கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளைப் பருவத்திலே

Page 1


Page 2


Page 3
முகப்பு அட்டையில்
. காந்தி
எடிசன்
தாகூர்
லெனின்
நேரு

@ghమిజ్రిమ
ey alsifyir
விற்பனை உரிமை :
unrrf. If96Duib

Page 4
PILLAT-P-PARUVATH
(Interesting Anecdotes from the early lives of Great men)
Author : ' AL. Valliappa
Illustrators: Sagar' and Natanam
Copyright : Author
Publisher Kulandai Puthaka Nilayan,
Madras-7
Printer : Jeevan Press, Madras-5.
Sole Distributor: Paari Nilayam, Madras-l.
First Edition : February, 1968.
Price : Rs... 2
விலை இரண்டு ரூபாய்
வெளியிட்டோர் :
குழந்தைப் புத்தக நிலையம்
சென்னை-17.

பக்கம்
13.
7.
21.
25.
29.
33.
37.
41.
அலெக்ஸாந்தர்
ஜோன் ஆப் ஆர்க்
கொலம்பஸ்
கலீலியோ கலிலி
ஜேம்ஸ் வாட்
ஆறுமுக நாவலர்
L-T66 -nrail
ராக் பெல்லர்
எடிசன்
3. (p. 356
6-卫一卫4及罗
1447
பிப்ருவரி, 1564
9-1-1736
丑822
28-8-1828
8-7-1839
1-2-1847

Page 5
45。
4 9.
53。
57.
6.
65.
69.
73.
77.
8.
85.
89.
93.
97.
0.
丑05。
09.
3.
盈盈7。
丑罗卫。
I 25。
4.
சாரதாமணி தேவியார்
உ. வே. சாமிநாதய்யர்
ரொனுல்டு ராஸ்
தாகூர்
எம். விஸ்வேஸ்வரய்யா
ஹென்றி போர்ட்
வில்பர் ரைட்
356svg|Tifi LurT
மகாத்மா காந்தி
லெனின்
அரவிந்தர்
சர்ச்சில்
ஐன்ஸ்டின்
ஹெலன் கெல்லர்
ஜவாஹர்லால் நேரு
விநோபா பாவே
சுபாஷ் போஸ்
லால்பகதூர் சாஸ்திரி
பகத் சிங்
டென்சிங்
கென்னடி
27-2-1853
互9ー3ー互 355
857 I - 5 س-3 Ii
6-5-1861
5-9 - 861
30-7-1863
I 6-4-1867
ஏப்ரல், 1869
2- 0-1869
0-4- 8 70
5-8-1872
30-1 - 8 74
4-3-89 .
27-6- 880
1 4-1 - 889
ill-9- 895:
23-1-1897 2-10-1904
1907
மே, 1914
29-5-19 7

புத்தகத்தைப் பற்றி.
பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்ப தில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம் பிக்கையால் படிப் படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர் அவர்களில் 30 பேரு டைய பிள்2ளப் பருவ நிகழ்ச்சிகளேப் பிள்ளை களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன். 13 இந்தியப் பெரியார்களும், 17 வெளிநாட்டுப் பெரியார்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றி ருக்கிறர்கள்
பெரியோரது பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற் றைத் தெரிந்து கொள்ளுவதால், கமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வு மனப்

Page 6
6
பான்மை நீங்குகிறது. மேலும் மேலும் உயர வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.
இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழ வேண்டும்; அவர்களால் காடும் உலகும் கற் பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை. எல்லோருடைய ஆசையும் இதுவே.
இப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பலவும் மதுரை ‘தமிழ்நாடு’ இதழில் தொடர்ந்து வெளி வந்தவை. இவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட அனுமதி அளித்த 'தமிழ் காடு’ ஆசிரியருக்கு என் நன்றி.
இதற்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட 'சின்னஞ் சிறுவயதில்’ என்ற புத்தகத்திற்குத் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் கல்ல வரவேற்புக் கிடைத்தது. குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றேரும் அளித்த அன்பா லும், ஆதரவாலும் அப்புத்தகம் இதுவரை எட்டுப் பதிப்புக்கள் வெளி வந்துள்ளது. இப் புத்தகத்திற்கும் அத்தகைய அன்பையும் ஆதர வையும் அனைவரும் அளித்தருள வேண்டு கிறேன்.
சென்னை ܀ ܘ ܀ 9-2-’68 அழ.வள்ளியப்பா.

கிரேக்க நாட்டிலே ஒரு பகுதி. அதை பிலிப் என்ற ஓர் அரசர் ஆண்டுவந்தார். ஒருநாள் அவர் முன்னுல், ஒரு குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தினர்கள். அதன் நிறம் நல்ல கறுப்பு. கெற்றியிலே நட்சத்திரம் போல் வெள்ளைப் புள்ளி இருந்தது. பார்ப்ப தற்கு அழகாக இருந்தாலும், அதனுடைய பார்வை பயங்கரமாக இருந்தது. அது g(5 பொல்லாத முரட்டுக் குதிரை என்பதைப் பார்த்தவுடனேயே அரசர் தெரிந்துகொண்டு விட்டார்.
I259ーl 9

Page 7
அரசே, இதை இங்கே கொண்டு வரு வதற்குள் காங்கள் பட்ட பாடு கொஞ்ச கஞ்சமல்ல; ஆனலும், இதை வசப்படுத்தி விட்டால், யுத்த களத்திலே அஞ்சாது எதிரி களே எதிர்த்து விரட்டப் பயன்படும்” என்ருன் பிடித்து வந்த ஆட்களிலே ஒருவன்.
உடனே அரசர், சில குதிரை வீரர்களை வரவழைத்தார். அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் குதிரையை அடக்கப் பார்த்தார்கள். ஒருவராலும் முடியவில்லை. ஒரு வீரனுக்குத் தலையிலே பலமான அடி 1 மற்றெருவனுக்கு முழங்காலில் இரத்தம் வழிந்தது 1 இன்னுெரு வனுக்கு முன் பற்கள் உதிர்ந்துவிட்டன. இப்படி எல்லாரும் தோல்வி அடைந்தனர்.
அப்போது திடீரென்று, அரசரின் பக்கத் திலே உட்கார்ந்திருந்த அவருடைய மகன் எழுந்தான் ; விரைவாக ஓடினுன் ; குதிரை யின் அருகிலே போய் நின்றன். அவனைப் பார்த்ததும், எல்லாரும் திடுக்கிட்டனர். எேன்ன, என் மகனு! பெரிய பெரிய வீரர்களா லேயே இந்தக் குதிரையை அடக்க முடிய வில்லையே! சிறுவணுகிய இவனுக்கு ஏன் இந்த வம்பு?’ என்று அரசர் முணுமுணுத்தார்.
இதற்குள் அரச குமாரன் குதிரையின் கடி வாளத்தைக் கையிலே பிடித்தான். அப்போது குதிரை சும்மா இருக்கவில்லை. தன் குணத் தைக் காட்டத் தொடங்கியது. அவன் சிறி தும் அஞ்சவில்லை. குதிரையை எதிர்ப் பக்க
10

மாகத் திருப்பி நிறுத்தினுன், மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். அது சும்மா நின்றது. *சட்டென்று தாவி அதன் முதுகில் அமர்ங் தான். கடிவாளத்தை வெட்டி இழுத்தான். குதிரை வெகு வேகமாகப் பாய்ந்து ஓடியது. சிறிது நேரம் ஆனது. குதிரை திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப் போது அதன் முதுகு காலியாக இருக்கவில்லை; புன்சிரிப்புடன் அரசகுமாரன் குதிரை மேல் உட்கார்ந்திருந்தான் ! குதிரை அவனுக்குப் பணிந்துவிட்டது என்பதை அரசரும் மற்ற வர்களும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அரசரின் அருகிலே வந்ததும், குதிரையி லிருந்து அவன் இறங்கினுன். அவனை அரசர் தட்டிக் கொடுத்தார். 'மகனே, இந்த முரட்டுக் குதிரையை எப்படி அடக்கினுய்? இது என்ன மாயமா ? மந்திரமா ? என்று கேட்டார்.
தேங்தையே, இதில் மாயமும் இல்லை; மங் திரமும் இல்லை. குதிரை ஏன் மிரளுகிறது என்று உற்றுக் கவனித்தேன். அது தன் நிழலைப் பார்த்தே பயப்படுகிறது என்பதை அறிக்தேன். அதனுல்தான், அதை துரியன் இருக்கும் திசையிலே திருப்பி நிறுத்தினேன். நிழல் பின்புறமாக விழுந்ததால், அது நிழலைப் பார்க்கவும் இல்லை; பயப்படவும் இல்லை. அமைதியாக நின்றது. அப்போது, கான் அதன் முதுகிலே ஏறி உட்கார்ந்துகொண் டேன். அன்பாக அதனுடன் பேசினேன்.
11

Page 8
தட்டிக் கொடுத்தேன். இனி, இது என் தோழன். முரண்டு செய்யாது. தங்தையே, தாங்கள் அனுமதி கொடுத்தால், இந்தக் குதி ரையை நானே வைத்துக் கொள்ளுகிறேன்? என்றன். அரசரும் சரி? என்ருர்,
அங்த அரசகுமாரன் இருபதாவது வயதில் பட்டத்துக்கு வங்தான். பல நாடுகள்மீது படையெடுத்தான். பதின்மூன்று ஆண்டு களுக்குள் திக்விஜயம் செய்து, எகிப்து, பார சீகம் முதலிய நாடுகளை வென்றன். இந்தியா வுக்கும் வங்தான். ஆணுல், அதிக நாள் இங்கே தங்கவில்லை. விரைவிலே திரும்பிப்
போய்விட்டான்.
வரும்போது அவனை ஏற்றி வந்த அந்தக் கறுப்புக் குதிரை,போகும் போது அவனுடன் திரும்பிப் போகவில்லை : இந்தியாவிலேயே அது இறந்து விட்டது. அப்போது அவன் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை.
சொந்த நாடு திரும்பியதும், அந்தக் குதிரையின் பெயரால் ஒரு நகரத்தை அவன் அமைத்தான். அவன் பெயரிலும் இன்று எகிப்து நாட்டில் ஒரு பெரிய நகரம் இருக் கிறது. அலெக்ஸாந்திரியா என்பது அந்த நகரத்தின் பெயர்.
அப்படியாஞல் அவன் பெயர். ? ஆம், மகா அலெக்ஸாந்தர்!
12

பிரெஞ்சு நாட்டில் டாம் ரெமி என்று ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 550 ஆண்டு களுக்கு முன்பு ஒரு குடியானவன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பள்ளிக்கூடத்துக்கு அவள் சென்றதே இல்லை. அப்பாவைப் போலவே அவளும் ஆடு மாடுகளை மேய்ப்பாள் வயலில் இறங்கி வேலைசெய்வாள். அம்மாவைப் போல் நூல் நூற்பாள்; அழகாகத் தையல் வேலையும் செய்வாள்.
13

Page 9
வேலையில்லாத போது, தோழிகளுடன் அவள் தெருவில் விளையாடிக் கொண்டிருப் பாள். அப்போது, திடீரென அவள் விளை யாட்டைநிறுத்தி விடுவாள். நேராக மாதா கோயிலுக்கு ஒடுவாள். மண்டியிட்டு வணங் குவாள். திரும்பி ஓடிவருவாள். தொடர்ந்து தோழிகளுடன் விளையாடுவாள். இப்படி அடிக்கடி செய்வாள்.
அவளுக்குப் பதின்மூன்று வயதானது. அப்போது பிரெஞ்சு நாட்டின் மீது ஆங்கி லேயர் படை எடுத்திருந்தார்கள். ஆங்கி லேயருடன் சில பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து கொண்டார்கள். சொந்த நாட்டுக்கே துரோகம் செய்துவங்தார்கள். ஆங்கிலேயரின் படை பிரெஞ்சு காட்டில் புகுந்து பல இடங்களைத் தாக்கியது; கொள்ளை அடித்தது; கொலை செய்தது : தீ வைத்தது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட அச் சிறுமி, “கம் நாட்டு மக்கள் இப்படித் துன்பப் படுகிறர்களே எதிரிகளை எதிர்த்து விரட்ட எவருமே இல்லையா ?? என்று எ ன் னி எண்ணி ஏங்கினுள். அடிக்கடி இதைப் பற் றியே நினைத்து மனம் உருகிஞள்.
ஒருங்ாள் அவள், தன் வீட்டுத் தோட்டத் தில் தனியாக உட்கார்ந்து யோசனை செய்து கொண்டிருந்தாள். அப்போது, அவளுடைய பெயரைச் சொல்லி, யாரோ அழைப்பது கேட்
14

டது. சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒருவரை யும் காணுேம்.
கேவலைப்படாதே பிரெஞ்சு நாடு உன்னல் கன்மை அடையும்” என்று அக்குரல் கூறிய து. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அதே குரல் கேட்டது. யோரது ?? என்று மேலே பார்த்தாள். எவருமே தென்படவில்லை. மூன்ருவது முறையும் அதே குரல் கேட்டது. *ஆ வானத்தில் இருந்தல்லவா இக் குரல் கேட்கிறது 1 ஆம், அசரீரிதான். கடவுளே
பேசுகிருர் ? என்று அவள் நினைத்தாள்.
அன்று முதல் அவள் போக்கே மாறி விட்டது. அடிக்கடி இந்த மாதிரிக் குரலைக் கேட்டாள். கேட்கக் கேட்க அவளுக்கு எப் படியாவது தன் காட்டைக் காப்பாற்ற வேண் டும் என்ற ஆவேசம் ஏற்பட்டது.
ஒருங்ாள் வீட்டைவிட்டு அவள் புறப் பட்டு விட்டாள். பிரெஞ்சு நாட்டு மன்னனைக் காணச் சென்ருள். வழியில் எத்தனையோ தொல்லைகள் ! எல்லாவற்றையும் கடந்து அர சஆனக் கண்டாள். *ஆங்கிலேயருடன் போர் புரிய வங்திருக்கிறேன். என்னுடன் படை வீரர்களை அனுப்புங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்? என்று அரசனிடம் கூறினுள். அவள் பேச்சைக் கேட்டு அரசனும் மற்றவர் களும் சிரித்தார்கள். ஆணுலும், அவள் மனங் தளரவில்லை. மன்ருடி வேண்டினுள்.
15

Page 10
கடைசியில் அரசன் ஒரு படையை அவளு டன் அனுப்பினுன், ஆணைப் போல அவள் போர் உடை தரித்துக் கொண்டாள். குதிரை மீது ஏறி எதிரிகளைத் தாக்கப் புறப்பட்டாள்.
அச்சிறுமியின் காட்டுப்பற்று, O60 உறுதி, விடா முயற்சி முதலியவற்றைக் கண் டனர் பிரெஞ்சு வீரர்கள். அவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. வீரமுடன் போர்க் களத்தில் இறங்கினர். அவள் தலைமையில் சண்டையிட்டனர். முதல் போரிலே வெற்றி கிடைத்தது. பல இடங்களில் அவள் ஆங்கிலேயருடன் போர் புரிந்தாள். இரு முறை அவள்மீது அம்பு பாய்ந்தது. உடலெல் லாம் இரத்தம் ! அப்படியிருந்தும் அவள் போரை நிறுத்தவில்லை. தொடர்ந்து போரிட் டாள். பலமுறை வெற்றி பெற்ற அவள் கடைசியில் ஓரிடத்தில் தோல்வி அடைந்தாள். காரணம், சொந்த காட்டினரே அவளுக்குத் துரோகம் செய்து விட்டார்கள் !
தோற்றுப்போன அவ 2ள எதிரிகள் சிறையில் அடைத்தார்கள் ! அவள் மீது வழக்குத் தொடுத்து, அவளைக் குற்றவாளி என்ருர்கள். பிறகு, சங்தை கூடும் இடத்தில் ஒரு கம்பத்திலே அவளைக் கட்டிவைத்துச் சுற்றிலும் தீ வைத்தார்கள். 19 வயதிலே அவளே எரித்து விட்டார்கள் அவளது உடலை எரித்தாலும், அவளது பெயரை எரிக்க முடிங் ததா? ஜோன் ஆப் ஆர்க் என்ற பெயர் இன்று சரித்திரத்தில் நிலைத்துவிட்டதே !
16

இத்தாலி தேசத்திலே ஜினேவா என்ற ஒரு துறைமுகப் பட்டினம் இருக்கிறது. அங் தப் பட்டினத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டு உரோமம் கத்தரிக்கும் வேலையை ஒரு வர் செய்து வந்தார். அவருடைய வீடு கடற் கரை ஓரமாக இருந்தது.
அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். நல்ல பல சாலி யாகவும் இருந்தான்.
அந்தக் கடற்கரையிலிருந்து பாய்மரக் கப்பல்களில் பலர் போவார்கள். சிலர் அங்கு
17

Page 11
வந்து இறங்குவார்கள். அவர்கள் வருவதை யும் போவதையும் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பான் அந்தச் சிறுவன்.
சில மாலுமிகள்,தாங்கள் போய்ப்பார்த்து வந்த இடங்களைப் பற்றிக் கதை கதையாகக் கூறுவார்கள். சிலர் நடுக் கடலிலே புயற் காற்று வந்ததையும், அதைச் சமாளித்ததை யும் விரிவாக எடுத்துச் சொல்லுவார்கள். வேறு சிலர், சுருமின், திமிங்கலம் முதலிய வற்றுடன் சண்டைபோட்டுத்தப்பியவிதத்தை அழகாக அபிநயத்தோடு கூறுவார்கள். இவற் றையெல்லாம் வாயைப் பிளங்தபடி வியப் போடு அவன் கேட்டுக் கொண்டிருப்பான்.
சில நாட்கள் சென்றன. கோமும் கப்பல் ஏறிக் கடலிலே போக வேண்டும்" என்ற ஆசை அவனுக்குத் தோன்றியது. காள் ஆக ஆக அங்த ஆசை அவனுடனே வளரத் தொடங்கியது.
ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்தில் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அதில், உலகம் தட்டையாக இருப்பதாகவே எல்லோரும் நினைக்கிருர்கள். அது தவறு. உலகம் உருண்டையாகத்தான் இருக்கிறது’ என்று ஓர் அறிஞர் எழுதியிருந்தார். அதைப் பற்றி ஆசிரியர்களிடம் அவன் கேட்டான். அவர்கள், “எவனுே ஒருவன் உளறியிருக்கி முன். அதை கம்பாதே ! உலகம் தட்டையா
18

கத்தான் இருக்கிறது? என்ருர்கள். சிறுவ னுக்கு யார் கூறுவது சரி என்று தெரிய
ஒரு நாள் அவன் சாப்பிடுவதற்காக ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்தான். அதைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் போது பின்புறத்திலிருந்து ஒரு வண்ணுத்திப் பூச்சி பழத்தின் மேல் ஏறி வருவதைப் பார்த்தான். முதலில், அதன் இறகின் மேல் பகுதி மட் டுமே தெரிந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக இறகின் முழுப் பகுதியும் தெரிந்தது. வண்ணுத்திப் பூச்சி பழத்தின் மேல் ஏறி மேலே வந்ததும், அதன் முழு உருவமும் கன் ருகத் தெரிந்தது.
உடனே அச்சிறுவன், சங்தேகமில்லை. பூமி உருண்டைதான். பூமி உருண்டையாக இருப்பதால்தான், கப்பல் வெகு தூரத்தில் வரும்போது, முதலில் தலைப்பாகம் மட்டுமே தெரிகிறது. நெருங்கி வர வரத்தான் நடுப் பாகமும், அடிப்பாகமும் தெரிகின்றன” என்ற முடிவுக்கு வந்தான். இதைத் தன் தோழர்க ளிடத்திலே கூறினுன். எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். சிலர் பைத்தியம்’ என்று பட்டம் சூட்டினர்கள். ஒருவன், "அப் படியானல் இந்தியாவிலும், சீனுவிலும் இருப் பவர்கள் பூமியில் தலைகீழாகத் தொத்திக் கொண்டுதான் நடக்கிருர்கள் போல் இருக்கி றது ? என்று கேலி செய்தான்.
19 ". .
醬

Page 12
எேன்ன வேண்டுமானுலும் சொல்லுங்கள். பூமி உருண்டைதான்? என்று அச்சிறுவன் பிடிவாதமாகக் கூறினன். கூறியதோடு நிற்கவில்லை. பூமி உருண்டையாக இருப்ப தால், கான் இந்தியாவுக்குக் குறுக்கு வழி கண்டு பிடித்து அங்கே போகவும் திட்டம் போட்டிருக்கிறேன்? என்ருன்.
தான் போட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்காக அவன் பதினுன்காவது வ ய தி ல், ஒரு கப்பலிலே வேலைக்காரணுகச் சேர்ந்தான். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான். விரைவிலே அவனும் ஒரு மாலுமி ஆனன். மூன்று பெரிய கப்பல்களுடனும், 88 ஆட்களு டனும் இந்தியாவுக்குக் குறுக்கு வழி கண்டு பிடிக்கப் புறப்பட்டான். கரையைக் கண்ட தும், இந்தியா வந்துவிட்டோம் என்று அவனும் அவனுடைய ஆட்களும் ஆரவாரம் செய்தார்கள். துள் ளிக் குதித்தார்கள்.
ஆணுல், அவர்கள் கண்டது இந்தியா அல்ல ; ஒரு புதிய உலகத்தையே கண்டு பிடித்து விட்டார்கள் 1ஆம்,அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் 1 அமெரிக்கா வைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்று எத்தனை மாணவர்கள் கெஞ்சிலே குத்திக் கொண்டு இ ன் றும் கெட்டுருப் போடு கிருர்கள்!
20

இத்தாலி தேசத்திலே பைசா என்று ஒரு ககரம். அந்த நகரத்திலே ஒரு மாதா கோயில். அக்கோயிலில் ஆயிரக் கணக்கான மக்கள் அன்றைக்குக் கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் கண்களை மூடிக் கடவுளைத் தொழுது கொண்டிருந்தார்கள். ஆல்ை, அங் தக் கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் மட்டும் கண்களை மூடவுமில்லை; கடவுளைத் தொழ வும் இல்லை. கண்களை அகல விரித்து அண் ஞங்து பார்த்துக் கொண்டே நின்றன்.
அப்படி அவன் கவனத்தைக் கவர்ந்தது' எது? வேறென்றும் அல்ல ; ஒரு கண்ணுடி விளக்குத்தான். மேல் கூரையிலிருந் து
21

Page 13
சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்ட விளக்கு காற்றிலே அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதைத்தான் அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வேகமாகக் காற்று அடிக்கும்போது அந்த விளக்கு அதிகதூரம் போய்வரும்; மெது வாகக் காற்று அடிக்கும்போது, குறைந்த தூரமே போய் வரும். அந்த விளக்கு ஒரு முறை இங்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத் திற்குப் போவதற்கு எவ்வளவு நேரமாகிறது என்று அங்த மாணவன் கணக்கிட்டான்.
எப்படிக் கணக்கிட்டான், தெரியுமா? வைத்தியர்கள் காடி பார்ப்பது போல், தன் இடது கையில் வலது கை விரலை வைத்து நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டான். அதிக தூரம் போய்வர எவ்வளவு நேரம் ஆகிறது,குறைந்த தூரம் போய்வர எவ்வளவு நேரம் ஆகிறது என்று கணக்கெடுத்தான்" இரண்டுக்கும் ஒரே கேரம்தான் ஆனது.
300 ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை அறியக் கடிகாரங்கள் இல்லை. மாதா கோயில் விளக்கு அசைந்ததைப் போலத்தானே கடி காரத்திலுள்ள பெண்டுலமும் அசைகிறது? அந்த மாணவன் கண்ட உண்மையை வைத் துத்தான் கடிகாரங்கள் அமைக்கப்பட்டன.
அந்த மாணவனுடைய குடும்பமோ மிக வும் ஏழை. ஏழையாயிருந்தாலும், அவன்
22

மிகவும் புத்திசாலியாக இருந்தான். சிறு வய திலே அவன் சிறுசிறு கருவிகளை வைத்துக் கொண்டு வித்தைகள் செய்து காட்டுவான். அவற்றைக் கண்டு அவன் பள்ளித்தோழர் கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார்கள். அவன் கன்ருகப் பாடுவான். அழகாக ஒவியம் வரைவான்.
அவன் யார் எதைச் சொன்னுலும் உடனே நம்பிவிடமாட்டான். தானே செய்து பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வரு வான். இதனுல், அவனுக்கும் அவனுடைய மாணவத் தோழர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் ஆசிரியர் களுடனும் அவன் விவாதம் செய்வான். இதனுல், அவனை எல்லோரும் வம்பன் ? என்றே அழைக்கத் தொடங்கினர்.
அந்த வம் பன் தா ன் வானத்தைப் பார்க்கும் தொலை கோக்கியைக் கண்டுபிடிதி தான். காண முடியாத வானக் காட்சிகளே எல்லாம் பிறருக்குக் காட்டினுன். அதற்கு முன்பே ஹாலந்து தேசத்தில் ஒரு தொ8ல நோ க் கி (டெலிஸ்கோப்) கண்டுபிடித் திருந்தார்கள். ஆணுல், அ த ஞ ல் வானக் காட்சிகளைக் காணமுடியாது. த ரை யில் உள்ள தூரக் காட்சிகளைத்தான் கான முடியும்.
டெலிஸ்கோப்பைக் கண்டுபிடித்த அதே
23

Page 14
மாணவன் வெப்பமானியையும் முதல் முதலா கக் கண்டுபிடித்தான். இவை மட்டுமா? சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றே பெரும்பாலோர் அக்காலத்தில் கம்பி யிருந்தார்கள். அது தவறு. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது? என்பதைப் பல ஆதாரங்களுடன் அவன் எடுத்துச் சொன் (ன்ை. புத்தகங்கள் எழுதி விளக்கினுன். மேதக் கொள்கைகளுக்கு எதிராக இவன் பேசு கிருன்; எழுதுகிருன்? என்று சொல்லி அவ னைப் பிடித்துச் சிறையிலே அடைத்து வைத் தார்கள். சிறையிலே அவன் 22 நாட்கள் இருந்தான் 1 பிறகு விடுதலையாளுன். ィ விடுதலையாகி வெளிவந்தது முதல், மும் முரமாகப் பல நூல்களே எழுதினுன். தான் கண்டுபிடித்த விஞ்ஞா ன உண்மைகளை விளக்கிக் கூறினன்.
காணமுடியாத வானக் காட்சிகளை யெல் லாம் காண்பதற்கு வழிகாட்டிய அவன் 73 வது வயதில், எதிரில் இருப்பவர்களைக் கூடக் காணமுடியாமல் தவித்தான். ஆம், அந்த வயதில் குருடாகி விட்டான் ! அவன் கண் பார்வைய்ை இழந்த 5 ஆண்டுகளில், அவனை இந்த உலகம் இழந்து விட்டது ?
விஞ்ஞானிகளுக் கெல்லாம் விஞ்ஞானி யாக விளங்கிய அவன் பெயர் தான்
கலீலியோ கலிலி.
24

'அம்மா, தபால்?
தபால்காரர் குரல் கேட்டதும் வீட்டுக்குள் ளிருந்த அம்மா வெளியே வந்தாள்; கடிதத் தைக் கையிலே வாங்கினுள்; தபால் முத்திரிை யைப் பார்த்தாள். உடனே அவள் முகம் மலர்ந்தது.
அவளுடைய மகன் அங்தக் கிராமத்தி லிருந்து சிறிது தூரத்திலுள்ள பட்டணத்துக் குச் சென்றிருந்தான். அது பள்ளிவிடுமுறைக் காலம். அந்தப் பட்டணத்திலிருந்துதான் கடிதம் வந்திருந்தது. அவளுடைய தோழி அதை அனுப்பி யிருந்தாள். கடிதத்தை ஆவலோடு பிரித்துப் படிக்கத் தொடங் கினள்.
1259-2 25

Page 15
*அன்புள்ள தோழி, இனிமேல் உன் மகன் இங்கு இருந்தால், எங்கள் வேலையெல் லாம் கெட்டுவிடும். நீ உடனே இங்கு வந்து அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு போய்விடு’ என்று கடிதத்தின் ஆரம்பத்தில் இருந்தது.
இதைப் படித்ததும், அந்த அம்மாள் திடுக்கிட்டாள்.
*விடுமுறை கழிந்த பிறகுதான் உன் மக னைத் திருப்பி அனுப்புவேன் என்று ஆசை யோடு என் மகனை அழைத்துச் சென்ருளே, அந்தத் தோழியா இப்படி எழுதியிருக்கிருள் ! என் மகன் வம்பு வழக்குக்குப் போகமாட் டானே! என்ன காரணமோ ? என்று கவலை யோடு மேலும் படித்தாள்.
*உன் மகன் இங்கு வங்தது முதல், இரவு வெகு நேரம் சென்றுதான் காங்கள் தூங்குகிருேம். இதஞல், காலையில் விரை விலே எழுந்து வேலைகளைக் கவனிக்க முடிய வில்லை. அவன் கதை சொல்ல ஆரம்பித்து விட்டால், கேரம் போவதே தெரிவதில்லை. பிள்ளைகளோடு நாங்களும் சேர்ந்து மணிக் கணக்காகக் கேட்டுக்கொண்டேயிருக்கிருேம். வெகுநேரம் சென்ற பிறகுதான், அடடா இவ் வளவு கேரம் விழித்திருந்து விட்டோமே? என்று தோன்றுகிறது. ஆனலும், அவன் கதையைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவன் இங்கு இருந்தால், தினமும் இப்படித்
26

தான் கடக்கும். ஆகையால், தயவு செய்து விரைவில் அழைத்துப் போய் விடு.?
கடிதம் முழுவதையும் படித்து முடித்த தும், “பூ ! இதற்குத்தான இப்படி எழுதி யிருக்கிருள். என்னவோ ஏதோ என்று பயந்து போனேன்’ என்று கூறிச் சிரித்தாள் அந்த அம்மாள்.
இப்படிச் சிறிய வயதிலே கதை சொல் வதில் வல்லவனுக இருந்த அவன், பெரியவ ஞனதும், பெரிய கதாசிரியணுகி விட்டானே? இல்லை.
பன்னிரண்டு வயதுப் பையனுக இருக் கும்போது, அவன் அடுப்புக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து கொள்வான். கேத்தலில் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். நன்ருகக் கொதித்தவுடன் கேத்தலின் மூக்கு வழியாக *குப்தப்’ என்று ஆவி வெளிவருவதைப் பார்ப்பான்.
**இந்த ஆவி வெளியில் வராதபடி கேத் தலின் மூக்கை அடைத்துவிட்டால், என்ன கடக்கும் ? என்று ஒரு நாள் எண்ணினுன் உடனே அங்த மூக்கை மூடினன். அப்போது நீராவியால் வெளியில் வர முடியவில்லை. சிறிது கேரம் சென்றது. கேத்தலின் மூடி மெல்ல அசைய ஆரம்பித்தது. அப்போது சிறிது இடைவெளி ஏற்பட்டது. கீராவி கொப்புளித்துக்கொண்டு வெளியே வந்தது.
27

Page 16
அதை அவன் வேடிக்கை பார் த் துக் கொண்டே இருந்தான்.
மேலும் சிறிது கேரம் சென்றது. கேத்த லின் மூடி மேலே எழும்ப ஆரம்பித்தது. அப் புறம்..? அப்புறம் என்ன? மூடியைத் தள்ளி விட்டு நீராவி வேகமாக வெளிவரத் தொடங் கியது. அதை அவன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய அம்மா வங் தாள். போடங்களைப் படிக்காமல் இப்படி வீண் பொழுது போக்குகிறயே 1’ என்று கூறி வருத்தப்பட்டாள்.
ஆனல், அவன் கண்டுபிடித்த நீராவி என் ஜிஜனப் பின்பற்றியே புகை வண்டிகளும், கப்பல்களும் ஒருகாலத்தில் ஓடப்போகின்றன என்பது அந்த அம்மாவுக்கு அப்போது தெரியுமா ?
அவனுக்கு மக்கள் சிலை எடுப்பார்கள் என்றும், அவனைப் பற்றி ஆங்கிலப் பெருங் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த் புகழ்மாலை சூட்டு வார் என்றும் அப்போது அந்த அம்மா எதிர் பார்த்திருப்பாளா?
ஸ்காட்லாந்து தேசத் தி ல் பிறந்த ஜேம்ஸ் வாட் செய்த ஆராய்ச்சியின் பயணுகத் தான் இன்று நீராவி எங்திரங்களை நாம் காண் கிருேம்; அவற்றல் பயன் அடைகிருேம்.
28

யாழ்ப்பாணத்தில் கல்லூர் என்ற ஓர் "ஊர் இருக்கிறது. அந்த ஊரில் 150-ஆண்டு களுக்கு முன்பு கந்தப்ப பிள்ளை என்ற ஒரு வைத்தியர் இருந்தார். அவர் உடலுக்கு மருந்து கொடுத்து வந்ததோடு, உள்ளத்திற் திற்கும் மருங்து கொடுக்க நினைத்தார். கல்ல கல்ல நாடகங்களை எழுதினர். அந்த நாடகங் களில் உயர்ந்த கருத்துக்கள் இருந்தன. மக்கள் அந்த நாடகங்களைப் பார்த்து மனம் திருந்த வேண்டும் என்பதே அவர் ஆசை.
சிறிது நேரம்கூட அவர் சும்மா இருக்க மாட்டார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்
29

Page 17
நாடகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண் டிருப்பார். அல்லது, நாடகம் எழுதிக்கொண் டிருப்பார்.
ஒரு நாள், கையிலே ஏட்டையும் எழுத் தாணியையும் வைத்து அவர் ஏதோ ஒரு நாடகத்தை எழு தி க் கொண்டிருந்தார். திடீரென்று எழுதுவதை நிறுத்தினர். அப் படியே சாய்ந்துவிட்டார். உடனே எல் லோரும் அவர் அருகிலே ஓடி வந்தார்கள். மூக்கிலே கை வைத் துப் பார்த்தார்கள். *மூச்சு நின்றுவிட்டது!’ என்பதை அறிக் தார்கள்.
‘அங்தோ, நாடகம் முடிவதற்குள் இவர் ஆயுள் முடிந்து விட்டதே!’ என்று எல் லோரும் வருங்தினுர்கள்.
கங்தப்ப பிள்ளைக்கு ஆறுமுகம் என்று ஒரு மகன் இருந்தான். அவனுக்கு அப்போது வயது ஒன்பது. அந்த வயதிலே அவன் மிக வும் கெட்டிக்காரணுயிருந்தான். தமிழிலே நல்ல ஆர்வம் இருந்தது. ' கம் தங்தை எழு திய நாடகம் அரை குறையாக இருக்கிறது. அதை எப்படியாவது தொடர்ந்து எழுதி முடித்துவிட வேண்டும்’ என்று ஆறுமுகம்
ஆசைப்பட்டான்.
தங்தை எழுதிய நாடகத்தைப் பலமுறை படித்தான். அது பற்றியே பல நாட்கள் சிந்தித்தான். பிறகு, எழுத்தாணியை எடுத்
30

தான். ஏட்டிலே எழுதினன். நாடகத்தை ஒரு வழியாக முடித்தான். அண்ணனிடம் கொண்டுபோய்க் காட்டினுன். அவர் காட கத்தைப் படித்துப் பார்த்தார்.
தேம்பி, மிக கன் ரு க இருக்கிறது. கம் தங்தை எழுதுவதைப் போலவே எழுதியிருக் கிருய். நம் தங்தையின் ஆசையை நிறை வேற்றிவிட்டாய்” என்று கூறி ஆறுமுகத் தைக் கட்டித் தழுவினுர்,
பர்சிவல் துரை என்ற ஆங்கிலப் பாதிரி யார் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஆறுமுகம் படித்தான். தமிழிலும் ஆங்கிலத் திலும் கல்ல தேர்ச்சி பெற்றன். சிறு வயதி லேயே ஆறுமுகத்திற்கு இருந்த தமிழ்ப் புலமையைக் கண்டு எல்லோரும் வியங் தார்கள்.
மாணவனுயிருந்த போதே கீழ் வகுப் புகளுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக் கும்படி பர்சிவல் கூறினுர், ஆறுமுகத்திடம் மாணவர்கள் மட்டுமா தமிழ் கற்றுக் கொண் டார்கள் ? அந்தப் பர்சிவல் பாதிரியாரும் கற் றுக் கொள்ளத் தொடங்கிவிட்டார் 1 விரை விலே அவர் தமிழை கன்ருகக் கற்றுக்கொண் டார். ஆறுமுகத்தின் உதவியுடன் பைபிள் என்னும் கிறிஸ்தவ மத நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். எல்லோரும் அந்த மொழி பெயர்ப்பை மிகவும் பாராட்டினுர்கள்.
31

Page 18
இளம் வயதிலே இவ்வளவுதிறமையுடன் விளங்கிய ஆறுமுகம் வளர்ந்து வாலிபரான தும் ஏட்டிலிருந்த பல இலக்கியங்களை அச் சிட்டு வெளியிட்டார். கால் புள்ளி, அரைப் புள்ளி, கேள்விக்குறி,ஆச்சரியக் குறி முதலிய வற்றை முதன் முதலாகத் தமிழ் நூல்களில் சேர்த்து அச்சிட்டவர் அவரே !
சிறுவர்களுக்காக அவர்போல பாடங்கள்", நீதி நூல்கள், கணித நூல்கள், பூகோளம் முதலிய புத்தகங்களை எழுதினுர்.
பல பழைய இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினுர், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் முதலியவற்றை உரை கடையில் எழுதி வெளியிட்டார்.
அவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினர். நல்ல தமிழில் அழகாகப் பேசு வார்; சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். அவரது காவன்மையை அறிந்து, திருவாவடுதுறை மடத்தில் அறிஞர்கள் கூடி *நாவலர்” என்ற பட்டத்தை அவருக்குச் சூட்டி ஞர்கள்.
ஆறுமுக நாவலர்’ என்ருல், தமிழ் தெரிந்த அனைவருக்கும் இன்று தெரிந்திருக்கிறது ! இலங்கைக்குச் சென்றல் நாவலர் மண்டபம், ாகாவலர் வீதி, காவலர் வாசகசாலை, காவலர் அச்சுக்கூடம், காவலர் வித்தியாசாலை என்று பல நினைவுச் சின்னங்களைக் காணலாம்.
32

ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்திலே ஒரு தெரு, அந்தத் தெருவிலே ஒரு வீடு. அங்த வீட்டின் வாயிலில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் உட்கார்ந்து இருபுறமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தான். திடீரென்று அதோ வருகிருர் அப்பா ! அதோ வருகிறர் அப்பா ? என்று கூவிக்கொண்டே குதித்து எழுந்தான்.
அவன் குரலைக் கேட்டு உள்ளேயிருந்த அத்தை ஓடி வந்தாள். 'பாவம், எ த் தனை தடவை சொன்(லுைம் என்னை நீ கம்பமாட் டேன் என்கிருயே! உன் அப்பாவை இனி நாம் பார்க்கவே முடியாது. செத்துப் போனவர்
33,

Page 19
எ ப் படித் திரும்பி வருவார் ? என்று கூறினள்.
சிறுவன், அத்தை சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தெருவில் சிறிது தூரத்தில் வங்துகொண்டிருந்த ஒருவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே நின் ரு ன். அப்பா அப்பா? என்று ஆசையோடு அவன் கூவினன். அவர் அருகிலே வந்தார். அவர் முகத்தைப் பார்த்ததும், அவன் முகத்திலே ஏமாற்றக் குறி தெரிந்தது. இவரா என் அப்பா? இல்லை ; இல்லவே இல்லை. இவர் யாரோ ? என்று கூறிவிட்டுத் தொப்பென்று தரையில் உட்கார்ந்துவிட்டான்.
இப்படி ஒரு காளா, இரண்டு நாளா ? ஏழெட்டு மாதங்களாகத் தங்தையை எதிர் பார்த்து எதிர்பார்த்து அவன் ஏ மாங் து கொண்டிருந்தான். இறந்தவர் எப்படி உயிர் பெற்று வருவார்?
இரண்டு வயதுக் குழங்தையாக இருக் கும்போதே அவனுடைய தாய் இறந்து விட் டாள். தாய் இறந்த பிறகு அவனைக் கிரா மத்திலிருந்து நகரத் தி ற்கு அவனுடைய அத்தை அழைத்துவங்தாள். செல்லமாக வளர்த்துவந்தாள். த க்  ைத கிராமத்திலே வாழ்ந்தார். அடிக்கடி நகரத்திற்கு வருவார்; மகனைப் பார்த்துவிட்டுப் போவார்.
ஒருங்ாள், அவர் கிராமத்திலே நண்பர் ஒரு
34

வரைப் பார்க்கச் சென்றர். தெருவில் கடந்து போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று அவருக்கு வலிப்பு வங்துவிட்டது. கடுத்தெரு விலே அவர் விழுந்தார். சில விகாடிகளில் அவர் இறந்துவிட்டார்.
நகரத்திலே இருந்த சிறுவனின் அத்தைக் குத் தகவல் அனுப்பினுர்கள். அவள், சிறுவ னிடம் தங்தை இறந்த செய்தியை மிகுந்த வருத்தத்தோடு கூறினுள். ஆணுல், அவன் அவள் பேச்சை கம்பவில்லை. நீ பொய் சொல் கிருய். என் அப்பா என்னைப் பார்க்க வரு வார். நிச்சயம் வருவார்? என்று கூறிஞன். கூறியதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் வாயிற்படியில் உட்கார்ந்துகொண்டு தங்தையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டே யிருப்பான். கன்ருக இருட்டிய பிறகே வீட் டுக்குள் வருவான்.
தங்தை இறந்த ஒன்பதாவது மாதம் அவ னுடைய பாட்டி இறந்துவிட்டாள். அவள் அருகிலே சென்று அவன் உற்றுப் பார்த்தான். அவள் வாய் திறக்கவில்லை. கண் விழிக்க வில்லை. அசையாமல் கிடப்பதைக கண்டான். அவளை அடக்கம் செய்வதையும் அவன் கேரிலே பார்த்தான். அப்போதுதான் சாவு என்ருல் என்ன என்பது அவனுக்குத் தெரிங் தது. “பாட்டியை இனிப் பார்க்கமுடியாது. கம் அப்பாவும் இப்படித்தான் இறங்திருக்க
35

Page 20
வேண்டும். இனி, அவரையும் பார்க்க முடி யாது? என்ற முடிவுக்கு வந்தான்.
இப்படிப் பத்து வயதுவரை ஒன்றும் அறியாத குழங்தையாக இருந்த அவன், உல கம் போற்றும் ஒரு பெரிய ஞானியாகி விட் டான். ரஷ்ய ஞானி டால்ஸ்டாய் என்ருல் ஓ, அவரா காந்தி மகானே தம்முடைய குரு எனக் கொண்டாடியவரல்லவா அவர்? என்று கூறத் தொடங்கிவிடுவீர்கள்.
ஆம், பெரும் பணக்காரக் குடும்பத்திலே, 42 அறைகள் கொண்ட மாளிகையிலே அவர் பிறந்தார்; தம்முடைய நிலங்களையெல்லாம் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, ஏழையோடு ஏழையாக வாழ்ந்தார். நூற் றுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி மக் களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
அந்தப் புத்தகங்களின் மூலம் நிறைய வருமானம் வந்திருக்கும் என்றுதானே நினைக் கிறிர்கள் ? இல்லை. அவர் வருமானத்திற் காக எழுதவில்லை. தாம் எழுதிய புத்தகங் களை யார் வேண்டுமானுலும், எங்த மொழியில் வேண்டுமானுலும் இலவசமாக வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அவர் கூறிவிட்டார். அவரைப் பற்றி இதுவரை வெளி வந்துள்ள புத்தகங்கள் சுமார் 25,000 இருக்கலாம். அப்படியென்றல், அவர் எவ்வளவு பெரிய மகான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
36

வான்கோழி வியாபாரம்
ஜான்’ என்று அம்மா அழைத்தாள். எேன்ன அம்மா ? என்று கேட் டு க் கொண்டே மகன் அருகிலே சென்றன்.
அம்மா ஒரு சிறு கூடையை ஜானிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கிப் பார்த் தான். உள்ளே பத்து வான்கோழி முட்டை கள் இருந்தன. கேன்றி அம்மா’ என்று கூறி விட்டு அந்த முட்டைகளுடன் அவன் தோட் டத்திற்கு ஓடினன்.
இப்படி அடிக்கடி அம்மா அவனிடம் முட் டைகளைக் கொடுப்பாள். அவன் அந்த முட் டைகளைப் பத்திரமாக அடைகாக்க வைப் பான். குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை
37

Page 21
கன்ருக வளர்ப்பான். கொழு கொழு என்று வளர்ந்ததும் கல்ல விலைக்கு விற்றுவிடுவான். விற்றுவந்த பணத்தை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் செல்வான். அம்மா, நீ தந்த முட்டைக்கு இதோ பணம்’ என்று கூறிச் சரி யாகக் கணக்குப் பார்த்துக் கொடுத்துவிடு வான். இப்படி ஏழு வயதிலே அவன் வான் கோழி வியாபாரத்தைத் தொடங்கிவிட்டான். பகலெல்லாம் பள்ளியில் படிப்பான். காலே யிலும் மாலையிலும் வான்கோழிகளை வளர்ப் பதிலும் விற்பதிலும் நேரத்தைப் போக்கு வான்,
அவன் ஒரு கணக்குப் புத்தகம் வைத் திருந்தான். அதன் அட்டை மிகவும் கனமாக இருக்கும். அது என்ன, பள்ளிக்கூடக் கணக் குப் புத்தகமா? இல்லை; வான்கோழி சம்பந்த மான வரவு செலவுப் புத்தகம்தான் ! அந்தப் புத்தகத்தை அடிக்கடி புரட்டிப் பார்ப்பான். நாளுக்கு நாள் இலாபம் பெருகி வருவதைக் கண்டு உள்ளுர மகிழ்ச்சியடைவான்.
அவன் வீட்டு அடுக்களையில் ஓர் உடைந்த தேநீர்க் கோப்பை இருக்கும். அதில்தான் பணத்தைப் போட்டுவைப்பான். சிலர் அவ னிடம் கடன் கேட்பார்கள். கல்ல வட்டிக்குக் கடன் கொடுப்பான்.
சின்ன வயதிலே வியாபாரம் செய்யவேண் டும், கை நிறையச் சம்பாதிக்கவேண்டும்
38

என்று ஜான் ஆசைப்பட்டான். ஆணுல், உலகிலேயே, மிகமிகப்பெரிய கோடீஸ்வரனுக அவன் ஒரு காலத்தில் விளங்கப் போகிருன் என்பது அப்போது யாருக்குத் தெரியும்? அவனுக்கே தெரியாதே !
மிகப் பெரிய கோடீஸ்வரனுக விளங்கிய தோடல்ல ; மிகப் பெரிய கொடையாளியா கவும் அவன் விளங்கினுன். ஜான். டி. என்று சொன்குல்ை அமெரிக்கர் அனைவருக்கும் கன்ரு கத் தெரியும். ஜான். டி. ராக்பெல்லர் என்று சொன்னுல் உலகின் பல பகுதிகளில் உள்ள வர்களுக்கும் கன்ருகத் தெரியும்.
ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி என்ற எண்ணெய்க் கம்பெனியைத் தொடங்கி அவர் லட்சம் லட்சமாகச் சம்பாதித்தார். பெட்ரோல், இருப்புப் பாதை முதலியவற்றின் மூலமாக, மொத்தம் அவர் சம்பாதித்த தொகை 100 கோடி டாலருக்குமேல் இருக்கும் என்கி ருர்கள். (அதாவது கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்) சம்பாதித்ததில் பாதிக்குமேல் அவர் கன்கொடையாக வழங்கிவிட்டார். அவரால் 1913 இல் நிறுவப்பட்ட ரோக்பெல்லர் பவுண். டேஷன் இன்று எத்தனையோ கல்ல காரியங் களுக்கு உதவி வருகிறது.கல்வி, மருத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி முதலிய பல துறை களிலும் உலகின் பல பாகங்களிலும் தொண்டு செய்து வருகிறது.
39

Page 22
ராக்பெல்லர், உயர்ாநிலைப் பள்ளியுடன், படிப்பை முடித்துக் கொண்டார். பல்கலைக் கழகப் படிப்பை அவர் எட்டிக்கூடப் பார்த்த தில்லை. ஆனலும், சிகாகோப் பல்கலைக் கழகத்திற்கு அவர் ஒரு கோடி பவுனுக்குமேல் கொடுத்திருக்கிறர் 1
ராக்பெல்லர் எதிலுமே அவசரப்பட மாட் டார்; ஒருபோதும் ஆத்திரப்படமாட்டார். பகல் சாப்பிட்டவுடன் அரைமணி கேரம் படுத் துத் தூங்குவார். இவற்றல்தான் அவர் 97 வயதுவரை இந்த உலகில் ஆரோக்கியத் துடன் வாழமுடிந்ததாம். அவர் இறந்தபோது பல் இல்லாத கிழவராக இறக்கவில்லை. 32 பற் களும் அப்படியே ஆடாமல் அசையாமல் இருங் தனவாம் ! அவற்றில் ஒன்றுகூடப் பொய்ப் பல் இல்லை. அவரிடம் சில கண்டிப்பான பழக்க வழக்கங்கள் இருந்தன. அவர் சீட்டாட மாட்டார்; திரைப்படம் பார்க்கமாட்டார்; புகை பிடிக்கமாட்டார்; மது அருந்தமாட்டார்.
கோடீஸ்வரரான பிறகும், வான்கோழியை ராக்பெல்லர் மறக்கவே இல்லை, 8000 ஏக்கர் நிலத்தில் வான்கோழிப் பண்ணை ஒன்றை ஏற் படுத்தினர். ஏராளமான வான்கோழிகளே. அதில் வளர்த்துவந்தார். ஒரு காலத்தில் ஏழையாக இருந்து வான்கோழி வியாபாரம் செய்ததை நினைவுபடுத்திக் கொள்ளவே அவர் அவ்வாறு செய்தாராம் !
40

6696from பருவமா! அப்படி ஒன்று அவ னுக்கு இருப்பதாகவே தெரியவில்லையே! விவ ரம் தெரிந்த நாளிலிருந்து அவன் பெரிய மனிதன் போலவே எல்லாம் செய்து வரு கிருன்” என்று அவனுடைய அப்பா ஒரு முறை கூறினுர்.
அது உண்மைதான். அவன் மற்றப் பிள்ளைகளைப் போல் வி2ளயாட மாட்டான்; தெருவில் அலையமாட்டான்; அரட்டை அடிக்க மாட்டான். எப்போதும், ஏதாவது ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருப்பான். அல்லது, இது என்ன ? அது என்ன ? இதை ஏன் இப்படிச் செய்யவேண்டும் ? அதை ஏன் அப்படிச்
1259-3 41

Page 23
செய்யக் கூடாது? என்று பெரியவர்களிடம் கேள்வி மேல் கேள்வி போட்டுக் கொண்டிருப் பான்.
6 என்ன, இந்த மாதிரி அர்த்தமில்லாத கேள்விகளை யெல்லாம் கேட்கிறனே ! ஒரு வேளை. இவனுக்கு மூளைக் கோளாறக இருக் குமோ ? என்று சிலர் சங்தேகப்பட்டனர். இேவன் தலை பெரிதாக இருக்கிறது. அதனல், மூளையில்தான் ஏதோ கோளாறு இருக்கவேண் டும்" என்று ஒரு டாக்டர்கூடக் கூறினுர் 1 மூளைக் கோளாறு உள்ள பையனை எப் படிப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பது ?’ எட்டு வயதுவரை அவனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவே இல்லை. அப்புறம்தான் அவனைப் பள்ளியிலே சேர்த்தார்கள்.
பள்ளியில் மூன்று மாதங்களே படி த் தான். பிறகு அவன் படித்ததெல்லாம் வீட் டிலேதான். அவன் அம்மா ஒரு காலத்தில் பள்ளி ஆசிரியையாக இருந்தவள். அவள் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
பத்தாவது வயதில் அவன் தன் வீட் டிலேயே ஒரு சோதனைச் சாலையை ஏற்படுத்தி ஞன். அப்போது, அவன் கூடையை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாகச் செல்வான். கூடை நிறையப் புட்டிகளைச் சேகரித்துக் கொண்டு வருவான்.இரசாயனப் பொருள்களை அவற்றிலே போட்டுவைப்பான். யாராவது அந்தப் புட்டிகளை எடுத்துவிட்டால், என்ன
42

செய்வது? அதற்காக, விஷம்" என்று துண்டுக் காகிதத்தில் எழுதி ஒவ்வொரு புட்டி யின் மீதும் அதை ஒட்டிவைப்பான்! இப்படி அவனுடைய சோதனைச் சாலையில் 200க்கு மேற்பட்ட புட்டிகள் இருந்தன!
புதிது புதிதாகப் பல விஞ்ஞான உண்மை களைக் கண்டுபிடிக்க வேண்டும், பெரிய விஞ் ஞானியாக வேண்டும் என்ற ஆசை அந்த வயதிலே அவனுக்கு இருந்தது. வானத்திலே பறவை பறக்கிறதே, அதேபோல் ஏன் மனித ணுல் பறக்க முடியாது?’ என்று அவன் அடிக் கடி தன்னைத் தானே கேட்டுக் கொள்வான்.
ஒரு நாள் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே இரசாயனப் பொருள் களில் சிலவற்றைக் கலந்தான் ; கன்ருக அரைத்துத் தூள் ஆக்கினன். அந்தத் தூள்ை, அவர்கள் வீட்டு வேலைக்காரப் பையனுன மைக்கேல் ஓட்ஸ் என்பவனிடம் கொடுத்து, ைேமக்கேல், இதோ இந்தத் தூளை நீ உன் வாய்க்குள் போட்டு விழுங்கவேண்டும். சிறிது கேரத்தில் ஓர் அதிசயம் கடக்கும். நீ இருந்த இடத்தை விட்டு மெல்ல மெல்ல மேலே எழும்பு வாய். அப்புறம், சிறிது கேரத்தில், விேர்? ரென்று வானத்திலே பறக்க ஆரம்பித்து விடு வாய்.உம்.வாயைத் திற” என்றன். 7
மைக்கேலுக்குப் பயமாயிருந்தது. பயப் படாதே 1 முதல் முதலாக வானத்திலே பறந்த வன் யார் என்று கேட்டால், மைக்கேல் ஒட்ஸ்
43

Page 24
என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆம், அந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும் ? உம். விழுங்கு”என்று கட்டாயப்படுத்தினுன் மைக்கேல் அரைமனதாக அந்தத் துர8ள வாய்க்குள்ளே போட்டு விழுங்கினுன், சிறிது கேரம் சென்றது.மைக்கேல் மேலே எழும்பவும் இல்லை; வானத்தில் பறக்கவும் இல்லை. தடால் என்று கீழே சாய்ந்தான். தரையோடு தரை யாய்ப் படுத்துவிட்டான். ஆமாம், மயங்கி விழுந்துவிட்டான் ? அப்போது அவனுடைய அம்மா அங்கே வந்தாள் கடந்ததை அறிக் தாள். அவளுக்கு மகன்மீது கோபம் கோப மாக வந்தது. அவன் கன்னத்தில் இரண்டு போட்டாள் ; காதைப் பிடித்துத் திருகினுள். கல்ல வேளை, மைக்கேலின் உயிருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை.
சிறு வயதிலே இப் படி யெ ல் லா ம் சோதனை செய்து பார்த்துவங்த அவன், வளர்ந்து பெரியவனனதும், எத்தனை எத்த, னையே விஞ்ஞான அற்புதங்களைச் செய்து காட்டினுன்.
மின்சார விளக்கில் படிக்கும்போது, திரைப் படத்தைப் பார்க்கும்போது, டெலி போனில் பேசும் போது, கிராமபோனில் கேட்கும்போது, நாம் அவனுக்கு மறக்காமல் நன்றிசெலுத்த வேண்டும்.
யாருக்கு? தாமஸ் ஆல்வா எடிசனுக்குத்தான் !
44

அது ஒரு சிறு கிராமம். அங்கே ஒரு சிவன் கோயில் உண்டு. அக்கோயிலில் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாகத் திருவிழா கடைபெறும். சுற்றுப்புறக் கிராமங்களி லிருந்து பெருங்கூட்டமாக மக்கள் வரு வார்கள். r
அந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கடந்து கொண்டிருந்தது. கோயிலின் முன் ணுல் ஒரு பெரியவர் கதாகாலட்சேபம் செய்து கொண்டிருந்தார். அங்கே நிறையக் கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் மூன்று வய துச் சிறுமி ஒருத்தியும், அவளுடைய அம்மா
45

Page 25
வும் இருந்தார்கள். அவர்களைச் சுற்றி உற வினர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
அந்த உறவினர்களில் ஓர் அம்மாள் அங் தச் சிறுமியை ஆசையோடு தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். விளை யா ட் டா க அவளுடன் பேசினுள். சிறுமியும் மழலை மொழியில் ஏதேதோ சொன்னுள். அப்போது அந்த அம்மாள் போப்பா, நீ யாரைக் கல்யா ணம் பண்ணிக் கொள்வாய்? என்று வேடிக் கையாகக் கேட்டாள்.
உடனே அச்சிறுமி சிறிது தூரத்தில் கதை கேட்டுக்கொண்டிருந்த ஒரு வாலிபனைச் சுட்டிக் காட்டி, அதோ, அந்த மாமாவைத் தான் கல்யாணம் பண் ணி க்கு வேன்? என்ருள்.
சிறுமி சொன்னதை அந்த அம்மாள் பக் கத்தில் இருந்த பெண்களிடம் சொன்னுள். உடனே எல்லாரும் கொல்லென்று சிரித் தார்கள். மூன்று வயதுச் சிறுமி இருபது வயது வாலிபனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னுளே, அதற் காக அவர்கள் சிரிக்கவில்லை. அந்த வாலிபகுே பார்ப்பதற்குப் பைத்தியக்காரனைப் போலவே இருந்தான். இவ்வளவு பெரிய திருவிழாக் கூட்டத்தில் இப்படி ஒரு பைத்தியக்காரனைத் தேடிப் பிடித்தாளே !? என்றுதான் அவர்கள் சிரித்தார்கள்.
46

ஆணுல், அதே வாலிபனுக்கும், அதே சிறுமிக்கும் மூன்று ஆண்டுகள் கழித்துத் திருமணம் நடக்கப் போகிறது என்பதை அன்று யாரும் அறியவில்லை. திருமணம் கடந்தபோது அச்சிறுமிக்கு வயது 6. அங்த வாலிபனுக்கு வயது 23.
“என்ன இது 1 ஆறு வயதுச் சிறுமிக்குக் கல்யாணமா ?? என்று ஆச்சரியப்பட வேண் டாம். அங்தக் காலத்தில், பெண்களுக்கு ஆறு, ஏழு வயதிலும் பையன்களுக்குப் பத்து, பன் னிரண்டு வயதிலும் திருமணம் செயவது வழக்கமாயிருந்தது. அப்படியானுல், அந்த வாலிபனுக்கு ஏன் இருபது வயதுவரை திரு மணம் ஆகவில்லை ? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா ?
அவனை அரைப் பைத்தியம்’ என்றே பெரும்பாலோர் கிசனத்தார்கள். ஆகுல், உண் மையில் அவன் பைத்தியக்காரனல்ல. எப் போதும் அவன் கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பான். பக்திப் பாடல்களை வாய்க் குள்ளே படிக் கொண்டிருப்பான்; யாருட னும் அதிகமாகப் பேசமாட்டான். அவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் பைத் தியம்’ என்றே முடிவுகட்டி விட்டனர்.
பைத்தியத்துக்கு யா ரா வது பெண் கொடுப்பார்களா ? பெண் கொடுக்கமாட் டோம் என்று எல்லாரும் கூறிவிட்டார்கள்.
47

Page 26
கேம்முடைய பிள்ளைக்கு எவருமே பெண் கொடுக்கமாட்டேன் என்கிருர்களே! எல்லோ ரும் அவனைப் பைத்தியம் என்று கேலி செய்கி றர்களே! இனி அவனுக்குக் கல்யாணமே ஆகாதோ?’ என்று அவனுடைய அம்மா ஒரு நாள் மிகவும் கவலைப்பட்டாள். அப்போது அவன், “ஏனம்மா இப்படிப் பெண் தேடி அலைகிறீர்கள் ! கேராக ஜயராம்பாடிக்குப் போங்கள். அங்கே இராமச்சந்திர முகர்ஜி என்று ஒருவர் இருக்கிறர். அவருக்கு ஒரு மகள் இருக்கிருள். அங்கே போய்க் கேளுங் கள்? என்றன்.
மகன் இப்படிப் பேசியதைக் கேட்டதும், அம்மாவுக்கு வியப்பாக இருந்தது. அன்றே புறப்பட்டாள். மகன் சொன்ன வீட்டுக்குப் போனுள். பெண்ணின் அ ப் பா முதலில் இணங்கவில்லை. வெகு நேரம் பேசியபின் சரி? என்றர். ஒரு கல்ல நாளில் கல்ல வேளையில் திருமணம் கடைபெற்றது.
சிவன் கோயில் திருவிழாவில், அதோ அங் த மாமாவைத்தான் க ல் யா ண ம் பண்ணிக்குவேன்? எ ன் ருளே , அதே சிறுமிதான் அந்த மணப் பெண் 1
அவள் பெயர் சாரதா, மணமகன் பெயர் கதாதரன். கதாதரன் என்ற பெயரே பிற் காலத்தில் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆனது. சாரதா என்ற பெயரே பூரீ சாரதா மணி தேவியார் என்ருகிவிட்டது!
48

&mflumir சொன்ன
அதிசயம் !
− கும்பகோணத்திற்குப் பக்கத்திலே துரிய மூலை என்று ஒரு கிராமம். அங்கே ஒரு சாமி யார் இருந்தார். அவர் இறக்கும்போது *ஆனந்த வருடத்திலே இங்கு ஓர் அதிசயம் நடக்கப்போகிறது. அதைப் பார்க்காமலே நான் போ கி றே னே ? என்று கூறிக் கொண்டே உயிர் துறந்தாராம்.
அந்தச் சாமியார் சொன்ன அதிசயம் எது வாக இருக்கும் என்று ஒருவரை யொருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனந்த வருடம் எப்போது பிறக்கும் என்று ஆவலாக எதிர் பார்த்தார்கள்; ஆனந்த வருடமும் பிறந்தது;
49

Page 27
தமிழ் நாட்டில் அப்போதுதான் முதன் முதலாக ரயில் பாதை போடப்பட்டு ரயில் வண்டி ஒடத்தொடங்கியது. ரயில் ஒடு வதைத்தான் அதிசயம் என்று சாமியார் சொல்லியிருக்க வேண்டும்? என்றர்கள் சிலர்.
அதே ஆண்டில்தான் தந்தி வசதியும் வந்தது. இது தான் பெரிய அதி சயம். இதைத்தான் சாமியார் சொல்லியிருக்க வேண் டும்? என்றர்கள் வேறு சிலர். -
அதே ஆண்டில்தான் அந்தக் கிராமத் தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பையன் பிறந்த ஆண்டிலே அவனுடைய பெற்றேருக்குச் சொந்தமாக ஒரு வீடு கிடைத் தது. அதனுல், அந்தப் பையன் பிறந்தது தான் அதிசயம் என்று அவனுடைய அம்மா நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள். இதைப் பெருமையாக எல்லோரிடமும் அடிக் கடி கூறுவாள்.
அந்தப் பையன் ஆரம்பத்திலே திண் ணைப் பள்ளிக்கூடத்திலே படித்தான். பிறகு பல புலவா களிடம் தமிழ் கற்றன். வாலிபனு னதும் மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளே என்பவரிடம் பாடம் கேட்க ஆரம்பித் தான்.
மகா வித்துவானிடம் சென்றபோது, உேன் பெயர் என்ன ? என்று கேட்டார் அவர்.
50

வேங்கடராமன்? என்று பதில் சொன் ஞன் வாலிபன்.
வீேட்டிலே உன்னை எப்படி அழைப் பார்கள் ??
எேனக்கு வைத்த பெயர் வேங்கடராமன். ஆஞலும், அது என்னுடைய முன்னேரின் பெயராக இருப்பதால், அந்தப் பெயரைச் சொல்லி என் அப்பா, அம்மா அழைக்கமாட் டார்கள். சாமிநாதன் என்றே அழைப்பார்கள். சாமா, சாமா என்றே செல்லமாகக் கூப்பிடு Gunfissoit.'
சோமிநாதன் என்ற பெயரே நன்ருக இருக்கிறது. உன் 2ன இனி நான் சாமிநாதன் என்றே அழைப்பேன்’ என்ருர் மகாவித்து வான். அன்று முதல் அப்படியே அழைத்து வந்தார். அதே பெயர்தான் பிற்காலத்தில் மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமி நாதய்யர் என்று நீண்டு விட்டது. ஆளுனலும், தமிழ்த் தாத்தா? என்று சொல்வதிலதான் நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படு கிறது.
தமிழ்த் தாத்தா அன்று துரியமூலையில் பிறந்திராது போனல், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு என்று சொல்லுகிறேமே, இந்த இலக்கியச் செல்வங்களெல்லாம் நமக்குக கிடைக்காமலே போயிருக்கலாம்.
51

Page 28
சூரிய மூலையிலே பிறந்த அவர், தமிழ்
காட் டி ன் மூ8ல முடுக்குகளுக்கெல்லாம் சென்றர். அங்கே கேட்பாரில்லாமல் கிடந்த ஏடுகளையெல்லாம் தேடிப் பிடித் தார் . அவற்றைப் படித்துப் பார்த்தார். அவற்றிலே பல கல்ல நல்ல பாடல்களெல்லாம் இருந்தன.
முன் காலத்தில், அச்சடித்த புத்தகங்கள் இல்லை. ஆகையால், பனை ஓலையில்தான் பாடல்களை எழுதி ஒன்று சேர்த்துக் கட்டி வைப்பார்கள். அதுதான் அங்தக் காலத்தில் புத்தகம் !
அப்படி எழுதி வைத்த ஏட்டுச் சுவடி களைப் பலர் அலட்சியமாக வீடுகளில் போட்டு வைத்திருந்தார்கள். அவற்றின் அருமை அவர் களுக்குத் தெரியவில்லை. ஆகையால், அவை கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம், கம் தமிழ்த் தாத்தா திரட் டிஞர்; ஆராய்ச்சி செய்தார். ஏட்டுச் சுவடிகளில் உள்ள எழுத்துக்களைப் படிப்பது மிகவும் சிரமம். ஆணுலும், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வி டா முயற்சியுடன் அவற்றிலிருந்த பழைய பாடல்களை யெல் லாம் படித்தார். பிறகு, அவற்றைப் புத்தகங் களாக அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் காட் டைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய அதிசயம் அல்லவா ? இந்த அதிசயத்தைச் செய்தவர் ஆனந்த வருடத்திலே பிறந்ததும். ஓர் அதிசயம்தானே ! சாமியார் வா க் குப் பலித்துவிட்டது!
52

பச்சோந்திப் பரிசு !
கரிநாள், இராகு காலம், எமகண்டம் இவையெல்லாம் அபசகுனம் என்று கம்மிலே பலர் நினைக்கிருேமல்லவா? இதேபோல் வெள் ளைக்காரர்களிலும் சகுனம் பார்ப்பவர்க்ள் பலர் இருக்கிருர்கள்.
மாதங்களில் மே மாதம்.
தேதிகளில் பதின்மூன்றம் தேதி.
கிழமைகளில் வெள்ளிக்கிழமை. இவை யெல்லாம் அபசகுனம் என்று அவர்கள் கருதுகிறர்கள். இப்படியிருக்கும்போது மே மாதம்-அதிலும் 13-ஆம் தேதி வெள்ளைக்காரக் குடும்பத்திலே ஓர் ஆண் குழங்தை பிறந்த
53

Page 29
தென்றல் அதனுடைய அப்பா அம்மாவுக்கு எப்படியிருக்கும் ?
ஆலுைம் என்ன? அந்தக் குழங்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டதா? இல்லை. 75 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. சரி, அதைப் பெற்றவர்களுக்கோ அல்லது மற்ற வர்களுக்கோ ஏதாவது தீங்கு நேரிட்டதா? அதுவும் இல்லை; அந்தக் குழந்தையால் உலகத்துக்கே பெரிய கன்மை ஏற்பட்டது.
50. ஆண்டுகளுக்கு மு ன் பு மலேரியா நோயினுல் ஆண்டுதோறும் லட்சக் கணக் கான மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். ஆயி ரக் கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருங் தார்கள். மிகப் பயங்கரமான இந்த வியாதியை வர விடாமல் தடுக்கவும், வங்தால் விரைவில் விரட்டி ஒட்டவும் வழி கண்டுபிடித்தது யார் தெரியுமா? மே மாதத்தில் 13-ஆம் தேதியில் பிறந்த அதே குழந்தைதான். ஆம், அது வெள்ளைக்காரக் குழந்தையாக இருந்தாலும், பிறந்தது கம் இந்தியாவில்தான். வட இந்தி யாவில் உள்ள அல்மோரா நகரில் 1857-ஆம் ஆண்டு பிறந்தது. ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டதும் கம் தேசத்தில் தான்.
குழங்தையின் தகப்பனுர் ஆங்கிலேயரின் படையில் தளபதியாக இருந்தார். அவருக்கு மொத்தம் பத்துக் குழங்தைகள். மூத்த குழங்தையின் பெயர் ரொனுல்டு ராஸ் என்ப" தாகும்.
54

ராஸ் கான்கு வயதுப் பையனுக இருந்த போது உடல் கலமில்லாமல் மிகவும் அவதிப் பட்டார். காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் அவரைப் படாத பாடு படுத்திவிட்டன. பிள் 2ளயை இங்கிலாங் துக்கு அனுப்பிவைத்தால், உடல் தேறும் என்று அம்மா நினைத் தாள். மறு கப்பலிலே பிள்ளையை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார்கள்.
ராஸ்பதின்ைகு வயதுப் பையனுக இங்கி லாங்தில் இருங்தபோது அவருடைய மாமா அவருக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது என்ன பரிசு தெரியுமா ? உயிருள்ள பச்சோந்திதான் அந்தப் பச்சோங்தியை மிக வும் அன்பாக வளர்த்துவங்தார் ராஸ்.
அந்தப் பச்சோங்திக்குக் குளிர் மிகுதியா யிருந்தால் பிடிக்காது. எப்போதும் வெது வெதுப்பான இடத்திலேயே அதை வைத் திருக்க அவர் நினைத்தார். தோட்டத்தின் கடு விலே கண்ணுடி வீடு ஒன்றைக் கட்டினுர். அதற்குள்ளே ப9 சோங்தியை வளர்த்து வக் தார். அதனுேடு சில செடி கொடிகளும் அங் தக் கண்ணுடி வீடடுக்குள்ளே வளர்ந்து வக தன. அவை எப்போதும் பச்சைப் பசே லென்று இருக்கும். ஆகையால் அதைப் பேச்சை வீடு' என்றே எல்லோரும் சொல்வார் கள். தோட்டக்காரரும் ராஸாம் சேர்ந்து தின மும் கண்ணுடி வீட்டின் வெளிப்புறத்தில்
55

Page 30
கொதி நீரை ரப்பர்க் குழாய் மூலம் பாய்ச்சு வார்கள். இதனுல் அந்த வீட்டுக்குள் எப் போதும் வெதுவெதுப்பாக இருக்கும். ஓந்தி கண்னடி வீட்டுக்குள் மகிழ்ச்சியோடு ஓடி ஆடித் திரியும்.
ஒருநாள் ராஸ் வெளியிலே போயிருந்தார். அப்போது தோட்டக்காரனுக்கு வேடிக்கை யான ஓர் எண்ணம் தோன்றியது. இந்தப் பச்சை ஓங்திமீது பச்சைத் தண்ணிரை ஊற்றி ஞல் என்ன ஆகும் ? அதையுங்தான் பார்க்க லாமே? என்று நினைத் தான். ஒரு வாளி நிறை யக் குளிர்ச்சியான நீரை எடுத்து வந்தான். பச்சோங்தியின் தலையிலும் உடலிலும் மட மடவென்று ஊற்றினுன். மறு விகாடி பச் சோங்தி குளிர் தாங்காமல் அதே இடத்தில் இறந்துவிட்டது.
சின்ன முதலாளியாகிய ராஸ் திரும்பி வங் தார். செத்துக் கிடந்த பச்சோங்தியைக் கண் டார். விவரம் அறிந்ததும் துடிதுடித்துக் கண்ணிர் விட்டார். அப்போது தோட்டக் காரன் மன்னிப்புக் கேட்டான். அங்யாயமாக என் தோழனைக் கொன்றுவிட்டாய் ; உன் 2ன மன்னிக்கவே மாட்டேன்? என்று கதறினுர்,
பச்சோங்தியின் உயிருக்காக அன்று கண்ணிர் விட்டவர், பிற்காலத்தில் பல்லா யிரக்கணக்கான உயிர்களே மலேரியாவி லிருந்து காப்பாற்றினர் f
56

தாகூர் சிறுவராயிருந்தபோது, கல்கத் தாவில் ஒரு பெரிய பயில்வான் இருந்தார். கோனு பயில்வான்’ என்பது அவருடைய பெயர். அவரிடம் பலர் குத்துச் சண்டை கற்றுக் கொண்டார்கள்.
தாகூர் தினமும் பொழுது விடிவதற்கு முன்பே எழுங்து விடுவார்; குஸ்தி போடுவதற் கான லங்கோடு ஒன்றை அணிந்து கொள் வார்; காணு பயில்வானுடைய குஸ்திப் பள்ளிக் கூடத்திற்குக் கிளம்பி விடுவார்.
அங்கே தரையில் ஓர் அடி ஆழம் மண் ணைக் கிளறி மாவுபோல் வைத்திருப்பார்கள்.
I 259ー4 57

Page 31
அந்த மண்ணின் மீது கடுகு எண்ணெயை ஊற்றி இருப்பார்கள். அதுதான் குஸ்தி போடும் இடம். அந்த இடத்தில்தான் காணு பயில்வான் குத்துச் சண்டை கற்றுக் கொடுப் பார். அவருடன் தாகூர் சண்டை போடுவார். இருவரும் கட்டிப் புரளுவார்கள் ; உருளு வார்கள். உடம் பெல் லா ம் மண் ஒட்டிக் கொள்ளும். கு ஸ் தி வகுப்பு முடிந்ததும், தாகூர் உடம்பைத் தட்டிவிட்டுக்கொண்டு, வீடு திரும்புவார். ஆனலும் தலையிலும், முதுகிலும் மண் ஒட்டிக் கொண்டிருக்கும்.
இது என்ன விளையாட்டு? உடம்பெல் லாம் ஒரே மண் இப்படித் தினமும் மண்ணைப் பூசிக்கொண்டு வந்தால், உன் சிவப்பு நிறம் மங்கிவிடாதா ? என்று தாகூரின் அம்மா கோபித்துக் கொள்ளுவாள்.
விடுமுறை காட் களி ல் அவருடைய அம்மாதான் குளிப்பாட்டி விடுவாள். அப் போது அவள் ஒரு வாசனைத் திரவியத்தை மேலே தேய்ப்பாள். அரைத்த பாதாம் பருப்பு பால், ஆரஞ்சுப் பழத்தோல் இன்னும் என் னென்ன வெல்லாமோ சேர்த்துத் தயார் செய்ததுதான் அங் த வாசனைத் திரவியம், இது எதற்காகத் தெரியுமா ? தாகூரின் நிறம் மங்கிப் போகாமல் இருப்பதற்காகத்தான்.
தாகூரிடம் அம்மாவுக்குப் பிரி யம் அதிகம். ஆணுலும், சின்ன வயதிலே காடகம்
58

பார்க்க அவரை அனுமதிக்கவே மாட்டாள். சிறுபிள்ளைகள் நாடகம் பார்த்தால் கெட்டுப் போய்விடுவார்கள்? என்று அம்மா நினைத் தாள். அம்மா மட்டுமா? அங்தக் காலத்தி லிருந்த பெரியவர்கள் எல்லோருமே அப்படித் தான் நினைத்தார்கள்.
தாகூருக்குச் சிற்றப்பா ஒருவர் இருந்தார். அவர் நாடகம் எழுதுவார். காடகங்களைத் தயார் செய்வார். நடிகர்களில் சிறுவர்களும் இருப்பார்கள். சிறுவர்கள் நாடகத்தைப் பார்க்கக் கூடாதாம். ஆணுல், நடிக்கலாமாம்” என்று தாகூர் குறைப்பட்டுக் கொள்வார்.
தாகூர் வீட்டில் அடிக்கடி நாடகம் நடக் கும். ஒருங்ாள், அவர்கள் வீட்டில் களன் - தம யங்தி நாடகம் கடைபெற இருந்தது. அந்த காடகத்தைச் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பெரியவர்கள் அனு ம தி கொடுத்துவிட் டார்கள். சிறுவர் தாகூருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
கோடகம் ஆரம்பிக்க வெகுாேகரம் ஆகும். நீ படுக்கையில் படுத்துத் தூங்கு. நாடகம் ஆரம்பமானதும் உன் னை எழுப்புகிறேன்? என்ருள் அம்மா. தாகூர் முதலில் அம்மா பேச்சை கம்பவில்லை. ஆணுலும், அம்மா உறுதி யாகச் சொன்னதால், “சரி” என்று போய்ப் படுத்துவிட்டார்.
மணி அடித்தது. அப்போதுதான் காட கம் ஆரம்பமானது. உடனே, ஒருவர் வந்து
59

Page 32
தாகூரை எழுப்பினர். தாகூர் கண்களைக் கசக்கிக் கொண்டு நாடகம் நடந்த இடத்திற்கு வங்தார். அப்போது எங்கு பார்த்தாலும் வர்ண விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அவ ருக்குக் கண்கள் கூசின. சுற்றிலும் பார்த்தார். பெரியவர்களும், சிறியவர்களுமாக அங்கே ஏராளமானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
முன் வரிசையில் அண்ணன்களுடன் தாகூர் போய் உட்கார்ந்தார். அப்போது அவர் கையிலே ஒரு முடிச்சைக் கொடுத் தார்கள். அதில் ரூபாய்கள் இருந்தன. சபாஷ்" சொல்லும்போதெல்லாம் ஒவ்வொரு ரூபாயாக மேடையில் வீசவேண்டும் என்றர்கள். அப் படியே தாகூர் வீசினுர், அந்தக் காலத்தில் பணக்காரர்கள், அங்த மாதிரிதான் ரூபாய் களே மேடையிலே வீசுவார்கள். நடிகர்கள் அந்த ரூபாய்களை எடுத்துக் கொள்வார்கள். இது அவர்களுக்கு மேல் வரும்படி !
சிறிய வயதிலே சிற்றப்பா எழுதிய காட கத்தைப் பார்த்த தாகூர், பிறகு தாமே பல காடகங்களை எழுதினர். நாடகங்கள் மட் டுமா ? கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதினுர், அவை மூலமாக உலகப் புகழ் பெற்றர். அவரது கீதாஞ்சலி? எ ன் ற கவிதை நூல் நோபல் பரிசு பெற்றதுதான் உங்களுக்குத் தெரியுமே! அவர் எழுதிய
தேசீய கீதத்தை காம் பாடாத நாள் உண்டா?
60

பலிக்காத வாக்கு!
வகுப்பிலே சமஸ்க்ருதப் பாடம் கடந்து கொண்டிருந்தது. சமஸ்க்ருத ஆசிரியர் வாழ்க்கையைப் பற்றியும், ஆயுளைப்பற்றி யும் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது வகுப்பில் உட்கார்ந்திருந்த ஒரு மாணவனைச் சுட்டிக் காட்டி * இதோ இந்த விஸ்வேஸ்வரஜனப் பாருங்கள். ஒல்லி யாக கோஞ்சானுக இருக்கிறன். இப்படியே இருந்தால் 30 வயது முடிவதற்குள், இவன் ஆயுளே முடிந்துவிடும் " என்றர்.
ஆளுல்ை கல்லகாலம்; அந்த ஆசிரியரின் வாக்கு பலிக்கவில்லை. அந்த விஸ்வேஸ்வரன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அந்த
61

Page 33
ஆசிரியரின் வாக்கைப் பொய்யாக்கி விட் டான். ஆளுல்ை, அவன் சாதாரண விஸ்வேஸ் வரணுக வாழவில்லை.இந்த உலகமே போற்றிப் புகழும் விஸ்வேஸ்வரனுக வாழ்ந்தான். இல் லாத போனல், அவரது நூற்றண்டு விழாவை இந்தியா முழுவதும் கோலா கலமாகக் கொண் டாடி யிருப்போமா ?
டாக்டர் எம். விஸ்வேஸ்வரய்யா என்ருல் ஓ அவரைத் தெரியுமே! அவர் மிகப் பெரிய பொறிஇயல் நிபுணரல்லவா ? மைசூர் திவாளுை யிருந்து மைதுர்ப் பல்கலைக் கழகம், மைதர் பாங்க், கிருஷ்ண சாகர் அணைக்கட்டு, பத்ரா வதி இரும்பு உருக்குத் தொழிற்சாலை ஆகிய வற்றை யெல்லாம் நிறுவியவரல்லவா ? பாரத ரத்ன" பட்டம் பெற்றவரல்லவா? என்றெல் லாம் புகழத் தொடங்கி விடுவீர்கள் !
சிறு வயதிலே விஸ்வேஸ்வரய்யா பாடங் களே ஒழுங்காகப் படிப்பார். ஆசிரியர்களிடம் மரியாதையாக கடந்து கொள்வார். சோம்பல் என்பதை அவரிடம் காணவே முடியாது. அவருடைய நல்ல குணங்களைக் கண்டு அவ ரிடம் மிகுந்த அன்பு காட்டினர், அவருடைய ஆசிரியர்களில் ஒருவர். காதமுனி காயுடு என் பது அவரது பெயர். அவர் விஸ் வேஸ் வரனைப் பார்த்து, நீ தினமும் மாலை வேளை யில் என் வீட்டிற்கு வா. நான் உனக்கு இல வசமாகப் பாடம் சொல்லித் தருகிறேன்" என்றர்.
62

விஸ்வேஸ்வரய்யாவின் அப்பாவோ மிக வும் ஏழை. ஏழைப்பிள்ளை சம்பளம் கொடுத்து வீட்டுப் பாடம் வைத்துக்கொள்ள முடியுமா? அந்த ஆசிரியரின் அன்பாலும் ஆதரவாலும் தினமும் மாலை வேளையில் அங்கே சென்று படித்து வருவார்.
கீழ் வகுப்பில் படிக்கும் போது அவர் ஆசிரியர் வீட்டுக்குப் போய்ப் பாடம் படித்து வங்தார். மே ல் வகுப்புக்குச் சென்றபின் அவரிடம் சில மாணவர்கள் பாடம் படித்து வந்தார்கள். ஆம், ஏழைப்ாக இருந்ததால் அவர் கல்லூரியில் படிக்கும்போது கீழ் வகுப்பு மாணவர் சிலருக்கு வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தார். அதில் கிடைத்த வரும்படியைக் கொண்டுதான் அவரா ல் கல்லூரியில் படிக்கமுடிந்தது.
ஆரம்பப் பள்ளியில் நாதமுனி நாயுடு எவ்வளவு அன்பாக இருந்தார் ! அதேபோல்; கல்லூரியில் படித்தபோது கல்லூரி முதல்வ ரான சார்லஸ் வாட்டர்ஸ் என்ற ஆங்கிலேயர் விஸ்வேஸ்வரய்யாவிடம் மிகவும் பிரியமா யிருந்தார். விஸ்வேஸ்வரய்யாவின் புத்தி நுட் பம், கடமை உணர்ச்சி, கல்லொழுக்கம் முதலியவற்றை அவர் அ டி க்க டி பாராட் டுவார். ஒரு சமயம் அவர், விஸ்வேஸ்வரா, இதோ இந்த அகராதியை என் அன்பளிப் பாக ஏற்றுக்கொள். உனக்கு உதவியாயிருக்
63

Page 34
கும்”, என்று கூறி வெப்ஸ்டர் அகராதி ஒன் றைக் கொடுத்தார்.
வாட்டர்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ற பிறகும் விஸ்வேஸ்வரய்யா அவரை மறக்கவில்லை. பேரும் புகழும் பெற்ற பிறகு, இங்கிலாந்துக்கு அவர் அடிக் கடி செல்வதுண்டு. அப்போதெல்லாம் அவர் வாட்டர்ஸ் வீட்டுக்குப்போய் அவரைக் கண்டு தமது மரியாதையைத் தெரிவித்து வருவார்.
வாட்டர்ஸ் இறப்பதற்கு முன்பு தம் முடைய மனைவியை அருகிலே அழைத்தாராம். *நான் இறந்த பிறகு, நீ இந்தக் கைப் பொத் தான் களை எடுத்துக்கொண்டு இந்தியா செல்லவேண்டும். அங்குள்ள என் மாண வராகிய சர். விஸ்வேஸ்வரய்யாவிடம் என் நினைவாக இவற்றைச் சேர்ப்பிக்க வேண்டும்? என்று கூறி, தங்கத்தால் ஆன ஒரு ஜோடி கைப் பொத்தான்களைக் கொடுத்தாராம்.
அவர் விரும்பியதுபோல், அந்த அம் மையார் இந்தியா வங்து விஸ்வேஸ்வரய்யா விடம், அப்பொத்தான்களைக் கொடுத்தாராம். விஸ்வேஸ்வரய்யா கடைசி காலம்வரை அங் தப் பொத்தான்களைக் கண்ணேபோல் கருதிப் போற்றி வந்தார்.
மாணவரிடத்திலே ஆசிரியருக்கு எத் தகைய அன்பு 1 ஆசிரியரிடத்திலே மாண வருக்கு எத்தகைய பக்தி !
64

தங்தையும், மகனும் தெருவிலே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எ தி ரே ஒரு வண்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியை மாடு இழுக்கவில்லை; குதிரையும் இழுக்கவில்லை. தானுகவே அது நகர்ங் து வந்தது. அதைப் பார்த்தான் அங்தச் சிறுவன். அவனுக்கு வியப்பாக இருந்தது.
உடனே ? அப்பா அப்பா ! இது என் னப்பா தானுக வருகிறதே? என்றன். தங்தையும் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டு அங்கேயே அடித்துவைத்த சிலை போல் நின்றுவிட்டார்.
65

Page 35
ஆணுல் அங்தச் சிறுவன், அங்கேயே நிற்கவில்லை. வேகமாக அந்த வண்டியை கோக்கி ஓடினன். கையைக் காட்டி அந்த வண்டியை நிறுத்தினன். வண்டி நின்றதும், ஒரே தாவில் அங்த வண்டியில் அவன் ஏறி ஞன். வண்டி ஒட்டியின் அருகிலே போய் நின்றுகொண்டு, ஐயா, மன்னித்துக் கொள் ளுங்கள். இதற்குமுன் கான் இதுமாதிரி வண் டியைப் பார்த்ததே இல்லை. இது என்ன வண்டி? எப்படி இது தானுக ஓடுகிறது ? என்று ஆவலாகக் கேட்டான்.
வண்டி ஒட்டி அந்தச் சிறுவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒருமுறை பார்த் தார். அப்போது அவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவன் அவ்வளவு ஆர்வமாகக் கேள்வி கேட்டது வண்டி ஓட் டிக்கு வியப்பாக இருந்தது. உடனே அவர், இங்கு ஒரு சாலை போடப் போகிறர்கள். அதற்காகத்தான் இதை ஒட்டிச் செல்கிறேன். இதன் பெயர் ரோடு-என்ஜின்’. நீராவியால் இது ஓடுகிறது” என்றர்.
சிறுவன் உடனே வண்டியிலிருந்த பல பகுதிகளையும் கூர்ந்து பார்த்தான். எப்படி இது வேலை செய்கிறது? மணிக்கு எத்தனை மைல் போகும் ?? என்று கே ள் வி மேல் கேள்விகளே அடுக்கிக்கொண்டே போனன். வண்டி ஒட்டியும் பொறுமையாகப் பதில் கூறி
66

னுர், எல்லா வற்றையும் அவன் கவனமாகக் கேட்டுக் கொண்டான்.
அன்றே அச் சிறுவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. மனிதர்களை ஏற்றிச் செல் லக்கூடிய வண்டிகளைச் செய்ய வேண்டும். மிக வேகமாக அவை ஒடும்படி செய்ய வேண் டும்’ என்பதுதான் அவனுடைய ஆசை. அடிக் கடி அதைப் பற்றியே அவன் நினைத்தான்.
பதின்மூன்றவது வயதில் கடிகாரங் களைப் பழுதுபார்க்க அவன் கற்றுக் கொண் டான். எங்தக் கடிகாரத்தைக் கொடுத்தாலும், மிக எளிதாகப் பழுது பார்த்துவிடுவான். ஒரே ஆண்டில் 300 கடிகாரங்களை அவன் பழுது பார்த்திருக்கிறன் !
எல்லோரும் அவனுடைய திறமையைப் பாராட்டினர்கள். ஆளுலுைம், அவனுடைய அப்பாவுக்கு அவன் செய்கை பிடிக்கவில்லை, அவர் ஒர் உழவர். தன்னைப் போலவே தன் மகனும் ஓர் உழவனுக வேண்டும் என்றே விரும்பினுர். ஆணுலும், என்ன செய்வது? மக னுடைய ஆசை அளவு மீறிப் போய் விட் டதே !
அவன் ஓர் எங்திரத் தொழிற்சாலையில் சேர்ந்தான், பகலிலே தொழிற்சாலையில் வேலை செய்வான். இரவிலே, வேகமாக ஓடும் வண் டியை எப்படிக் கண்டு பிடிப்பது எ ன் று ஆராய்ச்சி செய்வான். பல நாள் முயன்றன்.
67

Page 36
கடைசியில் அவன் முயற்சி வெற்றிபெற்றது. 1893ல் அவன் மோட்டார் வண்டியைக் கண்டு பிடித்தான். பிறகு சொந்தமாக ஒரு மோட் டார்க் கம்பெனியைத் தொடங்கினுன். ஆயிரக் கணக்கான மோட்டார்களைச் செய்தான். உல கம் எங்கும் அவன் மோட்டார்கள் சென்றன. நல்ல கிராக்கி ஏறபட்டது. லட்சம் லட்சமாக அவன் சம்பாதித்தான். ஏழை உழவனின் மக ஞய்ப் பிறந்த அவன், உலகிலேயே மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவன் ஆஞன். மோட்டார் மன்னன்? என்று உலகமே அவ
னைப் புகழ்ந்தது.
அவன் ஏற்படுத்திய மோட்டார்க் கம்பெனி யில் இப்போது 300 இலாகாக்கள் இருக்கின் றன. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமாகப் பல ரப்பர்த் தோட்டங்கள் உண்டு. பருத்தித் தோட்டங்கள் உண்டு. இவை மட்டுமா ? இரும்புச் சுரங்கங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் சாமான்களை ஏற்றிச் செல்லத் தனி ரயில் பாதைகள் எல்லாம் இருக்கின்றன !
அவன் கம்பெனியில் தயாரான மோட் டார் கார்கள் உலகப் புகழ் பெற்றன. போர்ட் மோட்டார்? என்ற பெயரைக் கேள்விப்பட் டிருப்பீர்களே ! ஹென்றி போர்ட் என்ற அமெ ரிக்கச் சிறுவனின் விடாமுயற்சி வெற்றி பெற் றது என்பதையே அந்த மோட்டார் கமக்கு எடுத்துக் காட்டுகிறது!
6S

விடுமுறை வந்துவிட்ட்ால் போதும், அம் மாவும் மூன்று குழங்தைகளும் வீட்டை விட் டுப் புறப்பட்டுவிடுவார்கள். பகல் உணவைக் கையிலே எடுத்துக் கொள்வார்கள். ஆற்றங் கரைக்கோ அல்லது பக்கத்திலுள்ள காட் டுக்கோ போவார்கள். அங்கே பகல் முழு வதும் தங்கிவிட்டு, இரவுதான் வீடு திரும்பு GTI (95GT.
அந்த மூன்று குழங்தைகளிலே இருவர் ஆண்கள்; கடைக்குட்டி பெண்.
அவர்களுடைய அப்பா ஒரு மதகுரு.மதப் பிரசாரம் செய்வதற்காக அவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். பெரும்பாலும்
69

Page 37
வீட்டில் தங்கமாட்டார். விடுமுறை காட் களில், அம்மாதான் அவர்களை வெளியிலே அழைத்துச் சென்று, இயற்கைக் காட்சிகளை யெல்லாம் காட்டுவாள். ஆற்றங்கரையிலோ, காட்டிலோ தங்கியிருக்கும்போது, அம்மா அவர்களுக்கு இனிக்க இனிக்கக் கதைகள் சொல்லுவாள். ஏதேனும் ஒரு பறவையின் குரல் கேட்டால், உடனே, "இது எங்தப் பற வையின் குரல் ? சொல்லுங்கள், பார்க்கலாம்" என்பாள். சரியாக ஒரு குழந்தை சொல்லி விட்டால், உடனே அந்தக் குழங்தையைத் தட்டிக் கொடுப்பாள் கட்டிப் பிடித்து முத் தம் கொடுப்பாள்.
யாருக்குமே தெரியாத போனுல், அங் தப் பறவை இந்தப் பக்கமாக வரும். வரும் போது காட்டுகிறேன்? என்பாள். அவ்வாறே அந்தப் பறவை அந்தப் பக்கம் வரும்போது காட்டுவாள். இ த ( ைல், எல்லாப் பறவை களையும் அவர்கள் கன்ருகத் தெரிந்து வைத் திருந்தார்கள். அவற்றி ன் குரல்களையும் எளிதில் கண்டு கொள்வார்கள்.
ஒருகாள், ஆண் குழங்தைகள் இருவரும் ஆற்றங்கரையிலே மீன் பிடித்துக் கொண் டி ரு ங் தார் க ள். அம்மாவும் அருகிலே இருந்தாள். தூண்டிலில் வெகு ாேக ரம் வரை மீன் விழ வில் லை. பொறுமையாக அவர்கள் காத்திருந்தார்கள். அப்போது, ஒரு
70

பெரிய பறவை பறந்துவங்தது. அது லேபக்” கென்று தண்ணிருக்குள் பாய்ந்தது. தன் அலகினுல், ஒரு மீனைக் கொத்திக்கொண்டு மேலே பறந்து சென்றது.
அதைப் பார்த்தான் மூத்த பையன். உடனே அம்மாவிடம், 'அம்மா, அம்மா, பார்த் தாயா ? கண் மூடிக் கண் திறப்பதற்குள் அங் தப் பறவை மீனைத் தூக்கிக்கொண்டு பறந்து விட்டது! எப்படி அம்மா அந்தப் பறவை யால் நினைத்தபடி பறக்க முடிகிறது?என்று கேட்டான்.
சிேறகுகளினுல்தான் அது பறக்கிறது. அதன் சிறகுகள் அசைவதைப் பார்த்தாயா?* என்ருள் அம்மா.
*அது சரி. ஆனல், கீழே இறங்கும்போது சிறகுகள் அசையவே இல்லையே?
அம்மா அதற்குப் பதில் சொல்ல முயன் ருள். சிறுவனுக்கு அது அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.
'அம்மா, கமக்கும் சிறகு இருந்தால். p பறவையைப் போல வானத்திலே பறக்கலாம் அல்லவா ?
'பறக்கலாம். ஆணுல், ஆண்டவன் கமக் குச் சிறகுகளைப் படைக்கவில்லையே ?
ஆேண்டவன் படைக்காது போ னு ல் என்ன ? காமே சிறகுகள் செய்து கொள்ள முடியாதா?
71

Page 38
முேடியுமோ, என்னவோ, எனக்குத் தெரியாதப்பா. யாரும் சிறகு கட்டிக்கொண்டு பறந்ததாகத் தெரியவில்லை.?
"அப்படியானல், நான் பறந்து காட்டு கிறேன். என்ருவது ஒரு காள் பறந்து காட்டு வேன்.?
அேண்ணு கூடவே நானும் பறப்பேன்? என்று மகிழச்சி பொங்கக் கூறினன் அரு கிலே இருந்த தம்பி.
சேரி, இப்போது பறந்து விடாதீர்கள். கொஞ்சம் வயதாகட்டும்” என்ருள் தாய் சிரித் துக்கொண்டே
கேம் பிள்ளைகள் கெட்டிக்காரப் பிள் 2ள கள் தா ன் எ ன் று மனத்திற்குள்ளே சொல்லிக் கொண்டாள். பிற்காலத்தில் அவர் க2ளக் கெட்டிக்காரர்கள் என்று இந்த உலகமே மனம் விட்டுப் பாராட்டத் தொடங்கி விட்டது.
சிறிய வயதிலே,வானத்தில் பறக்கவேண் டும் என்று ஆசைப்பட்ட அச்சிறுவன் பெயர் வில்பர் ரைட் அவன் தம்பி பெயர் ஆர்வில் ரைட்.1903ஆம் ஆண்டில் பறக்கும் இயங்திரத் தைக் கண்டுபிடித் து வானத்திலே பறக்க விட்டவர்கள் அவர்கள்தான். ரைட் சகோ தரர்கள் என்னும் அவர்களது விடாமுயற்சி யால்தான் இன்று விமானம் பறப்பதை நாம் பார்க்கின்ருேம்.
72

ராஜ்கோட் நகரில் திவானக ஒருவர் இருங் தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவ னுக்கு ஏழு வயதிருக்கும். அதே ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் பெயர் கோகுல் தாஸ் மகன்ஜி. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கும் கிட்டத்தட்ட அந்தப் பையனின் வயதுதான். வியாபாரியும் திவா னும் கெருங்கிய நண்பர்கள். அவர்கள் தங் களுடைய கட்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கென்று ஒரு திட்டம் போட்டார்கள். அது என்ன திட்டம் ?
வியாபாரியின் மகளுக்கும், திவானுடைய மகனுக்கும் சில ஆண்டுகளில் திருமணம்
259-6 73

Page 39
செய்துவைப்பது என்பதுதான் அவர்கள் போட்ட திட்டம். அப்போது அந்தப் பெண் ணும் பையனும் ஏழு வயதுச் சிறுவராக இருங் தார்கள்.
அப்போதே நிச்சயதார்த்தம் கடக் துவிட் டது. ஒரு பையனுக்கும், ஒரு பெண்ணுக் கும் கல்யாணம் செய்வதென்று, அந்த இரு வரது பெற்றேர்களும் முதலிலே நிச்சயம் செய்து கொள்வதைத்தான் நிச்சயதார்த்தம் என்கிருர்கள்.
அதற்கு முன்பே அந்தப் பையனுக்கு இரண்டு த ட  ைவகள் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. முதலில் ஒரு பெண்ணை நிச் சயம் செய்தார்கள். ஆணுல், அவள் சில காட் களிலே இறந்துவிட்டாள். பிறகு மற்றெரு பெண்ணை நிச்சயம் செய்தார்கள். அவளும் இறந்து போனள். நல்ல வேளையாக, மூன்ற வதாக நிச்சயம் செய்யப்பட்ட அந்த வியா பாரியின் மகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை !
நிச்சயதார்த்தம் செய்து ஆறு ஆண்டு கள் ஆயின. அப்போது அந்தப் பெண் ணுக்கு வயது பதின்மூன்று. பையனுக்கும் அதே வயதுதானே 1 அங்த வயதில் இருவருக் கும் திருமணம் நடந்தது. திருமணம் என் ருல் என்ன என்பது அந்தப் பெண்ணுக்கும் தெரியாது; பையனுக்கும் தெரியாது. பேட் டுச் சேலை கட்டலாம்; பளபளக்கும் நகைகள்
74

அணியலாம்? என்றுதான் அந்தப் பெண் நினைத்தாள்.
திருமணத்தன்று மாப்பிள்ளைப் பையன் புதுச் சரிகை வேட்டி கட்டி, சரிகைத் தொப்பி அணிந்திருந்தான். சின்னப் பல்லக்கிலே அவனை உட்கார வைத்து, பெண் வீட்டை கோக்கி மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குள் இருந்தவர்களெல் லாம் வெளியிலே ஓடிவந்தார்கள். தெருவிலே சென்றவர்களெல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
கல்யாணப் பெண்ணுக்கும் இந்த வேடிக் கையைப் பார்க்கவேண்டும் என்று ஆசை. பெரியவர்களுக்குத் தெரியாமல் அவள் பூனே போல் வாசலுக்கு வந்தாள். ஒரமாக நின்று கொண்டு, ஊர்வலத்தை எட்டி எட்டிப் பார்த் தாள். ஆலுைம், சிறிது நேரம்கூட அவளை அங்கு நிற்க விடவில்லை; பிடித்து உள்ளே இழுத்துச் சென்று, மணமேடையில் உட்கார வைத்து விட்டார்கள்.
திருமணம் ஆனபிறகு, நேம்முடன் விளை யாடுவதற்கு ஒரு தோழன் கிடைத்தான் ? என்று அந்தச் சிறுமி நினைத்தாள். அந்தப் பையனும் அப்படித்தான் கினைத்தான்.
அந்தப் பெண்ணுக்கு, எழுதப் படிக்கத் தெரியாது.படிக்காத பெண்ணுக இருந்தாலும்,
75

Page 40
அவள் கல்ல பண்பு உள்ள பெண்ணுக இருங் தாள்.
இவள் படித்தவளாகவும் இருந்தால், இன்னும் எவ்வளவு நன்ருக இருக்கும்? என்று அந்தப் பையன் நினைத்தான். அவளுக் குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஆசைப் பட்டான் ; ஆணுல், பெற்றேர்கள் என்ன நினைப்பார்களோ எ ன் ற பயம். அதனுல், இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தான்.
அவள் பல நாட்கள் இராப் பாடம் படித் தாள். கடிதம் எழுதவும் எளிய கடைப் புத் தகங்களைப் படிக்கவும் ஓரளவு கற்றுக்கொண்
LGT
அவள் பெரியவளானள். பத்திரிகைகள் படிக்கத் தெரிந்து கொண்டாள். பாட்டி யாஞள். பகவத் கீதையைப் பக்தியோடு படிக்கத் தொடங்கினுள். பாராமல் ஒப்புவிக் கவும் அவளுக்குத் தெரிந்தது! Y
பாட்டியான பிறகும், எல்லாரும் அவளே அன்னை' என்றே அன்போடு அழைத்து வங் தார்கள். ‘பா’ என்றலே அன்னை என்று தான் பொருள்.
இந்தியர் அனைவருக்கும் அன்புள்ள அன்னையாக விளங்கிய கஸ்தூரி பா’தான் 13-வது வயதிலே மணப் பெண் ஆனவர் 1 மா ப் பிள் 2ள யான வர் யார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
76.

திருடன். L?g Tör.
பாம்பு.
இந்தப் பெயர்களில் எதைச் சொன்னு லும் போதும் ; மோகன் நடுநடுங்குவான். இரவில் வீட்டைவிட்டு வெளியில் வரவே மாட் டான். அறையில் இரவு முழுவதும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்; அப் போதுதான் அவனுக்குத் தூக்கம் வரும்.
மோகனுடைய அண்ணனுக்கு ஒரு கண் பன் இருந்தான். அவன் சில நாட்களில் மோகனுக்கும் நண்பன் ஆகிவிட்டான். அவன் கல்ல பலசாலி, தைரிய முள்ளவன்.
77

Page 41
ஒருங்ாள் அந்த கண்பன், மோகனேப் பார்த்துக் கூறின்ை : மோகன், உன்னைப் பார்க்கவே பரிதாபமாயிருக்கிறது. இவ்வளவு கோழையாக இருக்கிருயே! இப்படி கோஞ்சா (கை இருக்கிருயே! என்னைப் பார்; என் உடம் பைப் பார். நான் எவ்வளவு பலசாலியாக இருக்கிறேன்! விளையாட்டுக்களில் எவ்வளவு கெட்டிக்காரணுக இருக்கிறேன் ! இதற்கெல் லாம் என்ன காரணம், தெரியுமா ? நான் மாமிசம் சாப்பிடுகிறேன் !
நீே ஆங்கிலேயர்களைப் பார்த்திருப்பாயே, அவர்கள் எப்படி இருக்கிருர்கள்? கொழு கொழு’ என்று இருக்கிருர்கள்! நம்மையெல் லாம் அடக்கி ஆளுகிறர்கள். இதற்கு க் காரணம் என்ன தெரியுமா ? அவர்கள் மாமி சம் சாப்பிடுகிறர்கள் ! அவர்களைப் போல் காமும் மா மி சம் சாப்பிடவேண்டும். அப் போதுதான் பலசாலி ஆகமுடியும். அவர் களை கம் காட்டை விட்டு விரட்டியடிக்க முடி யும்; விரைவிலே சுதந்திரம் பெற முடியும். மாமிசம் சாப்பிடுவதில் உள்ள நன்மை, சொன் ஞல் புரியாது. சாப்பிட்டுப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்.”
மோகனுக்குப் பலசாலியாக வேண்டும், பயமில்லாமல் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், மாமிசம் சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை.
78.

ஆளுலுைம், அந்த நண்பன் விடவில்2ல. திரும்பத் திரும்ப மாமிசத்தின் மகிமையை எடுத்துக் கூறிவந்தான். கரைப்பார் கரைத் தால் கல்லும் கரையும் என்பார்கள். அதே போல், மோகனுடைய மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது.
ஆனல், மாமிசத்தை எங்கு வைத்துச் சாப்பிடுவது? யாராவது பார்த்துவிட்டால்...? அம்மா அப்பாவுக்குத் தெரிந்து போனல்.? அவனுக்குப் பயமாகவே இருந்தது.
ஆளுல்ை, அந்த கண்பன், 'மோகன், வீணு கப் பயப்படாதே. நாம் இருவரும் ஆற்றங் கரைக்குப் போவோம். எவரும் வராத இடத் தில் உட்கார்ந்து மாமிசம்’ சாப்பிடுவோம். மனத்தைத் திடப்படுத்திக் கொள்’ என்று தைரியம் கூறினுன்.
அவன் சொன்னபடியே இருவரும் ஆற் றங்கரைக்குச் சென்றர்கள். மறைவான ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். காகிதத்தில் மடித்து வைத்திருந்த ஆட்டு மாமிசததை நண்பன் வெளியே எடுத்தான். மோகனிடம் கொடுத்தான். மோகன் அதை வாயின் அரு கிலே கொண்டுபோகத் தயங்கினுன்.
உேம், என்ன தயக்கம் ? சாப்பிடு? என் ருன் நண்பன்.
மோகன் கண்களை கன்ருக மூடிக்கொண் டான். கசப்பு மருந்து சாப்பிடுவதுபோல் வேண்டா வெறுப்புடன் மாமிசத்துண்டை
79

Page 42
வாய்க்குள்ளே போட்டான். அப் போது அவன் உடல் நடுநடுங்கியது. வியர்வை கொட்டியது. அதற்குயேல் அவனுல் அங்கு இருக்க முடியவில்லை. எழுந்து வீடு வந்து சேர்ந்தான்.
அன்று இரவு முழுவதும் மோகனுக்குத் தூக்கம் வரவில்லை. கண்களை மூ டி ஞ ல் போதும்; வயிற்றுக்குள்ளே ஓர் ஆடு வந்து கிற்பதுபோல் இருக்கும். அது சும்மா நிற் காது. மே, மே" என்று கதறும் ! அப்போது மோகனின் உள்ளம் படாதபாடு படும். பரம சாதுவான ஆட்டைக் கொன்று தின்பதா? சே, இனி உயிருள்ளவரை மாமிசத்தைத் தொடமாட்டேன்? என்று அப்போது அவன் உறுதி எடுத்துக்கொண்டான்.
சாகும்வரை அவன் எந்த உயிரையும் கொன்று தின்றதில்லை. அது மட்டுமா? எங்த உயிருக்கும் தீங்கு செய்ததும் இல்லை; தீங்கு கினைத்ததும் இல்லை.
மாமிசம் சாப்பிட்டால்தான் ஆங்கிலே யரை விரட்ட முடியும், சுதந்திரம் பெற முடி யும் என்று சொன்(னைல்லவா அந்த கண் பன் ? ஆனல், மாமிசம் சாப்பிடாமலே, அன்பு வழியில் ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு விடு தலை வாங்கித் தந்தான் அந்த மோகன் !
அங்த மோகன் யார் என்பது உங் களுக்கா தெரியாது!
கம் தேசத் தங்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியேதான் !
80

அண்ணன் பெயர் விளாதிமிர்.
தங்கை பெயர் ஒல்யா.
இருவரும் எப்பொழுதும் ஒன்றகவே விளையாடுவார்கள். தோட்டத்தில் அண்ணன் ஓடுவான்; தங்கை அவனைத் துரத்துவாள். மரத்தின்மீது அவன் விறுவிறு என்று ஏறு வான். அவளும் தட்டுத் தடுமாறி எப்படியோ ஏற முயலுவாள். அவன் கிளைவழியாக கடந்து சென்று, தொப்பென்று கீழே குதிப் பான். அவள் மரத்தை விட்டு இறங்கி மீண் டும் துரத்துவாள்.
இப்படியே இருவரும் ஓடிப் பிடிக்கும் விளையாட்டில் மும்முரமாக ஈடுபடுவார்கள்.
81

Page 43
தோட்டத்தில் மட்டுமல்ல; வீட்டுக்குள் ளேயும் அவர்கள் இப்படி விளையாடுவார்கள். அப்பொழுது அவாகள் பலமாகக கூச்சல் போடுவார்கள். * ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? என்று சில சமயங்களில் அம்மா கோபித்துக் கொள்வாள். அம்மா வுக்கு எவ்வளவுதான் கோபம் வந்தாலும், குழங்தைகளை அடிக்கவே மாட்டாள். கோபம் அதிகமாக வந்துவிட்டால், அவள் என்ன செய்வாள், தெரியுமா?
அப்பாவின் அறையிலே கைபிடியுடன் கூடிய ஒரு கறுப்பு காற்காலி இருக்கும். எங்தக் குழங்தையாவது தவறு செய்தால், அங் தக் குழந்தையை அங்தக் கறுப்பு நாற்காலி யில் அம்மா உட்கார வைத்துவிடுவாள். எங் கும் போகக்கூடாது. இங்கேயே உட்கார்ங் திருக்கவேண்டும். நான் போகச் சொன்னுல் தான் போகலாம்? என்று கண்டிப்பாக உத் தரவு போட்டுவிடுவாள். குழங்தைகளை காற் காலியுடன் சேர்த்துக் கயிற்ருல் கட்டிவைக்க மாட்டாள். ஆளுலுைம், கட்டிவைத்தது போல் அவர்கள் ஆடாமல் அசையாமல் காற்காலி யில் உட்கார்ந்திருப்பார்கள்.
சிறிது நேரம் சென்றதும், அம்மா காற் காலியின் அருகிலே வருவாள். எேன் கண் ணல்லவா ? நீ தப்பு செய்யலாமா? இனி செய்யக்கூடாது. போய் விளையாடு’ என் Lustoir.
82

ஒருங்ாள் விளாதிமிர் ஏதோ ஒரு சிறு தவறு செய்துவிட்டான். அதனுல், அம்மா அவனைக் கறுப்பு நாற்காலியில் உட்காரவைத் தாள். வழக்கம்போல் சிறிது கே ரத் தி ல் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்றே அவன் கினைத்தான். ஆணுல், இரண்டு மூன்று மணி நேரமாகியும் அம்மா வரவில்லை. அப் படியே நாற்காலியில் சாய்ந்து தூங்கிவிட் டான். வேலை மும்முரத்தில் அவன் காற்காலி யில் இருப்பதை அம்மா மறந்துவிட்டாள்.
வெகு நேரம் சென்ற பிறகே, அடடே, பிள்ளையை எவ்வளவு நேரம் உட்கார வைத்து விட்டோம் ? என்று நினைத்தாள். உடனே கறுப்பு காற்காலியை கோக்கி ஓடினுள். விளா திமிர் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவனைக் கீழே இறக்கிக் கட்டி லில் படுக்கப் போட்டாள்.
ஒரு சமயம் விளாதிமிர் ஒரு மைனுவைப் பிடித்து வந்து கூட்டிலே அடை த் து வளர்த்துவங்தான். ஆணுல், அந்த மைனு அதிகாகாள் உயிரோடு இருக்கவில்லை. உடல் மெலிந்து, உரோமம் உதிர்ந்து விரைவிலே இறந்துவிட்டது. இறந்துபோன மைனுவைக் கண்டதும், அவன் கண்கள் கலங்கின. சுதங் திரமாகப் பறந்து திரிந்த பறவையைக் கூட் டிலே அடைத்துக் கொடுமைப் படுத்தினேன். கூட்டைவிட்டுப் போக முடியவில்லை. அத ஞல் இந்த உலகத்தை விட்டே போய்விட்
S3,

Page 44
டதே ’ என்று முணுமுணுத்தான். அதே சம யம் அவன்,'இனி நான் எந்தப் பறவையையும் கூண்டில் அடைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துக்கொண்டான்.
அந்த காளில் வசந்த காலம் வங்தால், கூண்டுப் பறவைகளுக்கெல்லாம் விடுதலை கிடைக்கும். பறவை வளர்ப்பவர்கள் கூண்டு களைத் திறந்து பறவைகளைப் பறக்க விடு
6956
விளாதிமிர்தான் பறவைகளைக் கூண்டில் அடைப்பதில்லையே! அ த ஞ ல் அவன் அம்மாவிடம் காசு வாங்கி அந்தக் காசில் பறவை வியாபாரியிடமிருந்து ஒரு பற வையை வாங்குவான். வாங்கியவுடனே, அதைத் தூக்கி மேலே எறிவான். அது சிற கடித்துப் பறந்து செல்லும்.அதைப் பார்த்துப் பார்த்து அவன் ஆனந்தக் கூத்தாடுவான்.
அன்று பறவைக்கு விடு த லை வாங் கிக் கொடுத்த விளாதிமிர், பிற்காலத்தில் மக் களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க நினைத் தான். அதற்காக அரும்பாடுபட்டான். பெரும் புரட்சியை 50 ஆண்டுகளுக்கு முன்பு, முன் னின்று கடத்தினுன்.
புதிய ரஷ்யாவை-இன்றுள்ள சோவியத் நாட்டை நிறுவிய லெனின் அவர்களின் இளமைப் பெயர்தான் விளாதிமிர் என்பது!
84

ஏழு வயதுச் சிறுவரா யிருந்தபோதே இங்கிலாந்து சென்றவர் அரவிந்தர்!
அரவிந்தருடைய அப்பா ஒரு பெரிய டாக் டர். டாக்டர் கிருஷ்ணதன் கோஷ் என்பது அவரது பெயர். இங்கிலாந்தில் மேல் படிப் புப் படித்தவர். ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களும், கடை உடை பாவனைகளும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
ஆகையால், அவர் தம்முடைய மூன்று பிள்ளைகளையும் ஆங்கில அதிகாரிகள் படிக் கும் பள்ளியிலே சேர்த்தார். வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு வெள்ளைக்கார அம்
85

Page 45
மையாரையும் ஏற்பாடு செய்தார். அந்த அம் மையார் ஆங்கில மொழியையும், ஆங்கிலேய ரின் பழக்க வழக்கங்களையும் அந்தப் பிள்ளை களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
இப்படியிருந்தும் டாக்டர் கோஷாக்குத் திருப்தி ஏற்படவில்லை. என்ன இருந்தாலும் இங்கிலாந்தில் படிப்பது போல் ஆகுமா..? என்று அவர் அடிக்கடி நினைப்பார்.
அவருக்கு ஒரு வெள்ளைக்கார நீதிபதி யைத் தெரியும். அங் த நீதிபதியிடம் தம் முடைய ஆசையை வெளியிட்டார். உடனே அந்த நீதிபதி, பிேள்ளைகள் படிப்பைப் பற் றிக் கவலைப்பட வேண்டாம். என் உறவினர் ஒருவர் மாஞ்செஸ்டர் நகரில் பாதிரியாக இருக் கிருர். அவர் வீட்டில் உங்களுடைய மூன்று பிள்ளைகளும் தங்கிப் படிக்கலாம்.? என்றர். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் அவரே செய்தார்.
மூன்று பிள்ளைகளையும் இங்கிலாந்துக் குத் தனியாக அனுப்பலாமா?
டாக்டர் கோஷாம், அவருடைய மனைவி
யும் பிள்ளைகளோடு இங்கிலாந்துக்குப் புறப்
பட்டார்கள். மாஞ்செஸ்டர் நகரை அடைங்
தார்கள். அங்கே, பாதிரியாரிடம் குழங்தை
களே ஒப்படைத்தார்கள். சில நாட்களில்,
பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு, இந்தியா வுக்குத் திரும்பினுர்கள்.
86

சின்ன வயதிலே, அரவிந்தர் நிறைய நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பார். ஆங்கிலக் கவிதைகளைப் படிப்பதில், அவ ருக்கு ஒரு தனி விருப்பம். கவிதைகளைப் படிப்பதோடு அவர் நிற்கவில்லை; சொந்த மாகக் கவிதைகள் எழுதவும் ஆரம்பித்தார்.
இங்கிலாந்தில் இருந்தபோது, அரவிங் தரை எப்படியாவது கிறிஸ்தவ மதத்தில் சேர்த்து விடவேண்டும் என்று அந்தப் பாதிரி யாரின் தாயார் முயற்சி செய்தாள். ஆணுல், பாதிரியார் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
பத்து வயதுப் பையனு யிருந்தபோது அரவிந்தரை ஒரு நாள் மாதா கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். மாதா கோயி லில் ஏராளமான கூட்டம். எல்லோரும் விதம் விதமான உடைகள் உடுத்திப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.
சிறிது கேரத்தில் பிரார்த்தனை முடிந்தது. கூட்டமும் கலைந்தது. ஆஞலும், சிலர் மட் டும் அங்கேயே தங்கியிருந்தார்கள். அவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ மதத்தில் சேருவதற்காகவே வந்திருந்தார்கள். அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தார் அரவிந்தர்.
அப்போது மதகுரு அரவிந்தரைப் பார்த் துச் சில கேள்விகள் கேட்டார். அரவிந்தர் பதில் எதுவும் கூறவில்லை. மெளனமாகவே நின்றர்.
87

Page 46
அப்போது, அங்கே கூடியிருந்தவர்கள், இவன் காப்பாற்றப்பட்டான்.", "இவன் காப்பாற்றப்பட்டான்? என்று சத்தம் போட் டார்கள். பிறகு, எல்லோரும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். அரவிந்தரையும் அவ்வாறே பிரார்த்தனை செய்யும்படி சொன் ஞர்கள். அரவிந்தருக்கு ஒன்றுமே புரிய வில்லை. ஆளுனுலும், அவர் சும்மா இருக்க வில்லை; வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தார். அரவிந்தர் அப்போது கிறிஸ்தவ மதத் தில் சேர்ந்து விட்டதாகவே எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ஆணுல், கிறிஸ்தவ மதம் என்ருல் என்ன என்பதுகூட அந்த வயதில் அரவிந்தருக்குத் தெரியாது.
ஆளுல்ை, வளர்ந்து பெரியவரானதும் அவ ருக்குத் தெரியாத மதமே இல்லை. எல்லா மதங் களிலும் உள்ள உண்மைகளை உணர்ந்தார். எல்லா மதங்களையும் மதித்தார். பெரிய யோகியானர். பல புத்தகங்களை எழுதினர். புதுச்சேரியில் ஓர் ஆசிரமம் அமைத்தார். அதுதான் அரவிந்த ஆசிரமம்.
அந்த ஆசிரமத்தில் சாதி வேற்றுமை கிடையாது; மதவேற்றுமை கிடையாது; இன வேற்றுமை கிடையாது. எல்லா தேசத் தவரும் எல்லா மொழியினரும் அங்கே ஒன்ருக வசித்து வருகிறர்கள்; ஒன்று கூடிப் பிரார்த்தனை செய்கிறர்கள்!
88

அஞ்சா நெஞ்சன்
பள்ளி மாணவர்கள் சுற்றிலும் வட்ட மாக உட்கார்ந்திருக்கிறர்கள். நடுவிலே ஒரு கையில் பளபளக்கும் வாளுடனும், மற்ருெரு கையில் ஆப்பிள் பழத்துடனும் ஒரு வர் நின்று கொண்டிருக்கிறர். அவர் மாணவர் களைப் பார்த்து, 'தம்பிகளா! நான் இப்போது ஒரு வித்தை காட்டப் போகிறேன். இதோ இங்த ஆப்பிள் பழத்தை நான் ஒரு பையன் தலையில் வைப்பேன். வைத்துவிட்டு இந்த வா8ள வீசுவேன். இது ஆப்பிளை இரு துண்டு களாக வெட்டும். மேல் பகுதி பறந்துபோய்த் தூரத்தில் விழும். கீழ்ப் பகுதி அப்படியே பையன் தலைமேல் நிற்கும். ஆனலும், பைய னுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.” என்கிறர்.
I 259ー6 89

Page 47
உடனே அங்கு உட்கார்ந்திருக்கும் மாண வர்களின் கண்கள் அங்குமிங்குமாகத் தேடு கின்றன. பழத்தை யார் தலையில் வைக்கப் போகிருர் ? அவருடன் எந்தப் பையனும் வரவில்லையே!’ என்று சங் தே கப் படு கின்றனர்.
அப்போது அவர், தேம்பிகளா, இதோ என் வலது கையில் வாள் இருக்கிறது. இடது கையில் ஆப்பிள் இரு க் கிற து. பழத்தை வைத்து வெட்டுவதற்குத் தலைதான் வேண்டும். இங்கு எத்தனையோ வீராதி வீரர்கள் இருக்கிறீர்கள். ஒரு வீரன் முன் வங்தால் போதும்’ என்கிருர்,
எந்த மாணவனும் முன் வரவில்லை. ஒவ் வொரு மாணவனுகக் கையைக் காட்டி அழைக் கிருர்; பயனில்லை. அந்தப் பள்ளியில் கால் பங்தாட்டக் கோஷ்டிக்குத் தலைவனுக இருக் கிருன் ஒரு பையன். அவனுடைய கண் பர்கள் அவனைப் பிடித்து முன்னுல் தள்ளு கிருர்கள். ஆணுல், அவணுே பயங்து பின் வாங்குகிருன். 'இங்கு ஒரு தைரியசாலி கூட இல்லையா? என்று கேட்கிருர் வித்தைக்காரர்.
இதோ நான் இருக்கிறேன்" என்று கூறிக் கொண்டே ஒரு தாவுத் தாவி அவர் முன்னுல் வந்து மண்டியிட்டு உட்காருகிருன் ஒரு சிறுவன். ஆப்பிள் பழத்தை அவனது தலையிலே வித்  ைத க் கா ரர் வைக்கிருர்,
90

வைத்துவிட்டு வாளை ஒங்குகிருர், சிறுவன் சிறிதுகூட அஞ்சவில்லை. ஆடாமல் அசை யாமல் அப்படியே உட்கார்ந்திருக்கிறன்.
வித்தைக்காரர் சொன்னபடி செய்து காட்டுகிறர். பழம் இரண்டாகிறது. பைய னுக்கு எவ்வித ஆபத்துமில்லை. பெரியவரின் வித்தையையும், சிறுவனின் வீரத்தையும் மாணவர்கள் கைதட்டிப் பாராட்டுகிறர்கள்.
அவனுடைய பள்ளியிலே நீச்சல் குளம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிய குளம், அதன் குறுக்கே இரண்டு பாலங்கள் கூட இருந்தன. அந்தக் குளத்திலே அவன் தின மும் நீச்சலடிப்பான். கரையோரமாக ஒரு மாணவன் நின்றல் அவனுக்குப் பின்புற மாகப் பூனைபோல் செல்வான். லபக் கென்று அவனைப் பிடித்து உள்ளே தள்ளிவிடுவான்.
அவன் அங்தப் பள்ளிக்கு வந்த புதிதில், ஒரு நாள் இப்படித்தான் ஒரு மாணவனைப் பிடித்து வேடிக்கையாகத் தள்ளிவிட்டான். எப்போதுமே தன் வயதுப் பையன்களை அல்லது தன்னைவிடச் சிறியவர்களைத்தான் அவன் தள்ளுவது வழக்கம். அந்தப் பைய னும் பார்ப்பதற்கு மிகச் சிறியவன்போல் தான் இருங் தான். ஆணுல் உண்மையிலே அவன் வயதில் பெரியவன்; மேல் வகுப்பில் படிப்பவன் ; பள்ளி விளையாட்டுப் போட்டி களில் முதல் பரிசு பெறுபவன். அவன் சும்மா இருப்பானு? சண்டைக்கு வந்துவிட்டான்.
91

Page 48
*நான் யார் தெரியுமா? எப்படி நீ என்ஜினப் பிடித்துத் தள்ளலாம்” என்று கேட்டான்.
“உங்கள் உருவம் சிறியதாக இருந்தது. உங்களைக் கீழ் வகுப்பு மாணவன் என்று நினைத்து விட்டேன். என் அப்பாகூட மிகப் பெரிய மனிதர். ஆணுல் உருவத்தில் அவரும் சிறியவர்தான்.?
இதைக் கேட்டதும் கோபம் கொண்ட மாணவனுக்குச் சி ரி ப் பு வந்துவிட்டது. சேரி, போ..இனி இந்த மாதிரி வீண் வம்புக் குப் போகாதே’ என்று சொல்லி அனுப்பி விட்டான்.
சாமர்த்தியமாகத் தன் அ ப் பா  ைவ ப் பற்றிச் சொல்லி அவன் தப்பித்துக் கொண் டான். ஆணுலும், அவ ன் சொன்னதில் பொய்யே இல்லை. அவனுடைய அப்பா மிகப் பெரிய மனிதர்தான்; உருவத்திலே 'சிறியவர் தான். ஆம், இங்கிலாந்தின் நிதி அமைச்சராக இருந்த ராண்டல்ப் சர்ச்சில் அவனுடைய அப்பாதான். ஆணுல், அவனே பிற்காலத்தில் இங்கிலாந்தின் பிரதம அமைச்சராகவே ஆகி விட்டான்.
பெரிய பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், உயர்ந்த ராஜ தந்திரி என்றெல்லாம் உலகம் போற்றிய வின்ஸ்டன் சர்ச்சில், ராண்டல்ப் சர்ச்சிலின் மகன்தான் ! 参
92

அப்பாவின் மேசை மேல் ஒரு கிண்ணம் இருந்தது. நாலு வயதுச் சிறுவணுகிய ஆல் பர்ட் அதன் அருகில் சென்றன். கிண் ணத்தை உற்றுப் பார்த்தான். அதன் கடு விலே ஒரு கம்பி செங்குத்தாக இருந்தது. அதன் மேல் கடிகார முள்போல் ஒர் ஊசி பொருத்தப்பட்டிருந்தது. அவன் அதைக் கையில் எடுத்தான். அப்போது அந்த ஊசி மெதுவாக ஆடியது. கிண்ணத்தை இப்படி யும் அப்படியுமாக அவன் திருப்பினுன. எங் தப் பக்கமாகத் திருப்பினுலும் அங்த ஊசி தெற்கு வடக்காகவே நின்றது. மேற்குப் பக்க மாகத் திருப்பினுன். ஊசி தெற்கு வடக்கா
93

Page 49
கவே நின்றது. கிழக்குப் பக்கமாகத் திருப் பினுன். அப்போதும் அது தெற்கு வடக் காகவே கின்றது. அவனுக்கு வியப்பாக இருந்தது.
‘அப்பா, அப்பா’ என்று அழைத்தான். அப்பா அருகிலே வந்தார்.
**இது என்னப்பா? என்று கேட்டான். இதுதான் காங்த ஊசி. கப்பலில் செல் லும்போது திசை அறிவதற்கு இது உதவி யாக இருக்கும்” எ ன் று அப்பா பதில் சொன்னர். மின்சாரக் கருவிகளை விற்பனை செய்வதுதான் அவருடைய தொழில்.
அன்று முதல் அவர் கொண்டுவரும் மின் சாரக் கருவிகளை எல்லாம் ஆல்பர்ட் ஆசை ஆசையாகப் பார்ப்பான். இது என்ன ? அது என்ன ? என்று கேள்விகள் கேட்பான். அவன் கேட்கும் கேள்விகளைக் கேட்டு அப்பா இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார். "நம் மகன் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்கிருனே? என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி. முன்பெல்லாம் திக்கித் திக்கிப் பேசுவான். இப்போது சுத்த மாகப் பேசுகிருனே ? எ ன் று மற்ருெரு பக்கம் மகிழ்ச்சி.
ஆல்பர்ட் பிறந்து பல மாதங்கள் வரை பேசவே இல்லை. பேச ஆரம்பித்த பிறகும் புரியும்படி பேச மாட்டான். வாய் குளறும். போவம், ஒரே பிள்ளை. அதுவும் இப்படி
94

உளறுவாயாக இருக்கிறதே!” என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் அனுதாபப் படுவார்களாம்.
சின்னஞ்சிறு குழந்தையா யிருந்தபோது ஆல்பர்ட்டைப் பார்த்துப் பலர் அனுதாபப் பட்டார்கள். பள்ளியில் சேர்ந்த பிறகு பல மாணவர்கள் அவனைப் பார்த்து முகம் சுளித் தார்கள். காரணம்?
ஒருங்ாள் ஒர் ஆசிரியர் துருப்பிடித்த ஆணி ஒன்றை வகுப்புக்குக் கொண்டு வங் தார். 1 மாணவர்களே ! நம் ஏசுநாதரைச் சிலுவையில் அ ைற ங் து கொன்றவர்கள் யார்? என்று கேட்டார்.
யூதர்கள்? என்ருர்கள் மாணவர்கள். 6 ஏசுநாதரைக் கொல்ல உதவிய ஆணி எது தெரியுமா? இதோ இருக்கிறது” என்று அந்த ஆணியை மேலே தூக்கிப் பிடித்துக் காட்டினுர் ஆசிரியர்.
மாணவர்கள் அந்த ஆணியைப் பார்க்கீ வில்லை. ஆல்பர்ட்டையே முறை த் துப் பார்த்தனர். ஆல்பர்ட்டுக்கு இது அவமான மாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது. காரணம், அவன் யூதர் குடும்பத்திலே பிறங் தவன்.
இப்படி அனுதாபத்துக்கும் வெறுப்புக் கும் ஒரு காலத்தில் ஆளாகியிருந்த ஆல் பர்ட் பிற்காலத்தில் உலக மே போற்றும் ஒரு பெரிய விஞ்ஞானியானுன் 1 ஆல்பாட்
95

Page 50
ஐன்ஸ்டின் எ ன் ரு ல், 6 அடேயப்பா ! அவர் பெளதிகத்துக்குப் புத்துயிர் அளித்த மேதை யல்லவா! மிகப் பெரிய கணித நிபுணரல்லவா! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியல்லவா ? என்றெல்லாம் பாராட்டத் தொடங்கி விடு வீர்கள் !
ஆஞல், ஐன்ஸ்டினுக்குப் பாராட்டு என் ருலே பிடிக்காது.எப்போதும் அடக்கமாகவும், அமைதியாகவும், எளிமையாகவும் அவர் இருப்பார்.
ஒருங்ாள், பெர்லின் ககரில் டிராம் வண் டியில் ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண் டிருந்தார். அப்போது, டிராம் கட்டணம் செலுத்த அவரிடம் சில்லறை இல்லை. ஆகை யால், கோட்டு ஒன்றைக் கண்டக்டரிடம் நீட் டிஞர். நோட்டைப் பெற்றுக்கொண்ட கண் டக்டர், கட்டணம் போக மீதிச் சில்லறையை ஐன்ஸ்டினிடம் கொடுத்தார். சில்லறை சரி யாகத்தான் இருந்தது. ஆணுலும், எங்கோ கவனமாக இருந்த ஐன்ஸ்டின் சில்லறையை எண்ணிப் பார்த்துவிட்டு, ‘என்னப்பா, சரி யாக இல்லையே? என்றர்.
கண்டக்டருக்குக் கோ ப ம் வந்துவிட் டது. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. சாதாரணக் கூட்டல் கழித்தல்கூடத் தெரிய வில்லையே, உமக்கு ? என்று சீறி விழுந்தார்.
அவர் ஒரு பெரிய கணித மேதை என் பது, பாவம், அப்போது அந்தக் கண்டக்டருக் குத் தெரியாது!
96

பொம்மைக்குக் கண் வைத்தவள்
அவளுக்கோ கண் குருடு, காது செவிடு. பத்து வயதுவரை வாயும் ஊமையாகவே இருந்தது. பாவம், பிறந்த பத்தொன்பதாவது மாதத்தில் திடீரென்று அவளுக்கு நோய் கண்டது. கடுமையான காய்ச்சல் ! தாயும் தங்தையும் வைத்தியர்களை அழைத்து வந்து காட்டினர்.
குழங்தை பிழைக்காது? என்று வைத் தியர்கள் கைவிட்டு விட்டனர். ஆணுலும், எமன் ஏமாந்து போனன் குழங்தை பிழைத் துக் கொண்டது! பெற்றேர் அளவில்லாத
97

Page 51
மகிழ்ச்சி அடைந்தனர். ஆணு ல், அங் த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம், அந்தப் பொல்லாத கோய் போகும்போது, குழங்தை யின் பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றையும் கூடவே கொண்டு போய்விட்டது!
ஆணுலும், அவள் சிறிய வயதிலே மிகவும் கெட்டிக்காரியாக இரு ங் தாள். தோட் டத்திலுள்ள பூக்களையும் செடிகளையும் தொட் டுப் பார்த்தே அவைகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வாள்.
எவருடைய உதவியும் இல்லாமல் அவளா கவே மாடிப் படிகளில் ஏறி அறைக்குச் செல் வாள். பெட்டியைத் திறந்து உடைகளை எடுத்து அணிந்து கொள்வாள். தலைவாரிக் கொள்வாள். முகத்துக்குப் பவுடர் பூசிக் கொள்வாள்.
பூட்டு, சாவி இரண்டையும் அவள் தட வித் தடவிப் பார்த்தே அவற்றின் உபயோகங் களைத் தெரிந்துகொண்டாள். அறையை எப் படிப் பூட்டுவது எ ன் ப  ைத யும் கற்றுக் கொண்டாள்.
ஒருங்ாள், அவளுடைய அம்மாவை உக் கிராண அறைக்குள் வைத்துப் பூட்டி விட் டாள். பூட்டிவிட்டுக் கதவிலே சாய்ந்து கொண்டு வயிறு குலுங்கச் சிரித்தாள். வெகு நேரம் சென்ற பிறகே அம்மாவுக்கு விடுதலை கிடைத்தது.
98

அவளுக்கு ஆறு வயது இருக்கும். அப் போது ஒருநாள் அவளுடைய அத்தை அவ ளிடம் ஒரு துணிப் பொம்மையைக் கொடுத் தாள். அந்தப் பொம்மையைக் கண் தெரி யாத அச்சிறுமி மார்போடு அணைத்துக் கொண்டாள். மெதுவாக அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். அதன் முகத்தில் கண், காது, மூக்கு, வாய் எதுவுமே இல்லை. திரும் பத் திரும்பத் தடவிப் பார்த்தாள். என்ன இது இதற்கும் கண்கள் இல்லையா? என்று தனக்குள்ளே சொல் லி க் கொண்டாள். *இதற்கு எப்படிக் கண் வைப்பது?’ என்று சிறிதுநேரம் யோசித்துப் பார்த்தாள்.
திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அத்தையின் அருகிலே சென் ருள். அவளுடைய சட்டையில் கையை வைத் துத் தடவிப் பார்த்தாள். அந்தச் சட்டையின் ஒரத்தில் கண்ணுடி மணிகள் இருந்தன. உருண்டையாக இருந்த அந்த மணிகளில் இரண்டை லேபக் கென்று அவள் பறித்தாள். அத்தையின் கையிலே கொடுத்து, பொம்மை யின்முகத்தைக் காட்டினுள்.
அத்தைக்கு முதலில் புரியவில்லை. பொம் மையின் முகத்தில் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் விரலால் குத்திக் குத்திக் காட் டினுள். அப்போது அத்தைக்குப் புரிந்துவிட் டது. உடனே அவள் அங்தக் கண்ணுடி மணிகளைப் பொம்மையின் முகத்திலே கண்
99

Page 52
கள் இருக்கவேண்டிய இடத்திலே வைத்துத் தைத்தாள். பிறகு சிறுமியிடம் கொடுத்தாள். பொம்மையின் முகத்தைத் தடவித் தடவிப் பார்த்து அச்சிறுமி ஆனந்தம் அடைந்தாள்.
ஒன்பது வயது வரைதான் அவள் ஊமை யாக இருந்தாள். அப்புறம் பேசும் சக்தியைப் பெற்று விட்டாள். ஆஞலும், பார்க்கும் சக் தியையோ, கேட்கும் சக்தியையோ இன்று வரை அவள் பெறவில்லை. அதனுல் என்ன ? கண்ணும் காதும் கன்ருக இருப்பவர்களே யெல்லாம் அவள் பல வழிகளில் தன து இடைவிடா முயற்சியினுல் மிஞ்சி விட்டாள் !
அவள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிருள். நூற்றுக் கணக்கான புத் தகங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொண்டிருக்கிருள். ஏழு புத் தகங்க 2ள அவளே எழுதியிருக்கிருள். திரைப்படத்தில் கூட அவள் நடித்திருக்கிருள்! ஆம், அவளு டைய அதிசய வாழ்க்கையைத் திரைப் பட மாக எடுத்தார்கள். அதில்தான் அவள் கடித் திருக்கிருள். ஒன்பது ஆண்டுகள் ஊமை யாக இருந்த அவள் உலகின் பல பாகங்களுக் கும் சென்று சொற்பொழிவு செய்திருக்கிருள். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்குக்கூட வந்தாள்.
இன்று அவள் சிறுமியல்ல; 87 வயதுப் பாட்டி! ஹெலன் கெல்லர் என்ற அமெரிக்கப் பெண்மணிதான் அந்தப் பாட்டி!
100

ஜவாஹர்லால் கே ரு சிறுவராயிருந்த போது, அவருடைய அப்பாவிடம் ஒரு கணக் குப் பிள்ளை இருந்தார். முன்ஷி முபராக் அலி என்பது அவருடைய பெயர். கு ழ ங்  ைத* களிடத்தில் அவர் மிகவும் அன்பாக இருப் பார். ஜவாஹர்லாலிடத்தில் அவருக்கு ஒரு தனி அன்பு.
முபராக் அலியைக் கண்டதும் ஜவாஹர் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்வார். கதை சொல்லும்படி கேட்பார். முபராக் அலி அரபிக் கதைகளையும், மற்றக் கதைகளையும் நேரிலே பார்த்ததுபோல் கூறு வார். அத்துடன் 1857-ஆம் ஆண்டில் கம்,
101

Page 53
தேசத்தில் நடந்த சுதந்திரப் போரைப் பற்றி யும் சொல்வார். அந்தப் போரிலே அவரு டைய குடும்பத்தைச் சேர்ந்த பலரை ஆங்கி லேயர் கொன்றுவிட்டார்களாம். அதையெல் லாம் கேட்கக் கேட்க நேருவுக்கு வருத்தமா யிருக்கும். ஆங்கிலேயரின் ஆட்சிமீது அவ ருக்குக் கோபம் கோபமாக வரும்.
ஏழு, எட்டு வயதுக் குழங்தையா யிருக் கும்போதே,ஜவாஹர் கன்ருகக் குதிரைச் சவாரி செய்வார். அவருக்கு அவருடைய அப்பா அழகான குதிரைக் குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். தினமும் ஜவாஹர் அ த ன் மேல் ஏறி, அலகாபாத் நகரை ஆனந்தமாகச் சுற்றி வருவார். அப்போது அலகாபாத்தில் குதிரைப் படையைச் சேர்ந்த குதிரை வீரர் ஒருவர் இருந்தார். அவருடன் சேர்ந்து தின மும் நேரு குதிரைச் சவாரி செய்வார்.
ஒருங்ாள் அரபிக் கதையில் வரும் குதிரை க2ளப் பற்றி முபராக் அலி ஜவாஹரிடம் கூறினர். அந்தக் குதிரைகள் செய்த வீர தீரச் செயல்களைப் பற்றியும், அவை எப்படிப் பறந்து சென்றன என்பதைப் பற்றியும் விவர மாகக் கூறினுர். அன்று குதிரைச் சவாரி செய் யும்போது, முபராக் அலி சொன்ன கதைகளே யெல்லாம் குதிரைக் குட்டியிடம் ஜவாஹர் கூறிஞர். கூறி வி ட் டு, ! நீயும் அந்தக் குதிரைகளைப்போல் பறக்கவேண்டும். உம், எங்கே பார்க்கலாம்” என்ருர், அதைத் தட்டி
102

ஒட்டினுர், குதிரைக் குட்டி காலுகால் பாய்ச் சலில் ஓட ஆரம்பித்துவிட்டது. ஜவாஹருக்கு ஒரே உற்சாகம். * உம், அப்படித்தான். ஒடு, ஒடு " எ ன் று விரட்டினர். குதிரைக் குட்டிக்கு ஒரே குதூகலம். கண்மண் தெரியா மல் தாவித்தாவி ஓடியது. தாவித் தாவி ஒடும் போது ஜவாஹர் தவறிக் கீழே விழுங்து விட் டார். அவர் விழுந்ததைக்கூடக் குதிரை கவனிக்கவில்லை. வீடு போய்த்தான் அது கின்றது.
அப்போது டென் னி ஸ் விளையாடிக் கொண்டிருந்தார் கேருவின் தங்தை. அவர் குதிரை மட்டும் தனியாக வந்ததைக் கண்ட தும், ஜவாஹர் எங்கே? அவனுக்கு என்ன ஆயிற்றே !’ என்று திகில் அடைந்தார். உடனே ஜவாஹருடைய தாய்க்குத் தகவல் எட்டியது. எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள்; ஜவாஹரைத் தேடிக்கொண்டு போனுர்கள். அது ஒரு பெரிய ஊர்வலம் போ ல வே இருந்தது.
இச் சமயத்தில் குதிரையிலிருந்து விழுந்த ஜவாஹர் மெதுவாக எழுந்தார். ஆடையில் ஒட்டியிருந்த மண் 2ண த் தட்டிவிட்டார். பிறகு வீடு கோக்கி வந்துகொண்டிருந்தார். வழியிலே அவரைப் பார்த்துவிட்டனர், அ வருடைய பெற்றேரும், மற்றவர்களும், பெரிய வீரனை வரவேற்பதற்கு வருவது
103

Page 54
போல் அல்லவா கூட்டமாக வருகிருர்கள்? என்று ஜவாஹர் நினைத்தார்.
ஜவாஹரைக் கண்டதும் அவருடைய அப்பாவும், அம்மாவும் ஒடிச் சென்று, ஏேதே னும் காயம் பட்டதா ? என்று பரிவோடு கேட்டார்கள்.
இல்லையே. எனக்கு எவ்வித காயமும் இல்லை’ என்று சிரித்துக்கொண்டே கூறி ஞர் ஜவாஹர்.
*கல்லவேளை’ என்று பெருமூச்சு விட் டாள் அவரது அம்மா. "குதிரைக் குட்டி வீட்டிறகுப் பத்திரமாக வங்துவிட்டதா? என்று கேட்டார் ஜவாஹர்.
"அது மட்டும் வங்ததால்தானே நாங்கள் பதறிப் போனுேம்’ என்ருர் அப்பா.
எல்லோரும் வீடு திரும்பினர். குதிரைக் குட்டி ஜவாஹரைப் பார்த்தது. ஜவாஹரும் குதிரைக் குட்டியைப் பார்த்தார். போர்க்கிற தைப் பார். என்னைக் கீழே தள்ளிவிட்டு நீ மட்டும் வந்து விட்டாயே! உன்னே என்ன செய்கிறேன் பார்? என்று ஜவாஹர் ஆத்திரப் பட்டாரா? இல்லை. எப்போதும்போல் அத னிடம் அவர் அன்பு காட்டினுர். அன்று முதல் குதிரைச் சவாரி செய்வதை விட்டுவிட் டாரோ? அதுவும் இல்லை. வழக்கம்போல் தின மும் அதன்மீது ஏறி இளவரசரைப் போல் சவாரி செய்து வந்தார்.
104

“G)?lisum” artirஅ9 அழைத்தாள் அம்ம
'இதோ வந்துவிட்டேன், அம்மா’ என்று கூறிக்கொண்டே ஓடி வந்தான் சிறுவன் விங்யா,
அம்மாவின் எதிரிலே ஒரு பாத்திரம் இருந்தது. அதில் fb60)muנ இனிப்புப் பண் டங்கள் இருந்தன.
‘இதெல்லாம் எதற்கு அம்மா ? என்று விங்யா கேட்கவில்லை. அம்மா எதற்காக அழைத்திருப்பாள் என்பது அவனுக்குத் தெரி யும். உடனே அந்தப் பாத்திரத்தைக் கையில்
1259-7 105

Page 55
எடுத்துக் கொண்டான். குடுகுடு? என்று அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு ஓடினன். எல்லோருக்கும் விநியோகம் செய்துவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்பினுன். அப் போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனைப் பார்த்து அம்மாவும் மிக மிக மகிழ்ச்சி அடைந்தாள்.
இந்த மாதிரி நிகழ்ச்சி அந்த வீட்டிலே அடிக்கடி நடக்கும். விசேஷமாக எந்தத் தின் பண்டம் செய்தாலும் அதை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்தனுப்புவாள் அங்த அம்மா. தின்பண்டங்களை விநியோ கித்து வருவான் அந்தச் சிறுவன்.
அங்த அம்மாவுக்குத் தெய்வபக்தி அதி கம். இரவு நேரங்களில் பக்தர்களின் கதை களை அவள் மகனுக்குக் கூறுவாள். சில சமயங்களில் அவளுக்கும் கதை கேட்கவேண் டும் என்ற ஆசை தோன்றும். அப்போது மகனிடம் சொல்லுவாள். உடனே, அவன் புத்தகத்தை எடுத்து வருவான்; அம்மா பக்கத் திலே உட்கார்ந்து, அதிலுள்ள கதைகளைப் படித்துச் சொல்லுவான்.
ஒருநாள், விக்யா, பக்த விஜயம் புத்த கத்தை எடுத்துவந்து படி கேட்கவேண்டும் போலிருக்கிறது’ எ ன் ரு ள். பக் த விஜ யத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று விங்யாவுக்கு ஒரு சங் தே கம் தோன்றியது. ஏனம்மா, பெரிய பெரிய
106

மகான்களைப் பற்றியெல்லாம் இதில் படிக் கிறேமே, இந்த மாதிரி மகான்கள் இப்போது இல்லையா ? என்று கேட்டான்.
*இப்போதும் இருக்கலாம். ஆனல், கம் கண்களுக்குத்தான் தெரியவில்லை. மகான்கள் இல்லாதபோனல், இங்த உலகம் இயங்காது? என்று பதில் சொன்னுள் அம்மா.
பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் சென் றன. அந்தச் சிறுவன் வாலிபனுக வளர்ந் தான். இருபத்து ஓராவது வயதில் ஒரு பெரிய மகாத்மாவைக் கண்டான். உடனே *ஆ1 அன்று ஒருகாள் அம்மா சொன்னுளே, அது உண்மைதான். இதோ ஒரு மகான் என் எதிரிலே இருக்கிருரே! நான் மகாஜனக் கண்டுவிட்டேன்! இந்த மகானுல்தான் கம் காடு இயங்குகிறது” என்று பூரிப்படைங் தான். அன்று அவன் கண்ட ம க ர ன் மகாத்மா காந்தியேதான் 1 ஆணுல், அந்த வாலி பனும் ஒரு காலத்தில் மகானுக விளங்கப் போகிருன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது. ஆளுல்ை, இப்போது நம் எல்லோ ருக்குமே தெரியும் !
விேங்யா என்ற பெயரில் எந்த மகானும் இருப்பதாகத் தெரியவில்லையே!? என்று தானே கேட்கிறீர்கள்? விங்யா' என்பது அவ ருடைய அம்மா வைத்த செல்லப் பெயர். *விகாயக்” என்பதுதான் அவருக்கு இட்ட
107

Page 56
பெயர். ஆனல், இந்தப் பெயருக்குப் பின்னுல்,
தகப்பனர் பெயரையும், அதற்குப் பின்னுல்
குடும்பப் பெயரையும் சேர்த்து விே கோ யக் கரஹரி பாவே' என்றுதான் பல ஆண்டுகள்
அழைத்து வந்தார்கள். இந்த நீண்ட பெயரை *விநோபா என்று காந்திஜி குறுக்கிவிட்டார்.
காந்தி வைத்த பெயரைச் சொன்னதும் உங் களுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே இன்று
தெரிகிறது.
சின்ன வயதில் தின்பண்ட தானம் செய் வதில் மகிழ்ச்சி அடைந்த விநோபா பாவே, இன்று பூதானம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைந்து வருகிருர், 'உங்களுக்கு ஐந்து குழங்தைகள் இருந்தால் உ ங் களு  ைடய நிலத்தை ஐந்து பங்கு போடுவீர்கள். ஒவ் வொரு குழங்தைக்கும் ஒரு பாகம் கொடுப் பீர்கள், ஆறு குழங்தைகள் இருந்தால், ஆறு பங்கு போடுவீர்கள் அல்லவா? என் 2னயும் உங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்டு எனக்கு ஒரு பங்கு கொடுங்கள்’ என்று நிலம் வைத்திருப்பவர்களை அவர் கேட்கிருர், தான மாகக் கிடைக்கும் நிலத்தை, அவர் நிலம் இல் லாத ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுக் கிருர்,
மகாத்மா காந்திக்குப் பிறகு, அவரு டைய கொள்கைகளைப் பின்பற்றி, மக்களுக்கு அறநெறியில் வழிகாட்டி வரும் பெரியவர் விநோபா அவர்களே.
108

uDTuuLDTuiu மறைந்தவன்!
*ஜெய் ஹிந்த் இதைச் சொல்லும் போதே, கமக்கு ஒரு வீர உணர்ச்சி ஏற்படுகின்ற்து; கம் தேச பக்தி அதிகமாகின்றது. 4.
*ஜெய் ஹிந்த்-அதாவது வெல்க இக் தியா !” என்ற மந்திரத்தை நமக்கெல்லாம் சொல்லித் தந்தவர் யார்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பது உ ங் களு க் குத் தெரியும்.
சிறிய வயதிலே சுபாஷ் சந்திர போஸி டத்தில் தெய்வ பக்தி, தேச பக்தி இரண்டும் இருந்தன. தெய்வ பக்தியை ஊட்டி உடலை வளர்த்தாள், அவருடைய அன்னே பிரபாவதி அம்மையார். தேச பக்தியை ஊட்டி அறிவை
109

Page 57
வளர்த்தார், அவருடைய பள்ளித் தலைமை ஆசிரியர் பெனி பாபு.
அன்று இரவு பத்து மணி. அங்த வீட் டிலே ஒரே பரபரப்பாக இருந்தது.
எேங்கே போயிருப்பான் சுபாஷ்? இன் னும் வரவில்லையே!”
*எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து விட்டோம். அகப்பட வில்லையே!”
பேகல் சாப்பாட்டுக்குப் பிறகு, இராம கிருஷ்ண பரமஹம்சர் எழுதிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தானே! எப்பொழுது போனுன், எப்படிப் போ னு ன், எங்கே போனன், ஏன் போனன் ? ஒன்றுமே புரிய 6x676ü26)(5u /**
1ஐ யோ, எ.ன் ம க னே! நீ எங்கு போனயோ !”
மணி பதினென்று, பன்னிரண்டு, ஒன்று, இரண்டு, என்று ஓடிக்கொண்டே யிருந்தது. அப்பாவும் வேலையாட்களும் அன்று இரவு முழுவதும் தேடினர்கள். சுபாஷ் அகப்பட வில்லை. மறுநாளும் தேடினுர்கள். மூன்ற வது நாளும் தேடினுர்கள். இப்படிப் பல காட்கள் தேடிப் பார்த்தும் பயனில்லை.
ஆனல், அதே சமயம் சிறுவரான சுபாஷ், இமயமலையை நோக்கி நடந்து கொண்டிருங் தார்; இரவு பகல் பாராமல் கடந்தார்.
110

வழியெல்லாம் ஒரே காடு. அங்தக் காட் டுப் பாதையில் பகலில் செல்லவே பயமாக இருக்கும். இரவு நேரத்தில் கேட்கவேண்டுமா? இரவிலே இரைதேடி அலையும் மிருகங்கள், மேலே வட்டமிட்டுத் திரியும் பறவைகள், அவைகள் போடுகின்ற பயங்கர சப்தங்கள் இவற்றை யெ ல் லா ம் அவர் சிறிதும் பொருட் படுத்தவில்லை. எேப்படியும் இமய மலைச் சார2ல நாம் அடைந்துவிட வேண்டும். அங்குள்ள சங்ாநியாசிகளைக் காணவேண்டும். அவர்களில் ஒருவரை கம் குருவாகப் பெற வேண்டும். அங்கேயே தங்கிவிட வேண் டும்? என்ற ஒரே நினைப்புடன் அவர் கடந்து கொண்டே இருந்தார்.
இமயமலையில் வசிக்கும் சங்ாகியாசி களைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிருர். அவர்கள் கடும் தவம் செய்து முக்தி அடை கிறர்கள் என்றும் அவருக்குச் சிலர் கூறி இருக்கிறர்கள். அவர்களைப் பற்றி சுபாஷ் அடிக்கடி நினைப்பார். தாமும் ஒரு சாமியா ராக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். ஆணுல், அப்பா அம்மாவிடம் சாமியாராகப் போக வேண்டும் என்று சொன்குல்ை, அவர்கள் சரி என்பார்களா? அதனுல்தான் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பிவிட் டார் ! அறு சுவை உணவுடன் செல்லமாக வளர்ந்த பிள்ளை காய் கனிகளைத் தின்ருர்; தண்ணிரைக் குடித்தார்; கால்கோவ அ2லங்
111

Page 58
தார். இப்படி ஒரு மாதமா, இரண்டு மாதங் களா? ஆறுமாதங்கள் ஓய்வின்றி அலைந்தும் அவர் நினைத்தது கைகூடவில்லை.
வழியிலே அவர் பல சங்கியாசிகளைக் கண்டார். அவர்களில் பலர் கஞ்சா, பீடி முதலியவற்றைப் பிடித்துக் கொண்டிருங் தார்கள். அவர்களுக்குத் தெய்வ நினைப்பே இல்லை. ஆனலும், பெரிய பக்தர்கள் போல் பாசாங்கு செய்தார்கள். சுபாஷிற்கு அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதே சமயம் அப்பா அம்மாவைப் பற்றிய நினைப்பும் வங் தது. "ஐயோ, என்னைக் காணுமல் அம்மா வும் அப்பாவும் எவ்வளவு வேதனைப்படுகிறர் களோ ! சரி, இனி அலைவதில் பயனில்லை. உடனே வீடு திரும்ப வேண்டியதுதான்” என்ற முடிவுக்கு வந்தார்.
விரைவிலே வீடு வந்து சேர்ந்தார். எதிர் பாராமல் திடீரென சுபாஷ் அங்கு வந்ததைக் கண்டதும், எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். அப்பொழுது அவருடைய அம்மாவும் மற்ற வர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
சின்ன வயதில் திடீரெனக் காணுமற் போன சுபாஷ், ஆறு மாதங்களுக்குப் பிறகு திடீரெனத் திரும்பிவந்து சேர்ந்தார். ஆணுல், 1941-ல் இந்தியாவைவிட்டு மாயமாய் மறைந்த சுபாஷ் பிறகு திரும்பி வரவே இல்லை !
112

நான் ஹே !
நான் ஹே1
இப்படித்தான் அந்தச் சிறுவனை எல் லோரும் அழைப்பார்கள்; கான்ஹே’ என் ருல் சின்னப் பையன்? என்று பொருள். மிக வும் குள்ளமாக அவன் இருந்ததால்தான் அப் படி அழைத்தார்கள். ኤ
அந்தச் சின்னப் பையன் மிகவும் ஏழைப் பையணுகவும் இருந்தான். அவன் பிறந்த 18வது மா த த் தி லே யே அவன் அப்பா இறந்து விட்டார். அவனுடைய தாத்தா, அவனே கன்ருகப் படிக்க வைத்து முன்னுக் குக் கொண்டுவர ஆசைப்பட்டார். அரிச்சங் திரா பள்ளியில் அவனைச் சேர்த்தார்.
113

Page 59
அவனுக்கு அப்போது வயது ஆறு இருக்கும். ஒருநாள் பள்ளித் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டு முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே வீடு திரும்பினுர்கள். வழியிலே ஒரு தோப்பு இருந்தது. அதற்குள் எல்லோரும் சென் ლფifტ5Gir.
தோப்பிலே ஏராளமான செடிகளும், மரங் களும் இருந்தன. செடிகள் நிறையப் பூக்கள் இருந்தன. மரங்கள் நிறையப் பழங்க ள் இருந்தன. அங்தச் சிறுவனுக்குப் பூக்கள் என்ருல் பிரியம் அதிகம். அதனுல், அவன் ஓரிடத்திலே நின்றன். வண்ண வண்ணப் பூக்களைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப்பட் டுக் கொண்டிருந்தான். ஆல்ை, மற்ற சிறு வர்களோ பூக்களைப் பார்த்துக்கொண்டு நிற்கவில்லை. சரசர” என்று மரங்களின் மேல் ஏறினர்கள்; பழங்களைப் பறித்தார்கள்; கடித்துத் தின்றர்கள்; ஆனந்தக் கூச்சல் போட்டார்கள்.
தோட்டக்காரர் இதை அறிங் தா ர். உடனே கோபமாகக் கத்திக் கொண்டே ஓடி வங்தார். அவர் வருவதற்குள் எல்லோரும் தரையிலே தா விக் குதித்தார்கள்; தலை தெறிக்க ஒடிஞர்கள். தோட்டக்காரர் அவர் களைத் துரத்திச் சென்ருர், ஆணுலும், பல னில்லை. பழம் பறித்தவர்களில் ஒருவர்கூட அவரிடம் சிக்கவில்லை. எல்லோரும் தப்பிவிட்
114

டனர். எல்லோரும் என்ற சொன்னேன்? இல்லை; ஒரே ஒருவன் மட்டும் அவரிடம் சரி 55 அகப்பட்டுக் கொண்டுவிட்டான் ! அவன்தான் பூக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சிறுவன். r
தோட்டக்காரர் மிகுந்த ஆத்திரத்துடன் அவன் அருகிலே ஓடி வந்தார். ஆவேசம் வங் தவர் போலக் கத்தினுர், டேய் பொடிப் பயலே, இன்று உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன். இனி, நீயும் உன் தோழர் களும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காதபடி செய்யப் போகிறேன்? என்றர்.
அவரது உருவமே பார்ப்பதற்குப் பயங் கரமாக இருந்தது. என்ன செய்வதென்றே சிறுவனுக்குப் புரியவில்லை. கை கால்களெல் லாம் நடுநடுங்கின.
தோட்டக்காரரிடம் அழாக் குறையாக, ஐயா, காகுே பரம ஏழை. எனக்கு அப்பா வும் இல்லை. தயவு செய்து என்னை ஒன்றும் செய்யாதீர்கள்." என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
என்ன ! ஏழை என்கிருய். அத்துடன் அப்பாவும் இல்லை என்கிருய். அப்பா இல் லாத ஏழை தப்புத் தவறு செய்யலாமோ? மற்றவர்களைவிட நீ மிகவும் கல்லவனுக, யோக்கியணுக கடக்க வேண்டாமோ? என்று கேட்டார் தோட்டக்காரர். அச்சிறுவனின்
115

Page 60
களங்கமற்ற முகமும், அவனது பேச்சும் அவ ரது மனத்தை மாற்றிவிட்டன.
சேரி, போ. இனி இந்த மாதிரி கடந்து கொள்ளாதே" என்று எச்சரித்து அவனை அனுப்பினுர்.
*தோட்டக்காரர் சொல்வது சரிதான். அப்பா இருந்தால், காம் தவறு செய்தால் திருத்துவார். இப்போது கம்மை நாமேதான் திருத்திக் கொள்ள வேண்டும். இனி, மிகவும் கல்லவனுக, ஒழுக்கமுள்ளவனுக நான் கடப் பேன்.” என்று அவன் தனக்குத்தானே சொல் லிக்கொண்டான். சொன்னதோடு நிற்க வில்லை; செய்கையிலும் காட்டினன்.
அரிச்சந்திரா பள்ளியில் படித்த அவன், அரிச்சங்திரனைப் போல் சத்தியத்தைக் கடைப் பிடித்தான். அதுமட்டுமல்ல; காந்தித் தாத்தா பிறந்த தேதியிலே பிறந்த அவன் (அக்டோ பர்2-ல்) காங்திஜியின் வழிகளை முழுக்க முழுக் கப் பின்பற்றினன். அவன் வளர, வளர அவனது பேரும், புகழும் வளர்ந்தன. கடைசி காலத்தில், இந்தியாவின் பிரதமராக இருந்து, எல்லோருடைய உள்ளத்திலும் இடம்பெற்று விட்டான்.
நேருஜிக்குப் பிறகு நம் பிரதமராய் விளங் கிய லால்பகதூர் சாஸ்திரிதான் அச் சிறுவன் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா ?
116

கோட்டையில் கொடி
கதவு தட்டும் சத்தம் கேட்டது. கிருஷ்ண சிம்மன் எழுந்து சென்று கதவைத் திறந்தார். எதிரே நின்று கொண்டிருந்தார்கள் போலீஸ் காரர்கள். உேம்மைக் கைது செய்ய வங்திருக் கிருேம். ஆங்கில ஆட்சிக்கு விரோதமாக நீர் புரட்சி செய்து வருகிறீர். உம்மை வெளியில் விட்டுவைப்பது ஆபத்து ? என்றர் போலீஸ் அதிகாரி.
கிருஷ்ண சிம்மன் முகத்தில் புன்னகை அரும்பியது. “உம், இதோ என் கைகள். விலங்கை மாட்டுங்கள்? என்று கூறிக் கைகள் இரண்டையும் அவர்கள் முன்பு நீட் டிஞர். உடனே அவரது கைகளில் விலங்கு மாட்டினர்கள். போலீஸ் வண்டியில் அவரை
117

Page 61
ஏற்றினுர்கள். சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றர்கள்.
அப்போது அவருடைய மனைவி கருவுற் றிருந்தாள். இன்னும் சில நா ட் களி ல் குழங்தை பிறந்துவிடும். ஆனலும், அந்த அம்மாள் கண் கலங்கவில்லை. ஆண்டவனே, எங்களுக்கு உன் அருளால் ஆண் குழங்தை பிறக்கவேண்டும். அந்தக் குழங்தை தங்தை யைப் போலவே தேசபக்தனுகவும் தியாக சீலனுகவும் விளங்கவேண்டும்’ என்று நாள் தோறும் வேண்டினுள்.
அம்மாவின் வேண்டுதல் பலித்தது. ஒரு மகன் பிறந்தான். அவன் கன்கு வளர்ந்தான்; பள்ளியில் சேர்ந்தான் ; கருத்துடன் படித் தான். காட்டு வரலாறு படிப்பதிலே அவ னுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. விடுதலை பெற்ற காடுகளின் வரலாறுகளை எல்லாம் அவன் அடிக்கடி படிப்பான். அவற்றைப் படிக்கப் படிக்க அவனுக்குத் தேசபக்தி அதிகமாகியது. தங்தையைப் போலவே தேச விடுதலைக்குப் போராட வேண்டும் என்ற ஆர் வம் பொங்கியது.
அச்சிறுவனுக்கு வயது 12 இருக்கும். ஒருகாள் கையில் தேசீயக் கொடியுடன் அவன் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, சிறிது தூரத்தில் கோட்டைமேல் ஆங்கிலக் கொடி பறப்பதை அவன் பார்த்
118

தான். உடனே சட்? டென்று அந்த இடத் திலே நின்றன்.
ஏே, ஆங்கி லக் கொ டி யே! இது எங்கள் நாடு. இந்தக் கோட்டை எங்கள் கோட்டை. எங்கள் கோட்டையில் எங்கள் காட்டுக் கொடிதான் பறக்கவேண்டும். அங் கிய நாட்டுக் கொடியாகிய நீ பறப்பதை காங்கள் இனிமேலும் பார்த்துக் கொண் டிருக்க மாட்டோம். விரைவிலே நீ கீழே இறக் கப்படுவாய். இதோ என் தாய் காட்டுக் கொடி. இது அங்கு தலை நிமிர்ந்து பறக்கும்? என்று ஆவேசத்துடன் கூறினுன்.
அச்சிறுவன் அப்போது கூறிய து 1947-ஆம் ஆண்டு பலித்துவிட்டது. ஆணுல் அந்தக் காட்சியைக் காண் அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அதற்குப் பதினறு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 24 வய திலே அவன் தூக்கிலிடப்பட்டான் ! கார ணம். p
போஞ்சால சிங்கம்” என்று போற்றப்பட்ட லாலா லஜபதிராய் தலைமையில் ஆங்கிலேய ருக்கு எதிராக ஓர் ஊர்வலம் லாகூரில் கடங் தது. போலீஸார் அந்த ஊர்வலத்தைத் தாக் கினர். லஜபதிராய் மார்பிலே பலமாக அடி விழுந்தது. அடிபட்ட பதினெட்டாம் நாள் அவர் உயிர் துறந்தார். இதை அறிந்த மக்கள் கொதித்து எழுந்தனர். லஜபதிராயை
119

Page 62
அடித்த ஸாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரி சில காட்களில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கடந்து சில காட்களில் மத்திய சட்ட சபையில் வெடி குண்டு வீசப்பட்டது.
இவற்றிற் கெல்லாம் யார் காரணம்?
பகத் சிங், இராஜகுரு சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களும் முக்கியமானவர்கள் என்று கூறி, அவர்களைக் கைதுசெய்து ஆங் கில அரசினர் விசாரணை கடத்தினர். அம் மூவருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்தனர்.
தேச மக்கள் அனைவரும் அந்த வீர இளை ஞர்களின் தேச பக்தியைக் கண்டு வியங் தனர். மகாத்மா காந்தியும், அவர்களது வன் முறையை ஆதரிக்காத போனலும், அவர் களது தேசபக்தியைப் பாராட்டினுர். அவர் க2ள விடுவிக்க வைஸ்ராயுடன் பேச்சு கடத் தினர்; பயனில்லை.
தேச விடுதலைக்காகப் பாடுபட்டோம். மகிழ்ச்சியோடு உயிர் கொடுக்கிருேம். மீண் டும் இதே பாரத பூமியில் காங்கள் பிறக்க வேண்டும். இதுவே எங்கள் ஆசை” என்று கூறிக் கொண்டே பகத் சிங்கும் அருடைய இரு கண்களும் தூக்குமேடை ஏறினர்கள். அந்த மூவரில் முதல்வரான பகத்சிங்தான் கோட்டையில் தாய் காட்டுக் கொடி பறப் பதைப் பார்க்க ஆசைப்பட்டவர் 1
120

பனிமலைப் புலி’ என்ருல் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்; 29,028 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலே முதல் முதலாக ஏறி, இந்தியக் கொடியை காட்டிய டென்சிங்கைத்தான் பனி மலைப் புலி’ என்று உலகம் அழைக்கிறது.
டென்சிங்கின் முழுப்பெயர் டென்சிங் கோர்கே என்பதுதான். ஆணுல், அந்தப் பெயர் அவருடைய அப்பா, அம்மா வைத்த பெய ரன்று லாமா என்னும் அவர்களுடைய மத குரு வைத்த பெயர்தான். அம்மா, அப்பா வைத்த பெயர் என்ன தெரியுமா? காம்கியால் வாங்டி என்பதே.
பெயர் சூட்டிய சில நாட்களில் அவரை மதகுருவிடம் தூக்கிச் சென்றர்கள். குழங்
1259-9 121

Page 63
தையை வாழ்த்தி அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே அவர் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தார். இந்தப் பிள்ளை முற்பிறப்பில் மிகப் பெரிய பணக்கார ஞக இருந்திருக்கிருன்” என்றர்.
*ஆ! அப்படியா !” என்று அப்பாவும் அம்மாவும் வியப்போடு கேட் டார் கள். **ஆமாம். அதனுல், இப்போது நீங்கள் வைத் திருக்கும் பெயர் பொருத்தமாக இல்லை. வேறு பெயர் வைக்கவேண்டும்” என்ருர்,
எேன்ன பெயர் வைப்பது ? நீங்களே சொல்லுங்கள்? என்ருர்கள்.
ெேடன்சிங் கோர்கே என்பதே பொருத்த மான பெயர். டென்சிங் என்ருல், மதத்தைக் காப்பவன். நோர்கே என்ருல் செல்வன். கமது புத்த மதத்தைக் காக்கும் செல்வனுக இவன் விளங்குவான்? என்று கூறி வாழ்த் தினுர் அவர்.
டென்சிங்கின் கூடப் பிறந்தவர்கள் பதின் மூன்று பேர். ஏழு ஆண்கள்; ஆறு பெண் கள். பதினுேராவது பிள்ளையாக டென்சிங் பிறந்தார்.
டென்சிங், ஷெர்பா’ என்ற இனத்தைச் சேர்ந்தவர். ஷெர்பா' என்ருல் கிழக்கே இருந்து வந்தவன் என்று பொருள். வெகு காலத்துக்கு முன்பு திபேத் காட்டி
122

லிருந்து அவரது முன்னுேர்கள் இந்தியாவிற்கு வந்தார்களாம்.
அவர்களுடைய பஞ்சாங்கத்தின்படி ஒவ் வோர் ஆண்டுக்கும் ஒரு பிராணியின் பெயர் உண்டு. மாடு, குதிரை, முயல், புலி, பாம்பு இப்படித்தான் அந்தப் பெயர்கள் இருக்கும். முயல் வருவடித்தில்தான் டென்சிங் பிறந்தா ராம். அதாவது 1914ஆம் ஆண்டு மே மாதம். ஆணுல், தேதி தெரியாதாம் !
சிறு குழங்தையா யிருந்தபோது அடிக் கடி எவரெஸ்ட் சிகரத்தை டென்சிங் அண் ணுங்து பார்ப்பார். தேம்பி, அதோ பார்த் தாயா, அதுதான் பறவையும் பறக்க முடி யாத அளவு உயரமான மலை ” என்று அவரு டைய தாயார் அடிக்கடி சொல்வாள். அப் போதே டென்சிங்கிற்கு அந்த மலை உச்சியில் எப்படியாவது ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது.
டென்சிங் சிறு பையனுக இருந்தபோது அவரை ஒரு லாமா (மதகுரு) ஆக்கிவிட வேண்டும் என்று அவருடைய அப்பா தீர் மானித்தார். ஒரு மடத்திலே அவரை க் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். அங்கே போய்ச் சேர்ந்ததும், முதலில் அவருடைய தலையை மழுங்க மொட்டை யடித்தார்கள். காவி உடை கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொன்னர்கள். டென்சிங், அவர்கள் சொன்ன
123

Page 64
படி யெல்லாம் செய்தார். ஆணுலும், அதிக நாட்கள் அங்கே அவர் தங்கி யிருக்கவில்லை.
ஒரு காள் அந்த மடத்தில் இருந்த ஒரு லாமாவுக்கும், டென்சிங்கிற்கும் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் அந்த லாமா ஒரு கட்டையைத் தூக்கி டேங் என்று டென்சிங் கின் மொட்டைத் தலையில் போட்டுவிட்டார். அடி விழுங்ததுதான் தாமதம், டென் சிங் அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக வீட் டுக்கு ஒடிஞர். கடந்ததை அப்பாவிடம் கூறி ஞர். ‘இனி அந்த மடத்துப் பக்கம் தலை காட்டவே மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.
சில காட்கள் சென்றன. ஒருநாள் வீட் டில் யாரிடத்திலும் சொல்லாமல் ஊரை விட் டுப் புறப்பட்டு விட்டார். இமயமலையில் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தார். பிறகு, ம்லே ஏறும் குழுவினருக்கு மூட்டை தூக்கும் கூலி யாக இருந்தார். கடைசியில் ஹில்லரி என்ற வெள்ளைக்காரருடன் சேர்ந்து எவரெஸ்ட் சிக ரத்தையே எட்டிப் பிடித்துவிட்டார்.
அன்று, டென்சிங்கின் மொட்டைத் த2ல யில் கட்டையால் அடித்தாரே ஒரு லாமா, அவ ருக்கு காம் நன்றி சொல்லவேண்டும். இல் லாதபோனல், டென்சிங் எவரெஸ்ட் சிகரத் தில் ஏறியிருப்பாரா? அங்கே இந்தியக் கொடியை காட்டியிருப்பாரா? அவரும் ஒரு லாமாவாகத்தானே இருந்திருப்பார்?
24

ஜோசப், ஜான்.
இந்த இரண்டு சிறுவர்களும் வீட்டுக் குள்ளே குத்துச் சண்டை போடுகிறர்கள். சண்டை என்றல், சாதாரணச் சண்டையல்ல; ரோஷமான குத்துச் சண்டை
பாய்ந்து பாய்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குகிறர்கள்; கட்டிப் புரளு கிருர்கள்; பலமாகக் குத்து விடுகிறர்கள். நீண்ட நேரம் சண்டை கடக்கிறது.
சுற்றிலும் ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு பையனும் உட்கார்ந்து வேடிக்கை பார்க் கிருர்கள்.
உம், விடாதே ?
*ஆ! அப்படித்தான்?
'ஆஹா ! பிரமாதம்
125

Page 65
இப்படி அந்தக் குழங்தைகள் ஆரவாரம் செய்கிருர்கள்.
ஜோசப்புக்கு வயது 14. அவன் கொஞ் சம் பருமனுக இருக்கிறன். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிருன். ஜான், அவனை விட இரண்டு வயது இளையவன், ஒல்லியாக இருக்கிருன்; பார்ப்பதற்கு கோஞ்சானுக இருந்தாலும், வீரமாகச் சண்டை போடுகிறன். ஆணுலும், கடைசியில் ஜோசப்தான் வெற்றி பெறுகிறன்.
குஸ்திச் சண்டை போடும்போது மட்டு மல்ல; பங்து விளையாடும்போதும், நீங்தும் போதும், படகு ஒட்டும்போதும், அவர்கள் பலத்த போட்டி போடுவார்கள். மற்றப் போட்டிகளில் தோற்றுப் போஞலும், நீச்சல் போட்டியில் ஜான் தோற்றதே இல்லை. அரை நிமிஷத்தில் அவன் 50 கஜ தூரம் கீந்தி விடுவான்.
விளையாட்டு நேரங்களில்தான் அவர்கள் எதிரிகள்போல் இருப்பார்கள். மற்ற கேரங் களில், இருவரும் மிகுந்த அன்போடு பழகு வார்கள். அப்படியானுல், அந்த இருவரும் நெருங்கிய கண்பர்களோ ? இல்லை, இல்லை. இருவரும் கூடப் பிறந்தவர்கள் ! ஒரே தாயின் வயிற்றுப் பிள்ளைகள் சுற்றிலும் உட்கார்ந்து குத்துச் சண்டையை வேடிக்கை பார்த்தார்களே, அவர்களும் இவர்களது சகோதர சகோதரிகளே !
126

அவர்களுடைய அப்பா ஒரு பெரிய பணக்காரர். சொந்த முயற்சியால் பல லட்சம் டாலர்களைச் சம்பாதித்தவர். இருபத்தைங் தாவது வயதிலே அவர் ஒரு பாங்கின் தலைவ ரானுர். பிற்காலத்தில், அவர் அமெரிக்கத் தூதராக இங்கிலாந்தில் இருந்தார்.
*நீங்கள் பெரியவர்களானதும், எந்த வேலையைச் செய்தாலும், நான் கவலைப்பட மாட்டேன். ஆனல், எந்த வேலையைச் செய் தாலும், அந்த வேலையில் சிறந்து விளங்க வேண்டும். மண் வெட்டுபவனுக இருந்தாலும், உலகிலே சிறந்த மண் வெட்டுபவன் என்று பெயர் எடுக்கவேண்டும்’ என்று அவர் பிள்ளை களுக்கு அடிக்கடி அறிவுரை கூறுவார்.
சிறு வயதிலே படகு ஒட்டுவதில் மிகவும் கெட்டிக்காரணுக இருந்தான் ஜான். வாலிபணு னதும் கடற்படையிலே சேர அவன் விரும் பினுன். லட்சாதிபதியின் மகனக இருந்தும், ராணுவத்தில் சேரவேண்டும்; பிறந்த நாட்டுக் குத் தொண்டு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான்.
ஆஞல், அவனை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். காரணம், அவனது எடை குறைவாயிருந்ததுதான் ! அதற்காக, அவன் மனம் தளரவில்லை. ஐந்து
127

Page 66
மாதங்கள் தண்டால், பஸ்கி, ஒட்டம் முதலிய கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்தான். எடை ஏறியது. ஆருவது மாதம், அவனை ராணுவத்தில் கடற்படையிலே சேர்த்துக் கொண்டு விட்டார்கள். விரைவிலே அவன் யுத்தப் படகு ஒன்றின் தலைவனனன்.
ஒரு சமயம், அவனுடைய படகு இரண் டாக உடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட் டது. அவன், தான் தப்பியதோடல்லாமல், தன் நண்பர்களையும் வீரமுடன் காப்பாற் றினுன். அவனுடைய வீரத்தைப் பாராட்டி, ராணுவத்தினர் அவனுக்கு விருது வழங் கிஞர்கள்.
சிறந்த வீரனுக மட்டுமல்ல; சிறந்த எழுத் தாளனுகவும் அவன் விளங்கினுன், தீரர்கள் வாழ்க்கை” என்ற அவனுடைய புத்தகத்திற் குப் பெரிய பரிசு ஒன்றும் கிடைத்தது. அவனது தங்தை கூறியதுபோல், அவன் ராணுவத்திலே சிறந்து விளங்கினன்; புத்த கம் எழுதுவதிலே சிறந்து விளங்கினுன். இவை மட்டுமா ? அமெரிக்காவின் ஜஞதி பதியாகவும் அவன் சிறங்து விளங்கினன். ஆம், அமெரிக்காவின் 35-வது ஜனதிபதியாக 43-வது வயதிலே தேர்ங்தெடுக்கப் பெற்ற ஜான் எப். கென்னடிதான் அந்தச் சிறுவன். அமெரிக்க ஜனுதிபதியாக விளங்கியவர்களில் கென்னடிதான் மிகவும் இளமையானவர் !
128


Page 67


Page 68


Page 69
.திராகர்
ZZz@娜劑/鱷r