையைப் பெற்றுள்ளன.
மக்கள் ஒவ்வொருவரும் தத்தமக்குச் சிறப்பாக உள்ள தன்மையையுடையவர். அதுபோன்று அவர்தன் பண்பும் அவர்களின் வாழ்வு நெறியை அழகுபடுத்தும். பண்பாடில்லாத வாழ்க்கையானது உப்புச்சப்பில்லாமல் இருக்கும்.
ஒருவனுடைய செயல்களிலும், சிறப்பாக தன் ஊர் வாழ்க்கைக்கு ஏற்பவும், பொதுவாக உலக வாழ்க்கைக்கு ஏற்பவும், தன்னை அமைத்துக் கொள்வதற்கு செய்யும் முயற்சிகளிலும் இவை தங்களுக்குரிய பண்பை நேராகவும் மறைமுகமாகவும் நிறைவேற்றுகின்றன.
இஸ்லாம் போதிக்கின்ற அறநெறிப் பண்புகளும் பண்பாட்டு ரீதியாக கலப்புற்ற தென்னிந்திய குண ஒழுக்கங்களும் இலகு ஒன்றுசேர இருந்து வந்துள்ளன.
பள்ளிவாசலை மையமாகக்கொண்ட சமூகக் கட்டமைப்பு இருந்து வந்தமையால் ஒருவருக்கொருவர் உதவும் குணப்பண்பு இப்பிரதேச மக்களிடையே காணப்பட்டது.
24.

இப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க குணப்பண்பே விருந்தோம்பல், வறுமை வாட்டியபோதும் வீடுதேடி வருபவரை உபசரித்து உளம் மகிழ்விக்கும் மனப்பாங்கு அன்றிலிருந்து இருந்துவருகின்றது.
வர்த்தகர்களின் சந்ததியிலிருந்து வாழையடி வாழையாக இருந்துவரும் மற்றுமொரு வழக்கமே ஆடம்பரச் செலவு சுய கெளரவத்திற்கு முக்கிய இடமளிப்பதும் இந்த வர்த்தக மனப்பான்மையினாலேயே ஏற்பட்டுள்ளது.
முன்னர் கை நிறையச் சம்பாதித்து சுகபோக வாழ்வு நடாத்தியமையால் இன்றுள்ளோரும் தமது வாழ்வியற் சடங்குகளை ஆடம்பரமாக பிறர் போற்றும் விதத்தில் நடாத்தவே விரும்புகின்றனர்.
முற்காலத்தில் பாவனையில் இருந்த பெண்புத்திமாலை, நஸிஹத்து நாமா, தலைபாத்திஹா போன்ற படைப்புக்கள் மக்களின் குண ஒழுக்கங்களை வளர்க்க உதவியுள்ளன.
மேலும் சமயப்பற்றும், ஒழுக்கநெறியும் மிக்கவர்களாக இப்பகுதி மக்கள் காணப்படுகின்றனர். செல்வம் சேர்ந்ததும் திரு மக்கா நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி மார்க்க அடிப்படையில் வாழும் இளம் சந்ததியினர் அதிகரித்து வருவது நல்ல உதாரணமாகும். இந்த மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஹாஜிமார் அதிகம் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
இப்பகுதி மக்கள் மண்மானம் காப்பவர்கள். கிராமம் என்று ருேம்போது எதையும் செய்யத் துணிபவர்களாகக் காணப்படுகின்றனர். பொது விடயங்களில் ஐக்கியப்பட்டுச் செயல்படுகின்றனர்.
தொழில்முறை அல்லது பொருளாதார நிலை
1956 இன்பின் இலவசக்கல்வி, உயர்கல்வி என்பன கிராமங்களுக்கும் பரவலானமையால் இப்பிரதேசத்து முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டினர். இதனால் அரசாங்க உத்தியோ ஈடுபடும் வாய்ப்புக் கிடைத்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் இன்னபிற உத்தியோகங்கள் புரிவோர் அதிகமாகக் காணப்படுகின்றனர். உயர்நிலை தொழில் புரிவோர் குறிப்பிட்ட தொகையினரே காணப்படுகின்றனர்.
முஸ்லிம்களின் பிரதான - பரம்பரைத் தொழிலான வணிகமே இப்பகுதியில் கையோங்கிக் காணப்பட்டது. வர்த்தகத் தொடர்புகள் "நாடு" "சிங்களச் சீமை" எனக் குறிக்கப்பட்ட அக்குறஸ்ஸ, மொறவக்க, தெனியாய, பிபில, வெல்லவாய, மொனராகல, கண்டி, மன்னார் போன்ற ஊர்களுடன் காணப்பட்டன. ஆரம்பத்தில் இப்பகுதி மக்கள் புடைவை வர்த்தகத்திலும், நெல், பாக்கு, வாசனைத் திரவியங்கள் கொள்வனவு செய்து விற்பனை செய்வதிலும் ஈடுபட்டிருந்தனர். பலர் வர்த்தக நிலையங்கள் வைத்திருந்தனர். கச்சவடம், பொட்டனி வியாபாரம் இப்பகுதியில் விஷேடமாக இடம் பெற்றன.
I25

Page 65
வர்த்தகத்தில் சில உந்தலின் ஆதிக்கமும் காணப்பட்டது. தெனியாப்பிரதேசம் கபுவத்த மக்களின் தனி ஆதிக்கத்திலும், வெல்லவாய, புத்த பிரதேசங்கள் திக்குவல்லை மக்களின் ஆதிக்கத்திலும் மன்னார் பகுதி வெலிகம மக்களின் வணிக ஆதிக்கத்திலும் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களினால் இவர்களது வியா பாரத்துறையில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. கடைகள் கூடின, கூட்டுறவுக் கடைகள் தோன்றின. இதனால் இவர்களது வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டது. இதனால் இன்று அதிகமானோர் தன்லநகருக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் தமது வர்த்தகத் துறையை மாற்றியுள்ளனர். வெலிகமையில் முன்பு முஸ்லிம்கள் நிறைய தோணிகள் வைத்து மீன் முதலாளிகளாக இருந்துள்ளனர். கடந்த 40 வருடங்களில் அவர்கள் படிப்படியாகத் தமது தோணிகளை விற்றுவிட்டனர்.
கொடப்பிட்டிய, ஹொரகொட, கிரிந்த, மீயெல்லை போன்ற பகுதிகளின் பாரம்பரிய தொழிலாக விவசாயமும், ஆடு, மாடு, கோழி என்பவற்றை வாங்கி விற்பனை செய்தலும் நடந்து வருகிறது. சில கிராமங்களைப் பொறுத்தமட்டில் விவசாயம், பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவது குறைவு. முஸ்லிம்களின் வயல் நிலங்கள் பெரும்பாலானவற்றில் சிங்களவர்களே வேலை செய்கின்றனர்.
மதுராபுரம், கந்தறை போன்ற கிராமங்களில் பெண்கள் கயிறு திரித்தல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
பாதணி, தைக்கப்பட்ட உடை, தொப்பி, நுளம்புவலை (நெட்), பேக் தைத்தல் போன்ற கைத்தொழில்களிலும் இப்பகுதி மக்களில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
சில கிராமங்களில் பாரம்பரிய வைத்திய தொழில்களும் உண்டு.
கலாசாரம்
மக்களின் பண்பாட்டு வளர்ச்சியில் கலாசார நிகழ்ச்சிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. மக்களிடையே பரஸ்பர ஒற்றுமை, விருந்தோம்பும் நேர்த்தி, நாகரீக வளர்ச்சி, சமயஞான பயிற்சி விருத்தியுற கலாசாரம் கைகொடுக்கிறது எனலாம்.
இப்பகுதிகளில் நடைபெறும் கல்வி, சமய, கலை நிகழ்ச்சிகளின்போது கோலாட்டம், ரபான் பாட்டு, கழிக்கம்பு, பதம் பாடல் விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றுள்ளன.
இப்பகுதி மக்களின் கலாசார பண்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் இருந்தாலும் தென்னிந்திய தமிழ் கலாசாரக் கலப்பும் அவர்களிடையே பிரதி பலித்திருந்தமையைக் காணமுடிகிறது.
கபுவத்த, கொடப்பிடிய போன்ற பகுதிகளில் இடம்பெறும் ரிபாய் ராத்தீபு நிகழ்ச்சி பிரபல்யம் பெற்ற கலாசார நிகழ்ச்சியாகும். பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் கிராமிய ஊர்வலங்களிலும் இந்நிகழ்ச்சி பக்திப் பரவசத்துடன் நடாத்தப்படுகிறது. இன்று தேசிய வைபவங்களிலும் நாட்டுத் தலைவர்களின் வரவேற்பிலும் ரபான் முழக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
26

சில ஊர்களில் மீலாத்தின சிறுவர் ஊர்வலம் நடைபெறுகின்றது. ஊர்வலங் களில் வரும் சிறுவர்களுக்கு ஊர்மக்கள் பலகாரம், இனிப்புப் பண்டம், பரிசுப் பொருட்கள் வழங்கி உபசரிப்பார்கள். இது இப்பகுதியில் இடம்பெறும் சிறப்பான கலாசார நிகழ்ச்சியாகும்.
கோலாட்டம்
கந்தூரி வைபவங்கள், கத்னா வைபவங்கள் முதலியவற்றில் கோலாட்டங்களை இப்பகுதியின் முஸ்லிம் குழுக்கள் நடாத்தியுள்ளன. 1980 ஆம் ஆண்டுகளோடு இதன் செல்வாக்கு அருகி கொடப்பிடிய, திக்குவெல்லை போன்ற இடங்களில் மாத்திரம் தற்சமயம் காணப்படுகிறது.
குத்து விளக்கை மத்தியில் வைத்து சிறுவர்கள் அல்லது பெரிய ஆண்கள் கைகளிலே ஒரு குறுந்தடியை ஏந்தியவர்களாக பைத்துக்கள் பதங்களோடு இவ்வாட்டத்தில் ஈடுபடுவார்கள். பார்ப்பதற்கும் பிரமிப்பும் பரவசமும் தரவல்லனவாக இவ்வாட்டம் அமைந்திருக்கும். கயிற்றைப் பின்னி அமையும் பின்னல் கோலாட்டமும் கொடப்பிடிய திக்குவெல்லைப் பகுதியில் மிகவும் பிரசித்தமானதாகும். -
முன்பு இவ்வாட்டத்தின்போது ஹம்ஸா புலவரின் கீர்த்தனைகள் பெரும்பாலும் பாடப்பட்டன. மீயல்லை அஹமது நெய்னா புலவர், காஸிம் புலவர் ஆகியோரின் பாடல்களும் பாடப்பட்டன. கோலாட்டப் பாடல்கள் குறிந்தடிகளின் தட்டல் ஒசைக்கேற்ப அழகாக அமையும். அவ்வாறு பாடப்படுகின்ற ஒரு கோலாட்டப் பாடல் இது.
பச்சை குத்திடும் ஈர்க்குச் சம்பா - நல்ல
பணிகாரத்துக்கு ஏற்ற சம்பா இப்படி நெல்லுகள் உண்டுமென்றால்
எப்படிக்கலியாணம் செய்யமாட்டோம் வாரண்டா வாரண்டா வெள்ளைக்காரன் - அவன்
படைக்குப் பட்டாளம் சேர்த்துக்கொண்டு எத்தனைப் பட்டாளம் வந்தாலும் - நான்
ஏத்துவேன் காலாலே துள்ளத்துள்ள.
சிலம்பாட்டம்
சிலம்பாட்ட விளையாட்டிலே கைகேர்ந்த கலைஞர்கள் பலர் இப்பகுதியிலே இருந்துள்ளனர். இப்பகுதிகளில் வருடாந்தம் நடைபெறும் கந்தூரிகளின்போது கலை நிகழ்ச்சிகளின்போது இவ்விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
சிலம்புக்கம்பு கொண்டு தனித்தோ பலர் இணைந்தோ இவ்வாட்டத்தில் கலந்து கொள்வர். ஆட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆட்டம் இடம்பெறும் இடத்தில் இருக்கும் ஒரு குருவிடம் உத்தரவு பெற்றே இவ்வாட்டத்தில் ஈடுபடுவர்.
27

Page 66
சிலம்பாட்டத்தில் தேர்ச்சிபெற்ற ஒருசிலர் இப்போது உள்ளபோதிலும் பொது வைபவங்களிலே நிகழ்த்துவது நின்று போயுள்ளது. கழிகம்பு விளையாட்டுக்கள் வாள்வீச்சு, சிலம்ப ஆட்டம் என்பன முன்னர் இப்பகுதியில் சிறப்பாக இடம் பெற்றிருந்தன.
U9)
"துரி வைபவங்களிலே ஒதும் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று உணவு பரிமாறும் நேரத்துக்கு கிடைக்கப்பட்ட நேரத்தில் களரியில் பதம்பாடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இப்பதங்களில் அநேகமானவை குத்புமார்கள், செய்குமார்களைப் பற்றியனவாக விளங்கின. மாத்தறை காஸிம் புலவர் வாழ்ந்த காலத்தில் அவர் கலந்து கொள்ளும் எந்தக் களரியிலும் அவரால் இயற்றப்பட்ட பதங்களை அவரோ அவரது சீடர்களில் ஒருவரோ பாடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
மஸ்தான் ஸாஹிபின் பாடல்கள், திருப்புகழ் போன்றவை தங்களாகப் பாடப்பட்டுள்ளன.
கீழ்வரும் பதம் அப்துல்லா மெளலானா அவர்களின் பெயரால் பாடப்பட்டதாகும்.
" வாலை சூரியன்போல் உதித்தவர்
வள்ளல் அப்துல்லா என்னும் வரிசை
நாமம் பூத்துவர ஆல காலமும் இலங்க
ஹாதி புர்தாவை முழங்க ஆலமெல்லாம் கீர்த்தியோங்க
ஆசிகாம் வொலியுல்லாவே . . . "
தற்போது பதம் பாடல் இப்பகுதியில் அருகிவிட்டது எனலாம்.
கிராமியப் பாடல்கள்
பூவடிச்சிந்து, நாட்டுப் பாடல்கள், கும்மிமாலை, பதம், கதா பிரசங்கம் போன்ற இன்னபல மாத்தறை மாவட்டத்துக்கு முஸ்லிம்கள் மத்தியில் அன்றுதொட்டு பாடப்பட்டு வருகின்றவை எனலாம். மாத்தறை, திக்குவல்லை, கந்தறை, வெலிகம போன்ற பகுதிகள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புகளான ‘ நெய்தல் தன்மை வாய்ந்தன. கிழக்கிலங்கையையினைப்போல இப்பகுதிகளிலும் கிராமியப் பாடல்கள் இடம்பெற்றுள்ளமை சிறப்புக்குரிய அம்சமாகும்.
அன்று சிறுவர்கள் கடற்கரைக்குப் போய் விளையாடுவர். மட்டி பிடிப்பர் ; சேர்ந்து குஸ்தி போடுவர். இவர்கள் கடற்கரைப் பக்கம் போவதைப் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பெற்றோருக்குத் தெரியாமலேயே இவர்கள் வருவர். திடீரென்று பெற்றோர்களோ, உறவினர்களோ வருவதைக் கண்டால் எல்லோரை யும் ஒடி ஒழிக்கும்படி குழுஉக் குறியில் சிலேடை மொழியில் பாடுவர்.
128

செம்பகமே செம்பகமே மாமா வாரா மாமி வாரா கடற்கரையோரத்தில போய்
ஒழித்திரு . . ஒழித்திரு என்று பாடிக்கொண்டே ஒழித்திடுவர்.
சிறுவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுகதைப் பாணியில் பாடும் பின்வரும் கிராமியப் பாடல் இன்றும்சுட இப்பகுதியில் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்தப் பாடல்
"பருப்பாம் பருப்பாம் பன்னண்டாம்
தோறு தோறு மஞ்சளாம் செல்லப் பருப்புக் கூட்டமாம் கூட்டத்திலே கொப்பறாய வட்டமிட்டு என்ன பூ - முருங்கைப் பூ தாட்சவனே முன்னடிப்பால் குடிச்சவனே கைய மொடக்கு - சும்மா
pp
கைய மொடக்கு . . .
அதேபோல் பின்வரும் கிராமியப் பாடலும் இன்றும்கூட எமது சிறுவர்களால் பாடப்பட்டுவரும் காலத்தால் அழியாத கிராமியப் பாடலாகும்.
"கன்னம் பூச்சிலே
கரக்கட்டில நாச்சிலே எத்தன புள்ள பெத்தாய் ஒன்டை ஆடுது ஒன்டை பாடுது உனக்கும் எனக்கும் நல்லதில ஒரு சம்பல் கொண்டு ஓடிவா . . ."
ஹிஜ்ரி 1388 இல் எழுதப் பெற்ற போர்வைச் சிந்து 1309 இல் வெளியான ஆரண முஹம்மதர் காரண கம்மி, திக்குவெல்லையில் வெளியான மிஹ்ராக் கும்மி என்பன கிராமியப் பாடல் பாணியில் எழுதப்பட்டவையாகும். இன்றும் கூட கலைநிகழ்ச்சிகளின்போது பாடப்படுகின்றன. இப்பகுதிப் பெண்களில் முதியோரின் வாய்மொழிகளிலே தவழ்ந்து நிறுகின்றன. -
"கன்னல் மொரீயுடைக்
காரிகை நாங்கள் காந்தலம் கைகள் எடுத்தெடுத்து . . ." என மிஹ்ராக் கும்மிப் பாடலை சிறுமிகள் கைகொட்டிக்கொட்டிப் பாடும் அழகினை இன்றும் காணலாம்.
• 29 10

Page 67
பழமொழிகள்
தமது நீண்ட அனுபவங்களையும், வாழ்வில் கண்ட உண்மைகளையும் பழ மொழிகளாகக் கூறும் தன்மை இப்பகுதிகளில் நிறையவே காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் தாம் கருதிய பொருளை அழகாக பழமொழிகளில் எடுத்துக் கூறுகின்றனர்.
கொடப்பிடிய, மீயல்ல, ஹொரகொட போன்ற பகுதியில் மக்கள் அதிகமாகச் சிங்கள சகோதரர்களுடன் சேர்ந்து பழகுவதால் அவர்களுடைய பழமொழிகளில் அதிகம் சிங்களம் கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக தேவைக்குப் பயன்படாத ஒரு கருத்தைப் பின்வருமாறு எடுத்துச் சொல்வர். "யுத்தெட நெதி கடுவ கொஸ் கொடன்னத ?” (யுத்தத்திற்குப் பயன்படாத வாள் பலாக்காய் வெட்டவா ?) இப்படியாக ஏராளமான சிங்களப் பழமொழிகளைச் சேர்த்தே இவர்கள் பேசுவர்.
ஏனைய பகுதிகளில் ஏராளமாக தமிழில் பழமொழிகள் கலந்து பேசுகின்றனர். இன்றும் கூட வயோதிபப் பெண்கள், ஆண்கள் பேசும்போது பழமொழிகளைச் சேர்த்தே பேசுகின்றனர். அவ்வாறு பேசுகின்ற ஏராளமான பழமொழிகளில் ஒரு சில மாத்திரம் உதாரணத்திற்காகக் கீழே தரப்பட்டுள்ளன.
"தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேற" "குஞ்சிக் கோழியெண்டாலும் குனிஞ்சி அறுக்கோணும்" "ஊமையன் ஊரக் கெடுப்பான்" "மல்லாந்து துப்பினா மார்புக்கு மேல" "குட்டிச் செய்த்தானுக்கு வெரம்பு சுல்தான்" "தயித்துச் சட்டிக்கு பூண் சாக்கி" "பாலைக் குடிக்கேலும் பாக்கியத்தைக் குடுக்கேலுமா" "குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது" "பகுத்தால் தேன் பகாவிட்டால் பாகல் (பாகற்காய்)"
உவமானப் பேச்சு
ஒரு சிறு விடயத்தினையும் அலங்காரமாக உவமை அணிகளோடு பேசுவதில் பாரசீகர்கள் கைதேர்ந்தவர்கள் என்று சொல்வர். அதே பாரசீகப் பண்பு இப் பகுதி மக்களிடையே நிறையவே விரவிக் காணப்படுகின்றமை சிறப்பு. எந்தப் பொருளையும் மிகைப்படுத்தி வர்ணித்துப் பேசுவதில் இப்பகுதிப் பெண்கள், ஆண்கள் இருபாலாரும் முன் நிற்கின்றனர். தமது பேச்சில் சிலேடை, உவமானம் என்பவற்றை அதிகமாக சேர்த்தே பிரயோகிக்கின்றனர்.
பெரும் சிந்தனையோடு இருப்பவர்களைப் பார்த்து "பத்துக்கு எடுத்து எட்டுக்குக் கொடுத்து அதையும் இடை வழியில விட்ட மாதிரி என்ன பலத்த யோசனை . . ." என்பர். இவ் உவமானம் இப் பகுதிகளில் வெகு பிரசித்தம். ஓர் அழகான பெண்ணை வர்ணிக்கும்போது "அரிசிக் குரிசுபோல அழகான பெண்" என்பர். சகிக்க முடியாத வகையில் யாராவது பாட்டுப்பாடினால் "அம்பம் பக்கீர்ட பாட்டு மாதிரி" எனக் கேலி செய்வர். இந்த அம்பம் பக்கீர் யார் என்று கூட
30

அறியாமல் இவர்கள் இதனைப் பிரயோகிப்பது ரசிக்கத்தக்கது. அதேபோல மாத்தறை மாவட்டத்து முஸ்லிம்கள் பிரயோகிக்கின்ற உவமானப் பேச்சுக்கள் சில வருமாறு. “ஊரா ஊட்டுக் கோழிய அறுத்து உம்மட பேரிலகத்தம் குடுத்த மாதிரி" "நரியிட கையில கொடல் கழுவக் குடுத்த மாதிரி" "உப்புத் திண்ட கிடாய் மாதிரி" "மொதல கிரிமெட்டிய புழுங்கின மாதிரி","காக்கேட கால்ல சலங்கை கட்டின மாதிரி", "கம்பி லேஞ்சி வாங்க கொழும்புக்குப் போன மாதிரி" இப்படிப் பல.
பேச்சு வழக்கு
சிங்களச் சூழலில் வாழ்வதால் இப்பகுதிப் பேச்சுத் தமிழில் சிங்கள மொழி ஆதிக்கம் அதிகம் காணப்படுகின்றது. உச்சரிப்பிலும் இத்தன்மையைக் காணலாம். உதாரண மாக வயிற்றினை "பஹ்று" என்றும், கிணற்றினை “கெணறு" என்றும் அழைப்பர்.
மலாய் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பாரசீக, மலையாளச் சொற்கள் நிறையவே இங்கு பிரயோகத்தில் உண்டு. அண்மைக் காலத்தில் தப்லிக் இயக்கம் செல்வாக்குச் செலுத்துவதனால் உருதுச் சொற்களும் பாவனைக்கு வந்துள்ளன. உதாரணமாக ஜுமேராத், கஸ்து, சில்லா போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.
சில ஊர் மக்களின் பேச்சில் அறபுச் சொற்கள் அதிகமாகக் கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விளக்கம் தெரியாதவர்கள் புரிந்து கொள்வதற்குக் கஷ்டம். கல்பு, பாயிதா, துன்யா, ஆகிரம், மலக்கல்மெளத், இல்மு, நப்ஸ், ஹலாக், தவாபு, அதாபு, ரிஸ்கு, கப்ரு போன்ற சொற்களை உதாரணத்திற்குக் குறிப்பிடலாம். வெலிகமப் பகுதி மக்கள் அதிகம் அறபுச் சொற்களைக் கலந்து பேசுகின்றனர்.
கொடப்பிடிய, ஹொரகொட, கிரந்தவியெல்ல போன்ற சிங்களச் சூழலில் வாழும் மக்களிடையே சிங்களச் சொற்கிள பேச்சு வழக்கில் விரவிக் காணப் படுகின்றன. பநாலை, பாள்க்கை, கடோல், வாசி, குனு அமுட, பிஸ்ஸன், ஹொல்மன் போன்ற சொற்களை உதாரன்த்திற்குக் குறிப்பிடலாம்.
அதேபோல் செந்தமிழ்ச் சொற்களும் இம்மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கில் உண்டு. கடப்பு, கவடி, குப்பி, கையடை, புழைக்கடை போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.
ஆடை ஆபரணங்கள்
முன்பு இப்பகுதிகளில் செல்வந்தர்களாகத் திகழ்ந்த ஆண்கள் தலையில் ஸாறாத் தொப்பிகளை அணிந்தனர். கழற்றக்கூடிய பொத்தான்களுடன் கூடிய மேற் சட்டைகள், சிங்கப்பூர் பளயகாட் சாரன்கள், கோட் முதலியவற்றை அணிந்தனர். கால்களில் தோற் செருப்புக்கள் அல்லது மிதிவடிகள், சப்பாத்துக்கள் அணிந்தனர். பின்னர் ஆண்களின் தொப்பியில் மாற்றம் ஏற்பட்டது. துருக்கித் தொப்பி அணிவதில் ஆண்கள் ஆர்வம் காட்டினர். துருக்கித் தொப்பி யுகம் மங்கத் தொடங்கியதும் புடைவைத் தொப்பியும், அதனோடு பின்னல் தொப்பிகளும் அணியத் தொடங்கினர்.
3.

Page 68
முன்பு வசதியுள்ள பெண்கள் விலைபெற்ற “ வெல்வட் " துணியில் பர்தா வைத்து அணிந்தனர். ஏழைப் பெண்கள் சாதாரண புடவை அணிந்து துப்பட்டியால் தோள்களையும் தலையையும் மறைத்துக் கொண்டனர். துப்பட்டிக்குப் பதிலாக சாரங்களால் மூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.
கலியான வீடுகள், பிரயாணங்கள் செல்லும்போது எந்தப் பெண்மணிகளும் துப்பட்டி போடாமல் செல்லவேமாட்டார்கள். அன்று பெண்களின் உடையில் சிக்கனம் தெரிந்தது. சீத்தையும் ஒயிலுமே அதிகமாக அணிந்தனர்.
இன்று ஆடை ஆபரணங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிகமாகப் பெண்கள் தலையையும் தோளையும் மாத்திரம் மறைக்கக்கூடிய " ஹிஜாப்" அணிகின்றனர். ஒரு சிலர் முழு உடம்பையும் மறைக்கக்கூடிய " அபாயா " அணிகின்றனர். பெரும்பாலானோர் இந்திய பாணியில் சல்வார், தாவணி, பாவாடை போன்றவற்றை அணிகின்றனர்.
நோய்ப் பரிகாரங்கள் இப்பிரதேசத்து மக்கள் தமது நோய்களுக்கு மருத்துவர்களை நாடினும் இன்றுங் கூட பலர் எமது முன்னோர்கள் வழியில் அவர்கள் பின்பற்றிய சில நோய்ப் பரிகாரங்களையே நாடுகின்றனர்.
இம்மாவட்டத்தில் சில கிராமப் புறப் பகுதிகளில் இதனை இன்றும் காணலாம். ஒருவருக்கு திடீரென்று நோய் பிடித்து, எவ்வளவோ வைத்தியம் செய்தும் குணமாகாவிட்டால் நோயாளிக்கு ஏதோ நடந்து விட்டது என்று தீர்மானித்து கழிப்புக் கழித்தல், ஒதி இறக்குதல், என்றால் ஒரு சட்டியில் நெருப்புத் தணல்கள் போடுவர். அதில் காய்ந்த மிளகாய், உப்பு என்பன போட்டு நோயாளியின் தலையைச் சுற்றி இறக்குவதாகும். பலவிதமான இலைக் கொத்துக்களினால் நோயாளியின் முழு உட்ம்பையும் தடவித்தடவி எடுப்பதே குழையடிப்பதாகும். இவை இன்றும்கூட இப்பகுதியில் பல இடங்களில் இடம்பெறுவது குறிப்பிடத் தக்கது. மேலும் தேசிக்காய் வெட்டுதல், சூனியம் வெட்டுதல், துஆ கட்டுதல், மை பார்த்தல் என்பனவும் இப்பகுதியில் நிலவும் சில நோய்ப் பரிகாரங்களாகும்.
ஸபர்மாதம் கடைசிப் புதன் ஒடுக்கத்துப் புதன் எனப்படும். இத்தினத்தில் இஸ்ம் எழுதிக் குளித்தால் ஒரு லட்சம் பலாய் வானத்தில் இருந்து இறங்குவது தடுக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் நம்பி குளித்து வந்தனர். இன்று அது முற்றாக நின்றுவிட்டது எனலாம்.
சம்பிரதாயங்கள் சம்பிரதாயங்களை இரண்டாகப் பிரிக்கலாம். வாழ்வியல் சம்பிரதாயங்கள், மற்றது சமய சம்பிரதாயங்கள். வாழ்வியலில் திருமணம், குழந்தைப்பேறு பெயர் வைத்தல், சுன்னத்து, சாமத்தியம், மரணம், தொழில், விவசாயம் இப்படிப் பல அடங்கும். அதேபோல் சமயச் சம்பிரதாயங்களில் நோன்புப் பெருநாள், நிகழ்ச்சிகள், தர்ஹா நிகழ்ச்சிகள், கந்தூரி, நிய்யத்து வழிபாடுகள் தலைப்பாத்திஹா, மெளலூது இப்படிப்பல அடங்கும்.
32

திருமணம் மணமகன் தனக்கு விரும்பிய பெண்ணை மஹர் கொடுத்து மணம் முடிப்பதே இஸ்லாமிய வழிமுறை. ஆனால் அம்முறை மாறி பெண் வீட்டாரே மாப்பிள்ளையைக் கேட்கும் வழக்கம் இங்கிருக்கிறது. சீதனப்பணம், வீடு, கடை, காணி, பூமி என்றெல்லாம் கேட்டு அடம் பிடிக்கும் வழக்கமும் உண்டு. சமீப காலமாக இதிலும் சிறுமாற்றம் ஏற்பட்டு வருவதைக் காணலாம்.
கலியான நாளில் " இஸ்தாது " என்னும் பந்தல் கட்டல், வாணவெடி கொழுத்துதல், கோலாட்டம், சிலம்படி, ரபான் கொட்டல், சங்கீதக் கச்சேரி என்று ஆடம்பரச் செலவுகள் முன்னர் செய்யப்பட்டாலும் இன்று அருகிக்கொண்டு வருகின்றது எனலாம்.
கலியாணம் நிச்சயிக்கப்பட்டபின் பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சீதனப் பணத்துடன் கலியாணக் கேக், வட்டிலாப்பம், பலகாரம், பழவகைகள், தொதோல், மஸ்கட், பிஸ்கட், வெற்றிலை பாக்கு என 7 தட்டம், 11 தட்டம், 17, 21 என்று அவரவர்களின் பொருளாதார வசதிகளுக்கேற்ப தட்டங்கள் கொண்டு போவார்கள். அதனை மாப்பிள்ளை வீட்டில் ஒப்படைத்து அமர்ந்த பின்பு மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் எழுந்து "நீங்கள் இந்த நேரத்தில் இவ்விடத்துக்கு அரிய பெரிய பரிசுப் பொருட்களுடன் வந்த காரணத்தை சபை அறியச் செய்யும்படி வீட்டுடையோர் வேண்டுகின்றனர் " என்பார். அதன்பின் பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர் எழுந்து கலியான நிச்சயதார்தத்திற்காக வந்த காரணத்தை விரிவாக விளக்கி மணாளனுக்கு வந்து கலியாணப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவார். இந்த நடைமுறை இன்று அருகி வருகிறது.
இதேபோன்று மாப்பிள்ளைக்குப் பாவாடை போடல், ஜரிகைத்தூள் தூவல், கோழி அல்லது சேவல் ஒன்றை எடுத்து அவர் தலையைச் சுற்றிப் போடல், பாவாடைக்கு காணிக்கை இடல், தாலி கட்டியபின் மாப்பிள்ளையின் காலை பெண்ணின் சகோதரன் பன்னீரால் கழுவல் போன்ற கைங்கரியங்கள் முன்னர் இடம்பெற்றன. -
இப்போது இவைகள் அருகிவிட்டன என்றே கூறவேண்டும்.
மேலும் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்குத் திரும்பி அழைத்துப்போகும் முதல் தினத்தில் இடம்பெற்று வந்த உப்புக்கோப்பி, போலிப் பலகாரம் அளித்தல் போன்ற வேடிக்கை விளையாட்டுக்களும் இப்போது குறைந்து விட்டன. எனினும் தென்னிந்திய கலாசாரத் தாக்கத்தால் ஊடுருவிய தாலி கட்டும் பழக்கம் இன்னும் எம்மிடமிருந்து அகன்றுவிடவில்லை.
வெலிகம பாலத்தடிப் பகுதியில் முன்னர் மாப்பிள்ளையைப் பல்லாக்கில் வைத்துத் தூக்கி வருவார்கள். அத்தோடு மேளதாளம் ஒலிக்கும். மாப்பிள்ளை வரும் சமயம் பார்த்து வெற்றிலை பாக்குகளுடன் சேர்த்து நாணயங்களை வீசுவார்கள். பன்னீர் தெளிப்பார்கள். பெண் வீட்டில் ஆலாத்தி வேறு நடைபெறும். இவை இப்பகுதியில் இன்று முற்றாக நின்று விட்டது.
33

Page 69
திருமணம் போன்ற மங்களகரமான வைபவங்களை முதலில் ஆரம்பம் செய்யும்போது மஞ்சள் இடித்து ஆரம்பித்து வைப்பது இப்பகுதியில் தொடர்ந்து இருந்து வருகின்றது.
புதுமாப்பிள்ளை வீட்டில் காலடி எடுத்து வைக்கும்போதும், பயணங்கள் மேற்கொள்ளும்போதும், தண்ணிர் தேங்காய்ப்பால் கோப்பையில் வெற்றிலையைப் போட்டு வாசற் படியில் வைத்து அதனைக் கடக்கச்செய்வது முன்னிருந்த வழக்கம், இதுவும் இன்று சிறுகச் சிறுகக் குறைந்து வருகின்றது.
முன்பு புது மாப்பிள்ளையை வீட்டின் வாசற்படியில் வைத்து ஆலாத்தி எடுப் பார்கள். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டால் பரஸ்பரம் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வார்கள். மணப்பெண்ணிடம் புதுமாப் பிள்ளையைப் பெண்ணின் தகப்பன் அல்லது சகோதரன் அழைத்துச் செல்வார். தாலி கட்டியவுடன் தம்பதிகளுக்கு பால் பருக்கப்படும். இவை இன்று மாறாமல் வழக்கில் இருந்து வருகின்றன.
திருமணச் சடங்கு முடிந்து மூன்றாம் நாள் தினத்தில் அரிசிமா தீன்பண்டங்கள் போன்றவற்றை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். இதனை இப் பகுதியில் "மூன்றாம் புட்டு " என்பர். வெள்ளிக்கிழமை குத்பா சாப்பாடு, 7 ஆம் நாள் பிலால் சாப்பாடு (வலிமாச் சாப்பாடு) பகலில் பெண் கூட்டிப்போதல்,
மாமிபார்த்தல் போன்ற சடங்குகள் இன்றும் வெலிகம பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்களாகும்.
* இஸ்தாது " என்று அழைக்கப்படும் மணப்பெண்ணின் அலங்கார ஆசனத்தில் மணப்பெண் அமர்ந்ததும் வாழிப்பாடல் பாடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது.சிறுமிகள் சேர்ந்தோ, இளம் பெண்களோ பாடுவார்கள். முன்பு அவ்வாறு பாடப்பட்ட ஒரு வாழிப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
" வாழி வாழி மோட்சம்
மீள நாளும் சுவர்க்கம் அன்னை ஈனா ஆதம் கன்னி ஹவ்வாவும் போல வாழி வாழி நீங்கள் நீடு வாழ்க . . வாழ்க . . "
பிள்ளைப்பேறு மணவாழ்வில் ஈடுபட்டு கர்ப்பிணியின் தலைப் பிள்ளைக்கு 7 மாதம், 9 மாதம் அண்மிக்கும்போது தலைப்பாத்திஹா ஓதி அன்னதானம் வழங்குதல் இப்பகுதியில் இருந்து வருகிறது. பிறக்கும் குழந்தை பாத்திமா நாயகி மாதிரி சிறந்த குணநல பண்புகளுடனும் மார்க்க பக்தியுடனும் விளங்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதனை நடாத்துகின்றனர். பெண்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் இந் நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்ணை சபையில் உட்கரவைத்து தலைப்பாத்திஹா ஒதுவார்கள்.
134

மாப்பிள்ளை வீட்டார் முதற்கொண்டு உறவினர்கள் கர்ப்பிணிக்கு " சூல் சாப்பாடு " என்று ஒரு விருந்தோம்பலை 9 ஆம் மாத இறுதியில் நடாத்தும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. சில ஊர்களில் விருந்துக்குப் பதில் பலகாரம், தீன் பண்டங்கள் அனுப்புவார்கள்.
கர்ப்பணிப் பெண்ணின், ‘ ஆசைக்குணம் " (அசாக்குணம்) காலத்தில் புளிக் காய்கள், வழக்கத்தில் பயன்படுத்தாத கருவாட்டுப் பொரியல், குரக்கன்கழி, கனி வர்க்கங்கள் சாப்பாட்டு வகையறாக்கள் போன்றவற்றை அன்பளிப்போரும் உளர்.
சுன்னத்து - சாமத்தியச் சடங்குகள் சுன்னத்து, சாமத்தியம் போன்ற முக்கிய சடங்குகளை அறிவிக்குமுகமாக பெண்கள் சிலர்கூடி ‘ரபான் " கொட்டி மகிழ்வது முன்பு இப்பகுதியிலிருந்த பழக்கம். தற்போது இப்பழக்கம் முற்றாக நீங்கிவிட்டது எனலாம்.
கத்னா வைபவங்களின்போது துர்னல் ராத்தீபு ஒதி ரபான் தட்டியும், ஹளரா, திகிர், ரிபாய், ராத்திபுஒதியும், கழிகம்பு கொட்டி சோபனகிதம் பாடியும் கத்னாச் சடங்கை நடாத்தி வைப்பதை மாத்தறைப் பகுதியில் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது.
மேலும் சுன்னத்துப் பிள்ளைகளை மாப்பிள்ளைபோல புத்தாடை உடுத்தி பள்ளிவாசலுக்கு பைத்து ” ப் பாடி ஊர்வலமாய் அழைத்துப் போவார்கள். வீட்டில் அலங்கார ஆசனத்தில் அமர்த்துவார்கள். உறவினர்கள் சீர்வரிசை செய்வார்கள். நெருங்கிய சுற்றத்தார் தங்கமாலை, மோதிரம் என்பனவும் பரிசாகக் கொடும் பார்கள்.
கத்னா நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும்போது பெண்கள் சேர்ந்து ரபான் கொட்டும் பழக்கம் மீயல்லை, கிரிந்தை, ஹொரகொட, கொடப்பிடிய போன்ற பகுதிகளில் நீண்ட-காலமாக இருந்துவந்துள்ளது. தற்போது ஒரு சில இடங்களில் ரபான் கொட்டுவதற்குப் பதில் "திக்ர்" செய்யப்படுகிறது.
பெண்கள் பருவமடைந்தால் நீராட்டி அழகிய ஆடைகளை அணிவித்து, பந்தல் போட்டு அமர்த்துவார்கள். பாற்சோறு சமைத்து மஞ்சள் தடவிய வெற்றிலையில் வைத்து உறவினர்களுக்கு அனுப்புவார்கள். பெண்கள் பரிசுப் பொருட்களுடன் சாரிசாரியாக வருவார்கள். கூடிக் குதூகலித்து ‘ரபான் " கொட்டி மகிழ்வார்கள். ஏழாம் நாள் விருந்தோடு வைபவம் நிறைவுபெறும். இவை இன்று இப்பகுதியி லிருந்து விடைபெற்று விட்டன என்றே கூறவேண்டும்.
நீண்டகாலமாக நாவிதர்களால் செய்யப்பட்ட கத்னா நிகழ்ச்சிகள் தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று வைத்தியசாலைகளில் முஸ்லிம் டாக்டர்களைக்கொண்டு நடாத்தப்பட்டு வருகிறது.
ஜனாஸா ஜனாஸாவை அடக்கஞ் செய்த தினத்திலிருந்து காலை மாலை சூறா யாஸின் ஒதுதல், திக்ரு ஸலவாத் வைத்தல் என்பன இப்பகுதியில் இருந்து வருகின்றன. இவை நாற்பது நாட்களுக்குத் தொடரும்.
35

Page 70
மரணித்தவர்களின் பேரால் மூன்றாம் நாள், ஏழாம் நாள், பதினைந்தாம் நாள் என நாட்கள் கணக்கிட்டு அன்னதானம் கொடுக்கும் வழக்கம் இப்பகுதியில் இருந்துவருகிறது. இதனைத் கத்தம் ' என்று வழங்குவர்.
முன்பு இப்பகுதியில் சில கிராமங்களில் மரணவீடுகளில் நாற்பதாம் நாள்வரை பல இலக்கியங்கள் பாடப்பட்டன. இரவு நடுநிசிவரை விழித்திருந்து இதனைப் படிப்பர். பதங்களும் பாடுவர். இவ்விலக்கியங்களுள் “ ஸைத்தூன் கிஸ்ஸா " பப்பாத்தியம்மாள் கதை சீறாப்புராணம், ராஜமணிமாலை, காஸிம் படைப்போர் , ரசூல்மாலை தலைப்பாத்திஹா என்பன சிறப்பாகக் குறிப் பிடத்தக்கன. இவை வாசிக்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்படும். இவை இன்று படிப்போர் மிகக் குறைந்து ஒரு சிலரே காணப்படுகின்றனர்.
இப்பகுதிகளில் மரணங்கள் ஏதும் ஏற்பட்டால் எவ்வித பேதங்களுமின்றி ஊரவர்கள் அனைவரும் அவ்வீட்டில் ஒன்று கூடுவர். குறிப்பிட்ட மையத்தின் கடமைகள் அனைத்தையும் ஒழுங்காக நிறைவேற்றுவர். மையத்தினைக் குளிப் பாட்டல், ' கபுறுவெட்டுதல் உட்பட அனைத்துக் காரியங்களையும் ஊரவர்களே செய்து வந்தனர். ஆனால் இன்று பெரும்பாலான பகுதிகளில் இவை அனைத்தும் கூலிக்கு ஆள்பிடித்தே செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெயர் வைத்தல்
குழந்தை கிடைத்துவிட்டால் 40 ஆம் நாள் வைபவம் பெண்ணின் வீட்டில் சிறப்பாக நடைபெறும். உறவினர்கள் யாவரும் அழைக்கப்படுவர். விதம்விதமான பரிசுப்பொருட்களுடன் அவர்கள் கலந்துகொள்வர். குழந்தைக்கு அழகாகப் புத்தாடை அணிவிப்பர். ஊரில் முக்கியமான ஒரு பெண்மணி குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டிருப்பார். அவரைச் சூழ ஏனைய பெண்கள் பூரிப்புடன் பார்த்திருக்க அப்பெண்மணி அழகாக ராகம் எடுத்துக் குழந்தையை வாழ்த்தித் தாலாட்டுப் பாடுவார். இன்றும் இந்த வழக்கு மாத்தறை, திக்குவல்லை போன்ற பகுதிகளில் காணப்ப்டுகின்றது.
புதுமனை கட்டல் - குடிபுகுதல் இப்பகுதியில் சில கிராமங்களில் புதுமனை கட்டல், குடிபுகுதல் நிகழ்ச்சியின் போது தென்னை, பாக்கு மரம் என்பவற்றின் பூவை வெட்டி வந்து கட்டித் தூக்கி வைப்பர். அதற்கான காரணம் தெரியவில்லை. இது சிங்கள மக்களின் வழக்கமாகும். இங்கும் ஊடுருவியுள்ளது.
தொழில், விவசாயம், மனைகட்டல், திருமணம் போன்ற எல்லா மங்கள விஷயங்களிலும் பாற்சோறு சமைத்தல், பால் பொங்க வைத்தல், பணியாரம் செய்தல், குர்பானி கொடுத்து இறைச்சி பங்கிடல் இப்பகுதியில் இன்றும் இருந்து வருகிறது. அதனையும் முகூர்த்தம் பார்த்தே செய்வர்.
136

k
விவசாயம்
ஹொரகொட, கிரிந்த, கொடப்பிடிய, மீயல்ல போன்ற விவசாயப் பகுதிகளில் அறுவடையினால் கிடைக்கும் முதல் நெல் சாக்கினை வீட்டுக்குக் கொண்டு வந்தால் கீழே வைக்க மாட்டார்கள். ஒரு கதிரையில் வெள்ளைப் புடவை விரித்து அதற்கு மேலால் வைப்பது வழக்கம். இப்பகுதியில் வாழும் சிங்கள விவசாயிகள் பின்பற்றும் முறையினையே இவர்களும் பின்பற்றுகின்றனர்.
கந்தூரி பள்ளிவாசல்களில் கந்தூரி விழா நடைபெறும்போது வீதி நெடுகிலும் பந்தல், கொடி கம்பங்கள், மின் அலங்காரம், கடைகள் போன்றன அமைக்கப்பட்டிருக்கும். இரவில் விசேடமாகக் கழிகம்பு விளையாட்டு, சிலம்படி, சீனடி என்பன இடம்பெறும். முறையாக விஷேட பயிற்சிபெற்ற இளைஞர்கள் மக்கள் முன்னிலையில் இதை நடாத்திக் காட்டுவது வழக்கம். வெலிகம போன்ற பகுதிகளில் இன்றும் காண முடிகிறது. ஏனைய பகுதிகளில் அருகிவிட்டன.
முஸ்லிம்களின் மாதக் கணக்கெடுப்பான சந்திரமாத வரிசையில் றபீஉல் அவ்வல் மாதம் கந்தூரி மாதம் என்றும், றபீஉல் ஆகிர் மாதம் முஹியத்தீன் கந்தூரி மாதம் என்றும், ஜமாதுல் அவ்வல் மாதம், மதார் கந்தூரி மாதம் என்றும், ஜமாதுல் ஆகிர் மாதம் மீரா கந்தூரி மாதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
నీ இங்கே நடைபெறும் கந்தூரிகளை வீட்டுக் கந்தூரி, பள்ளிக் கந்தூரி என இரண்டாகப் பிரிக்கலாம்.
நபிகள் பெருமானார் (ஸல்) பிறந்ததினமான றபீஉல் அவ்வலில் அவர்கள் பெயராலும், தரீக்காக்களைக் கொண்டு அவுலியாக்களின் பெயராலும் மற்றும் விஷேட காரணங்களுக்காகவும் வீடுகளில் கந்தூரி கொடுப்பர்.
வீடுகளில் கந்தூரி கொடுப்போர் அதற்கு முன்னால் ஒரு ஒத்திகை நிகழ்ச்சி போல "ரசூல் மாலை" மஜ்லிஸ் வைப்பர். ரசூல்மாலை படிப்பதற்கென்றே கைதேர்ந்தவர்கள் இப்பகுதியில் இருக்கிறார்கள். இனிமையான ராகத்துடன் மனப்பாடமாக ஒதுவர். ரசூல்மாலை ஓதி முடிந்ததும் பழங்கள் பங்கிடப்படும்.
முன்னர் இப்பகுதியில் வீடுகளில் நாகூர் சாஹால் ஹமீத் ஆண்டகை பேரில் மீராகந்தூரி, கல்வத்து நாயகம் கந்தூரி, சேகு தாவூத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பேரால் சிறிய கந்தூரிகள் நடைபெற்றன. இன்றும் சில இடங்களில் இக்கந்தூரிகள் வழக்கில் உண்டு.
பள்ளிவாசல்களில் நடைபெறும் கந்தூரிகளை நோக்கின் இஸ்லாமிய வருடத்தின் மாதமான ஸ்பரில் புறுதாக் கந்தூரி பல ஊர்களிலும் கொடுக்கப் படுகின்றது. புறுதாக் கந்தூரியை ஆரம்பித்து வைத்தவர் அப்துல்லா மெளலானா அவர்களாவர்.
37

Page 71
இக்கந்தூரி வெளியூர்களுக்கும் அறிவித்து எல்லாப் பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்தூரிக்காக மெளலானா ஒருவர் தலைவராக வருகை தருவார். அவர் கந்தூரிக்கு வந்தால் மக்கள் அவருக்குப் பெரும் வரவேற்பு அளிப்பர். அவரின்பேரில் அதிக பக்தியுண்டு. வீட்டில் பல நற்கருமங்களை அவரைக் கொண்டு செய்விப்பர். பிள்ளைகளுக்குப் பலகை எழுதுதல், வீட்டிற்கு அடித்தளக்கல் வைத்தல், பிள்ளைகளுக்கு பெயர் வைத்தல் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஊர்ப் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவரிடம் எடுத்துக் கூறி தீர்வு கேட்போரும் உள்ளனர்.
முஹியத்தீன் கந்தூரி முஹியத்தீன் ஆண்டகை பேரில் ஆண்டுதோறும் றபீஉல் ஆகிர் மாதத்தில் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு இரவில் மவ்லூது ஒதப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
வெலிகம கபுவத்த பகுதியில் நடைபெறும் ரிபாய்க் கந்தூரி மிகவும் பிரதானமானது. இவ்வூர் மக்கள் இக் கந்தூரியை முன்னிட்டுச் செய்யும் ஏற்பாடுகளைப் பார்த்து வெளியூரவர்கள் "கபுவத்த மக்களின் மூன்றாம் பெருநாள்" எனச் சொல்வார்கள். முன்பு இக் கந்தூரிக்காக தேங்காய் குலைகளினால் பாதையில் பந்தல் அமைப்பார்கள். கந்தூரிக்காக வருகை தரும் ரிபாய் மெளலானாவை ஊர்வலமாகப் பள்ளிக்கு அழைத்து வருவார்கள். தேங்காய் வாண வேடிக்கைகள் போட்டிக்கு நடைபெறும். இவை இன்று அருகிவிட்டன.
கொடப்பிடிய என்று அழைக்கப்படும் போர்வையில் அடங்கியுள்ள ஸெய்யித் ஸாதாத் பகிர் முஹியித்தீன் வொலியுல்லா பேரால் இங்கு வருடாந்தம் நடைபெறும் கந்தூரி மிகப் பிரசித்தமானது. பத்து நாளைக்கு முழு ஊருமே விழாக்கோலம் பூணும். கடைசி இரண்டு நாளிலும் பெரும் சனத்திரள் இங்கு ஒன்றுகூடும். அந்நிய சமயத்தவர் பக்தியுடன் இங்கு வருகை தருவர். இலங்கையில் நாலாபக்கம் இருந்தும் மக்கள் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. கந்தூரி அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு திருவிழாச் சட்டத்தின்கீழ் நடைபெறுவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
வெலிகம தெனிப்பிடிய பள்ளிவாசலில் ஹஸன், ஹாஸைன் (ரலி) அவர்களின் பேரால் நடைபெறும் கந்தூரி இப்பகுதியில் மிகப் பிரசித்தமானது. பத்து நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கடைசிநேரம் வெகு விமரிசையாகக் கந்தூரி நடைபெறும். கலாசார நிகழ்ச்சிகள் விடியவிடிய இடம்பெறும்.
மேலும் வெலிப்பிடிய பகுதியில் நடைபெறும் சேகுமதார் கந்தூரி, மாத்தறை தொடுவேகொட, மீயல்ல, கந்தறைப் பகுதிகளில் நடைபெறும் புறுதா கந்தூரி, ஹொரகொட, மீயல்ல போன்ற பகுதிகளில் நடைபெறும் மீரா கந்தூரி அவ்வப் பகுதிகளில் விசேடமாகக் கருதப்பெறும் கந்தூரிகளாகும்.
நல்ல நோக்கங்களுக்காக கந்தூரிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இப்பகுதியில்
சிலர் கந்தூரி கொடுப்பதனை சமயக் கடமையை நிறைவேற்றுவதுபோல நிறைவேற்றுகின்றனர்.
38

மேலும் இம்மாவட்டத்தின் சில பகுதிகளில் அடிக்கடி வெள்ள அபாயம் தலைகாட்டுவதனால் கந்தூரியை நிறுத்தாமல் நடாத்தியுள்ளனர். சில ஊர்களில் பாவம், முஸிபத் என்பவற்றைப் போக்கும் என்ற நம்பிக்கையில் கந்தூரிகளைக் கொடுத்து வந்துள்ளனர். என்றாலும் இவ்ை ஓர் அற நிகழ்ச்சியாக, விருந்தோம்பலாக இரு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருவது விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
நாச்சிமார் கந்தூரி
இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் இக்கந்தூரி நடைபெற்றுள்ளது. தொற்று நோய்கள் நீங்க நாச்சிமார் பேரில் இக் கந்தூரி நடாத்தப்பட்டது. இக் கந்தூரி திக்குவல்லையில் "கடற் கந்தூரி” என்றும், கந்தறையில் "காட்டுக் கந்தூரி" என்றும் அழைக்கப்பட்டது. இந்தக் கந்தூரியின் நோக்கம் ஊரிலுள்ள நோய் பிணிகள், தொற்று நோய்கள் நீங்க நாச்சிமார் பேரில் கந்தூரி வழங்குவதாகும்.
உணவுப் பொருட்களைப் பக்கத்திலுள்ள காட்டுக்குக் கொண்டு சென்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு எஞ்சியதை அப்படியே கடலில் எறிந்து விடுவார்கள். அதனால் தோஷம் நீங்கிவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. இக்கந்தூரி இன்று வழக்கொழிந்துள்ளது.
வெலிகம பகுதிகளில் தொற்றுநோய் பீடைகள் ஏற்பட்டால் அதற்காக வீடு வீடாக ஹத்தாத் ராத்தீபு ஓதி வருவது வழக்கம். இறுதி நாளன்று ஊர்மக்கள் எல்லோருமாக கடற்கரைக்குச் சென்று ராத்தீபு ஒதி நிய்யத்து வழங்குவார்கள். இதுவும் இன்று வழக்கில் இல்லை.
மிஃறாஜ் கந்தூரி
மிஃறாஜ் தினத்தில் இக் கந்தூரி இப்பகுதியில் நடைபெறுகிறது. சமீப காலத்திலேயே இக் கந்தூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனலாம்.
இவை தவிர ஸில்ஸிலா கந்தூரி, மீரா கந்தூரி என்பனவும் இப்பகுதியில் உண்டு. பெண்கள் ஒன்று சேர்ந்து தனியார் வீடுகளில் இக் கந்தூரிகளை நடாத்துவர்.
பெருநாள் நிகழ்ச்சிகள் இப் பகுதிகளில் ஈத் பெருநாள் தினங்களில் ஜமா அத்தார் ஒன்றுகூடி தக்பீர் முழக்கத்துடன் புத்தாடை புனைந்து கம்பீரமாக பள்ளிவாசலுக்குப்போய் தொழுகையை நடாத்தி வருவது வழக்கம். இந்தத் தக்பீர் முழக்க ஊர்வல நிகழ்ச்சி பிற மதத்தவரும் பாராட்டும் ஓர் உயரிய நிகழ்ச்சியாகும்.
துல்ஹஜ் 9 ஆம் நாள் அதிகாலையில் சிறுவர்கள் ஒன்றுகூடி ஸ"பஹாத் தொழுகைக்கு முன்னதாக தக்பீர் முழங்கிக்கொண்டு தெருவெல்லாம் வலம் வருவது இப்பகுதியில் முன்னிருந்த வழக்கம். இன்றும் சில பகுதிகளில் இருந்து வருகிறது.
139

Page 72
நோன்புப் பெருநாள் தினத்தன்று ஊர் ஜமா அத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு " ஆட்டுப்பட்டிக்காசு வழக்கம். இது பள்ளிப் பரிபாலனத்துக்கு உதவும் ஒரு பாரிய நன்கொடையாகும். இது இன்றும் எல்லாப் பகுதிகளிலும் மாறாமல் இருந்து வருகிறது.
என அழைக்கப்படும் " ஆட்படிக்காசு " கொடுப்பது
மேலும் பெருநாள் தினங்களில் உறவினர்களின் வீட்டுக்குப் போய் முஸாபஹா செய்து கொள்வார்கள். சிறு பிள்ளைகள் பேதங்கள் இன்றி பெருநாள் காசு சேர்க்க வீடு வீடாய்ப் போவார்கள்.
நோன்பு மாதம்
இம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நோன்பு மாதம் ஆரம்பிக்க முன்னதாக ஹதீஸ் மஜ்லிஸ், மார்க்க உபன்னியாசங்கள் செய்யும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஊரில் முக்கியமான ஆலிம்கள் இதனை நடாத்தி வைப்பார்கள். பெண்பாலாருக்கு இது பாரிய வரப்பிரசாதமாகும்.
றமழான் மாதங்களில் ஸஹர் செய்ய எழும்புவதற்காக றமழான் மாலை 8 பைத் " பாடியவண்ணம் ஊரின் தெருக்களில் சிலர் வலம் வருவது முன்பிருந்த வழக்கமாகும். திக்குவல்லை போன்ற ஊர்களில் பக்கீர் பாவா போல ஒருவர் ரபான் அடித்து பாட்டுப்பாடி ஆட்களைத் துயில் எழுப்பிவிடும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
பாலத்தடி, கொடப்பிடிய, ஹொரகொட போன்ற பகுதிகளில் விழித்திருக்கும் இளைஞர்கள் ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காக " பொம்படிக்கும் " பழக்கத்தைக் கையாண்டு வந்துள்ளனர்.
ஏழு அடி அளவுள்ள மூங்கில் துண்டை எடுத்து அதன் ஆரம்ப அமைப்பைத் தவிர்த்து, மற்றவற்றை உடைத்துவிடுவர். ஆரம்ப அமைப்பிலிருந்து மூன்று அங்குலம் தள்ளி வடிவான ஒரு துவாரம் இருக்கும். துவாரத்தின் ஊடே மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பந்தத்தால் சூடேற்றுவர். அது சூடேறியதும் வெடிச்சத்தம் கேட்கும். பிறகு வாயினால் ஊதி ஊதித் தீப்பந்தத்தை வைப்பர். டும் . . டும் என்ற சத்தம் காதைப் பிளக்கும். இச்சத்தம் அயற் கிராமங்களுக்குக் கூட கேட்கும். இந்த " பொம்படிக்கும் முறை இன்றும் சில பகுதிகளில் இருந்து வருகிறது. இதனை இப் பகுதிகளில் அறிமுகப்படுத்திய பெருமை கொடப்பிடியைச் சேர்ந்த சின்னலெப்பை என்பவரையே சாரும்.
இன்று பல இடங்களில் ஸஹர் நேரம்பற்றி ஒலிபெருக்கியிலேயே அறிவிக்கின்றனர்.
றமழான் மாதத்தில் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ் இப்பகுதிகளில் அன்றுதொட்டு நடந்து வருகிறது. ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு ஒரு ' ஜாஸ்ஊ " அல்லது இரண்டு, மூன்று என ஒதி தமாம் செய்யப்படுகின்றது. ஹிஸ்புல் குர்ஆன் ஓத முன்னர் வித்ரியா மஜ்லிஸ் நடைபெறும். அது முடிந்ததும் நார்ஸா வழங்குவர்.
140

மீலாத் விழா
வருடாந்தம் நடைபெறும் மீலாத் விழா நிகழ்ச்சிகள் இப்பகுதிகளில் கலைவிழா போல நடைபெறும். பள்ளிவாசல் முற்றவெளியில் ஆண்களும் பெண்களும் அன்றைய இரவில் திரண்டு நிற்பர். நள்ளிரவு 12 - 1மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெறும். போட்டி நிகழ்ச்சிகள் இஸ்லாமிய கீதங்கள் எல்லாம் முடிந்தபின் சீனடி, சிலம்படி வித்தைகள் நடக்கும். இவற்றிற்குப் பரிசில்களும் வழங்கப்படும்.
அடுத்தநாள் பகல் ஊரில் அனைவருக்கும் பள்ளியில் கந்தூரி வழங்குவர். இரவு விடியும்வரை மக்கள் ஒத்துழைப்போடு கலை நிகழ்ச்சிகளையும் ரசிப்பர்.
வெலிகம கோட்டகொட, மாத்தறை, திக்குவெல்லை, கொடப்பிடிய போன்ற இடங்களில் மீலாத் விழா நிகழ்ச்சிகள் அதி விமரிசையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நிறைவுரை வாழ்வியலும் பண்பாடும் நிலையானதல்ல. அரசியல், பொருளாதாரம் கல்வியறிவு போன்றவை மாறும்போது சமூகத்தின் வாழ்வியல் மாற்றமடைகிறது. இதனால் பண்பாடு மாறுகிறது. ஒரு காலத்தில் அவசியம் என்று தூக்கிப்பிடிக்கப்படும் பண்பாட்டுக் கூறொன்று காலப்போக்கில் அவசியம் அற்றதாக வழக்கிழந்து போகலாம். இன்றியமையாத மார்க்கக் கிரியைகளாக நினைத்து நிறை வேற்றப்பட்ட பல சடங்குகள் இன்று மூட நம்பிக்கைகளாகக் கருதி தூக்கி எறியப்பட்டுள்ளன. இதற்குச் சமயத் தெளிவு மட்டும் காரணம் என்று கூறமுடியாது. சமூகத்தின் ஏதாவதொரு தேவையை நிறைவு செய்யாத கலாச்சாரக் கூறொன்று கால வெள்ளத்திற்கு ஒருபோதும் தாக்குப்பிடிக்காது.
இன்றும்கூட சமயக் கிரியைகள் அல்லாத பல சடங்குகள் சமூகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் காரணம் அவை சமூகத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் பயனளிக்கின்றமையே. அவற்றை நாம் சமயமாக அன்றி கலாசாரமாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அத்தகைய சடங்குகள் ஆத்மீக ரீதியில் பயன்தராதுவிடினும் லெளகீக மட்டத்திலாவது உபயோகமாக இருக்கின்றன.
இந்த அடிப்படையில், மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் இஸ்லாத்தின் வழிகாட்டலாலும் கல்வியறிவு, சிந்தனை என்பவற்றின் செம்மைப் படுத்தலாலும் சீர்பெற்று வந்துள்ளன என்று துணிந்து கூறலாம். மேற்குலக நவீன சாதனங்களின் மலிவுகூட இப்பிரதேசங்களில் பாரிய சீரழிவுகளை ஏற்படுத் தியதாகக் கூறமுடியாது. கல்வியறிவும், சிந்தனையும் விருத்தியடைவதன் காரணமாக நவீனத்துவத்தின் ஆரோக்கியமான அம்சங்களே இங்கு பண்பாட்டுக்கு உள்ளாகின்றன.
நவீன அம்சங்களைப் பயன்படுத்த சமய ரீதியிலான ஆட்சேபம் சில இடங்களில் இருப்பினும் அது பெரிய தாக்கமாக அமையவில்லை. சமய போதனைகளை அறிவு பூர்வமாக அணுகும் தன்மை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். எது எவ்வாறிருப்பினும் வாழ்வியலும் பண்பாடும் புனித இஸ்லாத்தினால் வழிபடுத் தப்படுவது சமூக கட்டமைப்புக்கும் சந்துஷ்டிக்கும் காரணமாய் அமைகிறது என்று கூறலாம்.
141

Page 73
இக்கட்டுரையினை எழுதுவதற்கு எனக்குப் பலவகையிலும் ஒத்துழைப்பு நல்கிய, தகவல்களைத் தந்து ஊக்குவித்த பின்வருவோருக்கு எனது இதயங் கலந்த நன்றிகள்.
சங்கைக்குரிய ஜே. எஸ். கலில் அவுன் மெளலானா வெலிகம
அல்ஹாஜ் ஏ. எம். ம்ெ. உவைஸ் கல்பொக்க வெலிகம அல்ஹாஜ் முக்தார் ஏ. முஹம்மது கல்பொக்க வெலிகம அல்ஹாஜ் எம். எச். எல். ஏ. ஏ. சீ. நூஹா கல்பொக்க வெலிகம ஜனாப் எம். எச். எம். ஷம்ஸ் கோட்டகொட வெலிகம ஜனாப் எம். எஸ். எம். இர்பான் மதுராபுர வெலிகம ஜனாப் எம். ஏ. எம். ராசிக் வெலிபிடிய வெலிகம ஜனாப் ஹிபிஷி தெளபீக் பாலத்தடி வெலிகம ஜனாப் எம். எம். முஹம்மட் கபுவத்த வெலிகம ஜனாப் எம். எச். ஏ. பாரி கொடப்பிடிய அக்குறஸ்ல ஜனாப் எம். ஏ. மன்ஸூர் மாத்தறை அக்குறஸ்ஸ் அல்ஹாஜ் எம். ஐ. எம். எம். ஜெலிது கந்தறை அக்குறஸ்ல ஜனாப் எம். ஸி. எம். நிஸார் மீயெல்ல அக்குறஸ்ஸ் ஜனாப் ஏ. டபிள்யூ. முஹம்மட் கிரிந்த அக்குறஸ்ஸ ஜனாப் கே. எஸ். வாரிஸ் அலி மெளலானா வெலிகம அக்குறஸ்ல ஜனாப் எம். ஹம்ஸா முஹம்மது திக்குவல்லை அக்குறஸ்ஸ்
உசாத்துணை நூல்கள்
1. "மலர் " - ஒகஸ்ட் 1971 (தென்னிலங்கை பேச்சு வழக்குத் தமிழ்) 2. மல்லிகை திக்குவல்லை சிறப்பிதழ் - 1978 பெப்ரவரி 3 "も”ー1973.
142

மாத்தறை மாவட்டம்
- - -4- -- مجي
: س--۰ہہ ۔ حملے 冰
143

Page 74
6
பொருளாதார நிலையும் தொழில்களும்
எஸ். ஐ. எம். ஹம்ஸா
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார நிலைமைகள், தொழில்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வதாயின், முதலில் இவற்றுக்கு ஆதாரமாக விளங்கியுள்ள பல்வேறு பகைப்புலங்களையும் (Backgrounds) சுருக்கமாகவேனும் நாம் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும். இவ்வாறான பகைப்புலங்களாக புவியியல் பின்னணி, வரலாற்றுப் பின்னணி, அரசியல் பின்னணி, கலாசார பண்பாட்டுப் பின்னணி என்பவற்றை எடுத்துக் காட்டலாம்.
மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரை மேற்காட்டிய அம்சங்களை முழு மாவட்டத்திற்குரியதாகவும், மாவட்டத்திற்குள் முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள், நகரங்கள் போன்றவற்றுக்குரியதாகவும் வேறுபிரித்து ஆராய முடியுமாகும். ஆனாலும் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஆராய்வதாகும். இவ்வடிப்படையில் முதலில் நாம் மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு கண்ணோட்டம் செலுத்துவோம்.
புவியியல் பின்னணியும் முஸ்லிம்கள் வாழ் பிரதேசங்களும் : மாத்தறை மாவட்டமானது இலங்கையின் தென் பகுதியில் (தென் மாகாணத்தில்) (படம் : 1) மேற்கே காலி, கிழக்கே அம்பாந்தோட்டை, வடக்கே இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களையும், தெற்கே இந்து மா கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மாத்தறை, அக்குரஸ்ஸ, வெலிகம, தெனியாய, ஹக்மன, தெவிநுவர, கம்புறுபிட்டிய ஆகிய ஏழு தேர்தல் தொகுதிகளையும் (படம் : 2) உள்ளடக்கப் பிரதேசங்களாகக் கொண்ட மாத்தறை மாவட்டம் ஏறத்தாழ 1245 சதுரக் கிலோ மீற்றர்கள் (481.3 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது. இதன் தென் எல்லை முழுவதும் கடல் மட்டத்துடன் கூடிய தாழ்நிலமாகும். வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல நிலம் படிப்படியாக உயர்ந்து சென்று மாவட்டத்தின் வட எல்லை தெணியாயப் பிரதேசத்துடன் 300 மீற்றர் உயரத்தில் சப்ரகமுவாத் தொடரைச் சந்திக்கின்றது. ஏனைய பகுதிகளில் இடைக்கிடை சிறு குன்றுகளைக் காணலாம்.
காலநிலையைப் பொறுத்தவரை ஈரலிப்பான காலநிலைத் தன்மையும், வருடத்தில் சராசரி 28° செ.கி. வெப்பமும், சராசரி 2500 மி.மீ. மழையும் பெறுகின்ற பிரதேசமாக மாத்தறை மாவட்டம் காணப்படுகின்றது. இப்பகுதிக்கான அதிகள
144

விலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக் காற்றின் மூலமே கிடைக்கின்றது. இதன் காரணமாக மாத்தறை மாவட்டத்தூடாக ஓடும் இரு ஆறுகளான நில்வளா கங்கையும், பொல்வத்தை ஆறும் வற்றா நதிகளாகக் காணப்படுகின்றன. (படம் : 2) இதனாற்றான் கிராமிய விவசாயப் பொருளாதார அமைப்பையும், விவசாயத்துறை சார்ந்த தொழில் துறைகளை அதிகளவிலும் கொண்டதாக மாத்தறை மாவட்டம் விளங்குகின்றது.
இவ்வாறான ஒரு சூழலை அடியொற்றியதாகவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார அமைப்புக்களும், தொழில் துறைகளும் இருந்து வந்துள்ளன. ஆனாலும் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களும், நகரங்களும் மேற் காட்டிய விரிந்துபட்ட பொருளாதார அமைப்புக்களினாலும், தொழில் துறை களினாலும் நன்மை அடையக் கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை எனக் கூறலாம். இதற்குக் காரணம் மாவட்டத்தின் முழுப் பிரதேசத்தினையும் அளாவிய விதத்தில் முஸ்லிம்களின் வாழிடங்கள் அமையாமையேயாகும்.
மாத்தறை மாவட்டத்தின் முஸ்லிம்கள் வாழ் பகுதிகள், மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 1% மட்டுமேயாகும். அதாவது 14.3 சதுரக் கிலோ மீற்றர்கள் மட்டுமேயாகும். இந்தப் பரப்புக்குள்தான் முஸ்லிம்கள் வாழும் 3 நகரங்களும் 8 கிராமங்களும் காணப்படுகின்றன. (படம் : 2) வெலிகம, மாத்தறை, திக்வெல்ல என்பன நகரங்களாகவும், கந்தர, கிரிந்த, கொடப்பிட்டிய, ஹொரகொடி வெலிப்பிட்டிய, கொலேதண்ட, மதுராபுர, கப்புவத்த என்பன பெரிய கிராமங் களாகவும் விளங்குகின்றன.
வெலிகம நகரம் பழைய தெரு, கல்பொக்க, கோட்டகொட, புதிய தெரு, மலபலாவ, கடேவத்த ஆகிய ஏறத்தாழ 99% அளவில் முஸ்லிம்கள் வாழும் உப நகர் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 3 1/2 ச.கி. மீற்றர் பரப்பைக் கொண்டதாக
விளங்குகின்றது.
இதனையடுத்து மாத்தறை நகரம் கொட்டுவேகொட, கடை வீதி, இஸ்ஸதீன் நகரம் என்னும் முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் உப நகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 3 ச. கி. மீற்றர் பரப்பைக் கொண்டதாக விளங்குகின்றது.
அடுத்ததாக திக்வல்லை நகரம் யோனகபுர, பந்தியவத்த, சூரியகஹவெல, வெலிஹிட்டிய (புதிய முஸ்லிம் குடியிருப்பு), கச்சல்வத்த (புதிய குடியிருப்பு), நைகல ஆகிய உப பகுதிகளை உள்ளடக்கிய ஏறத்தாழ 2 ச. கி. மீற்றர் பரப்பைக் கொண்டு விளங்குகின்றது.
ஏனைய கிராமங்களான கந்தர, கிரிந்த, கொடப்பிட்டிய (போர்வை), ஹொரகொட என்பன முறையே ஒவ்வொன்றும் ஏறத்தாழ 3/4 ச. கி.மீற்றரையும், வெலிப்பிட்டிய, கொலேதண்ட, கப்புவத்த, மதுராபுர என்பன முறையே ஒவ்வொன்றும் ஏறத்தாழ 1/2 ச. கி. மீற்றரையும் கொண்டு விளங்குகின்றன.
145

Page 75
முழு மாவட்டத்தினதும் நிலப்பரப்பில் ஒரு கண்ணோட்டம் செலுத்தி வடவரைப் பகுதி, தென்னரைப் பகுதி எனச் சரி பாதியாக நோக்கும்போது இம்மாவட்டத்தின் வடவரைப் பகுதியில் எந்தவொரு முஸ்லிம் கிராமமும் காணப்படவில்லை. ஏறத்தாழ தென்னரைப் பகுதியில் மட்டுமே, அதுவும் தென்கரையோரமாகவும், மேற்கு எல்லை சார்ந்துமே முஸ்லிம் பிரதேசங்கள் காணப்படுகின்றன. கிழக்கில் காணப்படும் (உட்பகுதியில்) ஒரே ஒரு முஸ்லிம் கிராமம் கிருந்தையாகும்.
முஸ்லிம்கள் வாழும் இந்தப் பதினொரு பிரதேசங்களிலும் 1981 ஆம் ஆண்டின் குடிசனப் புள்ளி விபரத் தொகை மதிப்பீட்டின்படி, மாத்தறை மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகையான சுமார் 644000 பேரில் 16744 முஸ்லிம்கள் மட்டுமே காணப்பட்டனர். அதாவது 2.6 % மானவர்களே முஸ்லிம்கள். (படம் : 3) இன்றைய மேலோட்டமான கணிப்பின்படி மாத்தறை மாவட்டத்தின் மொத்த முஸ்லிம்களின் தொகை சுமார் 22890 பேர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
பொருளாதாரமும் தொழிலும்
வரையறுக்கப்பட்ட சில எல்லைக்குள் மட்டுமே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் வாழுவதனால் முழு மாவட்டத்திற்குமே உரித்தான பிரதேச வேறுபாட்டு ரீதியிலான பொருளாதார அமைப்புக்களையும், பயன்களையும், தொழில் வாய்ப்புக் களையும் இவர்கள் அடையப் பெறவில்லையென்றே கூற வேண்டும். உதாரண மாக மாவட்டத்தின் வடவரைப் பகுதியில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் இல்லாததன் காரணமாக பெருந்தோட்ட விவசாயத்துடன் கூடிய எந்தவொரு பொருளாதாரப் பயனையும், தொழில் வாய்ப்பையும் முஸ்லிம்கள் பெறவில்லை. இதேபோன்று கரையோரப் பிரதேசத்தில் அமைந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் கூடக் கடற்றுறைகளைச் சார்ந்து அமையாததனால் (இன்றைய நிலையில்) கடற்றொழிலுடன் கூடிய பொருளாதார அமைப்புக்களையும், தொழில் வாய்ப்புக் களையும் இப்பகுதி முஸ்லிம்கள் பெறவில்லை (போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு தெவிநுவர, மாத்தறை, வெலிகம பகுதிகளில் முஸ்லிம் மீனவர்கள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகின்றன.) எனவேதான் இம் மாவட்டத்தின் முஸ்லிம் குடியிருப்புக்கள் முழுவதிலும் ஒரேவிதமான பொருளாதார, தொழில் நிலைமைகள் அண்மைக் காலம் வரையிலும் இருந்து வந்துள்ளன. இலங்கையில் அந்நியர் ஆட்சிக் காலமுதல் முஸ்லிம்களின் முன்னேற்றங்கள் தடை செய்யப்பட்டதும் இதற்கொரு காரணமாக இருந்துள்ளது. என்றாலும் சில கிராமங்களில் சூழலுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த பொருளாதார அமைப்புக் களும், தொழில் நிலைமைகளும் அன்று தொடக்கம் இன்று வரை இருந்து வருகின்றன. இது ஒரு குறைந்த வீதாசாரமே. ஆகவே, மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார, தொழில் நிலைமைகளை ஆரம்பகால பொதுவான பொருளாதார, தொழில் நிலைமைகளென்றும், சுதந்திரத்திலிருந்து அண்மைக் காலம் (இன்றுவரை) வரையிலான பொருளாதார, தொழில் நிலைமைகளென்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து ஆராயலாம்.
146

ஆரம்பகால பொதுவான பொருளாதார, தொழில் நிலைமைகள் ஆரம்ப காலத்தில் மாத்தறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் பொதுவான பொருளாதார, தொழில் நிலைமைகளில் வர்த்தகமே முக்கியம் பெற்றது. இலங்கை முஸ்லிம்களின் கீழைத்தேச, மேலைத்தேச வணிக வரலாறுகள் குறிப்பாக அராபிய, பாரசீக, சீன வணிக வரலாறுகள் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார, தொழிற் துறை வரலாற்றிலும் ஓர் அங்கமாக விளங்கியது. குறிப்பாக மாத்தறை மாவட்டத்தின் கடற்கரைத் துறைகள், குடாக்கள் என்பன ஆரம்பகாலத்தில் வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற்றன. உதாரணமாக ஆரம்ப காலங்களில் நிலவளாதித்த " என மாத்தறையும், " வலுகாமம் " என வெலிகாமமும் வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெற்ற கடற்றுறையும், குடாவுமாகும். ஆகவே மாத்தறை மாவட்டத்தின் வியாபார வரலாறானது இலங்கையின் புராதன ராஜதானிகள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே முக்கியம் பெறத் தொடங்கியதெனலாம்.
இக்காலகட்டத்தில் அராபிய வர்த்தகர்களுக்குத் தென்னிலங்கை அரசர்களின் ஆதரவு கிடைத்ததன் காரணமாக மாத்தறை, வெலிகம, தெவிநுவர போன்ற கரையோரப் பகுதிகள் (துறைகள் காரணமாக) அறாபிய வர்த்தகர்களின் குடியேற்றத்திற்குக் காரணமாயிற்று. ஆகவே இக்காலத்திலிருந்துதான் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார, தொழில் துறை நிலைமைகள் வர்த்தகம் சார்ந்து வளர்ச்சி பெற்றன. (மார்க்கோ போலோ, இப்னு பதூதா போன்றோரின் பிரயாணக் குறிப்புக்கள் இதனை நிரூபிக்கின்றன).
இதனையடுத்து இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகையுடன் தென் கரையோர நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். குறிப்பாக போத்துக்கேயரின் நடவடிக்கைகள் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் வணிகத்தோடு கூடிய பொருளாதார, தொழிற்துறை அமைப்புக்களைச் சீர்குலைக்கத் தொடங்கின. எனவே முஸ்லிம்கள் இம்மாவட்டத்தின் உள்பகுதியை நோக்கி நகரத் தொடங்கினர். இக்கால கட்டத்தில்தான் உள்நோக்கிப் பல முஸ்லிம் கிராமங்கள் உருவாயின.
ஒல்லாந்தர் காலத்திலும் இதே நிலைதான். இப்போது, உள்நோக்கி நகர்ந்த முஸ்லிம்கள் ஓரளவு உள்நாட்டின் விவசாயத்தோடு கூடிய வர்த்தகத்தில் கவனம் செலுத்தினர். இது வெளியூர்களுடன் தொடர்புபட்ட வகையில் விரிவடைந்தது. அதுமட்டுமன்றி உள்ளுர்ச் சிறு வியாபாரக் கடைகளும் உருவாகின. மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கிடைத்த நெல், பாக்கு, தேங்காய் என்பன சேகரிக்கப்பட்டு, கண்டி போன்ற தூரப் பகுதிகளுக்கு மாட்டு வண்டி, தவனம் என்பவற்றின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வர்த்தகம் நடைபெற்றது. உள்நாட்டு வணிகப் பொருள்களும், பொருள்களைச் சேகரிக்கும் மையங்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பெருகியதன் &SAT6TDrts கொடப்பிட்டிய, கிரிந்தை ஹொரகொட போன்ற முஸ்லிம் கிராமங்கள் தோற்றம் பெற்றன.
மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் இந்த வணிகத்துறை சார்ந்த பொருளாதார, தொழில் நிலை வரலாறானது, இலங்கை சுதந்திரம் அடையும் வரையிலும் மாவட்டத்தின் சகல முஸ்லிம் கிராமங்களிலும் ஒரே மாதிரி
147

Page 76
அமைப்பிலேயே காணப்பட்டது. குறிப்பாக மாத்தறை, வெலிகம, திக்வெல்ல முதலிய பிரதேசங்களின் முஸ்லிம் வணிகர்கள் மாவனல்லை, கண்டி, சிங்களஞ்சீமை (மொனராகலை), பஸ்ஸர, மெதகம போன்ற இலங்கையின் ஏனைய பாகத்திலுள்ள பிரதேசங்களுடன் இரட்டை மாட்டு வண்டி, மாட்டுத் தவளம் போன்றவற்றின் மூலம் பெருமளவில் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார, தொழில்துறை நிலைமைகளும் பல்வேறு துறைகள் சார்ந்து மாற்றமும், விருத்தியும் பெற்றன.
சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததோடேயே இலவசக் கல்வி, தேசிய அரசின் தோற்றம் என்பவற்றின் காரணமாக மாத்தறை மாவட்ட முஸ்லிம் சமூகத்திலும், முஸ்லிம் பிரதேசங்களிலும் தனித்துவமிக்க வளர்ச்சி ஏற்படலாயிற்று. ஆகவே பொருளாதார, தொழிற்துறை நிலைமைகளும் புதிய துறைகள் சார்ந்து (பழைய நிலைமைகளோடேயே) மாற்றம் பெற்றன. இவற்றை நாம் வர்த்தகம், பயிர்ச் செய்கை, கைத்தொழில், அரச உத்தியோகம், வைத்தியம், விலங்கு வளர்ப்பு மீன்பிடி, ஏனைய துறைகள் என்ற அடிப்படையில் பிரதேச ரீதியாக நோக்க முடியுமாகும்.
வர்த்தகம் :
சுதந்திரத்திற்கு முன்பு மாத்தறை மாவட்டத்தின் முஸ்லிம்களின் பொருளாதார, தொழிற்துறைகளில் வணிகம் முக்கியம் பெற்றதை முன்னர் கண்டோம். இன்றும் கூட இம்மாவட்டத்தின் முஸ்லிம்களின் பொருளாதார, தொழில் நிலைமைகளில் ஏறத்தாழ சராசரி 40% க்கும் மேலாக வணிகமே காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தின் வணிகத்தில் இன்றும்கூட ஆரம்ப காலத்தில் காணப்பட்ட ஈரோட்டு வியாபாரம், பொட்டணி வியாபாரம், மணிப்பெட்டி வியாபாரம் என்பன தூர்ந்து போன நிலையில் திக்வெல்ல, வெலிகம, மாத்தறை நகரங்களின் முஸ்லிம் களிடையே காணப்படுகின்றன. மொத்த வணிகத்துறைப் பொருளாதாரத்தில் இது இன்று 1% க்கும் குறைவான அளவிலேயே காணப்படுகின்றது. அதே நேரம் இன்று பெரியளவிலான நிரந்தர வியாபாரமாக இம்மாவட்டத்தின் நகரங்களிலும், கிராமங்களிலும் புடைவை வியாபாரம், இரும்பு வியாபாரம், சாப்புச் சாமான் வியாபாரம், சில்லரை வியாபாரம், நகை வியாபாரம், மின்சாரப் பொருள் வியாபாரம், மரத்தளபாட வியாபாரம், இயந்திரங்கள், பைசிக்கில்தள் வியாபாரம், ஹோட்டல் வியாபாரம். இறைச்சிக் கடை வியாபாரம், பீங்கான் பொருள் வியாபாரம், மருந்துக்கடை (Pharmacy வியாபாரம், புத்தகக் கடை வியாபாரம், பழைய இரும்புச் சாமான் வியாபாரம் என்பன முஸ்லிம்களால் மேற்கொள்ளப் படுகின்றன. குறிப்பாக மாத்தறை மாவட்டத்தின் ஏனைய சமூகத்தவரின் வியாபாரத்தோடு ஒப்பிடும்போது மொத்த வியாபார வீதாசாரத்தில் 50% மான
148

அளவு முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதிலும் குறிப்பாக நகை வியாபாரத்தில் ஏறத்தாழ 80% க்கும் மேலான அளவு மாத்தறை, திக்வெல்ல, வெலிகம முஸ்லிம்கள் வசம் இருப்பதனைக் காணலாம். மாத்தறை மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் பொருளாதார, தொழிற்துறைப் பங்களிப்பில் வர்த்தகத்தின் பங்களிப்பு மாத்தறையில் 65% மாகவும், வெலிகமவில் 80% மாகவும், திக்வெல்லயில் 50% மாகவும் வெலிப்பிட்டிய கப்புவத்தையில் முறையே ஒவ்வொரு பகுதியிலும் 40% மாகவும், கிரிந்தையில் 30% மாகவும், கந்தறையில் 25% மாகவும், கொடப்பிட்டியவில் 20% மாகவும், ஹொரகொட, கொலேதண்ட, மதுராபுர ஆகிய ஒவ்வொன்றிலும் தலா 15% மாகவும் காணப்படுகின்றது (அட்டவணையைப் பார்க்கவும்.)
மேற்காட்டிய விபரங்களைத் தவிர மாத்தறை, வெலிகம, திக்வெல்லப் பகுதி முஸ்லிம்களின் பல வியாபார நிலையங்கள் இன்று கொழும்பு, காலி, கண்டி, வெள்ளவாய. புத்தளை, மொனராகலை, தங்காலை, அம்பாந்தோட்டை போன்ற வெளி மாவட்ட நகரங்களிலும் காணப்படுகின்றன.
மாத்தறை மாவட்ட வியாபாரத்துறையின் இன்னொரு சிறப்பம்சம் கொள்முதல் வியாபாரமாகும். குறிப்பாகக் கொட்டைப் பாக்கு, கோப்பி, கராம்பு, கொறக்கா, மிளகு, றப்பர் ஏலம் போன்ற பொருள்கள் இதனில் முக்கியம் பெறுகின்றன. இந்த வியாபாரத்தில் சிறப்புப் பெற்ற கிராமங்களாக கிருந்தை கொடப்பிட்டிய, ஹொரகொட என்பன விளங்குகின்றன.
விவசாயம் :-(பயிர்ச்செய்கை) Y மாத்தறை மாவட்டத்தின் பயிர்ச் செய்கை விவசாயத்தில் நெல், தென்னை, றப்பர், தேயிலை, மிளகு, கோப்பி, கறுவா, வாழை, பழச் செய்கை, மரக்கறிச் செய்கை, சிறு தோட்டப் பயிர்கள் என்பன விளங்குகின்றன.பொதுவாக மாவட்டம் முழுவதும் பரந்து காணப்படும் இந்தப் பயிர்ச் செய்கைப் பொருளாதாரத்தில் முஸ்லிம் களினதும், முஸ்லிம் பிரதேசங்களினதும் பங்களிப்புக் குறைவாக இருப்பதுடன், பயன்பாடும் குறைவாகும். (அட்டவணை) நெல் விவசாயத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களிடம் நெற்காணிகள் காணப்பட்டபோதும், அவைகள் உழைப்புக்குத் தங்களை அர்ப்பணிக்காத செல்வந்தர்களிடமே (முஸ்லிம்) காணப்பட்டதனால் கடந்த 100 வருட கால வரலாற்றில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் விவசாயத்தில் அடைகின்ற பயனை அது குறைத்துக் காட்டியது. பல நிலச் சொந்தக்காரர்கள் தமது வயல் நிலங்களை முஸ்லிம் அல்லாதோருக்கு குத்தகை யாக அல்லது பயிர் செய்வதற்காக வழங்கி அதிலிருந்து வருமானத்தைப் பெறுகின்ற வழக்கமே காணப்பட்டது. இவ்வாறான ஒரு நிலைமை நீடித்தபோது, கடந்த தசாப்தங்களில் அரசாங்கம் மேற்கொண்ட காணிச் சீர்திருத்த நடவடிக்கைகள் இம் மாவட்ட முஸ்லிம்கள் தமது நெற்காணிகளை இழப்பதற்குக் காரணமாயிற்று. ஆகவே கடந்த இரு தசாப்தங்களுக்குள் இம்மாவட்ட முஸ்லிம்களின் அதிகமான நெற் காணிகள் இழக்கப்பட்டும், துண்டாடப்பட்டும், அழிந்தும் போயின. இதன் காரணமாக நெல் விவசாயத் துறைப் பொருளாதாரப் பயன்பாடு முஸ்லிம்களைப் பொறுத்தவரை இன்று 5 % க்குக் குறைவாகக் கிடைக்கின்றது. இதனிலும் அதிக பகுதி கிரிந்த கொடப்பிட்டிய, ஹொரகொடப் பிரதேச முஸ்லிம்களாலேயே அடையப்படுகின்றது.
149 12

Page 77
தென்னை உற்பத்தியிலும் இவ்வாறான நிலைமை இருந்தபோதும் அதிகமான தென்னங்காணிகள் முஸ்லிம் குடியிருப்புக்களுடன் இணைந்து காணப்படுவதனால் சகல முஸ்லிம் கிராமங்களிலும் தென்னையால் வருகின்ற வருவாய் ஒரளவு சார்பானதாகக் காணப்படுகின்றது. இன்றும் முஸ்லிம்களினதே உடைமையாகக் காணப்படும் அதிகளவிலான தென்னங்காணிகள் வெலிகம, கப்புவத்த, மதுராபுர, வெலிப்பிட்டிய, கொலேதண்ட பகுதிகளில் உள்ளன. இதனைத் தவிர ஏனைய கிராமங்களிலும் தென்னைப் பொருளாதாரம் கணிசமானளவில் பயனைத் தரக் கூடியனவாக உள்ளன.
றப்பர், கராம்பு, கறுவா போன்ற உற்பத்திப் பிரதேசங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இல்லாததனால் அவற்றோடு கூடிய பயிர்ச்செய்கைப் பயன்பாடு இல்லையெனலாம். எனினும் கொடப்பிட்டிய, ஹொரகொட முஸ்லிம்களின் சிறு
உடைமைகளாக இவ்வாறான பயிர்ச்செய்கை நிலங்களைச் சிறியளவில் காணலாம்.
வர்த்தகத்துறையைப் போன்றே மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் உடைமைகளாக நெல், தென்னை, றப்பர் காணிகள் வெளி மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. குறிப்பாக வெலிகம, கப்புவத்த, வெலிப்பிட்டிய, திக்வெல்ல முஸ்லிம்களின் இவ்வாறான பல காணிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம, போலான, அம்பலாந்தோட்ட, வலஸ்முல்ல, யக்கஸ்முல்ல, வீரகெட்டிய ஆகிய இடங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் மொனராகல, வெள்ளவாய, புத்தல போன்ற இடங்களிலும், மாத்தறை மாவட்டத்தின் சிங்களப் பிரதேசமான வறக்காப்பிட்டிய, தெலிஜ்ஜவில, போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. மொனராகலை மாவட்டத்தின், மொனராகலை நகரத்தை அண்மியுள்ள அலியாவத்த, விகாரமுல்ல என்ற இடங்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 4 சதுர கி. மீற்றர் றப்பர் காணியொன்று அண்மைக் காலம் வரை மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அபூபக்கர் ஹாஜியார் என்பவருக்குச் சொந்தமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மாவட்டத்தின் கிராமச் சிறு தோட்டங்களைப் பொறுத்தவரை நகரப் பகுதிகளைவிட முஸ்லிம் கிராமப் பகுதிகளிலேயே, குறிப்பாக ஹொரகொட, கிரிந்த கொடப்பிட்டிய பகுதிகளின் பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் கூடிய முக்கியம் பெறுவதனைக் காணலாம்.
மீன்பிடியும் கால்நடை வளர்ப்பும் :
மாத்தறை மாவட்டத்தின் முஸ்லிம் நகரங்களும், கிராமங்களில் சிலவும் கடற் கரையை அண்மி இருந்தபோதிலும் மீனவத் தொழிலோடு கூடிய பொருளாதார, தொழிற்றுறை அமைப்புக்கள் முக்கியம் பெற்றதாக இன்றைய நிலையில் காணப்படவில்லை. ஆரம்ப காலத்தில் கடற்கரைப் பகுதியோடு ஒட்டி வாழ்ந்த முஸ்லிம்கள் வள்ளங்களில் சென்று மீன்பிடித் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. என்றாலும் காலஞ் செல்லச் செல்ல கடற்கரையோரத்தில் ஏற்பட்டு வந்த கடலபாயம், சிங்களவர் குடியேற்றம் என்பவற்றின் காரணமாக முஸ்லிம்கள் உள்நோக்கி நகர்ந்தனர். அத்தோடு மீன்பிடித் தொழில் சமூகத்தில் அந்தஸ்த்தைக் குறைப்பதாக எண்ணிய மனப்பாங்குகளும் காலகெதியில்
150

முஸ்லிம்கள் மத்தியில் அத்தொழில் இல்லாதொழியக் காரணமாயிற்று. அது மட்டுமன்றி வர்த்தகத்துறை போன்று லாபம் இல்லாமையும், மீன்பிடித் தொழிலுடன் கூடிய பயிற்சியைப் பெறவோ, அதனில் ஈடுபடவோ இம்மக்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. எனினும் ஆதிமுதல் இன்றுவரை உள்நாட்டுக் கிராமப் பகுதிகளின் உள்ளூர் நீர்ப்பரப்புக்களில் ஆங்காங்கே வறுமைப்பட்ட சில குடும்பங்கள் மீன்பிடியை வாழாதாரத் தொழிலாகச் செய்கின்றனர்.
கால்நடை வளர்ப்பைப் பொறுத்தவரை இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே வீட்டுச் சூழலில் ஆடு, மாடு, கோழி, வாத்து என்பவற்றை வளர்ப்பதில் இம்மாவட்டத்தின் முஸ்லிம் கிராமவாசிகளும், நகர வாசிகளும் கூடிய ஆர்வம் காட்டினர். குறிப்பாக இப்பகுதியின் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு இதில் அதிகம். இப்பகுதிக் கிராமங்களினதும், நகரங்களினதும் திருமண வைபவங்கள், கந்தூரி வைபவங்கள் என்பவற்றுக்குத் தேவையான கால்நடைகள் உள்ளூருக்குள்ளேயே பெறப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் கோழி வளர்ப்பு பாரிய அளவில் பண்ணைகள் (Farms) அடிப்படையில் இம்:ாவட்டத்தின் சகல முஸ்லிம் பகுதிகளிலும் வாலிபர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. அவை ஓரளவில் சந்தை நோக்கிய வர்த்தக ரீதியான தொழிலாக நடைபெறுகின்றன. என்றாலும் மொத்தப் பொருளாதார, தொழிற்துறை வீதாசாரத்தில் குறைந்த அளவினதாகவே இது உள்ளது. (அடடவணை)
கைத்தொழில்கள் : சுதந்திரத்துக்கு முன்பிருந்தே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் வீட்டோடு கூடிய சிறு கைத்தொழில்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தன வாக விளங்கின. 1956 ஆம் ஆண்டுவரை ஊக்குவிப்புக்கள் எதுவுமின்றியே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வந்த சிறு தொழில்களில் பாய் இழைத்தல், கிடுகு இழைத்தல், கயிறு திரித்தல், கயிறு முறுக்குதல், அப்பம், இடியப்பம் அவித்தல், மோடகெடல் (சுடாத செங்கல்) செய்தல், கொட்டமல் ரேந்தை பின்னுதல், உடுப்புத் தைத்தல், மூக்குத்தூள், கோப்பித்தூள் தயாரித்தல், கடதாசிப் பூச் செய்தல், பலகாரம் செய்தல், என்பன முக்கியம் பெற்றன. இவ்வாறான சிறு தொழில்களிலும் ஏறத்தாழ 95 % மான அளவில் முஸ்லிம் பெண்களே பங்களிப்புச் செய்தனர். இத்தொழில்களில் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பங்களும் வறிய குடும்பங்களுமே பங்கெடுத்தன.
1956, 1970,1977 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், பொருளாதாரக் கொள்கைகளும் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் கைத்தொழிற் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தின. இக்கால கட்டத்தில் சிறு இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் பல தொழில்கள், குறிப்பாக மாத்தறை, வெலிகம, திக்வெல்ல முஸ்லிம்கள் மத்தியில் விரிவு பெற்றன. தைத்த ஆடைகள் உற்பத்தி (சேட், ஸ்கேட், பிளவுஸ், பிரசியர்ஸ் போன்றன), நுளம்பு வலை உற்பத்தி, தொப்பி செய்தல், கால்மேஸ் உற்பத்தி, இடுப்புப் பட்டி உற்பத்தித் தொழில், பிளாஸ்டிக் பூக்கள் உற்பத்தி, சாய உற்பத்தி, பாதணிகள் உற்பத்தி, தகரப் பொருள் உற்பத்தி, அச்சுத் தொழில், வீட்டு மின்சார இணைப்பு (Wiring) பொருத்துதல், ரேடியோ, ரீவி பழுது பார்த்தல், பைசிக்கில் திருத்துதல்,
15

Page 78
நீர்க் குழாய் பொருத்துதல் போன்றன வெளியூர்களுக்கும், வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய, சேவை வழங்கக்கூடிய விதத்தில் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. இவைகள் மாவட்டத்தில் சகல ஊர்களினதும் முஸ்லிம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் குறிப்பாக வறுமைப்பட்ட குடும்பங் களுக்குச் சிறந்த வருமானத்தைத் தரும் வேலை வாய்ப்புக்களை வழங்கின. அதுமட்டுமன்றி மாத்தறை மாவட்டத்தின் முஸ்லிம் செல்வந்தர்கள் இக் கைத்தொழில்களில் பலவற்றில் மூலதனமிட்டு கொழும்பு மாநகரத்திலும் பெருந் தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர். 1970 ஆம் ஆண்டளவில் இவ்வாறு மிக முன்னேற்றம் கண்ட ஒரு பாதணித் தொழிற்சாலைதான் திக்வல்லையிலும், தெகிவளையிலும் அமைந்த " மின்ஸ் MINS பாதணித் தொழிற்சாலை. அதே நேரம் தைத்த ஆடைகள் உற்பத்தி போன்ற ஏனைய தொழில்கள் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளன. இது இன்று இம்மாவட்டத்தின் சகல முஸ்லிம் கிராமங்களிலும் கூட விருத்தி பெற்றுள்ளன. அதே நேரம் ஆரம்பகாலத்தில் காணப்பட்ட சிறிய வீட்டுக் கைத்தொழில்களும் இன்று ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இவற்றைத் தவிர வயறிங், ரேடியோ மெக்கானிசம், பைப் பொருத்துதல், தட்டச்சு போன்ற பல்வேறு தொழிற் பயிற்சிகளை மாத்தறை மாவட்ட முஸ்லிம் இளைஞர் பெற்றுக்கொள்ளும் வகையில் காலியில் அமைந்த இஸ்லாமியச் செயலகம் கூடியளவில் பணிபுரிந்து வருகின்றது.
1960 ஆம் ஆண்டின் பின்னர் இப்பகுதிகளில் முன்னேறிய இன்னொரு தொழிற் துறைதான் புத்தக வெளியீடும், பத்திரிகை வெளியீடுமாகும். நாடளாவிய ரீதியில் பிரபல்யம் பெறும் அளவிற்கு இத்துறை இம்மாவட்டத்தில் முன்னேற்றம் பெற்றன. திக்வெல்ல, வெலிகம, மாத்தறை போன்ற பகுதிகளிலிருந்து வெளியீடுகள் வெளிவந்தன. பல காலப் பிரிவுகளில் பலரால் வாராந்த, மாதாந்தப் பத்திரிகைகள் வெளியிடப்பட்டபோதும் ஒரு வருடத்திற்கும் மேலாக பொருளாதார ரீதியில் நின்று பிடித்த பத்திரிகைகளாக வெலிகம முக்தார் ஏ முஹம்மதை ஆசிரியராகக் கொண்ட புதுமைக்குரல் சித்தீக் ஆலிமின் "அல் - இர்ஷாத்", திக்குவல்லை மக்கள் கோங்கிரசின் "அஷ்ஷதிரா", செய்திமடல் என்பன விளங்கின.
புத்தக வெளியீட்டிலும் பலர் ஆர்வம் காட்டியபோதிலும் கூடுதலாகப் பாடப் புத்தகங்களின் வெளியீடே பிரபல்யம் பெற்றது. வெலிகம கப்புவத்தையைச் சேர்ந்த ஏ. எம். எல். எம். பளில் ஆலிமின் " சாந்தி மார்க்கம் ” (சாதாரண வகுப்புக்கான), வெலிகம முக்தார் ஏ முஹம்மதின் " இஸ்லாமிய நாகரிகம் " (1974, 1987 உயர்தர வகுப்புக்கான இரு பதிப்புக்கள்), மாத்தறை எம். எச். எம். நாளிரின் * இஸ்லாமிய நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் " (உயர்தர வகுப்புக்கான), திக்வெல்ல எஸ். ஐ. எம். ஹம்ஸாவின் 'அபிவிருத்திப் புவியியல் (1984, 1985, 1987 உயர்தர வகுப்புக்கான மூன்று பதிப்புக்கள்),
இதனைத்தவிர இலக்கிய நூல்களின் வெளியீடும் ஓரளவு பொருளாதார ரீதியாக
முக்கியம் பெற்றது. வெலிகம ஏ. எச். எம். யூசுபின் “நகைமலர் " திக்குவல்லைக் கமாலின் இரு சிறுகதைத் தொகுப்புகள் (கேடைகளும் வரம்பை உடைக்கின்றன,
15

குருட்டு வெளிச்சம்), திக்குவல்லை ஸப்வானின் இலக்கியப் பாடநூல்கள், திக்குவல்லை எம். எச். எம். ஷம்ஸின் கவிதை நூல்கள் என்பன இவற்றில் குறிப்பிடக் கூடியன.
அரசாங்க உத்தியோகம் மாத்தறை மாவட்டத்தின் அரசாங்க உத்தியோகத்துறை பெரும்பாலும் கல்வித் துறை வளர்ச்சியோடு இணைந்ததாகவே காணப்படுகின்றது. அதே நேரம் மாத்தறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி வரலாறும், இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி வரலாற்றுடன் ஒட்டியதாகவே காணப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலிருந்து துரிதம் பெற்றதிலிருந்து மாத்தறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியும் துரிதம் பெற்றது. மாத்தறை மாவட்டத்தின் முதலாவது பாடசாலை 1887 இல் கப்புவத்தைக் கிராமத்தில் அமைந்ததைத் தொடர்ந்து இம்மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலும் பாடசாலைகள் உருவாகின. இவ்வாறு பாடசாலைக் கல்வி வளர்ச்சி பெற்றபோதும் சுதந்திரத்திற்கு முன்பு அரச உத்தியோகத்தில் சேர்ந்தோர்கள், அல்லது அரசாங்க உத்தியோகம் கிடைக்கப் பெற்றோர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். ஆனால் சுதந்திரத்தின் பின்னர் ஓரள்வு சுய மொழிக் கல்வி விருத்தியுடன் அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்தது. இவ்வாறு மாத்தறை மாவட்டத்தில் பல்கிப் பெருகியதும், பலரினால் அடைந்து கொள்ளப்பட்டதுமான உத்தியோகங்களில் ஆசிரியத் தொழில், பாடசாலை அதிபர்கள், கல்வித்துறை அலுவலர்கள், கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள்? வழக்கறிஞர்கள், எழுதுவினைஞர், காசாளர் (வங்கி), வங்கி முகாமையாளர், வங்கி அலுவலர்கள், பணிப்பாளர்கள், தபாலதிபர்கள் போன்ற இன்னும் பல அடங்குகின்றன. இன்று ஆசிரியத் தொழிலில் மாத்திரம் இம்மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் உத்தியோகம் பெற்றுள்ளனர். அதே நேரம் இம்மாவட்டத்தின் பாடசாலைகளிலே பயின்று பட்டதாரிகளாகிய ஆசிரியர்கள் ஏறத்தாழ 45 பேர்கள் வரை உள்ளனர். இம்மாவட்டத்தின் முஸ்லிம் பெண் உத்தியோகத்தரைப் பொறுத்தவரை ஏனைய தொழில்களைவிட ஆசிரியத் தொழிலிலேயே அதிகளவில் காணப்படுகின்றனர். இதனைத் தவிர கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் பலரும் மாத்தறை, வெலிகம, திக்வெல்லப் பிரதேசங்களில் உருவாகியுள்ளனர். இம்மூன்று பகுதிகளிலும் ஏறத்தாழ 18 பேர்கள் வரை கல்வி நிருவாக சேவை உத்தியோத்தர்களாகக் காணப்படுகின்றனர். கிராமசேவை உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரை இட்மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலுமாக சுமார் 18 கிராம சேவை உத்தியோகத்தர்கள் கடமையாற்றியும், கடமையாற்றிக் கொண்டும் உள்ளனர். பொதுவாக நோக்கினால் மாத்தறை மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏறத்தாழ சராசரி 10% மானோர் அரச உத்தியோகத்தர்களாகக் காணப்பட்டும், காணப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர். (அட்டவணை)
வைத்தியத்துறை மாத்தறை மாவட்டத்தில் பிரபல்யம் பெற்ற மற்றோர் தொழிற்றுறைதான் வைத்தியமாகும். நாட்டு வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம், ஆங்கில வைத்தியம் ஆகிய பல்வேறு வைத்தியத்துறைகளும் கடந்த
I53

Page 79
காலத்திலிருந்து வளர்ச்சி பெற்று வந்துள்ளன. இற்றைக்கு ஏறத்தாழ 400 வருடங்களுக்கு முன்பிருந்தே நாட்டு வைத்தியத்தில் சிறந்து விளங்கிய பலர் மாத்தறை மாவட்டத்தின் பல முஸ்லிம் ஊர்களிலும் இருந்து வந்துள்ளனர். ஏறத்தாழ 1730 ஆம் ஆண்டளவில் கண்டியிலிருந்து வந்த முஸ்லிம் நாட்டு வைத்தியரொருவர் வெலிகமவில் வாழ்ந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. இதேபோல 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்த மார்க்கப் போதகர்கள் சிலர் மாத்தறை மாவட்டத்தில் குடியேறியதுடன், அவர்களில் சிலர் சித்த வைத்தியர்களாகவும், ஆயுர்வேத வைத்தியர்களாகவும் காணப்பட்டனர். அவர்களின் பரம்பரையில் வந்த சிலரை இன்று மாத்தறை, திக்வெல்ல, வெலிகம போன்ற பகுதிகளில் காணலாம். 1800 ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து வந்து வெலிகமவில் குடியேறிய சின்னலெப்பை அபூபக்கர் என்பவர் சிறந்த ஆயுர்வேத நாட்டு வைத்தியராவர். இதனைத் தொடர்ந்து அவரின் மகன் முஹம்மது பரியாரி அவரின் வைத்தியப் பணியைத் தொடர்ந்தார். இதேபோல் முஹம்மது பரியாரியின் மகன் அபூபக்கர் பரியாரியும், இன்று அவரின் பரம்பரையில் வந்த மஃரூப் பரியாரியும் வெலிகமவில் சிறந்த ஆயுர்வேத வைத்தியர்களாவர். இதே தலைமுறையில் வந்த இன்னொருவர் பக்கீர் முஹிதீன் என்பவராவர். இதேபோன்று ஹாமீம் பரிகாரி, அப்துல் கரீம் பரிகாரி போன்றோரும் ஆயுர்வேத வைத்தியத்தில் முக்கியம் பெறுகின்றனர். இதே போன்று திக்குவல்லையிலும் செய்னுதீன் பரிகாரி, ஹனீபா பரிகாரி, பாவாஸா, முஹம்மது காசீம் போன்றோரும் சிறந்த ஆயுர்வேத வைத்தியர்களாக விளங்கினர். இன்னும் பல ஆயுர்வேத வைத்தியர்கள் மாத்தறையிலும் ஏனைய கிராமங்களிலும் இருந்து வந்துள்ளனர். குறிப்பாக மாத்தறையில் நூர்தீன் பரியாரியைக் கூறலாம்.
இதனைத் தவிர யூனானி வைத்தியத்தில் பலர் சிறந்து விளங்கினர். குறிப்பாக திக்வல்லையில் ஜே. எம். காஸிம் என்பவர் நீண்ட காலம் மருந்தகமொன்றை வைத்து இவ்வைத்தியத் துறையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். (இவரின் இரு புதல்வர்களும் இன்று ஆங்கில எம். பி. பி.எஸ். வைத்தியர்களாக தனியார் மருத்துவமனையை வைத்துள்ளனர்) மாத்தறை, வெலிகம ஆகிய பகுதிகளிலும் இந்த யூனானி வைத்தியத் துறைகள் இருந்துள்ளன. ஆனால் இன்று இவை யாவுமே பரம்பரையின்றி மங்கிப்போகும் நிலையிலுள்ளன.
இவற்றோடு இன்று மாத்தறை மாவட்டத்தின் பல ஊர்களில் ஆங்கில வைத்தியத்தில் சிறப்புப்பெற்ற பட்டதாரிகளும், பட்டதாரிகளல்லாதோருமான ஏறத்தாழ 15 முஸ்லிம் வைத்தியர்கள் உருவாகியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் திக்வெல்ல, வெலிகம, கப்புவத்தையைச் சேர்ந்தோர்களாவர். இவர்களில் சிலர் இன்று ஐக்கிய ராச்சியம் போன்ற வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும், கொழும்பிலும் தனியார் மருத்துவமனைகள் வைத்துத் தொழில் புரிந்து வருகின்றனர்.
இவ்வாறு மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார நிலையும் தொழில்களும் அமைந்த விதத்தை ஒரேபார்வையில் பின்வரும் அட்டவணையில் சுருக்கமாக நோக்க முடியுமாகும்.
54

அட்டவணை
ஒரே பார்வையில் மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பல்வேறு துறைசார்ந்த பொருளாதார, தொழிற்றுறைப் பங்களிப்பு (ஒவ்வோரு பிரதேசத்திற்கும் தனித்தனியாக 100% ல்)
பிரதேசம் வர்த்தகம் விவசாயம் கைத் அரச உத்தி விலங்கு வைத்தியம் ஏனைய
தொழில் யோகம் வளர்ப்பு
ເມື່ອທ່ານ) வெலிகம 60% 0.5% 10% 20% 03% .3% 1.7% மாத்தறை 65% 02% 15% 15% 02% .2% .8% திக்வெல்ல 50% 03% 15% 20% 04名 .4% 7.6% கந்தர 25% 0.5% 05% 0.5% 03% .1% 56.9% கிரிந்த 30% 06% 05% 07% 04% .1% 47.9% கொடப் 20% 08% 03% 08% 05% .1% 55.9% பிட்டிய Georr 15% 10% 01% 05% 08% .1% 60.9% கொட
வெலிப் 40% 10ኢ! 05% 10% 05% .1% 29.9% பிட்டிய கொலே 15% 04% 03% 0垒% 02% 72% தண்ட மதுராபுர 15% 06% 01% 05% 05% .2% 67.8% கப்புவத்த 40% 10% 05% 08% 02% .2% 34.8%
(இதுவரை மாத்தறை மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதார நிலையும், தொழில்களும் பற்றி என் பார்வைக்கெட்டிய தகவல்களையே முன்வைத்துள்ளேன். ஆனாலும் இது இன்னும் மிக விரிவாக ஆராயப்படவேண்டிய தலைப்பாகும். ஆகவே பல ஆதாரபூர்வமான விடயங்கள் என் பார்வைக்கு எட்டாதபடியால் விடுபட்டிருக்கலாம். ஆகவே அவற்றை விடயமறிந்தவர்கள் எனக்கு எட்டச். செய்தால் எதிர்காலத்தில் முழுமையான ஆராய்ச்சியை என்னால் செய்ய முடியும் என பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.)
உசாத்துணைகள்
1. Annual Report - Central Bank of Ceylon - 1980 - 1993 2. Matara District Development Report - 1982 - 1992 − 3. ශ්‍රී ලංකා සමාජ - ආර්ථික දත්ත - 1992, 1993 4. Sri Lanka Atlas - 1991; Surveyor Department
SS

Page 80
5
. இலங்கையின் நிருவாக மாவட்டங்களின் சனத்தொகைப் பரம்பல் - 1981
- புள்ளி விபர, தொகை மதிப்புத் திணைக்களம்.
6. இளஞ்சுடர் - பாராட்டுமலர் - 1990
7. An-Noor - 125th Anniversary Souvenir - 1992
8. Mishkathul Baari Sourvenir – 1984
9. An Introduction to the Geology of Ceylon - P. G. Cooray
1
Development Geography - 1984 - S. I. M. Hamzaa
Ibid.
12. இலங்கையின் தேர்தல் தொகுதிகள் அறிக்கை - தேர்தல் ஆணையாளர் திணைக்களம்
56

இலங்கையில் மாத்தரை
AMZA A
13

Page 81
மாத்தறை மாவட்டம்
vSo "S = fu as)
marafovas fð aw~** Caśf asb .
}---- mr gun
( ) முஸ்லிம்கர்
نمونہی (Jn
auaweirye då Mar MGM
cussuasars is
$፰s....S33 'ኳ፻፭ድኛ المكتان مدينة "مة
தேர்தற் றெகுதிகளும் இலக்கமும் ബത്തnണ്ട
ge. Gigfourtu 72. தெளிதுவர
69, ap 4 tu&ur 7s. thாத்தார
70. Iyágprevang 74. anys sus up "flabel: ; so,000
7 f. ribly suliu
AMZA A
{ { خاس سال
159
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 建 : ;11mrm wyzwłłł·]<6) -/a、kーさ93Wと? FKn心Ag、「LL『| ダ ざ* 々 さ*©韃蠟試- _Los.*こ*33099++、9ーにて。さ aミag 1s&su494员、4点19 ゃ〜」1rayaAgaata
モミaる?s 司에이되러디헌디z凉
159

Page 82
இணைப்பு 1
மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள்
வெலிகம
மாத்தறை
திக்குவல்லை
கந்தற மீயல்ல
கிரிந்த
கொடப்பிட்டிய
ஹொரகொட
கல்பொக்கை புதுத்தெரு கப்புவத்தை வெலிப்பிட்டி கோட்டகொட Lursial பழையதெரு மதுராபுர கொரட்டுவ மலப்பலாவ
தெளிப்பிட்டிய
கடைவீதி கொட்டுவகொட இஸ்ஸதீன் டவுண் கோட்டை
சாந்த யெஹியா மாவத்தை பதுதா மாவத்தை
யோனகபுர அல்அக்லாபுர ஆஸாத்புர
புஹஜூல்வெல்ல
Curfssoa
60

01.
O2.
O3.
04.
05.
06.
07.
08.
இணைப்பு I
பள்ளிவாசல்கள்
ஹாஜியார் அப்பா பள்ளிவாசல், 32, யெஹிெயா மாவத்தை, மாத்தறை.
முஹியத்தீன் பள்ளிவாசல், மீயல்ல,
ஹக்மன.
ஹொரகொட முஸ்லிம் மீரா பள்ளிவாசல், தெலிஜ்ஜவில.
ஒமர் மீஹ்லார் பள்ளிவாசல், கோட்டகொட,
வெலிகம,
தெனிப்பிட்டிய ஹஸன் ஹாஸைன் பள்ளிவாசல் தெனிப்பிட்டிய,
வெலிகம.
மொஹிதீன் ஜாம்ஆப் பள்ளிவாசல்,
புதிய தெரு,
வெலிகம,
புஹாரி பள்ளிவாசல், மத்ரஸா,
புஹாரி மஸ்ஜித் வீதி,
வெலிகம.
அல் - ஸாவியத்துல் குத்ளியா லிஷ் ஷாதுலியா பாஸியா,
புதிய தெரு,
வெலிகம,
6.

Page 83
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17。
கப்புவத்த முஹியத்தீன் பள்ளிவாசல், கப்புவத்த, தெனிப்பிட்டிய,
வெலிகம.
மீராஸாஹிப் பள்ளிவாசல், 11, புகையிரத வீதி,
வெலிகம,
போர்வை மொஹிதீன் பள்ளிவாசல், கொடப்பிட்டிய,
அக்குரஸ்ஸ.
ஜிப்ரியா தக்கியா, கடை வீதி, மாத்தறை.
முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல், யோனகபுர,
திக்குவல்லை.
முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் வெலிப்பிட்டிய
வெலிகம,
கப்துறை பள்ளிவாசல்,
வெலிகம.
பதுரர் பள்ளிவாசல், கல்பொக்க,
வெலிகம,
ஜும்ஆப் பள்ளிவாசல்,
பிரதான வீதி, தெனியாய.
162

18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
ஜூம்ஆப் பள்ளிவாசல்,
கிரிந்த, புஹால்வெல்ல.
மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல்,
மதுராபுர
வெலிகம.
பெரிய பள்ளிவாசல்,
கடை வீதி, மாத்தறை,
கொடவுட (மலைப்) பள்ளிவாசல், வெலிப்பிட்டிய,
வெலிகம.
வெரலவிய ஜும்ஆப் பள்ளிவாசல்,
வெலிகம,
முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல்,
கொட்டுவகொட,
மாத்தறை.
கந்தர ஜும்ஆப் பள்ளிவாசல், தங்கல்ல வீதி, கந்தற.
அல்புதூஹாத்துல் மக்கியா அஸ்ஸாவியத்துல் பாஸியா, யோனகபுர, திக்குவல்லை.
ஜிப்ரி தக்கியா, கப்புவத்த, வெலிகம,
ஹிலுர் தக்கியா, புதிய தெரு வெலிகம.
63

Page 84
28.
29.
30.
01.
02,
O3.
04.
O5.
06.
தக்கியா ஸாஹிப் தக்கியா, கடை வீதி, மாத்தறை.
பாக்கீர் ஒலியுல்லாஹ் ஸியாரம், பிரவுண்ஸ் ஹில், மாத்தறை,
அஸ்ஸாவியத்துல் பாஸியத்துல் ஷாதுலியா, 202, குமாரதுங்க மாவத்தை மாத்தறை.
இணைப்பு III
அறபுக் கலாசாலைகள்
மத்ரஸ்துல் பாரி அறபுக் கலாசாலை,
புஹாரி மஸ்ஜித் மாவத்தை, வெலிகம.
ஜிப்ரியா அறபுக் கலாசாலை, 51, யெஹியா மாவத்தை, மாத்தறை.
முர்ஷியா அறபுக் கலாசாலை,
283, புதிய வீதி, வெலிகம,
அல் - மத்ஸரத்துன் நூரியா அறபுக் கலாசாலை, மொஹியத்தீன் மஸ்ஜித் கொட்டுவகொட,
மாத்தறை,
அல் - மின்னஹாத்துல் பாஸியா அறபுக் கலாசாலை, 202, பிரதான வீதி,
மாத்தறை,
மத்ரஸ்துல் ஹில்ரியா,
தக்கியா லேன், புதிய தெரு,
வெலிகம.
64

01.
02,
O3.
04.
05.
06.
07.
O8.
09.
0.
இணைப்பு IV
முஸ்லிம் பாடசாலைகள்
அரபா தேசியக் கல்லூரி, வெலிகம.
தாருல் உலும் ம. வி. பதுரதா வீதி, மாத்தறை,
மின்ஹாத் ம. வி. சன்டிஸ் வீதி, திக்குவல்லை.
அந்நூர் முஸ்லிம் மகளிர் ம. வி. கப்புவத்த, தெனிப்பிட்டிய.
கொடப்பிட்டிய சதாத் ம. வி. அக்குரஸ்ஸ.
அல்மினா மகா வித்தியாலயம், மீயல்லை, ஹக்மன.
அரபா கனிஷ்ட வித்தியாலயம், வெலிகம.
மின்ஓ7 GL தி:
ஹொரகொட முஸ்லிம் கனிஷ்ட வி. தெலிஜ்ஜவில.
Øysňosmour ds. 6.,
மதுராபுர,
தெனிப்பிட்டிய,
65

Page 85
11.
12.
13.
14.
01.
O2.
O3.
04.
O5.
O6.
வெலிப்பிட்டிய முஸ்லிம் க. வி. வெலிப்பிட்டிய.
கிரிந்த முஸ்லிம் வி. புகுல்வெல.
கொட்டுவகொட முஸ்லிம் வி. மாத்தறை.
அஸ்ஹர் முஸ்லிம் க. வி. கந்தற.
குர்ஆன் மத்ரஸாக்கள்
மாத்தறை ஜிப்ரியா குர்ஆன் மத்ரஸா, 51, சாந்த யெஹியா மாவத்தை, மாத்தறை.
ரிபாயா குர்ஆன் மத்ரஸா, மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல், கப்புவத்த, தெனிப்பிட்டிய வெலிகம,
மீராஸாஹிப் குர்ஆன் மத்ரஸா, பிரதான வீதி, வெலிகம.
அல் - மத்ரஸ்துல் ஜிப்ரியா, கிரிந்த, புகுல்வெல்ல,
மத்ரஸ்துல் பலாஹ், மஸ்ஜித்துல் பலாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல்,
Dg5:TLHDT,
வெலிகம,
மொஹிதீன் பள்ளிவாசல் மத்ரஸா, மொஹிதீன் பள்ளிவாசல், மீயல்ல, ஹக்மன.
மாத்தறை,
66
இணைப்பு V

O7.
O8.
09.
10.
11.
12.
13.
14.
15.
குர்ஆன் மத்ரஸா, தெனிப்பிட்டிய பள்ளிவாசல், வெலிகம,
அல் - மத்ரஸ்துல் அரூசியா, தக்கியா லேன், புதிய வீதி, வெலிகம,
அல் - மத்ரஸ்துல் காதிரியா, மொஹிதீன் பள்ளிவாசல்; கொடப்பிட்டிய, அக்குரஸ்ஸ.
மத்ரஸதுர் ரழியா முஹியதீன் ஜும்ஆப் பள்ளிவாசல், திக்குவல்லை. *
அல் - மத்ரஸ்துல் ஹிதாயத்துல் மஷூர் மீரா பள்ளிவாசல், ஹொரகொட, தெலிஜ்ஜவில:
அல் - மத்ரஸ்துல் மனாருல் உலூம் ஜும்ஆப் பள்ளிவாசல், கந்தற.
மத்ரஸ்துல் பாதிஹால் அலிம் அல் - இஸ்லாமியா - ஸாவியா, யோனகபுர, திக்குவல்லை.
மாஅலுல்கைராத் குர்ஆன் மத்ரஸா, 10, லுசிங்டன் வீதி, கொட்டுவகொட,
மாத்தறை,
குர்ஆன் மத்ரஸா, முஹியதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல், கொலேதன்ட,
வெலிகம.
67

Page 86
18. அல் - மத்ரஸ்துல் ஒமர் மிஹ்லார் மஸ்ஜித், ஒமர் மிஹ்லார் மஸ்ஜித் மாவத்தை, கோட்டேகொட,
வெலிகம.
17. முர்ஸியா குர்ஆன் மத்ரஸா,
263, புதிய தெரு வெலிகம,
18. நுஸ்ரதுல் இஸ்லாம் குர்ஆன் மத்ரஸா,
கப்புவத்த, தெனிப்பிட்டிய, வெலிகம,
இணைப்பு VI
கட்டுரைகள் வழங்கியோர்
1. எம். எம். எம். மஹரூப்
இலங்கைப் பல்கலைக்கழகம் (கொழும்பு/பேராதனை), இலண்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பட்டதாரியான இவர், இலங்கை சட்டக் கல்லூரி அட்வகேட் பரீட்சையிலும் சித்தியடைந்தவராவார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றி, கடைசியாக முஸ்லிம் சமய, பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். கலாநிதி ரீ. பீ. ஜாயா, ஐ. எல். எம். அப்துல் அளிஸ், நீதியரசர் எம். ரி. அக்பர் ஆகியோரைப் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் வெளியிட்டுள்ளதோடு களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியருமாவார். தமிழ் நாட்டுப் புனைகதைகளின் தோற்றமும் வீழ்ச்சியும், பிறை வளர்ந்த கதை முதலிய தொடர் கட்டுரைகளின் ஆசிரியரான இவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். சர்வதேசப் புகழ் பெற்ற பல ஆங்கில ஆய்வுச் சஞ்சிகைகளில் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
168

2. கலாநிதி அல்ஹாஜ் எம். ஏ. எம். சுக்ரி
1975 இல் இங்கிலாந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறபு விரிவுரையாளராகக் கடமையாற்றிய பின் இன்று ஜாமி ஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். எகிப்து, பாகிஸ்தான், லிபியா, மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச மகாநாடுகளில் பங்குபற்றியுள்ள இவர் முஸ்லிம்ஸ் அன்ட் சிறிலங்கா, இஸ்லாம் அன்ட் எடுயுகேஷன், மேன்கைன்ட் அன்ட் பெக்ஸிக் அல்குர்ஆனின் வரலாறும் வாழ்வு நெறிகளும், ஹதீஸ் - வரலாறும் முக்கியத்துவமும், ஆத்மஞானிகளும் அறப்போராட்டங்களும், இஸ்லாமிய வரலாற்றில் திருப்பம் ஏற்படுத்திய பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளதுடன் தேசிய, சர்வதேச சஞ்சிகைகளான ஹம்டாட், இஸ்லாமிக் ஸ்டடீஸ், என் - நல்டா, முஸ்லிம் வேல்ட் போன்றவற்றில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
3. அல்ஹாஜ் முக்தார் ஏ. முஹம்மத்
பயிற்றப்பட்ட ஆசிரியரும் சிறப்புப் பட்டதாரியுமான இவர் கல்விச் சேவை விசேஷ பிரிவு 1 ஆம் தரத்தைச் சேர்ந்தவராவார். இவர் கல்வி நூல் பிரசுர திணைக்கள முன்னாள் பிரதம நூலாசிரியராகவும், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலா சாலைகள், ஜாமிய்யா நளீமிய்யா என்பவற்றில் பகுதி நேர விரிவுரையாளராகவும், அல் ஹாமைஸ்சா மத்திய கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இஸ்லாமிய நாகரீகம், இனிக்கும் இஸ்லாம், இறை காப்புக் கேடயம் போன்ற நூல்களை ஆக்கிய இவர் புதுமைக்குரல் மாதாந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராக 1965 - 72 காலப்பகுதியில் கடமையாற்றியுள்ளார். மாத்தறை மாவட்ட கல்வி அபிவிருத்தி முன்னணி, வெலிகம இஸ்லாமிய கலாச்சார மன்றம், இஸ்லாமிய பிரச்சார சபை, மாகொல அநாதை நிலையம், தர்கா நகர் அநாதை நிலையம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர், பணிப்பாளர் பதவிகளை வகித்த இவர் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சினால் கன்சுல் உலூம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
169

Page 87
4. எம். எச். எம். ஷம்ஸ்
திக்குவல்லையைப் பிறப்பிடடி கக் கொண்ட இவர் ஒரு பட்டதாரியாவார். பாலர் கவிதைகள், புதுக் கவிதைகளில் ஆர்வம் காட்டிய இவர் மேடை, வானொலி, தொலைக் காட்சிக் கவியரங்குகளில் தமது திறமையினைக் காட்டியுள்ளார். ஆசிரியராகவும் பத்திராதிபராகவும் பணியாற்றிய இவர், இன்று தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.
சிங்கள இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு மாத்தறை காஸிம் புலவர், ஹைகூ எழுதுவது எப்படி, விலங்குகள் நொறுங்குகின்றன, பதுர் - ஒரு வரலாற்றுத் திருப்பம், இன்றைய புதுக் கவிதைகள் போன்ற ஆய்வு ஆக்கங்களை எழுதிய இவர், கலைத்துறையில் வானொலி நாடகம், கவிதை நாடகம், ஒலிபரப்பு மேடை நாடகம், (எழுத்தும் தயாரிப்பும்) இஸ்லாமிய கீதம், ஒவிலும், ஆகிய துறைகளிலும் குறிப்பிட்டளவு பங்களிப்புச் செய்துள்ளார். கழிகம்பு அண்ணாவியாகப் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ள இவர் நேர்வழி, அஷ்ஷூரா, பாமிஸ், செய்தி மடல், பிரதிராவ போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
5. எம். எச். எல். ஏ. ஏ. ஸி. நூஹ"
வெலிகாமம் அறபா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர் அதே கல்லூரியில் உதவியாசிரியராகவும், பிரதி அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பயிற்றப்பட்ட ஆசிரியராக சேவை புரியும்போதே பட்டப்படிப்பை மேற்கொண்டு அறபு கற்கை நெறியில் சிறப்புப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கல்வி டிப்ளோமாப் பட்டமும் பெற்றார். நீண்டகாலமாகப் பல சமூக நலன்புரி இயக்கங்களில் செயலாற்றி உத்தியோகத்தராக இருந்துள்ளதோடு, மாத்தறை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி முன்னணியின் தாபக உறுப்பினராகவும் அதன் பொருளாளராகவும் இருந்து பணியாற்றுகிறார். இக்பால் நலன்புரிக் கழகம் வெளியிட்ட " ஹிதாயத் " மலர்க்குழுவிலும், மத்ரஸதுல் பாரீ நூற்றாண்டு விழா மலரான " மிஷ்காத்துல் பாரீ” மலர்க் குழுவிலும் செயலாளராக இருந்து அவற்றை வெளியிடுவதில் பிரயாசை எடுத்துள்ளார்.
170

6. திக்வல்லை ஸப்வான்
1970 களில் முகிழ்த்த கலை, இலக்கியவாதியான இவர் இலக்கியம், சமயம் சார்ந்த கட்டுரைகள் குறுங்கதைகள், சிறு கதைகள், கவிதைகள் ஏராளமாகப் படைத்துள்ளார். தேசிய மீலாத் சிறுகதைப் போட்டிகளில் பலமுறை முதற் பரிசு பெற்றவர். மேடை நாடகங்கள் பல தந்துள்ள இவர் வானொலியில் நாடகம், கவிதைப் பொழிவு ஒலிக்கதை, ஊடுருவல் என ஏராளமாக வழங்கியுள்ளார். இனிமை கவிமஞ்சரியின் ஆசிரியரான இவர் கலைச்சுடர் சஞ்சிகையின் இலக்கியப் பகுதியின் பொறுப்பாசிரியருமாவார். கிராம உத்தியோகத்தராக தொழில் செய்த போதும் மாணவர்களது மொழி, இலக்கிய அறிவை விருத்தி செய்ய இவர் வெளியிட்டுள்ள இலக்கியப்பாட நூல்களும், திகரனில் தரும் கட்டுரைகளும் நல்ல ஆதாரமாகும்.
7. எஸ். ஐ. எம். ஹம்ஸா
திக்குவல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீண்ட காலமாக தேசியப் பத்திரிகைகளிலும் 'பூ' ஆண்டு மலர்கள், திக்குவல்லை மலர் ஆகிய சஞ்சிகைகளிலும் ஆக்க இலக்கியங்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்து வருகிறார். முன்னைய பாடவிதான அபிவிருத்தி நிலையம் வெளியிட்ட உயர்தர வகுப்புகளுக்கான புவியியல் ஆசிரியர் கைந்நூல், புவியியல் மூலவள நுரல் - 1, 2, தற்போதைய தேசிய கல்வி நிறுவனம் தயாரித்துள்ள உயர்தர -- வகுப்புகளுக்கான புதிய புவியியல் பாடத்திற்குரிய வளுவாளர் கையேடு, கொழும்பு பல்கலைக்கழக புவியியலாளர் சங்கம் வெளியிடும் புவியியல் செய்திமடல் ஆகியவற்றிலும் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவர் சமூகக்கல்வி ஆலோசகராகவும், உயர்தரப் புவியியல் ஆலோசகராகவும், வெலிகம அறபா மத்திய கல்லூரி அதிபராகவும் கடைமையாற்றிய பின் தற்போது மகரகம தேசியக் கல்வி நிறுவகத்தின் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
7.

Page 88


Page 89
PP CX05545 surģis*:S

ரராங்க ஆச்சகத் தினைக்கள்ம்