கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்

Page 1
  

Page 2
கொடிய யுத்தம் அழித்து விட்ட முஸ்லிம் பிரதேச மஸ்ஜித்களுள்
சிலாபத்துறை ஜும்ஆ மஸ்ஜிதும் ஒன்று. அதனை ஊரவர்
கவலையுடன் நோக்குகின்றனர்.
சிலாபத்துறைக்கு பெருமை சேர்த்த கடலில் பன்னிரண்டு வருடங்களின் பின்னர் பாசத்துடன் கால்களை நனைத்துக்கொண்ட முஸ்லிம்கள் வெறுமையை கவலையுடன் நோக்குகின்றனர்.
படங்கள்: ஆசிரியர்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
‘புத்தளம் - மன்னார் பாதையும்,
புத்தளம் பெரிய பள்ளி வாசலும், அல்குர்ஆன் 1400ம் ஆண்டு நினைவுத்தபீயும்.
வெளியீடு: புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கம்
Guld. H. Suid. 24 godd A9g, gur o

Page 3
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
ISBN
Title
Author
CopyRight
Address
Language
First Edition
Type Setting
Printers
Publishers
Page
Price
புத்தளம்
955 - 8885 - 00 - 2
“Puttalam - Mannar Pathaiyum,
Varalatrup Payahangalum"
Al-Haj. M. I. M. Abdul Latheef JP
(Rtd. Teacher Adviser - Social Studies And History)
To The Author
Res: #19, "Moulavi Fuard Place' (14th Lane) Marikar Street, Puttalam, Sri Lanka.
0712- 387002
Of: Telica Cellular Trading Co. (Pvt) Ltd., #14 B, K. K. Street, Puttalam,
Sri Lanka.
Tel./Fax: O75290044
Tami
July 2003
Coloriine C.com
#157, 'Simco Building', Mannar Road,
Puttalam. Te: O3266 O79
Right Printers
# 7 E, Poles Road, Puttalam. Te: O78905868
Puttalam District Tamil Reporters
Association
91 Pages
RS
எம். ஐ. எம். அப்துல்ல்த்திப்
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
- சமர்ப்பணம் F───────────།
நூலாசான்களின் நம்பிக்கை நட்சத்திரம் - எனது முதல் நூலாம் புத்தளம் இஜ்திமாவின் நூலினை நினது நூறாம் நூலாய் பெற்றாய் - இன்னும் பந் நூறு நூல்களைப் பெற்றே நன்னயம் புரிவாய் நூலோர்க்கே! நல்லோனே நல்லிதயம் உடையோனே நினைவால் உயர்ந்தோனே நேராம் மேமன் குடியோனே நானிலம் போற்றும் புரவலராம் நம் ஹாஷிம் உமருக்கே - இந் நூல் அர்ப்பணம் சமர்ப்பணம் !!
-ஆசிரியர்.
ஆசிரியர்)
D
برصے

Page 4
புத்தளம் -
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
உள்ளே
தலைப்பு பக்கம்
வாழ்த்துரைகள் 05 - 09
என்னுரை 10
வந்தோரை வாழவைக்கும் புண்ணிய பூமி புத்தளம் 11 - 21
புத்தளம் - மன்னார், தலை மன்னார் தனுஷ்கோடி பாதைகளின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வு 22 - 62
முதல் மனித தோற்றம் பற்றி - வேத நூல்கள் கூறுவன 63 - 66
சிலாவத்துறைக்கான பயணமும், அங்கு சிலமணி நேரங்களும் 67 - 85
பயணத்தில் இடம் பெற்றோர் பெயர் விபரம் 86 - 87
பிரதேசப்படம் 89
துணைபுரிந்த நூல்கள் 90 - 91
எம். ஐ. எம். அபதுல் லத்திப்
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வாழ்த்துரை புத்தளம் தந்த புத்திரன் அப்துல் லத்தீபை பூந்தமிழால் வாழ்த்துவோம் வரலாற்றின் தலை வாசலைத் தன்னகத்தே புதையலாய்ப் பூட்டி வைத்திருக்கும் மாவட்டம் புத்தளம் ஆகும். வரலாற்று வாடை வீசிக்கொண்டேயிருக்கும் இந்த மாவட்டதின் தலை நகர் புத்தளம் என்றால், அந்தப் புத்தளம் மண் பிரசவித்த புத்தி ஜீவியான புத்திரர்களில் அல்ஹாஜ் எம். ஐ. எம் அப்துல் லத்திப் ஜே.பி அவர்களும் ஒருவர். சமகால எழுத்துலகில் பணியாற்றிவரும் பண்பாளர்-அன்பாளர் எனச் சொன்னால் அ.து மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.
கல்வியுலகில் ஓர் ஆசிரியராகக் காலடியெடுத்து வைத்து, ஆசிரிய ஆலோசகராக உயர்ந்து ஓய்வுபெற்ற இந்த கல்வியின் காதலர், எழுத்துத்துறையில் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையாளர். ‘லத்திப் மாஸ்டர்’ என்று மாணவர்களாலும், அன்பர் நண்பர்களாலும் அன்பு தோய்ந்து அழைக்கப்பட்டு வரும், இவர் சுமார் 45 ஆண்டுகளாக (1958 முதல்) பல்வேறு சமூக - சமய - கல்வித்துறை சார்பான அமைப்புக்களில் முக்கிய பதவிகளை அலங்கரித்து, சமுகபிரக்ஞையுடன் சந்தனமாய் மணம் வீசுபவர். பொதுப் பணிகள் புரிவதன் மூலம் இந்த “லத்தீப் மாஸ்டர் ” பெற்ற - இன்றும் பெற்று வருகின்ற அனுபவமே இவரது எழுத்துகளுக்கு உரம் சேர்ப்பதாகும்.
தான் பிறந்த மண்ணுக்குப் புகழ் சேர்ப்பதற்காக இவர் ஏந்தி நிற்கும் எழுதுகோல் பற்பல ஆக்கங்களை - ஆராய்ச்சித்தேடல்கள் மூலம் பெற்று தகவல்களை சமுதாயத்திற்குத் தந்திருப்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. இலிங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தோடு சங்கமமான "துருக்கித் தொப்பி" பற்றியும், மற்றும் தொப்பியும், தலைப்பாகையும் நமது கலாசாரத்தில் எத்தகைய பங்கைக் கொண்டுள்ளது என்பன பற்றியதுமான “லத்திப் மாஸ்டரின்” வரலாற்று ஆய்வு என் கூற்றுக்கு நல்லுதாரணமாகும்.
இந்தப் பத்திரிகைச் செய்தியாளரிடம் குடிகொண்டிருக்கும் அறிவு - அனுபவம் - ஆராய்ச்சித்தேடல் - சமூகத்தின் மீது கொண்ட பற்றுறுதி - எழுத்தாற்றல் போன்றன எனது மேற்பார்வையிலான பொறுப்பில் எத்தனை விழாக்கள் நடந்தாலும், அவை அத்தனையிலும் பாராட்டத்தக்கவர், இவர் என்பதை சொல்லாமற் சொல்கின்றன. அந்தளவு தகுதி பெற்ற இந்த ‘லத்தீப் மாஸ்டரை” பூந்தமிழால் புகழ் மாலை சூட்டி வாழ்த்துவோம். தற்போது வெளிவரும் இவரது மூன்றாவது நூலான “புத்தளம் மன்னார் பாதையும், வரலாற்றுப்பயணங்களும்” என்ற நூல் போன்று இன்னும் பல நூல்களை சமுதாயத்திற்கும் - சங்கத் தமிழுக்கும் தரவேண்டும் என ஆசிப்போமாக!
அல்ஹாஜ். ஏ. எச். எம். அஸ்வர் பா. உ பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பாராளுமன்ற விவகார அமைச்சு 49/1, வாட் பிளேஸ், கொழும்பு - 07. 2002-2-03
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 5
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வாழ்த்துரை
பிரபல எழுத்தாளர் அல்-ஹாஜ் எம். ஐ. எம். அப்துல் லத்தீப் (J.P) அவர்களது கட்டுரைகள் அடங்கிய ‘புத்தளம்-மன்னார் பாதையும் வரலாற்றுப் பயணங்களும் என்ற நூலில் எனது வாழ்த்துரை இடம் பெறுவது குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.
20ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த நாட்டில் இடம்பெற்ற வட மாகாண முஸ்லிம்களின் இடம்பெயர்வு இலங்கை சரித்திரத்தில் மிகப்பிரதானமாகப் பொறிக்கப்பட வேண்டியதொரு நிகழ்வாகும். வடபுல முஸ்லிம்கள் தங்களது சகோதர இனமான தமிழ் மக்களுடன் எவ்வாறெல்லாம் இரண்டறக்கலந்து வாழ்ந்தார்கள் என்பதும், அவர்களின் வாழ்வில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம் பெற்ற இடம் பெயர்வுக்கான நிகழ்வுகளும், சூனியத்தை நோக்கிய இடம் பெயர்வின் போது புத்தளம் வாழ் மக்கள் அவர்கள்பால் காட்டிய அன்பும், ஆதரவும் காலத்தால் மறக்க முடியாதவைகளாகும், தவிர, வட மாகாண மக்களை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு மிகக் கிட்டிய பாதையாகக் கருதப்படும் புத்தளம்-மன்னார் கரையோரப் பாதை பற்றியும், இலங்கையில் இருந்து அதி விரைவாக இந்தியாவை அடையக்கூடியதாக உள்ள தலைமன்னார் - தனுஷ்கோடி பாதை தொடர்பாகவும், 1990ன் இடம் பெயர்வுக்குப் பிந்திய சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்குப் பின்னர், முஸ்லிம்கள் முன்னர் செறிந்து வாழ்ந்த முசலி சிலாபத்துறைக் கிராமம் எவ்வாறு கண்ணிர் கோலத்துடன் காட்சியளித்தது என்பதையும் அப்துல் லத்தீப் அவர்கள் மிக அருமையாக இந் நூலில்விளக்குகிறார்.
இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஏனைய சகலருக்கும் இந்நூல் பல வழிகளில் உதவிபுரியக் கூடியதொன்றாகவுள்ளது, இதில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் பின் நாட்களில் சரித்திர ஆராய்ச்சி மாணவர்களுக்கு உபயோகமானதாக அமையும். .
அல்-ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் நாடறிந்த எழுத்தாளர்மட்டுமல்ல, பிரபலமான பத்திரிகைகளுக்கு காய்தல் உவத்தல் இல்லாமல் செய்திகளை அனுப்பும் செய்தியாளரும் கூட, அவர் தற்போது வெளிக்கொணரும் இந்நூலுக்குப் பின்னரும் அவரது முழு ஈடுபாடுள்ள வரலாற்றுத் துறையில் மென்மேலும் பல நூல்களை வெளிக்கொணர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
அல்-ஹாஜ். நூர்தின் மஷர் பா. உ., வன்னி புனர்வாழ்வுக்குத் துணைபுரியும் அமைச்சர் 146, 2lb uoffig காலி வீதி, கொழுக்யு-03 30.07.2002
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வாழ்த்துரை
1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வட புலத்து முஸ்லிம்கள் திடீரென வெளியேற்றப்பட்ட நிகழ்வும், அப்போது அபயம் தேடி ஓடோடி வந்த எமது மக்கள் அனைவருக்கும் தன்னகத்தில் இருப்பிடங்களும் இயன்ற பற்பல உதவிகளும் வழங்கி உபசரித்தும், இன்று வரை அதே நிலை பேணியும், பல இரத்த உறவுகளையும், கலாசாரத் தொடர்புகளையும் ஏற்படுத்தியும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் புத்தளம் தொகுதி மக்களின் அன்பின் வெளிப்பாடுகளும் வரலாற்றுப் பதிவுகளாகி விட்டன.
அத்தகைய மண்ணின் மைந்தன் நூலாசிரியர் அல்-ஹாஜ் எம். ஐ. எம். அப்துல் லத்திப் ஜே. பி. அவர்கள் எழுதியுள்ள “புத்தளம் - மன்னார் பாதையும் வரலாற்றுப் பயணங்களும்’ என்ற நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் பேருவகையடைகின்றேன். இதன் மூலம் உறவுகள் மேலும் வலுவடையும் எனவும் நம்புகின்றேன்.
புத்தளம், மன்னார் நகரங்கள் அமைந்துள்ள வடமேற்குக் கரையும், பிரதேசமும் ஆதி வரலாற்றுச் சம்பவங்களை நிறைவாகக் கொண்டுள்ளன. இந்த வகையில் ஆசிரியர் எடுத்துக்கொண்டுள்ள தலைப்புக்குரிய, புத்தளத்திலிருந்து மன்னாருக்கான கரையோரப் பாதை மற்றும் தலை மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கான கடலில் பாலம் அமைக்கும் விடயங்களும் மற்றும்"பாடல் பெற்ற சிலாபத்துறை பற்றிய விடயங்களும் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை, இவை பற்றிய பல்வேறு பெறுமதி மிக்க தகவல்களையும், இப்பாதைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் ஆசிரியர் வரலாற்று ரீதியாகவும், யதார்த்தபூர்வமாகவும் ஆராய்ந்துள்ளார்.
இந்நூல் பொதுவாக அனைவருக்கும், குறிப்பாக வரலாறு போதிக்கும் ஆசிரியர்களுக்கும், அதைப்பயிலும் மாணவர்களுக்கும் பயனளிக்குமென நம்புகிறேன். ஆசிரியரின் இத்தகைய முயற்சியைப் பாராட்டுவதுடன் “இன்ஷா அள்ளாஹற்” இன்னும் பல நூல்கள் அவர் வெளியிட வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.
ஜனாப். ரிஷாட் பதியுத்தீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரீ லங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும்.
#12, அல்-மினா புரம், தில்லையடி - புத்தளம். 2003-02-15
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 6
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வாழ்த்துரை
ஓய்வு பெற்ற சமூகக்கல்வி மற்றும் வரலாற்றுப்பாட ஆசிரிய ஆலோசகரும் சமாதான நீதவானும், ஊடகவியலாளருமான அல்ஹாஜ். எம். ஐ. எம். அப்துல், லத்தீப் எழுதிய ‘புத்தளம் மன்னார் பாதையும் வாரலாற்றுப் பயணங்களும் என்ற நூலுக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
வரலாற்றுப் பதிவுகளே ஒரு சமூகத்தின் காலக்கண்ணாடியாகும். ஒரு பிரதேசத்தின் வரலாறு ஒரு நாட்டின் வரலாறாகும். தான் பிறந்த மண்ணின் வரலாற்றை சரியாகப் பதிந்து வைக்காத சமுதாயம் தனது வரலாற்றையே இழந்த சமுதாயமாகிவிடும். இவற்றையெல்லாம் தத்ரூபமாக விளங்கிய எனது ஊரவர், தம்பி அப்துல் லத்தீப், காலத்தின் தேவையறிந்து இந்நூலை வெளியிடுவதையிட்டு எனது உளப்பூர்வமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், அத்துடன் ‘புத்தளம் வரலாறும் மரபுகளும் என்ற எனது வரலாற்று நூலையும் உசாத் துணையாகக் கொணி டு நுாலாசிரியர் இந்தப் படைப் பை வெளிக்கொணர்வதானது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது, தொடர்ந்தும் இதுபோன்ற காத்திரமான பல வரலாற்றுப்படைப்புக்களை எம். ஐ. எம். அப்துல் லத்திப் சமூகத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
‘தாஜுல் அதீப், "கலா பூஷணம்' அல்ஹாஜ். ஏ. என். எம். ஷாஜஹான் ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி,
காஸிம் ஒழுங்கை. புத்தளம். 01.03.2003
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வாழ்த்துரை
பிஸ்மில்லாஹிர்ரஹற்மானிர்ரஹீம்!
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், சமூகக்கல்வி மற்றும் வரலாற்று பாட ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகருமான அல்ஹாஜ். எம். ஐ. எம். அப்துல் லத்தீப் ஜே.பி. இந்நூலில் புத்தளத்துச் சிறப்பையும், மன்னாருக்குள்ள தொடர்பையும், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான (கடல்) தரைவழிப்பாதையின் அவசியத்தையும் பற்றிய தனக்கே உரித்தான பாணியில் நயம்பட எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
தனது சிலாபத்துறைக்கான கன்னிப் பயணத்தை வரலாற்றுச் சுவடாக வடித்துள்ளதுடன், இப்பிரதேசங்களின் பாடல்களையும் திறம்பட தொகுத்துத் தந்துள்ளார்.
இவர்களின் இப்பணிக்கு குறிப்பாக முசலிப்பகுதி மக்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
‘புத்தளம் - மன்னார் பாதையும் வரலாற்றுப் பயணங்களும" ஒரு புத்தகமல்ல, போற்றிப்பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
இது போன்ற இவரது இன்னும் பல ஆக்கங்கள் இதழ் விரிக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
A.T. Sameen B.A. Dip in Ed (Sri Lanka), Dip in E. Ed (Canada) Hon. Secretary, Chilawathurai Rehabilitation Foundation.
எம். ஐ. எம். அப்துல் லத்திப் (09)

Page 7
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
என்னுரை
தன்னை நாடிவரும் அனைவரையும் தத்தெடுக்கும் புண்ணிய தலம் புத்தளம், எனினும் இத்தலத்தின் நற்றன்மைக்கு ஒரு கலங்கமுண்டு, அதுதான் ஏடுகூறா “எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே. ” என்னும் வசை மொழி இக்கலங்கத்தை நீக்கித் தெளிவைத்தரும் பிறந்த மண்ணுக்காற்றும் கடமையாக எனது முயற்சி உள்ளே..!
அயலூராம் மன்னாருக்கு தற்போதுள்ளது போல புத்தளமிருந்து சுற்றி வளைத்துச்செல்லாத புராதன நேர்வழி. ஆம், கரையோர வழியொன்றிருந்தது, அது மீண்டும் திறக்கப்பட்டு பயணம் இலகு படுத்தப்பட எடுக்கப்படும் முயற்சிகளும், மற்றுமொரு புராதன வரலாற்று வழியான தலைமன்னார் - தனுஷ்கோடிக்கிடையே இந்தியாவுடனிணைந்து பாலம் அமைக்க இலங்கையரசு எடுத்து வரும் முயற்சிகளும் பல அனுகூலங்களைப் பெற்றுத்தரும். இவைபற்றிய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளே.
நம்மோடிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் வடபுல முஸ்லிம் மக்களுள் முசலியின் முத்துச்சிலாபத்துறை மக்களும் அடங்குவர், அவர்களின் பன்னிரண்டு ஆண்டு கடந்த பிறந்தகத்துக்கான பயணமும் அன்மித்தகால வரலாற்றுப் பயணமே! அப்பயணத்தில் அவர்களோடு இணைந்து செல்லும் பாக்கியம் M. S. M. அன்ஸார் ஹாஜியார் மூலமாக எனக்கும் கிட்டியது, அம்மக்களின் உணர்வோடு நானும் கலந்தேன், அதே உணர்வோடு வாசர்களாகிய உங்களோடும் கலக்கின்றேன்..!
உள்ளே இடம் பெற்றுள்ள மூன்று ஆக்கங்களில் முதல் இரண்டும் முறையே 'தினகரன் வாரமஞ்சரி' 1999 ஜனவரி 21லும், 2002 ஜூலை 07, 21 இதழ்களிலும் வெளிவந்தவை மூன்றாவது ஆக்கம் ‘நவமணி 2002 ஜூலை 07, 14, 21, 28, இதழ்களில் வெளிவந்தவை இப்பத்திரிகைகளின் நிறுவனத்தார்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வரலாற்றோடிணைந்த இவ்வாக்கங்களை சிலரின் ஆலோசனைக்கிணங்க ஆவணப்படுத்தக்கருதி சிற்சில திருத்தங்கள், ! இணைப்புகளுடன் நூலுருவிலாக்கியுள்ளேன்.
இவற்றை மீள் பரிசீலனைகள் செய்து உதவிய நண்பர்களான ஓய்வு பெற்ற அதிபர்கள் ஜனாப். எம். எம். எம். தையூப். ஜனாப். எம். ஏ. அப்துல் லத்தீப், ஜனாப். எம். ஐ. எம். ஹாலித, தமிழ் மொழி பாட ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் அல்ஹாஜ். எஸ். ஏ. நெய்னா மரைக்கார். விஞ்ஞான பாட ஆசிரியர் ஜனாப் வீ. ரி. ரஜப்டின் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
ஆசிரியர்.
si tro. H. 6 s. 7): 14bj odli odij, of
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வந்தோரை வாழ வைக்கும் புண்ணிய பூமிபுத்தளம்
* மட்டக்களப்புக்குப் போகாதே
போனால் பாயில் ஒட்ட வைப்பர்-போகாதே
* காலியான் உண்டு கெட்டான்
கொழும்பான் உடுத்திக் கெட்டான்'
* எத்தலம் போனாலும் புத்தளம் போகாதே
புத்தளம் போனாலும் புத்தியாய் நட
இவையெல்லாம் கடந்த பல தசாப்தங்களின் முன்னர் ஒர் ஊரைப் பற்றி ஏனைய ஊரவர் கூறி வைத்த வசை மொழிகளாகும். எழுத்தில் இல்லாத பேச்சு வழக்கிலான நாட்டு மொழிகளாகும். எப்போதோ நடந்துவிட்ட ஓரிரு சம்பவங்களை வைத்து அல்லது பாதிப்புக்களை வைத்து, அல்லது சம்பந்தப்பட்டோரால் தமக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்கள் அல்லது பாதிப்புகளை வைத்து கூறப்பட்டதாகக் கொள்ளக் கூடிய இவ்வசை மொழிகள் நிலைத்து விட்டன. முன்னோரால் கூறப்பட்ட இவ்வசை மொழிகளைக் கொண்டு அந்த ஊரவர் அனைவருமே அத்தகையவர்கள் என்று கருதி விடுதல் தவறாகும். «era
"மட்டக்களப்புக்குப் போனால் பாயில் ஒட்ட வைப்பர்” என்பதன் கருத்து, முற்காலத்தில் அங்கு செல்வோர் மந்திர சூனியத்தின் மூலம் திருமணப் பந்தத்திற்கு ஆளாக்கப்படுவர் என்றும், தனது ஊரையே மாப்பிள்ளையானவர் மறந்து விடுவர் என்பதுமாகும். பொதுவாக கிழக்கு மாகாணம் பல தசாப்தங்களின் முன்னர் மந்திரம் மற்றும் சூனியத்தில் திறமைசாலிகள் பலரைக் கொண்ட இடமாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூரவரான ஒரு சிலருக்கு நடந்திருக்கக் கூடிய இத்தகைய சம்பவங்களை வைத்து மட்டக்களப்பு பிரதேச மக்கள் அனைவருமே அப்படியானவர்கள் என்றோ, அல்லது ஏனைய பகுதிகளில் சூனியக் காரர்கள், மந்திரக் காரர்கள் இல்லையென்பதோ கருத்தல்ல.
"காலியான் உண்டு கெட்டான் - கொழும்பான் உடுத்திக் கெட்டான்", இது தென் மாகாணத்தின் முஸ்லிம் திருமண விருந்துகளின் போது நடைபெறும் ஆடம்பரத் தன்மையையும், கொழும்பு மக்களில் பலர் தமது உழைப்பின் பெரும் பகுதியை உடைகளில் செலவிட்ட தன்மையையும் இது குறிக்கின்றது. முன்னைய காலங்களில் காலி பிரதேச முஸ்லிம் திருமண, மற்றும் வைபவங்களின் போது ஏனைய பகுதிகளை
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 8
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
விட விருந்துகளுக்கு அதிகம் செலவிட்டிருந்த தன்மையை இதன் மூலம் விளங்குகின்றோம். இவற்றைக் கொண்டு காலிப் பிரதேச மக்கள் அனைவருமே சாப்பாட்டுக்கு அதிகம் செலவிட்டனர் என்பதோ, ஏனைய பகுதிகளில் அத்தகையோர் இல்லையென்பதோ கருத்தல்ல, இது போல கொழும்புப் பிரதேசம் எப்போதும் சன நெருக்கடி கூடிய இடம். சிறிய பரப்புகளில் அதிகமான மக்கள் வசிப்பர், அம்மக்கள் தமது உழைப்பில் ஏனைய பகுதிகளில் போன்று நிலம் மற்றும் உடமைகளை கொள்வனவு செய்ய வாய்ப்புக்கள் குறைவாக இருந்தமையினாலும், பெரும்பாலும் உடுப்புக்களில் புதிய புதிய மோஸ்தர்கள் தலை நகர பிரதேசங்களிலே தோற்றம் பெறுவதனாலும், கொழும்பு மக்கள் உடுப்புகளுக்கு அதிகம் செலவிட்டிருக்கலாம் இதனை வைத்துக் கொண்டு கொழும்பு மக்கள் அனைவருமே உடைகளுக்கு அதிகம் செலவிட்டிருப்பார்கள் என்பதோ, ஏனைய பகுதிகளில் இத்தகைவர்கள் இல்லை என்பதோ கருத்தல்ல.
இது போலவே "எத்தலம் போனாலும் புத்தளம் போகாதே புத்தளம் போனாலும் புத்தியாய் நட" என்ற கூற்றும் முன்னைய காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்னர் புத்தளம் பிரதேசத்தில் நிலவிய கொடிய ஆட்கொல்லி மலேரியா நோயின் காரணமாய் உருவானது என்று சிலரும், பாமரரான வெளியூரவர் சிலர், தீய சுபாவமுடைய புத் தளத்தவர் சிலரின் நடவடிக்கைகளினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாகச் சொல்லப்பட்ட கூற்றாகவும் இருக்கலாம் என்று சிலரும் கூறுவர்.
எப்படியான போதிலும் இதனைக் கொண்டு புத்தளம் தவிர ஏனைய பிரதேசங்களில் மலேரியா நோய் போன்ற கொடிய நோய்கள் இல்லை என்பதோ, அல்லது ஏமாற்றுக் காரரும், பாமரரும் இல்லை என்பதோ கருத்தல்ல. எனவே இவ்வாறான எழுத்தில் வடித்திராத வசை மொழிகளைக் கொண்டு ஒரு பிரதேசத்தையோ, ஓர் இனத்தையோ, ஒரு மதத்தவரையோ எடை போடுவது பிழையானதாகும். என்ற போதிலும் புத்தளம் பற்றி அடிக்கடி பலராலும் பரவலாகச் சொல்லப்படும் இவ்வசைச்சொல் எப்போது, யாரால், எதற்காகச் சொல்லப்பட்ட போதிலும் அவை அனைத்தும் சமீப காலமாகப் பொய்ப்பிக்கப்பட்டு வருவதுடன், "எத்தலம் போகாவிட்டாலும் புத்தளம் போ - புத்தளம் போனால் புது வாழ்வு பெறலாம் - பொருளும் தேடலாம்" என்றாக்கப்பட்டு வருகின்றது.
ஆம்! புத்தளம் அனைவரும் நாடி வரும் இடமாகி விட்டது இன்று. நிம்மதியான சகோதரத்துவ வாழ்வும் இங்கு கிடைக்கின்றது. வடக்கும் தெற்கும் இன்று புத்தளத்தில் நிலை கொண்டுள்ளன. வந்தோரை வாழ வைக்கும் புண்ணிய பூமியாக புத்தளம் மாறியுள்ளது என்றால்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
மிகையல்ல அது இன்று முற்றிலும் உண்மையாக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப, இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்த வட்டுக்கோட்டை முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்கள் 1938ம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளத்தை பற்றிப் பாடிய பாடலும் இதற்கு மெருகூட்டுகின்றது. அவர்,
எத்தலந்தான் சென்றிடினும் எவ்விதந் தான் நொந்திடினும் புத்தளம் நன்றென்று போயடைக - புத்தளத்தார் பார்த்திருக்க உண்ணார் பசித்த முகம் பார்த்தருள்வர் கோத்திரத்துக்குள்ள குணம்
என்ற அவரது வாக்கும் கருத்தும் மெய்ப்பிக்கப்பட்டபோதிலும், ஏனோ பாடல் மட்டும் நிலைக்கவில்லை. மாறாக பிறரின் மாற்றுக்கருத்து மட்டும் நிலைத்தவிட்டது.
இற்றைக்கு 1380 ஆண்டுகளின் முன்னர் அல்லாஹற்ஷின் கட்டளை படி முகம்மது நபி (ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம்) அவர்கள் புனித மக்கா நகரில் ஏகத்துவக் கொள்கையை போதித்த போது அதன்ன ஏற்று பின்பற்றிய முஸ்லிம்களும் போதித்த நபியும் குறைஷி காபிர்களால் சொல் லொணாத் துன்பங்களுக்குப் பிறந்த மண் ணிலேயே உள்ளாக்கப்பட்டனர். கொடுமை உச்சக்கட்டம் எய்திய போது அல்லாஹற்வின் கட்டளைப் படியும், ஏற்பாட்டின் படியும் நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் மக்கா நகரிலிருந்து 450 கி.மீ தொலைவிலான ‘யத்ரிப்' எனப்பட்ட (மதீனா) நகருக்கு கூட்டமாக இடம் பெயர்ந்து ஹிஜ்ரத் மேற்கொண்ட போது குறைஷிக் காபிர்கள் எப்பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே வெறுங்கையோடு சென்ற முஸ்லிம்களை வரவேற்று ஆதரித்த யத்ரிப் மக்கள் முஹாஜிரீன்களான முஸ்லிம்களுக்கு இல்லங்களையும், இடங்களையும் வழங்கி உதவினர் உபசரித்தனர். தொழில்களை வழங்கினர், திருமண பந்தங்களும் வர்த்தக நடவடிக்கைகளும் இரு தரப்பாரிடமும் நடந்தன. மார்க்கப் பிரச்சாரங்களிலும் யுத்த நடவடிக்கைகளிலும் இணைந்தே செயல்பட்டனர். அன்சாரீன்களான யத்ரிப் (மதீனா) மக்கள் வேறுபாடின்றி இணைந்தே செயல் பட்டதனால் இடம்பெயர்ந்தோர் என்ற சொல் காலப்போக்கில் அருகி விட்டது. இத்தகைய ஒரு முகப்பட்ட தன்மைகள் காரணமாக மதீனா இஸ்லாமிய உலகின் தலைநகரமாக மாறியது. நாலாபக்கங்களில் இருந்தும் செல்வங்கள் வந்து குவிந்தன. அன்று முதல் இன்று வரையும் இறையருளால் இனி
எம். ஐ. எம். ' துல் லத்தி

Page 9
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயனங்களும்
புத்தளம் மேலும் இலட்சோபலட்சம் உலகத்து முஸ்லிம்கள் ஒன்று கூடும் புனித பூமியாக மதீனா விளங்குகினறது.
மனிதப்புனிதர்களும் தியாகப்பெருமக்களுமான நபித்தோழர்களுக்கு மக்கா நகரில் நிகழ்ந்தது போன்ற கொடுமைகள் இங்குள்ள வட புலத்து அப்பாவி முஸ்லிம்களுக்கும் நிகழ்ந்து விடவில்லை. என்ற போதிலும் 1990 ஒக்டோபரில் காரணம் ஏதும் இன்றி பிறந்த மண்ணில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட போது மக்கத்து முஸ்லிம்களை போன்றே இம்மக்களும் உடைமைகள் எதையுமே உடன் எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் வெளியேற்றப்பட்டனர். அப்படி ஓடோடி வந்த பல்லாயிரக் கணக்கான மக்களைப் புத்தளம் பிரதேச மக்களும் மதீனத்தின் சாயலில் வரவேற்று உபசரித்தனர், இன்று வரை உபசரிக்கப்படுகின்றனர். இதனாலேயே அம்மக்களும் அவர்தம் தலைவர்களும் கடந்த ஒரு தசாப்த காலமாகப் பல் வேறு சந்தர்ப்பங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் தம்மை 'முஹாஜிரீன்கள்’ என்ற அடைமொழியிலும் புத்தளம் பிரதேச மக்களை “அன்சாரின்கள்’ என்ற அடைமொழியிலும் நன்றிப்பெருக்குடன் நினைவு கூறுகின்றனர் போலும்.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சுமார் 75000 முஸ்லிம் மக்களுக்கு புகலிடம் அளித்த புண்ணிய பூமியாக புத்தளம் தொகுதி விளங்கியது. இன்றும் விளங்குகிறது. இவர்களில் ஒரு பகுதியினர் பின்னர் தமது தனிப்பட்ட வசதி வாய்ப்புக்கள் கருதி நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை, கண்டி முதலான பகுதிகளுக்கு மீண்டும் இடம் பெயர்ந்தனர். எனினும் 75 வீத மக்களின் தரிப்பிடமாக இன்றும் புத்தளம், கற்பிட்டி பகுதிகளை உள்ளடக்கிய புத்தளம் தேர்தல் தொகுதியே விளங்குகிறது. மேற்படி நான்கு மாவட்ட மக்களின் இடம் பெயர்வால் ஏற்பட்ட வருகையால் சிலர் நினைப்பது கதைப்பது போல புத்தளம் மக்களுக்கோ, தொகுதிக்கோ இடர்களோ, இடைஞ்சல்களோ, நட்டங்களோ பெரும்பாலும் ஏற்பட்டுவிட வில்லை. நன்கு சீர் துாக்கிப் பார்ப்பின் நன்மைகளும், பல நலன்களுமே அதிகரித்துள்ளன. விளக்கிக் கூறுவதாயின் இம்மக்களின் வருகையினால் புத்தளம் பிரதேசத்தில் பல்வேறு தொழில் வாய்ப்புக்களும், பொருளாதார அபிவிருத்திகளும், கல்வி, நட்புறவு முதலானவையும் அதிகரித்தன. உதாரணமாக தோட்ட்ப் பகுதிகளில் கிடுகுகள் இழைத்து விற்று மிகவும் சொற்ப ஆதாயத்தையே பெற்று வந்த கிராமத்து மக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. பல்லாயிரக் கணக்கில் வந்து சேர்ந்த மக்களை ஆரம்பத்தில் பாடசாலைகளில் வைத்து பராமரித்த போதிலும் இவர்களை சீக்கிரமே தனியான இடங்களில் அமர்த்தும் தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இதற்காக அரச, தனியார் காணிகளில் முகாம்கள்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
அமைக்கப்பட்டன. இதனால் கிடுகுகளும், கம்புத் தடிகளும் அதிகம் தேவைப்பட்டன.
இவற்றின் தேவைகள் பெருமளவு அதிகரித்தன. நுாறு ரூபாய்க்கு விற்கப்பட்ட கிடுகுகள் நானுாறு ரூபா முதல் ஐநுாறு ரூபா வரை அதிகரித்தது (தற்போது இதன் விலை எண்ணுாறு ரூபா). முகாம்களில் நிலவிய நெருக்கடி காரணமாக வருடந்தோறும் இக் குடிசைகள் தீ அபாய காரணங்களாலும், கிடுகுகள் இற்றுப் போவதனாலும் புதுப்பிக்கப்பட நேரிட்டதால் அவற்றின் இந்த விலையும் இன்று வரை நிலைத்தே நிற்கின்றன. தவிர குடிசை முகாம் வாழ்க்கையை விரும்பாத இடம் பெயர்ந்த மக்கள் பலர் பிரத்தியேக வீடுகளைப் பெற்றுக் கொள்ள போட்டி போட்ட போது வீடுகளின் வாடகையும் இரண்டு, மூன்று மடங்குகளாக அதிகரித்தன. புத்தளத்தவர் பலரால் நடத்த முடியாது மூடப்பட்டுக் கிடந்த பல வர்த்தக நிலையக் கட்டடங்கள் காலப்போக்கில் இம்மக்களால் பொறுப்பேற்று திறக்கப்பட்டு, வர்த்தக நிலையங்களாகவும், தையல், ஒட்டு வேலை, சைக்கிள் திருத்துதல் முதலான தொழிற் கூடங்களாகவும் மாறியுள்ளன.
இம்மக்களின் வருகையால் வர்த்தகம், விவசாயம்,மற்றும் தொழில் துறைகளும் பெருகியுள்ளதுடன் செல்வமும் அதிகரித்துள்ளன. முகாம்கள் தோறும் பள்ளிவாசல்கள் மத்ரஸாக்கள் பல்வேறு நிறுவனங்கள்ாலும், அமைப்புக்களாலும், அம்மக்களின் முயற்சிகளாலும் நிறுவப்பட்டுள்ளன. இடம் பெயர்ந்த மக்களின் பிள்ளைகளின் கல்விக்கென புத்தளத்துப் பாடசாலை வளவுகளில் நிறுவப்பட்டுள்ள புறம்பான கட்டடங்கள் இங்கேயே சேர்ந்து விடுகின்றன. யாழ்ப்பாணத்து மண்வாசனையான யாழ் மண்ணுக்கு பெருமைத் தேடித் தந்த கல்வி இன்று இடம் பெயர்ந்து வாழும் ஆசிரியர்களினால் புத்தளத்து சிறார்களுக்கும் சேர்த்தே ஊட்டப்படுகின்றமை பெரிய பேறாகும்.
அப்பகுதியின் பல அதிபர்கள் இன்று புத்தளம் பிரதேசத்தின் கல்வி கூடங்கள் பலவற்றை வழி நடாத்துகின்றனர். மேலும் ஆசிரிய ஆலோசகர்களாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களாவும் சேவை புரிகின்றனர், இவ்வாசிரியர்களினால் இங்கு யாழ்ப்பாணத்திற் போன்று பல டியூஷன் நிலையங்களும் நடாத்தப்படுகின்றன. இன்னும் பலர் அரச திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் பல் வேறு பொறுப்புக்களில் பணிபுரிகின்றனர், தவிர பல்வேறு திருமண உறவு முறைகளும் நிரம்பவே இங்கு நிகழ்ந்துள்ளமையும் ஒரு பாரிய பிரதேச இணைப்பை நிரந்தரமாகவே இங்கு நிலை நாட்டியுள்ளன. யாழ், வன்னி மாவட்டங்களின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கேயே வதிவதால் இவர்களின்
எம். ஐ. எம். அப்துல் லப்

Page 10
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
நிதி ஒதுக்கீடுகளும் இன்னும் சில தமிழ் பிரதிநிதிகளின் நிதி ஒதுக்கீடுகளும் புத்தளத்து மண்ணுக்கும் செலவிடப்படுகின்றன. புத்தளத்தின் சுற்றாடலில் முட்பற்றைகளால் மூடப்பட்டுக் கிடந்த பல் வேறு இடங்கள் இன்று இடம் பெயர்ந்த மக்களால் நவ குடியேற்றங்களாக மாற்றப்பட்டு இஸ்லாமியப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. இப்படியாக அல்லற்பட்டு ஓடி வந்த மக்களில் அதிகமானோரை புத்தளம் அரவணைத்ததால் அம்மக்கள் ஓரளவாவது நிம்மதி வாழ்வை பெற்று உள்ளார்கள். எவ்வாறெனில் அம்மக்களின் வட புல வாழ்வின் போது மேற் கொள்ளப்பட்ட புனித ஹஜ் பயண விகிதாசரங்களை விட இடம் பெயர்ந்த வாழ்வின் பின் அவ்விகிதாசாரம் அதிகரித்துள்ளதில் இருந்து இக்கருத்து புலனாகின்றது, என்ற போதிலும் இதிலிருந்து இடம் பெயர்ந்த அனைத்து மக்களுமே வளமான வாழ்வை இங்கு பெற்று விட்டார்கள் என்பது அர்த்தமல்ல, ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாதோரும் இவர்களில் நிறைய உண்டு. இவர்களுக்கு உலர்உணவுத்திட்டம் உதவுகின்றது. எனினும் வட புலத்தை விட நிம்மதியாகத் துாங்கி எழும்பும் பாக்கியத்தை அல்லாஹற் இம்மக்களுக்கு இங்கு வழங்கியுள்ளான். அதே வேளை புத்தளம் மக்களும் நகரமும் பிரதேசமும் பல்வேறு வளத்தையும், நலத்தையும், அபிவிருத்தியையும் கூட இவர்களின் வருகையாலும், முயற்சியாலும் பெற்றுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மைகளாகும்.
இந்த வெளியேற்றத்தின் மூலம் வட பகுதி முஸ்லிம்களின் விகிதாசாரம் அங்கு தற்காலிகமாக ஒழிக்கப்பட்ட போதிலும் கடந்த நான்கு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்டு வந்த பெரும்பான்மை சமூக இன ரீதியான குடியேற்றங்களால் வீழ்ச்சி கண்ட புத்தளம் முஸ்லிம்களின் விகிதாசார பாதிப்பு, வட பகுதி முஸ்லிம்களின் வருகையினால் மீண்டும் உயரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதும் எமது பாக்கியமே. என்ற போதிலும் வாக்களிப்பு விடயத்தில் தொகுதி ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் பிரித்தே கணக்கிடப்படுகின்றனர். எதிர் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்பட்ட போதிலும் கூட, இம்மக்களின் பாதுகாப்புப் பற்றிய தொடர் நம்பிக்கையீனம் இங்கு அவர்கள் பல புதிய தொழில்களில் காலுான்றி உள்ளமை, குடும்ப திருமண உறவு தொடர்புகள், புத்தளத்தின் முஸ்லிம் பெரும்பான்மைத் தனம், கொழும்பை அண்மித்து இருக்கின்றமை முதலான காரணங்களால் இடம் பெயர்ந்து வந்த மக்களின் பல ஆயிரம் முஸ்லிம்கள் மீண்டும் வட பகுதியில் மீள் குடியமரச் செல்லமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதனாலும் எதிர் காலத்தில் புத்தளம் தொகுதியின் முஸ்லிம் விகிதாசாரம் உயரக் கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 
 

மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
L3556LD -
இப்படியாக ஐந்து ஆண்டுகளுக்கு (தற்போது 12 வருடங்களுக்கு) முன்னர் வட இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முல்லைத் தீவு முதலான பிரதேசங்களில் இருந்து காலத்துக்குக் காலம் விரட்டப்பட்ட மேற்கிலங்கையின் சிங்கள மீனவர் பலருக்கு புத்தளம், கல்பிட்டி பகுதிகள் தொடர்ந்து புகலிடம் அளித்தே வந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் நிரந்தர குடிபதிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பணி னிரணி டு (12) ஆண்டுகளின் முன் னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட டசின் கணக்கான லொறி வண்டிகள் பொருட்களுடன் தினமும் இரவில் புத்தளம் நகரில் வரிசையாகத் தரித்தே மறு நாள் காலை கொழும்பு அடைந்ததும், மீண்டும் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் புறப்பட்ட அவ்வண்டிகள் அதே வரிசையில் புத்தளத்தில் மீண்டும் இரவு தரித்து யாழ்ப்பாணம் புறப்பட்டதும் வரலாறாகி விட்டன. பயங்கரவாதம்தான் அதனையும் ஒழித்தது. தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான ஒரேயொரு தமிழ் பேசும் பகுதியும், பாதுகாப்பான இடமும், தரிப்பிடமுமாக புத்தளம் நகரமே விளங்கியது. இதுவும் கூட ஒரு வகையான தற்காலிகப் புகலிடமே. ஏன் 2500 ஆண்டுகளின் முன்னர் (கி.மு. 543) இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கருதப்படும் , இளவரசன் விஜயனினதும் (700) எழுநூறு தோழர்களதும் தோணிகள் புத்தளம் பிரதேசக் கரையில் ஒதுங்கியதன் மூலம் புத்தளம் பூமியே அவர்களுக்கும் புகலிடம் அளித்துள்ளது என்றால் மிகையல்ல. விஜயனின் ராஜவம்ச காலத்தின் போது இப்போதைய புத்தளம் 'மகுல் தொட்டமுன” (திருமணத்தின் துறைமுகம் -The Port of Marriage) என அழைக்கப்பட்டது. இச்சுற்றாடலில்தான் விஜயன் வந்திறங்கி குவேனியை மணம் புரிந்தார். புத்தளத்திலிருந்து கிழக்கே ஏறக் குறைய பதினைந்து (15) கிலோ மீட்டர் துாரத்திலுள்ள (வழுக்கியாற்றுப் பகுதியில்) “தம்மண்ணா நுவர” என்ற இடமே குவேனியின் வதிவிடமாக இருந்தது எனவும், எனினும் அதற்கான போதிய தடயங்கள் இல்லை எனவும் "Gazetteer ofthe Putalam District" என்ற குறிப்பேடு கூறுகின்றது. கி.பி. 1345 ஆம் ஆண்டு மொரோக்கோ நாட்டின் உலகப் புகழ் பெற்ற தேச சஞ்சாரி இப்னு பதுாதாவின் கப்பல் நங்கூரம் இட்டதும் புத்தளம் கரையிலேயே எனக் கூறப்படுகிறது. இங்கு வைத்து அவரும், அவரது பரிவாரங்களும் மன்னனால் வரவேற்கப்பட்டு உபசரிப்பின் பின் சில நாட்களில் அவர்கள் பல்லக்கு மூலம் ஆதம் மலைக்கு (பாவா ஆதம் மலை, சிவனொளி பாத மலை) பயணம் மேற்கொண்டதும் மீண்டும் கொழும்பு வழியாக புத்தளம் அடைந்து கப்பல் மூலய்பயணத்தை தொடர்ந்ததும் வரலாறு கூறும் உன்ைமைகள். கொழும்பு தமிழ்ச் &ቻ፫፥፳1ሪm W ስ
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 11
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இவ்வாறாகப் பலருக்கு புகலிடம் அளித்தும், பலரால் புகழப்பட்டதுமான புண்ணிய பூமியான புத்தளம் வெளியூரவர் பலருக்கு பெரும் பொருள் வளத்தையும், வழங்குகிறது. செல்வந்தர்கள், அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் பொருள் வளம் தரும் பெரிய காணிகள் பல இங்கு உள்ளன. வெளிநாட்டவர் பலரும், வெளியூரவர் பலரும், இங்கு அமைந்துள்ள பாரிய இறால் பண்ணைகளால் இலட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆகியுள்ளனர். தென் இலங்கையிலிருந்தும் மலையகத்திலிருந்தும் பெரும் அளவில் சீமான்களின் கனவு தேவதைகளாக 'புத்தளம் பிரதேசத்தின் இறால் பண்ணைகள் விளங்குகின்றன. இப்பண்ணைகளால் புத்தளத்துச் சூழலுக்கும், மக்களுக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்ட போதிலும் பண்ணையாளர்களுக்கு பெரும் இலாபத்தையும், அரசுக்கும் கோடானு கோடி ரூபாய் அந்நிய செலாவணிகளையும், குறுகிய காலத்தில் புத்தளத்து இறால் பண்ணைகள் பெற்றுக் கொடுக்கின்றன. எனினும் நோய்க் காரணங்களால் இவ்விறால் பண்ணை வருமானம் சில வேளைகளில் பெரிய நட்டங்களுக்கு உள்ளாவதும் உண்டு. w
எனினும் எவர் எப்பகுதியைச் சேர்ந்தோராக இருப்பினும், வெவ்வேறு நோக்கோடு அப்பகுதிகளில் குடியேறி வளம் பெற்ற வாழ்வு வாழ்ந்திடினும், தத்தம் பிறப்பு வழி மண்ணுக்குரித்தான மண்வாசனையைப் பெருமை படக் கூறிக் கொள்வதில் சளைப் பதுமிலி லை விட்டுக்கொடுப்பதுமில்லை!! அதே வேளை இவர்களில் சிலர் வந்து வதியும் இடத்தின் வழுக்கல்களை இனங்காணத் தவறுவதுமில்லை!!! இத்தகைய சம்பவங்களும் நிகழ்கின்றன. இவை தவிர்க்கப்படல் வேண்டும். இதே வேளை பல வசதிகளோடு வட பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் காலத்தின் விளைவால் இன்று இங்கு முகாம்களில் வாழும் நிலையை வைத்து அவர்களை ஒரு வித இரண்டாந் தர பிரஜைகளைப் போல் ஒரு சில உள்ளுர் முஸ்லிம்களும் இங்கு வதியும் ஏனைய இனத்தவரும் கணிப்பதும், கதைப்பதும் கைவிடப்படல் வேண்டும்.
வட புலத்து முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கில் திடீரென வெளியேற்றப்பட்டு புத்தளம் வந்து கதி கலங்கி நின்ற வேளை எமது கண்களும் கலங்கின, கண்ணிர் சிந்தின, உள்ளங்கள் குமுறின. உணர்ச்சி பொங்க அவர்களை உபசரித்தோம் எனினும் நாம் சுய கட்டுப்பாட்டை மட்டும் இழந்திட வில்லை, அயலயலில் ஆண்டாண்டு காலம் வசித்த தமிழ் மக்களும் இந்நிகழ்வால் அஞ்சினர். அதனை அறிந்த புத்தளம் முஸ்லிம்கள், 'யாரோ செய்த தவறுக்கு நீங்கள் அஞ்ச வேண்டியது இல்லை, வழமை போல் வாழலாம்' என அவர்களுக்கும் ஆறுதல் ஊட்டி அச்சம் நீக்கி வாழ வைத்த இடம் புத்தளம். புத்தளத்தின் பூர்வீக
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
தமிழ் குடி மக்கள் தவிர, வட புலத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாண தீப கற்பத்தில் இருந்து அரச பதவிகள் உத்தியோகங்கள் நிமித்தம் புத்தளம் நகருக்கும் பிரதேசத்துக்கும் நியமனமாகி அல்லது மாற்றலாகி வந்த மக்களில் பலரும், அதுபோல் வர்த்தக நிமித்தமாய் வந்தோர் பலரும் காலப்போக்கில் குடும்ப சகிதமாக நிரந்தர குடிபதிகளானோரும் அனேகர் இங்குள்ளனர். இங்குள்ள சூழல், சுற்றாடல் குறைந்த விலையில் நிலம் பெறக்கூடியதாக இருந்த வாய்ப்பு, வாழ்க்கைச் செலவு குறைவு, புத்தளத்து முஸ்லிம்கள் உத்தியோக ரீதியாகவும், கல்வி சார் ரீதியாகவும் அவர்களுக்கு அளித்த மதிப்பு, கொழும்புக்கு அண்மித்த விசாலமான நிலங்களைக் கொண்ட தமிழ் பேசும் பிரதேசம் என்பன புத்தளத்தை இவர்கள் நிரந்தர குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுத்த காரணங்களாக இருக்கலாம். தற்போது அரச காரியாலயங்கள் இங்கும் ஏனைய இடங்களிலும் பெரும்பான்மை இன உத்தியோகஸ்தர்களால் நிரம்பி இருந்த போதிலும் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களின் முன்னர் அவ்விடங்கள் ஆங்கில மொழியை அரச மொழியாகக் கொண்டு பதவி வகித்த தமிழ் அதிகாரிகளாலும் உத்தியோகஸ்தர்களாலுமே நிரப்பப்பட்டிருந்தன. புத்தளம் நகரிலுள்ள அனுராத புரவீதியை அண்மித்த பகுதிகள் பல தசாப்தங்களாக “சின்ன யாழ்ப்பாணம்” என பொதுவாக மக்களால் அழைக்கப்படுவதும் இதன் காரணத்தினாலேயாகும். இது போல 1956ம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கள மொழி உத்தியோக பூர்வ மொழியாக ஆக்கப்பட்ட பூோது இங்கு நியமனங்களைப் பெற்ற பெரும்பான்மை இன சகோதரர்களில் பலரும் முன்னையவரைப் போலவே புத்தளத்து புறச்சூழலில் நிலபுலங்களைப் பெற்று நிரந்தர குடிபதிக்ளாக மாறியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக நீண்ட காலமாய் வந்தோரை வாழ வைக்கும் புண்ணிய பூமியான புத்தளத்திற்கு எப்போதும் இயற்கை அழிவுகளோ, செயற்கை அழிவுகளோ பெரும்பாலும் ஏற்பட்டதில்லை. சூறாவளிகள், பெரும் வெள்ள அனர்த்தம், முதலானவையோ, பயங்கரவாத நடவடிக்கைகளோ, அழிவுகளோ நேராது எல்லாம் வல்ல அல்லாஹற் காத்துள்ளான். மூன்று தசாப்தங்களின் முன்னர் நிகழ்ந்த ஜே. வி. பி. பயங்கரவாத நடவடிக்கைகளின் போதும், தற்போதும் கூட இவைகள் ஏனைய பகுதிகளில் போன்று இங்கு அழிவுகளைத் தந்ததில்லை. ஆண்டு தோறும் வங்காள விரிகுடாக் கடலில் சூழ்ந்து கொள்ளும் பவன அமுக்கம் சூறாவளியாக மாறி நாட்டை ஊடறுத்த போதெல்லாம் அது புத்தளத்திற்குப் பாதிப்புகளைத் தந்ததில்லை. இனி மேலும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாதவாறு அல்லாஹற் பாதுகாப்பானாக! ஆமீன
lui. I strib. oai haud sacer

Page 12
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புத்தளம் நகரில் மாத்திரம் 38க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், பெளத்த, இந்து, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து தேவாலயங்களும் உள்ளன. இது போலவே புத்தளம் நகரின் சுற்றுப் புறக் கிராமங்களிலும் நூற்றுக் கணக்கான மஸ்ஜிதுகளும் ஆத்மீகப் பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் பலவும் உள்ளன. மார்க்க சம்பந்தமான ஆத்மீக சேவைகளும் புத்தளத்தில் தினந்தோறும் நிறைவாக நடத்தப்பட்டும் வருகின்றன.
*1996ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம், 21ம், 22ம் திகதிகளில் புத்தளம் நகரில் நடைபெற்ற அகில இலங்கை (உலக) தப்லி". இஜதிமா மகாநாடு உலகப்பிரசித்தமானது. இலங்கை வரலாற்றில் ஒரே நோக்கத்திற்காக ஒரே இடத்தில் மூன்று தினங்கள் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள் மாத்திரம் சங்கமித்ததும் இதுவே முதல் தடவையாகும், இங்கிருந்து வெளியாகிய ஆயிரக்கணக்கான ஜமாஅத்தினர் உள் நாட்டிலும் சுமார் 1050 நபர்களை கொண்ட சிறு சிறு குழுக்களான ஜமாஅத்தினர் ஐம்பத்தி மூன்று நாடுகளிலும் மார்க்க சேவையாற்ற புறப்பட்டுச் சென்றமையும் வரலாறு. இந்நிகழ்வு புத்தளத்து மக்கள் செய்த பெரும் பாக்கியமாகவே கருதப்படுகிறது. இது விஷேடமாக இப்பிரதேசத்திற்கும் மக்களுக்கும் பொதுவாக நாட்டுக்கும் நல்லருளைப் பெற்றுத் தரும் நிகழ்வாகும். மேலும் புத்தளம் மண்ணுக்கும் புத்தளம் மக்களுக்கும் பெருமை தேடித் தரும் இறைப் பாதுகாப்பைத் தரும் விடயங்களுமாகும். பல்லின மக்களும் சந்தோஷமாகவும் சகோதரத் தன்மையுடனும் தொடர்ந்தும் இங்கு வாழும் நிலை நீடிக்க இறைவன் வழி வகுப்பானாக!!!
ஊருக்கெல்லாம் உப்பிடும் தளம் - இன்னும் உறைவிட மளிக்கும் தளம் உழைத்திட இடமளிக்கும் தளம் உணர்வோடு ஒன்றி நிற்கும் தளம் - இந்த உப்புத்தளம் பற்றிய முன்னைய உளறலை நீவிர் தீர்க்கமாய் உதறித்தள்ளி புத்தளம் ஊரையும் உப்பிடுபவரையும் என்றும் உள்ளளவும் நினைப்பீரே உளமாற உண்மையை உரைப்பீரே!
-ஆசிரியர்
பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே
-பாரதியார்.
6st ttb. 3. 6tilib. ?»I1J Ábl 6Ü sudgi5gÄt
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
குறிப்பு:
‘புலவர் 1938ல் புத்தளம் பற்றிக் குறிப்பிட்ட இவ்வார்த்தைகள் தீர்க்க தரிசனமாகி அவரது மகளின் குடும்பத்தினர் கடந்த 1970ம் ஆண்டு முதல் புத்தளம் நகருக்கு வந்து முஸ்லிம்களோடு ஒன்றித்து வாழ்ந்து பின்னர் அவர்கள் அண்மையில் குடும்ப சகிதமாக புனித இஸ்லாத்தைத் தழுவி உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து வருவதும் ஆச்சரியம் தரும் விடயமாகும்.
“புத்தளம் நகரில் நடை பெற்ற இவ்விஜதிமா சம்பவங்களை உள்ளடக்கிய, நினைவு நுாலான புத்தளம் கண்ட மாபெரும் தப்லி". இஜதிமா என்ற எனது முதல் நூல் 280 பக்கங்களுடன் 1998 ஜூலை மாதத்தில் வெளி வந்தமை குறிப்பிடத்தக்கது.
எம். ஐ. எம். அப்துல் லத்தி

Page 13
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புத்தளம் - மன்னார் தலை மன்னார் - தனுஷ்கோடி பாதைகளின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வு
2001-12-05ல் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து புதிய ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சி மலர்ந்ததும் , சமாதானத்துக்கான பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் காணி கிறோம். சர்வதேச ஒத்துழைப்புக்களுடன் இவை நடைபெறுகின்றன. துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு, பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. சுமார் இருபது வருடங்கள் மூடப்பட்டு கிடந்த பல பாதைகள் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. யுத்த நிறுத்த, சமாதான, சகவாழ்வுப் பிரயத்தன நடவடிக்கைகளுடன், இடம் பெயர்ந்து வாழும் மக்கள்ன் மீள் குடியமர்வு ஏற்பாடுகள் பற்றியும் பேசப்படுகின்றன அத்துடன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்சந்தர்ப்பத்தில் துணிச்சலும், ஆற்றலும் மிக்க பிரதமர், திரு. ரணில் விக்ரம சிங்க அவர்கள் இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையே பாலம் அமைக்கப் போவதாக ஒரு திட்டத்தை அண்மையில் வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்ளிலும் ஈடுபட்டதையும் அறிவோம். பாராளுமன்ற விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், வன்னி மாவட்டப் புனர்வாழ்வுக்குத் துணை புரியும் அமைச்சரும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் நூர்தீன் மசூர் அவர்களும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் ரிஷாத் பதியுத்தீன் அவர்களும், மற்றும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, அகதிகள் விவகார அமைச்சர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன போன்றோரும், பல அமைப்புக்களும் ஏக காலத்தில் புத்தளம் - மன்னார் கரையோரப் பாதை அமைத்து போக்கு வரத்துச் சிரமத்தை இலகு படுத்துதல் வேண்டும் என கருத்துக்கள் வெளியிட்டும் வருகின்றார்கள். அதற்கியையத் தற்போது செயல் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றோம். இவை வரவேற்கத் தக்க விடயங்களாகும்!
புத்தளம் - மன்னார் கரையோரப் பாதை திறத்தல், தலை மன்னார் - தனுஷ்கோடி (இலங்கை - இந்தியா) பாலம் அமைத்தல் இவை இரண்டினதும், இவற்றுக்கிடையிலும், புவியியல், வரலாற்று,
22) எம். ஐ. எம். அப்துல் லத்தி
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இலக்கிய, சமய, கலாசாரத் தொடர்புகள், சம்பவங்கள் இருப்பதை அவதானிக்க முடியும். இவை இரண்டுமே பதிய விடயங்கள் அல்ல, மாறாக புராதன விடயங்களைப் புதுப்பிக்க எடுக்கப்படும் நல்ல முயற்சி என்று சொல்வதே பொருந்தும்!
பாரம்பரிய வரலாற்றுத் தொடர்புகளுக்கும், புராதன கால, மற்றும் அணி மித்த காலப் போக்குவரத்துக்கும் இப் பாதைகள் பயன்படுத்தப்பட்டன என்பது வரலாற்று உண்மைகளாகும்! இடைப்பட்ட காலத்தில் இவ் விரு பாதைகளினுாடாக போக்குவரத்துக்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய பல்வேறு அவசியத் தேவைகள் கருதி நமது பிரதமர், மற்றும் அமைச்சர்கள், அரசியல் வாதிகள், சமூகவியலாளர்கள், முதலானோரும், சமூக அமைப்புக்களும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் புத்தளம் - மன்னார் கரையோரப் பாதை திறப்பது பற்றியும், தலை மன்னார் தனுஷ்கோடிக்கிடையே கடலில் பாலம் அமைத்தல் பற்றியும் சிந்திப்பது, பேசுவது வரவேற்கத்தக்கது மாத்திரமன்றி அவை காலத்தின் அவசியத் தேவைகளுமாகும் !!
'........ சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம். என்று பாடினார், சுப்பிரமணியப் பாரதியார்! இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அவசியம் இருக்க வேண்டிய நெருங்கிய தொடர்பை உணர்த்தி அவர் பாடிய இப்பாடல் பிறந்தது கடந்த நுாற் றாணி டில் . ஏற்கனவே தெனி னிநிதியாவின் இராமேஸ்வரத்துக் கணித்தான தனுஷ்கோடி முனைக்கும், இலங்கையின் தலை மன்னார் முனைக்கும் இடையே, 'இராமர் அணை என்ற ஒரு பாதை அமைப்பு கடலில் இருந்ததாக இலக்கியத்தோடு சம்பந்தமான இதிகாசங்கள் கூறுகின்றன! இது உண்மையானால் அணை எனப்படும் இப்பாதை இற்றைக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இடப்பட்டிருக்க வேண்டும். அயோத்தி மன்னன் தசரதனின் கட்டளைப்படி அவரது மூத்த மகன் இளவரசன் இராமரும், மனைவி சீதையும், தம்பி இலக்குமணரும், பதினான்கு வருட காலம் வனவாசம் செய்த காலத்தில், சீதையை, இலங்கை வேந்தன் இராவணன் கவர்ந்து வந்து இலங்கையில் சிறை வைத்தான் எனவும், இதனால் , தொடுக்கப்பட்ட யுத்தத்தின் போது, இராமனுக்கு உதவிய
Lib. g. 6. gogo) svog

Page 14
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சுக்கிரீவனது வானரப் படைகள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவதற்குத் தடையாக இருந்த கடலின் குறுக்கே, கற்பாறைகளைச் சுமந்து வந்து அடுக்கி பாதை அமைத்து அதன் வழி வந்து இலங்கையில் யுத்தம் நடைபெற்றது எனவும், இந்த யுத்தத்தில் மாவீரன் இராவணன் முதல் தடவையாகத் தோல்வி அடைந்தான் எனவும் சொல்லப்படுகிறது, இதனை கம்பராமாயணத்தின், கும்பகர்ணன் வதைப் படலத்தில் பின்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது!
*வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோடிலங்கைப் புக்கான்”
என இலங்கை வேந்தன் இராவணனின் அவல நிலை குறித்து இயம்புகின்றது, முதல் நாள் நடந்த போரிலேயே அவனது கையிலிருந்த வாள் கை நழுவி வீழ்ந்து, இராவணன் தலை குனிந்து நின்ற நிலை கண்டு இராமன், இராவணனை விழித்து, ‘இன்று போய் நாளை வா.” என்று கூறிய வார்த்தை கூட பிரபல்யமானதே !! இக்கடல் வழிப்பாதையைத் தமிழ் இலக்கியம் 'இராமர் அணை என இயம்புகிறது. அந்த இராமர் வாழ்ந்த காலம், கி.மு. 400ம் ஆண்டுக் காலப்பகுதி என, 'இலங்கைச் சரித்திரம்' என்ற வரலாற்று நூல் கூறுகின்றது. அப்படியானால் அது இற்றைக்கு சுமார் 2400 அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்றே கொள்ளல் வேண்டும்! 'இராமர் அணை ஆரம்பிக்கும் தனுஷ்கோடி முனைக்கு அடுத்துள்ள இடம் ‘இராமேஸ்வரம்’ என இராமர் பெயரால் அழைக்கப்படுவதும் இக்கூற்றுக்குத் துணை நிற்கின்றது!!
ஆனால் தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையே உள்ள மேற்படி இயற்கை அமைப்பான கண்டத் திட்டுப் பகுதி தேச விபரப் படத்தில் 'ஆதமின் பாலம்' (ADAMSBRIDGE) என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது! அது சரியானால் 'ஆதமின் பாலத்தின் வயது, சுமார் ஏழாயிரம் (7000) ஆண்டுகளைக்
w எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
கொண்டதாக இருக்க முடியும் இறைவனின் இறுதிப் படைப்பான மனித இனத்தின் முதல் மனிதர் ஆதம் (அலை) என புனித வேத மறைகளான கிறிஸ்தவர்களின் பைபிலும், முஸ்லிம்களின் அல்குர்ஆனும் கூறுகின்றன, ஆதமின் மனைவியும், முதல் பெண்ணுமான ஹவ்வா (அலை) (ஏவால்) அவர்களை ஆதமின் விலா எலும்பிலிருந்து இறைவன் படைத்தான் எனவும், அவர்கள் இருவரும் சுவர்க்கத்தில் வாழுகையில் ஷெய்த்தா' (சாத்தான்)ணின் ஆசை வார்த்தையில் கட்டுண்டு தவறு செய்தமையினால்,அவர்களைத் தண்டிக்கும் முகமாக சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றி பூமியில் இறக்கினான் எனவும், இவ்வேத நூல்கள் இரண்டும் விளக்குகின்றன. அப்படி இறக்கப்பட்ட ஆதம் (அலை) அவர்கள், பூமியின் இலங்கை அமைந்துள்ள நிலப்பரப்பின் ஒரு மலையிலேயே இறங்கியதாக உலகக் கிறிஸ்தவரும், உலக முஸ்லிம்களும் நம்புகின்றனர். அம்மலையே இன்றும், 'ஆத மலை' (ADAMSPEAK) என்று அழைக்கப்படுவதுடன், இலங்கை தேசப்படத்திலும் அப்பெயர் கொண்டே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ஆனால் இந்துக்கள் அம்மலையை 'சிவனொளி பாத மலை' எனவும், பெளத்தர்கள் அதனை 'ரீ பாத' எனவும் அழைப்பர்), இதே வேளை அவரது மனைவி ஹவ்வா (அலை) சவூதி அரேபியா அமைந்துள்ள பகுதியில் இறக்கப்பட்டதாவும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதற்கியைய சில ஆதாரத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. மனித குலத்தின் முதல் மனிதரும், முதல் இறை துாதருமான நபி ஆதம் (அலை) அவர்களின் பாதச் சுவடே அம்மலையில் இருப்பதாக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர். அவர் சுமார் முந்நூறு (300) வருடங்கள் இலங்கையிலுள்ள 'ஸரந்தீப் மலை மீது அழுது பாவ மன்னிப்பில் ஈடுபட்டிருந்ததாயும், பிறகு அல்லாஹற்வின் கட்டளைப்படி அவனது முதல் ஆலயமான "கட்பதுல்லாஹற்வை வானவர்களுடன் சேர்ந்து வலம் வர கால்நடையாகப் புறப்பட்டுச் சென்றார்கள் என்றும் அவர்கள் பற்றியும், அவர்தம் மனைவியைப் பற்றியும் பல குர்ஆன் விளக்க உரைகளின் (தப்ஸிர்) ஆதாரங்களுடன், நபிமார் சரிதை' பாகம்-1 விளக்குகிறது.
அப்போது கால் நடையாகக் கடந்து சென்றிருக்கக் கூடிய தற்போதைய தலைமன்னாருக்கு அடுத்துள்ள பகுதி சதுப்பு நிலம் கலந்த, அல்லது நீரால் மூடப்பட்ட பகுதியாகவே அன்றும் இருந்திருக்க வேண்டும். மிகவும் உயரமான தோற்றத்தை
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 15
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
(180 அடி)க் கொண்டவர் எனக் குறிப்பிடப்படும் நபி ஆதம் (அலை) ஏதோ வகையில் அவ்விடத்தில் வழி அமைத்து அந்த நீர் பகுதியைக் கடந்து சென்றுள்ளார்! இதன் காரணமாகவே இவ்விடத்துக்கு மாத்திரம் ஆய்வாளர்கள் 'ஆதமின் பாலம்' (ADAMSBRIDGE) எனப் பெயரும் சூட்டியுள்ளனர்! இதன் படியே தேசப்பட விளக்கத்திலும் அவ்விடத்துக்கு 'ஆதமின் பாலம்' எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 'ஆதமின் பாலம்', அல்லது 'ஆதம் பாலம்', 'ஆதமின் மலை" என்ற சொற்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ உலகத் தேச விபரப்படத்தில் இலங்கைப் பகுதியைத் தவிர வேறு எப்பகுதியிலும் குறித்து அவை சுட்டிக்காட்டப்பட்டிருக்கவில்லை என்பதும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயங்களாகும்!
தொடர்ந்து ஆதம் (அலை) அவர்கள் இந்திய நிலப்பகுதியையடைந்து நில மார்க்கமாக அல்லாஹற் குறிப்பிட்ட இடத்தையடைந்தார்கள். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் செய்து காட்டிய முறைப்படி ஹஸரத் ஆதம் (அலை) அவர்கள் ‘பைத்துல் ம.முரை வலம் வந்து ஹஜ் கிரியைகளை முடித்துக் கொண்டு ‘அரஃபாஹற்’ மைதானத்துக்கு வந்தார்கள். அதே வேளை அரேபிய நாட்டில் தற்போது ஜித்தா நகர் அமைந்துள்ள பகுதியிலேயே முன்னர் இறக்கப்பட்டதாக முஸ்லிம்கள் நம்பும் ஆதி அன்னை ஹவ்வா (அலை) அவர்களும், அங்கிருந்து கணவர் ஆதம் (அலை) அவர்களைத் தேடிக் கொண்டு அரபாஹற் மைதானத்தை வந்தடைந்தார்கள். இவ்வாறு இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த நாளை அல்லாஹற் அரபாஹ என அறிவித்தான் என மேற்படி "நபிமார் சரிதை பாகம்-1 நுாலும், சந்தித்த திடல் அரஃபாஹ' என ‘அன்வாருல் குர்ஆன் - ஸ?ரத்துல் பகரா’ தமிழ் தப்ஸிர் விளக்க உரையிலும் விபரிக்கப்பட்டுள்ளது. ‘அர..பாஹ' என்றால் ‘அறிமுகமாகுதல்' எனப் பொருள்படும். பல காலத்தின் பின்னர் அன்னை ஹவ்வா (அலை) ஜித்தா பகுதியிலேயே அடக்கமானதாகவும் அங்குள்ள செங்கடற் கரைப்பகுதியில் அடக்கத் தலத்தின் தடயம் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது! ஆதம் (அலை) அவர்கள் தமது 930ம் வயதில் மரணமாகி புனித மக்கா நகருக்கு 15கி.மீ. தொலைவிலுள்ள மினாவில் மஸ்ஜிது கைப்' அமைந்துள்ள சுற்றாடலில் அடக்கம் செய்யப்பட்டார்கள், எனவும் ஆதம் நபி (அலை) அவர்கள்தான் மக்காவில் 'க.பா' என்னும் ஆலயத்தை நிர்மாணித்தார்கள் எனவும், 'அன்வாருல் குர்-ஆன்' எனும்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
குர்-ஆன் விளக்கவுரையில் (தப்சிரில்) விளக்கப்பட்டுள்ளது, அதில் அவர் இலங்கை நிலப் பகுதியில் இறக் கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்படாவிடினும், ஆசிய நாட்டுப் பகுதியில்இறக்கப்பட்டது திட்டவட்டமான உண்மை எனவும் தெளிவு படுத்துகின்றது. நபிமார் சரிதை-01 நுால், ஆதம் (அலை) அவர்கள் இலங்கையிலேயே இறக்கப்பட்டதாகவும், ஹவ்வா (அலை) மக்கா நகருக்கு அணித்தாயுள்ள ஜித்தாவில் இறக்கப்பட்டதாகவும் கூறுகின்றது. (இருவரிலும் ஆதம் (அலை) அவர்களே முதலில் மரணித்ததாக நபிமார் சரிதை-01 நுால் கூறுகின்றது) அவர் மீண்டும் இலங்கை மீண்டதாகவும் வேறொரு தகவலும் உண்டு.
“ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்” எனும் நூலின்
பக்கம் 38ல் ‘. சிலரின் கூற்றுப்படி, ஷய்தான் முல்தானுக்கும் ஆதம் (அலை) அவர்கள் இலங்கைக்கும், ஹவ்வா (அலை) அவர்கள் ஜித்தாவுக்கும் அனுப்பப்பட்டனர். ஆதம் (அலை)
அவர்கள் இலங்கைக்குதான் அனுப்பப்பட்டார்கள் என்ற கதையின் மூலமானது அறபியர்களிடம் தோன்றியதா? அல்லது கிருஸ் தவர்களிடம் தோன்றியதா? என்று முடிவாக கூறமுடியாவிட்டாலும் இக்கதை பற்றிய குறிப்பு முதன் முதலாக அலக்சான்றியாவில் கி. பி. 864ம் ஆண்டில் வாழ்ந்த யூட்டிஷியஸ் என்ற கிரிஸ்தவ மதத் தலைவரால் எழுதப்பட்டது என்பது ஒரு சிலரின் முடிவான கருத்து. ’ இதே நூலின் பக்கம் 47ல் ஸ்பெயின் தேசத்தில் குடியேறிய முஸ்லிம் பரம்பரையைச் சேர்ந்த ‘அபூ அப்துல்லா முஹம்மது' எனும் நாமத்தையுடைய எதிரிசி (இத்ரீஸ்) என்பவர் கி. பி. 1054 காலப்பகுதியில் எழுதிய புவியியல் நூலில் " . ஹர்க்கந்த் என்ற கடலின் மத்தியிலுள்ள பிரசித்தி பெற்ற தீவுதான் செரந்திப். ஆதம் (அலை) முதன் முதல் அந்த தீவில் உள்ள மலை ஒன்றில்தான் இறங்கினார். இந்த மலை கடலில் வெகுதுாரம் வரை தெரியும். ஆதமுடைய பாதம் பட்ட இடம் ஒளி விட்டு பிரகாசித்து கொண்டிருக்கிறது. மலைச் சாரல்களில் நறுமணம் வீசும் ஒரு வித மரங்கள் வளர்கின்றன, அந்நாட்டு மக்கள் நெற்பயிர், தென்னை, கரும்பு என்பன உண்டாக்குகின்றனர், அங்குள்ள நதிகளில் பளிங்குக் கற்களையும் கரையோரங்களில் முத்துக்களையும் காணலாம். ’ என விபரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கருத்துக்களையே பாரசீகரும் கொண்டிருந்தனர்.
ாம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 16
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
"உலக வரலாற்றுத் தகவல் களஞ்சியம்" என்னும் நூலில் பக்கம் 18ல் தரப்பட்டுள்ள நபிமார்களுக்கிடையேயான கால இடைவெளி பற்றிய விபரத்தில், ஆதித் தூதர் நபி ஆதம் (அலை) அவர்ளுக்கும், இறுதித் துாதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே 6155 வருடங்களின் இடைவெளி இருப்பதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது, இக்கூற்றுக்கு ஆதாரமாக, "துருஸத் தாரிக்குல் இஸ்லாம், முஹ"யித்தீனே ஹயாத்” பாகம் 01, பக்கம் 21, மற்றும் ‘வடிரஹல் மகாலா பக்கம் 18, 'தல்கீஹற் இப்னு ஜவ்ஸி பக் 03 (இதில் இடைவெளி 6150 வருடம்) முதலான கிரந்தங்களில் விபரங்கள் பெறப்பட்டுள்ளன எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. பொதுவாகவும், இந்நுாலின் மற்றொரு விபரப்படியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து தற்போது 1432 வருடங்களாகின்றன, எனவே முதல் மனிதரும், முதல் இறைத் துாதுவருமான நபி ஆதம் (அலை) அவர்கள் வாழ்ந்தது, இற்றைக்கு 7587 (6155+1432) வருடங்களுக்கு முன்புதான் எனக் கொள்ள முடிகிறது!!
“ ஈழத்தவர் வரலாறு ” நூலின் பக்கம் 05ன் அடிக்குறிப்பில், w a as a தாமிரபரணி ஆறு திருநெல்வேலியூடாக இலங்கைவரை ஓடியது என்றும், கடற்கோளினால் இலங்கை பிரிக்கப்படுமுன்னர் தாமிரபரணி வடிநில மக்கள் இலங்கையில் குடியேறினர் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். இது எவ்வகையிலும் ஏற்புடையதன்று, ஆனால் புவிச்சரிதவியலடிப்படையில் ஒரு நிலப்பாலம் இன்றைய இராமர் அணையில் இராமேஸ்வரத்தையும் தலை மன்னாரையும் இணைத்திருந்தது என்பது நிறுவப்பட்ட உண்மையாகும். இந்த நிலப்பாலத்தினுாடாகத் தமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு புலப்பெயர்வு நிகழ்ந்துள்ளது எனக்கொள்ளலாம்.” என விளக்கப்பட்டுள்ளது.
6
பக்தாத் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆத்ம ஞானி முஹையத்தீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் இலங்கை விஜயம் குறித்து 'தென்கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மான்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்” எனும் நூல் பக்கம் 23ல் ‘. முஹையதீன் அப்துல்காதர் ஜீலானி அவர்கள் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி 471-562க்குச் சமமான கி. பி. 1081-1172 வரையுள்ள காலமாகும். ஒலியுள்ளாஹற் அவர்கள் த.வா’ பணியில்
sub. a. suò. L6ò Goggi
 
 

நீளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் ஈடுபட்டு பல நாடுகளுக்கும் பிரயாணம் செய்து பாண்டிய நாடு சென்று அங்கிருந்து இலங்கை வந்தார்கள், அவர்கள் இலங்கைக்கு வந்த வழியும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆதம் அணை வழியாக இலங்கைக்கு காலடியெடுத்து வைத்திருக்கிறார்கள். சுவனத்தில் இருந்து இறக்கப்பட்டு இலங்கையில் சீவித்த ஆதம் நபி அவர்களால் கடலை கடந்து, இந்தியா செல்வதற்காகக் கட்டப்பட்ட அணை ஆதமனையாகும். இதே அணை மூலம் இலங்கைக்கு இராமபிரான், அவர் மனைவியை மீட்கப் படையுடன் வந்தார் என்று இராமாயணம் கூறுகின்றது. ஆனபடியினால் இவ்வணையை இராமர் அணை என இந்துக்கள் அழைக்கின்றார்கள். இது ஆதம் நபி அவர்களுக்கு பிற்பட்ட
99
6) J6).T......... என விபரிக்கப்கட்டுள்ளது.
எனவே இலங்கையின் தலை மன்னாருக்கும், இந்தியாவின் தனுஷ்கோடிக்குமிடையே தேசப் படத்திலும் குறித்துக் காட்டப்பட்டுள்ள ஆதமின் பாலம்' இற்றைக்குச் சுமார் 7500 முதல் 8000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தை கொண்டது என்ற முடிவுக்கு நாம் வரலாம்!!! (இங்கு, நாம் முதல் மனிதர் ஆதம் (அலை) பற்றித் தந்திருக்கும் ஜனன காலம் பற்றிய விபரங்கள் யாவும் கோடானுகோடி மக்கள் உண்மை கொண்டு நம்பிப் பின்பற்றும் வேத நூல்கள் அடிப்படையிலான, பல்வேறு கிரந்தங்கள், விளக்க உரைகள் பற்றிய நூல்களில பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயேயன்றி வேறில்லை, எனினும் இக்கணக்கெடுப்பு இதனைவிடவும் அதிகரித்த காலத்தைக் கொண்டதாயும் இருக்கலாம். தேசப்பட விபரங்கள், முதல் மனிதர் பற்றிய வருடக் கணக்குகள் என்பனவும் இதே அடிப்படையிலேயே தரப்பட்டிருப்பதாலும், இங்கு பல இலட்சம் வருடங்கள் முந்தியதாகக் கருதப்படும் இப்பகுதியில் அமைந்திருந்த, 'குமரி முனை, அல்லது 'குமரிக் கண்டம் மற்றும் அதற்கும் முந்திய காலத்தைக் கொண்ட ‘லெமூரியாக் கண்டம்’ என்பன பற்றிய ஆய்வுகள் இங்கு அவசியமற்றதாகின்றது.
என்ற போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 2002 இறுதிப்பகுதியில் “நாஸா’ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் செயற்கை கோள் மூலம் தலை மன்னாருக்கும் ராமேஸ்வரத்துக் ("ம்
எம். ஐ. எம். அப்துல் லத்திப் 29

Page 17
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இடையிலான முப்பது கிலோ மீட்டர் நீளத்துக்கு நீரின் கீழ் ஏராளமான மணல் திட்டுகள், பாலம் போல அமைந்திருப்பதை தெளிவாகப் படம் பிடித்துள்ளனர். இது பதினேழு இலட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்ற ஆய்வுத்தகவலையும் (30, செப்டம்பர், 2002) பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன!! இத்தகவல் சரி என நாம் ஏற்றுக்கொள்ளின் பதினேழு இலட்சம் வருடங்களுக்கு முன்னரும் இலங்கையானது இந்திய பெருநிலத்தின் நின்றும் நீரால் பிரிக்கப்பட்ட தீவாகவே இருந்துள்ளது என்பது புலனாகின்றது, அல்லது ஏற்கனவே இருந்திருக்கக் கூடிய முப்பது கிலோ மீட்டர் நீளமான இத்தகைய நிலத்தொடர்புக்கு மேலால் பின்னர் கடல் நீர் மூடியதா!! எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது!!!!
அண்மித்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கு முன்னர், தலைமன்னாருக்கும், இராமேஸ்வரம்மிடையே கப்பல் சேவைகள் நடைபெற்றமையும், மக்கள் நன்மை அடைந்தமையும், நாம் அறிந்த விடயமே! அவ்விடயம் மீண்டும் புத்துயிர்பெறும் விதமாக, தற்போது கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி தரும் விடயமாகும்! எனினும் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவர்கள் இக்கடல் பகுதியில் பாலம் அமைப்போம்' என்றே பாரதியார் பாடியுள்ள வழியில் கூறியுள்ளார், இது அரசியல், பொருளாதார, கல்வி, கலாசார, பண்பாட்டு, இலக்கிய, நல்லிணக்கப் பாலமாகவும் இப்பாலம் அமையலாம்!! அதற்கியைய, இலங்கையின் மன்னார், இந்தியாவின் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மக்களிடையே நிலவிய உறவை மன்னாருக்கு உரித்தான நாட்டார் பாடலொன்று இப் படியாகவும் , ரசனையளிக்கின்றது!
தங்கும் தலை மன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம், வெத்தலைக்கூர் மண்டபத்தில் - மச்சான் எத்தனை நாள் தங்குரீங்க? - என்பதாக
இது போல நாம் அடுத்து கவனத்தில் எடுப்பது புத்தளம் - மன்னார் கரையோரப் பாதைத் திறப்பது பற்றியதாகும்! இப்பாதையும் வரலாற்றுத் தொடர்பு கொண்டது மட்டுமின்றி, தலைமன்னார் . தனுஷ்கோடி பாதையோடும் தொடர்பு கொண்டதாகும் புத்தளம்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
நகருக்கு வடக்கே சமீபமாக அமைந்துள்ள மன்னார் நகருக்குச் செல்வதானால், தற்போதுள்ள அமைப்பின்படி, புத்தளமிருந்து வடகிழக்கே அநுராதபுரம் சென்று, அங்கிருந்து வடக்கே மதவாச்சி நகரையடைந்து, அங்கிருந்து வடமேற்காகச் சென்றே அடையவேண்டியுள்ளது. இது ‘பிடறியைச் சுற்றி மூக்கு நுனியைத் தொட்ட கதையை ஒத்ததாகும். இந்நிலைமையே கடந்த ஒரு நுாற்றாண்டுக்கும் மேலாக உள்ளது!! புத்தளமிருந்து வில்பற்று வனத்தைச் சுற்றி 182 கி. மீ. தூரம் பயணித்தே நாம் மன்னாரை அடைதல் முடியும். ஆனால் இச்சரணாலயத்தின் மேற்கு கரை வழியே புத்தளமிருந்து மன்னாரையடைய ஆக 111 கி. மீ. பயணிக்க வேண்டும். அதாவது 71 கி.மீ. தூரம் இதனால் குறைவதுடன் மூன்று மணி நேரத்தில் மன்னாரை அடைந்து விட முடியும்.
தலைநகரிலிருந்து மன்னாருக்கு பயணிக்க கரையோர மார்க்கமே குறுகிய தூரத்தைக் கொண்டது, என்றபோதிலும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் A-14 மன்னார் - மதவாச்சி பாதைக்கு முக்கியத்துவம் அளிக்கக் காரணம் அப்போது அவர்களால் அரசுடைமையாக்கப்பட்ட மலையகக் காடுகளை அழித்து கோப்பித் தோட்டங்களை உருவாக்கும் கடுமையான பணிக்கு இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மன்னார் வழியாக அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்ற இப்பாதையே ஏற்றது என்ற காரணத்தினாலாக இருக்கலாம். அத்துடன் கரையோர வழியில் ஆறுகள் குறுக்கிடுவதால் பல பாலங்கள் அமைக்கும் பாரிய செலவுகளும் எதிர்கொள்ளப் பட்டிருக்கலாம்.
இப்பாதையை இப்போது திறப்பது தற்போதைய சமாதான சூழ்நிலையில், மீள் குடியேற்றம் பற்றி எல்லாம் பேசப்படும் வேளையில் மிகவும் அத்தியாவசியமானது எனப் பலதரப்பாலும் உணரப்பட்டுள்ளது! பேசவும் படுகிறது! திட்டங்களும் தயாராகியுள்ளன பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் பெரும் சிரமங்களுடனே, பெரும்பான்மை இனச் சூழலுக்கும் உட்பட்ட அநுராதபுரம் முதலான பிரதேசங்களுாடாகவும் வர நேர்ந்தது! சிறியோர் அனைவருக்கும், முதியோர் பலருக்கும் இது முதற் பயணமாகவும் அமைந்திருக்கலாம்! அப்படி அனைத்தையும் இழந்து ஓடோடி வந்தவர்களுள் மிக அதிகமானோர் அன்று முதல் இன்று
எம். ஐ. எம். அப்துல் லத்திப் 31

Page 18
வரை புத்தளம் பிரதேசத்திலேயே வதிகின்றனர். இன்னும் பலர் கடல் வழியே பெரும் அலைகளுக்கும், பெரும் சிரமங்களுக்கும் முகம் கொடுத்துப் பயணித்துக் கல்பிட்டி நகரையும், இதன் கிராமப் பகுதியையும் வந்தடைந்தனர். ஆனால் தற்போது அமைக்கத் திட்டமிடப்படும் புத்தளம் - மன்னார் கரையோரப் பாதைப் போக்குவரத்து அப்போது இருந்திருப்பினர் அம்மக்களினர் வெளியேற்றத்தின் போது பட்ட சொல்லொணாச் துயரங்களில் பாதியளவாயினும் குறைந்திருக்கும் அல்லவா?
தற்போது மீள் குடியமர்வு பற்றிப் பேசப்படுகிறது, திட்டமிடப்படுகிறது. மன்னார், மற்றும் முசலிப் பிரதேச மக்கள் பலரும் தமது பரம்பரைத் தாயக பகுதிகளில் மீள்குடியமர விரும்புகின்றனர். எனவே துரித கதியில் இக்கரையோரப்பாதை அமைக்கப்பட்டுவிடின் அம்மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய நடவடிக்கைகள் மிகவும் இலகு படுத்தப்பட்டுவிடும்! அத்துடன் முன்னைய பாரம்பரிய வர்த்தகக் கலாசாரப் போக்கவரத்தும் மீண்டும் வழமைக்குத் திரும்பிவிடும்!
ஆம்! புத்தளம் - மன்னார் கரையோரப் போக்கு வரத்துப் பாதையும் மேலே சொல்லப்பட்டது போல பழமையான பாதையே. புத்தளம் நகரில் இன்றும் மன்னார் வீதி, அல்லது “யாழ்ப்பாண வீதி ( இது இப்போது வழக்கில் இல்லை) என்று அழைக்கப்படும் வீதி உள்ளது. இப் பாதை தற்போது மன்னாருக்குச் செல்லாவிட்டாலும் முற்காலத்தில் நடைமுறையில் இருந்த பெயரே வழக்கில் இன்றும் உள்ளது, இதுவே தற்போது புதுப்பிக்க உத்தேசிக்கப்படும் வீதியாகும்.
கொழும்பிலிருந்து புத்தளம் வரை ‘கொழும்பு வீதி' என்ற பெயரிலும், புத்தளம் இருந்து வடக்காக இப்பாதை ‘மன்னார் வீதி' என்ற பெயரிலும் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்தாலும், உண்மையில் அதுபுத்தளத்துக்கு வடக்கே 32 கி. மீ. துாரத்திலுள்ள இலவன் குளம் கிராமத்தை அண்மித்து நீர்ப் பாய்ச்சும் கால ஓயாவுடன் (காலாவி ஆறு) நின்று விடுகிறது. முற்காலத்தில் புத்தளம் நகரிலிருந்து வடக்கே அம்பலம் (தங்குமிடம், இளைப்பாறும் இடம்) இலவன் குளம், முரண்டன் வெளி, பொன்பரப்பி, மாரதோட்டை, மறிச்சுக்கட்டி, கல்லாறு, கொண்டச்சி, சிலாபத்துறை, அரிப்பு,
sllib. g. Gltö. SIÚJoð 6ldig
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
வங்காலை, ஆகிய கரையோரக் கிராமங்களைத் தாண்டி மன்னாரை இப்பாதை சென்றடைந்தது! இது வரலாறு. இது போல இதே பாதை மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான கரையோரப்பாதையும் தொடர்கிறது, அது மன்னாரிலிருந்து இலுப்பைக் கடவை, வெல்லங்குளம், கும்புலா முனை, பல்லவராயன் காடு, பூநகரி வரைச் செல்லும் A-32 வீதியானது சிறு கடல் பகுதியைத் தாண்டி (பெரி) சங்குப்பிட்டிவழியாக யாழ்ப்பாணத்தை அடைகிறது. இப்பாதை மூலமான போக்குவரத்து பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்து வருகிறது. எனவேதான் புத்தளமிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் கைவிடப்பட்ட கரையோரப் பாதையை மிக நீண்ட காலமாக "மன்னார் வீதி' எனவும் யாழ்ப்பாண வீதி எனவும் புத்தளத்தில் அழைக்கப்பட்டு வருவதற்கான காரணங்களாகும்! இன்றும் புத்தளம் நகரில் மறிச்சிக்கட்டிக்குச் செல்லும் தூரம் 66 கி. மீ. என அம்புக்குறியிட்டு காட்டும் அரசாங்க பெயர் பலகையை காணக்கூடியதாவும் இருக்கின்றது. எனினும் வழக்கத்தில் இப்பாதை பாவனையில் இல்லை.
முற்காலத்தில் மாட்டு வண்டிப் போக்கு வரத்துப் ப்ாதையாகப் பெரும்பாலும் கோடை காலங்களில் இப்பாதை பாவிக்கப்பட்டு வந்தாலும், 1902ம் ஆண்டுக் காலப் பகுதியில் ஆங்கில ஆட்சியாளர்களால், மன்னாருக்கும், புத்தளத்திற்கும், இடையில் அமைந்துள்ள கரைப் பகுதியும் சேர்த்து வன விலங்குகளின் புகலரணாக, "வில்பற்று சரணாலயம் உருவாக்கப்பட்டதால் சாதாரண போக்கு வரத்துத் தடைப்பட்டது. இவ்வனப்குதியின் தெற்கே உள்ள இலவன் குளம், கரைத் தீவு ஆகிய கிராமங்களுக்கு வடக்கே நீர்பாய்ச்சும் கால ஓயாவுக்கும், வடக்கே மறிச்சிக்கட்டிக்குத் தெற்கே நீர்பாய்ச்சும் மோதரகம் ஆறு, மற்றும் அதற்கு வடக்கே நீர்பாய்ச்சும் கல்லாறு முதலான சிற்றாறுகளுக்குத் தெற்காயும், வனத்துக்கு கிழக்கே பேய்மடு, மகாவிலாச்சிய பகுதிகளுக்குக் கிழக்காயும், மேற்கே கடற்கரைக்கு உட்பட்டதுமான விசாலமான பகுதி அரச வன பரிபாலன அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தப்பட்டதனால், புத்தளமிருந்து, மன்னார் பகுதியை சென்றடையும் இலகு வழி தடைபட்டதுடன், வெகு சிரமத்துடன் சுற்றி வளைத்துச் சென்றடையவும் நேரிட்டது! எனினும் வன பரிபாலன அதிகாரிகளின் அனுசரணையுடன் முன்னோர்களால் மறிச்சிக்கட்டி, கொண்டச்சி பகுதிகளிலிருந்து கால் நடையாக
எம். ஐ. எம். அப்துல் லத்தி

Page 19
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
பெருமளவு மாடுகளும், குதிரைகளும், கரையோரமாக அக் காலத்தில் விற்பனைக் காக புத் தளம் பகுதிக் கு கொண்டுவரப்பட்டன, அது போல புத்தளம் இலவன் குளம், கரைத் தீவுப் பகுதிகளிலிருந்து தேங்காய்கள், கிடுகுகள் முதலானவை கோடை காலங்களில் யோனை வண்டிகள், மாட்டு வண்டிகள் மூலம் மறிச்சிக்கட்டிப் பகுதிக்கு கொண்டு செல்லவும் பட்டன. சற்று பிந்திய காலத்தில் இவ் வழியே ஜீப் வண்டிப்பயணங்களும், ட்ரெக்டர் வண்டி பயணங்களும், துவிச்சக்கர வண்டிப் பயணங்களும் நடைபெற்றன. மழை காலங்களில் கால ஒய, மற்றும் மோதரகம் ஆறு என்பவற்றின் பெருக்கெடுப்பாலும், அவற்றின் மேலாகப் பாலம் அமைப்பு வசதிகள் இன்மையாலும் போக்கு வரத்துக்கள் அக்காலப் பகுதியில் நடைபெறவில்லை! எனினும் அண்மித்த காலப்பகுதியில் சரணாலயப் பகுதிக்குள் தீவிரவாத குழுக்களின் நடமாட்டங்களும், நடவடிக்கைகளும் அதிகரித்தமையாலும், அது போல அதற்கெதிரான இராணுவக் கண்காணிப்பு நடவடிக்கைகளும், அதிகரித்ததாலும் தொடர்ந்து இலவன் குளத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டதாலும், சாதாரண மக்களின் போக்கு வரத்தும், வனத்திலிருந்து கலப்படமற்ற தேன் சேகரித்து வருதல், விறகு சேகரித்து வருதல், முதலான தொழில்களும் முற்றாகத் தடைபட்டன. 1985ம் ஆண்டு மே மாதத்தில் வனத்திலிருந்து இலவன் குளத்தினுாடாக நடைபெற்ற அதி தீவிரவாத நடவடிக்கை காரணத்தாலேயே இலவன் குளத்திலும், புத்தளம் நகரிலும் இராணுவ முகாம்கள் அமைப்பதற்கான தேவை அப்போதைய அரசுக்கும் ஏற்பட்டது.
ஆரம்ப கால வரலாற்றுத் தடயங்களையும் , வரலாறுகளையும் நிறைவாகக் கொண்டுள்ள இப்பகுதி 'வில்பற்று சரணாலயமாக மாற்றப்படுவதற்கு முற்பட்ட மனித வாழ்க்கைக் காலங்களில், ஆட்சிப் பீடங்களாகவும், வர்த்தக மையங்களாகவும், வெளி நாட்டு வணிகர்களது நாவாய்கள், நங்கூரமிடும் துறைகளாகவும், தானியக் களஞ்சியங்களாகவும் புகழுடன் விளங்கியதை உள்நாட்டு, வெளி நாட்டு வரலாற்று நூல்கள் தெளிவு படுத்துகின்றன! நமது நாட்டு வரலாற்றைக் கூறும், ‘மகா வம்சம் இலங்கையின் முதல் ஆரியன் என இனங்காட்டும் இளவரசன் விஜயனும், அவனது எழுநுாறு தோழர்களும், கரையொதுங்கியதும், அப்போது இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த இயக்கர் இனத்தின்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் அரசியான குவேனி இவர்களைச் சிறை வைத்ததும், பின்னர் விஜயன் குவேனியைக் கரம் பற்றியதும் இப்பகுதியிலேயே என்று கூறுகின்றது!
குவேனியின் வதிவிடமாயும் விஜயனின் தலைநகரமாகவும் விளங்கியதாக நம்பப்படும் “தம்மன்னா நுவர” என்னும் இடம் புத்தளம் கரையிலிருந்து 6 மைல் (10 கி. மீ.) கிழக்கே அமைந்திருந்தது எனவும் அவ்விடம் வழுக்கியாற்றுப் பகுதி (விழுக்கை) என ஒரு தகவலும், மீ ஓயாவின் ஒரு பகுதியான வாரியா குண்டு’ என்ற ஆற்றின் வடகிழக்கே அமைந்த கண்டு கழி மலைக்காடு என்ற இடம் என ஒரு தகவலும், புத்தளம் இருந்து 6 மைல் (10 கி. மீ) தொலைவில் அமைந்துள்ள தம்மன்னாவில்’ என்ற குளத்தின் அருகிலேயே குவேனியின் வாசஸ்தலம் இருந்ததாக ஒரு தகவலும் உள்ளன, அவர்களது திருமணம் நடைபெற்றது, "சிறி வஸ்து நகரில் என்கின்றது ஒரு தகவல், புத்தளம் பிதேசத்தில் என்கின்றது மற்றுமொரு த வல். இத்திருமணத்தின் பெயரால் இப்போதைய புத்தளம் பிரதேச கரைப் Lug5g ““ LD56ð Gg5T'L(yp6OT” (gó(bLD600Tgög6l60oD THE PORT OF MARRIAGE) என்ற பெரைப் பெற்றது. பின்னர், குவேனி தனக்கு அரசியாக இருக்கத் தகுதியற்றவள் எனக்கருதிய விஜயன் பாண்டிய இளவரசியை மணக்க முடிவு செய்தான். அவளது பெயர் விஜாயி என ஒரு தகவலும் உண்டு. இவள் 700 தோழியருடன் வந்திறங்கிய இடம் வில்பற்றுக்கு வடக்கே அமைந்துள்ள “மாதோட்டம்’ (மாந்தை); துறையிலாகும். இவர்கள் கரை வழியாகவே விஜயனின் ஆட்சி பீடமான புத்தளம் பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பர் என நம்பலாம். குவேனியும் பிள்ளைகளும் விரட்டப்பட்டு பாண்டிய இளவரசியை விஜயன் மணந்தான். தோழியரை தோழர்கள் மணந்தனர். கால கட்டத்தில் விஜயனது அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இப்பிராந்தியத்தில் ஒவ்வொரு குடியேற்றங்களை அமைத்து அவற்றுக்கு தத்தமது பெயர்களையும் சூட்டினர். இப்படி ஊருவள கம, உபதிஸ்ஸ கம, அநுரத கம முதலான பல குடியேற்றங்கள் உள்நாட்டை நோக்கி நகர்ந்தன.
இதே வேளை கி. மு. 483ம் ஆண்டு நிகழ்ந்த விஜயனதும், குழுவினரதும் வருகைக்கு முன்னர் உண்மையான ஆரிய சேனாதிபதிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர் எனவும் இராமன் என்ற ஆரியன் சீதையை மீட்டுச்செல்லவும், பாரத பாண்டவர்களில்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 20
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் ஒருவனான அர்ச்சுனன் அல்லியைக் கவர்ந்து செல்லவும், இயக்கப் பெண்ணான வள்ளியை மணக்க ஸ்கந்த என்ற ஆரியன் வந்தமை
é é
பற்றியும் குறிப்பிடும் “ ஈழத்தவ்ர் வரலாறு ” என்னும் நூல் இலங்கைக்கு வந்த விஜயனையும் தோழர்களையும் ஆரியர் என் பாளி நூல்கள் எதுவும் குறிப்பிடவில்லை எனவும், மென்டிசும், பரன விதானவும் அவர்கள் பின் வந்தவர்களும் விஜயனை ஆரியனாக்க முயன்றுள்ளனர் எனவும் விபரிக்கின்றது. (பக்கம் 20, 21)
99.
கல்வி வெயீட்டுத் திணைக்களத்தின் வெளியீடான வரலாறு (முதலாம் பகுதி) எனும் நூலும் மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் பற்றிய குறிப்புக்களிலே பூர்வீகம் 4ற்றிய நம்ப முடியாத சில விடயங்கள் காணப்படுவதாயும், இலங்கையிலே குடியேற்றங்கள் அமைப்பதற்கு அனுகூலமாக இருந்த காரணங்கள் எல்லாம் விஜயன் பற்றிய குறிப்புகளிலே அடங்கி உள்ளன எனக் கூறமுடியாது எனவும் கூறுகின்றது. சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயனும் கூட்டத்தினரும் புதிய இருப்பிடம் தேடியே இலங்கையில் குடியேறினர், இவற்றை விட மேற்கூறப்பட்ட காலத்திலே வியாபாரத்தின் பொருட்டும் பாரத தேசத்தவர் கடல் கடந்து சென்றனரென 'சுவர்ன பூமி ஜாதகய' , 'வலாஹஸ்ஸ ஜாதகய’ , “பவேறு ஜாதகய’ போன்ற ஜாதகக் கதைகளில் இருந்து அறிய முடிகின்றது . 5ம் நூற்றாண்டில் இலங்கை வந்த சீன யாத்திரிகன் பாகியனுடைய பயணக்குறிப்பிலும் இலங்கையில் குடியேற்றங்கள் தோன்ற, வியாபாரிகள் முன்னோடிகளாக இருந்தார்கள் எனக் குறிப்புகள் காணப்படுவதுடன் மகா வம்சக் கதைகள் யாவற்றையும் அப்படியே நம்ப முடியாது எனவும் கூறுகின்றது (பக்கம் 4.5)
எனவே சிங்கள இனத்தவரின் தலைவனான விஜயனதும் தோழர்களதும் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படும் புத்தளம், ஆனமடுவ, சிலாபம் பிரதேசங்களின் நகரங்கள், கிராமங்கள் யாவற்றினதும் தற்போதைய பெயர்கள் யாவும் சிங்கள மொழி முலத்திலன்றி தமிழ் மொழி முலத்திலேயே அமைதிருப்பதற்கான காரணங்களும் ஆராயப்பட வேணர்டியது அவசியமாகும். அண்மை காலமாக இதனை உணர்ந்த இப்பகுதிப் பெரும்பான்மை இனத்தவர்கள் சில கிராமங்களின் அசல் பெயர்களை சிங்கள மொழி முலத்தில் மாற்றிப் பிரயோகிப்பதும் அறியக்கூடியதாக உள்ளது. உதாரணமாக: மயிலங்குளம் - "மொனரா வெவ, கரைத்திவு - "கரதிவ', வண்ணாத்தி வில்லு - 'வனத்த வில்லுவ'
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 

மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புத்தளம் -
இது போலவே அல்லி ராணி’ என்ற தமிழ் அரசியின் ஆட்சிப் பிரதேசமும் வடமேற்குப் பகுதியே என வரலாறு கூறுகின்றது, மன்னார் சிலாபத் துறைக்கும் ,அரிப்புக்கும் இடையே பெருங்கடற்கரையோரமாகப் பேரலைகளின் கடல் அரிப்புக்குள்ளாகி சிதைவுற்ற நிலையில் மேட்டு நிலத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் செங்கற்களிலான கோட்டை போன்ற ஒரு கட்டிடமே 'அல்லி ராணிக் கோட்டை’ எனப் பிரதேச மக்கள் இன்றும் நம்புகின்றனர், கூறுகின்றனர். சிலாபத்துறைக் கடலிலே பண்டைக் காலத்தவர் முத்துக் குளிக்கும் காட்சியினை அல்லி ராணியும், தோழியரும் அரண்மனை உப்பரிகையில் நின்று கண்டு களிப்பர் என்ற ஐதீகக் கூற்றுக்கியைய அக்கட்டிடமும் கடற்கரையில் அமைந்திருப்பது பொருத்தமாகவே உள்ளது, பெண்மைக்கு முதலிடத்தைத் தந்த இவ்வரசியை பாண்டவருள் ஒருவனான வில்வீரன் அருச்சுனன் அடக்கி கரம் பற்றினான் என்ற ஐதீகக் கதைகளும் உண்டு. இப்பிரதேசம் அல்லி ராணியினதும் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதற்கு ஆதாரமாக வனத்துள் காணப்படும் ‘தேரோடும் வீதிகளின் சிதைவுகள் சாட்சி பகருவதாக ஏடுகள் விபரிக்கின்றன, கடலரிப்பினாலி சிதைக்கப்பட்டிருக்கும் அழகிய இவர் வரலாற்றுச்சின்னம், புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்படல் வேண்டும்
‘ஒரு சிறுபான்மை சமூத்தின் பிரச்சினைகள்” நூலின் பக்கம் 72ல் “முஸ்லிம்கள் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சோனகர் என அழைக்கப்பட்டனர், 1834ல் வெளியான ‘நோட்டியர்’ தமிழ் அகராதியில் சோனகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மகா அலக்சாந்தருடைய கட்டளையின் படி கிரேக்க கடல் தளபதி ஒனஸிக்ரீட்டர்ஸ் (Onesicritos) கி. மு. 327ல் தயாரித்த பூகோள படத்தில் மன்னார், புத்தளம் பிரதேசங்களில் வாழ்ந்த அரேபியர்களை குறிப்பிடுகையில் ‘சோனி’ (Sonal) என்ற பதத்தையும், இப்பிரதேசத்திற்கு “சோனி பொடோமஸ்’ (Sonal Potomos) என்ற பதத்தையும் பிரயோகிக்கின்றார். எனவே 2300 வருடங்களுக்கு முன் அரேபியர்கள் இலங்கையின் வடமேல் கரையை அடைந்து வர்த்தகத் தொடர்புகளையும் , குடியிருப்புக்களையும் ஏற்படுத்தினர். இது அரேபியாவில் இஸ்லாம்
தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முற்பட்ட நிகழ்வாகும்.
கொழும்பு தமிழ்ச்சங்கம்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 21
வரலாற்றுப் பயணங்களும்
புத்தளம் - மன்னார் பாதையும், ``......................... அநுராதபுர காலத்தின் முற்பகுதி தொட்டே இலங்கையில் அரேபிய வணிகர்கள் வந்திருத்தனர். ’ என
வரலாறு நூல் பக்கம் 34 விளக்குகிறது.
வில்பற்று சரணாலயத்தின் கரைப்பகுதியில் அமைந்துள்ள குதிரை மலை முனை யும், அதனோடிணைந்த பகுதிகளும் சிலாபத் துறையும் அராபிய முஸ்லிம் வணிகர்களதும், கப்பலோட்டிகளதும், தங்குமிடமாகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளன. இதற்கான தடயங்களும் முஸ்லிம் பெரியார்களது அடக்கஸ்தல சிதைவுகளும் அங்குள்ளன, இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும், கற்பிட்டிப் பிரதேச முஸ்லிம் மக்களுக்கு முற்காலத்தில் குதிரை மலை, சிலாபத்துறை, மன்னார் யாழ்ப்பாணம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் முதலான இடங்களோடு கடல் வழியாக இருந்துள்ள தொடர்பினை அத்தாட்சிப் படுத்தும் முகமாகவும், புத்தளம் தொகுதியைச் சேர்ந்த கற்பிட்டிக்கு அணித்தாக அமைந்துள்ள குறிஞ்சிப்பிட்டி கிராமம் தந்த மர்ஹஉம் அசனார் மரைக்கார் செய்கு இஸ்மாயில் புலவர் அவர்கள், பாடிய பாடல்கள் ‘புத்தளம் பிரதேச புலவர்கள்’ என்ற நூலில் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
LSL LLL LLLL LL LLL LLL LLLLL LLSLSLLLLLSLLLLLS0LLSL00LL
சீரான குறிஞ்சி நகர் - இல்லல்லாஹற் செல்வமுள்ள தேசம்விட்டு - இல்லல்லாஹற் நேரான கல்பிட்டியூர் - இல்லல்லாஹற் நிறைவான தலம் கடந்து - இல்லல்லாஹற்
கூரான பார்முகம் குதிரைமலை சேர்ந்து குணமான கிச்சடி ஆக்கிப் பகிர்ந்து நேரான புனல்வாவி ஆற்றில் புகுந்து நெறியான கோட்டை மன்னாரைக் கடந்து தோதான யாழ்ப்பாணத் துறைமுகம் சேர்ந்து சூதான வெங்கலப் பீரங்கி தீர்த்து வீரனாம் தண்டையல் முதலாளி சொல்ல விலை பெற்ற முத்துக்கள் இறக்கினாரையா'
(6) Tg)
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சொன்ன விலை சரக்கிறக்கி - இல்லல்லாஹற் துறையரசர் வீடு புக்கி - இல்லல்லாஹற் மன்னவர்கள் மனையிறங்க - இல்லல்லாஹற் வைரம் விற்றுப் பணம் வாங்கி - இல்லல்லாஹற்
பன்னீரும் பலபல சரக்குகள் ஏற்றி பாங்கான யாழ்ப்பாணம் விட்டுப் பிரிந்து உன்னிர்தமான மன்னாரைக் கடந்து ஒளிவான குதிரைமலை சாஹிபைப் போற்றி சொன்ன மொழி தவறாது குறிஞ்சி மாநகர் துறை சேர்ந்து தீனோர்கள் வாழ்ந்திருந்தார்கள் சொன்னேன் இக்கவி தன்னை செய்கு இஸ்மாயில் சுகம் பெற்று எந்நாளும் வாழ்ந்திடவே வாழி
(லாஇ) 661)
கூனுதே - உடல் நாணுதே - வெற்றி குதிரைமலைக் கொடியும் தெரியுதே (சீனி)
'பத்திர மேவிய சாஹிபைப் போற்றியே பாலுடன் கிச்சடி ஆக்கி - இன்னும் பாத்திஹா ஒதிப்பின் நேத்தியைப் பகிர்ந்து *பாதமதை விட்டு நீங்கி - இன்னும் சித்திர முத்துச் சிலாவத்துறைமுகம் சிந்து கரைதனில் இறங்கி - இன்னும் வெற்றியாய் நடந்து நாற்பது முழ கபுறடியைக் கண்டு ஒதுங்கி - இன்னும் தோத்திரம் செய்து நேத்தியைக் கழித்து சோபனமாய் ஒரு தோணிவந்தடுத்து காத்த முலன்பியா காசிமை நினைத்து காத்தெழும்பக் கரைவிட்டுப் பாய் தொடுத்து
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 22
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சாடுதே - மனம் நாடுதே - இன்னும் சக்கரை சாகிபு தலமும் தெரியுதே (சீனி)
உத்தமராகிய - கப்பமுசாகிபு உண்மையான மலர்ப்பதம் தோய்ந்து விட்டு சுத்தாங்கமாகவே வங்கத்திலேறியே சோதிக் குறவயல் கடந்து - இன்னும் குத்துமணுகாத மூலப்பயலெனும் கூரான பார்முகம் உணர்ந்து - இன்னும் சற்றும் மனது தயங்கிடாமலே தனுஷ்கோடி தீர்த்தக்கரை சேர்ந்து - அதில செட்டி சமுத்திரம் ராமேஸ்வரமும் கோவில்புறமும் நல்ல குந்துகால் பள்ளியும் மட்டில்லாத ஆறுகளும் தாவி ஓடும் பாமன் ஆறுடன் மோருசா மின்னுதே
மின்னுதே - நதி உன்னுதே - இன்னும் வெற்றியாய்த் தோணித்துறையும் தெரியுதே
(சீனி) சந்நிதி சத்திரம் வாவிக்கபுறடி சங்கை மண்டபத்தைக் கண்டுவிட்டு விந்தை அழகான மரைக்கார் பட்டணம் வீதியிருப்பது கண்டு நின்றும் மந்திர மேவிய மன்னார் தீவின் ஆலவிருட்சம் பள்ளி சென்று - நின்று சிந்தை மகிழ்ந்து சிரசைப் பணிந்து பின் சீரான பாத்திஹா நவுட்டு - இன்னும் சங்கையாய் வேதாந்துறையிலிறங்கியே தாழ்மையாய் ஆதி இறையை வணங்கியே மங்கையே நித்தம் வணங்கியே வேதாள வாகன கூடமும் மாடமும் நீங்கியே
கண்ணே - நட பெண்ணே - ஒலிகாரண சேகு முகப்பையும் பார் முன்னே (சீனி)
L0LLLL LLLL LL LLL LLL 00LLL LLLL LLL 0LLL LLL LLL Y LLL LLLLLL GLLLS
எனவும் பாடியிருப்பதன் மூலம் தெளிவாகப் புரிகின்றது !!
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
ஷெய்கு இஸ்மாயில் புலவர் - ஒரு பண்பாட்டுப் பார்வை” நூல் பக்கம் 32ல் ‘. ஷெய்கு இஸ்மாயிலின் கப்பல் ஒரு வணிகக் கப்பல். இதில் தொண்ணுற்றி ஆறு வேலையாட்களும், தணர் டையலும் , வேதநூல் அறிந்தோரும் , அத்துடன் வியாபாரி(முதலாளி)யும் வணிக பொருட்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் செல்வர், மீள்வர். கி. பி. 8ம் நூற்றாண்டிலிருந்து பொதுவாக கல்பிட்டி, புத்தளம் முஸ்லிம்கள் குதிரைமலை, மன்னார் மஊடாக யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு அப்பால் ஆசிய நாடுகளுக்கும் பெருங்கடல் வணிகத்தை செய்தனர். மன்னாரில் இருந்து, நீர் கொழும்பு வரைக்கும் உள்ள கரையோர பகுதியில் முஸ்லிம் கடல் வணிகர்கள் பெரிதும் பயன்படுத்திய துறைமுகங்கள் கல்பிட்டியும் குதிரைமலையும். ’ எனவும்
பக்கம் 34ல் “. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்ட தென்னிந்திய முஸ்லிம்களுள் பெரிய தம்பி மரைக்காயர் முக்கியமானவர். அவரது வாணிபம் இந்திய துறைமுகங்கள் மற்றும் மலாக்கா, இலங்கை கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெற்று வந்த புடைவை, முத்து, சங்கு, பாக்கு வியாபாரம் முழுவதையும் டச்சுக்காரர்கள் தம்வசம் ஆக்க முனைந்த போது பெரிய தம்பி மரைக்கார் அதற்குப் பெருந்தடையாக விளங்கினார். (1964 : 54) . 1790களில் இலங்கை முஸ்லிம்கள் பல வர்த்தக கப்பல்களை சொந்தமாகப் பெற்றிருந்தனர் (1986 - 173) கப்பல் வாங்கி வர்த்தகத்தில் ஈடுபட்ட கல்பிட்டி மரைக்கார் பற்றியும் செய்திகள் வழங்குகின்றன. பெரிய தம்பி மரைக்காரின் வர்த்தக ஆதிக்கம் டச்சு ஆட்சியினரின் வர்த்தக ஏகபோகத்திற்குப் பெரும் சவாலாக விளங்கியது எனப் பேராசிரியர். அரசரட்னம் விரிவாக ஆராய்ந்துள்ளார். டச்சுக்காரர் பெரிய தம்பி மரைக்காரின் கடல் வாணிபத்தை தடுப்பதற்கு முயன்றனர், எனினும் மரைக்கார் மறைமுகமான கடற்பாதைகளை பயன்படுத்தி கடத்தல் மூலம் அதனை அவர் முறியடித்தார். மன்னாருக்கும், புத்தளத்திற்கும் இடையேயுள்ள ஆழமற்ற பரவை கடற்பகுதியின் ஊடாக சிறிய மரக்களங்களைப் பயன்படுத்தித் தனது வர்த்தக நடவடிக்கைகளை அவர் தொடர்ந்தும் நடத்தினார். (1964:54)
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 23
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
“வரகவி செய்கு அலாவுத்தீன்” நூல் பக்கம் 147ல் குதிரை மலை பயணம் பற்றி ‘குதிரை மலைக் காரணச் சிந்து' எனும் தலைப்பில் கரைத்தீவு புலவர் மர்ஹம் செய்கு அலாவுத்தீன் அவர்கள் பாடியது.
பல்லவி குதிரை மலையின் காரணம் காணலாம் - வா இளம் கோதையரே சென்று குதிரை மலையின் காரணம் காணலாம் வா
அனுபல்லவி
கருமுகில் பொழிந்தோங்கி வளர் செறி கரடிக்குழி நகர் வாவிகள் சூழ்ந்திட திருவளர் இறை பாத்திஹா ஒதியே குதிரை மலையின் காரணம் காணலாம் வா (குதிரை)
a po so ee so so on a 0 s so
SL00L LLLLLLLLSLLLSL0L Y LLLLLLLLL LL LLLLLL
a e s p o os e s as a on e o o see
கந்தங் கமழ்மலர் கோரை மோட்டைக் - கமம்பார் பயிர் ஓங்கிச் செழித்திடும் பாவையே முன்னால் வெளி ஒன்று தோணுது. நேர் மரம் தோன்றிய சோலை சூழ் சுண்டிக் குழி வாவி நீங்கியகல்வது பேர் நிரை மாடம் தெரியுது பாவையே பாரடி சுத்தமாய் முத்துக்கடைகளும் தோணுது பார் அண்டம் தொடும் ஒரு கோபுரம் கண்டிடுவாய் அந்தா தெரியுது மேல் மெத்தை மாளிகை தொண்டர்கள் கூடியே தொட்டதன் வேலையில் தொகையின் ஆடவர் கூடும் சிலாபமே. சிப்பி குளிப்பதை தோணியில் ஏற்றுவதும் கப்பல் தோணிகளைச் சுற்றி நங்கூர மிட்டிறங்கி இருப்பதுவும் - வெகு சிங்காரமாகவே கப்பியில்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சாம்பிச் சரக்குப் பறிப்பதுவும் பல ஆடவர்கள் வந்து காத்து இருப்பதுவும் சிப்பி கொள்வார்களுமே தப்பித மற்றிட முத்தை எடுப்பாரும் சல்லி இருப்பார்களும் கோடியே விற்பதும் சிப்பிக்குள் முத்தில்லை என்று மொழிவாரும் சொல்ல முடியாதது அற்புத நுட்பமே (குதிரை)
LSL LLL LLLLLLLLSLLL0LLLLLLLLL LL LLLLLL L0LLLLL
LSLLLLLLLS LLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL0L00LLLL
LL LLLLLLLLSLLL0L LLL LLLLLLLLLLLLLL LLLLLL
இது போல பக்கம் 160ல் ‘குதிரை மலை வழி நடைச்சிந்து
எனும் தலைப்பிலும்,
9
குதிரை மலைக்குப் போவோம் வா கோதையரே நீ குதிரை மலைக்குப் போவோம் வா
கதிரோன் எழும்பு முன்னே கடவுள் தனைத் தொழுது
பிரியாத ஜரிவைத்த
பட்டை எடுத்துடுத்தி (குதிரை)
தோழிகளுடனே தொடர்ந்திலவங் குளம் தோகையே வருவாய் நடந்து ஆழிபோற் காளாவி கடந்து பொன்பரப்பியும் அந்த கந்தைத் தூக்கி நடந்து தளிரோங்கும் சோலைதனில் சாதம் சமைத்துண்டு விளரி விண்டு பாடியே விலமற வில்லைத் தாண்டு
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 24
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
பிள்ளை கொல்லி மணல் வருகுதே அமதாரி வில்லும் பூவையே பல வில்லும் பிரியுதே வெள்ளமொடர் கமத்தாறும் தெரியுதே வெளிநீங்கியே அப்புறம் வெளியும் தென்னை மரச் சோலையும் தெரியுதே
கள்ளமில்லாமலே அப்புறம் திரும்பியே கன்னியரே பூக்குளத்தையும நீங்கியே வெள்ளமில்லா வடு நேரக் கடற்கரை வெயிலடிக் க்ாதடி ஜாதிமயிலே - நீ (குதிரை)
கல்மலைக் குகைகளு முண்டும் பாரடி - பெண்ணே கடலொரு புறத்தினில் நின்றும் வள்ளலொலி முழக்கமுமுண்டும் கடலோரத்தில் வாவாப்பிள்ளை ஒலி கபுறு முண்டும் பலரும் நாருசா வைத்து
பாத்திஹா நேத்தி கொடுத்து சொல்லினேன் செய்கலாவுதீன் தொல்வினை முடித்து வர s (குதிரை)
புத்தளம் கல்பிட்டி பகுதிகளில் இருந்து முற்காலத்தில், தரைவழியாகவும், அடுத்துள்ள கடல் வழியாகவும் வடக்கே மன்னார் பிரதேசங்களுக்கும் அதற் கப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பயணங்களைப் பற்றி இப்பிரதேசத்தின் இரண்டு புலவர்கள் பாடியுள்ள பாக்கள் மேலே தரப்பட்டன. அப்பயணங்களில் இவர்களும் இணைந்து சென்றுள்ளனர், தற்போது வனமாகவுள்ள இப்பிரதேசத்தின் முன்னைய தோற்றங்களையும், ஜனரஞ்சகமான இடங்களாக அவ்விடங்கள் காட்சியளித்ததையும் இப்பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இப்பகுதிகளில் அடங்கப்பட்டுள்ள முஸ்லிம் பெரியார்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிக்க முஸ்லிம் பெண்களும் கூடவே சென்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.
“இலங்கை - கிழக்கரை இனிய தொடர்புகள்” என்ற நூலில், தமிழ் நாடு இராம நாத புரம் மாவட்டத்திற்கான இந்திய கெஜட்டீரின்
44 எம். ஐ. எம். அப்துல் லத்தி
 

மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
LS536TLD ஏழாம் பக்கப்பதிவினை மேற்கோள்காட்டி ‘.அரபு நாட்டில் இருந்து துவக்க காலத்தில் முஸ்லிம்கள் இந்த மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் முதலில் குடியமர்ந்த இடங்கள் குறிப்பாக கீழக்கரையும் மற்றும் தேவிப்பட்டினம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட சில இடங்களாகும். இவர்கள் வசிப்பதற்கு மேற் கொண்ட இடங்கள் இலங்கையுடன் வர்த்தக தொடர்புக்கு இடையூறில்லாத வசதி கருதியாகும். இதன் பின்புதான் இவர்கள் படிப்படியாக இதர இடங்களுக்கும் பரவியுள்ளார்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார் மேலும் 'அரபு நாட்டில் இருந்து துவக்க காலத்தில் வந்த முஸ்லிம்கள்’ என்ற வரிகள் இலங்கைக்கும் அச்சொட்டாகப் பொருந்தி வரும் என்கின்றார் (பக்கம் 25) அராபியர்கள் 5ம் 6ம் நூற்றண்டுகளில் இலங்கைக்கு வந்தார்கள் என சேர். எமசர் டெனன்ட்” குறிப்பிட்டுள்ளதுடன் அவர்கள் தென்னிந்தியாவுடனும் இலங்கையுடனும் வர்த்தக தொடர்புகள் வைத்திருந்தமை பற்றியும் மேற்படி நுால் விபரிக்கின்றது.
“ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் ” நூல் பக்கம் 99ல் ‘. கிழக்குக் கரையோரத்தில் ஆந்திராவின் மேட்டுப்பள்ளியும், தமிழ் நாட்டின் காயல் பட்டினமும் முஸ்லிம்களின் முக்கிய துறைமுகங்களாக இருந்தன. காயல் (கெய்ரோ) என்ற பிரசித்தி பெற்ற நகரத்தில் இருந்துதான் காயல் பட்டணத்தைச்சேர்ந்த முஸ்லிம் வணிகர்கள் இங்கையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர். இலங்கையின் பெரும்பாலான முஸ்லிம் வியாபாரக் குடும்பங்கள் காயல்பட்டணத்தைத் தமது பிறப்பிடமாகக் கருதுகின்றனர். இலங்கையின் சிங்கள இலக்கியங்களிலும் காயல்பட்டணம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அரபு நாட்டுக் குதிரைகள் காயல்பட்டணம் ஊடாக இலங்கையின் கரையோரத் துறைமுகமாகிய ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவரப்பட்டன என்று 13ம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரம பாகுவின் நெய்னா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது என்று கலாநிதி. இந்திர பாலா கருதுகின்றார். முஸ்லிம்கள் தாம் வியாபாரம் செய்த பகுதிகளில் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள், எனவே முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் வடக்குக் கரையோரப் பகுதிகளில் 13ம் நூற்றாண்டு தொடக்கமே இருந்திருக்கிறார்கள் என கருத இடமிருக்கிறது.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம். ஐ. எம். அப்துல் லத்தி

Page 25
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இதே நூலின் பக்கம் 129ல் கண்டி மன்னர்கள் தமது நாட்டில் விளையும் பொருட்களை வெளிநாட்டில் சந்தைப் படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பொருட்களை தமது பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கும் முஸ்லிம்களையே நம்பி இருந்தனர். முஸ்லிம்களும் அரசனுக்கு விஸ்வாசமாக இருந்தனர். இதே போன்று, மேற்கு கரையோர பிரதேசமாகிய ‘ஏழு கோரளை” கள் என்று கூறப்பட்ட வடமேல் மாகாணத்தில் பொருட்களை முஸ்லிம்கள் மேற்குக்கரையோர துறைமுகங்களான புத்தளம், கல்பிட்டி ஆகிய இடங்களினூடாக தென்னிந்திய மேற்குக் கரையோர பிரதேசமாகிய கேரளாவில் சந்தைப்படுத்தி, அப்பிரதேசத்தின் பண்டங்களை கொண்டு வந்து இங்கே விற்றார்கள், முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் அதிகமாகக் குடியேறுவதற்கு இவ்வர்த்தகப் பயணங்களே காரணமாக இருந்தது. “குமார வன்னியன்’ என்று கூறப்பட்ட ஒரு முஸ்லிமே இப்பிரதேசத்துத் தலைவனாக இருந்தான். இவன் புத்தளம் “திஸாவ’வின் கீழ் செயலாற்றினான். என விபரிக்கிறது.
'................... கி. பி. 1450 ல் தனது வளர்ப்புப் புத்திரனும், சேனாதிபதியுமான சபுமல் குமாரயா (செண்பகப் பெருமாள்) என்பானை கோட்டை மன்னன் ஆறாம் பராக்கிரமபாகு பெரும் படையுடன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற அனுப்பினான் 'கோகில சந்தேச என்ற நூலில் இப்படை நகர்த்தல் கோட்டையிலிருந்து மேற்குக் கரையோரமாக புத்தளம் - பூனகரி கரைப்பாதை வழியேதான் நிகழ்ந்தது. ” என கூறுவதாக ‘ஈழத்தவர் வரலாறு (பக்கம் 84) நூல் விபரிக்கின்றது.
எனவே மக்கள் செறிந்து வாழ்ந்ததாக நம்பக்கூடிய இப்பிரதேசம், நதிகளின் நீர்ப் பாய்ச்சலாலும் 'வில்’ என அழைக்கப்படும் நீர்ச் சுனைகளாலும் வளம் பெற்றிருந்ததால் இப்பிரதேசம் நெற் களஞ்சியமாகவும், பொன் கொழிக்கும் பூமியாகவும் மிளிர்ந்தன, இதனை உறுதிப்படுத்தும் சான்றாக இப்பிராந்தியத்தை (GOLDENPLAN) பொற் சமவெளி’ எனவும், "LAND OF THE GOLDEN GRAIN" “ GUTAĎApst6ofluugögl6ör Ló” 6T6őT Gp6ð6.DTLb, நுாலாசிரியர்கள் வர்ணித்துள்ளனர். மேலும், இலவன்குளம், கரைத்தீவு, வண்ணாத்தி வில்லு முதலான பகுதிகள் உள்ளிட்ட இந்த நிர்வாகப் பிரதேசம் இன்றும் உத்தியோகப் பூர்வமாக
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
‘பொன் பரப்பிப்பற்று' என்றே குறிப்பிடப்படுகிறது. இலவன் குளம் இப்போதும் நெற்களஞ்சியப் பூமியே! அது போல பிற்காலத்தில் சரணாலயமாக ஆக்கப்பட்ட இப்பிரதேசம் 'வில்’ எனப்படும் ஏராளமான நீர்ச் சுனைகளைக் கொண்டிருந்ததால் ‘வில்பற்று' எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். ஆரியர்களின் பாரம்பரிய தொழில் ஆற்றங்கரைகளை அண்டி விவசாயம் செய்தலாகும்! ஆரிய வகுப்பினரான விஜயனும் தோழர்களும் கூட இதன் அடிப்படையில் இப்பிரதேசத்தில் விவசாயத்தை ஆரம்பித்து வளமாக்கியதன் காரணத்தால் காலக் கிரமத்தில் நெல் தானியக் களஞ்சியமாக மாற்றம் கண்டு பொற் சமவெளி’ எனப் பெயரை பெற்றிருக்கலாம்! இது போலவே, அல்லி ராணியும், தமிழ் மக்களும் விவசாயத்தை வளம் படுத்தி இருப்பர். பிற்காலத்தில் அநுராதபுர இராசதானிக்கு எதிராகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட தென்னிந்திய படையெடுப்புகளால் பாதுகாப்பின் நிமித்தம் ஆட்சி பீடங்கள் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்த போது பொது மக்களும் விவசாய நிலங்களை கைவிட்டு புலம்பெயர்ந்தனர், இதனால் கைவிடப்பட்ட விவசாய நிலங்களும், நீர்த்தேக்கங்களும் காலக்கிரமத்தில் காடுகளாயின. இதன் அடிப்படையிலேயே "பொற்சமவெளி என்று பெயர்பெற்றிருந்த மேற்சொல்லப்பட்ட இப்பிரதேசமும் காடாகி இருந்த நிலையில் 1902ம் ஆண்டில் ஆநர்கரிலேய ஆட்சியாளர்களால இப்பகுதி வில பற்று சரணாலயமாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
‘பண்டை ஈழத்தில் தமிழர் - ஒரு பன்முகப்பார்வை” எனும் நூலில் பேராசிரியர் க. சிற்றம்பலம் “. கலா ஓயா நதிக்கரையில் தான் ஈழத்தின் புகழ் பூத்த பெரும் கற்கால தாழிக்காடான பொன்பரப்பு காணப்படுகின்றது இதில் அகழ்வாய்வின் போதும் கிடைத்த எச்சங்கள் யாவும் ஆதிச்ச நல்லுாரில் அகழ்வாய்வின் போது கிடைத்த தொல்லியல் எச்சங்களை ஒத்துக்காணப்படுவதால் ஈழத்தின் ஆதிக்குடியேற்றவாசிகளில் ஒரு பகுதியினர் இப்பகுதியில் இருந்தே இங்கு வந்திருப்பர் எனக் கொள்ளலாம். ’ என இவ்விடயத்தை ‘வரலாற்றில் இலங்கையும் காயல் பட்டினமும்’
என்ற தனது நுாலில் சுட்டிக்காட்டிய மானா மக்கீன் ‘. அநத ஆதிக்குடியேற்ற வாசிகளுள் அரபுக்களும் இருந்திருப்பார்கள், அவர் களர் அணி னைத் தமிழை பேசுபவர்களாகவும் இருந்திருப்பார்கள். ’ எனவும் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 26
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சிற்றம்பலம் அவர்கள், ‘. புத்தளத்தில் வடக்கே ஆறாவது மைலில் இருந்து மன்னார் எல்லை வரை பரந்துள்ள நிலப்பகுதி ‘பொன்பரப்பிப் பற்று' என அழைக்கப்படும் இவ்வழகிய பெயர் “பொம் பரிப்பு' என சிங்களத்தில் சிதைத்து வழங்கப்படுகின்றது. புத்தளம் மக்களை பொறுத்தவரையில் ‘கலா ஓயா என இப்பொழுது பெயர் கொண்டிருக்கும் ஆறே ‘பொன்பரப்பி' - அப்படியே அழைக்கவும் செய்கின்றனர். பொன்னிற மண், சிவந்த மண் பரந்து காணப்படுவதன் காரணமாகப் பொன்பரப்பி’ என பெயர் ஏற்பட்டதாகவும், செப்பு நிறம் என்ற கருத்து தாமிரபரணிக்குப் (ஆறு) பொருந்தும் என்பதும், தம்பபானி - தம்பபன்னி என்றழைக்கப்படுவதும், பொன் பரப்பிப் பகுதியையே என விபரிப்பதாகவும் இந்நூலில் வந்துள்ளது.
புத்தளத்துக்கரையில் இரவில் கரையொதுங்கி உறங்கிய விஜயனும் தோழர்களும், விடிந்து பார்த்த போது அவர்களது உள்ளங்கைகளில் சிவந்த மண் ஒட்டியிருந்ததை கண்டனர் எனவும் பாரம்பரியமாக சொல்லப்பட்டு வருவதும் மேற்படி கருத்துக்குப் பொருந்துகிறது !!
“...மொரோக்கோ நாட்டின் புகழ் பெற்ற தேச சஞ்சாரி இபுனு பதூதா அவர்கள் மாலை தீவில் இருந்து புறப்பட்டு கி. பி. 1345 - 09 - 21ம் திகதி புத்தளம் துறைமுகத்தை அடைந்தார். அரசனால் வரவேற்கப்பட்ட அவரும் அவரின் பரிவாரங்களும் அரசனின் விருந்தாளியாகவும் இருந்துள்ளனர். இங்கிருந்து மன்னரின் ஏற்பாட்டில் சிலாபம, குருநாகல் வழியாக பாவா ஆதமலைக்குப் பல்லக்கு மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இபுனு பதூதா அங்கு அவற்றை பார்வையிட்ட பின்பு கொழும்பு வழியாக மீண்டும் 134510-17ல் புத்தளம் வந்து அடைந்தார். புத்தளத்தை தனது குறிப்பேட்டில் “பத்தள” என்று குறிப்பிட்டுள்ளார். புத்தளம் அழகிய சிறு நகரம் எனவும் மரத்தால் ஆன மதில்களும் கோபுரங்களும் சூழவுள்ளன எனவும், கடற்கரையோரத்தில் அரசனுக்குச் சொந்தமான கறுவா மலைபோல குவித்து வைக்கப்பட்டிருந்தன எனவும் மஅபாரில் இருந்தும், மலபாரில் இருந்தும் வரும் வணிகர்கள் இதனைப் பெற்று, பகரமாக உடையும் வேறு பொருட்களும் அரசருக்கு அளிப்பர் எனவும் இபுனு பதூதா குறிப்பிடுள்ளார். அவரின் குறிப்பின் படி புத்தளம் மன்னரின் இராச்சியத்தில் உள்ள
(48. எம். ஐ. எம். அப்துல் லத்தி
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
முத்துக்குளிப்பிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறந்த ரக முத்துக்களை மன்னரின் உதவியாட்கள் அவரின் முன் தெரிவு செய்வதைத் தான் கண்டதாவும், தனக்கும் அம்மு ததுக்கள் அன்பளிக்கப்பட்டதாகவும் புத்தளத்தில் இருந்த ஆரிய சக்கரவர்திக்கு பாரசீக மொழி தெரிந்திருந்தது எனவும் இபுனுபதுாதாவின் குறிப்புகளில் இருந்து அறிய முடிவதாகவும் அவர் பாரசீக வருகையிலான தகியுத்தீன் அப்துர்ரஹம்மான் அல்லது அவரது வாரிசானவராக இருக்கலாம் எனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
புத்தளம் மன்னர் ஆரிய சக்கரவர்த்தி தகியுத்தீன் அப்துர்ரஹற்மான் பற்றி 1918 காலப்பகுதியில் கிழக்கிலங்கையில் வாழ்ந்த அசனாலெவ்வை ஆதம்பாவாலெவ்வை அவர்கள் அவரது மச்சான் புத்தளத்தார் அலியார்லெவ்வை வாயிலாக அறிந்து எழுதி வைத்த ஏட்டின் மூலம் எம். எம். எம். காசிம்ஜி அவர்கள் தொகுத்து முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட ‘* தென்கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மான்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்” நூல் பக்கம் 85ல்,
'...................... ஒரு காலத்தில் புத்தளத்தை ஒரு அரசன் ஆண்டு கொண்டு வந்தான், அவன் பெயர் ஆரிய சக்கரவர்த்தி - அவன் பாரசீக பரம்பரையைச் சேர்ந்தவன். அவன் பார்ப்பதற்கு தமிழனை போல தோற்றமளித்தான். காரணம் அவன் பாண்டிய நாட்டில் வளர்ந்தவன், இருந்தும் இஸ்லாத்தில் பற்றுள்ளவன். அவன் நூற்றுக்கணக்கான கப்பல்களையுடையவனாக இருந்தான். இவனிடம் அனேகம் ஒட்டகங்கள் இருந்தன. அவனது ஆட்கள் சிலாபம், சிலாபத்துறை மற்றுமிடங்களிலெல்லாம் முத்துக்குளித்தார்கள், ரத்தினக்கற்கள் தோன்டி எடுத்தார்கள். வெளிநாட்டவர்களான. மொரோக்கர்கள், பாரசீகர்கள், அறபிகள், யமனர்கள், சாமந்தர்கள், துருக்கர்கள், மொகலாயர்கள் , சுவர்ணதவினர்கள் , யவர்ணதீவினர்கள், சீயம் நாட்டவர்கள், மியாமியர்கள் கப்பல்களில் வந்து புத்தளத்துத்துறைமுகத்தில் இறங்கினார்கள். வந்தவர்கள் ஆரியச்சக்கரவர்த்தியிடம் போய், இரத்தினக்கற்கள், கருவா. (சிதைந்திருக்கும்சுவடி)
எம். ஐ. எம். அப்துல் லத்தி 49

Page 27
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் இதனை விளக்கும் பாடல்கள் இதே நூல் பக்கம் 90, 91ல் உள்ளன. தகியுத்தின் ஆரியசக்கரவர்த்தியின் படையிலிருந்து காயலூரை (சிலாபம்) ஆட்சி புரிந்தவரும் புலவருமான முத்து முகம்மது அவர்கள் தகியுத்தீன் புத்ஹ’ என்னும்தலைப்பில் பாடிய பாடல்கள் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட பதிவேட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது வருமாறு:
தங்கையைச் சிறை செய்த சிங்கள ராசன் வேங்கையாய் தக்யுத்தீன் ஆரியச் சக்கரவர்த்தி கங்கையைக் கடந்து படையுடன் வரக்கண்டு தன் கையை உயர்த்திக் கோட்டையைத் திறந்தான்
வேங்கையாய்ச் “சிங்கக் கொடி யேந்தி வேலேந்தி வாள் தொங்க வந்த தக்யுத்தினை நேர் நின்று வாளேந்தி எதிர்க்கத் துணிவில்லை சிவதாச னோடினான் புத்தூர் நோக்கி
புத்தளக் கோட்டையிலே பார்சி சிங்களவர் தமிழர் நடுவே பாண்டியன் குல சேகரன் போல் தக்யுத்தீன் சக்கரவர்த்தி பூ நூலணிந்து நெற்றியில் பொட்டு மிட்டிருந்து யானை கறுவா கற்கள் வாங்க வந்த வர்த்தகரை வரவேற்றான்
ஆயிரங் கப்பலுக் கதிபதி தக்யுத்தீன் யானை குதிரை ஒட்டகப் படைக ளுடையோன் ஒட்டக முண்பதற்கு “பெருக்க மரம் கொணர்வித்து நாடெங்கும் வளர்த்தான் பாலைவனக் கப்பலுக்கு
இரத்தினக் கற் குவியல்களும் கறுவா கந்து களும் யானைத் தந்தங்களும் சிந்து தேசப் பரிகளும் சீனத்துப் பட்டுகளும்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
மியன்மார் விசிறிகளும் யவனத் தீவுக் கண்ணாடியும் சுவனத் தீவுக் கற்பூரமும் புத்தளத் தங்காடி யெங்கும் தினமும் காணப்பட்டனவே
யானைகள் பிளி றொலியும் குதிரைகள் கனைப் பொலியும் எட்டுத் திக்கிலு மிருந்து வந்தோர் பன்மொழி பேச் சொலியும் காளையர் கன்னியர்கள் கைகோர்த் தங்காடி யெங்கும் முத்துப் பட்டுப்பவளம் வாங்கி மகிழும் சிரிப் பொலியும் போகும் வரும் கப்பல்கள் உண்டாக்கும் கட லொலியும்
சுபுஹத் தொழுகைக் கழைக்கும், மோதினார் வாங்கொலியும் தாங்கும் தக்யுத்தி னாரியச் சக்கரவர்த்தியை தட்டி எழுப்பினவே!
தகியுத்தீன் புத்தளத்தை ஆட்சிபீடமாகப் பெற்ற விபரமும் இந்நூலில் பக்கம் 78ல் விபரிக்கப்பட்டுள்ளது.
'............. யாப்பகுவையில் இருந்து முதலாம் புவனேகபாகு (1271-83) ஆட்சி செய்துக்கெண்டுடிருந்தான் அவன் பாண்டிய அரசனுக்கு கப்பம் கொண்டு போன போது அங்கே பாண்டியன் அரச அவையில் அரச வைத்தியராக இருந்த அசவெத்தும்மாவின் தந்தையை அவனது அரச அவைக்கு அரச வைத்தியராக இருக்க அழைத் துப் போனானி . அவருடன் அருடைய மகள் அசெவெதும்மாவும் சென்று யாப்பகுவையில் குடியேறினாள். 1310ல் இரண்டாம் புவனேகபாகு குருநாகல் மன்னனானான். (1310-25) அசெவெதும்மாவைக் கண்டு அவளை கலியாணம்முடிக்க விரும்பினான். முஸ்லிம் அல்லாதவனை மணமுடிக்க விரும்பாமல் தந்தையும், அவளும் பாண்டிய நாட்டுக்கு தப்பியோட முயன்றனர்.
எம். ஐ. எம். அப்துல் லத்தி

Page 28
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புவனேகபாகு வீட்டுக்காவல் போட்டு அவர்களை சிறை வைத்தான். தந்தையும், தங்கையும் சிறை வைக்கப்பட்டிருப்பதை கேள்வியுற்ற அவளது சகோதரன் தக்யுத்தீன் என்பவன் தந்தையையும், தங்கையையும் சிறை மீட்க பாண்டியர் படையுடன் ஹஸ்தி செய்லாபுரம் (குருனாகல்) போனான். கோட்டைக் கதவை திறந்து விட்டு தக்யுத்தினை வரவேற்றான் புவனேகபாகு மன்னன். இரகசியமாக இஸ்லாத்தை தழுவி, அபூசனா என்ற பெயர் சூடி முறைப்படி அசவெத்தும்மாவை திருமணம் செய்து அவளைப் பட்டத்து இராணியாக்கியதோடு, அதனால் மைத்துனனாக வந்த தக்யுத்தீனுக்கு புத்தளத்தை அன்பளிப்பு செய்து அதை ஆளும் படி கூறினான். V−
இரண்டாம் புவனேகபாகு மன்னனுக்கும் இராணி அசவெத்தும்மாவுக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். மூத்தவன் இளவரசன் 'சாலேன் பண்டார வத்ஹிமி, இளையவன் முசுகி. இருவரும் சிறந்த வீரர்கள். தந்தை இரண்டாம் புவனேகபாகு இறந்ததும் இளவரசன் சாலேன் பண்டார வத்ஹமி அரசனானான். ஒரு முஸ்லிம் அரசனாக இருப்பதை புத்தகுருமார் விரும்பவில்லை. சதிதிட்டம் தீட்டி மத வைபவத்தின் போது (குருனாகல்) கல்கல அல்லது எதுகல மலையிலிருந்து சாலேன் பண்டாரவை தள்ளி கொலை செய்தனர், இவரது அடக்கஸ்தலம் இன்னமும் குருனாகலில் உள்ளது. இச்சம்பவத்தை பற்றிய 'இராணி அசவெத்தும்மா ஒப்பாரி” என்னும் தலைப்பிலான 38 பாடல்களில் ஆறு பாடல்கள் புத்தளத்தை இணைத்துப் பாடப்பட்டுள்ளன. இவை இந்நூலின் 71 முதல் 76ம் வரை பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
d to 0 . . . . . . . . .
5) உன்னைக் கொல்லுவதை
உன் தம்பி தருப்பா னென்று நினைத் தவனை மாமாவிடம் அனுப்பினரே புத்தளக்தூக்கு
7) சதியை நான் தெரிந்திருந்தால்
புததளம ராசாவை அழைதது படைபெற்று உன்னை ராசா காத்திருப்பேன் விதியை வென்று
24)மகா ராசா எனது மகன்
இஸ்லாமாகி விட்ட பின்பே கலியாணம் முடித்தா ரென்னை உன் மாமன் தக்யுத்தீன் முன்னிலையில்,
O0 PK 869 000000000
25) மகாராசா உன் மாமன் தக்யுத்தினை
புத்தளம் சென்று அங்கு கோட்டை கொத்தளங் கட்டி ராசாவாக இருக்கச்சொன்னார்.
de O a SO se a O' O. O 89 e
28) இளவரசனாக உன்னை மகன் ஆக்கியதைக் கண்ட அந்த குருமார்கள் முணு முணுத்தார் புத்தள மன்னனுக் கஞ்சியோராய்.
30)புத்தளம் மன்ன னுனது மாமன்
தக்யுத்தீன் போல நீயும் பெரு வெற்றி கண்டாய் அங்கே இன்று நீ அழிந்துப் போனாய்.
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 29
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
கி. பி. 1300களில் புத்தளத்தை ஆட்சி புரிந்த தகியுத்தீன் அப்துர் ரஹம்மானின் ஆட்சி பற்றியும், அவரால் நிர்மானிக்கப்பட்ட கோட்டை அமைப்புக்கள் பற்றியும் வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் பல தகவல்கள் உள்ளன, என்ற போதிலும் அத்தகைய கோட்டை ஒன்று இருந்தமைக்கான கட்டடத்தடயங்கள் ஏதும் இங்கு இல்லை, எனினும் புத்தளம் கச்சேரி மற்றும் அரச அதிபர் வாசஸ்தலம் முதலான அரச கட்டடங்கள் அமைந்திருக்கும் சுற்றாடலில் தகியுத்தீன் அப்துர் ரஹற்மானின் கோட்டையானது இவை அமைக்கப் படுவதற்கு முன்னர் இருந்திருக்கக்கூடும்.
கி. பி. 1536ம் ஆண்டில் போர்த்துக்கேயர் புத்தளத்தை தமது ஆதிக்கத்தின் கீழ் ஆக்கினர். கி. பி. 1766ல் தளபதி இம்ஹொப் (Captain lmhoff) என்பவன் தலைமையில் புத்தளம் ஒல்லாந்தரின் (டச்) ஆட்சியில் வந்தது. அவர்கள் புத்தளம் நகரின் தென் புறத்தில் இருந்த தென்னந் தோப்புக்கு 800 யார் தூரத்தில் அகழிகளுடன் மண் கோட்டை ஒன்றை கட்டினார்கள் கி. பி. 1796ல் சேர் ஜோன் பெளசர் (Sir John Bowsor) என்ற பிரித்தானிய இராணுவத் தலைவரின் கீழ் வந்த படை புத்தளத்தை கைப்பற்றி டச் கோட்டையை மேலும் புதுப்பித்துக்கட்டி ஆட்சி செய்தனர். குருனாகல் பாதையில் இருந்து வாடிவீடு அரச அதிபர் வாசஸ்தலம் என்பன அமைந்துள்ள வீதி இன்றும் ‘போட் ரோட் (Fort Road - கோட்டை வீதி) என்றே அழைக்கப்டுகின்றது. 13ம் நூற்றாண்டின் பின்னர் நாடு காணர் பயணங்களை மேற்கொண்ட ஜரோப்பியர்கள் முஸ்லிம்களின் ஆட்சி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைத் தரையிலும் கடலிலும் துவம்சம் செய்வதிலும், அழித்தொழிப்பதிலும் கணிணுங் கருத்துமாகச் செயல்பட்டனர். இதன் அடிப்படையில் புத்தளத்தில் அமைந்திருந்த தகியுத்தின் அப்துர் ரஹர்மானின் கோட்டை முதலான ஆட்சித்தடயங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டு அவ்விடத்தில் தங்களது கோட்டை அமைப்புக்களை 1766களில் ஒல்லாந்தர் அமைத்திருக்கலாம். இச்சுற்றாடலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படின் சில உண்மைகள் வெளிவரலாம்.
புத்தளம் கரைப்பகுதியையும், கொழும்பு பிரதான வீதியையும் (A3) அடுத்து கச்சேரி, அரச அதிபர் வாசஸ்தலம் ஏனைய அரச காரியாலயங்கள் என்பன அமைந்திருப்பதோடு இதே இடத்தில் அமைந்துள்ள புரட்டஸ்தாந்து தேவாலயத்தின் முன்னுள்ள கடல்
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
 
 

புத்தளம் - மன்னர் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
பகுதியில் படகுகள் கட்டப்படும் இரும்பினாலான அமைப்புக்களும் அண்மை காலம் வரை காணப்பட்டன. இதற்கு ச்மீபமாகத் தற்போதைய மீன் மார்கட்டுக்குப் பின்னால் ‘ரேகையடிப் பாலம் என அழைக்கப்படும் படகுத்துறையும் புத்தளம் கடலில் அமைந்திருந்தது. அக்கரையில் அமைந்திருக்கும் கல்பிட்டியில் டச்சு கோட்டை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1782ல் புத்தளத்துக்கு விஜயம் செய்த திரு. ஹாப்னர் (Hafner) என்ற ஆய்வாளர், ‘. கண்டி அரசனுக்கு கடைசியாகக் கைகொடுத்த துறைமுகம் புத்தளம். அம்மன்னன். உப்பு வியாபாரத்தை தன்னாதிக்கத்தில் வைத்திருந்தான். கோட்டை நல்ல நிலையிலேயே இருக்கிறது. அழகுடன் விளங்கும் நான்கு உயர்ந்த புற அரண்களுடன் கூடிய சிறிய கோட்டை இதுவாகும். புத்தளம் அதிககுடிசனம் நிறைந்த பெரிய நகரம். ஏராளமான பாக்கு இங்கு உள்ளன. நீர்வழிப் போக்குவரத்துக்கான படகுகளையும், வெளிப் போக்குவரத்துக்கான கப்பல்களையும், தோணிகளையும், ஏனைய சிறிய இந்திய படகுகளையும் புத்தளத்தில் செய்கிறார்கள். ’ என விபரித்துள்ளார்.
‘ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்’ நூல் பக்கம் 52ல் “. இபுனு பதூதா வந்த சமயம் (1345) இலங்கையின் வடக்கு பகுதிகள் தமிழர்களின் கையில் இருந்தன, சிங்கள அரசர்கள் கம்பளையை தங்கள் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். இபுனு பதூதா ‘புத்தள’ என்ற இடத்தில் வந்திறங்கினார். சேர் டெனன்ட் போன்ற வரலாற்றாசிரியர்கள் இது புத்தளத்தை குறிக்கின்றது என ஊகிக்கின்றனர். இங்கு கறுவா வளர்வதாகவும் ஒரு நதி ஓடுவதாகவும் இவர் குறிப்பிடுகின்றார், இங்கு ஆண்ட தமிழரசன் இபுனு பதூதாவுக்கு பாதுகாப்பளித்து அவரை ஆதமலைக்கு அனுப்பி வைத்தான். ’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இபுனு பதூதா அவர்களின் புத்தளம் வருகையின் ஞாபகார்த்தமாக, முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அல்-ஹாஜ். ஏ. எச். எம். அஸ்வர் அவர்களின் ஏற்பாட்டில் 1991-10-13ம் திகதியில் புத்தளம் நகரில்
எம். ஐ. எம். அப்துல் லத்தி ss

Page 30
புத்தளம் மன்னார் பாதையும், வரலாற்றுப் இஆங்களும் நடைபெற்ற 'தேசிய மீலாத் விழா' வைபs:*திற்கு வருகை தந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களால் 'களம் நகர கடற்கரை விதிக்கு "இபுனு பதூதா விதி" என :ெ', நாமம் குட்டப்பட்டது. அத்துடன் கங்காணிக்குளம் மைதாஸ்த்தில் இராஜாங்க அமைச்சர் அளdவர் அவர்களால் அடிக்கலி நாட்டப்பட்டு, ஒராண்டுக்குள் கட்டட வேலை பூர்த்தி செயப்யப்பட்டு அவராலி 1994-08-10ல திறந்தும் வைக்கப்பட்டதுமான பிரமாணடமான மணர்டபத்துக்கு இபுனுபதுரதா மஹாலி (I. B. M) எனப் பெயரிடப்பட்டதும் குறிப்பிடதக்கதாகும்.
"ஈழத்தவர் வரலாறு” நூல் பக்கம் 80ல் ‘. கி. பி 1325 . 1347களில் ஆண்ட மன்னன் மார்த்தாண்ட சிங்கையாரியன் (பரராச சேகரன்-3) காலத்தில் இபுனு பதுாதா யாழ்ப்பாணம் வந்தார், அங்கே ஆரிய சக்கரவர்த்தியின் திரண்ட கடற்படையும் செல்வத்தையும் கண்டு அதிசயித்தான். ’ என்ற குறிப்பும் உள்ளது.
மீண்டும் ‘ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' நூலின் பக்கம் 76ல் ‘. பதினான்காம் நூற்றாண்டில் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் இந்திய உபகண்டத்தை சேர்ந்த மலபார் கரையோரப் பகுதியில் வாழ்ந்த கேரள முஸ்லிம்களும் குஜராத்தியைச் சேர்ந்த கோஜா, போரா, மேமன், ஆகிய ஷியா முஸ்லிம்களும் பெரும்பங்கை ஏற்றார்கள். அவர்கள் “கம்பே' வளைகுடாவில் இருந்து கொண்டு வந்த துணிமணிகள் இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் "கம்பாய” என்ற பெயரைப் பெற்றன. 99
இரண்டு தசாப்தங்கள் முனர்பு வரை புத்தளம், மன்னார், மட்டக்களப்பு பகுதி முஸ்லிம் பெனர்கள் தடிப்பமானதும் நிறக்கோடுகள் இடப்பட்டதுமான "கம்பாயம்” என்ற புடவைகளை அணிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
பக்கம் 149ல் “. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையின் தலைமை நீதிபதியாகவும், அரசியல் சபையின் தலைவராகவும் இருந்த எலக்சாண்டர் ஜோன்சன் பிரபுவின் முஸ்லிம்கள் பற்றிய குறிப்பை கூறலாம்.
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
''......... முகம்மதியர்களின் எண்ணிக்கையை நாம் எழுபதாயிரம் என்று கணிக்கலாம். அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் வசிக்கின்றார்கள். முகம்மதிய வர்த்தகர்கள் கொழும்பு, காலி, புத்தளம், பேருவளை போன்ற இடங்களில் தமது வியாபார ஸ்தலங்களை அமைத்துக்கொண்டு தென்னிந்திய கரையோரப் பகுதிகளுடன் வர்த்தகம் செய்கிறார்கள் எனவும் வந்துள்ளது. 99
எனவே வடமேற்கின் பண்டைய சிறப்பை விளக்குவதாயின்,
0பண்டைய காலத்தில் மாந்தை, மன்னார், அரிப்பு, சிலாபத்துறை, குதிரைமலை முனை, புத்தளம், கல்பிட்டி போன்ற இடங்கள் கடல் வழி போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்ற துறை முகங்களாகும், மத்திய கிழக்கு, துார கிழக்கு நாடுகளுடன் இரு வழி கப்பல் பாதையாகவும் , சன நெரிசலுள்ள இடங்களாகவும் இருந்தன.இப்பிரதேசத்திலேயே முத்துக் குளித்தல் நடை பெற்றது.
0 அரிசி, மிளகு, சாயமூட்டும் மரவகைகள், பாக்கு, சங்கு, கறுவா, தேங்காய், எண்ணெய், தும்பு, கருங்காலி, யானை, பீனைத்தந்தம் முதலானவை பெறப்பட்டன.
0 கிழக்கு, மேற்கு நாடுகளின் வணிகர்கள் சந்திக்கும் இடங்களாக இலங்கையின் வட மேற்குப் பகுதியும் தென் இந்தியாவும் விளங்கின.
0 கடல் கொந்தளிப்போ, புயலோ அற்ற கடலாக விளங்கும் இப் பகுதி, ஏனைய பகுதிக் கடல்களில் அத்தகைய கடல் கொந்தளிப்புகளில் சிக்கிக் கொள்ளும் கப்பல்கள் ஈற்றில் கரையொதுங்கும் பகுதி என இப் பகுதிக் கடலுக்கு பெருமையுண்டு. உதாரணமாக, விஜயனின் கப்பல், தேச சஞ்சாரி இப்னு பதுாதா அவர்களின் கப்பல், குளோடியஸ் மன்னனின் செங்கடல் ஆதிக்கமாயிருந்த 'ஆனியஸ் லோக்கமாஸ் போன்றோரின் கப்பல்களும் அடைக்கலமான கடற்கரைப் பகுதியாக நமது வட மேற்குக் கரை விளங்கியுள்ளது.
எனவே முற்காலத்தில் பல வழிகளிலும் புகழ் பெற்று விளங்கிய ஆரம்ப வரலாற்றுப் பகுதியான இப்பிரதேசம், பல்வேறு காரணங்களால் பிற்காலத்தில் வனமாக்கப்பட்டு மன்னார், புத்தளம் தமிழ் பேசும் (தமிழ் முஸ்லிம்) பிரதேசங்களைப் பிரித்து விட்டது. இதனால் தொடர்புகளும் தடுக்கப்பட்டு விட்டன. தற்போது புதிய ஆட்சி 2002ஆம் ஆண்டில்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 31
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
L556ΠLD - மலர்ந்ததும் இரண்டு தசாப்தங்களாக முழங்கிய துப்பாக்கிகளுக்கும் பயங்கரமான அதன் தாக்குதல்களுக்கும் ஒய்வு கொடுக்கப்பட்டு நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கான பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முடப்பட்ட பல பாதைகளும் தற்போது திறந்து விடப்பட்ட நிலையில் பத்து தசாப்தங்களுக்கு, முன்னர் அதாவது நூறு (100) வருடங்களுக்கு (1902ம் ஆண்டு) முன்பு முடப்பட்ட, புத்தளம் - மன்னார் கரையோரப் பாதை மீண்டும் திறக்கப்படுதல் வேண்டும் எனத் தற்போது சாதாரண மட்டத்திலும், உயர் மட்டத்திலும் ஆலோசனைகளும், திட்டங்களும் முன் வைக்கப்படுவதானது, பெரிதும் வரவேற்கத் தக்கவையாகும் !!
புத்தளம் - மன்னார் கரையோரப் பாதைத் திறக்கப்படின், அது யாழ்ப்பாணம் வரையான கரையோரப் பாதையாகவும் பின்னர் உருவாகலாம். முன்னைய நிலைமையும் அதுவே! அப்போது அப்பாதையானது, வடக்கே யாழ்ப்பாணம் காங்கேசன் துறை முதல், தெற்கின் அம்பாந்தோட்டை வரையான கரையோரப் பாதையாகத் தோற்றம் பெற்றுவிடும். அத்துடன் இலவன் குளம் முதல் மன்னார் வரை கரையோரப் புகையிரதப் பாதையும் விஸ்தரிக்கப்படுமாயின் அது மன்னார் முதல் மாத்தறை வரையான கரையோர புகையிரதப் பாதையாகவும் அமையப் பெற்றுவிடும்!!!
இதனால் மீள் குடியமர்வு வேலைகள் இலகுவாகிவிடும், கரையோர மீனவ, மற்றும் குடியேற்றங்கள் பெருகும், தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும், உல்லாசப்பயணத் துறை விரிவடையும், வனத்துள் மூழ்கியுள்ள வரலாற்றுத் தடயங்கள் பற்றிய ஆய்வுகள் விரிவடையும், கற்பிட்டி தலவில யாத்திரையில் இருந்து, மடு யாத்திரைக்கான துாரம், காலம் குறையும், இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணங்களால், சரணாலய விலங்குகள், பறவைகளின் பாதுகாப்புக்குப் பாதிப்பு நேராமலும், பரவலாக நடைபெறக்கூடிய காடு அழிப்பு நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நடைபெறாதும் கவனம் செலுத்தல் வேண்டும்.
அதே வேளை தலை மன்னார் . தனுஷ்கோடி (இராமேஸ்வரம்) வரை கடலில் இந்திய அரசினது ஒத்துழைப்புடன், பாலம் அமையும் போது நமது கரையோரப் பாதை மூலம் இந்தியாவுக்கான வாகனப்போக்கு வரத்தும், அது போல இந்தியாவிலிருந்து இலங்கைக்கான வாகனப் போக்கு வரத்தும் இலகுவாகிவிடும்! இதனால் போக்கு வரத்துச் செலவும்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 
 
 

மன்னர் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
LS556TD குறைந்துவிடும். அதன் மூலம் வர்த்தக, சமய, கலாச்சார, பண்பாட்டு நல்லுறவுகள் தற்போதையும் விட பன்மடங்கு உயர்ச்சியடையும். வல்லரசு நிலையை அண்மித்துக் கொண்டிருக்கும் அயல் வீடும், நாடுமான இந்தியாவுடன் தொடர்பு மேலும் விரிவடையும், உறவும் நெருக்கமாகும். சின்னஞ்சிறு நாடான இலங்கையின் தொடர்பு சதா காலமும், மிக அண்மையிலுள்ளதும், உலகின் பெரிய ஜனநாய நாடுமான இந்தியாவுடன் நிலைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இலங்கையும், இந்தியாவும் எப்போதுமே பிரிக்கப்பட முடியாத, அல்லது மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ பட முடியாத சமய, கலாசார, இன, மொழி, பண்பாட்டு, வர்த்தக, பொருளாதாரத் தொடர்புகளைத் தொன்று தொட்டே கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்!
எமது நாட்டுத் சிங்கள, தமிழ் இனங்கள், சிங்கள, தமிழ் மொழிகள் பெளத்த, இந்து சமயங்கள், அவை சார்ந்த கலாசாரப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், சாத்திரீய சம்பிரதாயங்கள், சமையல், உணவு, உடை, ஆபரண வகைகள், யாவுமே இந்தியாவிலிருந்து இங்கு வந்தவையே! இவை தவிர இஸ்லாம் சமயம் அரபு நாட்டில் தோன்றி இங்கு அராபிய முஸ்லிம்களால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், காலப் போக்கில் , முஸ்லிம்களின் வருகையும் பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்தே நடைபெற்றன. முஸ்லிம் வியாபாரிகள், மற்றும் ஆலிம், உலமாக்களின் வருகையும், மஸ்ஜித், மத்ரஸா அமைப்புகளும், முஸ்லிம்களின் உடை, மற்றும் திருமணச்சம்பிரதாய நடைமுறைகளும், இன்னும் மார்க்கக் கல்வியோடிணைந்த அரபுத் தமிழ் மொழிப் பிரயோகமும், கூட தென்னிந்திய முஸ்லிம்களால் இங்கு அறிமுகப் படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டவையே ! அதே வேளை வட இந்திய முஸ்லிம்களின் வருகையும், அவர்கள் சார்ந்த பாரம்பரியங்களும் கூட சிறிதளவுப் பங்களிப்பை இங்கு செய்துள்ளன!!
எனவே சகலவித சம்பத்துக்களையும், கருத்துக்களையும் கருத்தில் கொண்டு, எந்த வகையிலும், எல்லாக்காலத்திலும், இந்தியத் தொடர்புடனேயே செயல்பட வேண்டிய தேவை நமக்குண்டு, இலங்கைக்குண்டு. வல்லரசு அந்தஸ்தை நெருங்கிவிட்ட இந்தியா ஐ. நா. வின் பாதுகாப்புச்சபையிலும் நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளும், பெரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. எனவே அதன் எல்லையில் இன்னுமொரு வல்லரசு செல்வாக்குப் பெறுவதையோ அல்லது ஆதிக்கம் பெறுவதையோ அது விரும்பாததுடன், அத்தகைய சூழ் நிலைக்கு நாம் இடம் கொடுப்பது நமது பாரம்பரிய கலாசாரத்திற்கும் பாதிப்பையும், இழுக்கையும் ஏற்படுத்தி விடும், அத்துடன் இந்திய நாட்டுடன் வேறு பிரச்சினைகளுக்கும் வழி ஏற்படலாம். எனவே நமது கூடிய அளவு
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 32
புத்தளம் - மன்னர் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
நெருக்கம் அயல் நாட்டுடனேயே அமைதல் வேண்டும், அதே வேளை, தலை மன்னார் - தனுஷ்கோடி பாலம் அமைக்கும் விடயம் எவ்வளவு துாரம் சாத்தியமானது, என்பதையும் இரண்டு நாட்டவருமே தீவிரமாக ஆய்வு செய்வர்! இதன் படி,
1. பொருளாதார, கலாசார, பண்பாட்டு, இன நல்லுறவுக்கு இப்பாலம் அமைப்பு வழி வகுத்தாலும், பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் ஏற்கனவே உள்ள அனுபவத்தைக் கொண்டு, இந்தியா அவ்விடயம் குறித்து அதிகமாகவே சிந்திக்கும், சந்தேகப்படும்!
2. தமிழ் நாடும், தமிழ் ஈழமும் சேர்ந்த தனித் தமிழ் இராச்சிய அமைப்புக்கு இப்பாலத்திட்டம் உந்து சக்தியாக அமையலாம் என்ற அச்சம், இரண்டு நாட்டு அரசுகளுக்கும் ஏற்படலாம்!!
3. இந்தியா திட்டமிட்டுள்ள தென் இந்தியாவைச் சுற்றிச் செல்லும் இந்து சமுத்திரக் கப்பல் போக்குவரத்து விஸ்தரிப்புக்கான "சேது சமுத்திரம் கால்வாய் அகழ்வுத் திட்டத்துக்கு இப்பாலம் அமைப்புத் திட்டமானது தடையாக அமையலாம் என்பதை இந்தியா கருத்தில் கொள்ளலாம் !!!
என்ற போதிலும் இப்பாலம் அமைக்கப்படுவதால, இந்தியா உள்ளிட்ட இருபத்திரண்டு நாடுகளுடன், தொண்ணுாறாயிம் (90,000) கி. மீ. தரை வழித்துாரத் தொடர்பு இலங்கைக்கு ஏற்படுவதாகவும், இது பல அநுகூலங்களை இலங்கைக்குச் சேர்க்கும் எனவும் மின்சக்தி, எரிசக்தி, அமைச்சர் திரு. கரு ஜயசூரிய அவர்கள் கடந்த 10-11-2002ல் பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாத உரையின் போது எடுத்தரைத்ததும் குறிப்பிடத்தக்கது !!
புத்தளம் - மன்னார் கரையோரப்பாதை திறப்பது பற்றி அமைச்சர் அல்-ஹாஜ், நூர்தீன்மசூர் அவர்கள் கடந்த 5ெ-03-2003ல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, இப்பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், மிதி வெடிகளை அகற்றிய பின்னரே வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அதிகாரிகள் கருத்து வெளியிட்டனர் எனினும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த 1985ம் ஆண்டு முதல் மூடப்பட்ட வில்பற்று சரணாலயம் பற்றி தற்போது நிலவும் சமாதான சூழ்நிலை காரணமாக உல்லாச பயணிகளின் வருகைக்காக 18 வருடங்களின் பின்னர் 16-03-2003 முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப் படுவதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.
எம். ஐ. எல். அப்துல் ஸ்த்தி
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 'பஞ்சவரிபவனில் 02-03-2003ல் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கும் இலங்கைப் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் போது இராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்குமிடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் இலங்கை - இந்திய தரைப்பாதை குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
இந்திய ஜனாதிபதி ‘பாரதரத்தினா' கலாநிதி அப்துல் கலாம் அவர்களை 01-03-2003ல் இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிர பவனில் சந்தித்த இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் குழுவினரிடமும், ஜனாதிபதி அவர்கள் இந்தியாயுக்கும், இலங்கைக்குமிடையே நல்லுறவை மேம்படுத்த பாலம் அமைக்கப்பட வேண்டியதின் அவசியம் பற்றிய தனது கருத்தையும் விருப்பத்தையும் எடுத்துரைத்தார்கள். (ஜனாதிபதி அவர்கள் இராமேஸ்வரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
குறிப்பு: புேத்தளம் இ . செ. மு. (பெரிய முதலாளி) குடும்பத்தினருக்கு யானை வண்டிகள் சொந்தமாயிருந்தன.
செய்கு இஸ்மாயில் புலவர் அவர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ள புத்தளம் பிரதேச புலவர்கள புத்தளம் வரலாறும், மரபுகளும் எனும் நூல்களில் கவிதையின் சில சொற்களில் சிறுமாற்றங்களைக் காண முடிகின்றது, அவை முறையே 1. பத்திரமே வரிய பத்திரமாகவே 2. பாதமதை u Tg Loan ay 3.இன்னும் - அருள்
*பாரசீக வணிகர்கள் தமது கப்பல்களில் சிவப்பு சிங்கக் கொடியையே ஏற்றி வந்தனர் தகியுத்தின் அவர்களும் பாரசீக வருகையில் உள்ளவரே
*இக்கூற்றுக்கு இயைய கல்பிட்டி பகுதி திஹளி மஸ்ஜித் வளவிலும், சிலாபத்தறையிலும் அண்மை காலம்வரை பெருக்கு மரங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புத்தளம் பழைய கொதுபாப் பள்ளி வளவிலும் எழுபது அடிகள் உயரமும் நாற்பத்தாறு அடிகள் சுற்றவும் கொண்ட பெருக்கு மரம் நின்றதாகவும் திரு. டெனண்ட் 1940ல் குறிப்பிட்டுள்ளார். பெருக்கு மரத்துக்கு ஆங்கிலத்தில் பெஓ-பப் (Beo-Bub) என அழைக்கப்படும்.
$ அம்பன் பொளைக்கு இரண்டரை மைல் கிழக்கில் "அஸ்வந்துழ" என்ற கிராமமுமுண்டு
எம். ஐ. எம். ப்துல் லத்தி f

Page 33
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
9இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கும் கடல் வழியிலான வாகன போக்குவரத்துப்பாதை (பாலம்) யானது தலை மன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையே அமையும் என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருகின்றன. எனினும் தரைத்தோற்ற இயற்கை அமைப்பின் படியும், அண்மித்த தூர அடிப்படையிலும் நோக்கும் போது இப்பாதையானது தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தான் அமையும் என்பதே பொருந்தும்.
இராமர் அணை அல்லது ஆதாமின் பாலம் என அழைக்கப்படும் இயற்கை அமைப்பிலான கண்டத்திட்டுப் பகுதியானது தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே சுமார் 18 வரையான திட்டுகளுடன் (தீடை) அமைந்துள்ளது. இப்பகுதியிலேயே பாதை அல்லது பாலம் அமைய முடியும். அவ்விடைவெளியின் தூரம் 29 கி. மீ. ஆனால் தலை மன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான தூரம் சுமார் 48 கி. மீ. இது சற்று ஆழமான கடற்பகுதியும் கூட. இராமேஸ்வரம் பிரதேசத்தில் தலை மன்னாரை நோக்கிய வண்ணம் நீண்டிருக்கும் நிலப்பகுதியின் முனைப்பகுதியே தனுஷ்கோடி 1964ம் ஆண்டின் பிற் பகுதியில் வீசிய சூறாவழியினால் தனுஷ்கோடி உட்பட தமிழ் நாட்டின் தென் பகுதியும், இலங்கையின் வடக்குக் வடமேற்கு கரைப்பகுதியும் கூட பெரும் சேதத்துக்கு உள்ளாயின. இதனால் கப்பல் துறைமுகமாயிருந்த தனுஷ்கோடியின் பாலம் உட்பட நிர்வாக அலுவலகங்கள் யாவும் பலத்த சேதமுற்றன. இவற்றின் சிதைவுகளை இன்றும் காணலாம். தற்போது இங்கு மீனவர்கள் சிறு சிறு குடிசைகளில் வசித்து வருகின்றனர். தனுஷ்கோடியில் இருந்து இராமேஸ்வரத்துக்கு தற்போதும் பஸ் வண்டி மற்றும் வாகனப் போக்கு வரத்துகள் சாதாரணமாக நடைபெறுகின்றன. எனவே பாதை அமைக்கப்பட்ட பின்னர் தலை மன்னாரில் இருந்து வாகனங்கள் மூலம் தனுஷ்கோடியை அடைந்து அங்கிருந்து சமார் 19 கி. மீ. தூரத்திலுள்ள இராமேஸ்வரம் ஊடாக தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பயணிக்கலாம்.
tosstry Guest sps) தலை மன்னார் ஆதம் பாலம் தனுஷ்கோடி . இராமேஸ்வரம்
வேத்ஹிமி சாலே பண்டார என்ற முஸ்லிம் மன்னன், தம்பதெனியாவில் கி. பி. 1220 - 1224 வரை ஆட்சி செய்த 3ம் விஜயபாகுவுக்கும், பேருவள முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகளான மானா உம்மா, மானும்மா, மானம்மா எனப்பட்ட ‘யகடதோலிய , அல்லது 'மெதகெட்டிய ஹாமினே' எனப்படும் அம்மன்னனின் இரண்டாம் தாரத்துக்குப் பிறந்தவன் எனவும் சில நாட்டார் கதைகள் கூறுகின்றன. வத்ஹிமி குருனாகலில் கி. பி. 1234 - 1236 காலப்பகுதியில் ஆட்சி புரிந்திருக்கலாம் என்ற அனுமானங்களும் உண்டு. (தினகரன் வாரமஞ்சரி 05-05-2002)
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
முதல் மனித தோற்றம் பற்றி பரிசுத்த வேத நூல்கள் கூறுவன. முதல் மனித தோற்றம் பற்றி பரிசுத்தவேதாகமும் (பைபில் பழைய ஏற்பாடு) புனித அல்குர்ஆனும் கிட்டத்தட்ட ஒரே கருத்துக்களையே கொண்டிருப்பதைக் காணமுடிகிறது, முதல் மனித படைப்பான ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட விதம், அவரது மனைவி படைக்கப்பட்ட விதம், மேலுலக வாழ்க்கை, பூமிக்கு இறக்கப்பட்டமை, ஆதம் வாழ்ந்த காலம் (930 வருடம்) என்பவை பற்றிய வேத கருத்துக்கள் வருமாறு: பரிசுத்த வேதாகமம் 01) 02 : 07
“தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துவமானான்.
02) 02 : 08
‘'தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உருவாக்கி தாம் உருவாக்கினு மனுஷனை அதிலே வைத்தார்’
03) 02 : 19
“தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவித பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி ஆதம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும் படி அவைகளை அவனிடத்தில் கொண்டு வந்தார், அந்தந்த ஜீவ ஐந்துக்களுக்கு ஆதம் எந்தெந்த பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயராயிற்று”
04) 02 : 22
“தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுவழியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்’
05) 03 : 20
“ஆதம் தன் மனைவிக்கு ஏவால் என்று பெயரிட்டான், ஏனெனில் அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்"
எம். : எ. , ,

Page 34
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயனங்களும்
06) 02 : 09
“தேவனாகிய கர்த்தர் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு
நலமும் ஆன சகல வித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவில் ஜீவ விருட்சத்தையும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியில் இருந்து முளைக்கப்பண்ணினார்.
07) 03 : 23
“அவன் எடுக்கப்பட்ட மண்ணை பண்படுத்த தேவனாகிய
கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்தில் இருந்து அனுப்பிவிட்டார்.”
08) 03 : 19
“நீ பூமியில் இருந்து எடுக்கப்பட்ட படியால் நீ பூமிக்குத் திரும்பும்
மட்டும் உன்முகத்தின் வியர்வையால் ஆகாரம் புசிப்பாய், நீ மண்ணாய், இருக்கிறாய் மண்ணுக்கு திரும்புவாய் என்றார்.”
புனித அல்குர்ஆன்
01) 02 : 30
" (நபியே!) உமதிறைவன் மலக்குகளை நோக்கி “நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக அமைக்கப்போகிறேன்.” எனக்கூறி சமயத்தில்.”
02) 06 : 02
"அவனே உங்களை களிமண்ணிலிருந்து சிருஷ்டித்தான்.
03) 30 : 20
“உங்களை மண்ணிலிருந்து சிருஷ்டிப்பது அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும்”
04) 37 : 11
“(காய்ந்தால் சர சர என்று சப்தமிடும்) பிசு பிசுப்பான களிமண்ணினால் நிச்சயமாக நாமே அவர்களைப் படைத்தோம்.”
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 

மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புத்தளம்
05) 02 : 31
“பின்பு (ஆதமை படைத்து) ஆதமுக்கு (இப்பூமியில் உள்ள) எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக்கொடுத்து, பின்னர் அவற்றை (அந்த) மலக்குகளின் முன்பாக்கி (மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதி இல்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை நீங்கள் எனக்கறிவியுங்கள் எனக்கூறினான்.”
06) 02 : 33
(பின்னர் இறைவன்) 'ஆதமே! நீர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியும் ” எனக்கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்த போது, அவன் (மலக்குகளை நோக்கி).
07) 02 : 35
“பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியை படைத்து, ஆதமை நோக்கி) ‘ஆதமே! நீர் உம்முடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் விரும்பியவற்றை தாராளமாகப் புசியுங்கள், ஆனால் இவ்விருட்சத்தை அனுகாதீர்கள்! அனுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினான்.
08) 02 : 36
“ஆகவே ஷய்த்தான் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரையும் அ(ச்சுவனத்)திலிருந்து சருகச்செய்து அப்பால் அவ்விருவரும் எ(நீதஅந்தஸ்)தில் இருந்தனரோ அதனை விட்டு அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான். இன்னும், ‘நீங்கள் கீழிறங்கி விடுங்கள். உங்களில் சிலர் சிலருக்கு பகைவர் ஆவார், மேலும் உங்களுக்குப் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்குதலும் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று (அவர்களை நோக்கி) நாம் கூறினோம்”
51. g. 6tuð. 34j39l Gð sig

Page 35
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
09) 02 : 38
(பின்பும்) நாம் கூறினோம் “இதிலிருந்து நீங்கள் அனைவரும் இறங்கி விடுங்கள், அப்பால் என்னிலிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர் வழிவரும், அப்பொழுது எனது நேர் வழியை எவர் பின்பற்றுகிறாரோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் துக்கிக்கவும் மாட்டார்கள்’
குறிப்பு : ஆதம் என்றால் ‘மண்ணிலான குழம்பினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று பொருளாகும்.
(குழைக்கப்பட்ட கழிமண்ணினால் ஒரு உருவத்தை அள்ளாஹற் படைத்து ஜீவாத்மாவை அதில் நுளைவித்து அதன் அகத்தையும் புறத்தையும் சம்பூரணமாக்கி அழகிய மனிதனாக ஆக்கினான். அவர்தாம் ஆதம் நபி (அலை) அவர்கள்) . ”(தப்ஸிர் அன்வாருல் குர்ஆன்)
'......... அவருக்குத் துணைவியாக அன்னை ஹவ்வா (அலை) அவர்களையும் அவரது விலா எலும்பிலிந்து சிருஷ்டித்து அவருக்கு மனைவியாக்கி வைத்தான்.” (தப்ஸிர் அன்வாருல் குர்ஆன்)
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
 
 
 

மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புத்தளம் -
சிலாவத்துறைக்கான பயணமும், அங்கு சில மணிநேரங்களும்
பிரதேச வரலாற்றுச் சிறப்பு :
'......... வெற்றிக் குதிரை மலையும் கொடியும் தெரியுதே பத்திரமாகவே சாஹிபைப் போற்றி பாலுடன் கிச்சடியாக்கி அங்கே பாத்திஹா ஒதியே நேர்த்தியைப் பகிர்ந்து பார மலைவிட்டு நீங்கி அருள் சித்திர முத்து சிலாபத் துறைமுகம். 9
எனக் கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டி புலவர் மர்ஹம் அசனார் மரைக்கார் செய்கு இஸ்மாயில் புலவர் அவர்கள் தமது கப்பற் பயணத் தொடர் பாவிலே குதிரை மலையையும், மன்னார் சிலாபத் துறையையும் இணைத்துப் பாடியுள்ளார். அவர் சிலாபத்துறையை, “அருள் சித்திர முத்துச் சிலாபத் துறைமுகம்” என்று சிலாகித்துப் பாடும் அளவுக்கு அந்த நகரம் பண்டைய புகழ் மிக்கதாய் விளங்கியுள்ளமைப் புலப்படுகிறது. அருள் மிக்க சித்திர முத்துக்கள் கிடைக்கப்பெற்ற புண்ணிய பூமி அது!
“...சலாபம் என்றாலே முத்துக் குளித்தல் என்று பொருள் படும். முத்துச் சலாபம் என்றும் கூறுவர். முத்துக் குளிக்கும் பருவ காலங்கள் உண்டு. அக்காலத்தில் சுறுசுறுப்பு நிறைந்த சன நெருக்கடியுடன் கூடிய துறை முகப் பிரதேசங்கள் இங்கு இருந்தன. பல நிறத்தவரும், பல நாட்டவரும், பல சாதியினரும், குடி மக்களும், தத்தமது கலங்களை எதிர் கொள்ளத் துடித்தோடும் கலச் சொந்தக்காரர்களும், அக் கலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருகைக்காக, அவர்கள் முகங்களைக் காண ஏங்கி நிற்கும் குடும்பங்களும், பலவிதமான உடைகளனிந்த பல வண்ணங்களும், பல தோற்றங்களும் உள்ள நகை வணிகர்களும், தரகர்களும், முத்து வணிகர்களும், முத்து சிப்பிகளைத் தெரிவு செய்து வகைப்படுத்துவோரும், அவைகளைக் கூடையில் அள்ளிச் சுமந்துச் செல்வோரும், முத்துக்களை ஆராய்ந்து நிறுத்துப் பார்ப்போரும், தரத்துக்கேற்ப முத்துக்களின் பெறுமதியை நிர்ணயிப்போரும், சிப்பிகளை-முத்துக்களை அறுப்போரும், ஆக பலதரப்பட்ட அலுவல்களையும் புரியும் மக்கள் எம் கண் முன்னே நிழலாடுகின்றனர். அங்கு உள் நாட்டு, வெளி நாட்டுப் பொருட்களை விற்கும் வியாபார நிலையங்களும், உணவுச் சாலைகளும், கடைக்
6 . . . 6iv. 39FÜhjoŮ (NA),

Page 36
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
S5356TD - கண்ணிகளும், நிறைந்து கலகலப்பாக விளங்கும் காட்சி மனதை அள்ளக்கூடியன! சனக் கூச்சலினால் அப்பிராந்தியமே களைகட்டி கொண்டிருக்கும், அமைதியை நிலை நாட்டும் அரசுக் காவலர்களும், அங்கே நடமாடுவர்.”
என ‘புத்தளம் வரலாறும், மரபுகளும்' என்னும் நூலில் பண்டைய சிலாபத்துறையின் காட்சிகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் வடமேற்குக் கரை முத்துக் குளிப்புக்குப் பெயர்பெற்ற பிரதேசம் எனவும், இதன் அடிப்படையில் குதிரை மலை, பொன் பரப்புப் பகுதி, சிலாபத்துறை பகுதிகள் முன்பு முத்துக் குளிப்புக்குப் பெயர்பெற்று, உலக நாடுகளை ஈர்க்கும் வளங்கொழிக்கும் பகுதியாக மிளிர்ந்துள்ளன. கிளியோபெற்றா, மற்றும் எகிப்திய, உரோமப் பேரரசிகள், உயர்குலப் பெண்கள் முத்து மாலைகள் அணிவதில் பேருவகைக் கொண்டிருந்தனர். எனவே சிலாபத்துறையும், அதற்கு நேரெதிரே கடலில் முத்துப போலக் காட்சியளிக்கும் குதிரை மலையும், பொன் பரப்புக் கடலும் (வில்பற்று) பண்டைக் காலத்தில் பெறுமதியான முத்துக்களை வாங்கிச் செல்ல கப்பலில் வருகை தரும் அராபிய, ஐரோப்பிய பெரு வணிகர்களின் வர்த்தக பூமியாக விளங்கின: அதனால் இப்பகுதிகளில் செல்வ வளம் பெருகின: பெரு வீடுகளும், வர்த்த: நிறுவனங்களும் தோன்றின.
மலையாளத்திலுள்ள ‘கோலாங்” என்ற இடத்திலிருந்து வரும் ‘‘லெப்பைகள்’ என அழைக்கப்பட்ட முஸ்லிம்கள் மூழ்குவோருக்குப் பயிற்சியளிப்பதில் வல்லுனராகக் கருதப்பட்டனர், அவர்கள் சலாபக் கரைகளில் இருந்தே பயிற்சி கொடுப்பர், குதிரை மலைக்கு எதிரே உள்ள கடலில் ‘பார்கள்’ உள்ளதாக வரை படங்கள் தெளிவு படுத்துகின்றன. முத்து வியாபாரம் அராபியர்களிடமிருந்து, ஐரோப்பியரின் கைக்கு மாறிவிட்ட பின்பும், முத்துக் குளிக்க ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது முஸ்லிம்களுக்கே முதலிடம் அளித்தனர், அவர்களிடம் குடிப் பழக்கம் இல்லாதிருந்ததும், அதனால் கடலுள் அதிக நேரம் மூச்சுப் பிடித்து இருக்க முடிந்தமை எனவும், முத்துக்குளித்தல் காலத்துக்குக் காலம் நடைபெறுவது எனவும் அந்நூலில், இப்பிரதேசத்துக்குப் பெருமை தரக்கூடிய முத்துக்குளித்தல் பற்றி மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
எகிப்தின் எழிலரசி, பேரரசி கிளியோபெற்றாவின் மணிமுடியை அலங்கரித்த பெறுமதி மிக்க முத்து, சிலாபத்துறைக் கடலிலிருந்து பெறப்பட்டதே எனவும் பிரதேச ஐதீகக் கதைகள் கூறுகின்றன. எனினும் முத்துக்குளித்தல் தற்போது அரிதாகி விட்டது. இப்பகுதிக் கடலில் கண்டமேடை விசாலமாக இருப்பதால் மீன் பிடித் தொழில் பிரதான இடத்தை வகிக்கின்றது. அத்துடன் பெறுமதி மிக்க கடல் அட்டை, சிங்கி இறாள், சங்கு, நாகவடம், கலர்மீன், கடற்குதிரை போன்றவைகளும் சுழியோடிகளால் பிடிக்கப்பட்டன. இவை தவிர பரந்துபட்ட கடலைப் போல பரந்துபட்ட விவசாய பூமியையும் முசலிப் பிரதேசம் பெற்றிருப்பதாலும், அருகே வனவளமும் சேர்ந்திருப்பதாலும், அவை சார்ந்த விவசாயம், கால் நடை வளர்ப்பு, காட்டுத்தொழில் என்பனவும் இப்பகுதி மக்களின் பிரதான அடிப்படைத் தொழில்களாக அமைந்து பொருளாதார வளத்துடன் வளமான வாழ்வு வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அண்மைகால கோர யுத்தமும், இனப்பிரச்சினையும் இப்பிராந்திய முஸ்லிம், தமிழ் மக்களை வெகுவாகவே பாதித்திருப்பதை நேரில் சென்று பார்த்தாலே முழுதாகப் புரிந்தும், தெரிந்தும் கொள்ளலாம்!!
பணி டைய புகழ் மிக்க இச் சிலாபத் துறையானது, மன்னாருக்குத் தெற்கிலும், குதிரை மலை முனைக்கு வடக்கிலும் ஓரளவு குடா சார்ந்த அமைப்பில் கரையோரமாக அமைந்துள்ளது. மன்னார் மாவட்டத்திலேயுள்ள மன்னார், மாந்தை, நானாட்டான், மடு, முசலி உள்ளடக்கிய ஐந்து பிரதேசச் செயலகப் பகுதிகளில் முசலி செயலகப் பிரிவு மாத்திரமே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு செயலகப் பிரிவாகும், அது மாத்திரமன்றி முழு வட பிராந்தியத்திலும் கூட முசலி பிரதேசம் மாத்திரம்தான் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு பிரதேசச் செயலகமும், அத்துடன் ஒரேயொரு பிரதேசச் சபையுமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது!
முசலி பிரதேசச் சபைப் பிரிவுக்குள் 26 கிராமங்கள் உள்ளன. இவற்றுள் 21 கிராமங்கள் முஸ்லிம்களையும் 05 கிராமங்கள் தமிழ் மக்களையும் பெரும்பான்மையாகக் கொண்டவை. இவற்றுள் மறிச்சிக்கட்டி, கரடிக்குளி, பாலக்குழி, கொண்டச்சி, தம்பட்ட முதலிக் கட்டு, கூழாங்குளம், புதுவெளி, சிலாபத்துறை, பண்டாரவெளி, சிறுகுளம், வார்வெளி, மேத்தன்வெளி, சின்ன
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 37
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
புள்ளச்சி, பொற்கேணி, வேப்பங்குளம், பிச்சுவாணியன் குளம், முசலி, மணக்குளம், இலந்தைக்குளம், பூனொச்சிக் குளம், நாலாம் கட்டை, அகத்திமுறிப்பு என்பன 21 முஸ்லிம் கிராமங்கள், எனவும் முள்ளிக் குளம், கொக்குப்படையான், சவேரியர்ப் புரம், அரிப்புத் துறை, மதுர மடு என்பன தமிழ்க் கிராமங்கள் எனவும் அறியப்பட்டுள்ளது.
இந்த 26 கிராமங்களுக்கும் தலை நகராக விளங்கியது சிலாபத்துறை, இங்கேயே பிரதேசச் செயலகம், கமத் தொழில் விரிவாக்க நிலையம், இலங்கை வங்கிக் கிளை, வைத்தியசாலை, பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, காதி நீதி மன்றம், சீநோர் ஜஸ் பதனிடும் தொழிற்சாலை, கனிட்ட வித்தியாலயம், எனப் பல்வேறு நிறுவனங்களும் அங்கு அமைந்திருந்தன.
முசலி பிரதேசமானது, கிழக்கு மாகாணத்தில் தற்போது வலியுறுத்தப்படும், கரையோர மாவட்டத்தை விட விசாலமானது எனச் சொல்லப்படுகின்றது, அதாவது இந்த கரையோர மாவட்டம் 150 சதுர மைல் பரப்பு எனவும், முசலிப்பிரதேசம் 288 சதுர மைல் பரப்புடையது எனவும், அதுபோல கோரிக்கை விடப்பட்டிருக்கும் தென் கிழக்கு அலகையொத்த விசால பரப்பையும் முசலிப் பிரதேசம் உள்ளடக்கியுள்ளது எனவும் தெரிய வருகின்றது. இங்கு சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காணியில் விவசாயம் செய்யப்படுகின்றது.
இத்தகைய வளங்களையும், பெரு நிலப்பரப்பையும் உள்ளடக்கிய முசலி முஸ்லிம் பிரதேசத்திலிருந்தும் பல்லாயிரம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் "அகதிகள்", "இடம் பெயர்ந்தோர்" என்ற இரண்டாந்தர சொல்லுக்குள்ளாகி, சொல்லொணாத் துன்பங்கள், துயரங்களுக்கும் மத்தியில் அல்லலுற்று, கணக்கில் சொல்லவும், வர்ணிக்கவும் முடியாத அளவுக்கு பொருள், உடமை, மற்றும் உயிரிழப்புகளுக்கு உள்ளாகி, நாட்டின் பல்வேறு பாகங்களிலும், "வந்தான் வரத்தான்" என்ற கேவலமான அடை மொழிக்கும் ஆளாகி, அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பல்வேறு உலக அழுத்தங்களுக்கும் மத்தியில் "ரணில் - பிரபா" யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒருவாறு அமுலாகி சுதந்திர சமாதானத்தின் ஒளிக்கிற்று வெகு துாரத்திலே மின்ன ஆரம்பித்திருக்கும் இவ்வேளையிலே, கிடைத்த இந்தச்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தத்தமது பிறந்தகத்தை, தாயக மண்ணை, தாயகத்தின் மண்ணில் நின்று அந்தச் சுதந்திரக் காற்றைச் சற்று சுவாசித்தாவது வந்திடுவோமே என்ற உந்துதலில் ஏவ்ப்பட்டு வடக்கின் பல்வேறு தாயக மண்பிரிவுகளுக்கும் புறப்பட்டுச் சென்ற முஸ்லிம் சகோதரர்களின் வரிசையிலே முசலியின் தலை நகர் ‘‘அருள் சித்திரமுத்துச் சிலாபத்துறை முஸ்லிம்களும் புறப்பட்டுச்சென்றனர்!! அவர்களுக்குக் கிடைத்த பன்னிரண்டு வருடங்கள் கழிந்த அந்த மீள் பயணம், புத்தளம் நகரைத் தாயகமாகக் கொண்ட நிருபர்களாகிய எனக்கும், ஜனாப் எம். ஐ. எம். அஸ்லம் அவர்களுக்கும் அது கன்னிப் பயணமாகவே அமைந்தது. இது ஒரு வரலாற்றுப் பயணமே!!
கடந்த 27.04.2002 அதிகாலையிலே கற்பிட்டி நகரிலிருந்து சிலாபத்துறைக்குப் புறப்பட்ட மஞ்சள் நிற மக்கள் மய பேருந்து வண்டியிலே 47 ஊரவரும் இரண்டு, நிருபர்களுமாகிய நாமும், இணைந்து பயணத்தை மேற்கொண்டோம். இடம் பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம் மக்களில் சுமார் 75% விகிதத்தினர் கற்பிட்டி, புத்தளம் பகுதிகளிலேயே கடந்த பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றனர், இதனாலேயே பேருந்து வண்டியும் கல்பிட்டியிலிருந்து பயணத்தை தொடர்ந்தது. அது புத்தளம், அநுராதபுர நகரங்களினுாடே மதவாச்சி நகரை அடைந்து, அங்கிருந்து மேற்கு நோக்கி மன்னார் செல்லும் ஏ14 வீதியில் வண்டி பயணிக்க ஆரம்பித்த போதே பல்லாண்டு கழித்து தாயகத்தின் சுகந்த காற்று தம்மை நோக்கி வீச ஆரம்பித்து விட்டது!! என்ற ஏதோ ஒர் உணர்வோடு மக்கள் தம்மை சுதாகரித்துக் கொண்டதையும், ஒருவரோடோருவர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. ஏனெனில் அவர்கள் மதவாச்சியிலிருந்து சுமார் மூன்று (03) கிலோ மீட்டர் துாரத்துக்கு அந்த வீதியால் 19 வருடங்களுக்கு பின்னரும், அவர்களில் அனேகர் அங்கிருந்து மன்னார் வீதியால் 12 வருடங்களுக்கு பின்னரும் பயணிப்பவர்களாக இருந்ததாகும். மதவாச்சி நகரிலிருந்து மன்னார் வீதியில் மேற்படி 03 கிலோ மீற்றர் துாரம் பாதுகாப்பு நிமித்தம் 19 வருடம் நீடித்த அந்த வீதித்தடையும் இப்போது நீக்கப்பட்டிருந்தது! வண்டிக்குள்ளிருந்து பயணிகளின் இரு பக்க மருட்சியான பார்வை புதிதாக எவற்றையோ தேடுவது போன்றிருந்தாலும், அவர்களின் கண்களில் தென்பட்டதெல்லாம் வெறும் காடுகளும், இடைக்கிடை
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 38
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சின்னஞ்சிறு கிராமங்களும், அடிக்கடி இராணுவ, மற்றும் ஊர் காவலர் நிலையங்களுமேயாகும். என்ற போதிலும் பயணத்தின் போதும், மீளும் போதும் முன்னர் போன்று எவ்வித பரிசோதனைகளையும் நாம் எதிர்கொள்ளவில்லை. பதினைந்து (15) அடி அகல வீதி வழியே வண்டி இலகுவாகப் பயணிக்கையில், நீண்ட தூரத்துக்கு அதிகமான வைரமிக்க பாலை மரங்களையும், புளிய மரங்களையும், விளா மரங்களையும், நிறைந்த மயில் கூட்டங்களையும் தான் காண முடிந்தது. இவை வில்பற்று சரணாலயத்தின் வடக்கு எல்லைப்பகுதியாகும். இப்வழியே பயணிக்கும் போது பல வருடங்களின் முன்னர் றயிலில் மன்னாருக்கு பயணித்த ஞாபகம் எனக்கு வந்தது, அங்கே றயில் பாதை இருந்தமைக்கான தடயங்கள் மிக அரிதாகவே இருந்ததையும் காண முடிந்தது! மன்னார் வீதியில் முருங்கன் சந்தியிலிருந்து தெற்கே பிரியும் பாதையே சிலாபத் துறைக்கும், முசலி பிரதேசத்துக்கும் செல்லும் வீதியாகும். முருங்கன் சந்தியில முஸ்லிம்களின் முதலாவது அழிவுத் தடயம் எமது கண்களில் பட்டது, அதுவே தகர்க்கப்பட்டிருந்த மஸ்ஜிதாகும்! எனினும் அவ்வேளையில் இறங்கிப்பார்க்கவில்லை.
முருங்கன் சந்தியிலிருந்து பஸ் வண்டி தெற்கு நோக்கி திரும்பியதும் சிலாபத்துறைக் கடலின் காற்று வீசுவதாயும், சுகந்த மணம் மணப்பதாயும் பயணிகள் சிலாகித்துக் குரல் கொடுத்தனர், என்ற போதிலும் இந்த வீதி பெரிதும் பாதிக்கப்பட்டுக் குன்றும் குழிகளுமாய் காணப்பட்டதால் பதினாறு (16) கிலோ மீற்றர் தூரத்தையும் தாமதித்தே சென்றடைய நேரிட்டது. மதவாச்சி முதல் முருங்கன் வரையான 57 கிலோ மீற்றர் தூரத்தையும் கடக்க எடுத்த 90 நிமிட நேரமே ஆக பதினாறு (16) கிலோ மீற்றர் துார சிலாபத்துறை வீதியைத் தாண்டவும் எடுத்தது! பரிகாரி கண்டல், பொன் தீவுக் கண்டல் ஆகிய தமிழ் கிராமங்களைத் தாண்டும் போது சன நடமாட்டம் அதிகாமாக இருந்தது. பஸ் வண்டி மல்வத்து ஓயா என்னும் அருவி ஆற்றுப் பாலத்தை அடைந்ததும் மகிழ்ச்சியால், பஸ் வண்டியைப் பாலத்தில் தரிக்கச் செய்த பயணிகள், அதில் நின்றும் இறங்கி சற்று ஒய்வெடுத்ததுடன், பல்லாண்டுகளின் பின்பு பாலத்தின் இரு மருங்கிலும் நின்று ஆற்றின் நீரோட்டத்தை அவதானித்தவர்ளாய், முசலி முஸ்லிம் பெரு நிலத்தின் ஆரம்ப எல்லையையடைந்த மகிழ்ச்சியில் குதூகலித்தனர், என்ற போதிலும்,
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
அதன் பின்னரே வேதனைகளும், மனத்தாங்கல்களும், பெரு மூச்செறியும் நிலமைகளும் காத்திருக்கின்றன என்ற நிலமைகள் புரியாத அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் இணைந்து கொண்டு ஞாபகத்துக்காகப் படங்களும் எடுத்துக்கொண்டோம். பாலத்தைத் தாண்டியது முதல், இரண்டு பக்கங்களிலும் நெடுக காடுகளை மாத்திரமே கண்ணுற்ற, பயணிகளுக்கு அதிர்ச்சியும், ஒரு வகை கவலையுடன் கூடிய அச்ச உணர்வும் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
எவ்வித வீடுகளோ ஏனைய கட்டடங்களோ அங்கு காணப்படவில்லை, வீதியோரக் காடுகளுக்கிடையே, இடப்பக்கத்தில் அமைந்திருந்த பாசி பிடித்துக் கருமை நிறத்தில் காணப்பட்ட ஒரு முகட்டுச் சுவரில் ‘வேப்பங்குளம் அ.மு.க.பாடசாலை' என எழுதப்பட்டிருந்த வாசகத்தைவைத்தே, 'இதுதான்வேப்பங்குளம்" என்று பயணிகள் கூறிக்கொண்ட போது எமக்கும் ஆச்சரியமாகவே இருந்தது! பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பார்த்திட்ட போதிலும், இடங்களைக் கண்டுபிடிக்க பழக்கப்பட்டவர்களுக்கே தடயங்கள் தேவைப்படும் அளவுக்கு சுற்றுச் சூழல் அழிக்கப்பட்டுக் காடு மண்டிக் கிடந்த நிலைமை கவலை தருவதாய் இருந்தது. ஓரிடத்தில் வீதியோரமாய் நின்ற மதுரை மரத்தை அடையாளம் பிடித்து, இவ்விடத்தில்தான் இன்னாருடைய வீடு இருந்தது எனவும்: கூறிக்கொண்டனர்.
இரண்டு போகங்களும் விதைக்கக்கூடிய பரந்துபட்ட, பொன்கொழிக்கும் பொற்கேணி விவசாய நிலத்தைக் கண்டு பெருமைப்பட்ட பயணிகள், இப்படி அகத்தி முறிப்புத் தேக்கம், புது வெளி, முசலி, கூளாங்குளம் முதலான கிராமங்களினுாடே சென்ற பஸல் வண்டி முற்பகல் 11.15 மணியளவில் சிலாபத்துறைத் தலைவாசலைச் சென்றடைந்த போது, அங்கே முதலில் தென்பட்டவை பற்றைக் காடுகளுக்கு மத்தியில் அழிக்கப்பட்ட ஒரு மாடி வீட்டுச் சிதைவும், அதன் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த, ‘நிலக்கண்ணி வெடி பற்றிய யுனிசப் நிறுவனத்தின் எச்சரிக்கைப் பலகையுமேயாகும். இம்மாடி வீடானது சிலாபத்துறை புனர் நிர்மாண நிறுவனத்தின் செயலாளரும், ஆசிரியருமான ஜனாப். ஏ. ரீ. சமீம் அவர்களுடையதாகும். பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் தாயகத்தில் காலூன்றி சுதந்திரக் காற்றைச் சற்று சுவாசித்திடச்
எம். ஐ எம். அப்துல் லத்தி 73

Page 39
புத்தளம் - மன்னர் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
சென்ற ஊரவர்க்கு, தலை வாசலிலேயே கண்ணி வெடி எச்சரிக்கைப் பலகையை முதல் தடவையாகக் கண்டபோது ஆறாத் துயரம் அம்மக்களை ஆட்கொண்டது. கூடவே காடுகளும், சிதைந்த கட்டடங்களும் அவர்களை வரவேற்கும் முனைப்புகளாய் இருந்தன! இவை நிருபர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை.
நாம் நின்றிருந்த வீதிதான், வில்பற்று வனத்துக்கு தெற்கே அமைந்துள்ள கொழும்பு - புத்தளம் வீதியானது, புத்தளத்திலிருந்து “மன்னார் வீதி' என்ற பெயரில் புத்தளத்துக்கு வடக்கே கால ஓயா நதிக் கரையுடன் இலவன் குளத்தில் முடிவடைந்த, வில்பற்று வனத்தினூடே வண்டில் பாதையாகவும் சென்று புகலரனின் வடக்கு எல்லையிலிருந்து மோதரகம் ஆற்றைக் கடந்து மறிச்சிக்கட்டியூடாகக் கொண்டச்சி மற்றும் சிலாபத்துறையூடாக, தாழையடி வழியே மன்னாரையடையும் வீதி எனத் தெரிவிக்கப்பட்டது. 1902ம் ஆண்டில் இவ்வனப் பகுதி பிரித்தானிய ஆட்சியாளர்களால் ‘வில்பற்று புகலரனாக மாற்றி அமைக்கப்படு முன்னர் இவ்வீதி புத்தளம் - மன்னார் கரையோர பாரம்பரிய வீதியாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது, எனினும் புகலரனின் ஊடே சைக்கிள், மற்றும் வண்டில் போக்குவரத்து நடைபெற்ற போதும், தீவிரவாத நடவடிக்கை தொடர்ந்த அண்மித்த காலத்தில் இப்போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. தீவிர வாதிகளின் நடமாட்டமும், இலவன் குளத்தில் கால ஒய ஆற்று முகத்தில் இராணுவ முகாம் அமைந்துள்மையும் இதற்குக் காரணம். தற்போது நிலவும் சமாதானப் பேச்சு வார்த்தைக்கான ஆரம்ப நடவடிக்கைகளும், வடக்கு முஸ்லிம்களை அவரவர் பிரதேசங்களில் மீள் குடியமர்வை பல வழிகளிலும் இலகு படுத்தக் கூடிய புத்தளம் - மன்னார் கரையோர வீதி திறக்கப்படவும், அது மக்கள் போக்கு வரத்துக்காக திறந்து விடப்பட்டவும் வேண்டும் என்று குரல்கள் அமைச்சர்களான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், அல்ஹாஜ் நூர்தீன் மஷார், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் ரிஷாத் பதியுதீன், முதலானோராலும், மன்னார் பிரதேச முஸ்லிம் அமைப்புக்களாலும் கோரிக்கைகள் தற்போது விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பொருளாதார, கலாசார, மற்றும் உல்லாசப்பயணத் துறைகள் அபிவிருத்தி காணுவதுடன், கொழும்பு - மன்னாருக்கான போக்குவரத்துத் தூரமும் சுமார் 75 கிலோ மீட்டர்களால் குறையும் வாய்ப்புமுண்டு. (1996.11.10 தினகரன் வார மஞ்சரியிலும், சமாதானத் தீர்வு எட்டப்படும் காலத்தில் -
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இவற்றை விளக்கும் ‘புத்தளம் - மன்னார் கற்பாதை இருப்புப்பாதை அமைக்கப்படுவதற்கான நியாயமான காரணங்கள்’ என்ற தலைப்பில் எமது கட்டுரை பிரசுரமானதும் இங்கு ஞாபகமூட்டத்தக்கது.)
சிலாபத்துறையினுாடாகச் செல்லும் அதே பாரம்பரிய வீதியில் நின்றவாறே நாம் நிலமைகளை அவதானித்தவாறு எமது பயணத்தை அங்கு கால்நடையாகத் தொடர்ந்தோம். ஒரு தேநீர் கடையைத் தவிர வேறொன்றையும் காண முடியவில்லை, அதில் வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்த தமிழ் சகோதரரை இனங்கண்டு நம்மவரில் சிலர் பழைய உறவைப் புதுப்பித்துக் கொண்டதுடன், கவலையையும் பரிமாறிக்கொண்டனர், அக்கடையின் முன்னால், 'சமூக ஜோதி” ஜனாப் முஹம்மது றபீக் அவர்களின் வீடும், கடையும், அதுபோல தேநீர்க் கடையின் பின்னால் அழிந்துபட்ட சீநோர் ஐஸ் கட்டி பதனிடும் ஆலையும், சற்றுத் தொலைவில் அழிந்துபட்ட பிரதேச சபைக் கட்டடமும் காடுகளால் மூடப்பட்டே காணப்பட்டன. இதுதான் எமது பிரதான கடைத் தெருவாக இருந்தது என்றார்கள், ஆனால் அவற்றுக்கான தடயங்கள் இன்மையால் முதல் தடவையாக சென்ற எம்மால் அதனைக் கிரகிப்பதற்குக் கஷ்டமாகவே இருந்தது!
அடுத்து நாம் பற்றைக் காட்டினுாடே அழைத்துச் செல்லப்பட்ட போது சற்று தயக்கமாகவே இருந்தது. அதுதான் அம்மக்களின் பிரதான குடியிருப்புப் பகுதி எனத் தெரிய வந்ததும் சொல்லொணாத் துயரம் எம்மை ஆட்கொண்டது, அப்படி எனில் அம்மக்களின் மனத் துயரம் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் நாடி பிடித்து உணர்ந்து கொள்ளலாம்! ஓங்கி வளர்ந்த இபில் மரக் காடுகளாலும், அடர்ந்த முற்பட்றைகளாலும் மூடப்பட்டிருந்த அந்த காட்டு வீதியின் (முன்னைய குடியிருப்பு பிரதான வீதி) இரு மருங்கிலும்தான் சிலாபத்துறை முஸ்லிம்களின் லட்சக் கணக்கான ரூபாய்கள் பெறுமதியான பல வீட்டுத் தடயங்கள் உடைக்கப்பட்ட சுவர்களுடன் காட்டு மரங்களால் சூழப்பட்டுக் காட்சியளித்தமை கண்டு, உண்மையிலேயே நாம் அனைவரும் அதிர்ச்சியும், சொல்ல முடியாத அளவு கவலையும் அடைந்தோம். ஆண்டாண்டு காலம் நீடித்த கோர யுத்தத்தின் கெடுபிடி கண்டு அதிர்ந்து போய் அவர்கள் அனைவரும் என்ன செய்வது, ஏது செய்வது என்று எதுவும் புரியாது பிரம்மை பிடித்தவர்களாய், காட்டினுாடே தத்தம் பூர்வீக வீடுகளை இனங்காணுவதில் சற்றுத் தடுமாறவுஞ் செய்தனர். சிலர் கவலை
எம். ஐ. எம். "ப்துல் லத்தி

Page 40
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
மேலிட்டவர்களாய் தமது வீடுகளின் இடிந்த சுவர்களிலும், தளத்திலும் ஏறி நின்றுப் பார்வையிட்டாலும் பலர் அதனைத் தவிர்த்துக் கொண்டனர், காரணம் அங்கெல்லாம் நிலக்கண்ணி வெடிகள் புதைக் கப்பட்டிருக்கலாம், விஷ ஜந்துக்களும் குடியிருக்கலாம், என்ற பயமும், அத்தகைய எச்சரிக்கை, வந்திருந்த முதியோர் சிலரால் விடுக்கப்பட்டதுமேயாகும்!! அதனையும் மீறிய சிலர் உட்புகுந்து சென்று வீட்டுச் சுவர்களைத் தமது கரங்களால் தொட்டுத் தத்தமது மனப்பாரங்களை இறக்கிக் கொள்ள முயல்வதைக் கண்டு, அதனைப் பார்த்துக் கொண்டு நின்ற சிலரின் கண்களும் பனித்தன! சில வீடுகள் தந்தை அல்லது பாட்டன்களால் கட்டப்பட்டவை, மற்றும் சில அவர்களின் முயற்சியாலேயே கட்டப்பட்டவை.தமது வீடுகள், உடமைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை இடம் பெயர்ந்து வாழும் இடத்தில் இருந்தவாறு சில தமிழ் சகோதரர்களாலும், மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் மூலமும் ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தாலும், அதனை அவ்விடத்திலேயே நின்றவாறு பல்லாண்டுகளின் பின்பு நேரில் பார்க்க நேர்ந்த போது, பீறிட்டு எழுந்த அவர்களின் நெஞ்சுப் பாரத்தைக் கரங்களால் நெஞ்சை அழுத்தித் தடவிக் தவிர்த்துக் கொண்டதையும், சிலர் கவலை தோய்ந்த தழுதழுத்த குரல்களால் வெளிப்படுத்திக் கொண் டதையும் காண முடிந்தது!!!
தொடர்ந்து அதே வழியில் ஊர் ஜும்ஆ மஸ்ஜிதை சென்று பார்த்த போது அதுவும் கூட கூரையும், கதவுகளும் அகற்றப்பட்ட நிலையில் காடு மண்டிக் காண நேர்ந்தமை கண்டு பலர் கண்ணிர் வடித்தனர். இறை இல்லம் இடிக்கப்பட்டிருந்தமை கண்டு இறைவனிடம் இருகரம் ஏந்தினர்! மஸ்ஜிதுக்குப் பின்னால் மாவட்ட வைத்தியசாலைக் கட்டிடமும் இருந்த இடம் தெரியாது நீர்த் தாங்கியுடன் மாத்திரம் குட்டிச் சுவர்களுடன் காட்டுக்குள் காட்சி தந்தது
பாழடிக்கப்பட்டு கைவிடப்பட்ட வரலாற்றுத் தடயங்களுடன் கூடிய புராதன சிறு நகரம் ஒன்றினைக் காடுகளினுாடே கண்டு விட்டு வெளியேறிய ஒருவித பிரமையுடன், பள்ளி வாசல் திடரில் இருந்து பார்த்த போது, அங்கே எதிரே சிலாபத்துறையின் பரந்து விரிந்த நீலக்கடலும், நெடிய கடற்கரை மணற்றிடலும், தூரத்தில் குதிரை மலை முனையும், வில்பற்று வனத்தின் கரைப்பகுதியும்,
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் மக்கள் செறிவோ, படகுப் பயணங்களோ எதுவுமின்றி, களை இழந்து காட்சி அளித்தன,
மயான பூமியில் நின்று எதனையோ தேடுவது போன்று அம்மக்களின் பார்வை வெளிப்பட்டன; அதற்கேற்ப மயான அமைதியும் அங்கே நிலை கொண்டிருந்தது!! கொடிய யுத்தம் பல்லாண்டு நிலவிய கலகலப்பைப் பறித்து விட்டிருந்தது!!!
என்ற போதிலும் கரைப் பகுதிக்கு வாஞ்சையுடன் சென்ற முஸ்லிம்கள் கடல் நீரில் கால்களை நனைத்துப் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். சில வாலிபர்கள் பழைய நினைவுகள் மேலிட்டவர்களாய் இடுப்பளவு நீரில் இறங்கி நீராடினர். பாடல் பெற்ற முத்துச் சிலாபத் துறைக் கடலிலும், கரையிலும் கன காலத்தின் பின்பு சற்றுக் கல கலப்புக் காணப்பட்டாலும், அவர்கள் சற்று முன்பு கண்டு வந்த கோரக் காட்சிகளையிட்டே கதைத்துக் கொண்டனர். வடக்கே சற்று தொலைவில் தென்னந்தோப்பு காட்சி தந்தது, பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த எமது சாரதியும், நடத்துனரும், ஓரிரு இளைஞர்களும், நீண்ட கரையில் ஒதுங்கிக் கிடந்த அதிகமான அழகிய சங்குகளையும், சிப்பிகளையும் சேகரிப்பதில் ஈடுபட்டனர். அவையும் தேடுவாரற்றே ஒதுங்கிக் கிடந்தன!
கடற் கரையில் சிறிது பொழுதை, சுகந்த காற்றைச் சுவாசித்துக் கால்களையும் நனைத்துக் கொண்ட அவர்கள் மீண்டும் அதே காட்டு வழியில் பிரதான வீதிக்கு வந்து, அங்கிருந்து வண்டி மூலம் தாம் கற்ற பாடசாலையை அடைந்தனர். சிலாபத் துறை அரசினர் மு.க.பாடசாலை என்ற வாசகம் எழுதப்பட்ட அந்த புதிய பாடசாலைக் கட்டடங்கள் இரண்டும் மாத்திரமே, அவ்வூரில் முழுதான கட்டடங்கள் என்றோ அல்லது அரச கட்டடங்கள் என்றோ சொல்லிக் கொள்ள இருந்த ஒரே அமைப்பாகும். தமிழில் பெரிதாகக் கறுப்புத் தீந்தையால் எழுதப்பட்டிருந்த பாடசாலையின் பெயரின் a Gyp, Sou Slp 60LDu360TT6) UNHCR MICRO PROJECT 99/PES/024 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கே முஸ்லிம் பிள்ளைகளின் வாடையே இல்லாத போதும் புதிய கட்டடத்தில் முஸ்லிம் பாடசாலை என்றே எழுதப்பட்டிருந்தமை அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. பயண ஏற்பாட்டாளர்களின் முன் கூட்டிய ஏற்பாட்டின் பிரகாரம்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 41
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் இங்கே மன்னாரிலிருந்து வருகைத் தந்து எம்மை வரவேற்று உபசரித்த மன்னார் பிரதிக் கல்விப் பணிப்பபாளர் திருமதி. சுகந்தி செபஸ்தியன் (கல்வி முகாமை) அவர்கள் போதிய விளக்கம் தந்தார். இவர் பிரதி கல்விப் பணிப்பாளர் என்ற தோரணையில் இங்கே வருகைத் தந்திருந்தார் என்பதை விட முந்திய பாசம், உறவு மேலிட்டவராய் மன்னாரிலிருந்து ஓடோடி வந்து உபசரித்தார் என்பதுவே உண்மை. ஆம்! 1982ம் ஆண்டில் உதவி ஆசிரியையாக இதே முஸ்லிம் பாடசாலையில் நியமனம் பெற்று அங்கே கூடி நின்ற முஸ்லிம் வாலிபர் பலருக்கு கல்வியை 1990ம் ஆண்டு வரை புகட்டியவர். அதாவது இம்முன்னாள் மாணவர்களும், பெரியோர்களும் ஊரைவிட்டே வெளியேற்றப்படுவதற்கு அண்மித்த காலம்வரை எட்டு (08) வருடங்கள் அவ்வூர் மக்களோடு பழகியவர், உறவாடியவர் என்ற பந்த பாசத்தோடுதான், பன்னிரண்டு (12) வருடங்களின் பின்பு அம்மக்களைக் கண்டிட வந்திருந்தார் என்பதுவே உண்மை!
அவர் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், ‘நீங்கள் கற்ற இந்த இடத்திலிருந்த பாடசாலைக் கட்டடங்களும் கோர யுத்தத்தால் அழிந்துவிட்டன. இந்த நிலையில் இங்கே வசித்த தமிழர்களில் அனேகரும் வெளியேறி விடவே, வில்பற்று வனப் பகுதியை அடுத்துள்ள முள்ளிக்குளம் பகுதியில் வசித்த தமிழ் குடும்பங்கள், அங்கு இராணுவ நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்புத் தேடி அயலில் உள்ள சவேரியர் புரத்தில் குடியமர்ந்தனர், அவர்களது பிள்ளகைளதும், அயலிலுள்ள தமிழ் பிள்ளைகளதும் கல்விக்காக பாடசாலை தேவைப்பட்டது. அப்போது கடமை புரிந்த முஸ்லிம் கல்விப் பணிப்பாளர் ஜனாப் அப்துல் ஹக் அவர்களின் முயற்சியின் பேரிலும் இதே இடத்தில் ஐ.நா. உதவித் திட்டத்தின் கீழ் மீண்டும் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, முஸ்லிம் பாடசாலை என்றே பெயரும் பொறிக்கப்பட்டது. என்ற போதிலும், தற்போது ஒன்பதாம் தரம் வரை தமிழ் மாணவர்களும், தமிழரான அதிபரின் கீழ் ஐந்து ஆசிரியர்களும் கடமை புரிகின்றனர். தற்போது முஸ்லிம்களாகிய உங்களின் மீள் குடியமர்வு நிகழும் பட்சத்தில் முஸ்லிம் மாணவர்களும், முஸ்லிம் ஆசிரியர்களும் முன்பு போல மீண்டும் இணைந்து மகிழ்ச்சியுடன் சேவை புரியலாம். இதே நிலைதான் மன்னார் கல்வி வலயத்திலுள்ள 71 முஸ்லிம் பாடசாலைகளுக்கும் உள்ளது.
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
எமது காரியாலய பதிவுகளிலும் இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் பாடசாலைகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் உண்மையில் 58 பாடசாலைகளே இயங்குகின்றன என்றார். நம்மைப் போன்றில்லாது, வெளியேற்றத்தின் பின்பு பிறந்து வளர்ந்துள்ள இவ்வூரைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மாணவர்கள், தற்போது ஒருவரையொருவர் அறியாத நிலையில், மீண்டும் மீள் குடியமர்வு நிகழும் பட்சத்தில், அவர்கள் இவ்விடத்தில் ஒன்றாகக் கல்வி கற்கச் சூழ் நிலை ஏற்படும் போது அவர்களிடையே ஏற்படக்கூடிய புரிந்துணர்வு அற்ற தன்மையைப் போக்கி பழைய உறவு முறையைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்று பட்டுழைப்போம் என்றார்.” அயலில் இருந்த சிறு கடையில் அனைவருக்கும் குளிர் பானம் வாங்கிக் கொடுத்து உபசரித்த அவர், பழையவர்களைக் காணக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து விடை பெற்றார். ழுஹர் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள சூழல் சுற்றாடல் அமைப்புக்கள் வாய்ப்பாக அமைந்திருக்கவில்லை. கோர யுத்தம் பிராந்தியத்தின் அனைத்து பள்ளிவாசல்களையும், ஏனைய வணக்கஸ்தலங்களையும் கூட அழித்து விட்டன. தொடர்ந்து ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின் படி அயலிலுள்ள் சவேரியர் கிராமத்து பங்குத் தந்தையைச் சந்திப்பதற்காக அனைவரும் வண்டியில் அங்கு சென்றோம். அவர் அங்கு காணப்படவில்லை. அவர் மன்னார் சென்றிருப்பதாக அங்கு குடிசைகளில் மீன் வலைகளைச் சரிக் கட்டுவதில் ஈடுபட்டிருந்த தமிழ்ச் சகோதரர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்களும் முள்ளிக் குளம் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களேயாதலால், சிலாபத்துறை முஸ்லிம்களை அறிந்திருக்கவில்லை. தபால் நிலைய பொறுப்பாளர் மட்டும் சிலரை இனங்கண்டு கொண்டார்.
அங்கிருந்த புனித சவேரியர் ஆலயமும், இன்னும் சில தமிழர் வீடுகளும் கூரைகள், சுவர்கள் இல்லாது காட்சியளித்தன. தேவாலயமும் தகர்க்கப்பட்டிருந்ததால், அதற்கு அருகில் கிடுகினால் வேயப்பட்ட பிரார்த்தனைக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. பங்குத் தந்தையின் இல்லம் புதிய கட்டடமாகக் காணப்பட்டது. மணிக் கோபுரமும் தப்பி இருந்தது. தமிழ் சகோதரர்கள் சிலரைத் தேடிச் சென்ற சில முஸ்லிம் சகோதரர்கள் வரும் வரை நாம் தேவாலயத்தின் முன்னால் நின்ற பெரிய ஆல மரத்தின் நிழலில் சற்று ஒய்வெடுத்தோம். சற்று வேளையில் நாம் வீதிக்கு அப்பால்
எம். ஐ. எம். அப்துல் லத்தி

Page 42
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும் அமைந்திருந்த சிறு தேநீர் கடையின் அருகில் சென்ற போது, அங்கே சிலரால் அறிமுகப்படுத்தப்பட்ட கடற் புலிகளில் ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் நாம், இங்கு தேவாலய பங்குத் தந்தையைச் சந்திக்க வந்தோம், அத்துடன் விடுதலைப் புலிகளின் பகுதிப் பொறுப்பாளர்களையும் சந்திக்க விரும்புகிறோம். எனினும் சுவாமி மன்னார் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. உங்களோடும் இப்பகுதி முஸ்லிம்களின் மீள் குடியமர்வு பற்றிக் கதைக்க விரும்புகிறோம். என்று கூறிய போது அவர் எமது பெயர்களைக் கேட்டு தெரிந்து கொண்டு, இங்கே பொறுப்பான விடுதலைப் புலித் தலைவர்கள் இருவர் உள்ளனர், அவர்களே வினாக்களுக்கு விடைகள் தர முடியும், நாம் விளக்கம் தர முடியாது. தலைமைப் பீட ஏற்பாடுகள் படியே நாம் செயல் படுகின்றோம். பொறுப்பாளர்கள் இருவரும் தற்போது மன்னார் சென்றுள்ளனர். அவர்களிடமே எதையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும், என்றார். மர நிழலில் பிலாஸ்டிக் கதிரைகள் போட்டு இருக்கச் செய்து எம்மை அவர் உபசரித்தார்.
ஆலய குருவையோ அல்லது விடுதலைப் புலிப் பிரதேசப் பொறுப்பாளர்களையோ சந்திக்க முடியாது போனமைக்கு முஸ்லிம்கள் வருந்தினர். ஏனெனில் முஸ்லிம்களின் மீள் குடியமர்வுக்கு அவர்களின் உறுதியான பங்களிப்பும், ஒருமைப்பாடும் தேவை, அதைப்பற்றியும் பொறுப்பாளர்களுடனும், தேவாலய குருவானவாரிடமும் கதைப்பதற்கும் வேண்டியும்தான் அவர்களின் பயணமும் முன்கூட்டியே ஓரளவு ஏற்பாட்டுடனுமே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், வாய் மூல ஏற்பாட்டின் படி அச்சந்திப்புக்கள் நடைபெறவில்லை. எனவே நாங்கள் ஓரளவு ஏமாற்றம் அடைந்த நிலையில் இருப்பதைத் தெரிந்து கொண்ட அந்த விடுதலைப் புலி உறுப்பினர் எம்மைத் தேற்ற எண்ணியோ என்னவோ, நம்மிடம் என்ன விளக்கத்தை எதிர்ப் பார்க்கின்றீர்கள் என்றார். அதற்கு நாம், “யுத்த சூழ்நிலை முடிந்து சமாதான சூழ் நிலை தோன்றியுள்ள நிலையில், முஸ்லிம்களின் மீள் குடியமர்வு பற்றி அரச உயர் மட்டத்திலும், உங்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பின் உயர் மட்டத்திலும் பேசப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் வடபுலத்து முஸ்லிம்கள் தத்தமது தாயக மண்ணை பார்த்திடச் சென்று வந்தது போல, சிலாபத்துறை முஸ்லிம்களும் இங்கு தமது பூர்வீக இடத்தைப் பார்த்துச் செல்ல வந்துள்ளனர். எனினும் அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டும், காடு மண்டியும்
(80) எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
காணப்படுகிறன. இந்நிலையில் அவர்கள் மீள் குடியமர வருக்ை தரும் பட்சத்தில், உதவி செய்வீர்களா?” என்று கேட்ட போது, "ஆம், தலைமைப் பீடத்துக்கு அடிபணிந்து செயல் படுவது எமது கடமை, ‘அண்ணன் எதைச் சொல்கின்றாரோ, அதனைச் செயல் படுத்துவதே எமது பணி! இப்பொழுது முஸ்லிம்கள் மீள் குடியேறலாம் என எமது பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, தாராளமாக முஸ்லிம்கள் மீண்டும் குடியேறலாம், இயன்ற அளவு உதவிகளையும் நாம் செய்வோம். முஸ்லிம்களின் உடமைகள் எதையும் தமிழர் வைத்திருந்தால், அல்லது சுவீகரித்திருந்தால் அவற்றையும் மீட்டுத் தருவோம், அதே வேளை தமிழர் உடமைகளும்தான் அழிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள்! யுத்தம் என்று வரும் போது யாவுமே அழிவது, அழிக்கப்படுவது இயற்கை இங்கே பதினேழு (17) மீனவப்பாடுகள் உள்ளன, அவற்றுள் சிலாபத்துறை பாடும், பள்ளிவாசல் பாடும், முஸ்லிம்களுடையதாகும், அவைகளில் முஸ்லிம்கள் வந்து அச்சம் எதுவுமின்றி தொழில் செய்யலாம், இங்கிருந்து இடம் பெயர்ந்து கல்பிட்டி பகுதியில் வசித்து, மீண்டும் இங்கு வந்து வாழுகின்ற முஸ்லிம் குடும்பம் ஒன்று எம்மிடம் வேண்டிக் கொண்டதின் பேரில் மீன் பிடித் தொழிலுக்குத் தேவையான உதவிகளை நாம் வழங்கியுள்ளோம்!” என்றார், அவர் முஸ்லிம்களை "நானா' என்றே அடிக்கடி அழைத்தார்.
அவ்வேளை ஊர் தமிழ்ச் சகோதரர்களைத் தேடிச் சென்றிருந்த முஸ்லிம்களில் சிலர்,சில தமிழ்ச் சகோதர, சகோதரிகளுடன் வருகை தந்தனர், அவர்களுள் 68 வயது மதிக்கத்தக்க திரு. எம்.ஈ. ஜோஸப் துரை அவர்களும், அவரது குடும்பமும் நான்கு தலைமுறையாக சிலாபத் துறை முஸ்லிம்களுடனேயே வசித்து வந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனால் அவர் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் அறிந்திருந்தார். ஆதலால் பலரையும் கண்டு சுகம் விசாரித்ததுடன் இருபிரிவாரும் பழையவற்றையும் நினைவு கூர்ந்து கொண்டனர். கூடவே அவரது மகள் ஆசிரியை திருமதி. ஹெலன் றோஸ் ஜெகனாதன், மற்றது முதியவரின் மருமகள், அவர் கைக் குழந்தையுடன் வந்திருந்தார். இவரது கணவன் திரு. இமானுவேல் ஜோஸப் திவேரி, கடந்த 25.01.2001ல் அதாவது 13 மாதங்களின் முன்னர் வவுனியா சென்றவர்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்

Page 43
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
மீளவே இல்லை எனவும். அதன் பின்பே சிறிது நாளில் அக்குழந்தையும் பிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது. அவர் சோகத்தோடு காணப்பட்டார். அவரது துக்கத்தில் நாமும் கலந்து கவலை தெரிவித்தோம். ஆசிரியை அங்கு குழுமி நின்ற முஸ்லிம்கள் பலருடன் சிலாபத் தறை பாடசாலையில் கற்றவர். முஸ்லிம்களுடன் அயலயலில் வாழ்ந்தவர். இப்படியான அளவளாவலின் பின்னர் அனைவரும் ஒன்றாக மற்றொரு தமிழ் அயல் கிராமமான கொக்குப் படையானுக்குச் சென்றோம். சிலாபத் துறை முஸ்லிம் கிராமத்துக்கு இரண்டு புறமும், இரண்டு தமிழ் கிராமங்களே இருப்பது குறிப்படத்தக்கது. அவை சவேரியர் புரம், மற்றது கொக்குப் u60)LuJIT66.
கொக்குப் படையான் கிராமத்தையடைந்ததும், சந்தியில் ஒரு கிணறு தென்பட்டது.முதற் தடவையாக கிணற்றைக் கண்டதும், போத்தல்களில் கொண்டு போயிருந்த நீரும் தீர்ந்து விட்டிருந்த நிலையில் அனைவரும் கிணற்றைச் சூழ்ந்து கொண்டனர். தாகம் தீரப் நீர் பருகினர், போத்தல்களிலும் நீரை நிரப்பிக் கொண்டனர், மழை பெய்யும் அறிகுறியும் தென்பட்டது. சந்தியில் ஒரு தமிழ் குடும்டமும் சற்றுத் தூரத்தில் இன்னும் சில வீடுகளும் காணப்பட்டன. அங்கிருந்தோருக்கும் முஸ்லிம்கள் பரிச்சயமானவர்கள் எனப் புலப்படவில்லை. அங்கிருந்த இருவருமே பெண்கள், அவர்கள் புதினம் பார்ப்பது போல் இருந்தது அவர்களது பார்வை, சற்று வேளையில் அங்கிருந்த பலரையும் அறிந்த ஒருவர் வந்து அனைவரோடும் மிகவும் அந்நியோனியமாகப் பழகினார். அவரது பெயர் திரு.எஸ். ஞானம், ஒரு முக்கியஸ்தர் போல் அவரது பேச்சுக்கள் விளங்கின. இவர் தன்னை முசலி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்களில் ஒருவர் என அடையாளம் காட்டிக் கொண்டார். முஸ்லிம்கள் நண்பர்களாக இருந்த போதும் பதவியை அறிந்திருக்க நியாயமில்லை, ஏனெனில் பிரிந்து பன்னிரண்டு வருடங்கள்!!
இவரும் அங்கு வருகை தந்த இன்னும் சில தமிழ்ச் சகோதரர்களும் முஸ்லிம்களைக் கண்டதும் ஆரத் தழுவி ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தவறவில்லை!! சற்று வேளையில் முந்திய விடுதலைப் புலி உறுப்பினருடன், மற்றொரு கடற்புலி உறுப்பினரும் வந்து சேர்ந்தார், அவர் வந்ததும் கலகலப்பாகவே
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
கதைக்கத் தொடங்கினார். நிருபர்களதும், ஊரவர்களதும் சகல கேள்விகளுக்கும், ‘எமக்கு எதுவும் சொல்ல முடியாது, பொறுப்பாளர்களும் இல்லை. அண்ணன் சொல்லி விட்டார்தானே! அதன்படியேதான் நாம் நடப்போம், அதுவே எமது பணி, மேற் கொண்டு நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை”, எனக் கலகலப்பாக அவர் சிரித்துச் சமாளித்ததில், வருகை தந்திருந்த அனைவருமே திருப்தி காணவில்லை என்பதை உணர்ந்து கொண்ட திரு. ஞானம் அவர்கள், “முஸ்லிம்கள் எமது சகோதரர்கள், ஒன்றாகக் கூடி வாழ்ந்தோம், நீங்கள் இங்கிருந்து சென்ற பின்பு ஒருவித தனிமைக்கு நாம் தள்ளப்பட்டோம், நீங்கள் ஏதோ நிம்மதியுடன் வாழுகின்றீர்கள், நாம் எப்போதும் அச்ச உணர்வோடேயே வாழ்ந்து வருகின்றோம்.
நீங்கள் இன்மையால் நாம் பொருளாதார மட்டத்திலும், போக்குவரத்து, மற்றும் வைத்திய சுகாதார, மின்சார வசதிகள் போன்ற இன்னோரன்ன வசதிகள் யாவுமே இழக்கப்பட்ட நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். சனத்தொகை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் குடியிருந்த இடங்களும் காடுகளாகி சமீபத்திலுள்ள வில்பற்று வனத்து யானைகளும் இங்கு வந்து எம்மை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் முஸ்லிம்களின் மீள் குடியமர்வு பற்றி முசலி பிரதேச செயலாளர் மட்டத்தில் நாம் சந்தித்துக் கதைத்த போது, அவர்களுக்கு 100'X 20 அளவிலான தற்காலிக மடுவங்கள் அமைத்துக் கொடுத்தல் பற்றியும் ஏற்பாடுகள் உள்ளதாயும், அதிலிருந்து கொண்டு தேவையான புதிய பல விடயங்களைச் செயல் படுத்தலாம் எனவும், பேசப்பட்டுள்ளது. இவை தவிர எமது இயன்ற உதவிகளையும் நாம் வழங்குவோம், சிலாபத்துறை, கொண்டச்சி பகுதிகளில்தான் நிலக்கண்ணி வெடி அச்சுறுத்தல் பிரச்சினைகள் உள்ளன. இவைகளும் அகற்றித் தரப்படும், உங்களின் தொழுகைகளுக்கான இட வசதிகளையும் தேவைப்படும் காலம் மட்டும் எமது பகுதிகளில் செய்து தருவோம், நீங்கள் அனைவரும் மீண்டும் வந்து வாழ்க்கையை இங்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோளும், விருப்பமுமாகும். என்றார்!” அங்கிருந்த அனைத்து தமிழ் சகோதர, சகோதரியரின் கருத்துக்களும் அதுவாகவே இருந்தது. அப்போது நேரம் மாலை 4.15ஆகி இருந்தது. வானமும் மழை மூட்டத்துடன் இருட்டத் தொடங்கிய நிலையில், பன்னிரண்டு வருடங்களின் பின்னரான சில மணிநேர சந்திப்பை முடித்துக் கொண்ட இரு
எம். ஐ. எம். அப்துல லத்தி

Page 44
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
பகுதியாரும், சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட சிலாபத் துறையிலிருந்து பிரிக்க முடியாத பாசத்துடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பாடல் பெற்ற முத்துச் சிலாபத்துறையில், முந்திய நிலையில், பரந்துபட்ட நிலக் கடலையும், நெடிய கடற்கரை வெண்மணற்றிடரையும், காணப்பட்ட அழகிய சங்கு சிப்பிகளையும், எதிரே தெரியும், குதிரை மலைப் முனைப் பகுதியையும், விரிந்த நில வானத்தையும், சிலரின் அன்பு உள்ளங்களையும், தவிர அங்கு முழுமையாக எதனையும் கண்டு கொள்ள முடியவில்லை! இதே நிலைதான் முசலிப் பிரதேசத்திலுள்ள சகல கிராமங்களினதும், யுத்த அனர்த்த சோகக் கதையாகும்! சாவகச்சேரி முதலான இடங்களின் யுத்த அனர்த்த அழிவுகளைக் கண்டு கொண்ட உலகம், சிரழிக்கப்பட்ட சிலாபத்துறை மற்றும் முசலிப் பிரதேசக் கிராமங்களினதும், சோக அழிவுக் கதைகளையும் கண்டு கொள்ளாதது விந்தையிலும் விந்தைதான்!!! காலம்தான் இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்.
அங்கிருந்து கல்பிட்டியை நோக்கிய பயணத்தின் போது, யதார்த்தத்தில் பயணிகள் நேரில் அவதானித்துக் கொண்டவற்றை அடிப்படையாக வைத்து, மீள் குடியமர்வை எப்படிச் சாதிப்பது?, எவ்வாறு சாதிப்பது?, எவ்வளவு காலத்தில் சாதிப்பது?, என்பன போன்ற விடயங்களே அவர்களின் சம்பாஷணையாக அமைந்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது! முருங்கன் சந்தியை அடைந்த நாம், தொழுகைக்காகவும், தேநீர் அருந்துவதற்காகவும் அங்கு இறங்கினோம். அங்கு இடிந்த நிலையில் காணப்பட்ட மஸ்ஜிதின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சிறு அறையில் விடுபட்டுப் போன ‘ழுஹர் தொழுகையையும், ‘அஸர் தொழுகையையும் சேர்த்து தொழுது விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். இந்த மஸ்ஜிதின் தற்போதைய பராமரிப்பு பணிகளை இலங்கை போக்கு வரத்துச் சபையின் ஒய்வு பெற்ற ஊழியர் ஜ்னாப் எஸ்.எல். அஸனார் லெப்பை என்பவர் வெகு சிரமத்தின் மத்தியில் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது, அவரது தியாகத்துடன் கூடிய தனித்த சேவைக்கு வல்ல அல்லாஹம் தக்க கூலியைக் கொடுப்பானாக! ஆமீன்.
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
குறிப்பு: முத்துக்களில் பத்துவகை உண்டு. அவை ஆணி, கனதாரி, மக்கை, மடங்கு, குறவில், கனிப்பு, பீசல், குறல், தூள், ஒட்டுமுத்து என்பனவாகும் சிலாபம் என்ற சொல்லின் கருத்து முத்து 2000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இத்தொழில் உலகின் ஏனைய நாடுகளை விட இலங்கையின் முத்துக்குளிக்கும் கண்டமேடையை கொண்ட சிலாபத்துறை பகுதி முத்துக்குளிப்பே பிரசித்தி பெற்றது, என வான் (Van 1888) என்ற அறிஞரின் கருத்துள்ளது. இப்பகுதி முத்துக்குளிப்புக்கு பெப்ரவரி மாதத்தில் அரச உதவிகள் கிடைக்கும் என்றும் மாத நடுப்பகுதியில் இங்கு பலதரத்திலுமான பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர் எனவும் மார்ச் மாத ஆரம்பத்தில் முத்துக்குளிப்பு ஆரம்பிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் கி. பி. 1661 தொடக்கம் 1768 காலப்பகுதி வரையும், பிரித்தானியர் ஆட்சி காலத்தில் 1796 தொடக்கம் 1887 வரை பெரிய அளவில் முத்துக்குளிப்பு இங்கு நடைபெற்றதாகவும் போக் (Boake 1888) என்பவர் குறிபபிட்டுள்ளார். முன்னால் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அவர்களிடம் ஊர் மக்களால் முத்துக்குளிப்பு பற்றி வேண்டுகோல் விடுத்ததன் பேரில் 1984ல் (அல்லது 1985) ஜப்பானிய ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கையின் பின் அது ஆரம்பித்துவைக்கப்பட்டது. எனினும் அது வெற்றி அளிக்காததால் துறுதிஷ்டவசமாக அம்முயற்சி நிறுத்தப்பட்டது.
ஆசிரியரின் வெளிவந்த நூல்கள் -
‘புத்தளம் கண்ட மாபெரும் தப்லி. இஜ்திமா”
(வெளியீடு 1998)
“புனித இஸ்லாம் கூறும் தொப்பி தலைப்பாகையின்
கண்ணியம்”
(வெளியீடு 2001)
இன்ஷா அல்லாஹ வெளிவரவிருக்கும் நால்கள்.
“இலங்கை வரலாற்றுச்சுருக்கத் தொகுப்பு”
(பாகம் 1, 11, 111)
/ص ܠܐ
எம். ஐ. எம். அப்துல் லத்திப் (85) X

Page 45
புத்தளம்
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
01. பன்னிரெண்டு வருடங்களின் பின்னர் ஜனாப் ஏ. எம். மன்ஸீர் அவர்களின் தலைமையில் 27 - 04 - 2002 ம் திகதியில் சிலாபத் துறைக்கு முதல் பயணம் மேற்கொண்டோர் பெயர் விபரம்:
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
மெளலவி. ஏ. எஸ். எல். அலிகான் மெளலவி. ஜி. எம். ஹில்மி மெளலவி. எம். கலிலுல்லாஹற் மெளலவி. எஸ். சுஹைர் மெளலவி. எஸ். எம். நவாஸ் அல்-ஹாஜ். எச். எம். நஸர்
ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப்.
எச். எம். சாஹிர் எச். எம். அக்ரம் எச். எம். அக்ரப் எச். எம். றஸ்மின்
அல்-ஹாஜ். எஸ். எம். அன்ஸார்
ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப்.
ஏ. ஏ. றிழ்வான் கே. எம். கபூர் எம். எப். அமீன் எம். ஆர். சமீன் குரைஷ் எச். எம். ரஸின் ஏ. றாஸ்தீன் எஸ். எம். றம்ஸின் ரீ. எம். மனாஸ் கே. எம். மவ்ஜுத் ஏ. எம். சுக்ரி எஸ். எம். முஹாஜரீன் ஏ. எம். நைரூஸ் ஏ. எம். லுக்மான் எம். எம். லாபிர் ஏ. எஸ். லாகிர் ஏ. எம். மஹற்பூப் எஸ். எம். வாஜித் எம். எம். தலில் எஸ். ஏ. பாஸ்தீன் எஸ். எம். அப்துல் ஸலாம்
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 

புத்தளம் -
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப். ஜனாப்.
ஜனாப்
மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
எச். எம். உவைஸ் எச். எம். தாஹிர் எஸ். றவுப் எஸ். சித்திக் ஓ. எம். இர்ஷாத் பீ. எம். ஜாஹித் எம். ஹம்ஸா ஆர். றிபாஉதீன் எஸ். எம். சுஜாத் எம். முஹம்மது கல்லடி ஏ. எம். பைஸல் ஏ. சேகு வாப்பு எம். எப். பெளஸல் ஏ. ரீ. றைஸ்தீன் . ஏ. ரீ. சமீம் (செயலாளர்)
புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கம் 2003
தலைவர் உப தலைவர் செயலாளர்
உப செயலாளர் :
தனாதிகாரி
செயற்குழு
உறுப்பினர்கள்
ஜனாப். ஜே. இசட். ஏ. நமாஸ் திரு. பீ. புஸ்பராஜ ஜனாப். ஏ. யூ. எம். மெளயிர் திரு. வீர சொக்கன் அல்-ஹாஜ். எம். ஐ. எம். அப்துல் லத்திப்
ஜனாப், இசட். ஏ. எம். சருக் ஜனாப். ஜே. எம். எம். ரியாஸ் ஜனாப். எம். ஐ. எம். ராஜி ஜனாப். எம். யூ. எம். சனுான்
ஜனாப். ஏ. எஸ். புல்கி அல்-ஹாஜ். எஸ். ஆர். எம். எம். முஹற்ஸ் ஜனாப். எஸ். ஆர். எம். எம். இர்ஷாத் ஜனாப். ஏ. எம். காதர் ஜனாப். எம். ஏ. ஏ. காசிம் ஜனாப். எம். ஐ. எம். அஸ்லம் ஜனாப். எம். எச். எம். சியாஜ் ஜனாப். ஏ. ஆர். எம். ஹலீம்
ாம். ஐ. எம். அப்துல் லர்,

Page 46
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
இதுதான் வேப்பங்குளம் கிராமம் என்பதை அறிந்து கொள்ள உதவிய மன்! வேப்பங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அழிக்கப்பட்ட தோற்றம்.
சிறு பராயம் முதல் ஒன்றாக வாழ்ந்த தமிழரும் முஸ்லிம்களும் சிலாபத்துறை ஊடகச்செல்லும் பாரம்ாரிய புத்தளம் மன்னார் கரையோர வீதியில் வைத்து உறவை புதுப்பித்துக் கொண்டபோது
எம். ஐ. எம். அப்துல் லத்தி
 
 
 

புத்தளம் - மன்னர் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
1. புத்தளம் 2. கல்பிட்டி 3. கரைத்தீவு 4. பெரியநாகவில்லு 5. அருவாக்காடு 6. இலவன்குளம் 7. பொன்பரப்பி 8. வில்பற்று தேசிய வனம் 9. குதிரை மலை முனை 10. மறிச்சுக்கட்டி 11. கொண்டச்சி 12. சிலாபத்துறை 13. அரிப்பு 14. தள்ளாடி 15. மன்னார் 16. தலை மன்னார் 17. ஆதம்அணை 18. பள்ளமடு 19. விடத்தல் தீவு 20. இலுப்பை 21. பூனகரி 22.நல்லூர் 23. யாழ்ப்பாணம் 24. அநுராதபுரம் 25. மதவாச்சி 26. முருங்கன் சந்தி 27. தனுஷ்கோடி 28. இராமேஸ்வரம்
எம். ஐ. எம். அப்துல் லத்தி

Page 47
புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
துணைபுரிந்த நூல்கள்.
0.
02.
03.
05.
06.
07.
08.
09.
வரலாறு - (முதலாம் பகுதி) :
கலாநிதி. அமரதாச லியனகமகே கலாநிதி. சிறிமல் ரணவல கலாநிதி. பீ. வீ. ஜே. ஜயசேகர திரு. நந்தா ஜயசிங்க பீ.ஏ.(இலங்கை)
ஈழத்தவர் வரலாறு :
கலாநிதி. க. குணராசா
புத்தளம் வரலாறும், மரபுகளும் :
தாஜுல்அதீப், கலா பூஷணம், அல்-ஹாஜ். ஏ.என்.எம். ஷாஜஹான்
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் :
அ. முஹம்மது சமீம் (B.A.Hon.(Cey)
நபிமார்களின் சரிதை - 01 :
குலாம் ரசூல்
உலகவரலாற்றுத் தகவல் களஞ்சியம் :
மெளலவி உஸ்மான் ம.ரு.பி தமிழில் மெளலவி. முஹம்மத் ரஸின் ஹஸனி
ஷெய்கு இஸ்மாயில் புலவர் ஒரு பண்பாட்டுப் பார்வை :
கலாநிதி. எம்.எஸ்.எம். அனஸ்
வரகவி செய்கு அலாவுத்தீன் :
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
புத்தளம் பிரதேச புலவர்கள் :
கலாநிதி. எம்.எஸ்.எம். அனஸ்
எம். ஐ. எம். அப்துல் லத்திப்
 
 

புத்தளம் - மன்னார் பாதையும், வரலாற்றுப் பயணங்களும்
10. வரலாற்றில் இலங்கையும், காயல்பட்டினமும் :
தமிழ்மணி, தாஜுல் உலூம் மானா மக்கீன்
11. இலங்கை - கிழக்கரை இனிய தொடர்புகள் :
தமிழ்மணி, தாஜுல் உலூம் மானா மக்கீன்
12. இலங்கைச் சரித்திரம் :
13. தென்கிழக்கிலங்கை முஸ்லிம்களின்
மான்மியத்துக்கு முன்னோரளித்த அருஞ்செல்வம் :
எம். எம். காசிம்ஜி
14. கம்பராமாயணம் - கும்பகர்ணவதைப்படலம் :
15. அல்-குர் ஆன் ஓர் அறிவியல் கண்ணோட்டம்
மெளலவி. எஸ்.எல்.எம். ஹஸன் (916rög Dyfi B.A. Hon, (Cey))
16. Gazetteer of the Puttalam District V Frank Moder
17. The Problams of a Minority Community
A. M. Sameem (B.A. Hon. (Cey))
மேலும் பரிசுத்த வேத நூல்களான பரிசுத்த வேதாகமும் (பழைய ஏற்பாடு), புனித அல்-குர் ஆன் அரபு மூல தமிழ் மொழிபெயர்ப்பு (அல்லாமா. அப்துல் ஹமீது பாகவி), அன்வாருல் குர்ஆன் (அரபி மூலமும், தமிழ் மொழி பெயர்ப்பும், விரிவுரையும்) (மெளலவி. ஹாபிஸ் ஈ. எம். அப்துர் ரஹற்மான்) என்பவற்றிலிருந்தும் விபரங்கள் பெறப்பட்டுள்ளன.
it
بالا , ۱۱۵, ۱۲ و لرا اlر :

Page 48

ASAeeLALAL SSS S eAAALLAA LEELLALSLAeLeTLLLLL
சிலாபத்துறைக்கு அயலிலுள்ள சவேரியர்புர தமிழ் கிராமத்திலும் , அர்ச் சவேரியர் ஆலயமும் அழிக்கப்பட்டிருப்பதைமுஸ்லிம்கள்
பார்வையிட்டனர்.
சிலாபத்துறைக்கும், அரிப்புக்கும் இடையே பெருங்கடற்கரையோரத்தில் சீறிடும் அலைகளின் சிதைப்புக்குள்ளாகிக் காட்சி தரும்
அல்லி ராணிக் கோட்டையின் அழகிய தோற்றம்.
படங்கள்: ஆசிரியர்)

Page 49
".
1958ம் ஆண்டு முதல் ஆசிரியர் ெ
W.M. Quality - D777-61.7509
'முப்பது வருடங்களுக்கும் மேற்ட
"பூர்த்தி செய்த இவர் கற்பித்தலில் பங்களிப்பைச் செய்துள்ளார் என் சொல்வதை விட நான் நேர
வைத்துள்ளேன்.
தனது ஆசிரியர் தொழிலோடு ே கல்வி, கலாசார, பொருளாதார இவரது பொதுச்சேவைகள் ெ புத்தளம், அல்குர்ஆன் 1400
இஸ்லாமிய முன்னணி இயக்கம், கமிட்டி, புத்தளம் சாஹிரா கலி சங்கம், உடையார்வெளி, வட் அச்சமலையாறு உப்பு உற்பத்தி அமைப்பிலும் பல வருடங்கள் சப புரிந்துள்ளதுடன், 1991ம் ஆன பொருட்காட்சிக் குழு செயலாளா மீலாத் விழா பொருட்காட் சேவையாற்றியுள்ளார். அத்துடன் " புத்தளம் கிளை உதவிச் செயலா செய்தியாளர் சங்கத் தலைவராக அதன் பொருளாளராகவும், புத்த தலைவராகவும், புத்தளம் வர்த்தக புத்தளம் அஞ்சல் அலுவல் பொருளாளராகவும், புத்தளம்
உறுப்பினராகவும், புத்தளம் சிந்த போஷகர்களில் ஒருவராகவும் பணி
சமூக சேவையில் இவருக்கு: மதிக்குமுகமாக நாம் அண்மையில் பட்டமளித்து கெளரவித்தோம். இது துறைக்கான இவரது பங்களிப் முஸ்லிம் வெகுஜன தொடர்பு
பாராட்டி கெளரவித்தமையும் குறி
சேவைகள் தொடர அல்லாஹற்வை
ஜனாப். எஸ். எஸ். எம்.றபிக் 'தலைவர், 'அறிவுச்சுடர்' (கல்வி ே
புத்தளம் நவமணி வாசகர் வட்டம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாடர்புகள்.
தாழிலில் ஈடுபட்டு ட்ட சேவையைப் மிகச் சிறப்பான பதை மற்றவர்கள் டியாக அறிந்து
சர்ந்து சமகாலத்தில் சமய, சமுக, பணிகள் என்று இன்று வரையிலும் தாடருகின்றன. உதாரணத்திற்கு ஆண்டு விழாக் கமிட்டி'(1968),
பராஅத் குழு, புத்தளம்/மீலாத் ப்லூரி பாடசாலை 'அபிவிருத்திச் டுக்காவெளி விவசாயச்'சங்கம் யாளர் சங்கம், என ஒவ்வொரு காலத்தில் செயலாளராகப் பணி ன்டின் ‘தேசிய மீலாத் விழா ராகவும், 1999ம் ஆண்டின்'தேசிய சிக் குழு உறுப்பினராகவும் அகில இலங்கை ஷரீஆ கவுன்சில் ளராகயும், புத்தளம் மாவட்ட தமிழ் வும் பணியாற்றிய இவர் தற்போது ளம் நவமணி வாசகர் வட்ட உப * சங்கத்தின் உப தலைவராகவும், பக ஆலோசனை சபையின் அஹதியா ஆலோசனை'சபை யா கலை இலக்கிய வட்டத்தின் யாற்றுகின்றார்.
ர்ள தொடர்பான பங்களிப்பை இவருக்கு 'சமூகச்சுடர்' என்னும் போல் ஊடகம் மற்றும் எழுத்துத் பை மதிக்குமுகமாக 'ரீலங்கா அமைப்பு' அண்மையில் இவரை ப்பிடத்தக்கது. இவரது இத்தகைய வேண்டி மனமாற வாழ்த்துகிறேன்.
மம்பாட்டு அமைப்பு),
WDesign. By El ORLIFE.