கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுயுகம் கண்டேன்

Page 1
|×|-
s. |× |-|:
 


Page 2

டாக்டர் க.இந்திரகுமார்
மக்கள் எழுத்தாளர் முன்னணி,

Page 3
People's Writers Front Publication No. 9
Puthu Yugam. Kandane (Witness to a New Epoch)
By
Dr. K. Indra Kumar
First Edition: October 1976 All CopyRights Reserved by the Author
Price 函
Published by: People's Writers Front, 91, Cotta Road, Colombo 8.
Frinted at : Albion Press (Colombo) Ltd. 157, Jayantha Weerasekera Mawatha, Colombo 10.
Cover printed at : Gunaratne & Co. 31, Jayantha Weerasekera Mawatha,
Colombo 10.

உள் ளே
பக்கம்
முன்னுரை-பீட்டர் கெனமன் V அணிந்துரை-இ. சிவகுருநாதன் Vi வெளியீட்டுரை-குணசேன வித்தான X 1. புதுபுகம் கண்டேன் 2. வழிபாட்டுச் சுதந்திரம் 5 3. தன்னிகரற்ற தலைநகர் காட்சிகள் 15 கி. வீதிகள் தெரிவித்த வாழ்க்கைத் தகவல்கள் 21 5. பஸ் பிரயாணம் தந்த பாடங்கள் 29 6. லெனின் சமாதி தரிசனம்" 36 7. வர்க்கமற்ற சமுதாயத்தில்
* சலுகை பெற்ற" வர்க்கம் 44 8. சமுதாய முன்னேற்றத்தின் சின்னங்கள் 5 9. அற்புதமான குடியிருப்புத் திட்டங்கள் ' 60 10. பூகம்பத்திற்கு படுதோல்வி 78 11. பாலைவனத்திற்கு பசுமை Xa s
பாய்ச்சும் செயற்கை நதி 87 12. பாலைவனத்தில் சோலைவனம் 94 13. தொழில் துறையின் விழுமிய சிறப்பு I 04 14. சம உரிமை கண்டு பொலிவுற்ற பெண்மை 16 15. உயரும் ஊதியங்கள் வீழும் விலைவாசிகள் 127 16. உள்ளங் கவர் பொல்ஷோய் நடனம் I35
17. மெய்யான மார்க்ஸிஸ்-லெனினிஸ்க்
கலாசாரப் புரட்சி 143 18. மக்கள் இலக்கியம் படைத்தவர்கள் 150 19. கலைத்தாய் களிநடனம் புரிந்தனள் 60 20. நூறு தேசிய இனங்கள்
இணைந்த அன்புக் குடும்பம் 167 முடிவுரை 73

Page 4
சமர்ப்பணம்
என் வளர்ச்சிக்கு வித்திட்ட
என் அன்னைக்கும் தந்தைக்கும்
இந் நூல் சமர்ப்பணம்.

முன்னுரை
பீட்டர் கெனமன், பொதுச் செயலாளர், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி.
Oபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின் னர் பிறந்த ஒரு புதிய துறை தான் சோவியத் இயல். இத் துறைக்கு நண்பர்களும் பகைவர்களும் தமது பங் களிப்பை ஆற்றியுள்ளனர்.
“ ‘புதுயுகம் கண்டேன்' என்ற இந்த நூல், எமது முன் னணி எழுத்தாளர்களில் ஒருவரும், சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளருமான டாக்டர் க. இந்திரகுமார் அவர்களால் படைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சோவி யத் யதார்த்தத்தின் ஆழ்ந்த கிரகிப்புடன் எழுதியுள்ள இந்த நூல், அவர் கடந்த வருடம் சோவியத் யூனியனுக்கு விஜ யம் மேற்கொண்டபோது பெற்ற அனுபவங்களை உள்ளடக்கி யுள்ளது. 'ኳ
இந்த நூல் ஏற்கனவே 'தினகரன் வாரமஞ்சரி" யில் தொடராக வந்தது என்று அறிகிறேன்.
இந்த இலக்கியப் பிரிவைச் சார்ந்த நூல்கள் எமது தேசிய மொழிகளில் மிகச் சிலவாகவே உள்ளது துரதிருஷ்ட வசமான ஒரு நிலையாகும். அதுவும், இன்றைய சூழ்நிலை பில், ஆங்கிலத்தை விட தேசிய மொழிகள் மேன்மேலும் முதன்மை பெற்று வருகையில், தேசிய மொழிகளில் இத் தகைய இலக்கியங்கள் மேலும் அதிகமாகப் படைக்கப் படுவது இன்றியமையாததாகும்.
டாக்டர் இந்திரகுமாருக்கு அவரது படைப்பிற்கு வாழ்த் துக்கள் தெரிவிக்கும் அதே வேளையில், இந் நூலைத் தமது ஒன்பதாவது பெரிய வெளியீடாகவும், தமிழில் மூன்றுவது வெளியீடாகவும் பிரசுரித்துள்ள மக்கள் எழுத்தாளர் முன் னணிக்கு எனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள் கின்றேன்.

Page 5
அணிந்துரை
இ. சிவகுருநாதன். பீ.ஏ., சட்டத்தரணி, பிரதம ஆசிரியர், தினகரன், லேக் ஹவுஸ்.
y - w
go வரலாறு பல திருப்பங்களைக் கண்டது. வர்க்கப் போராட்டத்தின் அகச் சான்றுகளாகப் பல நிகழ்வுகள் சம்பவித்துள்ளன. தன் நிலம் எங்கே இருக்கின் றது என்றே தெரிந்திருக்காது நிலத்தின் பூரண பயனை அடையும் நிலப்பிரபு ஒரு கரையில், தொழில் செய்யும் சக்தியையே விலைக்கு விற்றும் அவ்வுழைப்பின் பயன் பெருத நிலமற்றவன் மறுகரையில்; சாய்கதிரையில் தொந்தியைத் தொங்கப்போட்டு ஏப்பமிடும் அன்பே அறியாத முதலாளி ஒருபுறம், அல்லும் பகலும் பயபக்தியுடன் உழைக்கும் பாட்டாளி மறுபுறம்: சமூகத்தையே சுரண்டி இன்ப வாழ்க்கை காணும் வட்டிக்கடைக்காரன் ஒரு பால், அல்லும் பகலும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துவிட்டு அந்த உழைப்பின் பயனையே அப்படியே வட்டியும் முதலு மாகக் கொடுத்துவிடும் ஏழைக் கடன்காரன் மறுபால்; இரு முரண்பாடான வர்க்கங்களுக்கிடையே ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவந்த போராட்டத்தின் வரலாறே உலக சரித்திரம். இச்சரித்திரத்திலே 1917 மிக முக்கியு மான ஆண்டாகும். 1789 ஆம் ஆண்டில் பாரிஸ் மாநகர மக்கள் பஸ்டீல் சிறையைத் தகர்த்தெறிந்து பிரெஞ்சுப் புரட்சியை ஆரம்பித்தனரெனினும் இது பாட்டாளி வர்க்கப் புரட்சியென்று வரலாறு ஏற்கவில்லை. இது பூர்ஷ"வா புரட்சி.
ஆணுல் ரஷ்யாவில் 1917 இல் ஏற்பட்ட புரட்சியோ புதிய அமைப்பை ஏற்படுத்திற்று. உலகம் இதுவரை காணுத புதிய சமூக அமைப்பை உருவாக்கிக் காட்டிற்று. அக்டோபர் புரட்சியே சோஷலிஸ் வரலாற்றின் ஆரம்பம்:
4.
V
 

-றத அறுபது ஆண்டுகளிலே எத்தனை இறைமை கொண்ட நாடுகள் தோன்றின? இவற்றுள் எத்தனை சோஷலிஸ் சமூக அமைப்பை ஏற்றன? இதனை ஆராய்கின்றபோது ரஷ்யப் புரட்சியின் சிறப்பு துலாம்பரமாகின்றது. 20ம் நூற்றண் டிலே அரசியல் அமைப்பில் அடிப்படையான, தாரதம்மிய மான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தவைசோஷலிஸ் நாட்டின் தோற்றமும் வளர்ச்சியுமே. உலக வரலாற்றிலேயே ஏற்பட்ட இப்பாரிய திருப்பம், ரஷ்யாவில் 1917இல் நடை பெற்ற மகத்தான அக்டோபர் புரட்சியுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, பல நாடுகள் இவ்வழிச் சென்றன.
பூர்வு "வா அரசியல் அமைப்புக்கு வரலாற்று ரீதியான எல்லைகள் உண்டு. எனவே புதிய முறையிலான ஒர் அமைப்பு, அதாவது சமத்துவமான சமூக பொருளாதார அடிப்படை யைக்கொண்ட சோஷலிஸ் அமைப்பு, உருவாகுதல் தவிர்க்க முடியாத நிகழ்வு என்றல்லவா மார்க்ஸிஸம் கூறிற்று? 1917 இன் நிகழ்ச்சியும் 20ம் நூற்ருண்டிலே ஏற்பட்ட மாற்றங்களும் இதனை நிரூபித்தன. சோஷலிஸ் அரசியல் அமைப்பின் தோற்றமும், உலக சோஷலிஸ் அமைப்பின் உதயமும், எமது யுகத்திலே சம்பவித்த இரண்டாவது பாரிய இயக்கத் தையே ஆரம்பித்தன. காலனித்துவ அமைப்பு முறிந்து வீழ்ந்தது. தேசிய விடுதலை இயக்கம் வெற்றி யுற்று பழைய அடிமை நாடுகள் சுதந்திரமடைந்தன. கால னித்துவம் விட்டுச் சென்ற சிக்கல்களிலிருந்து வெளியேறி விட அரசியல் பொருளாதார ரீதியிலே பல நடவடிக்கை களை இவை மேற்கொண்டன. இத்தகைய அமைப்பிலே அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது. பொருளாதார, அரசியல், நீதித்துறை நிறுவனங்களையும் அமைப்புகளையும் மாற்றி அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே மார்க்ஸிஸத்தை முதன் முதலில் செயல் முறைத் தத்துவமாக்கிய அக்டோபர் புரட்சியையும், இப்புரட்சி உரு வாக்கிய சோவியத் யூனியனையும், மக்கள் நன்கு அறியவேண் டும். கடந்த இரு தசாப்தங்களிலும், குறிப்பாக எமது நாட்டில் 1956ல் அமரர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்கா புதிய சகாப்தத்தை ஆரம்பித்தபின் கழிந்த இரு பது ஆண்டுகளிலும் சோவியத் யூனியனைப் பற்றியும், அதன் சாதனைகள் பற்றியும் அறிந்து கொள்ள மக்கள் அவாவுறு கின்றனர். மூன்ரும் உலகினைப் பொறுத்த மட்டில் ரஷ்யா மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறமுடியும்.
vii

Page 6
முன்பு போலல்லாது, இன்று பலர் சோவியத் யூனியனுக்கு நேரே சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏரோ புளொட் விமான மூலம் லண்டன் செல்பவர்கள் கூட சில மணிநேரம் மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்க முடிகிறது" நல்லுறவு வளர்ச்சியினல் பரஸ்பரத் தொடர்பு ஏற்பட் டுள்ளது. மேலை ஏகாதிபத்தியவாதிகள் புனைந்த பொய்க் கதைகளையும் தீட்டிய அழகற்ற சித்திரங்களையும் நம்ப மக் கள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைக் குறிப்பிடும் போது சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்த ஸ்கொட்டிஷ் சட்டவியலாளர் லயனல் டெய்செஸ் என்பவர் கூறியது நினைவிற்கு வருகிறது. சோவியத் யூனியனில் ஜனநாயகத் தன்மை மிக்க சட்ட நிர்வாக முறை இருக்கும் எனத்தான் முன்பு எண்ணியிருக்கவே இல்லை என்1 ஒளிவு மறைவன் றித் தனது நூலின் ஆரம்பத்திலேயே தெரிவித்து, அப்போதிருந்த எதிர்ப்பிரசாரத்தின் தாக்கத்தை ஒப்புக் கொண்டார். மாஸ்கோ நகர நீதிமன்றத்துக்குத்தான் சென்று பார்த்த தனக் குறிப்பிட்ட போது பின்வருமாறு தெரிவித்தார்: * மிக்க ஆச்சரியத்துடன் நீதிமன்றத்தில் இருந்து நடவடிக்கை களை அவதானித்தேன். நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட கெளர வம், சட்ட அறிஞர்கள் வாதித்த முறை, சட்டமேற்கோள் களை எடுத்து விளக்கிய பான்மை ஆகிய அனைத்தும் செந் நீதி பற்றி நான் கொண்டிருந்த தவருன கருத்துக்களைச் சிதறடித்தன. மாஸ்கோவின் நடுமத்தியிலே ஒரு நீதிமன் றத்தில் வீற்றிருக்கின்றேன என்ற சந்தேகமே எனக்கு எழுந்தது," என்று இவர் கூறியிருந்தார். லயனல் டெய் செஸ் அவர்களைக் குறை கூற முடியாது. ஏகாதிபத்தியச் சூழ்ச்சியில் அவர் அகப்பட்டிருந்ததால் சதிப் பிரசாரத்தை முன்பு நம்பியிருந்தார். உண்மையை அறிந்ததும் உலகத் துக்கே இதனை அறிவிக்க வேண்டும் என்ற ஆசை மேலிட்டு நூல் வரைந்தார்.
இன்று ஏகாதிபத்திய பிரசாரம் முற்ருகவே முறியடிக்
கப்பட்டு விட்டது என்று திட்டவட்டமர்கக் கூறமுடியாது.
சோவியத் யூனியனுக்கு நேரே செல்லும் வாய்ப்பு பலருக்கு
இன்று கிடைக்கின்றதெனினும், எதிர்ப் பிரசாரமும் வளர்ச்சி கண்டே வருகிறது எனலாம். எனவே உண்மையை மக்கள், அறியவேண்டும். பொய் கண்டவிடத்து அதனை நசுக்கி
விடவேண்டும். ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் பொய்ப்
பிரசாரம். இவ்வேளையில் தான் இலட்சிய எழுத்தாளன்
பணி தேவைப்படுகிறது. உள்ளதை உள்ளவாறு இதயத்
துடிப்புடன்சொல்லி இருளை இவண் அகற்ற வேண்டும்.
viii

இப்பணியினைச் செவ்வனே செய்யக்கூடிய அறிவையும் ஆற்றலையும் இதய சுத்தியையும் தகுதியையும் தராதரத்தை யும் பெற்றவர் டாக்டர் கதிரவேலு இந்திரகுமார்.
வைத்தியத்துறையில் ஈடுபட்டுள்ளவரெனினும், தமிழ் மேலும், தமிழர் அரசியல் சமூக பொருளாதார மேம் பாட்டிலும் அக்கறை கொண்டுள்ளவர் என்பதனை தமிழ் மக்கள் அறிவார்கள். இளம் பிராயத்திலிருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் டாக்டர் இந்திரகுமார் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவரது எளிய தமிழ் நடையும், விளக்கமாகவும் , எதையும் அலங்காரமாகவும் சொல்லும் பாங்கும் தமிழ் வாசகர்களைக் கவர்ந்தவை. இக்கட்டுரைகள் ** தினகரனில்" வெளியாகிய போது கிடைக்கப் பெற்ற பாராட்டுக் கடிதங்களே வாசகர் களின் உள்ளங்களில் எத்தனை உயரிய இடத்தை இவர் பெற்றுள்ளார் என்பதற்குத் தக்க சான்று.
பிரயாணக்கட்டுரை டாக்டர் இந்திரகுமார் கால் எடுத்து வைத்த புதிய துறை. விண்வெளி ஆராய்ச்சியில் இவர் இறங்கி ஓர் அரிய நூலைத் தந்த போது, அரசாங்கம் சாகித்திய மண்டலப் பரிசளித்துக் கெளரவித்தது. பிரயாணக் கட்டு ரைகள் பற்றி நாம் அதிகம் குறிப்பிடத் தேவையில்லை. இக்கட்டுரைகளைப் படிக்கும்போது வியாபித்தெழுகின்ற உணர்வே அவர் எழுத்தின் வெற்றி. இவற்றைப் படிக்கும் தோறும் சோவியத் யூனியனுக்குச் சென்று அந்நாட்டைப் பார்க்க வேண்டும், அம்மக்களோடு பழக வேண்டும் என்ற ஆவல் எம்மை அறியாமலேயே எழுகின்றது. ஏகாதிபத்தி யச் சதிப்பிரசாரம் முறியடிக்கப்பட்டு நிதர்சனமான் . யதார்த்த நிலை தோற்றுவதால் சோவியத் மக்க ளுக்கு எம்மை அறியாமலேயே எமது அன்புக் கரத்தை நாம் நீட்டுகின்ருேம். இக்கட்டுரைகள் 'தினகரனில்" வெளியாகிய காரணத்தால் சுயபுராணம் எனக் கொள்ளக் கூடும் என நினைத்து இவண் மேலும் கூருது விடுகின் ருேம்.
டாக்டர் இந்திரகுமார் சேவை வளரவேண்டும். இதர எழுத்தாளர்களைப் போலல்லாது டாக்டர் இந்திரகுமார் சில துறைகளில் விசேட தகுதி பெற்றவர். பிறர் எழுதத் துணியாத துறைகளில் எழுதும் தகுதியும் திறமையும் இவ ருக்குண்டு. எனவே மேன்மேலும் நூல்களை ஆக்கித் தந்து தமிழ் மொழியைச் சிறப்பிக்க வேண்டும். இப்பணியில் டாக்டர் இந்திரகுமாருக்கு நாம் உதவ முடிந்ததே என நினைக்கும் போது மன மகிழ்வெய்துகின்ருேம்.
ix

Page 7
வெளியீட்டுரை
குணசேன வித்தான, பொதுச் செயலாளர், மக்கள் எழுத்தாளர் முன்னணி.
மக்கள் எழுத்தாளர் முன்னணியின் பொருளாளரான
டாக்டர் க. இந்திரகுமார் எழுதிய ‘புதுயுகம்
கண்டேன்’ என்ற நூலை வாசகர்களுக்கு அளிப்பதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிருேம்.
சிங்கள எழுத்தாளர்களையும், தமிழ்ப் பேசும் எழுத்தாளர் களையும் உள்ளடக்கிய மக்கள் எழுத்தாளர் முன்னணியின் ஒன்பதாவது வெளியீடாக இது வருகிறது. இது தமிழில் நாம் வெளியிடும் மூன்றுவது நூலாகவும் அமைகிறது,
இது உலகின் முதலாவது சோஷலிஸ் சமுதாயத்தை நிறுவிய சோவியத் யூனியனைப் பற்றிய நூல் என்பது வெளி யீட்டாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது,
ஒரு சோஷலிஸ் சமுதாயத்தை உருவ்ாக்குவதை இலட்சிய மாகக் கொண்ட எமது மக்களுக்கு இந் நூல் ஊக்கமும் உந்துவிசையும் அளிப்பதாக அமையின், இதைப் பிரசுரித்த நோக்கம் நிறைவேறியதாக நாம் திருப்தி அடையலாம்
அந்த நம்பிக்கை எமக்குண்டு.
 
 

நீங்கிகண்டன்|
உலகின் முதலாவது சோஷலிஸக் குடியரசு தோன்றி இதுவரை ஐம்பத்தெட்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவேறி உள்ளன. எனினும்இக்குறுகிய காலகட்டத்தினுள்ளேயே சோவியத் சோஷ லிஸக் குடியரசுகளின் ஒன்றியம் கலாசார வளமும் பொரு ளாதார முதிர்ச்சியும் மிக்க ஒரு சமுதாயமாக மலர்ந்துள் ளது; புதியதொரு வாழ்க்கை முறையை, சமூக நீதியை உலகிற்கு வழங்கியுள்ளது; எம் கண் முன்னே புதியதொரு யுகத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
சோவியத் வாழ்க்கை முறை என்பது, சோஷலிஸ் சமூக நீதி என்பது வெறும் சுலோகம் என்ற நிலையைக் கடந்து விட்டது; வெறும் கோட்பாடு என்ற கட்டத்தைத் தாண்டி விட்டது. w
சோவியத் மக்களின் நாட்டில் இதன் யதார்த்த பூர்வ மான செய்ல்பாட்டை, நிகழ்வை எவரும் கண்ணுல் காணக் கூடியதாக உள்ளது; அனுமானித்து அளவிடக்கூடியதாக உள்ளது.

Page 8
இத்தகைய புதுயுகம் படைப்பதற்குச் சோவியத் மக்க ளுக்குச் சோவியத் கம்யூனிஸ்ட கட்சி தலைமை தாங்கி வழி நடத்தியுள்ளது; சோவியத் மக்கள் மார்க்ஸிஸ-லெனி னிஸக் கொள்கைகளைச் செயற்படுத்தியுள்ளனர்.
சோஷலிஸக் கொள்கையின் வெற்றி, அதன் விளையா கச் சோவியத் பொருளாதாரத்தில், விஞ்ஞானத்தில், 5 ώύ Π சாரத்தில் ஏற்பட்ட வரலாற்றுத் தகைமைமிக்க மாற்றங்கள், சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் கலாசார மேம்பாட்டிலும் ஏற்பட்ட ஈடினையற்ற வளர்ச்சி, சேஷலிஸ் ஜனநாயகத்தின் படிமுறை வளர்ச்சி, சோவியத் மக்களின் வெற்றிகளும் சாதனைகளும் - இவை யாவும் மாமேதை லெனினின் நாமத்தோடு, லெனினின் போதனை களோடு, லெனினின் கம்யூனிஸ்ட் கட்சியோடு இரண்டறக் கலந்துள்ளன.
இந்த மாற்றங்கள் சோவியத் மக்களின் வாழ்க்கை முறை யின் ஒவ்வோர் அம்சத்திலும் பிரதிபலிக்கின்றன. சோவியத் மக்கள் வல்லமை மிக்க ஒரு சோஷலிஸப் பொருளாதா ரத்தைக் கட்டி எழுப்பி, தொழிலுக்கும் வாழ்வுக்கும் புதிய அத்திவாரமிட்டு, புதியதொரு சோஷலிஸக் கலாசாரத்தை யும் உருவாக்கியுள்ளனர்.
திட்டமிட்ட உற்பத்தி, மக்களின் பொருளாதார ஆன் மிக்த்தேவைகளை இயன்றவரை முழுமையாகப் பூர்த்தி செய் வதற்கும் விருத்தி செய்வதற்கும் ஏற்ற சமூக வாழ்வை உரு வாக்குதல் - இவையே சோவியத் நாட்டின் சமூக அபி விருத்தித் திட்டத்தின் அடிப்படை இலக்குகளாகும்.
சோவியத் நாட்டில் தெரியும் மாற்றங்கள் வெறும் புற மாற்றங்கள் மட்டுமல்ல. நாம் அனுபவப்பட்ட மனிதர்களி லிருந்து முற்றிலும் வேறுபட்ட மனப்போக்குள்ள மக்களை, முற்றிலும் புதிய ஒரு சமூகச் சூழலை அங்கு காணலாம். மக்களிடையே முற்றிலும் புதிய சமூக உறவுகள் வேரூன்றி யிருப்பதைக் காணமுடியும். ஒரு மனிதனுடைய அந்தஸ்து முற்றிலும் புதிய முறையில் நிர்ணயிக்கப்படுவதைக் காணக் கூடியதாய் உள்ளது. பரிபூரண சமத்துவம் உள்ள ஒரு சமுதாயத்தில் மனிதன் அங்கே வாழ்கிருன். . அவனது நாளாந்த வாழ்வு நம்பிக்கை, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனல் மனிதனது மனப்போக்கே மாறி, அவன் 'அகத்தூய்மை உள்ள ஒரு புதுப் பிறவியாக விாழ முற்படுவதைச் சோவி
யத் நாட்டில் காணலாம்.
盛

மனிதனை மனிதன் சுரண்டி வாழ்வதையே மூலாதாரமாகக் கொண்ட ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பிற்கும் சோவி யத் சமூக அமைப்பிற்கும் தான் எத்து26ன வேற்றுமை! மாமேதை லெனின் சொன்னது போல ஒரு முதலாளித்துவ நாட்டில், அதன் சமூக அமைப்பில் ஒருவன்', 'திருடுபவ னகவோ அல்லது திருடப்படுபவனகவோ, மற்றவர்களுக் காக உழைப்பவனகவ்ோ அல்லது மற்றவர்களின் உழைப் பைச் சுரண்டுபவனுகவோ, அடிமையாகவோ அல்லது அடி மைகளை ஆள்பவனுகவோ” மட்டுமே இருக்க முடியும,
சகல விதமான சமூக தேசிய அட்டூழியங்களுக்கும் சோஷ லிஸ் வாழ்க்கை முறை சமாதி கட்டிவிட்டது. சமூகம் ஆண் டான், அடிமை என்ற கேவலமான பாகுபாடுகளுக்கு உள் ளாக்கப்படுவதைச் சோவியத் சமூக நீதி அனுமதிப்பதில்லை. முதலாளித்துவ அடிமைத் தனத்தை அறவே களைந்தெறிந்த மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்சி, உழைக்கும் மக்களை அந்நாட்டின் தலைவர்களாக, தலைவிதியை நிர்ண யிப்பவர்களாக, தேசியச் செல்வத்தின் உரிமையாளர்களாக" -பாதுகாவலர்களாகப் பிரகடனம் செய்தது.
சோவியத்தில், சோஷலிஸத்தின் கீழ், நாட்டின் சகல
இயற்கை மூலவளங்களும், மனித உழைப்பின் பலாபலன் களும் முழுச் சமூகத்தினதும் சொத்தாக்கப்பட்டுள்ளன. இவற்றிற்குத் தனி நபர்கள் சொத்துரிமை கொண்டாட முடியாது.
* "ஜனநாயகம்' என்ற போர்வையின்கீழ், முதில்ாளித்துவ ஆட்சிமுறை நிலவும் அமெரிக்காவிலே, நாட்டின் செல்வுத் தில் 25 சத வீதத்திற்கு 0.5 சத வீத மக்கள் உரிமையாளர்க் ளாக இருக்கின்றனர். அதே போல், இங்கிலாந்தில் நாட் டின் தனியார் சொத்துக்களில் 75 சத வீதத்திற்கு அந் நாட் டின் ஜனத்தொகையில் 5 சத வீதத்தினர் சொந்தக்காரர் களாய் உள்ளனர். ஒரு சிலருக்கு மட்டும் ஜனநாயகம் என்ற இந் நிலையைப் போலல்லாது, சோவியத் நாட்டில் சகலருக்கும் ஜனநாயகம் நிலவுகிறது.
உண்மையான ஜனநாயகம் - அதாவது மக்களால், மக்கிளுக்கென நிறுவப்படும் ஒரு மக்கள் அரசு - சாத்திய மாவது நாட்டின் சகல பொருட் செல்வங்களும் ஆன் மிகச் செல்வங்களும் அனைத்து LDој фof 60Tri tih go 360) L 60 LDLJIT-5 இருக்கும்போதும் அம் மக்களின் கைகளிலே ஆட்சியின் சகல பொறுப்புக்களும் இருக்கும்போதும் தான் என்பதைச் சோவி யத்தின் பிரமாண்டமான வள்ர்ச்சி நிரூபித்து நிற்கிறது.

Page 9
சோவியத்நாட்டில் பெரியவையும் சிறியவையுமாக நூற் றுக்கு மேற்ப்ட்ட தேசிய இனங்கள் உள்ளன. இவ்வளவு பெருந்தெரிகையான தேசிய் இனங்களைக் கொண்ட நாடு உலகில் வேறேதும் இல்லை. தேசிய இனங்களின் பிரச் சினைக்கு நியாயமான, ஜனநாயகபூர்வமான தீர்வு கண்ட உலகின் முதல் நாடு சேர்வியத் நாடே.
சகல மக்களுக்கும் சமவுரிமை, பல்வேறு இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் சமவுரிமை, இன ரீதி யில் பாகுபாடு காட்டப்படுவதற்கோ சலுகைகள் வ்ழங்கப் படுவதற்கோ தடை-இவை சோவியத் வாழ்க்கை முறை யின் சீரிய அம்சங்களாகும். சகல சோவியத் மக்களும், அவர்கள் எந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்தவராயிருப்பி னும் சரி, சோவியத் நாடு ன்ன்ற ஒரே தாயகத்தின் குடி மக்களாக, பொதுவான அக்கறைகளும் பொதுவான கொள் கைகளும் உடையவர்களாக, கம்யூனிஸ் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே இலக்கை உடையவர்க ளாக வாழ்கின்றனர்.
இவ்வளவு பெருந்தொகையான தேசிய இனங்களை உடைய ஒரு நாடு, தனது பல்வேறு இனங்களுக்கிடையே உறுதியான சகோதர வாஞ்சையையும் தோழமையுடன் கூடிய ஒத்துழைப்பையும், பரஸ்பரம் உதவும் தன்மையை யும் கட்டி வளர்த்தது உலகின் வரலாற்றில் வேறெங்கும் இல்லை.
இப் புது யுகத்தில் நான் சஞ்சரித்த காலத்தில் கண்டன வற்றை, கேட்டனவற்றை, அனுமானித்து அறிந்தன வற்றை இனிச்சுருக்கித் தருகிறேன்.

2
வழிபாட்டுச்
சுதந்திரம்
ஒனக்கும் என்னேடு சோவியத் பயணம் மேற்கொண்ட "தினமின" சிங்களத் தினசரி ஆசிரியர் டி. பி. பெறமுனதிலக்கவுக்கும் சோவியத் நாட்டில் சுற்றிப் பார்ப்ப தற்கு வேண்டிய நிகழ்ச்சி நிரலை, அயல் நாடுகளுடன் நட் புறவு-கலாசாரத் தொடர்புகள் மேற்கொள்வதற்கான சோவியத் சம்மேளனம் தயாரித்திருந்திது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அன்று காலைப் பொழுது ஒய்வு எடுப்பதைத் தவிர வேறெந்த நிகழ்ச்சியும் எமது நிகழ்ச்சி நிரலில் இல்லை.
எமது மொழிபெயர்ப்பாளர் திருமதி லுட்மிலா பெட் டோணிச் நாம் தங்கியிருந்த "ஹோட்டல் ருெஸியா' வுக்கு வந்து சேர்ந்தார்.
லுட்மிலா 21 வயதே நிறைந்த கவர்ச்சிகரமான ஒரு ரஷ்யப் பெண். சுறுசுறுப்பு, மதிநுட்பம், செயலாற்றல், இனிய சுபாவம் அமைந்தவர். சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றிருந்தார். 'லுரடா' என்று சுருக்கமாக அவரை அழைத் தோம் .
'இன்று காலை ஒய்வு எடுக்க விரும்புகிறீர்களா? அல்லது, நீங்கள் பார்க்க விரும்புகின்ற ஏதாவது இடமிருக்கிறதா, சொல்லுங்கள், அழைத்துச் செல்கிறேன்," என்ருர்.
மாஸ்கோவில் ஒய்வா? இந்தப் புது யுகத்தில் பார்க்க வேண்டியது எத்தனையோ இருக்கையில், எந்த முட்டாள் தான் அறையில் முடங்கிக் கிடக்க விரும்புவான்?
"லூடா, மாஸ்கோவில் உள்ள ஏதாவது ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எங்களை அழைத்துச் செல்வீர்களா?" என்று கேட்டேன்.
**அதுவும் நல்ல ஒரு யோசனைதான். ரஷ்யாவின் பழைய கட்டடக் கலை, சிற்ப-ஓவியக் கலைகளைப் பற்றி நீங்கள் இங்கே அறிந்துகொள்ள நிறைய வாய்ப்பு உண்டு," என்ருர் லூடா.

Page 10
'நாம் புறப்பட்டோம். ஆாடா கூற்ய வார்த்தைகளின் அர்த்தம் என்ன? வழி நெடுகிலும் என் மனம் இதைப் பற்றியே சிந்தித்தது.
இளம் பெண்ணுன லூாடா தேவாலயம் என்றவுடன், தெய் வத்தைப் பற்றியோ வழிபாட்டைப் பற்றியோ பேசாமல், கட்டடம்-ஒவியம்-சிற்பம் பற்றி மட்டுமே பேசியதிலி ருந்து அவர் இறை நம்பிக்கை அற்றவர் என்ற முடிவுக்கு வந்தேன் •
நாம் சென்ற தேவாலயம் ரஷ்ய கிறிஸ்தவ வைதி கத் திருச்சபைக்கு உரியதாகும். உடலை உலுக்கும் சைபர்பாகை சென்டிகிரேட் குளிரில், பெருமையுடன் நிமிர்ந்து நின்ற அந்தப் பழைய, நெடிய கட்டடத்தைக் காலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் தழுவி நின்றன. ஜனசந்தடியையே காணுேம். குளிரிலிருந்து பாது காப்புப் பெறுவதற்காக, ஒன்றின் பின் ஒன்ருக அமைக்கப் பட்டிருந்த பாரிய தேவாலயக் கதவுகளை இழுத்துத் திறந்து கொண்டு உள்ளே சென்ருேம் .
நாம் கண்ட காட்சி- அங்கே ஒரு சின்னஞ்சிறு உலகம்! "பெரிய ஒரு சிலுவை; அதில் அறையப்பட்டிருந்த ஏசுநாத ரின் உருவம்; வெண்ணுளியை அள்ளி வீசும் நீண்ட மெழுகு வர்த்திகள்,தங்கம் போல் தகதகவென்று ஜொலிக்கும் நீண்ட அழகிய அங்கிகளை அணிந்த பாதிரிமார்கள்; பக்தியுடன் முழந்தாளில் நின்று வழிபடும் மக்கள் கூட்டம் , ஞாயிற்றுக் கிழமை அல்லவா? காலை நேரப் பூசை பூரண பொலிவுட னும், கோலாகலத்துடனும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. உள்ளே பிரவேசித்தோம். பிரார்த்திக்கும் மக்கள் கூட்டத் தினுள் நாமும் புக முயன்ருேம் . . அப்போது-வயது முதிர்ந்த ஒரு கிழவி எனது தோளிலே தடடி, எனது தலையை நோக்கித் தனது விரலைச் சுட்டிக் காட்டினள். எனது தலையிலே மாஸ்கோவின் கொடும் குளிரைத் தாங்கு வதற்காக நான் அணிந்திருந்த விலங்கு உரோமம் பதித்த தொப்பி இருந்தது. அதை அகற்றும்படி சைகை காட்டினுள். பிரார்த்தனையின்போது தொப்பி அணியக் கூடாது - அங்கே அவள் வைத்ததுதான் சட்டம் , தொப்பிகளைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டோம்.
பாதிரிமார் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தனர். எனது விழிகளைச் சுற்றிலும் ஒடவிட்டேன் அந்தத் தேவாலயத் தில், ஆண்களும் பெண்களுமாகச் சுமார் 200 பேர் வழி ’ பட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானேர்
6

வயது முதிர்ந்தவர்கள். இளைஞர்கள், நடுத்தர் வயதினர் என்று சொல்லக்கூடிய வயதுப் பிரிவில் பத்து அல்லது பதினைந்து பேர்மட்டுமே இருந்தனர்.
வழிபட்டோர்களில் சிலர் கடதாசித் தாள்களில் எதையெதையோ எழுதி நீண்ட மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்த ஒரு மேசையின் மீது வைப்பதைக் கண்டேன். ஆண்டவனிடம் தனது வேண்டுகோளை எழுதிச் சமர்ப்பித்த தாக வயது முதிர்ந்த ஒரு பெண் எமது மொழிபெயர்ப் பாளரிடம் விளக்கினுள்.
கம்யூனிஸத் தத்துவம் பொருள் முதல்வாதத்தை அடிப் படையாகக் கொண்டது. எனவே அது மதத்தை நிராகரிக் கிறது. எனினும், சோவியத் நாட்டின் கம்யூனிஸ்ட் அரசு மக்களின் மீது தனது கருத்தைப் பலவந்தமாகத் திணிக்க வோ, அல்லது மக்களின் வழிபாட்டுச் சுதந்திரத்துக்குத் தடை விதிக்கவோ இல்லை.
கம்யூனிஸத் தத்துவத்தைப் படித்தறிந்து, அதில் பரிபூரண நம்பிக்கை ஏற்பட்டபின், சோவியத் மக்கள் தாமாகவே தேவாலய வழிபாடுகளை நிறுத்திக் கொள்கிறர்கள். இவர் களுள் இளைஞர்களும் நடுத்தர வகுப்பினரும் பெருமளவில் அடங்குவர்.
இது சோவியத் நாட்டுக்கு மட்டும் பொதுவான நிகழ்வு அல்ல. அனைத்துலகலுமே இளம் தலைமுறையினரிடத்தே இறை நம்பிக்கை குறைந்த போக்கு பெரிதும் பரவி வருவதை நாம் காணலாம். •
மாஸ்கோவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள ஸகோர்ஸ்க் நகரில் உள்ள (ரஷ்ய வைதிகத் திருச்சபைக் குச் சொந்தமான) டிரினிடி-செர்ஜியஸ் மடாலயத்துக்கு நான் சில தினங்கள் கழித்து விஜயம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இங்குள்ள சில பாதிரிமார்களுடன் உரையாடிய திலிருந்தும் , எமது மொழிபெயர்ப்பாளருடன் பேசியதிலி ருந்தும் சோவியத்நாடடில் மதங்களுக்கு உள்ள இடம் பற் றிப் பல சுவையான தகவல்களைத் தெரிந்து கொண்டேன். சோவியத் நாட்டில் பிரஜைகளுக்கு மனசாட்சிச் சுதந்தி ரத்தை உறுதிப்படுத்துவதற்காக, அந்நாட்டில் திருச்சபை அரசாங்கத்திலிருந்தும் பள்ளிக்கூடங்களிலிருந்தும் பிரிக்கப் பட்டுள்ளது; சோவியத் நாட்டிலுள்ள ஆஸ்திகர்களுக்கு மத வழிபாட்டுக்கும், மதச் சடங்குகளைப் புரிவதற்கும் உரிமை உண்டு; அதேபோல், நாஸ்திகர்கள் தம் கருத்தைப் பரப்பு வதற்கும் உரிமை உண்டு-இது சோவியத் அரசியலமைப்புச் சட்டத்தின் 124ம் பிரிவாகும்.

Page 11
ஸகோர்ஸ்க் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம்
ஆனல்-தாஸ்திகப் பிரசாரம் மத நம்பிக்கை உள்ளவர் களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் பெரும் சிரத்தை எடுக்கின்றது. இதை உறுதிப் படுத்தும் முகமாக அமைந்துள்ளது சோவியத் குற்றிவியல் சட்டத்தின் 143 Lib பிரிவு-பொது அமைதியைக் குலைக்காமலும், பிறமக்களின் உரிமைகளை lfo LD லும் நடைபெறும் மதச் சடங்குகளைத் தடுக்கும் எவருக்கும் ஆறு மாதச் சீர்திருத்த உழைப்பு முக்ாம் (அதாவது சிறைத் தண்டனை அல்லது பொதுக் கண்டனம் என்ற தண்டனை) அளிக்கப்படலாம்.
ஒரு சில வருடங்களுக்கு முன் , தமிழ் நாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் கடவுள் சிலைகளே வண்டிகளில் ஏற்றி, செருப்பால் அடித்தவாறே ருத்தெருவி e வலமாகச் சென்ருர், ந்து ச்மயம் கொலுவீற்றிருக்கும் இந்தியா இந்த அநாகரிகத்தைப் பொறுத்துக்கொண்டது. ஆனல். கம்யூனிஸத்தை இலட்சியமாக வரித்துக் கொண்ட சோவியத் நாட்டில் ஈ.வே.ரா, அல்லது வேறு எவராவது இச்செயலை நிறைவேற்றியிருந்தால், ஆஸ்திகர்களின் உணர்சசி களே அவமதித்த குற்றத்திற்காக அந் நாட்டுச் சட்டம் அவரை ஆறு மாதங்கள் "கம்பி எண்ண' வைத்திருக்கும்!
8
 

சோவியத் நாட்டில் நிலவும் வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
GSFIT கியத் நாட்டில் மதச்சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது உண்மையில் ஜார் மன்னரின் ஆட்சிக்காலத்திலேதான். ஸகோர்ஸ்க் பாதிரிமார்களே இதைக் கூறினர். வைதிகத் கிறிஸ் கடைச் ச்சபை ஒன்றையே ஜார் அரசு_ஆங்கீகரித் திருந்தது. ஏனைய மதத்தவர்களைப் பலவந்தமாக மதம் 鸞零點 இத் திருச்சடையின் உயர் பதவிகளைக் கூடப் பெரும் நிலப்பிர புக்களே வகிக்கலாம் என்ற நிலை இருந்தது. திருச்சபை விதிகளை மீறுவோர் சைபீரியத் தடுப்பு முகாம்களுக்கு அனுப் பப்பட்டுவந்தனர். கிறிஸ்தவர் அல்லாதாருக்கும் மதநம் பிக்கை அற்றேருக்கும் அரசாங்கப் பதவிகள், உத்தியோ கங்கள், கல்லூரி அனுமதி என்பன வழங்கப்படவில்லை.
மாமேதை லெனின்,மதங்களைப் பற்றி 1903ல் பின்வரு
மாறு எழுதியிருந்தார்
“ஒவ்வொருவருக்கும் தாம் விரும்புகின்ற மதத்தைக் கடைப்பிடிக்கவோ, தமது மதத்தைப் பரப்பவோ, மதம் Lрп дрGа п முற்றிலும் சுதந்திரம் இருக்க வேண்டும். எவரது மதத்தைப் பற்றியும் அவரிடம் கேட்க எந்தவோர் அதிகாரி க்கும் உரிம்ை இருக்கக் கூடாது. இது ஒவ்வொருவரின் மனச்சாட்சி சம்பந்தப்பட்ட விஷயம் இதில் தலையிட் எவ ருக்கும் உரிமையில்லை. அங்கீகரிக்கப்பட்ட மதம் அல்லது திருச்சபை என்று எதுவும் இருக்கக் கூடாது. தடிடாது. எல்லா மதங் களும், எல்லாத் தேவாலயங்களும் சட்டத்தின் முன்னுல் சம அந்தஸ்துள்ளவையே'.
1917ல் அக்டோபர் புரடசி வெற்றி பெற்று, சோவியத் தலைவராக லெனின் வந்த பின்பும் இதே கருத்தையே தெரிவித்தார். 。儘駕醬顎器"。蠶 விரும்புவதை நம்பிவிட்டுப் போகட்டும். அல்லது எதையும் நம்பாமலும் போகட்டும். சோவியத் குடியரசு சமய சம்பந்த மான தனிப் பண்புகளை அங்கீகரிக்கவில்லை." " எனவே திருச்சபையிலிருந்து அரசாங்கத்தையும் பள்ளிக் கூடங்களையும் பிரிக்கும் ஆணையை சோவியத் அரசு கொண்டுவந்தது. சோவியத்திலுள்ள மதஸ்தாபனங்களின் உள் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை. அதேபோல மத நிறுவனங்களும் அரசாங்கத்தில் தலையிடுவதில்லை. ஒரு வர் ஆஸ்திகரா, நாஸ்திகரா என்பதும், ஆஸ்திகராயின் எந்த மதஈடுபாடு கொண்டவர் என்பதும் சோவியத் சமூகத்தில்
9,

Page 12
ஒருவரின் தொழிலையோ அன்ருட வாழ்வையோ பாதிப் பதில்லை.
ஜார் ஆட்சியில் மதரீதியாக நடைபெற்றுவந்த பாகுபாடு அக்டோபர் புரட்சியுடன் ஒழிந்தது. விண்ணப்பத்தாள், கேள்வித்தாள், குடிசனக் கணக்கெடுப்பத் தாள், கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) போன்ற எந்தவோர் உத்தியோக பூர்வமான அரசாங்கப் படிவமும் ஒருவருடைய மதத்தைப் பற்றிக் கேட்பதில்லை. எனவே மத அடிப்படையில் பாகு பாடு காட்டப் படுவதற்கோ, சலுகைகள் வழங்கப்படுவதற் கோ சோவியத் நாட்டில் இடமில்லை.
சோவியத் நாட்டின் உயர் அதிகார ஸ்தாபனமான சுப்ரீம் சோவியத் நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானம் இதை வரையறுக்கிறது:-
'குடி மக்களுடைய சமயம்_பற்றிய கண்ணுேட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர்களுக்கு வேலைதர மறுப் பதும், கல்வி நிறுவனங்களிலிருந்து அவர்களை வெளியேற்று வதும், அவர்களுக்குச் சட்ட பூர்வமாகச் சேரவேண்டிய சலு கைகளையும் முன்னுரிமைகளையும் மறுப்பதும், இவைபோன்ற இதர தீவிர தவறுகளைச் செய்வதும், 'கிரிமினல்’ குற்ற மாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படும்." சோவியத் நாட் டில் பல்வேறு மதங்களும், மத நிறுவனங்களும் உள்ளன. இவற்றுள் ரஷ்ய கிறிஸ்தவ வைதிகத் திருச்சபையே மிக அதிகமான ஆதரவாளர்களையும், மத ஊழியர்களையும், தேவாலயங்களையும் கொண்டுள்ளது. இது முழு ரஷ்யா வுக்குமான ‘பாட்ரியார்க் கின் தலைமையின் கீழ் இயங்கு கிறது. , . . ზი”
இதைவிட, ஜியோர்ஜிய வைதிகத் திருச்சபை, ஆர் மீ னிய கிரிகோரியன் சபை'பழைய விசுவாசிகளின் திருச்சபை, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, இவாஞ்சிலிக்கல் லுரத ரன் தேவாலயம், இவாஞ்சிலிக்கல் கிறிஸ்தவ பாப்டிஸ்ட் தேவாலயம் போன்ற இதர கிறிஸ்தவ மத நிறுவனங்களும் இயங்குகின்றன.
சோவியத் நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய.மதம், இஸ்லாம் ஆகும். பெரும்பாலானசோவியத் முஸ்லிம்கள் 'தன்னிகள் ஆவர். 'Srயா’க்களும் உள்ளனர். நான்கு சுயேச்சையான இஸ்லர் யே சபைகள் சோவியத்தில் உள் GT6 М
மத்திய ஆசியா, ஆஸாக்ஸ்தான் இஸ்லாமிய சபை உஸ் பெக் குடியரசின் தலைநகரான தாஷ்கந்தில் அமைந்துள்
I O

ள்து. முஃப்தி ஸியாவுத்தீன் பாபாகான் இதன் தலைவர் ஆவார். ー 一
சோவியத் ஐரோப்பியப் பகுதிக்கும், 60F i riu unr @nyj GB மான இஸ்லாமிய சபை பாஷ்கீர் சுயாட்சிக் குடியரசின் தலை நகரான உஃபாவில் உள்ளது. முஃப்தி ஷகீர் ஹியாலுத்தீன்,
தன் தலைவர் ஆவார்.
வட காகஸஸ் இஸ்லாமிய சபை தாகெஸ்தான் குடியர8 லுள்ள பியூனுக்ஸில் உள்ளது. முஃப்தி முகம்மது ஹா குர்பான் இதன் தலைவர் ஆவார். , -- ༠ མཉམ་པ་ལ་ བར་པ་ ཁ་བ་
ஷேஇக்-உல்-இஸ்லாம் சுலைமான் g-T (Sg5 Sg26Ö) -27 என்பவரைத் தலைவராகக் கொண்ட டிரான்ஸ்காகேசிய இஸ்லாமிய சபை அஸர்பைஜான் குடியரசின் தலைநகரான ப்ாகூவில் உள்ளது.
டிரான்ஸ்காகேசிய இஸ்லாமிய சபைத் தலைவர் ஷேஇக்உல்-இஸ்லாம் சுலைமான் சாதே அலி ஆகா அவர்கள் அஸர் பைஜான் குடியரசின் தலைநகரான பாகூவில் உள்ள தாஸாக
பீர் மசூதியில் த்ொழுகை நடத்தும் காட்சி.
-

Page 13
புத்தமதம் சோவியத் நாட்டிலுள்ள புர்யாத் கால்மிக், துவா சுயாட்சிக் குடியரசுகளிலும், ரஷ்ய சமஷ்டியின் சிதா இர்குத்ஸ்க் பிராந்தியங்களின் சில பகுதிகளிலும் பின்பற்றப் படுகிறது. சோவியத் பெளத்தர்களின் மத்தியக் குழுவின் தலைவர் பாண்டிடோ காம்போ-லாமா கோம்பயேவ் ஸாம் பால்-தோர்ஷி ஆவார். இவரது தலைமையில் ஐவர் கொண்ட சோவியத் பெளத்த தூதுக்குழுவொன்று 1975 நவம்பரில் இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண் டது தெரிந்ததே.
மாஸ்கோவில் நான் இருந்த சமயத்தில், அங்கே ஒரு சர்வ தேச பெளத்த மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக உலக பெளத்த நாடுகள் பல வற்றிலிருந்தும் புத்த பிக்குகள் வந்திருந்தனர். இலங்கை யைச் சேர்ந்த புத்த பிக்கு மாப்பலகம விபுலஸாற"தேரோ வும், இன்ஞெரு பிக்குவும் வந்திருந்தனர். ஹோட்டல் உக்ரேனில் இவர்களை நான் கண்டேன். பெளத்த மாநாடு பற்றியவிவரங்களை இவர்களே எனக்கு எடுத்துக் கூறினர்.
எந்த ஒரு மத நிறுவனமோ அல்லது சங்கமோ குறைந்த பட்சம் 20 உறுப்பினர்கள் இருப்பின் , தமக்கு வேண்டிய வழி பாட்டு ஸ்தலங்களை அமைத்துக் கொள்வதற்கு வேண்டிய , இடத்தை அரசாங்க ஸ்தலஸ்தாபனக் குழுவிடம் விண்ணப் பித்து இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த இடத்திை நிர்வகிப்பது, பழுதுபார்ப்பது போன்றவை அந் தந்தக் குழுக்களின் பொறுப்பாகும். தமது ஆதரவாளர்களி டம் இருந்து திரட்டப்படும் நிதியை வைத்தே மத ஸ்தாப னங்கள் இயங்குகின்றன; மத ஊழியர்கள் ஊதியம் பெறு கின்றனர்.
மத நிறுவனங்களின் நிதிக்குச் சோவியத் அரசு வரி விலக்கு அளித்துள்ளது.
மேலும், மத நிறுவனங்கள் மதச் சடங்குகளை நடத்துவதற் காகக் கட்டடங்களைக் கட்டவும், வாடகைக்குப் பெறவும் மெழுகுவர்த்தி போன்ற மதச சடங்குப் பொருட் தொழிற் சாலைகளை நடத்தவும் , தமது சொந்தப் பிரார்த்தனை நூல் கள், சமயசஞ்சிகைகளை வெளியிடவும உரிமை பெற்றுள்ளன. மத்திய ஆசியா, கஸாக்ஸ்தான் இஸ்லாமிய சபை, உஸ் பெக், அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய நான்கு மொழி' களில் வெளியிடும் 'கிழக்கு சோவியத்தின் முஸ்லிம்கள்’’ என்ற மாசிகையின் ஆங்கிலப் பிரதியொன்று சோவியத் துருக்மேனியக் குடியரசுக்கு நான் விஜயம் மேற்கொண்ட போது எனக்குக் கிடைத்திது. இச சஞ்சிகையையும் சோவி
l

யத்தில் பிரசுரமான திருக்குர்ஆன் பிரதியொன்றையும் எனது ஈழத்து முஸ்லிம் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக நான் கொண்டு வந்தேன்.
வழிபாட்டு ஸ்தலங்களின் வளவுக்குள் நடத்தப்படும் ஊர் வலங்களுக்கும், சுடுகாட்டில் நடத்தப்படும் ஈமக்கிரியைகளுக் கும் மத நிறுவனங்கள் அரச அனுமதி பெறத் தேவையில்லை.
மத்திய ஆசியா, கஸாக்ஸ்தான் இஸ்லாமிய சபை வெளியிடும் *கிழக்கு சோவியத்தின் முஸ்லிம்கள்? என்ற மாசிகையின் ஆங்கிலப் பிரதியொன்றின் முகப்பு
அட்டை.
ஆனல், நகர விதிகளில் நடத்தப்படும் மத ஊர்வலங்களுக்கு மட்டும், நம் நாட்டில் உள்ளது போல, முன்கூட்டியே அரச அனுமதி பெறப்படல்வேண்டும்.
சோவியத்தில் தேவாலயங்கள் பள்ளிக்கூடங்களிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதால், எந்தவொரு பொதுக் கல்வி நிறு வனத்திலும் எவ்வித மத போதனையும் அளிக்கப்படுவதில்லை. ஆஞல் மத நிறுவனங்கள் சமயப் போதனைக் கூடங்களை நிறுவி அங்கே மதக்கல்வி மட்டும் அளிக்கலாம்.
நான் விஜயம் செய்த ஸ்கோர்ஸ்க்கில், ரஷ்ய வைதிகத் திருச்சபை மூன்று சமய போதனைக் கூடங்களையும், ஒரு சமயப் பேரவையையும் நிர்வகிக்கிறது. இங்கே டிரினிடி செர்ஜியஸ் மடாலயமும், கன்னியாஸ்திரி மடமொன்றும் உள்ள்ன. இது போன்ற கிறிஸ்தவ சம்ய போதனைக் கூடங்
S

Page 14
களையும் மடாலயங்களையும் ஏனைய கிறிஸ்தவ மத நிறுவனங் களும் நடத்துகின்றன.
முஸ்லிம்கள் புஹாராவில் ஒரு மதரஸாவையும், தாஷ் கந்தில் ஒரு மதரஸாவையும் நடத்துகின்றனர்.
மத நிறுவனங்களின் சமயபோதனைக் கூடங்கள் தமது மாணவர்களைப் பட்டம் பெறுவதற்கும், பட்டமேற்படிப்பிற் குமென் அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பு வ 7, ண்டு. கெய்ரோவிலுள்ள ஜாமியா அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம், லிபியாவின் எல்டெ ய்தாவிலுள்ள இஸ்லா மிய பல்கலைக் கழகம், ஆக்ஸ்பர்டிலும், கேம்பிரிட்ஜிலுமுள்ள சமயக் கல்விப் பீடங்கள், மேற்கு ஜேர்மனியிலுள்ள கோட் டின்கென் பல்கலைக் கழகம் என்பன இவற்றுட் சிலவாகும். மேலும், மத நம்பிக்கை உள்ள ஒரு மணமகனும் மண மக ளும், தாம் விரும்பினுல், மத வழிபாட்டு ஸ்தலங்களில் சமயாசாரங்களுடன் திருமணம் ச்ெய்துகொள்ள முடியும். அது ப்ோல்வே, பெற்றேரும், தாம் விரும்பிஞல், தமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தேவாலயங்களில் ஞானஸ் நானம் செய்துகொள்ள முடியும்.
. . அந்தச் சில்லிடும் ஞாயிற்றுக்கிழமைக் காலைப் பொழுது , , மாஸ்கோவில் நான் சென்ற அந்தக் கிறிஸ்தவத் தேவா லயம். அங்கு பிரார்த்தனை புரிந்த சோவியத் குடி மக்கள். . என் நினைவுகள் அவர்களைச் சுற்றி நிழலாடுகின்றன. அவர் களது பிரார்த்தனை அவர்களுக்கு ஆன்மிக மனநிறைவை. அளித்தது. ஆணுல்-எனது மொழிபெயர்ப்பாளர் லு, டா, போன்றவர்களுக்கும், அத்தேவாலயத்தின் அமைப்பில் சங் கமமாகியுள்ள கட்டடக் கலையின் கவர்ச்சி, ஒவியக் கலையின் எழில், சிற்பக் கலையின் சிங்காரம் இன்னெரு வகையான ஆன்மிகத் திருப்தியை அளித்தன.
4

3. தன்னிகரற்ற தலைநகர் காட்சிகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என் பார்கள். அதே போல், ஒரு சமூகத்தின் அரசியற் கோட்பாடு கள், கலை கலாசாரப் பண்புகள், ஆன்மிக உணர்வுகள் எத் தனகயன என்பதை அச் சமூகம் வாழுகின்ற நகர் நிர்மா ணிக்கப்படடிருக்கும் முறையிலிருந்து விளங்கிக் கொள்ள லாம். -
மாஸ்கோ நகரை ஒருவர் மேலெழுந்தவாரியாகப் பார்த் தாலே போதும்-இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.
இன்றைய உலகிலே, ஒரு மனிதனுடைய சூழலைப்பற்றி நாம் பேசும்போது, இருவகைப்பட்ட சூழல்களைக் குறிப் பிடுகிருேம்.
ஒன்று, இயற்கை அன்னையின் எழில் பூத்துக் குலுங்கும் சூழல். மற்றது, மனிதனின் கட்டடக் கலைத்திறன் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட அமைப்புகள். ஒரு நகரில் இவை இரண் டிற்கும் ஒத்திசைவு இருப்பது அவசியம்.
மேலும், நவீன வானத் தொடும் கட்டடங்களை நிறுவும் அதே வேளையில் வரலாற்றின் பல்வேறு காலகட்டத்தைய கட்டடக் கலை மரபுகளின் முற்போக்கான பண்புகளைப் பிரதி பலித்து நிற்கும் புராதன கட்டட அமைப்புகளும் பேணப் படல் வேண்டும். ஒரு நகரில் இவ்விரு கட்டட வகைகளுக் கும் இடையே ஒத்திசைவு இருப்பதும் அவசியம்.
சோஷலிஸத் தத்துவத்தின், "அனைத்தும் மனிதனுக்காக அனைத்தும் மனிதனது நன்மைக்காக’ என்ற மனிதாபிமான இயல்புக்கேற்ப நகர் நிர்மாணம் செய்யப்படும் போது, மேற்சொன்ன இரு ஒத்திசைவுகளும் பொருந்தி வருவது அவசியம்.
மேற்கூறிய பண்புகள் மாஸ்கோ நகரில் பொதிந்திருப்ப தை, அந் நகரைச் சென்றடைந்த ஒரு சில மணி நேரங் களுக்குள் தெட்டத்தெளிவாக உணர்ந்து கொண்டேன்.
運、5。

Page 15
282 சதுர மைல் பரப்புடைய மாஸ்கோ நகரம், 75 இலட்சம் சனத்தொகை உடையது. இது இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரு பங்காகும். மாஸ்கோ நகர் விஞ்ஞான ரீதியாகத் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
நகரில் குறுக்கும் நெடுக்குமாக அகன்ற நெடுஞ்சாலைகள் பல செல்கின்றன. இவற்றிலே வாகனப் போக்குவரத்துக் கெனப் பொதுவாக ஆறுபாதைகள் உள்ளன. ஆங்காங்கே மேல்வழிப் பாலங்களும், கீழ்வழிச் சுரங்கப் பாதைகளும் அமைந்துள்ளன. இவற்றிலே வாகனங்கள் வேகமாகவும் ஒழுங்காகவும் செல்கின்றன.
பாதசாரிகள் தெருக்களைச கடப்பதற்கென சுரங்கப்பாதை கள் இடையிடையே அமைக்கப்பட்டுள்ளன. இவ்வசதிகள் இல்லாத இடங்களில், பாதசாரிகள் தெருக்களைக் கடப்ப தற்கு ஒளிச் சமிக்ஞைக் கடவுகள் அமைந்துள்ளன.
மாஸ்கோவில் இருந்த காலத்தில் ஒரு நாளாவது தெருக் களில் வாகனப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டதை நான் காணவில்லை.
தெருக்களின் இரு மருங்கிலும் அகன்ற சீமெந்து நடை பாதைகள் பாதசாரிப் போக்குவரத்துக்கென அமைந்துள் ளன. நடைபாதைகளில் நிரையாக நிழல்தரு மரங்கள் நாட் டப்பட்டுள்ளன. பல இடங்களில் இவற்றின் இரு மருங் கிலும் சிறிய புற்றரைப் பரப்புகள் வேறு அமைந்துள்ளன. புற்றரைப் பரப்புகளுக்கும அப்பால் கட்டடங்கள் அமைந் துள்ளன. இவை 9 முதல் 16 மாடிகள் வரை உள்ள, மக் கள் வதியும் அடுக்கு மாடி வீடுகளாகவோ, அல்லது அவற் றையும் விட உயர்ந்த அலுவலகக் கட்டடங்களாகவோ உள் ளன. அல்லது, வரலாற்றுத் தகைமை பெற்ற-உயரம் குறைந்த கட்டடங்கள், தொழிற்சாலைகள் என்பனவாக இருக்கக் கூடும்.
தொழிற்சாலைகள் பெரும் பாலும் மாஸ்கோ நகரின் சுற் ருடலிலேயே அமைந்துள்ளன. தொழிற்சாலைத் தூசி, புகை என்பன நகரை நச்சுப்படுத்தாமல் இருக்க இந்த ஏற்பாடு. இத்தொழிற்சாலைப் பிரதேசத்துக்கு உள்ளே நெடிய அத்தி, பைன் மரங்கள் நிறைந்த ஒரு வனம் வளையம் போல் நகரைச் சுற்றி அமைந்துள்ளது. 17, 20,00 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ள இந்த வனத்தின் தாவரங்கள்,தொழிற்சாலைப் பகுதியிலிருந்து வரும் அசுத்தக் காற்றை வடிகட்டுவதோடு தமது ஒளிச் சேர்க்கை மூலம் சுத்தமான ஒட்சிசன் வாயுவை
யும் மாஸ்கோ வாசிகளுக்கு வழங்குகின்றன.
6

மேலும் மாஸ்கோ நகரில் மட்டும் 100 பூங்காக்கள் உள் ளன. இவற்றைவிட ஒவ்வொரு தொழிற்சாலையைச் சுற்றி லும் வளைய்ம் போல் தாவரங்கள் அமைந்துள்ளன. LDrt Gi) கோ நகரின் மொத்தப் பரப்பில் மூன்றிலொரு பங்கு இத் தகையதாவர வளர்ச்சிப் பகுதியாகும். இவை மனிதருக்கு இளைப்பாறுவதற்கு உகந்த இடமாக மட்டுமல்ல, சுற்ருடல் அசுத்தமாவதை, சுவாசிக்கும் காற்று மாசுபடுவதைத் தடுக் கும் முன்னணிப் போராளிகளாகவும் விளங்குகின்றன. ஒவ் வோர் ஆண்டும் , தாவர வளர்ச்சிநிலப்பகுதி 600 ஹெக்டர் களால் அதிகரிக்கப்பட்டுக்கொண்டே போகிறது.
மாஸ்கோ நகர சபையின் அதிகாரம் பெருமல் மாஸ்கோ வில் எவரும் எந்தவொரு மரத்தையாவது தறிக்க முடியாது. இதை உறுதிப்படுத்த கடுமையான சட்டம் உள்ளது.
இவற்றைப் பார்க்கும்போது, கொழும்பில் தெருக்களுக்கு அழகூட்டி, நடைபாதைக்ளுக்கு நிழலிந்து நின்ற நல்ல மரங் களை வெட்டிச் சாய்க்கும் சன்னதம் எமது மாநகர சபை அதிகாரிகளுக்குச் சில மாதங்களுக்கு முன் ஏற்படடமை எனக்கு ஞாபகம் வரத் தவறவில்லை.
ஆக்கல், காத்தல் பணிகளில் அவர்கள்-அழிவுப் பணி யில் நம்மவர்கள்; இயற்கைக்கு மெருகூட்டும் அவர்கள்இயற்கையை உருக்குலைக்கும் நம்மவர்கள்.
மக்கள் வாழ்வதற்கு, தத்தம் பணிகளை ஆற்றுவதற்கு கலாசார பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கு உறுது?%ண யாக மிளிரும் ஒரு செயற்கை ஊடகமே கட்ட்டக்சலை என்ற மனிதத்துவக் கோட்பாடு மாஸ்கோவில் நகர் நிர்மாணத் தில் வெளிப்படுகிறது. இங்கே நகர் நீர்மாணம் அனத்தை யும் தழுவிய ஒரு நீண்டகாலத் திட்டத்தினல் கடடுப்படுத் தப்படுகிறது.
நகர் புனர் நிர்மாணம் செய்யப்படும் போது, தெருக்கள் அகட்டப்படும்போது, தேவையற்ற பழைய கட்டடங்கள் தரை மட்டமாக்கப்பட்டு அங்கே புதிய கட்டடங் கள் நிறு வப்படுகின்றன. அதே வேளையில், பாதுகாக்கப்பட (് ഖ ബ് டும் என்று கருதப்படும் ‘கட்டடக் கலை மைல்கற்கள்’’ கவனமாகப் பேணப்படுகின்றன.
உதாரணமாக, கோர்க்கி தெருவிலுள்ள மாஸ்கோ நகர சபைக் ( மொஸோவெட்") கட்டடம் 18ம் நூற்ருண்டின் புகழ்பெற்ற ரஷ்யக் கட்டடக் கலைஞர் மட்வெய் காஸகோவ் அவர்களினல் நிர்மாணிக்கப்பட்டது. 1939ம் ஆண்டில், கோர்க்கி தெரு அகட்டப்பட்டபோது, இந்த அழகிய,
7

Page 16
பழைய கட்டடத்தை இடம் பெயர்க்க வேண்டிய நிலை வந்தது!
ஆம், உண்மை தான்! இக் கட்டடத்தை அடியோடு இடம் பெயர்த்தார்கள்! உருளைகளில் ஏற்றி 43 அடி தூரம் பின் னுேக்கி நகர்த்தினர்கள் கோர்க்கி தெரு அகலமஅடைந் தது.அதற்கு இடம்கொடுக்க ஒரு முழுக் கட்டிடம் அலுங் காமல், நலுங்காமல் உடைந்து கொட்டாமல் 48 அடி தூரம் பின்ளுேக்கி ஊர்ந்தது! -
ப் போன்ற 'நடக்கும் கட்டடங்கள்?? எத்தனையோ oż ്. ஒஸிபெங்கோ தெருவில் உள்ள கட்டடக் கலைஞர் காஸகோவின் சொந்த வீடு (இதுவும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்) இவ்வாறு நகாததப்பட்ட தோடு மட்டுமல்ல, 180 பாகையால் திருப்பப்பட்டது. இதன் விளைவாக, இவ் வீடு இன்று முன்பு நோக்கிய திசை க்கு எதிர்த் திசையில் பார்த்து நிற்கின்றது. வேருெரு தெருவை வாயிலாகக் கொண்டு நிற்கிறது.
மாஸ்கோவின் நவீன கட்டடக் கலைச் சிறப்பைப் பகன்று நிற் கும் சீ. எம். ஈ. ஏ. அலுவலகக் கட்டடம்- விரிக்கப்பட்ட புத்தகம் போன்ற அமைப்பை 26o Lug5
இது.
18
 
 

"கட்டடக் கலையின் மைல்கற்கள்" என்று கருதப்படும் புராதன கட்டடங்களை அழிப்பதைத் தடை செய்யும் ஆணை யில் மாமேதை லெனின் 1917ல் கைச்சாத்திட்டார்.
ஒரு சோஷலிஸ் சமூகத்தில் கலை, கலாசாரத்தைப் பேணு வதற்கு, எத்தகைய சிரத்தை எடுச்கப்படுகிறது என்பதை மேற்கூறிய "நடக்கும் கட்டடங்கள்’ நிரூபித்து நிற்கின்றன இதன் விளைவாக மாஸ்கோவில் புராதன கட்டடங்களும், நவீன கட்டடங்களும் ஒன்றுக்கொன்று ஊறு விளைவிக் காமல், ஒன்ருேடொன்று ஒத்திசைந்து அருகருகே பெரு மையுடன் தலை நிமிர்ந்து நிற்கின்றன்.
ஜார் மன்னர்கள் வாழ்ந்த, மாஸ்கோ நதியால் சூழப் படட கிரெம்ளின் அரண்மனை, தேவாலயத்துக் கோபுரங் கள், சென் பளில்ஸ் கதீட்ரல் போன்ற கட்டடங்கள் ஒரு புறத்தே பழமையை விளம்பி நிற்கின்றன.
இதே கிரெம்ளினில் நிறுவப்படடுள்ள ""பலஸ் ஒஃப் காங் கிரஸஸ்' மண்டபம் (எமது நாட்டின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தை விடப் பெரியது) நவீன சோவியத் கட்டடக் கலையைப்பறைசாற்றி
நிற்கிறது.
கிரெம்ளினுக்கு அணித்தாக உள்ள-6000 அறைகளைக் கொண்ட - ஐரோப்பாவின் மிகப் பெரிய ஹோட்ட
லான "ருெஸியா', 1750 அடி உயரமுள்ள ஒஸ்டன்கிஞே டெலிவிஷன் கோபுரம, 30 மாடிகள் கொண்ட சி. எம். ஈ. ஏ. (நாடுகளுக்கிடையே பரஸ்பர பொருளாதார உதவிக் கான சபை) அலுவலகம்-நவீன சோவியத் கட்டடங்களுக்கு இத்தகைய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக G)TT“ l A) ,
பழமையும் புதுமையும் சங்கமித்து நிற்கின்றன. இத்தகைய, விஞ்ஞான ரீதியில் அமைந்த நகர் நிர்மாணத் திட்டத்தை, புத்துணாச்சி ஊட்டும் அழகிய - ஆரோக்கிய LDITG3r 55U egy 33: LD1160) u உலகின் எந்தவொரு முதலா ளித்துவ நாட்டிலும் காணமுடியாது.
இதற்குக் காரணம்முதலாளிததுவ சமூக அமைப்பில் நிலம் தனிப்பட்ட சிலபேர்வழிகளின் சொத்தாய் உள்ளது ; வீடமைப்பு நிர் மாணம், தொழிற்சாலைகள் நிறுவுதல் முதலியன பணம் படைத்த ஒரு சிலரின் இச்சையில் தங்கியுள்ளது.
எனவேநகர்நிர்மானத் தி ல் அனுட்டிக்கப்படும் முக்கிய குறிக் கோள், உடைமை ஸ் உள்ளோர், உற்பத்திச் சாதனங்கள்
9

Page 17
உள்ளோர் தமது சொத்துக்களைப் பெருக்கிக் கொள்வதற்கு மிக உகந்த வழி எது என்பதே ஆகும்.
இயற்கையைப் பேண வேண்டும், புராதன கட்டடக் கலைச் சின்னங்களைக் காப்பாற்ற வேண்டும், அனைத்தும் மனித இறுக்காக, மனிதனது நன்மைக்காக" என்ற அடிப்படையில் என்ற அந்தரங்க சுத்தியுடன் நகர் நிர்மாணம் அமைதல் வேண்டும் என்ற ஆசை தமது பணத்தைப் பெருக்கக் கங் கணம் கடடி நிற்கும் முதலாளிவர்க்கத்துக்கு எழமுடியாது அல்லவா?
முதலாளித்துவ நாட்டு நகர்களில் சுற்ருடல் நஞ்சாதல் மிதமிஞ்சிய ஜனச்செறிவு, தெருக்களில் Tவாகன்த் த.ை ஆழிகற்ற-திட்மிட்டப்படாத வகையில் ஒன்றையொன்று விழுங்கு மாற்போல் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கழுத்தை நீட்டி நிற்கும் கட்டடங்கள் என்பன அந்நாடு களின் நகர் நீர் மாணத்தில் உள்ள குறையைச் சுட்டிக் காட்டுகின்றன; தேசியச் செல்வமும் உற்பத்திச் சாதனங் களும தனியார் கைகளில் இருப்பதால் ஏற்படும் ஊறுகளை வலியுறுத்தி நிற்கின்றன.
சோவியத் நாட்டில் தேசியக் செல்வங்கள், உற்பத் திச் சாதனங்கள் என்பன அனைத்து மக்களினதும் உடைமை யாக இருப்பதால் அந் நாட்டின் மக்கள் அரசு அனைத் தும் மனிதனுக்காக" என்ற அடிப்படையில் நகர் நிர்மா ணம் செய்வதில் வியப்பில்லை அல்லவா?
20

4. வீதிகள் தெரிவித்த வாழ்க்கைத் தகவல்கள்
ஒரு நகரத்தின் தெருக்களிலிருந்து, அந்நகரத்தைப்
பற்றிய் எத்தனையோ தகவல்களைத் தெரிந்து கொள்ள முடி யும். ஒரு நகரத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக் கண்ணுடிதான் அதன் தெருக்கள்.
மாஸ்கோவினுடைய சனத்தொகை 75 இலட்சம் ஆகும், இதைவிட தினமும் 12 இலட்சம் மக்கள் பல்வேறு வேலை களின் பொருட்டு மாஸ்கோ நகருக்கு வர்து செல்கின் றனா.
ஆனல்-மாஸ்கோவின் தெருக்களில், இவ்வளவு சன நட மாட்டத்திற்கான அறிகுறிகளைக் காணுேம். காலையில் மக்கள் வேலைத்தளங்களுக்குச் செல்லும் போதும், மாலையில் வீடு திரும்பும் போதும், மதிய இடைவேளையின் போதும் தெருக் களில் வாகனப் போக்குவரத்து சற்று அதிகரிப்பதைக் காண முடியும். தெருவின் இரு மருங்கிலுமுள்ள நடைபாதை களில் சனநடமாட்டம் சற்று அதிகரிப்பதைக் காணலாம்.
ஆனல்-தெருக்களில் வாகனப் போக்குவரத்து அதி கரித்து, அதனல் போக்குவரத்துத் தடை ஏற்படுவதைக் காணமுடியாது. அதேபோல், நடைபாதைகளில் மக்கள் நிரம்பி வழிந்து சனநெரிசல் ஏற்படுவதையும் காணமுடியாது.
தெருவோரங்களில் வாளா நின்று அவமே பொழுதைப் போக்குவோரையும், நடை பாதைகளில் கும்பலாக நின்று அரட்டை அடிப்போரையும் காண முடியாது. "சும்மா நிற்கிறேன்’ ‘சும்மா போகிறேன்? பேர்வழிகளை மருந்துக் கும் காணுேம்.
தெருவில் செல்லும் மக்களின் முகத்தில் பீதியையோ கலவரத்தையோ பதற்றத்தையோ காணுேம். அதற்கு மாருக அவர்கள் முகத்தில் மன நிறைவும் மகிழ்வும் நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் நடையில் ஒரு வித வேகமும் சுறுசுறுப்பும் தென்படுகின்றது. ஏதோ ஒர் அலுவலின் நிமித்தம் செல்கின்ற ஒரு பாங்கு வெளிப்பட்டு நிற்கிறது.
2.

Page 18
இம்மக்கள் அணிந்திருக்கின்ற ஆடைகள் அவர்களது உயரிய வாழ்க்கைத் தரத்திற்குச் சான்று பகர்வனவாக அமைந்திருக்கின்றன.
மாஸ்கோவின் உலகப்புகழ் பெற்ற பொல்ஷோய் பாலே நடன மண்டபம் இதுதாள். எதிரே உள்ள வீதியில் வாகனப் போக்குவரத்தைக் கவனிக்கவும்.
நான் மாஸ்கோவிலிருந்த சமயம் இலையுதிர் காலம் முடி வுற்று, பனிகாலம் ஆரம்பமாகும் கட்டமாயிருந்தது. இடை யிடையே பணிவிழத் தொடங்கியிருந்தது. நிலமெல்லாம் வெண்பாவாடை விரித்தது போல் இவ்வேளைகளில் மெல்லிய பனிப்படலம் பரவியிருந்தது. வெப்ப நிலை சைபர் பாகை சென்டி கிரேட், அதாவது தண்ணிர் ஐஸாக மாறுகின்ற வெப்பநிலை. முற்றிய பனி காலத்தின்போது வெப்பநிலை சைபரை விட மேலும் 25 முதல் 40 பாகை வரை குறைவாக இறங்குவதுண்டாம்.
நான் சென்றிருந்த போது, மாஸ்கோ மக்கள் பனிகால ஆடைகளை அணியத் தொடங்கி விட்டனர். கம்பளியா லான கோட் சூட், அதற்கு மேலே கம்பளியாலான
23
 

தடித்த நீண்ட ஒவர் கோட், தலையில் விலங்கு உரோமம் பதித்த தொப்பி, கழுத்தில் கம்பளி மஃப்ளர், கைகளில் கையுறைகள், கால்களில் விலங்கு உரோமம் பதித்த பூட்ஸ்தெருவில் காணப்பட்ட ஆண்கள் யாவரும் இத்தகைய ஆடைகளையே அணிந்திருந்தனர்.
பெண்கள் பற்பல அழகிய வண்ணங்களில் விதம் வித மான நாகரிக ஆடைகளை அணிந்திருந்தனர். பெல் பொட் டம்ஸ், ஷிஃப்ட், கவுண், மினிஸ்கேர்ட் போன்ற ஆடைகளுக் கும் குறைவில்லை. இவர்கள் அணிந்திருக்கும் ஒவர் கோட்டு களிலும் தொப்பிகளிலும் நீண்ட விலங்கு உரோமம் பதிந் திருந்ததோடு, கண்ணைப்பறிக்கும் வண்ணங்களிலும் மோஸ் தர்களிலும் அமைந்திருந்தன.
விலங்கு உரோமம் பதித்த தொப்பி மின் எழிலென்ன, ஒவர்கோட்டின் சொகுசென்ன, பூட் சுகளின் கவர்ச்சி என்ன? ஆம், பூரித்துப் பொலிவுற்றுத் தோன்றும் இப் பெண்மணி மாஸ்கோவின் தெருக் கூட்டிகளுள் ஒருவர்.
தெருக் கூட்டும் பெண்கள் கூட அழகிய, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருந்ததைக் கண்டு வியந்தேன். தரம் குறைந்த ஆடைகளை அணிந்த எவரையேனும் நான் தெருக் களில் காணவில்லை.
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம், வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்த சமுதாயம், உன்னத சோஷலிஸ சமுதாயம் இங்கு நிலவியதற்கு மக்களின் ஆடைகளே சான்ருக அமைந்தன.
மாஸ்கோ நகரின் தெருக்களின் சுத்தத்தைப்பற்றி இங்கு குறிப்பிடாமலிருக்க முடியாது. அப்போது இலையுதிர்கால் இறுதியாய் இருந்த போதிலும் தெருக்களில் ஓர் இலையையோ
28

Page 19
சருகையோ கூடக் காணுேம். ஒரு கடதாசித் துண்டுக் கூட வீதிகளை அசுத்தப்படுத்தவில்லை. தெருக்களில் ஆங் காங்கே காணப்பட்ட ஆண்-பெண் தெருக்கூட்டிகள், மரத் திலிருந்து ஒரு சருகு உதிர்ந்தாற்கூட, விரைந்து சென்று விளக்குமாறு கொண்டு கூட்டி, அள்ளி, தமது கைகளி சிறிய தகரப்பெட்டிகளினுள் போடுவதைக் கண் டேன். -
பாதசாரிகள் சிகரெட் புகைத்து எஞ்சுகின்ற அடித்துண் டை அங்கங்கேயே வீசி எறியாமல், அடுத்த குப்பைத் தொட்டி வரும்வரை கைகளில் பத்திரமாகக் கொண்டு சென்று, தொட்டிகளினுள் போடுவதைக் கண்டேன்"
'இது எனது நாடு; எனது தாயகம்; இதனை மாசு படாமல் பேணிக் காப்பது எனது கடமை’’-என்ற உணர்வு இச் சோஷலிஸ்பூமி மக்களின் உதிரத்துடன் இரண்டறக் கலந் ததன் அறிகுறி தானே இது?
மாஸ்கோவில் மட்டுமல்ல, நான் விஜயம் செய்த சோவி யத் மத்திய ஆசியக் குடியரசான துருக்மேனியத் தலைநக ரான ஆஸ்காபாத்திலும் கூட, பெரும பாலான துருக்மேனி யப் பெண்கள் அணிந்திருந்த தேசிய உடைகளைத் தவிர, பொதுவாக மேற் கூறிய நிலைமைகளே நிலவுவதைக் கண் டேன். ஆஸ்காபாத் மாஸ்கோவிலிருந்து 2800 மைல் தொலைவில் உள்ள ஒரு நகரமாகும்.
மாஸ்கோ வீதிகள் எமக்குப் புகட்டிய மிகச் சுவையான அனுபவம் இன்னென்று உண்டு.
21 வயது நிறைந்த இளம் ரஷ்யப் பெண்ணுன லுட்மிலா பெட்டோனிச், தினமும் எம்முடன் சுற்றி அலைந்து விட்டு நாம் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டி வந்து விடும்போது எப்படியாவது இரவு ஒன்பதரை அல்லது பத்து மணியாகிவிடும். நாம் ஹோட்டலை வந்தடைந்தவுடன் எமக்கென ஒதுக்கப்பட்டிருந்த காரின் பணி பூர்த்தியாகி விடும். எமது கார்ச் சாரதியும் புறப்படடுவிடுவார்.
லுரடா காலையில் வரும்போது, மிகவும் பணிவுடன் எனது அனுமதியைப் பெற்றுக்கொண்டு, தமது மழைக் கோட்டை எனது அறையில் உள்ள ஒரு கொக்கியில் மாட்டி விடுவார். இப்படியான வேளைகளில், இரவில் எம் : ம ஹோட்டலுக்குக் கூட்டி வந்து விடும்போது ஆரும் மாடியில் எமது அறை
வரை வருவார்.
இப்படி அவர் வந்த ஒருநாள் நான் அவரிடம் கேட்டேன்: 'ஒாடா, இந்த நேரத்தில் நீங்கள் எப்படி வீடு போய்ச் சேரப் போகிறீர்கள்?"
24

"டிராலி பஸ் தான் இருக்கிறதே. இங்கிருந்து டிராலி யில் ஏறினுல் சுமார் பதினைந்து நிமிடங்களில் எனது வீட் டிற்கு அருகே கொண்டு போய் விடும்."
'அது சரி, தனியாகவா போகப் போகிறீர்கள்-அது வும் இந்த நேரத்தில்? இது ஆபத்தில்லையா?*
லூாடாவின் நீலக் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந் தன.
'உங்கள் அக்கறைக்கு எனது. நன்றி ஆனல் நீங்கள் என்ன ஆபத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை."
லூாடா என்ன சொல்லியும் கேளாமல், அவரோடு பிடி வாதமாக ஹோட்டலுக்கு முன்பாக உள்ள ட்ராலி பஸ் தரிப்புவரை வந்து, அவர் பஸ் ஏறும்வரை நின்றுவிட்டு, எனது அறைக்கு வந்தேன்.
இலங்கையின் முன்னுள் கடற்ருெழில், சுகாதார அமைச்ச ரும், இலங்கை-சோவியத் நட்புறவுச் சங்கத்தின் முன்னுள் தலைவருமான காலஞ்சென்ற ஜோர்ஜ் ராஜபக்ஸாவும் அவரது மனைவி லலிதாவும் ஒரு சில மாதங்களுக்கு முன் மாஸ்கோவில் அதே ஹோட்டலில் தங்கியிருந்தபோது லுரடாவே அவர்களுக்கும் மொழி பெயர்ப்பாளராகப்பணி யாற்றியிருந்தாராம்.
அப்போதும் இது மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்ற தாம். அமைச்சரும் பாரியாரும் பிடிவாதமாக பஸ்தரிப்பு வரை வந்து நின்று லுரடாவை அனுப்பிவிட்டுத்தான் செல் வார்களாம். லூடாவே இதை எனக்குக் கூறினர்.
லூடாவுக்கு இந்த ஆபத்து என்னவென்று புரியவில்லை. "உனக்குப் புரியாது தான் லூடா. நீ தான் உன் தாய் நாட்டுக்கு வெளியே இதுவரை பயணம் மேற்கொண்ட தில்லையே! உனக்கு எப்படிப் புரியும்? எங்கள் நாடுகளிலும், அது மட்டுமல்ல-ஜனநாயகத்தின் உச்சா:ை க் கொப்புக்கே போய்விட்டதாகத் தம்பட்டமடித்துக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட, இந்த இரவு வேளையில், காடை யர்களும் காமுகர்களும், பாலியல் குற்றவாளிகளும் பால்யக் குற்றவாளிகளும் வீதிகளில் மேய்ந்து திரிவதை நீ அறிய வாய்ப்பில்லைத் தானே! உங்கள் நாட்டில் நீங்கள் படைத் துள்ள புது யுகத்தைப் போல் உலகின் ஏனைய பகுதிகளும் இருக்கும் என்று நீ கருதுகிருய்.”*
-எனது அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்துகொண்ட தும், என் மனம் மேற்சொன்னவாறு இரை மீட்கத் தொ டங்கியது.
名5

Page 20
மாஸ்கோ வீதிகளில் இரவில் எந்த நேரத்திலும்கூட ஆண்களும், பெண்களும், இளம் தம்பதிகளும் கூட பய மின்றி நடமாடுவதைக் காணலாம். இவ்வாறு நடமாடு வோர் பொதுவாக, இரவு இரண்டாம் காட்சி சினிமாவி லிருந்து வீடு திரும்புவோரும், இருபத்துநான்கு மணி நேர மும் இயங்கும் தொழிற்சாலைகளில் இரவு விஃப்ட் பணி புரிவோருமாக இருப்பர்.
ஒருநாள் இரவு-நடுச்சாமம் கழிந்து ஒரு மணி நேரத்திற் குப்பின், அதிகாலை 1 மணிக்கு சோவியத்திலுள்ள இலங்கை யின் பதில் தூதுவர் கலாநிதி விஸ்வா வர்ணபாலாவின் (தூதுவர் டாக்டர் சி.எஸ்.வீரதுங்க அப்போது போலந்து சென்றிருந்தார்.) இல் லத்தில் இராப்போசன விருந்து முடிந்து ஹோட்டல் திரும்பிக்கொண்டிருந்தோம்.
கலாநிதி வர்ணபாலாவே காரை ஓட்டிக்கொண்டிருந் தார். கார் மாஸ்கோ நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஓரளவு ஒதுக்குப்புறமான லெனின் குன்றுகள் பகுதி யினுடாகச் சென்றுகொண்டிருந்தது.
அந்த நேரத்தில் கூட, அந்த ஒதுக்குப்புறமான இடத்தி லும், தெருக்களில் ஆண்கள், பெண்கள், இளம் தம்பதிகள் நடமாடுவதைக் கண்டு நான் வியந்தேன். இதைப்பற்றி நான் கலாநிதி வர்ணபாலாவிடம் குறிப்பிட்டபோது, அவர் கூறிய பதில் என்னை மெய் சிலிர்க்க வைத்து.
"மாஸ்கோ வீதிகள் பாதுகாப்பானவை; எந்த நேரத்தி லும் எவரும்-அவர்கள் உள்நாட்டாராயிருந்தாலென்ன, வெளி நாட்டாராயிருந்தாலென்ன, ஆண்களாயிருந்தா லென்ன, பெண்களாயிருந்தாலென்ன, வயது முதிர்ந்தவரா யிருந்தாலென்ன, காளையர் கன்னியராயிருந்தாலென்ன, நடுநிசியாயிருந்தாலென்ன, நண்பகலாயிருந்தாலென்ன-- அச்சமின்றி இத்தெருக்களில் நடமாடலாம். குளிர் ஒன் றைத் தவிர வேறெதற்கும் தெருவில் நடக்கும் எவரும் பயப்படுவதில்லை."
மாஸ்கோ வீதிகளின் பாதுகாப்பு மைக் தாவிதோவ் என்ற அமெரிக்கப்பத்திரிகையாளரையும் வியப்பில் ஆழ்த்தி யிருந்தது என் நினைவுக்குவந்தது மாஸ்கோவில் கில வருட காலம் வசித்த இந்த அமெரிக்கர், தனது சோவியத் அனுப வங்கள் பற்றி எழுதிய நூலில், மாஸ்கோ வீதிகளின் பாது காப்பான தன்மையை வியந்து எழுதிய வாசகங்கள் என் மனக்கண்முன் தோன்றி மறைந்தன.
அவரது மகனன 18 வயது நிறைந்த ஜோ தாவிதோவ் என்பவர் மாபெரும் அமெரிக்க நகரான மான்ஹட்டனின் பிர
86

பல மடிஸன் சதுக்கத் தோட்டத்தில் வைத்து, ஒரு நாள் இரவு 9 மணிக்கு அவர் முன்பின் அறியாத பால்யக் காடை யர் கூட்டமொன்ருல் எதுவித காரணமுமின்றத் தாக் கப்பட்டு, பிரக்ஞையிழந்த நிலையில் மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டாராம்.
இவ்வாறு பொழுதுபோக்குக்காகக் குற்றம் இழைப்போர் நிறைந்த பாதுகாப்பற்ற அமெரிக்க வீதிகளை மாஸ்கோவின் பாதுகாப்பான வீதிகளுடன் ஒப்பிட்டு அந்த அமெரிக்கர் எழுதியிருந்தார்"
சோவியத் நகரங்களில் வீதிகளின் பாதுகாப்புப் பற்றி எழுதுகையில் என் நினவுகள் ஆஸ்காபாத் நகரை நோக்கிச் சிறகடித்துப் பறக்கின்றன.
இரவு ஒன்பதரை மணி. ஆஸ்காபாத் வீதிகளில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். என்னருகே மொழிபெயர்ப்பா ளர் லுரடாவும் நடந்துகொண்டிருக்கிருர்,
ஐந்து மணி நேர விமானப் பயணத்தின் பின் அன்று மாலைதான் ஆஸ்காபாத் வந்து சேர்ந்திருந்தோம். "ஹோட் டல் ஆஸ்காபாத்"தில் இரவு உணவை முடித்துக் கொண்ட போது, இரவு ஒன்பது மணி தாண்டிவிட்டது.
பகல் முழுவதும் விமானத்தில் தூங்கி வழிந்து கெர்ண்டே வந்ததால், இரவுத் தாக்கம் இலகுவில் வருவதாக இல்லை. தெருவில் இறங்கி விறுவிறுவென்று ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வந்தால் காக்கம் வரும் போல், இருந்தது. அதே நேரத்தில், இரவில் ஆஸ்காபாத் எப்படி இருக்கும் என்று ("ஆஸ்காபாத் பை நைட்') அறிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தேன். நான் உடனே புறப்பட்டேன். அப்போது, லூாடா தயங்கியவாறே கேட் Litri.
"எனக்கும் தூக்கம் வரவில்லை. இந்தக் குடியரசுக்கும் நான் இதற்கு முன் வந்ததில்லை. நானும் உங்களுடன் வருவ தற்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?"
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது-இதென்ன ஆபத்து? ஒரு நிமிடத்திற்குள் ஒராயிரம் சிந்தனைகள் என் மனத்திரை பில் மின்னி மறைந்தன. இலங்கையில் ஒரு சில வருடங் களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்-டாக்டர் பந்துல பெரேரா படுகொலை. . கறுவாக் காட்டில், தான் மணம் செய்ய விருந்த பெண்ணுடன் இரவில் சென்ற டாக்டர் பெரேரா காமுகர்களால் படுகொலை செய்யப்படட நினைவு. . எனக் கும் இன்று அப்படியா. .? அப்படியானல், இலங்கையின்
27

Page 21
தமிழ்ப் பத்திரிகைகளின் தலையங்கம். . 'ஈழத்து டாக்டர் ரஷ்யாவில் சதக். . சதக்" . .
அந்தக் கொடுங்குளிருக்குள்ளும் குப்பென்று எனது உடல் ஒரு தரம் வியர்த்தது. ܕ
"உங்களுக்கு விருப்பமில்லை என்ருல் நான் வரவில்லை. , ' லூாடா இழுத்தார்.
துணிவை வரவழைத்துக் கொண்டேன். லுTடாவும் நானும் புறப்பட்டோம். பல்வேறு விஷயங்களைப் பற்றி-- சர்வதேச அரசியல் நிலை பற்றி, சோவியத்-சீன பிரச்சினை கள் பற்றி, ஈழத்தின் அரசியல் நிலை பற்றி, இனப் பிரச்சினை பற்றி, தோட்டத்தொழிலாளரின் பிரச்சினைகள் பற்றியெல் லாம் சுவைபடப் பேசிக்கொண்டே நடந்தோம்.
ஹோட்டல் ஆஸ்காபாத்தில் எனது அறைக்கு நான் திரும்பியபோது இரவு பதினென்றன ர மணி ஆகிவிட்டது. லூாடாவுடன் இரவில் உலவச் செல்ல நான் முதலில் பயந் தது, அப்போது தான் எனக்கு நினைவுவந்தது. எதுவுமே நடக்கவில்லை" ஆஸ்காபாத் வீதிகளில் நடமாடியவர்கள் எம்மை ஏறெடுத்தும் பார்க்கவில்லை மாஸ்கோ வீதிகள் எவ்வளவு பாதுகாப்பானவையோ, அவ்வளவு பாதுகாப் பானவை ஆஸ்காபாத் வீதிகளும் என்பது தெரிந்துவிட்டது. எனது கட்டிலில் சாய்ந்து கொண்டு மூன்று கம்பளிப் போர்வைகளை ஒன்றன்மேல் ஒன்ருக இழுத்து மூடியபோது எனது வாய் முணுமுணுத்தது. ‘புது யுகம் கண்டேன். . புதுபுகம் கண்டேன். . "
A 8

5
பஸ் பிரயாணம் தந்த பாடங்கள்
கொழும்பு நகரின் வீதிகளில் புதுமையான ஒரு நிகழ்வு இந்நாட்களில் இடம்பெற்று வருகிறது.
திடீர் திடிரென நகரில் எங்காவது ஒர் இடத்தில் சுமார் இருபது அல்லது முப்பது டிக்கெட் பரிசோதகர்கள் கும்ப லாக நின்று, அவ்வழியே போகும் சகல பஸ் வண்டிகளையும் மறித்து, டிக்கெட் சோதிக்கும் காட்சிதான் அது. கூடவே இரு பொலீஸ் கான்ஸ்டபிள்கள்.
இதைவிட-ஒவ்வொரு பஸ்ஸிலும், நாட்டை, சமூகத்தை வஞ்சித்த குற்றத்துக்காக அகப்படுகின்ற பத்துப் பேராவது வீதியோரத்தில் இறக்கப்பட்டு நிற்க, இவர்களை வேடிக் கைபார்த்து, சுமார் ஐம்பது வீணர்கள் எந்நேரமும் தெருக் களில் குழுமி நிற்க, இந்த அல்லோல கல்லோலத்தை என்
டிக்கெட் எடுக்க 'மறக்கும் கனவான்களும் சீமாட்டி களும், தெருவோரததில் தயாராக நிற்கின்ற விசேஷ" என்ற பெயர்ப்பலகை தாங்கிய ஒரு பெரிய பஸ் வண்டியில் ஏற்றப்பட்டு, "அரச மரியாதை களுக்காகப் பொலீஸ் நிலையங்களுக்குச் சிங்காரப் பவனி செல்லக் காத்திருக்கும் அந்தக் காட்சியை என்னென்பது?
சிகிச்சை பெறவேண்டிய ஞாபக மறதிக்காரர்கள் ஒரு "பஸ் லோட்" கிடைப்பார்கள் என்ற உறுதியுடன் ஒரு முழு பஸ்வண்டி காத்திருக்கிறதே, அந்த வண்டியைப் பார்ாட் டாமல் இருக்க முடியுமா?
மாஸ்கோவில் இத்தகைய ஞாபக மறதிக்காரர் அருமையி லும் அருமை என்பதை நான் நேரில் அறிந்து கொண்டேன். மாஸ்கோ வீதிகளின் பிரதான போக்குவரத்துச் சேவை டிராலி பஸ்களாகும். இவற்றைவிட, சாதாரண பஸ்களும் டிராம் கார்களும் கூட ஒடுகின்றன. பூமிக்கு அடியில் உள்ள
忍9

Page 22
சுரங்கப் பாதைகளில் “மெட்ரோ" எனப்படும் ரயில் சேவை உள்ளது.
இவற்றில் பயணம் செய்வதற்கு ஒருவர் ஏறுவதெங்கே, இறங்குவதெங்கே என்பது கணக்கு எடுக்கப்படுவதில்லை. எங்கும் ஒரே கட்டணம் தான்.
மாஸ்கோவில் ஒரு டிராலி பஸ் பயணத்திற்கு நான்கு கொப்பெக்களும் (இலங்கைப் பணம்-35 சத்ம்), டிராம் வண்டிப் பயணத்திற்கு மூன்று கொப்பெக்களும் (26 சதம்) பஸ் பயணத்திற்கு அல்லது மெட்ரோ ரயில் பயணத்திற்கு ஐந்து கொப்பெக்களும் (44 சதம்) செலுத்த வேண்டும். அமெரிக்காவில், மெட்ரோவை ஒத்த சுரங்க ரயில் பய ணம் ஒன்றுக்கு என்ன கட்டணம் தெரியுமா? நியூயார்க் நகரில் 35 அமெரிக்க சதங்களும் (இலங்கை-2 ரூபா 32 சதம்), சிக்காகோ நகரில் 60 அமெரிக்க சதங்களும் (இலங் கை-3 ரூபா 98 சதம்) அறவிடப்படுகின்றனவாம்.
மைக் தாவிதோவ் என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் மேற்சொன்ன தலைதெறிக்கும் அமெரிக்கப் போக்குவரத் துக்கட்டணங்களைச் சோவியத் நாட்டைப்பற்றித் தான் எழுதியுள்ள நூலில் தந்து அங்கலாய்த்துக் கொள்கிருர், இவர் சோவியத்தில் சில ஆண்டுகாலம் வசித்தவர். அமெ ரிக்கப் போக்குவரத்துக் கட்டணங்களோடு ஒப்பிடுகையில் சோவியத் போக்குவரத்துச் சேவையை ஓர் இலவச சேவை என்றே கொள்ள வேண்டும் என்கிருர் தாவிதோவ்.
மாஸ்கோவில் டிராலி பஸ்களில் கண்டக்டர் இல்லாமலே கட்டணம் செலுத்தப்படும் சிறப்பை நான் நேரில் கண் டேன்.
இந்தப் பஸ்களில் சாரதி மட்டும்தான்; கண்டக்டர்களே இலர், பஸ் தரிப்புகளில் டிராலி வந்து நின்றதும், அதன் மூடிய கதவுகள் திறந்து கொள்கின்றன. பிரயாணிகள் ஏறிக்கொண்டதும் கதவுகள் மீண்டும் மூடிக் கொள்கின்றன. பஸ் புறப்படுகிறது. கதவுகளை மூடித் திறக்கும் மின் விசை யைச் சாரதி இயக்குகிருரர். -
பஸ்ஸின் பின் பக்க இடது கோடியில் டிக்கெட் இயந்தி ரம் ஒன்று உள்ளது. பிரயாணிகள் பஸ்ஸில் ஏறிக் கொண் டதும், நேராக இந்த இயந்திரத்தை அணுகி, நான்கு கொப் பெக்களை அதில் போட்டு, தமது டிக்கெட்டைக் கிழித்தெ தெடுத்துக்கொண்ட பின்னரே ஆசனங்களில் அமருவதை கண்டேன்.
மாஸ்கோவில் நான் டிராலி பஸ் பயணம் மேற்கொண்ட போதெல்லாம், பஸ்ஸில் ஏறும் நேரம் முதல் இறங்கும்
80

நேரம்வரை, எனது கண்கள் இந்த டிக்கெட் இயந்திரத்தைச் சுற்றியும், பஸ்ஸில் ஏறுவோரைச் சுற்றியுமே வட்டமிட்டன. எவராவது டிக்கெட்டுக்கு ‘டிமிக்கி கொடுத்ததை என் ஞல் காண முடியவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகாலமாக, மாஸ்கோவில் உள்ள இலங் கைத் தூதரகத்தில் பணியாற்றி வருபவர்கள்தான் திரு வாளர்கள் றுவான்பத்திரனவும் மென்டிஸும். இவர்கள் தினமும் டிராலி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்.
"மாஸ்கோவில் டிக்கெட்டுக்கு டிமிக்கி கொடுத்தவர்கள் எவரையாவது நீங்கள் கண்டதுண்டா?' என்று இவர்களை நான் கேட்டேன்.
இத்தகைய டிமிக்கிக்காரர்களைத் தாமும் தேடுவதாகவும், கடந்த மூன்று வருட காலமாக ஒருவர் கூட தமது கண்களுக் குத் தட்டுப்படவில்லை என்றும் அவர்கள் பதிலளித்தனர். ஆனல், மைக் திாவிதோவ் என்னைவிட அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். அவர் கண்களுக்கு இத்தகைய ஒரு பேர்வழி ஒருநாள் தட்டுப்பட்டு விட்டார்.
அவர் டிராலி பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருநாள்-நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி பஸ்ஸில் ஏறினர். ஒருகையில் ஒர் அடையாள அட்டையைக் காட்டியவாறே, மறுகையை நீட்டிக்கொண்டு, ஒவ்வொரு பிரயாணியையும் அணுகினர். அவர் ஒரு டிக்கெட் பரி சோதகர்.
அந்தப் பஸ்ஸில் ஒரே பிரயாணியிடம்-ஒர் இளை னிடம் டிக்கெட் కొత్ ஓர் இளைஞ இயந்திரத்தில் காசுபோட்டு டிக்கெட் எடுக்க தான் அப் போதுதான் தயாராகிக் கொண்டிருப்பதாகச் சாக்குக் கூறிக் கொண்டே, டிக்கெட் இன்றிப் பயணம் செய்வதற்குரிய அபராதத் தொகையான ஒரு ரூபிள் தாளை (இலங்கைப் பணம்--ரூபா 9.90) எடுத்து நீட்டினன், அந்த இளைஞன். அபராதத்தை பெற்றுக் கொண்டதோடு டிக்கெட் பரி சோதகர் திருப்திப்பட்டதாகத் தெரியவில்லை.
அவள் கண்கள் அந்த இளைஞனைச் சுட்டெரித்தன. பஸ் ஸில் பிரயாணம் செய்த மக்களின் கனல்கக்கும் பார்வைக் கும் அவன் இ ைரயானன்.
'தம்பி, எமது சோவியத் சமுதாயத்துக்கு நீ செய்த வஞ்சனை நான்கு கொப்பெக்குகளை விடப் பன்மடங்கு அதிக மானது,' என்று ஆரம்பித்து அந்த இளைஞனைக் கண்டித் தாள் அந்தப் பெண்மணி,
3.

Page 23
கூனிக் குறுகிப்போன அந்த இளைஞனின் முகம், இத் தகைய தவறை அவன் தன் வாழ்க்கையில் இனியொரு நாளும் இழைக்கத் துணியவே மாட்டான் என்பதை எடுத் துணர்த்தியது.
இத்தகைய குற்றவாளிகள் சோவியத் நாட்டில் மிக மிகச் சொற்ப தொகையினரே உள்ளனர் என் கிருர் தாவிதோவ். இவர்களைத் தண்டிக்கவும் சீர்திருத்தவும் கையாளப்படும் அதிதீவிர சக்தி பொதுசனக் கண்டனம்தான் என்பது அவர் கருத்து. இதுவே அதிக பயனுறுதி கொண்டதுமாம்.
அந்த இளைஞன் நான்கு கொப்பெக் செலுத்தாமல் பஸ் பயணம் செய்தமை சக பிரயாணிகள் அனைவரிடமும் இருந்து வெறுப்பைச் சம்பாதித்தது. சோவியத் சமுதாயத்தை வஞ் சித்துவிட்டான் என்ற கண்டனத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டில் தனியுடைமை ஒழிக்கப்பட்டு, அனைத்தும் மக்கள் அனைவரதும் உரிமை என்ற நிலை ஏற்படும்போது, இத்தகைய சத்திய ஆவேசம் எழுவதில் வியப்பில்லை அல்லவா?
மைக் தாவிதோவ் கூறுகின்ற இன்னுெரு பஸ் அனுபவத் தையும் இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும்.
மாஸ்கோவில் அவரது முதலாவது பஸ் பிரயாணம் அது. டிக்கெட் இயந்திரத்தினுள் போட நாலு கொப்பெக் சில் லறை அவரிடம் இருக்கவில்லை. அவரிடமிருந்த ஆகக் குறைந்த நாணயமோ 15 கொப்பெக் குத்தி தான். என்ன செய்வது? வேறு வழி என்னவென்று தெரியாத மைக, அந்த 15 கொப்பெக் நாணயத்தை டிக்கெட் இயந்திரத்தினுள் போடடு தனது டிக்கெட்டைக் கிழித்துக் கொண்டார். 11 கொப்பெக் மேலதிகம். போய்த் தொலையட்டும் என்று நினைத்துக்கொண்டாராம் மைக்,
ஆனல், இத்தனையையும் கவனித்துக்கொண்டு, அருகில் நின்ற ஒரு சக பிரயாணியோ அவரைச் சும்மா விடுவதாகக் காணுேம். - -
‘'தோழர், நீங்கள் தேவைக்கதிகமாகக் கட்டணம் செலுத்திவிட்டீர்கள்,' என்று உரத்துக் கூறிஞர் அப்பிர யாணி. அத்தோடு நில்லாமல், மேலதிகமாகச் செலுத்திய கட்டணத்தை மீளப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியிலும் உடனடியாக இறங்கிவிட்டாராம். எப்படித் தெரியுமா?
ஒரு பெண் பிரயாணி இயந்திரத்தினுள் 4 கொப்பெக் போடுவதற்குப் பதிலாக, 1 கொப்பெக் மட்டுமே போட்டு விட்டு, மீதி 3 கொப்பெக்கை அவருக்குக் கொடுத்தாள். இப் பணம் மைக்கின் கைக்கு வந்தது. "இந்தத் தோழ ருக்கு இன்னும் 8 கொப்பெக் வந்து சேர வேண்டும்,'
32.

என்று உரத்த குரலில் மீண்டும் அறிவித்தார் ஆப்பிரயாணி. 'இதோ, என்னிடம் 4 உள்ளது,' என்றவாறே ஓர் இளை ஞன் இயந்திரத்தினுள் தான் போடச்சென்ற பணத்தை மைக்கிடம் நீட்டினன். இக் கட்டத்தில் காசுக் கணக்கை மைக் மறந்துவிட்டாராம். ஆனல், அவரது சக பிரயாணிகள் மறக்கவில்லை. நான்கு 1 கொப்பெக் குத்திகளை இயந்திரத் தினுள் போடச்சென்ற ஓர் இளம் யுவதியை ஒரு நடுத்தர வயதுப் பெண் முதுகில் தட்டி, 'உங்கள் கொக்பெக்குக: இந்தத தோழருக்குக் கொடுக்க வேண்டும்,' என்ருள். அப்ப டியே பணம் கைமாறியதாம்.
இவ்வாறு மேலதிகமாக மைக் செலுத்திய அவ்வளவு பணமும் அவர் கைக்கு மீண்ட பிற்பாடுதான் அவரது சசி பிரயாணிகள் ஒய்ந்தனராம்.
இதுபோன்ற "பணம் மீளப் பெறும்" நிகழ்ச்சிகள் மாஸ் கோ டிராலிகளில் அடிக்கடி நடை பெறுவதாகவும், தான் பன்முறை அதில் பங்குபற்றியிருப்பதாகவும் கூறுகிருர் மைக் தாவிதோவ்.
தமது சக மனிதர்களுக்கு உதவ வேண்டும்; வெறும் வார்த்தை அளவில் நில்லாது, தினமும் தமது வாழ்வில், செயல் ரீதியில் மற்றவர்களுக்கு உதவிநிற்கும் சோவியத் மக்களின் இந்தப் பண்பை வியர்து பாராட்டியுள்ளார் தாவிதோவ்.
உண்மைதான். அரை நூற்ருண்டு கால அசல் சோஷ லிஸ் ஆட்சியும் போதனைகளும் சோவியத் நாட்டில் ஏற் படுத்தியுள்ள மிகப் பெரிய தாக்கம், அந்நாட்டு மக்களின் மனப்போக்கில்தான் என்பதைப் பல்வேறு நிகழ்ச்சிகள் எனக்கு உணர்த்தின. நாம் தினமும் காணும் மனிதரைவிட மாறுபட்ட, முற்றிலும் புதிய மனப்போக்கு உடைய மனிதர் கள், நல்லவர்கள், பண்பாளர்கள் அங்கு வாழ்வதை நான் கண்டுகொண்டேன்.
எமது மொழிபெயர்ப்பாளர் தெருவில் செல்லும் ஒருவ ரிடம் எதையாவது விசாரித்தால், அருகிலுள்ள பலர் தாமா கவே முன்வந்து பதிலளித்து, உதவுவதைக் கண்டேன்.
இதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இலங்கை அனுப வம் ஒன்று நினைவு வரத் தவறவில்லை. சில வேளைகளில் மாலை யில் களைத்து விழுந்து வீடு திரும்பும்போது, தெருவில் செல் லும் எவராவது, ‘நேரம் என்ன?’ என்று என்னிடம் கேட்டால், எனது அதிருப்தியைக் காட்ட நான் தவறுவ தில்லை. கைக்கடிகாரத்தைப் பார்க்காமலே, வெறும் ஊகத் தைக் கொண்டு கூறிவிடுவேன்.
33.

Page 24
இனிமேல் இப்படி நடந்து கொள்வதில்லை, சோவியத் மக்க ளின் நல்ல முன்னுதாரணத்தைப் பின்பற்றவேண்டும் என்று அன்றே மனதில் உறுதியெடுத்தேன்.
மாஸ்கோவில் டிராலி பஸ்ஸில் நடைபெற்ற ஒரு சம்ப வம் என் மனதில் பசுமையாக நினைவில் இருக்கிறது. எனது உரோமத் தொப்பியையும் கழுத்திலிருந்த மஃப்ளரையும் கழற்றக் கைகளில் வைத்திருந்தேன். ஒவர் கோட்டின் கழுத் துப் பித்தான்களையும் தளர்த்தி விட்டிருந்தேன்
இதைக் கவனித்த எனது சக பிரயாணி ஒருவர், எனது கழுத்தைச் சுட்டிக்காட்டி, அப்பகுதி குளிரிலிருந்து பத்திர மாகப் பேணப்படல் வேண்டும் என்று விளக்கினர், அன்பு டன் மஃப்ளரை எடுத்துக் கழுத்தைச் சுற்றிப் போட்டு விட்டார்.
முன்னர் பின்னர் தெரியாத மனிதர்களிடமிருந்து குளிர்ப் பாதுகாப்புப் பற்றிய இத்தகைய அன்பு உபசரிப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்பு எனது சோவியத் விஜயத்தின்போது பன் முறை எனக்குக் கிட்டியது.
சோவியத்தின் ஸினித் காமராக்கள் உலகப் புகழ் பெற் நறவை. ஸினித் காமரா ஒன்றை வாங்குவதற்கு நான் முயற்சி எடுத்தபோது, சோவியத் மக்களின் மற்றவர்க ளுக்கு உதவும் பண்புகளை மேன்மேலும் அறிய வாய்ப்புக் கிட்டியது.
சோவியத்துக்கு இன்று சாரி சாரியாக வந்து குவியும் அமெ ரிக்கா, மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற முதலாளித் துவ நாடுகளின் உல்லாசப் பிரயாணிகள் ஸினித் காமராக் களை விழுந்து விழுந்து வாங்குகிருர்கள். இதனல் இக் காம ராக்களுக்கு ஒரளவு தட்டுப்பாடும் நிலவுகிறது. θ, LD πff பதினைந்து கடைகளில் ஏறியிறங்கிய பின்னரே எனக்கு இக் காமரா ஒன்று கிடைத்தது.
ஒரு கடையில் ‘*ளினித் இல்லை' என்ற பதில் வரும் போது, கடைக்குப் பொருள் வாங்க வந்த எவராவது வலிந்து முன்வந்து, எங்கெங்கே ஸிணித் காமராவை வாங்க முடியும் , கடைசியாக ஸ்னிேத் காமராவைத் தாம் கண்டது எக்கடையில் போன்ற விவரங்களைத் தருவார். இவ்வாறு வலிந்து உதவ முன்வந்த ஒரு நல்லவரின் முயற்சியாலேயே ஸினித் காமரா ஒன்றை என்னுல் வாங்க முடிந்தது.*
காமராவை இயக்கும் முறை பற்றிக் கடைச் சிப்பந்தி ஒரு வரிடம் நான் சில கேள்விகளைக் கேட்டேன். நான் கேட் டதை விளங்க அவரால் முடியவில்லை. அப்போது, எங்கள் சம்பாஷ்னேயை அவதானித்த எவரோ ஒரு வாடிக்கைக்
34

காரர், 'நான் உங்களுக்கு உதவுகிறேன் தோழர்,' என்று கூறியவாறே என்னிடம் வந்தர்ர். சிப்பந்தியின் கையிலிருந்த காமராவை வாங்கி, என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். இவ்வாறு-கறுப்பனென்றும் வெள்ளையனென்றும் பேதம் பாராட்டாமல், அன்புடன், ஆதரவுடன் சக மனிதர்களுக்கு தாமாக முன்விந்து உதவும் உதார புருஷர்களைச் சோஷ லிஸம் பிறந்த பூமி உருவாக்கியிருப்பதை நான் கண்டேன். இதற்கு நேர்மாருக அமெரிக்க, ஆங்கிலேய வாழ்க்கை முறையைப்பற்றி இரு நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே நான் குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது.
சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கா சென்று மீண்ட மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் (சிங்களவர்) என் னிடம் கூறியிருந்தார்:-
"தெருவோரத்தில் நீ குற்றுயிராய்த் தான் விழுந்து கிடந்தாலும், அந் நாட்டு மக்கள் உன்னை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் போவார்கள். அந்த நாட்டில் டாக்டர்கள் ப்ற்றுக்குறை இருப்பதால், கறுப்பு டாக்டர்களுக்குக் கூட அந் நாட்டு ஆஸ்பத்திரிகளில் வேலை தருகிருர்கள். ஆஞல் ஆஸ் பத்திரியின் நான்கு சுவர்களுக்கு அப்பால், ஒரு நாய்க்குக் கிடைக்கும் மரியாதைகூட இக்கறுப்பு டாக்டர்களுக்குக் கிடையாது.”*
இரு வருடங்களுக்கு முன், இங்கிலாந்தில் டாக்டரா கத் தொழில் பெற்று, அங்கு பணிபுரிவதற்குச் சென்ற ஒரு சிங்கள நண்பர் எனக்கு அண்மையில் எழுதிய கடிதத்தின் சில வாசகங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன:- *
","இங்கே எடுத்ததற்கெல்லாம் நன்றி-நன்றி என்று கூறுகின்ருர்கள். ஒருவர் நன்றி சொன்னல், அதற்கு ம் நன்றி என்கிருர்கள். ஆணுல் இத்தனை நன்றிகளும்நாவின் நுனியிலிருந்து வருகின்றனவே தவிர, மனதின் அடித்தளத் திலிருந்து வருவதில்லை. 'ரெடி போய்ஸ்' எனப்படும் பால்ய நிறவெறியர்கள் வெள்ளையரல்லாதோரைக் கண்ட விடத்தெல்லாம் வம்புக்கிழுத்து அவமதிக்கிருர்கள். எதிர் த்தால் , அடித்து நொறுக்கி விடுகிருர்கள்.'
இதற்கு மாருக, சோவியத் நாட்டில், வீதிகளில், ஹோட் டல்களில், சிற்றுண்டிச் சாலைகளில், கடைகளில், ‘பாலே' நடன மண்டபங்களில், சுருங்கச்சொன்னல், நாட்டின் எப் பகுதியிலும், நீகிரோ இனத்தவர்கள் தலை நிமிர்ந்து நடக்கி ருர்கள்; தமது தாயகம் போல் உரிமையுடன் போய் வருகி முர்கள்; அன்புடன் உபசரிககப்படுகிருர்கள்,
35

Page 25
6 லெனின் சமாதி
தரிசனம்"
உலகின் மிக நீண்ட "கியூ" வரிசைகள் எங்கே உள்
ளன தெரியுமா? மாஸ்கோவில் தான். ஆனல்இவை பாணுக்காகவோ, கோதுமைமாவுக்காகவோ, அல் லது உடுதுணிகளுக்காகவோ தோன்றும் கியூக்கள் அல்ல. மாருக-இந்த நூற்ருண்டின் இல்ைணயற்ற வல்லரசான சோவி யத் நாட்டின் மக்கள், சீரழிந்து கிடந்த தம் நாட்டைச் சிங் கார புரியாக்கிய செம்மலுக்கு, பாழ்பட்டுக் கிடந்த தம் தேசத்தைப் பொன் கொழிக்கும் பூமியாக மாற வழிவகுத் துத் தந்த புரட்சிப் பெருந் தலைவனுக்கு, மாமேதை லெனி னுக்கு நன்றிக்கடன் செலுத்த நிறைந்து நிற்கும் கியூவரிசை கள் அவை .
இந்தக் கியூவரிசையில் நின்று, மனித வரலாற்றின் மிக மகத்தான நாயகனைத் தரிசிக்கவும், அவனுக்கு அஞ்சலி செலுத்தவும் வாய்ப்புப் பெற்றதால் நான் சிறப்புற்றேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பகல் 11 மணிக்குச் செஞ் சதுக்கத்தில் உள்ள லெனின் சமாதிக்கு நாம் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தநூ. சோவியத்-இலங்கை நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் நாயகமான ஆர்தர் நொவிகோவ், செஞ்சதுக்கத்தின் வாயிலில் எம்மைச் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து அவரே எம்மை லெனின் சமாதிக்கு இட்டுச் செல்லவிருந்தார்.
லெனின் சம்ாதியைத் தரிசிப்பதற்கு நீண்ட கியூ வரிசைக ளில் மக்கள் நிற்பார்களாம். சோவியத் அரச விருந்தாளிக ளான எம்மைக் கியூவில் நிற்காமல், நேரே உள்ளே அழைத் துச்செல்லும் அதிகாரம் நொவிகோவிற்கு உண்டு என்று அறிந்து கொண்டோம் .
ஆனல்-பகல் 11 மணிக்கு முன்னதாக நாம் விஜயம் செய்ய வேண்டிய வேறு சில இடங்கள் இருந்தன. அவற்றை முடித்துக்கொண்டு, எமது மொழிபெயர்ப்பாளருடன் நாம் செஞ்சதுக்கத்தை வந்தடைந்தபோது நண்பகல் 12 மணி ஆகிவிட்டது.
36

க்ாலையில் நாம் மேற்கொண்ட விஜயங்கள், எமக்கு நாமே வகுத்துக் கொண்ட சொந்த நிகழ்ச்சிகள் ஆகும். எனவே காலதாமதத்திற்கான முழுப் பொறுப்பும் எம்முடையதே.
iት ॐ
செஞ்சதுக்கத்தில் லெனின் சமாதியைத் தரிசிக்க? மைல் கணக்கில் வளைந்து நீண்டிருக்கும் கியூ வரிசையின் முன்னே நூலாசிரியர்.
37

Page 26
ஆனல்-ஒவ்வொரு நிமிடமும் காலத்ாமதம் ஆக் ஆக், எமது மொழிபெயர்ப்பாளர் லூடா பொறுமையிழந்து, அமைதி குலைந்து வருவதை அவரது முகம் எடுத்துக் காட்
• ומש, מ), {t
சோவியத் மக்கள் காலத்தைப் பொன் செய்பவர்கள், குறித்த நேரத்தில் குறித்த பணிகளை ஆற்றிப் பழக்கப் பட்டவர்கள் என்பதை இது போன்ற பல சிறிய சம்பவங் கள் எனக்கு உணர்த்தத் தவறவில்லை.
செஞ்சதுக்கம் என்பது மாஸ்கோ கிரெம்ளினின் ஓர் அங்கம் ஆகும். மாஸ்கோ நகரின் இதயம் என்று முன்னைக் காலங்களில் கிரெம்ளின் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. உல கின் மிக அழகானவையும், வரலாற்று ஏடுகளில் மிக உன்னத இடம் பெற்றவையுமான கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கி யது இந்தக் கிரெம்ளின் . மாஸ்கோ நகரின் மத்திய பகுதி யில் மொஸ்க்வா நதியின் வடக்குக் கரையோரமாக அமைந் துள்ளது கிரெம்ளின். முற்காலத்தில் இது ஜார் மன்னர் களின் கோட்டையாக விளங்கியது.
செஞ்சதுக்க வாயிலில் நொவிகோவைத் தேடினுேம், அவரை எங்கும் காணவில்லை. 11 மணிக்குச் சந்திப்பதாகக் கூறிய நாம், ஒரு மணி நேரம் கழித்து வந்து அவரைத் தேடு வது எமது தவறு தானே? என்ன செய்வது? லூாடாவின் முகத்தில் கவலை தோய்ந்தது. லெனின் சமாதிக்குச் செல்வ தற்கான மக்கள்வரிசை வளைந்து வளைந்து எம் கண்ணுக் கெட்டாத தொலைவு வரை எங்கோ சென்றது.
'நொவிகோவ் வராவிட்டால், நாம் கியூவில் நின்றுதான் சமாதிக்குச் செல்ல வேண்டும். காலதாமதம் ஆகப் போகிற தே? " என்று அங்கலாய்த்தார் லூடா. விருந்தாளிகளாகிய எம்மைக் கியூவில் நிறுத்திவைத்து வாட்டுவதா என்பது அவரது கவல்ை. இதை நான் உணர்ந்து கொண்டேன்.
'லூடா, லெனின் உங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்த மானவரல்லர். அவர் முழு உலகத்திற்கும் சொந்தமானவர். அவர் மனித சமுதாயத்தின் பொதுச் சொத்து. உலகில் எங்கெங்கெல்லாம் மக்கள் அடிமைத்தளையற்ற, சுரண்டலற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை நிறுவ விழைகிருர்களோ, அங்கங்குள்ள மக்கள் எல்லாருக்கும் லெனின் தலைவர்; வழிகாட்டி, ஆதர்ஸ் சக்தி. இத்தகைய ஒரு பெருந்தலைவ னின் சமாதிக்குச் செல்ல, கியூ வரிசையில் நிற்பதைக் கூட நான் பொருட்படுத்த மாட்டேன்,' என்றேன்.
争议
இவ்வாறு மனந்திறந்து நான் பேசியது லுனடாவின் முகத் தில் மலர்ச்சியை வரவழைத்தது.
38

'உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நான் பெருமையடை கிறேன். லெனின் பிறந்த மண்ணில் பிறந்தமைக்காக மகிழ்ச்சியடைகிறேன். லெனினின் பூதவுடலை ஒரு முறை யல்ல, இருமுறையல்ல, வேண்டிய போதெல்லாம் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றவள் என்பதனல் பூரிப்படைகிறேன்,' என்று லூாடா பதிலளித்தபோது சோவியத் மக்களின் உள் ளத்தில் லெனின் வகிக்கும் உன்னத ஸ்தானத்தை என்னுல் உணர்ந்து கொள்ள முடிந்தது. V
கியூவின் வாலைத் தேடிக் கண்டு பிடிக்க நாம் புறப்பட்ட போது- சீருடை தரித்த இரு இராணுவ வீரர்கள் எம்மை இடைமறித்தனர். நாம் ஏதோ ஒரு பிரச்சினையால் கவலைப் படுவதாக அவர்கள் கருதினர்கள்போலும்.
'உங்களுக்கு நாம் உதவ முடியுமா?' என்று அவர்கள் எம்மைப் பார்த்துக் கேட்டனர்.
மளமளவென்று லூடா விஷயத்தைக் கக்கினர். வீரர்கள் எம்மைப் பார்த்துப் புன்னகை புரிந்தனர். "பூரீ லங்கா?' என்று கேள்வித் தோர4ை யில் வினவினர். "'யேஸ், யேஸ்," என்றவாறே மேலும் கீழும் தலையைப் பலமாக அசைத்தோம். ' .
எம்மை அங்கேயே நிற்குமாறு சைகை செய்துவிட்டு, வீரர்கள் லுரடாவை அழைத்துச் சென்றனர். சற்றுத் தொலைவில் நின்ற இராணுவத் தலைமை அதிகாரியுடன் மூவ ரும் பேசுவது தெரிந்தது.
இதையடுத்து, லூாடாவும் வீரர்களும் திரும்பி வந்தனர். எம்மைச் சமாதியிலிருந்து சுமார் 100 யார் தூரத்தில் கியூ வில் சேர்த்துவிடுமாறு அந்த அதிகாரி பணித்திருந்தாராம். இந்த உதவி கிடைத்திராவிட்டால், நாம் கியூவில் சுமார் இரண்டு மைல் நீளம் சென்றிருக்க வேண்டும். مه
சமாதியின் வாயிலுக்கருகில் எம்மைக்கொண்டு சென்றுவிட முடியாமைக்காக மன்னிப்புக் கோரிக்கொண்டு, வீரர்கள் விடைபெற்றனர்.
இராணுவம் என்றவுடன் எவருடைய மனதிலும் ஒரு வித அச்சம் எழுவது இயல்பு. ஈவிரக்கமற்ற தன்மை, முரட்டுச்சுபாவம் போன்ற பண்புகளுடன் இராணுவத்தினரை இ6ைனத்துப் பார்ப்பது ஒரு வழக்கம். இலங்கை இராணு வத் தொண்டர் படையில் மூன்றுவருட காலம் கடமை யாற்றிய எனக்கு இது நன்ருகத் தெரியும்.
ஆனல்- நாம் கண்ட இந்தச் சோவியத் இராணுவ வீரர்கள்?
39

Page 27
முன்யோசனை, கனிவு, இனிய சுபாவம், மக்களுக்கு வலிந்து வந்து உதவும் பாங்கு-இப் பண்புகள் (ஹிட்லரின் நாசகாரப் படைகளை ஒட ஓட விரட்டிய) வீரத்துடன் இணையும் போது . . . . . . ?
என் மனத்திரையில் இரு வார்த்தைகள் மின்னி மறைந்தன. ஆம் , மக்கள் இராணுவம் என்பது இதைத் தான்; இத்தகைய ஒரு மலர் ஒரு சோஷலிஸ் சமுதாயத்தில் தான் மலரும்.
சுளிரென்று வீசிய முன்பணிகாலக் குளிர் காற்று என் சிந்தனைக் கோர்வையை அறுத்தது. கழுத்தில் தளர்ந்து விழுந் திருந்த மஃப்ளரை எடுத்து, கழுத்தை இறுகச் சுற்றிக் கொண்டேன். அன்றைய வெப்ப நிலை, தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறும் சைபர் பாகை சென்டி கிரேடை விட ஐந்து பாகைகள் குறைவாயிருந்தது.
தாங்க முடியாத குளிர். காற்று ஒவ்வொரு முறையும் வீசி வீசி அடித்தபோது, அது என்து தடித்த கம்பளி மேலா டைகளினுடாகச் சென்று நெஞ்செலும்பையும் துளைத்துக் கெரண்டு இருதயத்திலேயே பட்டுத் தெறித்தது போலிருந் தது. மூச்சு விட்ட போதெல்லாம், நாசித் துவாரங்களி லிருந்து ஆவி வந்தது. கம்பளிக் கையுறைகள் அணிந்திருந்த போதிலும், எனது இருகைகளும் விறைத்து, மரத்து, உயி ரற்றுப் போயிருந்தமையை என்னல் உணர முடிந்தது.
இந்தக் கொடுங் குளிரில் லெனின் சமாதியை நோக்கி, கியூ நகர்ந்துகொண்டிருந்தது.
கியூவில் நின்றவர்கள் தமது உடல்களைச் சூடேற்றுவதற் காக தாம் நின்ற நின்ற இடங்களில் துள்ளிக்கொண்டிருந் தனர். சிலர் கையுறை அணிந்த கரங்களை ஒன்ருகத் தட்டிக் கொண்டிருந்தனர். வேறு சிலர் கையுறைகளைக் களைந்து, கரங்களை ஒன்ருேடு ஒன்முகக் கூட்டி (கற்கால மனிதன் கற்களை உராய்ந்தது போல) விறுவிறுவென்று உராய்ந்து கொண்டிருந்தனர். ஆணுல்-கியூவை விட்டு எவருமே வெளியேறவில்லை.
கியூவில் நின்ற மற்றவர்களைப் போல நானும் என் உட லுக்குப் பல்வேறு வழிகளில் சூடேற்ற முனைந்தவாறே முன் னேறினேன். i.
கிரெம்ளின் கோட்டையின் நீண்ட, நெடிய சிவப்பு மதில்களில் கொஞ்சி விளையாடுவதும் முகில்களினுள் மறைவதுமாக கதிரவன் கண்ணும்பூச்சி விளையாடிக்கொண் டிருந்தான். சிவப்பு, பச்சை, தங்க நிறங்கள் பொருந்திய சென்ட்பஸில்ஸ் தேவாலயத்தின் கோபுரங்களில் சூரிய ஒளி
40

பட்டுத் தெறித்தபோது-அக் காட்சியில் பிறந்த திகி லுடன் கூடிய அழகு, இது கனவுலகு தானே என்றுகூட மலைக்கவைத்தது.
சமாதியின் வாயிலை நெருங்கி விட்டோம். கியூவிலே வந்த மக்கள் தமது உரையாடல்களை எல்லாம் நிறுத்திக் கொண்டனர். மிகவும் பயபக்தியுடனும் மரியாதையுடனும் சமாதியை நெருங்கினர். -
செஞ்சதுக்கத்தின் ஒரு தோற்றம்" நடுவில் காணப் படுவது தான் சென்ட்பஸில்ஸ் தேவாலயம்.
மாபிள் கற்களால் கட்டப் பட்டிருந்தது சமாதி. செங் கம்பளம் விரிக்கப்பட்ட அதன் தரைகளும், சுவர்களும் பளபள வென்று மின்னிக்கொண்டிருந்தன. ஐந்தாறு படிக்கட்டு களில் ஏறிமுன்னேறினுேம். அதற்கு அப்பால், பூமிக்கடியில் உள்ள அறைக்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள் தெரிந் தன.
ஆங்காங்கே அழகிய சீருடை அணிந்த வீரர்கள் அணி வகுத்து மரியாதைக்காக நின்றனர்.
41

Page 28
கியூ வரிசையில் ஒருவர் பின் ஒருவராக படிக்கட்டுகளில் இறங்கினுெம். சமாதியின் பிரதான அறையை அடைந் தோம்.
அங்கேநான் கண்ட காட்சிகண்கள் அகல விரிய, உடலெல்லாம் உரோமம் புல் லரித்து நிற்க, அங்கமெங்கும் குருதி புது வேகத்துடன் பீரிட் டுப்பாய, நான் கண்ட காட்சி
புதுயுகம் படைத்த பெருமகன், சமத்துவ சமுதாயம் தோற்றுவித்த உத்தமன், சுதந்திர உலகின் சுடர் விளக்கு, வரலாற்று நாயகன் மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கக் கண் டேன்.
பூதவுடலா, உறங்கும் உயிரா என்று ஐயுறத்தக்க வகை யில், ஜீவகளையுடன் பேணிப் பாதுகாக்கப்பட்ட லெனினின் உடல் கண்ணுடிப் பெட்டியில் வளர்த்தப்பட்டிருந்தது. நான புறமும் மலர் வளையங்கள்; கண்ணுக்கினிய வெண்ணுெளி அள்ளி வீசும் விளக்குகள்.
பெட்டியின் நான்கு மூலைகளிலும், நான்கு இராணுவ வீரர்கள் மரியாதைக்காக அணிவகுத்து நின்றனர். பதி னைந்து நிமிடங்களுக்கொரு முறை, பெட்டியைச் சுற்றி நிற் கும் பழைய வீரர்கள் அகல, புதிய வீரர் நால்வர் வந்து நின்று, அணிவகுப்பு மரியாதையைத் தொடர்வது வழக்க மாம். இது இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. கியூ வரிசை தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. பல ரின் கண்கள் கண்ணிரால் குளமானதை கண்டேன்.
கண்ணுடிப் பெட்டியைச் சுற்றிக்கொண்டு வந்து, படிக் கட்டுகளில் ஏறிச் சமாதிக்கு வெளியே வந்தோம்.
ஒரு சில நிமிடங்கிளுக்கு என்னல் பேச முடியவில்லை. வெளியே-மக்கள் கியூ மைல் கணக்காக நீண்டு கிடந்தது. ஆண்கள்-பெண்கள், காளையர்-கன்னியர், கிழவர்கிழவிகள், உள்நாட்டார்-வெளிநாட்டார், வெள்ளையர்கறுப்பர், சமாதிக்கு முதல் முறையாக வருபவர்கள்- பல முறை வந்தவர்கள். . . . இவ்வாருகப் பலதரப்படட மக்களை உள்ளடக்கிய அந்தக் கியூ நகர்ந்துகொண்டிருந்தது.
செவ்வாயும் வெள்ளியும் தவிர, வாரத்தின் இதர நாட் களிலெல்லாம், காலை எட்டு முதல் மாலை ஐந்து வரை திறந் திருக்கும் அந்தச் சமாதி. . அதிகாலை நான்கு மணிக்கெல் லாம் அங்கு ஆரம்பமாகும் மக்கள் வரிசை. எந்நேரமும் மைல் கணக்கில் நீண்டிருச்கும் கியூக்கள். . இவையாவும் இறந்
42

தும் இறவாப் பெருமகனக மக்கள் உள்ளங்களில் லெனின் வாழ்வதை விளம்பி நின்றன. Y
லெனின் சமாதிக்கு வெளியே நின்ற ஒர் இளம் ஜோடிபுது மணத் தம்பதிகள் எங்கோ சஞ்சரித்த என் நினைவுகளைச் செஞ்சதுக்கத்துக்கு மீட்டு வந்தனர்.
கல்யாண உடையில் இவர்கள் இங்கே என்ன செய்கிறர் கள்? மொழிபெயர்ப்பாளர் லுரட்ாவிடம் கேட்டேன்.
லூ டாவின் பதில் என்னைக் கிறங்க வைத்தது. ** மாஸ்கோவில் இது ஒரு திருமணச் சம்பிரதாயம். மண மகனும் மணமகளும் விவாகப்பதிவு செய்துகொண்டதும் செஞ்சதுக்கத்துக்கு வருவார்கள். லெனின் சமாதிக்கு முன் ணுல் நின்று அஞ்சலி செய்வார்கள். நான் கூட எனது திரு மணத்தின்போது எனது கணவருடன் இங்குதான் வந்தேன். எமது நாட்டை இந்த உன்னத நிலைக்குக் கொண்டுவந்ததற் காக, சிறந்த ஒரு வாழ்க்கை முறையை வமக்கு அமைத்துத் தந்தமைக்காக, புதுயுகமொன்றை மலர வைத்தமைக்காக எங்கள் தலைவர் லெனினுக்கு நன்றி கூறிவிட்டுத்தான், நாம் புதுமண வாழ்வை ஆரம்பிப்போம்.'
மாஸ்கோவிற்குத் தொலைவில் உள்ள பகுதிகளில், அல்லது பிற குடியரசுகளில் திருமணம் செய்வோர், அவ்வப் பகுதி களில் சோவியத் நாட்டிற்காக உயிர்த்தியர்கம் செய்த வீரர் களுக்கு எழுப்பப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்களுக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்துவார்களாம். என்ன தேச பக்தி!
43

Page 29
7 வர்க்கமற்ற சமுதாயத்தில்
“சலுகை பெற்ற” வர்க்கம்
ரஷ்யாவில் 1917ல் நடைபெற்ற மாபெரும் அக் டோபர் சோஷலிஸப் புரட்சியின் விளைவாக, அந் நாட்டில் வர்க்க பேதம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடடது என்பது பொதுவான நம்பிக்கை.
எனவே, எனது சோவியத் விஜயத்தின் போது, அர் நாட்டில் சலுகை பெற்ற வர்க்கம் ஏதாவது உண்டா என்று அறிந்துகொள்ள நான் முயற்சி எடுத்தேன் என்று சொன் ணுல், அதில் வியப்படைவதற்கு ஏதும் இல்லை அல்லவா? எனது உறுதியான முடிவு, அந்நாட்டில், சலுகை பெற்ற ஒரு வர்க்கம் உண்டு என்பதே ஆகும்.
மாஸ்கோவில் லெனின் குன்றுகளில் அமைந்துள்ள 'பய னியர் மாளிகை’க்கு நான் விஜயம் மேற்கொண்டபோது நாட்டின் ஏனைய மக்களை விட அதிகமான சலுகைகள் பெற்ற இந்த 'உயர் வர்க்கத்தினரை' எனது கண்களால் கண்டேன்.
யார் இவர்கள் என்கிறீர்களா? சோவியத் நாட்டின் இளம் தலைமுறையினர்! சர்வ சலுகைகளும் பெற்ற வர்க்கத் தினர் இவர்கள் தாம்.
பயணியர் மாளிகையின் சொந்தக்காரர்கள், அனைத்து யூனியன் லெனின் இளம் பயணியர் நிறுவனத்தினர் ஆவர். இந் நிறுவனத்தின் உறுப்பினர்களாக, சோவியத் நாடு தழுவிய ரீதியில், 24 கோடி குழந்தைகள் உள்ளனர். சோவியத் நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விசேஷ சலுகைகள், அவர்கள் தமது அன்னையரின் வயிற்றில் சிசுக்களாக இருக்கும்போதே ஆரம்பிக்கின்றன.
இளம் பயணியர் நிறுவனம் என்பது முதலாம் வகுப்பி லிருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள சிறுவர்கள் அங்கம் வகிக்கும் ஒர் இயக்கமாகும். எனவே, இதன் உறுப்பினர் களின் வயது 6 முதல் 17 வரை இருக்கும்.
இளம் பயணியர் நிறுவனம் குழந்தைகளுக்குத் தேசபக்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் ஈடுபாடு, மக்களிடையே பரஸ்
44

பர நட்புறவு ஆகிய உணர்வுகளை வளர்க்கிறது. அது குழந் தைகளின் ஆக்கத்திறனை விருத்தி செய்து, உழைப்பின் மேல் அவர்களுக்கு ஈடுபாடடை ஏற்படுத்தி, நாட்டுக்குகந்த சிறந்த குடிமக்களாக அவர்கள் மலர வழி வகுக்கிறது. சோவியத் நாட்டில் எல்லாமாக 4000க்கும் மேற்பட்ட இளம் பயணியர் பள்ளிக் குழந்தைகள் இல்லங்களும், பய னியர் மாளிகைகளும் உள்ளன. இவற்றில் உள்ள விளை யாட்டு, பொழுதுபோக்கு வசதிகள், மேலே சொன்ன இலட்சியங்களை அடைவதற்கேற்ற வகையில் அமைந்துள் ளதை நாம் நேரில் கண்டோம்.
மாஸ்கோவில் லெனின் குன்றுகளில் அமைந்துள்ள 'பய னியர் மாளிகை’க்கு நாம் சென்று பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. r
பயணியர் மாளிகையை நாம் அடைந்த போது, பிற்பகல் 3 மணி ஆகிவிட்டது. பள்ளிக்கூடப் பிள்ளைகள் சாரி சாரி யாக இம் மாளிகைக்கு வந்து கொண்டிருந்தனர். கல்லூரிப் புத்தகப் பைகள் சகிதம் அவர்கள் வந்ததிலிருந்து, கல்லூரி விட்டதும் நேராக அங்கே வருகின்றனர் என்று ஊகித்துக் கொண்டேன்.
முகத்தில் மகிழ்ச்சி பொங்கி விளையாட, கண்களில் ஆவல் தொக்கி நிற்க, ஒட்டமும் நடையுமாக அவர்கள் வந்த பாங்கிலிருந்து, பயணியர் மாளிகை விஜயம் எவ்வளவு தூரம் அவர்கள் உள்ளங்களுக்கு, நெருக்கமான ஒரு நிகழ்ச்சி என்பது புரிந்தது.
அந்தப் பயணியர் மாளிகையின் நிர்வாகி நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு ரஷ்யப் பெண்மணி. அவர் எம்ம்ை எதிர்கொண்டழைத்து, உள்ளே கூட்டிச் சென்றர்.
துள்ளிக் குதித்துப் புள்ளி மான்கள் போல் சென்றுகொண் டிருந்த குழந்தைகள் குழாத்தினூடாக மெல்ல விலக்கிக் கொண்டு முன்னேறனேம்.
நான்கு அடுக்குகள் கொண்ட அந்த மாளிகையில் 400க்கு மேற்பட்ட அறைகளும் மண்டபங்களும் இருந்தன. சுமார் 5000 குழந்தைகள் அங்கே அந்த நேரத்தில் இருந்தனர். தினமும் அங்கே வரும் குழந்தைகளின் சராசரித் தொகை இதுதானும், மாஸ்கோ பயணியர் மாளிகையின் மொத்த உறுப்புரிமை, 15,000 குழந்தைகள் என்பதையும் கேட் டறிந்து கொண்டோம். s
குழந்தைகள் பங்குபற்றுவதற்கு உகந்த எண்ணற்ற பொழுதுபோக்குகள், விளையாட்டுகள் இங்கே அமைந்திருப் பதைக் கண்டோம். தத்தமக்குப் பிடித்தமான பொழுது
45

Page 30
போக்குகளில் குழந்தைகள் ஆர்வத்துடனும் அகமகிழ்வுட னும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். Rr
எல்லாமாக 600க்கு மேற்பட்ட துறைகள் இங்கே இருப் பதைக் கண்டோம்.
ஒரு மண்டபத்திலே “பாலே" போன்ற உலகப் புகழ் பெற்ற சோவியத் நடனங்களில் குழந்தைகள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். சோவிய்த் விருது பெற்ற 'பாலே" கலைஞர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.
இன்னெரு மண்டபத்திலே, குழந்தைகள் வாத்தியக் கோஷ்டி ஒன்று இன்னிசை மீட்டிக் கொண்டிருந்தது.
இதைப் போல், எத்தனையோ பொழுது போக்குகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தன.
சிற்பச்சாலை ஒன்றை வந்தடைந்தோம். சின்னஞ் சிறிய குழந்தைகள் தமது பிஞ்சுக் கரங்களால் சிலை வடிக்கக்கற்றுக் க்ொள்ளும் காட்சியைக் கண்டோம். சோவியத் சிற்ப வல்லு நர் ஒருவர் அவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந் of TFT
மாஸ்கோ குன்றுகளில் உள்ள பயணியர் மாளி கையில் சிலைவடிக்கக் கற்றுக் கொள்ளும் சிறுவர்கள்,
46
 

ஓவியச் சாலை ஒன்றையும் கடந்து, பிரமாண்டமான ஒரு ஸ்டூடியோ அறைக்கு வந்தோம். என்ன ஆச்சரியம்! சுமார் பத்துப் பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவர் சிறுமியர்கள், சினிமாப் படப்பிடிப்பு பற்றியும், டைரக்ஷன் பற்றயும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.
ஒளியை அள்ளி வீசும் மின் விளக்குகள் சூழ்ந்திருக்க, இரு சிறுவர்கள் ஒரு சினிமா காமராவை இயக்கி, தம் முன்னே நின்ற சிறுவர்களைச் சினிமாப் படம் பிடித்துக்கொண்டிருந் தனர். அவர்களுக்குப் பின்னல் நின்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தவர், சோவியத்தின் சினிமா டைரக்டர்களில் ஒருவர் என்பது தெரியவந்தது.
இன்னுேர் அறையில், புகைப் படம் பிடிக்கப் பயிற்சி பெற் றுக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டோம். சிறுவர்களால் எடுக்கப்பட்ட எத்தனையோ புகைப்படங்கள் அந்த அறை யின் சுவர்களை அலங்கரித்தன. சர்வதேசப் புகைப்படப் போட்டிகளில் பரிசு பெறக் கூடிய தரத்திற்கு அவற்றில் சில இருந்ததைக் கண்டுகொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்த பகுதி, 'விண்வெளிப்பயணவியல்-வானியல் பகுதி' ஆகும்.
விண்வெளிப் பயணத்தின் பல்வேறு அம்சங்கள், சிக்கல் கள் என்பனவற்றை எளிதில் விளக்கும் மாதிரி அமைப்புகளு டன் இப் பகுதி கூடியிருந்தது. மேலும், "பிளண்டேற்யம்' என்றழைக்கப்படுகின்ற கோள் நிலை இயக்கங்களைக் காட்டும் பொறி மண்டபம் ஒன்றும் இங்கே அமைந்திருந்தது. எமது நாட்டில் கொழும்பு பழைய குதிரைப் பந்தயத் திடலில், அமைந்துள்ள ""பிளண்டேறியத்’தை ஒத்தது இது.
இலங் ைக ககாரின் விண்வெளிக் கழகத்தின் தலைவர் நான் என்பதை அறிந்து கொண்டதும், அந்த "பிளண்டேறியத்' துக்குப் பொறுப்பாய் இருந்த ஆசிரியை, அங்கு நடை பெற்ற ஒரு வகுப்பைப் பார்வையிடுமாறு என்ன அழைத் 5птт. ܚ உள்ளே சென்றேன். அங்கிருந்தோர்- பால் மணம் மாருப் பச்சிளம் குழந்தைகள். பன்னிரண்டு வயதுக்குட் பட்ட குழந்தைகள் என்று என் மனம் எடைபோட்டது. இன்னஞ்சிறு வாங்கு ஒன்றில் அக் குழந்தைகளோடு அமர்ந்
தன் .
விளக்கு அணைந்தது. வானம் போல் அமைந்திருந்த இருண்ட முகட்டில், ஒன்றன் பின் ஒன்ருகத் தாரகைகள்
47

Page 31
கண்சிமிட்டத் தொடங்கின. இருண்ட வானத்தை இரவில் பார்ப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.
டோர்ச் லைட் போன்ற ஒரு விளக்கை ஒவ்வொரு விண் மீன் தொகுதியின் மீதும் ஆசிரியை அடித்தபோது, குழந்தை கள் அனைவரும் ஏகோபித்த குரலில் அவ்வத் தொகுதிகளின் பெயரை, உரத்து உற்சாகத்துடன் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியுற்றேன்.
அத்தனை விண்மீன் தொகுதிகளையும் குழந்தைகள் சரியாக அடையாளம் கண்டு பிடித்தனர்.
என் காதுகளை என்னுல் நம்ப முடியவில்லை. இந்தச் சின்னஞ்சிறு வயதில் இச் சிறுவர்களுக்கு இவ்வ ளவு தூரம் வானியல் அறிவு இருப்பின், இவர்கள் பிற் காலத்தில் விண் 25ண அளக்கும் விஞ்ஞானிகளாக, சேர் ஜே கொருெலேவ்களாக, யூற ககாரின் களாக வருவதில் வியப் பில்லைத் தான் என்று என மனம் முடிவு கடடியது.
இவை போன்ற 600 க்கும் மேற்பட்ட பொழுது போக் குத் துறைகள் மாஸ்கோ பயணியர் மாளியிைல் பொருந்தி யிருப்பதைக் கண்டேன். குழந்தைகளின் விருப்பத்திற்கும் இயல்பாகவே அவர்களுக்குக் கைவரப்பெற்றுள்ள திறனுக் கும் ஏற்ப அவ்வத்துறைகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட் டிருந்தனர். w
பயணியர் இயக்கத்தில் சேர, கட்டணம் ஏதுமில்லை பிரவேசம் இலவசமாகும்.
கல்லூரி விட்ட நேரத்திலிருந்து பாலை ஏழு அல்லது எட்டு மணி வரை குழந்தைகள் பயணியர் மாளிகையில் பல் வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்தனர். இச் சிறு வர் சிறுமியர்களுக்குத் தாம் குடியிருக்கும் வீடு முதலாவது இல்லம், கல்வி பயிலும் பள்ளிக்கூடம் இரண்டாவது இல்லம், பயணியர் மாளிகை மூன்றுவது இல்லம் என்பதைப் புரிந்து கொண்டோம்.
இளம் தலைமுறையினரை வளர்த்து ஆளாக்கும் முக்கிய பொறுப்பைச் சோவியத்தின் சோஷலிஸ் அரசு செயற் படுத்திவரும் சிறப்பிற்கு ஒர் எடுத்துக்காட்டு தான் இளம் பயணியர் நிறுவனங்கள் ஆகும்.
பள்ளிக்கூடங்களுக்கு வெளியே குழந்தைகள் மேற்கொள்; ளும் பணியின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். பய னியர் மாளிகைகளிலுள்ள பொழுதுபோக்கு விளையாட்டுத் துறைகளுடன் , சமூக ரீதியில் பயனுள்ள உழைப்பின் அடிப் படைக் கூறுகள் சிறப்புடன் சங்கமிப்பதைக் காணக்கூடிய
48

தாயிருக்கிறது. நாட்டுக்குகந்த நல்ல பிரஜைகள் உருவாக இது வழிவகுக்கிறது. -
இலட்சக்கணக்கான சோவியத் குழந்தைகள் தமது கல் லூரி விடுமுறை நாட்களே இளம் Uuofuli முகாம்களிலும், உல்லாசப் பய்ண் நிலையங்களிலும், உட்ல்நலம் பேணும் நிலையங்களிலும் கழிக்கின்றனர்.
மேலும், இளம் பயணியர்களுக்கென நாடு தழுவியரீதி யில் 1,370 இளம் தொழில்நுட்பவியலாளருடன், இயற்கை யியலாளர் நிலையங்களும், 4,600க்கு மேற்பட்ட விளையாட்டுத் துறைக் கல்லூரிகளும், 3,200 இசை, பாலே நடன, கலைக் கல்லூரிகளும், 15 0 சிறுவர் நாடக அரங்குகளும், குழந்தை கள் இயக்கும் 36 குட்டி ரயில் வண்டி9ளும் உள்ளன
of)
குழந்தைகளுக்காக 28 செய்திப்பத்திரிகைகளும், 40 சஞ் சிகைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. * பயனர்ஸ்காயா பிராவ்ட்ா' என்ற சிறுவர் பத்திரிகை ஒரு கோடி பிரதிகள் விறபனையாகிறதாம். மேலும் சிறுவர் இலக்கிய நூல்கள் ஆண்டுதோறும். கோடிக்கணக்கில் பிரசுரமாகின்றன.
சோவியத் குழந்தைகளைச் சோஷலிஸ் அரசு ஒருதாயைப் போல் கவனமாகப் பேணி வளர்க்கும் பண்பைக் கண்டு வியந்தபோது, எனக்கு அமெரிக்க எழுத்தாளர் மைக் தாவி தோவின் சோவியத் பயண நூலிலுள்ள சில” ஒப்பீடுகள் நி%னவுக்கு வந்தன. *Na
சோவியத் குழந்தைகளின் சீரிய வாழ்க்கைமுறையைக் கண்டுவியந்த தாவிதோவ், அவர்களை பிரபல அமெரிக்க நகரான நியூயோர்க்கின் சிறுவர்களோடு ஒப்பிடுகிரு.ர். நியூ யோர்க்கில் 7 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களில் 20 சதவீதத்தினர் போதைப் பொருள்மருந்துகளை உபயோகிப்பவர்கள் என்று கூறி விசனப் படுகிருர் அவர்.
ஆமாம், ஒரு சமுதாயத்தின் சிறப்புகள், சீர்கேடுகள் அதன் குழந்தைகளில் பிரதிபலிப்பதில் வியப்பில்லை அல்லவா?
எம்மைக் கடந்து சிட்டுப் போல் பறந்து சென்ற ஒரு குழந்தையைப் பயணியர் மாளிகை நிர்வாகி பெயர் சொல்லி அழைத்தார்.
49

Page 32
இனம் பயணியர் இயக்கத்தின் குறிக்கோள் வாசகத்தை கறுமாறு ரஷ்ய மொழியில் பணித்தார்.
பால் மணம் மாருத பாலகன் அவன் தன் கால்களைக் கூட்டி நின்று 'சல்யூட் அடித்தான். இதனை அடுத்து, பயணி யர் இயக்கத்தின் குறிக்கோள் வாசகத்தையும், அதன் பதிலை யும் மளமளவென்று ரஷ்ய மொழியில் கம்பீரமாகக் கூறி ஞன்.
"“கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியத்துக்காகப் போராடத் தயாராக இருங்கள்’’-இது குறிக்கோள் வாசகம்,
'எப்போதும் சித்தமாயிருக்கிருேம்’-இது பதில என் உடல் புல்லரித்தது.
50

8
சமுதாய முன்னேற்றத்தின் சின்னங்கள்
உலக மகா அதிசயங்கள் எவை? புராதன உலகின் அதிசயங்கள், மத்திய கால அதிசயங்கள், நவீன அதிசயங்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் முறையே ஏழு அதிசயங்களை வரிசைப்படுத்திக் கூறுவது வழக்கம். ஆனல் இந்த அதிசயங்களையும் தூக்கி அடிக்கக் கூடிய அதிசயத் திலும் அதிசயத்தை மாஸ்கோவில் நான் கண்டேன். அது தான்-மாஸ்கோவில் உள்ள ஒஸ்டன் கினே டெலிவிஷன் கோபுரம் ஆகும். பூமியில் மனிதனுல் நிறுவப்பட்ட ஆகக் கூடிய உயரமுள்ள கட்டடம் இது ஆகும். இதன் உயரம் 1,780 அடிகள் !
இதைவிடப் பெரிய விந்தை-இதன் அத்திவாரம் 15 அடிகள் மடடுமே ஆழம் உடையது என்பது தான்.
உலகின் மிக உயர்ந்த சமூக நீதி நிலவும் நாட்டின் தலை நகரை, உலகின் மிக உயர்ந்த கட்டடத்தின் மீது ஏறி நின்று பார்க்கும் உன்னத வாய்ப்பு எனக்குக் கிட்டியபோது நான் அடைந்த உவகை கொஞ்ச நஞ்சமல்ல.
மாஸ்கோ நகரின் வடக்குக் கோடியில் அமைந்துள்ள ஒஸ் டன்கினே தொலைக்காட்சிக் கோபுரத்தை நாம் அணுகிய போது, இந்த விந்தைக் கட்டடத்தைப் பார்வையிடுவதற் காகப் பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் குழுமி யிருப்பதைக் கண்டேன். தொலைக் காட்சிக் கோபுரத்தைச் சுற்றியுள்ள வீதியோரங்களில், உல்லாசப் பயணிகள் வந் திறங்கிய பஸ் வண்டிகள் நிரை நிரையாக நிறுத்தப்பட் டிருநதன.
மின்சார லிஃப்டின் மூலம் மேலே சென்று, தொலைக்காட் சிக் கோபுரத்தின் முகில் தழுவிய காட்சிகாண் தளங்களை
51

Page 33
அடைவதற்கு, "கியூ" வரிசையில் உல்லாசப் பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.
இவர்களைப் பார்த்ததிலிருந்து, இவர்களோடு பேச்சுக் கொடுத்ததிலிருந்து, இவர்களில் பெரும்பாலானவர்கள் சோஷலிஸ-கம்யூனிஸ எதிர்ப்புப் பிரசாரத்தில், பித்தலாட் டத்தில் உலகில் முன்நிற்கும் அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி போன்ற முதலாளித்துவ நாடுகளிலிருந்து வந்தவர்கள் என் பது தெரிய வந்தது.
ஒஸ்டன்கினே தொலைக் காட்சிக் கோபுரத்தில் மட்டுமல்ல -மாஸ்கோவில் சோவியத் பொருளாதார சாதனைகள் பற் றிய நிரந்தரக்கண்காட்சியில், மாஸ்கோ பல்கலைக் கழகப் பிரதேசத்தில், கிரெம்ளினில், மாஸ்கோ வீதிகளில், ஹோட் டல்களில், கடைகளில்-இப்படி நான் சென்றவிடமெல் லாம் இந்நாடுகளின் உல்லாசப் பயணிகள் திருவிழாக் கூட் டம் போல் 'சோஷலிஸத் திருவிழா' காணச் சாரி சாரியாக வந்து குவிவதைக் கண்டேன்.
இரும்புத்திரை நாடென்றும், அடக்கு முறைத் தேசமென் றும், மூடு மந்திரப் பூமியென்றும் ‘மூடிய’ சமுதாய மென்றும் சோவியத் நாட்டுக் கெதிராக இந்நாடுகளின் கோ உஸ்வரர்களின், பணமுதலைகளின், சுரண்டும் வர்க்கத் தினரின் கைகளிலுள்ள பிரசாரஇயந்திரங்கள், மக்கள் தொ டர்புச் சாதனங்கள் செய்து வரும் உண்மையற்ற, அபாண்ட மான, நயவஞ்சகமான, பித்தலாட்டப் பிரசாரங்கள், சோவி யத் நாட்டைப் பார்க்கவேண்டும் என்ற பேராவலை அம் மக்களிடையே தூண்டிவிட்டிருப்பதைக் கண்டேன்.
ஒரு திரைப்படம் தடை செய்யப்படுவது அப்படத்திற்கு எவ்வளவு தூரம் நல்லவொரு விளம்பரமாக அமைகிறதோ, அதுபோல, சோவியத் நாடுபற்றி இந்நாடுகளில் கட்டவிழ்த்து விடப்படுகின்ற ‘மாயாஜாலக்கதைகள்' சோவியத்தின் உல் லாசப் பயணத்துறைக்கு நல்ல 'ஒசி விளம்பரமாக' அமைந் திருப்பதைக் கண்டேன்.
இங்கு வரும் முதலாளித்துவ நாட்டு உல்லாசப் பயணி கள் இங்கே இரும்புத் திரையையும் அடக்குமுறையையும் காண்பதில்லை; பதிலாக, மக்களால் மக்களுக்கென்று நடத்தப்படும் மக்களாட்சியை, முதிர்ந்த சோஷலிஸ் அமைப்பைக் காண்கிருர்கள்.
மூடு மந்திரத்தை, ‘‘மூடிய’ சமுதாயத்தைக் காண்ப தில்லை; பதிலாக, “ ‘அனைத்தும் மனிதனுக்காக, மனிதனின் உயரிய நன்மைக்காக’ என்ற தாரக மந்திரத்தின் செயற்
52

பாட்டை, 'அகலத் திறந்த” சமுதாயத்தைக் காண்கிருரர் கள். w
சோவியத் அரசின் அழைப் பின் பேரில் வந்த விருந்தாளி கள் என்றதால், ' கியூ' வில் நிற்காமல், நேரடியாக் லிஃப் டில் செல்ல கோபுரத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் எமக்கு அனுமதி வழங்கினர். லிஃப்டில் ஏறினுேம் s லிஃப்ட் புறப்பட்டதும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை!
எவ்வளவு பிரமாண்டமான கட்டடம்! இவ்வளவு உயரம் செல்ல, பத்து நிமிடமாவது எடுக்காதா என்ன? லிஃப்டில் நின்றவர்களிடையே மெது வாக நகர்ந்து சென்று, நல்ல ஒரு மூலையை அடைந்து, ** ஹாயாகச் ** சாய்ந்து கொண்டேன்.
நான் சாய்ந்ததும் சாயா ததுமாக லிஃப்டின் கதவு திறந்து கொண்டது. 1,112 அடி உயரத்திலுள்ள காட்சி காண்கூடத்திற்கு நாம் வந்து விட்டதாக அங்குள்ள பெண் வழிகாட்டி ஒருவர் அறிவித் தாா.
உலகின் மிக உயர்ந்த கட்டட மான மாஸ்கோ-ஒஸ்டன்கினே தொலைக்காட்சிக் கோபுரம் இதுதான். 1780 அடி உயர முடைய இக்கட்டடத்தின் அத் திவாரம் 15 அடி மட்டுமே உடையது
53

Page 34
ஒரு நிமிடத்திற்குள் 1,112 அடி உயரத்திற்குச் சென்று விட்டோம்!
தளத்தை அடைந்தோம். நாலாபுறத்திலும் மாஸ்கோ " நகர் அகன்று பரந்து கிடந்தது. அற்புதமான காட்சி அது. ஒஸ்டன் கினே தொலைக் காட்சிக் கோபுரத்தின் நிறை 55,000 தொன்கள் என்பதை அறிந்து கொண்டோம். 1,780 அடி உயரக் கோபுரத்தின் முதல் 1, 271 அடிகளும் கான் கிரீட்டினலும், எஞ்சிய பகுதி உருக்கினலும் அமைக்கப் பட்டிருந்தது.
எல்லாமாக 44 மாடிகளைக் கொண்ட இக் கட்டடத்தில் 485 அடி,881 அடி, 1,112 அடி உயரங்களில் காட்சி காண் தளங்கள் அமைந்துள்ளன. 1,073 அடி உயரத்தில் ஒரு சிற்றுண்டிச்சிாலை அமைந்துள்ளது.
நிக்கோலி நிக்கிற்றின் (1907-1973) என்ற புகழ் பெற்ற சோவியத் பொறியியல் நிபுணர், வழமையான கட் டட் நிர்மாணக் கோட்பாடுகளுக்குப் புறம்பான முறையில் புரட்சிகரமான இந்த அமைப்பை நிறுவினர் என்று அறிந்து கொண்டோம் .
சோவியத் நாட்டின்_டெலிவிஷன், வானெலி ஒலிபரப்பின் செலுத்திக் கருவிகள் இக் கோபுர்த்தில் நிறுவப்பட்டுள்ளன. வளி மண்டலத்தை 'நுகர்ந்து' வானிலை முன்னறிவிப்பு களேத் தரும் விஞ்ஞான ஆய் கூடம் ஒன்றும் இங்கே அமைந்துள்ளது.
ஒஸ்டன் கினே தொலைக்காட்சிக் கோபுரம் போன்ற இதர சோவியத் விஞ்ஞான-தொழில்நுட்ப-பொருளாதாரச் சாதனைகளை விளக்கி நிற்கும் நிரந்தரக்கண்காட்சி மாஸ்கோ வின் பிரதான கவர்ச்சிகளுள் ஒன்ருகும்.
530 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் அமைந்துள்ள இக் கண்காட்சியின் சில பகுதிகளை மட்டுமே என்னல் பார்வை யிட முடிந்தது.
எரு நிமிடத்திற்கு ஒரு காட்சிப்பொருள் என்ற வேகத் தில் பார்க்கத் தொடங்கினல், இங்குள்ள அத்தனை காட் சிப் பொருள்களையும் ஒருவர் பார்த்து முடிக்க ஆறு மாதங்கள் பிடிக்கும் ஆறு மணி நேரத்திற்கு மேல் கண் காட்சியில் செலவிட எனக்கோ நேரமிருக்க்வில்லை.
1917 முதல் 1975 ஈருகவுள்ள 58 ஆண்டுக் காலத்தில், சோவியத் பொருளாதாரம் அடைந்த பிரமாண்ட்ம்ான
54

வளர்ச்சியின் அற்புதக் கதையைக் கூறி நிற்கின்றன இக் காட்சிப் பொருள்கள்.
1917 அக்டோபர் புரட்சியை அடுத்து வந்த உள்நாட்டுக் குழப்பங்கள், இவற்றை முடுக்கிவிட்ட அந்நிய முதலாளித் துவ சக்திகளின் தலையீடு, இரு உலக மகாயுத்தங்கள் உலகின் வேறெப் பகுதியையும் விட அதிமாகச் சோவியத்திற்கு விளைவித்த சேதங்கள்-இத்தனை துர்ப்பாக்கியங்களுக்கும் எதி ராகப் போராடி, இரு நூற்ருண்டு காலத்திற்கு மேல் தங்கு தடையின்றி அமெரிக்கா அடைந்த பொருளாதார வளர்ச்சி யை இக்குறுகிய காலத்தினுள் எட்டிப் பிடித்து, அதனை மிஞ் சவும் வழிவகுத்த அந்த மந்திர சக்திதான் என்ன?
திட்டமிட்ட விஞ்ஞான சோஷலிஸ்ம் தான் அது என் பதை இக்கண்காட்சிக்கு வரும் எவரும் உணராமல் திரும்ப முடியாது.
78 பிரமாண்டமான காட்சிமண்டபங்களைக் கொண்ட இக் கண்காட்சியை ஆண்டு தோறும் ஒரு கோடி மக்கள் பார்வையிடுகிறர்கள் என்ற புள்ளி விபரத்தைப் பெற்றுக்
கொண்டோம் .
இக்கண்காட்சியில் நான் நீண்ட நேரம் செலவிடடது, சோவியத்தின் விண்வெளிச் சாதனைகளைச் சித்திரிக்கும் காட்சி மண்டபத்தில் ஆகும்.
பல்வேறு விண்கலங்கள், ருெக்கற்றுகள் முதலியனவற்றின் முழு அளவிலான, தத்ரூபமான மாதிரி அமைப்புகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. தற்போதும் விண்வெளியில் பூங்கி யை வலம்வந்துகொண்டிருக்கும் விண்வெளி ஆய்வு கூட மான சல்யூட்-4ன் மாதிரி அமைப்பினுள்ளே ஏறி, அதன் வசதியான அறைகளையும் உபகரணங்களையும பார்வையிடும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது.
மாஸ்கோ நகரின் இன்னுெரு மறக்க முடியாத அமைப்பு, மாஸ்கோ பல்கலைக்கழகமாகும். உலகம் வியக்கும் அற்புத சாதனைகள் ஆற்றும் விஞ்ஞானிகளை உருவாக்கித்தரும் இந் தக் கலைக்கோவிலை நாம் கண்டோம்.
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய விஞ்ஞானியும் கல்விமானு மாகிய எம். வி. லொமனேசோவின் பெயர் சூட்டப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மாஸ்கோ நகரின் தென்மேற்கு எல்லைப்புறத்தில், லெனின் குன்றுகள் பகுதியில் பெருமை யுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.
施5

Page 35
இக்கட்டடத் தொகுதியின் மத்திய கட்டடம் 200 அடி உயரக் கோபுரத்தை உடையது. இதனைச் சூழ்ந்துள்ள 18 மாடி உயரக் கோபுரங்கள் மத்திய கடடட்த்துடன் 12 மாடி உயரக் கட்டடங்களால் தொடுக்கப்பட்டுள்ளன. 12 மாடிக் கட்டடங்கள் பட்டதாரிகள், பட்டதாரி மாணவர் கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றேரின் வாசஸ்தலப் பகுதிகளாகும்.
மாஸ்கோ பல்கலைக்கழகம்
56
 

மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் எல்லாமாக 45,000 அறைகள் உள்ளன. இந்தப் பல்கலைக் கழகத்தைப் பூரண மாகச் சுற்றிப்பார்க்கப் புறப்படும் ஒருவர் ஒவ்வோர் அறை யையும் பர்ர்வையிட ஒவ்வொரு நிமிடம் எடுத்தாரென்றல் முழுப்பல்கலைக் கழகத்தையும் பார்வையிட 31 நாட்கள் எடுக்கும்! இவ்வாறு பார்வையிடுவதற்கு எல்லாமாக 90 மைல் தூரம் நடந்தாக வேண்டும்.
இத்தகைய ஒரு முயற்சியில் நான் நல்ல வேளையாக இறங்க முனையவில்லை.
கட்டடத் தொகுதியைச் சுற்றி மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த ஒரு குட்டி வனம், வளையம் போல் சூழ்ந்திருந்தது. பல்கலைக் கழகத்தின் வலப்புறத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா அமைந்திருந்தது.
பல்கலைக்கழக மாணவர்கள் புத்தகமும் கையுமாகச் சுறு சுறுசுறுப்புடன் இங்குமங்கும் நடந்து திரிவதைக் கண்டோம். அவர்களது நடையில், முகங்களில், போக்குகளில் ஏதோ ஒரு பணியை ஆற்றச்செல்லுகின்ற வேகம், உறுதி தென் பட்டது. இங்குமங்குமாகக் குழுமி நின்று அரட்டை அடிக் கும் வீணர்களையோ, கால்போன போக்கிலே கனவு நடை பழகும் சோம்பேறிகளையோ அங்கே மருந்துக்கும் காணுேம்.
சோவியத் மாணவர்களை விட வேறு பகுதிகளிலுமுள்ள மாணவர்கள் இங்கே கல்வி கற்கிருர்கள். இப்பல்கலைக் கழ கத்தில் இடம் பெறுவதற்கு இவர்கள் புகுமுகப் பரீட்சை ஒன்றில் சித்தி பெற வேண்டும். பல்கலைக் கழகத் தேர்வு கல்வித் திறமை என்ற தகைமையை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு நடைபெறுகிறது. எதுவிதத் தரப் படுத்தலும் இங்கு கிடையாது.
சோவியத் மாணவர்களைவிட, இலங்கை உட்பட நூற்றுக் கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களும் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் கல்வி பயில்கிருர்கள்.
மாஸ்கோவில் உள்ள இன்னுெரு முக்கிய பல்கலைக் கழக மான பற்றீஸ் லுமும்பா நட்புறவுப் பல்கலைக்கழகத் திற்கும் நாம் சென்ருேம்.
ஏகாதிபத்திய, கலோனியலிஸ் எதிர்ப்பு வீரரும், தனது தாய்நாடான காங்கோவின் விடுதலைக்காகப் போரிட்டு, அமெரிக்க படுபாதக சி. ஐ. ஏ. இயக்கத்தின் சதி முயற்சி களின் உதவியுடன் கொலை செய்யப்பட்டவருமான அமரர் பற்றீஸ் லுமும்பாவின் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டுள்ள"
57

Page 36
இப்பல்கலைக் கழகத்தின் 4000 மாணவர்களுள், 80 சத வீதத்தினர் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட வளர்முக நாடு களில் இருந்து வருகிறர்கள்.
இப்பிறநாட்டு மாணவர்களுக்குத் தம் தாய்நாடுகளி ருந்து சோவியத் வருவதற்கும், பின்னர் தமது தாய்நாடு திரும்புவதற்கும் விமானக் கட்டணத்தைச் சோவியத் அரசே செலுத்துகிறது. மேலும், இம் மாணவர்களுக்குப் பல்கலைக் கழக விடுதி வசதிகள், மருத்துவ வசதிகள், தல்வாழ்வுக்கூட (சனடோரியம்) வசதிகள், பனிகாலத்து ஆடைகள்-உடு துணி வசதிகள் என்பனவும் இலவசமாகக் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல--இவ்வளவையும் இலவசமாகக் கொடு த்து, மாதாமாதம் பயிற்சிக்கால உதவிச் சம்பளம் கூட இம் மாணவர்களுக்கு வழங்கிவருகிறது சோவியத் அரசு!
இத்தகைய உதவிச் சம்பளம் மாதமொன்றுக்கு 800 ரூபா இலங்கைப் பணச் சமானம் வரைகூட அமையக் கூடும்.
மாஸ்கோவில் செளகரியமாக வாழ்வதற்கு மாதம் 450 ரூபா தமக்குப் போதுமானது என்று தெரிவித்தனர் லுமும்பா பல்கலைக் கழகத்தில் நான் சந்தித்த ஈழத்து மாணவர் கள். எஞ்சிய பணத்தை அவர்கள் சேர்த்து வைத்து, தமக்கு வேண்டிய பொருள்களை வாங்கவோ, விடுமுறை காலத்தில் ஆங்காங்கே சுற்றுப்பயணம் செல்லவோ முடிகிறது.
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சோவியத் மாணவர் களுக்கும் உதவிச் சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் அளவு, அவர்களது குடும்ப வருமானத்திலும், கல்வியில் அவர்கள் காட்டும் திறமையிலும் தங்கியுள்ளது.
அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் மருத்துவர் கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள் போன்ற மூ சாலிகளுக்குத் தடடுப்பாடு உள்ளது. வளர்முக நாடுகள் பெரும் பணம் செலவுசெய்து, கல்வி புகட்டி உருவாக்கிய மூளைசாலிகளை அமெரிக்கா உயரிய சம்பளம் கொடுத்து அபகரித்துக்கொள்கிறது. ஒரு மூளை சாலியைப் பணம் செலவு செய்து, கல்வி புகட்டி உருவாக்குவதற்கு ஆகும் செலவை விட, இன்னெரு நாடு உருவாக்கிய மூளை சாலிக்கு உயர்ந்த சம்பளம் கொடுத்து விலைக்கு வாங்குவது இலாப கரமான ஒரு மனித வியாபாரமாகும்.
இலங்கை உட்பட வளர்முக நாடுகளிலிருந்து இத்தகைய மூளை சாலிகள் அபகரிப்பை அமெரிக்கா செய்து வருகிறது. இதற்கு நேர்மாருன ஒரு கைங்கரியத்தை அல்லவா சோவியத் நாடு செய்து வருகிறது?
58

வளர்முக நாட்டு மாணவர்களைத் தனது செலவில்
தருவித்து, தனது செலவில் கல்வி புகட்டி, வளர்த்து, மூளை சாலிகளாக்கி, அவர்களைத் தத்தம் தாய்நாடுகளை வளம் படுத்த அனுப்பி வைக்கிறது.
வளர்முக நாடுகளுக்கு 'மூளைசாலிகள்தானம் செய்யும் சோவியத் நாடு; வளர்முக நாடுகளிடம் 'மூளை சாலிகள் அபகரிப்பு செய்யும் அமெரிக்கா-என் உள்ளத் தராசில் இவ்வாறு நிறுத்துப் பார்த்தேன். V
வளர்முக நாடுகளின் அரசியல் சுதந்திரத்துக்கு மடடு மல்ல, அவைகளின் பொருளாதார சுதந்திரத்துக்கும் உதவு வதைத் தனது அயல் நாட்டுக் கொள்கைகளில் ஒன்ருக வகுத்துக்கொண்ட சோவியத் நாடடை, இக்கொள் கைகளைச் சொல்லில் மட்டுமல்ல, அந்தரங்க சுத்தியுடன் செயலிலும் நிரூபித்து, வளர்முக நாடுகளின் உண்மை நண் பணுகத் திகழும் சோவியத் நாட்டை ஒரு புதுயுகமாகக் காண்பதில் தான் என்ன தவறு?
59

Page 37
9 அற்புதமான குடியிருப்பு திட்டங்கள்
அக்டோபர் 10: 1975. அந்த நாள் என் மனதில்
இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. அதிகாலை 6 மணி, முன்பணி காலத்து இருள் இன்னும் விலகவில்லை. கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிட்டது.
மாஸ்கோவின் சுற்ருடலில் உள்ள நான்கு வானூர்த்தித் துறைகளில் ஒன்றன ஷிறேமெற்ஜீவோ வானூர்த்தித் துறையிலிருந்து மாஸ்கோ செல்லும் நெடுஞ்சாலையில் கார் ஒன்று விரைகிறது.
மாஸ்கோவைச் சென்றடைய, சுமார் 25 மைல்கள் உள் ளன. இந்தக் காரில் நானும் "தினமின* சிங்கள நாளேட் டின் பிரதம ஆசிரியர் டி. பி. பெரமுனதிலக்கவும் சென்று கொண்டிருக்கிருேம் .
சோவியத்-இலங்கை நட்புறவுச் சங்கத்தின் செயளாலர் நாயகம் ஆர்தர் நொவிகோவ், மொழிபெயர்ப்பாளர் திரு மதி லுடமிலா பெட்டோனிச் ஆகியோரும் இக்காரில் வருகிருர்கள்.
முதன் முறையாகச் சோவியத் நாட்டுமண்ணில் அரை மணி நேரத்திற்கு முன்னுல் தான் காலடி வைத்திருந் தேன்.
தூக்கிவிடப்பட்டிருந்த கண்ணுடி ஜன்னலினுடாக என் கண்களை அகலத் திறந்து இருண்ட இரவினுள்ளே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். கார் பறந்து கொண்டிருக் கிறது. காரைக் கடந்து மாஸ்கோவின் சுற்ருடலின் கட்ட டங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
மங்கலான வைகறை இருளில் நெடிய இராட்சத உரு வங்கள் போல் பத்துப் பதினைந்து மாடிக் கட்டடங்கள் தெரிகின்றன.
**இவை என்ன?’ நொவிகோவிடம் கேட்கிறேன். ** அடுக்கு மனைகள், மக்கள் வசிக்கும் மனைகள்,' அவர் பதிலளிக்கிருர்.
60

மேலும் கட்டடங்கள்- இராட்சத உருவங்கள். * 'இவை என்ன?’’ 'அடுக்கு மனைகள், மக்கள் வசிக்கும் அடுக்கு மனைகள்'. வழி நெடுகிலும் கட்டடங்கள், கட்டடங்கள், கட்டடங் கள்-அடுக்கு மனகள், அடுக்கு மனைகள், அடுக்கு மனைகள். மங்கிய வைகறை ஒளியில் மாடிகளை எண்ணுகிறேன். ஐந்து மாடி அடுக்கு மனைகள், ஒன்பது LDT 14. S9)GéG5 மனைகள், பன்னிரண்டு மாடி அடுக்கு மனைகள், பதினேழு மாடி அடுக்குமனைகள். ஆ! இதென்ன? ஆம், இருபத் தைந்து மாடி அடுக்கு மனைகள்.
蠶
(மாஸ்கோவில்புறெஸ்பெக்ட்மீராவில் உள்ள ஒரு 25 மாடிஅடுக்குமனை.
வானை அண்ணுந்து பார்த்த விடமெல்லாம் அடுக்கு மனை கள். அடுக்கு மனைகள் இல்லாத இடமெல்லாம் வானை எட டும் இராட்சத பாரந் தூக்கி இயந்திரங்கள் (கிறேன்கள்).
மாஸ்கோ நகரமே வா%ன நோக்கிப் படிப்படியாக நகரத் தொடங்கிவிட்டதோ? மாஸ்கோ வாசிகளின் அடுக்கு மனை இல்லங்கள், விண்ணில் வலம் வரும் சோவியத் விண்வெளி வீரர்களுடன் இரகசியம் பேசத் தான் தலைநீட்டி நிற்கின்ற
6.

Page 38
னவோ? அரிவாள், சுத்தியலுடன் பாரந்தூக்கி இயந்திரமும் சோவியத்தின் சின்னமாகச் சீர் பெற்றுவிட்டதோ?
மாஸ்கோ நகரைப் பற்றி என் மனதில் உதித்த முதல் எண்ணங்கள் இவைதான்.
இந்த எண்ணங்கள் நியாயமானவைதான் என்பதைப் பின் ணுல் உணர்ந்து கொண்டேன். ஏன் தெரியுமா?
அனைத்துலகிலும் வீடமைப்பு அளவில் முன்னிற்பது சோவி யத் நாடுதான். ஆண்டுதோறும் சோவியத் நாட்டில் எல்லா மாக 23 இலட்சம் அடுக்குமனைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன; ஆண்டு தோறும் சோவியத் நாட்டில் 1. கோடி மக்கள் புதுமனே புகுந்து வருகிறர்கள்; ஆண்டு தோறும் சோவியத் நாட்டில் 20 புதிய நகரங்கள் கட்டி யெழுப்பப்பட்டு வருகின்றன; கடந்த இருபது ஆண்டுகளில் இருபது கோடி மக்கள் (சோவியத்தின் சனத் தொகையில் 80 சதவீதம்) அரசாங்கத்திடமிருந்து புதுமனைகள் பெற் றுள்ளனர்.
ஒவ்வோர் ஆயிரம் சனத்தொகைக்கும் புதிதாகக்கட்ட படுகின்ற அடுக்குமனைகளின் தொகையில் சோவியத் நா( அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முதலாளித்துவ நாடுகளை முந்திக்கொண்டு, இனி நெருங்க முடியாத தொை சென்று விட்டது.
இந்தப் புள்ளி விவரங்களை இன்னும் நுணுக்கமாகப் ப{ த்து ஆராய்ந்தால், சோவியத் நாட்டில் ஒவ்வொரு மன நேரமும் 300 அடுக்கு மனைகள் கட்டி முடிக்கப்படுகின்ற என்பது புலப்படுகிறது! சோவியத் நாட்டில் ஒவ்வொ நாளும் 8,000 குடும்பத்தினர் புதுமனைப் பிரவேசம் செ கின்றனர் என்பது தெளிவாகிறது!
வீடமைப்புத் துறையில் சோவியத் நாடு நிகழ்த்தியுள்ள நிகழ்த்திவருகின்ற அற்புதத்தை மிகவும் நுணுக்கமாக அ தானிக்கவும், அதன் விவரங்களை ஆராயவும் ஒர் ஆவ6 இயல்பாகவே என் உள்ளத்தில் தோன்றியது. சோவிய நாட்டில் பல்வேறு அடுக்குமனை இல்லங்களை நான் நேரி பார்வையிடும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டேன்.
‘'நிலத்தில் தனியார் சொத்துரிமையை ஒழித்துக் கட்( வதன் மூலமும், மலிவான, சுகாதாரம் மிக்க வீடுகளைக் கட்( வதன் மூலமுமே குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்,' என்ருர் மாமேதை லெனின்.
உற்பத்திச்சாதனங்கள் சமூக உடைமையாக இருக்க் வேண்டும்; நிலம் தனி உரிமையாக இருக்க கூடாது; வர்த் தக நோக்குடன் வீடுகள் கட்டப்படக் கூடாது; வீட்டு
62

நிர்மாணம் பெரிய அளவிலும் உயர்ந்த வேகத்திலும் நடை பெறவேண்டும். '
--சோஷலிஸ் அமைப்பின் இந்த அடிப்படையில் சோவி யத் நாடு தனது குடியிருப்புப் பிரச்சினையை அணுகியது; வெற்றி கண்டுவருகிறது.
வீடமைப்பு நிர்மாணத்தைப் பொறுத்தவரையில், புரட் சிக்கு முந்திய ரஷ்யாவில் நிலவிய நிலையோடு இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்து, அன்ர நூற்ருண்டுகால சோஷலிஸ் ஆட்சி சோவியத்தில் புதுயுகமொன்றினைப் பிறப் பித்தது எவ்வாறு என்று விளங்கிக் கொள்வது உசித மானது, '''x.
1917ல் லெனின் தலைமையில் நடைபெற்ற உலகின் முதலா வது வெற்றிகரமான சோஷலிஸப் புரட்சி ரஷ்யாவில் ஜார் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தபோது, நாட்டின் குடி யிருப்பு வசதிகள் எப்படியிருந்தன தெரியுமா?
நகர்ப்புற வீடுகளில் 80 சத வீதத்திற்கு மேலானவை மரப் பலகைகளால் அமைக்கப்பட்ட ஒற்றை மாடி அல்லது இரட் டைமாடி வீடுகளாகவோ தான் இருந்தன.
எமது நாட்டுச் சம்பிரதாயப்படி, மாடியற்ற வீடு என்று நாம் குறிப்பிடும் ரக வீட்டை, ரஷ்யர்கள் ஒற்றைமாடி வீடு என்கிருர்கள். ஒரு மேல் மாடியுடன் கூடிய வீட்டை, இரட்டை மாடி வீடு என்கிருர்கள். இவ் பாறே நிலப்பரப் பில் அமைந்துள்ள அடுக்கை முதலாவது மாடி என்று எண்ணி, அதற்கு மேல் வரும் ஒவ்வோர் அடுக்கையும் இரண்டு, மூன்று, நான்கு என்று ஒவ்வொன்ருகக் கூட்டி எண்ணுகிருர் கள்.
புரடசிக்கு முந்திய ரஷ்யாவில் பெரிய நகரங்களின் மத் திய பகுதிகளில் உள்ள வீடுகளுள்ளும் 10 சத வீதத்துக் கும் குறைவானவையே குழாய் நீர் வசதி கொண்டிருந்தன; 3 சதவீதத்துக்கும் குறைவானவையே சாக்கடை நீர் வசதி பெற்றிருந்தன; 5 சதவீதத்துக்கும் குறைந்தவையே மின் சார வசதி உடையனவாயிருந்தன.
மாஸ்கோ நகரில் நிலப்பிரபுக்கள், பெரு வணிகர்கள், முத லாளிகள் ஆகியோர் மட்டும் பெரிய மாளிகைகளில் வசித்த னர். 18, 50,000 சனத்தொகையில் 3,25,000 மக்கள் சேரி களில் வாழ்ந்தனர். ஒரு சிறிய மர அறையில் சுமார் 15 பேர் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்தச் சீர்கெட்ட குடித் தனத்திற்கான வீட்டு வாடகை ஒரு குடும்பத்தின் வரு மானத்தில் 15-22 வீதம் ஆக இருந்தது.
63

Page 39
கிராமப் புறங்களில் இருந்த நிலையோ இதைவிடப் பன் மடங்கு மோசமானது. பாழடைந்த குடில்களில் கிராமவாசி கள் தமது வாழ்க்கையை ஒட்டி வந்தனர்.
தலைமையிலான கம்யூனிஸ் அரசு சுரண்டல் வர்க்கத்தின ரின் மாளிகைகளைத் தேசியமயமாக்கி, அவற்றில் சேரி வாழ் ஏழை மக்களைக் குடியமர்த்தியது.
இளம் சோவியத் நாட்டின் இராடசத வீடமைப்புப் பிரச் சினைக்கு இந் நடவடிக்கையால் மட்டும் நிவாரணம் கிட்ட வில்லை; கிட்டும் என்று சோவியத் அரசு கருதியதேயில்லை. உலக வரலாறு கண்டும் கேட்டும் கற்பனை செய்துமிராத மாபெரும் வீடமைப்புத் திடடத்தைச் சோவியத்தின் புரட்சி அரசு ஆரம்பித்தது. இடிந்து பாழ்பட்டுக் கிடந்த கட்டடங் கள் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டு, அவ்விடங்களில் நவீன குடித்தனப் பகுதிகள் கட்டப்படலாயின; குடிநீர், எரி வாயு, சாக்கடை, மின் சக்தி வசதிகள் ஏற்படுத்தப்பட 6)птш9lбот.
இக் கட்டத்தில் இளம் சோவியத் குடியரசின் வீட மைப்புப் பிரச்சினையை மேலும் பெருக்கக் கூடியதான ஒரு நிகழ்வு நடைபெற்றது. என்ன தெரியுமா?
மாபெரும் சோஷலிஸ் கைத்தொழில்மயமாக்கல் திட்ட மொன்றைக் கம்யூனிஸ் அரசு நகர்ப்புறங்களில் செயற்படுத் த்ததொடங்கியது. இதனுல் கவரப்பட்டு, கோடிக் கணக் கான மக்கள் கிராமங்களில் இருந்து நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கினர். 1926 முதல் 1971 வ்ரை யான காலகட்டத்தில் மட்டும் சோவியத் நகரங்களின் சனத் தொகை 11 கோடிக்கும் மேலாகப் பெருகியது.
ஏற்கனவே நகரங்களில் நிலவிய வீட்டு வசதிப்பற்றக் குறைப் பிரச்சினைக்கு மட்டுமல்ல, நகரங்களுக்குப் புதிதாகப் படையெடுத்தவர்களின் வீட்டு வசதிப்பிரச்சினைக்கும் சோவி யத் அரசு முகம்கொடுக்க வேண்டி வந்தது.
இப்பிரச்சினைகளைச் சமாளிக்க, அசுர வேகத்தில் சோவி யத் அரசு மேற்கொண்ட வீடமைப்பு நிர்மாணத் திட்டத் தின் விளைவாக, 1940 அளவில், புரட்சிக்கு முந்திய காலத் தில் இருந்ததைவிட 150 சதவீதம் அதிகமான வீடுகள் நகர்ப்புறங்களில் நிறுவப்பட்டு விட்டன.
இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்ட பின் தான் அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றது; உலக வரலாற்றில் மிக அதிக மாக இரத்தக் கறை படிந்த அந்த நிகழ்சசி இடம் பெற்றது; சோவியத்தின் முன்னேற்றப் பாதையில் பேரிடி வீழ்ந்தது.
64

இரண்டாவது உலக மகா யுத்தம் வெடித்துச் சிதறியது. மனித இனத்தின் வரலாற்றில் எந்தவொரு நாடும் எக் காலத்தில்ாவது அடைந்திராத் மாபெரும் பொருட் சேதசி தையும் உயிர்ச் சேதத்தையும் சோவியத் யூனியன் அடைய நேரிட்டது. ۔۔۔۔۔۔۔
நாஜிகளின் சர்வாதிகார இருளில் முழுஉலகும் அமிழ்ந் துவிடாது பாதுகாத்திட, ஜனநாயக விளக்கு உலகில் அணைந்து விடாது உறுதிப்படுத்திட, உலகில் மிக அதிகமான உயிர்களைப் பலிகொடுத்து, உலகின் மிக நீண்ட இரத்த ஆறு பாயக்கண்டு, உலகில் மிக அதிகமான பொருட் செல்வத் தைத் தானஞ் செய்தது உலகின் முதலாவது சோஷலிஸ் பூமியே.
1,710 நகரும் நகர்சார்ந்த குடியிருப்புக்களும், 70,000 கிராமங்களும், 32,000 கைத்தொழில் நிறுவனங்களும், ஆயி ரக்கணக்கான மருத்துவ-கல்வித்துறை-கலாசார ஸ்தாப னங்களும் அழிந்து தரை மட்டமாயின.
கீவ், ஸ்டாலின்கிராட், மின்ஸ்க், செவஸ்டபோல், ஒடெஸ்ஸா, நொவ்கோரொட், பிஸ்கோவ், ஒறெவ் போன்ற பாரிய நகரங்கள் சிதைந்து சின்னுபின்னமாயின.
வீரத் திருநகரான லெனின் கிராடில் பெரும் பகுதி அழிந் தது. அதன் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் (9 இலட்சம் மக்கள்) மடிந்தொழிந்தனர்.
சுதந்திர தேவியின் உயிரைக் காக்க, சோவியத்தில் நடை பெற்ற மாபெரும் யுத்த வேள்வியில் இரண்டு கோடி மக்கள் பலியுற்றனர். இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். சோவியத்தை எதிர்நோக்கிய மாபெரும் வீடமைப்புப் பிரச்சின்ை இதுதான். ஜார் ஆட்சிக்காலத்தின் சீர்கேடுகளும், சோஷலிஸ்க் கைத்தொழில் மயமாக்கலின் பக்கவிளைவுகளும் விளைவித்த குடியிருப்புப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கிடை யில், இரண்டாவது உலக மகாயுத்தம் ஏற்படுத்திய சொல் லொணுச் சேதத்தையும் சரி செய்ய வேண்டியிருந்தது.
அரை நூற்ருண்டுக் காலத்திற்கிடையில் இத்தனை பிரச் சினைகளை உல்கில் வேறெந்த நாடும் எதிர்நோக்க வேண்டி வரவில்லை, --
வீடமைப்பு நிர்மாணம் உட்பட இன்னும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, எதிர் நீச்சல் அடித்து, இக் குறுகிய காலத்தில் உலக வல்லரசாக முன்வரிசையில் நிற்க சோவியத்திற்கு முடிந்தது எப்படி?
முதலாளித்துவ வல்லரசுகளைப் போல், வளர்முக நாடு களை, காலனியாதிக்க நாடுகளைச் சூறையாடி அவற்றின்
65

Page 40
செல்வங்களை வைத்துத் தனது நாட்டை நூற்ருண்டுகால? மாகக் கட்டியெழுப்பிய நாடல்லவே சோவியத் யூனியன் விஞ்ஞான சோஷலிஸம் என்ற ஒரே ஒரு “காயகல்ப மாத்திரை'யை விழுங்கித்தான் சோவியத் நாடு கண்ணி மைக்கும் வரலாற்றுக் காலப்பொழுதில் வல்லரசானது.
சோவியத் வீடமைப்புத் திட்டத்தின் மகோன்னத வெற் றிக்கான காரணங்கள் என்ன?
திட்டமிட்ட பொருளாதாரம்: நிலத்தில் தனியார் உரிமை ஒழிப்பு - வர்த்தக நோக்குடன் வீடுகள் கட்டப்படாமை; மலிவான சுகாதார மிக்க வீடுகள் அமைப்பு; உற்பத்திச் சாதனங்கள் சமூக உடைமையாக இருத் 岛 ン
**அனைத்தும் மனிதனுக்காக, அனைத்தும் மனிதனின் நலனுக்காக" என்ற சோஷலிஸ் மனிதாபிமான தத்துவத் தின் செயற்பாடு; ܫ
- உயர்ந்த வேகத்துடனும், அயராத உழைப்புடனும் நடைபெறும் பாரிய அளவிலான வீட்டு நிர்மாணம்.
சோவியத் வீடமைப்பின் வெற்றிக்கு மேற்கூறிய ஏழு காரணங்களுமே வழிவகுத்துள்ளன என்பது எனது தீர்க்க மான முடிவு.
சோவியத் நாட்டில் நான் கண்டவை, கேட்டவை, விசா ரித்து அறிந்தவைகளை அடிப்படையாக வைத்தும், உலகின் முதலாளித்துவ நாடுகள்ல் நிலவும் வீடமைப்பு நிலைமைகளைப் பற்றி வாசித்து அறிந்தவைகளை அடிப்படையாக வைத்தும் நோக்குகையில், மேற்சொன்ன முடிவுக்கே என்னுல் வர முடிகிறது.
இந் ஏழு காரணங்களையும் இனி ஒவ்வொன்ருக எடுத்து நோக்குவோம்.
திட்டமிட்ட பொருளாதாரம் "
சோவியத் நாட்டிலுள்ள சகல விதமான கட்டடப் புனை வரைவு-நிர்மாண வேலைகளுக்கும் பொறுப்பாயுள்ளது, சோவியத் அமைச்சரவையின் கீழ் நேரடியாக இயங்குகின்ற "அரச கட்டடக் குழு' வாகும்.
இந்தக் குழுவின் கீழ் "அரச பொதுத்துறைப் பொறியியல் -கட்டடக்கலைக் குழு" என்ற ஒரு பிரிவு இயங்குகிறது. சோவியத் நாடு தழுவிய ரீதியில், நகரமைப்பு திட்டமிடல் வீடமைப்பு, படைத்துறை சாராத பொதுத் துறைக்
66

கட்டட நிர்மாணம் ஆகிய துறைகள் இக் குழுவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருகின்றன. உலகின் நில்ப்பரப்பில் ஆறிலொரு பகுதியை உள்ளடக்கி யது சோவியத் நாடு. இந்த நிலப்பரப்பினுள் இயற்கையின் வேறுபாடுகள், சுவாத்திய வேறுபாடுகள் தான் எத்தனை, எத்தனை உயர்ந்த மலைப் பிராந்தியங்கள் ஒரு புறம், அகன்று விரிந்த சமவெளிகள் இன்னெரு புறம்; பரந்த பணி படர்ந்த பகுதிகள் ஒரு புறம், உப வெப்பவலயச் சுவாத்தியம் சார்ந்த கடலோரங்கள் மறு புறம் காடுகளும் சதுப்பு நிலங்களும் ஒரு புறம், வரண்ட பாலைவனங்களும் நிலநடுக்கப் பிரதேசங் களும் இன்னுெரு புறம். .
இவற்றை விட, பெரியனவும் சிறியனவுமாக 100க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் சோவியத் நாட்டில் வாழ்கின் றன. ஒவ்வோர் இனமும் தனக்கே உரித்தான தேசிய சம்பிர தாயங்களையும் பழக்க வழக்கங்களையும் உடையது.
எனவே சோவியத்தில் ஒரு வீடோ அல்லது கட்டடமோ நிர்மாணிக்கும்போது, பல்வேறு காரணிகள் கணக்கெடுக் கப்படுகின்றன.
அவ்வப் பகுதிகளின் கட்டடக்கலை, கட்டடப் புனைவரைவு அகத் தினுசு, புறத்தோற்றம் என்பனவற்றை ஆங்காங்கே உள்ள இயற்கையின் வேறுபாடுகள், சுவாத்திய வேற்று மைகள், மக்களின் சம்பிரதாயங்கள் - பழக்கவழக்கங்களின் பல்வேறுபடட தன்மைகள் என்பன நிர்ணயிக்கின்றன. இத்தனையையும் உள்ளடக்கி, வீடமைப்பு நிர்மாணத் துறை யில், நவீன விஞ்ஞான ஆய்வுகளின் நல்ல பெறுபேறுகளையும் உட்புகுத்துவதற்கென, பெரியனவும் சிறியனவுமான நாடெங் கும் எண்ணற்ற ஆராய்ச்சி-புனைவரைவு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் பெரிய நிறுவனங்கள் மட்டும் 245க்கு மேல் உள்ளன.
இந்த ஆராய்ச்சி - புனை வரைவு நிலையங்கள் யாவும் "அரச பொதுத்துறைப் பொறியியல் - கட்டடக்கலைக் குழு’ வின் கீழ் இயங்கி வருகின்றன.
சோவியத்நாட்டின் ஒவ்வொரு நகரமும், அதில் நிறுவப்பட வுள்ள அடுக்கு மனைகள், வீடுகள், கட்டடங்கள் என்பன வும், செவ்வனே தயாரிக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் அடிப் படையில் வளர்ச்சியடைகின்றன. பெரும்பாலான நகரங் கள் 10-15 வருடகாலத்திற்கு இடப்பட்ட பாரிய திடடங் களையும் வருடாந்தர திட்டங்களையும் ஒட்டி நிறுவப்படு கின்றன.
67

Page 41
மாஸ்கோநகரம் கி. பி. 2000ம் ஆண்டில் எப்படி இருக் கும் தெரியுமா? v -
இதற்குப் பதில் தேடி, விஞ்ஞான அதீத கற்பனைக் கதை எழுதுப்விர்களை நாடவேண்டியதில்லை. பதிலாக, மாஸ்கோ வின் நகர நிர்மாணத்திற்குப் பொறுப்பாயுள்ள 1,500 கட்டடக்கலை நிபுணர்களில் ஒருவரை அணுகிக் கேட்டால் போதுமானது. ェ
கி. பி. 2000 ஆண்டு வரைக்குமான மாஸ்கோ அபிவிருத் தித் திட்டமொன்றைச் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி 1966 லேயே பரிசீலித்து, அதற்கு அங்கீகாரம் கொடுத்தும் விட் டது
மாஸ்கோவில், கி. பி. 2000 ல் கட்டடங்கள், வீடுகள், அடுக்குமனைகள், தொழிற்சாலைகள், வீதிகள், நந்தவனங் கள் முதலியவை எங்கெங்கே, எத்தனை எத்தனை அமைய வேண்டும் போன்ற தகவல்கள் ஏற்கெனவே திட்டமிடப்படடு விட்டன! \
இதைப் பார்த்தபோது- எனது மனதில் உதித்த கேள்வி -1980ல், கொழும்பு எப்படியிருக்கவேண்டும் என்ருெரு திட்டம் எம்மிடம் உண்டா?
எம்மைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில்- இந்தப் பெரிய முதலாளித்துவ வல்லரசான அமெரிக்காவிடமே, 1980ல், வாஷிங்டன், நியூயோர்க் போன்ற அதன் பிரதான நகரங்கள் எப்படியிருக்கும் என்று உறுதியாகக் கூறுவதற் கான திட்டம் இல்லை.
திட்டம் இருக்கும் வேளைகளில் கூட, அது சொன்னபடி செயலுருப் பெறுவதில்லை. உதாரணமாக - 1965ல், நியூயோர்க் மேயர் பதவி வேட்பாளாரான லின்ட்ஸே, அடுத்த நாலு ஆண்டுகளில் நியூயோர்க்கில் நடுத்தர, குறைந்த ஊதியமுள்ளோருக்கென 1,60,000 அடுக்குமனை களை அமைக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். ஆனல், அவரால் 34,167 அடுக்கு மனைகளில் மட்டுமே வேலை ஆரம்பிக்க (பூர்த்தியாகவும் இல்லை!) முடிந்ததாம். இவற்றுள் 8,920 மட்டுமே குறைந்த வருமானமுள்ளோ ருக்காக இருந்தனவாம்.
இதனைச் சொல்லி, அமெரிக்க ‘நியூயோர்க் டைம்ஸ்" பத்திரிகை அங்கலாய்த்துக்கொண்டுள்ளது.
சோவியத்தின் திட்டமிடுதல் இப்படியானதல்ல. தீட்டப்படுகின்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன, அல்லது மிஞ்சப்படுகின்றன.
68

1966-1970க்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மிஞ்சி, சோவியத்தில், 1, 13,50,000 அடுக்கு மனைகள் நிறுவப்பட் tools 1970-75க்கான ஐந்தாண்டுத் திட்டப்படி 120,00,000 அடுக்கு மனைகள் கட்டப்பட்டுவிட்டன.
மாஸ்கோவிலுள்ள ஒரு நவீன சோவியத்
அடுக்குமனைத் தொகுதி
நிலத்தில் தனியார் உரிமை ஒழிப்பு
சோவியத் வீடமைப்புத் திட்டம் வெற்றி பெறுவதற்கும் அமெரிக்க வீடமைப்புத் திட்டம் தோல்வியடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா?
அமெரிக்காவில் வீடோ, அடுக்கு மனையோ அல்லது பிறி தொரு கட்டடமோ கட்டுவதற்கு அவசியமான நிலம் தனி யாருக்குச் சொந்தமாக உள்ளது. இங்கே நிலத்தின் விலை ஏறத்தாழ கட்டடம் கட்டும் செலவுக்குச் சமமாக உள்ளது. இது வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒரு முக்கிய தடைக் கல்லாகும்.
இக்கருத்தை சோவியத்தில் நான்கு வருட காலமாக வசித்த அமெரிக்க 'டெய்லி வேர்ல்ட்' பத்திரிகையின் ருபர் மைக் தாவிதோவ் தமது சோவியத் அனுபவங்கள் பற்றிய நூலில் குறிப்பிடுகிருர்,
ஆனல், இதற்கு நேர்மாறக, சோவியத் நாட்டில் நிலத்தின் மீது தனியார் சொத்துரிமை ஒழிக்கப்பட்டுள்ளது. நிலம் அரசுக்கு, முழு நாடடுக்கும் சொந்தமானது.
69

Page 42
வர்த்தக நோக்குடன் வீடுகள் கட்டப்படாமை
சோவியத் வீடமைப்புத்திட்டத்தின் வெற்றிக்கு இன் னெரு முக்கிய காரணமுண்டு.
வர்த்தக நோக்கத்துக்காக, வாடகை அறவிட்டுப் பணம் சம்பாதிப்பதற்காக, அங்கே வீடுகள் எவராலும் அமைக்கப் படுவதில்லை; அமைக்கப்படவும் முடியாது.
அரசாங்கம் மக்களின் உபயோகத்துக்காக வீடுகளை அமைக்கிறது. அல்லது, வீடு அவசியமான சிலர் ஒன்று சேர்ந்து, கூட்டுறவு ஸ்தாபனங்களை அமைத்து, இந் நிறு வனங்கள் அரசின் பண உதவியுடன் வீடமைக்கின்றன. அல் லது, வீடு தேவைப்படுகின்ற குடும்பங்கள் தனித் தனி யாக அரச அங்கீகாரம் பெற்று, அரசிடமிருந்து இலகுவான தவணைகளில் கடனுதவி பெற்று வீடமைக்கின்றனர்.
ஆனல்-அமெரிக்காவில் வீடமைப்புத் துறை ஏறத்தாழ முற்று முழுதாகத் தனியார் துறையினரின் கைகளிலேயே உள்ளது.
தனியார் துறையினரும் யாருக்காக வீடமைக்கின்றனர் தெரியுமா?
நியூயோர்க் நகரத்தில், தனியார் துறையினர் நகரத்தின் சனத்தொகையில் செல்வந்தர்களான 7 சதவீதத்தினருக்கு மட்டுமே வீடமைக்கின்றனராம்! அரச பண உதவி கிடைப் பின் மட்டும், செல்வந்தரற்ற ஏனையவர்களுக்கு வீடமைக்கப் படுகிறதாம்! நியூயோர்க்கின் 28 இலட்சம் அடுக்கு மனை களில், 92 சதவீதம் தனியார் துறையினரால் வர்த்தக நோக்குடன் கட்டப்பட்டவையாம்.
'நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகையே வெளியிட்ட இத் தகவல்களை மைக் தாவிதோவ் மேற்கோள் காட்டியுள்ளார். சோவியத்தில் நிலவுகின்ற முதிர்ச்சியுற்ற சோஷலிஸ் சமூக அமைப்பு அந்த நாட்டை ஒரு புது யுகமாக மாற்றி
புள்ள தன்மை இவற்றிலிருந்து வெளிப்படுகிறதல்லவா?
மலிவான, சுகாதாரமிக்க் வீடுகள் அமைப்பு
மாஸ்கோவில் நான் இருந்த போது, மக்கள் வதிகின்ற அடுக்கு மனைகள் சிலவற்றினுள் சென்று பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ト。
இவற்றுள் ஒர் அடுக்கு மனை, அனட்டலி குரோமோவ் என்ற ரஷ்யருடையது. இவர் தமது இல்லத்தில் எமக்கு ஒரு விருந்து அளித்தார்.
70

இவர் யார் தெரியுமா? சோவியத்தின் முதிர்ச்சிபெற்ற இராஜ தந்திரிகளுள் ஒருவர் இவர். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் ஈழத்துப் பிரதி நிதியாகப் பல்லாண்டு காலம் இலங்கையில் கடமையாற்றிய வர்; அவ்வேளையில், காலஞ் சென்ற பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுடனும் நெருங்கிப் பழகியவர்; இலங்கையின் மகாவலி திசை திருப்பும் திட்டத் திற்கு ஐ. நா. விடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொடுப்பு தற்கு மூலகாரணமாயிருந்தவர்; அண்மையில் மகாவலி திசை திருப்பும் வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு இலங் கை அரசின் அழைப்பைப் பெற்ற ஒரே வெளிநாட்டவர்; மாஸ்கோவிலுள்ள சோவியத் இலங்கை நட்புறவுச் சங்கத் தின் செயற்குழு உறுப்பினர்.
இவரை விடநாம் மாஸ்கோ சென்ற வேளையில், மாஸ்கோவில் இலங் கையின் பதில் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த கலாநிதி விஸ்வா வர்ணபால, மாஸ்கோ வானெலியின் சிங் கள ஒலிபரப்பில் கடமையாற்றும் இலங்கையரான ஜே. பி. குரண்கே, மாஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரக ஊழிய ரான திரு றுவான்பத்திரன, இந்தியாவில் சோவியத் தூது வராகக் கடமையாற்றியவரும்-ஈழத்தின் முதலாவது சோவியத் தூதுவருமான விளாடிமீர் யக்கோலேவ் உட்பட வேறு சிலரது இல்லங்களுக்கும் விருந்தாளிகளாகச் சென்ற போதும், அவர்கள் வசித்த அடுக்கு மனைகளே, முன் வாச லிலிருந்து அடுக்களை வரை முற்ருகக் காண்பதற்கும் வாய்ப் புக்கிட்டியது. s 4 இத்தனை வீடுகளையும் பார்வையிட்ட போது, சமுதாயத் தில் பல்வேறு துறைகளில், தொழில்களில், அரசியல் அந் தஸ்துகளில் உள்ளோரது இல்லங்களை தரிசித்தபோது, எனக்குப் பளிச்சென்று புலப்பட்ட மாபெரும் உண்மைசோவியத்தில் கட்சித்தொண்டனுக்கும் சோஷலிஸம், கட் சித் தலைவனுக்கும் சோஷலிஸம் நிலவுகிறது என்பதே ! 'ஊருக்குத்தான் உபதேசம், அது உனக்கல்லடி கண்ணே** என்ற நிலை அங்கே மருந்துக்கும் கிடையாது!
அளவில், அழகில், அடிப்படை வசதிகளில் நான் சென்ற வீடுகள் அனைத்தும் ஒரே ஒருகிதத்தை-சோஷலிஸ்கீதத் தைத் தான் இசைத்து நின்றன.
வீடுகளின் அளவினைக் குடியிருப்பாளர்களின் தொழிலோ, துறையோ, அரசியல் அந்தஸ்தோ நிர்ணயிக்கக் காணுேம்
71

Page 43
ம்ாருக்-ஒருவருக்கு நான்கு அறை அடுக்கு மனையா மூன்று அறை அடுக்கு மனையா, அல்லது இரண்டு அறை அடுக்கு மனையா என்பதைக் குடும்பத்தின் மொத்த உறுப் பினர் தொகையே நிர்ணயித்தது.
அறைகளைவிட-சகல நவீன வசதிகளுடனும் கூடிய அடுக்களை, குளியலறை, மலசலகூடம் என்பனவும் அமைந் துள்ளன. இவை சலவைக் கல் பதிக்கப்பட்ட தரைகள், சுவர்களுடனும், அசுத்த காற்றை வெளியேற்றும் காற்ருடி களுடனும் கூடியுள்ளன.
குழாய்களில் சுடு நீர், குளிர் நீர் வசதிகள் இருப்பதோடு, முழு வீட்டையும் பணி காலங்களில் சூடேற்றுவதற்கான வசதிகளும் சோவியத் அடுக்கும%னகளில் அமைந்துள்ளன. அழகான, ஆரோக்கியமான, சிறிய-ஆளுனல் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடங்கிய அடுக்கு மனைகள் இவை. சராசரி பெருப்பமுடைய ஓர் அடுக்கு மனையை அமைக்க, சோவியத் அரசுக்கு 36,000 முதல் 40,000 ரூபா வரை மட்டுமே செலவாகிறது.
இவற்றிற்கு வாடகையும் மிகச் சொற்பமே. உலகிலேயே மிகக் குறைவான வீட்டு வாடகை நிலவும் நாடு சோவியத் யூனியனே!
நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதாந்த வீட்டு வாடகைக்கும், ஏனைய குடியிருப்புச் செலவுகளுக்கு மான பற்றுச் சீட்டு ஒன்றை இப்போது பார்ப்போம். இக் குடும்பத்தில் இருவர் உழைப்பவர்கள். ஒருவர் பென் ஷன் பெறுபவர்.
இதோ மாதாந்த பற்றுச் சீட்டு :-
ரூபா சதம்
வீட்டு வாடகை 67 75
குடியிருப்புச் செலவுகள்
41 07 குடிநீர், சாக்க டை Il 5 அஞ்சல் வானெலி 99 கொதி நீர் 20 63 கூட்டு டெலிவிஷன் ஏரியல் 1 49 மின்சாரம் 55 52 அடுப்புக்கு எரிவாயு 6 35
'டிரங்க்கோல்' தவிர ஏனைய தொலைபேசி
அழைப்புகள் எத்தனையென்ருலும்
ஒரே கட்டணம் 19 84 மொத்தம் 226 1.5

மாஸ்கோ நகரின் நடுப்பகுதியில் உள்ள இவர்களது அடுக்கு மனேயில், மூன்று அறைகள், ஒரு விருந்தினர் உபசரிப்பு றை, ஓர் அடுக்களை, ஒரு குளியலறை, ஒரு மலசலகூடம் என்பன உள்ளன.
இந்தக் குடும்பத்தின் மொத்தச் சம்பளம் மாதமொன்றுக்கு 3,970 ரூபா. அதில் வீட்டு வாடகைக்கு 67 ரூபா 75 சதம் மட்டும்.
இவர்களது வீட்டு வாடகைக்குப் போவது, மாதாந்த வருமானத்தில் 1.7 சதவீதம் மட்டுமே. சோவியத் நாட் டின் எந்த மூலை முடுக்கை எடுத்தாலும், வீட்டு வாடகைக்கும் குடியிருப்புச் செலவுகளுக்கும் மாதாந்த வருமானத்தில் பொதுவாக 4 சத வீதத்திற்கு மேல் ஆவதில்லை. எக் காரணத்தைக் கொண்டும் வீட்டு வாடகை, குடியுருப்புச் செலவுகளின் கூட்டுத் தொகை மொத்த வருமானத்தில் 6 சத வீதத்தை மிஞ்சுவதில்லை.
ஒரு சோஷலிஸ சமூக அமைப்பின் கீழ்தான் இத்தகைய குறைந்த வீட்டு வாடகை நிலவ முடியும்.
சோவியத் நாட்டில் நான்கு வருட காலம் வாழ்ந்த அமெரிக்கப் பத்திரிகையாளரான மைக் தாவிதோவ், தமது சோவியத் அனுபவங்களைப் பற்றி எழுதிய நூலில் இரு நாடுகளினதும் வீட்டு வாடகைகளை ஒப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இவர் வாழ்ந்த அடுக்குமனையும், மாஸ் கோவில் இவர் வாழ்ந்த அடுக்குமனையும் ஏறத்தாழ ஒரே அளவுடையனவாம். சோவியத்தில் இவர் மாதந்தோறும் செலுத்திய வீட்டு வாடகை 122 ரூபா. ஆனல், - அமெ ரிக்காவில் இவர் செலுத்திய வாடகையோ 1,800 ரூபா.
உற்பத்திச் சாதனங்கள் சமூக உடைமை
சோவியத்தின் வீடமைப்புத்திட்டத்தின் வெற்றிக்கு இன் ணுெரு காரணம், அந் நாட்டில் உற்பத்திச் சாதனங்கள் யாவும் சமூக உடைமையாய் இருத்தலாகும்.
எமது "நாட்டிலுள்ளதுபோல், வீடமைப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்கின்ற, அல்லது வீடமைத்துக் கொள்ளை லாபம் அடிக்கின்ற தனியார் கட்டடநிர்மாண் ஸ்தாபனங் களையோ, சொந்தக்காரர்களையோ அங்கே காண முடியாது. பதிலாக, அரச நிறுவனங்களே வீடமைக்கின்றன.
73

Page 44
அது மட்டுமல்ல, சகல விதமான் கட்ட்ட நிர்மாணப் பொருள்களையும் உற்பத்தி செய்வது அரச நிறுவனங்களே. கொள்ளை இலாபமடிப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட தனி யார் துறையினரிடம் கட்டட நிர்மாணப் பொருள் உற் பத்தி இருப்பின், வீடமைப்புச் செலவுகள் மலிவாக இருக்க வும் முடியாது; பாரிய ரீதியில் திட்டமிட்டு வீடமைக்கவும் (p' யாது. ܗܝ - - - - - - -
சோவியத் அடுக்கு மனைகள் எப்படிக் கட்டப்படுகின்றன தெரியுமா?
அடுக்குமனையின் பல்வேறு பகுதிகளும் தொ பிற்சாலைகளில் பகுதி பகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. வீட்டுச் சுவர்கள்கூட தொழிற்சாலைகளிலேயே பகுதி பகுதியாக அமைக்கப்படுகின்றன. வீட்டைச் சூடேற்றுவதற்கு வேண் டிய உலோகக்குழாய்கள், மின்சக்தி விநியோகம் செய்யும் கம்பிகள் என்பனகூட இச்சுவர்களினுள் வைத்தே அமைக் கப்படுகின்றன.
இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு பகுதிகள் வீடமைப்பு ஸ்தலத்திற்குப் பகுதி பகுதியாக எடுத்துச் செல் லப்பட்டு, அங்கு வைத்து அடுக்கு மனைகளாகப் பொருத்தி, நிறுவப்படுகின்றன.
உயர்ந்த வேகம், அயராத உழைப்பு
உயர்ந்த வேகத்துடனும், அயராத உழைப்புடனும் பாரிய அளவில் நடைபெறும் வீட்டு நீர்மாணம் சோவியத்தின் வீட மைப்புத் திட்டத்தின் இன்னெரு வெற்றி இரகசியமாகும்.
144 அடுக்கு மனைகளைக் கொண்ட ஓர் ஒன்பது மாடிக், கட்டடத்தை நிறுவ, சோவியத்தில் எத்த்னை நாட்கள் ஆகின் றன தெரியுமா?
28 நாட்கள்! புறப் பூச்சு வேலைகளுக்கு இன்னும் 12-14 நாட்கள். அவ்வளவுதான். Ww
தொழிற்சாலைகளில் பகுதி பகுதியாகக் கட்டி அமைக்கா மல், வீடமைப்பு ஸ்தலத்திலேயே வைத்துப் பூரணமாகக் கட்டியெழுப்புவதானல், இந்தகைய ஒரு கட்டடத்தைப் பூர்த்திசெய்ய 6 மாதங்கள் எடுக்கும், செலவும் 4 மடங்கு அதிகரிக்கும்.
சோவியத்தில் வருடம் முழுவதும் வீடமைப்பு துரித வேகத்துடன் நடைபெறுகிறது. வீடமைப்பு வேலைகள் நிறுத்தப்படுவது எப்போது தெரியுமா?
, ή 4

சைபீரியா, சோவியத் தூர வடக்குப் பகுதிகளில், வெப்ப நிலை தண்ணீர் ஐஸ் கட்-யாக உறையும் சைபர் பாகை சென்டி கிரேட் நிலையைவிட, மேலும் 45 பாகை குறையும் போதுதான் தொழிலாளர்கள் வீடமைப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றனர். . .
இத்தகைய அயராத உழைப்பு, வெற்றிக்கு வழி கோ வதில் வியப்பில்லையே! ற்றி கு வழி லு
அனைத்தும் மனிதனுக்காக, மனிதனின் நலனுக்காக
** அனைத்தும் மனிதனுக்காக, அனைத்தும் மனிதனின் நல னுக்காக" என்பது சோஷலிஸ்க் கொள்கையின் மனிதாபி மானத் தத்துவமாகும்.
இந்தத் தத்துவம் சோவியத்தின் வீடமைப்புத் துறை யிலும் செயற்படுவது இயல்பானதே. இத்துறையின் வெற் றிக்கும் இது உதவியுள்ளது. . . . . . . சோவியத்தில் அடுக்கு மனைகள் மக்களுக்கு வழங்கப்படு வது என்ன அடிப்படையில்? எவருக்குப் புதிய அடுக்கு ம%னகள் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றனவோ, அவர் களுக்கே அடுக்கு மனை பகிர்ந்தளிப்பில் முதலிடம் கொடுக் கப்படுகிறது. - - - -
ஆளுக்கு ஐந்து சதுர மீட்டர்களுக்குக் குறைவான தரைப் பரப்பையுடைய வீடுகளில் இருப்போர் புதிய அடுக்கு மனை பெறுவதற்கு முதல் அருகதை உடையவர்களாகின்றனர், இவர்களை விட, போரில் ஊனமுற்றவர்கள், போரில் ஆயி ரிழந்தோரின் குடும்பங்கள், அங்கவீனமுற்ற தொழிலாளர் கள், அளவில் பெரிய குடும்பங்கள் உடையோர் போன்ற வேறு சில பிரிவினரும் புதும%ன பெறுவதில் சலுகை பெறு கின்றனர். - -
அரசினல் நிறுவப்பட்டுள்ள விசேட வீடமைப்புக் குழுக் கள் புதும்னைகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து, வீடு வழங்கப்பட வேண்டிய ஒழுங்குப் பட்டியலைத் தயாரிக்கின் ADGOT・ ܖ -
புது மனைகள் பெறுவோரின் பெயர்ப் பட்டியல் பகிரங்கச் சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டுத் தொடக்கத்திலும் புதுமனை பெறக் காத்திருப்போரின் பட்டியல், அவர்களுக்கு வீடு வழங்கப்பட வுள்ள வரிசைக் கிரமத்தில் இச் சுவரொட்டிகளில் வெளி யிடப்படுகின்றன. . - ܗܝ
75

Page 45
சோவியத்தின் சோஷலிஸ் சமூக நீதி எவ்வித ஊழலுக் கும் பாரபட்சத்துக்கும் இடமளிப்பதில்லை என்பது இதி லிருந்து தெரிகிறது. ܫ
சோவியத் நாடு தனது வீடமைப்புப் பிரச்சினையை இன்று பெருமளவு தீர்த்துவிட்டது. சோவியத் நாட்டில் நான் விஜயம் செய்த எப்பகுதியிலாவது சேரிகள் என்று குறிப் பிடக்கூடிய தன்மையுள்ள வீடுகளை நான் காணவில்லை. நான் மட்டுமல்ல-நான்காண்டுகாலம் இந்நாட்டில் வாழ்ந்து, அதன் மூலை முடுக்கெல்லாம் தான் இஷ்டப்படி சுற்றித் திரிந்த அமெரிக்கரான மைக் தாவிதோவ் கூட சோவியத்தில் தாம் சேரிகளைக் காணவில்லை என்று எழுதி யுள்ளார். ܖ
அதே நேரத்தில்-தமது தாய்நாட்டில் நீகிரோ, பியோ ட்டோ றிக்கா, சிக்கானே இன மக்கள் கேவலமான சேரி களில் விலங்குகள்போல் அவலப்படடு வாழ்வதைக் குறிப் பிட்டு விசனப்பட்டுள்ளார். இம்மக்களுக்கு விடிவு எப் போது என்று கவலைப்பட்டுள்ளார்.
சோவியத் நாட்டில் வீடமைப்புப் பிரச்சினை நூற்றுக்கு நூறு இன்னும் தீர்க்கப்படவில்லைத்தான். ஆனல்-உலகத் தில் எந்த நாடுதான் தனது வீடமைப்புப் பிரச்சினையை இன்று முற்ருகத் தீர்த்துள்ளது?
சோவியத் மக்களுக்கு இது தெரியும். ஆனல்-தமது வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கத் தமது சோஷலிஸ் அரசு எடுத்துவரும் பிரமாண்ட மான முயற்சிகளை அவர்கள் அறிவார்கள்.
இன்று உலகிலேயே வீடமைப்புத் துறையில் முன்னிற்பது தமது நாடு என்பதை அவர்கள் அறிவார்கள்.
மணிக்கு 300 அடுக்கு மனைகள் பூர்த்தி செய்யப்படுவதும், தினமும் 8,000 புதுமனைப் பிரவேசங்கள் நடைபெறுவதும் உலகில் தமது நாட்டில்தான் என்பதை அவர்கள் அறிவார் கள்.
கடந்த ஐந்தாண்டுகளில், 1.2 கோடி அடுக்கு மனைகளைக் கடடி முடித்ததும், 6 கோடி மக்களுக்குப் புதுமனைகள் வழங் கியதும் உலகில் தமது நாடுதான் என்பதை அவர்கள் அறி GITISGT
1985ல், தரம் குறைந்த வீடே இல்லாத உலகின் முதல் நகரம் என்ற சாதனையை எட்டப்போவதும் தமது தலை நகரான மாஸ்கோதான் என்பதை அவர்கள் அறிவார்கள்.
76

2000ல், தரம் குறைந்த வீடே இல்லாத உலகின் முதல் நாடு என்ற சாதனையை எட்டப் போவதும் சோவியத் யூனி யனே என்பதை அவர்கள் அறிவார்கள்.
அவர்கள் மட்டுமல்ல
'தனது பரந்துபட்ட குடிமக்கள் தொகையினருக்கு விலே குறைந்த, நல்ல இல்லங்களை அமைத்துக் கொடுக்கும் பிரச்சினையைத் தீர்த்துவைத்த உலகின் முதல் நாடு, உல கின் ஒரேயொரு நாடு சோவியத் யூனியனே..." என்று அமெரிக்க காங்கிரஸ்-க்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் இயக்குநர்களில் ஒருவரான அலென் பேற்ஸாம் இதனை அறிவார்.
Z?

Page 46
10 பூகம்பத்திற்கு படுதோல்வி
துருக் மேனியா - இந்தப் பெயரை என்னல் என்
றென்றும் மறக்க மு யாது! இதற்குக் காரணம்-துருக்மேனிய சோவியத் சோஷலிஸ்க் குடியரசுக்கு ஈழத்திலிருந்து விருந்தாளியாகச் சென்ற முத லாவது ஆண் மகன் நான் என்பது ஒரு காரணமாகும்.
துருக்மேனியத் தலைநகரான ஆஷ்காபாத் வானுர்தித் துறையில் விமானத்தை விட்டு நான் இறங்குகிறேன்.
விமானத்தின் படிக்கட்டுகளின் அடியில் அழகிய, கம்பீர மான், சுறுசுறுப்பான ஓர் இளைஞன் நிற்பதைக் கவனிக்கின் றேன். அவனது கண்கள் விமானத்திலிருந்து இறங்குபவர் களில் எவரையோ தேடுவதை அவதானிக்கிறேன்.
ஆஷ்காபாத் மண்ணில் என் காலடிகள் பதிகின்றன. அந்த இளைஞன் என் முன்னே வந்து நிற்கிருன், 'நீங்கள் இலங்கையிலிருந்து வரும் பிரதிதிநியா?" அவன் கேட்கிருன்.
A LDTLd.“ 6ஆமாம்." 'நான் சமிதோவ் ஜோரா-அயல்நாடுகளுடன் நட்புறவு, கலாசார தொடர்புகளுக்கான துருக்மேனிய நிறுவனத்தின் உபதலைவர். துருக்மேனிய சோவியத் சோஷலிஸ்க் குடியர சுக்கு ஈழத்திலிருந்து விருந்தாளியாக வரும் முதலாவது ஆண்மகனன உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடை கிறேன்."
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. துருக்மேனிய மண் னில் காலடி வைத்த முதலாவது இலங்கையன் நான? இது நான் எதிர்பாராததொன்று.
'நான் இந்திரகுமார்.' எனது கரங்களை அன்புடன் இறுகப் பற்றிக் குலுக்குகிருன் அந்த இளைஞன்.

"'டாக்டர் இந்திரகுமார் - நான் சொல்வது சரியா?" எனது தலையை அசைக்கிறேன். ‘இவர் திரு. பெரமுனதிலக்க,’ என் பின்னல் இறங்கி வந்த 'தினமின’’ நாளேடு ஆசிரியரை அவனுக்கு அறி * முகப்படுத்துகிறேன்.
'பெரு-முன-திலக்கே’, என்று கஷ்டப்பட்டு, உதடுகளைச் சுளித்து உச்சரித்தவாறே அவரது கரங்களைப் பற்றிக் குலுக்கு கிருன் அவன்.
'ஜோரா, எனது பெயரை மட்டும் சரியாக உச்சரிக்கி நீர்களே, அது எப்படி?’ என்று சிரித்தவாறே அவனிடம் கேட்கிறேன்.
“ ‘பிரபல்யமான பெயர்களை மறக்க முடியுமn , என்ன? ந்திரா காந்தி. . . இந்திரகுமார்...' என் கிரு ன் அவன். பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கு ஆயிரம் தடவைகள் மானசீகமாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘எங்கள் குடியரசில் ஒரு பழமொழி உண்டு. இங்கு ஒரு முறை வருபவர்கள் எமது உற்ற நண்பர்கள் ஆகிருர்கள். இங்கு இரண்டாம் முறை வருபவர்கள் எமது உறவினர்கள் ஆகிருர்கள். நீங்கள் இன்று எமது உற்ற நண்பர்கள் அ கி விட்டீர்கள். நீங்கள் மீண்டும் வரவேண்டும். எ. களுக்கு உறவினர் ஆகவேண்டும்,' என்கிருன் அந்த இளைஞன்.
அந்த இளைஞன் மனம் திறந்து பேசிய முறையிலே, பழ கிய பண்பிலே, செலுத்திய அன்பிலே, அந் நகரின் மண் னிலே, அங்கே தழைத்து நின்ற தாவரங்களின் தன்மையிலே, அங்கு செறிந்திருந்த சுவாத்தியத்தின் வகையிலே கீழைத் தேச அம்சங்கள் பலவற்றை நான் கண்டு கொண்டேன்.
ஆம், துருக்மேனியா சோவியத் குடியரசுக்களுகுள்ளேயே மிகத் தென்திசை நோக்கி அமைந்துள்ள குடியரசல்லவா? - மத்திய ஆசியாவுக்குத் தென் கிழக்கில் அமைந்துள்ள தல்லவா? அதனல் தானே இந்த "மண்வாசனை’?
விமான நிலையத்திலிருந்து ஆஷ்காபாத் நகரிலுள்ள மிகப் பெரிய ஹோட்டலான “ஹோட்டல் ஆஷ்காபாத்'துக்குப் புறப்படுகிருேம். காரில் பேச்சுத் தொடர்கிறது. துருக் மேனியா பற்றிய சில முக்கிய தகவல்களை அறிந்து கொள் கிறேன்.
துருக்மேனியாவின் வடஎல்லையில் காஸ்ாக்ஸ்தான் சோவி யத் சோஷலிஸக் குடியரசும், வட கிழக்கில் உஸ்பெக்கிஸ் தான் சோவியத் சோஷலிஸ்க் குடியரசும், தெற்கில் ஈரான் நாடும், தென் கிழக்கில் ஆப்கானிஸ்தான் நாடும் அமைந்
79

Page 47
துள்ளன. துருக்மேனியாவின் மேற்குக் கரையோரமாக காஸ்பியன் கடல் அலைமோதுகிறது.
துருக்மேனியா ஏறத்தாழ 1,85,000 சதுரமைல் பரப் புடையது. ஆனல் இதில் 99 சத வீதம் பாலைவனமாகும். காரகும் பாலைவனம் எனப்படும் இப் பகுதி, உலகின் மிகப் பெரிய பாலைவனமான சஹாராப் பாலைவனத்திற்கு அடுத்த பெரிய பாலைவனமாகும.
துருக்மேனிய மக்களின் உள்ளங் களில், துருக்மேனியக் கம்பளங் களில், ஒவியங்களில், சிற்பங் களில்- இப்படி எங்கும் நிறைந் தவர் தான் கவிஞர் மக்தும்குலி. துருக்மேனிய ஓவியக் கலைஞர் ஒருவரை அவர் வரைந்த மக்தும் குலி ஒவியத்துடன் காண்க.
துருக்மேனியக் குடியரசு இலங்கையை விட 7-8 மடங்கு பெரிய பரப்புடையது; இங்கிலாந்தைப் போல் இரு மடங்கு பெரியது; ஏறத்தாழ பிரான்சின் பரப்பளவைக் கொண்டது.
80
 
 

முப்பது இலட்சம் சனத் தொகையை உடைய துருக் மேனியாவின் தலைநகரம் ஆஷ்காபாத் ஆகும்.
ஜாராட்சிக் காலத்தின் போது ரஷ்யாவின் மிகப் பின் தங்கிய பகுதியாக துருக்மேனியா விளங்கியிருந்தது, கால் நடை வளர்ப்பையும், கம்பளம் பின்னுதலையும் தொழி லாகக் கொண்டு துருக்மேனிய மக்கள் கல்விவாசனையற்ற நாடோடிகளாக வாழ்ந்த இருண்ட காலம் அது.
மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்சி, நிலப்பிர புத்துவ சமுதாயத்திலிருந்த துருக்மேனியா ஒரு சோஷலிஸ் சமுதாயமாக மலர்வதற்கு வழிவகுத்தது. சமூக பரிணம வளர்ச்சிப் பாதையில் துருக்மேனியா நிலப்பிரபுத்துவத்தி லிருந்து முதலாளித்துவ சமூக அமைப்பிற்குச் சென்று, அதி லிருந்து சோஷலிஸ் அமைப்பிற்குச் செல்லாமல், நேரடி யாகவே சோஷலிஸ் சமூக அமைப்பிற்கு மாறியது.
அதைவிடச் சிறப்பு என்னவெனில், இத்தகைய மாற்றம் ஒரு தலைமுறைக்குள் நடந்து முடிந்ததாகும்.
முன்னேற்ற மடைந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தின ரின் உதவிவிருப்பின், பின்தங்கிய நாடுகள் முதலாளித்துவ சமூக அமைப்புக் கட்டத்தினூடாகச் செல்லாமல் சோஷ லிஸ் சமூக அமைப்பை அடையலாம் என்று மாமேதை லெனின் கூறிய வார்த்தைகளை மெய்ப்பிப்பதாக அமைந் துள்ளது துருக்மேனியக் குடியரசு.
அழகிய ஆஷ்காபாத் நகரின் நடுப்பகுதியினுடாக எமது கார் இப்போது செல்கிறது.
ஜோரா கூறுகின்ற ஒரு தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக் குகிறது.
1948ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பூகம்பம் ஆஷ்காபாத் நகரை மண்ணுேடு மண்ணுக்கி விட்டதாம். இன்று கொள்ளை அழகு பூத்துக் குலுங்க நிற்கும் ஆஷ்காபாத் சிதைவிலிருந்து புத்துயிர் பெற்றெழுந்த நகரமாம்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் சேதங்கள் சோவி யத் குடியரசுகள் அனைத்தையும் பாதித்திருந்த வேளை அது. எனினும், சோவியத் ஒன்றியத்திலிருந்த சக குடியரசுகள் அனைத்தும், சோவியத் சமஷ்டியின் தேசிய இனங்கள் யாவும் உண்மையான சகோதரத்துவ உணர்வுடன் ஆஷ்காபாத் நக ருக்குப் புனர் ஜென்மம் அளிக்க ஆர்த்தெழுந்தனர். பொருளுதவி, பணஉதவி, வழங்கியதோடு நில்லாது, சோவி யத் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் தம் உட லுழைப்பை நல்கிட ஆஷ்காபாத் வந்து குவிந்தார்களாம்.
81

Page 48
ஆஷ்காபாத் ஹோட்டலை வந்தடைந்தோம். இரவு உண வின்பின் ஜோரா விடை பெற்ருர்,
மறுநாள் காலையில் துருக்மேனிய தரிசனம் ஆரம்பம். இரண்டாவது உலகப் போரில் பாஸிஸ்த்தை முறியடிக்கத் தமது இன்னுயிரை ஈந்த துருக்மேனியத் தியாகிகளின் நினை வுச் சின்னத்தில் மலர்வளையம் சாத்தி முதலில் அஞ்சலி செலுத்தினேம். W
இதனை எமது முதல் நிகழ்ச்சியாக ஒழுங்கு செய்தது பொருத்தமானதே என்று எனது இதயம் ஆமோதித்தது. துருக்மேனியரின் தேசப்பற்றை என்னல் உணர முடிந்தது. உலக யுத்தத் தியாகிகளின் நினைவுச் சின்னங்களிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இன்னெரு நினைவுச் சின்னத்திற்கு அடுத்ததாகச் சென்ருேம்.
இச்சின்னம் மக்தும்குலி ஃபிராகி என்பவருடையது. "மக்தும்குலி 18ம் நூற்ருண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு கவிஞர், எ )த்தாளர், தத்துவஞானி, சீர்திருத்தவாதி. துருக்மேனிய இலக்கியத்தின் தந்தை இவர்தான்,' என்று ஜோரா விளக்கினர்.
மக்தும்குலி எழுதிய கவிதைகள் துருக்மேனியாவின் மிகப்பெரும் பிரச்சினையான தண்ணீர்ப் பற்ருரக் குறையைப் பற்றி அமைந்திருந்தனவாம். ஆனல், கவிதை எழுதுவதை விட வேறெதனையும் செய்து பிரச்சினையைத் தீர்க்க ஜாராட் சிக்காலத்தில் முடியவில்லை. - -
கம்யூனிஸ் அரசு காரகும் கால்வாய் அமைத்து இப்பிரச் சினையைத் தீர்த்து வைத்தது. தண்ணீர்ப் பிரச்சினையைப் பற்றிப் பாடிய கவிஞன் என்பதால், மக்தும் குலியின் சிலையை ஒரு நீர்த்தடாகத்தின் நடுவே நிறுவி, அக்கவிஞனின் இதய தாகத்தைத் தீர்த்து வைத்துள்ளனர் துருக்மேனிய மக்கள். துருக்மேனிய மக்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட கவி ஞன் மக்தும்குலி என்பதை துருக்மேனியாவில் நான் இருந்த நான்கு நாட்கள் எனக்கு உணர்த்தின.
நான் சென்ற விடமெல்லாம் மக்தும்குலியின் தாக்கத்தைச் கண்டேன்.
துருக்மேனியத் திரைப்படங்களில் வரும் பாத்திரங்கள் மக்தும்குலியைப் பற்றிப் பேசுகின்றன. நாடக பாத்திரர் கள் மக்தும்குலியைப் பற்றிப் பேசுகின்றன. துருக்மேனிய கம்பளங்களில், ஒவியங்களில், நூல்களில் - இப்படி அனை இடத்திலும் மக்தும்குலி நீக்கமற நிறைந்திருப்பதைக் கன
1-607.
82

துருக்மேனிய அரும்பொருட் காட்சிச்சாலைத் தலைவர் மக் தும்குலியின் கவிதைத் தொகுப்பு நூலொன்றை எனக்கு அன்பளிப்புச் செய்தார். V
அதிலிருந்து எடுக்கப்பட்ட மக்தும்குலியின் கவிதை யொன்றை இங்கே தருகிறேன். ரஷ்ய மொழியிலிருந்து இக்கவிதையை எனது ரஷ்ய மொழி பெயர்ப்பாளரான திருமதி லுட்மிலா பெட்டோனிச் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துத் தந்தார். ”ད་
இதனை எனது இனிய நண்பரான கவிஞர் பெரி. சண்முக நாதன் தமிழுருவில் வடித்துத் தருகிருர்:
துருக்மேனியாவின் எதிர்காலம்
*காகூன் நதியதுவின் கண்ணுடி முகந்தொட்டு காஸn க் எல்லைவரை ஏகமதாய் பரந்திருக்கும் மண்பரப்பினை துருக்மேனிய காற்றலைகள் தொட்டுச் செல்கின்றன. மேகம் தொடுந் துருக் மேனிய மலைகள் ஜனிக்கின்ற
ஜலத் தாரை தேன்ரோஜா மலர்க்காக்கள் இவையெலாம் என் நயனங்களுக்குப் பெரு விருந்து!
துருக்மேனியத் தோட்டங்களின் குளிரால் நீழலில்ஸ்டெப்பிதனில் வெள்ளாடும் நல்லாவும் புல்மேயும்; ኣ பரந்திருக்கும் புல்தரையை பாயாக மூடியுள்ள மலர்ப் படுக்கை; ஆம், இந்த மணற்பரப்பில். அற்புதமான பூவொன்று புஷ்பிக்கின்றது!
茹3

Page 49
84
அவனிடமிருத்து நறுஞ்சுகந்தம் கமழ்வதால் அவளுடையின் குளிர் அருட்டல் ஒரு பொருட்டல்லஏக சித்தர்களாய் இணைந்துள்ள மக்கள் தம்மை ஞானம் நிறை நற்றலைவன்
o
நடாத்துகின்றன்; குவேர்- ஒக்லியின் கோஷம்
எம் சோதரர்தம் சித்தங்களில் கொலு ஏறியுள்ளது நண்பனே, அந்த துருக்மேனிய சிங்கத்தைப் luftrif!
எதிரியை எதிர்கொள்ளும்போது இரக்கம் கோரி அது சிரந் தாழ்த்துவதில்லை!
அனைத்து இனங்களும் தனியொரு குடியாய் வாழுகின்றனர்; வெற்றி விருந்துக்காய்
Tg5 FT g5tt IITIT-g) திருrே వాణి மகத்தான எதிர்காலம் அண்மிக்கிறது! துருக்மேனிய வீரன் தருக்கு கண்டு கடும் பாறையும் அஞ்சி உருகி விடும்!

துருக்மேனியாவை எவர்தானும்
மீண்டும் ஜயங்கொள்ள முடியாது இந்த மண் முந்திய பஞ்சம் தன்னை மறந்துவிட்டது.
இங்கு ரோஜாக்கள் வாடுவதில்லை; இங்கு எவரும் மனஞ்சலிப்பதில்லை!
துருக்மேனியாவின்
மரபுகள்
சோதரத்துவம் நட்புறவு - இவை வழிவந்த சட்டங்கள் ஆற்றல் மிகு அனைத்து இனத்தவரும் மஹோன்னத உடன் பிறவிகள் துருக்மேனியப்
புதல்வர்களைச் செரு முனையில் எதிர்கொள்வோர் பீதியால் மடிவர்
துருக்மேனியர்களின் வீரப்பயணத்துக்கு மலைகள் உடலொதுங்கி வழிவிடும் மக்தும் குலியின் வீரகவிகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் அவா துருக்மேனியாவின் உதடுகளாகிவிட்டார்
இது நிஜமே!
8$

Page 50
(குறிப்பு- 'குவேர் ஒக்லி" எனப்படுவது நிலப் பிரபுத்து வத்துக்கு எதிரான, எழுத்தில் இடம்பெருத, துருக்மேனிய வீரகவிதைத் தொகுப்பு.) . . -
மக்தும்குலியின் கவிதைகள் பற்றிய இனிய கதை ஒன்று துருக்மேனியாவில் கூறப்படுகிறது. −
ஜாராட்சிக் காலத்தில் இது நடைபெறுகிறது. துருக் மேனியக் கிராமம் ஒன்றுக்கு ஓர் அறிஞன் வருகிருன். அவ னது கையில் 'புத்தகம்' என்னும் ஒரு பொருள் இருக்கி றது. படிப்புவாசனை அற்ற கிராமவாசிகள் அதனை வியப்பு டன் பார்க்கின்றனர். அதன் பக்கங்களை அந்த அறிஞன் ஒவ்வொன்ருகப் புரட்டியபோது, இனிய நாதம் எழுந்த, தாம.
அந்த இனிய நாதம் - அதனேடு அர்த்தத்துடன் கூடிய சொற்கள் அமைந்திருந்தன. அந்தச் சொற்கள்-துருக் மேனியா எப்படி எப்படி எல்லாம் வளம் பெற வேண்டும் என்று அவர்கள் மனதில் புதைந்து கிடந்த அபிலாஷை களைப் பிரதிபலித்தனவாம். r.
புத்தகம்தான் இனிய ஓசையைப் பிறப்பிக்கிறது என்று நினத்த ஒரு கிராம வாசி, தனது மிகப் பெய சொத்தா கிய ஒட்டகத்தையே அந்த அறிஞனுக்குக் கொடுத்து, புத்த கத்தைப் பண்டமாற்றுகப் பெற்றுக்கொண்டானும்,
புத்தகத்தை வீடு கொண்டு சென்ருன் அவன். புத்த கத்திலிருந்து எந்த நாதமும் வரவில்லை. எனினும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்.
ஆண்டுகள் ஓடின. அக்டோபர் சோஷலிஸ்ப் புரடசியும் நடந்து விட்டது. அவனது மகனைக் கம்யூனிஸ் அரசு படிக்க வைத்தது.
மகனின் கையில் இப் புத்தகம் ஒரு நாள் சிக்கியது. அவன் அதன் பக்கங்களைப் புரட்டியபோது, அந்த நாதம்அதே நாதம் எழுந்தது.
அந்த நாதம் என்ன தெரியுமா? வருங்காலத் துருக்மேனியா எப்படி எப்படி எல்லாம் வளம் பெற்றுச் செழிக்க வேண்டும், புதுயுகமாக மலர வேண்டும் என்று மக்தும்குலி தன் உள்ளத்து ஆசைகளை எல்லாம் கொட்டிச் சமைத்த கவிதை நூல் அது. அக் கவிதைகளை இசை புடன் பாடியபோதுதான் நாதம் எழுந் ததாம்.
மக்தும்குலியின் கற்பனையில் உதித்த அந்தப் புதுயுகத்தை நான் நேரில் கண்டேன்.
&G、

11 பாலைவனத்திற்கு பசுமை பாய்ச்சும் செயற்கை நதி
ரகும் பாலைவனம் - உலகின் இரண்டாவது 5Tபெரிய ப2வனம். துருக்மேனியக் குடியரசின் நிலப்பரப்பில் 99 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள இப் பாலைவனம், சஹாராப் பாலை வனத்திற்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய பாலைவன மாகும.
எமது இலங்கை நாட்டின் மொத்த நிலப்பரப்பை விட 7-8 மடங்கு பெரியது இப் பாலைவனம்.
இந்தப் பாலைவனத்தில், தண்ணிர் உள்ள நீர்ச் சுனைகளைத் (ஒயேஸிஸ்) தேடி, தமது கால் நடைகளுடன் நாடோடிக ளாக அலைந்து திரிந்தனர் துருக்மேனிய மக்கள். மூக்கை யும் வாயையும் சீலையால் இழுத்துக் கட்டி ('யஷ்மாக்" எனப்படும் அடிமைச் சின்னம்) பெண்கள் அடிழைகளாய் அல்லலுற்றனர்.
--இது பழைய கதை; அக்டோபர் சோஷலிஸப் புரட் சிக்கு முந்திய துருக்மேனியாவின் பரிதாபக் கதை கல்வி வாசனை அற்ற மாக்களாக, நிலப்பிரபுக்களால் இரத்தம் உறிஞ்சப்பட்ட அடிமைகளாக ஆதித் துருக்மேனியர் அல்லலுற்ற அவலக்கதை.
துருக்மேனியாவை நான் கண்டேன். துருக்மேனிய மக்களை நான் கண்டேன்.
ஆணுல் - இவை யாவும் கூறி நின்றதோ, புதிய ஒரு கதையைநவயுகப் பிரம்மா -- லெனினின் கண் பட்டதால்,
கருத்துச் செயற்படடதால், கனவு கைகூடியதால், நுங்கும் நுரையும் கக்கி, நீர் பாயக் கண்டு, உயிர் பெற்றெழுந்த காரகும் பாலைவனத்தின் கதையை இவை கூறி நின்றன.
87),

Page 51
ங்ாலைவனம் பசுஞ்சோலையாக, பொன் கொழிக்கும் பூமியாக மதர்த்துச் செழித்துப் பசுமை பெற்றெழுந்த கதையை இவை கூறி நின்றன.
துருக்மேனிய அடிமைகளும், நாடோடிகளும், பாமரர் களும், பெண்களும் அடிமைத் தளை தகர்த்து, அறியாமைத் தடை நொறுக்கி, புத்துலகின் ஆக்க சக்திகளாய், விவசாய வீரர்களாய், கைத்தொழில் விற்பன்னர்களாய், சான்ருேர் களாய், விஞ்ஞான மேதைகளாய், கலைக்குரிசில்களாய் விசுவரூபங்கொண்டெழுந்த கதையைக் கூறி நின்றன.
பழைய கதை, துருக்மேனியாவின் வரலாற்று ஏடுகளோடு சங்கமமாகிவிட்டது; துருக்மேனிய நூதனசாலைகளில் உள்ள களிமண்ணுல் செய்த, மரத்தில் செதுக்கிய பாவைப் பொருட்களோடு ஒன்றிவிட்டது.
இது சாத்தியமானது எப்படி? துருக்மேனியாவின் கிழக்கு எல்லையை ஒட்டி அமுதாரியா என்ற நதி பாய்கிறது. இந்த நதி சோவியத் தாகிஸ்தான் குடியரசில் உள்ள பாமிர் மலைகளில் ஊற்றெடுத்துப் புறப் பட்டு, இறுதியில் ஏரல் கடலில் போய் விழுகிறது. இதற் கிடையில், உஸ்பெக்கிஸ்தான், துருக்மேனியா, காஸாக்ஸ் தான் ஆகிய மூன்று சோவியத் குடியரசுகளினுடாக இது செல்கிறது.
அமுதாரியா நதியின் நீரை காரகும் பாலைவனத்தினு டாகத் திசைதிருப்பும் திட்டம்தான் துருக்மேனியக் குடியர சுக்குப் புனர்ஜென்மம் அளித்தது.
ஆஷ்காபாத் நகரின் நடுவில் நீர்ச்சுனைகளுடன் கூடிய ஓர் அழகிய கட்டடம் உள்ளது. அது தான் அமுதாரியா நதி திசை திருப்புத் திட்டத்துக்குப் பொறுப்பான சபையின் அலுவலகம். இக்கட்டடத்திலே இச் சபையின் இயக்குநர் களில் ஒருவரும், நதி திசை திருப்புத் திட்டத்தின் சிரேஷ்ட பொறியியல் நிபுணர்களில் ஒருவருமான மாமிதோன் கஹாலி அவர்களைச் சந்தித்தோம்.
அமுதாரியா திசை திருப்பப்படட வரலாற்றையும் விவ ரங்களையும், தேசப்படங்கள், மாதிரி அமைப்புக்களின் உதவி கொண்டு இவர் எனக்கு விளக்கினர்.
அமுதாரியா நதியின் நீரை காரகும் பாலைவனத்தினுடா கப் பாய்ச்சவேண்டும் என்ற எண்ணம் எண்ணற்ற ஆண்டு களுக்கு முன்னரே பிறந்துவிட்டதாம்.
இற்றைக்கு 262 ஆண்டுகளுக்கு முன்னரேயே, துருக் மேனியப் பெரியாரான கோட்ஸா நெப்பீஸ் என்பவர் மகா
88.

பீற்றர் சக்கரவர்த்தியைச் சந்தித்து, அமுதாரியா நதியை காரகும் பாலைவனத்தினுடாகத் திசை திருப்புவதற்கு துருக் மேனிய மக்களுக்கு உதவுமாறு கேட்டதாக வரலாறு உண்டு. அமுதாரியா நீரை, காரகும் பாலைவனத்தில் வளமான மண்ணுள்ள முர்காப், ரெட்ஜன் நீர்ச் சுனைகளுக்குத் திருப் பும் பிரச்சினை உலகெங்கும் உள்ள நீர்ப்பாசனத்துறை வல்லுனர்களைப் பெரிதும் கவர்ந்தது. எம். என். எர்மோல யேவ் என்ற பொறியியல் நிபுணர் இதுபற்றி நீடித்த ஆராய்ச்சிகள் புரிந்தார். இதன் பலாபலனுக, இப்பிரச்சினை யைத் தீர்க்கக்கூடிய தொழில் நுட்ப வழிமுறையை, 1908ல் வெளியிட்டார்.
திட்டங்கள் தீட்டப்படடு விட்டன. ஆனல் இவற்றைச் செயல் படுத்துவது யார்? புரடசிக்கு முந்திய, பின் தங்கிய ரஷ்யாவில் இத்தகைய ஒரு பாரிய திட்டத்தைச் செயற் படுத்தக்கூடிய பொருளாதார வசதி இருக்கவில்லை. தொழில் நுட்ப, வளர்ச்சியும் கூடியிருக்கவில்லை.இவற்றிற்குமேலாக, ஜார் அரசுக்கு, தலைமுறை தலைமுறையாகத் துருக்மேனி யரின் உள்ளங்களில் கொழுந்து விட்டெரிந்து வந்த இந்த இலட்சியத்தை நிறைவேற்றவேண்டும் என்ற அக்கறை இருந்ததுமில்லை.
அக்டோபர் சோஷலிஸப் புரட்சியை அடுத்து ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ் அரசுதான் துருக்மேனிய மக்களின் இந்த இலட்சியத்தை நிறைவேற்றி வைத்தது.
அமுதாரியா நீரை துருக்மேனியாவின் தென் , தென் மேற் குப் பகுதிகளுக்குத் திசைதிருப்புவதற்கு ஒரு செயற்கைக் கால்வாயை அமைக்க வேண்டும் என்று சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி தீர்மானித்தது.
இதையடுத்து, பூர்வாங்க விஞ்ஞான ஆய்வுகளும் புனை வரைவுவேலைகளும் ஆரம்பமாகின. இரண்டாவது உலக மகாயுத்தம் வெடிப்பதற்குச் சிறிது முன்னல் ஆரம்பமான இப்பூர்வாங்க வேலைகள், லெனின் கிராடில் நாஜிகள் புகுந்த காலத்தில்கூட தொடர்ந்து நடைபெற்றன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் புனைவரைவு களுக்கு அங்கீகாரம் அளித்ததை அடுத்து, 1956ல் காரகும் கால்வாய் நிர்மாணம் ஆரம்பமானது.
அமுதாரியா திசை திருப்பலின் முதலாவது கட்டம் 1959ல் பூர்த்தியானது. அமுதாரியா ஆற்றிலிருந்து முர்காப் நீர்ச்சுனை வரையிலான இக்கால்வாய் 250 மைல் நீள முடையது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான
89

Page 52
தூரமுள்ள இக்கால்வாய் மூன்றே ஆண்டுகளில் கட்டி முடிக் கப்பட்டது ஒரு பெரிய சாதனையாகும். -
காரகும் கால்வாயின் மிகக் கஷ்டமான பகுதி அதன் முதற் கட்டம் என்றே சொல்ல வேண்டும். காரணம். இம்முதற் பகுதி மனித சஞ்சாரமே அற்ற வனந்தரத்தி னுடாகச் சென்றதே ஆகும். இப்பகுதிகளில் இயற்கை யின் கொடுமையை எதிர்த்துப் போராடி, கூடாரங்கள் அடித்துத் தங்கியிருந்து தொழிலாளர்கள்,கால்வாய் அமைப்
பில் ஈடுபட்டனர். .
மணற் புயல்கள் ஒருபுறம், தலையை எரித்துத் தள்ளும் சூரியன் மறுபுறம். மணற்றரையின் கதகதக்கும் 75_பாகை சென்டிகிரேட் வெப்பநில்ை இன்னெரு புறம். இத்தனை சித்திரவதைகளையும் தாங்கிக்கொண்டு, கருமமே கண்ணுயி ருந்து, அமுதாரியா திசைதிருப்பலின் முதலாவது கட்டத்தை மிகக் குறுகிய காலத்தில் சாதித்தனர் சோவியத் மக்கள். அமுதாரியா திசை திருப்பலின் இரண்டாவது கட்டம் 1961ல் முடிவுற்றது. முர்காப் நீர்ச்சுனை வரைக்கும வந்தி ருந்த அமுதாரியா நீரை அங்கிருந்து ரெட்ஜன் நீர்ச்சுனை வரைக்கும் 90 மைல் தூரம் கொண்டு போய் விட்டது இக் கட்டம். *
அமுதாரியா திசை திருப்பலின் 200 மைல் நீளமான மூன்ருவது கட்டம் 1962ல் பூர்த்தியடைந்தது. ரெட்ஜன் நீர்ச் சுனைவரை வந்த அமுதாரியா நீரை துருக்மேனியத் தலை நகரான ஆஷ்காபாத்திற்குக் கொண்டுவந்தது இக்கட்டம். ஆறே ஆறு வருடங்களில் அமுதாரியா ஆறு எல்லாமாக 540 மைல் தூரம் திசை திருப்பப்பட்டது மனித வர லாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகச் சிரமமான, மிகப் பாரிய, மிக நீண்ட, மிக விரைவான நதி திசைதிருப் பல் திட்டம் இதுதான்.
அமுதாரியா திசை திருப்பல் இத்தோடு முடிவடையப் போவதில்லை. அமுதாரியாவின் (மனிதனல் ஆக்கப்பட்ட) காரகும் கிளைய்ை காஸ்பியன். கடலுக்கே கொண்டுசெல்ல' சோவியத் அரசு தீர்மானித்துள்ளது.இது நிறைவேற்றப்படும் போது துருக்மேனியாவின் கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைவரை அமுதாரியா பாயும்.இதற்கேற்ப, அமுதாரியா திசை திருப்பலின் நான்காவது கட்டம் இப்போது நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. 1985க்குள் இக்கட்டம் பூர்த்தி யாகிவிடும். அப்போது காரகும் கால்வாயின் நீளம் 875 மைல்களாக இருக்கும்.
90

இத்தனை விஷயங்களையும் எமக்கு விளக்கிய பொறியியல் புணர் மாமிதோன் கஹாலிக்கு நன்றி தெரிவித்துவிட்டு,
ஆஷ்காபாத்திற்கு மாஸ்கோவிலிருந்து நாம் விமான மார்க்கமாக வந்தபோது, பரந்த பாலைவனத்தில் வெள்ளிக்கோடு போல் பளிச்சிட்ட காரகும் கால்வாய்
9.

Page 53
காரகும் பாலைவனத்துக்கு உயிர் கொண்டுவந்த கால்வாயை நேரில் காணப் புறப்பட்டோம்.
ஆஷ்காபாத்திற்கு மாஸ்கோவிலிருந்து நாம் விமான மார்க்கமாக வந்தபோது, பரந்த பாலைவனத்தில் வெள்ளிக் கோடுபோல் பளிச்சிட்ட இக்கால்வாயை வானிலிருந்து பார்த்த காட்சி என் மனத் திரையில் மீண்டும் ஒடத் தொடங்கியது.
கால்வாயின் பல்வேறு பகுதிகளை அருகிலிருந்து பார்வை யிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
கால்வாயின் வழி நெடுக அதன் இரு புறங்களிலும் கூட் டுப் பண்ணைகளும், புதிய கிராமங்களும் தழைத்தெழுவதைக் கண்டோம். கொடிய வனந்தரத்தின் நடுவே, கால்வாயின் இரு புறங்களிலும் பசுமையின் வர்ண ஜாலத்தைக் கண் குளிரக் கண்டோம் .
காரகும் கால்வாய் எல்லாமாக 11,25,000 ஏக்கர் பாலை நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவந்துள்ளது. கால்வா யின் நான்காவது கட்டமும் பூர்த்தியாகும்போது, இது 25 இலட்சம் ஏக்கராக அதிகரிக்குமாம்.
அமுதாரியாவைத் திசை திருப்பிய இடத்தில் உள்ள அணைக்கட்டின் வாயினுடாக, ஒவ்வொரு செக்கனுக்கும் 84,000 கலன் தண்ணிர் பாலைவனத்தைப் பசுமையாக்கச் சூளுரைத்துப் பாய்கிறது.
காரகும் கால்வாயினுடாகச் சிறு கப்பல்கள் போய் வருகின்றன.
98
 

110 யார் குறுக்களவு உடைய காரகும் கால்வாயில் 300 மைல் தூரத்திற்குக் கப்பற் போக்குவரத்து நடை பெறுகிறது. சிறு கப்பல்கள் கால்வாயினுடாகப் போய் வருகின்றன.
அமுதாரியா திசை திருப்பலின் நான்காவது கட்டத் தோடு, ஏற்கனவே உள்ள கால்வாயின் சில பகுதிகளின் அகல மும் ஆழமும் மேலும் பெருப்பிக்கப்படட உள்ளன. இதன் விளைவாக, 1980ல், ஆஷ்காபாத் உலகின் முக்கிய ஆற்றுத் துறைமுகங்களுள் ஒன்ருக மாறும் என்று திட்டமிடப்பட் டுள்ளது.
காரகும் கால்வாயின் முதலாவது கட்ட வேலைகள் 1956ல் ஆரம்பமாயின. அதன் மூன்ருவது கட்ட வேலைகள் 1962ல் பூர்த்தியாயின. இத்தனையையும் கட்டி முடிப்பதற்கு ஆன முழுச் செலவு, கால்வாய் ஏற்படுத்தித் தந்த விவசாய உற் பத்திமூலம் 1964 இலேயே மீளப் பெறப்பட்டுவிடடதாம். 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதிவரை கால்வாய் பெற்றுத்தந்த நிகர லாபம் 700 கோடி ரூபாய்கள்!
காரகும் கால்வாயின் நீரைத் தேக்கி வைக்க, கால்வா யில் நான்கு இடங்களில் பிரமாண்டமான ஏரிகளை அமை துள்ளனர். இவற்றில் ஒன்றை நாம் பார்வையிட்டோம்
உலகின் மிகப் பெரிய நதி திசை திருப்பலைச் சாதித்த பொறியியல் நிபுணர்களுக்கு லெனின் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது சோவியத் அரசு.
தலைமுறை தலைமுறையாகத் தம் மனதில் வாழ்ந்து வந்த இலட்சியத்தைச் செயலுருவில் கொண்டுவந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்குமுகமாக, காரகும் கால்வாய்க்கு அமரர் லெனினின் நாமத்தைச் சூட்டியுள்ள் னர் துருக்மேனிய மக்கள்.
உலக விவசாயப் பொறியியல் வரலாற்றில் இணையற்ற ஒரு சாதனையான காரகும் கால்வாய் ஆறே வருடங்களில் கடடி முடிக்கப்பட்டதன் இரகசியம் என்ன தெரியுமா? இத்திட்டத்தை துருக்மேனியரின் இலட்சியமென்று கொள் ளாது, சோவியத் நாட்டின் இலட்சியம் என்று கருதி முழுச் சோவியத் சமுதாயமும் இதில் ஈடுபட்டதுதான்; சோவியத் நாடெங்கணும் உள்ள 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கால்வாய் நிர்மாணத்திற்கு இயந்திரங்களையும் உபகரணங் களையும், கட்டடப் பொருள்களையும் அனுப்பி வைத்தது தான்; 36க்கும் மேற்பட்ட சோவியத் தேசிய இனத்தவர் கள் காரகும் கால்வாய் நிர்மாணத்திற்குத் தமது உடலு ழைப்பை ஈந்திட முன்வந்தமைதான் ஒரு சோஷலிஸ் சமுதாயத்தின் இணையற்ற சகோதரத்துவ மனப்பான்மை யின் செயற்பாடுதான். 9
3

Page 54
12 பாலைவனத்தில் சோலைவனம்
உலகின் இரண்டாவது பெரிய பாலைவனமான கார கும் பாலைவனத்தைத் தனது நிலப்பரப்பில் 99 சதவீதமாகக் கொண்டது துருக்மேனியக் குடியரசு.
இப்பாலைவனத்தைப் பசுஞ் சோலை ஆக்கிவிட அதனூடே மனிதனல் அமைக்கப்பட்ட 540 மைல் நீள காரகும் கால்வாயில் அமுதாரியா நதியின் நீர் பாய்கிறது.
இதன் விளைவாக, இன்று துருக்மேனியக் குடியரசில் 327 கூட்டுப் பண்ணைகளும், 56 அரச பண்ணைகளும் தோன்றி யுள்ளன.
சோஷலிஸ் சமூக அமைப்பின் தனிச் சிறப்புமிக்க ஓர் அங்கம்தான் கூட்டுப் பண்ணைகள் ஆகும்.
சோவியத்தின் விவசாயக் கூடடுப் பண்ணைகளைப் பற்றி நிறையப் படித்தும் கேள்விப் பட்டும் இருந்த எனக்கு, அத்த கைய ஒரு கூட்டுப் பண்ணையை நேரில் பார்வையிடும் வாய்ப்பு துருக்மேனியாவில் கிட்டியபோது ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லுந்தரமுடையதன்று.
'ஆஷ்காபாத் மாவட்டத்தின் சோஷலிஸம்’-
இதுதான் நாம் விஜயம் செய்த கூட்டுப் பண்ணையின் பெயர். துருக்மேனியாவில் உள்ள மிகப் பெரிய கூட்டுப் பண்ணைகளில் இதுவும் ஒன்று.
ஏறத்தாழ 1 ; கோடி ஏக்கர் பரப்பளவு உடையது இந் தக் கூட்டுப்பண் 26ன. மலைப் பகுதிகளில் உள்ள நீர் வள முள்ள தாழ்நிலங்களையும், பாலைவனங்களில் உள்ள பசும் புல் நிலங்களையும் உள்ளடக்கியது இந்தப்பரப்பளவு. 5,000 மக்களைக் கொண்டது இக்கூட்டுப் பண்ணே. Sw
இக்கூட்டுப்ண்னையின் தலைவர் எம்மை எதிர்கொண் டழைத்துச்சென் ருர்,
94

டெலிவிஷன் போன்ற நவீன வசதிகளுடன் கூடியிருந்த அவரது அறையிலே எமக்கு மிகச் சிறப்பான ஒரு விருந்துப சாரம் அளிக்கப்பட்டது.
விருந்தின்போது அவரைச் சரமாரியாகக் கேள்விகளால் துளைத்து அக்கூட்டுப்பண்னை பற்றிய பல தகவல்களை நான் சேகரித்துக் கொண்டேன். மிக்க பொறுமையுடனும், விளக் கத்துடனும் எனது கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். வயிற்றுக்கினிய விருந்து படைத்த அவரது பதில்கள் செவிக்கினிய விருந்தாகவும் அமையத் தவறவில்லை.
அந்தக் கூட்டுப் பண்ணையில் 1,00,000 கோழிகள் - வாத்துக்கள் - தாராக்களும், 3,000 பன்றிகளும், 1,500 ஆடு மாடுகளும், இவற்றைவிட, குதிரைகள், ஒட்டகங் களும் கூட வளர்க்கப்படுகின்றனவாம்.
ጎmሯ::x xxx:--
பாலைவனம் சோலைவனமாகிய கதையைக் கூறும் ஒரு ஆஷ்காபாத் கூட்டுப் பண்ணை. கூட்டுப் பண்ணையின் 1974க்கான உற்பத்தி விவரங் கள்-17,000 தொன் காய்கறி வகைகள், 2,500 தொன் கோதுமை, 3,000 தொன் கொடி முந்திரி, 2,000 தொன் தகரத்திலடைத்த காய்கறிவன்ககள் (பனிகால உபயோகத்திற்
「g.5

Page 55
காக), 11,000 தொன் புல் (கால்நடைகளுக்காக), 700 தொன் பால், 700 தொன் இறைச்சி, 80 தொன் செம்மறி ஆட்டு உரோமம்.
இந்தக் கூட்டுப்பண்ணை ஆண்டுதோறும் ஆறு கோடி ரூபாவை நிகர லாபமாகப் பெறுகிறதாம்.
இக்கூட்டுப் பண்ணை இயங்குகின்ற முறையைப் பற்றியும் நான் விசாரித்தறிந்தேன்.
கூட்டுப்பண்ணை அமைந்துள்ள நிலம் அரசாங்கத்துக்குச் சொந்தமானது. கூட்டுப் பண்ணையின் சொத்துக்களான கட்டடங்கள், இயந்திரங்கள், கால்நடைகள், உற்பத்திப் பொருள்கள் முதலியன அப்பண்ணையில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் 5,000 பேருக்கும் சொந்தமானவை யாகும். அவர்களது உழைப்பின் பலன்களுக்கு அவர்களே முழு உரிமையாளர்களும் ஆவார்கள்.
கூட்டுறவுப் பண்ணையை நிர்வகிக்கும் உயர் அதிகாரம்
தேர்ந்தெடுக்கிருர்கள்,
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை, கூட்டுப் பண்ணை யிலுள்ள 5,000 விவசாயிகளும் கூடி, 11 பேரைக் கொண்ட நிர்வாக சபையொன்றை வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். நிர்வாக சபை கூடி அதன் தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்கிறது.
கூட்டுப் பண்ணையின் நிர்வாகம், அது தொழிற்படும் முறைகள் பற்றிய சகல விவரங்களுக்கும் இந்த நிர்வாக சபையே பொறுப்பாயுள்ளது. இதற்காக நிர்வாக சபை அடிக்கடி கூடுகிறது.
இதைவிட, ஆண்டிற்கு இரு முறையாவது நிர்வாக சபையி னர் கூட்டுப்பண்ணையின் சகல உறுப்பினர்களதும் கூட்டங் களை நடத்தி, கூட்டுறவுப் பண்ணையின் நடவடிக்கைகள், முன்னேற்றம் என்பன பற்றி அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்த அறிக்கைகளைப் பற்றி விவாதம் நடைபெறும். தேவை ஏற்படின், புதிய ஆலோசனைகள் சேர்த்துக் கொள்ளப்படும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிர்வாக சபைத் தெரிவு நடைபெற்றபோதிலும், தகுதியற்றவர் என்று காணும் ஒரு நிர்வாக சபை உறுப்பினரை எந்த வேளையிலும் ஓர் அவசரக் கூடடத்தைக் கூட்டி, அகற்றும் உரிமை பொது உறுப்பினர்களுக்கு உண்டு.
கூட்டுப் பண்ணைகளுக்கு நவீன விவசாய உபகரணங்களை யும், இரசாயன உரப் பொருட்களையும் அரசு இலவசமாகச்
96

கொடுத்துதவுகிறது. அவசியமேற்பட்டபோது, விதைகள், வாங்குவதற்குக் கடனும், வங்கி மூலம் கடனுதவிகளும் கூட அளிக்கிறது.
இது மட்டுமல்ல, விவசாயத் துறையில் உயர் கல்வி கற்ற நிபுணர்களையும், மிருக வைத்தியர்களையும் கூட அரசு இல வசமாகப் பயிற்றுவித்து, கூட்டுப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கிறது. துருக்மேனியாவில் இன்று உள்ள அரச, கூட்டுப் பண்ணைகளில் மட்டும் இத்தகைய நிபுணர்கள் 7,000 பேர் பணியாற்றி வருகிருர்கள்.
நாட்டின் சனத்தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இவ்வளவு பெருந்தொகையான விவசாய நிபுணர்கள் இருப் பது உலகில் சோவியத் நாட்டிலேயே ஆகும். இத்தொகை யில் அமெரிக்காவைக்கூட சோவியத்நாடு மிஞ்சிவிட்டது.
ஆஷ்காபாத்திலுள்ள விவசாய நிறுவனத்தில் துருக்மேனி யாவுக்கு வேண்டிய நிபுணர்கள் பயிற்றுவிக்க்ப்படுகிருர்கள். இங்கு கல்வி கற்பவர்களில் 90 சதவீதமானேர் துருக்மேனி யக் கிராமங்களில் இருந்து வருகிருர்களாம். இவர்கள் தமது கல்வியின் முடிவி ல், தத்தமது கிராமங்களில் உள்ள கூட்டுப் பண்6ை:னகளுக்குத் திரும்பிவிடுகிருர்களாம்.
சோவியத் அரசு முழு நாட்டிற்குமென வகுக்கும் ஐந் தாண்டுத் திட்டத்தில் நாடடின் விவசாய இலக்குகள்வரை யறுக்கப்படுகின்றன. இதில், ஒவ்வொரு குடியரசும் ஈட்ட வேண்டிய உற்பத்திஇலக்குகளும் வரையறுக்கப்படுகின்றன. இதையடுத்து குடியரசுகள் மட்டத்தில், ஒவ்வொருகுடி யரசிலுமுள்ள வெவ்வேறு அரச கூட்டு பண்ணைகளுக்கும் உற்பத்தி இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ܂ ܘܗ இவ்வாறே, ஒவ்வொரு பண்ணைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு உரிய இலக்கும், ஒவ்வோர் ஆண்டுக்கும் உரிய இலக்கும் நிர்ணயிக்கப்படுகின்றன. என்னென்ன விவசாயப் பொருள் கள் என்னென்ன அளவுகளில் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்கான உற்பத்தி இலக்குத் திட்டங்கள் ஒவ்வொரு பண்ணைக்கும் உண்டு.
உற்பத்தி இலக்குத் திட்டங்க% வழிகாட்டியாகக் கொண்டு ஒவ்வொரு 'பண் லைனயும் விவசாய உற்பத்தியில் ஈடுபடுகிறது. தமது உற்பத்திப் பொருள்களைக் கூட்டுப் பண்ணைகள் அரசாங்கத்திற்கு விற்கின்றன. இலக்கிற்கு மேலாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அதற்கும் மேலதிகப் பணம் கொடுத்து அரசாங்கம் விலைக்கு வாங்குகிறது. என வே, உற்பத்தி மேலதிகமாக அமைந்தாலும் கூட, அதனைச்
97.

Page 56
சந்தைப்படுத்துவது எப்படி என்ற கவலை பண்ணைகளுக்கு இல்லவே இல்லை. அரசுக்கு விற்பதற்காக உற்பத்தி செய்யும் உணவுகளைவிட கூட்டுப்பண்3ைணயின் உறுப்பினர்களுக்கு உட்கொள்வதற்கு வேண்டிய உணவுகளையும் கூட்டுப் பண்ணையே உற்பத்தி செய்கிறது. தமது கூட்டுப் பண்ணையில் உற்பத்தி ஆகாத ஓர் உணவு, அருகிலுள்ள இன்னெரு கூட்டுப் பண்ணை யில் உற்பத்தியானல், தமது உற்பத்திப் பொருள்களை அப் பண்ணைக்குக் கொடுத்துப் பண்டமாற்றுச் செய்யவும் கூட்டுப் பண்ணைகளுக்கு உரிமையுண்டு.
கூட்டுப்பண்ணைகளின் நிகர லாபத்தில் 50 சதவீதம் பண்ணை உறுப்பினர்கிளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. எஞ்சிய 50 சதவீதம, கூட்டுப்பண்ணை உறுப்பினரின் கலா சார, பொழுதுபோக்கு, ஆக்க நல வேலைகளுக்குச் செல விடப்படுகிறது. கூட்டுப் பண்ணைக்கு அரசாங்கம் இலவச மாக அளிக்கும் இயந்திரங்களைவிட, மேலும் அதிக இயந் திரங்கள் வாங்க வேண்டும் என்று நிர்வாகசபை தீர்மானித் தால், அச்செலவுக்கும் பின்சொன்ன 50 சதவீதத்திலிருந்து பணம் பெறப்படுகிறது.
கூட்டுப் பண்ணை விவசாயிகளுக்கு வேதனம் வழங்கப்படு வது எவ்வாறு தெரியுமா? -
எந்த விவசாயி அதிகமாக உழைக்கிருனே அவனுக்கு அதிக வேதனம் வழங்கப்படுகிறது. S.
நிலத்தில் தனியார் சொத்துரிமை ஒழிக்கப்பட்டு, கூட்டு உரிமை என்ற நிலை ஏற்படுத்தப்பட்ட்ால், அது உழைப்ப தற்கான தூண்டுவிசையை அகற்றி விடுகிறது என்பது முதலாளித்துவ வாதிகளின் பிரசாரம். ஒவ்வொருவனும் தன்தன் நிலத்தைச் சாகுபடி செய்தால் அதனல் ஏற்படும் அதிக விளைச்சல், அதிக வருமானம் என்னும் தூண்டுவிசை அவனைக் கடுமையாக உழைக்க வைக்கிறது. பொதுச் சொத்து என்ற நிலை ஏற்பட்டால், அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலும் வருமானமும் சகலருக்கும்-கடுமையாக உழைத்தவனுக்கும் கடுமையாக உழைக்காதவனுக்கும் - ஒரே அளவில்தான் பங்கிடப்படும். இது கடுமையாக உழைக்கவேண்டும் என்ற தூண்டுவிசையை அகற்றிவிடுகிறது என்பது இவர்களது வாதம்.
இது எவ்வளவு பெரிய பொய்ப் பிரசாரம் என்பதை ஆஷ்காபாத்திலுள்ள இக்கூட்டுப்பண்ணைக்கு விஜயம் மேற் கொண்டபோது நான் உணர்ந்து கொண்டேன்.
98

நான் சென்ற கூட்டுப் பண்ணையில் விவசாயி ஒருவனின் சராசரி மாத வருமானம் 1,750 ரூபாய்களாகும். அடிப் படை மாத ஊதியம் அவ்வவ் விவசாயி புரிந்த தொழிலின் தரத்தில் தங்கியிருக்கிறது.
ஆணுலமிகவும் கடுமையாக உழைத்து மாதமொன்றுக்கு 3,000 ரூபாய் ஊதியம்பெற்ற விவசாயிகளும் அங்கு இருந்தனர். குறிப்பிடப்பட்ட இலக்கிற்கு மேல் கடுமையாக உழையாமல் மாதம் 1,000 ரூபாயோடு திருப்தியடைந்த விவசாயிகளும் அங்கு இருந்தனர். அக் கூட்டுப்பண்ணையில் மாதம் 1,000 ரூபாவே மிகக் குறைந்த தர ஊதியமாக இருந்தது. குறிக்கப்பட்ட உற்பத்தி இலக்கு எட்டப்படவில்லை என் பதற்காக எந்தவொரு விவசாயியின் ஊதியமும் வெட்டப்படு வதில்லை. ஆனல் இலக்கை மிஞ்சி உற்பத்தி ஏற்படும் போது, அத்தகைய உற்பத்திக்குப் பொறுப்பாயிருந்தோரின் ஊதி யமும் அதற்கேற்ப உயர்த்தப்படும்.
கூட்டுப்பண்ண்ை விவசாயிகளைப் பற்பல சிறு குழுக்களா கப் பிரித்து உற்பத்தியில் ஈடுபடுத்துவதன் மூலம், கடுமை யாக உழைத்தது யார், கடுமையாக உழைக்காதது யார் என்பதை விளைச்சலை அளவு கோளாகக் கொண்டு அளவிட முடியும். உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கவும் முடியும்.
ஒருவரைக் கடுமையாக உழைக்க வைக்கின்ற உந்து விசை எதுவும், இங்கு அற்றுப் போய்விடவில்லை. அதற்குப் பதிலாக, உழைப்பின் அளவிற்கும் தரத்திற்குமேற்ற ஊதி யம் என்ற தத்துவம் மிகவும் சிறப்பாக அமுல் நடத்தப்படு கிறது. ܫ மிகவும் துணுக்கமாக, குறுக்கு விசாரணை செய்வது போல் துருவித் துருவி நான் கேட்ட கேள்விகளுக்கு, முகம் சுளிக் காது பதிலளித்தார் 'ஆஷ்காபாத் மாவட்ட சோஷலிஸம்" என்ற கூட்டுப் பண்ணையின் தலைவர்.
'உங்களுக்கு இவ்வளவு தூரம் சிரமம் தந்ததற்கு மன் னிக்கவேண்டும்' என்று இழுத்தேன்.
'இல்லை. . . இல்லை. . . எங்கள் கூட்டுப் பண்ணை பற்றி அறிந்து கொள்ள நீங்கள் காட்டிய ஆவல் எனக்குப் பெரும் மகிழ்ச்சியையும உற்சாகத்தையும் தருகிறது," என் ருர் அவர்,
"எங்கள் கூட்டுப்பண்ணைத் தலைவர் கிழக்குநாட்டு மக்க ளைப் பெரிதும் நேசிப்பவர். நீங்கள் இவ்வளவு கேள்விகளைக் கேட்டது அவருக்குத் தலைகால் தெரியாத மகிழ்ச்சியைத்
99

Page 57
தான் ஏற்படுத்தியிருக்கும். மேற்கு நாடுகள் சிலவற்றிற்கு விஜயம் செய்யும் படி அழைப்புகள் இவருக்கு வந்தன. அவற்றையெல்லாம் தமக்கு நேரமில்லை என்று சொல்லி இவர் நிராகரித்துவிட்டார். ஆனல் சென்ற வருடம் இந்தி யாவிற்கு வருமாறு ஒர் அழைப்பு வந்தது. மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக் கொண்டல்லவா இந்தியா போய் வந் தார்!’ என்று சொன்னர் எம்முடன் கூட வந்திருந்த சாமிதோவ் ஜோரா (அயல் நாடுகளுடன் நட்புறவு, கலாசாரத் தொடர்புகளுக்கான துருக்மேனிய சம்மேளனத் தின் துணைத் தலைவர் ).
கூட்டுப் பண்ணையைச் சுற்றிப் பார்ப்பதற்கு எழுந்தோம். பண் 23ணத் தலைவர் ஜீப் வண்டியொன்றில் எம்மை அழைத் துச் சென்ருர்,
ஒரு காலத்தில் மணற்புயல் வீசி, நிலம் வெடித்துக் காய்ந்து கொதித்துக் கிடந்த காரகும் பாலைவனத்தில், இன்று செழித்து வளர்ந்து, பூத்துக் குலுங்கி, கதிர்முற்றிப் பசுமை பரப்பிநின்ற மரஞ் செடி கொடிகளைக் கண்டோம்.
கோதுமை வயல்கள் ஒரு புறம். முலாம்பழம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, வெள்ளரி, மிளகு, முள்ளங்கி, தக்காளி போன்ற மரக்கறித் தோட்டங் கள் மறுபுறம் .
கொடிமுந்திரி, ஆப்பிள், வாதுமை, செறி, பீச், பெயர்ஸ், பிளம்ஸ் போன்ற பழத் தோட்டங்கள் இன்னெரு புறம், கோழிகள், வாத்துக்கள், மாடுகள், குதிரைகள், ஒட்ட கங்கள் போன்ற விலங்கினப் பண்ணைகள் வேருெரு புறம். பாலைநிலம் பசுஞ்சோலையாக மாறிய மகத்துவம் கண் டோம்.
கொடிய கானலின் 'தலைவிதி"யை அடியோடு மாற்றி யெழுதி, இயற்கையை வென்ற மனிதனின் சாதனையைக் கண்டோம்.
உலகின் முதலாவது சோஷலிஸ் சமுதாயத்தை மலர வைத்த லெனினின் கனவுகளை, கொள்கைகளைச் செயல் வடிவில் கண்டோம் .
அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியை அடுத்து, சோவியத் நாட்டில் அவசாய நிலங்களில் சோஷலிஸச் சொத்துரிமை முறை கொண்டுவரப்பட்ட முறையே அலாதியானது.
விவசாய நிலங்கள் அனைத்தையும் தேசியமயமாக்கி, அரச சொத்தாக மாற்ற லெனின் விரும்பவில்லை.
00

ஏன் தெரியுமா? sm சின்னஞ்சிறு துண்டுக் காணிகளுக்கு உரிமையாளனக் இருந்த குடியானவ விவசாயிகளைச் சுரண்டும் வர்க்கம் என்ற பிரிவினுள் சேர்க்க முடியாது. அவன் தன் நிலத்திற்குச் சொந்தக்காரன் தான். ஆனல் அந்நிலத்தில் மெய்வருந்த, வியர்வை சிந்த உழைப்பவனும் அவனே. விதை விதைத்து அறுவடை செய்பவனும் அவனே. அவனது ஜீவனுேபாயத் திற்கு இந்த உழைப்புத்தான் வழி வகுக்கிறது.
எனவே பெரிய முதலாளிகளுடைய, நிலப்பிரபுக்களுடைய சொத்துக்களைச் சுவீகரித்தது போல் ஏழைவிவசாயியினுடைய சொத்துக்களைப் பறிக்க முடியாது; பறிக்கவும் கூடாது. மேலும், தனது சிறிய காணித்துண்டின் மீது ஒர் ஏழை விவசாயி வைத்திருக்கும் பாசத்தையும் மறக்க முடியாது.
ஆனல், சிறுநிலச் சொந்தக்காரக் குடியானவர்களும், தமக்கும் நிலம் கிடைக்கும், தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சோஷலிஸ்ப் புரட்சியில் ஈடுபAடுருர்கள். எனவே, சோஷலிஸப் புரட்சி யின் போது இவர்களது நம்பிக்கையைப் புறக்கணிக்க முடி Η Πέ5ι &
அக்டோபர் புரட்சியை அடுத்து, பெருநிலச் சொந்தக் காரர்களினதும் முதலாளிகளினதும் நிலங்களில் பெரும் பங்கு, நிலத்தை உழுபவர்களுக்கு-அதாவது நிலமற்ற பண்ணைத் தொழிலாளிகளுக்கும் வறிய, மத்தியதரக் குடி யானவர்களுக்கும்-பிரித்து வழங்கப்பட்டது.
எனவே, கிராமப் புறங்களில் சோஷலிஸப் புனர்நிர் மாணம் செய்வதற்குக் கூட்டுறவு முறையில் விவசாயம் மேற் கொள்வதே ஒரே வழியாகும். இந்த வழியே சோவியத் நாட்டில் கையாளப்பட்டது. சிறுநிலச் சொந்தக்கார விவசாயிகள் பெரிய கூட்டுறவுப் பண்ணைகளாக இயங்க, தாமாகவே முன்வந்து கூட்டுச் சேர்ந்தனர். .
சோவியத் நாட்டிலும், உலகின் இதர சோஷலிஸ் நாடு களிலும் மூன்றுவிதமான விவசாயக் கூட்டுறவு முறைகள் நிலவுகின்றன.
1. கூட்டு விவசாயச் சங்கங்கள். இது மிகவும் எளிதான ஒரு கூட்டுறவு அமைப்பு. நிலமும் விவசாயக் கருவிகளும் அவரவருக்குச் சொந்தமாய் இருக்க, உடலுழைட்பு மட்டும் கூட்டுறவு உறுப்பினர்களின் பொதுநிதி ஆக்கப்படுகிறது. 2. நிலம் அவரவருக்குச் சொந்தமாய் இருக்க, விவ சாயக் கருவிகளும் உடலுழைப்பும் கூட்டுறவு உறுப்பினர் களின் பொதுநிதி ஆக்கப்படுகின்றன. இத்தகைய
0.

Page 58
கூட்டுறவு முயற்சிகளில், ஊதியம் பெரும்பாலும் உழைப்பின் அளவை ஒட்டியே வழங்கப்படுகிறது. சில அமைப்புக்களில் கூட்டுறவு உறுப்பினரின் நிலத்தின் பரப்பளவிற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதும் உண்டு.
3. நிலம், விவசாயக்கருவிகள், உழைப்பு ஆகிய மூன்று அம்சங்களும் கூட்டுறவு உறுப்பினர்களின் பொதுநிதியாக் கப்பட்ட அமைப்பு. ஊதியம் உழைப்பின் அளவை ஒட்டியே வழங்கப்படுகிறது. கூட்டுறவு முயற்சியின் மிகச் சிறந்த அமைப்புத்தான் இத்தகைய கூட்டுப் பண்ணைகள்.
தனி நிலங்களைப் பெற்ற சோவியத் விவசாயிகள் ஏறத் தாழ அனைவரும், கடைசியாகக் கூறிய ரகக் கூட்டுப் பண்ணை 'களில் எதுவித நிர்ப்பந்தமுமின்றித் தாமாகவே இன்று
கூடடுச் சேர்ந்துள்ளனர்.
இதன்மூலம், சோவியத்தில் விவசாயத் துறையில், தனி யார் சொத்துரிமை படிப்படியாக அகற்றப்பட்டு, மிக உயர்ந்த சமூகநீதியான சோஷலிஸ் சொத்துரிமை முறை நிலைநாட்டப் படடுள்ளது. இம் முறை, ஒருவரது உழைப்பை இன்னுெரு வர் சுரண்டிவாழும் அநியாயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டது.
சோவியத் நாட்டில் கூட்டுப் பண்ணைகளுடன் அரசாங்கப் பண்ணைகளும் உள்ளன. இவற்றின் நிலங்கள், விவசாயக் கருவிகள் என்பன அரசாங்கத்திற்கு-அதாவது முழு நாட் டிற்கும்-உரிமையானவையாகும். தொழிற்சாலைகளில் வேலை செய்வதுபோல, விவசாயிகள் அரசாங்கப்பண்ணை களில் வந்து வேலை செய்கின்றனர். அரசாங்கப் பண்ணை கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒருவகை உணவுப் பொருளை அல்லது பயிரை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துவன வாகும.
கூட்டுப் பண்ணைக் குடியானவர்கள், அரசுப் பண்ணைத் தொழிலாளர்களுக்குச் சொந்த உபயோகத்துக்காகக் கொல்லை நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள், பால், முட்டைகள் முதலியன வும் நாட்டின் மொத்த உற்பத்தியில் கணிசமான பங்காகும். குடும்பக் கொல்லைகளில் உற்பத்தியாகும் இப்பண்டங்களை அக்குடும்பத்தினரே உபயோகிக்கின்றனர். எஞ்சியவை, சுயேச்சையாகச் சந்தைகளிலோ அல்லது பண்ட நுகர்வோர் கூட்டுறவு ஸ்தாபனமான 'ஸென்த் ரோஸோயுஸ்" மூலமோ விற்கப்படுகின்றன.
102

நீான் சென்ற ஆஷ்காபாத் கூட்டுறவுப் பண்ணையில் 20 டாக்டர்களைக் கொண்ட ஒரு சிறிய ஆஸ்பத்திரி, இரு கல் லுரரிகள், ஒரு பாலர் பாடசாலை என்பனவும் இருந்தன. சோவியத் நாட்டுக்கான கூட்டுறவு விவசாய முறையை வகுத்தவர் லெனின்.
இதன் விளைவாக-கிராமப் புறங்களில் சோஷலிஸப் புனர் ர்மாணம் வெற்றிகரமாகவும் படிப்படியாகவும் நடந்து முடிந்துள்ளது; கூட்டுறவு முறைகள் மிகவும் எளிய கட்டங் களில் ஆரம்பித்து, இன்று உயரிய, சீரியமட்டங்களை அடை துள்ளன; சொந்த நலன்களையும் பொது நலன்களையும் இணைத்து, கூட்டுறவு விவசாய நிர்வாகத்தில் உண்மையான ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது; தொழிலாளர்களைத் தலைமையாகக் கொண்டுள்ள அரசு, கூட்டுப் பண்ணைகளுக்கு நல்கும் இயந்திர, இரசாயன உர உதவிகள், தொழிலாளர் வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள இணைப்பையும் சகோதரத்துவத்தையும் மேலும் உறுதிப் படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
03

Page 59
13 தொழில் துறையின் விழுமிய சிறப்பு
முகல மக்களுக்கும் ஏராளமான பொருள்முதல்வாதி, கலாசார செல்வங்களைப் படைத்தளிப்பதே சோஷலிஸ் உற்பத்தி முறையின் உன்னத இலட்சியமாகும். இதற்கு நேர்மாருக, உற்பத்திக்கு உடலுழைப்பை அளிப்ப வர்கள் எக்கேடுகெட்டாலென்ன, அவர்களது உழைப்பைச் சுரண்டி, அந்த உழைப்பின் பலாபலன் களை உற்பத்திச் சாத னங்களின் உரிமையாளர்களே நுகர்ந்து, இயன்றமட்டும் தமது இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதே ஒரு முத லாளித்துவ அமைப்பின்கீழ் நிலவும் உற்பத்தி முறைக் கொள்கையாகும்.
சோவியத் யூனியனில், ஒருமுகப்பபடுத்தப்பட்ட அரசாங் கத் திட்டத்திற்கேற்ப, சோவியத் பொருளாதாரம் வளர்ச்சி யடைந்து வருகிறது. சோவியத்தின் பொருளாதாரம், அதன் பொருளாதார நிர்வாகத்தின் சோஷலிஸ் முறையை யும், அதன் உற்பத்திச் சாதனங்கள், இயற்கை மூல வளங்களின் பொதுவுடைமை முறையையும் அடிப்படை யாகக் கொண்டது.
இது தொழில் துறையை மேலும் அறிவார்ந்த முறையில் ஒருங்கமைத்து, தேசிய செல்வம் அதிகரிக்கவும், அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும், கலாசாரத் தரமும் உயர் வடையவும் வழிவகுக்கிறது. தொழில் துறையில் திட்ட மிடாத, தான் தோன்றித் தனமான உற்பத்தியின் விளை வுகளால் ஏற்படும் தீமையிலிருந்து சமுதாயத்தை மீட்க வழிகோலுகிறது. பொருளாதார நெருக்கடிகளையும் பின் னடைவுகளையும் தவிர்க்கிறது. பொருளாதாரத்தின் நிலை யான வளர்சசிக்கு உறுது6ைல அளிக்கிறது. # மார்க்ஸிஸ - லெனினிஸ அடிப்படையில் வகுக்கப்பட்ட சோவியத் தொழில் துறையின் மூலாதாரக் குணம்சங்களைப் பற்றப் படித்தும், கேட்டும் அறிந்திருந்த எனக்கு இந்த அறிவை மேலும் விருத்தி செய்து கொள்ளவும், இக்கொள்
104

கிைகளின் செயற்பாட்டை நேரில் கண்டுகொள்ளவும் சோவி யத் நாட்டு விஜயம் வழிவகுத்தது.
மாஸ்கோவிலும், துருக்மேனியக் குடியரசிலும் சில தொழிற் சாலைகளுக்குச் சென்று பார்வையிட எமக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இவற்றுள் குறிப்பிடத்தக்கவை, துருக்மேனியத் தலைநக ரான ஆஷ்காபாத்தில் உள்ள கண்ணுடித் தொழிற்சாலையும் மாஸ்கோவின் சுற்ருடலில் உள்ள ஒரு டயர்த் தொழிற் சாலையுமாகும்.
ஆஷ்காபாத்திலுள்ள கண்ணுடித் தொழிற்சாலை மத்திய ஆசியாவிலுள்ள மிகப் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்ற (5LD.
இதன் அதிபர் திரு. கானிஸ் யூறி போறிஸோவிச் எம்மை எதிர்கொண்டழைத்துச் சென்று தொழிற்சாலையைச் சுற் றிக் காடடினர்.
யூறி போறிஸோவிச் தொழில் நுட்ப விஞ்ஞானத்தில் 'கண்டிடேட்' பட்டம் பெற்ற ஒரு வஞ்ஞானியாவார். சோவியத்தில் "கண்டிடேட்” பட்டமெனப்படுவது, எமது நாட்டில் படடதாரியான ஒருவர் பட்டதாரி மேற்படிப்பின் பின்ன்ர் பெறும் 'கலாநிதி" பட்டத்திற்கு ஒப்பானது. கண்ணுடி உற்பத்தித் துறையைப் பற்றித் தமது கலாநிதிப் படிப்பில் கரைத்துக் குடித்தவர் அவர்.
கண்ணுடித் தொழிற்சாலை அதிபராக, அத்துறையில் உயர் தேர்ச்சியும் தகைமையும் பெற்ற ஒரு நிபுணர் இருப்பது என்ன பொருத்தம் என்று என் மனம் எண்ணி மகிழ்ந்தது. கண்ணுடித் தொழிற்சாலையை மட்டுமல்ல, சோவியத்தின் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அவ்வத் துறை களில் நிபுண்த்துவம் பெற்றவர்களே தலைமை வகிப்பதைக் கண்டேன்.
\
உதாரணமாக-மாஸ்கோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்கிலிபோகோவ்ஸ்கி ஞாபகார்த்த விபத்து ச் சேவை ஆஸ் பத்திரிக்கு நான் சென்றேன். மாண்டவர்களின் இரத் தத்தை உயிருள்ளோருக்கு மாற்றுப் பிரயோகம் செய்யும் முறையினே உலகிற்கு முதன் முதலில் அறிமுகஞ் செய்து வைத்த மருத்துவ நிலையம் தான் இது.
சோவியத் நாட்டினதும் உலகினதும் தலைசிறந்த அறு வைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் போறிஸ் பெட்ரோவ்ஸ்கி காலை வேளைகளில் இங்கு அறுவைச் சிகிச்சை செய்கின்ருர், 05
l :

Page 60
டாக்டர் போறிஸ் பெட்ரொவ்ஸ்கி யார் தேரியுமா? இவர்தான் சோவியத் யூனியனின் சுகாதார அமைச்சர். இவற்றையெல்லாம் பார்த்தபோதுஎனது சிந்தனைப் பறவை, உலகின் மிக வேகமான சோவி யத் விமானங்களோடு போட்டி போட்டுக்கொண்டு எனது தாயகத்தை நோக்கிப் பறந்தது.
ஒவ்வொரு துறைக்கும் அவ்வத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தலைமை வகிக்கும் அந்த நல்ல முறை எமது தாயகத்தில் எம் ஆயுட்காலத்தில் வருமா? வரவைக்க முடி யுமா? இக்கேள்வி என் மனதில் எதிரொலித்தவாறே ஆஷ்கா பாத் கண்ணுடித் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்தேன். யூறி போறிஸோவிச்சுடன் அத்தொழிற்சாலையின் தொழிற் சங்கத் தலைவர்களும் எமக்குத் தொழிற்சாலையைச் சுற்றிக் காட்ட வந்தனர். அவர்களையும் வரும்ாறு போறிஸோவிச் அழைப்பு அனுப்பியிருந்தார்.
'நல்ல நாளில்தான் வந்திருக்கிறீர்கள். இன்று (1975, அக்டோபர் 16), இத்தொழிற்சாலையின் வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய நாள்," என்ருர் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர்.
'அப்படி என்ன விசேஷம்?" என்று கேட்டேன். "இந்தத் தொழிற்சாலைக்கான ஐந்து வருடத் திட்ட இலக்கு 2,70,00,000 ரூபா பெறுமதியான கண்ணுடிப் பொருடகள் தயாரிப்பதாகும். ஐந்து வருடங்கள் முடி வதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட இலக்கு, இன்றே எட்டப்பட்டுவிட்டதையிட்டு இங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்,' என்ருர்,
தொழிற்சங்கத் தலைவர் கூறிய இச்செய்தியும், அவர் பெருமையுடனும் உற்சாகத்துடனும் அதைக் கறிய பாங் கும் பெரிய உண்மைகள் இரண்டை எனக்கு உணர்த்தி நின்றன.
முதலாவது உண்மை, ஒரு சோஷலிஸ் சமுதாயத்தின் திட்டமிட்ட பொருளாதார முறை. நாடெங்கும் கண்ணுடி உற்பத்திக்கென ஓர் இலக்கு ஐந்தாண்டுத்திட்டத்தில் சேர்க் கப்பட்டால், இந்த இலக்கு முதலில் குடியரசுவாரியாகவும், அதன் பின் ஒவ்வொரு குடியரசிலும் உள்ள கண்ணுடித் தொழிற்சாலை வாரியாகவும் பிரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஐந்தாண்டுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு தொழிற்சாலையினதும் பங்களிப்பு நிர்ண்பிக்கப்படுகிறது.
l 06

ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் உரிய ஐந்துவருட உற்பத்தி இலக்கு, மேலும், வருடாந்த இலக்குகளாகவும், மாதாந்த இலக்குகளாகவும் கூட வகுக்கப்படுகிறது.
இவ்வாறு அடியிலிருந்து முடிவரை எல்லாமே சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடைபெறுகிறது. ஐந்தாண்டு திட்ட இலக்குகளை வகுப்பதில் தொழிற்சாலைகளில் உள்ள தொழிற் சங்கங்களும் கூடப் பெரும்பங்கு வகிக்கின்றன. ஐந்தாண் டுத்திட்டங்கள் கோபுரங்களில் கொலுவிருக்கும் உயர்மடடக் கோமான்களால், தமது வாழ்நாளில் ஒரு தொழிற்சாலை யின் உட்புறத்தைக் கண்டறியாத பிறவிகளால், கண்மூடித் தனமாக, யதார்த்தத்திற்குப் புறம்பான முறையில் நிறு வப்படும் வழக்கம் சோவியத்தில் இல்லவே இல்லை.
ஐந்தாண்டுத் திட்டத்தை செயல் ரீதியில் அமுல் நடத்து கின்ற தொழிலாளர் மட்டத்திலிருந்தே திட்ட இலக்குகள் பற்றிய ஆலோசனைகள் ஆரம்பமாகின்றன. இவ்வாறு திட்டமிடல் அடிமட்டத்திலிருந்து ஆரம்பமாகி, உயர்மட்ட பொருளாதாரவியலாளர்களிடம் செல்கிறது. இதனுல் இத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போகின்றன என்ற பேச் சுக்கே இடமில்லை. குறித்த காலத்துக்கு முன்னரேகுறி த்த *இலக்குகள் நிறைவேற்றப்படுகின்றன.
இதற்கு நேர்மாருக ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் முழு நாட்டினதும் உற்பத்தி சீராகத் திட்டமிடப்பட முடியாது. சில பொருட்கள் மேலதிகமாக உற்பத்தியாகிச் சந்தையில் குவிந்து கிடப்பதும், சில பொருட்கள் தேவைக்குக் குறைவாக உற்பத்தியாகி அருகி இருப்பதும் ஒரு முத லாளித்துவ பொருளாதார அமைப்பில் நாளாந்த நிகழ்ச்சி கள். தொழிற்சாலை முதலாளிகள் நாட்டுக்காகவா திட்ட மிடுகிருர்கள்? தமது சொந்த வருவாயை, நாடடைச் சீர் குலைத்தாவது பெருக்கவல்லவா திட்டமிடுகின்றனர்!
ஆஷ்காபாத் கண்ணுடித் தொழிற்சாலைத் தொழிற்சங்கத் தலைவரின் பேச்சிலிருந்து நான் உணர்ந்த இரண்டாவது பெரிய உண்மை, இலக்குகள் நிறைவேறும் போது தொழி லாளர் அடையும் மகிழ்ச்சியின் காரணங்கள் பற்றியது.
தமது உழைப்பின் பலாபலன்களை, அறுவடைகளைச் சுரண்டி எடுத்துச் செல்ல அங்கே ஒரு முதலாளி இல்லை என்று அத்தொழிலாளர்கள் அறிவார்கள். இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், உற்பத்தி பெருகினல், அதன் விளை வாகத் தமது நாடுமுழுவதுமே சுபீட்சமடையும், தமது நாட்டு மக்கள் அனைவரதும் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதை அவர்கள் அறிவார்கள். அது மட்டுமல்ல, தாம்
07

Page 61
எவ்வளவுக் கெவ்வளவு கடுமையாக உழைக்கிருர்களோ, அவ்வளவுக் கவ்வளவு தமது மாதாந்த ஊதியமும் அதி கரிக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
உழைப்பிற்கேற்ப ஊதியம வழங்கப்படுவது எப்படி என்று எமக்கு விளக்கும்ாறு தொழிற் சங்கத் தலைவர்களைக் கேட் டேன். அவர்கள் கூறிய பதிலிலிருந்து ஊதியம் வழங்குவ தற்கு உன்னதமான ஒரு நடைமுறை வழக்கிலிருப்பதை உணர்ந்துகொண்டேன்.
ஆஷ்காபாத் கண்ணுடித் தொழிற்சாலையில் 1,300 தொழி லாளர்கள் கடமையாற்றுகிறர்கள். இவர்களில் சரிபாதிப் பேர் பெண்கள்.
இவர்கள் 10 முதல் 20 பேரைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். 'பிரிகேட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் இக்குழுக்கள் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் ஒரு தொகுதியில் உழைப்பார்கள். இக் குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருவரதும் தொழிலின் தரத் திற்கேற்ப அவரவரது அடிப்படை மாதச் சம்ப்ளம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதை நிர்ணயிப்பதில் தொழிற் சங் கத்துக்கும் பங்கு உண்டு. w
ஒரு தொழிலாளிக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆகக் குறைந்த வேதனம், அவனது அடிப்படைச் சம்பளமாகும். எக்காரணத்தைக் கொண்டும் அடிப்படைச் சம்பளத்தைக் குறைக்க முடியாது.
ஒரு தொழிற்சாலைக்கு மாதாந்த உற்பத்தி இலக்குகள் உள்ளன என்று முன்னர் கூறினேன். அத்தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர் குழுக்களிடையே இந்த இலக்கு சமமா கப் பிரிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உற்பத்தி இலக்கு உண்டு.
எந்தெந்தக் குழுக்கள் தமது உற்பத்தி இலக்கை மிஞ்சிவிட் டன என்பது மாதந்தோறும் கணிக்கப்பட்டு, அந்தந்தக் குழுக்களுக்கு மேலதிகக் கூலி அனுமதிக்கப்படுகிறது. இந்த மேலதிகக் கூலி அக்குழுவின் தொழிலாளர் அனைவருக்கும் அவர்களது அடிப்படைச் சம்பள விகிதாசாரப்படி பிரித்து வழங்கப்படுகிறது.
எனவே உழைக்கும் அளவிற்கும், உழைப்பின் தரத்திற்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. Y
ஆஷ்காபாத் கண்ணுடித் தொழிற்சாலையில் உள்ள தொழி லாளர்களின் சராசரி மாதவருமானம் 1,890 ரூபாவாகும். ஆகக் குறைந்த சம்பளம் 840 ரூபாவாகும். மிகவும் கடு
708

மையாக உழைத்து மாதமொன்றுக்கு 4,000ரூபா உழைக் கும் தொழிலாளிகளும் உள்ளனர்.
தொழிற்சாலைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டால், கடு மையாக உழைப்பவனுக்கும், கடுமையாக உழைக்காதவ னுக்கும் கிடைப்பது ஒரே வேதனம்தான். இது கடுமையாக உழைக்க வேண்டும் என்ற தூண்டுவிசையை அகற்றிவிடு கிறது என்பது முதலாளித்துவவாதிகளின் பிரசாரம்.
இது எவ்வளவு பெரிய பொய்ப்பிரசாரம் என்பதை ஆஷ் காபாத் கண்ணுடித் தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள் நிர்ணய முறை நிரூபித்து நின்றது.
எனது சோவியத் விஜயத்தின்போது, நான் பார்வை யிட்ட தொழிற்சாலைகளுள் குறிப்பிடத்தக்க இன் ஞெரு தொழிற்சாலை, மா ஸ்கோவின் சுற்ருடலில் உள்ள ஒரு டயர்த் தொழிற்சாலையாகும்.
இலங்கையில் களனியில் நிறுவப்படடுள்ள டயர்த் தொழிற் சாலை, சோவியத் நாடு எமக்களித்த விலைமதிப்பற்ற பொரு ளாதார உதவிகளில் ஒன்ருகும் என்பதை அறியாதிார் இலர். களனியில் சோவியத் யூனியன் எமக்குக் கட்டித் தந்த டயர்த் தொழிற்சாலை, மாஸ்கோவில் நாம் விஜயம் செய்த தொழிற்சாலையின் ஒரு நகல் அமைப்புத்தான்.
மேலும், களனித் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஈழத்து நிபுணர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வியலாளர்கள் யாவரும் நாம் மாஸ்கோவில் விஜயம் செய்த தொழிற்சாலையில் பயிற்றப்படடவர்களே.
பசித்திருக்கும் ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கும் முறையைக் கற்றுக் கொடுப்பதே உயர்ந்த உதவி என்பது ஒரு சீனப் பழமொழி. அதைப்போல; இலங்கைக்கும் அதனை ஒத்த வளர்முக நாடுகளுக்கும் சோவி யத் யூனியன் அளிக்கும் தன்னலங் கருதாத அந்தரங்க சுத்தியான இது போன்ற உதவிகள், அந்நாடுகள் தமது உற் பத்தியைப் பெருக்கி, பொருளாதார சுதந்திரத்தை அடைந்து அதன் மூலம் தமது அரசியல் சுதந்திரத்தையும் சுயாதிபத்தி யத்தையும் இறைமையையும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள வழி வகுக்கிறது.
‘மூன்ருவது உலகம்' என்றும், "அணி சேரா நாடுகள்' என்றும் உலகில் இன்று 82 நாடுகளையும், மனித இனத்தில் சரி பாதிக்கு மேற்பட்டோரை குறித்து நிற்கும் இயக்கம் அதனது இன்றைய உயரிய, மதிப்பார்ந்த நிலையை எய்தியதற்கே சோவியத் யூனியனின் தலைமையிலான உலக சோஷலிஸக் குடும்பமே காரணம்.
10.

Page 62
இயற்கை வளம் பொருந்தியிருந்தும், ஏகாதிபத்தியத்தின தும் கலோனியலிஸம் - நவகலோனியலிஸத்தினதும் குறை யாடலுக்குள்ளாகி, வறுமையில் துஞ்சி, இன்று விடுதலை பெற்று நிமிர்ந்து நிற்பன இவற்றில் பல நாடுகள். இந் நாடுகள் தமது அரசியல் விடுதலையைப் பெறுவதற்கும், மேற் கொண்டு ஏகாதிபத்தியத்தினதும், நவ கலோனியலிஸத்தி னதும் சுரண்டல்களுக்கு ஆளாகாமலிருப்பதற்கும், பொரு ளாதார விருத்தியடைவதற்கும் உற்ற நண்பனுய் விளங்கி வருவது சோவியத் யூனியனின் தலைமையிலான சோஷ லிஸ்க் குடும்பம் .
இதனல் தான், உலகின் அணிசேரா நாடுகளின் இயக்கம் எகாதிபத்திய எதிர்ப்பு, நவகலோனியலிஸ் எதிர்ப்புக் கொள் கைகளை அடிப்படையாகக் கொண்டது.
மனித இனத்தின் மேம்பாட்டிற்குச் சோவியத்யூனியன் ஆற்றிவரும் உயர்ந்த நன்மைகள் பற்றிய இனிய நினைவுகள் என் உள்ளத்தில் நர்த்தனமாட, மாஸ்கோ டயர்த் தொழிற் சாலையை நான் சுற்றிப் பார்த்தேன். பொறியியல் நிபுண் ரான அதன் அதிபர் எமக்குத் தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினர்.
தொழிற்சாலையினுள் புகுந்த போது
என் மனதில் சுருக்கென்று எழுந்த கேள்வி - இன்று ஆலை விடுமுறை நாளா என்பதே.
உயர்ந்த அந்தக் கட்டடத்தினுள் எங்கு பார்த்தாலும் பாரிய இயந்திர சாதனங்கள்; தொழிற்படும் பொருள் களைக் கொண்டு செல்கின்ற இரும்புச் சங்கிலி வார்கள் (கொன்வேயர் பெல்ட்ஸ்); பல்வேறு உற்பத்திக் கட்டங் களிலுள்ள டயர்கள்.
மனித அரவத்தைக் காணுேம்.
தொழிலாளர்கள் எங்கே?
இயந்திர அறையினுள் இன்னும் சற்றுத்தூரம் சென்று இயந்திரங்களுக்கிடையே புகுந்து வெளிவந்தோம்.
இப்போது சில தொழிலாளிகளைக் காணக்கூடியதாக இருந்தது. ஆங்காங்கே உள்ள மின்விசைப் பலகைகளுக்கு முன்னுல் அமர்ந்து, 'சுவிட்சு’’களை அழுத்திக்கொண்டிருந் தனர் அவர்கள். இயந்திரங்கள் தாமாக இயங்கி, மனிதர் பலர் கூடிச் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் இலாவக மாகவும் சாதுரியமாகவும் தாமே சாதித்துக் கொண்டிருந் தன.
0.

பளிச்சென்று என் மனதில் எல்லாமே புரிந்துவிட்டன. தொழிற்சாலையில் தொழிலாளர் குறைவாக இருந்தமைக்கு விளக்கம் கிடைத்து விட்டது.
ஆம், அது பெருமளவுக்குத் தன்னியக்கத்தால் இயக்கப் படும் தொழிற்சாலை!
1970ல் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் நான் எழு திய ஒரு கட்டுரையின் சில வாசகங்கள் என் உள்ளத் திரையில் மின்னி மின்னி மறைந்தன
..'சுமார் இரண்டரை இலட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள அம்புலிக்கு மனிதரற்ற ஒரு விண்கலத்தைச் சோவி யத் நாடு அனுப்பி, அம்புலி மண்ணைத் தானகவே தரு விக்கவும், அம்புலித் தரையில் ஒரு கார் வண்டியை இறக்கி, பூமியிலிருந்து நினைத்த மாத்திரத்தே விசைகளை முடுக்கி, காரை ஒட வைத்து, விஞ்ஞான ஆராய்ச்சி செய்வித்து, ஆய்வு முடிவுகளைப் பூமிக்குத் தருவிக்கவும் உதவிய தன் னியக்கம் (AUTOMATION) சோவியத் தொழிற்சாலைகளில் இயந்திர சாதனங்களில் வியக்கத்தக்க, புரட்சிகரமான, இலாபகரமான மாறுதல்களை ஏற்படுத்தத்தான் போகிறது." என் உதடுகள் குவிகின்றன. என்னையறியாமலே அவை சீழ்க்கை ஒலி எழுப்புகின்றன.
என் புருவங்கள் உயருகின்றன. கண்கள் அகலத் திறக்கின் றன.
'தன்னியக்கத்தால் இயங்கும் தொழிற்சாலை!" வியப் புணர்ச்சியை மறைக்க என்குரல் நாண்களால் முடியவில்லை. *யேஸ், யேஸ் , 'என்று, மிகவும் உற்சாகத்துடன் கூறு கின்ருர் தொழிற்சாலை அதிபர். "உலகிலேயே மிக அதிக மான தன்னியக்கசசெயற்பாடுகளைக் கொண்ட டயர்த் தொழிற்சாலை இதுதான். இதன் சாதனங்களை நாமே புனைவரைவு செய்தோம்."
அந்தத் தொழிற்சாலையின் மிகச் சிறப்பு அம்சத்தை அவர் கூருமல் நானகவே கண்டு பிடித்துவிட்டேன் என்று அவ ருக்குப் பெருமகிழ்ச்சி.
எனது 1970-கட்டுரையின் வாசகங்களை அவருக்குக் கூறுகிறேன்.
"அப்படியா?" என்று அவர் பதில் கூறிய தொனி அவரது மகிழ்ச்சி இரட்டிப்பாகியதைக் காட்டி நின்றது.
ஒரு கம்யூனிஸ் சமுதாயத்தில், உற்பத்தித் துறையானது முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப்பட்டு, தன்னியக்கத் தால் இயங்குவதாக இருக்கும். இத்தகைய ஒரு தொழிற்
l

Page 63
சாலையில் சகல தொழில்நுட்பச் செயற்பாடுகளும் தொழி லாளியின் நேரடிப் பங்குபற்றல் இன்றியே நடைபெறும் தொழிலாளியின் பங்கு, தன்னியக்க இயந்திரங்களின் தொழிற்பாட்டை மேற்பார்வை செய்தலும், அவற்றைத் தேவைக்கேற்ப சரி செய்து கொள்ளலும், திட்டத்தை, அமைத்தலும் ஆகும்.
இது உற்பத்தித் துறையில் தொழில் ஆற்றல் திறனைப் பெருக்கி, அத்துறை வளர வழி வகுக்கிறது.
ஒரு சோஷலிஸ் சமூக அமைப்பில் இத்தகைய தன்னி யக்கத் தொழிற் சாலைகள் சிலவாகவே இருக்கின்றன. மாஸ் கோவில் நாம் கண்ட டயர்த் தொழிற்சாலை இவற்றில் ஒன்று.
ஒரு சோஷலிஸ் சமுதாயம் கம்யூனிஸ் சமுதாயமாக மாறும் போது, தொழில் உற்பத்தித் துறையின் சகல அம் சங்கிளும் பூரணமாக இயந்திரமயமாக்கப்பட்டுத் தன்னியக்க மாக்கப்படும். இயற்கையைப் பெருமளவில் வெற்றி கொண்டு, இயற்கையின் மூலங்களை, இடையருது வளரும் பரி மாணங்களுக்குக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவதற்கு, முழு நிறைவான விஞ்ஞானம்-தொழில் நுட்பத்தில் கம்யூனிஸம் தங்கியுள்ளது. இக் கட்டத்தில் திட்டமிடல் மிக மிக உயரிய மட்டங்களில் நடைபெறும் . இதன் விளைவாக, பொருள் முதல்வாதச் செல்வங்களும், இயற்கை மூலவளங் களும், மனித அறிவுசார்ந்த, மிகவும் பிரயோசனமான வழி களில் பயன்படுத்தப்படும். இவையாவும் சேர்ந்து, கம் யூனிஸ் உற்பத்தியின் இலக்கை- அதாவது, சமூகத்தில் ஒவ்வொரு மனிதனதும் இடையருது வளரும் தேவைகளுக் கும், அக்கறைகளுக்கும், சுவைகளுக்கும் ஏற்ப, அவனுக்குப் பொருள்முதல் வாத கலாசார நலன்களை வழங்கும் இல க்கை அடைய வழி வகுக்கும். −
சோவியத்தில் இன்று நிலவுவது முதிர்ச்சியுற்ற ஒரு சோஷ லிஸ் சமுதாயம். இந்தச் சமுதாயம் உலகின முதலாவது கம்யூனிஸ் சமுதாயமாக மாறுவதற்கு இன்று தயாராகி விட்டது. இதை இந்த டயர்த் தொழிற்சாலை போன்ற பல அம்சங்கள் சோவியத் விஜயத்தின் போது எனக்கு உணர்த்தி நின்றன.
இன்று சோவியத் யூனியனின் மொத்த தொழில்துறை உற்பத்தி ஐரோப்பாவில் முதலிடத்தையும், உலகில் இரண் டாவது இடத்தையும் பிடிக்கிறது. உலகின் சனத்தொகை யில் 7 சத வீதத்தைக் கொண்ட சோவியத் நாடு உலக,
113

தொழில்துறை உற்பத்தியில் ஏறத்தாழ 20 சத வீதத்தை உற்பத்தி செய்கிறது.
1913ம் ஆண்டில், ஜார்கால ரஷ்யாவின் தொழில்துறை உற்பத்தி, உலக தொழில்துறை உற்பத்தியில் 4 சத்வீதமாக இருந்தது. அக்டோபர் புரட்சியின் விளைவாக மாபெரும் தொழில்துறை மயமாக்கல் சோவியத்நாடெங்கும் ஆரம்ப மாயிற்று. அதிலும் குறிப்பாக, ஒரு சோஷலிஸ் சமுதாயத் தின் முதுகெலும்பான கனரக தொழில்துறை பெருவளர்ச்சி அடையத் தொடங்கியது. . .
"சோஷலிஸம் உருவாகக் கூடிய ஒரே ஒரு பொருள் முதல் வாதத் தளம், விவசாயத்தை மறுசீரமைக்கக்கூடிய பாரிய ரீதியிலான இயந்திரத் தொழில்துறை உற்பத்தி தான்,' என்பது மாமேதை லெனினின் கருத்தாகும்.
இதற்கமைய, சோவியத் நாடு இன்று அறுபதாண்டுக்கும் குறைவான காலத்திலேயே வல்லமை மிக்க, தொழில்துறை யில் வளர்ச்சியடைந்த ஓர் அரசாகப் பரிணமித்துவிட்டது. இக் காலகட்டத்தின் போது, ஏறத்தாழ 20 ஆண்டுகள் யுத்தங்களிலும் யுத்தத்தினல் நாசமடைந்த பொருளாதாரத் தைப் புனரமைப்பதிலும் செலவிடப்பட்டன. உலக வர லாற்றின் மிகக் கொடூரமான இரண்டாவது உலக மகா யுத்தத்தில் மிக அதிகமான சேதமடைந்தது சோவியத் நாடே. இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடிமக்களையும், தேசிய செல்வத்தில் மூன்றிலொரு பங்கையும் இழந்தது சோவியத் நாடு.
இதந்கு நேர்மாருக, அமெரிக்கா 200 ஆண்டு காலமாகத் தங்குதடையேதும் இன்றி வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 200 ஆண்டு காலமாக வட அமெரிக்க மண்ணில் எந்த வோர் எதிரிப் படைவீரனும் காலடி வைத்ததேயில்லை.
அப்படியிருந்தும் முதலாளித்துவ அமெரிக்காவின் 200 ஆண்டு காலத் தொழில்துறை வளர்ச்சியை, 40 ஆண்டு காலத்திலேயே எட்டிப்பிடித்து, அதனை மிஞ்சிவிடும் அள விற்கு சோஷலிஸ் சோவியத் நாடு இன்று வந்துவிட்டது. தேனிரும்பு, இரும்பு, உருக்கு,பெற்ருேலியம், எண்ணெய், இரசாயன உரங்கள், நிலக்கரி, சிமெந்து , டிராக்டர்கள், டீசல்-மின் ரயில் வண்டிகள், பருத்தி, கம்பளி, சணல்,
3

Page 64
மங்கனிஸ்-குரோமியம் தாதுக்கள் போன்ற உற்பத்திப் பொருள்களில் உலகில் முதலிடத்தை இன்று சோவியத் யூனியன் வகிக்கிறது.
1970 இறுதிவரையிலான சோவியத் யூனியனின் பொரு ளாதார வளர்ச்சி வீதத்தை உலக முதலாளித்துவ நாடு களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். தமது தேசிய வருவாயை இரு மடங்காக்குவதற்கு அமெரிக்காவுக்கு 20 ஆண்டுகளும், பிரிட்டனுக்கு 30 ஆண்டுகளும், மேற்கு ஜெர்மனிக்கு 15 ஆண்டுகளும் பிடித்தன. ஆனல் சோவியத் யூனியனுக்கு 10 ஆண்டுகள் மட்டுமே எடுத்தது.
தமது தொழில்துறை உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கு அமெரிக்காவுக்கு 18 ஆண்டுகளும், பிரிட்டனுக்கு 22 ஆண்டு களும், மேற்கு ஜெர்மனிக்கு 11 ஆண்டுகளும், சோவியத் யூனியனுக்கு 83 ஆண்டுகளும் பிடித்தன.
1971 - 75 காலகட்டத்தை எடுத்துப்பார்த்தால் கூட, சோவியத்தின் தொழில் துறை உற்பத்தி ஆண்டுதோறும் சராசரி 7.4 வீதம் உயர்ந்துள்ள அதே வேளையில், அமெ ரிக்காவின் தொழில் துறை உற்பத்தி சராசரி 1.2 வீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இவை முன்பே எனக்குத் தெரிந்த தகவல்களாயினும், சோவியத் தொழிற்சாலைகளையும் அவற்றின் இயக்கத்தையும் நேரில் கண்டபோது, இவை புதிய பரிமாணம் பெற்று நிற் பது போல் உணர்ந்தேன்.
மாஸ்கோ டயர்த் தொழிற்சாலை இன்று களனியில் உள்ள தொழிற்சாலையை விடப் பல்வேறு வழிகளில் வளர்ந்து விட்டது. அத் தொழிற்சாலையில் தன்னியக்க அமைப்புக் கள் நிறுவப்படடது, எமது களனித் தொழிற்சாலை நிறு வப்பட்டதன் பின்னரேயாகும்.
"எமது தொழிற்சாலையின் புதிய தன்னியக்க உத்திகளை உங்கள் நாட்டில் நிறுவ எமது நாடு தயாராயுள்ளது. இலங்கையிலுள்ள டயர்த் தொழிற்சாலையின் இரண்டாவது கட்டத்தை நிறுவுவதற்கு உங்கள் நாடு பச்சை விளக்குக் காட்டும் போது, நாம் அதனைக் கட்டித் தரத் தயாராய் உள்ளோம்,' என்ருர் டயர்த் தொழிற்சாலையின் அதிபர்.
14

சோவியத் தொழிற்சாலைகளில் நான் அவதானித்த இன் னெரு முக்கிய அம்சம், உற்பத்தி பற்றிய சகல தகவல்களும், கணக்குகளும், புள்ளி விவரங்களும் கொப்பிகளிலும் ‘பைல் களிலும்' இல்லை. அவற்றை எழுதி வைக்க இலிகிதர்களும் இல்லை. அதற்குப் பதிலாக், இத் தகவல்கள் யாவும் எண் ணற்ற கம்பியூட்டர்களின் மூளைகளில் சேகரித்து வைச்கப் பட்டுள்ளன. இது தொழிற்சாலை நிர்வாகத்தின் சிறப்புை மேலும் உயர்த்துகிறது.
இவற்றை எல்லாம் பார்த்தபோது, என் மனதில் எழுநத எண்ணம் -
அடுத்த பதினைந்து ஆண்டுகளுள் சோவியத் நாட்டின் தொழில்துறை உற்பத்தி மேலும் பன்மடங்கு பல்கிப் பெருகி, உலகின் சகல முதலாளித்துவ நாடுகளையும் மிஞ்சிக்கொண்டு, இனியொருகாலும் நெருங்க முடியாத தொலைக்குப் போய் விடும் என்பதே,

Page 65
14 சம உரிமை கண்டு
பொலிவுற்ற பெண்மை
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் து
துருக்மேனியக் கிராமமான பெஸ்மேனில் 20 வயதுப் பெண்ணுெருத்தி படுகொலை செய்யப்பட்டாள். அவளது பெயர் துர்ஸ்"ன்.
அவள் இழைத்த குற்றம் என்ன தெரியுமா? பல பெண்களுக்குக் கணவனுயிருந்த ஒரு முரடனுக்கு மனைவியாக அவள் விற்கப்பட்டிருந்தாள். அவள் இஷ் டத்திற்கு விரோதமான செயல் அது. அன்றைய துருக் மேனியாவில் நிலவிய இக் கொடிய நிலப் பிரபுத்துவ சம்பிர தாயத்தை எதிர்க்க அவள் துணிந்தாள். அவளது குரூரக் கொலைக்கு இதுதான் காரணம்.
அக்டோபர் சோஷலிஸப் புரட்சிக்கு முன்பு, ஒரு துருக் மேனியப் பெண்ணுக்குத் தான் பிறந்த நாள் முதல் இறக் கும் நாள் வரை எதுவிதமான உரிமையும் இருக்கவில்லை. பெண்ணுெருத்தியைப் பெற்றெடுத்தல் பெரியதொரு துர்ப் பாக்கியமாகக் கருதப்பட்டது. பெண் மகவொன்றைப் பெற்றெடுத்த ஒரு தாய் தனது கணவனதும் உறவினர் களதும் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே அஞ்சுவாள்அவ்வளவு குற்றவுணர்ச்சி! பெற்றேர்கள் தமக்குப் பிறக் கும் பெண குழந்தைகளை அவமதிக்கும் வகையிலான பெயர் களையே அவர்களுக்குச் சூட்டுவார்கள்.
சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகளை வீட்டு வேலைக்காரி களாகக் கணித்து, கடுமையான, கீழ்த்தரமான வேலைகளை யெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பார்கள். அவளுக்கு 12 அல்லது 13 வயது எட்டியதும், கனமான - கூம்பு வடிவான ஒரு விதத் தலை அங்கி அவளுக்கு அணிவிக்கப் படும். அவளது முகத்தையும் வாயையும் கண்களுக்குக் கீழே துணிகொண்டு மூடிக் கட்டுவார்கள். ‘யஷ்மாக்" எனப்படும் இந்த அடிமைச்சின்ன அங்கியின் அர்த்தம், "வாயடைக்கும் போர்வை' என்பதாகும்.
116.

இந்த இலட்சணங்களோடு அவளைக் கேட்காமலே அவளது வருங்காலக் கணவனுக்கு அவளை விற்றும்விடுவார்கள்.
இன்று இது பழைய கதையாகிவிட்டது. துருக்மேனியா வின் வரலாற்று ஏடுகளில் மட்டுமே காணக்கூடிய அம்ச மாகிவிட்டது.
இவள் ஒரு துருக்மேனிய யுவதி. முழுமதியை ஒத்த இம் முகத்தைத் தானும் வெளியே
மைச் சமுதாயத்தில் இடம் இருக்கவில்லை.
மாமேதை லெனினின் தலைமையில் நடைபெற்ற அக்டோ பர் சோஷலிஸப் புரட்சியும், அதையடுத்துப் பதவியேற்ற சோவியத் கம்யூனிஸ் ஆட்சியும் துருக்மேனியப் பெண்களின் அடிமைத்தளையை உட்ைத்தெறிந்துவிட்டன; மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்திவிட்டன; ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழும் நிலையைக் கொண்டு வந்து விட்டன.
இதுவே இன்றைய கதை; புதிய நிலை. பழைய கதையையும், புதிய கதையையும் பிரதிபலித்து நிற்கும் ஒரு பெண்மணியைத் துருக்மேனியத் தலைநகரான ஆஷ்காபாத்தில் நான் கண்டேன்.
፲ 1 7

Page 66
அவர்தான் - சச்லி துர்ஸுனேவா, படுகொலை செய் யப்பட்ட துர்ஸ்"னின் மகள்.
சோவியத் கம்யூனிஸ் அரசின் முயற்சியால் இவர் படித் துப் பட்டம் பெற்று ஒரு மருத்துவ நிபுணராக வர முடிந்தது. ஆஷ்காபாத் மருத்துவக் கல்லூரியின் முகவராக (RECTOR) இவர் நியமிக்கப்பட்டார். துருக்மேனிய சோவியத் சோஷ லிஸ்க் குடியரசின் 'சுப்ரீம் சோவியத்' (பாராளுமன்றம்) உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சச்லி துர்ஸ் "னுேவா முகவராக விளங்கும் ஆஷ்காபாத் மருத்துவக் கல்லூரிக்கு நாம் விஜயம் மேற்கொண்டோம். 3,000 மருத்துவ மாணவர்கள கல்வி பயிலும் இந்தக் கல் லுரரியிலிருந்து ஆண்டு தோறும் 475 பேர் டாக்டர்களாகப் பட்டம் பெற்று வெளியேறுகிருர்கள். இந்தக் கல்லூரியில் உள்ள 315 விரிவுரையாளர்களில் 170 பேர் எமது நாட்டுக் 'கலாநிதி" பட்டத்திற்கு நிகரான பட்டம் பெற்றவர் கள்; 24 பேர் எமது நாட்டுப் "பேராசிரியர்', 'இணைப் பேராசிரியர்’ அந்தஸ்தில் உள்ளவர்கள். -
இந்த மருத்துவக் கல்லூரி சர்வதேசத் தராதரம் உடை யது என்பதை அதன் பல்வேறு பிரிவுகளைச்சுற்றிப் பார்த்த போதும், சில விரிவுரைகளில் பிரசன்னமாயிருந்தபோதும் எனக்கு விளங்கியது.
ஆனல், ஆஷ்காபாத் மருத்துவக் கல்லூரி என்றவுடனேயே என் நினைவிற்கு உடனடியாக வருவது சோவியத் பெண் மையின் அக்டோபர் புரடசிக்கு முந்திய அந்தஸ்தையும், அதற்குப் பிந்திய அந்தஸ்தையும் பிரதிபலித்து நிற்கும் அதன் முகவர் சச்லி துர்ஸுனேவாவின் வாழ்க்கை வரலாறு ஆகும். துருக்மேனியப் பெண்களைப் பற்றி எழுதும்போது, துருக் மேனியக் கம்பளத் தொழிற்சாலைகளைப் பற்றிக் குறிப்பிடா மல் இருக்கமுடியாது. அவ்வளவு தூரம் நெருக்கமாய் உள்ள ளது இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பு.
ஆஷ்காபாத்திலுள்ள கம்பளத் தொழிற்சாலைகளிலும் துருக்மேனியத் தேசிய அரும் பொருட்சாலையிலும் துருக் மேனியக் கம்பளங்கள் பலவற்றை நாம் கண்டோம். அவற் றில் தான் எத்தனை எத்தன் வண்ணங்கள், புனைவரைவு கள், அளவுகள். ·
அரும்பொருட்சாலையின் அதிபர் அங்குள்ள கம்பளங்களை எமக்குக் காட்டியபோது, உலகப் புகழ்பெற்ற யாத்திரீகர் மார்க்கோ போலோவின் கருத்துக்கள் சிலவற்றைப் பெரு மையுடன், எமது கவனத்திற்குக் கொண்டு வந்தார். துருக் மேனியக் கம்பளங்களே. உலகின் மிகச் சிறந்த கம்பளங்கள்
8

என்று கி. பி. 13ம் நூற்றண்டிலேயே மார்க்கோ போலோ எழுதியிருந்தார். ۔۔۔۔بر
அந்த அரும்பொருட்சாலையில் உலகின் மிகப் பெரிய கம் பளத்தைக் கண்டோம். 60 அடி நீளமும் 37 அடி அகல மும் கொண்ட அக் கம்பளத்தின் நிறை என்ன தெரியு L DIT? al
1,903 இருத்தல்கள்! 36 துருக்மேனியப் பெண்களால் பின்னப்பட்டது அக் கம்பளம் . 1941ம் ஆண்டு ஜூலை மாதம் 13ந் திகதி பின்ன ஆரம்பிக்கப்பட்ட அக் கம்பளம் பின்னி முடிக்கப் பட்ட போது, 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி ஆகிவிட்டது. அக்கம்பளத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 2,50,000 முடிச்சுக்கள் இருந்தன.
ஆஷ்காபாத்திலுள்ள மிகப் பெரிய கம்பளத் தொழிற் சாலைக்கும் நாம் சென்று பார்வையிட்டோம். அங்கே துருக்மேனியக் குடியரசின் கம்பளச் சபைத் தலைவர் திரு மதி பெக்தூர்தீவா குல்ஜெமால் எம்மை வரவேற்றுத் தொழிற் சாலையைச் சுற்றிக் காட்டி, துருக்மேனியக் கம்பள உற்பத்தித் தொழில் பற்றியும் விளக்கினர்.
துருக்மேனியா வாசிகள் ஆதிகாலம் தொட்டே ஆடுமாடு களை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக வாழ்ந்து திரிந்த தால் அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்வதற்காக கம்பளங்கள் பின்னப் பழகினர் களாம். இத்துறை பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வந்து, அதில் அவர்கள் நிபுணத்துவமும் அடைந்தார்கள். துருக்மேனியாவில் கம்பளம் பின்னும் தொழில் பொது வாகப் பெண்களின் கலையாகவே இருந்து வருகிறது.
துருக்மேனியாவில் உள்ள 10 கம்பளத் தொழிற்சாலை களும் ஆண்டுதோறும் 75,000 சதுர மீட்டர் கம்பளங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றில் 84 சத வீதம் இலங்கை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இலங்கை யில் உல்லாசப் பிரயாணிகளுக்கென நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமர்ன ஹோட்டல்களை துருக்மேனியக் கம்பளங்கள் அலங்கரிக்கின் றன.
துருக்மேனியாவில் கம்பள உற்பத்தியில் எல்லாமாக 5,200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானேர் பெண்கள்.
துருக்மேனியாவிலுள்ள பத்துக் கம்பளத் தொழிற்சாலை களில், ஐந்தில், பெண்கள் தமது வீடுகளில் வைத்துப்
19
a

Page 67
பின்னிய கம்பளங்களைக் கொண்டு வந்து விற்கிறர்கள். இக் கம்பளங்களின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டபின், அவர் களுக்கு அதற்கேற்ற கூலி வழங்கப்படுகிறது.
கம்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள துருக்மேனியப் பெண் ஒருத்திக்கு மாதமொன்றுக்குச் சராசரி 1,400 ரூபா சம்ப ளம் கிடைக்கிறது. உருவப் படங்களோடு கூடிய விசேஷ கம்பள உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணுக்குச் சராசரி 2,000 ரூபா மாதச் சம்பளம் கிடைக்கிறது. எனவே தமது வீடுகளில் வைத்துக் கம்பளம் பின்னியே மாதந்தோ றும் 2,000 ரூபாய் உழைக்கும் பெண்களும் துருக்மேனியா வில் உள்ளனர்.
துருக்மேனியக் கம்பளங்களின் இரு முக்கிய சிறப்பம்சங் கள், அவற்றின் அழகிய உருவரை அமைப்பும், அவற்றின் இறுக்கமான் தன்மையுமாகும். துருக்மேனியக் கம்பளங்கள் பெரும்பாலும் ஒரு சதுர மீட்டருக்கு ஐந்து இலட்சம் முதல்
பத்து இலட்சம் முடிச்சுக்கள் வரை உடையவை. சதுர மீட்டருக்கு 11,48,000 முடிச்சுக்கள் வரை உள்ள கம்ப ளங்களும் பின்னப்பட்டுள்ளனவாம். முடிச்சுக்கள் அதி
கரிக்க அதிகரிக்க, கம்பளத்தின் இறுக்கமும் அதிகரிக்கிறது. துருக்மேனியக் கம்பளங்களின் இறுக்கத்திற்கு நிகரான கம் பளங்கள் உலகில் இல்லை என்று சொல்ல்ப்படுகிறது.
கம்பளங்களுக்கான உருவரை ஒவியங்களை அமைப்பதற் கென துருக்மேனியாவில் ஒவியர் பேரவை ஒன்று செயற்படு கிறது. இவர்கள் தீட்டும் உருவரைகள் கம்பளத் தொழிற் சாலைகிளுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கே இந்த ஒவி யங்களை வைத்து முழு அளவிலான பரீட்சார்த்த கம்பளம் ஒன்று பின்னப்படுகிறது. இது தகுதிவாய்ந்தது என்று காணப்பட்டால், இந்த உருவரை ஒவியம் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அதனேடு கூடிய கம்பளங்கள் உற்பத்தி செய்யப்படு கின்றன.
துருக்மேனியக் கல்லூரிகளில் 9ம், 10 ம் வகுப்புக்களில் கம்பள உற்பத்திக் கலை கற்பிக்கப்படுகிறது. இதைவிட விசேட கம்பள உற்பத்தி நிபுணர்கள் பயிற்றுவிக்கப்பட்டு, பல்வேறு கம்பளத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். கம்பள உற்பத்தியையும் கம்பளங்களின் தரத் தையும் மேன்மேலும் உயர்த்துவதற்கு நவீன விஞ்ஞான உதவிகளைப் பயன் படுத்தும் ஆராய்ச்சியும் இங்கே நடை பெறுகிறது.
அக்டோபர் சோஷலிஸப் புரட்சிக்கு முந்திய துருக்மேனி யாவில், ஒவ்வொரு குடும்பமும் கம்பள உற்பத்திக் கலையின்
120

சிறப்பம்சங்களைத் தத்தமது குடும்ப இரகசியங்களாகக் காத்து வந்தது. அக்டோபர் சோஷலிஸப் புரட்சி இந்நிலையை முற் ருக மாற்றியமைத்து விட்டது. கம்பள உற்பத்திக் கலையின் சிறப்பம்சங்கள் இன்று முழுநாட்டினதும் பொதுச் சொத் தாகி விட்டன. கம்பள உற்பத்திக் கலையின் பழமையான சிறப்பம்சங்கள் நவீன விஞ்ஞானத்தின் சிறப்பம்சங்களோடு சங்கமமாகிச் சீர்பெற்றதால், கம்பள உற்பத்தியில் தனக் கொப்பாருமிக்காருமின்றித் துருக்மேனியா புகழ்படைத்து நிற்கிறது.
சோஷலிஸ் சமூக நீதியின் கீழ், நாட்டின் நலன் கருதி, பழைய சிறப்பம்ச இரகசியங்களும் புதிய விஞ்ஞான உத்தி களும் சங்கமித்ததைக் கண்டுநான் வியந்து மகிழ்ந்தபோது, எனது தாயகத்தில், மக்களுக்கு நலன்தரக் கூடிய எத்தனை யோ சித்த-ஆயுர்வேத வைத்திய முறைகளைத் தமது குடும்ப இரகசியங்களாகப் பேணிப் பாதுகாக்கும் வைத்தியர் களை எண்ணி விசனப்பட்டேன். இவை முழு நாட்டினதும் சொத்தாகக் கூடியதான சோஷலிஸ் சமூக அமைப்பு விரைவில் வரட்டும் என்று என் மண்ம் வேண்டிநின்றது.
கம்பளத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்தோம். வட இந்தியப் பெண்களைப் போன்ற உரு அமைப்புக் கொண்ட அழகிய இளம் துருக்மேனியப் பெண்கள், வண்ணுத்திப் பூச்சியின் வண்ணங்களைப் போன்ற கண்கவர் தேசிய ஆடை அணிந்து, வண்ண வண்ணக் கம்பளங்களைக் கண்ணும் கருத்து மாகப் பின்னும் கண்ணுக்கினிய காட்சியைக் கண்டோம். அப்போது, அதற்கு முதல் நாள் நாம் சந்தித்த துருக் மேனிய சமூகக் காப்புறுதி அமைச்சர் திருமதி மாமிதோவா ஜெறெனும், ஆஷ்காபாத் நகர மாதா (ஆம் மேயர்* திருமதி பேர்டினியாஸோவா அமன்குல் ஒவிஸோவ்னுவும் எனக்கு விடுத்த கடும் எச்சரிக்கை ஞாபகத்திற்கு வந்தது.
நான் திருமணமாகாதவன் என்பதைத் தெரிந்து கொண்ட இவ்விரு பெண்களும் துருக்மேனியக் கம்பளத் தொழிற்சாலை களில் கடமையாற்றும் பெண்களைக் கண்டதும் நான் நிச்ச யம் மயங்கிக் கிறங்கிவிடுவேன் என்று எனக்கு எச்சரிக்கை விடுத்துக் கிண்டல் செய்திருந்தனர்."
துருக்மேனியாவிலும் சோவியத் நாட்டிலும் பெண்கள் எய்தியுள்ள உன்னத நிலையைப் பற்றிய பல தகவல்களை இவர் களோடு பேச்சுக் கொடுத்த போது நான் அறிய வாய்ப்புக் கிட்டியிருந்தது.
சோவியத் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பொருளாதாரம், அரசாங்கம், நிர்வாகம், அரசியல், விஞ்
12

Page 68
ஞானம், கலாசாரம், சமூகசேவை முதலான சகல துறை களிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை களை வழங்குகிறது.
X8
ஆஷ்காபாத் நகரசபை அலுவலகத்திற்கு முன்னல் ட(இடமிருந்து வலமாக) சாமிதோவ் ஜோரா, அயல் நாடுகளுடன் கலாசார உறவுக்கான துருக்மேனிய சம்மேளனத்தின் துணைத் தலைவர்; ஆஷ்காபாத் நகரமாதாவின் உதவியாளர்; டாக்டர் க. இந்திரகுமார், நூலாசிரியர்; திருமதி பேர்டினியா ஸோவா அமன்குல் ஒவிஸோவ்னு, ஆஷ்காபாத் நகரமாதா ; திருமதி லுட்மிலா பெட்டோனிச், மொழிபெயர்ப்பாளர்.
wሥ-ኣዶ•'•ኣጸ%‹‹.‰ዏኦ›ና
அமைச்சர்களாக, தொழிற்சாலை அதிபர்களாக, கூட்டுற வுப் பண்8ைணத் தலைவர்களாக, நகர மாதாக்களாக, நீதிபதி களாக, மருத்துவ நிபுணர்களாக, விஞ்ஞானிகளாக-இன் னும் இன்னேரன்ன சிறப்பு நிலைகளில் சோவியத் பெண்கள் புகழ்பரப்பி நிற்கின்றனர். • − −
சோவியத் பாராளுமன்றப் பெண் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 475 ஆகும். இது முதலாளித்துவ
夏2&
 
 
 

நாடுகளின் பாராளுமன்றங்கள் அனைத்திலும் உள்ள பெண் உறுப்பினரின் எண்ணிக்கையை விட அதிகம்என்பதுகுறிப் பிடத் தக்கது.
புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில், பெண்களில் 55 சத வீத மானேர் முதலாளிகள், நிலப்பிரபுக்கள், உத்தியோகத்தரின் வீடுகளில் வேலைக்காரிகளாகப் பணி புரிந்தனர். இன்னும் 25 சதவீதமானேர் நிலப் பிரபுக்களின் பண்ணைகளில் கூலிக்கு வேலை செய்தனர். தொழில் நிறுவனங்களில் 13 சதவீதத்தினரும், சுகாதார சேவைகளில் 4 சத வீதத்தின ரும் மட்டுமே பணி புரிந்தனர். புரட்சிக்கு முந்திய ரஷ்யா வில் பெண்கள் வகித்த இழிநிலை இப்புள்ளி விவரத்திலிருந்து
தெரிகிறது. al
இன்றைய நிலை என்ன? சோவியத் சனத்தொகையில் 53.9 சதவீதத்தினர் பெண் கள், இவர்கள் சோவியத் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள் ளவர்களில் 51 சத வீதத்தினராக உள்ளனர். சோவியத் தின் கட்டட நிர்மாணத் துறையில் உள்ளோரிள் 27 சத வீதத்தினரும், தொழில்துறையில் 50 சத வீதத்தினரும், விவசாயத்துறையில் 43 சத வீதத்தினரும், விஞ்ஞானத் தோடு சம்பந்தப்பட்ட துறைகளில் 49 சதவீதத்தினரும், கல்வித்துறையில் 73 சதவீதத்தினரும், சுகாதார சேவைகளில் 85 சத வீதத்தினரும் பெண்களாகவே உள்ளனர்.
சோவியத் நாட்டில் ஒவ்வொரு மூன்று பொறியியலாளர் களை (எஞ்சினியர்கள்) எடுத்தால், அவர்களில் ஒருவர் பெண் ணுக இருப்பார். பிரான்சில் 50 பொறியியலாளர்களில் ஒரு வரும், அமெரிக்காவில் 100 பொறியியலாளர்களில் ஒருவரும் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோவியத்தில் ஒவ்வொரு ஐந்து டாக்டர்களை எடுத்தால், அவர்களில் நால்வர் பெண்களாக உள்ளனர். பிரான்சில் 10 டாக்டர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 13 டாக்டர்களில் ஒருவரும் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் நாட்டில் ஆணுக்கொரு சம்பளம், பெண்ணுக் கொரு சம்பளம் என்ற நிலை இல்லை. ஆணுே பெண்ணுே , அவர்களது தகைமைகள், திறமைகள், வேலையின் தன்மை என்பன தான் சம்பளம் வழங்கும்போது கணக்கெடுக்கப் படுகின்றனவே தவிர, அவர் ஆணு பெண்ணு என்பதல்ல. சர்வதேச தொழில் நிறுவனத்தின் புள்ளி விவரங்களி லிருந்து, பிரான்சில் ஆண்-பெண்கூலிக்கு இடையேயான வித்தியாசம் 17.1 சதவீதமென்பதும், ஸ்வீடனில் 24 சத
23

Page 69
வீதம் என்பதும், மேற்கு ஜேர்மனியில் 31.3 சதவீதம் என் பதும், ஜப்பானில் 50 சதவீதம் என்பதும் தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, முதலாளித்துவ உலகில் இந்த வித்தியா சம் குறைவதற்குப் பதிலாக வர வர உயர்ந்து கொண்டே போகிறதாம்.
ஒரு குடும்பத்தின் தலைவர் யார்? அக்குடும்பத்தில் மிக அதிக உழைப்புடையவர்தானே?
இதன்படி பார்த்தால், 5.87 கோடி சோவியத் குடும்பங் களில், நாலிலொரு பங்கு குடும்பங்களின் தலைமைப் பதவி பெண்களுக்கே உரியது. சோவியத் குடும்பங்களில் நாலி லொரு பங்கு குடும்பங்களில் ஆண்களைவிட அதிக வேத னம் பெறுபவர்கள் பெண்களாக உள்ளனர். பெண் விடு தலைக்கு இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
பொருளிட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் சோவியத் பெண்கள் வேலைக்குப் போகிருர்களா என்ற கேள்வி எழலாம். ஆனல் சமூகவியலாளர்களின் கணக்குப் படி பார்த்தால், பெரும்பாலான சோவியத் பெண்கள் தார் மிக கெளரவத்திற்காக வேலைக்குப் போகிறர்களே தவிர பொருளிட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தினல் அல்ல என்பது தெரிய வந்துள்ள தாம்.
சோவியத் நாட்டில் குழந்தைகளைப் பெறும் தாய்மார் களுக்குக் கிடைக்கும் வசதிகளும் சந்தர்ப்பங்களும் எவ ருக்கும் பிரமிப்பூட்டவல்லன.
ஒரு கர்ப்பிணிக்கு மகப் பேற்றிற்கு முன்பு 56 நாட்களும் மகப்பேற்றிற்குப் பின்னர் 56 நாட்களுமாக எல்லாமாக 112 நாட்கள் முழுச் சம்பளத்தோடு லீவு வழங்கப்படு கிறது. (எமது நாட்டில் எல்லாமாக 42 நாட்கள் மட்டுமே). இதைவிட, மகப்பேற்றை அடுத்து, ஒரு தாய் தான் விரும்பி னல் ஒரு வருட லீவு எடுத்துக்கொள்ளலாம். இந்த லீவு காலத்தின்போது சம்பளம் வழங்கப்படமாட்டாது.
எனினும், அத்தாய் வகித்து வந்த உத்தியோகம் ஒரு வருட காலத்திற்கு அவருக்கென்று பாதுகாத்து வைக்கப் படும். அவர் வேலைக்குத் திரும்பி வந்ததும் அவரது சேவைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது தொடர்ச்சியான தாகவே கணிக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் மூன்றுவது குழந்தை பிறந்தால், அக் குடும்பத்திற்குப் பெரும் பணம் நன்கொடையாக வழங் குகிறது அரசு! நான்காவது குழந்தை பிறந்ததும், ஒவ் வொரு மாதமும் விசேஷ போனசுப் பணம் கிடைக்கிறது!
刀24

ஐந்து குழந்தைகள் பெற்றெடுத்த தாய்க்குப் பதக்கங்கள் பரிசாகக் கிடைக்கின்றன, W
ஏழு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த அன்னைக்கு "பூரிக்கும் தாய்மை விருது வழங்கிக் கெளரவிக்கிறது சோவி யத் அரசு!
பத்துக் குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த பெண்க ளுக்கு "வீரத் தாய்’ விருது சோவியத் அர்சினல் வழங்கப் படுகிறது!
கர்ப்பிணியாயிருக்கும் காலத்தின் போதும், மகப்பேற்றின் போதும், குழந்தைப் பருவத்தின்போதும் தாய்க்கும் சேய்க் கும் மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் வழங்குவதில் பெரும் பணம் செலவு செய்கிறது அரசு.
அது போலவே, தாய்மார்கள் வேலைக்குப் போனலும், அவர்களுடைய குழந்தைகளை விட்டுச்செல்ல எண்ணற்ற குழந்தை இல்லங்கள் உள்ளன. பள்ளி செல்லும் குழந்தை கள் இருப்பின், பெற்ருேர் வேலை முடிந்து வீடு வரும்வரை, பள்ளி முடிந்த பின்னரும் குழந்தைகள் அங்கேயே இருந்து, மறுநாளுக்கான பள்ளிப் பாடங்களை முடித்துவிட்டு, சற்று நேரம் விளையாடியும் விட்டு, பின் வீடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாளித்துவ நாடுகளிலோ வேலையில்லாத் திண்டாட டத்திற்கு முதலில் பலியாகின்றவர்கள் பெண்கள்தான். மேலும், விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றமும் அவுர் கிளுடைய வேலை வாய்ப்புக்களுக்குத் தடையாய் உள்ளது. அங்கு திருமணமானவர்களுக்கு வேலை கிடைப்பது அரிது. அப்படித்தான் கிடைத்தாலும் குழந்தைகளைப் பராமரிக்க வசதிகள் இல்லை. குழந்தை இல்லங்கள் இருந்தாலும் கூட அவற்றிற்குச் செலுத்த வேண்டிய தொகை ஒரு நடுத்தர வகுப்புக் குடும்பத்திற்குக் கட்டுபடியாகாது.
சோவியத் நாட்டிலோ, குழந்தை இல்லங்களுக்குச் செலுத்தவேண்டிய கட்டணம் மிகக் குறைவானது. இக் கட்டணத்தில் பெரும் பகுதியைக் கூட தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் கட்டுகின்றன.
சோவியத்தின் திட்டமிட்ட சோஷலிஸப் பொருளாதாரத் தில் குடிசனப் பெருக்கம் பொருளாதாரத்தைச் சீர்குலைக் கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.
12

Page 70
எனவே சோவியத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 'ஏன் பிறந்தாய் மகனே-ஏன் பிறந்தாய்? நாட்டின் பிரச் சினைகளைப் பெருக்குவதற்கு நீயும் வந்து ஏன் பிறந்தாய்?" என்று தன் வருகையை எவரும் சபித்து நொந்துகொள்ள மாட்டார்கள் என்ற துணிவுடன் பிறக்கிறது. நாடு அழையா விருந்தாளியெனத் தன்னை வெறுக்காமல், இரு கரம் நீட்டி வரவேற்கிறது என்ற நம்பிக்கையுடன், திருப்தியுடன் பிறக்கிறது-புதுயுகத்தினுள் களிப்புடன் பிரவேசிக்கிறது.
16.

15 உயரும் ஊதியங்கள்
வீழும் விலைவாசிகள்
சோவியத் நாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு நான் தாயகம் திரும்பிய பின், பலரும் என்னிடம் விசாரித்து அறிந்துகொண்ட முக்கிய ஓர் விஷயம், சோவியத் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப்பற்றியதாகும்.
சோவியத் நாட்டில் ஒரு குடும்பத்தின் வருவாய் என்ன? வாழ்க்கைச் செலவு, விலைவாசிகள் எப்படி? வாழ்க்கைச் செலவு வருவாயுக்குள் அடங்குகிறதா? உலகின் முதலாவது சோஷலிஸ் நாடான சோவியத் நாட்டின் வாழ்க்கைத் தரம் முதலாளித்துவ நாடுகளின் வாழ்க்கைத் தராதரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் எவ்வாறு அமைகிறது?
-இத்தகைய கேள்விகளைப் பலரும் என்னிடம் கேட்ட
5
சோவியத் நாட்டில் தொழிலாளிகள், விவசாயிகளின் வரு மானம் எத்தகையது, இது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது போன்ற விஷயங்களை ஏற்கெனவே ஆராய்ந்து எழுதியுள் ளேன். வீட்டு வாடகை, குடியிருப்பு வசதிச் செலவுகள் பற்றியும விரிவாக எழுதியுள்ளேன். બક குடும்ப வருவாயையும், வாழ்க்கைச் செலவு-விலைவாசி களையும் தொடர்புபடுத்தி, சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரத்தை இனி நோக்குவோம்.
எனது சோவியத் விஜயத்தின் போது, மாஸ்கோ நகரிலும் மாஸ்கோவிலிருந்து சுமார் 50 மைல் தொலைவிலுள்ள ஸ்கோர்ஸ்க் நகரிலும், மாஸ்கோவிலிருந்து சுமார் 2,000 மைல் தொலைவிலுள்ள ஆஷ்காபாத் நகரிலும் எண்ணற்ற கடைகளுக்குள் நான் ஏறியிறங்கினேன். இது அங்குள்ள நுகர்ப் பொருள்களின் விலைகளை நான் நேரில் கண்டறிந்து கொள்ள வாய்ப்புத் தந்தது.
இந்த அனுபவத்தையும், எத்தனையோ சோவியத் மக்க ளுடனும்,சோவியத்தில் சில வருட காலமாக வாழ்ந்து வரும் இலங்கையருடனும் கேட்டறிந்து கொண்ட தகவல்களையும், அடிப்படையாக வைத்து, சோவியத் மக்களின் வாழ்க்கைத்
J27

Page 71
தரத்தை எடை போட முன்வருகிறேன். சோ பியத் துருக்மேனியக் குடியரசின் சமூகக் காப்புறுதி அமைச்சர் திருருதி மாமிதோவா ஜெறெனுடன் நான் மேற்கொண்ட நீண்ட உரையாடலும் சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிப்பதற்கு எனக்கு மிகவும் உதவியாய் உள்ளது. திட்டமிட்ட விஞ்ஞான சோஷலிஸ்ப் பொருளாதாரத் தின் கீழ் சோவியத் உற்பத்தித் துறையும் விவசாயமும் இடையருது அடைந்து வரும் முன்னேற்றத்தின் விளைவாக, தொழிலாளர் கூட்டுப்பண்ணை விவசாயிகளின் அடிப்படைச் சம்பளம் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்துள் ளது. 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருவரின் அடிப்படைச் சம்பளம் இர்ட்டிப்பாக மாறும் அளவிற்குச் சம்பள உயர்வு அமைந்துள்ளது.
இன்று சோவியத் தொழிலாளி ஒருவரின் சராசரிச் சம் பளம் 1,400 ரூபாவாகும்; கூட்டுப்பண்ணே விவசாயி ஒரு வரின் சராசரிச் சம்பளம் 960 ரூபாவாகும். கூட்டுப் பண்ணை விவசாயிகள் தமது கொல்லை நிலத்தில் சாகுபடி செய்யும் பயிர்களை விற்பதன் மூலம் இதை விட மேலதிக ஊதியமும் பெறுகின்றனர். -
கடுமையாக உழைத்து, மேற்சொன்ன சராசரி அளவுகளை விட இரட்டிப்புச் சம்பளம் பெறும் தொழிலாளி விவசாயி
சம்பளங்கள் எவ்வளவுதான் கூடினுலும், அவற்ருேடு விலைவாசிகளும் கூடினல் சம்பள அதிகரிப்பினல் எதுவித பயனும் இல்லை.
முதலாளித்துவ நாடுகளது பொருளாதாரத்தின் குரல் வளையை நெரித்துப் பெரும் நெருக்கடியை இன்று ஏற் படுத்தியுள்ள பணவீக்கம் சோவியத் யூனியனில் இல்லவே இல்லை. இங்கே பொருள்களின் விலைகள் ஸ்திரமாக உள்ளன. சோவியத் நாட்டில் பொருள்களின் விலையைப்பற்றிப் பேசும் போது, இன்னெரு விசேஷ அம்சத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
மாஸ்கோவிலும் அதிலிருந்து சுமார் 2,800 மைல்களுக்கு அப்பாலுள்ள ஆஷ்காபாத்திலும் பொருள்களுக்கு ஒரே விலை தான். ஒரு சதம் கூட விலை வித்தியாசமில்லை.
பாரிய சோவியத் நாட்டின் எந்த மூலை முடுக்கை எடுத்துக் கொண்டாலும் பொருள்களின் விலை மாறுபடுவதில்லை. எல்லாப் பொருள்களினதும் விலை ஒரு பிளாஸ்டிக் தகட்டில் குறிக்கப்பட்டு அவ்வப் பொருள்களோடு வைக்கப்பட்டிருக் Gé5 L Do
18

சோவியத் நாட்டில் விலை நிர்ணயிப்பதற்கான விதிகளை ஒரு விசேஷ ஆராய்ச்சி நிறுவனம் நிறுவுகிறது. சோவியத் அமைச்சரவையின் கீழ் இயங்கும் அரசவிலை நிர்ணயக் குழு விலைகளை நிர்ணயிக்கிறது.
கடந்த பத்து ஆண்டு காலமாக சோவியத்தில் பாண், சீனி, பால், பாற்பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி வகைகள், தாவர எண்ணெய்வகைகள் போன்ற சகலவித உணவுப் பொருள்களினதும் விலை ஒரு சதம் கூடக் கூடவில்லை. இவற்றின் விலைகள் ஸ்திரமாகவே இருந்துள்
GT 6T.
அதே வேளையில், டெலிவிஷன் கருவிகள், சலவை இயந் திரங்கள், க்ைககடிகாரங்கள், மணிக்கூடுகள், சவர்க்காரம் போன்ற பல பயனிட்டுப் பொருள்களின் விலை படிப்படி யாகக் குறைந்து கொண்டே வருகிறது.
மேலும், வீட்டு வாடகை - குடியிருப்பு வசதிச் செலவு கள், போக்குவரத்துச் செலவுகள், சினிமா-நடனம் போன்ற கலை, பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் கட்டணங்கள் முதலி யனவும் அதிகரிக்காமல் ஸ்திரமாகவே அமைந்துள்ளன.
இன்னெரு விதமாகச் சொல்லப் போனல், ஒரு பக்கம் சம்ப்ளம் அதிகரித்துக்கொண்டே போக, இன் ஞெரு புறம் விலை வாசிகள் குறைந்து கொண்டே போகின்றன. உயர்ந்து வரும் சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
சோவியத் மக்கள் தமது வருவாயை எவ்வாறு செலவிடு கிருர்கள் தெரியுமா?
62,000 சோவியத் குடும்பங்களிடமிருந்து சோவியத் அரசு தகவல் சேகரித்து, அவற்றைப் பகுத்து ஆராய்ந்து பெற்றுக் கொண்ட புள்ளி விவரங்களை இங்கே தருகிறேன். ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம் 100 என்று வைத்துக் கொண்டால், அவற்றில் என்னென்ன சதவீதம் பல்வேறு செலவுகளுக்குச் சென்றது என்பது உற்பத்தித் துறைத் தொழிலாளிகளுக்கு வேருகவும், கூட்டுப் பண்ணை விவசாயி களுக்கு வேருகவும், தரப்பட்டுள்ளது. மேலும், 1910ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் 1973ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளன.
129

Page 72
உற்பத்தித் துறைத் தொழிலாளி
செலவு (வீதத்தில்)
1940 1973
உணவு 53。8 34。2 கலாசார, மற்றும், இதர சேவைகள் 17.5 22.7
(கல்வி, சுகாதார சேவைகள் இலவசம்). உடை, காலணி, தளபாடம்,
பொழுதுபோக்கு 14.0 22.2
இதர செலவுகள் 9.9 5, 1
சேமிப்பு 4.3 5.3
மொத்த வருமானம் 100 100
கூட்டுப் பண்ணை விவசாயி
செலவு (வீதத்தில்)
1940 1973
உணவு 67.3 36.9
உடை, காலணி, தளபாடம்,
பொழுது போக்கு I 5。Q 22。5
சேமிப்பு 6.9 13.4
இதர செலவுகள் 5. 5 13.0
கலாசார, மற்றும் இதர சேவைகள் 4, 4 1 4, 2 (கல்வி, சுகாதார சேவைகள் இலவசம்)
மொத்த வருமானம் 100 1 00
மொத்த வருமானத்தில் உணவுக்குப் போகும் சதவீதப் பங்கு குறைந்திருப்பது புள்ளி விவரத்தில் தெரிகிறது. இதற் குக் காரணம், மக்களின் உண்மையான வருமானம் அதி கரித்திருப்பதால், அதில் உணவிற்கு அவர்கள் செலவிடும் சதவீதப் பங்கு குறைவதே. 1940ல் உட்கொண்ட உணவை விடச் சிறந்த உணன்வ மக்கள் இன்று உட்கொள்கின்றனர்.
மேலும், சோவியத் மக்களில் 75 சதவீதத்தினர் வானெ லிகள் உடையோராயும், 71 சதவீதத்தினர் டெலிவிஷன் கருவிகள் உடையோராயும், 75 சத வீ த த் தி ன ர் குளிர் சாதனப் பெட்டிகளுடையோராயும், 60 சத வீதத்தினர் சலவை இயந்திரங்கள் உடையோராயும் இருப் பதை மேற்படி புள்ளிவிவரச் சேகரிப்பு காட்டுகிறதாம்,
30

ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, சோவியத்தில் உணவுப் பொருள்களின் விலை எவ்வாறு அமைகிறது தெரி யுமா? W
அமெரிக்காவில் கிளெவ்லன்டில் இருந்து வரும் "பிளேன் டீலர் சன்ட்ே மகளின்" என்னும் சஞ்சிகை, 17 உலக நாடு களில் உணவுப் பொருள்களின் விலையை ஆராய்ந்தது.
பன்றி இறைச்சி, பாண், பால், முட்டை, சீனி, அரிசி போன்ற சில உணவுகளை நிலையான குறித்த சில அளவுகளில் தெரிந்தெடுத்து, அவற்றை ஒருவருடைய "சந்தைப் பை' யில் அடங்கும் பொருள்களென வரையறுத்தது. இத்தனை உணவுகளையும் கொண்ட ஒரு "சந்தைப் பை"க்கு ஒவ் வொரு நாட்டிலும் என்ன விலை கொடுக்க வேண்டும் என்று கணித்தது.
இதன்படி பார்த்தால், இந்தப் பதினேழு நாடுகளுள்ளும் ஆகக் குறைந்த விலை சோவியத் நாட்டில்தான் என்பது தெரிய வருகிறது.
உதாரணமாக சோவியத் யூனியனில் இத்தகைய ஒரு 'சந்தைப் பை'யின் விலை 32 ரூபா 65 சதம்; அமெரிக்கா வில் 72 ரூபா, ஆஸ்திரேலியாவில் 64 ரூபா 63 சதம்; நியூசிலாந்தில் 64 ரூபா 65 சதம்.
ஏனைய முதலாளித்துவ நாடுகளுடன் ஒப்பிடும்போது விலை வாசிகள் சோவியத்தில் எவ்வளவு குறைவாக உள்ளன என் பது இதிலிருந்து புரிகிறது.
ஒரு சோவியத் குடும்பத்தின் வரவு-செலவுக் கணக்கை நாம் பார்க்கும் போது இன்னுெரு மிக முக்கிய வரவையும் கணக்கில் எடுக்க வேண்டும், چیمبند தாய் தந்தை, இரு குழந்தைகளைக்கொண்ட ஒரு சராச ரிக் குடும்பத்தின் செலவில் மூன்றில் ஒரு பகுதியை-அதா வது மாதந்தோறும் சராசரியாக 1,075 ரூபாவான ஒரு தொகையை - அரசாங்கம் பொறுப்பெடுக்கிறது.
அரசாங்கத்தின் சமூகப் பயனீட்டு நிதியிலிருந்து இந்தப் பணம் செலவிடப்படுகிறது.
ஒரு குடும்பத்தின் உண்மையான செலவுகளில் அரசு பொறுப்பேற்பது எவை எவை என்று பார்ப்போம்
ஒரு கர்ப்பிணியின் நான்கு மாதகால பிரசவ விடுமுறைச் சம்பளம் சமூகப் பயினிட்டு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. கருவுற்ற ஒரு தாய்க்குரிய மருத்துவ ஆலோசனைச் செலவு, மருத்துவ உதவி, தாய், சேய் இருவரதும் உடல் நிலையை அவ்வப்போது வட்டார மருத்துவத் தாதி வீடடிற்கு வந்து பரிசீலித்துச் செல்வதற்கான செலவு அதிக உறுப்பினர்
3

Page 73
களைக் கொண்ட குடும்பத் தாய்மாருக்கு வழங்கப்ப்டும் மாதாந்த உதவிப் பணம் என்பனவும் சமூகப் பயணிட்டு நிதியிலிருந்தே வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு சோவியத் குழந்தைக்கும் அதனது முதலாவது வயது நிறைவு வரை குறைந்தபட்சம் 2,000 ரூபாவை அரசு செலவு செய்கிறது. ܫܝ 津
ஏழு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் நேர் ஸரிப் பள்ளிகளில் வைத்துப் பராமரிப்பதற்கு ஆண்டுதோ தோறும் 440 ரூபாவை அரசு செலவிடுகிறது. பெற்ருே ர் களோ சராசரியாக 800 ரூபாவே செலவிடுகின்றனர்.
ஆரம்பப்பள்ளியில் (கின்டர் கார்ட்டன்) உள்ள ஒவ் வொரு குழந்தைக்கும் அரசு ஆண்டுதோறும் 3, 900 ரூபா செலவிடுகிறது. பெற்றேர்களுக்குச் சராசரியாக 1,000 ரூபா மட்டுமே ஆகிறது. பள்ளிப்படிப்புக்கு முந்திய ஸ்தா பனங்களில் குழந்தைகளை வைத்துப் பராமரிக்கும் செல வில் 80 சத வீதத்தையும் அரசே ஏற்கிறது.
பிள்ளைகள் பள்ளி செல்லும் காலத்தில், வீட்டிலிருந்து வந்து படிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆண்டுதோறும் 1,800 ரூபாவையும், பள்ளி விடுதியில் தங்கிப்படிக்கும் ஒவ் வொரு பிள்ளைக்கும் 6,000 ருபாவையும் அரசு பொறுப் பேற்கிறது.
சோவியத் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விசேட தேர்ச்சி பெறும் உயர் நிலைப் பள்ளிகள் என்பனவற்றில் முழு நேரக் கல்வி கற்கும் இளம் தலைமுறையினருக்கு ஒவ்வொருவருக்கும் ஆண்டு தோறும் 8,500 ரூபாவை அரசு செலவிடுகிறது.
சோவியத் யூனியனில் வீட்டு வாடகையும், மின்சாரம், குடி நீர், எரிவாயு, தொலைபேசி போன்ற குடியிருப்பு வசதிச் செலவுகளுக்குமாகச் சேர்த்து ஒரு குடும்பத்தின் வரு மானத்தில் நான்கு அல்லது ஐந்து சத வீதத்திற்கு மேல் ஆவதில்லை என்று கட்டுரைத் தொடரில் முன்னர் கண் டோம்.
உண்மையில் ஒரு வீட்டைப் பழுது பார்த்துப் பராமரித்து வைக்கும் செலவில் மூன்றிலொரு பகுதிக்குக் கூட வீட்டு வாடகை வருவதில்லை. பராமரிப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கிறது. ஒவ்வொரு சதுர யார் நிலப்பரப்பள விற்கும் பர்ாமரிப்பிற்காக அரசு ஆண்டு தோறும் சுமார் 40 ரூபா செலவிடுகிறது.
நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வருவது, அல்லது டாக்டர் கள் நோயாளிகளின் வீட்டிற்குச் சென்று பார்ப்பது என்ற
32

இரு வகையிலுமாக, சோவியத் நாட்டில் ஆண்டுதோறும் 200 கோடி 'விஜயங்கள்’ நடந்து வருகின்றன்வாம். இவற் றுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரு நோயாளிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க நாளொன் றுக்கு அரசிற்கு சுமார் 80 ரூபா செலவாகிறது.
சுகவீனம் காரணமாக வேலைக்கு வராமலிருக்கும் தொழி லாளிகளுக்குச் சுகவீன காலச் செலவை அரசு வழங்குகிறது. தொடர்ச்சியாக எட்டு வருட காலத்திற்கு மேல் வேலை செய்த ஒருவருக்கு அவரது முழுச் சம்பளத்துக்குச் சமமான ದ್ವಿಜ್ಷಣಹ சுகவீனச் செலவாக மாதந்தோறும் வழங்கப்படு
si)gl.
சொவியத்தில் ஒய்வு பெறும் (பென்ஷன்) வயது ஆண் களுக்கு 60 ஆகவும் பெண்களுக்கு 55 ஆகவும் உள்ளது. ஐந்துக்குமேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் 50 வயதில் ஒய்வு பெறலாம். உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய தொழில்துறைகளில் கடமையாற்றுபவர் கள் 5-10 ஆண்டுகள் முன்னதாகவே ஒய்வு பெறலாம். ஒருவரது ஒய்வுகாலச் சம்பளத் தொகை (பென்ஷன்) அவரது சம்பளத்தில் 70 சத வீதத்திற்குக் குறையாமல் இருக்கும்.
இத்தகைய செலவுகளையெல்லாம் சோவியத் அரசு தனது சமூகப் பயனீட்டு நிதியிலிருந்து மேற்கொள்கிறது. 1940க்கும் 1970க்கும் இடையே சமூகப் பயனீட்டு நிதி 14 மடங்காக அதிகரித்துள்ளது. 1970ல் 64,000 கோடி ரூபாவாக இருந்த சோவியத் சமூகப் பயனீட்டு நிதி 1975ல் 90,000 கோடி ரூபாவாக அதிகரித்தது.
ஒரு சோவியத் பிரஜையின் அடிப்படை ஜீவாதாரத் தேவைகள், அப் பிரஜையின் சம்பளம் குறைவாயிருந்தா லும், பூர்த்தி செய்யப்படவேண்டும் என்று சோவியத் அரசு கருதுகிறது. அனைத்து மக்களதும் பொருள் முதல்வாத, கலாசாரத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படவேண்டும். நாட்டின் வருமானத்திற்கு ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு தூரம் உழைத்துள்ளான் என்பதைக் கணக்கிலெடாமல், ஒவ் வொரு பிரஜையினதும் சம்பளம் என்ன என்பதைக் கணக் கிடாமல், எல்லோருக்கும் ஒரே அளவு பயன்தரக் கூடிய முறையில் சமூகப் பயனீட்டு நிதியை அரசு செலவிடுகிறது.
இவை எல்லாவற்றினதும் மொத்த விளைவுகள் என்ன தெரியுமா?
பணவீக்கம் என்பது முதலாளித்துவ நாடுகளில் நிலவுவ தாகச் சோவியத் மக்கள் கேள்விப்பட்டிருக்கிருர்களே தவிர
133

Page 74
அத்ை அவர்களே அனுபவித்ததில்லை. விலைவாசிக்ள் உயர்வு சோவியத் மக்கள் அறியாததொன்று.
சோவியத் மக்கள் கைநிறையப் பணம் சம்பாதிக்கிருர்கள். மனம்போல் செலவு செய்து மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நாளை என்ற கவலை அங்கே இல்லை. ஒவ்வொரு சோவியத் பிரஜையின் - அது குழந்தையானலென்ன, முதியவரான லென்ன - வாழ்க்கைக்கும் எதிர் காலப் பாதுகாப்புக்கும் சீர் சிறப்புக்கும் உத்தரவாதம் உண்டு; சீரிய சமூகக் காப் புறுதி உண்டு.
எவரும் அங்கு அநாதை இல்லை; அநாதையாகவும் முடி tLITg5!.
எனவே, பிள்ளை குட்டிகளுக்கென்ருே அடுத்த தலைமுறைக் கென்ருே பெரும் முதிசம் பாடுபட்டுத் தேடி வைக்க வேண்டி யதில்லை; தேடிவைப்பாருமிலர்.
இத்தகைய முற்றிலும் புதிய, சீரிய வாழ்க்கைத்தரங்கள் சமூகப் பண்புகள், சமூக நீதி நிலவும் இந்நாட்டை ஒரு புதுயுகமாகக் காண்பதில் என்ன தவறு?
134

16 உள்ளங் கவர் பொல்வேடிாய் நடனம்
பெ ல்ஷோய் -
நடனத்துறையைப் பொறுத்த மட்டில், அதிலும் குறிப் பாக "பாலே" நடனத் துறையைப் பொறுத்த மட்டில் இது மந்திர சக்தி மிகுந்த ஒரு வார்த்தை,
'பாலே' நடனத்தில் உலகில் தமக்கு ஒப்பாருமிக்காருமின் றித் திகழ்பவர்கள் தாம் சோவியத்தின் பொல்ஷோய் நட னக் குழுவினர்.
எனது சோவியத் விஜயத்தை ஆரம்பிப்பதற்கு ஒரிரு வாரங்களுக்கு முன்னர், இலங்கையிலுள்ள சோவியத் தூத ரகத்தினர் சோவியத் நாட்டில் நான் குறிப்பாகப் பார்க்க விரும்புபவைகளைப் பட்டியல் போட்டுத் தருமாறு கேட் டிருந்தனர்.
எனது பட்டியலில் பொல்ஷோய் பாலே நடனமும் முதன்மை இடம்பெற்றிருந்தது. . .
'பொல்ஷோய் மட்டுமல்ல-எமது நாட்டில் கலை கலா சாரத்தோடு சம்பந்தப்பட்ட சகல வித நிகழ்ச்சிகளையும் நீங்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருக்கிருேம். தினமும் உங்கள் மாலைப் பொழுது கலை கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது."
-இவ்வாறு சோவியத் தூதரகத்தின் முதலாவது செய லாளர் ஜேக்கப் எஸ். வொஸ்கோபொய்னிகோவ் எனக்கு உறுதியளித்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில், பாலே நடன நர்த்தகிகள் எகிறிப் பாய்கின்ற உயரத்தை விட அதிக உயரம் துள்ளிப் பாயலாம் போலிருந்தது.
இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் மக்கள் கால்கடுக்கப் பல மணி நேரம் "கியூ" வரிசையில் நின்று போட்டி போட்டுக் கொண்டு நுழைவுச் சீட்டு பெற்றுப் பார்த்துக் களிக்கும் சோவியத் பாலே நடனங்களை ஆசை தீரப் பார்த்துக் களிக்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் -
135

Page 75
ஐந்து பால்கனிகளுடன் கூடியதும், 2,100 பார்வையாளர் களை உள்ளடக்கக்கூடியதுமான உலகப் புகழ் பெற்ற பொல்ஷோய் நடன அரங்கின் உட்புறத் தோற்றம்.
136,
 

சோஷலிஸ யதார்த்த வாதம் என்ற கலையியல் முறையில் புடமிடப்பட்டு, உலகெங்கும் பட்டொளி வீசி நிற்கின்ற சோஷலிஸ்க் கலாசாரத்தை அதன் ஜன்ம பூமியிலே என் கண் முன்னல் காணப்போகிறேன்; உண்மையான கலாசாரப் புரட்சியின் அறுவடையை நேரில் காணும் பாக்கியத்தை அடையப் போகிறேன் என்ற பெருமிதம் மறுபுறம்.
பொல்ஷோய் குழுவினரின் உலகப் புகழ்பெற்ற 'அன்னத் தடாகம்' என்ற பாலே நடனத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
சோவியத் பாலே நடனம் ரஷ்ய நடன அமைப்பு மரபு கள், சோவியத் நாட்டில் வாழும் மக்களது நடனங்கள், இசை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். ஒரு கதையை அற்புதமான நடன அசைவுகள் மூலமாகவும் பாவங் கள் மூலமாகவும் எடுத்துச் சொல்கின்ற ஒருவித நாட்டிய நாடகம் இது. ۔ عبر
புதியன புனையும் உணர்வும், கலைப் போக்குகளின் பல் வேறு வகைப்பட்ட தன்மைகளும், அவற்றின் தீரமும் சோவி யத் பாலேயின் விசேஷ அம்சங்களாகும். கதைகளின் ஆழ்ந்த சித்தாந்தக் கருத்தின் சிறப்பு, அவற்றில் நிறைந்துள்ள மனி தாபிமானம், பாத்திரப் படைப்புகளின் நேர்த்தி, நடன அமைப்பின் அழகு, இசையமைப்பின் இனிமை போன்ற சீர்சிறப்புகள் சோவியத் பாலே நடனங்களுக்கு உரியன.
பாலே நடனக்காரர்கள் வெறுமனே நடனமாடுவதோடு நில்லாது, நடனத்தின் மூலம் ஒரு பாத்திரத்தின் வளர்ச் சியை உளவியல் ரீதியாகவும் சித்திரித்துக் காட்ட வேண்டும். என்ற புதிய போக்கு, உலகப் புகழ் பெற்ற சோவியத் பாலே நடன அமைப்பாளர் சாய்க்கோவ்ஸ்கியைத் தந்ன்த யாகக் கொண்ட யதார்த்தபூர்வ பாலே நடனத் தோற்றத் துடன் உதயமாயிற்று. இந்தப் போக்குத்தான் சோவியத் பாலேயின் விசேஷ பண்புகளை இன்று நிர்ணயிக்கிறது.
சோவியத் அரங்குகளில் அடிக்கடி மேடையேறும் பாலே நடனம் சாய்க்கோவ்ஸ்கியின் "அன்னத் தடாகம்’ ஆகும். புகழ், தயாரிப்புக்களின் எண்ணிக்கை, மேடையேற்றப்பட்ட தடவைகள் என்பனவற்றைக் கணக்கெடுத்தால் 'அன்னத் தடாகம்’* பாலே நடனத்திற்கு நிகரான பாலே இன்று உலகில் இல்லை என்று கூடக் கூறலாம்.
எல்லாமாக சுமார் 1,000 பேரைக் கொண்டது பொல் ஷோய் நடனக் குழு. இக் குழுவின் பாலே நடனங்கள் மாஸ் கோவிலுள்ள பொல்ஷோய் நடன அரங்கிலும், மாஸ்கோ கிரெம்ளினுள் உள்ள 'பாலஸ் ஒஃப் காங்கிரஸ்' அரங் கிலும் மேடையேறுகின்றன.
137

Page 76
முன்னய அரங்கு ஐந்து பால்கனிகளுடன் கூடியது: 2,100 பார்வையாளர்களே அடக்கக்கூடியது.
பின்னைய அரங்கு ஒன்பது பால்கனிகளுடன் கூடியது: 6,000 பார்வையாளர்களை அடக்கக் கூடியது.
இந்த பாலே நடனங்களின் போது, நடனமாடுபவர் களின் அசைவுகளை, பாவங்களைக் கூர்மையாகவும் அருகிலிருப் பது போலவும் அவதானிப்பதற்காக பார்வையாளர்களுக்கு "பைணுேகுலர்ஸ்’ எனப்படும் தொலை நோக்கிக் கருவி களைத் தருகிருர்கள்.
எமது நாட்டில் பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற நடன நிகழ்ச்சிகளில் முன்வரிசைகளில் இருப்போரைத்தவிர பின்னுள்ள எவருக்கும் நர்த்தகிகளின் பாவங்கள் தெரிவதே இல்லை. எமது நடன நிகழ்ச்சிகளிலும் 'பைணுேகுலர்ஸ்’’ உபயோகிக்கும் வழக்கம் வந்தால் எவ்வளவு நல்லது என்று எனது மனம் சிந்தித்தது.
அதே நேரத்தில், பைனேகுலர்களின் வருகை பாவமே அற்ற எமது நர்த்தகிகள் பலரை நடன அரங்குகளுக்கு முழுக்குப் போட வைத்துவிடும் என்ற உண்மையும் என் மனதில் உதிக்காமல் இல்லை. -
ஒடேற் என்ற அழகிய இளம் பெண்ணை அன்னமாகப் போகும் படி ஒரு மந்திரவாதி சபித்து விடுகிருன், அவள் அன்னமாக உருமாறி, அன்னங்களின் அரசி ஆகிருள். தின மும் நள்ளிரவில் ஒரு மணி நேரத்துக்கு மட்டும் அவளுக்கு மனித உருவம் திரும்பி வரும். காட்டிற்கு தனது நண்பர் களுடன் வேட்டையாட வந்த ஓர் இளவரசன் ஒடேற்றைச் சந்திக்கிருன். தனது அன்னங்களைக் கொல்ல வேண்டாம் என்று இளவரசனிடம் கெஞ்சுகிருள் ஒடேற். இளவரசன் ஒடேற் மீது காதல் கொள்கிறன். இவ்வாறு வளர்கிறது *"அன்னத் தடாக'த்தின் கதை,
பாலே நடனப் பாணியில் தமது கால் விரல்களின் மீது நின்று சுழன்றும், பாய்ந்தும், ஒடியும், நளினமான உடல் நெளிவுகளுடனும் மென்மையுடனும் ஒடேற்றும் இளவரச னும், அவர்களது பரிவாரங்களும் ஆடும் நடனங்களும், செவிக்கினிய பின்னணி இசையும் எங்கோ ஒரு கனவுலகத் திற்கு எம்மை இட்டுச் சென்றன.
ஒடேற்றக யெகரெறின மக்ஸிமோவாவும், இளவரசனுக விளாடிமீர் வளிலியேவும் அற்புதமாக ஆடினர்.
'அன்னத் தடாகம் பாலே முடிந்து நாம் வெளியேறிக் கொண்டிருந்தபோது, யெகரெறிஞவின் நடனத்தைப் பலர் வாயாரப் பாராட்டிக் கொண்டு வெளியே வந்தது என்
双寻3

காதுகளில் விழுந்தது. இவர்களில் சிலர், ஒரு தசாப்தத்துக்கு முன்னர் 'அன்னத் தடாக'த்தில் ஒடேற்ருக நடனமாடிய க்லின உலனேவாவின் நடனத்தை நினைவு கூர்ந்து பாராட் டிக் கொண்டு சென்றதையும் கவனித்தேன்.
ஒடேற்றக யெகரெறி tDateFo Gudrra fir. ஞ
ad
சோவியத் பாலேயின் ஒப்புயர்வற்ற மேதை என்று கணிக் கப்படுபவர் தான் இந்த கலின 'உலனேவா. சோவியத் பாலேயின் மருட்சி தரும் உயிராகவும், அதனது உணர்ச்சி யூட்டும் கவிதையாகவும் உள்ளவர் என்றும், உலகப் பாலே யில், 20ம் நூற்ருண்டில், சாஸ்திரீய பாத்திரங்களில் முன் னெப்போதும் கண்டிராத உணர்ச்சிகளை வெளிப்படுத்து வதில் நிகரற்றவர் என்றும் உலக விமர்சகர்களின் புக ழாரங்களைப் பெற்றவர் அவர்.
கலின இன்று நடனமாடுவதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், நடன ஆசிரியராக இருந்து இளம் கலைஞர்களை உருவாக்கி வருகிறர்.
பாலே நடனங்களின் போது மண்டபம் மக்கள் வெள்ளத் தால் நிரம்பி வழிந்ததை நான் கண்டேன். பாலே நிகழ்ச்சி களுக்கு மட்டுமல்ல, நாடகம், இசை நிகழ்ச்சி, சர்க்கஸ்
39

Page 77
போன்ற சகலவிதமான கலாசார நிகழ்ச்சிகளுக்கும் நிரந்தர 'ஹவுஸ் ஃபுல்" அங்கு இருப்பதைக் கண்டேன். இந் நிகழ்ச்சிக்ளுக்குச் செல்ல விரும்புவோர் குறைந்த பட்சம் முதல் நாளே தமது நுழைவுச் சீட்டுக்களைப் பணம் கொடுத்து வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஆசனம் கிடைக்கவே கிடைக்காது. சோவியத் மக்களின் உயர்ந்த கலாரசனை இதிலிருந்து புலப்படுகிறது.
சோவியத் பாலே நடன நிகழ்ச்சிகளின் போது நான் அவதானித்த இன்னெரு சிறப்பு அம்சம், நடன அரங்கு களில் நிரம்பி வழியும் மக்களின் மிகச் சிறந்த கலை அறி வாகும.
நடனக் கலைஞர் சிறப்பாக ஆடும்போது, அரங்கின் எம் மருங்கிலிருந்தும் ஏக காலத்தில் கரவொலி எழுவதைக் SIGSOTG) ITI,
எமது நாட்டுப் பரத நாட்டிய அரங்குகளில் இத்தகைய ஒர் ஒழுங்கை இதுவரை நாம் கண்டதில்லை. நர்த்தகி தாளம் தப்பி ஆடும்போதுகூட சில வேளைகளில் சபையிலிருந்து கர வொலி எழுவதைக் கேட்கலாம். அதுவும் பெரிய கோஷ்டி நடனங்கள் என்ருல் அங்கு நடக்கும் 'ஹாஸ்யங்கள்' இன்னும் அதிகம். மேடையில் எதை, எப்படி ஆடித் தள்ளி ஞல் என்ன, ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை கரவொலி எழும். மேடையில் தோன்றும் ஒரு நர்த்தகியின் பெற்றேர் கள், உற்ருர் உறவினர்கள் சன்னதம் கொண்டு, கரவொலி எழுப்ப, சபையிலிருக்கும் வேறு சிலர் அதைப் புரிந்துகொள் ளாமல், தாமும் கை தட்டித் தொலைத்து முடிப்பார்கள்.
குதிரைப் பந்தயத்தில் ஒரு குதிரையின் மீது காசு கட்டி விட்டவர்கள் தமது குதிரை முன்னுக்கு வரவேண்டும் என்று கத்திக் கூத்தாடுவதை ஒத்த இத்தகைய நிகழ்வுகளைச் சோவி யத் பாலே நடன அரங்குகளிலோ அல்லது வேறெந்தக் கலாசார நிகழ்ச்சிகளின் போதோ காண முடியாது.
இன்னெரு புதுமையான அம்சத்தை பொல்ஷோய் அரங் கில் நான் கண்டேன். திறமையாக நடனமாடுபவர்கள் மீது சபையோர் மலர்ச்செண்டு வீசி தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர். நடனத்தின் போது கூட சில மலர்ச் செண்டுகள் மேடையை நோக்கிப் பறக்கின்றன. நடனத் தின் இறுதியில், நடனமாடியவர்கள் மேடைக்கு வந்து சபையோரின் கரகோஷத்தைப் பெறும்போது, சபையின் பல்வேறு திசைகளிலிருந்தும் மலர்ச்செண்டு மழை மேடை யின் மீது பொழிகிறது. திறமையாக நடனமாடியவரின் காலடியில் ஒரு மலர்மலையே வளர்ந்து விடுகிறது.
1 40

சோவியத் நாட்டில் பாலே நடனம் போன்ற கலைகளைத் தமது நிரந்தர ஜீவனுேபாயமாகக் கொண்டவர்களும் உள்ள னர். வேறு தொழில் புரிந்து இத்தகைய கலைகளைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டவர்களும் உள்ளனர். சோவி யத் நாட்டில் 2.3 கோடி மக்கள்-அதாவது நாட்டின் சனத் தொகையில் பத்தில் ஒரு பங்கினர்-இவ்வாறு கலைகளைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர்.
அவ்வக் கலைகளில் ஆர்வமும் திறனும் உள்ளவர்களைப் பயிற்றுவிப்பதற்கு அரசு சகலவித வசதிகளையும் செய்து கொடுக்கிறது. கலைக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு இல வச கலைப் பயிற்சி நிபுணர்களால் வழங்கப்படுவதோடு நில் லாது, அவர்களுக்கு உதவிச் சம்பளமும் வழங்கப்படுகிறது. இன்னெரு விதமாகச் சொல்லப் போனல், கரும்பு தின்னக் கைக்கூலியும் கொடுக்கப்படுகிறது. இதனுல் கலைத்திறன் உள் ளவர்கள் எங்கிருந்தாலும், அவர்களது உத்தியோகம், சம்ப ளம், இனம், மொழி, குடியரசு போன்ற அம்சங்கள் கணக் கெடுக்கப்படாது, தமது திறமைகளை மேம்படுத்த, விருத்தி செய்ய, வெளிப்படுத்த வாய்ப்புத் தரப்படுகிறது.
இதைப் பார்த்தபோது, எமது தாய் நாட்டிலே நடனத் துறையின் அவல நிலை என் மனத் திரையில் தோன்றத் தவறவில்லை.
திறமையுள்ளவர்களிடம் நடனத் துறையில் கற்று முன் னேறப் பணவசதியில்லை. அப்படித்தான் வயிற்றைக் கட்டிக் கற்ருலும் நிகழ்ச்சிகளை நடாத்தி முன்னுக்கு வரப் 'பண பலமும்’ ‘அந்தஸ்து பலமும்" இல்லை. :ܐܶܡܲܪ
இதன் விளைவு? as . எமது மேடைகளில் பரத நாட்டியத்திற்குப் பதிலாக "பண நாட்டியமும்** இடையிடையே ஆடப்படுகிறது. பண பலம், அந்தஸ்துப் பலம் கூடப் பெற்ருல், உலக வலம் கூடச் சாத்தியமாகிறது. ஆட்டத்தில் “ரம்பை" என்றும “ஊர் வசி’ என்றும் கூடப் புகழ் பெறும் வாய்ப்புக்களும் கிட்ட லாம். இத்தகைய நிலை நடனத் துறைக்கு மட்டும் உரிய தல்ல. எமது தாய்நாட்டில் எந்தக் கலைத துறையை எடுத் தாலும் இதே நிலைதான். இலங்கையில் முற்போக்கு இலக்கி யத்தின் முன்னேடிகள் என்று வர்ணிக்கப்பட்டோர் கூட வறுமையில் துஞ்சி உயிர் துறந்த வரலாறு உண்டு. அவர் களின் குடும்பத்தினர் இறந்தோரின் உடலை அடக்கம் செய் வதற்குக் கூடப் பணமின்றி அவலப்பட்ட வரலாறும் உண்டு.
ஏனிந்த நிலை? இந்தக் கொடுமை தீர வழியேயில்லையா?
147

Page 78
வேதனையில் வெதும்பிய என் மனதில் எழுந்த இக்கேள் விகளுக்கு விடையும் சோவியத் விஜயத்தின் போது கிடைத் 岛垒/·
சோவியத் யூனியனும், சோஷலிஸத்தைத் தழுவிக் கொண்ட உலக நாடுகளிலும் ஏற்படடதைப் போன்ற ஒரு "கலாசாரப் புரட்சி' எமது நாட்டிலும் ஏற்பட்டாக வேண்டும். - .
உண்மையான மார்க்சிய லெனினியக் கருத்தமைப்பில், கலாசாரப் புரட்சி என்பது, உழைப்பாளி மக்களுக்கு மனித குலத்தினுல் சேகரிக்கப்படட அறிவுத துறை, கலாசார செல் வங்களை அளிப்பதிலும், வெகுஜனங்களின் நலன்களை முன் னிட்டு இச்செல்வங்களைப் பயன்படுத்துவதிலும் அடங்கி யிருக்கின்றது.
உலகின் முதலாவது சோஷலிஸ் நாட்டின் ஸ்தாபகரான மாமேதை லெனின், "எமது நாட்டை முற்றிலும் சோஷ லிஸ் நாடாக மாற்றுவதற்குக் கலாசாரப் புரட்சி போது மானதாயிருக்கும்.’’ என்று கூறியதிலிருந்து சோஷலிஸ் நிர் மாணத்தில் கலாசாரப் புரட்சியின் பங்கு எவ்வளவு மகோன்னதமானது என்பது புலப்படுகிறது. -
இன்று சோவியத்தில் நிலவும் உன்னத சோஷலிஸ் கலா சாரத்தின் தோற்றத்திற்கு அர்நாட்டில் லெனின் தலைமை யில் ஆரம்பமான கலாசாரப் புரட்சி எவ்வாறு வழிவகுத் தது என்பதை நேரில் கண்டறியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

17
மெய்யான மார்க்வRஸ லெனினிஸக் கலாசாரப் புரட்சி
1906 புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் வெளி வந்த ‘வெஸ்த்ணிக் பிராஸ்வெஷசெனியா"(கல்வித் தூதன்) என்ற சஞ்சிகையில் சுவையான ஒரு மதிப்பீடு வெளி யிடப்பட்டிருந்தது.
ரஷ்யாவின் அப்போதைய கலாசார வளர்ச்சியின் வேக த்தை மாற்றமலே விட்டு வைத்தால், அந்நாட்டில் ஆண் கள் மத்தியில் நிலவிய எழுத்தறிவின்மையை ஒழிக்க 180 ஆண்டுகள் பிடிக்கும்; பெண்கள் மத்தியில் 300 ஆண்டுகள் மத்திய ஆசிய துருக்கிஸ்தானில் (இன்றைய துருக்மேனியக் குடியரசு இதிலிருந்துதான் வந்தது) 4,600 ஆண்டுகள்.
இந்தச் சஞ்சிகை வெளிவந்து இன்று 70 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன. சோவியத் குடியரசுகள் அனைத்திலுமே ஏறத்தாழ நூற்றுக்கு நூறு சதவீதம் எழுத்தறிவின்மை ஒழிக்கப்பட்டு விட்டது. ཡག
புரட்சிக்கு முந்திய துருக்மேனியாவில் கல்வி வாசனை அற்ற 14 வயதுப் பெண் ஒருத்தி தனது கணவனுக்கு அடிமைபோல் விற்கப்பட்டாள். பீபி பல்வனுேவா என்ற இப் பெண் புரட்சிக்குப் பிந்திய துருக்மேனியாவில் கல்வி கற்றுத் தேறி, பின் துருக்மேனியாவின் கல்வி அமைச்சராக வும் உயர்ந்தாள்.
இவை லெனின் தலைமையில் ஆரம்பமான கலாசாரப் புரட்சியின் பெறுபேறுகளே.
லெனினின் தலைமையில் அக்டோபர் சோஷலிஸ்ப் புரட் சியை நடத்திய கம்யூனிஸ்டுகளின் கலை ஆர்வத்திற்கு எடுத்துக் காட்டாகச் சுவையான ஒரு சம்பவம் உள்ளது.
பெட்ரோகிராட் (இன்று லெனின் கிராட்) நகரில் 'அரோரா' என்ற போர்க்கப்பல் குண்டொன்றை
ls

Page 79
வெடித்து அக்டோபர் புரட்சியை ஆரம்பித்து வைத்த தல்லவா? இதையடுத்து, பெட்ரோகிராட் நகரிலிருந்து புரட்சிக்குழு புரட்சியில் ஈடுபட்டிருந்த மக்களுக்குப் பின் வருமாறு அறைகூவல் விடுத்தது
“பொதுமக்களே, உங்கள் பழைய எஜமானர்கள் போய் விட்டனர்; அவர்கள் விட்டுச் சென்ற மாபெரும் கலைச் செல்வங்கள் இப்போது தேசம் அனைத்திற்கும் சொந்த மாகிவிட்டன. பொதுமக்களே, உங்கள் மூதாதையர்களின், உங்களின் கலாசார பாரம்பரியத்தின் பிரதிபலிப்புக்களான ஓவியங்களையும், சிலைகளையும், கட்டடங்களையும் பாதுகாக்கத் தவருதீர்கள். பொதுமக்களே, நினைவுச்சின்னங்களையும், புராதனப் பொருள்களையும், ஆவணங்களையும் பாதுகாத்து வையுங்கள்-அவைதாம் உங்கள் வரலாறு; உங்கள் ** . מL (60לש)b) L_j)
புரட்சியை முன்னின்று நடாத்திய மக்கள் இந்த அறை கூவலைச் செவிமடுத்தனர். ஜார் மன்னர்களின் உறைவிட மாகவும், கலைச் செல்வங்களின் கருவூலமாகவும் திகழ்ந்த மாரிகால அரண்மனையை நோக்கி அவர்கள் சுட்டபோது கூட நிஜக் குண்டுகளைச் சுடவில்லை. வேற்று வேட்டுக்களே தீர்க்கப்பட்டன. அங்கிருந்த கலைப் படைப்புக்கள் எதை யும் தொடவில்லை; சிதைக்கவில்லை; சீர்குலைக்கவில்லை.
அவர்களுக்குத் , தெரியும் அந்த அரண்மனையும், அவற்றின் அற்புதமான கலைப் படைப்புக்களும் ஆளும் ஜார் மன்னர்க ளுக்குச் சொந்தமாக இருந்த போதும் கூட, இவையாவும் ஆயிரமாயிரம் தொழிலாளி மக்களின் அரிய உழைப்பிலும் நெற்றிவியர்வையிலும் உருவான பொக்கிஷங்கள் என்று. அவர்கள் அறிவார்கள், அக்டோபர் புரட்சியின் வெற்றி, அக் கலைக் கருவூலங்களின் சொத்துரிமை அடக்கியாண்ட, சுரண் டிப் பிழைத்த வர்க்கத்திடமிருந்து அவற்றை ஆக்கிய தொழி லாளர் வர்க்கத்தினரான தமக்கு மாற்றப்படும் என்று.
அக்டோபர் புரட்சியாளர்கள் கலை, கலாசாரத்தின் மீது, வைத்திருந்த பற்றையும் ஆர்வத்தையும் விளக்க வேறென்ன வேண்டும்?
1917 ன் அக்டோபர் சோஷலிஸப் புரட்சி வெற்றி பெற்ற தை அடுத்து, மாமேதை லெனின் மேற்கொண்ட முதற் பணிகளுள் ஒன்று, சோஷலிஸ்க் கலாசாரம் ஒன்றினை உரு வாக்குவதாகும். கலாசாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற் படுத்துவது சோஷலிஸ் நிர்மாணத்தின் வெற்றிக்கு அவசிய மான ஒரு முன்தேவை என்று லெனின் கருதினர்.
244

ஜார் ஆட்சியின் கீழிருந்த ரஷ்யப் பேரரசில், மக்கள் தமக் கென ஒரு கலாசாரத்தை உடையவராாய் இருந்தபோதிலும், அக்கலாசாரச்செல்வங்களைக் கோடிக்கணக்கான தொழிலாளி களும் விவசாயிகளும் அனுபவிக்க முடியாத நிலை அன்று நிலவி யது. அக்டோபர் புரட்சிக்கு முன்னர், மத்திய ஆசிய மக்க ளுள் 99 சத வீதத்தினர் உட்பட, ரஷ்யக் குடிமக்கள் 70 சத வீதத்தினருக்குமேல் எழுத்தறிவற்றவர்களாக விளங்கி னர். இந்நிலையில் நூல்களே, ஒவியங்களை, நடனங்களை, இசையினை-இன்னும் இன்னேரன்ன கலாசாரச் செல்வங் களை நுகர்ந்து அனுபவிப்பதுதான் எப்படி? -
இதனல்தான், புரட்சிக் கனலில் பிறந்து வந்திருந்த இளம் சோவியத் குடியரசுக்களை இன்னெரு புரட்சிக்கு-கலாசா ரப் புரட்சிக்கு உள்ளாக்க வேண்டும் என்று லெனின் தீர் மானித்தார்.
லெனின ஏற்படுத்திய "கலாசாரப் புரட்சி, உழைக்கும் மக்களைச் சுரண்டும் வர்க்கத்தினர் பல நூற்றண்டு காலமாக அடிமைப்படுத் தி வைத்திருந்த ஆன்மீகத் தளைகளிலிருந்து அவர்களை விடுவிக்கவும், கடந்த காலங்களின் கலாசார ச் செல்வங்களையெல்லாம் அவர்களுக்குக் கிட்டச் செய்வதை யும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது ஒரு புதிய சோஷலிஸ்க் கலாசாரத்தை உருவாக்குவதையும், ஒரு புதிய சோஷலிஸ் அறிவுத்துறையினரை உருவாக்குவதையும், விஞ் ஞானம்-இலக்கியம்-கலைகள் ஆகியவற்றின் சர்வாம்ச மான முன்னேற்றத்தைக் கொண்டு வருவதையும் நோக்க மாகக் கொண்டிருந்தது. ܝ
உண்மையான சோஷலிஸ்ப் பாதையிலிருந்து தடம் புரண்ட மாவோயிஸ்டுகள், அதனல் ஏற்படும் அரசியல் நெருக்கடிகளின் போது, தமக்கு மாறனவர்களை, **கலா சாரப் புரட்சி' என்ற போர்வையின் கீழ் அடக்கி, ஒடுக்கி, அழித்து, களைபிடுங்கிடக் கட்டவிழ்த்து விடும் அராஜக வன்முறைகளுக்கும் லெனின் ஆரம்பித்து வைத்த கலாசாரப் புரட்சிக்கும் எதுவித பொதுத் தன்மையும் இல்லை.
லெனின் ஆரம்பித்து வைத்த கலாசாரப் புரட்சியா னது, 'பாட்டாளி வர்க்கக் கலாசாரம்' என்ற கோஷத்தின் மத்தியில் கடந்த காலக் கலாசாரச் சாதனைகள் அன்ைத்தை யும், பேரிலக்கியங்கள்--கலைகள் யாவற்றையும் தூக்கித் தூர வீசும் சூன்யவாதமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, சோஷலிஸ் கலாசாரமானது, மனிதகுலம் உரு வாக்கியுள்ள அருமையான கலை அம்சங்கள் யாவற்றினதும்
45

Page 80
இயல்பான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று லெனின் சுடடிக்காட்டிஞர்.
"முதலாளித்துவம் விட்டுச்சென்றுள்ள கலாசாரம் முழு வதையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு சோஷலிஸத்தை நிர்மாணிக்க வேண்டும்.’’ என்று அவர் எழுதினர். 'அதன் விஞ்ஞானம், தொழில் நுட்ப வியல், விஷயஞானம், கலை யாவற்றையும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்; அவையில்லாமல், கம்யூனிஸ் சமுதா யத்தைக் கட்டியமைக்க நம்மால் இயலாது."
முதலாளித்துவம் விட்டுச் சென்ற கலாசாரத்தின் சிறந்த சாதனைகளை சோஷலிஸ் கலாசாரம் தன்வயப்படுத்துகின் றது; விமர்சனபூர்வமாக மறுமதிப்பீடு செய்கிறது; மேலும், உழைக்கும் வர்க்கத்தினரின் பரந்த பகுதியினருக்கு அவை கிடைக்கும்படி செய்கிறது.
சோஷலிஸ் கலாசாரப் புரட்சியின் பிரதான குறிக்கோள் சோஷலிஸ்-கம்யூனிஸ நெறிமுறைகளின் அடிப்படையில் சமுதாயத்தில் ஒரு முற்று முழுதான கலாசார மறுமலர்ச் சியை ஏற்படுத்துவதாகும். இதற்கு மக்கள் உள்ளங்களில் வேரூன்றியிருந்த கடந்தகால தப்பெண்ணங்களின் எச்சங் களை அகற்றுவதும், மனிதரின் கலாசாரப் பசியைப் போக்கு வதும், சகல மக்களுக்கும் ஒரு மார்க்ஸிய-லெனினியக் கண்ணுேட்டத்தை ஏற்படுத்துவதும், புதிய தார்மிகத் தன்மைகளையும் சமூக நடத்தைத் தரங்களையும் உருவாக்கு வதும், பூரணத்துவமான உளவளர்ச்சியும் ஆக்க சிந்தனை யும் உள்ள ஒரு புதுமனிதனை உருவாக்குவதும் இன்றி யமையாதது. அதே நேரத்தில், எல்லாச் சகாப்தங்களின தும் தேசங்களினதும் அரிய கலை, கலாசாரப் பொக்கிஷங் கள் அனைத்தையும் தன்வயப்படுத்தி மேலும் விருத்தியுறச் செய்யாது சோஷலிஸ்க் கலாசாரத்தை நிறுவ இயலாது என்று லெனின் சுட்டிக் காட்டினுர்,
பல இன மக்கள் வாழ்ந்த சோவியத் யூனியனில், ஒவ் வோர் இனமும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்ட சமூக, கலாசார் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தது. வெவ்வேறு இனங்களின் சமூக, கலாசார முதிர்ச்சியில் இருந்து உயர்வு தாழ்வுகளை அகற்றுவது எப்படி? பொதுவான ஒரு சோஷ லிசக் கலாசாரத்தின் நிர்மாணத்திற்கு ஒவ்வோர் இனமும் பயனுள்ள பங்களிப்புகளை அளிக்க வழிவகுப்பது எப்படி? நூற்றிற்கு மேற்பட்ட இனங்கள் வசித்த சோவியத் யூனிய னில், சகல பின்தங்கிய இனங்களுக்கும், அவை எண்ணிக் கையில் பெரிய இனமாயிருந்தாலென்ன, சிறிய இனமா
盈46

யிருந்தாலென்ன, முன்னேற்றமுற்ற இனங்களின் சமூக, கலாசார வளர்ச்சித் தரங்களுக்கு நிகராக உயர்ந்து, நாடெங்கும் சகல இனங்களுக்குமிடையே ஒரே சீரான சமூக கலாசார முதிர்ச்சி ஏற்படுவதற்கு சகல விதமான வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டன. w .
1918-1920 காலகட்டத்தின் போது, சோவியத் யூனி யனில் வதிந்த சில சிறிய இனங்களுக்கு, முதன் முதலாக பாடப் புத்தகங்களைக் கம்யூனிஸ்ட் அரசு வெளியிட்டது. சில இனத்தினர்கள் தமது தாய்மொழிக்கு எழுத்துவடிவம் இன்றிக் கூட இருந்தனர். இம் மொழிகளுக்கும் கம் யூனிஸ்ட் அரசே எழுத்து வடிவங்களை அமைத்துக்கொடுத்தது. இவ்வாறு 40க்கும் மேற்பட்ட தேசிய மொழிகள் முதன் முத லாக விஞ்ஞான அடிப்படையோடு கூடிய எழுத்து மொழி கள் ஆயின. நாடெங்கும் தேசிய மொழிகளை வளர்க்கவும் ஆராயவும் பல விஞ்ஞான ஆய்வுகூடங்கள் திறக்கப்பட்டன. எழுத்துக்கள், சொற்கள், பதங்கள், உச்சரிப்பு, இலக்கணம், முதலிய துறைகளில் சீரிய ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டன. அக்டோபர் புரட்சி நடைபெற்றுச் சுமார் 20 ஆண்டுகளுக் குள் சோவியத்தில் எழுத்தறிவின்மை பெரும்பாலும் ஒழிக் கப்பட்டுவிட்டது. .
சோவியத்தின் பல்வேறு தேசிய கலாசாரங்களும் முதிர்ச்சி அடைந்து, ஒரு சர்வதேச உணர்வுப் பிணைப்புடன் சோவியத் சமூகத்தின் ஒரு பொதுவான கலாசாரமாக மலர்ந்தன. அதே நேரத்தில், ஒவ்வொரு தேசிய கலாசார மும் அதனது தேசியத் தனித் தன்மைகளையும் மரபுகளையும் பாதுகாக்கவும் தவறவில்லை. *
சர்வதேச ரீதியிலான சோஷலிஸ் உள்ளடக்கமும், பன் முகப்பட்ட தேசிய வடிவங்களும் மரபுகளும் இசைவுடன் ஒருங்கே சங்கமித்துச் சிறப்புறுவதுதான சோஷலிஸ் கலாசாரம், இது சோஷலிஸ் யதார்த்த வாதத்தை தனது படைப்பாக்க முறையாகக் கொண்டது. யதார்த்தத்தை அதனுடைய புரட்சிகர வளர்ச்சியில் எடுத்துக்கொண்டு உள்ளதை உள்ளபடி பிரதிபலிப்பது தான் சோஷலிஸ் யதார்த்தவாதம். கலைப் படைப்புக்கள் மதிப்பிடப்படுவதற்கு அத்திவாரமாக உள்ள பொது அடிப் படைத் தத்துவங்கள் அதில் அடங்கியுள்ளன. கலையானது உண்மையும் நேர்மையும் உடையதாய் இருக்க வேண்டும் என்றும், மனிதாபிமானம் - தேசியப் பண்புக் கூறுகள் - உயர்ந்த கலையம்சம் - வாழ்வுடன நெருங்கிய தொடர்பு - தன்னம்பிக்கை உடையதாய் இருக்க வேண்டும் என் றும் அது வரையறுக்கிறது.
147

Page 81
சோஷலிஸ் யதார்த்தவாதத்தின் முக்கிய அம்சம், அது ஒரு சர்வதேசக் கண்ணேட்டத்தை உடையதே ஆகும். இக் கண்ணுேட்டம் யதார்த்த வாழ்விலிருந்து பின்வாங்குவதை நிராகரிக்கிறது; மனித குலத்தின முன்னேற்றத்திற்காகப் போராட வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது; கோடிக் கணக்கான மக்களால் விரும்பப்படும் இலட்சியத்தை அடை வதற்கான பாதையில் ஒளிவிளக்காகத் திகழ்கிறது; ஒரு புது யுகததை நிறுவுவதற்கான பணியில் மக்களுக்குத் தீவிரமாக உதவுகிறது.
1917ன் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியை அடுத்து, லெனினின் தலைமையில் சோவியத் யூனியன் நிகழ்த்திய கலா சாரப் புரட்சியின் நல் விளைவுகளை இன்று உலகமே அங்கீ கரிக்கிறது.
உலகப் புகழ் பெற்ற ஆங்கில விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான எச். ஜி. வெல்ஸ் 1920ம் ஆண்டில் சோவி யத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதையடுத்து, 'நிழ லில் ரஷ்யா' என்ற நூலை அவர் எழுதினர். சோவியத் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த கலாசாரப் புரட்சி பற்றி அவர் பின்வருமாறு வியந்து எழுதினர்.
'இன்றைய பணக்கார இங்கிலாந்திலும், பணக்கார அமெ ரிக்காவிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒர் இலக் கியப் பணி, குழப்பமும், குளிரும், பஞ்சமும், பரிதாபத் திற்குரிய வறுமையும் தாண்டவமாடும் இந்த விசித்திர ரஷ்யாவில் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் பசியால் வாடுகின்ற ரஷ்யாவில் நூல் மொழிபெயர்ப் புப் பணியில் நூற்றுக்கணக்காஞேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மொழிபெயர்க்கும் நூல்கள் அச்சேற்றப்பட்டு வரு கின்றன. இவை வேறெந்த நாட்டு மக்களுக்கும் கிடைக் கப்பெருத அளவு உலக அறிவைப் புதிய ரஷ்யாவுக்கு வழங்கப்போகின்றன.'
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (**யுனெஸ்கோ’) புள்ளி விவரங்களின் படிபார்த்தால் கடந்த பலவருடகாலமாக நூல் பிரசுரிப்பில் சோவியத் யூனியனே உலகில் முதலிடம் வகிக் கிறதாம். ஆண்டுதோறும் உலகில் பிரசுரிக்கப்பட்டு வரும் நூல்களில் நாலிலொரு பங்கு சோவியத்திலே பிரசுரிக்கப் படுகிறது. ஆண்டு தோறும், 80,000 க்கு மேற்பட்ட நூல் களின் 140 கோடி பிரதிகள் இந் நாட்டில் பிரசுரிக்கப்படு கின்றன. இவை சுமார் 90 சோவியத் மொழிகளிலும் 60 உலக மொழிகளிலும் பிரசுரமாகின்றனவாம்,
48

யூனெஸ்கோ’ புள்ளி விவரத்தின் படி, மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுவதிலும், உலகில் முதலிடத்தை சோவி யத் யூனியனே பெறுகிறது.
1946 - 1972 காலகட்டத்தில், சோவியத்தில், பல் வேறு இலக்கிய, தத்துவார்த்த போக்குகளைக் கொண்ட 6,305 அமெரிக்க நூல்களும், 5,733 பிரெஞ்சு நூல்களும், 3,697 ஆங்கில நூல்களும, 724 இத்தாலிய நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டன.
ஆனல் இதே காலகட்டத்தில், அமெரிக்காவிலும், பிரான்சிலும், பிரிட்டனிலும், இத்தாலியிலும் வெளியிடப் பட்ட சோவியத் நூல்கள் முறையே 450, 628, 437, 407 மட்டுமே ஆகும்.
கம்யூனிஸ்ட் சோவியத் யூனியனை "இரும்புத் திரை' நாடு-" "மூடிய சமூகம்' என்றும், முதலாளித்துவநாடு களைத் 'திறந்த சமூகம்' என்றும் சிலர் செய்து வரும் பிர சாரம் எவ்வளவு அபாண்டமானது என்பதை நிரூபிக்க இக் கலாசாரப் பரிவர்த்தனைப் புள்ளி விபரங்களே போதும். உலகிலேயே நூல்களுக்கு மிக மலிவான விலைகளை உடைய நாடும் சோவியத் யூனியனே.
திரைப்படங்கள் பார்ப்பதிலும் உலகில் சோவியத் மக்களே முன் நிற்கின்றனர். "யூனெஸ்கோ' புள்ளிவிவரங் களின் படி, சராசரியாக, ஒரு ஜப்பானியர் ஆண்டுக்கு 2 முறையும், மேற்கு ஜெர்மானியர் 3 முறையும், ஆங்கிலே யர் 4 முறையும், பிரெஞ்சுக்காரர் 4 முறை பும், அமெரிக்கர் 5 முறை பும, சோவியத் பிரஜை 19 முறையும் திரைப்படம் பார்க்கின்றனராம்! சோவியத் நாட்டில் திரைப்பட மாளிகீை களில் ஆண்டுதோறும் மக்கள் வரவு 500 கோடியாகும்.
* யூனெஸ்கோ’ புள்ளிவி வரங்களின் படி நாடகங்கள், இசை- நடன நிகழ்ச்சிகள், அரும் பொருட்காட்சிச் சாலை களுக்குச் செல்வதிலும் உலகில் சோவியத் மக்களே முத லிடம் வகிக்கின்றனர். w
கலாசாரத் துறையில் இத்தனை சீரும் சிறப்பும் பெற்றுப் புகழ் பரப்பி வரும் சோவியத் நாட்டை ஒரு ‘புது யுக" மாக நான் காண்பதில் என்ன தவறு?
49

Page 82
18 -- மக்கள் இலக்கியம் படைத்தவர்கள்
ழோவியத் மக்கள் பெரும் புத்தகப் பிரியர்கள், வாசகர் கள் என்பதை எனது சோவியத விஜயத்தின் போது பல சந்தர்ப்பங்களில் என்னல் உணர்ந்து கொள்ள முடிந்தது.
சோவியத்திலுள்ள புத்தகக் கடைகளில் எப்போதும் பெருங் கூட்டம் இருப்பதை அந் நாட்டிற்குச் செல்லும் எவ ராலும் அவதானிக்காமல் இருக்க முடியாது.
மாஸ்கோவில் கலினின் புருெ ஸ்பெக்டில் பிரமாண்டமான ஒரு புத்தகக் கடை உள்ளது. இதனைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய புத்தகக் கடைகளில் ஒன்ருகும். இதன் மொத்தப் பரப்பளவு 4,000 சதுர மீட்டர்களாகும். இங்குள்ள புத்த கத் தட்டுக்களின் மொத்த நீளம் சுமார் ஒரு மைலாகும். இங்கு தினமும் 20,000 மக்கள் புத்தகங்கள் வாங்குகின்றனர். சோவியத் யூனியனில் எல்லாமாக 14,500 பெரிய புத்தகக் கடைகளும், 35,000 சிறிய புத்தகக் கடைகளும் உள்ளன. சோவியத்திலுள்ள நூலகங்களில் எல்லாமாக 18 கோடி மக்கள் நூலக உறுப்பினர் அட்டை உடையவர்களாயிருக் கின்றனர். இது அந்நாட்டின் சனத்தொகையில் முக்காற் பங்காகும். நூலகங்களில் நூல்களை இரவல் பெறுவதற்குக் கட்டணம் ஏதும் இல்லை.
மாஸ்கோவிலுள்ள உலகப் புகழ் பெற்ற லெனின் நூலகத் திற்குத் தினமும் 10,000 பேர் வருகிறர்களாம். நேர மின் மையால் அந் நூலகத்திற்கு விஜயம் செய்ய எனக்கு வாய்ப் புக் கிட்டவில்லை. எனினும், அந்நூலகத்தைக் கடந்து காரில் சென்ற போது ஒருவித பெருமிதம் என்னை ஆட்கொள்ளத் தவறவில்லை.
ஜி. சீ. ஈ. வகுப்பு மாணவனுக நான் யாழ்ப்பாணம் இந் துக்கல்லூரியில் இருந்தபோது, 'சந்திரனைச் சேர்ந்திடுதல் என் ருே?" என்ற பெயரில் விண்வெளி ஆய்வு பற்றிய எனது முதலாவது கட்டுரையை 'இந்து இளைஞன்' என்ற கல்
150

லூரிச் சஞ்சிகைக்கு எழுதியிருந்தேன். உலகின் முதலாவது விண்வெளி வீரரான யூறி ககாரின் இலங்கை வந்தபோது, அவரை வரவேற்பதற்காக "வானமரன்” என்ற சிறு நூலை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழில் வெளியிட்டிருந்தது. இந் நூலில் உள்ள ஒரேயொரு கட்டுரையாக எனது கடடுரை மறுபிரசுரம் செய்யப்பட்டது. "வானமரன்" மாஸ்கோ லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
விண்வெளி ஆய்வு பற்றிய, சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எனது நூலான 'மண்ணில் இருந்து விண்ணிற்கு"ம் இந் நூலகத்தில் உள்ளது.
'எனது இரு இலக்கியப் படைப்புக்கள் அங்கே உள் ளன,' என்று என்னுடன் கூட வந்த நொவோஸ்தி பத்திரி கை ஸ்தாபன ஆசிரியரான வியசஸ்லாவ் டொப்சியனிடம் நான் கூறியபோது, அவர் முகம் மலர, என் கைகளைப் பிடித்து குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டார்.
சோவியத் யூனியனில் எல்லாமாக 3,60,000 நூலகங் கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 350 கோடி நூற் பிரதிகள் உண்டு.
சோவியத் மக்களின் தணியாத இலக்கியப் பசிக்கு இவை சான்று பகர்வனவாக அமைந்துள்ளன.
பல தலைமுறை எழுத்தாளர்களது படைப்பாற்றலின் விளைவே பல - தேசிய சோவியத் இலக்கியமாகும்.
சோஷலிஸ் யதார்த்த வாதத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாவது சோவியத் படைப்பாக "தாய்" என்ற நவீனம் கருதப்படுகிறது. அதன் ஆசிரியரான மக்ஸிம் கோர்க்கி சோவியத் உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிப் பல அமர காவியங்களை ஆக்கியவர். சோஷலிஸ் இலக்கியத் தின் தந்தை என்று கருதப்படும் இவரையே உலகின் மூலை முடுக்குகளில் உள்ள எண்ணற்ற முற்போக்கு எழுத்தாளர் கள் தமது ஆதர்ஸ் புருஷராகக் கொண்டுள்ளனர்.
அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சிக்கு முன்னரேயே தமது இலக்கியப்பணியை ஆரம்பித்திருந்த எண்ணற்ற ரஷ்ய எழுத் தாளர்கள் - குறிப்பாக, விக்கென்றி வெரஸ்யேவ், சேர்ஜி செர்ஜியேவ் - சென்ஸ்கி, வியசெஸ்லாவ் ஷிஷ்கோவ், மிஹ்ேபில் பிரிஷ்வின், நிக்கோலாய் அஸியேவ், அலெக்ஸாந் தர் கிரின் முதலியோர் - 1920ம், 1930ம் தசாப்தங்களில் சோஷலிஸ்க் கலாசாரத்தை உருவாக்குவோரின் அணிகளில் சேர்ந்தனர்.
அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியின் ஆதாயங்களைப் பேணுவதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் தீவி
151

Page 83
ரப் பங்கெடுத்த லியோனித் லியனேவ், அலெக்ஸாந்தர் ஃபதயேவ், டிமிற்றி ஃபுர்மனேவ், மிஹேயில் ஷொலக்கோவ், விஸேவெலொட் விஷ்ணெஷ்ஸ்கி, போறிஸ் லாவ்ரினேவ், நிக்கோ லாய் திக்கனேவ் போன்ற சிருஷ்டி கர்த்தாக்களும் இலக்கியவானில் புதிதாகத் தோன்றினர்.
இத் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஒரு புதிய கதாநாயகனை - புரட்சியின் இலட்சியத்தை நிலை நிறுத்து வதற்காகச் செயலூக்கத்துடன் போராடும் ஓர் இலட்சிய நாய்கனை உருவாக்கினர்.
அக்டோபர் புரட்சியை அடுத்து. வந்த ஆண்டுகளில் கவி தைத் துறையும் விருத்தியடையலாயிற்று, விளாடிமிர் மாய கோவ்ஸ்கி, அலெக்ஸாந்தர் பிளொக், வலறி பிரியுஸோவ், சேர்ஜே எஸினின் போன்ற ஒப்பற்ற கவிஞர்கள் உருவாயி னர். மாயகோவ்ஸ்கியின் அனல் தெறிக்கும் உணர்ச்சிக் கவிதைகள் சோவியத் இலக்கியத்தை வளமூட்டி நிற்கின், .10 (მბ)IT •
1930ம் தசாப்தத்தில் துருக்மேனிய எழுத்தாளர் பேர்டி கேர்பயேவைப் போன்ற-பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தோன்றிப் புகழ் பெற்றனர்.
1930 - 1940 காலகட்டத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூல்களில் மிஹாயில் ஷொலகோவின் "டான் நதி அமைதியாகப் பாய்கிறது", அலெக்ஸி டால்ஸ்டாயின் 'நகரத்தின் வழியே பாதை' ஆகிய நவீனங்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். கம்யூனிஸ்க் கண்ணுேட்டத்துடன் எழுதப்படட அந் நவீனங்கள் பழைய - புதிய உலகங்களுக் கிடையே நடைபெறும் ஜீவ மரணப் போராட்டத்தை நிறைந்த கலை அம்சத்துடனும் யதார்த்தித்துடனும் அணுகின.
அக் காலகட்டத்தில் எழுதப்பட்ட, விஸ்ேவெலொட விஷ் ணேவ்ஸ்கியின் 'நம்பிக்கைமிக்க துன்பியல்' போன்ற சிறந்த நாடகங்கள் இன்றும் மேடை ஏற்றப்பட்டும், சினி மாவாகக் காட்டப்பட்டும் வருகின்றன. அவற்றைப் பார்ப் பதற்கு மக்கள் திரளுகின்றனர்.
1932ல் வெளிவந்த நிக்கோலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கியின் * * Gub 6737555"” (HOWTHE STEEL WASTEMPERED) என்ற நவீனம் சோவியத் நவீனங்களின் சிகரமாகத் திகழ் கிறது" ஒஸ்ட்ரோவ்ஸ்கி உள்நாட்டு யுத்தத்தில் போரிட்டுத் தியாகத் தழும்பேறியவர்; கடுஞ் சுகவீனமுற்றுக் கண் பார்வையை இழந்து வாதத்தினுல் முடக்கம் அடைந்தவர். ஆனல் இத்தனை சுகவீனங்களாலும் கூட சோஷலிஸ் இலக் கியத்திற்கு அவர் ஆற்ற விழைந்த சேவையைத்தடுக்க முடிய
752

உலகப் புகழ் பெற்ற தமது நவீனத்தை எழுதாது அவனிரத் தடுக்க முடியவில்லை. m ༦...---- அவரது நவீனத்தின் கதாநாயகனன பவல் கோர்ச்சா ஜின் சோவியத் இளம் தலைமுறையினரின் இலட்சிய புருஷ ஞனுன், வீரத்திற்கும் தியாகத்திற்கும் உலகுக்கே ஒர் ஆதர்ஸ் நாயகனஞன், பலவகைகளில் இந்த நவீனம் ஒஸ்ட் ரோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே அமைந்ததெனலாம்.
எனது சோவியத் சுற்றுலாவின்போது, ஒரு நாள், நாம் சென்ற காரின் சாரதியாக நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு ரஷ்யப் பெண் வந்திருந்தாள். நாம் காரை விட்டு இறங் கிச்சென்ற போதெல்லாம், அவள் விழுந்து விழுந்து ஒரு புத்தகத்தை வாசிப்பதைக் கண்டேன். அது என்ன புத்த கம் என்றறியத் துடித்தேன்.
அது ஒஸ்ட்ரோவ்ஸ்கியின் வீர காவியம் என்றறிந்தபோது நான் அடைந்த வியப்பிற்கு அளவேயில்லை. தனது சிறு வயது முயல் பல தடவைகள் அதைத் திருப்பித் திருப்பி அவள் படித்துவிட்டாளாம். எனினும் அந்த நூல் அவளுக்கு இன்னும் அலுக்கவில்லை. ஒரு கார்ச்சாரதியின் இலக்கிய இரசனையைப் பார்த்தீர்களா? -
1941-45 உலக மகா யுத்தத்தின் போது, சோவியத் எழுத்தாளர்கள் தமது சகபிரஜைகளுடன் தோளோடுதோள் நின்று தமது தாயகத்தையும் மனித குலத்தையும் ஹிட்ல ரின் பாஸிஸப் படைகளிலிருந்து காப்பதற்காக வீரப் போர் புரிந்தனர். புதை குழிகளிலும், போர்க் கப்பல்களிலும், யுத்த முனை நிருபர் குழுக்களிலும் எழுத்தாளர்கள் தமது பேணுக்களோடு துப்பாக்கிகளையும் ஏந்திநின்றனர். புத்த முனையில் இருந்து, அவ்விடத்து நிகழ்வுகளை வீரகாவியமாக் எழுதி, தம் நாட்டவரின் தேச பக்தியையும் கடமையுணர்ச்சி யையும் கொழுந்துவிட்டு எரியச் செய்து, எதிரியை முறி யடிப்பதற்கு உதவினர். 400க்கு மேற்பட்ட சோவியத் எழுத்தாளர்கள் யுத்த முனையில் உயிர் துறந்தனர். ܗܝ
அலெக்ஸி ட்ால்ஸ்டாய், மிஹேயில் ஷொலகோவ், விஸே வெலொட் விஷ்னேவ்ஸ்கி, இலியா எஹரன் பேர்க் போன் ருேரின் எழுத்துக்கள் யுத்தகால வீரகாவியங்களாகப் புகழ் பரப்பி நிற்கின்றன.
மனித வரலாற்றல் எந்தவொரு நாடும் அடைந்திராத சேதத்தை இரண்டாம் உலக யுத்தத்தில் சோவியத் நாடு அடைந்தது. இரண்டு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்களைப் பலிகொடுத்து, தனது தேசியச் செல்வத்தில் மூன்ற லொரு பங்கைப் பறிகொடுத்து, மனித இனத்தை பாஸிஸப்
1.59

Page 84
பயங்கரத்திலிருந்து காத்தனர் வீரம் செறிந்த சேர்வியத்
D9595.
இந்தக் கட்டத்தில், சொல்லெனித்ஸின் என்ற மாபெரும் பிரகிருதியை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தல் உசிதமானது.
மாபெரும் இலக்கிய கர்த்தா என்றும், சோவியத் சமூ கத்திலுள்ள ஊழல்களை உடைத்து எழுதியதால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டவர் என்றும், நோபல் பரிசு பெற்ற எழுத் தாளர் என்றும் சர்வதேச பிற்போக்குவாதிகள் புகழ்பாட, உலகெங்குமுள்ள சில அசட்டு அரைவேக்காடுகள் அதற்கு ஒத்தாதப் பெற்ற தகைமை உடைய இந்த சொல்லெனித்
6ör umff? - சொல்லெனித்ஸினுடைய வண்டவாளங்கள் பலவற்றைப் பற்றி நான் ஏற்கெனவே வாசித்தறிந்திருந்த போதிலும், அவ னைப் பற்றிச் சாதாரண சோவியத் குடிமக்கள் என்ன கருது கிருர்கள் என்று நேரில் கண்டறிய விரும்பினேன்.
எனது விசாரலைக்கு முதலில் ஆளானவர் ஒரு துருக் மேனியக் கார்ச் சாரதி. எமது துருக்மேனியக் குடியரசுச் சுற்றுலாவின்போது ஒரு நாள் நாம் சென்ற காரை இவர் ஒட்டி வந்தார். அவரிடம், 'நீங்கள் ஏன் சொல்லெனித் ஸினை நாடு கடத்தினீர்கள்?" என்று கேட்டு வைத்தேன். "ஒரு தேசத் துரோகியைச் சுட்டுத்தள்ளாது நாடு கடத் தியது குற்றம்தான்,' என்று வெடுக்கென்று பதிலளித்தார் அக்கார்ச்சாரதி. சொல்ஸெனித்ஸினின் துரோகத்தைப் பற்றி நீண்டதொரு விளக்கம் தந்தார்.
மாஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமை யாற்றும் சிங்கள நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென் றிருந்தோம். அங்கே அச் சிங்கள நண்பரைக் காண மாஸ் கோவில் பட்டதாரிக் கல்வி பயிலும் ஓர் இலங்கை மாண வன் வந்திருந்தான். அவனேடு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒரு ரஷ்ய சகமாணவனும் வந்திருந்தான். இந்த ரஷ்ய மாணவனிடம் நான் கேட்டேன்"சொல்லெனித்ஸினின் நூல்களை உங்கள் நாட்டில் ஏன் பிரசுரிப்பதில்லை?*
'அவன் ஒரு தேசத்துரோகி, ஜன விரோதி. அவனது நூல்களைப் பிரசுரிக்க எமது அரசு மக்கள் பணத்தை விரயம் செய்வதை நாம் அனுமதிக்க மாட்டோம்." என்து முகத் விதி உற்றுப் பார்த்து விட்டுத் தொடர்ந்தான் அம் மாண வன். "மாபெரும் தேசபக்தப் போரில் பங்கு பற்றி ஊன முற்றவர் எனது தாத்தா , எமது தேசத்துக்காகப் போராடிய
54

எனது தாத்தாவைப் போன்ற கோடிக்கணக்கான சோவியத் வீரர்களைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்று இகழ்ந்து எழுதிய தேசத் துரோகி சொல்ஸெனித்ளின் ." உணர்சசி வசப்பட்டவணுய், சொல்ஸெனித்ஸினின் அயோக்கியத்தனத்தைப் பற்றி விளக்கினன் அந்த இளை ஞன.
சோவியத் மக்கள் சொல்ஸெனித்ஸினை எத்தகைய ஒரு தேசத் துரோகியாக, ஜன விரோதியாக வெறுத்தொதுக்கு கிருர்கள் எனபதை , கார்ச்சாரதியினதும மாணவனதும் சத்திய ஆவேசங்கள் எனக்கு நிரூபித்து நின்றன.
யார் இந்த சொல்லெனித்ஸின் என்று பார்ப்போம். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் சோவியத் மக்கள் புரிந்த தியாகத்தையும், ஈட்டிய வெற்றியையும் ஏளனம் செய்து எழுதியவன்தான் சொல்லெனித்ஸின. இவனது எழுத்துக்கள் சோவியத் வீரர்களையும் நாஜிக கொலைகாரர் களையும் சமமாக மதித்தன. யுத்தத்தில் போரிட்ட சோவி யத் படையினர், உண்மையில் பலிக்க டாக்களாகச் செரு முனைக்கு அனுப்பப்பட்ட, தண்டனை விதிக்கப்பட்ட கைதி கள் என்று எழுதி வீர சோவியத் மக்களின் உணர்ச்சிகளை மிதித்துப் புண்படுத்தியவன் சொல்ஸெனிதஸின. ஹிட் லரின் படைகளை நேரடியாகவே பாராட்டி எழுதி மனித இனத்துக்கே துரோகம் விளைவித்தவன் அவன். நாஜக் கொலைகாரர்களை "இரக்க சிந்தனையும்', 'பெருந்தன்மை யும்" மிக்கவர்கள் என்று எழுதிய நீசன் இவன். ரஷ்ய மனிதன் ஒரு துண்டு ரொட்டிக்காக, பெற்ற தாயையும் தந்தையையும் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று எழுதித் தனது தாயகத்தின் முதுகில் குத்திய கயவன் இவன்.
சொல்ஸெனிதஸின் நாடு கடத்தப்படுவதற்கு உடனடிக் காரணமாயிருந்த 'குலாக்தீவுக் கூட்டம்' என்ற நூலில் சோவியத் அவதூாரு?ன 'கட்டுக்கதைகள்' நிறைய உள்ளன என்று சொல்ஸெணித்ஸினின் முன்னுள் மனைவியான நதா ல்யா ரெஷதோவ்ஸ்காயா எழுதியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக சொல்ஸெனித்ஸினின் விசுவாசம் மிக்க மனைவியாக வும், செயலாளராகவும் இருந்தவர்தான் நதால்யா. 'குலாக் தீவுக் கூடடம்' நூலை சொல்ஸ்ெனித்ஸினுக்குத் தட்டசசு இயந்திரத்தில் அடித்துக்கொடுத்தவரும் நதால்யாதான். சொல்ஸெனித்ஸினின் கட்டுக் கதைகளுக்கு முதலாளித்துவ நாடுகளில் "உண்மை வரலாறு' என்ற புகழ்மாலை சூட்டப் பட்டதால், அவருக்குத் தலைக்கணம் அதிகரித்துவிட்டது என்றும் ததால்யா கூறுகிருர்,
55

Page 85
சொல்ஸெனித்ஸின் நாடு கடத்தப்பட்டதை அடுத்துச் சுவையான ஒரு சம்பவம் நடைபெற்றது. அமெரிக்க ஜனதி பதியின் ஆலோசகரான டாக்டர் ஹென்றி கீசிங்கர் சொல் ஸெனித்ஸின் அமெரிக்காவின் கட்ைகெட்ட பிற்போக்கு வாதியான பறி கோல்ட்வாட்டரை விடப் பிற்போக்குவாதி என்று வர்ணித்தாராம். அப்போது முன்னுள் ஜனதிபதி நிக்ஸன் இடை மறித்து, சொல்ஸெனித்ஸின் ஜார் மன்னர் களைவிட மோசமான பிற்போக்குவாதி என்று இன்னுமொரு படி மேலே சென்று இகழ்ந்தாராம். அமெரிக்காவின் "டைம் சஞ்சிகையில் இச சம்பவம் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. -
சொல்ஸ்ெனித்ஸினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது எதற்காக? முதலாளித்துவ நாடான சுவீடனிலிருந்து வழங் கப்படும் நோபல் பரிசின மதிப்பு உயர்ந்தது தான். ஆணுல், இலக்கியத்தரத்தை மட்டுமே எப்போதும் அளவுகோலாக வைத்து இது வழங்கப்படுவதில்லை என்பதும் ஒரு கசப்பான, ஆணுல் மறுக்கமுடியாத, உண்மையாகும். 1901ம் ஆண்டு தொட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த போதிலும், அமரத்துவம் பெற்ற உலக இலக்கிய மன்னர்களாக எவ ராலும் ஏற்றுக்கொள்ளப்படும் லியோ டால்ஸ்டாய், மக் ஸிம் கோர்க்கி, அன்டன் செக்கோவ், விளாடிமீர் கொருெ லெங்கோ, அலெக்ஸாந்தர் குப்றின், விளாடிமீர் மாயா கோவ்ஸ்கி போன்ற- ரஷ்ய-சோவியத் இலக்கிய கர்த்தாக்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லையே, ஏன்? உலக வரலாற்றின் ஒப்பற்ற இலக்கியமேதைகளான இவர் களை விடவா சின்னஞ்சிறு சொல்ஸ்ெனித்ஸின் இலக்கியத் தர்த்தில் உயர்ந்தவர்?
சொல்ஸ்ெனித்ஸினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது அவரது இலக்கிய மேதாவிலாசத்துக்காக அல்ல, அவரது சோஷலிஸ் விரோத எழுத்துக்களுக்காக என்பது தெட்டத் தெளிவான உண்மை.
சொல்ஸெனித்ஸின் என்ற எட்டப்பனை, காக்கைவன்னி யன உபயோகித்து, உலக முதலாளித்துவவாதிகள், சோஷ லிஸ் நீதிக்கு, ஆட்சி முறைக்கு, உலகின் முதலாவது சோஷேலிஸ் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்த முயன் றதன் விளைவு தான் முதலாளித்துவ நாடுகளில் சொல் ஸெனித்ஸினுக்குக் கிடைத்த புகழாரங்கள், பரிசுகள், வாழ்த்துக்கள். - ;
ஆசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளை இன மக்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற பொருட்பட எழுதிய இன வெறயன்தான் சொல்ஸெனித்ஸின்.

ವ್ಹಿಜ್ಡ: புரிந்து கொள்ளாது, இவன ஓர் இலட்சிய எழுத்தாளனுக வரித்து, அவனுக்கு வக்காலத்து வாங்கும் சில கோமாளிகள்--சொல்ஸ்ெனித்ஸின் அரிச்சுவ டியே அறியாதவர்கள் எமது நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றனர்.
உலகத்திலேயே மிக அதிகமான மொழிபெயர்ப்பு நூல் கள் வெளியிடப்படுவது சோவியத் யூனியனில்தான் என்று முன்னர் கூறினேன். நூற்றுக்கு மேற்பட்ட நாட்டு எழுத் தாளர்களின் நூல்கள் சோவியத் யூனியனில் மொழிபெயர்க் கப்படடுள்ளன.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, எறிச் றிமார்க், ஸ்கொட் ஃபிற்ஸ் ஜெறல்ட், ஷேக்ஸ்பியர், அல்பிரட் கேமஸ், அல்பேர்ட்டோ மொருவியா, ஹென்றிச் போல், வில்லியம் ஃபோல்க்னர், றே பிராட்பறி, கோபோ அபே போன்ற எண்ணற்ற உலக எழுத்தாளர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரபல இந்தியத் தமிழ் எழுத்தாளர்களான புதுமைப் பித்தன், பி. எஸ். ராமையா, கி. வா. ஜகந்நாதன் ஆகி யோரது சிறு கதைகளும் மொழிபெயர்த்து வெளியிடப் பட்டுள்ளன.
இந்தியாவில் சோவியத் நாடகக் குழு இராமாயண நாடகத்தைமேடையேற்றியமையைக் குறிக்க வெளி யிட்ட சிறப்பிதழிலிருந்து ஒரு படம் - இராமன் கோதண்டத்தை வளைக்கத் தயாராகும் காட்சி.
757

Page 86
இராமாயணமும் கூட ரஷ்ய மொழியில் வெளிவந்துள்ளது. அண்மையில் மகா கவி காளிதாசனின் நாடகங்களும் கவிதைகளும் அடங்கிய ஒரு தொகுப்பு வெளியிடப்பட்ட தாம். மாஸ்கோவிலுள்ள மிகப்பெரிய புத்தகக்கடை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அக் கடையில் பணியாற்றிய ஓர் ஊழியர் கூறிய தகவல் எனக்கு ஆச்ச1 யத்தைத் தந்தது. காளிதாசனின் தொகுப்பு வெளியிடட் பட்டு ஒரு மணி நேரத்திற்குள் 25,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம். இந்தியாவின் வரலாற்றிலும், கலா சாரத்திலும், வாழ்க்கை முறையிலும் சோவியத் மக்கள் செலுத்திய ஈடுபாட்டின் ஓர் அறிகுறிதானே. இது?
இந்நூல்களில் நான் செலுத்திய அக்கறையைக் கவனித்த எனது சோவியத் நண்பர் டொப்சியன், அடுத்த நாட் காலை என்னைச் சந்திக்க பந்தபோது இரு சிறிய பரிசுகளைக் கொண்டுவந்தார்.
ஒன்று, ஒரு நாடகச் சிறப்பிதழ். சோவியத்தின் சிறுவர் களுக்கான மத்திய நாடகக் குழு இராமாயண நாடகத்தைச் சோவியத்தில் பலமுறை மேடையேற்றியபின், 1974 அக் டோபரில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தது. புதுடில்லி, சந்திகார், சென்னை ஆகிய மூன்றிடங்களிலும் சோவியத் நாடகக் குழு இராமாயண் நாடகத்தை மேடையேற்றியமையைக் குறிக்க வெளியிடப்பட்ட சிறப் பிதழ் இது.
மற்றது காளிதாசனின் தொகுப்பிற்கு பி. கே. சகாரின் என்ற சோவியத் இலக்கிய விமர்சகர் ரஷ்ய மொழியில் எழுதி யிருந்த முன்னுரையின் மொழிபெயர்ப்பு. அம் முன்னுரை யின் சில பகுதிகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன:
"...இந்திய வரலாறு என்னும் சமுத்திரத்திலிருந்து காலத்தின் அலைகள் காளிதாசன் என்னும் முத்தை நமக்குத் தந்தன. சுமார் முப்பத்தாறு கவிதை மற்றும் வசன நூல் களை அவன் இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பல, இந்திய இலக்கியத்தில் என்றென்றும் ஒளிவீசும் மணிக ளாகும்.
'..தமது சமகாலத்தவரைப் போல் நம்பிக்கை என்பதே காளிதாசனின் உன்னத இலட்சியமாக இருந்தது. காளிதாச னின் நம்பிக்கையானது, பூமியில் வேரூன்றி நிற்கிறது, அதற்கு எவ்விதத் தளையும் இல்லை; அவனது நம்பிக்கையில் உணர்ச்சிகளையும், சந்தேகங்களையும், இன்பத்தையும், துன் பத்தையும் நிரம்பக் காணலாம்.
158

"...மகாகவி காளிதாசன் யார்? அரண்மனைப் பாடக அல்லது 'கடவுள் அருள் பெற்ற" " கவிஞன? உயர் குடி ல் பிறந்தவன அல்லது சாதாரண மனிதனு? காவியநெறிகளைக் கர்வத்துடன் பாதுகாத்தவன அல்லது அவற்றை இரகசிய மாகக் கேலி செய்தவன? அவன் இப்படிப்பட்டவனகவும், அப்படிப்பட்டவனுகவும், வேறுவிதமாகவும் இருக்கிருன் அல்லது எந்த வரையறுப்புக்குள்ளும் அடங்காவதனக இருக் இன் அவன் அவளுகவே இருக்கிறன்; இந்தியாவுக்குழ் மனித குலம் அனைத்துக்கும் சொந்தமானவனுக இருக்கி முன், அவன் படைப்புக்கள் அற்புதமானவை; அவன் போற்றும் உயிர்துடிப்பு மிக்க வாழ்க்கைக் கடலைப் போல், அவை எல்லையற்றவை அவன் எழுத்துக்கள் அவனையே பிரதிபலிக்கின்றன."
5

Page 87
19 கலைத்தாய் களிநடனம் புரிந்தனள்
கிராமியக் கலை என்னும் கடலின் கரையில், கூழாங் கற்களைச் சேகரிப்பது மட்டும் போதாது. ஒருவர் தைரிய மாகக் கடலில் மூழ்க வேண்டும்; கடலாழத்தை ஆராய வேண்டும்; அங்கே புதைந்து கிடக்கும் மர்மங்களை ஆராய்ந்துகலையின் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும்,'
-பிரபல சோவியத் பாலே நடன மேதை இகோர் மொய் செயேவின் இக்கூற்றிலிருந்து கிராமியக் கலைகளைப் பேணு வதிலும் விருத்தி செய்வதிலும் சோஷலிஸக் கலாசாரம் செலுத்தும் அக்கறை வெளிப்படுகிறது.
சோவியத் நாட்டில் எத்தனை தேசிய இனங்கள் உள் ளனவோ, அத்தனை புகழ் பெற்ற கிராமிய நடனங்களும் உள் ளன. சோவியத்தில் உள்ள பல்வேறு கிராமிய நடனக் குழுக் களும் தத்தமது தேசிய வடிவங்களையும் மரபுகளையும் தனித் தன்மையுடன் அழகுறப் பிரதிபலிப்பதைக் காணலாம்.
சோவியத் துருக்மேனியக் குடியரசுக்கு நான் விஜயம் மேற்கொண்டபோது, சோவியத் குடியரசுக்களின் கிராமிய நடனங்கள் சிலவற்றை வண்ணத் திரைப்படத்தில் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிட்டியது. பச்சைப் பசேலென்ற கிரா மப் புல்வெளிகளிலும், இயற்கை எழில் குலுங்கும் மலைச் சாரல்களிலும், வண்ண வண்ணத் தேசிய ஆடைகளை அணிந்து, காளையரும் கன்னியரும் உணர்ச்சியூட்டும், களிப்பு மிக்க கிராமிய நடனங்களை ஆடுவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
அக்டோபர் சோஷலிஸப் புரட்சியை அடுத்து, கம்யூனிஸ்ட் அரசு, மக்களின் நடன மரபுகள் பற்றி விரிவான ஆராய்ச்சி நடத்தியது. மரபியல் வல்லுநர்கள், அழகுக் கலைச் சரித்திர வியலாளர்கள், நடனக் கலைஞர்கள், பாடகர்கள் ஆகியோர் கிராமிய நடனங்களைச் சேர்த்து வருவதற்கு நாடெங்கும் அனுப்பப்பட்டனர். இவற்றை அடிப்படையாக வைத்து புதிய படைப்புக்கள் உருவாக்கப்பட்டன; கிராமிய நடனக் கலை வளர்ச்சியுற்றது.
6

சோவியத் கிராமிய நடனங்கள் எண்ணற்ற வகையின. டிஸ்பெக்கிஸ்தான் குடியரசில் "பக்கார்" எனப்படும் பேண் தள மட்டும் கொண்ட நடனக் (5(p ஒன்று உள்ளது. உஸ்
* ' 、メ
இயற்கை எழில் குலுங்கும் மலைச்சாரல்களில் வண்ண வண்ணத் தேசிய ஆடைகனை அணிந்து உணர்ச்சியூட்டும், களிப்புமிக்க கிராமிய நடனம் ஆடும் சோவியத் மத்திய ஆசிய மக்கள். இந் நடனங்களில் இந்திய் கிர்ாமிய நடனங்களின் சாயல் இருப்பதைக்காணலாம்.
6.

Page 88
பெக் மொழியில் 'பக்கார்" என்ருல் வசந்த காலம் என்று பொருள்படும். கொடி இடையும், மெல்லிய உடற்கட்டும் அழகும், கொண்ட இப் பெண்கள் வசந்தத்தின் சின்னமாக விளங்குகின்றனர்.
சுக்சி, யாகுத்ஸ், தூர வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நடனத்தில் பறவைகள், மிருகங்களைப்போல் நடித் துக்காட்டுவர். எமது நடன மேடைகளில் ஆடப்பட்டு வரும் மயில் நடனம், பாம்பு நடனங்களை இவை ஞாபக மூட்டுகின்றன.
பைலோ ரஷ்ய நடனமான "லியான்கா"வில் சணல் சாகுபடியின் எல்லாக் கட்டங்களும் இடம் பெறுகின்றன. துருக்மேனிய மக்கள் "கேர்ட்" எனப்படும் கவர்ச்சிகர மான கிராமிய நடனத்தை ஆடுகின்றனர்.
"எங்கெல்லாம் மொல்தாவிய நடனம் நடைபெறுகிற திோ, அங்கெல்லாம் பூமி குலுங்குகிறது" என்ற உரை மொல்தாவிய கிராமிய நடனத்தை விவரிக்கிறது.
மேலும், பிர்யோஸ்கா, மொய்ஸியேவ், வட ரஷ்ய கிராமிய நடனக் குழு, தாஜிக், ஜோர்ஜிய, ஆர்மீனிய நடனக் குழுக்கள்போன்ற சோவியத் நட்னக் குழுக்களை உலக மக்கள் நன்கறிவர். இவற்றில் சில, இலங்கை உட்பட உலக நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியும் உள்ளன.
அண்மையில் மக்கள் எழுத்தாளர் முன்னணி நிதிக்காக் கொழும்பில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சியில், செல்வி விஜயாம்பிகையும் அவரது மாணவிகளும் ஆடிக்காட்டிய 'குறத்தி நடனத்தை", இந் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சோவியத் கலாசார மன்ற அதிபர் திரு. ஜி. எல். ஜீஜின் வெகுவாக இரசித்து, அது தமது நாட்டுக் கிராமிய நடனங் களை ஒத்திருக்கிறது என்று எனக்குக் கூறிய வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்று சோவியத் கிராமிய நடனங்களைப் பார்த்தபோது நான் நினைத்துக்கொண்டேன். கிராமிய நடனங்கள் தொன்மையானவை. அவை வெகு ஜனங்களின் கலாசாரச் செல்வங்கள். எனவே அவற்றைப் பேணிப் பாதுகாப்பதிலும், மேலும் விருத்தி செய்வதிலும், சோவியத் கம்யூனிஸ்ட் அரசு சிரத்தை எடுப்பதில் வியப் பில்லை.
சோவியத் நாடக மன்றங்களைப் பற்றிச் சில வார்த்தை கள் கூருமலிருக்க முடியாது.
அநேகமாக எல்லாச் சோவியத் நாடக மன்றங்களும் ஒரே இடத்தில் நிலையாக இருப்பவை. వడిని தேதி
62

கும் சொந்தமாகக் கட்டடங்களும் நாடக அரங்குகளும் உள்ளன. ஒவ்வொரு நாடக மன்றமும் நாடகத்துறை யோடு சம்பந்தப்பட்ட சகலவித கலைஞர்களையும் உள்ளடக் கிய நிரந்தரமான குழுக்களை உடையது. ஒவ்வொரு மன்ற மும் மேடையேற்றுவதற்கென்று தத்தமது நாடகங்களை வைத் துள்ளது. இவை வரலாற்றுக் கால இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியம்வரை பல தரப்பட்ட கதைகளை மேடை யேற்றுகின்றன. . . . .. சோவியத் நாட்டிலுள்ள ஒபரா, பாலே, குழந்தைகளுக் கான நாடகமன்றங்கள், பொம்மலாட்ட நாடக மன்றங்கள் உட்பட சகலவிதமான நாடக மன்றங்களும் அரச மான்யம் பெற்று இயங்குவனவாகும்.
எமது நாட்டில் நாடகத் துறையின் அவல நிலை, ஒரு நாடகத்தை மேடையேற்றுவதற்குப் பல்வேறு இடர்கள், வசதிக்குறைவுகள்,நிதிநெருக்கடிகளுக்கிடையே நாடகக் கலை ஞர்கள் படும் பாடு என்பன சோவியத் நாடகத் துறையின் செழுமிய வளர்ச்சியைப் பார்த்தபோது என் மனதில் எழா மல் இல்லை.
சோவியத் நாட்டில் நாடகத் துறையின் நிலை பற்றி விரி வாக அறிந்துகொள்ள எனக்கு உதவியவர் சோவியத் துருக் மேனியக் குடியரசின் கலாசார அமைச்சரான ஹடேபேர்டி டேர்டியேவ் ஆவார். துருக்மேனியாவின் 'மாலனெப்பீஸ் நாடக மன்றத்தில்" இவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
1975 அக்டோபர் 17- அன்று தான் மொலனெப்பீஸ் நாடகமன்றத்தின் "சீஸன்" ஆரம்பமாயிருந்தது. முதல் நாள் நாடகம் அழைப்பிதழ் பெற்ருேருக்கு மட்டும். அன்று நுழைவுச்சீட்டுக்கள் எதுவுமே விற்பனைக்கு விடப்பட வில்லை. அமைச்சர் டேர்டியேவ் எழுதிய ஒரு நாடகம்தான் அன்று மேடையேறியது. டேர்டியேவ் ஒரு சிறந்த எழுத் தாளர். நல்ல இசை ஞானம் உள்ளவர் என்பதை அறிந்து கொண்டேன். 'துருக்மேனிய இசையின் மர்மம்' என்ற திரைப்படத்திற்கும் இவர் கதைவசனம் எழுதியிருந்தார். துருக்மேனிய இசையைப் பற்றிய பல நூல்களை எழுதியிருந் தாா.
மிகவும் அமைதியாக எம் அருகே அமர்ர்திருந்து முழு நாடகத்தையும் அமைச்சர் பார்த்தார். நாடகம் ஆரம்பிக்க முன்னரும், இடைவேளையின் போதும் எம்மோடு அவர் மேற் கொண்ட உரையாடலின் போது சோவியத் நாடகத் துறை யின் நிலைபற்றி அறிந்து கொண்டோம்.
63.

Page 89
அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், ஜார் ஆட்சியின் சூழ தமக்கென நாடகமன்றங்கள் இல்லாதிருந்த 38 தேசிய இன் மக்களுக்கு முதன் முதலாகத் தமது சொந்தத் தேசிய நாடக மன்றங்களை நிறுவ, கம்யூனிஸ்ட் அரசு ஊக்கமளித் திது.
இன்று சோவியத்திலுள்ள ஒவ்வொரு தேசிய நாடக மன் றமும், அந்தந்தத்தேசிய இன மக்களின் தனித்துவப் பண்பு களையும், வரலாற்று அனுபவத்தையும், க மரபுகளையும் பிரதி பலிக்கின்றது, V சோவியத்தில் இன்று 40 ஓபரா, பாலே மன்றங்கள், 364 நாடக, இசை நடன மன்றங்கள், 149 குழந்தைகள் நர்டக மன்றங்கள்-என்று எல்லாமாக 553 தொழில்முறை மன் றங்கள் உள்ளன.
சோவியத் நாடக மன்றங்களில், ரஷ்யாவின் பழைய இலக்கியங்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களும், பழைய கிரேக் கத் துன்பியல் நாடகங்களும் பிரபல்யமானவை. மேலும் சமகால நாடகாசிரியர்களான பேர்டோல்ட் பிரெச்ட், ஏர் னெஸ்ட் ஹெமிங்வே, ஆர்தர் மில்லர், ஜீன் அனுெளல்ஹ, பிரெட்றிச் துரென்மாட் போன்றேரின் படைப்புக்களும் பிரபல்யம் பெற்றுள்ளன,
குழந்தைகளுக்கான நாடக மன்றங்களைப் பற்றிக் குறிப் பிடாமலிருக்க முடியாது. இற்றைக்கு 52 ஆண்டுகளுக்கு முன்னரேயே, உலகில் முதல் தடவையாக குழந்தைகளுக் கென்று ஒரு நிரந்தர நாடக மன்றத்தை நிறுவியது சோவி யத் நாடே ஆகும். மிகச் சிறந்த நாடகாசிரியர்களால் குழந்தைகளுக்கென்றே எழுதப்பட்ட நாடகங்கள் அவற்றில் மேடையேற்றப்படுகின்றன. மேலும், வழமையான சோவி யத், அயல் நாட்டு நாடகங்களும் நடத்தப்படுகின்றன.
சோவியத்தின் சிறுவர்களுக்கான மத்திய நாடக மன்றம் இராமாயண நாடகத்தைச் சோவியத்தில் பலமுறை மேடை யேற்றியபின், இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்கும் மேடையேற்றியமை பற்றி ஏற்கெனவே பார்த்துள்ளோம். சோவியத்தின இளம் இரசிகர்களிடையே மட்டுமல்ல, வயது வந்தோரிடையே கூட பொம்மலாட்ட நாடகங்கள் மிகவும் பிரபலமடைந்திருப்பதை நான் கண்டேன.
மூடநம்பிக்கைகளை அகற்றுவதைக் கதையாகக் கொண்ட ஒரு பொம்மலாட்ட நாடகத்தை மாஸ்கோவில் நான் பார்த் தேன். நாடக அரங்கு சிறுவர்களும், பெரியோர்களுமாக நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. நாடகத்தின் சுவையான கட்டங்களின்போது, வயதுப் பேதமின்றிப் பார்வையாளர்
双6绩

கள் யாவரும் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரித்ததை நான் கண்டேன்.
சோவியத் சர்க்கஸ் பற்றிச் சில வார்த்தைகள். சோவியத்தின் சர்க்கஸ்"க்கு நுழைவுச்சீட்டு வாங்குவதில் என்றும் போட்டிதான். உல்லாசப் பிரயாணிகளும், உள் நாட்டு மக்களும் சோவியத் சர்க்கலை விரும்பிப் பார்க்கின் றனர். அரச விருந்தாளிகள் என்று சென்றிருந்ததால் மிகவும் குறுகிய கால முன்னறிவிப்பில் எனக்கும் எனது சோவியத் விஜய சக நண்பருக்கும் மொழிபெயர்ப்பாள ருக்கும் நுழைவுச்சீட்டுக்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் காட்சிக்குச் சில நாட்களுக்கு முன்னதாகவே நுழைவுச் சீட்டுக்களை வாங்கிவிட வேண்டுமாம்.
சோவியத் சர்க்கஸ் அரசமான்யத்தில் இயங்குவது. அது தனது கடந்த கால ஜனநாயக மரபுகளை வெற்றிகரமாக வளர்த்து வருகிறது. மிருகங்களைப் பயிற்றுவித்து வித்தை காட்டுதல், உடற்பயிற்சி வித்தைகள், ஜாலங்களுடன் சமூக, சர்வதேசக் கிண்டல்களுக்கும் பெயர் பெற்ற கோமாளி களையும் கொண்டது சோவியத் சர்க்கஸ்
சோவியத் யூனியனிலுள்ள பல்வேறு குடியரசுகளுக்கும் தத்தமது தேசிய சர்க்கஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன் றும் தத்தமது தேசிய மரபுகளையும், தனித்துவப் பண்புகளை யும், பிரதிபலிப்பது இந் நாட்டின் சர்க்கஸின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
புதிய புதிய சர்க்கஸ் வித்தைகளை உருவாக்கவும், பரீட் சிக்கவும், பயிற்சி பெறவும் என்றே விசேட ஸ்டூடியோக் களை அரசு அமைத்துக் கொடுத்துள்ளது. இத்தனை வசதி களை உடைய சோவியத் சர்க்கஸ் உலகப் புகழ்பெற்று விளங்குவது வியப்பல்லவே? - w சோவியத் நாட்டில் கலைத் திறன் உள்ளவர்களை, அவர் கள் நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும், தேடிக் கண்டு பிடிக்க சீரிய முறையொன்றை அரசு கையாள்கிறது. இரண்டாம் தரப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக் கும்போது சிறுவர்களின் கலைத்திறன் கண்டுபிடிக்கப்படு கிறது.
பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளுக்கு, விஜயம் மேற்கொண்டு கலைத்திறமையுள்ள சிறுவர் சிறுமியரைக் கண்டுபிடிப்பதற்கு விசேட ஆராய்ச்சிக் குழுக்கள் சோவியத் அரசின் கீழ் இயங்கு கின்றன. இவை பள்ளிக்கூடங்கள், பொழுதுபோக்குக் கழகங்களில் உள்ள திறமைசாலிகளைக் கண்டுபிடித்து, அவர் களை அந்தந்தக் கலைத்துறைக்குரிய கல்லூரிக்கான அல்லது
65

Page 90
நிறுவனத்திற்கர்ன புகுமுகப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அழைக்கின்றனர். இப் பரீட்சைகளுக்கு எவர் வேண்டு. மாஞலும் தோற்றலாம் என்ருலும், திறமைசாலிகளே இக் கல்லூரிகள்-நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுவர். புகு முகப் பரீட்சையில் திறமையின் அடிப்படை யில் மட்டுமே ஒருவர் அனுமதிக்கப்படுகின் ருர், எதுவித தரப்படுத்தலும் அங்கில்லை. VK.
கலைக் கல்லூரிகள்-நிறுவனங்களில் மாணவர், மாணவி கள் தங்கியிருந்து படிக்க விடுதிச்சாலை வசதிகளை அரசு ஏற் படுத்தியுள்ளது. இதனல் மாஸ்கோ, லெனின் கிராட் போன்ற பெரிய நகரங்களில் வதியும் பிள்ளைகள் மட்டு மல்ல, சோவியத் பூமியின் எந்த மூலையைத் தனது உறை விடமாகக் கொண்ட பிள்ளைக்கும் எந்தப் பெரிய கலைக் கல்லூரியிலும் சேர்ந்து தனது திறமைகளை விருத்தி செய்ய வாய்ப்புண்டு. இக் கல்லூரிகளில் படிப்புக்கள் இலவசம். அதுமட்டுமல்ல, இங்கு கற்பவர்களுக்கு உதவிச் சம்பளம் கூட வழங்கப்படுகிறது. Ys
எமது நாட்டிலோ? அரைகுறைக் கலைத்திறனுடையோர் கூட, பணபலம் கூடி யிருந்தால், யாராவது ஒருவருடைய நடனக் குழுவில் ஒரு உறுப்பினராக இடம்பெற்று, இரண்டு அல்லது மூன்று உலக நகரங்களில் ஒரு சில நடனங்கள் ஆடிவிட்டால், “ ‘சர்வ தேசப் புகழ்" என்ற கிரீடத்தைத் தமக்குத் தாமே மாட்டி, சில்லறை விளம்பரம் பெறுவது எவ்வளவு எளிது?
அதே நேரத்தில் அபரிமிதமான கலைத்திறனிருந்தும், பண வசதியற்றிருப்பதால் தமது திறமையை வெளிப்படுத்த முடி யாது முடங்கி விரக்தியில் வாழும் கலைஞர்கள் எத்தனை எத்தனை பேர்? . சீரிய கலாசாரப் புரட்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி, ஒரு புதிய சோஷலிஸ்க் கலாசாரத்தை ஆக்கித் தந்து, ஒரு புதிய சோஷலிஸ் அறிவுத் துறை பினரை-கலைத் துறையினரை உருவாக்கி, விஞ்ஞானம்-இலக்கியம்- கலை கள் ஆகியவற்றின் சர்வாம்ச முன்னேற்றத்தை ஏற்படுத்தி, கலாசாரச் செல்வங்களை எல்லாம் வெகு ஜனங்களுக்குக் கிடைக்கச் செய்த சோவியத் நாட்டை ஒரு புது யுகமாக நான் கண்டதில் எனண தவறு?
66

20 நுாறு தேசிய இனங்கள் இணைந்த அன்புக் குடும்பம்
மெது துருக்மேனிய விஜயத்தின் போது, ஒரு நாள், துருக்மேனியப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயற் குழு வினரைச் சந்தித்தோம் .
ஆசிய - ஆபிரிக்க ஒருமைப்பாட்டுக்கான சோவியத் குழுவின் மாநாட்டுக்கு வந்திருந்த ஈழத்து நீதியரசர் திரு. ஐயா பத்திரனவின் சட்டத்துறைத் தகைமைகள் மாநாட் டுப் பேச்சுவார்த்தைகளின் போதும், தீர்மானங்களின் ஆக் கத்தின் போதும் தமக்குப் பேருதவியாக இருந்ததென்று அவர்கள் பாராட்டினர். திரு. பத்திரன 'மிகவும் உறுதி யான முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஒரு நீதிபதி' என்று அவர்கள் வர்ணித்தனர்.
என்னேடு பயணம் செய்த 'தினமின* சிங்கள நாளேடு ஆசிரியர் டி. பி. பெரமுனதிலக்க ஒரு சிங்களவர் என்பதும், நான் ஒரு தமிழன் என்பதும் ஈழத்துப் பத்திரிகைத்துறை பற்றி நாம் சம்பாஷித்தபோது வெளிப்பட்டது.
இதிலிருந்து ஈழத்துத் தேசிய இனங்கள் பற்றிப் பேச்சு வார்த்தை திரும்பியது. vn
இலங்கையின் இரு பிரதான மொழிகள் சிங்களமும் தமி ழும் என்பதை எம்மிடம் இருந்து அவர்கள் விசாரித்து அறிந்து கொண்டனர். இலங்கையில் தேசிய இனப் பிரச்சினை முற்ருகத் தீர்க்கப்படவில்லை என்பதையும் அவர் கள் உணர்ந்து கொண்டனர்.
"'உங்கள் நாட்டில் இரு தேசிய இனங்கள் தானே? எங்கள் நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளபோதிலும் தேசிய இனப் பிரச்சினை முற்று முழுதாக வும் திருப்திகரமாகவும் தீர்க்கப்பட்டுவிட்டது," என்று அத் துருக்மேனியர்கள் கூறினர்.
உன்மை தான். மனித இனத்தின் வரலாற்றிலேயே தேசிய இனப் பிரச்சி னைக்கு மிகச் சிறப்பானதும் நிரந்தரமானதுமான தீர்வு
167

Page 91
கனட நாடு சோவியத் யூனியனே. இந்தச் சிக்கலான, அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியை நிறைவேற்றிய பெரு” மை: லெனினுக்கும் அவர் தோற்றுவித்த கம்யூனிஸ்ட் கட்சிக்குமே உரியது.
துருக்மேனியப் பத்திரிகையாளர் சங்கத்தினர் மட்டுமல்ல, எனது சோவியத் யூனியன் விஜயத்தின் போது நான் சந் தித்த_திருமதிலுட்மிலா பெட்டோனிச் (ரஷ்ய இனத்தவர்), சாமிதோவ் ஜோரா (துருக்மேனிய இனத்தவர்), விய செஸ்லாவ் ட்ொப்சியன் (ஆர்மீனிய இனத்தவர்) போன்ற பல்வேறு இனத்தவர்களும் தேசிய இனப் பிரச்சினை தம் நாட்டில் தீர்க்கப்பட்ட முறை குறித்து பரிபூரண திருப்தி தெரிவித்தனர். இத் தீர்வு பற்றி இவர்கள் என்னுடன் மிக விரிவாகக் கலந்துரையாடினர்.
உலகுக்கே ஒளிவிளக்காகத் திகழும் இந்த சோவியத் தீர்வு பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியம்.
மார்க்ளிஸ்-லெனினிஸ்க் கண்ணுேட்டத்தில் ஒரு தேசிய இனம் என்ருல் என்ன?
ஒரு பொதுமொழி, பொதுப் பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு, ஒரு பொதுவான கலாசாரமாகப் பிரதிபலிக்கும் ஆன்மிகப் பண்பு ஆகிய இவற்றின் அடிப் படையில் அமைந்த, சரித்திர ரீதியாக உருவாகிய, நிலை யான மக்கள் சமூகமே தேசிய இனம் என்பது,
1917 அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சிக்கு முந்திய ரஷ் யாவில் நிலவிய நிலைமை என்னவென்று கவனிப்பது அவசி
Ll D
பழைய ரஷ்யா 'பல தேசங்களின் சிறைக்கூடம்' என்று பெயர் பெற்றிருந்தது. ரஷ்யாவின் எல்லைப்புறப் பிரதேசங் களின் தேசிய இனத்தவர்கள் தேசிய அசமத்துவம், ஒடுக்கு முறை, பகைமை போன்ற சுரண்டல் அமைப்புக்குரிய அட்டூ ழியங்களுக்கு ஆளானர்கள். மத்திய ஆசியா, காகஸஸ், சைபீரியா, தூரவடக்கு போன்ற பிரதேசங்களின் தேசிய இனங்கள் கொடிய காலனியாதிக்கச் சுரண்டலுக்கு உள்ளா ஞர்கள். Kr
இத்தகைய சுரண்டலுக்குப் பொறுப்பாக இருந்த வர்கள், அன்றைய ஆளும் வர்க்கத்தினரான நிலப் பிரபுக்க ளும் முதலாளிகளும் ஆவார்கள்.
தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து முற்போக்கு எண்ணம் கொண்ட ரஷ்ய மக்கள் போராடினர். pTaunt வின் பல்வேறு இன மக்களும் நடத்திய இப் போராட்டத் திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது.
i68

தேசிய இனப் பிரச்சினை குறித்து ஒரு வர்க்கரீதிங்ர்ன் அணுகுமுறை மேற்கொள்ளப்படல் வேண்டும், பாட்டாளி மக்களின் வர்க்கப் போராட்டத்தை, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தோடு இணைக்கவேண்டும்” என்று: கட்சிக்குப் போதித்தார் லெனின். அதே நேரத்தில் பூர்ஷாவா தேசியவாத, குறுகிய தேசிய வெறிச் சித்தாந்தங் களையும், வலது-இடது சந்தர்ப்பவாதிகள் தேசியப் பிரச் சினையைப் பற்றிப் பரப்பி வந்த மார்க்ஸிலத்தின் பாற் படாத பல்வேறு கொள்கைகளையும் அவர் அம்பலப்படுத், தினர். 'பூர்ஷாவா தேசியவாதமும், பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்--இரு சமரசப்படுத்தவொண்ணு, L16矿颂。 மைக் கொள்கைள்" என்று லெனின் வலியுறுத்தினுர்,
1917ல் அக்டோபர் சோஷலிலப் புரட்சி வெற்றி பெற் றதை அடுத்து, லெனினியத் தேசிய இனக் கொள்கையின் சட்டரீதியான வடிவமாக ரஷ்யத் தேசிய இனங்களின் உரி மைப் பிரகடனம் ஒன்றைப் புரட்சி அரசு வெளியிட்டது: ரஷ்யாவின் சகல தேசிய இனங்களுக்கும் பிரிந்து சென்று சுதந்திர அரசு நிறுவிக்கொள்ளுதல் உட்பட தங்குதடை யற்ற சுயநிர்ணய உரிமை வழங்குதல், மத இனச் சலுகை கள், தடைகள் உட்பட சகல விதமான் தேசிய தனிச் சலுகைகளையும் அகற்றி தேசிய இன மொழிகளுக்கு பரிபூரண மான சமத்துவத்தையும் தேசிய இனங்களுக்கிடையே உண்மையான சமத்துவத்தையும் உறுதிசெய்தல், ரஷ்யா வின் தேசிய சிறுபான்மையினர்-வர்ண இனச் சிறுபான்மை யினர் ஆகியோரின்தங்குதடையற்ற சர்வ்ாம்ச வளர்ச்சிக்கு வழி செய்தல் ஆகிய பல முக்கிய அம்சங்கள் இந்த உரி மைப் பிரகடனத்தில் அடங்கியிருந்தன. −
அளவில் சிறியதாகவும், முன்னுட்களில் ஒடுக்கப்பட்டு இருந்த தேசிய இனங்களுடனன உறவுகளில், "ஆழமான உஷார் தன்மையும் முன்யோசனையும், சமரசம் செய்வதற் கான தயார் நிலையும் மேற்கொள்ளப்படவேண்டும்," என் பதே லெனினுடைய கோரிக்கையாய் இருந்தது.
இதற்குக் காரணம், "தேசிய அநீதிபோல பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடு வளர்ச்சி அடைவதையும் வலுவடிை வதையும் பாதிக்கும் வேறு எதுவும் கிடையாது." "மனத் தாங்கல்" கொள்ளும் தேசிய இன்ங்கள், சமத்துவ உணர் வுக்கே மிகுந்த மதிப்புக் கொடுப்பர். அசட்டையாகவோ, விளையாட்டாகவோ கூட இதை மறக்கக்கூடாது. அதிலும் தமது பாட்டாளி வர்க்கத் தோழர்கள் சமத்துவ உரிமையை மீறுவதென்ருல் பொறுக்கமாட்டார்கள்." ،تأ : :.
8

Page 92
1917ல் அக்டோபர் புரட்சியின் வெற்றியை அறிவித்த மறுதினமே, சோவியத் ஆட்சி ரஷ்யாவில் ஜார் ஆட்சியின் போது நிறுவப்பட்டிருந்த சகல பாரபட்சம்ான, இனஒதுக் கல் சட்டங்களையும் ஒழித்துக்கட்டி, இனங்களுக்கிடையே நிலவிய அசமத்துவத்தை அகற்ற ஆரம்பித்தது. சோவியத் தேசிய இனங்கள் யாவும் அரசுரிமை கொண்ட பிரதேச சுயாட்சிகளைக் கட்டியமைக்கும் வாய்ப்பைப் பெற்றன.
தற்போது சோவியத் யூனியன் 20 சுயாட்சிக் குடியரசு களையும், 8 சுயாட்சிப் பிரதேசங்களையும், 10 தேசியப் பிரதேசங்களையும் தன்னுள் அடக்கிய 15 யூனியன் குடியரசு களைக் கொண்டது. ---
ரஷ்ய சோவியத் சோஷலிஸ் சமஷ்டிக் குடியரசு, உக்ரே னியன், பைலோரஷயன், உஸ்பெக், காசாக், ஜோர்ஜியன், அஸர்பெய்ஜான், லிதுவேனியன், மால்தேவியன், லாத்வி ய்ன், கிர்கிஸ், தாஜிக், ஆர்மீனியன், துருக்மேனியன், எஸ். தோனியன் சோவியத் சோஷலிஸ்க் குடியரசுகள் என்ப னவே இவை. - - . ܝ
இக் குடியரசுகள் அயல்நாட்டுக் கொள்கை, வாணிபம், பாதுகாப்பு, நிதி, திட்டமிடுதல் போன்ற துறைகளில் தமது அரசுரிமையை ஐக்கிய அரசுக்கு வழங்கும். ஆனல், கல்வி, பொதுச் சுகாதாரம், சமூகக் காப்புறுதி, உள்நாட்டு விவ காரங்கள் முதலியவற்றில் இக் குடியரசுகள் சமத்துவ அரசுரிமை பெற்றிருக்கும்.
யூனியன் குடியரசுகளினுள்ளே, எந்தத் தேசிய இனமா வது தேசிய சிறுபான்மை இனமாவது ஏறத்தாழத் தொடர் ச்சியான பிரதேசத்தில் வாழ்ந்தால், அந்த இனத்திற்கு சுயாட்சிக் குடியரசு, சுயாட்சிப் பிரதேச தேசியப் பிரதேச அந்தஸ்துக்களில் ஏதாவ்து ஒன்று வழங்கப்படுகிறது. சுயாட்சிக் குடியரசு தனது எல்லைக்குள் தேசப் பொருளா தாரத்தையும் கலாசாரத்தையும் நிர்வகிக்கிறது. சொந்த அரசியல் சட்டத்தை வகுத்துக் கொள்வத்ற்கும், ஆட்சி: அமைப்புக்களை நிறுவிக்கொள்வதற்கும் யூனியன் குடியரசு போலவே சுயாட்சிக் "குடியரசும் உரிமை பெற்றிருக்கிறது. உதாரணமாக ரஷ்ய சோவியத் சோஷலிஸ் சம்ஷடிக் குடி யரசில் மட்டும் 16 சுயாட்சிக் குடியரசுகளும் , 5 சுயாட்சிப் பிரதேசங்களும், 10 தேசியப் பிரதேசங்களும் உள்ளன. சோவியத் நாட்டின் மிக உயர்ந்த ஆட்சி அமைப்பு, சம உரிமைகளுடன் கூடிய இரு சபைகளைக் கொண்ட சுப்ரீம் சோவியத்' (நாடாளுமன்றம்) ஆகும். யூனியன் சோவியத், தேசிய இனங்களின் சோவியத் ஆகிய இவ்விரு
70

சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால் தான் ஒரு சட்டம் ஏற்கப்பட்டதாகக் கருதப்படும். எத்தகைய தேசிய இனப் பாகுபாடுமின்றி, சோவியத் மக்கள் அனைவரதும் பொது நலன்களையும் பிரதிபலிப்பதுதான் யூனியன் சோவியத் சபை. நாட்டில் வாழும் எண்ணற்ற தேசிய இனங்களினதும் தனித், தேவைகளையும் நலன்களையும் பேணுவது தான் தேசிய இனங்களின் சோவியத் சபை. SSSS '.
சோவியத் யூனியனில் 'அரசாங்க மொழி ** எதுவும் கிடையாது. அத்தகைய ஒரு மொழியைப் புகுத்துவதும், சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனல், யதார்த்தமான சமூக-பொருளாதாரக் காரணங்களுக்காக தேசிய இனங்களுக்கிடையே ஒரு கருத்துப் பரிவர்த்தனைச் சாதனமாக சோவியத் நாட்டு மக்களே ரஷ்ய மொழியைச் சுயவிருப்புடன் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜார் கால ரஷ்யா சோஷலிஸ் அரசுக்கு விட்டுச் சென் றிருந்த தேசிய இன உறவுகளில் மிகப் பெரிய சிக்கல் களும் இருந்தன. ஜார் கால ரஷ்யாவில் ஒப்பு நோக்கினுல், மத்திய ரஷ்யா, தென் உக்ரேன் போன்ற பகுதிகள் பொரு ளாதார ரீதியில் நன்கு வளர்ச்சியுற்றிருந்தன; அதே வேளையில், குலவழி சமுதாய நிலப்பிரபுத்துவ உறவுகள் மேலோங்கி நின்ற-இயந்திரத் தொழில் எதையுமே பெற்றி ராத-மக்கள் இன்னும் நாடோடி வாழ்க்கையையே நடத்தி வந்த-மக்கள் கிட்டத்தட்ட முற்றிலும் எழுத்தறிவற்றி ருந்த பின்தங்கிய எல்லையோரப் பிரதேசங்களும் இருந்தன. நான் விஜயம் செய்த துருக்மேனியா இத்தகைய ஒரு பின்தங்கிய பிரதேசமாகவே ஐார் கால ரஷ்யாவில் இருந் ჭნჭნI • R
எனவே, புதிய சோஷலிஸ் அரசு பின்தங்கிய தேசியக் குடியரசுகளின் பொருளாதாரத்தை முன்னேறிய பிரதேசங் களின் தரத்துக்கு வெகு விரைவில் உயர்த்துவதை மிக முக்கியமானதாகக் கருதி, அதற்கான நடவடிக்கைகளை உட னடியாக மேற்கொண்டது. இதனல், சோவியத் அரசின் தலையாய கவனத்திற்குரியதாய் விளங்கிய 'நாடுமுழுவதை யும் சோஷலிஸத் தொழில் மயமாக்குதல்' கொள்கை, சோவியத் யூனியனின் பின்தங்கிய தேசியக்குடியரசுகளிலேயே மிகவும் தீவிரமாக அமுல் நடத்தப்பட்டது. உதாரணமாக 1926-27 பொருளாதார ஆண்டில் தொழில் துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் ஒட்டுமொத்தமாக சோவியத் யூனியன் முழுவதிலும் முந்திய ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகரித்த அதே வேளையில், பின்தங்கிய தேசியக்
12.

Page 93
குடியர்சான உஸ்பெக்கிஸ்தானில் முந்திய ஆண்Lைவிட 200 சத வீதம் அதிகரித்தன. -
பின் தங்கிய குடியரசுகளில் முதலீடுகளுக்கான பணத்த்ை அரசு எப்படிப் பெற்றது தெரியுமா? இதில் ஒரு கண்ணிசமான பகுதி மிகவும் வளர்ச்சியுற்ற குடியரசுகளின் வருமானங் களிலிருந்து கழித்துச் சேகரித்த அகில - யூனியன் நிதியி லிருந்து பெறப்பட்டது. *ந்: கொள்கையின் நல் விளைவாக, முதலாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் (1928-32) தொழில்துறை உற்பத்தி சோவியத் யூனியன் முழுவதிலும், 200 சதவீதம் அதிகரித்த அதே வேளையில், பின்தங்கிய தேசியக் குடியரசுகளில் 850 சதவீதத்தால் அதிகரித்தது.
இன்றே, பல தேசிய இன சோவியத் யூனியனின் குடி யரசுகளில், பொருளாதாரம் ஒரே தொகுதியாக, ஒரே சீராக அமைந்துள்ளது. . .
படிப்புவாசனை அற்று, விவசாய-தொழில்துறை மேம் பாடற்று, நாடோடிகளாய்த் திரிந்த துருக்மேனிய மக்கள், அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியின் விளைவாக எய்திய அபரிமித முன்னேற்றத்தைப் பற்றி ஒரளவு விரிவாக முன் னைய அத்தியாயங்களில் கண்டோம். இதையொத்த முன் னேற்றத்த்ை சகல பின்தங்கிய தேசியக் குடியரசுகளும் அடைந்தன. விவசாய, தொழில் துறைகளில் மட்டுமல்ல, கல்வி-கலாசாரத் துறைகளில் கூட, லெனின் ஆரம்பித்து வைத்த கலாசாரப் புரட்சி பின்தங்கிய இன மக்களுக்கும் அவர்களது மொழிகளுக்கும் ஏற்படுத்திய மறுமலர்ச்சியைப் பற்றியும் ஒரளவு விரிவாக முன்னைய அத்தியாயங்களில் கண்டோம். கீர்கீஜியா போன்ற எழுத்து வடிவமே இல்லாத மொழிகள் கூட சோவியத் ஆட்சியில் எழுத்து வடிவமும் இலக்கணமும் அமைத்துக்கொண்ட விவரங்களைப் பார்த் தோம். s இவ்வாறு சோவியத் யூனியனில், பொது இலட்சியங் களால் உறுதியாக்கப்பட்ட, நூற்றுக்கும் அதிகமான தேசிய இனங்களின் சோதரக் கூட்டணி அமைப்பானது, உலகில் தேசிய இன உறவுகளின் அரங்கில் சோஷலிஸம் ஈட்டிய மாபெரும் வெற்றியாகும். முழு உலகுக்கும் எடுத்துக் காட்டாக விளங்குவதர்கும்.
தேசிய இனப் பிரச்சினைக்கு சோவியத் யூனியன் வழங்கி யுள்ள தீர்வு, சோஷலிஸத்தின் பேரால் சீனமா வோயிஸ்டு கள் கடைப்பிடிக்கும் தேசிய இனவெறிக் கொள்கையிலிருந்து அடியோடு வேறுபட்டது. சீன மக்கள் குடியரசின் நிலப்.
巫停靠

பரப்பில் 60 சதவீதப் பகுதியில் வசிக்கும் சீன ஹான் வம்சத்தவரல்லாதாரான சுவான்கள், உகிர்கள், திபேத் தியர், மங்கோலியர், மற்றும் 50க்கும் மேற்பட்ட பிர தேசிய இனத்தவர்களுக்கு வெறும் பெயரளவில் தான் பிரதேச சுயாட்சி உரிமை உள்ளது. தேசிய சிறுபான்மை இனங்களை வலுக்கட்டாயமாக ஹான் இன மயமாக்கு கொள்கை சீனவில் நிறைவேற்றப்படுகிறது. டி. எ சேனநாயக்கா அரசின் கீழ் இலங்கையின் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றம் போல, சீனுவின் சுயாட்சிப் பிரதேசங்களிலும் ஹான் வம்சத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தை மாவோயிஸ்டுகள் நடத்தி வருகிறன்னர்.
சோஷலிஸத்தின் பகைவர்கள் கூட, இன்று சோவியத் யூனியனில் தேசிய இனப் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதையும் , சோவியத் நாட் டின் தேசிய இனக் கொள்கை மகத்தான சாதனைகளை நிலைநாடடியுள்ளது என்பதையும் ஒளிவுமறைவின்றி ஏற்றுக் கொள்கின்றனர். பிரபல அமெரிக்க அரசியல்வாதியான அவெரில் ஹரிமனே சோவியத் உஸ்பெக்கிஸ்தான குடி யரசைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த உண்மையை ஏற்றுக் கொண்டார், −
தேசிய இனப் பிரச்சினைக்கு சோஷலிஸத்தின் அடிப்படை யில்தான் தீர்வுகாண முடியும் என்ற மார்க்ஸிஸ்-லெனினிஸ் கோட்பாட்டின் உண்மையினை சோவியத் யூனியனின் அனுப வமும், அதனைப் பின்பற்றி வெற்றிகண்ட இதர சோஷலிஸ் நாடுகளின் அனுபவமும் மேன்மேலும் உறுதிப்படுத்துகின் றன.
இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றித்தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு உடனடித் தீர்வாக பிரதேச சுயாட்சி உட்பட ஐந்து அம்சத் திட்டமொன்றை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்வைத்துள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்கு சோவியத் யூனியன் கண்ட தீர்வைப் பற்றி என்னுடன் அளவளாவிய சோவியத் நண்பர் களுக்கு, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து அம்சத் திட்டத்தை நான் விளக்கினேன்,
அவர்கள் முகத்தில் திருப்தியை நான் கண்டேன்.
yYg

Page 94
முடிவுரை
...."உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள்பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டு; உண்மை சொல்வோர்க்கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; தூக்குண்டே இறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவதுண்டு. . . . .
... . "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்ருர்; இடிபட்ட சுவர்போலே கலிவீழ்ந்தான், கிருதயுகம் எழுக மாதோ!"
- மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ப் புரட்சியின் விளைவாக, கவிஞன் பாரதி தன் மனக் கண்ணில் எழக்
கண்ட கிருத யுகத்தை நான் நேரில் கண்டேன்.
மாஸ்கோவிலிருந்து கட்டுநாயக்கா வானுர்த்தித் துரை நோக்கி நாம் தாயகம் திரும்பிய இலியுஷன்-62 ஜெட் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, என் மனதில்
நிறைந்திருந்த ஒரே எண்ணம் -
சோவியத் யூனியனில் உதயமான இந்தப் புதுயுகம் இலங்
கையில் உதயமாவது எப்போ?
(முற்றும்)
74

} assas
P m
ELLLLLSLLLLLLLALALLALALLLL LLLLLLL LL0L Lt LS0LLLL TL0L SSS
翻口公エX○エ、口
烈_幻
ಏನ್ರೀತಿ.
S.
8
S.
=:- "
ਗਏ।
- FAREEZ BRo
COLOMBO-2,

Page 95
ം പ
நூலாசிரியர் டாக்ட பல்கலக் கழக (ெ பீடத்தில் சட்ட மரு எழுத்தாளர்
பாலஸ்தீன மக்கs
இலங்கைக் குழுவி விண்வெளிக் கழ! சோவியத் நட்புற உறுப்பினர் கலா: சரனேயுடன் இயங்கு
எழுத்தாளர் கூட்டு
“剑 மிதிப்பு-எரி: ஆங்கில நூலும், னரிற்கு' என்ற த படைப்புக்கள்.
"மண்ணில் இருந் நூலுக்கு 1974ல் வழங்கப்பட்டது.
 

ர் க. இந்திரகுமார் இலங்கைப் காழும்பு வளாகம் மருத்துவ த்துவ விரிவுரையாளர் மக்கள் பன்னணியின் பொருளாளர்; நீடன் ஒருமைப்பாட்டுக்கான ன் துனேத்தலேவர்; ககாரின் கத்தின் தலவர்: இலங்கை வுக் கழகத்தின் செயற்குழு சாரத் தினக்களத்தின் அணு நம் வரையறுக்கப்பட்ட இலங்ண்க றவுச் சங்கத்தின் இயக்குநர். கின்ற உண்மைகள்" என்ற "மண்ணில் இருந்து விண் தமிழ் நூலும் இவரது இதர
து விண்ணிற்கு" என்ற சாஹித்திய மண்டலப் பரிசு