கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென் கிழக்கு ஆசியா

Page 1


Page 2


Page 3
}rsا۔
ஆாங்கொக் -كس
5ւԸn6ծ7 மேர்குழி) *சீயெம் ரீயும்
SG S ՓլbGլյ تاسو ٢٦ 密 நியாதிராங்கு G'olemu (n' ழியென்தின்வர் (
6 a 10o விக்டோரியா (pడిaft リる"
s w
ஃநகக போாத் திவு !
காலிமாந்தான்
பான்ஜெர்மாசி
10° 6յ கிறிஸ்மஸ் தீவு 110
ിജ്ഞ ===కాల----
( ' { P492 , 7 (6ፏR |Q)
0.
g
 
 
 
 
 
 
 

மைல் அளவுத்திட்டம்
oO 700 30o 4oo o
- தென் கிழக்டு அதியா
p தீவு
uglas
10° த்ெ
சமுத்திரம்
பாலவுத் தீவு
பண்டாக் கடல்
e
0. தனிம்பார் தீவு OA
ஆராபூசாக் கடல்
0 ot

Page 4


Page 5


Page 6

தென்கிழக்கு ஆசியா

Page 7

தென்கிழக்கு ஆசியா
இந்நூல் சிலகாலம் மலாயாப் பல்கலைக் கழகத்திலும் (சிங்கப்பூர்), கானப் பல்கலைக் கழகக் கல்லூரியிலும் புவியியற் பேராசிரியராயிருந்த
ஈ. எச். ஜி. டொபி
(பீ.எ., பிஎச். டி.,)
அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினல் இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது
3-CP 4217-1,004 (68/9)

Page 8
முதற் பதிப்பு 1970
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்துக்கே
S O U T H E A S T A SI A
by E. H. G. D. O. B. B. Y (B.A., Ph. D.)
Copyright UNIVERSITY OF LONDON PRESS LTD.
Translated and Published in Ceylon
by arrangement with UNIVERSITY OF LONDON PRESS LTD. WARWICK squaRE LONDON EC. C. 4.
வறிக்சயர் சதுக்கத்திலுள்ள இலண்டன் பல்கலைக்கழக அச்சகத்தாரின் இசைவுபெற்றது இலங்கை அரசாங்கத்தால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது

முன்னுரை
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்படும் இந்நூல் பேராசிரியர் ஈ. எச். ஜி. டொபி அவர்கள் எழுதிய ‘தென்கிழக்கு ஆசியா' என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இலங்கைப் பல்கலைக் கழகத்துப் புவியியற்றுறையைச் சேர்ந்த திரு. சோ. செல்வநாயகம், M. A. ஆவர்.
தென்கிழக்கு ஆசியா என்பது ஒரு புவியியற்றணித்தொகுதியன்று. சுதந்திர நாடுகளாகவும் கூட்டாட்சி நாடுகளாகவுமுள்ள பெரியவுஞ் சிறியவுமான பல தீவு களும், ஆசியக்கண்டத்தின் ஒரு பகுதியும் சேர்ந்துள்ள தொகுப்பே தென் கிழக்கு ஆசியா எனப்படுகின்றது. இந்து சமுத்திரத்திலும் பசிபிக்குச் சமுத்தி சத்திலுமாகப் பரந்து கிடக்கும் இந்நாடுகள் வசதி நோக்கியே ஒரு தொகுப் பாக ஆராயப்பட்டுள்ளன; ஆயினும் புவிச்சரிதவியல் அடிப்படையில் நோக்கும் போத, சண்டா மேடை, சாகுல் மேடை என்னும் இரண்டையும் இளமலேவிற்கள் இணைத்துள்ளதைக் காணலாம்; அன்றியும் இந்நாடுகளின் பொருளாதார, சமூக, பண்பாட்டு அமைப்பு முறைகளும் அரசியல் வளர்ச்சியுமே தம்முட் பெரிதும் ஒற்றுமையுடையனவாய்க் காணப்படுகின்றன.
இவ்வியல்புகளை யெல்லாம் நுணுகி ஆராய்ந்த இதன் ஆசிரியர் இந்நூலை மூன்று பகுதிகளாகப் பிரித்து, முதற்பகுதியிலே தென்கிழக்கு ஆசியா (ՄGք வதையும் ஒருங்கெடுத்து, அதன் இயற்கை அமைவினை விளக்கியும், இரண்டாம் பகுதியிலே இத்தொகுப்பிலுள்ள நாடுகளைப் புவியியற் கூறுகளாகப் பிரித்துப் பிரதேசவாரியாக அவை ஒவ்வொன்றையும் விளக்கியும், மூன்ரும் பகுதியிலே மக்கட் புவியியலை விரித்தும் செல்கின்றர் ; மக்கட் புவியியலைக் கூறும் பகுதி யில் ஆசிரியர், தென் கிழக்காசியாவிலே பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முதலாக இக்காலச் செறிவுப் பயிர்ச்செய்கை வரையுமுள்ள விவசாய விருத்திகளை யெல் லாம் விளக்கியுள்ளார்; மேலும் மீன்பிடிதொழில், இக்காலக் கைத்தொழில், வியாபாரம் ஆகியவற்றையும் விவரித்துள்ளார். இறுதியாக ஆசிரியர் தென் கிழக்கு ஆசியாவின் வரலாற்றுப் புவியியலை ஆராயுமுகமாகக் குடிப்பெருக்கம், குடிச்சுருக்கம், குடிப்பெயர்வு முதலான குடித்தொகைப் பிரச்சினைகளையும் மாறி வரும் அரசியல் நிலைமை, குழல்நிலைமை நாட்டுரிமைவாதம் ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவைப் பற்றிய புவியியல் நூல்கள் மிகக் குறைவாகவே உள. இந்த நூல், க.பொ.த. உயர்நிலையிலும் பல்கலைக்கழகத்திலும் பிரதேசப் புவியியல் கற்கும் மாணுக்கர்களுக்கு ஒரு பாடநூலாக உதவவல்லது ; எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் மானுக்கருக்கேயன்றி, உலகின் இப்பகுதி யிலே அக்கறைகொண்டுள்ள மற்றையோர்க்கும் ஆர்வமூட்ட வல்லது. பொதுவா கத் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் இந்நூல் பயன்பட வல்லது,
வ. ஆனந்த ஜயவர்த்தன,
கல்வி வெளியிட்டுத் திணைக்களம், ஆணையாளர். கொழும்பு-3, 1970 &FଙTରuf 29.

Page 9
bov)
අධායාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුව මඟින් පළ කරන ලද මේ පොත ඊ. එච්. ජී. ඩොබිගේ Southeast Asia නමැති ග්‍රන්ථයෙහි පරිවර්තනය යි. මෙහි දෙමළ පරිවර්තනය ලංකා විශේව විදයාලයේ ඇස්. සෙල්වනායගම් මහතා විසින් කරන ලදී.
අග්නිදිග ආසියාව යනු භූගෝලීය ඒකකයක් නොවේ. නිදහස් රාජ්‍ය වශයෙන් හා සංයුක්ත රාජ්‍ය වශයෙන් පාලනය වන ලොකු කුඩා කොදෙව් රැසක් ද ආසියා මහාද්වීපයේ කොටසක් ද මෙනමින් හැඳින් වෙයි. ඉන්දි යන් සාගරයෙහි සහ පැසිපික් සාගරයෙහි විසිරී පිහිටි මෙම රටවල් එක් කොට සැලකීම උදක් පහසුව තකා කරන ලද්දක් වුව ද භූ විදයාත්මක ව බලන විට සුන්'ඩා වේදිකාව සහ සාහුල් තටාකය ඒ අතර පිහිටි යෙගුවන කඳු චාප මඟින් සම්බන්ධ කෙරෙන බව පෙනී යයි. එපමණක් නොව එහි දූපත්වල ආර්ථික ක්‍රමය, සමාජ හා සංස්කෘතික රටාව සහ දේශපාලන විකසනය යනාදි මූලික කරුණු එකිනෙකින් යයි කිව නොහැකි තරම් සමානත්වයක් දරයි.
යශෝක්ත ලක්ෂණ මැනවින් වටහා ගත් කර්තෘ මෙම ගුන්ථය කොටස් තුනකට බෙදා මුල් කොටසෙහි අග්නිදිග ආසියාව සමස්තයක් වශයෙන් ගෙන එහි ස්වාභාවික භූ දර්ශනය හෙගුතික අංග යටතේ විස්තර කොට ඉක්බිති දෙවැනි කොටසෙහි රටවල් වෙන් වෙන් ව ගෙන ඒවා භූගෝලීය කොටස්වලට බෙදා විග්‍රහ කොට තිබේ. තුන්වැනි කොටස මානව භූගෝල විදයාව සඳහා වෙන් කළ කර්තෘ අග්නිදිග ආසියාවේ කෘෂිකමීය, සල ගොවිතැනේ සිට නූතන සියුම් වගා කූම දක්වා වර්ධනය වූ අන්දමත් එම වාද්‍යාප්තියත් සවිස්තර ව දක්වා එහි මසුන් මැරීම, නවීන කර්මාන්ත සහ වෙළඳාම පිළිබඳ ව ද එබඳු ම විස්තරයක් ඉදිරිපත් කරයි.
අවසන් වශයෙන් අග්නිදිග ආසියාවේ ඓතිහාසික භූගෝල විදයාව ගැන සළකා බලන කර්තෘ ජන සංඛායා අඩු වැඩි වීම, ජනයා සංක්‍රමණය වීම, දේශපාලන තත්ත්වය වෙනස් වීම, පරිසරය සහ ජාතිවාදය ආදී මානව විදාඨාවට අයත් ඉතා වැදගත් අංග කීපයක් විවරණය කරයි.
අග්නිදිග ආසියාව අළලා ලියැවුනු භූගෝල විදයා ගුන්ථ සුලභ නොවේ. මෙය උසස් අධායාපන සහතික පත් විභාගයට භූගෝල විදයාව හදාරණ ශිෂ23යන' ට සහ 。 විදයාලයේ ප්‍රාදේශීය භූගෝල විදයාව හදාරණ උපාධි අපේක්ෂකයන්ට ඡාඨ ග්‍රන්ථයක් වෙයි. මේ පෙදෙස ගැන මනා අවබෝධ යක් ලබා ගැනීමට කැමති සාමාන්‍ය පාඨකයාට වුව ද පහසුවෙන් වැටහෙන අන්දමින් සරල බසින් ලියවී ඇති මෙය ආසියාතික රටවල ගුරුවරුන්ගේ ද පරිශීලනයට උචිත මා ඇඟි ගුන්ථයකි.
ව, ආනන'ද ජයවර්ධන,
4970, මැයි 20 වැනිදා, කොමසාරිස්. කොළඹ 3, ශ්‍රීමත් අර්න්ස්ට් ද සිල්වා මාවත, අධායාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවේ දී ය.
vri

முகவுரை தென் கிழக்கு ஆசியாவில் குழல் நிலைமைகளையும் மக்களின் இசைவாக்கங் களையும் விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும்; இஃது இப்பிரதேசத்தைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு ஓர் அடிப்படைப் பாடநூலாக அமைவதோடு, சமூகவியலறிஞர், ஆட்சியாளர், அரசியல்வாதிகள், வாணிகர் ஆகிய பலதிறத் தாருக்கும் அவ்வவர் வேலை பொதுச் செயற்களத்தோடு எவ்வாறு தொடர்புற் ஆறுள்ளதென்று காணத் தூண்டுதல் அளிக்கும். பெளதிகம், குழல், சமூகம் என் ணும் புவியியல் அமிசங்கள் பற்றி இக்காலத் தெழுந்த நூல்களை வாசகர் ஏலவே அறிந்திருப்பர் என்று உட்கொண்டே இந்நூல் எழுதப்பட்டுளது ; ஆதலால் இந் நூல் தென்கிழக்கு ஆசியாவுக்கும் அங்குள்ள மக்களுக்கும் சிறப்பாகவுரிய குழ் நிலைகள் பற்றியே விரித்துக் கூறுகின்றது.
இந்நூல் ஓர் அகராதியுமன்று, புவியியல் விவரத்திரட்டுமன்று, கலைக்களஞ்சி யமுமன்று. தென்கிழக்காசியாவிலே இடவமைதித் தோற்றவியல்புகளை முதன் முதல் ஆராய்ந்தெழுதிய நூல்களுள் இஃதொன்முகும். கடந்த உலகப் போர்க் காலத்தில் இப்பிரதேசத்தைப் பற்றிய செய்திகள் கிடைத்தற்கு அருமையா யிருந்தபோதே இத்தகைய ஓர் ஆராய்ச்சி இப்பிரதேசம் முழுமைக்கும் அத்தி யாவசியம் என்பது தெரியவந்தது. -"
இந்நூல் மூன்று பகுதிகளையுடையது. முதற்பகுதி இயற்கை அமைவை விளக்குகின்றது; இரண்டாம் பகுதி அரசியற் கூறுகள் ஒவ்வொன்றிலுமுள்ள மக்களின் வாழ்க்கை விவரங்களைப் பிரதேச முறையில் விளக்குகின்றது; மூன் மும் பகுதி தென்கிழக்கு ஆசியாவின் சமூகப்புவியியலை ஒருங்கிணைத்துக்காட்டி அதன் இக்காலப் பிரச்சினைகள் சிலவற்றை எடுத்துக் கூறுகின்றது.
பணம் பற்றிய குறிப்புக்கள் யாவும் மலேசியத் தொலர் நாணயத்திலே (2 சி. 4 பெ. அல்லது அமெரிக்க ஐ. மாகாணத்தின் 33 சதம்) தரப்பட்டுள்ளன. இந்த நாணயம், போருக்கு முந்திய காலத்தில் இப்பிரதேசத்தில் பெருவழக்கில் இருந் தமையாலும், போருக்கு முன்னும் பின்னும் உள்ள இதன் பெறுமதிகளுக் கிடையே சிக்கலில்லாத உறுதியான தொடர்பு இருந்துவருவதனலுமே இந்த நாணய முறை இங்குக் கையாளப்பட்டுள்ளதென்க. புள்ளிவிவரங்களை நிறையத் தருவது இந்த நூலின் நோக்கமன்று; அண்மைக்காலத்தில் வெளிவந்த ஆண்டுப் புத்தகங்களிலிருந்து இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நூலை வாசிக்கை யில் ஒவ்வொரு கட்டத்திலும் தென்கிழக்காசியாவின் இடவிளக்கப் படங்களைப் பார்த்தல் வேண்டும்; இப்படங்கள் இப்போது பெருந்தொகையாகவுள்ளன.
இந்நூலாசிரியர் தமக்குப் பல்வேறு காலங்களில் ஊக்கமளித்து இந்நூல் பற் றிய ஆய்வுரை கூறியதற்காகப் பேராசிரியர் ஈ. ஜி. ஆர். டெயிலர் அவர்களுக் கும், இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்து ஆய்வுரை கூறியதற்காகப் பேராசிரியர் எல். டி. ஸ்டாம்ப் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்ருர், தென் கிழக்கு ஆசியாவின் புவியியல் ஆராய்ச்சியில் முன்னுேடிகளாக முயன்ற ஆசிரி
vii

Page 10
முகவுரை
யர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்நூலாசிரியர் தாராளமாகப் பயன் படுத்தியுள்ளாராகையால் அவர்களுக்கும் நன்றி செலுத்துகின்ருர் ; (இவ்வா ராய்ச்சிக் கட்டுரைகள் உசாத்துணை நூற்பட்டியிற் குறிப்பிடப்பட்டுள்ளன.) மேற்குறித்தோருக்கு மட்டுமன்றி, இந்நூலை ஆக்குங்கால் ஒவ்வொரு கட்டத்தி ஆலும் ஓயாத பொறுமையோடு ஒத்துழைத்த தம்மனைவியாருக்கும் நூலாசிரியர் பெரிதுங் கடமைப்பட்டுள்ளார்.
இந்நூலிலுள்ள கூற்றுக்களைப் பற்றிப் பின்வரும் ஆராய்ச்சியாளர் எவ்வளவு தான் ஐயப்பாடுகொள்ளினும், இந்நூல் இப்பிரதேசம் பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சியைத் தாண்டுமாயின், விசேடமாகத் தென்கிழக்கு ஆசியாவில் வாழும் ஆராய்ச்சியாளர் தம்முடைய நாடுகளைப் பற்றி எழுதுவதற்கு இஃது ஊக்கி யுதவுமாயின், இதன் ஆசிரியர் பெரிதும் மனநிறைவெய்துவர்.
ஈ. எச். ஜி. டொபி
சிங்கப்பூர், 1950.
எட்டாம் பதிப்பின் முகவுரை 1963 ஆம் ஆண்டு நிலைமைகளைக் காட்டுமுகமாக மேலும் சில திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளன.
ச. எச். ஜி. டொபி
விஸ்பன், ஒகத்து 1964,
yiii

பொருளடக்கம்
Segasang O
முகவுரை : எட்டாம் பதிப்பிற்குரியது 0 O
பகுதி !
தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
அத்தியாயம் 1 : தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
சண்டா மேடை ; சாகுல் மேடை ; இளமலைகளும் தீவுவளை தொடர் களும் ; பாறை வகைகள் ; கடல்களின் தன்மை: சண்டா மேடைக் கடல்கள், சாகுல்மேடைக் கடல்கள், இந்தியத் தீவுகளின் " மத்திய தரைக் கடல்கள் ' ; வற்றுப்பெருக்கு ; முருகைக்கற்கள்.
Lidiasih 3
அத்தியாயம் 2 : தென்கிழக்கு ஆசியாவின் காலநிலைக் காரணிகள் சி
காற்றெழுங்கு மழைவீழ்ச்சி ; தைபூன் ; சூரியவொளி ஈரப் பதன் ; உயரத்தாலேற்படும் விளைவு; காலநிலைப் பிரதேசங்கள். *
utab 20
அத்தியாயம் . 3 : தென்கிழக்கு ஆசியாவின் வடிகாலமைப்பு
அயனப் பிரதேச ஆறுகளின் தன்மை ; ஆற்றுச் சுமையும் வடிநில அரிப்பும் ; பனிக்கட்டியாற்றுக் காலமும் தென்கிழக்கு ஆசிய வடி காலமைப்பும் ; அடையல் கொள்ளல் ; சேற்று நிலமும் சதுப்பு நிலமும், வெள்ளப்பெருக்கு.
Luā& ub 3ზ
அத்தியாயம் 4 : தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தாவரம்
அயனக் காட்டுக் காரணிகள் ; கடற்கரைத் தாவரம் : கடற்கரைச் சோலைகளும் மாங்குரோவுக் காடுகளும் ; தாழ்நிலத் தாவரம் : அய னப் பிரதேச மழைக் காடுகளும் துணைக் காடுகளும் ; பருவக்காற் றுக் காடுகளும் துணைக் காடுகளும் ; மலைத் தாவரம்: விலங்கினம்,
பக்கம் 54
அத்தியாயம் 5 : தென்கிழக்கு ஆசியாவின் மண்வகைகள்
அயனப் பிரதேச மண் விருத்திக்கு உதவும் காரணிகள்; அயனப் பிரதேசத்தில் தரைநீர் ; சாம்பனிற மண்ணுக்கமும் சரளை மண் ணுக்கமும் ; சரளை மண்வகை ; பொலினேவ் என்பாரும் சரளை மண்ணுக்கமும் ; தென்கிழக்கு ஆசியாவின் வறண்ட வலயங்களி லுள்ள மண் வகைகள் ; மண் வகையும் பயிர்ச் செய்கையும்.
Latasub 68
ix

Page 11
அத்தியாயம் 6 :
அத்தியாயம் 7 :
அத்தியாயம்` 8 :
அத்தியாயம் 9 :
அத்தியாயம் 10 !
அத்தியாயம் 盘星:
புத்தியாயம் 12 :
த்தியாயம் 13 :
பொருளடக்கம்
பகுதி II தென்கிழக்காசிய நாடுகள்
மலாயாவின் இயற்கை நிலத்தோற்றம் தரைத் தோற்றம் ; மலாயாவின் பாறைகள் ; காலநிலை மழை வீழ்ச்சி ; வடிகாலமைப்பு; மண் வகைகள் ; காடுகள்: கடற்கரைச் சவுக்கு மரக் காடுகள், கடற்சேற்றுநில மாங்குரோவுக்காடு, உன் நாட்டு நன்னீர்ச் சேற்றுநிலக் காடுகள், தாழ்நில அயன மழைக் காடுகள், துணைக்காடுகள், குன்றுக்காடுகள், மலைக்காடுகள் ; மலாயா, மலேசியா, மலே, மலாயன். பக்கம் 8)
மலாயாவின் பண்பாட்டியல்புகள் உணவுப் பொருளுற்பத்தி : மீன்பிடித்தல், நெற்செய்கை, பணப் பொருளுற்பத்தி : (அ) பணப்பயிர்ச் செய்கை, இறப்பர், தென்னைதாவரநெய் மரப் பெருந்தோட்டங்கள், எனைய பணப்பயிர்கள் ; (ஆ) கணிப்பொருளகழ்தல் : தகரம், இரும்பு, தங்கம், எனைய கணிப்பொருள்கள். asb 10
மலாயாவின் சமூகப் புவியியல் -- மலாயாவின் வாழ்க்கை முறையின் தோற்றம் ; இனவகுப்பினரின் பரம்பல் : மலே இனத்தவர், பிறநாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள்; பிரதேசப்புவியியல் : மேற்கு மலாயா, கிழக்கு மலாயா, சிங்கப்பூர் шda ih 137
பேமாவின் இயற்கை நிலத்தோற்றம் பெளதிகவுறுப்பியல் ; மேற்கு மலைப்பகுதி, சான் உயர் நிலம், ஐராவதி வடிநிலம் ; காலநிலை ; வடிகால் முறைகள் , அரக்கன் ஆறுகள், தெனசெரிம் ஆறுகள், சல்வீன் ஆறு, ஐராவதி ஆற் றுத் தொகுதி ; காடுகளும் பிற தாவர வகைகளும் ; காடுகளின் வர்த்தகப் பயன்பாடு ; கணிப்பொருள்கள் ; மண் வகைகள் ; கரிய பருத்திமண், உவர்மண்ணும் உப்பு மண்ணும். Luišasih 162
பேமாவின் பண்பாட்டு நிலத்தோற்றம் வறண்ட வலயப் பயிர்ச்செய்கை , கழிமுகப் பயிர்ச் செய்கை : குன்றுப் பயிர்ச்செய்கை, ušash 185
பேமாவின் சமூகப் புவியியல் குடிப்பரம்பல்; நகரமையங்கள் ; பிரதேசப் புவியியல்; போருக்குப் பிந்தியநிலை. y kash 205
கிழக்கு இந்தியத் தீவுகள் : மேற் ر/தீவுகள்-சுமாத்திரா கிழக்கு இந்தியத் தீவுகள் ; மேற்குத் தீவுகள்-சுமாத்திசா : பெளதி கவுறுப்பியல், காலநிலை, குடிப்பரம்பல், மனிதப் பிரிவுகள், நிலப் பயன்பாடு ; சிங்கெப், பங்கா, பிலிற்றன் ; போக்குவரத்து. Lふ5th 220
கிழக்கு இந்தியத் தீவுகள் : மேற்குத் தீவுத்தொடர்-யாவாவின்
இயற்கைத் தோற்றம் தென்கரைச் சுண்ணக் கற்பீடங்கள் ; நடுவிலுள்ள பள்ளத்தாக்குத் தொடர் வலயம் ; எரிமலைகள் ; வடக்கிலுள்ள வண்டல் வலயம் ; ரெம்பாங்கிலும் மதுராவிலுமுள்ள சுண்ணக் கற்பீடம் ; ஆறுகள்; காலநிலை ; காடுகள். பக்கம் 24க்

angsguTub 14 :
4த்தியாயம் 15:
அத்தியாயம் 16 :
அத்தியாயம் 17 :
அத்தியாயம் 18 :
அத்தியாயம் 19 :
அத்தியாயம் 20 :
gigsu Tub 21 :
பொருளடக்கம்
கிழக்கு இந்தியத் தீவுகள் : மேற்குத் தீவுத்தொடர்-மாவாவின்
பண்பாட்டு, சமூக இயல்புகள் உணவுப் பயிர்கள் விளைவிககப்படும் முறைகள் ; ஏற்றுமதிப் பயிர் கள் ; கைத்தொழிலாக்கம் : பண்பாட்டுமுறைமை, குடிப்பரம்பல்; யாவா மக்கள் ; வந்து குடியேறியோர் ; யுத்தத்திற்குப் பிற்பட்ட காலம்.
iš asub 259
கிழக்கு இந்தியத் தீவுகள் : மேற்குத் தீவுத்தொடர்-போணியோ வட போணியோ ; காலிமாந்தான். L&sua 280
கிழக்கு இந்தியத் தீவுகள் : செலிபீஸ், பாலி, லொம்பொக்,
தீமோர், மேற்கு ஈரியான் பக்கம் 289
தைலாந்தின் இயற்கைத் தோற்றம் தரைத் தோற்ற வகைகள் ; காலநிலை ; தாவரவகை. udasio 299
தைலாந்தின் பண்பாட்டுச் சமூக நிலைமைகள்
பழைய பயிர்ச்செய்கை முறைகள் ; வர்த்தகப் பயிர்ச் செய்கை : நெல் ; நிலப் பிரச்சிஜன; மாடுகள்; குடிப்பரம்பல் : சீனர், சுதேச வகுப்பினர், பழக்க வழக்கங்கள், குடியிருப்புவக்ை; போக்குவர த்து பட்டினங்கள் அரசியல் ஒற்றுமையும் தொடர்புகளும். مه
udasto 318
இந்தோசீளுவின் இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும்
காலநிலை ; இயற்கைத் தாவரம் ; பிரதேசநிலப் பிரிவுகள் : வட வியற்நாம் கழிமுகங்கள், வட வியற்நாம் உயர் நிலங்கள், மேக் கோங்கிற்கும் செந்நதிக்குமிடைப்பட்டபகுதி வியற்நாம் உயர்நிலங்கள், மேக்கோங்கின் கீழ்ப்பகுதியும் தொன்லேசப் சமநிலமும், தொன்லேசப்புக்குக் கிழக்கேயுள்ள தாழ் நிலங்கள், மேக்கோங்குக் கழிமுகம், சைகன், கம்போடியாவுக்கு மேற்கேயுள்ள மலைகள்.
ab 336
இந்தோசீனுவின் பண்பாட்டு சமூக நிலைமைகள் குடிப்பரம்பல் : மக்கள் இடம் பெயர்தல் ; இன வகுப்புக்கள் ; இந்தோசீனப் பயிர்ச்செய்கை, அரசியற் பிரிவுகள் ; கைத்தொழில் கள் ; வர்த்தகமும் போக்குவரத்தும். ušao 859
பிலிப்பைன் தீவுகள் புலிப் பெளதிகவுறுப்பியல் ; காலநிலை , மண்வகை ; நிலப்பயன் பாடு ; காடுகளும் கணிப் பொருளகழ்தலும் ; பயிர்ச்செய்கை : நெல், சோளம், எனைய உணவுப் பொருள்கள், வர்த்தகப் பயிர்கள், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தாக்கம், சீனி, தென்னை, அபக்காச்சணல், புகையிலை ; குடிப்பரம்பல், மக்கட் பிரிவுகள் ; பிறநாடுசளின் தாக்கம், ஸ்பானியர் தாக்கம். பக்கம் 371
xi

Page 12
அத்தியாயம் 22 :
அத்தியாயம் 23 :
அத்தியாயம் 24 :
அத்தியாயம் 25
புத்தகப் பட்டியல்
சொல்லடைவு
பயிர்ச்செய்கையின் போக்கு ; இரண்டாம் உலகயுத்த விளைவுகள்.
Gurg5enrLátásáb
பகுதி II
தென்கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
தென்கிழக்கு ஆசியாவிற் பயிர்ச்செய்கை பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை , வாழ்க்கைப் பயிர்ச்செய்கை வர்த்தகப் பயிர்ச்செய்கை : நெல் , ஏனைய உணவுப் பயிர்கள், இறப்பர் ;
USSb 4ts
தென்கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் மீன்வகை ; மக்களின் முக்கிய உணவுப் பொருளாக மீன் வகை ; மீன் வியாபாரம் ; நன்னீரில் மீன்பிடித்தல் ; கடற்கரையடுத்த பகுதிகளில் மீன்பிடித்தல் ; மீன்பிடிக்கப்படும் பகுதிகள் : பேமா, மலாயா, இந்தோனேசியா, இந்தோசீன, தைலாந்து, பிலிப்பைன் தீவுகள், மீன்பிடி தொழிலின் போக்குக்கள், போருக்குப் பிந்தியநிலை,
Liastih 429
தென்கிழக்கு ஆசியாவின் கைத்தொழிலும் வியாபாரமும் குடிசைக் கைத்தொழில் ; விவசாயப் பொருள் பதன் செய்தல் ; நெசவுப் பொருள்கள் ; கணிப்பொருளகழ்தல் ; கைத்தொழிலாக் கத்திற்குத் தேவையான தொழிலாளர் வசதியும் வலுவும் ; பொரு ளுற்பத்தியும் உள்நாட்டுப் பதன் செய்தலும் ; தென்கிழக்கு ஆசியப் பகுதியில் வியாபாரம் ; தென்கிழக்கு ஆசியாவின் வெளிநாட்டு வியாபாரம்; போக்குவரத்துப் பாதைகள் இணைவு ; தொடர்புகள் இணைவு பெற்றிருத்தல் ; ஆசியாவும் தென்கிழக்கு ஆசியாவும், சர்வதேச உதவி. It isth 44.
தென்கிழக்கு ஆசியாவின் மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை வரலாற்றுப் புவியியற் காரணிகள் ; குடிப்பரம்பல் மாற்றங்கள் ; மாறிவரும் உட்பகுதி நிலைமை ; அரசியல் இணைவு ; இப்பகுதியில் நிலவும் வேறுபாடுகள் ; பல சமூகங்கள் ; இரு தேசிய மையங்கள் ; சூழலும் அரசுகளும் ; யுத்தத்தின் பின் வளர்ச்சியுற்ற தேசிய வுணர்ச்சி ; அதிகார மாற்றம். udasiћ 456
グ・ 77
udastih 487
xii

படங்களும் வரிப்படங்களும்
முன்னட்டை உட்புறம்-தென்கிழக்கு ஆசியா
அத்தியாயம் 1
. Lät tăé5b 1. தென்கிழக்கு ஆசியாவின் நிலத்தோற்றம் . . .. ·,4 2. கிராப்பூசந்திக் குறுக்கு முகம் 8 ... 6 3. கிழக்கு இந்தியத்தீவு எரிமலை வலயம் Ο Φ. ... 8 4. கிழக்கு இந்தியத் தீவுகளிலுள்ள ஓர் எரிமலைத்தீவின் விரிவான விளக்கம் . . 9 6. மலாங்கிலுள்ள மலைத்தொடர்களின் மேற்குக் கிழக்குக் குறுக்குமுக அமைப்பு. 11 6. 1965 மார்ச்சு 14 ஆந் திகதிக்குரிய தென்கிழக்கு ஆசியக் கடல்களின் உடனிகழ்
வற்றுப் பெருக்குக் கோடுகள் 16 7. போணியோக் கடற்றள மேடையும் சண்டாமேடையின் கிழக்கிலுள்ள பெரிய
தடுப்பு முருகைக் கற்பாரும் - ... 9
அத்தியாயம் 2
8. தென்கிழக்கு ஆசியாவின் நாள் வானிலைப்படம் : 28, 1946, 12.00 மணிக்குரியது 22
9. தென்கிழக்கு ஆசியாவின் அயனவிடைப் பிரிதளம் . . 24 10. தென்கிழக்கு ஆசியாவின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி . . 26 11. தென்கிழக்கு ஆசியாவின் மழைவீழ்ச்சி காற்றுத்திசை என்பவற்றின் தொடர்பு 27 12. அயன இடிமின்னற் புயலின் அமைப்பு . . ... 28 13. தைபூனின் பொது அமைப்பு 30 14. தென்சீனக் கடலில் தைபூன் வழிகள் o 31 15. தென் கிழக்கு ஆசியாவிற் கெப்பன் வகுத்த காலநிலைப் பிரதேசங்கள் ... 35
அத்தியாயம் 3
16. மத்திய மலாயாவில் ஆற்றுச்சிறை . . 42 17. சண்டா மேடையிலுள்ளவற்றையொத்த தளக்கிடைக்குன்றுகள், குழிவு நீள்
முகத் தோற்றம் முதலியன அமையுமாற்றை விளக்கும் படம் . . 44 18. தென்கிழக்கு ஆசியாவின் வடிகால்களும் ஆழமற்ற கடல்களும் . . 46 19. சீமானுக் ஆற்றுமுகத்தையடுத்து உண்டான கடற்கரை மாற்றங்கள் ... 4 20, லிப்பீஸ்-பாகாங்கு ஆறுகள் சேருமிடத்திலுள்ள வெள்ளப்பெருக்கு வலயம் . . 49 2. பென்டொங்கு ஆற்றுப்பள்ளத்தாக்கிற்குக் குறுக்கே வண்டல் விசிறிகள் ... 52
xiii

Page 13
படங்களும் வரிப்படங்களும்
lso
அத்தியாயம் 4
22. மாங்குரோவு வேர் மாதிரிகள் o o 23. அயனப் பிரதேச மழைக்காட்டின் பக்கத்தோற்றம் w 24. தென்கிழக்கு ஆசியாவின் உயிரினப் பிரதேசங்கள் a
அத்தியாயம் 5
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34。
35.
86.
37. 38.
39.
40.
4.
42.
43.
றம சிங்கப்பூரின் மேற்குப் பகுதியிலுள்ள இறப்பர் மரங்கள் நீக்கப்பட்ட குன்றின் குறுக்கு முகத் தோற்றம் . .
கோராத் என்னுமிடத்திலுள்ள மணற்கற் சரளை மண்ணின் வெட்டுமுகத் தோற்
Jesu Tulúb 6
மலாயாவிற் பாறைகளின் பரம்பல் - - w மலாயா : மொத்த வருட மழைவீழ்ச்சி தென் மேல் பருவக்காற்று யூலை மழைவீழ்ச்சி வடகீழ் பருவக் காற்று : நவம்பர் மழை வீழ்ச்சி பெப்புருவரி மழைவீழ்ச்சி
மலாயாவின் வடிகால் முறை
மேல் முவார் பகுதியில் ஏற்பட்ட ஆற்றுச் சிறை
மலாயாவின் காட்டுவகைகள்
அத்தியாயம் 7
பேர்ளிஸ், கேடா, வெலஸ்லி மாகாணம் என்பவற்றின் நிலப்பயன்பாடு பேராக்கின் நிலப்பயன்பாடு
கின்டாப் பள்ளத்தாக்கின் நிலப்பயன்பாடு செலங்கர், நேகிரிசெம்மிலான், மலாக்கா ஆகிய பகுதிகளின் நிலப்பயன்பாடு வட கிழக்கு மலாயா : நிலப்பயன்பாடு கமரன் உயர்நிலத்தில் பாறைவகைகளும் நிலப்பயன்பாடும் மலாயாவின் கணிப் பொருட் பரம்பல்
பகங்கு : நிலப்பயன்பாடு
தென் மலாயாவின் நிலப்பயன்பாடு O
- Χίν
பக்கம் ,
57
66.
ሽ5 .
76 。
88.
93.
93.
93.
93.
9ገ‛
98
102
110
13.
117
121
123,
26.
128.
13
134,

· SLLVš4567
அத்தியாயம் 8 44. மலாயாவின் குடிப்பரம்பல் 45. பினங்கு தரைத்தோற்றமும் நிலப்பயன்பாடும் 46. சிங்கப்பூர்த் தீவின் பெளதிக நிலைமைகள் . 47. சிங்கப்பூர்த் தீவின் வடிகால் முறைகள் 8 w 48. சிங்கப்பூர்த் தீவின் நிலப்பயன்பாடு
அத்தியாயம் 9 49. பேமாவின் பகுதிகள் 50. பேமாவின் மழைவீழ்ச்சி . . o 51. சிட்டாங்கு சல்வீன் ஆறுகளின் கழிமுகங்கள் . . 52. மேல் ஐராவதி ஆற்று ஒழுங்கு 53. பேமாவின் தாவர வகைகள் 54. மத்திய ஐராவதிப் பகுதியிலுள்ள நிலநெய் வயல்கள் 55. கீழ்ப் பேமாவிலுள்ள கணிப்பொருள் எடுக்குமிடங்கள்
அத்தியாயம் 10 56. பேமாவின் வறண்ட வலயம் 57. ஐராவதிக் கழிமுகத்தின் நிலப்பயன்பாடு 58. பேமாவின் குடித்தொகை மாற்றங்களும் பயிர்ச்செய்கை மாற்றங்களும் 59. ஐராவதிக் கழிமுக ஒழுங்கு
அத்தியாயம் 11 60. பேமாவின் குடியடர்த்தி - 61. பேமாவிற் குடிப்பரம்பலுக்கும் பயிர்ச் செய்கைக்குமுள்ள தொடர்பு 62. பேமா : தரைவழியால் ஏற்பட்ட மக்கள் பெயர்வும் இனப்பிரிவுகளும்
அத்தியாயம் 12 63. சுமாத்திராவின் நிலவுருவங்கள் 64. சுமாத்திராவின் நிலப்பயன்பாடு 65. சுமாத்திராவின் மழைவீழ்ச்சி 66. மெடானின் பின்னணியில் எரிமலைக் குழம்புப் படிவுகளுக்கும் பயிர்ச் செய்கைக்கு
முள்ள தொடர்பு a 67. பாலெம்பாங்கிற்கு அண்மையிலுள்ள பெற்றேலியப் படிவுகள் '68, mälas
*69. பிலிற்றன் s
படங்களும் வரிப்படங்களும்
8
uses
146
54
57
158
60
63
168
72
176
179
182
83
188
194
198
206
207
209
223
228
229
23.
233
242
243

Page 14
படங்களும் வரிப்படங்களும்
படங்கள்
அத்தியாயம் 13
70. யாவாவின் தரைத்தோற்றப் பிரிவுகள் 71. கூஞெங்கு ஊங்காரான் பகுதியின் புவிப்பெளதிக வுறுப்பியல் விளக்கம் 72. பழைய ஊங்காரான் எரிமலை அமைப்பைக் காட்டும் படம் 73. கூஞெங்கு மெராபிச் சாய்விலுள்ள ஒழுங்கற்ற விளைநிலக் குடியடர்த்தி 74. யாவாவில் மழைவீழ்ச்சி
அத்தியாயம் 14
75. யாவாவின் நிலப்பயன்பாடு 76. யாவாவில் பெருந்தோட்டப் பயிர்களின் பரம்பல் 77. சோலோ ஆற்றுமுகப்பகுதியின் நிலப்பயன்பாடு
78. யாவாவிற் குடிப்பரம்பல்
அத்தியாயம் 15
79. போணியோவின் நிலப்பயன்பாடு
80, போனியோவில் மக்கட் பரம்பல்
81. போணியோவில் இனப் பரம்பல்
அத்தியாயம் 16
82. செலிபீஸ் 8 A w.
83. பாலி, லொம்பொக் என்னும் தீவுகளின் தரைத்தோற்றம் 84. பாலி, லொம்பொக் ஆகிய தீவுகளின் வடிகால் முறைகள் ..
85. பாலி, லொம்பொக் தீவுகளில் நெற்செய்கை 

Page 15
படங்களும் வரிப்படங்களும்
படங்கள் tatastb
95Sumudb 25
113. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியக் குடியேற்றவாட்சிக் காலத்தில் நிலவிய வர
லாற்றுத் தன்மைகள் 45 114. தென்கிழக்கு ஆசியா இஸ்லாமிய மயமாகிய காலத்தில் நிலவிய வரலாற்றுத்
தன்மைகள் is ... 458 115. தென்கிழக்கு ஆசியாவின் குடிப்பெருக்கம் . . . 461 116. தென்கிழக்கு ஆசியாவில் குடிப்பரம்பல் 8 as a ... 464 117. தென்கிழக்கு ஆசியாவில் இக்காலக் குடிப்பெயர்வுகள் e ... 469 118. தென்கிழக்கு ஆசியாவில் மொழி வேறுபாடுகள் a ... 471
பின்னட்டை உட்புறம்-மலாயா போக்குவரத்துத் தொடர்புகளும் பிரதேசங்களும்,
xviii

LiTablo I
தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்

Page 16

அத்தியாயம் 1 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
தென்கிழக்கு ஆசியா என்னும் பதம் 1941-45 அாாகிழக்கு யுத்த காலத்திற் பெருவழக்காயிருந்தது. கடகக்கோட்டிற்குத் தெற்கேயுள்ள கிழக்கு ஆசியப் பகுதிகளையும் (பேமா, சீயம், இந்தோசீனு, மலாயா) அவற்றிற்கு அண்மையாக ஆசியாக் கண்டத்திலிருந்து கிழக்கே நியூகினிவரை பரந்துள்ள தீவுகளையும் இப்பதம் குறிக்கின்றது. இத் தீவுக்கூட்டம் கிழக்கில் மேற்கு மத்திய பசிபிக்குத் தீவுக்கூட்டங்களோடு இணைந்து காணப்படுகின்றது. இதனுல் 'நியூகினி தென் கிழக்கு ஆசியாவின் ' புறத்தே அமைந்துள்ளது எனக்கோடலே பொருத்த முடையதாகும். இதற்குச் சார்பாக மேல்வரும் காரணங்களும் குறிப்பிடப் படுகின்றன: (1) நியூகினி பெளதிகவமைப்பில் அவுஸ்திரேலியக் கண்டத்தோடு தொடர்புடையதாயிருத்தல், (2) அவுஸ்திரேலியாவில் இன்று பெரும்பாலும் காணப்படும் தனிப்பட்ட ஒரு மானிடவியல் வகையைச் சேர்ந்தோர் நியூகினி யில் ஐதாகக் காணப்படுதல், (3) நியூகினியின் தாவரவன்க்கள், விலங்குகள் முதலியன அவுஸ்திரேலியாவிலுள்ளவற்ருேடு நெருங்கிய தொடர்புடையனவா யிருத்தல். தென்கிழக்கு ஆசியாவின் வட எல்லை மேற்குப் புறத்தில் மேல் பேமாவை உள்ளடக்கிக் கடகக்கோட்டிற்கு அப்பாற் காணப்படுகின்றது; ஆணுற் கிழக்கிற் சீயம், இந் சீன ஆகிய நாடுகளின் அரசியலெல்லையையொட்டிக் கடகக்கோட்டிற்குத் தீெந்தித் காணப்படுகின்றது. ஆகவே “ தென்கிழக்கு ஆசியாவும்" அதனைச் சார்ந்துள்ள தீவுகளும் மத்தியகோட்டினிருபுறத்தும் சமச்சீரற்ற முறையிற் பரந்து காணப்படுகின்றன. மேக்கோங்கு ஆற்றுமுகத்தி லிருந்து, 1500 மைல் ஆரையையுடைய ஒரு வலயத்தை இப்பகுதி அடக்கி யுள்ளது. இது ஆபிரிக்காவின் விடகரைக்கு அப்பாலுள்ள ஐரோப்பாக் கண்டத் தையும் சூழவுள்ள கடல்களையும் உள்ளடக்கிய பகுதியைப் பரப்பளவில் ஒத் துள்ளது. தென்கிழக்கு ஆசியாவிற் பல்பாகங்கள் தொடர்பற்றமுறையில் தூரத்தூரப் பாந்து காணப்படுகின்றன. பெளதிகவியல்புகள் காரணமாக ஏற் பட்ட தடைகளும் அதிகம் எனலாம். தென்கிழக்கு ஆசியாவின் பல பாகங் களிடையுள்ள புவியியற்முெடர்பு பற்றிய விளக்கத்திற்கு மேற்கூறிய விபரங்கள் முக்கியமாக உள்ளன. '.
தென்கிழக்கு ஆசியாவில் நடுமையமாக விளங்குவது சண்டாமேடையாகும். மையமாகவிருப்பது மட்டுமல்லாது அது தென்கிழக்கு ஆசியாவின் பல பாகம் களோடும் புவிச்சரிதத்தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. சண்டா மேடை ஆசியாவின் அதிதெற்கிலுள்ள கண்டப்பகுதியாகும்; அது புவிச்சரித காலத்தில் அதிக தாக்கத்திற்கு உள்ளாகாது நிலையான திணிவாகக் காணப்
3.

Page 17
4 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
பட்டது. புறவோாங்களில் மட்டும் புவியோட்டசைவினல் ஏற்பட்ட சில மாற்றங்கள் காணப்படுகின்றன. சண்டாமேடைப்பகுதி தக்கணம், அராபியத் திணிவு, உலோரன்சியப் பரிசைநிலம் முதலியனபோன்று ஒரு "நிலையான” திணிவாகும். போணியோ, கிழக்குச் சுமாத்திரா, வட யாவா, மலாயா ஆகிய வற்றின் பெளதிகவுறுப்பினைப் பொறுத்தவரையில் இது முக்கியமாக உள்ளது.
சண்டாமேடையையொத்த ஒரு மேடை அவுஸ்திரேலியா, ஈரியான் ஆகிய வற்றின் பொதுவான பெளதிகவமைவுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. கிழக்கிந்தியத் தீவுக்கூட்டத்திற்குக் கிழக்கிலுள்ள இந்த மேடை சாகுல் மேடை
எனப்படும்.
படம் 1. தென்கிழக்கு ஆசியாவின் நிலத்தோற்றம்
தென்கிழக்கு ஆசியா மூவகையான பெளதிகவுறுப்புகளைக் கொண்டது (படம் 1).அவையாவன:-
1. சண்டாமேடை.
2. சாகுல்மேடை.
3. மேலே குறிப்பிட்ட இரு மேடைகளுக்குமிடையில் அவற்றின் ஒாங்களைச் சார்ந்து காணப்படும் சிறு இளமலைத் தொடர்கள்.
 

இயற்கைத் தோற்றம் 5
1. சண்டாமேடை
இமாலய மலைத்தொடர் கிழக்குத் திசையிற் சீனக் கடல்வரை பரந்து காணப் படுகின்றது. தென் சீனவில் இம்மலைத்தொடர் நான்லிங்கு என்னும் பெயரால் வழங்குகின்றது. கிழக்கு மேற்காகப் பரந்துள்ள இத்தொடர் தொங்கின் பகுதி யிலுள்ள செந்நதிக்கும் கந்தொன் பகுதியிலுள்ள சிக்கியாங்கு ஆற்றிற்கும் இடையில் நீர்பிரிநிலமாக அமைந்துள்ளது. அல்பைன் வகையைச் சேர்ந்த இந்த மடிப்பு மலைத்தொடரினல் தென்கிழக்கு ஆசியா புவிச்சரித அடிப்படை யில் எஞ்சிய ஆசியப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இம்மலைத்தொடர் வடபகுதியிலிருந்து தொழிற்பட்ட விசைகள் காரணமாக ஏற்பட்ட மலையாக்கத் திற்குச் சான்முகக் கொள்ளப்படுகின்றது.
அகலக்கோட்டு முறைமைக்கு ஏற்ப அமைந்துள்ள மலைவரிசைகளைக்கொண்ட இப்பகுதிக்குத் தெற்கில் நிலவமைவு இடத்திற்கிடம் வேறுபட்டுள்ளது; இது முக்கியமாக நெடுங்கோட்டு முறைமைக்கேற்ப அமைந்துள்ளது. சண்டா மேடைப் பாப்பும் இதன் போக்கிற்குப் பொருந்தக் காணப்படுகின்றது. ஏறத் தாழ வடக்குத்தெற்காக இப்பகுதியிற் பரந்துள்ள தொடர்கள் புராதன மலைக ளின் அடிப்பாகங்கள் எனச் சுயஸ் என்பார் குறிப்பிடுகின்றர். மலைத்தொடர்கள் அழிவுக்கருவிகளினுற் பாதிக்கப்பட்டுச் சிதைவுற்றதனுல் ஏற்பட்ட எஞ்சிய பாகங்களே அவையாகும். மலைகளினடியிற் காணப்பட்ட பளிங்குருப்பாறை கள் நீண்டகால அரிப்பினுல் வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. அப்பாறை கள் ஆதியில் அடையற்பாறைகளிடைத் தலையீடுகாரணமாக அமைந்தன. எஞ்சிக் காணப்படும் மலைப்பாகங்களானமையினுற் குத்துச்சாய்வுகள், குத்துப் பாறைகள் முதலியன குறைவாக உள்ளன. அவை பெரும்பாலும் மென்சாய்வை யுடையனவாய் உள்ளபொழுதும் ஓரளவு உயரமானவையாகவே காணப்படுகின் றன. இதற்குக் காரணம் ஆகியிற் காணப்பட்ட மலைகள் இமாலய மலைகளைப் போன்று பெரியனவாய் இருந்தமையேயாகும். ஆனல் இன்று பேமாவுக்கும் சியத்துக்குமிடையிலுள்ள மலைப்பகுதியிலும், இந்தோசீன, மலாயா, போணியோ முதலிய பகுதிகளிலும் காணப்படும் "அல்தாய்த்" தரைத்தோற்றவுறுப்புக்கள் உயரமான இமாலயம், அல்பு ஆகிய மலைகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது தாழ்ந்தனவாக உள்ளன. அவை அழிவுக்கருவிகளினற் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்று 10,000 அடிக்குச் சற்று அதிகமான உயரமுடையனவாய்க் காணப்படு கின்றன.
சண்டாமேடையின் மத்திய பகுதி, மலாயா, போணியோ ஆகிய இடங்கள் மூப்புப்பருவத்துக்குரிய தரைதோற்றத்தைக் கொண்டுள்ளன (படம் 2). அழிவுக்கருவிகளினுற் பாதிக்கப்பட்ட தன்மைகளே அப்பகுதிகளிற் காணப்படு கின்றன. லிங்கா, சீயோத் தீவுக்கூட்டங்களைச் சார்ந்தும் இத்தகைய தன்மைகள் காணப்படுகின்றன. இவை மொனட்டுனுெக்குக்களெனக் கொளளப்படுகின்றன. அல்தாய்ப் போக்கையொட்டிய தொடர்கள் பொதுவாக நெடுங்கோட்டு முறை மைக்கு ஏற்பக் காணப்பட்டபொழுதும் போணியோவில் அவற்றின் போக்கு

Page 18
6. தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
வடகிழக்கு-தென்மேற்காகக் காணப்படுகின்றது. இந்தோ சீனு, தைலாந்து, கிராப் பூசந்தி முதலிய பகுதிகளில் தொடர்கள் பெரும்பாலும் வடக்குத் தெற்காகப் பாந்துள்ளன. நெருக்கமாகப் பரந்து கிடக்கும் இத்தொடர்களிடை ஐராவதி, சல்வீன், மெனும், மேக்கோங்கு, செந்நதி முதலிய ஆறுகள் சமாந்தா மாக ஓடுகின்றன. சண்டாமேடை உறுதியான நிலப்பகுதியாக நீண்டகாலமாக விளங்கிய பொழுதும் இப்பொழுது அது பெரும்பாலும் கடல்கோளுக்கு இலக் காகியே காணப்படுகின்றது. ஆகவே உயரமான பகுதிகள் மட்டுமே கடல் மட்டத்திற்கு மேலே காணப்படுகின்றன. இம்மேடை ஆழமற்றகடலினுல் ஒரே
படம் 2, கிராப்பூசந்திக் குறுக்குமுகம் தன்மைத்தாக மூடப்பட்டிருப்பதே இது அரிப்புண்ட சமவெளியாக்கப்பட்ட தென்பதற்குச் சான்முகவுளது. தென் சீனக்கடல், மலாக்காத்தொடுகடல், யாவாக்கடல் ஆகியன இக்கண்டமேடையை மூடியுள்ள ஆழமற்ற கடல்களாகும். சண்டாமேடை எரிமலைத்தாக்கம், புவிநடுக்கம் என்பவற்முல் அதிக அளவுக் குப் பாதிக்கப்படவில்லை. எனினும் மிகப் பழைய காலத்தில் ஏற்பட்ட புவி நடுக்கங்களினல் உண்டான விளைவுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
2. சாகுல் மேடை
சாகுல் மேடை உருவமைப்பிற் பெரும்பாலும் சண்டாமேடையை ஒத்துள் ளது. இம்மேடை அவுஸ்திரேலியக் கண்டத்தோடு தொடர்புள்ள, அதிவடக்கே பரந்துள்ள நிலப்பகுதி எனவே கொள்ளப்படுகின்றது. ஆழமற்ற ஆராபூராக் கடலினுல் ஒரளவுக்கு மூடப்பட்டுள்ள இப்பகுதி நியூகினியின் மத்தியில் கிழக்கு மேற்காகச் செல்லும் தொடரின் தென்எல்லையில் முடிவடைகிறது. சண்டாமேடையைப் போன்று இப்பகுதியிலும் அண்மையில் எரிமலைத்தாக்கம் ஏற்படவில்லை. நியூகினியின் வடவோரத்தை யடுத்து நிகழ்ந்த மலையாக்கங்கள் சாகுல் மேடை வடக்கு நோக்கிப் புடைத்ததனுல் ஏற்பட்ட தாக்கத்தால் உண்டாகியிருத்தல் வேண்டும்.
3. இளமலைகளும் தீவுவளைதொடர்களும் சண்டாமேடை, சாகுல் மேடை ஆகியவற்றைச் சூழவுள்ள மலைத்தொடர்கள்
மலையாக்கம் பற்றிய கொள்கைகளை வரையறுப்பதற்குத் துணையாகவுள்ளன. இத்தகைய ஆராய்ச்சி புவியியலுக்குச் சற்றே புறம்பானது எனலாம். மேற்
 

இயற்கைத் தோற்றம், 7
கறிய மலைத்தொடர்கள் இந்து பசிபிக்குச் சமுத்திரங்களின் அடித்தளத்தி விருந்து எழுந்து, கடல்மட்டத்திலிருந்து 15,000 அடிக்கு மேலாக உயர்ந்து காணப்படுகின்றன. வேறுசில இடங்களில் மலைத்தொடர்கள் பெரும்பாலும்
கடல்மட்டத்திற்குக் கீழே காணப்படுகின்றன. இத்தொடர்களின் உச்சிகள்
மட்டும் தீவுக்கோவைகள் போன்று காட்சியளிக்கின்றன. பல தொடர்களில் மடிப்புத்தொகுதிகளும் ஒன்றேடொன்று பின்னிக்காணப்படுவதனல் அப் பகுதி மிகவும் சிக்கலான முறையிற் காணப்படுகின்றது. அவ்வாறு காணப்
பட்டபொழுதும் சில பொதுப்பட்ட ஒழுங்கினை அடிப்படையாகக் கொண்டு
இப்பகுதியைப் பின்வருமாறு பிரித்து ஆராயலாம்.
(அ) பேமா-யாவா வளைதொடர் இந்திய-பேமா எல்லையிலிருந்து
தொடங்கி அரக்கன் யோமாவூடாகச் சென்று மறைகின்றது; இத் தொடர் பின்பு வெளித்தோன்றி மேற்குச் சுமாத்திரா, தென் யாவா ஆகியவற்றிற்கூடாக மடிப்புக்கள் பிளவுகள் ஆகியவற்றைக் கொண்ட விக்கலான தொடராக அமைந்துள்ளது. கிழக்கில் இத்தொடர் கோவையாக அமைந்துள்ள பல தீவுகளை உள்ளடக்கிச் சென்று சாகுல் மேடைக்கு அண்மையாகப் பின்வளைந்து, கைத்தீவுகளுக்கூடா கச் சேராம்வரை பரந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் இந்து சமுத்திர வோரத்தையடுத்துள்ள இத்தொடருக்குச் சீமாந்தரமாகக் கடற்பகுதியிற் சமுத்திரத்தாழி ஒன்றும் அதனையடுத்துச் சமுத்திரப் பாறைத்தொடர் ஒன்றும் காணப்படுகின்றன. குறித்த இச் சமுத் திரப் பாறைத்தொடர் மேற்குச் சுமாத்திராவில் நீயாஸ்-மெந்தா வைத் தீவுகளே உள்ளடக்கியுள்ளது. யாவாவுக்குத்தெற்கில் இத் தொடர் தீவுகளற்ற கடற்கீழ்ப்பாறைத் தொடராகப் பரந்துள்ளது.
(ஆ) பசிபிக்கு ஒரத்தையடுத்து வளே தொடர்கள் பிலிப்பைன், வடஈரியான்
ஆகியவற்றிற்கூடாகப் பல தொடரான தீவுக்கூட்டங்களை உள்ளடக் கிக் காணப்படுகின்றன. இவற்றிற்கிடையே ஆழமான, சிறிய, சதுர வடிவச் சமுத்திரத்தாழிகளும் காணப்படுகின்றன. பசிபிக்குச் சமுத் திசத்தின் சராசரி ஆழத்திலும் பார்க்கக் கூடிய ஆழமுள்ள சமுத் திரத்தாழிகள் (அல்லது அகழிகள்) மேற்குறித்த தொடர்களின் பசிபிக்கு ஒரத்தையடுத்துக் காணப்படுகின்றன (பிலிப்பைன் அகழி ஏழு மைலிலுங்கூடிய ஆழத்தையுடையது). உருவமைப்பு, காணப் படுமிடங்கள் என்பனவற்றைப் பொறுத்தவரையில் இவ்வகழிகள், சுமாத்திசா, யாவா ஆகியவற்றையடுத்துள்ள சமுத்திர அகழிகளை ஒத்துள்ளன எனலாம்.
(இ) செலிபீஸ்-மொலுக்காத் தீவுத்தொகுதிகளிலுள்ள சிக்கலான சிறு
வளைதொடர்கள், முடிச்சுக்கள் ஆகியன பசிபிக்கு இந்து சமுத்திர வோரங்களிலுள்ளவற்றையும், சண்டாமேடை சாகுல்மேடை ஆகிய வற்றின் உள்ளோரங்களிலுள்ளவற்றையும் ஒத்துள்ளன. வளைதொடர் கள் இப்பகுதியிலும் மிகவாழமான புவிக்கீழ்மடிப்பிலுள்ள சமுத்திாத்

Page 19
8 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
தாழிகளைச் சூழ்ந்தே அமைந்துள்ளன. மொலுக்காக் கடல் இத் தகைய சமுத்திரத்தாழிகளுள் ஒன்ருகும். இதன் ஆழம் 16,500 அடிக்குமதிகமாகும். ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் தொடர்களின் போக்கிற்கு ஏற்ப வினேதமான வடிவிற் செலிபீஸ், ஹல்மாகொா முதலிய தீவுகள் அமைந்துள்ளன. இவ்வலயம் பொது வாக ஐரோப்பாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையிலும் வட அமெரிக் காவுக்கும் தென் அமெரிக்காவுக்குமிடையிலும் காணப்படும் " Lidiánu · தரைக் கடல்களை” ஒத்துள்ளது எனலாம். இங்கு ஆசியா, அவுஸ் திரேலியா ஆகிய கண்டங்களுக்கிடையில் மத்தியதரைக் கடல்: போன்று இவ்வலயம் விளங்குகின்றது.
படம் 8. கிழக்கு இந்தியத்தீவு எரிமலை வலயம்
ஒரே காலத்திற் புவியோட்டுச் சிதைவினைப்பெற்ற இவ்வலயங்களிற் குறுக் கும் நெடுக்குமாக முறிவுகள் ஏற்பட்ட இடங்களில் எரிமலைத்தாக்கங்கள் காணப்படுகின்றன. எரிமலைகளுட் பல உயிர்ப்பெரிமலைகளாக இன்றும் உள். ளன (படம் 3). எரிமலைகளூடாக வெளித்தள்ளப்பட்ட பொருள்கள் ஏலவே ஆற்றரிப்பு முதலியவற்றினுற் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலங்களிற் படிந்து தரைத்தோற்றத்தில் அதிக வேறுபாடுகளை உண்டாக்கியுள்ளன (படம் 4). எரிமலைக் குழம்பு, தீப்பாறைப் பொருள்கள் முதலியன பெரும்பகுதிகளிற் படிந்துள்ளன. சுமாத்திராவிற்போன்று சண்டாமேடைப் பகுதியிலுமே இப் பொருள்கள் படிந்துள்ளன. பல காலங்களில் இப்பொருள்கள் வெளிவந்து படிந்துள்ளன. மேலும், புவியோட்டுச் சிதைவுக்குள்ளான இவ்வலயங்களின் ஒரத்தையடுத்துள்ள சமுத்திரத்தாழிகளிலேயே பெரும்பாலான புவிநடுக்கங் களின் மேல்மையங்கள் காணப்படுகின்றன. மேடைகளைச் சூழவுள்ள பகுதியின் உறுதியற்ற தன்மையைப் புவிநடுக்கங்களின் எண்ணிக்கை காட்டுகின்றது.
 

இயற்கைத் தோற்றம் 9
எனவே, மூன்முவது வலயத்தின் புவியுருவியல்புகள் பொதுவாக இடைப் பட்ட தன்மையைக் கொண்டிருப்பதோடு, ஆசியா அவுஸ்திரேலியாக் கண்டன் களினதும், இந்து பசிபிக்குச் சமுத்திரங்களினதும் தாக்கத்தைப் பிரதிபலிப் பனவாகவும் உள்ளன.
அனக் கிராக்கற்முே . ܢ எரிமலை அளவைப் பகுதி இற். 9-10, 1941
昇イ
படம் 4. கிழக்கு இந்தியத் தீவுகளிலுள்ள ஓர் எரிமலைத்தீவின் விரிவான விளக்கம்
பாறை வகைகள்
அயன மண்டல, மத்தியகோட்டு வானிலையழிவு காரணமாக ஏற்பட்ட இா சாயன மாற்றம் தென்கிழக்கு ஆசியாவில் இருவித விளைவுகளை உண்டாக்கியுள் ளது. எளிதிற் புலனுகக்கூடிய உயிர்ச் சுவடுகள் முதலியன வானிலையழிவினும் சிதைந்திருத்தல், சிதைவுற்ற பெருந்தொகையான பொருள்களினல் இப்பகு தியிலுள்ள பாறைகள் மூடப்பட்டிருத்தல் என்பனவே அவ்விளைவுகளாம். இக் காரணங்களினல் தென்கிழக்கு ஆசியாவின் புவிச்சரித ஆராய்ச்சி, அதாவது பாறை வகைகளைக் காலவடிப்படையில் ஆராய்தல், விரிவான முறையில் இது வரை நடைபெறவில்லை. இதனுல் இப்பகுதியிலுள்ள பாறைவகைகள் பற்றிய புவிச்சரித விளக்கத்திற் கருத்துவேறுபாடுகள் காணப்படுவது இயல்பேயாகும்.
பொதுப்பட்ட தன்மைகளைப் பொறுத்தவரையில் கிழக்கு ஆசியாவிலுள்ள பாறைவகைகளுக்கும் ஐரோப்பா, வட அமெரிக்கா முதலிய கண்டங்களில் நன்

Page 20
10
தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
முக ஆராயப்பட்ட பகுதிகளிலுள்ள பாறைவகைகளுக்கும் அதிக வேறுபாடு? இல்லை. பாறைவகைகளைப் பொறுத்தே தரைத்தோற்ற வேறுபாடுகள் உலகின் எல்லாப் பாகங்களிலும் அமைகின்றன; அவை அவ்வப்பகுதிகளில் வேறுபட் டனவாகவிருந்தபொழுதும் பொதுத்தன்மையில் ஒத்தனவாய்க் காணப்படு'
கின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் பாறைவகைகள் மேல்வருமாறு தொகுத்து ஆாசி" யப்படலாம்:
1. சண்டாமேடையின் பெரும்பகுதியிற் படிகப்பாரும் மாக்கல்லும் அதிக
மாகக் காணப்படுகின்றன. தரைத்தோற்றம் தாழ்வானதாகவும். பாறைப்படைகளின் மடிப்பொழுங்கிற்கு அத்துணை பொருந்த அமை யாததாகவும் உளது. இந்த உருமாறிய பாறைகள் அநேகமாக மேற் பாப்பிற் சுண்ணப்பாறைகளுக்கு அண்மையாகக் காணப்படுகின்றன. சுண்ணப்பாறைகளுள் ஒன்றன மாக்கல் தாழ்வான பெரும்பகுதியிற்பரந்துள்ளது. கரைசல் முறையாக உண்டாகும் வானிலையழிவு ÉSasவும் குறைவாகவுள்ள மேடையின் வறண்ட ஓரங்களில் (உ-ம் கிழக்கு. யாவா, தொங்கின்) சுண்ணப்பாறைத்திணிவு ஒரு பொதுவான தரைத் தோற்ற உறுப்பாக அமைந்துள்ளது; இங்கே சுண்ணப்பாறைகள் கரடுமுரடான குன்றுகள் போலக் காணப்படுகின்றன. அவை காசித்துப் பகுதியிலுள்ள உறுப்புக்களைப் பொதுவாக ஒத்துள்ளபொழுதும் தாவரங்கள் ஓரளவு அடர்த்தியாகவுள்ளமையாற் சில பாகங்களில் தெளிவாகப் புலனுவதில்லை. அதிக மழைவீழ்ச்சியைக் கொண்ட மக் தியகோட்டுப் பகுதியிலும் சற்றே உருமாறிய சிறிய சுண்ணப்பாறைக் திணிவுகள் காசித்துத் தன்மையைக் கொண்டுள்ளன. மலாயாவின் வட பகுதியில் இத்தகைய தன்மையைக் கொண்ட பாறைத்திணிவு கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. சண்டாமேடை மேற்பரப்பில் வெளித்தோன்றிக் காணப்படும் போணியோவின் பெரும்பகுதி பழைய மணற்பாறைகளால் அமைந்துள்ளது. இதனுல் தசைத்தோற்றம் தட். டையானதாகவும் ஒடுக்கமான ஆழப் பள்ளத்தாக்குக்களைக் கொண்ட தாகவும் விளங்குகின்றது. சண்டாமேடைப் பகுதியிலுள்ள உயரமான மலைத்தொடர்களைச் சுயஸ் என்பார் “அல்தாயிட்ஸ்” எனக் குறிப்பிடு வர். இம்மலைத்தொடர்கள் நெடிய தீப்பாறைத் தலையீடுகளாகும்; பெரும்பாலும் கருங்கற் பாறைகளைக் கொண்ட இத்தொடர்கள் உயச மான பகுதிகள் அமையக் காரணமாக உள்ளன. இவையில்லாதவிடக் அத் தரைத்தோற்றம் ஏற்றத்தாழ்வுகள் குறைந்த சீரான தொன்முகக்
காணப்படும்.
2. சண்டாமேடையின் ஒரத்தையடுத்துள்ள இளமலைத்தொடர்களாலான நிலப்
பகுதி அண்மைக் காலத்திலேற்பட்ட புவியோட்டசைவுகளினற். பெரும்பாலும் அமைந்தது எனலாம். தரைத்தோற்றம் அங்குக்

இயற்கைத் தோற்றம் 11
காணப்படும் பாறைவகைகளின் தன்மையால் ஏற்பட்டது எனக்கூறல் முடியாது. அங்குள்ள பாறைவகைகளுட் பெரும்பாலானவை சண்டா மேடைப் பகுதியிலும் காணப்படுகின்றன. சிக்கலான முறையில் ஏற் பட்ட உடைவுகள், மடிப்புக்கள் முதலியன காரணமாக இளமடிப்பு மலேகள் குத்தான தரைத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. மலைத் தொடர்களிடைப் பழைய கண்டத்துண்டங்களின் சிறு பாகங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவற்றேடு எளிதாக அரித்துச் செல் லத்தக்க நுகைவான பாறைக் குழம்புப் பொருள்களான, எரிமலைவாய் முதலிய தனிப்பட்ட நிலவுருவங்களும் காணப்படுகின்றன. (ulti-5).
QFar சிக்கலான இஜாம்கு
பூடாச் சிக்கலான ஜேம்பரங்கன்
தொகுதி
5-t_-_4_4-4-
படம் 6. மாலாங்கிலுள்ள மலைத்தொடர்களின் மேற்குக் கிழக்குக் குறுக்குமுக அமைப்பு
இவை வானிலையழிவினுற் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எரிமலைக்ளிே லூடாகப் பாறைக் குழம்பு அதிகமாக வெளிப்பாய்ந்து பெரும் பகுதி யிற் படிந்துள்ளது. கீழுள்ள பழைய பாறைகளால் அமைந்த தரைத் தோற்றம் மேற்கூறிய பாறைக்குழம்புப் படிவினல் மறைக்கப்பட்டுள் ளது. இப் பிரதேசத்தின் எல்லாப் பாகங்களிலும் தீப்பாறைத் தலையீடு எற்பட்டதனுல் தொடுகையுருமாற்றம் பரந்த அளவில் நிகழ்ந்துள் ளது. உலோகக் கணிப்பொருள்கள் பலவிடத்தும் காணப்படுதற்கு இது ஒரு காரணம் எனலாம். 3. தென்கிழக்கு ஆசியாவின் சிறிய தரைத்தோற்ற வேறுபாடுகள் பெரும் பாலும் ஆற்று வண்டற் படிவுகள், கடற்கரைப் படிவுகள் (கிழக்குச் சுமாத்திாா, தென்போணியோ) ஆகியவற்ருல் ஏற்பட்டுள்ளன. இப்படி வுகளின் தொகையும் தடிப்பும் ஒருபால் அயனப் பகுதியில் விரைவாக நிகழும் அரிப்பினையும் மறுபால், கண்டமேடைப் பகுதியின் திண்மை யையும் பொறுத்துள்ளன. வண்டற் படிவுகள் படிந்துள்ள பகுதிகளில் தரைத்தோற்ற வேறுபாடுகள் குறைவாகும். இவ்வலயத்தில் நிலப்பாப் போடு பொருந்தப் பார்க்கும்பொழுது கரையோரம் நெடிதாகவுள்ளது. இதனுற் கடற்கரையையடுத்துக் காணப்படும் கூழாங்கற் படிவுகள் மணற்றடைகள் முதலியன தசைத்தோற்றம், குடியிருப்பமைவு ஆகிய வற்றைப் பெரும்பாலும் கட்டுப்படுத்தியுள்ளன. இவ்வலயத்தில் கடற் 4-CP 4217 (88.19)

Page 21
2 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
படிவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆற்றரிப்பு விரைவாக நிகழ் வ்தோடு, மணற்படிவுகள் கூழாங்கற் படிவுகள் முதலியவற்றில் மாங்கு சோவுச் செடிகள் எளிதாகப் பரந்து விடுவதும் காரணமாகும். இச்செடி கள் பாந்து விடுவதனுற் கடலலைகளின் தாக்கம் குறைவடைவதோடு, அடையல்கள் விரைவாகப் படியவும் தொடங்குகின்றன. சண்டாமேடை யின் உள்ளோரப் பகுதியிலேயே கடற்படிவுகள் அதிகமாக உள்ளன. இந்து பசிபிக்குச் சமுத்திரங்களை நோக்கியுள்ள வெளியோரங்களிற் கடற்படிவுகள் குறைவாகும். இக்கடற்கரையோரங்களின் முகப்புக் குக் துச் சாய்வுடையதாய் உள்ளது; கடலலைகள் இவ்வோரங்களில் வேக மாக அடித்துக் கொள்ளுகின்றன.
கடல்களின் தன்மை
ஆழத்தை அடிப்படையாகக் கொண்டு கடல்கள் மூவகையாகப் பிரிக்கப்படும்.
1. சண்டாமேடையின் ஆழமற்ற கடல்கள், 2. சாகுல் மேடையின் ஆழமற்ற கடல்கள், 3. சண்டாமேடைக்கும் சாகுல் மேடைக்கும் இடையிலுள்ள அவுஸ்தி ரேலிய-ஆசிய "மத்தியதரைக் கடல்கள். ' தீவுக்கூட்டங்கள் இங்குக் காணப்படுவதனுல் இக்கடல்கள் பிரிந்து காணப்படுகின்றன. இவற் ருேடு குலூக்கடலையும் அடக்குவது ஓரளவுக்குப் பொருத்தமாக இருக் கும். ஆணுல் பிலிப்பைன் தீவுகளுக்கும் ஆசியப் பெருநிலத்துக்கு மிடையிலுள்ள தென்சீனக் கடலை இவற்றேடு சேர்ப்பதாகவிருந்தால் “மத்திய தரைக் கடற்” கருத்தை மேலும் விரிவுபடுத்தியதாகக் கொள் ளப்படும்.
1. சண்டாமேடைக் கடல்கள்
மலாக்காத் தொடுகடல், தென்சீனக் கடலின் தென்பகுதி, சண்டாக் கடல், யாவாக் கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய இக்கடல்கள் பொதுவாக ஆழமற் றனவாயிருப்பதோடு ஒரே வகையான ஆழமற்ற தன்மையுடையனவாகவும் உள் ளன. இவை பொதுவாக 120 அடி ஆழமுடையன. சில இடங்களில் மட்டும் ஆழம் 150 அடிக்குமதிகமாக உள்ளது. இத்தன்மைகள் காணப்படுவதற்குச் சண்டாமேடையின் சில பாகங்கள் கடலினல் மூடப்படுவதற்கு முன்பு சண்டா மேடைப் பகுதி அரிப்புண்ட சமநிலமாக அமைந்திருந்ததே காரணமாகும். இவ் வரிப்பு நீண்ட காலப்பகுதியில் நிகழ்ந்ததாகும். இம் மேடையின் சில பாகங்கள் புவியோட்டசைவினல் ஏற்பட்ட மாற்றங்களிலும் பார்க்க, நன்னிலை நிலவசைவு காரணமாக ஏற்பட்ட மாற்றங்களினலேயே கடலின்கீழ் அமிழ்ந்தன எனலாம். இக்கடல்களின் மத்தியிற் காணப்படும் சிறு தீவுகள் (சீயோ, லிங்கா, பங்கா, பிலித்தன் தீவுகள்) அரிப்பினுற் சிதைவுருது எஞ்சிய மொனட்டுனுெக்குக்கள் போன்று காணப்படுகின்றன. இத் தீவுகளின் மையப்பகுதிகள் கருங்கற் பாறை

இயற்கைத் தோற்றம் 3
களைக் கொண்டுள்ளன. கடற்கரையையடுத்துத் தாழ்வான பாகங்கள் காணப் படுகின்றன. ஆற்றுப் பொங்குமுகங்கள் அதிக தூரம் உட்பகுதிகளிற் பரந்து காணப்படுகின்றன. தட்டையான கடற்கரைப் பகுதிகளில் வண்டற் படிவுகள், சேற்று நிலங்கள் ஆகியன உண்டு. கடலரிப்பால் அமைந்த உறுப்புக்களிலும் பார்க்க, கடற்கரைப் படிவுகளே அதிகமாக உள்ளன. இத்தகைய ஆழமற்ற கடல் கள் காற்றுக்கள் வீசுவதனுல் உண்டாகும் நீரோட்டங்களினுற் பெரிதும் பாதிக் கப்படுகின்றன. ஆகவே பருவகாலங்களில் உண்டாகும் பருவக்காற்று மாற்றங் களுக்கு ஏற்பவே நீரோட்டங்கள் அமைகின்றன. இக்கடல்கள். குழவுள்ள சமுத் திரங்களிற் காணப்படும் நீரோட்டங்களினுல் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. கடல்களின் மேற்பரப்பு நீர் அசைவு இரண்டாம் அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டுள்ள காற்றுத் தொகுதிகளின் ஒழுங்கிற்கு அமையக் காணப்படுகின்றது. இக்கடல்கள், தீவுத்தொடர்கள் குறுக்கே அமைந்திருப்பதனுல் இந்து பசிபிக் குச் சமுத்திர நீரோட்டங்களோடு தொடர்பில்லாதனவாய்க் காணப்படுகின் றன. அல்லாமலும் மத்தியகோட்டு நிலத்திணிவுகளுக்கு இடையிற் காணப்படுவ தனுலும் அதிக மழைநீர் நிலப்பகுதிகளிலிருந்து இழிந்து இக்கடல்களில் வந்து விழுவதனலும் இக்கடல்கள் பெரும்பாலும் குடாகவும் உவர்ப்புக் குறைவாக வும் உள்ளன . உவர்த்தன்மை ஆயிரத்தில் 31 பங்காகவும் கடல் வெப்பநிலை 70 ப. பாகையாகவும் இருக்கின்றன. மேற்பரப்பு நீரில் இடத்திற்கிடமும் பருவத்திற் குப் பருவமும் காணப்படும் வேறுபாடுகள் மிகக் குறைவாகும். مية"
அந்தமான், பேமா, கிரா, சுமாத்திரா ஆகியவற்றினுற் குழப்பட்டுள்ள கட அலுள் ஐராவதி ஆற்றுக் கழிமுகம் படிப்படியாகப் பரந்து வருகின்றது. இக்கட லின் ஆழமும் சண்டாமேடைக்குப் புறத்தேயுள்ள சமுத்திர நீரோட்டத் தொடர்பும் காரணமாக இது பெரும்பாலும் வங்காளக் குடாவோடு தொடர் புடையதாய் உள்ளது. ஆனற் பேமாவிலுள்ள ஆறுகள் காரணமாக இக்கடலின் மேற்பரப்புநீரின் உவர்த்தன்மை சண்டாமேடைக் கடல்களின் உவர்த்தன்மையி லும் குறைவாகக் காணப்படுகின்றது.
இக்கடல்கள் புவியோட்டசைவினல் ஏற்பட்ட மாற்றங்களிலும் பார்க்க, நன்னிலை நிலவசைவினல் ஏற்பட்ட மாற்றங்களிஞலே அமைந்தன என்பதற்கு வேறு சான்றுகளும் உள்ளன. சண்டாமேடைத் தளத்தில் நுகைவான பாற்கல், மணல், களிமண் ஆகிய காணப்படுவதும், கடற்கரையையடுத்து அலேகளால் வெட்டப்பட்ட உயரமான படிகள் காணப்படாமையும் இக்கருத்தை மேலும் வலி யுறுத்துகின்றன. அல்லாமலும் கடற்றளமெங்கும் ஒட்டுத் தாவரங்களும் காணப் படுகின்றன. இவை கடற்கரையையடுத்து வளரும் தாவரவகையைச் சேர்ந்த வையாகும்.
2. சாகுல் மேடைக் கடல்கள்
ஆராயூாாக் கடல், கார்ப்பெந்தெரியாக் குடாவரை பரந்துள்ள அக்கடலின் பகுதி ஆகியன பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மிகக் குறைவாகும். இக்கடல்கள் தென் கிழக்கு ஆசியாவுக்குப் புறத்தே காணப்படுவதோடு சண்டா

Page 22
4 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
மேடைக் கடல்களை ஏறத்தாழ ஒத்துள்ளன. உவர்த்தன்மையைப் பொறுத்த வரையில் மட்டும்வேறுபாடு காணப்படுகின்றது. அவுஸ்திரேலிய ஒரப்பகுதியில் மழைவீழ்ச்சி குறைவாகவிருப்பதனுலும் இக்கடல்களுள் வந்து விழும் ஆறுகளி லிருந்து பெறப்படும் நன்னீர் குறைவாகவிருப்பதனலும் உவர்த்தன்மை முற் கூறிய கடல்களிலுள்ளவற்றிலும் ஓரளவு அதிகமாக உள்ளது.
3. இந்தியத் தீவுகளின் "மத்தியதரைக் கடல்கள்" இந்தியத் தீவுகளின் " மத்தியதரைக் கடல்களுள் ” இருபத்தாறு ஆழமான பள்ளங்களும் தாழிகளும் அறியப்பட்டுள. பிலிப்பைனுக்கும் சீனுவுக்குமிடையி லுள்ள ஆழக்கடல் இவற்றுள் அடக்கப்படவில்லை. இக்கடல் குறித்த பிரதேசச் திற்கு அப்பாற் காணப்படுகின்றது. மேற்குறித்த இருபத்தாறு கடற்முழிகளுள் எட்டு 15,000 அடிக்குமதிகமான ஆழத்தை உடையன. இக்கடல்களைப் பிரிக்கும் மேடான பகுதிகள் 4,000 அடிக்கு மேற்பட்ட ஆழத்தையுடையன. இக்கடல்கள் ஒவ்வொன்றுள்ளும் இருவகையான நீரோட்டத்தொகுதிகள் காணப்படுகின்றன; (அ) மேற்பரப்பு ஓட்டம் விரைவாக நிகழ்வதோடு அடுத்துள்ள கடற்பள்ளங் களிலுள்ள நீரோட்டங்களோடும் அப்பாலுள்ள சமுத்திரவோட்டங் களோடும் தொடர்புள்ளதாய்க் காணப்படுகின்றது. இந்த மேற்பரப்பு ஓட்டம் கடலின் மேற்பரப்பிலிருந்து கடற்பள்ளத்தைச் சூழவுள்ள கிடைப்பாறை மட்டம்வரை (அதாவது ஏறத்தாழ 5,500 அடி ஆழம் வரை) காணப்படுகின்றது. மேலும் தீவுத்தொடர்கள் அமைந்துள்ள நிலை காரணமாக மேற்பரப்பு நீர் பசிபிக்குச் சமுத்திரத்தின் வட மத் திய கோட்டு நீரோட்டத்தினுற் பாதிக்கப்படுகின்றது. மிண்டானுவோ வுக்கும் நியூகினிக்கும் இடையிலுள்ள பல வெளிகளூடாக இந்நீரோட் டம் "மத்தியதரைக் கடல்களுட்" செல்லுகின்றது. ஆனல், இந்து சமுத்திரத்திலிருந்து இத்தகைய நீரோட்டம் உட் செல்லாதவாறு சுமாத்திரா-யாவாத் தீவுத்தொடரினல் தடைசெய்யப்பட்டுள்ளது. வெப்பத்தைப் பொறுத்தவரையில் இக்கடல்கள் மத்தியகோட்டுக் கடல்களை ஒத்துள்ளன. இக்கடல்களுக்கும் மேடைக் கடல்களுக்கும் உவர்த் தன்மையில் வேறுபாடு காணப்படுகின்றது. இக்கடல்களின் உவர்த்தன்மை ஆயிரத்தில் 34.5 பங்காகும். பருவக் காற்றுக்களின் தாக்கமும் இக்கடல்களிற் குறைவாகும். (ஆ) ஆழமான பகுதிகளில் நீரோட்டம் மெதுவாக நிகழுகின்றது. தாழிகள், கடற்பள்ளங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் இவ்வோட்டம் காணப்படுவ தோடு அயலேயுள்ள தாழிகளின் ஒட்டம், மேற்பரப்பு ஒட்டம் ஆகிய வற்றேடு தொடர்பற்றும் காணப்படுகின்றது. அயலேயுள்ள தாழிகளின் ஓட்டத்தோடு தொடர்பற்றிருப்பதற்கு இக்கடல்களைப் பிரிக்கும் கிடைப்பாறைகளே காரணமாகும். மேற்பரப்பு ஓட்டத்தோடு தொடர் பற்றிருப்பதற்கு ஆழமான பகுதியிலுள்ள நீர் அடர்த்தியாயிருக்

இயற்கைத் தோற்றம் 5.
தலே கார்ணமாகும். தனித்தனியாகவுள்ள ஆழமான இப்பகுதிகளிற் காணப்படும் நீரோட்டம் பெரும்பாலும் பசிபிக்குச் சமுத்திரத்திவி ருந்து உண்டாகி முறையே வட பண்டாக் கடற்பள்ளம், தென் பண் டாக் கடற்பள்ளம், விபர் ஆழி, சாவூக் கடற்பள்ளம், வேகர் கடற் பள் ளம் ஆகியவற்றிற்கூடாகச் சென்று இறுதியில் இந்து சமுத்திரத்தின் ஆழிகளை அடைகின்றது. ஆழமான பகுதியிலுள்ள நீர் பொதுவாகக் கூடிய உவர்த்தன்மையையும் குறைந்தவெப்பத்தையும் உடையது. இக் தன்மையினல் ஆழமான கடற் பள்ளங்களிலிருந்து நீர் எளிதில் வெளியே தொடர்ந்து ஓடமுடியாதிருக்கின்றது. எனினும் ஆழமான பசிபிக்குப் பகுதியிலிருந்து இக் கடற்பள்ளங்களுள் நீர் ஓடுகின்றது. இந்நீரினது வெப்பநிலை ஒத்த ஆழத்திற் கிடைப்பாறைகளினுற் குழப் பட்ட கடற்பள்ளங்களிலுள்ள நீரின் வெப்பநிலையிலும் குறைவாகும். இக்கடற் பள்ளங்களினுள் மிகத் தாழ்ந்த கிடைப்பாறையின் மட்டத் திற்குச் சற்றுக் கீழே மிகக் குறைந்த வெப்பநிலை காணப்படும். கீழே போகப்போக வெப்பநிலை, வெப்பஞ் செல்லாமுறையில், அதிகரித்துச் செல்லுகின்றது. ஆணுற் கடல்மட்ட வெப்பநிலை குறைவாக உள்ளது. இதனல் மேற்காவுகை ஓட்டம் உண்டாக வாய்ப்பில்லாது போய்விடு கின்றது. இத்தன்மைகளைக் கொண்ட ஆழமான கற்பகுதிகளில் அடர்த்திகூடிய நீர் நிலையாகக் காணப்படுவதனல் அப்பகுதிகளில் 857 சன் சல்பைட்டுப் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. 1. ܫ மத்தியதரைக் கடல்களின் ஓரங்கள் பொதுவாக மேலுயர்த்தப்பட்ட கடற் கரைகளையும் கடலலைகளால் வெட்டுண்ட படிகளையும் கொண்டுள்ளன. இவை இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வுடையனவாய்க் காணப்படுகின்றன. பெரிதும் வேறுபட்ட அதிர்வு வீச்சுக்களையுடைய புவியோட்டசைவுகளினற் பாதிக்கப் பட்டதனுற் சிறு அாரங்களுக்குள்ளும் இம்மாற்றங்கள் அதிகமாக உள்ளன. கடற் கரையோரங்கள் பெரும்பாலும் குத்தாகவிருப்பதனுற் பொங்குமுகப் பகுதிகளில் அடையற் படிவு மிகக் குறைவாகவே உள்ளது.
வற்றுப்பெருக்கு
ஓரளவுக்கு நிலத்தினுற் குழப்பட்டுள்ள இக்கடல்களில் ஏற்படும் வற்றுப் பெருக்கு விளைவுகள் இந்து பசிபிக்குச் சமுத்திரங்களிலிருந்து தோன்றுவனவா யுள்ளன. வெளியான சமுத்திரங்கள், "மத்தியதரைக் கடல்கள்” ஆகியவற்றிற் காணப்படும் வற்றுப்பெருக்கு விளைவுகள் எத்தகையனவாயிருந்த பொழுதும், மேடைமீதுள்ள ஆழமற்ற கடல்களில் இவை சிறு அலைகளாக மாற்றமடைந்து காணப்படுகின்றன (படம்-6).
பசிபிக்குச் சமுத்திரத்திலிருந்து வற்றுப்பெருக்கு அலைகள் அலுசோன் தொடு கடலுக்கூடாகவும் நியூகினி போமோசா ஆகியவற்றிற்கிடையிலுள்ள பல கட லிடுக்குக்களுக்கூடாகவும் மேற்குத் திசையை நோக்கிச் செல்லுகின்றன. இந்து சமுத்திரத்திலிருந்து வரும் வற்றுப்பெருக்கு அலைகள் மலாக்காத் தொடு கடலுச்

Page 23
16 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
கடாகக் கிழக்கு நோக்கியும் சுமாத்திரா நியூகினி ஆகியவற்றிற்கிடையிலுள்ள இடுக்குக்களுக்கூடாக வடக்கு நோக்கியும் செல்லுகின்றன. " மத்தியதரைக் கடற் ” பகுதியிலுள்ள ஆழமான பள்ளங்களிலும் தாழிகளிலும் வற்றுப்
படம் 6, 1956 மாச்சு 14 ஆந் திகதிக்குரிய தென்கிழக்கு ஆசியக் கடல்களின் உடனிகழ் வற்றுப் பெருக்குக் கோடுகள் (ஒரு மணி நேர இடைக்காலம்)
பெருக்கு விளைவுகள் நிலையான ஏற்றத்தாழ்வு அசைவுகளாகக் காணப்படுகின் றன. வற்றுப்பெருக்கு ஆவர்த்தனங்கள் ஆழிகளின் பருமன், உருவம் ஆகிய வற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன.
சண்டாமேடைக் கடல்களின் தன்மைகள் பிரதான கப்பற் பாதைகள் அமைந்துள்ள இடங்களில் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ளன. தென்
 

இயற்கைத் தோற்றம் 7
சீனக் கடவின் ஆழமான வடபகுதியில் வற்றுப்பெருக்குகள் நிலையாக நிக மும் ஏற்ற இழிவுகளாகக் காணப்படுகின்றன; அவை பெரும்பாலும் ஒரே காலத்திலும் நிகழுகின்றன. தென் பகுதி ஆழங்குறைந்ததாயிருப்பதனுல் வற் றப் பெருக்கு அலைகள் தெற்கு நோக்கி மெதுவாக அசைகின்றன. சண்டா மேடைக் கடலுக்கூடாகவுமே அவை அவ்வாறு செல்லுகின்றன.
இந்து சமுத்திர வற்றுப்பெருக்கு அலைகள் மேற்கிலிருந்து புனல்வடிவான மலாக்காத் தொடுகடலுக்கூடாகச் செல்லுகின்றன. அவற்றின் வீச்சு வாவா அதிகரித்துக்கொண்டுபோகும். கிழக்கில் பசிபிக்குச் சமுத்திரத்திலிருந்து தோன்றும் வற்றுப்பெருக்கு அலைகள் ஹொங்கோங்குக் கடற்பள்ளத்திலிருந்து வருகின்றன. யாவாக் கடலின் வற்றுப்பெருக்கு அலைகள் அதிதெற்கிலுள்ள “மத் தியதரைக் கடல்களிலிருந்து” தோன்றிவருகின்றன. முதலில் இவை இந்து சமுத்திரத்திலிருந்து தீமோர்க் கடல், சிறு சண்டாக் கடல் ஆகியவற்றிற்கூடாக " மத்தியதரைக் கடல்களுக்கு" வருகின்றன.
சிங்கப்பூர்த் தீவுக்குச் சற்றேதெற்கில் மலாக்காத்தொடுகடல், தென்சீனக் கடல் ஆகியவற்றிற்கூடாக வரும் வற்றுப்பெருக்கு அலைகள் ஒன்ருேடொன்று இணைகின்றன. இதனுல் இப்பகுதியில் அலையரிப்புக் குறைவாக உள்ளது. அயலி லுள்ள நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அடையற்படிவுகளும் கடலோாங் களிற் பெருந்தொகையாகப் படிகின்றன. லிங்கா, ரீயோத் தீவுப் பகுதிகளை யடுத்து வற்றுப்பெருக்கு ஒட்டம் மிகவும் சிக்கலானதாயிருக்கின்றது; அயிலே யுள்ள கடல்களிலிருந்து வற்றுப்பெருக்கு அலைகள் வந்து இணைவதே இதற்குக் காரணம். மேலும் பருவ காலங்களுக்கு ஏற்பக் காற்றுக்கள் மாற்றமடைவதனுல் வற்றுப்பெருக்கு விளைவுகளும் மாற்றமடைகின்றன. வருடத்தில் இக் காற்றுக் கள் திசைமாறி எதிர்ப்பக்கமாய் விசுவதனுல் நீர் மட்டமும் அதற்கேற்பக் கூடி யும் குறைந்துங் காணப்படுகின்றது. தென் சீனக் கடலின் நீளத்துக்குச் சமாந் தரமாகப் பருவகாலங்களில் மாறுபட்ட காற்றுக்கள் விசுகின்றன; வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் நீர்மட்டம் 1.5 அடிவரையில் மாற்றமடைந்து காணப்படுகின்றது.
வற்றுப்பெருக்கு அலைகளின் வீச்சு ஆழமான கடற்பள்ளங்களில் இரண்டு அடிக்குக் குறைவாகவிருந்து ஆழமற்ற கடல்களில் பத்து, பன்னிரண்டு அடி வரை அதிகரித்துக் காணப்படுகின்றது. கடற்கரைக்கண்மையிற் பொதுவாக வீச்சு ஐந்து அடிக்குக் குறைவாகும்.
முருகைக் கற்கள் முருகைப் பல்லடியன்கள், பிற சேதனப்பொருள்கள் ஆகியவற்றின் எலும்புத் தொகுதிகள் சேர்ந்தே முருகைக்கற்பார்கள் உண்டாகின்றன. இந்த உயிரினங்கள் கூட்டாக வாழுகின்றன. நாலு வருட காலத்தில் இவை ஒவ்வொன்றும் இரண்டு அங்குல விட்டமுடையனவாகப் பருத்துவிடுகின்றன. இந்த உயிரினங்களுக்குப் பொருத்தமான குழல் தன்மைகள் அவசியம் வேண்டும். கடல் வெப்பநில்ை

Page 24
8 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
ஆண்டுமுழுவதும் 68 ப. பாகைக்குக் குறையாமலிருத்தல் வேண்டும்; உணவுப் பொருளாக்கத்துக்குப் பொருத்தமான ஆழமற்ற தெளிவான நீரும், அதிக உவர்த்தன்மையும் வேண்டும். உணவுப்பொருள்கள் பெரும்பாலும் ஒளிக் தொகுப்பு முறையிலே கிடைக்கின்றன. கூட்டாகவுள்ள முருகைக்கற்கள் வழு வழுப்பான மேற்பகுதியைக் கொண்டுள்ளன. உண்மையில் இப்பகுதியே உயி ருள்ள கூருகும். உயிரணுக்கள் காற்றிற் பட்டாலும் களிமண்ணுல் மூடப்பட்டா அலும் இறந்துவிடும். ஆகவே முருகைக் கற்கள் பெரும்பாலும் நிலையான பாறை கள் மீதே பரந்து பெருகிக் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியாவுக்கு அப் பால் முகுகைக் கற்கள் இடத்திற்கிடம் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
சண்டர்மேடையிற் கடற்கரைக்கு ஓரளவு தூரத்திலே முருகைக் கற்கள் ங்ாந்து காணப்படுகின்றன. உவர்த்தன்மை குறைவான கடல்களும் நுண்ணிய மண்டிப்ப்ொருள்கள் அழுகிய அமிலப்பொருள்கள் முதலியன படிந்துள்ள அடர் சேற்றுக் கரைப்பகுதிகளும் முருகைப் பல்லடியன்கள் விருத்தியாவதற்குப் பேரருத்தமற்றனவாய் உள்ளன. மேடையின் சில பாகங்கள் அண்மையிற் படிப் படியாக நீரின் கீழ்த்தாழ்ந்து வந்ததனுலும் இவை விருத்தியடைய வாய்ப்பு ஏற்படவில்லை. எனினும் மேடை ஓரங்களையடுத்துள்ள ஆழமான பகுதிகளிலும் தென்மலாயாவுக்கு அப்பாலுள்ள பாறைத் தீவுகளைச் சுற்றியுள்ள பரந்த பகுதி யிலும் முருகைக் கற்கள் காணப்படுகின்றன. மேலும் மேடைப்பகுதியிற் காணப்படும் முருகைக் கற்கள் நீரின் கீழ்த்தாழ்ந்து காணப்படும் இயல்பின.
பொதுவாகக் கடற்கரைக்கு அப்பாற் கடல்மட்டத்தின் கீழ் அவை காணப்படு கின்றன. கடற்கரையையடுத்து அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. மேடையின் கிழக்கு ஒரத்தை யடுத்தே முருகைக் கற்கள் பெருந் தொகை யாக உள்ளன. அவை போணியோவின் கிழக்குக்கரைக்குச் சமாந்தரமாகப் பரந் திருப்பதோடு மாக்கசர்த் தொடுகடலுக்குள்ளும் விரவிக் காணப்படுகின்றன (படம்-7). மாக்கசர்த் தொடுகடற் பகுதியில் அகன்ற முருகைக்கற்பார்களாக அவை விருத்தி பெற்றுள்ளன. பருமனைப் பொறுத்தவரையில் சாகுல் மேடை யின் கிழக்கு ஒரத்தையடுத்துள்ள பெரிய முருகைக்கற்பார்களை அவை ஒத் துள்ளன எனலாம். இப்பகுதிகள் கடற்கரையை நோக்கிவரும் மத்தியகோட்டு வெப்ப நீரோட்டங்களைக் கொண்டுள்ளமையால் முருகைக்கல் வளர்ச்சிக்குப் பொருத்தமானவையாக உள்ளன. கண்ட மேடையின் மேற்குப் பாகத்திற் கடற் கரைநீங்கு நீரோட்டங்களினல் நீர் மேனேக்கி எழுவதினுல் முருகைக் கற்கள் பொதுவாக விருத்தியடைவதில்லை.
" மத்தியதரைக் கடல்கள்" காணப்படும் பகுதியில் முருகைக்கற்கள் குறை வாகவிருந்தபொழுதும் அவை வேறுபட்ட உருவ அமைப்பினை உடையனவாய் உள்ளன. கங்கண முருகைக் கற்றிவுகள், தடுப்பு முருகைக்கற்பார்கள், முருகைக் கற்பார்க் கவிப்புக்கள் ஆகியன இன்றுள்ள கடல்மட்டத்திற்கு மேலும், கீழும் சாய்வாகவும் வேறுபட்ட உயரங்களிற் காணப்படுகின்றன. அவை, இப்பகுதியி அலுள்ள தீவுகளைச் சூழ்ந்து வெவ்வேறு அளவுகளில் வளர்ந்துள்ளன. இத்தீவுத்
 

இயற்கைத் தோற்றம் 19
தொடர்களை உள்ளடக்கிய புவிமேன்மடிப்புக்கள் காலப்போக்கில் மேல்கீழாகப் பன்முறை இடம்பெயர்ந்தும் காணப்படுகின்றன.
స్చె
义 مچھر
器 *|闘*へ)* } ° 制浦 t 毛 g خ با محده می
VR al eud a-a IIIIIIIIII???
Imini /? S 9 O படம் 7. போனியோக் கடற்றள மேடையும் சண்டா மேடையின் கிழக்கிலுள்ள பெரிய
தடுப்பு முருகைக்கற் பாரும் முருகைக்கல் உண்டாகும் முறையினை விளக்கும் கொள்கைகள் பல உண்டு. அவை யாவும் உயிருள்ள முருகைக்கற்பல்லடியனுக்குத் தேவையான குழற் காரணிகளையே (அவையாவன ஞாயிற்று வெளிச்சம் படும், வற்றுமட்டத்துக் குக் கீழான நீரையுடைய கடல்கள்) அடிப்படையாகக் கொண்டுள்ளன; எலும் புக்கூடுகள் தொகுவதனுல் உண்டாகும் முருகைக்கற்களின் வடிவமும், விரிவும் கடல்நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களோடு தொடர்புபடுத்திக் காட்டப்படு கின்றன. கடல்மட்ட (அல்லது பாவைமட்ட) மாற்றத்தை வற்புறுத்திக் கூறும் முருகைக்கல்லாக்கக் கொள்கைகளுக்குச் சான்முகப் பல உதாரணங்கள் தென் கிழக்கு ஆசியக் கடல்களிற் காணப்படுகின்றன. சண்டாமேடைப்பகுதியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேல் கீழாக மெதுவாக அசையும் புவியோட்டுப் பகுதிகளோடு தொடர்புடைய முருகைக் கற்களும் உண்டு. " மத்தியதரைக் கடல்கள்" காணப்படும் பகுதியிலுள்ள இத்தகைய தீவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடலின் கீழ் ஏற்படும் புவியோட்டசைவினல் முருகைக்கற்கள் உண்டாகின்றன எனக்கூறும் கொள்கைகள் இம்மாற்றங் களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

Page 25
அத்தியாயம் 2 தென்கிழக்கு ஆசியாவின் காலநிலைக் காரணிகள்
தென்கிழக்கு ஆசியாவின் எல்லாப் பாகங்களிலும் வருடம் முழுவதிலும் வெப்பநிலை சீரானதாகக் காணப்படுகின்றது. பருமனில் தென் கிழக்கு ஆசி யாவை ஒத்த வேறெப்பிரதேசத்திலும் இத்தகைய தன்மையுைக் காண்பதளி தாகும். தென் கிழக்கு ஆசியாவில் உயரம் காரணமாக இடத்திற்கிடம் வெப்ப நிலையிற் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. திபேத்து மேட்டுநிலம் காரணமாக உண்டாகும் கண்ட நிலைமைகள் வட பேமா, தைலாந்து முதலிய பகுதிகளினைப் பாதிக்கின்றன. இப்பகுதிகள் தவிரப் பேமாவின் கீழ்ப்பாகத்தி லிருந்து தென் வியற்நாம், ஈரியான் ஆகியவை வரையுள்ள தென் கிழக்கு ஆசி யப் பகுதியில் மாதச் சராசரி வெப்பநிலை எல்லாப் பருவங்களிலும் ஏறத்தாழ 80 ப. பாகையாக உள்ளது; ஏற்றத் தாழ்வுகள் பத்துப் பாகைக்குக் குறை வாகவே ஏற்படுகின்றன. நிலப்பகுதி மத்திய கோட்டைச்சார்ந்து அமைந் திருப்பதனலும், பெரிய நீர்ப்பரப்பைத் தன்னகத்தே அடக்கியிருப்பதனுலும் வெப்பம் எல்லாப் பாகங்களிலும் எல்லாக் காலங்களிலும் சீரானதாக உள்ளது. மக்களது வாழ்க்கை முறை, தாவர வேறுபாடுகள் ஆகியன இடத்துக்கிடம் காணப்படும் வெப்ப வேறுபாடுகளுக்கு ஏற்பவும் தாவர விருத்தி பயிர்ச்செய்கை ஆகியன வருட வெப்பநிலை மாற்றங்களுக்குப் பொருந்தவும் அமைந்தனவா
தென் கிழக்கு ஆசியாவில் தாவர விருத்தி, பயிர்ச்செய்கை ஆகியன முக்கிய மாக மழைவீழ்ச்சியையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மொத்த மழை வீழ்ச்சியிலும் பருவ ஒழுங்கிற்கு அமையப் பெறப்படும் மழைவீழ்ச்சியே முக்கியமாகும். மொத்த மழைவீழ்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக மத் திய கோட்டிற்குத் தூரத்தேயுள்ள பகுதிகளிற் காலநிலைத் துணைப் பிரிவுகள் அமைகின்றன. இத்தகைய காலநிலை வேறுபாடுகள் கெப்பன் காலநிலைத் திட் டத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள. பிரிவுபட்டுக் காணப்படும் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் மழை வீழ்ச்சி ஒழுங்கு, குறுகிய அாரத்தில் நிகழும் மழை வீழ்ச்சி மாற்றங்கள் முதலியன பெரும்பாலும் காற்றுத் தொகுதிகளையே பொறுத்துள்ளன. உள் நாட்டு மழைவீழ்ச்சி வேறுபாடுகள் நிலப்பகுதியின் தரைத்தோற்றத் தன்மை, அதற்கும் பருவக் காற்முேட்டத்திற்கும் உள்ள தொடர்பு, அயலிலுள்ள நீர்ப்பகுதிகள் ஆகியவற்றற் பெரிதுங் கட்டுப்படுத்தப்
பட்டுள்ளன. w
காற்முெழுங்கு தென் கிழக்கு ஆசியா ஒத்த தன்மையையுடைய இரு காற்றுத் திணிவுகளின் தாக்கத்தைப் பெற்றுள்ளது. அவையாவன :
20

காலநிலைக் காரணிகள் 2.
(அ) வட அயனமண்டலக் காற்றுத் திணிவு, கடகக் கோட்டிலிருந்து மக் திய கோட்டை நோக்கி விசும் இக்காற்று வடகிழக்குத் தடக்காற்று என வழங்கும். ܙ (ஆ) தென் அயனமண்டலக் காற்றுத் திணிவு. இக்காற்று மகரக் கோட்டி லிருந்து மத்திய கோட்டை நோக்கி விசும். இது தென் கிழக்குச் தடக் காற்று என வழங்கும். இந்த இரண்டு காற்றுத் திணிவுகளும் பெளதிகத் தன்மையைப் பொறுத்த வரையில் ஏறத்தாழ ஒத்தனவாக உள்ளன. இக்காற்றுக்கள் வெப்பமான பரந்த கடல்களுக்கூடாக விசுவதனுல் சீரான வெப்பம், ஈரத்தன்மை ஆகிய வற்றைக் கொண்டுள்ளன. காற்றுக்கள் தாழ் அகலக்கோட்டுப் பகுதிகளை நோக்கி விசுவதனல் வேகங் குறைந்தும் காணப்படுகின்றன. வட, தென் அயன மண்டலக் காற்றுக்கள் இணையுமிடம் பிரிதளம் எனப்படும். உலகின் பிற பகுதிகளிலுள்ள “முனைவுப் பிரிதளம்” போன்ற பிரிதளங்களை இது ஒக் துள்ளது. மேற்குறித்த அயனமண்டலக் காற்றுத்திணிவுகள் இரண்டும் இணையு மிடம் "அயனவிடைப் பிரிதளம்” எனப்படும். வானிலைப் படத்தில் இப்பிரி தளம் ஒரு கோட்டினுற் சுட்டப்பட்டுள்ளது.
மேற்குறித்த இரு காற்றுத் திணிவுகளும் பெளதிகவியல்புகளில் ஏறத்தாழ ஒத்துள்ளமையால் அவை இணையுமிடங்களில் அயனவிடைப் பிரிதளம் தெளி வானதாய் அமைவதில்லை. ஆனல் முனைவுப் பிரிதளமோ வேறுபட்ட பெளதிக வியல்புகளைக் கொண்ட காற்றுத் திணிவுகளிடை ஏற்படுவதனுல் மிகத்தெளி வானதாய் உள்ளது. அயனக் காற்றுத் திணிவுகள் ஒவ்வொன்றிலும் காணப் படும் வெப்பம், ஈரப்பதன் கிடைக் தாண்டு விசை அழிவு முதலியன நிலைக்குத் துத் தாண்டுவிசை அதிகரிப்பதைக் குறிக்கும். அயனவிடைப் பிரிதளத்தினிரு புறமும் காற்றுக்கள் மேலெழுந்து வேகமான மேற்காவுகைத் தாக்கத்தை உண்டாக்கும். இதனுல் அயன விடைப் பிரிதளத்தைச் சார்ந்து அமைதி வல யங்கள் காணப்படுகின்றன. மத்திய கோட்டை யடுத்த பகுதியிலேயே அமைதி வலயம் சிறப்பாக ஏற்படுகின்றது. பழைய சொற் பிரயோகத்தின்படி தடக் காற்றுக்கள் ஒருங்கும் வலயம் மக்திய கோட்டமைதி வலயம் எனப்பட்டது. அதி வடக்கேயுள்ள அகலக்கோட்டுப் பகுதிகளிலுண்டாகும் அமுக்கவிறக்க நிலைமைகளை முன்னரே அறிந்து கூறுவதற்கு முனைவுப் பிரிதளம் உதவியாக உள்ளது. அவ்வாறே அயனவிடைப் பிரிதளத்தைச் சார்ந்து ஏற்படும் திடீர்ப் புயல்கள், மெல்லமுக்கவிறக்கங்கள் முதலியவற்றை முன்னரே அறிந்து வானி லைத் தன்மைகள் பற்றி விளக்குவதற்கு அயனவிடைப் பிரிதளம் துணையாகவுள் ளது. இவ்வாறு உண்டாகும் திடீர்ப்புயல்கள், அமுக்கவிறக்க நிலைமைகள் ஆகி யன சில சமயங்களில் அதிக சேதத்தையும் உண்டுபண்ணிவிடுகின்றன. இவ் வலயத்திற்குரிய நாள் வானிலைப் படங்கள் (பார்வைப் படங்கள்) இன்று உத்தியோகத் தேவைக்காகவே வரையப்படுகின்றன (படம் 8) , பொதுத் தேவைக்காக அவை விற்கப்படுவதில்லை.

Page 26
22 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
மேற்குறித்த காற்முெழுங்கு வேறிரு தன்மைகளினற் பாதிக்கப்படுகின்றது. சூரியனின் வருட அசைவினல் இரு காற்றுத் திணிவுகளும் மத்திய கோட்டிற் கூடாக இடம் பெயர்ந்து காணப்படும். இதனுல் தென்னரைக் கோளத்திற் கோடைக் காலம் ஏற்படும் பொழுது அயனவிடைப் பிரிதளம் மத்திய கோட்
È
1906
-அடயரமுக்கம் 7 ് ༄ ༼འོ་ ۶ آ16 سب سے (53.
○
ö
Y ஐ இடிமின்னற் புயல்
படம் 8. தென் கிழக்கு ஆசியாவின் நாள் வானிலைப் படம் (செத்தெம்பர் 28, 1946 12.00 மணிக்குரிய இப்படத்திற் சமவமுக்கக் கோடுகள் மில்லிபார் அளவிற் குறிக்கப்பட் டுள்ளன) டிற்குத் தெற்காகவும் வடக்கிற் கோடைக்காலம் ஏற்படும்பொழுது வடக்காக வும் காணப்படும். காற்றுத் தொடர் மத்திய கோட்டைக் கடக்கும்பொழுது அதன் திசையில் மாற்றம் ஏற்படுகின்றது. பொலின் விதிக்கமையத் தென்கிழக் குத் தடக்காற்றுக்கள் வடவரைக் கோளத்தில் தென் மேற்குக் காற்றுக்களாக விசும், வடகிழக்குத் தடக்காற்றுக்கள் தென்னரைக் கோளத்தில் வடமேற்குக் காற்றுக்களாக விசும்
 

காலநிலைக் காரணிகள் 23
கண்டங்களின் உட்பகுதிகளில் உண்டாகும் தாழமுக்க மையங்களினுலும் காற்றெழுங்கு பாதிக்கப்படுகின்றது. தாழமுக்கமுண்டாகும் கண்டங்களின் ஒரத்தையடுத்தே தென் கிழக்கு ஆசியா அமைந்துள்ளது. இதனுற் காற்றுக் தொடரின் போக்குச் சில பருவங்களிற் பாதிக்கப்படுகின்றது. கோடைக் காலத் தில் அவுஸ்திரேலியாமீது உண்டாகும் தாழமுக்கம் காரணமாக அயன விடைப் பிரிதளம் அதி தெற்கே அசைந்து காணப்படும். திசம்பர் மாதத்தில் வட அவுஸ்திரேலியாமீது அயனவிடைப் பிரிதளம் காணப்படும். கோடைக்காலத் தில் இந்தியா மீதும் மத்திய பேமா, தைலாந்து, ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசியாக் கண்டவோாப்பகுதி மீதும் காணப்படும் தாழமுக்க மையங்களினுற் குறிப்பிடத்தக்க விளைவுகள் உண்டாகின்றன. வட வேனிற்காலத்தின் பிற்பகுதி யில் தென் அயனக் காற்றின் ஒரு பகுதி மத்திய கோட்டைக் கடந்து வட இந்தியாவிலுள்ள தாழமுக்க மையத்தை நோக்கி விசும். நவம்பர் மாதம் வரை இத்தாழமுக்கத்தை நோக்கிக் காற்று வட இந்து சமுத்திரத்திற்கூடாக வளைந்து விசும். இந்தியாவில் தாழமுக்கம் உண்டாகும் காலத்திற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்பு ஆசியாவின் கிழக்குப் பகுதிகள்மீது தாழமுக்கம் உண்டாகின்றது. இந்தியாவின் தாழமுக்கத்தாலுண்டாகும் விளைவுகளையொத்த தன்மைகள் இங்கும் உண்டாகின்றன. யூன், யூலை, ஒகத்து மாதங்களில் தென் அயனக் காற்று தென் சீனக் கடலுக்கூடாகக் கிழக்காசியத் தாழமுக்கத்தை நோக்கி விசும்.
இத்தகைய தாக்கங்களினுற் காற்றுத் தொடர்களின் போக்குப் பாதிக்கப் படுகின்றது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு படங்களில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது (படம் 9). ஒவ்வொரு படத்திலும் மூன்று மாதக் காலத் தில் உண்டாகும் விளைவுகள் விளக்கப்பட்டுள்ளன. இவ்விளைவுகளைப் பின்வரு மாறு தொகுத்துக் கூறலாம் :
1. திசம்பர்-பெப்புருவரி. இக்காலத்தில் வட, தென் அயனக் காற்றுத் திணிவுகள் அவற்றிற்குரிய இயல்பான வழிகளில் வீசும், வட காற் அறுத் தொடர் மத்திய கோட்டைக் கடந்து தெற்கில் 7 பாகைவரை வடமேற்குக் காற்முக விசும். இப்பாகையை யடுத்து அயனவிடைப் பிரிதளமும் ஏறத்தாழ அகலக்கோட்டு முறையிற் காணப்படும். அவுஸ்திரேலியாவின் தாழமுக்க வலயத்தைச் சார்ந்து அயன விடைப் பிரிதளம் தெற்காக வளைந்து காணப்படும். 2. மார்ச்சு-மே. இக்காலத்தில் மூன்று காற்றுத் தொடர்கள் சந்திக்கின் றன. தென் அயனக் காற்று வடக்கு நோக்கி முனைந்த பொழுதும் தென் கிழக்கு ஆசியாவில் மத்திய கோட்டைக் கடந்து அதிக அாரம் செல்வதில்லை. வட அயனக் காற்றுத் திணிவுகள் வடகிழக்கை நோக் கிப் பின்வாங்கிக் கிழக்கு ஆசியாவில் கீழைக் காற்முக விசும். இந்து சமுத்திரத்தின் மத்திய பகுதியில் தென் அயனக் காற்றுத்திணிவின் ஒரு பகுதி (இந்தியத் தாழமுக்கம் காரணமாக) மத்தியகோட்டைச் கடந்து வங்காளக் குடாவில் தென் மேற்குக் காற்முக விசும். பின்பு

Page 27
24 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
படிப்படியாக இக்காற்று மேலும் கிழக்கு நோக்கி வீசும், இக்காலத் தில் அயனவிடைப் பிரிதளம் கிளைத்தன்மையுடையதாய் வடக்காக வளைந்திருக்கும். வங்காளக் குடாவிலிருந்து வரும் காற்றும் மேற்குப் பசிபிக்கிலிருந்து வரும் காற்றும் இங்கு இணைகின்றன. இக்காற்றுக் கள் இணையுமிடம் மார்ச்சு மாதத்தில் இந்து சமுத்திரத்தின் மத்தியி லும், பின்பு கிழக்காகவும் சற்றே வடக்காகவும் நகர்ந்து மே மாதத் தில் லபூவனுக்கு அப்பாலும் காணப்படும்.
Lub 9. தென்கிழக்கு ஆசியாவில் அயனவிடைப் பிரிதளம். பிரிதளம் தடித்த கோட்டாற் சுட்டப்பட்டுள்ளது. தெளிவாகவும் திட்டமாகவுமுள்ள பிரிதளம் தொடர் கோட்டாலும் தெளிவற்ற பிரிதளம் பிரிபட்ட கோட்டாலும் காட்டப்பட்டுள. தெளிவற்ற பிரிதளம் நிலை மாறுந்தன்மையது. இரட்டைக் கோட்டுக் குறியீடு காற்றுத் தொடர் அசையும் திசையைக் குறிக்கும்
3. பூன்-ஒகத்து. இக்காலத்தில் தென் அயனக் காற்று வடக்கு நோக்கி வேகமாக விசும். இக்காற்றின் இன்னெருகிளை யாவாக் கடல், தென் சீனக் கடல் ஆகியவற்றிற்கூடாகக் கீழ்மத்திய ஆசியாவிலுள்ள தாழ முக்கத்தை நோக்கி வீசும். இக்காலத்தில் வட அயனக்காற்று தென் கிழக்கு ஆசியாவரை வீசுவதில்லை. தென் அயனக்காற்றின் மற்றைய கிளை காரணமாக அயனவிடைப் பிரிதளம் சமச்சீரான இரு பிரிதளங் களாக அதிபரவளைவு வடிவில் அமைந்திருக்கும். பிரிதளத்தின் இரு
 

காலநிலைக் காரணிகள் 2S
கிளைகளும் முதலில் ஒன்றிற்கொன்று அண்மையாகக் காணப்படும் பின்பு இவை அாாத்தூரப் பிரிந்து போக ஒகத்து மாதத்தில் மேற்குத் கிளைமட்டும் தென் கிழக்கு ஆசியாவில் இந்தோசீனக் காைக்கு அப் பால் வடக்குக் கிழக்குப் பிரிதளமாக வளைந்து காணப்படும். யூன்ஒகத்துக் காலத்தில் அயனவிடைப் பிரிதளம் மலாயா-இந்தோசீனப் பகுதியில் தொடர்ந்து காணப்படும். இதன் இருபுறத்தும் இரு காற் அறுத் தொடர்கள் காணப்படும். இவை இரண்டும் தென் அயனக் காற் அறுத் தொடர்களாக இருந்தபொழுதும் வேறுபட்ட இரு பாதைகளில் வீசுவதால் வேருன பெளதிகவியல்புகளைக் கொண்டுள்ளன. 4. செத்தெம்பர்-நவம்பர். இக்காலத்தில் வட அயனக் காற்று வடக்கி லிருந்து மேற்காகவும் தெற்காகவும் வேகமாக வீசும். இப்பொழுது தென் அயனக்காற்றுத் தொடர்ந்து மத்தியகோட்டைக் கடந்து இந்து சமுத்திரப் பகுதியில் வீசிய பொழுதும் படிப்படியாக வேகத்திற் குறைவடைந்து நவம்பர் வரையில் முற்முகவே மறைந்துவிடுகின்றது. தென் சீனக் கடலுக்கூடாக வீசும் தென் அயனக் காற்றுத் தொடர் படிப்படியாக அற்றுப் போய்விடத் தென் அயனக் காற்று மத்திய கோட்டிற்குத் தெற்கில் தென் கீழ்த்தடக்காற்ருய் வீசும். அயன விடைப் பிரிதளம் தெற்கே போகப்போக மார்ச்சு-மேக் காலத்திற் போன்று கூர்முனையுடையதாய் அகலக்கோட்டு முறையில் அமைந் திருக்கும். நிலைமாறு காலமாய இக்காலத்தில் பிரிதளம் இலைதுஸ்ரிர் காலத்திற் போலன்றிச் சமச்சீரற்றுக் காணப்படும்; முனையும் கூர் மிகுந்து காணப்படும். அயனவிடைப் பிரிதளம் பொதுவாகத் தெளிவான முறையில் அமைவதில்லை. பிரிதளம் காணப்படுமிடங்கள் பெரும்பாலும் அகன்ற அமைதி வலயங்களா கும். அயனவிடைப் பிரிதளத்தை உள்ளடக்கிய வலயமே மத்திய கோட் டமைதி வலயமாகும். நிலையற்ற காற்றே இங்குப் பொதுவாக வீசும். அத ைேடு பலமற்ற அமுக்கவிறக்கங்கள் மேற்காகவும் கிழக்காகவும், சில பருவங் களில் அயலேயுள்ள கண்டங்களின் தாக்கத்தால் முனைவுகளை நோக்கியும் அசைந்து காணப்படும்.
மழைவீழ்ச்சி
நிலவமைவுப் போக்கு, தரைத்தோற்றம், காற்றுக்கள் ஆகியன காரணமா கத் தென் கிழக்கு ஆசியாவிற் பெரும்பகுதி வருடத்தில் 80 அங்குலத்திற்கு மதிகமான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. மழைவீழ்ச்சிப் பாம்பல் 10 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளது. பேமாவின் மேற்பாகம், மத்திய தைலாந்து ஆகியன குறைந்த மழைவீழ்ச்சியைப் பெறும் பகுதிகளாகும். இப்பகுதிகளே நோக்கிக் காற்றுக்கள் விசாதவாறு மலைத்தொடர்கள் தடைசெய்கின்றன. மழைவீழ்ச்சி கிழக்குமுகமாக இந்தோனேசியாவினூடாகக் குறைந்து செல்

Page 28
26 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
கிறது. குறிப்பாக மத்திய யாவாவுக்குக் கிழக்கிலுள்ள தீவுகளையுள்ளடக்கிய பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதைக் காணலாம்.
ஆச்சீனிலிருந்து வடமலாயாவுக்கூடாக மிண்டானவோவரை கோடு ஒன்று
வரையப்படுமாயின், அக்கோட்டிற்கு வடக்காகவும், மத்திய யாவாவுக்குக் கிழக்
2)
皂
படம் 10, தென் கிழக்கு ஆசியாவின் வருடச் சராசரி மழை வீழ்ச்சி காகவும் தெற்காகவும் உள்ள பகுதிகளில் தெளிவான வறண்ட காலம் உண்டு. கெப்பனின் காலநிலை வரையறையின்படி,
இப்பகுதிகள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திலேனும் 2.4 அங்குலத்திற்கும் குறைந்த மழைவீழ்ச்சியைக் கொண்
 
 

காலநிலைக் காரணிகள்
А O
இ جبه. یق عل זימGu கொக் சைகன்
s
8
s
மழைவீழ்ச்சியற்ற மாதங்கள் திசைகாட்டி
27
தென் கிழக்கு ஆசியாவில் மழை வீழ்ச்சி காற்றுத் திசை என்பவற்றின்
2 பெப்புருவரி)
தொடர்பு. ஒவ்வொரு கோடும் (மையத்தை நோக்கி வீசும்) மாதச் சராசரிக் காற்றுத் திசையைக் காட்டும். கோட்டின் நீளம் மாதச் சராசரி மழை வீழ்ச்சியைக் குறிக்கும். மத்தியிற் சிறு புள்ளிகளாகக் காட்டப்படும். கோட்டின் மீது கொடுக்கப்பட்டுள்ள எண் மாதத்தைக் குறிக்கும், (உ-ம். 1 சனவரி,

Page 29
28 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
ள்ெளன. வறண்ட காலநிலையைக் கொண்ட பகுதிகள் மத்திய கோட்டு வலயத் திற்கு அப்பால் அயனமண்டல எல்லைகளைச் சார்ந்து காணப்படுகின்றன. மத் திய கோட்டையடுத்து மழைவீழ்ச்சி பருவகாலங்களுக்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றது. இப்பகுதியில் பொதுவாக இரு மழைவீழ்ச்சிப் பருவங்கள் உண்டு. வறண்ட பருவம் என்று கூறத்தக்க வகையில் எந்த ஒரு பருவமும் மழையற்றுக் காணப்படுவதில்லை.
6ooo gyllg
+ +ے م> ط۔
} +ے ۔۔ --
படம் 12, அயன இடிமின்னற் புயலின் அமைப்பு
தென்கிழக்கு ஆசியாவின் அயனக்காற்றுத் திணிவுகள் அதிக வெப்பத்தை யும் ஈரப்பதனையும் உடையன. இவை இயல்பாகவே உறுதியற்ற தன்மையை யுடையனவாயுமுள்ளன. உறுதியற்ற தன்மை மத்திய கோட்டையடுத்த பகுதி யில் அதிகமாயும் ஆசியக்கண்டத்தையடுத்துக் குறைவாயுமிருக்கின்றது. இவ் வுறுதியற்ற தன்மையால் ஒரு ப்ட்டணம், வெளியான வயல் போன்ற இடங் களிற் காணப்படும் மிகை வெப்பம், பலமற்ற அமுக்கவிறக்கங்கள், சிறு தரைத் தோற்ற வேறு பாடுகள் முதலியன காரணமாகச் சடுதியான நிலைக்குத்துக் காற் முேட்டம் உண்டாகின்றது. ஏனைய அகலக்கோட்டுப் பகுதிகளிலும் பார்க்க இப் பகுதியில் குத்துயரம் காரணமாக அதிக விளைவுகள் ஏற்படுகின்றன. இத்தன் மைகளினல் அரை மணிக்குக் குறைந்த நேரத்தில் 10,000 அடித் தடிப்பான
 

காலநிலைக் காரணிகள் 29
திரண்மழை முகில் உண்டாகின்றது. இம்முகிலுள் மணிக்கு 100 மைல் வேக மான நிலைக்குத்துக் காற்றுக்கள் காணப்படுவதுமுண்டு. முதற் காற்று ஈரத் தன்மையுடையதாயிருத்தலினல் மேலெழுங்காற்முேட்டத்தால் அதிக மழை வீழ்ச்சியும் பெறப்படுகின்றது. (ஒரு மணிநோத்தில் 2 அங்குல மழைவீழ்ச்சி ஏற்படுவதுண்டு). இம் மழைவீழ்ச்சி பெரும்பாலும் குறித்த ஒரு சிறிய பகுதி யிலேயே ஏற்படுகின்றது. மழைவீழ்ச்சியினுல் வெளிப்படும் மறைவெப்பம் காரணமாகக் காற்முேட்டம் மேலுமதிகமாக மேலெழ வாய்ப்பு உண்டாகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் மழைவீழ்ச்சி ஏற்படப் பல ஏதுக்களும் காணப் படுகின்றன. அவை பெரும்பாலும் இடிமின்னற் புயலோடு தொடர்புடையன. மத்திய கோட்டையடுத்த பகுதியில் இடிமின்னற் புயல் நாடோறும் நிகழும் ஒரு நிகழ்ச்சியாகும் (போகோர் என்னுமிடத்தில் வருடத்தில் 320 இற்கு மேற் பட்ட புயல்கள் ஏற்படுகின்றன). இத்தகைய புயல்களினுல் அதிக சேதமும் உண்டாகின்றது. மாரிக் காலத்தில் வறண்ட பருவத்தைக் கொண்ட உட் பிர தேசப் பகுதிகளில் இடிமின்னற் புயல்கள் குறைவாக உள்ளன. இப்பகுதிகளி அலும் மழைவீழ்ச்சி ஏற்படும் மாதங்களில் இடிமின்னற் புயல்கள் அதிகமாக உண்டாகின்றன. தென் கிழக்கு ஆசியாவில் உண்டாகும் இடிமின்னற் புயல்கள் மத்திய அகலக்கோட்டுப் பகுதிகளில் உண்டாகும் இடிமின்னற் புயல்களை ஒத் துள்ளன (படம் 12). இப்புயல்களின் நடுவில் வேகமாக மேலெழுங் காற்றுக் கள் “ புகைக்குழாய் ' போன்று காணப்படும். இப்புயல்களின் முன்பு குளிர் காற்றுக் கீழ் நோக்கி இழிந்து செல்லும். இடிமின்னற் புயல்களிடை“மேலெ ழுங்காற்றுச் சில சமயங்களில் ஒரு விமானத்தையே இரு துண்டுகளாகக் கிழித்து விடுஞ் சத்தியுடையது. பிற அகலக்கோட்டுப் பகுதிகளில் ஆலிழி பெரும்பாலும் உண்டாகின்ற பொழுதும், இப்பகுதியில் உறைநிலை மட்டம் உயர்ந்திருத்தலின் (28,000 அடிக்கு மேல்) ஆவி அரிதாகவே உண்டாகின்றது. மழைவீழ்ச்சிக்கும் காற்றுக்கும் உள்ள தொடர்பு காற்றுக் கோட்டுப் படமும் மழைவீழ்ச்சித் தர வும் ஒருங்கே கொடுக்கப்பட்டுள்ள 11 ஆம் படத்திலிருந்து தெளிவாகும். மத் திய கோட்டிற்குத் தூரத்தேயுள்ள இடங்களில் ஒழுங்கான வறண்ட பருவம் காணப்படுவதையும் இது காட்டுகின்றது. −
தைபூன்
கிழக்கு ஆசியப் பகுதிக்கு அப்பால் உண்டாகும் அயனச் குருவளிகள் * தைபூன்' என வழங்கும். தென் கிழக்கு ஆசியாவின் வட பகுதி மட்டுமே தைபூனின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும். பிலிப்பைன், இந்தோசீன ஆகிய பகுதிகளில் தைபூன் பெரும்பாலும் ஏற்படுகின்றது. சில காலங்களில் தைபூன்கள் கிரா நிலவிணைப்பைக் கடந்து வங்காளக்குடாவூடாகச் சென்றது முண்டு. வங்காளக்குடாத் தைபூன்கள் குடாவின் வட பகுதியில் ஒரு சிறிய பாகத்தைமட்டுமே பாதிக்கின்றன. இவற்ருல் பேமா பொதுவாகப் பாதிக்கப் படுவதில்லை. தென்கிழக்கு ஆசியப் பகுதியின் வானிலைத் தன்மைகள் பெரும் பாலும் தென் சீனக் கடலின் தைபூன்களினலேயே பாதிக்கப்படுகின்றன.

Page 30
30 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
தைபூன் உண்டாகும் முறைபற்றிய கொள்கைகளிற் பல கருத்துவேறுபாடு கள் உண்டு. இதனை விளக்குவதற்கு வேண்டிய வளிமண்டலத் தரவினைப் பெறு வது கடினமாகவிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். தைபூனின் சடுதியான
*** MRR
ன் வலக் கார் ఇ శ్ని స్క్రిస్ట్రీ"లో
创 میک : - V ஒருங்கலும
ஆ sமேலெழலும்
حصہ سے لا 、あ"富)
படம் 13. தைபூனின் பொது அமைப்பு
தாக்கத்தால் வளிமண்டலக் கருவிகள் சிதைந்துவிடுகின்றன. வெப்பவிர நிலை யற்ற காற்றின் மேற்காவுகையினல் சிக்கலான ஒருங்கு காற்முேட்டம் உண்டா கின்றது. இத்தன்மையையுடைய தைபூன் செல்லும் வழி சடுதியாக மாற்ற மடைதலினுல் முன்னரே திட்டமிட்டு ஆராய்தல் கடினமாக உள்ளது. கடல் மட்ட நிலையில் தைபூனின் தன்மைகள் பற்றிய விபரங்கள் ஓரளவுக்குக் கிடைத் துள்ளன. தைபூனின் நிலைக்குத்துத் தன்மைபற்றிய விபரங்கள் மிகக் குறை வாகும். முகில் அமைப்புப் பற்றிய மாலுமிகளின் குறிப்புக்கள் மட்டுமே உண்டு. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிற் பெறப்பட்ட விபரங்களை அடிப்படையா கக் கொண்டு கிளைன்ஸ் என்பார் தைபூன் பற்றிய சில கருத்துக்களை வெளியிட் டுள்ளார். இவரது கருத்தின்படி முன்வலக் காற்பகுதியிற் சடுதியாக உண்டா கும் மழைவீழ்ச்சியினுற் பெறப்படும் மறைவெப்பம் காரணமாகத் தைபூன் தன்னியக்கமுள்ள தொன்முகக் கொள்ளப்படுகின்றது. தரைக்கு மேலே, மழை வீழ்ச்சி உண்டாகும் மட்டத்தில் உள்ள ஓரிடத்தில் ஓயாமல் அதிக வெப்பம் உண்டாகின்றது எனவும், அது மாருத ஒரு தாழமுக்க மையமாகவிருக்க அத்
 
 
 
 
 
 

காலநிலைக் காரணிகள் 3.
சாழமுக்க மையத்தை நோக்கிக்கடல்மட்ட அமுக்கமத்தி எப்போதும் நகர்ந்து செல்லுகின்றது எனவும் கிளைன்ஸ் கருதுகிருர் (படம் 13). தைபூன் செல்லும் வழிக்கும் காற்றுத் திணிவுகளிடை ஏற்படும் பிரிதளத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் கூறப்படுகின்றது.
படம் 14. தென் சீனக் கடலில் தைபூன் வழிகள்
தென் சீனக் கடலிற் காணப்படும் தைபூன்கள் பிலிப்பைனுக்குக் கிழக்காகத் தொடங்கிப் பிலிப்பைன் தீவுகள், இந்தோசீனு முதலிய பகுதிகளை நோக்கிச் செல்லுகின்றன. ஏனைய அயனச் குருவளிகளைப் போன்றே இவையும் பரவளை வுப் பாதையிற் சென்று, பிலிப்பைனுக்கும் வடவியற்நாமுக்குமிடையில் மீண் டும் வடகிழக்காக வளைந்து செல்லுகின்றன (படம் 14). தைபூன்களின் எண் ணிைக்கை பருவங்களைப் பொறுத்து வேறுபடுகின்றது. 1918-29 ஆம் வருடத்தில் 98 தென் சீனக் கடல் தைபூன்கள் காணப்பட்டன. அவை காணப்பட்ட மாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
சன பெ|மார் எப் 1 மே யூன் யூலை ஒக செத் ஒற் நவ| திச மொத்தம்
தைபூன்கள் 9 0 O 15 15

Page 31
32 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
யூலை-நவம்பர் காலத்திலேயே தைபூன்கள் பெருந்தொகையாக ஏற்படுகின் றன. அவை 9 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள முறிவுற்ற அயனவிடைப் பிரி தளத்தின் அசாதாரண நிலைகளோடு தொடர்புடையன. கிழக்கு ஆசியத் தைபூன் கள் செல்லும் பொது வழியைப் பொறுத்தவரையில், பெப்புருவரி முதல் ஓகத்து வரையுள்ள காலப்பகுதியில் அவை படிப்படியாக வடக்கு நோக்கி நகரும் வழி களிலும், இக்காலத்தின் பின்பு சனவரி வரையும் தெற்கு நோக்கி நகரும் வழி களிலும் செல்லுகின்றன. தெற்கே அவை கம்போடிய முனைக்கு அப்பால் என் றும் செல்வதில்லை. யூலை முதல் செத்தெம்பர் வரையுள்ள காலத்தில் மிகக் கூடிய சேதத்தை விளைவிக்கக்கூடிய தைபூன்கள் 15 ° அகலக் கோட்டிற்கு வடக்கி அலுள்ள வலயத்தில் ஏற்படுகின்றன (லூசோனும் தொங்கின் குடாவும்). ஒற்றே பர், நவம்பர் மாதங்களில் இத்தகைய தைபூன்கள் தென்வியற்நாம் கரைகளில் ஏற்படுகின்றன.
தென் சீனக் கடல் தைபூன்கள் பிற பகுதிகளில் ஏற்படும் குழப்பம் விளைவிக் குந் தைபூன்களை ஒத்துள்ளன. தைபூன் ஏற்படுவதற்கு முன்பு அடிவானத்தில், மேற்பகுதியிற் கீற்றுமுகிற் படையும், கீழே அறுபட்ட திரண்முகிற் படைகளும் காணப்படும். தைபூன் அணுகும்பொழுது திரண்முகில் நடுவில் மேலும் திரட்சி பெற்றுக் கருமுகிற் படலமாகக் காட்சியளிக்கும். மத்தியிலிருந்து 100 மைல் தொலைவிற் கரிய மழைமுகில்கள் உண்டாகித் திடீரெனப் பெருமழை பெய்யும். இவை முழுத் தைபூனேடு 10-20 நொற்று வேகத்தில் முன்னே அசைந்து செல் அலும். தைபூனிற் கலந்துள்ள காற்றுக்கள் படிப்படியாக வேகத்தில் அதிகரித்து 80 நொற்றிலும் அதிகமாக வீசும். தைபூனின் மத்தியில் "கண்” எனப்படும் சிறிய மையப்பகுதி ஒன்று உண்டு. ஏறத்தாழ ஐந்து மைல் விட்டமுடைய இம் மையப் பகுதியில் வானம் தெளிவாகவிருப்பதோடு மழையற்ற அமைதியான நிலையும் காணப்படும். மத்திய அகலக்கோட்டுச் குருவளியில் குளிர், வெப்ப முகங்களுக்கிடையிற் காணப்படும் மிகவும் அமைதியான தன்மைகளே இங்கும் உள்ளன. தைபூன் மையத்தின் முன் பாகத்தில் வீசும் காற்றின் திசைக்கு எதிர்த் திசையில், மையத்தின் பின்பாகத்தில் மிக வேகமான காற்று வீசும். அதனேடு மழைப்படைமுகில்கள் உண்டாகிச் சோனை மழையைக் கொடுக்கும். கட்புல ஞகுதன்மை முற்முகவே அற்றிருக்கும். தைபூன் படிப்படியாக அசைந்து செல்ல இத்தன்மைகளும் குறைவடைந்து, வானத்தில் உயர்கீற்று முகில்கள் காணப்படும்.
கடூரமான அயன அமுக்கவிறக்கங்கள் ஏற்படும் பகுதிகளில் வேகமான காற் அறுக்களினுற் கட்டிடங்கள், பயிர் நிலங்கள் முதலியன பாதிக்கப்படுகின்றன. அவை அதிகமாக ஏற்படுவதும் மிக்க சேதத்தை விளைவிப்பதும் அாசொனிலா கும். இந்தோ சீனப்பகுதியில் இவற்றின் தாக்கம் ஓரளவுக்குக் குறைவாகும். தென் சீனக் கடலில் தைபூன்கள் கப்பற் போக்குவரத்திற்குப் பெருந் தடை யாக உள்ளன. சிறிய பாய்க்கப்பல்களும் வள்ளங்களும் இவற்முற் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தைபூன்கள் பற்றி முதன் முதலிற் பெறப்பட்ட விபரங் கள் யாவும் ஐரோப்பிய மாலுமிகளின் கைந்நூல்களிற் காணக்கிடக்கின்றன.

காலநிலைக் காரணிகள் 33
இந்த விபரங்கள் பெரும்பாலும் பழைய காலமுறையைத் தழுவிப் பெறப்பட்ட வையாகும். தைபூன்கள் செல்லும் வழியிற் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற் காகவே இக் குறிப்புக்கள் வெளியிடப்பட்டன. தொங்கின், அனம் முதலிய கரை யோரப் பகுதிகளில் தைபூன் காற்றுக்கள் குறித்த திசைகளில் விசும்போது கட லலைகள் பெருக்கெடுத்துக் கரையோரத்தையடுத்த தாழ்வான பகுதிகளில் வெள் ளப் பெருக்கை ஏற்படுத்துவதும் உண்டு. தைபூன் காற்றுக்கள் மிகக் கடுமையான வேகத்தில் வீசும்பொழுது புகைவண்டிகள் தண்டவாளத்திலிருந்து மேலே தூக் கப்படுவதும் கப்பல்கள் கடற்கரையிலிருந்து உண்ணுட்டிற் பன்னூறு யார் துராக் துக்குத் தூக்கி எறியப்படுவதுமுண்டு.
பிரெஞ்சு அவதானிகளான புருசோன், காட்டன் என்பார் நியாதிராங்கு ஹொன்பா என்னுமிடங்களில் 1926 இல் ஏற்பட்ட தைபூன்பற்றிப் பின்வருமாறு விவரித்துள்ளனர்; 'நவம்பர் 2 ஆந் திகதி முதன் முதலில் தைபூன் யப்பின் மே. வ. மே. திசையிற் காணப்பட்டது. 3 ஆந் திகதி இத் தைபூன் மணிலாவின் கிழக் கில் 700 கிலோ மீற்றர் தொலைவிற் காணப்பட்டது. 5-6 ஆந் திகதி இரவு மணி லாவுக்குத் தெற்கிற் காணப்பட்டது. சீனக் கடலில் தைபூன் செல்லும் திசை மேற்கிலிருந்து மேற்குத்-தென் மேற்காக மாறியது. 7 ஆந் திகதி அனம் கரைப் பகுதி தைபூனின் தாக்கத்தைப் பெற்றது. அன்று ஏறத்தாழ 16.00 மணியளவில் நியாதிராங்கிற் காற்று மே. தெ. மே. திசையிலிருந்து மிக வேகமாக விசியது. அன்று இரவு காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. திசை வடமேற்காகவும், வடக்காகவும், வட கிழக்காகவும் மாற்றமடைந்தது. அன்று இரவு அமுக்கமும் மிகக் குறைவாகவிருந்தது (980 மி. பா). ஹொன்பா என்னுமிடத்தில் மலைக ளிடை (1480 மீ) இரண்டு மணி நேரத்தின் பின்பு அமுக்கம் 818 மி. பா. ஆக மேலும் குறைவடைந்து காணப்பட்டது. அன்றிரவு தைபூன் சென்ற வழியில் அமுக்கம் மேலும் 30 மி. பா. ஆற் குறைவடைந்து காணப்பட்டது. சில மணி நேரத்தின் பின்பு சாதாரண நிலைமை நிலவியது. ஹொன்பாவிலுள்ள காடுகள் தைபூனின் தாக்கத்தால் பெருஞ் சேதமடைந்தன. பல மரங்கள் வேரோடு பெயர்க்கப்பட்டன. சில பகுதிகளில் எல்லா மரங்களுமே சிதைந்தழிந்தன. பையூ முதற் படரான் முனைவரையுள்ள அணும் கரைப்பகுதியில் தைபூன் காரணமாகப் பெருமழைவீழ்ச்சியும் ஏற்பட்டது."
தாழகலக் கோட்டையடுத்து மலாக்காத் தொடுகடலிலே கிழக்காக மலாயா வுக்கு வீசும் சில தொடைத் திடீர்ப் புயல்கள் தைபூனைப் போன்ற சேதத்தை உண்டுபண்ணத்தக்க காற்றுக்களாகும். இக்காற்றுக்கள் அயனவிடைப் பிரிதளக் குழப்பங்களோடு தொடர்புடையனவாகும். இக் காற்றுக்கள் வட்டமான முறை யில் வீசுவதில்லை; தைபூனிற் போன்று இங்கு மையப்பகுதியும் இல்லை. இக்காற் அறுக்கள் அதிக பரப்பை உள்ளடக்கியோ, தொடர்பாயோ வீசுவதில்லை. எனவே இக்காற்றுக்களுக்கும் தைபூனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

Page 32
34 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
குரியவொளி
தென் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகள், வருடத்தின் பெரும்பாகத்தில் தடித்த முகிற் படலத்தால் மூடப்பட்டிருக்கும். இதனுற் குரியவொளியைப் பெறுங்காலம் குறுகியதாகும். மத்தியகோட்டையடுத்த பகுதியிற் பெரும் பாலும் இத்தகைய நிலைமை காணப்படும். மத்திய கோட்டிற்குத் தூரத்தே யுள்ள பகுதிகளில் முகிலற்ற தெளிவான நிலைமைகளைக் கொண்ட பருவமும் தொடர்ந்து குரியவொளியைக் கொண்ட வானிலைத் தன்மைகளும் காணப்படுவ ஆண்டு. கூடிய ஈரப்பதன் காரணமாக உண்மையாகப் பெறப்படும் குரியவொளி குறைவாகும். தாக்குந்திறனுள்ள பல குரியக் கதிரலைகள் ஈரப்பதன் காரண மாகத் தடைசெய்யப்படுகின்றன. சிங்கப்பூரில் அசைநாளுக்குமதிகமான நோம் சூரியவொளி முகிற்படலங்களால் மறைக்கப்பட்டிருக்கும். ஜக்கார்த்தாவில் குரியவொளி பெறக்கூடிய மணி நேரத்தில் 70 சதவீதத்திற்குறைந்த நோமே குரியவொளியுடையதாயிருக்கும். மத்திய கோட்டுப் பகுதியில் குரியவொளி நாடோறும் ஒழுங்கான முறையிற் பெறப்படுகின்றது. இப்பகுதியில் காலை நேரம் பெரும்பாலும் தெளிவாகவும் குரியவொளியுடையதாயுமிருக்கும். திரண் முகில்கள் படிப்படியாக உண்டாகி நண்பகலுக்குச் சற்றுப் பின்பு மிகக்கூடிய அளவில் திரட்சி பெற்று, மேற்காவுகை இயக்கம் காரணமாக இடிமின்னலோடு மழைவீழ்ச்சியையும் கொடுக்கின்றன. மாலையில் குரியன் மறையும் நேரத்தில் மீண்டும் வானம் முகில்களற்றுத் தெளிவாகக் காணப்படும். பொதுவாகக் கடல் மட்ட அளவிலுள்ள பகுதிகளில் குரியவொளி அதிகமாகும். உயரம் கூடக்கூடச் குரியவொளியும் குறைவடைகின்றது. தெளிவான வறண்ட காலத்தையுடைய பகுதிகளில் வறண்ட பருவத்தில் அதிக அளவுக்குச் சூரியவொளி கிடைக்கின் றது. ஆனல் மழைக்காலத்திற் குரியவொளி நெடும்போது முற்முகவே மறைக் கப்படுவதனுற் கோடைக் காலத்திற் பெறப்பட்ட சூரியவொளி பொதுவாகச் சரியீடு செய்யப்பட்டு விடுகின்றது. பயிர்ச்செய்கையைப் பொறுத்த வரையில் இத்தகைய நிலைமைகள் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன.
FFuւնւսչ5ahr
தென் கிழக்கு ஆசியாவின் எல்லாப் பாகங்களிலும் அதிக சராசரி ஈரப்பதன் உண்டு. ஆனல் இடங்களைப் பொறுத்து ஈரப்பதன் வேறுபடுகின்றது. உட்பகுதி யிலும் பார்க்கக் கரையோரப் பகுதி ஈரமாகக் காணப்படும். குறித்த வறண்ட பருவங்களையுடைய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாகவுள்ள காலங்களில் ஈரப் பதன் குறைவாகவிருக்கும். ஓர் இடத்தில் சில மணிநேரம் சூரியவொளி உண் டாயின் அங்குச் சாரீாப்பதன் திடீரெனக் குறைவடைந்து காணப்படும். மிக வும் ஈரமான இடங்களிலும் நிலம், ஈரத்துணிகள் ஆகியன குரியவொளியில் உலர்ந்து விடுவது கண்கூடு. ஈரப்பதனின் வேறுபாடு சிறிதாக இருந்தபொழு தும் தாவரங்களில் அதன் தாக்கம் அதிகமாகும். மக்களைப் பொறுத்தவரையில் வெப்பநிலையிலும் பார்க்க ஈரப்பதன் காரணமாகவே வெப்ப உணர்வு குளி ருணர்வுமுதலியன உண்டாகின்றன. சாரிாப்பதன் சற்றே குறைவடையும்

காலநிலைக் காரணிகள் 35
பொழுது உடலிற்குளிர்த்தன்மை போன்ற உணர்வு ஏற்படுகின்றது. வியர்வை நீர் எளிதில் ஆவியாகிவிடுவதே இதற்குக் காரணமாகும். இக் காரணத்தாலே ஒழுங்கான மென்காற்று வீசும் ஓரிடம், அதன் உண்மையான ஈரப்பதன் அளவு களும் வெப்பநிலை அளவுகளும் குறிக்கும் நிலையைக் காட்டிலும் வறட்சியும் குளிர்ச்சியும் கூடியதாய்த் தோன்றும், பருவங்களையும் பொதுப்படையான மழைவீழ்ச்சியையும் காட்டும் படம் (படம் 10) பல பாகங்களினதும் ஈரப்
பதனை அறிந்து கொள்ளுவதற்குத் துணையாகவுள்ளது.
உயரத்தாலேற்படும் விளைவு
தென்கிழக்கு ஆசியாவின் பல பாகங்களில் வானிலைத் தன்மையில் வேறுபாடு கள் காணப்பட உயரம் ஒரு முக்கிய காரணமாகும். நிலத்திணிவுகள் சிறியன
வெபமான இடைவெப்ப மழைக் காலநிஜல, தெளிவான வறண்.
வெபவமான இடைவெபப மழைக் காலநிலை, குே * மிக வறண்ட மாத மொத்தத்திலும் பதின் டிருேமழை பெறும் மிக ஈரமான (p. Aastle-us
3 s 46R7)LXfj AWNaw as
பண்டல மன்தக் காலநிலை குறைந்தது.ஒரு மாத nog o' theo Joeg se Aفيه நண்ட பகுவ முன்பது,75 வெபuம்ரீதர் மிகக் குளி மாதத்துக்கும் வேறுபாடு 9 ம், பர்கைமிற் குன்ற்வாஞ்ம்
படம் 15. தென் கிழக்கு ஆசியாவிற் கெப்பன் வகுத்த காலநிலைப் பிரதேசங்கள் வாகவிருந்த பொழுதும் மலைகள் அதிகமாக உள்ளன. கிழக்குச் சுமாத்திரா தவிர, அகன்ற சமநிலங்களைக் கொண்ட பகுதிகள் இல்லை. எல்லாப் பகுதிகளி லும் மலைகள் காட்சியளிக்கின்றன. மிகவுயரமான மலையுச்சி (பிரி போணியோ

Page 33
36 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
வின் கினபனு, 13,681 அடி) மழைப்பனிக் கோட்டிற்குக் குறைந்த உயரத்தையே
கொண்டுள்ளது. ஆனல் யுன்னன் பகுதியையடுத்துள்ள உயர்நிலங்களில் மாரிக்
காலத்தில் சற்றே மழைப்பனி படிவதுண்டு. பொதுவாக 8,000 அடி உயரத்தை
யுடைய உயர் நிலங்களே இங்கு உண்டு. ஆனல் உயர் நிலங்கள் தொடர்பாகப்
பாந்து காணப்படுவது குறைவாகும். உயரம் காரணமாகக் குறித்த பகுதிகளில்
வெப்பநிலை குறைவடைகின்றது. இதனைப் பகற்காலத்திலும் பார்க்க இராக்
காலத்தில் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். ஈரப்பதனும் அதிகமாகும். மலை கள் காரணமாக மழையொதுக்குப் பகுதிகளும் காணப்படுகின்றன. வருடத்
திற் காற்றுக்கள் மாறி மாறி வீசுவதனல் மழையொதுக்குப் பகுதிகள் நிலையாக
விருப்பதில்லை. பருவகாலங்களில் மட்டுமே அத்தன்மைகள் நிலவுகின்றன. மத்
திய பேமா போன்று இருபுறத்தும் மலைத்தொடர்களைக் கொண்ட தாழ்நிலப்
பகுதியிலே மழையொதுக்குத் தன்மை ஓரளவுக்கு நிலையாகக் காணப்படுகிறது.
தரையுயர்ச்சி காரணமாக உண்டாகும் முக்கிய விளைவுகளுள் மலையியன் மழை வீழ்ச்சி, வெப்பநிலை குறைதல் ஆகியன குறிப்பிடத்தக்கன. வெப்பநிலை குறை வடைதலிலும் பார்க்க மழைவீழ்ச்சியே புவியியலடிப்படையில் முக்கியமான
தாகும்.
காலநிலைப் பிரதேசங்கள்
காலநிலைப்பிரதேசங்கள் வரையறுக்கப்படுவதற்கு மழைத்தன்மையே முக்கிய காரணமாகும். வெப்பநிலை எல்லாப் பாகங்களிலும் ஒரளவுக்குச் குடாகக் காணப்படுகின்றது. மழைவீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இரு கால
நிலைப் பெரும் பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள.
(அ) வருடம் முழுவதும் அதிக மழைவீழ்ச்சியைக் கொண்ட பிரதேசம் (வரு டத்தில் 80 அங்குலத்திற்குக் கூடிய மழைவீழ்ச்சியுடைய பகுதி). பொதுவாகப் பார்க்கும் பொழுது வருடத்தில் இரு முறையும் உச்ச மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. உச்ச மழைவீழ்ச்சிக் காலங்களுக்கு இடையிலுள்ள காலம் சற்றே குறைந்த மழைவீழ்ச்சியுடைய காலமா கும். ஆனல் வருடத்தில் எந்த மாதமும் வறட்சியுடையதாயில்லை. இத் தகைய காலநிலையைக் கொண்ட பிரதேசம் பெரும்பாலும் மத்திய கோட்டையடுத்துள்ள மத்திய கோட்டுக் காலநிலைப் பிரதேசமாகும். (ஆ) வருடத்திற் பெரும்பாகத்தில் மழைவீழ்ச்சியையும் குறைந்தது ஒரு மாதம் 2.4 அங்குலத்திற்கும் குறைந்த மழைவீழ்ச்சியையும் கொண்ட பிரதேசம். மத்திய கோட்டிலிருந்து தூரத்தே போகப் போக வறண்ட பருவமும் அதிகரித்துக் காணப்படும். பிரதேச எல்லைகளும் ஏறத்தாழ அகலக்கோட்டு முறைக்கு ஏற்பக் காணப்படும் (படம் 10). வறண்ட பருவங்கள் வருடத்திற் குறித்த காலங்களிற் காணப்படும் காற்முேட் டங்களோடு தொடர்புடையனவாய் உள்ளன. இக் காலநிலையைக்
கொண்ட வலயத்தை இரண்டு சிறு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

காலநிலைக் காரணிகள் 37
1. மிகக் குறைந்த மொத்த மழைவீழ்ச்சியையும் (வருடத்தில் 60 அங் குலத்திற்குக் குறைந்த மழைவீழ்ச்சி) நெடிய வறண்ட பரு வத்தையுமுடைய பகுதிகள். பேமாவின் மத்திய பகுதி, கிழக் குத் தைலாந்து ஆகியன குறிப்பிடத்தக்கன. 2. நெடிய வறண்ட பருவத்தையும் உயரம் காரணமாகக் குளிரான பருவத்தில் 60 பாகைக்குக் குறைந்த-ஆனல் சராசரியாக உறைநிலைக்கு மேற்பட்ட-வெப்பநிலையையும் கொண்ட பகுதி
56t. தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கு ஓரளவுக்குப் பயன்படுத்தத் தக்கதாகக் கெப் பனின் காலநிலைத்திட்டம் உள்ளது; முற்றிலும் பொருத்தமான திட்டமென இதனைக் கூறமுடியாது (படம் 15).

Page 34
அத்தியாயம் 3 தென்கிழக்கு ஆசியாவின் வடிகாலமைப்பு
தென் கிழக்கு ஆசியாவின் ஆறுகளுள் பெரும்பாலானவை சில நூறுமைல்கள் நீளமுடையன. இவற்றேடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஐராவதி, சல்வீன், மெனும், செளபிராயா, மேக்கோங்கு முதலிய ஆறுகள் அதிக நீளமுடையன எனலாம். இந்த நான்கு பிரதான ஆறுகளும் மலையாக்கத் தாக்கத்தாலேற் பட்ட வடிநிலங்களோடு தொடர்புடையன. ஏனைய பாகங்களில் தசைத்தோற்ற வேறுபாடுகள் சிறிய அருவிகள் மட்டுமே தோன்றக் காரணமாயுள்ளன. மேலும் சண்டா மேடையைச் சார்ந்துள்ள பகுதிகள் அண்மைக் காலத்திற் புவி யோட்டு மாற்றங்களுக்குட் பட்டமையால் அப்பகுதிகளில் விருத்தியாயுள்ள ஆறுகள் பெரும்பாலும் இளமைநிலையிற் காணப்படுவதோடு அளவிலும் சிறியன வாய் உள்ளன. ஆனல் மேடைப் பகுதி பொதுவாக முதிர்ச்சிபெற்ற நிலத் தன்மையைக் கொண்டுள்ளது. பழைய நிலத்திணிவாகவிருந்தபொழுதும் புறத்தே காணப்படும் பகுதிகள் குறைவாகவிருத்தலினல் அங்குக் காணப்படும் ஆறுகளும் சிறியனவாய் உள்ளன.
அயனப் பிரதேச ஆறுகளின் தன்மை
இடைவெப்பப் பிரதேச ஆறுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது அயனப் பிரதேச ஆறுகள் பல முக்கியமான பண்புகளைக் கொண்டுள்ளன. அயனப் பிா கேசத்திற் குறித்த ஒர் ஆற்று வடிநிலத்திற் பெறப்படும் நீரின் அளவும், ஆறு கொண்டு செல்லும் நீரின் அளவும் அதையொத்த ஓர் இடைவெப்ப ஆற்றுவடி நிலத்திற் காணப்படுவதிலும் பன்மடங்கு அதிகமாகும். அயனப் பிரதேசத்தில் மழை வீழ்ச்சி அதிகமாகவிருப்பதே இதற்குக் காரணமாகும். அன்றியும் இங்கு மழைவீழ்ச்சி கடுமையாகவும் இருக்கும். பேமாவின் வறண்ட உட்பகுதியிலும் மழைநாள் ஒன்றுக்குச் சராசரியாக 6 அங்குல மழை கிடைக்கின்றது. தென் கிழக்கு ஆசியாவில் அயனக் காற்றுத் திணிவுகள் அதிக அளவு நீரைத் தம் மகத்தே கொண்டுள்ளமையாலும் மேலெழும் காற்றுக்கள் மிக்க வலிமையும் நிலைபேறும் உடையனவாயிருப்பதாலும் யாவாவிலுள்ள பல இடங்கள் நாளொன்றுக்கு 16 அங்குலத்திலும் அதிகமான மழைவீழ்ச்சியைப் பதிவு செய் துள்ளன. இத்தகைய மழைவீழ்ச்சி சடுதியாகச் சிறு பகுதிகளில் மட்டுமே ஏற் படுகின்றது. ஆனல் பொதுப்படையாகப் பார்க்கும் பொழுது பெரிய பகுதிகளே இத்தகைய மழைவீழ்ச்சியைப் பெறுவது புலனுகும். ஆகவே குறித்த ஒரு வடி நிலத்திலுள்ள நீரின் தொகை மிகவதிகமாயும் சிறிது நேரத்தில் கூடிக்குறையு மியல்புடையதாயும் காணப்படுகின்றது.
இப்பிரதேசத்தில் சடுதியாகப் பெருமழைவீழ்ச்சி ஏற்படுவதனுல் நீாரிப்பும் அதிகமாக நிகழுகின்றது. நீர் அதிகமாகவும் வேகமாகவும் ஓடுவதனல் விளை
38

வடிகாலமைப்பு 39
நிலத்தின் மேல்மண் அரிக்கப்படுகின்றது. சில சமயங்களில் குன்றுகளின் ஒரத் தையடுத்துள்ள மண்படைகள் பெயர்ந்து வீழ்வதுண்டு. இத்தகைய விளைவுகளி குல் நீரில் அதிக சேற்றுத் தன்மை காணப்படும். மேலும் ஆறுகள் பொதுவாக முதிர்ச்சி பெருதவையாகவிருப்பதனல் சுமை ஆற்றுநீரால் அதிக அாரத்திற்குக் கொண்டு செல்லப்படும். ஈரப்பருவமும் வறண்ட பருவமும் மாறி மாறி நிகழும் பகுதிகளில் வறட்சியினல் நிலம் எளிதில் வெடித்துவிடும். இதனுல் மேல் மண் சிதைந்து மழை பெய்யத் தொடங்கியதும் நீரால் அரித்துக்கொண்டு செல்லப் படும். நீரின் சுமை அதிகரிப்பதற்கு இது ஒரு காரணமாகும். பேமா, தைலாந்து ஆகிய நாடுகளின் வறண்ட பிரதேசங்கள் மேற்கூறிய நிலைமைகளைக் கொண்டி ருப்பதனுல் மேல் மண் அதிக அளவிற் சிதைவடைகின்றது. தென் கிழக்கு ஆசி யாவில் ஆறுகள் கொண்டு செல்லும் சுமை அதிகமாகவிருப்பதனுல் கழிமுகங் கள் விசாலமாக அமையவும் பொங்குமுகங்களில் அடையல்கள் படியவும் ஏது வாக உள்ளது. சில சமயங்களில் உட்பகுதிகளிலேயே பெருந்தொகையாக வண்டல் முதலியன படிந்துவிடுகின்றன. மேலும் மழைவீழ்ச்சி அதிக அளவிற் சடுதியாக ஏற்படுவதோடு பருவங்களுக்கு ஏற்ப வேறுபட்டும் காணப்படுகின் றது. பேமாவின் மேற் பகுதி, மத்திய தைலாந்து, கிழக்கு யாவா ஆகிய பகுதி களில் அநேக ஆறுகள் பல மாதங்களாக நீரற்று வறண்டு காணப்படும். பின்பு சில மணி நேரத்திலேயே அவை பெருந்தொகையான அளவில் நீரைக்கொண்டு விளங்கும். இதனுல் அவை வட ஆபிரிக்காவிலுள்ள "வாடிகள்" எனப்படும் தாழ்வான பகுதிகளைப் போன்று காட்சியளிக்கும். பருவகால மழைவீழ்ச்சியும் நிலவுருவமும் காரணமாக சில மணி நேரத்திலேயே சல்வின் ஆற்றுநீர்மட்டம் ஐம்பது அடிவரையில் மாற்றமடைகின்றது. ஆற்றில் நீர் பெருந்தொகையாக ஏற்படுவதனுல் உட்பகுதியிலேயே வண்டல்கள் படிகின்றன. பல அருவிகளின் ஒரங்களைச் சார்ந்து மண்டிப்படிவுகள் ஏற்படுகின்றன. அருவிகள் சமநிலத்தில் வந்துவிழும் இடங்களிலும் கிளையாறுகள் இணையும் இடங்களிலும் வண்டல் விசிறிகள் அமைகின்றன.
அயனமண்டலத்தில் ஆமுனது அதன் பல பாகங்களிலும் வேறுபட்ட வடி காற்றன்மையைக் கொண்டிருக்கும் என்பதற்கு ஐராவதி ஓர் உதாரணமாகும். பாமோவிற்கு அண்மையாகவும் மேற்பாகத்திலும் ஐராவதி ஆற்றுமட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மழைவீழ்ச்சி வேறுபாடுகளுக்கு அமையக் காணப் படுகின்றன. அது சிண்ட்வின் ஆறு இணையுமிடத்திற்குக் கீழ், பேமாவின் வறண்ட பிரதேசத்திற்கூடாகச் செல்லும்பொழுது ஆறு கிளையாறுகளிலிருந்து அதிக நீரைப்பெறுவதில்லை. இப்பகுதியில் ஆவியாகல் காரணமாக ஆற்றுநீர் குறைவடைகின்றது. ஐராவதி ஆறு கழிமுகத்தை அடைவதற்கிடையில் 45 சத வீதமான நீர் ஆவியாகல் மூலம் குறைந்து விடுகின்றது என ஸ்டாம்பு என் பார் கணித்துள்ளார். பேமாவின் வறண்ட பிரதேசத்தில் ஆவியாகல் விகிதம் மிகக் குறைவாகும். மழைவீழ்ச்சியிலும் அவை குறைவாக உள்ளன. ஆற்றின் கீழ்ப்பகுதியிற் கழிமுகத்தைச் சார்ந்து மழைவீழ்ச்சி அதிகமாக ஏற்படுகின் றது. பாமோவின் மேலுள்ள பகுதியில் கடுமழை ஏற்பட்டு ஏறத்தாழ ஒருமாத

Page 35
40 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
காலத்தின்பின்பே கழிமுகத்தைச் சார்ந்து ஐராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டாகின்றது. கழிமுகப் பகுதியிற் பெய்த மழை காரணமாகவும் சிறிய அருவிகள் காரணமாகவும் இதற்கு முன்பே இப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்றது. முன்பு ஏற்படும் வெள்ளப்பெருக்கினல் ஐராவதி ஆற்று நீர் தடைப்பட்டுத் தேங்கி நிற்கிறது. ஆற்றுநீர் கொண்டுள்ள மண்டி பற்றி ஸ்டாம்பு என்பாாது கணிப்பு ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இவரது கணிப்பின் படி வருடத்தில் சராசரியாகக் கழிமுகப் பகுதியில் 2,610 இலட்சம் தொன் மண் டியும் மண்டலேயில் 320 இலட்சம் தொன் மண்டியும் காணப்படுகின்றது. ஆகவே மேலதிகமாயுள்ள 2,290 இலட்சம் தொன் மண்டி வறண்ட பிரதேசத்தி லிருந்து பெறப்படுகின்றது. 1,090 இலட்சம் தொன் மண்டி சின்ட்வின் ஆற்றி ஞற் பெறப்படுகின்றது. எஞ்சிய 1,200 இலட்சம் தொன் மண்டி வறண்ட பிர தேசத்தில் ஐராவதியோடு வந்திணையும் சிறிய அருவிகள் மூலம் பெறப்படுகின் றது. சிறிய அகழிகள் போன்ற இந்த அருவிகளில் நீர் அதிக ஏற்றத்தாழ்
வுடையதாய் உள்ளது.
ஆற்றுச் சுமையும் வடிநில அரிப்பும்
காடுகள் அடர்த்தியாகப் பரந்து காணப்படுவதனுல் ஆற்றரிப்பு, ஆற்று நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றம் ஆகியன ஒரளவு குறைவாக உள்ளன. சடுதி யான மழைவீழ்ச்சியினல் ஏற்படும் தாக்கமும் குறைவாகும். மரவேர்களும் செடி களும் நீரை உறிஞ்சித் தடுத்து வைக்கின்றன. அடையல்களைப் பிரிப்பதற்கும் இவை துணையாக உள்ளன. காடுகள் மக்களாற் பாதிக்கப்படாத இயற்கையான நிலைமைகள் காணப்படும் பகுதிகளில் சிறிய அருவிகளும் தெளிவாகக் காணப் படுகின்றன. பயிர்ச்செய்கைக்காகவும் கணிப்பொருள்களை எடுத்தற்காகவும் காடு கள் எரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அருவிகள் அடையல் கலந்துள்ள தெளிவற்ற நீரைக் கொண்டுள்ளன. பயிர்ச்செய்கை, கணிப்பொருளெடுத்தல் முதலிய தொழில்கள் பெருகிவருவதனுல் இந்த நிலைமைகள் இன்று பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உயிர்ப்பெரிமலைகள் உள்ள பகுதிகளிற் சாம்பல் பெருந் தொகையாக வெளிவந்து படிவதுண்டு. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள எரிமலை களிலிருந்து குழம்பிலும் பார்க்கச் சாம்பலே அதிகமாக வெளிவருகின்றது. தாவரங்களற்ற இறுகாத சாம்பற் படிவுகள் எளிதாக அருவிகளினற் கொண்டு செல்லப்பட்டுப் பொங்குமுகப் பகுதிகளிற் படியவிடப்படுகின்றன. எரிமலையி லிருந்து சாம்பல் முதலியன பெருந் தொகையாக வெளியேறும்பொழுது அதற் கண்மையாகவுள்ள ஆறுகளின் சுமை அதிகரிப்பதோடு பொங்குமுகங்களிற் படி தலும் அதிகமாக நிகழுகின்றது. அல்லாமலும் ஆற்றின் கீழ்ப்பாகங்களில் நெற் செய்கைக்காக அமைக்கப்பட்ட நீர்ப்பாய்ச்சற் கால்வாய்கள், வடிகால்கள் முத லியவற்றிலும் அடையல்கள் படிந்துவிடுகின்றன (படம் 19). யாவாவின் சாம் பற் கூம்புச் சாய்வுகள் படிமுறையாக அமைக்கப்பட்டுப் பயிர்கள் விளைவிக்கப் படுவதற்குப் பயிர்ச்செய்கையின் முக்கியத்துவமே காரணமாகும். படிமுறைக் கட்டுக்கள் சாம்பற் படிவுகள் பெயர்ந்து விழாதவாறு தடைசெய்கின்றன. சாம்

வடிகாலமைப்பு 4.
பல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுத் தாழ்நிலங்களிற் படிதலையும் இவை தடை செய்கின்றன. சாம்பல் காரணமாக சோலோ ஆறு சயின் நதியிலும் பார்க்க அறு பது மடங்கு அதிகமான அடையல்களைக் கொண்டு செல்கின்றது எனக் கூறப் படுகின்றது. ஆனல் இந்த ஆறு ரயினிலும் 40 சத வீதமே நீளமுடையது.
ஆறுகள் அதிக சுமையைக் கொண்டுசெல்வதனல் வடிநிலம் படிப்படியாகத் தாழ்ந்துசெல்கின்றது. வடிநிலத்தின் கீழ்ப்பாகத்தில் அடையல்கள் ஓரளவுக்குப் படிந்தபொழுதும் பொதுவாக வடிநிலம் தாழ்வாகவே அமைகின்றது. ஏனைய பகுதிகளிலும் பார்க்க அயனப் பிரதேசத்தில் வடிநிலம் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றது. சிண்ட்வின் ஆற்றரிப்பினுல் அதன் வடிநிலம் வருடத்தில் .78 மி. மீ. தாழ்வடைகின்றது. புரோமிற்கு மேலுள்ள பாகத்தில் ஐராவதி ஆற்றரிப்புக் காரணமாக வடிநிலம் வருடத்தில் 52 மி.மீ. தாழ்வடைகின்றது. யாவாவில் லோசி ஆற்றினுல் வடிநிலம் 87 மி.மீ. தாழ்வடைகின்றது. யாவாவிலுள்ள சிறிய ஆறுகளைக் கொண்ட சில வடிநிலங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வரு டத்தில் 3 மி.மீ. வரை இவ்வடிநிலங்களிற் சிதைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படு கின்றது. இவற்முேடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது டானியூப், மார்ண் ஆறுக ளின் வடிநிலங்கள் அதிக சிதைவுக்குட்படுவதில்லை என்பது தெளிவு. டானியூப் வடிநிலத்தின் சிதைவு விகிதம் வருடத்தில் .006 மி.மீ. ஆகவும் மார்ண் ஆற்று வடிநிலத்தின் சிதைவு விகிதம் .005 மி.மீ. ஆகவும் உள்ளன. **
தென் கிழக்கு ஆசியா மலையாக்கத் தன்மை, வடிகாலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நிலையற்ற ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. இப்பகுதி யில் ஆற்றரிப்பு இடைவெப்பப் பகுதியிலும் பார்க்க விரைவாக நிகழுகின்றது. அதற்கேற்ப அடையல்களும் அதிகமாகப் படிகின்றன. இத்தன்மைகள் சண்டா மேடையைச் சூழவுள்ள நிலையற்ற வலயத்திற் காணப்படுகின்றன. ஆனல் சண் டாமேடை காலத்தால் மிகப் பழையதும் நிலையானதுமான ஒரு பகுதியாகும். ஆற்றரிப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. நீடிய காலம் ஆற்றரிப்பு நிகழ்ந்துள்ள தனுல் ஓரளவு முதிர்ச்சி பெற்ற ஆறரித்த சமநிலைத்தன்மையை இங்குக் காண லாம். கண்டத்தோடு சார்ந்த மேடையின் மத்தியில் மலாயா அமைந்துள்ளது. ஆற்றரிப்பும் மலாயாவில் நீண்ட காலமாக நிகழ்ந்து வந்துள்ளது. வேகமான ஆறுகள் தொடர்பாக இப்பகுதியைப் பாதித்து வந்துள்ளன. மலாயாவில் அகன்ற வண்டற் சமநிலங்கள் காணப்படுகின்றன. இவற்றையடுத்துக் குன்று கள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. அவ்வாறிருந்தபொழுதும் சாதாரண ஆற் றரிப்பாலேற்பட்ட தன்மைகளும் அநேகமாக உண்டு. மலாயாவின் ஆறுகள் விரைவோட்டப் பகுதிகளையும் கொண்டுள்ளன. ஆறுகளின் நீள்முகத்தோற்றம் பல படிகளிற் சீரற்றும் காணப்படுகின்றது. பாறைப்படைகள் சரிந்துள்ள பகுதிகளில் அளியடைப்பு வடிகாலமைப்பு உண்டு (படம் 32). ஆறுகள் முதிர்ச்சி பெற்றுள்ள நிலையிலும் ஆற்றுச்சிறை நிகழ்வதுண்டு. பேரா ஆற்றின் மேற் பாகம் முவார் ஆற்ருற் சிறைப்படுத்தப்பட்டுள்ளது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. (படம் 16). சண்டாமேடையின் பிரதான பாகத்தில் ஏரிகள் குறைவாக உள் ளன. இத்தன்மை ஆற்றரிப்பால் ஏற்பட்ட முதிர்ச்சிநிலையை ஒரளவுக்குப் பிரதி

Page 36
42 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
காட்டு நிலம் 소 은 150 அடிக்குமேல்
அடர்சேறும் குளங்களும்
ε0οιρώύ.
படம் 16. மத்திய மலாயாவில் ஆற்றுச்சிறை. பேசா ஆற்றின் மேற்பாகம் முவார் ஆற்றின் கிளையான பாலோங்கினற் சிறைப்படுத்தப்பட்டுள்ளது
பலிக்கின்றது. அயனப்பகுதியில் தாவரங்கள் ஏரிகளைச் சார்ந்து பரவுவதனுலும் வண்டல்படிந்து ஏரிகள் தூர்ந்துவிடுகின்றன. மலாயாவிலுள்ள போா ஏரி உண் மையில் ஒரு பெரிய அடர்சேற்றுப் பகுதியாகும். காலத்திற்குக் காலம் இங்கு நீர் தேங்கி நிற்கும். இந்தோசீனவிலுள்ள தொன்லேசப் ஏரியும் படிப்படியாகத்
 

வடிகாலமைப்பு 43
அளர்ந்து ஓர் அடர்சேற்றுப்பகுதியாக மாறிவருகின்றது. அடர்சேற்றுத் தன்மை பருவகாலத்திற்கு ஏற்ப வேறுபடுகின்றது. இத்தகைய அடர்சேற்று ஏரிகள் போணியோ, சான் மேட்டுநிலம் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
பனிக்கட்டியாற்றுக் காலமும் தென்கிழக்கு ஆசிய வடிகாலமைப்பும்
தென் கிழக்கு ஆசியாவில் சண்டாமேடையைச் சூழவுள்ள பகுதிகளில் ஆறு களிற் காணப்படும் வேறுபாடுகள் யாவும் புவியோட்டுச் சிதைவினலும் நீரரிப்பி ஞலும் ஏற்பட்டவையாகும். ஆனல் சண்டாமேடையிலுள்ள ஆறுகள் அண்மைக் காலத்தில் கடல் நீர் உட்புகுவதனுலும் பாதிக்கப்பட்டுள்ளன. சண்டாமேடை ஒரு நிலையான பகுதி எனக் கருதப்படுகின்றது. இம்மேடை சற்றே தாழ்ந்திருத் தல் வேண்டும் எனவும் நம்பப்படுகின்றது. சண்டாமேடைக் கடலின் சீரான ஆழம், கடலிற் படிந்துள்ள பொருள்கள், கடல் மேடையிலுள்ள முதிர்ச்சிபெற்ற ஆற்றுப் பள்ளத்தாக்குக்கள் ஆகியன கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்ற கருத் கிற்குச் சாதகமாக உள்ளன. கடைசிப் பனிக்கட்டியாற்றுக்கால இறுதியில் வட அகலக் கோட்டுப் பகுதிகளிற் காணப்பட்ட பனிக்கட்டிப் படலங்கள் உருகியத னல் இக்கடல் மட்ட உயர்ச்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். 25,000 வருடங்க ளுக்கு முன்பு ஸ்கந்தினேவியாவில் பனிக்கட்டியாற்று நிகழ்ச்சி இறுதியாக ஏற் பட்டது என டீகியர் கணித்துள்ளார். அப்பொழுது அதிக அளவு கடல்நீர் பனிக்கட்டியாக மாறியது. இதனுற் கடல் மட்டம் தாழ நேரிட்டது. மத்திய கோட்டுப் பகுதியிற் கடல் மட்டம் (இன்றைய நிலையோடு ஒப்பிடும்பொழுது) 250 அடிமுதல் 300 அடி வரை தாழ்ந்திருத்தல் வேண்டும் என டேலி என்பார் கருதுகின்ருர். சண்டாமேடைக் கடலின் சராசரி ஆழம் 180 அடியாகும். டேலி யின் கணிப்பின்படி சண்டாமேடை முழுவதும் கடல்மட்டத்திற்குமேல் காணப் பட்டிருத்தலோடு வடிகால் முறைகளும் விருத்திபெற்றிருத்தல் வேண்டும். சண்டாமேடைப் பகுதியிலுள்ள வடிகால்கள் இரண்டு ஆற்றுத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டன எனவும், அவற்றுள் ஒன்று சிங்கப்பூர்ப் பகுதி யிலிருந்து வடகிழக்காக ஓடியது எனவும் மற்றையது யாவாக் கடலுக்கூடாகக் கிழக்கு நோக்கி ஓடியது எனவும் மொலன் கிராவ் என்பார் (படம் 18) கருது கின்ருர், சுமாத்திராவிலுள்ள மூசியாற்று மீனுக்கும் போணியோவிலுள்ள காப் புவாஸ் ஆற்று மீனுக்குமுள்ள ஒருமைப்பாடு இதற்கு ஆதாரமாகக் கொள்ளப் படுகின்றது. பனிக்கட்டியாற்றுக் காலத்திலேற்பட்ட விளைவோடு இது தொடர் புடையது எனவும் கூறுவர். வட அகலக்கோட்டுப் பகுதிகளில் பணிக்கட்டியாற் றுத் தாக்கம் பல தடவைகளில் (குன்ஸ், மின்டெல், ரிஸ், வூம் பனிக்கட்டியாற் றத் தாக்கங்கள்) ஏற்பட்டது. இத்தாக்கங்களால் குறைந்தது நான்கு தடவை களில் சண்டாமேடைக் கடலில் நீர் குறைந்தது எனவும், இந்த நான்கு தடவை களில் சண்டாமேடைக் கடற்றளம் நீர்மட்டத்திற்கு மேற் காணப்பட்டது என வும், சாதாரண நீரரிப்பினுற் பாதிக்கப்பட்டது எனவும் இவர் கருதுகின்ருர்,
ஆற்று விருத்தியின் அண்மைக்கால வரலாற்றைப் பொறுத்தவரையில் குறிப் பிடத்தக்கது காலத்திற்குக் காலம் கடல்மட்டம் தாழ்ந்து வந்ததாகும். இச
5-CP 4217 (68/9)

Page 37
44 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
ணுல் சண்டாமேடைப் பகுதியிலுள்ள ஆறுகளின் அரிப்பு நிலைகள் மேலும் தாழ்ச் சியுற நேரிட்டது. தென்கிழக்கு ஆசியாவின் ஆறுகள் நான்கு முறைகள் புத்துயிர்ச்சி பெற்றுள்ளன எனக் கொள்ளுதல் வேண்டும். ஆற்றரிப்புப் படிப் படியாகக் குறைந்து முதிர்ச்சிபெற்ற காலங்களில் கடல்மட்டத்தில் உயர்ச்சியும் காணப்பட்டது (படம் 17). உலகப் பனிக்கட்டிக் காலங்களில் வேறுபாடு காணப்பட்டபொழுதும் அவை அதிகமாக ஏற்பட்ட காலங்களைப் பொறுத்த
தென்கிழக்கு ஆசியாவில் ஆற்றின் அசா தாரண குழிவுப் பக்கப் பார்வை அமையுமாறு
சாதாரண ஆற்றுப் பக்கப் பார்வை
கடல் மட்ட உயர்ச்சியினலும் அடையற் படிவினலும் உண்டான ஆற்றின் பக்கப் பார்வை
படம் 17. சண்டாமேடையிலுள்ளவற்றை யொத்த தளத்திடைக் குன்றுகள், குழிவு நீள்
முகத் தோற்றம் முதலியன அமையுமாற்றை விளக்கும் படம்
வரையில் முரண்பாடு அதிகமாக இல்லை. மத்தியகோட்டுப் பகுதியின் இன்றைய கடல் மட்டம் பனிக்கட்டிக் காலங்களுக்கிடையிற் காணப்பட்ட அரிப்பு மட்ட fi&60)u ஏறத்தாழ ஒத்துள்ளது எனலாம். பழைய காலத்தில் கடல்மட்டம் இன்றைய கடல்மட்ட நிலையிலிருந்து நூறு அடிக்கு மேலாக உயர்ந்திருக்கமாட் டாது எனக்கோடலே பொருந்தும். ஆகவே கடல்மட்டத்தில் ஏற்பட்ட வேறு பாடு மிகக் குறைவு என்றே கருதல் வேண்டும். ஆகவே கடந்த பத்து இலட்ச வருடக் காலத்தில் சண்டாமேடைமீது கடல்மட்டம் இன்றைய கடல் மட்ட நிலையிலும் நூறு அடி உயரமாக இருந்தது என்ற கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடி யதாய் இல்லை.
தென் கிழக்கு ஆசியாவில் பழைய பாறைகளைக்கொண்ட பகுதிகளில் ஆற் றரிப்பாலுண்டான நிலவுருவங்கள் அண்மையில் கடல்மட்ட உயர்ச்சியைப் பொறுத்தும் அமைந்துள்ளன. ஐரோப்பா, வட அமெரிக்கா முதலிய பகுதிக ளில் நிலம் மேலெழுவதனல் நிலவுருவங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட கடல்மட்ட உயர்ச்சியினுலுண்டான விளைவுகள் பின்வருமாறு :-
 
 
 
 
 
 

வடிகாலமைப்பு 45
(அ) ஆற்றரிப்பாலேற்பட்ட அடித்தரைமட்ட உயர்ச்சி; (ஆ) தற்போதைய அருவிகளில் கீழ்நோக்கி அரித்தல் குறைவடைதல்; (இ) ஆறுகளின் சுமை கொண்டு செல்லும் தன்மை குறைவடைதலும் அவற்
றின் மேற்பாகங்களில் அடையல்கள் அதிகமாகப் படிதலும்; (fF) ஆழமற்ற கடற்கரையும் கடற்கரைப் է 1ւգ-6վ அதிகரித்தலும்; (உ) நீர்ப்பெருக்கினல் கரையைச் சார்ந்து குடாக்கள் அமைய ஆறுகள் துண்டிக்கப்படுதல் (மொலன்கிராவின் விளக்கத்தைப் பார்க்க). (ஊ) ஆற்றுப் பொங்குமுகங்களில் விரைவாகப் படிதல் ஏற்படுவதனுல் கீழ்ப் பாகங்கள் அசாதாரணமான முறையில் தட்டையாக அமைய மேற்பா கங்கள் பெரும்பாலும் குத்தான தன்மையைக் கொண்டிருக்கும். இத ஞல் "உட்குழிந்த நீள்முகத் தோற்றம்' ஏற்படுகின்றது. இங்குக் குழி வுத் தன்மை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவிலுள்ள ஆறுகள் நெளிவு களுள்ள குவிவான நீள்முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளன (படம் 17). (எ) தளத்திடைக் குன்றுகளை யொத்த மலைகள் தாழ்வான வண்டற் சம
நிலத்தில் சிறு தீவுகள் போன்று காணப்படுதல். d பனிக்கட்டியாற்றுக் காலத்தில் தாழ்வான அடித்தளமட்டம் உண்டாகுமாறு கீழ்நோக்கி வெட்டுதலே பெரும்பாலும் நிகழுகின்றது. இதனல் ஆற்றின்"மேற் பாகங்களில் பல நிலைகளில் தளங்கள் உண்டாகின்றன. சண்டாமேடை இக்கா லத்தின் பின்பு அதிகவளவுக்கு வானிலேயழிவால் பாதிக்கப்பட்டுள்ளதனுல் இத் தகைய விளைவுகளைத் தெளிவாக ஆராய்தல் கடினமாக உள்ளது. பனிக்கட்டி யாற்றுக் காலத்தில் மேற்குறித்த தளங்கள் அமைந்திருந்தாலும் இப்பகுதியி அலுள்ள அடர்த்தியான தாவரங்கள் காரணமாக அவற்றைப் பார்த்தறிதல் கடின மாகும். மலாயாவிலுள்ள ஆறுகளின் மேற்பாகங்களிற் காணப்பட்ட இத்தகைய சில தளங்களை ரிச்சாட்சன், ஸ்கிரிவெனுெர் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
நீரில் அமிழ்ந்திய வரலாற்றை நோக்கும் பொழுது சண்டாமேடையில் நீள் குடாக்கள் ஏன் அமையவில்லை எனத்தோன்றும், ஆறுகள் மூலம் கொண்டு வந்து படியவிடப்பட்ட பெருந்தொகையான அடையல்களும், மென்மையான சரளைமண் நிலமுமே இதற்குக் காரணமாகும். உயர்ந்து வரும் கடல்நீரினல் இந் நிலம் எளிதிற் சிதைந்து விடுகின்றது.
தென் கிழக்கு ஆசியாவில் பனிக்கட்டியாற்றுக் காலங்களில் ஏற்பட்ட சிறு விளைவும் உண்டு. பனிக்கட்டியாற்றுக் காலங்களில் வடபேமாவில் 9,000 அடிவரை யில் மழைப்பனிக்கோடு கீழ்த்தாழ்ந்து காணப்பட்டது என வைஸ்மன் கணித் துள்ளார். இன்றுள்ள நிலையோடு ஒப்பிடும்பொழுது மழைப்பனிக்கோடு ஏறக் தாழ 3,500 அடி கீழ்த்தாழ்ந்து காணப்பட்டது. பனிக்கட்டியாற்றுத் தாக்கத் தின் மிகக்கூடிய நிலையில் தென்கிழக்கு ஆசியா எங்கும் நிலைமை ஏறத்தாழ இவ்வாறே இருந்திருத்தல் வேண்டும். மத்திய கோட்டு வலயத்தில் மழைப்

Page 38
46 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
y 60) foG)
: 6 Soo .
உஇறு? - இன்றைய ஆறுகள் =
Eழ- அமிழ்ந்திய ஆறுகள் .
முண்டயல் வடிகாற் போக்கு . لسیاسی است
படம் 18. தென் கிழக்கு ஆசியாவின் வடிகால்களும் ஆழமற்ற கடல்களும். இன்று 200 அடிக்குக் குறைந்த ஆழத்தையுடைய கடல்கள் பனிக்கட்டியாற்றுக் காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருத்தல் வேண்டும்
 
 
 

வடிகாலமைப்பு 47
பனிக்கோடு இன்று 16,000 அடி உயரத்திற் காணப்படுகின்றது. இவ்வலயத்தி துள்ள போணியோ, யாவா, சுமாத்திசா, மலாயா முதலியவற்றின் மலையுச்சி கள் இம்மழைப்பனிக் கோட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கறமுடியாது. மலைப்பனிக்கட்டியாற்றுத் தாக்கம் பற்றிக் கூறவேண்டியதில்லை.
உ1981 இல் கடற்கரை 07دقیمتهمth به نام || 5 || 14 dس - - -1877 இல கடற்கரை
ecos
す
•, '^{•့်နျ
படம் 19, சீமானுக் ஆற்றுமுகத்தையடுத்து உண்டான கடற்கரை மாற்றங்கள். அடையல்கள் படிந்தமையால் யாவாக் கரையில் விரைவாக ஏற்பட்ட மாற்றங்கள்
இப்பகுதிகளின் நிலவுருவங்கள் பனிக்கட்டியாற்றுத் தாக்கத்தால் அமைந்தன எனப்படும் விளக்கத்திற்கு முற்றிலும் முரணுகப் பல சான்றுகள் இங்கே காணப்படலாம்.
அடையல்கொள்ளல்
ஆறுகள் அதிகவளவு சுமையைக் கொண்டிருப்பதும், ஆறுகளின் கொண்டு செல்லுஞ் சத்தி படிப்படியாகக் குறைவடைதலும், கண்டமேடை வலயத்தை யடுத்துக் கடல் ஆழமற்றிருப்பதும், பொங்குமுகங்கள், கடற்கரைகள் ஆகிய பகுதிகளில் விரைவாக அடையல்கள் படியக் காரணமாக உள்ளன. அடையல் கள் படிதலினுலேற்பட்ட மாற்றங்களை நிலவுருவங்கள், வடிகாலமைப்புக்கள் ஆகியவற்றிற் காணலாம். மேடைப் பகுதியில் கடலைச்சார்ந்து அதிகவளவுக் குப் படிதல் ஏற்பட்டுவருகின்றது. யாவாவின் சீமானூக் (படம் 19), சோலோ என்னும் ஆறுகளின் கழிமுகங்கள் வருடத்தில் 100 மீற்றர் விகிதத்தில், வளர்ந்து வருகின்றன. மேக்கோங்குக் கழிமுகம் வருடத்தில் 60-80 மீற்றர் வரை வளருகின்றது. எரிமலைத் தாக்கம் ஏற்படும்பொழுது பெருந்தொகையான

Page 39
48 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
சாம்பற் படிவுகள் வெளிவருகின்றன. இவை ஆற்றினுற் கொண்டுசெல்லப்பட் டுக் கரையோரங்களிற் படியவிடப்படுகின்றன. கடற்கரையில் இவை சீராகப் படிதற்குக் கடல் நீரோட்டமும் காரணமாகும். அடையல்கள் படிதலாலுண் டான மணற்கரைகளில் மாங்குரோவுச் செடிகளும் பிறவும் விரைவாகப் பரந்து விடுகின்றன. பேராக் ஆற்றுமுகத்தில் நீர் குறைவாகவுள்ள பருவத்தில் சில நாட்களிலேயே தாவரங்கள் பரந்துவிடுகின்றன. தாவரங்கள் பரவிவிடுவதனல் ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டு அடையல் படிதல் மேலும் அதிகமாக நிகழுகின் றது. இதன் காரணமாக மணற்கரை படிப்படியாக விருத்திபெற வாய்ப்பு ஏற் படுகிறது. தாவரவளர்ச்சி ஏற்படாதவிடத்து நீர்ப்பெருக்கு ஏற்படும் பருவத் தில் மணற்கரை நீசரிப்பினுல் எளிதாக அரித்துச் செல்லப்பட்டுவிடலாம்.
ஆழமான கடற்பகுதியில் வந்துவிழும் ஆறுகளினல் மணற்கரை ஏற்படுவது அரிதாகும். ஆழமான கடற்பகுதியில் பெருந்தொகையான அளவில் அடையல் கள் படிதல் வேண்டும். அவ்வாறிருந்தபொழுதும் ஐராவதிக் கழிமுகப் பகுதி வருடத்தில் 60 மீற்றர் வீதம் பரந்துவருகின்றது. ஆழமான கடற்பகுதியில் இந்த வீதத்தில் கரை வளர்ச்சியேற்பட ஐராவதி ஆறு கொண்டுவந்து படிய விடப்படும் பெருந்தொகையான அடையல்களே காரணமாகும். பெளதிக நிலை மையும் அடையல்கள் கழிமுகத்தின்மீது படியாது அதன் புறவோரத்தே படி யத் துணைசெய்கின்றது (9 ஆம் அத்தியாயத்தைப் பார்க்க).
ஆறுகள் அடையல்களைக் கொண்டுவந்து அவற்றின் கீழ்ப்பகுதிகளிற் படிய விடுதலினல் அவை படிப்படியாக மேலே உயர்ந்துவிடுகின்றன. மேலுயர்ச்சி நீடித்து நிகழமாட்டாது. ஏனெனில், ஓர் ஆற்றின் கீழ்ப்பாகம் சூழவுள்ள நில மட்டத்திலும் பார்க்க மேலே உயர்ந்துவிடும்பொழுது அவ்வாற்றின் போக்கு மாறிவிடுகின்றது. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள ஆற்றுக் கழிமுகங்கள் கிளை யாறுகளின் போக்கு அடிக்கடி மாற்றமடைந்ததனுல் அமைந்தன என்பத னைக் காட்டுகின்றன. பல நிலைகளில் மாற்றம் பெற்ற பழைய கால்வாய்களையும் கிளையாறுகளையும் ஏறத்தாழ எல்லா ஆற்றுமுகங்களிலும் காணலாம். பல கழி முகங்கள் வருடத்தில் பல தடவை நீரில் அமிழ்ந்துவிடுகின்றன. இது நெற்செய் கைக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது. நெற்செய்கைக்கு இயற்கையான வெள்ளப்பெருக்கோ செயற்கை முறையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கோ அவ சியமாகும். நீர் பெரும்பாலும் ஆறுகளிலிருந்தே பெறப்படுகின்றது. கழிமுகப் பகுதி எங்கணும் அடையல்கள் படிவதற்குக் கிளையாறுகள் இடம்பெயர்ந்து ஓடுவதும் பருவந்தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் காரணம் எனலாம். இங்ங்னம் அடையல்கள் படிதலினல் கழிமுகம் முழுவதுமே படிப்படியாக மேலுயர்ந்துவிடுகின்றது. இதனற் கழிமுகத்தின் உட்பகுதியிலுள்ள சற்றே உயரமான நிலத்திற்கு நீர்பாய்ச்சுதல் கடினமாகவுள்ளது. காலஞ்செல்லச் செல்ல நீர் கீழ்நோக்கி எளிதாக வடிந்தோடத் தொடங்குகின்றது. கீழ்ப் பகு தியிற்முன் வளங்குன்ருத புதிய மண்வகைகள் காணப்படுகின்றன.

வடிகாலமைப்பு
926 இல் வெள்ளப்
பெருக்கு
படம் 20. லீப்பிஸ்-பாகாங்கு ஆறுகள் சேருமிடத்திலுள்ள வெள்ளப்பெருக்கு வலயம்
49

Page 40
50 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
சேற்று நிலமும் சதுப்பு நிலமும்
சண்டாமேடையிற் சென்றுவிழும் ஆறுகளைக் கொண்ட நிலப்பகுதிகளின் ஓரங்களைச் சார்ந்து சேற்றுநிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. கிழக் குச் சுமாத்திரா இதற்கொரு சிறந்த உதாரணமாகும். ஆழமற்ற கடற்பகுதி யில் ஆறுகள் நீண்டகாலமாக அடையல்களைக் கொண்டுவந்து படியவிட்டத னல் சேற்றுநிலம் அமைந்துள்ளது. கரையைச் சார்ந்து காணப்படும் இச் சேற்றுநிலம் குறைந்தது 60,000 சதுரமைல் பரப்புடையது. இத்தொகை சுமாத்திராவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றிலொரு பகுதியாகும். மத்திய கோட்டுப் பகுதியிற் பெருந்தொகையான அளவில் அடையல்கள் படிவதனு லேற்படக்கூடிய விளைவினை இது தெற்றெனக் காட்டுகின்றது. சுமாத்திராவின் உட்பகுதியில் வரலாற்றுக் காலத்தில் (கி. பி. 1000 வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு நூற்றண்டு முன்பு நிகழ்ந்திருக்கலாம்) நிகழ்ந்த எரிமலைத்தாக்கமும் இச் சேற்றுநிலம் அமையத் துணையாகவிருந்திருக்கலாம். இங்கு ஆழமற்ற மலாக் காத் தொடுகடல் காணப்படுவதும் ஒரு சாதகமான நிலையாகும். சுமாத்திரா வின் கரையோரத்திலும் பார்க்கத் தொடுகடலின் கிழக்குப் பகுதியிலேயே வற் றப்பெருக்குச் சிதைவு ஏற்படுகின்றது. இதுவும் சேற்றுநிலம் அமைய வாய்ப் பாயிருந்தது.
கிழக்குச் சுமாத்திராவுக்கு அப்பால் தட்டையான அகன்ற தீவுகள் பல அமைந்துள்ளன. அவை காலத்திற்குக் காலம் வற்றுப் பெருக்கு விளைவுகளி னல் நீரில் அமிழ்ந்திவிடுகின்றன. அவை சில காலம் நீரின் கீழும் சில காலம் நீரின் மேலும் காணப்படும் தீவுகளாக உள்ளன. மேலும் வரலாறு சம்பந்த மான இடப்பெயர்களை அவற்றின் உண்மையான இடங்கள், குடியிருப்புக்கள் ஆகியவற்றேடு தொடர்புபடுத்தி ஆராயும்பொழுது, அடையல்கள் படிதல் மாற்றமடைதல் ஆகிய முறைகள் எத்துணைவேகமாக நிகழுகின்றன என்பதை யும் மனத்திற்கொள்ளுதல் பொருத்தமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கீழைத்தேசப் பிரயாணிகள் கிழக்குச் சுமாத்திராவிற் காணப்பட்ட பேரரசுப் பகுதிகள் வீழ்ச்சியடைந்தமை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கடற்கரையோரங் களிலேற்பட்ட மாற்றங்களும் பழைய இடங்களுக்கிருந்த மதிப்புக் கெட்டு விட்டதுமே இவ்வீழ்ச்சிக்குக் காரணமெனக் கொள்ளுதல் பொருந்தும்.
வெள்ளப்பெருக்கு தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பழைய வடிகால் முறைகளை ஆராயுங்கால் உள்நாட்டிலுள்ள பெரிய சதுப்பு நிலங்கள் பற்றியும் குறிப்பிடுதல் வேண்டும். மலாயா, போணியோ முதலிய பகுதிகளில் இத்தகைய சதுப்பு நிலங்கள் உண்டு. சதுப்பு நிலங்களமையப் பல காரணங்கள் துணையாக உள்ளன.
(அ) மழை மிகவதிகமாகப் பெய்வதனல் ஆறுகள் கொண்டு செல்லத்தக்க நீர், நிலம் உறிஞ்சக்கூடிய நீர் ஆகியவற்றிலும் பார்க்க அதிகமான வளவு நீர் சில மணி நேரத்தில் ஏற்பட்டுவிடுதல் ;

வடிகாலமைப்பு 5.
(ஆ) அடர்த்தியான தாவரத்தினல் நீரோட்டம் தடைப்படுதல்;
(இ) மழைவீழ்ச்சி எங்கும் ஒரேயளவாகவில்லாமையால் சில ஆறுகள் அதிக நீரைப் பெற, ஏனைய குறைந்தவளவு நீரைக் கொண்டிருக்கும். அதிக நீரைக்கொண்ட ஆருென்று நீர் குறைவாயுள்ள ஆற்ருேடு இணையும் பொழுது (படம் 20) நீர் கூடிய ஆறு Éir குறைந்த ஆற்றினுள்ளும் பாய்ந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றது; சில சமயங்களில் நீர் குறைவாயுள்ள ஆற்றிற்குக் குறுக்கே மண்டியணைகளையும் உண் டாக்கிவிடுகின்றது. இவ்வாறு ஏற்படும் மேக்கோங்கு ஆற்றுப்பெருக் கால் தொன்லேசப் சேற்றுநிலம் பாதிக்கப்படுதல் நோக்கற்பாலது ;
(ஈ) வடிகால் முறைகளில் இடுக்குக்கள் (மலாயாவிலுள்ள ஆறுகளிற் போன்று), அல்லது அவைபோன்ற ஒடுக்கப்பகுதிகள் (ஐராவதி ஆற் றிற் போன்று) காணப்படும்பொழுது அவற்றிற்கு மேலுள்ள பள் ளத்தாக்குக்களில் நீர்ப் பெருக்கு ஏற்படலாம். மலாயாவிலுள்ள தாசெக் போாவில் பகாங்குப் பள்ளத்தாக்கிலுள்ள இடுக்குக்கள் காரணமாகவே வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது;
(d) உயரணைகள் அமையும்பொழுது அவ்வணைகளுக்கும் அடிக்குன்று களுக்குமிடையிலுள்ள பகுதியிலிருந்து நீர் ஆற்றை நோக்கிக் கீழ் வடிந்து ஓடுவது தடைப்படுகின்றது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுதும் சடுதியாகப் பெருமழைவீழ்ச்சி ஏற்படும்பொழுதும் இதன் விளைவு மேலுமதிகமாக உள்ளது. இதனுல் உயரணைகளைச் சார்ந்து உட்பகுதியில் நன்னீர்ச் சேற்றுநிலங்கள் பரந்து காணப்படுகின்றன. இவை தைலாந்தின் கோராத் மேட்டுநிலத்திற்குக் குறுக்கே ஆறுகள் அமைந்துள்ள முறையினை ஒத்துள்ளன (படம் 90);
(ஊ) ஆறுகளின் பிற பகுதிகளிலிருந்து நீர் பெருகிவரும் காலத்தில் குறித்த பகுதிகளில் மழைப்பருவம் காணப்பட்டால் மழைநீர் முழுவதும் நிலத்திலிருந்து வெளியே ஓடமுடியாத நில் ஏற்படுகிறது. இதனுற் சேற்றுநிலங்கள் உண்டாகின்றன.
நன்னீர்ச் சேற்றுநிலங்கள் பருவத்திற்குப் பருவம் நீரில் அமிழ்ந்துகின்றன. பின்பு படிப்படியாக ஆற்றில் நீர் குறையும்பொழுது அவை வறண்டுவிடுகின் றன. மழைப்பருவங்களில் வெள்ளப்பெருக்கு பத்து அடிவரை ஏற்படுவதுண்டு.
சிலவகையான சதுப்பு நிலங்கள் மக்களின் நடவடிக்கைகளால் உண்டாகின் றன. வண்டற் பகுதிகளில் கணிப்பொருள் எடுப்பதற்காகப் பம்பிகள் வாரி யெடுக்குங் கருவிகள் முதலியன பயன்படுத்தப்படுகின்றன. இதனுல் அடையல் கள் நீரோடு கலந்து ஓடி ஆங்காங்கே படிகின்றன (படம்21). இவ்வடையல்கள் பயிர்ச்செய்கைக்கு உவந்தனவல்ல. நெல் வயல்களிலுள்ள பள்ளங்கள் வாய்க் கால்கள் முதலியவற்றில் அடையல்கள் படிவதனுல் அவை மேடாகிவிடுகின்றன. ஆற்றுமட்டமும் எதிர்பாராதவளவுக்கு உயர்ந்துவிடுகின்றது. (மலாயாவில் செரெண்மா என்னுமிடத்தில் 1923-33 காலப்பகுதியில் அடையல் படிந்ததனுல்

Page 41
52 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
ஆற்றுமட்டம் 21 அடியாக உயர்ந் தது). மண்டி முதலியன வயல் களில் பரவிவிடுவதனல் பயிர்ச் செய்கையும் பாதிக்கப்படுகின் l • ஆற்றுமட்டம் உயர்ந்துவிடுیگAIO வகளுல் அடையல்கள் படிதலைத் தடைசெய்வதும் கடினமாக உள் ளது. இந்நிலைமை ஏற்படும் பொழுது பயிர்ச்செய்கையிலி ருந்து பெறப்படும் வருவாய் குறைகின்றது. ஆகவே வயல்கள் படிப்படியாகக் கைவிடப்படுகின் றன. சதுப்பு நிலத்தாவரங்கள் அந்நிலங்களிற் பரந்துவிடுகின் றன. மலாக்கா ஆற்றின் கீழ்ப் பாகத்தைச் சார்ந்துள்ள சதுப்பு நிலங்களில் சதுப்புநிலத் தாவ ாங்கள் அடர்த்தியாகக் காணப் படுகின்றன. அங்குப் பழைய வயல் களின் வரம்புகள் இடையிடையே காணப்படுகின்றன. ஆற்றின் மேற்பாகங்களில் நடைபெற்ற கணிப்பொருள் எடுக்குந் தொழில் காரணமாகக் கீழ்ப் பாகங்களில் வந்து படிந்த அடையல்களே ஆங்குப் பயிர்ச்செய்கை முற்முக அற்றுப்போவதற்குக் 56ðMTL Ni* கு கும். இத்தகைய சதுப்புநிலங்கள் படிப்படியாகவே உண்டாகின் றன. இவற்றைப் பார்க்கும் பொழுது பயிர்ச் செய்கைக்காக மக்கள் எடுக்கும் முயற்சிகளை இயற்கையே தடை செய்வது போன்று தோன்றுகின்றது. ஆனல் உண்மையில் மக்க ளால் ஏற்படும் நீாரிப்பும் தேய் வுமே இதற்குக் காரணமாகும். கணிப்பொருள் எடுத்தல் காடு
படம் 21, பென்டொங்கு ஆற்றுப் பள்ளத்
தாக்கிற்குக் குறுக்கே வண்டல் விசிறிகள் களையழித்தல் முதலிய தொழில்
 

வடிகாலமைப்பு 53
முறைகளால் நீண்டகாலமாக உறுதிபெற்றுக் காணப்பட்ட நிலப்பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. கணிப்பொருள் எடுக்கும் பகுதிகளிலிருந்தும் கடுமழை காரணமாகக் காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் மண்டி, பால் முதலிய பொருள்கள் கொண்டு செல்லப்பட்டுக் களைநீக்கப்பட்ட சிறந்த விளை நிலங்களிற் படியவிடப்படுகின்றன. இதனுற் பயிர்ச்செய்கை அற்றுப்போவதோடு, படிதலேற் பட்ட இடங்கள் சேற்றுநிலங்களாகவும் மாறிவிடுகின்றன.
மக்களுக்கு அதிகம் பயன்படத்தக்க பகுதிகளிலேயே இத்தகைய சேற்றுநிலங் கள் உண்டாகின்றன. அதாவது, பயிர்ச்செய்கை விருத்திக்கு ஏற்ற தட்டை பான நிலங்கள், பிறநாட்டுக் குடியிருப்பு ஏற்படத்தக்க கரையோரங்கள் ஆகிய னவே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. ஆகவே தென் கிழக்கு ஆசியாவின் மக்கட்பாம்பல் இத்தகைய நிலைமைகளினற் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. கடற்கரையோரத்தும் உட்பகுதியிலுமுள்ள சேற்றுநிலங்கள் மரங்க ளடர்ந்து காணப்படுவதனல் அவற்றைக் கடந்து செல்வதோ, கட்டுப்படுத்து வதோ கடினமாக உள்ளது. அந்நிலங்களைப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்து வதும் எளிதன்று. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள சதுப்பு நிலங்கள் பல்வேறு நிலைகளிலுள்ளமையால் சில பயிர்ச்செய்கை விருத்திக்கு ஒரளவு பொருத்த மானவையாகக் காணப்படுகின்றன. எனினும் இப்பகுதியில் மக்களின் முன் னேற்றத்திற்கு அகன்ற இச்சேற்றுநில வலயமே ஏனையவியல்புகளிலும் பார்க் கத் தடையாக உள்ளது.

Page 42
அத்தியாயம் 4 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தாவரம்
அயனக் காட்டுக் காரணிகள்
மழை சீரான முறையில் அதிகமாகப் பெய்வதனலும் வெப்பநிலை என் றென்றும் அதிகமாகவிருத்தலினலும் தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாகத் தில் தாவர வகைகள் தொடர்சியாக வளர்கின்றன. பல்வேறுபட்ட தாவர வகைகள் இங்கு அடர்த்தியாகக் காணப்படுகின்றன. வருடம் முழுவதுமே தாவர வளர்ச்சிக்குகந்த காலமாயிருத்தலின் தாவரங்கள் விரைவாக வளர்கின்றன. வேறு எப்பிரதேசத்திலும் காணப்படாத தாவர வகைகள் இங்கு உள்ளன. இக் குள்ள தாவர வகைகள் பூரணமாக அறியப்படாதபொழுதும், பூக்குந் தாவர வகைகள் 35,000 வரையில் உண்டு எனக் கருதப்படுகின்றது (வான் ஸ்டீனிஸ்). போணியோவில் மட்டும் 11,000 தாவரவகைகள் உள்ளனவெனக் கூறப்படுகின் றது (மெரில்). ஆனல் அயன மேற்கு ஆபிரிக்கா முழுவதிலும் 13,000 தாவர வகைகள் மட்டுமே காணப்படுகின்றன எனக் கருதப்படுகின்றது (குட்). போணி யோவின் தொகை அயன மேற்கு ஆபிரிக்காவின் தொகையை ஏறத்தாழ ஒத் துள்ளது. சடையான செடிகளே அதிகமாகக் காணப்படுகின்றன. 15 விதமான தாவரங்கள் மரங்களாகும்; முதிர்ந்த மரங்கள் 16 அங்குலத்திற்கு மேற்பட்ட விட்டத்தையுடையன. பல்வேறுபட்ட தாவரவகைகள் காணப்பட மேல்வரும் நிலைமைகள் காரணமாகும் : (அ) பெரும்பாலும் நிலவும் ஈரவெப்பக் காலநிலை, (ஆ) நீண்ட புவிச்சரித காலமாக இக்காலநிலை நிலவிவருதல், (இ) தரைத் தோற்ற வேறுபாடுகளும் தீவுகளினலுண்டான சிறு மாற்றங்களும், (ஈ) ஆறும் பருவமில்லாத அயனக் காலநிலையில் தாவரங்களின் தேர்வு Gp6D (puyuh (Selective) இசைவாக்க முறையும் (Adaptive) விரைவாக ஏற்பட்டுப் புதிய தன் மைகள் உண்டாதல், (உ) ஆசியா, அவுஸ்திரேலியாக் கண்டங்களிலிருந்து தாவா வகைகள் இடம்பெயர்ந்து அமைதல்.
தென்கிழக்கு ஆசியாவில் முதலில் மரங்களே அடர்த்தியாகக் காணப்பட்டன. இம்மரங்கள் அண்மைக்காலத்திலேயே அதிகமாக வெட்டியழிக்கப்பட்டன. புரா தன காலத்தில் வாழ்ந்த மக்கள் காடுகளைப் பெருந்தொகையாக வெட்டியழிக் கும் வகையை அறியாதவராயிருந்தனர். ஆகவே நெருப்பினல் அழிக்கப்பட்டன தவிர எஞ்சியன காடாகக் காணப்பட்டன. கடந்த சில நூற்முண்டுகளில் அழிக் கப்பட்ட காட்டு நிலங்களில் நிலையான பயிர்ச்செய்கை நடைபெற்று வருகின் றது. மற்றைய காட்டுப் பகுதியில் இடையிடையே அழிக்கப்பட்ட இடங்களில் பின்பு புல், சவனுத் தாவரம், புதர் முதலியன வளர்ந்து மூடிக்கொண்டன. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை காரணமாகவே காடுகள் தற்காலிகமாக அழிக்கப்படு
கின்றன. தீயினல் அழிக்கப்பட்ட இவ்விடங்களைத் தாவரங்கள் மீண்டும் விரை
54

இயற்கைத் தாவரம் 55.
வாகப் பற்றிக் கொள்ளுகின்றன. சில வருடங்களின் பின்பு இவை துணைக்காடு களாக அமைந்த பொழுதும், நீண்ட காலத்தின் பின்பு முதற்காடுகளுக்கும் இவற்றிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
மலாயாவில் லடாங்கெனவும் (Ladang) பேமாவில் தவுங்கியா (Taungya) எனவும் வழங்கும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முறை தென்கிழக்கு ஆசியா எங்கணும் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் ஒவ்வோர் ஏக்கருமே இத் தகைய முறையினுற் பாதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதனல் முழுக்காட்டுப் பகுதியிலும் தெளிவான முறையில் தேர்வுத்தாக்கம் காணப்படுகின்றது (சோயர்). இன்று முதற் காடுகள் எனப்படுபவை ஒருகால் முதிர்ச்சி நிலையி லுள்ள அணைக்காடுகளாகவிருக்கலாம். மக்கள் இன்று நெருக்கமாக வாழும் யாவா, வியற்நாம் பகுதிகளில் இத்தகைய காடுகளைக் காணலாம். பல நூற்ருண் டுக்காலமாக மக்களடர்த்தி குறைந்த போனியோ போன்ற பகுதிகளிலும் இத் தகைய தாக்கம் ஓரளவுக்கு ஏற்பட்டிருக்கலாம். இந்த நோக்கிற் பார்க்கும் பொழுது “முதற்காடுகள்' என்பது சார்பாக வழங்கப்பட்ட பதம் எனக் கொள்ளுதலே பொருத்தமாகும். முதற் காடுகளை அயனப் பிரதேசக் கன்னிக் காடுகள் எனக் கருதுவது தவருகும்.
வறட்சியை அடிப்படையாகக் கொண்டு பிரதான தாழ்நிலக் காடுகள் இரு வகையாக வேறுபடுத்தப்பட்டுள்ளன :
(1) அயனக் கோட்டையடுத்துள்ள பகுதியில் என்றும் பச்சையான செறி வான இலைகளைக் கொண்ட நெடிய மரங்கள் அடர்த்தியாக உள்ளன. அயனப்பிரதேச மழைக்காடுகள் என வழங்கப்படும் இக்காடுகள் சில சமயங்களில் மத்தியகோட்டு மழைக்காடுகள் எனவும் கூறப்படுகின் றன. தென் கிழக்கு ஆசியாவின் வடவெல்லையைச் சார்ந்துள்ள மத்திய கோட்டிற்குத் தூரத்தேயுள்ள பகுதியிலும் இக்காடுகள் காணப்பட்ட லாம். இப்பகுதியில் குறித்த சில குழ்நிலைத் தன்மைகளினல் ஈரமான காலநிலை காணப்படுகின்றது. (2) தொடர்ச்சியாகச் சில மாதங்களில் மழையற்ற பகுதிகளில் சற்றே கட் டையான மரங்களைக் கொண்ட வெளியான காடுகள் காணப்படுகின் றன. இவை பெரும்பாலும் உதிர்கா டுகளாகும்; மாவினங்களும் குறை வாகும். அயனப் பிரதேச உதிர்காடுகள் பொதுவாகப் பருவக்காற்றுக் காடுகள் என வழங்குகின்றன ; கிழக்கு யாவா, பேமா, தைலாந்து, இந் தோசீனு முதலிய பகுதிகளில் இக்காடுகள் அநேகமாகக் காணப்படு கின்றன. அயனப்பிரதேச மழைக்காடுகளுக்கும் பருவக்காற்றுக் காடுகளுக்குமிடையில் இடைப்பட்ட தரத்தையுடைய காடுகளும் நிலைமாறு பகுதிகளும் உள்ளன. எந்த வொரு வளிமண்டலக் காரணியைக் கொண்டும் இக்காடுகளைத் திட்டமாக வரை யறுத்தல் கடினமாகும். அல்லாமலும் முதற் குறித்த இரு பிரதான காட்டுவகை களுள்ளுமே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறித்த பகுதிகளின் மண்

Page 43
56 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
தன்மை, மழை நாட்கள், தரைத்தோற்றம், வெளியமைவு (Exposure) பார்வை (Aspect) (paasu laar இவ்வேறுபாடுகளுக்குக் காரணமாகும். மலைசார்ந்த இப் பிரதேசத்தில் இரு பிரதான காட்டுப் பிரிவினுள்ளும் மூவகையான தாவர வல யங்கள் உண்டு. இவற்றிடையேயுள்ள வேறுபாடுகளே இவை தனிப்பட்ட வலயங் களாக அமையக் காரணமாகும். இவ்வலயங்கள் பின்வருமாறு : (1) கடற்கரைத் தாவரம், (2) தாழ்நிலத் தாவரம், (3) மலேத்தாவரம்,
(1) கடற்கரைத் தாவரம்
மணல் சார்ந்த கடற்கரைப் பகுதியில் சிறிய செடிகள், புல் முதலியன காணப் படுகின்றன. தடித்த இலைகளையும் தண்டுகளையுங் கொண்ட செடிகளும் உண்டு. ஐரோப்பியக் கரைகளிற் காணப்படும் உப்புநீர்த் தாவர வகைகளை இவை ஒத் துள்ளன. உதாரணமாக இராவணன் மீசையைக் குறிப்பிடலாம். இத்தாவர வகைகளைக் கொண்ட பகுதியின் பின்னணியில் “ கடற்கரைச் சோலைகள்' காணப்படுகின்றன. சில சமயங்களில் இவை கடற்கரைக் காடுகள் எனவும் வழங் குகின்றன. கற்பார், சதுப்பு நிலம், பொங்குமுகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் மாங்குரோவுக் காடுகள் பரந்துள்ளன. இப்பகுதி நாடோறும் ஏற்படும் உயர்பெருக்குக் காலத்தில் நீரினுல் மூடப்படுகின்றது. கரைப்பகுதி பாறைகளைக் கொண்டிருப்பின் தாழ்நிலக் காடுகள் உயர்பெருக்கு மட்டவெல்லை வரையிற் பரந் திருக்கும். இவற்றின் பரம்பலுக்கு நீரினுற் கொண்டுசெல்லப்படும் விதைகள், பழங்கள் முதலியன காரணமாகும். ஆகவே நீரோட்டம் இங்கு முக்கியமானதாய் உளளது.
செழிப்பாக வளர்ந்துள்ள கடற்கரைச் சோலைகள் கரையிலிருந்து உள்ளே 200 அடிவரை விசாலமாகக் கரையோரத்தையடுத்து நீண்டு காணப்படுகின்றன. வேறிடங்களிற் காணப்படாத மாவினங்களே இங்கு அதிகமாக உண்டு. மரங்கள் 90 அடிவரை உயரமாகவும் உள்ளன. சவுக்கு முக்கியமான மரமாகும். அவுஸ்தி ரேலிய கடற் கருவாலி (Sea-Oak) மரத்தோடு தொடர்புடைய இம்மரம் பார்ப் பதற்கு ஊசியிலை மரம்போன்றிருக்கும். சிலவிடங்களில் சவுக்க மரங்களே அடர்த்தியாகக் காணப்படும். சில சமயங்களில் இவற்றேடு தாழை, தடித்த இலை புடைய புன்னை, பறிங்ரோணியா முதலிய மரங்களும் காணப்படும். கடல் நீரோட்டத்தினுற் பரப்பப்பட்ட தென்னை மரங்களும் காணப்படுகின்றன. கடற் கரைச் சோலைப் பகுதியில் நாட்டப்பெற்ற தென்னை மரங்களும் உண்டு. தீவுகளிற் காணப்படுபவை கடல் நீரோட்டத்தினுற் கொண்டுவரப்பட்ட விதைகளிலிருந்து உண்டான மரங்களாகும்.
தென் கிழக்கு ஆசியாவில் அடையல்கள் படியும் கரைகளில் மாங்குரோவுக் காடுகள் அநேகமாகக் காணப்படுகின்றன. கடல்வரையும் பாறைகள், ஓங்கல்கள் பரந்துள்ள இடங்களில் மாங்குரோவுக் காடுகள் காணப்படுவதில்லை. வடிகால் தடைப்படுவதனல் மண்டி முதலியன படிய வாய்ப்பேற்படுவதில்லை. அப்பொழு
தும் மாங்குரோவு மாங்கள் வளாமாட்டா. மண்டி விரைவாகப் படியும்

இயற்கைத் தாவரம் 57
(வருடத்தில் ஒன்றரை அங்குலத் தடிப்பாகப் படிவதுமுண்டு) இடங்களிலேயே மாங்குரோவு மரங்கள் வளர்வதுண்டு. இம்மரங்களினுல் நிலம் படிப்படியாக உயரவும், கடலை நோக்கி வளரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. மண்டி படியும் இடங்களில் மாங்குரோவு மரங்கள் வளருகின்றனவா, அன்றேல் மாங்குரோவு மரங்களின் வேர்கள் காரணமாகக் கடற்பெருக்கோட்டமும் தாைநீரோட்டமும் தடைப்பட்டு மண்டிபடிகின்றதா என்பது பற்றித் திட்டமாக இன்னும் அறியப்படவில்லை. உண்மையில் இந்த இரண்டு முறை களும் காணப்படுகின்றன எனக் கூறுதலே பொருந்தும். இம்முறைகளினல் கரை
யடுத்த நிலம் உயர்ச்சி பெறுகின்றது. கடலின் கீழ்க் காணப்படும் நிலத்தைப்
படிப்படியாக மீட்பதற்கு இவை துணைசெய்கின்றன. மாங்குரோவு மரக்குற்றி கள் விறகு, கரி முதலிய தேவைகட்குப் பயன்படுத்தப்படுகின்றன. மசப்பட்டை தோல் பதனிடுந் தொழிலுக்கு உபயோகிக்கப்படுகின்றது. மாங்குரோவு மாங்க ளுள் ஏறத்தாழ முப்பது இனங்கள் உண்டு. அவை நிலையில்லாத சேற்று நிலங்களில் வளருகின்றன. நாடோறும் ஏற்படும் பெருக்கு நீர் (உப்புநீர்) இச்சேற்று நிலங்களிற் பரவு கின்றபொழுதும் அவை பாதிக்கப்படுவதில்லை. மாங்குரோவு மரங்களோடு சிறிய செடிகள், பூண்டுகள், பன்னங்கள் (Aerostichum ?
Aureum) ஆகியனவும் காணப்படுகின்றன.
என்றும் பச்சையான மரங்கள் சில சமயங் களில் 100 அடி உயரமாக உள்ளன. பளிச் சென்ற கடித்த இலகளையும், சிறிய பூக்களை ሀ/th, ...9/ሣ በ ዶp # # Goor வேர்த்தொகுதிகளையும்
அவை கொண்டுள்ளன. சில மாங்களில் (ரைசோபோா-கண்டல் வகை) வேர்கள் சேற்று மட்டத்திற்கு மேலே தோன்றிக் கீழ் நோக்கி வளர்ந்துள்ளன (படம் 22). வேறு சில மரங்களின் (அவிசென்னியா, சொன்ன
ரேசியா) பிரதான வேர்கள் கிடையாகச் சுற்றிப் பரந்துள்ளன. பிரதான வேர்களி
படம் 22. மாங்குரோவு வேர் மாதிரி a P கள். (a) கண்டல் மரத்தின் (ரைசோ றின்மீது வளர்ந்துள்ளன. இன்னும் சில போரா) மிண்டி வேர். (b) புரூகியரா மாங்குரோவு மரங்களில் (புரூகியரா) வேர் மரத்தின் முழங்காலுரு வேர். (e) அவிசென்னியாவின் (கண்டல்வகை) மேல் நோக்கி வளரும் வேர்
லிருந்து சிறு கிளைகள் மேல் நோக்கிச் சேற்
கள் இடையிடையே வளைந்து கிடையாகப் பரந்துள்ளன. சேற்றின்மீது முழங்கால் போலப் புடைத்துநிற்கும் இவ்வளைவுகள் மரங்களிடைச் செல்வதற்குத் தடை யாக உள்ளன. மரங்கள் சூழலுக்கு ஏற்றமுறையில் அமைவதற்காகவே வேர்த்

Page 44
58 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
தொகுதிகள் இங்ஙனம் காணப்படுகின்றன. நல்ல காற்றைப் பெறக்கூடிய முறையில் வேர்கள் சேற்றிற்கு மேற் புடைத்துள்ளன. அவற்றிற் சுவாசத் துளைகள் உண்டு. மண்டி முதலியன மேலும் படிந்து பழைய வேர்களை மூடிக் கொள்ளும் பொழுது புதிய சிறுவேர்கள் மேலே வளர்ந்துவிடுகின்றன. பல மாங்குரோவு மரங்களின் விதைகள் மரங்களைவிட்டு நீங்குமுன்பே முளைத்துவிடு கின்றன. அவை பாரமான முளைகளாயிருப்பதனுல் வற்றுக் காலத்திற் கீழுள்ள சேற்றில் எளிதாகப் பற்றிக் கொள்ளுகின்றன. பெருக்குக் காலத்தில் அவை, நீரோட்டத்தால் அதிக தூரத்திற்குக் கொண்டு செல்லப்படுவதும் உண்டு. சி முளைகள் கூராகவிருத்தலினுல் விழும்பொழுது சேற்றில் எளிதாகப் புதைந் விடுகின்றன.
மாங்குரோவு இனங்களுள் வேறுபாடுகள் காணப்படப் பெருக்குநீர்த் தாக் கமே காரணமாகும்; எந்த அளவுக்குப் பெருக்குநீரைத் தாங்கிக்கொள்ளுகின் றன என்பதனை அடிப்படையாகக் கொண்டே வேறுபாடுகள் அமைகின்றன. மாங்குரோவுக் காடுகளிடையுள்ள வேறுபாடுகளைக்கொண்டு பல வலயங்கள் வகுக்கப்படலாம். கரையோடு சார்ந்த சமாந்தரமாக இவ்வலயங்கள் உள்ளன. கடற்கரையையடுத்துள்ள வலயத்தில் அதிக கடல்நீரைத் தாங்கக்கூடிய இயல் புடைய மரங்கள் காணப்படுகின்றன. உட்பகுதியின் எல்லையிலுள்ள மாங்கள் சிறிது அளவுக்கே உப்புநீரைத் தாங்குமியல்புடையன. மேலும் மண்டி படிப் படியாக வந்து படிவதனுல் வற்றுப் பெருக்குத் தாக்கங்களும் குறைவடைகின் றன. இதனுல் தாவரவகைகளும் படிப்படியாக வேறு இனங்களையும் உள்ளடக்கி யனவாக மாறி நன்னீர்ச்சதுப்பு நிலத் தாவரங்களாக அமைகின்றன.
வற்றுப் பெருக்குத் தாக்கம் குறைவாயுள்ள பல பொங்கு முகங்களில் சிறிய தண்டையும் இறகுபோன்ற ஒலேகளையுமுடைய நிபமரம் காணப்படுகின்றது. இதன் ஒலே பொதுவாக 18 அடி நீளமுடையது. இந்த மரம் தால வகையைச் சேர்ந்தது , உப்புநீர்த் தன்மையிலும் பார்க்கச், சற்றே உவர்நீர்த் தன்மையுள்ள இடங்களிலேயே இது வatாகின்றது. குடிசைகளை வேய்தற்கு இது பொதுவாக உபயோகிக்கப்படுகின்றது.
(2) தாழ்நிலத் தாவரம்
அயனப்பிரதேச மழைக்காடுகள்-அடர்த்தியான என்றும் பச்சையான இலே களைக் கொண்ட நெடிய மாங்கள் இங்கு உண்டு. காடுகள் இருண்டனவாயில்லை. பகல் நாளில் குரியவொளி நிலத்திற்படுவதுண்டு. மரங்களினடியிலுள்ள செடிகள் முதலியன அடர்த்தியாயில்லை. தெருவோரம், ஆற்றோம் ஆகிய விடங்களில் குரியவொளி அதிகமாயிருத்தலினுல் கீழ்த்தாவர வகைகள் அடர்த்தியாய்க் காணப்படுகின்றன. காட்டினுட்பகுதியிற் காற்முேட்டம் குறைவாகும். வெப்ப நில் காட்டின் மேற்புறத்திலும் பார்க்க 10 ப. பாகை குறைவாயிருக்கும். பகட் டான பூக்களைக் கொண்ட செடிகள் குறைவாகும். வேறுபட்ட பலவண்ணமுள்ள இலைதளைகளே அதிகமாக உண்டு; ஆயினும் பொதுவாக இக்காடுகள் கரும்பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்.

இயற்கைத் தாவரம் 59.
அயனப் பிரதேச மழைக்காடே பொதுவாக 'வனம் (jungle) எனவும் வழங்குகின்றது. மாவட்டத்திற்கு மாவட்டம் இப்பதப் பிரயோகம் வேறுபடு வதுமுண்டு. காடு முதற் சிறுபுதர் ஈருரகவுள்ள தாவரவகைகளுக்கெல்லாம் இப் பதம் வழங்கப்படுகின்றது. மயக்கமுள்ள பதமாகையால் இதன் வழங்காது விடலே பொருத்தமாகும்.
உயரம், குரியவொளி முதலிய சிறப்பியல்புகளால் அயனப்பிரதேச மழைக் காடுகள், தனிப்பட்ட வகையைச் சார்ந்தன எனக்கொள்ளப்படுகின்றது. ஏறக் குறைய 190 அடி உயரமான மரங்கள் காடெங்கும் உண்டு. 60 அடி உயரமான இலைதளைகள் காணப்படும் மட்டத்திற்கு மேலே மரங்களின் இலைமுடிகள் நீட்டிக் காணப்படுகின்றன. இலை முடிகள் ஒன்றேடொன்று இணையும்பொழுது விதானம் போன்ற தோற்றம் உண்டாகின்றது (படம் 23). இதன் கீழ்ச் சிறிய செடிகளும்
2N!S- 30 SO O 120 30 18Oی
- - - - - - - - - - - - - -
படம் 23, அயனப் பிரதேச மழைக் காட்டின் பக்கத் தோற்றம். 180 அடி அகலமான காடு இங்குக் காட்டப்பட்டுள்ளது. (1) மரங்களின் உயரம். (2) இலைமுடிகள் ஆகியவற்றைப்
பார்த்தறிக
பூண்டுகளும் இடையிடையே பரந்துள்ளன. இவை பெரும்பாலும் நிழலில் வள ரும் தாவரங்களாகும். சில மரங்களில் இலைநிறத்தில் சிறு மாற்றம் ஏற்படுகிற பொழுதும் பொதுவாக இலைகள் என்றும் பச்சையானவையாய் உள்ளன. இலை நிற மாற்றம் பிரதேச அடிப்படையில் இல்லை. சில மரங்களில் புதிதாக இலைகள் தோன்றும்வரை பழைய இலைகள் காணப்படும். மரங்களின் இலைகள் ஒரே காலத் தில் தோன்முமையாலேயே என்றும் பச்சையான தோற்றம் இங்குக் காணப்படு கின்றது. காலநிலைக்கும் மாங்களில் பூக்கள் இலைகள் உண்டாதல் ஆகிய முறை களுக்கும் உள்ள தொடர்பில் வேறுபாடும் அதிகம் உண்டு. சில காட்டுத் தாவரங் கள் சில நாள் வறட்சியின்பின் பூக்கின்றன. இடிமின்னற் புயற்காலத்திற்

Page 45
60 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
போன்று வெப்பநிலை சற்றே வீழ்ச்சியடையும்பொழுதும் சில பூக்கின்றன.ஏனைய தாவரங்கள் வானிலை மாற்றங்கள் எவ்வாறிருந்தபொழுதும் வருட ஒழுங்கிற்கு அமையப் பூக்கின்றன. சில உச்ச மழைவிழ்ச்சிக் காலத்தில் பூக்கின்றன. வேறு சில 15 மாத காலத்திற்கொருமுறை பூக்கின்றன. மரங்கள் அவற்றின் உயர மட்டங்களுக்கேற்பச் சில சிறப்பியல்புகளையும் கொண்டுள்ளன. அதியுயரமான மட்டத்தை அடையும் மரங்கள் மெல்லிய நெடிய அடிமரங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் விசாலமான முடியிலுள்ள இலைகள் பிளவு படாமலும் தடிப்பாகவும் நீள்வட்டமாகவும் உள்ளன. நெடிய மரங்களுட் பல ஊன்றி நிற்றற்காக அடி மரங்களைச் சுற்றிப் பதினைந்து அடி உயரம்வரை உதைப்பு வேர்களைக் கொண் டுள்ளன. வேர்கள் விசாலித்துப் பரம்புவதற்குப் பொருத்தமற்ற மண்ணில் நெடிய மரங்கள் உரமாய் நிற்றற்காகவே இங்ஙனம் காணப்படுகின்றன. இதனுல் மாங்க%ள வெட்டுவது கடினமாயிருக்கின்றது. இரண்டாவது மட்டத்திலுள்ள மாங்கள் சிறியனவாகும். அவற்றின் அகன்ற இலைகள் கூர்நுனிகளைக் கொண் டுள்ளன.
இத்தொகுதியில் மேல்வரும் இருவகையான தாவரங்கள் உண்டு : (அ) ஏறு கொடிகள் (Lianes), (ஆ) மேல்வளரிகள்.
வயிரமான ஏறு கொடிகள் நூறு அடிக்குமதிகமான நீளமுடையவை. இவை நிலத்திலிருந்து மரத்தைப்பற்றி ஏறி இலைமுடிவரை வளர்ந்தும் மரத்துக்கு மரம் தாவிப் படர்ந்து தோரணம் போல அமைந்தும் காணப்படும். இக்கொடி கள் விரலளவு தடிப்பிலிருந்து பத்து அங்குல விட்டம்வரை இருக்கும். பூக்கள் இக் கொடிகளின் மேற்பாகத்திற் காணப்படும். பிரப்பங்கொடிகள் இந்த ஏறு கொடி வகையைச் சார்ந்தவை. முட்களையுடைய இக்கொடிகள் பலமாயிருத்தலி ஞல் கயிற்றுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒக்கிட் முதலிய செடிகள் மேல்வளரிவகையைச் சார்ந்தன. இவற்றின் விதை கள் மரங்களின் கிளைகளிலேயே முளைத்துவிடுகின்றன. இச் செடிகள் மரங்களி லேயே வளரும் இயல்புடையன. சிலசமயங்களில் இவற்றின் வேர்கள் நீண்டு வளர்ந்து நிலத்திற் புதைந்துவிடுகின்றன. மேல்வளரிகளுட் சிலவே உண்மை யான ஒட்டுண்ணிகளாய் வளர்வன. ஆனல் பல வேறு மரங்களின் துணையோடு வளர்ந்து முடிவில் தமது வேரை நிலத்திற் செலுத்துகின்றன. அத்தியின் (Ficus) தடித்த வேர்கள் வேறு மரங்களைச் சுற்றிவளர்கின்றன. இதனுல் அம் மரங்கள் படிப்படியாக உக்கி அழிந்துவிடுகின்றன. இறுதியில் இம் மரங்களின் வேர்களே வலைபோன்று காணப்படும். இவற்றினுற் கல்லாற் சமைக்கப்பட்ட கட்டிடங்களும் சிதைந்துவிடுகின்றன. புகழ்பெற்ற அங்கோர் ஆலயங்கள் ஈண்டு குறிப்பிடத்தக்கன. இவற்றின் விதைகள் பறவைகளினுலும் காற்றினுலும் கொண்டு சென்று பரப்பப்படுகின்றன.
அயனப் பிரதேச மழைக்காடுகளில் வேறுபட்ட பல மாவினங்களும் காணப் படுகின்றன. ஓர் இனத்து மரங்கள் கூட்டமாகக் காணப்படுவது குறைவாகும். 100 யார் சதுரத்தில் ஏறத்தாழ முப்பது மரவினங்கள் காணப்படலாம். மரவி னங்கள் அதிக அளவுக்கு வேறுபட்டனவாயுள்ள பொழுதும் "செட்டையொடு

இயற்கைத் தாவரம் 6.
பொருந்திய” விதைகளைக் கொண்ட பருத்த மாவினம் குறிப்பிடத்தக்கது. காட்டினுட்பகுதியில் தனிப்பட்ட பெரு மரங்கள் ஏனைய மாஞ்செடிகளால் நெருக்கப்பட்டுக் காணப்படுவதனுல் தெருவோரத்தில் அல்லது பூங்காவில் உள்ள பெரு மரத்தின் வடிவத்தைக் கொண்டு இவற்றின் தன்மையை மட்டிடுதல் தவ முகும்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட மரவினங்களைக் கொண்ட இக்காட்டில் வர்த்தகப் பொருள்களான மரம், பிசின், கர்ப்பூரம் முதலியன பெறப்படுகின்றன. வர்த்தக அடிப்படையிற் பார்க்கும்பொழுது பல மரங்கள் பயனற்றவையாகும். வேறு பட்ட மாவினங்கள் அடர்த்தியாகப் பரந்துள்ளமையால் பயனுள்ள மரங்களை வெட்டி எடுப்பதும் கடினமாக உள்ளது.
அயனப் பிரதேச மழைக்காட்டில் பல சிறு பிரிவுகளும் உண்டு. (அ) போணியோவின் சில பகுதிகளிலும், சுமாத்திரா, மலாயா ஆகிய பகுதிக ளிலும் நூண்டுளைத்தன்மையுடைய வெண்ணிற மணல் கீழ்மண்ணுய்க் காணப்படுகின்றது; இது அயனப்பிரதேசப் பொட்சொல் மண்வகை யைச் சார்ந்தது எனவும் கருதப்படுகின்றது (ஐந்தாம் அத்தியாயம் பார்க்க). இத்தகைய மண்ணிற் சிறு செடிகள், ஊசியிலைத் தாவரங்கள் முதலியனவும் புல்வகைகளுமே காணப்படும். தரிசுத் தன்மையை யுடைய இந் நிலத்தில் மரங்கள் காணப்படமாட்டா. (ஆ) நுண்டுளைத் தன்மையுடைய சுண்ணக்கற் பகுதியில் குட்டையான மரங் களும் அதிக மேல்வளரிகளும் காணப்படுகின்றன. தரைக்கீழ்நீரற்ற பகுதியில் இவை வளரும் இயல்புடையன. .ܝܠ ܐܡ ܼ (இ) மாங்குரோவு மரங்களடர்ந்த பகுதிக்கும் உண்மையான அயனப்பிரதே சத் தாழ்நில மழைக்காட்டுக்குமிடையில் நன்னீர்ச் சேற்றுநிலக் காடு கள் காணப்படுகின்றன. சுமாத்திரா, மலாயா, போணியோ ஆகிய பகுதிகளில் இவை சிறப்பாக உள்ளன. சேற்று நிலத்திற்குச் சிறப்பாக வுள்ள தாவரங்கள் நன்னீர்ப்பெருக்கு ஏற்படும் காலத்திற்கு அமைய வேறுபடுகின்றன. மாங்கள் பொதுவாகக் குறுகிய உயரமுடையன. மாவினங்களும் குறைவாகும். உறுதியான வேர்களையுடையன. ஓரி னத்து மரங்கள் அதிக தூரத்திற்குப் பரந்து காணப்படும். குட்டை யான மரங்கள் நிலத்தை மூடியிருப்பதனுல் அதனைக் கடந்து செல்லல் கடினமாகும். சுமாத்திராவின் கிழக்குக் கரையையடுத்துள்ள நன்னீர்ச் சேற்றுநிலக் காட்டில் தாவரப் பொருள்கள் பல அடி ஆழம்வரை சிதைந்து காணப்படுகின்றன. துணைக் காடுகள்-அயனப் பிரதேச மழைக் காடுகள் அழிக்கப்பட்ட பின் உண்டாகும் தாவரவகைகளை உள்ளடக்கியன துணைக்காடுகள். அயனப் பிரதே சப் புல்வகைகள், செடிகள், பூண்டுகள் முதலியன முக்கிய தாவர வகைகளா கும். வெறும் நிலத்திலிருந்து அயனப் பிரதேசக் காடுகள் வரையுள்ள பல நில் களிற் காணப்படும் தாவரவகைகளேப் பல சிறு பிரிவுகளாக வகுக்கலாம். அழிக்

Page 46
62 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
கப்பட்ட காட்டுநிலத்தில் மீளப்பாவும் தாவரவகைகள் வளரும் காலம், மண்ண ரிப்பு, காட்டழிப்பு, முதல் மண்வகை, விதைகள் பாம்புவதற்குரிய அயலே யுள்ள காடுகள் ஆகியவற்றைப் பொறுத்தமைகின்றன. இத்தாவரவகைகள் முத லிற் காணப்பட்ட அயனப் பிரதேச மழைக்காடுகள் போன்று அமைய மிகச் சாதகமான நிலைகள் குறைந்தது இரண்டு நூற்றண்டுகளுக்காவது இருத்தல் வேண்டும். இக்காலத்திற் சடுதியாக ஏற்படும் தீயினுல் இவை பாதிக்கப்படுவ துண்டு. அவ்வாறு பாதிக்கப்படும்பொழுது தாவரங்கள் வளர்வதற்கு எடுக்குங் காலமும் அதிகமாகின்றது. புல்மேயும் விலங்குகளினலும் சில தாவரவகைகள் பாதிக்கப்படுகின்றன.
தாவரவகைகள் மீண்டும் வளரும்பொழுது படிப்படியாகவே வளர்கின்றன. முதலிற் சிறு பூண்டுகளும் புல்வகைகளும் உண்டாகின்றன. பின்பு செடிகளும் இறுதியில் மரங்களும் உண்டாகின்றன. அயனப்பிரதேசப் புல்வகைகள் கரடு முரடாகவும் தடிப்பாகவும் உள்ளன. வெளியாக்கப்பட்ட நிலத்தில் இவை விரை வாக வளர்ந்துவிடுகின்றன. ஏறத்தாழ ஐந்து அடிவரை வளர்கின்றன. இப் புல் நிலங்கள் சவனப் புல்நிலங்களை ஒத்துள்ளன. புல்வகைகள் தீயினுல் எரிக்கப் பட்டபொழுதும் அவை மீண்டும் விரைவாக உண்டாகிவிடுகின்றன. வேர்கள் தீயினுற் பாகிக்கப்படாமையால் அவை மீண்டும் முளைத்துவிடுகின்றன. விசை வாக வளரும் அயனப்பிரதேசப் புல்வகையினுற் பிற தாவரங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மண்வளங் குறைந்தது என்பதனைப் புல்வகையிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கின்றது. மண் வளத்திற்குன்ற அவையே காரணமாகவுமிருக்கலாம். இங்குப் புல்வகையே முக்கியமாயிருந்தபொழுதும் சாதாரண கரும்புவகைகளும் உண்டாவதுண்டு.
புதர் நிலத்தில் காட்டு இஞ்சியும், அயனமண்டல அவிஞ்சியும் (ரோடோடெண் டிரன்) அநேகமாகக் காணப்படுகின்றன. சில பகுதிகளில் பெரிய பன்னச்செடி வகைகளும் அடர்த்தியாகப் பரந்துள்ளன.
இளமைநிலையிலுள்ள துணைக் காட்டுப் பகுதியில் 30 அடி உயரமான மரங்க ளும் காணப்படுகின்றன. ஆனல் இவற்றிற்கு முற்பட்ட அடர்த்தியான செடிக ளும் பருத்த கொடிகளும் இங்கு உண்டு. ஒரே இனத்தைச் சேர்ந்த தாவரவகை கள் சிலகாலம் தொடர்ந்து காணப்படுகின்றன. மென்மர வகையைச் சேர்ந்த இத்தாவரங்கள் முதலில் விரைவாக வளருமியல்புடையன. குறித்த சில பகுதி களில் துணைத்தாவரங்களுள் பைன் மாங்கள் முக்கியமாகவுள்ளன. இவற்றுள் முதிர்ச்சிபெற்ற தாவரவகைகளை முதற்காட்டு வகைகளிலிருந்து வேறுபடுத்து தல் கடினமாக உள்ளது. கீழுள்ள அடர்த்தியான தாவரவகைகள் மட்டுமே ஓரள வுக்கு அறியக்கூடியனவாயுள்ளன.
பருவக்காற்றுக் காடுகள்-வறண்ட பருவம் காணப்படுகின்ற காரணத்தினுல் பருவக் காற்றுக் காடுகளில் தீயினல் அதிக சேதமேற்படுவதுண்டு. இதனல் நெடிய வேரையுடைய தாவரவகைகளும் தடித்த விதைகளையுடைய தாவரவகை களுமே மீண்டும் வளாவாய்ப்பு ஏற்படுகின்றது. அயனப்பிரதேச மழைக்காட் டுப் பகுதிகளிலும் பருவக்காற்றுக் காட்டுப் பகுதியிலேயே பெயர்ச்சிப் பயிர்ச்

இயற்கைத் தாவரம் 63
செய்கை அதிகமாக நிகழுகின்றது எனக் கூறப்படுகின்றது. ஆகவே பெயர்ச் சிப் பயிர்ச்செய்கையாலுண்டாகும் விளைவுகளும் இப்பகுதியிலேயே அதிகமாக உண்டு. எனவே பருவக்காற்றுக் காட்டுப் பகுதியில் முதற் காடுகளிலும் பார்க் கத் துணைக்காடுகளே அதிகமாகக் காணப்படுகின்றன. தென் கிழக்கு ஆசியா வில் மத்தியகோட்டு ஒழுங்கு முறையில் அகன்ற இரு பருவக்காற்றுக் காட்டு வலயங்கள் உண்டு. இவற்றுள் பெரியது பேமா, தைலாந்து, இந்தோசீனு ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது. மற்றையது கிழக்கு யாவா, சண்டாத்தீவுகள், நியூகினி ஆகியவற்றை அடக்கியுள்ளது. தீவுத் தன்மையினுற் சில வேறுபாடு களைக் கொண்ட இவ்வலயம் அளவாற் சிறியதாய் உள்ளது. 10 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள வறண்ட பாகங்களைச் சார்ந்தே இவ்வலயங்கள் காணப்படு கின்றன.
மழைப்பருவத்தில் பருவக் காற்றுக் காடுகள் அயனப் பிரதேச மழைக்காடு களைப் போன்று காட்சியளிக்கின்றன. பருவக் காற்றுக் காட்டு மாங்கள் அதிக உயரமில்லாதனவாயும், அாாத்தார அமைந்தனவாயும், இலைதழை குறைவாயுள்ள னவாயும் காணப்படுகின்றன. கீழுள்ள செடிகள் கொடிகள் முதலியனவே வருடம் முழுவதும் ஓரளவு பச்சையாயுள்ளன. மற்றைத் தாவரவகைகள் வறண்ட பரு வத்தில் இலைகளையுதிர்க்கின்றன. இக்காலத்தில் மரங்கள் யாவும் இலைகளற்றுக் காணப்படும். சிறு பூண்டுகள், ஏறு கொடிகள், மூங்கில் முதலியனவும் காணப் படுகின்றன. மேல் வளரிகள் குறைவாகும். மிக வறண்ட பருவத்தில் சிறு பூண்டு கள் குட்டைத் தாங்கமுடியாது கருகி அழிந்துவிடுகின்றன மரங்களுள் கரு வேல், வாகையாகியன சாதாரணமாகக் காணப்படுகின்றன; இலெகுமினேசே இனத்தைச் சேர்ந்த மரங்கள் முக்கியமாயுள்ளன.
பருவக் காற்றுக் காடுகள் சிலசமயங்களில் ஈரமான காடுகள், வறண்ட காடு கள் என இரு வகையாகவும் பிரிக்கப்படுகின்றன. இக்காடுகள் அயனப் பிரதேச மழைக்காட்டிற்கும் அயனப் பிரதேசப் பாலைநிலத்திற்கும் இடைப்பட்டவையா கும். பாலேநிலங்கள் தென் கிழக்கு ஆசியாவின் புறத்தே காணப்படுகின்றன.
பருவக் காற்றுக் காடுகள் பெரும்பாலும் கலப்பின மரங்களைக் கொண்டன வாகும். சில சமயங்களில் தனிப்பட்ட ஓரினமரங்கள் பெருந்தொகையாகக் காணப்படுவதுமுண்டு. காலத்துக்குக் காலம் தீயினுல் அழிக்கப்பட்டதனுல் ஏற் பட்ட "தேர்வு' முறையினல் இவ்வகையான மரங்கள் பெருகியிருத்தல்கூடும். பருவக் காற்றுக் காடுகளிலுள்ள மரங்களுள் தேக்கு மரங்கள் குறிப்பிடத்தக் கன. வட பேமா, வட தைலாந்து, கிழக்கு யாவா, மொலுக்காத் தீவுகள் முத லிய பகுதிகளில் இத்தகைய மாங்கள் பெருந்தொகையாக உள்ளன. வர்த்தக அடிப்படையில் இவை முதன்மையானவை. சில காட்டுப் பகுதிகள் உண்மை யில் தேக்கு மரங்களைக் கொண்ட காட்டாக்கப்பகுதிகளாகும். தேக்கு மா விதைகள் தடித்த கோதினைக் கொண்டிருப்பதால் எளிதில் தீயினுற் பாதிக்கப் படுவதில்லை. தேக்கங் கன்றுகளும் தீயினுல் முற்முக அழிக்கப்படுவதில்லை. இவ் வாறு ஏற்பட்ட "தேர்வு" முறையினலேயே தேக்குமரக்காடுகள் அமைந்திருத் தல் வேண்டும். இயற்கையாகத் தேக்குமரக் காடுகள் தனிப்பட்ட முறையில்

Page 47
64 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
அமைந்திருக்க முடியாது. தேக்கு மரங்கள் 120 அடிக்கு மேலாக வளருகின்றன. நிலத்திலிருந்து அரைவாசி உயரம்வரை இம்மாங்கள் நெடியனவாயும் கிளைக ளற்றுங் காணப்படுகின்றன. நிலத்தில் செடிகள் முதலியனவும் குறைவாகும். தேக்குமா இலைகள் வீழ்ந்து சிதம்புவதனுல் மாரிக்காலத்தில் நுளம்புகள் உண் டாக ஏதுவாகின்றது.
தேக்கு மரக் காடுகளைப் போன்று யூக்கலித்தஸ் காடுகள் கிழக்கிலுள்ள தீவு களிற் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியாவிலிருந்து இம்மரங்கள் பரவியிருக் கின்றன. ஈரியான், தீமோர், சிறு சண்டாத் தீவுகள், செலிபீஸ், பிலிப்பைன் ஆகிய தீவுகளிலேயே இம்மரங்கள் இயல்பாக வளர்ந்துள்ளன.
பருவக்காற்றுக் காடுகளுள் மூங்கிற் காடுகளும் குறிப்பிடத்தக்கன, “தேர்வு" முறையினலேயே இக்காடுகளும் அமைந்திருத்தல் வேண்டும். தென் கிழககு ஆசி யாவின் வட பகுதியில் பெருந்தொகையாக மூங்கிற் காடுகள் காணப்படுகின் றன. கிழக்கு யாவாவிலும் துண்டுதுண்டாக இக்காடுகள் பரந்துள்ளன. தென் கிழக்கு ஆசியாவில் பலவகையான மூங்கில் மரங்கள் உண்டு. உபயோகமுள்ள மரமாகையால் இவை அதிகமாக நாட்டப்பெற்றுமுள்ளன. வறண்ட பருவம் உள்ள பகுதிகளிலும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை நடைபெற்ற பகுதிகளிலும் மூங்கில் மாங்கள் பெருந்தொகையாகக் காணப்படுகின்றன. நூற்றுக்கு மேற் பட்ட இனங்களையுடைய மூங்கில் மாங்கள் தடித்த அடிமரங்களையும் வேர்களை யும் கொண்டுள்ளன. கூட்டங்கூட்டமாக வளரும் இம்மரங்கள் என்றும் பச்சை யானவையாய், அல்லது இலைகள் உதிர்க்கும் இயல்புடையனவாய்க் காணப்படும். சில மூங்கில் இனங்கள் நீண்டகாலத்திற்கொருமுறை (25-70 வருடங்களில்) பூக் கும். மூங்கில் விதைகள் தீயினல் எளிதிற் பாதிக்கப்படமாட்டா, காய்ந்த அடி மரங்கள் ஒன்முேடொன்று உராய்வதனுல் தீ மூண்டு காடுகளை அழிப்பதுண்டு. இத்தகைய தீ காரணமாக மூங்கில் மரங்கள் “தேர்வு' முறை மூலம் தனிப் பட்ட காடுகளாக அமைகின்றன.
பருவக் காற்று வறண்ட காடுகள் சில மாவினங்களை மட்டும் கொண்ட வெளி யான காடுகளாகும். பேமா தைலாந்து, இந்தோசீனு முதலிய நாடுகளிற் பெரும் பகுதிகளில், அநேகமாக வளமற்ற மண்வகைகள் உள்ள பகுதிகளில் இக் காடுகள் காணப்படுகின்றன. பேமாவில் இக்காடுகள் இடைங் எனவும் தைலாந் தில் பாடெங் எனவும் வழங்குகின்றன. வருட மழை வீழ்ச்சி 40 அங்குலத்திற்கு மேற்படாத பகுதிகளிலேயே இக்காடுகள் பரந்துள்ளன. இக்காடுகள் மத்திய கோட்டைச் சார்ந்து அயன மழைக்காடுகளாகவும், மறுபுறத்தில் வறண்ட சவன முள் தாவரங்களாகவும் மாற்றமடைகின்றன. பருவக் காற்று வறண்ட காடுகளில் மரங்கள் தூரத் தாரக் காணப்படும். அவை உயரத்திற் குறைந் தனவாயும் இலைகள் உதிர்க்கும் இயுல்புடையனவாயும் உள்ளன.
பருவக் காற்றுத் துணைக் காடுகள்-இயற்கையாகக் காணப்பட்ட பருவக் காற்றுக் காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளிலேயே இத்துணைக் காடுகள் பரந் துள்ளன. பேமா, தைலாந்து, இந்தோசீனு, கிழக்கு இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் அதிக அளவு சவனத் தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றுள்

இயற்கைத் தாவரம் 65
நெடிய தடித்த புல்வகைகள், மூங்கில், சிறு மாங்கள் முதலியன குறிப்பிடத் தக்கன. அடர்த்தியற்ற முறையில் இவை பரந்து காணப்படும். மூங்கில்களும் சிறு மரங்களும் இடையிடையே காணப்படும். நீண்ட வறண்ட பருவம் உள்ள பகுதிகளிலேயே இத்தகைய தாவரங்கள் உண்டாகின்றன. நுண்டுகளைகளைக் கொண்ட வளமற்ற மண்வகைகளும் இவை உண்டாகக் காரணமாகும். சவனத் தாவரங்களுள் கட்டையான தால மரங்கள் (பனை), நாகதாளிச் செடிகள், முள் ளுள்ள கள்ளிச் செடிகள் முதலியன குறிப்பிடத்தக்கன. இத்தாவர வகைகள் படிப்படியாகப் பருவக் காற்று வறண்ட காட்டுத் தாவரங்களாக மாற்றமடை
கின்றன.
(3) மலைத்தாவரம்
உயரப் போகப் போகத் தாவர வகைகள் வேறுபடுத்தி உணரமுடியாத வகை யில் படிப்படியாக மாற்றமடைந்து காணப்படும். தென் கிழக்கு ஆசியாவில் உயர அடிப்படையில் தாவரங்கள் ஏறத்தாழ ஒரேமாதிரியாகவே காணப்படுகின் றன. மலைகளின் மிகவுயரமான பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளிற் காடுகள் அடர்ந்துள்ளன. வெளியாயுள்ள உச்சிகளில் மரங்கள் கட்டையாக உள்ளன. ஈரியான், யுன்னன் ஆகிய பகுதிகளிலுள்ள மிகவுயரமான இடங்களில் மட்டும் அல்பைன் தாவர வகைகள் உண்டு. இவ்விடங்களில் மரங்கள் வளரமாட்டா. இளமையான எரிமலைப் பகுதிகள் மண்வகைகள் காரணமாக மாங்க்ளற்றுக் காணப்படலாம். இதற்குக் காலநிலைத் தன்மைகள் காரணம் எனக் கூற
முடியாது.
தென் கிழக்கு ஆசியாவில் 2,000 அடி உயரத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் பெரிய மரங்கள் படிப்படியாக அற்றுப்போய்விடுகின்றன. கருவாலி, செசுநட் மரங்களுட்பட்ட இடைவெப்ப மரங்கள் இப்பகுதிகளில் அதிகமாகக் காணப் படும். அல்லாமலும் பெரிய முட் செடிகள், மரப் பன்னங்கள் ஆகியனவும் பரந் திருக்கும். இந்த நிலைக்கும் மேற்பட்ட பகுதிகளில் தாவரவகைகள் மேலும் குட்டையானவையாயிருக்கும். சிறு மரங்கள் செடிகள் முதலியன வளைந்து முறுகிக் காணப்படும். நிழற்றன்மையும் குறைவாகும். 5,000 அடி உயரத்திற்கு மேல் பாசியினங்களே அதிகமாகக் காணப்படும். ஈரந்தங்கிய குளிர்ான காற்று வீசும் பகுதிகளில் எல்லாத் தாவரங்கள் மீதும் தடித்த பாசியினங்கள் பரந் திருக்கும். பாசியினங்கள் பல வடிவங்களில் தூங்கிக்கொண்டிருப்பதோடு, போணியோ போன்ற பகுதிகளில் சுவர்கள் போன்றும் பீடங்கள் போன்றும் அமைந்திருக்கும். இவற்றின் கீழ் குட்டையான கருவாலி மரங்களும் அலிஞ்சி மரங்களும் மறைந்திருக்கும் (ஹரிசன்). வறண்ட பருவமுடைய பகுதிகளில் பாசியினங்கள் வளாமாட்டா. பருவக் காற்றுப் பகுதிகளில் இவற்றிற்குப் பதி லாகப் பைன் மரக்காடுகள் காணப்படும். இக்காடுகளிற் சில அகன்ற இலைமால் கள் உண்டு. மேற்குறித்த இருவகையான மலைத் தாவரவகைகள் காணப்படும்

Page 48
66 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
பகுதிகளுக்குமேல் (6,500 அடிக்கு மேல்) மலைப்புல்வகைகளும் பூண்டுகளும் காணப்படும். இவற்றைக் கொண்ட நிலங்கள் அலைவடிவ நிலங்கள் போன்று
காட்சியளிக்கும்.
விலங்கினம் அத்திலாந்திக்குச் சமுத்திரத்தினற் பிரிக்கப்பட்ட ஆசியா, தென் அமெ ரிக்கா ஆகிய இரு கண்டங்களிடையில் விலங்கினங்களிலுள்ள வேறுபாடுகளிலும் பார்க்க, தென் கிழக்கு ஆசியாவின் மேற்கு கிழக்குப் பகுதிகளிடையில் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன (மெரில்). அவுஸ்திரேலியக் கண்டம் நீண்ட காலமாக ஆசியாவிலிருந்து பிரிக்கப்பட்டிருந்ததே இந்த வேறுபாடுகளுக்குக்
படம் 24. தென் கிழக்கு ஆசியாவின் உயிரினப் பிரதேசங்கள்
காரணமாகும். ஆசியாவிலிருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் விலங்கினங்கள் தென் கிழக்கு ஆசியாவின் தீவுகள், குடாநாடுகள் ஆகியவற்றிற் பரவியுள்ளன. எனவே தென் கிழக்கு ஆசியாவை மேற்குறித்த இரு கண்டங்களுக்குமிடைப் பட்ட விலங்குப் புவியியற் பிரதேசமெனக் கோடலே பொருந்தும் (படம் 24).
அயனப் பிரதேச மழைக்காடுகள் சிக்கலான உயிர்ச் குழல்களைக் கொண்டுள்ள தணுல் விலங்கினங்களும் அவற்றேடு தொடர்புடையனவாய் உள்ளன. வேறு பட்ட விலங்கினங்கள் வேறுபட்ட தாவரவகைகளுக்கு ஏற்பக் காணப்படுகின்
 

இயற்கைத் தாவரம் 67
றன. யானை, புலி, காண்டாமிருகம் முதலிய பெரிய விலங்கினங்கள் இங்கு குறை வாகும். அவை பெரும்பாலும் கடற்கரையடுத்த பகுதிகளிற் காணப்படலாம். மரங்களில் வாழும் உயிரினங்களும் பறக்கும் உயிரினங்களுமே அதிகமாக உள் ளன. வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், சிறிய செந்துகள் முதலியன பெருந் தொகையாகக் காணப்படுகின்றன. இவை எளிதாக இடம் பெயர்ந்து செல்ல வல்லன. இந்த இயல்பினுல் ஆசிய, அவுஸ்திரேலிய உயிரினங்கள் ஒன்றுசேர வாய்ப்பு உண்டு. முலையூட்டி விலங்குகளுள்ளேயே அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியாவில் வெளவால், கொறிக்கும் உயிரினவகை கள் முதலியன சில தவிர, ஏனை முலையூட்டிகள் மாசுப்பியல்களாகவோ (மதலைப் பையுடையவை) மொனுேத்திரீம்களாகவோ (ஒற்றைக் கழிவறை கொண்டவை) காணப்படுகின்றன. ஆசியாவில் இத்தகைய விலங்குகள் இல்லை. இங்குள்ள முலையூட்டிவகைகளுள் குரங்குகள், அணில்கள், மூஞ்சூறுகள் முதலியனவும் குளம்புள்ள விலங்குகளும் குறிப்பிடத்தக்கன.
ஆசியாவிலிருந்து பரவிவரும் விலங்கின வகைகள் அதிகமாகும். பல வருடங் களாக இவ்விலங்கின வலயங்களைப் பிரித்தற்கு வல்லேசின் கோடு உபயோகிக் கப்பட்டது. வல்லேஸ் என்பாரின் எல்லைக்கோடு லொம்பொக், செலிபீஸ் தீவு களுக்கு மேற்கில் அமைந்திருந்தது. பின்பு ஹக்ஸ்லி என்பார் பிலிப்பைன் தீவு களையும் அவுஸ்திரேலிய வலயத்துள் அடக்கி இக்கோட்டினத்திருத்தி வரைந் தார். புவியியலடிப்படையில் இந்த எல்லை சண்டாமேடை எல்லையோடு ங்ொருந் தக் காணப்படுகின்றது. பனிக்கட்டியாற்றிடைக்காலத் தொடர்பினுல் போணியோ, மலாயா, சுமாத்திரா, யாவா முதலிய பகுதிகளில் விலங்கினங்கள் " மத்திய தாைத் தீவுகளிடை" நிலத்தொடர்பு இருக்கவில்லை. விலங்கினங்கள் பற்றிப்
f
ஒரேமாதிரியாகப் பரவ முடிந்தது. சண்டாமேடைக்குக் கிழக்கிலுள்ள
பின்பு நிகழ்ந்த ஆராய்ச்சிகள் மூலம் வல்லேசின் கோடுபற்றிய குறைபாடுகள் தெரியவந்தன. விலங்கினங்கள் தொடர்ச்சியாகக் கிழக்கு நோக்கி நகர்ந்தமைக் குச் சான்றுகள் உண்டு. ஆசிய அவுஸ்திரேலிய விலங்கினங்களை ஏறத்தாழப் பொருத்தமான முறையிற் பிரிக்குங் கோடாக விபரின் கோடு அமைந்துள்ளது. இக்கோட்டிற்குக் கிழக்கில் அவுஸ்திரேலிய விலங்கினங்கள் அதிகமாகக் காணப் படுகின்றன. ஆசியாவுக்கேயுரிய விலங்கின வகைகளின் கிழக்கு எல்லையைக் காட்டும் கோடாக வல்லேசின் கோடு இன்று கொள்ளப்படுகின்றது. சாகுல் மேடைக்குச் சற்று மேற்கிலுள்ள எல்லையே அவுஸ்திரேலிய, நியூகினி விலங் கினங்களின் மேற்கு எல்லை எனக் கொள்ளப்படுகின்றது. இந்த எல்லைக்கும் வல்லேசின் எல்லேக்குமிடையில் புவியோட்டுச் சிதைவேற்படக்கூடிய நிலையில் லாத பகுதி காணப்படுகின்றது. இதுவே " மத்தியதரை” வலயமாகும். இவ் வலயத்தில் முதலில் விலங்கினங்கள் அழிந்துபட்டன. பின்பு அயலேயுள்ள கண்டங்களிலிருந்து அவை பரவின. இவ்வாறு விலங்கினங்கள் பரவியபொழுதும் அவை ஒழுங்கான முறையிற் பரவவில்லை. இதனல் இடத்துக்கிடம் சீரற்ற நில் மைகள் காணப்படுகின்றன. இந்த " மத்தியதரை ” விலங்கின வலயத்திற்கு அண்மையாகவே விபரின் எல்லேக்கோடு அமைந்துள்ளது.

Page 49
அத்தியாயம் 5 தென்கிழக்கு ஆசியாவின் மண்வகைகள் அயனப் பிரதேச மண்விருத்திக்கு உதவும் காரணிகள்,
தென்கிழக்கு ஆசியாவின் மண்வகைகளைப் பொறுத்தவரையில் ஓர் ஒருமைப் பாடு உண்டு. இம்மண்வகைகள் மிகவும் ஈரமான நிலைமையில் அமைந்தனவா கும். பொதுவாகச் “சரளைமண் ” (லற்றாைற்) எனக் குறிப்பிடப்படும் இம் மண் வகைகளிடை அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே பொதுப்பட்ட இப்பதம் தவமுன கருத்தையே கொடுப்பதாக உள்ளது. உலகின் ஏனைய பகுதி களிற் போன்று அயனப் பிரதேசத்திலும் மண்வகைகள் காலநிலை, முதற்பாறை, தாவரவகைகள், விலங்குகள், தரைத்தோற்றம், வடிகாலமைப்பு ஆகியவற்றிடை யேயுள்ள தொடர்பு காரணமாக அமைந்துள்ளன. இவற்றுள் ஏதாவது ஒன் றில் மாற்றம் ஏற்படும் பொழுது மண் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. மண்வகைகள் உண்டாவதற்குக் காலமும் முக்கியமாகும். மண்வகைகள் உண் டாவதற்குத் துணையாகவுள்ள காரணிகள் நீடிய காலத்திற்குத் தொழிற்படுமா யின் இறுதியில் முதிர்ச்சி பெற்ற மண்வகைகள் அமைகின்றன. காட்டு மாங்கள் வெட்டி நீக்கப்படும்பொழுது அன்றேல் எரிமலைத் தாக்கம் ஏற்பட்டுப் புதிய பாறைகள் வெளியே எறியப்படும் பொழுது மண்வகைகள் உண்டாகத் துணை யாகவுள்ள காரணிகளில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனுல் மண்வகைகள் மீண் ம்ெ புதியனவாய் அமையவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்பொழுது வேறு பட்ட முறையில் மண்வகைகள் உண்டாகின்றன. எனவே இடத்துக்கிடம் மண் வகைகளிற் காணப்படும் வேறுபாடுகள் மண்வகைகள் உண்டாகும் படிமுறையி அலுள்ள வேறுபாடுகள், காலம் ஆகியன காரணமாக ஏற்பட்டவையாகும்.
தென்கிழக்கு ஆசியாவில் வானிலையழிவு இடத்துக்கிடம் ஒரே சீரானதாகக் காணப்படுகின்றது. இப்பகுதியில் உறைபனி, வெப்பம், குளிர் ஆகியவற்றிடையே யுள்ள வேறுபாடுகள் முதலியன குறைவாகும். ஆகவே வானிலையழிவு பெரும் பாலும் வெப்பம் அதிக மழைவீழ்ச்சி என்பன காரணமாகவே நிகழுகின்றது. இதனல் பொறிமுறை வானிலையழிவுக்குப் பதிலாக இப்பகுதியில் இரசாயன முறை வானிலையழிவே பெரும்பாலும் நிகழுகின்றது.
தென்கிழக்கு ஆசியாவில் மத்திய கோட்டிற்குத் தூரத்தேயுள்ள பருவமழை வீழ்ச்சியுள்ள பிரதேசங்களில் (பேமா, தைலாந்து ஆகிய நாடுகளின் வறண்ட வலயங்கள்) மண்வகைகள் உண்டாகும் முறைகள் இருவகையின. மேற்பரப்பு ஆவியாகல் பெரும்பாலும் இல்லாத வருடப் பகுதியில் மத்திய கோட்டுப் பிரதே சங்களுக்குரிய மண் உண்டாகும் முறைகளும் மேற்பரப்பு ஆவியாகல் மிகக் கூடிய அளவிற் காணப்படும் வருடப் பகுதியில் பாலைநிலப் பிரதேசங்களுக்குரிய
மண் உண்டாகும் முறைகளும் காணப்படுகின்றன.
68

மண்வகைகள் 69
அயனப் பிரதேசங்களில் ஏற்படும் வெப்பமான மழைநீரில் காபனேற்று, சிதைந்த தாவரப் பொருள்களான சேதனவிரசாயனப் பொருள்கள் முதலியன கலந்துள்ளன. இதல்ை இம்மழைநீர் பெரும்பாலான பாறைகளிலுள்ள சிலிக் கேற்றை எளிதிற் சிதைத்துவிட வல்லது. சிலிக்கேற்றுப் பொருள்கள் உப்புப் பொருள்களாகச் சிதைவுற்றுக் கரைந்து போய்விடுகின்றன. இறுதியாக எஞ் சிக் காணப்படும் ஒட்சைட்டுப் பொருள்கள் மண்ணுேடு சேர்ந்து விடுகின்றன. இப்பொருள்களும் அதிக மாற்றங்களுக்குள்ளாகின்றன. இம்மாற்றங்கள் களிப் பொருள்கள் அமைவதற்குத் துணைசெய்கின்றன. தென்கிழக்கு ஆசியத் தாழ் நிலங்களிலுள்ள அயனப் பிரதேச வெப்பம் சிலிக்கேற்று விரைவாகச் சிதைந் தழியக் காரணமாக உள்ளது. ஐரோப்பியப் பகுதி, உயரமான மலைப்பகுதிகள் ஆகியவற்றேடு ஒப்பிடும்பொழுது இப்பகுதியில் பாறைகள் விரைவாகச் சிதைந்து முதிர்ச்சி பெற்ற "இறுதிநிலை” மண்வகைள் அமைகின்றன. சண்டா மேடை சாகுல்மேடை ஆகியன நீண்ட புவிச்சரித காலமாக நிலையானவையாக இருந்து வந்துள்ளன. இதனுல் இப்பகுதிகளில் முதிர்ச்சிபெற்ற மண்வகைகள் காணப்படுகின்றன. எரிமலைகள் ஏற்பட்ட புதிய பகுதிகளிற் காணப்படும் இள மையான மண்வகைகளும் விரைவாக முதிர்ச்சிபெற்றனவாய் மாறி வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள சிக்கலான மண்வகைகளோடு வேறுபட்ட பாறை வகைகளும் குறிப்பிடத்தக்கன. இப்பிரதேசத்தின் புறவோரங்களைச் சார்ந்த வறண்ட பருவமும் கூடிக்குறைந்து காணப்படுகின்றது. எனவே தென்கிழக்கு ஆசியாவின் வேறுபாடுகள் மேலுமதிகமாக உள்ளன. அயனப் பிரதேச ஈரவெப்ப வானிலையழிவு காரணமாக மண்வகைகள் விரைவாக முதிர்ச்சி பெற்று விடுகின்ற மையால் மண்வகைகளிடை வேறுபாடுகள் தென்படுகின்றன.
அயனப் பிரதேசத்தில் தரைநீர்
தென்கிழக்கு ஆசியாவில் சில சிறு பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் வருடத் தில் ஆவியாகலிலும் பார்க்க அதிகமான மழைவீழ்ச்சி உண்டு. மழைநீரில் ஒரு பகுதி தரையுட் சென்று மண்ணிலுள்ள திண்ணிய பொருள்களைக் கரைப்பதற்கு உதவுகின்றது. மண்ணிலுள்ள சில கூட்டுப்பொருள்கள் தாவரங்கள் சிதைந்தழிவ தனுல் உண்டாகின்றன. ஆனல் தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத சத்துப் பொருள்கள் தரைநீர் உட்சென்று கரைப்பதனலேயே கிடைக்கின்றன. இவை வேர்கள் மூலம் தாவரங்களுக்குப் பயன்படுகின்றன. கரைதற் பொருள்கள் யாவுமே தாவரங்களுக்குப் பயன்படுகின்றன எனக் கூறமுடியாது. அவற்றுட் பல கரைந்து வெளிச்சென்று விடுகின்றன. தரைநீர் உட்செல்வதனல் மண்ணிலுள்ள கரையக்கூடிய பொருள்கள் யாவும் கரைந்து சென்று விடுகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் இந்த நிலைமையே காணப்படுகின்றது. மேற்பரப்பில் அடர்த்தியாகத் தாவர வகைகள் காணப்படும் பொழுது கரைந்து செல்லும் சில பொருள்களைச் சிதைந்து அழுகிப்போகும் தாவரப் பொருள்கள் மூலம் ஈடுசெய்யக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. ஆனல் தாவரவகைகள் நீக்கப்பட்டதும் மண்ணிலுள்ள கரைந்து விடக்கூடிய பொருள்கள் எளிதில் அற்றுவிடுகின்றன. அவற்றை ஈடு

Page 50
70 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
செய்யக்கூடிய பொருள்கள் இல்லாமையால் மண் வளங்குன்றிவிடுகின்றது. பயிர்ச்செய்கை தொடர்ச்சியாக நடைபெறுமிடங்களில் மண்வளங்குன்றி விடுவ தற்கு இதுவே காரணமாகும். தரைநீர் உட்செல்வதனல் மண்ணிலுள்ள கரை யும் பொருள்கள் கரைந்து மண் பயிர்களுக்குப் பயனற்றதாய் விடுகின்றது. வறண்டபருவம் ஏற்படும் பகுதிகளில் தரைநீர் உட்சென்று கழுவுதல் தொடர்ச்சி யாக நிகழமுடிவதில்லை. இப்பகுதிகளில் குறித்த காலத்தில் மழைவீழ்ச்சியிலும் பார்க்க ஆவியாகல் அதிகமாக நிகழும். அப்பொழுது நீர் உட்சென்று கழுவுதல் தடைப்பட்டு கரையுமியல்புடைய தாவரச் சத்துப் பொருள்கள் சேர வாய்ப்பு ஏற்படும். அல்லாமலும் ஆழமான பகுதிகளிலிருந்து மயிர்த்துளைத் தாக்கமுறை மூலம் கரைதற் பொருள்கள் மேலுக்குக் கொண்டுவரப்படும். வறண்ட பருவம் உள்ள வலயங்களில் மண்வகைகள் சத்துப் பொருள்களை முற்முக இழந்து வளங். குன்முமைக்கு இப் பருவகால விளைவே காரணமாகும். மத்திய யாவாவிலிருந்து கிழக்கேயுள்ள பகுதி, கிராப் பூசந்திப் பகுதி, வடக்கே பேமா, தைலாந்து, இந் தோசீனு என்பன இத்தகைய வறண்ட பருவமுடைய பகுதிகளாகும். மத்திய கோட்டுப் பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இவை வளங்கூடியன வாயிருப்பதோடு பயிர்ச்செய்கை, குடித்தொகை மிக்கனவாயும் உள்ளன.
தசைநீர் உட்சென்று கழுவுதல் அயனப் பிரதேசங்களில் மட்டும் நிகழுவ தன்று. ஏனைய பகுதிகளிலும் இது நிகழ்வதுண்டு. ஆனல் அயனப் பிரதேசங்க ளில் அதிக வெப்பநிலையும் மழைவீழ்ச்சியும் உள்ளமையால் தரைநீர் அதிக சத்தி வாய்ந்ததாகக் காணப்படுகின்றது; தரையுட் சென்று கரையும் பொருள் களை எளிதிற் கரைத்து விடுவதோடு சிலவற்றை விரைவாகக் கொண்டு சென்று விடுகின்றது. மழைநீரும் தரைநீரும் அதிகமாக உள்ள பகுதிகளில் கரையும் பொருள்கள் எளிதில் அற்றுப்போய்விடுகின்றன. மணற்பொருள்கள், களிப் பொருள்கள், இரும்பு ஒட்சைட்டு (மண்ணிற்கு நிறம் ஏற்படக் காரணமாயிருப் பது) முதலியன கரைந்து செல்லும் வேகம் தரைநீரின் சேதனப்பொருளின் தன்மையையும் அதன் வெப்பநிலையையும் பொறுத்துள்ளது. தசைநீரில் சேத னப் பொருள்கள் அதிகமாகக் கலந்திருக்குமானல் அதனுல் களிப்பொருள்கள், இரும்புக் கூட்டுப்பொருள்கள் முதலியன விரைவாகக் கழுவப்பட்டு விடலாம். ஆனல் படிகக் கற்களாக உள்ள சிலிக்காப் பொருள்கள் இத்தகைய தரை நீரி ஞல் தாக்கப்படாது அதிக காலத்திற்குக் காணப்படலாம். கிளிங்கா என்பாரின் ஆராய்ச்சிப்படி தசைநீராற் பாதிக்கப்படும் பகுதியில் முதிர்ச்சி பெற்ற மேல் மண் பெரும்பாலும் மணல்தன்மை உடையதாயிருக்கும். மண்ணிற்கு நிறமூட் டும் பொருளான இரும்பு ஒட்சைட்டு நீக்கப்பட்டதனல் இம்மணல் வெண்ணிற மாகக் காணப்படும். கழுவிக் கொண்டு செல்லப்பட்ட இரும்பு ஒட்சைட்டு முதிர்ச்சி பெற்ற கீழ்மண் படையிற் படிந்து காணப்படும்.இத்தகைய முறை யில் மண்வகைகள் உண்டாதல் "சாம்பனிற மண்ணுக்கம்" (Podsolisation) எனப்படும். தசைநீரில் சேதனப் பொருள் குறைவாயிருக்குமானல் அதனல் சிவிக்காப் பொருள்கள் எளிதில் பாதிக்கப்படலாம். அவ்வாறு பாதிக்கப்படும் பொழுது சிலிக்காப் பொருள்கள் விரைவாகச் சிதைந்து அலுமினியம் சிலிக்

மண்வகைகள் 7.
கேற்முக மாற்றமடைகின்றன. சிதைந்த பொருள்களுட் சில நீராற் கழுவப்பட் டும் விடுகின்றன. இதனுல் இறுதியில் அமையும் முதிர்ச்சிபெற்ற மேல்மண் வகை கள் பெரும்பாலும் நிலையான களிமண்பொருள்கள், இரும்புக் கூட்டுப் பொருள் கள் முதலியன சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன. இத்தகைய பொருள்கள் சேர்ந்திருப்பதனுல் அவை சிவப்பு, மஞ்சள், கபிலநிறத் தன்மைகள் சார்ந்தன வாக உள்ளன. இத்தகைய முறையில் மண்வகைகள் அமைதல் “சரளை மண் னக்கம்" (Laterisation) எனப்படும். தென்கிழக்கு ஆசியாவில் மண்வகைகள் பெரும்பாலும் இவ்வாறே அமைகின்றன. இம்முறையில் அமைந்த இறுதி மண் வகை லற்றாைற்று எனப்படும். லற்றாைற்று நுண்டுளைகளையுடைய, எளிதில் உடைந்து விடக்கூடிய, செந்நிற மண்ணுகும். இம்மண் பெரும்பாலும் களிப் பொருள்கள், இரும்புக் கூட்டுப் பொருள்கள் முதலியன சேர்ந்தமைந்ததாகும், காற்றில் இம்மண் இறுகி வன்மைபெற்று விடுகின்றது. முதற்பாறை எத்தகைய தாயிருந்த பொழுதும் மேற்குறித்த முறையில் அமையும் மண்வகை இறுதியில் லற்றாைற்று எனப்படும் சரளைமண்ணுகவே மாறிவிடுகின்றது. முதிர்ச்சி பெற்ற சரளைமண்வகைகள் சில சிறிய பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஏனைய பகுதிகளில் “சரளைமண்ணுக்கம்” முதிர்ச்சி நிலையை இன்னும் அடையவில்லை. தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாகத்தில் மண்வகைகள் மட்டான அளவுக்கே " சரளைமண்ணுக்க " முறையாற் பாதிக்கப்பட்டுள்ளன எனக்கூறுவதே பொருத்த மாகும். மண்வகையிலுள்ள சிலிக்கா, அலுமினுப் பொருள்களின் விகிதாசாரத் தைப் பார்த்து இந்த நிலையை அறிந்து கொள்ளலாம். மண்ணில் சிலிக்காப் பொருள்கள் அதிகமாக இருக்குமானுல் "சரளைமண்ணுக்கம்” குறைந்த அள வுக்கே நிகழ்ந்துள்ளது எனக் கொள்ளல் வேண்டும் (பொலினேவ்).
"சாளே மண்ணுக்கத்தினுல்' மண்வகைகளில் சிக்கலான இரசாயன, பெளதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கு விரி வான ஆராய்ச்சிகள் அவசியமாகும்.
மண்ணிலுள்ள சேதனப் பொருள்களின் அளவு வெப்பநிலையைப் பொறுத் துள்ளது. சருகுகள், ஏனைய தாவரப் பொருள்கள் முதலியன சிதைந்தழிவதற் குக் காரணமாகவுள்ள மண்ணிற் காணப்படும் பற்றீரியங்கள், பங்கசுக்கள் என் பன வெப்பநிலையைப் பொறுத்தே உண்டாகின்றன. தாவரப் பொருள்கள் முத வில் அழுகிய கருநிற மட்கலாக மாறிப் பின்பு இரசாயனக் கூட்டுப்பொருள்க ளாக அமைகின்றன. பட்டுப்போன மாங்கள், செடிகள், அவற்றின் இலைகள் முத வியன இறுதியில் மண்ணுேடு சேர்ந்து விடுகின்றன. அவை பற்றீரியங்கள் எனப் படும் நுண்ணுயிர்களினல் பாதிக்கப்பட்டதும் படிப்படியாகச் சிதைந்தழிகின் றன. மேலே கூறியவாறு சிதைந்தழிதல் வெப்பநிலையைப் பொறுத்துள்ளது. அய னப் பிரதேசங்களில் மண்வெப்பநிலை 75 ப. பாகைக்குமதிகமாகும். இதனுல் தாவ ாங்கள் அடர்த்தியாகச் செழித்து வளர்வனவாகத் தோன்றினும், சேதனப் பொருள்களை அவை பதிலீடு செய்வதிலும் பார்க்க விரைவாக நுண்ணுயிர்கள் அழித்து விடுகின்றன. எனவே சரளை மண்ணிற் சேதனப் பொருள்கள் குறை வாகவே உள்ளன. இச்சேதனப் பொருள்கள் மேல்மண்ணிற் சில அங்குலத் தடிப்

Page 51
72 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
பாகக் காணப்படுகின்றன. இதன் கீழ் அழுகிய பொருள்கள் காணப்படமாட்டா. செறிவான மரங்களுள்ளிட்ட தாவரங்களினல் மூடப்பட்டுள்ள பகுதிகளில் மண் வெப்பநிலை 75 ப. பாகைக்குக் குறைவாகவிருக்கும். இதனுல் சேதனப் பொருள் கள் சிதைந்தழிதலிலும் பார்க்கச் சேதனப் பொருள்கள் திரண்டு சேருதல் அதிக மாக நிகழுகின்றது. அழுகிய பொருள்கள் சேர்ந்து காணப்படுவதனல் மண்வகை கள் கருநிறமாகக் காட்சியளிக்கின்றன.
தென் கிழக்கு ஆசியாவின் மேற்குப் பாகத்தில் சாதாரணமாக நீர்தேங்கி நிற்ற அலுண்டு. இதனுல் நுண்ணுயிர்கள் பெருகுவதற்கு வேண்டிய ஒட்சிசன் இல்லாது போய்விடுகின்றது. எனவே மண் வெப்பநிலை எத்தகையதாயிருந்த பொழுதும் நுண்ணுயிர்களின் தாக்கம் குறைவாக இருத்தலினல் பட்ட மரஞ்செடிகள் திரண்டு முற்முநிலக்கரிப் படையாக அமைந்து விடுகின்றன. உயரங் காரண மாகவும் மண் வெப்பநிலை 75 ப. பாகைக்குக் குறைந்துவிடுகின்றது (கிளிங்கா). அவ்வாறு குறைவதனுலும் மண்ணிலுள்ள அழுகிய பொருள்களின் அளவு வேறு படுகின்றது. யாவாவிலுள்ள பிரெயாங்கர் என்னுமிடத்தில் குன்றுகளின் 9ے{{ வாரத்தில் மேல்மண் குறைந்த அளவு அழுகிய பொருள்களைக் கொண்டதாயும் செந்நிறமாயும் காணப்படுகின்றது. இம்மண் படிப்படியாக மாற்றமடைந்து 5,000 அடி உயரமான இடத்தில் அதிக அளவு அழுகிய பொருள்களைக் கொண்ட தாயும், உயரமான மலைப்பகுதியில் கபிலநிறமாயும் கருநிறமாயும் மாற்றமடைந் தும் காணப்படுகின்றது. அடிக்குன்றுப் பகுதியில் கீழ்மண் செந்நிறமாகக் காணப்படும். இப் பகுதியில் “சரளைமண்ணுக்கம்” அதிகமாக நிகழுகின்றது. ஆனல் உயரமான பகுதிகளில் கீழ்மண் மங்கிய வெண்ணிறமாகக் காணப்படும். இப்பகுதிகளில் வெப்பநிலை குறைவாக இருத்தலினல் "சாம்பனிற மண்ணுக்கம்” பெரும்பாலும் நிகழுகின்றது. கீழ்மண் வெண்ணிறமாக மாறுவதற்கு இதுவே காரணமாகும்.
அயனப் பிரதேசங்களில் நுண்டுளைத் தன்மையுடைய பாறைகள் காணப்படும் சில இடங்களில் சாம்பனிற மண்வகைகள் உண்டு. பங்கா, போணியோ, மலாயா, ஆகிய பகுதிகளிற் காணப்படும் வெண்ணிறமான மணல், மணற்பாறைகள் என் பன குறிப்பிடத்தக்கன. இப்பகுதிகளிற் சாளைமண்ணுக்கத்திற்குப் பதிலாகச் சாம்பனிற மண்ணுக்கம் ஏன் நிகழுகின்றது என்பது தெளிவாக அறியப்பட வில்லை. இப்பகுதிகளிற் காணப்படும் வெண்ணிறமான மணல்வகை சாம்பனிற மண்ணுக்க நிலைமைகளைக் காட்டுகின்றன. மேலும் இப்பகுதிகளில் அடர்த்தி யற்ற துணைக்காடுகளே பொதுவுாகக் காணப்படுகின்றன. சாம்பனிற மண்வகை உண்டாவதற்கு இவை அடிப்படைக் காரணமாகவிருந்தனவா, அன்றேல் இம் மண்வகை காரணமாகக் காடுகள் அமைந்தனவா என்பதும் தெளிவாக ஆரா யப்படவில்லை. கிளிங்கா என்பாரின் ஆராய்ச்சியின்படி மிக்க ஈரமும் அழுகிய பொருள்களும் காணப்படும் சாளைமண் பகுதிகளிலும் சில இடங்களில் வெண் ணிறமான மண்வகை உண்டாகலாம் என்பது தெரிய வருகிறது. ஆனல் அயனப் பிரதேசங்களில் இத்தகைய நிலைமைகளில் உண்டாகும் சாம்பனிற மண்வகை இரசாயனச் சேர்க்கையைப் பொறுத்த வரையில் இடைவெப்பக் காலநிலைப் பிர

மண்வகைகள் 73
தேசங்களிற் காணப்படும் மண்வகைகளிலும் வேறுபட்டன. மக்னெற்றைற்று இரும்புப் பொருள்கள் காணப்படும் பாறைகளிலிருந்து வெண்ணிறமான சாளே மண் உண்டாகலாம் எனவும் கிளிங்கா கருதுகின்றர். இத்தகைய இரும்புப் பொருள்களைக் கொண்ட பாறைகள் வானிலையழிவினுற் பாதிக்கப்படும் பொழுது எளிதிற் சிதைந்து கபிலநிற ஒட்சைட்டாக மாறிவிடமாட்டா.
சரளைமண்வகை
சரளைமண் வகை பொதுவாகச் செந்நிறமானவை. சில தடித்த மஞ்சள் நிற மாகவும் காணப்படலாம். ஆனல் இரசாயன முறையில் இவற்றிடையே அதிக வேறுபாடு இல்லை. சில மண்வகைகளிலுள்ள பல்வேறுபட்ட இரும்பு ஒட்சைட் ப்ெ பொருள்கள் அதிக அளவுக்கு நீருட்கொள்ளப்பட்டதனல் மாற்றமடைந் திருக்கலாம். எனவே நிறத்திலுள்ள சிறிய வேறுபாடுகள் இன்று முக்கியமான வையாகக் கருதப்படுவதில்லை. சில சமயங்களில் மஞ்சள் நிறமான மண்ணில் சிறு செந்நிறக் கட்டிகள் காணப்படலாம். பட்ட தாவரங்களின் வேர்கள் மூலம் காற்றேட்டம் நிகழ்வதனுல் இது ஏற்படுகின்றது எனக் கருதப்படுகின்றது (பென்டில்டன்). ஆனல் இக்கருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சில சமயங்களில் செந்நிறக் கட்டிகளின் நடுவில் சிறு வேர்கள் சென்ற துவாரங்கள் காணப்படுவதுண்டு. அவற்றின் வெட்டுமுகத் தோற்றம் சிப்பி ஒே போன்றிருக் கும். al
முதற்பாறைகளிடை வேறுபாடு காணப்படுகின்றபொழுதும் சாளைமண்ணுக்க முறை மூலம் உண்டாகும் மண்வகைகள் யாவும் ஏறத்தாழ ஒரேமாதிரியாகக் காணப்படும். எனவே அயனப் பிரதேசங்களில் கருங்கற் பாறைகளிலிருந்தும் சுண்ணக்கற் பாறைகளிலிருந்தும் செந்நிற மண் உண்டாகலாம். முதிர்ச்சிபெற்ற மண்ணுக மாறுவதற்கு மட்டும் பாறைகளைப் பொறுத்துக் காலம் ஏற்றத்தாழ் வுடையதாயிருக்கும். சாளைமண்ணுக மாற்றமடைந்த மண்ணில் முதற்பாறைக ளின் இரசாயனத்தன்மை நீடிய காலத்திற்குக் காணப்படலாம். சுமாத்திரா, யாவா ஆகிய தீவுகளிற் சில பகுதிகளில் தீப்பாறைகள் உப்பு மூலப்பொருள் சேர்ந்தனவாகவும் வேறு சில பகுதிகளில் அமிலப் பொருள் சேர்ந்தனவாகவும் உள்ளன. அதிக அமிலஞ் சேர்ந்த தீப்பாறைகளில் கல்சியம், பொசுபொாசு முத லிய பொருள்கள் மிகவும் குறைவாக இருக்கும். இதனுல் இப்பாறைகள் வானிலை பழிவால் மெதுவாகச் சிதைவடைய வளமற்ற மண்வகைகள் உண்டாகின்றன. உப்பு மூலப் பாறைகளில் மேற்குறித்த பொருள்கள் அதிகமாகக் காணப்படும். எனவே அயனப்பிரதேசங்களில் இப்பாறைகள் வானிலையழிவால் எளிதிற் சிதைந்து விடுகின்றன. இவ்வாறு உண்டாகும் மண்வகைகள் வளமிக்கனவா யும் உள்ளன. மண்வகைகள் தொடர்ந்து விரைவாக நீராற் கழுவப்படுகின்றன. எனவே வானிலையழிவு மிகக்கூடிய நிலையிற் காணப்படும் பகுதிகளில் உப்புமூலப் பாறைகளிலிருந்து உண்டாகும் மண்வகை அமிலப் பாறைகளிலிருந்து உண்டா கும் மண் வகைகளிலும் பார்க்க வளமுடையன எனக் கூறமுடியாது. யாவt வில் உள்ள பல்வேறுபட்ட எரிமலைகளின் ஓரங்களில் எதிர்காலப் பயிர்ச்

Page 52
74 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
செய்கையைப் பொறுத்தவரையில் அதிக வேறுபாடுகள் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். யாவாவிற் குடியடர்த்தி குறைவாயுள்ள பகுதிகளை எடுத் துக் கொண்டால் அவை அமிலத் தீப்பாறைகளிலிருந்து உண்டான மண்வகை காணப்படும் பகுதிகளாகவோ, உப்புமூலப் பாறைகளிலிருந்து உண்டான, மிகையான அளவுக்கு முதிர்ச்சிபெற்ற மண்வகை காணப்படும் பகுதிக ளாகவோ உள்ளன எனத் திட்டமாகக் கூறிவிடலாம். எல்லா வகையான பாறைகளிலிருந்தும் முதிர்ச்சி பெற்ற சாளைமண் உண்டாகுமோ என்பதுபற்றி மண்ணியல் ஆராய்ச்சியாளரிடையே கருத்து வேறுபாடு உண்டு. அவர்களுட் பெரும்பாலார் அவ்வாறு உண்டாகலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவரா யுள்ளனர். கலப்பில்லாத படிக மணற்பாறை எளிதிற் சிதைந்து சரளைமண்ணுக மாறுவதில்லை. நரம்புபோன்ற படிகக் கட்டிகளைக் கொண்டுள்ள முதற்பாறைகள் வானிலையழிவாற் பாதிக்கப்பட்டுச் சிதைந்தழிந்த பின்பும் படிகக் கட்டி கள் சிதையாது திண்மையாகக் காணப்படுவதுண்டு.
சரளைமண்ணைக் குறிக்கும் லற்றாைற்று என்னும் ஆங்கிலப் பதம் (செங்கட்டி யைச் சுட்டும் லத்தின் பதத்திலிருந்து அமைந்தது) இப்பொழுது முதிர்ச்சி பெற்ற சரளைமண்வகையை மட்டும் குறிப்பதாகவே வழங்கப்படுகின்றது. இப் பதம் பல்வேறு காலங்களில் வேறுபட்ட கருத்தை உணர்த்தும் ஒரு பதமாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் 1807 ஆம் ஆண்டில் முதன் முதலாகப் புக் கானன் என்பவர் அயனப் பிரதேச மண்வகை ஒன்றைக் குறிக்கும் ஒரு சொல் லாக இதனை வழங்கியுள்ளார். இரும்புப் பொருள்களை அதிகமாகக் கொண்ட, மண்வெட்டியால் எளிதாக வெட்டக்கூடிய, மென்மையுடைய மண்வகைக்கே இது வழங்கப்பட்டது. மென்மையாகவிருந்த பொழுதும் குரிய ஒளி அல்லது காற்றுப்படும் பொழுது கட்டடங்கள் கட்டுவதற்கு ஏற்ற கடினமான கல் போன்று இறுகிவிடக்கூடியது. அயனப் பிரதேசங்களில் கட்டடங்கள் கட்டுவ தற்கு இது அதிகமாக உபயோகிக்கப்படுகின்றது. முதன் முதலில் மேற்குறித்த மண்வகையை மட்டும் சுட்டும் ஒரு சொல்லாகவிருந்த பொழுதும் பிற்காலத்தில் அயனப்பிரதேசங்களிற் காணப்படும் எல்லாவிதச் செந்நிற மண்வகைகளுக்கும் இப்பதம் வழங்கப்பட்டது. ஆனல் அண்மைக் காலத்தில் இப்பதம் ஒரளவு திருத் தமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் ஒரேமுகமாக வழங்கும் முறை இன்னும் வளர்ச்சியடையவில்லை என்றே கூறவேண்டும்.
சரஃளமண்ணில் மேலுள்ள சில படைகளே இயல்பாக இறுகிவிடுகின்றன. வானிலையழிவால் இவை மேலும் பாதிக்கப்படுதல் குறைவாகும். அயனமண் டலக் காலநிலைப் பிரதேசங்களில் இப்பாறைப்படைகளைக் கொண்டு கட்டப் பட்ட கட்டடங்கள் உறுதியானவையாயும் நிலையானவையாயும் உள்ளன. இப் பிரதேசங்களிலுள்ள கட்டடத்திற்குரிய வேறுபொருள்களிலும் பார்க்க இறு கிய சரளைமண் உறுதிவாய்ந்தது. மலாக்காவிலுள்ள பழைய கோட்டையும் அங்கோர் கோயில்களும் இதற்குக் தக்க சான்றுகளாகும். இக்கட்டடங்கள்

மண்வகைகள் 75
பல நூற்முண்டுக் காலமாக வானிலையழிவாற் பாதிக்கப்பட்டபொழுதும் அவை அமைக்கப்பட்டுள்ள சாளைமண் கட்டிகள் இன்றும் உறுதியானவையாக உள் ofoot.
முதிர்ச்சிபெற்ற சரளைமண் படைகள் நூறு அடிவரை தடிப்பாகக் காணப் படும். படைகள் யாவும் அவை காணப்பட்ட இடங்களிலேயே வானிலையழி வாற் பாதிக்கப்பட்டுச் சிதைந்தனவாகும். இதனுல் இவற்றை "மண்" எனக் குறிப்பிடுதல் சாலப்பொருத்தமாகும். நூறு அடிவரை தடிப்பாக உள்ளபொழு தும் இதில் வேறுபட்ட பல படைகள் உண்டு. மேலேயுள்ள மண் சில அங்குலத் தடிப்புள்ள காட்டுமண்ணுகும். அழுகிச் சிதைந்த தாவரப் பொருள்களைக் கொண்ட இம்மண் கருநிறமாகக் காணப்படும் (படம் 25). இதற்குக் கீழே
W\\\\\\\\\\\ དོ་རྡོ་དོད་དོ༽༽༽༽དོདོད་དོ། \ .NIN \\ \ \ \\ V V \ Wv V'\\ \\\\\\ܓܵܛܠRܠܬ\
V
Vや、 གོ་ག་དེ་ v W ...A., \ \ \ \ \ \ \ \ \ や དགག་གཞག་དེ་དེ་ \, Vャ
V AAAAAAAAAAA \\\\\\\\\\ A Vདོད་དག་དད་དོ། དེ་ན DAAAAAAA VAVA
w
டம் 25. கோராத் என்னுமிடத்திலுள்ள மணற்கற் சரளை மண்ணின் வெட்டுமுகத் தோற்றம். பெயர்ச்சிப் பயிர்ச் செய்கைக்காக மேற்பரப்பிலுள்ள தாவரம் எரிக்கப்பட்டுள்ளது. (a) செம் மஞ்சள் நிற மணற்படை ; மரங்களின் பழைய வேர்கள் ஒடியுள்ள இடங்களில் குழாய் வடிவ இரும்புப் படிவுகள் காணப்படுகின்றன. (b) இரும்புப் படிவுகள், மணியுருத் திரள்கள் முதலியவற்றைக் கொண்ட 8-12 அங்குலத் தடிப்புள்ள சரளைமண் படை. (c) வானிலையழிவாற் பாதிக்கப்பட்ட கபிலநிற-செந்நிற மணற் படை. பழைய வேர்கள் காணப்பட்ட வெற்றிடங்கள் சில படைகளில் தெரிகின்றன. (d) கோராத் செந்நிற மணற் படை. சற்றே இறுகிய இப்படை அதிகம் சிதையாத நிலையில் உள்ளது
செந்நிறமான மண் படை காணப்படும். உடையுந் தன்மையுடைய இம்மண் எளிதில் ஒட்டக்கூடியதாயும் உள்ளது. நீருட்புகக் கூடிய இம்மண் குரிய ஒளி பட்டதும் எளிதில் இறுகிவிடும். நீர் மண்ணில் உறிஞ்சப்பட்டிருப்பதனுல் சரளை மண்படை காணப்படும் இடங்களில் ஊற்றுக் கிணறுகள் அதிக பயனளிக்க மாட்டா. மேற்பரப்பிலிருந்து நான்கு அல்லது ஐந்து அடி கீழே வேறுபட்ட அமைப்புடைய படை ஒன்று உண்டு. இப்படையில் மென்மையான களிப் பொருள்கள் நடுவிலும் அவற்றைச் சுற்றிக் கரடுமுரடான தன்மையையுடைய இரும்புக் கூட்டுப் பொருள்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இப்பொருள் கள் காணப்படும் படையே எளிதில் இறுகக்கூடியதும் கட்டடங்களுக்குப் பயன்படக்கூடியதுமாகும். இப்படையிலுள்ள இரும்புப் பொருள்கள் அவை
6-88 4217 (68/9)

Page 53
76 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
காணப்படுமிடங்களிலேயே படைபோன்று இறுகிவிடுகின்றன. தரைக்குச் சமாந்தரமாக அவை காணப்படும். உறுதியாக இறுகிய இரும்புப் பாளங்கள் எரிமலைப்பொருள்கள் எனத் தவமுகக் கருதப்படலாம். இப்பாளங்கள் 30 சத வீதம் வரை இரும்பைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் இவை உருக்கப் பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய இரும்புப் பாளங்களைப் பெருந் தொகையாகப் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான உருக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். இப்பாளங்களோடு மங்கனீசு ஒட்சைட்டும் சேர்ந்து காணப்படும். மண்ணின் கீழ் இரும்புப்பாளம் பரந்தும் காணப் படலாம். அவ்வாறிருக்கும்பொழுது நீர் உட்புகாது தடைபடும். காடு கள் வெட்டி அழிக்கப்பட்ட பகுதிகளில் மேல் மண்படை நீராற் கழுவப்பட்டு விடும். சில சமயங்களில் இரும்புப் படையின் மீது சறுக்கிக் கீழ்ச்சென்று விடும். அப்பொழுது இரும்புப் படை உறுதியான பீடம்போன்று வெளித்தோன் றிக் காணப்படும். இது காணப்படும் இடங்களில் தாவரங்கள் வளாமாட்டா.
படம் 26. சிங்கப்பூரின் மேற்குப் பகுதியிலுள்ள இறப்பர் மரங்கள் நீக்கப்பட்ட குன்றின் குறுக்குமுகத் தோற்றம். (1) பாறைப்படைத் தளங்களுக்குக் குறுக்கே காணப்படும் இரும்புப் படிவுகளைக் கொண்ட சரளைமணற் படை, (2) மூன்றடித் தடிப்புள்ள கீழ்ச் செம்மண் படை. (3) சற்றே நீக்கப்பட்டமாக்கற் படை, (4) உருண்டைக் கற்படை
இரும்புப் படிவுகள் உண்டாகக் கீழ்மண் நீர்மட்டத்தில் ஏற்படும் பருவகால வேறுபாடுகளும் கரைசல்களோடு சேர்ந்த நீர் உட்செல்வதனுல் ஏற்படும் மாற்றங்களும் காரணம் எனக் கருதப்படுகின்றது. மேற்பரப்பு நிலைமைக ளோடு தொடர்பில்லாத முறையில் இரும்புப் படிவுகள் அமைந்துள்ளன. உட் பகுதியிலுள்ள வடிகால் முறைகள் காரணமாகப் பிளவுத் தளங்களைச் சார்ந்து அவை அமைந்துள்ளன. படிகப்பார்களைச் சார்ந்து ஒழுங்கற்றமுறையில் இரும் புப் படிவுகள் அமைவதும் உண்டு. தடிப்பான சரளைமண் படைகளுக்கூடாகப் படிகப்பார் சிதையாது உறுதியாகக் காணப்படும். இரும்புப் படிவுகளை ஒத்த படைகள் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இரும்புப் படிவுகள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன என்று கூறுவதும் பொருந்தாது. இப்படிவு கள் தீப்பாறைகளிலிருந்து உண்டாகின்றன எனச் சிலர் கருதுகின்றனர். சாளை மண்படைகள் பெரும்பாலும் தரைத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. முதற்பாறைகள் அமைந்துள்ள முறையோடு அதிக தொடர் புடையன எனக் கூறமுடியாது (படம் 26).
 

மண்வகைகள் 77
இறுகிய படையின் கீழே வேருெரு படை காணப்படுகின்றது. இப்படை ஒாளவிற்கே செந்நிறமாகக் காணப்படும். பெரும்பாலும் மஞ்சள் நிறமாகவோ, வெண்ணிறமாகவோ இப்படை காணப்படும். பாறைகள் சிதைந்து செல்லும் படைவாை இப்படையின் நிறம் இவ்வாறே காணப்படும். ஆழவுள்ள இப்படை கள் வானிலையழிவால் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட தன்மையையே காட்டு கின்றன. பிற பகுதிகளில் மேற்பரப்பிற் காணப்படும் முதிர்ச்சிபெருத சரளை மண் தன்மைகள் ஆழமான இப்படைகளிற் காணப்படுகின்றன.
தெருக்கள் புகையிரத விதிகள் முதலியவற்றை அமைப்பதற்காகச் சாளை மண்படைகள் வெட்டப்படுவதுண்டு. வெட்டப்பட்ட புறவோரங்கள் எளிதில் இறுகிக் கடினத்தன்மை பெற்றுவிடும். இவற்றைப் பார்த்து உள்ளேயுள்ள மென்மையான மண்ணின் இயல்பை உணர்வது கடினமாகும். சிலசமயங்களில் புறவோரப் பகுதிகளிலுள்ள மென்மையான பொருள்கள் மழைநீரினுற் கழு வப்பட்டுப்போவதுமுண்டு. அப்பொழுது கடினமான இரும்புப் பொருள்கள் கண்ணறைத்தன்மையுடைய புறவோரப் பகுதியிற் காணப்படும். சாளைமண் பொதுவாக ஈரமாகவும் தடிப்பாகவும் இருப்பதனுல் எளிதாகச் சிதைந்து கரைந்துவிடக் கூடியதாய் உள்ளது. இதனுல் சரிவான பகுதிகளில் மண்படை கள் எளிதிற் சறுக்கிவிழுந்துவிடும். மேல் மண்படையின் கீழே இரும்புப் படை ஒன்று காணப்படுமாயின் மேலுள்ள மண்படை எளிதாகச் சறுக்கிவிழுந்து விடும். குன்று ஒன்றின் முழுப்பக்கமுமே இங்ங்ணம் சறுக்கிப் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுவதுமுண்டு. மண்படைகள் இடம்பெயர்ந்த பகுதியில் தாவரங்கள் பற்றிப் படரும்வரை அது வெளியாகத் தோற்றமளிக்கும். தெருவோரங்களி லும் மண்படைகள் சிதைந்து விழுந்துகிடப்பதைக் காணலாம். சிறுபள்ளங் களைச் சார்ந்தும் அழுகிய தாவரப் பொருள்களைக் கொண்ட மேல்மண்படை சிதைந்துகிடப்பதை நோக்கலாம்.
பொலினேவ் என்பாரும் சாளை மண்ணுக்கமும்
சாளைமண் உண்டாகும் முறை பற்றிப் பொலினேவ் " வானிலையழிதல் வட் டம்”* என்னும் அவரது நூலில் புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இவருக்கு முன்பு இத்துறையில் ஈடுபட்ட மண் ஆராய்ச்சியாளர் அயனப் பிர தேசத்திலுள்ள மிகக் கூடிய வெப்பம் மழைவீழ்ச்சி முதலியன காரணமாகவே சாளைமண் உண்டாகின்றது எனக் கூறியுள்ளனர். இவர்களது கூற்றின்படி அயனப் பிரதேசத்தில் மட்டுமே சரளைமண் காணப்படுதல் வேண்டும். ஆனல் பொலினேவ் வானிலையழிவு காரணமாக இறுதியில் அமையும் முதிர்ச்சிபெற்ற மண்ணே சரளைமண் எனவும் அம்மண் எல்லாப் பிரதேசங்களிலும் உண்டாக லாம் எனவும் கூறுகின்முர். நீடிய காலத்திற்கு வானிலையழிவு முறைகள் தொழிற்படுவதஞலேயே இம்மண்வகை உண்டாகின்றது என்பது இவரது கூற் முகும். இவரது கருத்தின்படி அயனப்பிரதேசத்தில் பெருந்தொகையான அன வில் சரளைமண் காணப்படுவதற்கு வானிலையழிவு முறைகள் அங்கு விரைவா
Cycle of Weathering

Page 54
78 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
கத் தொழிற்படுதலே காரணமாகும். இதனுல் குளிர்த்தன்மை கூடிய பிரதேசங் களிலும் பார்க்க அயனப் பிரதேசத்தில் மண் விரைவில் முதிர்ச்சி பெற்றுவிடு கின்றது. மேற்குறித்த இருவகையான கருத்துக்கும் பொருந்தக் கூடியதாக சண்டாமேடை, சாகுல் மேடை ஆகியவற்றிலுள்ள மண்வகைகள் காணப்படு கின்றன. இப்பகுதிகளில் வானிலையழிவு முறைகள் நீடிய காலத்திற்குத் தொழிற்பட்டுவந்துள்ளமையால் மண்வகைகள் முதிர்ச்சிபெற்றுள்ளன. அய னப்பிரதேசத்திலுள்ளமையால் கூடிய வெப்பம் மழைவீழ்ச்சி முதலியன காரணமாக வானிலையழிவும் விரைவாக நிகழ்கின்றது. மண் ஆராய்ச்சியாள ாைப் பொறுத்தவரையில் பொலினேவின் கொள்கை எத்தகையதாயிருப்பி னும், அயனப்பிரதேசத்திற்கு அப்பாலுள்ள பகுதிகளில் காணப்படும் சரளை மண் சார்ந்த செந்நிற மண்வகைகள் உண்டாகும் முறையை விளக்குவதற்கு இக்கொள்கை துணைபுரிகின்றது. முக்கிய காலநிலை மாற்றங்களை அடிப்படை யாகக் கொள்வதற்குப் பதிலாக இதன்மூலம் இம்மண்வகைகளின் பாம்பலை எளிதாக விளக்கிவிடலாம்.
தென் கிழக்கு ஆசியாவின் வறண்ட வலயங்களிலுள்ள DGT 266DF5E6YT
தென் கிழக்கு ஆசியாவில் மத்தியகோட்டிலிருந்து வடக்கே போகப்போக வறண்ட பருவமும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கேற்ப நீர்முறை அரிப்பும் குறைவடைகின்றது. வெளியான பகுதிகளில் வறண்ட பருவத்திலேற்படும் ஆவியாகல் காரணமாகத் தரைநீர் மேல்வந்து எளிதில் ஆவியாகிவிடுகின்றது. இதனுல் கரைசற் பொருள்கள் மேல்மண்ணிற் படிந்துவிடுகின்றன. இத் தகைய மண்வகைகள் சவனு மண்வகை எனக் குறிப்பிடப்படும். தைலாந்து இந்தோசீனு முதலிய பகுதிகளில் இவை அநேகமாகக் காணப்படுகின்றன. இவை பொருத்தமான காலநிலை காணப்படும் இடங்களில் மட்டுமல்லாது அயனப்பிரதேச மழைக்காட்டின் புறவோரங்களிலும் உண்டு. புறவோரங்களில் தாவரங்கள் மீள வளர்வதிலும் பார்க்க விரைவாகச் சிதைதலினலேயே இம் மண்வகைகள் உண்டாகின்றன. அயனப் பிரதேசக் காட்டு மண்ணில் சிறிதளவு தாவர உணவுப் பொருளே தாவரத்திலிருந்து மண்ணுக்கும் மண்ணிலிருந்து தாவரத்திற்கும் பயன்படுகின்றது. இதனுல் அயனப்பிரதேச மண்ணின் சம நிலை எளிதிற் பாதிக்கப்படக்கூடியதாயுள்ளது. காடுகள் மனிதரால் வெட்டி யழிக்கப்படாதிருக்கும்பொழுது இயற்கையான நெருப்பினுல் அதிகம் பாதிக் கப்படமாட்டா; ஆனல் அவை மனிதரின் முயற்சியால் மீண்டும் மீண்டும் எரிக்கப்படும்பொழுது தாவர உணவுத் தொழிற்பாட்டு முறை மாற்றமடை கின்றது. இதனுற் கரைசற் பொருள்கள் வெளிவந்து படிகின்றன. இத்தகைய நிலைமைகள் ஏற்படும்பொழுது இரும்புப் பொருள்கள் மேல்மண்படையின் கீழ்த் தடிப்பாகப் பரந்துவிடுகின்றன. இவற்றைக் கொண்ட மண்ணில் தடித்த அயனப்பிரதேசப் புல்வகைகள் தவிர வேறு தாவரங்கள் செழிப்பாக வளர
மாட்டா. அல்லாமலும் நடித்த இரும்புப் படை கீழே காணப்படுவதனுல் கடு

மண்வகைகள் 79
மழை பெய்யும்பொழுது மேல் மண் எளிதாகக் கழுவப்பட்டுவிடுகின்றது, முதன் முதலில் ஆராயப்பட்ட சாளைமண்வகை சவனத் தாவரங்கள் உள்ள இடங்களிற் காணப்பட்டன. மத்திய கோட்டுக் காலநிலை சவனுக் காலநிலை யாகத் திரிந்ததனுல் இம் மண்வகை உண்டாகியன என அப்பொழுது கருதப் பட்டது. ஆணுல் உண்மையில் ஆதியிற் காணப்பட்ட அயனப் பிரதேசக் காடு கள் மிகக்கூடிய அளவுக்குச் சிதைந்ததும், அதனுல் மீண்டும் காடுகள் செழிப் பாக வளரமுடியாதவாறு மண்வகை மாற்றமடைந்ததுமே இதற்குக் காரணம் எனலாம். சரளைமண் நூண்டுளைத் தன்மை உடையதனுல் மழைநீர் தாவரங்க ளுக்குப் பயன்படாது நேரடியாகக் கீழே சென்று விடுகின்றது. அவ்வாறே நீர் கீழே செல்லும்பொழுது முக்கியமான தாவர உணவுப் பொருள்களையும் கழுவிச் சென்றுவிடுகின்றது. இதனுல் ஆதியிற் காணப்பட்ட தாவரங்கள் மீண்டும் வளரவாய்ப்பு இல்லாது போய்விடுகின்றது.
தென் கிழக்கு ஆசியாவிலுள்ள சவணு நிலப்பகுதிகளில் இரும்புப் பொருள் களைக் கொண்ட படைகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. மண்ணில் நீர் நேரடியாகக் கீழ்ச் செல்வதனுல் இரும்புப் பொருள்களைக் கொண்ட சாளை மண்படை உண்டாகின்றது என்ற கருத்திற்கு இது சான்று தருவதாக உள்
ளது.
மண்வகையும் பயிர்ச்செய்கையும்
அயனப் பிரதேசத்திலுள்ள வேறுபட்ட காடுகள் காரணமாக மண்ணிலும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. காடுகள் பயிர்ச்செய்கைக்காக அழிக் கப்படும்பொழுது இவ்வேறுபாடுகள் முக்கியமாக அமைகின்றன. மண்ணி லுள்ள சிறிதளவு தாவர உணவுப்பொருள்கள் இதனைத் தெளிவாகக் காட்டு கின்றன. செழிப்பான காடுகள் காணப்படும் பொழுது மண் மிக்கவளமுடைய தாகத் தோற்றுகின்றது. காடுகள் அழிக்கப்பட்டதும் மண்ணின் வளம் குன்றி விடுகின்றது. அப்பொழுது தாவர உணவுப்பொருள் தொழிற்பாட்டுமுறை மாற்றமடைந்துவிடுகின்றது, மண்ணிலுள்ள கரைசற் பொருள்களும் கழுவப் பட்டுவிடுகின்றன. காடுகள் நீக்கப்பட்டதும் தாவர உணவுப் பொருள்கள் காைந்து செல்வது அதிகரித்துவிடுகின்றது. இவை இறுதியில் நீரோடு கலந்து சேற்று நிலங்கள், பொங்குமுகங்கள், கடல் ஆகியவற்றில் கொண்டுவந்து விடப்படுகின்றன. காடுகள் எரிக்கப்படுவதல்ை ஏற்படும் சாம்பல் நிலத்திற் கிடந்து மண்ணுேடு சேருவதற்கு வாய்ப்பு உண்டு. இவ்வாறு சேர்வதனுல் மண் ணிற்கு இன்றியமையாத சில இரசாயனப் பொருள்கள் கிடைக்கின்றன. நிலக் தில் படிக்கட்டுகள் அமைத்து அல்லது செடிகளை வளர்த்து சாம்பல் முதலிய பொருள்களேப் பேணுதவிடத்து அவை ஆற்றுநீரோடு கழுவப்பட்டுச் சென்று விடலாம். சாம்பல் சேர்ந்த மண்ணில் பயிர்கள் செழிப்பாக வளரும். ஆனல் ஒரிரு பருவங்களோடு மண்ணின் வளம் கெட்டுவிடும். இதன்பின் சரளை மண் ணின் வளமற்ற தன்மையையே இங்குக் காணலாம். சில பகுதிகளில் பெயர்ச் சிப் பயிர்ச்செய்கைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதுண்டு. இப்பகுதிகள்

Page 55
80 தென்கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம்
மிகச் சிறியனவாயிருப்பதோடு காடுகளாற் குழப்பட்டுமுள்ளன. இப்பகுதிக ளிற் காடுகள் அழிக்கப்படுவதனுற் கெடுதல் அதிகம் இல்லை. காடுகளாற் குழப் பட்டுள்ளமையால் தாவர உணவுப் பொருள்கள் அதிக தூரத்திற்குக் கழுவப் பட்டுச் செல்வதில்லை. அல்லாமலும் குழவுள்ள காடுகள் காரணமாக இழந்த காட்டுநிலைமையை மீண்டும் பெறவாய்ப்பு உண்டு. ஆனல் குறித்த ஓர் இடத் தில் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை அடிக்கடி நடைபெறுமானல் அதனுல் மண் வளம் கெட நேரிடும். குறைந்தது இருபது வருடத்திற்கு ஒரு முறையே பெயர்ச்சிப் பயிர்ச்செய்கைக்காகக் காடுகள் அழிக்கப்படுதல் வேண்டும். காலம் குறைந்துவிடுமானல் காடுகள் மீண்டும் வளர வாய்ப்பு இல்லாது போய்விடும். காடுகள் நீக்கப்பட்ட இடங்களிலும் அதிகம் முதிர்ச்சிபெருத சரளைமண் உண்டானுல் மண் வளத்தைப் பேணிக்கொள்ளுதல் ஒரளவு எளிதாகும். அதனேடு வறண்ட பருவம் குறைந்த காலத்திற்காவது உண்டானுல் மண்ணின் வளம் விரைவாகக் கெட்டுவிடுதலைத் தடைசெய்ய ஏதுவாகும்.
யாவாவிலுள்ள உப்புமூலப் பொருள் சார்ந்த எரிமலைப் பாறைகளும் அண் மைக் காலத்தில் வெளிவந்த சாம்பல், களிப்படை ஆகியனவும் பல முக்கிய மான இரசாயனப் பொருள்களைக் கொண்டுள்ளன. வானிலையழிவால் இவை சிதைந்து சிறந்த தாவர உணவுப் பொருள்களாக மாற்றமடைகின்றன. இளம் பாறைகளாயிருத்தலின் சாளைமண்ணுக்கமும் படிப்படியாகவே நிகழுகின்றது. இதனுல் இப்பாறைகளிலிருந்து வளமான மண்வகைகள் தோன்றுகின்றன. பழைய எரிமலைக் குழம்புப் பாறைகள் அமிலப் பாறைகள் முதலியன காணப் படுமிடங்களில் மிகவும் முதிர்ச்சிபெற்ற சாளை மண்ணுக்க நிலைமைகள் காணப் படுகின்றன. இதனுல் சண்டாமேடையின் ஏனைய பகுதிகளிற்போன்று பயிர்ச் செய்கைக்கு அத்துணை பொருந்தாத வளமற்ற மண்வகைகளே காணப்படுகின் றன. எரிமலைத் தாக்கம் புதிதாக நிகழுமாயின் பயிர்ச்செய்கைக்கு உவந்த தாவர உணவுப் பொருள்கள் உண்டாக ஏதுவாகும். குடிச்செறிவு காரணமாக மட்டுமே சாம்பற் படிவுகளைக் கொண்ட புதிய எரிமலைச் சாய்வுகள் படிமுறையி லமைக்கப்பட்டன எனக் கொள்வது ஓரளவுக்கே பொருந்தும். கரைசற் பொருள்கள் நீரினுற் கழுவப்பட்டுச் செல்லாதவாறு இயன்றவரை பேணிக்காக்க மேற்கொள்ளப்பட்ட முறை என இதனைக் கொள்வதும் பொருத்தமேயாம்.
அயனப் பகுதியில் மண்ணின் வளம் குறைவதற்குக் கரைசற் பொருள்கள் விரைவாக நீராற் கழுவப்பட்டுவிடுவது ஒரு காரணமாகும். அதனேடு அய னப் பகுதியில் சடுதியாக ஏற்படும் பெருமழையினுல் பொறிமுறை அரிப்பு உண்டாகித் தாவரங்களற்ற வெளியான இடங்களைப் பெரிதும் பாதிக்கின்றது. சடுதியாக ஏற்படும் மழையினுல் வெளியான இடங்களிற் பள்ளங்கள் உண் டாக, மண்ணரிப்பு விரைவாக நிகழுகின்றது. இறுகாத சாம்பற் படிவுகளைக் கொண்ட எரிமலைக் கூம்புகள் இதனுற் பாதிக்கப்படுகின்றன. பள்ளங்கள் உண் டாகி மண்ணரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே கூம்புகள் படிமுறையில் வெட்டி அமைக்கப்படுகின்றன. செறிவான காடுகள் உள்ள பகுதிகளில் பொறி முறை மண்ணரிப்புக் குறைவாகும். யாவாவில் பயிர்ச்செய்கை செறிவாயிருப்ப

மண்வகைகள் 8.
தோடு அண்மைக் காலத்தில் வெளிவந்த சாம்பற் படிவுகளும் அதிகமாக உண்டு. இவை மண்ணரிப்பு ஏற்படுவதற்கு ஏதுவாக உள்ளன. இக்காரணத்தி னல் யாவாவில் ஆற்றுநீரில் ஒரு கன மீற்றருக்கு 300-2,000 கிராம் மண்டி காணப்படுகின்றது. ஐராவதி ஆற்றில் ஒரு கன மீற்றருக்கு 750 கிராம் மண்டி காணப்படுகின்றது. (சீன், ரைன் ஆறுகளில் ஒரு கன மீற்றருக்கு ஏறத்தாழ 50 கிராம் மண்டி உண்டு). அயனப் பிரதேசக் காடுகளில் மண் கரைசல் மூலமே கொண்டுசெல்லப்படுகின்றது. காடுகளிற் காணப்படும் ஆறுகள் தெளிவான நீரையோ, அழுகிய பொருள்கள் கலந்திருப்பதனுல் கரிய நீரையோ கொண்டி ருக்கும். காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் கீழ் மண்ணிலுள்ள கரைச லோடு சடுதியாக ஏற்பட்ட பொறிமுறை அரிப்பும் காணப்படும். இவ்விடங்களில் ஒடும் ஆறுகள் சேறு கலந்த தடித்த நீரைக் கொண்டிருக்கும். சேறு கலந்திருப்ப தனுல் நீரும் செந்நிறமாயிருக்கும்.
கீழ்மண்ணிற் காணப்படும் கரைசல் முறைகளும் மேற்றரை மண்ணரிப்பும் நீர் காரணமாகவே உண்டாகின்றன. எனவே கரைசற் பொருள்கள், மண்டி ஆகியன நீரினுற் கழுவிச் செல்லப்பட்டுக் கழிமுகங்களிலும் நன்னீர்ச் சேற்று நிலங்களிலும் படிய விடப்படுகின்றன. காட்டுப் பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்படும் தாவர உணவுப் பொருள்கள் இறுதியில் இவ்விடங்களிலேயே படியவிடப்படுகின்றன. கரையோரச் சேற்றுநிலங்கள் நன்னீர்ச் சேற்றுநிலங் கள் ஆகியன விரைவாகச் சிதைந்து விடுவதனுல் இவ்விடங்களில் தாவர உண வுப் பொருள்கள் பெருகுகின்றன. இவை படிப்படியாகப் பயிர்ச்செய்கைக்கு முக்கியமான இடங்களாக மாற்றமடைகின்றன. இவ்விடங்களில் மண்வளம் எளிதிற் கெட்டுவிடுவதில்லை. இதனல் பயிர்ச்செய்கை பல வருடங்களாகச் செழிப்பாகக் காணப்படுகின்றது. ஐராவதிப் பள்ளத்தாக்கு மெனும், செளபி ாாயா பள்ளத்தாக்கு ஆகியன ஈண்டுக் குறிப்பிடத்தக்கன. இப்பகுதிகளி லுள்ள களித்தன்மையுடைய ஈரமான மண்வகை கருநிறமாயும் கருமை சார்ந்த கபிலநிறமாயும் காணப்படும். மண்ணில் இடையிடையே முற்ற நிலக் கரியும் கலந்திருக்கும். இம்மண்வகை சூழவுள்ள சாளைமண்வகைகளுக்கு முற் றிலும் வேருனவை. இவை யாவும் கொண்டுவந்து படியவிடப்பட்ட மண்வகை யாகும். ஆற்றுப் படிவுகள், கடற்கரைப் படிவுகள் காரணமாகவே இம்மண் வகைகள் அமைந்தன.

Page 56

பாகம் II
தென் கிழக்கு ஆசிய நாடுகள்

Page 57

அத்தியாயம் 6 மலாயாவின் இயற்கை நிலத்தோற்றம்
சண்டாமேடையின் மத்தியில் அமைந்துள்ள மலாயா தொல்கால நிலத் தோற்றத்தைக் காட்டும் ஒரு பகுதியாக விளங்குகின்றது. இம்மேடையின் ஒரத்தை அடுத்துள்ள இடங்கள் எல்லாம் புவியோட்டுச் சிதைவினுற் பாதிக்கப் பட்டுள்ளபொழுதும் மலாயா இத்தகைய தாக்கங்களினுற் பாதிக்கப்படாத ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. மலாயா மத்தியகோட்டுக் காலநிலைத் தன்மை யைக் கொண்டுள்ளது. நிலவுறுப்புக்கள் விரைவாக முதிர்ச்சிபெறுதற்கு இக் காலநிலைத் தன்மை உதவுகின்றது. வட அகலக்கோட்டுப் பகுதிகளில் பனிக் கட்டியாற்றுக் காலத்தில் நிகழ்ந்ததுபோன்று கடல் நீரில் தாழ்ந்ததனுல் நிலப் பகுதியில் ஏற்பட்ட விளைவுகளையும் இங்குக் காணலாம்.
தரைத்தோற்றம்
பருமட்டாகப் பார்க்குமிடத்து மலாயா மலைப்பாங்கான ஒரு நாடாக விளங்கு கின்றது. மலைத்தொடர்களைச் குழக் கடல் மட்டத்திற்குச் சற்றே உயரமான அகன்ற சமநிலங்கள் உண்டு. முதன் முதலிற் கடற்கரையிலிருந்து மலாயாவின் உட்பகுதிகளை நோக்கிச் சென்ற பிரதேச ஆராய்ச்சியாளர் மலாயாக் குடாநீாடு பல தீவுகளை நிரையாகக் கொண்ட ஒரு பகுதி எனக் கருதினர். அவ்வாறு அவர் கள் கருத அகன்ற சமநிலங்களே காரணமாகும். மலாயாவிலுள்ள மலைகள் பெரும்பாலும் உயரத்திற் குறைவாக உள்ளன. கூனுேங்குதகான் என்னும் LD& 7,186 அடி உயரமுடையது. இது காடடர்ந்த பகுதியில் மேலே புடைத்துக் காணப்படுகின்றது. மலையிற் சிறு செடிகள் முதலியன ஐதாகக் காணப்படுவத ணுல் இடையிடையே படிகப் பளிங்குக் கற்கள் பளிச்சென்று வெளியில் தோன் அறும். காடடர்ந்த பகுதியில் இவை வெளித்தோன்றிக் காணப்படுதல் அசா தாரணத் தோற்றமாகக் கொள்ளப்பட்டது. இதனுல் மலாயாவில் மலைகள் வைரத்தால் அமைந்துள்ளன எனவும், பேய்கள் அவற்றைக் காத்து வருகின்றன எனவும் கட்டுக் கதைகள் பரவின.
மலாயாவின் வட பாகத்திலேயே மலைத்தொடர்கள் உயரமாகக் காணப்படுகின் றன. தெற்கே போகப்போக அவை உயரத்திற் குறைந்து கடலின் கீழ் மறைந்து விடுகின்றன. லிங்கா, ரீயோ, பங்காத் தீவுகளில் அவை மீண்டும் சிறு குன்று களாக வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. இரு தொகுதியான மலைத்தொடர் கள் மத்திய மலாயாவில் வந்து இணைகின்றன. வடக்கிலுள்ள தொடர்கள் வ. வ. கி-தெ. தெ. மே. திசையில் குடாநாட்டுக்குக் குறுக்காக வளைந்து காணப்படு கின்றன. தெற்கிலுள்ள தொடர்கள் உயரத்திற் குறைவாகவும் அதிக வளைவில்லா தனவாகவும் காணப்படுகின்றன. இவை வ. வ. மே-தெ. தெ. கி. திசையில் அமைந்துள்ளன. திரெங்கானு உயர் நிலத்தில் இத்தகைய அமைப்பு முறையைக்
85

Page 58
36 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
காணலாம். மலைத்தொடர்களுள் மத்திய மலைத்தொடர் என்னும் தொடர் சீயத் தில் பதானி என்னுமிடத்திலிருந்து மலாக்காவரை நேரே பரந்துள்ளது. இத் தொடர் மத்திய தொடர் என வழங்குகின்றபொழுதும் சற்று மேற்காகவே அமைந்துள்ளது. மலாயாவிலுள்ள மலைத்தொடர்களிடைச் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றபொழுதும், ஏறத்தாழ எல்லாத் தொடர்களின் உட்பகுதியிலும் தீப்பாறைகள் காணப்படுகின்றன. மிகப் பழைய காலத்தில் (மெகசோயிக் காலத்தின் பிற்பகுதியில்) மடிப்பு மலைத்தொடர்களின் அடிப்பகுதியில் இவை தலையீட்டுப் பாறைகளாக அமைந்திருத்தல் வேண்டும். மத்திய தொடர் விசிறி மடிப்புத் தொடராக இருந்திருத்தல் வேண்டும். இத்தொடர்கள் நீடிய காலமாக நீாரிப்பினுற் பாதிக்கப்பட்டதனுல் அவற்றின் மத்தியிற் காணப்பட்ட தலையிட் டுக் கருங்கற் பாறைகள் இன்று வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. இப் பாறைகள் மிக உயரமுடையனவாயும் உள்ளன. மேற்கிலிருந்து கிழக்கு 66) யுள்ள மலைத் தொடர்கள் பின்வருமாறு :
1. நாக்கோன் தொடர், பேர்ளிஸ்-தைலாந்து எல்லையிற் சுண்ணக்கற்ருெடர் போன்று கடற்கரைவரை பரந்துள்ளது.
2. மேற்குத் தொடர், சிங்கோரா என்னுமிடத்திலிருந்து மேற்கு மத்திய கேடாவுக்கூடாக வெல்லஸ்லி மாகாணத்தின் மேற்கு எல்லைவரை பரந்துள்ளது. பினுங்கு, கேடாச் சிகாம் என்னுமிடங்களிலும் டின்டின்கைச் சூழவும் சிறு குன்றுகள் காணப்படுகின்றன.
3. பின்டாங்குத் தொடர், தைலாந்திலிருந்து புரூவாஸ் வரை பரந்துள்ளது.
4. கிளேடாங்குத் தொடர், பேராக் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்து கிண்டாவின் மேற்குவரை பரந்துள்ளது. குங்கை பிளசால் இத்தொடர் வெட்டப்பட்டுள்ளது.
5. மத்திய தொடர் அல்லது பிரதான தொடர், சில சமயங்களில் கெர்பவு அல்லது கோர்பு தொடர் எனவும் குறிப்பிடப்படும். இப்பெயர் இத்தொடரி லுள்ள உயரமான சிகரம் (கூனுேங் கெர்பவு 7,160 அடி) காரணமாக வந்து வழங்குகின்றது. இத்தொடர் தைலாந்திலிருந்து மலாக்காவரை வில்வளைவில் அமைந்துள்ளது.
6. பெனுெம்-மவுண்ட் ஒபீர் தொடர், மத்திய தொடரிலிருந்து ஆறுகள் கிழக்கி நோக்கி ஓடுவதனல் இடையிடையே முறிந்து காணப்படுகின்றது.
7. தகான் தொடர், திரெங்கானு உயர்நிலத்திலிருந்து யோகூர், சிங்கப்பூர் என்பவற்றிக்கூடாகத் தெற்கிலுள்ள தீவுக் கூட்டங்கள் வரை பாந்துள்ளது. இத் தொடர் பகங்கு ரொம்பின் ஆறுகளினல் வெட்டப்பட்டுள்ளது.
8. கிழக்குத் தொடர், அதிக அளவு அறியப்படாதது. இத்தொடர் கெலந்தனி லிருந்து தென் கிழக்கு யோகூரிலுள்ள பென்கெராங்குக் குடாநாடுவரை பரந் அள்ளது. குறுக்காகச் செல்லும் ஆறுகளினல் அதிக அளவு வெட்டப்பட்டும் காணப்படுகின்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் : 87
மலைத்தொடர்களின் இருபுறத்தும் குன்றுகள் காணப்படுகின்றன. கருங்கற் பாறைகளைச் சார்ந்துள்ள மடிப்பாக்கம் பெற்ற அடையற்பாறைகளின் குத்தான ஓரங்களைப் பொறுத்தே இக்குன்றுகள் அமைந்துள்ளன.
மலாயாவின் பாறைகள்
மலாயாவின் பாறையமைப்பிற் பெரும்பகுதி வானிலையழிவாற் பெறப்பட்ட பொருள்களின் தடித்த படையினல் மூடப்பட்டுள்ளது (படம் 27). இப்படை யின் மீது அடர்த்தியான அயன மழைக்காடுகள் காணப்படுகின்றன. ஆற்றுப் படுக்கைகள், குன்றுகள், கணிப்பொருளெடுக்கப்படும் இடங்கள் ஆகியவற் றிலேயே பாறைகள் ஓரளவிற்கு வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் பிரதான பாறைகளாவன :
1. சுண்ணக்கற்பாறைகளும் சுண்ணஞ்சார் மாக்கற்களும் : இவை புவிச்சரிதப் படத்தில் ஒரு தொகுதியாகக் காட்டப்பட்டுள. இவற்றைப் பின்வரு மாறு பிரிக்கலாம் : (அ) ஓரளவு வன்மையான மூட்டுக்களையுடைய சுண்ணக்கற்றிணிவு கள். புதிதாக வெட்டப்பட்ட இடங்களில் இவை சாம்பனிறச் தனவாயிருக்கும். மாக்கல்லும் இடையிடையே காணப்படும் மலைத்தொடர்களின் உட்பகுதியில் அமைந்த தலையீட்டுக் கருங் கற் பாறைகளை யடுத்துள்ள சுண்ணற் கற் பாறைகள் சலவைக் கற்பாறைகளாக உருமாறியுள்ளன. ஓரளவுக்கு உருமாறிய பாறைகள் வானிலையழிவால் அதிகம் பாதிக்கப்படாது குத் தான குன்றுகளாகக் காணப்படும். காசித்து நிலப்பகுதியிற் காணப்படும் காைதலால் ஏற்பட்ட தரைத்தோற்றத் தன்மை களை இங்கே காணலாம். லங்காவி, கிண்டா, பேர்ளிஸ், கெலந் தன் முதலியன சிறந்த உதாரணங்களாம். (ஆ) மெல்லிய சுண்ணக்கற்படைகளைக்கொண்ட சுண்ணஞ்சார் மாக் கற் பாறைகள். தொடுகையாலும் அமுக்கத்தாலும் இப்பாறை கள் இடையிடையே தகடாகுபாறைகளாகவும், பில்லைற்று, சிலேற்றுப் பாறைகளாகவும் மாற்றமடைந்துள்ளன. மத்திய கோட்டுப் பிரதேச வானிலையழிதலினுல் இப்பாறைகள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனுல் இவற்றைக் கொண்ட நிலப் பகுதிகள் இன்று உயரத்திற் குறைந்து காணப்படுவதோடு கடித்த வண்டல் மண் படைகளால் மூடப்பட்டும் உள்ளன. ழுேள்ள சுண்ணக்கற்படை விரைவாகச் சிதைந்துவிடுவதனல் மேலுள்ள பாறைகள் சறுக்கிவிழுந்து விடுகின்றன. 2. படிகப்பார், உருண்டைக் கற்றிரள், மாக்கல் முதலியன 1 ஆம் தொகுதி uმჩ குறிப்பிட்ட பாறைகளின்மீது காணப்படுகின்றன. வடக்கே இப்பாறை களேக் கொண்ட பகுதி உயர்நிலமாகக் காட்சியளிக்கின்றது. இங்கு மலேர்

Page 59
88
மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
கடற்கரை வண்டல் மண் கருங்கல்லும் ஒத்த பாறைகளும் படிகப்பாரும் மாக்கற்களும் சுணணககற்பாறைகளும் சுண்ணஞ்சார் மாக்க பகங்கு எரிமலைப் பாறைகள்
படம் 27. மலாயாவிற் பாறைகளின் பரம்பல்
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 89
தொடர்களும் (தகானிற் போன்று) உண்டு. ஆனல் ஏனைய பகுதிகளில் இவை பெரும்பாலும் சிதைந்து சிறிய அடிக் குன்றுகளாகக் காணப்படுகின்றன. மத் திய கோட்டுப் பிரதேச வானிலையழிவாற் படிகப்பார்கள் அதிகம் பாதிக்கப் படாமையினலே இவை அடிக்குன்றுகளாக அமைந்துள்ளன. மூட்டுக்களோடு நன்கு மடிப்புண்டிருப்பதனுற் படைகள் அநேகமாகக் குத்தாகச் சரிந்து காணப் படுகின்றன. இதனுற் குத்துச் சரிவான தரைத்தோற்ற உறுப்புக்கள் அமைந் துள்ளன. இப்பாறைகளில் ஊதாப்பச்சை நிற மாக்கற்களும் காணப்படுகின்றன. சில கரிய நிறத்தையுடையனவாயும் அதிக காபனக் கொண்டனவாயும் உள்ளன. இப்பாறைகள் வானிலையழிவால் எளிதாகப் பாதிக்கப்பட்டுச் சிதைந்துவிடுகின் றன. பளபளப்பான தகடாகு பாறைகளாக உருமாறிவிடும்பொழுது அங்ங்னம் கிதைதல் குறைவாகும். தென் கேடா, செலங்கர் ஆகிய இடங்களில் நல்ல மணி யுருவமைப்புடைய தீக்கற் பாறைப் படைகள் சிலவும் காணப்படுகின்றன.
1 ஆம் 2 ஆம் பாறைத் தொகுதிகளுக்கு முன்பு அமைந்த சிறிதளவு மாக்கற் படைகளைக் கொண்ட சில வன்மையான படிகப்பார்கள் (சிலிக்கா மணிகள் சிலிக்காவினல் நன்கு இணைக்கப்பெற்றதன் மூலம் அல்லது மீளமணியுருப்பெற்ற தன் மூலம் படிக மணிகள் திரட்சிபெற்ற மணற்கற்கள்) வட பேர்ளிலிலுள்ள லங்காவிஸ் என்னுமிடத்திலும் கேடாவில் பாலிங்கு என்னுமிடத்திற்கு அண்மை யாகவும் காணப்படுகின்றன. மலாயாவில் இவை மிகப் பழைய பாறைகளாகும். இப்பாறைகள் காரணமாகத் தரைத்தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் உண் டாகவில்லை.
3. பகங்கு எரிமலைப் பாறைத்தொகுதியிற் பலவகையான பாறைகளும் காணப் படுகின்றன. எரிமலைச் சாம்பல், இறுகிய நுரைக்கற் படைகள், வெடித்துக் கிளம்பிய எரிமலைப் பாறைத்துண்டுகள் முதலியன உட்பட்ட தீப்பாறைகள், குறிப்பிடத்தக்கன. மஞ்சள் நிறமான, அல்லது ஊதா நிறமான இரையோல யிற்றுப் பாறைகள் தடித்த பச்சை எரிமலைக் குழம்புப் பாறைகள் ஆகியனவும் காணப்படுகின்றன. இப்பாறைகளுட் சில திண்ணிய பாறைகளாக உருமாற்ற மடைந்து காணப்படுகின்றன. இப்பாறைத் தொகுதி மலாயாவின் கருங்கற் பாறைகளிலும் பழையது எனக் கருதப்படுகின்றது. இத்தொகுதி எவ்வாறு அமைந்தது என்பது பற்றித் தெளிவாக அறியப்படவில்லை (ஸ்கிறிவெனேர்). அல்லாமலும் இத்தொகுதியிலுள்ள பாறைகள் 1 ஆம் 2 ஆம் பாறைப்படை களிடையிற் காணப்படுவதனுல் அவற்றிலும் இளமையானவை என்று கருதவும் இடமுண்டு. மலாயாவிலுள்ள மத்திய மலைத்தொடருக்குக் கிழக்கே இப்பாறை கள் பல இடங்களிற் காணப்படுகின்றன. இத்தொடருக்கு மேற்கில் சில இடங்க வில் மட்டுமே இப்பாறைகள் உண்டு. உயிர்ப் பெரிமலைகளாக, அல்லது உறங்கெரி மலைகளாக மலாயாவில் எவ்வகையான எரிமலைகளும் இல்லை. பகங்கு எரிமலைப் பாறைகளுக்கும் சுமாத்திராவில் இன்றுள்ள எரிமலைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. போணியோவிலுள்ள உறங்கெரி மலைகளோடு இப் பாறை களைத் தொடர்புபடுத்துவதும் பொருத்தமன்று.

Page 60
90 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
4. பெரும்பாலும் பருமணிகளைக் கொண்ட தலையீட்டுக் கருங்கற் பாறைகள். புவிச்சரிதவியற் படத்தில் சயனற்று, கோண்பிளெண்டுக் கருங்கல், கருங்கல், கருங்கற்போபிரி முதலிய பெயர்களால் இப்பாறைகள் சுட்டப்பெற்றுள்ளன. இவை பொதுவாகச் சாம்பனிறத்தன. நுண்ணிய மணியுருவான களிக்கல், மைக்கா என்பனவும் பல்வேறு வகையான கரிய கணிப்பொருள்களும் பெரிய மணியுருவான களிக்கல்லும் இப்பாறைகளிற் காணப்படுகின்றன. நன்முக இறு கிய மூட்டுக்களையுடைய கருங்கற்கள் படிக நரம்புகளையும் உலோகத் தாதுக் களையும் கொண்டுள்ளன. மலாயாவிற் பெறப்படும் கனிப்பொருள்களுட் பல இப் பாறைகளிலிருந்தே எடுக்கப்படுகின்றன. மலாயாவின் தரையமைப்புக்கு இக் கருங்கற் பாறைகளே காரணமாக உள்ளன. இப்பாறைகள் உள்ள இடங்கள் சிறு குன்றுகளாகக் காட்சியளிக்கின்றன. இத்தகைய குன்றுகளை மலாயாவின் தென் பகுதிகளிற் காணலாம். 6,000 அடிக்கு மேற்பட்ட பின்டாங்கு, பெனுெம் மலைகளும் இப்பாறைகளால் அமைந்தனவே. முன்பு குறிப்பிடப்பட்ட பாறை களிலும் பார்க்க இவை காலத்தாற் பிந்தியவை. ஆகவே இப்பாறைகளால் அமைந்த நிலமானது மெல்வளைவுகளையுடைய சீரான தன்மையைக் கொண்டுள் ளது. இதன் மேற்பரப்பில் வானிலையழிவால் உண்டான தடித்த பாறைப்படை கள் காணப்படுகின்றன.
5. செலங்கரிலுள்ள பாடு அராங்குப் பகுதி, தை நாட்டையடுத்துள்ள பேர் ளிஸ் ஒரப்பகுதி, கெப்பொங்கிற்கு அண்மையிலுள்ள பகுதி, யோகூரிலுள்ள நியோர் பகுதி, பேராக்கிலுள்ள எங்கோர் பகுதி ஆகிய இடங்களில் மென்மை யான மாக்கற் படைகள், மணற்கற் படைகள், நிலக்கரிப்படைகள் முதலியன காணப்படுகின்றன. நிலக்கரி சிறந்ததாப் பழுப்பு நிலக்கரிவகையைச் சார்ந்த தாகும். எளிதில் உடையுந் தன்மையது; நிலக்கரியில் நீர்ச்சத்தும் அதிகமாகும். நிலக்கரிப் படைகள் பாடு அசாங்குப் பகுதியிலே அநேகமாகக் காணப்படுகின் றன. அகழ்ந்தெடுக்கப்படத்தக்க படைகள் 25 அடி முதல் 45 அடி வரை தடிப்புடையனவாய் உள்ளன. (1959 ஆம் ஆண்டில் மாதந்தோறும் 6,100 தொன் நிலக்கரி இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஆனல் 1960 இல் இச் சுரங் கம் மூடப்பட்டுவிட்டது).
6. பள்ளத்தாக்குகளிற் பிற பாறைகளிலிருந்து ஆறுகளினுற் கொண்டுவந்து படியவிடப்பட்ட பெரிய வண்டற்படிவுகள் காணப்படுகின்றன. இப்படிவுகள் வேறுபட்ட தடிப்பை உடையன. அடிக்குன்றுப் பகுதிகளிலும் கரையோரப் பகுதிகளிலும் இத்தகைய படிவுகள் பரந்து காணப்படுகின்றன.
கரையோரப் பகுதிகளில் மணல் முற்றநிலக்கரி முதலியவற்றைக் கொண்ட கருநீலக் களிப் படைகள் காணப்படுகின்றன. கரையிலிருந்து 40 மைல் உள் வாாக இப்படைகள் பரந்துள்ளன; தட்டையானசேற்று நிலம்போன்று இவை பரந்துள்ள பகுதி காட்சியளிக்கும். கரையையடுத்த பகுதியில் இப்படைகள் 400 அடிவரை தடிப்பாக உள்ளன (செலங்கரில் நடைபெற்ற துளையிடுதல் மூலம் இது அறியப்பட்டுள்ளது). இப்படைகள் ஆறுகளினதும் கடலினதும்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 9.
தாக்கத்தால் அமைந்தவையாகும். பனிக்கட்டியாற்றுக் காலத்தின் பின்பு கடற் கரைப்பகுதியில் இவை படிந்துள்ளன. மாங்குரோவுச் செடிகளும் சேற்றுநிலச் செடிகளும் நிறைந்த இப்பகுதியில் வண்டல் படிதலும் விரைவாக நிகழ்ந்துள் ளது. நன்னிலை நிலவசைவினல் ஏற்பட்ட மாற்றங்களைத் தடுத்துக் கடற்கரை யைப் பேணுவதற்கு விரைவாக நிகழ்ந்த வண்டற்படிவு துணைசெய்துள்ளது. இதனுற் கடற்கரை கடலைநோக்கி வளர்ச்சிபெற்றுக் காணப்படுகின்றது.
உட்பகுதியில் அடிக்குன்றுகளைச் சார்ந்தும் பள்ளத்தாக்குக்களைச் சார்ந்தும் காணப்படும் வண்டற்படைகள் மூலப் பாறைகளைப் பொறுத்தும் ஆறுகள் அருவிகள் ஆகியவற்றின் தாம்பிரித்தலைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. களி, மணல், பால், தடிப்பற்ற முற்ருநிலக்கரி (பழைய சேற்றுநிலம் அல்லது ஏரிப் பகுதி), தடிப்பற்ற இரும்புக்கற் படை முதலியன இங்குப் பொதுவாகக் காணப் படுகின்றன. கருங்கற்றிணிவுகளைச் சார்ந்து "கருங்கற் கழுவல்' எனப்படும் வெண்ணிறக் களிப்படைபோன்ற படிகமணிகளைக் கொண்ட படை காணப்படு கின்றது. உடைந்து சிதறிய கருங்கற் பொருள்கள் அருவிகளினல் முதலில் தாம்பிரிக்கப்பட்டுப் படியவிடப்பட்டதனுல் இது உண்டாகியது. உலோகப் பொருள்களைக் கொண்ட பாறைகளிலிருந்து ஆறுகளினற் கொண்டுவந்து படிய விடப்பட்ட உலோகத் தாதுக்களும் வண்டல் மண் படைகளிடைக் காணப்படு கின்றன. ஒடும் ஆற்றுநீரினுற் பிரிக்கப்பட்டுக் கொண்டுவந்து படியவிடப்பட்ட னவே மலாயாவிலுள்ள தகரப்படிவுகள். வண்டற் படிவுகள் தடிப்பில் வேறு பட்டன; ஆறுகளின் அரிப்புவிகித வேறுபாட்டால் இது ஏற்பட்டிருக்கலாம். கின்டாப் பகுதியில் இப்படைகள் 60 முதல் 200 அடிவரை வேறுபட்டுள்ளன. பழைய வண்டற் படிவுப் பகுதிகள் ஆற்றரிப்பினுற் பாதிக்கப்பட்டமையால் இடையிடையே உயரமான வண்டல் நிலங்கள் காணப்படுகின்றன. இவை ஆற் றரிப்பால் அமைந்த எஞ்சிய நிலங்கள் எனக் கொள்ளப்படுகின்றன (ரிச் சாட்சன்).
காலநிலை மலாயாவின் காலநிலையை நிருணயிக்கும் காரணிகளுள் இரண்டு முக்கிய
மான இடத்தைப் பெற்றுள்ளன :
(அ) தாழ் அகலக்கோட்டு நிலை-எல்லா இடங்களிலும் சீரான உயர் வெப்ப நிலை நிலவுவதற்கு இதுவே காரணமாகும். மத்திய மலைத் தொடரி லுள்ள கமரன் உயர்நிலப் பகுதியிலும் சீரான வெப்பநிலை காணப்படு கின்றது. ஆனல் வெப்பநிலை சற்றுக் குறைவாக உள்ளது. தொடர்ச்சி யாகவுள்ள உயரமான நிலப்பகுதிகள் குறைவாயிருப்பதனுலும் ஆங் குக் குடியிருப்புக்கள் குறைவாயிருப்பதனுலும் குறைந்த வெப்பநிலை யினுல் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
(ஆ) அயனக் காற்றுத் திணிவுகளின் அசைவு-இக் காற்றுத் திணிவுகள் மத் திய கோட்டிற்குக் குறுக்கே முன்னும் பின்னுமாக வீசுவதனுற் பருவ

Page 61
92 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவ காலமாற்றங்கள் வ்ெப்பநில மாற்றங்களைப் பார்க்கிலும் காற்றுக்களின் திசை மாற்றங்களினலே ஏற்படுகின்றன. வடக்கே மாரிக்காலம் காணப்படும்பொழுது குடா நாடு முழுவதிலும் வடகிழக்கிலிருந்து காற்றுக்கள் வீசுகின்றன. கோடைக்காலத்தில் காற்றின் திசை வேறுபடுகின்றது. இக்காலத்திற் சிங்கப்பூரிற் காற்றுத் தென்திசையிலிருந்தும் வட மலாயாவில் மேற் குத் திசையிலிருந்தும் வீசுகின்றது. இத்தகைய காற்றுக்களினல் உள் நாட்டுக் காலநிலையிற் சிறு வேறுபாடுகள் ஏற்படுகின்றன. காற்றுத் திணிவுகளின் அசைவினல் மழைவீழ்ச்சி ஏற்படும் காலம், மழை வீழ்ச்சிப் பரம்பல் முதலியனவும் பாதிக்கப்படுகின்றன. இவற்றில் ஏற்படும் வேறுபாடுகள் பருவகாலங்களுக்குச் சிறப்புத் தன்மையைக் கொடுக்கின்றன. ஏதாவது ஒரு குறித்த பருவத்தில் மிகக்கூடிய மழைவீழ்ச்சி ஏற்படுவதில்லை. மிகக் கூடிய மழைவீழ்ச்சி காற்றுப் பருவங்களுக்கு இடைப்பட்ட அமைதிக் காலத்தில் பெறப்படுகின்றது. ஏப்பிரில்-மே மாதக் காலத்திலும் ஒற்முேபர்நவம்பர் மாதக் காலத்திலும் மத்திய கோட்டு அமைதி வலயம் மலாயா உட் பட்ட பகுதியிற் காணப்படுகின்றது. இதனுல் மிகக்கூடிய மழைவீழ்ச்சி வறண்ட பருவங்களுக்கிடையே (ஆயினும் முற்முக வறண்டவையல்ல) உண்டாகின் றது. இவ்வறண்ட பருவங்களிலே காற்றுக்கள் உறுதியாக வீசுகின்றன (படம் 31). மழைவீழ்ச்சி பெரும்பாலும் உறுதியின்மை நிலை காரணமாகவே ஏற்படு கின்றது. உறுதியில்லாத வெப்பவீரக் காற்றுத் திணிவுகள் உள்நாட்டு விளைவு களினற் பாதிக்கப்படும்பொழுது மழைவீழ்ச்சி உண்டாகின்றது. எனவே நெல் வயல்களும் தகரச் சுரங்கங்களும் காணப்படும் நிலப்பகுதியில் நிலம் அமைந் துள்ளமுறை, உள்நாட்டுத் தரைத்தோற்ற வேறுபாடு, மேற்காவுகை ஓட்டம் முதலியனவும் தரைக்காற்று கடற்காற்று என்பனவும் முக்கியமாக உள்ளன. இவையே மழைவீழ்ச்சி ஒழுங்கினைப் பெரிதும் கட்டுப்படுத்துகின்றன. மின்ன லோடு கூடிய சடுதியான புயலும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதனுற் குறிப் பிட்ட இடங்களில் மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. இத்தகைய மழைவீழ்ச்சி பெரும்பாலும் பிற்பகலில் ஏற்படுகின்றபொழுதும் எப்பொழுதும் அவ்வாறே நிகழுகின்றதென்று கூறமுடியாது. ஆகவே பருவகால மாற்றங்களிலும் நாள் மாற்றங்களே (மென் குளிரான இராவும் காலையும் வெப்பமான இடிமுழக்கத் தோடுகூடிய பிற்பகலும் சேர்ந்த நாள்) முக்கியமாக உள்ளன.
பருவகாலங்கள் வருமாறு : (1) வடகீழ் பருவக்காற்றுக் காலம்-ஒற்ருேபர் பிற்பகுதியிலிருந்து மார்ச்சு இறுதிவரை உள்ள காலம். இக்காலத்தில் தென் சீனக் கடலிலிருந்து உரமான காற்றுக்கள் வீசுகின்றன. கிழக்குக் கரையோ ரப் பகுதியும் மலைத்தொடர்களுக்குக் கிழக்கிலுள்ள பகுதியும் இக்காற்றுக்கள் மூலம் அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. முகில்களும் தாழ்வாகக் காணப்படுகின்றன. பிறபகுதிகளில் இக்காலத்தில் மென்காற்றுக்கள் வீசுகின் றன; மழைவீழ்ச்சியும் குறைவாகும் (படம் 30). (2) தென் மேல் பருவக் காற்

தென்கிழக்கு ஆசிய நாடுகள்
D76 aés, sydd
படம் 28. மலாயா மொத்த வருட
மழைவீழ்ச்சி
e
93
Kes-ko Alexsh مه کا - يا
படம் 29. தென் மேல் பருவக்காற்று :
யூலை மழைவீழ்ச்சி
oெஅங்குலம் 圈5 ” Π . ο
f { logo
படம் 80. வடகீழ் பருவக்காற்று : நவம்பர் மழைவீழ்ச்சி
படம் 31. பெப்புருவரி மழைவீழ்ச்சி
அறுக் காலம்-யூன் முதல் பகுதியிலிருந்து செத்தெம்பர்வரையுள்ள காலம். இக் காலத்தில் பொதுவாக மென்காற்றுக்கள் வீசுகின்றன. இது பெரும்பாலும்
வறண்ட காலமாகும் (படம் 29). (3) அமைதிக் காலம்-இதனை நிலைமாறு பருவ
காலம் எனவும் கூறலாம். ஏப்பிரில்-மே மாதக்காலத்தும் ஒற்ருேபர்-நவம்பர் மாதக் காலத்தும் அமைதியான நிலை காணப்படுகின்றது. இப்பொழுது அடிக் கடி மாறுமியல்புடைய மென் காற்றுக்கள் வீசுகின்றன. மழைவீழ்ச்சி அதிக மாக உண்டு. முகில் அதிகமாகக் காணப்படும். சடுதியான மின்னற் புயலும்
உண்டாவதுண்டு.

Page 62
94 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
தென்மேல் பருவக் காற்றுக் காலத்திற் சிறிய அளவிற் கரேமான புயற் காற்றுக்கள் மலாக்காத் தொடுகடற் பகுதியிலிருந்து மலாக்கா-சிங்கப்பூர்க்
* சுமாத்திராஸ்” என
கரையை நோக்கி விசுவதுண்டு. இவை சில சமயங்களில் வழங்கப்படுகின்றன. குருவளித் தன்மையைக் கொண்ட இக்காற்றுக்கள் சடுதியாக விசுவதோடு சில மணிநேரத்தில் அதிக மழைவீழ்ச்சியையும் கொடுக்கின்றன. கரையைக் கடந்து சென்றதும் இக்காற்றுக்களின் வேகம்
குறைந்துவிடுகின்றது.
மழைவீழ்ச்சி
மலாயாவில் மழை பெரும்பாலும் பாட்டம் பாட்டமாகவே பெய்கின்றது (ஒரு மணிநேரத்தில் ஓர் அங்குல மழைவிழ்ச்சிவரையில்). இத்தகைய மழை வீழ்ச்சி பெரும்பாலும் பிற்பகலில் ஏற்படுவதுண்டு. வடகீழ்ப் பருவக் காற்றுக் காலத்திற் கிழக்குக் கரையோரத்திலும் தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் மேற்குக்கரையோரத்திலும் நடுநிசிக்குப் பின்பு மழைபெய்கின்றது. வருடத் திற்கு வருடம் மொத்த மழைவீழ்ச்சியில் வேறுபாடு காணப்படுகின்றது (படம் 28). உறுதியின்மைப் புயல்களினுல் மழைவீழ்ச்சி ஏற்படுவதே இதற்குக் காச ணம் எனலாம். அல்லாமலும் வருடத்தில் எக்காலத்திலும் அதிக மழை வீழ்ச்சியோ, வறட்சியோ ஏற்படலாம். மேற்குப் பாகத்தில் ஒற்ருேபர் முதல் சனவரி வரையும் கூடிய சராசரி மழைவீழ்ச்சி உண்டு. யூலை, பெப்புருவரி மாதங்களில் மழை வீழ்ச்சி குறைவாகும். வட பகுதியில் மிகக் கூடிய மழை வீழ்ச்சி ஓகத்து-ஒற்ருேபர் காலத்திற் பெறப்படுகின்றது. திசம்பர்-பெப்புரு வரி மிகவும் வறண்ட காலமாகும். கிழக்குப் பகுதியில் ஒற்ருேபர்-திசம்பர் மழைவீழ்ச்சி கூடிய காலமாகும். மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பெப்புருவரி யிற் பெறப்படுகின்றது (படம் 31). கடும் மழை பெய்யும்பொழுது வெள்ளப் பெருக்கு உண்டாகின்றது. ஒரு நாளில் 15 அங்குல மழை பெய்வதுண்டு. பினுங்கில் 8 மணி நேரத்தில் 17 அங்குல மழை பெய்ததாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
கிழக்குக் கரையோரத்திலே வருடத்தில் மிகக்கூடிய மழைவீழ்ச்சி (வருடத் தில் 125 அங்குலத்திற்கு மேல்) பெறப்படுகின்றது. பின்டாங்குத் தொடரி லுள்ள லாருட் குன்றுகள் (வருடத்தில் 200 அங்குலத்திற்கு மேல்), கம்பர் தான்ஜொங்மலிம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மத்திய தொடர்ப் பகுதி (வருடத்தில் 150 அங்குலத்திற்கு மேல்) என்பன மிகக்கூடிய மழையைப் பெறும் பகுதிகளாகும். மத்திய தொடரின் தென்கிழக்கில் கோலா பீலாவைச் சார்ந் துள்ள ஒதுக்கான பகுதியே மிகவும் வறண்ட (வருடத்தில் 75 அங்குலத்திலும் குறைவான மழைவீழ்ச்சியுடைய) பகுதியாகும்.
ஈரப்பதன் வருடம் முழுவதுமே அதிகமாக உள்ளது. பகல் நாளில் ஈரப்பதன் 85 சதவீதம் வரையிற் காணப்படலாம். பெரும்பாலான நாள்களிலும் இராக் காலங்களிலும், பருவகாலங்களிலும் ஈரக்குமிழ் வெப்பநிலை 75 ப. பாகைக்கு மதிகமாக உள்ளது. இதனுல் உடல்நலத்துக்குப் பொருந்தாத நிலைமைகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 95.
உண்டாகின்றன. வியர்வை ஆவியாவதனல் உண்டாகும் குளிர்ச்சியான தன் மையே உடலுக்கு ஏற்றதாகும். இதற்கு நல்ல காற்முேட்டம் வேண்டும். கடற் கரையிலும் காற்றேட்டமுள்ள இடங்களிலும் மேற்குறித்த நிலைமைகள் குறை வாகும். ஆனல் காற்முேட்டமில்லாத மூடப்பட்டுள்ள இடங்களில் இத்தன்மை கள் அதிகமாகக் காணப்படும்.
மாதச் சராசரி மழைவீழ்ச்சி (அங்குலத்தில்)
海 ·S
རྒྱུ་ S ཐེ་ 想 8 'S S S sણ
སྐྱེསྦྱོ| ཕྱི་ལྕེ་སྐྱེ་བྱེ་ཕྱི་སྒྲིལྕི་ཕྱི་མི་རྗེ་
Տ CS
ஆலோர்ஸ்டார் 58 7 1-2 5-3 10-5 8.6 7.5 6.6 10.6 0-2 13.7 83 6s2 904 திறெங்கானு 59 9.2 34 7.3 46 4.7 5.1 6.2 7.0 5.8 14.7 27.2 24-7 119-9
காரேன் உயர்
நிலம் 68 6-0 5.1 6-8 12-4 10.7 5.1 37 7.8 8-9 131 12-3 9-8 101-5 கோலாலீப்பிஸ் 6. 10.1 3.5 6.9 8.0 8.4 5.8 5. 66 7.7 11.5 1.8 9.8 952 கோலாலம்பூர் 62 6.6 6.1. 8.8 10.5 8-5 4.9 4.3 6.3 .3 11.1 9.9 9.7 94-0 குளுவாங்கு 55 8.Ꮾ 4 , 1 8.7 Ꮽ•9 10•0 Ꮾ .5 8.9 Ꮾ•8 Ꮾ•5 Ꮽ•8 10•1 8• 4 92•8 சிங்கப்பூர் 58 9.9 6.9 7.6 7.4 6.8 6.8 6.7 7.7 7.0 8.2 10.0 10.2 95-2
(கூடிய மழைநாள் என்பது 0.5 அங்குலமழையை அல்லது அதற்குக்கூடியூமழையைப் பெறும் நாள் எனப் பொருள்படும்.)
பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் முகில் நிலைமைகளும் முக்கியமான வையாகும். பழவகைகள் நெல் முதலியன முற்றுவதற்கு முகில்கள் இல்லா திருத்தல் வேண்டும். முகில்கள்-குறிப்பாகத் திரள் முகில்கள்-ஒரு நாட் காலத்திலேயே அதிக வேறுபாடுகளுக்குள்ளாகின்றன. பொதுவாக ஒற்ருேபர் நவம்பர் மாதங்களிலே முகில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பெப்புருவரி மாதம் முகில் குறைவான மாதமாகும். உட்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் சனவரி முதல் மார்ச்சு வரையுள்ள காலத்தில் முகில்கள் குறைவாக உள்ளன. ஆனல் சிங்கப்பூரிலும் மலைப்பகுதியிலும் முகில்கள் எப்பொழுதுமே தடிப்பாகக் காணப்படுகின்றன. மழைவீழ்ச்சிப் படத்திலிருந்து முகில் பற்றிய விபரம் ஒர ளவுக்குத் தெரிகின்றது. நெல் வயல்களைக்கொண்ட கெலந்தான், கோலாபீலா என்னும் பகுதிகளில் முகில்கள் குறைவாகும்.
வடிகால் அமைப்பு
மலாயாவில் மழைவீழ்ச்சி அதிகமாகவும் நீராவியாதல் குறைவாகவுமிருத்த லால் ஆறுகள் அதிக அளவு நீரைக் கொண்டுள்ளன. ஆறுகளின் நீளம், நீரேந்து பரப்பு என்பவற்றேடு ஒப்பிடும்பொழுது அவை கொண்டுள்ள நீர் மிகவும் அதிக மாகும். நீரில் சேதனப்பொருள்கள் கலந்திருக்கும். திண்மப் பொருள்கள் குறைவாகும். ஆறுகளின் நீர் சில மணிநேரத்தில் அல்லது சில நாளில் சடுதி யாக மாறுமியல்புடையது. இதனுல் ஆற்றேரங்களில் உயரணைகள் உண்டாகின் றன. மலாயாவின் வடிகால் அமைப்பு தொன்மைமிக்கதாயும் முதிர்ச்சிபெற்ற

Page 63
96 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
தாயும் காணப்படுகின்றது. ஆறுகளின் பக்கப்பார்வையைப் பொறுத்தவரை யில் வேறுபாடுகள் உண்டு. இவை அவற்றின் தொன்மை நிலைகளை உணர்த்து கின்றன. அண்மைக்காலத்தில் நீர்ப்பெருக்கே படிப்படியாக ஏற்பட்டுவந்துள் ளது (படம் 17). இதனுல் ஆறுகளின் கீழ்ப்பகுதிகள் மேற்பகுதிகளோடு ஒப் பிட்டுப் பார்க்கும்பொழுது மேலும் தட்டையாக மாற்றமடைந்து காணப்படுகின் றன. சுண்ணக்கற் பிரதேசத்தில் உண்டான கரைதல் காரணமாகவும் தரைத் தோற்ற வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவையும் வடிகால் அமைப்பிற் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. கடல்மட்டநிலை உயர்ந்து வந்துள்ளபொழுதும் நீள்குடா பொங்குமுகத் தன்மைகள் உண்டாகவில்லை. அடையல்கள் விரைவா கப் படிந்ததே இதற்குக் காரணமாகும். ஆற்றுக் கழிமுகங்களும் செம்மையாக அமையவில்லை. உரமான கடற்கரை நோக்கு பருவக் காற்றுக்கள் வீசுவதனுல் அடையல்கள் கூழாங் கற்படைகளாக ஆற்றுமுகத்தையடுத்துப் படியவிடப்படு கின்றன. கடலைநோக்கி இவை படியவிடப்படுவதனல் கழிமுகங்கள் ஒழுங்காக அமைவதில்லை.
மலாயாவில் ஆறுகள் அமைந்துள்ள முறை (படம் 32) பல தன்மைகளினல் ஏற்பட்டதாகும். இத்தன்மைகள் ஒவ்வொன்றும் இடத்துக்கிடம் வேறுபடுகின்
fgor :
(அ) மலைத்தொடர்களின் பாறையமைவுக்கு ஏற்ப நெடுங்கோட்டு அருவி கள் காணப்படுகின்றன. அருவிகள் நெடுங்கோட்டு முறையில் கிடைப் பள்ளத்தாக்குக்களுக்கூடாக ஓடுகின்றன. கெலந்தான், பேராக் யோகூர் ஆறுகளும் பகங்கின் மத்திய பாகமும் இதற்குச் சான்முக
D GITGITST. (ஆ) மலையாக்க முறை காரணமாகச் சில அருவிகள் அகலக்கோட்டு முறை யில் அமைந்துள்ளன. மலைச் சாய்வுகளுக்குப் பொருந்தக் காணப் படும் இவ்வருவிகள் சில சமயங்களில் அயலேயுள்ள மலைத்தொடர்களை ஊடறுத்துச் செல்கின்றன. பகங்கு ஆற்றின் மேற்கிளைகள் இவ்வாறு கிழக்கு நோக்கி ஓடுவதைக் காணலாம். (இ) கண்டமுறைத் தாழ்வினல் ஆற்றின் மேற்பாகங்களில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு உட்பகுதியில் மியாந்தர் வளைவுகளும் தெளிவற்ற வடிகால் களும் உண்டாகியுள்ளன. (அ), (ஆ) ஆகிய பகுதிகளிற் குறிப்பிட்டுள்ள நிலைமைகள் அதிகமாகவுள்ள பாகங்களில் ஆறுகள் அளியடைப்பு வடிகால் முறையைக் கொண்டுள்ளன. நெடுக்குப் பகுதிகளில் அகன்ற சேற்றுநிலங்கள் உள்ளன. குறுக்குப் பகுதி களில் தரைத்தோற்றம் வெளிப்புடைத்த தன்மையைக் கொண்டுள்ளது. இத் தகைய நிலைமைகள் மலாயாவின் மத்திய, வட பகுதிகளிற் பெரும்பாலும் காணப்படுகின்றன. ஒருமுகச் சாய்வுடைய நிலப்பகுதிகளிலுள்ளனபோன்ற முதிர்ச்சிபெற்ற வடிகால் முறைகள் சமச்சீருள்ள மலைத்தொடர்களின் இரு

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 97
----- வடிகாற் போக்கு 今一 நீர்ப்பெருக்குப் பகுதிகள்
படம் 32. மலாயாவின் வடிகால் முறை
சாய்வுகளிலும் காணப்படுகின்றன. தென் பகுதியில் (இ) பிரிவிற் குறிப்பிட்ட நிலைமைகள் அதிகமாக உள்ளன. மலாக்காத் தொடுகடல் வடிகால் முறைக்கும் தென் சீனக் கடல் வடிகால் முறைக்கும் இப்பகுதியில் அரிப்புத்தொழிலில் போட்டியான நிலைமைகள் காணப்படுகின்றன. முதற் குறித்த வடிகால்முறை யினுற் பிற்குறித்த வடிகால்முறை சிறைப்படுத்தப்பட்டுள்ளதை மேல் முவார்

Page 64
98 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
ஆற்றுப்பகுதியிற் காணலாம் (படம் 33). ஆற்றின் மேற்பகுதிகள் அதிகமாகச் சிறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, கீழ்ப்பகுதிகள் இடம்பெயர்ந்தும் அமைந்துள் ளன. கின்டா, பகங்கு ஆறுகள் இதற்குச் சான்முக உள்ளன.
s VM
8.
så
*
alog - குடியிருப்புக்கள்
* காட்டுநிலம்
படம் 33. மேல் முவார் பகுதியில் எற்பட்ட ஆற்றுச்சிறை
சுண்ணக்கற் பிரதேசங்களில் நான்காவது தன்மையொன்றுங் காணப்படு கின்றது. சுண்ணக்கற் பிரதேசத்தில் முதலிற் முேன்றிய வடிகால் சுண்ணப் பொருள் கரைந்ததும் சடுதியாக மாற்றமடைகின்றது. இதனலே பாரி ஆற்றின் கிளைகளாயிருக்க வேண்டிய கின்டா அருவிகள் இன்று பேராக் கிளைகளாக அமைந்துள்ளன (படம் 37).
மண்வகைகள்
மத்திய கோட்டு வானிலையழிவால் பாறைகள் வேறுபட்ட முறையிற் சிதை கின்றன. இதனுற் சாளை மண்ணுக்கமே பெரிதும் நிகழுகின்றது. பல பகுதிகளிற் சாம்பனிற மண்ணுக்கமும் நடைபெறுகின்றது. இதனுற் கீழ்மண் சாம்பனிற மாகவும் வெண்ணிறமாகவும் காணப்படுகின்றது. இக்காரணத்தினுற் பல உயர மான பகுதிகளிலுள்ள மண்வகைகளை வரையறுத்து விளக்குதலிற் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
(அ) கருங்கற் பாறைகள் வானிலையழிதலுக்கு உட்படும்பொழுது களிக்கல் வெண்களியாகச் சிதைகின்றது. இதனற் களியும் மணலும் சேர்ந்த மண்வகை உண்டாகின்றது; இப்படை 50 அடிவரை தடிப்பாக உள்
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 99
ளது. சதுரமாகவுள்ள உடைந்த கருங்கற் பாறைகள் களியும் மணலும் சேர்ந்த மண்படையில் உருண்டை வடிவான பாறைகளாகச் சிதைகின் றன. வானிலையழிவாற் சிதைந்த பாறைப்பொருள்கள் அதிக மழை வீழ்ச்சி காரணமாகப் பெயர்ந்து செல்லுகின்றன. இதனுல் மலாயாவின் சில பகுதிகளில் வெறுமையான கருங்கற் பாறைகள் வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. ஆ) படிகப்பார், உருண்டைக் கற்றிரள் என்பன வானிலையழிவாற் பாதிக்கப் படும்பொழுது மணலாகவும் பரலாகவும் மாற்றமடைகின்றன. இவை கருங்கற் பாறைகளைப் போன்று சிதைவதில்லை. தீக்கற்பாறை கூரிய ஓரங்களையுடைய துண்டுகளாகச் சிதைகின்றது. இத்தகைய இறுகாத பாறைப்பொருள்களூடாக நீர் எளிதாகச் செல்லக்கூடியதாயிருப்ப தஞல் சரளைமண்ணுக்கத்திலும் சாம்பனிறமண்ணுக்கமே அதிகமாக நிகழுகின்றது (கிளிங்கா). இ) மாக்கல், சிலேற்று, தகடாகுபாறை என்பன தகடாகு தளங்களைக் கொண்டிருப்பதனுல் மென்மையான களிப்படையாகச் சிதைந்துவிடு கின்றன. மைக்காத் துண்டுகளும் காணப்படும். இப்பாறைகளிலுள்ள காபன் வெண்ணிறமாகத்தோற்றமளிக்கும். களிமண் மஞ்சள், கபிலம், பச்சை, நீலம் முதலிய பல நிறங்களிற் காணப்படும். சிதைந்த பொருள்களிடைப் பாறைகளின் உட்பாகங்கள் உடையாது காணப் படும். மண்ணின் மேற்பாகத்தையடுத்துச் சரளைமண்ணுக்கம் பெற்ற இரும்புக் கற்றிரள்களையும் காணலாம். நிலவமைப்புப் போக்கிற்குக் குறுக்காக இவை பரந்துகாணப்படுவதுண்டு. (ஈ) சுண்ணக் கற்பாறைகள் கரைதல் மூலம் சிதைகின்றன. சுண்ணஞ் சேர்ந்த மாக்கற் பொருள்கள் தவிர ஏனைய பாறைப் பொருள்கள் யாவும் எளிதிற் கரைந்துவிடுகின்றன. கரைதலுக்கு உட்பட்ட சுண்ணக்கற் பிரதேசத்திற் கொடுமுடிகளையும் கூரிய ஓரங்களையு முடைய தொடர்கள் காணப்படுகின்றன. கின்டாப் பள்ளத்தாக்கில் வண்டற் படைகளின் கீழ் இவை காணப்படுகின்றன. சுண்ணக்கற் பிரதேசத்தில் ஏலவே அமைந்த பழைய வடிகால்களும் வண்டற்படை களின் கீழ் மறைந்து காணப்படுகின்றன. வண்டற் படையின் கீழ்ச் சுண்ணப் பொருள்கள் இன்றும் கரைந்துகொண்டேயிருக்கின்றன. இதனுல் நிலம் படிப்படியாகத் தாழ்ந்து செல்கின்றது. கரைதல் காரண மாகக் குகைகளும் உண்டாகின்றன. நிலத்தின் மேற்பாகம் சிதைந்து தாழ்ந்து விடும்பொழுது பதிவான சிறு வடிநிலம் (வங்கு) ஏற்படுகின் றது. குகைகள் உள்ள இடங்களிற் கசிதுளித்துண்டுகளும் காணப்படு கின்றன. (உ) பகங்கு எரிமலைப் பாறைகள் வானிலையழிவால் அதிகம் சிதைவதில்ல். இவை வெறும் பாறைகளாக வெளித்தோன்றி நிற்கின்றன. பாறை

Page 65
100 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
களின் மேலுள்ள ஓரிரு அங்குலப் படைமட்டும் சற்றே மாற்றமடைந்து காணப்படும். இரையோலைற் பாறை சிதைந்து மண்டியாக மாறுவ துண்டு. வெளிவரும் எரிமலைப் பொருள்கள் திரண்டு இறுகாத பாறை களாக அமைவதுண்டு. உப்புமூலத் தீப்பாறைகள் வானிலையழிவாற் சிதைவுறும்பொழுது சில பகுதிகளில் வளமான மண்வகைகள் உண்டா கின்றன. மலாயாவில் இம்மண்வகைகள் உட்பகுதிகளிற் காணப்படுவ தணுல் அத்துணை முக்கியமானவையாக இல்லை. இவை நன்முகப் பயன் படுத்தப்படாதிருத்தலே இதற்குக் காரணமாகும். கொக்கோச் செய் கைக்கு உகந்தனவாவென இம்மண்வகைகள் அண்மையிற் பரீட்சிக்கப் பட்டுவருகின்றன. (ஊ) படிக நரம்புகள் கருங்கற் பகுதியிலும் அதற்கப்பாலும் காணப்படுகின் றன. வானிலையழிவால் இவை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இதனுற் சிதைந்த பாறைகளுள் இவை உடைந்த மணித்தொடர்களாக வெளித் தோன்றி நிற்கின்றன. கிளாங் கேற்ஸிற்கு அண்மையிற் காணப்படுவது போன்று படிகம் தொடர்ச்சியாகவும் தடிப்பாகவும் காணப்படும் பொழுது அது முக்கியமான தரைத்தோற்ற உறுப்பாக அமைகின்றது. பள்ளத்தாக்குக்கள், சேற்றுநிலங்கள், கரையோரங்கள் ஆகிய பகுதிகளிற் கொண்டுவந்து படியவிடப்பட்ட நுண் மண்வகைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஒட்டுமியல்புடைய களிமண்ணுக உள்ளன. இவற்றிற் சிதைந்த தாவரப் பொருள்களும் அதிகம் உண்டு. மேனிலப் பகுதிகளிலுள்ள மேல் மண்ணே ஆறுகளினுற் கொண்டுவந்து இப்பகுதிகளிற் படியவிடப்பட்டுள்ளது. குறித்த ஓர் இடத்திலே உண்டாகியுள்ள மண் பயிர்ச்செய்கையைப் பொறுத்த வரையில் அவ்வளவு வளமுடையதாயில்லை. ஆனற் கொண்டுவந்து படியவிடப் பட்ட மண்வகைகள் வேறுபட்ட வளமுடையன. சுண்ணஞ் சார்ந்த மாக்கற் பாறைகளிலிருந்து வளமான ஈரக்களிமண் பெறப்படுகின்றது. பொங்குமுகப் பகுதியில் உட்பகுதியிலிருந்து வளமான மண்வகை கொண்டுவந்து படியவிடப் படுகின்றது. இங்கே நிலத்தைத் திருத்தி வடிகாலமைத்துப் பயிர் விளைவிக்கும் போது, மண் வளத்திற் குறைவடைவதில்லை. இத்தகைய தாழ்வான பொங்கு முகப் பகுதியில் வானிலையழிவின் தாக்கம் அவ்வளவாக உண்டாவதில்லை. ஏனைய இடங்களில் மண்ணுேட்டம், மண்சரிதல் முதலிய தன்மைகளினுல் மேல்மண், கீழ்மண் ஆகியன எளிதாகப் பெயர்த்துச் செல்லப்படுகின்றன. நிலத்திலுள்ள அதிக நீரும், கீழே தடித்த படையையுடைய சாளைமண்ணுக்க நிலைமைகளும் இதற்குத் துணைசெய்கின்றன. மலாயாவிற் சாளைமண்ணுக்கம் அதிகமாக நிகழ்ந் துள்ளது. அதிக அளவுக்குச் சாளைமண்ணுக்கம் ஏற்படக் காலநிலை, புவியோட் டுச் சிதைவு என்பனவும் காரணம் எனலாம்.
கீழ் மண்ணில் நீரோட்டமும் அதிகம் வேறுபடுகின்றது. கீழ்மண் நீர் படைக ளிடையிற் காணப்படாது, கூழான நிலைமையிலே காணப்படுகின்றது. இதனுல் நீருட்செல்வதனுலமையும் கிணறுகள் மிகவும் குறைவு. மலாயாவில் பெரும்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் O
பாகத்தில் நீர் தேங்கி நிற்பதுண்டு. இதனுல் நீர்மட்டம் பெரும்பாலும் தரையின் கீழ் ஓர் அங்குல அளவிற் காணப்படுகின்றது. கடற்கரையையடுத்த பகுதியில் வில்லைவடிவத்தில் வண்டல் படிந்துள்ள இடங்களில் ஆட்டீசிய நிலைமைகள் காணப்படுகின்றன. நீர் பெரும்பாலும் தாைநீராகவே பெறப்படுகின்றது. கிணறு களிலும் தசைநீரே ஒடித் தேங்கி நிற்கின்றது. ஊற்றுக் கிணறுகள் அதிகமாக இல்லை. மலாக்கா, கோலாலம்பூர் என்னுமிடங்களுக்கு அண்மையிலும் பேராக்கி அலும் வெப்ப நீரூற்றுக்கள் உண்டு. நீரின்வெப்பம் 100 ப. பாகைவரை இருக்கும். இந்நீரூற்றுக்கள் அதிக ஆழத்திலிருந்து வெளிவருதல் கூடும். எரிமலைத் தன்மையாலன்றி அமுக்கம் காரணமாகவே இவை அதிக வெப்பமுடையனவா யிருக்கின்றன. இக்காரணத்தினுல் இந்நீர் "இளமையான நீர்' என வழங்கு கின்றது.
காடுகள்
மலாயாவின் தாவரவகைகள் சிறிய நிலப்பகுதிகளில் எளிதில் ஆராய்ந்து குறிக்கப்படத்தக்க முறையிற் காணப்படுகின்றன. அவை குடிகள் செறிவாக வுள்ள எல்லைப் பிரதேசங்களிற் பரந்துள்ளன. தாவரவகைகள் அதிக அளவுக்கு வேறு பட்டனவாகவும், மலாயாவின் இயற்கைத் தோற்ற இயல்புகளுள் மிக முக்கியமானவை எனக்கொள்ளத் தக்கனவாகவும் உள்ளன. தாவரவகைகள் ஓரளவுக்கு தரை உயர வேறுபாட்டையும் இட அமைவையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதனுல் இத்தாவரவகைகளை இணைச் சொற்களால் விபரிப்பது பொருத்தமாகும்.
கடற்கரைச் சவுக்கமாக் காடுகள்.--திரெங்கானுவிலிருந்து யோகூர்வரை கடற் கரையைச் சார்ந்து நெடிய தொடர்போன்று சவுக்கமாங்கள் காணப்படுகின் றன. ஏறத்தாழ 60 அடி அகலத்திற்குப் பரந்துள்ள இத்தாவரங்கள் உயர் நீர் மட்ட எல்லைக்குச் சற்று மேலேயும் நன்னீர்ச் சேற்றுநில மட்டத்திற்குச் சற்று மேலேயும் பாந்துள்ளன. மேற்குக் கரையிலும் இத்தாவரங்கள் தொட்டம் தொட்டமாகப் பரந்துள்ளன. இம்மரங்கள் பெரும்பாலும் 80 அடி உயரத்துக்கு வளருகின்றன. இவற்றின் ஊசிபோன்ற இலைகள் தடித்த படையாகப் படிந்து பிற தாவரங்களை மூடிவிடுகின்றன. புன்னை (Calophylum), வாதுமை (Termi nalia Catappa) முதலிய கணுக்களுள்ள பிற மரங்களும் இதற்குத் துணைசெய் கின்றன. கடற்கரையிலுள்ள மணவிலும் மணற்குன்றுகளிலும் இவை எளிதில் வளர்ந்துவிடுகின்றன. மாங்குரோவுச் செடிகளுக்கு முன்பு இவை வளர்ந்துவிடு கின்றன. கடற்கரையிலுள்ள இம்மரங்களின் பின்னணியில் சில நூறு யார் அகல மான புதர்களும், அயனப் புல்வகைகளும் (லலாங்கு, Imperator Cylindrical), தொடுகடல் அலிஞ்சிப் பூச்செடிவகைகளும் (ரொடோடெண்டிரன்) காணப் படுகின்றன. கடற்கரையிற் காணப்படும் மரங்கள் மீன்பிடி வள்ளங்கள் கட்டு வதற்குப் பயன்படுகின்றன.
கடற்சேற்று நில மாங்குரோவுக்காடு-இக்காடு கடற்கரையைச் சார்ந்து கேடாவிலிருந்து சிங்கப்பூர்வரை ஒரு வலயமாகப் பரந்துள்ளது. இது 50 Uri

Page 66
02 மலாயா : இயற்கை நிலத்தோற்றம்
ዯ# t
r
s t is d with - s
ܠ.
a a a e = · ay s
at • a ay o t * W. " ... م، “چ”ر“، “, ”ع • * * * .*."•
نسبت . ۰ ۹ کی ه هند ه ه مه و .. ه ه • •
o , a al o s o a • o o * 8 voto ، تعتمجتمعة . لتون ۳: هر • • • • • • • • • • • "، و ؟
o Հ՞ք.
w Y . 宮5. 'மலைக்காடு *:'::
O 춘불 . ’."........ குன்றுக்காடு 、亨鲁 、
ܝ ܪ ܖ. M i ue w ser
உள்நாட்டு நன்னீர்ச் சேற்றுக் காடு تاريخ . .': கடற் சேற்று மாங்குரோவுக் காடு -དོ་། காடற்ற நிலம் (OS
தாழ் நில அயனமிழைக்காடு 尋.......高
படம் 34. மலாயாவின் காட்டு வகைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 103
முதல் 12 மைல் வரை அகலமுடையது. உட்பகுதியில் ஆற்முேரங்களைச் சார்ந்து பரந்துள்ளது. இக்காட்டுவலயத்தில் ஆற்றுப் பொங்குமுகங்கள் நீர் வழிக ளாக அமைந்துள்ளன. சில இடங்களில் இக்காடுகள் ஆழமான கால்வாய் களினற் பிரிக்கப்பட்ட தீவுகளாகவும் உள்ளன. போட் சுவெற்றினம் இதற்கு ஓர் உதாரணமாகும். ஆறுகள் படியவிட்ட சேற்றுநிலத்திலே மாங்குரோவுச் செடிகள் பொதுவாக வளருகின்றன. மலாக்காத்தொடுகடல் நீரோட்டத்தினுற் கரைக்குப் புறத்தே படிந்த மணற்றடைகளுக்கிடையிலுள்ள கடனீரேரிப் பகுதி களில் இச்செடிகள் வளர்ந்து அவற்றை மூடியுள்ளன. இச்செடிகள் கடலைநோக் கிச் சாய்ந்துள்ளமையால் வற்றுக் காலத்திற் சிறிய வள்ளங்களும் பல யார் அாரத்திற் செல்ல வேண்டியுள்ளன. மாங்குரோவு நிலம் குவிவுத்தன்மையுடைய தாய் அமைகிறது. இதன் சற்றே உயரமான பகுதியை நீர் அதிகமாக மூடுவ தில்லை. இதனுற் சில வகையான மரங்கள் மட்டுமே அங்கு வளர வாய்ப்பேற்படு கிறது. மண் தொடர்ந்து வந்து படிவதனுல் நிலமட்டம் படிப்படியாக மேலு யர்ந்துவிடுகின்றது. இதற்கு வளை தோண்டும் இருரல்கள் (தலசினு) துணை செய்கின்றன.
மரங்கள் சீரானவையாயும் சராசரியாக 40 அடி உயரமுடையனவாயும் உள் ளன. கரிய பளபளப்பான இலையைக் கொண்டுள்ளன. சாம்பனிற இலையையு டைய அபிஅயி என்னும் கண்டல்மரம் (அவிசென்னியா) முதன்முதலில் இப் பகுதியில் தோன்றிய மரங்களுள் ஒன்முகும். கடல்மட்டத்திற்கு மேல் நிலம் அமைந்ததும், சில நாள்களிலே இம்மரம் வளர்ந்துவிடுகின்றது. இது மண்ணை இறுகப் பற்றி வளரும் இயல்புடையது. இதனுல் மண் உறுதிபெற்று வேறு மரங்கள் வளரவும் இடமளிக்கின்றது. மின்மினிப் பூச்சிகள் இம்மரங்களிற் பெருந்தொகையாகக் காணப்படும். இவை மாலுமிகளுக்குத் துணைசெய்கின் றன. அபிஅபி மரங்களின் பின்னணியில் பகோ (ரைசோபோரா), லெங் (56) (புரூகியெரா) என்னும் மரங்கள் காணப்படுகின்றன. செலங்கர், பேராக், வெலஸ்லி மாகாணம் ஆகியவற்றின் பொங்குமுகங்களுக்கு அப்பாற் பல ஏக் கர் சேற்றுப் புதர்நிலம் காணப்படுகிறது. விளைநிலம் நீர்ப்பெருக்காற் பாதிக் கப்படாதவாறு புதரைச்சூழச் சிறு வரம்புகள் கட்டப்பட்டுள்ளன. படிப்படி யாகக் கைவிடப்பட்ட விளைநிலம் போன்று இப்புதர்நிலம் காட்சியளிக்கின்றது. கிழக்குக் கரையிலுள்ள மாங்குரோவுக் காடுகள் ஆற்றுப் பொங்குமுகங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆற்றுமுகங்களுக்குச் சற்றே தெற்காக அமைந் துள்ள மணற்கும்பிகளில் இவை பரந்துள்ளன. மணற்கும்பிகளில் முதலில் சவுக்கமரங்கள் வளருகின்றன. அவற்றின் பின்னணியிலுள்ள கடலேரிகளிற் பின்பு மாங்குரோவுச் செடிகள் வளர்ந்து மூடிக்கொள்கின்றன. மணற்கும்பி களிற் பிளவு ஏற்படும்பொழுது கடல் நீர் உட்செல்லுகின்றது. உள் நாட்டிற் பல மைல் தூரத்திற்குப் பழைய மணற்கும்பிகளையும் மாங்குரோவுச் சேற்று நிலங்களையும் காணலாம். சேற்றுநிலங்கள் பின்பு நெற்காணிகளாக மாற்றப் பட்டுவிடுகின்றன. கேடாவிலும் இத்தகைய நிலைமைகளைக் காணலாம்.

Page 67
104. மலாயா: இயற்கை நிலத்தோற்றம்
460 சதுரமைல் நிலத்தில் மாங்குரோவுக் காடுகள் காணப்படுகின்றன. இவற் றிலிருந்து கரி, விறகு, மரக்குற்றி முதலியன பெறப்படுகின்றன. மாங்குரோவு வலயத்தின் ஒரு பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழுகின்றனர். இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்கள் உண்டு. குடியிருப்புக்கள் கம்பங்களில் உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். பெருக்குக்காலத்தில் அவை நீரில் முட்டுவதுண்டு. பழைய மணற்கும்பிகளிலும் குடியிருப்புக்கள் நிறுவப் பட்டிருக்கும். மாங்குரோவுப் பகுதியில் வாழும் மக்கள் மீன்பிடித்தல், மீனைக் கருவாடாக்கல், பன்றி வளர்த்தல், முதலை பிடித்தல் (தோலிற்காக) முதலிய தொழில்களில் ஈடுபடுவர். மணற்பாங்கான மேற்குக் கரையில் இத்தொழில்கள் அதிகமாக நடைபெறுவதில்லை. மேற்குக் கரையில் மலேரியா, மணற் பூச்சிக் காய்ச்சல் முதலிய நோய்கள் பரவுவதே இதற்குக் காரணமாகும். பன்றிகள் பெரும்பாலும் வளர்க்கப்படுவதனல் இக் கிராமங்களில் வாழுபவர் இஸ்லாமிய ால்லாதவராயிருத்தல் வேண்டும். மலே இனத்தவரிலும் பார்க்க நாகரிகமற்ற வராகக் காணப்படுகின்றனர்.
நீபம், நீபொங்கு (ஒன்கொஸ்பேர்மா), தாழை முதலிய செடிகள் நன்னீர்த் தன்மையுடைய பொங்குமுகங்களில் வளருகின்றன. வேலி அடைத்தற்கு நீபம் பெரிதும் பயன்படுகின்றது. தாழை இலைகள் பாய், பை முதலியன இழைத்தற் குப் பயன்படுகின்றன.
உள்நாட்டு நன்னீர்ச் சேற்றுநிலக் காடுகள்-அண்மைக்காலத்தில் கடல் மட் டம் உயர்ந்து வருவதனுலும் பாட்டமாக மழை பெய்வதனலும் வண்டல் மண் ணைக்கொண்ட தாழ்நிலங்கள் பெரும்பாலும் நீரினல் மூடப்படுகின்றன. இத ஞல் உள்நாட்டுப் பகுதியில் நன்னீர்ச் சேற்றுநிலக் காடுகள் உண்டாகின்றன. இங்குத் தடித்த களிமண் காணப்படுகின்றது; மேற்படை பெரும்பாலும் முற்ரு நிலக்கரியைக் கொண்டுள்ளது. கோலா செலங்கரில் இப்படை முப்பது அடித் தடிப்பாக உள்ளது. இதனிலும் தடிப்புள்ள படைகள் மிகவும் உட்பகுதியிற் காணப்படுகின்றன. நன்னீர்ச் சேற்றுநிலக் காடுகளிலுள்ள மாங்கள் மலாயாவி அலுள்ள மரங்களின் சராசரி உயரத்திலும் குறைந்தனவாய் உள்ளன. தாலமரம், தாழை, முட்செடிகள் முதலியன தரையிற் செறிவாகப் பரந்துள்ளன. இத னல் உட்செல்லுதல் மிகவும் கடினமாகும். ஒரப்பகுதியிலே ஒரோவொருகால் நீரினுல் மூடப்படும் நிலம் லோபக் என மலாயாவில் வழங்கப்படும். சேற்று நிலப் பகுதியிலுள்ள சற்றே உயரமான வறண்ட மேடுகள் பேர்மடாங் எனப் படும். இவை பழைய உயரணைகளாக அல்லது கடற்கரை நிலங்களாக இருக்க லாம். கேடா, பேர்ளிஸ் ஆகிய பகுதிகளிலுள்ள சேற்று நிலங்களிற் பெரும் பாலுங் கலப்பில்லாத ஜெலம் (மெலவியூக்கா) மரங்கள் காணப்படுகின்றன. இவை மூன்று அடி ஆழமான நீரில் வளரக்கூடியவை. இங்கு மரவகைகள் குறைவாகவே உள்ளன. வியாபாரத்திற்கு ஏற்ற சில மரங்களும் இங்கு உள் ளன. சேற்று நிலங்களுக்குச் செல்வது கடினமாக இருப்பதனுல் இவை பெரும் பாலும் வெட்டப்படாதுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 105
தாழ்றில அயன மழைக் காடுகள்-மலாயாவிலுள்ள இக்காடுகள் பெரும் பாலும் தென்கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளிலுள்ள காடுகளை ஒத்துள்ளன (4 ஆம் ஆக்தியாயம் பார்க்க). கடற்கரைச் சமநிலத்திலிருந்து 2000 அடிவரை யுள்ள நிலத்தில் இக்காடுகள் பரந்துள்ளன. இவை மலாயாக் குடாநாட்டில் 60 சதவிதமான பகுதியை அடக்கியுள்ளன. பேர்டாம் (யூகேய்சோன), பிரம்பு, கெலுபி (சலக்கா) முதலிய செடிகள் தரையிற் காணப்படுகின்றபொழுதும் உட்செல்லுதல் அவ்வளவு கடினமாக இல்லை. செங்கால், பாலோ, காபுர், கெரூங், மொாந்தி முதலிய வியாபாரத்திற்கேற்ற மரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. எனினும் வெட்டுதல் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றிலுள்ள இடர்ப்பாடுகள் போதிய வேலையாட்களைப் பெறமுடியாமை முதலிய காரணங்களால் இத் தொழில் அதிக அளவுக்குப் பெருகவில்லை. மரங்கள் பெரும்பாலும் உள்நாட் டிலே பயன்படுத்தப்படுகின்றன. மலாயாவின் தேவைக்கு வேண்டிய மரங்கள் இப்பொழுது அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. காட்டு மரங்களி விருந்து பிசின் போன்ற பொருள்கள் எடுக்கப்படுகின்றன. இப்பொருள்கள் மூலம் வருடத்தில் 3.3 இலட்சம் தொலர் வரை வருமானம் கிடைக்கின்றது. இவற்றுள் ஜெலுடொங்கிவிருந்து பெறப்படும் மெல்லும் பிசின் மிகவும் முக்கிய மானதாகும். மலாயாவில் பெறப்படும் மரங்களாவன :
1. செங்கால் (பலனேகார்புஸ்)-கட்டடங்களுக்கு ஏற்ற மிகள்ம் 63) di TLD tadt
t All ty. 

Page 68
06 மலாயா: இயற்கை நிலத்தோற்றம்
துணைக்காடுகள்-மக்களால் வெட்டி அழிக்கப்பட்ட நிலங்கள், காட்டுத் தீயினல் பாதிக்கப்பட்ட நிலங்கள், கைவிடப்பட்ட விளைநிலங்கள் ஆகிய இடங் களிலே இக்காடுகள் காணப்படுகின்றன. மலாயாவிலும் கிழக்கிந்தியத் தீவுகளி அலும் இக்காடுகள் பெலுகர் என்ற பெயரால் வழங்குகின்றன. இவை நெடிய அயனப் புல்வகைகள் (லலாங்) முதல், காடுகள் வரை பல தாவரவகைகளை உள் ளடக்கியுள்ளன. இக்காடுகள் தாழ்நிலக் காடுகளைப் பெரிதும் ஒத்துள்ளன. சில பகுதிகளில் ரேசம் எனப்படும் அடர்த்தியாக வளரும் கொடிகள் காணப்படுகின் றன. அவற்றேடு பல செடிகளும் அடர்த்தியாகப் பரந்துள்ளன.
இத்தகைய காடுகள் கம்பொங்கிற்கு அண்மையிலும் வடகிழக்குக் கேடாவி லூம் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளிற் காடுகளில் வாழும் கூட் டத்தினர், தற்காலிக தேவைக்காகக் காடுகளை அடிக்கடி அழித்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பெலுகர் காடுகள் வியாபாரத் தேவைகளுக்கு உவந் தனவாய் இல்லை. மூங்கில் மட்டும் சிறிதளவு பெறப்படுகின்றது. எனினும் இக் காடுகள் வேறுபல தேவைகளுக்குப் பயன்படுகின்றன.
குன்றுக் காடுகள்-இக் காடுகள் அயனப் பிரதேச மழைக்காடுகளுள் ஒரு வகையினவாகும். குன்றுகளிலுள்ள வானிலை மாற்றங்களுக்குப் பொருந்தக் காணப்படுகின்றன. 2,000 அடிமுதல் 4,000 அடிவரையுள்ள மேனிலங்கள், குன் அறுத் தொடர்கள் ஆகியவற்றில் இக்காடுகள் பரந்துள்ளன. இத்தகைய உயரத் கில் கெரூங் (டிப்தெரோகார்புஸ்) மரங்கள் பெரும்பாலும் காணப்படமாட்டா. இங்குக் காணப்படும் மரங்களுள் சாம்பனிற இலையையுடைய செராவா மிகவும் முக்கியமானதாகும். முட்களையுடைய பேர்டாம் மாமும் குறிப்பிடத்தக்கது. இக்காடுகளிற் காணப்படும் மரங்களிலிருந்து அதிக வருவாய் கிடைப்பதில்லை. எனினும் இப்பகுதிகளில் வாழும் கூட்டத்தினரின் காட்டு வழிகள் பல இங்குக் காணப்படுகின்றன.
மலைக்காடுகள்-4,000 அடிக்கு மேற்பட்ட உயரமுடைய பகுதிகளில் தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிற் காணப்படுவனவற்றை ஒத்த காடு கள் மலாயாவிலும் காணப்படுகின்றன (4ஆம் அத்தியாயம் பார்க்க). இவை குறைந்த உயரமுடைய பகுதிகளில் மலைக் கருவாலிக் காடுகளையும் (பசனியா), மிகவும் உயர்ந்த பகுதிகளில் வறணிலப் புதர்களையும் கொண்டனவாய்க் காணப் படுகின்றன. வியாபாரத் தேவையைப் பொறுத்தவரையில் மலைக் கருவாலி முக் கியமானதாகும். இது விறகுக்கும் குன்று நிலையக் கட்டடத் தேவைக்கும் உப யோகப்படுகின்றது.
மலாயா, மலேசியா, மலே, மலாயன் மலாயா என்னும் பெயர் தைலாந்து எல்லைக்குத் தெற்கேயுள்ள குடாநாட்டுப் பிரதேசத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டு வருகிறது; இப் பிரதேசத் தில் முன்பு சுல்தான் இராச்சியங்களாயிருந்த பகுதிகள் பின்பு மலாயாக் கூட் டாசு என அமைக்கப்பட்டன. மலேசியா என்னும் பெயரை முதன் முதல் எமே

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 07
சன் என்பவர் 1937இல், மலாய் மொழிபேசும் மக்கள் வாழும் பிரதேசத்துக்கு (இதில் மலாயா, இந்தோனேசியா, பிலிப்பைன் தீவுகளின் சில பகுதிகள் ஆகிய யன அடங்கும்) வழங்கினர். இப்போது இப்பெயர் மலாயா, சிங்கப்பூர், சரா வாக், சாபா என்னும் இராச்சியங்கள் இணைந்த மலேசியக் கூட்டாசைக் குறிக் கின்றது. மலே என்னும் பதம் அக் குடாநாட்டில் இன-மொழி அடிப்படையில் அமைந்த ஒரு கூட்டத்தாருள் ஒருவரைக் குறிக்கும். மலாயன் என்னும் பதம் இன அடிப்படையிலன்றி, மலாயாக் கூட்டாசைச் சேர்ந்த ஒருவரைக் குறிக் கும். மலேசியன் என்னும் பதம் மலேசியக் கூட்டாசைச் சேர்ந்த ஒருவாைக்
குறிக்கும்.
7-ᏟᏢ 4217 ( Ꮾ819)

Page 69
அத்தியாயம் 7 மலாயாவின் பண்பாட்டியல்புகள்
மலாயாவின் பண்பாட்டியல்புகளைப் பொறுத்தவரையில் மக்களின் தொழில் முறைகளினல் சிறிதளவு (மொத்த நிலப்பரப்பில் 35 வீதமான பகுதியில் மட் ம்ெ) மாற்றமே ஏற்பட்டுள்ளது. மாற்றத்தின் தாக்கம், காலம் என்பன உண வைத் தேடிக்கொள்ளுதல் பணஞ் சேகரித்தல் ஆகிய இரு காரணங்களை அடிப் படையாகக் கொண்டுள்ளன.
உணவுப் பொருள்களைத் தேடிக்கொள்வதிலேயே உள்நாட்டு மக்கள் பெரும் பாலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கை முறைகள், பாரம்பரிய வழக்கு, குடியிருப்பு வகைகள், குடியிருப்புப் பரம்பல் முதலியவற்றில் பல நூற்ருண்டுக் காலமாக அதிக மாற்றம் ஏற்படவில்லை. அவை யாவும் அவ்வப் பகுதியின் குழ லுக்கு ஏற்பச் சிறுசிறு வேறுபாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. ஆனற் பணஞ் சேகரித்தலை முக்கியமாகக் கொண்ட பகுதிகளில்-அதாவது உள்நாட் டுப் பொருள்களைப் பணத்திற்காக ஏற்றுமதிசெய்யும் பகுதிகளில், நிலைமை கள் பெரும்பாலும் வெளிநாட்டவர் காரணமாக அமைந்தன எனலாம். அவர் களது வாழ்க்கை முறைகள், குடியிருப்பு வகைகள் முதலியன மலாயாவின் தன் மைகளிலும் பார்க்க வெளிநாட்டுத் தன்மைகளுக்குப் பொருந்தவே காணப்படு கின்றன. இந்த நிலைமைகள் காணப்படும் பகுதிகளிற் புதிய தொழில்நுட்ப முறைகள், புதிய பொருளாதார அமைப்பு என்பன அண்மைக் காலத்திற் பரவி யுள்ளன. இவற்றல் ஏற்பட்ட மாற்றம் ஒரு சீரானதாயில்லை; பழைய பண்பாட்டு நிலைமைகளில் இது படிப்படியான ஒரு தாக்கத்தையே கொண்டுள்ளது. எனவே மலாயாவின் பண்பாட்டு இயல்புகளை உணவுப்பொருள் உற்பத்தி, பணஞ் சேக ரித்தல் ஆகிய இரு தலைப்புக்களின் கீழ் ஆராய்தல் பொருத்தமாகும். இந்த இரு தொழில்முறைகளும் பல வழிகளில் ஒன்முேடொன்று தொடர்புடையனவாயும்
A 676tat.
உணவுப் பொருளுற்பத்தி
மலாயாவிலுள்ள மிகமுக்கியமான உணவுப்பொருளுற்பத்தித் தொழில்களுள் நெல் விளைவித்தலும் மீன்பிடித்தலும் குறிப்பிடத்தக்கன. மலே இனத்தவரே இத் தொழில்களிற் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். மலே இனத்தவரின் வீடுகள் (மரத்தினற் கட்டி வேயப்பட்ட வீடுகள்), உடைகள் (இறுக்கமற்ற பாவாடை போன்ற சாரமும் கரிய குல்லாய்போன்ற சொங்கொக்கும்), கலாசார நிலை யங்கள் (தொழுதற்குப்பயன்படும் பள்ளிகள்) முதலியன மேற்குறித்த தொழில் முறைகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இவை அவ்வப் பகுதிகளின் அமை வையும் பொருளாதார நிலைமைகளையும் பொறுத்துச் சிறிதளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன.
08

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 09
மீன்பிடித்தல்-கடலில் மீன்பிடிக்குந் தொழில் மலாயாவில் அதிக அளவு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. ஆறுகள் அருவிகள் கால்வாய்கள் முத லியவற்றிலும் சொந்தத் தேவைக்காக மீன்பிடிக்கப்படுகின்றது. மலாயா மக்க ளின் முக்கியமான உணவுப் பொருள்களுள் மீன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கிழக்குக் கரையோரத்திலுள்ள கிராமத்தவர் பெரும்பாலும் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பிடிக்கப்படும் மீனில் ஒருபகுதி கருவாடாக்கப் படுகின்றது. வெப்பமான காலநிலையுள்ள இப்பகுதியிற் கருவாடாகக்கொண்டு செல்லுதல் எளிதாகும், பாங்கோர் தீவு, டின்டிங்ஸ் ஆகிய பகுதிகளிலும் மீன் பிடிதொழில் சிறப்பான தன்மைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதிகளிற் கடற் கரையில் மீன்பிடி கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் மிகக் கடுமை யாக விசும் பருவக் காற்றினுற் பாதிக்கப்படாதவாறு ஓரளவு ஒதுக்கில் உள் ளன. விடுகளும் தென்னை மரங்களிடையில் மறைவாகவே உள்ளன. மீன்பிடி தொழிலின் மூலம் வருவாயோடு தென்னையிலிருந்தும் ஓரளவு வருவாய் பெறப் படுகின்றது. வீட்டுத் தேவைக்குரிய எண்ணெயும் கிடைக்கின்றது. மலாயாவின் மீன்பிடிதொழில் கரையிலிருந்து 20 மைலுக்குட்பட்ட பகுதியில் நடைபெறு கின்றது. வலை, ஆாண்டில் முதலிய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலாயா வின் மேற்குக் கரையைச் சார்ந்த கடல் அமைதியாகவிருப்பதனுற் கடலில் ஆயிரக்கணக்கில் மூங்கில் தடிகளை நட்டு மீனை எளிதாகப் பிடிக்கக்கூடிய பொறிகளுக்குக் கடத்திச்செல்வர். பெரும்பாலும் சீன மீன்பிடி தொழிலாளரே இத்தகைய முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மீன்பிடித்தல் ஒரு பிரத்திய்ேக மான தொழிலாக உள்ளது. மீன்பிடிதொழிலாளரின் ஏனைய உணவுப் பொருள் கள் மீண் விற்பதன் மூலம் பெறப்படுகின்றன. கிழக்குக் கரைப்பகுதியில் நவம் பர் முதல் மார்ச்சுவரையுள்ள காலம் மீன்பிடி தொழில் இல்லாத காலமாகும். சடுதியான வானிலேத் தன்மைகள் இக்காலத்தில் நிலவுவதே இதற்குக் காரண மாகும். இகளுல் மீன்பிடி தொழிலாளர் நெற்செய்கையிலும் ஈடுபடுவர். சிறு தென்னந்தோட்டங்களேயும் இவர்கள் கொண்டுள்ளனர். கரைப்பகுதியிற் சதுப்பு நிலங்கள் காணப்படுவதஞல் மீன்பிடி கிராமங்கள் உட்பகுதியிலிருந்து பிரிக்கப் பட்டுள்ளன. இதனுற் போக்குவரத்து நீர்வழி மூலம் நடைபெறுகின்றது. மலாக் கா, பேராக்கரைப்பகுதி ஆகியன உட்பகுதியோடு தெருக்கள் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. உட்பகுதியிற் பனிக்கட்டியிலிட்ட உடன்மீனுக்கு அதிக மதிப்பு இருப்பதனல் தெருக்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றது.
மலாயாவில் உட்கொள்ளப்படும் பிரதான மீன்வகைகள் பிடிக்கப்படும் மீனின் நிறையை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளன. கெம்பொங் எனப்படும் மக்கால் (ஸ்கொம்பர்) பெரும்பாலும் டின்டிங்ஸிற் பிடிக்கப்படுவது ; பிலிஸ் எனப்படும் வைற்பெயிற் (ஸ்ரொல்பொரஸ்) பெரும் பாலும் திரெங்கானுவிற் பிடிக்கப்படுவது; உடாங் எனப்படும் இருல் (பெனே யஸ்) மேற்குக் கரையிற் பெரும்பாலும் பிடிக்கப்படுவது ; தம்பன் எனப்படும் நெத்தலி (குளுப்பியா) வடகரைகளிற் பெரும்பாலும் பிடிக்கப்படுவது; செலார் (செலாயாங்) எனப்படும் குதிரை மக்கால் (காரங்ஸ்) பெரும்பாலும் கிழக்குக் கரையிற் பிடிக்கப்படுவது; பாாங் எனப்படும் தோசாப் (சிசோ

Page 70
10 மலாயா: பண்பாட்டியல்புகள்
சென்றஸ்) தென் கரைகளிற் பெரும்பாலும் பிடிக்கப்படுவது ; டெலா எனப் படும் சீபிரீம் (கயிசியோ) மலாயாவின் தெற்கிலுள்ள தீவுகளைச் சார்ந்துள்ள ஆழ்கடலிற் பிடிக்கப்பட்டுச் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படுவது.
1961 ஆம் ஆண்டில் மொத்தம் 178,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. இத் தொகையில் 98,000 தொன் மீன் மேற்குக் கரையிற் பிடிக்கப்பட்டது; இக்கரை
யில் மீன் பெரும்பாலும் வியாபாரத்திற்காகவே பிடிக்கப்படுகின்றது;
9,700
தொன் மீன் சிங்கப்பூரிற் பிடிக்கப்பட்டது; கிழக்குக் கரையிற் பிடிக்கப்படும் மீனிற் பெரும்பகுதி கணிக்கப்படாது போய்விடுகின்றது. ஏறக்குறைய 57,000
Ali Guoso peruanr
படம் 35, பேர்ளிஸ், கேடா, வெலஸ்லி மாகா ணம் என்பவற்றின் நிலப்பயன்பாடு
பேர் இத்தொழிலில் அப்பொழுது ஈடு பட்டிருந்தனர். 5,000 இற்கு மேற் பட்ட இயந்திர வள்ளங்களும் பயன் படுத்தப்பட்டன.
நெற்செய்கை-மலே இனத்தவர் முதன் முதலிற் கடலோடிகளாகவும் மீன் பிடிப்பவர்களாகவும், மாலுமிக இருந்தனர் என்ற கூற்று உண்மையாயினுமாக , பொய்யாயினு
ளாகவும்
மாக, இவர்கள் இன்று மலாயா குடா நாட்டிற் பெரும்பாலும் நெற்செய் கையிலிடுபட்டவர்களாகவே காணப் படுகின்றனர். இங்குள்ள பயிர் விளை நிலமாகிய 60 இலட்சம் ஏக்கர் நிலத் தில் 970,000 ஏக்கர் நெற்செய்கைக்
காகப் பயன்படுத்தப்படுகின்றது. நெற் செய்கையிவிடுபட்டுள்ள பிர தான மாகாணங்கள் முறையே
கேடா, கெலந்தான், பேராக் என்பன வாகும். மலாயாவிலுள்ள மொத்த நெல் வயல்களுள் மூன்றிலிரண்டு பகுதி இந்த மூன்று மாகாணங்களில் உள்ளது. 94 சத வீதமான நிலத்தில் பயிரிடப்படுகின்றது. அல்லது உலர்நெல்
ஈரநெல்வகை குன்று நெல், வகை மிகக் குறைந்த அளவுக்குச் சிறு நிலப்பகுதியிற் பயிரிடப்படுகின் Pஅது. பயிர்ச்செய்கை நடைபெறும் சிறு நிலத்தில் உலர்
பெயர்ச்சிப்
நெல்வகை சிறிதளவு விளைவிக்கப்படுகின்றது. வேறு பயிர்த் தேவைக்காக முதன் முதலில் திருத்திப் பதன் செய்யப்பட்ட நிலத்திலும் உலர் நெல்வகை
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள்
தொடக்கத்திற் பயிரிடப்படுவதுண்டு. நிலப்பயன்பாட்டுப் படத்தில் ஈர நெல் வகை காணப்படும் பகுதியே தெளிவாகக் காட்டத்தக்கதாய் உள்ளது. மலாயா முழுவதையும் எடுத்துப் பார்க்கும்பொழுது இந்நிலம் சிறிதாக உள்ளது. பிச தேச நிலப்பயன்பாட்டுப் படங்களில் இது தெளிவாகக் குறிக்கப்பட்டு விளக் கப்பட்டுள்ளது (படம் 35-43), 2
ஈரநெல்வகை நீரைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவதிற் றங்கியுள்ளது. மலா யாவில் மழைநீர் சடுதியாக ஓடாதவாறு கட்டுப்படுத்திப் பயன்படுத்தப்படுகின் றது. இதற்குக் கையாளப்படும் முறைகள் பெரும்பாலும் பழைய முறைகளா கும். ஆற்றுநீரும் நீர்ப்பாய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய முறை களோடு புதிய அணைக்கட்டு முறைகளும் ஆற்றுநீரைக் கால்வாய்ப்படுத்திப் பயன்படுத்த உதவுகின்றன. கேடா, வெலஸ்லி மாகாணம், பேராக்கில் கிரியன் பகுதி, கெலந்தான் முதலியன தொடர்பாக அதிக நெல்விளையும் நிலங்களைக் கொண்டுள்ளன. இந்நிலங்கள் யாவும் ஆறுகளின் கீழ்ப்பாகத்தைச் சார்ந்துள்ள வண்டற் பகுதிகளிற் காணப்படுகின்றன. பிற பகுதிகளில் நெற்காணிகள் குறை வாகும். அவை பெரும்பாலும் பேராக், பகங்கு ஆகிய பெரிய ஆறுகளின் வெள் 6ாச் சமநிலங்களிலும் (படம் 42), ஒடுக்கமான குன்றுப் பள்ளத்தாக்குகளிலும் (படம் 38) காணப்படுகின்றன. மலாயாவின் எந்தப் பகுதியிலும் 50 அடி மட் டத்திற்கு மேலுள்ள இடங்களில் ஈரநெல்வகை பயிரிடப்படுவதில்லை. கெலந் தான், திரெங்கானு, வெலஸ்லி மாகாணம் ஆகியவற்றின் கரையோரப் பகுதியில் நெற்காணிகள் 10 ஏக்கர் அளவிற் சிறுசிறு துண்டுகளாகப் பரந்துள்ளன. ஒரு காலத்தில் மாங்குரோவுச் செடிகளைக் கொண்ட சதுப்புநிலங்களையும் ஏரிகளை யும் சார்ந்து காணப்பட்ட மணற்குன்றுகளுக்கிடையில் இந்நெற்காணிகள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் ஆறுகள் வண்டல் மண்ணைக் கொண்டுவந்து படியவிடுவதனுற் கரைகள் படிப்படியாக அகன்றுவருகின்றன. கடல் நீரோட் 1.த்தின் தாக்கமும் இங்கு உண்டு. வறண்ட பருவங்களில் இப்பகுதிகளிலுள்ள வயல்களில் உவர் நீர் படிகின்றது. கடல் மட்டம் தாழும் பொழுது பழைய மணலுக்கூடாகக் கடல்நீர் கசிந்து வயல்களில் உவர்நீர் படிகின்றது. இதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வயல்களைச் குழக் கடற்பெருக்கு ஏற்படும் ஒரத்தில் இரண்டு அடி உயரமான வரம்புகள் எழுப்பப்பட்டுள்ளன. சில சமயங் களில் கடல்நீர் சிறிதளவுக்குக் கசிந்து வந்தபொழுதும் அதனல் அதிக தீங்கு விளைவதில்லை. மழைக்காலத்தில் நன்னீர் அதிகமாக வந்து உவர்நீர்ப் படிவைக் கழுவிச் சென்றுவிடுகின்றது.
மலாயாவில் நெல்விளையும் நிலங்கள் மட்டுமே மாங்களில்லாத வெளிநிலங்க ளாகும். இந்நிலங்களிற் குடியிருப்புக்களும் அரிதாகவே காணப்படும். கிராமங் களும் வீடுகளும் இந்நிலங்களின் எல்லேப் பகுதியில் உள்ளன. எல்லைப் பகுதியில் நிலம் ஓரளவு உயரமாக இருத்தலினுற் சாதாரண வெள்ளப்பெருக்காற் பாதிக் கப்படுவதில்லை. வீடுகள் மூன்றடி உயரமான கால்களில் தரைக்குச் சற்று மேலே கட்டப்பட்டுள்ளன. வீடுகளை இவ்வாறு அமைத்தல் இங்குக் காணப்படும் ஒரு வழக்கமாகும். வெள்ளப் பெருக்கு, காட்டுவிலங்குகள் ஆகியவற்றிலிருந்து பாது

Page 71
12 மலாயா; பண்பாட்டியல்புகள்
காப்பாயிருப்பதற்காகவே விடுகள் இவ்வாறு அமைக்கப்படுகின்றன. இத்தகைய வீடுகள் குளிர்ச்சியாயுமுள்ளன. வற்றுப்பெருக்குக்குட்பட்ட கரைப்பகுதி, பொங்குமுகப் பகுதி ஆகியவற்றில் வீடுகளை அமைக்கும் பழைய மலே மரபும் வீடுகள் இங்ஙனம் அமைக்கப்படுதற்கு ஒரு காரணமாகும். நெற் காணிகளுக் கூடாகக் கால்வாய்களும் சிறு அகழிகளும் காணப்படுகின்றன. அவற்றைச் சார்ந்துள்ள வாம்புகள் போக்குவரத்துக்கும் குடியிருப்புக்களுக்கும் பயன்படு கின்றன. மலே இனத்தவர் அமைக்கும் கால்வாய்கள் 4 அடி ஆழமும் 18 அடி அகலமுமுடையன. வரம்புகள் 3 அடி உயரமும் 10 அடி அகலமுமுடையன. வரம்புகளின் மேற்பரப்பு திருத்தமாக அமைக்கப்படுவதில்லை. கால்வாயில் நீர ணைகள் சிறுதடிகளினுலும் கற்களினலும் அமைக்கப்படுகின்றன. இவ்வணைக ளுக்கூடாகவும் மேலாகவும் நீர் சிறிதளவிற் செல்லும். இந்த அணைகள் எளிதாக அமைக்கப்படுகின்றன. எதிர்பாராதவிதமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது இவை நீக்கப்படுகின்றன. இந்த அணைகள் காரணமாக மண்டி முத விய பொருள்கள் அதிகமாகக் குறைந்து விடுகின்றன எனக் கூறமுடியாது. மேலைத்தேச எந்திரியரின் துணையோடு அமைக்கப்படும் இக்காலக் கால்வாய்கள் ஏறத்தாழ ஒரே அளவானவையாயுள்ளன. அவற்றின் ஒரு பக்கத்திலுள்ள வரம்பு அகன்றதாயும் போக்குவரத்திற்கு ஏற்றதாயும் திருத்தமாய் அமைக்கப் படுகின்றது. இக்கால்வாய்களிற் சீமந்தினுல் நிலையான அணைகள் கட்டப்படுகின் றன. அணைகளின் கீழ்ப்பாகத்தில் நீர் செல்லக்கூடியதாய் துவாரம் விடப்பட்டி ருக்கும். துவாாத்தின் வழியாகச் செல்லும் நீரை வேண்டியவிடத்து அடைத்து விடலாம். நீரை அடைப்பதன்மூலம் மண்டியைத் தடைசெய்யலாம். துவாரத்தி னுரடாக நீர் சடுதியாகப் பிரவாகித்து ஓடும்பொழுது அணைக்கட்டின் கீழுள்ள பள்ளத்தாக்குப் பகுதி மேலும் தாழ்வாக வெட்டப்படுகின்றது. இதனுல் அய லில் உள்ள வயல்களின் நீர்மட்டம் மேலும் தாழ்ந்துவிடுகின்றது. அப்பொழுது அவ்வயல்கள் இயல்பாகக்கிடைக்கக்கூடிய நீரிலும்பார்க்க அதிக அளவுக்கு நீர்ப் பாய்ச்சலில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகின்றது.
நெல்வயல்கள் 9 அங்குல உயரமான வரம்புகளினுற் சிறு துண்டுகளாகப் பிரிக் கப்பட்டுள்ளன. வயல்களின் எல்லையைக் குறிப்பதற்காகவும் நீரைப் பேணிப் பயன்படுத்துவதற்காகவும் இவ்வரம்புகள் கட்டப்படுகின்றன. வயல்கள் தாழ் வான படி அமைப்பை உடையனபோன்று காட்சியளிக்கின்றன. எனினும் அடுத் தடுத்த வயல்களிடையேயுள்ள உயரவேறுபாடு மிகச் சொற்பமாகும். நெல் வள ரும் காலத்தின் பெரும்பகுதியில் இவ்வயல்களில் நீர் நிறைந்திருக்கும். நீரில் லாத பருவத்தில் நிலம் வறண்டு வெடித்துவிடும். அதிக வெப்பமுடைய காலத் தில் நிலம் மிகவும் குடாக இருக்கும். பிற பகுதிகளில் வழக்கமாக ஏற்படாத இந்த நிலைமை மேற்காவுகைப் புயல் உண்டாக ஓரளவுக்கு ஏதுவாக உள்ளது எனலாம்.
கேடா, பேர்ளிஸ், கெலந்தான், திரெங்கானு ஆகிய பகுதிகளிலும் மலாக்கா வின் பெரும்பாகத்திலும் செத்தெம்பர் முதல் சனவரி வரையுள்ள ஈரமான காலத்திலேயே நெல் வளருகின்றது. கேடாவிற் போன்று பருவகால நீர் அதிக

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13
மாக உள்ள பகுதிகளில் யூன் மாதத்திலும் நெல் நடப்படுகின்றது. நெற் கதிர் கள் ஒவ்வொன்முகக் கைகளினலேயே வெட்டி எடுக்கப்படுகின்றன. அறுவடை சனவரி முதல் மார்ச்சு வரையுள்ள காலத்தில் நடைபெறும். அதன் பின்பு நிலத்தில் ஒன்றும் பயிரிடப் イ峠 .. படுவதில்லை; நிலம் வெறுமையாகவே 8 1:! ”1 ܕ݁ܶܬ݂ܐ
காணப்படும். மழை ஒழுங்கான
முறையிற் பெய்யாத இடங்களில் நெற்பயிர் நடுதல் ஆற்று நீர்ப்பாய்ச் சலில் தங்கியுள்ளது. நாட்டின ஒரு பாகத்தில் மழை அதிகமாகப் பெய் யும் பொழுதே ஆறுகளிலும் அதிக நீர் காணப்படுகின்றது. ஆறுகள் ஊற் றெடுக்கும் பகுதியிற் பெருமழை பெய்யும் பொழுது அரசாங்க அறி வித்தல் கொடுக்கப்படுகிறது. இத னைத் துணையாகக் கொண்டு நெற் பயிரை நட முயற்சிகள் மேற்கொள் ளப்படும். வருடத்தில் ஒரு முறைக்கு மதிகமாக நெல் பயிரிடும் நிலங்கள் அரிதாக உள்ளன. போதிய நீர் வசதியின்மையும் நிலம் பொருத்த மாக இல்லாமையும் இதற்குக் கார ணம் எனக் கூறப்படுகிறது. நெல் விளையும் நிலப்பகுதியில் வெள்ளப் பெருக்குமட்டத்திற்கு மேலாகவுள்ள வரம்புகளிலேயே தெருக்கள் அமைக்
தான்ஜொங்கு
tarihi” *əraür:
rt கப்பட்டுள்ளன. : . #
பயிர் விளைவிக்கப்படும் காலமுறை iஇறப்பர் ஐ நெல் *L。
8 Exe: O O மாவடடதஅககு trait -- ou தாலம் Éos irar
அதிக வேறுபாடு காணப்படுகிறது. படம் 36. பேராக்கின் நிலப்பயன்பாடு விளைவிக்கப்படும் காலம் மழைநீர் அல்லது ஆற்றுநீர் போதிய அளவிற் கிடைப்பதில் தங்கியுள்ளது. மழைவீழ்ச்சி முதலியன சூரியனின் தொழிற்பாட்டோடு தொடர்புடையன. ஆனல் ஆண்டுக் காலமுறை மதியமுறைக்கணக்கை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. இதனேடு தொடர்புடைய விழாக்கள் முதலியன பருவகாலப் பயிர்ச்செய்கை வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையனவாய் இல்லை. அவ்வாறே இஸ்லா மிய மத சம்பந்தமான விழாக்களும் தென் கிழக்கு ஆசியாவினுடையதைச் காட்டிலும் மத்திய கிழக்கு நிகழ்ச்சிகளோடு அதிக தொடர்புடையனவாகச்

Page 72
14 மலாயா: பண்பாட்டியல்புகள்
காணப்படுகின்றன. மலாயாவிற் பருவகாலங்கள் தெளிவாக அமையாதபொழு தும் உணவுப் பயிர்கள் விளைவித்தலைப் பொறுத்தவரையில் பருவ ஒழுங்கு காணப்படுகின்றது. பருவ காலங்கள் தெளிவாக, அமையாத தன்மை கிழங்கு வகைகளைப் பயிரிடுவதற்கே பொருத்தமுடையது. எனினும் மலாயாவில் நெற் செய்கையும் சிறப்பாகவே காணப்படுகின்றது. நெல் வருவாய் (1963 இல் ஏக் கருக்கு 1,400 இருத்தல் சுத்தமாக்கப்பட்ட அரிசி பெறப்பட்டது) தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஏனைய பகுதிகளிலும் பார்க்க அதிகமாக உள்ளது.
மலாயாவின் நெற்செய்கை வட்டம்
கெலந்தான் Uasi 686ör நேகிரி கேடா திரெங்கானு ge. LJG56) மலாக்கா 1 செம்பிலான்
செய்தல் முதற் (1Բ5քb பகுதி
பகுதி பகுதி நாற்று மேடை ஒகத்து ஒகத்து யூலை இறு யூலை நடுப் எப்பிரில்
கள் அமைத் நடுப் நடுப் திப்பகுதி பகுதி தல் பகுதி பகுதி நாற்று நடுதல் ஒற்றேபர் ஒற்ருேபர் செத்தெம் ஒகத்து மே நடுப்
முதற் (passi Lji பகுதி பகுதி பகுதி Jegale)l சனவரி (Amfi** பெப்புருவரி சனவரி நவம்பர்
முதற் பகுதி கூடிய மழைவீழ் ஒற்ருேபர் திசம்பர் திசம்பர் யூலை ontida,
க்தி நெல்விளைய எடு 7-8 மாதம் 8-9 மாதம் 8-9 மாதம் 7-8 மாதம் 6-8 மாதம்
க்கும் காலம்
மலாயாவில் இன்று ஆறு இலட்சம் தொன்னிற்குமதிகமாக நெல் விளைவிக்கப் படுகின்றது. இங்கு வாழும் மக்களின் தேவையில் இது அரைப் பகுதியாகும். உற்பத்தி செய்யப்படும் நெல் பெரும்பாலும் மலே விவசாயிகளின் சொந்தத் தேவைக்காகவே உபயோகிக்கப்படுகின்றது. நெல் வியாபாரம் மிகவும் குறை வாகும். நெல்லைக் குற்றிச் சுத்தஞ்செய்தல், மாவசைத்தல் முதலிய தொழில்கள் பெரும்பாலும் அவ்வப் பகுதிகளிற் கைகளினற் செய்யப்படுகின்றன. தெல் சிறிது சிறிதாக எடுக்கப்பட்டே இத்தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே விடுகளில் நெல் ஒலையினல் இழைக்கப்பட்ட பெரிய கூடைகளிலிடப் பட்டு எலி அரிக்காத உறுதியான நாற்காலிகளிற் பேணி வைக்கப்படுகிறது. நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அண்மையில் மின்சத்தியினுல் இயங்கும் ஆலைகள் சில அமைக்கப்பட்டுள்ளன. இவை அநேகமாக நெல் அதிகமாக விளை யும் கேடா, பேர்ளிஸ், பேராக் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. எனினும் பேமா, சீயம், இந்தோசீன முதலிய முக்கியமான நெல் விளையும் பிரதேசங்களி லுள்ள பெரிய ஆலைகளை இங்குக் காணமுடியாது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள், 115
உழவுக்கு எருமைகள் உபயோகிக்கப்படுவதனல் நெல்விளையும் பகுதிகள் எங்கனும் எருமைகளைக் காணலாம். சீயநாட்டு எருதுகளும் ஓரளவு பயன் படுத்தப்படுகின்றன. மலாயாவிலுள்ள எருதுகள் எருமைகள் ஆகியவற்றின் மொத்தத் தொகையில் மூன்றிலிரண்டு பகுதிக்கு மேற்பட்டன நெற் பிரதேசங் களிற் காணப்படுகின்றன. இத்தகைய விலங்குகளுக்குப் போதிய புல்வகை இல்லாமையால் விலங்குகளின் தொகை குறைவாயுள்ளது; விலங்குகள் தரத் திலும் சிறந்தனவாய் இல்லை. இழுவைக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. அறுவடையின் பின்பு நெல்வயல்களிலும் சிறிய அயனப் புல்வகை காணப்படும் நிலங்களிலும் அவை மேயவிடப்படுகின்றன.
மலேக் குடியிருப்புக்கள் நெல் விளையும் நிலங்களிலுள்ள கம்பொங் எனப்படும் கிராமங்களில் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக அமைந் துள்ளன. அவற்றைச் சுற்றித் தென்னை, பழமரங்கள் முதலியன காணப்படுகின் றன. இம்மரங்கள் மறைப்பாக வளர்ந்திருப்பதோடு நிழலையும் கொடுக்கின்றன. ஐரோப்பாவிலுள்ளவற்றைப் போலல்லாது குடியிருப்புக்கள் இங்குக் குறித்த மையத்தையுடையனவாயில்லை. இஸ்லாமியப் பள்ளிகளுமே வீட்டுத்தொகுதி களுக்கு மையங்களாக அமையவில்லை. ஒரே வரிசையில் அமைந்துள்ள வீடுகள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. பரந்த முறை யில் அமைந்துள்ள இக்குடியிருப்புக்கள் பாதுகாப்பான முறையில் அமைந்துள் ளன எனக் கூறமுடியாது. நேரான வரிசைகளிற் காணப்படும் வீடுகள் பின் வருமிடங்களைச் சார்ந்தமைந்துள்ளன : (அ) நெல்விளையும் ஓரங்களைச் சார்ந்து காணப்படும் வீடுகள்-இவற்றை உள்ளடக்கிய கிராமம் (கம்பொங்) சமவுயரக் கோட்டு முறையில் அமைந்துள்ளது ; (ஆ) கால்வாய்களையும் அணைகளையும் சார்ந்து வரிசையாகக் காணப்படும் வீடுகள் ; (இ) தெருக்களைச் சார்ந்து வரிசையாகக் காணப்படும் விடுகள்; சில சமயங்களில், தெருக்கள் ஒன்றை யொன்று வெட்டுமிடங்களில் சிலுவைபோன்ற வடிவிலும் வீட்டு நிரைகள் காணப்படுகின்றன. சுகாதார வசதிகள் குறைவாக இருந்தபொழுதும் வீடுகள் தனிக்கனியாகப் பரந்தமைந்துள்ளமையால் அவ்வளவாகப் பாதிக்கப்படுவ தில்லை. குடிநீர் உள்நாட்டு அருவிகள் கால்வாய்கள் ஆகியவற்றிலிருந்து பெறப் படுகின்றது.
மலே விவசாயிகள் சில உணவுப் பயிர்களை மட்டுமே விளைவிக்கின்றனர். விளக் கெரிப்பதற்கும் சமையலுக்கும் எண்ணெயெடுப்பதற்காகத் தென்னை சிறுதுண்டு நிலங்களிற் பயிரிடப்படுகின்றது. அதனேடு சில கமுக மரங்களும் பழமரங்களும் பயிரிடப்படுகின்றன. காய்கறிகள் மலே விவசாயிகளின் உணவில் முக்கியமான இடத்தைப் பெறவில்லே. இதனுற் காய்கறிகள் அதிகமாகப் பயிரிடப்படுவதில்லை.
பணப் பொருளுற்பத்தி உணவுப் பொருளுற்பக்கி பெரும்பாலும் சொந்த நாட்டினரால் மேற்கொள் ளப்படும் தொழிலாக உள்ளது. ஆனற் பணத்திற்காகச் செய்யப்படும் பொரு ளுற்பத்தி மேல் நாட்டவர் மலாயாவிற்கு வந்தபின்பு வளர்ச்சிபெற்றதொன்

Page 73
16 மலாயா: பண்பாட்டியல்புகள்
முகும். அதற்கு முன்பு இது முக்கியமான தொழிலாக இல்லை. உணவுப் பொரு ளுற்பத்தி, பணப்பொருளுற்பத்தி ஆகிய இருவகையான தொழில்களும் தனித் தனியாக நடைபெற்றுவந்துள்ளன. அவற்றிடையே அதிக தொடர்பு இருக்க வில்லை. இதனுல் தொழில்நுட்பமுறை, பரம்பரை வழக்கு, மக்களின் வாழ்க்கை முறை என்பனவற்றில் அதிக தாக்கம் ஏற்படவில்லை.
பணத்திற்காக ஏற்பட்ட பொருளுற்பத்தி இருவகைத்து : (1) வியாபார நோக்கத்தோடு விருத்தி செய்யப்பட்ட பயிர்ச்செய்கை, (2) கணிப்பொருள் எடுத்தல். பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாகவிருப் பது இறப்பர்ச் செய்கையாகும். கணிப்பொருள் எடுக்குந் தொழிலைப் பொறுத்த வசையில் தகரம் அகழ்ந்தெடுத்தல் முதன்மை பெற்றது. பிற தொழில்களும் சிலவுள.
(அ) பணப் பயிர்ச்செய்கை
இறப்பர்-மலாயாவிற் கடந்த ஐம்பது வருடகாலத்திற்கு மேலாக இறப்பர் மிகவும் முக்கியமான பயிராக இருந்துவந்துள்ளது. 65 இலட்சம் ஏக்கர் பயிர் விளையும் நிலத்தில் 35 இலட்சம் ஏக்கரில் இறப்பர்ச் செய்கை நடைபெறுகின் நது. வருவாயிலும் இப்பயிர் முதன்மைபெற்றது. நேரடியாக இத்தொழிலில் அதிக தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர். 1957 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி 14 இலட்சம் பயிர்ச்செய்கையிலீடுபட்ட தொழிலாளரில் 5 இலட்சம் தொழிலாளர் இறப்பர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டாம் உலகயுத்தத்தின் பின்பு வருவாய், தொழிலாளர் தொகை முதலியவற்றில் அதிக மாற்றம் ஏற்பட்டுள் ளது. இறப்பர் விளையும் நிலம் ஏறத்தாழ மாற்றமில்லாது காணப்படுகின்றது. யுத்த காலத்தின் பின்பு காணப்பட்ட நிலைமைகளினுற் சிலவற்றில் மாற்றம் ஏற்பட்டபொழுதும் இறப்பர்ச் செய்கையின் முதன்மை குறைந்து விடவில்லை.
பிரித்தானியரே முதன்முதலில் "ஹேவியா பிறேசிலியேன்சிஸ்" என்னும் இறப்பர் இனத்தை மலாயாவிற் புகுத்தினர். 1879 இல் முதன் முதலில் இறப்பர் பரிசோதனைக்காகப் பயிரிடப்பட்டது. சில வருடங்கள் இப்பரிசோதனை நடை பெற்றது. இக்காலத்திற்கு முன்பு மலாயாவிற் காட்டு இறப்பரேனும் சேகரிக்கப் பட்டதில்லை. பால் எடுத்தற்கு உவந்த மரங்கள் எவையேனும் இதற்கு முன்பு முக்கியமாகக் கொள்ளப்படவில்லை.
ஹேவியா இறப்பர் மரம் பொதுவாக வளமற்ற சாளை மண்ணிற்கும் மலாயா வின் காலநிலைத் தன்மைக்கும் ஏற்றதாகக் காணப்படுகின்றது. காலநிலையும் மண்ணும் ஏறத்தாழ அமேசன் பள்ளத்தாக்கிலுள்ளவற்றைப் போன்றுள்ளன. மலாயாவில் இறப்பர்ச் செய்கை பெருகியதன் காரணமாகப் பல நன்மைகள் உண்டாயின. மலாயாவிற் காடுகள் வெட்டி நீக்கப்பட்டதும் இறப்பரைப் பயிர் செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. பிரித்தானியாவில் வளர்ச்சிபெற்றுவந்த மின்சாரத் தொழிலுக்குப் பெருந்தொகையான அளவில் இறப்பர் தேவைப்பட்டது. இத் தேவையைப் பூர்த்தி செய்ய மலாயாவின் இறப்பர்ச் செய்கை உதவியது. அல்லா மலும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் விருத்திபெற்றி

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 7
ருந்த கார்த் தொழிலுக்கும் இறப்பர் தேவைப்பட்டது. இறப்பர் முற்றிப் பயன் தரக் குறைந்தது எழு வருடங்கள் செல்லும். காடுகளை அழிக்கவும், அழித்த
நிலங்களில் இறப்பரைப் பயிரிடவும், வளரும் காலத்தில் மரங்களைப் பேண வும் அதிக முதல் தேவைப்படுகின் றது. இக் காரணத்தினுல் இறப்பர்ச் செய்கை பெருந் தொகையான முதலை அடிப்படையாகக் கொண்ட தொழிலாக அமைந்துள்ளது. இத்த கைய வசதியுடைய பெரிய கம்பனி களே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. நீண்டகாலத் திட்ட அடிப்படையில் இறப்பர்ச் செய்கை நடைபெறுகின் றது. இறப்பர் மரம் வெளிநாட் லிருந்து கொண்டுவரப்பட்டது போன்று இறப்பர்ச் செய்கையிலிடு பட்டுள்ள தொழிலாளரும் பிறநாட்ட வராவர். எனவே, இறப்பர்ச் செய்கை மக்களின் மிகக்கூடிய முயற்சியினல் விருத்திபெற்ற ஒரு தொழிலாக இருப்பதோடு, தாவரப் புவியியலி லும் முக்கியமான இடத்தைப் பெற் பறுள்ளது. ஹேவியா இறப்பர் மரம் அமேசன் காட்டிலும் LJTieža. மலாயா, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளோடு மிகவும் நெருங் கிய தொடர்பு ையதாகக் காணப்
ཞི་ 冒
s *8 مليو 添
68youDé»
A6* Avašos இ8இறப்புச் &சண்ணக்கற் குன்றுகள் 9
தெருக்கின்
படம் 37, கிண்டாப் பள்ளத்தாக்கின் நிலப்
uutatist
டாடுகின்றது. அமேசன் காட்டிலேயே முதன் முதலில் இம்மரம் காணப்பட்டது. மலாயாவில் முதலில் பல இன மரங்களேக் கொண்ட காடுகள் காணப்பட்டன. இவை பின்பு நீக்கப்பட்டு இறப்பர் மாங்கள் நாட்டப்பெற்றன. இம்மரங்களின் கீழ், தரையிற் செடிகள் முதலியன காணப்படும்; அவை நீர் அரிப்பைக் கட்டுப்
படுத்த உதவுகின்றன.
மலாயாவில் பிற பயிர்களும் வியாபார நோக்கத்திற்காகப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. இப்பயிர்களுள் ' கம்பியர் ' + கோப்பி, தேயிலை, கரும்பு என் பன குறிப்பிடத்தக்கன. மண் வளமற்றிருந்ததனுலும் தொழிலாளர் வசதி குறைவாயிருந்ததனுலும் பிற பகுதிகளிற் போட்டியாக விளைவிக்கப்பட்டமை யாலும் இப்பயிர்கள் இங்கு வெற்றியளிக்கவில்லை. வர்த்தகத்தைப் பொறுத்த வரையில் தேயிலை மட்டும் ஒரளவு முக்கியமான பயிராக இன்றுமுள்ளது.
*Gambier-இது தோல் முதலியன பதனிடுவதற்கு உபயோகிக்கப்படும் ஒரு செடி.

Page 74
8 மலாயா பண்பாட்டியல்புகள்
முதன் முதலில் இறப்பர்த் தோட்டங்களிலுள்ள களை முதலியன முற்முகவே பிடுங்கப்பட்டன. இடைவெப்ப நிலங்களிலுள்ள பழத்தோட்டங்கள் போன்று செடி கொடி முதலியன முற்முக நீக்கப்பட்டன. இதனுல் சடுதியாக மழைபெய் யும் பொழுது மேல் மண் எளிதாகப் பாதிக்கப்பட்டது. பின்பு நீாரிப்பைக் கட்டுப் படுத்தவும் மண்வளத்தைப் பேணவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மண்ணைப் பாதுகாப்பதற்காக இறப்பர்த் தோட்டங்களிற் செடிகொடி கள் தரையில் வளரவிடப்பட்டன. யப்பானியரின் ஆட்சியில் மலாயா சிறிது காலம் சிக்கியதால் தோட்டங்கள் கவனிப்பாாற்று விடப்பட்டன. அப்பொழுது செடிகொடிகள் பற்றிப்படர்ந்தன. மலாயாவிலுள்ள பல பெருந்தோட்டங்கcரில் அடர்த்தியான செடிகொடிகள் இன்று காணப்படுகின்றன. இவற்றிடையே தொழிலாளர் ஒவ்வொரு மரத்தையும் சென்றடையக்கூடியதாக ஒற்றையடிப் பாதைகள் காணப்படுகின்றன.
இறப்பர்ச் செய்கை அதிக முதலீட்டைக் கொண்ட பெருந்தோட்டங்களாக அமைந்தது. பெருந்தோட்டங்கள் ஒவ்வொன்றும் 2,000 ஏக்கர் நிலத்தை அடக்கியிருந்தன. ஆணுல் ஆசியாவைச் சார்ந்த சிறு தோட்ட முதலாளிகள் 100 ஏக்கருக்குக் குறைந்த தோட்டங்களில் இறப்பரைப் பயிரிட்டனர். சிறு தோட்டங்கள் இருவகையின : (1) சற்றே பெரிய தோட்டங்கள் பெருந்தோட் டங்கள்போன்று அமைக்கப்பட்டன; (2) சிறிய தோட்டங்கள் நெல்லைப் பயிரிடும் விவசாயிகள், மீன்பிடிப்போர் ஆகியோர் கையிலிருந்தன. பொருள் களைப் பெறுவதற்காக மேற்கொண்ட தொழில்களோடு இறப்பர்ச் செய்கையிலும் ஈடுபட்டிருந்தனர். இறப்பர் பணப்பயிராக இருத்தலினல் இறப்பரின் விலையைப் பொறுத்து முக்கியமாகவும் உள்ளது. மலாயாவிலுள்ள மொத்த இறப்பர்த் தோட்ட நிலத்தில் 45 சத வீதம் சிறு தோட்ட நிலங்களைக்கொண்டுள்ளது. 1962 இல் சிறு தோட்டங்களிலிருந்து 42 சத வீதமான இறப்பர் உற்பத்தி செய்யப்பட்டது.
மலாயாவின் பெளதிக நிலைமைகளுக்கு ஏற்ற பயிராக இறப்பர் உள்ளது. வருடம் முழுவதும் நல்ல பயனைக்கொடுப்பதோடு, பல வருடங்களுக்குப் பயன் தரவல்லதாயும் காணப்படுகின்றது. இறப்பர் பால் வெட்டவும், பாலைச் சேகரிக்க வும் சீரான தொழிலாளர் வசதியும் அவசியமாகும். இந்த நோக்கிற் பார்க்கும் பொழுது வருட முழுவதுமுள்ள தொழில் முறைகள் பாற்பண்ணைத்தொழிலிற் காணப்படுவனவற்றை ஒத்துள்ளன. சராசரியாக ஓர் ஏக்கருக்கு ஒர் ஆள்வீதம் தேவைப்படுகின்றது. நேர அளவிலும் பார்க்க நில அளவில் தொழிலாளர் பணி புரிய ஒப்பும்பொழுது இந்த விகிதம் சற்றுக் குறைவாக உள்ளது. எனினும் தோட்டத்துக்குத் தோட்டம் வேறுபாடுகளும் உண்டு. தொழிலாளருக்கு வழங் கப்படும் சம்பளம் தாரப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள் களை வாங்குவதற்குச் செலவிடப்படுகின்றது. இந்த நிலையினுல் இறப்பர்ச் செலவில் அதிக மாற்றமில்லாது காணப்படுகின்றது. சிறு தோட்டங்களையுடை யோர் உணவுப் பொருள்களையும் தாமே உற்பத்தி செய்வதால் இறப்பரின் விலையை அதிக அளவுக்கு நம்பியிருக்கவேண்டிய அவசியமில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 19
இறப்பர்ச் செய்கைக்குத் தேவையான மொத்தத் தொழிலாளர் தொகை அதிகமாகும். மலாயாவிற் போதிய தொழிலாளர் வசதி இருக்கவில்லை. இதஞல் இறப்பர்த் தொழிலுக்குத் தேவையான தொழிலாளரைப் பிறநாடுகளிலிருந்து பெறவேண்டியிருந்தது. இந்திய, சீனத் தொழிலாளர் பெருந்தொகையாகக் கொண்டுவரப்பட்டனர். 1962 ஆம் ஆண்டில் மலாயாவில் 20 இலட்சம் ஏக்கர் இறப்பர் நிலம் காணப்பட்டது. இந்நிலத்தில் 286,000 தொழிலாளர் வேலைசெய் தனர். இத் தொகையில் 46 சதவீதமானேர் இந்தியராகவும் 31 சதவீதமானேர் சீனராகவுமிருந்தனர். இத் தொழிலாளர் தோட்டங்களிற் பல இடங்களிற் சிறு குடிசைகளில் வாழுகின்றனர். தோட்டத்தில் தொழிலாலையைச் சார்ந்த இடமே மையமாக விளங்குகின்றது. ஆலையில் இறப்பர்ப் பால் இறுகவிடப்பட்டுச் சிறு தகடுகளாக உலாவிடப்படுகின்றது. இத் தகடுகள் பின்பு தோட்டங்களிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றன. டன்லப்ஸ் போன்ற பெரிய கம்பனி களின் வசமுள்ள புது முறையிலமைந்த பெருந்தோட்டங்களிலிருந்து பிறநாடு களிற் பதன்செய்வதற்காக இறப்பர்ப் பால் ஏற்றுமதித் துறைமுகங்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படுகின்றது. தொழிலாலை தவிர்ந்த ஏனைய இடங் களில் தொழிலாளர் குடியிருப்புக்கள் நிலையற்ற சாதாரண தன்மையை யுடை யனவாக உள்ளன. மாற்றம் எதுவுமில்லாத வாழ்க்கை அவர்களுக்குப் பழகி விட்டதொன்முகும். முதலில் ஒரளவுக்குப் பணத்தைச் சேகரித்துக் கொண்டு பிற தொழில்களிற் சேர்வதற்காகவே அவர்கள் இவ்வாறு தொழில் புரிகின்றனர். பிறநாட்டிலிருந்து தொழிலாளர் வந்ததும் முதலில் தோட்டங்களுக்குச் செல் கின்றனர். பணம் ஓரளவு கிடைத்ததும் தோட்டத்தொழிலை விட்டுப் பின்பு ஒரளவுக்கு எளிதான தொழில்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபட வாய்ப் பில்லாதவிடத்து அவர்களின் பிள்ளைகளையாவது பிற தொழில் துறைகளிற் புகுத்திவிடுகின்றனர்.
தொழிற்சாலை உண்மையில் தொழிலை மேற்பார்வை செய்யும் ஒரு மத்திய நிலையமாகும். தொழிலாளரின் குடியிருப்புக்களுக்கும் தோட்டங்களுக்குமுள்ள நெருங்கிய தொடர்பை இங்குக் காணமுடியாது. தொழிலை மேற்பார்வை செய்வோர் நிரந்தரமற்ற முறையில் கடமையாற்றிச் செல்பவர்களாக இருத்தலே இதற்குக் காரணமாகும். எனவே இறப்பர்த் தோட்டத்தின் பண்பாட்டு நிலைகள் தொழில்நுட்பவறிஞரை உதவும் ஐரோப்பா, தொழிலாளரை உதவும் தென் இந் தியா சீனு ஆகிய நாடுகளிலுள்ள நிலைகளிலும் பார்க்க வேறுபட்டன. இறப்பர்த் தோட்டம் நீடியகாலத்திற்குரியவொன்முகக் காணப்படுகின்றபொழுதும் பண் பாட்டு நிலைகளைப் பொறுத்தவரையில் நிலையற்ற ஒரு தன்மையே காணப்படுகின் றது. நெல் முதலிய பயிர்கள் விளையும் நிலம் அறுவடையின் பின்பு மீண்டும் பயிர்களை விளைவிக்கும் காலம்வரை வெறிதாகக் கிடக்கின்றது. ஆனல் இறப்பர்த் தோட்டவேலை வருடந்தோறும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. இறப்பர்த் தோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் புதிதாகக் காடுகளை அழித்துப் பயிர் செய்வதற்கு ஏற்படும் செலவு தேவைப்படலாம். இதனுலேயே மலாயாவில் யப்பானியர் ஆதிக்கம் வலுப்பெற்ற யுத்த காலத்தில் இறப்பர்த் தோட்டங்கள்.

Page 75
120 மலாயா; பண்பாட்டியல்புகள்
அதிகமாக அழிந்துவிடவில்லை. மாற்றமடையவுமில்லை. பாற்பண்ணைத் தொழில் விருத்தியடைந்துள்ள பிறநாடுகளிற் பால் மாடுகளை அடிப்படையாகக் கொண்டே தொழில் அமைந்துள்ளது. இத்தொழிலோடு சம்பந்தப்பட்டாரது வாழ்க்கை முறையும் தனிப்பட்ட ஓர் இயல்பை உடையதாயுளது. இறப்பர்த் தொழிலும் அதனேடு சம்பந்தமுடைய இயல்புகள் நிரந்தரமாக அமையத் துணைசெய்யலாம். மலாயாவில் இந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. சிறு துண்டு களாக உள்ள இறப்பர்த் தோட்டங்கள் பெருந்தோட்டங்களிலிருந்து அளவில் மட்டுமே வேறுபட்டனவாக உள்ளன. தொழில்முறைகளும் ஏனைய இயல்புகளும் ஏறத்தாழ ஒன்முகக் காணப்படுகின்றன. ஆனல் நெல், காய்கறிகள் பயிரிடும் நிலத்திற்கருகில் இரண்டு மூன்று ஏக்கர் நிலக்கிற் குடும்பத்தினராற் பயிரிடப் பட்டுள்ள இறப்பர்த்தோட்டம் குழலோடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. இறப்பர் மரங்களிற் குடும்பத்தினரே பால் எடுப்பதுண்டு. பிறர் கூட் டாகச் சேர்ந்தும் பால் எடுக்கின்றனர். இவர்கள் எடுக்கும் இறப்பர்ப் பால் பின்பு பெரிய ஆலைகளுக்கு விற்கப்படுவதுண்டு. மிகச் சிறிய அளவைக் கொண்ட இத்தகைய தோட்டங்கள் மலாயாவில் பெரும்பகுதியை அடக்கியுள்ளன.
பயிரிடப்பட்ட இறப்பர் மரங்கள் சீரான முறையிற் காடுகளிலிருந்து சற்றே வேறுபட்டனவாகப் பரந்துள்ளன. மலாயாவின் தென் பகுதியில் மரங்களின் இலைவளர்ச்சியிற் பருவ மாற்றங்கள் அதிகமாக இல்லை. ஆனற் குறித்த வறண்ட பருவம் நிலவும் வட பகுதியில் இலைகள் பழுத்துப் பெப்புருவரி மாதத்தை யடுத்து நான்கு கிழமைவரையிற் படிப்படியாக உதிர்கின்றன. பிற்பகுதிகளில் இலைகள் இடையிடையே உதிர்வதுண்டு. ஆனல் தோட்டங்கள் என்றும் பச்சை யாகக் காட்சியளிக்கும். மரங்கள் நிரையாக நடப்பெற்றுள்ளமையாற் கால் மைல் தூரம்வரை நேராகப் பார்க்கமுடிகின்றது. செம்மையாகப் பயிரிடப் பட்டுள்ள பகுதிகளில் இறப்பர் மரத்தின் வேர் தரையில் அதிக தூரத்திற்குச் செல்வதில்லை. மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளில் இறப்பர் மரத்தில் வேர்கள் தரையின்மீது வெளித்தோன்றிக் காணப்படும். மண்டிகள் படிவதற்காக சம வுயரக்கோட்டு முறையில் அகழிகள் வெட்டப்படுகின்றன. மண்ணரிப்பைத் தடுப்பதற்காக இங்ங்ணம் செய்யப்படுகின்றது. இறப்பர்ச் செய்கைக்குகந்த அலே வடிவப் பகுதிகள், சிறு குன்றுப் பகுதிகள் ஆகியவற்றில் இத்தகைய பாது காப்பு முறைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மரத்தின் வேர்கள் நிலத்தில் ஆழமாக இறுகிக் காணப்பட்டால் மாம் செழிப்பாக வளரமாட்டாது. மரத்தின் பட்டையைச் செம்மையாக வெட்டாத காரணத்தினுல் சில மரங்கள் உருச் சிதைந்து காணப்படும். நீர் தேங்கி நிற்கக் கூடிய தாழ்வான நிலங்களில் இறப் பர் பயிரிடப்படும்பொழுது நீர்மட்டத்தைத் தாழ்த்துவதற்காக அகழிகள் வெட்டப்படுகின்றன. தோட்டங்களுக்கூடாகத் தெருக்கள் அமைக்கப்பட்டுள் ளன. இறப்பர்ப் பால் உறைவதற்கு உபயோகிக்கப்படும் அமிலம், பதன்செய்யப் பட்ட இறப்பர், உணவுப் பொருள் முதலியவற்றைக் கொண்டுசெல்வதற்கு இத் தெருக்கள் பயன்படுகின்றன. இப்பகுதிகளிற் கிடைக்கக்கூடிய செந்நிறச் சாளைக் கற்களால் தெருக்கள் அமைக்கப்படுகின்றன. தோட்டங்கள் தனித்தனி

தென்கிழக்கு ஆசிய நாடுகள்
uð6V(résr
நெல இறபப7 昌Ggar"s"
| | {
鑑
药
‘ජන්
መጥ 6፴ùó
ו-luNן
Egogel-r 07வான்கு
il IH Ÿጋ• *

Page 76
122 Losorum: uGöTuTÜ9u6öL|5sir
யாக இருப்பதனல் தீசல் இயந்திரங்களிலிருந்து அல்லது மாக்குற்றிகளை எரி பொருளாகக்கொண்ட நீராவி இயந்திரங்களிலிருந்து வலு உற்பத்தி செய்யப் படுகின்றது.
இறப்பரை விற்பதற்கும் தொழிலாளருக்கு வேண்டிய உணவுப் பொருளைக் கொண்டுவருவதற்கும் பிரதான தெருக்கள் புகையிரதப் பாதைகள் முதலியன முக்கியமாக உள்ளன, எனவே இறப்பர்ப் பாம்பல் தெருப்போக்குவரத்து, புகையிரதப் போக்குவரத்து முறைகளோடும் ஒழுங்கான வடிகால்களையுடைய தாழ்நிலங்கள் அடிக்குன்றுகள் ஆகியவற்றேடும் தொடர்புடையதாக உள்ளது. வேறு தொழில்களுக்காக வந்து குடியேறியவர்களும் இறப்பர்த் தொழிலோடு தொடர்புடையவர்களாக உள்ளனர். மலாயாவின் மேற்குப் பகுதியில் இறப்பர் அடர்த்தியாகப் பரந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேற்குப் பகுதி யிலுள்ள காட்டு வலயமும் போக்குவரத்திற்கு அதிக தடையாக இல்லை. ஆகவே இறப்பர் ஏற்றுமதிக்கு ஏற்றமுறையில் துறைமுக வசதிகள் அமைந்துள்ளன. துறைமுகங்கள் மூலமாக இறப்பர் ஏற்றுமதி செய்யப்படுவதே இறப்பர்த் தொழிலில் இறுதியாக இடம்பெறுவதாகும். உள்நாட்டில் இறப்பர்த் தேவை மிகவும் குறைவாகும்.
தென்னை-நெய்த்தால மாப் பெருந்தோட்டங்கள்-சொந்தத் தேவைக்காக இவை சிறு தோட்டங்களிற் பயிரிடப்படுகின்றன. தென்னை கடற்கரையையடுக் துப் பெருந்தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. இத் தோட்டங்களில் நீர் வடிந்து செல்வதற்காகக் கிடங்குகள் வெட்டப்பட்டுள்ளன. தென்னையைப் பொறுத்தவரையிற் செம்மையான வடிகாலமைப்பு இருத்தல் அவசியமாகும். கடலலைகள் உட்செல்லாதவாறு தடுக்கப்பட்டுள்ளன. தென்னைமரங்களின் கீழ், தரையில் விக்டோரியாப் புல்வகை மட்டும் காணப்படும். இதனுல் தென்னந் தோட்டங்கள் பெரும்பாலும் வெளியாகவே காணப்படும். தோட்டமண் அதிக மாகப் பண்படுத்தப்படுவதில்லை. இறப்பர்த் தோட்டங்களிலும் பார்க்க இத் தோட்டங்களில் தொழிலாளர் தேவை குறைவாகும். தென்னை மரங்களிலிருந்து வருடம் முழுவதுமே தேங்காய் பெறப்படுவதனுல் ஒரே அளவான தொழிலாளர் தேவையே உண்டு. 1957 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி தென்னைச் செய்கையில் ஈடுபட்டுள்ளோரின் தொகை 10,000 ஆகும். சந்தைத் தோட்டச் செய்கையிலீடு பட்டோர் தொகையிலும் இத்தொகை குறைவாகும். தொழிலாளர் பெரும் பாலும் மலே இனத்தவராவர். இவர்கள் பெருந்தோட்டப் பகுதியிலேயே பரம் பசை முறைக்கு ஏற்ப வீடுகளையும் கிராமங்களையும் அமைத்துக் கொள்ளுகின்ற னர். இதனுல் இப்பகுதியில் மலேப் பண்பாட்டு ஒருமைப்பாடு காணப்படுகின் 2து. தேங்காயைக் கொப்பராவாக மாற்றுவதற்குப் பல முறைகள் பயன்படுத் தப்படுகின்றன. வெயிலில் உலரவைத்தல், நெருப்பின் உதவியினுல் உலரவைத் தல், உலைகளின் உதவியினுல் உலாவைத்தல் ஆகிய மூன்று முறைகளும் உண்டு. தென்னந் தோட்டங்களின் பருமனைப்பொறுத்து இந்த முறைகள் வேறுபடுகின் றன. இத்தொழிலுக்குக் குறைந்த அளவு தொழிலாளரே தேவைப்படுகின்றனர். இவர் பெரும்பாலும் தொழிற்றிறனற்ற தொழிலாளராவர். புகை உலைகள் ஏனைய

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 123
முறைகளிலும் பார்க்க அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலைகளில் எரிப் பதற்குத் தென்னம்பொச்சுப் பயன்படுகின்றது. தேங்காய்களைப் பறித்தவுடன் உலர்த்துவது அவசியம்; ஆதலால் இவை தோட்டங்களிலே உலரவைக்கப்படு கின்றன. பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பெரும் பாலும் கொப்பராவாக மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கொப் பாாவிலிருந்து எண்ணெய் எடுத்தல் பெரும்பாலும் துறைமுகப் பகுதிகளில் நடைபெறுகின்றது. சிங்கப்பூர், பினங்குத் துறைமுகங்களில் இத்தொழில் இன்று நடைபெறுகின்றது. பிறநாட்டுத் துறைமுகங்களிலும் இத்தொழில் ஓரள வுக்கு இடம்பெற்றுள்ளது.
N་ இறப்பா பு:
கோடா பாறு நெல
தென்னை ஆ ... ف
A> நெயத தாலம்
so
蓟 656)
படம் 39. வட கிழக்கு மலாயா : நிலப்பயன்பாடு
வியாபாரத்தைப் பொறுத்தவரையில் தென்னைப் பொருளுற்பத்தி சீராக இல்லை. தென்னைப் பொருளின் தேவை, விலை ஆகியன அடிக்கடி மாறுகின்றன. கொண்டுசெல்வதனல் ஏற்படும் செலவும் அதிகமாகும். இதல்ை தாங்குறைந்த பாரமான தென்னைப் பொருள்கள் மூலம் அதிக இலாபத்தைப் பெறுதல் இய லாது. ஆனல் வேறு தொழில்களிலீடுபட்டுள்ளோர் தமது சிறு தோட்டப் பொருள்களைப் போட்டி விலையிலும் விற்கின்றனர். இவர்கள் பிறதொழில்கள் மூலம் தேவையான உணவுப் பொருள்களைப் பெறக்கூடிய வாய்ப்பு உடையவர். இதனல் நேரமுள்ள வேளைகளில் உற்பத்தி செய்த தென்னைப் பொருள்களைச் சிறு சிறு தொகையாக விற்கின்றனர். மொத்தமாகப் பார்க்கும்பொழுது இத் தொகை அதிகமாகும். கூலி கொடுத்து உற்பத்தி செய்யும் பெருந்தோட்டங்க ளின் விற்பனை விலையிலும் பார்க்கக் குறைந்த விலைக்கே மேற்குறித்த சிறு தொகையான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மலாயாவிலுள்ள 6.7

Page 77
24 மலாயா; பண்பாட்டியல்புகள்
இலட்சம் ஏக்கர் வரையுள்ள தென்னந் தோட்டங்கள் நிலப்பயன்பாட்டுப் படத் திற் காட்டமுடியாத முறையில் மிகச் சிறிய அளவிற் காணப்படுகின்றன. பேராக் கரைப்பகுதியில் (படம் 36) மட்டுமே பெரிய தோட்டங்கள் உண்டு. கொப்பாா, தென்னைப் பொருள்கள் ஆகியவற்றின் வியாபாரத்தில் மலாயா கொண்டுள்ள முதன்மையை திட்டமாக ஆராய்வது கடினமாகும். உள்நாட்டில் தென்னைப் பொருள்கள் அதிகமாக உபயோகிக்கப்படுவதும், ஏற்றுமதி இறக்குமதி வியா பாரம் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதும் திட்டமாகக் கூறுவதற்குத் தடையாக உள்ளன. 1962 ஆம் ஆண்டில் மலாயாவில் 165,000 தொன் கொப்பராவும், 89,000 தொன் தேங்காயெண்ணெயும் உற்பத்திசெய்யப் பட்டன. மொத்தத் தொகையில் 45 சத வீதமான பகுதியைச் சிறுதோட்டங் கள் உற்பத்தி செய்தன.
நெய்த்தால மரம் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு மலாயா வில் வளர்க்கப்படும் ஒரு மரமாகும். இம்மரம் ஆற்றையடுத்த பகுதியிலும் கரை யோரச் சமநிலத்திலும் பெருந்தோட்ட முறையில் வளர்க்கப்படுகின்றது. இம் மரம் தரைக்கு அணித்தாக ஒலைகளைப் பாப்பி வளர்வதாகும். மரத்தின் காய்ந்த ஒலைகள் உதிர்ந்துவிடாது அதிக நாட்களுக்குக் காணப்படும். பொதுவாக இம் மரம் தென்னையிலும் பார்க்கத் திண்மையும் அடர்த்தியுமுடையதாய்த் தோன் அறும். ஓர் ஏக்கர் நிலத்திலுள்ள தென்னைமரங்கள் அளவே நெய்த்தால மரங்களும் காணப்படுகின்றன. ஆனல் நெய்த்தால மரங்கள் அடர்த்தியாயிருப்பதனல் தோட்டங்கள் செறிவாகவுள்ளன. தரையிற் செடிகொடிகள் இல்லாதபொழுதும் அாரப்பகுதிகள் கண்ணுக்கு எளிதிற் புலப்படுவதில்லை. தென்னந் தோட்டங் களிற் போன்று இத்தோட்டங்களிலும் நெய்த்தால மரங்கள் தவிர வேறு பயிர்கள் விளைவிக்கப்படுவதில்லை. இம்மரங்களில் தொடர்ச்சியாகப் பழங்கள் உண்டாவதனுல் நாடோறும் தோட்டங்களில் வேலை உண்டு. இத்தோட்டங்கள் அளவால் மிகவும் பெரியன; இவை வெளிநாட்டவரின், குறிப்பாகப் பிரித்தா னியரின், முதலீட்டால் ஏற்படுத்தப்பட்டவை. இத்தோட்டங்களில் வேலை செய்பவரும் தென் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாள சாவர். தென்னந்தோட்டங்களில் ஏக்கர் ஒன்றில் தொழில் புரியும் தொழிலாள ரின் எண்ணிக்கையே இத்தோட்டங்களிலும் உண்டு. தென்னந்தோட்டங்களைப் போன்று நெய்த்தாலச் சிறு தோட்டங்கள் இல்லை. இதனுல் தென்னந் தோட்டங் களைப் பொறுத்தவரையிற் காணப்படும் போட்டி இங்கு இல்லை. பெருந் தோட்டங்களிற் சிறந்த போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றன. தெருக் கள், புகையிரதப் பாதைகள், கால்வாய்கள் முதலியன போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. நெய்த்தால விதைகள் சிறியனவாயிருந்தபொழுதும் பெருந் தொகையாகப் பெறப்படுகின்றன. இவை தோட்டங்களிலுள்ள ஆலைகளில் உட னடியாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆலைகள் பெருஞ் செலவில் நிருமாணிக்கப் பட்டவையாகும். ஆலைகளில் நடைபெறும் முக்கியமான தொழில்முறை விதை களிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுப்பதாகும். இரசாயன மாற்றம் ஏற்படா திருப்பதற்காக வேறு சில துணைத்தொழில் முறைகளும் மேற்கொள்ளப்படுகின்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 25
றன. தோட்டங்களிலிருந்து எண்ணெய் திரவவடிவில் எடுத்துச்செல்லப்படுகின் றது; ஒரு பகுதி கிங்கப்பூருக்குக் கடல் வழியாகவும் கொண்டுசெல்லப்படுகின் றது. எண்ணெயைச் சேமித்து வைப்பதற்குப் பெரிய தாங்கிகள் தேவைப்படு கின்றன. தேங்காய் எண்ணெயைப் போன்று இதுவும் பலவித கைத்தொழிற் றேவைகட்குப் பயன்படுகின்றது.
தாவர நெய் மரத்தோட்டங்கள் மலாயாவில் யோகூர் (மலாயாவிலுள்ள தோட்டங்களில் அரைவாசித் தொகையின), பேராக், செலங்கர் ஆகிய மாகாணங்களில் உண்டு. தோட்டங்கள் அடக்கியுள்ள ஏக்கர் நிலத்தை அடிப் படையாகக் கொண்டு இம்மாகாணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளன (படம் 36, 38, 43). தோட்டங்கள் 1962 ஆம் ஆண்டில் 121,000 ஏக்கர் நிலத்தை அடக்கியிருந்தன; அவ்வாண்டில் மொத்தம் 94,000 தொன் தாவ நெய்யும் உற் பத்தி செய்யப்பட்டது (1938 இல் 51,000 தொன் உற்பத்தி செய்யப்பட்டது).
ஏனைய பணப்பயிர்கள்-இப்பயிர்களுள் அன்னசியும் ஒன்ருகும். அன்னசி பதினெட்டு மாத காலத்திற் பயன்தருவது. திசெம்பர், யூன் மாதங்களில் அன்னு சிப் பழம் பெறப்படுகிறது. அன்னசி முன்பு பெருந்தொகையாகப் பயிரிடப் பட்டது. சிங்கப்பூர், யோகூர் முதலிய பகுதிகளில் தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலைச் சொந்தக்காரசே அன்னசியைப் பெருந்தொகையாகப் பயிரிட் டனர். அப்பகுதிகளில் இறப்பர் மரங்கள் நாட்டப்பெற்ற காலையில் அன்னுசி துணைப்பயிராகப் பயிரிடப்பட்டது. அன்னசிச் செய்கை கைத்தொழிற்சார் புடைய ஒரு தொழிலாகும். ஆலைகளைச் சொந்தமாகக் கொண்ட சீனமே இத் துறையில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளரும் சீனராவர். அன்னசிச் செய்கை குறித்த பருவங்களில் நடைபெறுந் தொழிலாகும். இதனல், மலாயாவின் நிலப் பயன்பாட்டில் அதிக மாற்றம் ஏற்படுவதில்லை. தகரத்திலடைத்த அன்னசிப் பழம் பிரித்தானியாவுக்கும் கனடாவுக்கும் பெருந்தொகையாக ஏற்றுமதி செய் யப்படுகின்றது.
யுத்த காலத்தில் அன்னசிச் செய்கை முற்முகக் கைவிடப்பட்டது. சிங்கப்பூர் அன்னசி இனம் முன்பு குன்றுச் சாய்வுகளிலேயே பெரும்பாலும் பயிரிடப் பட்டது. ஆனல் மீட்டும் அன்னசிச் செய்கை தொடங்கப்பட்டபோது புதிய இடங்களில் இது இடம்பெற்றது. தென் மேற்கு யோகூரிலுள்ள முற்முநிலக்கரிப் படைகளைக் கொண்ட மண்ணில் இன்று அன்னசி பயிரிடப்படுகின்றது. 1954 இல் 17,500 ஏக்கர் நிலத்தில் அன்னசி பயிரிடப்பட்டது. அன்னசித் தோட்டங் கள் பெரும்பாலும் சிறு தோட்டங்களாகும். 5,000 சீனக் குடும்பங்கள் இச் செய்கையில் ஈடுபட்டுள்ளன. அன்னசிப் பழ உற்பத்தி இப்பொழுது அதிக மாகக் குறைந்துவிட்டது.
பட்டினங்களைச் சார்ந்து காய்கறித் தோட்டங்கள் காணப்படுகின்றன. சில இடங்களில் இவை அதிக ஏக்கர் நிலத்தை அடக்கியுள்ளன. ஆனல் மொத்த நிலத்தைப் பிற நிலப்பயன்பாட்டு வகைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது அது குறைவாக உள்ளது. காய்கறித் தோட்டங்கள் பெரும்பாலும் சீனர் கையி லுள்ளன. மலாயாவிலுள்ள பயிர்ச்செய்கை வகைகளுள் காய்கடித் தோட்டச்

Page 78
126 மலாயா: பண்பாட்டியல்புகள்
செய்கையே மிகவும் செறிவாக அமைந்ததாகும். பெரும்பாலும் தனிப்பட்ட குடும்பங்களின் அடிப்படையில் இது நடைபெறுகின்றது. ஓர் ஏக்கர் நிலத்தில் வேலை செய்வதற்குக் குறைந்தது இரண்டு பேராவது தேவையாக உள்ளனர். காய்கறிகள் பெரும்பாலும் பணத்திற்காகவே பயிரிடப்படுகின்றன. கமரன்
பிரின்சாங்கு 器 C கோப்பி T தேயிலை
V; V காய்கறிவகை (தெருக்கள். ബ്രി) ལ་ 6
ܝܒܫܒ. - சுண்ணமாக்கற் பகுதி.
────མ་མཚོ་
ό------ - και
ت
தஞசட்டர் ரொபின்சன் நீர்வீழ்ச்சி
படம் 40. கமரன் உயர்நிலத்தில் பாறை வகைகளும் நிலப்பயன்பாடும்
உயர் நிலத்தில் அநேக சிறு தோட்டச் சொந்தக்காார் இடைவெப்பக் காலநிலைப் பிரதேசங்களுக்குரிய காய்கறிகளைப் பயிரிடுகின்றனர்; தாழ்நிலப் பகுதிகளி அலுள்ள பட்டினங்களில் வாழ்வோரின் உணவுக்காகவே இவை பயிரிடப்படுகின் றன. காய்கறி வகைகளை எடுத்துச் செல்லுவதற்காகத் தெருப்போக்குவரத்து.
உண்டு. நாள்தோறும் போக்குவரத்து நடைபெறுகின்றது (படம் 40).
மலாயாவின் உற்பக்கிப் பொருள்களைக் குறிக்கும் அறிக்கையில் மேலும் பல சுறு பயிர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல பயிர்கள் பிற பயிர்களோடு வேண்
 
 
 
 
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 127
டிய காலத்தில் துணைப்பயிர்களாகக் கொள்ளப்படுகின்றன. அவற்றுள் மரவள்ளி முக்கியமானது. அதிக ஏக்கர் நிலத்தில் இன்று மரவள்ளி பயிரிடப்படுகிறத. அரி சிக்குப் பதிலாக மரவள்ளி உபயோகிக்கப்படுவதும், கஞ்சிப் பசைக்கு மரவள்ளி பயன்படுத்தப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும். கஞ்சிப் பசைக்குப் பயன் படுத்தப்படுவதால் பணவருவாயும் உண்டு. பணப்பயிர்களாகக் கரும்பு, சோளம், கம்பியர், தேயிலை, கோப்பி, வாசனைப் பயிர்கள், புகையிலை, தெரிஸ் t, நிலக்கடலை என்பனவும் விளைவிக்கப்படுகின்றன. இவை அடக்கியுள்ள நிலம் குறைவாகும். இத்தகைய பயிர்களை விளைவிப்போர் பெரும்பாலும் சீனரும் இந்தியருமாவர். மலாயாவின் மொத்தப் பயிர்நிலத்தில் இவை சிறிய பகுதியை மட்டுமே கொண்டுள்ளன. வியாபாரத்திலும் இவை முக்கியமாக இல்லை. திரெங் கானுவிலுள்ள ஒரு தோட்டத்தில் அமெலஞடோ கொக்கோ வியாபார நோக் கத்திற்காகப் பயிரிடப்படுகின்றது.
(ஆ) கணிப்பொருளகழ்தல்
தகரம்-குங்கை லெம்பிங்கிலுள்ள (குவாந்தானுக்கு அண்மையில்) தகர மகழ்தல், ராவுப்பிலுள்ள (படம் 42) தங்கமகழ்தல் தொழில்கள் தவிர ஏனைய அகழ்தற்முெழில்கள் வேறுபட்டன. மேற்படைகளிலுள்ள கனிப்பொருள்களை அகழ்தலே பிறவிடங்களில் நடைபெறுகின்றது. தகரமகழ்தல் முதலிய தொழில் கள் பெரும்பாலும் வண்டற்படிவுகளில் நடைபெறுகின்றன. கணிப்பொருளகழ் தற்முெழில் பெரிய நிலப்பகுதியில் நடைபெறுகின்றது. ஆனற் பெறப்படும் கணிப்பொருளின் தொகை குறைவாகும். 1956 இல் ஏறத்தாழ 700 சுரங்கங்க்ளி லிருந்து 62,000 தொன் தகாப்பொருள்கள் பெறப்பட்டன. பின்பு சர்வதேசக் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதனுல் அரைவாசித் தொகையான சுரங்கங்கள் மூடப்பட்டன. இதனுல் 1962 இல் மொத்தம் 60,000 தொன் தகரப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
தகாத்தாது (75 சத வீதம் தகரத்தைக் கொண்ட கசிற்றாைற்று) பெரும் பாலும் வானிலையழிவாலமைந்த பால், மணற் படிவுகளிற் பரந்து காணப்படு கின்றது. வானிலையழிவாலமைந்த நிலையான படிவுகளில் (குறித்த இடத்திலே நிலை பெயராது இருக்கும் படிவுகளில்) இது காணப்படலாம், ஆனற் பெருந் தொகையான தாது வண்டற் படிவுகளில் (கொண்டுவந்து படியவிடப்பட்ட படிவுகளில்) காணப்படுகின்றது. இத்தாது நீரினுற் கொண்டுவந்து படியவிடப் படுகின்றது. அவ்வாறு படியவிடப்படும் பொழுது தாது தாந்தரமாகப் Gfi கப்பட்டுப் படியவிடப்படுகின்றது. தகாத்தாதை அகழ்தற்கு முதலில் மேலுள்ள தசை வெட்டப்படுகின்றது. பின்பு வண்டற் படிவுகளிலுள்ள தாது பெயர்த் தெடுக்கப்பட்டு நீரில் மணல்,களி, பால் முதலியவற்றை நீக்குவதற்காகக் கழு வப்படுகிறது. கழுவப்படும்பொழுது எஞ்சியுள்ள பாரமான கசிற்றாைற்றே தகாத்தாதாகும். அகழ்தல் முறைகள் வேறுபடும் பொழுது தரையிலும் வேறு பாடு ஏற்படுகின்றது.
f derris : வைரமான ஒருவகைப் படர்கொடி.

Page 79
128 மலாயா: பண்பாட்டியல்புகள்
1. வாருதல்: 1929 ஆம் ஆண்டிலிருந்து இம்முறை பயன்படுத்தப்பட்டு வரு கின்றது. இது மிக முக்கியமான ஒரு முறையாக இருப்பதோடு குறைந்த
魁
- ng *、 c2
செரெம்பரின் 8
G 3-D Tau-N92 وهشه ܓܪ گصس uDST A, TU -
பட்டினம் (p6aos
uோகூர்
தகரம பறுS
போட்சைறறு. €ሻ`tiር}@ስ) ” స్త్రీ********. , " کے O . 3O
: - -sess saw- v
படம் 41. மலாயாவின் கணிப்பொருட் பரம்பல்
தொகையான தொழிலாளர் மேற்கொள்ளத்தக்கதாயுமுள்ளது. வாருதலுக்கு உபயோகிக்கப்படும் கருவி நாலு ஏக்கர் பரப்பை அடக்கிய ஒரு குளத்தில்
 
 
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 129
மிதந்து கொண்டிருக்கும். இதனை இயக்குவதற்கு நீராவி அல்லது மின்சாரம் உபயோகிக்கப்படுகிறது. கருவியிற் சங்கிலித் தொடரிற் பொருத்தப்பட்டுள்ள வாளிகள் நீரின் அடித்தளத்திலிருந்து வண்டல் மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருக்கும். குறித்த ஓர் இடத்தில் வண்டல் மண் அகழ்ந்தெடுத்த பின்பு, அகழ்கருவி அயலிலுள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு குளத்தின் அடித்தளம், பக்கம் ஆகியன படிப்படியாக அகழப்படும். அகழ் கரு வியிலேயே வண்டல் மண்ணிலிருந்து தகரமும் பிற கணிப்பொருள்களும் பிரித்து எடுக்கப்படும். எஞ்சியன வெளியே தள்ளப்படும். இவை கருவியின் பின்புறத் தில் நூற்றுக்கணக்கான யார் அரசம்வரை சேற்றுப் படிவுகளாக அமையும். இப் படிவுகள் நீருக்குமேற் சிறிதளவே உயர்ந்து காணப்படும், மண்ணில்லாமையால் இவற்றில் தாவரங்கள் படிப்படியாகவே வந்து பரவுகின்றன.
அகழ்கருவியை அமைப்பதற்கு அதிக செலவு (ஒவ்வொன்றுக்கும் 250,000 பவுணுக்கு மேல் தேவைப்படுகிறது) ஏற்படுகிறது. பெருந்தொகையான பணம் முதலீடு செய்வோரே இதனைப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஐரோப்பிய கம்பனிகளே இதனைப் பயன்படுத்தக் கூடியனவாயுள. இக்கருவியினல் அதிக அளவு வண்டல் மண் அகழப்படுகின்றது. இதனல் ஒரு முறை அகழப்பட்ட இடத்தை மீளவும் அகழவேண்டிய அவசியம் இல்லை. அகழ்வதிற் குறைந்த அளவு தொழிலாளரே ஈடுபடுகின்றனர். இவர்கள் தொழில்நுட்ப அறிவு குறைந்தவரா வர். இக்காரணங்களினல் அகழும் இடங்களில் நிலையான கட்டடங்கள் நிறுவப் படுவதில்லை. தற்காலிகமாகவே சில கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அகழ்கரு வியை வேறிடத்திற்கு எடுத்துச் செல்லும்பொழுது தொழிலாளரும் அவ்விடத் திற்குச் செல்லுகின்றனர். அகழ்கருவி ஆற்றுப்படுக்கையில் அல்லது அண்மை யில் நிறுத்தப்படும். வாரி எடுக்கப்படும் பொருள்களைக் கழுவுவதற்கு அதிகநீர் தேவையில்லை. நீரைப் பல தடவை பயன்படுத்தக்கூடிய வசதி இருத்தலே இதற்குக் காரணமாகும். கழிவுப் பொருள்கள் தொடர்ந்து வெளியே தள்ளப் படும். அகழ் கருவிகள் மூலம் பெறுமதி குறைவான தகரம் அநேகமாகப் பெறப் படுகின்றது. இதனைப் பெறத் தொழிலாளர் அதிகமாகத் தேவைப்படமாட்டார். யுத்த காலத்தில் அகழ் கருவிகள் சில சேதமடைந்தன. உலகின் பிற பகுதி களில் இயந்திரத் தேவைகள் அதிகமாக இருந்தமையாற் புதியவற்றை எளி தாகப் பெறமுடியவில்லை. 1957 இல் 71 அகழ் கருவிகளே பயன்படுத்தப்பட்டன. 16,000 தொழிலாளர் இவற்றை உபயோகிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஆனல் 1959 ஆம் ஆண்டில் 34 அகழ் கருவிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டன.
2. பாற் பம்பு அகழ் கருவி: இக்கருவிகளால் வண்டற் படிவுகள் பெருந் தொகையாக அகழப்படுவதனல் தரையிற் பெரும் பள்ளங்கள் உண்டாகின்றன; இப்பள்ளங்கள் நெடுங் காலத்திற்குக் காணப்படலாம். இக்கருவிகள் மேல் மண்ணைப் பேணி வைத்துப் பின்பு பள்ளங்கள் மூடப்படும் போது அவற்றின் மீது பரப்பிவிடக் கூடியன. இவ்வாறு செய்வதல்ை தரையில் அதிக மாற்றங் கள் ஏற்படமாட்டா. ஆனல் பள்ளமான பகுதிகள் செம்மையாக மூடப்படாமை

Page 80
130 மலாயா; பண்பாட்டியல்புகள்
யினுல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலம் மீண்டும் பயன்படுத்தத் தக்கனவாய் அமைவதில்லை.
பம்பின் மூலம் நீரோடு கலந்த தகரப்படிவுள்ள பரற்கற்கள் உயர்மட்டத்தி அலுள்ள சாய்வான ஒரு மடைக்கு உயர்த்தப்படுகின்றன ; பம்பை இயக்குவதற்கு நீராவி, தீசல், மின்சக்தி என்பவற்றில் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. உயர மான மரச்சட்டத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட மடைக்கு அகன்ற குழாய் மூலம் இப்பாலும் நீரும் கொண்டு செல்லப்படுகின்றன. மடையிற் படிகள் அமைக்கப்பட்டிருக்கும் தகரத் தாது இப்படிகளில் தங்கிவிட, தொடர்ந்து இறைக்கப்படும் நீரினுற் பரற்கற்கள் கழுவி அகற்றப்படும். இவ்வாறடைந்த தகரப் படிவுகள் மீண்டும் கழுவப்பட்டு, உலரவைக்கப்பட்டு, ஏற்றுமதி செய் யப்படுகின்றன. கழிவுப்பொருள்கள் படிவதஞல் அதிக நிலப்பகுதி பாதிக்கப் படுகிறது. தொழிலாளரும் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். தகரப் படிவுகள் அகழ்ந்தெடுக்கப்படும் இடங்களுக்கு அண்மையில் தொழிலாளர் வதியும் சிறு குடிசைகள் காணப்படும். இவை மண்ணுலும் மாத்தாலும் அமைக்கப்பட்டவை யாகும். நீரைப் பெறுவதற்காக அயலே சிறு குளம் காணப்படும். தகாப்படிவு கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் பின்பு கைவிடப்பட்டதும் அவை நீரினுல் மூடப்பட்டு ஆழமான குளங்கள் போன்று காணப்படும்.
தகரப்படிவுகள் பிரித்தெடுக்கப்படும் இம்முறையிலும் பல வேறுபாடுகள் உண்டு. ஒருமுறை கழிவாய் விடப்பட்ட பாற்படிவுகளை மீளவும் புதிய முறை கள் மூலம் கழுவித் தகரப் படிவுகளைப் பெறலாம். மலாயாவின் சில பகுதிகளில் தகரப் படிவுகளைப் பெறுவதற்காக நான்கு தடவைகளுக்கு மேற் பரற்படிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணிப்பொருள் அகழ்தல் பகலும் இரவும் ஓயாது நடைபெறுகின்றது; முதலிற் குறிப்பிட்ட வாரியகழுங் கருவிகளிலும் குறை வான இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன ; இதனுல் முதலீடுங் குறை வாகும். இந்த முறையான அகழ்தற்ருெழில் ஐரோப்பிய, சீன, இந்தியக் கம்பனி களினல் மேற்கொள்ளப்படுகின்றது. 1956 ஆம் ஆண்டில் 620 சீனக் கம்பனிகள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தன. மொத்தம் 19,000 தொழிலாளர் தொழில் புரிந் தனர். 1957 இல் அரைவாசித் தொகையான கம்பனிகள் மூடப்பட்டுவிடப் பட்டன.
3. தகாப் படிவுகள் அகழும் பிறமுறைகள்: நீரியக்கக் கருவிகளைப் பயன் படுத்தும் முறைகள் (1955 இல் 14 கருவிகள் உபயோகத்திலிருந்தன) ஏறத்தாழ மேற்குறித்த பாற்பம்பு முறையை ஒத்தன. நீரைப் பெறும் முறையே இங்கு வேறுபட்டுள்ளது, நீர் குன்றுகளிலிருந்து குழாய்மூலம் பெறப்படுகின்றது. வண்டற் குழிகளைத் தாரைகள் மூலம் நனைப்பதற்கும், பாற் பம்புகளை இயக்கு வதற்கும் இது பயன்படுகிறது.
பல இடங்களில் தரையின் மேற்பாகம் வெட்டப்பட்டுத் தகரப்படிவுகள் பெறப் படுகின்றன. குங்கை பெசி ஆற்றையடுத்துள்ள ஹொங்வாற் சுரங்கம் குறிப் பிடத்தக்கது. இத்தகைய சுரங்கங்களில் இயந்திரங்கள் மூலம் மேற்பாகம்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13
வெட்டப்பட்டு வண்டற் படிவுகள் அகழப்படுகின்றன. மேலே கொண்டுவரப் படும் வண்டற் படிவுகளைப் பாற் பம்பு முறையிற் போன்று நீரினுற் கழுவித் தகரப்படிவுகள் பெறப்படுகின்றன.
தகரப் படிவுகளைப் பாற்படிவுகளிலிருந்து கையினற் பிரித்தெடுக்கும் பழைய முறையும் பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. பழைய தங்கமகழ்தல் முறையை இம்முறை ஓரளவுக்கு ஒத்துள்ளது எனலாம். முதல் வசதி குறைந் தோரே இம் முறையைப் பின்பற்றுகின்றனர். கூலியாட்களாகச் சீனப் பெண் கள் அமர்த்தப்படுகின்றனர். மலாயாவில் இம்முறை அகழ்தல் டுலாங் என வழங்குகின்றது. பொருளாதார நெருக்கடி ஏற்படும்பொழுது கணிப்பொருளக ழும் பெரிய கம்பனிகள் பாதிக்கப்படுகின்றன. அப்பொழுதே மேற்குறித்த முறை பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது.
_நெய்த்தாலம்
படம் 42. பகங்கு : நிலப்பயன்பாடு. (வெளியாக விடப்பட்டுள்ள பகுதியில் காடடர்ந்துள்ளது )
E 0,56%. Il
இறப்பர் அசுரங்க வேலை
ഞഥമ
நெல் &一玄
கெலந்தானுக்கு அண்மையாகவுள்ள குங்கை லெம்பிங் சுரங்கத்திற் குத்தாக வெட்டிச் செல்லும் முறை (1,200 அடி ஆழம் வரை) பயன்படுத்தப்படுகின்றது. குத்தாக வெட்டிச் செல்லுங் கருவி மூலம் தாது மேலே கொண்டு வரப்பட்டு, உடைக்கப்பட்டு, உலரவைக்கப்படுகிறது. மலாயாவில் இது ஒரு புதிய முறையா கும். பகங்குக் கணிப்பொருளகழ் கூட்டுக்கம்பனி இம்முறையைப் பயன்படுத்து கின்றது. இக்கம்பனி பெருந்தொகையான முதலீட்டையும் இயந்திர சாதன வச திகளையுங் கொண்டது. மலாயாவில் தகாப் படிவுகளகழ்தலைப் பொறுத்த வரை யில் எதிர்காலத்தில் இத்தகைய வசதிகளையுடைய பெரிய கம்பனிகள் மேற் குறித்த புதிய முறைகளையே பெரும்பாலும் பயன்படுத்தலாம்.

Page 81
32 மலாயா: பண்பாட்டியல்புகள்
தகரம் அகழ்ந்தெடுக்கப்படும் இடங்களில் தொழில் புரியும் தொழிலாளருட் பெரும்பாலார் சீனராவர். யுத்தத்திற்குச் சற்று முற்பட்ட வருடங்களில் இந்தி யத் தொழிலாளரும் இத்தொழிலிலிடுபட்டிருந்தனர். ஆனல் சீனத் தொழிலாள ருக்கும் இந்தியத் தொழிலாளருக்குமுள்ள விகிதம் ஒன்பதுக்கொன்முக இருந் தது. மலே இனத்தவரில் மிகச் சிலரே இத்துறையிலிடுபட்டனர். தொழிலிலிடு பட்டிருந்தோர் தொகை தொழிலின் வளர்ச்சியைப் பொறுத்ததாகும். 1933 முதல் 38 வரையுள்ள ஆறு வருட காலத்தில் ஆண்டுத் தகாவுற்பத்தி 25,000 தொன்னிலிருந்து 75,000 தொன்னிற்குமதிகமாகக் காணப்பட்டது. தொழிலின் ஏற்றவிறக்கங்களுக்கேற்பத் தொழிலாளர் தொகையும் கூடிக்குறைந்து காணப் பட்டது. 1962ஆம் ஆண்டில் தகரமகழ்ந்தெடுத்தற்ருெழிலில் 34,000 தொழிலா ளர் ஈடுபட்டிருந்தனர். அவ்வாண்டில் மலாயாவின் மொத்த தகரவுற்பத்தி 60,000 தொன்னுகும். (1940 இல் தொழிலாளர் தொகை 83,000 ஆகவும் மொத்த தகரவுற்பத்தி 85,000 தொன்னகவும் இருந்தன). 1959 ஆம் ஆண்டில் கட்டுப் பாடு காரணமாக 21,000 தொழிலாளரே இத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவ் வாண்டின் மொத்த தகாவுற்பத்தி 32,500 தொன்னகும். தொழிலாளரைப் பொறுத்தவரையில் இத்தொழில் ஒரு குதாட்டம் போன்றதாகும். சிலர் நாட் கூலிக்கு வேலை செய்தனர். எனினும் அவர்களுக்கு வீட்டு வசதி, உணவு வசதி என்பனவும் கொடுக்கப்பட்டன. மற்றையோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தனர். வெட்டப்பட்ட நிலத்தின் அளவுக்கு ஏற்ப அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. சிலர் கூட்டமாகச் சேர்ந்து ஒருவகைக் கூட்டுறவு முறையில் வேலை செய்தனர். குத்தகைக்கு எடுத்தவருக்குக் கொடுக்க வேண்டிய பணத் தைக் கொடுத்தபின்பு மிகுதியை இவர்கள் பிரித்து எடுத்துக் கொண்டனர்.
மக்கட் புவியியலடிப்படையிற் பார்க்கும்பொழுது கணிப்பொருளகழ்ந்தெடுத் கல் தொழிலோடு தொடர்புடைய பண்பாட்டு நிலைகள் பெரும்பாலும் தற்காலிக மானவை போன்று உள்ளன. கணிப்பொருளுக்கு மதிப்பு ஏற்படும்பொழுது அதிக அளவுக்குத் தொழில் நடைபெறுகின்றது. பின்பு தொழில் கைவிடப்படு கிறது. கைவிடப்பட்ட நிலத்தில் கழிவுப் பொருள்களும் குளங்களும் பரந்திருப் பதல்ை நிலம் சீரற்றுக் காணப்படும். எனினும் இந்நிலைமை பயிர்ச்செய்கையை . அதிகம் பாதிப்பதாக இல்லை. செறிவான முறையிற் பயிர்ச்செய்கை நடை பெறும் இடங்களிற் சிறந்த தகரப்படிவுகள் அநேகமாகக் கிடைப்பதில்லை. ஆனல் மேற்குறித்த தன்மையினல் வேறுசில விளைவுகள் உண்டாகின்றன. தகர மகழ்ந்தெடுக்கப்படுவதனல் அடையல்கள் படிதலில் மாற்றம் ஏற்படுகிறது. ஆறு கள் ஒடும் போக்குப் பாதிக்க்ப்படுகிறது. படிதல் விரைவாக நடைபெறுதலி ஞற் கழிமுகப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. போாக்கின் கீழ்ப்பாகம், செலங் கர் ஆகியவற்றின் மேற்குக் கரையில் இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்றன.
மலாயாவில் வண்டற் படிவுகளிலிருந்தே தகரம் எடுக்கப்படுகின்றது. தீப் பாறைத் தலையீட்டுக்கு அணித்தாகவுள்ள பாறைப்பிளவுகள், தொடுகைப் பாகங்கள் ஆகியவற்றில் கசிற்றாைற்று என்னும் தகரப்படிவு நரம்புகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 133
போன்று அமைகின்றது. வண்டற் படிவுகளிற் பெறப்படும் தகரம் உண்மையில் இப்பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். மலைத் தொடர்களைச் சார்ர் துள்ள குன்றுகளிடை இப்படிவுகள் காணப்படுகின்றன. இப் பகுதியிற் சாய்வு கள் தாழ்வாகவிருப்பதனுல் ஆறுகள் கசிற்றாைற்றுப் படிவுகளைக் கொண்டு செல்ல முடியாதனவாய் உள்ளன. தகரப் படிவுகள் அகழ்ந்தெடுக்கப்படும் இடங் கள் மத்திய மலைத்தொடரைச் சார்ந்து அமைந்துள்ளன. இத் தொடரின் மேற் குப் பாகத்திலேயே இத்தகைய இடங்கள் பெரும்பாலும் உள்ளன. கின்டாப் பள்ளத்தாக்கும் கோலாலம்பூரைச் சூழவுள்ள பகுதியும் தகரமெடுத்தலுக்குப் புகழ்பெற்றன. மலாயாவின் மொத்த உற்பத்தியில் நாலில் மூன்று பாகம் இப் பகுதிகளிற் பெறப்படுகின்றது. மலைத்தொடரின் கிழக்குப் பகுதியிலும் தெற் காகவுள்ள பென்டொங்கு முதலிய இடங்களில் தகரம் பெறப்படுகின்றது (படம் 41). பேர்ளிசிலுள்ள நாக்கோன் தொடர்ச் சாய்வுகள், மேற்குத் தொடர், பின்டாங்குத் தொடர் (தைப்பிங்கைச் சார்ந்துள்ள பகுதி) முதலியன வும் இத்தொழிலுக்கு முக்கியமானவையாகும். கிழக்குப் பகுதியிற் குறைந்த அளவுக்கே இத்தொழில் நடைபெறுகின்றது. தகரமுள்ள பகுதிகள் கிழக்குக் தொடரைச் சார்ந்து கரையோரமாகப் பெசுத் ஆற்றிலிருந்து யோகூர்வாை பரந்து காணப்படுகின்றன. தகரம் எடுத்தற்ருெழில் சிறப்பாக விருத்தியடையா மைக்கு இப்பகுதிகள் துTசத்தே காணப்படுவதும் ஒரு காரணமாகும். இப்பகுதி களுள் குங்கை லெம்பிங் சுரங்கங்கள் முக்கியமானவையாகும்.
மலாயாவின் சுரங்கங்களிலிருந்து தகரப் படிவுகள் 1946 ஆம் ஆண்டிலிருந்து 24 வருடங்களுக்கு மட்டுமே பெறக்கூடியன எனக் கொள்ளப்பட்டது (ஓசைலி யையும் பார்க்க). மலாயாவின் ஏற்றுமதி வியாபாரத்தில் தகரம் முக்கியமாக இருந்தபொழுதும் நிலத்தோற்றம் தொழில் முறைகள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் அத்துணை முக்கியமானதாய் இல்லை. மலாயாவில் இறப்பர், நெல் என்பனவற்றின் தாக்கம் அதிகமாகும். Φ 6ύ5 அடிப்படையிற் பார்க்கும் பொழுது மலாயாவில் மிகக்குறைந்த செலவில் தகரம் உற்பத்தி செய்யப்படுகின் றது. எளிதாக அகழக்கூடிய படிவுகள் பெறப்பட்டதும் ஏனைய நாடுகளிற் போன்று மலாயாவிலும் செலவு அதிகரிக்கலாம்.
கசிற்றாைற்றுப் படிவுகள் சாக்குகளிற் கட்டப்பட்டுப் புகையிரதமூலம் பினுங்கு, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 1942 ஆம் ஆண்டு வரையில் இப்பட்டினங்களிலுள்ள இரண்டு உலைகளில் உலகின் மொத்தத் தகா உற்பத்தியில் ஏறத்தாழ அரைவாசி உருக்கப்பட்டது. மலாயா விற் பெறப்பட்ட தகரத்தோடு சூழவுள்ள பகுதிகளிலிருந்தும் தகரம் இறக்கு மதி செய்யப்பட்டு உருக்கப்பட்டது. சுண்ணக்கல், அந்திரசைற்று என்பவம் (ேmடு கலந்தே தகரம் உருக்கப்படுகின்றது. தகரத்தோடு சேர்ந்துள்ள பிற பொருள்களை நீக்குவதற்குச் சுண்ணக்கல் உதவுகின்றது; அந்திாசைற்று தக ாத்தை ஒடுக்க உதவுகின்றது. 99 சதவீதத்துக்கு மேற்பட்ட அளய தகசத்தைப் பெறுவதற்கு அது பின்னர் வார்ப்பிரும்புக் கேத்தல்களிற் சுத்தி செய்யப்பட்டு, இறுதியில் அச்சுக்களில் வார்க்கப்படுகின்றது. 1946 இற்குப் பின்னர் இந்த

Page 82
134 மலாயா: பண்பாட்டியல்புகள்
உருக்கும் உலைகள் விரைவாகத் திருத்தியமைக்கப்பட்டன. சிங்கப்பூரிலுள்ள உலைக்குப் போட்டியாக 1955 இல் பட்டர்வேர்த் என்னுமிடத்தில் ஒரு புதிய உலை நிறுவப்பட்டது. இவ்வுலைகள் மலாயாத் தகாத் தாதுடன் தைலாந்து, பேமா ஆகிய இடங்களிலிருந்து வரும் தகரத் தாதையும் சுத்தி செய்கின்றன. 1962 இல் மொத்தமாக 84,000 தொன் சுத்தி செய்த தகரம் உற்பத்தியானது.
9 சுரங்க வேலே i இறப்பர் இத் தென்னே
நெல் நெல்த் தாலம
翻 அன்ரூசி
படம் 43. தென் மலாயாவின் நிலப்பயன்பாடு
இரும்பு-1940 ஆம் ஆண்டையடுத்த வருடங்களில் மலாயாவில் வருடம் 20 இலட்சம் தொன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது. யோகூர், கெலந் தான், பகங்கு, திரெங்கானு ஆகிய பகுதிகளிலுள்ள ஏமத்தைற்றுப் படிவுகளிலி ருந்து இத்தாது பெறப்பட்டது. உயர்தரத் தாதாக இருந்தமையால் இதில் 5065 சத விதமான இரும்புச் செறிவு காணப்பட்டது (படம் 41). மொத்தத் தொகையில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகை யோகூர் (பாடுபகத், எண் டவு பகுதிகள்) (படம் 43), திரெங்கானு (துன்குன், கெமமன் பகுதிகள்) (படம் 39) படிவுகளிலிருந்து பெறப்பட்டது. இரும்புத்தாது மேற்படைகளிலி ருந்தே அகழப்பட்டது. இத்தொழிலுக்குப் பெரும்பாலும் சீனத் தொழிலா ளரே பயன்படுத்தப்பட்டனர். மேற்படைகளிலிருந்து இரும்புத்தாது அகழப் பட்டதனுற் புதிய நிலங்களிற் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இரும்புத்தாது பெருந்தொகையாக அகழப்படவேண்டியிருந்தமையால் தொழிலாளரும் தொகை யாகத் தேவைப்பட்டனர். இரும்புத் தாதின் பெறுமதியோடு ஒப்பிட்டுப் பார்க் கும் பொழுது தொழிலாளர் செலவு அதிகமாக உள்ளது. இரும்புத்தாதிலும்
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 35
பார்க்கத் தகரத்தின் பெறுமதி அதிகமாகும். இரும்புத்தாது அகழப்படும் பகுதி கள் பெரும்பாலும் கிழக்குக் கரையைச் சார்ந்துள்ளன. இதனல் ஆற்றுப் போக்குவரத்தே இப்பகுதியில் முக்கியமாக உள்ளது. இரும்புத்தாது சிறு வள் ளங்களில் ஏற்றப்பட்டுக் கரைக்குக் கொண்டுவரப்படுகின்றது. வள்ளங்கள் கங் குவதற்கு ஏற்ற வசதியான இடங்கள் கிழக்குக் கரையிற் குறைவாகும். கப்பல் கள் கரைக்கு அண்மையாக வாமுடிவதில்லை. அவை வள்ளங்களிலிருந்து இரும் புத்தாதை ஏற்றுவதற்காகக் கடலிற் சற்றுத் தூரத்திற் கட்டப்படுகின்றன. வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்திற் கடல் கொந்தளிப்பதனல் ஏற்றியிறக்கு தல் தடைப்படுகின்றது. இரும்புத்தாது அகழப்படும் பகுதிகள் நிலக்கரிப் படிவு களுக்கு மிகத் தூரத்திலிருப்பதும் ஒரு தடையாக உள்ளது. 1941 ஆம் ஆண் டிற்கு முன்பு இரும்புத்தாது அகழுந் தொழிலுக்கு யப்பானியரே முதலீடு செய்தனர். அகழப்பட்ட இரும்புத்தாதும் உருக்கப்படுவதற்காக யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. திரெங்கானுப் பகுதியில் இரும்புத்தாது அகழுந் தொழில் அவுஸ்திரேலியக் கம்பனி ஒன்றினல் 1949 இல் மீண்டும் தொடங்கப் பட்டது. தாது யப்பானுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டது. ரொம்பின் ஆற்றுப் போக்கையடுத்து ஒரு புதிய இரும்புச் சுரங்கம் விருத்தியாக்கப்பட்டமையால், பகங்கில் ஒரு புதிய துறைமுகமும் புதிய இருப்புப்பாதையும் அமைக்கப்பட் டன. இப்பகுதியில் 1963 இல் 81 இலட்சம் தொன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது (1956 இல் 24 இலட்சம் தொன்னே உற்பத்தி செய்யப்பட்டது).
தங்கம்-கெலந்தான் வடமேற்கு பகங்கு ஆகிய பகுதிகளிற் பல இடங்களில் வண்டற் படிவுத் தங்கம் சிறிது அளவிற் காணப்படுகின்றது. தகரப் படிவுகள் காணப்படும் பிடோர் தபாப் பகுதி, மலாக்கா, செலங்கர் ஆகிய பகுதிகளிலும் தங்கம் ஒரளவுக்கு உண்டு. ராவுப் என்னுமிடத்திலேயே தங்கம் முக்கியமாகப் பெறப்படுகின்றது. 1000 அடிவரை ஆழமான இடங்களிலிருந்து ஏறத்தாழ 20,000 அவுன்சு தங்கம் 1960 ஆம் ஆண்டிற் பெறப்பட்டது (யுத்தத்திற்கு முன்பு வருடந்தோறும் 28,000 அவுன்சு தங்கம் பெறப்பட்டது). தங்கப் படிவுகளை உடைத்துப் பிரித்தெடுக்கும் தொழில் முறைகள் யாவும் பூக்கிகோமான் என்னு மிடத்தில் நடைபெறுகின்றன. தங்கத்தோடு சீலேற்றும் தொகையாக எடுக்கப்படு வதணுல் உற்பத்திச் செலவு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
ஏனைய கணிப்பொருள்கள்-மலாயாவின் வடகிழக்குப் பகுதியில் இரும்புத் தாதோடு தரத்திற் குறைந்த மங்கனிசுத் தாதும் பெறப்படுகின்றது. இத்தாது பெரும்பாலும் யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கேடா திரெங்கானு ஆகிய பகுதிகளில் தங்கிதன் (உல்பிராம்) படிவுகள் சிறுதொகையாகப் பெறப் பட்டு ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் என்பவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாடுபகத், கிழக்கு யோகூர், பாறு ஆகிய பகுதி களில் யுத்தத்திற்கு முன்பு போட்சைற்று மேற்படைகளிலிருந்து சிறிதளவு எடுக்கப்பட்டது. இத்தொழிலுக்கு யப்பானியரின் முதலீடு முக்கியமாக இருந் தது. வருடத்தில் 60000 தொன் போட்சைற்றுத் தாது ஏற்றுமதி செய்யப்பட் டது. போட்சைற்றுத் தாதிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறை

Page 83
136 மலாயா: பண்பாட்டியல்புகள்
உள்நாட்டில் விருத்தி செய்யப்படவில்லை. இன்று மலாயாவின் போட்சைற்றுத் தாது பெரும்பாலும் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தும் அலுமினியத் தொழிற்சாலைகள் அநேகம் இங்கு உண்டு (1963 ஆம் ஆண்டு 390,000 தொன் போட்சைற்று ஏற்றுமதி செய்யப்பட்டது). தகரப் படிவுகளிலிருந்து இல்மனைற்று (தைத்தேனியம் தாது), மொனசைற்று (தோரியத்தின் மூலப் பொருள்) என்பனவும் சிறிதளவு பெறப்படுகின்றன. இவை கழிவுப் பொருள்களிலிருந்து காந்த முறைப்படி பிரித்தெடுக்கப்படுகின்றன. பேராக், செலங்கர் தகா வயல்களிலிருந்து இல்மனைற்று (1960 இல் 80,000 தொன் பெறப்பட்டது; 1940 இல் ஏறத்தாழ 26,000 தொன் மட்டுமே பெறப்பட்டது) பெறப்படுகின்றது. உலகில் தைத்தேனியப் பயன்பாடு அதிகரித்துள்ளதனல் இல்மனைற்று அதிக வருவாயைக் கொடுக்கக்கூடிய ஓர் ஏற்றுமதிப்பொருளாக உள்ளது. கொலம்பைற்று அரிதாகப் பெறப்படும் உலோகமாகும். தாரை இயந் திரங்களுக்கு வேண்டிய கலப்பு உருக்கு உற்பத்திக்கு இது உபயோகிக்கப்படு கின்றது. மலாயாவின் சில தகரச் சுரங்கங்களின் பக்கவிளைவான இவ்வுலோகம் 1957 ஆம் ஆண்டில் மாதந்தோறும் 12 தொன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட் டது. ஆனல் இதன் அபிவிருத்தி நீடிக்கவில்லை.

அத்தியாயம் 8 மலாயாவின் சமூகப் புவியியல்
மலாயாவில் இன்று காணப்படும் நிலைமைகள் கடந்த 150 வருட காலத்தில் ஏற்பட்டவையாகும். இத்தகைய அயனப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற் றங்களும் தொடர்புகளும் அடிப்படையிற் புவியியற் காரணிகளாலே ஏற்பட்
6.
மலாயாவின் வாழ்க்கை முறையின் தோற்றம்
பதினெட்டாம் நூற்றண்டிற்கு முன்பு மலாயாநாட்டினர் மிகவும் எளிதான வாழ்க்கை முறையை உடையராய் இருந்தனர். அவர்களின் உணவுக்கு வேண் டிய அரிசியை அவர்களே உற்பத்தி செய்தனர்( மீன்பிடிதொழிலில் ஈடுபட்டா ரும் தமது சுயதேவையைப் பூர்த்தி செய்பவர்களாக இருந்தனரி நெற் செய்கை மீன்பிடி தொழில் ஆகியன சிறப்பாகக் காணப்பட்ட சில பகுதிகளிற் பண்டமாற்றும் ஓரளவுக்கு நடைபெற்றது. அப்பொழுது இரண்டரை இலட் சம் மக்கள் வரையில் வாழ்ந்தனர். ஆறுகளையும் கரைகளையும் சார்ந்து அவர் களுடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. சிறு வள்ளங்களின் போக்கு வரத்து, குடிநீர், நீர்ப்பாய்ச்சுதலுக்கு வேண்டிய நீர் முதலியன குறித்த பகுதிகளிற் காணப்பட்டமையே குடியிருப்புக்கள் அமையக் காரணமாகும். அடர்த்தியான காடுகளைக் கொண்ட பகுதிகளில் மலே இனத்தவர் குடியேற விரும்பவில்லை. பிறநாட்டவரும் இப்பகுதிகளை விரும்பவில்லை. இதனுல் ஆறு களைச் சார்ந்து காணப்படும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் கரைப் பகுதிக ளுக்குமிடைப்பட்ட பகுதிகள் பயனற்ற பகுதிகளாகக் கருதப்பட்டன. ஆகவே மலாயாவின் அரசியற் பிரிவுகள், சுல்தான் ஆட்சிப் பிரிவுகள், தலைமையாளர் பிரிவுகள் என்பன நெல்விளையும் கழிமுகப் பகுதிகளைச் சுற்றிக் காணப்படு கின்றன. கடற்கரைக் கிர்மங்கள்.ஆற்றுக்கிராமங்கள் ஆகியன இணையும் இடங் களிலே இப்பிரிவுகள் வரையறை செய்யப்பட்டுள்ள்ன்:ஐாடடர்ந்த ஆற்றிடைப் பகுதிகள் திட்டமாக வரையுறுக்கப்படாத எல்லைகளைக் கொண்டுள்ளன. இப் பகுதிகளிற் பிற்போக்கானவரும் ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதவரு
4
மான அநாகரிக மக்கள் வ்ாழுகின்ற்ன்ர். '
மலே இனத்தவரின் சமூகம் தன்னிறைவு ப்ேற்ற ஒன்ருகும். தேவையான வளவு உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை உற் பத்தி செய்யக்கூடியவர்களும் உண்டு. மலாயாவில் இன்று வியாபாரத்திற்காக உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருள்கள் பெரும்பாலும் பிறநாட்டவர் முறையை அடிப்படையாகக் கொண்டன. முன்பு உள்நாட்டில் உற்பத்தி செய் யப்பட்ட பொருள்களுள் வாசனைப் பொருள்களுக்கு மட்டுமே மதிப்பு இருந் தது. இவையே ஏற்றுமதிப் பொருள்களாகவும் இருந்தன. மலே இனத்தவரின் முக்கிய உணவாக இன்றுள்ள அரிசி இங்கு குடியேறியுள்ள இந்திய வகுப்பின
137

Page 84
38 மலாயா சமூகப் புவியியல்
ாால் முதன்முதலிற் கொண்டுவரப்பட்டது. இப்பகுதி பெரும்பாலும் கிழங்குச் செய்கைக்கே பொருத்தமானதாகும். இடைக்காலத்தில் மலாக்காவில் வாச னைப் பொருள் வியாபாரம் சிறிதளவுக்கு நடைபெற்றது. இப்பொருள்கள் அங் குள்ள சிறு தோட்டங்களில் விளைவிக்கப்பட்டன. பெருந்தோட்டச் செய்கை
மலாயாவின் தரைத்தோற்றத் தன்மையும் குடியிருப்பைக் கட்டுப்படுத்து கின்றது. கடற்கரைசார்ந்த பகுதிகளிலே இக்கால முறைக் குடியிருப்புக்கள் முதலிற் செறிவாக அமைந்தன. அராபியர், இந்தியர், சீனர், ஐரோப்பியர் ஆகி யோர் படிப்படியாக வந்து குடியேறுவதற்கு இக்கரைப் பகுதிகள் பொருத்த மாக இருந்தன. போத்துக்கேயர் டச்சுக்காரர் ஆகியோரின் வியாபாரத் தொடர்பு முதலில் மலாக்காவில் ஏற்பட்டது. பிரித்தானியரின் தொடர்பு முத லில் சிங்கப்பூர் பினங்கு ஆகிய இடங்களில் ஏற்பட்டது. இவை குடாநாட்டிற் குப் புறத்தேயுள்ளன. குடாநாட்டோடு அரசியல் தொடர்போ, பிற பொறுப்போ ஏற்படக்கூடாது என்ற ஒரு சட்டம் 1874 ஆம் வருடம்வரை இருந்தது. பிரித்தானியர் தொடர்பு சிங்கப்பூர் பினங்கு ஆகிய இடங்களில் நிலைநாட்டப்பெற இதுவும் ஓர் காரணமாகும்.
பின்பு மலாயாக் குடாநாட்டோடு தொடர்புகள் ஏற்படத் தொடங்கின. மலாயாவின் பெளதிகக் கட்டுப்பாடுகள் குறிப்பிடத்தக்கன. இங்கு நான்கு வகையான நிலப்பகுதிகள் உண்டு: (1) குடியிருப்புக்களற்ற காடடர்ந்த மலைத்தொடர்கள்; இவற்றுள் மத்திய மலைத்தொடர் குறிப்பிடத்தக்கது; (2) இம்மலைத்தொடர்களைச் சார்ந்துள்ள அடிக்குன்றுகள் ; இவை பெரும்பாலும் காடுகளால் மூடப்பட்டுள்ளன ; நல்ல வடிகால்களையுடைய இப்பகுதியில் இடை யிடையே மலே இனத்தவரின் குடியிருப்புக்கள் உண்டு; (3) ஒழுங்கற்ற வடி கால்களையுடைய பகுதி, நன்னீர்ச் சேற்றுக் காடுகள் இப்பகுதியிற் பரந்துள் ளன ; குடியிருப்புக்கும் விவசாயத்திற்கும் இவை தடையாக உள்ளன; ஆறு கள் மூலமாகவே உட்பகுதியை அடையலாம் ; (4) உடனலத்திற்குகந்த கரைப் பகுதி ; கலப்பு வேளாண்மையும் மீன்பிடியும் இங்கு முக்கியமாக உள்ளன : இடையிடையே செறிவான பயிர்ச்செய்கை நடைபெறும் சமநிலங்கள் உண்டு. பாறைப் பகுதிகள் அடையல்களால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன. மலைத் தொடர்களின் போக்கிற்கு ஏற்ப தான்கு வகையான நிலப்பகுதிகளும் அமைந் துள்ளன. எனினும் மத்திய மலைத்தொடர் சில இடங்களில் மேற்குக் கரையைச் சார்ந்து காணப்படுகின்றது. இதனல் சேற்றுநிலப் பகுதி ஒடுக்கமாக உள்ளது. பிறநாட்டவர் ஈர்ப்பு மலாயாவின் அடிக்குன்றுப் பகுதியிலே அதிகமாக இருந்தது. இங்குள்ள வண்டற் படிவுகளில் தகரம் காணப்பட்டதே இதற்குக் காரணமாகும். இதனுல் இப்பகுதி மிகவும் வளமானதாகவும் கடற்கரைக்கு அண்மையாகவும் உள்ளது. தகரம் காணப்படும் மேற்கு வலயத்தில் அடிக் குன்றுகளை எளிதாகச் சென்றடையக் கூடியதாயிருத்தல் மிகவும் முக்கியமா கும். அடிக்குன்றுகளை ஆறுகள் மூலம் எளிதாகச் சென்றடையலாம். வெளியி லுள்ளோர் சேற்றுப் பகுதிகளுக்கூடாக முதலிற் செல்லுவதற்கு ஆறுகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 130
துணைசெய்தன. பாரமான தகாப் படிவுகளை ஏற்றிச் செல்லவும் தொழிலாள ருக்குத் தேவையான உணவுப் பொருள்களைப் பயிர்விளையும் பகுதிகளிலிருந்து கொண்டுசெல்வதற்கும் ஆறுகள் பயன்படுகின்றன. உள்நாட்டிற் பயிர்ச்செய்கை பெரும்பாலும் சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே மேற்கொள் ளப்படுகின்றது. வியாபாரத்திற்காக எஞ்சியுள்ள தொகை மிகக் குறைவாகும். லாருட் கரைப்பகுதி கிளாங்கு ஆற்றுமுகப்பகுதி ஆகியவற்றைச் சார்ந்து மலைத் தொடர்கள் கடற்கரைக்கு அண்மையாகப் பரந்துள்ளன. இதனல் அடிக் குன்றுகளிற் காணப்படும் தகரப் படிவுகளை ஆறுகளிற் சிறு வள்ளங்களிற் சென்றும் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. இவ்வாறுகளிற் பெரிய கப்பல்கள் செல்லமுடியாது. மலே இனத்தவர் குடியிருப்புக்கள் இப்பகுதிகளில் அதிக மாக உள்ளன எனவும் கூறமுடியாது. கணிப்பொருளகழ்தலை முக்கியமாகக் கொண்ட இரு பிரதான குடியிருப்புக்கள் மலாயாவின் உட்பகுதியிலே காணப் படுகின்றன. இன்றைய தைப்பிங்கு, கோலாலம்பூர் பட்டினங்களைச் சார்ந்தே இக்குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. கணிப்பொருளகழுந் தொழிலிற் சீனாே முக்கியமாக ஈடுபட்டனர்.
கணிப்பொருள் அகழுந்தொழில் விருத்திபெற்றதனுல் இத்தொழிலில் ஈடு பட்ட சீனருக்கும் விவசாயத்திலிடுபட்ட மலே இனத்தவருக்குமிடையிற் பொருளாதாரப் போட்டி ஏற்படவில்லை. இப்பகுதிகளில் மலே இனத்தவரின் குடியிருப்புக்கள் மிகவும் குறைவாக இருந்தமையே காரணமாகும். செலங்கர் பகுதியில் (கோலாலம்பூரைச் சூழவுள்ளது) மலே இனத்தவர் தொகை-மிக வும் குறைவாகும். கணிப்பொருள் அகழுந்தொழில் தொடங்கப்பட்ட காலத் திற் குடித்தொகை இவ்வாருக இருந்தது. சுல்தான் ஆட்சிப் பகுதியின் தலைப் பட்டினமான பண்டார் தேர்மசா உண்மையில் உடனலத்திற்கொவ்வாத, சுகா தார வசதி குறைந்த கிராமமாகக் காணப்பட்டது. இன்று போணியோவில் அாரத்தேயுள்ள தனிப்பட்ட கிராமக் குடியிருப்பை ஒத்ததாகவே இப்பட்டி னம் இருந்தது. கணிப்பொருள் அகழுந்தொழிலிலிடுபட்ட சீனர் சுல்தானிட மிருந்து நிலத்தைக் குத்தகைக்குப் பெற்றுக் கணிப்பொருள்களை எடுத்தனர். எடுக்கப்படும் கணிப்பொருள்களுக்கும் வரி செலுத்திவந்தனர். இத்தொழிலில் ஈடுபாட்டாரிடை நிலவிய போட்டி காரணமாக முதன்முதலில் இத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட பகுதிகளிற் பல சச்சரவுகள் காணப்பட்டன. நிலங்களை மலே தலைமையாளர் அளவீடு செய்து பிரித்துக்கொடுக்காமையால் ஒருவர் நிலத்தில் மற்ருெருவர் தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். கணிப்பொருள் அகழுந்தொழிலில் மலேத் தொழிலாளர் ஈடுபட மறுத்தனர். இதனுற் சீனத் தொழிலாளரே இத்துறையில் ஈடுபட்டனர். தொழிலாளர் அதிகமாகத் தேவைப்பட்டதனுல் பலவிதச் "சாட்டுக்களின்" அடிப்படையில் சீனர் பெருந்தொகையாகக் கொண்டுவரப்பட்டனர். போட்டி காரணமாக இவர்களிடைச் சண்டை சச்சரவுகள் மலிந்து காணப்பட்டன. சீனர் முன்பு வாழ்ந்த பகுதிகளிலிருந்தே இத்தகைய பண்புகளைப் பெற்றிருந் தார்கள். தென் சீனுவிலிருந்து வந்தவர்களிடையே பல வேறுபாடுகள் காணப்
8-CP 4217 (68/9)

Page 85
140 osorum: spisů 15ůuálusi)
பட்டன. பல கூட்டத்தினராக இருந்தமையால் மொழியிலும் வித்தியாசம் இருந்தது. ஒரு கூட்டத்தினர் மொழி மற்ருெரு கூட்டத்தினருக்கு விளங்கா திருந்தது. மலே இனத்தவருக்கு விளங்காதது போன்றே சீனருள் பலருக்கு மொழியை விளங்கிக் கொள்ள முடியாதிருந்தது. 1870 ஆம் ஆண்டிற்கு முன்பு மலாயாவில் வாழ்ந்த சீனரின் தொகைபற்றித் தெரியாது. 1891 ஆம் ஆண்டில் மட்டுமே மலாயாவில் 90,000 சீனத் தொழிலாளர் வந்திறங்கினர். அப்பொழுது மலாயாவில் 100,000 சீனத் தொழிலாளர் வரையில் கணிப்பொருளகழுந் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
சீனத் தொழிலாளர் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருள்களையே உட்கொண்டனர். இதனுல் இவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தயாரிப்பதற்காக ஏனைய சீனமக்கள் கடைகள் முதலியவற்றை நிறுவினர். மலேக் கிராமங்களிற் கடைகள் இல்லை. கணிப்பொருள் தொழிலிலும் பெருந்தோட்டங்களிலும் ஈடுபட்டார் காரணமாக வியாபாரம் முதன்மை பெற்றது. இதனுற் கிராமங்களைப் பெரும்பாலும் கொண்ட மலாயாவிற் பணக் திற்கு மதிப்பு ஏற்பட்டது. கிராமங்களிற் பல கடைகள் திறக்கப்பட்டன. வியா பார நிலையங்களும் நிறுவப்பட்டன. இத்துறைகளிற் சீனர் அநேகமாக ஈடுபட் டனர். இவர்கள் ஏலவே கிழக்கு ஆசியாவில் இத்தகைய அனுபவத்தைப் பெற் றிருந்தனர். வியாபாரத்தில் இவர்களுக்கு நல்ல பயிற்சியும் அனுபவமும் உண்டு. இதனுல் இன்று மலாயாவிலுள்ள கடைகள், சிறு வியாபார நிலையங் கள் ஆகியன பெரும்பாலும் சீனர் கையிலுள்ளன. ஓரளவுக்கு இந்தியவியா பாரிகளும் இத்துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இறப்பர்த் தோட்டங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளருட் சிலர் இத்துறைகளிற் பின்பு ஈடுபட்டனர்.
தகரம் எடுத்தற்முெழில்காரணமாக மலாயாவின் விவசாயத்தில் அதிகமாற் றம் ஏற்படவில்லை. இத்தொழிலில் பலர் ஈடுபட்டதனுல் அவர்களுக்கு வேண் டிய உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படலாம். ஆனல் மலே இனத்தவர் தமது பழைய முறைகளோடு ஒட்டியவர்களாகவே காணப்பட்டனர். 1874 ஆம் ஆண்டின் பின்பு அவர்கள் தொகை ஏழுமடங்காகப் பெருகியது. இயற்கையாகவே பெருக்கம் அதிகமாக ஏற்பட்டதனுல் உணவுப் பொருளுற்பத்தியைப் பெருக்குவது கடினமாக இருந் தஅது.
கோலாலம்பூர் தைப்பிங்கு முதலிய பட்டினங்களை நோக்கி மக்கள் பெருந் தொகையாக வந்துகுடியேறினர். அவர்களுக்கு வேண்டிய பொருள்களும் கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில் இப்பட்டினங்களிலிருந்து தகரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனுல் போக்குவரத்திற்காகச் சிறு புகையிாத விதிகள் அமைக்கப்பட்டன. இப்பட்டினங்கள் கடற்கரை நிலையங்களோடு (கிளாங்கு போட் வெல்ட்) இணைக்கப்பட்டன. முன்பு தகரம் சிறு வள்ளங்க ளில் ஏற்றப்பட்டு ஆறுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இத்தகைய போக்குவரத்து அத்துணை பொருத்தமானதாக இல்லை; பாதுகாப்புடையது

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 4.
எனவும் கூறமுடியாது. ஆறுகள் அருவிகள் ஆகியவற்றிற் கழிவுப் படிவுகள் நிறைந்துவிடுவதனுல் போக்குவரத்தும் தடைப்படுவதுண்டு. பழைய கணிப் பொருள் நிலையங்களை இணைப்பதற்காக நெடுக்காகவும் ஒரு புகையிரதப்பாரை பின்பு அமைக்கப்பட்டது. மேற்கிலுள்ள அடிக்குன்றுப் பகுதியிற் கணிப் பொருள் எடுத்தற்கு இது துணைசெய்தது.
1874 இன் பின்பு பிரித்தானியரும் தகரம் எடுக்குந் தொழிலில் அதிக கவ னம் செலுத்தினர். அவ்வாறிருந்தபொழுதும் இத்தொழில் பெரும்பாலும் சீனர் கையிலே இருந்தது. ஐரோப்பியரின் பணமுதலீடு, நிருவாகம், தொழில் நுட்பமுறைகள் ஆகியன இத்தொழில் சிறப்பாக விருத்திசெய்யப்படவேண் டிய நிலையில் முக்கியமாக இருந்தன. அதாவது, தொழிலுக்கு அதிக முதலிடு பெரிய இயந்திர சாதனங்கள் ஆகியன தேவையாகவிருந்தபொழுது, ஐரோட் பியரின் உதவி துணையாகவிருந்தது. உற்பத்திச் செலவைக் குறைக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
கோலாலம்பூர் கிளாங்கு, கொம்பாக் ஆறுகள் இணையுமிடத்தில் அமைந்துள் ளது. 1874 ஆம் ஆண்டில் இப்பட்டினம் சிறு குடிசைகளைக் கொண்ட அசுத்த மான பட்டினமாகவிருந்தது. ஆணுற் கோலாலம்பூர் நகர ஆட்சிப் பகுதியில் 350,000 மக்களுக்குமதிகமானேர் வாழுகின்றனர். 1947 ஆம் ஆண்டிக்குப் பின்பு ஏற்பட்ட உள்நாட்டுக் கெரில்லாப் போர் காரணமாக் மக்கள் இடம் பெயர்ந்தமைந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். அமைதியாகக் காணப்க்ட்ட சிறு சந்தைநிலையிலிருந்து கோலாலம்பூர் இன்று முக்கியமான தலைப்பட்டின மாக மாற்றமடைந்துள்ளது. இப்பட்டினம் மலாயாவிலுள்ள ஏனைய பட்டினங் களோடு தெருக்கள், புகையிரதப் பாதைகள், விமானப் பாதைகள் ஆகியவற் றினல் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச விமானத் தளம் ஒன்றும் உண்டு. செலங்கர் அரசாங்கக் கட்டடங்கள், கூட்டாட்சி அரசாங்கக் கட்டடங் கள், வியாபார நிலையங்கள், ஒழுங்காக அமைந்த வாழுமிடங்கள் முதலிய பல கட்டடங்கள் கோலாலம்பூரின் மத்தியில் உள்ளன. கிளாங்கு ஆற்றின் இருபுறத் திலும் இவை பரந்துள்ளன. ஆற்றின் கரைகள் உறுதியாக அமைக்கப்பட்டுள் ளன. கோலாலம்பூரின் மத்திய பகுதி நெருக்கமாக அமைந்த பகுதியாகும். மோட்டார் வாகனப் போக்குவரத்தினுலும் நெருக்கடி ஏற்படுவதுண்டு. மத் திய பகுதிக்கு அப்பால் பணமுதலாளிகள், நிருவாக உத்தியோகத்தர், அரசி யல்வாதிகள், பிறநாட்டு அரசாங்கத் துTதர்கள் ஆகியோர் வாழும் பகுதிகள் உண்டு. புதிய வீடுகள் பல இப்பகுதிகளிற் கட்டப்பட்டுள்ளன. கணிப்பொருள் எடுக்கப்பட்ட பழைய இடங்கள், பழைய இறப்பர் நிலங்கள் ஆகியவற்றிற் பல புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 1949 ஆம் வருடத்தின் பின்பு கோலாலம்பூர் நகர எல்லையைச் சார்ந்து ஆறு "கிராமங்கள்” புதிதாக நிறு வப்பட்டுள்ளன. இவற்றுள் பெத்தாலிங் யாயா ஒன்ருகும். தென் மேற்கில் பன்னிரண்டு மைல் தராத்தில் இது உள்ளது. தென் கிழக்கு ஆசியாவிலே திட்டமுறையில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட துணைப்பட்டினமாக இது விளங்குகின்றது. இப்பொழுது இங்கு 35,000 மக்களுக்கு மேற்பட்டோர் வாழு

Page 86
42 மலாயா: சமூகப் புவியியல்
கின்றனர். கோலாலம்பூர் மத்திய நகரமாய் விளங்குகின்றது. இதற்கு வாய்ப் பாக, மத்திய மலைத்தொடர்களுக்கூடாக வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு "மலையிடைத் தெரு' இதற்குப் பத்துமைல் வடக்கே உளது. கோலாலம்பூரில் வாழும் மக்களுட் பெரும்பாலோர் சீனராவர். மொத்தக் தொகையில் இவர்கள் 62 சதவீதத்தினராக உள்ளனர். 15 சதவீதமானுேரே மலே இனத்தவராவர். எனினும் மலே இனத்தவருள் இத்தொகையினரே பட் டினங்களில் வாழும் மிகக் கூடிய தொகையினராவர்.
1890 ஆம் ஆண்டையடுத்த காலப்பகுதியில் தைப்பிங்கு கோலாலம்பூர் புகை யிரதப் பாதை மலாக்கா, பிறை (பினுங்கோடு தொடர்புபடுத்த) என்பனவற் முேடு இணைப்பதற்காக நீட்டப்பட்டது. 1909 வரையில் இப்பாதை சிங்கப்பூர் வரை நீட்டப்பட்டது. இந்தப் புகையிரதப் பாதை நாட்டின் உட்பகுதியிற் பெரும்பாலும் அடிக்குன்றுகளைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது. மேற்குக் கரையோசப்பகுதியிலுள்ள சேற்றுநிலக் காடுகளிலிருந்து மிகவும் துரத்தில் இப்பாதை உள்ளது. இப்பாதை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுப் பொதுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. தனியாரின் முதலீடு இப்புகையிா தப் பாதையை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படவில்லை. தகரம் அகழ்தற் ருெழில் காரணமாகவே முதன் முதலிற் புகையிரதப் பாதை அமைக்கவேண் டிய நிலை ஏற்பட்டது. முதலில் தகரம் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலே இத் தகைய பாதைகள் அமைக்கப்பட்டன. புகையிரதப் பாதைகள் நிறுவப்பட்ட தன் காரணமாகத் தகரம் அகழ்ந்தெடுக்கும் தொழிலிலும் அதிக முன்னேற்றம் ஏற்பட்டது. மலாயாவின் பிற பகுதிகளின் விருத்திக்கும் இப்பாதைகள் துணை யாக இருந்தன. உள்நாட்டுப் பகுதியிலிருந்து ஏற்றுமதிப் பொருள்களைக் கொண்டு செல்வதற்குப் புகையிாதப் பாதைகள் பெரிதும் பயன்பட்டன. அல் லாமலும் உள்நாட்டுப் பகுதியில் வந்து குடியேறியவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இவை துணையாகவிருந்தன. பின்பு விருத்திசெய்யப்பட்ட பெருந்தோட்டங்களும் அவற்றேடு தொடர் புடைய கைத்தொழில்களும் பெரும்பாலும் நெடுக்காக நிறுவ பட்டுள்ள புகையிாதப் பாதைகளைச் சார்ந்தே காணப்படுகின்றன. புகையிரதப்பாதைகள் காடுகளுக்கூடாகவமைந்த சிறு நடை பாதைகளினல் தொடர்புபடுத்தப்பட் டிருந்தன. புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்ட பின்பே தெருக்கள் அமைக் கப்பட்டன. காட்டுப் பகுதி குதிரைகள் உட்பட்ட வீட்டு விலங்குகளுக்குப் பொருத்தமானதாய் இல்லை. இதனல் தெருக்கள் அப்பொழுது தேவைப்பட வில்லை. மோட்டார் வாகனப் போக்குவரத்து வந்தபின்பே தெருக்கள் முக்கிய மாக அமைந்தன. புகையிாதப் பாதைகளோடு தொடர்புடைய நடைபாதை ஒழுங்கைப் பின்பற்றியே பின்பு தெருக்கள் அமைக்கப்பட்டன.
மலாயாவில் முதலில் அமைக்கப்பட்ட தெருக்கள் புகையிரதப் பாதைகளுக் குத் துணையாக இருப்பதற்காகவே நிறுவப்பட்டன. புகையிரதப் பாதைக ளோடு போட்டியிடுவதற்காக அவை அமைக்கப்படவில்லை. எண்ணெயைப் பயன்படுத்தும் வாகனங்கள் உபயோகத்திற்கு வந்தபின்பே மேற்குக் கரை

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 13
யோசப் பகுதியில் நெடிய தெருக்கள் அமைக்கப்பட்டன. 1942 ஆம் ஆண்டு வரையிற் கிழக்குக் கரையோரப் பகுதியில் நெடிய தெருக்கள் எவையேனும் இருக்கவில்லை. ஆனல் இப்பகுதியில் மலைகள் பள்ளத்தாக்குக்கள் ஆகியவற்றுச் கூடாகப் புகையிாகப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மலைக் தொடருக்கு மறுபுறத்தில் கெமாசிலிருந்து கோடாபாறுவரை இப்புகையிரதப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மேற்குப் பகுதியிற் பாதைகள் நிறுவப்பட்ட முறையிலே கிழக்குப் பகுதியிலும் இப்பாதைகள் அமைக்கப்பட் டன. கிழக்குப் பகுதியிலுள்ள புகையிரதப் பாதை குவாந்தான் வரை தெரு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அப்பால் பகங்கு ஆற்றுப் பள்ளத்தாக்கோடு தொடுக்கப்பட்டுள்ளது. பகங்கு ஆற்றின் மத்திய பகுதி புகையிாதப் பாதைக்கு அண்மையாகவே காணப்படுகின்றது (படம் 36). 1942 வரை இப்புகையிாதப் பாதை அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை. 1942 ஆம் ஆண்டில் யப்பானி யர் இப்பாதையைப் பெயர்த்தெடுத்துத் தைலாந்திற் புகையிரதப் பாதை ஒன்றை அமைத்தனர். 1948 ஆம் ஆண்டிற் பழைய பாதை மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டது. அப்பொழுது கிராவுக்கூடாகப் போக்குவரத்து மீளவும் தொடங்கப்பட்டது. s தெருக்கள் நெருக்கமாகவுள்ள இரண்டு பகுதிகள் இங்கு உள்ளன. இவை மலாயாவிலுள்ள மலைத்தொடர்களினுற் பிரிக்கப்பட்டுள்ளன : *
(அ) பட்டர்வேர்திலிருந்து தெற்கே கிண்டாப் பள்ளத்தாக்குவரை, (ஆ) கோலா செலங்கரிலிருந்து முவார் வரை. இப்பகுதிகளிற் கணிப்பொருள் அகழ்ந்தெடுத்தல் பெருந்தோட்டச் செய்கை என்பன சிறப்பாகக் காணப்படுகின்றன. சிங்கப்பூர்த் தீவிலும் தெருக்கள் நெருக்கமாக உள்ளன. ஏனைய இடங்களில் தெருக்கள் ஐதாகவும் தொடர்பற் றனவாகவும் உள்ளன. கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் தெருக்கள் குறை வாக இருப்பதனுற் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனுற் சேற்றுக் கழிமுகங்களைக் கடந்து செல்வது இன்றும் கடினமாக உள்ளது. இவறறைபட * பாதைகள்' (Ferry) மூலமே கடக்க வேண்டியுள்ளது. வட-தென் தெருக் கள் பெரும்பாலும் அடிக்குன்றுப் பகுதிகளிலே காணப்படுகின்றன. கிரா நிலத் தொடருக்கூடாகச் செல்லும் தெருக்கள் இல்லை. இப்பகுதியிற் சிங்கோராவுக் கப்பாற் புகையிரதப் பாதையே முக்கியமாக உள்ளது. மத்திய மலைத்தொடருக் கூடாக இரண்டு தெருக்கள் காணப்படுகின்றன. இவை கணிப்பொருள் எடுக் கப்படும் குடியிருப்புக்களையும் பெருந்தோட்டக் குடியிருப்புக்கவேயும் இணைக் கும் தெருக்களாக உள்ளன. மத்திய மலைத்தொடரின் இருபுறத்திலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதியிலுள்ள இடங்களின் விருத்திக்கு இவை துணையாக உள்ளன. இவற்றுள் கமரூன் உயர்நிலம் முக்கியமான காய்கறி உற் பத்தி செய்யும் பகுதியாக இன்று விளங்குகின்றது (படம் 40). இப்பகுதியி லிருந்து தாழ்நிலப்பகுதிக்கு நாள்தோறும் போக்குவரத்து உண்டு.
1890 ஆம் ஆண்டில் தகரம் அகழ்ந்தெடுக்கும் ஆர்வம் சற்றே குறைவடைய இறப்பர்ப் பெருந்தோட்டச் செய்கைக்கு மதிப்பு ஏற்பட்டது. பிரித்தானியப்

Page 87
44 மலாயா: சமூகப் புவியியல்
பெருந்தோட்ட முதலாளிகள் இறப்பர்ச் செய்கைக்காகத் தெரிந்தெடுக்கப் பட்ட நிலங்கள் சீனரின் தகரத்தொழில் நடைபெறும் இடங்களுக்கு அண்மை யாக இருந்தன. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தகரம் காணப்பட்ட குன்று நிலங்கள் இறப்பருக்கு ஏற்ற சிறந்த வடிகால் முறையை உடையதா யிருந்தன. சேற்று நிலங்களுக்கு அப்பாலுள்ள இந்த நிலங்கள் இறப்பர்ச் செய்கைக்கு உவந்தனவாயிருந்தன. தகரத் தொழிலுக்காக அமைக்கப்பட்ட புகையிரதப் பாதைகள் இறப்பர்த்தொழிலுக்கும் ஏற்றனவாயமைந்தன. இறப் பர்த் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளருக்கு வேண்டிய அரிசியை வெளியிலிருந்து கொண்டுவரவேண்டியிருந்தது. இறப்பர்ப் பொருள்களைத் தோட்டங்களிலிருந்து ஏற்றுமதி செய்யவேண்டியுமிருந்தது. மேற்கிலுள்ள குன்று நிலங்களிலே இறப்பர்த் தோட்டங்கள் பெரும்பாலும் அமைக்கப்பட் டன. புகையிசதப்பாதையைச் சார்ந்து இத்தோட்டங்கள் நெடியனவாக அமைக்கப்பட்டன. பின்பு படிப்படியாக இறப்பர்த் தோட்டங்கள் பரந் தமைந்தபொழுதும் அவை பெரும்பாலும் புகையிரதப் பாதையோடு தொடர் புடையனவாகவே உள்ளன. புகையிரதப் பாதைகள், தெருக்கள் ஆகியவற்றிற் கும இறப்பர்த் தோட்டங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நிலப்பயன் பாட்டுப் படங்களிற் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
மலே இனத்தவர் பெரும்பாலும் தன்னிறைவுக்காகப் பயிர்களை விளைவிக்கும் நோக்கம் உடையவர். ஏற்றுமதிப் பயிர்களை இங்கு விளைவிப்பதை இவர்கள் அதிகம் விரும்பவில்லை. ஏற்றுமதிப் பயிர்களுள் இறப்பர் மிகவும் முக்கியமான தாகும். இது அதிக பணவருவாயைக் கொடுக்கும் பயிராகும். கரும்பு, கோப்பி, கம்பியர், தென்னை, நெய்த்தால மரம் முதயனவும் ஓரளவுக்குப் பயிரிடப்பட் டன. இப்பயிர்கள் யாவும் ஐரோப்பியராற் புகுத்தப்பட்டன. உள்நாட்டவர் இப்பயிர்களை விளைவித்தலில் அக்கறை காட்டாதவிடத்து ஐரோப்பியரே இப் பயிர்களை விளைவித்தலில் ஈடுபட்டனர். இத்தகைய நிலைமையே கிழக்கிந்தியத் தீவுகளிலும் காணப்பட்டது. பேமாவில் நிலைமைகள் வேறுபட்டனவாக இருந் தன. ஐரோப்பியர் இத்துறையில் ஈடுபடவும் பல பிரச்சினைகள் காணப்பட் டன. புதிய நிலங்களிலே இத்தகைய பயிர்களை விளைவிக்கவேண்டியிருந்தது. இந்நிலங்கள் வளமான மண்வகைகளைக் கொண்டிருந்தன. பெருந்கோட்டங் களில் வேலைசெய்வதற்குத் தொழிலாளரும் பெருந்தொகையாகத் தேவைப்பட் டனர். உள்நாட்டவர் பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் நாட்டமில்லாகவ ாாக இருந்தனர். உணவுப் பயிர்களை விளைவிப்பதிலே அவர்கள் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தனர். இதனுல் மலாயாவிற் பெருந்தோட்டங்களை நிறுவியோர் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளரை இறக்குமதி செய்தனர். இவ்வாறே தென் அமெரிக்காவிலுள்ள ஹேவியா இறப்பர் முதன்முதலில் மலாயாவில் ஐரோப்பியராற் பெருந்தோட்டங்களிற் பயிரிடப்பட்டது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் இத்தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்ட னர். மலே இனத்தவர் முதலாம் உலக யுத்தம் வரையும் பெருந்தோட்டச் செய்கையில் ஈடுபடவில்லை. யுத்த காலத்தையடுத்தே சில மலே இனத்தவர் இறப்பர்ச்செய்கையில் ஓரளவுக்கு ஈடுபட்டனர். ஆனல் இவர்கள் இறப்பரைச்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 45
சிறந்த முறையிற் பயிரிடவில்லை. இன்றுவரை பெரும்பாலான மலே இனக்க வரின் வாழ்க்கைமுறையிற் பெருந்தோட்டச் செய்கையினல் அதிக மாற்றம் டிம் படவில்லை. நெல் விளையும் நிலங்களல்லாத புதிய காட்டு நிலங்களிற் பெருந் தோட்டங்கள் அமைக்கப்பட்டபின்பு மலே இனத்தவரும் தோட்டவேலைகளில் ஈடுபட்டுப் பணம் சேகரிக்க முற்பட்டனர். 1954 ஆம் ஆண்டில் தோட்டத் தொழி லாளரில் 12 சத வீதமானுேர் மலே இனத்தவராயிருந்தனர். இந்தோனேசிய வகுப்பினரையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது அவ்வாண்டில் 18 சத வீத மானேர் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர்.
இத்தகைய நிலைமைகளினுல் மலாயாவின் மேற்கு மத்திய பகுதியில் இறப் பர்ச் செய்கை, தகரம் அகழ்தல் முதலிய தொழில்கள் விருத்தியடைந்தன. இப் பகுதி மலாக்காவிலிருந்து கோலாலம்பூருக்கூடாக ஈப்போ, தைப்பிங்கு ஆகிய இடங்கள் வரை பரந்துள்ளது. இப்பகுதியில் மக்களும் பெருந்கொகையாகக் காணப்படுகின்றனர் (படம் 44). இவர்களுட் பெரும்பாலோர் வெளிநாடுகளி லிருந்து வந்து குடியேறியவராவர். புதிய மாற்றங்களும் இப்பகுதியிலே ஏற் பட்டுள்ளன. இப்பகுதியின் மையமாகக் கோலாலம்பூர் பட்டினம் அமைந்துள் ளது. மலாயாக் கூட்டாட்சி நாட்டின் தலைநகரமாகக் கோலாலம்பூர் அமைந்தது மிகவும் பொருத்தமேயாம். இப்பட்டினம் முக்கியமாய் அமைவதற்கு விருத்தி பெற்ற இந்த வலம் மே காரணமாகும்; செல்வமிக்கதாய் இருப்பதோடு வர்த்தக முதன்மையும் உடையது. தகரத்திற்கும் இறப்பருக்கும் இவ்வலயம் புகழ்பெற் றது. கரையோரப் பட்டினங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது கோலாலம் பூரில் மலே இனத்தவரின் ஆதிக்கம் அதிகம் எனலாம். கோலாலம்பூர் பழைய சுல்தான் ஆட்சிப் பிரிவின் முதற்ப்ட்டினமாக முன்பு அமையவில்லை. பரம்பரை யாக முதன்மைபெற்ற பட்டினமாக இல்லாததால் மலாயாக் கூட்டாட்சி நாட் டின் தலைநகராக எளிதாக அமையமுடிந்தது. கோலாலம்பூர் மலாயாக் குடா நாட்டின் மத்தியில் அமையாத பொழுதும் மத்தியான வேருேர் இடம் இங்கு இல்லை. நாட்டின் பெளதிக ஏற்றத்தாழ்வுகளினுற் போக்குவரத்து முறைகள் பெரும்பாலும் பிரிக்கப்பட்டுள்ளன. 1925 ஆம் ஆண்டின் பின்பு கிளாங்கு புகை யிரதப் பாதை போட்சுவெற்றினம் வரை நீட்டப்பட்டுள்ளது. இதன்வழியாக தகர-இறப்பர் வலயத்திலிருந்து பொருள்களைக் கொண்டுசென்று ஏற்றுமதி செய்ய வாய்ப்பு எற்பட்டது.
குடித்தொகையிற் கூடிய அடுத்த இடம் சிங்கப்பூர்த் தீவாகும். மலாயர்வைப் பொறுத்தவரையில் இதனை மைய இடமாகக் கொள்ளமுடியாது. இதனைத் தென் கிழக்கு ஆசியா முழுவதற்குமுரிய ஏற்றுமதி இறக்குமதித் துறைமுகமாகக் கொள்ளல்வேண்டும். சிங்கப்பூர் மலாயாவிலும் வேறுபட்டது. மக்கள் வேறு பட்டவர்-1961 இல் 1,670,000 பேரில் 1,270,000 பேர் சீனாாய் இாத் கனர். பொருளாதார நடவடிக்கைகளும் வேறுபட்டன. பொருள் உற்பத்தியிலும் பார்க்க வியாபாரமே முக்கியமாக உள்ளது.
மலாயாவின் வடமேற்கு வடகிழக்குப் பகுதிகளில் மலே இனத்தவர் இன்றும் பழைய காலத்திற்போன்று வாழ்க்கை நடாத்தி வருகின்றனர். மீன்பிடிதொழி

Page 88
மலாயா சமூகப் புவியியல்
«error prirrën?) soorteurmuaben *## on-mri
驴月曼寸母0 屬韃 *osaurichaeae
·鲁鲁爵城奥编 ག་:șRouen, işeyesorry» -rows grŵposo wegsyon door «pouso ngạo
q'oogoo waewoon onung .000'i gyhyeseh ourveysol
46
 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 47
லும் வேளாண்மையும் இவர்களின் முக்கிய தொழில்களாகும். சுயதேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய தொழில்களாக இவை உள்ளன. மலாயாவின் மேற்குமச் திய பகுதியிற் சீனரும் இந்தியரும் பெருந்தொகையாக வந்து குடியேறியுளள, பொழுதும் இப்பகுதிகளிலுள்ள மலே இனத்தவர் இதனுற் பாதிக்கப்படவில்லை. இரண்டாவது உலக யுத்தத்தினுல் மலே இனத்தவர்களிடையே தேசிய உணர்ச்சி ஓரளவுக்கு ஏற்பட்டது. ஆனல் மலாயாவிலும் சிங்கப்பூரிலும் பெருந்தொகையாக வந்து குடியேறிய பிறநாட்டவரைக் கட்டுப்படுத்தக்கூடியவகையில் மலே இனத் தவரின் தொகை, வசதிகள் என்பன இருக்கவில்லை. மலாயாவில் மலே இனத் தவரோடு இந்தோனேசியாவிலிருந்து வந்து குடியேறியவர்களும் உள்ளனர். இந்த இருவகுப்பினரது தொகை சீன-இந்திய வகுப்பினரின் தொகையை ஏறத் தாழ ஒத்துள்ளது. மலாயாவிலுள்ளோர் பல்லினச் சமுதாய அமைப்பை உடை யர் எனக் கூறமுடியாது. பல வகுப்பினர் ஒரே இடத்தில் வாழ்வதையோ ஒரே தொழிலை மேற்கொள்வதையோ இவர்களிடைக் காணமுடியாது. இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட சமுதாய அமைப்பை உடையவர்களாய் உள்ளனர். மலாயாவின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் வேறுபட்ட பண்பாட்டையும், மொழிகளையும், இனப்பிரிவுகளையும், பொருளாதார முறைகளையும் உடையவர்க ளாய் உள்ளனர். இவர்கள் தனிப்பட்ட முறைகளில் வாழ்க்கை நடாத்துகின்ற னர். குறித்த சமூகங்களிடையே மட்டும் ஒழுங்கான தன்மை காணப்படுகின் றது. 1957 இல் இக்குடாநாடு மலாயாக் கூட்டரசு என்னும் சுதந்திர அரசாக இணைக்கப்பட்டது; 1963 வரையும் சுய ஆட்சியுடைய சிங்கப்பூர் மலாயாக் கூட் டாசின் வேருயிருந்தது. 1963 இல் இவை சராவாக், சாபா என்னும் அரசுக ளுடன் சேர்ந்து மலேசியக் கூட்டரசாக அமைந்தன.
மலாயாவிலுள்ள குடிகளின் பிரிவுகள் (1980-61 ஆம் ஆண்டு மதிப்பீடு, ஆயிரம் அளவில்)
மலே இனத்த இசீனர் இந்தியரும் ஐரோப்பிய மொத்தம்
oft பாக்கித்தானி | ரும் ஐரோவா
யரும் சியரும்
மலாயாக் குடா
நாடு - 3,500 2,600 787 82 7,050 சத வீத அளவில் 50 39 1. 1. OO
சிங்கப்பூர்த் தீவு 237 1,270 42 21 l,670 சத வீத அளவில் 14 76 8 00
மொத்தம் 3,737 3,870 929 N04 8,720 சத வீத அளவில் 43 44 9 100
இனவகுப்பினர் பாம்பல் மலாயாவில் வேறுபட்ட இன வகுப்பினர் குறித்த ஓர் ஒழுங்கு முறைக்கு ஏற் பப் பாந்துள்ளனர். யுத்தத்தினுல் இந்த ஒழுங்கில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்

Page 89
148 மலாயா: சமூகப் புவியியல்
ளது. யுத்தக் காரணங்களினல் மலாயாவின் மேற்கிலும் தெற்கிலும் குடிகள் பெருகியுள்ளமையோடு நகர வாக்கமும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகள் இன்றும் காணப்படுகின்றன. மற்றைய இனத்தவரிலும் பார்க்க இந் தியர்களிடையே அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம். 10,000 பேருக்கு மேற்பட்ட குடித்தொகையையுடைய இடங்களையே பட்டினங்கள் எனக்குறிப் பிடலாம் என்பது குடிமதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த பின்வரும் சுருக்கமான பகுப்பாராய்ச்சியாற் புலப்படும்.
மலே இனத்தவர்-கோடா பாறு, கோலாதிரெங்கானு, துன்குன் ஆகிய மூன்று பட்டினங்களில் மட்டுமே :லே இனத்தவர் பெரும்பான்மையாக உள் ளனர். மலே இனத்தவர் பொதுவாக நகரங்களில் வாழுமியல்புடையவரல்லர் என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். ஆயினும் பல பட்டினங்களின் எல்லைப்புறங்களில் மலே இனத்தவர் கூட்டமாக வாழுகின்றனர். மலே இனத் தவர் பெருந்தொகையாக வாழும் கிராமப் பகுதிகளாவன :
(1) வடகிழக்குப் பகுதி கெலந்தான் திரெங்கானுப் பகுதிகளிலுள்ள நெல்
விளையும் சமநிலங்கள் குறிப்பிடத்தக்கன. (2) வடமேற்குக் கரைப் பகுதி : இப்பகுதி தைப்பிங்கிலிருந்து தைலாந்தின் எல்லைவரை பரந்துள்ளது. மலே இனத்தவர் இப்பகுதியில் நெல் விளை வித்தல் மீன்பிடித்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தொடர்பாகக் கரைப் பகுதியில் நெருக்கமாக வாழுகின்றனர். (3) மலாக்காவிலிருந்து தெற்காக யோகூர்க் கரையைச் சார்ந்து சிங்கப்பூர் வரையுள்ள பகுதி : இந்த ஒடுக்கமான பகுதியில் மலே இனத்தவர் ஐதாகப் பாந்து காணப்படுகின்றனர். மலாயாவின் ஏனைய பகுதிகளில் மலே இனத்தவர் நெருக்கமாக இல்லை. கசைப் பகுதிகளிலும் ஆற்முேரங்களிலும் மலே இனத்தவர் மிகவும் ஐதாக உள்ளமை யாற் சிறிய படங்களில் இவர்களின் குடியிருப்புக்களைக் குறித்துக் காட்டுதல் கடினமாக உள்ளது. 1960 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி மலே இனத்தவர் 35 இலட்சத்திற்கும் அதிகமாக இருந்தனர். மலாயாவின் குடிக்தொகையில் இது 50 சத விதமாகும். போத்துக்கேயர் வழிவந்த ஐரோப்பியர் மலாக்காவிற் சிறு தொகையினராக வாழுகின்றனர்.
பிறநாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்கள்-பிறநாட்டிலிருந்து வந் தோருள் சீனரும் இந்தியரும் முக்கியமானவர்கள்; மேற்குக் கரையைச் சார்ந் அாள்ள 40 மைல் அகலமான பரப்பில் இவர்கள் நெருக்கமாகக் குடியேறி வாழு கின்றனர். மலாயாவிலுள்ள சீனருள் 90 சதவீதமானேரும் இந்தியருள் 95 சத வீதமானேரும் இந்த வலயத்திற் காணப்படுகின்றனர். மலாயாவிலுள்ள 35 பட் டினங்களுள் (10,000 பேருக்கு மேற்பட்ட குடித்தொகையையுடையவை) 26 பட்டினங்கள் இந்த வலயத்தில் உள்ளன. இந்த 26 பட்டினங்களில் ஏறக்குறைய 10 இலட்சம் சீனர் காணப்படுகின்றனர். பிற நாட்டினர் இப்பட்டினங்களையே பெரிதும் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் 49
பிறநாட்டிலிருந்து குடியேறியோர் சீரற்ற முறையிற் பரந்து காணப்படுகின் றனர். கிழக்குக் கரையிலும் கேடாவிலும் மிகக் குறைந்த அளவு சினரே குடி யேறியுள்ளனர். அவர்களின் தாயகமான சீனவை நோக்கி இப்பகுதி உள்ள பொழுதும் அவர்கள் அங்குக் குடியேறி வாழாமை வியப்புக்குரியதே. மத்திய மலைத்தொடருக்குக் கிழக்கில் ராவுப், பென்டொங்கு, குவாந்தான், கோடா பாறு என்பனவே ஒவ்வொன்றும் 10,000 பேருக்கு மேற்பட்ட சீனரைக் கொண்டுள் ளன. ஆனல் இத்தொடருக்கு மேற்கில் பட்டினங்கள் ஒவ்வொன்றும் 20,000 பேருக்கு மேற்பட்ட தொகையைக் கொண்டுள்ளன. கிளாங்கு, கோலாலம்பூர், ஈப்போ, தெலோ அன்சன், கம்பர், தைப்பிங்கு, பட்டர்வேர்த், ஜோர்ஜ்டவுன், செரெம்பான், ஆலோர்ஸ்டார் பாடுபகத், முவார், குளுவாங்கு, யோகூர்பாறு என்பன குறிப்பிடத்தக்கன. தகா இறப்பர் வலயத்தின் வடக்கிலுள்ள ஈப் போப் பட்டினம் தகரப் படிவுகள் பெருந்தொகையாகவுள்ள கிண்டாப் பள்ளத் தாக்கில் அமைந்துள்ளது. இங்கு 2% இலட்சம் சீனர் வாழுகின்றனர். ஏனைய மாவட்டங்களிலும் பார்க்கக் கோலாலம்பூரிற் சீனர் தொகை அதிகமாகும் (300,000 பேர் வரையில்). இதற்குத் தெற்காகத் தெருக்கள் புகையிரத விதிகள் என்பவற்றைச் சார்ந்து சிங்கப்பூர் வரையிற் சீனரது கிராமக் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. 1950 முதல் உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகக் கிராமங்களில் வாழ்ந்த ஐந்து இலட்சம் சீனர் கட்டாயமாகக் கொண்டு செல் லப்பட்டு 450 புதிய கிராமங்களிற் குடியேற்றப்பட்டனர். கிராமங்களில் ஐதா கக் காணப்பட்ட விவசாயிகள் ஒழுங்காக அமைக்கப்பட்ட புதிய கிகாமங் களிற் குடியேற்றப்பட்டனர். இதனுல் மலாயாவின் குடியிருப்புப் பரம்பலிற் சிறிது மாற்றம் ஏற்பட்டது. புதிய பல கிராமங்களிற் செறிவான காய்கறித் தோட்டங்கள் பரவி வருகின்றன. இக்கிராமங்களிற் பண்பாட்டு மாற்றங்கள் அரசியல் மாற்றங்கள் என்பனவும் விரைவாக ஏற்பட்டுவருகின்றன.
1950 ஆம் ஆண்டின் பின்பு பாதுகாப்புக் காரணமாக ஏற்படுத்தப்பட்ட குடி யிருப்பு மாற்றங்களினல் இந்தியரும் கூட்டமாகக் கிராமங்களில் வாழத்தொடங் கினர். மேற்குறித்த 35 பட்டினங்கள் தவிர்ந்த பகுதிகளிலே 78 சத விதமான இந்தியர் வாழுகின்றனர். இவர்கள் இறப்பர்த் தோட்டங்கள், தொழில் நுட்ப அறிவு குறைவாகத் தேவைப்படும் தொழில்கள் ஆகியவற்றிலே பெரிதும் ஈடு பட்டுள்ளனர். கோலாலம்பூரில் 54,000 இந்தியர் வாழுகின்றனர். சிங்கப்பூரில் 124,000 இந்தியர் உண்டு. ஏனைய மூன்று பட்டினங்களில் மட்டுமே 10,000 மேற் பட்ட இந்தியர் வாழுகின்றனர். எந்தப் பட்டினத்திலும் இந்தியர் பெரும் பான்மையினராக இல்லை. கோலாலம்பூர்-கிளாங்கு மலாக்கா வலயத்தில் இறப் பர்த் தோட்டங்கள் பெருந்தொகையாக உள்ளன. இவ்வலயத்திலே இந்தியரும் நெருக்கமாக உள்ளனர். கிண்டா முதல் பட்டர்வேர்த் வரையுள்ள பகுதியிலும் இந்தியர் நெருக்கமாக வாழுகின்றனர். மத்திய மலைத் தொடருக்குக் கிழக்கில் இந்தியர் தொகை குறைவாகும்.

Page 90
O மலாயா சமூகப் புவியியல்
பிரதேசப் புவியியல் மலாயாவைப் பிரதேசங்களாகப் பிரிக்கும் பொழுது மேல்வரும் விபரங்கள் பற்றி ஆராய்தல் அவசியமாகும்:
(1) உயர் நிலம் தாழ்நிலம் ஆகிய இரு பகுதிகளிலும் காடுகள் அடர்த்தியா கப் பரந்திருப்பதனல் மக்கள் தொழில் புரிவது கடினமானது. எனவே, பிரதேச வரையறைக்கு மலையியல் தன்மையை அடிப்படையாகக் கொள்வது பொருந்தாது. (2) சேற்று நிலங்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றிற் காணப்படும் காடுகளே
ஏனையவற்றிலும் பார்க்க மக்களுக்குத் தடையாக உள்ளன. (3) காலநிலை வேறுபாடுகளும் அதிகமாக இல்லை. அவை உள்நாட்டு நிலைமை களை அதிகம் பாதிப்பனவாக இல்லை. மழைவீழ்ச்சி ஒழுங்கினையே அவை கட்டுப்படுத்துகின்றன. (4) பெளதிகப் புவியியல் வேறுபாடுகளிலும் பண்பாட்ப்ெ புவியியல் வேறு
பாடுகளே அதிகமாக உள்ளன. (5) ஆற்றிடை நிலங்கள் சுதேசிக் கூட்டத்தினர் வாழும் பகுதிகளின் எல்லை களாகக் கொள்ளப்பட்டன. உட்பகுதிகளுக்குச் செல்லவும் அப்பகுதி கள் படிப்படியாக விருத்தியுறவும் ஆறுகளே காரணமாக இருந்தன. (6) போக்குவரத்துப் பாதைகளே நாட்டின் எல்லாப் பகுதிகளும் ஒழுங்காக இணைந்திருப்பதற்குக் காரணமாகும். விருத்திமுறைகள் எதிர்கால முன்னேற்றம் என்பவற்றுக்கும் இவையே துணையாக உள்ளன. (7) மலாயாவின் விருத்தியைப் பொறுத்தவரையில் உள்நாட்டு நிலைமை களோடு வெளிநாட்டுத் தன்மைகளும் பெரிதுங் காரணமாக உள்ளன. குடிப்பாம்பல் பொருளாதார விருத்தி என்பனவற்றை நோக்குமிடத்து மலா யாவை மேற்குப்பகுதி, கிழக்குப் பகுதி என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக் கலாம். இவற்றிடையே மத்திய மலைத்தொடர் எல்லையாக அமைந்துள்ளது. இத் தொடர் ஆறுகளே இருபுறத்தும் கொண்ட நீர்பிரி நிலமாக மலாக்கா தென்சீனக் கடல் என்பனவரை பரந்து யோகூர் பாறு, யோகூர் ஆறு ஆகியவற்றிற் கிடையே யோகூர்த் தொடுகடலில் முடிவடைகின்றது. மேற்கு மலாயாவிற் புகை யிாதப் பாதைகளும் தெருக்களும் பிரதான போக்குவரத்துப் பாதைகளாக உள்ளன. கிழக்கு மலாயாவில் ஆறுகள் மூலம் கடற்கரைவரை மேற்குக் கிழக் காகவே போக்குவரத்து நடைபெறுகின்றது. கடற்கரை ஓரமாகவும் போக்கு வரத்து உண்டு. குடாநாட்டிலுள்ள இந்த இரண்டு பகுதிகளிலும் வேறுபட்ட தாகச் சிங்கப்பூர்த் தீவு உள்ளது. மலாயாவின் இவ்விரு பகுதிகளையும் பின்வரு மாறு மேலும் பிரிக்கலாம் (நூலின்கடைசிப் பக்கம் பார்க்க).
மேற்குமலாயா
(அ) வட கடற்கரைச் சமநிலம்-மேற்கு மலைத்தொடருக்கு மேற்காகத் தைலாந்தின் எல்லையிலிருந்து வெலஸ்லி மாகாணத்திற்குச் சற்றுத் தெற்குவரை

தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பரந்துள்ளது. இங்கு மலே இனத்தவரே பெரும்பான்மையாக உள்ளனர். சிறிது வறட்சியுடைய காலநிலைத் தன்மையையுடைய இப்பகுதியில் சுயதேவைக்காக நெல் பயிரிடப்படுகின்றது. மலாயாவைச் சார்ந்து புறத்தேயுள்ள லங்காவித் தீவுகள், நாக்கோன் தொடரோடு தொடர்புடையனவாகத் தென்படுகின்றன. புவியியற் றன்மையிலும் புவிச்சரிதவியல் வேறுபாடுகளே முக்கியமாக உள்ளன. தீகவுளின் குடாக்களைச் சார்ந்துள்ள சுண்ணக்கல் நிலங்களில் சிறு தொகை யினாான மக்கள் வாழுகின்றனர்.
(ஆ) மலேயும் பள்ளத்தாக்கும் கொண்ட வலயம்-ஒதுக்காக இருப்பதோடு தரைத்தோற்ற வேறுபாடுகளும் உடையது. மேற்கு மலைத்தொடருக்கும் மத்திய மலைத்தொடருக்குமிடையிலுள்ள இவ்வலயம் அபிவிருத்தி குறைந்த பகுதி யாகும் ; தைப்பிங்கு-கோலா கங்சர் புகையிாதப் பாதைக்கு வடக்காக முடி வடைகின்றது.
(இ) தகர-இறப்பர் வலயம்-அடிக்குன்றுகளை உள்ளடக்கியுள்ளது. லாருட், கின்டாப் பள்ளத்தாக்கு என்பனவற்றிலிருந்து தொடங்கி போட் டிக்சனுக்குத் தெற்கிலுள்ள கரைப் பகுதியை உள்ளடக்கிச் சிங்கப்பூர்வரை பரந்துள்ளது. இந்த வலயத்தில் தகரம் அகழ்தல், இறப்பர்ச் செய்கை என்பன சிறப்பாகக் காணப்படுகின்றன. புகையிரதப் பாதைகள், தெருக்கள் ஆகியன நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. பொருள்கள் பெரும்பாலும் ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வலயத்திற் சீனர் கூட்டங்கூட்டமாக வாழுகின்றனர். இந்தியத்தொழிலாளர் கிராமப் பகுதிகளிற் பரந்து வாழுகின்றனர். மலாக்கா, நேகிரி செம்பிலான் என்னும் மாவட்டங்களில் மட்டுமே மலே இனத்தவர் சிறு தொகையினராக உள்ளனர். இவர்கள் சுயதேவைக்காகவே பயிர்களை வி%ள விக்கின்றனர்.
(ஈ) மேற்கு மத்திய சேற்று நிலக்கரை-பேராக், பேணும், செலங்கர், லங்காத் ஆற்றுக் கழிமுகங்களை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் விருத்தியற்றுக் காணப்படுகின்றது. விருத்திக்கு ஏற்றதாயும் இல்லை. கடற்கரையில் இடையிடை யேயுள்ள மேடான பாறை நிலங்களில் (டிங்டிங்கு என இவை வழங்குகின்றன) மீன்பிடி தொழிலிலும் தென்னைச் செய்கையிலும் ஈடுபட்டுள்ள மக்கள் வாழு கின்றனர். மேடான பாறை நிலங்கள் இன்று சேற்றுப் படிவாற் பின்ன64 பி லுள்ள நிலத்தோடு இணைந்து காணப்படுகின்றன. கடற்கரைப் பகுதியில் உட் பகுதியிலுள்ள இடங்களுக்குரிய துறைமுகங்களும் காணப்படுகின்றன. ஈப்போ, கின்டாப் பள்ளத்தாக்கு என்பவற்றேடு தொடர்புடையதாக தெலோ அன்சனும் கோலாலம்பூரோடு தொடர்புடையதாகப் போட்சுவெற்றினமும் அமைந் துள்ளன.
(உ) பினங்கு (அ) பிரிவுக்கும் (இ) பிரிவின் கின்டாப் பள்ளத்தாக்கிற்கு முரிய இறக்கியேற்றும் துறைமுகமாக உள்ளது.
முதன் முதலிற் பினங்குத் தீவு வாசனைத் திரவியங்களை வாங்குவதற்ாகம் வட கிழக்கு மலாயாவுக்குத் துணிகளையும் அபினையும் விற்பதற்கும் முக்கியமாக

Page 91
52 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
விருந்தது. வடமேற்கு மலாயாவின் மலைதொடர்களுக்கு அப்பாற் கருங்கற் பாறைகளை மையமாகக் கொண்டு பினங்குத் தீவு தனியாக அமைந்துள்ளது (இத்தீவு 110 சதுரமைல் பரப்பையுடையது; மிகக் கூடிய உயரம் 2,722 அடி யாகும்). வியாபாரம் கடற் படைத்தளம் என்பவற்றிற்குப் பயன்படலாம் என்ற காரணத்தாற் குடியேற்றம் இல்லாத இத்தீவு 1796 ஆம் ஆண்டிற் பெறப்பட்டு விருத்தி செய்யப்பட்டது. பிரித்தானிய வியாபாரக் கம்பனிகளுக்கும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிகளுக்குமிடையில் நிலவிய போட்டியினற் பினங்குத் தீவு மிகவும் முக்கியமான ஓர் இடமாகக் காணப்பட்டது. இந்து சமுத்திரத்தினூடாக வந்த பாய்க் கப்பல்களுக்கு ஏற்ற ஆழமான துறைமுகம் இங்குக் காணப் பட்டது. எனினும் கிழக்கு மேற்குத் திசைகளிலிருந்து விசும் கடூரமான புயற் காற்றுக்களினல் துறைமுகத்திலுள்ள கப்பல்கள் பாதிக்கப்பட்டன. மலாயா, தைலாந்து, பேமா முதலிய நாடுகளுக்கு முக்கியமான துறைமுகமாகப் பினங்கு முன்பு விளங்கியபொழுதும் பின்பு இந்த முதன்மையை இழந்துவிட்டது. இத ணுல் இது இறக்கியேற்றும் இடமாக மாறவேண்டியேற்பட்டது. மேலைத்தேச நாடுகளுக்கும் கீழைத்தேச நாடுகளுக்குமிடையேயுள்ள போக்குவரத்துப் பாதைகள் தெற்காக அமைந்துள்ளமையாற் சற்றுவடக்காக அமைந்துள்ள பினுங்கு முக்கியமான நிலையைப் பெற முடியவில்லை. மலாயாவிலும் தென் பகுதியிலே பின்பு விருத்தி அதிகமாக ஏற்பட்டது. அவ்வாறிருந்தபொழுதும் பினுங்குத் தீவிற் குடித்தொகைப் பெருக்கமும் வியாபார விருத்தியும் தொடர்ந்து ஏற்பட்டன. ஆனல், சிங்கப்பூசோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது விருத்தி குறைவாகும். 1790 ஆம் ஆண்டிற் குடிகளற்றுக் காணப்பட்ட பினங் குத் தீவில் 1801 ஆம் ஆண்டில் 20,000 மக்கள் காணப்பட்டனர். இவர்களுட் பெரும்பான்மையினர் சீனராவர். 1957 இல் குடித்தொகை 342,000 ஆகப் பெரு இக் காணப்பட்டது. இத்தொகையில் 70 சத விதமானேர் சீனராகவும் 11 சத விதமானேர் இந்தியராகவும் காணப்பட்டன்ர். அயலிலேயுள்ள வெலஸ்வி மாகாணத்தில் வாழ்ந்த 223,000 (1957) மக்களும் நிருவாக அடிப்படையிற் பினுங்கின் குடித்தொகையோடு சேர்க்கப்பட்டிருந்தனர். இப்பகுதியிற் காணப் பட்ட சீனருட் சிலரே தைப்பிங்குப் பகுதிக்குச் சென்று தகரம் எடுக்குந் தொழிலில் ஈடுபட்டனர். மலாயாவின் வட பகுதியிலுள்ள கனிப்பொருள் அக ழும் இடங்களைப் பொறுத்தவரையிற் பினங்கு முதலிலிருந்தே முக்கியமாக இருந்துவந்தது. இங்கு இன்றும் இரு கணிப்பொருள் உருக்கும் நிலையங்கள் காணப்படுகின்றன. இறப்பர்த் தோட்டங்கள் தெற்கே தாரத்தில் அமைக்கப் பட்டன. இறப்பர் வியாபாரம் முக்கியமாக வளர்ச்சி பெற்றபொழுது பினங்கின் வியாபார முதன்மை மேலும் குன்றியது. 1825 ஆம் ஆண்டிற் பினுங்கின் வியா பாரம் சிங்கப்பூரினதிலும் அரைவாசியாகவிருந்தது. 1864 இல் வியாபாரம் மூன்றிலொன்முகக் குறைந்தது. இந்த நூற்றண்டில் வியாபாரம் மேலும் குறைந்து காணப்படுகின்றது. எனினும் பினங்கு மூலம் நடைபெற்ற வியா பாரம் காரணமாக 1962 ஆம் ஆண்டில் 17,000 இலட்சம் தொலர் வருமானம் பெறப்பட்டது. இத்தொகையில் ஐந்திலொரு பகுதி சுமாத்திர்ா, பேமா, ஆகிய நாடுகளுக்குரிய இறக்கியேற்றும் வியாபார மூலம் பெறப்பட்டது.

மலாயா: சமூகப் புவியியல் 153
தைலாந்தின் புகையிரதப் பாதை மூலமாக கிராவிலிருந்து பெருந்தொகை யான அளவில் தகரமும் இறப்பரும் பினங்கிற்குக் கொண்டுவரப்பட்டன. இத் அறையிலும் பினங்கு சிங்கப்பூரோடு போட்டியிட முடியாது போயிற்று. தென் சீனக் கடற் பகுதியில் மிகமுக்கியமான இறக்கியேற்றுத் துறைமுகமாகச் சிங் கப்பூர் வளர்ச்சிபெற்றதே இதற்குக் காரணமாகும். பினங்குத் தீவிற் பினங்குப் பட்டினம் வடகிழக்குக் கரையிற் சிறு பாகத்தையே அடக்கியுள்ளது. இன்று பயிர்ச்செய்கை குறைவாகவே நடைபெறுகின்றது. கடந்த நூற்ருண்டின் பிற் பகுதியிற் கரும்பு, மரவள்ளி, வாசனைப் பொருள்கள் முதலியன இங்கு விளைவிக் கப்பட்டன. மலாயாவின் பெருந் தோட்டத் தொழில்கள் விருத்தி செய்யப்பட்ட பொழுது சென்னையிலிருந்து இந்தியத் தொழிலாளர் பினங்கு வழியாகவே வந்து குடியேறினர். ஜோர்ஜ் டவுனுக்கு எதிரே, பட்டர்வேர்துக்கு வடக்கே புதிய பட்டினமொன்று வளர்ச்சியடைந்து வருகிறது. கிழக்கு மலாயா
(அ) கோலா கிராய்க்கு வடக்கிலும் கிழக்கிலுமுள்ள கெலந்தான்-பெசுத் கழி முகப் பகுதி. பெரும்பாலும் கிராமத் தன்மையைக் கொண்ட இப் பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழுகின்றனர். மலே இனத்தவர் சொந்தத் தேவைக்காக நெல்லை விளைவிக்கின்றனர். மீன்பிடி தொழி அலும் அணைத் தொழிலாக அமைந்துள்ளது. * (ஆ) கிழக்குக் கரைப் பகுதி உள்நாட்டிலிருந்து அகன்ற சேற்று நிலத் தினுற் பிரிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மலே இனத்தவர் இடையிடையே வாழுகின்றனர். சொந்தத் தேவைக்காகப் பயிர்ச்செய்கையும் சிறிதளவுக்கு நடைபெறுகின்றது. கரையோாத்திற் சிறு வள்ளங்கள் மூலம் வியாபாரமும் நடைபெறுகின்றது. (இ) மேற்குப் பகங்கிலுள்ள மலைகளையும் பள்ளத் தாக்குக்களையுங் கொண்ட பகுதி. இது மத்திய மலைத்தொடருக்குக் கிழக்காகக் கெலந்தான் பள் ளத்தாக்கின் மத்தியிலிருந்து நேகிரி செம்பிலானின் உட்பகுதிவரை பரந்துள்ளது; மலைகளையும் பள்ளத்தாக்குக்களையும் கொண்ட தசைத் தோற்ற வேறுபாடுடையது. வடக்குத் தெற்காகவும் கிழக்கு மேற்காக வும் இரண்டு முக்கியமான பள்ளத்தாக்குக்கள் உண்டு. ராவுப்-பென் டொங்கு மாவட்டத்திலே பள்ளத்தாக்குக்களிற் சினர் கணிப்பொருள் அகழ்தற்முெழிலில் ஈடுபட்டுள்ளனர். தெற்கில் (கோலா பீலா) சிறு தொகையான மலே இனத்தவர் சொந்தத் தேவைக்காகப் பள்ளத்தாக் குக்களில் நெல்லை விளைவிக்கின்றனர். விருத்தி செய்யப்பட்டுள்ள இடங் கள் மத்திய மலைத்தொடருக்கூடாகத் தெருக்கள் மூலம் மேற்கு மலாயா வோடு இணைக்கப்பட்டுள்ளன. கெமாஸ் முதல் கோலாவிப்பிஸ்வரை வடக்குத் தெற்குத் திசையிற் செல்லும் புகையிரதப்பாதை கணிப் பொருள் அகழப்படும் இடங்களுக்குக் கிழக்காக உள்ளது. இப் பாதையைச் சார்ந்து இறப்பர்த் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Page 92
154
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
8. அடி 500 அடிச் சமவுய்ரக்கோடு இறப்பரும் கலப்பு
தென்னையும் 须
படம் 45. பிஞங்கு : தரைத்தோற்றமும் நிலப்பயன்பாடும்
(ஈ) திரெங்கானு உயர்நிலம் தூரத்தேயுள்ள பெரும்பாலும் மக்களற்ற பகுதி
யாகும். காடடர்ந்த இப்பகுதியின் கிழக்கு ஒசம்மட்டுமே வெளிநாட்ட வரால் விருத்திசெய்யப்பட்டுள்ளது. யுத்த காலம் வரை கிழக்கு ஓரத் தைச் சார்ந்துள்ள துன்குன் கெமமன் இரும்புச் சுரங்கத்தில் இரும்புத் தாது எடுக்கப்பட்டுக் கிழக்குக் கரைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. குவாந்தானுக்குப் பின்னணியிலுள்ள குங்கை லெம்பிங்கு தகரச் சுரங்கமும் முக்கியமானதாகும். இத்தொழில்களிற் பெரும்பாலும் சீனத்தொழிலாளரும் இந்தியத் தொழிலாளரும் ஈடுபட்டனர்.
 

மலாயா சமூகப் புவியியல் 155
(உ) பகங்குரொம்பின் பள்ளத்தாக்குகள் ஜெசன்டட்டிற்குத் தெற்கிலுள்ள பகங்கையும் குங்கை பேராவையும் உள்ளடக்கியுள்ளது ; ஐதான குடித் தொகையையுடைய விருத்தி குறைந்த பகுதியாகும். பகங்கின் மத்திய, கீழ்ப்பகுதியில் மலே இனத்தவர் சொந்தத் தேவைக்காகச் சிறிது நெல் விளைவிக்கின்றனர். ஆற்றைச் சார்ந்த மேடுகளிலும் சேற்று நிலங் களிலும் நெல் பயிரிடப்படுகின்றது. போக்குவாத்திற்கும் பகங்கு ஆறு பயன்படுத்தப்படுகின்றது. ஆனல் இது வியாபார முதன்மை பெற்ற ஒன்முக இல்லை. (ஊ) கிழக்கு யோகூர்-சேற்று நிலத்தினற் பிரிக்கப்பட்டுள்ள குன்றுநிலப் பகுதியாகும். ஐதான குடிப்பாம்பலைக் கொண்டது. யுத்த காலங்களுக் கிடையில் தகரம் அகழ்தல் (மேர்சிங்கின் பிற்பகுதியில்), இரும்புத் தாது அகழ்தல் (எண்டவுக்கு அண்மையில்), இறப்பர்த் தோட்டங்கள் (தெற்கில்) என்பன விருத்தி செய்யப்பட்டுள்ளன. முன்பு இப்பொருள் கள் கிழக்குக் கரைக்கே கொண்டு செல்லப்பட்டன. ஆனல் சிங்கப் பூருக்குத் தெருக்கள் அமைக்கப்பட்டதும் தகரம், இறப்பர் ஆகிய பொருள்கள் சிங்கப்பூர் வழியாக எற்றுமதி செய்யப்படுகின்றன. இத் துறையில் ஈடுபட்டுள்ளோரிற் பெரும்பாலார் சீனத் தொழிலாளராவர். முவார் சிம்பாங்கு கனன் எண்டவு ஆற்றுச் சேற்று நிலங்கள் கிழக்கு மேற் காகப் பரந்திருப்பதனல் தென்யோகூர் மலாயாவின் கிழக்கு, மேற்குப் பகுதிக ளோடு தொடர்பற்றுக் காணப்படுகின்றது. இத்தன்மை வரலாற்றுப் பாங்கில் முக்கியமாக உள்ளது. யோகூரை மலாயாவின் கிழக்கு மேற்குப் பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியாகக் கொள்ளுவது மிகவும் பொருத்தமாகும். சிங்கப் பூரின் பின்னணி நிலமாக இப்பகுதி அமைந்துள்ளது. யோகூரின் தெருக்கள் புகையிரதப் பாதைகள் என்பனவும் சிங்கப்பூரில் வந்து இணைகின்றன.
சிங்கப்பூர்
மலாயாவின் பெளதிகவமைப்பு, விருத்தி என்பன அக்குடாநாட்டில் உண் டாக்கும் விளைவைப் பொறுத்த வரையில் வெளிநோக்கி அமைந்தனவாகக் காணப்படுகின்றன. ஆனல், தென் மலாயாவைப் பொறுத்தவரையிற் போக்கு வாத்துப் பாதைகளும் தொடர்புகளும் மைய நோக்கி அமைந்தனவாக உள் ளன. சிங்கப்பூசே அப்போக்குவரத்துப் பாதைகளுக்கும் தொடர்புகளுக்கும் மையமாகவிருக்கின்றது. 1819 ஆம் ஆண்டிற்குப் பின்பே இத்தகைய தொடர்பு கள் சிங்கப்பூரை மையமாகக் கொண்டமைந்தன. இதற்கு முன்பு வெவ்வேறு காலப் பகுதியில் பாலெம்பாங்கு, மலாக்கா, வத்தாவி, பினுங்கு ஆகியன முக்கிய மாக இருந்தன. சிங்கப்பூர் சவ்விள்ஸ் என்பாருக்குச் சொந்தமாக மாறிய காலத்திலிருந்து அறுபது வருடத்திற்கு மேலாக இத் தீவு குடிகளில்லாத, விருத்தியற்ற நிலமாகவே காணப்பட்டது. சிங்கப்பூர் இன்று முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதற்கு வியாபாரமே காரணமாகும். மைய நாட்டத் தொடர்புகள் காரணமாகச் சிங்கப்பூர் இந்திய, சீன ஐரோப்பிய, கிழக்கு

Page 93
156 தென்கிழக்கு ஆசிய நாடுகள்,
இந்திய வியாபாரப் பொருள்களின் மிகமுக்கியமான ஏற்றுமதி இறக்குமதித் துறைமுகமாக அமைந்தது. இந்த நாடுகளின் பொருள்களைப் பொறுத்த வரை யிற் சிங்கப்பூர் ஓர் ஏற்றுமதி இறக்குமதித் துறைமுகமாக மட்டுமே இருந் தது. பின்பு மலாயாவின் தகர ஏற்றுமதியும் வளர்ச்சிபெற்றது. அப்பொழுதும் சிங்கப்பூர் ஏற்றுமதி இறக்குமதித் துறைமுகமாகவே காணப்பட்டது. இந்த நூற்றண்டில் மலாயாவின் தகரம் இறப்பர் ஆகிய பொருள்கள் வர்த்தக முறை யில் உலக முதன்மை பெற்றன. மலாயாவிலிருந்து இப்பொருள்கள் யாவும் சிங்கப்பூருக்கூடாகவே ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனுற் சிங்கப்பூர் தகரம், இறப்பர் ஆகிய பொருள்களுக்கு மிக முக்கியமான சந்தையாக அமைந்தது. கிழக்கு இந்தியப் பகுதியும் ஏனைய தென்கிழக்கு ஆசியப் பகுதிகளும் இப் பொருள்களை மேலுமதிகமாக உற்பத்தி செய்தமையால் இப்பகுதிகளின் வியா பாரமும் சிங்கப்பூர் வழியாக நடைபெறத் தொடங்கியது. இந்த அடிப்படையில் சிங்கப்பூர் வரியிறுக்காத் துறைமுகமாக ஆரம்பத்திலிருந்தே அமைந்துவிட்டது. மலாயாவின் வியாபாரத்திற்கான வரி, யோகூர்த் தொடுகடற்றுறையிலே (சிங்கப்பூரில் இல்லை) பெறப்படுன்றது. யோகூர்த்தொடுகடற் பகுதி 1918 இற்கு முன்பு குடாநாட்டோடு பாலமூலம் இணைக்கப்படாதிருந்தது. இன்றும் இப் பகுதி நிருவாக அடிப்படையில் வேறுபட்டதாய் உள்ளது. சிங்கப்பூர்த் தீவு வாசனைப் பயிர்கள், மிளகு, இறப்பர் ஆகிய பயிர்களைச் சிறப்பாக விளைவித்தற் குப் பொருத்தமானதாயில்லை. வியாபாரமே இங்கு முக்கியமாக உள்ளது.
பிரித்தானிய, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிகளின் போட்டி காரணமாக ரவ் விள்ஸ் சிங்கப்பூர்த்தீவில் நான்கு மாதங்களிலே ஒரு துறைமுகத்தை நிறுவி விட்டார். துறைமுகம் அமைக்கப்பட்டதும் சிங்கப்பூரில் 5,000 சீனர் வந்து குடியேறினர். சீனர் வியாபார நுணுக்கம் தெரிந்தவராய் இருந்தமையால் பிரித்தானியரின் வியாபார நோக்கங்களுக்கு இவர்கள் துணையாக இருப்பர் என ரவ்விள்ஸ் எண்ணினர். மலாயாத் தீவுத்தொடர்ப் பகுதியிற் சீனர் ஏலவே வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அல்லாமலும் சவ்விள்ஸ் சீனுவின் வியா பாரத்திலும் கண்ணுடையவராயிருந்தார். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி அப்பொழுது இந்தியாவையே மையமாகக் கொண்டிருந்தது. இதனுல் 1867 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூரின் விடயங்கள் யாவும் இந்தியாவிலிருந்தே கவனிக்கப்
LILL - 60T.
சிங்கப்பூர்த் தீவின் புவியியல் தன்மைகளை 46 ஆம், 47 ஆம், 48 ஆம் படங் களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். 220 சதுர மைல் பரப்பையுடைய சிங்கப்பூர்த்தீவு, பெளதிகவியல்புகளையும் நிலப்பயன்பாட்டு வேறுபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகளின் எல்லைகளாக மாங்குரோவுச் செடிகளைக் கொண்ட தாழ்வான பகுதி. கள் உள்ளன. தீவின் தென், கிழக்குப் பகுதிகள் பல வருடங்களாக நகரவாக்கம் பெற்று வந்துள்ளன. இப்பகுதிகளில் ஏற்பட்டுவரும் பெருக்கமே இதற்குக் காரணமாகும். வடபாலுள்ள சிறு பட்டினங்கள் கடற்படைத் தளங்களோடு தொடர்புடையனவாக உள்ளன. சாங்கி என்னுமிடத்தில் விமானத் தளம் உள்

மலாயா: சமூகப் புவியியல் 157
ளது. பாசிர் பஞ்யாங்கைச் சார்ந்த மேற்குப் பாகம் இராணுவத் தளமாகும், இது நகரப் பகுதிக்குச் சற்றுத் தூரத்தில் உள்ளது. நகரத்தின் மத்தியில் நீர்ச் தேக்கம் இருப்பதால் நகர்ப்புற வளர்ச்சிக்கு இடமில்லையாகின்றது. இதனுல் துணைப்பட்டின வளர்ச்சி ஏற்படுவது அவசியமாக உள்ளது. சிங்கப்பூரின் குடிச் தொகை இப்பொழுது 17% இலட்சத்திற்கும் அதிகமாகும். குடித்தொகை அதிக மாக இருப்பதனுல் சிங்கப்பூர்த் தீவில் நகரத்திற்கும் சூழவுள்ளபகுதிக்கும் அதிக வேறுபாடு இல்லை.
ÖS :ேசேற்றுநிலம் N్య
படம் 46. சிங்கப்பூர்த் தீவின் பெளதிக நிலைமைகள்
மலாயாக் குடாநாட்டில் ஏலவே அமைந்துள்ள பட்டினங்கள் போன்று சிங் கப்பூர் நகரமும் நீள்சதுர வீதி அமைப்பைக் கொண்டுள்ளது. வீடுகளும் அமைப்பு முறைகளும் பெரும்பாலும் மேலைநாட்டு முறைகளை ஒத்துள்ளன. ஆனல் இங்கு வசிப்போரிற் பெரும்பாலார் சீனராவர். இவர்களது தொழில் முறைகள் யாவும் கடலோடு தொடர்புடையனவாகும். கடற்கரையைச் சார்ந்து சமுத்திரங்களிற் செல்லும் கப்பல்களும் சிறிய தீவுகளிடையிற் பிரயாணஞ் செய்யும் நூற்றுக்கணக்கான சிறு வள்ளங்களும் காணப்படும். இவற்றுட் சில ஒழுங்காக அமைக்கப்பட்ட துறைமுகங்களில் வந்து இணைகின்றன. ஏனையவை கடற்கரைப் பகுதிகளிற் பொருள்களை ஏற்றி இறக்குகின்றன. சிங்கப்பூர் மிகவும் ஆழமான துறைமுக வசதிகளைக் கொண்டுள்ளது. 100 மைல் ஆசமுள்ள குழ லில் இத்தகைய வேறு துறைமுகம் இல்லை. கப்பல்கள் தங்கக்கூடிய வசதிக ளோடு பண்டகசாலைகளும் உண்டு. சீனர்களுக்குச் சொந்தமான நீராவிக் கப்

Page 94
158 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பல்களும் இங்கு அநேகம் உண்டு. இங்குள்ள தீவுப் பகுதிகளுக்கும் ஏனைய தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கும் இக்கப்பல்கள் போய் வருகின்றன. சிங்கப் பூர் பல வழிகளிற் சிறப்புடைய ஒரு தீவாகும். இங்குள்ளோரின் வாழ்க்கை முறை சீனர் வாழ்க்கை முறையாகும். உடை ஐரோப்பிய உடையாகும். வியா பார முறை சீனரின் வியாபார முறையாகும். பேசும் மொழி ஆங்கில மொழி யாகும். பசாரில் மலே மொழியும் சிறிது உபயோகிக்கப்படுகின்றது. அண்மை யில் வந்து குடியேறிய சீனர் சீன மொழிகளையும் பேசுகின்றனர்.
Sபோமேர்பவு % 6t)
கெப்பெல் துறைமுகமி>S gnetif. في ستعتنقسم
}ਨੇ KK பிளக்காங் மாதி
படம் 47. சிங்கப்பூர்த்தீவின் வடிகால் முறைகள்
சிங்கப்பூர் மக்களில் மூன்றிலிரண்டு தொகையானேர் கடற்கரையைச் சார்ந்த 38 சதுரமைல் பரப்பில் வாழுகின்றனர். கிழக்குப் பகுதியில் சில முக்கியமான துணைப்பட்டினங்களும் உண்டு. மேற்குப் பகுதியில் மக்கள் ஐதாக வாழுகின்ற னர். ஆயினும் யூரோங்கு ஆற்றின் மேற்கில் அப்பெயருடைய சார்பு நகரம் ஒன்று விரைவாக விருத்தியடைந்துவருகிறது. இப்பொழுது சிங்கப்பூரில் வந்து குடியேறுவோர் இல்லை. எனினும் சிங்கப்பூரின் குடித்தொகை வருடத்தில் 6.8 சத விதமாகப் பெருகுகின்றது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய பெருக்கம் இல்லை.
சிங்கப்பூரின் உள்நாட்டுப் போக்குவரத்து முறைகள் சிக்கலானவையாகும். இங்குத் தெருக்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. புகையிசதப் பாதை மலாயாவின் வியாபாரத் தொடர்பையே முக்கியமாகக் கொண்டுள்ளது. 1958 இல் இருவழியிலும் கொண்டுசெல்லப்பட்ட பொருள்கள் ஏறத்தாழச் சம மாகவிருந்தன. நெடிய தெருக்கள் மூலம் இருவழியிலும் போக்குவரத்து நடை
 

மலாயா சமூகப் புவியியல் 6)
பெறுகின்றது. 1962 ஆம் ஆண்டில் சிங்கப்பூர்த் துறைமுகத்தில் 7,800 வெளி நாட்டுக் கப்பல்கள் வந்து தங்கின. இந்த ஆண்டில் 9,000 சிறு வள்ளங்களும் இத்துறைமுகத்தைப் பயன்படுத்தின. சிங்கப்பூரின் வியாபாரப் பெறுமதியில் மூன்றிலொரு பகுதி மலாயா மூலமாகப் பெறப்படுகின்றது. மலாயா இப்பொழுது ஒரு தனி நாடாகவுள்ளது. நாலிலொரு பகுதி இந்தோனேசியாவி லிருந்து பெறப்படுகின்றது. சிங்கப்பூரிலிருந்தும் பெருந்தொகை இந்தோனேசி யாவுக்குச் செல்லுகின்றது. சிங்கப்பூரிலுள்ள ஐரோப்பிய வியாபாரிகள் பரும் படிப் பொருள்களைத் தொகையாக இறக்குமதி செய்கின்றனர். சீனரும் இந்திய ருமே இவற்றைச் சில்லறையாக விற்கின்றனர். தகரத்தாது சிறிதளவுக்கு உருக் கப்படுகின்றது. சிங்கப்பூர்த்தீவுக்கு அயலிலுள்ள சிறு தீவு ஒன்றில் பழைய உருக் கும் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அண்மையாகவுள்ள ஏனைய தீவுகளில் நிலநெய் சேமித்து வைக்குமிடங்கள் உள்ளன. சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப் படும் பொருள்களுள் மிகச் சிலவே பரும்படிப் பொருள்களாக மாற்றி அமைக் கப்படுகின்றன. சிங்கப்பூரில் நடைபெறும் தொழில்களுள் முக்கியமானவை பொருள்களை இறக்குதல், ஏற்றுதல், கொண்டுசெல்லுதல், கப்பல்களில் ஏற்று தல், சிறு சிறு தொகையினவாகப் பிரித்தல், தாம் வகுத்தல், சேர்த்தல், விநியோகித்தல் என்பனவாகும். வியாபாாத்தில் தாகுத் தொழிலே முக்கிய மான இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக இலாபம் பெறப்படுகிறது. உணவுப் பொருள் விநியோகமும் சிங்கப்பூரில் முக்கியமாக உள்ளது. தோட்டங் களுக்கும் கனிப்பொருள் எடுக்கப்படும் இடங்களுக்கும் வேண்டிய பொருள் களும் விநியோகிக்கப்படுகின்றன. தைலாந்து, பேமா ஆகிய நாடுகளிலிருந்து அரிசியும், சீனு, அவுஸ்திரேலியா என்பவற்றிலிருந்து ஏனைய உணவுப்பொருள் களும், தீவுப் பகுதியிலிருந்து கருவாடும், யப்பான், சீனு, பிரித்தானியா ஆகிய வற்றிலிருந்து புடைவையும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 1951 இல் சிங்கப்பூரின் மொத்த வியாபாரம் 100,000 இலட்சம் தொலராகக் காணப் பட்டது. "இத்தொகை ஏனைய வருடங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மிகவும் அதிகமாகும். 1960 இல் இத்தொகை 57,000 இலட்சம் தொலராகக் குறைந்து காணப்பட்டது. இந்த ஆண்டில் சிங்கப்பூரிலிருந்து 11 இலட்சம் தொன் இறப்பரும், 37,000 தொன் தகாத்திலடைத்த அன்னசியும், 20,800 கொன் தகரமும் (மலாயாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்காகக் கொண்டுவரப் பட்ட பொருள்கள்) ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டில் சிங்கப்பூரின் தேவைக்காகவும், மீள ஏற்றுமதி செய்வதற்காகவும் பல பொருள்கள் இறக்கு மதி செய்யப்பட்டன. அதாவது சுமாத்திரா, போணியோ ஆகியவற்றிலிருந்து 52 இலட்சம் தொன் சுத்தஞ்செய்யப்படாத நிலநெய்யும், தைலாந்து, பேமா என்பவற்றிலிருந்து 105,000 தொன் அரிசியும், 88,000 தொன் கொப்பாாவும், 1430 இலட்சம் சதுசயார் பருத்திப் புடைவையும் (யப்பானிலிருந்து 50 சத வீதமும, சீனவிலிருந்து 25 சத விதமும்), 840 இலட்சம் சதுர யார் செயற் கைப் பட்டுத்துணியும் (யப்பானிலிருந்து 80 சதவீதம்), 16,000 தொன் மிளகும் *1964 இல் 1 மலேசியத் தொலர், அ. ஐ. மாகாணங்களின் 33 சதத்திற்கும், பிரித்தானி யாவின் 2 சிலின் 4 பென்சிற்கும் சமமாகவிருநதது.

Page 95
160 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
(சுமாத்திரா, சராவாக், பங்கா, பிலிற்றன் என்பனவற்றிலிருந்து) இறக்குமதி செய்யப்பட்டன. மலாயாக் கூட்டாட்சி நாட்டுக்குரிய வியாபாரம் அதன் சொந் தத் துறைப்பட்டினங்கள் மூலமே நடைபெற வேண்டும் என்னும் தேசியப் போக்கினல் இந்த வியாபார ஒழுங்கு பெரிதும் குழப்பமுற்றது. இதன் விளை வாகச் சிங்கப்பூரின் வியாபாரம் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டது, வேலையில் லாப் பிரச்சினையும் தொழிலாளர் குழப்பமும் பெருகிக் காணப்பட்டன. ஆகவே பெருநிலப் பகுதியோடு சிங்கப்பூர் நெருங்கிய அரசியற் ருெடர்பு கொண்டிருத் தல் வேண்டுமென்ற கருத்து வலிமை பெற்று வந்து, முடிவிலே மலேசியக் கூட் டாட்சி நாடு உருவாவதற்கு வழி வகுத்துவிட்டது.
செலிடார்.... 4“}} த்திடல்? :s 。 گی
of தெங்கா O விமானத்திட் бөлі з; நீர்தீதே 蔷
திமா A 4 صمبے حین۔°::
ாத்தோ-ஆபவமறுத்துறை تحت |யூஇந்த QZ ific இாஜ்ரிஜ் 総○xも4Sリ% m Sys/ A. 2 . இடொங்கு يقول:
Y* tung SS கல்லாங்கு
○ダపైకి மாங்குரோவும்
கற்பார்Nஆ2துறைமுகம் கல்தான் ଝୁ_g mari) கிாடும் *மண்றறிடல் க்கும் வேதகாங் மாதி
வெளிச்சம் (S
படம் 48. சிங்கப்பூர்த் தீவின் நிலப்பயன்பாடு
துறைமுகத்தைச் சூழ்ந்து கருமையாகவுள்ள பகுதி மிகவும் முன்னேற்றமடைந்த நகர மையபாகும். இதனைச் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளிற புறநகர்த் "தோட்ட வலயம்” விரைவில் விசாலித்து வருகின்றது. வெண்மையாக உள்ள இடங்களில் இறப்பர், தென்னை புதர், காய்கறித் தோட்டம் ஆகியன உள்ளன
சிங்கப்பூர் பாதுகாப்பான தன்மை குறைவாகவுள்ள ஒரு பிரதேசத்தில் அமைந்துள்ளபொழுதும், 1946 ஆம் ஆண்டின் பின் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றது. தொழிலாளரின் சம்பளம் உயர்ந்ததோடு முதலீடும் அதிக அளவுக்கு இடம்பெற்றது. உள்நாட்டுச் சந்தை பெருகியதனல் சிறிதளவுக்குக் கைத்தொழிற் பெருக்கமும் ஏற்பட்டது. இயந்திர வேலைத்தளங் கள் (கிப்பற் போக்குவரத்தோடும் தெருப்போக்குவரத்தோடும் தொடர்புடை பன) பெருகின. சிங்கப்பூருக்கு நடுவாக வடக்கே யோகூருக்கும் மேற்கே யூரோங்குக்கும் செல்லும் தெருவைச் சார்ந்து தொழிற்சாலைகள் அமைந்தன. தகரப் பெட்டிகள், மூடிகள், மின்பற்றறிகள், கண்ணுடிப் பொருள்கள், உணவுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலாயா: சமூகப் புவியியல்
பொருள்கள், கைத்தொழில் வாயுக்கள், தளபாடப் பொருள்கள், செங்கட்டிகள், குழாய்கள், ஒட்டுப்பலகை முதலிய பொருள்கள் இத்தொழிற்சாலைகளில் உற் பத்தி செய்யப்படுகின்றன. இவை காரணமாகச் சிங்கப்பூரின் தொழில்முறைகள் பலவாகக் காணப்படுகின்றன. சிங்கப்பூரில் தொழிலாளர் செலவு மிகவும் அதிக மாக உள்ளது. வலு, நீர்வளம் என்பனவும் குறைவாகும். இக்காரணங்களினுல் உலக நாடுகளின் போட்டியைச் சிங்கப்பூர் எந்த அளவுக்குத் தாங்கிக்கொள்ளும் என்பதைத் திட்டமாகக் கூறமுடியாதுள்ளது. சேரியா, சுமாத்திரா ஆகிய பகுதிகளில் நிலநெய் பெருந்தொகையாக எடுக்கப்படுவதனல் சிங்கப்பூர்த் துறைமுகத்திற்கு நிலநெய் தொகையாகக் கொண்டுவரப்படுகின்றது. இது அண்மையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க ஒரு மாற்றமாகும். இதனல் ஆங்கே எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையமொன்று தோன்றியுளது.

Page 96
அத்தியாயம் 9 பேமாவின் இயற்கை நிலத்தோற்றம்
சண்டாமேடைச் குழலுக்கு உதாரணமாக மலாயா அமைந்துள்ளது. சண்டா மேடைக்கும் இமாலயத் தொகுதிக்கும், ஒரமாகவுள்ள பகுதியின் குழலுக்கு உதாரணமாகப் பேமா உள்ளது. தென் கிழக்கு ஆசியத் தீவுத்தொடர்களின் புவியியற் குழலுக்கும், மேற்குச் சீன, இந்தியா ஆகியவற்றின் மலைசார் குழலுக் கும் இடைப்பட்ட நிலைமாறு பகுதியில் பேமா அமைந்துள்ளது.
பெளதிகவுறுப்பியல் பேமாவின் பெளதிகவுறுப்பியல் மேலெழுந்தவாரியாய்ப் பார்க்கும்போது எளி தானதாய்த் தோன்றும்; ஆயினும் அது ஓரளவு சிக்கலானதே. குறிப்பாக அதன் வெவ்வேறு பகுதிகளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு சிக்கலான தாகக் காணப்படுகின்றது. தரைத்தோற்ற அமைவு ஒழுங்கில்லாத 'V' தலை கீழாக இருப்பதற்கு ஒப்பக் காணப்படுகின்றது.
y( பூற்றவோவுக்கு வடக்கிலுள்ள பெயரற்ற ஒரு மலைமுடிச்சிலிருந்துھیے } தரைத் தோற்றம் அமைந்துள்ளது. 20,000 அடிக்கு மேல் உயரமுள்ள தொடர்கள் மிகவும் சிக்கலான முறையிற் காணப்படுகின்றன. மேற் குக் கிழக்காகவுள்ள இமாலய மடிப்பு மலைத்தொடர்கள் பெருவளைவா கப் பரந்திருப்பதோடு தெற்கில் வில்போன்று வளைந்தும் பேமாவின் மேற்கு மலைத்தொகுதியாக அமைந்துள்ளன. (அரக்கன் யோமாத் தொடர் முக்கியமானது). சண்டா மேடையின் ஓரத்தைச் சார்ந்து தெற்கிலும் மேற்கிலும், சுமாத்திசா, யாவா ஆகியவற்றை உள்ளடக்கி ய்னவாய் இத் தொடர்கள் அப்பாலும் பரந்துள்ளன. (ஆ) கிழக்கில் அதி தூரத்தில் சான் உயர்நிலம் அமைந்துள்ளது. பூற்ருவோ முடிச்சிலிருந்து மலைத்தொடர்கள் சான் உயர்நிலத்தை நோக்கித் தெற்காகப் பரந்துள்ளன. ஆனல் மலைத்தொடர்களுக்கும் நிலவமைவி லுள்ள ஒற்றுமைக்கும் அதிக தொடர்பு காணப்படவில்லை. (இ) மேற்கு மலைத்தொடர்களுக்கும் சான் உயர்நிலத்திற்கும் இடையில் ஐராவதி வடிநிலம் அமைந்துள்ளது. வடிநிலம் தெற்கு நோக்கிச் சரிந்திருப்பதோடு அகன்றும் காணப்படுகின்றது. தெற்கு ஒரத்தில் சங்கூன குடா உளளது. (ஈ) இன்றைய அரசியற் பிரிவாகவுள்ள பேமா கிராப்பூசந்தியை நோக்கி
ஒடுங்கியுள்ளது. மலேக் குடாநாட்டின் மலைத்தொடர்கள் இதற்க.ட கச் சான் உயர்நிலம்வரை பரந்துள்ளன. பேமாவின் இப்பூசந்திப் பகுதி தெனசெரிம் என வழங்கப்படுகின்றது.
69

பேமா இயற்கை நிலத்தோற்றம்
རྨི་
ITassGeshth &6@历 Kமேற்குக் óm@ Nகீழ்ப் பேமாக் கழிமுகம்
iபெகூ Guunruofir Zசான் உயர்நிலம்
ದಿ: [8]àar\| 国リーエーデ刺
வட ஐராவதி வடிநிலம « - »x « - » Y• •**
படம் 49. பேமாவின் பகுதிகள்
168

Page 97
164 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பேமாவில் மூன்று முக்கியமான பெளதிகவுறுப்பியற் பிரிவுகள் உண்டு. அவை மேற்கு மலைத்தொகுதி, சான் உயர்நிலமும் தெனசெரிமும், ஐராவதி வடிநிலம் என்பனவாகும். (படம் 49). இவற்றுள் ஐராவதி வடிநிலப் பகுதியே அதிக அளவுக்கு விருத்திபெற்றுள்ளது. இதுபற்றி அதிக ஆராய்ச்சியும் நடை பெற்றுள்ளது.
1. மேற்கு மலைப்பகுதி
பூற்றவோவுக்கு வடக்கில் சிக்கலான மலைமுடிச்சுக் காணப்படுகின்றது. பேமாவில் மலைத்தொடர்கள் பெரும்பாலும் வடக்குத் தெற்காகப் பரந்துள் ளன. இப்பகுதியில் மக்கள் ஐதாகப் பரந்துள்ளனர். விருத்தியும் குறைவாகும். இதனுல் இப்பகுதியின் புவியியற் றன்மையிலும் புவிச்சரிதவியலே முக்கியமாக வுள்ளது. ஆசியாவிலிருந்து மக்கள் தெற்குநோக்கிச் செல்லுவதற்கு இப்பகுதி துணையாகவுள்ளது.
பேமாவில் மிக முக்கியமாகவிருப்பது மேற்கு மலைத்தொகுதியாகும் (மிகவும் உயரமான சாமெத்திச் சிகரம் 12,557 அடியாகும்). இம்மலைத் தொகுதிக்கூடா கவே இந்தியா-பேமா எல்லை அமைந்துள்ளது. அரக்கன் யோமா உட்பட்ட தொடர்களை உள்ளடக்கிய இம்மலைத்தொகுதி 6,000 அடிக்கு மேல் உயரமுடை யது; வடக்கில் அகன்றும் தெற்கில் ஒடுங்கியும் உள்ளது. ஒடுக்கமாகவுள்ள தெற்கு முனை நெகிரைஸ் முனை எனப்படும். அப்பாலுள்ள அந்தமான் தீவுக் தொடர்களும் இதனேடு தொடர்புடையனவாகும். மேற்கு மலைத்தொகுதியி அலுள்ள மலைத்தொடர்கள் சமாந்தரமாகப் பரந்துள்ளன. இவற்றிடையேயுள்ள ஆறுகள் தொடர்களுக்குக் குறுக்காக வெட்டிச் சென்றுள்ளமையால் அளிய டைப்பு வடிகால் தன்மை காணப்படுகின்றது. வடக்கிலுள்ள தொடர்கள் பாற் கோய், லூசாய், நாகா, மணிப்பூர், சின் குன்றுகள் என்னும் பெயர்களால் வழங்குகின்றன. மத்தியில் ஒருங்காக இணைந்துள்ள மலைத்தொடர் அாக்கன் யோமா எனப்படும். பாற்கோய்க் குன்றுகளுக்கும் அரக்கன் யோமாவுக்கும் மலையிடை வடிநிலமான மணிப்பூர் உள்ளது. மணிப்பூர்ப் பகுதி சூழவுள்ள நிலத் திலும் தாழ்வாகவுள்ளபொழுதும், "மணிப்பூர் உயர்நிலம்' எனவே வழங்கப் படுகின்றது. வேறுபட்ட இனமக்கள் இப்பகுதியூடாகவே பேமாவுக்குட் சென் றனர். மலைத்தொடர்களிற் சில பாகங்கள் மிகப்பழைய நிலப்பகுதிகளோடு தொடர்புடையனவாகவுள்ளன. மேற்கு மலைத்தொடர்கள் தோன்றிய காலத் கில் இவை அவற்றேடு சேர்ந்து அமைந்திருக்கலாம். வட பகுதியில் இத்தொ குதி கிழக்கோசத்தில் ஹ"அக்கோங்கு வண்டற் பள்ளத்தாக்கைக் கொண்டுள் ளது. அரக்கன் யோமா வெட்டுண்ட குன்றுநிலங்களை உள்ளடக்கியிருப்பதோடு, இடையிடையே குத்துச்சாய்வுகளையும் கொண்டுள்ளது. சிண்ட்வின் ஆற்றின் கீழ்ப்பகுதியிலும் இத்தகைய குத்துச்சாய்வுகள் காணப்படுகின்றன. அரக்கன் கடற்கரை வண்டல் மண்ணைக்கொண்ட ஒடுங்கிய கரையாகும். வேகமாக ஒடும் சிறிய அருவிகள் இக்கரைப்பகுதி அமையக் காரணமாகும். காடடர்ந்த குன்று கள் சில இடங்களிற் கடல்வசையும் பரந்துள்ளன. மடிப்புத் தொடர்கள் கட

பேமா இயற்கை நிலத்தோற்றம் 66
அலுக்குச் சமாந்தரமாக உள்ளமையால் இது “ பசிபிக் கரையை' ஒத்துள்ளது, எனக் கூறுவது பொருத்தமாகும். வடக்கில் மிகவும் உயரமான இடங்கள் உள்ள பொழுதும் 27° வட அகலக்கோட்டிற்கு அப்பாலே பனிக்கட்டியாறு அரித்த தரைத்தோற்ற நிலைமைகள் காணப்படுகின்றன. அரக்கன் யோமாப் பகுதியில் இத்தகைய தன்மைகள் இல்லை.
2. சான் உயர்நிலம்
சான் உயர்நிலம் ஆழமாக வெட்டப்பட்ட மேட்டுநிலமாகும். சராசரியாக 3000அடி உயரமுள்ள இம் மேட்டுநிலம் சிட்டாங்கு-ஐராவதி வடிநிலத்தை யடுத்து நேர்குத்தாக 2000 அடிவரை உயர்ந்துள்ளது. வட-தென் பகுதிகளில் மடிப்பாக்கம் பெற்றும் காணப்படுகின்றது. பேமாவிலுள்ள பாறைகளுள் மிக வும் பழமையான பாறைகளும் இங்கு உண்டு. இப்பாறைகள் சண்டா மேடைப் பாறைகளோடு தொடர்புடையன. மலாயாவிலுள்ள பாறைவகைகளையும் தசைத்தோற்றத்தன்மைகளையும் போன்று சான் மேட்டுநிலத்திலும் காணப்படு கின்றன. தடிப்பான சுண்ணக்கற்பாறைகள், மணற்கற்பாறைகள், கருங்கல், உருமாறிய பாறைகள் முதலியன பெரும்பாலும் உயர்வான இடங்களைச் சார்ந்து காணப்படுகின்றன. அடிப்பாகத்திற் கருங்கல் குறைவாகவே காணப் படுகின்றது. தெற்கிலும் மேற்கு ஓரத்திலும் உயர்நிலம் ஒடுங்கி, தெனசெரிம் தொடரோடு இணைந்துள்ள இடங்களிலே கருங்கல் ஓரளவுக்குக் காணப்படுஇன் றது. தெனசெரிம் தொடர்கள் பூசந்திப் பகுதியிற் கோணலாக அமைந்துள் ளன. சான் உயர்நிலப் பகுதி வடக்கில் உயரமான மலைப்பகுதியோடு இணைந் துள்ளது. இம்மலைப்பகுதி வடதென் திசைகளில் ஆறுகளினல் வெட்டப்பட்ட ஒடுங்கிய பள்ளத்தாக்குக்களைக் கொண்டுள்ளது. பூற்ருவோ முடிச்சோடு இணைந்த உயரமான மலைப்பகுதி தைலாந்துக்கூடாகக் கிழக்கு நோக்கிப் பரந்து மேக்கோங்கு நதிக்கு அப்பால் லாவோஸ் வரையும் நீண்டுள்ளது. இறுக் கமான சுண்ணக்கல் பரந்துள்ள பகுதிகளும் உண்டு. எளிதிற் கரைந்துவிடக் கூடிய சுண்ணக்கல் நிலத்தில் ஆழமற்ற அகன்ற பள்ளத்தாக்குக்கள் காணப் படுகின்றன. சுண்ணக்கல் கரைந்துவிடுவதனுற் பள்ளத்தாக்கின் இரு பக்கங் களும் மென்சாய்வாக உள்ளன. அருவிகளும் சிறிதளவுக்கே நீரைக்கொண்டுள் ளன. சேற்று நிலங்களும் பக்கங்களில் உண்டு. பல அருவிகள் ஒன்முகச் சேர்ந்து ஒடும்பொழுது பக்கங்களில் ஏற்படும் கரைதலிலும் கீழ்வெட்டுதல் வேக மாக நடைபெறுகின்றது. இதனுல் மிகவும் ஒடுக்கமான பள்ளத்தாக்குக்கள் உண்டாகின்றன ; சில இடங்களிற் பக்கங்களிலிருந்து சுண்ணக்கல் உடைந்து விழுவதனுல் இவை நிரம்பிக் காணப்படும். சில வேளைகளில், கரைந்த சுண்ணக் கல் தரைநீரிலிருந்து மீண்டும் படியவிடப்படுகின்றது. இதனுல் வெண்ணிறமான படிவு உண்டாகின்றது. படிதல் விரைவாக ஏற்பட்டால் ஓர் அணைக்கட்டே உண் டாகிவிடலாம். பின்பு ஆறு இந்த அணையை உடைத்துக்கொண்டு வேறு ஒரு வழியில் ஒடலாம். இவ்வாறு பல சிறிய நீர்வழிகள் அமையலாம். இவற்றைச் சுற்றிச் சேற்றுநிலம் காணப்படும். கும்சாய் என்னும் இடத்தில் மண்டலே

Page 98
166 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
லாஷோ புகையிசதப் பாதையைச் சார்ந்து இத்தகைய சேற்றுநிலம் உண்டு. வடிநிலங்களும் அவற்றேடு தொடர்புடைய தரைக்கீழ் ஆறுகளும் سا-الUPL-LJLع இங்குக் காணப்படுகின்றன. மூல்மேன், காலோ, கொக்டெயிக், சிங்கு (மண்ட லேக்கு மேல் உள்ளது), மியிச்சீன என்னும் இடங்களிற் சுண்ணக் கற்குகை களும் அதிகமாக உள்ளன.
3. ஐராவதி வடிநிலம்
மேற்கிலும் கிழக்கிலுமுள்ள இரண்டு உயரமான பகுதிகளிடையில் ஐராவதி வடிநிலம் அமைந்துள்ளது. இவ்வடிநிலப் பகுதி அடிப்படையில் மடிப்புள்ள நிலவமைவைக் கொண்டுள்ளபொழுதும் வேறுபாடு குறைந்தது ; ஆனல் இடை யிடையே எரிமலைக் குழம்பினுல் அமைந்த தரைத்தோற்றங்களும் உண்டு. ஐரா வதி வடிநிலத்தை ஒரு பெரிய ஆற்றுப்பள்ளத்தாக்கு என்றே, அல்லது பழைய கடற்குடா என்றே கொள்ளமுடியாது. பாறை வகைகள், நிலவமைவு என்பன ஒழுங்கான முறையிற் காணப்படுகின்றன. சில இடங்களிற் பாறைப் படைகள் மிகவும் தடிப்பாகவுள்ளன. பாறைப்படைகள் ஒன்றன்பின் ஒன்முக அமைந் தனவாகவும், நீண்ட காலப்பகுதியில் அமைந்தனவாகவும் உள்ளன. இதனல் இப்பகுதியிலுள்ள பாறைப்படைகள் "ஐராவதிப் பாறைகள்”, “பெகப் பாறைகள்” என முறையாக வகுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. வடிநிலத்தின் சில பாகங்கள் சிண்ட்வின், ஐராவதி, சிட்டாங்கு ஆறுகளின் வண்டற் படிவி ஞல் மூடப்பட்டுள்ளமையாற் கீழுள்ள நிலத்தைக் காணமுடியாதுள்ளது. கீழுள்ள மடிப்புண்ட நிலம் பெசுயோமாப் பகுதியில் வெட்டுண்டு காணப்படு கிறது. இது நீளப்போக்கில் மியின்யான் மாவட்டத்திலிருந்து ரங்கூனைச் சார்ந்துள்ள தாழ்வான குன்றுகள் வரை பரந்துள்ளது. வடக்கில் இது வெட் டுண்ட குன்றுத் தொடர்களாக இருபக்கத்திலும் ஐராவதி சிண்ட்வின் ஆறு களுக்கு அப்பாலும் பரந்துள்ளது. இக்குன்றுகள் சாகயிங்-மின்கின்-சிபி யூன் குன்றுகள் என வழங்குகின்றன. பெசுயோமா மடிப்புத் தொடர்களி லிருந்து வட குன்றுகள் வரை அவிந்த எரிமலைகள் காணப்படுகின்றன. இப் பொழுது இவை அரிக்கப்பட்ட கூம்புகளாகக் காட்சியளிக்கின்றன. பெசு. யோமாவின் வட ஒரத்தில் எரிமலைக் குழம்பாலான போப்பாச்சிகரம் உள்ளது. நீலமணிக்கல் எடுக்கப்படும் வுன்தோ மாவட்டமும் தவுங்கோன்லனும் மின்கின் குன்றுப் பகுதியில் உள்ளன. வடிநிலப் பகுதி ஒருகாலத்தில் இருபுறத்தும் பிளவுகளையுடைய கீழ்த்தாழ்த்தப்பட்ட நிலம் எனக் கருதப்பட்டது. இவ்வடி நிலம் மடிப்புண்ட நிலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஒன்ருகும். களிப்படை, மாக்கற்படை, மணற்கற்படை என்பன மாறிமாறி அமைந்துள் ளன. பாறைகள் வேறுபட்டனவாயிருப்பதனுல் அவற்றின் இயல்பிற்கும் வெளித்தோன்றியுள்ள நிலைமைக்கும் ஏற்பத்தாைத்தோற்றம் அமைந்துள்ளது. “ஐராவதி பாறைகள்” பெரும்பாலும் மணற்பாறைகளாக உள்ளன. கீழே கூழாங்கற்களும் களியும் உண்டு. இப்பாறைகள் முதலில் மடிப்பாக்கம் பெற்று பின்பு அரிப்புண்டு காணப்படுகின்றன. பாறைத்தொடர்களையும் பள்ளத்தாக்குக்

பேமா இயற்கை நிலத்தோற்றம் 37
களையும் கொண்ட தரைத்தோற்றம் அமைய இவை காரணமாகும். வறண்ட பகுதியில் சிண்ட்வின்-ஐராவதி ஆற்றுச் சந்தியைச் சார்ந்துள்ள நிலக்கில் மேற்குறித்த பாறைகள் மீது பாலும் சாளைமண்ணும் காணப்படுகின்றன (படம் 56).
* பெசுப் பாறைகள்” தடிப்பான மணற்கற்பாறைகளாக உள்ளன. இவை எளிதில் அரிக்கப்படத்தக்கவை. மணற்கற் பாறைகளைக் கொண்ட நெடிய குத் துச் சரிவான நிலம் வடக்குத் தெற்காகக் காணப்படுகிறது. பொன்னியா டோங் தொடரைச் சார்ந்துள்ள குத்துச் சரிவானநிலம் சற்றே தாழ்வான பகு தியில் உள்ளது. களிப்படையைக் கொண்ட தாழ்நிலத்திற்கு (பியாப்வே என் லுமிடத்தில்) மேலுள்ள பகுதி களிப்படை மாக்கற்படை, மணற்கற்படை என்பவற்ருல் அமைந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் சிறந்த குத்துச் சரி வான நிலங்கள் மடிப்புண்ட இளமையான பெசு. ஐராவதிப் பாறைகள் காணப் படும் இடங்களிலேயே உண்டு.
வடிநிலத்தின் தென் பாகத்தில் வேறுபட்ட வண்டற் படிவுகள் பரந்துள்ளன. இவை வேறுபட்ட தடிப்புடையனவாயிருப்பதோடு வேறுபட்ட தன்மை உடையனவாயுமுள. குன்றுகளைச் சார்ந்து பால் காணப்படுகின்றது. மத்தியி லும் தெற்கிலும் களியும் மண்டியும் உண்டு. டீதெரா என்பார் இவற்றை ஒன் றன்பின் ஒன்முகப் படிந்த ஆற்றுப் படிவுகள் எனக் கூறுவர். இப்பாறைகள் மிகவும் வேறுபட்டனவாகவிருத்தலினுல் பொதுப்படக் குறித்து விளக்குதல் கடினமாகும். ஆனல் இவற்றின் வேறுபட்ட தன்மைகளும் பண்பும் பயிர்வகை களுக்கும் செறிவுக்கும் காரணமாகவுள்ளன.
காலநிலை பேமாவிலுள்ள பல காரணிகளினல் தென்கிழக்கு ஆசியாவுக்குரிய பொதுப் பட்ட காலநிலைத் தன்மையில் வேறுபாடு ஏற்படுகின்றது.
(1) உயர் அகலக்கோட்டுத் தன்மை, மிகையான உயரம், கண்டஞ் சார்ந்த உள் அமைவு என்பன தென் கிழக்கு ஆசியாவின் ஏனைய பகுதிகளி லும் பேமாவில் வெப்பநிலை குறைவாயிருக்கக் காரணமாகும். இத ல்ை 3,500 அடிக்கு மேலான உயரமுடைய இடங்களில் சனவரியில் பனி உறைகின்றது. அப்பொழுது சான் உயர்நிலத்தில் மூடுபனியும் உண்டாகின்றது. வடக்கிலுள்ள 10,000 அடி உயரமான நிலங்களில் வருடத்தில் இரண்டு மாதம் மழைப்பனி ஏற்படுகின்றது. பேமா முழு வதிலும் மென் குளிரான பருவம் ஒன்று உண்டு. (2) பெரும்பாலான பகுதியில் வறண்ட பருவம் ஒன்று உண்டு. கடற்கரைப் பகுதியிலும் மேனிலத்திலும் உள்நாட்டு விளைவுகளினுல் போதிய மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. இதனுல் இப்பகுதிகளில் வறட்சி யின் தாக்கம் குறைவாகும். பேமாவுக்குரிய சராசரி மழைவீழ்ச்சியி லூம் குறைவான மழை பெய்யும் பகுதிகளிலேயே வறட்சி அதிகமா கும். இந்தியாவின் பருவ மழைபோன்று இங்கும் மழை சடுதியாகப் பெய்கிறது. மே மாதக் கடைசியிலிருந்து ஒற்முேபர் மூன்றம் கிழமை

Page 99
168
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
வரை மழைபெய்கிறது. வறண்ட காலத்தில் சூரிய ஒளியும் வெப்பமும் அதிகமாகும். நாள் வெப்பம் மழைக் காலம்வரை அதிகமாக உள்ளது. ஏப்பிரில், மே மாதங்களிலேயே மிகக்கூடிய நாள் வெப்பம் ஏற்படு
கிறது.
(3) வடக்குத் தெற்காகவுள்ள தசைத் தோற்ற அமைப்பு பேமாவை நோக்கி
விசும் காற்றுக்களுக்கு குறுக்க
120 - 17: அங்குலம் 89 = * 2) . ܘ 8 ܚ- à C as 9 - F 3
sasarum'Yser
படம் 50. பேமாவின் மழைவீழ்ச்சி
ாக உள்ளது. இதனல் ஐராவதி வடி நிலத்தின் மத்தியபாகம் வருடத்தின் பெரும்பகுதியில் மழை ஒதுக்கில் காணப்படுகின்றது. இத்தன்மையி னல் பகானைச் சூழவுள்ள நீள்வளை வான பகுதி வறண்ட பகுதியாக உள்ளது. இங்குள்ள வறட்சி அரக் கன் யோமா, சான் உயர்நிலம் ஆகிய வற்றிலிருந்து வீசும் போன் காற் நுக் காரணமாக மேலும் அதிகரித் துக் காணப்படுகின்றது. கோடை காலத்தில் தெற்கிலிருந்து விசும் காற்றின் மூலம் வறண்ட பகுதியிற் சிறிது மழைவீழ்ச்சி ஏற்படுகிறது.
பேமாவின் மழைப் பரம்பலுக்குத் தசைத்தோற்ற அமைப்பே காரண மாகும் (படம் 50). தென் மேற்குக் காற்றுக்கள் விசும் காலத்தில் மேற்கு மலைப்பகுதியிலும் லூம் வெப்ப ஈரக்காற்றின் தாக்கம் ஏற்படுகிறது. இதல்ை தெனசெரிம் பகுதிகளில் அதிகமாக மழை பெய்கின்றது. இப்பகுதிகளில் வருடத்தில் 200 அங்குலத்திற்கும் அதிகமான மழைவீழ்ச்சியுண்டு. இப்
பூசந்திக்கரையி
அரக்கன்,
பொழுது அரக்கன் யோமாவின் கிழக்குச் மிகவும் குறைவாகும். ஆனல் கிழக்கு உயர் நிலத்தில் மழைவீழ்ச்சி அதிக மாகும். குளிர் காலத்தில் பேமாவை
சாய்வில் மழைவீழ்ச்சி
நோக்கி வீசும் வட அயனக் காற்று
அதிக மழையைக் கொடுப்பதில்லை. கிழக்கு உயர்நிலத்திலும் ஐராவதி வடிநிலத் தின் மேற்கு ஓரத்திலும் உயாங் காரணமாகச் சிறிது மழைவீழ்ச்சி ஏற்படு
கின்றது.
 

பேமா: இயற்கை நிலத்தோற்றம் 169
மாத மழைவீழ்ச்சியும் ( ·OM தோறும் வீசும் பி றும்
ਸ tossip | ssu. Guu. "| lbr asrè. (Suo. gd | g& s செ. ஒற். ந |திசெ. 0 நாள் 岛
.9 .4 2.8 6.9 15.3 夏8。● 21.4 重9.圭 2.0 4. 3. 2. 2م gússsir 12 வவல் வவகி தெமே 1 மேதெ தெமே தெ தெதெமேெ Go Ggsco I asse lasasse alausa தயெற்மி Gud Gunt 73 . 2 8 4.5 6.7 6.8 6.5 6.1 4.1 1.7 2 37. மூல்மேன் 139 2 . s 2.8 203 37.2 46.2 43.6 27.7 | 8.7 2.2| .3 |189,& aabLGBay | sl | .1 2 l 5.8 sis 3.3 4.6 . || 47 || || 6 || 4 || 33
YN-Y-G% Yo & தெகி தெ தெதெகி Gs as a afsir S7 O O .3 8 5.6 5.7 4s S3 6.2 4.5 18 。5 35.3
auGud || Lobau || GS தெல். | தெகி தெகி தெகி தெகி தெகி | தெகி வமே வமே
பேமாவில் வறண்ட பகுதி பேமியர் வாழ்க்கைக்கும் விருத்திக்கும் முதன்மை பெற்றது. இப்பகுதியில் பெறப்படும் சிறு மழைவீழ்ச்சி (சில இடங்களில் வருடத்தில் 25 அங்குலத்திற்கும் குறைவான மழை பெறப்படுகின்றது) சடுதி பாக ஏற்படும் புயல் காரணமாகக் கிடைக்கின்றது (படம் 52). நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பார்க்க இங்குப் பெய்யும் மழை நம்பக்கூடியதாய் இல்லை. வறண்ட பகுதியிற் பயிர்ச்செய்கை விரிவான முறையில் அமைக்கப்பட்டுள்ள தனுல் மழைவீழ்ச்சித் தன்மை இதனைப் பாதிக்கக் கூடியதாயுள்ளது. மழை ஒழுங்காகப் பெய்யாத காரணத்தினல் இப்பகுதியிற் பலவகையான பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. குறித்த வருடத்தில் மழை ஒழுங்காகப் பெய்யாத பொழுதும் ஏதாவது ஒரு பயிரை மட்டுமாவது பெறுவதற்கு இந்த முறை உதவுகின்றது. நவம்பர் முதல் மார்ச்சு வரை வானிலை தெளிவாகவும் அமைதி யாகவும் உள்ளது. ஆற்றுப் பள்ளத்தாக்குக்களில் மூடுபனி காணப்படலாம். வறண்ட பகுதியில் ஏனைய பகுதிகளிலும் பார்க்கப் பின்பே மழை பெய்கின் றது (யூன் முதல் செத்தெம்பர் வரை). மழைக்காலத்திற் காற்றுப் பலமற்றிருக் கும்; வானத்தில் முகிலும் அடர்த்தியாகப் பரந்திருக்கும். பேமாவின் உட்பகுதி யைச் சார்ந்தே வறண்ட பகுதி அமைந்துள்ளது. ஐராவதிப் பள்ளத்தாக்கிலும் வறட்சி ஏற்படுகின்றது (படம் 59). அரக்கன், தெனசெரிம் பகுதிகளிலும் இங்கு வறட்சிக் காலம் நீண்டதாயுள்ளது. ஐராவதி வடிநிலத்தில் உட்பகுதியை நோக்கி மழைவீழ்ச்சி குறைவடைகின்றது. கரைப் பகுதியில் வருட மழை வீழ்ச்சி 200 அங்குலத்திலிருந்து 100 அங்குலம் வரை குறைவடைகின்றது. ஆனல் உட்பகுதியில் மழைவீழ்ச்சி 40 அங்குலமாகும். தயெற்பமியோவில் வருட மழைவீழ்ச்சி 38 அங்குலமாகும், புரோமில் 47 அங்குலமாகும். யூலை மிகக்கூடிய மழையைப் பெறும் மாதமாகும். திசெம்பர் முதல் மார்ச்சு வரையுள்ள காலம் வறண்ட பருவமாகும்.
நவம்பர் முதல் மேவரையுள்ள காலத்தில் வட இந்தியாவுக்கூடாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் குருவளிக் காற்றினல் வட பேமா ஒரளவுக்குப் பாதிக்கப் படுகின்றது. அன்றேல் இப்பகுதியில் தெளிவான வானிலைத் தன்மைகள் நிலவும்.

Page 100
170 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
யூலை-செத்தெம்பர் காலத்தில் தென் சீனக் கடலிலிருந்து சிறிய குருவளிக் காற் அறுக்கள் வட பேமாவை நோக்கி விசுவதுண்டு. இவற்ருல் உட்பகுதியிற் சிறிது மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. ஏப்பிரில்-திசெம்பர் காலத்தில் வங்காளக் குடாவிலிருந்து அயனச் குருவளிக் காற்றுக்கள் வீசுவதுண்டு. இவை பொது வாகப் பேமாவுக்கு மேற்காகவே வீசுகின்றன; சில சமயங்களில் அாக்கன் கரை யைப் பாதிக்கின்றன. கடந்த அறுபது வருட காலத்தில் அரக்கன் மர்த்தபான் கரைகள் வேறுபட்ட வேகங்களையுடைய அயனச் குருவளிகளினுல் பாதிக்கப் பட்டன. வீசிய காலமும் தொகையும் பின்வருமாறு:
காலம் அரக்கன் கரை மர்த்தபான்கரை
திசெம்பர்-மார்ச்சு a v - - எப்பிரில்-மே A- - 21 5 யூன்-செத்தெம்பர் e 2 ஒற்றேடர்-நவம்பர் us p 24 kan
பேமாவில் காலநிலைக்கும் அயனப் பிரதேச நோய்களுக்குமிடையில் நெருங் கிய தொடர்பு காணப்படுகின்றது. உள்நாட்டுப் பகுதியில் ஈரமான பருவத்தில் மலேரியா நோய் பரவுகின்றது. ஆனல் கடற்கரைப் பகுதியில் வறண்ட பருவத் திலேயே இந்த நோய் அதிகமாகக் காணப்படுகின்றது. மழைப்பருவம் தொடங் கும்பொழுது வாந்தி பேதி (கொலரா) ஏற்படுகின்றது. வறண்ட பருவத்தின் பிற்கூற்றிலேயே அம்மை நோய் அநேகமாகப் பரவுகின்றது. மழைப்பருவத்தின் முதற் பகுதியில் வெள்ளப்பெருக்குக் காரணமாக சுகாதார வசதிகள் பாதிக்கப் படுவதுண்டு. வயிற்று உளைவு நோய் பெரும்பாலும் இக்காலத்தில் தோன்று கின்றது.
வடிகால் முறைகள்
பேமாவின் மூன்றிலிரண்டு பகுதியில் வடிகால் முறைகள் ஐராவதி ஆற்றேடு தொடர்புடையனவாய் உள்ளன. எனவே பேமாவில் ஐராவதி ஆற்றுத் தொகு தியே மிகவும் முக்கியமானதாய் உள்ளது. வேறு சில சிறு ஆறுகளும் பேமாவில்
D6tate.
அரக்கன் ஆறுகள்
கலடன் லெமியோ, மாயு, நாவ் ஆறுகள் வட-தென் திசைகளில் ஓடுகின்றன. இவை உயரமான நீர்பிரி நிலங்களினுல் பிரிக்கப்பட்டுள்ளன. நிலங்களின் தன்மை மடிப்பாக்கத்தோடு தொடர்புடையதாய் உள்ளது. ஆறுகளின் அமைவு அளியடைப்பு வடிவிற் காணப்படுகின்றது. ஆறுகள் ஒவ்வொன்றும் கடற்கரைப் பகுதியில் அகலமான கழிமுகங்களைக் கொண்டுள்ளன. நிலவமைவுக்குப் பொருந்த அமைந்துள்ள ஆறுகள் கடற்கரைப் பகுதியில் வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. ஆறுகளின் கீழ்ப்பாகங்களிலேயே அடையல் ஓரளவுக்குப் படிந்துள்ளது. கடற்கரையை நோக்கி வீசும் காற்றினுற் கழிமுகங்கள் காை. யைச் சார்ந்து நீளப்பாட்டில் அமைந்துள்ளன. ஆறுகள் சிறியனவாயும்

பேமா; இயற்கை நிலத்தோற்றம் 7
முதிர்ச்சியில்லாதனவாயும் இருப்பதனுற் போக்குவரத்திற்கு ஏற்றனவாய் இல்லை. கலடன் ஆற்றில் மட்டும் பலெற்வா வரை போக்குவரத்துச் செய்யலாம். குடியிருப்புக்கள் ஆற்று முகங்களில் நெருக்கமாக அமைந்துள்ளமையால் ஆறு கள் மிகவும் முக்கியமானவையாயுள்ளன. இந்த ஆறுகளின் மேற் பகுதிகளேச் சார்ந்தே அரக்கன் யோமாவின் மலை இடுக்குக்கள் காணப்படுகின்றன. இப் பொழுது இம்மலை இடுக்குக்கள் அத்துணை முக்கியமானவையாய் இல்லை. தெனசெரிம் ஆறுகள்
பேமாவைச் சார்ந்த பூசந்திப் பகுதியில் மலாயாவிலுள்ளவற்றைப்போன்று சிறு அருவிகளே காணப்படுகின்றன. கடற்கரைக்குச் சற்றுக் கோணலாகவுள்ள தொடர்களிடையாக இவ்வருவிகள் ஒடி கடலில் விழுகின்றன. கரையைச் சார்ந்து கடலில் மணல்மேடுகள் காணப்படுவதனல் அடையல் வந்து படிய ஏது வாக உள்ளது (படம் 55). ஆறுகள் முதிர்ச்சி பெற்றுள்ளபொழுதும் தொடர்களி டையுள்ள ஒடுங்கிய இடுக்குக்களூடாக ஓடுகின்றன. தெனசெரிம் பகுதியில் ஒடும் ஆறுகள் செங்கோண வடிவில் வளைந்தே கடலுள் விழுகின்றன. அரக்கன் ஆறுகளைப்போன்று இவையும் அயனப் பகுதியிலுள்ள சிறு ஆறுகளாகும். இவற் றின் மூலம் அதிக அளவு மண்டிகொண்டுவந்து படியவிடப்படுகின்றது. இதனுல் அடையல்படிதல் விரைவாக ஏற்படுகின்றது. முன்பு வியாபாரிகள் இந்த ஆறு களை ஒரளவுக்குப் பயன்படுத்தினர். பூசந்திக்கூடாகப் போக்குவரத்துச் செய்ய இவை ஓரளவுக்கு உதவின. ஆனல் இப்பொழுது சிறு வள்ளப் போக்குவரத்தும் இவற்றில் நடைபெறுவதில்லே. மலைத்தொடரிலிருந்து கடற்கரைவரை பால்முதல் மண்டி ஈருகப் பல்வேறுபட்ட அடையற் படிவுகள் பரந்துள்ளன. தவோய் என்னுமிடத்திலுள்ள பாற்படைகளில் தகரம் காணப்படுகின்றது. மலாயாவின் பெளதிகவியல்புகள் இங்கும் உள்ளன.
சல்வீன் ஆறு
ஐராவதி ஆற்றுக்குச் சமாந்தரமாக சல்வின் ஆறு ஓடுகின்றது. சான் உயர் நிலப் பகுதியில் இவ்வாறு ஆழமாக வெட்டப்பட்ட பல மலையிடுக்குக்களுக் கூடாகப் பாய்ந்து ஓடுகின்றது. இவைபோன்ற நெடிய மலையிடுக்குக்கள் யாந்திசி நதி பாயும் பகுதியிலும் இல்லை எனலாம். திபெத் மேட்டுநிலப்பகுதியிலிருந்து ஊற்றெடுத்து ஓடும் சல்வீன் ஆமுனது சில இடங்களில் மேக்கோங்கு யாந்திசி ஆகிய நதிகளுக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. அதாவது 42 மைல் அாசத்தில் இந்நதிகள் மூன்றும் பக்கம் பக்கமாகக் காணப்படுகின்றன.
சான் பகுதியை அடையும்வரை சல்வீன் ஆற்றேடு தொடர்புடைய பிரதான கிளைநதிகள் இல்லை. ஆனல் சான் பகுதியிற் பல கிளைநதிகள் காணப்படுகின்றன. முன்னூறு மைல் நீளமான கிளைநதிகளும் உண்டு. கடற்கரையிலிருந்து ஐம்பது மைல் துராத்திலும் ஆற்றின் பள்ளத்தாக்கு ஆழமானதாயும் பாறைகளையுடை யதாயும் உள்ளது. இதனுல் சல்வின் ஆற்றின் அரிக்குந் திறன் கடற்கரை வரை பரந்து காணப்படுகின்றது. மேக்கோங்கு ஆற்றின் மேற்பாகத்திலும் பார்க், கச் சல்வின் ஆற்றுப் பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானதாக வெட்டப்பட்டிருப்ப
9-CP 4217 (68.10)

Page 101
172 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ಒಂಟಿ ಕಿಡಕಿಯಾ। புனனில 2பிரதானமாக சேறும்
500 மேல் காடு リ
மாங்குரோவுச் சதுப் -
படம் 61. சிட்டாங்கு, சல்வீன் ஆறு
களின் கழிமுகங்கள்
தற்குக் கூடிய மழைவீழ்ச்சி காரணமா கும். சிறந்த ஆற்றின் வடிநிலம் பிரதான ஆற்றைச் சார்ந்து நெடிதாகவிருப்பதற்கு அயலேயுள்ள ஐராவதி, மேக்கோங்கு ஆகிய நதிகளினுல் சல்வீன் ஆற்றின் கிளை நதிகள் முதலியன சிறைகொள்ளப்பட் ட்தே காரணமாகும். சல்வின் ஆற்றின் * முக்கியமான கிளைநதிகளான யுங்சலின், கியாயிங்கு அத்தரன் என்பன பல படி நிலைகளிற் கீழ்விழுந்தே பிரதான ஆற்
றைச் சேருகின்றன. பிரதான ஆற்றின் 'நீர்மட்டத்தில் அதிக வேறுபாடுகள்
காணப்படுவதும், பள்ளத்தாக்கில் கூடிய அளவுக்கு அரிப்பு ஏற்பட்டிருப்பதும் இதற்குக் காரணம் எனலாம், பருவகாலங் களிடையில் சல்வீன் ஆற்றின் நீர்மட்டம் 65 அடிவரையில் வேறுபடுகின்றது. இத னுல் கிளையாறுகளின் ஒட்டம் தடைப் பட்டு பரல் முதலிய படிவுகள் ஆறுகள் இணையுமிடங்களில் படிகின்றன. சல்வீன் நெடிய ஆமுகவிருந்தபொழுதும் பல இடங் களில் முறிவுபெற்றும், ஆழமாக வெட்டப் பட்டும், அதிக நீர்மட்ட வேறுபாடுகளுக் குட்பட்டுமிருப்பதனற் பேமாவிலுள்ள பிரதான ஆறுகளுள் குறைந்த அளவுக்கே பயனுள்ள ஓர் ஆமுக உள்ளது. தேக்கு மரக் குற்றிகளைக் கொண்டுசெல்வதற்கே இது பெரிதும் பயன்படுகின்றது. எந்திர வியல்முறையில் விருத்தி செய்யப்பட்டால் நீர்மின் சத்தி உற்பத்திக்கும் பயன்பட லாம். ஆற்றின் முகத்தில் மணல்மேடுகள் படிந்துவிடுவதனுல் கிளைநதிகளின் போக்கு அடிக்கடி மாற்றமடைகின்றது (படம் 81). கழிமுகத்தில் மண்டி முதலியன படிந்துவிடு வதனற் கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதா யில்லை. இந்த நூற்றண்டின் முதற் பகுதி யில் மூல்மேனில் துறைமுகவசதி ஓரள வுக்கு இருந்தது. அத்தான்போன்ற ஆஅ களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதணு லேயே சல்வின் ஆற்றின் நீர் பெருகுகின்
 
 
 
 
 

பேமா இயற்கை நிலத்தோற்றம் 73
Aறது. மழைப்பருவத்தில் சல்வீன் ஆற்றுமுகப் பகுதி தடைப்பட்டுள்ளதஞல் நீர் குறைவாகவே வெளியேறுகின்றது. இதனுற் கடற்கரையின் பின்னணியில் அதிக அளவுக்கு வெள்ளப்பெருக்கு உண்டாகின்றது.
சல்வீன் ஐராவதி ஆறுகளுக்கு இடையிலுள்ள நீர்பிரி நிலத்தின் இன்லே என்னுமிடத்தில் உள்நாட்டு வடிகால் ஒன்று உண்டு. 3000 அடி உயரத்திலுள்ள 14 மைல் நீளமும் 4 மைல் அகலமுமுடைய ஏரியுள் நீர் வந்துவிழுகின்றது. ஏரி யின் நீர்மட்டம் பருவத்திற்குப் பருவம் வேறுபடுகின்றது. ஏரியிலிருந்து நீர் தெற்கு நோக்கி இழிகின்றது. ஆனல் இது வெளித்தோன்றவகையில் சுண்ணப் பாறைப்பகுதியில் சடுதியாக மறைந்துவிடுகின்றது. இறுதியில் இந்நீர் சல்வின் ஆற்றில் வந்து விழவும்கூடும்.
ஐராவதி ஆற்றுத்தொகுதி
மடிப்பாக்க விளைவுகளினல் ஏற்பட்ட தாக்கத்தை ஐராவதி ஆற்று வடிகா லமைப்பில் காணலாம். ஏலவே ஆற்றுத்தொகுதி ஒன்று அமைந்திருந்த நிலத்தி லேயே இத்தகைய தாக்கம் ஏற்பட்டது. பீகு யோமா மடிப்பு மலைகள் அமைந் ததிலிருந்து இரண்டு அருவிகள் வடிநிலத்தில் ஒடத்தொடங்கின :
(அ) மேற்கு அருவி-இப்பொழுதுள்ள சிண்ட்வின் ஆறும் பகோக்கூவிற்குக் கீழுள்ள ஐராவதி ஆறும் சேர்ந்து அமைந்தது; இந்த ஆறு முதல்ஐராவதி ஆறு என வழங்குகின்றது. (ஆ) கிழக்கு அருவி மண்டலேக்கு மேல் இப்பொழுதுள்ள ஐராவதி தெற்கில் சிட்டாங்கு நதியாக இணைந்து ஓடுகின்றது. இது முதற் சிட்டாங்கு நதி எனப் பெயர்பெறும். முதற் சிட்டாங்கு நதியின் மேற்பாகம்-முதல் ஐராவதி ஆற்றினல் மண்ட லேக்கு அண்மையிலுள்ள வளைவில் சிறைசெய்யப்பட்டுள்ளது. வடிநிலப்பகுதி யில் ஏற்பட்ட மடிப்புத்தாக்கத்தினுலும் சடுதியாக உண்டாகிய (இப்பொழுது அற்றுப்போய்விட்டது) எரிமலைத்தாக்கத்தினுலும் இது ஏற்பட்டிருத்தல் வேண்டும் (ஸ்டாம்ப்). ஆறு சிறைகொள்ளப்பட்டுள்ள தன்மையை சிட்டாங்கு நதியைப் (படம் 56) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேல் ஐராவதியோடு பொருந்த உள்ள உருவத்தன்மை, சிறை செய்யப்பட்ட வளைவிற்கண்மையில் உள்ள ஒழுங்கற்ற வடிகாலமைப்பு, சிட்டாங்கு நதிக்கும் இப்பொழுது அது பாயும் வண்டல்செறிந்த பள்ளத்தாக்கிற்குமிடையே காணப்படும் பொருத்த மின்மை, குத்தாக அரித்தல் குறைவாயிருத்தல் என்பன ஆறு சிறைகொள்ளப் பட்டதனைக் குறிக்கும் தன்மைகளாகும். சிட்டாங்கு நதிப்பள்ளத்தாக்கில் மண்டி விரைவாகப் படிந்துவருகின்றது. அயலே நடைபெறும் பயிர்ச்செய்கை யும் காடுகள் அழிக்கப்படுதலும் இதற்குக் காரணம் எனலாம். ஏறத்தாழ நாற் பது வருடங்களுக்கு முன்பு துங்கு என்னுமிடத்திற் சராசரியாக 18 அடி ஆழ மாக இருந்தது. ஆனல் இப்பொழுது 3 அடிதானும் இல்லை. இதனல் ஆற்று நீர் முன்னரிலும் இருமடங்கு அகலமான நிலத்திற் பரந்து காணப்படுகின்றது (படம் 51).

Page 102
74 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஐராவதி ஆறு அதன் பல்வேறு பகுதிகளில் அதிக வேறுபாடுகளைக் கொண் டுள்ளது. இதனை மேல்வரும் சிறு பிரிவுகளாகப் பிரித்து ஆராயலாம்:
(அ) அருவிகள், இணையுமிடத்திற்கு மேலுள்ள (மியிச்சீனு என்னுமிடத் திற்கு வடக்கில்) ஐராவதி ஆற்றின் பாகம் அப்பெயரால் வழங்கப்படுவ தில்லை. தென் பனிப்பகுதியில் ஊற்றெடுத்து ஓடும் மாலிகா, நிமைகா என்னுமிரு மலையருவிகள் மேற்குறித்த இணையுமிடத்தில் வந்து சந்திக் கின்றன. இவற்றுள் மாலிகா முதிர்ச்சிபெற்ற அருவியாகத் தென்படு கின்றது. இது முந்திய வடிகாலாகவுமிருக்கலாம். (ஆ) மேற்குறித்த இணையுமிடத்திலிருந்து பாமோ வரையுள்ள ஐராவதி ஆற்றுப் பாகம் "மேல் ஐராவதி” எனப் பெயர்பெறும். 150 மைல் நீள மான இப்பகுதியில் ஆற்ருேட்டம் அதிகமாகும். எனினும் அபாயமான இடங்கள் தவிர்ந்த ஏனைய பாகங்களில் ஓடப்போக்குவரத்து நடை பெறுவதுண்டு. சின்போ என்னுமிடத்துக்குக் கீழ் ஆறு ஐம்பது யார் அகலமான இடுக்கினூடாகப் பாய்கின்றது. இவ்விடத்தில் ஆறு வேக மாகப் பாய்வதோடு அபாயகரமானதாகவும் உள்ளது (ஓர் இரவில் 80 அடி உயரத்திற்கு ஆற்று நீர் எழும்புவதுண்டு). இணையுமிடத்தை யடுத்த தாழ்வான பகுதியில் ஆஅது கால் மைல் அகலமாகவும் 30 அடி ஆழமாகவும் உள்ளது. ஆறு ஒடுங்கி ஓடும் இடுக்குப்பகுதி 40 மைல் வரை நீளமாக உள்ளது. 2,500 அடிக்கு மேல் உயரமுடைய மலைக ளிடையில் ஆற்றைச் சார்ந்து 60 அடி உயரமான ஓங்கல்கள் காணப் படுகின்றன. ஒடுக்கப்பகுதிக்குக் கிழக்கிலும் அதனைச்சார்ந்தும் அகன்ற தாழ்வான பள்ளத்தாக்கு உண்டு. இதன்வழியாகவே ஐராவதி ஆறு முன்பு ஓடியது எனக் கூறப்படுகின்றது. ஆறு இப்பள்ளத்தாக்கை விட்டுநீங்கி எவ்வாறு இன்றைய ஒடுக்கப்பகுதிக்கு வந்தமைந்தது என் பது தெளிவாக இதுவரை விளக்கப்படவில்லை. - (இ) பாமோ என்னுமிடத்தில் ஐராவதி ஆறு ஏறத்தாழ 12 மைல் அகலமான வண்டல்செறிந்த பகுதியிற் பரந்து காணப்படுகின்றது. இவ்வண்டற் சமநிலம் மேற்காக வளைந்துள்ளது.
சமநிலத்தை நீக்கி ஐராவதி ஆதி மேற்காக வளைந்துள்ளது. இப் பகுதியிலுள்ள திணிவான சுண்ணக்கற் பாறைகளிடையிற் காணப் படும் இரண்டாவது ஒடுக்கினூடாக இது ஓடுகின்றது. ஒடுக்கப்பகுதி இங்குச் சில சமயங்களில் 250 அடி ஆழமாகவும் 100 யார் அகலமாகவும் உள்ளது. இந்த ஒடுக்கப்பகுதியினூடாக ஓடுவதும், எளிதாக வேருெரு வழியிற் செல்லக்கூடியதாயிருப்பதும் திருத்தமாக விளக்குவது கடின. மாகும். இன்றைய தரைத்தோற்றமுறைக்கு முன்னரே அமைந்த முந், திய வடிகால் இது அல்லவென்றும், சுண்ணக்கற் பகுதியில் தரையின் கீழ் ஏலவே காணப்பட்ட அருவிகள் சிறைகொண்டதனுல் இது அமைந் தது எனவும் ஸ்டாம்ப் கருதுகின்றர். இந்த ஒடுக்கப்பகுதிக்கு அப்பால்

பேமா இயற்கை நிலத்தோற்றம் 75
ஐராவதி மீண்டும் கதாவரையில் மேற்காகவுள்ள வண்டற் சமநிலத் தில் ஒடுகின்றது. அப்பால் இது தெற்கு நோக்கி ஓடுகின்றது. தொடக்க நிலையிலிருந்து கதாவரையில் ஐராவதி ஆறு இன்றுள்ள நிலவமைவுக்கு முன்பே அமைந்த முந்திய வடிகாலாக உள்ளது. (ஈ) கதாவிலிருந்து மண்டலே வரையில் ஐராவதி ஆறு சாய்வுச் செங்குத்துப் பள்ளத்தாக்கில் ஓடுகின்றது. இதன் கிழக்கிற் பளிங்குருப்பாறைக் குன்றுகளைக் கொண்ட சான் உயர்நிலம் காணப்படுகின்றது. இந்த உயர் நிலம் தெற்கு நோக்கி நீண்டிருப்பதோடு செங்குத்தாகவும் உள் ளது. கடல்வரையுள்ள 500 மைல் அாரத்தில் இதன் உயரம் 2,500 அடி வரை உள்ளது. சண்டாமேடை பிளவுபட்டதை உணர்த்தும் பிளவு ஒரமாக இது இருக்கலாம். முதற் சிட்டாங்கு ஆற்றுப்போக்கினையும் இது கட்டுப்படுத்துகின்றது. தபேக்கியின் என்னுமிடத்திற்கு அண்மை யில் மணற்பாறைகளிடையமைந்த ஒடுக்கினூடாக (முதல் ஒடுக்கு) ஆறு ஓடுகின்றது. இதன் ஓரங்கள் காடடர்ந்து காணப்படுகின்றன. ஏனைய ஒடுக்கப்பகுதிகளின் சாய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது குத்துச்சாய்வுத் தன்மை குறைவாகவும் உள்ளது. கப்வெற் என்னுமிடத்திற் காணப்படும் எரிமலைக் குழம்புப் படைகாரணமாக ஆறு மேற்குநோக்கி ஓடுகின்றது. இப்படைவரலாற்றுக் காலத்தில் ஏற் பட்டிருக்கலாம். பள்ளத்தாக்கு தென்பகுதியில் மண்டலே வடிநிலம் வரை அகலமாகக் காணப்படுகின்றது. இப்பகுதியிற் பளிங்குருப் பாறைக்குன்றுகள் (சான் உயர்நிலத்து வெளிக்கிடைக் குன்றுகள்) வண்டற் படிவுகளிடையில் வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. ஆவா என்னுமிடத்தில் ஐராவதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் வெளித்தோன்றியுள்ள மேற்குறித்த குன்று ஒன்றைத் துணையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.
ஐராவதி ஆறு தெற்காகச் சிட்டாங்கை நோக்கி எளிதாக ஓடாது மேற்கு நோக்கிப் பெருவளைவாக அமைந்திருப்பது ஆற்றுச் சிறை கோளினல் ஏற்பட்டதொன்றென்பர். இத்தகைய வளைவு மவுண் போப்பா தோன்றக் காரணமாகவுள்ள எரிமலைக்குழம்புப் படிவுகள் ஏற்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். ஐராவதியை நோக்கியுள்ள போப்பாச் சிகாம் 5,000 அடி உயரமுடையது ; கடந்த சில நூற்ருண்டு களாகவே இதில் எரிமலைத்தாக்கம் ஏற்படுவதில்லை. ஐராவதி ஆறு வளையுமிடத்தில் மிகக் கூடியவளவு நீர் (செக்கனுக்கு 900,000 கன அடி நீர்) காணப்படுகின்றது.
பேமிய மக்களின் மையத்தானமாக மண்டலே அமைந்துள்ளது. சிண்ட்வின்-ஐராவதி-சிட்டாங்கு ஆற்று இடுக்குக்களூடாகவும் சான் உயர் நிலப் பள்ளத்தாக்குக்களூடாகவும் செல்லும் மக்கள் சந்திக்கச்
கூடிய மையமான இடத்தில் மண்டலே உள்ளது.

Page 103
76 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
(உ) மண்டலேயிலிருந்து தயெற்பியோ வரை ஐராவதி ஆறு வறண்ட வலயக் தினூடாகச் செல்லுகின்றது. தட்டையான வண்டற் படிவுகளைக் கொண்ட இப்பகுதியில் தாழ்வான படிகளும் சிதைந்த குத்துச் சாய்வு களும் ஆங்காங்கே உள்ளன. அதிக தாவரங்களற்ற இந்நிலங்கள் மேலுயர்ந்து காணப்படும் (படம் 56). வறண்ட பருவம் நெடிதாயிருப் பதனலும் வருடந்தோறும் சிறு மழை சடுதியாகப் பெய்வதனலும் இப்பகுதியில் மண்ணரிப்பு மிகவும் அதிகமாகும். இதனல் குன்றுச் சாய்வுகள் ஆழமாக அரிக்கப்பட்டுள்ளன. மண்டிமண் நீரோடு சேர்ந்து ஐராவதியோடு கலந்துவிடுவதனல் வண்டற் படிவுகள் குறைவாகும்.
ဓါးရှို့ 40 :. 合30 }30 శ్రీ 每 CS Sa 母20 ;ao ဒိ, శ ... • | %
நீறிஞ்சி ሪ‛ 侬。静 O 0|| شمسالها به ای s 鳢 *9 - ...}
சன. பெப். மாச். எப். மே யூன் பூலே ஒக. செத், ஒற். நவ திசெ.
படம் 52. மேல் ஐராவதி ஆற்று ஒழுங்கு
இக்காரணங்களினல் இப்பகுதி "பயனற்ற நிலமாக” உள்ளது. இங் குள்ள சிறிய அருவிகள் பெரும்பாலும் வறண்டு காணப்படும். ஆணுல் மழைப்பருவத்திற் சில நிமிட நேரத்திலேயே நீர் பெருகிச் சேற்முேடு சேர்ந்து பிாவாகித்து ஓடும். வறண்ட வலயத்தில் நீராவியாதல் வீத மும் அதிகமாகும். இதனுல் ஆற்றுநீர் எப்பொழுதும் அதிகமாக இராது. மேலும் இப்பகுதியிற் பள்ளத்தாக்கு கடல்மட்டத்திலிருந்து 200 அடிக்கும் குறைவாகவே உள்ளது. ஆனுற் கடல் 450 மைல் தூரத் கிற்கு அப்பால் உள்ளது (படம் 52). (ஊ) தயெற்பியோவிலிருந்து புரோமுக்குக் கீழுள்ள அகவுக்தவுங்குப் பாறைத் தொடர்வரையுள்ள பகுதியில் அரக்கன் யோமா பெசுயோமா என்பன ஒன்றற்கொன்று அண்மையாக உள்ளன. இவற்றிலிருந்து வெளிப்புடைத்து நிற்கும் தொடர்கள் ஐராவதி ஆற்றுப் பள்ளத்தாக் கிற்குக் குறுக்கே காணப்படுகின்றன. பள்ளத்தாக்கு ஒடுங்கியிருப்ப தோடு மேல் ஐராவதி ஆற்றுப் பள்ளத்தாக்கிற்போன்று குத்தான பாறைப் பகுதிகளிடையில் மண்டலேப் பகுதியை நிகர்க்கும் வண்டம்
 
 
 

பேமா இயற்கை நிலத்தோற்றம் 177
படிவுகள் உள்ளன. ஒடுக்கமான ஓர் இடத்தில் முக்கிய ஆற்றுத் துறை முகமான புரோம் உள்ளது. இதிலிருந்து கீழே 90 மைல் அாாத்தில் ஐராவதியின் முதற்பரப்புங் கிளையாருன பசேன் ஆறு தொடங்கு கின்றது. இதன் கீழ்ப்பாகத்திலும் மணற்குன்று ஓங்கல் புடைத்து நிற்பதால் ஆறு ஒடுங்கிக் காணப்படுகின்றது. பள்ளத்தாக்கு கழிமுகக் தின் உச்சியான மியானுேங்குவரை பரந்துள்ளது.
(எ) ஆற்றுக் கழிமுகம் வடக்குத் தெற்காக 180 மைல் நீளமும் கடற்கரையை யடுத்து 150 மைல் அகலமும் உடையது. இப்பகுதியிற் பரப்புங் கிளை யாறுகள் பல இணைந்தும் பிரிந்தும் காணப்படுகின்றன. மொத்தம் ஒன்பது கிளையாறுகள் மூலம் ஐராவதி ஆற்றுநீர் கடலோடு சேருகின் றது. எயா ஆற்றுமுகமூலமே பெருந்தொகையான நீர் வெளியேறுகின் றது. பசேன் ஆறும் சங்கூன் ஆறும் ஐராவதியின் பரப்புங் கிளையாறு களோடு சேர்ந்துள்ளபொழுதும் அவை தனிப்பட்ட ஆறுகளேயாம். பசேன் ஆறு அரக்கன் யோமாத் தொடர்களிலிருந்தும் சங்கூன் ஆறு பெசு யோமாத் தொடர்களிலிருந்தும் ஊற்றெடுத்து ஓடுகின்றன. இந்த ஆறுகளின் கழிமுகங்கள் பிரதான கழிமுகத்தோடு இணைந்து காணப்படுகின்றன. கழிமுகப் பகுதி தட்டையாகவிருப்பதிலும் பார்க்கத் தாழ்வாக உள்ளது எனக் கூறுதலே பொருத்தமாகும். இங் குள்ள 2,000 சதுர மைல் பரப்பு நிலம் (மொத்தம் 12,000 சதுர ன்மல் பாப்பு நிலத்தில்) உயர் பெருக்கு மட்ட எல்லைக்குக் கீழே காணப்படு கின்றது. இன்றும் 2,000 சதுர மைல் பரப்பு நிலம் இந்த மட்டத்திலும் ஓர் அடிமட்டுமே உயரமுடையது. சடுதியாக ஏற்படும் பெரு மழை வீழ்ச்சியும் இக்கழிமுகப் பகுதியிலுள்ள நுண்மண்டியும் மண்ணரிப்பு விரைவாக நிகழக் காரணமாக உள்ளன. இதனுல் நிலமட்டம் குத்தாக உயருவதில்லை. குறிப்பாகப் பயிர்நிலத்தில் இத்தகைய உயர்ச்சி இல்லை. இதனுற் கழிமுகம் கடலைநோக்கிக் கிடையாக நீண்டுவருகின்றது. ஒரு நூற்முண்டுக் காலத்தில் ஏறத்தாழ மூன்று மைல் பரப்பளவில் நிலம் (வருடத்தில் 50 மீற்றர்வரை) வளருகின்றது. கரைப்பகுதியில் அடை யல்கள் படிந்ததும் தாவரங்கள் அவற்றின்மீது தோன்றி வளருகின் றன. இடையிலுள்ள கடலேரிகளில் மாங்குரோவ் செடிகள் வளர்ந்து மூடுவதனுல் நிலம் படிப்படியாக உயர்ந்து விடுகின்றது. நாலாம் அத்தி யாயத்தில் கூறப்பட்டுள்ளமுறையில் கழிமுகப்பகுதி படிப்படியாக வளர்ச்சி பெறுவது நோக்கற்பாலது. கழிமுகம் பெரும்பாலும் தாழ் வாக உள்ளது. கழிமுகத்திற் பரப்புங் கிளையாறுகளைச் சார்ந்து உயர ாணைகள் காணப்படுகின்றன. வளைவான கரையைச் சார்ந்துள்ள மேட் ப்ெ பகுதிகளிற் சவுக்க மரங்கள் பரந்துள்ளன. கரையில் முன்பு காணப்பட்ட மணல் மேடுகள் பெருநிலத்தோடு சேர்ந்து காணப்படு ଈର୍ଷ୍tpଶor.

Page 104
178 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
முந்திய வடிகால்களும் இன்றைய வடிநிலத்திலுள்ள மலையாக்க நிலைமைகளி ஞல் அமைந்த வடிகால்களும் இணைந்ததனுல் கிளையாறுகள் மிகவும் சிக்கலான வையாகக் காணப்படுகின்றன. இக்கிளையாறுகள் மண்டலேக்கு மேல் ஐராவதி ஆற்ருேடு சேர்ந்துள்ளன. இவற்றுள் சுவெலி, மியிற்றின்கே என்பன நெடியவை. ஒழுங்கற்ற முறையிற் காணப்படுவதோடு சிறைகொள்ளப்பட்ட இடங்களும் உண்டு. ஆற்று ஒடுக்கப்பகுதிகளும் பெயர்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன.
ஐராவதி ஆற்றின் பிரதான கிளையாறு சிண்ட்வின் (44,000 சதுர மைல் அள வான வடிநிலத்தை அடக்கியுள்ளது) ஆகும். ஹ"அகோங்குப் பள்ளத்தாக்கி லுள்ள இதன் மேற்பகுதி மேல் ஐராவதிக்கு அண்மையாக உள்ளது. பின்பு இது மேற்காக வளைந்திருக்கின்றது. இப்பகுதியில் விரைவாற்றேட்டங்களும் நீர் வீழ்ச்சிகளும் உள்ளன. இதற்கப்பால் ஆறு தெற்கு நோக்கி ஓடிப் பரப்புங்கிளை யாறுகளாக ஐராவதியோடு சேருகின்றது. உட்பகுதியில் உள்ள கழிமுகம் போன்று இது காணப்படுகின்றது. ஐராவதிப் பள்ளத்தாக்கோடு சேருமிடத்தில் தாழ்வான பகுதியில் சிண்ட்வின் ஆறு ஓடும்நிலையை இது காட்டுகின்றது. மேல் சிண்ட்வின் குத்துச்சாய்வுகளிடையேயுள்ள அகலமான கீழ்மடிப்பில் அமைந் துள்ளது. நிலம் விசிறி மடிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. சுவேபோக் குன்றுகளுக்குக் கிழக்கில் பெரிய பிளவு ஒன்றும் காணப்படுகின்றது. மின் கினுக்கு அண்மையில் சிண்ட்வின் ஆறு மலையாக்கத் தாக்கத்தால் ஏற்பட்ட வடி நிலத்திலிருந்து நீங்கி, குத்துச் சாய்வுகளை ஊடறுத்து மேடின், பலுசாவா மேல் மடிப்புக்களிடையேயுள்ள தாழ்வான பகுதியையடைந்து பின்பு தெற்குநோக்கி ஒடுகின்றது. தென் பகுதியில் அகலமானதாகவுள்ள இந்த ஆறு சிவெசாய் என்னுமிடத்திற் கண்மையில் ஆற்றின் இருபுறத்தும் எரிமலைக் குழம்புப் படிவு கள் படிந்துள்ளமையால் ஒடுங்கிக் காணப்படுகின்றது. இப்பகுதியில் இருபுறத் தும் ஓங்கல்களையுடைய பள்ளத்தாக்கில் சிண்ட்வின் ஓடுகின்றது.
காடுகளும் பிற தாவரவகைகளும்
அரக்கன் யோமாவின் மேற்குப் பாகம், பெகயோமாவின் தென் பகுதி, சிட் டாங்குப் பள்ளத்தாக்கை நோக்கியுள்ள சான் உயர்நிலத்தின் மேற்கு ஒரம், சல்வின் ஆற்றுக்குக் குறுக்கே 25° வட அகலக்கோடு வரையுள்ள ஒடுங்கிய பகுதி, தெனசெரிம் பகுதி என்பவற்றில் அயன மழைக்காடுகள் பரந்துள்ளன (படம் 53).
பாலை, தேக்கு முதலிய மரங்களைக் கொண்ட உதிர் காடுகள் (பருவக்காற்றுக் காடுகள்) 80 அங்குல மழைக்கோட்டினுல் வரையறுக்கப்பட்டுள்ளன. இம்மாள் கள் காணப்படும் பகுதிகளில் தரையில் செடிகொடிகள் குறைவாகும். இதனுல் நிலம் பெரும்பாலும் வெளியாகத் தோற்றமளிக்கும். இம்மரங்களோடு வேறு சில என்றும் பச்சையான மரங்களும் மூங்கில்களும் கலந்து காணப்படுகின்றன. இவை பேமாவில் அநேகமாக எங்கும் பரந்துள்ளன. இங்கு இருவகையான
தேக்குமரக்காடுகள் உள்ளன. மூங்கிற் பற்றைகளைக் கொண்ட வறண்ட காடுகள்

பேமா இயற்கை நிலத்தோற்றம் 79
ஒருவகையின. ஈரக்காடுகள் மற்ருெரு வகையின. இக்காடுகள் வட தெளுசெரிம், பெசுயோமா என்னும் பகுதிகளிலும் பாமோவுக்கு அண்மையிலும் மேல் பேமா விலுள்ள கதா என்னுமிடத்திலும் காணப்படுகின்றன. 3,000 அடிக்கும் உயர மான பகுதிகளில் மரங்கள் உயரமாக வளர்ந்து மூடிக்காணப்படும். கருவாலி மரங்கள் அதிகமாக உள்ளன. உயரமான அரக்கன் யோமாத் தொடரிலும் பாற்
கோய்த்தொடர்களிலும் ஊசியிலை மாங்கள் பரந்துள்ளன.
காடுகளோடு சேர்ந்து சவனப் புல் வகையும் சான் உயர் நிலத்தில் அதிகமாகப் பரந்துள்ளன. நுண்டு ளேயுடைய கீழ்மண்ணும் தாவரம் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையாளரால் அழிக்கப்படுவதும் இத்தாவர வகைகள் தோன்ற மேலும் துணையாகவுள்ளன.
ஐராவதி வடிநிலத்திலுள்ள வறண்ட வலயத்தில் 35 அங்குல மழைவீழ்ச் சிக்கு உட்பட்ட பகுதியில் வறண்ட புதர் காடுக ள் காணப்படுகின்றன. பகோக்கூக்கு மேற்கிலுள்ள யோ பள் ளத்தாக்கில் வர்த்தகத் தேவைக்குரிய நல்ல கருங்காலி மாங்கள் காணப் படுகின்றன. மண்டலேக்குத் தெற்கில், குறிப்பாகப் பெசுயோமாவில், சிறு கிளைகளையுடைய குட்டையான மரங் கள் பரந்துள்ளன. இவற்றுள் தேக்கு UA TfÄ7é5@ij5ub அக்கேசியா மரங்களும் குறிப்பிடத்தக்கன. ஈரமான பகுதி களில் சைக்கட் (Cycad) மரங்கள் உள் இலேய கிர் ளன. வலயத்தின் மத்திய பகுதியில் 禺臀 முட்களையுடைய அக்கேசியா மரங்களும் 2 சேற்றுநிலக் காடு யூபோ பியா (சதுரக்கள்ளி) மரங்களும் :* குன்றுக் காடு
அயன மழைக் காடு
காணப்படுகின்றன. நீர்ப்பற்றுடைய உவறண்ட புதர்க் காடு இடங்களைச் சார்ந்து பனைமரங்கள் வளர்ந்துள்ளன. படம் 53. பேமாவின் தாவர வகைகள்
அதி வடக்கில் கண்டத்தன்மையுடைய காலநிலையும் உயரமும் சேர்ந்து காணப்படுவதனல் அலிஞ்சி (உரோடோடெண்டிசன்) பூமரங்களே பெரும் பாலும் வளர்ந்துள்ளன. மக்னேலியா, மேபிள்ஸ், பேர், பைன் முதலிய மரங்கள்
பொதுவாகக் காணப்படுகின்றன. இங்கும் 8,000 அடிக்கு மேலுள்ள பகுதிகளிற்

Page 105
180 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
குட்டையான மூங்கில் மரங்கள் உள்ளன. இத்தகைய காட்டுமரங்கள் மேலும் of Affat பகுதிகளிற் பூச்செடிகள், யுனிப்பர், பாசிவகைகள், என்றும் பச்சை யான செடிகள் பல்லாண்டுத்தாவரவகைகள் முதலிய மலைத் தாவர வகைகளோடு சேர்ந்து காணப்படுகின்றன.
கடற்கரைகளைச் சார்ந்தும் கழிமுகங்களைச் சார்ந்தும் மாங்குரோவுச் செடி கள், சேற்றுநிலத் தாவர வகைகள் என்பன காணப்படுகின்றன. இத்தகைய தாவர வகைகளே தென் கிழக்காசியாவின் பிற கரையோா, கழிமுகப்பகுதிகளி லும் காணப்படுகின்றன.
காடுகளின் வர்த்தகப் பயன்பாடு
வர்த்தகத் தேவைக்காகப் பேமாவிற் பெறப்படும் மரங்களுள் பாலையும் தேக் கும் முக்கியமானவையாகும். உள்நாட்டுத் தேவைக்காகப் பலவகையான பிற மரங்களும் உபயோகிக்கப்படுகின்றன. பேமிய மக்களின் வீடுகளில் மூங்கிலும் பனையோலை போன்ற பல ஓலைகளும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பேமாவின் பெரும்பகுதியில் தேக்குமரங்கள் காணப்படுகின்றன. வர்த்தகத் தைப் பொறுத்தவரையில் இம்மரங்களே முக்கியமானவை. வருடத்தில் 400,000 தொன் மரங்கள் வரை பெறப்படுகின்றன. தாவடி-புரோம், பியின் மனு, துங்கு, கதா சுவேபோ, சிண்ட்வின் பள்ளத்தாக்கு, மியிச்சீனு, மின்பூ சான் உயர்நிலம், கீழ்ச்சல்வின் பகுதி முதலிய பகுதிகளிலுள்ள காடுகளிலிருந்தே தேக்கு மரங்கள் பெரும்பாலும் பெறப்படுகின்றன. மரவேலைகளுக்கு வேண்டிய தொழிலாளர் வசதி குறைவாயிருத்தலினலும் ஆறுகள் அருவிகளில் நீருள்ள பொழுதே மரங்களைக் கொண்டு செல்லக் கூடியதாயிருத்தலினலும் மரம்வெட்டுந் தொழில் மிகவுஞ் சீரான முறையில் நடைபெறுகின்றது. வெட்டப்பட்ட தேக்கு மரங்களை பானைகள் இழுத்துச்சென்று ஆறுகளில் விடுகின்றன. இவை பின்பு ஆற்முேட்டத்தின் உதவியோடு கீழே கொண்டு செல்லப்படுகின்றன. யூலை முதல் ஒற்முேபர் வரையுள்ள காலத்தில் மழை அதிகமாகவிருத்தலினல் ஐராவதி, சிட் டாங்கு, சல்வின் ஆகிய ஆறுகளில் நீர் அதிகமாகவிருக்கும். இக்காலத்தில் இந்த ஆறுகள் மூலம் பெருந்தொகையான தேக்குமரங்கள் கொண்டு செல்லப்படுகின் றன. வர்த்தகமையமாக ரங்கூன் விளங்குகின்றது. நவம்பர்-பெப்புருவரி காலத்தி அலும் மரங்கள் இங்குப் பெறப்படுகின்றன. மண்டலே, பகோக்கூ, புரோம், துங்கு முதலிய இடங்களிலேயே தேக்கு மரங்கள் கட்டப்பட்டு ஆறுகளில் விடப்படு கின்றன. ரங்கூன், மூல்மேன் ஆகிய பட்டினங்களிலேயே மரங்கள் வியாபாரத் தேவைக்கேற்பப் பலகைகளாக அரியப்படுகின்றன. ஆற்றோங்களைச் சார்ந்து வேறு சில சிறிய மாமரியுமாலைகளும் காணப்படுகின்றன. யுத்தகாலத்தின் பின்பு பேமாவின் தேக்கு மர வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண் டில் 565,000 தொன் தேக்கு மரம் பெறப்பட்டது. ஏற்றுமதியிற் பெரும்பகுதி இந்தியாவுக்குச் செல்லுகின்றது. எஞ்சிய பகுதி ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற் அறுமதி செய்யப்படுகின்றது. 1963 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள

பேமா: இயற்கை நிலத்தோற்றம் 18
ஏனைய நாடுகளிலிருந்து வருடத்தில் பேமாவின் தொகையில் நாலிலொரு பகுதி
பெறப்பட்டது.
அண்மைக்காலத்தில் தேக்கு மரத்தொகையிலும் பார்க்கப் பிற மரங்கள் அதி கமாகப் பெறப்படுகின்றன (1962 இல் 594,000 தொன்). ஆனல் இத்தகைய மரங் கள் பெரும்பாலும் உள்நாட்டு உபயோகத்துக்காகவே பெறப்படுகின்றன. பேமாவிலுள்ள காடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பெறப்படும் மசங் களின் தொகை அதிகமாக இல்லை. மரங்களைப் பெறுவதிற் பல இடர்ப்பாடுகள் உள்ளன. பிற மரங்களிற் சில, நீரிலும் பார்க்கப் பாரமானவை (அயனப் பகுதி யில் புகையிரதப் பாதைக்கும் உறுதியான கட்டடங்களுக்கும் உபயோகிக்கப் படும் பாலைமரம் இத்தகைய ஒன்றகும்). இதனை வேறு மரங்களோடு சேர்த்துக் கட்டி ஆற்றில் இழுத்துச் செல்லவேண்டியுள்ளது. ஆற்றில் நீர் அதிகமாக இருத் தலும் அவசியமாகும். வருடத்தில் 100,000 தொன் பாலை மரம் வெட்டி எடுக் கப்படுகிறது. இதனை அரியும் ஆலைகள் மண்டலேயிலே பெருந்தொகையாகக் 5ாணப்படுகின்றன.
பேமாவின் வருவாயிற் பெரும்பகுதி காடுகளிலிருந்து பெறப்படுகின்றது. யுத்த காலத்தின் பின்பு பேமாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுள் நெல் விற்கு அடுத்ததாகத் தேக்குமாம் உள்ளது. மத்தியகோட்டிற்கு அண்மையாக வுள்ள பகுதிகளிற் காட்டுவளத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படாதபொழு தும் பேமாவில் இது மிகவும் முக்கியமாக உள்ளது.
கணிப்பொருள்கள்
பேமாவின் கைத்தொழிலாக்கத்திற்கு நிலக்கரியின்மை ஒரு தடையாகவுள் ளது. வட சான் மாகாணங்களிலும், லஷோ, நம்மா என்பவற்றிற்கண்மையி லும், மின்பூ ஹென்சடா என்பவற்றைச் சார்ந்துள்ள அரக்கன் யோமா அடிக் லும், மின்பூ ஹென்சடா என்பவற்றைச் சார்ந்துள்ள அரக்கன் யோமா அடிக் முக்கியமான கணிப்பொருள் பெற்றேலியமாகும். பெசு யோமாவின் வடமேற்கி அலுள்ள மேல்மடிப்பு, குமிழ்மடிப்புப் பகுதிகளிற் பெற்றேலியம் காணப்படுகின் றது. இங்கு இன்டோவிலிருந்து (மேல் சிண்ட்வின் பகுதி) சாபே (மேற்குப் பகோக்கூ), சிங்கு என்னுமிடங்களை உள்ளடக்கியதாய் யேனுன்யவுங்கு வரை நிலநெய் வயல்கள் பரந்துள்ளன. 1942 ஆம் ஆண்டுவரை இவ்வயல்களிலிருந்து நிலநெய் பெறப்பட்டது (படம் 54). சங்கூனிலிருந்து ஆற்றுக்கு அப்பால் சிரி யாம் என்னுமிடத்திலுள்ள சுத்தி செய்யுமாலைகளுக்கு 2,750 இலட்சம் கலனுக்கு மதிகமான (1939-40) நிலநெய் குழாய் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. உலக உற்பத்தியோடு பார்க்கும் பொழுது இங்கு பெறப்பட்ட தொகை குறைவாகும் (1 சத விதத்திலும் குறைவாகும்). ஆனல் இந்தியாவுக்குப் பெற்றேலியமும் துர கிழக்கு நாடுகளுக்கு மண்ணெண்ணெய் மெழுகுதிரி முதலியனவும் ஏற்று

Page 106
182 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மதிசெய்யக்கூடியவகையில் இவ்வயல்கள் அமைந்திருந்தமை பொருத்தமேயாம். சிரியாம் என்னுமிடத்திலுள்ள சுத்திசெய்யுமாலைகள் இப்பொழுது திருத்
நிலநெய்க் குழாயு;
பம்பு நிலையமும் சுத்த செய்யும் ஆ.ோ
لیبیسیسیپیسی-؟
ージ யேகுன்பாவுங்கு ஐநியவுங்கிலா めノ*
படம் 64. மத்திய ஐராவதிப் பகுதியிலுள்ள நிலநெய் வயல்கள்
கிக் கட்டப்பட்டுள்ளன. யேனுன்ய வுங்கு வயல் தேசிய அடிப்படை யில் உற்பத்தி செய்கின்றது. 54 ஆம் படத்தில் காட்டப்பட்டுள்ள குழாய்கள் திருத்தி அமைக்கப் படுகின்றன. 1963 ஆம் ஆண்டில் 612,000 தொன் சுத்தி செய்யப் படாத நிலநெய் உற்பத்தி செய் யப்பட்டது. சிரியாம் ஆலையில் தினமும் 1,100 தொன் நிலநெய் சுத்திசெய்யப்படுகிறது.
மண்டலேயின் வட கிழக்கி லுள்ள மோகோக் சுரங்கத்தி லிருந்து இரத்தினக் கற்கள் பெறப்படுகின்றன. இவற்றுள் சிவப்புக்கல் முக்கியமாகும். பேமா வில் இக்கற்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. ஆனல் வியாபாரத்தைப் பொறுத்தவரையில் இவை அத் துணை முக்கியமாக இல்லை. முன்பு சீனர் அகழ்ந்தெடுத்த முயற்சி களைப் பின்பற்றிச் சான் மாகா ணத்திலுள்ள போட்வின் என்னு மிடத்தில் புதிய முறையிற் கணிப் பொருள்கள் பெறப்படுகின்றன. 1960 இல் இங்கு 22,000 தொன் ஈயமும் 40 தொன் வெள்ளியும் (யுத்தகாலத்தின் முன்பு பெறப் பட்ட தொகையில் ஒரு பகுதியே யாகும்) பெறப்பட்டன. தெணு செரிம், கரென்னி ஆகிய பகுதி களிலுள்ள கருங்கற் பாறைகளைக் கொண்ட குன்றுகளின் மேற்குச் சாய்வில் (படம் 55) தகாப்
படிவுகள் காணப்படுகின்றன. மலாயாக் குடாநாட்டிற் போன்று இவை காணப் படுகின்றன. தவோய்க்கு கிழக்கில் தகரமும் தங்கிதனும் உள்ளன. மேர்குயிக்கும் விக்டோறியா முனைக்குமிடையில் தகரமே பெரும்பாலும் பெறப்படுகின்றது.
 
 
 
 

பேமா இயற்கை நிலத்தோற்றம் 88
தெனசெரிமிலிருந்தே தகரம் பெருந் தொகையாக ரங்கூனுக்குக் கொண்டு செல் லப்படுகின்றது (1961 இல் 1,035 தொன்). சங்கூனிலிருந்து இத்தகரம் பினுங்கு, சிங்
கப்பூர் ஆகிய இடங்களிலுள்ள உருக்கும் 幸
ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின் றது. மியிச்சீன என்னுமிடத்திற்கண்மை யில் ஐராவதி பாற்படையிற் காணப்பட்ட
தங்கப்படிவுகள் இப்பொழுது முக்கிய
மானவையாய் இல்லை.
பேமாவின் மொத்தக் கணிப்பொருள் வரு வாய் குறைவாகும். நாட்டின் கைத் தொழில் விருத்திக்கும் பொருளாதார முதன்மைக்கும் இது போதியதாயில்லை. போட்வினில் ஈயம், வெள்ளி என்பன பெருந்தொகையாக அகழ்ந்தெடுக்கப்படா தும் உள்ளன. ஆனல், பொதுவாக பேமாவி லூள்ளமுக்கியமான கணிப்பொருள்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுவிட்டன. கணிப்பொருள் எடுக்குந் தொழிலை மீளவும் சிறப்பாக அமைப்பதற்குத் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படல் வேண்டும். இப்பிரச்சினைகள் புதிய பிரச்சினைகளல்ல. கடந்த நூறு வருட காலமாகவே தொழிலாளர் பிரச் சினைகளாற் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வநதுளளது.
மண்வகைகள்
பேமாவின் மண்வகைகள் பெரும்பாலும் தென் கிழக்கு ஆசியாவிலுள்ள மண் வகை களை ஒத்துள்ளன. பேமாவின் வறண்ட வல யத்தில் மட்டும் காலநிலைத் தன்மைகள் ஒழுங்காக இல்லாமையினல் மண்வகைகள் வேறுபட்டுள்ளன. சரளை மண்ணுக்கம் வறண்ட வலயத்தின் ஓரங்களைச் சார்ந்து காணப்படுகின்றது. வறண்ட வலயத்தில் நீராவியாதல் அதிகமாக நிகழுவதனல் மேல் மண்ணில் கரைசல்கள் வந்து படிந்து விடுகின்றன. வறண்ட வலயத்தில் இரு
வேறுபட்ட மண்வகைகள் உள்ளன :
"தகரச் சுரங்கம் * உலுல்பிராம்
சுரங்கம்
படம் 55. கீழ்ப் பேமாவிலுள்ள கணிப்பொருள் எடுக்குமிடங்கள்

Page 107
184 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
(அ) கரிய பருத்தி மண்-பழைய ஐராவதி வண்டல்கள் மீது ஏறத்தாழ
இரண்டு அடி தடிப்பில் இந்த மண் காணப்படுகின்றது (வறண்டுவிடும் பொழுது மஞ்சள் நிறமாகவிருக்கும்). ஈரமாகவிருக்கும்பொழுது கருமை அதிகமாகும். களிமண்ணைப்போன்றிருந்தாலும் இதில் களித் தன்மை குறைவாகும் (45 சத வீதம் வரையில்). கல்சியம் மகனீசியம் என்பன அதிகமாகவிருத்தலினலே மண் இறுக்கமாகவுள்ளது. நீராவி யாதல் அதிகமாக நிகழுவதனலே இப்பொருள்கள் உண்டாகின்றன. இம்மண்ணைப் பதன்செய்தல் கடினமாகும். இது பருத்திச் செய்கை யோடு தொடர்புடையதாய் உள்ளது. கருமண் மோன்யுவா, சுவேபோ என்னும் பகுதிகளில் சிண்ட்வினில் இருபுறத்தும் பரந்துள்ளது. வறண்ட வலயத்தின் மத்தியிற் பல இடங்களிற் சிறிய அளவில் இம் மண் காணப்படுகின்றது. நீரைப் பேணிவைத்திருக்குமியல்பு இம்மண் ணிற்கு இருப்பதனல் வறண்ட பருவத்திலும் பயிர்களை விளைவிக்கமுடி கின்றது. குளிர்காலத்திலும் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.
ஆ) உவர்மண்ணும் உப்புமண்ணும்- களித்தன்மை குறைந்த பகுதிகளில் மிக்க நீராவியாக்கம் காரணமாக இம்மண்வகை உண்டாகின்றன. மண்ணின் நுண்டுளைத் தன்மை காரணமாக காபனேற்று, சோடியம் சல்பேற்று, கல்சியம், மகனீசியம் முதலியன வந்து படிகின்றன. இவை படிவதனுல் மண் மஞ்சள் நிறமாகவும் கபிலநிறமாகவும் மாற்றமடை இன்றது. சுவேபோவுக்குத் தென் கிழக்கிலும் வட சாகயிங்கிலும் உப்பு மண் அதிகமாக உண்டு. வட சாகயிங்கில் உப்புநீர் ஏரிகளும் (ஹலின், யெம்யெற் இன்) காணப்படுகின்றன. செலின்கியி எரிமலை மேனிலங் களில் உப்புத் துகள்கள் பரந்துள்ளன. பொதுவாக உவர் மண், உப்பு
மண் முதலியன பயிர்வகைகளுக்குப் பொருத்தமானவையாயில்லை.

அத்தியாயம் 10 பேமாவின் பண்பாட்டு நிலத்தோற்றம்
பேமாவில் மூவகையான பயிர்ச்செய்கை உண்டு. அவையாவன: (1) குன்றும் பயிர்ச்செய்கை, (2) வறண்ட வலயப் பயிர்ச்செய்கை, (3) கழிமுகப் பயிர்ச் செய்கை. பேமியரின் வாழ்க்கையோடு மிகத் தொடர்புடையது வறண்ட வல யப் பயிர்ச்செய்கையே. அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையும் தேசிய ஒருமைப்பாடும் பெரும்பாலும் வறண்ட வலயத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. உலகின் பிறநாடுகளைப் பொறுத்தவரையில் பேமாவின் கழி முகப் பயிர்ச்செய்கை முக்கியமாக உள்ளது. இப்பகுதியிலே மேலதிகமாக நெல் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. குன்றுப் பயிர்ச்செய்கையில் மிகக் குறைந்த தொகையினரே ஈடுபட்டுள்ளனர்; இது சொந்தத் தேவைக்காக மேற்கொள்ளப்படுவதனுல் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
வறண்ட வலயப் பயிர்ச்செய்கை
ஒன்பதாம் நூற்முண்டிலிருந்து பேமியர் வாழும் மிகவும் முக்கியமான பகுதி யாக வறண்ட வலயம் அமைந்துள்ளது. வருடத்தில் கூடிய காலம் வறண்டு காணப்பட்டபொழுதும் இப்பகுதி மிக முக்கியமாக அமைந்திருப்பது நோக்கு தற்குரியது. கடந்த நூற்ருண்டின் தொடக்க காலத்திலே இப்பகுதியில் மிகை யாகக் குடித்தொகை பெருகிவிட்டதனுல் மழை வறண்டுவிடுங் காலங்களிற் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு மக்கள் பல இன்னல்களை அனுபவிக்க நேர்ந் தது (படம் 61). இன்று நெல் பெருந்தொகையாக விளையும் தெற்கிலுள்ள கழி முகப்பகுதியிலும் பார்க்க வறண்ட வலயம் ஏலவே விருத்தி செய்யப்படுவதற் குச் குழல் தன்மைகளும் பாரம்பரிய இயல்புகளுமே காரணம் எனலாம். வேண் டுமென்றே வறண்ட வலயத்தை விருத்தி செய்தனர் எனக் கூறமுடியாது. பேமி யர் வடக்கிலுள்ள பகுதிகளிலிருந்தே இப் பகுதியில் வந்து குடியேறினர். வறண்ட பகுதிகளிலிருந்து வந்தமையால் அவர்கள் மேற்கொண்ட பயிர்ச் செய்கை முறைகள் இப்பகுதிக்குப் பொருத்தமானவையாக விருந்தன. இப் பகுதியிற் பயிர்களை விளைவிப்பதில் அவர்களுக்கு எதுவித தடையுமிருக்கவில்லை. வடக்கிலுள்ள பகுதிகளிலும் பார்க்க இந்த வறண்ட வலயத்திற் பயிர்களை விளைவிப்பது ஓரளவுக்கு எளிதாகவுமிருந்திருக்கலாம். இப்பகுதி அலைத் தன்மை யுடைய சமநிலமாக இருத்தலினலும் சிறு குன்றுகளும் ஒழுங்கற்ற ஆறுகளும் வேறுபட்ட மண்வகைகளும் இங்குக் காணப்படுதலினுலும் கலப்புப் பயிர்ச் செய்கைக்கு இது ஏற்ற ஒன்முக உள்ளது. இன்றும் கலப்புப் பண்ணை வேளாண் மைக்கு இப்பகுதி முக்கியமாக உள்ளது. வறண்ட வலயம் ஐராவதி ஆற்று வடி நிலத்தின் மத்தியில் அமைந்திருப்பதோடு சிண்ட்வின், மேல் ஐராவதி, கீழ் ஐராவதி, சிட்டாங்கு ஆகிய ஆறுகளின் பள்ளத்தாக்குக்களுக்கூடாகச் செல்
185

Page 108
186 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
வோர் சந்திக்கும் மையப் பகுதியாகவும் விளங்குகின்றது. இதனல் பேமியரின் பண்பாட்டு இயல்புகள் ஒருங்கிணையவும், பேமிய மக்கள் ஒருங்கு சேர்ந்து நின்று வாழ்க்கைக்கு ஒவ்வாத வடபகுதிகளிலிருந்து பின்னர் உட்புகுந்தவரை எதிர்த்து நிற்கவும் இப்பகுதியின் அமைவு பொருத்தமாயிருந்தது.
இப்பகுதியிற் பல்வேறு பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. பயிர்விளை நிலம் சிறுதுண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொட்டம் தொட்டமாய் கிடக் கும் பகுதிகளில் மட்டுமே நெல் பயிரிடப்படுகின்றது. ஒடுக்கமான ஆற்றுப் பள் ளத்தாக்குக்களும் நீரேந்தும் வடிநிலங்களும் இதற்குப் பயன்படுத்தப்படுகின் றன. மழைவீழ்ச்சி குறைந்த வறண்ட வலயத்தில் நீர்ப்பற்றுடைய இப்பகுதி களே நெற்பயிருக்கு ஒரளவுக்கு ஏற்றனவாகவுள்ளன. வாய்க்காலாற் பரப்பும் வகையைச் சேர்ந்த நீர்ப்பாய்ச்சல் முறையும் சிறிய அளவில் (நீர்த்தேக்க வகை யன்று) பதினுெராம் நூற்ருண்டிலிருந்து விருத்திசெய்யப்பட்டுள்ளது. சவுக் சேப் பகுதியில் இத்தகைய நீர்ப்பாய்ச்சல் முறைகள் காணப்படுகின்றன. வறண்ட வலயத்திற் போதிய அளவுக்கு நெல் விளைவிக்கப்பட்டது. சிறிய குளங் களிலிருந்தும் (ஒடும் நீரைச் சிறிய அணைகளினல் மறித்துக் கட்டுவதன்மூலம் இக் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன) நீர் பாய்ச்சப்படுகின்றது. சிறிய அருவி கள் ஆழமான பள்ளத்தாக்குக்களிற் காணப்படுவதோடு மழைக் காலத்தில் வேகமாகவும் ஒழுங்கற்றும் ஒடுகின்றன. சாதாரண முறைகளைக் கொண்டு இவற் றைக் கட்டுப்படுத்தி நீர்ப்பாய்ச்சுதலுக்குப் பயன்படுத்துதல் கடினமாகும். இப் பகுதியிற் குடியடர்த்தி அதிகரித்ததனுல் தன்னிறைவுத்தன்மை குறைந்துள் ளது. எனினும் பயிர்செய்வோர் தன்னிறைவு மனப்பான்மை உடையவராகவே உள்ளனர். இவ்வலயத்தில் ஏறத்தாழ இருபத்தைந்து இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்கப்படுகின்றது. ஒரு பகுதியில் ஏப்பிரில்-மே மாதங்களில் நெல் பயிரிடப்பட்டு யூலையின் பின்பு அறுவடை செய்யப்படுகின்றது. வறண்ட வல யத்தின் பயிர்ச்செய்கை ஒழுங்கு பேமாவின் பிறபகுதிகளில் நடைபெறுவதிலும் பார்க்க வேறுபட்டதாயுள்ளது.
இவ்வலயத்தின் கரிய பருத்தி மண்பகுதியில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் எக் கர் நிலத்தில் பருத்தி விளைவிக்கப்படுகின்றது. சிறு துண்டு நிலங்களில் இது பயி ரிடப்படுகின்றது. சாதாரண சிறுகமக்காாரே இதில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சை எடுப்பதற்கு வேண்டிய தொழிலாளரைப் பெறுவது கடினமாகவிருப்பதனுற் பருத்திச் செய்கையை விரிவாக்க முடியாதுள்ளது. மே மாதத்திற் பருத்தி பயிரிடப்பட்டுச் செத்தெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் அறுவடை செய்யப் படுகின்றது. நெல் அறுவடையும் இம்மாதத்திலே முடிவடைகின்றது. பருத்தி யோடு கலந்து கடலையும் பயிரிட்ப்படுகின்றது. பருத்தியின் பின்பே இது முற்று கின்றது. தாவர உணவைப் பெரிதும் விரும்பும் மக்களுக்குக் கடலை முக்கிய உண வுப் பொருளாக உள்ளது. மியின்யன், தயெற்பியோ, மீக்திலா, பகோக்கூ ஆகிய பகுதிகளில் 494,000 ஏக்கர் நிலத்தில் பருத்தி விளைவிக்கப்படுகின்றது. 1963 ஆம் ஆண்டில் குறைந்த தரப் பஞ்சு 20,000 தொன் உற்பத்தி செய்யப்பட்டது. முன்பு பாமோவின் ஊடாகத் தரைவழியாகப் பஞ்சு யுன்னனுக்கு ஏற்றுமதி

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 87
செய்யப்பட்டது. அண்மைக் காலத்தில் இது பெரும்பாலும் யப்பானுக்கு ஏற்று மதி செய்யப்பட்டது. இப்பொழுது உள்நாட்டு நெசவுத் தொழிலுக்கு இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது.
இவ்வலயம் குறைந்த மழைவீழ்ச்சியையும் வண்டல் மண்ணையும் கொண்டி ருப்பதனுல் நிலக்கடலை, எள் முதலிய வறண்ட பயிர்கள் முக்கியமாக உள்ளன. பேமியரின் பயிர்ச்செய்கை முறையில் இப்பயிர்கள் முக்கிய இடம்பெற்றுள்ளன. நிலச்கடலையும் எள்ளும், தனித்தனி 12% இலட்சம் ஏக்கர் நிலத்திற் பயிரிடப்படு கிட்றன. பயிரிடும்நிலம் சிறு துண்டுகளாக உள்ளன. பேமாவின் தேவைக்கு வேண்டியதாவர எண்ணெய் இவற்றிலிருந்து பெறப்படுகின்றது. எண்ணெய் விதைகளுள் எள் முக்கியமானதாகும். இது யூனில் விதைக்கப்பட்டு செத்தெம் பர் முதற் பகுதியில் அறுவடை செய்யப்படுகின்றது. இவற்றேடு அவரை, பயறு, பருப்புவகை, மிளகாய் என்பனவும் இங்கு பயிரிடப்படுகின்றன. உள்நாட்டு உண வுத் தேவையைப் பொறுத்தவரையில் இவை முக்கியமாக உள்ளன .வறண்ட வலயத்தில் 30-50 இலட்சம் ஏக்கர் நிலத்தில் தினைவகைகள் பயிரிடப்படுகின் றன. இவ்வலயம் மென்மண் வகையையும் வறட்சியையு முடையதாயிருப்பத ஞலே இத்தகைய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. மிகவும் வறண்ட வருடங்க ளிலும் இப்பயிர்களை விளைவிக்கலாம். ஆனல் நீர்ப்பாய்ச்சல் இல்லாது நெல்லை இக்காலங்களில் விளைவித்தல் கடினமாகும். நெல் பயிரிடும் காலத்தின் பின்பே தினைவகை விதைக்கப்படுகின்றன. இவை நவம்பரில் அறுவடை செய்யப்படுகின் றன. நெல்லின் பின்பு விதைக்கப்படுவதனுல் நெல் நன்முக இல்லாவிடித்து அதனை அழித்து தினவகையை விதைக்கக்கூடிய வசதி உண்டு. இதனுல் தினை வகை விளைவிக்கப்படும் நிலத்தில் வருடத்துக்கு வருடம் ஏற்றத்தாழ்வு ஏற்படு கின்றது. கூடிய வறட்சி ஏற்படும் பொழுதும் நெற்செய்கை பாதிக்கப்படும் பொழுதும் இவை அதிகமாகவிளைவிக்கப்படுகின்றன. பிரதான உணவுப் பொருள் களாக அமையாதபொழுதும் அதிகமாக விளைவிக்கப்படுவதற்கு மேற்குறித்த நிலைமைகளே காரணமாகும். இந்நாட்டு மக்களின் உணவில் கினைவகை பல்வேறு அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
வறண்ட வலயத்தில் நடைபெறும் பல்வேறு வகையான பயிர்ச்செய்கை முறை களுக்கு மாடுகளும் எருமைகளும் தேவையாக உள்ளன. இத்தகைய விலங்கு கள் இங்கு அதிகமாக வளர்க்கப்படுகின்றன. மாடுகளுக்குப் பொருத்தமான காலநிலையில்லாத பிறபகுதிகளுக்குத் தேவையான விலங்குகள் இங்கிருந்து கொண்டுசெல்லப்படுகின்றன. இப்பகுதிகளில் விலங்குகள் நோய் முதலியவற்றி னற் பாதிக்கப்பட்டு அழிந்துவிடுவதனுல் அடிக்கடி வறண்ட வலயத்திலிருந்து விலங்குகளைக் கொண்டு செல்லவேண்டியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் (தைலாந்தின் கீழ்ப்பகுதிக்கும் கோராத் மாடுகளுக்குமுள்ள தொடர்பினையும் பார்க்க) ஒழுங்காக இல்லாத பொழுதும் பேமாவின் மத்திய தென் பகுதிகளின் பயிர்ச்செய்கை முறைகளுக்கு இவை முக்கியமாக உள்ளன. வறண்ட் வலயத்தி லும் கழிமுகத்திலும் வாழும் மக்கள் பெளத்த சமயத்தினராகவும் இந்து சம யத்தினராகவும் உள்ளமையால் இறைச்சி முக்கிய உணவுப் பொருளாக இல்லை.

Page 109
88 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பயிரிடப்படும் ~~இருப்புப் s பாதைகள் வண்டற் சமவெளி Ο மைல் 50
படம் 58. பேமாவின் வறண்ட வலயம்
 
 

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 89
யுத்தகாலத்தில் இராணுவத்தினர் மாட்டிறைச்சியை உணவாகக் கொண்டதன ஆலும் போக்குவரத்திற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டதனுலும் பெருந்தொகை யின அழிந்துவிட்டன. யுத்தகாலத்தின் பின்பு பயிர்ச்செய்கை நடவடிக்கைக ளுக்கு வேண்டிய மாடுகளைப் பெற்றுக் கொள்வது கடினமாகக் காணப்பட்டது. வறண்ட வலயத்தின் பயிர்ச்செய்கை பெரும்பாலும் உள்நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் தொழில்முறையாக உள்ளது. சொந்தப் பயன்பாட் டுக்கான பல பொருள்கள் இதன் மூலம் பெறப்படுகின்றன. பெரும்பாலும் சொந் தக் குடும்பத்தினரும் அயலாரும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். பயிர்ச் செய்கை மூலம் வேண்டிய பொருள்களைப் பெறக்கூடியதாயிருப்பதனுற் பிற நாட்டு வியாபார விலைகளினுல் இவர்கள் பாதிக்கப்படுவதில்லை. பயிர்விளையும் நிலம் பெரும்பாலும் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. குடும்பம் ஒன்றிற்கு 5 முதல் 15 ஏக்கர் நிலம் உண்டு. 80 ஏக்கர் நிலம் மிகப் பெரிய துண்டாகக் கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் குடும்பத்திற்குரிய பயிர்விளையும் நிலத்தில் மூன்றிலொரு பகுதியிற் பயிர்கள் விளைவிக்கப்படுவதில்லை. நிலம் ஒரு வகையில் உழுது பதன் செய்யப்படுகின்றது. ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெறும் உலர்வேளாண்மை முறையில் நீர் பேணப்படும் தன்மையை இது ஒத்துள்ளது. பயிர்கள் சுழல் முறையில் ஒழுங்காக விளைவிக்கப்படுகின்றன.
பணப்பயிர்களும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. ஆனல் இவை அத்துணை முக்கியமானவையாக இல்லை. இவற்றை விளைவித்தல் ஒரு துணைத் தொழிலா கவே கொள்ளப்படுகின்றது. தாவர நெய் விதைகள், பருத்தி, பருப்புவகை என் பனவும் மாடுகளுமே பணவருவாய்க்குக் காரணமாக உள்ளன. இவை வறண்ட வலயத்தை உள்ளடக்கிய பேமாப் பகுதியிலேயே பெரும்பாலும் வியாபாரம் செய்யப்படுகின்றன. மழை ஒழுங்காக இல்லாத பொழுதும் வறண்ட வலயத் திற் பயிர்ச்செய்கை ஒரளவுக்குச் சீரானதாகவே காணப்படுகின்றது. பல வகை யான பயிர்களும் விளைவிக்கப்படுவதனுல் எந்த வருடத்திலும் எல்லாப் பயிர்க ளும் முற்முகப் பாதிக்கப்படுவதில்லை. வருடத்தில் இருமுறை குறித்த பயிர் விளை விக்கப்படும் முறை உள்ளதனுல் பயிர்ச்செய்கை மேலும் பாதுகாப்பாக அமைந் துளளது. வறண்ட வலயத்தில் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை முக்கியமானதாக இருப்பதோடு எல்லாப் பயிர்களும் ஒரே காலத்திற் சேதமடைவதும் இல்லை. வெளிநாட்டுச் சந்தையில் இவற்றின்விலை ஏக காலத்திற் குறைவடைவது மில்லை. இந்நிலைகள் சாதகமாகவிருந்தபொழுதும் வறண்ட வலயத்திற் பயிர்ச் செய்கை மூலம் பெறப்படும் வருமானமும் குறைவாகும். இந்த வலயத்தில் வா ழும் மக்கள் குறைந்த பணவருவாய் உடையவராக உள்ளனர். பேமாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இவர்களின் வாழ்க்கைத் தாம் குறைவாகும். வாழ்க்கை முறையும் எளிதாக உள்ளது. வறண்ட அயனப் பகுதியில் வாழ்க்கை முறை எளிதாக உள்ளபொழுதும் கடின மாகக் காணப்படுகின்றது. இதற்கு இயற்கைச் சூழல் தன்மைகளே காரணமா கும். குடியானேர் வேலிகளாற் பாதுகாவல் செய்யப்பட்ட கிராமங்களிற் கூட்ட
மாக வாழுகின்றனர். பயிர்விளையும் நிலங்களில் இவர்கள் வாழ்வதில்லை.

Page 110
190 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கிராமங்களிற் குடிசைத் தொழில்களும் விருத்திபெற்றுள்ளன. பருத்தி, பட்டு நெசவுத் தொழில்கள் குறிப்பிடத்தக்கன. இத்தொழில்களுக்கு வேண்டிய நூல் கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. யுத்த காலத்தின் பின்பு மத்திய பேமாவில் 200,000 கைத்தறிகள் பாவனையில் இருந்தனவெனக் கூறப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கைத்தறி இருந்தது. கைத்தறிகளின் தொகையைப் பெருக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். 'அரிசி அாைத்தல், தாவர நெய் பெறுதல், பிரதான ஆறுகள் மூலம் தேக்கு மாத்தைக் கொண்டுசெல்லுதல், சவுக்-யேனுன்யாங்குப் பகுதியில் நிலநெய் எடுத்தல் முதலியன பிரதான வர்த்தகக் தொழில் முறைகளாக உள்ளன. இங்கு 1960 ஆம் ஆண்டில் 195,000 தொன் நிலக்கடலையும் 45,000 தொன் எள்ளும் உற்பத்திசெய்யப்பட்டன.
பேமாவின் வறண்ட பகுதியில் உள்நாட்டுப் பயிர்ச்செய்கைமுறை அதிக அள வுக்கு வளர்ச்சிபெற்றுக் காணப்படுகின்றது. உணவுப் பொருள்கள் போதிய அளவில் உற்பத்திசெய்யப்படுகின்றன. மக்களின் பண்பாட்டு இயல்புகளும் சிறப்பாக உள்ளன. பெளத்த வைபவங்களை அடிப்படையாகக் கொண்ட கற் சிற்பங்கள் மரச்சிற்பங்கள் ஒவியங்கள் என்பன இவர்களது பண்பாட்டு வளர்ச் சியைக் காட்டுகின்றன. இசை நடன நாட்டியத் துறைகளிலும் இவர்கள் புலமையுடையவராவர். இவர்கள் அணியும் பாவாடை கமிசை என்பனவும் வன்ன வேலைப்பாடு கொண்டவையாகும். தென் கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளிலும் இத்தகைய உடைகள் அணியப்படுகின்றன. இத்தகைய இயல்புகள் எல்லாம் குழல் தன்மைக்குப் பொருந்தவே வளர்ச்சி பெற்றுள்ளன எனலாம். மக்களின் பொருளாதார அமைப்பில் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை முக்கியமாக உள்ளது. பணப் பயிர்கள் ஒரளவுக்கே இடம்பெற்றுள்ளன. பேமாவின் பிறபகுதிகளோடு வியாபாரத்தொடர்பும் குறைவாகும்.
கழிமுகப் பயிர்ச்செய்கை
அரக்கன் தெனசெரிம் கரைப்பகுதிகளிலும் ஐராவதி, சிட்டாங்கு, சல்வீன் ஆற்றுக் கழிமுகங்களிலும் நடைபெறும் பயிர்ச்செய்கையை இது பொதுவாகக் குறிக்கின்/pது. இப்பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் ஐராவதிக் கழி முகம் முக்கியமாக உள்ளது. வறண்ட வலயத்திற்கு அப்பால் இக்கழிமுகப் பகுதியிலேயே பயிர்நிலம் அதிகமாகும்.
ஐராவதி ஆற்றுக் கழிமுகப் பயிர்ச்செய்கையில் தனிப்பயிராக நெல் விளைவிக் கப்படுகின்றது. வியாபாாத்திற்காக நெல் இங்குப் பெருந்தொகையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆசியாவின் மிக முக்கிய உணவுப்பொருளர்ன நெல் இப் பகுதியில் தனிப்பயிராக விளைவிக்கப்படுகின்றது. இதனை விளைவிக்கும் விவசாயி கள் நெல்லை லிற்றே பிற உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளுகின்றனர்.

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 1S)
கழிமுகப்பகுதியிலுள்ள விளைநிலத்தில் நெல்லோடு சிறிதளவு பழமாங்களும் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கழிமுகப் பகுதியில் நெல் மட்டும் முக்கிய பயிராக விருப்பதற்குப் புவியியல் நிலைமைகள் காரணமாகும். ஆஜென்தீனு, வட. அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளின் கோதுமை நிலங்கள் கோது மையை உணவாகக்கொண்ட மக்க்ளுக்கு எத்துணை முக்கியமாக உள்ளனவோ, அவ்வாறே நெல்லை உணவாகக் கொண்ட மக்களுக்கு ஐராவதிக் கழிமுகம் (மெனும், செள பிராயா மேக்கோங்கு ஆற்றுக் கழிமுகங்களிலும் பயிர்ச்செய்கை விருத்திசெய்யப்பட்டுள்ளது) விளங்குகின்றது. 1930 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டுவரையுள்ள பத்து வருட காலத்தில் சர்வதேச வர்த்தகத்திலீடுபட்ட மொத்த நெல்லில் அரைவாசித்தொகை பேமாவின் கழிமுகங்களில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். இங்குள்ள 100 இலட்சம் ஏக்கர் சேற்றுநிலத்தில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது இங்குள்ள பயிர்விளையும் நிலம் முழுவதி அலும் நெல்லே விளைவிக்கப்பட்டது.
நெல் பணப்பயிராக மிகவும் சிறந்த முறையில் விளைவிக்கப்படுவது குறிப் பிடத்தக்கதாகும். உலகிலுள்ள ஏனைய கண்டங்களிற் புதிய நிலங்கள் விருத்தி செய்யப்பட்டமைபோன்று பேமாவின் கீழ்ப்பகுதியும் காணப்படுகின்றது. கடந்த நூற்முண்டின் முதற்பகுதியில் பேமியரின் முக்கிய உணவுப்பொருளாக நெல் இருந்தபொழுதும் நெற்செய்கை பெரும்பாலும் வாழ்க்கைப் பயிர்ச் செய்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது வறண்ட வலயத்திலேயே நெல் அதிகமாகப் பயிரிடப்பட்டது. இந்த வலயத்திலிருந்து நெல்லை ஏற்றுமதி செய்வதும் பேமிய அரசர்களால் தடைசெய்யப்பட்டிருந்தது. பேமாவின் கீழ்ப் பகுதியில் அப்பொழுது சிறிது அளவுக்கே நெல் மேல்மிச்சமாகக் காணப் பட்டது. வறண்ட வலயத்தின் நெல் உற்பத்தி போதாமையினல் உள்நாட்டின் தேவைக்கே இதுவும் பயன்படுத்தப்பட்டது. அரக்கன் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் சிறுபகுதி அசாம் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அப்பொழுது அசாம் பேமாவின் ஒரு மாகாணமாகவிருந்தது. ஆனல், பொது வாகப் பார்க்கும்பொழுது பேமாவின் தேவைக்குப் போதிய அளவு நெல் அங்கு விளைவிக்கப்பட்டது. இன்று முக்கியமாகவுள்ள கழிமுகப் பகுதிகள் அப் பொழுது பயனற்ற பகுதிகளாகவிருந்தன. சேற்றுநிலக் காடுகள் இப்பகுகளிற் பரந்திருந்தன. தென் கிழக்கு ஆசியாவில் இத்தகைய சேற்றுநிலங்கள் அப் பொழுது விருத்தியில்லாது காணப்பட்டன. இன்று போணியோ, கிழக்கு சுமாத் திரா போன்ற பகுதிகளிலேயே கழிமுகச் சேற்றுநிலங்கள் விருத்தி செய்யப் படாது காணப்படுகின்றன. ஐராவதிக் கழிமுகமும் பேமாவின் பிற கழிமுகங் களும் 150 வருடங்களுக்கு முன்பு இத்தகைய நிலையிலேயே காணப்பட்டன.
கழிமுகப்பகுதியை விருத்திசெய்யும் முயற்சிகள் 19 ஆம் நூற்றண்டின் மத்திய காலத்திற்குச் சற்று முன்பாகவே மேற்கொள்ளப்பட்டன. ஆனல் நம்பத்

Page 111
192 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
தகுந்த புள்ளிவிபரங்கள் 1870 ஆம் ஆண்டின் பின்பே கிடைத்துள்ளன. பேமா வின் நெல் விளையும் நிலங்களின் விருத்தியை பின்வரும் புள்ளிவிபரங்கள் காட்டு
கின்றன.
பேமாவின் நெல் விளையும் நிலம் பேமாவின் கீழ்ப் வருட (இலட்சம் எக்கர் பகுதி மட்டும்
அளவில்)
1866 17.5 14.4(1865) 1886 40.0 37.0(1885) 896 57.5 50.0(1895) 90 99.5 78.1 1920 103.0 - 85.9 1930 23.7 99. 1940 28.0 99.5 950 93.0 67.0 1960 104.5 75.
நெல்விளையும் நிலம் படிப்படியாகப் பெருகிவந்துள்ள தன்மையைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. நன்னீர்ச் சேற்றுநிலங்களிற் காணப்பட்ட காடுகள் முதலில் வெட்டி நீக்கப்பட்டன. பின்பு இந்நிலங்களிலிருந்து நீர் வடியவிடப் பட்டுத் தட்டையாக மாற்றி அமைக்கப்பட்டன. இவ்வேலைகள் எல்லாம் இயந் திரங்களின் உதவியின்றிக் கைகளினலேயே செய்யப்பட்டன. இலட்சக்கணக் கான விவசாயிகள் பல நூற்ருண்டுக்காலமாக உபயோகித்து வந்த கலப்பை முதலிய சிறு கருவிகளின் உதவியோடும் எருத்துமாடுகள் எருமைகள் ஆகிய வற்றின் உதவியோடும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனுகவே கழிமுகப் பகுதியிற் பெருந்தொகையான அளவில் நெல்விளையும் நிலம் விருத்திசெய்யப் பட்டுள்ளது. பேமாவின் கீழ்ப்பகுதியில் உபயோகமில்லாது கிடந்த சேற்றுநிலங் களைச் சாதாரண விவசாயிகள் திருத்தி, இன்று முக்கியமான பயிர்விளையும் நில மாக மாற்றியமைத்தமை பற்றி அதிகமாகக் குறிப்பிடப்படுவதில்லை. உலகின் பிற பகுதிகளிற் கோதுமை விளைவித்தற்காக நிலங்கள் விருத்தி செய்யப்பட்ட காலத்திலேயே இந்த நிலங்களும் விருத்தி செய்யப்பட்டன. மெனும், செள பிராயா, மேக்கோங்குக் கழிமுகங்கள் இவற்றின் பின்பே விருத்திசெய்யப் பட்டன. பேமாவின் இந்நிலங்கள் சிறப்பாக விருத்தி செய்யப்பட்டமையைத் தொடர்ந்தே பிற பகுதிகளிலும் விருத்திசெய்யப்பட்டன. 19 ஆம் நூற்ருண் டின் கடைசி இருபது வருடகாலத்திலே அதாவது 1883 முதல் 1902 வரையுள்ள காலத்திலே, நெல்விளையும் நிலம் வருடந்தோறும் அதிக அளவுக்கு அதிகரித்துக் காணப்பட்டது; ஆனல் 1948-57 ஆண்டுக்காலத்து உயர் வீதங்களுக்கு ஆரம்ப அபிவிருத்தியன்றி, புதிய முயற்சியே காரணமாகும்.

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 193
பேமாவின் கீழ்ப்பகுதியில் நெல்விளையும் நிலம் அதிகரித்த முறை
காலம் சராசரி வருட அதிகரிப்பு-எக்
கர் அளவில்
1852- 2 63,577 1873 82 117,490 1883- 92 16404 1893-1902 162,595 1903- 12 136,888 1913- 22 78,867 1923. 32 84,05 1933- 37 14,385 1948. 57 115,000
கழிமுகப் பகுதியில் பயிர்ச்செய்கை விருத்திசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மக்களும் தென்பகுதியில் வந்து குடியேறினர். விவசாயிகள் கழிமுகப்பகுதியில் நெல்விளையும் நிலங்களைக் கைகளினலேயே விருத்திசெய்துள்ளனர். 1880 ஆம் ஆண்டையடுத்து நெல்விளையும் நிலத்தில் எதிர்பாராத அளவுக்குப் பெருக்கம் ஏற்பட்டது. உலகின் பிறபகுதிகளில் தங்கம் தகரம் முதலிய கணிப்பொருள்களை நாடி மக்கள் பெரும் தொகையாக இடம் பெயர்ந்தமை போன்று இப்பகுதியில் நெல் நிலங்களை நாடி மக்கள் வந்து குடியேறியுள்ளனர் எனலாம். கழிமுகப் பகுதிக்கு குடிமதிப்புப்புள்ளி விபரங்கள் பெறப்படுவதற்கு முன்பே மக்கள் வந்து குடியேறிவிட்டனர். நெல் நிலங்களில் முதன்முதலில் வந்து குடியேறிய வர்கள் பேமாவின் பிறபகுதிகளிலிருந்து வந்து குடியேறியபொழுதும் அப்பகுதி களிற் குடித்தொகை அவ்வளவு குறைவடையவில்லை. ஆனல் இக்கழிமுகப் பகுதி தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளைப்போன்று விரைவாக விருத்திபெற்ற ஒரு பகுதியாகும்.
பேமாவின் குடித்தொகை மாற்றங்கள்
பேமாவின் கீழ்ப்பகுதி பேமா
வருடம்
இலட்சம் 1881 இன் பேமாவின் இலட்சம் 1881 இன் பேர் அளவில் சதவீதம் சதவீதம் பேர் அளவில் சதவீதம்
88 35. 100 6 59.0 100 891 44.1 22 57 ገ7.2 13 901 64. 150 5. 104.9 178 191 62. 13 5. 21.0 . 205 1921 68.6 19 62 32.0 224 1931 ; 7ገ.7 25 53 4.0 . . 249 1941 89.2 249 53 1680 284 95. 04.0 289 56 186.0 35 96. 1249 35 56 215.0 368

Page 112
194 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
須
s
خلیجچتیجنیرنگینی لدي تغة يعتمد -
இஜ் புன்னிலம் لكيلان
W. A. خرساله ه al - - .. SS ཐུཊ་ $குேரோவு அடர்சேறு :
ᎾᎼᎥᏝbᏑ8) ar * பெரும்பாலும் 500 အံ့ဖြုံဖါက္ကံ’鶯 须 oli ab பயிர்ச்செய்கை
}9కోa,
படம் 57. ஐராவதிக் கழிமுகத்தின் நிலப்பயன்பாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 95.
புதிதாக விருத்தி செய்யப்படும் பிறபகுதிகளிற் போன்று இப்பகுதியிலும் பின்பு தொழிலாளர் பிரச்சினை ஏற்பட்டது. நெல்விளையும் நிலம் அளவுக்கு விஞ்சி அதிகரித்ததனுற் பாரம்பரியமான முறையிலே பேமியக் குடும்பத்தினரின் உதவியோடும் சமுதாயத்தினரின் உதவியோடும் நெல் விளைவித்தல் கடினமாகக் காணப்பட்டது. நெற்செய்கைக்காகப் புதிய நிலங்களைத் திருத்துவதும் கடின மாகவிருந்தது. நாற்றுமுளைகள் ஒவ்வொன்முகக் கையினுற் பிடுங்கி நடப்படுவத ணு,லும் கதிர் முற்றியபின் ஒவ்வொன்முக அரிவாளினுல் வெட்டி எடுக்கப்படுவத ணு,லும் பெருந்தொகையான தொழிலாளர் இதில் ஈடுபடல் வேண்டும். நெல் பணப்பயிராக விளைவிக்கப்படுவதனுற் கூலியாட்களைக் கொண்டு விளைவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கூலியாட்கள் பெரும்பாலும் இந்தியா விலிருந்து வந்தவராவர். பேமிய மக்கள் பணத்தைப் பொறுத்தவரையிற் கட்டுப்பாடு குறைந்தவராவர். அவசியமற்ற பொருள்களிலும் தொழிலாளர் கூலி யிலும் நெருக்கடியான வருடங்களில் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் களிலும் (19 ஆம் நூற்ருண்டில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அதிக இடர் ஏற்பட்டது) அதிக பணத்தைச் செலவிட்டனர். வருவாயிலும் பார்க்க அதிக மாகச் செலவு ஏற்பட்டதனுற் பிறரிடமிருந்து கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. கடனைப் பெறுவதற்கு நிலங்களை ஈடாக வைத்தனர். விரைவில் நெல்விளையும் நிலங்கள் யாவும் ஈட்டுக்குப் பணம் கொடுத்தோர் கைக்கு மாறின. பயிர்ச்செய்கை முக்கியமாகப் பணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. புதிதாக நிலங்களைத் திருத்திப் பயிர்களை விளைவிப்போர் பெரும்பாலும் நிலங் களைச் சொந்தமாகக் கொண்டிருப்பர் ; வேலைகளையும் தாமே செய்வர். ஆனல் இப்பகுதியில் நிலைமை அவ்வாறிருக்கவில்லை. படிப்படியாகத் தோட்டச் செய்கை போன்று பயிர்ச்செய்கை மாறிவிட்டது. நிலங்கள் குத்தகைக்கும் பெறப்பட் டன. தொழிலாளரும் கூலிக்கு வேலை செய்தனர். முன்பு நிலங்களைச் சொந்த மாகக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கூலியாட்களாக வேலைசெய்தனர். அவர்களின் குடும்பத் தேவைக்குரிய நெல்லைப் பெறுவதே இப்பொழுது அரி தாகி விட்டது. நிலமற்றவர்களாக இருந்தமையாற் கூலிக்கு வேலை செய்யவேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1936 ஆம் ஆண்டிற் கீழ் பேமாவிலுள்ள பயிர்விளை யும் நிலத்தில் 90 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட தொகை நிலத்தைச் சொந்த மாகக் கொண்ட சிறு விவசாயிகளிடமிருந்து ஈட்டுக்குப் பணம் கொடுத்தோர் கைக்கு மாறியது. அதிக அளவில் நிலங்களைப் பெற்ற புதிய நிலச்சொந்தக்காரர் இந்நிலங்களை முன்னைய சிறு விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று மாற்றம் ஏற்பட்டு முன்னைய சொந்தக்காரர் நிலத்தைப் பெற்றுவருகின்றனர்.
பழைய பேமிய பயிர்ச்செய்கை முறை இன்று பெரும்பாலும் கழிமுகப் பகுதி யில் இல்லாது அழிந்துவிட்டது. அப்பொழுது நிலம் விவசாயிகளுக்குச் சொந்த மாகவிருந்தது. குடும்பத்தினரும் உறவினரும் சேர்ந்து பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். இத்தகைய முறைகள் வறண்ட வலயத்திலுள்ள விவசாயி: களிடையே இன்று காணப்படுகின்றன. சிறு நிலத்துண்டுகளில் சொந்தத்

Page 113
196 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
தேவைக்காக இவர்கள் நெல்லை விளைவிக்கின்றனர். பணப்பயிர்களை விளைவித்தல் சிறிதளவுக்கு மட்டுமே நடைபெறுகின்றது. பேமாவிற் கழிமுகத்திலேயே வர்த் தகத்திற்காக நெல் விளைவிக்கப்படுகின்றது. நிலத்தைக் குத்தகைக்குவிடும் முறை ஏற்பட்டதனுல் வியாபாரத்திற்கு ஒழுங்காக நெல் கிடைக்கின்றது. குத் தகைப் பணம் கொடுப்பதற்காக நெல்லை விற்கவேண்டியுள்ளது. நிலம் பொது வாக இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறித்த தொகைப் பணத்திற்குக் குத் தகைக்கு விடப்படுகின்றது. பேமாவின் கீழ்ப் பகுதியில் விளைநிலம் இன்று பிரச் சினேக்கு உட்பட்டதாக உள்ளது. நூறு வருட காலத்திற் சிறு விவசாயிகளினற் சொந்தமாக நெல் விளைவிக்கப்பட்ட நிலையிலிருந்து நிலத்தைக் குத்தகைக்குப் பெற்று விளைவிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவிற் பழைய காலத்திற் காணப்பட்ட முறையிலும் பார்க்க இது பொருத்தமற்ற ஒரு
•S s s aoඹි 説 محضع l.-1 雪a" ങ്ങ് سسمس سے 论 将 ઉીe! : @蚊一 - 2 2
1-' \ திக்கில் سمحسیے سمصص 金 ܠܔ d 5 tlUዒጳ.. سميس محصے ベエ* /
s ހީ صبر و{° W 8
હું૩+6'; ,్యతో S స్థిత2|4-rap" *鹊 塞 2Cs 罗
商 1890 1900 1910 is20 1930 1940 1950 1960
படம் 58. பேமாவின் குடித்தொகை மாற்றங்களும் பயிர்ச்செய்கை மாற்றங்களும்
முறையாக உள்ளது. ஐரோப்பாவிற் பெரிய நிலங்கள் (லற்றிவுன்டியா) சிறு துண்டுகளாகப் பிரிக்கபட்டு விளையும் பயிரிற் குறித்த விதம் என்ற அடிப்படை யில் (குறித்த தொகையான பணம் குத்தகைப் பணமாகக் கொடுக்கப்படுவ தில்லை) அவை குத்தகைக்கு விடப்பட்டன. இதனல் வெளிநாட்டுச் சந்தையில் ஏற்படும் விலைமாற்றங்களினுற் குத்தகைக்கு நிலத்தை எடுத்துச் செய்வோர் பாதிக்கப்படவில்லை. ஆனல் பேமாவின் நிலை அவ்வாறில்லை.
பேமாவின் கீழ்ப்பகுதியில் நடைபெறும் பயிர்ச்செய்கை இரண்டாம் யுத்த காலத்திற் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1941 முதல் 1948 வரையுள்ள காலப் பகுதியில் 30 இலட்சம் ஏக்கர் நெல்விளையும் நிலம் கைவிடப்பட்டது. நாட்டின் மொத்தப் பயிர்விளையும் நிலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இது முக்கிய காரண
மாகும்.
 
 
 
 

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 197
ஆனல் கழிமுகத்திற் புதிதாக நெற்செய்கைக்கென நிலம் திருத்தி அமைக்கப் பட்டதனுலும் மாற்றமடைந்துள்ள சமூக நிலைகளில் நெல்லை விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதனுலும் நெல் பெருந்தொகையாக ஏற்றுமதிக்கென உற்பத்தி செய்யப்படுகின்றது. குடிப்பெருக்கத்திலும் பார்க்க விரைவாக (படம் 58) நெல் உற்பத்தி ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். விரைவாக ஏற் பட்டுள்ள பேமாவின் பயிர்ச்செய்கை விருத்தியைப் பின்வரும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கோதுமை விளைவிக்கப்படும் புதிய நிலங்களில் (அ. ஐ நாடு, அவுஸ்திரேலியா) ஏற்பட்ட விருத்தியிலும் பார்க்க விரைவாக இது ஏற்பட்டுள் ளது. அல்லாமலும் இந்நிலங்களிற் குடிப்பெருக்கமும் அதிகமாக ஏற்பட்டுள் ளது. பயிர்ச்செய்கைத் துறையிலும் இயந்திரங்கள் விரைவாகப் பயன்படுத்தப் பட்டும் வந்துள்ளன.
பேமாவின் நெல் எற்றுமதி (குற்றப் வருடம் பட்ட நெல் இலட்சம் தொன்
அளவில்)
1881 5.2 1891 8.2 90. 14。2 19 17.8 1921 24.5 93. 30,0 941 35.0 95. 12.9 96. 5.9
உள்நாட்டுத் தேவைபோக எஞ்சிய தொகையே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1963 இல் உள்நாட்டுத் தேவை ஏற்றுமதித் தொகையிலும் இரண்டுமடங்காக விருந்தது.
கழிமுகத்தில் நெல்விளையும் சேற்று நிலங்களுக்குத் தேவையான நீர் மழை வீழ்ச்சிமூலம் பெறப்படுகிறது. பேமாவின் கீழ்ப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி உண்டு. இதனுல் ஐராவதி ஆற்றிலிருந்து நீர் பாய்ச்சப்படுவதில்லை (படம் 59). ஒவ்வொரு வயலையும் சுற்றி வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மிதமிஞ்சிய நீர் வயலிலிருந்து வழிந்து ஓடுவதற்காகச் சிறு கால்வாய்களும் உண்டு. ஐராவதி ஆறு பெருக்கெடுத்தோடும் காலத்திலும் வயல்களுக்கு மிகவும் குறைவாகவே நீர் பாய்ச்சப்படுகிறது. கழிமுகத்தின் பெளதிகநிலைமைகளினல் ஆற்றில் மிகக் கூடிய அளவுநீர் ஏற்படுவதற்கு முன்பே அப்பகுதியின் மழைவீழ்ச்சி காரண மாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. ஆற்றில் உண்மையாக நீர் அதிகரித்துக் காணப்படும்பொழுது இருபுறத்தும் உள்ள உயரணைகளுக்கிடையில் ஓடுகின்றது. மழைநீரால் மூடப்பட்டுள்ள வயல்மட்டத்திலும் பார்க்க ஆற்று நீர் மட்டம் உயரத்திற் காணப்படும். இதனல் ஐராவதிக் கழிமுகத்திற் பயிர்செய்வோர் தமது நெல்வயல்களை ஆற்றுப் பெருக்கு நீராற் பாதிக்காவண்ணம் தடைசெய்ய

Page 114
  

Page 115
200 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பேமாவின் தாழ்நிலப் பகுதியில் விளைவிக்கப்படும் நெல்லில் 95 சத விதம் மாரிக்காலப் பயிராக விளைவிக்கப்படுகிறது. யூலை மாதத்திற் பயிரிடப்பட்டு நவம் பர் திசெம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்யும் காலமே வேலைகூடிய காலமாகும். திசெம்பர் மத்தியிலிருந்து சனவரி மத்திவர்ை தானியத்தின் பெரும்பகுதி ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது; வயல் களிலிருந்து முதலில் வண்டிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுப் பின்பு நீர்வழி யாக ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. பேமாவின் ஆறுகள் அருவி கள் என்பன நெல்லின் வியாபாரத்தேவைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. சிறிய வள்ளங்களிலும் நீராவிப் படகுகளிலும் நெல் ஏற்றிச் செல்லப்படுகிறது. இத்தகைய நீர்வழிப் போக்குவரத்து இல்லாதவிடத்து நெல் முக்கியமான வியா பாரப் பொருளாக அமைந்திருக்குமோ என்று கூறுவதே கடினமாகும். ஒரு நூற்முண்டுவரை நெல்லின் விலை மிகவும் குறைவாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் மலிவான போக்கு வாத்து வசதி நெல் உற்பத்திக்குத் துணையாக அமைந்துள்ளது எனக் கொள்ளுதல் வேண்டும்.
நெல் குற்றும் தொழில் ஒரு தனித்தொழிலாகக் காணப்படுகின்றது. இத் துறையிற் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த நூற்முண்டில் முக்கியமான ஆலைகள் யாவும் துறைமுகங்களுக்கு அண்மையாக அமைக்கப்பட்டிருந்தன. இவை யாவும் ஐரோப்பியருக்குச் சொந்தமாகவிருந்தன. இந்த நூற்ருண்டிற் பல சிறிய ஆலைகள் நெல் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அண்மையாகப் பிரதான ஆறுகளின் ஓரத்தே நிறுவப்பட்டுள்ளன. இவை உள்நாட்டு மக்களுக் குச் சொந்தமானவை. தகரத்தால் அமைக்கப்பட்ட இந்த ஆலைகள் பேமியரின் சாதாரண கிராமங்களில் வேறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன. 1960 ஆம் ஆண்டில் 710 நெல் குற்றும் ஆலைகள் இருந்தன. இவற்றுள் 640 ஆலைகள் சிறியன வாகும். இவை ஒவ்வொன்றிலும் நாளொன்றிற்கு 100 தொன் நெல்லே குற்றுதல் முடியும். பெரிய ஆல்கள் சங்கடன், அக்யப், பசேன் முதலிய பட்டினங்களிலும் ஹென்சடாவுக்குத் தெற்கிலுள்ள பரப்புங் கிளையாறுகளைச் சார்ந்தும் காணப் படுகின்றன.
அரிசியிலிருந்து உமி நீக்கப்படும்வரை அது பல பெயர்களால் வழங்கப்படு கின்றது. இப்பெயர்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டனவாக உள்ளன. கோதுமை வியாபாரத்திற் போன்று நெல் வியாபாரத்திலும் பல பெயர்கள் வழங்கப்படு கின்றன. ஆலைகளிற் குற்றப்பட்டதும் அரிசி உடையாத அரிசி உடைந்த அரிசி என இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது. ஆலைகளில் குற்றும்பொழுதே அரிசி உடைகின்றது. வெவ்வேறு அளவில் உடைந்த அரிசி காணப்படுவதனுல் பல நுணுக்கமான பெயர்களால் அரிசி வகைகள் குறிப்பிடப்படுகின்றன. கூடிய அள வில் உடைந்த அரிசியைக் கொண்டவகை மலிவாகக் கிடைக்கின்றது. அரிசியை நன்முக விளக்கி எடுத்தலும் ஆலையில் நடைபெறும் இன்னுெரு முறையாகும். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மிகவும் விரும்பப்படும் அரிசி அவித்துக் காயவைத்த அரிசியாகும். இத்தகைய அரிசி எளிதிற் பழுதடையாதிருப்பதோடு

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 20
கூடிய சத்தை உடையது எனக் கூறப்படுகின்றது. தொழிலாளர் இத்தகைய அரிசியை விரும்பி உண்ணுகின்றனர். நாளுக்கு ஒருமுறை இதனைச்சமைத்து உண்டாற் போதுமானது.
பேமிய விவசாயிகள் தமது சொந்தத் தேவைக்காக வைத்திருக்கும் நெல்லே வீடுகளிற் குற்றிப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக விதைநெல்போக எஞ் சியவற்றைப் பணத்திற்கு அவர்கள் விற்றுவிடுகின்றனர்; பின்பு சொந்தத் தேவைக்கு ஆலைகளிற் குற்றிய அரிசியை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
நவம்பர் கிசெம்பர் மாதங்களில் நெல் முழுவதும் அறுவடை செய்யப்பட்டு விடப்படுகின்றபொழுதும், நெல்குற்றுந்தொழில் வருடம் முழுவதுமே நடை பெறுகின்றது. சில பகுதிகள் தூரத்தே காணப்படுவதனுலும் விலை பொருத்த மாகக் கிடைக்காமையினுலும் நெல்லைப் படிப்படியாகக் குற்றுவிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. போக்குவரத்து வசதிகளும் எளிமையானவையாகவும் துரிதமற்றனவாகவும் உள்ளன.
1962 இல் பேமாவின் ஏற்றுமதிப் பெறுமானத்தில் 76 சதவீதம், அரிசி மூலம் கிடைக்கின்றது. நாட்டு வருமானத்தைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக் கியமாகும். பேமாவிலிருந்து அரிசி பெருந்தொகையான அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 80 சதவீதமான அரிசி ஏற்றுமதி ரங்கூன் மூலமாக நடை பெறுகின்றது. நெல் உற்பத்தி செய்யும் பிற பகுதிகளின் துறைமுகங்களான பசேன் (9 சதவீதம்), அக்யப் (6 சதவீதம்), மூல்மேன் (5 சதவீதம்) ଗୀର୍ଜାr பன சிறு தொகையை ஏற்றுமதி செய்கின்றன. ஏற்றுமதி செய்யப்படும் அரிசி இத்துறைமுகங்களின் பின்னணி நிலங்களிலும் பார்க்க ஐராவதிக் கழிமுகத்திலி ருந்தே பெறப்படுகின்றது. ரங்கூன், அக்யப், மூல்மேன் துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசி வங்காளச் சாக்குக்களில் அடைக்கப்பட்டு ஏற்று மதி செய்யப்படுகின்றது. ஆற்றின் மூலைகளிலும் நுழைகழிகளிலுமுள்ள ஆலை களிலிருந்து சிறிய ஒடங்கள் அரிசிச் சாக்குகளை ஏற்றிவந்து ரங்கூன் துறை முகத்திலுள்ள கப்பல்களிற் சேர்க்கின்றன. ஆலைகளுக்கு அண்மையாகக் கப்டல் கள் செல்வது கடினமாகும்.
ஏற்றுமதி ஓர் ஒழுங்கில் நடைபெறுகின்றது. வருடத்தில் ஏற்றுமதி செய்யப் படும் மொத்தத்தில் மாதமொன்றுக்கு 5 சதவீதம் ஒற்ருேபர், நவம்பர், திசெம் பர் மாதங்களில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அடுத்த மாதங்களிற் படிப்படி யாகக் கூடிய தொகை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மார்ச்சு மாதத்திற் கூடிய அளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மொத்த ஏற்றுமதியில் 15 சதவீதம் இம் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதன்பின்பு ஏற்றுமதி படிப்படி யாகக் குறைவடைகின்றது. துறைமுகங்களில் அரிசியை மிகக்கூடிய அளவிற் சேமித்து வைக்கக்கூடிய வசதிகள் குறைவாயிருத்தலினல் அறுவடைக் காலத் தையடுத்து ஏற்றுமதி அதிகமாக நடைபெறுகின்றது. ஈரமான காலத்தில் அரிசி யைச் சேமித்து வைக்கும் பொழுது அரிசி பழுதடைவதுமுண்டு.

Page 116
202 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
1963 ஆம் ஆண்டிற் கழிமுகப் பகுதியில் 45,000 ஏக்கர் நிலத்திற் சடைச் சணல் பயிரிடப்பட்டது. ஏற்றுமதிக்குரிய அரிசியை அடைத்தற்கு வேண்டிய சாக்குகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. -
பேமாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில் நெல் அறுவடை செய்யப்படும் காலத்தையொட்டிச் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. யுத்த காலத்தின் முன்பு ஏற்றுமதியில் அரைவாசி இந்தியாவுக்குச் சென்றது. இலங்கை 12 சதவீதத்தையும் மலாயா 6 சதவீதத்தையும் இறக்குமதி செய்தன. தூரத்தேயுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி குறைவாகும். 1957-60 இல் அசிசியை இறக்குமதி செய்யும் நாடுகளிடையில் வேறுபாடு காணப்பட்டது. மொத்த ஏற்று மதியில் நாலிலொரு பகுதியை இலங்கை இறக்குமதி செய்தது; மூன்றிலொரு பகுதியை இந்தியா இறக்குமதி செய்தது; ஆறிலொரு பகுதியை இந்தோனே சியா இறக்குமதி செய்தது; ஆறிலொரு பகுதியை யப்பான் இறக்குமதி செய் தது. மலாயா இறக்குமதி செய்த தொகை 6 சதவீதமாகும். அரிசி வியாபாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குன்றுப் பயிர்ச்செய்கை
பேமாவிலுள்ள குன்றுசார்ந்த மாவட்டங்களிற் பல்வேறு நிலைகளிலுள்ள பயிர்ச்செய்கை முறைகளைக் காணலாம். 'தகவுங்கியா' எனப் பேமாவில் வழங் கும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முதல் நிலையான பயிர்ச்செய்கைவரை பலவகை யின உண்டு.
தேக்குமரக் காடுகள் தவிர்ந்த ஏனைய குன்றுநிலங்களில் வாழும் கூட்டத்தவர் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையிலிடுபட்டுள்ளனர். ஐராவதி வடிநிலத்தை நோக்கி அமைந்துள்ள பள்ளத்தாக்குக்களில் ஓரளவுக்கு நிலையான பயிர்ச்செய்கை இடம் பெற்றுள்ளது. சான் உயர்நிலத்தில் நிலையான முறையிற் பயிர்ச்செய்கை இடம் பெற்று வருவதை நோக்கலாம். எனினும் ஏறத்தாழ 70 இலட்சம் ஏக்கர் நிலத் தில் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. மக்கள் காடுகள் முதலிய வற்றை வெட்டித் திருத்தித் தற்காலிகமாக நான்கு ஐந்து வருடங்களுக்குக் கிராமங்களே அமைத்துக் கொள்ளுகின்றனர். பின்பு புதிய நிலங்கள் திருத்தப் படும்பொழுது கிராமங்களும் இடம்பெயர்ந்தமைகின்றன. ஐராவதிக் கழிமுகத் திலும் முன்பு பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை நடைபெற்றது. மியிச்சீன, மேர்குயி என்பவற்றிற்கு அண்மையாகவுள்ள நிலங்களில் இன்றும் நடைபெறுகின்றது. தயெற்பியோப் பகுதியில் நடைபெறும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையில் முக்கிய பயிராகப் பருத்தி உள்ளது. குன்றுவாழ் கூட்டத்தினர் காலத்திற்குக் காலம் இடம்பெயர்ந்து செல்வதற்குப் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையும் ஒரு காரணமா கும். பேமாவின் குன்றுப் பகுதிகளில் மக்கள் பல நூற்முண்டுக் காலமாகவே இங்ஙனம் இடம்பெயர்ந்து வந்துள்ளனர் (படம் 62). இப்பகுதிகளிலுள்ள அய னக் காடுகளிற் பயிர்ச்செய்கையின் படிப்படியான வளர்ச்சி முறையைக் காண லாம். வேட்டையாடுதல், கனிகிழங்கு தேடுதல், பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை என் பனவும் பொருத்தமான பள்ளத்தாக்குக்களில் நிலையான பயிர்ச்செய்கை முறைக

பேமா: பண்பாட்டு நிலத்தோற்றம் 203
ளும் காணப்படுகின்றன. இத்தகைய வேறுபட்ட நிலைகளிற் பயிர்ச்செய்கை ஆபி ரிக்காவின் அயனப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. ஆபிரிக்காவில் விலங்கு வளர்த்தலும் பயிர்ச்செய்கையோடு தொடர்புடையதாய்க் காணப்படுகின்றது. பேமாவின் குன்றுப் பயிர்ச்செய்கையிற் பன்றிகளும் கோழிகளும் தவிரப் பிற விலங்குகள் முக்கியமானவையாக இல்லை. நெல், தினை, கிழங்குவகை, கரும்பு என்பனவே பெரும்பாலும் சொந்தத் தேவைக்காகப் பயிரிடப்படுகின்றன.
குன்றுப் பயிர்ச்செய்கை சாதாரண வகையைச் சார்ந்துள்ளதாகவுள்ள பொழுதும் எளிதானதன்று. தொழிலாளர் வசதி குறைவாகவும் பயன்படுத்தப் படும் கருவிகள் எளிமையுடையனவாகவும் இருப்பதாற் காடுகளை வெட்டி நிலத் தைத் திருத்துவது கடினமாக உள்ளது; வருடத்திற் பல மாதங்கள் இதற்குச் செலவிடவேண்டியுள்ளது. சமநிலப் பகுதிகளில் வாழும் விவசாயிகளிலும் பார்க் கக் குன்றுப் பகுதிகளில் வாழும் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளனர். அவர்களது கூட்டுவாழ்க்கையும் குறிப்பிடத்தக்கதாகும். அவர்களது மொழி, தோற்றம் என்பவற்றில் இடத்திற்கு இடம் வேறுபாடு உள்ளபொழுதும் பயிர்ச்செய்கை முறை, பண்பாடு, பாரம்பரிய வழக்கு என்பன பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
பேமாவில் நடைபெற்றுவரும் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையால் ஏற்பட்டுள்ள மண்ணரிப்புப் பற்றி இன்னும் நன்முக ஆராயப்படவில்லை. 140 இலட்சம் ஏக்கர் நிலம் வரையில் வருடத்திற் கடும்மழையினற் பாதிக்கப்படுகின்றது. பயிருள்ள நிலத்தையும் அண்மையிற் கைவிடப்பட்ட நிலத்தையும் இத்தொகை அடக்க வில்லை. கடந்த 150 வருட காலத்திற் குன்றுப் பகுதிகளில் மக்களும் அதிகரித் துள்ளனர். இதனுல் மேலுமதிகமான அளவிற் காட்டுநிலம் வெட்டித் திருத்தப் பட்டு வருகின்றது. சிட்டாங்கு ஆற்றின் கீழ்ப்பகுதியில் மண்டி முதலிய அடை யல்கள் அதிகமாகப் படிவதற்கு விரைவாக நிகழும் மண்ணரிப்பே காரணமாகும். பேமாவில் இன்று 25 இலட்சம் மக்கள் வரையிற் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவிற் கண்டஞ்சார்ந்த இப்பகுதியிலேயே நிலையான பயிர்ச்செய்கை உண்டு. இடைவெப்ப அகலக்கோட்டுப் பகுதிகளுக் குரிய பயிர்களும் ஒரளவுக்கு உண்டு. ரங்கூனின் தேவைக்கு வேண்டிய காய்கறி கள் பழவகைகள் என்பனவே இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனவின் எல்லைப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு விளைவிக்கப்படும் தங் மா மும் முக்கியமானதாகும். இது ஒரு பணப்பயிாாகும். இம்மரத்திலிருந்து பெறப் படும் எண்ணெய் வாணிசுக்குப் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது. பேமா வின் தேவைக்காக சான் இனத்தவர் தேயிலையும் விளைவிக்கின்றனர். தெற் கிலுள்ள தெனசெரிம் பகுதியில் மலாயாவிற் போன்று இந்த நூற்றண்டில் இறப் பர் தென்னை முதலிய பயிர்களும் சிறிது அளவில் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாகப் பார்க்கும்பொழுது பேமாவின் பயிர்ச்செய்கை மலாயாவின் பயிர்ச்செய்கையைப் பலவழிகளில் ஒத்துள்ளது. இரு நாடுகளிலும் வாழ்க்கைப் பயிர்ச்செய்கையிலிருந்து பணப்பயிர்ச் செய்கைக்குச் சடுதியாக மாற்றம் ஏற் 10-CP 4217 (6819)

Page 117
204 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பட்டுள்ளது.'பேமாவின் பிரதான பணப்பயிர் நெல்லாகும். இதுவே பிரதான உணவுப் பொருளுமாகும். ஆனல் மலாயாவில் இறப்பரே பிரதான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. உள்நாட்டுத் தேவைக்கு இது அதிகம் பயன்படுவதில்லை: இரு பகுதிகளும் புதிதாக விருத்தி செய்யப்பட்ட பகுதிகளாகும். மலாயா இங்கு வந்து குடியேறியவர்களை அடிப்படையாகக் கொண்டு விருத்தி செய்யப் பட்டது. ஆனல் பேமாவில் முதற்காலப் பகுதியிற் பெரும்பாலும் உள்நாட்டவ ரின் உதவியோடே விருத்தி ஏற்பட்டது. இந்த இரண்டு நாடுகளும் வெளிநாட்டு வியாபாரத்தைப் பொறுத்தவரையில் நெல் இறப்பர் ஆகிய இரு தனிப்பயிர் களையே கொண்டுள்ளன. வெளிநாட்டுச் சந்தைகளின் நிலையை அடிப்படையா கக் கொண்டே இவற்றின் விலைகள் நிருணயிக்கப்படுகின்றன.

அத்தியாயம் 11 பேமாவின் சமூகப் புவியியல் பேமாவின் மேற்குப்பகுதியில் வெவ்வேறு வகுப்பினரிடை நிலவி வந்த
சச்சரவுகள் காரணமாகக் குடியிருப்புக்கள் பெரும்பாலும் கூட்டங் கூட்டமாக அமைந்துள்ளன. வயல்களுக்கு அண்மையாகப் பள்ளத்தாக்குக்களில் இவை அமைந்துள்ளன. பெருக்கெடுத்தோடும் ஆறுகள் அருவிகள் என்பனவற்றினுற் பாதிக்கப்படாதவாறு இவை காணப்படுகின்றன. மூங்கிலும் பிற மரங்களும் விடுகள் கட்டுவதற்குப் பயன்படுகின்றன. உபயோகத்துக்கு வேண்டிய பல பொருள்கள் குடிசைக் கைத்தொழில்கள் மூலம் பெறப்படுகின்றன.
ஐராவதிக் கழிமுகப் பகுதியிற் புதுநிலக் குடியேற்றம், பிறநாட்டுத் தாக்கம், பாதுகாப்பான நிலைமை என்பன காரணமாகக் குடியிருப்புக்கள் பாந்தமைந் துள்ளன. சேற்றுநிலப் பகுதியிற் சற்று உயரமாகவுள்ள இடங்களிலேயே குடி யிருப்புக்கள் இடம்பெற்றுள்ளன. பரப்புங்கிளையாறுகளைச் சார்ந்துள்ள உயரணை களைச் சார்ந்தும் கழிமுகத்தின் கடலோரத்திலுள்ள பழைய மணல்மேடுகளைச் சார்ந்தும் குடியிருப்புக்கள் அமைந்துள்ளமை நோக்குதற்குரியது. பட்டினன் களிற் கட்டடங்கள் கட்டுவதற்குச் செங்கட்டிகள், இறக்குமதி செய்யப்பட்ட நெளியிரும்பு என்பன உபயோகிக்கப்படுகின்றன. கழிமுகப் பகுதியிற் பாதுகாப் பான நிலைமைகள் உள்ளமையாற் கிராமங்கள் நெடும்போக்கில் அமைந்துள்ளன. பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு உள்ள கார ணத்தினுற் கிராமமக்கள் உள்நாட்டு உபயோகப் பொருள்களோடு இறக்குமதி செய்யப்பட்ட புடைவைகளைப் பயன்படுத்துவதை இங்குக் காணலாம்.
குடிப்பாம்பல் பேமிய மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாவர். இதனுல் இவர்கள் சிறந்த பயிர்நிலங்களில் வாழுகின்றனர் (படம் 80). எனினும் பேமாவில் விளைநிலத்திற் குரிய குடியடர்த்தி (ஓர் ஏக்கர் விளைநிலத்திற்குரிய குடியடர்த்தி) தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் குறைவாகும் (படம் 61). இந்த நி%லமை மலாயாவிலும் உண்டு. ஹென்சடா, பசேன், ரங்கூன் என்னும் பட்டினங்களைக் கொண்ட முக் கோண வடிவிலுள்ள பகுதியிலேயே குடியடர்த்தி மிகவும் அதிகமாகும். இப் பகுதி கழிமுகத்தின் மேற்பாகம் பழைய பாகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள் ளது. இங்குச் சதுர மைலுக்கு 250-500 பேர் காணப்படுகின்றனர். கழிமுகத் தின் எஞ்சிய பகுதியிலும் தபேக்கியின் வரையுள்ள ஐராவதி வடிநிலத்திலும் சதுர மைலுக்கு 125-250 பேர் காணப்படுகின்றனர். அக்யப்பைச் சூழவுள்ள அடையல்களைக் கொண்ட சிறு பகுதியிலும் குடியடர்த்தி இவ்வாறு உள்ளது. இப் பகுதிகளுக்கு அப்பால் வடக்கிலும் சான் உயர்நிலத்திலும் அடர்த்தி படிப்
- 2OS

Page 118
206
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
SO st
படம் 60. பேமாவின் குடியடர்த்தி
 
 

பேமா : சமூகப் புவியியல் 207
--r-re - 95ttini
V X } No Sir 摄 A.
དྲི ix ۔
ராம் சண்டொவே' HHHجیتتك
பேமாவின் மத்திய கீழ்ப் பகுதிகளில் உணவூட்ட அடர்த்தி
10 ஏக்கர் விளைநிலத்துக்குரிய ஆள்
4.9 9)/0 [HH óa 匪*一99
11 இற்கு மேல்
Ο மைல் 15о 5
படம் 81. பேமாவிற் குடிப்பரம்பலுக்கும் பயிர்ச்செய்கைக்குமுள்ள தொடர்பு

Page 119
208 தென்கிழக்குஆசிய நாடுகள்
படியாகக் குறைவடைந்து காணப்படுகின்றது. மேற்கு மலைத்தொடர்ப் பகுதி யிற் சதுர மைலுக்கு 25 பேரிலும் குறைந்த தொகையே உண்டு.
வட பகுதியிலும் மத்திய ஆசியாவிலும் காணப்பட்ட சிறு சிறு கூட்டத்தவ ாான மக்கள் வடிநிலத்தன்மையுடைய இப்பகுதியிற் பல காலங்களில் வந்திணைந் துள்ளனர் (படம் 62). இவர்களுள் பேமியர் சீரான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர். இதனுல் ஐராவதி வடிநிலம் முழுவதிலும் ஒருவகை யான தன்மை காணப்படுகின்றது. இந்த நிலத்தில் பாமோவரை பேமியர்களே வாழுகின்றனர். மொத்தக் குடித்தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கினார வர் (1958இல் 203 இலட்சம்). தென் பகுதியில் இவர்கள் மோன்குமேர் கூட்டத் தினரோடு கலந்து காணப்படுகின்றனர் (இக்கூட்டத்தினர் பேமாவில் தலைங் என வழங்கப்படுகின்றனர்). தைலாந்து, இந்தோசீனு, மலாயா முதலிய பகுதி களில் இவர்களோடு தொடர்புடையவர்களும் சிறந்த நிலையிலுள்ளவர்களுமான இந்தோ-மலாய இனத்தவர் காணப்படுகின்றனர். ஐராவதி வடிநிலத்தில் பேமி யர் வந்து குடியேறுவதற்கு முன்பே இவர்கள் மேற்குறித்த பகுதிகளிற் பாந்து விட்டனர்.
இன்றைய பேமியரின் மிகமுக்கியமான பகுதியாக வறண்ட வலயம் உள்ளது. இவ்வலயத்திலிருந்தே அண்மைக் காலத்தில் பேமியர் தென் பகுதிகளில் வந்து குடியேறினர். பேமியரின் உடற்கூற்றுத் தன்மைகள், பண்பாடு என்பன மொங் கோலிய இனத்தொடர்புடையன. மோன்ஸ் என்னும் இனத்தாரின் பண்பாட்டுக் கலப்பு அதிகமாகும். அவர்களது மொழி, ஓரசைச் சொற்களை உடையதாயிருப் பதோடு, திபேத்திய மொழியோடு தொடர்புடையதுமாகும். எழுத்தும் இலக்க ணமும் பாளி மொழியிலிருந்து பெறப்பட்டனவாகும். இதற்குப் பெளத்த குரு மாரே பெரிதும் காரணமாவர். இவர்களது முயற்சியினுற் பேமாவிலுள்ள ஆண் களில் ஐம்பது விதத்திற்கு மேற்பட்டோர் கல்வியறிவு உடையவராகவுள்ளனர். சுயமொழிக் கல்வியைப் பொறுத்தவரையில் இந்த விகிதம் தென் கிழக்கு ஆசி யாவிலே அதிகம் எனலாம். பிற்காலத்தில் வடபகுதியிலிருந்து பேமாவுள் துழைந் தவர்களுட் சிலர் பேமியரோடு முற்முகக் கலந்துவிட்டனர். தெற்கு நோக்கிவந்த சான் மக்கள் உட்பட மற்றும் சிலர் பேமியரால் தடுக்கப்பட்டமையாற் கிழக்கி அலுள்ள உயர்நிலத்திலும் தைலாந்திலும் குடியேறி வாழ நேர்ந்தது. மொங்கோ லிய இனத்தோடு தொடர்புடைய கரென் என்னும் இன்னுமொரு வகுப்பினர் தெற்கிலுள்ள உயர்நிலங்களிலும் பெசுயோமாப் பகுதியிலும் குடியேறினர். பேமாவிலுள்ள வேறுபட்ட வகுப்பினரிடையே இன்றும் ஒற்றுமையின்மை காணப்படுகின்றது. பேமாவிலுள்ளோரில் 9 சதவீதத்தினர் சான் வகுப்பினர் எனவும் 7 சதவீதத்தினர் கரென் வகுப்பினர் எனவும் கருதப்படுகின்றனர். இவ் வகுப்பினர்கள் வாழும் பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்து காணப்படுவதும் மொழிகளிடையே வேறுபாடு காணப்படுவதும் போக்குவரத்தில் தடைகள் காணப்படுவதும் மேற்குறித்த வகுப்பினரிடையே வேறுபாடுகள் தொடர்ந்து நிலவக் காரணமாகும். பேமாவில் வாழும் மக்களிடையே காணப்படும் சமூக பண்பாட்டு ஒற்றுமையிலும் பார்க்க வேறுபாடுகளே அதிகமாக உள்ளன

பேமா : சமூகப் புவியியல் 209.
லிசு, லோலோ -
இன்த்தவர்
தான் నాత=
பெயர்வு
படம் 82. பேமா: தரைவழியால் ஏற்பட்ட மக்கள் பெயர்வும் இனப் பிரிவுகளும்
மேற்கிலும் வடக்கிலுமுள்ள குடியடர்த்தி குறைவான குன்றுப் பகுதிகளில் இனப் பிரிவுகள் மேலுமதிகமாக ஏற்பட்டுள்ளன. பல்வேறுபட்ட இனப்பிரிவு கள் வெவ்வேறு உயரங்களிலும் பள்ளத்தாக்குக்களிலும் காணப்படுகின்றன. மேற்கு மலைகளிலுள்ள எல்லா வகுப்பினரும் பேமியரால் சின் மக்கள் என வழங் கப்படுகின்றனர். ஆனல் உண்மையில் இங்குப் பல பிரிவினர் வாழுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகளின் தொகையே அறுபதுவரை இருக்கும். இவர்களைக் குறிக்கும் பெயர்களும் வேறுபட்டனவாகும். இன்றைய பேமாவின் வளர்ச்சி

Page 120
210 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
யைப் பொறுத்தவரையில் இவ்வகுப்பினர் முக்கியமானவர்களாயில்லை. அசாமி லிருந்து அமைந்த சில பாதைகள் இவர்கள் வாழும் குன்றுகளுக்கூடாகச் செல்லுகின்றன. மணிப்புரிக்கூடாகவுள்ள மியித்தாப் பாதை, அரக்கனிலிருந்து வறண்ட வலயம் வரை செல்லும் ஆன் பாதை, புரோமுக்குச் செல்லும் தவுங்குப் பாதை என்பன வரலாற்றுக் காலத்தில் உபயோகத்திலிருந்தன. இப்பகுதிகளி அலுள்ள பள்ளத்தாக்குக்களுக்கூடாகச் செல்வது அத்துணை எளிதன்று. தரைப் போக்குவரத்து வறண்ட மேனிலப் பகுதிகளில் ஓரளவுக்கு எளிதாகவுள்ளது. வடக்கிலிருந்து பேமாவுக்குள் வந்த மக்கள் ஹ"க்கோங்குப் பள்ளத்தாக்கு, துசு இடுக்கு என்பனவற்றுக்கூடாகவே வந்தனர். வடக்கிலிருந்தும் அசாமிலிருந்தும் மொங்கோலிய, திபேத்திய இனத்தவர்கள் இவ்வழிகள் மூலமாக வந்தனர். பேமாவில் ஏலவே காணப்பட்ட மக்களை இவர்கள் ஒத்தவராகவிருந்தனர். வா லாற்றுக் காலத்தில் வடக்கிலிருந்து ஏற்பட்ட முக்கியமான குடிப்பெயர்வு போன்று சீனுவின் யுன்னன் மாகாணத்திலிருந்து வடகிழக்குப் பேமா, சான் ஆகிய பகுதிகளில் மக்கள் பெயர்ந்து வந்து குடியேறியுள்ளனர். இப்பகுதிகளிற் சீனர் தொகையாக வாழ்வதனற் சிலசமயங்களில் அரசியற் பிரச்சினைகளும் ஏற் படுவதுண்டு.
பேமியரின் பண்பாட்டிற் புத்தசமயம் முக்கியமான இடத்தைக் கொண்டுள் ளது. பேமாவிற் புத்தசமயம் பரவுவதற்கு இந்திய ஆட்சியின்கீழ் பேமா அமைந் தது காரணமன்று. இந்திய ஆட்சியின்கீழ் பேமா அமைந்ததற்குப் புத்தசமயம் பரவியதும் காரணமில்லை. பேமாவின் அரக்கன் கழிமுகப் பகுதியிற் கடந்த இரண்டாயிரம் வருட காலமாகவே மக்கள் கொஞ்சங்கொஞ்சமாக வந்து குடி யேறியுள்ளனர். இவர்கள் அப்பகுதி மக்களோடு படிப்படியாகக் கலந்துவிட்ட னர். இதனல் அரக்கன் பகுதி மக்களுக்கும் பேமியருக்கும் அதிக வேறுபாடு இல்லை. அாக்கன் யோமாவுக்கூடாகவிருந்து வந்த நெருங்கிய தொடர்பு இதற்
குக் காரணமாகும்.
பேமாவோடு அதிக அளவில் ஏற்பட்ட இந்தியத்தொடர்பு அண்மைக் காலத்
லேயே எற்பட்டதெனலாம். இத்தொடர்பு இருதடவைகளில் ஏற்பட்டது. மத் திய காலப் பகுதியில் இந்தியாவுக்கும் பேமாவுக்குமிடையில் நடைபெற்ற வியா பாரத் தொடர்பு பேமாவின் வடபகுதியைச் சார்ந்து திபேத்தினூடாக நடை பெற்றது. மலையிடுக்குக்களூடாக அமைந்த பாதைகள் முக்கியமாகவிருந்தன. பேமாவின் தென்கரையைச் சார்ந்தும் வேருெரு வியாபார வழி காணப்பட்டது. இந்தியாவிலிருந்து கப்பல்கள் பேமாவின் தென்கரையைச் சார்ந்து சென்றமை யால் அக்யப்பிலிருந்து பெசுவரையுமுள்ள பகுதியும் மூல்மேனிலிருந்து மேர் குயிவரையுமுள்ள பகுதியும் போக்குவரத்துத் தொடர்பைப் பெற்றன. பொருள் கள் கப்பல்கள் மூலமாகவும் தரைமார்க்கமாகவும் கொண்டுசெல்லப்பட்டன. கிராப் பூசந்திப் பகுதியிற் பொருள்கள் தரைமார்க்கமாகக் கொண்டுசெல்லப்பட் டன. பேமாவிற் பெளத்த சமயம் பரவுவதற்கு இந்த வழியே காரணமாகவிருந் தது. இதன் பின்பு இஸ்லாமிய மதமும் இதன்வழியாக வந்து பேமாவிற் சிறிதள வுக்குப் பாவியது. இதனது பண்பாட்டை அக்யப் பகுதியில் மட்டுமே காண

பேமா; சமூகப் புவியியல் 21.
லாம். பேமிய மக்கள் வாழ்ந்த வறண்ட வலயத்தின் ஒரத்தைச் சார்ந்துள்ள அக் கியப் பகுதி வியாபாரத் தொடர்பைப் பெற்ற ஒரு பகுதியாகும். பேமிய மக்கள் வறண்ட பகுதியில் வாழ்ந்தனர். பயிர்ச்செய்கையும் ஆட்சிமுறையும் அங்கேயே இடம்பெற்றிருந்தன. கரைசார்ந்த பகுதியில் அப்பொழுது ஏற்பட்ட வியாபா ரத் தொடர்பினுல் பேமியர் அதிகம் பாதிக்கப்படவில்லை. வெளித்தொடர்பு குறை வான உட்பகுதியில் அவர்கள் காணப்பட்டனர். அவர்களது பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பன அவர்களுக்கேயுரிய பாணியில் வளர்ச்சிபெற்றன.
கரைசார்ந்த பகுதியிலேயே தொழில்முறைகள் துரிதமாக வளர்ச்சி பெற்றன. இதனல் பேமாவிற் புறத்தொடர்புத் தாக்கங்கள் ஏற்பட்டன. அகநோக்கி யமைந்த வறண்ட வலயத்தின் தன்மை இத்தாக்கங்களுக்கு முரண்பட்டதாய் இருந்தது. கரைப் பகுதியோடு நடைபெற்ற வியாபாரத் தொடர்பைப் பின்பற் றிக் கிழக்கிந்தியக் கம்பனியின் தொடர்பு ஏற்பட்டது. இக்கம்பனியின் மூலமா கப் பேமாவின் கீழ்ப்பகுதியோடு பிரித்தானியர் தொடர்புகொள்ள நேர்ந்தது கிழக்கிந்தியக் கம்பனியின் நிர்வாக மையமாகக் கல்கத்தா விளங்கியது. பேமா வில் ஏற்பட்ட புறத்தாக்கங்களினல் பேமாவின் கீழ்ப்பகுதி இந்தியாவின் வியா பார நிர்வாகத் தொடர்புகளினற் பாதிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் அர சாங்கத்தொடர்பு நீக்கப்பட்டதனுல் இந்தியாவின் கட்டுப்பாடு நீங்கியது. ஆணுல் கல்கத்தாவோடு வியாபாரத் தொடர்பு தொடர்ந்து நடைபெற்றது. பேமாவிற் பின்பு நிறுவப்பட்ட அரசாங்கமும் பிற அமைப்புக்களும் பெரும் பாலும் இந்திய முறைகளைத் தழுவியமைந்தன. பேமியர் வாழ்க்கை முறைக்கு இவை பொருத்தமானவையோ, இல்லையோ, இந்தியத் தொடர்பினுல் ஏற்பட்ட விளேவுகள் என இவற்றைக் கருதுதல் வேண்டும்.
பேமியர் பின்பு கழிமுகப் பகுதியிலுள்ள புதிய நெல்விளையும் நிலங்களில் இடம் பெயர்ந்து வந்து குடியேறினர். அக்யப், ஐராவதிக் கழிமுகம், சிட்டாங் கின் கீழ்ப்பகுதி என்பனவற்றிலுள்ள நெல்வயல்கள் இவர்கள் வசமாயின. தெனசெரிம் பகுதியிலுள்ள வயல்களும் ஓரளவுக்கு இவர்களுக்குச் சொந்தமா யின. பணப்பயிரை உற்பத்திசெய்யும் முறை இப்புதிய நிலங்களில் விருத்தி யடைந்தது. இதனுல் தொழிலாளர்தேவையும் அதிகரித்தது. போதிய தொழி லாளரைப் பேமாவிற் பெறுவது கடினமாகவிருந்தது. இதனுற் பயிர்விளைவிக்கப் படும் பருவங்களில் இந்தியாவிலுள்ள குடியடர்த்திகூடிய வங்காளம், சென்னை முதலிய பகுதிகளிலிருந்து தொழிலாளர் வருவதுண்டு. தொழிலாளர் பெருந் தொகையாக வருவது அண்மைக்காலத்திற் குறைவடைந்துவிட்டது. 1937 இல் பேமாவுக்கு வந்த தொழிலாளர் தொகை 1927 இல் வந்த தொகையில் அரை வாசியாகும். 1942 இல் தொழிலாளர் வருகை முற்முகவே நின்றுவிட்டது. அந்த ஆண்டில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட இந்தியத்தொழிலாளர் இந்தியாவுக் குக் திரும்பிவிட்ட னர் எனவும் கூறப்பட்டது.
இந்தியாவோஒெப்பிடும்பொழுது பேமாவிற் காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைகளைப் பொறுத்தே தொழிலாளர் வருகையும் செலவும் அமைந்திருந்தன. உதாரணமாக 1928 இல் 85,000 இந்தியர் பேமாவுக்கு வந்த

Page 121
212 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
னர். 1931 இல் பேமாவில் பொருளாதார வீழ்ச்சி காணப்பட்டபொழுது 57,000 பேர் பேமாவிலிருந்து திரும்பிச் சென்றனர். 1880 முதல் 1900 வரையுள்ள காலப் பகுதியிலேயே பேமாவில் நெல்விளையும் நிலங்கள் மிகக் கூடிய அளவில் விருத்தி செய்யப்பட்டன. இந்தியத் தொழிலாளர் பெருந்தொகையாக இக்காலப்பகுதி யில் வரவில்லை. முதலில் நெல்வயல்களைப் புதிய நிலங்களில் விருத்தி செய்து நெல் விளைவித்தவர் டேமிய மக்கள் என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும்.
வெளிநாட்டவர் வருகைக்குப் பேமாவின் கீழ்ப்பகுதியின் வர்த்தகம் விருத்தி பெற்றதே காரணமாகும். மலாயாவில் ஏற்பட்டதைப்போன்றே இங்கும் நிலைமை காணப்பட்டது. சென்னை, வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் முத லிற் பருவகாலத்திற்குமட்டும் வந்து விட்டுப் போபவர்களாகவிருந்தனர். அவர் கள் ஐராவதிக் கழிமுகத்திற்கு அறுவடைக் காலத்தில் வந்து அறுவடை முடிந்த அதும் இந்தியா திரும்புவர். சிலவேளைகளில் அங்குத் தங்கி அறுவடை, அரிசி குற் றதல், வரம்புகட்டுதல் முதலிய பல வேலைகளையும் கவனித்து அடுத்த வறண்ட பருவத்திற்கு இந்தியா போவதும் உண்டு. மலாயாவுக்குச் சென்ருேர் தொடர்ந்து தொழில்புரிவதற்காகச் சென்றனர். ஆனல் பேமாவுக்கு வந்தோர் பருவகாலக் தொழிலுக்காக வநதமையாற் குறைந்த காலத்திற்கே அங்குத் தங்கவேண்டியி ருந்தது. படிப்படியாக அவர்களும் நிலையான தொழில்களில் ஈடுபடத்தொடங்கி னர். புகையிரதநிலையம், துறைமுகங்கள், ஆற்றுப் போக்குவரத்து, அரிசி குற்று தல், மாத்தொழில் முதலிய பல்வேறு வகையான தொழிற்றுறைகளில் அவர்கள் ஈடுபட்டனர். கடந்த நூறுவருட காலத்திற் பேமாவின் வர்த்தகம் வளர்ச்சி பெற்றுவந்துள்ளதனுற் பல தொழில்களும் விருத்தியடைந்தன. இத்தகைய தொழில்களுக்குத் தேவையான தொழிலாளரைப் பெறுவது முதலிற் கடினமாக விருந்ததல்ை இந்தியத் தொழிலாளரை வரவழைப்பதற்குப் பேமிய அரசாங் கம் சில சலுகைகளை வழங்க வேண்டியிருந்தது.
இந்நிலைமைகளினல் இந்தியர் படிப்படியாக வந்து தமது குடும்பங்களோடு பேமாவிற் குடியேறினர். 1941 இல் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட இந்தியர் பேமாவிற் காணப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் கரைப்பகுதி, கழிமுகப் பகுதி என்பனவற்றிலுள்ள நகரங்கள் வர்த்தக மையங்கள் முதலியவற்றைச் சார்ந்தே வாழ்ந்தனர். பேமாவில் இந்துஸ்தானி மொழி இரண்டாவது இடத் தைப் பெற்றது. நிர்வாகத்திலும் பிற உத்தியோகங்களிலும் இந்தியரே அநேக மாக ஈடுபட்டனர். பேமாவில் ஏலவே காணப்பட்ட பல்வேறு வகுப்பினரோடு இப்பொழுது இந்தியரும் சேர்ந்ததனுல் மேலும் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தி யர் பெரும்பாலும் வர்த்தகம், பட்டினவாக்கம் ஆகியவற்றேடு தொடர்புடைய வர்களாக விருந்தனர். - -
கழிமுகப் பகுதியிற் புதிதாகப் பேமிய மக்கள் விருத்திசெய்த நிலத்துண்டு களைப் பின்பு அவர்கள் எவ்வாறு இழந்து குத்தகைக்குச் செய்யும் விவசாயிக ளாக மாறினர்கள் என்பது பற்றி ஏலவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலங்கள்.
இந்தியர்களுக்கு குறிப்பாகச் செட்டியார்களுக்கு ஈடாக வைக்கப்பட்டதன்

பேமா : சமூகப் புவியியல் 23
மூலம் அவர்களுக்கே சொந்தமாயின. 1931 ஆம் ஆண்டில் கழிமுகப் பகுதியி அலுள்ள பயிர்விளையும் நிலத்தில் அரைவாசி இந்தியர்களுக்குச் சொந்தமாயிருந் தது. இதனுல் இப்பிரச்சினை மேலும் சிக்கலாக அமைந்தது. அவர்கள் பிறநாட்ட வராக இருந்தமையால் நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருந்தபொழுதும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடவில்லை. ஏலவே பொருளாதார நெருக்கடியை அனுபவித்துவந்த பேமியர், இந்தியர் இவ்வாறு நிலத்தை உடைமையாகப் பெற் றிருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்தனர். இனவெறுப்பும் இதனல் ஏற்பட் டது. பிறநாட்டவர் பயிர்ச்செய்கைத் தொழில்களை மட்டும் செய்துவிட்டுத் திரும் பிச் செல்லுகின்ற நிலை இருந்தபொழுது, இத்தகைய இனவெறுப்புக் காணப்பட வில்லை. ஐராவதிக் கழிமுகத்திற் பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றமையால் அப்பகுதி பேமாவின் பிறபகுதிகளிலும் வேறுபட்டதாக உள்ளது. கழிமுகப் பகுதி வெளிநாட்டவர் தொடர்பும் வெளிநாட்டு வர்த்தகமும் விருத்திபெற்ற பகுதியாகும். பேமாவின் மிக முக்கியமான துறைப்பட்டினமாக ரங்கூன் அமைந் துள்ளது; உட்பு:கவும் வெளிச்செல்லவும் இது துணைசெய்கின்றது. கழிமுகப் பகுதியிலுள்ள நிலம் பெரும்பாலும் இந்தியர்களுக்குச் சொந்தமாயிருந்தமை யால் இந்தியத் தொழிலாளரே விவசாயத் தொழில்களில் மேலுமதிகமாக ஈடு பட்டனர். இத்தகைய நிலைமைகளினல் பேமா இருவலயங்களாகப் பிரிந்தது. பேமியர்கள் வாழும் வறண்ட வலயம் மையநோக்குத் தன்மையை உடையதாயி ருப்பதோடு, வருவாய் குறைந்த பகுதியாகவும் உள்ளது. ரங்கூன் பட்டினத்தை உள்ளடக்கிய வளமான கழிமுகப் பகுதி வெளிநோக்குத் தன்மையை உடையது. அதிக வருவாயைக் கொடுக்கும் பகுதியும் இதுவேயாம். பிற நாட்டவரான இந் தியர் பெரும்பாலும் வாழும் இப்பகுதி மையத்தன்மையைக் கொண்டதாயில்லை; பேமாவின் வாயில்போன்றே காணப்படுகின்றது. மொங்கோலிய இனத்தவரின் பெயர்வு பேமாவின் பழையகால வரலாற்றில் முக்கியமற்றதாய் அமைந்துவிடப் புதிய வளமான பகுதி வறுமையும் எளிதாக இடம்பெயரும் தன்மையுமுடைய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நெருக்கமாக வாழும் மக்களைத் தன்னகத்தே இழுக்கும் பகுதியாக அமைந்துவிட்டது.
நகர மையங்கள்
பேமாவில் ரங்கூன், மண்டலே ஆகிய இரண்டுமே பெரிய நகரங்களாகும். ஏனைய பட்டினங்களுள் மூல்மேன், பசேன், அக்யப் ஆகிய பட்டினங்களிலேயே 50,000 இற்கு மேற்பட்ட தொகையினர் வாழுகின்றனர். அக்யப் பசேன், மூல் மேன், தவோய் என்பன சிறுதுறைப் பட்டினங்களாகவும் பொங்குமுக அரிசி நிலையங்களாகவும உள்ளன. ஐராவதி ஆற்றைச் சார்ந்து ஹென்சடாவிலிருந்து பாமோவரையும் ஆற்றுத் துறைப்பட்டினங்களும் உண்டு. ஐராவதி ஆற்றில் 900 மைல்வரையுள்ள பகுதியில் வர்த்தகப் போக்குவரத்து நடைபெறுகின்றது. மியின்யான் போன்ற பல சிறிய பட்டினங்களில் எண்ணெய் ஊற்றுதல், பஞ்ச கடைதல் முதலிய கிராமத் தொழில்கள் நடைபெறுகின்றன. யேனுன்யவுங்கு நாம்து ஆகிய பட்டினங்களில் எண்ணெய்த் தொழில், கணிப் பொருளகழ்தல்

Page 122
214 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
முதலிய தொழில்கள் விருத்திபெற்றுள்ளன. புகையிரதப் போக்குவரத்தும் நிர்வாக முறைகளும் பெசு, சுவேபோ, துங்கு என்பனவற்றேடு தொடர்புடை யனவாயுள்ளன. அவை நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளன. ஸ்பேற் என்பார் இப்பட்டினங்களின் வளர்ச்சிபற்றிக் குறிப்பிடும்பொழுது "தகரக் கொட்டகைகளான சில கட்டிடங்களைச் குழப் பெரிதாக வளர்ச்சிபெற்ற கிரா மங்கள் என இவற்றை வர்ணித்துள்ளார். வரலாறு எவ்வாருகவிருந்தபொழுதும் இவை புதிதாகவமைந்த குடியிருப்புக்கள் எனக்கூறுவதில் தவறில்லை.
ாங்கூன் (1962 இல் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையினர் இங்குக் காணப்பட்டனர்) ஐராவதி ஆறும் பெசு யோமாவின் அடிக்குன்றுகள் வரை செல்லும் தெருவழியும் கடற்பாதையும் வந்து சந்திக்கும் இடத்தில் அமைந்துள் ளது. கப்பற்போக்குவரத்திற்குப் பொருத்தமாகவிருப்பதோடு ஐராவதி சிட் டாங்கு ஆறுகளின் பள்ளத்தாக்குக்களின் முகப்பிற் காணப்படுகின்றது. பெசு யோமாவைச் சார்ந்து புகையிாதப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அமையும் பட்டினங்களைப் போன்று சங்கூன் பட்டினமும் நீள்சதுர அமைப்பைக் கொண்டுள்ளது. கடந்த நூற்ருண்டில் வெளிநாட்டு வியாபாரம் விருத்தியுறும் வரை இப்பட்டினம் முக்கியமான இடத்தைப் பெறவில்லை. யுத்த காலத்தின்முன்பு இப்பட்டினம் பெரும்பாலும் இந்திய மயமானதாய்த் தோற்றமளித்தது. பேமிய ரின் ஆட்சி இடம்பெற்றதும் நிர்வாகம் விரைவாகப் பேமியர் கைக்கு மாறியது. ாங்கூன் மிகமுக்சியமான துறைப்பட்டினமாகும். பேமாவின் வெளிநாட்டு வியா பாசத்தில் ஐந்தில் நான்கு பகுதிக்கு மேற்பட்டதொகை ரங்கூன் மூலமாக நடை பெறுகின்றது. இந்தியாவிலிருந்து பெருந்தொகையாக இந்தியர் வரவும் போக வும் முக்கியமாகவிருந்த பட்டினமும் சங்கூனகும். 1921 முதல் 1931 வரையுள்ள காலப்பகுதியில் வருடந்தோறும் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட இந்தியப் பிர யாணிகள் இதனூடாசச் சென்றுள்ளனர். வெளிநாட்டு வர்த்தகமும் கப்பற் போக்குவரத்தும் வளர்ச்சி பெற்றதனுற் பல இனமக்களின் தொடர்பைப் பெற்ற பட்டினமாக சங்கடன் அமைந்தது. பேமாவில் மிகப் புதியதும் மேலைநாட்டு அமி சங்களைக் கொண்டதுமான பட்டினமும் ாங்கூனுகும். பிரதான கப்பற்பாதைகள் ரங்கூனுக்கு அப்பால் அமைந்துள்ளமையால் இத்துறைப்பட்டினம் ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளமை உண்மையே. ஆனல் சர்வதேச விமானப்பாதைகள் விருத்தி செய்யப்பட்டமையால் சங்கூனின் முக்கியத்துவம் மேலும் அதிகரித் துள்ளது. இந்தியாவையும், ஐரோப்பாவையும், பாங்கொக்கையும் தூரகிழக்கை யும், சிங்கப்பூரையும் அவுஸ்திரேலியாவையும் இணைக்கும் சர்வதேச விமானப் பாதைகள் ரங்கூனேடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பேமாவின் கீழ்ப்பகுதியி லுள்ள பலதுறைப்பட்டினங்களில் மூன்று இலட்சம் சீனவியாபாரிகள் குடியேறி யுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிலையாகவே இப்பட்டினங்களில் வாழுகின்ற னர். யுத்த காலத்திற் சீனவோடு தொடர்புடையதாய் சங்கூன்-லஷோ-குன் மிங்குப்பாதை அமைந்திருந்தது. ரங்கூனில் வாழ்ந்த சீனர் அப்பொழுது சீனு பற்றி மிக்க சிரத்தையுடையவர்களாயும் காணப்பட்டனர். யுத்தகாலத்தின்
பின்பு சீனுவின் உட்பகுதியை இணைக்கும் இப்பாதை அத்துணை நிலையான

பேமா : சமூகப் புவியியல் 216
தன்மையையுடைய பாதையாகத் தென்படவில்லை. பேமா சுதந்திரம் பெற்ற பின்பும் (1948) நாட்டின் நிர்வாகத் தலைநகரமாக சங்கூன் பட்டினமே இருந்து வருகின்றது. இந்த நிலையில் மாற்றம் ஏற்படக் கூடியதாய் இல்லை. தூரகிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தினுல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மணிலா தவிர்ந்த பிற தலைப்பட்டினங்களுள் மிகவும் பாதிக்கப்பட்ட பட்டினம் ரங்கூனுகும். ரங்கூனில் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டன. உள்நாட்டு அமைப்பில் சீர்குலைவு ஏற்பட்டது. வியாபாரம் வீழ்ச்சியுற்றது. விலைவாசிகள் அதிகரித்தன. அப்படி யிருந்தும் 1961 ஆம் ஆண்டில் வர்த்தகத்தின் மதிப்பு 1938 இலிருந்ததிலும் குறைவாகவே காணப்பட்டது.
மண்டலே பேமிய அரசர்களோடு வரலாற்றுத் தொடர்புடைய பட்டினமாகும். யுத்தகாலத்திற் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு அளவாற் சிறிய பட்டினமு மாகும். பரம்பரையாகவே பேமியரின் பட்டினமாக இருந்துவருகின்றது. 212,000 பேருக்குக் கூடிய தொகையைக் கொண்ட பட்டினமாகவுள்ளபொழுதும் கீழைத் தேசப் பண்பாடும் சமூகத்துறையில் வளர்ச்சியும் பெற்ற பட்டினமாக உள்ளது. இசை, நாடகம், நுண்கலைகள் என்பனவும் வளர்ச்சி பெற்றுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ளாக அமைந்த வேறு இடங்களில் இத்தகைய தன்மைகள் குறை வாகும.
1942 ஆம் 1944 ஆம் வருடங்களில் பேமாவில் நடைபெற்ற இராணுவ நிலைமை களிஞல் நகர வாக்கம் பாதிக்கப்பட்டுள்ளபொழுதும் கிராமப் பகுதிகளில் எது வித மாற்றமுமில்லை. வாழ்க்கைப் பயிர்ச்செய்கை நடைபெறும் மத்தியபேமா அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. வர்த்தகம் வளர்ச்சி பெற்றிருந்த கழிமுகப் பகுதியே பெரும்பாலும் பாதிக்கப்பட்டது. வர்த்தக அமைப்புச் சீர்குலைந்த தோடு தொழிலாளர் வருகையும் தடைப்பட்டது. இந்தியர்களின் தொகையிலும் மாற்றம் ஏற்பட்டது. 1942 இல் 600,000 இற்கு அதிகமான இந்தியர் பேமாவி விருந்து அரக்கன் குன்றுகளுக்கூடாக நடந்து அசாம் சென்றனர். பேமாவின் சமூக வர்த்தக நிலைமைகளைப் பொறுத்தவரையில் இந்த நிகழ்ச்சி முக்கியமான தாகும். இந்தியர் வருகை இப்பொழுது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரதேசப் புவியியல் பேமாவின் புவியியலிற் குடியடர்த்தி கூடிய நான்கு பிரதேசங்கள் முக்கிய
மானவை (படம் 48):
1. வறண்ட வலயம்-வறண்ட காலநிலை, வாழ்க்கைப் பயிர்ச்செய்கை, பேமிய ரின் நீண்ட காலத்தொடர்பு என்பன காரணமாகத் தனித்தன்மையைப் பெற்ற ஒரு வலயமாகும். பகான், மண்டலே என்பன இங்குள்ள முக்கிய பட்டினங்களா கும். குறிப்பான தசைத்தோற்ற வேறுபாடுகளும் 40 அங்குல வருட மழைவீழ்ச் சிக் கோடும் இவ்வலயத்தின் எல்லைகளை ஒரளவுக்கு வரையறுக்கத் துணையாக வுள்ளன.

Page 123
26 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
2. பேம்ாவின் கீழ்ப்பகுதிக் கழிமுகங்கள்-ஐராவதிக் கழிமுகத்தை நடுவணு கக் கொண்டு சிட்டாங்குக் கழிமுகத்தை உள்ளடக்கியுள்ள பேமாவின் கீழ்ப் பகுதி நெல் உற்பத்தியை முக்கியமாகக் கொண்ட வர்த்தகப்பயிர்ச் செய்கை விருத்திபெற்றுள்ள பகுதியாகும். வெளிநாட்டு வியாபாரம் வெளிநாட்டுத் தொழிலாளர் வசதி என்பன காரணமாக்ப் பேமியால்லாதோரின் முதன்மையை இங்கே காணலாம். இப்பகுதியின் விருத்தியை அடிப்படையாகக் கொண்டு
ாங்கூன் மூக்கியமான ஒரு மையம்ாக வளர்ச்சிபெற்றுள்ளது. A 3. அசக்கன் கழிமுகக் கரைப்பகுதி-நெற்செய்கை நடைபெறும் சிறிய பகுதி யாகும். இதன் வழியாகவே இந்தியர் பேமாவின் உட்பகுதிகளைச் சென்றடைந்த னர். மேலே குறிக்கப்பட்டுள்ள இருபகுதிகளிலுமுள்ள குடித்தொகையிலும் பார்க்கக் குறைந்த குடித்தொகை இப்பகுதியில் உண்டு. 'பசிபிக் கரையைப்" போன்று நெடிய மலைத்தொடர்கள் கரையைச் சார்ந்து பரந்துள்ளமையாற் கடற்கரைப் பகுதி ஒடுக்கமாக உளது. கடந்த ஐம்பது வருடகாலத்தில் இதன் வியாபாரத் தொடர்பு பேமர்வின் பிற பகுதிகளோடு நடைபெற்றதிலும் பார்க்க வங்காளத்தோடே அதிக அளவுக்கு நடைபெற்று வந்துள்ளது.
4, தெனசெரிம் கரைப்பகுதி-நெடிய தொடர்களைக் கொண்ட தரைத்தோற்ற வேறுபாடுடைய பகுதியாகும். பயிர்விளையும் சிறு தாழ்நிலங்கள் இடையிடையே பரந்துள்ளன. காைசார்ந்து மாங்குரோவுச் சேற்றுநிலங்கள் காணப்படுகின் றன. இப்பகுதியின் அமைப்பும் மக்களின் நடவடிக்கைகளும் மலாயாவின் கிழக் குப் பகுதியிலுள்ள நிலைமைகளை ஒத்துள்ளன. இறப்பர், தென்னைப்பொருள் கள், தகரம் என்பன முக்கிய வியாபாரப் பொருள்களாகும். பேமாவின் பிற பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இப்பகுதியின் வர்த்தகம் வேறு பட்டிருப்பதோடு கிராப்பூசந்தியோடு தொடர்புடையதாயுமுள்ளது.
பேமாவின் ஏனைய பிரதேசங்கள் மலைகளும் குன்றுகளும் சார்ந்த பகுதிகளா கும். குடியட்ர்த்தியும் குறைவாகும். பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முதல் நிலை யான பயிர்ச்செய்கைவரை பல முறைகள் காணப்படுகின்றன. பல்வேறுபட்ட வகுப்பினர்கள் இப்பகுதிகளில் வாழுகின்றமையாற் பேமிய ஒருமைப்பாடு பல படிகளில் உள்ளது. இப்பிரதேசங்களாவன :
5. மேற்குக் காட்டு வலயம்-இது அடர்த்தியான காடுகளையுடைய வலயமா கும். உயரவடிப்படையில் தாவரவகைகள் வேறுபட்டுள்ளன. மேற்குச் சாய்வு களில் மலைக்காடுகள் பரந்துள்ளன. வறண்ட பருவம் காணப்படும் கிழக்குச் சாய்வுகளில் உதிர்காடுகள் உண்டு. இவ்வலயத்தில் நெடியனவாகவும் அளிய டைப்பு வடிவிலும் அருவிகள் ஓடுகின்றன. முக்கியமான அருவிகள் ஐராவதி ஆற்றேடு வந்து இணைகின்றன.
8. வட ஐராவதி வடிநிலம்-பாமோவுக்கு வடக்கில் இவ்வடிநிலம் இமாலய மலைத்தொடர்களோடு தொடர்பாக அமைந்துள்ளது. இங்கு வடக்குத் தெற்கா கப் பல மலைத்தொடர்கள் பாந்துள்ளன. இவற்றிடையே ஐராவதி ஆற்றின்

பேமா : சமூகப் புவியியல் 27
மேற்கிளைகள் காணப்படுகின்றன. திபேத், யுன்னன் உட்பகுதி என்பவற்றைச் சார்ந்தும் உயரமான மலைநிலம் அமைந்துள்ளது. இப்போது பேமாவிலுள்ள மொங்கோலிய இனத்தவர் கூட்டங்களிற் பல, குடியடர்த்தியில்லாத இப்பிா தேசத்தினூடாகவே வந்தன.
7. நிலைமாறு பிரதேசம்-உயரமான பாகங்களை உள்ளடக்கிய இப்பிரதேசத் தில் மழைவீழ்ச்சியும் அதிகமாகும். வறண்ட வலயம், வட ஐராவதி வடிநிலம், சான் உயர்நிலம் என்பனவற்றிடையே தேக்குமரக்காடுகள் பாந்துள்ளன.
8. பெசு யோமா-இளம் பாறைகள் சற்றே மேன்மடிப்பாக அமைந்த பகுதி யாகும். ஐராவதியின் கீழ்ப்பகுதிக்கும் சிட்டாங்கிற்குமிடையில் உள்ளாக அமைந்துள்ளது. இதன் வடக்கில் எஞ்சிய எரிமலைக் கூம்புகள் காணப்படுகின்
கத்திற்கு ஏற்ற தேக்குமாங்கள் பரந்துள்ளன.
9. சான் உயர்நிலம்-வறண்ட பிரதேசத்திலும் பார்க்க இப்பகுதியிற் கூடிய
றன. வடமேற்குச் சாய்வில் நிலநெய்யும் உண்டு. எல்லாப் பாகங்களிலும் வர்த்த
மழைவீழ்ச்சியும் குளிரான தன்மையும் (உயரம் காரணமாக) உண்டு. இத்தன்மை களினல் உதிர் காடுகளும் அயனவயற் கலப்புக்காடுகளும் பரந்துள்ளன. அய்ன வயற் பயிர்ச்செய்கையும் நடைபெறுகின்றது. வெப்பமான தாழ்நிலங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. தைலாந்து மக்களோடு தொடர்புடைய சான் மக்கள் இப் பகுதியில் வாழுகின்றனர். இப்பகுதி பேமாவோடு தொடர்புடையதாயிருப்பقني போன்று தைலாந்தோடும் தொடர்புபெற்றுள்ளது. லஷோ, காலோ என்பவற்றை நோக்கி வர்த்தகமும் விருத்திபெற்றுள்ளது. இவை யுன்னனுக்குட் ச்ெல்லும் பாதைகளோடு தொடர்புடைய புகையிரத நிலையங்களாகும். போட்வின் என்னு மிடத்தில் ஈயம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது. இங்கு தங்’ தோட்டச் செய்கை யும் வளர்ச்சி பெற்றுள்ளது. இப்பகுதியிற் பயிர்ச்செய்கையை விருத்தி செய்வ தற்கும், மக்கள் குடியேறி வாழுவதற்கும் ஏற்ற சாதகமான தன்மைகள் உண்டு எனக் கருதப்படுகின்றது. சல்வின் நதி இப்பகுதியினூடாக ஓடுகின்றது. இந் நதியைத் தொடர்ந்து உட்பகுதியை அடையக்கூடிய நிலைமைகள் இங்கு இல்லை. மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது பகுதிகளும் பின்வருவனவற்ருல் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன : . . . . . . . . . w
(அ) ஐராவதி ஆற்றுப் போக்குவரத்து-ஐராவதி வடிநிலத்தின் மத்திய, கீழ்ப் பகுதிகளின் தேவைகளுக்கு இப்போக்குவரத்து மிகவும் உப யோகமுள்ளதாய்க் காணப்படுகின்றது. பார்மான பொருள்களைக் குறைந்த செலவிற் கொண்டுசெல்ல இப்போக்குவரத்தித் துணைசெய் கின்றது. இது சங்கனை மையம்ாகவும் முக்கிய இறக்கியேற்றுந் துறை முகமாகவும் கொண்டுள்ளது. 1960 ஆம் வருடத்தில் உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து மூலம் 111 இலட்சம் தொன் நிறைய்ான பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டன; 41 இலட்சம் பிரயாணிகளும் இதனைப் பயன்படுத்தியுள்ளன்ர்.

Page 124
218 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
(ஆ) ாங்கூன்-மியிச்சீனுப் புகையிசதவழி-இது முதலில் பெசுயோமா
அடிக்குன்றுகளைச் சார்ந்து, ஐராவதியை யடுத்துள்ள மண்டலே வரையும் சென்று பின்பு மண்டலே-லஷோக் கிளையாக யுன்னன் வழி வரை பரந்துள்ளது. மண்டலேயிலிருந்து புகையிரத வழிகள் யேயு வரையும், தாசியிலிருந்து மியின்கான்வரையும், காலோவுக்குச் சில மைல்கள் அப்பால், ஹெஹோ வரையும், பியின்மீனுவிலிருந்து பெசுயோ மாத் தொடருக்கூடாக சவுகபதவுங்கு வரையும் பரந்து காணப்படு கின்றன. தெற்கில் புகையிரத வழிகள் சங்கூனிலிருந்து புரோம், ஹேன்சடா, பசேன் என்பனவரையும், பெசுவிலிருந்து மூல்மேன் யே வரையும் பரந்துள்ளன. 1957 இல் புகையிாத வழிகள் மூலம் கொண்டுசெல்லப்பட்ட பொருள்களின் தொகை 1937 இல் கொண்டு செல்லப்பட்ட தொகையில் அரைவாசியாகும். 1957 இல் 22 இலட்சம் தொன் நிறையான பொருள்களே (255 இலட்சம் பிரயாணிகளும் இவ்வழிகளைப் பயன்படுத்தியுள்ளனர்) கொண்டுசெல்லப்பட்டன.
(இ) கரையைச் சார்ந்து நடைபெறும் கடற்போக்குவரத்து-சிறிய் நீரா விக் கப்பல்களும் பாய்க் கப்பல்களும் இப்போக்குவரத்தில் ஈடுபட் டுள்ளன. இப்போக்குவரத்து வழிகளும் சங்கூனயே மையமாகக் கொண்டுள்ளன .
(F) ாங்கூன்-மண்டலே-லஷோ தெருப்போக்குவரத்து-ாங்கூனிலிருந்து மண்டலே, லஷோ ஆகிய இடங்கள்வரையும் பரந்துள்ள தெருவழி புகையிரத வழியைக் கடந்து. செல்லுகின்றது. புகையிாதவழிமூலம் நடைபெறும் ப்ோக்குவரத்தி ஓரளவுக்கு இதன்மூலம் நடைபெறு கின்றது. வேருெரு தெரு கிழக்கிலுள்ள சான்நிலத்தையும், மேற்கி லுள்ள புரோமையும் நிலநெய் வயல்களேயும் இணைக்கின்றது. பொது வாகப் பார்க்கும்பொழுது ஃபேமாவின் தெருப்போக்குவரத்து அதிக அளவுக்கு விருத்தி செய்யப்படவில்லை. 1963 ஆம் ஆண்டில் பேமா வில் 20,000 மோட்டார் வாகனங்களே வர்த்தகப் போக்குவரத்தில் ஈடு பட்டிருந்தன; தனிப்பட்டவர்கள் 22,000 மோட்டர் வண்டிகளை உடை
யவராயிருந்தனர்.
இக்கால நிலை
யுத்தகாலத்தில் ஆற்றுப் போக்குவரத்தும் புகையிரதப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனுற் பிரதேசங்களிடைத் தொடர்பு குறைந் தது. மண்டலே நாட்டின் தலைநகராய் அமையவேண்டும் என்ற எண்ணமும் இந்நகர் யுத்தத்தினுல் அதிகம் சேதமடைந்ததனுற் கைவிடப்பட்டது. உள் நாட்டுப் பிணக்குக்களும் இனப்பகைமையும் பொதுவுடைமை வாதமும் அதி கரித்தமையால் ரங்கூனின் அதிகாரம் அாாத்தேயுள்ள பகுதிகளில் அதிக செல் வாக்கைப் பெறமுடியவில்லை. நெல்லும் சிறு தொகையாகவே கிடைத்தது. ஆயு

பேமா : சமூகப் புவியியல் 219
தந் தாங்கிய வகுப்பினர் நெல்லில் ஒரு தொகையைக் கைப்பற்றினர். நெல் உற் பத்தி ரங்கூனில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. நெல்மூலம் பெறப் படும் வருமானவரியின் துணையினலே அரசாங்கம் அலுவல்களைக் கவனிக்கக் கூடியதாயிருக்கிறது. சுதந்திரம் காரணமாகப் பேமா தனித்த நாடாக மாறிய பொழுதும், வெளிநாட்டு வர்த்தகம் முன்புபோலத் தொடர்ந்து நிலவிவந்தது.
(1964 இல் பேமாவின் ஒரு கியாற் அல்லது ரூபாய் அரசாங்க நாணயமாற்று விகிதத்தில் 64
மலாயாச் சதத்திற்கும், 21 அ.ஐ.மா சதத்திற்கும், பிரித்தானிய 1 சிலின் 6 பென்சுத் தொகைக்கும் சமமாக விருந்தது.)

Page 125
அத்தியாயம் 12
கிழக்கு இந்தியத் தீவுகள் மேற்குத் தீவுக் கூட்டம்-சுமாத்திரா கிழக்கு இந்தியத் தீவுகள்
தென் கிழக்கு ஆசியாவுக்கு அப்பால் குலுக் கடலிலிருந்து தெற்கு நோக்கி ஈரியானுக்கு (நியூகினிக்கு) மேற்காக விபர் கோடுவரை பரந்துள்ள தீவுக் கூட்டம் கிழக்கு இந்தியத் தீவுகள் என வழங்கும். இவை மிகச் சிறிய நிலத் துண்டுகளாக அமைந்துள்ளன. கடந்த சில நூற்முண்டுகளாக இத்தீவுகள் (வட போணியோதவிர) இடச்சுக்காரரின் நிர்வாகத்தின் கீழிருந்தன. அரசியலடிப் படையில் இத்தீவுகள் ஒருங்காக இணைந்திருந்த காரணத்தினலேயே புவியிய லடிப்படையிலும் இவை ஒரு தீவுக் கூட்டமாக உள்ளன என்ற கருத்து எழ லாயிற்று. இந்தோனேசியப் பகுதியில் வாழ்பவர் ஏறத்தாழ ஒரே இனத்தைச் சார்ந்தவராகக் காணப்படுகின்றனர். இங்குப் பாந்து காணப்படும் தீவுகளில் இவர்கள் வாழுகின்றனர். இத்தீவுகளின் பெளதிகச் சூழலிலும் பல ஒற்றுமை கள் காணப்படுகின்றன. பெளதிக நிலைமைகளுக்குப் பொருந்த மக்களது பண் பாட்டு இசைவுகளும் ஏற்பட்டுள்ளன.
மத்திய கோட்டுச் சூழலையுடைய பெரும் பகுதிகளாக விருந்தபொழுதும் கிழக்கு இந்தியத் தீவுகள் கடலினுற் பிரிக்கப்பட்டுள்ளமையால் அவற்றை எளி தாக அடைந்துவிடலாம். இத்தகைய வசதி இருப்பதால் மக்கள் எளிதாக இப் பிரதேசத்தை அடைந்து குழலின் தாக்கத்தையும் உணரக்கூடியவராயுள்ளனர். இத்தீவுகளில் மக்களின் வாழ்க்கை முறைகளிலும் பல வேறுபாடுகள் தென்படு கின்றன. யாவாவில் இலட்சக் கணக்கான மக்கள் மிகவும் நெருக்கமாக வாழு கின்றனர். ஆனல் போணியோ பெரும்பாலும் காடடர்ந்து மக்களின்றிக் காணப் படுகின்றது. சுமாத்திராவின் மலைசார்ந்த பகுதிகளில் அலைந்துதிரியும் கூட்டத் தினர் பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ளனர். பாலித்தீவி லுள்ளவர்களே பண்பாட்டில் மேம்பட்டவர்களாக உள்ளனர். இவர்களது நுணுக்கமான பண்பாட்டுச் சிறப்பினை வேறிடங்களில் காண்பதளிதாகும். யக் கார்த்தாவில் வாழ்பவர்கள் நகர வாழ்க்கையிற் பெரிதும் திளைத்தவராக உள்ள னர்.
இத்தீவுகள் 2,000 மைல் தொலைவுக்குப் பரந்திருப்பதால் தனிப்பட்ட தீவு களில் வாழ்பவர்களிடையில் தொடர்பு குறைவாக உள்ளது. அல்லாமலும் இத் தீவுகளிற் காடுகள் செறிந்திருப்பதனுற் கரையோரங்களில் வாழ்பவர்கள் உட் பகுதிகளில் வாழ்பவர்களோடு தொடர்பு குறைந்தவர்களாகவும் காணப்படு கின்றனர். இத்தகைய தன்மைகள் உள்ளபொழுதும் தீவுகள் உள்ளக்கிளர்ச்சி
220

கிழக்கு இந்தியத்தீவுகள்: சுமாத்திரா 221
யூட்டும் கடவினுற் குழப்பட்டுள்ளமையால் போக்குவரத்திற்கு ஏற்றனவாய் உள்ளன. காடுகளிடையேயும் சேற்று நிலங்களிடையும் காணப்படும் ஆறுகளும் கரைகளைச் சார்ந்து காணப்படும் ஒதுக்கான கடலேரிகளும் போக்குவரத்திற் குத் துணைசெய்கின்றன. காடுகள் செறிந்த இடங்களில் ஆறுகளே போக்கு வரத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. இங்குள்ள தீவுகளில் வாழும் மக்களுக்கு நீர்வழிகள் துணையாயிருந்தமைபோன்று, வெளிநாட்டார் வருகைக்கும் அவை துணைசெய்தன. மலாய்க் குடாநாடு ஆசியப் பெருநிலப்பரப்பிலிருந்து தெற்கு நோக்கி நீண்டிருப்பதனுல் அவர்கள் தெற்கே காணப்பட்ட தீவுகளிடையே பிரயாணஞ் செய்யவேண்டியவராயினர். இந்தியா, சீன, ஐரோப்பா முதலிய பகுதிகளிலிருந்து வந்தோர் பல நூற்ருண்டுகளாக இத்தீவுகளோடு தொடர்பு கொண்டுள்ளனர். இங்ங்னம் ஏற்பட்ட தொடர்புகளினல் இனக்கலப்புக்களும் பண்பாட்டுக் கலப்புக்களும் உண்டாக வாய்ப்பு ஏற்பட்டது; தொழில் நுட்ப் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இங்குள்ள தீவுகள் உயரத்திற் குற்ை வாக இருத்தலினல் வேறுபட்ட காலநிலைகளோ தாவர வகைகளோ அமைய வில்லை; இதனுல் மக்களிடையும் குறிப்பிட்ட வேறுபாடுகள் ஏற்படவில்லை. எனினும் உயரமான எரிமலைக் குழம்புப் பகுதிகள் ஈண்டுக் குறிப்பிடத்தக்கன. இப்பகுதிகளில் வளமான இள மண்வகைகள் பரந்துள்ளமையாற் பயிர்ச் செய்கை மிகவும் செறிவாக நடைபெறுகின்றது. செறிவான பயிர்ச்செய்கை காரணமாக மக்கள் மிகவும் அடர்த்தியாய் வாழ்கின்றனர். உயிர்ப்பெரிழலை வாய்வரையிற் பயிர்ச்செய்கை பரந்துள்ளது. சடுதியாக எரிமலைத் தாக்கம் ஏற்படுமானுற் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர். வருவாயைக் கொடுக்கும் வளமான எரிமலைக் குழம்புப் பகுதிகளிலேயே (குறிப்பாக யாவா வில்) அரசியற் செல்வாக்கு அதிகமாகும். ஏனைய அரசியற் பிரிவுகள் பெரும் பாலும் கரைசார்ந்த பகுதிகளில் உள்ளன.
புவிவெளியுருவவியல் தன்மைகளையும் விலங்குகள் தாவரங்கள் என்பனவற் றிடைக் காணப்படும் வேறுபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு கிழக்கிந் தியத் தீவுகளைப் பின்வருமாறு பிரிக்கலாம் : (அ) மேற்குத் தீவுக் கூட்டம். சுமாத்திரா, யாவா, போணியோ என்பனவும் சண்டாமேடையோடு தொடர் புடைய பிற தீவுகளும் இதனுள் அடங்கும். ஆசியாக் கண்டத்தின் பிரதான பகுதிகளை இணைக்கும் பாதைகள் இதனை மையமாகக் கொண்டிருந்தமையால் இப்பகுதியில் வாழ்வோரின் வாழ்க்கை முறை சிறப்புப் பெற்றுள்ளது. இக் காலமுறையில் வர்த்தகம் வளர்ச்சி பெற்றிருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். (ஆ) கிழக்குத் தீவுக்கூட்டம். பாலித்தீவிலிருந்தும் மாக்கசர்த் தொடுகடலிலிருந்தும் கிழக்கு நோக்கி விபர் கோடுவரை பரந்துள்ள தீவுகள் இதனுள் அடங்கும். சர்வதேசப் போக்குவரத்துப் பாதைகளுக்குச் சற்று அப்பாற் காணப்படும் இத்தீவுகள் பெரும்பாலும் இளமை நிலையில் உள்ளன. ஆசியாவின் தாக்கமும் குறைவாகும்; சர்வதேச வர்த்தகமும் விருத்தியடைய வில்லை.

Page 126
222 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
இந்தோனேசியப் பிரிவுகளுக்குரிய இடப்பெயர்கள் இடச்சு ஒலிமுறையில் வழங்கப்பட்டுள்ளன. மூலநூல்களையும் படங்களையும் விளங்கிக்கொள்ளுவதற்கு இம்முறை உதவியாகவிருக்கும்.
(1964 இல் இந்தோனேசியாவின் ரூப்பியா ஒன்று, நேர்மாற்று விகிதத்தில் மலாயாவின் 6 சதத்திற்கும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் 24 சதத்திற்கும், ஐக்கிய இராச்சியத்தின் 2 பென்சிற்கும் சமமாக விருந்தது, மறைமுகமாற்றில் இப்பெறுமானங்களில் நாற்பதிலொன்றுக் குப் பெரும்பாலும் கிடைக்கக்கூடியதாகவுமிருந்தது).
மேற்குத் தீவுக்கூட்டம் மேற்குத் தீவுகளுள் போணியோ பெரிதாகும். ஆனற் சிறிய தீவான யாவாவே புகழ்பெற்றுள்ளது. இங்குக் குடித்தொகை மிகவும் அதிகமாகவிருப்பதோடு பயிர்ச்செய்கையும் மிகச்செறிவாக உள்ளது. இத்தன்மைகளைப் பொறுத்த வரையிற் சுமாத்திரா, போணியோவுக்கும் யாவாவுக்கும் இடைப்பட்ட நிலை யில் உள்ளது. சிறிய தீவுகளாகிய பங்கா, பிலிற்றன் என்பன தகரம் அகழ்ந் தெடுக்குந் தொழிலுக்குப் புகழ்பெற்றன.
சுமாத்திரா
(அ) பெளதிகவுறுப்பியல்
சுமாத்திரா 1,600 மைல் நீளமுடையது. மத்தியகோடு ஏறத்தாழ இரு பங்காக இதனை ஊடறுத்துச் செல்லுகின்றது. சுமாத்திராவைச் குழப் பல சிறு தீவுகள் உண்டு. இந்து சமுத்திரப் பகுதியில் சுமாத்திராவுக்குச் சமாந்தர மாக நசோ-மெந்தாவைத் தீவுகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் மலைப் பாங்கான இத்தீவுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. மக்கள் தொகையும் குறைவாகும். உலகமக்களின் கவனத்தை இவை அதிகம் ஈர்க்கவில்லை. மலாக் காத் தொடுகடற் பகுதியில் தட்டையான சேற்றுத் தன்மையுடைய தீவுகள் உண்டு. இவை கடலைச்சார்ந்து படிப்படியாக வளர்ந்துவருகின்றன; காலப் போக்கில் அடையற் படிவுகளினல் சுமாத்திராவோடு இணைக்கப்படுகின்றன. கிழக்கில் சண்டாக் கடலோடு தொடர்புடைய தீவுகள் காணப்படுகின்றன. இவை மலாயாவின் சண்டாமேடைத்தொடர்களோடு தொடர்புடையன; இன்று கடலின் கீழ்த் தாழ்ந்து காணப்படுகின்றன. சுமாத்திராவிலுள்ள மலைத்தொடர்கள் வடக்கு நோக்கிப் பரந்து உவேயைச் சூழத் தீவுகளாகக் காட்சியளிக்கின்றன; தெற்கில் அவை சண்டாத் தொடுகடலைச் சார்ந்து காணப்படுகின்றன. இங்கேய்ே கிராக்கற்ருே எரிமலை உள்ளது. இது சுமாத் திரா, யாவா என்பவற்றுக்கு நெடுக்காகச் செல்லும் பலமற்ற பாறைகளின் சந் திக்குமிடத்தைக் காட்டுமாறு அமைந்துள்ளது. பெருந்தீவுகளைச் சார்ந்துள்ள சிறு தீவுகளில் அதிக மக்கள் வாழ்வதில்லை. சண்டா மேடை பெரும்பாலும் அடையல்களால் மூடப்பட்டுள்ளது. தான்சுங்பஃலயை ஒஸ்தாவனேடு இணைக் கும் கோட்டிற்குக் கிழக்கில் இது அமைந்துள்ளது.

கிழக்கு இந்தியத்தீவுகள் : சுமாத்திரா
சுமாத்திராவிற் பெரிய தட்டை யான வண்டல் தாழ்நிலம் உண்டு. கிழக்குக் கரைப் பகுதியில் மூன்றி விாண்டு பாகம் இத்தகைய தாழ்நில மாகும். தான்சுங்பலைக்குத் தெற்கில் இது காணப்படுகின்றது. இப்பகுதி பெரும்பாலும் காடு செறிந்த சதுப்பு நிலமாய்க் காணப்படுகின்றது. இத ஞல் மேடையின் ஒரம் மறைக்கப்பட்டுள்ளது. இத்தாழ் நிலம் படிப்படியாக ஆழமற்ற மலாக் காத் தொடுகடலோடு இணைந்துள் ளது. இந்நிலைமைகள் குடியிருப்புக் கள் அமையத் தடையாகவுள்ளன; கிழக்கிலிருந்து இப்பகுதியை அடை வதும் கடினமாகும் ; இப்பகுதி பெரும்பாலும் விருத்தியில்லாது காணப்படுகின்றது. மக்களும் மிகவும்
சண்டா
குறைவாகவே வாழுகின்றனர். தென் கிழக்கு ஆசியாவில் தொடர்ச்சியா கப் பாந்துள்ள மிகப் பெரிய மத்திய கோட்டுச் சதுப்புநிலம் இதுவாகும். தொழில்நுட்ப அறிவு யடைந்துள்ள இன்றும் இச்சேற்று நிலத்தை மக்கள் திருத்திப் பயன் படுத்த முடியாதவராயிருக்கின்றனர். சுமாத்திராவில் மக்கள் அடர்த்தி வாழவும் விருத்தியை ஏற் படுத்தவும் தடையாகவுள்ளவற்றுள்
வளர்ச்சி
s
முக்கியமானது கிழக்குக் கரைச் சதுப்பு வண்டல் படிந்த இச்சதுப்பு நிலம் சில இடங்களில் 150 மைல் வரையில்
என்ருல் மிகையாகாது.
உள்ளுக்குப் பாந்துள்ளது. சுமாத்தி
ராவின் தென் பகுதி இன்று அகல மானதாகத் தோற்றமளிப்பதற்குக் கரையைச் சார்ந்துள்ள சதுப்பு
நிலமே காரணமாகும், !
223
சிறிது நிலைகுலைந்த அடையல் மலையடிநிலம
பழைய மலைத் தொடர்கள்
மிகப் பழைய எரிமலைப் பாறைகள் பெரும்பாலும் எரிமலேக்கு
றம்பாலானவை ட் FK அண்மைக்கால வனடல்
மண்ணும் சேறும் *N இளைய எரிம?லப்
பாறைகள்
எரிமலேகள் se
இலே அலாசு
வடிநிலம்
அங்கோலா கடிசு
வடிநிலம்
も認のメ金)
1 (5:ԲԱft
i
கூந்தாசு வடிநிலம் >கெரிஞ்சி
�} log)
படம் 63. சுமாத்திராவின் நிலவுருவங்கள்

Page 127
224 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
சுமாத்திராவின் பிரதான பாகத்தில் (படம் 63) சிக்கலான தன்மையை யுடைய மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. இத்தொடர்கள் மேற்கு ஓரத் திற்கு அண்மையாக அமைந்துள்ளன. ஆகவே இதன் நீர்பிரிநிலம் இந்து சமுத்திரத்திலிருந்து 35 மைலுக்கு உட்பட்டதாகவே உள்ளது. தென்பாகத் தைச் சார்ந்துள்ள மூன்றிலிரண்டு பகுதி தவிர எஞ்சிய தொடர்களுக்குத் திட்டமான பெயர்கள் இல்லை; தென் பகுதி பாரிசான் தொடர் (பாரிசான் என்பது குன்றுத்தொடர் எனப் பொருள்படும்) என வழங்குகின்றது. வட பகுதிக்குச் சாதாரணமாக ஆச்சே, பாதாக்கு உயர்நிலங்கள் என்னும் பெயர் கள் வழங்கப்படுகின்றன. -
இம்மலைத் தொடர்களும் அவற்றிற்கிடையேயுள்ள பீடங்களும் மேற்கிலிருந்து கிழக்காகச் சற்றுச் சாய்ந்துள்ளன. எனவே மேற்கு ஒரம் மலைச்சுவர்போன்று காணப்படுகின்றது. மேற்குக் கரையிற் சற்று உயர்த்தப்பட்ட முருகைக்கல் நிலம் உண்டு. விரைவாக ஓடும் சிறிய அருவிகள் வெட்டிச் செல்லும் பள்ளத் தாக்குக்களும் அங்குக் காணப்படுகின்றன. மலைச்சுவர் மேற்கு ஒரமாக அமைந் திருப்பதனுல் இவ்வழியாக இப்பகுதியை அடைவது கடினமாக உள்ளது ; இதனை விருத்தி செய்வதும் கடினமாகும். மலைத்தொடரின் நீளம் முழுவதும் பிளவுகள் உண்டாகியுள்ளன. இக்காரணத்தால் நெடும் பிளவுப் பள்ளத்தாக்குக் கள் ஒன்ருேடொன்று தொடர்பில்லாத முறையில் அமைந்துள்ளன. வடக்கே கோசா அலாஸ் வடிநிலத்திலிருந்து தெற்கில் செமாங்காவா குடாவரையும் இப்பள்ளத்தாக்குக்கள் பரந்துள்ளன. நடுவணுள்ள தாழியைச் சார்ந்து அங் கோலா கடிஸ் (பாடாங்சிடிப்பூன்), மேல் கும்பூர் போட்டீ கொக் (பூக்கிதிங்கி) முதலிய வடிநிலங்கள் காணப்படுகின்றன.
இம்முப்பிரிவுகளோடு எரிமலைத்தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் குறிப்பிடுதல் வேண்டும். பல காலங்களில் அண்டீசைற்று முதல் சாம்பர் வரை பல்வேறு தன்மையான எரிமலைக் குழம்புப் படிவுகள் வெளிவந்து படிந்துள் ளன. கடுமழையால் ஏற்பட்ட மண்ணரிப்பினுற் பழைய எரிமலைக் குழம்புப் படிவுகள் பெரும்பாலும் அரித்து நீக்கப்பட்டுள்ளன. தெற்கிலும் மேற்கில் சில இடங்களிலும் இந்த எரிமலைக் குழம்புப் படிவுகள் இன்னும் காணப்படுகின் றன. எரிமலைக் குழம்பு பெரும்பாலும் கிழக்குப் பகுதியிலே படிந்துள்ளது ; சாம்பர், நுரைக்கல், நுண்டுளைப்பார் முதலியன பாளங்களாக எரிமலைவாயி லிருந்து வெளிவந்த நிலையிலும் நீராற் கொண்டுவந்து படியவிடப்பட்ட வண் டல் நிலையிலும் காணப்படுகின்றன. கிழக்குப் பகுதியிலுள்ள சதுப்பு நிலம் தென் சுமாத்திராவிலுள்ள எரிமலைகளிலிருந்து அண்மையில் வெளிவந்த படிவு களினல் அமைந்துள்ளது. பாதர்க்கு உயர்நிலப் பகுதி அண்மையில் வெளிவந்த நுண்டுளைப் பார்ப் படைகளினல் மூடப்பட்டுள்ளதனுற் பழைய நிலவுருவங்க ளைக் காண்பது அரிதாகவுள்ளது. ஏறத்தாழ 5,500 சதுரமைல் அளவான பகுதி இப்படிவுகளால் மூடப்பட்டுள்ளது. சொரிக்மொாபிக்குத் தெற்கிலும் பெரிய எரிமலைக் குழம்புப் படிவுகள் உள்ளன. இப்படிவுகளால் நடுவணுகக் காணப் பட்ட தாழியிற் சில பகுதிகள் அடைபட்டுள்ளன. இதனுல் வடிகால் பாதிக்கப்

கிழக்கு இந்தியத் தீவுகள் : சுமாத்திரா 22
பட்டது. நீர் வடிந்தோட முடியாததால் தற்காலிகமாக ஏரிகள் அமைந்தன. இந்த நிலைமைகளினல் இப்பகுதியில் வளமான வண்டல் நிலங்கள் அமைந்தன. இவை பயிர்ச்செய்கைக்குப் பெரிதும் உவந்தவையாயுள்ளன. ஆனல் தவர் ஏரி யைச் சார்ந்துள்ள இடுக்குப்போன்ற இடங்களூடாகவே இந்நிலங்களை அடைய லாம். எனவே வடிகால் முறைகள் அநேகமாக நடுவணுகவுள்ளதாழி, கிழக்கு நோக்கியமைந்த சரிவு, நாக்குக்களாக நீண்டுள்ள எரிமலைப் படிவுகள் ஆகிய வற்றைப் பொறுத்தே அமைந்துள்ளன.
மலைத்தொகுதிக்கும் கிழக்குக் கரைப்பகுதிக்குமிடையில் மலைய்டிவாரப் பகுதியொன்று உண்டு. இது சுமாத்திராவின் நீளப்போக்கில் அமைந்துள்ள பொழுதும் எல்லா இடங்களிலும் ஒரே அளவுக்குப் பாந்து காணப்படவில்லை; தொடர்ச்சியற்ற முறையில் அகன்றும் குறுகியும் காணப்படுகின்றது. சிறிது அளவுக்கு மடிப்புண்ட அடையற் படிவுகளைக் கொண்டுள்ளதனுல் இப்பகுதி தனித்தன்மை வாய்ந்த ஒன்முகவுளது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் ஆழமாக வெட்டப்பட்ட பள்ளத்தாக்குக்களைக் கொண்டுள்ளன. இப் பகுதியிலுள்ள கீழ்ப்பாறைப்படைகளில் நிலநெய் காணப்படுகின்றது. ஆச்சே யிலிருந்து பாலெம்பாங்குவரை பல இடங்களில் நிலநெய் எடுக்கப்படுகின்றது: இவ்வடிவாரப் பகுதி மெடானுக்கு வடக்கே கரைவரை பரந்துள்ளது. இதனுல் இங்குக் கரைசார்ந்த சதுப்புநிலம் மிகவும் ஒடுக்கமாகவுள்ளது. ஆனற் பிற இடங்களில் இப்பகுதி பெரும்பாலும் உண்ணுேக்கி அமைந்துள்ளது.
பாதாக்கு உயர்நிலப் பகுதியில் எரிமலைக் குழம்பினுல் அமைந்த 2,000 அடித் தடிப்பான அமிலப் பாறைகள் காணப்படுகின்றன. இவை இடையாகவுள்ள தாழிகளையும் அணித்தாய்க் கிழக்குக் கரைவரையும் பரந்துள்ள மலையடிவாரப் பகுதியையும் வெளித்தோன்முத முறையில் மூடி மறைத்துள்ளன. பாதாக்கு உயர்நிலத்தின் உட்பாகத்தைச் சார்ந்து தோபா ஏரியைச் குழப் பெரிய உறங்கு எரிமலைக் கூம்புகள் இன்றும் காட்சியளிக்கின்றன. மேட்டுநிலம்போன்ற இப் பகுதியில் சாய்வுவீதங்கூடிய ஆறுகள் ஆழமாக அரித்துள்ளமையால் ஒடுங்கிய இடுக்குக்கள் பல அமைந்துள்ளன. ஆறுகளினல் எளிதாக அரிக்கப்பட்ட எரி மலைத் துண்டுக்குவைகள் கிழக்குக் கரையிற் கொண்டுவந்து படியவிடப்பட் டுள்ளன. இவ்வாறு ஆறுகளாற் கொண்டுவந்து படியவிடப்பட்ட மண்ணில் இன்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. இப்பயிர்ச் செய்கை மெடானுக்கு மேற்கிலும் தெற்கிலும் நடைபெறுகின்றது (படம் 66). உயர்நிலத்தின் பிற பாகங்களில் அமிலப் பாறைகள் அமைந்துகாணப்பட, வட பகுதியிலுள்ள பாதாக்கு உறங்கு எரிமலைகளிலிருந்து உப்புமூலப் பாறைப் பொருள்கள் வெளிவந்து படிந்தன. இவ்வுப்புமூலப் பாறைகள் பின்பு வானிலை யழிவாற் பாதிக்கப்பட்டு வளமான மண்வகைகளாக அமைந்தன. மெடானின் பின்னணியில் இம்மண்வகை காணப்படுமிடங்களிலே புகையிலைச் செய்கை சிறப்பாக நடைபெறுகின்றது. மேட்டுநிலத்தின் பிற பாகங்களில் அமிலஞ் சார்ந்த எரிமலைச்சாம்பர் பாந்து காணப்படுகின்றது. இச்சாம்பர் நீருட்புகக் கூடிய தன்மையைக் கொண்டிருப்பதனுல் அயனப் பிரதேச மழைக்காடுகளின்

Page 128
226 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
வளர்ச்சிக்கு ஏற்றதாயில்லை. ஆகவே இம்மண்ணிற் பெரிய பன்னச்செடிகளை இடையிடையே கொண்ட, ஒரளவு வறட்சி நிலையைப் பிரதிபலிக்கும் சவனத் தாவர வகைகள் காணப்படுகின்றன. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையிலிடுபட் டோர் முன்பு இப்பகுதியிற் காணப்பட்ட காடுகளை வெட்டி அழித்திருத்தலும் கூடும். மண் எளிதாக நீருட்புகுமியல்பைப் பெற்றிருந்ததனுலும் தெற்கிலும் கிழக்கிலுமிருந்து மலைச்சரிவுமூலம் விசும் போன் காற்று வறண்ட காற்ரு யிருந்ததனலும் பின்பு துணைக்காடுகள் வளருவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. கடல்மட்டத்திலிருந்து 3,600 அடி உயரத்தில் தோபா ஏரி அமைந்துள்ளது. 50 மைல் நீளமுள்ள இந்த ஏரி 500 சதுரமைல் பரப்பினை அடக்கியுள்ளது. ஏரியின் நாற்புறத்தும் 2,000 அடி உயரமான ஓங்கல்கள் காணப்படுகின்றன. ஓங்கல் களின் அடியில் ஒடுங்கிய வண்டற் சமநிலம் உண்டு. இச்சமநிலத்தில் நெற் செய்கை செறிவாக நடைபெறுகின்றது. ஏரியிலிருந்து தென் கிழக்காக ஓடும் நீர் (குங்கை அசகான்) ஒடுங்கிய இடுக்குக்கள் மூலம் வெளிநோக்கிப் பாய் கிறது.
பாதாக்கு மாவட்டத்தின் அதி தெற்கில் பூவல்பூவலி என்னும் உறங்கெரிமலை காணப்படுகிறது. பாரிசான் மலைப்பகுதியிலுள்ள முதல் எரிமலை இதுவாகும். இங்கு இரு மலைத்தொடர்கள் பிளவு காரணமாக நிரையாக அமைந்துள்ள பல தாழ் நிலங்களினுற் பிரிக்கப்பட்டுள்ளமையை நோக்கலாம். மேற்குறித்த தாழ் நிலங்கள் பெரும்பாலும் சதுப்பு நிலமாக அல்லது ஏரிகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. மேற்குத் தொடர் அண்மையில் உறங்கு நிலையைப் பெற்ற எரிமலைக் கூம்புகளாலமைந்ததாகும். எரிமலைப் படிவுகள் எளிதாகப் பாதிக்கப் படக்கூடியனவாக இருந்தமையால் இந்து சமுத்திரத்தை நோக்கியமைந்துள்ள பகுதி அதிக அளவுக்கு நீரளிப்பினுல் தாக்கப்பட்டுளது. எனவே வண்டல் விசி றிப் பகுதிகள் மிகவும் சிறியனவாயும் குறைவாகவும் உள்ளன. இவற்றிடையே ஓங்கல்களாலமைந்த முனைநிலங்கள் காணப்படும். மேற்குறித்த வண்டல் நிலங் களிலே குடியிருப்புக்கள் ஒரளவுக்குக் காணப்படுகின்றன. கிழக்குத்தொடர் பெரும்பாலும் திணிவு பெற்ற உருமாறிய பாறைகளாலமைந்தது. இப்பாறைக ளோடு தகடாகு பாறைகள் சிலேற்றுக்கள் சுண்ணப்பாறைகள் என்பனவும் காணப்படுகின்றன. தொடரின் கிழக்குச் சாய்வு படிப்படியாகத் தாழ்ந்து செல்லுகின்றது. இங்குச் சில தாழ்வான பாகங்களும் உண்டு; பாதாங்கு ஊம்பி லின் வடிநிலம் குறிப்பிடத்தக்கது. இந்த வடிநிலப்பகுதியிலே சுமாத்திராவின் பிரதான நிலக்கரி வயல் காணப்படுகின்றது. இப்பகுதி பாடாங்கோடு புகையிச தப் பாதைமூலம் இணைக்கப்பட்டுள்ளது.
1°30" வடக்கு அகலக்கோட்டையடுத்து மலைப்பகுதி 20 மைல் அகலமான தாய் ஒடுங்கியுள்ளது. இந்த ஒடுங்கிய பகுதியினூடாக, 2,000 அடி உயரத்திற்கு மேற் செல்லாமலே பாடாங்கு சிடிம்பூனில் எளிதாகக் கடந்து செல்லமுடியும். மேற்குறித்த சிறிய பட்டினத்திலிருந்து தெருவொன்று மத்தியிலுள்ள தாழி வழியே அங்கோலா, கும்பூர் ஆகிய பள்ளத்தாக்குக்களுக்கூடாக போட்டீ கொக் வடிநிலம்வரை செல்லுகின்றது. அவ்விடத்திலிருந்து தெருவானது பிரிந்து மேற்

கிழக்கு இந்தியத் தீவுகள் : சுமாத்திரா 227
குக் கரைப்பகுதிக்குக் குறுக்கே தெற்குநோக்கி பாடாங்கு, கிழக்கு மலையடி வாரம் ஆகிய பகுதிகளிலிருந்து சாம்பி, பாலெம்பாங்கு, லாம்புங்கு விரிகுடா என்னுமிடங்கள் வரை பரந்துள்ளது. மத்திய தாழியின் இப்பகுதியில் (மனிஞ்சோ, சிங்காராக்) ஏரிகளையுள்ளடக்கிய தாழ்வான நிலங்கள் உண்டு; அந்நிலங்கள் சிறிய பயிர்ச்செய்கை நிலங்களாகும்.
பாதாங்கரியின் தெற்கில் கெரிஞ்சி என்னும் மிகப் பெரிய உயிர்ப்பெரிமலை (பியெக்குவான் இந்திராபூசா) காணப்படுகின்றது. சுமாத்திராவில் மிகவுயர மான உச்சியைக்கொண்டிருப்பதுமிதுவே (12,470 அடி). இதனையடுத்துப் பல உயிர்ப்பெரிமலைக்கூம்புகள் சண்டாத் தொடுகடல் வரையும் பாந்து காணப்படு கின்றன. கருங்கற்கள், பளிங்குக் குழம்புப் படிவுகள் நுண்முனைப்பார் என்பன எல்லாப் பாகங்களிலும் பரந்துள்ளன. நடுவணுகக் காணப்படும் தாழிப் பகுதி களில் வண்டல் படிந்திருப்பதனுல் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது; இத ஞல் குடியிருப்புக்களும் இப்பகுதிகளில் அமைந்துள்ளன. ஆனல் மலைப்பகுதி களை இணைக்கும் போக்குவரத்துப் பாதைகள் குறைவாகும். இந்த வலயத் திலேயே எயர்மூசி எனப்படும் போாறு காணப்படுகின்றது. சுமாத்திராவிலுள்ள ஏனைய ஆறுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது இது முதிர்ச்சி பெற்றதாயும் ஆழமற்றதாயும், அகன்ற பள்ளத்தாக்கை உடையதாகவும் காணப்படுகின்றது. இதன் பக்கங்கள் மென்சாய்வைக் கொண்டுள்ளன. தென் சுமாத்திராவிலுள்ள பல எரிமலைகள் சேற்றையும் (இலகர்) கக்குகின்றன. இச்சேறு தாழ்நிலங் களில் வந்து படிகின்றது. sus -
பாரிசான் தொடர்களின் கிழக்கிலுள்ள தாழ்நிலம் சுமாத்திராவில் அரைப் பகுதியை அடக்கியுள்ளது. இத்தாழ்நிலம் 100 அடிக்குக் கீழ்ப்பட்ட உயர முடையது. மலையடிவாரப் பகுதியில் நிலநெய்யும் நிலக்கரியும் காணப்படுகின் றன. இப்பகுதி தவிர்ந்த பிறவிடங்களில் எரிமலைகளிலிருந்து வெளிவந்த அண் மைக்கால வண்டற்படிவுகள் பரந்துள்ளன. கீழுள்ள பாறைகள் இவற்றல் மூடப்பட்டுள்ளன. மாங்குரோவுச் செடிகளும் அயனச் சதுப்பு நிலங்களும் படிப்படியாக ஏற்படுவனவாகும். இதனுல் சில இடங்களில் சற்றே உயரமான வறண்ட நிலங்களும் உண்டு. இவை ஆற்றுக்குத் தூரத்தே காணப்படுகின்றன. ஆறுகள் பெரும்பாலும் சேற்றையும் அழிந்த தாவரவகைகளையும் கொண்டிருப் பதணுல் குத்தாகப்படிவுசெய்யும் தகைமையை இழந்துவிடுகின்றன. இதனல் ஓரங்களை நோக்கி அவை தொழிற்படுவதனுல் அவற்றின் போக்கு அடிக்கடி மாறுதலடைகின்றது. இக்காரணத்தினுல் காலப்போக்கிற் கைவிடப்பட்ட பல கால்வாய்கள் அமைகின்றன; அவற்றில் தடித்த படையாகத் தாவரங்கள் படிந்து காணப்படுகின்றன. சதுப்பு நிலங்களில் ஒவ்வொரு மழைக்காலத்தி அலும் நீர் தேங்கி நிற்கின்றது. இவற்முேடு பெரிய கழிமுகங்களும் கடற்கரையை யடுத்து 12 மைல் அகலமான பகுதியும் நாளுக்கு இருமுறை பெருக்குக் காச ணமாக வெள்ளத்தைப் பெறுகின்றன. சதுப்பு நிலப் பகுதியிலும் ஆறுகள் ஒர ளவுக்குப் போக்குவரத்துச் செய்யக்கூடியனவாக உள்ளன. அசையும் மணற்
கும்பிகளினல் போக்குவரத்து இடையிடையே பாதிக்கப்படுகின்றது. ஆற்றே

Page 129
228 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ாத்திற் கிராமங்கள் ஒவ்வொன்றும் அதிக இடைத்தூரத்தில் அமைந்துள்ளன. கடற்கரைக்கு அண்மையில் சில கால்வாய்கள் ஆழமாகவுள்ளன; வற்றுப் பெருக்குத் தாக்கம் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. காம்பார் என்
பதனை இதற்கு உதாரணமாகக்
கொள்ளலாம். நீர்வழி காரணமாகக்
----
பயிர் செய்நிலம் கிழக்கு-மேற்குத் திசையில் போக்கு
வரத்து விருத்தி பெற்றுள்ளது. மலை யடிவாரத்தையடுத்த உட்பகுதியில் தொடர்ச்சியாகத் தெருக்களும் வட
சவஞ)
துணைக்காடு இ
மேற்கு-தென்கிழக்குத் திசையில மைந்த புகையிாதப் பாதையும் காணப்படுகின்றன. இயற்கைத் தாவ ாம் இருவகையினது : (அ) அயனச் சதுப்புக்காடு, தீவின் கிழக்கு அரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படு கின்றது ; (ஆ) அயன மழைக்காடு தீவின் பிற பாகங்களிற் பெரும் பாலும் காணப்படுகின்றது. உயரங் காரணமாகவும் மண்ணின் நீர் உட் புகுதன்மை காரணமாகவும் சில இடங்களில் தாவரங்களில் வேறுபாடு காணப்படுகின்றது (படம் 64) கிழக் குக் கரையில் முருகைக் கற்கள் வளர்ச்சி பெறவில்லை. கரைப்பகுதி சேற்றுநிலமாகவும் மாங்குரோவுச் செடிகளை அடர்த்தியாகக் கொண்ட தாயுமிருப்பதால் முருகைக் கற்கள் வளர்ச்சியடைய முடியவில்லை. மேற் குக் கரையில் உயிர்த்தன்மையுடைய முருகைக் கற்களும் உயர்த்தப்பட்ட பாகங்களில் முருகைக்கல் மேடை
படம் 64. சுமாத்திராவின் நிலப்பயன்பாடு களும் காணப்படுகின்றன.
(ஆ) காலநிலை
சுமாத்திராவின் காலநிலை பருமட்டாக மலாயாவின் காலநிலையை ஒத்துள் ளது. உயரமான மலைப்பகுதி எல்லாப் பருவங்களிலும் பெருமழைவீழ்ச்சி (வரு டத்தில் 150 அங்குலத்திற்குமேல்) உண்டாகக் காரணமாக உள்ளது. மத்திய கோட்டிற்கு வடக்கில் மிகக்கூடிய மழைவீழ்ச்சி ஒற்முேபர்-நவம்பர் காலத்தில் ஏற்படுகின்றது. மத்திய கோட்டிற்குத் தெற்கில் இத்தகைய மழைவீழ்ச்சி திசம்
 
 
 
 
 

கிழக்கு இந்தியத் தீவுகள் : சுமாத்திரா
229
பர்-சனவரி காலத்தில் பெறப்படுகின்றது. வடபகுதியில் (வடமலாயாவில் போன்று) குறைந்த மழைவீழ்ச்சியுடைய (வறட்சி நிலையன்று) பருவங்கள்
சுமாத்திராவின் மழை வீழ்ச்சி,
2 அங்குலத்திற்.
குறைவு
Ο'
15 அங்குலம்
&
N
நவம்பர் W யூலை
જે
படம் 65. சுமாத்திராவின் மழைவீழ்ச்சி
அதிகமாகும். இங்குள்ள சில மலையிடை வடிநிலங்களிலும் மழைவீழ்ச்சி குறை வாகும்; மழையொதுக்கில் அவை அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்
(படம் 65).

Page 130
230 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பாரிசான் தொடர்களை அடக்கியுள்ள பகுதியில் வானிலையில் இடத்துக்கிடம் அதிக வேறுபாடு காணப்படுகின்றது. தென் மேற்குப் பருவக்காற்றுக் காலத் திற் கிழக்குச் சாய்வில் போன் காற்று வீசுகின்றது. சில மேட்டுநிலங்களிற் குளி ாான வறண்ட காலநிலைத் தன்மைகள் நிலவுவதனுல் மத்தியகோட்டுக்குரிய கரே மான மேற்காவுகை மழைவீழ்ச்சி, ஒருசீரான வெப்பம் ஆகியவற்றிற் சிறு வேறு பாடுகள் ஏற்படுகின்றன. சனவரி மாதத்தில் வட பகுதியில் கிழக்கு நோக்கி அசையும் பலமான சுழல் காற்றுக்கள் வீசுகின்றன. இவை மலாக்காத் தொடு கடற்பகுதியில் " சுமாத்திராசு" என வழங்குகின்றன. அதி தெற்கே மேற்குக் கரைப்பகுதியில் ஓகத்து மாதத்திலும் கிழக்குக் கரைப்பகுதியில் யூலை மாதத் கிலும் இவை கரேமாக வீசுகின்றன. அயனமண்டலச் குருவளிகள் ஏற்பட்டதா கப் பதிவு செய்யப்படவில்லை.
சுமாத்திரா : சராசரி மழைவீழ்ச்சி (அங்குலம்)
மழைநாள் (.02 அங் குலத்திற்கு
மேல்) சன பெ மா ஏப் மே யூன் யூலை ஒக செத் ஒற் நவ தி மொ பூக்கி திங்கி (3,018 9յլգ) 95 分 7。2 8.4 9.9 7.0 5.4 3.7 6.0 6.7 8.7 8.7 9.6 | 90.3
பாடாங்கு
(அடி 230) 190 13.410.911.414.312.012.810.913.416.419.4 量9.918。7|173.5
(இ) குடிப்பாம்பல்
சுமாத்திசாவில் மிகக் கூடிய குடித்தொகையையுடைய மாவட்டமான மெடா னிலே (படம் 66) குடியடர்த்தி, யாவாவில் மிகக் குறைந்த குடியடர்த்தியுடைய மாவட்டத்தின் குடியடர்த்திக்குச் சமமாகவுள்ளது. 1961 ஆம் ஆண்டுக் குடி மதிப்பின்படி இங்கு 4,64,400 பேர் வாழ்ந்தனர். குடிப்பாம்பலிலுள்ள இந்த வேறுபாடு பெளதிகநிலை வேறுபாடுகளைப் பிரதிபலிப்பதாயுள்ளபொழுதும் அண் மைக்கால வரலாற்று நிலைமைகளோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது. இந்துக்குடியேற்றம் ஏற்பட்ட காலப்பகுதியில் பிரயாணிகள் அடிக்கடி சுமாத் திராவுக்குச் சென்று வந்தனர்; அங்கு அப்பொழுது காணப்பட்ட பிரதான ஆட்சிப் பகுதிகளின் சிறப்புப்பற்றியும் இவர்கள் எழுதிவைத்துள்ளனர். சுமாத் திராவுக்கும் யாவாவுக்குமிடையில் இன்று காணப்படும் வேறுபாடுகள் அன்று காணப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. கடந்த சில நூற்றண்டுகளிலே, சுமாத்திரா இக்கடல்களிற் குறுக்கும் மறுக்குமாகச் சென்ற சருவதேச வியா பாரப் பாதைகளுக்குப் புறத்தே ஒதுங்கிவிட்டது. இதனேடு கிழக்குக் கரையி அலுள்ள சேற்றுநிலமும் மேற்குக் கரையிலுள்ள ஓங்கல்களும் உட்பகுதியிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளைச் சென்று அடைய முடியாதவாறு தடைசெய்துள் ளன. யாவாவைப் பொறுத்தவரையில் இந்த நிலைமைகள் இல்லை. சுமாத்திராவில் இக்கால முன்னேற்றங்கள் போக்குவரத்து முறைகள் ஆகியன உரிய காலத்தில்

கிழக்கு இந்தியத் தீவுகள் : சுமாத்திரா 23.
ஏற்படாமையும் அதன் விருத்திக்குத் தடையான ஒரு காரணமாகும்; பிற்பட்ட காலப்பகுதியிலேயே இவை இங்கு ஏற்பட்டன. இந்த நூற்முண்டின் முதற் பகுதியிலே சுமாத்திரா இடச்சுக்காரரின் ஆட்சியின்கீழ் அமைந்தது. யாவா விற் கடந்த நூற்றண்டில் ஏற்பட்ட குடிப்பெருக்கம், பண்பாட்டு வளர்ச்சி என்பன சுமாத்திராவை அதிகம் பாதிக்கவில்லை. மக்களும் பெருந் தொகையின
eptod
২১
须 Hill
မျို%ဒ္ဒိ၊ స్టీళ్ల#1 I
13பூெமாதாங்சியாந்தார் 21 ܨܘ .4/?a><。::*:七リ郊 i జy நெய்த் தாலழ்&3:23"இர் le " :";ಷ್ರ!?” }
A f: EN NÄ; . ; ; "... *@/ 、○ செல் y : % لاريو 劾 G3 தேயிலை :}{:::::: sŽií, l Hy : با۱ • . . ܐ ܐ
:Iஅமிலப்பாறைக்குழம்பு li
•, t- • ཡ་་་་་་་་་་་་་་་ : ;: ; 。
உப்புமூலப் பாறைக் குடும்
டி எரிமலைகள் :::::::::::?کردy گلیمرسیہ ::::::: "物
படம் 86. மெடானின் பின்னணியில் எரிமலைக் குழம்புப்படிவுகளுக்கும்
பயிர்ச்செய்கைக்கு முள்ள தொடர்பு
ாாய் இப்பகுதியில் வந்து இக்காலத்தில் குடியேறவில்லை. இவையாவும் சுமாச் திராவின் விருத்திக்குத் தடையாகவமைந்த காரணங்களாகும். இன்றுள்ள மொத்தக் குடித்தொகையைப் பார்க்குமிடத்து (1961 இல் 157 இலட்சம்) சதுர மைல் ஒன்றில் சராசரியாக 85 பேர் காணப்படுகின்றனர். சுமாத்திரா மக்களில் ஏறக்குறைய 12 சதவீதமானேர் நகரங்களில் வாழுகின்றனர், இந்த விகிதம் 1930 ஆண்டுக் குடிமதிப்புக்குப் பின் இாட்டித்துள்ளது.
சுமாத்திராவில் குடிகள் பரம்பியுள்ள தன்மையைப் பின்வருமாறு தொகுக் துரைக்கலாம். மெடானின் பின்னணியிலே குடியடர்த்தி மிகவும் அதிகமாகும். பூக்கிதிங்கி வடிநிலப் பகுதியில் குடியடர்த்தி சற்றே குறைவாக உளது. அவ் வாறே அயலாகவுள்ள மத்தியதாழிப் பகுதியிலும் பாதாக்கு உயர் நிலத்திலும் குடியடர்த்தி குறைவாகும். அதி வடக்கிலும் அதிதெற்கிலும் அமைந்துள்ள வள

Page 131
232 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மான ஆச்சே, லாம்புங்கு பொங்குமுகப் பகுதிகளிற் குடிகள் ஒரளவுக்கு அடர்த்தியாகக் காணப்படுகின்றன. கிழக்குக்கரைச் சதுப்புநிலப் பகுதியிலேயே குடியடர்த்தி மிகக் குறைவாகும். இங்குள்ள பல பாகங்களிற் சதுரமைலுக்கு 25 பேரிலும் குறைவாகவே அடர்த்தி காணப்படுகின்றது. இச்சதுப்பு நிலமே மலாயா மக்களுக்கும் சுமாத்திரா மக்களுக்குமிடையே போக்குவரத்து நடை பெருதவாறு தடையாக அமைந்துள்ளது. இடையே யுள்ள மலாக்காத் தொடு கடல் கடற்போக்குவரத்து மூலம் மக்கள் தொடர்பு கொள்வதற்குத் துணையாக விருந்தும் இச்சதுப்பு நிலம் காரணமாகவே அது தடைப்பட்டுளது. உப்பு மூல எரிமலைக் குழம்புப் படிவுகளிலிருந்து உண்டான வளமான மண் லாம் புங்கு, பாலெம்பாங்குக்கு மேற்கிலுள்ள அடிக்குன்றுப் பகுதி, பாடாங்குவடி நிலம், பாதாக்கு உயர்நிலம் ஆகியவற்றிலேயே காணப்படுகின்றது. இதனல் இப் பகுதியிலே பயிர்ச்செய்கையிலிடுபட்டுள்ள மக்களும் அதிகமாக வாழுகின்றனர். பாலெம்பாங்கு, மெடான், பாடாங்கு ஆகிய பட்டினங்களை ஒத்த கரை சார்ந்த 12 பட்டினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 50,000 இற்கு மேற்பட்ட குடித்
தொகையைக் கொண்டுள்ளன. −
ஒரளவுக்குப் பயிர்ச்செய்கை விருத்திபெற்ற பிரதேசத்தின் மையமாக மெங் காலா விளங்குகின்றது. ஆனற் குடியடர்த்தி சதுரமைலுக்கு 60 பேரிலும் குறை வாகவே உள்ளது. எயர் மூசி ஆற்றுப் பள்ளத்தாக்கின் மத்திய, மேற்பாகங் களில் வண்டல் மண்ணும் கட்டுப்படுத்தத்தக்க நீரும் உள்ளமையால் நெற் செய்கை நடைபெறுகின்றது. இதன் ஒரங்களையடுத்த பாகங்களில் இறப்பரும் கோப்பியும் பெருந்தோட்டமுறையிற் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் அதிக கவனஞ் செலுத்தப்படுவதற்கு இது சிறந்த நிலநெய் வயல்களுக்கு அண்மை யாகவிருப்பதும் ஒரு காரணமாகும் (படம் 67). மூசி ஆற்றையடுத்துச் சிறு குன்றுகள் நிரையாகப் பாந்துள்ளன. இங்கே பாலெம்பாங்கு அமைந்துள்ளது; (1961 இல் குடித்தொகை, 458, 700); நீடிய காலமாக இது முதன்மைபெற்ற ஓர் இடமாக இருந்து வந்துள்ளது. இக் குடியிருப்புப் பற்றிப் பழைய இந்திய, சீனப் பிரயாணிகள் குறிப்பிட்டுள்ளார்களாயினும் பாலெம்பாங்கு சுமாத்திரா வின் மிக முக்கியமான வர்த்தகத் தலைநகரமாக இடம்பெற்றது அண்மைக்காலத் திலாகும். அயலிலுள்ள பிளாட்சோ என்னுமிடத்தில் நிலநெய் சுத்தி செய்யும் நிலையங்கள் அமைந்ததும், வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் இதனவந்தடையக் கூடியதாயிருப்பதும், சுமாத்திராவின் மத்திய பகுதியிலிருந்து மலையடிவாரப் பகுதிமூலம் இதனையடையக் கூடியதாயிருப்பதும் இப்பட்டினத்தின் வளர்ச்சிக் குக்காரணம் எனக்கூறலாம். இதனைப் போன்றே சாம்பி என்னுமிடமும் அமைந் துள்ளது : பாதாங்கு ஆரி ஆற்றேடு வரலாற்றுத் தொடர்பும் இதற்குண்டு. யுத்தகாலத்தின் பின்பு பூக்கி அசாம் நிலக்கரி வயலும் விருத்தி செய்யப்பட்டுள் ளது. இவ்வயல் பாலெம்பாங்கோடு இருப்புப் பாதைமூலம் இணைக்கப்பட்டுள் ளது. நிலக்கரி குறைவாகவுள்ள இப்பகுதிக்கு இவ்வயல் முக்கியமாகவிருப்ப தோடு இதன் உற்பத்தியும் விரைவாக அதிகரித்துள்ளது. ஊம்பிலினேடு சேர்த்து இந்த வயல் 1961 இல் 450,000 தொன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

கிழக்கு இந்தியத் தீவுகள் : சுமாத்திரா 233
VM
S SS SS SS S SS SS SS -
- ۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ حب۔ بے حیح ـــــــ ــــــس مــس مــــــــ ــــــــــــــــــ W. --a ܗ= -= - - - − − - 1 -- -- -- -- 2ܓܖ ܧܠ ܼzܟ
CWWW W. W. W. - - - - -
- - - - -
WW W. W. W. W. W. - - - - ... W. W. W. W. W. W. W. W- - - - -
Vas - en «s
W. W. W. W. W. TW YY. - - -
த்ர
w WW W.
W. W. W. --- س--سہ-- V WYNY wa - بیمه سبیح ܓܠܚܐ
- -
- -
--66.7L6); tests
ు சாம்பலும் Y-Y-Հ (5եՈԼՈւվԼ0'
>--> மேன்மடிப்புக்கள்
படம் 67. பாலெம்பாங்கிற்கு அண்மையிலுள்ள பெற்றேலியப் படிவுகள்
கரையையடுத்துள்ள கிழக்கு மலையடிவாரப் பகுதியில் மெடானின் இருமருங் கும் குடியடர்த்தி ஓரளவுக்கு அதிகமாகும். புகையிலை, இறப்பர், கோப்பி, தேயிலை, நெய்த்தாலம் ஆகியன இங்குப் பெருந் தோட்டப் பயிராகச் செய்யப் படுவதே இதற்குக் காரணமாகும். மெடானும் (குடித்தொகை 116,000) முதலில்

Page 132
234 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பிரதேசத் தலைப்பட்டினமாகவே விருத்திபெற்றது; ஆற்றுப்போக்குவரத்தும் கடற்கரைப்போக்குவரத்தும் இணையும் குங்கை தேவி ஆற்றையடுத்து இப் பட்டினம் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். ஆற்றுநீர் குறைவாயிருந் ததால் கப்பற் போக்குவரத்திற்குப் பொருத்தமாயில்லை. இதனுல் காலப்போக்கில் பிலாவான் எனுந் துறைமுகத்தை நிறுவவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் மூலமாகவே இன்று பாரமான முதற்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படு கின்றன (1960 இல் ஏற்றுமதி 300,000 தொன், இறக்குமதி 140,000 தொன்). சுமாத்திராவிலுள்ள ஏனைய துறைமுகங்களைக் காட்டிலும் கூடிய கப்பற் போக்கு வசத்தைக் கொண்டதாக பிலாவான் முன்பு விளங்கியது. யுத்த காலங்களுக் கிடையில் இது ஐந்து மடங்காகப் பெருகிக்காணப்பட்டது. ஆனல் யப்பானிய ரின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் இப்பகுதியில் அதிக மண்டி படிந்தது. இதனல் இத்துறைமுகம் பழைய முதன்மையை இழந்து பாலெம்பாங்கிற்கு அடுத்ததாக இன்று அமைந்துள்ளது.
சுமாத்திராவிலுள்ள மலைப்பகுதிகளிற் குடியடர்த்தி சதுர மைலுக்கு 50 பேருக்குமேல் இல்லை. கெரிஞ்சி எரிமலையைச் சூழவுள்ள பகுதியில் வளமான இளமண் காணப்படுகின்றபொழுதும் இங்குச் சதுரமைலுக்குரிய அடர்த்தி 70 பேராகும். மத்தியிலுள்ள தாழ்வான பகுதிகளை நெடுங்கோட்டுமுறையில மைந்த தெருவொன்று இணைக்கின்றது. இப்பகுதிகளின் பயிர்ச்செய்கை விருத் திக்கு இது துணை செய்கின்றது. சுமாத்திராவின் பிறபாகங்களிற் காணப்படாத செறிவான குடியிருப்புக்களைப் பாடாங்கு உயர்நிலத்திற் காணலாம். மொா பியைச் சூழ வளமான எரிமலை மண்படிவுகள் காணப்படுவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். பூக்கிதிங்கிப் பகுதியில் (1961 இல் 51,000 பேர்) சதுர மைலுக்குரிய அடர்த்தி 950 பேருக்கு மேலாக உளது. இப்பகுதியிற் புகையிலை, கோப்பி, தென்னை என்பன பயிரிடப்படுகின்றன. அண்மையாகவுள்ள சாவா லுந் தோவில் நிலக்கரி அகழப்படுகின்றது. இக்குடியடர்த்தி நிலைமைகள் மேற் குக் கரைவரை பரந்து காணப்படுகின்றன. மேற்கு சுமாத்திராவில் பாடாங்கு (57,000) முக்கிய பட்டினமாகும். சுமாத்திராவில் இது மூன்ருவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கும் பாதுகாப்புடைய வெளித்துறைமுகமொன்று தெற்கே செயற்கை முறையில் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பாடாங்குத் துறைமுகம் ஆழங்குறைந்ததாயும் பாதுகாப்பற்றதாயுமிருந்ததனுல் இக்காலக் கப்பற் போக்குவரத்திற்கு அது ஏற்றதாயில்லாமையாலே இவ்வெளித்துறைப் பட் டினம் அமைக்கப்படவேண்டியதாயிற்று. இடச்சுக்காரர் கட்டிய இத்துறைப் பட்டினம் இப்போது பாடாங்கின் ஒருபகுதியாகக் கொள்ளப்படுகிறது. இதன் வழியாகவே உயர்நிலப் பகுதியின் விளைபொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின் றன. ஊம்பிலின் நிலக்கரிவயலிலிருந்து எடுக்கப்படும் ஏராளமான கரியும் இத் துறைப்பட்டினத்தின் மூலமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள தீவு களின் புகையிாதங்களுக்கும் கப்பல்களுக்கும் வேண்டிய நிலக்கரியை வழங் கும் சில வயல்களுள் ஊம்பிலின் வயலும் ஒன்ருகும். தூரத்தேயுள்ள நிலக்கரி வயல்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டுசெல்லுவதற்கு அதிக செலவு ஏற்

கிழக்கு இந்தியத் தீவுகள் : சுமாத்திரா 235
படுகின்றது. நிலக்கரியை முதலிற் புகையிசதப்பாதை மூலம் துறைமுகங்களுக் குக் கொண்டுசென்று பின்பு கடல் மூலம் தொலைவிலே சாபாங்கு, யாவா என்னு மிடங்களிலுள்ள விற்பனைப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டியிருக் கிறது. பாதாக்கு உயர்நிலத்திலும் குடியடர்த்தி ஓரளவுக்கு அதிகமாகும் (சதுர மைலுக்குரிய அடர்த்தி 350 பேருக்குமதிகமாகும்). இப்பகுதி மெடான், சிபோல்கா என்பவற்றேடு இணைக்கப்பட்டுள்ளது. பாதாக்குப் பகுதி பயிர்ச் செய்கைக்கு உவந்ததாயிருப்பதோடு தோபா ஏரியையடுத்துக் குன்றுச் சுகநிலை யங்களை விருத்திசெய்வதற்கும் வாய்ப்புடையதாயுள்ளது.
(ஈ) மனிதப் பிரிவுகள்
தரைத்தோற்றத் தன்மை காரணமாகத் தனிப்பட்ட குலங்களாகப் பல வகுப்பினர் தோன்றி விருத்தியெய்தியுள்ளனராயினும் சுமாத்திராவில் இரண்டு இனவகையினரே குடியேறியுள்ளனர். கோக்கேசிய இனப்பிரிவைச் சார்ந்த நீண்ட தலையையுடைய மக்கள் (நெசியொற்றர்) ஒரு வகையினர்; பாடாக்கரும், காஜோ மக்களும் நீயாஸ்-மெந்தாவைத் தீவினரும் இவ் வகையைச் சார்ந்தவர். அகன்ற தலையையுடைய மொங்கோலிய இனத்தவர் ஆசியக் கண்டத்திலிருந்து மலாயா வழியாக இடம்பெயர்ந்துவந்து குடியேறியவர்போலும். இவ்வினத்த வரை சுமாத்திராவின் கிழக்குக் கரைப்பகுதியிலுள்ள மக்களிடையிலும், சுமாத்திராவின் வடகரையோாத்திலுள்ள மேனுங்காபோ, ஆச்செகர் என்போ ரிடையிலும் காணலாம். சுமாத்திராவில் இன்று வாழும் மக்கள் பதினைந்திற்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றனர்; இவற்றைவிடப் பல்வேறுபட்ட கிளை மொழிகளும் வழங்கப்படுகின்றன. பழக்கவழக்க முறைகளிற் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றபொழுதும், அவை அடிப்படையில் ஒத்தனவாயும் குழல் நிலைமைகளின் ஒருசீர்த்தன்மையோடு நெருங்கிய தொடர்புள்ளனவாயும் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.இங்கு மூவகையான மக்கள் வாழுகின்றனர்!
(அ) மேனுங்காபோ வகுப்பினர் தீவின் மத்திய பகுதியிலிருந்து மேற்குக் கரைவரையும் பரந்து காணப்படுகின்றனர். அயலிலுள்ள வகுப்பினரோடு ஒப் பிட்டுப் பார்க்கும்பொழுது இவர்கள் மிகவும் அகன்ற தலையையுடையவராகக் காணப்படுகின்றனர்.மேனுங்காபோ வகுப்பினர் இப்பொழுது முஸ்லிம்களாக வாழுகின்றனர். ஆனல் இவர்களது முன்னைய தாய்வழிமரபு இப்பொழுதும் பேணப்பட்டுவருகின்றது. குடும்ப ஒற்றுமையும் இவர்களிடம் அதிகமாகவுண்டு. இதஞலே ஒரு குடும்பத்தின் பல கிளையினரும் ஒரு வீட்டில் வசிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. இவ்வழக்கங்கள் பெரும்பாலும் இந்துக்களின் குடும்ப முறையை ஒத்தனவாக உள்ளன. குடும்பங்கள் ஒன்முக வாழும் முறை சொத் தைப் பிரிக்காமல் வைத்திருப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். நான்காம் பிறைச்சந்திரன் வடிவத்தில் அழகாக அமைக்கப்பட்ட விடுகள் உயர்ந்த பண் பாட்டு நிலையை இவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதற்குச் சான்முக உள்ளன. சிறந்த மச, உலோக வேலைப்பாடுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. மேனுங்காபோ வகுப்பினரின் பயிர்ச்செய்கை முறையும் மிகவுஞ் சிக்கலானது. ஈரநிலங்களில் ll-CP 4217 (6819)

Page 133
236 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
நெல் பயிரிடலும் எருமைகளை வளர்த்தலும் இவர்களின் முக்கிய தொழில்களா கும். இவர்கள் வர்த்தகத் துறையிலும் புகழ்பெற்றிருந்தனர். தீவின் பல பாகங் களிலும் சீனரே வர்த்தகத் துறையில் முதன்மைபெற்றிருந்தனர். சுமாத்திராவி லுள்ள மக்களுள் மேனுங்காபோ வகுப்பினர் மட்டுமே சீனரோடு போட்டி யிட்டுச் சிறந்த முறையில் வியாபாரஞ் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவரா யுள்ளனர்.
மேனுங்காபோ மக்கள் வாழுமிடங்களுக்குக் கிழக்கிலே, கிழக்குக் கரைப் பகுதியிலும் அயலிலுள்ள தீவுகளிலும் ஏனைய மலாய் இனத்தவர் வாழுகின்ற னர். இவர்கள் தந்தை வழிமரபைப் பேணும் முஸ்லிம்களாவர். வற்றுப்பெருக்கு நீருக்கு அண்மையிலுள்ள கிராமங்களையே இவர்கள் பெரிதும் விரும்பி வாழ்வர். பாலெம்பாங்கிற்கு அண்மையில் வாழும் சில மலாய் மக்கள், மலாக்காவிலிருந்து குடியேறியவர் வழிவந்தோர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் உட்பகுதி களைச் சார்ந்து வாழாமையாற் பயிர்ச்செய்கையிற் சிறப்பாக ஈடுபடுவதில்லை. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலிலேயே ஈடுபடுகின்றனர்; பிறநாட்டுச் செல்வாக்கும் இவர்களுக்கு அதிகம் உண்டு.
(ஆ) மேலே (அ) பிரிவிற் குறிப்பிடப்பட்டவர்களுக்கு வடக்கிலும் தெற்கிலும் Lu ITL Irdi, லாம்பூங்கர் எனப்படும் மக்கள் காணப்படுகின்றனர். பாடாக் என்னும் மலாய்ப் பதம் முதலில் இழிவான கருத்தைக் கொடுப்பதாகவிருந்தது. மேனி லப் பகுதியில் தோபாவைச் சூழவாழும் பல கூட்டத்தினரை இப்பதம் குறிக் கின்றது; இத்தகையோர் நேத்தால்வரையுள்ள மேற்குக் கரையிலும் காணப் படுகின்றனர். இம்மக்கள் இந்துமதச் சார்புடைய பழக்க வழக்கங்களினதும் இயற்கை வழிபாட்டு முறைகளினதும் செல்வாக்கிற்கு உட்பட்டவராகவுள்ள னர். தென் பகுதியிலுள்ள கூட்டத்தினர் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களையும் தழுவியுள்ளனர். தந்தை வழிமரபும் சாகிப்பிரிவுளோடு தொடர்புடைய வகுப்புப்பிரிவுகளும் பாடாக் மக்களிடையே காணப்படுகின்றன. கூட்டாக வாழும் குடும்ப முறையும் இவர்களிடை உண்டு. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை நிலையிலிருந்து மாற்றம்பெற்றுள்ள வாழ்க்கைப் பயிர்ச்செய்கை இவர்களது தொழிலாகும். ஆச்சேயின் உட்பகுதியிலுள்ள காஜோ மக்கள் பெரும்பாலும் பாடாக் மக்களை ஒத்தவராக உள்ளனர். ஆனல் நீண்ட காலமாக ஆச்சே மக்க ளின் செல்வாக்கிற்கு உட்பட்டவராகவிருந்தமையால் ஆச்சே மக்களின் பண்பு களிற் பல இவர்களிடையே காணப்படுகின்றன.
லாம்பூங் மக்களுக்கும் பாடாக் மக்களுக்கும் நீண்ட காலமாகத் தொடர்பு உண்டு. ஆனல் தொடுகடலுக்கூடாகச் சண்டாப்பகுதி மக்களின் தொடர்பாலும் மத்திய சுமாத்திராவிற் கிழக்கு மேற்காக மலாய் மக்கள் பரந்திருப்பதாலும் லாம்பூங் மக்களுக்குப் பாடாக்கருடன் உள்ள தொடர்பு ஓரளவுக்குக் குறைந்து விட்டது. லாம்பூங் மக்கள் முஸ்லிம்களாகவுள்ளபொழுதும் தலைவேட்டையாடும் வேட்டுவ நிலையிலிருந்து அதிகம் முன்னேற்றமடைந்தவரல்லர். பல மாடிகளைக் கொண்ட அவர்களின் வீடுகள் குறிப்பிடத்தக்கனவாயுள. அவை ஒவ்வொன் அறும் மரக்குற்றிகளால் அமைத்த வேலிக்குள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்

கிழக்கு இந்தியத்தீவுகள் : சுமாத்திரா 237
ளன. இம்மக்கள் பெரும்பாலும் தாவர உணவை உண்பவராயிருப்பதோடு நுணுக்க விரிவுடைய இலக்கியப் பண்பாட்டையுமுடையவராய் உள்ளனர்.
(இ) ஆச்சேகர் (ஆச்சேமக்கள்) எனக்கூறப்படுபவர்களும் பல குழுவினராய் உள்ளனர். இவர்களுள் கரைசார்ந்த பகுதிகளிற் பெரும்பாலும் பயிர்ச்செய் கைத் தொழிலை மேற்கொண்டு வாழும் கூட்டத்தினருக்கும், உட்பகுதியில் அநேகமாக இடம்பெயர்ந்து கிரியும் கூட்டத்தினருக்குமிடையிற் பெரிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. கரையோரத்தில் வாழ்பவர் அதிக அளவுக்குப் பிறநாட்டுத் தொடர்பு முடையவர். பல நூற்ருண்டுக் காலமாக இந்து சமுத் திரப் பகுதியிற் பிரயாணஞ் செய்தோரின் தொடர்பு இவர்களுக்குக் கிடைத் தது. நீண்டகாலமாக அராபியரின் தொடர்பையும் அத்திசையிலிருந்து வந்த பிறரின் தொடர்பையும் இவர்கள் பெற்றிருந்தனர். இந்த அளவுக்கு வேறு நாட்டவரின் தொடர்பு இருக்கவில்லை. வரலாற்று அடிப்படையிற் பார்க்கும் பொழுதும் கிழக்கு இந்தியத் தீவுகளுள் இப்பகுதியே முதலில் முஸ்லிம் பண் பாட்டைப் பெற்றது. இக்கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் உயர்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவராவர். இவர்களுடைய வெறிகொண்ட முஸ்லிம் கோட் பாடுகள் இவர்கள் ஒரு சமுதாயமாய் இணைந்து வாழத் துணைசெய்தன. தற் காலத்திற் பிறரின் தாக்குதலை எதிர்த்து நிற்பதற்கு இத்தகைய கூட்டுவாழ்க்கை பெரிதும் உதவியாகவிருந்தது. ஆச்சேகரின் நிலம் முழுவதும் அச்சமுதாயத் தாரின் பொதுச் சொத்தாக உள்ளது; ஆயினும் தனிப்பட்ட முறையில் மக்கள் வாழ்க்கைக்காகப் பயிர்செய்துவருவர். அடிப்படையான பழைய பண்பாட்டு முறைகளில் அராபிய வியாபாரிகளின் தாக்கமும் அதிக அளவுக்குப் பதிந்து காணப்படுகின்றது.
நிலையாக வாழும் மக்களோடு மத்திய ஆச்சேயிற் புராதன முறையில் வாழும் மக்களும் காணப்படுகின்றனர். இவர்கள் மலாயாவின் உட்பகுதியிற் காணப் படும் நாடோடிக் கூட்டத்தவரை ஒத்துள்ளனர். இவர்கள் முஸ்லிம் மதத்தை ஓரளவுக்கே தழுவியுள்ளனர்; வேட்டையாடுதல், காய்கனி தேடுதல், மீன்பிடித் தல் என்பன இவர்கள் தொழில்களாகும். உட்பகுதியிற் பெயர்ச்சிப் பயிர்ச் செய்கையைத் தொழிலாகவுடைய அலைந்து திரியும் சிறு கூட்டத்தவரும் உண்டு. ஆனல் வேட்டையாடுதல் காய்கனி தேடுதல் ஆகியவற்றிவிடுபட்டுள்ளோரே அதிகமாக உள்ளனர். முஸ்லிம்களல்லாத மெந்தாவை-நீயாஸ் தீவினர் பெரும் பாலும் பொலினீசியச் சார்புடையவர்களாயுள்ளனர். கிழங்குவகைகளைப் பயிரிடு தல் அவர்களது முக்கிய தொழிலாகும்.
சுதேசிகளாய் இங்கு வாழ்ந்து வந்த மக்களோடு, அண்மைக் காலத்திற் பயிர்ச்செய்கை விருத்தி, கனிப்பொருளெடுத்தல் ஆகிய தொழில்கள் காரண மாக வந்து குடியேறிய மக்களும் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சீனத் தொழிலாளராவர்; இவர்கள் மெடான் மாவட்டம், பாலெம்பாங்கு ஆகியபகுதி களில் அநேகமாக வாழுகின்றனர். 1960 ஆம் ஆண்டில் சுமாத்திராவில் 600,000 சீனத் தொழிலாளர் வாழ்ந்தனர். இவர்கள் பெரும்பாலும் பெருந்தோட்டத் தொழில், கணிப்பொருளெடுத்தல் என்பனவற்றில் ஈடுபட்டிருந்தனர். பாகான்

Page 134
238 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
சீயாப்பியாப்பிப் பகுதியில் இவர்கள் மீன்பிடி தொழிலிலீடுபட்டிருந்தனர்; அல்லாமலும் பட்டினங்களிற் சில்லறை வியாபாரிகளாகவும் தரகர்களாகவும் வாழ்க்கை நடாத்திவந்தனர்.
(உ) நிலப்பயன்பாடு
சுமாத்திராவின் பெரும்பகுதி இன்றும் இயற்கையான தாவர வகைகளையே கொண்டுள்ளது (படம் 64). இவற்றுள் அயனப் பிரதேச மழைக்காடுகள் முக்கிய மானவை. இடையிடையே வளமற்ற மண்வகை காணப்படும் பாகங்களிற் சிறிய அளவில் துணைக்காடுகளும் சவனப் புல்லும் உண்டு. தென்மலைப் பகுதியின் கிழக் குப் பாகத்தில் (பாலெம்பாங்கு வாழிடத்திற்கு மேற்கில்) துணைக்காடுகள் அதி கம் உண்டு. இத்தகைய காடுகள் பயிர்ச்செய்கை வலயங்களின் ஒரங்களைச் சார்ந் தும் காணப்படுகின்றன.
சுதேசிகள் நிலையான பயிர்ச்செய்கையிலும் பார்க்கப் பெயர்ச்சிப் பயிர்ச் செய்கையிலே அதிகம் ஈடுபட்டுள்ளனர். ஆகவே சுதேசிகள் பெரும்பாலும் வாழும் பகுதிகளிற் பெயர்ச்சிப் பயிர்செய்கைக்காகக் காடுகள் வெட்டி அழிக்கப் பட்டுள்ளன. குடியிருப்புக்களைச் சுற்றிச் சவனக் காணப்படுதற்கும் இதுவே காரணமாகும். பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையைப் பாதிக்கக்கூடிய அளவில் இன்று குடியடர்த்தி ஏற்படவில்லை. இதனுற் சுமாத்திராவில் இன்றும் ஏறத் தாழ அறுபது இலட்சம் மக்கள் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையிலிடுபட்டுள்ளனர். குன்றுப் பகுதிகளில் வாழுவோர் பெரும்பாலும் கிழங்கு வகைகளைப் பயிரிடுகின் றனர். சுதேசிகளின் உணவுப் பொருள் உற்பத்தி முறைகளுள் இதுவே பழமை யானதாகும். ஓரளவுக்கு முன்னேற்றமான மக்கள் நெல், சோளம், ஆகிய தானி யங்களைப் பயிரிடுகின்றனர். இதற்குப் பிறநாட்டவர் தொடர்பே முக்கிய காரண மாகும். பிறநாட்டுப் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மையாகவே இப் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
ஈர நெற்பயிர்ச் செய்கை ஆச்சேக் கரைப்பகுதியிலுள்ள கழிமுகஞ்சார்ந்த சில பாகங்களிலும் கெரிஞ்சிச் சாய்விலுள்ள மூசி, ஹாரி ஆறுகளின் மேற் பள் ளத்தாக்குக்களிலும் நடைபெறுகின்றது. ஆயிரம் வருடங்களின் முன்பு இந்தியக் குடியேற்ற ஆட்சி உச்சநிலையிற் காணப்பட்டபொழுது செல்வச் சிறப் புப் பெற்று விளங்கிய பகுதிகளின் எஞ்சிய கூறுகளாக இவை உள்ளன என லாம். பிற இடங்களில் தற்காலிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டு நீர்ப்பாய்ச்சல் வசதியில்லாது நெல் பயிரிடப்படுகின்றது. லாம்பூங்கர்க் கரையிலே நிலையாக நெல் பயிரிடப்படும் வலயங்கள் சில உண்டு. இப்பயிர்ச்செய்கை பெரும்பாலும் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை முறையாகவே உள்ளது. எனினும் சுமாத்திரா முழு வதையும் நோக்குகையில் நெல் தன்னிறைவுக்கு ஏற்றமுறையில் இங்கு விளை விக்கப்படுவதில்லை. இதனுல் முக்கியமான துணை உணவுப் பொருளாகச் சோளம் பயிரிடப்படுகின்றது. பாடாங்கு உயர்நிலப் பகுதியில் மட்டும் செறிவான முறை யில் நெல் விளைவிக்கப்பட்டு உள்நாட்டு வர்த்தகத்திற்கும் உபயோகிக்கப்படுகின் றது. ஆச்சேயிலும் லாம்பூங்கிலும் நெல்விளையும் நிலம் அண்மையில் விரைவாகப் பெருகியுள்ளது. கடந்த நூற்முண்டில் ஏற்பட்ட கிராக்கற்றே எரிமலைக் கக்கலின்

கிழக்கு இந்தியத்தீவுகள் : சுமாத்திரா 239
விளைவாகத் தென் சுமாத்திராவில் வளமுள்ள சாம்பல் பரவியதனல், லாம்பூங் கில் மண் புத்திளமைபெற்று நெற்செய்கை பெருகுவதற்கு வாய்ப்பாக அமைந் துள்ளது. மக்கள் குறைவாகவிருத்தலினுற் பயிர்ச்செய்கையைப் பெருக்குவதில் பிரச்சினைகள் எழுகின்றன. சுமாத்திராவில் மக்களைக் கொண்டுவந்து குடியேற்று வதற்காக அரசாங்க ஆதரவோடு அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சி களும் எதிர்பார்த்த அளவு வெற்றியை அளிக்கவில்லை. அயலிலுள்ள யாவாவில் மக்கள் மிதமிஞ்சிய அளவில் உள்ளனர்; அவர்களுக்குப் போதிய நிலமும் இல்லை. இருந்தும் அவர்கள் இடம்பெயர்ந்து சுமாத்திராவிற் குடியேற விருப்பற்றவராக உள்ளனர். யாவாவிலிருந்து வந்து குடியேறிய மக்கள் நிலையாக வாழுவதற்கு விவசாயத்துறையில் ஈடுபடவேண்டியவராயிருந்தனர். ஆனல் ஐரோப்பியர் தாபித்த பெருந்தோட்டங்களுக்குத் தொழிலாளர் தேவையிருந்ததனுல் குடி யேறியோரில் ஒரு பகுதியினர் இத்துறையிலும் ஈடுபட்டனர். இவ்வாறு இரு வேறு தேவைகளுக்கும் தொழிலாளர் அதிகமாகத் தேவைப்பட்டதனுற் சுமாத்தி ாாவில் உணவுப் பயிர்ச்செய்கை அதிக அளவுக்கு விருத்தியடைய முடியவில்லை. தென் சுமாத்திராவில் மீண்டும் நெற்செய்கையைச் சிறப்பாக விருத்தி செய்வ தற்காக இந்தோனேசியர் குடியேற முயன்று வருகின்றனர். யாவாவிலிருந்து தொழிலாளர் இப்பகுதிக்கு வந்து திரும்பிச் செல்லும் முறை இங்கு உண்டு. 1930-61 குடிமதிப்புக் காலத்தில் சுமாத்திரா முழுவதிலும் குடித்தொகை 87 சத விதத்தாற் பெருகியுள்ளது; ஆனல் குடியேற்றத்திற்கு இடமாக இருந்த அக்ன் தென்கரையில் 141 சதவீதத்தாற் குடித்தொகை பெருகியது; மத்திய கிழக் குக் கரையிலே (ரியோ, சாம்பி) இத்தொகை 247 சதவீதத்தாற் பெருகியுளது. மேற்குக் கரையிற் குடித்தொகை பொதுவாக மாருமல் இருக்கிறது.
சுமத்திராவில் சுதேச விவசாயிகள் இறப்பரையும் ஒரு முக்கிய பயிராக விளை விக்கின்றனர். பெயர்ச்சிச் செய்கை நிலையான பயிர்ச்செய்கையாக மாறும் முறைக்கும் பணப்பயிர்கள் விளைவித்தற்கும் இப்பயிர்ச்செய்கை பொருத்தமாக உள்ளது. சிறிய நிலப் பகுதிகளில் விவசாயிகள் பயிரிடும் பிற பணப்பயிர்கள் புகையிலை, கோப்பி, தேயிலை, இலவம், தென்னை, மிளகு என்பனவாகும். சிறிய நிலப் பகுதிகளில் விளைவிக்கப்படும் முக்கியமான பணப்பயிர் இறப்பராகும் எவ்வளவு நிலத்தில் இறப்பர் இவ்வாறு பயிரிடப்படுகின்றது என்பதுபற்றித் திட்டமாகக் கூறல் முடியாது. இறப்பர் செய்யும் நிலப்பகுதிகள் பலவிடங்களி லும் உள்ளமையாலும், ஒழுங்காக அவற்றில் இறப்பர் பயிரிடப்படாமையாலும் அவற்றின் தொகையைத் திட்டமாகக் கணித்தல் இயல்வதன்று. சிறிய அளவில் இறப்பர் உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்வோரின் புள்ளிவிவரங்களைக் கொண்டு இதனை ஓரளவு அறியலாம். 1915 இன் முன்பு இத்தகைய இறப்பர் ஏற்றுமதி செய்யப்படவில்லே, 1956 இல் 224,000 தொன் இறப்பர் ஏற்றுமதி செய்யப்பட் டது. இத்தொகையில் 56,000 தொன் சாம்பியிலிருந்தும், 77000 தொன் பாலெம் பாங்கிலிருந்தும், 70,000 தொன் வடகிழக்குக் கரையிலிருந்தும் பெறப்பட்டன. எனவே சாதாரணமாக 15 ஏக்கர் நிலத்தில் ஒரு தொன் இறப்பர் உற்பத்தி

Page 135
240 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
செய்யப்படுகின்றது எனக் கொண்டு இங்குள்ள சிறிய இறப்பர் நிலங்களை ஒரு வாறு கணக்கிட்டுக் கூறலாம்.
சுமாத்திராவின் பயிர்ச்செய்கை மலாயாவின் பயிர்ச்செய்கையைப் போன்று வளர்ச்சிபெற்றதாயில்லை. ஐரோப்பியர் முதலோடும் நிருவாக அமைப்போடும் பெருந்தோட்டங்கள் கடந்த நூற்முண்டின் இறுதிக் காலத்திலே ஏற்படுத்தப்பட் டன. மிகப் பழைய பெருந்தோட்டம் புகையிலைச் செய்கைக்காக 1863 இல் மெடானின் பின்னணியிலுள்ள டேலி சுல்தானுட்சிப் பிரிவில் நிறுவப்பட்டது. இப்பகுதியில் இன்றும் சிறந்த தரப் புகையிலை பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது; உப்புமூல எரிமலைக் குழம்பு மண்ணைக்கொண்ட 29,000 ஏக் கர் தோட்டநிலம் இங்கு உண்டு. பழைய புகையிலைத் தோட்டங்களுக்கு அண் மையாக இறப்பர்ச் செய்கை படிப்படியாகப் பரவியது; பல பெருந்தோட்டங் கள் அமைக்கப்பட்டன. இன்று அவை புகையிலைத் தோட்டங்களிலும் பார்க்க முதன்மை பெற்றனவாக உள்ளன. அவ்வாறே பாலெம்பாங்கு சாம்பி ஆகிய விடங்களின் பின்னணிப் பகுதிகளிலும் இறப்பர்த் தோட்டங்கள் அமைந்தன. தொழிலாளர் குழப்பங்கள் உண்டான 1961 ஆம் ஆண்டில் சுமாத்திராவிற் சிறு தோட்டக்காரர்களிடமிருந்து 5.1 இலட்சம் (மீற்றரளவைக்) தொன் இறப்பர் பெறப்பட்டது. அவ்வாண்டிற் பெருந்தோட்டங்களிலிருந்து 1 இலட்சம் தொன் இறப்பர் மட்டுமே கிடைத்தது. மெடான் பகுதியில் (படம் 66) பலவகையான பெருந்தோட்டப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. மலாயாவின் பெருந்தோட் டங்களில் நடைபெறும் தனிச்செய்கையோடு பார்க்குமிடத்து இம்முறை வேறு பட்டதாகும். இங்கு எண்ணெய்த்தாலம், தேயிலை (பெமாதாங்கியந்தாருக்கு அண்மையில் சிறப்பாகக் காணப்படுகின்றது), கோப்பி, சிசற்சணல் முதலிய பயிர்கள் விளைவிக்கப்படும் பெருந்தோட்டங்கள் மாறிமாறி அமைந்துள்ளன. கடற்கரைக்குச் செங்கோணமாக இத்தோட்டங்கள் பரந்துள்ளன. கொண்டு வந்து படியவிடப்பட்ட எரிமலைக் குழம்பு மண்வகை காணப்படுமிடங்களிலே இத்தோட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெருந்தோட்டங்கள் காரணமாக அதிக மான சீனத்தொழிலாளர் மெடானைச் சூழவுள்ள பகுதியில் வந்து குடியேறியுள் ளனர். 1961 இல் மெடான் 16,000 தொன் புகையிலையையும் 25,000 தாலப் பருப் புக்களையும் ஏற்றுமதி செய்தது.
கணிப்பொருளெடுக்குந் தொழிலும் பெரும்பாலும் வெளிநாட்டார் கையிலே உள்ளது. ஆச்சே, வட கிழக்குக்கரை ஆகிய பகுதிகளிலுள்ள நிலநெய் வயல்களி லிருந்து பெறப்படும் எண்ணெய் சாபாங்கு, மெடான் ஆகிய இடங்களிற் சுத்தி செய்யப்படுகின்றது. தெற்கிலிருந்து பெறப்படும் எண்ணெய் பாலெம்பாங்கு சாம்பி ஆகிய இடங்களில் சுத்திசெய்யப்படுகிறது. எண்ணெயிற் பெரும்பகுதி சிங்கப்பூரையடுத்துள்ள தீவுகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. 1940 ஆம் ஆண்டில் சுமாத்திராவில் பெறப்பட்ட சுத்திசெய்யாத எண்ணெயில் அரைவா சிக்கு மேற்பட்ட தொகை (50 இலட்சம் தொன்) பிளாட்ஜோ வயல்களிலிருந் தும் காற்பகுதி சாம்பியிலிருந்தும் பெறப்பட்டன. 1962 இல் சுமாத்திராவில் மீண்டும் 90 இலட்சம் தொன் சுத்திசெய்யப்படாத எண்ணெய் உற்பத்தி செய்யப்

கிழக்கு இந்தியத்தீவுகள் : சுமாத்திரா 24l
பட்டது. மேற்குச் சுமாத்திராவில் வண்டற் படிவுகளிலிருந்து சீனர் தக்கமும் எடுக்கின்றனர். உற்பத்தி அநேகமாகக் கட்டுக்கதையாகவே உள்ளது; குறிப்பிடத தக்க அளவில் இல்லை.
சிங்கெப், பங்கா, பிலிற்றன்
சுமாத்திராவைச் சார்ந்து காணப்படும் மூன்று தீவுகள் சிங்கெப், பங்சா, பிலிற்றன் என்பனவாகும்; இவை சுமாத்திராவோடு நிருவாகத் தொடர்புகொண் டுள்ளன. இவை மிகவும் முதிர்ச்சிபெற்ற தரைத்தோற்றத் தன்மையைக் கொண் டிருப்பதனுல் மலாயாவை ஒத்துள்ளன. கருங்கற்களை நடுவிலும் முருகைக்கற் களைக் கரையோரத்திலும் கொண்டமைந்த இத்தீவுகளில் மக்கள் ஐதாகக் காணப்படுகின்றனர்; பயிர்ச்செய்கையும் மிகவும் குறைவாகும். இம்மூன்று தீவு களும் மலாயாவின் தெற்கிற் பரந்துள்ள ரியோ, லிங்கா என்னும் சிறிய தீவுக் கூட்டங்களிலுள்ள பெரிய தீவுகளாகும். இப்பொழுது இவை கப்பற் போக்கு வாத்துக்குப் பெரிதும் தடையாகவுள்ளன. எனினும் பழங்காலத்திலே பல ஆயி ாம் ஆண்டுகளாக மக்கள் கண்டம் பெயர்ந்து குடியேறுவதற்கு இவை துணையாக விருந்தன. சுமாத்திராவின் கரையோரம் அதிசயிக்கத்தக்க முறையில் பங்கா பிலிற்றன் தீவுகளின் கரைகளுக்குச் சமாந்தரமாக உள்ளது (படம் 68, 69). இத்தீவுகளில் அதிக அளவு வண்டல் தகரப் படிவுகள் காணப்படுகின்றன. தக ாப் படிவுகள் உள்ள இடங்கள் கின்டாப் பள்ளத்தாக்கை ஒத்துள்ள பொழுதும் இங்கு தகரப் படிவு சிறிதளவு கடலிலும் பரந்து காணப்படுகின்றது. இதன்ல் இத்தகரம் "கடல் தகரம்' என வழங்கப்படுவதுமுண்டு. சேறுவாரிகள் மூலம் வண்டலை வாரியெடுத்து அவற்றிலுள்ள தகரம் பிரித்தெடுக்கப்படும் ; பிலிற்றன் தீவில் பாறை நாளங்களிலிருந்தும் ஓரளவு தகரம் அகழ்ந்தெடுக்கப்படும். தக ாம் அகழ்ந்தெடுக்கப்படும் இடங்களில் சீனத் தொழிலாளர் பெருந்தொகையின ாாகக் குடியேறியுள்ளனர். இவர்கள் தற்காலிகமான முறையில் வந்து குடி யேறியவராவர். 1940 இல் பங்காத்தீவில் வாழ்ந்த 1,15,000 பேரில் 43,000 பேர் சீனராவர். பிலிற்றணில் வாழ்ந்த 58,000 பேரில் 20,000 பேர் சீனராவர். இத் தீவுகளில் சுமார் 2,50,000 மக்கள் வாழ்கின்றனர் ; 1961 ஆண்டுக் குடிமதிப்பின் படி சுரங்கவேலை செய்யும் பகுதியாகிய பாங்கால்பினுங்கில் 1,59,000 பேர் வாழ்ந்தனர். முன்பு பெருந்தொகையான தகரத்தாது சிங்கப்பூரிலுள்ள பெரிய உருக்கும் நிலையத்துக்கே கொண்டுசெல்லப்பட்டது. பின்பு, ஒல்லாந்தில் அண் கெம் என்னுமிடத்திலுள்ள உருக்கு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆயின் 1949 இற்குப் பின்னர் பெரும்பாலும் அ. ஐ மாகாணங்களுக்கு நேரே அனுப் பப்பட்டது. உலகத் தகரவிலேக்கு ஏற்பத் தகரம் அகழ்ந்தெடுக்குந் தொழிலி லும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. 1956-62 ஆண்டுப் பகுதியில் இவ் வுற்பத்தி 40 சதவீதத்தாற் குன்றியது. அப்போது உற்பத்தி செய்யப்பட்ட 17,200 தொன் செறிவான தகாத்தில் பங்காவிலிருந்து 64 சதவீதமும், பிலிற்ற னிலிருந்து 24 சதவிதமும் சிங்கெப்பிலிருந்து எஞ்சிய தொகையும் பெறப்பட் டன. பெருந்தொகையான மிளகும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Page 136
242 குதன்கிழக்கு ஆசிய நாடுகள்
சதுபட நிலம்
மோங்குரோவு سسہ G(5ئوdز தெரிபோவி
250 அடிக்கு மேறபடட நிலம் 3வண்டல தகரமகழதல்
படம் 88. பாங்கா. கணிப்பொருளெடுக்கப்படுமிடம் தவிர இத்தீவு
காடடர்ந்து காணப்படுகின்றது
இந்தோனேசியாவின் மொத்தப் போட்சைற்று உற்பத்தியிற் பெரும்பகுதி ரியோவிலுள்ள பூலோ பிந்தானிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது (1963 இல் 427,000 தொன் போட்சைற்று உற்பத்தி செய்யப்பட்டது).
அதிதெற்கிலே, கிராக்கற்ருே எரிமலை மக்கட் புவியியலில் அதிக முதன்மை யுடையதாயில்லை. ஆயினும் 1883 ஆம் ஆண்டில் இந்த எரிமலை அதிசயிக்கத் தக்க அளவிற் பெருந்தொகையான சாம்பலைக் கக்கியது. இதனுல் தென் சுமாத்திரா வில் பெரும்பாகம் சாம்பற்படிவுகளால் மூடப்பட்டது; இச்சாம்பல் சிங்கப்பூர், யக்கார்க்கா ஆகிய இடங்களுக்கும் பரவியது. இயல்பாகவே நிலையற்ற தன்மை யையுடைய தீவுக்கூட்டத்தில் எரிமலைச்சாம்பற் படிவும் அதனல் ஏற்பட்ட வெள் ளப்பெருக்கும் சிறிது கால எல்லைக்குள் அதிக சேதத்தை விளைவித்தன.
போக்குவரத்து
கிழக்குக் கரைப்பகுதியிற் பெரும்பாகம் குடியிருப்புக்களுக்கு உகந்ததன் முயினும் அப்பகுதியிலே போக்குவரத்து முறைகள் இப்போது விருத்தியடைந்து வருகின்றன; இப்பகுதியில் நீர்வழிப் போக்குவரத்திற்கு ஏற்ற ஆறுகள் சர்வ தேசப் பாதையாகவுள்ள மலாக்காத் தொடுகடலை இணைக்குமாறு அமைந்துள்ள
 
 
 

கிழக்கு இந்தியத்தீவுகள் : சுமாத்திரா 243
மையே இதற்குக் காரணமாகும். சிங்கப்பூர் சுமாத்திராவின் கிழக்கு மத்திய கரையிலிருந்து அதிக தூரத்திவில்லை. சுமாத்திராவின் வெளிநாட்டு வர்த்தக நிலையமாகச் சிங்கப்பூர் விளங்குகின்றது. இது ஐரோப்பாவோடு தொடர்புபெற்
w பிரத ಆಬ್ಜೆಕ್ ಟ್ಲಿ ಹಲಸಹಳು @55ಣ್ದ°~ www.disp) punts” . مسخه தகரம்
படம் 69. பிலிற்றன். தகரத்தாது அகழ்ந்தெடுக்கப்படும் இடங்கள்
தவிர ஏனைய பகுதிகள் காடடர்ந்து காணப்படுகின்றன
றிருப்பதோடு கிழக்குக் கரைத் துறைமுகங்களிலிருந்து யக்கார்த்தாவுக்குச் செல்லுந் துறைமுகமாகவும் விளங்குகின்றது. யக்கார்த்தா இத்தீவுத் தொடரின் நிருவாகத் தலைநகரமாக அமைந்துள்ளது. தொடுகடலின் அடித்தளத்தில் ஏற் றத்தாழ்வுகள் உள்ளமையால் சர்வதேசக் கப்பல்களும் உள்நாட்டுக் கப்பல்களும் சிங்கப்பூருக்கு அணித்தாகவுள்ள ஒடுங்கிய பாதைமூலம் செல்லுகின்றன. சுமாத் திராவைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் நீண்டகாலமாகவே முக்கிய இடத்தை வகித்துவந்துள்ளது. இதனலே யப்பானியர் ஆட்சிக்காலத்தில் மலாயா, சுமாத் திரா ஆகிய இரண்டிற்கும் பொதுவாக அவர்கள் சிங்கப்பூரையே நிருவாகக் தலைநகரமாக அமைத்திருந்தனர். 1955 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் ஏற்றுமதியில் 21 சதவீதம் சிங்கப்பூர் மூலமாகவே நடைபெற்றது. இறக்குமதி யில் 1 சதவீதம் மட்டுமே இவ்வழியாக நடைபெற்றது. இறக்கியேற்முகவகையில்

Page 137
244 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மேலுமதிக பொருள்கள் சென்றிருக்கலாம்; அவை வியாபாரப் பதிவேடுகளிற் பதியப்படுவதில்லை. 1958 இல் பினங்கின் இறக்கி ஏற்றும் வியாபாரத்தில் சுமாத் திராவிலிருந்து 890 இலட்சம் தொலர் இறக்குமதி இடம்பெற்றது; ஆனல் பினுங்கிலிருந்து சுமாத்திராவுக்கு 60 இலட்சம் தொலர் ஏற்றுமதியே கிடைத் தது. மலேசியாக் கூட்டரசு நிறுவப்பட்டதன்பின், இந்தோனேசிய அரசாங்கம் விதித்த தடைகாரணமாக, மலாயாத் துறைப்பட்டினங்களுக்கூடாக நடை பெற்ற சுமாத்திராவின் வியாபாரம் 1963 இல் மட்டுப்படுத்தப்பட்டது; ஆனல் அதன் பின்பு கள்ளக் கடத்தல் வியாபாரம் அதிகரித்துள்ளது.
சுமாத்திராவின் ஏற்றுமதிப் பொருள்களான இறப்பர் பெற்ருேலியம் என்பன பாரமான பொருள்களாகும். ஆதலால் இந்தோனேசியாவின் ஏற்றுமதியில் மூன் றிலொரு பகுதிக்கு பாலெம்பாங்கு பிலாவான் ஆகிய இரு அறைப்பட்டினங் களும் பொறுப்பாகவுள்ளன. தென் கிழக்கு ஆசியாவில் 1957 ஆம் ஆண்டிலே பாலெம்பாங்கில் "ஊக்கற்பிளப்பு' முறையில் நிலநெய் சுத்திசெய்யும் நிலையம் தொழிற்படத் தொடங்கியது. இந்நிலையத்தில் உள்நாட்டு நிலநெய்யிலிருந்து உய ரளவு ஒக்ரென் கொண்ட சிறந்த தரப் பெற்முேலியம் 6,000 பீப்பா நாளொன் அறுக்கு உற்புக்கி செய்யப்படுகின்றது.

அத்தியாயம் 13
கிழக்கு இந்தியத் தீவுகள்
மேற்குத் தீவுத்தொடர் : யாவாவின் இயற்கைத் தோற்றம்
600 மைலுக்குச் சற்றே கூடிய நீளத்தையுடைய யாவாத்தீவு அகலக்கோடுக ளுக்குச் சற்றேசாய்வாக அமைந்துள்ளது. மலாயாவின் வட பாகங்களிலும் பார்க்க மத்திய கோட்டிலிருந்து தூரத்தில் காணப்பகிென்றது. இங்கே திட்ட மான வறண்ட பருவம் உண்டு. கூனுேங்குமொபியிலிருந்து கிழக்கு நோக்கி மழை வீழ்ச்சி குறைந்து செல்லுகிறது. தாைத்தோற்றம் காரணமாக இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவதுண்டு. யாவாவின் மத்திய பாகம் (செரிபொனி லிருந்து சமராங்கு வரை) 60 மைல் வரை அகலமுடையது. தீவின் ஒடுங்கிய நடுப்பாகத்திற்குக் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பாகங்கள் 100 மைல் வரை அகலமுடையனவாய்க் காணப்படுகின்றன. யாவா நீள்முகத் தன்மையுடைய தீவாக அமைந்திருப்பதனுல் நிலவமைவும் தரைத்தோற்றப் பிரிவுகளும் அதற் குப் பொருந்தக் காணப்படுகின்றன. வடக்கிலும் பார்க்கத் தெற்கிலேயே இத் தன்மைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
rai தெற்கிலிருந்து நோக்கும்பொழுது தரைத்தோற்றப் பிரிவுகள் பின்வருமாறு காணப்படுகின்றன (படம் 70).
(1) தென்கரைச் சுண்ணக்கற்பீடங்கள் (2) நடுவிலுள்ள பள்ளத்தாக்கும் தொடரும் சேர்ந்த வலயம்; அடையற் பாறைகளாலமைந்த இவ்வலயம் அதிகமாகச் சிதைவுற்றுக் காணப்படு கின்றது. (3) யாவாவின் நடுமுகட்டைச் சார்ந்து காணப்படும் எரிமலைத்தொடர். (4) வண்டல் வலயம். இவ்வலயம் பன்தமிலிருந்து கிழக்காக மதுராத் தொடு
கடல்வரை லூசிசோலோ பள்ளத்தாக்குக்கூடாகப் பாந்துள்ளது.
(3) வடகரையையடுத்துள்ள செம்பாங்கு மதுராச் சுண்ணக்கற்பீடங்கள்.
தென்கரைச் சுண்ணக்கற்பீடங்கள் கண்ணக்கற்பீடங்கள் ஐந்து இங்கே காணப்படுகின்றன. பொயிற்றென்சோர்க் கிலுள்ள சிறுபீடம், பிரியங்கனிலுள்ள பெரிய பீடம், காலி ஒப்பாக்கிற்கும் பற் சிதன் குடாவுக்குமிடையிலுள்ள பாந்த கூனேங்கு செவோப் பீடம், பொப்போ சிபெலொற் குடாக்களுக்கு இடையிலுள்ள மேட்டுநிலம், கிழக்கி அலுள்ள பிளம்பங்கன் குடாநாட்டுப் பகுதி என்பனவே இந்த ஐந்து பீட நிலங்ச
25

Page 138
246 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ளாகும். அதிகம் சிதைவுருத சுண் ணக்கற்பீடங்களாகக் கடற்கரையிலி ருந்து செங்குத்தாக இவை அமைந் துள்ளன. அயனப் பிரதேசத்தி லுள்ள ' காசித்து’ நிலங்களாக இவை காட்சியளிக்கின்றன. இந் நிலங்கள் மிகத் தடிப்பானவையாக வும் நீருட்புகுமியல்புடையனவாயும் உள்ளன. தரைக்கீழ் வடிகாலமைப் புக் காரணமாக மேற்றரை நீரற்றுக் காணப்படுகின்றது ; பயிர்ச்செய்கைக் குப் பொருத்தமாயில்லை; குடியிருப் புக்கும் ஏற்றதாயில்லை. கூனுெங்கு செவோப் பகுதி 1,000 அடிவரை உயரமானதாயிருப்பதோடு குன்று 8 களேயும் பள்ளங்களையும் கொண்டுள் ளது. இதனூடாகப் போக்குவரத் துப் பாதைகளும் விருத்தி செய்யப் படவில்லை. மேற்கிலுள்ள பீடநிலங்
கள் ஒழுங்கான மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. இதனுல் தாவரவகை களும் அடர்த்தியாகவுள்ளன. ஆனற் கிழக்கிலுள்ள நிலங்கள் நீண்ட வறட் சிக் காலத்தைக் கொண்டிருப்பதனுல் இயல்பாகவுள்ள நிலையைப் பிரதி பலிக்கின்றன.
s
நடுவிலுள்ள பள்ளத்தாக்குத்
-தொடர் வலயம்
தொடரையும் பள்ளத்தாக்கையும் அடக்கிய நடுவலயம் சுண்ணும்புக் களிப் படைகளாலமைந்த முதிர்ச்சி பெற்ற தரைத்தோற்றத்தைக் கொண்
டுள்ளது. சுண்ணப்பாறைகள் உட்
s
பட்ட அடையற் பாறைகள் 33 சத விதமான நிலப்பகுதியில் பரந்துள் ளன. தென் பகுதியில் பழைய புவிச் சரிதகால எரிமலைகள் அரிப்புத் தாக் கத்தால் பாதிக்கப்பட்டதனலேயே இவை பெறப்பட்டன. அல்லாமலும்
A.
A.
S.
e6.
படம் 73. யாவாவின் தரைத்தோற்றப்
ຢ.ທີ່6j867
 
 
 

கிழக்கு இந்தியத்தீவுகள் : யாவா 247
இவ் வடையற் பாறைகள் அதிக அளவுக்கு மடிப்புண்டும் சிதைவுற்றும் காணப் படுகின்றன. சுமாத்திராவிற் போன்று குன்றுத் தொடர்களிடையில் நடுவே அமைந்த தாழ்வான பகுதி ஒன்று காணப்படுகின்றது. மேற்கில் இப்பகுதி பல வடிநிலங்களை உள்ளடக்கியுள்ளது (பாண்டுங்கு, காரூற் என்பன உதாரணங் கள்) ; கிழக்கில் தாழ்நிலம் அகன்றும் உயரத்திற் தாழ்ந்துங் காணப்படுகின்றது ; சிறிது பாகம் மதுராத் தொடுகடலின் பெருக்காற் பாதிக்கப்பட்டுமுள்ளது. அடையற் பாறைகள் 4,000 அடிக்கு மேல் உயரமாகப் பாந்துள்ளன. யாவா உயர்நிலங்களின் தரைக்கீழ்ப்பாறைகளாக இவை காணப்படுகின்றன. வடக்கில் இப்பாறைகளிடை இலிக்னேற்றுப் படிவுகளும் நிலநெய்ப்படிவுகளும் காணப்படு கின்றன. தெற்கில் உயர்நிலம் கடற்கரைவரை பரந்துள்ளது; கரையையடுத்து ஓங்கல்களும் காணப்படுகின்றன. கடற்கரை ஆங்காங்கு உயரமாகவும் காணப் படுகின்றது. பன்ஜோமஸ் சமநிலம் போன்று சிலபாகங்களில் மட்டுமே உயர் நிலம் சற்றுப் பின்னணியிற் காணப்படுகின்றது; கரையையடுத்து வண்டல்நிலம் உண்டு. இத்தகைய வண்டற் படிவுகளிடையிலேயே "யாவா மனிதனின்’ (ஹோமோ சொலோன்சிஸ்) சுவடுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதி ஆசியா வோடு மிகப்பழைய புவிச்சரித காலமுதல் தொடர்பு கொண்டிருந்தது என் பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. சுண்ணக்களிப் படைகளும் அவற்றேடு தொடர்புடைய பாறைகளும் காணப்படும் பகுதியிற் போதிய அளவில் தரைநீர் உண்டு. இதன் காரணமாக அமைந்த தரைத்தோற்றத்தை நன்கு அரிக்கப்பட்டு அலைவடிவத்தன்மையும் முதிர்ச்சியும் பெற்றுள்ள பிரெயாங்கர் நிலப்பகுதியிற் காணலாம். மேற்குறித்த பாறைவகைகள் வறண்ட கிழக்கு யாவாப் பகுதியிற் குறைவாகவே காணப்படுகின்றன. அல்லாமலும் எரிமலைகளும் அவற்றிலிருந்து பெறப்பட்ட பாறைகளும் இப்பகுதியில் தரைத்தோற்றத்தைப் பாதித்துள்ளன. வடக்கில் இவ்வடையற் பாறைகள் கடற்கரைவரை பரந்து காணப்படவில்லை.
எரிமலைகள்
யாவாவின் தரைத்தோற்றத்தில் எரிமலைகள் முக்கியமாகவுள்ளன. எரிமலைகள் காரணமாக அடையற்படைகள் சிதைவுற்றுள்ளன (படம் 72). எரிமலைக் குழம்பு, சாம்பர் முதலியவற்றினுற் பழைய நிலவுருவங்கள் மூடப்பட்டுள்ளன. தரைத்தோற்றத்தில் எளிதாகத் தெரியும் நிலவுருவமாக எரிமலைக் கூம்பு காணப் படுகின்றது. யாவாவின் எரிமலைகள் மிகவும் உயரமாகக் குத்தான சாய்வுகளைக் கொண்டு அமைந்துள்ளன. பெருமழைவீழ்ச்சியினல் இவை பாதிக்கப்பட்டுள் ளன. தரைத்தோற்றத்தைப் பொறுத்த அளவில் இந்நிலவுருவங்கள் முக்கிய மானவையாயுள்ளன. இங்குள்ள 44 எரிமலைக்கூம்புகள் 6,000 அடிக்கும் 10,000 அடிக்கும் இடைப்பட்ட உயரத்தையுடையன. 14 கூம்புகள் இவற்றிலும் உயர மானவையாகவுள்ளன. பலமற்ற நிலவமைவும் எரிமலைக்குழம்பு வெளியேற்றமும் இங்கேயே அதிகமாகக் காணப்படுகின்றன. உலகின் பிற பகுதிகளில் இத்தகைய நிலைமைகள் அரிதாகவே நிகழுகின்றன. எரிமலைகளின் தன்மையைப் பொறுத் துக் கக்குதலும் வேறுபடுகின்றது. சிலசமயங்களில் எரிமலைவாயைச் சுற்றிச்

Page 139
248 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
a *公 2ష్ట్రాప్తి 'ീ', போதிரிக் கழிமுகம்
O MAP soubo
-கெண்டால் - -
حجم
2۔ جب ۵کRNg56 -- --
லிவூன்கோ E-Tర్తెలైజ్
XOXO> sa. S&S பெங்கோல்
xநியோசீன் ジs○○ ラるXぐ L
9G s/ < ஊங்கீரர்ான்(.) ỡờ7 ന്നു S. ξs, ९ --ァーつで
4ం96 %パ&# ^
|ԱԱԱԱ!! \\կ332: «K2X* : ఇంగ్లంరెస్ట్రాసెసrళిద్ధాN*<> ధ్య
డిగ్గజళ్ల 2భ gaరLTUTYధ్య222/- -ధ్వధ వ్లో భూస్ద2 కైర్గర్ల ஆப்ர் C ଽ ഗ|1Yభ இப்னிங்குத்3ே *్యసిo“°C°రంధ్స ○ككم( X ← =منقول __سنتجنیسیՑիմլ! : & *go: వర్గధ இ23திxஇஇஇ °丽“之参°59.o ధభ リタぐぷ一ぐ総。 ఫ్రేన్గోధట్టిక్స్టికోస్ట్రే છે... :ી:જંs ధ ※ぐ※ ృప్తి Xగ#ళి S 9.
ub l. கூஞெங்கு ஊங்காரான் பகுதியின் புவிப்பெளதிக வுறுப்பியல் விளக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழக்கு இந்தியத்தீவுகள் : யாவா 249
சாம்பர் படிவதனல் குத்தான ஒடுங்கிய வாய் அமைகின்றது; இது நடுவில் புனல்போன்றவடிவைக் கொண்டிருக்கும். சாம்பர் அாாப்பாந்து படிவதும் உண்டு. எரிமலை கக்கும்பொழுது வெளிவரும் பொருள் உருகிய பாறைக் குழம்பா
& மூனறம யுகத்துக்கு முறபடட
புவியோடு
Pேளிரும் யுகம- பழைய பிளேத்தொசின்
பேழைய ஊங்காரான் ;
"றை (நோடடோபுரோபரற்ப றை
பழைய ஊங்காரான பாறைக்
குழமபு
படம் 72. பழைய ஊங்காரான் எரிமலை அமைப்பைக் காட்டும் படம்
அல்லது சாம்பாா என்பதைப் பொறுத்தே எரிமலைப் பொருளின் தன்மை அமை யும். உருகிய பாறைக்குழம்பு எரிமலைச் சாய்வுகளைச் சார்ந்து கீழ்நோக்கி ஓடும். எரிமலைவாயின் தாழ்வான ஒாத்திலிருந்தே பாறைக்குழம்பு வழிந்தோடும் சாம்பர் முகில்போன்று காற்றினல் ஏந்திச் செல்லப்பட்டுப் படியவிடப்படும். அது படியும் திசை காற்றின் திசையைப் பொறுத்ததாகும். அயனச் குரவளி கள், 0.யரம் என்பன காரணமாக மழைவீழ்ச்சி இப்பகுதியில் அதிகமாக ஏற் படுவதனுல் எரிமலை வாய்கள் ஏரிகளாக அமைந்துவிடுகின்றன. அவிந்த எரிமலை வாய்கள் சிலகாலம் வட்டமான ஏரிகளைக் கொண்டுவிளங்கும். பின்பு அரிப்புச் தாக்கம் காரணமாக வாய் ஓரங்கள் சிதைந்துவிடலாம். நீர் உட்புகுவதனல் நீராவி அமுக்கம் மிகுந்து சில எரிமலைகள் சடுதியாக வெடித்துவிடுகின்றன. சில எரிமலைகளின் வாய்களிற் குடான சேற்றைக் கொண்ட ஏரிகள் அமைகின்றன. காலத்துக்குக் காலம் குடான சேறு எரிமலை வாய்களிலிருந்து வெளியே வழியும்

Page 140
250 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
இதனுல் எரிமலைகளைச் சூழவுள்ள நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சில எரிமலைகளின் வாய்களிலிருந்து குடான துகள் வெளிக்கிளம்பும். இத்துகள் படிவதனுலும் சூழவுள்ள பகுதிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. யாவாவி அலுள்ள சில எரிமலைவாய்களில் வாயுக்கள் காணப்படுகின்றன ; சிலவற்றிற் கந்தகம் சேர்ந்த குடான நீர், அல்லது சேறு காணப்படுகின்றது. பள்ளத்தாக் குப் பகுதிகளில் நச்சுவாயுக்கள் நீண்ட காலம் காணப்படலாம். இத்தகைய பள்ளத்தாக்குக்களில் உயிரினங்கள் வாழமுடியாது.
யாவாவிலுள்ள எரிமலைகள் எரி
மலைக் குழம்பிலும் பார்க்கச் சாம்ப ரையே அதிகமாகக் கக்குகின்றன. எரிமலைக் குழம்பாகவிருந்தால் அது அநேகமாக உப்பு மூலச்சார்புடைய குழம்பாகவிருக்கும். இதனுல் எரி மலைக்குழம்பு வண்டற்சாம்பர் முத லியவற்றிலிருந்து உண்டாகும். மண், மகனீசியம்,
பொசுபரசு முதலியவற்றைக் கரை
கல்சியம், நைதரசன்,
யக்கூடிய தன்மையிற் கொண்டிருக்
கும். மிகவும் பொருத்தமானதாகும். எரி
இம்மண் பயிர்ச்செய்கைக்கு
மலைச் சாய்வுகள் குத்தானவையாக வும் இருப்பதனுல் அரிப்புத் தாக்கம் ஏற் பட்டு மண்சரிவுகள் உண்டாகின்றன.
இக்காரணத்தினுல்
'மாவட்ட அடிப்படையில் பண்படுத்திய சீ மைல் வீதம் ஆட்கள்
மழைவீழ்ச்சி அதிகமாகவும்
so 750 कुँज्ञा இறகுகீழ்ே இற்கு டிேல்
250 250 750
எரிமல்ையைச்
படம் 73. கூஞெங்கு மெராபிச் சாய்விலுள்ள ஒழுங்கற்ற விளைநிலக்குடியடர்த்தி. கக்கப்பட்ட பொழுது காணப்பட்ட காற்றுத்திசைக்குப் (வட மேற்கிலிருந்து) பொருந்த இது அமைந்திருக்க 60th
சார்ந்த நிலம் குத்தாகவும் சிதைவுற் அறும் காணப்படும். உயிர்ப்பெரிமலை வாய்களைச் சார்ந்து தாவரங்கள்
காணப்படா.
கூனெங்கு மொாபி (தீ மலை, இது உள்நாட்டில் எரிமலைக்கு வழங்கும் பதமா கும்) யாவாவிலுள்ள மிகவும் சேதம் விளைவிக்கும் எரிமலைகளுள் ஒன்முகும் (படம் 73).
இது ஏறத்தாழ 10,000 அடி உயரமுடையது. கடந்த நூறு வருட காலமாகத் தொடர்ந்து உயிர்ப்பெரிமலையாக இருந்திருக்கின்றது. சில மைல் அாரம் வடக்கில் மெர்பாபூ எனப்படும் கூம்பு உண்டு. மறுபக்கத்தில் மொாபியின் சாய்வு குடிச் செறிவு மிக்க வளமான சமநிலங்களோடு இணைந்துள்ளது. மாகெலாங்கு யோக் பக்கார்த்தா, சுரகார்த்தா எனப்படும் இச்சமநிலங்களில் எரிமலைச் சாம்பர் நீரி
 
 
 
 
 
 
 
 
 
 

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 25
னுற் கொண்டுவந்து படியவிடப்பட்டுள்ளதனுற் செறிவான பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. விவசாயிகள் படிப்படியாக எரிமலையின் மேற்சாய்வுகளே நோக்கித் தமது நெல்வயல்களையும் குடியிருப்புக்களையும் அமைத்து வருகின் றனர். எரிமலை வாயிலிருந்து சில மைல் தூரத்தில் இவை காணப்படுகின்றன. இதனுல் எரிமலைவாயிலிருந்து குடான சேறு, சாம்பர் முதலியன பரவும் பொழுதும் எரிமலை வெடிக்கும்பொழுதும் மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவ தோடு பொருள் நட்டமும் உண்டாகின்றது. சேதம் ஏற்பட்டாலும் விவசாயி கள் குன்றுச்சாய்வுகளை நோக்கி மேலே செல்லுகின்றனர். எரிமலை மண் அத் துணை வளமுடையதாயிருப்பதே இதற்குக் காரணமாகும். இந்த எரிமலை நன் முக அவதானிக்கப்பட்டுவருகின்றது. எரிமலைத் தாக்கம் ஏற்படலாம் என்று கண்டால் அதன் சாய்வில் வாழும் மக்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்படும். எரிமலை அச்சு உள்ளாக அமைந்துள்ளது. பன்தமிலுள்ள காங்கு, செம்பாங் கிலுள்ள மூரியா ஆகிய எரிமலைகள் கடற்கரையிலிருந்து சில மைல் துரசத்தில் புறத்தே அமைந்துள்ளன. மதுராத் தொடுகடலின் தெற்கிலும் விஜின்கூப்ஸ் குடாவை யடுத்தும் (தென் பன்தம்) எரிமலைக் குழம்பு வந்து படிவதுண்டு. மேற்கு யாவாவில் பாண்டுங்கு, காரூற் வடிநிலங்களை உள்ளடக்கி எரிமலைகள் வளைவாகப் பரந்துள்ளன. இந்த வடிநிலங்களில் எரிமலைப் பொருள்கள் படிந்து வடிகால் முறையைத் தடைசெய்தமையால் ஒருகாலத்தில் அவை ஏரிகளைக் கொண்டிருந்தன. கிழக்கு யாவாவிலும் எரிமலை வாய்கள் கூட்டமாகக் காணப் படுகின்றன. மத்திய யாவாவில் அடையற்பாறைகளாலான மேனிலுங்கள் இடையிலுள்ளமையால் எரிமலைகள் இரண்டு மூன்முகப் பிரிக்கப்பட்டுள்ளன. அநேகமான எரிமலைகள் மத்தியிலுள்ள தாழ்வுப் பகுதியிற் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து வெளிப்போந்த எரிமலைப் பொருள்கள் பல இடங்களில் அவற்றை மூடியுள்ளன. தென் பன்தமிலுள்ள எரிமலேகள் மட்டுமே அமிலஞ் சேர்ந்த குழம்பைக் கக்குகின்றன. இதிலிருந்து உண்டாகும் மண் வளங் குறைந்ததாகும். இதனுலேயே பன்தமிலுள்ள எரிமலைகளைச் சூழவுள்ள சாய்வு களிற் சிறிதளவுக்கே பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது (படம் 75).
பாண்டுங்கு, காரூற் வடிநிலங்கள் முக்கியமானவை. இவ்வடிநிலங்களிற் செறி வான பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
(அ) பாண்டுங்கு வடிநிலம். இது முன்பு ஏரியாகக் காணப்பட்டது. இப் பொழுது கடல் மட்டத்திற்கு மேல் 800 அடி உயரத்திற் காணப்படு கின்றது. இதன் வடிகால் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. சீத்தாரூம் ஆறு பாண்டுங்கைச் சூழவுள்ள எரிமலைகளை ஊடறுத்து இடுக்குவழி யாக ஓடுகின்றது. சிறிய ஏரிகள் இன்றும் ஆங்காங்குக் காணப்படுகின் றன. இந்த வடிநிலம் மிக்க வளமுடையதாகும். ஆ) காரூம் வடிநிலம். பாண்டுங்கு வடிநிலத்தை ஒத்த இவ் வடிநிலம் அதி லிருந்து கூந்தூர் எரிமலைக் குழம்பினுற் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வடிநிலங்களும் ஒருகாலத்தில் இணைவாகக் காணப்பட்டிருக்க லாம். காரூற் வடிநிலத்தில் வளமான எரிமலை வண்டல்மண் படித்துள்

Page 141
252 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ளது. எஞ்சிய ஏரிகள் சில ஆங்காங்கே காணப்படுகின்றன. சீமானூக் இவ்வடிநிலத்திற் காணப்படும் பிரதான ஆருகும்; சூழவுள்ள எரிமலை களுக்கூடாக இடுக்குமூலம் இது ஓடுகின்றது. காரூற் வடி நிலத்தைச் சூழவுள்ள நிலத்திற் பெருந்தோட்டங்களில் தேயிலை, சிங்கோன என் பன பயிரிடப்படுகின்றன.
வடக்கிலுள்ள வண்டல் வலயம்
உட்பகுதியிலிருந்து எரிமலைப் பொருள்கள் நீரினுற் கொண்டுவந்து இப்பகு யிற் படியவிடப்பட்டுள்ளன. சண்டா மேடையை மூடி இப்படிவுகள் காணப்ப வதோடு யாவாக் கடலின் ஆழமற்றபாகங்களிலும் இவை பரந்துள்ளன. படிவுகள் இயல்பாக வந்து படிவதணுற் கடற்பகுதிகள் படிப்படியாக நிலமாக மாற்றம் பெற்றுவருகின்றன. விவசாயிகளும் இப்பகுதிகளை நுண்ணிய முறையில் மீட்டுவருகின்றனர். வளமான வண்டல் மண்ணைக்கொண்ட இப்பகுதி சமாாங்கின் மேற்கிற் கரைசார்ந்த வலயமாகக் காட்சியளிக்கின்றது. கிழக்கில் இவ்வலயம் லூசி. சோலோ ஆறுகளின் நடுப்பாகங்கள் காணப்படும் தாழ்நில மாக அமைந்துள்ளது. மொாபிக்குக் கிழக்கிற் சிறு கூட்டங்களாகவுள்ள எரி மலைக் கூம்புகளைச் சார்ந்து வண்டல் பரந்துள்ளது. வடக்கிலுள்ள வண்டல் வல யத்தை இரு பிரிவாகப் பிரிக்கலாம். மேனிலத்தைச் சார்ந்து உள்ளே காணப் படும் பகுதியின் ஒரத்தையடுத்துக் கடற் கரைக்குச் சமாந்தரமாகத் தாழ்வான படிகள் காணப்படுகின்றன. யாவாவின் அண்மைக்காலப் புவியோட்டு விருத்தி யின்போது படிப்படியாக மேலுயர்த்தப்பட்ட நிலைகளை இப்படிகள் உணர்த்து கின்றன. புறத்தேயுள்ள பிற்பட்ட வண்டல் படிந்த நிலம் தட்டையாக உள்ளது; கடல்மட்டத்திலிருந்து ஐம்பது அடி உயரமுடையது. இந்த இருவகையான வண்டற் பகுதிகளையும் பிரிக்கும் எல்லையிற் சாய்வு முறிவுற்ற தன்மையைக் காட்டும் படியமைப்பு உண்டு; சில இடங்களில் இது தெளிவாகவில்லை. இந்த எல்லையோரத்தை அடுத்தே குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. பேகாசி குடி யிருப்பு இதற்கு ஒர் உதாரணமாகும். கீழுள்ள வண்டற் பகுதியிலும்பார்க்க இந்த ஒாப்பகுதி உடல்நலத்திற்கு ஏற்றதாயிருப்பதோடு வெள்ளப்பெருக்கினும் பாதிக்கப்படாத பகுதியாகவுமுள்ளது. இக்காரணத்தினலேயே புகையிரதப் பாதை (பக்கார்த்தா-செரிபொன் புகையிாகப் பாதை), தெருக்கள் முதலியன வும் இங்கு அமைந்துள்ளன. இப்பகுதியில் நெல் முக்கியமாக விளைவிக்கப்படு கின்றது. இப்பகுதியில் வடிகாலமைப்பு, நீர்ப்பாய்ச்சல், வெள்ளத்தடுப்பு முறை கள் எல்லாம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றேடு குடியிருப்புக்களும் போக்குவரத்து முறைகளும் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியிற் கழி முகங்களும் விரைவாக அமைந்து வருகின்றன. உட்பகுதியில் எரிமலைத்தாக் கம் ஏற்படும் பொழுது ஆறுகள் அதிக அளவிற் சாம்பரைக் கொண்டுவந்து படியவிடுவதனற் கழிமுகங்கள் இன்னும் விரைவாக அமைகின்றன (படம் 19).
உள்ளாக அமைந்துள்ள வண்டற்பகுதி தொடர்பாக இல்லை. பொயிற்றன் சோர்க் வரை உள்ளே பரந்துள்ள குடாக்களிலும் வண்டற் பகுதி பாதிக்கப்பட்

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 253
டுள்ளது ; சீத்தாரூம் பள்ளத்தாக்கில் இப்பகுதி முற்ருகவே மறைந்துவிடுகின் றது. மேலுள்ள வண்டல் நிலம் சில இடங்களில் 300 அடிக்குமேல் உயரமுடைய தாய்க் காணப்படுகின்றது. தரைமட்டத்திற்குக் கீழே ஆறுகள் அருவிகள் வெட்டியுள்ளமையால் தரைத்தோற்றத்தில் அதிக வேறுபாடு உண்டு. மேற் பகுதியில் நெல் சிறிதளவுக்கே விளைவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் இழிந் தோடும் நீரைக் கட்டுப்படுத்தி நீர்ப்பாய்ச்சல் செய்யவேண்டியுள்ளது. இப் பகுதியிற் பெருந்தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கரையையடுத்துக் கீழுள்ள புதிய வண்டற் பகுதியோடு ஒப்பிடும்பொழுது குடியிருப்புக்கள் ஆங் காங்கே சீராகப் பாந்துள்ளன.
அலூசி-சோலோத் தாழ்நிலம் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் சாய்ந்துள் ளது. லூசி-சோலோ ஆறுகள் இத்திசைகளில் ஒடுகின்றன. தாழ்நிலமும் இவற் றின் பெயரால் வழங்குகின்றது. நீர்பிரிமேடு மென்சாய்வுடையதாய்த் தெளிவற் அறுக் காணப்படுகின்றது. ஆறுகள் சிக்கலான மியாந்தர் வளைவுகளையும் சேற்று நிலங்களையும் ஏரிகளையும் (ஏரிகளில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன) கொண் டுள்ளன (படம் 77). பெரும்பகுதியில் நெல் பயிரிடப்படுகின்றது. மேலே வெளித் தோன்றிக் காணப்படும் சுண்ணக்கல் மேடுகளில் தேக்குக் காடுகள் பரந்துள் ளன. தாழ்நிலத்தில் சோலோ ஆற்றைச் சார்ந்து மட்டான குடித் தொகை உண்டு; ஆற்றையடுத்துக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன.
மெராபிக்குக் கிழக்கில் எரிமலைகளுக்கிடையிலுள்ள பாகங்களில் வண்டற் படி வுகள் படிந்துள்ளன. இவை மக்களுக்கு முக்கியமாக உள்ளன. யாவா மக்களின் பண்பாட்டு இயல்புகள் பாரம்பரியக் கொள்கைகள் என்பன இப்பகுதிகளிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தன. செறிவான பயிர்ச்செய்கையை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதிகளில் இராசதானிகள் வளர்ச்சிபெற்றன :
(அ) சுரகார்த்தா வடிநிலம்-இது சோலோப் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி யாகும்; மொாபி, லாவூ எரிமலைகளுக்கிடையில் அமைந்துள்ளது. ஆறு களினல் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. செறிவான பயிர்ச்செய்கை இங்கு நடைபெறுகின்றது. நிலம் படிகளாக அமைக்கப்பட்டு நெல்லும் கரும்பும் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி அதிக வருவாயைக் கொடுக்கும் ஒரு பகுதியாகும். மொாபியிலிருந்து காலத்துக்குக் காலம் சாம்பர் பரவுவதனல் மண் இயல்பாகவே வளம்பெறுகின்றது (படம் 73).
(ஆ) மடியூன் வடிநிலம்- இது லாவூவுக்கும் விலிஸ்-கெபேக்தேக்கும் இடை யிற் காணப்படுகின்றது. ஒடுக்கமாகவும் தட்டையாகவும் இருப்பதனல் நி&லயான நீர்ப்பாய்ச்சல் வசதியோடு கூடிய நெல் வயல்கள் அமைக்கப் பட்டுள்ளன. லாவூவின் வடிநிலச் சாய்வில் 3,000 அடிவரை படிக்கட்டு வயல்களும் அமைக்கப்பட்டுள்ளன. வடிநிலத்தின் தென் ஓரத்தில் அடையற் படைகளால் அமைந்த சுவர் போன்ற தொடர் காணப்படு

Page 142
254 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கின்றது. வடக்கில் சோலோ ஆறு ஓடுகின்றது. வடக்கிலுள்ள அடை யற்படைகளாலான தொடருக்கூடாகவுள்ள ஒடுங்கிய இடுக்குக்கு முன்பு மடியூன் ஆறு சோலோ ஆற்றேடு இணைகின்றது.
(இ) கேதிரி வடிநிலம்-சுரகார்த்தா மடியூன் தாழ்நிலங்களோடு தொடர்பற் றிருக்கும் கேதிரி வடிநிலம் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பொப் போ சிபெலொற் சுண்ணப்பீடத்து அடிவாரத்தில் மேற்பகுதி காணப் படுகிறது; ஒடுங்கிய இப்பகுதி ஆாலுங்காகுங்குச் சமநிலம் எனப்படும் கிழ்ப்பகுதி கேதிரிப் பட்டினத்திற்குக் கீழே காணப்படுகின்றது. வடக் கிலும் கிழக்கிலும் அகன்றுள்ள இப்பகுதி யாவாவில் மிகவும் வளமான பகுதியாகும் , நெல்லும் கரும்பும் பெருந்தொகையாக விளைவிக்கப்படு கின்றன. இதனைச் சார்ந்துள்ள மலைச்சாய்வுகளிலும் படிக்கட்டு வயல் கள் அமைக்கப்பட்டுள்ளன. வடிநிலத்தின் கிழக்கு வளைவுப் பகுதி பிரந் தஸ் சமநிலம் எனப்படும். இது மதுராத் தொடுகடல்வரையும் பரந்துள் ளது. கீழுள்ள புதிய வண்டற்படிவுகளைச் சூழ மீன்குளங்கள் காணப் படுகின்றன.
(ஈ) மாலாங்கு வடிநிலம்-மத்திய பிரந்தஸ் சமநிலத்தின் மூலம் இது கேதிரி வடிநிலத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. இடையிலுள்ள ஏனைய எரி மலை வடிநிலங்களைப் போன்று இது தெற்கில் அகன்றதாயில்லே. இது ஒருகாற் பழைய எரிவடிநிலமாக (பாண்டுங்கு) இருக்கலாம். இதன் மேற்பரப்பு 1,200 அடி உயரத்தில் குழிவாக அமைந்துள்ளது. இந்த வடிநிலத்திலிருந்து தென் கரைக்குப் போகக்கூடிய பாதை இல்லை. வடக்கில் மதுராத் தொடுகடல்வரையும் நேரடியாகச் செல்லும் புகை யிரதப் பாதை தெருப்பாதை என்பனவும் குத்தான சாய்வுகளுக்கூடா கச் செல்லவேண்டியுள்ளது.
ரெம்பாங்கிலும் மதுராவிலுமுள்ள சுண்ணக்கற்பீடம்
வட கரையைச் சார்ந்து ரெம்பாங்கிலும் மதுராவிலும் காணப்படும் சுண்ணக் கற்பாறைகள் கிழக்கு யாவாவின் கரைப்பகுதி மேற்கிலுள்ளதிலும் பார்க்க வேறுபட்டிருக்கக் காரணமாக உள்ளன. திணிவாகவுள்ள இப்பாறைகள் தென் கரையிலுள்ளவற்றைப் போன்று "காசித்துத் ” தன்மையைக் கொண்டுள்ளன. (அ) செம்பாங்கு-போஜெனெகோரோக் கடற்கரையைச் சார்ந்து ஒடுங்கிய வண்டற் சமநிலம் காணப்படுகின்றது. சுண்ணக்கற்குன்றுகள் ஓங்கல் கள் போன்று வடக்குநோக்கி அமைந்துள்ளன. செம்பாங்குச் சுண்ணக் கற் பகுதியிற் பெரும்பகுதி 900 அடிக்கு மேற்பட்டுள்ளது. இங்குத் தேக்குக் காடுகள் காணப்படுகின்றன. செம்பாங்கின் தெற்கில் நிலநெய் வயல்களும் உண்டு. சுண்ணக்கற்றிணிவின் அகன்ற பாகம் நடுவிற் காணப்படுகின்றது. புரொண்டாங்கிற்கு அண்மையில் இதன் அகலம்
இரண்டு மைலாகும். இங்குச் சுண்ணக்கற்பாறைகள் கடற்கரைக்கு

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 255
மிக அணித்தாகப் பரந்துள்ளன. சுண்ணக்கற் பகுதி பொதுவாக மக் கள் வாழ்க்கைக்கு ஏற்றதாகவில்லை. எனினும் பல தெருக்களும் புகை யிாதப் பாதைகளும் இதனூடாகச் செல்லுகின்றன.
(ஆ) சுண்ணக்கற்பாறைகள் மதுராவிற் பரந்திருக்கும் பகுதியில் வண்டல் நிலம் தொடர்பற்றுக் காணப்படுகின்றது. குத்தான சுண்ணக்கல் ஓங் கல்களிடையிற் சிறிதளவில் வண்டற் படைகள் பரந்துள்ளன. மதுரா வில் 800 அடி உயரத்திற் சுண்ணக்கற்றிணிவு தட்டையாகப் பரந்துள் ளது. அலைவடிவான தரைத்தோற்றம் களிப்படைகள் உள்ள இடங்க களிற் காணப்படுகின்றது. தீவின் மத்தியில் நீளப்போக்கிலுள்ள தாழ் வான பகுதியில் இத்தகைய நிலத்தோற்றம் உண்டு. தாழ்வான பகுதி யாக விருந்தும் ஆறுகள் தீவுக்குக் குறுக்கே வடக்குத் தெற்காக ஓடு கின்றன. மதுராப் பகுதியிற் பெரும்பாகம் தரிசுநிலமாக உள்ளது. கிழக் குப் பருவக்காற்று வறட்சி காரணமாக இலையுதிர் தாவரவகைகளே உண்டு. தென்கரையைச் சார்ந்துள்ள வண்டல் மண் கொண்ட மூன்று சிறிய பகுதிகளிலேயே பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. கடற்கரை யில் உப்பு விளைவித்தலும் குளங்களில் மீன்வளர்த்தலும் இங்கு முக்கிய தொழில்களாகவுள்ளன.
ஆறுகள்
யாவாவில் மூன்றிலிரு பகுதியில் ஆறுகள் வடக்கு நோக்கி ஓடி யாவாக் கடலில் விழுகின்றன. இவை இவ்வாறு ஓடுவதற்கு நீர்பிரிமேடு அதி தெந்கில் அமைந்திருப்பதே காரணமாகும். யோக்யக்கார்த்தாவிலிருந்து மொகோமேரு வரையும் நீர்பிரிமேடு இந்து சமுத்திரத்திலிருந்து சில மைல் தூரத்திற் காணப் படுகின்றது. எளிதான அமைப்பையுடைய ஆறுகள் சிக்கலானமுறையில் மாற்ற மடைந்திருப்பதற்குப் பின்வரும் நிலைமைகள் காரணமாக உள்ளன : (அ) எரி மலைகளிலிருந்து ஓடும் ஆாைவடிகால்கள் ; (ஆ) பழைய ஏரிவடிநிலங்களும் மத் திய தாழ்வுப் பகுதியும், ஆறுகள் வடக்குத் தெற்காக ஓடுவதை இவை தடை செய்கின்றன ; (இ) கிழக்கு மேற்குப் பிளவுகளும் மடிப்புத் தொடர்களும்; ஆறு கள் தடைப்பட்டு அளியடைப்புத் தன்மையைப் பெற இவை துணைசெய்கின்றன. யாவாவில் மிகவும் நீளமான ஆறுகள் மிக அகன்ற மத்திய கிழக்குப் பகுதியிற் காணப்படுகின்றன. சோலோ ஆறு 600 சதுரமைலுக்கு மேற்பட்ட பகுதியை அடக்கியுள்ளது. பிரந்தஸ் ஆறு 340 மைல் நீளமுடையது. இது எல்லாத் திசை களிலும் வளைந்து ஓடுகின்றது. யாவாவில் ஒடும் ஆறுகளில் நீர் பருவத்திற்குப் பருவம் கூடிக்குறைந்து காணப்படுகின்றது. இதனைப் பொறுத்தே கடற்கரையிற் படிவு ஏற்படுகின்றது. ஒற்முேபர்-மே காலத்தில் மழைவீழ்ச்சி அதிக மாகும். இக்காலத்திலேயே ஆறுகளில் நீரும் அதிகமாகும். பெருமழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதுண்டு. சிறந்த வெள்ளத்தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டும் வெள்ளப் பெருக்குச் சிலசமயங்களில் ஏற்படு கின்றது. மே-செத்தெம்பர் வறண்ட காலமாகும். கிழக்கு யாவாவில் வறட்சி அதி

Page 143
256 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கமாகும். ஆறுகளில் நீர் குறைவாயிருக்கும். நிலம் வறண்டு வெடித்துக் காணப்
படும். இதனுல் மழைவீழ்ச்சியின்போது மண் சடுதியாக அரித்துச் செல்லப்படு
கின்றது. மாண் ஆறு இரண்டு நூற்முண்டில் அதன் வடிநிலத்தை அரித்த அள
வுக்கு யாவாவிற் சில ஆறுகள் அவற்றின் வடிநிலங்களைப் பெருமழை ஏற்படும்
ஒரு நாளில் அரித்துவிடுதல் கூடும். ஆறு கொண்டு செல்லும் படிவுகள் வட சம நிலத்தில் அணைகளாகவும் படிகின்றன.
காலநிலை
தென்னரைக்கோளத்திலுள்ள யாவாத்தீவில் தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிற்போலன்றிக் காற்றுக்கள் வேறு திசைகளிலிருந்து வீசுகின்றன. வட அயனக் காற்று இங்கு வடமேற்குக் காற்ருகவும் விசுகின்றது. ஒற்முேபர் முதல் மேவரையும் மத்திய கோட்டு மழைவீழ்ச்சி ஏற்பட இக்காற்றே காரணமாகும். யாவாவில் இது மழைக்காலமாகும். தரைத்தோற்ற வேறுபாடு மலைத்தொடர்க ளிலும் பார்க்க எரிமலைக் கூம்புகள் காரணமாக ஏற்படுவதனுல் மழையொதுக் குத்தன்மை மிகவும் குறைவாகும். தென் அயனக் காற்று தென் கிழக்குக் காற் முகவோ, கிழக்குக் காற்றகவோ வீசுகின்றது. வெப்பமான காற்முகவிருப்பத ணுல் இக்காலத்தில் கிழக்கு யாவாவில் வறட்சி அதிகமாகும் (படம் 74).
மேற்கிலுள்ள மலைப்பகுதியில், குறிப்பாகத் தென் பாகத்தில் வறட்சி நிலைமை ஒரளவுக்குக் குறைவாகும். சடுதியான இடிமின்னற்புயலோடு சேர்ந்து மழை விழ்ச்சி ஏற்படுகின்றது. வடக்கில் திசம்பர் மாதத்தில் உயர்மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. தெற்கில் உயர் மழைவீழ்ச்சி மேயிற் கிடைக்கின்றது. வறண்ட பருவத்திற் குரிய ஒளி அதிகமாகக் கிடைக்கின்றது. செறிவான பயிர்ச் செய்கைக்கு இது துணைசெய்கின்றது. வருட மழைவீழ்ச்சியில் அதிக வேறுபாடு
யாவா : சராசரி மழைவீழ்ச்சி (அங்குலம்)
மழை நாள் (.02 அங் சன பெ மா எப் மே யூன் யூலை ஒக செத் ஒத் நவ திச|மொத்
மேல்)
யக்கார்த்தா
(26 அடி) 38 11.9 13.4 8.0 5.6 4.1 3.7 2.6 1.6 2.8 4.5 5.7 7.6 715 பாகுரூலான்
5,6 ,6.3 2.5 0.8 0.3 0.2 l 2.3 3.5 5.2 8.0 11.8 9.6 .94 (كالإع 16) தொசாரி
(5,692 அடி) 142 12.4 14.6 10.8 6.9 4.6 3.3 1.5 1.1 1.0 3.4 7.8 11.8 79.2 பாண்டுங்கு
(2,395 அடி) 146 7.6 7.7 9.29.2 5.2 3.7 2.5 2.2 3.5 6.6 9.2 8.7| 75.3
'உண்டு. பன்தமில் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 160 அங்குலத்திற்கு மேலாக உள்ளது. கிடக்கிலுள்ள் செரிபொன் சமநிலத்தில் மழைவீழ்ச்சி வருடத்தில் 40

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா
257
ulin l4,
فسه في أشهر} أي: (1) نال اللاتF، له }.

Page 144
258 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
அங்குலத்திற்கும் குறைவாகும். வட கிழக்குச் சமநிலத்தில் வருடத்தில் 40 அங் குலமுதல் 80 அங்குலம் வரை மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது.
காடுகள்
யாவாவில் ஏறத்தாழ நாலிலொரு பகுதியிற் காடுகள் காணப்படுகின்றன (படம் 75). குடியடர்த்தி மிகவும் அதிகமாக இருத்தலினுற் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடங்களிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. வர்த்தகத்தைப் பொறுத்த வரையில் தேக்குச் செய்கை முக்கியமாகும். ரெம்பாங்கு, சமராங்கு, மடியூன், கேதிரி முதலிய பகுதிகளிற் சுண்ணப் பாறைகளிலிருந்து அமைந்த நீருட்புகத்தக்க வளமற்ற மண்ணில் தேக்குச் செய்கை நடைபெறுகின்றது. தேக்கு மரங்கள் பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைக்காகவே பய்ன்படுத்தப் படுகின்றன. இதனுல் யாவாவின் தேக்குமா ஏற்றுமதியில் அதிக வீழ்ச்சி காணப்
^கின்றது.

அத்தியாயம் 14
கிழக்கு இந்தியத் தீவுகள் மேற்குத் தீவுத்தொடர் : யாவாவின் பண்பாட்டு,
சமூக இயல்புகள்
கடந்த மூன்று நூற்முண்டுக் காலத்தில் யாவாவின் பயிர்ச்செய்கை முறை கள் டச்சுக்காரர் புகுத்திய பணப்பயிர்ச்செய்கையோடு தொடர்புடையனவா கக் காணப்படுகின்றன. நாட்டில் முன்பு வழக்கிலிருந்த பயிர்ச்செய்கைக்குப் பதிலாகப் பணப்பயிர்ச்செய்கை தொடங்கப்பட்டது. ஐரோப்பியரின் குடி யேற்ற நாட்டாட்சிக்காலத்தில் யாவாவில் கணிப்பொருள் எடுப்பதிலும்பார்க்க ஏற்றுமதிக்கான விவசாயப் பொருள்களை விளைவித்தலே முக்கிய நோக்கமாக இருந்தது. இத்தகைய விவசாயப் பொருள்களை ஐரோப்பியரின் பெருந்தோட் டங்கள் மூலமாகப் பெறுவதிலும்பார்க்க உள்நாட்டு விவசாயிகள் மூலம் பெறு வதே சிறந்தமுறை எனவும் கருதப்பட்டது. எனினும் ஐரோப்பியரின் பெருந் தோட்டங்கள் பின்பு படிப்படியாக அமைக்கப்பட்டன. யாவாவிற் பயிர்ச் செய்கை பல்வகையினதாகவும் செறிவானதாகவும் அமைய டச்சுக்காரரின் பயிர்ச்செய்கை முறைகள் துணைசெய்தன. ஐரோப்பாவில் டச்சுக்காரர் மேற். கொள்ளும் செறிவான தோட்டச் செய்கை முறைகள் யாவாவில் அயனப் பகு கிக்கு ஏற்றமுறையில் விருத்திசெய்யப்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளில் இதற்கு ஒப்பான பயிர்ச்செய்கை இல்லையென்றே சொல்லலாம். யாவாவில் மண்வகைகள் சிறப்புடையனவாயிருந்ததே இத்தகைய பயிர்ச் செய்கை விருத்தியடையக் காரணமாகும். மலைத்தொடர்களிடையிலுள்ள மண்ணும் கரைப்பகுதியில் ஆறுகள் கொண்டுவந்து படியவிட்ட வண்டலும் எரிமலைச் சாம்பரிலிருந்து அமைந்தனவாகையால் மிக்க வளமுடையன. எரி மலைச் சாம்பரிலிருந்து சிறந்த வளமுடைய மண்வகைகள் அமைகின்றன. எரி மலைகளிலிருந்து காலத்திற்குக் காலம் படிவுகள் நிகழ்வதனற் புதிய மண்வகை கள் அமைகின்றன. புதிய படிவுகள் காலத்திற்குக் காலம் ஏற்படுவதை மொா பிச்சாய்விற் காணலாம். இங்குத்தான் பயிர்ச்செய்கை மிகவும் செறிவாகக் காணப்படுகின்றது ; குடியடர்த்தியும் அதிகமாகவுள்ளது. எரிமலைக் கக்கல் எற் பட்ட காலத்தில், நிகழ்காற்றுக்கள் இங்கே சாம்பலைப் படிவித்துள்ளன. காற் றுப்போக்குப் பக்கங்களில் படிவுகள் குறைவாகையாற் பயிர்ச்செய்கை செறி வற்றதாயும் குடியடர்த்தி குறைவாகவும் காணப்படுகின்றன (படம் 73). அடிக் கடி படிவுகள் ஏற்படும் பகுதிகளே மண்வளம் குன்முத பகுதிகளாகும். எரி மலைகளின் கூம்புகளையடுத்தே சாம்பர் முதலியன அதிகமாகப் படிகின்றன. எரி மலைகளிலிருந்து ஆறுகளும் வண்டலைக் கொண்டுசென்று கீழ்ப்பகுதிகளிற் படியவிடுகின்றன. ஆகவே கூம்புகளையடுத்த பகுதிகளிலும் வண்டற் பகுதிகளி லுமே செறிவான பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
259

Page 145
260
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
o
ዚJዚ...tነh T5.
器 ' 설
ලී ශ්‍රී
ଓଷ୍ବ ଐତ୍ତି జరిష్టి 8 ፄጳ 。 号
S. s བླ་སྤྱི་ 盛 添 德演· Է Տ Տ į šį $ 彗墨 ܥܸܢ ܊ $ S is SS གྱི་སྐྱི་ 翡墨歇 器。‘密 连 GES . S s S. S CS
turtaine air fia) Liugitung
பெளதிக நிலைமைகளினலும் வழக் காமுக நிலவிவந்த தன்மைகளின லும் இன்று யாவாவிற் கலப்பு வேளாண்மை சிறந்த முறையில் நடைபெறுகின்றது. சொந்தக் தேவைக்காகவும் வியாபாரத்திற் காகவும் பயிர்களை விளைவித்தல் இவ்வேளாண்மையின் முக்கிய அமிச மாகும் (படம் 76). முன்பு பெரும் தொகையான முதலீட்டையுடைய பெருந்தோட்டங்களில் ஏற்றுமதிக் காக விளைவிக்கப்பட்டுவந்த பயிர் களிற் சில படிப்படியாகச் சுதேச விவசாயிகளால் வியாபாரப் பயிர் களாக விளைவிக்கப்படலாயின. இது சுதேசப் பயிர்ச்செய்கை முறையில் ஏற்பட்ட முக்கியமான ஒரு மாற்ற மாகும். இதன் காரணமாகப் போட்டியான இரண்டு உற்பத்தி முறைகள் இடம்பெற்றன.
பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை இன்று யாவாவிற் பெரும்பாலும் அற்றுப் போய் விட்டது. பயிர்ச்செய்கை அநேகமாக நிரந்தரமான முறையில் இன்று நடைபெறுகின்றது. “தேச முறை' என்பதொன்று இங்குண்டு. இம்முறையின்படி சமுதாயப் பொது நிலம் காலத்திற்குக் காலம் குறித்த கிராமத்தவருக்கு மீளப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. முன்பு பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையாள ரிடை நிலவிய முறையை இது ஏறத்தாழ ஒத்துள்ளது. மேற்கி லுள்ள மந்தாரமான ஈரப்பகுதி தவிர அநேக நிலத்தில் வருடத்தில் இருமுறை பயிர்செய்யப்படுகின் றது. சமாராங்கு, மாலாங்கு என்
னும் பகுதிகளில் கமநிலத்திலும்
 
 
 
 
 
 

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 26 பார்க்க அறுவடை செய்யப்படும் நிலம் 50 சதவீதம் அதிகமாகும். அதிக அள வில் வருடத்தில் இருமுறை பயிர் விளைவித்தலை இது காட்டுகின்றது.
இயற்கைச் சூழலிற் பல வேறுபாடு களுள்ளமையாற் பல்வேறு 665 பான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன 8 (படம் 76). மேற்கிலுள்ள ஈரமான மேனிலங்களில் தேயிலை பயிரிடப்படு கின்றது. கிழக்கிலுள்ள குரிய ஒளி மிக்க நீர்ப்பாய்ச்சல் நிலங்களிற் கரும்பு பயிரிடப்படுகின்றது. வடக்கிலுள்ள s தட்டையான தாழ்நிலங்கள் நெற்செய் கைக்கு உவந்தனவாகும். 6. - {f' (SL f வில் ஓர் அந்தத்திலிருந்து மற்றை அந் தம்வரையும் தொடர்ச்சியாக நெல் விளைவிக்கப்படுகின்றது. ரெம்பாங்கைச் சார்ந்துள்ள சுண்ணக்கல் மேட்டுநிலத் தில் மட்டும் தேக்குச் செய்கை காணப் படுகின்றது. இங்குப் பெருந்தொகை யாக வாழும் மக்களுக்கு உற்பத்தி செய்யப்படும் நெல் போதியதாக இல்லை. இதனுல் மரவள்ளி, சோளம் முதலிய துணையுணவுப் பயிர்கள் அதிக மாகப் பயிரிடப்படுகின்றன. நெல் விளை யும் நிலத்திலும் அதிக பரப்புடைய நிலத்தில் இவை விளைவிக்கப்படுகின் I : றன. வட கிழக்குக் கரைப் பகுதி,  ே கிழக்கிலுள்ள எரிமலைகளிடையுள்ள தாழ்நிலங்கள் ஆகியவற்றிலே இப்பயிர் கள் பெரும்பாலும் விளைவிக்கப்படுகின் றன. பருப்பு வகைகளும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. அவற்றின் பரம்
ཉི་ G"
s
Š
பல் சீரானதாயில்லை. பணப்பயிர்களுள் கடந்த பல ஆண்டுகளாகக் கரும்பு முக் கிய பயிராக இருந்து வந்துள்ளது. - - - செரிபொனுக்குக் கிழக்கில் ஏறத்தாழ எல்லாக் கிராமங்களிலுமுள்ள நிலை
படம் 76. யாவாவில் பெருந்தோட்டப்
8 பயிர்களின் பரம்பல் யான நீர்ப்பாய்ச்சல் வசதியுடைய நெல் விளையும் நிலங்களிற் கரும்பு பயிரிடப்படுகின்றது. கிராமப் பயிர்ச்செய்கை யிற் கரும்பு மிகமுக்கியமான பயிராக இன்று விளங்குகின்றது. ஐரோப்பியரால்

Page 146
262 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
அமைக்கப்பட்ட நிரந்தரமான பெருந்தோட்டங்களிலும் கரும்பு முக்கிய பயி ராக உள்ளது (படம் 76). கிராமப் பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் மதம், சமூகப் பழக்கவழக்கங்கள், குடும்ப வாழ்க்கைமுறை என்பன ஒன்றே டொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. இதனுற் பயிர்ச்செய்கையிற் புதிய மாற்றங்களைப் புகுத்துதல் மிகவும் கடினமாகவுள்ளது. மாற்றங்கள் ஏற் படுவதாகவிருந்தாலும் மிகவும் மந்தமாகவே ஏற்படுகின்றன. யாவாவில் டச்சு ஆட்சியினரின் நிருவாகத் திறமை காரணமாகவே சிறுநிலங்களைச் சொந்தமா கவுடையவரும் கரும்பை முக்கிய வர்த்தகப் பயிராகச் செய்துவருகின்றனர்; இதிலிருந்து ஏற்றுமதிக்காகச் சீனியும் உற்பத்திசெய்யப்படுகின்றது. ஐரோப் பியரின் பெருந்தோட்டங்களிலும் கிராம நிலங்களிலும் கரும்பு உற்பத்தி செய் யப்படுகின்றது. 1961 ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தியான 625,000 தொன் தொகையில் ஐந்திலொரு பகுதி சுதேச வேளாண்மையால் உற்பத்தி செய்யப் பட்டது. கரும்பு உற்பத்திசெய்யப்படும் சிறு தோட்டங்களின் தொகையைப் பெருக்குவது உள்நாட்டுக் கொள்கையாகவுமிருந்து வருகின்றது. சிறிது காலம் வாசனைப் பொருள்களின் ஏற்றுமதியிலும் சீனியே அதிகமாக ஏற்றுமதி செய் யப்பட்டது. வாசனைப் பொருள்களே இப்பிரதேசத்தில் முதன்முதலில் ஐரோப் பியரைக் கவர்ந்தன ; அவையே முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகவும் இருந் தன. அயனப் பிரதேசத்திலுள்ள பிற பகுதிகளைப் போன்று இப்பகுதியிலும் சந்தைப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விரைவாகவும் பெருந்தொகையாகவும் உற்பத்திப் பொருள் பெருகுவதனல் சந்தை வசதிகள் குறைவடைகின்றன. யாவாவின் சீனி உற்பத்தியும் இங்ங்னம் பாதிக்கப்பட்டது. சந்தை வசதி குறைந்ததனுல் சீனியின் மதிப்பும் குறைந்தது. 1961 ஆம் ஆண்டில் கரும்பு விளை விக்கப்பட்ட நிலம் 1951 ஆம் ஆண்டிற் கரும்பு விளைவிக்கப்பட்ட நிலத்தில் ஏறத்தாழ 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
யாவாவின் பருமனேடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருள்கள் முதன்மையுடையனவாக உள்ளன. எனி னும் வாழ்க்கைப் பயிர்ச்செய்கையே இவற்றிலும் பார்க்க அதிக முக்கியத்து வம் பெற்றுள்ளது. 1956 ஆம் ஆண்டில் 200 இலட்சம் ஏக்கர் நிலத்தில் உள் நாட்டுத் தேவைக்காக உணவுப் பயிர்கள் விளைவிக்கப்பட்டன. பத்திலட்சம் ஏக்கரில் மட்டுமே ஏற்றுமதிக்கான பயிர்கள் வளர்க்கப்பட்டன. ஆயினும் கிழக்கு இந்தியத் தீவுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களோடு ஒப்பிடும்பொழுது இவற்றின் ப்ெறுமானம் அதிகமாகும். ஐரோப்பியராலோ, யாவாமக்களாலோ தனிப்பட்ட முறையில் விளைவிக்கப்படும் பயிர்களெனச் சொல்லத்தக்கவை சிலவே. ஆயினும் பெரும்பாலும் யாவா மக்களால் மட்டும் பெருந்தொகையான அளவில் உற்பத்தி செய்யப்படும் முக்கிய பயிர் நெல்லா கும். கரும்பு,தேயிலை, சிங்கோன நெய்த்தால மரம் முதலியன அநேகமாகப் பெருந்தோட்டங்களிலே விளைவிக்கப்படுகின்றன. மிளகு பெரும்பாலும் உள்ளூர்க் கமக்காரர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றது. தென்னை, மரவள்ளி என்பன

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 263
சிறுநிலங்களிலும் பெருந்தோட்டங்களிலும் ஏறத்தாழச் சமமாகப் பயிரிடப்படு கின்றன. இறப்பரைச் சிறு தோட்டங்களிற் பயிரிடுவதை யாவா மக்கள் முத லில் விரும்பவில்லை. 1937 ஆம் வருடத்தில் யாவாவில் உற்பத்தி செய்யப்பட்ட இறப்பர் முழுவதுமே பெருந்தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டது. இப் பகுதியிலுள்ள பிற தீவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இத்தன்மை வேறுபட்டுள்ளது. யாவாவில் விவசாயிகள் முக்கியமான உணவுப் பயிர்களை விளை விப்பதே இதற்குக் காரணமாகும். பிற தீவுகளிற் புதிய நிலங்கள் மலிவாகக் கிடைக்கின்றன. யாவாவில் பெருந்தோட்டங்கள் பல இன்று சிறு தோட்டங்க ளாகப் பிரிக்கப்படுகின்றன.
யாவாவில் விளைவிக்கப்படும் பிரதானபயிர்கள் நீர்ப்பாய்ச்சப்படுகின்றன. இதற்காக வயல்களில் வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மண்ணரிப் பைத் தடைசெய்வதோடு மண்ணின் தன்மையைப் பேணவும் உதவுகின்றன. வரம்புகள் அமைக்கப்படாவிட்டால் இப்பகுதியில் சடுதியாகப் பெய்யும் பெரு மழை, இறுகாத மேல் மண், குத்தான சாய்வு என்பன காரணமாக மண்ணரிப்பு விரைவாக நிகழலாம். எரிமலை மேனிலங்களின் சாய்வுகளில் இறுகாத சாம்பர் காணப்படுகின்றது. இதனுல் இத்தகைய சாய்வுகளில் வயல்கள் படிக்கட்டுமுறை யில் அமைக்கப்படுகின்றன. மண்ணரிப்பைத் தடுத்து மண்வளத்தைப் பேணுவ தற்கு இது அத்தியாவசியமாகவுள்ளது. நீரைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தவும் இது துணைசெய்கின்றது. மேற்குறித்த செறிவான பயிர்ச்செய்கை முறைகள் கூடிய குடியடர்த்தி நிலைமைகளேப் பிரதிபலிக்கின்றன. யாவாவில் வாழும் விவ சாயிகள் குறைந்த வசதியைக் கொண்டிருந்தபொழுதும் அதிக திறமையுடைய வர்கள். அவர்களின் நீர்ப்பாய்ச்சல் முறைகள் பழையனவாயுள்ள பொழுதும் இன்றும் அதிக அளவுக்குப் பயன்படத்தக்கனவாயுமுள்ளன. பழைய நீர்ப்பாய்ச் சல் முறைகளினுற் கட்டுப்படுத்த முடியாத பெருக்கெடுத்தோடும் ஒழுங்கற்ற ஆறுகள் அல்லது உள்ளமைந்த ஆறுகள் காணப்படுமிடங்களில் டச்சுக்காரர் புதியமுறையிற் பெரிய நீர்ப்பாய்ச்சல் திட்டங்களை அமைத்துள்ளனர். சீமானூக் சீத்தாரும், பிரந்தஸ் முதலிய ஆறுகளிலிருந்து புதிய முறையிற் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாய்ச்சப்படுகின்றது; 27% இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் பழைய சுதேசமுறைகளினுல் நீர்ப்பாய்ச்சப்படுகின்றது.
உணவுப் பயிர்கள் விளைவிக்கப்படும் முறைகள்
உள்நாட்டு விவசாயிகள் வருடத்தில் 200 இலட்சம் ஏக்கர் நிலத்திற் பயிர்களை விளேவிக்கின்றனர். இத்தொகையில் 52 சதவீதமான நிலத்தில் நெல்லும் (ஈர நிலவகை), 25 சதவிதமான நிலத்தில் சோளமும் 18 சதவீதமான நிலத்தில் அயனப் பிரகேசக் கிழங்கு வகையும் (மரவள்ளியும் பிற கிழங்கு வகையும்) பயி ரிடப்படுகின்றன. மக்திய பசிபிக்குத் தீவுகளிற்போன்று கிழங்குவகை இங்குப் பயிரிடப்படுகின்றன. 1952 ஆம் ஆண்டின் பின்பு நிலக்கடலையும் சோயா அவரை யும் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.

Page 147
264 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
உள்நாட்டுப் பயிர்ச்செய்கையில் நெல் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள் ளது. நெற்செய்கையைக் குறிக்கும் சாவா என்னும் யாவானியச் சொல் இன்று பயிர்ச்செய்கையைப் பொதுவாகக் குறிப்பதாகவுள்ளது. நெல் உற்பத்தியில் ஏற் றத்தாழ்வு ஏற்படுகின்றபொழுதும் சாதாரணமாக வருடம் ஒன்றிற்கு மொத்தம் 40 இலட்சம் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தொகை உள்நாட் த்ெ தேவைக்கே உதவுகின்றது. உற்பத்தி செய்யப்படும் நெல்லின் தொகை பொதுவான பொருளாதார நிலைமைகளை ஒரளவுக்குப் பிரதிபலிக்கின்றது என லாம். ஏற்றுமதிப் பயிர்கள் மூலம் அதிக இலாபம் கிடைக்கும் பொழுது நெல் குறைவாக உற்பத்தி செய்யப்படுகின்றது. 1930-37 காலப்பகுதியில் சீனி ஏற்று மதியில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது கரும்பு விளைவிக்கப்பட்டுவந்த நிலத்தில் நெல் மீளவும் உற்பத்தி செய்யப்பட்டது. அக்காலப் பகுதியில் யாவா வில் நெல் உற்பத்தி செய்யப்பட்ட நிலம் வருடத்தில் 12 இலட்சம் முதல் 90 இலட்சம் ஏக்கர் வரையில் அதிகரித்தது. யாவாவின் பயிர்ச்செய்கையில் நிகழும் ஏற்ற இறக்கத் தன்மைகளை மேற்குறித்த நிலைமைகள் விளக்குகின்றன. யாவா வின் பயிர்ச்செய்கையில் இத்தகைய மாற்றம் எளிதாகச் செய்யப்படக்கூடியதா யிருப்பதோடு பயிர் நிலமும் பொருத்தமாக உள்ளது. தென் கிழக்கு ஆசியாவி லுள்ள பல பகுதிகளில் யாவாவிலுள்ள நிலைமைகள் இல்லை, அயனப் பிரதேசத்தி அலுள்ள கரும்பு விளைவிக்கும் பிறபகுதிகளிலும் பார்க்க யாவா சிறப்புடையது எனலாம் தென் கிழக்கு ஆசியாவில் மலாயா தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் பார்க்கக் கூடிய நெல் விளைவு (ஏக்கருக்கு 1,000 இருத்தல்) இங்குப் பெறப்படு கின்றது. யாவாவிலும் விளைவு இடத்துக்கிடம் வேறுபடுகின்றது ; கிழக்குப் பகு தியிலே ஏக்கருக்குரிய விளைவு மிகவும் அதிகமாகும்.
நெல் உற்பத்தியிற் பெரும்பாகம் செரிபொன் பெக்காலோங்கான் பகுதிகளி லுள்ள நன்செய்நிலங்களிலிருந்து பெறப்படுகின்றது. நெல்விளையும் மொத்த நிலத்தில் ஆறிலொரு பகுதி புன்செய்நிலமாயுளது. யோக்யக்கார்த்தா, பன்தம் தென் போகோர் ஆகிய பகுதிகளிலே இவ்வாறு புன்செய்முறையில் நெல் உற் பத்தி செய்யப்படுகின்றது. பழைய முறையைத் தழுவி நெல்விளைவிக்கப்படும் இந்நிலத்தில் நன்செய்நில நெல் விளைவில் மூன்றிலிரண்டிற்கும் குறைந்த அளவே கிடைக்கின்றது. புன்செய்நில நெல் உற்பத்தி கடந்த பத்தாண்டுக் காலத்தில் அதிகரித்தும் வந்துள்ளது. குடிப்பெருக்கம் காரணமாக உணவுப் பயிர்களுக்கு அதிக மதிப்பு ஏற்பட்டதும் நீர்ப்பாய்ச்சலுள்ள நிலம் முழுவதிலும் எலவே நெல் விளைவிக்கப்பட்டதும் இதற்குக் காரணம் எனக் கூறலாம். புன்செய் முறை யில் நெல் பயிரிடுவதனல் மண்வளம் விரைவாகக் கெட்டுவிடுகின்றது. நன்செய் முறையில் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதல்ை புன்செய் முறை நெற் செய்கையைத் தொடர்ந்து ஒரே நிலத்திற் செய்து வருவது கடினமாகும். தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிற்போன்றே யாவாவிலும் நெற் செய்கை நடைபெறுகின்றது. நிலத்தை உழுது பண்படுத்துதல், பயிரை நடுதல், அறுவடை செய்தல் என்பன பெரும்பாலும் கைகளினலே செய்யப்படுகின்றன. தானியத்தைப் பதன் செய்தலும் கைகளினலே பெரும்பாலும் நடைபெறுகின்

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 265
றது. கிறித தொகையை மட்டும் தரகர் பெற்றுச் சீனர்களுக்குச் சொந்தமாக வுள்ள ஆஃலகளில் குற்றுவிக்கின்றனர். நெல்லை அறுவடை செய்வதற்குப் போதிய தொழிலாளர் வசதி உண்டு. தேவையானபொழுது சமூகத்தவர் எல் லோருமே அறுவடையில் ஈடுபடுவதும் உண்டு. அறுவடைக்குக் கூலியாக நெல் லிற் சிறிது தொகை கொடுக்கப்படுவதுண்டு (மொத்தத் தொகையில் 10 சதவீத முதல் 20 சத வீதம் வரையில் கொடுக்கப்படுவதுண்டு). ஒவ்வோர் ஊரிலும் பயிர்ச்செய்கை சமூகத்தினர் யாவரும் கூட்டுறவு முறையில் மேற்கொள்ளும் ஒரு தொழிலாக உள்ளது. விதைநெல் சேமித்து வைத்தல் நாற்றுமேடைபோடு தல் என்பன பொது அடிப்படையில் இன்றும் நடைபெறுகின்றன. அறுவடைக் காகக் கொடுக்கப்படும் நெல்லும் கூட்டாகவே சேமித்து வைக்கப்படுகின்றது.
உள்நாட்டு வேறுபாடுகள் அதிகமாக உள்ளமையாலும் வருடம் இருமுறை பயிர் விளைவிக்கப்படுவதனலும் பயிர்த்தொழில் முயற்சி பிற பகுதிகளிலும் பார்க்கக் காலத்தாற் பரந்ததாகக் காணப்படுகின்றது. ஒற்முேபர் மாதத்தில் மேற்குப் பருவக்காற்று மழையோடு நெல் விதைக்கப்படுகின்றது. சனவரி பெப் புருவரி மாதங்களில் நாற்றுநடுதல் நிகழுகின்றது. நாற்று நட்டு 3% மாத முதல் 6 மாதம் வரையிற் பயிர் அறுவடை செய்யப்படுகின்றது. யாவா எங்கணும் சன வரி மாதத்தில் விதைப்பு மும்முரமாக நடைபெறுகின்றது. விதைப்பைப் பொறுத்தவரையில் இதுவே மிக முக்கியமான மாதமாகும். எனினும் யாவாவில் ஒவ்வொரு மாதமும் சிறிதளவுக்கு விதைப்பு நடைபெறுவதுண்டு. மே யூன் மாதங்களே முக்கியமான அஅறுவடை மாதங்களாகும். ஆனல் யாவாவில் வருடம் முழுவதுமே எங்கேனும் ஓர் மாவட்டத்தில் அறுவடை நடைபெற்றவண்ண மிருக்கும்.
யாவாவின் விளைநிலத்தில் பத்திலொரு பாகத்தில் மரவள்ளி பயிரிடப்படுகின் றது. மரவள்ளி உள்நாட்டு மக்களுக்குத் துணை உணவுப் பொருளாகவிருப்ப தோடு, ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. நெசவுத் தொழில் போன்ற தொழில் களுக்கு வேண்டிய பசை முதலியன செய்வதற்கு இது பயன்படுகின்றது. (போருக்கு முந்திய காலத்தில் உலகத்தேவையில் முக்காற் பங்கை யாவா உத வியது). பசை பிழிந்து எடுக்கப்பட்டதன் பின்பு எஞ்சிய பொருள்கள் மாடு களுக்குத் தீனியாக உபயோகிக்கப்படுகின்றன.
வி&ளநிலத்திற் காற்பாகத்திற் சோளம் பயிரிடப்படுகின்றது. யாவா மக்கள் சோளத்தை அதிகமாக உண்ணுகின்றனர். அயலிலுள்ள தீவுகளுக்கும் சோளம் ாற்றுமதி செய்யப்படுகின்றது. தீமோர்த் தீவிலே சோளம் மக்களின் பிரதான e dW van at as R.6m øMr.
1940 ஆம் ஆண்டில் யாவாவிலும் மதுசாத்தீவிலுமுள்ள நன்செய் நிலங்களில் 61 இலட்சம் தொன் நெல்லும் புன்செய் நிலத்தில் 5 இலட்சம் தொன் நெல்லும் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் மூலம் இந்த ஆண்டில் மொத்தம் 42 இலட்சம் தொன் அரிசி பெறப்பட்டது. யாவா மக்களுக்கு இத்தொகை (ஆளுக்கு 80 கிலோகிராம் அளவில்) போதியதாயில்லை. 1936-40 ஆண்டுக்காலத்தில் யாவா மக்கள் ஆண்டுதோறும் ஆள்வீதம் 86 கிலோகிராம் அளவு உணவு உட்கொண்ட

Page 148
266 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
னர். சிறந்த தர அரிசி யாவாவிலிருந்து சுமாத்திசா, செலிபீஸ், போணியோ முத லிய தீவுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்நாட்டுத் தேவைக்கு வேண் டிய குறைந்த தர அரிசி தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
யுத்தகாலத்தின் பின்பு அரிசி நிலைமை பிரச்சினை மிக்கதாகக் காணப்படுகின் றது. 1957 ஆம் ஆண்டு அரசாங்க அறிக்கைகளின்படி மொத்தம் 105 இலட்சம் எக்கர் நிலத்தில் (இது யுத்த காலத்தின் முன்பு காணப்பட்ட தொகையிலும் எட்டிலொரு பகுதி அதிகமாகும்) நெல் விளைவிக்கப்பட்டது. உற்பத்தித் தொகையும் ஆறிலொரு பங்கு அதிகரித்துக் காணப்பட்டது. ஆயினும் யாவா வின் தேவைக்கு இன்று அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. யாவாவின் பொருளாதாரத்தில் இது மாருத ஒர் அமிசமாகியுள்ளது. 1961 ஆம் ஆண்டில் 11 இலட்சம் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
ஏற்றுமதிப் பயிர்கள்
1931 ஆம் ஆண்டில் யாவா-மது ராக் தீவுகளில் ஏறத்தாழ 650,000 ஏக்கர் நிலத்தில் கரும்பு விளைவிக்கப்பட்டது. ஆனல் 1935 ஆம் வருடத்தில் இத் தொகை 65,000 ஏக்கராக வீழ்ச்சியடைந்தது. 1940 இல் தொகை மீண்டும் 240,000 ஏக்கராகப் பெருகியது; 1945 இல் கரும்புச் செய்கையே இல்லையா யிற்று. 1962 ஆம் ஆண்டில் மொத்தம் 251,000 ஏக்கர் நிலத்திற் கரும்பு விளைவிக் கப்பட்டது. கரும்பு விளைவிக்கப்படும் நிலக்கிலும் தொழிலாளர் தொகையிலும் ஏற்ற இறக்கம் ஏற்பட வெளிநாட்டு விலைவாசிகளே காரணமாயிருந்தன. சர்வ தேசக் கட்டுப்பாட்டுப் பாதிப்பும் அதற்கு ஒரு காரணம் எனலாம். எனினும் கரும்பு விளைவிக்கப்படும் முறை காரணமாகவே யாவாவிலுள்ள கிராமங்கள் அதி கம் பாதிக்கப்படாமல் தப்பின. ஈரமான தாழ்நிலங்களே கரும்புச் செய்கைக்கு ஏற்றன. இந்நிலங்களே நெற்செய்கைக்குந் தேவைப்படுவன. மூன்று வருடச் சுழல் முறைச் செய்கை இந்நிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. கரும்புச் செய்கையிலீடுபடும் ஐரோப்பியர் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் குத்தகைக்கு எடுப்பர். ஆணுல் சொந்த விவசாயிகளே கரும்பை விளைவித்தல் அறுவடை செய்தல் முதலிய தொழில்களைக் கூலிக்குச் செய்வர். இடைக்காலங் களில் அவர்கள் மிகுதியாகவுள்ள நிலங்களில் தமது தேவைக்கு வேண்டிய உண வுப் பயிர்களை விளைவிப்பர். இந்த முறையினுல் நிலத்தைப் பயனுள்ள வகையில் உபயோகிக்க வாய்ப்பு உண்டு. வெளிநாட்டுச் சீனிவிலை வீழ்ச்சியடைந்து காணப் படும் காலங்களிற் கரும்பு விளைவிக்கப்படும் நிலங்கள் வெறுமையாகக் கிடக்க வேண்டியதில்லை. அக்காலங்களில் இந்நிலங்களில் வேறு பயிர்கள் விளைவிக்கப்படு கின்றன. மேற்கு இந்தியத் தீவுகளோடு ஒப்பிடும்பொழுது இங்கு நிலைமைகள் வேறுபட்டுள்ளன. இங்குள்ள வழக்கம் அரசாங்கத்திற்குக் கட்டாயமாகப் பயிரி டும் கடந்த நூற்முண்டுப் "பண்பாட்டு முறைமையைத் ’ தழுவியுள்ளது. இந்த வழக்கத்தில்ை சமூக நிலைமைகளில் பாகிப்பு ஏற்பட்ட பொழுதும் அதிக அள வில் சீனியை உற்பத்தி செய்ய வாய்ப்புக் காணப்பட்டது. அக்காலத்தில் சீனியே

ழேக்கு இந்தியத் தீவுகள் : யாவா 267
முக்கிய ஏற்றுமதிப் பொருளாகவுமிருந்தது. யாவாவில் விளைவிக்கப்படும் பயிர்வு ளுள் சினி நீண்ட காலப் பயிராகும். ஏப்பிரில் முதல் ஒற்ருேபர் வரையுள்ள மாதங்களில் கோட்டமுதலாளியின் கண்காணிப்பில் கரும்பு நடப்படுகின்றது : 12 மாதங்களின் பின்பு அறுவடை செய்யப்படுகின்றது. கரும்பை வெட்டுதற்குத் தொழிலாளர் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். கரும்புத் தோட்டங்கள் மக் கள் அடர்த்தியாக வாழும் தாழ்நிலங்களில் உள்ளமையால் வேண்டிய தொழி லாளரைப் பெறவாய்ப்பு உண்டு. 1940 ஆம் ஆண்டிற் கரும்புச் செய்கையில் ஏறக் தாழ 60,000 தொழிலாளர் தற்காலிகமாக ஈடுபட்டிருந்தனர். கரும்பு விளைவிக்கப்படும் தாழ்நிலங்களில் கரும்பை ஆலைகளுக்குக் கொண்டு செல்வதற் காகச் சிறு புகையிரத விதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 1929 ஆம் வருடத் திற்கு முன்பு யாவாவில் 179 சீனித்தொழிலாலைகள் இருந்தன. 1940 இல் ஆலைக ளின் தொகை 47 ஆகவும் 1956 இல் 52 ஆகவும் காணப்பட்டது. 1956 ஆம் ஆண் டில் 121,000 ஏக்கர் நிலத்திலே கரும்பு விளைவிக்கப்பட்டது.
யாவாவில் பெருந்தோட்டங்கள் சிறுதோட்டங்கள் ஆகிய இருவகையான நிலங்களிலும் கரும்பு விளைவிக்கப்படுகின்றது. ஒல்லாந்தில் பீற்றுக்கிழங்குச் சீனித்தொழில் பாதுகாக்கப்பட்டிருந்ததன் காரணமாக, யாவாவில் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புச் சீனி பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. யாவாவில் விவசாயிகள் சுயமாகவும் சிறிதளவுக்குக் கரும்பை விளைவித்தனர். இதிலிருந்து குறைந்த தரமுடைய சீனி சொந்தத்தேவைக்காக உற்பத்திசெய்யப்பட்டது. பெருந்தோட்டச் சொந்தக்காரரின் ஆலைகளை இவர். கள் பயன்படுத்துவதில்லை. சுயமாக மேற்கொள்ளப்படும் கரும்புச் செய்கையி லும் அதிக விருச்சி காணப்படுகின்றது; அதற்கேற்ப உள்நாட்டுச் சீனி உட யோகமும் அதிகரித்துள்ளது. சீனித்தொழிலினது விருத்தி பெரும்பாலும் சிறு தோட்டக்காரரைப் பொறுத்ததாகவே உள்ளது. பிறபகுதிகளில் இறப்பர்ச் செய்கை சிறு தோட்டக்காரரை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பது போன்று இங்குக் கரும்புச் செய்கையும் அவ்வாறு அமைந்துவிடக்கூடிய சாத்தி யக்கூறுகள் காணப்படுகின்றன.
யுத்தகாலங்களுக்கிடையில் யாவாவின் கரும்புச் செய்கையில் அதிக மாற்றங் கள் நிகழ்ந்தன. கரும்பு விளைநிலத்திலும் இம்மாற்றங்கள் ஏற்பட்டன. 1930 ஆம் ஆண்டில் 29 இலட்சம் தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டது. இத்தொகை 1936 இல் 5 இலட்சம் தொன்னுகக் குறைந்து, பின்பு 1939 இல் 14 இலட்சம் தொன்னக அதிகரித்துக் காணப்பட்டது. 1939 இல் யாவாவிலிருந்து 5 இலட் சம் தொன் சீனி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இரண்டாவது யுத்த காலத்தின் முன்பு யாவா ஐரோப்பாவுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து வந்ததோடுமட்டுமல்லாது, ஆசிய நாடுகளுக்கும் பொருள்களை உற்பத்தி செய்தது. யுத்தத்தின் பின்பு ஆசிய நாடுகளுக்கான உற்பத்தியில் மேலும் விருத்திகாணப்பட்டது. ஆனல் யாவா 1938 இல் ஏற்றுமதி செய்த சீனி யின் தொகையில் எழிலொரு பகுதியையே 1949 இல் ஏற்றுமதிசெய்தது. யாவா வின் சீனித்தொழிலில் ஏற்பட்ட மந்தநிலைமையையும் வீழ்ச்சியையும் இது
12-CP 4217 (6819)

Page 149
268 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
காட்டுகின்றது. அயனவலயத்தில் பிற நாடுகளும் சீனியை இன்று உற்பத்தி செய்வதனல் யாவா சினியை ஏற்றுமதி செய்யவேண்டிய நிலைமை முற்முக ஏற் படாதும் போகலாம் (1962 இல் 595,000 தொன் ஏற்றுமதி செய்யப்பட்டது).
யாவாவில் வெவ்வேறு காலங்களிற் கோப்பியும் தேயிலையும் பெருந்தோட்டங் களில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. கோப்பியின் வர்த் தக நிலைமை பின்பு அதிகமாகப் பாதிக்கப்பட்டதோடு கோப்பிச் செடியும் கொடிய நோயினுல் தாக்கப்பட்டது. மண்வளத்தையும் விரைவாகப் பயன் படுத்திவிடும் தன்மையும் கோப்பிச் செடிக்கு உண்டு. யாவாவின் பண்பாட்டு முறைமையோடு தொடர்புடையதாகக் கோப்பிச் செய்கை வலிந்து புகுத்தப் பட்டபின், இன்று சிறுதோட்டங்களிலே இச்செய்கை நடைபெறுகின்றது. 1961 ஆம் ஆண்டில் 45,000 தொன் கோப்பி மட்டுமே உற்பத்தி செய்யப்பட் டது. யாவாவில் தேயிலைச் செய்கை ஆரம்பிக்கப்படுவதற்குப் பிரித்தானியரின் முயற்சியே காரணமாகும். இங்கு மென்குளிர்த்தன்மையையும் மழைவீழ்ச்சி யையும் கொண்ட பிரெயாங்கர் உயர்நிலத்தில் தேயிலை பயிரிடப்படுகின்றது. மிகக் கூடிய வறட்சியுடைய மாதத்திலும் 20 நாட்களுக்குக் குறையாத மழை யையுடைய பகுதிகளிலே தேயிலைச் செடி வளரக்கூடியதாயுள்ளது. தேயிலைச் செய்கை காரணமாக டச்சுக்காரரின் பழைய கோப்பி வியாபாரம் அருகிவிட் டது; அவ்விடத்தை அநேகமாகத் தேயிலை வியாபாரம் பெற்றுக்கொண்டதெ னக் கூறலாம். 1941 இன் முன்பு வருடத்தில் ஏறத்தாழ 85,000 இருத்தல் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இத்தொகையில் 15 சத விதத்தைச் சிறு தோட்டக்காரர் உற்பத்தி செய்தனர். அவர்கள் உற்பத்தி செய்த தேயிலை, பதன் செய்யப்படுவதற்காகப் பெருந்தோட்டக்காரருக்கு விற்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டில் யாவாவில் மொத்தம் 39,000 தொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட் டது. ஆனல் அவ்வாண்டில் 18 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. 1941 இற்கு முன்பு 243 தொழிற்சாலைகள் காணப்பட்டன. தனிப்பட்டோர் தொழிற் சாலைகளை மீண்டும் மெல்ல மெல்ல நிறுவியுள்ளனர்; கூட்டுறவு முறையில் இத் தொழிற்சாலைகள் தேயிலையைப் பதன் செய்துவருகின்றன. தேயிலை ஏற்றுமதி யிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்த உற்பத்தியில் மூன்றிலிரண்டு பகுதி முன்பு ஐக்கிய இராச்சியத்திற்கும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனல் 1959 ஆம் ஆண்டு உற்பத்தியில் அரை வாசிக்கு மேற்பட்ட தொகை தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கிழக்குச் சாவாப் பகுதியிற் சிறு தோட்டங்களில் புகையிலையும் விளைவிக்கப்படுகின்றது. 1962 இல் 400,000 தொன் நிலக்கடலை யும் உற்பத்தி செய்யப்பட்டது.
சிங்கோனுச் செய்கையும் ஏற்றத்தாழ்வுடைய வளர்ச்சியையே கொண்டுள் ளது. சிங்கோன மரப்பட்டையிலிருந்து குயினின் மருந்து உற்பத்தி செய்யப் படுகின்றது. குறித்த கூட்டத்தினர் மட்டுமே இதனைக் கடந்த நூற்றண்டின் பிற்பகுதியில் இறக்குமதி செய்து வந்தமையால் வர்த்தக நிலைமைகள் வாய்ப் பாக அமையவில்லை. பின்பு சிங்கோனுச் செய்கை படிப்படியாக வளர்ச்சி

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 269.
யடைந்து வந்துள்ளது. பாண்டுங்கிற்கு அண்மையிலுள்ள பெங்காலென்கான் மேட்டுநிலத்தில் 3,000 அடிக்கும் 6,500 அடிக்கும் இடைப்பட்ட பகுதியிற் சிங்கோன மாங்கள் சிறப்பாக வளர்கின்றன. இன்று வாசனைப் பொருளாகச் சிங்கானே சிறிதளவுக்கு உற்பத்திசெய்யப்படுகின்றதாயினும் குயினின் ஏற்று மதி முற்முகவே நின்றுவிட்டது.
a languadala *šSA o o
நெல்லி?ள சேற்று 3 & Rலர்கள * : జిష్టి ఊత్తా
படம் 77. சோலோ ஆற்றுமுகப்பகுதியின் நிலப்பயன்பாடு
யாவாவில் வர்த்தகத்திற்காக வாசனைப்பொருள்கள் இன்று அதிகமாக விளை விக்கப்படுவதில்லை. உள்நாட்டுத் தேவைக்கு வேண்டிய கிராம்பு போன்ற வாச னைப் பொருள்களைச் சான்சிபாரிலிருந்து மலிவாக இறக்குமதி செய்துவிட லாம். மத்திய யாவாவில் 3,700 ஏக்கர் (1961) நிலத்தில் கொக்கோவும் விளை விக்கப்படுகின்றது. டச்சு ஆட்சியினர் ஆதரித்துவந்த அவுரிச் செடிச் செய்கை யும் இன்று அருகிவிட்டது. யாவாவின் நெசவுத் தொழிலுக்குத் தேவையான செயற்கை நீலம் இன்று இறக்குமதி செய்யப்படுகின்றது. தென்னை முக்கிய வியாபாரப் பயிர்களுள் ஒன்முக விளங்குகின்றது. யாவாவிற் சிறுதோட்டங் களில் தென்னை அதிகமாக விளைவிக்கப்படுகின்றது; இப்பொழுது ஏறத்தாழ இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலத்தில் தென்னை வளர்க்கப்படுகின்றது. 1956 ஆம் ஆண்டில் 189,000 தொன் கொப்பரா ஏற்றுமதி செய்யப்பட்டது; 1958 இல் 44,000 தொன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. :

Page 150
270 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
சுமாத்திராவிலும் பார்க்க யாவாவிலே இறப்பர் ஒரு முக்கிய பெருந் தோட டப் பயிராக அமைந்துள்ளது. 1,500 அடி உயரத்தில் பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறப்பர்ச் செய்கை அதிக முதலீட்டைக்கொண்ட ஒரு தொழிலாகும். இறப்பரின் விலை குறையும் காலங்களிற் கிழக்கு இந்தியத் தீவு களின் சிறுதோட்டங்களோடு யாவாவின் பெருந்தோட்டங்கள் போட்டியிட முடியாதனவாய் விடுகின்றன. யாவாவில் விளைவிக்கப்படும் பிறபயிர்களோடும் யாவாவின் இறப்பர் போட்டியிடக்கூடியதாயில்லை. யாவாவிலும் மதுராவிலும் 14 இலட்சம் ஏக்கர் நிலத்தில் பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகையில் 41 சதவீதமான நிலத்தில் இறப்பரும் 19 சதவீதமான நிலத் தில் தேயிலையும், 17 சதவீதமான நிலத்தில் கோப்பியும் விளைவிக்கப்படுகின் றன. 1937 ஆம் ஆண்டில் யாவாவில் 90,000 தொன் இறப்பருக்கு மேல் உற் பத்தி செய்யப்பட்டது. 1956 இல் 107,000 தொன் இறப்பர் உற்பத்தி செய்யப் பட்டது. இந்த ஆண்டையடுத்த காலத்திற் பெருந்தோட்டங்களில் இறப்பர் உற்பத்தி செய்வதிற் பல பிரச்சினைகள் காணப்பட்டன.
வயல்களை உழுவதற்கும் வண்டிகளை இழுப்பதற்கும் மாடுகள் தேவையாகவுள் ளன. இக்காரணங்களுக்காக மாடுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. யாவா மதுராத் தீவுகளில் 50 இலட்சம் மாடுகளுக்கு மேல் (40 சதவீதம் எருமைக ளாகும்) வளர்க்கப்படுகின்றன ; குறித்த சில பகுதிகளில் மாடுகளின் எண் ணிக்கை அதிகமாகும். யாவாவில் சதுர மைலுக்கு 100 மாடுகளுக்கு மேலும் மதுராவில் 300 மாடுகளுக்கு மேலும் வளர்க்கப்படுகின்றன; இங்கே சில மாவட் டங்களில் ஐரோப்பாவிலுள்ள மாடு வளர்க்கும் பகுதிகளின் அடர்த்தியை யொத்த அடர்த்தி காணப்படுகின்றது. மேற்கிலுள்ள ஈரமும் மந்தாரமுள்ள பகுதியில் எருமைகள் வளர்க்கப்படுகின்றன. சாதாரண இழுவைக்கு இவை உபயோகமாகவுள்ளன. கிழக்கிலுள்ள நெல் விளைவிக்கப்படும் பகுதியில் எருத்து மாடுகள் அநேகமாக வளர்க்கப்படுகின்றன. மாடுவளர்த்தல் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறு தொழிலாக உள்ளது. பன்தம், பிரெயாங்கர் ஆகிய பகுதிகளிற் பெருந்தொகையாக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மாட்டுவியா பாரத்திற்கு மதுரா ஒரு முக்கிய மையமாகவுள்ளது. அயலிலுள்ள தீவுகளில் இழுவைக்காகவும் இறைச்சிக்காகவும் வருடத்தில் 90,000 மாடுகள் இங்கிருந்து ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.
கைத்தொழிலாக்கம்
பழைய குடிசைக் கைத்தொழில்களை விருத்திசெய்வதன்மூலம் இந்த நூற் முண்டிற் கைத்தொழிற்றுறையில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யப்பானிற் போன்று கிராமங்களிலும் கைத்தொழில்கள் விருத்திசெய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய மாதிரித் தொழிற்சாலைகளிற் பயிர்ச்செய்கை நடை பெருத காலங்களில் கமத்தொழிலாளரின் துணையோடு சீனி, நெல், மரவள்ளி என்பன பதன் செய்யப்படுகின்றன ; பருத்தி நெசவுத் தொழிலும் நடைபெறு கின்றது. தயர் உட்பட்ட இறப்பர்ப் பொருள்களும் 70 இற்கு மேற்பட்ட

கிழக்கு இந்தியத் தீவுகள்: யாவா 27
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மதுராவிற் பெருந்தொகை யாக உப்பு எடுக்கப்படுகின்றது. இங்குள்ள விரைவாக நீராவியாகும் நிலைமை கள் இதற்குச் சாதகமாகவுள்ளன. யாவாவில் உப்புக்குப் போதிய சந்தை வசதியுமுண்டு. தொழில் நுட்பத்துறையிற் பிரச்சினைகளும் வெளிநாட்டுப் போட்டியும் உள்ளபொழுதும் கைத்தொழிலில் நிறைவுத்தன்மைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த நோக்கத்தோடே நெசவு ஆலைகள் அதிகமாக அமைக்கப்பட்டுவருகின்றன. 1962 இல் 75 நெசவு ஆலைகள் 600 இலட்சம் யார் துணியை உற்பத்தி செய்தன; சாரம், துவட்டி ஆகிய ஆடை வகைகள் விசேடமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலைநாட்டு முறையிலமைந்த கணிப்பொருளெடுக்குந் தொழில்களும் சில வுள. யோக்யக்கார்த்தாவிலும் பிரெயாங்கரிலும் மங்கனிசுத்தாது எடுக்கப் படுகின்றது. பல எரிமலைவாய்களிலிருந்து (காவா பூதியிற் போன்று) கந்தக மும் சுரபாயாவிலிருந்து அயடினும், பிரெயாங்கரிலிருந்து சீனக்களியும் பெறப்படுகின்றன. ரெம்பாங்கிலும் சுரபாயாவிலுமிருந்து மாதத்தில் ஏறத் தாழ 5,500 தொன் பெற்முேலியம் உற்பத்திசெய்யப்படுகின்றது. யாவாவின் தேவைக்குரிய பெற்ருேலியம் செப்பு வோனக்குரோமோ, காப்புவான் (புளோரா) என்னுமிடங்களில் சுத்திசெய்யப்படுகின்றது. ஆயினும் யாவாவின் தொழில்களுட் கணிப்பொருளெடுத்தல் சிறிய இடத்தையே பெஜ்றுள்ளது.
பண்பாட்டு முறைமை
போதிய அளவில் விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடிய முறையை யாவாவில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியார் அமைக்கமுடியாத நிலையில் டச்சு ஆட்சியினர் பண்பாட்டு முறைமையை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இது யாவாவின் பயிர்ச்செய்கையில் மிக்க தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. 1830 ஆம் ஆண்டிற் பண்பாட்டு முறைமை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு 1870 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. குடியேற்ற நாடொன்றில் இத்தகைய முறைமை மேற்கொள்ளப்பட்டது அசாதாரண நிகழ்ச்சியாகவேயுளது. இந்த முறைமை நடைமுறையிலிருந்த காலத்தில், யாவாவிலுள்ள விவசாயிகள் தமது விளைநிலத் தில் ஒரு பாகத்தில் டச்சு ஆட்சியினரின் மேற்பார்வையிற் குறிப்பிட்ட ஏற்று மதிப் பயிர்களைக் கட்டாயமாக விளைவிக்குமாறு பணிக்கப்பட்டனர். கரும்பு கோப்பி, அவுரி போன்ற ஏற்றுமதிப்பயிர்கள் விளைவிக்கப்பட்டன. இவை டச்சு ஆட்சியினரால் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பண்பாட்டுமுறை மையை நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் மூலம் டச்சு ஆட்சியினர் யாவா வின் குடியேற்ற நாட்டு வரலாற்றில் முதன் முதலாக மிகப் பெரும் வருவாயைப பெற்றனர். இந்த முறைமை காரணமாக யாவா மக்கள் காலப்போக்கிற் செறி வான புதிய பயிர்ச்செய்கை முறைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. ாாறுமதிக்காகப் பயிர்களைப் பெருந்தொகையாக விளைவிக்கும் முறையையும் அவர்கள் அறிந்து கொண்டனர். ஏற்றுமதிப் பயிர்களை விளைவித்தமையால் மண் வனம் விரைவாகப் பாதிக்கப்பட்டது. வாழ்க்கைப் பயிர்களை விளைவித்தற்கு

Page 151
272 தென்கிழக்கு ஆசிய நாடுகள் வேண்டிய நேரமும் விவசாயிகளுக்குக் குறைவாகவிருந்தது. இக்காரணங்க ளோடு அக்காலக் கருத்துக்கும் ஒருப்பாடுடையதாகப் பண்பாட்டு முறைமை அமையவில்லை. இதனுல் யாவாவில் மட்டுமல்லாது ஐரோப்பாவிலும் இந்த முறை மைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இக்காரணத்தினுல் இந்த முறைமை பின்பு கைவிடப்பட்டது. பண்பாட்டு முறைமை நடைமுறையிலிருந்த காலத்தில் யாவாவின் விளைநிலத்தில் ஐந்து சதவீதம் மட்டுமே இதனற் பாதிக்கப்பட்டது. எனினும் இந்த முறைமைகாரணமாக யாவாவிற் புதிய வியாபாரப் பயிர்கள் விளைவிக்கப்பட்டன. பண்பாட்டு முறைமை ஒழிக்கப்பட்ட பின்பும் அதனடிப் படையிற் பெருந்தோட்டச் சொந்தக்காரர் பயிர்களை (கரும்பு பற்றிய விளக் கத்தை 266 ஆம் பக்கத்திற் காண்க) விளைவித்தனர். டச்சு ஆட்சியினர் ஆத ரித்து வளர்த்த கோப்பி, கரும்பு, அவுரி முதலிய பயிர்கள் ஐரோப்பாவிலும் (பீற்றுக்கிழங்குச் சீனி உற்பத்தி) அயனவலயத்தின் பிற பகுதிகளிலும் ஏற் பட்ட போட்டி காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனுல் யாவாவிற் பல வகையான பயிர்களையும் விளைவிக்கும் முறையை மேற்கொள்ள வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டதோடு விஞ்ஞான அடிப்படையிற் சிறப்பாக அமைக்கவேண் டிய நிலையும் ஏற்பட்டது.
யாவாவில் பண்பாட்டு முறைமையைப் புகுத்துவதற்கு யாவா மக்களின் நில ஆட்சி முறையும் ஒரு காரணமாகும். யாவாவில் கிராம மக்கள் அல்லது குறித்த குழுவினர் சமுதாய அடிப்படையில் நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருந்த னர். சுயதேவைக்கான பயிர்களை விளைவிப்பதற்கு இந்த முறை சிறந்ததே. ஆணுல் ஏற்றுமதிப் பயிர்களை விளைவித்தற்கு இது தடையாகவிருந்தது. சமுதா யத்துக்குரிய நிலத்தைக் காலத்துக்குக் காலம் மீளப்பகிர்ந்து கொடுக்கும் பழைய வழக்கம் பல பகுதிகளிற் பரந்து நிலவியதாயினும் இன்று அப்பாாம் பரியம் படிப்படியாக மறைந்து வருகின்றது. இதற்குப் பதிலாகப் பாம்பரை யாக நிலத்தைத் தனிச்சொத்தாகக் கொள்ளுகின்ற முறை இன்று வளர்ச்சி பெற்று வருகின்றது. 1882 ஆம் ஆண்டில் 18 சதவீதமான கிராமங்களில் மட் டுமே நிலத்தைத் தனித்சொத்தாகக் கொள்ளும் முறை வழக்கிலிருந்தது. 1927 ஆம் ஆண்டில் 39 சதவீதமான கிராமங்களில் இந்த முறை வழக்கிலிருந்தது. எஞ்சிய கிராமங்களில் நிலம் வேறுபட்ட கால இடையீட்டில் மீளப்பகிர்ந்து வழங்கப்பட்டது. பண்பாட்டு முறைமை நடைமுறையிலிருந்ததன் பயனுய்த் தனிப்பட்டவர் நிலத்தைச் சொந்தமாக வைத்திருப்பது தாங்கரும் பாரம் என் னும் கருத்து யாவானிய மக்களிடையே நிலைபெற்றது. பெருந்தொகையான கிராம வாசிகள் வாழும் இப்பகுதியில் விளைநிலம் ஒழுங்காகப் பிரித்துக் கொடுக் கப்பட்டதனற் கமங்கள் பருமன்ரிற் சிறுத்து வந்தன. குடித்தொகை பெருகப் பெருகச் சராசரிக் கமநிலம் மிக விரைவிற் சிறுத்து வரலாயிற்று. 1930 ஆம் ஆண்டில் நன்செய்யும் (ஈரமானதும்) புன்செயும் (வறண்டதும்) சேர்ந்த சரா சரிக் கம நிலம் 2.45 ஏக்கராயிருந்தது; 1958 இல் இது 2.0 ஏக்கராகக் குறைந்து காணப்பட்டது. யாவாவில் மக்களின் வாழ்க்கைப் பயிர்ச்செய்கைக்கும் சமூக
மதக் கொள்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பணப்பயிர்கள் புகுத்தப்

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 273 பட்டமையாற் காலப்போக்கில் ஏற்பட்ட ஒருவிளைவையும் இங்குக் காணலாம். யாவாவில் அண்மைக்காலத்தில் குத்தகைக்காரர் கமநிலத்தைக் குத்தகைக்குப் பெற்றுப் பிறரைக் கொண்டு பயிர்களை விளைவிக்கும் முறையும் ஏற்பட்டுள்ளது.
குடிப்பாம்பல்
உலகிலுள்ள குடித்தொகை மிக்க
பகுதிகளுள் யாவாவும் ஒன்ருகும். 1961 ஆம் ஆண்டில் யாவாவின்
3
குடித்தொகை 630 இலட்சமாக விருந்தது ; சதுர மைல் ஒன்றில் 900 பேருக்குமேற் காணப்படுகின்ற O
னர் (படம் 78), யாவாத்தீவிற் சில
பாகங்களிற் குடியடர்த்தி மேலு மதிகமாகும். சுரகார்த்தா, யோக்யக்
- -
கார்த்தா என்னும் மாவட்டங்களிற்
சதுரமைல் ஒன்றில் 3,300 பேருக்கு 1.
மேல் உள்ளனர். நன்செய் (ஈரநில) நெற்செய்கை காரணமாகவே இவை
حمح۔
மிகக் குடியடர்த்தியைக் கொண்டுள் ளன ; 40 சதவீதத்திற்கு மேற்பட்ட
E
பரப்பு நன்செய் நிலமாகவுள்ளது. பன்தமின் தென்பகுதி, பெகுக்கி யின் தென்கிழக்கு மூலைப்பகுதி என்பன வறண்ட வளமற்ற பகுதி களாகும். இப்பகுதிகளிற் சதுர மைல் ஒன்றில் 350 பேருக்குக் குறைந்த அடர்த்தி காணப்படுகின்
ந0ஆ.
மக்களடர்த்தி மிகவும் செறிவாக
梅
裴 s d 运 恪
སྒྱུ་ CS
حج 剧 Në/
O 盛 令
விருப்பதற்குச் சிக்கலான பல கார ணங்களுள்ளன. ஆனல் தனிப்பட்ட முறையில் எந்த ஒருகாரணமும் S முக்கியமானதெனக் கூறமுடியாது. பொருத்தமான காலநிலை, அடிக்கடி புத்துயிர்ப்புப் பெற்ற உப்புமூல எரி மலைப் பாறைகளிலிருந்து உண்டான
Լc6ծr, நீர்ப்பாய்ச்சலுள்ள நெற்
செய்கைக்குவந்த பரந்த தாழ்நிலம் படம் 78. யாவாவிற் குடிப்பரம்பல்

Page 152
274 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
என்பன பெளதிகப் புவியியல் நிலைக்கு ஆதாரமாகவுள்ள காரணிகளாகும். மேலைநாட்டு முறைகளோடு ஏற்பட்ட நீண்டகாலத் தொடர்பினல் வாழ்க்கைப் பயிர்களும் பணப்பயிர்களும் ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை முறை இங்கே வளர்ச்சிபெற்றுள்ளது ; கீழைத்தேச முறைகளும் மேலைத்தேச முறைகளும் இணைவுற்றதின் காரணமாக ஒருவிதச் சமன்பாடும் இவற்றிடையே உண்டு. யாவாவில் நீண்ட காலமாகவே கொந்தளிப்பு இல்லாத பாதுகாப்பான சமூகச் குழ்நிலை நிலவி வந்துள்ளது. பிரதான ஆற்றுவடிகால்கள் நீர்ப்பாய்ச்சல் வசதி கள் முதலியவற்றைப் பயன்படுத்தக்கூடிய நிலைமையும் காணப்பட்டது. சிறிது காலமே நடைமுறையிலிருந்த பண்பாட்டு முறைமை மக்கள் விரைவாகப் பெருகுவதற்குச் சாதகமாகவிருந்தது. விவசாயத் தேவைக்காகக் கூடிய தொழி லாளர்கள் அவசியமாகவிருந்தமையே இப்பெருக்கத்துக்குக் காரணமாகும். பண்பாட்டு முறைமையின் இறுதிக் காலத்தையடுத்துக் குடித்தொகை பத்து. வருடத்தில் 33 சதவீதமாகப் பெருகிக் காணப்பட்டது. இது மிகக் கூடிய அதி கரிப்பு விதமாகும்.
மூன்று வலயங்களிலே குடியடர்த்தி அதிகமாகும் :
1. வடக்கிலுள்ள வண்டற் சமநிலம் முழுவதிலும் குடியடர்த்தி அதிகமாக வுள்ளது. யக்கார்த்தாச் சமநிலத்திலிருந்து புரோபொலிங்கோ, பாகு ரூவன் சமநிலங்கள் வரையும் மக்கள் அடர்த்தியாகப் பரந்துள்ளனர். இப்பகுதிகளிற் குடியடர்த்தி ஈரமான தாழ்நில நெற்செய்கையோடும் கரும்புச் செய்கையோடும் தொடர்புடையதாய் உள்ளது. இந்த வலயத் தில் ஆடிவேர்னு மாவட்டம் (தெகாலுக்கு அணித்தாக) உள்ளது. இங் குச் சதுர மைல் ஒன்றில் 6,500 பேர் வாழுகின்றனர். யாவாவில் மிகக் கூடிய கிராமக் குடியடர்த்தி இதுவாகும். இந்த வலயத்திலே ஏற்றுமதி வியாபாரத்திற்கு முக்கியமான யக்கார்த்தா (1961 இல் 29 இலட்சம் மக்கள்) செரிபொன், சமாாங்கு சுரபாயா என்னும் துறைப்பட்டினங் கள் அமைந்துள்ளன. கிழக்கிந்தியத் தீவுத்தொடரில் டச்சு ஆட்சியின ரின் செல்வாக்கு முதன் முதலில் யக்கார்த்தாவிலே ஏற்பட்டது. இப் பட்டினம் இப்பொழுது கப்பற்போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாதவகையில் உள்ளாகக் காணப்படுகின்றது. எனவே வெளியாக வமைந்துள்ள தான்யுங் பிரியொக் துறைமூலமே இப்பொழுது ஏற்று மதி வியாபாரம் நடைபெறுகின்றது. யாவாவின் மொத்த ஏற்றுமதி யான 800,000 தொன்னில் (1961) சுரபாயா 40 சத விதத்தையும் தான் யுங் பிரியொக் 20 சதவீதத்தையும் ஏற்றுமதி செய்கின்றன.
2. மத்திய யாவாவிலுள்ள எரிமலைகளுக்கிடையிலுள்ள தாழ்நிலங்களில் (சோலோ, மடியூன், பிரந்தஸ் வடிநிலங்கள்) யாவா மக்களில் மூன்றி லொரு பகுதியினர் வாழுகின்றனர். இந்நிலங்களிற் பயிர்ச்செய்கையே பிரதான தொழிலாக உள்ளது. யோக்யக்கார்த்தா, சுரகார்த்தா என் னும் பட்டினங்களிற் சிறு தொகையினரே (ஒவ்வொன்றிலும் 310,000

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 275
பேருக்கு மேல்) உள்ளனர். இங்கு எரிமலைகள் அடிக்கடி வெடிப்பதனல் அதிக அளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் உண்டாகின்றன. அவ்வாறிருந்தும் இவ்வெரிமலைச் சாரல்களைச் சுற்றிக் கிராமங்களும் பயிர்நிலங்களும் புதிய சாம்பல் படிந்துள்ள எல்லை வரையும் செறிவா கப பரநதுளளன. 3. பாண்டுங்கு-காரூற் வடிநிலங்களில் குறைந்த அளவில் மக்கள் கூட்டமாக வாழுகின்றனர். மேலைத்தேச அடிப்படையிற் பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். தென் கரைப்பகுதி யில் காலி சொாயூவுக்கும் காலி புரோகோவுக்கும் இடையிலுள்ள பகுதி யிலே குடியடர்த்தி அதிகமாகும். மத்திய யாவா எரிமலைப் பகுதியிலி ருந்து கொண்டுவரப்பட்ட வண்டலையுடைய ஒடுங்கிய கழிமுக வலய மொன்று இங்கிருப்பதால் வடக்கிலுள்ள வண்டற் சமவெளிகளிற் போன்று, கிராமத்தவர் இங்கு நெருக்கமாக வாழுகின்றனர். தெற்கில் எரிமலையிடைத் தாழ்நிலங்களிற் போன்று குடியடர்த்தி காணப்படுகின் றது. தென்கரைப் பகுதியில் ஆழமான நீர்வசதியைக் கொண்ட துறை முகமாகச் சிலாச்சாப் மட்டுமே உள்ளது. இது இந்து சமுத்திரப்புயல் களினுல் தாக்கப்படாதவாறு நூாசா காம்பான்கானுற் டாதுகாக்கப் பட்டுள்ளது. மத்திய யாவாவில் தென்கரையையடுத்து நெருக்கமாக வாழும் மக்களுக்கு இதுவே முக்கிய துறைமுகமாக விளங்குகின்றது. முக்கியமாகச் சீனி, மரவள்ளி என்பனவே இத்துறைமுக மூலம் (1991 இல் 52,000 தொன்) ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 4. மதுராவின் தரைத்தோற்றத்தில் வறண்ட சுண்ணக்கற் பாறைகள் முக் கியமாகவுள்ள பொழுதும் அதன் சிறிய கரைச் சமநிலங்கள் அதிக வருவாயைக் கொடுக்கக் கூடியனவாய் உள்ளன. இங்கு சதுரமைல் ஒன் றில் 1,300 பேர் வாழுகின்றனர். இத்தொகை யாவாவின் சராசரி அடர்த்தியிலும் அதிகமாகும். மத்தியிலுள்ள தாழ்வான நிலம் பய னற்ற பகுதியாகும்; எனவே மக்கள் இங்கு மிகவும் ஐதாகவுள்ளனர். பிற பகுதிகளில் நெல், சோளம், புகையிலை முதலிய பயிர்கள் விளைவிக் கப்படுகின்றன; மாட்டு வளர்ப்பும் முக்கியமாகும்; உப்பும் எடுக்கப்படு கின்றது. மதுராவிற் குடித்தொகை அதிகமாகவிருப்பதனுல் மக்கள் யாவாவுக்குப் பெயர்ந்து சென்று குடியேறி வருகின்றனர். மக்கள் அடர்த்தியாக வாழுகின்ற பயிர்விளையும் வலயங்களில் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. வடக்கிலுள்ள தாழ்நிலத்தில் போக்குவரத்துப் பாதைகள் ஓர் அந்தத்திலிருந்து மற்றை அந் தம் வரையிற் பரந்துள்ளன. தெற்கிலுள்ள எரிமலைகளுக்கிடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியையும், சிலாச்சாப், யோக்யக்கார்த்தாப் பகுதிகளையும் நோக்கிச் சிறு பாதைகள் வடக்கிலுள்ள போக்குவரத்துப் பாதைகளிலிருந்து பிரிந்து அமைந்துள்ளன. யாவாவில் தென்கரையிலும் சிதைவுற்ற மலைப்பகுதி யிலும் உள்ள சில சிறிய பகுதிகள் மட்டுமே தெருக்கள், புகையிாகப் பாதைகள்

Page 153
276 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆகியவற்றிலிருந்து பத்து மைலுக்கு அப்பாற் காணப்படுகின்றன. யாவாவின் தெருக்கள் புகையிரதப் பாதைகள் ஆகியவற்றேடு கடற்கரையைச் குழக் கடற் போக்குவரத்தும் உண்டு. இவை காரணமாக யாவா தென்கிழக்கு ஆசியப் பகுதி களுள் சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது எனலாம்.
தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிற் போன்றே யாவாவிற் குடியிருப்புக் கள் அமைந்துள்ளன. நெல் விளையும் சமநிலங்கள் காணப்படும் பகுதிகளில் எல் லாம் ஆறுகள் கால்வாய்கள் என்பனவற்றைச் சார்ந்தே குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. வடதென் கரைப் பகுதிகளில் மணல் மேடுகளையும் மணல் நாக்குக்களையும் சார்ந்து குடியிருப்புக்கள் நெடிதாக அமைந்துள்ளன. பழைய கடல் மேடைப் பகுதியிலும் நெடிதாகக் குடியிருப்புக்கள் பரந்துள்ளன. உப்பு மூலப் பாறைகளைக் கொண்ட எரிமலைக் கூம்புகளைச் சார்ந்தும் கிராமங்கள் தொடராகக் காணப்படுகின்றன. பல நூற்ருண்டுகளாகப் போதிய பாது காப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையாற் பழைய பாதுகாப்பு அரண்கள் இன்று அநேகமாக மறைந்து விட்டன. இப்பொழுதும் தேவை ஏற்பட்டால் அவை அமைக்கப்படலாம். கிராமங்களில் மாட்டுக் கிடைகளைக்காணல் அரிது; மதுராவில் மாடு வளர்க்கும் பகுதிகளிலே அவற்றைக் காணலாம். யாவா மக்க ளின் வீடுகள் மூங்கிலாலும் ஒலைகளாலும் அமைக்கப்பட்டவை. ஆயின் நெடுங் கழிகளை நட்டு உயர்த்தி அமைக்கும் வழக்கம் இல்லை. இதனுல் இவ்வீடுகள்
மலாயர், பேமியர் என்போரின் விடுகளிலும் சற்று வேறுபட்டனவாக உள்ளன.
யாவா மக்கள்
1 யாவா மக்கள் அயலிலுள்ள பகுதிகளில் வாழும் மக்களிலும் பார்க்க ஒருமைப் பாடு கூடியவர். இவர்கள் மூன்று முக்கியமான மொழிகளை வழங்குகின்றனர். பல நூற்முண்டுகளாகச் சிறப்புற்று விளங்கும் இலக்கியம், இசை, சிற்பம் முத விய கலை வடிவங்களுக்கு இம்மொழிகள் துணையாகவிருந்து வந்துள்ளன. இந் தோனேசிய மக்களின் சமூக பண்பாட்டு வளர்ச்சியில் இவை மேலும் தொடர்ந்து பயன்பட்டு வருகின்றன. பெருமைமிக்க அடிப்படைப் பண்பாட்டு நிலைமை இஸ்லாமியச் செல்வாக்கினல் இன்று ஓரளவுக்கு மாற்றமடைந்து காணப்படுகின்றது. இந்த நிலைமைகளை ஆதாரமாகக் கொண்டே யாவா மக்க வின் தேசிய உணர்ச்சி வளர்ந்துவருகின்றது. கூட்டு ஒழுங்கு நிலவிவந்ததன் காரணமாக, பிரச்சினைகளுக்குக் கூட்டுமுறையில் தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாவாவில் மூலவளங்களுக்கும் அதிகமாகக் குடித் தொகை பெருகியுள்ளது இன்று முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
யாவானியர் (Javanese) எனப்படுவோரே தொகையில் அதிகமாகவுள்ள னர். தீவின் கிழக்கிலுள்ள மூன்றிலிரு பகுதியே இவரின் தாயகமாகும். மேற்குப் பகுதியில் வாழ்வோர் சண்டானியர் (Sundanese) என வழங்கப்படுகின்ற னர். மதுராத் தீவிலுள்ளோரும் குடிநெருக்கம் காரணமாக யாவாவில் வந்து குடியேறியுள்ளனர். கி.பி முதலாம் ஆயிரவாண்டுக் காலம் இந்தியக் குடியேற்ற

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 277
நாட்டாட்சிக் காலமாகும். இக்காலத்தில் இந்து, பெளத்தப் பண்பாட்டுச் செல் வாக்குக்கள் இப்பகுதியிற் பரவியிருந்தன. இதற்குச் சான்முகப் போாப்புதூர், பிளித்தார், கேடுஸ் ஆகிய இடங்களிற் கல்லினல் அமைந்த அழிபாடுகள் இன் றும் காணப்படுகின்றன. அவை உயர்குடி மக்களுக்குரிய அழகுணர்ச்சி நிறைந்த கலைவடிவங்களாகக் காட்சியளிக்கின்றன ; அன்றியும் தேச எனப்படும் கிராமத் தில் தன்னிறைவு பெற்று விளங்கும் சமுதாயத்திலும் இந்தியப் பண்பாட்டுக் தாக்கம் தெளிவாகப் புலப்படுகிறது. இத்தகைய பாரம்பரியப் பண்பாட்டு முறை கள் அழிந்துபட, இஸ்லாமியப் பண்பாட்டியல்புகள் இடம்பெற்றன. சண்டானி யர் என்பார் வேருன மொழியைப் பேசுவர். அவர்களின் மகிழ்ச்சிமிக்க வாழ் வைப் பிசதிபலிப்பனவாக அவர்கள் அணியும் பகட்டான நிறமுள்ள ஆடைகள் அமைந்துள்ளன. அவர்களின் கிராமங்கள் சிறு சிறு பிரிவுகளாக அமைந்துள் ளன. அவர்களது பண்பாட்டு வளர்ச்சி யாவானியரின் பண்பாட்டிலும் குறைந்த காகக் கொள்ளப்படுகின்றது. மதுராத் தீவினர் யாவானியரோடு ஒப்பிடும் பொழுது சுயநலமும் பிடிவாதமும் மிக்கவராகக் காணப்படுகின்றனர். இத்தன் மைகள் அவர்கள் வாழும் பகுதியின் நிலைமையையும் தொழிலையும் பிரதிபலிப் பனவாக உள்ளன. கடினமான சூழலையுடைய தீவில் அவர்கள் வாழுகின்றனர். அவர்களது வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகும். தென்கிழக்கு ஆசியா வில் மாட்டு வளர்ப்பிலும் வியாபாரத்திலும் முக்கியமான இடத்தை அவர்கள் கொண்டுள்ளனர். **
யாவாவில் குடித்தொகை மிக அதிகமாகவுள்ள பொழுதும் யாவாவிலிருந்து பிற தீவுகளுக்குச் சென்று குடியேறுவோர் தொகை குறைவாகவே இன்றும் உள்ளது. இதல்ை யாவாவிற் குடிப்பெருக்கம் ஏற்படுவதற்கேற்பப் பிரச்சினை களும் அதிகரித்துவந்துள்ளன. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்க மாக யாவாவின் பயிர்ச்செய்கை மேலும் செறிவானதாக அமைக்கப்பட்டு வரு கின்றது; யாவாவிலுள்ள விளைநிலங்கள் முழுவதிலும் பயிர்ச்செய்கை உச்ச நிலைக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்களும் அமைக்கப்பட்டு வருகின் றன.
வந்து குடியேறியோர்
யாவாவில் சுதேசிகள் பெருந்தொகையானேர் வாழுகின்ற பொழுதும் 500,000 இற்கு மேற்பட்ட சீனரும் அங்குவந்து குடியேறியுள்ளனர். டச்சு ஆட்சியின ரின் முதற்காலப் பகுதியிலிருந்தே சீனர் யாவாவில் வந்து குடியேறியுள்ளனர். சுதேசிகள் தமக்கேயுரிய பாரம்பரியத் தொழில் முறைகளில் ஈடுபட்டிருந்தமை யாற் புதிய கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகச் சீனத் தொழிலா ளர் கொண்டுவரப்பட்டனர். பின்பு சீனர் படிப்படியாகப் பட்டினங்களில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். பட்டினங்களில் தரகர்களாகவும் வியாபாரிகளாகவும் சீனர் வாழ்க்கை நடாத்துகின்றனர். தீவுகளிடையிற் பொருள்களைக் கொண்டு செல்லும் துறையில் சீனர் ஈடுபட்டுள்ளனர். யாவாவில் வாழும் சீனரில் மூன்றிலொரு பகுதியினர் யக்கார்த்தா, சமசாங்கு, சும பாயா

Page 154
278 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆகிய பட்டினங்களில் வாழுகின்றனர். இவர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. சீனர்களுட்பெரும் பாலோர் தாய்நாடான சீனவோடு தொடர்புடையவர்களாய் உள்ளனர்; சீனு, வுக்குத் திரும்பிச் செல்லும் நோக்கமும் அவர்களுக்கு உண்டு. யாவாவில் 50,000 அராபியரும் வாழுகின்றனர். இவர்கள் அராபியாவில் ஹத்திரமூத் என் னும் பகுதியைச் சேர்ந்தவராவர். இவர்களும் அநேகமாகத் தரகர்களாகவே வாழ்க்கை நடாத்துகின்றனர். இவர்கள் யாவானியரோடு கலப்பு மணம்புரிந்து யாவா வாசிகளாக மாறிவருகின்றனர். மதசம்பந்தமான விடயங்களில் இவர்க ளுக்கு அதிக மரியாதை உண்டு. இவர்கள் யாவாவிலிருந்து அராபிய நாடுகளுக் குப் பெருந்தொகையினராக யாத்திரை செய்கின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவின் குடியேற்ற நாட்டாட்சி வரலாற்றில் டச்சுக்காரர்
குடியேற்றமும் முக்கியமானதாகும். யாவாவில் ஏறத்தாழ 200,000 டச்சுக் காார் குடியேறியுள்ளனர். 1870 ஆம் ஆண்டு வரையில் டச்சு அரசாங்க உத்தி யோகத்தர் மட்டுமே அங்குவாழ்ந்தனர். ஆனற் பின்பு டச்சுக்காரர் படிப்படி யாக வந்து நிலையாகக் குடியேறினர். 1940 ஆம் ஆண்டுவரையில் அவர்கள் குடியேற்றம் அதிகரித்து வந்துள்ளது. டச்சுக்காரர் அநேகமாக யக்கார்த்தா, பொயிற்றென்சோர்க், பாண்டுங்கு ஆகிய பட்டினங்களிலே குடியேறினர். அவர் கள் அரசாங்க உத்தியோகம், வியாபாரம், சிறப்புத் தொழில்கள் முதலிய துறை களிலும் பெருந்தோட்டப் பொருள் உற்பத்தியிலும் ஈடுபட்டிருந்தனர். யுத்த காலத்தின் பின்பு ஏற்பட்ட அரசியற் சூழ்நிலை அவர்கள் தொடர்ந்து வாழ்வ தற்கு ஏற்றதாயிருக்கவில்லை.
யாவாவில் பிறநாட்டுத் தொழிலாளர் தற்காலிகமான முறையில் பெருந்தொகை யாக வந்து குடியேறவில்லை. யாவாவில் பண்பாட்டு இயல்புகள் சுதேசிகளின் முதிர்ச்சிபெற்ற வாழ்க்கை முறையோடு இயைபுடையனவாகவும் சூழற்காாணி களுக்குப் பொருந்துவனவாகவும் அமைந்துள்ளன. யாவாவின் மொத்தக் குடித் தொகை 1815 ஆம் ஆண்டின் பின்பு பத்து மடங்காகப் பெருகியுள்ளது. குடித் தொகை இவ்வாறு பெருகியதனுல் யாவா மக்கள் மலாயா, பேமா போன்ற நாடுகளில் வாழ்வோரிலும் பார்க்க ஓரளவுக்கு வேறுபட்ட வாழ்க்கை முறையை மேற்கொள்ளவேண்டியவராகவுள்ளனர். இங்கு வாழும் மக்கள் பல்வேறு வகை யான பயிர்களை மிகவும் செறிவான முறையிலும் விரிவான அளவிலும் விளை விக்கின்றனர்; சொந்தத் தேவைக்காகவும் பணத்திற்காகவும் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர்.
யுத்தத்திற்குப் பிற்பட்ட காலம் யுத்த காலத்தில் யாவா அதிக அளவில் பாதிக்கப்படாதபொழுதும் 1946 இன் பின்பு புரட்சிகரமான விளைவுகள் இங்கு ஏற்பட்டன. வர்த்தகப் பயிர்ச்செய்கை சடுதியாக வீழ்ச்சியடைந்தது. பல ஆலைகள் அழிந்தன. போக்குவாத்துப் பாதிக்கப்பட்டது. மத்திய அரசாட்சி சீர்குலைந்தது. சுயஆட்சியை வேண்டிய பழைய பிரதேசப் பிரிவுகள் மீண்டும் அதைப்பெற முயற்சிசெய்தன. தனிப்

கிழக்கு இந்தியத் தீவுகள் : யாவா 279
பட்ட தலைவர்களும் புரட்சிவாதிகளும் பெருகினர் (பக்கம் 298). இந்த நிலைமை யில் டச்சுத் தொழில்நுட்ப வல்லுநர் இந்தோனேசியர் வருவதற்குமுன்னமே விரைவாகத் தொழில்களை விட்டுநீங்கினர். நிதிநிலைமை முற்முகச் சீர்குலை வதற்கு முன்பு முக்கிய பொருள்களான தகரம், இறப்பர் என்பனவற்றின் வியா டாரம் கட்டுப்படுத்தப்பட்டது (பக்கம் 222). இறக்குமதியும் கட்டுப்படுத்தப் பட்டது. வெளிநாட்டு உதவியை நாடுவதிலும் சுயதேவைப்பூர்த்தியே முக்கிய நோக்கமாகக் கருதப்பட்டது. எனினும் மக்களுக்குப் போதிய உணவுப்பொரு ளின்மையாற் பேமாவிலிருந்தும் சீயத்திலிருந்தும் பெருந்தொகையாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை முக்கியமாகவிருந்த தனுல் தவறிழைக்கும் சீனவியாபாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். புதிய சீனுவிலிருந்து அரசியற் செல்வாக்கும் பிரயோகிக்கப்பட்டது. இன உணர்ச்சி முற்முக மறைந்துவிட்டது என்றும் கூறமுடியாது. சிறு தொகையான சீனர் கட்டாயமாகத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1952 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டுப் பொருளாதார நிலைமைகளில் ஓரளவிற்குச் சீரான தன்மை காணப்பட்டது. ஆனல் உள்நாட்டு நிர்வாக, சமூக நிலைமைகளில் குறைந்த அளவு மாற்றமே காணப்பட்டது. 1955 ஆம் ஆண்டின் பின்பு டச்சு ஆட்சியினருக்கும் இந்தோனேசிய ஆட்சியினருக்குமிடையிலிருந்த தொடர்பு முற்முகவே நீங்கியது. பின்னர் 1964 ஆம் ஆண்டில் அத்தொடர்பு ஓரளவுக்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டின் முற்பகுதியிலுமே உள் நாட்டு அரசியற் கொந்தளிப்பு மற்றையவற்றை யெல்லாம் மறைத்து விடுமள வுக்கு முக்கியம் பெற்றுக் காணப்பட்டது; இதனுல் குடிமக்களுக்கிடையில் அமைதிக்கேடும் குழப்பமும் நிலவின; மலேசியாவுடன் செய்யும் வியாபாரத்துக் குத் தடைவிதிக்கப்பட்டது; யாவாவிலுள்ள வேற்றுநாட்டவரின் தொழில் நிலையங்களில் தொழிற் சங்கத் தொல்லைகள் அதிகரித்தன. இவையெல்லாம் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்ததோடு, கட்டில்லாச் சந்தை யில் நாணயத்தின் மதிப்பையும் குறைத்துவிட்டன.

Page 155
அத்தியாயம் 15 கிழக்கு இந்தியத் தீவுகள் மேற்குத் தீவுத்தொடர்: போணியோ
சண்டாமேடையிலமைந்துள்ள நிலங்களுட் பெரியது போணியோவாகும். போணியோ என்னும் பதம் புரூணை என்பதனடியாக ஏற்பட்டது. மேற்குக் கரையோரத்திற் சுல்தானின் ஆட்சியிலுள்ள புரூணை இன்று கிரவுஞ் சிறிய ஒரு பகுதியாக உள்ளது. ஆனல் முன்பு புரூணை மிக்க பலமுடைய ஒரு பகுதியாகத் திகழ்ந்தது ; போணியோத் தீவு முழுவதிலும் அதன் செல்வாக்குப் பாந்திருந் தது. மத்தியகோட்டில் அமைந்துள்ள போணியோவில் அயனப்பிரதேச மழைக் காடுகளே முக்கிய தாவர வகையாக உள்ளன. உயரமான பகுதிகளில் அயனக் காடுகள் அருகிவிட மலைத்தாவா வகையான பாசிக் காடுகள் அமைந்துள்ளன. கரைசார்ந்த தாழ்நிலங்களில் நன்னீர்ச் சதுப்பு நிலக் காடுகளும் மாங்குரோவுக் காடுகளும் காணப்படுகின்றன (படம் 79). போணியோவின் மேற்கிலும் தெற் கிலும் 200 அடிக்கும் குறைவான ஆழமற்ற கடற்பகுதி உண்டு. ஆனல் வடக் கிலும் கிழக்கிலும் கண்டமேடை மிகவும் ஒடுங்கிக் காணப்படுகின்றது; கண்ட மேடையின் ஒாத்தையடுத்துக்கடல் சடுதியாகத் தாழ்ந்துள்ளது. மிக அணித் காகவே கடல் 12,000 அடிக்கும் ஆழமாகக் காணப்படுகின்றது.
போணியோ : சராசரி மழைவீழ்ச்சி (அங்)
மழை நாள் (.02 சன பெப் மார் எப் மே யூன் யூலை ஒக செத் ஒற் நவ திச மொத் அங்.)
Frt 67 lities not
(105 அடி) 18.210.4 7.9 4.1 5.8 7.4 6.4 7.9 9.5 9.814.817.4119.6 பொந்.
தியானுக் 2.0 13.1 .16.1 .4 8.6 8.6 6.5 8.9 0.7 .1 9.6 8.5 10.6 82 (وبعد 10) பாலிக்பாப்.
unfait (16அடி) 137 7。7 7.5 9.0 7.6 8.7 8.3 7.8 6.9 4.8 5.7 6.4 7.5 87.9
கடந்த ஒரு நூற்ருண்டாகப் போணியோ இரு பிரிவாகப் பிளவுபட்டுக் காணப்படுகின்றது. வடமேற்கிலுள்ள சிறிய பகுதி (வட போணியோ, புரூணை, சராவாக் என்பன) பிரித்தானியரின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலுமாகப் பரந்துள்ள பெரும்பகுதி இந்தோனேசியப் பகுதியாகும். அயலி அலுள்ள சிறிய பகுதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்களினுலும் முன்னேற்றமான முயற்சிகளினலும் இப்பகுதி அதிகம் பாதிக்கப்படவில்லை. இத்தகைய பிற்போக்
280

கிழக்கு இந்தியத் தீவுகள்: போணியோ 28.
கான நிலை அண்மையில் ஏற்பட்டதன்று. போணியோவின் வடமேற்குப்பகுதி யில் சீனர் பழைய காலத்திலிருந்தே (முத்துக்களுக்கும் பறவைக்கூடுகட்கும்) நாட்டமுடையவராகவிருந்தனர். முதல் ஆயிரமாண்டுகளில் தென் போனியோ வின் ஆற்றுப்பகுதிகளைச் சார்ந்து இந்து மதத்தவர் தாக்கமும் ஏற்பட்டது,
- பயிர்ச் செய்கை 들 அயனமண்டல மழைக்கா,ே (பிரதானமாக நெல்)
துணைக்காடும் பெயர்ச்சிப் ப்பு நிலம் பயிர்ச்செய்கையும் சதுப்பு நி
படம் 79. போணியோவின் நிலப்பயன்பாடு
போணியோவில் இன்று காணப்படும் நிலைமைகள் நான்கு அல்லது ஐந்து நூற் முண்டுகளுக்கு முன்பு இப்பகுதியிலுள்ள எல்லாத்தீவுகளிலும் அயலாகவுள்ள நிலங்களிலும் காணப்பட்டிருத்தல் வேண்டும். இந்த நிலைமைகள் போணியோ வில் இப்பொழுதும் காணப்படப் பின்வரும் தன்மைகள் காரணமாகவுள்ளன :
(அ) தென் கிழக்கு ஆசியப் போக்குவரத்துப் பாதைகளுக்கு அப்பால் காணப்

Page 156
282 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
படுவது ; (ஆ) மண்வளம் குறைவாயிருப்பதும் குரிய ஒளி குறைவாயிருப் பதும்; (இ) போணியோவின் உட்பகுதிகளை நோக்கி மக்கள் பெருந்தொகை யாக வருவதற்குச் சிறந்த கனிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்படாமை ; (ஈ) தீவு இறுக்கமாக அமைந்திருந்தமை ; (உ) போணியோவின் ஆறுகளும் கரைப்பகுதி պւA போக்குவரத்திற்கு ஏற்றனவாய் அமையாமை போணியோவின் ஆற்று முகங்களில் இடம்பெயரும் மணற்றடைகள் அடிக்கடி காணப்படுவதனல் போக்குவரத்துத் தடைப்படுகின்றது. சிறு வள்ளங்களும் பெருக்குக் காலத் தில் மட்டுமே போகக்கூடியனவாகவுள்ளன. கிழக்குக் கரையோரத்தில் முரு கைக் கற்பார்களும் பரந்துள்ளன. (ஊ) மக்கள் பயிர்ச்செய்கைத்துறையில் அதிகம் ஈடுபடாதவர்களாகக் காணப்பட்டமை.
போணியோவின் உட்பகுதிகளில் சுதேசிகள் சிறுதொகையினராக வாழுகின் றனர். அவர்களுள் அநேகமானேர் இன்றும் வேட்டையாடுதல் காடுகளிற் காய் கனி கிழங்கு முதலியவற்றைச் சேகரித்தல் ஆகிய தொழில்முறைகளிலே ஈடு பட்டுள்ளனர். பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளவர்களும் பெயர்ச்சிமுறை யிலே பயிர்களை விளைவிக்கின்றனர். தொழில்முறைகளும் குடியிருப்புக்களும் புற வோரங்களை நோக்கியமைந்துள்ளன (படம் 80) , நாட்டமும் மையநீங்கு தன்மையையுடையது. கரையோரப் பகுதியிலும் குடியிருப்புக்கள் அயனப் பிரதேசங்களுக்குரிய எளிதான முதற்குடியிருப்புக்களாகக் காணப்படுகின்றன. இத்தகைய அசுத்தமான சிறு குடிசைகளில் அயற்பிரதேசங்களிலிருந்து வந்து குடியேறிய சீனரும் மலாயருமே பெரும்பாலும் வாழுகின்றனர். உட்பகுதிகளில் வாழுகின்ற மக்கள் எல்லோரும் "தையக்கர்" என்ற பொதுப் பெயரால் வழங் கப்படுகின்றனர். அவ்வாறு பொதுவாக வழங்கப்படுகின்றபொழுதும் பண்பாட் டில் வேறுபட்ட பல கூட்டத்தவர்கள் அவர்களிடையே காணப்படுகின்றனர் (படம் 81). கரையோரத்திலுள்ள குடியிருப்புக்கள் ஏரிக் குடியிருப்புக்கள் போன்று சிறிதளவு நீரின்மீது கட்டப்பட்டுள்ளன. ஆறுகளையும் காட்டு ஒற்றை படிப்பாதைகள் சிலவற்றையும் தவிர வேறு போக்குவரத்துப் பாதைகள் இல்லை. இப்பொழுது போணியோவில் 54 இலட்சம் மக்கள் வரையில் வாழுகின்றனர். இத் தொகையில் 13 இலட்சம் பேர் மட்டுமே வடமேற்குப் பகுதியில் உள்ளனர்.
போணியோ குன்றுகளைக்கொண்ட தரையமைப்பையுடையது. பொதுவாக உயரம் 6,000 அடிக்குக் குறைவாகும். முதிர்ச்சிபெற்ற தாைத்தோற்ற நிலைமை கள் இங்குக் காணப்படுகின்றன. தீப்பாறைகளைக் கொண்ட பகுதிகளின் வட்ட மான சாய்வுகள் முதல், மணற்கல் நிறைந்த பகுதியிலுள்ள தட்டையான ஆற் றிடை நிலங்கள் வரை வேறுபாடுகள் உள்ளன. மாடி மேட்டு நிலத்தில் இத்த கைய தன்மைகள் காணப்படுகின்றன. சுண்ணக்கற்பாறைகள் காணப்படுமிடங் களில் அரிப்பினுல் சிற்பவேலைப்பாடமைந்த தரைத்தோற்றமுண்டு. பூலிற் பள் ளத்தாக்குக்களில் இத்தன்மை சிறப்பாகக் காணப்படுகின்றது. மண்ணின் நீருட் புகு தன்மையைச் சீராகப் பெய்யும் பெருமழை ஈடு செய்துவிடுவதால் இங்குத் தாவரங்கள் செறிவாகப் பரந்து காணப்படுகின்றன. மலைத்தொடர்கள் நில வமைவுப் போக்கிற்குப் பொருந்தக் காணப்படுகின்றன. பழைய கிழக்கு-மேற்கு

கிழக்கு இந்தியத் தீவுகள் : போணியோ 283
மடிப்பு-பிளவுத் தன்மைகளுக்கு ஏற்ப இத்தொடர்கள் அமைந்துள்ளன. சில வவகி-தெதெமே. திசையில் அமைந்த தொடர்களும் காணப்படுகின்றன.
சதுரமைலுக்கு ஆள் の 欲
-
படம் 80, போணியோவில் மக்கட் பரம்பல்
ச ராவாக்கின் உள் எல்லையையடுத்துள்ள நெடிய நீர்பிரிமேடு இத்தொடர்களால் அமைந்ததொன்முகும். ஆற்றுமுகங்களைச் சூழப் பெரிய சேற்றுநிலங்கள் அமைந்துள்ளன. அவற்றிடையே பரப்புங் கிளையாறுகள் அடிக்கடி மாறிமாறி அமைகின்றன.
வட போனியோ
வட போணியோ என வழங்கும் பகுதி சராவாக், புரூணை, சாபா (1963 வரை யும் பிரித்தானிய வடபோணியோ என வழங்கப்பட்டது) ஆகியவற்றை அடக்கி

Page 157
284 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
யுள்ளது. ஏறத்தாழ 80,000 சதுர மைல் கொண்ட இப்பகுதியில் 60 சதவீதமான நிலம் சாாவாக்கிற் காணப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள ஆறுகள் வடக்கு நோக்கியும் மேற்குநோக்கியும் ஓடுகின்றன. இவற்றுள் ரேயாங்கு என்னும் ஆறே மிகப்பெரியது. ஆனல் அதன் கழிமுகம் அடர்ந்த சேற்றுநிலமாக உள்ளதனுல் ஆற்றுப் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. ஆற்று முகத்திலிருந்து 60 மைல் அாாத்திலுள்ள சிபூ ரேயாங்குப் பள்ளத்தாக்கில் வாழும் 125,000 மக்களின் பிரதான துறைமுகமாக விளங்குகின்றது. வட போணியோவில் 13 இலட்சம் பேர் வாழுகின்றனர். இத்தொகையினரில் 744,000 பேர் சராவாக்கில் வாழுகின்ற னர்; இவர்கள் பெரும்பாலும் கரைசார்ந்த பகுதியிலே காணப்படுகின்றனர். இங்கு வந்து குடியேறிய சீனரின் தொகை ஏறத்தாழ 170,000 ஆகும். இத் தொகையிலும் சற்றுக்கூடுதலாக மலாயரும் வந்து குடியேறியுள்ளனர்; புதிதாக வந்து குடியேறியோர் ஏற்றுமதி வியாபாரம் சில்லறை வியாபாாம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்; சிலர் நிலநெய் எடுக்குந் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். சரா வாக்கின் தலைநகரான கூச்சிங்கு ஓர் ஆற்றுத்துறைப்பட்டினமாகும். மண்டிபடி யும் கழிமுகத்திலிருந்து தூரத்தில் அமைந்திருப்பதனல் இத்துறைமுகம் அதிக மாகப் பாதிக்கப்படவில்லை. புரூணைக்கு அண்மையாகவுள்ள மீரி என்னுமிடத்திற் சில நிலநெய்வயல்கள் உண்டு; அவற்றில் நிலநெய் படிப்படியாகக் குறைந்து செல்லுகின்றது. புரூணையிலுள்ள சேரியா என்னுமிடத்திலிருந்து குழாய்மூலம் கொண்டுவரப்படும் நிலநெய்யில் ஒருபகுதி லூட்டோங்கிலுள்ள சுத்திசெய்யும் ஆலைகளிற் சுத்திசெய்யப்படுகின்றது. 1963 ஆம் ஆண்டில் சேரியாவிலுள்ள 120 கிணறுகளிலிருந்து 35 இலட்சம் தொன் (சுத்தஞ் செய்யப்படாத) நிலநெய் உற்பத்திசெய்யப்பட்டது. 1960 இலே நிலநெய்யுற்பத்தி முதன்முதலாகக் குறை யத் தொடங்கியது.
சாபாவில் 1961 ஆம் ஆண்டில் 454,000 மக்கள் காணப்பட்டனர். கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கு முஸ்லிம் கடலோடிகள் வாழ்கின்றனர். சாபாவின் இரு முக்கிய பட்டினங்கள் ஜெசில்றன், சான்டாக்கான் என்பனவாகும். இப்பட்டி னங்களில் வந்து குடியேறிய சீனமக்கள் பெருந்தொகையாக உள்ளனர்.
புரூணை அளவாற் சிறிதாயிருப்பினும் மலாயர் தொகையாக வாழும் பகுதி யாக இது விளங்குகின்றது. நிலநெய் காரணமாகச் செல்வங்கொழிக்கும் நாடாக வும் திகழுகின்றது. 1962 ஆம் ஆண்டில் நிலநெய் ஏற்றுமதியால் 960 இலட்சம் தொலர் வருமானம் பெறப்பட்டது. அவ்வாண்டின் குடித்தொகை 85,000 ஆகும். வட போணியோ என வழங்கும் விருத்தியில்லாத இப்பெரும்பகுதி பயிர்ச் செய்கையைப் பொறுத்தவரையில் தன்னிறைவு எய்தியதாக இல்லை. புரூணையின் தேவைக்குரிய அரிசியில் மூன்றிலொரு பகுதியே அங்கு விளைவிக்கப்படுகின் றது; சாபாவின் மொத்தத் தேவையில் அரைவாசி அங்குப் பெறப்படுகின்றது. நிலம் மலிவாகக் கிடைத்ததனல் இறப்பர், தென்னை முதலிய பயிர்களே முக்கிய மாக விளைவிக்கப்படுகின்றன. ஆனல் தேவையான தொழிலாளரைப் பெறுவதிற் பிரச்சினை காணப்படுகின்றது. கடந்த நூற்முண்டில் வர்த்தகத்திற்காகப் புகை

நிலத்தில் இறப்பர்
கிழக்கு இந்தியத் தீவுகள்: போணியோ 285
யிலை பயிரிடப்பட்டது. புகையிலைச் செய்கை பயன்தராதமையாற் கைவிடப் பட்டது. இப்பொழுது இறப்பரே பெரும்பாலும் பயிரிடப்படுகின்றது. 1962 இல் ஏற்றுமதிப் பயிர்களுள் 89 சதவீதம் இறப்பரேயாகும். மொத்தமாக 73,000 தொன் இறப்பர் ஏற்றுமதி செய்யப்பட்டது. கம்பனிகட்குச் சொந்தமான பெருந்தோட்டங்களுடன் சிறுதோட்டங்கள் விருத்திசெய்யப்பட்டுள்ளன. நெற்
சுதேசிகள் (“தையக்கர்")
昌ew
இந்தோனேசியர்
இரை
ሰ
Z
التي سيختمة
படம் 81-போணியோவில் இனப்பரம்பல்
செய்கையோடு சிறுதோட்டங்களும் பயிரிடப்படுகின்றன. இத்தகைய புதிய நிலங்கள் பற்றி விரிவான புள்ளிவிவரங்கள் இல்லை. ஏறத்தாழ 290,000 ஏக்கர்
விளைவிக்கப்படுகின்றது. இறப்பர் நிலம் பெரும்பாலும் சாடாச் கரையோசப் பகுதியிற் காணப்படுகின்றது. 1961 ஆம் ஆண்டில் சாபா விலிருந்து 44,000 தொன் கொப்பராவும் ஏற்றுமதி செய்யப்பட்டது 390,000

Page 158
286 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஏக்கர் நிலத்தில் (1962) நெல் பயிரிடப்படுகின்றது. நெல் விளையும் நிலங்கள் செவ்வனம் அமைக்கப்படாத சிறு துண்டுகளாகக் காணப்படுகின்றன. யுத்த காலத்தின் பின்பு இப்பகுதியிலுள்ள புதிய நிலங்களில் நெல் விளைவித்தற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மலேசியக் கூட்டாசில் நிலவிய நெல் பற்முக் குறையை நிவிர்த்தி செய்யும் நோக்கமாகவே இத்திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஆனல் புதிய நிலங்களில் நெற்செய்கையை விருத்திசெய்வதற்குச் சீனத் தொழிலாளர் கொண்டுவரப்பட்டனர். சராவாக்கில் சவ்வரிசி எப்போதும் உற்பத்தி செய்யப்பட்டது. ஏறத்தாழ 70,000 ஏக்கர் நிலத்தில் சவ்வரிசி விளை விக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டில் சராவாக்கிலிருந்து 240 இலட்சம் தொலர் பெறுமதியான மிளகும் ஏற்றுமதிசெய்யப்பட்டது.
வடபோணியோவிற் புதிதாக அமைக்கப்பட்ட பல குடியேற்றப்பகுதிகள் யுத்த காலத்தில் இராணுவத்தாக்கத்தினுற் பாதிக்கப்பட்டன. நிலநெய் எடுக் குந் தொழில் மீளவும் விரைவாகச் சீர்செய்யப்பட்டது. இதன்காரணமாக 1939 ஆம் ஆண்டிற் பெறப்பட்ட தொகையிலும் பார்க்க எழுமடங்கு அதிகமான அளவில் நிலநெய் 1959 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது. 1961 ஆம் ஆண்டுக்குப் பின் பிலிப்பைன் தீவுகளாலும் இந்தோனேசியாவாலும் அரசியற்
சச்சரவுகள் நேர்ந்துள்ளன.
காலிமாந்தான்
இந்தோனேசியப் போணியோ பெரிய நிலப்பரப்பை அடக்கியிருப்பதோடு, நெடிய கடற்கரையையும் கொண்டுள்ளது. இக்காரணங்களினலே இப்பகுதியிர் குடித்தொகை (1961 இல் 41 இலட்சம்) அதிகமாகவுள்ளது. இதனுல் வட போணியோவிலும் பார்க்க இப்பகுதி கூடிய விருத்தியைக் கொண்டுள்ளது எனக் கருதுவது தவருகும். கரைப்பகுதிகளில் வேறுபட்ட மக்கள் வாழுகின் றனர். தென் கிழக்குக் கரைப்பகுதியில் செலிபீஸிலிருந்து வந்து குடியேறிய பூகியர் என்னும் மக்கள் காணப்படுகின்றனர். தென் கரையில் யாவாவிலிருந்து வந்து குடியேறிய மக்கள் வாழுகின்றனர். மேற்குக் கரையோரத்திலுள்ள சாம் பாஸ், பொந்தியானுக் எனப்படும் இடங்களிற் சீனர் காணப்படுகின்றனர். இவர் களது குடியிருப்புக்கள் பழமையானவை. சாம்பாஸில் இவர்களது குடியேற்றம் ஏற்பட்டு 1,000 வருடங்கள் ஆகியிருக்கலாம். இந்தோனேசியப்போணியோவில் வாழும் முஸ்லிம் மக்கள் யாவரும் மலாயர் எனப் பொதுவாக வழங்கப்படுகின்ற னர். வேறுபட்ட பல இனவகைகளே அடக்கிய ஒரு பொதுப் பதமாக இதனைக் கொள்ளுதல் வேண்டும். ஏனைய மக்கள் எல்லோரும் "தையக்கர்' என வழங்கப் படுகின்றனர். இப்பதமும் பலகட்டத்தினரைக் குறிக்கும் ஒரு பொதுப்பத மாகும். காயான், கென்ஜா, பாகவு எனப்படும் மத்தியபோணியோவில் வாழும் கூட்டத்தினரும், தெற்கிலும் கிழக்கிலும் காணப்படும் ஊலு, நிகாட்சு, வகுப் பினரும், பூனன் குழுவினர் போன்ற அலைந்து திரியும் பிற கூட்டத்தினரும், பொதுவாகத் "தையக்கர்' என்ற பதத்தினுல் வழங்கப்படுகின்றனர். தையக்க ரிடையே சாதாரணமாகக் கிராமங்களிற் காணப்படும் முறைகள் இல்லை. அவர்

கிழக்கு இந்தியத் தீவுகள் : போணியோ 287
களின் உறுதியான குடும்பத் தொடர்புகளே இதற்குக் காரணமாகும். இக் காரணத்தினுல் பாறைத் தொடர்களில் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட "நெடிய வீட்டில்' அவர்கள் கூட்டமாக வாழுகின்றனர். உறவினரைக் கொண்ட இப்பெருங் குடும்பம் ஒரு கிராமம் போலவே அமைந்திருக்கும்.1
மேற்கிலும் தென்கிழக்கிலுமுள்ள பள்ளத்தாக்குக்களிலே மக்கள் செறிவாக வாழுகின்றனர். இங்குக் காணப்படும் பான்ஜெர்மாசின், பொந்தியானக், பாலிக் பாப்பான், தாராக்கான், தான்யுங்சேலோர் எனப்படும் ஐந்து பட்டினங்களும் கரைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இப்பட்டினங்கள் ஒவ்வொன்றிலும் ஏறத் தாழ 25,000 மக்கள் வாழுகின்றனர். சாம்பாஸ், பொந்தியானுக் ஆகிய பட்டினங் களைச் சூழவுள்ள பகுதிகளில் அதிக நிலம் தென்னை, இறப்பர், மிளகு ஆகிய பயிர்களைக் கொண்டுள்ளன. மத்திய காப்புவாஸ் பள்ளத்தாக்கிலுள்ள சிந்தாங் கைச் சார்ந்த நிலங்களிலும் மேற்குறித்த பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. சிந்தாங்கிலிருந்து இப்பொருள்கள் பொந்தியானுக்கிற்கு ஆற்றுவழியாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. தென் தாழ்நிலங்களில், முக்கியமாக குங்கை பாரித்தோவுக்கும் கூனுேங்கு மெராத்தூசுக்கும் இடையில் அதிக குடியடர்த்தி யைக் கொண்ட பயிர்விளையும் நிலம் ஒன்று உண்டு. ஏனைய பாகங்களிலும் பார்க்க இங்கு மழைவீழ்ச்சி ஒரளவுக்குக் குறைவாகும். இதனுல் மண்ணும் அதிகம் நீரினுற் கழுவப்பட்டதாயில்லை. இங்கு நெல், மிளகு, இறப்பர், தென்ன என்பன விளைவிக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஏற்றுமதிக்காகவே இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. காண்டாங்கான் மூலமாகவே ஏற்றுமதி நடைபெறு கின்றது. காண்டாங்கான் பல புதிய தெருக்களினுற் பான்ஜெர்மாசினேடு இணைக் கப்பட்டுள்ளது. பான்ஜெர்மாசினில் 214,000 மக்கள் வாழுகின்றனர். காலிமாந் தானில் இதுவே குடிச்செறிவுமிக்க மாவட்டமாகும். யாவாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்குமுகமாகக் காலிமாந்தானில் நெற்செய்கையின் பொருட் டுப் பெருந்தொகையானேர் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
கிழக்குக் கரைப் பகுதியில் மக்கள் எங்கும் ஐதாகவே வாழுகின்றனர். யுத்த காலத்தின் முன்பு பூலோலவுற் என்னுமிடத்தில் நிலக்கரி எடுக்கப்பட்டது. ஆனல் யுத்த காலத்தின் பின்பு லோவா கூலு, பாசாப்பத்தான் என்னும் இடங் களிலே நிலக்கரி எடுக்கப்பட்டுவருகின்றது. 1960 ஆம் ஆண்டில் இவ்விடங்களி லிருந்து 100,000 தொன் நிலக்கரி எடுக்கப்பட்டது. மாகாக்கான் வடிநிலத்தின் கீழ்ப்பகுதியில் பாலிக்பாப்பான் என்னுமிடம் மையமாக விளங்குகின்றது. இதற் கண்மையாகவுள்ள சமாரிண்டா நிலநெய் எடுத்தற்குப் புகழ்பெற்றதாகும். இந்தோனேசியத் தீவுத்தொடரிலுள்ள மிகமுக்கியமான நிலநெய் வயல்களுள் இதுவும் ஒன்முகும். இங்குப்பெறப்படும் நிலநெய் பாலிக்பாப்பான் மூலமாக ஏற்றுமதிசெய்யப்படுகின்றது. 1961 ஆம் ஆண்டில் 600,000 தொன் ஏற்றுமதி செய்யப்பட்து. அதே வருடத்தில் தாராக்கான் வயலிலிருந்து 100,000 தொன் ஏற்றுமதிசெய்யப்பட்டது. சமாரிண்டாவின் இன்றைய சுத்திசெய்யப்படாத நில நெய் உற்பத்தி யுத்தகாலத்தின் முன்பு உற்பத்திசெய்யப்பட்ட தொகையில் அாைவாசியாகும். தாராக்கான் வயல் யுத்தகாலத்தில் அதிக சேதத்திற்குள்

Page 159
288 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ளாகியது. பின்பு இவ்வயல் மீண்டும் சீராக அமைக்கப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டில் இவ்வயலில் 250 கிணறுகளிலிருந்து நிலநெய் உற்பத்தி செய்யப் பட்டது. யாவாவைச் சேர்ந்த மக்கள் குடியேறியுள்ள பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் உணவுப் பொருள் உற்பத்தி குறைவாகும். பூலோலவுற் பகுதியில் ஏற்றுமதிக்காக மிளகு விளைவிக்கப்படுகின்றது. சிறிய தோட்டங்களில் இறப் பர்ச் செய்கையும் பெருகிவருகின்றது. 1960 ஆம் ஆண்டில் இத்தோட்டங்களி லிருந்து 130,000 தொன் இறப்பர் உற்பத்தி செய்யப்பட்டது. அண்மைக் காலத் தில் மீன்பிடித்தொழிலும் முக்கிய தொழிலாக அமைந்துள்ளது. 1960 ஆம் ஆண் டிற் பிடிக்கப்பட்ட கடல்மீனின் தொகை 110,000 தொன் ஆகும். 1951 ஆம் ஆண்டுத் தொகையோடு ஒப்பிடும்பொழுது இது மும்மடங்காகும். நன்னீர்ச் சதுப்பு நிலங்களில் தடைகளை அமைத்து அவற்றைத் திருத்தி எடுக்குந் திட்டம் ஒன்றும் நடைமுறையிலுள்ளது. திருத்தப்பட்ட இந்நிலங்களில் யாவாவைச் சேர்ந்தோரைக் கொண்டுவந்து குடியேற்றினல் இவற்றைச் சிறந்த ஒரு நெற் களஞ்சியமாக மாற்றியமைத்துவிடுவர். வெட்டு மரத்தொழில் முக்கியமானதா யினும் ஒழுங்கற்றதாய்க் காணப்படுகிறது. 1960 இல் 100 இலட்சம் கன அடி மரம் பெறப்பட்டது. இந்தோனேசியாவின் மொத்தக் கொப்பரா ஏற்றுமதியில் அரைவாசி காலிமாந்தானிலிருந்து பெறப்படுகின்றது (1961 ஆம் ஆண்டில் 153,000 தொன்). பிலிப்பைன் நாடு பெருந்தொகையாகக் கொப்பராவை ஏற்று மதி செய்வதனுல் காலிமாந்தானின் கொப்பரா ஏற்றுமதி ஓரளவுக்குப் பாதிக்கப் பட்டுள்ளது.
(சாபா, புரூணை, சராவாக் ஆகிய பகுதிகளில் மலேசியாவின் தொலர் உபயோ கத்திலுளது. இந்தோனேசியாவின் ரூப்பியா காலிமாந்தானில் உபயோகத்தில்
உள்ளது. 222 ஆம் பக்கம் பார்க்க.)

அத்தியாயம் 16
கிழக்கு இந்தியத் தீவுகள் செலிபீஸ், பாலி, லொம்பொக், திமோர், மேற்கு ஈரியான்
போணியோ, யாவா என்பவற்றுக்குக் கிழக்கேயுள்ள தீவுகளில் மக்கள் மிகவும் ஐதாகக் காணப்படுகின்றனர். இத்தீவுகளில் ஏற்பட்டுவரும் விருத்தியும் அண் மைக் காலத்ததேயாகும் , அதிக அளவுக்கு விருத்தி யடைந்தனவாகவும் அவை காணப்படவில்லை. ஆகவே இத்தகைய தீவுகள் பற்றிய நூல்களோ அறிக்கை களோ குறைவாகவே யுள்ளன. புவியியல் சம்பந்தமான விளக்கங்களைப் பெறுவ தற்கு அரிதாகக் காணப்படும் சில விவரத் திாட்டுக்கள் மட்டுமே துணைசெய்கின் றன. இத்தீவுகள் மிகவும் ஆழமான கடற்பகுதியில் எரிமலைப் பாறைகளால் அமைந்துள்ளன. இத்தீவுகளைச் சுற்றி முருகைக்கற்பார்கள் பரந்துள்ளன. சில விடங்களில் இரு நிரைகளில் இப்பார்கள் பாந்துள்ளன. கடலிற்குச் சற்று மேலே தெரியத் தக்கனவாகப் பல சிறிய தீவுகள் காணப்படுகின்றன. இவை பெரும் பாலும் தெளிவாக அறியப்படாத நிலையிலே இன்றும் உள்ளன. பல சிறு தீவுகள் இங்ஙனம் பரந்து காணப்படுவதனல் போக்குவரத்திற்கும் தடையாக உள்ளன. பாலித்தீவுக்கும் லொம்பொக் தீவுக்கும் இடையிலுள்ள தொடுகடற் பகுதியே இன்று சர்வதேசக் கப்பற் போக்குவரத்திற்கு முக்கியமாகவுள்ளது. போர்த்துக் கேயர் தூரகிழக்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த காலத்திற் சீனுவுக்குப் போவ தற்கும் வருவதற்கும் மாக்கசர்த் தொடுகடலையே பயன்படுத்தினர். மொலுக்காத் தீவுகளுக்குப் போகும் பாதையில் மாக்கசர் உள்ளதல்ை நீரைப் பெறுவதற்கும் ஏற்ற இடமாகவும் கொள்ளப்பட்டது. செலிபீஸை வடிவத்தில் ஒத்துள்ள ஹல் மாகொாவும் அதற்கப்பாலுள்ள மொலுக்காத் தீவுகளும் உரோமர் காலத்திலி ருந்து போர்த்துக்கேயர் காலம்வரையில் வாசனைப் பொருள் வியாபாரத்திலீடு பட்டோரை ஈர்க்கும் தீவுகளாக இருந்தன. இத்தீவுகள் பெருந்தொகையாகக் கிராம்பை உற்பத்தி செய்தமையே காரணமாகும். வாசனைப் பொருள் வியாபா ாம் இன்று பெரும்பாலும் அற்றுப்போய்விட்டது. கிழக்காகவமைந்துள்ள இச் சிறிய தீவுகளின் வர்த்தக முதன்மையும் குன்றிவிட்டது. இன்று கொப்பராவே சிறிதளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதன் உற்பத்தியும் காலத்திற்குக் காலம் கூடிக்குறைந்து வந்துள்ளது. இன்று கொப்பாா மேற்கிலுள்ள பெருந் தோட்டங்களிலிருந்தே பெறப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட சிறிய தீவு களில் சிற்சில இடங்களிலே தென்னை பயிரிடப்படுகின்றது. இதனுல் எல்லா இடங் களுக்கும் சென்று கொப்பசாவைச் சேர்ப்பதற்கு ஏற்படும் செலவும் அதிக மாகும். கொப்பாாவின் தரமும் எப்பொழுதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. செவி பீஸ், பாலி, லொம்பொக் ஆகிய தீவுகள் ஒரளவுக்குக் கூடிய முதன்மை பெற்றுள் ளன எனலாம். கிழக்கிலுள்ள தீவுக்கூட்டத்தில் வாழ்பவரெனக் கணிக்கப்பட்ட 130 இலட்சம் மக்களில் 120 இலட்சம் பேர் மேற்குறித்த மூன்று தீவுகளிற்
289

Page 160
290 தென்கிழக்கு ஆசிய நாடுகள் காணப்படுகின்றனர். கிழக்கிலுள்ள இத்தீவுகள் சில காலம் கிழக்கு இந்தோ னேசியா என்ற பெயரால் வழங்கி வந்தன. தூரம், தொடர்பின்மை, தன்னிறை வுள்ள பொருளாதாரம் என்பன இந்தோனேசியா ஒருங்காகவிணைந்து அமை யாது, பிரிவுபடுவதற்குக் காரணமாக இருக்கின்றன.
క్వైస్త్ర - T "" --""سT-------- - - - -
33தனிக் குடா:
རུ་ཉི་
一士
6f
s:
士
ஸ்டேர்மண்டித் வுேத் தொட்
60001அடியிலும் -23,56ւճn 6ծ7 5ւ-6)
படம் 82. செலிபீஸ்
மாக்கசர்த் தொடுகடலின் தென்பகுதி கப்பற் போக்குவரத்திற்குப் பொருத்த மான பகுதியாகவில்லை. பாய்க்கப்புல்கள் அநேகமாகப் பாதிக்கப்படுகின்றன. புயற்காற்று வீசும் பருவகாலங்களில் இது ஆபத்தான பகுதியாக இன்றும் காணப்படுகின்றது. தீவுகளைச் சுற்றியும் குறுக்கிலும் கற்களும் பார்களும் காணப்படுகின்றன. ஓரிடத்தில் இவை பெரியனவாக அமைந்து சண்டாப்பெருந் தடுப்பக் கற்பார்த்தொடர் என வழங்கப்படுகின்றன. குவின்சுலாந்தைச் சார்ந்து அமைந்துள்ள பெருந் தடுப்புக் கற்பார்த் தொடரிலும் பார்க்கச் சற்றே சிறிதாக
 
 
 
 

கி. இ. தீவுகள் : செலிபீஸ், பாலி, லொம்பொக், திமோர் 29
வுள்ளபொழுதும் இக்கற்பார்த்தொடர் அதிக ஆபத்தை விளைவிக்கத்தக்கது. இது போணியோவின் கரையிலிருந்து 250 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இதற் கும் செலிபீஸிற்கும் இடையில் ஆழமான ஒடுங்கிய கடலுண்டு. இது தெற்கு நோக்கி லீமா, காங்கையான் தீவுகள் வரை பரந்து முருகைக் கற்களை ஒாத்திற் கொண்டுள்ள ஒரு பெரிய மேடையாக அமைந்துள்ளது. இம் மேடையின் பரப்பு 50,000 சதுர மைலுக்கும் மேற்பட்டதாக உள்ளது (படம் 7). இம் மேடைக்கும் தென் செலிபீஸிற்கும் இடையில் ஏனைய முருகைக்கற்றிணிவுகள் காணப்படுகின் ஹன. இவற்றுள் மாக்கசருக்கு அப்பாலுள்ள ஸ்பேர்மண்டித் தீவுத்தொடர் மிகப் பெரியதாகும். V
செலிபீஸ்
யாவாவிலும் பார்க்கச் செலிபீஸ் (உள்ளூரார் குலாவேசி என வழங்குவர்) பெரிதாகவுள்ளபொழுதும் இது பல ஒடுங்கிய நிலப்பிரிவுகளாக (படம் 82) அமைந்துள்ளது. இதனுல் 73,000 சதுரமைல் பரப்பை உள்ளடக்கிய செவிபீஸ் 3,000 மைல் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. ஆகவே பொதுவாக இங் குள்ள எல்லா இடங்களும் கடலிலிருந்து 25 மைல் அாாத்திற்குள்ளாகவே காணப் படுகின்றன. இதனுல் எளிதாக எல்லாப் பகுதிகளுக்கும் செல்லலாம் எனக் கருது வது தவருகும். பாறைகளும் முருகைக் கற்பார்களும் தொடர்ச்சியாகக் கரை யைச் சூழ்ந்து பரந்துள்ளன. பழைய இந்தியக் குடியேற்றம் இத்தீவில் ஏற்படா மைக்கு இது ஒரு காரணமாக இருந்திருத்தல் வேண்டும். ஐரோப்பிய வியாபாரி களும் இப்பகுதியில் நாட்டங்கொள்ளவில்லை. கிழக்கு இந்தியத் தீவுகளுள் ஏனைய ஏலவே இஸ்லாமியத் தாக்கத்தைப் பெற்றிருக்க இத்தீவு பிற்பட்ட காலத்திலே இத்தாக்கத்தைப்பெற்றது.
சுமாத்திரா, யாவா ஆகிய பகுதிகளில் வில்வடிவில் ஏற்பட்ட மடிப்பு மலைகள், பிளவுகள் என்பனபற்றி முன்னரே குறிப்பிட்டோம். அவற்றின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலைமைகளை இங்கும் காணலாம். செலிபீஸிற் புவியோட்டுத் தாக்கங் கள் பல திசைகளிலிருந்து ஏற்பட்டன. இதன் வடிவம் அகலக்கோட்டு முறை யில் ஏற்பட்ட யாவா-சுமாத்திரா மலைத்தொடர் அமைவினையும் நெடுங்கோட்டு முறையில் ஏற்பட்ட பிலிப்பைன் மலைத்தொடர் அமைவினையும் காட்டுவதாக உள்ளது. மேலும் இதன் குத்தான கரைகள், மேலுயர்த்தப்பட்ட நிலங்கள், பிள வுப் பள்ளத்தாக்குக்கள் என்பன இது அதிக அளவுக்குப் பிளவுத்தாக்க நிலைமை களினுற் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை உணர்த்துகின்றன. பிளவுத் தாக்கங் கள் காரணமாகப் பிற்பட்ட காலத்தில் எரிமலை விளைவுகளும் ஏற்பட்டன. வட கிழக்கு மூலையில் மீனகாசாவின் பின்னணியில் எரிமலைத் தாக்க நிலைமைகள் இப் பொழுதும் காணப்படுகின்றன. தெற்கிலுள்ள லோம்பொபாதாங்கில் அவிந்த எரிமலைகள் காணப்படுகின்றன. செலிபீஸின் வட துண்டு நீங்கிய பிற பகுதிகள் மத்திய கோட்டிற்குத் தெற்கில் அமைந்துள்ளன. தீவு முழுவதிலும் ஈரமும் வெப் பமுமான காலநிலை நிலவுகின்றது. இதனுல் அயனப் பிரதேச மழைக்காடுகள் இங்குப் பரந்துள்ளன.

Page 161
292 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
இங்குள்ள ஆறுகளில் அதிக நீர் காணப்படுகின்றது. நீரரிப்பு நிலைமைகளைப் பார்க்கும்பொழுது அவை இளமையான நிலையிற் காணப்படுகின்றன. குறுகிய அளவையுடைய ஆறுகளின் போக்கிற் பெரிய நீர்வீழ்ச்சிகளும் ஆழமான பாகங் களும் இடுக்குக்களும் உண்டு. செலிபீஸில் 1,500 அடிக்குக் கீழ்ப்பட்ட நிலம் குறைவாகும். இது பெரும்பாலும் மலைசார்ந்த தீவாகும். தாழ்வான நிலத்தைக்
கிழக்குத் தீவுத்தொடர்: சராசரி மழைவீழ்ச்சி (அங்குலம்)
trood நாள் (.02 அங் * பெ மா எப் மே யூன் யூலை ஒக செத் ஒக் நவ திச | மொத்
மேல்)
மானுடோ
(30 அடி) 164 17。715,111.67.96.3 6.5 4。6 3.7 3.4 4.6 8.714。4 104.5 மாக்கசர்
(13 அடி) 134 26.623.216.46.03.4 2.9 1.4 0.4 0.6 1.7 7.223.5 113.3 கூப்பாங்கு
(148 ayus) 80 15.2 15.8 8.5 2.6 1.1 0.4 0.2 0.1 0.1 0.7 3.6 9.5 57.8
கொண்ட பகுதிகளாக சிடென்றெங்கு-தெம்பி ஏரிப் பகுதியும் (இது தென் மேற் கிலுள்ள உறுப்பைத் தனிப்பட்ட பகுதியாகப் பிரித்துள்ளது) தென் கிழக்கி லூள்ள சம்பாசாப் பள்ளத்தாக்கும் விளங்குகின்றன. தீவின் மத்திய பகுதியிற் பல ஏரிகள் காணப்படுகின்றன. சில பிளவுப் பள்ள ஏரிகளாகவிருப்பதனுல் மிக ஆழமாக உள்ளன. வவமே-தெதெகி. நிரையிலுள்ள ஏரிகளுள் ஒன்ருன போசோ ஏரி 5,000 அடி ஆழமுடையது. ஏனைய பெரும்பாலும் தூர்ந்து சேற் றுச் சமநிலங்களாக உட்பகுதியில் அமைந்துள்ளன.
செலிபீஸில் பொன், நிக்கல், இரும்புத்தாது, பெற்முேலியம் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளபொழுதும் அவை அதிக அளவுக்கு அகழ்ந்து எடுக்கப் Lւ-aն)avã». ۔ செலிபீஸில் 70 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வாழுகின்றனர். இத்தொகையில் 10 இலட்சம் மக்கள் மீனகாசாவிற் காணப்படுகின்றனர். தீவின் பெரும்பகுதி குடிகளற்றுக் காணப்படுகின்றது ; சில காட்டு மக்கட் கூட்டத்தினரே அங்குள்ள னர். மீனகாசா மாவட்டத்திற் சதுர மைலுக்குரிய குடியடர்த்தி 75 பேராகும். தென் மேற்கிலுள்ள மாக்கசரிற் சதுரமைல் ஒன்றில் 325 பேர் வாழுகின்றனர். கடற்கரைப்பகுதியிலே மக்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றனர். உட்பகுதி யில் ஒதுக்காயுள்ள பள்ளத்தாக்குக்களிலும் தாழ்நிலங்களிலும் அலைந்து திரியும் மக்கட் கூட்டத்தாரே காணப்படுகின்றனர். சுதேசிகளும் பூகியரும் மாக்கசாரி களுமே பெருந்தொகையினராயுள்ளனர். இவர்களுள் 20 இலட்சம் பேர் வரையில் தென்மேற்கில் வாழுகின்றனர். கிழக்கு இந்தியத் தீவுகளிலுள்ள கடலோடும் முஸ்லிம் இனத்தவருள் வரலாற்று முறையாக முதன்மை பெற்றவர் இவர்கள் எனக் கூறலாம். கடற்கொள்ளையடிப்பதிலும் ஆட்களை அடிமை கொள்வதிலும்

கி. இ. தீவுகள் : செலிபீஸ், பாலி, லொம்பொக், தீமோர் 293
இவர்கள் கைதேர்ந்தவர்கள். இப்பொழுது இவர்கள் இங்குள்ள தீவுகளிடை யில் நடைபெறும் வியாபாரத்தில் முக்கியமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர் களுடைய சிறிய வத்தைகளைச் சிங்கப்பூருக்கும் போட் மோர்ஸ்பிக்கும் இடை யில் எங்கும் காணலாம். பூகியர் தொழிலாளராகப் போர்த்துக்கேயரால் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டனர். குடியேற்ற நாட்டாட்சி ஏற்பட்ட ஆரம்ப காலத்திலே தொழிலாளர் பிரச்சினை இருந்தது என்பதனை இதி லிருந்து அறியலாம். கொண்டுவரப்பட்ட பூகியர் மலாக்காவின் பின்னணியிற் குடியேறினர். உட்பகுதியிலுள்ள கூட்டத்தவர் தொராட்சர் என்ற பொதுப் பெய ரால் வழங்குகின்றனர். பெரும்பாலும் இயற்கையோடொட்டிய வாழ்க்கையை மேற்கொண்ட இக்கூட்டத்தவர்களில் பொலினீசியத் தொடர்பு காணப்படுகின் றது. இவர்கள் கிழங்கு வகைகளைப் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முறையிற் பயி ரிடுகின்றனர். செலிபீஸின் வட பகுதியில் முஸ்லிம் கோரோந்தாலரும் கிறிஸ்தவ மீனகாசியரும் காணப்படுகின்றனர். மீனகாசிய மக்கள் பிலிப்பினுேக்களை ஏறத் தாழ ஒத்துள்ளனர். செலிபீஸில் வாழும் மக்களுள் இவர்களே முன்னேற்றமான வாாக உள்ளனர். இவர்கள் மேலைத்தேச முறையிற் கல்வி பயின்றவராகவும் ஐரோப்பிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவராகவும் காணப்படுகின்றனர்.
வட கிழக்கு முனையான மீனகாசாவில் மக்கள் அடர்த்தியாக வாழ்வதற்கு இப்பகுதியில் நடைபெறும் செறிவான பயிர்ச்செய்கை காரணமாகும். இளமை யான எரிமலை மண்வகை உள்ளமையாற் பயிர்ச்செய்கை செறிவாக உள்ளது. இங்குள்ள பள்ளத்தாக்கிலே பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. யாவாவிலுள்ள எரிமலைகளைப்போன்று இங்குள்ள எரிமலைகளில் மேல் உச்சிவரையில் படிவயல் கள் அமைக்கப்படவில்லை. மிக்க வளமுடைய ஒடுங்கிய தாழ்நிலங்களிற் பயிர்கள் சிறப்பாக விளைவிக்கப்படுகின்றன. வாழ்க்கைப் பயிராக நெல் விளைவிக்கப்படு கின்றது. ஏற்றுமதிக்காகத் தென்னையும் சோளமும் பயிரிடப்படுகின்றன. இப் பொருள்கள் மானடோமூலம் (குடித்தொகை 30,000) ஏற்றுமதி செய்யப்படுகின் றன. தென் மேற்குக் குடாப் பகுதியிலும் குடித்தொகை அதிகமாகும். லோம் பொபாதாங்கிலிருந்து எரிமலை மண்வகை பரந்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம். இங்கு நெல், சோளம், கோப்பி, தென்னை ஆகிய பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. மேற்குக் கரையிலுள்ள மாக்கசர் (குடித்தொகை 1961 இல் 3,84,100) அடர்த்தியான குடித்தொகையுள்ள இப்பகுதியின் துறைமுகமாக அமைந் துள்ளது. கடற்கரையிலிருந்து சிடென்றெங்கு-தெம்பி ஏரிகளைச் சூழவுள்ள தாழ்நிலம் வரை மாக்கசரை இணைக்கும் தெரு அமைக்கப்பட்டுள்ளது. செலிபீஸில் இங்குத்தான் தெருப்போக்குவரத்து சிறப்பாகவமைந்துள்ளது. செலிபீஸில் மேலைத்தேசப் பயிர்ச்செய்கைமுறை பாவவில்லை. பெருந்தோட்டங் களும் விருத்திசெய்யப்படவில்லை. ஆகவே ஏற்றுமதிப் பயிர்கள் சிறு தோட்டங் களிலே அநேகமாக விளைவிக்கப்படுகின்றன. இறப்பர்ச் செய்கையும் அதிக அள வுக்கு விருத்தி செய்யப்படவில்லை.
கிழக்கிலுள்ள தீவுகளின் கடற்போக்குவரத்தில் மாக்கசர் மையமாக விளங்கு கின்றது. கிழக்கு இந்தியத்தீவுகளை உள்ளடக்கிய புதிய கூட்டாட்சி அமைப்பிள்

Page 162
294 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மாக்கசர் இப்பகுதியின் தலைநகராக இடம்பெறவேண்டும் எனவும் கருதப்படு கின்றது. போர்த்துக்கேயர் காலத்தின் பிற்பட்ட நிலையில் இப்பகுதியில் நிலவிய ஒரு அமைப்பினை நினைவூட்டுவதாக இது உள்ளது.
படம் 83. பாலி, லொம்பொக் என்னும் தீவுக ளின் தரைத்தோற்றத் தன்மைகள்
பாலியும் லொம்பொக்கும்
பாலி முதல் தீமோர் வரையுள்ள தீவுகள் சண்டாமேடைச் சிறு தீவு கள் என வழங்கப்படுகின்றன. இவற் அறுள் பாலியும் லொம்பொக்குமே குடியடர்த்தி கூடிய தீவுகள். இவை ஒரளவுக்கு நன்கு அறியப்பட்டன வாயுமுள. புவியியல் முறைப்படி இத்தீவுகள் முக்கியமானவையாய் உள்ளன. ஆனல் இவற்றிற்குக் கிழக்கிலுள்ள தீவுகளின் நிலைமை களையே இத்தீவுகளும் கொண்டுள்
ளன எனக் கூறமுடியாது. இத்தீவு கள் லொம்பொக்தொடுகடலினுற்
பிரிக்கப்பட்டுள்ளன. சண்டா மேடையின் மேற்குச் சிறு தீவுப் பகுதியில் ஆழமும் பாதுகாப்பும் உடையதாய் இத்தொடுகடல் காணப் படுகின்றது. பாலி, லொம்பொக் என் னும் தீவுகளின் தரைத்தோற்றம், தன்மை என்பனவும் ஏறத்தாழ ஒரேமாதிரியாக உள்ளன. யாவா வின் தரைத்தோற்ற நிலைமைகளின் தொடர்ச்சியென இவற்றைக் கருத லாம். பாலி, லொம்பொக் என்னும் இரு தீவுகளினதும் தென்பாகம் தாழ்வான சுண்ணக்கல் மேட்டு நில மாக உள்ளது. இதுவே தென் யாவா விலும் காணப்படுகின்றது. பாவித் தீவில் வெளியரும்பிய பாறைகள் குறைவாகும். தபெல்கூக் எனப் படும் மக்களில்லாத வெறும் பாறைப்
பகுதி குறிப்பிடத்தக்கது. இது
தீவோடு ஒரு மணலிணைப்பு மூலம் தொடுக்கப்பட்டுள்ளது. லொம்பொக்கில் வெளியரும்பிய பாறைப்பகுதி பெரிதாக உள்ளது. நீரில்லாத காசித்து மேனில
 

கி. இ. தீவுகள் : செலிபீஸ், பாலி, லொம்பொக், தீமோர் 295
மாக இது காட்சியளிக்கின்றது (ஏறத்தாழ 1,000 அடி உயரமுடையது). இங்கு மூங்கிற்பற்றைகள் மட்டும் இடையிடையே உண்டு. பெரும்பாலும் தரவையாக வுள்ள இப்பகுதியில் மக்கள் வாழ்வதில்லை. ஜெம்பிரானுவுக்கும் தபனனுக்கும் இடையில் ஏறத்தாழ இத்தகைய தரவைத்தன்மையுடைய சுண்ணக்கல் நிலம் (படம் 83) ஒன்று உண்டு.
பாலி, லொம்பொக் ஆகிய தீவு களின் வடபகுதியில் அடிப் பாறையமைப்பு யாவாவின் அச் அடையற் பாறைகளாலான மடிப்பு-பிளவுத்
சாகவமைந்துள்ள
தொடரின் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. ஆனல் இத் 穿 தொடரின் அமைவு தரையில் தெரியாதவாறு எரிமலைகள் பரந் துள்ளன. எரிமலைப் படிவுகள் தரைத் தோற்றத்தில் முக்கியமா கக் காணப்படுகின்றன.
பாலியின்
உயிர்ப்பெரிமலைகள் பல
フジ፪)ቷ
སྤྱི
V
ܚ
பாகத்தில் நிரை யாகப் பரந்துள்ளன. (பீக் வான் தபனன், சாத்தூர் பதூர், ஆகூங்கு என்பன). எரிமலைக ளின் வட சாய்வுகளிற் சிறிய அருவிகள் காணப்படுகின்றன. பிரவாகித்து ஓடுவதனல் அவை நீர்ப்பாய்ச்சலுக்கு ஏற்றனவாக வில்லை. வருடத்தில் அரைவாசிக் காலம் அவை நீரற்று வறண்டு காணப்படும். தென் பாகத்தில் பெரிய அருவிகள் காணப்படுவ தணுல் சாய்வான வண்டற் சம நிலம் மிக்க வளமுடையதாக அமைந்துள்ளது 84). ஆறுகள் அடிக்கடி புதிய எரி
GL
○表
ཛོད།།
—,
(Lul Lh
மலைப் படிவுகளைக் கொண்டு வந்து படியவிடுவதனல் மண்வளம் மேலும் அதிகரிக்கின்றது. இத ல்ை இப்பகுதியில் அடர்த்தியான குடியிருப்பு உண்டு. நுட்பமான
நீர்ப்பாய்ச்சல் வசதியைக்
ހަހަހި
محہ
Q
uLuh 84.
வடிகால் முறைகள்
பாலி, லொம்பொக் ஆகிய தீவுகளின்

Page 163
296 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கொண்ட நெல் வயல்கள் இங்கே காணப்படுகின்றன. டச்சு ஆட்சியினர் காலத் திற்கு முற்பட்ட நெல் விளைவிக்கப்படும் படிவயல்கள் உட்பகுதியைச் சார்ந்தும்
s
o
no o
s
iš
படம் 85. பாலி, லொம்பொக் தீவுகளில்
நெற்செய்கை
2,000 அடி உயரம் வரை பரந்தும் காணப்படுகின்றன. இந்த உயரத் கிற்கு மேலே வயல்கள் ஒரள வுக்கு ஐதாக உள்ளன. எனினும் 5,000 அடி உயரமான பதூர் எரி மலை வாய்வரையில் மேற்குச் சாய்விற் குடியிருப்புக்களும் பயிர்ச்செய்கையும் பரந்துள்ளன. இச்சாய்வில் இறுகாத எரிமலைச் சாம்பர் உள்ளமையினல் ஆறுகள் ஆழமான பள்ளத்தாக்குக்களில் ஓடுகின்றன. ஆற்றுநீர் காலத்திற் குக் காலம் கூடிக்குறைந்து காணப்படுகின்றது. வறண்ட பரு வங்களில் துளையுள்ள எரிமலைக் குழம்புப் பாறையில் நீர்மட்டம் தாழ்ந்துவிடுவதே இதற்குக் காரணமாகும். மழைக்காலத்தில் ஆறுகள் பிரவாகித்து ஓடுகின் றன. ஆனல் கிழக்குப் பருவக் காற்று வீசும் காலத்தில் (மே முதல் நவம்பர் வரை) ஆறுகள் நீரற்று வறண்டுவிடுகின்றன. குரிய ஒளிபடும் இச் சமநிலத் தில் சாம்பர் கொண்டு வந்து படியவிடப்பட்டதனுல் மண்ணின் வளம் யாவா மண்ணிலும் பார்க் கக்கூடுதலாக உள்ளது. மண் வளத்திற்கு ஏற்பக் குடியடர்த்தி யும் அதிகமாகும் (படம் 85).
லொம்பொக் தீவின் எரிமலை வலயம் நீள்வட்டக் கூம்பு போன்று காணப்படுகின்றது. இங்கு எரிமலைப் பெருவாய்கள்
சில உண்டு-ரின்ஜனி (12,200 அடி), நங்கி என்பன. இங்குள்ள வறட்சியுடைய
குத்தான வடசாய்வுகள் பெரும்பாலும் மக்களற்றுக் காணப்படுகின்றன. மென்
சரிவுடைய தென் சாய்வுகளைச் சார்ந்து கீழே செவ்வக வடிவமான நிலம்
 
 
 
 

கி, இ.தீவுகள் : செலிபீஸ், பாலி, லொம்பொக், திமோர் 297
உண்டு. இது நீர்ப்பாய்ச்சல் வசதியுடைய செறிவான பயிர்ச்செய்கை நிலமா கும். கிழக்கில் காலநிலை மேலும் வறட்சியுடையதாய் உள்ளது. அவுஸ்திரேலியத் தன்மை இங்கு ஓரளவுக்கு உண்டு. அவுஸ்திரேலியாவிலுள்ள தாவர வகைகளை யும் (நாகதாளி வகை) விலங்கு வகைகளையும் (கொண்டைக் கிளிவகை) ஒத்தன இங்கும் காணப்படுகின்றன.
பாலித்தீவில் வாழும் மக்கள் இன்றும் இந்து சமயத்தவராகவே காணப்படு கின்றனர். யாவாவின் உயர்சாதி இந்துக்களின் வழித்தோன்றல்கள் இவர்கள். யாவா இஸ்லாமிய மதத் தாக்கத்தைப் பெற்றபொழுது இந்து சமயத்தவர் கிழக்கு நோக்கிப் பெயர்ந்தனர். இவர்கள் இன்றும் அதிக அளவு கூட்டு வாழ்க்கை முறையையும் சிறப்புடைய சமூகவமைப்பையும் உடையவராகக் காணப்படுகின்றனர். இவர்களது கலைப்பண்பு போற்றத்தக்கதாக உள்ளது. ஏனைய தீவுகளில் வாழும் மக்களிலும் பார்க்க இவர்கள் கலைத்துறையில் மேம் பட்டவராகக் காணப்படுகின்றனர். இவர்களது கோயிற் கட்டட அமைப்பு கவர்ச்சியுடையதாகவும் சிக்கலானதாகவும் விளங்குகின்றது. லொம்பொக் தீவில் பாலித்தீவினரிலும் பார்க்க முஸ்லிம் மதச்சார்புடைய சசக் மக்களே அதிகமாக வாழுகின்றனர். இத்தீவுகளில் எரிமலைகளின் வளமான தென் சாய்வுகளிலே குடி யடர்த்தி மிகவும் அதிகமாகும். பாலித்தீவின் கிரன்சார் மாவட்டத்தில் சதுர மைல் ஒன்றில் 2,300 பேர் வாழுகின்றனர். தீவு முழுவதையும் நோக்கும்பொழுது சதுர மைலுக்குரிய தொகை 1,500 பேராகும். இத்தீவின் மொத்தக் குடித் தொகை 29 இலட்சமாகும். லொம்பொக்கில் 10 இலட்சத்திற்குச் சற்றுக் கூடுத லாக மக்கள் உள்ளனர். சராசரி அடர்த்தி குறைவாகும்-சதுர மைலுக்கு 810 பேராகும். இத்தீவுகள் ஒவ்வொன்றிலும் 250,000 ஏக்கர் நெல் விளைவிக்கப்படும் நன்செய்நிலம் உண்டு (படம் 85). இந்நிலத்தில் வேறு உணவுப் பயிர்களும் சொந்தத் தேவைக்காகப் பயிரிடப்படுகின்றன. பாலித்தீவினர் நுண்ணிய சிற்ப வேலைக்குப் புகழ்பெற்றவர். மரம், கல், பொன், வெள்ளி முதலியவற்றில் அழ கான பொருள்களை இவர்கள் அமைப்பர். நெசவுத் தொழிலும் இவர்களுக்குக் கைவந்த ஒன்ருகும். இப்பொருள்கள் ஏற்றுமதிக்குப் பயன்படுகின்றன. எனினும் பன்றி வளர்த்தல் மூலமே இவர்கள் பணவருவாயைப் பெறுகின்றனர். தென் கிழக்கு ஆசியாவில் வாழும் சீனரின் தேவைக்காக இவர்கள் பன்றிகளை வளர்த்து ஏற்றுமதி செய்கின்றனர். இத்தீவுகளில் சிறந்த துறைமுக வசதிகள் இல்லை. இத ஞல் இவ்வழிச் செல்லும் சர்வதேசக் கப்பல்கள் இத்தீவுகளில் தங்காது இவற்றி னிடையாகச் சென்றுவிடுகின்றன.
தீமோர்
310 மைல் தூரத்தில் வவகி-தெதெமே திசைப்போக்கில் தீமோர் அமைந் துள்ளது. கிழக்கில் அதி அாரத்திலுள்ள சண்டாமேடைச் சிறுதீவு இதுவாகும். 7,300 அடிவரை உயரமுடைய இத்தீவில் அயனக் காடுகள் அடர்த்தியாகப் பரந் துள்ளன. மரவகைகளுள் யூக்கலிப்டஸ் குறிப்பிடத்தக்கது. மரவகைகள் விலங்கு வகைகள் என்பனவற்றைப் பொறுத்தவரையில் 1,500 மைல் அாரத்திலுள்ள

Page 164
298 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆசியாவோடும் 420 மைல் அாாத்திலுள்ள (9,000 அடி ஆழமான கடலாற் பிரிக் கப்பட்டுள்ள) அவுஸ்திரேலியாவோடும் தொடர்பு காணப்படுகின்றது. கோடைக் காலத்தில் (திசம்பர்-பெப்புருவரி) வடமேற்கிலிருந்து காற்றுவிசுகின்றது. இத னல் இப்பருவத்தில் ஈரமான மத்திய கோட்டு வானிலை நிலவுகின்றது. கோடை தவிர்ந்த பிற காலங்களில் தென் கிழக்குக் காற்றுக்கள் இங்கு விசுகின்றன. இவை காரணமாக வறட்சியான காலநிலைத்தன்மை ஏற்படுகின்றது. வளங்குறை வான கரைசார்ந்த நிலங்களில் நெல், சோளம் என்பன விளைவிக்கப்படுகின்றன. மீன்பிடித் தொழிலும் ஓரளவுக்கு நடைபெறுகின்றது. தீமோர் வாசிகள் கிறிஸ் தவராகவோ, முஸ்லிம்களாகவோ காணப்படுகின்றனர். உடலமைப்பு, மொழி ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இவர்கள் இந்தோனேசியரிலிருந்தும் மெல னிசியரிலிருந்தும் வேறுபட்டவராக உள்ளனர்.
தீமோர் அரசியலடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கி அலுள்ள 60 சதவீதமான பகுதி போர்த்துக்கேயத் தீமோராகும். 1960 ஆம் ஆண் டில் இங்கு 517,000 பேர் வசித்தனர். இப்பகுதியின் நிருவாகம் 1668 இல் போர்த் துக்கேயரால் நிறுவப்பட்ட டில்லி என்னும் துறைப்பட்டனத்திலிருந்து நடை பெறுகின்றது. 1947 இலிருந்து மேற்குத் தீமோர் இந்தோனேசியாவுக்குச் சொந்தமாகவிருந்துவருகின்றது. இங்கு ஏறத்தாழ 450,000 பேர் வாழுகின்ற னர். இதன் தலைநகரம் கூப்பாங்கு ஆகும். இது 1668 இல் டச்சு ஆட்சியினரால் நிறுவப்பட்டது. இந்நகரத்தில் இப்பொழுது 20,000 பேர் வாழுகின்றனர்.
பிசின், சந்தனக்கட்டை, கோப்பி முதலிய பொருள்கள் டில்லியிலிருந்து (1960 இல் குடித்தொகை 52,100) ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவுஸ்திரேலியா வுக்கும் ஹொங்கொங்கிற்குமிடையிற் செல்லும் கப்பல்கள் சில சமயங்களில் இவ்விடம் வந்து இப்பொருள்களை ஏற்றிச் செல்லுகின்றன. சிப்பி, கடல்அட்டை ஆகியன சிறிதளவில் கூப்பாங்கிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவுஸ் திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையிற் செல்லும் கப்பல்கள் இவற்றை ஏற் றிச் செல்லுகின்றன. போர்த்துக்கேயத் தீமோர்ப் பகுதியில் அவுஸ்திரேலியரால் நிலநெய் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1959 ஆம் ஆண்டில் ஒசுலரி, அலியம்பத்தா ஆகிய இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இங்கு மேற்பரப்பையடுத்த பாகத்தில் ஓரளவுக்கு நிலநெய் காணப்படுகின்றது.
மேற்கு ஈரியான்
1962 இல் நெதலாந்து, மேற்கு நியூகினியைக் கைவிட்டது. 167 சதுர மைல் பரப்புடைய இப்பகுதி காடடர்ந்ததாயும் மலைப்பாங்கானதாயும் அபிவிருத்தி பற்றதாயும் உள்ளது. ஐந்து இலட்சத்துக்குமதிகமான மக்களையுடையதாயு முள்ளது. நெதலாந்து கைவிட்டபின் "மேற்கு ஈரியான்" என்ற பெயருடன் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது. யாவாவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களை விட்டால், மேற்கு ஈரியான் மக்களுக்கும் பிரதான இந்தோனேசி பக் குடிகளுக்குமிடையே வரலாறு, இனம், மொழி, பொருளாதாரம் ஆகியவற் றில் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றே சொல்லலாம்.

அத்தியாயம் 17
தைலாந்தின் இயற்கைத்தோற்றம்
பல அமிசங்களிற் தைலாந்து பேமாவை ஒத்துள்ளது. இந்த இரு நாடுகளும் தெற்கு நோக்கியமைந்த தாழ்வான பகுதிகளைக்கொண்டுள்ளன. ஈரமும் வெப்ப மும் மாறிமாறி வரும் காலநிலைகள் இரு நாடுகளிலும் நிலவுகின்றன. இருநாடு களிலும் ஒவ்வோர் ஆறுகள் முக்கியமாக உள்ளன. இருநாட்டு மக்களிடையி அலும் பண்பாட்டு ஒற்றுமைகள் பல காணப்படுகின்றன. பொருளாதார நட வடிக்கைகளும் ஒரேவகையினவாக உள்ளன. இருநாடுகளும் அரிசி, தேக்கு ஆகிய பொருள்களையே முக்கியமாக ஏற்றுமதி செய்கின்றன. தைலாந்து பேமா விலும் பார்க்கத் தெற்காக அமைந்திருப்பதனற் சில வேறுபாடுகளும் காணப் படுகின்றன. குரிய ஒளிபடும் தன்மை காரணமாக நெற்செய்கையைப் பொறுத்த வரையில் தைலாந்தின் காலநிலை ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. காலநிலை யைப் பொறுத்த அளவில் தைலாந்து சீனுவோடு தொடர்புடையதாயிருப்பதும் (சீனவுக்கும் தைலாந்துக்கும் பொது எல்லை இல்லை) தென் கிழக்கு ஆசியத் தடக்காற்றுத் தொகுதிக்குட்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கன. தென் கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒழுங்குமுறையான விபரங்களில்லாத நாடு தைலாந்தாகும். இடப்பெயர்களும் சீரானமுறையில் ஒலியமைதிக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. தைலாந்தின் பழைய பெயர் சயாம் (சீயம்) என்பது.
தைலாந்தின் நிலவமைவு மிகவும் எளிமையானது (படம் 86). மேற்குப் பகுதியில் பழைய மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. இத்தொடர்கள் ஒருபுறத் தில் பேமாவுக்குள்ளும் மறுபுறத்தில் மலாயாவுக்குள்ளும் நீண்டு செல்கின்றன. வடக்கில் அரிபட்ட மேட்டுநிலம் உண்டு. நீாரிப்புத்தாக்கத்தினுல் சிதைந்து மேனிலமாக இது காட்சியளிக்கின்றது. சான் உயர்நிலத்தை நிகர்க்கும் இம் மேனிலம் அதன் தொடர்ச்சியாகும். கிழக்கில் தாழ்வான பீடம் ஒன்று உண்டு. இது கோராத் மேட்டுநிலம் என வழங்கும். இதன் மேற்கு ஒரமும் தெற்கு ஒரமும் குத்தாக உள்ளன. இதனுல் மத்திய தைலாந்து தனிப்பட்ட பிரிவாகத் தோற்றமளிக்கின்றது. இம்மேட்டுநிலம் தென்மேற்கிலுள்ள 4,100 அடி உயர மான காவோலெம் (காவோகியாவ்) என்னும் சிகரத்தோடு சேர்ந்து ஓர் அா ஞக அமைந்துள்ளது. மேற் குறித்த மூன்று நிலவுறுப்புக்களின் நடுவில் மத்திய தைலாந்து அமைந்துள்ளது. இது ஏறத்தாழ ஐராவதி வடிநிலத்தை ஒத்துள் வது. த ரிப்பட்ட ஒர் ஆற்றின் அதிக அளவு செல்வாக்கைக் கொண்டிராத பொழுதும் மத்திய தைலாந்து இந்நாட்டின் மையப் பகுதியாக விளங்குகின்றது. தென் கிழக்குத் தைலாந்தில் காடமம் மலைத்தொடரின் சிறுபாகம் ஒன்று புடைத்து நிற்கின்றது. இதற்கும் கோராத் மேட்டுநிலத்திற்குமிடையிலுள்ள ஒடுங்கிய பள்ளத்தாக்கில் பிராச்சின் ஆறு ஓடுகின்றது. தொன்லேசப் சமநிலத் தைத் தைலாந்துக் குடாவோடு இணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
299
13-CP 4217 (6819)

Page 165
300 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
۰۹نصر
7 .V !( ص ۰ ہے۔ مسی f V ജ് ന്യൂ j Y
a 3 • المہ V ܐ 'V /ご4 7-7s /**ہے مح
ܟ” "اما" مسیر مرگ مرد سیار W. ܓ” ; سم سر علم/ سمسم صح؟
\ \\ ~ نہ۔
ܠ”
vi محمد
14 ! ! ! t . бА ”ܠ rー 4e ~ ί γ ܗ ܐ ال I
s
f 6e 力
f
மேற்குத் தைலாந்தின்
உயர்நிலங்கள் 6 கோசாத் மேட்டுநிலம் Eமேயொம், மேநான் மேனிலம் 4 மேட்டு நிலம்
B கோராத் எல்லை உயர்நிலம். .
/ மலைத்தொடர்களும் 4மத்திய தைலாந்து
பள்ளத்தாக்குக்களும் 4 செள்பிராயர் 2தைலாந்தின் குடாநாட்டுப் பகுதி 8 புரசாக் தாழ்நிலம் 3.வட மலைப் பகுதி 5கீழ்த் தைலாந்துசெளபிராயாக்
4 மேப்பிங்கு, மேவாங்கு கழிமுகம்.
ス காடமம் மலைத்தொடர்
படம் 86. தைலாந்தின் பிரதேசப் பிரிவுகள்
 
 

தைலாந்து : இயற்கைத்தோற்றம் 30
தைலாந்தின் கிழக்கு எல்லை பெரும்பாலும் இயற்கைத் தன்மைகளுக்குப் பொருந்த அமைந்துள்ளது. இந்த எல்லை நெடுந்தூரம் மத்திய மேக்கோங்கு ஆற்றைச் சார்ந்தும் கோராத் மேட்டு நிலத்தின் குத்தான தென்சாய்வைச் சார்ந்தும் அமைந்திருப்பதோடு காடமம் மலைத்தொடரில் நீர்பிரி மேட்டோடு பொருந்தவும் காணப்படுகின்றது. பேமாவுக்கும் தைலாந்துக்குமிடையிலுள்ள எல்லை நீண்ட நீர்பிரிமேட்டோடு சார்ந்து காணப்படுகின்றது. இதனுல் இந்த எல்லை வளைந்து வளைந்து தெனசெரிம், தவோய் பகுதிகளுக்கூடாகச் செல்லு கின்றது. சாம்ரோய் யொற்றிற்கு அண்மையில் எல்லை தைலாந்துக் குடாவிற்கு மிக அணித்தாக அமைந்துவிட்டது. இதல்ை கிராப் பூசந்தியை யடுத்துள்ள தைலாந்தின் குடா நாட்டுப்பகுதி கண்டத்தைச் சார்ந்த தைலாந்துப் பகுதியி லிருந்து பிரிவுபட்டதுபோன்று காணப்படுகின்றது. வடக்கில் சான்நிலம் உள் ளது. இங்கும் நீர்பிரி மேடே எல்லையாக உள்ளது. இந்த எல்லை சல்வீன் ஆற்று இடுக்கைச் சார்ந்து சில மைல் தூரம் சென்று சியெங் சென்னுக்கு அண்மையி லூள்ள மலையிடுக்குப் பகுதியில் மேக்கோங்கு ஆற்றேடு இணைந்துள்ளது.
தரைத்தோற்ற வகைகள்
1. மேற்கு மலைப்பகுதி (படம் 86). இம்மலைத்தொடர்கள், ஏலவே மலாயா, பேமா ஆகிய நாடுகளில் இவற்றுக் கொப்பாகக் கூறத்தக்க பகுதிகளில் விரி வாக விளக்கப்பட்டுள்ள அமைப்பு முறையையே பின்பற்றிச் செல்கின்றன. விரிவாகப் பார்க்குமிடத்துத் தரைத்தோற்ற வகையில் வேறுபாடு இல்லாத பொழுதும், ஏற்றத்தாழ்வு அமிசங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை வர்லாற்றுக் காலத்தில் தரைப்போக்குவரத்து முறைகளைப் பாதித்து வந்துள்ளன. மேற்குப் பகுதியில் கருங்கற்களால் அமைந்த உயரமான தொடர் களும் அவற்றிடையே ஒடுங்கிய பள்ளத்தாக்குக்களும் உள்ளன. இடையிடையே சுண்ணக்கற்பாறை நிலங்கள் உள்ளமையினுல் காசித்துத் தரைத்தோற்றத் தன்மை காணப்படுகின்றது. சாம் ரோய் யொற்றிற்கு வடக்கில் மலைத்தொடர் வ வ மே-தெ தெ கி. திசையில் அமைந்துள்ளது. சமாந்தரமாகவுள்ள ஈரப் பள்ளத்தாக்குக்கள் பேமாவை நோக்கியும் தைலாந்தை நோக்கியும் அமைந்துள்ளன. இவை முறையே மூல்மேன், ரட்புரி ஆகியவற்றேடு வந்து இணைந்துள்ளன. மத்திய காலத்தில் மெக்லோங்குப் பள்ளத்தாக்கோடு இணைந்து இவை முக்கிய வியாபார வழியாக நிலவின. சாம் ரோய் யொற்றிற்குத் தெற்கில் கருங்கற் பாறைத் தொடர் வவகி-தெதெமே. திசையில் அமைந்திருந்தது. தெற்கில் மலாயாவோடு இணையுமிடத்தில் இது நெடுங் கோட்டு முறையில் அமைந்து காணப்பட்டது. இங்குள்ள கிராப் பூசந்தி மிக வும் ஒடுங்கிய பகுதியாகும் (10°வ அகலக்கோட்டை யடுத்து இதன் அகலம் 35 மைலாகும்). இங்கு ஒடும் சிறிய அருவிகள் பெரும்பாலும் எல்லாக் கருங்கற் பாறைகளிலுமிருந்து தகாப் படிவுகளைக் கொண்டுவந்து பக்கங்களில் வண்டல் களோடு படியவிட்டுள்ளன. கிழக்கு மேற்காக நடைபெற்ற தரை மார்க்கப் பிச பாணமும் இதனூடாகவே நடைபெற்றது. தக்குவாப்பா-பன்டன் பாதை

Page 166
302 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
குறிப்பிடத்தக்கதாகும். இப்பாதையில் சிறு ஒடங்கள் மூலம் நடைபெறும் போக்குவரத்து முக்கியமானதாகும். சிறிது அாரத்தையே கால்நடையாகக் கடக்க வேண்டியிருந்தது. காடடர்ந்த பகுதியானமையினற் சிறிது துரத்தை யேனும் கடப்பது மிகவும் கடினமாகவிருந்தது. வியாபாரிகளுக்கு இது ஆபத் தானதுமாகும். பூசந்தி வழியாக நடைபெற்ற போக்குவரத்து முறைகள் இப் பொழுது முக்கியமானவையாக இல்லை. யுத்தகாலத்தில் யப்பானியரால் நிறு வப்பட்ட சட்புரி, சிசவத், மூல்மேன் ஆகியவற்றை இணைக்கும் புகையிாதப் பாதை இன்று கைவிடப்பட்டுள்ளது. 1946 இல் ஏற்பட்ட ஆங்கில-தை ஒப் பந்தத்தில் கிராப் பூசந்திக்கூடாகக் கால்வாய் அமைப்பது பற்றியும் ஆராயப்
--gil. 2. வட மலைப்பகுதி மாக்கல், தகடாகுபாறை, சுண்ணக்கல் முதலியவற் றைக் கொண்டு அதிக அளவுக்கு மடிப்பாக்கம் பெற்ற பகுதியாகும். நீாரிப்பும் மிகையாக ஏற்பட்டுள்ளது. இதனல் வட-தென் திசையில் உள்ளாக அமைந்த கருங்கற்பாறைகள் இன்று புறத்தே காணப்படுகின்றன. சான் உயர்நிலத் தொடர்ச்சியாகவுள்ள இப்பகுதியிலிருந்து தென் திசையில் பல அருவிகள் ஒடு கின்றன. இவை தொடர்ந்து மத்திய தைலாந்துத் தாழ்நிலத்திற் கூடாகவும் ஓடுகின்றன. லாம்பாங்கிற்கும் பிரேக்கும் இடையில் தைலாந்திலுள்ள சில எரி மலைகளுள் ஒன்று காணப்படுகின்றது. ஆனல் இது இப்பொழுது உயிர்ப்பெரி மலையாக இல்லை. தைலாந்தில் மிகவும் உயரமான தரைத்தோற்றவுறுப்புக்கள் இப்பகுதியிற் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குக்களில் வளமான வண்டல்மண் உண்டு. இவ்விடங்களை நாடிக் கடினமான தன்மையையுடைய வட பகுதியி விருந்து மக்கள் வந்து குடியேறியுள்ளனர். இப்பகுதியின் தென் எல்லை 174° வ. அகலக்கோட்டைச் சார்ந்து காணப்படுகின்றது.
3. கோசாத் மேட்டுநிலம் தரைத்தோற்றத் தன்மையில் தைலாந்திலும், தென் கிழக்கு ஆசியாவிலும் சிறப்புடைய பகுதியாக விளங்குகின்றது. இப்பகுதி யிற் செம்மணற் கற்பாறைகள் பிளவுத்தாக்கங்களினலும் நீசரிப்பினுலும் சிதை வுற்ற நிலத்திணிவின்மீது பொருந்தாதமுறையிற் கிடையாகப் பாந்துள்ளன. இம்மணற்பாறைகள் சிதைவுருது காணப்படுகின்றன. ஆனற் கீழ்க் காணப் படும் சிதைவுற்ற நிலத்திணிவின் பகுதிகள் அயலிலுள்ள பிரதேசங்களில் மேற் றரையிலே காணப்படுகின்றன (படம் 87). இம்மணற்கல் மேட்டுநிலம் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 500 அடி உயரமுடையது. ஆனற் கிழக்கிலும் தெற்கிலும் 1,500 அடிக்கு மேற்பட்ட உயரத்திலிருந்து குத்தாக மேக்கோங்கு நதியை நோக்கிச் சாய்ந்துள்ளது. இதனுல் நாம் சீ, நாம் மூன் ஆகிய அருவி கள் கிழக்குநோக்கி ஓடுகின்றன. இக்காரணத்தினுல் இப்பிரதேசம் மத்திய தைலாந்திலிருந்து நீங்கி மேக்கோங்கை நோக்கி அமைந்ததுபோன்று தோற்று கின்றது. இப்பகுதி சதுரத்தன்மையுடையது. மேற்பாகம் தட்டையாகக் காணப்படுகின்றது. உள்நோக்கி வெட்டப்பட்ட பள்ளத்தாக்குக்கள் இங்கே உண்டு. பள்ளத்தாக்குக்களுக்கு இடையிலுள்ள நிலங்கள் மேசைபோன்று தட்டையாக உள்ளன. இவற்றில் நீர்மட்டம் வருடத்திற் பெரும்பாகத்தில் மேற்

தைலாந்து : இயற்கைத்தோற்றம் 303
தரையின் கீழே காணப்படுகின்றது. மணற்பாறை மேட்டு நிலத்தின் மேற்கு ஒரமும் தென் ஒரமும் டோங்பாயா, டோங் சேக் எனப்படும் குத்துச் சாய்வு களைக் கொண்டுள்ளன (ஒருகால் இவை பிளவுத்தாக்கத்தினுல் ஏற்பட்டிருக்க லாம்). இவற்றுக்கு அணித்தாக இடையிடையே பழைய எரிமலை நூண்டுளேப் பாறைகள் வெளித்தோன்றிக் காணப்படுகின்றன. மேக்கோங்கு நதியை நோக்கி யுள்ள வடக்கு-கிழக்கு ஓரங்களிலும் குத்துச் சாய்வுகள் காணப்படுகின்றன. நாம் மூன், நாம் சீ அருவிகளின் பள்ளத்தாக்குக்களைச் சார்ந்து மேட்டுநிலத்
5 .4 كاته 40
275-979.
{گا انقیه 165
படம் 87. கோராத் மணற்கல் மேட்டுநிலத்தின் குறுக்குமுகம், 1. தாழ்நிலக் காடுகள் 2. மரமிடையிட்ட மூங்கிற் பற்றைகள், 3. அயனப்பிரதேச மழைக்காடுகள், 4. மண்ணற்ற குத்துச்சாய்விலுள்ள குறள் மரங்கள், 5. பயின் இடையிட்ட சவணுப் புல்நிலம்
திற்குக் குறுக்கே கிழக்கு மேற்காகச் சேற்று நிலங்கள் பரந்துள்ளன. பொது வாக வறட்சியுடைய பகுதியில் இவை நீர்ப்பற்றுடைய நிலங்களாகக் காட்சி யளிக்கின்றன. தொன்லே சப்பைப்போன்று மேக்கோங்கு நதி பெருக்கெடுக் கும் போது இவை பாதிக்கப்படுகின்றன. நாம் மூன் இணையுமிடத்திற்குக் கீழ் மேக்கோங்கு ஒடுங்கிய இடுக்கினூடாகச் செல்லுகின்றது. இடுக்கின் இருபுறத் அம் மணற்பாறைகள் புடைத்து நிற்கின்றன. பெருமழை பெய்யுங் காலங்களில் இப்பாறைத் தடைகள் ஓட்டத்தைத் தடைசெய்வதனல் மேக்கோங்கு நதியி லிருந்து நீர் மேல்நோக்கி ஓடி நாம் மூன் அருவிப்பள்ளத்தாக்கின் மேற்பகுதி யில் வெள்ளப்பெருக்கை உண்டாக்குகின்றது. கோசாத் மேட்டுநிலத்திலிருந்து வரும் மழைநீரும் சேர்வதனல் நிலைமை மேலும் மோசமாகின்றது. மணற் பாறைப் பகுதியிலிருந்து மேக்கோங்கை வந்தடையும் சிறிய அருவிகளின் பள்ளத்தாக்குக்களிலும் இந்நிலைமை ஏற்படுவதுண்டு. கோராத் வடிகால்கள் மூலம் செல்லும் நீர் மேக்கோங்கைச் சேர்வதற்கு முன்னமே நாம் மூனேடு சேர்ந்துவிடுகின்றது. நாம் மூன் பள்ளத்தாக்குச் சில பருவங்களிற் சேற்று நிலமாக மாற்றமடையும் தட்டையான நிலமாகும் (படம் 90). பள்ளத்தாக் கின் ஒாங்களில் படிவுகள் காரணமாக வரம்புகள் அமைந்துள்ளமையாற் பெருக்கு நீர் மீண்டும் விரைவாய் ஆற்றிற் போய்ச் சேரமுடியாத நிலைமை உண்டு. இதனுல் அதிக காலம் சதுப்புத் தன்மை நீடிக்கின்றது. மேட்டுநிலக் தில் நுண்டுளேத்தன்மை காரணமாகக் கோடைக்காலத்தில் அடிக்கடி உப்புப் படிவுகள் மேற்றரையில் வந்து படிகின்றன. இவ்வாறு சேரும் உப்புப் படிவுகள் விட்டுத்தேவைக்காகவும் வியாபாரத்திற்காகவும் பெறப்படுகின்றன. உப்பு தரைவழியாக யுன்னனுக்கும் மத்திய தைலாந்துக்கும் வியாபாரத்திற்காகக் கொண்டுசெல்லப்படுகின்றது. பேச்சா யூனுக்கு வடமேற்கிற் காணப்படும்

Page 167
304 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மியேங்குன்றுகள் கோாாத் தொடர்புடைய வெளிக்கிடைப் பகுதியாகும். மேட்டுநிலத்தின் தென்மேற்கில் கருங்கற்பாறைக் குன்றுகள் நிரையாகப் பரந்துள்ளன. காடமம் குன்றுகளின் தொடர்ச்சியாக இவை அமைந்துள்ளன. 4. தென் மேற்குத் தைலாந்தில் அமைந்துள்ள காடமம் மலைத்தொடரின் தன்மைகள் கம்போடியாவில் உள்ளவற்றைப் போன்று (அத்தியாயம் 19) காணப்படுகின்றன. தொடரின் அமைவில்மட்டும் சிறிது வேறுபாடு உண்டு : தைலாந்திற் காணப்படும் இத்தொடரின் பகுதியில் வளமான வண்டற் படிவு களைக் கொண்ட பல பள்ளத்தாக்குக்கள் உள்ளன. இவை யாவும் தென் முக மாகத் தைலாந்துக் குடாவை நோக்கி அமைந்துள்ளன. இப்பள்ளத்தாக்குக் களில் மட்டான அளவில் மக்கள் வாழுகின்றனர். அந்த அளவுக்கே பயிர்ச்செய் கையும் விருத்தி செய்யப்பட்டுள்ளது. மடிப்புண்ட பாறைவகைகளைக் கொண்ட இப்பகுதி தாழ்வான குன்றுகளைக் கொண்ட ஆறரித்த நிலமாக உள்ளது. இந் நிலம் பாங்கொக் பெருங்குடாவின் நெடிய கிழக்கு ஒரம்வரை பரந்துள்ளது. அவ்விடத்தில் பிளவுத்தாக்கம் காரணமாக டோங் பாயாக் குத்துச் சாய்வு ஓரளவுக்கு நெடிதாக அமைந்துள்ளது.
5. மத்திய தைலாந்து நீாரிப்பினல் நன்கு பாதிக்கப்பட்ட தாழ்வான பகு தியை அடக்கியுள்ளது. இப்பகுதியில் காணப்படும் சிக்கலான அமைப்பை யுடைய அடையற் படிவுகள் நீசரிப்புக் காரணமாக 300 அடியிலும் குறைவா கத் தாழ்ந்து காணப்படுகின்றன, அடையற் பாறைகள் மீது ஆற்றுவண்டல் கள் பரந்துள்ளன. மத்திய தைலாந்து வடக்கே 17% பாகை அகலக்கோடு வரை பரந்துள்ளது. அவ்வெல்லையையடுத்து மலைத்தொடர் அமைந்துள்ளது. இப்பகுதி கோராத் மேட்டுநிலத்தின் குத்தான சாய்வுவரை பரந்துள்ளது. மேற்கே இப்பகுதி தானென் தோங் சை, தெனசெரிம் தொடர்கள் வரை பரந் துள்ளது. இதனுல் இந்த எல்லை ஓரளவுக்கு நெடியதாகக் காணப்படுகின்றது. இப்பகுதி தாழ்வான நிலமாக அமைவதற்குப் பிளவுத் தாக்கம் காரணமா, அல்லது நீரரிப்புக் காரணமா என்பது திட்டமாகத் தெரியாது. புவிச்சரித நிலைமைகள் பற்றித் தெளிவான உண்மைகள் அறியப்படுங் காலத்திலே இ பற்றித் திட்டமாகக் கூறலாம்.
மத்திய தைலாந்து பொதுவாக மெனும் பள்ளத்தாக்கு என வழங்கப்படுகின் றது. ஆனல் உண்மையில் மெனும் ஆறு என ஒன்றில்லை. மெனும் என்பது தை மொழியில் ஆற்றைக் குறிக்கும். தாழ்வான இப்பகுதியில் நான்கு பிரதான அருவிகள் வடக்குத் தெற்காகக் காணப்படுகின்றன. தைலாந்தின் வடக்கி லுள்ள மலைத்தொடர்களிலிருந்து இவை உற்பத்தியாகி ஓடுகின்றன. மேத்துன், பிங்கு, வாங்கு ஆகிய மூன்று அருவிகளும் பான் சொப் வூங்கு என்னுமிடத்தில் இணைகின்றன. பின்பு நாக்கோன் சாவான் என்னுமிடத்தில் இவற்றேடு நான், யொம் என்னும் வேறு இரண்டு அருவிகளும் சேர்ந்து தனி நதியாக ஏறத்தாழ 25 மைல் தூரம் ஓடுகின்றது. சைனத் என்னுமிடத்திற்குத் தெற்கில் கிளை அருவி கள் சேர்ந்த இந்த ஆறு பல பரப்புங்கிளைகளாகப் பிரிகின்றது. இவற்றுள்

தைலாந்து : இயற்கைத்தோற்றம் 305
முக்கியமாக மேற்கிலுள்ள தாச்சினும் கிழக்கிலுள்ள செள பிராயாவும் அமைந் துள்ளன. பிரதான பரப்புங் கிளை அருவியாகவுள்ள மெனும் செளபிராயாவே தைலாந்தின் பிரதான ஆறன மெனும் என நீண்ட காலமாக வழங்கிவருகின்றது. கிழக்கிலுள்ள பரப்புங்கிளையாற்றேடு ஆயுத்தியாவுக் கண்மையில் பாசாக் என்னும் அருவி வந்து சேருகின்றது. இது டோங் பாயா குத்துச்சாய்வுக்குச் சமாந்தரமாக ஒடுகின்றது.
கோராத் மேட்டுநிலத்திற்கும் காடமம் மஃக்தொடருக்கும் இடையில் ஓடும் பிராச்சின் ஆறு (பான் பா கொங்கு) தெற்கில் வளைந்து செல்வதனுல் மத்திய தைலாந்தின் வடிகால் முறையோடு தொடர்பில்லாது காணப்படுகின்றது. இது தனிப்பட்ட ஆமுக ஒடிப் பாங்கொக் பெருங்குடாவை அடைகின்றது. மேற்கு மலைத்தொடரிலிருந்து மெக்லோங்கு நதி தெற்கு நோக்கித் தனிப்பட்ட ஆருக ஓடிப் பாங்கொக் பெருங்குடாவில் விழுகின்றது. இது மேனும் செளபிராயா ஆற் முேடு செயற்கை முறையிலே தொடுக்கப்பட்டுள்ளது. கழிமுகப் பகுதியில் கால் வாய்கள் (நீர்பாய்ச்சுதற்கும் போக்குவரத்துக்கும்) சமாந்தரமாக அமைக் கப்பட்டுள்ளன. பூசந்தியிற் காணப்பட்ட பழைய பாதைகளைச் சார்ந்து இவை கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆறுகள் இங்குக் காலத்திற்கும் காலம் பெருகுவதோடு அதிக அளவில் மண்டி முதலியவற்றையும் கொண்டுவந்து படியவிடுகின்றன. இதல்ை இந்த ஆறுகளின் முகங்களைச் சார்ந்து அகன்ற கழி முகங்கள் அமைந்துள்ளன. பாங்கொக் பெருங்குடாவில் வண்டல்கள் வந்து படிவதனல் அது படிப்படியாக நிரம்பியும் வருகின்றது.
ஐராவதிப் பள்ளத்தாக்கிற் போன்று மத்திய தைலாந்திலும் இரு பிரிவுகள் காணப்படுகின்றன:
(அ) தைலாந்தின் கீழ்ப்பாகம்; வண்டற் படிவுகளைக் கொண்ட தட்டையான கழிமுகப் பகுதி சரிவகப் போலி வடிவத்தில் அமைந்துள்ளது. இது பெருங்குடாவிலிருந்து பிராச்சின் ஆற்றையடுத்துள்ள பிராச்சின்புரி வரையும், பாசாக் ஆற்றைச் சார்ந்துள்ள சாராபுரிவரையும், செளபி ராயா ஆற்றையடுத்துள்ள பேயுவாக்கிரிவரையும் மெக்லோங்கு ஆற்றை யடுத்துள்ள ராய்புரிவரையும் பரந்துள்ளது. இவ்வாறு வரையறுக்கப் பட்ட வண்டற் கழிமுகப் பகுதியில் நிலம் பெரும்பாலும் தட்டையாக வுள்ளது. ஆற்றைச் சார்ந்து காணப்படும் அணைகளும் வண்டல் திடல் களுமே சற்று உயரமாகக் காட்சியளிக்கின்றன (படம் 92). (ஆ) தைலாந்தின் நடுப்பாகம் ; தைலாந்தின் தாழ்நிலத்தின் வடபாகத்தில் அஃலவடிவ அமைப்பிற் குன்றுகளும் பள்ளத்தாக்குக்களும் காணப்படு கின்றன. மாக்கற்பாறைகள் தகடாகுபாறைகள் என்பன இடையி டையே அதிக அளவுக்கு மடிப்புண்டும் காணப்படுகின்றன. நாக்கோன் சாவானுக்குக் கீழேயுள்ள ஒடுங்கியவுறுப்புக்கள் நிலவமைவு, வடிகால் முறைக்குக் குறுக்காக அமைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. இதனுல் நாற்புறமும் குழப்பட்ட தாழ்வானநிலம் வடக்கில் அமைந் துள்ளது. பிரதான ஆறுகள் படிவுகளைக் கொண்ட அருவிகளேச்

Page 168
306
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கொண்டுள்ளமையால் வண்டற்படிவுகள் நிறைந்து காணப்படுகின் றன. இதனுல் தைலாந்தின் கீழ்ப்பாகத்திலுள்ளவற்றைப் போன்று பள்ளத்தாக்குக்கள் இங்கு அமைந்துள்ளன. பாசாக் பள்ளத்தாக்கு மிகப் பெரிதாகவுள்ளது. இன்று பள்ளத்தாக்கிற் சிறிய ஆறு ஒன்றே ஒடுகின்றது. இது நெடிதாகவும் காணப்படுகின்றது. ஆலுவாங் பிசாபாங் கிற்கும் பாக்லேக்கும் இடையில் ஒடும் மேக்கோங்கிலிருந்து இதனை அறியலாம். தெற்கில் பிராச்சின் கிளையாறு ஓடுகின்றது. இதிலிருந்து மேக்கோங்கின் பழைய போக்காகப் பாசாக் முன்பு தனிபட்ட முறை யில் ஓடிப் பெருங்குடாவிற் சேர்ந்தது என எண்ண இடமுண்டு.
தைலாந்திலுள்ள பாறைகள் கணிப்பொருள்களுக்கு அத்துணை முக் கியமானவையல்ல. கிராப் பூசந்தியைச் சார்ந்தே தகரப்படிவுகள் ஓரளவுக்குக் காணப்படுகின்றன. நாம் நிகவு பள்ளத்தாக்கிற் பரற்கற் களைக் கழுவிச் சிறிதளவு பொன் எடுக்கப்படுகின்றது. இப்பள்ளத் தாக்கு மேக்கோங்கின் ஒரு கிளையாகும். கிராப் பகுதியிலுள்ள சில பள்ளத்தாக்குக்களிலும் பொன் எடுக்கப்படுகின்றது. பழைய போக்கு வாத்துப் பாதைகள் காரணமாகவே கிராப் பள்ளத்தாக்குக்களில் இத் தொழில் ஆரம்பித்து நடைபெறுகின்றது. இவ்விடங்களில் தாது நாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று கூற முடியாஅ. வட தைலாந்திலுள்ள நாம் வா, டோங் பாயாவிலுள்ள சொன் லூக், கிழக்கிலுள்ள முவாங்குத் என்னுமிடங்களில் இப்போது செம்பு அகழப் படுவதில்லை. கஞ்சன்புரியில் கலேணு காணப்படுகின்றது. 1958 இல் கிராப் பகுதியில் 400 தொன் சீலைற்று (தங்கிதன் தாது) பெறப் பட்டது. காடமம் தொடரிற் சிறிதளவுக்கு இரத்தினக் கற்கள் இன்றும் பெறப்படுகின்றன. இரும்புத்தாது பல பகுதிகளிற் காணப்படுகின்றது. ஆனல் போக்குவரத்து, எரிபொருள் என்பன சிறப்பாக இன்மையால் இரும்புத்தாது அகழப்படுவதில்லை. நாக்கோன் சாவானில் முற்ரு நிலக் கரிப் படைகள் உண்டு. இவையும் இன்றுவரை அகழ்ந்தெடுக்கப்பட வில்லை. கிராவில் எடுக்கப்படும் தகரம் கரையைச் சார்ந்து கடல்வழி யாகப் பினங்கு, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு வியாபாரத்திற்காகக் கொண்டு செல்லப்படுகின்றது. தகரம் எடுத்குந் தொழில் வெளிநாட்ட வரான ஐரோப்பியர், சீனர் ஆகியோருக்கே சொந்தமாகவுள்ளது. அகழுந்துறையில் (வாருதல்) சீனத்தொழிலாளரே பெரும்பாலும் ஈடு பட்டுள்ளனர் (1961 இல் 16,600 பேர்). அகழப்படும் முறைகள் யாவும் பெரும்பாலும் மலாயாவிலுள்ளவற்றைப் போன்று காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்பு தைலாந்து வருடத்தில் 22,000 தொன் தகாத்தாதை உற்பத்தி செய்து வந்தது. ஆனல் 1962 ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி 15,100 தொன்னகும். உற்பத்தியிற் பெரும் பகுதி பினங்கு மூலம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தைலாந்து : இயற்கைத்தோற்றம் 307
காலநிலை
அயலிலுள்ள பேமா, இந்தோசீன, மலாயா ஆகிய நாடுகளில் நிலவும் கால நிலைத்தன்மைகளே தைலாந்திலும் காணப்படுகின்றன. கிராப் பூசந்திப் பகுதி யில் வட மலாயாவின் காலநிலைத் தன்மைகள் நிலவுகின்றன. இங்கு மழை எல் லாப் பருவங்களிலும் பெய்கின்றது; வருடத்தில் இருமுறை உயர் மழைவீழ்ச்சி உண்டு. மத்திய தாழ்நிலம் (படம் 88) அதிக வறட்சியுடையது. கோடையில்
20அங்குலம்
:-ஒட9 逊卧目须
படம் 88, தைலாந்தில் மழைவீழ்ச்சி
தெற்கிலிருந்து காற்றுக்கள் வீசும்பொழுதே மழை பெய்கின்றது. மேற்கு மலைத் தொடர் காரணமாக மெனும் செள பிராயாப் பள்ளத்தாக்கு ஒதுக்குத் தன் மையைப் பெற்றுள்ளது. இதனல் மத்திய பேமாவைப்போன்று வறண்ட வல யம் இங்கே அமைந்துள்ளது. மத்திய தைலாந்தைச் சூழ உயரமான நிலங்கள் காணப்படுவதஞல் உண்டாகும் வறட்சியை இடையிடையே ஏற்படும் குருவளி களும் மிதப்படுத்தக்கூடியனவாக இல்லை. இந்தோசீனுவிலும் தென்சீனக் கடற்

Page 169
308 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பகுதியிலும் உண்டாகும் தைபூன்களும் இப்பகுதியை அடைவதில்லை; கோாாத் மேட்டுநிலத்தையும் அரிதாகவே அடைகின்றன.
கிராப் பூசந்தி தவிர்ந்த தைலாந்தின் ஏனைய பகுதிகளில் திசம்பர் முதல் ஏப் பிரில் வரை மாதம் ஒன்றிற்கு ஓர் அங்குலத்திலும் குறைந்த மழைவீழ்ச்சியே பெறப்படுகின்றது. பின்பு இந்தியா, பேமா போன்ற நாடுகளிற் போன்று LD60A வீழ்ச்சி சடுதியாக ஏற்படுகின்றது. ஏப்பிரில் பிற்பகுதியில் சடுதியாக மழை தொடங்கி நவம்பர் நடுப்பகுதிவரையில் பெய்கின்றது. அமைவு நிலை உயரம் ஆகிய தன்மைகளைப் பொறுத்து மழைவீழ்ச்சி மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றது. யூலை மாதத்தில் தைலாந்தின் தென் கிழக்கிலும் எல்லாமலைப் பகுதிகளிலும் 10 அங்குலத்திற்கு மேற்பட்ட மழை பெய்கின்றது. ஆனல் மத் திய தைலாந்திலும் கோாாத் மேட்டுநிலத்திலும் இம்மாதத்தில் 10 அங்குலத்திற் குக் குறைந்த மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. ஒற்முேபர் மாதத்தையடுத்து மத்திய தைலாந்து எங்கும் மழைவீழ்ச்சி குறைந்துவிடுகின்றது.
நீண்டகால மழைவீழ்ச்சி விபரங்களைப் பார்க்குமிடத்துத் தைலாந்தில் மழை வீழ்ச்சி பெரும்பாலும் தசைத்தோற்ற வேறுபாடுகளுக்குப் பொருந்தக் காணப் படுகின்றது என்னும் உண்மை புலனுகின்றது. கோபாத் மேட்டுநிலத்தின் உயா மான ஒரப்பகுதிகள் வருடத்தில் 120 அங்குல மழையைப் பெறுகின்றன. மேட்டு நிலத்தின் தாழ்வான பகுதிகள் வருடத்தில் 60 அங்குலத்திற்குக் குறைந்த மழையைப் பெறுகின்றன. டோங் பாயா குத்துச் சாய்வைச் சார்ந்துள்ள ஒதுக் குப்பகுதியில் 40 அங்குலத்திற்கும் குறைந்த மழைவிழ்ச்சியே உண்டு.
மத்திய தைலாந்து எங்கும் 60 அங்குலத்திற்குக் குறைந்த மழைவீழ்ச்சி பெறப்படுகின்றது. மேற்குமலைத் தொடரைச் சார்ந்து பெருங்குடாவை யடுத் துள்ள பிரவுகவோவிலிருந்து பிங்கு ஆற்றையடுத்துள்ள ராகெங்கு வரையும் பாந்துள்ள கிழக்குக் குன்றுகளைக் கொண்ட ஒடுங்கிய வலயத்தில் 40 அங்கு
தைலாந்து சராசரி மழைவீழ்ச்சி (அங்)
சன பெ மார் எப் மே யூன் யூலை ஒக செத் ஒற் நவ திச மொத்தம்
பாங்கொக் .9 .0 1.3 1.9 6.8 6.4 6.9 7.3 1.6 7.8 2.1 .7 54.6
கான்புரி .9 1.0 1.3 2.3 6.4 5.2 5.3 3.8 7.8 6.9 7 .4 53
நாக்கோன் நாயக் 1.0 l. 19 2.3 7.9 11.6 14.5 16.5 6.7 7.3 2.6 .5 83.9
சியெங்மை .4 ,1 1,01.6 6.0 5.1 5.7 9.1 9.5 6.72.3 .5 、48.0
உடோரின் இல்லை 0.7 3.0 3.7 9.1 10.4 8.6 8.4 9.9 2.2 1.2 இல்லை 57.2
தக்குவாப்பா 1.3 6.1 7.5 7.7 20.5 23.8 23.9 33.321.29.2 3. 68.7

தைலாந்து : இயற்கைத் தோற்றம் 309
லத்திற்குக் குறைந்த மழைவீழ்ச்சி உண்டு. பேமாவின் வறண்ட வலயத்திற் போன்று மத்திய தைலாந்திலும் மழைவீழ்ச்சிப் பரம்பல் காணப்படுகின்றது. தெற்கிலுள்ள சமநிலத்தைச் சார்ந்து மழைவீழ்ச்சி அதிகரிப்பதில்லை. இங்கிருந்து பெருங்குடாவரை வறண்ட தன்மையே காணப்படுகின்றது. கோராக் மேட்டுநிலத்தில் மழைவீழ்ச்சி குறைவாகும். இங்கு நீருட்புகு தன்மையுடைய செம்மணற்கற் பாறைகள் உள்ளமையால் நீர் மேற்பரப்பில் தங்குவதில்லை. மேலும் ஏறத்தாழ 200 நாட்களைக் கொண்ட பருவத்தில் வெப்ப நிலையும் அதிகமாகும். இதனுற் குறைந்த மழைவீழ்ச்சியின் பயன்பாடு மேலும் குறைவடைந்துவிடுகின்றது.
தைலாந்தின் காலநிலையில் வருடத்திற்கு வருடம் ஏற்படும் வேறுபாடு ஒரு பெருந்தடையாகவுள்ளது. வறண்ட பருவங்களில் இதன் தாக்கம் மேலுமதிக மாகும். 1914-25 காலப்பகுதியில் மிகக்கூடிய மழைவீழ்ச்சியுடைய வருடங்கள் மிகக் கூடிய வறட்சியுடைய வருடங்களிலும் பார்க்க அதிக வேறுபாட்டைக் கொண்டிருந்தன. இந்த வேறுபாடு பாங்கொக்கின் சராசரி மழைவீழ்ச்சி அளவை ஒத்திருந்தது. மழைக்காலமும் வருடத்தில் 174 முதல் 236 நாள்வரை யிற் காணப்பட்டது.
மத்திய தைலாந்தில் மழைவீழ்ச்சி குறைவாகவிருப்பதனல் அதிக விளைவுகள் உண்டாகின்றன. தைலாந்தில் அருவிகள் சிறியனவாயும், தைலாந்தின் கால நிலைப் பிரிவில் உற்பத்தியாகின்றனவாயுமிருப்பதனுல் அவற்றின் நீர் பருவ காலங்களுக்கு ஏற்ப வேறுபடுகின்றது; மழைப் பருவத்தில் அவை கொண்டு செல்லும் சுமையும் அதிகமாகும். வறண்ட பருவத்தில் நிலம் தூசிமயமாகவிருப் பதனுல் மழைப்பருவத்தில் தாசி முதலிய பொருள்கள் கழுவிச்செல்லப்படுகின் றன. ஆறுகள் பருவத்திற்குப் பருவம் மாற்றமடைவதனல் ஆற்றுமுகங்களில் மணற்றடைகள் உண்டாகின்றன. வறண்ட பருவத்தில் பாக்னம்போ என்னு மிடத்தில் செளபிராயாவின் ஓட்டம் செக்கன் ஒன்றிற்கு 4,000 கன அடியாகும். மழைப்பருவத்தில் இவ்வோட்டம் செக்கனுக்கு 54,000 கன அடியாக உள்ளது. பாங்கொக்கிற் பெருக்கோட்டம் செக்கனுக்கு 95,000 கன அடியாகும். பெருக் கம் மே மாதத்தில் சடுதியாகத் தொடங்கி ஒற்முேபர்வரை காணப்படும். ஒற் ருேபரின் பின்பு படிப்படியாக நீர் குறைந்துவிடும்; ஏப்பிரில் மாதத்தில் நீர் மிகவுங் குறைவாயிருக்கும். செள பிராயா ஆற்றின் பரப்புங் கிளையாறுகள் கரையிலிருந்து ஐம்பது மைல் தூரம்வரை கடற்பெருக்க நிலைமைகளினுற் பாதிக் கப்படுகின்றன. இந்நிலைமைகள் வறண்ட பருவத்திலே பெரும்பாலும் ஏற்படு கின்றன. இப்பருவத்தில் ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதிகளில் நீர் உப்பு மயமாய் உள்ளமையாற் பயிர்ச்செய்கை, குடி நீர் என்பனவற்றைப் பொறுத்த வரையிற் பிரச்சினேகள் ஏற்படுகின்றன. எனினும் இப்பருவத்தில் கால்வாய்கள் ஒரளவுக்கு அரித்துக் கழுவப்படுகின்றன. செளபிராயா ஆற்றுமுகத்தில் மணற் றடைகள் அமைந்து விடுவதனுல் போக்குவரத்துத் தடைப்படுகின்றது. மணற் றடைகளைக் காலத்துக்குக் காலம் வாரிவிடுதல் அவசியமாகும். பெருங்குடா ஒதுக்கிற் காணப்படுவதனுல் கடல்நீரோட்டங்கள் மணற்றடைகளை மாற்றிவிடச்

Page 170
310 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கூடியனவாக இல்லை. ஏனைய ஆறுகள் அவற்றின் முகங்களிற்கூட ஓடப்போக்கு வரத்திற்கு ஏற்றனவாயில்லை. பேமாவிலுள்ள சவுங்குகளைப் போன்று இங்குள்ள சிறு அருவிகள் வறண்ட பருவத்திற் பல மாதங்களுக்கு நீரற்று உலர்ந்துவிடு கின்றன. பள்ளத்தாக்குக்களிற் பாற்படைகள் நிறைந்து காணப்படும். இக்கா லத்தில் பிரதான ஆற்றுப் பள்ளத்தாக்குக்களுக்கு அப்பாலுள்ள தைலாந்துப் பகுதிகளில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படுகின்றது.
தாவர 665
கோாாத் மேட்டுநிலம், மத்திய தைலாந்து ஆகிய பகுதிகளில் இலையுதிர் மாங் களைக்கொண்ட வறண்ட மொன்குன் காடுகள் காணப்படுகின்றன (படம் 89). இக்காடுகளில் மூங்கில் அதிகமாக உண்டு. வறண்ட பருவத்தில் உண்டாகும் காட்டுத் தீயினுல் இவை அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி தீயினுற். பாதிக்கப்படுவதனுல் இவை சவன்னப் புல்நிலமாகவும் புதர்க்காடுகளாகவும் மாற்றமடைந்தும் வருகின்றன. காட்டுத்தீ பரவுவதற்கு இயற்கைக் காரணங்க ளேர்டு பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையாளரும் காரணமாகவுள்ளனர். பல பகுதிக ளில்உயரம் அதிகமாகவிருத்தலினல் மழை ஒழுங்காகவும் அதிகமாகவும் பெய் கின்றது. இதனுல் உயரமான பகுதிகளில் அயனமண்டல மழைக்காடுகள் புெரும்பாலும் காணப்படுகின்றன. கிராப் பூசந்திப் பகுதியில் இத்தகைய காடு களே'உண்டு. 17 பாகை வட அகலக்கோட்டிற்கு வடக்கிலுள்ள பகுதியில் வண் டல்செறிந்த பள்ளத்தாக்குக்களில் இடையிடையே பயிர்ச்செய்கை நடைபெறு கின்றது. ஏனைய பாகங்களில் தேக்குக் காடுகளே முக்கியமாகப் பரந்துள்ளன. இத&னப் பொறுத்தவரையில் ஐராவதி வடிநிலத்திலுள்ள தன்மைகள் வட கிைலாந்திலும் காணப்படுகின்றன எனக் கூறலாம். 1942 ஆம் ஆண்டு வரையில் இப்புகுதியிலுள்ள தேக்கு மரங்களை வெட்டியெடுக்கும் உரிமை ஆறு வெளிநாட் டுக் தேம்பனிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. தைலாந்திலுள்ள காடுகளி லிருந்து வருடத்தில் 10 இலட்சம் குற்றிகளுக்கு மேல் வெட்டி எடுக்கப்பட்டன. வெட்டப்பட்ட மரங்களை யானைகள் இழுத்துவந்து ஆறுகளில் தள்ளிவிட்டதும் அவை மிதந்து சென்று கரைப்பகுதியை அடைகின்றன. மே, யூன் மாதங்க ளோடு ஆரம்பிக்கும் மழைப்பருவத்திலே குற்றிகள் ஆறுகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. சல்வின், மேக்கோங்கு ஆறுகள் மூலமும் சிறிதளவுக்குத் தேக்கு மாங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனல் முக்காற் பங்கிற்கு மேற் பட்ட தொகை செளபிராயா மூலம் பாங்கொக்கிற்குக் கொண்டுசெல்லப்படுகின் றது. வர்த்தகத்திற்கு உபயோகப்படும் தேக்கில் அரைவாசித் தொகை யொம் பள்ளத்தாக்கிற் பெறப்படுகின்றது. இதனேடு வாங்கு பள்ளத்தாக்கிலிருந்து காற்பங்கும் பிங்கு பள்ளத்தாக்கிலிருந்து காற்பங்கும் பெறப்படுகின்றன. அண் மைக் காலத்தில் தேக்கு மரங்கள் வெட்டி நீக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை மீளவும் உண்டாக்குவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இயல்பாக மாங் கள் மீளவும் உண்டாவதற்கு எடுக்கும் காலத்திலும் பார்க்க விரைவாக மரங்கள்
வெட்டி நீக்கப்பட்டுவருவதனல் இத்தகைய சட்டங்களை இயற்றவேண்டிய நிர்ப்

தைலாந்து : இயற்கைத் தோற்றம் 3.
பந்தம் ஏற்பட்டது. மேலும் மரங்கள் வெட்டி நீக்கப்படுவதனல் மண்ணரிப்பு குன்றுப் பகுதிகளில் அதிகமாக ஏற்பட்டுவருகின்றது. பாங்கொக்குக்கருகிற் பல தேக்கு மாமரியுமாலைகள் உள்ளன. குற்றிகள் சிங்கப்பூருக்கும் கொண்டு
ஐநெல் விளையும் நிலம் தேக்கு விரலிய
மொன்சூன் காடு *。夺,*
மலைக்காடு மழைக்காடு
கிலம் 圈斷 . کگان است
வறண்ட மொனசூன் தாடு
படம் 89. தைலாந்தில் தாவரவகை
செல்லப்பட்டு அரியப்படுகின்றன. தேக்குக் குற்றிகளோடு தைலாந்திலிருந்து பிரம்பும் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இப்பொருள்களைப் பொறுக்கவாையிற் சிங்கப்பூர் ஒரு முக்கிய இறக்கி ஏற்றுந் துறைமுகமாக உள் ளது. 1907 ஆம் வருடத்திலிருந்து மாவியாபாரம் படிப்படியாக வீழ்ச்சி யடைந்து வந்துள்ளது. இதனுல் தைலாந்துத் தேக்கின் மதிப்பும் கூடிக் குறைந்து வந்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க இறக்குமதியாளரிலும் utilisas

Page 171
312 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆசிய இறக்குமதியாளரே இதனைப் பொறுத்தவரையில் முக்கியமாகவுள்ளனர். யுத்தகாலத்தில் தேக்குமா வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டது. பின்பு ஏற்றுமதி அதிகரித்ததனுல் தேக்குமாம் அதிக அளவில் வெட்டப்பட்டது. 1963 இல் 2,10,00,000 தொலர் பெறுமதியான தேக்குமாம் ஏற்றுமதி செய்யப்
பட்டது.
மழைக்கால
வறண்டகால
நீர்மட்டம்
படம் 90. கோராத் பகுதியிலுள்ள ஆறுகளும் சதுப்பு நிலங்களும். 1. என்றும் பச்சையான செடிகளும் சிறு மரங்களும், 2. அணைகளைச் சார்ந்து காணப்படும் முள்ளுள்ள மூங்கில் 3, புல், 4. சேற்று நிலம், 5. மழைக்கால நீர்மட்ட அளவிற்கு மேலுள்ள சோலைநிகர் சவனுப்புல்நிலம்.
கோாத் பகுதியிலுள்ள பள்ளத்தாக்குக்களிற் குறித்த பருவ காலங்களில் நன் னிர்ச் சேற்றுநிலக் காடுகள் காணப்படுகின்றன. ஆறுகளுக்குத் தூரத்திலுள்ள சமநிலங்களில் மழைக்காலத்தில் நீர் தேங்கிவிடுகின்றது (படம் 90). இது காரணமாக இந்நிலங்களில் தாவரங்கள் செழித்துவளர்ந்து, வறண்ட காலத்தில் மக்கள் உட்செல்ல முடியாத காடுகளாக அமைந்துவிடுகின்றன. இதனுல் வறட்சி ஏற்படும்பொழுது இந்நிலம் அடர்ந்த சவனப் புதர்போலக் காணப்படும் ; ஒாங் களைச் சார்ந்து உயரமான அணைகளில் மூங்கிலும் காணப்படும். ஆனல் மழைப் பருவத்தில் அதிதெற்கிலுள்ள அகலக்கோடுகளிற் காணப்படும் புதிய சதுப்பு நிலக் காடுபோற் காணப்படும்.
 

அத்தியாயம் 18 தைலாந்தின் பண்பாட்டுச் சமூக நிலைமைகள்
தைலாந்தின் பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் முக்கியமாகவிருப்பது, நெற்செய்கையாகும். சமூகத்துறையிலும் இத்தொழில் முதன்மையாகக் கருதப் படுகின்றது. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பிற நெல்விளையும் பகுதிகளோடு ஒப்பிட்டு நோக்கும் பொழுது நெற்செய்கைக்கு வேண்டிய மிகச்சிறந்த நிலைமை கள் எல்லாம் இங்கு உண்டு என்று கூறமுடியாது. ஆற்றுப் பள்ளத்தாக்குச் சம நிலங்களில் சராசரி மழைவீழ்ச்சி குறைவாயிருப்பதோடு ஒழுங்கற்றதாயும் உள்ளது. மழைக்காலம் சீரானதாயில்லாமையால் நெற் செய்கை பாதிக்கப்படு வதுண்டு. சிம்மமனின் கூற்றுப்படி தைலாந்தில் மூன்றிலொரு பகுதி நெற்செய் கைக்கு ஏற்றதாயில்லை.
பழைய பயிர்ச்செய்கை முறைகள்
தைலாந்தின் வட மலைப்பகுதி, மேற்கு மலைப்பகுதி, கோசாத் மேட்டுநிலம் ஆகியவற்றில் ஏறத்தாழப் பத்து இலட்சம் தைமக்கள் இன்றும் பெயர்ச்சிப் பயிர்ச் செய்கையிலிருந்தே தமது உணவுப்பொருள்களைப் பெறுகின்றனர். வரு டத்தில் ஐந்து இலட்சம் ஏக்கர் நிலத்திற் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை நடை பெறுகின்றது. 4 -
தைலாந்தின் தாழ்நிலப் பகுதிக்கு அப்பாலுள்ள பகுதிகளிற் சிறப்பான தன் மைகள் உள்ளமையால் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை முக்கியமாகவுள்ளது. இத னல் இப் பகுதிகளில் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னெரு மாவட்டத்திற்கு உணவுப் பொருள்கள் அதிகமாகக் கொண்டுசெல்லப்படுவதில்லை. வடக்கில் பசை நெல்லே முக்கிய வாழ்க்கைப் பயிராக உள்ளது. இவ்வகை நெல் நான்கு மாதங்களில் முற்றிவிடும் பயிராதலால் இதனையே விவசாயிகள் விரும்புகின்ற னர். இப்பகுதியில் மழை 4% மாதங்களுக்கு மேற் பெய்வதில்லை. மழைப் பருவ மும் ஒழுங்கானதாயில்லை. இக்காரணங்களினலே கோராத் மேட்டுநிலத்திலும் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட கம நிலத்திற் பசை நெல் விளைவிக்கப்படு கின்றது.
விவசாயிகளின் முக்கிய பயிரான நெல்லோடு சொந்தத் தேவைக்காக வேறு பல பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இப்பயிர்கள் யாவும் இப்பகுதியி லுள்ள குறைந்த மழைவீழ்ச்சி, குறுகிய மழைப்பருவம், நீண்டவறட்சிப் பரு வம் ஆகிய தன்மைகளுக்கு ஏற்றனவாக உள்ளன. நெல் வருடத்தில் ஒரு முறைக்கு மேல் விளைவிக்கப்படுவதில்லை. புகையிலை, பருத்தி (சிறிதளவுக்கு), பழவகை, தேயிலை (மேனிலங்களில்), காய்கறிகள் என்பனவும் வாழ்க்கைப் பயிர்களாக விளைவிக்கப்படுகின்றன. தைலாந்தில் கிராப் பகுதி தவிர்ந்த ஏனைய நிலத்திலே நெல் அல்லாத வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1963 ஆம்
313

Page 172
314 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆண்டில் 1,02,000 ஏக்கர் நிலத்திற் புகையிலையும், 7,80,000 ஏக்கர் நிலத்தில் சோளமும், 3,00,000 ஏக்கர் நிலத்திற் கரும்பும் 1,32,000 ஏக்கர் நிலத்திற் பருத் தியும் விளைவிக்கப்பட்டன. பிரதான ஆற்றுப் பள்ளத்தாக்குக்களுக்குத் தூரத்தேயுள்ள நிலங்கள் நெற்செய்கைக்கு மழையையே முக்கியமாக நம்பி யுள்ளன. சிறிய ஆறுகள் பெருகுவதனலும் இந்நிலங்கள் ஓரளவு நீரைப் பெறு கின்றன. பயிர் விளையும் நிலத்திற் சிறுபகுதிக்கு மட்டுமே நீர்ப்பாய்ச்சல் வசதி உண்டு. அணைக்கட்டுக்கள் மூலம் நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டுக் கால்வாய் கள் மூலம் நீர்பாய்ச்சப்படுகின்றது.
கோராத் பள்ளத்தாக்குக்களில் பருவகாலங்களில் உண்டாகும் சேற்று நில வோரங்களிலே நெல் விளைவிக்கப்படுகின்றது. வெள்ளப் பெருக்கு நிலைமை களுக்கு ஏற்பவே நெல் நடுதல், அறுவடைசெய்தல் முதலிய தொழில்கள் நடை பெறுகின்றன. ஆற்றோ அணைகளைச் சார்ந்து காணப்படும் சேற்று நிலங்களிற் பயிர்களை விளைவித்தற்கு ஆற்றுப் பெருக்கு வற்றல் வேண்டும். வயல்களிலுள்ள நீரைக் கொண்டுசென்று ஆற்றுள் விடக்கூடிய முறைகள் இன்னும் விருத்தி செய்யப்படவில்லை. கோராத் சேற்று நிலங்களில் மக்களிடை வாக்குவாதமும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஆற்றிலிருந்து பெருக்கோடுவந்து சேற்றுநிலங் களில் தங்கிய நன்னீர் மீனைப் பிடிப்பதில் சிலர் ஈடுபடுவர். மீனைப் பிடிப்பதற் காக இவர்கள் இந்நிலங்களிலுள்ள நீரை விரைவாக ஆற்றுக்குத் திருப்பிவிட்டு வற்றச் செய்வர். ஆனல் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் சேற்றுநிலங்' களில் நீர் அதிக நாட்களுக்குத் தங்கி நிற்பதையே விரும்புவர். தென்கிழக்கு ஆசியப் பகுதியில் நீரைப் பேணிப் பயன்படுத்துகின்ற முறைகள் அதிக அள வுக்கு வளர்ச்சியடைந்துள்ளன. ஆனல் கோசாத் பிரதேசத்தின் வட பகுதியி அலும், கிழக்குப் பகுதியிலும் நீர்வசதி நம்பத்தக்கதாய் இல்லாதிருந்தும் விவ சாயிகள் நீர்ப்பாய்ச்சல் முறையை விருத்தி செய்யாமலிருப்பது வியப்பாயிருக் கின்றது. சாதாரண நீர்த்தும்புகளின் உதவியோடு உயரணைகளுக்குப் பின் னுள்ள சதுப்புநிலங்களை நீர்த்தேக்கங்களாகப் பயன்படுத்தும் முறையையுமே அவர்கள் மேற்கொள்ளவில்லை. கோராத் பகுதியில் நீர்ப்பற்முக்குறை ஒரு முக் கிய பிரச்சினையாகும். மழைவீழ்ச்சி குறைவாயிருப்பதோடு ஒழுங்கற்றதாயும் உள்ளது. இங்கு நீராவியாதலும் அதிகமாகும். நீருட்புகு மணற்கற் பாறை களைக் கொண்ட இப்பகுதியில் நீர் மட்டமும் தாழ்வாக உள்ளது. இத்தன்மை களினல் இங்குள்ள மக்களுக்கு நீர்த்தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாயிருக்கின் றது. ஆகவே விவசாயிகள் ஆற்றுப் பள்ளத்தாக்குக்களிற் சிறிது காலம் ஏற் படும் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தவேண்டிய நிலைமை இங்கே காணப்படு கின்றது. மேட்டுநிலப் பகுதியில் 7 சதவீதத்திற்கும் குறைந்த நிலத்திலே பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. இந்நிலத்திற் பெரும்பகுதி பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையைக் கொண்டுள்ளது. இரண்டு சதவீதத்திலும் குறைந்த நிலத் தில் நெல் தவிர்ந்த பிற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. பயிர்ச்செய்கை முறை கள் இங்கு ஒழுங்கானவையாய் இல்லை. 1960-61 ஆம் ஆண்டில் நெல் விளைவிக்

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலமைகள் 31
கப்பட்ட மொத்த நிலத்தில் 11 சதவீதம் நாக்கோன் சாவானுக்கு வடக்கி அலுள்ள மத்திய தைலாந்திலும் 43 சதவீதம் கோாாத் பள்ளத்தாக்குக்களிலும் காணப்பட்டன. இப்பள்ளத்தாக்குப் பகுதியில் நெல்லுக்கு மதிப்பு உள்ளதால் ஒரளவுக்கே பொருத்தமான நிலங்களிலும் நெல் இடைப்போகப் பயிராக விளே விக்கப்படுகின்றது. நெல் விளைவிக்கப்படும் இப்பகுதிகளிலிருந்து சிறிதளவு நெல்லே பிறவிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
கிராப் பூசந்திப்பகுதி தரைத்தோற்றத்தில் வட மலாயாவைப் போன்று காணப்படுகின்றது. இப்பகுதியிலே தைலாந்தின் தகரச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு 110,000 ஏக்கர் நிலத்தில் இறப்பரும், 1,00,000 ஏக்கர் நிலத்தில் நெல்லும் விளைவிக்கப்படுகின்றன.
வர்த்தகப் பயிர்ச்செய்கை
தைலாந்தின் கீழ்ப்பகுதியிலுள்ள வண்டற் சமநிலத்தில் (படம் 92) நெற் செய்கை சிறப்பாக நடைபெறுகின்றது. இப்பகுதியின் அமைவு, நெற்செய்கை யின் பொருளாதார முதன்மை என்பன பேமாவின் கீழ்ப்பகுதியின் நிலைமைகளை ஒத்துள்ளன. இப்பகுதியிற் பர்ச்செய்கை முறைகள் வேறுபட்டுள்ளன. 1962-63 ஆம் வருட காலத்தில் இப்பகுதியில் 95 இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இத்தொகை தைலாந்தில் நெல் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலத்தில் 1 சத விதமாகும். தைலாந்தின் கீழ்ப்பகுதி யில் வருட மழைவீழ்ச்சி 60 அங்குலத்திலும் குறைவாகும். நெல்விளையும் பகுதி யின் மையத்தானமாகவுள்ள ஆயுதியாவில் மழைவீழ்ச்சி 50 அங்குலத்திற்குச் சற்று அதிகமாகும். ஆனல் ஈர நெல்வகைக்கு 70 அங்குல வருட மழைவீழ்ச்சி மிகக் குறைந்த மழைவீழ்ச்சியாகக் கொள்ளப்படுகின்றது. பயன்படு மழை வீழ்ச்சி உண்மையிற் குறைவாகும் நெல்விளையும் முக்கியமான மாதங்களில் 40 அங்குல மழைவீழ்ச்சியே பயன்படு மழைவீழ்ச்சியாக உள்ளது (படம் 91). தைலாந்தின் கீழ்ப்பகுதியில் வர்த்தகத்திற்காக நெல் பெருந்தொகையாக உற்பத்திசெய்யப்படுகின்றது. நெல் உற்பத்திக்குப் போதிய மழைவீழ்ச்சி இல்லாதபொழுதும் ஏற்றுமதி செய்யப்படும் நெல் முழுவதும் இப்பகுதியிலே விளைவிக்கப்படுகின்றது.
தைலாந்தின் கீழ்ப்பகுதியில் வியாபாரத்துக்கான நெல்லெல்லாம் தன் செய் முறையிலே விளைவிக்கப்படுகின்றது; இந்நெல் பசைத்தன்மையில்லாதது. மழை குறைவாகவுள்ள பொழுது ஆற்றுப் பெருக்கு நீர் நேரடியாகப் பயன்படுத்தப் படுகின்றது. வடக்கிலுள்ள மலைப்பகுதியில் மழை தொடங்கி ஒரு மாதக்காலத் தில் செளயிாாயாவின் கழிமுகப்பகுதியிற் பெருக்கு ஏற்படுகின்றது. பெருக்கு நீரைப் பயன்படுத்துவதற்காகக் கழிமுகப்பகுதியிலுள்ள சமநிலம் எங்கும் சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெருக்கு நீரை அணைகட்டிப் பயன்படுத் தாது கால்வாய்கள் மூலம் நேரடியாகப் பயன்படுத்துவதனுல் கட்டுப்பாடான முறையில் நீரை அதிக நாட்களுகோ தேவையான அளவிலோ பயன்படுத்த

Page 173
36 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
4. 4.
* asis is 21நெற்பயிருக்குக் குறைந்தபடச் -2
-- དམ་པ་ཁང་དུ། ། - དྲོད་ཁམས་ཁོ་----------- ༈་ لس به سه س
போதிய பூெருக்கு நிலை O 0. 丽 9; 蟹 હ 8; 8葡 S) d હૈ 6 is
ls.
ši 4: 4. “g A : - 甲2书、 2
{{ಗಾ
படம் 91. ஆயுத்தியாவில் மழைவீழ்ச்சியும் ஆற்றுப் போக்கும்
முடிவதில்லை. இதனுற் பயிர் அதிக சேதத்திற்குள்ளாவதும் உண்டு. சில சமயங் களிற் பெருக்குநீர் போதிய அளவிற் கிடைப்பதில்லை. சில சமயங்களில் இந்நீர் அளவுக்கு அதிகமாகவிருக்கும். வேறு சில சமயங்களிற் பெருக்கு நீர் சில நாட் களுக்கு மட்டுமே போதியதாயிருக்கும். ஆனல் வேறு காலங்களில் தேவைக்கு மதிகமாகப் பல நாட்களுக்குப் போதிய அளவிற் கிடைக்கின்றது. இத்தகைய நிலைமைகளினல் நெல் உற்பத்தியில் அதிகவேறுபாடு ஏற்படுகின்றது. ஆயுத்தி யாவில் ஏறத்தாழ ஒரு நூற்முண்டுக் காலமாக மேற்கொள்ளப்பட்ட அவதா? னிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது 32 சதவீதமான வரு டங்களில் மட்டுமே இங்குப் போதிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. 22 சதவீமான வருடங்களிற் பெருக்குப் போதிய அளவில் ஏற்படவில்லை. 30 சதவீதமான பெருக்கு மிகக் குறைந்த அளவு நீரையும் 15 சதவீதமான
 
 
 
 

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 317
பெருக்கு மிகக்கூடிய அளவு நீரையும் கொண்டிருந்தது. இத்தகைய நிலைமை கள் நிலவுவதற்கு நீரைத் தேக்கிவைக்கக்கூடிய அணைக்கட்டுக்கள் இல்லாமை, போகிய கால்வாய்கள் இல்லாமை என்பன காரணமாகும். நீரை வயல்களுக்கு ஒழுங்காகப் பாய்ச்சுவதற்கு இத்தகைய வசதிகள் இன்றியமையாதனவாகும். நெல்விளையும் நிலங்களுக்குப் போதிய அளவிற் பெருக்கு நீர் கிடைப்பதற்குப் பாங்கொக் பெருங்குடாவின் சராசரி நீர்மட்டத்திலும் பார்க்க செளபிராயா ஆற்றுநீர் ஆயுத்தியாவில் 11.5 அடி மட்டத்திற்குக் காணப்படுதல் வேண்டும். இந்த நிலைமை நெல் விளையும்காலத்திற் பயிர் முற்றும்வரை நிலவினுற்முன் உற் பத்தி சிறப்பாகவிருக்கும். செள பிராயாவின் நீர்மட்டம் மேற்குறித்த அளவிற் காணப்படுவதற்கு இவ்வாற்றின் உற்பத்திப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருத்தல் வேண்டும். வட தைலாந்தில் ஒகத்து செத்தெம்பர் மாதங்களில் மழையின்றி வறட்சி ஏற்பட்டுவிட்டால் தைலாந்தின் கீழ்ப்பகுதி யிற் பெருக்கு நீர் சடுதியாகக் குறைந்துவிடும். இந்த நிலைமை ஏற்பட்டால் நெற்பயிர் முற்றுவது கடினம். இக்காலங்களில் தைலாந்தின் பொருளாதாரம் (வர்த்தகம்) பெரிதும் பாதிக்கப்படுகின்றது. 1919 ஆம் ஆண்டில் ஆயுத்தியா வில் மிகக் குறைந்த நிலையான 11.5 அடி மட்டத்திற்குப் பெருக்கு நீர் வராமை யினுல் அவ்வாண்டில் 25 இலட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை பாதிக்கப்பட்டது (43 சதவீதமான நெல்).
இத்தகைய நிலைமை காரணமாகப் பாங்கொக்கின் வடகிழக்கில் குளோங் சாங் சிற் என்னுமிடத்திற் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 5.5 இலட்தும் ஏக்கர் நெல்விளையும் நிலத்துக்கு பாசாக், பாக்கோங்கு ஆறுகள் மூலம் நீர் பாய்ச்சப்படுகின்றது. செளபிராயாவுக்கு மேற்கிலுள்ள பகுதியிற் பெருக்குநிர் போதிய அளவிற்கிடைக்காத காலங்களிற் சிறு குளங்கள் முதலியவற்றிலிருந்து பம்புகள் மூலம் நீர்பாய்ச்சப்படுகின்றது. பிரவாகித்து ஓடும் செளபிராயா ஆற் றில் சைனத் என்னுமிடத்தில் ஓர் அணைக்கட்டும் அமைக்கப்பட்டுள்ளது (செளபிராயாவின் சராசரி நீர்மட்டம் 1950-54 இல் 38 அடியாகும்). நீர்மட்ட உயரத்தைக் கட்டுப்படுத்திக் கீழுள்ள 37 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பெருக்கு நீரை ஒழுங்காக வழங்குவதற்காகவே இந்த அணைக்கட்டு அமைக்கப்
- L-L-gal.
செளபிராயா ஆற்றில் நீர் சடுதியாகக் கூடிக் குறைந்து காணப்படுவதோடு மண்டிமுதலிய பொருள்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனுல் வாய்க் கால்களிலும் வயல்களிலும் அடிக்கடி மண்டி படிந்துவிடுகின்றது. பரப்புங் கி%ள யாறுகள் உயரணைகளை அமைத்துவிடுகின்றன. அணைகளை உடைத்து நீர் பாயும் பொழுது புதிய கிளையாற்றுப் போக்குக்களும் அமைந்துவிடுகின்றன (படம் 92). கிழக்கிற் பரப்புங் கிளையாறுகளின் போக்கு இவ்வாறு மாற்றம் பெற்றுவருவ தைக் காணலாம். இத்தகைய மாற்றத்தினுல் முன்பு பெருக்கு நீரைப் பெற்று வந்த முக்கியமான நெல்விளையும் நிலங்கள் கிளையாற்றுப் போக்குப் பின்பு மாறி விட்டதனுல் முதன்மையை இழந்து காணப்படுகின்றன. சுபான்புரி மாவட்டம் இதற்கு ஓர் உதாரணமாகும். 14 ஆம் நூற்முண்டில் இந்த மாவட்டப் பகுதியில்

Page 174
38 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
sydstokosso عسعسعسع . حۂ ، ہ ، یہ خت డ లియోశిడా57&6r :சதுப்பு நிலம்
. வெள்ள 500 அடிக்கு கால்வா டே 3O
* oniridionalysait ே நிலம் ய்கள் sonude)
படம் 92. தைலாந்தின் கீழ்ப்பகுதியில் தரைத்தோற்றமும் நிலப்பயன்பாடும் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. அக்காலத்தில் செளபிராயா ஆறு இப்பொழுது மண்டிபடிந்து காணப்படும் தாச்சின் ஆற்றுவழியாக ஓடிக் கடலோடு சங்கமமாகியது. பின்பு செளபிராயா ஆற்றின் போக்கு மாறியதல்ை முன்பு முக்கியமாயிருந்த விளைநிலம் முதன்மையிழந்தது.
 

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 39
தைலாந்தின் கீழ்ப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பொழுது சில அங் குலம் முதல் பத்து அடிவரையில் நீர் காணப்படும். இங்கு அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் (குளோங்குகள்) மூலம் நீர் கொண்டு செல்லப்பட்டுப் பயன்படுத் தப்படுகின்றது. தரையிலிருந்து நீர் வடிந்து செல்வதனை அவை அதிகம் பாதிப் பதில்லை. கால்வாய்கள் போக்குவரத்துக்கும் உதவுகின்றன. கிராமம் சார்ந்த பகு திகளில் இக்கால்வாய்களிற் சிறு ஒடங்கள் போக்குவரத்துக்காகப் பயன்படுத் தப்படுகின்றன. கால்வாய்கள் பல தேவைகளுக்கும் பயன்படுகின்றன. பயிர்ச் செய்கை, போக்குவரத்து என்பனவற்றேடு மக்களுக்குத் தேவையான நீரைப் பெறவும், கழிவுநீரை அகற்றவும் இவை துணையாகவுள்ளன. பெருக்குநீர் நில வளத்தைப் பேணுவதற்கும் துணையாகவுள்ளது. ஆனல் கழிமுகப் பகுதியில் ஆற் அறுப்டோக்கில் மாற்றம் ஏற்படுவதனுலும் கால்வாய்களில் மண்டிபடிவதனுலும் மிக முக்கியமான நெல்விளையும் நிலங்கள் மாற்றமடைகின்றன. நீர்ப்பாய்ச்சல் முறைகள் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளிற் பொதுமட்டத்திற்கு மேல் வண் டல் படியும்பொழுது வெள்ளப் பெருக்குநீர் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட மாட்டாது. அப்பொழுது பயிர்ச்செய்கையும் வீழ்ச்சியடைந்துவிடும்.
நெல்
தைலாந்தின் கீழ்ப்பகுதியிலுள்ள ஆற்றுச் சமவெளியில் ஒரு பயிர்மட்டுமே விளைவிக்கப்படுகின்றது. நெற்செய்கையே இங்கு முக்கியமாகவுள்ளது. பாங் கொக்கிற்கு அண்மையிற் சிறிதளவுக்குக் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. சண்டபுரியில் பழவகைகளும் மிளகும் விளைவிக்கப்படுகின்றன. சமநிலவெளியில் விவசாயிகள் சொந்தத் தேவைக்காக அவரை வகைகளையும் சோளத்தையும் பயி ரிடுகின்றனர். 1948-60 காலத்தில் சோளம் விளைவிக்கப்படும் நிலம் எண்மடங் காகப் பெருகியுள்ளது. நெல் பயிரிடும் முறையில் இடத்துக்கிடம் அதிக வேறு பாடு காணப்படுகின்றது. வெள்ளப் பெருக்குப் பெரும்பாலும் ஏற்படும் நிலங்க ளில் நாற்றுநடுதல் முக்கியமாக உள்ளது. நிலத்தைப் பண்படுத்தும் முயற்சிகள் முதல் மழையோடு தொடங்குகின்றன. முதல் மழை பெய்ததும் வயல்கள் உழப் பட்டுப் பின்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் நாற்று நடப்படுகின்றது. மழை வீழ்ச்சியும் வெள்ளப்பெருக்கும் ஒரே சமயத்தில் ஏற்பட்டுவிட்டால் நெல் தூவி விதைக்கப்படும். உழவனுக்கு நாற்று நடப் போதிய உதவியில்லாத போதும் தூவி விதைக்கப்படுவதுண்டு. அாவி விதைக்கும் பொழுது வருவாய் குறைவாக வுள்ளது. மேலும் இத்தகைய நெல்லுக்குப் பெருக்கு நீரை ஏற்றமுறையிற் பயன்படுத்துவதும் கடினமாகும். பெருக்கு நீரிலும் பார்க்க மழை வீழ்ச்சியைப் பயன்படுத்தும் பகுதிகளிலே காய்கறிகள், சோளம், மிளகு, புகையிலை பருப்பு வகை என்பன விளைவிக்கப்படுகின்றன. பயிர்களை விளைவித்தல், பதன் செய்தல் ஆகிய முறைகள் யாவும் கைகளினலே மேற்கொள்ளப்படுகின்றன. தைலாந்தின் கீழ்ப்பகுதியில் விளையும் நெல்லில் அரைப்பங்கு தூவி விதைக்கப்படுகின்றது.
நெல் விளைவிக்கப்படும் பிற பகுதிகளோடு ஒப்பிடும்பொழுது தைலாந்தின் கீழ்ப்பகுதியிற் பயிர்விளைவித்தல் திட்டமான சிறிய காலப்பகுதியில் நடைபெறு கின்றது. யூலை மாதம் பயிர் நடுதலுக்கு உச்சமான மாதமாகும். அறுவடை

Page 175
320 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
திசம்பர் மாதத்தில் அதிக அளவுக்கு நடைபெறுகின்றது. செளபிராயாவின் கீழ்ப் பகுதியிலும் மேக்கோங்கின் மத்திய பகுதியிலும் பெருக்கு ஏற்படும் காலங் களேயொட்டிப் பயிர்ச்செய்கைத் தொழில் அமைகின்றது. மேக்கோங்கின் பெருக் கைப் பொறுத்துக் கோாாத் பகுதி நடுகை அமைகின்றது.
தைலாந்தின் கீழ்ப்பகுதியில் நெற்செய்கை செறிவற்ற முறையிற் காணப்படுவ தோடு காலத்திற்குக் காலம் அதிக சேதத்திற்கும் உள்ளாகின்றது (வருடத்தில் ஐந்தில் ஒருபங்கு இவ்வாறு சேதமடைகின்றது). எனினும் நெல் விளைவிக்கப் படும் நிலத்தில் அதிகரிப்பு ஏற்பட்டே வந்துள்ளது.
தைலாந்தில் நெற்செய்கை
நெல்விளையும் உற்பத்தி-சுத்தம் சராசரி எற்றுமதி
L10 մւլ செய்யப்பட்ட அரிசி சுத்தம் செய்யப்பட்ட ஐந்துவருடக் காலம் 10 இலட்சம் 10 இலட்சம் தொன் அரிசி, 10 இலட்சம்
ஏக்கர் அளவில் அளவில் தொன் அளவில் 1916-1920 . . 5.50 1.92 .7 1921-1925 . . A 6.45 2.76 . 1926-1930 . . 8 p. 7.14 2.71. 1.2 1931-1935 . . a 7.93 2.94 1.5 1936-1940 . . 8.45 2.71. 2.0 1946-1950 . . e 10.40 3.40 87 1951-1955 . . a 3.2 4.5 1.33 956-1960 3.4 4.9 1.16
1910 முதல் 1940 வரையுள்ள காலப்பகுதியில் 50 இலட்சம் ஏக்கர் புதிய நிலத் தில் நெற்செய்கை நடைபெற்றது. பெரும்பாலும் கழிமுகப் பகுதியிலே இந்தப் பெருக்கம் ஏற்பட்டது. பேமாவில் நெல்விளையும் நிலத்தில் ஏற்பட்ட பெருக்கத் திலும் பார்க்க இப் பெருக்கம் குறைவாகவுள்ளபொழுதும் தை விவசாயிகளே இதற்குக் காரணமாகவுள்ளனர் என்பதை உணரும்பொழுது இது ஒரு குறிப்பிடத்தக்க பெருக்கமாகக் கொள்ளப்படலாம். வெளிநாட்டுத் தொழிலா ளர் உதவியின்றித் தை விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்தே இப்பெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களது தொகையும் இக்காலப் பகு தியில் அதிகரித்துள்ளது. 1963 ஆம் ஆண்டில் நெல் விளையும் நிலம் 1940 ஆம் ஆண்டிலும் பார்க்க 74 இலட்சம் ஏக்கர் மேலும் அதிகரித்துக் காணப்பட்டது.
நிலப் பிரச்சினே
இந்த நூற்றண்டின் முதற் பகுதிவரை நிலத்திற்கு அவ்வளவு மதிப்பு இருக்க வில்லை. நில ஆட்சியும் பொதுப் பட்டமுறையிலிருந்தது. குறித்த நிலங்களில் வாழ்ந்தோருக்கு அந்நிலங்கள் உரியனவாகக் கொள்ளப்பட்டன. இன்றும் தனிப்பட்டவருக்குச் சொந்தமான பெரிய நிலத்துண்டுகள் உண்டு; இவை தை உத்தியோகத்தர்க்கு முன்பு சம்பளத்திற்குப் பதிலாக வழங்கப்பட்டவையாகும்.

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 32
அப்பொழுது உரிமை கொள்ளப்படாத நிலங்கள் தொகையாக இருந்தன. இத னல் விரும்பிய நிலத்தைப் பெறக் கூடிய நிலை காணப்பட்டது. குடித்தொகை பெருகியதும் நிலப் பிரச்சினை ஏற்பட்டது. நல்ல நிலங்கள் யாவும் ஏலவே பயிரி டப்பட்டன. விளைநிலங்கள் பெரும்பாலும் அளவிட்டுக் குறிக்கப்படாதனவாயும் உறுதியற்றனவாயுமிருந்தன. தைலாந்தில் இன்றும் நிலங்கள் இந்த நிலையிலே காணப்படுகின்றன. கழிமுகப் பகுதியில் வெள்ளப்பெருக்குக் காரணமாக எல்லை களும் நிலையாக அமைக்கப்படுவதில்லை. இதனுல் நிலங்களின் எல்லைகளை வரை யறுப்பது கடினமாக உள்ளது. 1912 ஆம் ஆண்டின் பின்பு தைலாந்தில் நெல்லுக் கும் நெல் விளையும் நிலத்திற்கும் அதிக மதிப்பு ஏற்பட்டது. இதனல் சிறு விவ சாயிகளுக்குப் புதிய நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனல் உண்மையில் பெரு நிலக்கிழார்களே மேலும் பெரிய அளவில் நிலங்களைப் பெற்றனர். நிலத்தின் மதிப்பு இதல்ை மேலும் உயர்ந்தது. ஒவ்வொரு நிலையிலும் நெல் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது. கழிமுகப் பகுதியில் விளைநிலம் பெரிய துண்டு களாகவே இன்று அமைந்துள்ளன. வர்த்தகத்திற்கான நெல் இத்தகைய பெரு நிலங்களிலே இன்று விளைவிக்கப்படுகின்றது. ஆனல் நிலங்களிற் பயிரை விளை விப்போர் குத்தகைக்குச் செய்யும் சிறு விவசாயிகள். இந்நிலங்களுக்கு உரிமை யாளர் பெரிய நிலக்கிழார்கள். இவர்கள் தூரத்தே வாழ்பவர். சிறு விவசாயிக ளிடமிருந்து இவர்கள் குத்தகைப் பணத்தைப் பெற்றுக்கொள்வர்.
பாங்கொக்கையும் ராங்சிற்றையும் குழவுள்ள பகுதிகளில் விளைநிலம் மேற் குறித்தவாறு சிலருக்கே உரிமையாகவுள்ளது. தைலாந்தில் வேறு எப்பகுதியி லும் இத்தகைய பெரிய விளைநிலங்கள் இல்லை. தான்யபுரியில் 85 சத வீதமான விவசாயிகள் குத்தகைக்குச் செய்பவராகவுள்ளனர். குத்தகைக்குச் செய்யும் நிலம் சராசரிக்கு 40 ஏக்கர் வரை உள்ளது. குத்தகை வருட முறையில் உள்ளது. இதனுல் நிலையான கிராம வாழ்க்கையை இவர்கள் அமைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. நிலையில்லாத முறையில் இப்பகுதியில் நெல்லை விளைவிப்போரே உண்மையில் ஏற்றுமதிக்கான நெல்லை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் நிலத் திற்குக் குத்தகைப் பணத்தைச் செலுத்துகின்றனர்; தமது உணவுத் தேவைக் காக விளைவிப்பது குறைவாகும். இந்த நிலைமைகளினல் நிலத்தைச் செம்மையா கப் பண்படுத்திச் செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. மிகச் சொற்ப காலம் இவர்கள் நிலத்திற் பயிர் விளைவிப்பவர்களாக உள்ளமையினல் இயன்ற வாையில் நிலத்திலிருந்து பெறக்கூடிய முழுப்பயனையும் பெறவே இவர்கள் விரும்புவர். மண்ணுக்கு ஏற்படும் தீங்கைப்பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை. அடுத்த ஆண்டில் இந்த நிலத்தில் வேறு ஒருவர் குத்தகைக்குப் பயிர் செய்வ தால் இத்தகைய ஒரு சிந்தனை ஏற்படவேண்டிய அவசியமும் இல்லை. 1935 ஆம் ஆண்டுவரையுள்ள 15 வருட காலத்தில் படிப்படியாக ஏற்றுமதி அதிகரித்து வந் தது. இதனையடுத்து ஐந்து வருடகாலத்தில் ஏக்கருக்குரிய வருவாய் அதிக அள வில் குறைந்து விட்டது. இதன் பின்பும் வருவாய் படிப்படியாகக் குறைந்தே வழிதுளளது.

Page 176
322 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
குத்தகைக்கு நிலத்தைச் செய்யும் முறைகாரணமாகப் பணக்காரரிடம் பணம் கடன் வாங்கவேண்டிய நிலையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இயற்கைக் கார ணிகள் மாற்றமடைவதனல் விவசாயிகளுக்கு அதிக சேதம் உண்டாவது முண்டு. இதனுலே இவர்கள் கடன்வாங்க நேரிடுகின்றது. சிறு விவசாயிகள் தமக்குச் சொந்தமாகவுள்ள சிறு நிலத்தோடு குத்தகைக்கும் சிறு நிலத்தையெடுத்துச் செய்வர். அப்பொழுது பயிருக்குச் சேதம் ஏற்பட்டு வருவாய் இல்லாது போய் விடும் சமயத்திற் சொந்த நிலத்தை இழந்து கடனை ஈடுசெய்யவேண்டிய நிலை யும் ஏற்படுவதுண்டு. இத்தகைய நிலைமைகளினல் நிலத்தைப் படிப்படியாக இழந்து நிலமற்முேராயுள்ளவர் தொகையும் அதிகமாகும். 1950 ஆம் ஆண்டில் தைலாந்தின் கீழ்ப்பகுதியில் 46 சத விதமான குடும்பத்தினர் நிலமற்றவராக விருந்தனர். இவர்கள் நிலமுடையோருக்குக் கூலிக்கு வ்ேலை செய்பவராகக் காணப்பட்டனர். பெரிய நிலங்களிற் பயிர்செய்தற்குக் கூலியாள் தேவையும் இங்கு அதிகமாக உண்டு; குறித்த பருவங்களில் தொழிலாளர் மிகவதிகமாகத் தேவைப்படுகின்றனர். தைலாந்தின் கீழ்ப்பகுதி தவிர்ந்த பிற பகுதிகளிற் பயிர் நடுதல், அறுவடை செய்தல் முதலிய தொழில்களைச் சிறு விவசாயிகள் கூட்டா கச் சேர்ந்து செய்கின்றனர். ஆனல் தைலாந்தின் கீழ்ப்பகுதியிலோ இத்தகைய கூட்டு முயற்சி கிடையாது; கூலியாட்களைக் கொண்டே தொழிலைச் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலைமையினுற் குத்தகைக்குச் செய்யும் சிறு விவசாயிகள் பணம் கொடுத்துக் கூலியாட்களைப் பெற்றுப் பயிரை விளைவிக்கவேண்டியுள்ளது. ஆகவே இவ் விவசாயிகள் கூலிப்பணம், குத்தகைப் பணம், வரிப் பணம் முதலிய பல தேவைகளுக்காகப் பணத்தைச் செலவிடவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படு கின்றது.
நெல் குற்றுதல்-பாங்கொக்கிற்கு அண்மையாகவும் பிரதான கால்வாய்களைச் சார்ந்தும் 1,000 இற்கு மேற்பட்ட நெல் குற்றும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லப்படும் முறை ஒழுங்கானதாயில்லை. வயலி லிருந்து நெல் சிறு தொகையாகக் கொண்டு செல்லப்படுகின்றது. குத்தன்கைக்குச் செய்வோர் ஆலைகளோடு நேரடியான தொடர்பு இல்லாதவராகக் காணப்படுகின் றனர். ஆலைகளுக்கு நெல்லைக் கொண்டு செல்லக்கூடிய வழிவகைகளும் அவர்க ளுக்குக் குறைவாகும். இந்த நிலைமைகளினல் இத்துறையில் தரகர் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். நெல்லைப் பெற்று ஆலைகளுக்குக் கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் முதலிய தொழில் முறைகளைத் தரகர்களே செய்கின்றனர். பெரும்பா லும் சீனரே இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். சந்தையில் விலை ஏற்றம் ஏற்படும் வரை சேமித்து வைக்கும் நிலைதரகர் காரணமாக ஏற்படுவதும் உண்டு. குத்த கைக்கு நிலத்தைச் செய்யும் விவசாயிக்குப் பணம் அவசியமாகத் தேவைப்படு கின்றது. பல தேவைக்கும் பணம் அவசியமாகத் தேவைப்படுவதனுல் உடனடி யாக இப்பணத்தைப் பெறமுயல்வர். இதனைப் பயன்படுத்திச் சீன வியாபாரிக ளும் தை உத்தியோகத்தரும் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்வர். நெல் அலுக்குமதிப்பு இருக்கும்பொழுதும் பயிர்செய்வோருக்குப் பயன் அதிகம் கிடைப்பதில்லை. சீன வியாபாரிகளே இதனுற் பயன் அடைகின்றனர். தை நெல்

தைலாந்து: பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 323
வர்த்தகம் இவர்கள் மூலமாகவே பெரும்பாலும் நடைபெற்றது. 1954 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் நெல் வியாபாரத்தில் தனியுரிமை கொண்டிருந்தது; விவசாயிகளிடமிருந்து குறித்த விலைக்கு நெல்லை வாங்கிப் பின்பு ஏற்றுமதி செய் தது. ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட தொகையில் நாலிலொரு பங்கே விவசாயிக ளுக்குக் கொடுக்கப்பட்டது. 1963 இல் நெல்லின் விலை 1954 ஆம் ஆண்டு விலையள வாகவே-அதாவது தொன்னென்றுக்கு 440 தொலராக-இருந்தது.
ଈ!!!.!!!
10 ஏக்கர் விளைநிலத்துக்குரிய
.இழுவை மாடுகளின்
\ (எருதுகளும் எரு
மைகளும்) அடர்த்தி
it.
படம் 93. தைலாந்தில் மாடுகள்
1958-61 ஆண்டுக் காலத்தில் சராசரியாக 124 இலட்சம் தொன் அரிசி ஏற்று மதி செய்யப்பட்டது. இத் தொகையில் 22 சத விதம் மலாயாவின் தேவைக்கா கச் சிங்கப்பூருக்கு வற்றுமதி செய்யப்பட்டது; 10 சத வீதம் ஹொங்கொங்கிற் கும், 12 சத விதம் இந்தியாவுக்கும், 9 சத வீதம் யப்பானுக்கும் ஏற்றுமதி செய் யப்பட்டன. பாங்கொக் மூலமாகவே அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. அரிசியை

Page 177
324. தென்கிழக்கு ஆசிய நாடுகள்
எற்றிச் செல்லப் பிறநாட்டுக் கப்பல்களே பயன்படுத்தப்பட்டன. அண்மைக் காலத்தில் இந்தியாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட தொகை குறைந்துவந்துள்ளது. ஆனல் யப்பான், சிங்கப்பூர், ஹொங்கொங்கு ஆகிய நாடுகளே தைலாந்திலிருந்து ஒழுங்காக அரிசியை இறக்குமதி செய்கின் றன. இறக்குமதி முதன்மையைப் பொறுத்தவரையில் யப்பான் முதலாவதாகவும், சிங்கப்பூர் இரண்டாவதாகவும், ஹொங்கொங்கு மூன்முவதாகவும் அமைத் துளளன.
மாடுகள்
தைலாந்தினர் பொதுவாக நெற்செய்கையை மட்டுமே தொழிலாகக் கொண் டுள்ளபொழுதும் மாட்டு வளர்ப்பும் அவர்களது தொழில்முறையில் சிறிதளவுக்கு இடம்பெற்றுள்ளது. கோராத் பகுதியிலேயே மாடுகள் பெரும்பாலும் வளர்க்கப் படுகின்றன. தைலாந்தில் விவசாயிகள் எருமைகளையும் மாடுகளையும் இழுவை விலங்குகளாகப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக ஒவ்வொரு குடும்பத்தின ரும் ஒரு சோடி விலங்குகளை வைத்திருப்பர். தைலாந்தின் கீழ்ப் பகுதியிலுள் ளோர் பெரும்பாலும் எருமைகளைப் பயன்படுத்துவர்; ஏனைய பகுதிகளில் மாடு கள் பயன்படுத்தப்படுகின்றன. கோராத் பகுதியில் சாதாரண விவசாயிகள் ஒவ் வொருவரும் நான்கிற்கு மேற்பட்ட விலங்குகளை வளர்ப்பர். இப்பகுதியில் நில வும் சவன்னத் தன்மை விலங்குவளர்த்தற்குத் துணைசெய்கின்றது. அதனேடு இப்பகுதியில் துணைப் பயிராக விளைவிக்கப்படும் சோளத்திலிருந்து பெறப்படும் வைக்கோலும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எனவே தைலாந்தில் கோராத் பகுதியிலே மாட்டுவளர்ப்பு முக்கியமாக நடைபெறுகின் றது. தைலாந்தின் கீழ்ப்பகுதியில் வாழும் விவசாயிகளுக்குத் தேவையான இழுவை விலங்குகள் இப்பகுதியிலிருந்தே பெறப்படுகின்றன. ஆனற் கோராத் பகுதியில் விலங்குகள் சிறப்புமுறையாகப் பண்ணைகளில் வளர்க்கப்படுவதில்லை. சாதாரண விவசாயிகளே இவ்விலங்குகளை வளர்க்கின்றனர். இப்பகுதியிலிருந்து தைலாந்தின் கீழ்ப்பகுதிக்கு வருடந்தோறும் விலங்குகள் கொண்டு செல்லப்படு கின்றன. மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 50 இலட்சம் மாடுகள் வளர்க்கப்படு கின்றன. சராசரியாக ஓர் ஏக்கர் நெல்விளையும் நிலத்திற்கு 3.2 என்ற வீதத்தில் இது காணப்படுகின்றது. தைலாந்தின் தாழ்நிலத்திலுள்ள ஏக்கர் ஒன்றுக்கு இது 7 ஆக உள்ளது (படம் 93). கோசாத் பகுதியில் பன்றிகளும் வளர்க்கப்படுகின் றன. பாங்கொக்கில் வாழும் சீனருக்கும், தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிக ளில் வாழும் சீனருக்கும் தேவையான பன்றிகள் இப்பகுதியிலிருந்தே பெறப்படு கின்றன. 1961 ஆம் ஆண்டில் தைலாந்தில் 57 இலட்சம் மாடுகளும் 45 இலட்சம் பன்றிகளும் இருந்தன. அவ்வாண்டில் 80,000 பன்றிகளும் 69,000 மாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
குடிப்பாம்பல்
பேமாவின் பெரும்பகுதியைப் போன்றும் வட மலாயாவைப் போன்றும்
தைலாந்திற் குடிகள் மிக ஐதாகவே பரவிக் காணப்படுகின்றன (படம் 94

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 3928
சதுர மைல் ஒன்றுக்குரிய சராசரி அடர்த்தி 135 பேராக உள்ளது. நைலாந்தின் கீழ்ப்பகுதியில் சதுரமைல் ஒன்றுக்குரிய அடர்த்தி 300 GuGajdicy b . siglah araw லாம். கோராத் மேட்டுநிலத்திலும் வடக்கிலுள்ள தேக்குமரக்காட்டுப் பகுதியி லும் சதுர மைலுக்குரிய அடர்த்தி 50 முதல் 100 பேராகக் காணப்படுகின்றது.
~-----srv rwa.
w
4. OO 4. Ο Ο க்கு மேல்
படம் 94. தைலாந்திற் குடியடர்த்தி
மேற்கிலுள்ள மலைப்பிரதேசத்தில் குடியடர்த்தி சதுரமைலுக்கு 50 இலும் குறை வாகவுள்ளது. பாங்கொக்கைச் சார்ந்து குடியடர்த்தி அதிகமாக உள்ளது. தொங் கின் கழிமுகத்தை (வட வியற்நாம்) இது ஒத்துள்ளது எனக் கூறலாம். தொங் கின் கழிமுகத்திலிருந்து மக்கள் பெயர்ந்து குடியேறினர். ஆனல் பாங்கொக் பகுதி அவ்வாறில்லை. இங்குக் குடித்தொகை மிகையாக உள்ளது என்று கூறமுடி யாது. குடிப்பெயர்வு நிகழும் இடமாகவும் இது இல்லை. குடிப்பரம்பலைப் பொறுத்தவரையில் கவனிக்கத் தக்கதாயிருப்பது விளைநிலத்திற்குரிய அடர்த்தி

Page 178
326 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
யாகும். நெல் விளையும் நிலத்தில் ஓர் ஏக்கருக்குரிய அடர்த்தியில் வேறுபாடு உண்டு (படம் 95). தைலாந்தின் கீழ்ப்பகுதியில் ஓர் ஏக்கர் விளைநிலத்திற்குரிய அடர்த்தி 86 ஆக உள்ளது; தொங்கின் கழிமுகத்தில் இது 2.6 ஆகக் காணப்படு கின்றது. தைலாந்தின் கீழ்ப்பகுதியில் விளைநிலத்திற்குரிய குடியடர்த்தி ஏனைய பகுதிகளிலும் பார்க்கக் குறைவாகும். குடித்தொகை அதிகமாகவிருந்தும் ஏற்று மதிக்காகத் தானியம் பெருந்தொகையாக உற்பத்தி செய்யப்படுவதற்கு இதுவே காரணமாகும் (ஒப்பிடுக படம் 61).
够سر.س"^ பிரதேசவாரியாக ஓர் ஏக்கர் a&r ܓ. ܗܘ ܀ܠ ۶ - ص--- வட தைலாந்து நிலத்துக்குரிய ,
3- O V குடித்தொகை Υ è ~, ベーート
-、./すゞ”し、ベ "v・マ Y. t می به ها : V, كير أ n
M.
W . .
கோராத் t .イ மத்திய 'W ص۱۰ rイ 1தைலாந்து 22 ” ༤༣ f ܐ ܂-- ܢܨ Y f ص !ర్లోయి• •98 ) { ተ
R >மேற்கு 86 \ المہ ، مص
படம் 95, தைலாந்தில் விளைநிலத்திற்குரிய குடியடர்த்தி
1937 ஆம் ஆண்டில் தைலாந்தின் மொத்தக் குடித்தொகை 145 இலட்சமாக விருந்தது. 1960 ஆம் ஆண்டில் இத்தொகை 263 இலட்சமாகப் பெருகியிருந் தது என மதிப்பிடப்பட்டது. தைலாந்தின் முக்கிய பட்டினமான பாங்கொக்கில் 13 இலட்சம், மக்கள் வாழ்கின்றனர். அண்மையிலுள்ள தொன்புரியில் 375,000 மக்கள், வாழ்கின்றனர். 80 சதவீதமான தைலாந்தினர் சாதாரண கிராமங்க ளில் வாழுகின்றனர். எஞ்சிய சிறு தொகையினர் சிறிய சந்தைப் பட்டினங்க ளில் வாழுகின்றனர். தைலாந்தின் குடித்தொகை பற்றிய விபரங்களை ஒப்பிட்டு ஆராய்தல் கடினமாகும். 1960 ஆம் ஆண்டுக் குடிமதிப்புப்படி ஆண்டுதோறும்
 
 
 

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 327
சராசரி 3.29 சதவீதமான குடிப்பெருக்கம் உண்டாகின்றது. பரும்படியான பிறப்பு விதம் ஏறக்குறைய 2.4 சதவீதமாகவும் இறப்பு வீதம் 8.5 ஆகவும் உள் ளன. 1929-37 காலப் பகுதியில் இயற்கைப் பெருக்கம் காரணமாக 30 இலட்சம் மக்கள் மேலதிகமாகப் பெருகிக் காணப்பட்டனர். 1937 முதல் 1962 வரையுள்ள காலப்பகுதியில் 136 இலட்சம் மக்கள் மேலும் பெருகிக் காணப்பட்டனர். இவ் வாறே கடந்த 25 ஆண்டுக் காலத்தில் குடித்தொகை இருமடங்காகப் பெருகி யுள்ளது. இத்தகைய அளவில் தென்கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளில் (சிங் கப்பூர்த்தீவு தவிர) பெருக்கம் ஏற்படவில்லை.
தைலாந்தில் ஏற்பட்ட குடிப்பெருக்கத்தினல் இந்த நூற்றண்டில் நெல்விக்ள யும் நிலம் மூன்று மடங்கிற்குமதிகமாகப் பெருகியுள்ளது. ஆயினும் அரிசி ஏற்று மதி மெல்ல மெல்லவே பெருகியுள்ளது. விரைவான குடிப்பெருக்கம் அண்மையி லேயே ஏற்பட்டுள்ளது எனக் கூறுதற்கில்லை. 1854 ஆம் ஆண்டில் தைலாந்தின் மொத்தக் குடித்தொகை 60 இலட்சமாக மதிப்பிடப்பட்டது. இதிலிருந்து இயற்கைப் பெருக்கம் காரணமாக மக்கள் படிப்படியாகப் பெருகிவந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும்பொழுது சிம்மமன் என்பார் கட்டுப்படுத்தமுடியாத வெள்ளப்பெருக்குக் காரணமாக மலேரியா நோய் பரவிவந்ததனுல் தைலாந்து மக்கள் காலத்துக்குக்காலம் இறந்துபட்டனர் எனக்கூறியிருப்பது ஏற்கத்தக்கதாயில்லை. கால்வாய் நீரை மக்கள் அதிகமாகப் பருகிவந்ததனுல் வாந்திபேதி (கோலாா) நோய் அடிக்கடி பரவிவந்தது; இதனுல் மக்கள் பீதியுற்றுத் தங்கள் வாழிடங்களைவிட்டு நீங்கி, வேறிடம்சென்று குடியேறினர். இத்தகைய குடிப்பெயர்வு குறிப்பிடத்தக்க அளவில் கோசாத் பகுதியில் ஏற்பட்டது. பல்வேறு நோய்கள் பரவுவதற்குக் காரணமான நுளம்பு முதலிய பூச்சிகள், கிருமிகள் என்பனவும் தைலாந்திற் காணப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்றபொழுதும் குடித் தொகையிற் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. வா லாற்று அடிப்படையில் பார்க்கும் பொழுது சியெங்மைப் பகுதியிலிருந்து உட னலத்திற்கு அத்துணை ஒவ்வாதனவாயினும் வளமுடைய ஆயுத்தியா, பாங் கொக் பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். மக்களின் பெயர் வுக்கு ஏற்ப விவசாயமும் புதிய பகுதிகளில் விருத்திபெற்றுக் காணப்படு கின்றது.
இரண்டு அல்லது மூன்று நூற்முண்டுகளாகத் தைலாந்தில் தொழிலாளர் போதிய அளவில் இல்லாமையால் பிரச்சினை காணப்பட்டது. மிகையான குடித்தொகையால் பிரச்சினை இங்கு எழவில்லை. தைலாந்தின் தென் பகுதியி லுள்ள நெல்விளையும் நிலங்கள் மந்தகதியில் விருத்திசெய்யப்பட்டமைக்கு இதுவே காரணமாகும். அண்மையிலுள்ள பகுதிகளில் அடிமைத் தொழிலாள ரைப் பெறுவதற்காக நடாத்தப்பட்ட முயற்சிகளுக்கும் காரணம் இதுவாகும். தைலாந்தில் தொழிலாளரின்மையால் ஏற்பட்ட பிரச்சினைக்கு வழிகாணுமுக மாகவே அடிமைத்தொழிலாளரைப் பயன்படுத்தவேண்டிய நிலைமை உண்டா னது. 20 ஆம் நூற்றண்டின் தொடக்ககாலம் வரையில் தைலாந்தில் இந்த

Page 179
328 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
நிலைமை நீடித்திருந்தது. இப்பொழுதும் தைலாந்தில் தொழிலாளரைக் கட் டாயமுறையில் வேலையிலிடுபடச் செய்யும் பழையமுறை நிலவிவருகின்றது. தைலாந்தின் கீழ்ப்பகுதியில் பருவத்திற்குப் பருவம் தொழிலாளர் தேவை அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தேவைக்கு வடகிழக்குப் பகுதியிலிருந்து (கோராத் மேட்டுநிலம்) தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருவோர் ஒரளவுக் குப் பயன்படுத்தப்படுகின்றனர். வட கிழக்குப் பகுதியிலிருந்து தற்காலிகமாக வருவோர் வருடத்தில் ஆறு மாதங்கள் தைலாந்தின் தாழ்நிலப் பகுதியில் தங்கியிருப்பர். அவர்களது குடும்பத்தினர் தமது கிராமங்களிலுள்ள விவசாய நடவடிக்கைகளைக் கவனித்துவருவர். தாழ்நிலப் பகுதியில் தற்காலிகமாகத் தொழில்புரிய வந்தோர் ஆறு மாதகாலத்தில் இரண்டு அல்லது மூன்று வரு டங்களுக்குப் போதிய பணத்தைச் சேகரித்துக் கொண்டு தமது கிராமங்களுக்கு மீண்டும் சென்றுவிடுவர். இவ்வாறு தற்காலிகமாகத் தாழ்நிலப் பகுதிக்கு வரு வோர் மீண்டும் மீண்டும் திரும்பிவருகின்ற வழக்கமும் இல்லை.
தைலாந்தில் வாழும் சீனர்-தைலாந்தில் மக்கள் தொகை குறைவாகவிருந் தமையாலும் மக்களுட் பெரும்பாலோர் வாழ்க்கைப் பயிர்ச்செய்கையிலீடுபட் டிருந்தமையாலும் சீனர் பெருந்தொகையினராக வந்து குடியேற வாய்ப்புண் டானது. தென் கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளிலும் சீனர் பெருந்தொகை யாகக் குடியேறியுள்ளனர். சீனத்தொழிலாளர் தைலாந்தில் வந்து குடியேறு வதை அங்கு வாழ்ந்த உயர்வகுப்பினர் ஆதரித்தனர். சாதாரண விவசாயிகள் இதுபற்றிச் சிரத்தை கொள்ளாதவராகவிருந்தனர். நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்பச் சீனர் வருகை அமைந்திருந்தது. பொருளாதாரச் சிறப்புக் காணப்பட்டபொழுது சீனத்தொழிலாளர் அதிகமாக வந்துகுடியேறி னர். பொருளாதாரவளம் குன்றியபொழுது அவர்கள் திரும்பிச் சென்றனர். நிலையாகச் சிறு தொகையினர் தங்கிவிட்டதனுல் அவர்கள் வழித்தோன்றி யோர் சீனத் தைலாந்தர் என்று கருதப்பட்டனர். சீனச் சட்டமுறைக்கு ஏற்ப இவர்கள் சீனர்களாகவும், தைலாந்துச் சட்ட முறைக்கு ஏற்பத் தைலாந் தினராகவும் கொள்ளப்பட்டனர். தேசியவுணர்ச்சி காரணமாகத் தைலாந்து மக்கள் சீனர்களை ஆதரிக்கவில்லை. இதனுல் நியாயமற்றமுறையில் அவர்கள் நடாத்தப்பட்டும் வந்தனர். 1925 முதல் 1930 வரையுள்ள காலப்பகுதியில் சராசரியாக வருடத்தில் 37,000 சீனர் தைலாந்தில் வந்து குடியேறியுள்ள னர். 1930 முதல் 1935 வரையுள்ள காலப்பகுதியில் தைலாந்திலிருந்து வருடத் தில் 1,000 சீனர் வெளியேறியுள்ளனர். 1960 ஆம் ஆண்டளவில் தைலாந்தில் " சீன இனத்தவர் ” ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் இருந்தனர் என மதிப் பிடப்பட்டது. சீனுவின் மதிப்பீட்டின்படி இத்தொகை 30 இலட்சத்திற்குமதிக மாகக் காணப்பட்டது. தைலாந்தில் வாழ்ந்த சீனர் பெரும்பாலும் அரிசிவர்ச் தகத்தோடு தொடர்புடையவராகவிருந்தனர். நெல்லுக் குற்றுதல் தொழிலிலும் தாகுத் தொழிலிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். தொழில் திறமை காரண மாகச் சிறு கைத்தொழில்களிலும் அவர்களுக்கு ஈடுபாடு உண்டு. கிராப் பகுதி யில் இறப்பர்த்தோட்டங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றிலும் பங்கு கொண்டிருந்

தைலாந்து : பண்பாட்டுச்சமூக நிலைமைகள் 329
தனர். இறக்குமதித் தொழிலில் ஈடுபட்டோருள்ளும் பெரும்பாலானேர் சீனர் களாகவிருந்தனர். விவசாயத்தில் அவர்கள் அதிகம் ஈடுபடவில்லை. சிறிதளவுக் குப் பாங்கொக்கிற்கு அண்மையிலே சந்தைப் பொருள்பயிரிடுதலை மேற்கொண் டிருந்தனர். ஆனல் விவசாயப் பொருள்களோடு தொடர்புடைய எல்லா நட வடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். கிராமங்களில் கடைகளை வைத்து நடாத்துவோரும் சீனராவர். அண்மையிலுள்ள ஏனைய நாடுகளிலும் பார்க்கத் தைலாந்தில் பொதுவிடயங்களிலும் சீனர் முக்கிய பங்கு கொண்டிருந்தனர்.
சுதேச வகுப்பினர்+பல்வேறு இனத்தொடர்புடைய சுதேசவகுப்பினர் தைலாந்தில் வாழுகின்றனர். தைலாந்தின் கீழ்ப்பகுதியில் தை வகுப்பினரே பெரும்பான்மையோராகவுள்ளனர். சுகோதைக்கு வடக்கிலும், கோராத்மேட்டு நிலத்திலும் லாவோஸியர் வாழுகின்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் இந்தோ சீனுவின் உட்பகுதியிலும் பரந்து காணப்படுகின்றனர். லாவோஸிய வகுப்பினர் தை வகுப்பினரோடு நெருங்கிய தொடர்புடையவர். காடடர்ந்த பகுதிகளில் அலைந்து திரியும் வகுப்பினர் காணப்படுகின்றனர். இவர்களுள் கரென் வகுப்பி னர் அதிக தொகையினாாயுள்ளனர். இவர்கள் பேமாவின் எல்லைக்கப்பாலும் பாந்து காணப்படுகின்றனர். பொதுவாக 1,500 முதல் 3,000 அடிவரையுள்ள உயரமான பகுதிகளிலேயே இவர்கள் வாழுகின்றனர். வடக்கிலுள்ள இன்னும் உயரமான மலைப்பகுதியில் மியாவோ, லிஸ்சு, யாவோ வகுப்பினர் காணப்படு கின்றனர். தென் மேற்கிலுள்ள சந்தபுரியையடுத்த பகுதியில் குமேர்-கம்போடி யர் வழிவந்தோர் சிறுதொகையினராகக் காணப்படுகின்றனர். அன்னுமியரும் சிறுதொகையாகக் கரைவழியாக வந்து பாங்கொக் பகுதியில் குடியேறியுள் ளனர். கிராப் பகுதியில் செமாங் ஆதிவாசிக் கூட்டத்தினர் காணப்படுகின்றனர். மலாயாவிலும் இவர்கள் காணப்படுகின்றனர். கிராப் பகுதியின் கரைநிலத் தைச் சார்ந்து சாவோ நாம் எனப்படும் ஒருவகை மீனவர் கூட்டத்தினர் வாழு கின்றனர். சிங்கோசாவிலிருந்து புக்கெற் வரை ஒரு கோடு வரையப்படுமானுல் அதற்குத் தெற்காக ஏறத்தாழ 600,000 மலாய் இனத்தவர் கரையைச் சார்ந்து வாழுகின்றனர். மேற்குறித்த கோடு அரசியற் பிரிவு எல்லைக்கு அதிவடக்காக அமைந்துள்ள இன-மத எல்லை உணர்த்தும் கோடாகும். தைலாந்தில் வாழும் மக்களில் 85 சதவீதமானுேர் தை-லாவோ இனத்தவராவர். இவர்களிடையில் வேறுபாடுகள் மிகச்சிலவேயாகும். எனவே தைலாந்தவர் ஒரளவுக்கு ஓரினக் கூட்டத்தவராவர். சீனரும் மலாயரும் இந்த ஓரினக்கூட்டத்துக்குப் புறம்பான வர். தைலாந்தின் கீழ்ப்பகுதியில் சீன வியாபாரிகளும், அதி தெற்கில் மலாய ரும் காணப்படுகின்றனர்.
பழக்கவழக்கங்கள்.-தை மக்கள் அதிகமாக வாழுகின்றமையால் தைலாந் தில் தைமொழி முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது (படம் 118). குன்று களிலும் காடுகளிலும் வாழும் கூட்டத்தினர் வேறுபட்ட மொழிகளைப் பேசுவர். லாவோஸ் மொழி தை மொழியினின்றும் சற்றே வேறுபட்ட ஒரு பேச்சு மொழி பாகும்; இதனை வேற்றுமொழியெனக் கூறுதல் பொருந்தாது. தைலாந்தில் வாழும் சீனரும் மலாயரும் தத்தம் மொழிகளைப் பயின்றுவருவாராயினும்

Page 180
330 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பொதுமொழியான தை மொழியைக் கற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். தை மொழி திபெத்திய, பேமிய மொழிகளோடு தொடர்புடைய ஒரு மொழியாகும். புத்த மதப் பிரசாரங் காரணமாகப் பாளி மொழித் தொடர்பு இதற்குண்டு. தை மொழி ஒருவகை இந்திய எழுத்திலேயே எழுதப்படுகின்றது.
புத்த மதச் செல்வாக்குக் காரணமாக மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிக ளில் பகோடா முறைக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிராமங்களில் வீடுகள் அமைந்துள்ள இடத்திற்குப் புறத்தே பகோடாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். குடியிருப்புக்களுக்கு மத்தியில் பகோடாக்கள் அமைக்கப்படும் வழக்கம் இல்லை. மக்களின் பயிர்ச்செய்கைத் தொழில் முறையோடும் சமூக வழக்கங்களோடும் நெருங்கிய தொடர்புடையதாக மதம் அமைந்திருந்தும் பகோடாக்கள் கிராமங் களில் மையமாக அமைக்கப்படாமை நோக்குதற்குரியது.
அறிவு வளர்ச்சிக்குப் புத்தமதப் பிரசாரகர் துணைபுரிந்து வந்துள்ளனர். இந்தியாவின் பழைய குடியேற்றப் பகுதிகளில் இத்தகைய தொடர்புகள் குறிப் பிடத்தக்கன. தை மக்களின் உடையிலும் இந்தியத் தொடர்புகளின் செல்வாக் குத் தென்படுகின்றது. இந்தியர் வேட்டி அணிவது போன்று தைமக்கள் உட லின்கீழ்ப்பகுதியைச் சுற்றிக் கால்களினூடாக எடுத்து ஆடையை அணிவர். தைமக்கள் அணியும் இந்த உடை பானுங் எனப்படும். தைலாந்தில் ஆண், பெண் ஆகிய இருபாலாரும் அணிகின்ற இந்த உடை தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் பொதுவாக அணியும் சாரம் போன்ற உடையி லிருந்து வேறுபட்டது. தை மக்கள் வாழும் பகுதியைச் சூழவுள்ள மலைகள், காடுகள் முதலியவற்றில் வசிக்கும் மக்கள் அணியும் உடையும் வேறுபட்டதா கும்.
குடியிருப்புவகை-தென்கிழக்கு ஆசியாவின் பிற பாகங்களிலுள்ள கிராமங் களைப் போன்றே இங்கும் கிராமங்கள் அமைந்துள்ளன. ஆற்றோ அணைகளை யடுத்துக் கிராமங்கள் நேராக அமைந்துள்ளன. வெள்ளப்பெருக்குச் சமநிலங் களின் புறவோரத்தையடுத்த வறட்சியான நிலங்களிலும், வெள்ளப்பெருக்கி ஞற் பொதுவாகப் பாதிக்கப்படாத மேடான நிலங்களிலும் கிராமங்கள் உண்டு. நீர்வசதி உள்ள இடங்களைச் சார்ந்தே கிராமங்கள் அமைந்துள்ளன. தைலாந்தின் கீழ்ப்பகுதியில் வர்த்தகத்திற்கான நெற்செய்கை அண்மைக் காலத்திலேயே பரவியது. இங்கு விவசாயத்திலிடுபட்டுள்ள குத்தகைச் செய்கையாளர் பெரும்பாலும் இடம்பெயர்ந்து செல்லுமியல்புடையர். இதனல் நிலையான கிராம வளர்ச்சி இப்பகுதியில் குறைவாகும். வீடுகள் மூங்கிற் கால் களில் உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். வீடுகளின் கீழ்ப்பகுதிகள் விவசாயக் கருவிகளை வைப்பதற்கும் மாடுகளைக் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. கோராத்திலும் மேற்கு மலைப் பகுதியிலும் கிராமங்கள் பாதுகாப்பான முறை யில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் விடுகள் இணையானமுறையில் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி மண்வரம்பும் மூங்கில் வேலியும் வைக்கப்பட்டிருக்கும். தாரத்தேயுள்ள இக்கிராமங்களுக்குப் பாது காப்பாகவே இம்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாடுகள் வெளிச்செல்

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 33
லாதிருக்கவும் இவை துணைசெய்கின்றன. லாவோஸ் மொழியில் "வியெங்" என் இணும் பதம் நகரத்தைக் குறிக்கும். இது அரண்செய்யப்பட்டது என்ற கருத் தைக் கொடுப்பதால் பாதுகாப்புடையது என்பது பெறப்பட்டது. வெள்ளப் பெருக்கு ஏற்படுங் காலத்தில் தைலாந்தின் கீழ்ப்பகுதியில் வாழுவோர் நீரின் மீது வாழ்க்கை நடாத்தவேண்டும். முழுக் குடும்பத்தினருமே சிறிய வள்ளங் களில் ஏறிக்கொண்டு பெருக்கு வற்றும்வரை காத்திருப்பர். உண்மையில் மூங் கில்களை இணைத்து அவற்றின் மீது பல வீடுகள் கட்டப்பட்டிருக்கும். இவை எளிதாக நீரிற் செல்லக்கூடியன. இத்தகைய பல வீடுகள் கூட்டமாக அமைச் திருக்கும்பொழுது அவை ஒரு கிராமமாகக் காட்சிதரும். அருவிகள், கால்வாய் கள் ஆகியவற்றையடுத்து இத்தகைய வீடுகள் காணப்படும். பாங்கொக்கிலும் இவை காணப்படுகின்றன. இதனலேயே இந்நகரத்தைத் தூரகிழக்கிலுள்ள வெனிஸ் நகரம் என்று வழங்குவர்.
போக்குவரத்து
1921 ஆம் ஆண்டுவரை வட தைலாந்து, சான் பகுதிகளோடும் பேமாவோ டும் வியாபாரத்தொடர்பு கொண்டிருந்தது. இதனுல் பேமிய நாணயமே இங் குப் பயன்படுத்தப்பட்டது. இதற்கு வேருெரு காரணமுமிருந்தது. வடதைலாந் திற்குப் பாங்கொக்கிலிருந்து செளபிராயா நதிமூலம் பிரயாணஞ் செய்வதும் கடினமாகும். செளபிசாயாவில் நீர் நிலைமை காலத்துக்குக் காலம் சடுதியாக மாற்றமடைவதுண்டு. நதிப் படுக்கையில் மணற்படிவுகளும் ஏற்படுவதுண்டு. தைமக்களின் தேக்கு வியாபாரமும் புறத்தொடர்புக்குக் காரணமாகும். பேமா விலும் தேக்குமரவியாபாரத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர். வட தைலாந்தில் அக்காலத்தில் பேமா, இந்தியா, சீனு முதலிய நாடுகளின் வியாபாரிகளின் தொடர்பு அதிகமாகவிருந்தது. பாங்கொக்-சியெங்மை புகையிாதப் பாதை அமைக்கப்பட்டதிலிருந்து (1921 ஆம் ஆண்டில்) வட தைலாந்து பாங்கொக் கின் பின்னணி நிலத்தோடு தொடர்புபெற்றது. பேமியத் துறைமுகங்களோடு முன்பு கொண்டிருந்த தொடர்பு இதனும் பாதிக்கப்பட்டது. தேக்குமா வியா பாரம் செளபிராயா நதிமூலம் பருவகால அடிப்படையில் நடைபெற்றுவர் தது. புதிதாக அமைக்கப்பட்ட புகையிாதப் பாதை பிரயாணிகளின் போக்கு வாத்திற்கும் சாதாரண வியாபாாப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. ヘ
மேலே குறிப்பிட்டதுபோன்று புறத்தொடர்பு கோசாத் மேட்டுநிலத்திலும் காணப்பட்டது. கோாாத் மேட்டுநிலத்திலிருந்து மத்திய தைலாந்துப் பகு தியை அடைவதிலும் பார்க்க மேக்கோங்குப் பள்ளத்தாக்கைச் சென்றடைவது (சிறு வள்ளங்கள் மூலம்) எளிதாகவிருந்தது. மத்திய தைலாந்திற்குச் செல்லு வதற்கு மாடுகள் கொண்டுசெல்லும் வழியையே பயன்படுத்த வேண்டியிருக் தது. கோராத் பகுதியோடு வியாபாரத் தொடர்பும் குறைவாகவிருத்தது. இம் கிருந்து விவசாயப் பொருள்கள் கொண்டுசென்று விற்கப்பட்டன. இவற்றைப் பாங்கொக்கிற்குக் கொண்டு செல்லும் மாகெள் பேமாவின் கீழ்ப்பகுதியிலுள்ள
14-CP 4217 (6819)

Page 181
332 - தென்கிழக்கு ஆசிய நாடுகள் விவசாயிகளுக்கு விற்கப்பட்டன. தைலாந்தில் முதன்முதலில் அமைக்கப்பட்ட மிகமுக்கியமான புகையிரதப் பாதை ஆயுத்தியா-கோராத் பாதையாகும். உள்நாட்டோடு தொடர்பை ஏற்படுத்துவதற்காகவே இப்பாதை அமைக்கப் பட்டது. இப்பாதை பின்பு உபோன்வரை நீட்டப்பட்டது. வியாபார நோக்கத் திலும் பார்க்க அரசியல் நோக்கமே இதற்குக் காரணமாகவிருந்தது. இப் பொழுது இப்புகையிாதப் பாதைமூலம் கோாாத் பகுதியிலிருந்து பாங்கொக் கிற்கு அரிசியும் (குறைவான தரமுடைய 300,000 தொன் அரிசி வருடத்தில் கொண்டு செல்லப்படுகின்றது. தைலாந்தின் கீழ்ப் பகுதியிலிருந்து சிறந்த தா அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இவ்வரிசி இறக்குமதி துணை செய்கின்றது) மாடுகள், பன்றிகள் என்பனவும் கொண்டு செல்லப்படுகின்றன. கோராத் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படும் பொருள்கள் குறைவாகும்; அவற் றின் பெறுமதியும் குறைவாக உள்ளது. கோராத் பகுதிக்குக் கொண்டு செல்லப் படும் பொருள்களுள் மீன், சீனி, உற்பத்திப் பொருள்கள் என்பன குறிப்பிடத் தக்கன.
பாங்கொக்-சிங்கப்பூர் புகையிாதப் பாதை அமைக்கப்பட்டதனுல் கிராப் பகுதி விருத்தியடைய வாய்ப்பு ஏற்பட்டது. இதனல் தைலாந்தின் தென்பகுதி தலைப்பட்டினத்தோடு நெருங்கிய தொடர்பு பெற்றது. மேற்குறித்த புகையிா தப் பாதைமூலம் உள்நாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்ட பொருள்கள் குறை வாகும். இறப்பர், தகரம் முதலிய பொருள்கள் இப்பாதைமூலம் தென் கிராப் பகுதியிலிருந்து பினங்கிற்குக் கொண்டுசெல்லப்பட்டன. கிராப் பூசந்திப் பகுதி புறத்தொடர்பைப் பெற இது துணைசெய்தது. 1961 ஆம் ஆண்டில் இப்பாதை மூலம் மொத்தம் 47 இலட்சம் தொன் பொருள் கொண்டு செல்லப்பட்டது.
பிலிப்பைன் நாட்டிலும் பார்க்கத் தைலாந்தில் கெருக்கள் குறைவாகும். தைலாந்தின் கீழ்ப் பகுதியில் வெள்ளப்பெருக்கு எற்படுவதனுல் தெருக்களை அமைப்பது கடினமாக உள்ளது. தெருக்கள் குறைவாகவிருப்பதற்குப் புகையிா தப் பாதைகளுக்குப் போட்டியாகத் தெருக்களை அமைக்காமையும் ஒரு காரண மாகும். ஆறுகள், கால்வாய்கள் என்பனவற்றின் மூலமே பிரயாணிகளின் போக்குவரத்து அதிகமாக நடைபெறுகின்றது. பொருள்களும் இவை மூலமே' கொண்டு செல்லப்படுகின்றன. 1940 ஆம் ஆண்டில் பத்து இலட்சத்திற்குச் சற் அறுக் குறைவான பிரயாணிகள் புகையிரதப் பாதை மூலம் பிரயாணஞ் செய் தனர். தெருக்கள் அமைக்கப்படாமைக்கு இது ஒரு காரணமாகக் காட்டப்படுவ துண்டு. தென் தைலாந்தில் நெடிய தெருப்பாதைகள் இல்லை. பாங்கொக்கிலுள்ள தெருக்கள் (1963 இல் பாங்கொக்கில் 56,000 மோட்டர் கார்களும், 60,000 வர்த் தகத்திற்கான மோட்டர் வண்டிகளும் காணப்பட்டன) நாட்டின் பிற பகுதிகளி லுள்ள சிறிய தெருக்களால் இணைக்கப்படவில்லை. இச் சிறிய தெருக்கள் புகை பிரதப் பாதையை இணைப்பதற்காக அமைக்கப்பட்டவை ; அவை நெடிய தெருப்பாதைகள் அல்ல. கிராமங்களில் போக்குவரத்திற்கு மாட்டுவண்டிகளும் சிறிய வள்ளங்களுமே பயன்படுத்தப்படுகின்றன.

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 333
நீர்ப் பெருக்கு ஏற்படுங் காலத்தில் செளபிராயா நதியில் நீராவி வள்ளம்சன் மூலம் பக்நம்போவின் மேலே 120 மைல் வரையில் பிரயாணஞ் செய்யலாம். எனவே பொருத்தமான காலங்களில் இந்நதியில் ஏறத்தாழ 260 மைல் உட் பகுதிவரை செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆனல் வறட்சிக் காலத்தில் கடலி லிருந்து 100 மைல் தூரத்திற்கும் செல்வது கடினமாகும். ஐராவதி ஆற்றுப் போக்குவரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது செளபிராயாப் போக்கு வாத்து அதிக வளவுக்கு வேறுபட்டதாக உள்ளது. தைலாந்தின் உட்பகுதி மெதுவாக விருத்தி பெற்றுவந்ததற்கு இதுவே காரணமாகும். 1,500 தொன் எடையுள்ள கப்பல்கள் பாங்கொக்வரை செல்ல முடியும். எனினும் அரிசி பெரும் பாலும் சிறிய வள்ளங்களிற் கொண்டு செல்லப்பட்டுச் சமுத்திரங்களிற் செல் அலும் பெரிய கப்பல்களில் ஏற்றப்படும். 1962 ஆம் ஆண்டில் பாங்கொக் துறை முகத்திற்கு 1,650 கப்பல்கள் சென்று 31 இலட்சம் தொன் பொருள்களை ஏற் றிச் சென்றன.
பட்டினங்கள்
தை மக்கள் பொதுவாகப் பட்டினங்களில் வாழும் பழக்கமுடையரல்லர். தைலாந்திலுள்ள மிகப் பெரிய பட்டினம் பாங்கொக் ஆகும். இதுவே நாட்டின் சமூக-பொருளாதார-வர்த்தக-அரசியல் தொடர்புடைய தலைநகரமாகும்; தைலாந்தை ஒரு நகர அரசு என்று குறிப்பிடுவது பொருத்தமாகும். ஏனெனில் பாங்கொக்கே நாட்டின் முக்கிய மையமாக விளங்குகின்றது. சகல நடவடிக்க்ை களும் இந்நகரத்தை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. தூரத்தேயுள்ள நாட்டின் பிறபகுதிகள் தொடர்பற்ற முறையிற் காணப்படுகின் றன. பாங்கொக் நாட்டின் தலைநகராக 1782 இல் அமைந்தது. இதற்கு முன்பு ஆயுத்தியா பிரதான பட்டினமாகவிருந்தது; அப்பொழுது பாங்கொக் ஒரு சிறு பட்டினமாக விளங்கியது. இப்பொழுது பாங்கொக் மட்டுமே சிறப்புமிக்க பட் டினமாக விளங்குகின்றது. தைலாந்தில் உள்ளாகக் காணப்படும் பகுதிகள் இப் பட்டினத்தோடு தொடர்பற்றனவாக உள்ளன. பாங்கொக் ஆற்றுக் கழிமுகத்தில் அமைந்த ஒரு துறைப்பட்டினமாகும். ஆறு ஆழமற்றதாயும் வளைந்தும் காணப் படுகின்றது. ஆற்றில் நீரும் கூடிக்குறைந்து காணப்படும். மணல் பெருந் தொகையாகப் படிவதனல் போக்குவரத்துத் தடைப்படுகின்றது. பாங்கொக் கின் தென்னோக்கில் கைத்தொழில் நிலையங்கள் உண்டு. நெல்குற்றும் ஆலைகள், தேக்கு மாமரியும் ஆஃலகள் குறிப்பிடத்தக்கன. பாங்கொக்கிலுள்ள தெருக்களில் சீனர் அதிகமாகக் காணப்படுவர். நாட்டின் வர்த்தகத்தில் அவர்கள் அதிக பங்கு கொண்டுள்ளனர். பாங்கொக் பட்டினத்தில் பாரம்பரியக் கலைநுணுக்க அம்சங் களைக் காணலாம். இங்குள்ள கோயில்களும் மாளிகைகளும் கலைநுணுக்கமும் அழகுமுடையவை. இவற்முேடு இணேவாகப் புதிய முறையிலமைந்த கட்டடங் கள் காணப்படுகின்றன. 1962 ஆம் ஆண்டில் பாங்கொக் நகரில் 13 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். இந்நகரின் குடித்தொகை 1937 ஆம் ஆண்டுத் தொகை யோடு ஒப்பிடும்போது இருமடங்காகப் பெருகிக் காணப்படுகின்றது.

Page 182
: 334 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆயுத்தியா. இது பாங்கொக்கிற்கு முன்பு தலைநகரமாக இருந்தது. 18 ஆம் நூற்முண்டுப் பிரயாணிகளின் குறிப்புக்களில் இப்பட்டினம் அடிக்கடி குறிப் பிடப்பட்டுள்ளது. பேமிய-தை யுத்தங்களினல் இருமுறை இப்பட்டினம் அழிய தேர்ந்தது. மண்டலேயைப் போன்று தைலாந்தில் ஆயுத்தியா குறிப்பிட்ட சில தொழில் முறைகளைக் கொண்டு விளங்குகின்றது. இப்பட்டினத்தில் போக்கு வத்துப் பெரும்பாலும் ஆற்றின்மூலம் நடைபெறுகின்றது. இதனூடாகப் புகை யிரதப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளனவேனும் அவை போக்கு வரத்திற்கு அத்துணை முக்கியமானவையாக இல்லை. இப்பட்டினத்தில் 20,000 இற்கும் குறை வாகவே மக்கள் வாழுகின்றனர். இவர்கள் மிகச் சிறிய குடிசைகளில் வசிப்பர். பலர் வள்ளங்களில் அமைக்கப்பட்ட குடிசைகளில் வசிக்கின்றனர். பட்டினத்தி அலுள்ள ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் குடிசைகளைக் கொண்ட வள்ளங் கள் நிறைந்திருப்பதனுல் நெருக்கடி அதிகமாகவிருக்கும்.
சியெங்மை. பிங் ஆற்றில் அமைந்துள்ள இப்பட்டினம் தைலாந்தில் இரண்டா வது நிலையைப் பெற்றுள்ளது. லாவோஸ் இராச்சியம் நிலவிய காலத்தில் இது தலைப்பட்டினமாகவும் திகழ்ந்தது. லாவோஸ் இராச்சியம் காரணமாகப் பேமியர், தைமக்கள் ஆகியோர்களுக்கிடையில் அடிக்கடி போர் நிகழ்ந்தது. பழைய வா லாற்று அம்சங்களை இங்குள்ள கோட்டைகள் முதலியவற்றில் காணலாம். இப் பொழுது இது ஒரு சிறிய கிராமப் பட்டினமாக உள்ளது. தேக்கு மரத் தொழி லுக்கு இது முக்கியமாக இன்று விளங்குகின்றது. இங்குள்ள மக்களுட் பெரும் பாலோர் இத்தொழிலிலீடுபட்டுள்ளனர். முன்பு சான், யுன்னன் பகுதிகளூடாக நடைபெற்ற மாட்டு வியாபாரம் இப்பொழுது நடைபெறுவதில்லை. தேக்கு Adria கன் இங்கிருந்தே பாங்கொக்கிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. 1957 ஆம் ஆண்டில் இப்பட்டினத்தில் 43,000 மக்கள் வாழ்ந்தனர்.
அரசியல் ஒற்றுமையும் தொடர்புகளும்
அரசியல் வளர்ச்சியில் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுள் தைலாந்து முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. தைலாந்தைச் சூழவுள்ள நாடு களிலெல்லாம் ஐரோப்பியரின் குடியேற்ற நாட்டாட்சி வலுப்பெற்ற பொழுதும் தைலாந்தில் அத்தகைய தாக்கம் ஏற்படவில்லை. தைலாந்து சுதந்திரமான தனி யாசாகத் திகழப் பிறபகுதிகளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளே காரண மாகும். இந்தோசீனப் பகுதியில் பிரெஞ்சு ஆட்சியினரின் தாக்கம் ஏற்பட்டது. பேமாவிலும் மலாயாவிலும் பிரித்தானிய ஆட்சியினரின் தாக்கம் ஏற்பட்டது. இப்பகுதிகளுக்கு இடையில் தைலாந்து அரசியல் தொடர்பற்றமுறையில் தனித்துநின்றது. இதனைப் பிறர் கைப்பற்ருது விட்டார்களே யன்றி இந்நாட் டின் சுதந்திரத்தைத் தைமக்கள் பேணிக்காத்தனர் என்று கூறமுடியாது. ஆஞல் இதனைச் சூழவுள்ள பகுதிகளில் வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இந் நாட்டு வர்த்தகத்தையும் படிப்படியாகப் பாதித்தன. 1941 ஆம் ஆண்டுவரை வில் தைலாந்தின் பணத் தொடர்பு பிரித்தானிய நாணயத்தோடு சேர்ந்ததாக இருந்தது. தைலாந்தின் வர்த்தகமும் சிங்கப்பூசை அடிப்படையாகக் கொண்டு

தைலாந்து : பண்பாட்டுச் சமூக நிலைமைகள் 335
நடைபெற்றுவந்தது. வர்த்தகத்தில் சீனர் மிகப்பெரும்பங்கு கொண்டுள்ளமை யால் அரசியலடிப்படையில் தனிப்பட்டதாயிருப்பினும் வர்த்தகத்தில் தைலாந்து சீனத்தொடர்புடையது என்று குறிப்பிடுவது சாலப் பொருத்த மாகும். இச்சீனத்தொடர்பு இந்த நாற்ருண்டில் தைலாந்தின் அரசியல் நிலைமை யில் அதிக தாக்கத்தைக் கொண்டிருந்தது. யுத்த காலத்தின் பின்பு நடைபெற்ற அரிசி வர்த்தகமும் சீனாது செல்வாக்கினடிப்படையில் அமைந்திருந்தது.
யப்பானியரது யுத்த காலத்திலும் பின்பும் இந்நாடு யுத்தவிளைவுகளினல் அழி யாது பிழைத்தது. இதனுல் இந்நாட்டின் விவசாயம் மீண்டும் விரைவாக விருத்திபெற வாய்ப்பு ஏற்பட்டது. யுத்த காலத்தின் பின்பு தைலாந்திலிருந்தே பெருந்தொகையாக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. தைலாந்தின் அரசியல் அமைப்பு இக்கால நிலைமைகளுக்கு ஒவ்வாதது எனச் சில சமயம் கருதப்பட் டது. எனினும் ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஒரளவுக்குத் தேசிய உறுதிப்பாட்டைக் கொண்ட ஆட்சிநிலைமை இங்கு உண்டு என்று கூறலாம். தென்கிழக்கு ஆசியப் பகுதியில் புதிய சீனுவின் தாக் கம் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் தைலாந்து ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள் ளது என ஏனைய தென் கிழக்கு ஆசிய நாடுகள் கருதுகின்றன. தைலாந்தின் பின்னணியில் பிரித்தானியரும் அமெரிக்கரும் தமது செல்வாக்கை நிலைநிறுத் தப் போட்டிபோட்டனர். இந்தியா மலாயா, இந்தோனேசியா, யப்பான் ஆகிய அரிசி உற்பத்திகுறைவான பகுதிகளில் ஓரளவுக்கு உறுதியான நிலைமைகளை ஏற்படுத்தவே இத்தகைய போட்டி ஏற்பட்டது. இந்த நிலைமைகளினுல் தைலாந் தின் அரிசி ஏற்றுமதி முக்கியமான தொன்முக அமைந்தது. தேவை அதிக மாகவிருந்ததனுல் ஏற்றுமதிக்குப் போதிய அளவில் அரிசி கிடைக்கவில்லை. பேமாவும் அதிகமாக அரிசியை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. (ஆகவே, சர்வ தேச நாடுகள் அரிசித் தேவைக்காகத் தைலாந்தை நாடவேண்டிய நிலைமை ஏற்பட்டது,/சர்வதேச தானிகர் நிலையங்கள் யாவும் பாங்கொக்கில் அமைக்கப் பட்டமையால் இப்பட்டினம் பல்வேறு மக்களின் தொடர்பையும் பெற்றது. சர்வதேச விமானப் பாதைகளும் பாங்கொக்கை மையமாகக் கொண்டன. இத் தகைய புதிய நடவடிக்கைகள் தைலாந்தில் இடம்பெற்றமையால் இந்நாடு புதியதோர் சூழ்நிலையில் அமைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கிளைநிலையங் கள் பல பாங்கொக்கில் நிறுவப்பட்டன. இச்சபையின் உணவு விவசாயக் கிளைத் தாபனம் பாங்கொக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் விவசாய நட வடிக்கைகளுக்கும் பிற சர்வதேச உதவித் திட்டங்களுக்கும் ஆதாரமாக இக் கிளே நிலையம் இயங்கி வருகின்றது (454 ஆம் பக்கம் பார்க்க).
(1964 ஆம் ஆண்டில் தை நாணயமான ஒரு கிக்கல் அல்லது பாட், மலேசியா வின் 14 சதத்திற்கும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் 4% சதத்தற்கும், ஐக்கிய இராச்சியத்தின் 4 பென்சிற்கும் சமமாயிருந்தது.]

Page 183
அத்தியாயம் 19
இந்தோசீனுவின் இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும்
1954 ஆம் ஆண்டின் பின்பு கம்போடியா, லாவோஸ், தென் வியற்நாம், வட வியற்நாம் (வியற்மின் என்னும் கட்சிப் பெயரும் இதற்குச் சில சமயங்களில் வழங்கப்படுவதுண்டு) என்னும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட பகுதி பொதுவாக "இந்தோசீனு ' என்னும் பெயரால் வழங்குகின்றது. வியற்நாம் பிரி வுகள் ஒன்றையொன்று இணைத்துக்கொள்ள முயலுகின்றன. இவை பழைய தொங்கின், அன்னும், கொச்சின்சீனப் பிரிவுகளை அடக்கியுள்ளன. பிரெஞ்சு அறி ஞரின் ஆராய்ச்சி நூல்களிலும், பிற மூலநூல்கள், பழைய படங்கள் ஆகியவற் றிலும் (371 ஆம் பக்கம் பார்க்க) இப்பிரிவுகள் பழைய பெயர்களினலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.
சோங் புவோங்கு ஆற்றிற்குத் தெற்காகக் காணப்படும் இப்பகுதி மிகப் பழைய பாறைகளாலமைந்த மத்திய திணிவை மையமாகக் கொண்டு விளங்கு கின்றது. பாறைகள் எளிதிற் சிதைவடையாத வன்பாறைகளாகும். இன்று அன் மிையத் தொடர் என வழங்கும் நிலப்பாகத்தை அடக்கியுள்ளது (படம் 97). இத் திணிவின் ஒரத்தையடுத்துக் காணப்படும் சிதைவுற்ற கரைப்பகுதி சண்டா மேடையின் வடகிழக்கு ஓரத்தின் ஒரு பகுதியாகும். இத்திணிவுக்கும் தென் சீனுவிலுள்ள பிறிதொரு திணிவுக்குமிடையே ஏற்பட்ட அசைவு காரணமாக அமுக்கவிசை உறுப்புக்கள் அவற்றிடையே அமைந்துள்ளன. மேற்குறித்த தாக் கத்தினுல் தீப்பாறைகளும் வெளிவந்தமைந்தன. மத்திய திணிவின் மேற்கிற் கீழுள்ள பாறைகளே மூடி மணற்பாறைகள் காணப்படுகின்றன.
மத்திய திணிவுக்கும் காடமம் மலைத்தொடருக்கும் இடையிலுள்ள பகுதியி அலும், அன்னுமியத் தொடருக்கும் தென்சீனத் திணிவுக்குமிடையிலுள்ள பகுதி யிலும் வண்டல்கள் அதிகமாகப் பரந்துள்ளன. ஆறுகள் இன்னும் வண்டல்க ளைக் கொண்டுவந்து படியவிடுகின்றன. இவை காரணமாக மண்வளமுள்ளதா யுள்ளது. தாழ்வான இந்நிலங்களிற் பயிர்ச்செய்கை முக்கியமாயுள்ளது. பளிங் குருப் பாறைகளைக் கொண்ட உயர்நிலங்களிற் காடுகள் காணப்படுகின்றன. வடக்கிற் சுண்ணப்பாறைகள் அதிகமாக உள்ளன. நீாரிப்பினுற் சுண்ணப்பாறை களைக் கொண்ட இந்த நிலத்தில் சிக்கலான காசித்துத் தரைத்தோற்றவுறுப்புக் கள் அமைந்துள்ளன. பேடி எல்லோங்குப் பகுதியை இதற்கு ஓர் உதாரணமா கக் கூறலாம்.
காலநிலை
வடக்கில் ஆசியாவை மையமாகக் கொண்டு அமைந்துள்ள கண்டஞ்சார் கால நிலைத் தன்மைக்கும் தெற்கில் தீவுத்தொடர்ப் பகுதியில் நிலவும் சீரான கால நிலைத் தன்மைக்கும் இடைப்பட்ட காலநிலை இங்குக் காணப்படுகின்றது (படம் 96). இக்காலநிலைத் தன்மை காற்முேட்ட மாற்றங்களினல் ஓரளவுக்குச் சிக்க
336

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 337
120"
66)ԼԸ6)
படம் 96-இந்தோசீனுவில் மழைவீழ்ச்சி

Page 184
338 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
லான தன்மையைக் கொண்டுள்ளது. இரண்டாம் அத்தியாயத்திற் காற்மூேட்ட மாற்றங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
செத்தெம்பர் நடுக்கூறு முதல் மாச்சு வரையுள்ள காலத்தில் வளிமண்டல வியல் நிலைமைகள் பெரும்பாலும் மத்திய ஆசியக் காற்முேட்ட முறைகளினற் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வடகிழக்குத் திசைகளின்மூலம் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. குறித்த இக்காலத்தில் ஹனேயில் வெப்பநிலை குறைவாக உள் ளது. அன்னுமியத் தொடரின் கிழக்குச் சாய்விலும் காடமம் தொடரிலும் மழை வீழ்ச்சியும் ஏற்படுகின்றது. நாட்டின் பிறபாகங்களில் இக்காலத்திற் குரிய வொளி மிக்க வறண்ட வானிலைத்தன்மைகள் காணப்படுகின்றன.
யூன் முதல் செத்தெம்பர் வரை தெற்கிலும் தென்மேற்கிலுமிருந்து காற்றுக் கள் வீசுகின்றன. இவை காரணமாக அயனப் பகுதிக்குரிய வெப்பம் கூடிய ஈரப்பதன் என்பன இப்பகுதிகளுக்கும் கிடைக்கின்றன. செந்நதிப் பள்ளத் தாக்கு மூலம் சிறு அமுக்கங்கள் கிழக்கு நோக்கிச் செல்கின்றன. நீண்ட காலத் திற்குத் தென் இந்தோசீனப் பகுதியில் தாழமுக்கமும் காணப்படுகின்றது. இக் காலத்தில் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் மழை அதிக அளவிற் பெய்கின்றது. ஆனல் பேமாவில் பருவக் காற்றுக்கள் சடுதியாக வீசுவதுபோன்று இப்பகுதி யில் வீசுவதில்லை. அதிகிழக்கிலுள்ள ஒதுக்கான கடற்கரைப் பள்ளத்தாக்குக்கள் தவிர இந்தோசீனவில் மிகக்கூடிய மழைவீழ்ச்சி யூலை-ஒகத்து மாதங்களிலே பெறப்படுகின்றது.
யூலை முதல் நவம்பர் வரை இந்தோசீனுவில் அயனச் குருவளிகளின் தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது. குருவளிகள் கிழக்குத் திசையிலிருந்து உண்டாகின் றன. இவை காரணமாக வடவியற்நாமில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. பெப்புருவரி முதல் ஒகத்து நடுக்கூறுவரை இச் குருவளிகள் வடக்கு நோக்கிச் செல்லுகின்றன ; பின்பு சனவரி வரை இவை தெற்கு நோக்கிச் செல்லுகின்றன. எனவே மேக்கோங்கு ஆற்றிலிருந்து சீனுவின் கரைவரையுள்ள கிழக்குக்கரைப் பகுதியிற் பருவத்திற்குப் பருவம் அயனச் குருவளிகளின் தாக்கம் ஏற்படுகின் றது. யூலை-செத்தெம்பர் காலத்தில் இவை 15 பாகை வட அகலக்கோட்டிற்கு வடக்கில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஒற்முேபர் முதல், நவம்பர் வரையுள்ள காலத்தில் இவற்றின் தாக்கம் தென் வியற்நாமில் அதிகமாக ஏற்படுகன்றது (படம் 14).
இந்தோசீனுவில் மழை வீழ்ச்சி (அங்குலம்)
Հ) Է 'S
፧ ö $ $ : ኔ ፏ ፥ ፰ ፭ ጻ ጳ l8 á
ஹனுேய் .9 1.4 1.8 8.7 8.7 l0.7 12.8 14.8 10.ሽ 4.1 1.8 1.1 | ፲2
லுவாங் பிராபாங்கு 8 5 1.3 4.5 8.2 6.7 8.9 12.6 6.8 3.2 1.2 3| 53
ஹ$வே 7.0 3. 4.1 2.1 - 4.4 3.2 3.3 4.6 14.4 25.5 29. 15.2116
டலாதி 3 1. 2.2 7.1. 8.1 6.4 10.2 8.6 2.7 8.9 3.5 .9 O
�f&gst .7 - 6 1.6 8.4 13. 12.3 1.3 4. 1.4 4.4 2.5 8. பிநோம் பென் 1 6 1.9 3.8 5.0 60 5.9 6.4 9.0 9.6 6.8 2.0 57.5
வல்டெமைருேட் 1.5 1.7 7.2 8.8 22.4 30.6 41.6 41.5 33.7 19.5 9.9 2.6 221

இந்தோசிஞ : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 339
எல்லா மாவட்டங்களிலும் சராசரி மழைவீழ்ச்சி அதிகமாகும். மலைகள் கார ணமாக மழை மேலுமதிகமாகப் பெய்கின்றது. காடமம் மலைத்தொடரிலும் அன் ஞமியத் தொடரிலும் வருடச் சராசரி மழைவீழ்ச்சி மிகக் கூடிய அளவில் காணப்படுகின்றது (வருடத்தில் 160 அங்குலத்திற்கு மேல்). ஆனல் மேக் கோங்கு, செந்நதி என்பனவற்றைச் சார்ந்துள்ள சமநிலங்களில் மழைவீழ்ச்சி குறைவாகும். இதனுல் இந்நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன. கடற்கரை யைச் சார்ந்து பான் கியெற் முதல் காப்படான்வரை பரந்துள்ள பகுதியே மிகக் கூடிய வறட்சியுடைய பகுதியாகும் (வருடத்தில் 30 அங்குலம்). மழை வீழ்ச்சியில் வேறுபாடு அதிகமிருப்பதோடு மழை நிச்சயமற்றதாயும் உள்ளது. இத்தன்மைகளினுற் பயிர்ச்செய்கை அதிகம் பாதிக்கப்படுகின்றது. ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி நிலைமைகள் வடக்கிலே பெரும்பாலும் ஏற்படுகின்றன. குரிய வொளிமிக்க நெடிய பருவங்களில் ஆவியாதலும் அதிகமாக நிகழுகின்றது. இத ஞல், மேலுமதிக வறட்சி ஏற்படுகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கற்ற மழைவீழ்ச்சித் தன்மை இப்பகுதியிலே அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தோசீனுவில் நெல் உற்பத்தியை இத்தன்மை பெரிதும் பாதிக்கின்றது. மழைவீழ்ச்சியோ, குரிய வொளியோ தேவையான காலங்களில் ஒழுங்காசக் கிடைக்காதவிடத்து நெற்பயிர் அதிக அளவுக்குப் பாதிக்கப்படுகின்றது. இந்தோசீனுவில் வருட மொத்த மழைவீழ்ச்சி போதிய அளவில் கிடைத்தாலும் பருவ ஒழுங்கிற்கு மாமுக அதிக வறட்சியோ மழைவீழ்ச்சியோ ஏற்பட்டாற் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும். வட பகுதியில் பருவ மழை சிறிது சிறிதாகப் பெய்கின்றது. ஆனல் தென்பகுதியில் அயனப் பிரதேசத்திற்குரிய முறையில் அதிக அளவில் மழை பெய்கின்றது.
இயற்கைத் தாவரம்
இந்தோசீன இயல்பாகக் காடடர்ந்த ஒரு பகுதியாகும். காட்டு நிலத்தில் 14 சதவீதம் மரங்கள் முதலியன வெட்டி நீக்கப்பட்டுப் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. 50 சதவீதமான நிலத்தில் காடுகள் வெட்டப்பட்ட தனுல் இந்நிலம் இன்று சவன்னப் புல்நிலமாகக் காணப்படுகின்றது.
நான்காம் அத்தியாயத்திற் குறிப்பிட்ட காட்டு வகைகள் யாவும் இந்தோசீன வில் காணப்படுகின்றன (படம் 104). பெரும்பாலான சமநிலங்களிலும் 2,500 அடிவரையுள்ள அடிக்குன்றுகளிலும் அயனப் பிரதேச மழைக்காடுகள் காணப் படுகின்றன. நீருட்புகுமியல்புடைய மண்ணைக் கொண்ட தாழ்நிலங்களிற் பரு வக் காற்றுக் காடுகளே அநேகமாக உண்டு. மழைக் காடுகள் அதிகமாக வெட் டப்படவில்லே, காடமம் மலைத்தொடரிலும் சவன்னக்கெற்றுக்கு அண்மையிலும் இக்காடுகள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன; ஏனைய பகுதிகளில் சேனைப் பயிர்ச்செய்கை காரணமாக இவை துணைக்காடுகளாக மாற்றமடைந்து காணப் படுகின்றன. அன்னுமியத் தொடரிலும் தொங்கின் பகுதியிலுள்ள மலைத்தொட ரிலும் அயனப் பிரதேச மழைக்காடுகள் காணப்படுகின்றன. இடையிடையே பருவக் காற்றுக் காடுகளும் உண்டு. மத்திய மேக்கோங்குப் பள்ளத்தாக்கை

Page 185
340 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
யடுத்துள்ள வறண்ட மேனிலங்களிற் பருவக் காற்றுக் காடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பருவக் காற்றுக் காட்டு மரங்களுள் தேக்குக் குறைவாக உள்ளது. லாவோஸில் பக்லேயைச் சூழவுள்ள பளிங்குருப் பாறைகள் கொண்ட பகுதியில் தேக்குமரக்காடுகள் ஓரளவுக்கு உண்டு. தென் வியற்நாமில், குறிப்பாக காப்படானின் பின்னணியிற் பெரிய சவன்னு நிலம் காணப்படுகின் றது. மழைவீழ்ச்சி குறைவாயிருத்தலினலே சவன்ன இங்கு அமைந்துள்ளது. இந்தோசீனுவில் “திரான்” என வழங்கும் ஒருவகை அயனப்பிரதேசப் புல் (இம் பொேற்றர் சிலிண்ட்ரிக்கா) பெருந் தொகையாகக் காணப்படுகின்றது. இது வேய்தற்குப் பயன்படுத்தப்படுகின்றது. தொன்லே சப்பைச் சூழவுள்ள பகுதி யில் பருவத்திற்குப் பருவம் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனுல் இங்கு நன்னீர்ச் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன. சவுல்முக்கிரா (ஹைட் ரோக் கார்புஸ்) என்னும் மரங்கள் இங்குத் தொகையாக உண்டு. இம்மரங்களிலி ருந்து குட்ட நோய்க்குப் பயன்படுத்தப்படும் நெய் பெறப்படுகின்றது. மேற்குத் தொங்கின் மலைத்தொடர்கள் உயரமானவையாகவும் மென் குளிரான மாரிக் காலத்தையும் கொண்டிருப்பதனுல் இங்குப் பயின் மரக்காடுகள் காணப்படுகின் றன. மேர்குசி, காசியா என்னும் பயின் வகைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
கடற்கரையையடுத்த மூன்று பகுதிகளில் மாங்குரோவுக் காடுகள் உணடு; ஏனைய பகுதிகள் நீரோட்டங்களாற் பாதிக்கப்பட்டனவாகவும் பாறைத் தன்மை யுடையனவாகவும் காணப்படுகின்றன :
(அ) செந்நதிக் கழிமுகம் வரையுள்ள தொடர்ச்சியற்ற முறையிலுள்ள பகுதி. (ஆ) மேக்கோங்குக் கழிமுகம்வரையுள்ள தொடர்ச்சியான பகுதி இது பொயின்ற்டீகாமாவுவிலிருந்து வடக்கு நோக்கி தைலாந்துக் குடா வரை பரந்துள்ளது. (இ) காடமம் மலைத்தொடரின் தென் முனையைச் சார்ந்த பகுதி. வியற்நாம் கடற்கரைப் பகுதியிற் பாறைத்தன்மையுடைய முனை நிலங்களுக் கிடையிலுள்ள சிறுகுடாக்கரைகளில் மணற்கும்பிகள் காணப்படுகின்றன. மணல் மேடுகள்மீது சவுக்க மரங்கள் பரந்துள்ளன.
பிரதேச நிலப் பிரிவுகள்
இந்தோசீனுவைத் திட்டமான பிரதேசப் பிரிவுகளாக வகுக்கலாம் (படம் 97). அவையாவன:
1. வட வியற்நாம் கழிமுகங்கள் :-செந்நதியினதும் அதனையடுத்துள்ள ஆறு களினதும் கழிமுகங்கள் இவற்றில் அடங்கும். 2. மேக்கோங்கின் கீழ்ப்பகுதியும் தொன்லே சப் சமவெளியும்:- இப்பிரதேசங் களில் இவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் பார்க்க மிகவதிகமான குடியடர்த்தி உண்டு (படம் 102) பயிர்ச்செய்கையும் செறிவாகவுள்ளது (படம் 104) ; இரண் டும் தனிப்பட்ட பண்பாட்டு விருத்தியும் சமுதாய விருத்தியும் உண்டாவதற்கு நிலைக்களமாயிருந்துள்ளன (படம் 103); ஆயினும் விருத்தி யொழுங்குகள் வித்
தியாசப்பட்டுள்ளன.

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும்
–/N (செந்நதிக்கும்மேக்கோங்கிற்கும்
இடையிஆள்ள மலைகளும் மேட்டு நிலங்களும் soo ص YM
A 3
•S くが、 3? லுெம் தன் 宽 சமவெளி ○
ப்பாறை கொண்ட மத்திய திணிவு
dood)
3oo
།
படம் 97-புதிய இந்தோசீன அரசியற் பிரிவுகளும் (முறிவுக்கோடு) அவற்றின்
புலியியற் பிரதேசங்களும் (தொடர் கோடு)
34)

Page 186
342 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
3. வட வியற்நாமின் உயர்நிலம்:- இது செந்நதிக்கு வடக்கில் உள்ளது. 4. மேக்கோங்கிற்கும் செந்நதிக்கும் இடையிலுள்ள மலைத்தொடர்களும் மேட்டு நிலங்களும்:- இந்நிலங்களிடையில் அதிக வேறுபாடு காணப்படுகின்றது. அதிக அளவுக்குச் சிதைவுற்ற நிலங்களிற் குடித்தொகை குறைவாகவும் ஐதாகவும் உள்ளது; விருத்தியும் குறைவாகும். மலைத்தொடர்கள் தென் சீன வைச் சார்ந்து நிலைமாறு பகுதியில் அமைந்துள்ளன. இவற்றினூடாக மக்கள் தொங்கினுக்கும் கந்தொனுக்குமிடையிற் போவதும் வருவதுமாக உள்ளனர். இந்தப் போக்குவரத்து அடிக்கடி ஏற்பட்டு வருகின்றபொழுதும் ஒழுங்கான முறையில் நடைபெறுவதில்லை. அதிக பயனில்லாத இம்மலைத்தொடர்களும் மேட்டு நிலங்களும் பெரும்பாலும் வடதைலாந்தோடும் யுன்னனுேடும் தொடர்புடையனவாயுள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் நெருக்கடி ஏற்படும் காலங்களில் மக்கள் வந்து ஒதுங்கும் இடங்களாக இவை உள்ளன. 5. வியற்நாம் உயர்நிலம் அல்லது அன்னுமியத்தொடர்:- இது மேக்கோங்கிற்கும் தென்சீனக் கடலுக்குமிடையிலுள்ள கூட்டான ஒரு பிரதேசமாகும். அரசிய லடிப்படையில் இது லாவோஸ், வடவியற்நாம், தென்வியற்நாம் என்னும் உப பிரிவுகளை அடக்கியுள்ளது. காடடர்ந்த லாவோஸில் ஆறுகள் மேற்குநோக்கி ஓடி மேக்கோங்கை அடைகின்றன. வியற்நாம் பிரிவுகள் இரண்டும் ஒடுங்கிய கடற்கரைச் சமநிலத்தைக் கொண்டுள்ளன. இங்குச் செறிவான பயிர்ச் செய்கையையுடைய வளமிக்க சிறுபகுதிக ள்உண்டு. குடியடர்த்தியும் இங்கு அதிகமாகும். இதன் பின்னணியிற் பயனற்ற மேனிலம் காணப்படுகின்றது. 6. மேற்குக் கம்போடியாவின் மலைத்தொடர்கள்:- காடமம் மலைத்தொடரையும் எலிபன் தொடரையும் உள்ளடக்கிய இம்மலைப் பகுதி பெரும்பாலும் விருத்தி செய்யப்படாத பயனற்ற ஒரு பிரதேசமாக உள்ளது.
வடவியற்நாம் கழிமுகங்கள்
புகழ்பெற்ற தொங்கின் கீழ்ப்பகுதியில் நிலம் தட்டையாகக் காணப்படுகின் றது. இப்பகுதி முழுவதுமே ஆற்று வண்டலினுல் அமைந்துள்ளது (படம் 98). பெரும்பாலும் தட்டையாகவுள்ள நிலத்தில் சிறுவேறுபாடு காணப்பட்டாலும் அது பயிர்ச்செய்கையை அதிக அளவுக்குப் பாதிக்கின்றது.
செந்நதிக் கழிமுகத்தில் பயிர்ச்செய்கை செறிவான முறையில் நடைபெறுகின் றது. இங்கு மக்களும் மிகவும் அடர்த்தியாக வாழுகின்றனர். இக்கழிமுகத்தின் தரைப்பக்க ஒரத்தைச் சார்ந்து சுண்ணப் பாறைகளாலமைந்த உயர்நிலங்கள் காணப்படுகின்றன. கடற்பக்க ஒரத்தில் மணற்கும்பிகள் காணப்படுகின்றன. இவை தென் பாகத்தில் உயரமாக அமைந்துள்ளன. கழிமுகத்தில் பெரும் பகுதி கடல் மட்டத்திலிருந்து பத்து அடி உயரத்திற்கும் குறைவாக உள்ளது. கழி முகத்தில் செந்நதியிலிருந்து பிரிந்து செல்லும் பரப்புங் கிளையாறுகள் பல உள் ளன. வடபகுதியிலுள்ள காடுகள் நீக்கப்பட்ட உயர் நிலத்திலிருந்து சோங் கவு முதலிய பல சிற்றருவிகளும் செந்நதியை வந்தடைகின்றன. வடக்கிலிருந்து

இந்தோசிஞ : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் SAS வரும் அருவிகள் மூலம் பெருந்தொகையான அடையல்கள் வந்து கழிமுகத்திற் படிகின்றன. இதனுல் கழிமுகத்திலுள்ள முக்கியமான பாப்புங்கிக்ளயாறுகள் படிப்படியாகத் தெற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. கழிமுகம் வடபாலுள்ள
おや திறனுேப்E* ஆகுவாக
Nias
t
ܫܘܤ ܧA27ܛܧܼ
அணைகள”
மைல் டிe ཡཱ་བ་ཀླུ་- இருபோக நெல் நவம்பரில் அறுவடை 500 Քյւգ*(35 .Jசெய்யும் நெல் மேலுள்ள நிலம்
படம் 98-வடவியற்நாமின் செந்நதிக் கழிமுகம்
ேெளபருவிகளின் கழிமுக விசிறிகளோடு இணைந்து காணப்படுகின்றது. பழைய மேடுகள், அனேகள் முதலியன சற்று உயரமாக உள்ளமையினல் குடியிருப்புச் களே அமைப்பதற்கு ஏற்றனவாக உள்ளன. இவற்றிடையேயுள்ள தாழ்வான கழிமுக நிலங்.ரில் நெற்செய்கை சிறப்பாக நடைபெறுகின்றது. வடபாகத்தில் கழிமுகப் பகு:யில் உயரமான அனேகள் இல்லாமையசல் கடல் பெருகுங் காலங்

Page 187
344 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கிள்ல் கட்ல்நீர் உட்செல்லுகின்றது. நன்னீர் ஆற்றில் மிகவும் குறைவாகவுள்ள வறண்ட பருவத்திலே கடல்நீர் அதிகமாக உட்செல்லுகின்றது.
அயல்ேயுள்ள சோங் மா, சோங் கு, சோங் கா எனப்படும் ஆறுகளின் கழி முகங்களும் இணைந்து காணப்படுவதனல் செந்நதிக் கழிமுகம் தெற்கு நோக்கிப் பரந்து காணப்படுகின்றது. ஆனல், தெற்கில் உயர்நிலம் கடற்கரைக்கு அணித்தா கப் பரந்துள்ளது; இதனல், கழிமுகம் தெற்கில் சிறுதுண்டாகப் பிரிக்கப்பட்டுள் ளது. தெற்கில் நடைபெறும் பயிர்ச் செய்கையைச் செந்நதிக் கழிமுகத்தில் நடைபெறும் பயிர்ச்செய்கையோடு ஒப்பிடும்பொழுது சற்றே வேறுபட்டதாக உள்ளது. துண்டாகவுள்ள உட்பகுதியில் பருமணற்படைகள் (கடற்படிவுகளாக இருக்கலாம்) காணப்படுவது இதற்கு ஒரு காரணமாகும். வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக்கூடிய இயற்கை அணைகளோ செயற்கையாக அமைக்கப்பட்ட அணைகளோ இங்கு இல்லை.
38
*. பெப். மாச். எப். டிெ யூன் பூலே ஒக. செத், க்ற். நவ. திர்ெ.
படம் 99.-ஹனுேயில் செந்நதிப் போக்கு
வ்டவியற்நாமின் கழிமுகங்களைக் கடல்வழியாகச் சென்றடைவது கடினமா கும். கழிமுகங்களிலுள்ள கால்வாய்களும் அடிக்கடி மாற்றமடைகின்றன (படம் 99). இந்த நிலைமைகளினல் வெளிநாட்டு வியாபாரம் தடைப்பட்டுள்ளது. ஹைபோங்கோடு (ஹனேயோடு தொடர்புடைய வெளித்துறைமுகம்) கப்பற் போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்துவதும் கடினமாக உள்ளது. தென்பா கத்தில் கழிமுகம் கடலைச் சார்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆற்றுப் படிவுகள் தொகையாகப் படிவதனலும் கரையோர மணற்றடைகளினலும் வரு டத்தில் முந்நூறு அடிவரை கழிமுகம் வளர்ச்சி பெற்றுவருகின்றது.
கழிமுகப் பகுதியில் நாள் வெப்பநிலையும் அதிக அளவில் வேறுபடுகின்றது. குளிர்காலத்தில் வேறுபாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்தோசீனுவின் தாழ்நிலங்களில் இப்பருவத்தில் வேறு எங்குமில்லாத அளவில் இங்கு வெப்ப
 

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 345
நிலை குறைந்து காணப்படுகின்றது. மழைவீழ்ச்சியிற் பருவகால வேறுபாடு சுற தளவுக்குக் காணப்படுகின்ற பொழுதும் அது தெற்கிலும் பார்க்கச் சீராக உள். ளது. குளிர்காலத்தில் தென்சீனச் குருவளிகள் காரணமாகவும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுகின்றது. வடகிழக்குக் காற்றுக்கள் தொங்கின் குடாவுக்கூடாக வீசுவதனுலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கின்றது. குளிர்காலத்தில் மழை சிறு ஆள்ம் லாகத் தொடர்ந்து பெய்கின்றது. இத்தகைய மழைவீழ்ச்சி மிக்க பயனுள்ளி, தாகக் கருதப்படுகின்றது. இரண்டாம் போகப் பயிர்ச்செய்கைக்கு இம்மழை வீழ்ச்சி பெரிதும் துணையாகவுள்ளது. வருடத்தின் மொத்த மழைவீழ்ச்சியிலும் வேறுபாடு உண்டு. இதுவும் ஆற்றுப் பெருக்கில் உண்டாகும் பெரும் வேறுபாடும் சேர்ந்து நெற்செய்கையைப் பெரிதும் பாதிக்கின்றன. - செந்நதிக் கழிமுகத்தில் நீர்ப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதன் மூலமே நெற் செய்கை நடைபெறுகின்றது. இப்பகுதிக்கு அண்மையிலுள்ள குன்றுகளிலுள்ள காடுகள் வெட்டி நீக்கப்பட்டுள்ளமையாலும், கழிமுகத்தில் வண்டல்கள் படிக் துள்ளமையாலும், பரப்புங் கிளையாறுகள் படிப்படியாக இடம்பெயர்ந்து வருவி தனலும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவது இன்று கடின மாகவுள்ளது. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காகக் காலத்துக்குச் காலம் அணைகள் கட்டப்படுகின்றன. அவ்வாறிருந்தும் சில சமயங்களில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுச் சேதம் விளைவிக்கின்றது. 1926 ஆம் ஆண்டில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததனுற் கழிமுகத்தில் மூன்றிலொரு ப்குதி வெள் ளச் சேதத்திற்குட்பட்டது. அணைகளைக் காலத்திற்குக் காலம் மேலும் உயரமா எழுப்புவதனல் ஆறு கழிமுகமட்டத்திற்கு மேலே உயர்ந்து விடுகின்றது. இ6 வாறிருப்பதனல் கழிமுகப் பகுதியிலுள்ள வயல்களுக்கு நீரைப் பாய்ச்சுவது எளிதாகவிருக்கின்றது. எனினும் பெருக்கு ஏற்படும்பொழுது அணைகளுக்கு இடையிலுள்ள நிலங்களிலிருந்து நீரை வெளியேற்றுவது மிகவும் கடினமா
உள்ளது.
இப்பகுதியிற் பழைய் நீர்ப்பாய்ச்சுதல் முறைகளோடு புதிய முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 57 இலட்சம் ஏக்கர் தாழ்நிலத்தில் நெல் விளைவிக் கப்படுகின்றது. இத்தொகையில் 20 இலட்சம் ஏக்கர் நிலத்தில் (மத்தியிலும் கிழக்கிலுமுள்ள நிலம்) வருடத்தில் இருமுறையோ, மும்முறையோ பயிர்ச் செய்கை நடைபெறுகின்றது; 13 இலட்சம் ஏக்கர் நிலத்தில் அறுவடை கோடை யிலும் 15 இலட்சம் ஏக்கர் நிலத்தில் குளிர்காலத்திலும் நடைபெறுகின்றது. இப்பகுதியிற் பல்வேறு வகையான மண் காணப்படுவதனுலும், வானிலைத் தன் மையினல் கழிமுகப் பகுதியில் வெள்ளப் பெருக்கு நிலைமையில் இடத்துக்கு இடம் வேறுபாடு உள்ளதனுலும் 300 இற்கு மேற்பட்ட நெல் இனங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. வருடத்தில் 32 இலட்சம் தொன் நெல் உற்பத்தி செய் யப்படுகின்றது. ஏக்கருக்குச் சராசரியாக 17 புசல் நெல் கிடைக்கின்றது ஆனல், உண்மையில் இடத்துக்கு இடம் காணப்படும் வேறுபட்ட தன்மைகளே அடிப்படையாகக் கொண்டு ஏக்கருக்குரிய விளைச்சல் 5 புசல் முதல் 37 புசல்

Page 188
346 தென்கிழக்கு ஆசிம் நாடுகள்
வரை வேறுபடுகின்றது. மொத்த உற்பத்தியில் பத்திலொரு பகுதி பிற மாகா னங்களின் சந்தைகளில் விற்பனையாகின்றது. எஞ்சிய தொகை பெரும்பாலும் இப்பகுதிகளிலுள்ள விவசாயிகளினுல் உட்கொள்ளப்படுகின்றது. இவ் விவசாயி கள் அநேகமாகச் சீவியத்துக்காகவே நெற்செய்கையை மேற்கொண்டுள்ளனர். 1943 ஆம் ஆண்டில் 36 சதவீதமான விளைநிலம் 5 ஏக்கருக்குக் குறைந்த துண்டு நிலங்களைக் கொண்டிருந்தது. நிலமற்றேர் தொகையும் அதிகமாகவிருந்தது. இதனுல் சமுதாயமாக நிலத்தை வைத்திருக்கும் ஒரு பாரம்பரியம் வழக்கிலிருந் துள்ளது. ஒரு குலத்தைச் சேர்ந்த உறுப்பினர் காலத்துக்குக் காலம் இந்நிலத் தைப் பெற்றுப் பயிர்செய்வர். 1950 ஆம் ஆண்டில் மொத்த விளைநிலத்தில் ஐந் தில் ஒரு பகுதி இத்தகைய ஆட்சி முறைக்கு உட்பட்டதாகவிருந்தது. இந் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கை * கூட்டுவேளாண்மை முறையை” ஒத்திருந்தது. விவசாயிகளுக்கு இம்முறை ஏலவே பழக்கமாயிருந்ததனல் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட கொம்மியூனிச நிலவாட்சி முறையினுல் இவர்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை.
புத்த காலத்திலும் வட வியற்நாமில் மொத்த நெல்விளையும் நிலம் யுத்தத் திற்கு முற்பட்ட தொகையையே ஒத்திருந்தது. வாழ்க்கைப் பயிர்ச்செய்கை இங்கு முக்கியமாகவிருந்தது என்பதை இது உணர்த்துகின்றது.
கழிமுகப் பகுதியில் 130 இலட்சம் மக்கள் வாழுகின்றனர். கிராமங்களையடக் கிய இந்நிலத்தில் சதுரமைல் ஒன்றில் சராசரியாக 1950 பேர் வாழுகின்றனர். சீனுவிலும் யப்பானிலும் மிகக்கூடிய தொகையான மக்கள் வாழும் தாழ்நிலங் கண் ஒத்ததாக இக்கழிமுகம் விளங்குகின்றது (படம் 102). இப்பகுதியில் நகரவாசிகள் தொகை குறைவாகும். தலைநகரான ஹனேயில் 640,000 பேர் வாழுகின்றனர். ஏனைய பட்டினங்கள் ஒவ்வொன்றிலும் 10,000 இற்குக் குறைந்த தொகையினரே காணப்படுகின்றனர். செந்நதியைச் சார்ந்துள்ள மாவட்டங் களிலே கிராமஞ் சார்ந்த பகுதிகளுக்குரிய மிகக்கூடிய குடியடர்த்தி (சதுர மைலுக்கு 2800 பேருக்கு மேல்) காணப்படுகின்றது. இத்தகைய குடியடர்த்தி கடல்ச் சார்ந்த ஒரு வலயத்திலும், ஹனேயைச் சூழவும், நின்பின்னைச் குழ வும் காணப்படுகின்றது. மிகக் கூடிய தொகையான இவ்வடர்த்தி புதிய வண்ட *லக் கொண்ட வளமான பாகங்களிற் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கிலும் வடக்கிலும் கழிமுகத்தின் குடியடர்த்தி இந்த அளவுக்கு இல்லை. கைத்தொழிற் பட்டினமான ஹைபோங்கு (1960 இல் 369,000) யுன்னன் புகை யிரத நிலையம் (இங்குப் பருக்கி நெசவு ஆலைகளும் சீமெந்து உற்பத்தி ஆலைகளும் உள்ளன) என்பனவற்றில் மட்டும் குடியடர்த்தி ஓரளவுக்கு அதிகமாக உள் ளது. கிராமங்களில் அடர்த்தியர்க வாழும் மக்கள் விவசாயத்துறையில் ஒரு வருக்கொருவர் துணையாக உள்ளனர். வெள்ளப் பெருக்கினுற் பாதிக்கப்படாத சற்றே உயரமான இடங்களில் இவர்களது குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள் ளன. ஆகவே, கிராமங்கள் பெரும்பாலும் அணைகளையும் மணற்கும்பிகளையும் குன்று அடிவாரங்களையும் சார்ந்து காணப்படுகின்றன.

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 34
வட வியற்நாம் உயர்நிலம்
தீப்பாறைகளாலமைந்த மலைத்தொடர்களையும் மணற் பாறைகளைக்கொண்ட மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய இந்த உயர்நிலம் வடமேற்கு-தென்கிழக் குத் திசையில் அமைந்துள்ளது. இங்கு வேறுபட்ட முதிர்ச்சி நிலைகளிலுள்ள ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுட் பல ஒடுங்கிய இடுக்குகளூடாக ஓடுகின்றன. சிக்கியாங்கு ஆற்றுத் தொகுதியின் கிளையொன்று (சோங் திசோ கியாங்கு) உயர்நிலத்திலிருந்து வடக்கு நோக்கி ஓடுகின்றது. இப்பகுதியிலுள்ள காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளன. இதனுல் தென் சீனுவிலுள்ளவற்றைப்போன்று வெளியான குன்று நிலங்கள் இங்குக் காணப்படுகின்றன. இப்பகுதியில் விவ சாயத்தில் ஈடுபட்ட சிறு தொகையினர் வாழுகின்றனர். இவர்கள் பெரும் பாலும் குன்றுநில மக்களாக உள்ளனர். (மாவு, லோலோ, தோ, நுங்கு).
மேக்கோங்கிற்கும் செந்நதிக்குமிடைப்பட்ட பகுதி
மேக்கோங்கிற்கும் செந்நதிக்குமிடையில் பரந்த மலைநிலம் ஒன்று உண்டு. வட வியற்நாம் உயர்நிலத்திலும் பார்க்க இதன் சராசரி உயரம் அதிகமாகும். இதன் கிழக்கோசத்தில் வடமேற்கு-தென் கிழக்குத் திசையிலமைந்த நிலவுறுப்புக் காணப்படுகின்றது. திணிவான சுண்ணக் கற்பாறைகளாலும் பளிங்குருப்பாறை களாலும் அமைந்த இந்நிலம் மக்களுட்புக முடியாத பாகமாக உள்ளது. மேக் கோங்கு ஆற்றைச் சார்ந்த நிலவமைப்பு வடகிழக்கு-தென் மேற்குத் திசையிற் காணப்படுகின்றது. பழைய மணற்பாறைகளாலமைந்த மேட்டுநிலங்களும் உண்டு. லுவாங் பிராபாங்கின் தென் கிழக்கிலுள்ள திரான் நின் மேட்டுநிலம் குறிப்பிடத்தக்கது. இங்கு ஆறுகள் ஒடுங்கிய ஆழமான பள்ளத்தாக்குக்களூடாக ஓடுகின்றன; வளமற்றன வாயிருப்பதனல் இப்பள்ளத்தாக்குக்களில் பயிர்ச் செய்கை நடைபெறுவதில்லை. மக்களும் ஐதாகவுள்ளனர். ஆறுகளுட் பெரியது கருநதியாகும். இது செந்நதிக்குச் சமாந்தரமாக ஒடி அதனேடு இணைகின்றது. சோ போ வரையில் இது போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது. இந்த ஆற்றில் விரைவோட்டப் பகுதிகள் உள்ள பொழுதும் உள்நாட்டுப் போக்குவரத்துக்கு இது முக்கியமாக உள்ளது.
செந்நதிக் கழிமுகத்திற்கு மேற்கிலும் வடக்கிலுமுள்ள மலைப்பகுதி ஆழமாக வெட்டப்பட்ட ஒரு பகுதியாகும். பெரும்பாலும் காடடர்ந்த இப்பகுதியில் தனிப்பட்ட வகுப்பினரான லாவோஸியர் (லாவோதியர் எனவும் வழங்கப்படுவர்) மான், மியாவோ எனப்படுவோரும் லோலோ குன்றுநிலவாசிகளும் வாழுகின்ற னர். குன்றுநில வாசிகள் யுன்னுன் பகுதியிலிருந்து கடந்த சில நூற்ருண்டு களில் இப்பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். வேறுபட்ட இவ்வகுப்பினர் குறித்த இடங்களில் வாழும் முறையும் குறிப்பிடத்தக்கதாகும். லாவோஸியர் பள்ளத்தாக்குக்களில் வாழுகின்றனர். தாழ்நிலங்களில் நெல் விளைவித்தல் இவர் களது முக்கிய தொழிலாகும். மான் வகுப்பினர் சற்று உயரமான நிலத்தில் வாழுகின்றனர்; இவர்கள் பெயர்ச்சிப் பயிர்ச் செய்கையிலிடுபடுகின்றனர்.

Page 189
348 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மியாவோ வகுப்பினர் 3,000 அடிக்கு மேற்பட்ட உயரமான நிலத்தில் வாழுகின் றனர். மலைநிலத்தில் இவர்கள் ஒருவகையான கலப்புமுறை வேளாண்மையை மேற்கொண்டுள்ளனர். உலர் முறையில் நெல்லை விளைவிப்பதோடு சோளத்தை யும் பயிரிடுகின்றனர். இவர்கள் மாடுகளையும் வளர்ப்பர். வட வியற்நாமில் பிற் காலத்தில் வந்து குடியேறிய இம்மக்கள் தீவிர மனப்பான்மை உடையராகவும் விளங்குகின்றனர். லோலோ வகுப்பினர் திட்டமாக ஓரிடத்தில் வாழுகின்றனர், எனக் கூறமுடியாது. அநேகமாக இவர்கள் லாவோஸியர் வாழும் பகுதிக்கு அணித்தாகக் காணப்படுகின்றனர்.
உயர்நிலப் பகுதியில் 20 இலட்சம் மக்கள் வரையில் வாழுகின்றனர். சதுர மைல் ஒன்றில் 48 பேர் வாழுகின்றனர். கழிமுகப் பகுதியிலுள்ள அடர்த்தியோடு ஒப்பிடும்பொழுது இத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. ஆனல், இந்தோசீன வின் ஏனைய மேனிலங்களோடு பார்க்குமிடத்து இத்தொகை அதிகமாகும். செந் நதியின் வடபாகத்தில் மேற்கிலும் பார்க்க அடர்த்தி ஓரளவுக்கு அதிகமாகும். மேற்கில் மக்கள் வாழாத நிலங்கள் அநேகமாகக் காணப்படுகின்றன.
வியற்நாம் உயர்நிலம்
புவியியல் அடிப்படையில் வியற்நாம் உயர்நிலம் ஒரு பெரிய நிலப்பகுதியாகும். இது மேக்கோங்கு ஆற்றுக்கும் கொல் டி டோங் றைமிற், காப்சென் யாக்ஸ் ஆகியவற்றிற்கும் இடையில் உள்ளது. இந்த உயர்நிலம் பொதுவாக அன்னமியத் தொடர் என வழங்குகின்றது. உண்மையில் இது வானிலையழிவினல் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மேட்டுநிலம் போன்று காணப்படுகின்றது. கிழக்கிலும் பார்க்க மேற்கில் இது மென்சாய்வுத் தன்மை பெற்றுள்ளது. கிழக்கில் உயரமான மலைப்புடை முனைப்புக்கள் கடற்கரைவரை பரந்துள்ளன. மலைப்புடை முனைப் புக்களுக்கு இடையாகவுள்ள சிறிய கரைச் சமநிலங்களிற் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. சோங்புவோங்குப் பள்ளத்தாக்கிலிருந்து வடக்காக மலைத் தொடர் அமைப்பு ஓரளவுக்குத் தெளிவாகக் காணப்படுகின்றது. இங்குள்ள மணற்பாறைகளும் சுண்ணக்கற்பாறைகளும் மடிப்புக்கள் பிளவுகள் முதலிய தாக்கங்களுக்கு உட்பட்டமையாலே மலைத்தொடர் இவ்வாறு காணப்படுகின் றது. சோங்புவோங்கின் தெற்கில் தொல்காலப் பளிங்குருப் பாதைத் திணிவுகள் உண்டு. இவற்றின் மீது பாறைக்குழம்புப் படிவுகள் சிறிதளவுக்கு உண்டு. மேற் கில் மத்திய மேக்கோங்குப் பள்ளத்தாக்கு, லாவோஸ் மாகாணம் முதலியன வரை பழைய மணற்பாறைகள் பரந்துள்ளன. உப்புமூலப் பாறைக்குழம்புப் படிவுகள் காணப்படுமிடங்களிற் சரளைமண் அமைந்துள்ளது. செந்நிறமான இச் சரளை மண் இங்குள்ள ஏனைய மேனில மண்வகைகளிலும் பார்க்க வளமுடை
եւ 157.
கிழக்கிற் சிறிய கரைச் சமநிலங்கள் காணப்படுகின்றன. இவற்றின் வளம் ஏற் றத்தாழ்வுடையதாகவிருப்பதோடு குடித்தொகையும் வேறுபட்டுள்ளது. இத் தாழ் நிலங்கள் உட்பகுதியில் தனிப்பட்டனவாக அமைந்துள்ளன. அவற்றி

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 349
னிடையே குத்துச்சரிவையும் ஓங்கலையும் கொண்ட பயனற்ற நிலங்கள் உள்ளன. ஆகவே இச்சமநிலங்கள் உட்பகுதியிலும் பார்க்கக் கரைப்பகுதியோடே அதிக தொடர்புடையன. கரையையடுத்துப் புதிய துறைமுகங்கள் குறைவாகும். கடற் கொந்தளிப்பும் தடையாகவுள்ளது. இத்தன்மையில்ை இப்பகுதியிலுள்ள சிறிய ஆறுகளின் முகங்களில் மணற்றடைகளும் ஏரிகளும் அமைந்துள்ளன.
கோடைக்கால நடுக்கூற்றில் உயர்நிலத்திற் கூடாக "லாவோஸ் காற்றுக்கள்" வீசுகின்றன. இக்காற்றுக்கள் " போன்" காற்றுக்களாகும். வெப்பமும் வறட்சியு முட்ைய கடுங்காற்றுக்களாக இவை கரைச்சம நிலங்களில் வீசுகின்றன. இக்காற் அறுக்களினுற் சடுதியாக வறட்சி ஏற்பட்டுப் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுகின் றது. ஏனைய பருவங்களிற் கரைச்சமநிலங்கள் காரணமாகக் காலநிலையிற் சிற்சில மாற்றங்கள் நிகழுகின்றன. கடற்காற்று, தரைக்காற்று முதலியனவும் இம்மாற் றங்களுக்குக் காரணமாகவுள்ளன. அன்னும் பகுதியில் மழைவீழ்ச்சி ஒழுங்கற்ற தாயும் சடுதியாக நிகழுவதாயும் உள்ளது. தைபூன் புயல்கள் காரணமாக ஏற் படும் பெருமழை வீழ்ச்சியினுற் கரைச்சமநிலங்கள் பாதிக்கப்படுவதும் உண்டு. சடுதியாக நீர் ஆறுகளிற் பெருகுவதனுல் இச்சமநிலங்கள் சேதத்திற்குள்ளா கின்றன. சடுதியாகப் பெருகும் ஆற்று நீரைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகும். ஆறுகளின் நீர்ப்போக்கு ஒழுங்கு பேமாவிலுள்ள சவுங்ஸ் என்னும் ஆறுகளின் நீர்ப்போக்கு ஒழுங்கை ஒத்துக் காணப்படுகின்றன.
கரைச் சமநிலங்களில் 60 இலட்சம் மக்கள் வாழுகின்றனர்.சோங் மா சோங் கு, சோங் கா, ஹ ஜூவோங்கியாங், குவாங் வை, குவாங் நாம் ஆறுகளின் கழிமுகங் களில் மக்கள் மிகவும் அடர்த்தியாக வாழுகின்றனர். இக்கழிமுகங்களுக்கு இடைப்பட்ட மேனிலப் பகுதிகள் விருத்தியுருத நிலங்களாகும். பெரும்பாலும் மக்கள் வாழாத இந்நிலங்களில் அலைந்துதிரியும் கூட்டத்தவர் சிலர் காணப்படு கின்றனர். கரைச்சமநிலங்களிலுள்ள பிரதான பட்டினங்கள் ஹஜூவே (106,000), தரசன் (110,000) என்பனவாகும். காப்படானை அடுத்த கரைச்சமநிலத்தில் மக் கள் ஐதாக வாழுகின்றனர். வறட்சியே இதற்கு முக்கிய காரணமாகும். வறட்சி யினுற் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுகின்றது. இத்தாழ்நிலங்களில் வாழும் மக் கள் ஏறத்தாழ எல்லோரும் வியற்நாமியர் ஆவர். வடக்கிலுள்ள கழிமுகப்பகுதி களிலிருந்து படிப்படியாக இடம்பெயர்ந்து தெற்கில் வந்து இவர்கள் குடியேறி யுள்ளனர்.
மேக்கோங்கின் மேற்பகுதியிலும் மக்கள் ஐதாகவுள்ளனர். மேனிலங்களில் தை, நுங், மியாவோ என்னும் இனத்தவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை வியற்நாமியர் இகழ்ச்சியாக மோய் (நாகரிகமற்றேர்) என்று குறிப்பிடுவர். மோய்க் கூட்டத்தவருள் பல பிரிவினர் உள்ளர். காடுகளிற் காய்கனி கிழங்கு முதலியவற்றைச் சேகரித்தல், வேட்டையாடுதல், பெயர்ச்சிப் பயிர்ச் செய்கை செய்தல் ஆகியவற்றேடு நிலையான பயிர்ச்செய்கையிலும் இவர்கள் ஈடு பட்டுள்ளனர். மத்திய மேக்கோங்குப் பள்ளத்தாக்கில் லாவோஸ் பகுதி அமைந் துள்ளது. லாவோஸ் மக்கள் இங்கு வாழுகின்றனர். இவர்கள் தை மக்களோடு

Page 190
350 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
இனத்தொடர்பு உடையவர். பயிர்த்தொழிலிலிடுபட்டுள்ள இம்மக்கள் சிறிய கிராமங்களில் வாழ்வர் ; பெளத்தமதச் சார்புடையவர். புராதனமான பழக்க வழக்கங்கள் சிலவற்றை இவர்கள் தழுவிவந்துள்ளனர். எனினும் தெற்கிலுள்ள கம்போடியர் பின்பற்றும் நடிப்பு ஆட்டம் என்பனவற்றில் இவர்களுக்கு நாட் டம் குறைவாகும்.
மேக்கோங்குப் பள்ளத்தாக்கைச் சார்ந்து லாவோஸ் மக்களின் குடியிருப்புக் கள் காணப்படுகின்றன. வியென்தியன் (தலைப்பட்டினம், 1961 இல் 52,000 மக் கள் இங்கு வாழ்ந்தனர்), லூவாங் பிராபாங்கு, பக்சே, சவனக்கெற், தகெக் முத லிய பெரிய பட்டினங்களையடுத்துக் குடியடர்த்தி அதிகமாகும். போக்குவரத்து ஆற்று வழியாக நடைபெறுகின்றது. சவனுக்கெற்றுக்கும் வியென்தியனுக்கு மிடையில் ஆற்றுப் போக்குவரத்து முக்கியமாகவுள்ளது. ஆனல் மேக்கோங்கு ஆற்றுவழியாகப் பிற பகுதிகளோடு தொடர்புகொள்வது கடினமாகும். ஆற்றில் விரைவோட்டங்களும், ஒடுக்கங்களும், மணற்படிவுகளும் காணப்படுவதனும் போக்குவாத்துத் தடைப்படுகின்றது. இத்தகைய நிலைமைகள் ஆற்றின் முதிர்ச் சியடையாத் தன்மையைக் காட்டுகின்றன.
வியற்நாமின் கரைச் சமநிலங்களில் 25 இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெல் விளே விக்கப்படுகின்றது. நெல்விளையும் நிலங்கள் ஆங்காங்கே பரந்து காணப்படினும் பெரிய பகுதிகள் வடக்கிற் காணப்படுகின்றன. இச்சமநிலப் பகுதிகளிற் பழைய நீர்ப்பாய்ச்சல் முறைகளே மேற்கொள்ளப்படுகின்றன. வட பகுதியில் வருடத் தில் இருமுறை (யூன், நவம்பர்) பயிர் அறுவடை செய்யப்படுகின்றது. தெற்கில் வருடத்தில் மூன்று முறையும் அறுவடை நடைபெறலாம். உதாரணமாக, குவாங் Bைப் பகுதியில் ஏப்பிரில், செத்தெம்பர், சனவரி மாதங்களிற் பயிர் அறுவடை செய்யப்படுகின்றது. வருடத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் தொன் அரிசி பெறப்படுகின்றது. ஏக்கருக்குரிய வருவாய் குறைவடைய மண்வளமின்மையும் ஒழுங்கற்ற மழைவீழ்ச்சியும் காரணமாகும். பாறைகளைக் கொண்ட கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தொழில் ஒரளவுக்குச் சிறப்பாகக் காணப்படுகின்றது. பிடிக் கப்படும் மீனிற் பெரும்பகுதி உப்பிட்ட மீனுகவும் புளிக்கவைக்கப்பட்ட ஒரு
வகைப் பண்டமாகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மேக்கோங்கின் கீழ்ப்பகுதியும் தொன்லேசப் சமநிலமும்
பிநொம் டான்கிசெக் குன்றுகள், பக்சே, மேக்கோங்குப் பகுதி, டுமுவோங் ஜிரிங் மேட்டுநிலங்கள் (இவை அன்னுமியத்தொடரோடு இணைந்துள்ளன) முத லியவற்றிற்குத் தெற்கிலும் காடமம் மலைகளுக்குக் கிழக்கிலுமுள்ள சமநிலங் கள் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன:-
(அ) தொன்லேசப் வண்டற் சமநிலம்-தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நில வுறுப்புக்களுள் இது குறிப்பிடத்தக்க ஒன்ருகும். கடலோடு சேர்ந்த பகுதியாக விருந்து இன்று இது சமநிலமாக மாற்றமடைந்துள்ளது. மேக்கோங்கு ஆற்று அடையல்கள் படிவுற்றமையினலே இவ்வாறு அமைந்தது. வரலாற்றுக் காலத்

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 35
திலேயே இந்நிகழ்ச்சி நடைபெற்றதாகக் கொள்ளப்படுகின்றது. இச்சமநிலத் தின் நடுவில் தொன்லேசப் ஏரி காணப்படுகின்றது. சமநிலம் படிப்படியாகவும்
႔အံ့ဖွံ၌\2 sesės ஜில் ܀" ܀" • :۰:۰ن உ 0ே0 அடிக்கு மேலுள்ள rrón a?»7 rey; Q டேரீர் ஃம் நெல் விண்நிலம்
சுேற்று நிலல். Eco-so
:
படம் 100-கம்போடியா, தொன்லேசப்பும், மேக்கோங்குச் சங்கமமும்
மெதுவாகவும் அமைந்ததனல் தொன்லேசப் ஏரியில் முன்பு கடலிற் காணப் பட்ட மீன்வகைகள் புதிய நிலைமைகளுக்கு ஏற்ற முறையில் மாற்றம் பெற்றுக் காணப்படுகின்றன. தொன்லே சப் (படம் 100) ஆழமற்ற ஏரியாகும் (வறண்ட பருவத்தில் 6 அடிக்கும் குறைந்த ஆழமுடையது). ஸ்டுங் சென், ஸ்டுங் சிக் சொங் முதலிய சிற்றறுகள் இவ்வேரியிற் படிவுகளைக் கொண்டுவந்து சேர்ப்

Page 191
352 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பதனுல் எரி மேலும் பிரிவுபட்டு அமையுந்தறுவாயிலுள்ளது. ஏரியின் கிழக்கு ஒரத்தில் அடையல்கள் படிந்துள்ளமையினுல் ஏரி அடைபட்டுக் காணப்படு கின்றது. அடையல்கள் கொண்ட இப்பகுதி வில் பொக் (சேற்றுச் சமநிலம்) என வழங்கப்படுகின்றது.
ஏரியிலுள்ள நீர் காலத்திற்குக் காலம் வேறுபடுகின்றது. நீர் குறைவாயுள்ள பொழுது (நவம்பர் முதல் யூன்வரை) ஏரியின் பரப்பு ஏறத்தாழ 1,000 சதுர மைலாகவிருக்கும்; அதன் அகலம் 22 மைலாகவிருக்கும். அப்பொழுது ஏரியி அலுள்ள நீர் வில் பொக் பகுதியூடாக வடிந்து மேக்கோங்கின் கீழ்ப்பகுதியை அடையும். வில் பொக் சேற்று நிலத்தில் தாவர வகைகள் வளர்ந்து பிணைந்து சிறுதீவுக்கூட்டங்கள் போன்று காணப்படும். நீர் பெருகிக் காணப்படும்பொழுது (யூன் முதல் ஒற்ருேபர்வரை) ஏரி ஏறத்தாழ 4,000 சதுரமைல் பரப்பைக் கொண்டிருக்கும். அப்பொழுது ஏரியின் அகலம் 65 மைல் ஆகும். இப்பருவத் தில் மேக்கோங்கு ஆற்றிலிருந்து நீர் ஏரியினுட் செல்லும், மேக்கோங்கு ஆற்றி லிருந்து நீர் இயல்பாகக் கீழிழிந்து கடலுட் செல்லாது பின்னுேக்கி ஓடி வெள் ளப்பெருக்கை உண்டாக்கப் பரப்புங் கிளையாறுகளில் அடையல்கள் படிந்துள் ளமையே காரணமாகும். பருவத்திற்குப் பருவம் இத்தகைய நிலைமை இங்கு ஏற்படுகின்றது. மேக்கோங்கு ஆற்றல் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப் படுத்தும் ஒரு கருவியாகத் தொன்லேசப் ஏரி அமைந்துள்ளது. மேக்கோங் குக் கழிமுகப் பகுதியில் வெள்ளப்பெருக்குக் குறைவாக ஏற்பட இது ஒரு காரணம் எனக் கொள்ளலாம். இதனுல் தொங்கின் பகுதியிற்டோன்று இக் கழி முகப்பகுதியில் உயர் அணைகள் எழுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை.
(ஆ) தொன்லேசப் ஏரிக்குக் கிழக்கில் தாழ்நிலத்திற்கூடாக மேக்கோங்கு ஆறு தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதன் பள்ளத்தாக்கிற் பலவிடங்களில் மணற்படிவுகள் படிந்துள்ளன. இப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள பகுதி களிப் படையைக் கொண்ட தட்டையான தாழ்நிலமாகும். இதன்மீது இடையிடையே மணற்பாறைகளாலமைந்த சிறு குன்றுகள் உண்டு. கோனுக்கு அணித்தாக இத்தகைய சிறு குன்றுகள் சில காணப்படுகின்றன. கோனுக்குக் கீழே மேக் கோங்கு ஆற்றிற் காணப்படும் விரைவோட்டங்கள் கிழக்கு மேற்காக அமைந் துள்ள எரிமலைக் குழம்புப் பாறைகள் காரணமாக ஏற்பட்டவையாகும். கிரத் தியேக்கு அண்மையிலும் இத்தகைய தடைகள் சிறிய அளவிற் காணப்படு கின்றன.
(இ) மேக்கோங்குக் கழிமுகம். தொன்லே சப் ஏரிநீர் வழிந்தோடி மேக் கோங்கு ஆற்றைச் சேருமிடமான பிநொம் பென்னில் (படம் 101) இக் கழி முகம் தொடங்குகின்றது. மேக்கோங்கு ஆறு கழிமுகப் பகுதியில் புளூவ் அந் தீரியர், புளூவ் போஸ்தீரியர் எனப்படும் இரு பரப்புங் கிளையாறுகளாகப் பிரிந்து, கடலையடைவதற்கு முன்பு மேலும் பல கிளைகளாகப் பிரிந்து காணப் படுகின்றது. கழிமுகம் இணைவாக அமைந்திருப்பதோடு வடக்கிலுள்ள வைக்கோ-சைகன் கழிமுகங்களோடும் சேர்ந்து காணப்படுகின்றது. வடக்கி

இந்தோசீனு : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 353
அலுள்ள மேற்குறித்த கழிமுகங்கள் வளங் குறைந்தனவாகும். மக்களும், ஐதாக வாழுகின்றனர். இக்கழிமுகங்களிற் பெரும்பாலும் பசைபோன்ற களிமண் காணப்படுகின்றது. இடையிடையே சிறிதளவுக்கு ஆற்று மணல் உண்டு. சைகன் ஆற்றுமுகம் தவிர்ந்த கழிமுகத்தின் பிற பகுதிகளைக் கப்பல்கள் சென் றடையமுடியாது. பரப்புங் கிளையாறுகளிலும் கப்பல்கள் செல்லமுடியாது.
0ே0 அடிக்கு மேலுள்ள காடடர்ந்த நிலம், محے
1900 இல் நெல் விளைநிலம் محمي 9 - 1987 அளவில் நெல் : සුර' 6 بیانی . g? . மேலதிக நிலம் ふつ ぬ女GörgFGoTa a万Lー@)
�LOffix' சேற்று நிலம் : O 5о
LЈLLh 101-மேக்கோங்கு ஆற்றுக் கழிமுகம்
சிறிய ஒடங்கள் மட்டுமே இவற்றிற் செல்லலாம். காமோக் குடாநாடு மணற் படைகளால் அமைந்த ஒரு பகுதியாகும். மேக்கோங்கு ஆற்றுப்படிவுகள் கட லோட்டத்தினுல் தென்மேற்காகத் தள்ளப்பட்டமையால் இக்குடாநாடு அமைந் துள்ளது. வருடத்தில் 200 அடிவரை இந்நிலம் கடலைநோக்கி வளர்ந்து செல்லு கின்றது. இங்குக் காடுகள் அடர்த்தியாகப் பரந்து காணப்படுகின்றன.
தேசிய நலனை உத்தேசித்துக் கழிமுகத்திற் கணித்தாகக் கொம்பொங் சொம் என்னுமிடத்தில் துறைமுகம் ஒன்றன அமைக்கக் கம்போடியா திட்டமிட்டுள் ளது. இவ்விடம் தைலாந்துக் குடாவில் கொம்பொட்டுக்குத் தெற்காக உள்ளது.

Page 192
354 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மேக்கோங்குக் கழிமுகப் பகுதியிற் கோடைக்கால நடுக்கூற்றில் வெப்பநிலை குறைவடைய மழை காரணமாக உள்ளது. பொதுவாக இப்பகுதியில் வெப்ப நிலை மிகவும் அதிகமாகும். பருவக் காற்று முறைமைக்கு அமைந்த தென் காற் அறுக்களினுலே இப்பகுதியில் மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. ஏப்பிரில் முதல் திசம்பர் வரையுள்ள காலத்தில் சைகனில் 76 அங்குல மழை பெறப்படுகின் 9து. (மிகக் கூடிய அளவு மழை யூனிலும் செத்தெம்பரிலும் பெறப்படுகின் றது). வருடத்தின் எஞ்சிய மாதங்களில் 4 அங்குல மழைவீழ்ச்சி மட்டுமே பெறப்படுகின்றது.
கழிமுகத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு தைலாந்தின் கீழ்ப்பகுதியில் ஏற் படுவதைப் போன்று காணப்படுகின்றது. இயற்கையாக உண்டாகும் வெள் ளப்பெருக்கு நிலைமைகளிலே பயிர்ச்செய்கை தங்கியுள்ளது. ஒழுங்கான நீர்ப் பாய்ச்சல் முறை இங்கு இல்லை. ரக்கியா-லோங் சுவீயன் எல்லையிலுள்ள பதே என்னுமிடத்தில் ஒற்முேபர் முதல் சனவரிவரையில் மேக்கோங்குக் கழிமுகத் தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு 18 அங்குலத்திலிருந்து 6 அடிவரையிற் காணப்படும். யூலை, ஒகத்து மாதங்களிற் கழிமுகப் பகுதியிற் பெறப்படும் மழையினல் வெள்ளப்பெருக்கு உண்டாகின்றது. இத்தகைய நிலைமைகளுக்கு ஏற்றவகையில் "மிதப்பு நெல்" தேர்ந்தெடுக்கப்பட்டு 18 ஆம் நூற்முண்டின் இறுதிப் பகுதியிற் பயிரிடப்பட்டது. இந்த நெல்வகை காரணமாகவே இந்த நூற்முண்டிற் கழிமுகப் பகுதியில் நெல் உற்பத்தி பெருகியது. வறண்ட மாத மான மார்ச்சு மாதத்தில் நெற்பாத்தி போடாது, மிதப்பு நெல்லை நேரடியாக விதைக்கலாம். ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினுல் அது வளர்ந்து முற்று கிறது. பெருக்கு வற்றியதும் சனவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யப் படும். மிதப்பு நெல்வகை 18 அடிவரை உயரமாக வளரக்கூடியது. வெள்ளப் பெருக்கு ஏற்படும்பொழுதும் தொடர்ந்து வளர இது துணைசெய்கின்றது. சாதா ாண நெல்வகைகளாகவிருந்தால் பெருக்கு நீரினுற் பாதிக்கப்பட்டு அழிந்து விடும்.
தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்களுள் 70 இலட்சம் மக்கள் தென் வியற் நாம் பகுதியில் வாழுகின்றனர். பெரிதான கம்போடியப் பகுதியில் 40 இலட் சம் மக்கள் காணப்படுகின்றனர் (படம் 102). தென் வியற்நாம் கிராமப் பகுதி யில் சதுர மைலுக்குரிய குடியடர்த்தி 230 ஆகும். கம்போடியப் பகுதியில் அடர்த்தி சதுர மைலுக்கு 52 ஆகும். மேக்கேர்ங்குக் கழிமுகத்திற் குடி யடர்த்தி 450 வரை உள்ளது. இது செந்நதிக் கழிமுகத்திலுள்ள அடர்த்தியி லும் பார்க்க மிகவும் குறைவாகும். ஒரே வகையான காலநிலையையும் பயிர்ச் செய்கையையும் கொண்ட இரு கழிமுகங்களிடையேயுள்ள வேறுபாடுகளை இவை உணர்த்துகின்றன. மேக்கோங்குக் கழிமுகத்தின் தரைத்தோற்ற வேறுபாடுகளே இதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அடையல்கள் இங்கு விரைவாகப் படிந்துவந்துள்ளன. வெள்ளப் பெருக்கினுலும் இக்கழிமுகம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது (செளபிராயாவில் ஏற்படும் வெள்ளப்பெருக்குப் போன்று இங்கு ஏற்பட்டுள்ளது). கம்போடியரின் பழைய தொழில்நுட்ப அறிவைக் கொண்டு

இந்தோசினு; இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 35
இத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகவிருந்தது. இந்தியக் குடியேற்றவாட்சிக் காலம்பற்றிய விபரங்கள் அதிகமாக உண்டு. அப்பொழுது இன்று தொன்லே சப் என வழங்கப்படும் பகுதி முக்கியமாகவிருந்தது; தைலாந்தோடு தரைவழித் தொடர்பு கொண்ட அங்கோர் பிரதான மையமாக இருந்தது. நோயினுலும் வெள்ளப் பெருக்கினலும் சமூகநிலைமைகள் பாதிக் கப்பட்டிருந்தன எனவும் கூறப்பட்டுள்ளது. அன்னுமியர் கடல்வழியாக வந்து குடியேறிய கழிமுகஞ்சார்ந்த பகுதிகளிலே இப்பொழுது மக்கள் மிகவும் அடர்த்தியாக வாழுகின்றனர்; செறிவான பயிர்ச்செய்கையும் இப்பகுதிகளிலே காணப்படுகின்றது. இந்த நூற்முண்டிற் குடித்தொகை இப்பகுதிகளில் விரை வாகப் பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பெரும்பாலும் கிராமவாசிகளாகக் காணப்படுகின்ற பொழுதும் தாழ் நிலப் பகுதியிலுள்ள சைகன் சோலோன் ஆகிய இரு பட்டினங்களில் நாகரிக மக்கள் வாழுகின்றனர். இவை வடகிழக்கு ஓரத்திலுள்ள பட்டினங்களாகும். இவ்விரு பட்டினங்களிலும் 1955 இல் 15 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். 1961 இல் இத் தொகை 13 இலட்சமாய்க் குறைந்துள்ளது. இப்பட்டினங்கள் மேக் கோங்கு ஆற்றின் பரப்புங் கிளையாற்றில் அமைந்த பட்டினங்கள் அல்ல. அவை வைக்கோ, சைகன் ஆறுகளைச் சார்ந்து அமைந்துள்ளன. எனினும் அவை பழைய கால்வாய்களினல் மேக்கோங்கு ஆற்றேடு தொடர்புபடுத்தப்பட்டுள் ளன. அவை அமைந்துள்ள கழிமுகப் பகுதிகளும் மேக்கோங்கு ஆற்றுக் கழி முகத்தோடு இணைவாகக் காணப்படுகின்றன. மேக்கோங்கு ஆற்றிற்கு அணித் தாகச் சைகன் அமைந்திருப்பது ஐராவதி ஆற்றிற்கு அணித்தாக ரங்கூன் அமைந்திருப்பதை ஒத்துள்ளது. கடந்த பத்தாண்டுக்காலத்தில் நிகழ்ந்த அர சியற் குழப்பங் காரணமாகச் சைகனின் குடித்தொகையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கழிமுகங்களில் மண் வளம் உள்ளதனுலும் நீரைக் கட்டுப்படுத்திப் பயன் படுத்தமுடிவதனுலும் நெற்செய்கை சிறப்பாக விருத்திபெற்றுள்ளது. இதனுல் மக்கள் மேலும் மேலும் அடர்த்தியாகக் குடியேறிவந்துள்ளனர். கடற்கரை யோரமாக மக்கள் ஐதாக வாழுகின்றனர். கடல் காரணமாக ஒரப்பகுதியில் தரைக்கீழ்நீர் உவராகவிருப்பதனல் வேளாண்மை சிறப்பாக அமையவில்லை. மக் கள் ஐதாகவாழ இதுவே காரணமாகும். பரப்புங் கிளையாறுகளுக்குத் தூரத்தே யுள்ள ஆற்றிடைநிலங்களிலும் ஐதான அடர்த்தி காணப்படுகின்றது. கழிமுகப் பகுதியில் ஆற்றோ நிலங்களைச் சார்ந்து குடியிருப்புக்கள் நேர்கோட்டு முறை யில் அமைந்துள்ளன. கடலிலிருந்து உள்ளாகத் தூரத்தில் இப்பொழுது காணப்படும் பழையமேடுகளை அடுத்தும் குடியிருப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கம்போடியச் சமநிலப்பகுதியில் தென்வியற்நாம் எல்லையிலிருந்து கொம் பொங் சினங், கொம்பொங் சாம் வரையுள்ள தாழ்நிலங்களில் மக்கள் அடர்த்தி பாகப் பரந்து வாழுகின்றனர். இத்தாழ்நிலப் பகுதியில் மையமாக பிநொடி பென்பட்டினம் அமைந்துள்ளது (1962 இல் குடித்தொகை 403,000). முழு

Page 193
356 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
நாட்டையும் பொறுத்தவரையில் இப்பட்டினம் ஒரு பக்கமாக அமைந்துள் ளது. தொன்லே சப் பகுதியில் ஏரியையடுத்து சேற்று நிலத்திற்கும் காடுகளைக் கொண்ட குன்றுநிலத்திற்கும் இடையிலுள்ள ஒடுங்கிய பாகத்திலே மக்கள் வாழுகின்றனர். கோடையில் ஏற்படும் பெருக்கினற் பாதிக்கப்படாத முறை யிற் குடியிருப்புக்கள் மேடான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஏரியி லிருந்து தூரத்தே காணப்படுகின்றன. சிறு குடிசைகள் சில ஏரிக்கு அண்மை யாகவும் காணப்படுகின்றன. பழைய தலைப்பட்டினமான அங்கோர் (சீயம் ரியப் சந்தைக்கு அண்மையிலுள்ளது) ஏரியிலிருந்து அதிக தூரம் வடக்கில் அமைந் துள்ளது. இந்தியக் குடியேற்றவாட்சிக் காலத்தில் ஏரிக்கணித்தாகவிருந்த தனல் முக்கியத்துவம் பெற்றிருத்தல் கூடும். பட்டம்பங்கு (1961 இல் குடித் தொகை 29,000) கம்போடியாவில் இரண்டாவது இடத்தைப் பெற்ற பட்டின மாகும். ஏரியிலிருந்து அதிக தூரம் தெற்கே காணப்படுகின்றது. இப்பட்டினம் இப்பொழுது பிநோம் பென் பட்டினத்தோடு புகையிரதப் பாதையினல் தொடுக் கப்பட்டுள்ளது.
தென் வியற்நாமில் 62 இலட்சம் ஏக்கர் நிலத்தில் இப்பொழுது பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. இதுதவிர, தொன்லே சப் பகுதியைச் சார்ந்தும் கம்போடி யத் தாழ்நிலத்திற்கு அண்மையாகவும் மேலும் 40 இலட்சம் ஏக்கர் நிலம் உண்டு. 1875 ஆம் ஆண்டின் பின்பு விளைநிலம் ஐந்து மடங்காகப் பெருகியுள்ளது. இந் தோசீனவில் வேறு எப்பகுதியிலும் இல்லாத அளவுக்கு நெற்செய்கை இங்கு முக் கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் பயிர்ச்செய்கை இப்பகுதியிலும் பார்க்க வட வியற்நாம் பகுதியிலே மிகவும் செறிவாக நடைபெறுகின்றது. கழிமுகப் பகுதியில் சில இடங்களில் ஏக்கருக்குச் சராசரியாக 1,200 இருத்தல் அரிசி பெறப்படுகின்றது. இப்பகுதியில் அரிசியைச் சேமித்து வைத்தற்காகப் பல சேமிப்பு நிலையங்களும் உண்டு. குத்தகைக்கு விவசாயம் செய்வோர் குத்தகைப் பணத்தை அரிசியாகவும் கொடுத்துவருகின்றனர். தொன்லே சப் போன்ற பகுதி களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனல் வெள்ள நிலத்தில் வளரக்கூடிய மிதப்பு நெல்வகை பயிரிடப்படுகின்றது. கழிமுகப் பகுதியில் ஏறத்தாழ 30 இலட்சம் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. கம்போடியாவில் மேலதிகமாக 15 இலட்சம் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது. முதலாவதாகக் குறிப்பிடப் பட்ட கழிமுகப் பகுதியில் விளைநிலங்கள் சராசரியாக 22 ஏக்கர் அளவினவாக இணைவாகப் பரந்து காணப்படுகின்றன. இவற்றிற் குத்தகைக்காரரே பெரும் பாலும் நெல்லை விளைவிக்கின்றனர். உற்பத்தியில் அரைவாசி குத்தகைக்காா ருக்கும் அரைவாசி நிலச் சொந்தக்காரருக்குமாகப் பகிரப்படுகின்றது. கம்போடி யாவில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட விளைநிலம் 10 ஏக்கருக்கும் குறைவான துண்டுநிலங்களாகக் காணப்படுகின்றன. இந்நிலங்கள் பெரும்பாலும் சொந்தக் காாரினல் விளைவிக்கப்படுகின்றன.
இப்பகுதியில் இரண்டாவது உலக யுத்த நிலைமையினல் ஏற்பட்ட விளைவுகள் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டவற்றிலும் பார்க்க வேறு பட்டனவாகவுள்ளன. யுத்தத்தினுல் நேரடியாக ஏற்பட்ட பாதிப்பு இப்பகுதி

இந்தோசிஞ : இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும் 357
யில் அதிகம் என்று கூறமுடியாது. யுத்த காலத்தின் பின்பு இப்பகுதியில் ஏற் பட்ட நிலைமைகளினலேயே இது அதிகம் சீர்குலைந்தது. கம்போடியாவில் யுத்த காலத்தின் முன்பிலும் பார்க்க யுத்தத்தின் பின்பு விளைநிலம் அதிகரித்துக் காணப்பட்டது; ஆனல் தென்வியற்நாமில் 1946-47 இல் விளைநிலம் அரைவாசி யாகக் குறைந்து காணப்பட்டது; 1940 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட நிலை தென் வியற்நாமில் படிப்படியாகவே ஏற்பட்டது.
இரண்டாவதாகக் குறிப்பிடவேண்டிய அமிசம் தொன்லே சப் ஏரி மீன்பிடி யாகும். இவ் வேரி மீன்பிடிக்குப் புகழ்பெற்றது. பெருந்தொகையான அளவில் இங்கு மீன் பிடிக்கப்படுகின்றது. இந்தோசீனப் பகுதி முழுவதிலும் பிடிக்கப் படும் மொத்தக் கடல்மீன் அளவு தொகையான மீன் தொன்லே சப் ஏரியில் பிடிக்கப்படுகின்றது. இங்குப் பிடிக்கப்படும் மீன் ஏற்றுமதிக்காகப் பலமாதிரியா கப் பதன் செய்யப்படுகின்றது. கருவாடாக்கல், புகையூட்டல், புளிக்கவைத்தல் முதலியன சில முக்கியமான பதன் செய்யும் முறைகளாகும். பதன் செய்யப் பட்ட மீன் இங்கிருந்து சிறு ஒடங்கள் மூலம் மேக்கோங்கு வரை கொண்டு செல் லப்படுகின்றது. ஒடங்கள் ஸ்நொக்திரவு வழியாகவும் சேற்றுச்சமநிலங்கள் வழி யாகவும் செல்லும். சில இடங்களிற் சேற்றுநிலங்கள் தாவரச்செறிவுகள் ஆகிய வற்றிற்கூடாக ஓடங்களை இழுத்துச் செல்லவும் நேரிடும். இதனல் கொம்பொங் லுவோங்கிலிருந்து பிநோம் பென்வரை ஒடங்கள் செல்லச் சில சமயங்களில் 15 நாட்களும் செல்லும், மேக்கோங்குக் கழிமுகப் பகுதியைச் சார்ந்தும் மீன்பிடிக் கப்படுகின்றது. மீனுணவுப் பொருள்களை ஆறு கொண்டுவந்து படியவிடுவதனல் மீன் அதிகமாக இங்குக் காணப்படுகின்றது. 1961 இல் தென் வியற்நாமில் 240,000 தொன் மீன்பிடிக்கப்பட்டது.
சைகன் தென்வியற்நாமின் தலைப்பட்டினமாகும். இங்குப் பத்து இலட்சத் திற்கு மேற்பட்ட அளவில் மக்கள் வாழுகின்றனர். ஆற்முேரமாக இப்பட்டினம் அமைந்துள்ளதனற் பெரிய கப்பல்கள் வந்துபோகக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆனல் இப்பட்டினம் பிரதான கப்பற் பாதையில் அமைந்த ஒன்முகவில்லை. கப் பல்கள் தனிப்பட்ட முறையில் இங்கு செல்லவேண்டும். துறைமுகவாயிலில் மணற்றடைகள் அமைவதும் சில சமயங்களிற் போக்குவரத்திற்குத் தடையாக வுள்ளது. இப்பட்டினத்தின் வியாபார முக்கியத்துவம் இன்று குறைந்துவிட் டது. (1962 இல் 20 இலட்சம் தொன் நிறையான கப்பற்பொருள் மட்டுமே ஏற்றியிறக்கப்பட்டது; 1937 இல் இடம்பெற்ற 52 இலட்சம் தொன் கப்பற் பொருளோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்க). சைகன் பட்டினம் பிரெஞ்சு முறை யில் நிருமாணிக்கப்பட்டுள்ளது. சைகனின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் அரிசி யாகும். இப்பொழுதும் கம்போடியாவினதும் தென் வியற்நாமினதும் அரிசி ஏற்றுமதி சைகன் மூலமாகவே நடைபெறுகின்றது. வியாபாரம் காரணமாகச் சைகன் ஆசியாவிலுள்ள பிற பட்டினங்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டில் சைகன் வழியாக 310,000 தொன் அரிசியே ஏற்றுமதி செய் யப்பட்டது; 1935 இல் 15 இலட்சம் தொன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

Page 194
358 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மேற்குக் கம்போடியாவின் தனிப்பட்ட மலைகளான காடமம் (ஏலமலை), யானை மலை என்பவை ஒரு புறத்தில் தைலாந்துக் குடாவையும், மறுபுறத்தில் வளமான மேக்கோங்குத் தாழ்நிலத்தையும் கொண்டிருப்பதனுல் தனிப்பட்ட ஒரு பகுதி யாக அமைந்துள்ளன. மேக்கோங்குத் தாழ்நிலம் தைலாந்தின் கீழ்ப்பகுதிவரை மேற்கு நோக்கிப் பரந்துள்ளது. 3,000 அடி உயரத்திற்கு அதிகமான மேட்டு நிலத்தில் மிகவும் உயர்ந்த பகுதியாகக் காடமம் (ஏல) மலை அமைந்துள்ளது. இம்மலையில் மழைவீழ்ச்சி அதிகமாகும். இங்குக் காடுகள் அடர்த்தியாகப் பரந் துள்ளன. இம்மலைப்பகுதி பளிங்குருப் பாறைகளினலும் சுண்ணக்கற் பாறைகளி ஞலும் அமைந்துள்ளது. வேகமாகப் பாய்ந்து செல்லும் சிறிய ஆறுகள் இங்கே காணப்படுகின்றன. இவற்றின் பள்ளத்தாக்குக்கள் மிகவும் ஒடுக்கமாக உள்ள மைந்து காணப்படுகின்றன. இப்பகுதியின் கரையோரத்தையடுத்து ஓங்கல்கள் அதிக அாரத்திற்குப் பரந்துள்ளன. ஓங்கல்கள் பரந்துள்ள இடங்களுக்குச் செல் வது எளிதன்று. கரையோரத்தையடுத்து இடையிடையேயுள்ள சிறிய பொங்கு முகங்களில் விவசாயிகள் சிலர் வாழுகின்றனர். இடையிடையே பொங்குமுகங் களில் வாழுகின்றமையால் இவர்களிடையில் தொடர்பு குறைவாக உள்ளது. பொதுவாக இப்பகுதி மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமானதொன்றன்று. இது பெரும்பாலும் தொடர்பு குறைந்த பகுதியாகும். மக்களும் மிகவும் ஐதாகவே இங்கு வாழுகின்றனர்.

அத்தியாயம் 20 இந்தோசீனுவின் பண்பாட்டு, சமூக நிலைமைகள் குடிப்பாம்பல்
102 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளது போன்று இந்தோசீன நாடுகளிற் குடிப்பாம்பல் சீரான முறையில் இல்லை. லாவோஸ், வடவியற்நாம், தென்வியற் நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் விளைநிலங்கள் மொத்த நிலத்தில் முறையே 2, 6, 9, 12 சதவீதமாக உள்ளன. சில மாவட்டங்களில் சதுர மைல் ஒன்றில் 2,500 பேர் வரையில் வாழுகின்றனர். ஆனல் 1961 இல் நாட்டுக் குடியடர்த்திகள் சதுர மைல் ஒன்றுக்கு லாவோஸில் 20 பேராகவும், தென் வியற்நாமில் 215 பேராகவும், வடவியற்நாமில் 271 பேராகவும், கம்போடியாவில் 79 பேராகவும் காணப் titl 607
கரைசார்ந்த பகுதிகள் கழிமுகங்கள் ஆகியவற்றில் நெருங்கிவாழும் மக்களுக் குக் காடுகளும் மலைகளுமாயுள்ள மக்களற்ற பகுதிகள் பொருத்தமானவையாக வில்லை. இப்பகுதிகளில் மலேரியா நோய் பரவியிருந்தமை உடல்நலத்தைப் பாதிப்பதாயிருந்தது. தாழ்நிலப் பகுதிகளில் இத்தகைய நோய்கள் பெரும் பாலும் இல்லை. காட்டுப் பகுதிகளில் மலேரியா நோய் காணப்பட்டதனுல் இக் காலத்திற் புதிய குடியேற்றங்கள் ஏற்படவில்லை. பழைய காலத்திற் குடியேறிய வர்களும் இந்நோயினுல் பீடிக்கப்பட்டு உடல் நலங்குன்றியவர்களாகக் காணப் பட்டனர். இதனுல் அவர்களிடை இனப்பெருக்கமும் அதிகம் ஏற்படவில்லை. மலே ரியா நோய் பரவிய காடுகள் உட்பகுதிகளில் உள்ளமையால் தென்கிழக்கு ஆசியா வில் வட பாகத்திலிருந்து கரைமார்க்கமாக மக்கள் பெருந்தொகையாக இடம் பெயர்ந்து சென்றனர். தரைமார்க்கமாக இடம் பெயர்ந்தோர் தொகை குறை வாகும். கடந்த நூற்றண்டோடு இத்தகைய இடப்பெயர்வு முற்முகவே அருகிவிட் டது எனலாம். இந்தோசீனுவின் தென்பாகத்தில் இராச்சிய பரிபாலனம் தோன்றி வளர்ச்சிபெற்றுப் பின்பு வீழ்ச்சியுற்றதற்கும் மலேரியா நோயே கார ணம் எனக்கூறலாம். மேனிலப் பகுதிகளில் மக்கள் செறிவாகப் பரவி வாழா மைக்கு இந்த நோயே காரணமாகும். உயர்நிலங்களில் வாழும் கூட்டத்தினர் ஓரளவுக்கு இப்பகுதிகளிற் பரவியிருந்தனர். தாழ்நிலப் பகுதியில் இக்காலத்திற் பெருந்தொகையான அளவில் வந்து படிந்த மண்டிப் படிவுகளைக் கொண்டு உயர் நிலங்களில் ஏற்பட்ட குடிப்பாம்பல் நிலைமைகளை ஒரளவுக்கு உணர்ந்து கொள்ள லாம். எனினும் பொதுப்படையாக நோக்குமிடத்து மேனிலப் பகுதிகள் மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமானவையாக இருக்கவில்லை.
இந்தோசீனப் பிரதேசத்திலுள்ள 397 இலட்சம் மக்களில் (1962) 172 இலட் சம் மக்கள் வடவியற்நாமில் உள்ளனர். தென்வியற்நாமில் 149 இலட்சம் மக்க ளும் கம்போடியாவில் 57 இலட்சம் மக்களும் லாவோஸில் 19 இலட்சம் மக்களும் வாழ்கின்றனர். பிரதான சமூகத்தவரிடையில் ஏறத்தாழ பத்து இலட்சம் மலே வாழ் சாதியினரும் ஆங்காங்குக் காணப்படுகின்றனர். பழைய அன்னமியப் பகு
359

Page 195
360
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
தியிலிருந்து வியற்நாமிய மக்கள் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்று குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இதனல் பிற பகுதிகளிலும் வியற்நாமியர் சிறு தொகையினராக வாழுகின்றனர். இந்தோசீனுவிலுள்ள சுதேசிய இனத்தவ ால்லாதோருள் முக்கியமானவர் சீனராவர். இவர்கள் பெரும்பாலும் முக்கியமான சந்தைகளிலும் துறைமுகங்களிலும் சோலோனிலும் காணப்படுகின்றனர். இப் பகுதியிலுள்ள மக்களுள் 75 வீதமானேர் கிராமவாசிகளாவர். 50,000 இற்கு மேற்பட்ட குடித்தொகையையுடைய பத்துப் பட்டினங்கள் மட்டுமே இங்கு உள் ளன. இப்பட்டினங்களில் மொத்தம் 52.5 இலட்சம் மக்கள் வாழுகின்றனர்.
Ns a s + " · ·
சதுர மைலுக்கு
படம் 102-இந்தோசீன மாகாணங் களில் குடியடர்த்தி
மக்கள் கிராமவாசிகளாகவும்
பொருள் வருவாய்க்கும் உணவுக்கும்
நெல்லையே நம்பியிருப்பவர்களாகவும் உள்ளமையால் நெல்விளையும் பகுதி
களில் மிகவும் நெருக்கமாக வாழு கின்றனர். எனவே மொத்தக் குடித் தொகையை நாட்டின் மொத்தப் பாப்போடு சேர்த்துப் பார்ப்பதிலும் பார்க்க நெல்விளையும் நிலத்தோடு சேர்த்துப் மாகும். இந்தோசீனுவிலுள்ள ஒவ் வொரு அரசியற் பிரிவிலும் " விளை நிலக் குடியடர்த்தி' நிலைமையில் அதிக வேறுபாடு காணப்படுகின்றது. நாடு முழுவதிலுமுள்ள அடர்த்தியி லும் பார்க்கக் குறித்த மாவட்டங்
களில் பன்மடங்கு அதிகமாக 6&T
பார்ப்பதே பொருத்த
நிலக் குடியடர்த்தி காணப்படுகின் றது. உதாரணமாக வடவியற்நாமி
அலுள்ள குவா பாங்கு என்னும் மாவட்
டத்தில் விளைநிலக் குடியடர்த்தி ஏக்கருக்கு எட்டுப் பேராகும். குடியடர்த்திப் பிரச்சினை வடவியற்நாமிற்முன் அதிகமாக உள்ளது. மேக்கோங்குப் பள்ளத் தாக்கின் கீழ்ப்பாகத்திலும் இது விரைவாக அதிகரித்து வருகின்றது.
இந்தோசினு: அரசியற் பிரிவுகளுக்குரிய விளைநிலக் குடியடர்த்தி
ஒர் எக்கர் நெல் நிலத்திற்குரிய
மக்கள் (1961)
வடவியற்நாம் கம்போடியா தென்வியற்நாம் லாவோஸ்
2.9
.8 2.5 1.2
 

இந்தோசீனு : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 36
இந்த நூற்ருண்டில் இந்தோசீன அரசியற் பிரிவுகளில் மக்கள் தொகை விாை வாக அதிகரித்து வந்துள்ளது. இயற்கைப் பெருக்கம் விரைவாக ஏற்பட்டதே இதற்குக் காரணமாகும். 1937-57 காலப்பகுதியில் இந்தோசீனத்தில் மக்கள் தொகையில் மேலும் 100 இலட்சம் அதிகரிப்புக் (45 சத வீதம்) காணப்பட் டது. 1957-61 காலப்பகுதியில் லாவோஸிலும் கம்போடியாவிலும் இயற்கைப் பெருக்கம் உலகிலே மிகக் கூடிய அளவில் (முறையே வருடத்தில் 3.9 சதவீத
மாக) காணப்பட்டது.
வண்டல் படிந்த தாழ்நிலங்களில் மக்கள் அடர்த்தியாகவுள்ள தன்மையும் மேனிலங்களில் ஐதாகவுள்ள தன்மையும் பயிர்ச்செய்கை நிலைமை, மக்களின் மனுேபாவம், வேறுபட்ட நிலப்பயன்பாடு என்பவற்றைப் பிரதிபலிக்கின்றன. செந்நதியைச் சூழவுள்ள கழிமுகப் பகுதியில் விவசாயிகள் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். இவர்கள் முயற்சிக்குப் புகழ்பெற்றவர்களாகவும் உள்ளனர். முதன் முதலில் கம்போடியர்களாலும் லாவோதியர்களாலும் (தொடர்ந்து பயன் பெருமல்) விருத்தி செய்யப்பட்ட மேக்கோங்குத் தாழ்நிலப் பகுதியில் பிற்காலத்தில் அன்னுமியர் பெருந்தொகையாக வந்து குடியேறினர். இவர்கள் மேக்கோங்குப் பள்ளத்தாக்கில் நெற்செய்கையில் திறம்பட ஈடுபட்டனர். தென் கிழக்கு ஆசியாவில் பிற்காலத்தில் பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட்ட நிலங் களுள் இது குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய சமூகத்தவர்களிலும் பார்க்கக் கம் போடியர் பயிர்ச்செய்கைத் துறையில் பின்தங்கியிருப்பதற்குரிய காரணத்தைத் துணிந்து கூறமுடியாதிருக்கின்றது. அங்கோர் போன்ற இடங்களிலுள்ள் வா லாற்றுச் சான்றுகளைக் கொண்டு பார்க்குமிடத்து இந்த நிலைமைக்குரிய காா ணத்தை எவ்வாற்ருனும் துணிய முடியாதிருக்கின்றது. இது கம்போடியர்க ளுக்குரிய இயல்பான தன்மை எனக்கூறமுடியாது. அவர்கள் உடல்நலம் படிப் படியாகக் கெட்டுவந்ததும், நோய்கள் அதிகமாகப் பாவியமையும், மேக்கோங் குப் பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு அநேகமாக ஏற்பட்டமையும் கம்போடி யர் பயிர்ச்செய்கைத் துறையில் பின்தங்கியதற்குக் காரணம் எனக் கொள்ள
G)TLb.
மக்கள் இடம்பெயர்தல்
இந்தோசீனவில் பலவழிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நூற்றண் டில் மேக்கோங்குக் கழிமுகத்தில் பயிர்ச்செய்கை விருத்திசெய்யப்பட்டதும் நிலத்தைப் பெற்று விவசாயம் செய்வதற்காகத் தென்சீனுவிலும் ஹைனனிலுமிருந்து சீனர் பெருந்தொகையாக இங்கு வந்து குடியேறினர். பின்பு இவர்கள் வியாபாரத்திலும் ஈடுபட்டனர். உள்நாட்டுக் கால்வாய்கள் இதற்குத் துணையாகவிருந்தன. முன்பு பயிர்ச்செய்கையிலீடுபடுவதற்காக வந்து குடியேறியோருள் மிகச் சிலரே இன்று விவசாயத்திலீடுபடுகின்றனர். Gifu ufrufrir நிலைமைகளுக்கு ஏற்ப சீனரது தொகையும் கூடிக்குறைந்து வந்துள்ளது. அண் மையில் இங்கு ஏற்பட்ட தேசிய உணர்ச்சியும் இவர்களின் வருகைக்குத் தடை யாக உள்ளது. அரிசி வியாபாரத்தில் சீனர் முக்கியமான பங்கு கொண்டுள்ளனர்.

Page 196
362 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
இத்துறையில் தைலாந்திற் காணப்பட்ட நிலைமை இங்கு உண்டு எனக் கூறலாம். கிராமவாசிகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தல், மீன் வியாபாரம், தாகுத் தொழில் முதலியவற்றிலும் சீனர் ஈடுபட்டுள்ளனர். 1912 ஆம் ஆண்டில் இந்தோ சீனவில் சீன வமிசத்தார் 293,000 காணப்பட்டனர். இப்பொழுது சீனர் தொகை பத்து இலட்சத்திற்குமதிகமாக இருக்கின்றது. 1960 ஆம் ஆண்டில் தென் வியற் நாமில் 750,000 சீனரும், கம்போடியாவில் 230,000 சீனரும், வியற்நாமில் 58,000 சீனரும் காணப்பட்டனர்.
மக்களடர்த்தி கூடிய பழைய தொங்கின் அன்னும் இராச்சியப் பகுதிகளிலி ருந்து அன்னுமியர் மேக்கோங்குப் பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் வந்து குடி யேறியுள்ளனர். இவர் எவ்வாறு வந்து குடியேறினர் என்பது தெரியவில்லை. மக் கள் தொகை மிகவும் அதிகரித்தபொழுதும் தமது சொந்த வயல்நிலங்களையும் பழைய கொள்கைகளையும் கைவிட்டு இடம்பெயர்வதில் அன்னுமியருக்கு விருப்ப மிருக்கவில்லை; போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் அவர்களுடைய இடப் பெயர்ச்சிக்குத் தடையாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் முதலில் பெருந் தோடங்கள் காரணமாகக் குன்றுப் பகுதிகளுக்குத் தற்காலிகமாகச் சென்ற னர்; நீளம்புகள் மிகுதியாக இருந்த காரணத்தாற், காட்டுப் பகுதிகளை விடுத்துக் கீழ்ப்பகுதியில் நிலையாகக் குடியேறியிருத்தல் வேண்டும். பொருத்தமான நிலை மைகள் இல்லாதபொழுதும் ஏறத்தாழ 40 இலட்சம் அன்னுமியர் இடம்பெயர்ந்து தென்விய்ற்நாமிலுள்ள நெல்விளையும் பகுதியிலும் 350,000 மக்கள் கம்போடிய எல்லைப் பகுதியிலும் வாழுகின்றனர். இவர்கள் அண்மைக்காலத்தில் இங்ங்னம் இடம்பெயர்ந்து குடியேறினர் என்று கூறமுடியாது. 14ஆம் நூற்முண்டி லிருந்தே அன்னுமியர் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வந்துள்ளனர். பிரெஞ்ச் ஆட்சியினர் இப்பகுதியைக் கைப்பற்றிய பின்பும் இத்தகைய இடப் பெயர்வுநிகழ்ந்திருக்கின்றது. கட்டுப்பாடு இல்லாமையினல் பெருந்தொகையா னேர் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். வருடந்தோறும் 10,000 தொழிலாளர் வரையில் இடம்பெயர்ந்து வந்தனர் எனக் கூறப்படுகின்றது. இத்தகைய இடப் பெயர்வுகளினல் இந்தோசீனப் பகுதியின் குடிப்பரம்பல் நிலைமையில் சில மாற் றங்கள் ஏற்பட்டன. 1954 ஆம் ஆண்டின் பின்பு இடம்பெயர்ந்தோர் தொகை மேலும் அதிகமாக உள்ளது; வடவியற்நாமில் போர் நடைபெற்ற பகுதிகளிலி ருந்து 800,000 விவசாயிகள் வரையில் இடம்பெயர்ந்து குடியேறினர்.
இனவகுப்புக்கள் இந்தோசீனுவில் இந்தியாவிலும் தூரகிழக்குப் பகுதியிலுமிருந்து முன்பு வந்த மக்களின் தொடர்பு காணப்படுகின்றது. இவர்களின் செல்வாக்கைப் பண்பாடு, மதம், மொழி ஆகியவற்றிற் காணலாம் (படம் 103). பழைய இந்து மதத் தொடர்பிற்கு மையமாகக் கம்போடியா விளங்குகின்றது. பழைய ஏகாதிபக்தி யச் சீனத்தொடர்பிற்கு மையமாகத் தொங்கின் அமைந்துள்ளது. எனவே மேக் கோங்கு செந்நதி ஆகியவற்றின் தாழ்நிலங்களில் இருவேறு இனத்தவர்

இந்தோசீனு : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 363
செறிந்து காணப்படுகின்றனர். இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட். நிலங்களில் மேற்குறித்த இருவகையான மக்கள் தொடர்பும் வேறுபட்ட படி நிலைகளிலுள்ள மலைச்சாதியினர் தொடர்பும் ஏற்பட்டு வந்துள்ளன. மலைச்சாதி
须 தை, லாவோசியர் 冒 கழ்புேரடியர்
(மொன்குமெற்
மலேச் சாதியினர்
படம் 103-இந்தோசீனப் பகுதியில் இனப்பிரிவுகள் (1948 ஆம் ஆண்டுவரையுள்ள அன்னும் இராச்சியத்தின் எல்லை முறிவுக் கோட்டாற்காட்டப்பட்டுள்ளது.)
யினர் நிலையாக ஓரிடத்தில் வாழ்பவரல்லர். இவர்கள் வடக்கிலிருந்து தரை
மார்க்கமாக இடம்பெயர்ந்து வந்தவராகவும் தாழ்நிலப் பகுதியிலிருந்து உதவி
பற்முேராய் வந்தவராகவும் காணப்படுகின்றனர். இந்தோசீனவின் பெளதிகப்
புவியியல் வேறுபாடுகளுக்கு ஏற்பக் குடியடர்த்தியிலும் இனவகுப்புக்களிலும்
வேறுபாடுகள் காணப்படுகின்றன. அன்னுமியத் தொடர் தடையாக அமைந்தி
16-CP 4217(68/9)

Page 197
364 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ருப்பதனுல் பிரதான இனங்களைச் சேர்ந்தவர் ஓரளவுக்குத் தனிப்பட்ட வகுப் பினராக வாழ்ந்து வருகின்றனர். சொற்ப தொகையினராகவுள்ள மலைச்சாதியின ரும் மலைப்பகுதியில் தனிப்பட்ட முறையில் வாழுகின்றனர்.
மக்களுள் இரு பிரிவினர் முக்கியமாக உள்ளனர். 1. தென் மொங்கோலிய இனத்தவர். இவர்கள் குள்ளமானவர்; குறுந் தலையை யும், சிறிய தட்டையான மூக்கையும், நேரிய கருமயிரையும், இமைக்கடைமடிந்த கண்ணையும், மஞ்சள் சார்ந்த கபிலநிறத்தோலையும் உடையவர். இவ்வமிசங்கள் வியற்நாமியரில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்கள் பிற இனத்தவரோடு அதிகம் கலந்துள்ளபொழுதும் இன்னும் சிறிய உடல் தோற்றமுடையவராகவே காணப்படுகின்றனர். மத்திய மேக்கோங்குப் பள்ளத்தாக்கில் வாழும் லாவோலி யர் இத்தகைய மொங்கோலிய இனத்தைச் சார்ந்தவர். இவ்வகுப்பினர் திபேத்து முதல் தைலாந்து வரை தெற்கிலும் கிழக்கிலுமாகப் பரந்துள்ளனர் (படம் 62).
2. கலப்பு இனத்தவர். பழைய காலத்தில் தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய மக்களும் மொங்கோலிய இனத்தவரும் கலந்துள்ளமையால் ஏற் பட்ட இனத்தவர் இவராவர். பெரும்பாலும் குள்ளமானவர். நீண்ட தலையை யும், ஓரளவுக்கு அகன்ற மூக்கையும், அலை நெளிவுள்ள கரிய மயிரையும், நேரிய கண்ணையும் உடையவர். கிழக்கு இந்தியத் தீவுப் பகுதியில் இவர்கள் பரவலாகக் காணப்படுகின்றபொழுதும் கம்போடியாவிலே இவர்கள் சிறப்பாகக் காணப்படு கின்றனர். இங்குள்ளவர்கள் குள்ளமானவர்களாகவும் கருமையானவர்களாக வும் உள்ளபொழுதும் வியற்நாமியரிலும் பார்க்கச் சிறந்த உடற்கட்டுடையவ ராய்க் காணப்படுகின்றனர். மோயிஸ் வகுப்பினரின் உடலமைப்புப் பொதுவாக நெசியோத் தன்மையைக் கொண்டுள்ள பொழுதும் சிலரது அமைப்பு (ஹோ, யாவு, மீயோ, லவோ, நெயூவா, டாம், டெங், லூ என்போரது) முறுக்கு மயிசை யுடைய நீகிரிற்ருேவகையினரோடு தொடர்புடையதாயுள்ளது.
இந்தோசீனுவின் வடதென் பகுதிகளின் வேறுபாட்டையுணர்த்தும் அமிசங் களுள் மொழி முக்கியமானதாகும் (படம் 118). தொங்கினியரும் அன்னுமிய ரும் ஒரசைத் தொனி மொழிகளைப் பேசுகின்றனர். இம்மொழிகள் கந்தோனி யர் பேசும் மொழியோடு தொடர்புடையன. இவை முன்பு கருத்தையுணர்த் தும் வகையிலிருந்து இப்பொழுது உரோமானிய உருவம் பெற்ற மொழிகளாக உள்ளன. இந்தோசீனுவின் தெற்கிலும் மேற்கிலுமுள்ள பகுதிகளில் வாழ்வோர் கம்போடிய (அல்லது குமேர்) மொழிகளைப் பேசுகின்றனர். இவை தொனி வேறுபாடில்லாத பல்லசை மொழிகள் ; தென் இந்திய எழுத்துவடிவையொட் டியமைந்த வடிவத்தில் எழுதப்படுகின்றன ; தைலாந்து எல்லையைச் சார்ந்து வாழும் ஒரு வகுப்பினர் தை என்னும் மொழியைப் பேசுகின்றனர். இம் மொழிச் சொற்கள் பல கம்போடிய அடியைக் கொண்டுள்ளன. மலைச்சாதி யினர் மலே, திபெத்தன், பேமிய மொழிகளோடு தொடர்புடைய மொழிகளைப் பேசுகின்றனர். இலக்கியப் பாரம்பரியமற்ற பல மொழிகள் மலைவாழ்சாதியின ாால் வழங்கப்படுகின்றன.

இந்தோசீனு : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 365
இந்தோசீனப் பயிர்ச்செய்கை
இந்தோசீனவில் பயிர்ச்செய்கை பெரும்பாலும் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை யாக உள்ளது. விட்டு நிலங்களில் விளைவிக்கப்படும் பொருள்கள் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனுல் வியாபாரம் குறைவாகவுள் ளது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் பணவருவாயும் குறைவாகும். இந்நூற் முண்டில் ஐரோப்பியரின் உதவியோடு பெருந்தோட்டங்கள் விருத்தி செய்யப் பட்டன. பத்து இலட்சத்திற்குச் சற்றுக் குறைவான நிலத்தில் பெருந்தோட் டங்கள் காணப்படுகின்றன. ஆனல் உள்நாட்டுப் பயிர்கள் 180 இலட்சம் ஏக் கர் நிலத்தில் விளைவிக்கப்படுகின்றன. இந்தோசீனுவின் மொத்த நிலம் 1,850 இலட்சம் ஏக்கராகும். உள்நாட்டுப் பயிர்ச்செய்கை பெரும்பாலும் தாழ்நிலப் பகுதியில் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்கள் மேனிலப்பகுதி யிற் காணப்படுகின்றன. அன்னுமியத் தொடரின் தென்பாகத்தில் இவை பரந் துள்ளன. உப்புமூல எரிமலைப் பாறைகளைக்கொண்ட இப்பகுதியில் ஓரளவுக்கு வளமான செம்பூரான் மண் உண்டு. இம்மண்ணுள்ள நிலங்களில் பெருந்தோட் டப்பயிர்கள் சிறப்பாகக் காணப்படுகின்றன. ܨܝ
செந்நதிக் கழிமுகம் மேக்கோங்குக் கழிமுகம் என்பனவே பயிர்விளையும் முக் கிய பகுதிகளாகும். அன்னுமிலுள்ள கரைசார்ந்த சிறிய பகுதிகளிலும் பயிர்ச் செய்ன்க சிறப்பாகக் காணப்படுகின்றது. செந்நதிக் கழிமுகத்தில் வண்டல்மண், மணல், களி முதலியன தொகையாகப் படிந்துள்ளன. இப்படிவுகள் இடத்துக்கு இடம் கூடிக்குறைந்தும் காணப்படுகின்றன. செந்நதியின் வடக்கிலும் ஹைடு வோங்கிற்கு மேற்கிலும் வண்டல், மணல்சார்ந்ததாக உள்ளது. ஏனைய இடங்க ளில் வண்டல் மண் செம்மண்ணுகவும் மஞ்சள் மண்ணுகவும் நரை மண்ணுகவும் காணப்படுகின்றது. மண்வகைகள் யாவும் சரளைமண்ணுக உள்ளன. சிறிது நேரத் தில் அவை இறுகிக் கட்டியாகிவிடும். செந்நதிப் பெருக்குக் காரணமாக அதிக மண்டி படிகின்றது. பயிர்ச்செய்கையும் அதிகமாக நடைபெறுகின்றது. இந் நிலைமைகளினுற் சரளைமண்ணுக்கத்தினுல் உண்டாகக் கூடிய தீமைகள் ஓரளவுக் குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அடிக்கடி பயிர்கள் விளைவிக்கப்படுகின்றபொழு தும் மேற்குறித்த நிலைமைகளினல் மண்வளம் பேணப்படுகின்றது. தென் வியற் நாமில் அண்மையில் வண்டல் படிந்துள்ள மேக்கோங்குப் பகுதியே மிக்கவள முடைய பகுதியாகும். வண்டல் மண்ணில் நைதரசன் பொட்டாசியம் என்பன அதிகமாக உள்ளன. சுண்ணும்பு, பொசுபரசு ஆகியன மிகக் குறைவாக உள்ளன. சைகனைச் குழக் காணப்படும் வண்டற் படிவுகள் ஒரளவுக்குச் சரளை மண்ணுக் கம் பெற்று உள்ளன. இதனுல் அவை வளங்குறைந்த சாம்பனிற மணற்படிவு களாக மாற்றம் பெற்றுள்ளன. அவை பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமானவை
35 @మడి).
வேறுபட்ட பகுதிகளில் மூன்று வகையான உள்நாட்டுப் பயிர்ச்செய்கை முறை கள் காணப்படுகின்றன (படம் 104) :

Page 198
366
வியென்தியன்
இறப்பர்
நெல்:
சவன
600) é5709
பக்லியூ
படம் 104.-இந்தோசீனவில் நிலப்பயன்பாடு
 

இந்தோசீனு : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 367
(அ) கிழக்கிலுள்ள கரைசார்ந்த சமநிலத்தில் தெற்கேயுள்ள பின்டின் வரை செறிவான பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. வருடத்தில் இருமுறை அல்லது மும்முறை பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. வாழ்க்கைத் தேவைக்காகவே பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. விளைபொருள்களைப் பொறுத்தவரையில் வியாபாரம் குறைவாகும். (ஆ) மேக்கோங்கின் கீழ்ப்பகுதியிலும் தொன்லே சப்பிலுமுள்ள சமநிலங் களிற் பரந்த முறையிற் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. வருடத்தில் ஒருமுறையே பயிர்விளைவிக்கப்படுகின்றது. பயிரிடப்படாதுள்ள விளை நிலமும் அதிகமாகும். எனினும் 1938 ஆம் ஆண்டின் பின்பு பயிர்கள் விளைவிக்கப்படும் நிலம் இருமடங்காகப் பெருகியுள்ளது. மக்கள் குறை வாகவுள்ள இந்த வலயத்தில் நெல் மிதமிஞ்சிய அளவில் உற்பத்தி செய் யப்படுகின்றது. இந்தோசீனவிலிருந்து ஏற்றுமதிசெய்யப்படும் அரிசி இங்கிருந்தே பெறப்படுகின்றது. (இ) காடடர்ந்த மலைப்பகுதிகளில் வாழும் மலைச்சாதியினர் சொந்தத்
தேவைக்காகப் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையிலீடுபட்டுள்ளனர். பழைய நிலங்களான தொங்கின், அன்னும் பகுதிகளிலேயே நெல் செறிவான முறையில் விளைவிக்கப்படுகின்றது. தனியாகவும், குடும்பமாகவும் குறித்தபரு வத்தில் கூட்டாகவும் நெல் இங்குப் பயிரிடப்படுகின்றது (குத்தகை முறையில் அன்று). விவசாயிகள் இங்கு வேய்ந்த சிறிய மரக்குடிசைகளில் வாழுகின்றனர். பாதுகாப்புக்காக இவை மரக்காலில் மேலே உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. குடி சைகள் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ளன. பல குடிசைகளைக் கொண்ட இடம் ஒரு கிராமமாகும். விவசாயிகள் சில கோழி களையும், பன்றிகளையும் வளர்ப்பர். அவர்களின் பணவருவாய் மிகக் குறைவாகும். விவசாயிகள் தனிப்பட்ட முறையில் எருமைகளையோ, மாடுகளையோ வளர்ப்பது குறைவாகும். நிலத்தை உழுவதற்காகக் கூட்டமாகச் சேர்ந்து விலங்கை வளர்க் கும் வழக்கம் உண்டு. பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் முதலி யனவும் வீடுகளிலேயே அமைக்கப்படுகின்றன. இவை யாவும் மாத்தினுற் செய் யப்படுகின்றன. இந்தோசீனுவிலுள்ள கிராமங்களில் மாத்தினுற் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தும் வழக்கமே இன்றும் உள்ளது.
1934 ஆம் ஆண்டில் கெளரு என்பார் இப்பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சி யிற் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி தொங்கின் பகுதியில் விவசாயி ஒருவ ருக்குச் சராசரியாக 32 தொலர் வருட வருமானம் கிடைத்தது. இன்றுள்ள அரிசி விலையோடு ஒப்பிடும்போது இத்தொகை 160 தொலராகவிருக்கலாம். அப் பொழுது இப்பகுதியிலுள்ள கிராமங்கள் பெரும்பாலும் தன்னிறைவு பெற்ற கிரா மங்களாகக் காணப்பட்டன. விவசாயத்தின் மூலம் பெறப்பட்ட பணவருவா யோடு அவர்கள் சொந்தத் தேவைக்காகவும் பயிர்களை விளைவித்தனர். சில பொருள்களைப் பெறக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்கிருந்தது. ஆனல் இந்த நிலைமை பின்பு பெரிதும் மாறிவிட்டது. விவசாயிகளின் விளைநிலம் படிப்படியா கச் சிறுத்துவந்துள்ளதனுல் நிலைமை மோசமடைந்து காணப்படுகின்றது.

Page 199
368 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
தென்வியற்நாமில் நிலவயிவிருத்தி விரைவாக ஏற்பட்ட 1920-40 கால்ப்பகுதி யில் விளைநிலங்கள் பெரிய அளவில் அமைக்கப்பட்டன. இதனல் குத்தகைக்கார ரைக் கொண்டு இந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டது. வட வியற்நாமி விருந்து பின்பு வந்த விவசாயிகளுக்குப் புதிய நிலம் கிடைக்கவில்லை. இதனல் இவர்கள் நிலமற்ற தொழிலாளராக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் வாழ்வதற்கே வசதியற்றவர்களாகக் காணப்பட்டனர். பிற இடங்களிலுள்ள தமது குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பக்கூடிய வசதியும் அவர்களுக்கு இல்லை. குத்தகைக்குப் பயிரிடும் குடும்பம் ஒன்று 12-25 ஏக்கர் நெல் நிலத்தைப் பெற்றுப் பயிரிடுகின்றது. குடும்பத்திலுள்ள எல்லோரும் பயிர்ச்செய்கையிலீடு படுகின்றனர். நெல் விளைந்ததும் அரைவாசித் தொகை நிலவுரிமையாளருக்குக் குத்தகையாகக் கொடுக்கப்படுகின்றது. எஞ்சிய தொகை குடும்பத்தினரின் சொந் தத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. நெல் மிதமிஞ்சிய அளவில் கிடை யாத பொழுது அதனை விற்றுப் பணவருவாயைப் பெறக்கூடிய வாய்ப்பு அவர் களுக்கு இல்லை. இதனல் வயதில் மூத்தோர் சிறிது காலம் பணவருவாயைப் பெறுவதற்காகக் கூலிக்கு வேலைசெய்வர். கெளருவின் புள்ளிவிபரங்களின்படி குத்தகைக்கு நிலஞ் செய்வோர் வருடத்தில் சராசரியாக 85 தொலர், பணவரு வாயைப் பெற்று உள்ளனர் (இன்றைய நிலையோடு ஒப்பிடும்பொழுது இத் தொகை 425 தொலராகும்).
இந்தோசீனுவின் எல்லாப் பகுதிகளிலும் விவசாயிகள் பணம் கடன்கொடுப் போர் காரணமாகப் பல பிரச்சினைகளே அனுபவிக்கின்றனர். பணம் கடன் கொடுப்போர் பெரும்பாலும் சீன வியாபாரிகள் ஆவர். இவர்களே விவசாயிகளிட மிருந்து நெல்லை விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகள் வேண்டிய பிறபொருள் களையும் இவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளுகின்றனர். பேமாவிலுள்ள விவ சாயிகளும் இத்தகைய பிரச்சினைகளுக்குட்பட்டவராக உள்ளனர். ''1940 ஆம் ஆண்டில் 150 இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்ச் செய்கை நடை பெற்றது. இத்தொகையில் 125 இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெல்விளைவிக்கப்பட் டது. இந்நிலத்திலிருந்து ஏறத்தாழ 60 இலட்சம் தொன் சுத்தஞ் செய்யப்பட்ட அரிசி பெறப்பட்டது. இதுவே இந்தோசீனரின் 90 சதவீதமான உணவுக்கும் 79 சதவீதமான ஏற்றுமதிக்கும் பயன்பட்டது. இந்தோசீனரின் கிராம வாழ்க்கை அரிசியை மையமாகக்கொண்டிருப்பதை இதிலிருந்து அறியலாம். பொதுவான வர்த்தக நடவடிக்கைகளும் அரிசியோடு சம்பந்தப்பட்டனவாகவே உள்ளன. 1936 முதல் 1940 வரையுள்ள காலப்பகுதியில் வடருந்தோறும் 13 இலட்சம் தொன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. வருட உற்பத்தியில் இத்தொகை 29 சதவீதமாகும். காலநிலை, விளைச்சல், அரிசிவிலை என்பன அதிகமாக மாற்றமடை யும் இந்தோசீனப் பகுதியில் வர்த்தகம் சிறிய தொகையோடு சம்பந்தப்பட்ட தாகக் காணப்படுகின்றது. m
இரண்டாம் உலக யுத்தத்திலும் பார்க்க யுத்தத்தின் பின்பு ஏற்பட்ட நிலைமை களே இந்தோசீனுவின் பயிர்ச்செய்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. 1947 ஆம் ஆண்டில் முன்பு பயிர்விளைவிக்கப்பட்ட 60 இலட்சம் ஏக்கர் நிலம் பயிர் செய்யப்

இந்தோசிஞ: பண்பாட்டு, சமூக நிலைமைகள் 369
படாது கைவிடப்பட்டது. 1961 ஆம் வருடத்தில் இந்தோசீனப் பகுதியில் 190 இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை (171 இலட்சம் ஏக்கரில் நெல் விளைவிக் கப்பட்டது) நடைபெற்றது. ஆனல் விளைச்சல் முன்னரிலும் பார்க்கக் குறைவா கும். 71 இலட்சம் தொன் அரிசியிலும் குறைவாகவே பெறப்பட்டது. இத்தொகை யில் 6 சத விதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கம்போடியா வின் உற்பத்தியில் நாலிலொரு பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டது.
நெல் விளைவிக்கப்படும் நிலங்களில் துணைப்பயிராகச் சோளம் பயிரிடப்படுகின் றது. நெல்லுக்குப் போதிய நீர்வசதி இல்லாத நிலங்களிலேயே சோளம் விளைவிக் கப்படுகின்றது. கம்போடியாவிலுள்ள தொன்லே சப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலத்தைச் சார்ந்து காணப்படும் 260,000 ஏக்கரில் சோளம் விளைவிக்கப்படுகின்றது. வட வியற்நாமிலும் தென் வியற்நாமிலும் சோளம் ஒரு வீட்டுப் பயிராக விளைவிக்கப்படுகின்றது. வட வியற்நாமிலிருந்து சோளம் கிழக்கு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது.
அயனப் பிரதேசக் கிழங்கு வகைகள் (வத்தாளக் கிழங்கும் பிறவும்) பழவகை கள் என்பனவும் சிறு நிலத்துண்டுகளில் கோடைக்காலத்தில் விளைவிக்கப்படுகின் றன. இவை பெரும்பாலும் வீட்டுத் தேவைக்காகவே விளைவிக்கப்படுகின்றன. தென்னை விளையும் பகுதியின் வடக்கு எல்லை தென்வியற்நாமில் காணப்படுகின் றது. இந்த எல்லைக்கு வடக்கில் குளிர் காலத்தில் வெப்பநிலை மிகவும் குறை வாகும். பொங் சொன், பின்டின், வைவோ, குவாங்கை, மீதோ, பென் திரே, வினிலோங்கு முதலிய இடங்களில் தென்னந்தோட்டங்கள் அதிக மாகக் காணப்படுகின்றன. தொங்கின் கழிமுகப் பகுதியில் நிலக்கடலையும் விளை விக்கப்படுகின்றது. ஆனல் தாவர நெய் பொதுவாக வியாபாரத்திற்குப் பயன் படுத்தப்படுவதில்லை. ஏனைய பிரெஞ்சு ஆட்சிப் பகுதிகளில் தாவர நெய் உற்பத்தி செய்வதனல் ஏற்பட்ட போட்டியே இதற்குக் காரணமாகும். பிரான்சில் வீட்டுத் தேவைக்குப்பெரும்பாலும் ஒலிவுநெய் பயன்படுத்தப்படுவதனல் இங்கு உற்பத்தி செய்யப்படும் தாவர நெய்க்கு அதிக மதிப்பு இல்லை.
விரைவாக வளரக்கூடிய சிறிய முசுக்கட்டைச் செடிகள் இந்தோசீனவிற் பயிரி டப்படுகின்றன. நெல்லோடு சேர்த்தே இச்செடிகள் விளைவிக்கப்படுகின்றன. வட வியற்நாமில் ஹைடுவோங்குப் பகுதியிலுந் தென் வியற்நாமில் தான்ஹோவா, குவாங் நாம், பின் டின் பகுதிகளிலும் முசுக்கட்டைச் செடிகள் பட்டுப் பூச்சிகளை வளர்க்கப் பயிரிடப்படுகின்றன. குடிசைத் தொழிலாக நடைபெறும் பட்டுப்பூச்சி வளர்ப்பு இப்போது குன்றி வருகின்றது. தான் ஹோவா பகுதியிலும் கம்போடியாவிலும் பருத்தி விளைவித்தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனல் விவசாயிகளை இப்பயிர் ஈர்ப்பதா யில்லை. பன்றி வளர்ப்புப் பெருகியுள்ளது. 1961 இல் கம்போடியாவும் தென் வியற் நாமும் 230,000 இற்கு மேற்பட்ட பன்றிகளை (ஹொங்கொங்கு, மலாயா, போணியோ ஆகிய இடங்களுக்கு) ஏற்றுமதிசெய்தன; அவ்வாண்டில் கம் போடியா 15,000 மாடுகளையும் ஏற்றுமதி செய்தது.

Page 200
370 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
விவசாயிகளினுற் கரும்பும் விளைவிக்கப்படுகின்றது. ஏறத்தாழ 100,000 ஏக்கர் நிலத்தில் கரும்பு விளைவிக்கப்படுகின்றது. இந்நிலத்திற் பெரும்பகுதி தென் வியற்நாமில் காணப்படுகின்றது. வைக்கோ ஒறியன்றல், சைகன், டோங் நை பள் ளத்தாக்குக்களில் கரும்புச் செய்கை சிறப்பாகக் காணப்படுகின்றது. வடவியற் நாமில் ஹனுேய்க்கு அணித்தாகச் சீனித்தொழிலாலை ஒன்று அமைக்கப்பட்டுள் ளது. கரும்பிலிருந்து பெறப்படும் சீனிச்சத்துக் குறைவாயிருத்தலினல் சொந் தத் தேவைக்கு வேண்டிய தொகையிலும் பார்க்கக் குறைவாகவே சீனி உற்பத்தி செய்யப்படுகின்றது (1963 இல் தென்வியற்நாமில் 900,000 தொன் உற்பத்தி செய் யப்பட்டது).
குடியடர்த்தி அதிகமாகவுள்ள தொங்கினின் நாம் டீனி, அன்னுமின் அளான்வைவோ, மேக்கோங்குத் தாழ்நிலத்திலுள்ள கியா டீனி, ஹொக் மொன், கொம் பொங் சாம் ஆகிய பகுதிகளிற் புகையிலை விளைவிக்கப்படுகின்றது. புகையிலைச் செய்கைக்கு அதிக தொழிலாளர் வசதி தேவை. வறண்ட காலத்தில் இது ஒரு பணப் பயிராக விளைவிக்கப்படுகின்றது. புகையிலையின் தாம் குறைவாகையினல் இது ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.
உலகில் மிகுதியாக மிளகு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தோசீனுவும் ஒன்று. கம்போடியாவிலுள்ள காம்போட் சமநிலத்தில் சீனரே பெரும்பாலும் இப்பயிரை விளைவிக்கின்றனர். 1961 இல், 1,200 தொன் மிளகு ஏற்றுமதி செய்
• {-سL-سflسtلlلlt
குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தில் இந்தோசீனுவிற் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை விருத்திசெய்யப்பட்டது. சைகன் ஆற்றைச் சார்ந்த பகுதியிலும் தென் வியற்நாமில் டோங் நைப் பகுதியிலும் பெருந்தோட்டங்கள் அநேகமா கக் காணப்படுகின்றன. கம்போடியாவில் கொம்பொங் சாமிற்கு அண்மையி லுள்ள மாவட்டங்களிலும், லாவோஸிலும் வட வியற்நாமிலுமுள்ள சில பகுதி களிலும் பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. பிரெஞ்சுக்காாருக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் மூன்றிலிரண்டு பகுதியில் நெல் விளைவிக்கப் பட்டது. இத்தோட்டங்கள் பிரிக்கப்பட்டுக் குத்தகைக்காரருக்குக் கொடுக்கப் பட்டிருந்தன. தென் கிழக்கு ஆசியக் குடியேற்ற நாட்டுப் பகுதியில் இத்தகைய நிலைமை வேறெங்கும் காணப்படவில்லை. எஞ்சிய பெருந்தோட்ட நிலப்பகுதியில் இறப்பர், கோப்பி, தேயிலை என்பன பயிரிடப்பட்டன.
தென்கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளில் இறப்பர்ச் செய்கை ஆரம்பிக்கப் பட்ட பின்பே இந்தோசீனுவில் இறப்பர்ச் செய்கை தொடங்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் 150,000 ஏக்கர் நிலத்தில் இறப்பர் விளைவிக்கப்பட்டது. இறப்பச் ரைக் கொண்ட 350 இற்கு மேற்பட்ட பெருந்தோட்டங்கள் இங்குக் காணப்பட் டன. இறப்பர்த் தொழிலுக்கு அரசாங்க ஆதரவுமிருந்தது. பிரான்சில் இறப்ப ருக்குப் பாதுகாப்பான சந்தை வசதியுமிருந்தது. 1961 ஆம் ஆண்டில் தென் வியற்நாமில் 79,000 தொன் இறப்பரும் கம்போடியாவில் 39,000 தொன் இறப்ப ரும் உற்பத்தி செய்யப்பட்டது. அண்மைக் காலத்தில் சில வருடங்களில் அரிசி ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருவாயிலும் பார்க்க இறப்பர் ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருவாய் அதிகமாகும்.

இந்தோசீனு : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 37
பூலைக்கு அண்மையாகவுள்ள குன்றுகளில் கோப்பிச் செய்கை முன்னரே விருத்தி செய்யப்பட்டது. மண்வளங் குன்றியதனுல் கோப்பிச் செய்கை படிப்படி யாகத் தெற்கிலுள்ள நிலங்களுக்குப் பரவியது. இதனல் வினிக்கு அணித்தாக வும் குவாங் திரியிலும் சிறு தோட்டங்களிற் கோப்பி பயிரிடப்படுகின்றது. இவற்றிலிருந்து 1961 ஆம் ஆண்டில் 3,500 தொன் கோப்பி உற்பத்தி செய்யப் பட்டது (1938 இல் 2,600 தொன் உற்பத்தி செய்யப்பட்டது). தென் வியற்நாமி அலுள்ள மேனிலத்தில் 22,000 ஏக்கரில் தேயிலை விளைவிக்கப்படுகின்றது. 1961 ஆம் ஆண்டில் 3,100 தொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது.
அரசியற் பிரிவுகள்
பிரெஞ்சு ஆட்சியினரால் அமைக்கப்பட்ட ஒரு பிரிவே இந்தோசீனவாகும். இப்பகுதியிலுள்ள வேறுபட்ட பெளதிக பொருளாதார மக்கட் பிரிவுகளை ஒன் முக இணைத்துத் தனிப்பட்ட அரசியற் பிரிவாக இதனை அமைத்த பொறுப்பு பிரெஞ்சு ஆட்சியினருக்குரியதாகும். இந்தோசீன எனப்பட்ட அரசியற் பிரிவு நிர்வாக வசதிக்காக மேல்வரும் சிறுபிரிவுகளாக வகுக்கப்பட்டது. இச்சிறு பிரிவு கள் பழைய மாநிலப் பிரிவுகளோடு தொடர்புடைய முறையினுல் அமைக்கப்பட்
L-67.
1. கொச்சின்சீன. 1862 ஆம் ஆண்டில் இது பிரெஞ்சுக் குடியேற்ற நாட்டுப் பகுதியாக அமைக்கப்பட்டது. இதற்கு முன்பு இது ஒரு தனிப் பிரிவாக இருக்கவில்லை. மேக்கோங்குக் கழிமுகத்தின் கரைசார்ந்த பகுதியூைஇது அடக்கியுள்ளது. அன்னுமியரும் சீனரும் இங்கு அதிகமாக வந்து கு யேறியுள்ளனர். 2. கம்போடியா. தனி இராச்சியமாக அமைந்துள்ள இப்பகுதி ஆரம்பத்தில் இந்து ஆட்சிநிலவிய குடியேற்ற நாட்டுப் பகுதியாக இருந்தது. தொன்லே சப் பகுதியை மையமாகவுடைய கம்போடிய இராச்சியம் விவ சாயம் விருத்திபெற்ற மேக்கோங்கின் கீழ்ப்பகுதியை அடக்கியுள்ளது. தைலாந்துக்கும் சீனவுக்குமிடையிற் பழைய காலத்தில் நடைபெற்ற தரைப் போக்குவரத்து கம்போடியாவுக்கூடாகவே நடைபெற்றது. 3. அன்னும், வரலாற்று முதன்மைபெற்ற "பேரிாாச்சியமாக "இது அமைந் திருந்தது. 14 ஆம் நூற்முண்டிலிருந்து இது தெற்குநோக்கி வளர்ச்சி பெற்றும் வந்துள்ளது. 4. தொங்கின். இதுவும் ஒரு "பேரிாாச்சியமாக" இருந்தது. நீண்ட காலம் இது சீனரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாயிருந்தது. இப்பகுதி பிரெஞ்சு ஆட்சியினரால் 1884 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. சீன-பிரெஞ்சு யுத்தத்தின் விளைவாக இப்பகுதி கைப்பற்றப்பட்டது. இப்பகுதியிலேயே பின்பு இந்தோசீனரின் தேசியவுணர்ச்சி போர்வேட்கையோடு வளர்ச்சி யுற்றது. வியற்மின் கட்சியினர் பலம்பெற்ற கட்சியினராக வளர்ச்சி பெற் றதும் இப்பகுதியிலாகும்.

Page 201
372 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
5. லாவோஸ். அன்னமுக்கும் தைலாந்துக்குமிடையிற் காணப்பட்ட பல சிறிய இராசதானிகளை இப்பகுதி அடக்கியுள்ளது. இப்பிரிவுகள் யாவும் “ஐக்கிய இந்தோசீன' என்ற கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. இதன் தற்போதைய நிர்வாக மையமாகச் சைகன் அமைந்துள்ளது. யப்பானியரின் யுத்தத்தின் பின்பும் இப்பகுதியில் தேசியவுணர்ச்சி, இன வுணர்ச்சி, கொம்யூனிசம் என்பன காரணமாகக் கிளர்ச்சிகள் ஏற்பட்டு வந்தன. இவை காரணமாக 1955 ஆம் ஆண்டுவரையில் இப்பகுதியில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதன் விளைவாகவே நான்கு தனிப்பட்ட ஆட்சிப் பிரிவுகள் இங்கு அமைந்தன. அவையாவன:
(அ) கம்போடியா. மேலே 2 ஆம் பிரிவிற் குறிப்பிடப்பட்ட இராச்சியத்தைப் பெரும்பாலும் கொண்டது. இதன் தலைநகர் பிநோம் பென் ஆகும். நாணய அலகாக "ரீல்" என்பது உபயோகிக்கப்படுகின்றது. (ஆ) லாவோஸ். மேலே 5 ஆம் பிரிவிற் குறிப்பிடப்பட்டவை இணைந்ததன் மூலம் அமைந்தது. இதன் தலைநகர் வியென்தியன் ஆகும். நாணய அல காகக் 'கிப்' என்பது உபயோகிக்கப்படுகின்றது. (இ) தென் வியற்நாம். 1965 ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதி வியற்நாம் குடி யரசு என வழங்கப்படுகின்றது. பழைய கொச்சின் சீனவையும் 17 பாகை வட அகலக்கோட்டிற்குத் தெற்கிலுள்ள அன்னும் பகுதியையும் அடக்கியுள்ளது. சைகன்-சோலோன் இதன் தலைநகராகும். 'பியாஸ் திரே நாணய அலகாக உபயோகிக்கப்படுகின்றது. (ஈ) வட வியற்நாம். கொம்மியூனிச ஆட்சிக்குட்பட்ட இப்பகுதி வட வியற் நாம் சனநாயகக் குடியரசு என வழங்கப்படும். தொங்கின் பகுதியையும் 17 பாகை வட அகலக்கோட்டிற்கு வடக்கிலுள்ள பகுதியையும் அடக்கி யுள்ளது. இதன் தலைநகர் ஹனேய் ஆகும். நாணய அலகாக டோங்கு உபயோகிக்கப்படுகின்றது.
கைத்தொழில்கள்
பெரும்பாலும் சிற்றளவுக் கைத்தொழில்களே இங்கு வளர்ச்சி பெற்றுள்ளன. மட்பாண்டத் தொழில், கூடைத் தொழில், மரத்தொழில் என்பன குடிசைத் தொழில்களாக அமைக்கப்பட்டுள்ளன. இப்பொருள்கள் சொந்தத் தேவைக்கே பயன்படுகின்றன. ஹைபோங்கில் அண்மையில் இரு பருத்தி நெசவாலைகள் நிறு வப்பட்டுள்ளன.
கணிப்பொருள்களுள் நிலக்கரி, தகரம், தங்கிதன் என்பன முக்கியமானவை. 1961 ஆம் ஆண்டில் 15 இலட்சம் தொன் நிலக்கரியும் (1941 இல் 22.5 இலட்சம் தொன் பெறப்பட்டது) 1,280 தொன் தகரமும் பெறப்பட்டன.
நிலக்கரி குவாங் யென் வயலிலிருந்து அகழப்படுகின்றது. இவ்வயல் செந் நதிக்கு வடக்கிற் கடற்கரையைச் சார்ந்து பெரிய வில்வடியிற் பரந்துள்ளது.

இந்தோசீனு : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 373
தரைக் கண்மையாகவும் கிடைப்படையாகவுமிருப்பதனுல் நிலக்கரியை எளிதாக அகழமுடிகின்றது. அந்திரசைற்று வகையைச் சார்ந்த இந்நிலக்கரி புகைகுறை வாகவும் எரியுஞ்சத்தி அதிகமாகவுமுள்ளது. இது முதன்முதலில் வெளியகழ்வு முறை மூலமே பெறப்பட்டது. கிழக்கே போகப்போகக் கீழ்ப்படைகளிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டியிருந்தது. இதனல் ஆழமாகச் சுரங்கமறுத்து அக ழும் முறை உபயோகத்திற்கு வந்தது. இவ்வயலிலிருந்து வருடத்தில் 20 இலட் சம் தொன்னிற்கு மேல் நிலக்கரியை உற்பத்தி செய்யலாம். எளிதாகச் சென்ற டையக் கூடிய வயலாகவிருப்பதோடு கப்பற் போக்குவரத்திற்கு அணித்தாகவு முள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் அகழப்படும் நிலக்கரியில் இங்குப் பெறப் படும் நிலக்கரியே தாத்திற் சிறந்ததாகும். தென்கிழக்கு ஆசியா பொதுவாக நிலக்கரிவளம் குறைந்த ஒரு பகுதியாகவுமுள்ளது. இந்தோசீனவில் துTயென் குவாங்கு பான்மே, நோங் சொன் ஆகிய இடங்களிற் சிறிதளவு நிலக்கரி உண் ளுட்டிற் காணப்படுகின்றது. இவை இதுவரை அகழப்படாதனவாக உள்ளன. அண்மையிலுள்ள நிலக்கரியின் உதவியோடு ஹைபோங்கில் நிறுவப்பட்டுள்ள சீமந்துத் தொழிற்சாலை இயங்கிவருகின்றது. இந்நிலையத்திலிருந்து வருடத்தில் 300,000 தொன் சீமந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. W
இந்தோசீனுவில் தகரம் எடுத்தற்முெழில் பிற்காலப் பகுதியிலேயே ஆரம்பிக் கப்பட்டது. 1940 ஆம் ஆண்டையடுத்து வருடத்தில் 1,500 தொன் தகரம் உற் பத்தி செய்யப்பட்டது. தகரம் இரண்டு இடங்களிற் பெறப்படுகின்றது. அவையா
வன
(அ) வடவியற்நாமில் சீனவின் எல்லைக்குச் சமீபமாகவுள்ள பியா அவ்வாக் திணிவில் காவோ பாங்கிற்கு அணித்தாகத் தகரம் பெறப்படுகின்றது. யுன்னன் பகுதியிலுள்ள தகரப்படைகள் இங்கும் பரந்து காணப்படு கின்றன. தகரம் அகழப்படும் தின் துக் என்னும் கிராமத்தில் ஊல்பிரா மும் பெறப்படுகின்றது. அகழப்படும் தகாத்தாது முன்பு ஹைபோங்கு வழியாகச் சிங்கப்பூருக்கு உருக்குவதற்காகக் கொண்டுசெல்லப்பட் டது. இப்பொழுது இங்கு நடைபெறும் தகரம் எடுத்தற்முெழிலில் ஏறத் தாழ 2500 தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர். இரசியாவிலிருந்து பெறப் பட்ட புதிய இயந்திரங்கள் இங்குப் பயன்படுத்தப்படுகின்றன. வருடத் தில் 900 தொன் தாது பெறப்பட்டு இங்கு நிறுவப்பட்டுள்ள நிலைய மொன்றில் உருக்கப்படுகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தகரம் அரசாங்கத்தினல் பண்டமாற்று முறையிற் கிழக்கு ஐரோப்பிய நாடுக ளுக்கு அனுப்பப்படுகின்றது. (ஆ) லாவோஸில் மேக்கோங்கைச் சார்ந்துள்ள நாம் பதேனுக்கு அணித் தாகவும் தகரம் எடுக்கப்படுகின்றது. வண்டற் படிவுகளிலிருந்து தக ாம் இங்குப் பெறப்படுவதனல் இதில் கழிவுப் பொருள்கள் அதிகம்

Page 202
374 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
காணப்படுகின்றன. 1963 ஆம் ஆண்டில் 360 தொன் தகரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. லாவோஸிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிகக் கூடிய பெறுமதியுடைய பொருள் இதுவாகும். வெள்ளி, ஈயம், அந்திமனி, இரும்புத்தாது (கம்போடியாவிலுள்ள கம்பொங் தொம் என்னுமிடத்திலிருந்தும் வட வியற்நாமிலுள்ள தை நிகுயென் என்னும் இடத்திலிருந்தும் பெறப்பட்டன). பொன், பொசுபேற்று, நாகம் (வட வியற் நாமிலுள்ள சோடியன் என்னுமிடத்திலிருந்து பெறப்பட்டன), இரத்தினக் கற் கள் என்பன வுல் சிறு தொகையினவாகப் பெறப்படுகின்றன.
வர்த்தகமும் போக்குவரத்தும்
ஹனேயைச் சுற்றி விசிறியமைப்பில் தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சைக னிலிருந்தும் மேக்கோங்குத் தாழ்நிலத்திற்கூடாகத் தெருக்கள் செல்லுகின்றன. இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் வியற்நாம் பிரிவுகளுக்கூடா கக் கரையைச் சார்ந்து தெருக்கள் செல்லுகின்றன. சைகனிலிருந்து வியென் தியன்வரை செல்லும் தெரு சில பருவங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதா யுள்ளது. மேக்கோங்கு ஆறும் ஆசியாவின் உட்பகுதிக்குச் செல்லக்கூடிய முக் கிய போக்குவரத்துப் பாதையாக இன்னும் அமையவில்லை.
ஐதான அமைப்பையே புகையிரதப் பாதையும் கொண்டுள்ளது. வடக்கிலும் தெற்கிலுமுள்ள முக்கியமான குடியடர்த்திப் பகுதிகளை இணைக்கும் முறையில் பிரெஞ்சு ஆட்சியினர் புகையிரதப் பாதையை விருத்திசெய்தபொழுதும் இது சிறப்பான தொன்முக அமையவில்லை. முக்கியமான புகையிரதப்பாதை சைகனை யும் ஹனேயையும் இணைத்தது. இப்பாதை கிழக்குக் கரையைச் சார்ந்து அமைந் திருந்தது. இப்பொழுது இது துண்டிக்கப்பட்டுள்ளது. பிநோம்பென்னிலிருந்து மொங்கொல் பொரேவரை வேருெரு தனிப்பாதையும் உண்டு. கம்போடியாவை மேக்கோங்கின் கீழ்ப் பகுதியின் கப்பற் போக்குவரத்தோடு இணைப்பதற்காக இது அமைக்கப்பட்டது. கீழுள்ள தொன்லேசப் சேற்று நிலத்தோடு தொடர்பில் லாதிருப்பதற்காகவே இது அமைக்கப்பட்டது. ஹைபோங்கிலிருந்து ஹனுேய் ஊடாக வடமேற்குப் பக்கமாய்ச் சென்று யுன்னனைக்கடந்து குன்மிங்கை அடை யும் ஒரு புகையிரதப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரைத் தோற்ற வேறுபாடு கள் அதிகமாகவுள்ள பகுதியில் இப்பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். சீனுவின் உட்பகுதிவரை செல்லும் புகையிரதப்பாதை இதுவொன் றேயாகும். 1941 இல் அழிக்கப்படு முன்பு இப்பாதைமூலம் வருடத்தில் 300,000 தொன் நிறையான பொருள்களே கொண்டுசெல்லப்பட்டன. 1957 ஆம் ஆண்டி லிருந்து இப்பாதை போக்குவரத்திற்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருகின்
Abel.
பிறநாடுகளோடு தொடர்புடைய கப்பற் பாதைகள் சைகனேடு இணைக்கப்பட் டுள்ளன. சில பாதைகள் ஹைபோங்கோடு தொடர்புடையனவாயுள. சைகனை

இந்தோசிஞ : பண்பாட்டு, சமூக நிலைமைகள் 375
பாங்கொக், சிங்கப்பூர், ஹொங்கொங்கு என்பவற்றேடு இணைக்கும் விமானப் பாதை ஒன்றுமுண்டு. கரையைச் சார்ந்த பகுதியில் கடற்போக்குவரத்து அதிக மாக நடைபெறுகின்றது. காைப் பகுதியில் வாழும் மக்களுக்கு இது துணையாக வுள்ளது. தைலாந்து, தென் சீன முதலியவற்றேடு நடைபெறும் வர்த்தகத்திற் கும் இப்போக்குவாத்து உதவியாகவுள்ளது.
இந்தோசீனப் பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாய விளை பொருள்கள் பாரமானவையாகவுள்ளனவன்றிப் பெறுமதியில் குறைவாகவுள் ளன. 1962 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்தப் பொருள்களின் பெறுமதி 2,550 இலட்சம் தொலராகும். மொத்தப் பொருள்களில் 59 சதவீதம் அரிசியாகும். இறப்பர் 25 சதவீதமாகவும் சோளம் 2 சதவீதமாகவுங் காணப் பட்டன.
இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் பெரும்பாலும் பதனிட்ட பொருள் களும் ஆக்கவுபகரணக் கருவிகளுமாகும். 1962ஆம் ஆண்டில் 11,280 இலட்சம் தொலர் பெறுமதியான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் துணிவகைகளும் இயந்திரங்களுமே பெரிதும் இடம்பெற்றன. இவை முக்கிய மாக அ. ஐ. மா. (அ. ஐ. மா. சாலவும் பெரிய அளவில் அபிவிருத்தி உதவிகளை அமைந்துள்ளது), யப்பான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய் யப்பட்டன. *
இந்தோனேசியப் பகுதியின் அரிசி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்ததனல் ப்ொரு ளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பருவக்காற்று ஆசியப் பிரதேசத்தின் பிற பகுதிகளிற் குடித்தொகையும் பெருகியுள்ளதனுல் அரிசிப் பற்ருக்குறையாற் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தோசீனப் பிரிவுகள் யாவும் சேர்ந்து 1963 ஆம் ஆண்டில் 218,000 தொன் அரிசியை (1940 ஆம் வருடத்தில் 14 இலட் சம் தொன் அரிசியை) ஏற்றுமதி செய்தன. யுத்த காலத்தின் முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் அரிசி ஏற்றுமதி வியாபாரம் அமையும் என்று கூறமுடியாது. இந்நிலைமையால் சைகன், ஹைபோங்கு ஆகிய துறைமுகங்களும் பாதிக்கப்பட் ள்ெளன. சைகனிலிருந்த நெல்குற்றும் ஆலைகளில் அரைப்பங்குக்கு மேலானவை மூடப்பட்டுவிட்டன.
இன்று நிலைமை மேலும் சீர்குலைந்து காணப்படுகின்றது. இப்பகுதியிலுள்ள புதிய அரசியற் பிரிவுகள் பற்றிய செம்மையான புவியியல் நூல்களும் இப்பொழு தில்லை. இவைபற்றிய விபரங்கள் ஆசியாவினதும் தூரகிழக்கினதும் பொருளா தாரக் கூட்டணியின் (ECARE) வருட அறிக்கைகளில் காணக்கிடக்கின்றன. இக்கூட்டணி தொன்லே சப் பகுதி, மேக்கோங்கின் மத்திய பகுதி என்பன வற்றை விருத்தி செய்வதற்கான திட்டங்களையும் அவ்வப்பகுதியின் அரசாங்க ஆதரவோடு வகுத்து வருகின்றது.

Page 203
376 , தென்கிழக்கு ஆசிய நாடுகள்
(1964 ஆம் ஆண்டில் தென் வியற்நாமின் பியாஸ்திரே ஒன்று பணமாற்றில் 8% மலேசியச் சதத்திற்குச் சமமாயிருந்தது. இது அமெரிக்க ஐக்கிய மாகாணத் தின் 3 சதத்திற்கும், பிரித்தானியாவின் 2% பென்சிற்கும் சமமாகும். அப்பொ ழுது பியாஸ்திரேயின் பெறுமானம் லாவோஸின் கிப்பிற்கும் கம்போடியாவின் சீலுக்கும் சமமெனக் கருதப்பட்டது. வட வியற்நாமின் டோங்கு கொம்மியூனிச நாணயமாதலால் சர்வதேச அடிப்படையில் மாற்றப்படுவது குறைவாகும். ஆனல் முதன் முதலில் டோங்கு பியஸ்திரேக்குச் சமமாகவிருந்தது. இப் பொழுது இது மலேசியாவின் ஒரு சதத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 4 சதத்திற்கும், பிரித்தானியாவின் 4 பென்னிக்கும் சமமாகும்.)

அத்தியாயம் 21 பிலிப்பைன் தீவுகள் புவிப் பெளதிகவுறுப்பியல்
பிலிப்பைன் தீவுகளின் மொத்தப் பரப்பில் 95 சத விதமான பகுதியைப் பதினெரு தீவுகள் அடக்கியுள்ளன. லூசோன், மிண்டானவோ, சாமார், நேகி ரொஸ், பாலாவான், பானை, மின்டோரா, லேற்றி, செபூ, பொகொல், மாஸ்பாதே என்பனவே அப்பதினெரு தீவுகளுமாம். தீவுகளின் பருமனுக்கேற்ப அவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தீவுக்கூட்டத்திலுள்ள எஞ்சிய 7,000 தீவு களும் மிகச் சிறியன. கடலுக்குமேலே பாறைகளாகவும் முருகைப் பார்களா கவும் தோற்றமளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் அவை ஒரு சதுர மைல் பரப்பிலும் சிறியனவாயுள்ளன. பிலிப்பைன் தீவுக்கூட்டம் ஆசியாக் கண்டத்தி லிருந்து ஆழமான கடலாற் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் கிழக்கில் உலகிலேயே மிகவும் ஆழமான சமுத்திரப் பகுதி (7 மைலிலும் கூடிய ஆழமுடையது) அமைந்துள்ளது. வடக்குத் தெற்காகப் பரந்துள்ள இத்தீவுக் கூட்டம் பசிபிக்கு ஒாத்தைச் சார்ந்துள்ள எரிமலைத் “தீ வலயத்தின்" ஒரு பகுதியாகவும் விளங் குகின்றது. உறுதியற்ற அமைவையுடைய இப்பகுதியில் எரிமலைகளும் புவி நடுக்கமும் உண்டாகின்றன. வேறுபட்ட நிலவமைவுத் தொடர்கள் முடிச்சாக இங்கே இணைந்துள்ளன. சண்டா மேடையின் கிழக்கு ஓரத்திற்குச் சமாந்தா மாக வடக்குத்-தெற்குத் திசையில் மடிப்பு-பிளவுத் தாக்கங்கள் ஏற்பட்டுள் ளன. ஆலூசோன், சாமார், லேற்றி, மிண்டானுவோ தீவுகளூடாக இவை செல்லு கின்றன. இவற்றேடு எரிமலைகளும் எரிமலைகளிலிருந்து வெளிவந்த பொருள் களும் சேர்ந்து தரைத்தோற்றத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இவை தென் பாகத்தில் அலுசோனின் தென் குடாநிலப் பகுதி வரையில் அதிகமாகக் காணப் படுகின்றன. எரிமலைகள் மீனகாசாவின் எரிமலைத் தொடரோடு தொடர்புடை யன. வடக்குத் தெற்காகவுள்ள நிலவமைவுத் தொடர்களுக்குக் குறுக்கே பிரிக் தானிய வடபோணியோவிலிருந்து செல்லும் தொடர்கள் காணப்படுகின்றன. இப் பழைய தொடர்கள் தென்மேற்கு-வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளன. இவை பிதிர்வுகளையும் பிளவுகளையும் கொண்ட நிலவுருவங்களைக் கொண்டுள் ளன. பிளவுபட்டுக் கீழ்த் தாழ்ந்த பகுதியில் இப்பொழுது குலூக்கடல் அமைந் துள்ளது. இதன் ஓரத்தைச் சார்ந்து பாலாவான், குலூத் தீவுகள் நேர்கோட் டுப் பிளவு ஓரங்களோடு அமைந்துள்ளன. இத்தன்மையை மிண்டானுவோத் தீவின் சாம்பொவாங்காக் குடாநிலப் பகுதியிலும் நேகிரொஸ், பானைத் தீவு களிலும் காணலாம்.
பிலிப்பைன் தீவுகளைப் பின்வரும் முறையில் ஒழுங்குபடத் தொகுக்கலாம் (1) லூசோன்-தீவுகளுட் பெரியதாய இத்தீவு வடக்கில் அமைந்துள்ளது.
குடித்தொகையும் இங்கு அதிகமாகும்.
377

Page 204
378 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
(2) விசாயன் தீவுகள்-விசாயன் கடலைச் சூழ இவை அமைந்துள்ளன. சாமார், நேகிரொஸ், பானை, லேற்றி, செபூ, பொகொல், மாஸ்பாதே என்பனவும் இவற்றேடு சேர்க்கப்பட்டுள்ளன. (3) மிண்டானுவோ-தெற்கில் அமைந்துள்ள இத்தீவு பருமனில் இரண்டாவ
தாக உள்ளது. (4) பாலாவான், குலூத் தீவுகள்-போணியோவுக்கு அண்மையாகவுள்ள
பிலிப்பைன் தீவுகள் இவையாகும். தீவுகள் எல்லாம் ஓரளவுக்குக் கூடிய உயரத்தை உடையன. இவற்றைச் குழக் கற்பார்களும் முருகைக்கற்படிகளும் காணப்படுகின்றன. இதனுல் இக் தீவுகளைச் சென்றடைவது கடினமாகும். பருமனிற் பெரிதாகவுள்ள அலுசோன், மிண்டானுவோ ஆகிய இரு தீவுகளில் மட்டுமே ஓரளவுக்குப் பிரதேச வேறு பாடுகள் காணப்படுகின்றன.
தீவுகளில் சுண்ணக்கல், மாக்கல், மணற்கல் என்பன காணப்படுவதனுல் மண் வகையில் சிறிது வேறுபாடுகள் உண்டு.
வடக்கிலுள்ள அலுசோன் தீவில் காகாயான் பள்ளத்தாக்கு ஒரு பிளவுப் பகு தியில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் உயரமான சியாாமட்றே மலைத்தொடர் காணப்படுகின்றது. மேற்கில் மத்திய கோடிலெரா மலைத்தொடர் உண்டு. இப் பள்ளத்தாக்குப் பகுதி பிலிப்பைன் தீவுக்கூட்டத்திற் காணப்படும் பிரதான பயிர்ச்செய்கை நிலங்களுள் ஒன்முக விளங்குகின்றது. இதற்கு ஏறத்தாழச் சமாந்தரமாகக் கிழக்கில் மத்திய கோடிலெரா மலைத்தொடருக்கு அப்பால் மணிலாச் சமநிலம் (மத்திய லூசோன்) அமைந்துள்ளது. இச்சமநிலம் லிங் காயன் குடா, மணிலாக்குடா என்பவற்றை உள்ளடக்கி கடல்வரை இருபுற மும் பரந்துள்ளது. பயிர்ச்செய்கைக்குப் புகழ்பெற்ற இப்பகுதியில் குடி படர்த்தியும் அதிகமாகும். மத்திய மலைத்தொடர் தெற்கே மணிலா வரை பரந் துள்ளது. மணிலாவுக்கணித்தாக இத்தொடர் முடியுமிடத்தில் பிளவுப்பள்ளம் போன்ற ஏரிச் சமநிலம் ஒன்று அமைந்துள்ளது. இது லகூணு மாகாணம் என வழங்கும். இதன் தெற்கிலும் கிழக்கிலும் மேற்குறித்த வடக்குக் தெற்குத் தொடர்கள் இல்லை. இங்கே வேறுபட்ட தரைத்தோற்ற நிலைமைகள் உண்டு. எரி மலைகளைக் கொண்ட இத்தரைத் தோற்றப் பகுதி பதங்கசின் பின்னணியிலுள்ள தால் மலைத்தொடரிலிருந்து ஆல்பைக்கு அணித்தாயுள்ள மாயோன் மலைத் தொடர் வரை பரந்துள்ளது. மிண்டானுவோவின் கிழக்கில் டியுவாத்தா மலைத் தொடர் வடக்குத் தெற்காகக் காணப்படுகின்றது. இது லானுவோ-யூக்கிட்னன் மேனிலத்திலிருந்து ஆகூசான் பள்ளத்தாக்கினுற் பிரிக்கப்பட்டுள்ளது. லானுவோ-பூக்கிட்னன் மேனிலத்தில் அவிந்த எரிமலைகள் பல காணப்படுவ தணுல் கோடாபாத்தோ ஆறு நெடுங்கோட்டு முறையிலும் சாம்பொலாங்கா மலைத்தொடரின் தென்மேற்கு-வடகிழக்கு அமைவுக்கு ஏற்பவும் ஓடுகின்றது. மண்வகைகளும் பொருத்தமாக உள்ளமையால் இப்பள்ளத்தாக்கு பயிர்ச் செய்கை விருத்திக்கு ஏற்ற நிலத்தைக் கொண்டுள்ளது. மிண்டானவோ பொது

பிலிப்பைன் தீவுகள் 379
வாக உயரமான மலைத்தொடர்களையும் அலேவடிவ மேனிலங்களையும் கொண்டுள் ளது. 9,450 அடி உயரமான ஆபோ பிலிப்பைன் கூட்டத்தில் மிகப் பெரிய மலையுச்சியாகும்.
பிலிப்பைன் தீவுகளில் ஆறுகள் சிறியனவாகவும் பிாவாகித்து ஒடுவனவாக வும் காணப்படுகின்றன. இவை முதிர்ச்சிபெருத நிலையிலேயே இன்று காணப் படுகின்றன.
காலநிலை
தீவுத்தன்மை காரணமாகவும் அகலக்கோட்டு அமைவு காரணமாகவும் பிலிப்பைன் தீவுகளின் காலநிலை மிதமானதாகவும் சீரானதாகவும் காணப்படு கின்றது. வெப்பநிலை வீச்சு 75 பானைற்றுப் பாகை முதல் 85 பானைற்றுப் பாகை வரையில் உள்ளது. இந்த நிலைமை வருடம் முழுவதுமே அடங்கலும் காணப் படுகின்றது. ஆனல், மழைவீழ்ச்சி இடத்திற்கு இடமும் பருவத்திற்குப் பருவ மும் வேறுபட்டுள்ளது. எனினும், மொத்த மழைவீழ்ச்சி, பருவ காலப் பரம் பல் ஆகியவற்றிலே ஒத்த அகலக் கோடுகளிலுள்ள பேமா, தைலாந்து, இந்தோ சீன போன்ற நாடுகளிற் காணப்படும் முரண்பட்ட நிலைமைகள் இங்கு இல்லை. தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் இல்லாத காலநிலைத் தன்மைகள் பிலிப்பைன் தீவுகளிற் காணப்படுவதற்கு வடகிழக்காகச் சமுத்திரத்தில் அவை அமைந்திருப்பதே காரணமாகும். வடக்கிலும் தெற்கிலுமிருந்து அயனக் காற்றுக்கள் இங்கு மாறி மாறி வீசுகின்றன. வடக்கிலிருந்து வீசும் கர்ற்றுக் களே முக்கியமானவை. ஒற்ருேபர் முதல் எப்பிரில்வரை இக்காற்றுக்கள் முத லில் வடக்கிலிருந்தும் பின்பு கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. மேயில் மத்திய கோட்டு அமைதி நிலைமைகள், பெரும்பாலும் மேற்குப் பாகத்தில் காணப்படு கின்றன. யூலை முதல் ஒகத்து வரை தெற்கிலிருந்து காற்றுக்கள் வீசுகின்றன; சற்றுத் தென்கிழக்கிலிருந்து இக்காற்றுக்கள் வீசுகின்றன எனக் கூறலாம். பிலிப்பைன் தீவுகள் இக்காற்றுக்கள் மூலமே அதிக மழைவீழ்ச்சியைப்பெறு கின்றன. மேற்குத் தீவுகளிலே மழைவீழ்ச்சி மிகக்கூடிய அளவிற் பெறப்படு கின்றது.
பிலிப்பைன் தீவுகளில் மழைவீழ்ச்சி(அங்குலம்)
சன பெ மா எப் மே யூன் யூலை ஒக செ ஒற் நவ திச மொ
unsount ... l.2 .7 1.6 4.915.815.742.345.528.317.0 3.4 2.2 178,6 பாராக்காலே ... 18.110.98.1 4.1 7.0, 8.5.11.4 6.8 9.620.619.520.0144.6 மணிலா ... 1.0 .5 .7 1.2 5.1 9.917.016.614.4 7.7 5.6 2.5 82.2 தாக்கிலோபான் . 14.0 8.7| 6.2 5.3| 6.2 7.9 6.9 5.5 6.08.010.915.0 99.6 strubQuttauntišist . , : 2.1 | 2.2| 1.5 | 2.0| 3,5| 4.2| 4.9| 4.0| 4.7| 5.7| 4.2: 3.4| 42.4 செபூ . . . 4.2 2.9 2.0 1.7 4.5 6.4 7.2 5.7 6.9 7.7 6.4 5.0 60.8 டாவவு 4.8. 4.4| 5.2 | 5.8| 9.8| 9.1| 6.5| 6.5! 6.7| 7.9| 5.8! 6.1 | ገ7.6

Page 205
380 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
மேலே குறிப்பிட்ட நிலைமைகளோடு உயரம், பார்வை முதலியவற்றிலுள்ள வேறுபாடுகளும் காலநிலைத்தன்மைகளைப் பாதிக்கின்றன. இவற்றின் தாக்கங் களினுல் பிலிப்பைன் தீவுகளில் நான்கு வகையான மழைவீழ்ச்சிகள் காணப்படு கின்றன(படம் 105).
(1) மாறி மாறி நிகழும் ஈரவெப்பப் பருவங்கள் : வறட்சியான குளிர் காலத் தையும் வேனிற்காலத்தையும் தொடர்ந்து ஈரமான கோடையும் உதிர் காலமும் நிகழுகின்றன. இவை காரணமாக லூசோன், மிண்டோரோ, நேகிரொஸ், பானை, பாலாவான் முதலிய பகுதிகளில் பேமாவில் காணப்படும் பருவகாலநிலைமைகள் ஏற்படுகின்றன. ஆயினும் மென் குளிரான பருவம் கூடிய ஈரமுடையதாகக் காணப்படுகின்றது. (2) தென் லூசோனிலுள்ள பிக்கோல்மாவட்டம், கிழக்குச் சாமார், லேற்றி, கிழக்கு மிண்டானுவோ முதலியவற்றில் வருடம் முழுவதும் ஈரத் தன்மை காணப்படுகின்றது. குளிர்காலத்திலேயே இத்தன்மை மிகை யாக உண்டு. (3) இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தன்மையிலும் சற்று வேறுபட்டது. வருட முழுவதும் மழை ஏற்படுகின்றபொழுதும் மழை மிகையாகப் பெய்யும் பருவம் இல்லை. வேனிற் காலத்தில் இரண்டு மாதங்கள்வரை யில் மழைவீழ்ச்சி மிகக் குறைவாகும்; ஆயினும் இதனை வறட்சிக் காலம் என்று கூறமுடியாது. காகாயான் பள்ளத்தாக்கு, விசாயன் கடலையடுத்த சமநிலம், வட மத்திய மிண்டானுவோ முதலியவற்றில் இந்த நிலைமை காணப்படுகின்றது. விவசாய முக்கியத்துவம் பெற்ற பகுதிகள் இவையாகும். (4) எல்லாப் பருவங்களிலும் சீரான மழைவீழ்ச்சி நிலவுகின்றது. வறட் சியோ, ஈரமோ மிகையாகவுள்ள பருவம் இல்லை. வடகிழக்கு அலூசோன், தென்மேற்குப் பிக்கோல், கிழக்கு மிண்டோரோ, மேற்கு லேற்றி, மிண்டானுவோவின் மேற்கு, மத்திய பகுதிகள் ஆகியவற்றின் கரைசார்ந்த காலநிலைத்தன்மையாக இத்தன்மை நிலவுகின்றது. மொத்த மழைவீழ்ச்சிகள் 40 அங். முதல் 180 அங். வரையும் வேறுபடுகின் றன; தென் மேற்குப்பார்வையுள்ள பகுதிகளிலே மிகக் கூடிய மழைவீழ்ச்சி காணப்படுகின்றது.
உலகிலேயே தைபூன் குருவளிகளினல் அதிகம் பாதிக்கப்படும் பகுதி பிலிப் பைன் தீவுகள் எனக்கூறலாம். பிலிப்பைன் தீவுகளை யடுத்துக் கிழக்கில் தைபூன் கள் உண்டாகி, கிழக்கு ஆசியப் பகுதியை நோக்கிச் செல்லும் (படம் 14). இந்தோசீன, தென் சீன, யப்பான் முதலிய பகுதிகளுக்கூடாகச் செல்லும் தைபூன்களின் தாக்கம் பிலிப்பைன் தீவுகளில் ஏற்படுகின்றது. யூலை-செத்தம் பர் காலத்தில் தைபூன்கள் பெரும்பாலும் லூசோனுக்கூடாகச் செல்லுகின்றன. நவம்பர், திசம்பர் மாதங்களில் குருவளித்தாக்கம் மிகவதிகமாக ஏற்படுவ துண்டு. இம்மாதங்களில் விசாயன் கடலுக்கூடாகத் தைபூன்கள் செல்லுகின் றன. தைபூன்கள் ஆரம்பமாகும் காலத்திற் குருவளிகள் பிலிப்பைன் தீவுகளில்

பிலிப்பைன் தீவுகள் 38 வடக்குத் தெற்காகவே பெரும்பாலும் செல்லுகின்றன. மிண்டானவோவுக்கூடா கத் தைபூன்கள் செல்வதில்லை. இந்த நிலைமையைப் பொறுத்தவரையில் இத் தீவு கிழக்கு இந்தியத் தீவுகளை ஒத்துள்ளது எனலாம்.
”نسیسی மைல் வறண்ட துருவம் இல்லை : மாரியில் மிக முனைப் பான உயர் மழைவீழ்ச்சி
மிக முனைப்பான உயர்ஐ மழைவீழ்ச்சிக் காலம் இல்லை ; & ஒரு மாத முதல் மூன்று மாதம் வரை நீடிக்கும் குறுகிய வறண்ட பருவம்
மிக முனைப்பான உயர் மழைக்காலம் இல்லை
வறண்ட பருவமும் இல்
2 முனைப்பான Clijah : ణ ఫ్లో
காலத்திலும் வறட்சி,
கோடையிலும் இலையுதிர் கிால்த்திலும் மழை భ
V
జ్ఞా "
26 ܫ
படம் 105.-பிலிப்பைன் தீவுகளில் மழைவீழ்ச்சி ஆட்சி
மண்வகை புவியோட்டில் அண்மையிலும் அடுத்தடுத்தும் ஏற்பட்ட மாற்றங்களினல் வேறுபட்ட மண்வகைகள் அமைந்துள்ளன. பிலிப்பைன் தீவுகளின் எல்லாப்

Page 206
382 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பகுதிகளிலும் சாளை மண்ணுக்கம் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது. எனி னும், நன்முக முதிர்ச்சியடைந்த சரளைமண்வகைகள் அரிதாகவே காணப்படு கின்றன. பெரும்பகுதியில் கொண்டுவந்து படியவிடப்பட்ட எரிமலைச் சாம்பர் மண் காணப்படுகின்றது. கரைப்பகுதியில் வளமான மண் உண்டு. மேலுயர்த் தப்பட்ட முருகைக் கற்கள் வானிலையழிதலினுற் பாதிக்கப்பட்டமையால் இம் மண் அமைந்துள்ளது. செபூவில் இத்தன்மை காணப்படுகின்றது. அடிக்கடி மண்வகை மாற்றமடைவது மண்வளத்தைப் பேண உதவும், ஒழுங்காக வெள் ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகளில் ஆறுகள் மண்டிமண்ணைப் படியவிடுகின் றன (காகாயான் பள்ளத்தாக்கிற் போன்று). இப்பகுதிகளிலும் அடிக்கடி எரி மலைச் சாம்பர் படியும் பகுதிகளிலும் (நேகிரொஸ் பகுதியிற் போன்று) மண் வளம் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனுல் இப்பகுதிகளிற் பயிர்ச் செய்கை மிகச் செறிவான முறையில் நீண்டகாலமாக நடைபெறுகின்றது. பொதுவாகப் பிலிப்பைனில் மண்வகை அதிக அளவுக்குச் சிறந்ததாக இல் லாமைக்குப் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையும் (இது கையின்ஜின் எனப்படும்) ஒரு காரணமாகும். குடிப்பெருக்கமும் விரைவாக ஏற்பட்டுவருவதனுல் மண் வளம் விரைவாகப் பாதிக்கப்படுகின்றது. அளவுக்கு விஞ்சித் தாவரவகைகள் வெட்டியும் எரித்தும் அழிக்கப்படாத நிலையில் காணப்படும் பகுதிகள் பிவிப் பைன் தீவுகளில் இல்லை என்றே கூறலாம்.
நிலப்பயன்பாடு
பிலிப்பைன் தீவுகளில் 15 சதவீதமான நிலத்தில் விவசாயம் நடைபெறுகின் றது. இந்நிலம் சீரானமுறையில் பரந்து காணப்படவில்லை (படம் 106). லூசோ னிலுள்ள காகாயான் பள்ளத்தாக்கு, இலோக்கொஸையும் லாயூனியனையும் அடுத்த மேற்குக் கரையோரம் முதலியன ஒடுங்கிய பயிர்ச்செய்கை வலயங் களாகும். மணிலாச் சமநிலமும் அதன் தொடர்பான லகூன டி பேயின் தெற்கி லுள்ள எரிமலைக் குடாநிலமும் பிலிப்பைன் தீவுகளிலுள்ள மிகவும் முக்கிய மான விவசாயப் பகுதிகளாகும். விசாயன் தீவுகள், பானை, நேகிரொஸ், செபூ ஆகியவற்றின் கரைச்சமநிலங்களிலும் செறிவான பயிர்ச்செய்கை நடைபெறு கின்றது. இந்நிலங்களில் உப்புமூல எரிமலைப் பாறைகளிலிருந்தும், முருகைக் கற்களிலிருந்தும் மண் அமைந்துள்ளதனல், அது மிக்கவளமுடையதாயுள்ளது. பிற பகுதிகளில் விவசாயம் நடைபெறும் இடங்கள் சிறியனவாகவுள்ளன. ஒன்முேடொன்று இவை தொடர்பற்றனவாயுமுள்ளன. வண்டல் மண்ணும் கொண்டுவந்து படியவிடப்பட்ட எரிமலைச் சாம்பரும் காணப்படுவதனலேயே இவை வளமுடைய விவசாய நிலங்களாக அமைந்துள்ளன.
காடுகளும் கணிப்பொருளகழ்தலும் வடகிழக்கு அலுசோன், சாமார், தென் நேகிரொஸ், பாலாவான், மிண்டா
ஞவோ முதலிய பகுதிகளில் அயனப்பிரதேச மழைக்காடுகள் அதிகம் காணப் படுகின்றன. மிகக்கூடிய அளவில் காடுகள் மிண்டானுவோவிலேயே காணப்படு

பிலிப்பைன் தீவுகள் 383
கின்றன. இங்குள்ள காடுகள் வடபோணியோவிலுள்ள காடுகளைப் போன்று பரந்துள்ளன. மிண்டாஞவோவிலுள்ள ஆகசான் ஏரிகளைச் சூழவும், கோடா பாத்தோப் பள்ளத்தாக்கிலும் முதிர்ச்சியடையாத மண்வகை உள்ளமையாற்
நெல். 二・ - தென்னை - சோளம். கரும்பு
Jody &&Gn7
புகையிலை
ککے
படம் 106.-பிலிப்பைன் தீவுகளிற் பயிர்ச்செய்கை
பெரும்பாலும் அயனப்பிரதேசச் சேற்றுநிலக் காடுகள் காணப்படுகின்றன. லூசோனிலுள்ள மத்திய மலைத்தொடரில் உயரம் காரணமாகப் பைன் காடு கள் காணப்படுகின்றன. நிலையான பயிர்ச்செய்கைமுறை நடைபெறும் பகுதி களேயடுத்துள்ள நிலங்களில் பெரிய துணைக்காடுகள் (பிலிப்பைனில் இவை

Page 207
384 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கோசோன் என வழங்கப்படுகின்றன) காணப்படுகின்றன. இந்நிலங்களிற் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையே பெரிதும் மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகைய நிலங்கள் மத்திய மலைத்தொடர், பானை-மாஸ்பாதே, காகாயான் பின்னணி நிலம், மிண்டானுவோவிலுள்ள கோடாபாத்தோ முதலியவற்றிலேயே காணப் படுகின்றன.
பிலிப்பைன் தீவுகளின் நிலப்பயன்பாட்டு முறையில் கணிப்பொருளகழ்தல் முக்கியமான இடத்தைப் பெறவில்லை. தீப்பாறைகள் இங்குக் காணப்படுவத ஞற் சில கணிப்பொருள்கள் அமைந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆணுல் இவை காணப்படும் இடங்கள் தொடர்பற்ற முறையில் அாாத்தே அமைந்துள்ளதும், கணிப்பொருள்வருவாய் குறைவாயிருப்பதும் இத்தொழில் விருத்தியடையாமைக்குரிய காரணங்களாம். லூசோனில் தங்கம் காணப்படு கின்றது என்ற செய்தி வெளியாகியதும் சீன, ஸ்பெயின் முதலிய தூரத்தே யுள்ள நாடுகளிலுள்ளோரும் இதில் நாட்டங்கொண்டனர். இவர்களது தொடர்பு இத்துறையிற் பல காலங்களில் ஏற்பட்டுவந்தது. எனினும் தங்கம் அதிகமான அளவில் அகழத்தொடங்கப்பட்டது அண்மைக் காலத்திலாகும். 1913 ஆம் ஆண்டின் பின்பே தங்கம் எடுத்தல் பெரும்பாலும் நடைபெற்றுவந்துள்ளது. 1940 ஆம் ஆண்டிலேயே தங்கம் என்றுமில்லாத அள்விற் பெருந்தொகையாகப் பெறப்பட்டது. அவ்வாண்டில் 200 கம்பனிகள் வரையில் தங்கம் எடுத்தலில் ஈடுபட்டிருந்தன. 760 இலட்சம் டொலர் பெறுமதியான 11 இலட்சம் அவுன்சு தங்கம் அப்பொழுது பெறப்பட்டது. லூசோனிலுள்ள மலைப்பகுதியில் பாகியோ, பொன்தொக் எனப்படும் இடங்களிலிருந்தே இத்தங்கம் பெறப்பட் டது. 1958 ஆம் ஆண்டில் 320,000 அவுன்சு தங்கமே பெறப்பட்டது. உற்பத்தி அதிக அளவிற் குறைந்துவிட்ட நிலைமையை இது காட்டுகின்றது. சபூவிலும் அல்பனியிலும் குறைந்த தர நிலக்கரிப் படிவுகள் சிறிதளவுக்கு உண்டு. நிலக் கரி குறைவாக விருந்ததனுல் பிறகனிப்பொருள்களைப் பொறுத்தவரையில் விருத்தி ஏற்படவில்லை. எனினும் யுத்த காலத்தின் பின்பு நிலக்கரித்தேவை அதி கரித்ததனுல் உள்நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்துள்ளது. 1938 இல் 41,000 தொன் நிலக்கரியே பெறப்பட்டபொழுதும் 1962 ஆம் ஆண் டில் 1,56,000 தொன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. யப்பானிற்கு ஏற்று மதி செய்வதற்காக காமாரினெஸ் நோர்டேயில் இரும்புத்தாது பெறப்பட்டது. 1962 இல் 14 இலட்சம் தொன் இரும்புத்தாது உற்பத்திசெய்யப்பட்டது சாம்பாலெஸில் குரோமியம் தாது எடுக்கப்பட்டது. வருடத்தில் 147,000 தொன் தாதுப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டது. செபூவின் தெற்கிலுள்ள செக்குவியோர் தீவிலும் பாசுவாங்காவிலும் (பாலாவானுக்கும் மிண்டோரோவுக் கும் இடையிலுள்ளது) மங்கனிசுத் தாது பெறப்படுகின்றது. 1958 இல் 12,000 தொன் தாதுப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டது. எரிமலைப் பாறை களைக் கொண்ட கிழக்குப் பகுதியிலேயே முன்பு செம்பு உற்பத்தி செய்யப்பட் டது. இப்பொழுது செம்பு பெரும்பாலும் மலேப் பகுதியில் (1958 இல் 40,000

பிலிப்பைன் தீவுகள் 385
தொன் செம்புத் தாதுப் பொருள்) பெறப்படுகின்றது. ஆலூசோனிற் புதிதாக இரசமும் எடுக்கப்படுகின்றது. வருடத்தில் 150 தொன் அளவிற்கு மேற்பட்ட இரசம் உற்பத்திசெய்யப்படுகின்றது.
பயிர்ச்செய்கை
பிலிப்பைன் தீவுகளிற் பெரும்பகுதி நிலத்திற் பயிர்ச்செய்கை (1963 ஆம் ஆண்டில் 240 இலட்சம் ஏக்கர் நிலம்) நடைபெறுகின்றது. இந்நாட்டுத் தொழி லாளரின் 65 சதவீதத்திற்கு மேற்பட்டோர் பயிர்ச்செய்கையை முக்கிய தொழி லாகக் கொண்டுள்ளனர் (படம் 106), தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பிற பகுதிகளிற்போன்று பயிர்கள் இங்கும் விளைவிக்கப்படுகின்றன. முதன்மையான பயிர்களைப் பொறுத்தவரையில் வேறுபாடு உண்டு. விலங்கு வளர்த்தல் தொழி வில் இங்குக் கவனஞ்செலுத்தப்படவில்லை. 37 சதவீதமான விளைநிலத்தில் நெல் விளைவிக்கப்படுகின்றது. இந்நிலத்தில் நாலிலொரு பகுதியில் உலர் முறையில் நெல் விளைவிக்கப்படுகின்றது. 24 சதவீதமான சம நிலத்திற் சோளம் விளை விக்கப்படுகின்றது. 3 சதவீதமான விளைநிலத்தில் அயனப் பிரதேசக் கிழங்கு வகைகள் (மரவள்ளியும் பிறவும்) பயிரிடப்படுகின்றன. இப்பயிர்கள் யாவும் சொந்த உணவுத் தேவைக்காகவே விளைவிக்கப்படுகின்றன. இவற்றேடு 25 சத வீதமான விளைநிலத்தில் வர்த்தகப் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இவற் அறுள் தென்னை முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது (விளைநிலத்தில் 15 சத வீதமான நிலத்திற் பயிரிடப்படுகின்றது). மணிலாச் சணலும் கரும்பும் மற்ற்ைய வர்த்தகப் பயிர்களாகும். பிலிப்பைன் தீவுகளில் தென்னைச் செய்கை சிறப்பு முறையாக மேற்கொள்ளப்படுவதனல் தென்கிழக்காசியாவிலுள்ள பிறபகுதி களில் நடைபெறும் வர்த்தகப் பயிர்ச் செய்கையிலும் வேறுபட்டுள்ளது. இங் குள்ள பயிர்ச்செய்கை கீழைக் கோடியிலுள்ள கிழக்கிந்தியத் தீவுகளில் நடை பெறும் பயிர்ச்செய்கை முறைகளோடு தொடர்புடையது எனக்கூறலாம்.
சமூகத் தேவைகளையொட்டி விவசாயம் பிலிப்பைன் தீவுகளிற் பெரும்பாலும் வர்த்தகச் சார்புடையதாகக் காணப்படுகின்றது. வியாபாரப் பயிர்களுக்கு மட்டு மல்லாது இது உணவுப் பயிர்களுக்கும் பொருந்தும். விவசாயத்தின் நோக்கமும் மிகக் கூடிய அளவு வருவாயைப் பெறுவதாகும். ஒழுங்கான முறையிற் பெறப் படும் சீரான மழைவீழ்ச்சியும், தொடர்ச்சியான பயிர்விளையுங் காலமும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்குத் துணை செய்கின்றன. இத்தன்மைகளினல் வரு டத்தில் இருமுறையும் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. முதலில் நெல் விளைவிக் கப்படும் நிலத்தில் மீண்டும் நெல் விளைவிக்கப்படுகின்றது. அதேபோன்று சோள மும் விளைவிக்கப்படுகின்றது. சுழல் முறையிற் பயிர்களை விளைவிக்கும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. குன்று சார்ந்த நிலங்களில் நீர்ப்பாய்ச்சலில்லாது பயிர் களை மாற்றி விளைவிக்கும் வழக்கம் உண்டு. பிலிப்பைன் தீவுகளின் புள்ளிவிபாங் கள், உண்மையாகப் பயிர்கள் விளைவித்த நிலத்திலும் பார்க்க, அதிகமான நிலம்

Page 208
386
தென்கிழக்கு ஆசிய நாடுகள்
参 ص லூசோனின் நிலப் பயன்பாடு
606)
O
R
பண்படுத்திய நிலம்( ) துணைக்காடுர்
மின்டோரோ
மாரின்டுக்கே
I
o தீர்விளாஸ் G பூரியாஸ் ಕ್ಲಿಕ್ಗಿ
இ? யான் வு t , حs
திக்காவோ\} .
L
படம் 107.-பிலிப்பைன் தீவுகளின் வடபகுதி
 
 
 
 

úSeðlúenusér Baasár 387
விவசாயத்திற்குட்பட்டிருந்ததாகவே காட்டுகின்றன. 20 சதவிதமான நிலத்தில் வருடத்தில் இருமுறை பயிர்ச்செய்கை நடைபெறுவதே இதற்குக் காரணம் எனலாம்.
குறித்த பகுதிகளிற் சிறப்பு முறையாகவும் பயிர்ச்செய்கை நடை பெறுகின் றது. தொடர்பற்றனவாக இப்பகுதிகளிருப்பதும், மண்வளம் பெரிதும் வேறு பட்டிருப்பதும் இதற்குக் காரணமாகும். எல்லாத் தீவுகளிலும் நெல்லை ஓரள வுக்குப் பயிரிடலாம். ஆனல், மத்திய லூசோனில் மண்தடிப்பானதாயும், நிலம் தட்டையாயும், காலநிலை ஈரவெப்பப் பருவங்களைக் கொண்டதாயும் உள்ளமை யால் தாழ்நில நெல்வகையே இங்குச் சிறந்த முறையிற் பயிரிடப்படலாம். தென்னைச் செய்கைக்கு நெடிய வறட்சிக்காலம் பொருத்தமற்றது. தென்லூ சோனில் தென்னை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அபக்கா என்னும் மணி லாச் சணற் செய்கைக்குச் சீரான மழைவீழ்ச்சியும் கூடிய ஈரப்பதனும் உவந் தன. டாவவில் இத்தன்மைகள் காணப்படுவதோடு வளமான எரிமலை மண் வகையும் உண்டு. இதனுல் அபக்கா எளிதில் மண்வளத்தை உறிஞ்சிவிடுகின்ற பொழுதும் மண்வளம் கெட்டுவிடவில்லை.
லூசோன ஐந்து பயிர்ச்செய்கை வலயங்களாகப் பிரிக்கலாம் (படம் 107) : (அ) மத்திய அலுசோன் நெல் வலயம், கரும்பு இங்கு முக்கியமான துணைப்
பயிாாகும். (ஆ) காகாயான் பள்ளத்தாக்கு, நெல் விளையும் நிலங்கள் இங்கு அதிகமாக் உள்ளன. குன்றுச் சாய்வுகளிலுள்ள படிவயல்களில் நெல் சிறப்பாகப் பயிரிடப்படுகின்றது (இகுரோட்டர்களின் பயிர்ச்செய்கைத் திறமை வர்த்தகப் பயிர்ச்செய்கைக்கு முன்பே புகழ்பெற்றிருந்தது). இங்குப் புகையிலையும் சோளமும் துணைப்பயிர்களாயுள்ளன. (இ) வடமேற்கு அரசோனிலுள்ள இலோக்கொஸ் மலைப்பகுதி. இங்குள்ள ஒடுங்கிய கரைச்சமநிலத்தில் நெல், சோளம், உருளைக்கிழங்கு என்பன பயிரிடப்படுகின்றன. (ஈ) தாயாபாசை உள்ளடக்கிய லகூனவுக்குக் கிழக்கிலும் தெற்கிலுமுள்ள தென் ஆாசோன் பகுதி. இங்குத் தென்னை பெருந்தோட்டங்களில் பயிர்ச் செய்யப்படுகின்றது. நெல் ஒரு துணைப்பயிராக உள்ளது. (உ) எரிமலைகளைக் கொண்ட லூசோனின் அதி தெற்காகவுள்ள பகுதி. இங்கு நெல் அத்துணை முக்கியமான பயிராக இல்லை. தென்னையும் அபக்காச் சணலும் (மணிலாச் சணல்) சிறப்பு முறையிற் பயிரிடப்படுகின்றன. பிலிப்பைன் தீவுக்கூட்டத்திலுள்ள எரிமலை மண்ணில் அபக்கா சிறப் பாக விளைவிக்கப்படுகின்றது. விசாயன் தீவுகளிலும் (படம் 108) சில பகுதிகளிற் பயிர்ச்செய்கை சிறந்த முறையில் விருத்தி செய்யப்பட்டுள்ளது. பானைத்தீவில் நெல் முக்கியமாக உள் ளது. நேகிரொஸின் மேற்குப் பகுதியிற் கரும்பு விளைவிக்கப்படுகின்றது. செபூத் நிவில் சோளம் முக்கிய பயிராகும். இங்கு நெல் துணைப்பயிராக விளைவிக்கப்

Page 209
388 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
படுகின்றது. ஏனைய விசாயன் தீவுகளில் பயிர்ச்செய்கை அத்துணை முக்கியமாக வில்லை. நெல்லும் தென்னையும் ஓரளவுக்குப் பயிர்செய்யப்படுகின்றன. சோளமும் சணலும் துணைப்பயிர்களாகும். .
படம் 108-விசாயன் தீவுகளில் நிலப்பயன்பாடு
மிண்டானுவோ (படம் 109) ஓரளவுக்கே விருத்திபெற்ற தீவாகும். சிறிதள வுக்கு, நெல், சோளம், தென்னை என்பன சொந்தத் தேவைக்காக விளைவிக்கப் படுகின்றன. டாவவுப் பகுதியில் ஏறத்தாழ அரைவாசிப் டாகத்தில் சணலும் அன்னசியும் பயிரிடப்படுகின்றன. தகாத்திலடைப்பதற்காகவே அன்னசி விளை விக்கப்படுகின்றது. இத்தீவினை விருத்தி செய்யும் நோக்கமாக அண்மையில் மேனிலப்பகுதிகள் மந்தை மேய்த்தற்காகக் குத்தகைக்கு விடப்பட்டன. சிறிது காலத்தின் பின்பே மந்தைத் தொழில் எந்த அளவுக்கு விருத்தி பெற்றுள்ளது என்பதனைத் தீர்மானிக்கமுடியும். -
பயிர்ச்செய்கை முறைகள் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலுள்ளவற் றைப் போன்று காணப்படுகின்றன. நெல்வயல்களில் மண்வெட்டி, சிறு அரிவாள் முதலிய கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன. மாக்கலப்பையும் உபயோகிக்கப் படுகின்றது. பழைய முறைக் கருவியாதலால் இதல்ை மண்ணைக்கிளற முடியுமே தவிரப் புரட்டமுடியாது. அமெரிக்கரின் குடியேற்ற நாட்டாட்சி நிலவிய காலக் திற் பயிர்ச்செய்கை முறைகளை இயந்திர மயமாக்குதல் பற்றிய கருத்துப்பரிமா ஹல் இடம்பெற்றபொழுதும் புதிய உழவு இயந்திரமோ அறுவடை இயந்திரமோ
 

பிலிப்பைன் தீவுகள் 389
பிலிப்பைன் பயிர்ச்செய்கையில் இன்றும் முக்கியமான இடத்தைப் பெறவில்லை. பயிர்ச்செய்கை சிறிய அளவில் விவசாயிகளினல் மேற்கொள்ளப்படுகின்றது.
மிண்டானுவோக் கடல்
به یکه
சாம்போவாங்கா
ية 6
OC)
படம் 109.-மிண்டானுவோவில் நிலப்பயன்பாடு
அசைவாசிக்கு மேற்பட்ட விளைநிலம் ஐந்து ஏக்கருக்குக் குறைவான துண்டு களாக உள்ளது. நாலிலொருபாகம் இரண்டரை ஏக்கருக்குக் குறைந்த துண்டு நிலங்களைக் கொண்டுள்ளது. வர்த்தகப் பயிர்கள் விளைவிக்கப்படும் பகுதிகளிலும் புதிதாக விருத்தி செய்யப்படும் பகுதிகளிலும் விளைநிலம் பெரிதாக உள்ளது. மிண்டோரோ, மிண்டானுவோ, நேகிரொஸ், மாஸ்பாதே என்பன இங்கே குறிப் பிடத்தக்கன.
8:08,000 ஏக்கர் நெற்செய்கை நிலத்துக்கு நீர்பாய்ச்சப்படுகின்றது. நீரைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்துவதே இங்கு முக்கியமாகவுள்ளது. வறட்சி நிலை மையை இதன் மூலம் நீக்கமுடியாது. நீர்ப்பாய்ச்சலுக்குப் பெரிய தேக்கங்கள் அமைக்கப்படவில்லை. நீர்ப்பாய்ச்சுதல் நடைபெறும் நிலத்தில் மட்டும் இரு தடவை பயிர்விளைவிக்கப்படுகின்றது. யாவாவின் கரும்புச் செய்கையிலும் பார்க்க இங்குக் கரும்புச்செய்கை முறை வேறுபட்டதாக உள்ளது. மலைப்பகுதி பிலுள்ள இகுரோட்டர் நீர்ப்பாய்ச்சல் முறை குறைந்த பட்சம் பன்னிரண்டு நூற்ருண்டுக்கு முற்பட்ட பழமையுடையது; யாவாவின் குன்றுநிலப் பகுதியிற் காணப்படும் சிறப்புமிக்க செறிவான பயிர்ச்செய்கையைப் பிலிப்பைன் தீவுக்

Page 210
390 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
கூட்டத்திலும் காணமுடிகின்றது. பிலிப்பைன் கூட்டத்தில் அதிக நிலத்துக்கு நீர்பாய்ச்சப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆனல் உண்மையில் வரம்பு கட்டி மழை வீழ்ச்சியைப் பயன்படுத்தும் முறையும் நீர்பாய்ச்சுதலோடு சேர்க்கப் பட்டுள்ளது. நீர்பாய்ச்சப்படும் நிலத்தில் முக்கால்வாசிக்கு மேற்பட்ட நிலம் மணிலாச் சமநிலத்தில் காணப்படுகின்றது.
1960 முதல் 1963 வரையுள்ள காலப்பகுதியில் பிலிப்பைன் தீவுக்கூட்டத்தில் ஏக்கருக்கு 680 இருத்தல் தீட்டப்பட்ட அரிசி பெறப்பட்டது. தென்கிழக்கு ஆசி யாவின் பிறபகுதிகளிற் பெறப்படும் வருவாயிலும் இத்தொகை குறைவாகும். தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தும் நாடு பிலிப்பைன் ஆகும். 1961 ஆம் ஆண்டில் ஓர் ஏக்கர் விளைநிலத்திற்கு 81 இருத்தல் உாம் உபயோகிக்கப்பட்டது. பிலிப்பைன் கூட்டத்திலுள்ள தீவுகளிற் பயிர்ச்செய்கை விருத்தி சீரான முறையில் ஏற்படவில்லை.
நெல்- பிலிப்பைன் தீவுகளில் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை அத்துணை முக்கியமாக இல்லை. இதற்கு வரலாற்று நிலைமைகள் காரணமாக உள்ளன. தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் இப்பயிர்ச் செய்கை ஒரளவுக்கு முக்கியமாகவுள்ளது. சொந்தத் தேவைக்கான நெல், சோளம், கிழங்குவகை என்பன மொத்த விளைநிலத்தில் 73 விதமான பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. பிலிப்பைன் மக்களின் உணவுத் தேவைக்கு இப்பயிர் களே முக்கியமாக உள்ளன. யுத்த காலத்தின் முன்பு வருடந்தோறும் 14 இலட் சம் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. 1962இல் உற்பத்தி செய்யப்பட்ட தொகை 26 இலட்சம் தொன்னுகும். உணவுத் தேவையைப் பொறுத்தவரையில் தீவுகள் ஒன்றுக்கு ஒன்று துணையாகக் காணப்படுகின்றன. எனினும் யுத்தகாலத் தின் பின்பு 1959 ஆம் ஆண்டு வரையும் சொந்தத் தேவைக்காகப் பெருந்தொகை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுவந்தது ; அவ்வாண்டுக்குப் பின் ஆண்டில் 9,000 தொன் அரிசியே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
நெல் 78 இலட்சம் ஏக்கர் நிலத்தில் (விளைநிலத்தில் 36 சத வீதம்) விளைவிக் கப்படுகின்றது. பிலிப்பைன் மக்களின் உணவில் நெல் மிக முக்கியமான இடத் தைப் பெற்றுள்ளது. உள்நாட்டில் பணவருவாயைக் கொடுக்கும் பயிரும் இது வாகும். சிறு விவசாயிகள் சொந்தத் தேவைக்காக நெல்லை விளைவிக்கின்றனர். எனினும் மத்திய லூசோன், பானை ஆகிய பகுதிகளில் வர்த்தகத்திற்காக நெல் பெருநிலங்களிலும் விளைவிக்கப்படுகின்றது. மத்திய அலுசோனில் பிலிப்பைன் பகுதியிலுள்ள மொத்த நெல் விளையும் நிலத்தில் 32 சதவீதமும் பானையில் 12 சதவீதமும் காணப்படுகின்றன. மிண்டானுவோவில் 13 சத வீதமான நெல்விளை யும் நிலம் காணப்படுகின்றது. மிண்டானுவோவின் பருமனேடு ஒப்பிடும் பொழுது இத்தொகை அதிகமாகவிருக்கிறதேயன்றி நெற்செய்கைக்கு இங்கு அதிக கவனம் செலுத்தப்படுகின்றது எனக் கூறமுடியாது. மொத்த நெல்விளைச் சலில் மூன்றிலிாண்டு பகுதி லூசோனிலிருந்து பெறப்படுகின்றது. நெல்லை மேல திகமாக உற்பத்தி செய்யும் தீவு இதுவாகும். எனவே நெல் அரசோனிலிருந்து

பிலிப்பைன் தீவுகள் 39
பிற தீவுகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது; விசாயன் தீவுகளுக்கே நெல் அதிகமாகக் கொண்டு செல்லப்படுகின்றது. விசாயன் தீவுகளிற் பயிர்ச்செய்கை செறிவாக நடைபெறுகின்றபொழுதும் இவை குடியடர்த்தி மிக்க தீவுகளாத லால் நெல் போதியதாக இல்லை. மொத்த நெல் உற்பத்தியில் நாலிலொருபகுதி குன்றுநில நெல்லாகும். குன்றுநிலங்களிற் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கைமூலம் நெல் விளைவிக்கப்படுகின்றது. விருத்தி குறைவான பதங்கஸ், காவித், மிண் டோரோ, பாலாவான் சாம்பொவாங்கா ஆகியன இங்கே குறிப்பிடத்தக்கன. பிலிப்பைன் தீவுகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல்வகைகள் பயிரிடப்படுகின் றன. தீவுகளிற் காணப்படும் பெளதிகப் புவியியல் வேறுபாடுகளே இதற்குக் காச ணமாகும். தாழ்நிலங்களில் நெல் நாற்முக நடப்படுகின்றது. மேனிலங்களில் நெல் ஒரு பருவத்தில் மட்டும் பயிரிடப்படும். தாழ்நிலங்களில் நெல் தூவி விதைக் கப்படுகின்றது.
மிண்டானுவோத்தீவில் ஈரமானதாழ்நிலங்களில் மே மாதத்திலே நெல் நாற் முக நடப்படுகின்றது. ஆனல் வடக்கேயுள்ள காகாயான் பள்ளத்தாக்கில் யூல் வரையில் நாற்று நடப்படுகின்றது. வடக்கில் சனவரி, பெப்புருவரி மாதங்களில் அறுவடை நடைபெறுகின்றது. அகி தெற்கிலுள்ள பகுதிகளில் இரண்டாம் முறை பயிர்செய்தல் வழக்கமாகவில்லை. விசாயன் தீவுகளில் நவம்பர் மாதத் தில் இரண்டாம் முறை நாற்று நடப்படுகின்றது. இப்பயிர் ஏப்பிரில் மாதத்தில் அறுவடை செய்யப்படும். காகாயான்பள்ளத்தாக்கில் பெப்புருவரியில் நாற்று நடப்பட்டு யூன் இறுதியில் அறுவடைசெய்யப்படுகின்றது. அகலக் கோட்டு முறையில் வடக்குத் தெற்காகவுள்ள தீவுகளிற் பயிர்ச்செய்கை வேலைகள் மேற் குறித்த முறையிற் காலவேறுபாட்டைக் கொண்டுள்ளன. நாற்று நடுதல், அறு வடை முதலிய வேலைகளுக்கு அதிக தொழிலாளர் தேவையாதலால் தீவுகளிடை யில் தொழிலாளர் பருவகாலங்களுக்கு ஏற்பப் போய்வருவதற்கு இது வாய்ப் பாக உள்ளது.
ஈர நிலங்களிற் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கு ஓரிரு மாதத்துக்கு முன்பு உலர் முறையில் பயிர்விளைவிக்கப்படும் நிலங்களில் விவசாய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தென் கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளிற் போன்று நெல்லை அறுவடை செய் தற்கு அதிக தொழிலாளர் தேவையாகவுள்ளனர். சிறு அரிவாளைக் கொண்டு கையினல் நெல்லை அறுவடை செய்வதே இதற்குக் காரணமாகும். இதனுல் சிறு விவசாயிகளும் அறுவடைக்குப் பிறதொழிலாளரை நாடவேண்டியவராயுள்ள னர். இங்ங்ணம் அறுவடைக்கு உதவுந் தொழிலாளருக்கு நெல்லில் ஒரு பகுதி யைக் கொடுப்பது வழக்கமாகும். பிற நாடுகளிலும் பார்க்கப் பிலிப்பைன் தீவு களில் விவசாயிகள் கூட்டாக இம்முயற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் குறை வாகும். நிலப்பயன்பாட்டு முறைகளில் நீண்டகாலம் ஸ்பானியத்தொடர்பு நில வியமை இதற்கு ஒரு காரணம் எனலாம். மத்திய அலுசோன் போன்ற நெல் செறி

Page 211
392 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
வாக விளைவிக்கப்படும் பகுதிகளிலே புதிய நெல்குற்றும் ஆலேகள் அமைக்கப்பட் டுள்ளன. நெல்லைக் காலால் மிதித்துக் காற்றில் தூற்றிய பின்பு கையினுற் குற்றி யெடுப்பதே பொதுவான வழக்கமாகும். W
மத்திய அலுசோனிலிருந்து குற்றிய அரிசி புகையிரதம், தெருக்கள், ஒடங்கள் என்பன மூலம் மணிலாவுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. இப்பகுதிகளிலி ருந்து செபூ டாவவு, ஆல்பை, நேகிரொஸ் ஆகிய பகுதிகளுக்குக் கடல்வழியாக அரிசி கொண்டுசெல்லப்படுகின்றது. சனவரி-பெப்புருவரி மாதங்களிலும் ஒகத்து மாதத்திலும் அரிசி இவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றது. உள்நாட்டு அரிசி வியாபாரத்தில் சீன வியாபாரிகளே பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலும் இந்த நிலைமையே காணப்படுகின் றது. பிலிப்பைன் நாட்டில் இன்று தேசிய உணர்ச்சி சீன வர்த்தகர்களான “ பிற நாட்டவர் ” வியாபார முயற்சிகளுக்குத் தடையாகவுள்ளது. " பிறநாட்டவர்" என இவர்கள் கருதப்படுகின்ற பொழுதும் பிலிப்பைன்நாட்டில் நீண்ட காலம் இவர்கள் வாழ்ந்துவந்துள்ளனர்.
சோளம்- பிலிப்பைன் மக்களின் முக்கிய உணவுப் பொருள்களுள் சோளமும் ஒன்ருகும். குடியேற்ற ஆட்சித் தொடர்பு நீண்டகாலமாக மத்திய அமெரிக்கா வோடு ஏற்பட்டிருந்தது இதற்கு ஒரு காரணமாகும். மத்திய அமெரிக்காவில் சோளம் இயற்கையாக விளையும் ஒரு பயிராகும். பிலிப்பைன் தீவுகளில் ஈரமும் வறட்சியுமுள்ள பருவங்களைக் கொண்ட மேனிலங்களில் சோளம் சிறிதளவுக்கு விளைவிக்கப்படுகின்றது. வறட்சிப் பருவமில்லாத பகுதிகளிலேயே சோளம் அநேகமாகப் பயிரிடப்படுகின்றது. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள் ளோரே இதனை அதிகமாக விளைவிக்கின்றனர். சோளத்தை வெயிலில் உலர் வைத்து மாவாக அரைத்து வெவ்வேறு வகையான உணவுகளைச் செய்து உண் பர். அரிசியிலிருந்து வேறுபட்ட உணவுவகைகள் தயாரிக்கப்படுவது போன்று, சோளத்திலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. சோளம் 48 இலட்சம் ஏக்கர் நிலத் தில் விளைவிக்கப்படுகின்றது. இத்தொகையில் மூன்றிலிரண்டு பகுதி நெல்விளை யும் நிலமாகும். சோளம் அதிகமாகப் பயிரிடப்படும் தீவு செபூவாகும். இங்குள்ள விளைநிலத்தில் அரைவாசிப் பகுதியில் சோளம் விளைவிக்கப்படுகின்றது. பிலிப் பைன் தீவுகளில் உற்பத்தி செய்யப்படும் மொத்தத் தொகையில் காற்பங்கு செபூ விற் பெறப்படுகின்றது. சோளம் விளைவிக்கப்படும் மொத்த நிலத்தில் அரைவாசி நேகிரொஸ், லேற்றி, மிண்டானுவோத் தீவுகளில் காணப்படுகின்றது. மேற் குறித்த நான்கு தீவுகளிலும் வாழும் மக்களுக்குச் சோளம் முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. பொகொல், மாஸ்பாதே, இசபெலா, காகாயான் ஆகிய பகுதிகளிலும் சோளம் விளைவிக்கப்படுகின்றது. விளைவு மிதமாகவே உளது. 1963 ஆம் வருடத்தில் மொத்தம் 13 இலட்சம் தொன் சோளமே பெறப்பட்டது. செபூவில் மண்வளம் விரைவாகக் கெட்டுவருகின்றது என்பதைச் சோள விளைச் சலிலிருந்து உணரலாம். பிலிப்பைன் தீவுகளின் சராசரி விளைச்சலிலும் பார்க் கச் செபூவின் விளேச்சல் குறைவாகும். வருடத்தில் பல தடவை சோளம் பயி ரிடப்படுகின்றது. பொதுவாக வருடத்தில் மூன்று தடவை சோளம் பயிரிடப்

பிலிப்பைன் தீவுகள் 393
பட்டு அறுவடை செய்யப்படுகின்றது. முதலாவது தடவையில் விளேச்சல் சொற்பமாகும். சோளம் விளைவிக்கப்படும் முக்கிய பருவங்களாவன: (அ) குளிர்காலத்தின் பிற்கூற்று அல்லது வேனிற்கால விதைப்பு (சனவரி முதல் மே வரை), (ஆ) இலையுதிர்கால விதைப்பு (ஒற்முேபர்). விதைத்து மூன்று மாதங்களில் சோளம் அறுவடை செய்யப்படும்.
ஏனய உணவுப் பொருள்கள்-வத்தாலங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு உட் பட்ட பல கிழங்குவகைகள் பிலிப்பைன் தீவுகளில் விளைவிக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அடக்கியுள்ள நிலம் குறைவாகவுள்ள பொழுதும் அவை அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. அவற்றை மக்களும் விரும்பி உண்ணுகின்ற னர். கிழங்குவகைகளை விளைவித்தல் எளிதாகையால் யுத்தகாலத்தில் அவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டன. யுத்த காலத்தின் பின்பும் அவை அதிக அளவில் பயிரிடப்பட்டுவருகின்றன. 1961 ஆம் ஆண்டில் 340,000 ஏக்கர் நிலத் தில் கிழங்குவகைகள் விளைவிக்கப்பட்டன (1938 இல் மூன்றரை ஏக்கரில் சோளம் விளைவிக்கப்பட்டது). நெல் உற்பத்தியில் பற்ருக்குறை ஏற்படும் பொழுது சோளம் அதிக அளவுக்குப் பயன்படத்தக்கதாய் உள்ளது. அவரை வகைகள், சுவைச்சரக்குக்கள் என்பனவும் பிலிப்பைன் தீவுகளில் பயிரிடப்படு கின்றன. பல பொருள்களையும் அடக்கிய சீரான உணவைப் பெறுவதற்கு இவை துணை செய்கின்றன. தாவர உணவை விரும்பும் பிலிப்பைன் மக்களுக்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. இத்தகைய பொருள்கள் உள்ளமையினலே மீக்கள் இங்குத் தாவர உணவை உண்ணுகிறர்கள், மதக்கொள்கை காரணமாக அவர் கள் தாவர உணவை உண்பதில்லை. உள்நாட்டுக் கடலிற் பிடிக்கப்படும் மீன் புர தச்சத்தைப் பெறுவதற்கு உதவுகின்றது. 1961 ஆம் ஆண்டில் 4,75,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. பிலிப்பைன் தீவுகளில் மந்தை வளர்ப்பு முக்கியமாக இல்லை. எருமைகளும் எருதுகளும் இழுவைத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படு கின்றன. நெல், கரும்பு முதலிய பயிர்கள் விளைவிக்கப்படும் பகுதிகளில் எருமை களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன் தீவுகளில் வளர்க் கப்பட்ட விலங்குகளில் அரைவாசித்தொகை யுத்தகாலத்தில் அழிந்துவிட்டன. கிராமப் புனரமைப்பில் இது முக்கிய பிரச்சினையாக விருந்தது. பொருத்தமான விலங்குவகைகளைத் தெரிந்து பேணும் முறைகள் இத்தீவுகளில் வளர்ச்சியடைய வில்லை. எனவே எல்லாத் தீவுகளிலும் சிறு தொகையாக விலங்குகள் வளர்க்கப் படுகின்றன. மாடுகள், பன்றிகள் என்னும் விலங்குகளைப் பொறுத்தவரையில் இந்த நாடு தன்னிறைவுடையதாயிருக்கிறது.
வர்த்தகப் பயிர்கள்-வர்த்தகத்திற்காக விளைவிக்கப்படும் பொருள்களுள் கரும்பு, தென்னை, சணல், புகையிலை என்பன முக்கியமானவையாகும். அணித் தாகவுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் வர்த்தகப் பயிர்களும் சிறிதளவில் இங்கு விளைவிக்கப்படுகின்றன. மிண்டானவோவில் பொருத்தமான காலநிலைத் தன்மைகள் காணப்படுகின்றபொழுதும் இறப்பர் முக்கியமான பயிராக விளை விக்கப்படுவதில்லை. சாம்பொவாங்காவில் மட்டும் 8,000 ஏக்கர் நிலத்தில் இறப்

Page 212
394 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
பர் விளைவிக்கப்படுகின்றது. இங்கே ஆண்டுதோறும் 1,300 தொன் இறப்பரி பெறப்படுகிறது. பொதுவாக இறப்பர்ச் செய்கைக்கு அதிக கவனம் செலுத்தப் படுவதில்லை,
பிலிப்பைன் தீவுகளில் வர்த்தகப் பயிர்ச்செய்கை குறைந்த அளவுக்கு விருத்திபெற்றதற்குரிய காரணங்களாவன :
(1) ஸ்பானிய குடியேற்ற ஆட்சித்தொடர்பு புதிய நிலங்களிற் பயிர்ச்
செய்கை விருத்தியுற ஆதரவாகவிருக்கவில்லை. (2) பிலிப்பைன்-அமெரிக்க யுத்தம் காரணமாகக் கடந்த நூற்முண்டின் இறு திப் பகுதியில் பிலிப்பைன் அ. ஐ. மாகாணங்களின் குடியேற்ற நாடாக அமைந்தது. இதனுல் நாட்டில் அமைதியின்மையும் பாதுகாப் பற்ற நிலைமையும் நிலவின. இக்காரணங்களினல் இக்காலப் பகுதியில் தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் வர்த்தகப் பயிர்ச் செய்கை வளர்ச்சியடையப் பிலிப்பைன் தீவுகளில் வளர்ச்சி ஏற்படவில்லை. நாட் டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்ட காலத்தில் ஏனைய அயனப்பிச தேச நாடுகளில் இறப்பர், நெல் என்பன அதிகமாக உற்பத்தி செய் யப்பட்டதனுல் இத்துறையில் போட்டி காணப்பட்டது. (3) அ. ஐ. மாகாணங்களின் இறக்குமதி வரிமுறைகள், வட அமெரிக்கத் தன்னுரிமையாட்சி என்பன பிலிப்பைன் சீனி உற்பத்தி (கியூபா, அலுயி சியான என்பவற்றின் சீனி உற்பத்தி இதற்குப் போட்டியாகக் காணப் பட்டது), பழவகை உற்பத்தி (கலிபோணியா, ஹாவாய்ப் பகுதிகளின் பழவகை உற்பத்தி இதற்குத் தடையாக இருந்தது), புகையில் உற் பத்தி (ஜோர்ஜியாவின் புகையிலை உற்பத்தி இதற்குத் தடையாகவிருந் தது) ஆகியவற்றிற்குத் தடையாகவிருந்தன. (4) அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள புதிய பகுதிகள் விருத்தி செய்யப் பட்டமையோடு பலதுறைகளிலும் பணமுதலீடு செய்யப்பட்டும் வந்தன. இதனுல் அதி தூரத்திலுள்ள பிலிப்பைன் தீவுகளில் இக் துறையில் விருத்தியை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை. மேற்குறித்த நிலைமைகள் விருத்திக்குத் தடையாகவே காணப்பட்டன. (5) பிலிப்பைன் தீவுகளில் பெறப்பட்ட தங்கத்தின் உதவியோடு அ. ஐ. மாகா ணங்களிலிருந்து பரும்படியாக்கப் பொருள்கள் இறக்குமதி செய் யப்பட்டன. பிலிப்பைன் நாட்டில் பயிர்ச்செய்கையைச் செம்மையான முறையில் விருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. (6) தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்து பிலிப்பைன் தீவுகள் அாரத்திற் பிரிந்து அமைந்துள்ளமையால் அப்பகுதிகளில் ஏற்பட்டு வரும் புதிய சாதனைகள், விருத்திகள் என்பனவற்றின் தாக்கமும் குறை வாகவுள்ளது. சீனி-வர்த்தகப் பயிர்கள் அடக்கியுள்ள நிலத்தில் பெரும்பகுதியைச் தென்னை கொண்டுள்ளபொழுதும் பெறுமதியைப் பொறுத்தவரையில் சீனி முக்

பிலிப்பைன் தீவுகள் 395
கியமாகவுள்ளது. 1940 ஆம் ஆண்டில் 20 இலட்சம் பிலிப்பைன் மக்கள் சினித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இத்தொழில் 5,000 இலட்சம் தொலர் முதலீட்டைக் கொண்டிருந்தது. 1935-39 காலப் பகுதியில் ஏற்றுமதிப் பொருள்கள் மூலம் பெறப்பட்ட மொத்த வருவாயில் 45 சதவீதம் சீனி மூலம் பெறப்பட்டது. உலகில் சீனியை உற்பத்தி செய்கநாடுகளுள் இந்தியா, கியூபா, யாவா, போமோசா என்பவற்றிற்கு அடுத்த நிலையைப் பிலிப்பைன் பெற்றிருந் தது. 1942 ஆம் ஆண்டில் இத்தொழில் முற்முகவே அழிந்துபட்டது. இதனல் பிலிப்பைன் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வருடந் தோறும் சராசரியாக 10 இலட்சம் தொன்சீனியை உற்பத்தி செய்த நாட்டில் இந்த நிலைமை எத்தகைய பாதிப்பை விளைத்திருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். யுத்த காலத்தின் பின்பு இத்தொழில் மீண்டும் விருத்தி செய்யப் பட்டது. 1962 ஆம் ஆண்டில் 588,000 ஏக்கர் நிலத்தில் (இது யுத்தத்திற்கு முன் பிருந்த அளவினது) கரும்பு விளைவிக்கப்பட்டது; இக்கரும்புத் தோட்டங்கள் 15 இலட்சம் தொன் சீனியை உற்பத்தி செய்தன; 3,600 இலட்சம் தொலர் பெறு மதியான சீனி ஏற்றுமதி செய்யப்பட்டது. சீனி ஏற்றுமதியைப் பொறுத்தவரை யில் பிலிப்பைன் கியூபாவுக்கு அடுத்த நிலையிலுள்ளது.
லூசோன், நேகிரொஸ் என்னும் தீவுகளிலே வர்த்தகக் கரும்புச் செய்கை முக்கியமாக இடம்பெற்றுள்ளது. அாசோனில் தார்லாக், பாம்பான்கா, பதங் கஸ், லகூன, பார்கசினன், பாதான் என்னும் பகுதிகளிலே கரும்பு முக்கியமாக விளைவிக்கப்படுகின்றது. நேகிரொஸ் தீவில் மேற்குப் பாகத்தில் கரும்பு விளைவிக் கப்படுகின்றது. லூசோனில் நெல்லே விளைவிக்கப்படும் சிறு துண்டு நிலங்களிலே கரும்பும் விளைவிக்கப்படுகின்றது. அரைவாசி நிலம் நான்கு ஏக்கரிலும் குறை வான துண்டுகளைக் கொண்டுள்ளது. பெருந்தோட்டங்கள் (ஹசியென்டா) நேகி ரொஸ் தீவில் பெரும்பாலும் காணப்படுகின்றன. இங்கு 400 பெருந் தோட்டங் களுக்கு மேல் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பரப்பளவில் 250 முதல் 650 ஏக் கர் வரை யுள்ளன. ஒவ்வொரு தோட்டத்திலும் கரும்பு அறுவடை செய்யப் பட்டு ஆலைகளிற் பிழியும் பருவத்தில் 250 பேர்வரையில் வேலையில் ஈடுபட்டிருப் பர். ஏனைய பருவங்களில் இத்தொகையில் நாலிலொரு பகுதியினரே இத்தொழி லிலீடுபட்டிருப்பர். எனவே குறுகிய பருவமாகிய அறுவடைக் காலத்தில் தொழி லாளர் பெருந்தொகையாகத் தேவைப்படுகின்றனர். ஆகவே பானை, பாந்தாயான் முதலிய தீவுகளிலிருந்து தொழிலாளர் பெருந்தொகையாகக் கொண்டு வரப்படு கின்றனர். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத மணல்சார்ந்த பகுதி களில் கரும்பு செழிப்பாக வளருவதனல் மேனிலப் பகுதிகள் இதற்கு ஏற்றன வாகவுள்ளன. பெருந்தோட்டங்களில் இயந்திரங்கள் உழுவதற்குப் பயன்படுத் தப்படுகின்றன. சிறு துண்டு நிலங்கள் எருமை மாடுகளின் உதவியோடு மாக் கலப்பையினுல் உழப்படுகின்றன. தென் பகுதியில் கரும்பு நடுதல் ஒற்ருேபர் மாதத்தில் தொடங்குகின்றது. வட பகுதியில் சனவரிவரையில் இது தொடரு கின்றது. நேகிரொஸ் தீவில் முதலில் அறுவடை செய்யப்பட்ட கரும்பின் அடியி விருந்து இரண்டாவது முறையாகவும் கரும்பு பெறப்படுகின்றது. மேற்கு இந்
16-CP 4217 (6819)

Page 213
396 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
தியத் தீவுகளில் உள்ள முறையை இது ஒத்துள்ளது. கரும்பு அறுவடை நவம் பரில் தொடங்கி ஏப்பிரில் வரையும் நடைபெறுகின்றது. போலோ என்னும் கத்தியைக்கொண்டு தொழிலாளர் கரும்பை அறுவடை செய்கின்றனர். முக்கிய மாக வர்த்தகத்திற்குக் கரும்பு விளைவிக்கப்படும் பகுதிகளில் சிற்றளவினை யுடைய புகையிரதப்பாதை மூலம் கரும்பு ஆலைக்குக் கொண்டு செல்லப்படுகின் றது. சொந்தத் தேவைக்காக விளைவிக்கப்படும் உள்ளூர்ப் பகுதிகளில் வண்டிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஐரோப்பாவில் பீற்றுக் கிழங்குச் செய்கையோடு தொடர்புடைய ஆலைமுறை யே இங்கும் காணப்படுகின்றது. இங்கு ஆலை தனிப்பட்டோருக்குச் சொந்த மாகவுள்ளது. ஆலைச் சொந்தக்காரர் கரும்பு விளைவிப்போரோடு குறித்த காலத் திற்குக் கரும்பை ஒழுங்காக விளைவித்து ஆலைக்குக் கொடுக்க வேண்டுமென ஏலவே ஒப்பந்தம் செய்துகொள்ளுகின்றனர். இவ்வாறு பெறப்படும் கரும்பை ஒருவகைச் சதவீத ஒழுங்கிற்கு ஏற்ப ஆலேகளில் பிழிந்து சீனியை உற்பத்தி செய்கின்றனர். பொதுவாக ஆலைச் செலவுக்கென 40 முதல் 50 சதவீதத்தை இவர்கள் பெற்றுக்கொள்ளுகின்றனர். எஞ்சிய பங்கைக் கரும்பை விளைவிப் போர் பெற்றுப் பணத்திற்கு விற்கின்றனர். விற்பனவு கூட்டுறவுச் சங்கம் மூல மாகவும் ஆலை உரிமையாளர் மூலமாகவும் நடைபெறுகின்றது. ஆலை உரிமையா ளர் கரும்பை விலைக்கு வாங்கிச் சீனியை உற்பத்திசெய்யும் முறையோ நேசடி யாகக் கரும்பை விளைவிக்கும் முறையோ இல்லை. 1961 ஆம் ஆண்டில் பிலிப்பை னில் காணப்பட்ட ஆலைகளில் 14 லூசோனிலும், 19 நேகிரோஸிலும், 66 பானை
யிலும் காணப்பட்டன.
1930-39 காலப்பகுதியில் வருடந்தோறும் 10 இலட்சம் சுத்தஞ் செய்யப்பட்ட சீனி உற்பத்தி செய்யப்பட்டது. 1921 இல் உற்பத்தி செய்யப்பட்ட தொகையி லும் இது இருமடங்காகும். குறித்த அளவான சீனியே உற்பத்திசெய்யப்பட வேண்டுமென்று அ. ஐ. மாகாணங்களோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாகச் சற்றுக் குறைவான தொகையே உற்பத்தி செய்யப்பட்டது (1933 இல் 17 இலட்சம் தொன் உற்பத்தி செய்யப்பட்டது). சாறு பிழியப் பட்ட கரும்புச் சக்கை தாள் உற்பத்திக்கு உபயோகிக்கப்படுகின்றது. குடி வகையும் கரும்புச் சத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு உற் பத்தி செய்யப்படும் இறம்மைப்போன்ற குடிவகை பாசி எனப்படும். சீனி உற் பத்தியில் நேகிரொஸ் 59 சதவீதத்தையும், லூசோன் 33 சதவீதத்தையும் பான ஐந்து சதவீதத்தையும் உற்பத்திசெய்கின்றன. இவ்வுற்பத்திச் சதவீதம் ஆண்டுதோறும் பெரிதும் வேறுபடுகின்றது.
தென்னை-பிலிப்பைன் தீவுகளில் விளைவிக்கப்படும் பணப்பயிர்களுள் தென்னை முக்கியமானதாகும். 25 இலட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் தென்னை விளைவிக்கப்படுகின்றது. 40 இலட்சம் மக்கள் இத்துறையில் ஈடுபட் டுள்ளனர். 1935-39 காலத்தில் ஏற்றுமதியாற் பெறப்பட்ட மொத்த வருவாயில் 29 சதவீதம் தேங்காயெண்ணெய் மூலம் பெறப்பட்டது. 1962 ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மொத்தக் கொப்பாா உற்பக்தியில் முக்காற்

பிலிப்பைன் தீவுகள் 39
பங்கைப் பிலிப்பைன் உற்பத்திசெய்தது. அதன் ஏற்றுமதியில் 34 சதவீதம் தேங்காயாகும். பல்லாண்டு வாழும் பயிராதலால் தென்னை யுத்த காலத்தில் அதி கம் பாதிக்கப்படவில்லை. காய்களைப் பறிக்கும் ஒழுங்கினை மாற்றிக் கொள்வதால் தேவைக்கு ஏற்றமுறையில் உற்பத்தியைப் பெருக்குதலும் குறைத்தலும் இய லும், சிறு தோட்டக்காரர் பெரும்பாலும் தென்னையையே வளர்க்கின்றனர். காய்களைச் சேகரிப்பதும் விடுவதும் உற்பத்திக்குரிய துரண்டுதலைப் பொறுத்து நிகழும்.
1962 ஆம் ஆண்டில் 13 இலட்சம் தொன் கொப்பரா உற்பத்தி செய்யப்பட் டது; 545,000 தொன் தேங்காயெண்ணெய் (அல்லது அதற்குச் சமமான பொருள்) ஏற்றுமதி செய்யப்பட்டது. சவர்க்காாத் தொழிலுக்கு வேண்டிய துப்புரவாக்கிகளின் போட்டியிருந்தபோதும், பிலிப்பைன் தேங்காயெண்ணெய் ஏற்றுமதி வியாபாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளது.
தென்னைச் செய்கைக்கு உட்பட்ட நிலத்தில் 30 சதவீதமான நிலம் தென் அலுசோனில் காணப்படுகின்றது. இந்நிலம் ஈரமான கிழக்குப் பகுதியில் உள்ளத ஞல் தைபூன் குருவளியினுல் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. மிண்டானுவோவில் 25 சதவீதமான தென்னை நிலம் உண்டு. தென்னையை விளைவிக்கும் பெருந்தோட் டங்கள் உள்ள பொழுதும் சிறுதோட்டங்களிலிருந்தே பெருந்தொகையான தென்னைப் பொருள் பெறப்படுகின்றது. தென்னை நடப்பெற்று ஆறுவருடங்களின் பின்பு தொடர்ந்து பயன் தரும். சிறு தோட்டக்காரர் தேங்காய் விழுந்தபின்பு அதனை எடுப்பர் மாங்களிலிருந்து பறிப்பது குறைவாகும். தேங்காயில் 90 சத விதம் கொப்பாா உற்பத்திக்குச் செல்லுகின்றது. மூன்றிலொரு பங்கு வெயிலில் உலர்த்தப்படும். எஞ்சிய தொகை புகையூட்டி உலர்த்தப்படும். 1934-39 காலப் பகுதியில் 6 இலட்சம் தொன் எண்ணெய் வருடந்தோறும் ஏற்றுமதி செய்யப் பட்டது. 1956-60 காலப்பகுதியில் சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்ட தொகைக்கு இது சமமாகும். தீவுகளிலிருந்து கொப்பரா சேர்க்கப்பட்டு சிறு ஒடங்களில் மணிலாவுக்கும் செபூவுக்கும் கொண்டு செல்லப்படும். தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கும் ஏற்றுமதி வியாபாரத்திற்கும் மணிலா மையமாக விளங்குகின்றது. செபூவுக்குக் கொண்டுசெல்லப்படும் கொப்பரா நோடியாகப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அபக்காச் சணல்-வாழையைப்போன்று நார் பெறுவதற்காக விளைவிக்கப் படுவது அபக்காச் சணற் செடியாகும். மணிலாச் சணல் எனப்படும் நார் இதி லிருந்து பெறப்படும். இச் செடி 10-20 அடிவரை வளரும். தண்டுகளில் அல்லது அங்குரங்களில் உள்ள இலை மடல்களிலிருந்தே சணல் நார் பெறப்படும். ஒருவேரி விருந்து 12-20 அங்குரங்கள் முளைக்கும். பிலிப்பைன் தீவுகளில் இயல்பாக வள ரும் செடி இதுவாகும். உலக உற்பத்தியில் பெரும்பகுதி பிலிப்பைனிலிருந்து பெறப்படுகின்றது. பிலிப்பைனின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம் அபக்காச் சணலாகும்.
நல்ல வடிகால்களையுடைய வளமான மண் காணப்படும் அலைவடிவக்குன்று
நிலங்களில் அபக்காச் சணல் செழிப்பாக வளரும். சீரான மழைவீழ்ச்சி அதிக

Page 214
398 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
அளவில் தேவைப்படுகின்றது. வறண்ட பருவம் சணல் வளர்ச்சிக்குப் பாதக மாக உள்ளது. தென் லூசோனிலும் டாவவுவிலும் அபக்காச் சணல் வர்த்தகத் திற்காக விளைவிக்கப்படுகின்றது. சணல் விளைவிக்கப்படும் மொத்த நிலத்தில் 43 சதவீதம் தென் லூசோனில் காணப்படுகின்றது. இங்குக் கலப்பு வேளாண்மை முறையில் பயிர்விளைவிக்கப்படுகின்றது. டாவவுவில் சணல் தனிப்பட்டபயிராக விளைவிக்கப்படுகின்றது; இங்கு யப்பானியர் நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட பயிர்ச்செய்கையாக இது காணப்படுகின்றது. மொத்தமாக 5 இலட்சம் ஏக்கர் நிலத்தில் அபக்காச் சணல் விளைவிக்கப்படுகின்றது. 1963 ஆம் ஆண்டில் இந் நிலத்திலிருந்து 107,000 தொன் சணல் நார் பெறப்பட்டது. இத்தொகையில் அரைவாசி டாவவுவில் உற்பத்திசெய்யப்பட்டது. இங்கு சணற்செய்கையைப் பெருக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலைமடல்களிலிருந்து கத்தியினல் சீவி நார் பெறப்படுகின்றது. ஒருசெடி குறைந்தது 25 வருடத்திற் குப் பயன்தரவல்லது.
புகையிலை-புகையிலை ஸ்பானிய மதச் சங்கத்தினரால் மெச்சிக்கோவிலிருந்து கொண்டுவந்து பரப்பப்பட்டது. பிலிப்பைனின் காலநிலை பொருத்தமானதாகை யால் இது ஒரு வர்த்தகப் பயிராக இன்று விளங்குகின்றது. பிலிப்பைன் மக் கள் புகைபிடிக்கத் தொடங்கியதிலிருந்து இது முக்கியமான பயிராக அமைந்து விட்டது. 19 ஆம் நூற்முண்டில் புகையிலை வியாபாரம் அதிகம் வளர்ச்சியடைய வில்லை. இந்த நூற்றண்டில் அ. ஐ. மாகாணங்கள் பிலிப்பைன் சுருட்டுக்கு முக்கிய சந்தையாக அமைந்ததிலிருந்து புகையிலை வர்த்தகம் வளர்ச்சியடைந் தது. பிலிப்பைன் ஏற்றுமதியில் புகையிலை 5 சதவீதமாகும். புகையிலைப்பொருள் கள் ஸ்பெயின், சீன, யப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின் றன. காகாயான், செபூ பானை, நேகிரொஸ் என்பன புகையிலையை உற்பத்திசெய் யும் முக்கிய பகுதிகளாகும். மெடானுக்கு (சுமாத்திராவில்) அணித்தாகவுள்ள பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புகையிலைச் செடி பிலிப்பைனில் செழிப் பாக வளருகின்றது. வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் இச்செடி அதிக பய னைக் கொடுக்கின்றது. யுத்தகாலத்திற்கு முன் புகையிலை பயிரிடப்பட்ட நிலத் திலும் அரைமடங்கு அதிகமான நிலத்தில் இப்பொழுது புகையிலை விளைவிக்கப் படுகின்றது. 1962 ஆம் ஆண்டில் 230,000 ஏக்கர் நிலத்தில் புகையிலை விளைவிக் கப்பட்டது. இந்நிலத்திலிருந்து 60,000 தொன் புகையிலை உற்பத்தி செய்யப் பட்டது. W
பிலிப்பைன் தீவுகளில் வேறு சில பயிர்களும் பணவருவாய்க்காக விளைவிக்கப் படுகின்றன. இவற்றுள் கற்ருளே, பருத்தி, இலவு, கோப்பி, டெறிஸ் என்பன குறிப்பிடத்தக்கன. கற்முளை அபக்காச் சணலைப் போன்று நாருக்காக விளைவிக் கப்படும் பயிராகும். ஆரம்பத்தில் ஸ்பானியர் பருத்திப் பயிரில் நம்பிக்கை கொண்டு இருந்தனராயினும் அது இங்கு முக்கிய பயிராக அமையவில்லை. கடந்த நூற்றண்டின் பிற் பகுதியிற் கோப்பி முக்கிய பயிராகவிருந்தது. இது இப்பொழுது முக்கியமாகவில்லை. பூச்சி புழுக்களை அழிக்கும் மருந்து வகைக்காக டெறிஸ் உற்பத்தி செய்யப்படுகின்றது.

பிலிப்பைன் தீவுகள் 399
குடிப்பாம்பல் பிலிப்பைன் தீவுகளில் குடிப்பாம்பல் சீாற்றமுறையிற் காணப்படுகின்றது (படம் 110). பிலிப்பைனின் 280 இலட்சம் மக்களில் (1960 மதிப்பீடு) 27 சத வீதமானேர் செறிவானமுறையில் பயிர்கள் விளைவிக்கப்படும் பகுதியில் வாழ்
.. ... ـمس صدس................. -سس،... مسسيسمع. سميم سعيمه ممن
குடிபடர்த்தி 1989 '90 இற் குறைந்தது2
S-AO
A??-3cmり
2š3. لسعه
படம் 110.-பிலிப்பைன் தீவுகளில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தி
கின்றனர். இப்பகுதி லிங்காயன் குடாவிலிருந்து தெற்காக மணிலா, லகூன என் பவற்றுக்கூடாக பதங்கஸ் வரை பரந்துள்ளது. 33 சதவீதமானுேர் விசாயன் நிவுகளைச் சூழவுள்ள ஒடுக்கமான பகுதியில் நெருக்கமாக வாழுகின்றனர். இப் பகுதியில் எரிமல் மண்ணும் முருகைக் கற்களிலிருந்து சிதைந்து அமைந்த மண்

Page 215
400 தென்கிழக்கு ஆசிய நாடுகள்
ஆணும் உண்டு. இவை வளமான மண்வகையாகையால் இப்பகுதியில் தனிப்பட்ட முறையில் குடிப்பாம்பல் காணப்படுகின்றது. செபூ (13 இலட்சம்), பார்கசினன் (11 இலட்சம்) ஆகியவற்றில் குடியடர்த்தி அதிகமாகும். பாலாவான் (162,000) மிண்டோரோ (3,13,000), மிண்டானவோ என்பவற்றில் குடியடர்த்தி குறை வாகவுளது. வட மிண்டானுவோக் கரையில் இடையிடையே குடியடர்த்திமிக்க பகுதிகள் உண்டு.
கரைசாந்த சமவெளிப் பகுதியில் மக்கள் அடத்தியாகப் பரந்துள்ளனர். உள்ளாகக் காணப்படும் பகுதி காடடர்ந்த நிலமாகும். இங்கு நாகரிகமற்ற ஆதி வாசிகள் கூட்டங்கூட்டமாக அலேந்து திரிவர். சில சமயங்களில் முன்னுேடிகள் சிலர் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதுண்டு. பிலிப்பைன் தீவுகளில் விளைநிலத்திற்குரிய சராசரிக் குடியடர்த்தி மிகவதிகமாகும்; சதுர மைல் பரப் பில் 1,100 பேருக்குமதிகமானுேர் வாழுகின்றனர் சதுர மைலுக்குரிய பொதுச் சராசரியான 215 பேரோடு ஒப்புநோக்கும் பொழுது இதன் வேறுபாட்டை உணர்ந்து கொள்ளலாம். நகரவாக்கம் பெற்ற பகுதிகளைத் தவிர்த்துப் பார்க் கும் பொழுது கிராமஞ் சார்ந்த இலோக்கொஸ், செபூப் பகுதிகளில் சதுரமைல் விளைநிலப்பரப்பில் 1,950 பேருக்குமதிகமானேர் வாழுகின்றனர். எனவே ଗଅଁଶr நிலத்திற்குரிய அடர்த்தி தென் கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளிற்போன்று இங்கும் அதிகமாகும்.
குடியடர்த்தி கூடிய பகுதிகளிலிருந்து சிறிதளவுக்கே மக்கள் இடம்பெயர்ந்து அடர்த்தி குறைவான தீவுகளில் குடியேறுகின்றனர். அரசாங்க ஆதரவு கொடுக் கப்பட்டும் கிழக்கு இந்தியத் தீவுகளிற்போன்று இங்கும் நிலையான பயன் அதி கம் ஏற்படவில்லை.
பிலிப்பைனில் இருவகையான இடப்பெயர்வு உண்டு :
1. தீவுகளிடையில் நடைபெறும் பருவகாலப் பெயர்வு. இடம்பெயர்வோர் குறித்த பருவத்தின் பின்பு மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பி விடுவர். பிலிப்பைன் தீவுகள் வடக்குத் தெற்காக அதிக அாரம் பரந் திருப்பதனுல் அறுவடைக் காலங்கள் வேறுபடுகின்றன. பணஞ் சேகரித் தற்காகத் தொழில்புரியும் வேலையாட்கள் பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து செல்வர். இந்த இடப்பெயர்வு பின்வரும் முறையில் காணப்படுகின்றது : (அ) மேற்கு அலுசேரன் பகுதியிலுள்ள இலோகொஸிலிருந்து காகா யான் பள்ளத்தாக்கிலுள்ள புகையிலைத் தோட்டங்களை நோக்கி நடைபெறும் பெயர்வு. (ஆ) இலோக்கொஸ், லா யூனியன் ஆகியவற்றிலிருந்து மத்திய அலுசோ னிலுள்ள நெல் நிலங்களை நோக்கி நடைபெறும் பெயர்வும் பாம் பான்கா, லகூன என்பனவற்றிலிலுள்ள கரும்புத் தோட்டங்களை நோக்கி நடைபெறும் பெயர்வும்.

பிலிப்பைன் தீவுகள் 40
(இ) ஈலொ ஈலோ, ஆந்திகே, செபூ ஆகியவற்றிலிருந்து மேற்கு நேகிரொஸிலுள்ள கரும்புத் தோட்டங்களை நோக்கி நடை பெறும் பெயர்வு.
(ஈ) செபூ, பொகொல் ஆகியவற்றிலிருந்து மிண்டாஞவோவிலுள்ள தென்னை, அபக்காத் தோட்டங்களை நோக்கி நடைபெறும் பெயர்வு.
(உ) காபிஸ், பதங்கஸ், பாம்பான்கா ஆகியவற்றிலிருந்து மிண்டோ ரோவிலுள்ள கரும்புத் ேேதாட்டங்களை நோக்கி நடைபெறும் பெயர்வு.
இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர் அவ்வப் பகுதிகளில் தமது கிராமங் களில் மேற்கொண்ட தொழில்களிலே ஈடுபடுகின்றனர். ஏறத்தாழ ஏழரை இலட் சம் தொழிலாளர் பருவகாலங்களில் தொழில் காரணமாக இடம்பெயருகின்ற னர். பயிர்களின் சந்தைப் பெறுமதியையும் செழிப்பையும் பொறுத்தே இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் தொகையும் செல்லும் திசைகளும் அமைகின்றன.
2. தூரப் பகுதிகளை நோக்கி நடைபெறும் பெயர்வு. பிலிப்பைன் மக்கள் அ. ஐ. மாகாணக் குடிகளாகவிருந்த காலத்தில் பொருந்தொகையான மக்கள் அ. ஐ. மாகாணங்களின் மேற்குப் பகுதிகள5க்க இடம் பெயர்ந்து சென்று நீண்ட காலம் வாழ்ந்தனர். ஆனல் இவர்களது (கடும்பக்கினர் தமக சொந்த நாட்டிலே வாம் ங் கனர். இடம் பெயர்ந்து சென்முேர் போதிய அளவில் பணஞ் சேகரித்ததும் தமது நாட்டுக்கக் கிாம்பிவந்த விடுவர். அ. ஐ. மாகாணங்களின் மேற் குப் பகுதியில் தொழில்புரிந்த கீழைத்தேச மக்களுள் பொம்பான்மை யோர் பிலிப்பைன் மக்களாவர். 1934-38 காலப்பகுதியில் அ. ஐ. மாகாணங்களிலிருந்து பிலிப்பைன் மக்கள் பெருந்தொகையாகத் தமது நாட்டுக்கத் திரும்பிச் சென்றனர். அமெரிக்க நாட்டின் நிலைமைகள் சாத கமாக இல்லாமையால் வாடந்தோறும் 17,600 பேர் தாயகம் கிாம்பி னர். சிறிது காலம் ஹாவாயின் கரும்புக் தோட்டங்களில் வேலை செய்வ தற்காகவும் பிலிப்பைன் தொழிலாளர் இடம்பெயர்ந்து சென்றதுண்டு. ஒப்பங்கக்கின் மூலம் இவர்கள் அங்குச் சென்றனர். 1932 ஆம் ஆண் டில் இவ்வாறு தொழிலாளரைப் பெறும் முறை கைவிடப்பட்டது. எனி ம்ை பிலிப்பைன் மக்கள் பசிபிக்கைக் கடந்து கிழக்கிலுள்ள நாடுக ளுக்குச் சென்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து சென்றதன் காரணமாக அவர்கள் கொNல்புரிந்த பகதிகளில் சிறு தொகையான பிலிப்பைன் மக்கள் நிரந்காமாகவும் கடியேறியுள்ளனர். ஹாவாய் பொரும்பாலும் பிலிப்பைன் நாட்டை ஒத்திருந்ததல்ை பிலிப்பைன் மக்கள் அங்குக் குடியேறியுள்ளனர். 1950 ஆம் ஆண்டின் பின்பு பிலிப்பைன் மக்கள் பொநம்பாலும் தாயகக்கிற்கத் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். வருடந்தோறும் 3,000 பேர் இவ்வாறு திரும்புகின்றனர். 1955 ஆம் ஆண்

Page 216
402 தென் கிழக்கு ஆசிய நாடுகள்
டில் ஏறத்தாழ 2,000 பேர் இடம்பெயர்ந்து அ. ஐ. மாகாணங்களி லும், 630 பேர் இடம்பெயர்ந்து யப்பானிலும், 280 பேர் இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவிலும் நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். பிலிப்பைன் தீவுகளில் மக்கள் படிப்படியாகப் பட்டினங்களில் வந்து குடியேறு கின்றனர். எனினும் பெரும்பான்மையோர் இன்றும் கிராமவாசிகளாகவே காணப்படுகின்றனர். 1960 ஆம் ஆண்டில் மணிலா-கேசோன் நகரப் பகுதியில் 22 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர்.
மக்கட்பிரிவுகள்-பிலிப்பைன் தீவுகளுக்கு அண்மையாகவுள்ள பகுதிகளிற் போன்று, இத்தீவுகளிலும் பல்வேறு இனவகைகளிலிருந்து தோன்றிய மக்கள் வாழுகின்றனர் (படம்-118). முதலில் பிலிப்பைன் தீவுகளில் மலாய் வகையி னர் வாழ்ந்தனர். 1292-1478 காலப் பகுதியில் யாவாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தோர் இத்தீவுகளிற் குடியேறினர். தீவுகளின் தென்பகுதியிலே இவர்கள் தாக்கம் அதிகமாக ஏற்பட்டது. மலாய் இனத்தவர் கடல்வழியாக வந்தே குடி யேறினர். ஆதிவாசிகளான நிகிரீற்ருே வகையினர் உட்பகுதிகளுக்குத் துரத் தப்பட்டனர். வடகிழக்கு லூசோன், சியராமட்றே, பானையின் உட்பகுதி, நேகி ரொஸ், மிண்டானுவோவின் குரிகாவோக் குடாநாட்டுப் பகுதி முதலியவற்றில் நிகிரீற்றே வகையினர் இன்றும் காணப்படுகின்றனர். இந்து மதத்தவரின் தாக் கம் பிலிப்பைன் தீவுகளில் ஏற்படவில்லை. ஆனல் இஸ்லாம் இத்தீவுகளிலும் பா வியது. மாக்கசர், மொலக்காத் தீவுகள் என்பவற்றிலிருந்து வடக்காகச் செல் லூம் வியாபாரப் பாதைகள் மூலமாக (படம்-114) இஸ்லாம் பரவியது. இத னல் தென் மேற்கு மிண்டானுவோப் பகுதியிலும் தென் பாலாவான் பகுதியிலு முள்ள மலாய் இனத்தவர் மதம்மாறினர். தென் பகுதியிலுள்ள மக்களுட் பெரும்பாலோர் போணியோவிலுள்ளவர்களைப் போன்று ஆன்மவாதக் கொள்கை உடையவர்களாகக் காணப்பட்டனர். மிண்டானுவோவின் உட்பகுதி, பாலாவான், மிண்டோரோ, மத்திய கோடிலெரா மலைப்பகுதி என்பனவற்றில் இத்தகைய மக்கள் இன்றும் வாழுகின்றனர்.
1565 ஆம் ஆண்டளவில் ஸ்பானியரின் தாக்கம் இங்கு அதிகமாகவிருந்தது. குடியேற்ற நாட்டாட்சி முறையில் ஸ்பானியர் மத்திய அமெரிக்காவில் கையாண்ட சில கொள்கைகளை இங்கும் பின்பற்றினர். ஸ்பானியரின் தாக்கம் மணிலாவை மையமாகக்கொண்டிருந்தது. கிறிஸ்தவ சமயம், ஸ்பானிய பண் பாடு என்பன இங்கிருந்தே பிறபகுதிகளுக்குப் பரப்பப்பட்டன. தென்பகுதி யிலே இவை அதிகமாகப் பரவின. விசாயன் தீவுகளில் இவற்றின் தாக்கம் அதிகமாகவுள்ளது. மிண்டானுவோவில் இத்தாக்கம் ஏற்படவில்லை. இதனை ஸ்பானியர் தமது முழு ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரவில்லை. மிண்டான வோவில் இஸ்லாமியப் பண்பாடே நிலைபெற்றிருந்தது. ஸ்பானியர் "மோரோக் களோடு” தொடர்பை வளர்க்காது புத்தியாகக் கைவிட்டனர். பிலிப்பைன் மக்களில் 80 சதவீதமானேர் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டதனுல் ஸ்பானியரின் பண்பாட்டுச் செல்வாக்கு மேலும் பரவலாய்ப்பேற்பட்டது. 4 சக

பிலிப்பைன் தீவுகள் (108
விதத்தினரே முஸ்லிம்கள். ஸ்பானியர் கலப்பு மணமும் செய்துகொண்டனர். கல்வியிலும் அபிவிருத்தி ஏற்பட்டது. ஸ்பானியரின் செல்வாக்கு இவ்வாறு பல வழிகளிலும் பெருகியது. எனினும் செல்வாக்குடைய ஸ்பானியக் குடியேற்ற ஆட்சியாளரின் தொகை விரைவாகக் குறைந்துவருகின்றது. இடப்பெயர், ஆட் பெயர் என்பன தென்பகுதியில் மலாய்த் தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. வடபகுதியில் இவை பெரும்பாலும் ஸ்பானியத் தொடர்புடையன
élfi" | 2-3f3f3ő”,
பிலிப்பைன் மக்களோடு ஏற்பட்ட கலப்பு ஸ்பானியரின் கலப்பு மட்டுமன்று. ஸ்பானியர் இங்கு வந்தபொழுது வட தீவுகளில் சீனர் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தனர். 17 ஆம் நூற்ருரண்டில் ஸ்பானியரை எதிர்த்து இருதடவை போராடினர். சீனர் தொடர்ந்து வியாபாரத்திலீடுபட்டுவந்தனர்; தரகர்களாக வும் அவர்கள் தொழில் புரிந்தனர். பிலிப்பைன் மக்கள் அடுத்தடுத்து இரு தடவை குடியேற்ற நாட்டாட்சிக்கு உட்பட்ட பொழுதும் சீனர் மேற்குறித்த துறைகளில் தொடர்ந்து தொழில்புரிந்துவந்தனர். பிலிப்பைன் மக்கள் வியா பாரத்துறையில் ஈடுபடவில்லை. இந்த நிலைமைகளினுல் அாசோனிலும் பிற பட் டினங்களிலும் சீனர் பிலிப்பைன் மக்களை மணஞ்செய்துள்ளனர். பிலிப்பை னின் பொதுவிவகாரங்களில் ஈடுபட்டுள்ள முக்கியமான சிலரிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். பிலிப்பைன் மக்கள் மலாயர், ஸ்பானியர், சீனர் ஆகி யோரோடு கலந்துவிட்டதனுல் இவர்களைத் திட்டமான முறையிற் பிரித்தழி வது கடினமாகும். இதனுல் பிலிப்பைன் நாட்டைக் கலப்பின மக்களைக் கொண்ட நாடு எனக் குறிப்பிடுவதால் பிலிப்பைன் தீவுகள் தென்கிழக்கு ஆசி யாவிலும் பார்க்க மத்திய அமெரிக்காவை ஒத்துள்ளன எனக் கூறலாம். ஆசி யாவில் மக்கட் கலப்பு அதிக அளவுக்கு ஏற்பட்ட நாடு பிலிப்பைன் ஆகும்.
மக்கட் கலப்பைப் போன்று மொழிகளிலும் பல சிக்கல்கள் காணப்படுகின் றன. 65 மொழிகளும் பேச்சுமொழிகளும் ஆட்சியினரால் அங்கீகரிக்கப்பட்டுள் ளன. குடியடர்த்தி கூடிய மத்திய தீவுகளிலுள்ளோர் விசாயன் மொழியைப் பேசுகின்றனர். பிலிப்பைனில் தனிப்பட்ட கூட்டமாகப் பெருந்தொகையினர் (44 சத விதம்) பேசும் மொழி இதுவாகும். இம்மொழியில் செபூ, பானைத் தீவுகளுக்குரிய சிறு மாற்றங்களும் காணப்படுகின்றன. மிண்டானுவோவிலுள்ள பயிர்நிலத்தில் செபூ மக்கள் வந்து குடியேறியிருத்தலினுல் அவர்களும் இம் மொழியைப் பேசுவர். மணிலாவிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் நெருக்க மாக வாழும் மக்கள் தகாலக் என்னும் மொழியைப் பேசுவர். 25 சதவீதமான பிலிப்பைன் மக்கள் இம்மொழியைப்பேசுவர். இதனிலும் சற்றுக் கூடிய தொகை பினர் (27 சதவீதமானேர்) ஆங்கிலமொழியைப் பேசுவர். 15 சதவீதத்தினர் இலோக்கோ மொழியைப் பேசுவர்; 8 சதவீதத்தினர் பிகோல் மொழியைப் பேசுவர். அடுத்து ஸ்பானிய மொழி முக்கியமாகவுள்ளது. இப்பொழுது 2.5 சத விதமான பிலிப்பைன் மக்கள் இம்மொழியைப் பேசுவர். காலப்போக்கில் இம் மொழி அழிந்துவிடலாம் எனக் கருதப்படுகின்றது. ஒரு சதவீதத்திலும் குறைந்த தொகையினரே சீன மொழியைப் பேசுகின்றனர். அண்மைக் காலக்

Page 217
404 தென் கிழக்கு ஆசிய நாடுகள்
தில் மணிலாவில் வந்து குடியேறியோரே சீனமொழியைப் பேசுகின்றனர். பிலிப் பைன் தீவுகளிலுள்ள ஏனைய வியாபார நிலையங்களிலும் சீன மொழி பயன் படுத்தப்படுகின்றது.
இந்த நூற்ருண்டிலிருந்தே ஆங்கில மொழி உபயோகத்திற்கு வந்தது. அ. ஐ. மாகாணங்களின் குடியேற்றவாட்சி நிலைமை காரணமாகவே ஆங்கில மொழி இடம்பெற்றது. 1964 ஆம் ஆண்டோடு அமெரிக்க நாட்டாதிக்கம் முடிவடைந்தது. ஸ்பானியர் முன்பு கைக்கொண்ட கொள்கையினடிப்படை யில் அமெரிக்கர் தமது மொழியையே கல்வி மொழியாக உபயோகித்தனர். இத னல் நகரப்பகுதிகளில் ஆங்கில மொழி பரவியது. கிராமங்களில் வாழ்ந்தோர் தமது சொந்த மொழிகளை உபயோகித்து வந்தனர். பிலிப்பைன் மொழிகளுட் பல உரோம எழுத்தால் எழுதப்படுகின்றன. தென் பகுதியில் வாழும் மக்கள் அரபுச் சாயலுடைய எழுத்தைப் பயன்படுத்துகின்றனர். சாதாரண மலாய் மொழி அல்லது யாவா மொழி இங்கு உபயோகிக்கப்படுவதில்லை. தென் பகுதி யில் வழங்கும் மொழிகள் இன்றைய மலாய், யாவா மொழிகளிலும் பார்க்க வட போணியோ மொழியோடு அதிக தொடர்புடையனவெனக் கூறலாம்.
பிறநாடுகளின் தாக்கம்
பிறநாடுகளின் தாக்கத்தினைப் பொறுத்தவரையில் தென்கிழக்கு ஆசிய நாடு களுள் பிலிப்பைன் வேறுபட்டதாகவுள்ளது. பசிபிக்குக் கூடாக நீண்ட காலத் தொடர்புடைய நாடாகப் பிலிப்பைன் விளங்குகின்றது. இதற்கு அண்மையி லுள்ள நாடுகள் இந்தியா, சீன, ஐரோப்பா ஆகியவற்றேடு தொடர்புபட்டன வாகக் காணப்படுகின்றன. பிலிப்பைன் தீவுகள் கடந்த மூன்று நூற்முண்டுக் காலமாக மத்திய அமெரிக்காவோடு தொடர்புகொண்டிருந்தன. ஸ்பானியர் இப் பகுதிகளிருந்தே பிலிப்பைனுக்கு வந்தனர். இதன்காரணமாகப் பொருளாதார, அரசியல் தொடர்புகளும் சமூக மதத்தொடர்புகளும் இப்பகுதியிலிருந்தே ஏற் பட்டன. அமெரிக்க ஐக்கிய மாகாணத் தொடர்பே பசிபிக்கூடாக ஏற்பட்ட இறுதித் தொடர்பாகும். பொருளாதார சமூகத் துறைகளிலல்லாது இறுதியாக ஏற்பட்ட தொடர்பு அத்துணை முக்கியமானதென்று கூறுவதற்கில்லை.
பிலிப்பைன் தீவுகளிலுள்ள விவசாயிகளுள் பெருந்தொகையினர் நிலமற்ற வராகவிரு அகு ஸ்பானியாது குடியேற்றவாட்சித் தொடர்பே காரணமாகும். தென்கிழc, ஆசியாவின் பிறபகுதிகளில் இந்த அளவுக்கு விவசாயிகள் நில மற்றவராகவில்லை. 1948 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட விரிவான கணிப்பின்படி விவசாயத்திலீடுபட்டவர்களுள் அரைவாசிக்குக் குறைந்தோரே விளைநிலங் களைச் சொந்தமாகக் கொண்டிருந்தனர். 16 சதவீதமானேர் தாம் பயிர் விளைவித்த நிலத்தில் ஒருபகுதியை மட்டும் சொந்தமாகக் கொண்டிருந்தனர். 35 சதவீதமானேர் பங்குக் குத்தகைக்கு நிலத்தை விளைவித்தனர். அமெரிக்க ஐக்கிய மாகாண ஆட்சியாளர் மேற்கொண்ட சீரமைப்பு நிலைமைகளின் பின்பே
மேற்குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டன. ஸ்பானிய முதலாளிகள்

பிலிப்பைன் தீவுகள் 405
கிராமப் பகுதிகளில் ஏற்படுத்திய நிலைமைகளினல் விவசாயிகளின் பொரு ளாதாரம் அதிக அளவுக்கு நலிவுற்றிருந்தது. சமூகத்துறையிலும் அதிக தீங்கு இதனல் ஏற்பட்டது.
ஸ்பானியர் தாக்கம்-ஸ்பானியர் வருகையினுல் நிலவாட்சி முறைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டது. ஸ்பெயினிலும் அமெரிக்கக் குடியேற்றவாட்சிப் பகுதிகளி அலும் ஏற்பட்ட நிலப்பிரச்சினைகள் பிலிப்பைனிலும் ஏற்பட்டன. ஸ்பானியர் வரு கைக்கு முன்பு இத்தீவுகளில் வாழ்ந்தோர் நிலவாட்சி முறைகளைக் கூட்டாகக் கொண்டிருந்தனர். ஒன்றுசேர்ந்து உழைப்பது பொதுவான ஒரு ப்ண்பாகும். மத்திய கோட்டைச் சார்ந்த ஆசியப் பகுதியில் இத்தகைய நிலவாட்சிமுறை கள் நீடியகாலமாக நிலவிவந்தன. கூட்டாக மக்கள் சேர்ந்து நிலங்களை ஆட்சி செய்தும் தொழில் புரிந்தும் வந்தபொழுதும் அவர்களுள் ஒருவர் பொறுப் புடையவராகவிருந்தார். குறித்த கூட்டத்தவருக்கு அவர் பொறுப்பாகவிருந் தார். கிராமத்திலுள்ள நிலங்கள் அவருக்கு மட்டும் சொந்தமாகவிருக்கவில்லை. ஸ்பானியர் அங்கு நிலவிய இந்த நிலைமையைப் பூரணமாக விளங்கிக் கொள்ள வில்லை. பொறுப்பாகவிருந்தவரை ஸ்பானியர் நிலங்களைச் சொந்தமாகக்கொண் டவர் எனக் கருதினர். கிராமங்கள்தோறும் காணப்பட்ட குறித்த கூட்டத்தவ ருக்குப் பொறுப்பாகவிருந்தோரை அவ்வக்கிராம நிலங்களை உரிமையாகவுடை யோர் என ஸ்பானியர் கருதியமையால் அவர்களுக்கு மேலும் நிலவாட்சி உரிமை களை வழங்கினர். பிரதி உபகாரமாக வரியைப் பெறும் நோக்கத்தோடு இந்த உரிமைகள் வழங்கப்பட்டன. பிலிப்பைன் தீவுகளில் நிலவிய இப்பழைய நில வாட்சி முறையோடு ஸ்பானியரது குடியேற்றவாட்சியோடு தொடர்புகைய முறைகளும் புகுத்தப்பட்டன. நிலமானிய உரிமையில் சொத்தை உடையவர் களுக்கும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்டு அவற்றில் வாழ்வோருக்கும் நிலங்கள் வழங்கப்பட்டன. குடியேற்றவாட்சி ஆரம்பிக்கப்பட்ட தொடக்கநிலை யில் குடித்தொகை குறைவாகும். (1586 ஆம் ஆண்டில் பானையில் 90,000 பேருக் குக் குறைந்த தொகையினரே காணப்பட்டனர். 1961 ஆம் ஆண்டில் இத் தொகை 13 இலட்சத்திற்குமதிகமாகக் காணப்பட்டது.) ஸ்பானியரைப் பிலிப் பைன் தீவுகளிற் குடியேறச் செய்யும் நோக்கத்தோடு அவர்களுக்கு நிலம் தொகையாக வழங்கப்பட்டது. ஸ்பானியருக்குத் துணையாகவிருந்தோருக்கும் நிலம் வழங்கப்பட்டது. (இவ்வகையில் என்கோமியன்டா என வழங்கிற்று). புதிதாக விருத்திசெய்யப்பட்ட பகுதிகளில் இவ்வாறு நிலம் வழங்குவது எளிதாகவிருந்தது.
குறித்த பகுதிகளில் இங்ஙனம் முதன்மை பெற்முேர் நிலப்பிரபுக்களாக அமைந்தனர். சில சமயங்களில் இவர்கள் பிறநாட்டவராகவுமிருந்தனர். இந்த முறையில் நிலங்கள் எல்லாம் தனிப்பட்ட சிலருக்குச் சொந்தமாயின. மற்றைய வர்கள் எல்லோரும் நில உரிமையை இழந்தனர். நில உரிமையை இழந்தோர் நிலமற்ற தொழிலாளராக அமைந்தனர். நிலவாட்சியைப் பொறுத்தவரையில் ஏற்படுத்தப்பட்ட இந்த முறை ஸ்பெயினில் ஏலவே மேற்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். ஸ்பெயினில் பொதுவான மந்தை மேய்த்தல் நிலங்கள் பயிர்ச்

Page 218
406 தென் கிழக்கு ஆசிய நாடுகள்
செய்கைக்காக அடைத்து ஒதுக்கப்பட்டதோடு இம்முறை நடைமுறைக்கு வந் தது. இந்த முறையை ஸ்பானியர் பிலிப்பைன் தீவுகளில் ஏற்படுத்தியதனுல் வாழ்க்கைப் பயிர்ச்செய்கையிலிடுபட்ட விவசாயிகள் நிறைந்த நாட்டில் முதன் முதலாக நிலமற்ற ஒரு தொழிலாளர் கூட்டத்தினர் உண்டாயினர். நிலத்தை உரிமையாக உடையோர் நேரடியாக ஈடுபடாத லற்றிவுண்டியா எனப்படும் பெருந்தோட்டங்கள் படிப்படியாக இங்கு இடம்பெற்றது. கிராமவாசிகள் குத்தகைக்கு நிலஞ் செய்வோராகவும் கூலிக்கு வேலை செய்பவராகவும் மாறினர். இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்பு இவர்கள் நிலத்தில் பொது உரிமையுடைய வராகவிருந்தனர். உணவு உற்பத்தியில் அவர்களுக்குச் சமமான பங்கு இருந் தது. ஸ்பானியரால் ஏற்படுத்தப்பட்ட நிலைமைகளினல் இவர்கள் இந்த உரிமையை இழந்து நிலமற்ற தொழிலாளராயினர். ஸ்பானியரது முறை நிரந் தாமாக அமைவதற்கு ஸ்பானியர் இப்பகுதியிற் கொண்டிருந்த உறுதியான ஆட்சியே காரணமாகும். இன்றும் மணிலாவைச் சூழவுள்ள பகுதியிலும் பானை யிலும் பெருந்தொகையானேர் நிலமற்ற விவசாயிகளாக உள்ளனர். ஸ்பானிய ரது நிலவாட்சி முறை இடம்பெருத பகுதிகளில் குத்தகை நிலம் மிகவும் குறை வாகும். மிண்டானவோ, பாலாவான், வட அலுசோன் என்பனவற்றை உதாரண மாகக் குறிப்பிடலாம். சொத்தைப் படிப்படியாகப் பெருப்பித்துக் கொள்வதில் சமய தாபனங்களும் அதிக பங்கு கொண்டிருந்தன. இவை பெருந்தொகையான அளவில் சொத்தைத் திரட்டிக்கொண்டன. புதிதாக அமைந்த முறையில் பணம் முக்கியமாகவிருந்ததனுல் பலர் தமது சொத்தைப் பணத்திற்கு ஈடுவைத்துப் பின்பு இழந்தனர்.
அமெரிக்க ஐக்கிய மாகாண ஆட்சிக்காலத்திலும் நிலப்பிரபுக்களின் செல் வாக்கு நிலைபெற்றிருந்தது. இக்காலத்திலும் அவர்கள் அதிக பயனைப்பெற்ற னர். பிலிப்பைன் நாட்டில் அண்மையாகவுள்ள நாடுகளில் இல்லாத அளவுக்கு நிலம் ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையாக அமைந்திருந்தது. நிலவாட்சி முறை யில் ஏற்பட்ட மாற்றத்தினுல் இங்குக் கல்வித்துறையில் அதிக முன்னேற்றம் அடைந்த நிலக்கிழார் கூட்டம் ஒன்று அமைந்தது. அரசியலில் பங்கு கொள்ள வும் திருத்தங்களை ஏற்படுத்தவும் இவர்கள் போராடினர். அதே வேளையில் கல்வி யறிவற்ற நிலமற்ற தொழிலாளர் கூட்டம் ஒன்றும் இங்குக் காணப்பட்டது. எப் பகுதியில் கூலி அதிகம் கிடைக்கின்றதோ அப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல் அலும் விருப்புடையராக இவர்களிருந்தனர். ஆனல் இவர்கள் வாழும் பகுதிகளி லூள்ள நிலக்கிழார்களிடம் கடன்பெற்றிருந்ததனல் அவ்வாறு ஒரு பகுதியி லிருந்து வேருெரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்வதும் கடினமாகவிருந்தது. இங்குள்ள நெல் விளையும் நிலங்களில் நடைமுறையிலுள்ள குத்தகை குடி வாரக் குத்தகையாகும் (கசம என இது இங்கு வழங்கும்). இம்முறையின்படி குத்தகைக்காரர் விளைவில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வர். பெறுகின்ற பங்கு, குத்தகைக்காரர் விதை நெல்லும் உழவுமாடும் கொடுக்கப் பெற்றுப் பயிர்ச் செய்கைத் தொழிலை மட்டும் செய்கின்றரோ, அன்றி விதைநெல், உழவுமாடு என்பனவற்றுக்கும் தாமே பொறுப்பேற்றுச் செய்கின்றரோ என்பதைப்

பிலிப்பைன் தீவுகள் 407
பொறுத்து வேறுபடும். தொழிலை மட்டும் செய்யும் குத்தகைக்காரருக்கு விதை நெல், உழவு மாடு ஆகியவற்றை நிலச் சொந்தக்காரர் கொடுத்து உதவுவார். பின்பு நெல் அறுவடை செய்ததும் விதை நெல், மாடு ஆகியவற்றிற்கு அசை வாசிச் செலவைக் கழித்துக்கொண்டு எஞ்சிய தொகையைச் சரி பங்காகப் பிரித்து, எடுத்துக்கொள்வர். குத்தகைக்காரர் தாமே விதை நெல், மாடு ஆகிய வற்றுக்கு ஏற்பாடு செய்யுமிடத்து மொத்த விளைவில் மூன்றிலிரண்டு பங்கைப் பெறுவர். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது இக்குத்தகை முறை குத்தகைக்காரருக்குப் பயனுடையதுபோன்று காணப்படும். ஆனல் உண்மை அவ்வாறில்லை. வானிலைத் தன்மைகள் முதலியன பிழைக்குங் காலங்களில் குத்தகைக்காரர் மிகவும் குறைந்த வருவாயைப் பெறுவர். இஃது அவர்களின் குடும்பத் தேவைக்கே போதியதாயமையாது. இதனேடு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. எனவே இத்தகைய நிலைமை ஏற்படும்பொழுது அவர்கள் கடன்பட்டு வாழவேண்டியவராகின்றனர். விளைவு எவ்வாருயிருப்பினும் நிலச் சொந்தக்காரர் தமக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வர். போதிய விளைவு இல் லாத வருடங்களில் இத்தொகை அவர்களுக்கு அதிக பண வருவாயைப் பெற உதவும், குத்தகை முறை பொதுவாகப் பொருத்தமான முறைபோன்று காணப் படினும் காலப்போக்கில் இம்முறைமூலம் குத்தகைக்காரர் அதிக கடனளிகளாக மாறவேண்டிய நிலையேற்படுகின்றது. பயிர்ச்செய்கையால் வரும் நட்டங்களை அவர்கள் பொறுக்கவேண்டியிருப்பதே இதற்குக் காரணமாகும். இன்று ஏற்பட் டுள்ள வேறுமொரு வெறுக்கத்தக்க நிலைமை குத்தகைக்கு நிலத்தைப் பெற்றேர் மீண்டும் அந்நிலத்தைப் பிரித்துப் பலருக்குக் குத்தகைக்கு விடுவதாகும். நிலக் கிழார்கள் தமக்குச் சொந்தமான பெருநிலங்களைச் சிலருக்குப் பணத்திற்குக் குத்தகைக்குக் கொடுப்பர். அவர்கள் அந்நிலங்களைப் பிரித்துப் பல சிறிய குத்த கைக் காாருக்குப் பங்குவிளைவு அடிப்படையில் குத்தகைக்குக்கொடுப்பர். சிறு குத்தகைக்காரர் இதனுல் அதிக இன்னலை அனுபவிக்கின்றனர். குடித்தொகை பெருகப் பெருக நெல் விளைவிக்கப்படும் நிலம் குறைகின்றது. இந்த நிலைமை யினல் சிறு குத்தகைக்காரரின் நிலை மேலும் பாதிக்கப்பட்டுவருகின்றது. பெரு நிலக்கிழார்களுக்கு இந்த முறை அதிக பயனைக் கொடுக்கக்கூடியதாயுள்ளது. இதனுல் அவர்களுக்கு ஏற்படும் சிரமமும் குறைவாகும். 1936 ஆம் ஆண்டின் பின்பு பெரிய நிலங்களைப் பறிமுதல் செய்தல் பிலிப்பைன் அரசியற் சட்டத்தில் ஒரு அமிசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெருந்தோட்டங்களைப் புதிதாக அமைப்பதும் சட்டமுறையாகத் தடைசெய்யப்பட்டது. அ. ஐ. மாகாணங்களின் பெருந்தோட்ட முயற்சிகளைத் தடைசெய்து தென் கிழக்கு ஆசியாவின் பிற பகு திகளுக்குத் திருப்புவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேமா, தைலாந்து ஆகிய நாடுகளிற்போன்று குத்தகைக்காசர் இங்கு அதிக கட ளிைகளாகக் காணப்படுகின்றனர். பிலிப்பைன் நாட்டின் அரசியலில் நிலப்பிரச் சினை எப்பொழுதும் ஒரு முக்கிய அமிசமாக இருந்து வந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் பிலிப்பைன் ஸ்பானிய நிலவாட்சி முறைகளுக் குட்பட்ட வேறுபட்ட தன்மையையுடைய நாடாக விளங்குகின்றது. கரை

Page 219
408 தென் கிழக்கு ஆசிய நாடுகள்
சார்ந்த பகுதிகளில் வாழும் பிலிப்பைன் மக்கள் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாலமரங்களடர்ந்த பகுதியின் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர். இதனை மிக உற்சாகத்தோடு அழகாக நடாத்தி வருகின்றனர். எனினும் இவர்களது இசை ஸ்பானிய கீதர் கருவியை அடிப்படையாகக் கொண்டது. இந்திய முறை யைத் தழுவிய துளைக்கருவி தோற்கருவிகளையோ காட்டு மக்களின் கருவிக ளையோ இவர்கள் தழுவிக்கொள்ளவில்லை.
பிலிப்பைன் தீவுகளுள் மிண்டானுவோவிலேயே வெளியான நிலங்கள் காணப் படுகின்றன. லூசோன், விசாயன் தீவுகளில் மிகையாகக் காணப்படும் விவசாயி களுக்கு இந்நிலங்கள் பயன்படக்கூடியன. டாவவுவில் குடியேற்றம் ஓரளவுக்கு ஏற்பட்டுள்ள பொழுதும் பல வருடங்களாக வெளியாகக் கிடக்கும் இந்நிலங் களில் விவசாயிகள் வந்து குடியேறவில்லை. கிழக்கு இந்தியத் தீவுகளிற்போன்று மக்களுடைய இன்னலிலும் பார்க்கச் சமூக உறவுத் தொடர்புகள் அதிக வலியுடையனவாயிருப்பதே இதற்குக் காரணமாகும். இப்பொழுது மிண்டான வோவில் தெருக்களும் பிற வசதிகளும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக வடபகுதியிலிருந்து மக்கள் பெருந்தொகையாக வந்து குடி யேறி வருகின்றனர். இதனுல் மிண்டானுவோவின் குடிப்பாம்பல் நிலைமையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. 1960 இல் இங்கு 35 இலட்சம் மக்கள் வாழ்ந்த னர்; இத்தொகை பிலிப்பைன் மக்களின் முழுத்தொகையிலும் 13 சதவித மாகும.
பிலிப்பைன் நாட்டிற் புதிய முறையிற் கைத்தொழிலாக்கம் அமையுமென நிச்சயமாகக் கூறமுடியாது. சீமந்து, தேங்காயெண்ணெய், இனிப்புப் பண்டம், சட்டை முதலியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சில அமைக்கப் நீர்மின் வலுவோ இல்லை. தொப்பி கள், மிதியடிகள் முதலியவற்றையும் பிறவற்றையும் உற்பத்தி செய்யும் குடிசைத்தொழில்களே இங்கு அதிக அளவில் வளர்ச்சியடையத்தக்கன. இத்
பட்டன. பிலிப்பைன் நாட்டில் நிலக்கரியோ,
தகைய குடிசைத்தொழிற் பொருள்கள் சீன, யப்பான் முதலிய நாடுகளிலிருந் தும குறைந்த செலவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டு உற்பத் திக்கு இத்தகைய இறக்குமதி தடையாக உள்ளது. சுருட்டுத்தொழிலும் அலங் காரத் தையற்ருெழிலும் குடிசைத்தொழில்களாயிருந்து கிராமங்களிற் சிறு ஆலைத்தொழில்களாய் மாறிவருகின்றன. 1955-52 காலத்தில் சீமந்து உற்பத்தி மும்மடங்காய்ப் பெருகிப் பத்துலட்சம் தொன் ஆகியுள்ளது ; மணிலாவைச் குழ்ந்த பகுதியில் நீர்மின்வலு உற்பத்தி இருமடங்காகப் பெருகியுள்ளது.
பிலிப்பைன் தீவுகளின் புவியியல் நிலைமைகள் யாவும் தென் கிழக்கு ஆசியா விலுள்ளவற்றைப்போன்று (குறிப்பாகக் கீழைக் கிழக்கு இந்தியத் தீவுகளில் உள்ளவற்றைப்போன்று) காணப்படினும் சில வேறுபாடுகளைக்கொண்டிருப்பதற் குப் பல நூற்ருண்டுகளாக அமெரிக்காவின் செல்வாக்கும் தாக்கமும் ஏற்பட் டிருத்தலே காரணமாகும். தென் கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகளில் இந்தியா, ஐரோப்பா, சீன என்பவற்றின் தாக்கம் ஏற்பட இங்கு அமெரிக்காவின் தாக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன் தீவுகளில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை இரண்டு

பிலிப்பைன் தீவுகள் 409
யுத்த நடவடிக்கைகளினற் சிதைவுற்றபகுதிகளை மறுசீரமைப்புச் செய்வதாகும். பேமாவிலும் இந்த நிலைமையே காணப்பட்டது. யுத்த நிலைமையினுல் பிலிப்பை' னில் அதிக அளவுக்குச் சேதம் ஏற்பட்டது; முதலில் லூசோனும் பின்பு விசா யன் தீவுகளும் அதிக சேதத்திற்குள்ளாயின. தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளிலும் பார்க்க மணிலாவே யுத்தத்தினுல் அதிகம் சிதைவுற்றது.
1946 ஆம் ஆண்டில் சுதந்திரம் பிரகடனஞ் செய்யப்பட்டது. அதனைச் தொடர்ந்து நகரங்களுக்கு அப்பாலுள்ள பகுதிகளிற் குழப்பநிலைமைகள் ஏற் பட்டன. அரசியல்வாதிகள் தம்முள் பிணக்குடையவராகவிருந்தனர். இவை யாவும் ஸ்பானியரின் நடவடிக்கைகளை ஒத்திருந்தன. யுத்த காலத்தில் நடவடிக் கைகளிலீடுபட்ட கெரில்லாப் படையினர் (குக்பலகுப்ஸ் என வழங்கப் பட்டோர்) மலைப் பகுதியில் நடமாடித் திரிந்தனர். பிலிப்பைனின் போக்குவரத் துக் குறைவானபகுதிகளில் இவர்கள் நடமாட்டம் அதிகமாகும். இவர்கள் மாவட்ட நிர்வாகிகளை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொண்டமையால் நிர் வாகம் சீராக அமையவில்லை. கிராம மக்களுக்கு நிலவாட்சி முறைகளில் மாற்றம் அவசியமாகவிருந்தது. ஆனல் அத்தகைய திருத்தங்களை ஏற்படுத்தக்கூடிய சமாதான நிலை நாட்டில் காணப்படவில்லை. நாட்டின் சீரமைப்புக்கு gy. 9. LIDITJEr ணங்களிலிருந்து பொருளாதார உதவியைப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட் டது. அ. ஐ. மாகாணங்கள் பழைய அரசியல் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட பொழுதும் 1945-58 காலப் பகுதியில் 7,550 இலட்சம் அமெரிக்க தொலர்களை வழங்கி உதவின. நாட்டின் அபிவிருத்திக்காகப் பெருந்தொகை யான அளவில் தொலர் பெறப்பட்டது. அலுரசோனிலுள்ள அமெரிக்கத்தளங்கள் மூலம் இராணுவப் பாதுகாப்பு உதவியும் கிடைத்தது. இந்த உதவிகள் காரண மாக பிலிப்பைன் நாட்டின் வியாபாரம் மீண்டும் யுத்த காலத்திற்கு முன்பிருந்த நிலைக்கு வந்துள்ளது. 1962 ஆம் ஆண்டில் இறக்குமதி வியாபார மூலம் 18,100 இலட்சம் தொலர் கிடைத்தது. இத்தொகையில் 51 சதவீதம் அ. ஐ. மாகாணங் களிலிருந்தும் 18 சதவீதம் யப்பானிலிருந்தும் கிடைத்தன. ஏற்றுமதி வியா பாரமூலம் 15,400 இலட்சம் தொலர் பெறப்பட்டது. ஏற்றுமதிப்பொருள்களில் 41 சதவீதம் அ. ஐ. மாகாணங்களுக்கும் 25 சதவீதம் யப்பானுக்கும் 5 சத வீதம் நெதலாந்துக்கும் சென்றன.
(1964 ஆம் ஆண்டில் பிலிப்பைன் நாட்டின் டேசோ, மாற்றுமுறையில் மலாயா வின் 75 சதத்துக்கும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் 25 சதத்துக்கும் பிரித் தானியாவின், 1 சிலின் 9 பென்சுக்கும் சமமாகவிருந்தது.)

Page 220

பகுதி II தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்

Page 221

அத்தியாயம் 22 தென் கிழக்கு ஆசியாவிற் பயிர்ச்செய்கை
தென் கிழக்கு ஆசியாவில் பல வகையான பயிர்ச்செய்கை முறைகள் காணப் படுகின்றன. இவை பிரதான காலநிலை வகைகளோடோ, குழல் வேறுபாடுக ளோடோ அதிக அளவுக்குத் தொடர்புடையன என்று கூறமுடியாது. பயிர்ச் செய்கை விருத்தியில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளே வேறுபட்ட இம்முறைகளுக் குக் காரணமாகும். விருத்தியில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாவதற்கு இப்பிரதேசத் அக்குப் புறத்தேயிருந்து வந்த தாக்கங்களே பெரும்பாலும் காரணமாகும். பயி ரிடப்படும் பயிர்களுட் பெரும்பாலன பிறநாடுகளிலிருந்தே புகுத்தப்பட்டன. தென்கிழக்கு ஆசியாவுக்கே உரியதெனப் பொதுவாகச் சொல்லப்படும் பெயர்ச் சிப் பயிர்ச்செய்கை, ஆசியாவின் கண்டப் பகுதியிலிருந்து தரைவழியாகத் தென் கிழக்கு ஆசியாவுக்கு வந்த எல்லா வகுப்பினரோடும் தொடர்புடையதா யிருக்கிறது. இன்று தென்கிழக்கு ஆசியாவில் விளைவிக்கப்படும் பயிர்களான நெல், கரும்பு, தேயிலே, கோப்பி, பருத்தி, இறப்பர், சோளம் முதலியன பிறநாடு களிலிருந்தே கொண்டுவரப்பட்டன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தோடே இப்பயிர்கள் இங்குக் கொண்டுவந்து விளைவிக்கப்பட்டன. இப் பயிர்கள் இங்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு கிழங்கு வகைகளே முக்கிய மாகவிருந்தன. இன்றும் அாசமாகவுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் கிழங்கு வகைகளையே முக்கிய உணவுப் பொருளாகக் கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்
பாலும் நாகரிகமற்ற கூட்டத்தைச் சேர்ந்தவராவர்.
பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை
பயிர்ச்செய்கை முறைகளுள் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை சிறப்பாக ஆராயப் படுவதுண்டு. மக்கள் வேட்டையாடுதல். காய்கனி சேர்த்தல் முதலிய பொருளா தார நிலைகளிலிருந்து நிலையான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் நிலைவரை யுள்ள படிமுறை வளர்ச்சியில் இது ஒரு சிறப்பான கட்டத்தை உணர்த்துகின் றது. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முறையிலும் பல வேறுபாடுகள் காணப்படுகின் றன. சில பகுதிகளில் மக்கள் காடுகளை வெட்டி அழித்து, கிழங்கு வகைகளையும் வாழையையும் பயிரிடுகின்றனர். பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையின் முதனிலையாக இதனைக்கொள்ளலாம். காடுகளில் அலேந்து திரியும் மக்கள் இதனை மேற்கொள்ளு தல் கூடும். வேறு អ៊៨) பகுதிகளில் காடுகளை அழித்துக் கோப்பி, மிளகு முதலி பன பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை முறையிற் பயிரிடப்படுகின்றன. விற்பனை செய் தற்காகவே இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை விளைவித்தற்கு மண் வளம் சிறப்பாக விருத்தலும் அவசியமாகும். பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையிலீடு பட்டுள்ள சிலர் அதிகமாக அலைந்து திரிவர். பயிர் செய்யப்பட்ட ஓர் இடத்தை விட்டுப் புதிதாக ஓர் இடத்திற்குச் செல்லும்பொழுது முழுக்கூட்டத்தினரும்
413

Page 222
414 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
இடம்பெயர்ந்து செல்வர். மற்றையோர் நிரந்தரமாக ஓர் இடத்தில் வாழ்வ. ஆனல் அவர்கள் பயிரிடும் நிலம் காலத்துக்குக்காலம் மாற்றப்படும். பயிரிடப் பட்ட ஒரு நிலத்தைக் கைவிட்டுவிட்டுப் புதிதாக ஓர் இடத்தைத் திருத்திப் பயிர் செய்வர். பழைய நிலத்தில் துணைக்காடுகள் தோன்றி வளரும். நிலத்தைப் பயிரிடாது தரிசுபட விடுவது போன்று இது காணப்படுகின்றது. இரண்டாவ தாகக் குறிப்பிடப்பட்ட இம்முறை யாவா, பிலிப்பைன், இந்தோசீனு ஆகிய பகு திகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இப்பகுதிகளில் வாழும் மக்களின் வழக்க முறைகளுக்கும் பொருத்தமுடையதாக இது அமைந்துள்ளது. இவர் களது வழக்கத்தின்படி நிலம் முழுவதும் ஒரு கூட்டத்தினருக்கே சொந்த மாகக் கொள்ளப்படுகின்றது. கூட்டத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் காலத்திற் குக் காலம் வெவ்வேறு துண்டுநிலம் பயிர் விளைவித்தற்காகக் கொடுக்கப்படு கின்றது.
தெருக்கள் இருப்புப்பாதைகள் ஆகியவற்றிலிருந்து
10 மைலுக்கு அப்பாற்பட்ட பகுதிகள்
மைல் அளவுததிடடம் 2CO, C, 2 CO 4CC
படம் 111-தென் கிழக்கு ஆசியாவைத் தரைவழியாக அடையும் தன்மை
தென் கிழக்கு ஆசியாவில் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையோடு மந்தை வளர்த் தல் தொடர்புடையதாயிருக்கவில்லை. சாதாரண தொல் குழுவினர் மாடுகள் வளர்த்தனரென்பதற்குச் சான்று இல்லை. ஆயினும் திபேத் மேய்ச்சல் நிலத்தி லிருந்தும் அதற்கப்பாலுள்ள நிலங்களிலிருந்தும் தரைமார்க்கமாகத் தெற்கு நோக்கிவந்த மொங்கோலிய இனத்தவர் எல்லாரும் தென்கிழக்காசியப் பிரதே சத்துக்கு வெளியே மிகப்பழங்காலத்தில் மந்தை மேய்த்தலை மேற்கொண்டிருந் தவரெனலாம். தென்கிழக்கு ஆசியாவின் காலநிலை, தாவரவகை என்பனவும் மந்தை வளர்த்தலுக்குப் பொருத்தமாகவில்லை. பூச்சிகள் புழுக்கள் முதலியன
 
 
 
 

தென் கிழக்கு ஆசியா பயிர்ச்செய்கை 415
வும் மந்தைகளைப் பாதிக்கின்றன. இவற்முேடு மதவழிபாடு காரணமாகவும் மக் கள் மந்தை வளர்த்தலை விரும்புவதில்லை. பெளத்தர்களும் இந்துக்களும் மாட் டிறைச்சியை உண்ணமாட்டார்கள். முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார். புராதன முறையில் வாழ்க்கை நடாத்தும் கூட்டத்தவரும் இத்தகைய பழக்க வழக்கங்களை உடையராகக் காணப்படுகின்றனர். மாடுகள் இன்று வளர்க் கப்படும் பகுதிகளில் அவை உழவுத்தேவை காரணமாகவே வளர்க்கப்படுகின்றன. எருமைகளும் சிறிய எருதுகளுமே இத்தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. எனவே மந்தைவளர்த்தல் வழக்கைத்தழுவியோ மந்தைகளைக் கொண்டு அலேந்து கிரியும் வாழ்க்கை முறையைத் தழுவியோ மந்தைகள் இப்பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன எனக் கருதுதல் தவருகும்.
வளமற்? மண்ணையும் அதிக மண்ணரிப்பையுங் கொண்ட வெம்ாயாகவுள்ள பெரும் பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையே பொருத்தமான முறையாகவுள் ளது. சேனைச் செய்கைக்குட்பட்ட நிலத்தில் மீண்டும் காடுகள் உண்டாக 7 முதல் 10 வருடங்கள் செல்லும். ஆனல் குடித்தொகை விரைவாகப் பெருகும் பொழுது இக்கால எல்லை குறைவடைந்து காட்டுத்தாவரம் பாதிக்கப்படும். தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியில் காட்டு மக்களின் தொகை பெருகி வருவதனுல் காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனுல் இயல் பான தாவரவகைகள் படிப்படியாக மாற்றமடைந்து சவளுப் புல்வகைகள் தோன்றி வருகின்றன. தாவர வளர்ச்சி குறைவாகவுள்ள வறண்ட நிலுங்களி லேயே புல்வகைகள் அதிகமாக ஏற்பட்டுவருகின்றன. குடிப் பெருக்கத்தினுல் அடிக்கடி தாவரவகைகள் அழிக்கப்படுவதனல் மண்ணரிப்பும் அதிகமாக நிகழு கின்றது. இதனுல் ஆறுகளில் மண்டி முதலியனவும் அதிகமாகப் படிகின்றன. பள்ளத்தாக்குகளின் கீழ்ப்பகுதிகளே இவ்வாறு பெரும்பாலும் பாதிக்கப்படுகின் றன. இப்பகுதிகளில் நிலையாக வாழும் விவசாயிகள் இதனுற் பாதிக்கப்படுகின் றனர். எரித்து அழிக்கப்படும் பகுதிகள் தாரத்தேயுள்ள பொழுதும் பாதிக்கப் படும் நிலங்கள் கீழே காணப்படுகின்றன. இக்காரணங்களினுல் பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை சட்ட முறையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், போக்குவரத்துக் குறைவாகவுள்ள உட்பகுதிகளில் இது இன்றும் நடைபெறு கின்றது. தென்கிழக்கு ஆசியாவில் வருடத்தில் ஏறக்குறைய 50 இலட்சம் ஏக் கர் காட்டு நிலம் தற்காலிகமாக எரித்துத் திருத்திப் பெயர்ச்சிப் பயிர்ச்செய் கைக்குப் பயன்படுத்தப்படுகிறது. காட்டுப் பகுதியில் 400 இலட்சம் முதல் 500 இலட்சம் வரையுள்ள ஏக்கர் நிலம் திருத்தப்பட்டுப் பயிர்ச்செய்கைக்குப் பயன் படுத்தப்படுகிறது; இதில் ஒரு பகுதி அண்மையில் தற்காலிகமாய்ப் பயிரிடப் பட்டுக் கைவிடப்பட்ட நிலமாக உள்ளது. மேற்குறித்த நிலப்பரப்பு தைலாந்தின் மொத்த நிலப்பரப்பை ஏறத்தாழ ஒத்துள்ளது. பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையில் வியாபாரப் பயிர்கள் முக்கியமாகவில்லை. கோப்பி, மிளகு என்பன மிகக் குறை வாகவே பயிரிடப்படுகின்றன; எனவே அவை அத்துணை முக்கியமாகவில்லை.

Page 223
416 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவிவியல்
பொதுவாகப் பெயர்ச்சிச் செய்கைமுறையில் விளைவிக்கப்படுவன வாழ்க்கைப் பயிர்களாகும். இப்பிரதேசத்தின் பயிர்ச்செய்கை முறையில் இது ஒரு முக்கிய அமிசமாகவுள்ளது.
- வாழ்க்கைப் பயிர்ச்செய்கை
பெயர்ச்சிப் பயிர்ச்செய்கையிலிருந்து படிப்படியாக நிலைபெற்ற தொன்முக வாழ்க்கைப் பயிர்ச்செய்கை விளங்குகின்றது. நிலத்தில் குடிநெருக்கம் அதிக மாக ஏற்பட்டதே இதற்குக் காரணமாகும். மண்ணரிப்போ மண்வளம் கெடு தலோ இல்லாத பகுதிகளிலேயே நிலையான பயிர்ச்செய்கை இடம்பெறுதல் (Alயும். பயிர்ச்செய்கையால் ஏற்படக்கூடிய இந்நிலைமைகளை ஈடுசெய்யவல்ல இயற் கைத் தன்மைகளிருத்தல் அவசியமாகும். எனவே, நிரந்தரமாகவன்றிக் குறித்த ஒரு பருவத்தில் மட்டுமே நீர்முறையரிப்பு நிகழக்கூடியவாறு வருடத்தின் ஒரு பகுதி வறண்டிருக்கும் இடங்கள், நீாரிப்பு, நீர்முறையரிப்பு ஆகியன உயரங் காரணமாய் நிகழ்தல் இல்லையாகுமாறு ஏறக்குறைய ஆற்றின் அடிப்பகுதி மட் டத்திலுள்ள இடங்கள், பிறவிடங்களிலிருந்து வந்துபடியும் வளமான மண் ணுள்ள பகுதிகள், தாவர வளர்ச்சிக்கு வேண்டிய இரசாயனப் பொருள்களைக் கொண்ட இளமண்ணுள்ள பகுதிகள் ஆகியனவே நிலையான பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பகுதிகளாகும். மத்திய கோட்டிற்குத் தூரத்திலும் அயனப்பிரதேசத்தின் “பருவக்காற்று வலய ஓரங்களிலும் ” வறண்ட பகுதிகள் காணப்படுகின்றன. முதிர்ச்சிபெற்ற ஆறுகளுக்கு அணித்தாயுள்ள வெள்ளப்பெருக்குச் சமநிலங் களில் நீரரிப்புத் தாக்கம் குறைவாகும். கழிமுக வண்டல் மண்ணும் நீண்ட காலத்திற்கு வளமுடையனவாயுள. இந்த நிலைமைகள் தென்கிழக்கு ஆசியாவில் நிலையான முறையிற் பயிர்ச்செய்கை அமையக் காரணமாகவுள்ளன. ஏறத்தாழ 1,000 லட்சம் ஏக்கர் நிலத்தில் இப்பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
இந்நிலத்திற் பெரும்பகுதியில் (மூன்றிலிரண்டு பாகத்தில்) வாழ்க்கைப் பயிர்செய்கை இடம்பெற்றுள்ளது. விவசாயக் குடும்பத்தினர் இங்கு உணவுப் பயிர்களையே பெரும்பாலும் விளைவிப்பர். இவை, அவர்களுக்கு மட்டுமே போதி யனவாகவுள்ளமையால், இவற்றில் வியாபாரம் நடைபெறுவதில்லை. மக்களின் பாரம்பரிய வழக்குமுறைகளோடு தொடர்புடையதாக இப்பயிர்ச்செய்கை அமைந்துள்ளது. இப்பயிர்ச்செய்கை நடைபெறும் பகுதிகள் தனிப்பட்டனவாக வும், போக்குவரத்துத் தொடர்பற்றனவாகவும் உள்ளமையினுல் பல நூற்ருண்டு களுக்கு முன்பிருந்த நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றன. உணவுப் பொருள்களோடு உடைகளை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய நார்வகைகளுமே விளைவிக்கப்படவேண்டியிருக்கின்றன. தென்கிழக்கு ஆசியாவின் பிரதான உண வுப் பொருளான நெல்லே வாழ்க்கைப் பயிர்ச்செய்கையில் முக்கியமாகவுள்ளது. குடிநெருக்கம் கூடிய விசாயன் தீவுகளிலும் யாவாவிலுமே நெல்லிற்குப் பதிலாக வேறு உணவுப் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. உள்நாட்டு நிலைமைகள் பொருத்தமற்றுக் காணப்படும் பகுதிகளில் வாழ்பவரும் நெல்லையே பெரும் பாலும் முக்கிய உணவாகக் கொள்ளுகின்றனர். உதாரணமாக பேமா, தைலாந்து

தென் கிழக்கு ஆசியா பயிர்ச்செய்கை 47
ஆகியவற்றின் வறண்ட பகுதிகளிலும், மத்திய கோட்டிற்கு அண்மையாகவுள்ள ஈரமிக்க பகுதிகளிலும் இந்நிலைமையே காணப்படுகின்றது. வாழ்க்கைப் பயிர்ச் செய்கை நடைபெறும் நிலத்தில் 90 சதவீதமான பகுதியில் நெல் பயிரிடப்படு கின்றது. தென்னை, வாசனைப் பயிர்கள், பருப்பு வகை, பழவகை போன்ற துணை உணவுப் பயிர்கள் எஞ்சிய நிலத்தில் சிறிய அளவிற் பயிரிடப்படுகின்றன. இவை பல பகுதிகளில் இயற்கையாக வளருகின்றன. மலைவாழ் மக்களிடையிலும் நெல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கி. பி. 500 வரையில் இந்தியக் குடியேற்றக்காச ாால் மலைசார்ந்த பகுதிகளிலும் நெற்செய்கை பரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளின் காலநிலை, பருவவேறுபாடு, மண்வகை என்பனவற் றிற்குப் பொருத்தமான ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல்வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
தென்கிழக்கு ஆசியாவில் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை பல நூற்ருண்டுக் கால மாக நடைமுறையிலிருந்து வந்த முறைகளைத் தழுவியே இன்றும் மேற்கொள் ளப்படுகின்றது. பல பகுதிகளில் மண்வெட்டி, களைக்கொட்டு என்பனவே இன் அறும் பயன்படுத்தப்படுகின்றன. நெல் வயல்களில் மண்ணேச் சாதாரணமாகக் கிளறக்கூடிய கலப்பைகளே பயன்படுத்தப்படுகின்றன. இவை மரத்தினல் வீடு களில் செய்யப்பட்டவையாகும். தேவையான மரத்தை இப்பகுதிகளிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி உண்டு. கலப்பையின் உபயோகம் காரணமாக உழவு மாடுகளின் தேவையும் ஏற்பட்டது. ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தினரும் இன்று குறைந்தது ஒர் எருமை மாட்டையோ, எருத்து மாட்டையோ கொண் டுள்ளனர். மத்திய கோட்டிற்கு அண்மையாகவுள்ள பகுதிகளில் எருமை udtr6 களும் பருவ மாற்றம் அதிகமாகவுள்ள வறண்ட பகுதிகளில் எருத்து மாடுகளும் பொதுவாக வளர்க்கப்படுகின்றன.
வர்த்தகப் பயிர்ச்செய்கை
வர்த்தகத்திற்காகப் பயிர்களை விளைவிக்கும் முறை தென்கிழக்கு ஆசியாவில் அண்மைக் காலத்திலே இடம்பெற்றது. பிலிப்பைனிலும் யாவாவிலுமுள்ள இரண்டொரு மாவட்டங்கள் தவிர ஏனைய பகுதிகளில் வர்த்தகப் பயிர்ச்செய்கை தொடங்கப்பட்டு ஒரு நூற்ருரண்டுமில்லை. இதனுல் சில பகுதிகளில் இம்முறை சீராகவும் அமையவில்லை. தென்கிழக்கு ஆசியாவில் மொலுக்காத் தீவுகளிலே முதன் முதலாக வர்த்தகத்திற்காக வாசனைப் பயிர்கள் விளைவிக்கப்பட்டன. வர்த்தகம் உச்சநிலையிலிருந்த காலத்திலும் சிறு பகுதிகளிலே வாசனைப் பொருள் கள் தனிப்பட்ட முறையிற் பயிரிடப்பட்டன. விவசாயிகளுக்குச் சொந்தமான ஓரிரு மரங்களிலிருந்தே வாசனைப் பொருள்கள் பெறப்பட்டன. பெரிய அளவான நிலங்களில் அவை பயிரிடப்படவில்லை. அக்காலப் பகுதியில் தென்கிழக்கு ஆசி யாவில் விளைவிக்கப்பட்ட பயிர்களுள் வாசனைப் பொருள்கள் மட்டுமே பிறநாட் டவருக்குத் தேவையாகவிருந்தன. அன்று கொண்டு செல்லத்தக்கனவாகவிருந்த பொருள்களும் இவையேயாம். கடந்த ஆயிரம் வருட காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கொண்டுபோகப்பட்ட பொருள்களிலும் பார்க்க அதிகமான

Page 224
48 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
பொருள்கள் அங்குக் கொண்டுவரப்பட்டன. சென்ற நூறுவருட காலத்திலே இந் நிலையில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆசியப் பொருள்க ளுக்கு ஏற்பட்ட மதிப்பிலும் பார்க்க அப்பகுதியில் உற்பத்தி செய்வதற்கெனக் கொண்டு வரப்பட்ட பயிர்களே முக்கியமாகவுள்ளன.
நெல்-தென்கிழக்கு ஆசியாவில் ஏறத்தாழ 350 இலட்சம் ஏக்கர் நிலத்தில் வர்த்தகப் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. இப்பயிர்ச்செய்கை இருவகை யினது. இரண்டும் அதிக அளவுக்கு ஐரோப்பியர் தொடர்புடையன. அவை யாவன : வியாபாரத்திற்காக உணவுப் பயிர்களை உற்பத்தி செய்தல், வியாபாரத் திற்காக உணவுப்பயிரல்லாதனவற்றை உற்பத்தி செய்தல். உணவுப் பயிர்களுள் கரும்பே ஐரோப்பியர் ஆட்சியைத் தொடர்ந்து முதன்முதலாக யாவா, பிலிப் பைன் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய் வதை முக்கியமாகக் கொண்டே இப்பயிர் விளைவிக்கப்பட்டது. ஏற்றுமதிக்காக விளைவிக்கப்படும் பயிர்களுக்குரிய நிலத்தில் அரைவாசியில் நெல் விளைவிக்கப்படு கின்றது. நெல் விளைவிக்கப்படும் ஒவ்வொரு நாட்டிலும் மிகையாக உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களிலிருந்து குறைவாக உற்பத்தி செய்யப்படும் பிரதே சங்களுக்கு நெல் விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் தொகையையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது முக்கால்வாசி நிலப்பகுதியில் நெல் விளைவிக்கப்படுவதாகக் கொள்ளுதல் வேண்டும். வர்த்தக நெற்செய்கை காரணமாகத் தொழிலாளர் தம்முடைய சொந்தக் கமங்களைவிட்டு, உணவுப் பயி ரல்லாத பிறபணப்பயிர்களை விளைவித்தற்குத் தமது முழுநேரத்தையும் செல விடக்கூடியவராயுள்ளனர். இறப்பர், பருத்தி, சணல், கோப்பி, கரும்பு முதலிய பயிர்கள் பெருந்தோட்டங்களில் விளைவிக்கப்படுகின்றன; இவற்றில் வேலை செய் யுந் தொழிலாளருக்கு அரிசி அதிகமாகத் தேவையாகவுள்ளது. அன்றியும் தென் கிழக்கு ஆசியாவிற் கணிப்பொருளெடுத்தல் துறையிலிடுபட்டுள்ளோருக்கும் ஆசி யாவின் பகுதிகளிற் கைத்தொழில்களிலீடுபட்டுள்ளோருக்கும் அரிசி தேவைப் படுகின்றது. தென் கிழக்கு ஆசியாவில் விளைவிக்கப்படும் அரிசியில் பெரும்பகுதி சீனுவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நாடுகளில் நெல் விளைவிக்கக்கூடிய நிலம் முழுவதிலும் நெல் விளைவிக்கப்படுகின்றது; மேலதிக மாக விளைவிக்கக்கூடிய நிலம் குறைவாகும். தென் கிழக்கு ஆசியாவின் உற்பத் தியில் மலாயா, கிழக்கு இந்தியத் தீவுகள் என்பனவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றது. 1941 ஆம் ஆண்டின் முன்பே யப்பான் அரிசியை அதிகமாக இறக்கு மதி செய்து வந்தது. பேமா, தைலாந்து, இந்தோசீனு ஆகியவற்றிலிருந்து (இந்த முறையில்) அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது; இன்றும் ஏற்றுமதி செய் யப்படுகின்றது. இந்நாடுகளிலே வர்த்தக நெற்செய்கை சிறப்பாக விருத்தி செய் யப்பட்டுள்ளது. நெல் உற்பத்தி குறைவான நாடுகளுக்கு அரிசியை வழங்கும் களஞ்சியமாக இந்நாடுகள் விளங்குகின்றன. கடந்த 20 வருட காலத்தில் தென் கிழக்கு ஆசியாவின் வர்த்தக நெற்செய்கை மேலும் விருத்தியடைந்து காணப் படுகின்றது. தென் கிழக்கு ஆசியாவில் நெல் விளைவிக்கப்பட்ட சராசரி நிலம்

தென் கிழக்கு ஆசியா பயிர்ச்செய்கை 49.
1916-20 காலப் பகுதியில் ஒவ்வோராண்டிலும் 382.8 இலட்சம் ஏக்கராயிருந்தது 1939-40 இல் இத்தொகை 522 இலட்சம் ஏக்கராயிருந்தது. 1963 இல் இத் தொகை 670 இலட்சம் ஏக்கராகப் பெருகிக்காணப்பட்டது. வாழ்க்கைப் பயிர்ச் செய்கை, வர்த்தகப் பயிர்ச்செய்கை ஆகிய இரு முறைகளுக்கும் உட்பட்ட நெல் நிலங்களை மேற்குறித்த தொகை காட்டுகின்றது. விளைவிக்கப்படும் பயிர்களுள் முக்கியமானது நெல்லாகும். தைலாந்தின் மொத்த விளைநிலத்தில் 95 சதவீத மான நிலத்திலும், இந்தோசீனவில் 85 சதவீதமான நிலத்திலும் பேமாவிலும் பிவிப்பைனிலும் 65 சதவீதமான நிலத்திலும் நெல் விளைவிக்கப்படுகின்றது.
பகுதிகள் *"הופ"P° ፰፻፺-s ○ア மைல் அளவுத்திட்டம்
ിങ്ങl-ബത്തnർm M 2CXO O 2 OC 4CdO GL soft S<>ہ லூசோன்
இந்தோ r y .Lಙ್ಗವಾ। S (59) سمتنَ
Gஒாேழி w மிண்டானே
G Ꮏ CᏛᎩfᎢt っ
@s上门 p * a
10 ó போணிர்ே 合=一等‐学。
S . C) ustoష _. 3ހށި\/ اދޗް ལཚོ་མཛད་ *(நியூகினி
2.
و لا
படம் 112.--தென்கிழக்கு ஆசியாவில் நெற்செய்கைப் பரம்பல்
தென் கிழக்கு ஆசியாவில் நெற்செய்கை நிலம் (இலட்சம் ஏக்கர் அளவில்)
1914-151924-25, 1934-351939-40 1944-45.1949-50 1954-55, 1959-60
Guunn ... 100 121 127 128 85 90 100 11 இந்தோசீன , , 104 | 117 131 | 147 / 141 | 120 | 101 | 169 தைலாந்து , , 50 68 81 88 55 24 38 139 6) TL if - 6 7 8 7 9 9 10 urtautoyid 69 87 99 10 77 97 95 101 ԼԸՑյ60)Մuւյւ0
பிலிப்பைன் . . 27 42 49 49·6 36 57 68 82

Page 225
420 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
தென் கிழக்கு ஆசியாவில் நெல் உற்பத்தி (இலட்சம் மீற்றர் தொன் அரிசி)
1914一15|1924一25|1934一351939-40|1944-45|1949-50|1954一55|1959–60
GւյւDո 。。37.3 51.5 46 47.3 24 29 38 46 இந்தோசீன . . 43.2 | 35.4 34 40.0 36 36 14 71 தைலாந்து . . 19.3 30.9 28.6 28.6 37 37 41 46 bGöslijfT is w Kama» 2.4 3.3 3.4 2 4. 4。6 6
யாவாவும் 28.8 | 34.3 35。4 40.9 35 42 43 49 மதுராவும்
பிலிப்பைன் , , 0.5 12.8 12.8 6 21 25
தென் கிழக்கு ஆசியாவில் வாழ்க்கைப் பயிரான நெல் அதிக அளவுக்கு வர்த் தகப் பயிராக விருத்திசெய்யப்பட்டுள்ளது. தென்னையும் வர்த்தகப் பயிராக இன்று விருத்திசெய்யப்பட்டுள்ள பொழுதும் தென்னைப் பொருள்கள் சிறிதள வுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தென்னையும் வாழ்க்கைப் பயிராக விருந்தே பின்பு பணப்பயிராக அமைந்தது. வாழ்க்கைப் பயிராக நெல் விளை விக்கப்பட்டதனுல் பயிர்ச்செய்கை முறைகளும் பழையனவாயிருந்தன. நெல் பணப்பயிராக அமைந்தபின்பும் முறைகள் பெரும்பாலும் அவ்வாறேயிருந் தன. இயந்திரங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நெல் அதிகமாக உற்பத்திசெய்யப்படுவதற்கு நிலம் அதிகமாக விருத்தலே காரணமாகும் செறி வான பயிர்ச்செய்கை முறைகள் காரணமல்ல.
தென் கிழக்கு ஆசியாவில் நெல் உற்பத்தி (ஐந்து வருடச் சராசரி)
நெல் நிலம் உற்பத்தி தெ.கி. ஆசியா | தலைக்குரிய @re#5#
இலட்சம் இலட்சம் வின்ஏற்றுமதி பயன்பாடு வருவாய் arrel) எக்கரில் தொன் அரிசி (இலட்சம் இ. கி.) (தொன் தொன் அளவில்) அளவில்)
921-25 . . 436 53 46 ፲8ሽ 352 926-30 . . 475 1.65 4. 31 348 1931-35 . . 皱}6 67 52 17 337 936-40 . . 54 175 50 8 339 1946-50 . . 481 56 19 98 325 1951-55 .. 548 181 46 8O .332 1956-60 . . 655 262 35 112 395
1962 ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசியாவில் 670 இலட்சம் ஏக்கர் நிலத் தில் நெல் விளைவிக்கப்பட்டது. இதிலிருந்து 320 இலட்சம் தொன் அரிசி பெறப் பட்டது. உள்நாட்டுப் பயன்பாடு அதிகரித்ததனுல் வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யக்கூடிய மிகை அரிசி குறைந்தது; இந்த மிகை அரிசியைப் பெறு

தென் கிழக்கு ஆசியா பயிர்ச்செய்கை 42丑
வதற்காக மற்றைய ஆசிய நாடுகள் ஆவலோடு போட்டியிட்டன; இதனல் கடந்த பத்தாண்டுக் காலத்தின் பெரும்பகுதியில் கோதுமையிலும் பார்க்க அரி சிக்கு மதிப்பு அதிகமாயிருந்தது.
ஏனைய உணவுப் பயிர்கள்.-ஏனைய வர்த்தக உணவுப் பயிர்களுட் குறிப்பிடத் தக்கன கரும்பு கோப்பி, தேயிலை, சிங்கோன, நெய்த்தால மரம் என்பனவாகும். இவையாவும் அடக்கியுள்ள நிலம் மொத்த நெல்நிலத்திலும் குறைவாகும். ஐரோப்பியரே பெருந்தோட்டங்களில் இப்பயிர்களை விருத்தி செய்தனர். இந் நிலங்கள் முன்பு பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பெருந்தோட் டங்கள் அமைக்கப்பட்டமையால் தொழிலாளரும் அதிகமாகத் தேவைப்பட் டனர். உள்நாட்டில் குறைந்த அளவுக்கே தொழிலாளர் கிடைத்தமையால் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர் கொண்டுவரப்பட்டனர். பிலிப்பைனிலும் யாவாவிலும் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பியப் பயிர்ச்செய்கை காரணமாக வழக் கிலிருந்த நில ஆட்சிமுறைகளில் மாற்றம் ஏற்பட்டது. தைலாந்தில் நிலமானிய முறை வழக்கிலிருந்ததனல் வெளிநாட்டார் உதவியின்றி வர்த்தகப் பயிர்ச்செய் கையை விருத்திசெய்வது இயல்வதாயிற்று. இங்கு விளைவிக்கப்படும் பயிர்களும் நிரந்தரமான பயிர்களாகும். தொடர்ந்து வளருங் காலமும் பயிர்ச்செய்கைக் குத் துணையாகவுள்ளது. காலப்போக்கில் இப்பயிர்கள் பெருந்தொகையான அள வில் உற்பத்தி செய்யப்பட்டன. இதல்ை பயிர்களின் மதிப்புக்குறைந்தது. மேலும் அயனப்பிரதேசத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பயிர்கள் வர்த்த கத்திற்காக விளைவிக்கப்பட்டன. உற்பத்தி இவ்வாறு பெருகியதனுல் பயிர்களுக் குரிய விலையும் குறைந்தது. செலவிட்ட முதலுக்குப் போதிய ஊதியம் பெறுவ தும் முடியாததாயிருந்தது. இப்பயிர்களை உற்பத்தி செய்யும் பிற நாடுகளின் போட்டியும், உலகச் சந்தைக்கு வேண்டிய தொகையிலும் பார்க்க அதிகமாகப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படுவதும் வர்த்தகப் பயிர்ச்செய்கையைப் பாதித்துள் ளன. இதல்ை விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. உற்பத்திச் செல வைக் குறைக்க விஞ்ஞான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இப் பயிர்களைப் பொறுத்தவரையில் கீழைத்தேச முறைகளிலும் பார்க்க மேலைத் தேச முறைகளே பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இயந்திரப் பயன்பாடு செய்யும் முறைகள் புதியனவாயும் அதிக அளவுக்கு இயந்திர உபயோகத்தை உடையனவாயுமுள்ளன.
இறப்பர்-தென் கிழக்கு ஆசியாவில் உற்பத்திசெய்யப்படும் உணவுப்பயிரல் லாத வர்த்தகப் பயிர்களுள் இறப்பர் முக்கியமானதாகும். புதிதாகப் புகுத்தப் பட்ட இறப்பர்ச் செய்கை தென் கிழக்கு ஆசியாவுக்குச் சிறப்பானதொன்முகும். பின்பு மத்திய ஆபிரிக்காவிலும் இலங்கையிலும் இறப்பர் பயிரிடப்பட்டது. அயனப் பிரதேசத்தின் வேருெரு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு இப் பகுதியிற் பெருந்தோட்டங்களில் விளைவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் இறப் பர் இயற்கையாக வளருகின்றது ; காட்டுமரங்களிலிருந்து பிசின் முதலியன

Page 226
422 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
சேகரிக்கப்படுவதுபோன்று அங்கு இறப்பர்ப்பாலும் சேகரிக்கப்பட்டது. பெற் முேலை உபயோகிக்கும் வாகனங்கள், பெற்ருேலிய உற்பத்தி, உலகின் தெருப் போக்குவரத்து விருத்தி என்பன யாவும் தென் கிழக்கு ஆசியாவின் இறப்பர் உற்பத்தியில் தங்கியுள்ளன. இறப்பர்ச் செய்கை ஐரோப்பியரின் பழத்தோட் டச் செய்கையைப் போன்றது. அதிக பணத்தைச் செலவிட்டு 7 முதல் 10 வரு டம் வரையில் இறப்பரைப் பெறுவதற்காகப் பொறுத்திருக்கத்தக்க கம்பனி களே இத்துறையில் ஈடுபடத்தக்கன. புதிய நிலங்களில் பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்டமையால் வேறு பகுதிகளிலிருந்து அதிக தொழிலாளரைப் பெறவேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. சிறு விவசாயிகளும் வேறு பயிர்களோடு கலப்புமுறையில் இறப்பரைப் பயிரிட்டனர். நெற் செய்கையைப்போலன்றி இறப்பர்ச் செய்கை பிறநாட்டுத் தொழிலாளரைக் கொண்டு பெருந்தோட்டங் களில் செய்யப்படும் தொழிலாக அமைந்தது. படிப்படியாகச் சிறு விவசாயி களும் இறப்பாைப் பயிரிட்டதனுல் கலப்பு முறைப் பயிராகவும் இறப்பர் இடம் பெற்றது. தென் கிழக்கு ஆசியாவில் ஏறத்தாழ 100 இலட்சம் ஏக்கர் நிலத்தில் இறப்பர் விளைவிக்கப்படுகின்றது. மலாயாவிலேயே இறப்பர் நிலம் பெருந் தொகையாகக் காணப்படுகின்றது. இறப்பர் ஒரு நீண்டகாலப் பயிராகும். ஆசி யாவுக்கு அப்பாலுள்ள பகுதியிலேயே இறப்பர்ச் சந்தை அமைந்துள்ளது. இறப்பரின் விலையும் காலத்துக்குக்காலம் கூடிக்குறைந்து காணப்படும். மலா யாவில் இறப்பர்ச் செய்கை மிகவும் முக்கியமாகவுள்ளது. பொருளாதார நிலைமை இறப்பரின் வெளிநாட்டுச் சந்தை நிலைமையைப் பொறுத்துள்ளது. ஏனைய பகுதிகளில் பயிர்ச்செய்கை வகைகள் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை யோடு தொடர்புடையனவாக விருப்பதனுல் வெளிநாட்டு நிலைமைகளினல் அதி கம் பாதிக்கப்படுவதில்லை.
பயிர்ச்செய்கையின் போக்கு
வேறுபட்ட பயிர்ச்செய்கை வகைகளில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்த பல நிலைமைகளை அவதானிக்கலாம். நெல் தவிர்ந்த ஏனைய வர்த்தகப் பயிர்கள் யாவும் மேலும் கூடிய அளவில் ஏக்கருக்குரிய வருவாயைப் பெருக்கும் நோக் கத்தோடு விருத்திசெய்யப்பட்டுவந்துள்ளன. இதனுல் வர்த்தகப் பயிர்களின் வருவாய் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. நெற்செய்கை இன்றும் செறி வற்ற முறையிலேயே நடைபெறுகின்றது. நெல்லின் வருவாய் படிப்படியாகக் குறைந்துவந்துள்ளது. நெல்லைப் பொறுத்தவரையில் ஏக்கருக்குரிய வருவா யைப் பெருக்குவதிலோ அல்லது மக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்து வதிலோ அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. நெல் விளைவிக்கப்படும் பகுதிகள் எங்கும் சிறந்த முறைகளைப் பரப்புவதற்காகப் பரீட்சை நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளன. ஆனல் விவசாயிகள் அவற்றல் அதிக பயனைப் பெறவில்லை.

தென் கிழக்கு ஆசியா பயிர்ச்செய்கை 423
தென்கிழக்கு ஆசியாவில் நெல்விளைவு (எக்கருக்கு நூறு இரு. அரிசி அளவில்)
1934-35, 1939-40 1944-45||1949-50 1954-55.959-60
Gu Lorr ... 8.2 8.4 6.5 7.0 7.6 10.1 இந்தோசீன ... 5. 5.5 5.6 6.6 6.9 10.3 தைலாந்து ... 9. 8.6 7.5 6.6 8.0 8. t)6)sTuT . . 9. 9. 6. 10.7 11.3 14.1
u Tv5Qu fT6)Jufb t
. ... 9.3 10.0 8.2 9.5 9.9 0.2 Ք5յDIT64ւԸ
பிலிப்பைன் 5.8 t 5.8 6.8 6.6 7.0 66
வருட நெல் விளைவு 1916-20 காலப்பகுதியின் வருவாயிலும் பார்க்க 1936-40 அாலப்பகுதியில் 4 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது. ஆனல் நெல் உற் பத்தி பெருகியதற்குக் காரணம் ஏக்கரளவிற் பெருக்கம் ஏற்பட்டதாகும். ஆணுல் 1955 இற்குப்பின் தென் வியற்நாமிலும் மலாயாவிலும் நெல் விளைவைப் பெருக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. :نامه
356 ஆம் பக்கத்திலுள்ள அட்டவணையில் அரிசி ஏற்றுமதி இறக்குமதி ஆற் றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூற்முண்டில் நிலவிய மிதமிஞ் சிய உற்பத்தி, குறையுற்பத்தி நிலைமைகளை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
நெற்செய்கை ஐராவதி, செளபிராயா, மேக்கோங்கு ஆகிய நதிகளின் கழி முகங்களிற் பரவிய பின்னரே நெல் வர்த்தகமுதன்மை பெற்றது. வெள்ளப் பெருக்கு நீரைக் கட்டுப்படுத்தி உபயோகித்ததும் இதற்குத் துணையாக அமைந் தது. தென் கிழக்கு ஆசியாவில் பல நிலைமைகளினல் வெள்ளப்பெருக்கு ஏற் படுகின்றது. இந்நிலைமைகளை ஆராய்ந்து மேலைத்தேசத் தொழில் நுட்ப அறி வின் அடிப்படையில் வெள்ளப்பெருக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. நீரைக் கட்டுப் படுத்தி உபயோகித்ததன் காரணமாகவே அதிக மாற்றங்கள் இத்துறையில் ஏற்பட்டன. சிறிய அளவில் நீரைக் கட்டுப்படுத்தி உபயோகிக்கும் முறை முன் னரே இப்பகுதியில் காணப்பட்டது. வளமான எரிமலை மண் காணப்படும் மேனி லப் பகுதிகளில் நீரைக் கட்டுப்படுத்தி நெற்செய்கையை விருத்தி செய்யும் முறையே முன்பு முக்கியமாகவிருந்தது. வளமான பகுதிகளிற் பயிர்களை ინმშar விக்கவேண்டும் என்பதே முன்பும் இப்பொழுதும் விவசாயிகளின் நோக்கமாக வுள்ளது. எரிமலை மண் பகுதிகளை அவ்வப்பகுதிகளில் உள்ளவர்கள் விருத்தி செய்தனர்; அவை அவர்களால் விருத்தி செய்யத்தக்கனவாயுமிருந்தன. இத னல் கழிமுகப்பகுதிகளிலும் பார்க்க எரிமலை மண்ணுடைய பகுதிகள் முதலில் விருத்திசெய்யப்பட்டன.

Page 227
424 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
தென்கிழக்கு ஆசியாவில் அரிசி ஏற்றுமதியும் இறக்குமதியும்
(இலட்சம் மீற்றர்த் தொன் அளவில்)
எற்றுமதி நாடுகள் இறக்குமதி நாடுகள்
பேமா | இந்தோசீன தைலாந்து | இந்தோனேசியா மலாயா பிலிப்டைன்
1920 . . 20 0.9 2.5 2.2 m 0.ሽ 1925 . . 33.2 3.3 1.8 5 4.
1930 . . 29.5 0.2 9.3 6.2 6 0. 1935 . . 29.3 15.2 3.8 3.6 4.8 - 1940 . . 25 14 20 0.6 O
1950 . . 11.7 0.9 4.8 2.9 4。7 O. 1955 ... 16.3 3.3 2.5 1.5 4.8 .5 1960 . . 17.5 7.7 2.0 9.6 5.9 0.
கடந்த 30 வருட காலத்தில் தென் கிழக்கு ஆசியாவில் ஆள்வீதம் அரிசி உட் கொள்ளும் அளவு குறைந்து வந்துள்ளது. இதனல் அரிசியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதி ஏற்பட்டுள்ளது. குடித்தொகை பெருகிவரும் வேளையில் இது சாதகமாயிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆள்வீத அளவு குறைவதற்கு வியாபார மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு p. 600Teay p Li கொள்ளும் முறைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதே காரணமாகும். கோதுமை (பாண்), சோளம், உருளைக்கிழங்கு, தகரத்திலடைத்த உணவுவகை என்பவற் ருேடு காய்கறிவகைகளும் ஆசிய மக்களால் இன்று அதிகமாக உட்கொள்ளப் படுகின்றன. பட்டினங்களில் அரிசியின் விலை அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். ரங்கூனில் ஒருதொன் அரிசியின் விலை 1938 இல் 60 தொலராக வும், 1948 இல் 325 தொலராகவும், 1952 இல் 425 தொலராகவும் காணப்பட்டது. அரசாங்கக் கட்டுப்பாடில்லாத காலத்திலும் விலை அதிகமாகவே காணப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் ஒருதொன் அரிசியின் சராசரி விலை 490 தொலராயிருந்தது.
வர்த்தகப் பயிர்ச்செய்கையில் மாப்பயிர்களே முக்கியமான இடத்தைப் பெற் அறுள்ளன. வளரும் பருவம் இடையறவுபடாமல் தொடர்ந்து செல்வதால் இப் பயிராற் கிடைக்கும் பயனும் அதிகமாகும். மத்திய கோட்டையடுத்த தென் கிழக்கு ஆசியப் பகுதிகள் இத்தகைய மரப் பயிர்களுக்கு ஏற்றனவாயுமுள்ளன. வருடப் பயிர்களிலும் பார்க்க இம்மாப் பயிர்களின் காலம் பரந்திருப்பதனல் தொழிலாளர் பிரச்சினையும் அதிகமாக ஏற்படுவதில்லை. மரப் பயிர்களைச் சிறு விவசாயிகளும் விளைவிப்பதனுல் தனிப்பயிர்களுக்குப் பதிலாகப் பலபயிர்கள் கலப்பு முறையில் விளைவிக்கப்படுகின்றன.
தென் கிழக்கு ஆசியாவில் இரண்டொரு வர்த்தகப் பயிர்களில் பொருளாதாரம் தங்கியிருப்பதனல் ஏற்படக்கூடிய தாக்கம் அதிகம் என்பதனுல் அதனைக் குறைப்பதற்காகவும் முயற்சிகள் ஒரளவுக்கு எடுக்கப்பட்டன. இப்பகுதியில் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை பெரும்பாலும் கலப்புமுறைச் செயகையாகவுள்

தென் கிழக்கு ஆசியா பயிர்ச்செய்கை 425
ளது. தென் கிழக்கு ஆசியப் பகுதி முழுவதிலும் ஓரளவுக்குக் கலப்புமுறைப் பயிர்ச்செய்கை விரவியுள்ளது எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். டெறிஸ் கிழங்கு (பூச்சி நாசினி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது) இப்பொழுது முக்கியமாகவில்லை. நெய்த்தால மரம் இப்பொழுது சிறந்த முறையில் விளைவிக் கப்படுகின்றது. கொக்கோவும் பரீட்சார்த்தமாகப் பயிரிடப்படுகின்றது.
இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவுகள்
1941-42 இல் பேமா, மலாயா, பிலிப்பைன் ஆகிய நாடுகளில் யுத்தம் நடை பெற்றது. 1944-45 இல் பேமாவிலும் பிலிப்பைனிலும் மேலும் இராணுவ நட வடிக்கைகள் இடம்பெற்றன. பயிர்ச்செய்கை, மரச்செய்கை என்பனவற்றை முற்ருக யுத்த காலத்தில் அழித்துவிடுவது கடினமாகும். இதனுல் இவற்றில் ஏற்பட்ட தாக்கம் ஓரளவுக்குக் குறைவு எனக் கூறலாம். ஆனல் யுத்தத்தினல் உள்நாட்டுப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. உள்நாட்டு வியாபாரம் சிதைவுற்றது. தென் கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் போக்குவரத்துப் பாதைகள் முற்ருகவே நீக்கப்பட்டன. வர்த்தகப் பயிர்களின் வெளிநாட்டுச் சந்தைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனவே தென் கிழக்கு ஆசியநாடுகள் எல்லாவற்றிலும் யுத்தம் நடைபெற்றதோ இல்லையோ, எல்லா நாடுகளிலும் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இத்தகைய நிலைமைகளினுற் பல விளைவுகள் இப்பகுதியில் ஏற்பட்டன. வாழ்க் கைப் பயிர்ச்செய்கை முக்கிய தொழில்முறையாக அமைந்தது. சுயதேவை யைப் பூர்த்திசெய்யும் நோக்கம் அவசியமாகக் காணப்பட்டது. வெளிநாட்டு வர்த்தகம் தடைப்பட்டதனுற் பணப்பயிர்கள் கைவிடப்பட்டன. உழவு மாடுகள் முதலிய இராணுவத்தினரால் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டமையால் அவற்றின் தொகை அதிகமாகக் குறைவடைந்தது. தொழிலாளர் வசதியும் சீர் குஃபந்து காணப்பட்டது. இறப்பர் மரங்களைக் கொண்ட நிலத்தில் ஏற்பட்ட அழிவு குறைவாகும். மலாயாவின் இறப்பர் நிலத்தில் 6 சதவீதமான நிலமே இவ்வாறு பாதிக்கப்பட்டது. எனினும் வர்த்தக நிலைமைகளினல் இப்பயிர்ச் செய்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்பு வர்த்தகப் பயிர் களையும் கைத்தொழில்களையும் விருத்தி செய்வதில் பல இன்னல்கள் ஏற்பட் டன. தொழிலாளருக்கு வேண்டிய அரிசியை இறக்குமதி செய்வதும் கடினமா யிருந்தது. தொழிலாளர்வசதி காணப்பட்ட பகுதிகளிற் பயிர்ச்செய்கை விாை வாகச் சீராக்கப்பட்டது. 1945-46 இல் மலாயாவின் மொத்த நெல் விளையும் நிலத்தில் 2 சதவீதம் தவிர எஞ்சிய பகுதி முழுவதிலும் நெல் விளைவிக்கப்பட் டது. இறப்பர்ச்செய்கையும் விரைவிற் சீரடைந்தது. யுத்தத்திற்கு முன்பு காணப்பட்ட மொத்த இறப்பர் நிலத்தில் மூன்றிலொரு பகுதியிலிருந்து 1947 இல் இறப்பர் பெறப்பட்டது. இத்தொகை இறப்பர் பெறக்கூடிய மரங்களைக் கொண்ட மொத்த நிலத்தில் மூன்றிலிரண்டு பகுதியாகும்.
உணவுப் பயிர்களைப் பொறுத்தவரையிற் படிப்படியாக ஓரளவுக்கு மேலதிக மாகவும் உற்பத்தி செய்யப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் தென் கிழக்கு

Page 228
426 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
ஆசியாவிலிருந்து ஏறத்தாழ 10 இலட்சம் தொன் அரிசி ஏற்றுமதி செய்யப் பட்டது. 1936-40 இல் இப்பகுதியிலிருந்து 57 இலட்சம் தொன் அரிசி ஏற்று மதிசெய்யப்பட்டது. ஏற்றுமதி அதிகமாகக் குறைந்த நாடுகளில் பேமா குறிப் பிடத்தக்கது. யுத்தத்தினுல் பேமா அதிகம் பாதிக்கப்பட்டது இதற்குக் காரண மாகும். ஆனல் 1950-51 இல் பேமாவின் கீழ்ப்பகுதியிலுள்ள நெல்விளையும் நிலங்களில் முக்கால்வாசியில் நெல் மீண்டும் விளைவிக்கப்பட்டது. 1945-46 இல் அரைவாசி நிலங்களிலே நெல் விளைவிக்கப்பட்டது. 1946-47 இல் கொச்சின் சீனுவில் 70 சதவீதமான நிலத்தில் நெல் விளைவிக்கப்பட்டது. யுத்தத்தினுற் பாதிக்கப்படாத தைலாந்தில் 1950-51 இல் 131 இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்கப்பட்டது (இத்தொகை 1940-41 இல் விளைவிக்கப்பட்ட நிலத்திலும் பார்க்க 64 சதவீதம் அதிகமாகும்). யுத்த காலத்தையடுத்த பத்துவருட காலத் தில் தைலாந்திலே நெல் விளையும் நிலம் அதிக அளவில் அதிகரித்துக் காணப் பட்டது.
யுத்த காலத்தின் பின்பு நெல் வருவாய் குறைவடைந்து காணப்பட்டது. போதிய உழவு மாடுகள் இல்லாமையும் நெற்செய்கைக்குத் தடையாகவிருந்தது. மறைவாகச் சந்தையில் விற்பதற்காக உண்மையான வருவாய் குறைத்துங் காட்டப்பட்டது. உணவுப்பயிரல்லாத வர்த்தகப் பயிர்களை விளைவிக்கும் மலாயா போன்ற நாடுகள் உள்நாட்டு உணவுச் செய்கை குறைந்ததனுல் அதி கம் பாதிக்கப்பட்டன. ஏனைய நாடுகள் குறைந்த அளவிலேயே வழக்கத்தில் அரிசியை இறக்குமதி செய்தன. சோளச் செய்கையிலும் விருத்தி காணப்பட் டது. 1938-58 காலப் பகுதியில் பிலிப்பைனில் சோளநிலம் மும்மடங்காகப் பெருகியது, தைலாந்தில் இந்நிலம் பன்னிரண்டு மடங்காகப் பெருகியது.
யுத்தகாலத்தின் பின்பு போதிய அளவில் தொழிலாளர் இல்லாமையாலும் வர்த்தகப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டிருந்தது. வாழ்க்கைப் பயிர்ச்செய்கை யிலீடுபட்டோரும் கலப்புப் பயிர்ச்செய்கையிலிடுபட்ட சிறு விவசாயிகளும் முன்னரிலும் பார்க்க முக்கியமாக அமைந்தனர். 1946 இல் மலாயாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த இறப்பரில் 55 சத விதத்திற்கு மேற்பட்ட தொகை சிறு தோட்டங்களிலிருந்து பெறப்பட்டது; அந்த ஆண்டின் முதற் பகுதியில் உற் பத்தி 85 சதவீதமாகவிருந்தது. 1962 ஆம் ஆண்டில் சிறுதோட்டங்கள் 40 சத விதமான தொகையையே உற்பத்தி செய்தன (1940 இல் இத்தொகை 39 சத வீதமாயிருந்தது).
தாவர நெய்யும் பின்பு ஒரு முக்கிய உற்பத்திப் பொருளாக அமைந்தது. 1947 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் தென் கிழக்கு ஆசியாவின் தாவர நெய் உற்பத்தி 1941 ஆம் ஆண்டு உற்பத்தியை ஒத்திருந்தது. இப்பொழுது எல்லா நாடுகளிலும் உற்பத்தி அதிகமாகும்.
உணவுப் பயிர்கள் விளைவிக்கப்படும் நிலம் குறைந்ததனுலும் உணவுப் பொருள்வருவாய் குறைந்ததனுலும் தென் கிழக்கு ஆசியாவின் உணவு நிலைமை எதிர்வரும் ஆண்டுகளிற் பாதிக்கப்படலாம். வர்த்தகச் செய்கை குறைந்து வாழ்க்கைப் பயிர்ச்செய்கை முக்கியம் பெற்றிருப்பதும் நோக்கத்தக்கது. பத்து

தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் 439
வகையான மீனே வியாபாரத்திற்குப் பயன்படுகின்றது. தென் கிழக்கு ஆசியா விலுள்ள பிற பகுதிகளிற் போன்றே மீன்பிடிதொழில் இங்கும் நடைபெறுகின் றது. கரைப்பகுதி மீன்பிடி உள்நாட்டு மீன்பிடி என்பன இங்கு மேற்கொள்ளப் படுகின்றன. கடந்த பத்துவருட காலமாக ஆழ்கடல் மீன்பிடியும் நடைபெற்று வருகின்றது. பொனிற்றே (தூன) எனப்படும் மீன் பெருந் தொகையாக இயந் திசப் படகுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. பதங்கஸ், மணிலா, குலு முதலிய கடற்பகுதிகளிலேயே ஆழ்கடல் மீன்பிடி நடைபெறுகின்றது. மிண்டோசோ, பதங்கஸ், புலக்கான் ஆகியவற்றை அடுத்த கரைப்பகுதிகளிற் சாதாரண மீன் பிடி நடைபெறுகின்றது. 90 சதவீதத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு மீன்பிடி தொழில் பதங்கஸ், புலக்கான், லகூன, ரீசால் முதலிய பகுதிகளிலே இடம்பெற் அள்ளது. பாம்பான்கா, ஈலோஈலோ மாவட்டங்களில் மீன் ஏரிகள் பல காணப் படுகின்றன. பாலாவான், குலு முதலிய தீவுகளைச் குழவுள்ள கடலில் முத்துச் சிப்பி பெறப்படுகின்றது.
1960 ஆம் ஆண்டில் பிலிப்பைன் தீவுகளில் 250,000 மக்கள் மீன்பிடிதொழிலில் முழுநேரமும் ஈடுபட்டிருந்தனர். மேலும் 290,000 மக்கள் மீன்பிடித்தலைப் பகுதி நோத் தொழிலாகக் கொண்டிருந்தனர். 1961 இல் பிலிப்பைனில் 475,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. இது 1956 இல் பிடித்த மீனின் தொகையிலும் 17 சத வீகம் கூடியது. அரைவாசிக்கு மேற்பட்டதொகை உடன்மீனுக விற்கப்பட்டது.
*
மீன்பிடி தொழிலின் போக்குகள் di -
சீரானமுறையில் அமைக்கப்படாத தொழிலாகவுள்ள பொழுதும் தென் கிழக்கு ஆசியாவில் இது முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மக்களின் உண வில் மீன் ஒரு முக்கியபொருளாகவுள்ளது. இப்பகுதியின் அரிசி ஏற்றுமதி யைப்போன்று மீன் வியாபாசமும் ஓரளவுக்கு அமைந்துள்ளது. சர்வதேச வர்த் தகத்தில் தரகர்களாகவும் வியாபாரிகளாகவும் இருப்பவர் வெளிநாட்டவர் ஆவர். தென்கிழக்கு ஆசியாவின் தொழில் ஒழுங்கான முறையில் விருத்தி செய்யப் படாத தொன்முதலால் யுத்தகாலத்தில் அதிகம் டாதிக்கப்படவில்லை. கென் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இத்தொழில் காணப்படுகின்றது. தொழில் எளிதான முறையிலே இன்றும் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைக் கப்படும் தோணிகள், கருவிகள் முதலியன பயன்படுத்தப்படுகின்றன. இக்காச ணங்களினல் மீன்பிடிதொழில் யுத்தகாலத்தில் ஏற்பட்ட விளைவுகளினல் அதிகம் பாகிக்கப்படவில்லை.
கென் கிழக்கு ஆசிய நாடுகளிடையில் நடைபெற்ற மீன் வியாபாரம் யுத்தத்தி ஞற் பாதிக்கப்பட்டது. தொகையாக உப்பைப் பெறுவது யுத்த காலத்திற் கடின மாகவிருந்தது. போக்குவரத்தும் தடைப்பட்டது. ஆனல் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் அண்மையான பகுதிகளிலிருந்து தேவையான அளவுக்கு மீனைப் பெற்ற னர். மீன்பிடி கப்பல்கள் மூலம் பச்சைமீனையும் கரைப்பகுதியிலிருந்து குளிரூட் டிய மீனையும் முன்பு பெற்றுவந்த பெரிய பட்டினங்கள் யுத்தகாலத்திற் பாதிக் கப்பட்டன. போக்குவரத்துச் சீரடையும் வரையில் இந்த நிலைமை காணப்பட்
19-CP 4217 (6819)

Page 229
440 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
டது. தென் கிழக்கு ஆசியாவிற் பெருந்தொகையாகக் கருவாட்டை இறக்குமதி செய்துவந்த பகுதி யாவாவாகும். யுத்த காலத்தில் சர்வதேச வர்த்தகம் தடைப் பட்டதனுல் யாவா கருவாட்டை இறக்குமதி செய்யமுடியவில்லை. தென் கிழக்கு ஆசியாவில் ஒவ்வொரு பகுதியிலும் மீன்பிடிதொழிலை விருத்திசெய்வதற்கான முயற்சிகள் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்டுவருகின்றன. மீன்பிடி கப்பல்கள் குளிர்சாதனப் பெட்டிகள் முதலியன மீன்பிடி தொழிலிற் பயன்படுத்தப்படுகின் றன. சந்தைவசதிகளும் ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மீன்பிடிக்கப்படாத புதிய பகுதிகளில் மீன்வளம்பற்றியும் ஆராயப் பட்டுவருகின்றது. பாங்கொக்கிலுள்ள உலக உணவுப் பயிர்ச்செய்கைத்தாபனக் கிளை இந்நடவடிக்கைகளை ஒழுங்கான முறையிற் சீரமைத்துவருகின்றது. தென் கிழக்கு ஆசியாவிற் பிடிக்கப்படும் மொத்த மீன் தொகை 1948-61 காலப்பகுதி யில் இருமடங்காகப் பெருகியுள்ளது. இதுபற்றிய புள்ளிவிபரங்கள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றன.

அத்தியாயம் 24 தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும வியாபாரமும்
1960 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவின் கைத்தொழில் உற்பத்தி பொத்த உற்பத்தியில் 12 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடை பெறும் “பதன்செய்தல்” தொழில் முறைகளை அடக்கிப் பார்த்தாற் கைத் தொழில் உற்பத்தி வீதம் அதிகமாகக் காணப்படும். தென்கிழக்கு ஆசியாவிற் பயிர்ச்செய்கையே முக்கிய தொழிலாக உள்ளது. வாழ்க்கைப் பயிர்ச்செய்கை யில் பெருந்தொகையான மக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வளிப்ப தும் இத்தொழிலாகும். விவசாயிகள் வாழ்க்கைப் பயிர்களிலிருந்து பெறப்படும் பொருள்களைத் தமது தேவைக்காகப் பலவழிகளிற் பதன்செய்து உபயோகிக்கின்
நறனர்.
குடிசைக் கைத்தொழில்
வாழ்க்கைப் பயிர்ச்செய்கையைப் போன்று சுயதேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கம் இப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிகமாக உண்டு. இதனுல் தென் கிழக்கு ஆசியாவில் நெசவுத் தொழில் போன்ற கைத்தொழில்கள் குடிசைத் தொழிலாக வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றன. சாரம், லுங்கி முதலிய துண் டுப் புடைவைகளே நெய்யும் பழக்கம் இப்பகுதி மக்களிடையில் உண்டு. இத்த கைய குடிசைத் தொழில், துணிகள் மலிவாக இறக்குமதி செய்யப்படுவதனுற் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் ஓரளவுக்கு இன்றும் நடைபெறும் பகுதிகளில் இறக்குமதி செய்யப்படும் நூலே நெசவுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. பேமா வின் சில பகுதிகளில் உள்நாட்டுப் பட்டு உபயோகிக்கப்படுகின்றது. தைலாந்து, இந்தோசீனு ஆகிய பகுதிகளில் இந்தோசீனப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது. யாவாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டிக் சாரத்தில் (ஆண்களும் பெண்களும் அணியும் வண்ணந்தீட்டிய புடைவை) 92 சதவீதம் 80 பேருக்குக் குறைவான தொழிலாளர் பணிபுரியும் சிறிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இப் பொழுது துணி இறக்குமதி செய்யப்பட்டுச் சிறிய ஆலைகளில் வண்ணந் தீட்டப் படுகின்றது.
மற்ருெரு குடிசைத்தொழில் தாலமச ஓலைகளைக் கொண்டு இழைக்கப்படும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வோலைகளிலிருந்து பல் வேறு பொருள்கள் அமைக்கப்படுகின்றன. பலவகையான பெட்டிகடகங்கள் தொப்பிகள், பாய்கள், தட்டிகள், ஏனைய விட்டுப் பொருள்கள், மீன் பொறிகள் பயிர்ச் செய்கைக் கருவிகள் முதலியபல பொருள்கள் தாலமாம், மூங்கில் என் பனவற்றைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சொந்தத் தேவைக்காகத் தோணி ாள், காற்கட்டைகள், கருவிகள் என்பன மரத்தினுற் செய்யப்படுகின்றன. இத்த
44

Page 230
442 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
கைய கிராமத் தொழில்களினுற் பணவருவாய் குறைவாகும். இவை பற்றிய புள்ளி விவரங்களும் இல்லை. எனினும் தென்கிழக்கு ஆசிய மக்களின் வாழ்க்கையில் இத் தொழில்கள் முக்கியமாக உள்ளன. கிராமத்தவரின் வாழ்க்கையில் மரப்பொருள் கள் கொண்டுள்ள முதன்மையினுல் இவர்கள் இன்றும் “மரக்காலத்தில்’ வாழு கின்றனர் எனக் கூறுவது பொருத்தமாகும். இப்பகுதியில் சொந்தத் தேவைக் காகச் சுருட்டு, சிகறெற்று என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் உபயோகத்தால் வெற்றிலேபோடும் பழக்கம் இன்று குறைந்துவருகின்றது. பேமா, பிலிப்பைன், யாவா ஆகியபகுதிகளில் வியாபாரத்திற்காகவும் ஏற்றுமதிக் காகவும் சுருட்டு உற்பத்தி செய்யப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் 12,000 தொன் புகையிலை சிகறெற்று வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
தென் கிழக்கு ஆசியாவில் ஆங்காங்கு உலோகத் தொழிலும் சிறிதளவுக்குக் காணப்படுகின்றது. மலாயா, யாவா ஆகியபகுதிகளில் வெள்ளித் தொழிலும், தைலாந்தில், நீலோத் தொழிலும், பேமாவில் இரத்தினக்கற்களை வைத்துக் கட் டும் பொற்ருெழிலும் குறிப்பிடத்தக்கன.
இத்தொழில்கள் சர்வதேச வர்த்தகத்தில் முக்கியமாக இல்லாமையால் சிறு தொழில்களாகக் கொள்ளப்படுகின்றன. இவற்றைப் பயனற்ற தொழில்கள் என நாம் கொள்ளமுடியாது. ஐரோப்பாவிலும் தூரகிழக்குப் பகுதியிலும் இத்தகைய தொழில்கள் பின்பு பெரிய தொழில்களாக விருத்தி பெற்றதுபோன்று இப்பகுதி யில் இவை விருத்தியடையலாம். இப்பொழுதுள்ள குடிசைக் கைக்தொழில்க ளில் உபயோகிக்கப்படும் முதலீடு மிகக் குறைவாகும். பல கைத்தொழில்கள் குடும்பத்தின் தேவைக்கு மட்டுமே பயன்படத்தக்கனவாக உள்ளன ; மேலதிக மாகப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
தென் கிழக்கு ஆசியாவில் வாழும் மக்கள் தமது உணவுத் தேவைக்கும் பிற தேவைக்கும் வேண்டிய பொருள்களேயே உற்பத்தி செய்வர். பிற பகுதிகளி லிருந்து அவர்கள் பெற்றுக் கொள்ளும் பொருள்கள் குறைவாகும். சுயதேவைக் காகப் பொருள்களை உற்பத்தி செய்பவர்களாதலால் அவர்களிடம் பணப்புழக்க மும் குறைவாகும். இதனுல் பிறபகுதிகளிலிருந்து பொருள்களைப் பெற்றுக் கொள் ளக்கூடிய வசதியும் இல்லை. ஐரோப்பாவில் கைத்தொழிற் புரட்சி ஏற்படுவதற்கு முன்பு தென் கிழக்கு ஆசியாவில் இந்த நிலையே காணப்பட்டது. இன்றும் பல பகுதிகளில் இந்த நிலை காணப்படுகின்றது. வேறு சில பகுதிகளில் இந்த நிலை வேறுவடிவங்களில் மாற்றமடைந்து காணப்படுகின்றது. சுயதேவை நோக்கம் இன்றும் கிராமங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்க விடையில் பணமாற்று இப்பொழுதும் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. சிலர் ஒய்வு நேரங்களில் வேலை செய்து சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் இவ்வாறு சேகரிக்கும் தொகை மிகக் குறைவாகும். தென்கிழக்கு ஆசியாவின் வெவ்வேறு பகுதிகளின் ஆள்வீத வருமானம் மிகவுங் குறைவாகவிருத்தலிலிருந்து இதனை ஊகித்துக் கொள்ளலாம். 1962 ஆம் ஆண்டில் பேமா, தைலாந்து, இந்தோனே சியா ஆகியவற்றின் ஆள்வீத வருமானம் 45 தொலருக்கும் குறைவாகவிருந்தது.

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும் வியாபாரமும் 443
லாவோஸில் இது 14 தொலராகவிருந்தது. இத்தொகை மலாயாவில் 137 தொல ராகவும், சிங்கப்பூரில் 220 தொலராகவும் காணப்பட்டது. மலாயா, சிங்கப்பூர் ஆகியவற்றில் பொருளாதாரம் சுயதேவை நிலையிலிருந்து அதிக அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பணத்தை அடிப்படையாகக் கொண்டு பல தொழில் முறைகள் இப்பகுதிகளில் வளர்ச்சி பெற்றுள்ளன.
தென் கிழக்கு ஆசியப் பகுதியில் வாழும் மக்களின் பொருளாதாரத்திற் பணம் சிறிதளவுக்கே முக்கியமாகவுள்ளதனுல் ஐரோப்பிய முறையில் அவர்கள் வறிய வர்களாக உள்ளனர் என்று கருதுதல் தவருகும். அவர்களின் சுயதேவைக்குரிய பொருள்களாக வெளியிலிருந்து பெறப்படுபவற்றிற்கு இப்பணம் போதியதாகும். அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்கள் வீட்டுப் பொருள்கள் என்பன வற்றை அவர்களே பெற்றுக்கொள்ளுகின்றனர். தேவையானவிடத்துக் கிராமத்த வர் உதவியுமுண்டு. ஐரோப்பாவில் இத்தகைய சமூகவமைப்பு இப்பொழுது இல்லை. தென்கிழக்கு ஆசியாவிலும் கைத்தொழில், வர்த்தகம் என்பன சிறப்பாக அமையும் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படலாம்.
விவசாயப் பொருள் பதன்செய்தல்
தென்கிழக்கு ஆசியப் பகுதி பயிர்ச்செய்கையை முக்கிய தொழிலாகக் கொண் டுள்ளதனுல் ஆலைகளில் பதன் செய்யப்படும் பொருள்கள் பயிர்ச்செய்கைப் பொருள்களாக உள்ளன. இப்பகுதியிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் பயிர்ச் செய்கையோடு தொடர்புடைய ஆலைத்தொழில்கள் விருத்திபெற்றுள்ளன. அரிசி குற்றும் ஆலைகள், சீனி ஆலைகள், பசைப்பொருள் ஆலைகள் (சவ்வரிசியிலிருந்தும் மரவள்ளியிலிருந்தும் பெறப்படுவது), சரக்கு ஆலைகள் என்பன குறிப்பிடத்தக் கன. ஐரோப்பியர் பயிர்ச்செய்கை முறைகள் விருத்திபெற்ற பகுதிகளில் மேலேத் தேச முறையிலமைந்த இறப்பர் ஆலைகள், எண்ணெய் ஆலைகள், சீனி ஆலைகள் என்பன நிறுவப்பட்டுள்ளன. இறப்பர்ப் பொருள்களை உற்பத்திசெய்யுந் தொழில் முறை தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவுக்கு விருத்தியடையவில்லை. யாவா வில் இறப்பர் தயர்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. மலாயாவில் இறப்பர் தயர் கள், சப்பாத்து வகை, இறப்பர்க் குழாய்கள் முதலியன இப்பொழுது உற்பத்தி செய்யப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியச் சந்தைக்காகவே இப்பொருள்கள் உற் பக்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் பதன் செய்யுந் தொழில் முறைகள் உட்பட்ட எல்லா ஆலைத்தொழில்களும் நாட்டின் கரையோரத்தையடுத்தே நிறு வப்பட்டுள்ளன. ஏற்றுமதி வியாபாரத்தை முக்கியமாகக் கொண்டே இவை அமைக்கப்பட்டுள்ளன. உட்பகுதிகளிலும் சிறிய அரிசி குற்றும் ஆலைகள், செங்
கட்டி ஆலைகள், சீனி ஆலைகள் என்பன ஒரளவுக்கு நிறுவப்பட்டுள்ளன.
நெசவுப் பொருள்களும் பிற கைத்தொழிற் பொருள்களும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருள்களுக்கு அடுத்த படியாக முக்கியமானவையாய் இருப்பன நெசவுப் பொருள்களாகும். கைத். தொழிற் பொருள்களுள் நெசவுப்பொருள்களே அதிகமாகத் தேவைப்படுகின்

Page 231
444 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
தன. இறக்குமதி செய்யப்படும் நெசவுப் பொருள்கள் பற்றிய விபரங்களே கிடைத்துள்ளன. தூரத்தேயுள்ள இடங்கள் தவிர, வேறிடங்களில் நெசவுத் தொழில் அதிகமாக நடைபெறுவதில்லை. தென்கிழக்கு ஆசியாவில் ஆலைத்தொழி லாக நெசவுத்தொழில் விருத்தியடையவில்லை. சமாாங்கு, தெகால், டமாக் ஆகிய இடங்களில் நூல்நூற்றல் தொழில் நடைபெறுகின்றது. யாவாவில் 200 சிறிய நெசவு ஆலைகளும் இயங்கிவருகின்றன. ஆகவே பெரும்பாலான நெசவுப்பொருள் கள் இன்றும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. நூல்நூற் றலுக்கு வேண்டிய பஞ்சும் இறக்குமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பா, இந் தியா, யப்பான் முதலிய பகுதிகளிலிருந்து மலிவான துணிவகைகளே இறக்குமதி செய்யப்படுகின்றன. நுண்ணிய துணிவகைகளுக்கும் ஒரளவுக்கு மதிப்பு உண்டு. 1960 ஆம் ஆண்டில் இப்பகுதியில் 17,000 இலட்சம் சதுர யார் பருத்தித் துணி வகைகள் உபயோகிக்கப்பட்டன என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் நெசவுத் தொழிலை விருத்தி செய்வதற்குப் பொருத்தமான சந்தை வசதி காணப்படுவதை இது உணர்த்துகின்றது. இந்தோனேசியா, தைலாந்து, பிலிப்பைன் தீவுகள் ஆகிய நாடுகளில் நெசவுத்தொழில் விருத்திசெய்யப்பட்டும் வருகின்றது. 1961 இல் இந்நாடுகள் முறையே 650, 240, 50 இலட்சம் யார் துணி வகைகளை உற்பத்தி செய்தன.
தெருக்கள் புகையிரதவீதிகள், துறைமுகம் முதலியவற்றேடு தொடர்புடைய தொழில் முறைகளும், இயந்திரங்கள் பழுதுபார்த்து ஒழுங்கு செய்தல் என்பன வும் குறிப்பிடத்தக்க பிற தொழில்முறைகளாகும். உள்நாட்டில் தொழில்நுட்ப அறிவு விருத்தியடையவும் மேலைத்தேசமுறையில் கைத்தொழிலாக்கம் ஏற்பட வும் இவை துணையாக அமைந்துள்ளன. இத்தொழில்களுக்கு வேண்டிய இயந் திர சாதனங்கள் யாவும் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலோகக் கைத்தொ ழில்களுக்குத் தேவையான இயந்திர சாதனங்களும் இறக்குமதி செய்யப்படு கின்றன. தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிற் பொருள்களும் பெருத் தொகையாகப் பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 1961 ஆம் ஆண்டில் வடவியற்நாம் தவிர்ந்த ஏனைய தென்கிழக்கு ஆசியநாடுகள் 125,000 இலட்சம் தொலர் பெறுமதியான கைத்தொழிற் பொருள்களை இறக்குமதிசெய் தன. இத்தகைய பொருள்கள் பட்டினங்களில் பெரும்பாலும் தேவையாகவிருந் தன. ஆயினும் எளிய கமத்தொழிற் கருவிகளையும் சாதாரண பொருள்களான கத்தரிக்கோல், ஊசி, முதலியனவற்றையும் கிராமவாசிகள் பெற்றுப் பயன்படுத் தினர். மேற்குறித்த கைத்தொழிற் பொருள்கள் அதிகமானவையாகவிருந்த பொழுதும் அவற்றின் பெறுமதி குறைவாகவிருந்தது. மேலைத்தேசக் கைத் தொழிற் பொருள்களைப் பொறுத்தவரையில் அவை தென்கிழக்கு ஆசிய நாடு களில் உற்பத்திசெய்யப்படுவதற்கு ஏற்ற குழ்நிலை தென்படவில்லை. நெசவுப் பொருள்கள் (மேலே குறிப்பிடப்பட்டன), சப்பாத்து, செருப்பு முதலிய கால ணிகள் என்பன ஒரளவுக்கு உற்பத்திசெய்யப்படுகின்றன. யாவாவிலும் மலாயா விலும் மோட்டார் வாகனத்திற்குத் தேவையான தயர் முதலியனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. யுத்த காலத்திற்கு முன்பு யப்பானில் கிராம அடிப்படை

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும் வியாபாரமும் 445
யில் கைத்தொழில் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. அத்தகைய முறையில் கைத் தொழில்களை அமைப்பதற்கான வாய்ப்புக்கள் இந்நாடுகளிலும் காணப்படுகின் றன. தொழிலாளர் செலவு ஓரளவுக்கு அதிகமாக உள்ளது. அரிசிவிலைக்கு ஏற்ப இந்நிலைமை காணப்படுகின்றது எனக் கூறலாம். இறக்குமதி செய்யப்படும் பொருள்களுள் அன்ருடத் தேவைக்கான நுகர்வுப் பொருள்களே அதிகமாக உள்ளன. 1961 இல் இந்தோனேசியா, பேமா, தைலாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இந்த விகிதம் 80 சதவீதத்திலும் அதிகமாகவிருந்தது.
கணிப் பொருளகழ்தல் மலாயா, பேமா, சுமாத்திரா, போணியோ, பிலிப்பைன், சுமாத்திராவுக்குக் கிழக்கிலுள்ள தீவுகள் என்பனவற்றில் கணிப்பொருளகழ்தல் முக்கியமான தொழிலாக வளர்ச்சிபெற்றுள்ளது. எடுக்கப்படும் கணிப்பொருள்களுள் தகா மும் பெற்ருேலியமும் பிரதானமானவை. கணிப்பொருள் மூலம் பெறப்படும் வரு வாயில் பெருந்தொகை மேற்குறித்த இரு கணிப்பொருள்கள் காரணமாகப் பெறப்படுகின்றன. 1963 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவிற் கணிப்பொருள் ஏற்றுமதிமூலம் 20,500 இலட்சம் தொலர் வருமானம் பெறப்பட்டது. தென் கிழக்கு ஆசியப் பகுதியில் இரும்புத்தாது, போட்சைற்று முதலிய கணிப்பொருள் களும் அதிக அளவிற் காணப்படுகின்றன. ஆனல் இவை காணப்படுமிடங்களிற் போதிய எரிபொருள், வலு வசதிகள் இல்லாமையினுல் இவை பயன்படுத்தமுடி யாதுள்ளன. பிலிப்பைன் தீவுகளில் தங்கமும் பெறப்படுகின்றது. தங்கம் ப்ல இடங்களில் காணப்படுகின்றபொழுதும், முழுப்பகுதியையும் நோக்கும்பொழுது இதன் உற்பத்தி குறைவாகும். தகரம், பெற்முேலியம் முதலியன பெறப்படுவ தல்ை இவற்றைச் சுத்தஞ்செய்து பதன்செய்யும் தொழில் முறைகளும் விருத்தி யடைந்துள்ளன. இத்தொழில்கள் சர்வதேசப் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மையாக இடம்பெற்றிருத்தல் கவனிக்கத்தக்கது. தகரத்தை உருக்கிச் சுத் ஈஞ்செய்யும் தொழில் சிங்கப்பூரிலும் பெற்முேலியம் சுத்தஞ்செய்யும் தொழில் பினுங்கிலும் வளர்ச்சியடைந்துள்ளன. இத்தொழில்களால் உள்நாட்டு விருத்தி யில் அதிகமாற்றம் ஏற்படவில்லை. இவை தொடர்பில்லாத இடங்களில் அமைந் திருக்கின்றன. இவற்றில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் தொகையும் குறைவா கும்.
இக் கைத்தொழில்கள் யுத்த நடவடிக்கையினலும் கைவிடப்பட்டமையாலும் சிாழிந்தன (1953 ஆம் ஆண்டின் பின்பு 250,000 பேருக்கும் குறைவான தொழி லாளரே இத்தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்). எனவே யுத்த காலத்தின் பின்பு, 1945 ஆம் ஆண்டு முதல் இவை புதியனவாகவே பெரும்பாலும் அமைந்தன என்று சொல்லலாம். ஏலவே வளம் சுருங்கியிருந்த சுரங்கங்களே இப்போது 1940 ஆம் ஆண்டு உற்பத்தி அளவுகளே அடையமுடியாதிருக்கின்றன. இந்தியப் பகுதிக்கும் தூரகிழக்குப் பகுதிக்கும் தேவையான பெற்முேலியத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு தென்கிழக்கு ஆசியாவில் உண்டு. சர்வதேச நிலநெய்க்

Page 232
446 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
கம்பனிகள் இப்பகுதியிலுள்ள பெற்முேலியப் படிவுகளை அண்மைக் காலத்தில் விரைவாக விருத்தி செய்து வந்துள்ளன. 1963 ஆம் ஆண்டில் 270 இலட்சம் தொன் சுத்திசெய்யப்படாத நிலநெய் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது. யுத்த காலத்தின் பின்பு தகாமகழ்தலும் படிப்படியாக விருத்திசெய்யப்பட்டது. தகரம் எடுப்பதற்குப் பம்புகள், வாருமியந்திரங்கள் முதலியன தேவை. இவற் றைப் பெற்றுக்கொள்வது சிரமமாகவிருந்ததனுல் இத்துறையில் விருத்தி படிப் படியாக ஏற்பட்டது. உலகச் சந்தையில் யுத்தத்திற்கு முன்பிருந்த மதிப்புத் தகாத்திற்கு மீண்டும் ஏற்படுமோ என்பது நிச்சயமில்லை. மலாயாவிலும் பிலிற் றனிலும் உள்ள தகரம் எடுக்கப்படும் இடங்கள் நீண்டகாலத்திற்குப் பயன்தர வல்லன என்று கூறமுடியாது. சிங்கப்பூருக்குத் தெற்கிலுள்ள சிறு தீவுகளில் தகரம் பெருந்தொகையாகக் காணப்படலாம் எனக் கருதப்படுகின்றது. அவ் வாறு காணப்பட்டால் எதிர்காலத்தில் உற்பத்தி அதிகரிக்கலாம், 1955 இல் தென் கிழக்கு ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்தத் தகாத்தின் தொகை 107,000 தொன்னகும். 1958 இல் இக்தொகை 62,000 தொன்னுகக் குறைவடைந் தது. தகாவிலையைச் சீராக்கும் எண்ணத்தோடு மேற்கொள்ளப்பட்ட சர்வதே சக் கட்டுப்பாட்டுத் திட்டம் காரணமாகவே உற்பத்தி குறைவடைந்தது. 1963 இல் மீண்டும் தகா உற்பத்தி அதிகரித்து 94,000 தொன்னகியது.
கைத்தொழிலாக்கத்திற்குத் தேவையான தொழிலாளர் வசதியும் வலுவும
தென்கிழக்கு ஆசியாவில் மேற்குறித்த கணிப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கைத்தொழிலாக்கம் சிறப்பாக விருத்தியடைய இரண்டு நிலைமைகள் அவசியமாக உள்ளன. ஒன்று தொழிலாளர் வசதி பற்றியதாகும். தென்கிழக்கு ஆசியாவில் தொழிலாளர்வசதி குறைவாகவிருந்து வருகின்றது. யுத்த காலத் தில் கணிப்பொருளகழ்தல் தடைப்பட்டதனுல் தொழிலாளர் இத்தொழிலைவிட்டு நீங்க நேரிட்டது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அதனைக் கைவிட்டு இத்தொழிலில் ஈடுபடுவரோ என்பதும் கூறமுடியாது. நெல் பெரும்பாலும் இப் பகுதியில் வாழ்க்கைப் பயிராக விளைவிக்கப்படுகின்றது. தொழிலாளர் அதனை (விடுத்துக் கைத்தொழிலில் ஈடுபடுவாரானல் உணவுப்பொருள் உற்பத்தி பாதிக் கப்டடும்.
தென்கிழக்கு ஆசியாவில் பொறிமுறைவலு குறைவாயிருப்பது அடுத்துக் குறிப்பிடத்தக்கது. கணிப்பொருள்களைத் துணையாகக் கொண்டு கைத்தொழில் கள் அமையவும், பொதுவான கைத்தொழில் விருத்திக்கும் வலு அவசியமாகும். கென் கிழக்கு ஆசியாவில் பெறப்படும் நிலக்கரி தரத்திற் குறைந்ததொன்முகும். தொங்கினில் மட்டுமே சிறந்தவகை நிலக்கரி பெறப்படுகின்றது. முக்கியமான கைத்தொழில்களுக்குத் தரங்குறைந்த நிலக்கரி பொருத்தமானதன்று. பெருந் தொகையான அளவிற் காணப்படும் இரும்புத்தாதைக் கைத்தொழிலிற் பயன் படுத்துவதற்குச் சிறந்த நிலக்கரி இல்லாதிருப்பது குறையாக உள்ளது. தொங்

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும் வியாபாரமும் 447
கின் நிலக்கரியே இத்தகைய தொழிலுக்குப் பொருத்தமானது. பாரித்த கைத் தொழில்களுக்கு நிலநெய்யும் அத்துணைப் பொருத்தமானதன்று. எனினும் இப் பகுதியில் விருத்திசெய்யப்படும் தொழில்களிற் பயன்படுத்தப்படும் பல இயந்தி ாங்களுக்கு டீசல் எண்ணெய் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றது. எதிர்காலத் தில் விருத்தியடையும் தொழில்கள் பெரும்பாலும் இதனையே முக்கிய எரிபொரு ளாகக் கொள்ளலாம்.
நிர்மின் உற்பத்திக்குப் பொருத்தமானநிலைமைகள் இப்பகுதியில் பல இடங்க ளில் காணப்படுகின்றன (வருடத்தில் 16,60,000 இலட்சம் கி. உ. ம. மின் உற்பத்தி செய்யமுடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது). பெரும்பாலான இடங்களில் நீர் மின் உற்பத்தி செய்யப்படாத நிலையிற் காணப்படுகின்றது. தென்கிழக்கு ஆசியா விலுள்ள மக்கள் விவசாயத்திற்குச் சிறந்த முறையில் நீரைப் பயன்படுத்தக் கற் வக்கொண்டுள்ள பொழுதும் இதனை மின் வலுவாக மாற்றிப் பயன்படுத்தப் பழ கிக் கொள்ளவில்லை. இப்பகுதியில் விருத்திபெற்று வரும் நெசவுத் தொழில், நெல் குற்றுதல் முதலிய தொழில்களுக்கு நீர்மின் வலு பெரிதும் துணையாக அமைய லாம். மேனிலப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகமாகவும் சீராகவும் பெறப்படுவ தல்ை நீர்மின் உற்பத்திக்குப் பொருத்தமாகக் காணப்படுகின்றது. உறுதியற்ற எரிமலைப் படிவுகள் காணப்படும் யாவா போன்ற பகுதிகளிலேயே அணைகளைக் கட்டுவது பிரச்சினையாக இருக்கலாம். போதிய அளவு ஆற்றில் நீரும் பொருத்த மான கரைத்தோற்றத் தன்மையும் காணப்படும் இடங்கள் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளுக்குத் தூரத்திலுள்ளன. இவ்விடங்களில் நீர்மின்னை உற்பத்தி செய்வதற்குத் தொழிலாளரைக் கொண்டுசெல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு கின்றது. இந்தோனேசியத் தீவுகளின் நதிகளிலிருந்து வருடத்தில் 260,000 இலட்சம் கி. ஐ. ம. மின் உற்பத்தி செய்யலாம் என மதிப்பிடப்பட்டுள்ள பொழு தும், 14 இலட்சம் கி. உ. ம. மின்னே உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தொகை பில் முக்காறபங்கு யாவாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மத்திய கோட்டு வலயத்திற்கு அப்பால் மழைவீழ்ச்சி ஒழுங்கானதாயில்லாததனுல் ஆற்றிற் சீரான நீரோட்டம் காணப்படுவதில்லை. இத்தகைய நிலைமையுள்ள பகுதிகளில் நீர்மின் உற்பத்தி அதிகமாக விருத்திசெய்யப்படவில்லை, பேமா, தைலாந்து, இந் தோசீன முதலிய நாடுகளில் நீர்மின் உற்பத்தி மிகக்குறைவாகும். மலாயாவில் பேராக் ஆற்றுக்குக் குறுக்கே செண்டரோ என்னுமிடத்தில் ஒர் அணை அமைக் கப்பட்டுச் சிறிதளவுக்கு நீர்மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேற்கு மலாயா விலுள்ள தகரமகழப்படும் இடங்களுக்குத் தேவையான மின்வலு இங்கிருந்து பெறப்படுகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் மின்வலு உபயோகம் இப்பொழுது wகிகரித்துள்ளது (இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களும் மின்வலு உற் பக்கிக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன). மத்திய ஐரோப்பாவிற் போன்று இடையிடையேயுள்ள பகுதிகளில் நீர்மின் வலுவின் துணையோடு கைக்கொழிலாக்கம் ஏற்படலாம். தென்கிழக்கு ஆசியப் பகுதியில் நீர்மின் வலு வையும் தடித்த எண்ணெய் வகையையும் கொண்டு கைத்தொழிலாக்கம் விருத்தி படையுமாயின் நீராவி இயந்திரங்களைக் கைத்தொழில்களுக்குப் பயன்படுத்த

Page 233
448 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
வேண்டிய நிலை ஏற்படமாட்டாது. ஐரோப்பாவில் இந்த நிலை ஏற்பட்டது. தென் கிழக்கு ஆசியாவில் 1962 ஆம் ஆண்டில் 61,000 இலட்சம் கிலோவாற்வலு உம் டக்கி செய்யப்பட்டது (இத்தொகையில் அரைவாசித்தொகை மலாயாவிலும் சிங்கப்பூரிலும் உற்பத்தி செய்யப்பட்டது). இதனைக் கொண்டு பார்க்குமிடத்துத் தலைக்குரிய உற்பத்தி உலகச் சராசரியில் அரைவாசிக்கும் குறைவாகவிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் காட்டு வளத்தினைப் பொறுத்தவரையில் தேக்கு மரம் ஒன்றே குறிப்பிடத்தக்கது. சர்வதேச வர்த்தகத்தில் தேக்குமர ஏற்றுமதி முக்கியமாக உள்ளது. இடைவெப்பப் பிரதேசக் காடுகளின் வளம்குன்றிவரும் இக்காலத்தில் தேக்குமர உற்பத்தி சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது எனலாம். அயனக்காடுகள் வெட்டுமரத்தொழிலுக்கு அத்துணை பொருத்தமானவை அல்ல என்பது ஏலவே குறிப்பிடப்பட்டது. அயனக்காடுகளில் மரங்கள் வெட்டப்பட்ட அம் அவை மீண்டும் சொற்பகாலத்தில் வளர்ந்துவிடக் கூடியவை. ஆகவே இம் மரங்களைப் பயன்படுத்தும் தாட்கூழ் உற்பத்தித் தொழிலை அமைக்கலாம். ஆனல் இத்துறையில் முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. தாட்கூழ் உற்பத்தி நடைபெறுமானல் உலகிலுள்ள தாள்பற்ருமை நிலையும் ஓரளவுக்குச் சீரடைய லாம். அயனப் பிரதேசத்திற் காணப்படும் செடித்தன்மையுடைய தாவர வகை களைத் தாட்கூழ்த் தொழிலுக்கு எளிதாகப் பயன்படுத்தலாம். இடைவெப்பப் பிர தேசங்களில் இத்தொழிலுக்கு மரங்களை வெட்டிப் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
வீடுகளில் எரிப்பதற்குத் தேவையான விறகுகள் காடுகளிலேயே பெறப்படு கின்றன. மின்சத்தி இல்லாத பட்டினங்களிற் காட்டுவிறகுகள் பயன்படுத்தப்படு கின்றன. விளக்கு எரிப்பதற்குத் தேங்காய் எண்ணெயும் மண்ணெண்ணெயும் உபயோகிக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள நிலநெய்வயல் கிளிலிருந்தே மண்ணெண்ணெய் பெறப்படுகின்றது. கைத்தொழிலுக்கு ஏற்ற வகையில் தெருப்போக்குவரத்து இன்னும் விருத்தியடையவில்லை. மோட்டார் வாகனங்களும் சில இடங்களில் மட்டுமே உண்டு. பேமாவிற் காணப்படும் வர்த் தகத் தேவைக்குரிய மோட்டார் வாகனங்களின் தொகையில் இருமடங்கு சிங்கப் பூரிற் காணப்படுகின்றது ; தைலாந்திலுள்ள கார்களின் தொகையில் இருமடங்கு மலாயாவில் காணப்படுகின்றது (1961).
பொருளுற்பத்தியும் உள்நாட்டுப் பதன்செய்தலும்
தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முக்கிய விவசாயப் பொருள்களாக இறப்பர், கொப்பரா, மருந்துத் தாவர வகைகள், மரவள்ளி முதலியன உற்பத்திசெய்யப் படுகின்றன. இவை முன்பு பெரும்பாலும் பிற நாடுகளிலேயே பதன்செய்யப்பட் ப்ெ பல பொருள்களாக உற்பத்தி செய்யப்பட்டுவந்தன. 1940 ஆம் ஆண்டுக்கு (மன்பாக விவசாயப் பொருள்களின் ஏற்றுமதிமூலம் வருடத்தில் 10,000 இலட் சம் தொலர் வருமானம் கிடைத்தது. படிப்படியாக இப்பொருள்கள் தென் கிழக்கு ஆசியப் பகுதியிலேயே பதன்செய்யப்பட்டுக் கைத்தொழிற் பொருள்

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும் வியாபாரமும் 449
களாக அமைக்கப்படலாம். இப்பகுதியிற் கைத்தொழில்கள் வளர்ச்சியடைய இவை பொருத்தமான மூலப்பொருள்களாக அமையும். இப்பகுதியிலுள்ள எரி பொருள்களும் மின்வலுவும் கைத்தொழில்கள் விருத்தியுறத் துணைசெய்யலாம். விவசாயத் தொழிலில் ஈடுபட்ட மக்களும் வேலையற்ற ஓய்வு நேரங்களில் இத் தொழில்களில் ஈடுபடலாம். இந்த முறையில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை யாவாவிற் காணலாம். தொழிற்றிறனுடைய தொழிலாளர் வசதியும் ஊக்கமும் இங்கே காணப்படுகின்றன. 1941 ஆம் ஆண்டளவில் இறப்பர்ப் பொருளும் பத்தி, துணி அச்சடித்தல், மருந்துவகை உற்பத்தி, இனிப்புவகை உற்பத்தி, எண்ணெய் சுத்தஞ்செய்தல் முதலியன இங்கே விருத்தியடைந்து காணப்பட் டன. யுத்தகாலத்தில் இத்தகைய கைத்தொழிற் பொருள்களை இறக்குமதி செய் வது தடைப்பட்டிருந்ததனுல் கைத்தொழில்கள் மேலும் சிறப்பாக விருத்தி யடைய வாய்ப்பு ஏற்பட்டது. பின்பு நிலைமை சீரடைந்ததும் இத்தகைய கைத் தொழிற் பொருள்களுக்குப் போட்டியாக இந்தியா, ஐரோப்பா, தூரகிழக்கு முதலிய பகுதிகளிலும் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தியா கைத் தொழிற்றுறையில் முன்னேறிவரும் நாடு என்பது தெளிவாகும். யுத்த காலக் தின் முன்பு விருத்தி செய்யப்பட்ட தொழில்களுள் நெசவுத்தொழில் முக்கிய மானது. யுத்த காலத்தில் இத்தொழில் மேலும் விருத்தியடைய வாய்ப்பு ஏற் பட்டது. இந்தியா தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கும் நெசவுப் பொருள்களை ஏற்றுமதி செய்துவந்தது. 1958 இல் சீனவின் ஏற்றுமதியிஞரல் இந்தியாவின் ஏற்றுமதி குறைவடைய நேரிட்டது. MVA
தென்கிழக்கு ஆசியாவின் பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கைத் தொழிற் பொருள்களுக்குச் சந்தைவசதி ஐரோப்பா, அ. ஐ மாகாணங்கள் முத லிய பகுதிகளிலேயே காணப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள சிறிய நாடு கள் இப்பொருள்களைப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய தகைமையைச் சிலகாலம் பெற்றிருக்கவில்லை. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் உணவுப்பொருளே அதிக மாக உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. விவசாயமே இப்பகுதியின் முக்கிய தொழி லாக உள்ளது. எனவே உணவுத் தேவைக்காக விசுக்கோத்து, பழச்சாறு முத லியவற்றையும் தகரத்திலடைக்கப்படும் பிற உணவுப்பொருள் வகைகளையும் இப் பகுதியில் உற்பத்தி செய்தல் கூடும். இதுவரை காலமும் தென்கிழக்கு ஆசிய நாடு சள் கைக்தொழிலாக்கம் பெற்ற மேலைத்தேச நாடுகளோடு தொடர்புகொண்டி ருந்தமையால் கைத்தொழில்கள் வளர்ச்சியடைய வாய்ப்பு ஏற்படவில்லை. எனி எனும் இந்நாடுகளில் ஏற்பட்ட தேசியவுணர்ச்சி காரணமாகவும், வேறுபட்ட கொழில் முறைகளைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கம் காரணமாகவும் கைத் கொழில்கள் ஒரளவுக்கேனும் வளர்ச்சியடைய எதுவாயது. 1962 ஆம் ஆண்டள விலுமே, மொத்தத் தேசிய வருமானத்தில் பேமாவில் 14 சதவீதமும், தைலாந் தில் 12 சதவீதமும், பிலிப்பைன் தீவுகளில் 18 சதவீதமுமே கைத்தொழிற் பொருளுற்பத்திமூலம் பெறப்பட்டன. (யப்பானின் 31 சதவீதத் தொகையோடு இவற்றை ஒப்பிட்டுப் பார்க்க).

Page 234
450 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
தென்கிழக்கு ஆசியாவிற் பெருந்தொகையான அளவில் உற்பத்தி செய்யப் பட்டுவரும் விவசாயப் பொருள்கள் மேலே குறிப்பிட்டதுபோன்று ஐரோப்பிய நாடுகளிலும் அ. ஐ. மாகாணங்களிலும் பதன்செய்யப்பட்டுப் பல்வேறு கைத் தொழில்களில் உபயோகிக்கப்பட்டுவருகின்றன. இப்பொருள்கள் வேறு இடங் களிற் கைத்தொழில்களிற் பயன்படுத்தப்படுமானுற் பழைய நிலையங்கள் பாதிக் கப்படலாம். தேசிய உணர்ச்சி காரணமாகத் தென்கிழக்கு ஆசியாவிலே ᏯᎦᏓt Ꮧ? தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தோடு கைத்தொழில்கள் விருத்திசெய்யப் டடுமானுல் தற்பொழுதுள்ள சர்வதேச வியாபாரப் போக்குப் பெரிதும் பாதிக்கப் படலாம். 1958-62 காலப்பகுதியில் சர்வதேச வியாபாரம் இப்பகுதியில் மேலும் விருத்தியடைந்து காணப்பட்டது; சிங்கப்பூரின் ஏற்றுமதிப் பெறுமானமும் இந்தோனேசியாவின் இறக்குமதிப் பெறுமானமும் மட்டுமே குறைவடைந்து
காணப்பட்டது.
தென்கிழக்கு ஆசியப் பகுதியில் வியாபாரம்
தென்கிழக்கு ஆசியப் பகுதியில் யுத்த காலத்தையடுத்துள்ள காலத்தில் 8,000 இலட்சம் தொலர் பெறுமதியான வியாபாரம் நடைபெற்றது. இந்த வியாபாரம் தென்கிழக்கு ஆசியாவைப் பொறுத்த அளவிற் குறைவான ஒரு வியாபாரம் என்றே கொள்ளவேண்டும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் பெரும் பாலும் ஒரேவகையான பொருள்களையே உற்பத்தி செய்கின்றன. இதனுல் இந் நாடுகளிடையில் வியாபாரத்திற் போட்டி காணப்படுகின்றது. பிரித்தானியா, பிரான்சு, ஒல்லாந்து, அ. ஐ. மாகாணங்கள் முதலியன தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு வரலாற்றுத் தொடர்புகொண்டிருந்தமையால் வியாபாரத்திலும் பங்கு கொண்டிருந்தன. இந்நாட்டத்தினுலும் இப்பகுதியிடையில் வர்த்தக வளர்ச்சி குறைவாகவிருந்தது. இந்நாடுகளுள் சிலவற்றில் உணவுப் பொருள் குறைவாயிருக்கும் பொழுது அது, அதிகமாக உற்பத்தி செய்யும் ஏனைய நாடு களிலிருந்து பெறப்படும். அரிசி, மீன் முதலிய பொருள்கள் பெரும்பாலும் பேமா, தைலாந்து, இந்தோசீன ஆகிய பகுதிகளிலிருந்து மற்றைய பகுதி களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியப் பகுதியிற் கப்பற் பாதை அமைந்துள்ள முறையாற் சிங்கப்பூர் மையத்தன்மை பெற்று விளங்கு கின்றது. இப்பகுதியில் நடைபெறும் வியாபாரம் சிங்கப்பூரை மையமாகக் கொண்டே நடைபெறுகின்றது. அவ்வாறே உலகிலுள்ள பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கைத்தொழிற் பொருள்களும் சிங்கப்பூருக்கு இறக்கு மதி செய்யப்பட்டே பின்பு த்ென்கிழக்கு ஆசியாவிலுள்ள பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. நீண்டகாலமாகச் சிங்கப்பூர் இப்பகுதியின் முக்கிய இறக்கியேற்றும் துறைமுகமாக இருந்து வந்துள்ளது. சிங்கப்பூரின் இறக்குமதி வருவாயில் மூன்றிலிரண்டு பகுதி தென்கிழக்கு ஆசிய நாடுகள் மூலம் பெறப் படுகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு தைலாந்து கொண்டுள்ள ஏற்று

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும் வியாபாரமும் 45
மதி இறக்குமதி வியாபாரம் சீரானதொன்முகக் காணப்படுகின்றது. தைலார் கின் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் 40 சதவீதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு நடைபெறுகின்றது.
தென்கிழக்கு ஆசியாவின் வெளிநாட்டு வியாபாரம்
இப்பகுதி வெளிநாடுகளோடு அதிக வியாபாரத் தொடர்பு கொண்டுள்ளது. 1936-40 காலப்பகுதியில் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து 20,000 இலட்சம் தொலர் பெறுமதியான பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட் டன. 12,000 இலட்சம் தொலர் பெறுமதியான பொருள்கள் இப்பகுதியில் இறக் குமதி செய்யப்பட்டன. தென் கிழக்கு ஆசிய நாடுகளிடையில் நடைபெறும் வியாபாரம் இதனுள் அடக்கப்படவில்லை. இப்பகுதியிலுள்ள எல்லா நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களின் பெறுமதியிலும் வேறுபாடு உண்டு. பிலிப் பைனிலும் பேமாவிலும் வேறுபாடு மிகவுங் குறைவாகும். தென் கிழக்கு ஆசியா வின் உற்பத்திப் பொருள்கள் பாரமானவை; நேரடியாக அல்லது சிறிதளவுக் குப் பதன் செய்யப்பட்ட நிலையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இக்காரணங் களினுல் எற்றுமதி செய்யப்படும் பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களிலும் பார்க்கப் பாரமானவையாகவுள்ளன. ஏற்றுமதி காரணமாகத் தென் கிழக்கு ஆசியா உலகில் கூடிய அளவுக்குக் கப்பற் போக்குவரத்தினையுங் கொண்டுள்ளது. இப்போக்குவாத்தோடு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கரை யையடுத்தும் சிறிய கப்பல்கள் வள்ளங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இப்பகுதியின் அமைவு இத்தகைய போக்குவரத்திற்கு ஏற்றதாகவுள்ளது. புத்த காலத்தில் இப்போக்குவரத்துப் பெரிதும் தடைப்பட்டது. இதனல் இப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டுக்குப்பின் மீள நிறுவப்பட்ட பிரதேச வியாபாரத்துக்கு அரசியல் அமைதிக்கேடு ஊறு விளைத்தது ; விலைகளிற் பெரிய மாற்றங்கள் ஏற் பட்டன; புதிய போக்குக்களும் காணப்பட்டன. தென் கிழக்கு ஆசியாவின் வியாபார மீதிகள் பொதுவாகப் பிரதிகூலமாகவே யிருந்தன. 1961 இல் தென் கிழக்கு ஆசியாவில் ஏறத்தாழ 1,10,000 இலட்சம் தொலர் பெறுமதியான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன; இதற்கெதிராக 1,07,000 இலட்சம் தொலர் பெறுமதியான பொருள்களே ஏற்றுமதி செய்யப்பட்டன. பல வேளை களில் இந்த வித்தியாசம் இன்னும் பெரிதாகவே காணப்பட்டது. பெரும்பா லான தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் பெறு மானத்திலும் கூடிய பெறுமானமுள்ள பொருள்களை இறக்குமதி செய்துவருகின் றன. -
1946 இன் பின்பு காணப்பட்ட ஏற்றுமதி வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலவ புத்தகாலப் பாதிப்பும் ஒரு காரணமாகும். யுத்தகாலத்தில் சிதைவுற்றவற்றை மீளவும் சீரமைப்பது முக்கியமாகவிருந்தது. இதனேடு தென்கிழக்கு ஆசியப் பகுதியின் விருத்திக்குப் புதிய சாதனங்களையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டி 41 நிலைமையுங் காணப்பட்டது. இதஞல் இப்பகுதி பல வருடங்களுக்கு

Page 235
452 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
இத்தகைய பொருள்களை இறக்குமதி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. 1961 இல் பேமா, இந்தோனேசியா, மலாயா, ஆகிய நாடுகள் மட்டுமே தாம் இறக்குமதி செய்தவற்றிலும் கூடுதலாக ஏற்றுமதி செய்தன; தென் வியற்நாம் ஏற்றுமதி செய்தபொருள்களின் பெறுமானத்திலும் மூன்று மடங்கு பெறுமான முள்ள பொருள்களை இறக்குமதிசெய்தது. 1956-61 காலத்தில் மலாயாவும் சிங் கப்பூரும் பிரதேச வர்த்தகத்தின் அரைப்பங்கைச் சராசரியாகக் கொண்டிருந் தன. 1961 இல் பிரதேச வர்த்தகத்திலே ஒவ்வொரு நாடுகளுக்குமுரிய சதவீதம் வருமாறு : மலாயா-சிங்கப்பூர் 41, இந்தோனேசியா 20, பிலிப்பைன் 15, தைலாந்து 12, பேமா 6, தென் வியற்நாம் 4.
போக்குவரத்துப் பாதைகள் இணைவு
சமுத்திரப் போக்குவரத்துப் பாதைகள் இணையும் மையத்தானத்தில் தென் கிழக்கு ஆசியா அமைந்துள்ளது. இதன் ஒருபுறத்தில் குடிநெருக்கமுடைய இந் தியாவும் மறுபுறத்தில் சீனுவும் உள்ளன. அல்லாமலும், ஐரோப்பா, அவுஸ்திரே லியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களிடையில் தென் கிழக்கு ஆசியா அமைந்திருப்பதனுல் சர்வதேசப் போக்குவரத்துப் பாதைகளிணையும் மையத் தில் காணப்படுகின்றது. குடியேற்ற ஆட்சிநிலைமைகள் காரணமாகப் பிலிப் பைன் அ. ஐ. மாகாணங்களினதும் கிழக்கு இந்திய தீவுகள் ஒல்லாந்தின தும், தென் கிழக்கு ஆசியாவின் பிறபகுதிகள் பிரித்தானியாவினதும் கப்பற் பாதைகளின் செல்வாக்கைப் பெற்றன. குடியேற்ற ஆட்சி நிலைமைகள் இல்லாத பொழுதும் தென் கிழக்கு ஆசியப் பகுதி தனிப்பட்ட முறையில் இத்தகைய செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்பது கூருமலே அமையும். 1957 ஆம் ஆண்டில் 21,000 வியாபாரக் கப்பல்கள் மலாயாவின் துறைமுகங்களை அடைந் தன. இவ்வாண்டில் சுயஸ் கால்வாய்க்கூடாகச் சென்ற கப்பல்கள் 34,000 ஆகவும் பனமாக் கால்வாய்க்கூடாகச் சென்ற கப்பல்கள் 33,000 ஆகவும் காணப்பட்டன.
சர்வதேசக் கப்பற் பாதைகளின் இணைவையொட்டி, விமானப் பாதைகளும் ஓரளவுக்கு அமைந்துள்ளன. வட அமெரிக்காவிலிருந்து ஒடுங்கிய கடற் பகுதிக் கூடாகவும் (அ. ஐ. மாகாணங்களை யப்பான், சீனு, யாவா ஆகியவற்றின் குடித்தொகை மிக்க மையங்களோடு இணைக்கும் முறையில்) மேற்குப் பசிபிக் குக்கூடாகவும் செல்லும் விமானப் பாதைகளும், ஐரோப்பாவிலிருந்து தென் மேற்கு ஆசியாவின் ஐரோவாசிய மத்திய தரைக்கடலுக்கு ஊட்ாகவும் இந்தியா வுக்கூடாகவும் செல்லும் விமானப் பாதைகளும் இறுதியில் தென் கிழக்கு ஆசி யப் பகுதியில் வந்து சேருகின்றன. அவுஸ்திரேலியாவை இணைக்கும் விமானப் பாதைகளும் இப்பகுதியோடு தொடர்பு பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவின் குடித்தொகை, உற்பத்தி நிலைமைகள் காரணமாக அவுஸ்திரேலியாவை இணைக கும் விமானப் பாதைகள் எதிர்காலத்தில் அதிக அளவுக்கு முதன்மை பெற்றி ருக்கும் என்று கூறுவது கடினமாகும். ஆனல் குடித்தொகை மிக்க இந்தியா, சீன என்பன இதனைப் பொறுத்தவரையில் முக்கியமாக அமையலாம்.

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும்வியாபாரமும் 453
தொடர்புகள் இணைவுபெற்றிருத்தல் தென் கிழக்கு ஆசியா மூலப்பொருள்களையும் உணவுப் பொருள்களையும் உற் பத்தி செய்கின்றது. கைத்தொழிற் பொருள்கள் தேவையாகவிருப்பதனுல் அவற்றை இறக்குமதி செய்கின்றது. இறக்குமதி ஏற்றுமதி காரணமாக ஏற்படும் தாகுப்பணமும் அதிகமாகும். இத்தகைய முறைகளோடு தொடர்புடையவர்க ளும் முன்பு தொடர்புகொண்டிருந்தவர்களும் (1961 இல் 2,20,000 இலட்சம் தொலர் வரையிற் பெறப்பட்டது) தமது பங்கை விட்டுவிடும் மனப்பான்மை யுடையவர்களாகவில்லை. முன்பு குடியேற்ற நாட்டாட்சியாளர் இத்துறைகளில் ஈடுபட்டிருந்தமையால் எல்லா நன்மைகளையும் அவர்களே பெற்றனர். தென் கிழக்கு ஆசியாவின் வியாபாரத்தில் ஐரோப்பா, யப்பான், அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் பார்க்க இந்தியா, சீனு என்பனவே அதிகமாகப் போட்டியிடக் கூடும்.
தென் கிழக்கு ஆசியா வேறுபட்ட குடியேற்ற ஆட்சியாளரின் தொடர்பைப் பெற்றிருந்ததனல் அது பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதனுல் பின்பு வளர்ச்சி பெற்ற தேசியவுணர்ச்சியிலும் பல பிளவுகள் ஏற்பட்டன. ஒற்றுமை யின்மை காரணமாக இன்று மேற்கு நாட்டவரதும் கிழக்கு நாட்டவரதும் தாக் கத்தினுல் எளிதாகப் பாதிக்கப்படத்தக்க ஒருபகுதியாகத் தென் கிழக்கு ஆசி யா விளங்குகின்றது. தென் கிழக்கு ஆசியா அரிசியை மிகையாக உற்பத்தி செய் யும் பகுதியாகவும், மலிவான பொருள் உட்பட எல்லா உற்பத்திப் பொருள்களை யும் இறக்குமதி செய்யும் பகுதியாகவும் உள்ளதனுல் மேற்குறித்த தாக்கம் மேலு மதிகம் எனலாம். இப்பொழுது மேற்கு நாடுகளின் உற்பத்திப் பொருள்கள் மட் டும் தென் கிழக்கு ஆசியச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று கூறமுடியாது. யப்பான், சீனு, இந்தியா ஆகிய நாடுகளின் கைத்தொழிற் பொருள்களும் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலைமைகள் தென் கிழக்கு ஆசியாவின் வர்த்தகம் குறைவடையாது மேலும் வளர்ச்சியுறும் என்பதனை உணர்த்துகின்றன.
ஆசியாவும் தென் கிழக்கு ஆசியாவும்
ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் தென் கிழக்கு ஆசியாவுக்குமிடையில் நெருங் கிய தொடர்பு காணப்படுகின்றது. பிற பகுதிகளுக்குத் தென் கிழக்கு ஆசியா உணவுப் பொருள்களை (பேமா, தைலாந்து, இந்தோசீனு என்பவற்றிலிருந்து அரிசியும் பிலிப்பைனிலிருந்து சீனியும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன) வழங் கும் பகுதியாகவுள்ளது. இப்பகுதியில் கணிப்பொருளகழ்தல் தொழிலிலும் பெருந் தோட்டச் செய்கையிலும் ஈடுபட்டுள்ள இந்திய, சீனத் தொழிலாளர் தத்தம் நாடுகளுக்குப் பணத்தையும் அனுப்பி வருகின்றனர். இன்றுவரை ஆசியாவின் மிகையான குடித்தொகைக்கும் உணவுத் தேவைக்கும் உதவிவரும் பகுதியாகத் தென் கிழக்கு ஆசியா விளங்கிவந்துள்ளது. சீன இந்தியா முதலிய குடிநெருக் கமுடைய நாடுகளில் வாழும் மக்களுக்குப் புதிய உலகமாக அமைந்துள்ளதும் இப்பகுதியாகும். இன்னுஞ் சில வருடங்களுக்குத் தென் கிழக்கு ஆசியா இத்

Page 236
454 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
துறைகளிற் பயன்படத்தக்கதாயிருக்கும். ஆனல் இப்பகுதியில் இன்று மேலதிக மாக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள் குறைவாகும். இப்பகுதியிலுள்ள கணிப்பொருள் அகழப்படும் பகுதிகள், உணவுப் பொருள் உற்பத்திப் பகுதிகள் ஆகியன இன்று குடிநெருக்கமுடைய பகுதிகளாக மாறிவிட்டன. இப்பகுதிக ளுக்கு வேண்டிய உணவுப் பொருள் இன்று இறக்குமதி செய்யபபடுகின்றது. அயனப் பிரதேசத்தில் இம்மாற்றம் விரைவாக ஏற்படுகின்றது. கடந்த நூற்றண் டில் பேமா, தைலாந்து, மலாயா, யாவா முதலிய பகுதிகளில் ஏற்பட்ட விருத்தி இப்பகுதிகளில் இத்தகைய ஒரு நிலை விரைவாக ஏற்படலாம் என்பதனைக் காட் கிென்றது. இப்பகுதிகளில் வாழும் மக்கள் புதிய இடங்களிலும் உறுதியாக உழைக்கக் கூடியவர்களாகவுள்ளனர். பயிர்ச்செய்கை, கைத்தொழில் ஆகிய துறைகளில் பரம்பரையாக மேற்கொண்டுவந்த வாழ்க்கைப் பயிர்ச்செய்கைத் தொழிலுக்கும் கூட்டு உழைப்புக்கும் பொருந்த முயற்சிகளை மேற்கொள்வார்க ளேயானுல் கடந்த ஐம்பது வருடகாலத்தில் அவர்கள் வர்த்தகப் பயிர்ச்செய் கையில் முன்னேறியது போன்று கைத்தொழிலிலும் முன்னேறமுடியும். வர்த்த கப் பயிர்ச்செய்கை இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் பல மாற். றங்களை ஏற்படுத்தியது. அவர்கள் வாழ்க்கை பலவழிகளிற் சீரற்று அமைய இது காரணமாகவிருந்தது. அவ்வாறே தென் கிழக்கு ஆசியாவின் குழல்நிலைமைக ளுக்கு ஏற்பக் கைத்தொழில் அமையாதவிடத்து மேற்கு நாடுகளில் கைத் தொழில் வளர்ச்சியினுல் ஏற்பட்ட விரும்பத்தகாத நிலைமைகள் இப்பகுதியிலும் ஏற்படலாம். இந்நிலைமைகள் பல வருடங்களுக்குத் தொடர்ந்து காணப்படலாம். மேற்கு நாடுகள் இப்பொழுதுதான் இந்த நிலைமைகளிலிருந்து ஓரளவுக்கு விடு பட்டுள்ளன. தென் கிழக்கு ஆசியாவில் வர்த்தகப் பயிர்ச்செய்கை விருத்தி யுற்றதனுல் கிராமப் பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழத் தொடங்கினர்; உடனலத்திற்கு ஒவ்வாத பகுதிகளாக இவை அமைந்தன. கைத்தொழிலும் தென் கிழக்கு ஆசியப்பகுதிக்குப் பொருத்தமாக அமையாதவிடத்து மக்களின் வாழ்க்கை வசதிகள் பாதிக்கப்படலாம். மேற்கு நாடுகளில் கைத்தொழில் விருச் தியால் ஏற்பட்ட பொருத்தமற்ற விளைவுகளை அகற்றுவதற்குப் பல வருடங்கள் சென்றன. கீழைத்தேச நாடுகளில் இந்த விளைவுகள் மிகவும் கடுமையாக அமைய லாம்; இவை பல வருடங்கள் நீடித்துமிருக்கலாம்.
சர்வதேச உதவி
யுத்த காலத்தையடுத்துத் தென் கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு, பொதுச் சேவைகள், வியாபாரம் என்பன பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் நிலைமை கள் மேலும் மோசமாகி வந்தன. இக்காரணங்களினல் சர்வதேசத் திட்டங்கள் மூலம் தென் கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கை நிலைமையையும் சீரமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதா கச் சுதந்திரம் பெற்ற பல நாடுகளின் பொருளாதாரம் அதிக அளவுக்குப் பாதிக் கப்பட்டிருந்தது. பொருளாதார விருத்தியிலிடுபட்டிருந்த அனுபவமுடைய மக் கள் யுத்தத்தினுலும் அதனலேற்பட்ட ஏனைய விளைவுகளினலும் பாதிக்கப்பட்ட னர். தென் கிழக்கு ஆசியப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் யுத்தகாலத்தின்

தென் கிழக்கு ஆசியாவில் கைத்தொழிலும் வியாபாரமும் 455
பின்பு காணப்பட்ட உறுதியற்ற நிலைமைகளினல் சிதைவுற்ற பொருளாதா 'சத்தை விருத்தி செய்யத் தனிப்பட்ட முயற்சிகள் எடுக்கப்படவில்லை. தென் கிழக்கு ஆசியாவின் உள்ளார்ந்த பொருளாதார நிலைமைகள் திருத்தமாக அறி யப்படாமையால் மேலும் சிக்கலான தன்மை காணப்பட்டது. இப்பகுதியின் பொருளாதார விருத்திக்காகக் "கொழும்புத் திட்டமும்’ (கூட்டுப் பொருளா தார விருத்திக்காக), “பொருளாதாரக் கூட்டு நிர்வாக அமைப்பும்" (அ. ஐ. மா. வரவு செலவுத்திட்டங் காரணமாக இப் பெயர் பின்பு “பொதுப் பாதுகாப்பு நிறுவனம்” எனவும் "விருத்திக்கான கடனுதவித்திட்டம்' எனவும் மாற்றப் பட்டது. ஆனல் இவற்றின் கடமைகள் ஒன்ருகவே காணப்பட்டன) நிறுவப்பட் டன. கொழும்புத் திட்டம் பிரித்தானிய பொதுநலநாடுகளின் தேளிங்கு நாணய உதவியை அடிப்படையாகக் கொண்டது. உணவுப் பொருள் உற்பத்தி, வீட மைப்பு, சுகாதார சேவை, பொதுச்சேவை என்பனவற்றிற்கு இத்திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்படுகின்றது. பொருளாதாரக் கூட்டு நிர்வாக அமைப்பும் மேற்குறித்தவற்றின் விருத்திக்காக நிறுவப்பட்டுள்ள அ. ஐ. மாகாண உதவியை அடிப்படையாகக் கொண்ட தாபனமாகும். தென் கிழக்கு ஆசியா வின் விருத்திக்காக ஐக்கிய நாடுகள் சபையின் கிளைத்தாபனங்கள் மூலமும் உதவி வழங்கப்படுகின்றது. 1953-57 காலப்பகுதியில் மேற்குறித்த பல தாபனங் கள் மூலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 32,050 இலட்சம் தொலர் வழங் கப்பட்டது; லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளிலுள்ளோருக்குத் தலைக்கு 61 தொலரும், தென் வியற்நாமியருக்குத் தலைக்கு 146 தொலரும், பிலிப்பைன் மக்களுக்குத் தலைக்கு 9 தொலரும், மலாயா மக்களுக்குத் தலைக்கு 7.8 தொலரும், தைலாந்து மக்களுக்குத் தலைக்கு 7.2 தொலரும், இந்தோனேசியருக்கு 1.5 தொ லரும் என்ற வீதத்தில் இத்தொகை வழங்கப்பட்டது. இத்தகைய உதவியினுல் தென் கிழக்கு ஆசியப் பகுதியின் வியாபாரம், கைத்தொழில் ஆகியவற்றில் ஏற் படக்கூடிய விருத்தியை இன்னும் சில வருடங்களிலேயே அறியலாம். தனிப் பட்ட முதலாளிகள் இப்பகுதியில் பணத்தை முதலீடு செய்யத் தயங்குகின்ற னர். சில சமயங்களில் பொருத்தமற்ற அரசாங்க நிலைமைகளும் தடையாக உள் ளன. இக்காரணங்களினல் சர்வதேசக் கடன் உதவி அதிக அளவுக்குத் தேவை யாகவுள்ளது.

Page 237
அத்தியாயம் 25 தென் கிழக்கு ஆசியாவின் மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை
தென்கிழக்கு ஆசியா அதிக அளவுக்குத் தரைத்தோற்ற வேறுபாடுகளைக் கொண்ட (மலைத்தொடர்களும் கழிமுகங்களும்) ஒரு பகுதியாகும். காலநிலை தாவர வளர்ச்சிக்கு ஏற்றதாய் ஈரத்தன்மையைக் கொண்டுள்ளது. இத்தன்மை படிப்படியாகப் பருவக்காற்றுத் தன்மையாக மாறிக் காணப்படுகின்றது. இக் தகைய சூழலைக் கொண்ட பகுதியில் மக்கள் பல்வேறு வகையான வாழ்க் கையை மேற்கொண்டுள்ளனர். காடுகளில் வாழுங் கூட்டத்தவர் காய்கறிகளைச் சேகரிப்பவர்களாகவும் வேட்டையாடுபவர்களாகவும் உள்ளனர். தாழ்நிலப் பகுதிகளில் வாழ்க்கைப் பயிர்ச் செய்கையிலீடுபட்ட மக்கள் வாழுகின்றனர். ஆனல் எல்லோரும் ஆயுதங்கள், கருவிகள், வீடுகள், வீட்டு உபயோகப் பொருள் கள் என்பனவற்றிற்கு மரங்களையே பயன்படுத்துகின்றனர். ஈரமிக்க பகுதியாத லால் நெல் முக்கிய தானியமாகவுள்ளது. சமூகவமைப்புக் கூட்டுறவு முயற்சி களுக்குத் துணையாகவுள்ளது. இப்பகுதியின் சமூக பொருளாதார அமைப்பு கடந்த இரண்டொரு நூற்றண்டில் அமைந்ததாகக் காணப்படுகின்றது. வெளி நாட்டு வியாபாரமும் கைத்தொழிலும் விருத்திபெற்றுள்ளன. தென்கிழக்கு ஆசியப் பயிர்ச்செய்கைப் பொருள்களுக்கும் கனிப்பொருள்களுக்கும் பிற நாடு களில் ஏற்பட்ட மதிப்புக் காரணமாகவே மேற் குறித்த பொருளாதார முறை கள் வளர்ச்சி பெற்றன. இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்பு இந்தியா, சீன ஆகிய நாடுகளிலிருந்து சில வியாபாரிகள் மட்டுமே தென்கிழக்கு ஆசியப் பகு திக்கு வருவதுண்டு.
வரலாற்றுப் புவியியற் காரணிகள்
தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றுப் புவியியல் பற்றித் திருத்தமாக அறிந்து கொள்வது கடினமாகவுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இப்பகுதியில் பல நூற்றண்டுகள் நின்று நிலவக்கூடிய முறையில் இலக்கியப் பாரம்பரியம் இடம்பெறவில்லை. இதனுல் பழைய நிலைமைகள் பற்றிய நம்பத் தகுந்த விவரங்கள் குறைவாகும். இப்பகுதியில் செவிவழியாகவே செய்தி வழங் கப்பட்டு வந்தது. இலக்கிய வழக்கு இப்பகுதிக்குரியதாயில்லாது இந்தியா சம்பந்தப்பட்டதாகவுள்ளது. வரலாற்றுத் தொடர்புடைய விவரங்கள் எவை யேனும் இருந்திருந்தாலும் அவை எளிதில் அழிந்திருக்கலாம். காலநிலை, எறும்பு, செல் முதலியவற்றினல் மரம், தாள், தோல், துணி என்பன எளிதாகச் சிதைந்துவிடுகின்றன. சதுப்பு நிலங்களும் காடுகளும் நிறைந்த இப்பகுதியில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருள் மரமாகும். மரத்தில் செய்யப்பட்ட கலை நுட்பமுடைய பொருள்கள் (செதுக்கு வேலைப்பாடுடைய பொருள்கள், கட்டடம்
458

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 457
கள், கருவிகள்), எளிதாக உடைந்து சிதைந்து விடுகின்றன. இவ்வாறு சிதைவு ற்ற பொருள்கள் ஏனைய பகுதிகளின் பழைய வரலாற்றை அறியத் துணைசெய் கின்றன. கட்டடங்கள், கற் சிற்பவேலைகள் என்பன தென்கிழக்கு ஆசியப் பகுதி யில் குறைவாகும். சிற்பவேலைக்குரிய கற்களைப் பெறுவதும் கடினமாகவிருந்தது. கல்லிற் செதுக்குவதற்குரிய கருவிகளும் அமைக்கப்படவில்லை. எனவே தென்
ill TG) ITS Elasg),
ဂြိုဇွို If00; tS
வியாபாரப் பாதைகள் سمے as
صه صر وحی-سسسسسسسسسه
படம் 113 தென் கிழக்கு ஆசியாவில் இந்தியக் குடியேற்றவாட்சிக் காலத்தில் நிலவிய வரலாற்றுத் தன்மைகள்
கழக்கு ஆசியாவின் கட்டட அழிபாடுகள் என்பன பெரும்பாலும் இந்தியத தொடர்புடையனவாகவுள்ளன. இந்தியப் பகுதியில் விருத்தி செய்யப்பட்ட அழ குக் கலை முறைகள் அவர்களால் பின்பு இப்பகுதிக்குக் கொண்டுவந்து பரப்பப் பட்டன. கற்கள் கிடைக்கக்கூடிய வறண்ட பாகத்திலேயே இவை விருத்தி பெற் றிருந்தன. களிப்படை காணப்படும் நிலங்களில் செங்கட்டியாலமைந்த கட் டடங்கள் நிறுவப்பட்டன. சிதைந்து காணப்படும் இக்கட்டடங்களும் இந்தியக கலாசாரத் தொடர்புடையன. அங்கோரில் விரைவாக அயனப் பிரதேச மாE) கள் வளர்வதலுைம் கல்லினலும் செங்கட்டியினலும் கட்டப்பட்ட கோயில் களும் பெரிய வாசத்தலங்களும் எளிதிற் சிதைந்து விடுகின்றன.
இயற்கையாக ஏற்பட்ட அழிவுகளினலும் இப்பகுதி பாதிக்கப்பட்டு வந்துன் ளது. அவை ஒவ்வொன்றையும் ஈண்டுக் குறிப்பிடுதல் கடினமாகும். யாவாவில்

Page 238
458 தென்கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
ஏற்பட்ட எரிமலைத் தாக்கங்களினுல் சில மணிநேரத்திலேயே சிறிய இராச்சி யங்கள் அழிந் தொழிந்தன. கிறித்துவுக்குப்பின் 1006 இல் தர்மவம்சப் பட்டி னம் (மத்திய யாவாவில் ஆட்சிபுரிந்த பெருமன்னன் ஒருவனின் பெயரா லமைந்தபட்டினமாகும்) உட்பட்டபகுதி அழிந்து சாம்பராயது. மொாபி எரி மலை வெடித்து எரிமலைக்குழம்பைக் கக்கியதனல் இப்பகுதி அழிந்திருத்தல் வேண்டும். எரிமலைத் தாக்கம் ஏற்படும்பொழுது சாய்வுகள் வழியாகப் பெருந் தொகையான மண்ணும் சேறும் இழிந்து வந்து கீழே படிகின்றன. ஆற்றே சங்களையடுத்துக் காணப்பட்ட பல குடியிருப்புக்கள் இப்படிவுகளினல் மூடப்
R SNA لأي ܫܚ ` ܐܫܒܚ
தென்னேக் கடல் ീ
Barragðagw .
/്
لمححا لاح இல்லாமியத் தாக்கக்
s
ாகித் இராசியம் ('jpgedwR*ھه شه ډي-14
படம் 114-தென்கிழக்கு ஆசியா இஸ்லாமிய மயமாகிய காலத்தில் நிலவிய
வரலாற்றுத் தன்மைகள் பட்டு அழிந்தன. கிழக்குச் சுமாத்திராவின் இராச்சியங்கள் பல இவ்வாறு அழிந்துபட்டிருத்தல் வேண்டும். இவ்விராச்சியங்கள் பற்றி அறியப்பட்ட விவ சங்கள் சொற்பமாகும். நீண்ட காலமாகப் படிதல் ஏற்பட்டு வந்ததனல் கரை யோரங்களும் கழிமுகங்களும் மாற்றமடைந்து காணப்படுகின்றன. முன்பு ஆழ மற்ற கடற்பகுதியாகவிருந்த பகுதிகளில் அடையல்கள் படிந்தமையால் அவை சதுப்பு நிலங்களாக மாற்றமடைந்துள்ளன. மேக்கோங்கு ஆற்றின் கீழ்ப்பகுதி யில் சேறு படிந்ததனுல் தொன்லேசப் கடலோடு தொடர்பற்றதாய் அமைந் தது. கம்போடியா தனிப்பட்டபகுதியாகப் பிரிந்தமையப் படிதலே காரண மாகும், புதிய பாதைகள் அமைக்கப்பட்டமையாலும் முன்பு முக்கியமாக விருந்த குடியிருப்புக்கள் முதன்மையையிழந்து சாதாரண மீன்பிடி குடி யிருப்புக்களாக மாற்றமடைந்தன. கிராப் பூசந்திக்கூடாகக் காணப்பட்ட பாதை கைவிடப்பட்டு, மலாக்காத் தொடுகடலுக்கூடாகக் கடற்பாதை உபயோ கத்திற்கு வந்ததும் பழைய தக்கோலா, பன்டன் முதலிய பட்டினங்கள் முதன்மையிழந்தன. கொள்ளை நோய்களினுலும் பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டு இறந்தனர். பல பெரிய பட்டினங்கள் இவ்வாறு அழிந்தன. 1850 ஆம் ஆண்டில் உதோங்கு பட்டினத்தில் வாந்திபேதி நோய் பரவியது. இதனல்
 
 
 
 

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 459
மக்கள் இப் பட்டினத்தைவிட்டு வெளியேறினர். இப்பொழுதும் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் மலேரியா, வயிற்றுளைவு, வாந்திபேதி, கொள்ளைநோய் ஆகி யன பரவுவதுண்டு. மக்கள் நெருக்கமாக வாழும் யாவாப் பகுதியில் இத்தகைய நோய்கள் அடிக்கடி பரவுகின்றன. இவை பரவும்பொழுது ஆயிரக்கணக்கில் மக்கள் இவற்ருல் பீடிக்கப்பட்டு இறக்கின்றனர். இந்நோய்கள் பரவுவதற்கு, கிரு மிகள் பெருகுவதற்கு வாய்ப்பாகவுள்ள காலநிலை, குடிநெருக்கம், கழிவுநீர் வெளியேற்றப்படாது தேங்கி நிற்றல், மக்களின் அசுத்தமான பழக்க வழக்கங் கள் (காடுகளில் தனிப்பட்ட குடியிருப்புக்களில் வாழும் மக்கள் இத்தகைய பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பினும் அவற்றல் அவர்களுக்கு அதிக தீங்கு ஏற்படுவதில்லை; ஆனல் பட்டினங்களில் அதிக அளவுக்குத் தீங்கு ஏற்படுகின் றது) என்பன காரணமாகவுள்ளன. காய்ச்சல் போன்ற நோய்களினுலும் மக் கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டுப் பிழைப்பவர்களும் Р-І —é) நலம் குன்றியவர்களாக உள்ளனர். இத்தகைய நோய்களினலும் பல குடியிருப் புக்கள் சிதைந்தன. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்பு சிறப்பாகவிருந்து சிதைவுற்ற பல பட்டினங்களில் அழிபாடுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. நோய்களினுலும் போதிய உணவின்மையாலும் பாதிக்கப்பட்டு உடல் நலங் குன்றிவாழும் கூட்டத்தவர்களும் உண்டு. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் சென்று குடியேறுபவர்கள் பெரும்பாலும் இப்பகுதியின் குழலின் தாக்கத்திற் குக் கட்டுப்பட வேண்டியவராயுள்ளனர். -
வரலாற்றுப் புவியியலைத் திருத்தமாக அறிந்துகொள்ள முடியாமலிருப்பதற் குப் பழைமையான பழக்கங்கள் நிலவுவதும் ஒரு காரணமாகும். இப்பகுதியில் படித்தவர் எனக் கருதப்படுபவர் மதக்குருக்களும் மதத் தொடர்புடையவர்களு மாவர். இவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாக அல்லது இந்திய மனப்போக்கி னைக் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். உலகியல் விவகாரங்களில் இவர் களுக்கு நாட்டம் குறைவாகும். தென்கிழக்கு ஆசிய மக்கள் பலரிடை இப் போதும் நிலவிவரும் பரம்பரை வழக்கிற்கு ஏற்ப, இவர்கள் தங்கள் தனிப்பட்ட பெயர்களைக் குறித்து வைப்பதில்லை. மிகப் புராதன முறைகள் எனப் பலவற்றை வைத்துக் கொள்வதற்காக இவர்கள் வரலாற்றுக் குறிப்புக்களைத் தவிர்த்து விடு வர். இந்த நிலைமைகளினுல் பழைய அறிக்கைகள் எவையேனும் காணப்பட்டா லும் அவற்றிலிருந்து எந்த உண்மையையும் அறிந்துகொள்ள முடிவதில்லை. இப் பகுதியில் வாழும் மக்கள் வேறுபட்ட பல எழுத்து வடிவங்களையும் கொண்டுள் ளனர். இதல்ை சில சாசனங்களிலுள்ள விவரங்களையும் மொழிபெயர்த்து அறிந்து கொள்ளுதல் கடினமாகவுள்ளது. தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரு முகமான பகுதியாக அமையாத காரணத்தினலும், வெளிநீங்கு தன்மைகள் அதிகமாகவிருந்தமையாலும் இப்பகுதியில் பழைய ஏடுகள் முதலியன சேகரிக்
கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை.

Page 239
460 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
குடிப்பாம்பல் மாற்றங்கள்
அண்மைக் காலம் வரையில் தென்கிழக்கு ஆசியாவின் குடித்தொகை மிகக் குறைவாகவிருந்தது. இன்றும் பல பகுதிகளில் மக்கள் மிகவும் ஐதாக வாழு கின்றனர். இந்த நூற்முண்டிற்கு முற்பட்ட காலத்திற்குரிய குடியடர்த்திபற் றிய விவசங்களும் குறைவாகும். 1800 இல் தென்கிழக்கு ஆசியாவில் ஏறத்தாழ 100 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர் எனக்கொள்ள இடமுண்டு. அப்பொழுது விருத்திபெற்ற பகுதிகளாகவிருந்த பேமாவின் மேற்பகுதி, தைலாந்தின் மேற் பகுதி ஆகியவற்றிலும் குடித்தொகை குறைவாகக் காணப்பட்டது. இப்பகுதி கள் இன்று அதிகம் விருத்தியடையாத பகுதிகளாகவும் மக்கள் விரும்பத் தகாத பகுதிகளாகவும் உள்ளன. அப்பொழுது மலாயாவில் இரண்டரை இலட் சம் மக்களும், யாவாவில் நாற்பது இலட்சம் மக்களும், பேமாவில் இருபது இலட்சத்திற்குக் குறைவான மக்களும் காணப்பட்டனர். 18 ஆம் நூற்றண் டின் இறுதிக் காலத்திலும் இப்பகுதியில் குடித்தொகை குறைவாகவிருந்த தனுல் தொழிலாளர் பிரச்சினை நிலவியது. இதனுல் இப்பிரதேசத்திற் சிறு பகுதி களே ஆட்சிபுரிந்த மன்னர் பிற இடங்களிலிருந்து தொழிலாளரைப் பெற வேண்டியிருந்தது. வாழ்க்கைப் பயிர்ச்செய்கையை முக்கிய தொழிலாகக் கொண்ட தென்கிழக்கு ஆசியப் பகுதியில் ஓரளவுக்கேனும் மேல்மிச்சமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்குத் தொழிலாளர் வசதி அவசிய மாகக் கருதப்பட்டது. இப்பகுதிக்கு வெளிநாட்டவர் அப்பொழுது அதிகமாக வரவில்லை. கடற்பாதைக்கு அணித்தாகவிருந்த இடங்களுக்கு மட்டும் வெளிநாட் டவர் சிறு தொகையாகச் சென்றனர். ஸ்பெயினின் குடியேற்ற நாடாகப் பிலிப் பைன் அமைந்திருந்தபொழுதும் இதனல் ஸ்பெயினுக்கு அதிக நன்மை ஏற் படவில்லை. ஸ்பெயினிலும் பார்க்க மெச்சிக்கோவோடு பிலிப்பைன் அதிக தொடர்பு கொண்டிருந்தது. ஸ்பெயினிலிருந்து அதிக தூரத்தில் பிலிப்பைன் இருந்ததோடு அதிக தொடர்பற்றுக் காணப்பட்டதனுல் 19 ஆம் நூற்ருண்டில் எளிதாக ஸ்பெயினிலிருந்து நீங்கி விட்டது. ஒல்லாந்தின் குடியேற்றவாட்சிப் பகுதியாகவிருந்த யாவா கம்பனி வியாபாரத்திற்கு முக்கியமாகக் கருதப் பட்ட பொழுதும் பல வருடங்களுக்கு அதனல் அதிக பயன் கிடைக்கவில்லை. சில காலங்களில் அதனுல் பெரு நட்டமே ஏற்பட்டது.
கடந்த 150 வருட காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் குடிப்பாம்பலில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பாவின் கைத்தொழிற் புரட்சியைத் தொடர்ந்து இந்துசமுத்திரப் பகுதிக்கும் தூரகிழக்குப் பகுதிக்குமிடையில் மீண்டும் வியாபாரத் தொடர்புகள் ஏற்பட்டன. முன்னரிலும் பார்க்கக் கூடிய அளவில் வர்த்தகம் அமைந்தது. இவ்வாறு வர்த்தகம் வளர்ச்சிபெற்றதனல் தென்கிழக்கு ஆசியாவில் பல இடங்களில் வர்த்தக மையங்கள் அமைந்தன. பெருந்தொகையான அளவில் தென்கிழக்கு ஆசியப் பொருள்கள் வர்த்தகத்தி லீடுபட்டன. இப்பகுதி வர்த்தகத்திற்கு முக்கியமான பகுதியாக அமைந்தது.

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 46
இந்த நிலைமைகளினல் கடந்த 150 வருட காலத்தில் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் குடிப்பெருக்கம் விரைவாக ஏற்பட்டது. ஆற்றுக்கழிமுகங்கள், எரி மலைக் கூம்புகள் முதலிய வளமான பகுதிகளில் மக்கள் பெருந்தொகையாக வந்து குடியேறினர். முன்பு இவை குடியடர்த்தியற்ற பகுதிகளாகவிருந்தன. வண்டலைக் கொண்ட கழிமுகங்களிலும் புதிய எரிமலைப் படிவுகளைக்கொண்ட எரிமலைக் கூம்புகளிலும் இப்பகுதியின் மக்களுட் பெரும்பாலோர் நெருக்கமாக வாழுகின்றனர். நெருக்கமான சிறிய பகுதிகளைப் பிரிக்கும் முறையில் இடை
40
30
2OH
っ*つ هليم
*
حصص
900 920 948.0 930s
படம் 115-தென்கிழக்கு ஆசியாவின் குடிப்பெருக்கம்
யிடையே காட்டு நிலங்கள் உண்டு. இந்நிலங்கள் பல நூற்முண்டுகளுக்கு முன்பு எவ்வாறு காணப்பட்டனவோ அவ்வாறே இன்றும் ஐதான குடித் தொகையைக் கொண்டுள்ளன. 1920 ஆம் ஆண்டளவில் தென்கிழக்கு ஆசியா வின் குடித்தொகை 1,100 இலட்சமாகப் பெருகிவிட்டது. 1940 இல் இத் கொகை 1,550 இலட்சமாகவும், 1960 இல் 2,000 இலட்சமாகவும் பெருகிக் காணப்பட்டது. பெருக்கம் தென்கிழக்கு ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரேமாதிரியாக ஏற்படவில்லை (படம் 115). இந்த நூற்முண்டில் பேமாவின் குடித்தொகையிலும் பார்க்கத் தைலாந்தின் தொகை அதிகமாகப் பெருகிக் காணப்படுகின்றது. 1953 ஆம் ஆண்டின் பின்பு சிங்கப்பூரிலேயே குடித்

Page 240
462 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல் தொகை மிகவும் விரைவாகப் பெருகிவந்துள்ளது. (ஆண்டுப் பெருக்கம் 6.8 சதவீதம்) மிகக் குறைந்த பெருக்கம் பேமாவில் காணப்படுகின்றது (ஆண்டுப் பெருக்கம் 1%).
தென்கிழக்கு ஆசியாவின் விளைநில அடர்த்தி (வருடத்தில் ஓர் எக்கர் நெல் நிலத்திற்குரிய சராசரித தொகை)
ஐந்துவருடம் பேமா இந்தோ தைலாந்து யாவாவும் பிலிப் மலாயா
சீன மதுராவும் பைன்
1916-20 1.23 175 1.66 4.12 3.13 ra1921-25 a 1.9 1.67 57 4.27 2.67 5.61 1926-30 0. I.4 1.6 1.57 4.50 2.69 6.13 1931-35 1 6 .9 1.64 1.63 4.60 2.76 6.42 1936-40 1.25 1.63 1.74 4.96 2.79 7.02 1946-50 . . 2.0 2.1 1.6 5.9 3.9 7.2 1951-55 s 2.0 3. 1.3 5.9 3.2 8.2 1956-60 0. 2.2 2.3 .9 6, 3.3 9, 1
தென்கிழக்கு ஆசியாவில் குடித்தொகை, உணவுப்பொருள் என்பன ஒத்த அள வில் அதிகரித்துள்ளமையால் இன்றைய விளைநிலத்திற்குரிய குடியடர்த்திபற்றி (ஒர் ஏக்கர் நெல் நிலத்திற்குரிய தொகை) ஆராய்தல் அவசியமாகும். உணவுப் பொருள் ஏற்றுமதித் தொகை உள்நாட்டு நுகர்வைப் பொறுத்துள்ளது. மேற் குறித்த அட்டவணையிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையில் விளைநிலத் திற்குரிய அடர்த்தி அதிக அளவுக்கு வேறுபட்டுள்ளது, என்பது தெரிகின்றது. இந்த அடர்த்தி மலாயாவில் மிகவதிகமாகவும் (பெருந்தோட்டத் தொழிலும் கணிப்பொருளகழ்தலும் இங்கு முக்கியமாகவுள்ளன) தைலாந்தில் மிகக் குறை வாகவும் (மிகையாக நெல் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது) காணப்படுகின் றது. தென்கிழக்கு ஆசியாவில் பொதுவாக இந்த நூற்றண்டில் விளைநிலத்திற் குரிய அடர்த்தி அதிகரித்துவந்துள்ளது. தைலாந்தில் மட்டுமே 1953 இற் காணப்பட்ட அடர்த்தி 1923 இற் காணப்பட்ட அடர்த்தியிலும் குறைவாக உள்ளது. யுத்த காலத்தின் பின்பு உலகின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் இப் பகுதியில் இயற்கைப் பெருக்கம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலத் தில்ஏற்படக்கூடிய அடர்த்திக்கு இயற்கைப் பெருக்கமே முக்கிய காரணமாகும். 1958-61 காலப் பகுதியில் தென்கிழக்கு ஆசியாவின் பிறப்பு வீதம் ஆண்டுக்கு 4.4 சதவீதமாகும். (உலகச் சராசரி 3.4 சதவீதமாகும்); இறப்பு விதம் 2.4 சத விதமாகும். (உலகச் சராசரி 1.8 சதவீதமாகும்). 1960 ஆம் ஆண்டில் உலகி லுள்ள நாடுகளுள் பேமாவிலேயே பிறப்பு விகிதம் மிகக் கூடிய அளவில் காணப் பட்டது; பிரித்தானியா, அ. ஐ. மா. ஆகியவற்றிலும் பார்க்கச் சிங்கப்பூரின் இறப்பு வீதம் அவ்வாண்டிற் குறைவாகவிருந்தக

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 463
மாறிவரும் உட்பகுதி நிலைமை
தென்கிழக்கு ஆசியாவில் இன்று குடிநெருக்கமுடைய பகுதிகள் யாவாவின் மத்திய, வடபகுதிகள், தைலாந்தின் கீழ்ப்பகுதி, செந்நதிக் கழிமுகம் என்பன வாகும். இவற்றில் சதுர மைல் ஒன்றில் 2,000 பேருக்குமதிகமாக மக்கள் வாழு கின்றனர். பேமாவின் கீழ்ப்பகுதி,மேக்கோங்கு ஆற்றுக் கீழ்ப்பகுதி, மத்திய லூசோன், விசாயன் தீவுகள் ஆகியவற்றிலும் குடிநெருக்கம் அடுத்தபடியாகக் காணப்படுகின்றது. இவை யாவும் பயிர்ச்செய்கை முக்கியமாக இடம் பெற்ற பகுதிகளாகும் (படம் 116). பொதுவாக வளங்குறைந்த மண்ணையுடைய தென் கிழக்கு ஆசியாவில் இவையே வளமிக்க மண்ணைக் கொண்டுள்ளன. குடிநெருக்க முடைய இப்பகுதிகளில் வர்த்தகப் பயிர்ச்செய்கை விருத்தியடைந்து காணப் படுகின்றது. இதனுல் இப்பகுதிகளில் இரு விளைவுகள் ஏற்பட்டன; பயிர்ச் செய்கை விருத்தியிலும் பார்க்க அதிகமான அளவுக்குக் குடித்தொகை இப்பகு கிகளிற் பெருகியது; அடுத்து, புதிய நிலங்களில் வர்த்தகப் பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதிகளிலிருந்து சிறிதளவுக்கு மக்கள் இடம் பெயர்ந்து புதிய நிலங்களில் குடியேறிவருகின்றனர். தொங்கின் பகுதியிலிருந்து மக்கள் பெயர்ந்து அன்னும் கரைச் சமநிலத்திற்கும் பின்பு மேக்கோங்கு ஆற்றுக் கீழ்ப்பகுதிக்கும் சென்று குடியேறியுள்ளனர். அவ்வாறே மத்திய அரசோன் பகுதியிலிருந்து மக்கள் விசாயன் தீவுகளுக்கு இடம்பெயர்ந் துள்ளனர். யாவாவின் தாழ்நிலங்களிலிருந்து மக்கள் பெயர்ந்து ஆபத்தான எரிமலைக்கூம்புகளின் முனைவரை சென்றுள்ளனர். பேமாவின் வறண்ட பகுதியி லிருந்து மக்கள் பெயர்ந்து ஐராவதிக் கழிமுகத்தில் வந்து குடியேறியுள்ளனர். சில சமயங்களில் பயிர்ச்செய்கைப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்வதில்லை. மக்கள் இடம் பெயருவதற்குப் புதிய பகுதிகளின் விருத்தி காரண மில்லை. சில பகுதிகளில் மக்கட் பெருக்கம் மிகவதிகமாகவிருப்பதே காரணமா கும். வர்த்தகப் பயிர்ச்செய்கை காரணமாகவே இப்பெருக்கம் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டது. வர்த்தகப் பயிர்ச்செய்கை விருத்திபெற்ற பொழுதும் பயிர்செய்யும் முறைகளில் மாற்றம் ஏற்படவில்லை. எல்லாத் தொழில் முறைக ளும் கைகளினுலேயே மேற்கொள்ளப்படுகின்றன. விருத்தி செய்யப்படும் புதிய நிலங்களிலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுவதற்காக அதிக மக்கள் வந்து குடியேறுகின்றனர். புதிய நிலங்களில் தொழிலாளர் தேவையும் அதிகமாக உண்டு. அதனேடு இப்பகுதிகளில் குடிநெருக்கம் குறைவாதலால் நோய்கள் முதலியனவும் குறைவாகும். மக்கள் ஐதாக வாழும் பகுதிகளில் நோய்கள் விசை வாகப் பரவமாட்டா. ஆகவே தென்கிழக்கு ஆசியாவில் பயிர்ச்செய்கைக்காகப் புதிய நிலங்களும் விருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அரிசியை உணவாகக் கொள்ளும் மக்களுக்கு இப்பகுதி மிக முக்கியமானதாகும். குடிநெருக்கமுடைய இந்திய சீனப் பகுதிகளில் அறுவடை ஒழுங்காக இல்லாத காலங்களில் இப்

Page 241
464 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
பகுதியிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. அப்பகுதிகளின் குடி நெருக்கம் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்தமையவும் தென்கிழக்கு ஆசியப் பகுதி துணைசெய்கின்றது எனலாம்.
g98#ITb
/
r
11ე°F მ.
சதுர மைலுக்குரிய
O
10g.
படம் 116.--தென்கிழக்கு ஆசியாவில் குடிப்பரம்பல்
கணிப்பொருள்கள் காரணமாகவும் வெளிநாட்டவர் தொடர்பு இப்பகுதிக்கு ஏற்பட்டது. பிலிப்பைனின் பொன் மலாயாவினதும் அதனைச் சூழவுள்ள தீவுக ளினதும் தகரம், சுமாத்திராவினதும் போணியோவினதும் நிலநெய் என்பன
 
 
 
 

மக்கள், அரசியல், எதிர்காலநிலைமை 465
வெளிநாட்டவரைப் பெரிதுங் கவர்ந்தன. இதன் காரணமாகக் கணிப்பொருள் அகழ்தலில் அதிக முதலீடு செய்யப்பட்டது. பெருந்தொகையான தொழிலாள ரும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பகுதியிலுள்ளோர் வாழ்க்கைப் பயிர்ச்செய்கையை முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தமையால் பிற பகுதிகளி விருந்து கூலியாட்கள் கொண்டுவரப்பட்டனர். கடந்த நூறு வருடகாலமாக இப் பகுதியில் விருத்தி செய்யப்பட்ட தகரமகழ்தல் நிலநெய்யெடுத்தல் ஆகிய தொழில்களில் இலட்சக்கணக்கான சீனத் தொழிலாளர் ஈடுபட்டுள்ளனர். இவர் கள் தென்சீனக் கடலுக்கூடாக இப்பகுதிக்கு வந்தனர்.
வேருெரு வகையான வர்த்தகப் பயிர்ச்செய்கையும் தென்கிழக்கு ஆசியப் பகு தியில் விருத்தியடைந்தது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள கைத் தொழில் ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பெறுதற்பொருட்டு வர்த்தகப் பயிர்ச்செய்கை இப்பகுதியில் விருத்திசெய்யப்பட்டது. வர்த்தகப் பயிர்கள் இப்பகுதியில் முன்பு விளைவிக்கப்படாத பயிர்களாகும். முன்பு எக் காலத்திலும் விளைவிக்கப்படாத பயிர்களாகவிருந்தபொழுதும் தென்கிழக்கு ஆசியாவில் கரும்பு, கோப்பி, சணல், இறப்பர், நெய்த்தால மரம் முதலியன மிகப் பொருத்தமான பயிர்களாக அமைந்தன. ஆகவே இப்பயிர்கள் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் பெருந்தோட்டங்களில் விளைவிக்கப்பட்டன. மேலும் தேவையான அளவுக்குக் கூலித் தொழிலாளர் கொண்டுவரப்பட்டனர். புதிய நிலங்களில் பெருந்தோட்டங்களை அமைப்பதன்மூலம் பெருந்தோட்டப்பொருள் களின் உற்பத்தி பெருக்கப்பட்டது. பெருந்தோட்டச் செய்கை காரணமாகி"இந் தியாவிலிருந்தும் சீனவிலிருந்தும் பெருந்தொகையான அளவில் இப்பகுதிக்குத் தொழிலாளர் வந்து குடியேறினர். பெருந்தோட்டப் பொருள்களுக்கான சந்தை சிலகாலங்களில் சாதகமாகவும் வேறுசில காலங்களில் பாதகமாகவும் அமைவ துண்டு. சாதகமாகவுள்ள காலங்களில் பெருந்தோட்டப் பயிர்கள் அதிகமான அளவில் பயிரிடப்படும். ஆகவே இக்காலங்களில் தொழிலாளரும் பெருந்தொகை யாக இப்பகுதிக்குச் செல்வர். பாதகமான காலங்களில் இவர்கள் மீண்டும் கிரும் பித் தமது நாடுகளுக்குச் செல்வர்.
அரசியல் இணைவு
வர்த்தகப் பயிர்கள் காரணமாகத் தென் கிழக்கு ஆசியாவில் ஏற்றுமதி வியர் பாரம் விருத்தியடைந்தது. ஏற்றுமதி வியாபாரம் மூலம் இப்பகுதி மக்களுக் குத் தேவையான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்பகுதியில் வந்து குடியேறிய கூலித் தொழிலாளருக்குத் தேவையான உணவுப் பொருள், துணி வகைகள் முதலியனவும் பயிர்ச்செய்கையிலிடுபட்ட இப்பகுதி மக்களுக்குக் தேவையான துணிவகைகளும் இறக்குமதி செய்யப்பட்டன. தென் கிழக்கு ஆசி யப் பகுதியில் விருத்தியடைந்த வர்த்தகம் காரணமாகவும் வெளிநாட்டார் தொடர்பு ஏற்பட்டது. சீனர்களும் இந்தியர்களும் தரகர்களாக வர்த்தகத்தி விடுபட்டனர். ஐரோப்பியர் தூரத்தேயுள்ள தமது நாடுகளின் கைத் தொழில் களுக்கு ஏற்றவகையில் வர்த்தகமுறைகளை அமைத்துக் கொண்டனர். பேமாவில்

Page 242
466 தென்கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
வர்த்தகத்திற்காக நெற்செய்கை விருத்தியடைவதற்குப் பிரித்தானியரும் துணை யாயிருந்தனர். குடிநெருக்கமுடைய இந்தியப் பகுதி கைத்தொழிலாக்கம் பெற்று வந்தது. மலிவான உணவுப் பொருள் தேவையாகவிருந்ததே இதற் குக் காரணமாகும் டச்சுக்காரரின் தாக்கம் யாவாவிலிருந்து அணித்தாக வுள்ள தீவுகளுக்கும் பரவியது. பிரான்சியர் சீன வியாபாரத்திற்கு ஏற்ற ஒரு தளமாக இந்தோ சீனுவை அமைத்துக் கொண்டனர். அதிதூரத்திலுள்ள கிழக் குத் தீவுகளின் கொப்பரா வியாபாரம் சிறிது காலம் ஜெர்மனியர் கையில் தங் கியிருந்தது. தென் கிழக்கு ஆசியாவில் குடிப்பெருக்கத்தோடு பொருளுற்பத்தி, தேவைகள் என்பனவும் பெருகி வந்தன. இந்த நிலைமைகளைக் கொண்ட பகுதி யோடு முக்கியமான எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அ. ஐ. மாகாணங் களும் குடியேற்ற நாட்டுத் தெடர்பு கொண்டிருந்தன. முக்கியமான கீழைத்தேச நாடுகளான இந்தியா, சீன, யப்பான் என்பனவும் தென் கிழக்கு ஆசியப் பகுதியோடு நேரடித் தொடர்பு வைத்திருந்தன (படம் 117). குடி யடர்த்தி கூடிய நாடுகளானமையால் மக்கள் வெளியேறிச் சென்று குடியேறு வதற்கு இப்பகுதி தேவையாகவிருந்தது. இந்நாடுகளுக்குத் தேவையான உண வுப் பொருள்களையும் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளவும் தென் கிழக்கு ஆசியா பயன்பட்டது. கைத்தொழிற் பொருள்களை விற்பதற்கு ஏற்ற சந்தையாகவும் இப்பகுதி அமைந்திருந்தது. கைத்தொழிற் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவும் யப்பானுமே அதிக பங்கு கொண்டிருந்தன.
இப்பகுதியில் நிலவும் வேறுபாடுகள்
தென்கிழக்கு ஆசியாவில் வேறு எப்பகுதியிலுமில்லாத அளவுக்கு வேறுபாடு கள் காணப்படுகின்றன. வாழ்க்கைப் பயிர்ச் செய்கையிலிருந்து வர்த்தகம் வரை வேறுபட்ட படிநிலை வளர்ச்சியை இங்கே காணலாம். குடியடர்த்தி இனம், மொழி என்பனவற்றிலும் வேறுபாடுகள் உண்டு (படம் 118). தென் கிழக்கு ஆசியாவின் பொருளுற்பத்தி நிலைமைகள் ஒரேவகையாக இருத்தலினல் இப் பகுதியினுள்ளேயே வேறுபாடுகள் வளர்ந்துள்ளன. தென் கிழக்கு ஆசிய நாடு கள் ஏறத்தாழ ஒரேவகையான பொருள்களை உற்பத்தி செய்வதனுல் அவற் றிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. வேறுபட்ட நாடுகள் குடியேற்றவாட்சித் தொடர்பு கொண்டிருந்தமையால் வெளிநாட்டு வியாபாரத் தொடர்பு, நாணய மாற்று, கல்வி முறைகள், அரசியல் முறைகள் என்பனவற்றிலும் அதிக அள வுக்கு வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற் பட்ட அரசியல் பொருளாதார நிலைமைகள் தென் கிழக்கு ஆசியாவையும் பாதித் தன. இவற்றினடிப்படையில் பிரான்சியர் மேற்கொண்ட பொருளாதாரப் பாது காப்புக் கொள்கையினல் இந்தோனேசியா அணித்தாகவுள்ள நாடுகளிலிருந்து பிரிந்தது. இதேபோன்று பிலிப்பையினும் ஆசியாவிலிருந்து பிரிந்தமைந்தது. ஐரோப்பாவில் காணப்பட்ட ஆங்கில-பிரென்சுத் தொடர்புகளின் ஏறறத்தாழ் வான நிலைமைகளுக்கு ஏற்பத் தைலாந்தோடு தொடர்பு உண்டாக்கவும் முயற்சி

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 467
கள் மேற்கொள்ளப்பட்டன. அ. ஐ. மா. கிழக்கு ஆசியாவில் தனக்கென ஒரு பகுதியை அமைத்துக் கொள்ளும் எண்ணத்தோடு தைலாந்தோடு தொடர்பு கொள்ள முனைந்தது. பல்வேறு வகையான குடியேற்ற ஆட்சிமுறைகளும் தென் கிழக்கு ஆசியாவில் பரீட்சிக்கப்பட்டன. இதனுல் இப்பகுதியில் வேறு பட்ட அரசியல் திட்டங்களும் ஆட்சிமுறைகளும் இடம் பெற்றன. காலத்திற் கொவ்வாத மிகப் பழைய கீழைத்தேச உயர்குடி ஆட்சிமுறை முதல் கற்றேர் சிலரால் அமைக்கப்படும் சனநாயக முறை வரை பல அரசியல் முறைகள் இப் பகுதியில் காணப்படுகின்றன. தனிவல்லாட்சித் தன்மையைக் கொண்டு சனநா யகப் போர்வையில் அமைந்துள்ள குடியரசுகளும் இப்பகுதியில் உண்டு. சிக்க லான மேலைத்தேச, கீழைத்தேச வியாபார முறைகளும் இத்தகைய ஆட்சி முறைகளினுற் பாதிக்கப்பட்டுள்ளன. பழைய காலத்தினதும் இக்காலத்தினதும் உலக அரசியல் பொருளாதார நிலைமைகள் தென் கிழக்கு ஆசியாவில் இப்பொழு தும் இழையோடிக் காணப்படுகின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பொதுத்தன்மை, பரம்பரை வேறுபாடுகள் ஆகியவற்றைக் காட்டிலும் மேற்கு றித்த நிலைமைகளே முக்கியமாகவுள்ளன.
தென் கிழக்கு ஆசியாவில் எல்லா வகையான மனித இனத்தவரும் காணப் படுகின்றனர். கிழக்கு மத்திய ஆசியப் பகுதியிலிருந்து காலத்துக்குக் காலம் மக்கள் தரைமார்க்கமாக வடக்கிலிருந்து வந்து தென் கிழக்கு ஆசியப் பகுதி யில் குடியேறினர். புராதன அவுஸ்திரேலிய இனத்தவர் எனப்படும் நாகரிக மற்ற கூட்டத்தவரைக் குறிக்கும் நேகிறிற்றே, அவுஸ்திரேலிய மக்கள் இன் அறும் சிறு தொகையினராகக் காடுகளில் வாழுகின்றனர். இக்கூட்டத்தவருட் பெரும்பாலார் தென் கிழக்கு ஆசியத் தீவுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். பிற்காலத்தில் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் வந்து குடியேறிய வர் திபேத்திய-மொங்கோலிய மக்களாவர். இவர்களே இன்று பேமா, தைலாந்து லாவோஸ் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் மூதாதையர். இவர்களைத் தொடர்ந்து பல நூற்றண்டுகள் தென் இந்தியக் குடியேற்றம் ஏற்பட்டது. தென் இந்தியாவிலிருந்து மக்கள் கடல்மார்க்கமாக வந்து கிராப் பூசந்திக்கூடாகவும், சுமாத்திரா யாவாக் கரைகள் மூலமாகவும் இப்பகுதியில் பரவினர். தைலாந்தின் கீழ்ப் பகுதி, மேக்கோங்கின் கீழ்ப்பகுதி ஆகியவற்றிலும் இவர்கள் குடியேற். றம் ஏற்பட்டது. இவர்களது குடியேற்றம் காரணமாகத் தென் கிழக்கு ஆசிய மக்களின் மொழி, பண்பாடு, மதம் ஆகியவற்றின் தென் இந்தியப் பண்பாட்டு இயல்புகள் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளன. தென் இந்தியாவிலிருந்து சென்ற வர் பெரும்பாலும் வியாபாரிகளாவர். பெருந்தொகையாக இந்தியர் இப்பகுதி யில் குடியேறும் நோக்கம் அப்பொழுது இருந்ததாகத் தெரியவில்லை. எனினும் காலப் போக்கில் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் வாழ்ந்த மக்களோடு இவர் கள் கலந்து விட்டனர். இந்தியரின் குடியேற்றம் ஏற்பட்ட காலத்தின் பின்பு சீனரும் கடல் மார்க்கமாக இப்பகுதியில் வந்து குடியேறினர். சிறு சிறு தொகையினராக இவர்கள் வந்து பயிர்ச் செய்கைத் தொழிலை மேற்கொண்ட னர். தொங்கின் பகுதியிற் போன்று பல குடியிருப்புக்களை இவர்கள் அமைத்த னர். காலப்போக்கில் சீனரும் தென் கிழக்கு ஆசியப் பகுதி மக்களோடு கலந்து

Page 243
468 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
விட்டனர். அண்மைக் காலத்தில் சீன வியாபாரிகளும் இப்பகுதியில் நாட்டங் கொண்டனர். முதலில் இந்திய சீன வியாபாரத்தில் ஈடுபட்ட இவ்வியாபாரிகள்
பிற்காலத்தில் தென் கிழக்கு ஆசியப் பகுதியின் வியாபாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். கடந்த ஐம்பது வருட காலத்தில் இந்தியாவிலிருந்தும் சீனுவிலி ருந்தும் இலட்சக் கணக்கான தொழிலாளர் தென் கிழக்கு ஆசியப் பகுதிக்கு வந்து குடியேறியுள்ளனர் (படம் 117). அண்மைக் காலத்திலேற்பட்ட இக்குடி யேற்றம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் தென் கிழக்கு ஆசியா கொண்டிருந்த தொடர்பை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறலாம். அண் மைக் காலத்தில் வந்தவர்கள் தற்காலிகமாக வந்தார்கள் எனினும் அவர்களில் ஒரு தொகையினர் இப்பகுதியில் நிரந்தரமாகவே தங்கி விட்டனர். நிரந்தரமாகத் தங்கிவிட்ட மக்கள் ஆசியப் பகுதியில் வாழ்ந்த மக்களோடு கலப்பு மணம் புரிந்து அப்பகுதியின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். இந்தியர் குடியேற்றம் பெரும்பாலும் கம்போடியா, தைலாந்தின் கீழ்ப்பகுதி, பேமாவின் கீழ்ப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய தென் கிழக்கு ஆசியாவின் தென், கிழக்குப் பகுதிகளில் பரவியது. சீனரின் குடியேற்றம் ஆலூசோன், போணியோ, தைலாந்து, மேக்கோங்குநதியின் கீழ்ப் பகுதி மலாயாவின் கரைப்பகுதி, யாவா, சுமாத்திரா, பேமாவின் வடபகுதி, பேமாவின் கீழ்ப்பகுதி ஆகிய i lo) பகுதிகளிலும் பாவிக் காணப்பட்டது. யப்பா னியரே 1942-45 வரையுள்ள காலத்தில் தென்கீழ் ஆசியா முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு முன் எந்த ஒரு மக்கட் கூட்டத்தவராயினும், வல்லரசா யினும் இப் பிரதேசம் முழுவதையும் எக்காலத்திலும் ஆட்சிசெய்ததில்லை. யப் பானியருடைய ஆதிக்கக் காலத்தில் மக்களின் ஆர்வத்தாலன்றிப் படைவலியா அலும் பொருளாதாரச்சீரழிவாலுமே ஒற்றுமை வலிந்து நாட்டப்பட்டது. இது ஒருவகையில் சீனர் இப்பிரதேசத்தில் வந்து குடியேறியதை ஒத்துள்ளது
எனலாம்.
பல சமூகங்கள்
தென்கிழக்கு ஆசியாவில் வேறுபட்ட இனங்கள் காணப்படினும் அவை நீண்ட காலமாக இப்பகுதியில் நிலவியமையால் ஒன்றேடொன்று கலந்து பல வேறு படிநிலைகளில் இன்று காணப்படுகின்றன. சில இடங்களிற் பழைய இன வேறுபாடு புலப்படாத அளவுக்கு இனங்கள் ஒன்றிக் கலந்துள்ளன. சில இடங்களிற் குறிப்பிடத்தக்க அளவுக்கு இனக் கலப்பு ஏற்படவில்லை. இந்த இரண்டு நிலைகளுக்குமிடையே பல்வேறுபட்ட படிநிலைகளில் இனக் கலப்பு நிகழ்ந்துளது. தென்கிழக்கு ஆசியாவில் புராதன முறை வாழ்க்கையையுடைய கூட்டத்தவரும் காணப்படுகின்றனர்; மிக அண்மையில் வந்து குடியேறியவர் களும் காணப்படுகின்றனர். சமூகத்தில் இவர்கள் கொண்டுள்ள பங்கும் வேறு பட்டதாகும். ஆகவே சமூகங்கள் ஒருமைப்பாடுடையன ତTଶ୪t # கொள்ளுதலும் தவருகும். குறித்த ஒரு சமூகத்தில் இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் வேறுபாடு காணப்படலாம். மேலும் அதே சமூகத்தில் கூலிக்கு வேலைசெய்

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 469
வோர், விவசாயிகள், வியாபாரிகள், நிர்வாகிகள், பணமுதலாளிகள் என்போரும் வாழுகின்றமையால் வேறுபாடுகள் மேலும் அதிகமாக உள்ளன. சில சமயங் களில் மதம் சமூகத்தை ஒன்றுபடுத்தும் ஏதுவாகவுள்ளது. வேறு சில சம பங்களிற் குடியேற்ற நாட்டாட்சியாளர் புகுத்திய கல்வி முறை சமூகத்தை
三 2 , சீனக் ਛੋ :குடிப்பெயர்வு மண்டலே ان لاجي يسكت
O 0 ì ழித்இஜ் Hಲ್ಲ?' e KN ரீ4:ஜிெ 器
xa ' േ.. மாசி g* GS) ! ; Çat
go '694558 S. &?ふタケリ 20 ஆம் நூற்றண்டில் #ష్ణో ທີ່ ຢູ່11 le
தென்கிழக்கு ஆசியாவின்ரியூோக்யக்கர்த்தர்
洲蜥
محہہ
P. Ա / 淞
அரசியற் பிரிவு | |ឃ្លា
ழையங்களும் குடிப்பெஇந்தோனேசியூக்யூ ●
աn6յւի |குடிப்பெர்லி
e DGT60) fou ub ஆஇந்தோனேசியக் குடிபெயர்வு ܫܠܚ ܠܗ ܫ ܪܶ
*வெளிமையம் இந்தியக் குடிப்@ہ6۔ ر???"eo",-490
:இசீனக் குடிப்பெயர்வு
படம் 117-தென்கிழக்கு ஆசியாவில் இக்காலக் குடிப்பெயர்வுகள் இணைக்கும் கருவியாகவுள்ளது. இந்தோசீனவிலும் கிழக்கு இந்தியத் தீவுகளி தும் இக்கல்வி முறை சமூகங்களை ஒன்றுபடுத்தும் கருவியாகக் காணப்படுகின் றது. இத்தகைய நிலைமைகளும் வேறுபட்ட பொருளாதார முறைகளும் காணப படுவதல்ை தென்கிழக்கு ஆசியாவின் ஒவ்வொரு அரசியற் பிரிவும் தென்

Page 244
470 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
கிழக்கு ஆசியா முழுவதிலுமுள்ள வேறுபட்ட மக்களின் தன்மையையும் நாட் டங்களையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய சமூகத்தின் வேறுபாடுகள் கடந்த 300 ஆண்டுக் காலத திலேயே அதிக அளவில் வெளியிற் புலப்பட்டன. வேறுபாடுகளையும் மாற்றங் களையும் கொண்ட சமூகங்களின் அரசியல் மாற்றங்களும் இந்த நிலைமைகளை உணர்த்துவனவாயின. தென்கிழக்கு ஆசியாவின் உட்பகுதியில் அரசியல் மையம் ஒன்று அமைந்திருந்தது. பேமாவின் மத்தியபகுதி, தைலாந்தின் மேற் பகுதி, கம்போடியாவின் உட்பகுதி ஆகியவற்றில் இராச்சியங்கள் அமைந்தி ருந்தன. புறத்தேயுள்ள சுமாத்திரா, யாவா, ஆகிய தீவுகளின் மலைப்பகுதிகளில் சிறு இராசதானிகள் அமைந்திருந்தன. பின்பு பெரும்பாலும் கடலோடு தொடர் புடைய அரசியல் நிலைமைகளும் வளர்ச்சிபெற்றன. மலாக்காத் தொடுகடலைப் போக்குவரத்துப் பாதையாகப் பயன்படுத்தி வளர்ச்சி பெற்றது சைலேந்திர இராச்சியமாகும். கடலைத் துணையாகக் கொண்டு அமைந்ததே மஜபாகித் இராச்சியமுமாகும். போணியோ செலிபீஸ், யாவா, தென்சுமாத்திரா என்பன இவ்விராச்சியத்தோடு இணைந்திருந்தன. கடலோடும் மக்களுக்கு இவை பொருத்தமாகக் காணப்பட்டன (படம் 113). பிற்பட்ட காலப் பகுதியில் அா சியல் மையங்கள் உட்பகுதிகளிலிருந்து கரைப்பகுதிகளுக்குப் பெயர்ந்தமைந் தன. அப்பொழுது பேமாவின் கீழ்ப்பகுதி, தைலாந்தின் கீழ்ப்பகுதி ஆகியன முக்கியமாக அமைந்தன. இத்தகைய அரசியல் முறைகளைக் கொண்ட பகுதி யில் வேறுபட்ட மக்களின் பண்பாடு, பாாம்பரியம் ஆகியவற்றின் தாக்கம் அதிக மாகக் காணப்படுகின்றது. மக்களுள் ஒரு பகுதியினர் தரைமார்க்கமாக வந்து தென்கிழக்கு ஆசியாவில் குடியேறினர். அவர்களின் வாழ்க்கையும் பலமும் பயிர்ச்செய்கையிலே தங்கியிருந்தன. மற்ருெரு பகுதியினர் கடல்வழியாக வந்து தென்கிழக்கு ஆசியாவிற் குடியேறியவராவர். இவர்களுள் பல்வேறு கூட் டத்தவர் உண்டு. மீன்பிடி தொழிலையும் வியாபாரத்தையும் முக்கியமாகக் கொண்ட இம்மக்கள் தென்கிழக்கு ஆசியாவின் கரையோரங்களையடுத்துக் குடி யிருப்புக்களை அமைத்தனர். எளிதாக இடம் பெயர்ந்து செல்லுந் தன்மையும் இவர்களுக்குண்டு.
இரு தேசிய மையங்கள்
தென்கிழக்கு ஆசியாவின் எல்லா அரசியற் பகுதிகளிலும் இருவகையான மையங்கள் உண்டு (படம் 117). பேமாவில் மண்டலே ஒரு மையமாகவும் சங் கூன் வேருெரு மையமாகவும் அமைந்துள்ளன. வர்த்தகத்திற்கும் நிர்வாகத் திற்கும் மையமாக ரங்கூன் 'விளங்குகின்றது. பிலிப்பைனிலும் இத்தகைய இரு மையங்கள் உண்டு. அவை மணிலாவையும், விசாயன் தீவுகளையும் அடிப்படை யாகக் கொண்டுள்ளன. அண்மையில் உள் நாட்டு மையத்தன்மை பெற்ற மலா யாவிலும் இரு மையங்கள் உண்டு. அவை கோலாலம்பூர், சிங்கப்பூர் என்பன வாகும். கோலாலம்பூர் மலாயாக் குடாநாட்டில் உள்ளது. புறத்தேயுள்ள சிங் கப்பூர் மலாயாவோடு மட்டுமல்லாது தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளோ

தென் கிழக்கு ஆசியா பயிர்ச் செய்கை 427
வருடத்தில் 200 இலட்சம் வீதம் குடித்தொகை பெருகிவரும் வேளையில் உணவு நிலைமை இவ்வாறு காணப்படுகின்றது. மக்களின் உடல்நலத்தைப் பேண முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில் உணவுப்பொருள் உற்பத்தி குறைந்துவருகின் றது. முன்பு அரிசியை ஏற்றுமதி செய்துவந்த நாடுகளில் இன்று ஏற்றுமதிக் குரிய அரிசி குறைவாகவுள்ளது. ஆசியாவிலுள்ள மக்கள் தமது முக்கிய உண வுப் பொருளான அரிசித்தட்டுப்பாட்டுப் பிரச்சினையை எவ்வாறு நிவிர்த்தி செய்வர் என்பது தெரியவில்லை. பயிர்ச்செய்கையை இயந்திரமயமாக்குதல் மட் டும் போதியதாயில்லை. நெல் வருவாயை அதிகமான அளவிற் பெருக்குவது கடினமாகும். நெல் சிறப்பாக விளையத்தக்க புதிய நிலங்களும் இல்லை. உற்பத்தி சீரடையாவிட்டால் தொழிலாளருள்ளும் பிரச்சினை ஏற்படலாம். அவர்கள் குறைந்த விலையில் அரிசியைப் பெறுவதிலும் இன்று பிரச்சினை காணப்படுகின் றது. உற்பத்திச் செலவும் இன்று அதிகமாகும். சராசரி உற்பத்தித்திறன் குறை வாக விருத்தலினல் தென் கிழக்கு ஆசியாவின் நெல் உற்பத்திச் செலவு உலகி லேயே மிகக்கூடிய அளவில் அதிகரிக்கலாம். இதனுல் ஐரோப்பா, அ. ஐ. மாகா ணங்கள் ஆகியவற்றில் அரிசிக்குப் பதிலாக வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் முயற்சிகள் தொடங்கப்படலாம். தென் கிழக்கு ஆசியாவிலும் பார்க்க இப்பகுதிகளில் இயந்திர முறையில் உற்பத்தியைப் பெருக்க வாய்ப்புண்டு. தென் கிழக்கு ஆசியாவின் கண்டஞ் சார்ந்த கழிமுகங்களில் கடந்த 50 வருட காலத் தில் மக்கள் விரைவாகப் பெருகியதுபோன்று சுமாத்திரா, போணியோ, நியுகினி ஆகியவற்றின் கழிமுகங்களிலும் மக்கள் விரைவாகப் பரவலாம். இப்பகுதிக ளுக்கு முன்பு மக்கள் போக மறுத்தாராயினும் அந்த நிலைமை இன்னும் தொடர்ந்திருக்குமென்று எண்ணுவதற்கில்லை. சில சமயங்களில் ஆசியாவைச் சாராத பகுதிகளில் விளைவிக்கப்பட்ட அரிசியையும் தென்கிழக்கு ஆசியா இறக்குமதி செய்வதுண்டு. 1951 இல் தென் கிழக்கு ஆசியா எறத்தாழ 270,000 தொன் அரிசியை இறக்குமதி செய்தது. 1961 இல் தென் அமெரிக்கர் 3,23,000 தொன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளனர். கனடா, அவுஸ்திரேலியா, ஆஜென் டீன் ஆகியவற்றின் உணவுப் பொருள் உற்பத்தியினல் கடந்த நூற்ருண்டில் ஐரோப்பாவின் உணவுப்பொருளாதாரம் மாற்றமடைந்ததுபோலவே பிறேசிலா யினும் ஆபிரிக்காவாயினும் தென்கிழக்காசியாவின் உணவு நிலைமைகளில் மாற் மத்தை உண்டாக்கலாம். தென்கிழக்கு ஆசியாவில் மக்களின் உணவுமுறையிலும் மாற்றம் ஏலவே ஏற்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டில் இப்பகுதி 942,000 தொன் கோதுமை மாவை இறக்குமதி செய்துள்ளது; இத்தொகையின் மூன்றிலொரு பங்கைப் பிலிப்பைன் இறக்குமதி செய்தது.
தென் கிழக்கு ஆசியாவின் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள பற்றித் திட்டமாகக் கூறுதல் கடினமாகும். சமூக அமைப்பிற் பல மாற்றங்கள்
17-CP 4217 (6819)

Page 245
428 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
ஏற்பட்டுவருகின்றன. அறியாமை, பயம், விலையேற்றம் முதலிய காரணங்களின லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை சீரடைய இன்னும் சில காலம் செல்லலாம். இக்காலப்பகுதியில் சுயதேவை நோக்கத்தினுல் வாழ்க்கைப் பயிர்ச் செய்கை மேலும் சீராக அமைக்கப்படலாம். இதனுல் வர்த்தகப் பயிர்ச்செய்கை முன்பிருந்த நிலைக்கு விருத்தியடைவதில் தாமதமேற்படலாம். இக்காரணங்களி ணுல் தென் கிழக்கு ஆசியா யுத்த காலத்திற்கு முன்புபோல் அரிசியைத் தடை யில்லாது ஏற்றுமதி செய்துவரும் என்று கூறமுடியாது. இதற்கு எதிராக, அய னப் பிரதேசத்தின் பயிர்ச்செய்கை புதிய மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக விருத்தியடையத்தக்கது என்பதையும் கருதுதல் வேண்டும்.

அத்தியாயம் 23 தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் மீன்வகை
மத்தியகோட்டைச் சார்ந்த பகுதியிற் கடல்நீர் உப்பு ஒட்சிசன் என்பனவற் றைக் குறைந்த அளவுக்கே கொண்டுள்ளதனுல் இந்நீரில் மீன்வகை குறைவாக விருக்கும் என்ற ஒரு கருத்துப் பொதுவாக நிலவுகின்றது. இத்தகைய கருத்து உண்மையற்றதாகும். ஹெரெ என்பவர் தென்கிழக்கு ஆசியாவைச் சார்ந்த ஆழ மற்ற கடல்களில் பல்வேறு வகையான மீன்கள் காணப்படுகின்றன எனவும் வேருெரு கடற்பகுதியிலும் இந்த அளவுக்கு மீன்வகை இல்லை எனவும் கூறு கின்றர். இவரது கருத்து பரீட்சார்த்தமாக நிரூபிக்கப்படவில்லையாயினும் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மீன்வகை அதிகமாகவிருத்தற்குச் சாதகமான தன்மைகள் உண்டு. நீர்வளமுடைய தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மீன் உண வுப் பொருள்களை ஆறுகள் பெருந்தொகையான அளவிற் கொண்டுவந்து கடலிற் படியவிடுகின்றன. மீன்வகை பெருகிக் காணப்படுவதற்கு இப்பொருள்கள் காரணமாகவிருக்கலாம். தென் கிழக்கு ஆசியப் பகுதியின் மீன்வளம் பற்றிச் சீரான முறையில் இன்னும் ஆராய்ச்சி நடைபெறவில்லை. *
அண்மைக்காலம் வரையில் தென்கிழக்கு ஆசியக் கடலிலுள்ள மீன்வகைக ளின் இயல்புகள் மட்டுமே ஆராயப்பட்டுள்ளன. எல்லா வகையான மீன்களும் வேறுபடுத்தப்பட்டுப் பெயரிடப்படவில்லையாயினும், யாவாவைச் சார்ந்த கடலில் ஏறத்தாழ 1,500 வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மலாயாவைச் சார்ந்த கடலிற் பிடிக்கப்படும் மீன்களுள் பொருளாதார அடிப்படையிற் பய னுள்ளவையென 500 இற்கு மேற்பட்ட மீன்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளைச் சார்ந்த கடல்களிலும் இவ்வாறே மிகப் பல மீன்வகைகள் உண்டு எனக் கூறப்படுகின்றது. அறியப்பட்ட மீன்வகைகளுட் பெரும்பாலன கரைக் குச் சமீபமாகவுள்ள கடலில் வாழ்வனவாகும். நிலப்பகுதியிலிருந்து கொண்டு வந்து படியவிடப்படும் பொருள்களையும், கரையடுத்த கடலில் அதிகமாக வளர்ந்துள்ள மிதக்குமுயிர் நுணுக்குக்கள் (பிளாங்டன்), கடற்சாதாழை என் பனவற்றையும் மீன்கள் உண்ணுகின்றன. தென் கிழக்கு ஆசியப் பகுதியில் கடற் கரையை யடுத்துச் சதுப்புநிலங்கள் உள்ளமையால் இந்நிலங்களிலும் பெருந் தொகையான மீன்கள் காணப்படுகின்றன ; இவை ஆழமில்லாத கடற்கரைகளுக் கும் சதுப்புநிலங்களுக்கும் குளங்களுக்குமிடையே நிலைமாறும் வாழ்க்கை புடையனவாயுள்ளன. உள்நாட்டு நீர் நிலைகளில் மீன்பிடித்தல் ஊக்கமாக நடை பெறுகின்றது. 1961 இல் நன்னீர், சதுப்புநீர், செய்குளம், ஏரி, வாய்க்கால் முதலியவற்றிலிருந்து இந்தோனேசியா 3,12,000 தொன் மீனும், பிலிப்பைன் ,40,009 தொன் மீனும், கம்போடியா 1,50,00 தொன் மீனும், தைலாந்து 69,000 தொன் மீனும், மலாயா 25,000 தொன் மீனும் பிடித்துள்ளன. மீன் பண்ணைச் தொழில் பெருகிவருகிறது.
429

Page 246
430 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
தென்கிழக்கு ஆசியாவையடுத்த ஆழமான கடற்பகுதியிற் கடந்த சில வரு டங்களாகவே மீன்கள் வியாபாரத்திற்காகப் பிடிக்கப்படுகின்றன. ஆழ்கடற் பகுதியில் மீன்பிடித்தலில் இன்று பெருந்தொகையான அளவில் பப்பானிய மீன் பிடி கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இப்பகுதியில் சாடீன் மீன்வகை தொகையா கக் காணப்படுகின்றன. பத்து மைல் நீளத்திற்கு இம்மீன்கள் சேர்ந்து செல்வது அறியப்பட்டுள்ளது. மக்கால், பொனிற்ருே என்பனவும் தொகையாகக் காணப் படுகின்றன. கடற்பன்றிகள் (Porpoise-இவை மீனை உண்டுவாழும் முலையூட்டி கள் ; இவற்றிலிருந்து மீன்கூட்டங்கள் பற்றி அறியலாம்) இப்பகுதியில் காணப் படுகின்றன. 15 மைல் நீளமும் 2 மைல் அகலமுமுடைய கடற்பரப்பில் இம்முலை யூட்டிகள் கூட்டமாய்க் காணப்பட்டனவென அறியப்பட்டுள்ளது. மிதக்குமுயிர் நுணுக்குக்களும் பெருந்தொகையான அளவிற் காணப்படுகின்றன. ஆழ்கடல் மீன்வகை பற்றி இன்னும் திட்டமாக அறியப்படவில்லை. தென் கிழக்கு ஆசியா வின் தேவைக்கு ஏற்ற அளவில் மீன் கரையடுத்த பகுதியில் உண்டு. மீனவர் சாதாரண முறைகளைக் கொண்டு மீனைப்பிடிப்பதும் எளிதாகவுள்ளது. ஆழ்கடல் மீன் பிடிக்கு வேண்டிய கருவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முதல்வசதியும் அவர்களிடமில்லை. இடைவெப்பப் பிரதேசங்களிற் பயன்படுத்தப்படும் கப்பல் கள் வலைகள் என்பனவற்றை இப்பகுதியில் பயன்படுத்துவதற்கு முருகைப் பார்கள், திட்டிகள் ஆகியன தடையாகவுள்ளன. முருகைப் பார்களும் திட்டி களும் மீன்களைப் பெரிதும் கவர்கின்றனவாயினும் வலைகளைச் சிக்கவைத்துப் பழுதாக்கிவிடுவதால் வலைகளை உபயோகித்து அன்மீன்களைப் பிடிப்பது கடின
மாகும்.
மக்களின் முக்கிய உணவுப் பொருளாக மீன்வகை தென் கிழக்கு ஆசியாவில் வாழும் மக்கள் மீனை ஒரு முக்கிய உணவுப் பொரு ளாகக் கொள்ளுகின்றனர். அவர்கள் உணவில் அரிசியும் மீனும் முக்கியமாகவுள் ளன. மீனிலிருந்து கல்சியம், அயடீன், உப்பு, விலங்குப்புரதம் என்பன பெறப் படுகின்றன. தென் கிழக்கு ஆசியப் பகுதியில் வேறு உணவிலிருந்து இப்பொருள் களைப் பெறுதல் கடினமாகும். சாதாரண விவசாயிகளின் பொருளாதார நிலை யும் அவ்வாறு பெறுதற்கு ஏற்றதாயில்லே. தென் கிழக்கு ஆசிய மக்கள் மீன்கறி யோடு சோற்றை உண்ணுகின்றனர். ஐரோப்பியர் உண்ணும் அளவுக்கு அவர்கள் காய்கறிகளை உண்பதில்லை. ஆகவே இப்பகுதியில் அரிசிக்கு அடுத்து முக்கியமாக விருப்பது மீனுகும். ஆனல் சோற்றேடு சேர்த்து உண்ணப்படும் மீன் மிகவும் சொற்பமாகும். மலாயாவில் வாழும் மக்கள் வருடத்தில் ஆளுக்கு 80 இருத்தல் மீனை உண்ணுகின்றனர். 1961 ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் பிடிக்கப்பட்ட மீனின் தொகை 21 இலட்சம் தொன் ஆகும். இத் தொகையைக் கொண்டு பார்க்குமிடத்து ஆளுக்குரிய அளவு 22 இருத்தலாகும் (அ. ஐ. மாகா ணங்களில் ஆளுக்குரிய தொகை 15 தொன்னகும்). மீன்பிடிதொழில் பற்றிய விவரங்கள் இப்பகுதியில் குறைவாக உள்ளன. நாட்டின் வருவாயைப் பொறுத்த வரையில் மீன் முக்கியமாக இல்லாததும் இத்தகைய விவரங்களைச் சேகரிக்கா

தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் 43
மைக்கு ஒரு காரணமாகும். 1955-61 ஆண்டுக் காலத்தில் பிரதேசவாரியாகப் பிடிக்கப்பட்ட மீன்தொகை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
வர்த்தகத்திற்காக மீன் பிடிக்கப்படுகின்ற பொழுதும் சொந்தத் தேவைக் காகவே மீன் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. கிராமவாசிகள் நெல்வயல்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றிலும் சொந்தத் தேவைக்காக மீனைப்பிடிக்கின்ற னர். கரைசார்ந்த பகுதியில் வாழும் மீனவர் நெற்செய்கையிலும் மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். சில கிராமங்களில் தேர்ச்சி பெற்ற மீனவர் காணப்படுகின்றனர். இவர்கள் பிடிக்கும் மீன் கிராமங்களில் சுயதேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றது. வியாபாரத்திற்காகவும் படிப்படியாக மீன் பிடிக்கப் படுகின்றது. மீன் தேவைப்படும் பகுதிகளுக்கு மீனைக் கொண்டுசெல்வதும் ஒரு பிரச்சினையாகவுள்ளது. மீனைப் பேணிக் கொண்டுசெல்வதும் கடினமாகும். மீன வருக்கும் மீனை உண்ணும் மக்களுக்குமிடையிலுள்ள தொடர்பும் பொருத்தமான முறையில் இல்லை.
மீன் வியாபாரம்
கடற்கரையையடுத்த பகுதிகளிற் பிடிக்கப்படும் மீனிற் சிறு பகுதி நேரடி யாக மக்களின் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. எஞ்சியுள்ள பெரும்பகுதி வியாபாரத்திற்காகவும், மீன்பிடிக்கமுடியாதவாறு கடல் கொந்த ளிக்கும் காலங்களில் உபயோகித்தற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. மீனைக் கெட்டுவிடாது பாதுகாத்து வைப்பதற்குக் கருவாடாக மாற்றியும், உப்பிட்டும் வைக்கின்றனர்; வாசனைப் பொருள்களையிட்டு ஒருவகைப் புளிப்புடையதாகவும் மாற்றி வைக்கப்படும் வழக்கமும் உண்டு. இவ்வாறு பதன்செய்து வைக்கப்படும் மீனுக்கு தென் கிழக்காசியாவில் அதிக மதிப்பு உண்டு (இது மலாயாவில் பிளச்சான் எனவும், யாவாவில் திராசி எனவும், இந்தோசீனுவில் நுவொக்மாம் எனவும், தைலாந்தில் காபி எனவும், பேமாவில் ஞாபி எனவும் வழங்கப்படும்). பதன் செய்யப்பட்ட மீன் பெருந்தொகையான அளவில் உள்நாட்டுப் பகுதிக ளில் வியாபாரம் செய்யப்படுகின்றது. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளி டையில் மீன் வியாபாரம் முக்கியமானதொன்முக உள்ளது. இந்நாடுகளில் பெருந்தோட்ட முயற்சிகளிலும் கைத்தொழில்களிலும் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மீன் முக்கிய உணவாக அமைந்துள்ளது. 1961 இல் பிலிப்பைனில் 170,000 தொன் மீனும் தைலாந்தில் 52,000 தொன் மீனும் இந்தோனேசியாவில் 40,000 தொன் மீனும் பதன் செய்யப்பட்டன. மீன்பிடி தொழிலிற் சில காலங்களில் மீன் மிகையாகவிருப்பதும் வேறு சில காலங்களில் அரிதாகவிருப்பதும் உண்டு. மீனைப் பதன்செய்து வைத்துக்கொள்வதனல் இத்தகைய நிலைமைகளைச் சமா ளிக்கமுடிகின்றது. இப்பகுதியில் மீனைப் பதன் செய்யும் வழக்கம் இப்பொழுது பிரபலமடைந்துள்ளது. பதன் செய்யப்பட்ட மீன் உள்நாட்டுப் பகுதிகளுக்கும் வெளிநாட்டுப் பகுதிகளுக்கும் கடல்வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றது. இத்தகைய போக்குவரத்தால் ஏற்படும் செலவு மிகவும் குறைவாகும். சாதாரண ரொமத்தவரின் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இது முக்கியமான ஒரு
1Ꮢ .CᎢ 4217 (Ꮾ81Ꮽ)

Page 247
432 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
அமிசமாகும். வேறு போக்குவரத்து வசதிகள் இப்பகுதியில் இல்லாமையும் குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் மட்டுமே நகரப் பகுதிகளுக்கு மீனைப் பச் சையாகக்கொண்டு சென்று விநியோகிக்கக்கூடிய விரைவான தசைப் போக்கு வசதிகள் உண்டு.
மீன்பிடிதொழில் வர்த்தகமுறையில் நடைபெறத் தொடங்கியபொழுது வெளி நாட்டவரும் இத்துறையில் ஈடுபட்டனர். பணத்திற்காக மீன் ஏற்றுமதியில் ஈடு பட்டுள்ளோரில் சீனர் முக்கியமானவர் எனலாம். பாகான்சீயாப்பியாப்பி (சுமாத்திரர), பாங்கோர் (மலாயா) முதலிய இடங்களிற் சீனர் இத்தகைய வர்த்தக மீன்பிடியில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். சிங்கப்பூரை மையமாகக் கொண்டு நடைபெறும் ஆழ்கடல் மீன்பிடியிலும் (முன்பு யாவா மக்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்), யாவாவிலுள்ள ஏரிகளில் மீன் பண்ணைகள் வைப்பதிலும் இப்பொழுது சீனரே ஈடுபட்டுள்ளனர். இவற்றேடு தரகர்களாகவும் சீனர் இடம் பெற்றுள்ளனர். மீன்பிடிப்போரிடமிருந்து மீனைப் பெற்று அதனைப் பதன்செய்து கொண்டுசென்று தேவையானுேருக்கு விற்றுவிடுவர். இதனுற் பச்சை மீனைப் பதன்செய்து பாதுகாக்கும் துறையிலும் சீனர் அதிகமாக ஈடுபட்டுள்ளனர் என் பது தெளிவாகின்றது.
நன்னீரில் மீன்பிடித்தல்
ஆழ்கடல் மீன்பிடியோடு பல கருவிகளையும் கொண்டு பெருந்தொகையான அளவில் மீனைப் பிடிப்பதில் தென்கிழக்கு ஆசியா முக்கியமான இடத்தைப் பெற் முள்ளது. நன்னீர் மீன்பிடியும் இப்பகுதியில் முக்கியமாக உள்ளது. நன்னீர்ப் பகுதிகளிற் பொறிகளும் சிறு வலைகளுமே மீன்பிடித்தற்குப் பயன்படுத்தப்படு கின்றன. கடற்கரையை அடுத்த பகுதிகளில் மீன்பிடித்தற்கும் இம்முறைகள் பின்பு பயன்படுத்தப்பட்டன. நன்னீர்ப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன் அதிக மாக மக்களால் உட்கொள்ளப்படுகின்ற பொழுதும் எவ்வளவு பெறுமதியுடைய மீன் பிடிக்கப்படுகின்றது என்று திட்டமாகக் கூறமுடியாது. நன்னீர் மீன்பிடி தொழிலில் இரண்டு பகுதிகள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கன. தொன்லே சப் ஏரி இயற்கையான நன்னீர் மீன்பிடிதொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்ருகும். இந்தோனேசியாவில் 1961 இல் பிடித்த மீனின் அரைப்பங்கு நன்னீரிலிருந்தே பிடிக்கப்பட்டது.
தொன்லே சப் ஏரியில் வருடத்தில் 40 தொன்னிற்குமதிகமான மீன் ஒவ்வொரு சதுரமைல் பரப்பிலும் பிடிக்கப்படுகின்றது. ஐரோப்பாவையடுத்துள்ள வட கடலிற் பிடிக்கப்படும் மீனின் தொகையிலும் இது அதிகமாகும். இந்த அளவில் மீன் வேறெங்கும் உண்டு என்று கூறமுடியாது. யூன் மாதத் தொடக்கத்தில் தொன்லே சப் உட்பட்ட பெரிய நிலத்தில் வெள்ளப்பெருக்கு நீர் பரவுகின்றது. ஏறத்தாழ 3,000 சதுர மைல் பரப்பில் (காட்டுப் பகுதி உட்பட) நீர் பரவுகின் றது. இதனுல் மீன் பெருந்தொகையான அளவில் முட்டையிட்டுப் பெருக வாய்ப் புண்டாகிறது. அண்மையாகவுள்ள ஆற்றுப் பகுதிகளிலும் பார்க்க இங்கு மீனுக்கு வேண்டிய தாவர உணவுப் பொருள்கள் அதிகமாக உள்ளமையினுல்

தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் 433
மீன் பெரிதாகவும் வளருகின்றது. இந்த ஏரியில் மீன்பிடிப்போர் ஏறத்தாழ 30,000 பேராவர். மீன்பிடியையே முக்கிய தொழிலாகக் கொண்டோர் ஏரியைச் சுற்றிக் குடிசைகள் அமைத்து வாழுகின்றனர். ஏரியைச் சுற்றியுள்ள மீன்பிடி கிராமங்களுள் ஸ்நொக் திரவ முக்கியமானதாகும். ஒற்ருேபர் முதல் சனவரி வரையுள்ள காலப்பகுதியிலேயே இங்கு மீன் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. இக்காலத்தில் அன்னுமியர், சீனர், மலாயர் ஆகியோரும் மீன்பிடிப்பதற்காக இங்கு வருகின்றனர். வருடந்தோறும் 150,000 தொன்னிற்கு மேற்பட்ட அள வில் மீன் பிடிக்கப்படுகின்றது. இத்தொகையில் அரைவாசி கருவாடாக்கப்படு கின்றது. சிறுதொகையான மீன் மூங்கிலாற் செய்த பெட்டிகளில் இடப்பட்டு உயிர்மீனக மேக்கோங்குப் பொங்குமுகப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகின் றது. பெட்டிகள் மிதந்து செல்வதனுல் மீன் இறந்துவிடமாட்டாது. மீன் வியா பாரம் முழுவதும் சீனர் கையிலேயே உள்ளது. அண்மைக் காலத்தில் மிதமிஞ்சிய அளவில் இங்கு மீன்பிடிக்கப்பட்டுவந்துள்ளது. அவ்வாறு நடைபெருது கட்டுப் படுத்தல் மிகவும் அவசியமாகும்.
யாவாவில் மீன்பண்ணைகள் இரு முறைகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஜக்கார்த்தா, சுரபாயா, சமசாங்கு முதலிய பட்டினங்களுக்கு (இப்பட்டினங்க ளில் மீனுக்கு அதிக மதிப்பு உண்டு) அண்மையிலுள்ள மாங்குரோவுச் செடிகள் நிறைந்த சேற்றுநிலம் கடலலைகளினற் பாதிக்கப்படாத முறையில் அடைக்கப் படும். அடைக்கப்பட்ட பகுதியில் எப்பிரில் முதல் யூலை வரையுள்ள காலத்திற் கடலிலிருந்து மீன்முட்டைகளும் சிறு மீன்களும் சாடிகளிற் கொண்டுவந்து விடப்படும். மீன்முட்டைகளையும் சிறு மீன்களையும் கடலிலிருந்து சேகரிப்பதற் காக மீன்பிடிப்போர் இலைகுழைகளைக் கட்டுக்கட்டாகக் கடலிலே இட்டுவைப் பர். அடைக்கப்பட்ட பகுதிகளில் மீன்கள் உண்டு கொழுப்பதற்காக அல்காக் களும் சாதாளைகளும் வளரவிடப்பட்டிருக்கும். இவ்வாறு வளர்க்கப்படும் மீனில் பால் மீன் (சானுெஸ்சானெஸ்) முக்கியமானது. ஒரு வருடகாலத்தில் இது பெரிய அளவில் வளர்ந்துவிடும். ஏனைய இடங்களில் மீன்பண்ணைகளுக்காகச் செயற்கையான முறையிற் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நீர் நிலையங்கள் மொத்தம் 100,000 ஏக்கரைக் கொண்டிருக்கும். இவற்றில் வருடம் முழுவதுமே கயல் போன்ற மீன்கள் வளர்க்கப்படும். இந்நீர்நிலைகளிலிருந்து வருடந்தோறும் 110,000 தொன் மீன் பிடிக்கப்படுகின்றது. இப்பொழுது நன் னிரேரி மீன்பிடிதொழில் நன்கு விருத்தி செய்யப்பட்டு வருகின்றது. குளம் குட்டைகள் உபயோகமற்றிருந்தால் நுளம்பு முதலிய பூச்சிகள் பெருகித் தீங்கு விளைக்கும். இவை மீன்வளர்த்தற்காகப் பயன்படுத்தப்படும்பொழுது நுளம்பு பெருக வாய்ப்பு இராது.
கடற்கரையடுத்த பகுதியில் மீன் பிடித்தல் தென்கிழக்கு ஆசியாவிற் கடற்கரையடுத்த பகுதியிலேயே பெரும்பாலும் மீன்
பிடிதொழில் நடைபெறுகின்றது. சிறிய வள்ளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மனிதனும் சிறு பையனும் இவ்வள்ளத்தில் எளிதாகச் சென்று மீன்பிடிக்க

Page 248
434 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
லாம். வள்ளங்களை ஒட்டிச் செல்லக் கடற்காற்றும் தரைக்காற்றும் துணை செய்கின்றன. இவை மாறி மாறி நிகழுவதனுல் வள்ளங்களை ஒட்டிச்செல்வது சுலபமாகும். கரையிலிருந்து ஒரு மைல் தாரத்திற்கு அப்பால் இவ்வள்ளங்கள் செல்வதில்லை. காைநிலம் தெரியாத அாரத்திற்கு இவை என்றும் செல்லமாட்டா. வள்ளங்கள் இல்லாதும் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கப்படுகின்றது. கடல் நீரில் மீனவர் அசைவரை நடந்து சென்று மீன்பிடிக்கும் முறையும் உண்டு. மீன் அதிகமாகக் காணப்படும் இடங்களில் மூங்கிற் குச்சிகளை நட்டு மீனைச் சதுரமான அடைப்புக்களுக்குக் கொண்டு சென்று வலை மூலம் பிடிப்பர். இந்த முறையில் மீன்பிடிப்போர் அடைப்புக்களுக்குமேலே குடிசைகட்டிக் குடும்பத் தோடு வாழுவர். தென் கிழக்கு ஆசியாவிற் கரைப்பகுதியில் 10 அடிக்குக் குறைந்த ஆழமுடைய நீரிலேயே மீன் பெரும்பாலும் பிடிக்கப்படுகின்றது. கரையிற் பிடிக்கப்படும் மீன் பொதுவாகச் சிறு மீனுகும். இவ்வகை மீன் உண் வுக்கு அதிகமாக விரும்பப்படுகின்றது. நண்டு, இருரல், சிப்பி முதலிய பலவகை யான கடல்வாழ் பிராணிகளும் பிடிக்கப்படுகின்றன. சிப்பி ஒடுகளைச் சுட்டுச் சுண்ணும்பாக்கி வெற்றிலேயோடு சேர்த்து மக்கள் உபயோகிப்பர். தென் கிழக் காசியாவில் மக்கள் வெற்றிலைபோடும் பழக்கம் அதிகமாக உண்டு. கரைக்கு அண்மையாக மீன்பிடி நடைபெறுவதனுல் இத்தொழில் சில பருவங்களில் மட்டுமே மேற்கொள்ளத்தக்கதாக உள்ளது. காற்றின் போக்கைப் பொறுத்து இப்பருவம் அமையும். சில பருவங்களிற் கடல்பெருகிக் கொந்தளித்துக் காணப் படும். மீன்பிடிதொழில் பருவ காலத்திற்கு ஏற்ப நடைபெறுவதனல் மீன்பிடிக் கப்படாத பருவத்தில் பதன் செய்து பேணப்பட்ட மீன் பயன்படுத்தப்படுகின் றது. இப்பருவத்திற் சிறிய வள்ளங்களிற் கடலிற் சென்று மீன்பிடிப்பது மிகவும் கடினமாகும். சண்டாமேடைப் பகுதியிற் கடல் ஆழமற்றதாயிருப்பதனுற் கடற் கரையடுத்த பகுதி மீன்பிடித்தற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. கண்ட மேடை தாழ்ந்து ஆழமாகி அமைந்துவிடும்பொழுது இத்தகைய மீன்பிடி கைவிடப்படுகின்றது.
மீன்பிடிக்கப்படும் பகுதிகள் தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் முக்கியமாகவுள்ளபொழுதும் இத்தொழில் எல்லாப் பகுதிகளிலும் விருத்திபெறவில்லை. குடியடர்த்தி கூடிய பகுதிகளையடுத்த கரைகளில் மீன்பிடிதொழில் அதிக அளவுக்கு விருத்தி பெற் றுள்ளது. கழிமுகங்கள், பொங்குமுகங்கள் ஆகியவற்றிலும் விருத்தி அதிக மாகும். ஆனல் செந்நதி முகத்திலும் ஐராவதி முகத்திலும் இந்த அளவுக்கு விருத்தி இல்லாதிருப்பது நோக்கத்தக்கது. மேக்கோங்கு ஆற்றை யடுத்து மீன் பிடிதொழில் விருத்தி பெற்றுள்ளது ; தொன்லே சப் ஏரியில் நீர் நிறைந்து வழி யும் பருவத்தில் மேக்கோங்கு ஆற்று முகத்தையடுத்த பகுதி, தைலாந்துக்குடா விலிருந்து சிங்கப்பூர் வரையுள்ள பகுதி முதலியவற்றில் மீன் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. மேக்கோங்கு ஆற்றின் நீர் தென் மேற்குத் திசையாகச் செல்லுவதற்கு அமைய மீன்கூட்டம் பெயர்ந்து செல்லுகின்றது என நம்பட்

தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் 435
படுகின்றது. மலாக்காத் தொடுகடற் பகுதியிலும் மீன்பிடி தொழில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சீனர் வசமுள்ள பாகான்சியாப்பியாப்பி, பாங்கோர் பகுதி களோடு இதுவும் தொடர்பு பெற்றுள்ளது. மலாக்காத் தொடுகடலின் இரு புறத் திலும் கரையைச் சார்ந்து பல மைல் தூரம்வரை மீன்பிடிக்கும் பொறிகள் இடப்பட்டிருப்பதைக் காணலாம். பாகான்சீயாப்பியாப்பிப் பகுதியில் சோகான் ஆற்றுமுகத்திலேயே மீன் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. பொறிகளைக் கொண்டே இங்கு மீன்பிடிக்கப்படுகின்றது. மத்தியகோட்டு நீரோட்டங்கள் ஓடும் திசைக்குக் குறுக்காகப் பிலிப்பைன் தீவுகள் உள்ளமையில்ை, இத்தீவு களிற் பெருந்தொகையான அளவில் மீன்பிடிக்கப்படுகின்றது. அவ்வாறிருந்தும் தகாத்தில் அடைத்த மீனும் பெருந்தொகையாக இறக்கும்தி செய்யப்படுகின்
fog.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் மீன்பிடிதொழில் பற்றிய விபரங் கள் அதிகமாகக் கிடைப்பதில்லை. ஆனல் மக்களின் உணவைப்பொறுத்தவரை யில் மீன் எப்பொழுதும் பிரதானமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு ஆசியப் பகுதியில் 30 இலட்சம் பேர்வரையில் மீன்பிடிதொழிலில் ஈடு பட்டுள்ளனர். உள்நாட்டு மீன் வியாபாரமும் அதிகமாகும். காைப் பகுதி யிலிருந்து உள்நாட்டுப் பகுதிக்கும் ஒரு நாட்டிலிருந்து மற்முென்றுக்கும் மீன் பல மாதிரியாகக் கொண்டுசெல்லப்படுகின்றது.
பேமா-பேமாவில் உள்நாட்டுப் பகுதியிலேயே மீன்பிடி முறைகள் முதலில் விருத்திசெய்யப்பட்டன. இப்பொழுது அரக்கன் கரைப் பகுதியிலும் தென செரிம் கரைப்பகுதியிலும் சிறந்தமுறையில் மீன்பிடிதொழில் நடைபெறுகின் றது. ஐராவதி ஆற்றுமுகப் பகுதியிலுள்ள பரப்புங் கிளையாறுகளில் தென் இந் தியர் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளனர். பேமாவின் கீழ்ப்பகுதியில் விவசாயத்தி விடுபட்டுள்ள மக்களுக்குத் தேவையான மீன் இவர்களிடமிருந்தே பெறப்படு கின்றது. மீன் பெரும்பாலும் பனிக்கட்டியில் இட்டே விற்கப்படுகின்றது. இப் பகுதியில் வாழும் விவசாயிகள் அநேகமாக அரிசியையும் மீனையுமே முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். பேமாவின் உட்பகுதியில் வாழ்வோர் அந்த அள வுக்கு இவற்றை உட்கொள்ளுகின்றனர் என்று கூறமுடியாது. பேமியர் பெளத்த மதத்தைத் தழுவியவர்களாகையால் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டோரை அவர் கள் அதிகம் மதிப்பதில்லை. மீனவர் காரணமாகப் பல உயிர்கள் வதைக்கப்படு கின்றன என்பதே இதற்குக் காரணமாகும். தெனசெரிம், அரக்கன் பகுதிகளில் மிதமிஞ்சிக் காணப்படும் மீன் மலாயா, இந்தியா முதலிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகின்றது. ஆண்டுதோறும் 2000 தொன் மீன் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டது. பேமாவில் சுயதேவைக்கு ஏற்ற அளவில் மீன் பிடிக்கப்படுவ தில்லை. யுத்தகாலத்தின் முன்பு பேமா வருடந்தோறும் 10,000 தொன் மீனையும், பின்பு 4,000 தொன் மீனையும் இறக்குமதி செய்துவந்துள்ளது. யுத்த காலத்தின் பின்பு பேமாவில் 44,000 பேரே மீன்பிடிதொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர் (மலாயாவில் இத் தொழிலில் ஈடுபட்டுள்ள 71,000 பேரோடு இத்தொகையை ஒப்பிட்டுப் பார்க்க).

Page 249
436 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
மலாயா-மலாயாவில் வருடத்தில் 178,000 தொன் மீன் பிடிக்கப்படுகின்றது. 19,000 மீன்பிடி வள்ளங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன (1960), செலங்கர், பேராக், திரெங்கானு, பாகங்கு, பினுங்கு ஆகியவற்றின் கரைப் பகுதிகளிலேயே மீன்பிடிதொழில் அதிகமாக நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் 1961 ஆம் வருடத் கில் 9,500 தொன் மீன் பிடிக்கப்பட்டது. பொறிகளும் மோட்டார் இணைக்கப் பட்ட (இயந்திர) படகுகளும் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இயந் கிசப் படகுகள் மூலம் ஆழ்கடற் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்க முடிகின்றது. தூரத்திலுள்ள தீவுகளைச் சுற்றியும் போணியோவுக்கு அப்பாலும் மீனவர் இப் படகுகளிற் சென்று மீன்பிடித்து வருவர். இங்குப் பிடிக்கப்படும் மீன் தவிர வருடத்தில் 290,000 தொன் (1960) கருவாடு கிழக்கு இந்தியத் தீவுகள், தைலாந்து, தென்வியற்நாம் முதலியவற்றிலிருந்து சிங்கப்பூரின் இறக்கியேற்றும் வியாபாரத்திற்காக இறக்குமதி செய்யப்படுகின்றது. மலாயாவில் மீன்பண்ணை விருத்தியும் உண்டு. இப்பண்ணைகளிலிருந்து 1960 இல் 9,000 தொன் மட்டி பெறப்பட்டது. இருரல், கயல் முதலியனவும் மலாயா, சிங்கப்பூர் ஆகிய பகுதிக ளிற் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
இந்தோனேசியா-யாவாவில் மீன்பிடி தொழில் அதிக அளவுக்கு விருத்தி செய்யப்பட்டுள்ளது. யாவாவில் மீன்பிடிக்கக்கூடிய கரைப்பகுதி சிறிதாக உள் ளது. ஆணுற் குடித்தொகையோ அதிகமாகும். இதனல் தொழில் விருத்தியடைந் துள்ளபொழுதும் போதிய அளவில் மீன் பிடிக்கப்படுவதில்லை. குடித்தொகை குறைவான சுமாத்திரா, செலிபீஸ், போணியோ முதலியவற்றேடு இதனை ஒப் பிட்டுப் பார்க்கலாம். யாவாவின் வட மேற்குக் கரைப் பகுதியிலேயே மீன் அதிக அளவில் பிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டில் இப்பகுதியில் 152 ,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. வடகரையைச் சார்ந்து கிழக்கே இத்தொழிலின் முக்கி யத்துவம் குறைவடைந்துவிடுகின்றது. ஒருகாலத்திலே பிடிக்கப்பட்ட மீனில் ஒருபகுதி யாவாவின் மேற்குப் பகுதிக்கும் புறத்தேயுள்ள தீவுகளுக்கும் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் உணவின் பொருட்டுக் கொண்டு செல்லப்பட்டது. யாவாவின் மீன்பிடிதொழில் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தமையால் இப் போது இங்குப் பிடிக்கப்படும் மீன் தேவைக்குப் போதியதாயில்லை. இதனல் தைலாந்து வியற்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பதன்செய்த மீன் இறக்குமதி செய்யப்படுகின்றது. இவ்வாறு ஆண்டுதோறும் 10,000 தொன் மீன் இந்நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
புறத்தேயுள்ள தீவுகளில் வர்த்தகத்திற்கான மீன்பிடி தொழிலை விருத்தி செய்வது சாத்தியமாக இல்லை. எனினும் சுமாத்திரா, போணியோ ஆகிய பகுதி களில் இது ஒரளவுக்கு இப்பெர்ழுது இடம்பெற்றுள்ளது. பாகான்சீயாப்பியாப் பிப் பகுதியில் 12,000 சீனர் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டுள்ளனர். வருடத்தில் 100,000 தொன் மீன் இங்கே பிடிக்கப்பட்டு யாவா (60 சதவீதம்), சிங்கப்பூர், பினங்கு மலாக்கா ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மீன உப்பிட்டுப் பதன்செய்வதற்குப் பாகான்சீயாப்பியாப்பிப் பகுதி வருடத்தில் 25,000 தொன் உப்பைப் பெற்றுவருகின்றது. போணியோவில் மேற்கில் குகடா

தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடி தொழில் 437
ணுவும் கிழக்கில் பெகாபான், கொடாபாறு என்பனவும் முக்கியமான மீன்பிடி பகுதிகளாக அமைந்துள்ளன. உள்நாட்டுத் தேவைக்கான மீன் இப்பகுதியிலி ருந்தே பெறப்படுகின்றது. அதனேடு யாவாவுக்கு வருடத்தில் 4,000 தொன் கரு வாடும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மாக்கசர்ப் பகுதியில் முத்தும் சிப்பியும் அதிகமாகப் பெறப்படுகின்றன. அபலோன் என்னும் உண்ணத்தக்க இப்பியும் இங்கே பெறப்படுகின்றது. வருடத்தில் 4,000 தொன் அகர் அகரும் (ஜெல்லி உற் பத்திக்குப் பயன்படும் கடல் தாவரம்) பெறப்படுகின்றது.
யுத்தகாலத்தின் முன்பு தைலாந்து, இந்தோசீன ஆகிய நாடுகளிலிருந்து யாவா, மதுரா என்பன 49,000 தொன் மலிவான மீனைக் சிங்கப்பூர் மூலமாக இறக்குமதி செய்தன. இவை மேலும் 46,000 தொன் மீனைக் கிழக்குச் சுமாத்திசா விலிருந்தும், 8,000 தொன் மீனைப் புறத்தேயுள்ள தீவுகளிலிருந்தும் இறக்குமதி செய்தன. இவை தவிர, யாவா, மதுரா ஆகியவற்றைச் சூழவுள்ள கடலிலிருந் தும் 1958 ஆம் ஆண்டில் 425,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. குளங்கள், ஏரி கள் முதலியவற்றிலிருந்தும் 290,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. உள்நாட்டு மீன்பிடிக்காக தெம்பி ஏரி (தென் செலிபீஸ்) சிறந்த முறையில் விருத்தி செய் யப்பட்டுள்ளது. 1956 இல் 250,000 இந்தோனேசிய மக்கள் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தோசீன-இந்தோசீனுவின் கடற்கரை அமைவு கடல் மீன்பிடிக்குப் பொருத்தமாகவுள்ளபொழுதும் உள்நாட்டு மீன்பிடிதொழிலிலேயே இங்குள்ள மக்கள் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். இங்குப் பிடிக்கப்படும் ஒருவகை மீனிலி ருந்து கிராமத்தவரின் தேவைக்கான எண்ணெய் பெறப்படுகின்றது. 1961 ஆம் ஆண்டில் இப்பகுதியில் 240,000 தொன் மீன்பிடிக்கப்பட்டது. தென்வியற்நாம் கரையைச் சார்ந்து தான் ஹோவாவைச் சூழக் காணப்படும் ஆழமான கடற் பகுதியிலேயே மீன் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. இயந்திரப் படகுகள் முத லியனவும் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மீன்பிடி (முறைகள் பொதுவாகத் தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படுவதில்லை. கம் போடியக் கரைப் பகுதியும் மீன்பிடித்தற்கு முக்கியமான ஒரு பகுதியாகும். மேக்கோங்கு ஆற்றுமுகப் பகுதியிலிருந்தும் தைலாந்து, கிசாக் கரைப்பகுதி களிலிருந்தும் இடம்பெயரும் மீன்கள் இக்கரையில் வந்து சந்திக்கின்றன. இத ஞற் பெரிய அளவினவான மீன்வகைகள் இங்குப் பிடிக்கப்படுகின்றன. மேக் கோங்கின் பரப்புங் கிளையாறுகளிலும் சைகன், கொச்சின்சீனு முதலாம் பகுதி களுக்குத் தேவையான மீன் பிடிக்கப்படுகின்றது. நன்னீரேரி மீன் பிடியைப் பொறுத்தவரையில் புகழ்பெற்ற பகுதி தொன்லே சப் ஆகும். பெருந்தொகை யான அளவில் இங்கு மீன் பிடிக்கப்படுகின்றது. தொங்கின் பகுதியிலுள்ள சிற் முறுகளிலும், மேக்கோங்கு நதியைச் சார்ந்து காணப்படும் ஏரிகள் (குளம்புக் குட்டைகள்), குளங்கள் முதலியவற்றிலும் பருவகால அடிப்படையில் மீன்பிடிக் சப்படுகின்றது.
கம்போடியா, தென்வியற்நாம் பகுதிகளிலிருந்து அதிக அளவில் மீன் ஏற்று மதி நடைபெறுகின்றது. ஆனல் ஏற்றுமதி மூலம் பெறப்படும் வருவாய் குறை

Page 250
4.38 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
வாகும், வடவியற்நாம் தன்னுடைய மீன்பிடி விவரங்களை வெளியிடுவதில்லை; ஆயினும் அதன் கரைகளில் அதிகம் மீன்பிடிக்கப்படுவதில்லை.
தைலாந்து-தைலாந்து மக்கள் தினமும் சோற்றேடு மீனையும் சேர்த்து உண் இணும் வழக்கம் உடையவர். தென் கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுள் தைலாந் திலே மக்கள் மீனை அதிகமாக உட்கொண்டுவருகின்றனர் என்று கூறலாம். உன் நாட்டு நீர்நிலைகளிலிருந்தே மீன் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. செளபி சாயா பெருக்கெடுப்பது இதற்கு வாய்ப்பாக அமைகின்றது. நாம் மூன் குளங்க ளும் மீன் பெருக்கத்திற்கு உதவுகின்றன. இத்தகைய உள்நாட்டு நீர்நிலைகளில் நடைபெறும் மீன்பிடிதொழில் பற்றிய விபரங்கள் குறைவாகும். 1961 ஆம் ஆண் டில் 69,000 தொன் மீன் பிடிக்கப்பட்டது. தைலாந்தில் மீன்பிடிக்கும் முறை விவரிக்கப்பட்டிருக்கின்றதேயன்றி பிடித்தமீனின் நிறை குறிப்பிடப்படவில்லை. 1961 இல் கடலிற் பிடித்த மீனின் தொகை 258,000 தொன்னகும். தைலாந்துக் கடலிற் பிடிக்கப்படும் மீன் காரணமாகவே ஏற்றுமதிக்குத் தேவையான கருவாடு பெறப்படுகின்றது. மக்கால், சாடின், பில்சாட் என்னும் மீன்வகைகள் காைப் பகுதியிற் பிடிக்கப்படுகின்றன. மீன்பிடிதொழில் தனிப்பட்டமுறையில் ஒழுங் காக இல்லாதபொழுதும் மொத்தமாக அதிக அளவு மீன்பிடிக்கப்படுகின்றது. சில காலங்களிற் கரைப்பகுதியில் ஒருவகைக் கணவாய் (squid) மீன் பெரு வாரியாகக் காணப்படும். இக்காலங்களில் உணவுக்காக இவை அதிக அளவிற் பிடிக்கப்படுகின்றன. 50,000 தொன் மீன் வருடந்தோறும் ஏற்றுமதிக்காகவும் வியாபாரத்துக்காகவும் கரைப்பகுதிகளிலே உப்பிட்டுப் பதன் செய்யப்படுகின் றது. சிறந்த முறையில் உப்பிட்டுப் பதன் செய்யப்படாமையால் மீனின் தாம் குறைவடைகின்றது. தென்கிழக்கு ஆசியச் சந்தையில் மிகக் குறைந்த விலை யில் விற்கப்படும் மீன் (உப்பிட்ட) தைலாந்திற் பெறப்படுவதாகும். 1956 இல் பிடிக்கப்பட்ட மீனின் பெறுமதி 1400 இலட்சம் தொலராகும். இதில் 30 இலட் சம் தொலர் பெறுமதியான மீன் சிங்கப்பூர், பினங்கு, ஹொங்கொங்கு முதலிய இடங்களுக்கு மீளவும் ஏற்றுமதி செய்வதற்காக, ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்நாட்டு மீன் தரத்திற் குறைந்ததாகவிருப்பதனுற் சிறந்த தர மீன் பிறபகுதி களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. 1956 இல் 31 இலட்சம் தொலர் பெறுமதியான மீன் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த வியாபாரம் பெரும் பாலும் சீனர் கையிலேயே உள்ளது. பல வருடங்களாக யப்பானிய மீனவர் இக் கரைகளில் வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். இவர்கள் பிடிக்கும் மீன் சிங்கப் பூரிலும் யப்பானிலும் உள்ள சந்தைகளிற் செலவாகின்றது. மீன்பிடிதொழிலில் ஈடுபட்டுள்ள தைலாந்து மக்களின் எண்ணிக்கை குறைவாகும். 1960 இல் 59,000 தை மக்களே இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
பிலிப்பைன் தீவுகள்-மீனுணவு பிலிப்பைன் தீவுகளிலும் முக்கியமாக உள் ளது. தைலாந்திற் போன்று மீன்பிடிதொழில் பற்றிய விபரங்கள். இங்கும் எளி திற் கிடைப்பதில்லை. 1939 ஆம் ஆண்டிற்முன் மீன்பிடிதொழில் பற்றி மதிப்பீடு ஒன்று எடுக்கப்பட்டது. பிலிப்பைன் தீவுகளிடையில் நடைபெறும் மீன் வியா பாரம் குறைவாகும். பிலிப்பைனிற் பிடிக்கப்படும் 1,600 வகையான மீனில் 100

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 47
ம்ெ தொடர்பு கொண்டுள்ளது. இந்தோசீனவிலும் இரு மைய நாட்டம் உண்டு. இங்கு தொங்கின் (ஹனேய்) பகுதியும் மேக்கோங்குப் பகுதியும் (சைகன்) இரு மையங்களாகவுள்ளன. யாவாவின் பழைய மையம் உட்பகுதியி லுள்ள யோக்யக்கார்த்தாவாகும். ஜக்கார்த்தா வெளித்தொடர்புடைய மைய மாகும். சுமாத்திராவில் உட்பகுதியைச் சார்ந்து பல மையங்கள் உண்டு. சுமாத் திராவின் வெளித்துறைமுகமாகச் சிங்கப்பூர் உபயோகிக்கப்படுகின்றது. ஜக் கார்த்தாவோடு போக்குவரத்துத் தொடர்பு கொள்ளவும் சிங்கப்பூர் துணையாக வுள்ளது. தைலாந்தில் மட்டுமே இரு மையங்கள் இல்லை. தைலாந்தில் செளபி
படம் 118.--தென்கிழக்கு ஆசியாவில் மொழி வேறுபாடுகள் :
சாயா வடிநிலம் பாங்கொக்கை நோக்கி அமைந்துள்ளது. கோராத் மேட்டு நிலத்தில் மக்கள் தொடர்பும் வியாபார முறைகளும் மேக்கோங்கை நோக்கி அமைந்துள்ளன. வடமேற்கிலுள்ள எல்லைப்பகுதி முன்பு சியெங்மையில் காணப் பட்ட பழைய இராச்சியத்தை நோக்கி அமைந்திருந்தது. போணியோவின் கரையோரப் பகுதிகளை வெளிநாட்டார் பிரித்து அமைத்துக் கொண்டனர். தீமோர் தீவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் கிழக்குப் பகுதி போர்த்துக்கல் நாட்டின் குடியேற்ற ஆட்சித் தொடர்புடைய ஓர் அரசியற் பிரிவாகும்.
தனிப்பட்ட அரசியற் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது போன்று தென்கிழக்கு ஆசியாவும் பிரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. ஆனல் கப்பற் பாதைகள்
20-CP 4217 (68/9)

Page 251
72 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
விமானப் பாதைகள் என்பன இப்பகுதியில் சிங்கப்பூரை மையமாகக் கொண் டுள்ளன. போக்குவரத்துப் பாதைகள் சிங்கப்பூரை மையமாகக் கொண்டுள்ள பொழுதும் இந்தியா, தென்சீனு ஆகியவற்றின் தாக்கமும் இங்குக் காணப்படு கின்றது. இந்தியா பேமாவோடு பொருளாதாரத் தொடர்பு கொண்டுள்ளது. தைலாந்து இந்தோசீன ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் தென்சீனவோடு தொடர்பு கொண்டுள்ளனர். உணவுப் பொருளுற்பத்தி, வியாபாரம் ஆகிய துறை களில் தொடர்பு காணப்படுகின்றது.
தென்கிழக்கு ஆசியாவில் ஒவ்வொரு நாட்டிலும் இரு மையங்கள் அமைவ தற்கு ஐரோப்பிய வியாபார முறைகளும் காரணமாகும். பரம்பசையாக இந் நாடுகளில் காணப்பட்ட முறை ஒரு புறத்தில் அமைந்து காணப்பட, ஐசோப் பியர் நாட்டம் வேறெரு புறத்தில் அமைந்தது. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் முன்பு இன்றைய எல்லைகளைக் கொண்டிருக்கவில்லை. ஓர் அரசியற் பிரி வாகவும் அமைந்திருக்கவில்லை. ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியாளர் காரண மாகவே இவை தனிப்பட்ட அரசியற் பிரிவுகளாக அமைந்தன. ஸ்பெயின், அ. ஐ மாகாணங்கள் என்பனவே பிலிப்பைன் தீவுகளை ஓர் அரசியற் பிரி வாக இணைத்தன். எனினும் மிண்டானுவோவை இப்பிரிவில் அடக்கி வைத்தி (ருப்பது இந்நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. இந்தோசீன ஒரு மைப்பாடுடைய பகுதியாக அமையப் பிரான்சு ஓரளவுக்குக் காரணமாகவிருந் தது. கூட்டாக அமைந்த இப்பிரிவு ஒரு புதிய அமைப்பாகக் கொள்ளப்பட்டது. இன்றைய அரசியற் பிரிவாகவுள்ள மலாயா பிரித்தானியரால் அமைக்கப்பட்ட தாகும். இந்த நூற்முண்டில் டச்சுக்காரரின் குடியேற்ற ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இந்தோனேசியத் தீவுகள் எல்லாம் ஒன்முக இணைந்திருக்கவில்லை.
குழலும் அரசுகளும்
கண்டஞ் சார்ந்த அரசியற் பிரிவுகளான பேமா, தைலாந்து, இந்தோசீனு ஆகியன சில வழிகளில் எகிப்து நாட்டை ஒத்துள்ளன எனக் குறிப்பிடலாம். இப்பகுதிகளில் மக்கள் வளமான பள்ளத்தாக்குக்களில் வாழுகின்றனர். இவை புறத்தே காடுகளினலும் மலைகளினலும் குழப்பட்டிருத்தலினல் பாதுகாப்பாக அமைந்துள்ளன. இயற்கையான வளமும் பாதுகாப்பும் இருந்தமையால் எகிப்து, மெசொப்பொற்றேமிட" ஆகிய பகுதிகளில் பிரதான நாகரிகங்கள் செழித்தோங்கின. இத்தன்மைகள் ஒரளவுக்குத் தென்கிழக்கு ஆசியப் பகுதி யிலும் காணப்பட்டன. ஆனல் ஒரு வேறுபாடும் இங்குக் காணப்பட்டது. ஆசி யாவின் தென்பகுதியைச் சார்ந்த நிலத்தில் அரசுகள் அமைய இயற்கைச் சூழல் ஓரளவுக்குப் பொருத்தமாக இருந்தது, என்பது உண்மையாகும். ஆனல் பாதுகாப்புத் தன்மை போதிய அளவிற் காணப்படவில்லை. வடக்கிலுள்ள ஆற் றங்கரைசார்ந்த அரசுகள் பிற பகுதிகளிலுள்ளோரின் தாக்கத்தாற் பாதிக்கப் பட்டன. ஆற்றுப் பள்ளத்தாக்குக்கள் அரசுகள் வளர்ச்சிபெற மிகவும் வாய்ப் புடையனவாக இருந்தபொழுதும் அவை நீண்டகாலம் நிலைபெற்றிருக்க இயற் கையான பாதுகாப்புக் காணப்படவில்லை. இப்பகுதியிலுள்ள பிரதான தீவுகள்

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 473
குத்தான ஓங்கல்களையும், சதுப்பு நிலங்களையும், காடுகளையும் கொண்டிருப்பத ல்ை உட் பாகங்களைச் சென்றடைதல் கடினமாகும். பிரதான தீவுகளுள் எது வும் தனிப்பட்ட மக்கள் குடியேற்றத்தைக் கொண்டதாக இல்லை; தனிப்பட்ட அரசாட்சியைக் கொண்டதாகவும் இல்லை : ஒருமைப்பாடாக அமைந்த அரசி யற் பிரிவாகவும் இல்லை. இங்குள்ள பெரிய தீவுகளில் எல்லாம் மக்கள் பரவலா கக் குடியேறியுள்ளனர்.
யுத்தத்தின் பின் வளர்ச்சிபெற்ற தேசியவுணர்ச்சி
யுத்த காலத்தின் பின்பு வளர்ச்சிபெற்ற தேசியவுணர்ச்சி முரண்பாடான தொன்முகக் காணப்படுகின்றது. பல சமூகங்களும் சிறுபான்மையோரும் உள் ளமை காரணமாக இவ்வளர்ச்சி ஏற்பட்டது. அரசுகள் ஒவ்வொன்றிலும் ஒரு மைப்பாடு அதிகமாக இருக்கவில்லை. ஐரோப்பாவின் தேசியதாடு' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டனவாகவும் இவை அமையவில்லை. பல வேறுபட்ட தன்மைகள் காரணமாகத் தோன்றிய பாதுகாப்பின்மையில் ஏற் பட்ட தேசியவுணர்ச்சியாக இது காணப்பட்டது. வேறுபட்ட தன்மைகளினுல் பழைய ஒருங்கிணைந்த சமூக அமைப்பு சிதைவுற்றது; மக்கள் தொடர்பும் பாதிக்கப்பட்டது. புதிதாக வர்த்தகம் வளர்ச்சி பெற்றது. “பொருளாதார மனிதன்" முக்கியமாக அமைந்தான். இவை காரணமாகத் தென்கிழக்கு ஆசிய மக்கள் ஒருங்கு இணையமுடியவில்லை. as
தென்கிழக்கு ஆசிய நாடுகள் குடியேற்ற நாட்டு நிலையிலிருந்து உகந்தநேர்க் கில் தேசியப் பிரிவுகளாக அமையவில்லை. நெற்செய்கை பெரும்பாலும் அதிக லாபத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டு வந் தது. நீண்டகாலமாக இது நடைபெற்றதனுல் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள் ளது; ஏக்கருக்குரிய வருவாய் இதனுற் குறைந்து வருகின்றது. யுத்தத்திற்கு முன்பு புதிதாக நெல் நிலத்தைப் பெறுவதும் கடினமாகவிருந்தது. யுத்தத்தின் பின்பு பழைய நிலங்கள் பலவற்றில் நெற்செய்கை கைவிடப்பட்டது. இயற்கை இறப்பருக்குப் பதிலாக இன்று செயற்கை இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின் மது. இதனுல் இயற்கை இறப்பருக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. இவ் வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டிருப்பதோடு எதிர் காலத்தில் சீனியின் நிலையே இதற்கும் ஏற்படலாம். ஏனைய உலோகக் கணிப்பொருள்களோடு ஒப் பிடும்பொழுது தகரத்தின் மதிப்பும் இன்று குறைந்துவிட்டது. பெருந்தோட் டப் பயிர்கள் பொதுவாகத் தொழிலாளர் வசதியையும், சந்தையையும், வாய்ப் பினேயும் இழந்து விட்டன. நிலைமைகள் இவ்வாறு காணப்பட தென்கிழக்கு ஆசியாவின் குடித்தொகை உலகச் சராசரியிலும் பார்க்க அதிக அளவில் பெருகி வருகின்றது. ஆனல் ஏலவே குடிநெருக்கமுடைய பகுதிகளில் பெருக் கம் ஒரளவுக்குக் குறைந்த வீதத்தில் ஏற்பட்டுள்ளது. அடர்த்தி குறைவாக விருந்த வெளியான பகுதிகளிலேயே பெருக்கம் அதிகமாகும். உதாரணமாகத் தென் சுமாத்திரா (யாவா மக்கள் இங்குக் குடியேறுகின்றனர்) மிண்டானவோ (பிலிப்பைன் மக்கள் இங்குக் குடியேறுகின்றனர்), யோகூர் (சீனர் இங்குக் குடி

Page 252
474 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
யேறுகின்றனர்) ஆகிய பகுதிகளில் பெருக்கம் அதிகமாகும். லாவோஸ், காவி மாந்தான், தைலாந்தின் உட்பகுதி ஆகியவற்றிலும் உள்நாட்டுப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. 1954-55 ஆண்டுக் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஏறத்தாழ 250,000 பேர் நெதலாந்து, சீனு, இந்தியா ஆகிய பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் பெருக் கம் அதிகமாக ஏற்பட்டு வருகின்றது
அதிகார மாற்றம்
தென்கிழக்கு ஆசியாவிற் குடிப்பெருக்கத்திற்கு முன்பு முக்கியமாகவிருந்த வர்த்தகம் சுருங்கிவருகின்ற வேளையில் குடிப்பெருக்கம் அதிகமாக ஏற்பட்டு வருகின்றது. குடியேற்ற ஆட்சி நிலைமைகள் நீங்கி நாடுகள் சுதந்திரமடைந்து வருகின்றன. ஆனல் முன்பு ஆட்சி செய்த வல்லரசுகளின் பொருளாதார நிலைமை சாதகமற்றதாயிருக்கும் கட்டத்தில் இந்த அதிகார மாற்றம் ஏற்பட் டமையால் பலனளிக்கும் தொழில் முறைகள் புதியவர்கள் கைக்கு மாறிவரு கின்றன. யுத்த காலத்தின் முன்பு காணப்பட்ட பொருளாதார நன்மையையும் 19 ஆம் நூற்முண்டுப் பேரிசாச்சியப் புகழையும் கருத்திற் கொண்டதனல் சிறிய தேசியப் பகுதிகள் இன்று பல சிக்கல்களுக்குள்ளாகியிருக்கின்றன. இந்தச் சூழ் நிலையிலே இச்சிறிய அரசுகள் சிலவற்றின் தேசிய ஆட்சிமுறைக் கொள்கையும் இவற்றின் வாழ்க்கைத்தரம் மேலும் குறைவடையக் காரணமாக உள்ளது. ஐரோப்பியக் குடியேற்ற நாட்டாட்சியாளர் முதன்முதலிற் கண்ட குழப்பமான நிலையும் மந்தமான விருத்தி நிலைமையுமே மீண்டும் இங்குக் காணப்படலாம். அரசியல், பொருளாதார நிலைமைகளிற் காணப்பட்ட வளர்ச்சி குன்றிக் குழப்ப மான நிலைமைகள் தலையெடுத்துள்ளன. நாடுகள் சீர்குலைந்துவிடுமோ என்று எண்ணுமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன. ஐரோப்பியரினதும் அமெ ரிக்கரினதும் தொழில்நுட்ப அறிவினல் முன்பு திகைப்புற்றிருந்த நிலை ஓரள வுக்கு மாறித் தென்கிழக்கு ஆசிய மக்களிடைப் புதிய முறைகள் ஓரளவுக்குப் பரவி வருகின்றன. தனிப்பட்ட முறையிலும் உலக உணவு-பயிர்ச்செய்கைத் தாபனம், ஆசியப் பொருளாதாரக் கமிசன் முதலிய உலகத் தாபனங்கள் மூல மும் இம் முறைகள் பரவிவருகின்றன. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் பிரச் சினைகள் ஒரளவுக்குக் குறைகின்றன போன்று தெரிகின்றது. ஆனல் திட்டமாக எந்த வழிகளில் விருத்தி காணப்படும் என்று கூறமுடியாது.
தென்கிழக்கு ஆசியாவின் அரசியற் பிரிவுகளும் எதிர்காலத்தில் எந்த முறை யில் அமையும் என்று கூற முடியாது. இப்பகுதியிலுள்ள நாடுகளில் ஏலவே இருவகையான மையத்தன்மை ஏற்பட்டுள்ளது. குடியேற்ற நாட்டு ஆட்சி முறை, தேசிய இயக்கம் என்பனவற்ருலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவை காரணமாக இந்நாடுகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. 1945 முதல் 1954 வரை நடைபெற்ற கலவரங்கள் பெரிய யுத்தம் போன்று காட்சியளிக் தன. இந்த நிலைமைகளினுல் இப்பகுதியில் சில அரசியற் பிரிவுகள் அமைந்

மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை 47
அள்ளன. குடியேற்ற நாட்டு ஆட்சியாளர் இப்பகுதியிலிருந்து சென்று விட்ட னர். ஆசியால்லாதார் இப்பொழுது இப்பகுதியில் வெளிநாட்டுத் தூதராகவும், வர்த்தகர்களாகவும், தொழில்நுட்பவறிஞர்களாகவும் கடமையாற்றுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கீழைத்தேசக் கோட்பாடுகட்கு உட்பட்டு நடக்க வேண்டிய நிலையும் இன்றுண்டு.
ஐரோப்பியரினதும் அமெரிக்கரினதும் ஆதிக்கம் குறைந்துள்ள இப்பகுதியில் சீனு, இந்தியா, யப்பான் ஆகிய நாடுகளின் தாக்கம் அதிகரித்தல் வேண்டும். பழைய காலத்திலிருந்தே இந்நாடுகள் செல்வாக்குடையனவாயிருந்தன; பெரும் இலாபத்தையும் ஈட்டியுள்ளன. இந்நாடுகளைச் சார்ந்தோர் இப்பொழு தும் தென்கிழக்கு ஆசியாவில் வாழுகின்றனர். இந்நாடுகளுக்கு வேண்டிய மூலப்பொருள்களைத் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலிருந்து பெறுதலுங்கூடும். ஆசியாவில் மிகவதிகமான அளவில் நெல்லை உற்பத்தி செய்யும் பகுதியும் தென் கிழக்கு ஆசியாவாகும். நோக்கம் எதுவாகவிருப்பினும் இந்தியாவும் சீனுவும் குடியேற்ற நாட்டாட்சி நாடுகளைப்போன்று தென்கிழக்கு ஆசியாவில் கூடிய செல்வாக்கைப் பெறுதல் கூடும். உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கொண்ட ஒரப் பகுதியிலுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிற நாடுகளின் துணையோடு நிற் கக் கூடியனவாகக் காணப்படுகின்றன. சுதந்திர நாடுகளாக இருப்பதிலும் பார்க்க அவை ஆசியாவின் பிற வல்லரசுகளின் துணைநாடுகளாக அமையக் கூடி
யனவாக உள்ளன.
al
சீனவில் இன்று கொம்மியூனிஸ ஆட்சி இடம் பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த ஆட்சி யப்பானின் பழைய ஏகாதிபத்திய ஆட்சியைப் போன்று காணப்படுகின்றது. கடற்படை இல்லாத காரணத்தினுல் சீன தரை மார்க்கமாகவே பேமா, தைலாந்து, லாவோஸ் முதலிய நாடுகளைப் பாதிக்கக் கூடியதாக உள்ளது. படைகளைத் தரைவழியாகக் கொண்டு செல்வதும் கடின மாகும். ஆனல் சிறு சிறு தொகையினராகச் சீனர் இந்நாடுகளின் வட பகுதி களிற் புகுந்து தாக்குதல் எளிதாகும். இந்நாடுகளில் சீன மக்கள் வாழுகின்ற படியால் சீனக் கொம்யூனிஸ மக்கள் இவர்களோடு தொடர்பு கொள்ளுதல் எளிதானதொன்முகும். ஆனல் இந்நாடுகளில் வாழும் சீனர் பெரும்பாலும் வியா பாரிகளாக உள்ளமையால் கொம்மியூனிஸச் சார்புடையவராக இல்லை; தேசிய வுணர்ச்சியினுல் பாதிக்கப்படக்கூடியவராக உள்ளனர். இந்நாடுகளில் தேசிய வுணர்ச்சியடிப்படையில் அரசியல் நிலைமைகள் மாறிவருவதனுல் சீனர் பாதிக் கப்பட்டு வருகின்றனர். இந்நாடுகளில் வாழும் சீனர் சீனவோடு கொண்டுள்ள தொடர்பு பாரம்பரிய உணர்ச்சியினல் ஏற்பட்டதொன்முகும். புதிய சீன மக் கள் இந்நாடுகளிலுள்ள மக்களை நாடும்பொழுது இந்நாடுகளிலுள்ள சீன மக் கள் அதனை ஆதரிப்பதாக இல்லை. தென்கிழக்கு ஆசியாவின் சீரற்ற நிலைமையி ஞல் கொம்மியூனிஸக் கருத்துப் பரவக்கூடிய வாய்ப்பு உண்டு. பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடிய பாதுகாப்பு முதலியன இல்லாதவிடத்து மக்கள் சாதாரண வாழ்க்கைப் பயிர்ச் செய்கை முறையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க

Page 253
476 தென் கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல்
வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. குடியேற்ற நாட்டாட்சி நாடுகள் தென்கிழக்கு ஆசியப் பகுதியை விட்டு நீங்கியதும் புதிய கட்சியினர் அப்பங்கை ஏற்
gojରTଗTଶ୪TIT.
இந்த மாற்றத்தின் அடிப்படையிலே அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் அமைந்துவருகின்றன. குடியேற்றநாட்டாட்சியாளர் ஐரோப்பிய, அமெரிக்க நிலைமைகளுக்கும் அரசியல் நிலைமைகளுக்கும் ஏற்பத் தென்கிழக்கு ஆசியாவை அமைத்திருந்ததனுல் புதிய மாற்றங்கள் இப்பகுதியில் ஏற்படுவது இயல்பாகும். தேசியவுணர்ச்சி காரணமாகவும் சமூகக் கொள்கைகள் காரண மாகவும் தென்கிழக்கு ஆசியாவில் இன்று பல சிறிய அரசியற் பிரிவுகள் அமைந் துள்ளன. தேசியவுணர்ச்சியும் இனத்தொடர்பும் ஒரு நாட்டின் அமைவுக்கும் சிறப்புக்கும் துணைசெய்யமாட்டா என்பது இப்பொழுது உணரப்படுகின்றது. இதனுல் சிறு பிரிவுகள் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து, பெரிய அரசியற் பிரிவுகள் இப்பகுதியிலே தோன்ற ஏதுவாதல் கூடும். சுயதேவைப் பூர்த்தி தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் முக்கியமானது என இப்பொழுது கருதப்படுகின் றது. மீண்டும் ஏற்படக்கூடிய இத்தகைய ஒழுங்கு இப்பகுதியின் பலத்தினலோ பிறநாடுகளின் தாக்கத்தினலோ ஏற்படும் என்று கூற முடியாது , எவ்வாரு யினும் இப்பகுதியிலுள்ள அரசியல் தலைவர்கள் சாமர்த்தியத்தையும் இப்பகுதி யின் புவிசார்பாசியல் தன்மைகளையும் பொறுத்து இத்தகைய ஒழுங்கு ஏற் Lilloft d.

BIBLIOGRAPHY
The following books are sources of facts upon which the author has gratefully
drawn and also additional reading on topics mentioned in the relative chapter.
CHAPTER I : Landforms of Southeast Asia
BRoUwIER, H. E. Geology of N.E.I., New York, 1925. DALY, R. A. Glacial Control. Theory of Coral Reefs, Am. Acad. Arts and Sc., 1915. DAVIs, W. M. The Coral Reef Problems, New York 1928. GARDINER, J. S. Coral Reefs and Atolls, London, 1931. GREGORY, J. W. “The Banda Arc,” Geog. Journal, 1923. MoLENGRAAF, G.A. F. De geologie der zeeën van Nederlandsch Oost-Indie, Leyden, l92l ScHoTT, G. Geographie den Indischen und Stillen Ozeans, Hamburg, 1935.
UMBG RovE, J. H. F. “Different Types of Island Arcs in the Pacific," Geog. Journal,
1945.
UMBGRovE, J. H. F Structural History of the East Indies, C.U.P., 1949. The Snellius Eacpedition Reports, Brill, Leiden, 1929-30.
CHAPTER 2: Climatic Factors in Southeast Asia ALGUE, J. Typhoons of the Far East, Manila, 1904. CLINEs, I. M. Tropical Cyclones, New York, 1926. DoBBY, E. H. G. "Winds and Fronts in Southeast Asia," Geog. Rev., 1945,
DEPPERMAN, C. E. Temperature Conditions in the Eye of Some Typhoons, 1936 : Characteristics of Phil. Typhoons, 1937; Upper Air Circulation over Phil., 1940: Typhoons originating over the China Sea, 1938; Pubs. Phil. Weath. Bur.,Manila.
GARBELL, M. A. Tropical and Equatorial Meteorology, London, 1947. WATTs, I. E. M. Equatorial Weather, London, 1955.
CHAPTER 3: The Drainage Patterns of Southeast Asia DALY, R. A. Changing World of the Ice Age, Yale U.P., 1934.
MoLENGRAAF, G. A. F. “Modern Deep Sea Research in East Indian Archipelago,'
Geog. Journal, 1921.
MYERs, E. H. Recent Studies of Sediments in Java Sea, Science and Scientists in
N.E.I., New York, 1945.
STAMP, L. D. "The Irrawaddy River,' Geog. Journal, 1940.
CHAPTER 4: Southeast Asia's Natural Vegetation CARTER, HILL & TATE. Mammals of the Pacific World, New York, 1946. CuRRAN, C. H. Insects of the Pacific World, New York 1945.
4穹7

Page 254
478 Bibliography
MAYR, E. "Wallace's Line in Light of Recent Zoogeographic Studies,' Quarterly
Rev. Biology, New York, 1944.
MERRILL, E. D. Plant Life of the Pacific World, New York, 1946.
RICHARDs, P. W. “Ecological Observations in Rain Forest of Mt. Dulit," Journal of
Ecology, London, 1936.
RIDLEY, H. N. Flora of Malay Peninsula, London, 1922, SAUER, C.O. "Early Relations of Man to Plants,' Geog. Rev., 1947. VAN STEENIs, C. G. G. Maleische Vegetatieschen, Buitenzorg, 1935. WATson, J. G. Mangrove Forests of Malay Pen., Singapore, 1928.
CHAPTER, 5 : Southeast Asia, Soils CoRBET, A. S. Biological Processes in Tropical Soils, London, 1935. GLINKA, K. D. (trans. Marbut). Great Soil Groups of the World, New York, 1927.
HoLLAND, J. "Constitution, Origin and Dehydration of Laterite,' Geologica
Маg., 1903.
MoHR, E. C. J. (trans. Pendleton). Tropical Soil-Forming Processes, Univ. of Philip' pines, College of Agriculture, 655, 1930; Olimate and Soil in N.E.I., Bull. Colonial Institute of Amsterdam, 1938.
PENDLEToN, R. “Laterite and its Structural Use in Thailand,' Geog. Rev., 1941. PoLYNov, B. B. Cycle of Weathering, London, 1937.
THORP, J. and BALDwIN. Laterite in Relation to Soils in the Tropics, Ann. Ass.
American Geogs, 1940.
VAGELER, P. Introduction to Tropical Soils, London. 1933.
CHAPTERS 6, 7 & 8 : Malaya BLAUT, J. "Econ. Geog. of One-acre Farm on “Singapore Island,' Mal. J. Trop
Geog., 1953. BURKILL, I. H. Economic Products of Malay Peninsula, London, 1935. CoRNER, E. J. H. Wayside Trees of Malaya, Singapore, 1940.
DALE, W. L. "Rainfall of Malaya', Mal. J. Trop. Geog., 1959-60; "Surface Temps.
in Malaya,' Mal. J. Trop. Geog., 1962.
DoBBY, E. H. G. “Settlement Patterns in Malaya,” Geog. Rev., 1942 ; “Singapore,” Geog. Reviev, New York, 1940 ; *Land Utilisation in Malacca,” Geog. Jnl., 1940; “Kelantan Delta,” Geog, Rev., 1951 ; “Recent Settlement Changes in S. Malaya,” Mal. J. Trop. Geog., 1953 ; (Ed.) “Padi Landscapes of Malaya," Mal. J. Trop. Geog., 1955 and 1957. Economic Development of Malaya, I.B.R.D. Report, Singapore, 1955. EMERson, R. Malaysia, New York, 1937. FRITH, R. Malay Fishermen, London, 1946.
GINSBURG, N. Malaya, Seattle, 1958.

Bibliography 479
GRIST, D. H. Outline of Malayan Agriculture, Kuala Lumpur, 1950. GULL, E. M. British Economic Interests in the Far East, London, 1943.
HoIDDER, B. W. Man in Malaya, London, 1959. MAxwell, C. N. Malayan Fishes, J. Malayan B.R.A.S., Singapore, 92). MILLs, L. A. British Rule in Eastern Asia, London, 1942.
MoHR, E. C. J. AND VAN BAREN. F. A. Tropical Soils, The Hague, 1954.
OoI JIN-BEE, “Mining Landscapes of Kinta,” Mal. J. Trop. Geog., 1955 ; “Rural
Development in Tropical Malaya,’ Mal. J. Trop. Geog., 1959.
O’REILLY, J.M.M. “ Malayan Tin Mining,' Mal. J. Trop. Geog., 1963.
PURCELL, V. W. W. S. Chinese in Malaya, London, 1948.
RICHARDsoN, J. A. “ Outline of Geomorphological Evolution of British Malaya,”
Geolog. Mag., 1947.
RoBERTs, G. (Dobby, E.H.G.) 'Making Malaya a Nation', Geog. Mag., 1946
ScRIVENOR, J. B. Geology of Malayan Ore Deposits, London, 1928, Geology of Malaga,
London, 1931.
SERVICE, H. "Explanation of Shallowness of Alluvium in River Flats of Western
Pahang,” F. M. S. Chamber of Mines, Kuala Lumpur, 1940.
SweTTENHAM, F. Footprints in Malaya. London, 1941.
WIKKRAMATILEKE, R. “Planned Settlement in Eastern Malaya," Mal. J. Trop.
Geog., 1963.
CHAPTERS 9, 10 & 1 : Burma
ANDRUs, J. S. Rural Reconstruction in Burma, Madras, 1936; Burmese Economic Life,
Stanford U.P., 1948.
CHANG CH’ENG SUN. Sino-Burmese Frontier Problems, Peiping, 1938.
CEIHTBBER, H. L. Mineral Resources of Burma, London, 1931; Geology of Burma
London, 1934; Physiography of Burma, Calcutta, 1933.
CoLLIs, M. Land of the Great Image, London, 1945.
FITZGERALD, P. "Yunnan-Burma Road,' Geog. Journal, 1940.
URNIVALL, J. S. Political Economy of Burma, Rangoon, 1938.
Jessic, T. Story of Burma, London, 1946.
KAULBACK, R. Salween, New York, 1939.
KNAPPEN, TIBBETTs and ABBETT. Economic and Engineering Survey of Burma
New York, 1952.
RACE, F. B. Future of Burma, (2nd Ed.) Rangoon, 1939. MINE, L. Home of an Eastern Clan (Palaungs), Oxford, 1924. MochEAD, F.T. "Forests of Burma,' Burma Pamphlet, London.
'GAIN. B. R. "Burma Background,' Burma Pamphlet, London.

Page 255
480. Bibliography
SPATE, O.H.K. "Rangoon, A Study in Urban Geography', Geog. Rev. 1942; "Beginnings of Industrialisation in Burma', Econ. Geog., 194l ; "Burma Setting,' Burma Pamphlet, London.
SPATE, O.H.K. and TRUEBLooD, L. W. "Rangoon', Geog. Rev., 1942.
STAMP, L.D. “Oilfields of Burma, Jnl. Inst. Petrol. Tech., 1929; 'Burma; an undeveloped Monsoon Country', Geog. Rev., 1930; "Vegetation of Burma from Ecological Standpoint', University of Rangoon Res. Mon., Calcutta, 1925; "Irrawaddy River', Geog. Journal., 1940.
STEVENsoN, H.N.C. “Hill Peoples of Burma’, Burma Pamphlet, Longmans London.
DE TERRA, H. "Quartenary Terrace System of Southern Asia', Geog. Rev., 1939; "Component Factors of Natural Regions of Burma', Annals Am. Assoc. Geog., Wisconsin, 1944.
WARD, F. K. "Irrawaddy Plateau'', Geog. Journal, 1939. ANON. "Burma's Rice,' Burma Pamphlet, London, 1944. aNoN. The Burma Petroleum Industry, London, 1946.
CHAPTERS 12, 13, 14, 15 & 16: The East Indies Atlas van tropisch Nederland, Amsterdam, 1937.
BARKENRoAD, M.D. "Development of Marine Resources in Indonesia', Far Eastern
Quarterly, New Yok, 1946.
BARNOUW A. "Crosscurrents of Culture in Indonesia,' Far Eastern Quarterly,
New York, 1946.
BECCARI, Wanderings in the Great Forests of Borneo, London, 1904.
WAN, BEMMELEN, R. W. Mineral Resources of N. Indies, Science de Scientists in
N.E.I., New York, 1945,
BoEREMA, J. Rainfall Types in N.E.I., No. 18 of Verhandelingen Konenklijk Mag
netisch en Meterologisch Observatorium te Batavia.
BRAAK, C. Het Klimaat Van Ned.-Indie, No. 8 of Verhandelingen Konenilijk Magnetischen Meterologisch Observatoriumte Batavia, Klimakunde Von Hinterindien und Insulinde, Berlin, 1936; Climate and Meterological Research in N.E.I., Science and Scieatists in N.E.I., New York, 1945.
TER BRAAKE, A.L. Volcanology in Netherlands East Indies, Science and Scientists
in N.E.I., New York, 1945.
BRITISH Borneo Geological Report, ed. Roe. F.W. Saravak, 1955.
BRoEk, J.O.M. “Man and Resources in N.E.I.' Netherlands Number, Far Eastern
Quarterly, New York, 1946.
BİRoUwIER, H.A. “Exploration in the lesser Soenda. Islands”, Geog. Journal, 1939
Geology of the N.E.I., London, l925.
CoILLET, O.J.A. Terres et Peuples de Sumatra, Amsterdam, 1925. DEASY, G.F. "Localisation of Sumatra's Oil Palm Industry,' Econ. Geog., 1942. EvANs, C. Among Primitive Peoples in Borneo, London, 1932. FURNIVALL, J.S. Netherlands India, Cambridge, 1939.

Bibliography 481,
VANGELDEREN, J. Western Enterprises and the density of population in the N.E.I. in "Effect of Western Influences on Native Civilisation in Malay Archipelago,' Bataίνia, 1929.
HARRISON, T. "North Borneo', Geog, Journal, 1933; (ed.) Borneo Jungle, London,
1932.
HART, G.H.C. "Recent Developments in N.E.I.", Geog. Jnl. 1942.
VoN HEINE-GELDERN, R. Prehistoric Research in N.E.I., Science and Seientists in
N.E.I., New York, 1945.
HoENIG, A. Agriculture in N.E.I., Science and Scientists in N.E.I., New York, 1945.
KENNEDY, R. Islands and Peoples of the Indies, Smithsonian Institute, Washington,
943.
KUPERUs, G. "Relation between Population and Utilisation of Soil in Java' Compt.
Rend du Congr. Inst. Geog., Amsterdam, 1938.
LASKER, B. “Role of the Chinese in the N.E.I.', Far Eastern Quarterly, New York,
1946.
LEE, Y.L. 'Dev. and planning Lands use, Br. Borneo', Mal. J. Trop. Geog., 196l; Long house Dyak Settlements, "Oriental G., 1962; "Pop. of Br. Borneo', population Studies, 1962.
LEHMAN, H. Morphologische Studien Auf Java, Geografische Abhandleyen, Stuttgart,
1936.
MILLER, C. C. Black Borneo, London, 1946. ORMELING, G. J. Toimor, Amsterdam, 1954.
PELZER, K. J. “ “Tanah Sabrang and Java’s Population Problem”“, Far Eastern Quarterly. New York, 1946.
PRESTAGE, E. Portuguese Pioneers, London, 1933. RoBEQUAIN, C. Monde Malais, Paris, 1946. lRUTTER, O. British North Borneo, London, 1922.
STAUFER, H. Geology of Netherlands East Indies, Science and Scientists in N.E.I.,
New York, 1945.
VAN STEENIS, C. G. G. J. Malaische Vegetatiescheten. Tijdschrift, v.h. Kon. Ned.
Handrijkskundig Genootschap, 1935.
VAN STRAEILEN, V. Resultats Scientifiques du Voyage Aluas Indes Orientales Nederlan
alaises, Brussels, 1933.
Tic NaweLL, T. A. History of Rubber Cultivation and Research in N.E.I., Science and
Scientists, N.E.I., New York 1945.
Naick, L. “Chinese in Southeast Asia', Geog. Rev., 1944.
VAN VALKENBURG, S. Economic Geography of a Tropical Island, Java, Geog. Rev,
026,
VrcurrAPPEN, H. Th. Djakarta Bay, Hauge, 1953. Vi.rrrr, B. H. M., Nusantara, Cambridge, Mass, 1943.

Page 256
482 Bibliography
WITHINGToN, W. A. "Population in Sumatra'', Mal. J. Trop. Geog., 1963. WITToUCK, S. F., Exploration of Portuguese Timor, Geog. Journ., 1938.
CHAPTERS 7 & 8: Thailand ANDREws, J. M. Siam, Second Rural Economic Survey, Bangkok, 1935,
BRAAK, C. Klimakunde von Hinter U. Insulinde, Hdb., d. Klimatologie, Bd. IV,
Berlin, 1931.
CoLLIs, M. Siamese White, London, 1936. CREDNER, W. Siam, das Land der Thai, Stuttgart, 1935.
F. A. O. Report on Siam, 1948, on its Fisheries, 1949.
CRosBY, J. Siam, London, 1945.
DE YoUNG, J. E., Village Life in Modern Thailand, Berkeley, 1955.
LANDoN, K. P. Siam in Transition, Shanghai, 1939; The Chinese in Thailand,
Shanghai, 194l.
NoRRIs, H. The Kingdom of Siam, Bangkok, 1936.
PENDLEToN, R. L. "Land Use in N. E. Thailand,' Geog. Rev., 1943 Soils and Surface
Rocks of Siam, Bangkok, 1953.
PUGH, M. The Economic Development of Siam, Bangkok, 1936.
RoBBINs, L. J. "A Journey in Central Siam', Geog. Journal, 1929. THOMPsoN, W. Thailand, New York, 1941.
WILLIAMs, L. Mysteries of Thailand, London, 1941.
ZIMMERMAN, C. C. “Some Phases of Land Utilisation in Siam, * Geog, Revieu, 1937 : .
Siam, Rural Economic Survey, Bangkok, 1931.
CHAPTERS 9 20 diochina
Atlas des colonies francaises, Paris, 1935.
BAUDRIT, A. Le Fameux Song-Be, Saigon, 1936. BRODERICK, A. H. Little China, London, 1942.
BRUzoN, E. AND CARToN, P. Le Climat de l’Indochine et les Typhons de la Mer de
Chine, Hanoi, 1930.
CHAsSIGNEUx, E. “ La Region de Hai Ninh, ” La Geographie, 1926,
Cool IDGE, H. J. AND RoosevELT, T. Three Kingdoms of Indo China, New York,
1933.
DELAHAYE, V. La Plaine des Joncs et sa Mise en Valeur, Rennes, 1928.
GAUTHIER, J. Digues du Tonkin, Hanoi, 1931.
GoURoU, P. L'Utilisation du Sol en Indochine Francaise, Paris, 1936 ; Les Paysans du
Delta Tonkinois, Paris, 1936 ; Le Tonkin, Hanoi, 1931.
LoUBET, L. Monographie de la Prov. de Kompong Cham, Phom. Penh, 1939. NULzEc, L. *Le Plateau des Cardamones Cambodgien, *La Geographie, 1926.

Bibliography 483
PoNDER, H. W. Cambodian Glory, London, 1936.
RoBEQUAIN, C. L'Indochine Francaise, Paris, 1935 ; Le Than Hoa, Paris, 1929 :
Economic Development of French Indochina, N. York, 1944.
RUssIER, H. L’Indochine Francaise, Hanoi, 1931. SION, J. * Asie des Moussons, * Geog. Universelle, Vol. IX, Paris, 1929. YvEs, H. Terres Rouges et Terres Noires Basaltiques d’Indochine, Hanoi, 1931.
Bulletin Economique de l'Indochine (annually).
CHAPTER. 21 : The Philippine Islands ALLEN, J. S. "Agrarian Tendencies in the Philippines, 'Pacific Affairs, 1938.
BoRJA, L. J. “Philippine Coconut Industry, ' Econ. Geog., 1927; 'Philippine
Lumber Industry, 'Econ. Geog., 1929.
BUTLER, O. M. Philippine Islands, U. S. Dept. Com., Washington, 1927. CuTSHALL, A. "Trends of Philippines Sugar Production," Econ. Geog., 1938. FAY-CoopFR, C. "Central Mindanao, '' Far Eastern Quarterly, New York, 1945. FoRBEs, W.C. The Philippine Islands, Boston, 1928. HAAs, W.H. The American Empire, Chicago, 1940. HAYDEN, J.R. The Philippines, New York, 1942. M.As HERRE, A.W. “Philippines Fisheries,' Far Eastern Qy, New York, 1945.
ris - KRIEGER, H.W. "Races and Peoples in the Philippines," Far Eastern Quarterly, New
York, 1945.
KURIHARA, K.K. Labour in Philippine Economy, Stanford, 1945. LASKER, B. Filipino Immigration, Chicago, 1931.
MILLER, H.H. "Principles of Economics Applied to the Philippines', Geog., Rev.
1932.
ORacIoN, T.S. “Kaingin Agr. in S.E. Negros, Mal.“ J. Trop. Geog., 1963. PENDILEToN, R.L. “Land Utilis. and Agri. of Mindanao”, Geog. Rev., 1942.
RooseVELT, T. "Land Problems in Puerto Rico and the Philippines', Geog. Rev.,
1934.
Ruiz, L.T. "Farm Tenancy and Cooperatives in the Philippines', Far Eastern
Quarterly, New York, 1945.
81 MkINs, P.D. and wernstedt., F.L. “Migration of Philippine Population", Mal. J.
T’rop. Geog., 1963.
VAN VALKENBERG, S. “Agricultural Regions of the Philippines”, Econ. Geog., 1936.
CHAPTER 22 : Southeast Asia Agriculture Aarorr, O.W. The Tropical Crops, New York, 1928.
Do II Y, E.H.G. “N. Kedah Pioneering for Padi”, Econ. Geog. 1951 ; Food and the shinging Function of Southeast Asia, in Southeast Asia in coming World, J, ikin M, 1953. −

Page 257
484 Biblioraphy
CRIST, D.H. Rice. London, 1953.
KNORR, K.E. World Rubber and its Regulation, Stanford, 1945. PELTZER, K. Pioneer Settlement in the Asiatic Tropics, New York, 1945 WHITTLESEY, D. “Shifting Cultivation’, Econ. Geog., 1937. WICKIZER, W.D. and BENNETT, M.K. Rice Economy in Monsoon Asia, Stanford, 1941. Devlpt. Upland Areas in F.E., 2V., I.P.R., New York, 1950-51. Economic Survey of Asia and the Far East, Annual reports.
CHAPTER 23: The Fisheries of Southeast Asia
CHEVEY, P. and LE Pou LAIN, F. La Peche dans les eaux douces du cambodge,
Sagon, 1940.
DELSMAN, H.C. “Fishing and Fish Culture in Netherlands, Indies,' Bull.Col. Inst.
Amsterdam, 1939.
LEE, Y.L. “Chinese Fishing Village in S.W. Malaya', Mal. J. Trop., Geog., 1962. NICBoLs BARTsch, Fishes ad Shells of the Pacific world, New York, 1946.
CHAPTER 24 : Industry and Trade in Shutheast Asia DIETRICH, E.B. Far Eastern Trade of United States, New York, 1940. Gull, E.M. British Economic Interests in the Far East, Oxford, 1943. HUBBARD, G.E. Eastern Industrialisation and its effects on the West, Oxford, 1938. SHEPEERD, J. “Industry in Southeast Asia', I.P.R., New York, 1941.
CHAPTER 25: Peoples, Politics and Prospects in Sontheast Asia
BAUER, P.T., The Rubber Industry, London, 1948. BENEDICT, P.K. “Thai, Kadai and Indonesian', American Anthropologist, 1942. BROEK, J.O.M. “Diversity and Unity in Southeast Asia', Geog. Rev., 1944. CHRISTIAN, J.L. "Anglo-French Rivalry in Southeast Asia', Geog. Rev., 1941.
DoBBY, E.H.G. "Aspects of Human Ecology of Southeast Asia, Geog J. 1946; "Rec Changes in Settlements of S. Malaya', Froc. XVII, Int. Geog. Cong., Washington, 1952.
EMERsoN, R., Mills, L.A. and THOMPsoN, V. Government and Nationalism in South
east Asia, New York, 1942.
FRYER, D. “The Million City in South east Asia', Geog. Rev., 1953. FuRNIVALL, J.S. Colonial Policy and Practice, Cambridge, 1948. GoURoU, P. The Tropical Lands, London, 1953, and L'Asie, Paris, 1953. KEESING, F. Native Peoples of the Pacific World, New York, 1946.
KERNIAL SINGE SANDHU, “Chinese Colonization of Malacca', Mal. J. Trop, Geog.
98.
LANDoN, K.P. "Southeast Asia-Crossroads of Religions', Chic.U.P., 1949.

Bibliography 485
LASKIEik, B. Asia on the Move, New York, 1945; Peoples of Southeast Asia, New
York, 1945.
MAJUMDAR. R.C. Hindu Colonies in the Far East, Calcutta, 1944.
PANIKKAR, K.M. Future of Southeast Asia, London, 1943; India and the Indian
Ocean, London, 1945.
PELIZER, K.J. Population and Land Utilisation (Pacific Area), New York, 194l. PURCELL, W. The Chinese in South east Asia, London, 1951.
RoBERTs, G. (Dobby, E.H.G.), “East to the Indies”, Geog. Mag., 1946 ; “South to the Indies', Geog. Mag., 1946; "From Europe to the Spice Islands', Geog. Маg., 1946.
TACHEN, Overseas Chinese in the South Seas, Chungking, 1938.
THAYER, P.W. (Ed.). "Southeast Asia in the Coming world'. J. Hopkins U, P.,
1953.
WHEATLEY, P. The Golden Chersonese, I.B.G., 1955.
WIBO PEEKEMA, "Colonisation of Javanese in Outer Provinces', Geog. Journal,
1943.

Page 258

சொல்லடைவு
அக்கியப், 201
அகர்அகர், 437
அங்கோர், 355, 356, 451
அங்கோலாகடிஸ், 224
அங்கோலாப் பள்ளத்தாக்கு, 226
அடையல்கொள்ளல், 40, 45, 47-54, 56, 91,
133, 170-178, 252, 295, 343-344
அடையற் பாறைகள், 87
அத்தி, 60
அபக்கா, 396-7
அபலோன், 437
அபி-அபி, 103
அமிலப்பாறை, 73
அமுக்கவிறக்கங்கள், 21, 25, 32
அயனப் பிரதேச மழைக்காடுகள் (மத்திய கோட்டு மழைக்காடுகள்) 55, 58, 105, 178, 228, 238, 280, 291, 311, 339, 382
* அயனவிடைப் பிரிதளம் ”, 21-25, 31, 33
அரக்கன் ஆறுகள், 170
அரக்கன் கரை, 216
அரக்கன் யோமா, 162, 164
அரசியற் பிரிவுகள், 298, 472-476
அராபியர், 278
அராபிய வியாபாரிகள், 237
அரிசி உட்கொள்ளல், 424, 426
அரிப்பு, 38-43, 203, 224, 263
* அல்தாய் ', 5
அல்தாயிட்ஸ், 10
அல்பைன் மலைகள் 6
அலாஸ் வடிநிலம், 224
அலியம்பத்தா, 298
அவரை, 187
அவுரிச் செடி, 289
அழுகிய மட்கல்,"T
அன்னசி, 125, 126
அன்னும், 363, 371
அன்னுமியத் தொடர், 336, 342, 348
Jadre). Sui, 329, 359, 362
»Qg, 225, 232, 236-38 ஆச்சே உயர்நிலங்கள், 224 ஆடிவேர்ன, 274 4ატმl Im, 879
ஆயுத்தியா-கொசாதி புகையிரதப் பாதை, 332 ஆயுத்தியா, 316, 384
ஆராபூராக் கடல், 8
ஆலி, 29
ஆவியாகல், 39, 68 ஆழ்கடல் மீன்பிடி, 110, 430-431, 432 ஆழமற்ற கடல்கள், 19, 12-14 ஆற்றிற் கப்பலோட்டல், 171 ஆற்றுச்சிறை, 41, 98, 173 ஆற்றுச் சுமை, 39 ஆற்றுத்தளங்கள், 45, 9 ஆற்றுவடி நிலம், 38 ஆறுகள், 38, 44, 95-98, 225, 282, 309, 317
இடிமின்னற் புயல், 29, 92 இந்தியர், 119, 148, 211-213 இந்தியா, 23 இந்தோசீன, 70, 336-375, 437, 438 இந்தோனேசியப் போணியோ, 286 இந்தோனேசியா, 220-298, 436-437 இமாலய-நான்லிங்கு மலைத்தொடர், 4 இரசாயனமுறைவானிலையழிவு 68 இரும்பு, 134-135, 306, 384 இரும்புப் பாளம், 76 இலகா, 227 இலாம்புங்கு, 227 இலெகுமினேசே, 63 இளமலைகள், 6 * இளமையான ፤8ñ ”, 101 இறப்பர், 116-122, 144, 231, 239-240, 270,
285-370, 42, 422, 425-426 இறப்பர், சிறுதோட்டங்கள், 188, 119 இறப்பர், தொழிற்சாலைகள், 118-119 இறப்பர்த் தோட்டங்கள், 118-122 இருல்கள், 103, 109 இன்லே, 73
ஈட்டுக்குப் பணம் கொடுத்தல், 195, 212 # ̆ህ Jub, 217
ஈயவெள்ளி, 182 FrưừLg, Gö7, 34, 36, 94
RFrflunt 637, 298
487

Page 259
488
உணவு விவசாயக் கிளைத் தாபனம், 335, 440 உதோங்கு, 458
உப்பு, 271, 304, 436
உப்புநீர் வரிகள், 184
உப்புமூலப் பாறை, 73 உருண்டைக் கற்றிரள், 87 உலர் நெல் வகை, 110, 391, 392 உலர் மண், 184
உவே, 222
உள்நாட்டு வடிகால், 173
எண்ணெய் விதைகள், 187 எயர்மூசி, 227, 232 எரிமலை இயல்பு, 5, 8, 10-11, 40, 41, 87-88, 165, 173, 174, 221, 224, 225, 226, 239, 247-252, 295, 377 எரிமலைக்குழம்பு, 80, 224, 227, 250 எரிமலைச் சாம்பர், 80, 178, 382 எருதுகள், 115, 187, 393 எருமைகள், 115, 187, 270, 367, 393 எள், 187, 190 என்றும் பச்சையான தாவரங்கள், 59, 60
ஏரிகள், 225, 292 எரி வடிநிலங்கள், 224, 225, 226 எறுகொடிகள், 60
ஐராவதி ஆற்றுக் கழிமுகம், 13, 48, 177 ஐராவதி ஆறு, 38, 39, 173-178, 217 ஐராவதிப் பாறைகள், 166 ஐராவதி வடிநிலம், 164, 166 ஐரோப்பியரின் செல்வாக்கு, 141
ஒஸ்தாவன், 222
கங்கண முருகைக் கற்றீவுகள், 18
கட்டிடத்திற்குரிய பொருள்கள், 74, 75
* கடல்கள் ', ஆழம், 15
கடல்மட்டம், 43, 44
asL.2s, 186
கடற்கரைச் சவுக்குமரக்காடுகள், 101
* கடற்கரைச் சோலைகள் ', 56
கடற்கரையடுத்த பகுதியில் மீன்பிடிதொழில்,
433-434
கடற்பன்றிகள், 430
கடற்றளம், 43
கனவாய் மீன், 438
கதா, 175
கந்தகம், 271
கப்பற் போக்குவரத்து, 42, 218, 234, 24
243, 274, 276, 332, 353, 375, 451 கப்வெற், 175 கம்போடியா, 353, 358, 363, 364, 371 கமோக்குடாநாடு, 353 கயல்மீன்கள், 433 கரங்கு, 251 கரிய பருத்திமண், 184, 186 கருங்கல், 90, 98, 227 கருங்காலி, 179 கருநதி, 347 கரும்பாலை, 395-396 கரும்பு, 253, 261, 266-267, 370, 385, 394
396, 421 கருவாலி, 65, 106, 179 கருவேல், 63 கரென், 208, 329 கரைச் சமநிலங்கள், 348, 382 கரையோரம், 11, 47, 48, 50, 91, 165, 336 கலடன் ஆறு, 171 கலப்பு வேளாண்மை, 424 கலேன, 306 கழிமுகங்கள், 39, 47, 218 கழிமுகப் பயிர்ச்செய்கை, 190-202 கணிப்பொருளகழ்தல், 51-52, 127-137, 446
446
காகாயான் பள்ளத்தாக்கு, 378, 382, 388 காசித்து, 87, 246, 254, 294, 336 காட்டுத்தீ, 82, 83, 84 காட்டுப் பொருள்கள், 61, 105, 446-448 காடமம் மலைத்தொடர், 304, 358 காடுகள், 54, 78, 85, 101-106, 179-181, 258 காண்டாமிருகம், 67 காபுர், 105 காய்கறிகள், 125, 313, 319, 393 காரூற் வடிநிலம், 251, 275 காலநிலைப் பிரதேசங்கள், 36 காவோலெம், 299 காற்றுக்கள், 21-25, 28-29, 32, 92 காற்றுத் திணிவுகள், 21-25, 31, 38, 91,379 காஜோ, 236 .
இராக்கற்றே, 222, 242 இராப்பூசந்தி, 6, 70, 301, 315 grib, 269

கிராமங்கள், 330, 346, 387, 433 கிரியன், 111
கிருமிகள், 459 கிழக்கு இந்தியத் தீவுகள், 220-299, 436 கிழக்குத் தீவுக் கூட்டம், 221 கிழக்கு மலாயா, 153-155 கிழங்கு வகைகள், 369, 385, 398 கிளேடாங்குத் தொடர், 88 கின்டாப் பள்ளத்தாக்கு 133
கீழ் வடிதல், 69
குகைகள், 99
குடிசைக் கைத்தொழில், 441-442
குடித்தொகை, 52, 104, 141, 185, 205, 213, 230-235, 273-276, 283, 292-293, 296297, 324, 346, 348, 354-355, 356, 359, 399-400, 460-463
குடியிருப்புக்கள், 115, 137, 190, 331, 346
குடியேற்ற நாட்டாட்சி, 334 ; குடியேற்
றவாட்சி, 466
குமேர்-கம்போடியர், 329
குரோமியம், 384
குவாங்கு கை, 349
குவாங் நாம், 349
குளோங்ருங்சிற், 317
குன்றுக் காடுகள், 106
குன்றுப் பயிர்ச்செய்கை, 202-204
குனேங்குகள், 319
கூச்சிங்கு, 284 கூப்பாங்கு, 292, 298 கூனேங்கு சேவோ, 245
கெரிஞ்சி (எரிமலை), 227 கெரூங், 105 கெலந்தான், 110, 111, 134
(smt, 110, 111 கேதிரி வடிநிலம், 254
கைத்தொழில், 270, 271 கைத்தொழிற் பொருள்கள், 444
கொச்சின் சீனு, பார்க்க வியற்நாம் கொடாபாறு, 437 கொப்பரா, 122
489
கொம்பொங்சொம், 358 கொழும்புத்திட்டம், 455
கோசா அலாஸ் வடிநிலம், 224 கோப்பி, 232, 239, 268, 370, 421 கோராத், 302-303, 313-314, 324 கோலாலம்பூர், 133, 139, 141, 145 கோழி வளர்ப்பு, 367
சண்டாக்கடல், 222 சண்டாத் தொடுகடல், 222 சண்டாப் பெருந்தடைக்கற்பார், 290 சண்டா மேடை, 3, 5, 7, 10, 11, 12, 13, 18,
38, 43, 69 சண்டாமேடைச் சிறுதீவுகள், 294 சண்டானியர், 277 சதுப்பு நிலம், 50, 223, 224, 227-228, 283 சதுப்புநில மண், 81 சந்தைப்பொருள் பயிரிடல், 127, 203 சமநிலங்கள், 35 சமராங்கு, 274 சமுத்திர நீரோட்டங்கள், 13, 14 சரமெத்திச் சிகரம், 164 «A சரளை மண்ணுக்கம், 71-72, 73-77, 365, 381 சராவாக், 284
Fధ667, 38, 39, 171-178 சவன-64, 179, 225, 238, 311, 340 சவனுமண் வகைகள், 78 சவுக்குமரம், 56, 101, 339 * சாகுல் மேடை ” 4, 6, 69 gTie 6öt, 430 sFrTLumt, 107, 147, 284-285 சாம்பர், 224 சாம்பனிற மண், 70, 71-73, 365 é† 7 tibl$), 232 சாம்ரோய்யொற், 301
“ FTutub ”, 330
சாவாலுந்தோ, 234 சாவோ நாம், 329 சான் உயர்நிலம், 164, 165-166, 217 சான் மக்கள், 208
சிங்கப்பூர், 145, 155-161 சிங்கெப், 241
சிங்கோன, 268
சிசற் சணல், 240 சிட்டாங்கு ஐராவதி வடிநிலம், 165

Page 260
490
சிட்டாங்கு நதி, 173 சிண்ட்வின், 164, 178 சியராமட்றே மலைத்தொடர், 378 கியெங்மை, 334, 471 சிரியாம், 181
சிலாச்சாப், 275
சிறுபயிர், 127 சின் குன்றுகள், 164 சின்மக்கள், 209
சீபூ, 284
இனக்களி, 271
இனமக்கள், 109, 119, 127, 132, 139, 140 148, 149, 237, 277, 297, 322, 328, 361, 474
சுண்ணக்கல், 87-89, 99, 165, 246 சுமாத்திரா, 50, 220, 221-240 * சுமாத்திராஸ் ", 94, 230 சுயஸ், 5 சுரகார்த்தா, 250, 273, 274 சுரகார்த்தா வடிநிலம், 253 sful litunt, 274 சுருட்டுத்தொழில், 408, 442 சுவெலி ஆறு, 178
சூகடான, 436 குங்கை தேலி, 234 சூங்கை லெம்பிங், 127, 131 சூரியவொளி, 34 சூலாவேசி (பார்க்க செலிபீஸ்) சூலூக்கடல், 377 குருவளி (அயன), 170, 230
செங்கால், 105
செசுநட் மரம், 65 செந்நதி-சிக்கியாங்கு நீர்பிரிநிலம், 8 செந்நதி-மேக்கோங் உயர்நிலங்கள், 347 செம்பு, 306, 384
செமாங், 329
செரிபொன், 274
செலங்கர், 139
செலிபீஸ், 7, 291-94 சேற்று நிலக்காடுகள், 104, 228
சைகன், 355, 357 சைகன் ஆறு, 353 சைலேந்திர இராச்சியங்கள், 470
சொரிகமெரப் பி. 224
சோங் கா ஆறு, 349
சோங்கு ஆறு, 349
சோங் மா ஆறு, 349
சோலோன், 355, 380 சோளம், 238, 265, 298, 389, 385, 392-393
செள பிராயா, 305, 333
டச்சுக்காரரின் நிர்வாகம், 220 டச்சு (ஆட்சியினர்), 279, 460, 472
டில்லி, 298
GLTriunuit, 303 டோங்ரேக், 303
தகரம், 91, 127-134, 138, 171, 182, 241 தகரம் உருக்கல், 133, 159, 241, 306 தகரமகழ்தல், 127; 131, 241 தகான், 85
தகான் தொடர், 86 தங்கம், 127, 135, 183, 384, 442 தங்கிதன், 135, 182, 307 தங் மர எண்ணெய், 203 தபெல்கோக், 294
தபேக்கியின், 175 தரைத்தோற்றம், 34-35 தரைநீர், 69, 70, 100 தவர் எரி, 225
தவோய், 171 தளத்திடைக்குன்றுகள், 44, 46
தாச்சின், 305 தாராக்கான், 287 தால் மலைத்தொடர், 378 தால நெய், 125 தாவரம், 20, 54 தாவர வகைகள், 54 தாழ்நிலத் தாவரம், 56 தான் கோவா, 437 தான்சுங்பலை, 223 தான்யுங்சேலோர், 287 தான்யுங் பிரீயொக், 274
திடீர்ப் புயல்கள், 33 திரெங்கானு, 111, 134 திரெங்கானு உயர்நிலம், 85,154 திஜனவகை, 187

தீப்பாறைகள், 88 திமோர், 297 தீவு வளைதொடர்கள், !
துணைக் காடுகள், 61, 72, 106, 340, 383 துரான், 349
துவாங் பிராபாங்கு, 350 துறைமுகங்கள், 135, 141, 172, 213
தூண்டில் முறை மீன்பிடி, 109
தெம்பி எரி, 437 தெருக்கள், 120, 142, 144, 218, 226, 252,
275, 293, 332, 374-375 தென் அயன மண்டலக் காற்றுத் திணிவு,
21, 23, 25 தென்கிழக்கு ஆசியா, அமைப்பு, 3-9 தென்கிழக்கு ஆசியா, வரைவிலக்கணம், 3 தென் கிழக்குத் தடக்காற்று, 21, 25 தென்சீனக்கடல், 17, 29 தென்ஜன, 56, 109, 122-125, 269, 369, 385,
386, 396 தெனசெரிம், 162, 164, 216 தெளுசெரிம் ஆறுகள், 171
தேக்கு, 63, 64, 179, 181, 253, 258, 311
313, 313, 339 தேங்காய் எண்ணெய், 123, 397 தேசியவுணர்ச்சி, 473 தேயிலை, 117, 203, 239, 268, 313, 370, 421
தைத்தேனியம், 136 தைப்பிங்கு, 133, 140 தைபூன், 29-33, 338, 379-80 தைமொழி, 330
" தையக்கர் ’, 282 தையற்றெழில், 408 தைலாந்தின் கீழ்ப்பாகம், 284, 314, 319 தைலாந்து, 39, 70, 299-335, 438 தை வகுப்பினர், 329
தொங்கின், 325, 371
தொங்கின் கழிமுகம், 342
தொப்பி செய்தல், 408
தொராட்சர், 293
தொழிலாளர்வசதி, 118, 123-124, 132, 144-145, 184, 195-196, 211-213, 327, 39, 426,446
49
தொன்லேசப், 42, 51, 350 தொன்லேசப் சமவெளி, 340, 350-359 தொன்லேசப் மீன்பிடி, 432
தோபா ஏரி, 225 தோரியம், 136 தோல் பதினிடுதல், 57
நகரங்கள், 213
நகர மையங்கள், 470-472
நசோ-மெந்தாவைத் தீவுகள், 222
நன்னீர்ச் சேற்றுநிலக்காடு, 61, 104, 138,
280, 312, 340, 383
நன்னீரில் மீன்பிடித்தல், 432, 433
நாக்கோன் தொடர், 86, 133 நாகம், 314 நாகா குன்றுகள், 164 நாம்சி, 303 நாம் மூன், 302 நாவ் ஆறு, 170 நான்லிங்கு, 5
நிமைகா, 174 நிலக்கடலை, 187 நிலக்கரி, 90, 181, 227, 287, 373, 384, 446 நிலநெய் சுத்தி செய்யும் நிலையம், 232 நிலமற்ற விவசாயிகள், 195, 196, 321-322,
405 நிலவாட்சி, 272, 320-322, 405-408 நிலவுருவங்கள், 44
நீபமரம், 58 நீயாஸ்-மெந்தாவைத் தீவுகள், 7 நீர்ப்பாசனம், 111, 186, 263, 345, 389 நீர்பிரிநிலம், 224, 283 நீர் மின்வலு, 447 நீர்முறையரித்தல், 69-70 நீர் வழிகள், 221 நீரியக்கக் கருவிகள், 130 நீள்முகத் தோற்றம், 45, 96
நுண்டுளைப் பார், 224 நுளம்புகள், 64, 433
நெசவுப் பொருள்கள், 443-444 நெய்த்தால மரம், 124, 239, 421

Page 261
492
நெல், 48, 110-114, 186, 190-202, 232, 238-239, 252, 253, 286, 33-320, 345, 354, 355, 385, 390-392, 418-420 நெல் இறக்குமதிகள், 424 நெல் ஏற்றுமதிகள், 197, 200-201, 323-324,
357, 369, 418, 424 நெல் குற்றுதல், 200, 322, 392 நெற்காணிகள் (நெல்லையும் பார்க்க), 103, 297
நோய்கள், 170, 459
பகங்கு, 111, 134
பகங்கு எரிமலைப் பாறைத் தொகுதி, 89, 99
பகங்குப் பள்ளத்தாக்கு, 155
பகோ, 103
பங்கா, 222, 241
பசேன், 201
பசேன் ஆறு, 177
Lu'luhtujä), 356
பட்டுப் பூச்சிகள், 369
படிகப்பார்கள், 89, 99
படிகம், 74, 100
பண்பாட்டு முறைமை, 271-272
பணம், 6, 220, 222, 288, 335, 372, 376,
409, 442-443
பனம் கடன்கொடுப்போர்கள், 195, 322, 388
பத்தேவியா, யக்கார்த்தாவைப் பார்க்க
பதங்கஸ், 439
* பயனற்ற நிலம் ”, 176
பயிர்ச்செய்கை, 34, 51, 70, 110-125, 139, 85-86, 235, 251, 282, 296, 413-427
பயிர்ச்செய்கை, எதிர்கால, 428-428
பயிர்ச்செய்கை, யுத்த விளைவுகள், 425-426
பரற் பம்பு, 129-130
பருத்தி, 186, 313, 369
பருவக் காற்று, 93-94, 338, 354
பருவக்காற்றுக்காடு (அயனப் பிரதேச உதிர்
காடுகள்), 55, 63, 64, 178, 225, 339
பருவக்காற்று வறண்டகாடு, 85
பருவக் குடிப்பெயர்வு, 211
பல சமூகங்கள், 468-470
பழங்கள், 313
பற்றீரியங்கள், 71
பறவைகள், 87
பன்தம், 273
பன்றிகள், 104, 324, 367
பன்னச் செடி, 62, 225
பன்ஜோமஸ், 247 பன்ஜோமஸ் சமநிலம், 247 பனிக்கட்டியாற்றுக் காலம், 43-47
பாகான்சியாப்பியாப்பி, 432, 436 பாங்கொக், 323, 324, 326, 333 பாங்கொக்-சிங்கப்பூர் புகையிரதப் பாதை, 332 பாங்கோர், 432 பாசாக் ஆறு, 306 பாசிக்காடுகள், 65, 280 பாகுரூபான், 274 шти-та, 236 ununig, 226 பாடாங்கு சிடிம்பூன், 226 பாண்டுங்கு வடிநிலம், 251, 275 பாதாக்கு உயர் நிலம், 224, 226 பாதாங்கு ஆரி ஆறு, 232 பாதாங்கு ஊம்பிலின் வடிநிலம், 228 பாதைகள், 210, 282, 452 LITGLoft, 174 பாரிசான் தொடர், 224, 226 பால்மீன், 433 Luné), 220, 294-97 um GS7 um ursõ7, 287 பாலெம்பாங்கு, 225, 232 ust 26, 178, 180 um(3a), 105 பாற்கோய்க் குன்றுகள், 164 பாறைவகைகள், 10-11, 87-91, 165, 167,
225, 378 பான்ஜெர்மாசின், 287 பானுங், * 330 ”
பிங்கு ஆறு, 304
பிசின், 105 பிநோம் பென், 355 பிராச்சின் ஆறு, 305 பிராபாங்கு, 350 பிரித்தானிய வட போணியோ,
பார்க்க
சாபாவைப்
SuujTšis, 247
LS)ødfr6) staðr, 234 பிலிப்பைன், 7, 377-409, 438-439 பிலிற்றன், 222, 242 பிளம்பங்கன் குடாநாடு, 244 பிளவுப் பள்ளத்தாக்குக்கள், 224 பிளாங்டன், 429, 430

பிளாட்சோ, 232
பின்டாங்குத் தொடர், 46, 183
பினங்கு, 152-153
புகையிரதப் பாதை, 141, 218, 902, 270,
331, 375
புகையிலை, 225, 239, 208, 318, 370, 308
புத்தசமயம், 210, 329, 330
புதர்கள், 106, 179, 311
புரூனை, 280
புரோபொலிங்கோ, 274
புரோம், 177
புல்வகை, 82, 101
ւյ6ծ), 67
புவிநடுக்கம், 8, 8
புன்னை, 101
பூக்கி அசாம் நிலக்கரி வயல், 283 பூக்கிகோமான், 135 பூக்கிதிங்கி, 224, 231, 234 பூகியர், 292 பூலிற் பள்ளத்தாக்குக்கள், 282 பூலோ பிந்தான், 242 பூவல் பூவலி, 226 பூற்றவோ, 182
பெகாபான், 437
பெசுப் பாறைகள், 167
பெசுயோமா, 166, 217
பெகுக்கி, 273
பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை, 55, 110, 179, 202, 238, 260, 293, 313, 339, 367, 382, 41345
பெரலின் விதி, 22
பெரிய முருகைக் கற்பார், 18
பெலுகர், 106
பெற்ருேலியம், 181, 232, 240, 271, 284,
287, 464
பென்டொங்கு, 133
பெனம்-மவுண்ட் ஒபீர் தொடர், 88
பேகாசி, 252 பேமா, 39, 10, 162-220, 426, 435 பேமா யாவா வளைதொடர், 7 பேமியர், 208, 209 பேரா ஆறு, 41
(Bulgrr airí), 42
பேராக்-110, 111 பேராக் ஆறு, 48
493
பைன் மரக்காடுகள், 65, 180, 340, 388
பொதுப் பாதுகாப்பு நிறுவனம், 335, 455 பொந்தியான, 287 பொருள் உற்பத்தி, 448-449 பொலினேவின் கொள்கை, 77 பொனிற்றே, 430
போக்குவரத்து, 124, 200, 214, 242, 331,
333
போட்சைற்று, 242
போட் வெல்ட், 140
Curt Goof(Burt, 10, 220, 280-88
போப்பாச்சிகரம், 166, 175
போர்த்துக்கேயர், 289, 298, 471
போன் காற்று, 168, 226, 230, 349
todas urubu Gúlug), 235, 286, 292, 293, 329,
330, 362-364, 400-404, 467, 468 மக்கரெல், 109, 430 மக்கள் பெயர்வுகள், 208-210, 399-400, 485 மக்னேலியா, 180 Lovsørfagr, 135, 27 l, 384 மடியூன் வடிநிலம், 253
nண்டலே, 175, 213, 215 மண்டலே வடிநிலம், 175 மண்ணகர்ச்சி, 77 மண்ணரிப்பு, 79-81, 120 Logoo160oflastaj GT Lo, 79-81, 282, 298
68-81, 98-100,
undisor (165).556it, 183-184,
295, 365, 381 மற்ைகும்பிகள், 103, 104 மணிப்பூர் குன்றுகள், 164 மத்திய கோட்டு அமைதி வலயம், 21, 25, 92,
93 மத்திய கோடிலெரா (லூசோன்), 378 " மத்திய தரைக் கடல்கள் ”, 8, 12, 14-15,
19 மத்திய திணிவு (இந்தோசீன), 336 மத்திய தைலாந்து, 304-306 மத்திய மலைத்தொடர் (மலாயா), 85, 86, 183 மதுரா, 275 மதுராத்தீவினர், 277 மதுராத் தொடுகடல், 247 ou ulio, 61, 105-106, l8l மரவள்ளி, 127, 265, 385, 393 மலாக்கா ஆறு, 62

Page 262
494
மலாக்காத்தொடுகடல், 242-243, 435 மலாங்கு வடிநிலம், 254 மலாயா, 10, 41, 85-162, 435, 436
மலாயாக்கூட்டரசு, 107, 145, 160 மலே இனத்தவர், 110, 145, 148-149, 329 மலேசியன், 111, 107, 147 LoGal)gun, 106-07, 47, 160, 286 மலேரியா, 327, 359 to2alias ITG, 65, 106 மலைகள், 36, 85-86 மலைத்தாவரம், 65, 180 மலை மண்வகைகள், 72 மலையடிவாரம், 225 மழைநீர், 68 மழைப்பனிக்கோடு, 45, 47 மழையொதுக்கு, 45 மழைவீழ்ச்சி, 20, 28-29, 31-32, 36, 37, 38, 92, 94-95, 68-69, 228-230, 256, 307308, 315, 338-339, 344, 354, 379, 380 மழைவீழ்ச்சிப் பருவங்கள், 28 மணிலா, 399, 403, 409, 439 மணிலாச் சனல், 385, 397
மஜபாகித் இராச்சியம், 470
Londisfit, 293, 437 மாக்கசர்த் தொடுகடல், 221 மாக்கற் பாறைகள், 87, 99 மாகெலாங்கு, 250 மாங்குரோவுக் கிராமங்கள், 104 மாங்குரோவுச் செடி, 12, 48, 56-58, 101,
103, 280, 340 மாடி மேட்டுநிலம், 282 மாடுகள், 187, 270, 324
տոպ քbմ)), 170 மாயோன் மலைத்தொடர், 378
மிண்டானவோ, 388, 408 மிண்டோரோ, 439 மிதப்பு நெல், 354 மிதியடிகள், 408 மியாவோ மக்கள், 329 மியிற்றின்கே ஆறு, 178 மிளகு, 370 மின் உற்பத்தி, 447 மின்மினிப்பூச்சிகள், 103
மீன், 104, 429, 430
மீன் பதன் செய்தல், 431, 439
மீன்பிடி கிராமங்கள், 109, 433
மீன்பிடித்தல், 108-109, 153, 352, 357, 393,
429一440
மீன் பொறிகள், 109, 435
மீன் வளர்ப்பு, 431-453, 437
L86ö7 6:57uurT_unTU urbo, 43l, 435
முகில், 29, 32, 33-35, 93-94, 95,
முத்துக்கள், 437, 438
முதல் ஐராவதி, 173
முதலை, 104
முதற்காடு, 54-81
முதற்சிட்டாங்கு, 173, 175
முருகைக்கற்கள், 17-19, 228, 289
முலையூட்டிகள், 67
முவார் ஆறு, 41
முற்ற நிலக்கரி, 72
முஸ்லிம்கள், 235-236
மூங்கில், 64-65, 178, 295, 310 மூரியா, 251 மூல்மேன், 180, 201
மெக்லொங் ஆறு, 305 மெங்காலா, 232 GLOLT air, 225, 231, 233 மெர்பாபூ, 250 மெராந்தி, 105 () og TS, 250 மென்மரவகை, 62 * மெனும்” ஆறு, 305 மெனம் செளயிராயா, 39, 305
மேக்கொங்கின் கீழ்ப்பகுதிச் சமவெளி, 340 மேக்கோங்கு ஆறு, 38, 51, 349-353, 374 மேக்கோங்குக் கழிமுகம், 352, 351 மேக்கோங்கு மீன்பிடி, 434-435 மேட்டுநில நெல் (பார்க்க உலர் நெல் வகை) மேத்துன் ஆறு, 304
மேர்போ, 105 மேல் சூம்பூர் வடிநிலம், 224, 228 மேல் வளரிகள், 60 மேற்காவுகை, 25-29, 30, 34 மேற்கு ஈரியான் (நியூகின்) 3, 6, 7, 15, 298 மேற்குத் தீவுக் கூட்டம் ,221, 222

மேற்குத் தொடர் (மலாயா), 6ே, 133 மேற்கு மலைப்பகுதி, (நைலாந்து) 301 மேற்கு மலைப்பகுதி (Quமா), 164
மேனங்காபோ, 235
மொலுக்கா, 7 மொழிகள், 364, 403-404
மோய் மக்கள், 349
யக்கார்த்தா, 252, 256, 278, 274, 277
urraun, 70, 220, 248-378, 208, 436-487 யாவாக் கடல், 17
* யாவாமனிதன்", 247
யாவானியர், 276
யாவோ வகுப்பினர், 329 unr2:07, 67 un2.0T un%, 358
யூக்கலித்தஸ், 64
யோக்யக்கார்த்தா, 250, 273, 274 யோகூர், 125, 134, 155
тiћа, обт, 180, 201, 213, 214 ாங்கூன் ஆறு, 177 a 61626)6ño, 155, 156
ராவுப், 135
fᏩum , 242 ரியோத் திவுக்கூட்டங்கள், 5
ரெம்பாங்கு, 254
ரேயாங்கு ஆறு, 284
ரொடோடெண்டிரன், 101, 180 ரொம்பின் பள்ளத்தாக்கு, 155
ಹುಆ»@ 378 லற்றரைற், 68, 71, 74
லாம்பூங்கர் 236, Forr(aum gruyff, 329, 349 லாவோஸ், 372
495
லிங்கா தீவுக்கூட்டங்கள், 6 லிஸ்சு மக்கள், 329
லூசாய் குன்றுகள், 164 லூசி-சோலோத் தாழ்நிலம், 253 லூசோன், 32, 388 லூட்டோங், 284
லெங்கடை, 103 லெமியோ ஆறு, 170
லொம்பொக், 234-2 7
வட அயனமண்டலக் காற்றுத் திணிவு, 21 வடகிழக்குத் தடக்காற்று, 21 வடதொங்கின் உயர்நிலங்கள், 342, வட மத்திய கோட்டு நீரோட்டம், 14
34
வட மலைப்பகுதி (தைலாந்து), 302 வடிகால் (செயற்கை), 120 வண்டல், 39, 90, 167, 252 வண்டல் விசிறிகள், 226 வண்ணத்துப் பூச்சிகள், 71 வத்தாளங் கிழங்கு, 369, 393 வந்து குடியேறுதல், 121, 239, வர்த்தகப் பயிர்ச்செய்கை, 417-422
劾7–278
வரம்புகள், 52, 112 வரலாற்றுக் குறிப்புக்கள், 459 வல்லேசின் கோடு, 67 ഖി), 10) வளிமண்டலவமுக்கம், 23, 30, 23 வற்றுப் பெருக்கு, 15-17 வறண்ட காலம் (வறண்ட பருவம்), 28, 29, 34, 36, 63, 69, 167, 255, 256, 298, 30 வறண்ட பிரதேசங்கள் (வறண்ட வலயம்), 39, 68, 168, 169, 176, 179, 183, 215, 308 வறண்ட வலயப் பயிர்ச்செய்கை, 185-190 வனம், 59
வாங்கு ஆறு, 304 வாசனைப் பொருள், 137, 138, 289, 289, 417
வாந்திபேதி (கோலரா), 327 வாருதல், 128-130 வாழ்க்கைப் பயிர்ச் செய்கை, 153, 189, 203,
262, 313, 365, 416-417 ଈunterfଅର), 21, 29, 35, 169, 220, 848-350

Page 263
496
விசாயன் தீவுகள், 387
விமானப் பாதைகள், 452
வியற்நாம், 336-376, 437
வியாபாரம், 156, 158-160, 197, 267, 268
375, 450-452, 466
வியென்தியன், 350
விலங்கினம், 66-67
விவசாயிகள், 195
6ö656ff, 11l, 112 வீபரின் எல்லைக்கோடு, 67
வெப்பநிலை, 20, 34, 36, 58, 91, 92,
167-68, 344, 354, 379
வெப்ப நீரூற்றுக்கள், 101
வெலஸ்லி மாகாணம், 111
வெள்ளப் பெருக்கு, 33, 40, 50-53, 111, 173, 197-198, 227, 303-304, 317-319, 345, 354
வெள்ளப் பெருக்குக் கட்டுப்பாடு, 423-24 வெள்ளி, 183, 442
வைற் பெயிற், 109
ஸ்நொக் திரவ், 433 ஸ்பேர்மண்டித் தீவுத் தொடர், 291
ஹல்மாகெரா, 8, 289 ஹனேய், 344, 346
ஹஜூக்கோங்கு வண்டற் பள்ளத்தாக்கு, 164
ஹஜூவே, 349 ஹலிவோங்கியாங் ஆறு, 349
ஹைபோங்கு, 344, 346
ஹொங்கோங்குக் கடற்பள்ளம், 17


Page 264


Page 265


Page 266
Ree - ——
LD6uTuT
மைல் அளவுத்திட்டம் ਸੰਧ Mauso summum (o) இருப்புப் பாதை தரு Y . . . .
2; கோடா பாறு
応>
vq கோலா இராய்
கோலா திரெங்கானு
S. གྱི་ கோலால்ழ்வுபூர் போட்சுவெற்றினS"இஒற்கு 蹄葵》
YA
8 ቻልክሌ ß2 ራ፭ போட் 2N2
சுமாத்திரா
-CP4217)6818)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pa .
மலாயாவின் பிரதேசங்கள்
மைல அளவுத்திட்டம்
O حیا "'لم) 33 ”வலயம் (
pics &M 26, unn *கோலாலீப்பிஸ் ெ
S. A - 5 o ஈப்பே பள்ளத்தாக்கு:Tu W V } a ung, --77-7. ~ Nazio- ميسا ,
லொ அன்சன்,இபிாே W .
d *ళ్యి V ஜொனி? کی م ܢܠ மேற்கு ぐ。 ჩხილh. "ዘòju, ኳረ குவாந்தான் a Verör (Q. i III மாலிம் 奥 மத்திய 2 V பென்ட்ெரங்கு பூகங்கு 2
சேற்றுக் தெமர்லோ , *瓦sn码 கரை, ", W, util(5
* காலஐம்பூர் ர்ென்ே போட்சுவெற்றிழ்ை у “ VM . ) راه
“'2 " Yo Y VA 6JLq5l6uyúb
8 . N. NA , V r\ ; ெேசரெருேன்
క్లైంగి S?கியாங் NZமுவார்&பெங்குo
lufT0 u5Il D 9
0 O 0 0 40 so iნo | மேற்கு கிழக் (ወ
D 6-Tur s ஆலோர்ஸ்டார், கோடி பர்ஸ் மலாயா
கெலந்தான் fᎦ•ᏍᎩᏯ5 குர்ே) حي، ما ཝ་ལྔ་ 616) used 1. «iυθο “பீர்ே .خة حده \) மலை p ଈଶଳ கிராய் V, p , Oதிரித் N . . . . . "
ரளததாக்கு Vல்கோலா திரெங்கானு :
Giouuti/ (a).
NA · V,\&. நப்பிங்குல்ெ திர்ெங்கர்னு -*: شنه 器
கோலா Ф—uції ჯრწg6მ@

Page 267