கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்தன செம்மலர்கள்

Page 1


Page 2

Sf b ) செம்மலர்கள்
க. சிவப்பிரகாசம்

Page 3
"Sirilhthana Sem malarkal"
by K. SIVAPRAKASAM
Maria
PRIGE )
liga
Published by:
VI RAKESARI P.O Box 160, COLOMBO
FIRST EDITION
JULY 1976
COPY RIGHTS
RESERVED WITH THE PUBLISHERS
VIRAKESAR VELIYEEDU
EXPRESS NEWSPAPERS (Cey) LTD.
185, GRANDPASSROAD, COLOMBO-14.

முன்னுரை
அமெரிக்கா, பிரிட்டன், மேற்குஜெர்மனி ஆகிய நாடு
களுக்குச் சென்று அந் நாடுகளின் நிலவரங்களை நேரில் பார்த் திருந்த நான். ஒரு கம்யூனிஸ்ட் நாட்டின் சமூக அமைப்பினையும் அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையினையும் கண்டுகொள்ள, வேண்டுமென நெடுநாள் அவாவுற்றிருந்தேன். அந்த ஆவல் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவேறியது.
எனது சோவியத் நாட்டு விஜயம் பல வழிகளில் பயனுள்ள தாக அமைந்திருந்தது. நூல்களில் படித்தவற்றிலும், மற்றவர்கள் சொல்லக் கேட்டவற்றிலும் பார்க்க அதிக விடயங்களை நேரில் பார்த்தறிய அவ் விஜயம் வழிவகுத்தது. இது மறக்கமுடியாத ஓர் அனுபவமாகும்.
உண்மையான உழைப்புடன் தேசப்பற்றும் சேர்ந்துகொண் டால் மக்கள் உயர்வடைவது திண்ணம், 1917ம் ஆண்டிலிருந்து 1976ம் ஆண்டுவரை அவர்கள் கண்டுள்ள அபிவிருத்திகள் ஏரா ளம். பொருளாதாரத் துறையிலென்சூலென்ன, சமூக மறுமலர்ச் சித் துறையிலென்ருலென்ன, விஞ்ஞானத் துறையிலென் ருலென்ன வெளிநாட்டவர் எவரும் அ தி சயித் து வியப்படையத்தக்க விதத்தில்தான் ரஷ்ய நாட்டவர் முன்னேறியிருக்கிருர்கள்.
புரட்சி தோன்றிய நாள்முதல் புரட்சிகரமான மாறுதல்களை அவர்கள் கண்டிருக்கிருர்கள். அவர்களின் உயர்ச்சி எம்மவர்க் கும் ஒரு முன்மாதிரியாகும். ஆகையினுல் அவ்வுயர்ச்சிக்கு வழி கோலிய ரஷ்ய நாட்டு அமைப்பினையே நான் கண்டவற்றில் இருந்து பொறுக்கி எடுத்துத் தந்துள்ளேன்.
வாசக அன்பர்களைத் திருப்திப்படுத்த அவை பயன்பட்டால் அதுவே எனது மகிழ்ச்சியாகும்.
க. சிவப்பிரகாசம்,

Page 4
பதிப்புரை
− 2-லகத்தில் பல பாகங்களுக்கம் சென்றுவர எல்லோரும் அதிர்ஷ்டம் பெற்றவர்களல்ல. இவ்வாறு அதிர்ஷ்டம் பெற்றவர் களில் ஒரு சிலரே. தாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றை யும் சுவையோடு கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின் றனர். அதிலும், பல ஆண்டுகள் பத்திரிகைத்துறையில் அனு பவம் பெற்ற ஒருவர், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வைய கம்" என்ற ஆவலில் எழுதும்போது, எந்தப் பயணக் கட்டுரை யும் இலகுவில் வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிடுமென் பது திண்ணம். *
இந் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமானபொழுது, ஏராளமான வாசகர்களைக் கவர்ந்துவிட்டதென்பதை அவர்களின் கடிதங்களிலிருந்து தெரிந்துகொண்டோம். இதனுல் கட்டுரைத் தொடரை, நூலுரு வில் கொண்டுவர முடிவு செய்தோம். இந் நூல், வாசகர்களின் நன்மதிப்பைப் பெறுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
.பதிப்பாளர் ، 1976 س-8 سسسس-20

சிரித்தன செம்மலர்கள்!
1. வான ஒரு கனவு
"'என்னடி இந்த வன்னித்தியல்புகள்! எத்தனை வடிவம் ! எத தனை கலவை **
- Lurrpur S.
ஆகாயவிமானம் மாஸ்கோ நகரினை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. நேரம் நடுநிசி கழிந்திருக்கும். என்னுடன் பிர யாணம் செய்த சக பிரயாணிகளுள் பலர் தூங்கிக்கொண்டிருந் தார்கள். தூக்கம் வராத சிலர் அமர்ந்திருந்தவாறே அங்குமிங் கும் பார்த்தக்கொண் டிருந்தனர். மாஸ்கோவுக்கும்,லண்டனுக்கு மெனப் பல்வேறு இடங்களுக்கும் செல்ல டிக்கெட் எடுத்தவர் கள் அவ் விமானத்தில் இருந்தார்கள். எண்ணற்ற சிந்தனை களுக்கு மத்தியில் அவர்களது மனங்கள் சுழன்றுகொண்டிருந் தன. பிரயாணக் களைப்பால் சிலர் சோம்பியிருக்கக் காணப் பட்டனர். ஆனல், ஒரு சிலருடைய முகங்களில் ஒருவித பொலிவு தென்பட்டது. தமது காதலர்களின் அழைப்பின் பேரில் லண்ட னுக்குச் சென்ற இரு யுவதிகளின் முகங்களிலோ களைப் பின் சாயல் கிஞ்சித்தும் தென்படவில்லை.
எனக்கு அருகில் சிங்கள அன்பரொருவர் அமர்ந்திருந்தார். தனது சகோதரியின் அழைப்பி%ன ஏற்று அவர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தார். நாங்கள் பிரயாணம் செய்த "ஏரோ பிளோட்" விமானம் மாஸ்கோ நகரில் தரித்துவிடும். எனது

Page 5
சிரித்தன செம்மலர்கள்
s
சிங்கள நண்பர் மாஸ்கோ விமானநிலையத்தில் இறங்கி, பிறி தொரு விமானத்தில் லண்டன் பிரயாணத்தி%ன மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏராளமான கைப் பார்சல்களைக் கொண்டு வந்த அவர் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். அத்தனை பார்சல்க%ளயும் கைகளிலும் தோளிலும் சுமந்க வண்ணம் ஒரு விமானத்திலிருந்து இறங்கி, எவ்வாறு இன்னெரு விமானத்துக் குக் கொண்டு செல்வதென்பதைப்பற்றிய கவலை அவரை வாட் டியது. கொழும்பிலுள்ள உறவினர்களின் தொல்லைகளையும் உபத்திரவங்களயும் தாங்கமுடியாது பல அன்பளிப்புப் பொருட் களைக் காவிச்செல்ல வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்னெரு ருசிகரமான "நா ட கம்’ எ ம் இருவர் மத்தி பிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தனது அன் புச் சகோதரிக்கு அவர் ஒரு போத்தல் தேன் கொண்டுவந்திருந் தார். அவருடைய துரதிர்ஷ்டம் அந்தத் தேன் போத்தலை அவ ரிடம் கொடுத்தவர்கள் அதனை நன்ருக அடைத்துக் கொடுக்க வில்லை. அதன் மேல்மூடி இறுக்கமாகப் பூட்டப்பட்டிருக்க வில்லை. இதல்ை புதுவிதமான தொல்லை எனது நண்பரை அவஸ் தைப் படுத்தக் தொடங்கியது.
விமானம் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்பொழுது நிலத்திலுள்ள காற்றமுக்க நிலைக்கும் முப்பதாயிாம் அடி உய ரத்தில் காணக்கிடக்கும் நிலைக்கும் பாரிய வித்தியாசமிருப்பது தவிர்க்கமுடியாததொன்ருகும். அத்துடன் பிரயாணத்துக்குப் பொருத்தமாக விமானத்துக்குள்ளும் குளிரூட்டப்பட்டிருந்தது. இத்தகைய குளிர் நிலையையும் அமுக்க நிலையையும் அத் தேன் போத்தலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. போத்தலின் அடி மட்டத்திலிருந்த தேன் கட்டிபட்டதுபோன்று காணப்பட்டது. மேலே இருந்த தேன் நுரைத்துப் பீறிட்டுக்கொண்டு மேலெழும் பத் தொடங்கியது. இருந்தாற்போல் ஒரு சப்தம். தடுப். அரு கில் இருந்த பிரயாணிகள் அதிர்ச்சியுற்றுச் சத்தம் வந்த திசையை நோக்கினர். "தேன் போத்தலின் "புரோப்' மூடி வெடித்துப் பறந்ததினுல் ஏற்பட்ட சத்தமே அது. மூடி வீசப்பட்டதை அடுத்து நுரைத்துக் கசிந்த தேன் வெளியே சீறிக் கொட்டத் தொடங்கியது. இதனைக் கண்ட என் நண்பர் செய்வதென்ன வென்று அறியாது திகைத்துத் தடுமாறினர். காரில் பிரயாணம் செய்வதென்ருல் போத்தலைத் தூக்கி வெளியே வீசலாம்.ஆனல் ஆகாய விமானத்தில் அவ்வாறு செய்யமுடியாதே. மேலும் சக பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்ததினுல் அவருக்கு மிக வும் வெட்கமாக இருந்தது. தன்னைப்பற்றி ஏதும் நினைத்துவிடு

சிரித்தன செம்மலர்கள் 3.
வார்களோ என்றும் சஞ்சலப்பட்டுக்கொண்டார். அவரை அமை
தியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டு, மெதுவாக எழுந்து
சென்று விமானப் பணிப்பெண்ணிடம் நடந்த நாடகத்தை விரி
வாக விளக்கிக் கூறினேன். சிரித்த முகத்துடன் நிலைமையைக்
கிரகித்துக்கொண்ட அப் பணிப்பெண், எனது நண்பருக்காகப்
பரிதாபப்பட்டுக்கொண்டார். காலங் கடந்தால் நிலைமை கட்
டுக்கடங்காமல் போய்விடுமென்பதை அனுபவத்தில் அறிந்து கொண்ட அவர், சுத்தம் செய்வதற்காக விமானத்தில் வைக்
கப்பட்டிருக்கும் மெல்லிய கடதாசிகளைக் கொண்டுவந்து தேன்
போத்தலை நன்ருகத் துடைத்து வெளியே பீறிட்டு வந்ந நுரை
க3ள அப்புறப்படுத்தினர். புதிய "புரோப்' ஒன்றினையும் போட்
டுக்கொடுத்து வேண்டிய நேரத்தில் பாவிப்பதற்காகப் போதிய் அளவு வெள்ளைத் தாள்களையும் எனது நண்பரிடம் கொடுத்துச் சென்ருர்.
மாஸ்கோ நாரினைச் சென்றடையும்வரை எனது நண்பருக்கு இது பெருத்த தலையிடியாகப் போய்விட்டது. தேன் போத்தலை ஏன் கொண்டுவந்தேன் என்று அவர் அலுத்துக்கொண்டார். இதனல் அவருக்குத் தூக்கம் கொள்ள முடியவில்லை. கால் மணித் தியாலத்துக்கு ஒருமுறை அப் போத்தலின் முகப்பினைத் துடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என் நண்பருக்க இருந்தது. இதனல்

Page 6
4 சிரித்தன செம்மலர்கள்
ஹாயாக ஓய்வெடுக்க அவருக்கு வாய்ப்பிருக்கவில்லை. அவர் நிம்மதியற்று இருப்பதைக்காண என் மனம் பச்சாத்தாபப்பட் டது. ஆறுதல் மொழிகளைக் கூறி அவரைத் தேற்றி வைத்தேன். நிலைமையை ஒரு வாறு அவர் சுதாகரித்துக்கொண்டபோதிலும் அத் தேன் போத்தலைக் கொடுத்து அனுப்பிய உறவினர்ைச் சபித்துத் தீர்க்கத் தவறவில்லை. தனிமையில் பிரயாணம் செய் யும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் போத்தலகளையும், தேன் போத்தல்களையும் கொடுத்தனுப்பும் பரோபகாரர்கள்', முப்பதாயிரம் 9 t. a-up5 தில் விமானததில் இருந்துகொணடு அந்த ‘சுமைதாங்கிகள் படும் அவஸ்தையை உணர்ந்துகொள்ள இது சிறந்ததொரு உதாரணமாகுமென என் மனதில் பட்டது.
‘தேன்போத்தல் நாடகத்தால் எனக்கும் தூக்கம் கொள்ள முடியவில்லை. வேண்டிய நேரத்தில் எனது நண்பருக்கு உதவி செய்ததுடன், வெளிக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில் நேரத் தைச் செலவு செய்தேன். w **
காகேசியன்" ம%ல உச்சிக்கு மேலாக விமானம் பறந்து கொண்டிருந்தது. பனியில்ை மூடப்பட்டு வெள்ளை வெளேரென மலைச்சாரல்கள் காட்சியளித்துக் கொண்டிருந்தன. மேடும் பள்ள முமாக வெள்ளைமுகிற் கூட்டங்களைப் போன்று அவை கண் ணுக்கு இனிமையாகக் காட்சி தந்தன. இருந்திருந்தாற்போல் மலயடிவாரத்தில் சிறுசிறு வெளிச்சங்கள், சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை போன்ற பல்வகை நிறங்களைக் கொண்ட மின் விளக்குகள் நகரங்களை அலங்கரித்திருந்தன.
விமானத்திலிருந்து அவற்றி%னப் பார்க்கும்பொழுது பெண் கள் கழுத்தில் அணியும் முத்துமாலைகளே நினைவுக்கு வருகின் றன. பலவிதமான நிறங்கள; அவற்றிற்கு ஏற்ற வண்ண அமைப் புக்கள், அழகு அத்தனையும் பொருந்திய வேஆலப்பாடுகள் சந் திரனின் பொற் கிரணங்கள் பொலிவுடன் பிரகாசித்துக்கொண் டிருந்த அந்த விடியற்காலை வேளையில் ரஷ்ய நகரங்க கண் கொள்ளாக் காட்சியாக என் கண்களுக்கு விருந்தளித்தன. மின் சாரம் கிடைத்த பின்னரே இவையெல்லாம் சாத்தியமாகிற்று என்று என் உள்மனம் கூறியது.
இக் காட்சிகளைக் கண்டு ரசித்த வேளையில், பொருளியல் பட் டப் படிப்பிற்காக வாசித்த சரித்திர நூல்கள் என் நினைவுக்கு வந்தன. இருபதாம் நூற்றண்டின் ஆரம்பக் கட்டத்தில் ரஷ்ய நகரங்களும், கிராமங்களும் இருந்த நிலையைப்பற்றிச் சிந்திக்க லானேன்.

சிரித்தன செம்மலர்கள் 5
சார் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்தில் பிரபுத்துவ குடும் பங்களுக்கே சகல சம்பத்துக்களுமிருந்தன. “காஸ்" விளக்குகளும் வெப்ப விளக்குகளும் அவர்களின் பெரிய மாளிகைகளை அலங் கரித்தன. சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்க ஒருசில ராஜ் ஜியங்களிலேதான் மின்விளக்குகள பொருத்தப்பட்டிருந்தன். ஆனல், பொதுமக்கள் வாழ்வில் எண்ணெய் விளக்குகளும்,மெழுகு திரி லாம்புகளும் முக்கிய பங்கினை ஏற்றுக்கொண்டன. ஏழை களின் கொட்டில்களில் மின் விளக்குகளைப் பற்றிய பேச்சிற்ே அந்த நாட்களில் இடமிருக்கவில்லை.
ஆஞல், 1917ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அவலநிலைமாறி யது. புரட்சியை அடுத்துப் புதுயுகம் தோன்றியது. தொழிலாள ரையும், விவசாயிக%ளயும் கொண்ட புதிய சமுதாய அமைப்பில் பொதுமக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. லெனின் தலைமையில் இயங்கிய அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பிக்க முற்பட்டது. 1920ம் ஆண்டில் நடைபெற்ற அகில சோவியத் எட்டாவது காங்கிரஸ் மகாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொளளப்பட்டன. கைத்தொழில், விவசா யம், போக்குவரத்து ஆகிய சகல துறைகளையும் புளிர்நிருமா ணம் செய்வதற்கென கொள்கைகள் வகுக்கப்பட்டன. இக் கொள்கைகள் யாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது மின்மயமாக்கும் திட்டந்தான். அதாவது முழு ரஷ்ய நாட்டினை யும் மின்யுகத்தில் இணைத்தால்தான் முன்னேற்றம் காண முடி யும் என்று அப்பொழுது முடிவு செய்யப்பட்டது.
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குள் எல்லா இடங் களுக்கும் மின்சக்கி பொருத்தப்பட வேண்டுமென்று இம் மகா நாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் பல இடங்களில்ஆகக் குறைந்தது முப்பது மின்சக்தி நிலையங்களையாவது நிறுவவேண்டு மென்று மகாநாட்டுத் த%லவர்கள் முடிவு செய்தார்கள். பொரு' ளாதார முன்னேற்றத்திற்கு இதுவே அத்திவாரமாக இருக்க முடியுமென்றும், மின்மயமாக்கலின் மூலமே புதிய நடவடிக் கைகளைத் தோற்றுவிக்க முடியுமென்றும் அவர்கள் நம்பினர்கள. புதிய சோஷலிஸ் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப மின்சாரத் திட்டம் முழு முதற் காரணமாக இருக்குமென்று புரட்சித் தலை வர் லெனின் கருதினர். இதனுல் இத் திட்டத்திற்கு முதலிடம் கொடுத்தார். பொருளாதார சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக மதிப்பிடப்பட்ட இத் திட்டம் "கோஎல்ரோ திட்டமெனஅழைக் கப்பட்டது
அந் நாட்களில் 'கோஎல்ரோ" திட்டத்தினை எள்ளி நகை யாடியவர்கள் பலர் இருந்தனர். அது நடைமுறைக்கு ஒவ்வாத

Page 7
6 சிரித்தன செம்மலர்கள்
ஒன்றென்று பரிகசித்தவர்களும், அதல்ை நாடே உருப்பட மாட்டாதென்று கவலை தெரிவித்தவர்களும் இருக்கத்தான் செய்தனர்.
அவர்களுள் ஒருவர்தான் பிரபல ஆங்கில எழுத்தாளரான திரு. எச்.ஜி. வெல்ஸ் என்பவர். சரித்திர நூலாசிரியராகவும் கட் டுரையாளராகவும் பிரபல விமர்சகராகவும் திகழ்ந்த திரு. வெல்ஸ், அந் நாட்களில் ரஷ்ய நாட்டிற்கு விஜயம் செய்திருந் தார். கிரெம்ளினில் லெனினுடன் சம்பாஷணைகளும் நடத்தியிருந் தார். ஆணுல், "கோஎல்ரோ" திட்டத்தின்மீது வெல்ஸ் நம்பிக்கை வைக்கவில்லை.
‘மின் இணைப்புத் திட்டம் சில பொறியியலாளரின் கற்பனைத் திட்டமாகும்'என்று அதனை வருணித்தார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. லெனினைப்பற்றி விமர்சிக்கையில், 'கிரெம் ளினில் உள்ள கனவுலகவாதி" என்று நாமம் சூட்டினர்.லெனின் கனவு க ண்டுகொண்டிருக்கிறர். அவர் கனவு நனவாக போவ தில்லையென்பதே திரு. வெல்ஸின் முடிவாகும்.
ஆனல், திரு. வெல்ஸ் கூறியதைப்போன்று மின்னிணைப் புத் திட்டம் பிழைக்கவில்லை. அது வெகு விரைவில் பூர்த்தி செய்து வைக்கப்பட்டது. பல நகரங்களில் மின்னிணைப்பு நிலை யங்கள் அமைக்கப்பட்டன, எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. நகரங்களும், கிராமங்களும் மின்சாரமயமாக்கலினல் புத்தொளி யைப் பெற்றன.
ஆகாயவிமானத்தில் இருந்தவண்ணம் மின் விளக்குகளினுல் அலங்கரிக்கப்பட்டிருந்த நகரங்களின் அழகினைப் பருகிய தான், நடந்து முடிந்த பழைய சரித்திரச் சம்பவங்களை நினைவில் நிறுத் திப் பார்த்தேன். வெல்ஸின் கூற்றுப் பொய்த்துவிட்டதென்பதனை உணர்ந்துகொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. லெனின் கனவு காணவில்லையென்ற உண்மையை நான் கண்முன்னல்கண்ட காட்சிகள் நிரூபித்துக்கொண்டிருந்தன.

சிரித்தன செம்மலர்கள்
2.
மழையோ அது பனி மழையோ!
* வண்ணமுறக் காக்கின்ருன்; வாய் முணுத்தல் கண்டறியேன். வீதி பெருக்குகி (ான்; வீடு சுத்தமாக்குகிருன் "
- um pr5
பனிக்காலம் ஆரம்பித்த பின்னர்தான் மாஸ்கோ நகருக்கு
நான் சென்றிருந்தேன். ரஷ்யாவின் கடுங் குளிரினைப்பற் சிப் பலர் என்னைப் பயமுறுத் கி வந்தனர். பிரெஞ்சு வீரன் நெப்போலியனின் படைகள் ரஷ்யக் கடுங் குளிரினத் தாங்க முடியாது பின்வாங் கினவென்றும். அக் கதியே எனக்கும் ஏற்படலாமென்றும் நண் பர்கள் சிலர் கிலியூட்டியிருந்தனர். கிண்டலுக்காக அவர்கள் எச்சரிக்கை செய்தபோதிலும், உள்ளூர நானும் பயங்கொண் டிருந்தேன்.
ஆனல், எனது பிரயாணத்துக்கான ஒழுங்குகள் அனைத்தை யும் கவனித்திருந்த கொழும்பிலுள்ள சோவியத் தூதுவரால யத்தின் தகவற்பிரிவு அதிகாரி திரு. வொஸ்கோ பொயினி கோவ், எனது அச்சங்கள் யாவற்றையும் போக்கி வைத்தார். கம்பளியினல் செய்யப்பட்ட தடித்த ‘ஒவர் கோட்" , தோலினல் அமைக்கப்பட்ட கையுறை ஆகியவற்றைக் கட்டாயமாகக் கொண்டுசெல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் ஒருவித ஒட்டுக் கம்பளத்தினல் தயாரிக்கப்பட்ட "பூட்ஸ்" காலணி யையும் எடுத் தச் செல்லுமாறு வற்புறுத்தியிருந்தார்.
அவருடைய அன்புக் கட்டளைக்கு அடிபணிந்த நான், இங்கு இருந்து பிரயாணத்தைத் தொடங்கிய வேளையிலேயே பூட்ஸினை அணிந்து சென்றேன். இதனல் பிரயாணத்துக்கென புதிதாக வாங், கப்பட்ட ஒரு சோடி சப்பாத்து, உடுப்புப் பெட்டிக்குள் அண்ட்ச் கலம் புகுந்து கொண்டது.

Page 8
8 சிரித்தன செம்மலர்கள்
மாஸ்கோ விமானநிலையத்தில் விமானம் தரித்தவுடன், ஒவர்கோட், கையுறை ஆகியவற்றை அணிந்துகொண்டேன்.
கழுத்தையும், முன் மார்பையும் சுற்றிப் போர்த்தி, ‘மப்ளரை' யும் போட்டுக்கொண்டேன். தலையையும் காதுகளையும் மூடிக் கொள்வதற்காகக் கம்பளியினுல் வேயப்பட்ட "குரங்குத்
தொப்பி'யையும் மாட்டிக்கொண்டேன். மாஸ்கோ குளிருக்கு எதிராகப் "போர் தொடுக்க" ஆகாய விமானத்திற்குள் நின்று கொண்டே எல்லா ஆயத்தங்களும் செய்து முடிக்கப்பட்டன. என்னுடைய போர்க் கோலத்தைப் பார்க்க எனக்கே சிரிப்பாக இருந்தது.
விமானத்தின் கதவு திறக்கப்பட்டதும் எல்லோரும்வெளியே இறங்கத் தலப்பட்டனர். நானும் அவர்களுடன் ஒன்றுசேர்ந்து கதவுக்கு வெளியே வந்தேன். கீழே இறங்கவேண்டிய ஏணிப் படிகளில் காலை வைத்ததுதான் தாமதம் குளிர் காற்று என் னைக் கவ்விக் கொண்டது. அவ்வேளையில் பூமாரி பொழிவதைப் போன்று பனித் துகள்களும் மேலிருந்து கொட்டிக்கொண் டிருந்தன.
இலங்கையிலோ அன்றி வேறு எந் நாட்டிலோ அத்தகைய குளிரினை நான் அனுபவித்ததில்லை. வெப்பமான சீதோஷ்ணநிலை யில் இருந்து செல்பவர்களுக்கு அது ஒரு புது அனுபவந்தான். உடைகளை ஊடறுத்துச் செல்லும் கடுங் குளிர் உடம்பினை அப்பிக் கொள்ளும். கைகள், கால்கள் விறைப்படைவதைப்போன்ற ஓர் உணர்வு ஏற்படும். உடல் மரத்துப் போவது போன்றதொரு பிரமை. "போர்" உடையில்லையெனின் அக் குளிரினைத் தாங்கிக் கொள்வது இயலாத காரியமாகும். விமானத்திலிருந்து இறங்கிய வர்கள் கைப் பார்சல்களைக் காவிய வண்ணம் விமானநிலையத்துக்கு ஒடத்தொடங்கினர், ஒடக் கூடியவர்கள் ஒடிஞர்கள். ஒடமுடி யாதவர்கள் வெகு விசையாக நடந்தார்கள் .எங்கு பார்த்தாலும் ஒரு அவசரம்: பதட்டம் கலந்த கடுகதியோட்டம். கொழும்பில் இருந்து முதன்முதலாக மாஸ்கோ நகருக்கு விமானப் பிரயா ணத்தினை மேற்கொண்டவர்கள், அங்கு ஒர் ஒட்டப்போட்டி இடம்பெற்றிருப்பின், முதல் இடங்களைத் தட்டிப் பிடித்திருப்பார் கள். கடுங் குளிர்தான் அவ்வாறு செய்யவைத்தது. என்னைப் பொறுத்தவரையில், இது மறக்க முடியாததோர் அனுபவ மாகும். விமான நிலையத்தின் கட்டிடத்திற்குள் சென்றபின்னரே ஒருவாறு நிம்மதி கிடைத்தது.
எனது முகத்தில் விழுந்திருந்த பணித் துகள்கள் உடல் உஷ் ணத்தின் விளைவாக நீராகிக் கொண்டிருந்தன, கண், மூக்கு

சிரித்தன செம்மலர்கள் 9
ஆகியவற்றிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது, தடிமன், சளி பிடித்தவர்களைப் போன்று கைக் குட்டையினுல் மூக்கையும் வாயையும் துடைத்துக்கொண்டேன். உபுைகளில் பதிந்துகிடந்த பனித் துகள்களும் நீராகிக்கொண்டிருந்தன.அவற்றினைப்பொருட் படுத்தாது மனதைத் திடப்ப்டுத்திக்கொண்டு கருமங்களைக் கவ னிக்கலானேன்.
விமான நிலைய அதிகாரிகள் வெகு சுறுசுறுப்பாக எமது அலுவல்களைக் கவனித்துக் கொடுத்தனர். ஒருசில நிமிடங்களுக் குள் பாஸ்போர்ட், டிக்கெட் பரிசோதனைகள் முடிவுபெற்றன. அவற்றை முடித்துக்கொண்டு நான் வெளியேறியதும், 'ஹலோ சிவா" என்று உரத்த தொணியில் கூவிக்கொண்டு, வலது கரத் தினை நீட்டியவண்ணம் ஒருவர் என்னிடம் விரைந்து வருவதைக் கண்டேன். வந்தவரைக் கூர்மையாகப் பார்த்தேன், என்ன ஆச் சரியம்! கொழும்பிலுள்ள சோவியத் தூதுவராலயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கடமையாற்றிய ரஷ்ய நண்பரான திரு. அலெக்ஸாந்தர் புரோகோரோவ் என்பவர்தான் இவ்வாறு உரிமையுடன் அழைப்பு விட்டுக்கொண்டு வந்தவர். அவரைக் கண்டவுடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோர் அளவேயில்லை. கடுங் குளிரை மறந்தேன். மகிழ்ச்சித் திளைப்பில் கை குலுக்கு வதை விட்டுத் தள்ளிவிட்டு, இருவரும் இறுகக் சட்டித் தழுவிக் கொண்டோம்.
மூன்று, நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னர் நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் கேட்கவா வேண்டும்? குடும்ப விவகாரங்களி லிருந்து நாட்டு அலுவல்கள் வரை எனது சம்பாஷணை விரிந்து பறந்து சென்றது.
எனது சோவியத் சுற்றுலாவின் வழிகாட்டியாக அவர் நிய மிக்கப்பட்டிருந்தார், நான் வீடு திரும்பும்வரை வழிகாட்டியாக மட்டுமின்றி, தோழனுகவும், ஆலோசகனுகவுமிருந்தார். இனிய நண்பரொருவர் இக் கடமைகளை மேற்கொண்டிருந்தது எனக் குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர் கொழும்பிலிருந்த நாட்களில் அவரை "சாஷா” என்று நாம் அழைப்பது வழக்கம். அதே பெயரை நான் பாவிக்க முனைந்ததும் அவர் பூரிப்படைந் தார்.
"குளிர் எப்படியிருக்கிறது? தாங்கிக்கொள்வீரா?" என்று அனுதாபங் கலந்த தொனியில் வினவினர்.
"உம்மைக் கண்டவுடன் சூரியனைக் கண்ட் பணிபோல் எல்
லாம் மறைந்துவிட்டது" என்று சிரித்துக்கொண்டே பதிலளித் தேன்.

Page 9
10 சிரித்தன செம்மலர்கள்
உண்மையில், தயார் நிலையில் நான் சென்றதால் குளிரைத் தாங்கிக்கொள்வது பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை.மேலும் சாஷாவைக் கண்டபின்னர் என்னிடம் புதிய தெம்பும் வீரமும் உருவாகிவிட்டன. சிகரெட் புகையினை ஊதித் தள்ளுவதால் உட லுக்குச் சூடேற்ற முடியுமென்று நினைத்துக் கொண்டு அவ்வாறே செய்துகொண்டேன். என துபிரயாணப்பெட்டி வரும்வரை காத் திருக்கவேண்டியிருந்ததினுல் இருவரும் வெகு அந்நியோன்யமாகக் கதைத்துக்கொண்டிருந்தோம்.
கதையுடன் அங்க நடப்பனவற்றையும் வெகு உன்னிப் பாகக் கவனித்துக்கொண்டேன். ஒர் ஆணும், ஒரு பெண்ணும் சிவப்பு, வெள்ளை மலர்களைக் கைகளில் அழகாக அடுக்கி வைத் துக்கொண்டு எவரோ ஒருவரின் வருகைக்காக காத்து நின்ற னர். அவர்கள் தம்பதியராக எனக்குக் காட்சிதந்தனர். நான் மாஸ்கோ சென்றடைந்த அதே நேரத்தில் பிறிதொரு விமா னம் ஜப்பானிலிருந்து வந்திருந்தது. அதில் பிரயாணம் செய்த பெண் விருந்தாளியை வரவேற்கவே இப் பூக்கள.அவரும் வந்து விட்டார். வந்தவரிடம் அகமும், முகமும் மலர, அங்கு நின்ற பெண்மணி பூக்களை ஒப்படைத்தார். கட்டித் தழுவிக் கன்னத்தில் முத்தமிட்டார். மிகவும் மரியாதை கலந்த முறையில் அங்கு நின்ற ஆணும் ஆலிங்கனம் செய்துகொண்டார். மூவர் மத்தி யிலும் ஒரே குதூகலம்! வந்த விருந்தாளி பூக்களை அடுத்தடுத் துப் பார்த்து மெச்சிக்கொண்டிருந்தார்.
இவற்றை நான் விடுப்புப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதனை அவதானித்த நண்பர் சாஷா, மலர்களுக்கும் ரஷ்ய மக் களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை எனக்கு விளக்கிக் கூறி ஞர். சிவப்பு பூக்கள் காதலைக் குறிக்கும்.வெள்ளைப் பூக்கள் அன்பு கலந்த பண்பான வாழ்த்தினைக் குறிக்கும். மஞ்சள் பூக்களை மக் கள் வழங்கமாட்டார்கள். அவை பொருமையை எடுத்துக்காட் டுவன. சிவப்பும், வெள்ளையும் கிடைக்காவிடின் நீலப் பூக்க%ள நாடுவார்கள். என்ன இருந்தாலும் சிவப்பிற்குத்தான் மவுசு அதிகம்.
சிவப்பு நிறம் காதலை எடுத்துக் காட்டுவதுடன் புரட்சியின் சின்னமாகவும் திகழ்கிறது. புரட்சியில் வெற்றிகண்ட மக்கள், செம் மலர்களில் தமது வெற்றியின் பூரிப்பைக் காண்கிருர்கள். சாஷா விளக்கிக்கொண்டிருந்த வேளையில், காதலனின் அன் பளிப்பினை ஏற்ற காதலியின் முகத்தில் தோன்றிய செந்தளிப் பினைக் கண்டு செம் மலர்களும் சிரித்ததாக ரஷ்யக் கவிஞன் ஒருவன் பாடிய கவிதையொன்று என் நினவுக்கு வந்தது.

சிரித்தன செம்மலர்கள் 1 if
விமான நிலையத்தில் ஒரே ஜன நடமாட்டம்.அங்குமிங்குமென ஒடித் திரிந்தவர்கள் தமது அலுவல்களைக் கவனித்துக்கொண் டிருந்தனர். ‘வயதுசென்ற பெண்களும் வேலையில் ஈடுபட்டிருந்த தன அவதானித்தேன். துடைப்பங்களால் நிலத்தினைத்துப்புரவு செய்பவர்களும், பிற வேலைகளைக் கவனிப்பவர்களுமாக பல்வேறு கருமங்களைச் செய்துகொண்டிருந்தனர். வயது சென்றவர்களாக இருந்தாலும், கொழுத்துப் பருத்தவர்களாக இருநதாலும் அவர்களுள் எவராவது சோம்பி நிற்கவில்லை. வேலையை விட்டு விட்டு அரட்டையடித்த எவரையும் என்னுல் கண்டுகொள்ள முடியவில்லை. சுறுசுறுப்புடன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். கடமையில் அவர்கள் காட்டிய கரிசனை என்னைப் பிர மிப்படையச் செய்தது, எனது தாய்நாட்டில் இத்தகைய காட்சி யைக் காணமுடியாதேயென்று எனக்குள் கறுவிக்கொண்டேன்
பயணப்பெட்டி வந்து சேர்ந்தவுடன் இருந்த சொற்ப அலு வல்களையும் விரைவில் முடித்துக்கொண்டு, வெளியே காத்திருந்த காருக்குச் சென்ருேம். கட்டிடத்திற்கு வெளியே கால் எடுத்து வைத்தவுடன் கடுங் குளிர் என்னைக் கவ்விக்கொண்டF மன தைத் திடப்படுத்திக் கொண்டு காருக்குள் ஏறினேன். குளிர் காக்க விமானத்திலிருந்துகொண்டே நான் அணிந்துகொண்ட போர் உடை" என்னைவிட்டு அகலாது இருந்தபடியினல் நிலைமை யைச் சமாளித்துக்கொள்ள முடிந்தது.
விமான நிலையத்திலிருந்து ஏறத்தாழப் பதினைந்து மைல்களுக் கப்பால் மாஸ்கோ நகரின் நடு மத்தியில் நான சென்றடைய வேண்டிய ஹோட்டலிருந்தது. காருக்குள் இருந்தவண்ணம் சுற் ருடலைக் கவனிததேன். நீண்ட பெரு வீதிகள், சமதரையான நிலப்பரப்பு. வீதிகளின் இருமருங்கிலும் நீண்டுயர்ந்த கட்டிடங் கள். பெரிய துகள்களாகவும், துளிகளாகவும் பணிமழை பெய்து கொண்டிருந்தது, நிலம் முழுவதும் வெள்ளைப் படுக்கை விரிப் பினல் மூடப்பட்டிருப்பதைப் போன்று காணப்பட்டது. மரங் களில் இலை, குழைகள் இருக்கவில்லை. கொப்புகளிலும், தளிர் களிலும் பணிக்கட்டிகள் மூடிக்கிடந்தன. நிறுத்தப்பட்டிருந்த கார்களையும், ஏனைய, வாகனங்களையும் பணி மூடியிருந்தது.
வீதிகளில் விழுந்துகிடந்த பணிப் படலத்தினை இயந்திரம் பொருத்தப்பட்ட லொறிகளிலும், டிராக்டர்களிலும் அப்புறப் படுத்திக்கொண்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்தின் செளகரியத்துக்காக வீதிகளை இவ்வாறு சுத்தம் செய்தனர் பனித் திரளினையும், பனிச் சேற்றினையும் அப்புறப்படுத்தவென

Page 10
சிரித்தன செம்மலர்கள்
பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் லொறிகளில் இயங்கும் விதத்தினைப் பார்வையிட நான் ஆசைப்பட்டேன். எனது வேண் டுதலுக்கிணங்க ஓர் இடத்தில் கார் நிறுத்தப்பட்டது. சாஷாவை அழைத்துக்கொண்டு இயந்திரத்துக்கு அருகில் சென்று பார்த் தேன்.
கொட்டும் பணித்துகள்கள் போர்வையிட, மாஸ்கோ
செஞ்சதுக்கத்தில் வியாபித்துநிற்கும் பெரும் பீரங்கி முன்னல் கட்டுரையாளரையும் (கம்பளிக் குரங்குத் தொப்பியுடன்) வழிகாட்டியாயிருந்த சாஷாவையும் படத்தில் காண்கிறீர்கள்.
குவியலாகக் கிடக்கும் நெல் மணிககள பெண்கள் இரு கை களாலும் சுளகுகளில் வாரியெடுத்துச் சாக்குகளுக்குள்போடுவதை இலங்கையின் வயல்வெளிகளில் கண்டிருக்கிறேன். அவ்வாறு இரு கைகளைப்போன்று அமைக்கப்பட்டிருந்த இரு இரும்பு அலகு
 

சிரித்தன செம்மலர்கள் 18
கள் வீதியில் கிடந்த பனித் திரளையும், மண்ணையும், சேற்றை யும் வாரி வாரி எடுத்தன. இவ்வகையில் அள்ளி எடுக்கப்பட் டவை லொறியில் கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் வீசப்படுகின் றன. வெய்யில் எறிக்கத் தொடங்கியதும் அவை நீராகக் கரைந்துவிடுகின்றன. மண்ணுனது ஆற்று மண்ணுடன் சங்கம மாகிவிடுகின்றது.
ஆட்களின் கைகளுக்குப் பதிலாக இயந்திரக் கைகள் வேலை செய்துகொண்டிருக்கின்றன. நம்மவர்களென்ருல் அக் கடுங் குளி ரில் நன்முகப் போர்த்திக் கொண்டு படுத்து உறங்கிக் கொள் வார்கள். வேலை செய்ய ம ன ம் உ சும் பாது. வே ஆல செய்யத்கக் கதான இயந்திரமிருந்தாலும் அதனை இயக்கக்கூடிய வர் "லிவு" போட்டிருப்பார். சனி, ஞாயிறு ஆகிய தினங்களுடன் நான்கு நாட்களுக்குத் தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப் பட்டிருந்தால், கொழும்புமாநகரமே பணியினல் மூடப்பட்டிருக் கும்.
ஆனல், மாஸ்கோ மக்கள் குளிரைப் பொருட்படுத்த வில்லை. அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பனித்திரளைக் கண்டு பயப்படவுமில்லை. கடமையுணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக வேலை செய்கிருர்கள்.
இயந்திரத்தையும், சுற்ருடலையும் பார்த்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறியபொழுது இவ்வெண்ணங்களே என் மனதில்
பதிந்திருந்தன. அவற்றைச் சாஷாவுக்குக் கூறமுடியாத நிலை யில் பேச்சினை வேறு திசைக்குத் திருப்பினேன்.

Page 11
4. சிரித்தன செம்மலர்கள்
மத சுதந்திரம்:
‘அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தினையும் போக்கி விடும் பாப்பா. ??
- Luirg S.
sair ஞாயிற்றுக்கிழமை
அதிகாலையிலேயே துயில்விட்டு எழுந்த நான், என் மனதைத் துளைத் துக்கொண்டிருந்த விடயமொன்றுக்குப் பதில் காணவேண்டு மென்று முடிவு செய்தேன்.
சோவியத நாட்டில் மத சுதந்திரம் இருக்கின்றதா அன்றி இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றனவா என் னும் விடயத்திற்குப் பதில் காண வேண்டுமென என் ι06οτιο துடித்தது. இவ் விடயம் சம்பந்தமாகப் பலர் பல வாருக விமர் சனம் செய்து வருவத்ை நான் அறிவேன். நான் படி நூல் களிற் கூட இதற்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்கல.
அபிப்பிராயங்களைத் தெரிவித்தவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் இப் பிரச்சிஜன. அணுகியிருந் தார்கள். கம்யூனிஸ அமைப்பினை வெறுத்தவர்கள் சோவியத் நாட்டில் மத சுதந்திரமே இல்லையென்று அடித்துரைத்தார்கள். ஆனல், அதேவேளையில் நாத்திகத்தில் நம்பிக்கை வைத்திருந்த வர்கள் "மதமானது மக்களுக்கு அபினைப் போன்றது" என வரு ணித்தார்கள்.
இவற்றல் என் மனமும் குழம்பியிருந்தது. இந்நிலையில் சோவியத் நாட்டிலிருக்கும்பொழுது உண்மை நிலையை அறிந்து கொள்வது உசிதமானதென எனக்குத் தோன்றியது. தக்க விசாரணைகள் நடத்தி எனக்கிருந்த மயக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டுமென முடிவுகட்டினேன்.
நண்பர் சாஷா வந்தவுடன் எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். ஒரு தேவாலயத்திற்கோ, அன்றிப் பிறிதொரு மத நிறுவனத்திற்கோ சென்று, அங்கு நடப்பனவற்றை நேரில் பார்க்க விரும்புவதையும் அவரிடம் கூறிவைத்தேன். மறுப் பில்லாமல் அவர் என்னை அழைத்துச் சென்ருர்,

சிரித்தன செம்மலர்கள் − 15
மாஸ்கோ நகரிலுள்ள தேவாலயம் ஒன்றிற்குள் நாம் சென் ருேம். அது ஒர் ரஷ்ய வைதீகத் தேவாலயமாகும். கட்டிட அமைப்பில் நான் மேலைநாடுகளில் கண்ட தேவாலயங்களுக்கும் அதற்கும் பாரிய வேறுபாடு இருக்கவில்லை. பத்தொன்பதாம்நூற் ருண்டின் ஆரம்ப காலத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த அத் தேவாலயம் இன்றும் பழுதின்றியிருந்தது. கட்டிடத்திற்குள் இருந்த தூண்களும், சுவர்களை அலங்கரித்த சித்திரங்களும் தூசு படாது நன்கு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த நீண்ட ஆசனங்கள், குருமாரின் பிரசங்க மேடை, தோத்திரத் தலம் போன்ற இடங்களும் அப்பழுக்கற்ற முறையில் அழகாகக் காட்சியளித்தன.
மண்டபத்துக்குள்ளே ஏறத்தாழ அறுபது, எழுபது பேர் சோத்திரம் பாடிக்கொண்டிருந்தனர். இவர்களுட் பெரும் பாலோர் வயது சென்றவர்கள். அறுபது வயதினைத் தாண்டிய வர்களே அதிகமாக இருந்தனர். பெண்கள் தமது வழமையான உடைகளுடன் கறுத்த முக்காட்டினுல் தலையை மூடியிருந்தார் கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் அணிந்தவாறு நம்மவரைப் போன்று பிரார்த்தித்துக்கொண்டு நின்ருர்கள். கறுப்பு அங்கி உடுத்தியிருந்த குருவானவர் போதனை நடத்திக்கொண்டிருந் தார்.
மெதுவாக, ஒசை செய்யாமல் உள்ளே சென்று பார்த் தோம். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த் தனை நேரம் எவ்வகையில் அமைந்திருக்குமோ அவ்வகையில் தான் அங்குமிருந்தது. ஆலயங்களில் காணக்கூடிய ஒருவகை அமைதி அங்கும் குடிகொண்டிருந்தது. உள்ளே சென்று நானும் கும்பிட்டிருப்பேன். ஆனல், அங்குள்ள நடைமுறை எனக்குத் தெரியாது. இந்துவாக இருந்துகொண்டு தவறுசெய்தால் வந்த காரியம் கெட்டுவிடுமென நினைத்துக்கொண்டு சந்தடி செய்யா மல் வெளியே நடைக்கூடத்தில் நின்றுகொண்டோம்.
தோத்திரங்கள் முடிவடைந்ததும் மண்டபத்திற்குள்ளே இருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர்.நடைக்கூடத்திற்கு வந்தவுடன் ஒரு வாறு பேச்சுக்களை ஆரம்பித்தனர். ஒருவர். இரு வராக வெளியேறிக்கொண்டிருந்தவர்கள், எம்மைக் கண்ட வுடன் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. நான் ஒரு வெளி நாட்டவனென்பதனைப் பலர் ஊகித்திருக்க வேண்டும். எம் இரு வரையும் பார்த்துப் புன்னகைத்தவாறே அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அவ் வழியே வந்த ஒரு வயதுசென்ற பெரியவர், சாஷாவைக் கண்டதும், அகமும், முகமும் மலர, நண்பரின் கையை இறுகப்

Page 12
சிரித்தன செம்மலர்கள்
பற்றியவாறு குசலம் விசாரித்தார். சாஷா அவருக்குப்பதிலளித் துக்கொண்டு, நாம் வந்த நோக்கத்தையும் அவருக்கு விளக்கி வைத்தார். ரஷ்ய மொழியில்தான் அவர்கள் சம்பாஷணையை ஆரம்பித்தபோதும், நான் ஒரு விருந்தாளியென்பதை அப் பெரி யார் அறிந்தவுடன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினர். எனது அதிர்ஷ்டம். அவருக்கு ஆங்கிலம் தண்ணிர்பட்ட பாடு. தங்கு தடையின்றி வெகு சரளமாகப் பேசினர். எங்களுடன் அவர் கதைத்துக்கொண்டிருந்தபொழுது அவரது துணைவியாரும் எம் முடன் சேர்ந்துகொண்டார். கணவனைப்போன்று மனைவியும் ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர். சேவையின் நிமித்தம் வெளி நாடுகளில் அவர்கள் கடமையாற்றியிருந்தபடியால் ஆங்கில மொழியை நன்க பயின்றிருந்தனர். இதனுல், வேண்டிய விப ரங்களை அவர்களிடமிருந்து அறிந்துகொள்வது மிகச் சுலபமான காரியமாகிவிட்டது.
மாஸ்கோவின் வெளிப்புறத்திலுள்ள கோர்க்கி மலை
யில் இருக்கும் லெனின் வாழ்ந்த வீடு இது. லெனின்
தனது கடைசி நாட்களைக் கழித்ததும், இறுதியெய்திய தும் இங்கேதான்.
எழுபது வயதினைத் தாண்டிய அவர், பிறந்தநாள்முதல் மதப்பற்றுக் கொண்டிருந்தவர். கம்யூனிஸ்ட் அமைப்பு அவ ருடைய மத வழிபாட்டுக்கு முட்டுக்கட்டை போடவில்லை, அவ
 

சிரித்தன செம்மலர்கள் 17
ரது விருப்பத்திற்கு ஏற்றவகையில் மத அனுஷ்டானங்களைஅவர் கடைப்பிடித்து வந்தார்.
தனது ஆரம்பகால அனுபவங்களை எடுத்து விளக்கிய அவர், ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம்போன்று ஒவ்வொரு விடயத் தினையும் தெளிவாக எனக்கு விளக்கிக்கொண்டிருந்தார். நடைக் கூடத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பது முறையற்றதென்று உணர்ந்த நாம், தேவாலயத்தினை விட்டு வெளியேறினுேம், சிறிது தூரம் நடந்து சென்று சிற்றுண்டிச்சாலையொன்றில் இடம் பிடித் துக்கொண்டோம். ஞாயிற்றுக்கிழமை ஒய்வு நாளாக இருந்தபடி யால் எமது வற்புறுத்தலுக்கு இணங்கி காலை உணவினை எம் முடன் அருந்திக்கொள்ள அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
உணவு அருந்துவதிலும் பார்க்க அவர்களுடன் பேசுவதி லேயே எனக்கு அதிக நாட்டமிருந்தது. ஏனெனில், விசாலமான அறிவுடனும், புத்திக்கூர்மையுடனும் அவர் எனது கேள்விகளுக் குப் பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரது மேதாவிலாசத்தினை மெச்சிய அதேவேளையில், எனது சமுசயங்களுக்குத் தீர்வுகாண நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைந் தேன். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். நான் கேள்வி க்ேட்க, அவர் பதிலளிப்பார். அவருடைய பதில் போதவில்லையெனில் அவரது துணைவியார், என்னிடம் தோன். றிய ஐயப்பாடுகளைத் தீர்த்து வைப்பார். இப்படியே விவாதித் துக்கொண்டிருந்தோம்.
மத அனுட்டானங்களுக்கான உரிமையையும், விரும்பிய மதத்தினை ஏற்றுக்கொள்ளும் சுதந்திரத்தையும் ரஷ்ய அரசியல் திட்டம் வழங்கியிருக்கின்றது. 1917ம் ஆண்டுக்குப் பின்னர் உரு வாக்கப்பட்ட இத் திட்டத்தில்தான் இவ்வுரிமையும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு மனிதனுக்கு, தான் விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமை அளிக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், மதத்தில் நம் பிக்கை இல்லாதவர்களுக்கு சமய எதிர்ப்புப் பிரசாரங்களை நடத்தவும சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஒருவனுடைய தனிப்பட்ட நம்பிக்கையில்தான் இவை தங்கியிருக்கின்றன. "மதமானது தனி நபரின் சொந்த விடயம்" என்று லெனின் கூறி இருக்கிருர், அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லையென்பதே அவரின் வாதமாகும். அதே கொள்கைதான் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
மதம் வேறு; பாடசாலைகள் வேறு. பாடசாலைப் படிப்புடன் மதபோதனையைக் கலக்க முடியாது. அதற்குத் தடைபோடப் பட்டிருக்கினறது. இதன் விளைவாக மாணவர்கள் மதத்தினைப்

Page 13
18 சிரித்தன செம்மலர்கள்
பற்றிக் கல்வி நிலையங்களில் கற்றறிய முடியாது.அதைப்போன்று தான் திருச்சபையும், அரச நிருவாகமும் பிரிதது வைக்கப்பட் டிருக்கின்றன. ராஜாங்க வேலைகளில் திருச்சபை தலையிட முடி யாது. அரச நடவடிக்கைகளில் தமது செல்வாககினைப் பிரயோ கிக்கத் திருச்சபையினருக்கு அனுமதி கிடையாது. மதம் வேறு, அரச நிருவாகம் வேறு. ஒன்றுடன் ஒன்று தலையிடுவதால் அனர்த் தங்களே விளையும். அதனல் அவை பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதத் தாபனங்களைக் கொண்டு நடத்துபவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பானதொன் ருகும. ஒவ்வொரு மதத்திலும் பற்றுள்ளவர்கள் தமது சொந்த விருப்பத்தின பேரில் பணவுதவி கொடுக்கின்ருர்கள். தம்மால் இயன்ற அளவுக்குச் சந்தாத் தொகைகளை வழங்குகின்ருர்கள். அவற்றினை ககொண்டு
லெனின் வாழ்ந்த வீட்டின் படிப்பறையிலே & ஸ்ள * பிசின் புட்டியைப்பற்றி கட்டுரையாளருக்கு சாஷா விளக்கிக்கொண்டிருக்கிருர். நாளாந்தம் தாம் உடயோ கிக்கும் "பிசினை" லெனின் தன் கைப்படவே செய்க. இப் புட்டியில் இட்டு வைப்பாராம்.
 

சிரித்தன செம்மலர்கள் 19
தான் மத நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. நூல்களையும் சஞ் சிகைகளையும், தங்களுக்கு வேண்டிய பிரசுரங்களையும் வெளிக் கொணர்கிருர்கள். இவை தனிப்பட்ட விடயங்கள் என்றபடி யால் அரச உதவி கிடைப்பதில்லை.
ரஷ்ய வைதீக தேவாலயத்தின் ஆக்ஞைகளுக்கு உட்பட்ட வர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ருர்கள். இஸ்லாம் மதத் திரைப் பின்பற்றுகிறவர்களும் கணிசமான அளவில் இருக்கின்ருர் கள். கிறிஸ்தவ பப்டிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவர்கள்,திருவாயிர வரு கைக் கோட்பாட்டாளர், விவிலிய மறைக் கோட்பாட்டாளர் போன்ற பல்வேறு மதக் கோட்பாடுகளை அனுட்டிப்பவர்கள் வாழ்கின்றர்கள். தங்களுடைய மதங்களைக் கடைப்பிடித்துஒழுக அவர்களுக்கு எவ்வித தடையோ, தடங்கலோ கிடையாது.
ஆனல், சோவியத் நாட்டிற்கு எதிரான பிரசாரத்தில் இறங் கவோ, கம்யூனிஸ கட்டுக்கோப்பினைச் சிதைக்கும் பிரசாரத்தில் இறங்கவோ அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தாய் நாட்டின் நலனில் அக்கறையுடையவர்கள் அவ்வாறு செய்வது தகாதென்று அரசியல்சட்டம் வரையறுத்துக் கூறியுள்ளது. கம் யூனிஸத்துக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் இறங்குவது தேசத் துரோகச் செயலாகும். மதத்தினை வளர்ப்பதாகப் பாசாங்கு செய்பவர்கள் தேசத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்.
Sà62 fluoritulu படம்போன்று எல்லா விவரங்களையும் அப்பெரி யார் எனக்குத் தெளிவாக விளக்கிக்கொண்டிருந்தார்.
இளவயதினர், அதாவது வாலிபப் பருவத்தினர் மதத்தில் நாட்டம் கொண்டுள்ளனரா? இது எனது அடுத்த கேள்வி.
இளவயதினர் தமது எதிர்காலத்தைப்பற்றியே சிந்திக்கிருர் கள். படிப்பில் சிரத்தை காட்டுகிருர்கள். தாம் மேற்கொண் டுள்ள தொழிலில் அதிக ஊக்கம் எடுக்கின்ருர்கள். அவர்களின் எண்ணங்களும் அபிலாஷைகளும் தொழில், ஆக்க முயற்சிகளில் நிலைகுத்தி நிற்கின்றன.
பழமையில் பற்றுள்ளவன் சமய சித்தாத்தங்களை நாடலாம். எதிர்காலத்தைப்பற்றி ஏங்குபவன் மதமென்னும் போர்வைக் குள் அடைக்கலம் புகுந்துகொள்ளலாம். ஆனல்,புதுயுகம் காணத் துடிக்கும் வாலிபன், விஞ்ஞான ரீதியிலமைந்த வாழ்வில் தனது மனதைப் பறிகொடுத்து நிற்கின்(?ன். அவனது உள்ளுணர்வும் சிந்தனையும் யதார்த்த நிலையில் செயற்படுவதால், மத போதனை களுக்கு அவனது இதயத்தில் இடமில்லாமற் போய்விடுகிறது.

Page 14
20 சிரித்தன செம்மலர்கள்
பெரியவருக்குப் பதிலாக அவ்வம்மையார் எனக்களித்த விளக்கம் இதுதான். பெரியதொரு தத்துவம் இதில் பொதிந் திருப்பது எனக்குப் புலனகியது. சிற்றுண்டிச்சாலையில் இருந்த இளவயதினரைப் பார்த்தேன். மன உளைச்சல்கள் எதுவுமின்றி ஆயாசமாக அவர்கள் பொழுதினைப் போக்கிக்கொண்டிருந்த னர். கலகலவென்ற சிரிப்பு. சில சமயங்களில் உரத்த தொனி யில் பேச்சு. எதிர்காலத்தைப்பற்றிய கவலையே இல்லாத போக்கு. முகங்களில் ஒரு சோபை, அங்கே கவலையையோ ஏக்கத் தையோ என்னுல் கண்டுகொள்ள முடியவில்லை.
அங்கு குழுமியிருந்த காதல் ஜோடிகள் இன்பமுற ஏதேதோ சல்லாபித்துக்கொண்டிருந்தன. கண்களும், வாய்களும் பேசின. ஆனல், அவை மதத்தைப்பற்றிய பேச்சாக இருக்கமாட்டாதென நான் புரிந்துகொண்டேன். எமக்கு அருகில் போடப்பட்டிருந்த மேசையில் அமர்ந்திருந்தவர்கள் அடுத்த விடுமுறையை எங்கே
கழிப்பதென்று வாதாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடலை சாஷா எனக்கு சுருக்கமா மொழிபெயர்த்துக் கொடுத்தார்.
தான் கூறியது உண்மையென்பதனை அருகிலிருப்பவர்கள் உணர்த்துகின்ருர்களென்று அவ்வம்மையார் முறுவலித்தார். அதை ஆமோதிப்பதைவிட எனக்கு வேறு ஒன்றும் செய்ய முடிய வில்லை.

சிரித்தன செம்மலர்கள் 1 ہے۔
4. நட்பும், தேநீரும்!
“ ‘பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் - அங்கு பதுமை கைக்கிண்ணத்தில் அளித்திடவே!"
-LumpS.
இலங்கையின் தேயிலைப்பானத்தை சோவியத் மக்கள் விரும்பிப் பருகுவதைக் காண எனக்குப் பெரு மகிழ்ச்சியாகஇருந் தது. நல்லரகத் தேயிலையென்ருல் சொல்லத் தேவையில்லை.விழுந தடித்துக்கொண்டு வாங்குவார்கள். தேயிலைப் பானத்தைப பருகி உடலுக்கும் உள்ளததிற்கும் இதத்தினைத் தேடிக் கொள்வார் கள்.
மாஸ்கோ நகரின் சுற்றுப்புறத்திலிருக்கும் தேயிலைத்தொழிற். சாலைஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. "லெனின் தேயிலைத் தொழிறசாலை" என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். நானும்சாஷாவும் தொழிற்சாலைக்கு சென்றபோது,அதன் டைரக் டர், தொழிற்சங்க அதிகாரி, அவ் வட்டாரத்தின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆகியோர் எம்மை வரவேற்றனர். தொழிற் சாலையில் கடமையாற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் வரவேற் புக் குழுவில் அடங்கியிருந்தனர்.
லெனின் தேயிலைத் தொழிற்சாலையைப் பொறுத்தவரையில் அதற்கும் எமது நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப் பதாகவே எனக்குப் பட்டது. சோவியத் - இலங்கை நட்புறவுச் சங்கத்தின் நடவடிக்கைகளின் பயனுக இத் தொடர்பு மிக இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பதனை என்னுல் அவதானிக் கக் கூடியதாக இருந்தது.
தொழிற்சாலையின் வரவேற்பு மண்டபத்தில் பெரியபடங் கள் தொங்கவிடப்பட்டிருந்தன. பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா அத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட படம், எமது அமைச்சர்கள், அதிகாரிகள்,சோவி பத் - இலங்கை நட்புறவுச் சங்க உறுப்பினர்கள் அத் தொழிற் சாலையைப் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் அங்கு

Page 15
2& - சிரித்தன செம்மலர்கள்
காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அப்படங்களைப் பார்த்தபோது நான் இலங்கை மண்ணில் இருக்கின்றேனு அல்லது சோவியத் மண்ணில் இருக்கின்றேனு என்றே எனக்குச் சந்தேகமேற்பட். டது. ஏனெனில் அவ்வளவு தூரத்திற்கு இலங்கை-சோவியத் நட்புறவினச் சித்திரிக்கும் படங்கள் என்ஐ கவர்ந்துகொண் டிருந்தன. ܐ
அத் தொழிற்சாலையில் “டீ டேஸ்ட்டராகக் கடமையாற்று பவர் இலங்கைக்கு இருமுறை விஜயம் செய்திருக்கிறா. புகல் லாவை, பூண்டுலோயா போன்ற பகுதிகளில் தங்கியிருந்து தேயிலைச்செடிகளின் உற்பத்திமுறைகளைப் பார்வையிட்டிருக் கிருர். இங்குள்ள தேயிலைத் கொழி ர்சாலைகளுக்குச் சென்று அங்கு நடப்பனவற்றையும் அவதானித்திருக்கிருர். இதனுல் இல யின் தேயி%லயைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். அவரைப் போன்று அந்தத் தொழிற்சாலையில் *l-99udun ögyub சில பெண் ஊழியர்களும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின் றனர்.
இலங்கையின் தேபி%லயை மட்டுமல்ல, செவ்விளநீரையும் அவர்கள் பாராட்டினுர்கள். நல்லெண்ண விஜயத்தின மேற் கொண்டு இலங்கை வந்தவர்கள், மலையகத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு விஜயம் செய்ததுடன் நீர்கொழும்பு, ஹிக் கடுவை போன்ற இடங்களுக்குச் சென்று உல்லாசமாகப் பொழு தினைப் போக்கியிருக்கிறர்கள். இலங்கை பின் இயற்கைக் காட்சி களைப்பற்றியும், நாட்டின் எழிலப்பற்றியும் அவர்கள் புகழ்ந் துரைத்தபொழுது என் மனம் புல்லரித்தது.
லெனின் தேயிலைத் தொழிற்சாலை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்ப ட்டதாகும் குறிப்பாக இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் அவர்கள் தேயிலையை இறக்குமதி செய்கி?ர்கள. அத்துடன் ரஷ்யாவின் சில மாநிலங்களிலிருந்தும் தேயிலையைப் பெற்றுக்கொள்கிருர் கள். இவ்வாறு தருவிக்கப்படும் தே பில இத் தொழிற்சாலையில் பதனிடப்பட்டுப் பக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றது. கால் இருத்தல், அரை இருத்தல், ஒரு இழுத்தல் என்று வெவ்வேறு அளவுகளில் அவை அடைக்கப்படுகின்றன. மாஸ்கோ நகர் முழு வதற்கும் அவை விநியோகிககப்படுகின்றன. மிஞ்சிய தேயிலைப் பாக்கெட்டுகள் ஏனைய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
தொழிற்சாலைக்கு நாங்கள் விஜயம் செய்தபொழுது கிழக்கு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இயந்திரங்களே அங்கு பொருத் தப்பட்டிருக்கக் கண்டோம். அதிக பாக்கெட்டுகளை அடைக்க வேண்டியிருப்பதாலும், ஏனைய மாநிலங்களிலும் தேயிலைப் பாக்

சிரித்தன செம்மலர்கள் 23
கெட் விற்பனவுகளைப் பெருக்கவேண்டியிருப்பதாலும் பிரிட்டனி லிருந்துதாருவிக்கப்படும் பாரிய புது இயந்திரங்களை பொருத்த விருப்பதாகத் தொழிற்சாலையின் டைரக்டர் எம்மிடம் கூறிஞர். பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் வெகுவிரைவில் வந்து சேர்ந்துவிடுமென்றும் அவை பொருத்தப்பட்ட பின்னர் பாக் கெட் அடைக்கும் வேலைகளை நூறு சதவிகிதம் அதிகரிக்கலாமென தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
* தொழிற்சாலையைப் பார்வையிட நாம் அழைத்துச் செல் லப்பட்டோம். பெரும்பாலும் பெண்களே அங்கு பணிபுரிகின்
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்கு
மதி செய்யப்படும் தேயிலை, மாஸ்கோ நகரின் சுற்றுப்
புறத்திலுள்ள லெனின் தேயிலைத் தொழிற்சாலையில்
"பாக்கெட்"டில் இயந்திரத்தின் உதவியுடன் அடைக்கப்
படுகிறது.

Page 16
24 சிரித்தன செம்மலர்கள்
றனர். நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக இருந் தனர். ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் சிறந்தவேலையைப் பெறும்பொருட்டு ஊக்கத் திட்டங்களை வகுத்திருந்தனர். ஒரு தினத்தில் அதிக பாக்கெட்டுகளை அடைப்பவரின் வேலை விசேட மாகக் கணிக்கப்படும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து நற்சேவை செய்யும் தொழிலாளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் பதக்கங்கள் கொடுக்கப்பட்டுகெளரவிக் கப்படுவார்.அவருடைய புகைப்படமும் அவர் வேலைசெய்யுமிடத் தில் ஏனைய தொழிலாளிகளின் பார்வைக்கென வைக்கப்படும். மற்றவர்களுக்க ஒரு முன்மாதிரியாக, ஒரு வழிகாட்டியாக அவர் இருக்கின்ரு ரென்பதைப் புலப்படுத்தவே இவ்வொழுங்குகள் செய் யப்பட்டிருக்கின்றன.
இத்தகைய திறமைப் பரிசுபெற்ற பெண் தொழிலாளி ஒரு வர் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நாற்பத் தெட்டு வயது நிரம்பிய அப் பெண்மணி தொடர்ச்சியாகத்தனது செயற்திறனையும் ஊக்கத்தினையும் வெளிக் காட்டியதால் பதவி உயர்ச்சி பெற்றிருந்தார். அவர் க்டமைபுரிந்த பகுதியின் முகவ ராக நியமிக்கப்பட்டிருத்தார். உண்மையாக உழைப்பவர்களுக்கு ரஷ்ய நாடு கொடுககும் மதிப்பினை இது எனக்கு உணர்த்தியது. தொழிற்சாலையை வெகு துப்புரவாகவும், அழகாகவும்வைத் திருந்தார்கள். தொழிலாளருக்கான அவசர சிகிச்சை அறை , ஓய்வு விடுதி, உணவு மண்டபம், சிற்றுண்டிச்சாலை போன்ற இடங்கள் வெகு நேர்த்தியாக அமைந்திருந்தன. தொழிலாளரே தொழிற்சாலையை நிருவகித்து நடத்துவதால் தொழிலாளரின் தேவைகளைக் கவனிக்கும் இடங்கள் யாவும் அழுக்கற்ற நிலை யில் காணக் கிடந்தன. சமூகச் சொத்து என்ற நினைப்பில் அவற் றினை ஒவ்வொருவரும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
டீ டேஸ்டர், செக்கர் போன்றவர்களுடனும் நிருவாகத் துக்குப் பொறுப்பான தலைவருடனும் நாம் பேசியபொழுது ஒரு சில உண்மைகள் வெளியாகின. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தேயிலை தருவிக்கப்பட்டபோதிலும், இலங்கை யின் உயர்ந்த ரக தேயிலைக்கு நல்ல மவுசு இருந்ததை அவர்கள் வெளிப்படையாகவே கூறி வைத்தனர். ஆனல், இந்தியாவும் இத்துறையில் கடுமையாகப் போட்டியிடுவதால் எமது உயர் ரகத் தேயிலையின் தரத்தையும், மணத்தையும், குணத்தையும் நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டியது அவசியமாகும். இதனை நாம் செய்யத்தவறில்ை இப்பொழுது பிடித்து வைத்திருக்கும் ஒருபடி உயர்ந்த நிலையைக் கட்டாயமாகக் கைவிடுவோமென்று நான் உணர்ந்துகொண்டேன்.

சிரித்தன செம்மலர்கள் 25
சோவியத் நாட்டிலுள்ள ஜோர்ஜியா போன்ற மாநிலங்களி லிருந்து பெறப்படும் தேயிலை காரம் மிகக் கூடியதாகும். இதனை பச்சைத் தேயிலைப் பானமாக்கிப் பருகுவர். இலங்கைத் தேயிலை யிலும் பார்க்க இது காரம் கூடியதுமட்டுமன்றி அளவிலும், நிறத்திலும் மாறுபட்டதாகும். இத் தேயிலையை ஆண்கள் அதிக மாக விரும்பிக் குடிப்பதனை நான் பார்த் திருக்கின்றேன்.
இது சோவியத் நாட்டில் மிகவும் பிரசித்தம் பெற்றதா கும். இதற்குப் பாலும் போடமாட்டார்கள். சீனியும் போட மாட்டார்கள், எலுமிச்சையோடு கிடைக்கும் இப் பானம் வயிற் றுக் கோளாறுகளத் தீர்ப்பதாகக் கூறிக் கொள்வர். விருந் தாளிகள் வந்தால் பெரிய வளைவான பாத்திரங்களில் தேயிலைப் பானத்தை எலுமிச்சைப் பழப் பாதியுடன் கொடுப்பது அவர் களின் வழக்கமாகும். உருளையில் அழுத்தி உடன் வறுக்கப்பட்ட இத் தேயிலையைக் காலை, மாலை, இரவென எந்த வேளையிலென் ருலும் பருக அவர்கள் தயாராக இருப்பர்.
மேசையில் பெரிய கூசாவொன்றில் கொதிக்கக் கொதிக் கப் பச்சைத் தேயிலைப்பானம் வைக்கப்பட்டிருக்கும். கூசாவுக் குப் பக்கத்தில் விருந்தாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகை யில் பாத்திரங்களும் இருக்கும். வீட்டுக்காரர் ஒவ்வொரு பாத் திரத்திலும் பச்சைத் தேயிலைப் பானத்தை நிரப்புவார்.
பாத்திரத்தை எடுத்து தேயிலைப் பானத்தை ஊற்றி, ஊற்றி ஆற்றுவார். இவ்வாறு தேயிலைப் பானத்தைப் பலமுறை ஊற்றி, ஊற்றி ஆற்றுவாரேயானுல் வந்துள்ள விருந்தாளி வீட்டுக்காரருக்கு மிகவும் வேண்டியவர் என்பதே அர்த்கம். அதாவது நெருங்கிய நண்பரொருவரோ அல்லது மிகவும் வேண்டப்படும் ஒருவரோ வீட்டுக்கு வந்தால் வீட்டுச் சொந் தக்காரர் இவ்வாறு நடந்துகொள்வார். கொதிக்கும் பச்சைத் தேயிலைப்பானத்தை ஒரு பாத்திரத்திற்குள் வார்த்துவிட்டு அப் பானத்தின் சூட்டினைத் தணிப்பதற்கு இன்னேரு சிறு பாத்திரத் திற்குள் ஊற்றி ஆற வைப்பது ஆழ்ந்த நட்பினை எடுத்துக்காட்டு கின்றது.
ஆனல், வந்த விருந்தாளியிடம் கொதிக்கும் தேயிலைப் பானத்தை சுடச் சுடப் பாத்திரத்திவிட்டு வீட்டுக்காரர் ஒப் படைப்பாரேயானல், அந்த விருந்தாளி அதிகநேரம் வீட்டில் தங்கியிருப்பதனை வீட்டுச் சொந்தக்காரர் விரும்பவில்லையென்றே பொருள்படும். அதனைப் பருகியவுடன் வந்தவர் வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டும். அதிகநேரம் தங்கியிருந்து காலத்தை வீணுக்கலாகாதென்பதை வாயால் கூருது செய்கையால் விளக்கி வைப்பர்.

Page 17
露6 சிரித்தன செம்மலர்கள்
நண்பரொருவர் விருந்தாளியாக வந்தால் கூசாவில் வைக் கப்பட்டிருக்கும் தேநீர்ப் பானம் முடிவுறும்வரை பாத்திரத்தில் வற்றி ஊற்றிக் குடிக்கவேண்டும். சுவையாகக் கதைத்துக் கொண்டு குடித்து முடிப்பதென்ருல் ஒன்றரை மணித்தியாலமா வது செல்லும். இதற்கென்றே ரஷ்யாவின் பல இடங்களில் பச் சைத் தேயிலைப் பானக் கடைகள் இருக்கின்றன. இக் கடை களில் வேறு எத்தகைய குடிவகைகளோ, தின்பண்டங்களோ
லெனின் தேயிலைத் தொழிற்சாலையில் "பாக்கெட்" செய்யப்பட்ட அழகிய தேயிலைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி.
பரிமாறப்படுவதில்லை. பச்சைத் தேயிலைப் பானம் மட்டுமே வழங் கப்படும். நண்பர்கள், அந்நியோன்யமான உறவினர்கள் ஒன்ருக
 

சிரித்தன செம்மலர்கள் 27
இருந்து இன்பமாகக் கதைத் துப் பொழுதைப் போக்க இது ஒரு வழியாகும்.
லெனின் தேயிலைத் தொழிற்சாலையிலும் எனக்கு இந்த அனு பவம் ஏற்பட்டது. அத் தொழிற்சாலையின் டைரக்டர், கூசாவில் இருந்த தேநீர்ப் பானத்தை ஒரு பாத்திரத்திலிட்டுப் பின்னர் நான்கு, ஐந்துமுறை மாறி மாறி ஊற்றி ஆறவைத்துவிட்டு என் னிடம் ஒப்படைத்தார். நான் ஒரு விசேட விருந்தாளியாகச் சென்றதால் விசேட உபசாரம் எனக்கு அளிக்கப்பட்டது. பாத் திரத்திலிருந்த தேநீரை ஒருமுறை பருகியபின்னர், இரண்டாம் முறையும் அவர் ஊற்ற எத்தனித்தார். ஆனல், வயிற்றில் இட மில்லாததினுல் இன்னெருமுறை அத் தேநீரை உட்கொள்ள என்னுல் முடியவில்லை.
நண்பர் சாஷா இவ் வழக்கத்தில் நன்கு பழக்கப்பட்டவர். தேநீர் பருக வது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.
எனது பங்கையும் ஒன்றுசேர்த்து அவர்குடித்து முடித்தார்.எனக்கு உதவிசெய்த நண்பரை நான் பின்னர் பாராட்டத் தவறவில்லை.

Page 18
28 சிரித்தன செம்மலர்கள்
5.
நகர்ந்தசையும்
மாளிகைகள்!
**அரும்பும் வேர்வை உதிர்த்துப்புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே பெரும் புகழ் நுமக்கேயிசைக்கின்றேன் பிரமதேவன் கலையிங்கு நீரே'
- Lumtgrgsô
w- O (UPருகா என்றதும், உருகாதா என் மனம். மோகனக் குஞ்சரி மணவாளா..!" என்ற பக்திப் பாடல்ஒலித்துக் கொண் டிருந்தது.
ஏது? மாஸ்கோ நகரில் முருகனின் பக்திப் பாடல் எவ்வாறு ஒலித்தது? என்று மூக்கின்மேல் விரலை வைத்துச்சிந்திக்கத் தலைப் படாதீர்கள்.
லுமும்பா பல்கலைக் கழகத்திற்கு நான் விஜயஞ் செய்த பொழுது அங்கு படித்துக் கொண்டிருக்கும் எனது உறவினர், ** டேப் ரிக்கார்டரில்" இப்பாடலை போட்டுக் காட்டித் தானும் மகிழ்ந்து கொண்டார். பொறியியல் து  ைற பட்டதாரி மாணவராகிய அவர், பக்திப் பாடல்களை யெல்லாம் 'டேப்' செய்து வைத்திருக்கிருர், ‘தெய்வம்' சினிமாப்படத்தில் உள்ள பக்திப் பாடல்கள், தமிழகப்பாட்டுக் காரர்களின் பக்திப் பாடல் கள் எல்லாம் 'டேப்பில்' இருந்தன.
இலங்கையில் படிக்கும் நாட்களில் பரீட்சைக்கு முதல் நாள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று அவர் கும்பிடுவது வழக்கம். பரீட்சை தொடங்கும் நாளிலும் அவர் கோவிலுக்குச் சென்று முருகனை வழிபட்டுத் தேங்காய் உடைத்துவிட்டுத் தான் அரீட்சை எழுதச்செல்வார்.
ஆனல், மாஸ்கோ நகரில் முருகனைத் தரிசிப்பது எங்ங்ணம்? அதற்கு ஒரே வழி முருகனைப் பற்றிய பக்திப்பாடல்கள்
அனைத்தையும் "டேப்' செய்து வைத்திருப்பது தான். கடவுளைப் பற்றிய எண்ணம் வந்தவுடன் அறைக்குள் வைத்து "டேப் ரிக்

சிரித்தன செம்மலர்கள் 29
கார்டரைப்' போட்டுக் கொள்வார். பாட்டை ரசிக்கும் வேளை யில் முருகன் மீது பக்தியும் பிறந்து விடும் என்று அவர் என்னிடம் கூறினர்.
அவரைப் பார்க்கச்சென்ற சமயம் தம் கைவசமிருந்த பக்திப் பாடல்களை அவர் போட்டுக்காட்டினர். தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும் அவர் என்னிடம் கூறிவைத்தார். லுமும்பா பல்கலைக் கழகத்தில் அவர் படிப்புக்களை ஆரம்பித்த நாங்களில் தமிழ்ப் பக்திப் பாடல்கள் எத்தகையவை என்பதைச் சகமாணவர் களுக்கு விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாம்.
அவருடன் படித்த தோழர்களுக்குப் பக்திப் பாடல்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. குறிப்பாக ரமணி அம்மாளின் பாட் டுக்கள் டேப் ரிக்கார்டரில் போடப்பட்டதும் மற்ற மாணவர்கள் ஆடத்தொடங்கி விடுவராம். நம்மவர்கள் ‘பைலா' நடனம் ஆடுவதைப் போன்று அவர்களும் நடன இசையென நினைத்துக் கொண்டு கட்டிங் பிடித்து ஆடத்தொடங்கி விடுவார்களாம்.
-
議
வீதிகளை விசாலிக்கும்போது குறுக்கே நிற்கும் கட் டடங்களைப் பெயர்த்து உருளைகள்மேல் வைத்து இப் படித்தான் அசைத்து நகர்த்துகிருர்கள்.
பக்திப் பாடல்களை வைத்துக்கொண்டு 'பைலா" ஆட 'எனது உறவினர் விரும்பவில்லை. மற்றவர்களைத் தன் வழிக்குக்

Page 19
O “ታ சிரித்தன செம்மலர்கள்
கொண்டு வர மிகவும் பிரயாசை எடுக்கவேண்டியிருந்தது. காலஞ் செல்லச் செல்ல அவர்களும் நிலைமையை உணர்ந்து 'பக்திப் பாடல்களுக்கு' பைலா ஆடுவதை நிறுத்திக்கொண்டனர். இப் பொழுது அவர் தனிமையில் இருக்கும் வேளையில் தான் முருகன் தியானத்தில் ஈடுபட்டு வருகின்ருர்,
அவரது பக்திப் பரவசம் முடிவடைந்ததும் மாஸ்கோ நகர் வீதிகளுக்கு அவரை இழுத்து வந்தேன்.
திட்டமிட்ட அடிப்படையில் தான் ரஷ்ய நகரங்கள் நிரு
மாணிக்கப்பட்டிருக்கின்றன. பரந்து அகன்று செல்லும் வீதிகள், அவற்றுக்கருகில் உயர்ந்து வியாபித்து நிற்கும் கட்டடங்கள், சூழலைக் கெடுக்காத முறையிலும் நச்சுப் புகைகள் பரவுவதைத் தடுக்கும் விதத்திலும் நகரங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
எனது உறவினர் கட்டடத் துறையில் ஆராய்ச்சிகள் நடத்தி வல்லமை பெற்றிருப்பவர் என்ற படியால் மாஸ் ஃகா நகரின் நிருமான வேலைகளை இலகுவாக எனக்கு விளக்கி வைத்தார்.
விதிகளை விஸ்தரித்து ஓர் ஒழுங்கான முறையில் அவற்றினை அமைக்கும் பொருட்டு அவ்வீதிகளுக்கு அருகிலிருந்த கட்டடங் களை அவர்கள் அகற்றி இருக்கிருர்கள். உண்மையில் கட்டடங்கள் தகர்த்தப்பட்டிருக்கின்றனவென எனது உறவினர் கூறியபொழுது என்னல் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.
1930ம் ஆண்டிலிருந்தே கட்டடங்களை நகர்த்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1936லிருந்து 1941ம் ஆண்டுவரை மாஸ்கோ நகரிலிருந்தே ஏறத்தாழ நாற்பது பெருமாடிக் கட்டடங்கள் நகர்த்தப் பட்டிருக்கின்றனவென அவர் புள்ளி விவரங்களுடன் எனக்குக் கூறி வைத்தார்.
கட்டடங்களை நகர்த்தும் கலை அவ்வளவு புதியதொன்றல்ல. கி. பி. 1455ம் ஆண்டில் இத்தாலியில் வாழ்ந்த அரிஸ்தோத்தல் பிரோவான்டி என்ற கட்டடக்கலை நிபுணர் அங்கிருந்த கட்டட மொன்றை முப்பத்திநான்கு அடிகள் தூரத்திற்கு நகர்த்தியிருந் தார். ஆனல் அவரது கலை, பரம இரகசியமாக பவுத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததன் விளைவாக ஏனைய நாட்டவர்கள் அதனை எளிதில் கற்றுக் கொள்ளவில்லை.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் கட்டடங்களை நகர்த்தும் வேலைகள் மீண்டும் ஆரம்பித்தன. அமெரிக்காவிலும் இதனைச் செய்தார்கள். அதைப்போன்று ரஷ்ய நாட்டிலும் முதன் முதலாக 1898ம் ஆண்டில் இரண்டு அடுக்கு மாளிகையொன்று

சிரித்தன செம்மலர்கள் 3.
மாஸ்கோ நகரில் நகர்த்தி வைக்கப்பட்டது. ஏழு அடி ஆழமும் தாற்பத்தியெட்டு அடி அகலமும் கொண்ட ஒரு குழிக்கு மேலால் அந்த மாளிகை நகர்த்தப்பட்டு விடப்பட்டது.
மாஸ்கோ நகரின் புனர் நிருமாணத்துக்காக 1930ம் ஆண் டில் “டிரஸ்டி” சபையொன்று அமைக்கப்பட்டது. பழைய வீடு களைப் பாதுகாப்பதுடன் இச்சபையின் வேலைகள் முடிந்துவிட வில்லை. அந்நாட்களில், வீடுகளை இடம் பெயர்க்க வேண்டிய
சோவியத் நாட்டில் உள்ள ஓங்கி உயர்ந்து புத்தக
விரிப்பைப்போல் காட்சிதரும் இக் கட்டிடத்தில்தான்
பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழு கருமமாற்றுகிறது.

Page 20
森2 சிரித்தன செம்மலர்கள்
அவசியம் ஏற்பட்டபொழுது அவற்றினை பகுதி பகுதியாகக் கழற் நிப் புது இடங்களில் கட்டிக்கொண்டார்கள்.
ஆனல் அதனிலும் பார்க்கக் கட்டடங்களை முழுமையாக நகர்த்தி அவற்றைப் பொருத்தமான இடங்களில் விட்டு வைப் பது நேரச் செலவையும் வேலைச்செலவையும் குறைக்கும் என்று கண்டு கொண்டார்கள்.
ஒரு கட்டடத்தை அகற்றுவதற்கு முன்னர் அது எழுப்பப்பட் டுள்ள நில அமைப்பினை நன்கு ஆராய்ந்து பார்ப்பார்கள். இதன் பின்னர் அக்கட்டடத்தின் அத்திவாரம் வரை தோண்டுவார்கள். அத்திவாரம் வரை தோண்டிய பின்னர் கம்பித் தூண்களினல் இறுக்கமாகக் கட்டடத்தைப் பிணேப்பார்கள்.
அவ்வாறு செய்து கொண்டு அத்திவாரத்திற்குக் கீழே உருளை களை வைத்துக் கட்டடத்தை நகர்த் துவார்கள்.
ஒரு மணித்தியாலத்திற்கு முப்பத்தைந்து அடி தூரம் கட் டபுடம் நகர்த்தப்படலாம்.இவ்வாறுநகர்த்தப்படும் கட்டடம், புதி ர்க அமைக்கப்பட்டுள்ள அத்திவாரத்தின்மீது பொருத்தப்படும்.
* கோர்க்கி வீதியில் அமைந்திருக்கும் மாஸ்கோ நகர் சோவியத் *ட்டடம் 1939ம் ஆண்டில் நாற்பது அடி தூரம் நகர்த்தி வைக் ஃப்பட்டது. இக்கட்டடம் பதினெட்டாம் நூற்ா?ண்டில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற கட்டடக் கலைஞரான மட்விகஸாகவ் என்ப வரால் நிருமாணிக்கப்பட்டதாகும்.
அதே போன்று கண்வைத்தியத்திற்கான ஆஸ்பத்திரியொன்றும் எண்பது அடி தூரம் நகர்த்தப்பட்டது. அப்படியே நகர்த்தப் பட்டது மட்டுமல்ல; முன் வாசல் இருந்த பக்கத்தில் பின்வாசல் இருக்கக் கூடியதாக திருப்பியும் வைக்கப்பட்டது. அதாவது, முன்வாசல் முன்னர் எப்பக்கத்தினை பார்த்ததோ,அங்பக்கத்தினை
பின்வாசல் பார்த்தது.
இவ்வாறு, மாளிகைகள், வீடுகள், மாடிக்கட்டடங்கள் ஆகிய யாவும் நகர்த்தப்பட்டன. பிரபல ரஷ்யக்கவிஞரான அலெக் ஸாந்தர் புஷ்கின் என்பவருடைய நினைவுச்சிலையும் நூற்றிப் பத்து அடி தூரம் நகர்த்தப்பட்டது.
பிரபல ஒவிகரொருவரின் வீடு, ஒரு வீதியைப் பார்த்தவாறு முன்னர் இருந்தது. அவ்வீடு நகர்த்தப்பட்ட பின்னர் இப் பொழுது இன்னெரு வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
நகர அமைப்பில் வீடுகளும் வீதிகளும் திட்டமிட்ட அடிப் படையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்து

சிரித்தன செம்மலர்கள் 33
வந்திருக்கின்றனர். வீதிகளைப் பெருப்பிக்கும் பொழுது வீடுகள் குறுக்கே நின்ருல் அவற்றினைப் பின் தள்ளி வைக்கின்றர்கள். வீதிகள் ஒன்று சேரும் சந்திகளில் வீடுகள் இடைஞ்சலாக இருந் தால் அவற்றினை வேண்டிய அளவுதூரத்துக்கு அப்பால் கொண்டு: போய் நிறுத்தி விடுகிருர்கள்.
இதனுல் நகரத்துக்குத் தனி அழகு கிடைத்து விடுகின்றது. வாகனப்போக்கு வி ரத்துக்கு இருந்த இடைஞ்சல்களும், தடங்கல் சு ஞ ம் இ ல் லா ம ல் போய்விடுகின்றன. பெ ட் ரோ ல் எண் ணெய், எரிபொருள் ஆகியவற்றின் உப யோகத் தி ஞல் வீதிகளில் ஏற்படும் நச்சுப் புகை வீடுகளுக்குள் புகுவ தில்லை. சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைக் காப்பாற்றச் சிறந்த பார்க்கயாக "நடக்கும் கட்டட அமைப்பு" அமைந்து விடுகிறது.
இயந்திர மயமாக்கலின் விளைவாக நகரங்களில் வாழும் மக்கள் அசுத்தக் காற்றினையும் அழுக்கினையும் அனுபவிக்க வேண்டி ஏற்பட்டு விடுகின்றது. ஆளுல் "நடக்கம் கட்டடங் சளிஞல்" இவ்வழுக்குகளிலிருந்து நகரவாசிகளுக்கு விடுதலை கொடுத்து விடலாம்.
மாஸ்கோ நகரின் அமைப்பினையும் பொலிவினையும் கண்டு பிரமித்த பொழுது, சொழும்பு மாநகரைப் பற்றியும் நான் சித் திச கலானேன். பஸ் வண்டிகள் கக்கும் புகை ஒரு புறம்; வீதியின் அருகே வாசல் கொண்ட வீடுகள் ஒரு புறம், வாசலில் நின்று விளையாடுப் சிறு பிள்ளைகள் மறுபுறம்; மண் தூசியையும் நச்சுப் புனகசளையும் சுவாசிக்கும் மனிதர் கூட்டம் ஒரு புறம்.
என்று தான் நிலைமை மாறுமோ என்று எனக்குள்ளே நினைத் துக்கொண்டேன். V

Page 21
34 சிரித்தன செம்மலர்கள்
6. வீரனுக்கு அஞ்சலி
'மனதிலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்"
- unrpts.
9ശ്ര நீண்ட கியூவரிசை.
கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு அக் "கியூ" வரிசை வளைந்து சென்று கொண்டிருந்தது. அது நெளிந்து சென்ற தூரம் அரை மைலா அல்லது அதற்கு மேற்பட்டதாவென என்னுல் மதிப்பிட முடியவில்லை.
பாணுக்கும், ரேஷனுக்கும், புடவைக்கும் எமது நாட்டவர் கியூ வரிசையில் நின்று தவங் கிடப்பதை நான் கண்டிருக்கிறேன். கொதிக்கும் வெயிலில் வெயர்வையையும் புழுக்கத்தையும் மன இரைச்சலுடன் தாங்கிய வண்ணம் கால்கடுக்க நிற்பவர்களைக் கண்டு நான் பரிதாபப்பட்டதுண்டு. கைக்குழந்தைகளுடன் கியூ வரிசையில் காத்து நிற்பவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் கல் நெஞ்சினையும் கரைய வைக்கும்.
ஆனல், மாஸ்கோ நகரில் நான் கண்ட கியூ வரிசை பானுக் காகவோ.சேலைக்காகவோ நெளிந்து வளைந்து செல்லவில்லை.
மாஸ்கோ நகரிலுள்ள செஞ்சதுக்கத்தில் ரஷ்யப் புரட்சியின் தந்தையான மாவீரன் லெனினது கல்லறை மண்டபம் இருக் கின்றது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் அன்னரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத்தான் இந்த நீண்ட கியூ வரிசை!
வயது சென்றவர்கள், இள வட்டத்தினர், தந்தையர், தாய் மார், குழந்தைகள் எனப் பல்வேறு திறத்தவர் கொட்டும் பணி யையும் பொருட்படுத்தாது கியூ வரிசையில் சென்று கொண் டிருந்தனர். கொழும்புமாநகரில் நடப்பதைப்போன்று கியூவினை உடைத்துக் கொண்டு உட்செல்பவர்களையோ, முண்டியடித்துக் கொண்டு முரட்டுத்தனம் காட்டுபவர்களையோ நான் அங்கு காண வில்லை.
நான் வெளிநாட்டு விருந்தாளியாகச் சென்றிருந்தபடியால் நினைவு மண்டபத்தின் அருகில் வைத்துக்கியூவில் சேர்ந்து கொள்ள

சிரிக்கன செம்மலர்கள் 35
எனக்கு அனுமதி தந்தார்கள். நண்பர் சாஷாவும் என்னுடன் கூட வந்திருந்தார். வாயில் முகப்பில் வைத்துத் தலையை மூடி யிருந்த கம்பளித் தொப்பியைக் கழற்றிக் கொண்டோம். ஒருவர் பன ஒருவராகப பளிங்குப் படிகளில் இறங்கி உள் மண்டபத் திற்குச் சென்ருேம். அங்கு நின்ற இராணுவ வீரர்கள் ஒழுங்கை யும் அமைதியையும் நிலைநாட்டிக் கொண்டிருந்தனர்!
மறைந்த மாவீரன், ஒரு கண்ணுடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருப்பவரைப்போன்று காட்சி தந்து கொண்டிருந்தார். நீட்டிப் படுத்திருந்த அவர் இடது கையினை மடக்கி நெஞ்சில் வைத்திருந்தார். லெனின், மீளாத் துயில் கொண்டிருந்தாலும் உண்மையான வாழ்க்கையில் நாம் காணும் வீரனுெருவன் எவ் வாறு நித்திரை கொள்வானே அவ்வாறே அவரது பூதவுடலும் பதப்படுத்தப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. மற்றவர்களுடன் நாமும் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியேறினுேம்.
மாஸ்கோ நகரில் உள்ளவர்கள் மட்டுமல்ல, ஏனைய மாநிலங் களில் வாமுபவர்களும் இங்கு வந்து தமது அஞ்சலியை செலுத் துவது வழக்கம். பனிக்காலத்தில் மாஸ்கோ நகருக்கு வந்தால் பனி உடைகளுடன் தயார் நிலையிலேயே வருவார்கள். கியூ வரிசைஎவ்வளவு தூரத்துக்கு நீண்டுவளர்ந்து சென்ருலும் அதனைக் கண்டு சஞ்சலப்படாது, புது வாழ்வு கொடுத்த அரசியற் தலை வனுக்குத் தங்கள் அன்புக்காணிக்கையைச்செலுத்தி விட்டே செல்வார்கள்.
1917ம் ஆண்டிற்குப்பின்னர் ரஷ்ய நாட்டில் புதுயுகம் மலர்ந் தது. அதற்கு வித்திட்ட பெருந்தகை மக்கள் மனதில் சிறப்பான இடத்தினைப் பிடித்திருந்தார். எங்கு சென்ருலும் எவ்விடம் என் முலும் லெனின் அங்கு இருப்பார். சந்திகளில், பூங்காக்களில், பொதுமக்கள்கூடும்நிலையங்களில் எல்லாம் லெனினுடைய உருவச் சிலகள் நிறுவப்பட்டிருக்கின்றன. கம்பீரமான தோற்றத்துடன் அவர் காட்சியளித்துக்கொண டேயிருக்கிறர். மக்களுக்குப் புரட் சியை நினைவுபடுத்தவும், புது வாழ்வு வழங்கிய பெரியாரைப் போற்றிவணங்கவும்இத்தகையநினைவுச்சிலைகள்பயன்படுகின்றன.
மாஸ்கோ நகரில் நான் கண்ட கியூ வரிசையில் புதுமணத் தம்பதிகளும் நின்றனர். இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்கவிருக் கும் ஆணும், பெண்ணும் தங்களுக்கு விடுதலை கொடுத்த வீர னுக்கு நன்றி செலுத்தவே கியூ வரிசையில் நிற்பதாக நண்பர் சாஷா விளக்கம் கொடுத்தார்.
ரஷ்ய நாட்டில் இலங்கையில் நடப்பதைப் போன்று மேள தாளங்களுடன் திருமணங்கள் இடம்பெறுவதில்லை. சாதி தேடிச்

Page 22
36 சிரித்தன செம்மலர்கள்
சாத்திரம் பார்த்துப் பெற்ருேர் வரன் தேட மாட்டார்கள். அதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றுண்டில் நடைபெற்றிருக் கலாம்.இன்றைய நாட்களில் திருமண விடயங்களில் பெற்ருேர் தலையிடுவதில்லை. பஞ்சாங்கம் என்ருல் அது என்ன என்றே அவர்கள் கேட்பார்கள்.
கருத்தொருமித்த காதலர்கள் பெற்ருேரின் ஆசியைப்பெற்ற தன் பின்னர் விவாகப் பதிவுகாரரை நாடுகின்றனர். சாட்சி களுடன் செல்லும் அவர்கள், பதிவுகாரர் முன்னிலையில் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துப் பத்திரத்தில் கையொப்பமிடு கின்றனர். இத்திருமணங்களுக்குக் கல்யாணத் தரகர் தேவை யில்லை, மத குருமாரும் தேவையில்லை. சாட்சிகள் இருந்தாற் பேர்தும். அரசாங்க ஊழியரான விவாகப் பதிவுகாரர் எல்ல வேலைகளையும் முடித்து வைப்பார். . ; வீதிகளிற் செல்லும் கார்களில் "பலூன்”கள் தொங்க் விடப்பட்டிருந்தால் அவை கல்யாணக் கார்கள் என்று அர்த்தம். பலூன்கள் போதவில்லையெனில் குழந்தைகளின் கைப்பொம்மை களையும் கார்களின் முன்பக்க பொனற்றில் கட்டிவிடுவார்கள். ஒரு கார் அல்லது இரண்டு கார்கள் இவற்றில் தான் மன மக்களும் அவர்களின் நெருங்கிய உறவினரும், நண்பர்களும் இருப்பார்கள். எமது திருமண வைபவங்களில் காணக் கிடப் பதைப் போன்று கார்களில் சாரிசாரியாகச் சவாரி செய்யமாட் டார்கள். சோடனைகளும் அற்ப சொற்பமாகத் தான் இருக்கும். இருவர் இல்லற வாழ்க்கையைத் தொடங்கி விட்டனர் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளவே இச்சோடனைகளைச் செய்கின் ரூர்கள்.
மணமகன், கோட்டும், சூட்டும் அணிந்திருப்பார். திருமண வைபவத்திற்கென்று தைக்கப்பட்ட திறமான உடையாகத் தான் அது இருக்கும். அவருடைய "கோட்" டில் ஒரு சிவந்த நிறப்பூ குத் தப்பட்டிருக்கும். மணமகளின் உடை எமது கிரிஸ்தவ புதுமணப் பெண்ணின் உடையைப்போன்றது தா ன. வெள்ளை நிற நீண்ட சட்டை, தக்லயையும் முகத்தையும், மூடி ரேந்தையில்ை ஆக்கப் பட்ட "வெயில்"; அவருடைய கையில் வெள்ளை நிறப்பூக்கள்
திருமணப்பதிவுகாரரின் வேலைகள் முடிந்தவுடன் மாஸ்கோ நகரில் வாழும் மணமக்கள், லெனின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்துத் தமது மரியாதையைச் செலுத்திக் கொள்வார்
56.
ஏனைய இடங்களைச் சேர்ந்தவர்கள் அவ்வவ்விடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் லெனின் கற்சிலைகளுக்கு அஞ்சலி செலுத் துவார்கள்.

சிரித்தன செம்மலர்கள் :37
இம்பட்டன்று!
இரண்டாம் உலகமகாயுத்தத்தினை ரஷ்ய மக்கள் தமது தேசீய் விடுதலைப் போராகவே கருத வருகின்றனர். ஹிட்லரின் சர்வாதி காரத்துக்கு எதிராக த் தாம் நடாத திய வெற்றிப்போர் என்றும் எதேச்சாதிகார வெறியர்களுக்குத் தாம் கொடுத்த சாவும என்றும் அப்போரை வருணித்து வருகினறனர்.
Wኅw»
இனந்தெரியாத வீரஞெருவனுக்சாகச் சுடர்விட் எரிக்ககொண்டிருக்கும் நெருப்புச்சுவாலைக்கு அ
அணியாக மக்கள் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
அப்போரில் எண்ணற்ற ரஷ்ய வீரர்கள் உயிர் நீத்தார்கள் ஏறத்தாழ இரு கோடி வீரர்கள் போர்க்களத்தில் பலியானர்கள். என்று மகிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு உயிர் நீத்க தியாகச் செம்மல்களுக்கு ரஷ்ய நாடு எங்கணும் நினவுச்சிலைகள்அமைக்கப்பட்டிருக்கின்றன. மாஸ்கோ நகரிலுள்ள செஞ்சதுக்கத்திலும் அணையாத்தீபம் ஒன்று போரிலே மாண்ட இனந்தெரியா வீரன் ஒருவனுக்காக எரிந்து கொண் டிருக்கிறது. ஏனைய குடியரசுகளிலும் நினைவு மண்டபங்களையும் அணயாத தீபங்களையும் காணலாம்.

Page 23
38 சிரித்தன செம்மலர்கள்
புதிய திருமணத் தம்பதிகள் இவ்விடங்களுக்குச் சென்று மலர் வளையங்கள் வைத்து மரியாதை செய்வது வழக்கமாகும். தாய் நாட்டினை மீட்ட வீரர்கள் தங்கள் சுபீட்ச வாழ்விற்காக உயி ரையே தியாகஞ் செய்திருக்கிருர்கள்.அந்நியரின் ஆக்கிரமிப்புக்கு இடமளியாது தாய் நாட்டினைக் காப்பாற்றியிருக்கிருர்கள். எனவே புதுமணத்தம்பதிகள் அத் தியாகிகளுக்குக் காணிக்கை செலுத்தக் கடமைப்பட்டிருக்கிருர்கள்.
வீரனின் உருவச்சிலைக்கு முன்னுல் நிற்கும் புதுமணப்பெண் அவ்வீரனைப்போல் தானும் ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கவேண் டுமென நினைக்கலாம். இல்லையெனில், தன் பிள்ளைகள் யாவருமே அவ்வீரனைப்போன்று தாய் நாட்டிற்காக வீரவாகை சூடவேண்டு மென எண்ணிக்கொள்ளலாம். எது எப்படியிருப்பினும் புது மணத் தம்பதிகள் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்து வது இன்று நிலைபெற்ற சம்பிரதாயமாக மாறியிருக்கிறது.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுற்றதன் பின்னர் சிலை கள் எழுப்பப்பட்டதையடுத்து இவ்வழக்கம் சிதறலாகப் பரவி வந்தாலும், இன்றைய நாட்களில் புதுமணத்தம்பதிகள் யாவரும் கடைப்பிடிக்கும் ஒரு மரபாக இது வளர்ந்து வேரூன்றி விட்டது. திருமண நாளன்று, நம் நாட்டவரைப் போன்று ஆயிரக் கணக்கில் பணத்தைச்செலவழித்து விருந்துகள் வைக்க மாட்டார் கள். நூற்றுக்கணக்காக விருந்தாளிகளை வரவழைத்து நாட்கணக் கில் உணவு போடமாட்டார்கள். அத்தகைய ஆடம்பரங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் ரஷ்ய நாட்டில் இடமில்லை.
தங்கள் நெருங்கிய உறவினரையும், உற்ற நண்பர்களையும் அழைத்து வீட்டிலோ அன்றி ஒரு ஹோட்டலிலோ விருந்து வைப்பார்கள். அடக்கமான முறையில் விருந்து நடந்தாலும் ‘சாப்பாடு" மிகவும் ஆடம்பரமாகத் தான் இருக்கும்.
மாஸ்கோ வீதிகளில் கவர்ச்சியைக் காட்டும் விளம்பரங் க%ளயோ, சுவரொட்டிகளையோ காணமுடியாது. உணர்ச்சிகளை தூண்டி விடக்கூடிய படங்களையோ சித்திரங்களையோ, மதில்களில் ஒட்டமாட்டார்கள்.
தொழிலாளி, உழவர் ஆகியோரைச் சித்திரிக்கும் படங்களைத் தான் சுவர்களில் காணலாம். உழைப்புககு மதிப்பளிக்கும் சித் திரங்களே நகரங்களை அலங்கரிக்கின்றன.
தொழிற்சாலையில் என்ருலும் விவசாயப் பண்ணையில் என் ருலும் உற்பத்தி பெருக வேண்டும் என்பதை உணர்த்தும் சுவ ரொட்டிகளைத் தான் நான் காண முடிந்தது. அரை நிருவான, முழு நிருவாண நங்கையரின் உடல் அழகுகளை அம்பலப்படுத்தும் காட்சிகளை எந்தவொரு இடத்திலும் காணமுடியாது.
அடக்கமான நாகரிகம்,மனப்பக்குவம் ஆகியவற்ருல்உயர்ந்த பண்பாடு பரிணமித்துள்ளதை என்னல் அனுமானிக்க முடிந்தது.

சிரித்தன செம்மலர்கள் 39
7.
ஆணுக்கு நிகர்
பெண்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"
- unrps
சிறுபதுஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யப் பெண்கள் வாழ்ந்த
நிலையையும் இன்று அவர்கள் வாழும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வியக்கத்தக்க பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதனை எவரும் எளிதில் புரிந்து கொள்வர்.
1917ம் ஆண்டின் அக்டோபர் புரட்சி இடம் பெறுவதற்கு. முன்னர், பெண்கள் அடிமைகளிலும் மோசமாகவே வாழ்ந்து வந்தனர். ஆண்களே சட்டங்களை வகுத்தனர். சமூக வாழ்விற்கு வேண்டிய விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் அவர்களே தீட் டிக்கொண்டனர். தங்களுக்குப் பொருத்தமான சமூக நீதியை அவர்கள் வகுத்துக் கொண்டதனுல் அதில் பெண்களுக்குக் கிஞ் சித்தும் இடம் அளிக்கப்படவில்லை.
அன்றைய நாட்களில் நிலபிரபுத்துவம் எங்கும் செங்கோ லோச்சி வந்தது. எந்த ராஜ்ஜியம் என்ருலுஞ்சரி, எந்த மாநிலம் என்ருலுஞ்சரி, நிலச் சொந்தக்காரர்கள் சகல உரிமைகளையும் அனுபவித்து வந்தார்கள்.அவர்களுக்குப் பரந்து விட்ட அதிகாரங் களும் கிடைத்திருந்தன. சார் சக்கரவர்த்தியின் ஆட்சிக்கு அவர் கள் கட்டுப்பட்டு இருந்காலும், வெளி இடங்களில் இருந்தவர்கள் குட்டி ராஜாக்களைப் போன்றே "தர்பார் நடத்தி வந்தனர்.
இத்தகைய சமூக அமைப்பில் ஆண் அமைத்த சட்டத்துக்கு பெண்ணனவள் அடி பணிந்து வாழவேண்டியிருந்தது. மாளிகை களிலும் அரண்மனைகளிலும் வாழ்ந்த பெண்கள் சுகபோகங்களை அனுபவித்தது ஏதோ உண்மைதான். ஆனல் ஆணுக்குக் கட்டுப் பட்டு அவன் விருப்பத்தின் பேரில் தான் சுகபோகங்களை அனு பவிக்க வேண்டியிருந்தது.

Page 24
40, சிரித்தன செம்மலர்கள்
ஆனல் முழு ரஷ்யாவையும் எடுத்துக் கொண்டால் ஆடம் பர வாழ்வினை நாடக்கூடியவர்கள் ஒரு சிலரே இருந்தனர். பெரும்பான்மையான மக்கள் ஏழ்மையில் உழன்று கொண்டிருந் தனர். வாழ்வதற்கு வழியின்றிப் பிரபுக்களின் தயவிற்காக தவம் கிடந்தனர். இந்நிலையில் பெண்ணுனவள் ஆணிலும் பார் க க தாழ்ந்த நிலையிலேயே மதிக்கப்பட்டாள்.
நாட்டுப் பணியில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற பெருமிதமும் நம்பிக்கையும் சோவியத் மாதர்களிடத்தில் ஒரு துணிவை ஏற்படுத்தியுள்ளது.
 

சிரித்தன செம்மலர்கள் 4.
ஒரு பெண் உயிர் நீத்தாளென்ருல் அவளுடைய கணவன் புதைக் கப்பட்ட நில மட்டத்திலிருந்து இரண்டு அடி தாழ்வாக அவளது பிரேதம் புதைக்கப்பட வேண்டும். அவள் மதிப்பிற் குறைந்தவள், அந்தஸ்தில் இறக்கமானவள் என்பதை எடுத்துக்; காட்டுவதற்கே புதை குழியையும் இரண்டு அடி ஆழமாகத் தோண்டி வைத்தனர்.
ஆணுடன் சரி நிகர் சமானமாக அவளுக்கு வாழ முடிய வில்லை. நிஜ வாழ்க்கையில் ஆணைப் பின் தொடர்ந்து சென்ருள். இறந்த பின்னரும் தனது தாழ்நிலையைச் சவக் குழிக்குள் கொண்டு சென்ருள்.
ஆண் வர்க்கம் அமைத்த சட்டம், பெண்ணுக்கு இத்தகைய இழி நிலையைத்தான் ஏற்படுத்தியது.
நீதிமன்றமொன்றில் ஆணுடைய சாட்சியத்திற்கு அதிக மதிப் பளிக்கப்பட்டது. நிலப் பிரபு என்ருல் கனவானின் சாட்சியமாகக் கணிக்கப்பட்டது.
ஆனல், ஆணின் சாட்சியத்தை மறுதலிக்க இரு பெண்கள் தேவைப்பட்டிருந்தனர். ஒரு பெண்ணுல் ஒர் ஆடவனின் சாட்சி யத்தை முறியடிக்க முடியாது. ஏனெனில் பெண்ணின் சாட்சியத் திற்கு மதிப்பளிக்க அவர்கள் முன்வரவில்லை.
w பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதிலும் பார்க்கப் பாருங் கல்லைக் கழுத்தில் கட்டித் தொங்க விடலாம் என்று உஸ்பெக் பழமொழி ஒன்று உண்டு.
இவை யாவும் அந்தக் காலத்தில் அதாவது அக்டோபர் புரட்சி, ரஷ்ய சமூக அமைப்பினைத் தல கீழாக மாற்றியமைக்க முன்னர் தான் பெண்கள் இந்த இழி நிலையில் இருந்து தத்தளித் துக் கொண்டிருந்தனர். Yn
1917 ம் ஆண்டில் இடம் பெற்ற மாபெரும் புரட்சி, பெண் களின் அடிமை வாழ்விற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது.
உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைநகரான தாஷ்கண்டிற்கு நான் சென்றிருந்த சமயம் இத் தகவல்கள் அனைத்தையும் பெற் றுக்கொண்டேன்.
உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் பிரதம நீதியரசர் ஒருபெண் மணியாவார். ரஷ்யாவின் மத்தியபகுதியில் முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒர் ஆசியக் குடியரசாக உஸ்பெக்கிஸ் தான் திகழ்கின்றது. சரித்திரப் பிரசித்திபெற்ற அக் குடியரசின் பிரதம நீதியரசருடனும், நான்கு நீதிபதிகளுடனும் கலந்துரை

Page 25
42 சிரித்தன செம்மலர்கள்
யாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தாஷ்கண்ட் நகரிலுள்ள பிரதம நீதியரசரின் அலுவலகத்தில் வைத்துத்தான் இச் சந் திப்பு நடைபெற்றது.
பிரதம நீதியரசர் ஒரு பெண்மணியாகையினல் மகளிரின் சுதந்திரங்களைப்பற்றிப் பேச மிக்க ஆவல் கொண்டிருந்தார். சந் தர்ப்பவசத்தால் நான் ரஷ்யாவுக்குச் சென்றிருந்ததோ 1975ம் ஆண்டாகும். ஐக்கியநாடுகள் ஸ்தாபனம், சர்வதேச மகளிர் ஆண்டாக அவ்வாண்டினைப் பிரகடனப்படுத்தியிருந்தது. இத ஞல் ரஷ்யாவிலும் பெண்களைப் பொறுத்தவரையில் . கடந்த ஆண்டு மிக முக்கிய ஆண்டாகக் கணிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய பின்னணியில் பிரதம நீதியரசர் என்னுடன் உரையாடத் தொடங்கிய வேளையில் சட்டங்களைப்பற்றியோ சமு
சிட்டுப்போல் துள்ளிவரும் சிறுவர்க்குச் சின்னச் சின்
னப் பாடல்கள் இசையோடு பயிற்றுவிக்கப்படுகின்றன.
சிறுவர்க்கான இசைக்கூடிமொன்றில் அதன் தலைவி பக்
கத்தில் நிற்க, இசையாசிரியை பாடல் போதிப்பதை
யும், சாஷா அவர்கள் பக்கத்தில் நிற்பதையும், கட்டுரை
யாளர் அவர்களைப் பார்த்து நிற்பதையும் படத்தில்
காண்கிறீர்கள்.
 

சிரித்தன செம்மலர்கள் 43
தாய அமைப்புக்களைப்பற்றியோ கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள அதிக நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆசியாவிலுள்ள பெண்கள், குறிப்பாக இலங்கை மாதர் எந்நிலையில் வாழ்க்கை நடத்துகின்ருர்க்ளென்பதனை என்னிட்ம் அறிந்துகொள்ளவே அவர் மிகவும் பிரயாசைப்பட்டார்.
ஐம்பது வயதினை அவர் எட்டிப் பிடித்திருந்தாலும் துடி துடிப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கக் காணப்பட்டார். அவரிலும் பார்க்க வயதில் மூத்த ஆண்கள் நீதிபதிகளாகக் கடமையாற்றியபோதிலும், தைரியத்திலும், சாமர்த்தியத்திலும் கைதேர்ந்த ஒரு வரைப் போன்றே தனது பொறுப்பான வேலை களை அவர் கவனித்துவந்தார். கலந்துரையாடலை அவர் வழிநடத் திய விதத்திலிருந்து இவ்வாறு எனக்கு எடைபோட முடிந்தது.
**உங்கள் நாட்டில் ஒரு பெண், பிரதமராக இருக்கின்ருர்,ஒரு பெண் நாட்டின் தலைவியாக இருப்பதினுல் அந் நாட்டில் வாழும் பெண்கள் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்ருர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது." என முன்னுரையுடன் சம் பாஷணையை ஆரம்பித்தார்.
**ஆம். உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய பெருமை எம் நாட்டிற்கு உண்டு" என்று நான் பதிலளித்தேன்: அவருடைய விருப்பத்திற்கிணங்க, இலங்கையில் தொழில்செய் யும் பெண்களின் உரிமைகளைப்பற்றியும், அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சலுகைகளைப் பற்றியும் சுருக்கமாக விளக்கிக் கூறி னேன்.
ரஷ்யநாட்டு சட்ட திட்டங்களையும் வாழ்க்கை முறைகளை யும் அறிந்துகொள்ளும்பொருட்டே இச் சந்திப்பினை ஏற்பாடு செய்யுமாறு நான் கோரியிருந்தேன். இந்நிலையில் எனது நாட்டு விவகாரங்களைப் பிரஸ்தாபித்து நேரத்தை வீணுக்க நான்விரும்ப வில்லை. இலங்கையைப்பற்றிப் பேசுவதென்ருல், ரஷ்ய சட்ட திட்டங்களை அறிந்துகொள்ள அவகாசம் இருக்கமாட்டாதென நான் கருதினேன். எங்கள் சந்திப்புக்கு ஒருமணி நேரமே குறிக் கப்பட்டிருந்தது. இச் சொற்ப நேரத்திற்குள் அறிந்துகொள்ளக் கூடியவற்றைத் திரட்டிக்கொள்ள வேண்டுமென்று நான் கங் கணம் கட்டியிருந்தேன். அவருடைய கேள்விகளுக்கு சுருக்கமா கப் பதிலளித்துவிட்டு ரஷ்ய நாட்டு விவகாரங்களுக்குத் தாவி னேன். அவர் உடனே, "நீர் ஒரு சட்டத்தரணி என்றபடியால் சாமர்த்தியமாகக் கதையைத் திருப்பிவிடுகிறீர்' என்று எனக்கு ஒரு போடு போட்டார்.

Page 26
44 சிரித்தன செம்மலர்கள்
'இல்லை அம்மணி பிரதம நீதியரசரிடம் உண்மைகளை அறிய ஆவல் கொண்டுள்ளேன்'என்று நாகுக்காகப் பதிலளித்து விட்டுக் கதையை ஆரம்பிக்குமாறு வேண்டினேன்.
அவர் சிரித்தவாறே, "பெண்கள் உலகமா? அதைப்பற்றிக்
கூறுகிறேன் கேளுங்கள். ரஷ்யாவைப் பொறுத்த வரையில் 1975ம்
ஆண்டினைச் சர்வதேச மகளிர் ஆண்டாகப் பிரகடனப்படுத்த
வேண்டிய அவசியமே இல்லையெனக் கூறலாம். ஏனெனில் அறு.
VM பது ஆண்டுகளுக்கு முன்னரே ரஷ்ய மண்ணில் சமத்துவ உல.
கொன்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது" என்ருர்,

&
சிரித்தன. செம்மலர்க்ள் :45
8.
சட்டத்தி ன் செல்லச் சிறுசுகள்
“சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சலமாகுதடி நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்குதடி""
- Lumpu S.
ரஷ்யப் பெண்களின் நிலையைப்பற்றிப் பேசமுனைந்த தாஷ்
கண்ட் பிரதம நீதியரசரான திருமதி முகைய தீனேவ், உணர்ச்சி வசப்பட்டே பேசலானர். அவருடைய பெற்ருேரும், மூதாதை யரும் அனுபவித்த இடர்களும், துன்பங்களும் அவர் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தன. அவற்றை அவரால் மறக்க முடிய வில்லை. அந் நாட்களை நினைவுபடுத்தும்பொழுது மனதில் எழுந்த ஆத்திரத்தினையும் அவரால் கட்டுப்படுத்திக்கொள்ள இயல வில்லை.
**1917ம்ஆண்டில் எமது கைவிலங்குகள் களையப்பட்டன.தளை கள் அறுக்கப்பட்டன. எமது வாழ்வில் புரட்சிகரமான மாற் றங்கள் புகுத்தப்பட்டன. அவற்றின் பலன்களை நாம் இன்று அனுபவிக்கிருேம்" என மகிழ்ச்சி பொங்க ஒரு குட்டிப் பிரசங்
கம் செய்து வைத்தார்.
**நான் ஒரு பெண்ணுக இருந்தும், தாஷ்கண்ட் உயர்நீதி மன்றத்தின் பிரதம நீதியரசராகக் கடமையாற்றுகிறேன். எனக் குக் கீழே பல ஆண்கள் நீதிபதிகளாகப் பணிபுரிகின்றனர். இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு எதுவும்கிடையாது 'என்று அங்கிருந்த ஏனைய ஆண் நீதிபதிகளைப் பார்த்தவாறு அவர் கூறி. ஞர். அவர்களும் அவர் கூறியவற்றை ஆமோதிப்பதைப்போன்று தலையசைத்தனர்.
"எமது நாட்டில் ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராட் டப்படுவதில்லை. ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானமாகவாழ வேண்டுமென்றே லெனின் விரும்பினர். அக் கொள்கைகளைத் தான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியும் கடைப்பிடித்து வருகின்

Page 27
46 சிரித்தன செம்மலர்கள்
றது. இந் நிலையில், இப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் எவ் வித கருத்துமயக்கத்திற்கும் இடமிருக்க முடியாது" என்றுஅவர் ஆணித்தரமாகக் கூறினர். -
எமது சம்பாஷணை ஒரு மணித்தியாலத்திற்குத்தான் நடை பெறவேண்டுமென்று முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிர தம நீதியரசருக்கு பிறிதொரு அலுவல் இருந்தபடியாலும்,இன் ஞெரு நீதிபதி வேறெங்கோ செல்லவேண்டியிருந்தபடியாலும் ஒரு மணித்தியாலத்துக்குமேல் என்னுடன் கலந்துரையாட முடி யாதென்று எமது சந்திப்பினை ஒழுங்கு செய்தவர்களுக்கு ஆரம் பத்தில் கூறியிருந்தார்கள். ஆனல், எமது சந்திப்பின்போது,
வயது முதிர்ந்த காலத்தில் தமது பேரப்பிள்ளைகளை
அரவணைத்துக் கொஞ்சி மகிழ்வதில்தான் என்ன ஆனந்
தம். இஸ்லாமிய கலை, கலாசாரங்கள் பெரிதும் பேணப்
படும் உஸ்பெக் குடியரசில் இரண்டு முஸ்லிம் வயோதிபப்
பெரியோர் தமது பேரக் குழந்தைகளுடன் குலவி மகிழ் கின்றனர்.
 

சிரித்தன செம்மலர்கள் 委7
கருத்துப் பரிமாற்றம் அவ்வளவு சுவையாக இருந்தபடியால் பிரதம நீதியரசர் தனது ஏனைய அலுவல்களை ரத்துச் செய்து கொண்டார். மற்ற நீதிபதியும் தான் செல்லவேண்டிய கடமை யில் இருந்து விலகிக்கொண்டார். ஒரு மணித்தியாலத்திற்கென ஆரம்பத்தில் வரையறை செய்யப்பட்ட சந்திப்பு ஏறத்தாழ நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது அந்த நான்கு மணித்தியா வங்களிலும் பல சட்டப் புத்தகங்களிலும் படிக்க முடியாத வற்றை நான் கற்றுக்கொண்டேன். நீதியரசரும் மூன்று நீதி பதிகளும் மனந்திறந்து பேசினர். ஒளிவு மறைவின்றி எனது சந் தேகங்களைத் தீர்த்து வைத்தனர். நீண்ட நேரம் கலந்துரையா டலை முடித்துவிட்டு நான் வெளியேறியபோது, சட்டக் கல்லூரி யில் படித்த நாட்களே எனது நினைவுக்கு வந்தன. விரிவுரையா புளர்களுடன் வெகு அந்நியோன்யமாகக் கலந்துரையாடுவதால் எவ்வகையில் அறிவு வளருகிறதோ அவ்வகையில்தான் பிரதம நீதியரசருடனுன எனது சந்திப்பும் அமைந்திருந்தது.
ரஷ்ய சட்டத்தின் கண்களில் குழந்தைகள் முதலிடம் வகிக் கின்றன. சட்டத்தின் செல்லப்பிள்ளைகள் குழந்தைகள்தான். அவர்களின் நல்வாழ்வு, எதிர்காலம் ஆகிய எல்லா விடயங்களி லும் சட்டம் அக்கறை எடுக்கின்றது. அவர்களைப் பாதுகாப் பதே சட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
கணவனும், மனைவியும் விரும்பினுல் திருமண பந்தத்தினை முறித்துக்கொள்ளலாம். ஆனல், அவர்கள் செய்யும் செயலினுல் குழந்தைகளின் வாழ்வும் எதிர்காலமும் பாதிக்கப்படலாகாது. விவாகரத்து வழக்கொன்று விசாரணைக்கு வந்தால் குழந்தை களின் நலனையே நீதிமன்றம் முன் கவனிக்கும்.
கணவனும் மனைவியும் தொடர்ந்து தாம்பத்திய வாழ்வினை நடத்த முடியுமென்ாடில் அவ்வகை இணக்கத்தினைத்தான் நீதிமன் றம் விரும்பும். பிள்ளைகள் இருந்தால் அவர்களின் நலன்கருதி பெற்ருேர் ஒன்று சேர்வது நன்மையானது என்பதுதான் ரஷ்ய சட்டத்தின் நோக்கமாகும். ஆனல், பிரிந்து செல்வதைத்தவிர வேறு வழி இல்லையெனின், அவர்களின் உறவு முறிவினை நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளும். நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஆகிய வற்றை விதித்ததன் பின்னரே விவாகரத்தினை நீதிமன்றம் வழங்கும்.
நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் குழந்தைகளின் உரிமை களைப் பாதுகாக்கும்பொருட்டே விதிக்கப்படுகின்றன.
வயதுசென்றவர்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். ஆனல், உலகம் அறியாத குழந்தை

Page 28
48 சிரித்தன செம்மலர்கள்
களைக் கண்காணிப்பது அரசின் பொறுப்பர்கும். குழந்தைகள் தேசத்தின் சொத்துக்கள். அவர்கள் கெட்டுநொந்து போகாமல் நல்ல வழியில் பாதுகாப்புடன் வளர அரசு சகல ஒழுங்குகளையும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் நாட்டிற்குப் பிரயோசனமுள்ள நற்பிரஜையாக வளரவேண்டும். தாய், தந்தையர் பிரிந்தால் இந்த நல்ல வளர்ப்புச் சிதைந்துவிடும். இதற்காக அரசு தலையிட்டுக் குழந்தைகளின் நலனைக் காப்பாற்ற வேண்டும். இதுவே ரஷ்ய நாட்டுச் சட்டங்களின் அடிப்படைச் சித்தாந்தமாகும். ܫܪ
பகோர் என்ற வசந்தகால உஸ்பெக் நடனம் உல கப் பிரசித்தி பெற்றது. அழகுமிக்க வணிதையர் ஒன்று சேர்ந்து ஆடும் இந் நடனம் அமைதியான தொழில் நட் பையும், இளைஞர்களின் உள்ளக் கனவுகளையும், சகோ தரத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
 

சிரித்தன செம்மலர்கள் 49
"ஒருவர் இழைத்த தவறின் நேரடி விளைவாகத் தண்டனை அவருக்குக் கிடைக்கிறதெனத் தவறிழைத்தவர் உணரும் விதத் தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கிறர். ஆனல் தண்டனை வழங்கப்படும்பொழுது தீங் கிழைத்தவர் செய்த குற்றத்திலும் மேலானதாகத் தண்டனை அமையலாகா தென்றும் அவர் விளக்கியிருக்கிருர், ܫ
இதனையொத்த கருத்தினைத்தான் ரஷ்யத் தலைவர் லெனி னும் வெளியிட்டிருக்கிருர். இன்னுெரு விதத்தில் தனது கருத்தை வெளியிட்ட அவர், "குற்றங்களைத் தடுப்பதற்குத் தண்டனைகள் பயன்படுகின்றன. அவை பயன்படுவது கொடூரமாக இருப்ப தன் காரணத்தாலல்ல. அவற்றிலிருந்து தவறிழைத்தவர் தப்ப முடியாதென்னும் காரணத்திற்காகத்தான்" என்று கூறியிருக் &მდფrr.
ரஷ்ய குற்றவியல் சட்டத்தில் கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகி யோரது கருத்துக்கள் நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கின்றன.
தவறிழைத்தவர் தண்டிக்கப்படவேண்டுமென்பது உண்மை தான். தண்டிக்கப்படவேண்டுமென்ருல் தண்டனை வழங்கப்படுவ தற்கான காரணம் யாது? அவர் சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்திருக்கிருர், சமூகமென்பது தனி மனிதனின் பிரத்தியேக் ராஜ்யமல்ல. அது ஒரு பொது அமைப்பாகும். பொது அமைப் பி ல் த னி மனித ஞெ ரு வன் தா ன் வி ரு ம் பி ய வ ழி க ளி ல் த வ று க ளை யு ம். தீ ங் கு க ளே யு ம் இழைத்துவிட்டுத் தப்பிச் செல்ல அனுமதிக்க முடியாது. இதுவே கம்யூனிஸக் கோட்பாட்டின் தாற்பரியமாகும்.
சட்டம் ஒரு மனிதனை அச்சுறுத்தலாகாது.சமூகத்தின்பொது அமைப்பினைக் காப்பாற்றவே சட்டம் இருக்கின்றது. எனவே தவறிழைப்பவன் அவன் பிறந்த பொதுவமைப்பு அவனை மீண் டும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் திருந்தவேண்டும். அவ னைத் திருத்தியெடுப்பது சமூகத்தின் பொறுப்பாகும். அவன் மீண் டும் குற்றம் புரியாமல் நல்ல குடிமகளுக: வாழச் சமுதாயம் வழி வகைகளைக் கற்பிக்க வேண்டும்.
குற்றம் புரிந்தவர்கள் பொதுப் பணிகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர். வீதி அமைத்தல், வீடு கட்டுதல், கட்டடங்களை எழுப் புதல் போன்ற தொழில்களில் அவர்கள் அமர்த்தப்படுகின்ற னர். நாட்டுக்குத் தேவையான பணிகளை அவர்கள் செய்ய வேண்டும், அவர்களின் உழைக்கும் சக்தி தேசவளத்தைப் பெருக் கப் பயன்படவேண்டும்.

Page 29
50 சிரித்தன செம்மலர்கள்
குற்றம் செய்தவனைச் சிறையில் வைத்தால், அவனைப் பரா மரிக்கும் பொறுப்பு அரசுமீது சுமத்தப்படுகின்றது. அவனுக்கு உணவும், உறையுளும் வழங்க அரசாங்கம் செலவு செய்யவேண் டும். இது உதவாக்கரைச் செலவாகும். அவன் தவறு செய்தவ ஞக இருப்பதுடன் அவனை ஒரு சோம்பேறியாகவும் மாற்ற இவ் வேற்பாடு வழிவகுக்கும். Wa
அதனுல், அவன் வேலை செய்து அதற்குச் சம்பளம்பெற வேண்டும். அவ்வூதியத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தலாம்.
பல்வகைப்பட்ட தண்டனைகள் ரஷ்ய நாட்டில் வழங்கப்படு கின்றன. ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை, தண்டம், அப ராதம் போன்ற முறைகளும் அங்கு கையாளப்படுகின்றன.
ஆனல், வீணே ஒருவரைச் சிறையில் அடைத்துவைக்க அவர் கள் விரும்புவதில்லை. மனநோயாளியாகவோ அன்றி மிகவும் அபாயகரமான பேர்வழியாகவோ ஒருவர் இருந்தால்தான், மற்ற வர்களுடன் நடமாடும் உரிமையை அவர் இழப்பார். சுகதேகியாக வும், உழைக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தாரென்ருல் அவர் வேலைத்தலத்திற்குச் செல்லவேண்டும்; வீணே சோம்பியிருக்க (pigtungil. -
காலையிலும், மாலையிலும் அறிவுரைகள், போதன வகுப்புக் கள் நடத்தப்படும். நல்ல பிரஜையாக வாழ ஆலோசனைகள் வழங்கப்படும். சிறைச்சாலையே ஒரு பாடசாலையாக மாற்றப் படும்.
நன்னடத்தையின்மூலம் ஒரு குற்றவாளி தனது தண்டனை யைக் குறைத்துக்கொள்ளலாம். மீண்டும் குடும்பத்துடனே சமூ கத்துடனே ஒன்றுசேர்ந்து முன்னைய வாழ்வினைத் தொடர்ந்து நடத்தலாம்.
சிறைக்கூடம் ஒரு சீர்திருத்தச்சாலையாக இருக்கவேண்டு மென்பதுதான் ரஷ்ய சட்ட வல்லுநர்களின் விருப்பாகும்.
அவர்களுடைய குற்றவியல் சட்டங்களின் உள்ளார்த்தத் தையும், நோக்கத்தினையும் திருமதி முகையதினேவ் இவ்வகை யில் எனக்கு விளக்கிக்கொண்டிருந்தார்.

சிரித்தன செம்மல்ர்கள் 5.
9.
விவாகரத்து வழக்குகள்!
"...அங்கு தூணில் அழகியதாய்
நன்மாடங்கள் தூய நிறத்தினதாய் - அந்தக்
காணிநிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித்தரவேண்டும்.""
-பாரதி.
2-ஸ்பெக்கிஸ்தான் குடியரசின் பிரதம நீதியரசர் திருமதி முகையதினேவ் திறமை மிக்கவர். சட்ட நுணுக்கங்களைத்தெளிவு படுத்துவதில் மட்டுமன்றி ஏனைய விடயங்களை எவரும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் விளக்கிக் காட்டுவதிலும் தனது சாமர்த்தியத்தி வெளிப்படையாகவே காட்டி வந்தார்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் சட்ட முறைமைகளையும் அவர் கற்று வைத்திருந்தார். இதனல், தனி யுடமை நிலவும். நாடுகளில் மனிதர்களிடையே எழும் பொருள் மீதான சச்சரவுகளைப்பற்றி என்னிடம் பிரஸ்தாபிக்க அவர் தவறவில்லை. '
ரஷ்ய நாட்டினைப் பொறுத்தவரை நிலம், அரசுடமையா கும். பூமியானது மக்களின் பொதுச்சொத்து என்ற கோட்பாட் டின் அடிப்படையில் அரசே முழு ஆதிபத்திய உரிமையையும் அனுபவித்து வருகின்றது.
தனிமனிதர் எவராவது நிலத்தின்மீது உரிமை பாராட்ட முடியாது. எவருக்காவது தனது சொத்து என்றுகூறி நிலத்தின் எப்பகுதியிலாவது சொந்தம் கொண்டாட முடியாது.
உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் காணிச் சட்டங்களின் பிரகா ரம் தனக்கெனத் தனிப்பட்ட முறையில் வீடு ஒன்றினைக் கட்டி யெழுப்ப விரும்புபவர் அவ்வாறு செய்துகொள்ள அனுமதிக் கப்படுவார். அதற்கு அரசாங்கத்திடமிருந்து அவர் காணிபெற வேண்டும். அக் காணியில் அவர் வீட்டைக் கட்டியெழுப்பின

Page 30
52 சிரித்தன செம்பலர்கள்
லும் அக் காணி அரசுக்கே சொந்தமானதாகும். அவர் கட்டும் வீடு மட்டும்தான் அவரது உடைமையாகும்.
தனது சேமிப்புக்களைக் கொண்டு ஒருவருக்கு வீடுகட்ட வாய்ப்பு இருக்கின்றது. அரசாங்கத்திடமிருந்து அவர் கடன் பெறலாம். பதினைந்து ஆண்டு காலத்திலோ அல்லது இருபது ஆண்டு காலத்திலோ அவர் இக் கடனைத் திருப்பி அடைக்கலாம், மிகவும் குறைந்த அளவில் வட்டி அறவிடப்படும்.
ஒருவருக்கு வீடு கட்டுவதற்காகக் கடன் வழங்கப்படும் பொழுது, அவருடையது மாதாந்த வருமானம், குடும்பநிலை, பிள்ளைகளின் எண்ணிக்கை ஆகியன கணக்கில் எடுககப்படும். இரண்டு படுக்கை அறைகளைக் கொண்டதாகவோ அன்றி மூன்று
புறுான்ஸ் ஹிப்போதுரோமில் மணப்பெண் விரட்டு ஒரு தேசீய விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது. குதிரையில் செல்லும் மணப்பெண்ணை, அவளை மணக் கப்போகும் மாப்பிள்ளை விரட்டிப் பிடிக்கவேண்டும்.
 

சிரித்தன செம்மலர்கள் 53
படுக்கையறைகளைக் கொண்டதாகவோ ஒருவர் குடிமனை ஒன் றினை அமைத்துக்கொள்ளலாம்.
மாளிகைகள போன்று வீடுகளைக் கட்ட ஒருவருக்கு வாய்ப் பிருக்கமாட்டாது. இரண்டு அடுக்கு, மூன்று அடுக்குக் கட்டிடங் களுக்குத் தனியொருவர் சொந்தக்காரராக இருக்க முடியாது. நீண்டு உயர்ந்த பல மனை மாடிக் கட்டிடங்களை அரசாங்கம் தான் எழுப்ப முடியும்.
உஸ்பெக் முஸ்லிம் பெண்மணியொருவர் மான் குட்டியொன்றை அன்போடு அரவணைத்து மகிழ்கிருர்,
இருந்தாற்போல் பெரிய அளவில் மாளிகைபோன்ற வீடு ஒன்றினைக் கட்டியெழுப்ப ஒருவர் முற்படுவாரேயானல் அவர் அதற்கான பணத்தினை எவ்வாறு சம்பாதித்தாரென்ற கேள்வி எழத்தான் செய்யும். குறிப்பிட்ட மாதாந்த வருமானத்தைப்

Page 31
54 சிரித்தன செம்மலர்கள்
பெறும் ஒருவர் கணக்குக் காட்ட முடியாத அளவுக்குச் சேமிக்க இயலாது. ஒரு வரையறைக்கு உட்பட்டுத்தான் சேமிப்புக்களை வைத்திருக்க முடியும். எனவே தவருன வழிகளில் பணத்தினை ஈட்டியிருக்கின்ருரென்ற குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகிவிடு வார். அத்தகையோரைக் கண்டுபிடிப்பதும் இலகுவான காரிய மாகிவிடும்.
ஒரு சோஷலிஸ் சமுதாயத்தில் அந்தஸ்து வேற்றுமைகளைப் பாராட்ட முடியாது. வீடுகள் இதற்கோர் உதாரணம். தனிப் பட்ட நபர்கள் தங்களுக்கெனக் கட்டியெழுப்பும் வீடுகள் ஒரே மாதிரியான அமைப்பினைத்தான் கொண்டிருக்க முடியும் எமது நாட்டில் நடப்பதைப்போன்று சோஷலிஸம் பேசுபவர்கள்மாட மாளிகைகளில் வாழவும், சோஷலிஸ் சமுதாயத்தினைக் காணத் துடிக்கும் ஏழை மக்கள் குடிசைகளில் வாழ்க்கையை நடத்தவும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
ஒரு குடும்பத்தின் தலைவன், வீடு ஒன்றினைக் கட்டியெழுப்புவ துடன், பணவசதி இருப்பதைப் பொறுத்து வீட்டுக்குத் தேவை யான தளபாடங்களையும் வாங்கி வைத் திருக்க ரஷ்ய நாட்டில் அனுமதியளிக்கப்படுகிறர். ஒரு கார், ஒரு குளிர்சாதனப்பெட்டி எனத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை அவர் வாங் கிப் பாவனையில் வைத்திருக்கலாம். இவை யாவற்றுக்கும் அவர் கணக்குக் காட்டக்கூடிய நிலையில் இருக்கவேண்டும். இரண்டு, மூன்று கார்களென்றும், நவநவமான மின்சார சங்கீதக் கருவி கள் என்றும் கணக்கில் அடங்காத ஆடம்பரப் பொருட்களைத் திரட்டிக்கொள்பவர்கள் தீய வழிகளில்தான் பணத்தினைச் சம் பாதிக்க முடியும். அத்தகைய ஒழுக்கவீனங்களுக்கு அங்கு அனு மதி கிடைக்கமாட்டாது. J
கணவனும், மனவியும் தனித்தனியே உழைப்பவர்களெனின் அவர்கள் இருவரும் தங்கள் சம்பளங்களிலிருந்து அவர்களுக் குத் தேவையான பொருள் பண்டங்களை வாங்கிக்கொள்ள லாம். அவர்கள் கருத்தொருமித்துக் குடும்பம் நடத்தும் நாட் களில், அவை வீட்டின் பொதுச் சொத்துக்களாக இருக்கும். ஆனல், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மணவினையை முறித்துக் கொண்டு பிரிந்துசெல்ல நேரிட்டால், தாம் ஒவ்வொருவரும் சொந்தச் சம்பளத்தில் வாங்கிய பொருட்களைத் திரும்பவும் எடுத்துச்செல்லலாம். பெண்ணின் சுதந்திரத்தையும் அவளின் உரிமையையும் காப்பாற்றவே இத்தகைய பாதுகாப்பு அரண் கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஒரு மனைவி தனது சம்பளத்தில் வீட்டுக்கெனக் குளிர்சாத னப் பெட்டியொன்றினை வாங்கியிருந்தால், அவள் விவாகரத்துப் பெற்றுச்செல்லும் வேளையில் அக் குளிர்சாதனப் பெட்டியையும்

சிரித்தன செம்மலர்கள் 55
அவளுடன் கொண்டுசெல்ல முடியும். அது தன்னுடையதென்று கணவனுனவன் கோர்ட்டுக்கு வரமுடியாது , வரது உழைப் பின் பெறுபேற்றினை இன்னெருவர் அனுபவிக்கச் சட்டம் இடத் தருவதில்லை. அதுவும் மனைவியின் உழைப்பினைக் கணவன் சுரண்டிவாழ அங்கு இடமளிக்கமாட்டார்கள்.
கணவன், மனைவியருக்கு இடையில் எழும் பிணக்குகளைத் தீர்க்க அங்கு 'மக்கள் நீதிமன்றங்கள் கடமையாற்றுகின்றன.இந் நீதிமன்றங்களில் சுற்ருடலில் வாழும் குடும்பஸ்தர்களே அங் கம் வகிக்கின்றனர். அவர்களுக்குச் சம்பந்தப்பட்ட கணவன்மனைவியரைத் தெரியும். அறிமுகமான அடுத்தடுத்த வீட்டுக் காரர்கள்; ஒவ்வொருவரதும் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டவர்கள். பிரச்சினகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள். எனவே சச்சரவுகள் எழும்பொழுது அவற்றுக்கான காரணங்களை அவர்களால் விரைவில் அறிந்து கொள்ள முடியும்.
மனைவியோ, அன்றிக் கணவனே தமது பிணக்கினை இத் தகைய மக்கள் நீதிமன்றங்கள்முன் பிரஸ்தாபிக்கலாம். வழமை
இள வயதினர் பாரம்பரிய கலாசார நடனங்களைக் கைவிடாது அவற்றைப் பேணிப் பயில்கின்றனர்.

Page 32
சிரித்தன செம்மலர்கள்
யாக ஐந்துபேர் இந் நீதிமன்றங்களில் அங்கம் வகிப்பர். அவர் கள் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வர். சம்பந்தப்பட்ட சர்ச் சைக்காரர் நேரடியாகச் சென்று சாட்சியமளிக்கலாம். இந் நீதி மன்றங்களில் வழக்குரைஞர்களுக்கு வேலையில்லை. சட்டத்தரணி கள் தோன்றினல், சட்ட நுணுக்கங்களை எடுத்துப் பிடித்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்ற காரணத் துக்காக அவர்களை அவ்விடங்களில் தலைகாட்டவிடாமல் ஒதுக்கி இருக்கிருர்கள்.
பிணக்குகளைச் சமரசமாகத் தீர்த்து ஒற்றுமையையும் நல் லுறவினையும் நிலைநாட்ட வேண்டுமென்பதே இம் மக்கள் நீதி மன்றங்களின் குறிக்கோளாகும். இவ்விலட்சியங்கள் சரிவர நிறைவேற அவை தமது செயல்முறைகளையும் செவ்வனே தயா ரித்து வைத்திருக்கின்றன. அன்றைய நாட்களில் கீழைத்தேய நாடுகளில் பஞ்சாயத்து சபைகள் மேற்கொண்ட பணிகளை ஒத்த சேவைகளைத்தான் இவை இன்று செய்து வருகின்றன.
கணவன்-மனைவி பிணக்குகள், அப் பகுதியில் எழும் சிறு சிறு சச்சரவுகள் ஆகியவற்றை இவை விசாரித்து தீர்த்து வைக் கின்றன. அறிவும், அனுபவ முதிர்ச்சியுமுடைய பெரியவர்கள் இவற்றில் கடமையாற்றுவதால் நேர்மையான முறையில் நீதி வழங்கப்படுமென்று மக்கள் எதிர்பார்த்துச் செல்கின்றனர்.
மக்கள் நீதிமன்றங்களினல் தீர்க்கப்பட முடியாத பிணக்கு கள் சட்ட அமைச்சின்கீழ் இயங்கும் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், மேல்நீதிமன்றம் என்ற பிரிவுகளடங்கிய நீதிமன்ற முறை அங் கும் இருக்கின்றது. பாரிய குற்றங்கள் அத்தகைய உயர்நீதி மன்றங்களினல்தான் விசாரிக்கப்படுகின்றன. கொலை, களவு, கற்பழிப்பு போன்ற சமூக விரோதக் குற்றங்கள் உயர் நீதிமன் றங்களுக்குப் பாரப்படுத்தப்படுகின்றன.
இத்தகைய நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் தோன்ற லாம். பலவகைப்பட்ட சட்டங்களை ரஷ்யநாட்டில் காணமுடி யாது. மாறுபட்ட தீர்ப்புக்களையோ, சட்ட வியாக்கியானங் களையோ அங்கு கண்டுகொள்ள முடியாது. சட்டம் ஒன்றுதான். குற்றத்தையும், குற்றவாளியையும் பொறுத்து அங்கு தண்டனை வழங்கப்படுகின்றது. எனவே குற்றவாளிக்காக வாதாடும் வழக் குரைஞர் தனது கட்சிக்காரருக்காகப் பரிந்து பேசி, கருணைகேட்டு நிற்கலாமே தவிர, சட்ட நுணுக்கங்களையும், நுட்பங்களையும் ஆராய்ந்து, விசாரணையின் நோக்கத்தையே திசை திருப்பிவிட (pig-tufts. ܫ

சிரித்தன செம்மலர்கள் 57
நீதிமன்றங்களில் தோன்றும் வழக்கறிஞர்கள் நீதியை நிலை நாட்ட நீதிபதிகளுக்கு ஒத்தாசை புரிய வேண்டும். குற்றமிழைத் தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. சமூகத் துக்குத் துரோகஞ் செய்த ஒருவனைச் சட்டத்தின் கரங்களில் இருந்து விடுவிக்க சட்டத்தரணி உதவிசெய்யலாகாது. நீதிய்ை நிலைநாட்டுவது அவர் கடமையாகும்.சமுதாயத்துக்கு அவர் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை இதயசுத்தியுடன் நிறைவேற்ற வேண்டுமென்றே நீதிமன்றங்கள் எதிர்பார்க்கின்றன.
தாஷ்கண்ட் உயர்நீதிமன்ற நீதியரசர்களுடன், நான் உரை யாடிய வேளையில் ரஷ்யநாட்டு சட்ட திட்டங்களின் தாற்பரியத் தினை இவ்வாறு உணர்ந்துகொண்டேன். தனி மனிதனின் உரிமை கள் என்ற பேச்சினைவிட, சமூக உரிமைகள், தேசீயப் பொறுப் புக்கள் என்ற பரந்துபட்ட அடிப்படையில் கொள்கைகளும் கோட்பாடுகளும் வகுக்கப்பட்டிருப்பதனை என்னுல் அறிந்து கொள்ள முடிந்தது.

Page 33
58 சிரித்தன செம்மலர்கள்
0.
பாலைவனம்
ஒரு சோலைவனம்!
" "வண்ணங்கள் வேற்றுமைப்
பட்டால் - அதில்
1ானுடர் வேற்றுமையில்லை”
- பாரதி.
"உலகில் எந்த நாட்டவரும் உணவுக்காகப் பானைத் தயாரித்துக்கொள்கிருர்கள். வழமையாக காலையில் அல்லது மாலையில் அதனை உனசிமுர்கள். பாண் செய்வதற்கு எந்த நாட் டினை எடுத்துக்கொண்டாலும் மாவினைத்தான் பயன்படுத்துகின் ருர்கள்.
அதனைப்போன்று பருத்தியும் உலகின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. ரஷ்யாவிலென்ருலும் சரி, எகிப்திலென்மு லும் சரி. இலங்கையிலென்ரு லும்ச ரி பருத்தியின் பஞ்சைப் பொறுத்தவரை ஒரே விதமாகத்தான் இருக்கின்றது. பாணில் எவ்வாறு வித்தியாசத்தைக் காணமுடியாதோ அவ்வாறேதான் பருத்திப் பஞ்சிலும் எத்தகைய வித்தியாசத்தையும் கண்டு கொள்வது கடினமாகும். பாண் என்ா?லும், பருத்தியின் பஞ்சு என்ருலும் உலகெல்லாம் ஒன்றுதான். -
ஆனல், பருத்தியிலிருந்து நெய்யப்படும் ஆடைகள் நாட் டுக்கு நாடு வேறுபட்டு இருக்கின்றன பஞ்சானது ஒரு தன்மை யுடையதாய் இருந்தபோதிலும் ஆடைகள் வித்தியாசமாகக் காணப்படுகின்றன.
கலையையும், கலாசாரத்தையும் எடுத்துக்கொண்டால் அவை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தன்மை உடையன வாகவே மிளிர்கின்றன. ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களதும் மனப்பக்குவம், சிந் கணு சக்தி, ஆசை, அபிலாஷை ஆகியன வெளிக்கொணரப்படும்பொழுது அவற்றின் பிரதிபலிப்பாகக் கலை, கலாசாரம் போன்றவற்றிலும் நாட்டுக்கு நாடு மாறுதல்

சிரித்தன செம்மலர்கள் 59
கள் ஏற்படத்தான் செய்யும். ஒரேமாதிரியான பருத்திப் பஞ்சு ஆடைகளாக நூற்கப்படும் வேளையில் எவ்வாறு இனம் மாறு கிறதோ, அத்தகைய மாற்றத்தினையும், வேறுபாட்டினையும் கலை பிலும், கலாசாரத்திலும் கண்டுகொள்ளலாம்.
உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் பிரபல எழுத்தாளரும், பத் திரிகை உலக மேதையுமாகிய திரு. லஸிஸ் கஜ"மோவ், எமது சந்திப்பின்போது எனக்கு அளித்த அரிய தத்துவ விளக்கம் இது வாகும்.
ஆறடி உயரம், அதற்கேற்ற கம்பீரமான உடற்கட்டு, எவரை பும் வசீகரிக்கும் புன்சிரிப்பு, படிப்பினலும், ஆராய்ச்சியினுலும் தெளிந்த அறிவுஞானம், இத்தனையும் கொண்ட அவர் வட இந்திய திரைப்பட நடிகரைப்போன்று ஆணழகனகத் தோற்ற மளிக்கிருர், சோவியத் - இலங்கை நட்புறவுச் சங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் அவர், இலங்கைக்குப் பலமுறை விஜயம் செய் திருக்கிருர், எழுத்தாளர் மகாநாடுகளில் கலந்து உரையாற்றி இருக்கும் அவர், யாழ்ப்பாணம், கண்டி ஆகிய பல பகுதிகளுக் கும் சென்றிருக்கிருர் . இலங்கையைப்பற்றியும், எமது அரசியல் அபிவிருத்தியைப்பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கும் அவர், இங்குள்ள தனது நண்பர்களைப்பற்றியும்என்னிடம்குசலம் விசாரிக் கத் தவறவில்லை. இலங்கையின் முன்னணிச் சிங்கள எழுத்தாளர் கள், பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ஆகியோர் அவரது உற்ற நண்பர்கள். முற்போக்கு இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் பகுத்துத் தொகுத்து விளக்குவதில் அவர் சமர்த்தர்.
*உஸ்பெக்கிஸ்தான் மதனியாத்தி' என்ற ஏட்டின் பிரதம ஆசிரியராக அவர் பணிபுரிகிருர், 'மதனியாத்தி’ என்ருல் கலா சாரம் என்று பொருள்படும். உஸ்பெக்கிஸ்தான் கலாசாரம் ரோம, கிரேக்க கலாசாரங்களுடன் ஒப்பிடத்தக்கது. வரலாற் றுப் பெருமை மிக்க அக் கலாசாரம் முஸ்லிம் மக்களின் வாழ் வோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து வந்திருக்கிறது. அவ்விதம் வளர்ந்து வந்த கலாசாரம் இன்று சோஷலிஸ் சமுதாயமொன் றில் பூக்துக் குலுங்குகின்றது.
அவர் கொடுத்த கலாசார விளக்கம் அர்த்தபுஷ் டியுடைய தென்பதன உஸ்பெக்கிஸ்தானிலுள்ள கூட்டுப் பண்ணையொன் றுக்கு விஜயம் செய்தபொழுது நாள் உணர்ந்துகொண்டேன்.
"லெனின் கூட்டுப் பண்ணை" என்ற பெயரைக்கொண்டமிகப் பிரமாண்டமான இப் பண்ணே, தாஷ்கண்ட் நகரிலிருந்து ஏறத் தாழ எழுபது மைல்களுக்கப்பால் இருக்கின்றது.

Page 34
60 சிரித்தன செம்மலர்கள்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப் பிரதேசம் அகன்று, பரந்து காய்ந்த பாலைவனமாகக் காட்சியளித்தது. "த ஹங்ரி ஸ்டெப்பே" என அதனை அழைத்தார்கள். அதாவது பசித்த பாலைவனம்என்று சரியான பொருள்பட அதற்குப் பெயரிடப்பட் டிருந்தது. אי
உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் சில பகுதிகளில் தண்ணிர்ப் பஞ்சம் நிலவுவது வழக்கமாகும். அப் பிரதேசங்களுக்கு இரத்த நாளங்களாக இருப்பவை கால்வாய்கள். அவற்றிலிருந்து பெறப் படும் நீர், பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தப்படு வதனல், பாவனையால் குறைந்துவிடுவதுமுண்டு. அத்துடன்
R
பசித்திருந்த பாலைவனத்திற்கு நீர் பாய்ச்சிப்
பசுமையாக்கும் நன்னீர்க் கால்வாய்.
பாலைவனத தட்பவெப்ப நிலையால் நீரானது இயற்கையாகவே வற்றி நிலத்திலிருந்து மறைந்துவிடுவதுமுண்டு. ஐம்பது ஆண்டு களுக்கு முன்னர் ஏகாந்தமான சூழலில் பல பகுதிகள் மக்களின் நடமாட்டமேயில்லாது வெறிச்சோடிக் கிடநதன.
இப் பிரதேசத்தின் நீர்ப்பசி ஆட்சியாளருக்குப் பெருத்த சோதனையாக இருந்தது. நீரினை வாரி வழங்க இயற்கையன்னை மறுத்தாலும், வாழ்க்கையில் சுபீட்சத்கைக் காணவிழைந்த மக் கள், அத் தடங்கலைக்கண்டு மனம் தளரவில்லை. திடசங்கற்பத் துடன் வேலை செய்து வெற்றிவாகை சூடியிருக்கிருர்கள்.
 

சிரித்தன செம்மலர்கள் w 6.
சோஷலிஸ சமுதாயப் புரட்சி ஆரம்பமானதை அடுத்து, பொருளாதாரத் திட்டங்களை வகுப்பதன்மூலம் பசித்த பாலை வனத்தையும் செழித்த பூமியாக மாற்றிவரத் தொடங்கினர் கள். ஒவ்வொரு பிரதேசத்தினதும் வளர்ச்சிக்கெனத் தயாரிக்கப் பட்ட திட்டங்களினற்ருன் இது சாத்தியமாகிற்று.
இத் திட்டங்களின் அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளையும், அரச பண்ணைகளையும் ஒருங்கே அமைக்க முன்வந்தார்கள். ஆரம் பத்தில் அரசாங்கத்தின் வழிநடத்தலுக்கிணங்க, வரையறுக்கப் பட்ட பகுதிகளில் வாழ்ந்த விவசாயிகள் அனைவரும் தங்களுக் குச் சொந்தமான காணிகளைக் கூட்டுப் பண்ணைகளின் பேரில் ஒன்றுசேர்த்துக் கூட்டுறவு அடிப்படையில் விவசாய முயற்சி க3ள மேற்கொண்டார்கள்.
ஏனைய இடங்களில் அரசாங்கமே குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி, அவ்விடங்களில் மக்களைக் குடியமர்த்துவதன் மூலம் அரசாங்கப் பண்ணைகளை ஆரம்பித்தது.
1930-ம் ஆண்டுக்குப் பின்னர் இருவகைப்பட்ட பண்ணை களும் பெரிய அளவில் உருப்பெற்று வளரலாகின. அவ்வாறு உதித்த கூட்டுப்பண்ணை ஒன்றுதான் “லெனின் கூட்டுப்பண்ணை' cunt (5th.
ரஷ்யப் புரட்சித் தலைவர் லெனினின் பெயரில் கைத்தொழில் களும், விவசாய நிலையங்களும் நாடுபூராவும் பரந்துபட்டு இயங்கி வருவதைக் காணலாம். "லெனின் கூட்டுப்பண்ணை'இருப் பதைப்போன்று, “லெனின் அரசுப் பண்ணை" ஒன்றும் தாஷ்கண்ட் நகரின் எல்லைப்புறத்தில் இருக்கின்றது.
லெனின் கூட்டுப்பண்னைக்கு நாங்கள் காரில் புறப்பட்ட சம யம், கார்ச் சாரதிக்கோ, நண்பர் சாஷாவுக்கோ, அன்றி எம் முடன் வந்த தாஷ்கண்ட் நகர் ஏ. பி. என். அதிகாரிக்கோ இப் பண்ணை எங்கிருக்கின்றதென்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
இகளுல் பல இடங்களில் விசாரித்துச் சென்றதன்பின்னர் ஒரு பண்ணையை அடைந்தோம். ஆனல், அது கூட்டுப் பண்ணையல்ல. லெனினின் பெயரைக் கொண்ட அரசபண்ணையென்பது அவர் களைக் கண்டு பேசியதும் புலணுகியது.
இதஞல், மீண்டும் வழியெங்கும் விசாரணைகள் நடத்தி லெனின் கூட்டுப் பண்ணையைச் சென்றடைய அதிக நேரம்பிடித்து விட்டது. எமது பிரயாண ஒழுங்குகளின்படி, பகல் ஒருமணியள வில் லெனின் கூட்டுப் பண்ணையை நாம் சென்றடைந்திருக்க

Page 35
62 சிரித்தன செம்மலர்கள்
வேண்டும். ஆணுல், அரச பண்ணைக்குச் சென்று காலம் வீணுகிய தால், கூட்டுப் பண்ணையை நாம் சென்றடைந்தபொழுது பிற் பகல் மூன்றுமணியாகிவிட்டது,
பகல் ஒரு மணியிலிருந்து எமது வருகைக்காகக் காத்திருந்த லெனின் கூட்டுப்பண்ணை அதிகாரிகள், எமது விஜயம் ஒத்திவைக்
கப்பட்டு விட்டதென நினைத்துச் சோர்வடைந்துவிட்டனர். "வருவார்கள், வருவார்கள்" என்று காத்திருந்த அவர்கள் நேரம் செல்லச் செல்ல மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். இந் நிலையில் நாம் சென்றடைநதவுடன் அவர்களாககேற்பட்ட மகிழ்ச் சிக்கு அளவேயில்லை. எமது தாமதத்திற்கான காரணத்தை
விளக்கியபின்னர்தான் அவர்களுக்கும் நிலைமை புரிந்துகொண்
l-gil
முடையதாகும். பண்ணையின் பல்வேறு பகுதிகளையும் நாம் காரி லேயே சென்று பார்வையிட்டோம். தக்காளி, வெள்ளரிக்காய் சுரைக்காய் போன்ற காய்கறிகள் ஒருபுறம், அப்பிள், கொடி முந்திரி, மாதுளம்பழம் போன்ற பழவகைகள் இன்னுெருபுறம், உணவுக்குத் தேவையான தானியவகைகள பிறிதொரு புறம். இவற்றுககு அப்பால் ஒதுக்கப்பட்ட இடமொன்றில பருத்திச்
செடிகள். விஞ்ஞான ரீதியில் இயந்திரங்களின உதவியுடன விவ
சாய வேலைகள் யாவற்றினையும் செய்து வருகிருர்கள்.
பருத்திச் செடியிலிருந்து பஞ்சினைப் பிடுங்குவது முதற்
கொண்டு உள்ளே இருக்கும் விதைகளை அகற்றிப் பஞ்சினைத் திரட்டி எடுப்பதுபோன்ற சகல வேலைகளையும் இயந்திரங்களே செய்கின்றன.
நாங்கள் அங்கு செனறது பணிக்காலத்திலென்ருலும் பணித் துகள்கள் பரக்கத் தூவப்பட்ட பாலைவனத்தினை நான் அங்கு காணவில்லை.லெனின் கூட்டுப் பண்ணையில் பசித்த பாலைவனத்தை
தான் மறந்துவிட்டேன். அங்கு செழித்த, வளமகொழித்த சோலை
களைத்தான் கண்டேன். மனிதன் தன் உழைக்கும் சகதியை விடா முயற்சியுடன் பயன்படுத்துவானேயாளுல் இயறகையின் கொடு
ரத்தையும் அவனல் வெல்ல முடியுமென்பதற்கு இதுவோர்
எடுத்துக்காட்டாகும்.
விவசாயிகளுக்கென புதிதாக நிருமாணிககப்பட்டுவரும் நவீன குடிம ைகளையும் பார்வையிட்டுவிட்டு நாம் வரவேற்பு மண்டபத்திற்கு வந்தபொழுது நேரம் மாலை நாலரை மணியாகி
விட்டது. நேரம் சென்றிருந்ததால் நாம் அவசரம் அவசரமா கவே பல இடங்களைப் பார்வையிடவேண்டி இருந்தது.
இக் கூட்டுப்பண்ணை ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரண

ரித்தன செம்மலர்கள்
பிரயாணக் களைப்பினுலும் அதிக ம் எங்கள் எல்லோருக்கும் அதிக ப சன்றவுடன் எப்பொழுது சாப்பாட்ை ாட நால்வரும் எதிர்பார்த்துக்கொண்
பிற்பகல் நான்கு நாற்பத்தைந்து .ணவுக்காக மேசையில் அமர்ந்துகொ ருந்த நால்வருக்குமாக உணவு பெரு சய்யப்பட்டிருந்தது. உஸ்பெக் சமை கழ்பெற்ற ஒன்ருகும். காரமான கெ திகம் பாவிக்கமாட்டார்கள். ஆணுல், பகைகளைக் கலந்து நறுமணத்தையும் اله கொள்வார்கள்.
மொழுமொழுப்பான மரக்கறிகள் அங்கு விளைந்து பொழிகின்றன.
"பிலாவ்" என்ருல் அங்கு எவருக்கும் வாய்ஊறும் உருண்டை வடிவுடைய பாத்திரத்தில்தான் இவ்வுணவினைப் பரிமாறுவார் கள். சோறு, சிறிய இறைச்சித் துண்டுகள், கரெட், போஞ்சித் துண்டுகள் போன்றவற்றைச் சரக்கு வகைகளைக்கொண்டு தயா விக்கப்பட்ட ஆணத்தில் குழைத்துக் கொடுப்பார்கள்.

Page 36
சிரித்தன செம்மலர்கள்
ள்ள உருக்குக் கோலொன்றில் வாட் துண்டுகள் பொருத்தப் பட்டிருக்கும். ருகத் தட்டித் தட்டிக் கீழே எடுத்து , ந்குப் பெயர் "ஷஸ்லிக்". இதனுேடு கப்படும் ஆட்டிறைச்சிச் சூப், இவை ஸ். பட்டியலை இப்படியே நீட்டி வளர்க்
திரி, பெயர்ஸ், மாதுளம்பழம் ஆகிய சுவையூட்ட மேசையில் வைக்கப்பட்
நாற்பத்தைந்து மணிக்கு ஆரம்பமான ரிவு எட்டரை மணிக்குத்தான் முடிவுபெற் bதென்று கூறிஞல் அது தவருகும். என்னைப் உணவு அருந்தத்தொடங்கி அரை மணித்தியா வயிறு நிரம்பிவிட்டது. அதற்குமேல் என்னுல் ருத்தும் விருந்தாளிகளாகச் சென்ற எங்களை வைப்பார்களா என்ன?
திரத்தில் ஒருவித உணவுவரும். அதனைத் தொடர்ந்து உணவு. விருந்தாளியாகச் சென்ற ஒருவர் வேண் தனையும் ஒதுக்கலாகாது. அவர் ஒவ்வொன்றையும் -ண்டு ரசிக்க வேண்டும். இதுதான் நியதி.
நாட்டில் பிரபல்யம்பெற்ற மதுபானம் "வொட்கா" உணவை உண்ணும்பொழுது "வொட்கா"வையும் 1 கொஞ்சமாகப் பருகினல் உணவு உடனடியாகச் சமி விடும். உணவைத் தீர்த்து வைப்பதில் "வொட்கா'வுக்கு வு சக்தியிருக்கிறது.
இனி எங்களால் முடியாது" என்று கூறிக்கொண்டு நாங் மேசையைவிட்டு எழுந்தபொழுது எத்தனை ‘வொட்கா" ாத்தல்களைக் காலி செய்தோமோ நாமறியோம். எந்தெந்த தமான உணவைச் சாப்பிட்டு முடித்தோமோ என்றும் எமக் குக் கணக்கில்லை.
உணவு முடிவடைந்தபின்னர் சிறப்புக்குரிய விருந்தாளிகள் கட்டிப்பிடித்து ஆடுவது வழக்கம். அதையும் நாம் மனமுவந்து செய்து வைத்தோம்.
அது விருந்தா அன்றி வர்ணனைக்கு அப்பாற்பட்ட உப சரணையா? இன்றுவரை என்னுல் பதில்காண முடியவில்லை.

சிரித்தன செம்மலர்கள் 65
உஸ்பெக்கிஸ்தான் கலாசாரத்தைப்பற்றித் திரு, லளிஸ் கிஜ"மோவ் கூறியிருந்ததை இவ் விருந்தில் நான் கண்டுகொண்
1. . " is 65.
விருந்தோம்பலில் உஸ்பெக் மக்கள் புகழ்பெற்றவர்கள்.அவர் களுக்கு அது ஒரு பூரணத்துவம் பெற்ற கலையாகும். அதில் முஸ் லிம் பண்பாடும் செறிந்து கிடக்கின்றது.
உண்மையில் இத்தகையவிருந்தொன்றில் கலந்துகொண்டால் தான் அதில் ஊறிப்டோய் இருக்கும் அன்பினையும், பண்பினையும் உணர்ந்து கொள்ள முடியும். ஏனெனில் வார்த்தைகளால் உஸ் பெக் விருந்தோம்பலை வருணித்துவிட முடியாது.

Page 37
66 சிரித்தன செம்மலர்கள்
11. பூமி அதிர்ச்சியும் புதிய நகரமும்!
'உச்சிமீது வானிடிந்து
வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.""
-பாரதி.
Lத்து ஆண்டுகளுக்கு முன்னர் தாஷ்கண்ட் நகரம் பெரிய தொரு பூகம்பத்தினுல் பாதிக்கப்பட்டிருந்தது. அந் நகரின் சரித் திரத்தில் அத்தகைய நிலவதிர்ச்சி முன்னர் எப்பொழுதாவது இடம்பெற்றிருக்கவில்லை.
1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதியன்று தாஷ் கண்ட் நகரம் இப் பூகம்பத்தின் விளைவாக அல்லோல கல்லோ லப்பட்டது.
இது நடைபெற்றது காலை 5-23 மணியளவில்.
ஒருசில மணித்தியாலங்களுக்குள் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுக் காரியதரிசி திரு. லியனிட் பிரஸ்நேவும், சோவியத் அமைச்சரவையின் தலைவர் திரு. அலெக்ஸி கொஸிஜினும் நகருக்கு விஜயம் செய்து அழிவுகளை யும் இடிபாடுகளையும் நேரில் பார்வையிட்டனர். அவர்களுடன் ஏனைய குடியரசுகளின் தலைவர்களும் அதிகாரிகளும் ஸ்தலத் துக்கு விரைந்திருந்தனர்.
இப் பூகம்பத்துக்குப் பலியாகாமல் தப்பித் தவறிக் கிடந்த ஒரு மண்டபத்தில் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நகரின் புனர் நிருமாண வேலைகள் சம்பந்தமாக மகாநாடு நடத்தினர். பூகம்பம் ஏற்பட்டு இரு தினங்களுக்குப் பின்னரே இக் கலந்துை யாடல் நடைபெற்றது.
மகாநாட்டில் திரு. பிரஸ்நேவ் உரையாற்றிக் கொண்டிருந் தார். அவ் வேளையில் சடுதியாக ப்பூமியதிர்ச்சி ஏற்பட்டது. முன்

சிரித்தன செம்மலர்கள் 5ሃ
னைய பூகம்பத்தைப் போன்று மோசமாக இல்லாதபோதிலும் இதனுடைய தாக்கமும் கடுமையாகத்தானிருந்தது. மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மேசைகளும் ஏனைய தளபாடங்களும் நிலை தளர்ந்து ஆடத் தொடங்கின. கண்ணுடி ஜன்னல்கள் வெடித் துச் சிதறின. கதவுகள் அங்குமிங்குமாக ஆடி அசைந்து பேரி ரைச்சலை உருவாக்கிக்கொண்டிருந்தன. கதிரைகளில் அமர்த் திருந்தவர்கள் இருக்கமுடியாது தடுமாறித் தத்தளித்துக்கொண் டிருந்தனர். அங்கு குழுமியிருந்தவர்களுக்கு இருக்கவும் முடிய வில்லை, நிற்கவும் முடியவில்லை. எங்கும் ஒரே பீதி சுவர்கள் வெடித்துப் பிளக்கும் ஒசை. இந் நிலையில் கூரை சரிந்து தலை கள்மீது நொருங்கி விழுந்துவிடுமோவெனக் கூட்டத்திலிருந்தவர் கள் அஞ்சினர்.
பெரியவர்களைப்போலவே சிறியவர்களுக்கு இசைக் குழுக்கள் அங்கு ஏராளமுண்டு. அத்தகைய இசைக் குழு வினரின் ஒத்திகையொன்று இங்கே நடைபெறுகிறது.
இத்தனைக்கும் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த திரு. பிரஸ்நேவ், தனது நிதானத்தை இழந்துவிடவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவரும் பீதி கொள்ளாது மனவுறுதியுடன் வீற்றிருந்தார். இவர்கள் இருவ ரதும் திடசங்கற்பத்தைக் கண்டதும் மற்றவர்களுக்கும் ஒரு வாறு வீரம் பிறந்தது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட்

Page 38
68 சிரித்தன செம்மலர்கள்
y
கட்சி உறுப்பினரொருவர்தான் இவ் விபரங்கள் யாவற்றையும் எனக்குச் சுவைபட வருணித்தார்.
ஒருசில நிமிடங்களுக்கு இந் நிலவதிர்ச்சி நீடித்தது. அது நின்றவுடன் அங்கு குழுமியிருந்தவர்கள் ஆறுதற் பெருமூச்சு விட்டார்களாம்.
முன்னர் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக தாஷ்கண்ட் நக ரின் பெரும்பகுதி பலத்த சேதத்துக்குள்ளாகியது. இருபது லட் சம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் இருந்த கட் டிடங்கள் யாவும் இடிந்து நொருங்கி மண்ணுேடு மண்ணுகக் கிடந்தனவென்ருல், பின்னர் கேட்கவா வேண்டும்? ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். அரசாங்க அலுவலகங்கள், கலாசார, சமூக நிலையங்கள ஆகியன இருந்த இடம் தெரியாமல் அழிந்துபட்டன. குடிமனைகளை இழந்தவர் கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தார்கள். தற்காலிகமாகக் கூடாரங் களை அமைத்துக்கொண்டு அவற்றில் வாழத் தொடங்கினுர்கள். மகாநாட்டினை நடத்தியவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் புதிய நகரமொன்றினை அமைத்து விடுவதாகச் சபதம் பூண் t-inrtis gair.
ஆனல், ஐந்து ஆண்டுகளில் அல்ல, இரண்டு ஆண்டுகளுக் குள்ளேயே பார்த்தவர்கள் வி ய க் கத் த க் க வகை யில் புதிய நகரொன்றினை நிருமாணித்துவிட்டார்கள். 1968ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர், கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் யாவும் பொருந்திய கட்டிடங்கள் தாஷ்கண்ட் நகரை அணி செய்தன. அத்துடன், 1965ம் ஆண்டில் நிகழ்ந்த பூகம்பத் தைப் பார்க்கிலும் மோசமான பூமியதிர்வு ஏற்பட்டாலும் அதனையும் சமாளிக்கக்கூடிய சக்திவாய்ந்த கட்டிடங்களாகப் புதியவை நிறுவப்பட்டன.
தாஷ்கண்ட் நகர மக்கள் மட்டுமன்றி ஏனைய பதினன்கு மாநிலங்களையும் சேர்ந்த கட்டிடத் தொழில் நிபுணர்கள், கலை ஞர்கள், சிற்பிகள், விற்பன்னர்கள் ஆகியோர் இவ் வேலைகளில் முழுமூச்சாகப் பங்கெடுத்துக்கொண்டனர்.
ஒரு பத்திரத்தை நிரப்பி அதன் பலாபலனைப் பெற்றுக் கொள்ள ஆண்டுகள் பல காத்திருக்கவேண்டிய என்னைப் போன்றவர்கள். தாஷ்கண்ட் நகர் அற்புதத்தைக் கண்டு ஆச் சரியப்பட்டால் அதில் வியப்பொன்றுமில்லை.
பத்து ஆண்டுகள் கழிந்தபின்னர் இந்த மகத்தான சாத னையை நினைவுகூரும்பொருட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் விழாவொன்று நடத்த எண்ணியுள்ளார்கள். இதற்காக ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து மாஸ்கோ, லெனின்கிராட் போன்ற

69
ம்மலர்கள்
சிரித்தன செ
வரலாற்றுப் புகழ்மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்போது காலஞ்சென்ற பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் ஜனதிபதி அயூப்கானும், சோவியத் பிரதமர் கொஸிஜினுடன் ஒன்ருக நின்று எடுத்துக்கொண்ட படம் இது. ஒப்பந்த மகாநாட்டில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவர்களான சவானும், சுவ ரண்சிங்கும் சாஸ்திரிக்குப் பக்கத்தில் காணப்படுகின்றனர்.

Page 39
70 சிரித்தன செம்மலர்கள்
பிற மாநிலத் தலைநகரங்களில் செய்யப்படும் இரு பிரமாண்ட மான வெண்கலச் சிலைகள் இங்கு நிறுத்தப்படவிருக்கின்றன -
ஒரு தாயின் கையில் ஒரு குழந்தை. அவர்களை அணைத்தபடி கணவன். இவ்விரு வெண்கலச் சிலைகளும் 1966ம் ஆண்டில் தாஷ்கண்ட் நகர் மக்கள் அனுபவித்த இன்னல்களை விளக்க மாட்டா. அவற்றுக்குப் பதிலிாகப் பூகம்பத்தை எதிர்த்துப் போரிட்ட மக்களின் துணிவு, வீரம், மனவுரம் ஆகியவற்றுக்கு நிலையான நினைவுச் சின்னங்களாக அவை மிளிரப்போவதுடன், ரஷ்ய மக்களின் சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டை யும் எடுத்துக்காட்டவிருக்கின்றன.
1966ம் ஆண்டில் இடம்பெற்ற பூகம்பத்தினுல் மட்டும் தாஷ்கண்ட் நகர் உலகப் பிரசித்தம் பெறவில்லை. அச் சம்பவம் நிகழ்வதற்கு முன்னர் உலகத்தின் கண் அதன்பால் திருப்பப்பட் டிருந்தது. இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தினை முடிவுறச் செய்வ தற்கு அவ்விரு நாடுகளின் தலைவர்களும் அங்குதான் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். அவர்களால் வெளியிடப் பட்டட் தாஷ்கண்ட் பிரகடனம் இரு நாடுகளுக்குமிடையில் சமா தானம் நிலைபெற வழி சமைத்துக் கொடுத்தது. இந்தியப் பிரத மர் திரு. லால்பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் ஜனதிபதி அயூப் கானும் அங்கு சந்தித்தபொழுது அவர்கள் என்ன முடிவு செய்யவிருக்கின்ருர்களென்பதை அறிய உலகம் பேராவல் கொண் டிருந்தது. இன்று பாகிஸ்தானின் பிரதமராக இருக்கும் சுல்பி கார் அலி பூட்டோ அன்றைய சந்திப்பில் வெளிநாட்டமைச்ச ஏாகக் கலந்துகொண்டதும் சிறப்பூட்டும் அம்சமாகும்.
தாஷ்கண்ட் பிரகடனத்தைக் கண்டு சமாதானப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த அதேவேளையில் இன்னுெரு பேரதிர்ச்சி தரும் சம்பவமும் இடம்பெற்றுவிட்டது.இந்தியப் பிரதமர் திரு.சாஸ்திரி மாரடைப்பால் இறந்துவிட்டதே அந்தத் துர்ப்பாக்கிய நிகழ்ச்சி யாகும்.
இந் நிலையில் இன்றும் தாஷ்கண்ட் நகர மக்கள் திரு.சாஸ் திரியை மறந்துவிடவில்லை. அவரின் பெயரில் ஒரு கல்லூரியை நடத்துகின்ருர்கள். ஒரு நீண்ட விசாலமான வீதிக்கும் ‘சாஸ்திரி வீதி’ என நாமம் சூட்டியிருக்கிருர்கள்.
சமாதானத்தைக் காணும்பொரும்டு திரு. சாஸ்திரி சென்ற வீதியால் நானும் கால்நடையாகச் சென்றபொழுது எனது வழி காட்டியிடம் இத் தகவல்களைத் திரட்டிக்கொண்டேன். பாரத நாட்டின் தவப்புதல் வனுெருவன் உயிர்நீத்த இடத்தில் ஒரு சாமான்யனுகச் சஞ்சரிக்க எனக்கும் வாய்ப்புக் கிட்டியதையிட்டு என் மனம் இறும் பூதெய்தியது.

சிரித்தன செம்மலர்கள்
12. ஹஸரத் உஸ்மான் உபயோகித்த புனித குர்ஆன்!
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி அண்டங்கள் எல்லாத் திசையினுமோ ரெல்லையில்லா
வெளிவானிலே நில்லாது சுழன் ருேட நியமஞ் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொட
ரொணுத பெருஞ் சோதிப்ே
(அல்லா, அல்லா, அல்லா)
- urg9
நிகரின் முக்கியமான ஒரு பகுதியில் பொருட்காட்சிச்சாலை ஒன்றிருக்கிறது. உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் வரலாற்றினைச் சித்திரிக்கும் பல்வேறு படிவங்களும் சாதனங்களும் அங்கு காட் சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அப் பிரதேசத்தில் வளர்ந்து வந்த கலை, கலாசார பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் முதிர்ந்த நாகரிகத்தை எடுத் துக் காட்டுவனவாக அமைந்திருக்கின்றன.
அங்கு, முஸ்லிம் மக்கள் பயபக்தியுடன் போற்றும் விலைமதிப் பற்ற பொக்கிஷமொன்றும் இருக்கிறது.
ஏறத்தாழப் பன்னிரு நூற்றண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட புனித குர்ஆனின் மூலப் பிரதி, கண்ணுடிப் பேழையினுள் வைக்கப்பட்டு, கண்ணின் மணிபோல் பாதுகாக்கப்பட்டு வரு கின்றது. குர்ஆனின் கதை வரலாற்று முக்கியத்துவம் உடைய தாகும்.
இஸ்லாத்தின் மூன்ரு வது கலிபாவான ஹஸரத் உஸ்மான் (ரலி) அரசாண்டபொழுது இக் குர்ஆன் எழுதப்பட்டதாக வர லாற்ருசிரியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதாவது, ஏழாம் நூற்றண்டளவில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

Page 40
72 சிரித்தன செம்மலர்கள்
கலிபா ஹஸரத் உஸ்மான்(ரலி)யினுல் ஒதுவதற்காகப் பாவிக் கப்பட்ட இக் குர்ஆன் "கூபி முறை அரபு எழுத்துக்களால்எழு தப்பட்டதாகும்.
இவருடைய உத்தரவின் பேரில் இதிலிருந்து பல உருவ நேர்ப் படிவங்கள் எடுக்கப்பட்டன.இவற்றிலிருந்து ஒரு படிவம் கெய்ரோ வுக்கு அனுப்பப்பட்டது. பக்தாத் நகருக்கு அப்பாலுள்ள "கூபா எனும் இடத்திற்கும், டமாஸ்கஸ் எனும் இடத்திற்கும் பிற படி வங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
கலிபா ஹஸரத் உஸ்மான்(ரலி) இக் குர்ஆனை ஓதிக்கொண் டிருந்தபொழுது, கிளர்ச்சிக்காரர்கள் திடீரென அவரது மாளி கைக்குள் புகுந்திருக்கின்றனர். தனிமையில் பக்தியுடன் குர்ஆனை பாராயணம் செய்க அவர். மூர்க்கத்தனமாய்க் கொலை செய் யப்பட்டிருக்கிருர். இத் துர்ப்பாக்கிய சம்பவம் கிறிஸ்துவுக்குப் பின் 642ம் ஆண்டில் இடம்பெற்றது.
உடற்பயிற்சி நிலையங்களுக்கு மாணவர்கள் சேர்க் கப்படும்பொழுது, சம்பிரதாயபூர்வமாகச் சத்தியப்பிர மாணம் எடுத்தே சேர்க்கப்படுகின்றனர்.
குர்ஆனைக் கையில் வைத்திருந்தபடியே அவர் உயிர் நீத் தார். அவருடைய உடலிலிருந்து பீறிட்ட இரத்தம் குர்ஆனின் பக்கங்களிலும் சிதறுண்டது. அந்த இரத்தம் பதிந்த மூலப்
 

சிரித்தன செம்மலர்கள் 73
பிரதிதான் தாஷ்கண்ட் நகரிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ரஷ்யாவின் மத்திய பிரதேசத்திலிருக்கும் உஸ்பெக்கிஸ் தான் மாநிலத்துக்கு இது எவ்வாறு வந்ததென அதன் பூர்வ சரித்திரத்தினை விளக்கிவைத்த பொருட்காட்சிச்சாலை அதிகாரி களிடம் நான் வினவினேன்.
அது வந்த வரலாற்றினை எடுத்துக்கூறும் பல மரபுவழிக் கதைகள் இருக்கின்றன. அந் நாட்களில் மத்திய கிழக்கிலிருந்து ஆசியாவுக்குச் சென்ற வணிகர் கூட்டத்தினர் தாஷ்கண்ட் நக ரத்துக்கூடாகத் தங்கள் வியாபாரங்களை நடத்திவந்தனர். வணி கர்களின் ஒட்டகங்களும், குதிரைகளும் இவ்வழியாகவேசென்று வந்தன. பண்டமாற்று வர்த்தகத்தில், தாஷ்கண்ட் நகரம் ஒரு கேந்திர நிலையமாகத் திகழ்ந்தது.
ஒஸ்மான் காலிப்பின் காலத்தில் எழுதப்பட்ட இக் குர்ஆன் பத்தாம் நூற்ருண்டளவில் அபூபக்கர் அல்கபால் சாஷி என்பவரால் உஸ்பெக்கிஸ்தானுக்குக் கொண்டுவரப்பட்டதாக ஒரு புராணக்கதை கூறுகின்றது. ஆனல், 1442ம் ஆண்டில் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றிய திமோர் என்பவரால் அது கொண்டுவரப்பட்டதாக இன்னெரு மரபுக்கதை இருக்கின்றது. இருந்தும் முன்னைய கதையினைத்தான் இன்றைய ஆராய்ச்சி யாளர்கள் ஏற்று வருகின்றனர்.
ஏழு, எட்டு நூற்ருண்டுகளுக்கு மேலாக இக் குர்ஆன் பவுத் திரமாகப் பேணப்பட்டு வந்த வேளையில், 1868ம் ஆண்டில் ரஷ்ய சார் சக்கரவர்த்தியின் படைகளிடம் உஸ்பெக்கிஸ்தான் மாநிலப் பாதுகாவலர் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கு பவுத்திரமாக இருந்த குர்ஆனும் கைப்பற்றப்பட்டு, பீட்டர்ஸ்பேர்க் நகருக் குக் கொண்டு செல்லப்பட்டது. 1917ம் ஆண்டுவரையும் அதாவது ரஷ்யப் பெரும் புரட்சி வெடிக்கும் வரையிலும். இது பீட்டர்ஸ் பேர்க் நகரிலேயே வைக்கப்பட்டிருந்தது.
புரட்சித் தலைவர் லெனின், இது உஸ்பெக் முஸ்லிம்களின் பூர்வீக சொத்து என்பதை உணர்ந்தார். உஸ்பெக் முஸ்லிம் மக்களின் கோரிக்கைக%ளச் செவிமடுத்த அவர், 1917ம் ஆண்டி லேயே அதனைத் திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அதற்கேற்ப, பீட்டர்ஸ்பேர்க் நகரிலிருந்து அது மீண்டும் தாஷ் கண்ட் நகருக்குக் கொண்டுவரப்பட்டது. 1924ம்ஆண்டிலிருந்து தாஷ்கண்ட் பொருட்காட்சிச் சாலையிலுள்ள விசேட அறை ஒன்

Page 41
74 சிரித்தன செம்மலர்கள்
றில், அதிக அக்கறையுடன் சேதமுருவண்ணம் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அதனைப் பார்வையிட எனக்குக் கிடைத்து பாக்கியத்தினைப் பெரும் பேருகவே நான் கருதுகிறேன்.
t
உஸ்பெக் மக்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டறிந்தபின் னர் மீண்டும் மாஸ்கோவுக்குப் பிரயாணமானுேம். மாஸ்கோ
வில் இருந்துதான் நான் தாயகம் திரும்பவேண்டியிருந்தது.
மாஸ்கோவிலிருந்து நான் கொழும்புக்குப் பிரயாணஞ் செய்த அதே விமானத்தில் ரஷ்யப் பெண்மணியான திருமதி கீதா ரேபன்ஸ்காயாவும் பிரயாணம் செய்தார். மாஸ்கோவில் உள்ள ஏ.பி.என். நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் அவர், இலங்கையில் நடைபெறவிருந்த "ரஷ்ய மாதர் புகைப்படக் காட்சி"யை ஒழுங்கு செய்வதற்காக இங்கு வந்தார்.
நண்பர் சாஷா அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத் தார் அரசின் விருந்தாளியாக ரஷ்ய நாட்டில் நான் சுற்றுலா மேற்கொண்டிருந்ததனை அவர் அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். விமானத்தில் அருகருகே அமர்ந்துகொண்டோம். சுற்றுலாவின்போது நான் கண்டவற்றையும் அறிந்தவற்றையும் அவரிடம் விபரமாகக் கூறினேன் குறிப்பாக என்னைக் கவர்ந்த குழந்தைப் பராமரிப்பு நிலையங்களைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறினேன்.
*எனது தாய்நாட்டில் வே?ல செய்யும் குடும்பப் பெண் களை நான் பார்த்திருக்கிறேன். கணவனும் மனைவியும் வே&லத் தலங்களுக்குச் செல்வதால் அவர்களுடைய குடும்பங்களில்எழும் சிக்கல்களும் தொல்லைகளும் சொல்லுந்தரமன்று.
குழந்தைகளைப் பார்க்க "ஆயா"மாரை அமர்த்தவேண்டும். அந்த ஆயாமார் குழந்தைகளைப் பார்க்கின்ருர்களா அல்லது தங்களுக்குத் தேவையானவற்றைச் சுருட்டிக்கொள்கிருர்களா என்பது பெருங் கேள்வியாகும். சிறு பிள்ளைகள் உள்ள வீடடில் அவர்களின் பராமரிப்பினைக் கவனிப்பதென்பது இலகுவான விடயமல்ல. வயது சென்ற தாய், தந்தையரோ அன்றி உற வினரோ இருந்துகொண்டால் வேலைசெய்யும் தாய்மாருக்கு ஒரு வகையில் ஒர் ஆறுதல்தான். இருந்தும் எத்தகைய ஏற்பாட்டினை மேற்கொண்டாலும், அதனல் வேலைக்குச் செல்லும் தாயான வள் பூரண திருப்தி பெற்றுவிடமாட்டாள். வீட்டில் மட்டுமல்லா மல் வேலைத்தலங்களிலும் தங்களின் சிறந்த பணியை ஆற்றமுடி யாத இக்கட்டான நிலையில்தான் பெரும்பாலான தாய்மார்கள் இருக்கிருர்கள்.

சிரித்தன செம்மலர்கள் 75
ஆனல், உங்கள் நாட்டில் இப் பிரசசினைக்கு நல்ல முறையில் தீர்வு கண்டிருக்கிறர்கள். மாதர் சங்கங்களின் தலைவிமாருட னும் மாதர் இயக்க உறுப்பினர்களுடனும் நான் கலந்துரை மர்டியபொழுது, ரஷ்ய நாட்டில் வேலைசெய்யும் பெண்கள் வீட் டுத் தொல்லைகளை மறந்து எவ்வாறு வேலையில் கண்ணுங் கருத்து யாய் இருக்க வாய்ப்பு இருக்கின்றதென்பதனை உணர்ந்துகொண (Blair.
ரஷ்ய அரசியலார் நல்ல திட்டங்களை வகுப்பதன் மூலம் இப் பிரச்சி%னயைத் தீர்த்து வைத்திருக்கின்றனர். கணவனும் மனைவி பும் வேலைக்குச் செல்லும்பொழுது வீட்டில் குழந்தைகளைப் பரா மரிக்க எவரும் இல்லாத நிலையில் குழந்தைகள் பராமரிப்பு நிலை பங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறர்கள். காலையில் அங்கு சேர்க்கப்படும் குழந்தையை மாலையில் அழைத்துச் செல்லலாம். அதற்கு வசதியில்லையெனில் வார இறுதியில், அதாவது வெள்ளிக் கிழமை மாலையில் அழைத்துச் செல்லலாம்.
காலைப் பொழுது முழுவதும் குழந்தைகளைப் பராமரித்துத் தாய், தந்தையர் வரும்பொழுது அவர்களிடம் ஒப்படைக்கப் பராமரிப்பு நிலையங்கள் தயாராக இருக்கின்றன. இல்லையெனின் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இரவும் பகலும் அவர்களைப் பேணிக் காத்து வளர்த்துவிடவும் அவை தயாராக இருக் கின்றன.
தாய், தந்தையரின் அன்பு கிடைக்காமற் போய்விடுமோ என்று எவரும் அஞ்சத் தேவையில்லை. தாயாக, தாயைப்போன்று கடமையாற்றக் கூடியவர்கள் அவ்விடங்களில் பணிபுரிகின்றனர். மழலைச் செல்வங்கள் முதற்கொண்டு துடுக்குத்தனமான பிள்ளை கள்வரை இவர்களிடம் வளர்ந்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு வேண்டிய நல்லொழுக் கடும் கல்வியும் அவ்விடங்களில் போதிக்கப்படுவதுடன் அவர்களின் சிறப்பியல்பு களும் ஆற்றல்களும் வளர்த்துவிடப்படுகின்றன.
இத்தகைய ஏற்பாடுகள் கணவன், மனைவி ஆகிய இரு தரப் பினருக்கும் பெருத்த ஆறுதலைக் கொடுத்து வருகின்றன"என்று நான் சொன்னதைத் தொடர்ந்து, இலங்கையைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர். என்னிடமிருந்து மேலும் தகவல்களைப் பெற் றுக்கொண்டார். "ரஷ்ய நாட்டில் சுற்றுலா செய்திருக்கிறீர் கள். எயது நாட்டவரைப்பற்றி உங்கள் மனதில் ஆழப் பதிந் துள்ள விடயம் எது?" என்று அவர் என்னிடம் கேட்டார்.
ரஷ்ய மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ் வில் கண்டுள்ள அபிவிருத்திகளையும் நான் பார்த்திருக்கிறேன். இவை யாவும் எனது மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்

Page 42
76 சிரித்தன செம்மலர்கள்
திருக்கின்றன. இவற்றிற்கும் மேலாக இன்னெரு விடயத்தினை யும் நான் குறிப்பிட் டேயாகவேண்டும். அது அவர்களின் உள் ளிார்ந்த நட்புறவைப் பற்றியதாகும். குறிப்பாக ஆசிய நாட்ட வர்கள் மீது அவர்கள் காட்டும் அன்பும் பரிவும் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. கலகலப்பாகப் பேசி, திறந்த மனதுடன் நட்புறவு கொண்டாடுவார்கள். கார்ச் சாரதிகளென் ருல் என்ன, உயர் அதிகாரிகளென்ருல் என்ன, ஆசிய நாட்ட வர்களைக் கண் டால் நடிப்பிற்கே இடமில்லாமல் மனமார்ந்த அன்புடன் பழக முன்வருவார்கள். '.
திருமதி ரேபன் ஸ்காயா என்னிடம் அக் கேள்வியைக் கேட்ட டொழுது, நன்ருகச் சிந்தித்துப் பார்த்துவிட்டு, ‘என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள விடயம், உங்கள் மக்களின் நடிப்பற்ற நட்பு' என்று கூறிவைத்தேன். அப் பதிலைக் கேட்டு அவர் உண் மையிலேயே திருப்திகொண்டார்.
விமானம் கட்டுநாயகா விமானத் தளத்தில் இறங்குவதற் காகக் கீழ் இறங்கி வந்துகொண்டிருந்தது. நண்பகல் வேளையில் தாம் வந்துகொண்டிருந்தபடியால் எல்லாக் காட்சிகளையும் பரி பூரணமாகப் பார்க்க முடிந்தது. கடல்சூழ்ந்த நாடு, கடலையும் நிலத்தையும் இணைக்கும் ஏரிகள்; கால்வாய்கள். விமானத்தில் இருந்து பார்க்கும்பொழுது நிலம் செழித்துப் பச்சைப் பசே லெனக் காட்சியளித்தது. தென்னை மரங்கள்.ஏனைய செடி,கொடி வகைகள், வயல்வெளிகள் ஆகியன கண்களுக்கு விருந்தளித் தன. நாம் இருவரும் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம். "கடல் வளம் சூழ்ந்த உங்கள் நாடு; இயற்கையின் வளங் கள் கொழித்துக்கொட்டும் உங்கள் நாடு; ஏன் பொருளாதாரப் பிரச்சினைகளால் அல்லற்படவேண்டும்? வானிலையும் உங்களுக்கு வாய்ப்பாகத்தானே இருக்கிறது. ரஷ்யாவைப்போன்று பணி பெய்வதால் இடைஞ்சல் ஏற்படுவதில்லையே? இவ்வளவிருந்தும் முன்னேற்றம் காணத் தடங்கல் ஏன் ஏற்படவேண்டும்?" இலங் கையின் எழில் மிகுந்த காட்சிகளை நாணு பக்கமும் சுற்றிப் பார்வையிட்டுவிட்டு, திருமதி ரேபன்ஸ்காயா என்னிடம் கேட்பு, கேள்வி இது. " . என்ல்ை சரியாகப் பதில் அளிக்க முடியவில்லை. அக் கேள் விக்கு இன்றும் நான் பதில் காண விரும்புகிறேன். அக் கேள் விக்கு தக்க பதில்கண்டு பிரச்சினைகளுக்குப் பரிகாரம் செய்வதில் வெற்றி கொள்வோமேயாகில் எமது தாய்த் திருநாடு ஒரு சொர்க்க பூமியாக மாறிவிடுவது நிச்சயம். அந்த நன்னுள் என்று தான் வருமோ?
*X


Page 43
செம்ம
(சோவியத் பட
റു ག་ க. சிவப் ?- மலருக்கும் மனத்திற்கும்
போலவே சோவியத் மலருக்கும் நெருங்கிய நிறப் பூக்கள் அங்கு க வென்ஜளநிற மலர்களே பண்புநிறை வாழ்த் தி2ள மலர்கள் பொருமையை அவை செல்வாக்கற்ற ே தெரிவிக்க வெள் 2ளமல மலர்க 2ள நாருவர் ம வன்னம் காதலுக்கு மட் சின்னமாகவும் திகழ்கிற கண்ட மக்கள் செம்மலி பூரிப் பைக் காக்கின்ற சிரிக்கும்போது . . . .
அட்டை அமைப்பு - ) . பெ
。 விர கே சரி
 

நதன
- - - லர்கள் / பணக் கட்டுரை) 9
பிரகாசம் -- ッ下<、一つ。ー
தொடர்பிருப்பது | மக்களின் மனதிற்கும் தொடர்புண்டு . as iš i ாத2லக் குறிக்கும் ། I ா அன்போடியைநீத తీ ఆ ఆలీ, అత్రీల్ க் குறிப்பவை . எனவே நவ , வாழ்த்தி 2ணத் 鞑 ர் இக்றேல் நீல நிற 臀 க்கள். செம்மை நிற டுமன்றி புரட்சியின் து. புரட்சியில் வெற்றி ரர்களில் தம் வெற்றியின் ,
ர். எனவே செம்மலர்
. . . . ?
1740
ாராயிஸ், -
!,