கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாய்லாந்தின் தலைநகரிலே

Page 1


Page 2


Page 3

தாய்லாந்தின் தலைநகரிலே
(பிரயாண அனுபவங்கள்)
எஸ். எம். கமாலுத்தீன் பொது நூல் நிலையம் கொழும்பு
விற்பனை உரிமை :
LuTro 2oub
59.5TITL66). 66rs.OF1.

Page 4
முதற் பதிப்பு டிசம்பர், 1968, உரிமை பதிவு
விலை ரூ. 175
சமர்ப்பணம்
எனக்குக் கல்வியறிவூட்டித் தந்தையும் தாயுமாய் நின்றிலங் கும், பல் ஆண்டுக்காலம் சிலாபம் நகரசபை உறுப்பின ராயும் மாவட்டக் காதியாராகவுமிருந்து இளைப்பாறிய என் அண்ணன் எஸ். எஸ். ஜாமால்தீன் அவர்களுக்கு இச் சிறு நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
PAARI N I LAYAM 59, Broadway, Madras-1.
MARUTHY PRESS, 83- PETERS ROAD, MADRAS-14,

என்னுரை
தமிழ்க் கலாசாரத்தின் முத்திரையைத் தம்மகத்தே தாங்கி நிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுள் தாய்லாந்தும் ஒன்ருகும்.
அண்மையில் சைகோனில் நிகழ்ந்த இளைஞர் மாநா டொன்றிற்குச் செல்லும் வழியில் தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் சில தினங்கள் தங்கிச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தாய்லாந்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் எனது பாங்கொக் நினைவுகளைச் சில கட்டுரைகள்மூலம் 'வீரகேசரி’ வார இதழில் வெளியிட் டேன். இக்கட்டுரைத் தொகுதியே இச் சிறு நூலாக உருப் பெற்றுள்ளது.
“தாய்லாந்தின் தலைநகரிலே" என்ற தலைப்பில் எனது அனுபவங்களை எழுதும்படி பன்முறை என்னைத் தூண்டியும், கட்டுரைகளை வீரகேசரி வார இதழில் வெளியிட்டும் ஊக்க மளித்த வீரகேசரி, ஆசிரியர் K. சிவப்பிரகாசம் அவர் களுக்கும், மற்றும் இவ்வகையில் எனக்குதவிய வீரகேசரி ஆசிரிய குழுவைச் சேர்ந்த திரு. P. இராஜகோபால் அவர் களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரித்தாகும்.
எனது பிரயாண அனுபவங்களே எனது முதலாவது நூலாக உருவாகுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. எனினும் இச்சிறு நூல், அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடு களில் நான் மேற்கொண்ட பிரயாண அனுபவங்களின் வெளி யீட்டிற்கு ஒரு முன்னேடியாக அமைய வேண்டுமாய் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளை நாடி நிற்கிறேன்.
கொழும்பு-7 68-س-12--3
பொது நூல்நிலையம்
எஸ். எம். கமாலுத்தீன்

Page 5
ഖff)
a/76
mtu Guo
øs
5.
சதுரமைலகள
оғear 5625леграб.: 29. 7оС, оoo
ாந்
Cafu nario)
одахилују: 98, sоo
சியாம்மெரழி.சீனமொழி
d es
பெளத்தமதம்
Вsорбуло: итд./Флi (2.ooo. ооо) O பிரதானமொழிகள்
Offs O பிரதான மதம்:
 

தாய்லாந்தின் தலைநகரிலே
1. தொன் முஆங் விமான தளம்
தொன் முஆங் விமானத் தளத்தில் நான் வந்து இறங்கியபோது கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்து விட்டது.
இதற்குமுன் வெளிநாட்டுப் பிரயாணம் என்ற வகையில் நான் சென்ற ஆகக் கூடுதலான தூரத்து இடம் சென்னை நகரம்தான். அதுவும் தமிழ் வழங் கும் பிரதேசத்திலே துணையோடு கூடிய புகையிரதப் பிரயாணம் !
தூரகிழக்கு நாடுகளுக்கு விமான மூலம் செல்லும் இந்த அனுபவம் எனக்கும் புதியது. இருந்தபோதிலும் ஏதோ அறிமுகமான-நட்புக்கரம் நீட்டும்-ஒரு நாட் டிற்குச் செல்வது போன்ற உணர்ச்சிதான் அப்போது மேலிட்டு நின்றது. சியாம் எனப்படும் தாய்லாந்தைப் பற்றி பூகோள சாஸ்திர வகுப்பறையில் கேட்ட பாடங் di (15lb '9siré06th durth 99.80th (Anna and the king of Siam) என்ற திரைச் சித்திரமும் ஞாபகத்திற்கு வந்தன. ஆனல் இவ்விரண்டும் உண்மை நிலைக்கு எவ்வளவு தூரம் அப்பாற்பட்டிருக்கும் என்ற எண்ணமும் ஏற் படாமலிங்க்கவில்லை.

Page 6
10
உலக இளைஞர் மன்றம்
தென் வியட்னுமின் தலை நகராகிய சைகோனில் நடை பெற்ற உலக இளைஞர் மன்றத்தின் (World Assembly of Youth) மகா நாட்டிற்கு இலங்கையின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தச் சமயத்தில் வெளியூர் உல்லாசப் பிரயாணக் கட்டுப்பாடு ஆரம்பமாகிக் கொண்டிருந்ததால், சைகோனுக்கு மாத்திரம் சென்று மீள்வதற்கு என் மனம் இடந்தரவில்லை. எனவே தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைப் பற்றி நேரில் அறிந்து கொள்வதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன் படுத்திக்கொள்ள விரும்பினேன்.
பிரயாணப் புகுமுக வேதனைகள் (மருந்து ஊசிகள் உட்பட எண்ணற்ற அதிகாரச் சீட்டுக்களும், சான் றிதழ்களும்) பற்றிப் பிரயாணக் கட்டுரையாளர்கள் வரைதல் மரபு. ஆனல் சென்னைக்குச் சேலை வாங்கச் செல்வது உட்பட வெளிநாட்டுப் பிரயாணம் சர்வ சாதாரணமாகிவிட்ட இந்தக் காலத்தில் வாசகர்களிற் பெரும்பாலோர் இவ்வகையில் என்னையும் விடக் கூடுத லான அனுபவத்தை-ஏன் வேதனையையுங்கூட அடைத் திருக்கக் கூடுமாதலின் எனது அனுபவத்தைக் கூறு வதைவிட்டு நேராக உங்களை இரத்மலானை விமான தளத்திற்கு மாத்திரம் சொற்ப நேரத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
விமானத் தளத்தில் என்னை வழியனுப்பி வைப்ப தற்கு உறவினர் சிலரும் நண்பர்கள் பலரும் வந்திருந் தார்கள். அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் இயக்கத்தின் சார்பில்தான் நான் சைகோன் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றேன். அச்சமயத்தில் நான் இவ்வியக் கத்தின் தலைமைப் பதவியை வகித்துக்கொண்டிருந்

11.
தேன். வழியனுப்ப வ்ந்த நண்பர்கள் பெரும்பாலோர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வயதாலும், மற்ருேர் உள்ளத்தாலும் இளைஞர்கள்.
ஜப்பானிய அழகிகள்
தூரகிழக்குப் பிரயாணத்திற்கான சூழல் இரத் மலானே விமானத் தளத்திலேயே எனக்கு அமைந்து விட்டது. அதெவ்வாறெனில், புன்முறுவல் படர்ந்த எழில் முகங்களைக் காட்டி நின்ற ஜப்பானிய ஆரணங்கு களின் கூட்டமொன்று அங்கே குழுமியிருந்தது. இலங் கையில் சில நாட்கள் தங்கி நடனக்கலைக் காட்சிகளை நடத்திவிட்டுத் தாயகம் திரும்பும் ஜப்பானிய நாட் டியப் பெண்களின் கூட்டம் இது. இப் பெண்களும் நான் செல்லும் விமானத்திற்காகவே காத்திருந் தனர்.
விமானத்தில் சென்று ஏறிக்கொள்ளும்படி ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது நண்பர்கள் நிற்கும் திசையில் என் கண்கள் படர்ந்தன. அவர்கள் எ ன் னை க் கவனிப்பவர்களாகத் தெரியவில்லை. என்னை அவர்கள் வழியனுப்பி வைப்பதுபோக நான் அவர்களிடம் ஓடியோடிப் பயணஞ் சொல்லவேண்டிய தாய்ப் போய்விட்டது! அந்த ஜப்பானிய அழகிகள் அறிவார்களா இந்த இளைஞர்களெல்லாம் என்னை வழி யனுப்ப வந்தவர்கள்தானென்று?
ஏதோ ஒருவகையாக நண்பர்களின் கவனத்தை என்பால் திருப்பி விடை பெற்றுக்கொண்டு விமா னத்தை நோக்கி விரைந்தேன் நான். எனக்குப் பின்னல் நண்பரொருவர் சற்று உரத்த குரலில் ஏதோ கூறுவது கேட்டது. சில வார்த்தைகள் மாத்திரம் தெளிவாகக் காதில் பட்டது.

Page 7
12
"சைகோனில் இறங்க மறந்துவிடாதீர்கள். உங்கள் பிரயாணச் சீட்டு டோக்கியோவுக்குச் செல்லுபடி யாகாது’ என்பதுதான் அவர் சொன்ன ? புத்திமதி"
எதிர்பாராத் தந்தி
விரைந்து சென்று விமானத்திற்குள் (K. L. M. Royal Dutch Air-lines) 6Tsidios IT 67 GL65T. gyri, Gas ஆசனமொன்றில் உட்கார்ந்ததுதான் தாமதம்; மறு கணம் "சார், உங்களுக்கொரு தந்தி’ என்று கூறிக் கொண்டே விமானப் பணிப்பெண்ணுெருத்தி தந்தி யொன்றை என்னிடம் நீட்டினுள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது!!
என்ன இது! நான் விமானத்திற்குள் நுழையும் வரை காத்திருந்தார்களோ இப்படி எனக்கு அதிர்ச்சி யூட்டுவதற்கு? நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. உள்ளூறப் பயம் எனக்கு எங்கே சைகோன் பயணம் சிலோன் பயணமாக மாறிவிடுமோ என்று.
ஆவலோடும், கலக் கத்தோடும் தந்தியைத் திறந்து படித்தேன். சிரிப்புச் சிரிப்பாக வந்தது, இதற்குத் தான இத்தனை மனக் குழப்பம்! எனது நண்பரும் முஸ்லிம் வாலிப இயக்க அபிமானியும், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஜனப் ஏ. அளிஸ் அவர்கள் மகாநாட்டிற்குச் செல்லும் எனக் குத் தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தந்தியில் சொல்லியிருந்தார்!
நண்பரின் அவ்வாசியை நினைத்துக்கொண்டிருக்கும் போதே விமானமும் நிலம் பெயர்ந்து-விண்ணுார்ந்து -விரையலாயிற்று.
உலகைச் சுற்றிப் பார்க்க விழைகிறவர்களுக்கு விமான மார்க்கம் எவ்வளவு அலுப்புத்தட்டக் கூடிய

13
தும் பயனற்றதும் என்பதை உடனடியாக நான் உணர லானேன். விமானம் நிலம் பெயர்ந்து உயரத்தில் தவழ ஆரம்பித்துவிட்டால் சுற்றிலும் சூன்யம் தான். பக்கத்திலிருப்பவர் பேச்சுத் துணையொன்றே கதி. அதுவும் நாமறியா மொழி பேசுகிறவராயிருந்தாலோ அல்லது சுடுமூஞ்சியாய் இருந்தாலோ அதோ கதிதான். இந்த உண்மைகளை நான் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கும் விமான மூலம் செல்ல நேர்ந்த பொழுதுதான் முற்முக அறிந்தேன். மீண்டும் வெளி நாடு செல்வதாயின் கூடுமானவரை விமானப் பயணத் தைத் தவிர்க்கவே நான் விரும்புகிறேன். காலத்தை வெல்கிறது விமானம், ஆனல் நாம் காணத்தக்க காட்சிகளையும் பெற க் கூ டி ய அனுபவங்களையும் அல்லவா அது விழுங்கிவிடுகிறது.
எனது அன்றைய விமானப் பயணம் தொன்முஆங் விமானத் தளத்தில் முடிவுற்றது.
தொன் முஆங் விமானத் தளம்
தென் கிழக்காசியாவில் உள்ள அதி முக்கியமான நவீன விமானத் தளங்களுள் ஒன்முகத் திகழ்வது தொன் முஆங். தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக் நகரத்து விமான நிலையம் இது தலைநகரிலிருந்து வடக்கே சுமார் 18 மைல்தூரத்திலுள்ளது. விமானப் போக்குவரத்துப் பெருகிவரும் இக் காலத்தில் பாங் கொக் விமான நிலையம் துரித வளர்ச்சியடைந்து வருவ தில் வியப்பில்லை. ஆசியாவில் இயங்கிவரும் எல்லா முக்கிய விமானத் தாபனங்களுமே தொன் முஆங் தளத்தை உபயோகித்து வருகின்றன. தற்போது சுமார் இருபதுக்கு மேற்பட்ட தாபனங்களைச் சேர்ந்த விமானங்கள் இத் தளத்தோடு தொடர்பு கொண்

Page 8
4.
டுள்ளன. எழிலோடு சகல வசதிகளும் கொண்டது இத்தளம்.
எனது சைகோன் பிரயாணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் இரண்டொரு தினங்களுள் செய்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனல் நானகவே தங்கிச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்துகொண்ட பாங்கொக் நகரத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கும், அங்கு தங்குவதற்கான இடவசதி பற்றிய ஏற்பாடுகள் செய்வதற்கும் எனக்கு அவகாசம் கிட்டவில்லை. பாங்கொக் நகரை விமானம் நெருங்கி வரும்போதுதான் இந்தப் பிரச்னையும் எனது கவனத் தில் சற்று அழுத்தமாகப் பதிவாயிற்று.
துறக்க தேரோ
கொழும்பில் நடைபெற்ற கிறிஸ்தவர்களின் மகா நாடொன்றிற்குச் சென்றுவிட்டுத் திரும்பும் தாய் லாந்து இளைஞர் ஒருவர் எனக்குப் பின்னிருந்த ஆசனத்திலிருந்தார். அவரிடம் மெதுவாக விசாரித் தேன் பாங்கொக் ஹோட்டல்களைப் பற்றி. என்னைச் சற்றுக் கூர்ந்து கவனித்தார் இளைஞர். நான் ஏதோ ஒரு பெரிய வர்த்தகராயிருப்பேனென்று அவர் எண்ணி விட்டார்போலும். பெரிய பெரிய ஹோட்டல்களின் பெயர்ப் பட்டியலொன்றையே சமர்ப்பித்து விட்டார் அவர், அசையவில்லை நான், ஹோட்டல் வர்ணனை முடிந்த பிறகுதான் எனது பிரயாணத்தின் நோக்கம் பற்றி வினவினர். சற்றுத் தயக்கத்தோடு நான் விளக்கம் கூறினேன்.
*அப்படியென்ருல் இந்த ஹோட்டலுக்குப் போங் களேன்' என்ருர் இளைஞர்.
*எந்த ஹோட்டல்?

15
அவர் ஏதோ ஒரு பெயரைச் சொன்னர், அப் பெயர் எனது காதில் சரியாக நுழையவில்லை. மீண்டும் விசாரித்தேன். மறுபடியும் கூறினர்.
"துறக்கதேரோ ஹோட்டல்" (Trocadero).
"அப்படியென்ருல்" என்று இளைஞர் கூறியதி லிருந்து இந்த ஹோட்டல் எனது நாணயக் கையிருப் புக்கு ஏற்றதாயிருக்குமென்று நிதானித்துக்கொண் டேன். மேலும் இந்த ஹோட்டல் பாங்கொக் நகரின் வர்த்தகப் பகுதியின் மத்தியில் அமைந்திருந்ததால் அங்கேயே தங்குவதற்குத் தீர்மானித்துக்கொண்டேன்.
உல்லாசப் பிரயாணிகள்
விமானத்திலிருந்து இறங்கிய பிறகு பரிசோதனை களெல்லாம் மிகவும் துரிதமாகவும், கவனமாகவும் நடைபெற்றன. மலர்ந்த முகத்தோடு அதிகாரிகள் தங்கள் கடமைகளில் ஈடுபடுவதைக்காண மகிழ்ச்சியேற் பட்டது. உல்லாசப் பிரயாணிகளின் மூலம் நிரம்ப வருமானத்தைப் பெற்றுவரும் தாய்லாந்து எல்லா வகையிலும் அங்கு வருவோருக்குச் செளகரியங்களைச் செய்து தருகிறது. சுங்க அதிகாரிகள் உட்பட எல்லோருமே பிரயாணிகளை மிகவும் கண்ணியமாகவும் இன்முகத்தோடும் வரவேற்கின்றனர்.
தொன்முஆங்கிலிருந்து பாங்கொக் நகரத்திற்கு விமான நிலைய பஸ்ஸில் ஏறிச் சென்றேன். எந்த ஹோட்டலுக்குச் செல்ல வேண்டுமென்று கேட்கப் பட்டபோது சற்று தயக்கத்தோடு பெயரைச் சொல்ல முயன்றேன். என்னை அழைத்துச் சென்ற பணிப்பெண் புன்முறுவலித்தாள். எனது உச்சரிப்பு விசித்திர மாயிருந்தது போலும்!

Page 9
16
அன்றிரவு நித்திரைக்குச் செல்லுமுன் பாங்கொக் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்கு வேண்டிய தகவல்களை ஹோட்டல் அதிகாரிகளிடையே விசாரித்து வைத்துக் கொண்டேன்.
சிந்தனை இரத்மலானை விமானத் தளத்தின் மீது படர்ந்தது. ஒரு சில மணி நேரங்களுக்குள் எவ்வளவு தூரம் வந்துவிட்டேன். புதிய நாடு, புதிய முகங்கள், புதிய மொழிகள். இப்படியாக விரிந்தது எனது சிந்தனை. அதிக நேரம் செல்லவில்லை.
நித்திராதேவி என்னை ஆட்கொண்டுவிட்டாள்.

2. தேவர்கள் உலகம்
நின் துயில் நீங்கிக் கண்விழித்தது தேவர்கள் உலகத்தின் மீது
ஆம். இரவோடு இரவாக இனம் தெரியாத ஒரு நகரத்தினுள் அல்லவா நான் நுழைந்தேன். இப்போது பகலவனின் பொற் கிரணங்கள் பளிச்சிட்டுக்காட்டின நான் காண வந்த எழில் நகரை.
இரவின் அமைதி நீங்கி உயிர்த்தெழுந்தது பாங்கொக். ஜன்னலின் ஊடாக காலைக் கதிரவனின் இளங்கதிர்கள் என்னைத் தழுவின. அறைக்கு வெளியே பார்வையைச் செலுத்தினேன்.
அதிகாலையிலேயே தொழிலுக்கு விரையும் நகர மக்கள், அரசாங்க ஊழியர்கள், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் ஆகியோருடைய நடமாட்டம் ஆரம்பமாகிவிட்டது.
நான் தங்கியிருப்பது தேவர்கள் உலகம் என்று வெறும் புகழுரையாக நான் கூறவில்லை. பாங்கொக் நகரத்திற்கு தாய்மொழியில் (தமிழன்று) மிகவும் அலங்காரமானதொரு பெயர் உண்டு. அதுதான் *குருங் தெப்" (Grung Tep) என்பதாகும் இப்பெயரின் பொருள் தேவர்கள் அல்லது கடவுளர்கள் நகரம் என்பதாகும்.

Page 10
18
உண்மையில் இந்நகரத்திற்கு இப்பெயர் மிகவும் பொருத்தமானது என்றுதான் கூறத் தோன்றுகிறது. ஏனென்ருல் துரிதமாகப் பெருகிவரும் நவீன நிர் மாணங்களுக்கிடையில் பழமையைப் பேணிக்கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட ஆலயங்கள் "குருங் தெப்”பை அணி செய்கின்றன.
சரித்திரப் பின்னணி
பாங்கொக் நகரையும், அங்கு கலந்துறவாடும் மக்கட் தொகுதிகளையும், ஒலிக்கும் மொழிகளையும், மாறுவதும் வளருவதுமான கலாசாரங்களையும்பற்றித் தக்கவாறு நாம் தெளிவுபெறுவதற்கு ஒரளவு தாய் லாந்தின் சரித்திரப் பின்னணி அறிவு நமக்கு இன்றி யமையாததாகும். ஆசிய கண்டத்தில் வேறு எந்த நவீன நகரத்திலும் காணமுடியாத விசேஷ நிலையை பாங்கொக் பெற்றுள்ளது. நவீன நாகரிகத்தின் தாக்கத்தால் அமிழ்ந்துவிடாது பழம்பெரும் பொக்கி ஷங்களைப் பக்கத்தே இருத்திக்சொண்டு நவயுகத்தின் நலன்களையும் அது பெருக்கி வருகிறது. தனது சொந்தக் கலாச்சாரத்தின் வேர்களை அறுத்துக் கொண்டு விடாது புதுமையோடு பழமையையும் பேணிவரும் பாங்கொக்கின் சிறப்புத் தன்மையை நாம் உணரத் தாய்லாந்தின் சரித்திரம் ஒன்றே உதவ (pigtlyth.
1939ம் ஆண்டுவரை சியாம் என்று அழைக்கப் பட்டுவந்த தாய்லாந்து, மலேசியா, பர்மா, லாஒஸ், கம்போடியா ஆகிய நாடுகளினலும், சியாம் குடாக் கடலினலும் சூழப்பட்ட, 198,500 சதுர மைல்கள் கொண்ட நாடாகும். ஆரம்ப காலத்தில் சீனுவினதும், பின்னர் இந்தியாவினதும் கலாச்சாரத் தாக்கத்தைப்

19
பெற்றபோதும் தொன்றுதொட்டு சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்தமையால் தாய்லாந்து தனது தனித் தன்மையையும் பேணி வந்துள்ளது.
இந்நாட்டின் ஜனத்தொகை 1960ம் ஆண்டில் 26,258,000 ஆகக் கணிக்கப்பட்டது. மத அடிப்படை யில் பின்வரும் முக்கியப் பிரிவுகள் குறிப்பிடத்தக்கன வாகும்.
பெளத்தர்கள் 24,564,000 முஸ்லிம்கள் 1,026,000 கிறிஸ்தவர்கள் 150,000 ஹிந்துக்கள் 3,000
கன்ஃபூஸிய மதத்தவர்கள் 461,000
பெரும்பான்மையான மக்களின் மதமான பெளத் தமே தாய்லாந்தின் தேசிய மதமாக்கப்பட்டுள்ளது. சுமார் 34,000 பெளத்த ஆலயங்களும் 250,000 மத குருமார்களாகிய பிக்குகளும் இங்குள்ளனர். எனினும் தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழா முதல் சகல விதமான முக்கிய வைபவங்களிலும் ஹிந்து மதா ாசரியர்களான பிராமணர்கள் பங்குகொள்கிருர்க ளென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நான்சாஒ
தாய்லாந்து மக்களின் பூர்வீக சரித்திரத்தின் நிகழ்களம் சீன தேசமாகும். ஆதியில் அவர்கள் அந்த நாட்டில், யாங்ஸி நதிக்கரையில் யுனன் பிரதேசத்தில் வாழ்ந்தார்கள். கி. பி. 650ம் ஆண்டளவில் சுதந்திர உணர்ச்சியினல் உந்தப்பட்ட அம்மக்கள் தங்களுக் கெனத் தனிப்பட்ட இராச்சியமொன்றை நான் சாஒ (Nanchao) என்ற பெயரில் அமைத்துக்கொண் டார்கள் எனினும் காலத்துக்குக் காலம் சீன தேசத்

Page 11
20
தோடு ஏற்பட்டுவந்த பூசல்களின் காரணமாக சீன ஆதிக்கம் நான்சாஒ மீது பரவலாயிற்று. இறுதியாக கி. பி. 1253-ம் ஆண்டில் நான்சாஒ தனது சுதந் திரத்தை முற்றக இழந்து குப்லாய்கானுடைய மொங் கோலிய சாம்ராஜ்யத்தின் ஒரு பாகமாக மாறியது. சுக்கோத்தாய்
தங்களுடைய பூர்வீக தேசம் சீனர்களின் ஆக்கிர மிப்புக்குட்பட்டு வருவது கண்ட தாய்லாந்து மக்கள் படிப்படியாகத் தெற்குத் திசை நாடி நிலம் பெயர லானர்கள். மீநாம்-சாஒபியா ஆற்றின் வளமிக்க கரைகளிலே அவர்களின் குடியேற்றம் பெருகலாயிற்று. அவர்கள் வட தாய்லாந்தின் சுக்கோத்தாய் என்ற நகரத்தை கம்போடிய படைகளிடமிருந்து கைப் பற்றித் தங்களுடைய முதலாவது தலைநகரமாக்கிக் கொண்டனர். புதிய தலைநகரம் சுக்கோத்தாயின் தோற்றமும், நான்சாஒவின் வீழ்ச்சியும், வடக்கே யிருந்து மேலும் பெருந்தொகையான மக்கள் தாய் லாந்தில் வந்து குடியேறுவதற்கு ஏதுவாயின. புதிய தொரு இராச்சியமும் உருப்பெறலாயிற்று.
சுங்கோத்தாய் தலைநகராயிருந்த காலம் (சுமார் கி.பி. 1260 முதல் 1350வரை) தாய்லாந்தின் சரித் திரத்தில் மிகவும் சிறப்பானதாகும். இக்காலக் கட்டத்தில்தான் மிகுந்த தேசிய உணர்ச்சியும் கலாச் சாரப் பெருக்கமும் ஏநற்பட்டன. தனது கலாச்சாரத் தின் தனித்தன்மையை பேணிவளர்க்க தாய்லாந்து முற்பட்டது. இக்காலத்தில் நாகரீகத் தொன்மை வாய்ந்த இந்தியாவின் தொடர்பும் பெருமளவில் இந் நாட்டவர்க்கு ஏற்பட்டது. சியாம்-இந்தியா கலாச் சாரத் தொடர்பு கி.பி. முதலாம் நூற்றண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

2.
இந்திய கலாச்சாரம்
பாங்கொக் நகரில் நான் தங்கியிருந்தபோது இந்தியத் தொடர்பினல் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள கலாச்சாரப் பதிவினைப் பிரத்தியட்சமாகக் காணக் கூடியதாகவிருந்தது. அந்நாட்டிலுள்ள அனைத்திலுமே இந்தியப் பண்பாட்டின் பிரதிபலிப்பை நாம் காண முடியும். சிறப்பாகத் தென்னிந்தியாவின் -தமிழகத்தின் கலாச்சார ஆதிக்கம் அங்கு நிலவிவருவது குறிப்பிடத் தக்கதாகும்.
சுக்கோத்தாய் காலத்து அரசர்களுள் முதன்மை யான இடத்தைப் பெறுகிறவர் ராம்-காம்ஹெங் அரச ராகும். வீரத்திலும் அறிவாற்றலிலும் மிக்கவர் இவ் வரசர். இவர் தமது நாட்டின் பரப்பை விஸ்தீரணப் படுத்திவைத்தார். மேலும் கம்போடியர்களைப் பின் பற்றித் தமது நாட்டிற்கான எழுத்துக்களையும் (அரிச்சுவடி) உருவாக்கி வைத்தார். மதம் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் அவரது ஆட்சியின் கீழ் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. கட்டடக் கலை, சிற்பக் கலை ஆதியன பெளத்தமத வழியே சிறப்பாக வளர்ச்சி யுற்றன. எனவே, தாய்லாந்தில் இன்றும் இவ்வரசர் நாமம் மிகவும் கெளரவிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைத் தொடர்பு
சுக்கோத்தாயின் உன்னத நிலை சுமார் 120 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. அதன் பின்னர் வலிமை குன்றிப் புதிய நகரொன்றிற்கு அது இட மளித்தது. தாய்லாந்தின் அடுத்த தலைநகராகவும் ஆட்சிபீடமாகவும் அ யு த் யா தலையெடுத்தது. தற்போதைய தலைநகராகிய பாங்கொக்கிற்கு வடக்கே

Page 12
22
சுமார் 45 மைல்களுக்கப்பால் உள்ளது இந்த பிரசித்தம் வாய்ந்த இடம்.
அயுத்வா
ஊதொங் அரசர், ராமாசுபோதி என்ற தாய்வீரர் தான் அயுத்யா நகரை நாட்டின் புதிய ஆட்சித்தலமாக அமைத்தார். பர்மியர்கள் 1767 ம் ஆண்டில் இந் நகரைக் கைப்பற்றும் வரை தாய்லாந்தின் தலைநகராக அது விளங்கி வந்தது. இக்காலத்தில்தான் ஐரோப்பிய நாடுகள் தொடர்பும் தாய்லாந்தில் ஆரம்பமாகியது. புதிய தலைநகராகிய அயுத்யாவில் தாய்லாந்து மன்னர்கள் சுமார் 417 ஆண்டுகள் ஆட்சி செலுத் தினர். இந்நகரம் புராதனப் பெருமைவாய்ந்த துவாரவத் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் அல்லது அதற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அயுத்யா மன்னர்களும் பெளத்தக் கலைகளைப் போற்றி வந்தனர். சுக்கோத்தாயில் வளர்ந்துவந்த தாய் நாகரீகத்தைப்போலவே அயுத்யா விலும் தாய் மன்னர்கள் புகழ்மிக்க நாகரீகங் கண்டனர்.
கி.பி. 1707ல் அயுத்யா பர்மியர்களின் ஆக்கிரமிப் புக்கு ஆளானது. பர்மியர்கள் எழில்மிகும் இந்நகரை அநேகமாக அழித்தேவிட்டார்கள். மகிமை வாய்ந்த மாபெரும் நகரமொன்று இருந்தமைக்கு இன்று அழி வுற்ற நிலையிலுள்ள ஆலயங்களும் அரண்மனைகளும் சான்றுபகர்வனவாயுள்ளன.
சுக்கோத்தாய் தலைநகராய்த் திகழ்ந்த காலத்தே பெளத்த மதம் நாட்டில் சிறப்பான இடம்பெற்றது. ராம்காம்ஹெங் மன்னர், மத அபிவிருத்திக்கான முயற்சிகளில் மிகவும் ஈடுபட்டார். இவ்வேளையில்

23
பெளத்த மதத்தின்மூலம் இலங்கைக்கும் தாய்லாந் திற்கும் ஏற்பட்ட தொடர்ப்பைப்பற்றி இங்கு குறிப் பிடுவது அவசியமாகும். ஏனெனில் ராம்காம்ஹெங் அரசர் முதலாக இலங்கை சென்று பெளத்த மதத் தைப் பயின்றுவந்த பிக்குகளை சுக்கோத்தாய் மன் னர்கள் தமது அவைக்கு அழைத்து நாட்டில் மத வளர்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். மலேய தீபகற்பத்திலுள்ள நாகோன் பூரீ தம்மராத் எனும் நகரில் இலங்சையில் வழங்கும் ஹினுயன பெளத்த மதத்தைப் போதித்து வந்த பிரபல மத குருவே சுக்கோத்தாய்க்கு முதலில் அழைக்கப்பட்டவராவர்.
கி.பி. 1362ல் முதலாம் தர்மராஜாவின் அழைப் பின்பேரில் இலங்கையில் பயின்ற மற்றுமொரு பெளத்த குரு சுக்கோத்தாய்க்கு வந்தார். அவருக்கென விசேஷ மாக அங்கு ஆலயமொன்றும் நிறுவப்பட்டது. இவருடைய பெயர் சுமண என்று கூறப்படுகிறது.
இப்படியாக வளர்ந்து வந்த பெளத்த மதம் பதினைந்தாம் நூற்றண்டில் இலங்கையிலிருந்து மேலும் கூடுதலான மதப் பிரசாரத்தைப் பெற்றது. கி.பி. 1423ம் ஆண்டில் வட தாய்லாந்திலுள்ள செங்மாயிலி ருந்து 25 பிக்குகள் மற்றும் 8 கம்போடிய பிக்குக ளோடு இலங்கைக்கு விஜயம்செய்தார்கள். இலங்கையி லிருந்து மீண்டதும் இவர்கள் தாய்லாந்தின் பிரதான நகரங்களிலெல்லாம் இலங்கையில் தாங்கள் பயின்று வந்த மதப்பிரசாரத்தை நடத்தி பெளத்தத்தின் வளர்ச்சிக்கு உதவினர்கள்.
பர்மியர் படையெடுப்பு
சுமார் நான்கு நூற்றண்டுகளுக்குமேல் ஆதிக்கம் செலுத்திய அயுத்யா ஐரோப்பியர்களின் கவனத்தைப்

Page 13
24
பெற்றது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய நாடுகளின் பிரதிநிதிகளும், வர்த்தகர்களும் தாய்லாந்தை இக்காலகட்டத்தில் முற்றுகையிட்டனர். தென்கிழக்காசியாவில் ஐரோப்பியரைப் பொறுத்த வரையில் தாய்லாந்து அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாடாய் திகழ்ந்தது. அதே சமயத்தில் இந்த ஐரோப் பியர்களின் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் இங்கு பெருக லாயிற்று. எனினும் அயுத்ய மன்னர் நாராயணு இவற்றையெல்லாம் தமது பிரதம ஆலோசகராகக் கடமையாற்றிய கொன்ஸ்டான்டின் பவுல்கோன் என் பவரது துணையோடு திறமையாக சமாளித்து வந்தார்.
இந்த வேளையில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பர்மியர்களின் ஆக்கிரமிப்பு படிப்படியாகப் பெருகிவரலாயிற்று. இறுதியில் 1767ல் அயுத்யா பர்மியரின் படையெடுப்பால் வீழ்ச்சியுற்றது. இந் நகரின் வீழ்ச்சியோடு தாய்லாந்தின் பழம்பெரும் சரிதையின் எல்லையைக் கடந்து தற்போதைய தலை நகராகிய பாங்கொக்கை நோக்கி நாம் செல்லலாம்.

3. தொன்புரியும் தக்லீனும்
பங்கொக் நகருக்கு எழிலூட்டுவது மீனம்சா-ஒ பிராயோ, நதியாகும். இந் நதியின் இரு கரைகளிலும் பரந்துகிடக்கின்றது ‘குருங்தெப்’ எனும் இத் தேவர் கள் நகரம்.
உலகப் பிரசித்திபெற்ற 'வட் அருண்’ எனும் அருணுேதய ஆலயம் (Temple of Dawn) அமைந் துள்ளது, நதியின் ஒரு கரைப் பகுதியாகிய தொன் புரியிலாகும். பாங்கொக் நகரின் இந்தப் பகுதி பழமை யானது. ஒருக்கால் நாட்டின் தலைநகராகத் தனித் தியங்கிய பெருமையும் வாய்ந்தது.
ஒரு நாள் அதிகாலையிலேயே நதியைக் கடந்து "வட் அருண் ஆலயத்தைக் காணச் சென்றேன். உல் லாசப் பிரயாணிகளை ஏற்றிச் செல்வதற்கான விசேஷப் படகுகள் நதிக்கரையில் உண்டு. "உதய மாளிகை’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "வட் அருணுக் குச் செல்லும் வழியிலேயே தொன்புரியைப் பற்றிய விளக்கத்தை நான் ஏறிச் சென்ற படகிலிருந்த வழி காட்டி ஆரம்பித்துவிட்டான்.
1767ம் ஆண்டு வரை தாய்லாந்தின் தலைநகரா யிருந்த அயுத்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு சுமார் 10
ஆண்டுகளுக்குள் புதியதொரு ஆட்சி பீடம் தோன்றி
தா. 2

Page 14
26
விட்டது. பர்மியர்கள் அயுத்யாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் தாய் வீரர்களில் ஒரு பகுதியினர் தளபதி பியாதக் என்பாருடன் தாய் குடாக்கடலின் கிழக்குக் கரை நோக்கி விரைந்தார்கள். இத்தளபதி யின் சிறப்பு பெயர் தக்ஸின் என்பதாகும். இந்த வீரர் தம்மோடு வந்த சுமார் 500 சகாக்களின் உதவி யோடு சொற்ப காலத்திற்குள் பர்மியர்களை எதிர்த்து வெற்றியும் கண்டார்.
பர்மியர்களை நாட்டிலிருந்து அகற்றிய தக்ளீன் தொன் புரியைத் தமது ஆட்சித் தலமாக ஆக்கிக் கொண்டார். அவரது ஆட்சி சர்வாதிகாரமாகவே உருவெடுத்தது. தக்ளினுடைய அதிகாரப் போக்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை. அவரைச் சுற்றிலும் வளர்ந்து வந்த எதிர்ப்பு அவரது ஆட்சிக்கு விரைவில் முடிவுகண்டது.
தக்ஸினுடைய அதிகாரிகளுள் மிகவும் ஆற்றலு டையவரான தளபதி சக்றி என் பார் நாட்டின் முதல்வ ராக மாறினர். இவரது பெயர் பிறகு முதலாவது ராமா என்று வழங்கலாயிற்று, ராமா அரசர் தமது தலைநகரை தொன் புரிககு எதிராகவுள்ள பாங்கொக் கிற்கு மாற்றிக்கொண்டார். இன்றுவரை தாய்லாந்தில் நிலை பெற்றுள்ள (சக்றி) அரச பரம்பரையை ஆரம் பித்து வைத்தவர் முதலாவது ராமா அரசரேயாகும்.
தொன் புரியின் தோற்றம் பற்றிய விளக்கம் முற்றுப் பெறுவதற்கும் உதய மாளிகையை நான் சென்றடைவதற்கும் சரியாகவிருந்தது. உதய சூரிய னது பொற் கிரணங்கள் வட அருண் கோபுரங்கள் மீது படர்ந்தன. மீனம் நதிக்கரையிலே, நீரில் தனது நிழல் காட்டி நிமிர்ந்து நிற்கும் வட் அருண், புகைப்படக் கருவிகளுக்கு அரியதொரு விருந்தாகும். பல்வேறு

2.
கோணங்களிலிருந்து ஆயிரமாயிரமாய 'கமராக் கண்கள் வட் அருணித் தம்முள் சதா பதிவாக்கிக் கொண்டு வருகின்றன.
மிகவும் தொன்மை வாய்ந்த மடாலயம் ஒன்று கட்டப்பட்டிருந்த இடத்தில் தான் வட் அருண் அமைந் துள்ளது. தக்ஸின் அரசர் தமது ஆட்சி காலத்தில் இவ் வாலயத்தைப் புனர் நிர்மாணஞ் செய்தார். அவருக்குப் பின் இரண்டாவது ராமா அரசர் காலத் திலும் மூன்ருவது ராமா அரசர் காலத்திலும் நடுக் கோபுரமும், சுற்றியுள்ள நான்கு கோபுரங்களும் எழுப்பப் பட்டன. சிவபிரான் திரிசூலம்
இந்த ஆலயத்தை நான் சுற்றிப்பார்த்துக் கொண்டு வரும்போது இந்திய கலாச்சாரத்தின் பிரதி பலிப்பை அங்கு கண்டேன், ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்கள் என் அகக் கண்ணிலே தோன்றி மறைந்தன. ஆலயக் கோபுரங்களின் உச்சியை நோக் கினேன். சிவனுடைய திரிசூலம் அவற்றை அலங் கரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய கோபுரத்தின் மீது அமைந்துள்ள இருப்பிட மொன்றில் இந்திரனுடைய சிலையொன்று காணப்பட்டது. ‘எறவான்’ என்று அழைக்கப்படும் மூன்று தலைகள் கொண்ட யானையின் மீது இந்திரன் அமர்ந்துள்ளான். இதுபோக மற்றும் பல தேவர்களும், அரக்கர்களும் கோபுரங்களின் மேடைகளை அலங்கரிக்கின்றனர். அருண் ஆலயத்தின் மத்திய கோபுரம் சுமார் 217 அடி உயரமானது என்று சொல்லப்படுகிறது.
புராதன இந்தியா அமைத்துக்கொண்ட கலாசார சாம்ராஜ்யத்தின் மீது படர்ந்து நின்ற எனது சிந்த னையைக் கலைத்தது வழிகாட்டியின் உரத்த குரலும்,

Page 15
28
அவனைச் சூழ்ந்து நின்ற உல்லாசப் பிரயாணிகளின் சலசலப்பும். அவர்கள் நின்ற திசை நோக்கி விரைந்தேன்.
வழிகாட்டியின் கற்பனைக்கோட்டை
பாங்கொக் நகரிலுள்ள பெரும்பாலான ஆலயங் களின் சுவர்களிலும் கோபுரங்களின் மீதும் பல வர் ணங்கள் கொண்ட உடைந்த பீங்கான் துண்டுகள் மிகவும் அலங்காரமாகப் பதிக்கப் பட்டுள்ளன. இதற்கு அபூர்வமானவிளக்கமொன்றைக் கூறிக்கொண் டிருந்தான் அந்த வழிகாட்டி.
*முன் காலத்தில் வாழ்ந்த எங்கள் அரசர்கள் தங்களுக்குக் கோபம் வரும் போதெல்லாம்-அதாவது அரசிகளோடு சன்டைப் போட்டுக்கொள்ளும் போ தெல்லாம் -பெருந் தொகையான பீங்கான்களை தரை யில் வீசி உடைப்பார்களாம்! பீங்கான் துண்டுகள் வீண்போகாமலிருப்பற்காகத்தான் இப்படிக் கட்டிட அலங்கா ரத்திற்கு அவற்றை உபயோகித்தார்களாம்." சுற்றி நன்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.
வழிகாட்டியை ஒருமுறை முறைத்துப் பார்த்தேன் நான்,
‘என்ன ஐயா? அப்படிப் பார்க்கிறீர்கள்? இவ் வளவு பீங்கான் துண்டுகள் எப்படிச் சேரக்கூடுமென்று சந்தேகிக்கிறீர்களா? இதிலென்ன ஆச்சரியம்? எங்கள் அரசர்களின் மனைவியர் தொகை எண்ணிலடங்காதது என்பது உங்களுக்குத் தெரியாதா? அத்தனைபேரோடும் சண்டை போடும்போது உடையும் பீங்கான்களின் தொகையைச் சொல்லவா வேண்டும்?"
உல்லாசப் பிரயாணிகளின் சிரிப்பு கோபுரங்களைத் தகர்த்துவிடும்போல் இருந்தது! அவர்களை மகிழ்விப்ப

29
தற்கெனவே இந்த வழிகாட்டிகள் கூட்டம் இது போன்ற அண்டப்புழுகுகளை நிரம்பச் சேகரித்து வைத் திருக்கிறது. குறிப்பாக அமெரிக்க உல்லாசப் பிரயாணி களுக்கு இப்படியான நகைச்சுவைக் கதைகள் மிகவும் பிடிக்கும். தாய்லாந்தின் மன்னர் பெருமக்களின் நீள் சரிதைகளை பொறுமையோடு கேட்டுத் தெளிவதைவிட வழி காட்டிகள் அவிழ்த்துக்காட்டும் புளுகு மூட்டை களைச் சுமந்து செல்வது சுலபம் போலும் !
நதி வளர்க்கும் கலாசாரம்
சாளுபிராயோ ஆற்றின் இரு கரைகளிலும் நகரின் வளர்ச்சி யேற்பட்டதும் நதியின் மீது போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றது. மேலும் ஆரம்ப காலத்தில் பெரும்பாலான இல்லங்கள் இந்த ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பெருவாரியான "குளங்’ (Klong) என்னும் வாய்க்கால்களின் கரைகளில் மரக்குத்திகளின் மீது எழுப்பப்பட்டவைகளாகவே யிருந்தன. எனவே மக்கள் சிறு சிறு தோணிகளிலேயே தங்கள் அலுவல் களுக்காகச் சென்று வந்தனர். அவர்களுடைய கலாச் சாரத்தில் தோணிகள் முக்கிய இடம்பெற்றன. திரு விழாக் காலங்களில் சிங்காரத் தோணிகளின் தோற்றம் நகரின் குதூகலத்தை மிகைப் படுத்துவதாயிருக்கும்.
தாய் மக்களின் திருநாட்களிலே, லோய் கிரா தொங் (Loi Krathong) என்பது அவர்களின் நதி சார்ந்த கலாசாரத்தில் சிறப்புடையதாகும். நன்முக அலங்கரிக்கப்பட்ட சின்னஞ் சிறு தோணிகளை மாரி காலத்தின் இறுதியில் பூரண நிலவொளிக்கும்போது ஆற்றிலே செலுத்தி மகிழ்வார்கள் தாய் மக்கள். வாழைத் தண்டு, இலை, மூங்கில் ஆகியவற்ருலான இந்தத் தோணிகளில் மெழுகு வர்த்திகளும் ஊது

Page 16
30
பத்திகளும் ஏற்றிவைக்கப்படும். வண்ண மலர்கள் வைத்தும் தோணிகள் அலங்கரிக்கப்படும். வெற்றிலை, சில்லறைக்காசு முதலியனவும் வைக்கப்படும். 'லோய் கிராதொங் விழாவின் நோக்கம், கடவுளருளுக்கு நன்றி செலுத்தவேயாகும். மாருது மாரி பொழியச் செய்தமைக்கும், ஆற்று நீர்ப்பெருக்கால் சேதங்கள் விளையாமல் காத்தமைக்கும் தாய் மக்கள் தங்கள் நன்றியறிதலைத் தோணி விழாமூலம் தெரிவித்துக் கொள்கின்றனர். இந்தச் சிறு தோணிகள் தங்கள் பாவங்களை சுமந்து சென்றுவிடுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.
சிங்காரத்தோணிகள்
*அருண் ஆலயத்திலிருந்து வெளியேறியதும் தாய் அரசர் விசேஷ காலங்களில் உபயோகிக்கும் சிங் காரப் படகுகளைக் காண்பதற்குச் சென்றேன். அச் சமயம் இந்த வள்ளங்களை உபயோகிப்பதற்கான சந்தர்ப்பமில்லையாதலின் அவை கரையில் இழுத்து வைக்கப் பட்டிருந்தன. மேலும் அவைகளைப் பழுது பார்ப்பதிலும், புதிய வண்ணங்கள் பூசுவதிலும் வேலை யாட்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.
தாய் அரசர் செல்லும் சிங்கார வள்ளம் மிகவும் கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்க நிறம் பூசப்பட்ட இந்த வள்ளம் சாஒ பிராயோ ஆற்றின் மீது மனேரம்யமாக மிதந்து செல்லும்போது அதன் மீது பகலவனின் பொற் கிரணங்கள் படர்ந்து ஜொலிக்கும் திவ்ய காட்சியை ஒரு கணம் மனதில் எண்ணி மகிழ்ந்தேன். மற்றும் பல அலங்கார வள்ளங் களும் அங்கே இன்பக் காட்சியளித்தன. அரசர் தமது பரிவாரங்களோடு உல்லாசமாகச் செல்வதற்கு வள்ளங்

31
களும் மற்றும் பட்டுகளும் உபயோகிக்கப்படும் என்று அறிந்தேன்.
வண்ணம் பூசும் வேலையிலீடுபட்டிருந்த ஒருவர் இராஜ வள்ளப் பவனி யொன்றை மிகவும் குதூகலத் தோடு,எனக்கு வருணிக்கத் தொடங்கினர். வருடந் தோறும் நடை பெறும் இந்த வைபவம் காலையில் நான் கண்டுவந்த "அருண் ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட தாகும். இராஜபவனி
ஆண்டுதோறும் தாய் மன்னர் தமது பரிவாரங் களோடு இராஜவள்ளத்திலேறி "அருண் ஆலயத் திற்குச் செல்வார். நூறு ஆண்டுகளுக்கு மேல் உபயோ கிக்கப்பட்டு வரும் இந்த வள்ளத்தின் பெயர் "பூரீசுபன்ன ஹொங்ஸ்'(சுவர்ண அன்னம்) என்பதாகும். வள்ளத்தின் உருவமும் அன்னத்தை யொத்ததாகும். மற்றும் பல வள்ளங்களும் அன்னத்தின் உருவிலமைந் தவைகள்தான்.
*அருண் ஆலயத்திற்கு அரசர் சென்று அங்கே வதியும் பிக்குகளுக்கு வஸ்திரதானம் செய்துவருவதும் சம்பிரதாயம். பிக்குகளுக்கு உடை வழங்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானதொரு வைபவமாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. வேலையாள் தந்த விளக்கம் இது.
நூற்றுக் கணக்கான படகோட்டிகளின் மந்திர உச்சாடனத்தோடு தமது தங்க அன்னத் தோணியில் தாய்மன்னர் மற்றும் எண்ணற்ற அலங்காரத் தோணிகள் பின்தொடர சாஒ பிராயோ நதியில் பவனி வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு மென்று "தனது கற்பனையை விவரித்தான் என்னேடு வந்த வழிகாட்டி,

Page 17
4. அரச பாரம்பரியம்
தீய்லாந்தின் தற்போதைய அரச பரம்பரை யைச் சேர்ந்த முதலாவது சக்றி மன்னரால் 1782ல் நிறுவப்பட்டது நவீன பாங்கொக் நகரம்.
பாங்கொக்கை முதலாவது ராமா அரசர் தமது ஆட்சித்தலமாக ஆச்கிக் கொண்ட போது அது மிகச் சிறியதொரு நதிக்கரைக் கிராமம். தலை நகராக வளர்ந்து வந்து பாங்கொக்கின் பாதுகாப்பிற்காக அக் கால அரசர்கள் உயர்ந்த மதில்களை எழுப்பிக் கொண் டனர். இப் பாதுகாப்பு அரண்களின் ஒரு சிறு பகுதி இன்றும் காணக் கூடியதாக உள்ளது.
பாங்கொக் நகரின் விசேஷ வைபங்களில் இடம் பெறும் பெருந் தொகையான சிங்காரத் தோணிசளும், படகுகளும் இந்நகரின் ஆரம்பகால நிலைக்குச் சான்று பகிர்கின்றன. ஒரு காலத்தில் நகரின் போக்குவரத்து முழுவதுமே தோணிகளில் தான் நடைபெற்று வந்தது.
பாங்கொக் நகரின் வளர்ச்சியில் இரண்டொரு சக்றி மன்னர்களின் ஆட்சி காலம் சிறப்பாகக் குறிப், பிடத்தக்கதாகும. இவர்களுள் நகரின் முன்னேற்றத் திற்கான பல முயற்சிகளில் ஈடுபட்ட நான்காவது ராமா அரசர் பிரபலமானவாராகும். இன்றும் நகரின் சிறப்பிற்குக் காரணமாய் விளங்கும் புதிய தெருவை

33
(NEWROAD) அமைத்தவர் இவர்தான். இவரதுஇயற் பெயர் மொங்கத் என்பதாகும்.
மொங்கத் அரசரின் வாழ்க்கை விபரம் மிகவும் ருசிகரமானதாகும். நாட்டின் ஆட்சியை ஏற்பதற்கு முன்னர் பல ஆண்டுகளாக அவர் பெளத்த மடமொன் றில் பிக்குவாக, மிகவும் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அக்காலை, இவர் மேல்நாட்டுக் கலைஞானங்களைத் தேடுவதில் ஈடுபட்டார். ஆங்கில மொழியை மிகவும் விரும்பிப் பயின்றர்.
அவருடைய ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஐரோப் பிய நா டு களு ட ன் தொடர்பு வளரலாயிற்று. விக்டோரியா மகாராணியாருடைய காலம் அது. மொங்கத் அரசர் மகாராணியாருக்குப் பலவிலை யுயர்ந்த வெகுமதிகளை அனுப்பி வைத்தார். இங்கிலாந் தோடு ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது. இவ் வரசர்தான் அன்ன என்ற பெயரில் ஆங்கில ஆசிரி யையை அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக நியமித்துக் கொண்டவர்.
யானைப் படை உதவி
தாய்லாந்துதான் ஐக்கிய அமெரிக்க நாடுகளுடன் அரசியல் ஒப்பந்தம் செய்து கொண்ட முதலாவது ஆசிய நாடாகும். மொங்கத் அரசர் அக்காலத்தில் ஜனதிபதியாகவிருந்த ஏப்ரஹாம் லிங்களுேடு நீண்ட கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். லிங்கன் தமது நாட்டில் புரட்சிக்காரர்களை அடக்குவதில் முனைந் திருந்த காலத்தில் அரசர் மொங்கத் அவருக்கு உதவி யளிப்பதில் உற்சாகமுடையவராயிருந்தார். நல்ல வேளையாக லிங்கன், மன்னருடைய உதவியைச் சாதுரிய மாக மறுத்துவிட்டார். இல்லாவிடில் அரசருடைய

Page 18
34.
மாபெரும் உதவியை அமெரிககாவுக்குக் கொண்டு சேர்ப் பதே பெரும் பிரச்னையாகிவிடும்! மொங்கத் அரசர் லிங்கனுக்கு அளிக்க முன்வந்த உதவி திறமை வாய்ந்த பல போர் யானைகள் தான் !!
சூல லொங்கோர்ன் சிறப்பு
மொங்கத் மன்னருக்குப் பின் அவரது மகன் சூல லொங்கோர்ன் என்பாரும் மிகவும் சிறப்பான முறை யில் ஆட்சி செலுத்தினர். சக்றி வம்ச ஐந்தாவது ராமா அரசராகிய இவர் பதவியேற்ற போது பதினறு வயதினராயிருந்தார்.
தாய் மன்னர்கள் தங்கள் பிரசைகளால் மிகவும் கெளரவிக்கப்பட்டு வந்திருக்கிருர்கள். தற்காலத் திலும் கூட தாய் மக்களின் பேராதரவிற்கும், மதிப் பிற்கும் உரியவர்களாகவே அரச குடும்பத்தினர் இருந்து வருகிறர்கள்.
ஐந்தாவது ராமா அரசர் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அரசர் அவையை அணுகும் பிரசைகள் குப்புற வீழ்ந்த நிலையில் தான் அரசர் முன்னிலையில் தோன்றவேண்டும். நாட் டின் அரசரை அல்லது அரசியைச் சாதாரண மக்கள் தீண்டக்கூடாது. அவ்வாறு தொட்டவர்களுக்கான தண்டனை மரணம் தான். இந்த நியதியின் விபரீத விளைவால் குல லொங்கோர்ன் அரசரின் முதலாவது மனைவி உயிர் துறக்க நேர்ந்த சோகக் கதை இன்றும் மக்களிடையே வழங்கி வருகிறது.
ஆற்றில் விபத்து
ஒரு சமயம் நகரினுாடே செல்லும் ஆற்றில் அரண் மனை வள்ளமொன்று விரைந்து கொண்டிருந்தது. அப்

35
போது தற்செயலாக அதன் வழியில் குறுக்கிட்ட மற்று மொரு வள்ளத்தோடு அது மோதலாயிற்று, இந்த எதிர்பாராத விபத்தில் வள்ளத்திலிருந்த பட்டத்து அரசியாரும் சிக்கிக் கொண்டார். அரண்மனை வள்ளத்திலிருந்து நீரில் வீழ்ந்த அரசியைக் காப்பாற்று வதற்குக் கப்பலோட்டிய ஒருவரேனும் துணியவில்லை. காரணம் அரசியைத் தொட்டவருக்கு மரண தண்டனை கிடைக்குமென்ற பயம்தான்! எனவே ஆற்றுக்குப் ப
யானுர் அரசியார்!!
குலலொங்கோர்ன் மன்னர் பதவியேற்றவுடன் மக்கள் அரசர் முன்னிலையில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து மரியாதை செய்யும் பழக்கத்தை ஒழித்து விடும்படி கட்டளையிட்டார். இருந்த போதிலும் இப்பழக்கம் இன்றுகூட நாட்டில் முற்ருக மறைந்து விட்டதாகக் கூறமுடியாது. இவ்வரசருடைய சிறப்பு மிக்க ஆட்சி 1910ம் ஆண்டுவரை நீடித்தது.
தேசிய மணி மண்டபம்
இம் மன்னர் காலத்தில் பாங்கொங்க் நகரம் பல முன்னேற்றங்களைக் கண்டது. கட்டிடக் கலையும் சிறப் புற்று விளங்கியது. சலவைக் கற்களாலான அழகு மண்டபங்கள் சிலவற்றை குலலொங்கோர்ன் மன்னர் அமைத்துப் பெரும் புகழ் கொண்டார்.
இன்று நாடாளு மன்றமாக இயங்கும் தேசிய அவை மண்டபம் (National Assembly) இவ்வரசரால் நிறுவபட்டதாகும். எழில் மிக்க இந்த மாளிகை இம் மன்னர் காலத்தில் சிம்மாசன மண்டபமாக விளங் கியது. இச் சலவைக் கல் மண்டபம் இத்தாலிய மறு மலர்ச்சிக்காலப் பாணியில் அமைந்ததாகும்.

Page 19
36
குல லொங்கோர்ன் மன்னர் நாட்டிற்குச் செய்த சேவைகளுக்காக மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகிருர். வருடந்தோறும் இவருடைய ஞாபகார்த்த மாக ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தேசிய மண்டபத்துக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள இவரது சிலையை இத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக் கள் தரிசித்து மரியாதை செலுத்தி வருகிருர்கள்.
வழிகாட்டிய மாணவன்
நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக் கதைவை அதிகாலையிலேயே யாரோ தட்டிக் கொண்டிருந்தார் கள். அச்சமயம் நானும் வெளியே செல்வதற்கு ஆயத்த மாகவே இருந்தேன். கதவைத் திறந்து பார்த்தேன். பாங்கொக்கில் நான் தங்கிய முதல் நாளிலேயே சந்தித்த மாணவன் ஒருவன் என் முன் நின்றன். சூல லொங்கோர்ன் பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்த மாணவன் என்னை நகரிலுள்ள ஆலயங்களைக் காண வழி காட்டியாக' அழைத்துச் செல்வதாக ஏற்கனவே கூறியிருந்தான். பாங்கொக்கில் மட்டுமல்ல, உலகில் பல பாகங்களில் இப்படியாகத் தான் பல்கலைக்கழக மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு தங்களுடைய மேற் படிப்புக்கான பணத்தைச் சேகரித்துக் கொள்கிருர்கள். உல்லாசப் பிரயாணி களின் எண்ணிக்கை பெருகிவரும் நமது நாட்டிலும் மாணவர்கள் தங்கள் ஒய்வு நேரங்களையும், விடுமுறைக் காலங்களையும் பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு இது நல்லதொரு மார்க்கமாகும் வருமானத்திற்கான் வழியும் கூட.
குலலொங்கோர்ன் மன்னருடைய நிர்மானங் களைப்பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டேனல்லவா?

3.
அவற்றுள் பிரபல மிக்கதான ஆலயமொன்றினைக் காண எனது மாணவ வழிகாட்டி நண்பனேடு புறப் பட்டேன்.
ஐந்தாவது ராமா அரசர், சூலலொங்கோர்ன் கட்டியெழுப்பியது, வட் பெஞ்சமாபோ பிதர் (Wat Benchamabopit) எனப்படும் சலவைக் கல் ஆலயம். இவ்வாலயத்தைத் திட்டமிட்ட கலைஞர் ஓர் இளவரச ராகும். இவரது பெயர் நாரிசருனுவத்தி வொங்ஸ் என்பதாகும்.
மூன்று அடுக்குக் கூரைகளைக் கொண்ட இந்த ஆலயம் சுமார் கி. பி. 1900ல் கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் இவ்வாலயத்திற்கு வட் பெஞ்சம போபிதர் என்று நாமஞ் சூட்டினர். இதன் பொருள் "அரசவம் சத்தின் ஐந்தாவது மன்னரால் நிறுவப்பட்ட ஆலயம்" என்பதாகும். இவ்வாலயம் அமைந்துள்ள இடம் மிகத் தொன்மையான மடமொன்று இயங்கி வந்த இட மாகும். எனவே சலவைக் கல் ஆலயத்தின் சரிதமும் தொன்மை மிக்கதாகும்.
இவ்வாலயத்தினுள் பல வகையான சிற்பமுறை களை அனுசரித்து உருவாக்கப்பட்ட புத்தர் சிலைகள் பல சிரத்தையோடு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பல பிரதேசச் சிற்ப முறைகள் இங்கு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. மேலும் இந்தியர் இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளில் வழங்கும் சிற்ப முறைகளும் இங்கே இடம் பெற்றுள்ளன.
பல்லவர் கலைச் சாயல்
இச் சலவைக் கல் ஆலயமும் பாங்கொக்கிலுள்ள ஏனைய பல ஆலயங்களும் பல்லவ கட்டிடக் கலையை யொட்டி அமைந்தவைகளாகும். மாமல்லபுரத்து

Page 20
38
கலைஞர்களின் கைவண்ணம் மாசமுத்திரம் கடந்து சியாம் நாட்டில் கட்டிடக் கலைக்கு முத்திரையிட்டி ருப்பது தமிழர் தம் நாகரீகத்தின் பரப்பினைப் பேசு கின்றது. பெருமை தரும் இக்கலாசார வளர்ச்சி யைப் பின்னரும் விளக்குவேன்.
சலவைக் கல் ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பம் சத்தை மாத்திரம் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தி யப் பண்பாட்டின் பதிவுக்குச் சான்ருக இவ்வாலயத் தின் கன்னச் சுவர்களில் (நான்கு புறங்களிலும்) கரு டன் மீதமார்ந்த விஷ்ணு மூன்று தலைகள் கொண்ட யானை (எறவான்) "ஓம்" அல்லது "உனலொம்’ எனும் மந்திரம் தர்ம சக்கரம் ஆகிய சின்னங்கள் பொறிக்க பட்டுள்ளன.
தாய்மக்களின் அபிமான மன்னராம் சூல லொங் கோர்ன் அமைத்த அற்புத ஆலயத்தின் அலங்காரம் அனைத்தையும் இடைவிடாது எனது மாணவ நண்பன் கூற அந்த விளக்கத்திலேயே நான் லயித்து விட்டேன்.
* பிறகு சந்திப்போம் ஐயா!' என்று வழிகாட்டி
கூறியதும் தான் நான் ஹோட்டலுக்கருகில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

5. இராமேஸ்வரப் பிராமணர்கள்
அன்று பகல் வெய்யில் மிகவும் கடுமையாக இருந் தது. அதிக தூரம் அலைந்து திரிவதற்கு மனம் ஒப்ப வில்லை. எனவே மாலை வேளையில் இரண்டொரு ஆலயங்களை மட்டும் கண்டு வரத் திட்டமிட்டுக்கொண் டேன், எனது மாணவ நண்பனும் உடன் வருவதாக ஒப்புக்கொண்டான்.
பெரிய ஹோட்டலில் தங்கியிருந்த போதிலும் எனது உணவு விஷயங்களையெல்லாம் வெளியிலேயே வைத்துக் கொண்டிருந்தேன். ஹோட்டலில் தங்கிய முதல்நாள் காலையில் சாப்பாட்டு அறைக்குச் சென்று பார்த்தேன். திருப்திப்படவில்லை. முட்டை, ரொட்டி யோடு பெரியதொரு பப்பாளிப் பழத்தையும் வெட்டி வைத்திருந்தார்கள். அதிகாலையில் அந்த அளவு பழம் தின்று பழக்கமில்லை. அயலூரிலே தவிர்க்கமுடியு மானல் சாப்பாட்டு முறையில் புதிய மாற்றங்கள் செய்வது உசிதமில்லையென்பது எனது கொள்கை. முட்டை, ரொட்டியோடு முடித்துக்கொண்டேன்.
பக்கத்தில் நல்ல சோற்றுக் கடையிருக்கிறது என்று சிப்பந்தியொருவன் சிபார்சு செய்தான். தலைநகரில் தங்கியவ்ரை அந்தக் கடை தான் உதவியது. மணிமணி யான முத்துசம்பா பிரியாணி, கோழிக் குறுமா சகிதம் அங்கே கிடைத்தது. அத்தோடு பிஞ்சு வெள்ளரிக்

Page 21
40
காயையும் துண்டு துண்டாக வெட்டி வைத்திருந் தார்கள். மலேயாவிலும் இதே பழக்கத்தைக் கண்டேன்.
இந்தியர் குடியேற்றம்
சோற்றுக்கடை அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அன்று கடை முதலாளியின் மகன் மிகவும் சுறுசுறுப்பாக வேலையிலீடுபட்டிருந்தார். இ  ைட யிடையே எனது கேள்விகளுக்குப் பதில் தந்தார். அவருக்குத் தெரிந்த ஒரளவு ஆங்கிலம் தான் உதவியது. கடைக்காரர் முஸ்லிம். தமது தாயார், தங்கை ஆகியோருடைய உதவியோடு கடை நடந்து வருகின்றது. மூவருமே கடையில் வேலை செய்கிருர்கள். தகப்பனர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர். தாய்லாந்தில் வந்து திருமணம் செய்து அங்கேயே தங்கிவிட்டவர். அவருடைய மெளத்துக்குப் பிறகு கடையை மகன் நடத்திவருகிருர். இதைப்போன்ற குடும்பங்கள் பெருந்தொகையாக உண்டு தாய்லந்தில். பாங்கொக் நகரில் பெரிய வியாபாரத் தலங்களி லும், வங்கிகளிலும் இந்தியர்கள் காவல் வேலை செய்து வருகிருர்கள். இவர்களிற் பலரை சோற்றுக் கடையில் சந்திக்க முடிந்தது, மற்றும் பலரகப்பட்ட மக்களையும் காண்பதற்கு இவ்விடம் ஏதுவாக இருந்தது. பாங் கொக்கில் வாழும் முஸ்லிம்களைப் பற்றி நான் அறிந்து கொண்ட சொற்ப விபரங்களும் இந்தக் கடையில் சந்தித்தவர்களிடமிருந்துதான் கிடைத்தது. அதுபற்றி பின்னர் கூறுவேன்.
அன்று மாலை நான் காணச் சென்ற ஆலயங்களுள், * வட்சுதாத்” எனது விசேஷ கவனத்தைப் பெற்றது. தலைநகரிலுள்ள வனப்பும் விசாலமும் பொருந்திய

41
ஆலயங்களுள் வட்சு தாத் ஒன்ரு கும். ஆனலும் எனது எண்ணமெல்லாம் ஏற்கனவே நான் கேள்விப்பட் டிருந்த வண்ண ஊஞ்சலின்மேல் சென்றது. அவ் வாலயத்திற்கு முன்னுள்ள முற்றவெளியில் மிகவும் உயரமான ஊஞ்சலொன்று காலூன்றி நின்றது. சொற்ப காலத்திற்கு முன் தாய்லாந்தில் ஊஞ்சல் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
தாய்மக்களின் ஊஞ்சல் திருவிழாவைப் பற்றியும் இந்த விழாவிலும், முடிசூட்டு விழாவிலும் பாடப்படும் தமிழ்ப் பண்களைப் பற்றியும் தாய்லந்தில் சுற்றிப் பிரயாணஞ் செய்த சங்கைக்குரிய தனிநாயக அடிகள் மிகவும் ருசிகரமான தகவல்களைத் தந்துள்ளார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் பிராம ணர்கள்தான் இந்த வைபவங்களிலெல்லாம் முக்கிய பங்கு கொள்கிருர்கள்.
எளது கவனத்தைப் பெற்ற ஊஞ்சல் பற்றி தனிநாயக அடிகள் பின்வருமாறு தங்கள் கட்டுரை ஒன்றில் (1935) குறிப்பிட்டுள்ளார்கள்.
தமிழில் பாடும் பிராமணர்கள்
தாய்லந்தில் மேன்மை தங்கிய இளவரசர் தானி நிவாத் அவர்களின் உதவியால் அரச அவைப் பிராமணர்களைச் சந்திக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன். அப்போது தாய் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களிலும், ஊஞ்சல் திருவிழாக்களிலும் பாடப் படும் தமிழ்ப் பாக்களைப் பற்றி அறிந்துகொள்வ தற்கு வாய்ப்புக் கிட்டியது. பாங்கொக்கில் இந்த ஊஞ்சல் திருவிழா சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் னிருந்து பகிரங்கமாகக் கொண்டாடப்படுவதில்லை,
தா.-3

Page 22
42
எனினும் ஊஞ்சல்களுக்காக நாட்டப்பட்ட பெரிய கம்பங்களை இன்றும் காணக்கூடும்.
இந்த ஊஞ்சல் திருவிழா பற்றிய விபரத்தைச் சேகரிக்கும்போது இதுவும் தமிழ் நாட்டிலிருந்து பரவியதென்றே அறியக் கிடக்கிறது.
இற்றைக்குச் சுமார் 40 ஆண்டுகளுக்குமுன் தாய் லாந்தில் நடைபெற்ற ஊஞ்சல் திருவிழாவொன்றினை ருச்செல்ட்குரோப்ட் என்ற ஆங்கிலேயர் “சியாமும் கம்போடியாவும்’ என்ற தமது நூலில் மிகவும் அழகாக வர்ணித்துள்ளார். அவர் தரும் விளக்கத்தைச் சுருக்க மாகத் தருகிறேன்.
வட்சுதாத் ஆலயத்தின் முற்றவெளியில் கடுஞ் சிவப்பு நிறம் பூசப்பட்ட ஊஞ்சல் மரங்கள் நாட்டப் பட்டிருந்தன. அவை சுமார் 80 அடி உயரமிருக்கும். திருவிழாவின் போது வெண் கொற்றக் குடைகள்; அலங்காரச் சீன விளக்குகள் முதலியவற்ருல் ஊஞ்சல் அழகுபடுத்தப்படும். தரையிலிருந்து சுமார் 10 அல்லது 12 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஊஞ்சல் பலகையில் ஆறு பேர்கள் ஏறிக்கொள்வார்கள். சிவப் புத் தலையணிகள் தரித்த இவர்கள் நாக அரசனின் பிரதிநிதிகள் என்று கருதப்படுகிருர்கள். தரையில் நிற்கும் ஒருவன் ஊஞ்சல் பலகையில் கட்டப்பட்டிருக் கும் கயிற்றை இழுத்து ஊஞ்சலை ஆட்டுவான். ஊஞ்சல் அங்குமிங்குமாக ஆடும்போது அருகில் ஒரு நீண்ட மூங்கிலில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பண முடிச்சை ஊஞ்சல் ஆடும் அறுவரின் தலைவன் தனது பற்களினல் கடித்துப் பறித்துக் கொள்ளவேண்டும்.
பண முடிச்சை வெற்றிகரமாகப் பறித்தால் நல்ல சகுனமென்றும், நெற்பயிர்கள் செழிப்பாக வளரு

43
மென்றும் கூடியிருக்கும் மக்கள் கணிப்பார்கள். பறிக் கத் தவறினலோ அல்லது தலையணிகள் கழன்று வீழ்ந்து விட்டாலோ, அல்லது ஊஞ்சலாடுவோர் தரையில் விழுந்துவிட்டாலோ அந்நிகழ்ச்சி அபசகுனமென்று கருதப்படும்.
இதைப் படித்துக்கொண்டு போகும்போது உண் மையில் ஊஞ்சலிலிருந்து ( 0 அல்லது 12 அடி) கீழே விழுபவருக்கு அது அபசகுனமே தான் என்று எண்ணிக் கொண்டேன் நான்.
தஞ்சாவூரில் கண்ட ஊஞ்சல்
இந்த ஆங்கிலேயர் வட்சுதாத்தில் கண்ட ஊஞ்சல் ஆட்டத்தை தென்னிந்தியாவில் தஞ்சாவூரிலுள்ள பெரிய சிவன் கோவிலில் தாம் கண்ட ஊஞ்சலாட்டத் தோடு ஒப்பிட்டுக் காண்கிருர், தஞ்சாவூரில் தாம் கண்டதும் ஒருவகை ஊஞ்சலாட்டமே. அங்கு ஊஞ்ச லில் ஆடியவர் சிவன் கோவில் நாட்டியப் பெண் னகும்.
தாய் மக்கள் கொண்டாடும் இந்த ஊஞ்சல் விழா பிரா ஈசுவென் (ஈசன்) அதாவது சிவனை முன்னிட்டே நடைபெறுகிறது. இந்த விழாவில் நாட்டின் அரசர் அல்லது அவரது பிரதிநிதி கலந்துகொள்வார். காத்தல், புரத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலோ ஞகிய சிவனது பிரதிநிதியாகவே அரசர் விழாவில் கலந்துகொ67 கிருர், தஞ்சாவூர் ஊஞ்சல் காட்சியும் சிவாலயத்து நிகழ்ச்சியாகவே அமைந்துள்ளது இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
வட்சுதாத் ஆலயத்தையும் ஊஞ்சல் கம்பங்களை யும் கண்டு திரும்புகையில் தாய்லந்தில் வாழும்

Page 23
44
பிராமணர்களைப் பற்றி எனது மாணவ நண்பனேடு பேசிக்கொண்டே ஹோட்டலுக்குத் திரும்பினேன். இந்தப் பிராமணர்கள் கலந்து கொள்ளும் வைபவங்கள் பலவும் வெவ்வேறு காலங்களில் நடைபெறுவதனல் அந்நாட்டில் பல கா ல ம் தங்கியிருந்தால்தான் அவற்றையெல்லாம் நேரில் கண்டு அவற்றின் கலாச் சாரத் தொடர்புகளை நாம் அறிய முடியும்.
ஹிந்து மதத் தொடர்பு
தாய்லந்திற்கு ஹிந்து மதத் தொடர்பு மிகத் தொன்மையானதாகும். நாட்டின் பல பாகங்களிலும் சுமார் 3000 ஹிந்துக்கள் வாழ்ந்து வருவதாக கணிக்கப் பட்டுள்ளது. இங்கே பிராமணர்கள் தங்கள் விசேஷ கோயில்களை நடத்திவருகிருர்கள்.
தாய் பிராமணர்கள் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழக ஆலயங்களில் அனுசரிக்கப்படும் சம்பிர தாயங்கள் பல தாய்லந்திலும் புகுத்தப்பட்டுள்ளன. உழவுத் திருவிழா, ஊஞ்சல் திருவிழா, முடிசூட்டுவிழா, "திரிபாவே விழா போன்றவைகளிலெல்லாம் பிராம ணர்கள் இடம் பெறுகிருர்கள்.
சங். தனிநாயக அடிகள் இந்தப் பிராமணர்கள் ஆதியில் இராமேஸ்வரத்திலிருந்து தாய்லந்து வந்தார் களென்றும் பாங்கொக்கில் அரச அவைப் பிராம ணர்கள் பின்பற்றும் சடங்குகள் தமிழகத்து கோயிற் சடங்குகளை ஒத்திருப்பதாகவும் குறிப்பாக காஞ்சீவரத் துக் கோயிற் சடங்குகளை ஒத்திருப்பதாகவும்-மஹா ராஜகுரு என்று அழைக்கப்படும் பிரதம குருவினிடம் கேட்டறிந்ததாக கூறியுள்ளார்கள்.

45
திருவெம்பாவை
'திரியம்பாவே திரிபாவே' எனும் திருவிழாவிலும், முடிசூட்டு விழாவிலும் மற்றும் வைபவங்களிலும் தாய் பிராமணர்கள் இசைக்கும் பாடல்கள் மணிவாசக ருடைய திருவெம்பாவையில் முதலிரண்டு பாடல்களா யிருப்பதை தனிநாயக அடிகள் சுட்டிக் காட்டு கிா?ர்கள். பாடல்கள் பின்வருமாறு:-
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்-வாள் தடங்கண் மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்? மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்கண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்! பாசம் பரஞ்சோதி கென்பாய் இராப் பகல் நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி! இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணுேர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருளி வந்தருளும் தேசன் சிவலோகன்தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனுர்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய் !
இந்தப் பாடல்கள் கிரந்த எழுத்துக்களில் அல்லது தாய் எழுத்துக்களில் எழுதப்பட்டு, வழங்கிவரு கின்றன.

Page 24
46
உழவுத் திருவிழா
தாய் பிராமணர்கள் கலந்துகொள்ளும் உழவுத் திருவிழாவும் மிகவும் அலங்காரமான காட்சியாகும். இதற்கு அரச தம்பதிகளும் சமுகமளிப்பார்கள். அரசாங்க மந்திரியொருவர் அல்லது விவசாயத்துறை மா அதிகாரியொருவர் விழாத் தலைவராகவிருந்து புனித எருதுகளால் இழுக்கப்பப்படும் ஏரினைச் செலுத்து வார். அப்போது பிராமணர்கள் சங்கு ஊதுவார்கள். மந்திர உச்சாடனம் செய்வார்கள்; எதிர்வரும் ஆண்டில் காலநிலை பற்றி-மழை பற்றியும் விளைச்சல் பற்றியும்-சாதகமும் கூறுவார்கன்.
நிலத்தை உழுத பின்னர் விழாத் தலைவர் தூதுவார்; விதைகளை தங்கத் தட்டுகளிலும் வெள்ளித் தட்டுகளிலும் நான்கு அரச அவைப் பெண்கள் ஏந்திச் செல்வார்கள்.
இந்த சிறப்பான நிகழ்ச்சியைக் காண்பதற்கு மக்கள் பெருந்திரளாகக் கூடி நிற்பார்கள். பலவித வர்ண உடைகளும், மேள முழக்கமும் இந்த உழவுத் திருவிழாவைக் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழச் செய்யும்.

6. தாய்' கலாசாரத்தில் இராமாயணம்
ஒரு நாட்டின் கலாசார வளர்ச்சியைப் பற்றி அறிவதற்கு அந் நாட்டின் ஆலயங்களைவிடச் சிறந்த மார்க்கம் வேறு இருக்க முடியாதென்ற எண்ணம் தாய்லந்தின் தலை நகரைச் சுற்றிப் பார்த்து வரும் போதெல்லாம் என் மனதில் தலை தூக்கி நின்றது. இந்த நிலை உலகின் கண்ணுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்து மெனினும் சிறப்பாகக் கீழ்த் தேசங்களில் கலைகளின் பல்வேறு அம்சங்களும் வணக்க ஸ்தலங் களைச் சார்ந்தே சிறப்பாக வளர்ந்து வந்துள்ளன. அறிவை வளர்ப்பது ஆலயம்
அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாய் விளங்கியது ஆலயம். மத குருமார்களே மக்களின் கல்வித் தேவை களுக்கு வழி செய்தனர். ஒவியமும் காவியமும் கோயிலைச் சார்ந்தே எழுந்தன. நாட்டியமும் நல் லிசையும் நலம்பெற வளர்ந்ததும் ஆலயத்தேதான். சிற்பக் கலையின் சிறப்பெல்லாம் மிளிர்வதும் ஆலயத் திலேதான். எனவே வனப்புமிக்க பாங்காக் நகர ஆலயங்களைக் கண்ணுற்ற நான் 'தாய்’ நாட்டுக் கலை களுக்கு நுழைவாயில்களாகவே அவற்றைக் கண்டேன். அதே சமயத்தில் அந்நாட்டுக் கலையம்சங்கள் அனைத் திலும் இந்திய நாட்டினது குறிப்பாகத் தமிழகத்தினது தாக்கத்தை நான் அவதானிக்கக் கூடியதாயிருந்தது ,

Page 25
48
இக் கலாசாரத் தொடர்பை முந்திய கட்டுரைகளில் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
மரகத புத்தர்
இந்திய கலாசாரத் தொடர்பின் விரிவை மேலும் பறை சாற்றுவது போலிருந்தது மறுநாள் நான் தரி சித்த ஆலயம். வட்ஃபிரா கீயோ என்று அழைக்கப் படும் இவ்வாலயம் தாய்லந்தின் மிகவும் பிரசித்தி பெற்ற மரகத புத்தர் சிலையை தன்னகத்தே கொண் டுள்ளது. இவ்வாலயத்தைச் சுற்றியுள்ள மண்டபச் சுவர்களில் இந்தியப் பண்பாட்டுக் களஞ்சியமான இராமாயணத்தின் காட்சிகள் மிகவும் சிறந்தமுறையில் தீட்டப்பட்டுள்ளன.
மரகத புத்தர் ஆலயத்திற்குச் செல்லும் தாய் மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையோடு சுவரோவியங் களாகப் பதிவாகியுள்ள இராமசரிதையைக் கண்டு வருவது ஒரு சம் பிரதாய மாகியுள்ளது. வண்ணங்கள் பல கொண்டு தீட்டப்பட்டுள்ள இச்சித்திரங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன. தமிழின் தாக்கம்"
"தமிழின் தாக்கம் குறிப்பாகத் தாய்லந்தில் இலக்கியத் துறையிலும் பரவியது. "தாய் இராமா யணத்தில் (ராமாகியன்) தமிழ் நாகரீகத்திலிருந்து எழுந்த சம்பவங்களும் தமிழ்ப் பெயர்களும் உள்ளதை எவரும் மறுக்க முடியாது.” தாய் இலக்கியத்திலும், இதர கவின்கலைகளிலும் இராமா யணம் வகிக்கும் இடத்தைப் பற்றி நான் கேட்டறிந் தவைகளை விவரிக்கு முன் மரகத புத்தர் ஆலயம்பற்றிக் குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது,

49
இந்த ஆலயம் முதலாவது ராமா அரசரால் 1782ம் ஆணடில் நிறுவப்பட்டது. இவ்வாலயத்தில் வைக்கப் பட்டுள்ள மரகத புத்தர் சிலையின் சரித்திரம் மிகத் தொன்மையானது. ஆரம்பத்தில் இச் சிலை வட தாய் லந்தில் பல பிரதான நகரங்களில் வைக்கப்பட்டு அக் கால மன்னர்களால் பெரிதும் போற்றப்பட்டு, வந்தது. இறுதியாக சக்றி வம்சத்து முதலாம் மன்னரால் முதலில் தொன் புரிக்கும் பின்னர் பாங்காக் நகருக்கும் இச் சிலை மாற்றப்பட்டது. பாங்காக் நகரில் இச் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்காகவே மிகவும் அலங்காரமான ஃபிரா கீயோ ஆலயமும் எழுப்பப் L-LLL -ġill.
*கின்னரி” சிலைகள்
இவ்வாலயத்தின் ஒரு பகுதியிலுள்ள இராஜ மண்டபம் ஆண்டுக்கு ஒரு முறைதான் பொது மக் களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும். அது தான் சக்றி தினமாகிய ஏப்ரல் 6ம் திகதியாகும், இந்த மண்டபத்திலே சகறி வம்சத்து அரசர்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இராஜ மண்டபத்தைப் பல நூதன உருவங்கள் காவல் புரிந்து வருகின்றன. பாதி இராட்சத உருவும் பாதி பட்சி உருவும் கொண்ட காவலர் சிலைகளும் பாதி மனித உருவும் பாதி பட்சி உருவும் கொண்ட காவலர் சிலைகளும் அங்கே காணப் படுகின்றன.
இந்த அதிசய உருவங்களை கவனித்து வந்த நான் பாதி மனித உருவும் பாதி பட்சி உருவும் அமைந்த காவல் மகளிரின் பெயர் "கின்னரி" என்பதாகக் கேட் டறிந்தேன். இந்தப் பெயர் எமது புராண நூல்களில் கூறப்படும் கின்னரர்களையே சுட்டுகிறது. பெண்ணு

Page 26
50
ருவும் பட்சி உருவும் அமைந்த இம் மகளிர் இசை வாணிகளாகக் கருதப்படுகின்றனர்,
மரகத புத்தர் சிலை பாங்காக் நகரத்தின் காவல் தெய்வமாகத் தாய்லந்து மக்களால் கருதப்பட்டு வரு கின்றது. நாட்டின் அரசரால் பெரிதும் போற்றப் படுவது இச்சிலை. சிலை வைக்கப்பட்டிருக்கும் மணி மண்டபத்து வாயில்களும் வாயிற் சட்டங்களும் அழகிய வேலைப்பாடமைந்தவை. கதவுகளில் முத் துக்கள் பதிக்கப்பட்டுள்ளன.
மரகத புத்தர் சிலை மிகவும் உயரமானதோர் மேடையில் வைக்கப்பட்டுள்ளது. வெண்கொற்றக் குடையின் கீழ் அமைந்துள்ள இச் சிலை மணிகள் இழைக்கப்பட்ட பொன்னடை போர்த்தி அழகு செய்யப்பட்டுள்ளது.
ஆடை மாற்றும் வைபவம்
மரகத புத்தர் சிலைக்குப் பொன்னுடைபோர்த்தும் வைபவம் ஆண்டிற்கு மூன்று முறை பெரு விமரிசை யாக நடைபெறும், குளிர்காலம். கோடைக்காலம், மாரிகாலம் ஆகிய மூன்று பருவங்களின் போதும் நாட்டின் அரசரே இச் சிலைக்குப் பொன்னடை போர்த்திச் சிறப்பித்து வருகிருர். இச்சிலை சுமார் இரண்டடி உயரமிருக்கும். பொன்னடை மறைத்து நிற்பதால் சிலையின் ஒரு சிறு பகுதி மாத்திரமே காணக்கூடியதா யிருக்கிறது.
பாங்காக்கிலுள்ள ஆலயங்களுள் வட் ஃபிராகீயோ பல வகைகளில் முதன்மையானதாக விளங்குகின்றது." தாய்லாந்தின் கட்டடக் கலையின் சிகரமாகக் கண்கவர் வண்ணக் கோலங்கள் காட்டி நிற்பது இவ்வாலயம்.
நாட்டின் ஆட்சிபீடத்தோடு இணைந்து நிற்பதும்

51
இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களை யெல்லாம் நுணுக்கமாக ஆராய்வ தென்ருல் பல தினங்கள் செல்லும். எனவே ஆலயத்தை ஒரளவு சுற்றிப் பார்த்த பிறகு இராமாயணச் சித்தி ரங்களின் மீது எனது கவனத்தை செலுத்த முற் பட்டேன்.
பரத கண்டத்தில் புனித நூலாக வழங்கிவரும் இராமாயணம் தாய்லந்தில் "ராமாகியன்" என்ற பெயரில் புகுந்துள்ளது. மரகத புத்தர் ஆலயச் சுவர் களில் இராம. யணக் காட்சிகள் தொடர்பாகச் சித்தி ரிக்கப்பட்டுள்ளன. இராம பிரான் வானரத் தலைவனன அநுமானுடைய உதவியோடு சீதையை இராவணனிட மிருந்து மீட்டுவரும் சரிதம் வண்ண ஒவியங்களாகக் காட்சி தருகிறது.
இராமாயணத்தின் வருகை
இராமாயணக் காதை சியாம் தேசத்தை வந்த டைந்த சரிதம் மிக விரிவான தொன் ருகும். பண்டைக் காலம் முதல் தொடர்பாக நிகழ்ந்து வந்த இந்தியர் களின் குடியேற்றம் இந்தோனீசியா, இந்தோ சீன ஆகிய நாடுகளில் இந்திய கலாசார, ஆதிக்கத்தைப் பெருமளவில் ஏற்படுத்தி விட்டது. அத்தோடு அர சியல் ஆதிக்கமும் வளரவே பல தென்கிழக்காசியப் பிரதேசங்கள் ஹிந்துப் பிரதேசங்களாக விளங்கத் தலைப்பட்டன.
தாய்லந்தில் வழங்கும் இராமயணசரிதம் ஜாவா கம்போடியா, ஆகிய நாடுகளினூடாகவே வந்தடைந் திருக்க வேண்டும் தாய்லந்து சரித்திரத்தில் அயுத்திய காலத்தில்தான் இராம சரிதம் மிகவும் பிரபல்ய மடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

Page 27
52
தாய்லந்தில் வழங்கும் இராமாயணம் நாமறிந்த சரிதத்திலிருந்து பல மாறுதல்களைக் கொண்டதாக உள்ளது. விசேஷமாகக் குறிப்பிடவேண்டிய தென்ன வென்ரு ல், பெளத்த நாடாகிய தாய்லந்தில் இராமா யணத்தின் தெய்வீகத் தன்மை முக்கியத்துவம் பெற வில்லை. இப்பெருங் காவியத்தைக் கலையின் களஞ்சிய
மாகவே கண்டனர் தாய் மக்கள்.
மேலும் முதலாவது ராமா அரசர் காலம்வரை இராமசரிதை முழுவதாக எழுத்து வடிவில் பதிவாக வில்லை என்று கூறப்படுகிறது. அவ்வரசரே ராமாகி யனை காவிய வடிவில் பூரணப்படுத்தி வைத்தார். முன்னரெல்லாம் பாவைக் கூத்துப் பாடல்களாக வழங்கி வந்த இராமாயணப் பாடல்கள், நாட்டியத் தோடு இசைப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப் Lւ ւ-Ցl.
பூர்வீக இராமாயணத்தில் சில மாற்றங்கள் காலக் கிரமத்தில் இடம் பெற்றன. ராமாகியனக மாறிய இராம சரிதையில் இலங்கையில் இராவணனேடு நிகழ்ந்த போரைப் போன்ற மற்ருெரு நீண்ட யுத்த மும், இரு சிறு போர்களும் இடம் பெருகின்றன. இலங்கை வேந்தன் இராவணன் தாய்லாந்துக் காவியத்தில் "தசகந்த்' (தசகண்டன்) ஆகப் பெயர் மாறுகிருன்.
ராமாகியனில், "மையராப்" என்ற ஒரு முக்கிய பாத் திரம் இடம் பெறுகிருன் மையராப் ஒரு மாந்திரீகன். அவன் தாயரிக்கும் மந்திரப் பொடியின் உதவியால் பெரும்படைகளையெல்லாம் மயக்கி ஆழ்ந்த நித்திரை யில் செலுத்தி விடமுடியும். இந்த மந்திரப் பொடியை உபயோகித்து "மையராப்" இராமனைத் தூக்கிச்

53
செல்லும் சம்பவமொன்றும் ரா மாகியனில் இடம் பெறுகிறது. இச் சம்பவத்தின்போது இராமன் அநும னுடைய பாதுகாப்பில் இருப்பதாகக் கதை உள்ளது. அநுமன் மிகப் பிரமாண்டமான உருக் கொண்டு இராமனைத் தனது வாயினுள் வைத்து பாதுகாக் கிருன். VM
தாய் மக்களின் இலக்கியத் துறையில் இராமா யணம் இடம்பெற்றுள்ளது போலவே அவர்களுடைய சித்திரம், சிற்பம் ஆகிய கலைகளிலும், இசையிலும் நாட்டியத்திலும் பரவி நிற்கின்றது. இராமாயண பாத்திரங்கள் அவர்களுடைய கட்டிடங்களை அலங்கரிக் கின்றன. நாட்டிய நாடகங்களில் இராமாயண சம்ப வங்கள் இடம் பெறுகின்றன.
நாட்டியமும் நல்லிசையும்
தாய்லாந்து அரசாங்கம் கவின்கலைகளுக்கு மிகுந்த ஆதரவளித்துவருகின்றது. கவின் கலைப் பகுதியின் ஆதரவில் உள்ள சில்பகோர்ன் தியேட்டரில் தாய் நடனங்களும் இசை நிகழ்ச்சிகளும் கிரமமாக நிகழ்ந்து வருகின்றன. இராமாயண சம்பவங்களை யொட்டி நடை பெறும் கோன் (Khon) எனும் "தாய்’ நாட்டிய நிகழ்ச்சி குறிப்பிடத் தக்கதாகும்.
கோன் நாட்டியத்தில் பிரதான பாத்திரங்கள் முகமூடியணிந்து காட்சியளிப்பர். பலவர்ண ஆடைகள் அணிந்து தோன்றும் பாத்திரங்கள் வாத்தியங்களின் ஒசைக்கிண்ங்க பலவித அங்க அசைவுகளால் சம்பவங் களை சபையோருக்கு விளக்குவர். இராமர் வேடத்தில் தோற்றும் பாத்திரம் பச்சை உடை அணிந்திருப் பார். இலக்குமணன் பொன்னிற ஆடையையும்

Page 28
54
அநுமன் வெண்ணிற ஆடையையும் அணிந்திருப் Luntri • • •
இவ்விதமாகக் கலை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கவின்கலையின் ஏனைய துறைகளிலும் இராமாயணம் பரவி தாய் நாட்டின் கலாசாரத்தை வளப்படுத்தி வருகின்றது.

?. மிதக்கும் சந்தை
மீனும் நதிக்கரையில் நான் நின்று கொண் டிருந்தேன். பாங்காக் நகரைப் போர்த்தியிருந்த இருட்கணத்தை காலைப்பரிதியின் மென்கிரணங்கள் மெல்லெனப் போக்கிக்கொண்டிருந்தன.
ஆற்று நீர்ப்பரப்பினையும் ஆங்காங்கே தொலைவில் தென்பட்ட ஆலயங்களின் முகட்டினையும் பகலவன் தன் பொன்னெளி வீசிப்பளிச்சிடச் செய்து கொண் டிருந்தான். மனதிற்கினிய காட்சி நல்கும் வட்அருண்' அக்கரையிலே தங்கமுலாம் தரித்துத் தனிச் சோபை யுடன் விளங்கிக் கொண்டிருந்தது. அதிகாலையில் ஆற்றங்கரையிலே
கடந்த இரவு நித்திரைக்குச் செல்லுமுன்பே சிப்பந்தியொருவன் புன்முறுவலுடன் கலந்த எச்சரிக் கை விடுத்திருந்தான். 'மிதக்கும் சந்தையைக் காணச் செல்வதாயிருப்பதால் அதிகாலையிலேயே ஆற்றங் கரைக்கு சென்றுவிட வேண்டும்” எனறு அவன் கூறிய உபதேசத்தின் படிதான் நான் மீனம் கரையில் நின்று கொண்டிருந்தேன்.
என்னைப்போலவே மற்றும் பல மேல்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் சிறுசிறு கூட்டங்களாக நின்று சாலையின் அமைதியைக் கலைத்துக்கொண்டு நின்றனர்,

Page 29
56
எல்லோருமே மிதக்கும் சந்தைக்கு எம்மை ஏற்றிச் செல்லும் படகுக்காகவே காத்து நின்ருேம்.
மேல்நாடுகளில் முன் பின் அறியாத ஒருவரோடு மற்ருெ?ருவர் பேச்சுத் தொடங்கவேண்டுமென் ருல் காலநிலையைப்பற்றித்தான் முதன் முதலில் குறிப் பிடுவது வழக்கம். "எவ்வளவு அழகான காலை வேளை!" ‘வெய்யில் இப்படி எரிக்கிறதே!" என்பன போன்ற காலவர்ணனையோடுதான் பேச்சு ஆரம்பமாகும். இந்தச் சம்பிரதாயத்தை யொட்டி நானும் காலத்தின் துணைகொண்டு அங்கே நின்ற சிறிய கூட்டமொன்றி னுடன் கலந்துவிட்டேன்!
மிதக்கும் சந்தைக் காட்சி
பாங்காக் நகருக்கு வரும் எவரும் அந்நகரின் சிறப்பம்சங்களுள் ஒன்ரு கிய மிதக்கும் சந்தைகளைச் காணத் தவறுவதில்லை. மீனம் ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல்வேறு குளங் (Kong) என்றழைக்கப்படும் கால்வாய்களில்தான் மிதக்கும் சந்தைகளை நாம் காண முடியும் . இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்ட உல்லாசப் படகுகளில் சென்று சந்தைக் காட்சியைக் கண்டுகளிக்க முடியும்.
சாதாரணமாக ஒரு சந்தையில் நாம் வாங்கக் கூடிய எல்லாவிதமான பொருட்களையுமே இந்த மிதக்கும் சந்தையில் பெறலாம். இங்கு நூற்றுக்கணக் கான படகுகளில் பொருட்களை அழகுற அடுக்கி வைத்து விற்பனை செய்கிருர்கள் தாய் வியாபாரிகள். உணவுப் பொருட்கள்தான் அதிகமாகி விற்பனை யாகிறது.
மரக்கறிவகைகள், பழங்கள், மீன் வகைகள், பூக்கள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் எத்தனையோ

5i
விதமான பொருட்களையெல்லாம் படகோட்டிகளிட மிருந்து பெற்றுக்கொள்ள முடியும். படகுகளை நிரப்பி நிற்கும் இந்த மிதக்கும் சந்தை உள்ள கால்வாய்களின் கரையோரத்திலும் பலவிதமான கடைகளை நாம் காண முடியும். மரக்குத்திகளின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகளிலும் வாழ்க்கைக்குத் தேவையான சகல பொருட்களும் பெறக்கூடியதாயிருக்கின்றது. சந்தையில் மகளிர் திறமை
சந்தை வியாபாரத்தில் பெண்கள் மிகவும் முக்கிய மான இடத்தை வகிக்கிரு ர்கள். பெருந்தொகையான படகுகளில் பெண்களே பலவிதமான பொருட்களையும் கொணர்ந்து விற்பனை செய்கிறர்கள். படகுகளைச் செலுத்தும் அவர்களே பெருந்தொகையாய்க் கூடி யுள்ள படகுகளினூடே தங்கள் படகுகளைச் சாதுரிய மாகச் செலுத்திச் செல்வது வியப்புக்குரியதாகும். ஒலையினல் செய்யப்பட்ட ஒருவகையான தொப்பிகளை எல்லோருமே அணிந்து கொள்ளுகிரு?ர்கள். நீண்ட நேரம் வெயிலில் செல்லவேண்டியிருப்பதால் அகல மான இந்தத் தொப்பிகள் மிக அவசியமாகிறது.
சமைக்கப்பட்ட ருசிகர உணவு பதார்த்தங்களும் இந்தச் சந்தையில் விற்பனையாகும். அனைத்தும் படகு களிலே வைக்கப்பட்டிருப்பதனுல் வர்த்தகப் பெண்டிர் கால்வாய்க்கரை நெடுக அமைந்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கெல்லாம் நேரில் சென்று வீட்டடியி லேயே உணவு பரிமாற முடிகிறது.
எனது படகிலிருந்தவாறே சந்தைக் காட்சியை அநுபவித்து வந்தேன் நான். நானும் ஏதாவது வாங்க வேண்டும்போலிருந்தது. மூங்கில் பிரம்பினுல் செய்யப் பட்ட சிறுசிறு வண்ணக் கூடைகள் சில எனது
தா.-4

Page 30
58
மனதைக் கவர்ந்தன. விலையும் மலிவாயிருந்தது. பல கூடைகளை வாங்கிக்கொண்டேன். தாய்மார்கள் அணியும் ஓலைத் தொப்பியொன்றையும் வாங்கிக் கொண்டன். எனது கைநிறைய பொருட்கள் ஆகி விட்டது. என்னேடு வந்த அமெரிக்கப் பிரயாணி யொருவர் சிரித்துக்கொண்டே "ஆமாம் இந்தக் குப்பையெல்லாம் (all this junk) எப்படி இலங்கைக்குக் கொண்டு சேர்க்கப்போகிருய்? உனது பயணம் விமானத்தில் என்பதை மறந்துவிட்டாயா?" என்று கேடடார். அப்போதுதான் இந்தப் பிரச்னை எனது மனதில் விழுந்தது. முடிவு என்னவென்று நினைக் கிறீர்கள்? பிரம்புக் கூடைகளில் சிலவற்றை ஒருவருக்கு அன்பளித்துவிட்டேன். இலங்கை திரும்பு மட்டும் ஒலைத் தொப்பியை தலையில் அணிந்துகொண்டேன். இரத்மலானை விமானத் தளத்தில் வந்திறங்கியபோதும் கூட பூரண வெள்ளேக்கார “சூட்டில்", ஆனல் தலையில் தாய் ஒலைத் தொப்பியோடு நான் காட்சியளித் தேன். எதைத் தவறவிட்டாலும் தொப்பியை இழக்க விரும்பவில்லை நான் !
கரையோரப் பண்டகசாலைகள்
மிதக்கும் சந்தைக்குச் சென்று வரும்போது குளங் களினதும், மீனம் ஆற்றினதும் கரையோரங்கள் தாய் லாந்தின் பொருளாதார சுபிட்சத்திற்குப் பகரும் சான்றினையும் நான் அவதானித்து வந்தேன். ஆற்றங் கரைகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பண்டக சாலைகள் தாய்லாந்தின் விளைபொருட்களைத் தம்முள் அடக்கி நிற்கின்றன.
தாய்லாந்தின் பிரதான விளைபொருள் நெல் தானியுமாகும். தனது உணவுத் தேவைக்கு மேலதிக

59
மான நெல் உற்பத்தியைக் கைக்கொண்டுள்ளது இந் நாடு. தாய்மக்களுள் சுமார் 85 அல்லது 90 சதவீதத் தினர் விவசாயிகளே. நெற்பயிர்களின் உற்பத்தியைக் கவனிப்பதற்கென விவசாய இலாக்காவில் ஒரு தனிப் Lugi 5 (Rice Department) 61 ibu G55lul "Lig-(556jD31. குன்றினையொத்த அரிசிக் குவியல்
ஆற்றங்கரையிலுள்ள பெருங்கு தங்களில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசி வகைகளைக் கண்ட நான் ஒருகணம் திகைத்துப் போனேன். அரிசிக்குப் பஞ்சப்பட்டு நிற்கும் நாட்டவன் நான். எனவே ஏற்றுமதிக்காகப் பண்டகசாலைகளை நிறைத்து நிற்கும் அரிசிக் குவியல்களை கண்டு வியப்படைதல் இயல்புதானே. இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் தாய்லாந்தும் ஒன்முக இருந்து வருகின்றது.
ஆற்றங்கரை நெற்கு தங்கள் என் சிந்தனைக்குச் சிறகு கட்டிவிட்டன. கீழ்த் தேசங்களின் தானிய களஞ்சியம் என்று ஒரு காலத்தில் புகழ் பூத்த இலங்கை யின் மீது எண்ணம் படர்ந்தது. அதே வேளையில் "சோறுடைத்து சோழவள நாடு’ என்று பறைசாற்றி நின்ற தென்னகத்தையும் எண்ணிப் பார்த்தேன். இன்று பற்ருக்குறை பாடிக் கூட்டுறவு கடைகளிலே அரிசிச் சீட்டேந்தி அணிவகுத்து நிற்கும் எமது சகோதர சகோதரிகளும் என் அகக் கண்களிலே காட்சி அளித்தனர். ஒரு காலத்தில் எமது நாடுகளும் நெல்வளத்தில் தாய்லாந்தை ஒத்திருக்க வேண்டும்!
தாய்லாந்து அந்நியர் ஆட்சி காணுத நாடு. எனவே அதன் நெற்பயிர் வேறு பயிர்களாகப் பயிரிடப்படவில்லை. ஆனல் எமது நாட்டிலோ மிகப்

Page 31
60
பெரும் பரப்பான நன்செய், புன் செய் நிலங்கள் புறக் கணிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங் சளும் அழிந்துபட்டன. ஆட்சியாளர் எண்ணமெல் லாம் தேயிலை, ரப்பர், கொக்கோ ஆகியவற்றில் தான் திளைத்திருந்தது. இதன் விளைவுதான் இன்றைய நிலை!
தேக்குமாமும் ஏற்றுமதியும்
தாய்லாந்தின் ஏற்றுமதிப் பொருட்கள் அரிசிக்கு அடுத்ததாக உள்ளவை இரப்பரும், டின்னும், தேக்கு மரங்களுமாகும். ஒரு காலத்தில் தேக்குமரக் கட்டை களின் ஏற்றுமதி மிகுந்திருந்தது. அதுவே ஏற்றுமதிப் பட்டியலில் இரண்டாவது தானத்தைப் பெற் றிருந்தது. உலகநாடுகளின் தேக்கு மரத் தேவைகளிற் பெரும் பகுதியை தாய்லாந்த்ே உதவிவந்துள்ளது.
எனது படகுப் பயணத்தின் போது பெரு வாரி யான தேக்கு மரக்கட்டைகள் ஒன்ருேடொன்று இணைக்கப்பட்டு ஆற்றில் மிதந்து வருவதைக் கண் ணுற்றேன். வடக்கேயுள்ள பிரதேசங்களில் வெட்டப் படும் தேக்கு மரங்கள் துண்டுகளாக நறுக்கப்பட்டு மீனம் ஆற்றின் வழியாகவே மிதக்கவிடப்பட்டு ஏற்றுமதிக்காக பாங்காக் நகர் வந்தடைகின்றன. தேக்கு மரங்களை வெட்டி நகர்த்தி அடுக்குவதற்கெல் லாம் நவீன இயந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன வென்றலும் இந்த வேலைகளில் யானைகள்தான் மிகவும் திறமை வாந்தவைகளாயிருக்கின்றன. எனவே பெருந் தொகையான யானைகள் இத்தொழிலில் ஈடுபடுத்தப் படுள்ளன. தொழில் துறையில் யானைகளை வேலைக் கமர்த்திக்கொண்டுள்ள வெகு சில நாடுகளுள் தாய் லாந்தும் ஒன்ருகத் திகழ்கிறது.

61.
மன்னர்க்குரிய வெள்ளை யானை
தாய்லந்தின் காடுகளில் பெருந்தொகையான யானைகள் யதேச்சையாகத் திரிகின்றன. காட்டு யானைகள் அனைத்தும் சட்டப்படிக்கு அரசாங்கத்துக்கு உரியனவாகும். தாய்லந்தின் "வெள்ளே யானைகள் உலகப் பிரசித்தி வாய்ந்தவை. உண்மையில் இந்த யானைகள் வெள்ளை நிறம் பொருந்தியவைகளல்ல; ஒருவித சாம்பல் நிறமான இந்தயானைகள் அதிர்ஷ்டம் பொருந்தியவைகளாகக் கருதப்படுகின்றன. அரிதாக உள்ள வெள்ளை யானையொன்று கண்டுபிடிக்கப் பட்டால் அது உடனடியாக நாட்டின் அரசருக்கு அளிக்கப்பட்டுவிடும்.
தொழில் புரியும் தாய்லந்து யானைகளைப்பற்றி குறிப்பிடும்போது ஒர் ஆங்கிலேய எழுத்தாளர் தாய் லந்துக் குரங்குகளைப்பற்றிக் கூறியிருப்பதையும் எடுத் துக் காட்டாமலிருக்க முடியாது. தொழிலில் திறமை காட்டுவது யானைகள் மாத்திரமன்று. தென்னந் தோப்புக்களில் தேங்காய் பறிக்கும் வேலைக்குக் குரங் குகள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த வேலைக்கு குரங்குகள் மிகவும் கிரமமாகப் பழக்கப்படுகின்றன. தனது எசமான் குறிகாட்டும் காய்களைச் குரங்கு பறித் துப் போடும்,
ஒரு குரங்கு தேங்காய் பறிக்கும்போது தனது எசமான் குறிப்பிடாத தேங்காய்க் குலையைத் தவழுகப் பறித்துவிட்டால் அது உடனே மரத்திலிருந்து இறங்கி வந்து தனது தவறுக்காகத் தன்னை நன்முக அடிக்கும் படி எசமானிடம் தனது பின்புறத்தைக் காட்டி நிற்கு மாம். தொழிற் கட்டுப்பாட்டை உத்தேசித்து தவறு செய்த குரங்கைத் தண்டிப்பது அவசியமாம். எனவே

Page 32
62
எசமான் தண்டிக்க விரும்பாவிடினும் கூட் தொழில் நலங் கருதி குரங்குக்கு அடி போடவே வேண்டுமாம். மனிதனுக்கு அவனுடைய தொழிலில் உதவி புரியும் யானையையும், குரங்கையும் பற்றி நினைக்கும் போது ஜப்பானில் மீன் பிடித் தொழிலில் மீனவருக்கு உதவும் ஒரு வகை வாத்துக்கள் எனது நினைவிற்கு வருகின்றன. இவை மீன் பிடிப்பதில் மிகுந்த திறமை வாய்ந்தவை. ஆனல் பிடிக்கும் மீனை விழுங்கிவிடாதவாறு செய்ய நெருக்கமான வளையங்களை மீனவர் இந்த வாத்துக் களின் கழுத்துகளில் மாட்டிவிடுவார்கள். இந்த வாத்துக்களின் நிலை நமது நாட்டில் வாயைக் கட்டி குடு மிதிக்க விடப்படும் எருமைகளின் நிலையை ஒத்திருக்கிறது! வளமிக்க துறைமுகம்
ஏற்றுமதிக்காக பாங்காக் நகரில் வந்து குவியும் அரிசியையும், தேக்கையும் போல மற்றும் பல விளை பொருட்களையும் பண்டக சாலைகளில் நான் கண்டேன். மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாகவும் பாங்கொக் விளங்குகின்றது. பெரிய பெரிய கப்பல்களெல்லாம் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக பாங்கொக் வந்து செல்கின்றன.
சந்தை போய்த் திரும்பி வரும் வழியில் படகி லிருந்தவாறே தாய்லந்தின் பொருளாதாரம் பற்றிய பல உண்மைகளை நான் அறிய முடிந்தது. ஆற்றங் கரைக் காட்சிகளிலேயே கவனத்தைச் செலுத்தி வந்த எனக்கு எனது படகு இறங்கு துறையை அடைந்து விட்டது கூடத் தெரியவில்லை.
கரை சேர்ந்ததும் கடும்பசி தலை தூக்கியது. கூட வந்த பிரயாணிகளிடம் விடை பெற்றுக்கொண்டு விரைந்தேன் சோற்றுக்கடையை நோக்கி!

8. இசையும் நடனமும்
அன்று மாலை தாய் நடன நிகழ்ச்சியொன்றினைக் காண்பதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்து அநு மதிச் சீட்டும் பெற்று வைத்திருந்தேன்.
பெருந் தொகையான உல்லாசப் பிரயாணிகள் வந்து போகும் நகரமாதலால் பாங்காக்கில் அவரி களுக்கான விசேஷ கலை நிகழ்ச்சிகள் பல நடைபெறு கின்றன. தாய் சங்கீதம், நடனம், நாட்டிய நாடகம் ஆகியவைகள் கலந்த கதம்ப நிகழ்ச்சி யொன்றினைக் காண்பதற்கே அன்று நான் சென்றேன்.
மாலை ஐந்தரை மணியளவில் நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து என்னைத் தியேட்டருக்கு ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் வந்து நின்றது. டிரைவருக்கு ஒரளவு ஆங்கிலம் தெரிந்தி ருந்தது. எனவே தியேட்டர் சென்றடையும் வரை பாங்காக் நகரின் இரவு காலக் களியாட்டங்களைப் பற்றி விசாரித்துக்கொண்டே சென்றேன்.
மேல் நாட்டுக் கலாசாரம்
கடந்த சில ஆண்டுகளாகவே மேல் நாட்டுக் கலா சார ஆதிக்கம் பாங்காக்கில் பெருகி வருவதாகவும் யுத்த காலங்களில் இராணுவத் துருப்புக்களின் நட மாட்டமும் நகரின் போக்கை மாற்றி வருவதாகவும்

Page 33
64
டிரைவர் கூறினன். உல்லாசப் பிரயாணிகளாக வரும் பல்லாயிரக் கணக்கான மேல் நாட்டவரின் தேவை களுக்கு ஈடுசெய்ய முயற்சிக்கும் இந்நகரம் தனது தோற்றத்திலும் கலாசாரத்திலும் திருப்பங்களைக் கண்டு வருவதில் வியப்பில்லையல்லவா? நல்ல வேளை யாக தாய்லந்துக் கலைகளின் இருப்பிடங்களான ஆல யங்கள் எவ்வித மாற்றங்களுக்கும் இலக்காகாது என்றும்போல் எழில் காட்டி நிற்கின்றன!
சொற்ப நேரத்தில் தியேட்டர் வாசலில் நிறுத்தப் பட்டது, நான் சென்ற கார். அங்கே பெரிய கூட்டம் எதுவும் காணப்படவில்லை. டிரைவரை ஏறிட்டுப் பார்த்தேன் நான். எனது முகக் குறியைப் புரிந்து கொண்ட டிரைவர் "என்ன யோசிக்கிறீர்கள்! இன்று கலைக் காட்சி இங்கு நடைபெறத் தான் போகிறது. இது பொது மக்களுக்கான நிகழ்ச்சியல்ல. உல்லாசப் பிரயாணிகளுக்காகவே பிரத்தியேகமாக நடைபெறு கிறது. எனவே, அதிகம் பேர் மண்டபத்தில் இருக்க மாட்டார்கள்” என்று விளக்கங் கூறினன்.
தியேட்டருக்குள் சுமார் முப்பது பேர்கள் மட்டுமே இருந்தார்கள். வசதியான ஆசனமொன்றில் நானும் சென்று அமர்ந்து கொண்டேன்.
கலைக்கு அரசினர் ஆதரவு
இசையிலும், நாட்டியத்திலும் தாய் மக்கள் பெரி தும் ஈடுபாடுடையவர்கள். அரசினரும் இவற்றின் வளர்ச்சியில் மிகுந்த கவனஞ்செலுத்தி வருகின்றனர். இசை நடனம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக அர சாங்கத்தின் நுண்கலைப் பகுதியொன்று செயல்பட்டு, வருகின்றது. இப்பகுதியின் ஆதரவில் தான் பிற

65
நாட்டவர்களுக்கு இக்கலைகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன.
அன்றிரவு நிகழ்ச்சி, தாய் (பிஃபாத்) வாத்தியக் குழுவினரின் இசையோடு ஆரம்பமாகியது. இதே வாத்தியத்தைப் பின்னணியாகக் கொண்டுதான் நடனங்களும் நடைபெற்றன. பல வாத்தியக் கருவி கள் கச்சேரியில் இடம் பெறுவதால் மேடை நிறைந்து காணப்பட்டது அவ்விசைக்குழு,
ஐந்து அல்லது பத்து வாத்தியக் கருவிகளைக் கொண்ட தாய் இசைக்கோவை "பிஃபாத்” (Piphat) என்று அழைக்கப்படுகிறது. இதில் மேளம், குழல் முதலான கருவிகள் இடம் பெறும். இசைக் குழுவினர் தரையில் அமர்ந்தே தமது கருவிகளை இசைப்பார்கள். "பிஃபாத்" என்னுஞ் சொல்"பி" என்ற தாய்ச் சொல்லும் "வாத்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லும் சேர்ந்து தோன்றியதாகும்."பி" என்பது "தாய்’ மொழி யில் ஒருவகை குழலாகும். பிஃபாத் என்ற சொல், ஃ பி ன்ஃபாத் (Phinphat) அதாவது வீணை -வாத்ய என்ற சொல்லின் வழியே தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. உளங்கவர் இன்னிசை
மேடையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வாத்தியக் கருவிகளிலிருந்து எழுந்த இனிய இசை அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தது. பல நாடுகளி லிருந்து வந்தவர்களாயிருந்தாலும் கூட சபையினர் இசையை மிகவும் ரசித்து மகிழ்வதை நான் அவதா னித்தேன். எல்லாவிதமான வரம்புகளையும் கடந்து நிற்பது இசை என்ற உண்மையை அங்கு நான் உணரக் கூடியதாயிருந்தது.

Page 34
66
வாத்தியக் குழுவினர் தமது நிகழ்ச்சியை முடித் துக்கொண்ட பிறகு மேடைக்கு முன்னல் பதிவாக அமைக்கப்பட்டிருந்த ஒரிடத்தில் தங்கள் கருவிகளை எடுத்துச் சென்று அங்கிருந்தவாறே நடன நிகழ்ச்சி களுக்குப் பின்னணி இசை உதவத் தொடங்கினர்கள். சபையிலிருந்த எங்கள் கவனம் கண்கவர் ஆடையலங் காரத்தோடு தோன்றிய நடனப் பெண்டிர்மீது படர்ந்தது. நங்கையரின் நடனம்
மேடையில் தோன்றிய நாட்டியப் பெண்கள் தங்கள் தலைகளில் மிகவும் உயரமான கிரீடங்களை அணிந்திருந்தார்கள். அவர்களுடைய ஆபரணங்களும் உடைகளும் பெரும்பாலும் இந்திய நடனத்துக்குரிய வைகளை ஒத்திருந்தன. அவர்களின் ஆட்டமும் அங்க அசைவுகளும் வேகம் குறைந்ததாகவும், ஆனல் கருத்து நிறைந்ததாகவும் காணப்பட்டன. தாய் நடனங்களின் நுட்பங்களைப்பற்றிய விளக்கம் இல்லாத வர்களுக்கு இந்த நடனங்களைப் பூரணமாக இரசிப்பது கடினமாகவேயிருக்கும்.
தாய் நாடகங்களும், நாட்டிய நாடகங்களும் பழங்காலத்திலிருந்தே வளர்ச்சியடைந்து வந்திருக் கின்றன. நாடகங்கள் இராமாயண சம்பவங்களைச் சித்திரிப்பதாக உள்ளன. நாடகங்களில் நடிகர்கள் பலவிதமான முக அணிகளைத் தரித்துக் கொள் வார்கள்.
அன்றிரவு நாங்கள் கண்டு களித்த காட்சிகள் மிசவும் சொற்ப நேரத்துக்குள்ளேயே நடைபெற்ற தால் பொறுக்கியெடுக்கப்பட்ட சில நிகழ்ச்சிகள் மாத் திரமே இடம் பெற்றன. தாய் நடனங்களில் பிரதி

67
நிதித்துவம் வாய்ந்த சிலவற்றை மட்டும்தான் ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்திய முஸ்லிம் நண்பர்
அன்றிரவு நடனக் காட்சிகளைக் கண்டுவிட்டு வரும் போது ஒர் இந்திய முஸ்லிம் கடைத்தெருவில் என் ணுேடு பேச்சுத் தொடர்ந்தார். அவர் சிறு வயதி லேயே பாங்காக் நகருக்கு வந்தவர், அங்கே நாணய மாற்றல் (Money Changer) தொழிலில் ஈடுபட்டிருந் தார்: நான் இலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் என்று அறிந்ததும் அவர் தமது கடைக்கு என்னை அழைத்துச் சென்று நீண்ட நேரம் தாய்லந்து முஸ்லிம் கள் நிலைபற்றி அளவளாவினர். அவருடைய அறி முகத்தை நான் தக்கபடி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்து அவருக்குத் தெரிந்த தாய் முஸ்லிம் வீடொன்றிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா என்று விசாரித்தேன்.
"நாளைக்கு எனது நண்பரொருவர் வீட்டில் நாற் பதாம் "கத்தம்" நடைபெறுகிறது. அங்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் வருகிறீர்களா?" என்ருர் அவர் சற்றுத் தயக்கத்தோடு. ஏனென்றல் ஒருவர் இறந்த வீட்டில் அவருடைய ஆத்ம சாந்திக்காக நிகழ்த்தப்படும் இந்தச் சடங்கில் கலந்து கொள்வ தற்குப் பலர் விரும்புவதில்ல. ஆனல் நானே உடனடி யாக அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அதற்குக் காரணம் இப்படியான சில சந்தர்ப்பத்தில் தாய் முஸ்லிம்களுடைய பழக்க வழக்கங்களை நேரில் கண்ட றிய முடியும் என்பதற்காகத்தான்.
மறுநாள் பொழுது விடிந்தவுடனேயே எனது இந்திய நண்பர் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்

Page 35
68
டார். பெரிதும் சிறிதுமான பல தெருக்களினுடாக நாங்களிருவரும் நடந்து சென்ருேம். சன நெருக்கடி யான நேரம் அது.
அறபு மொழித் தேர்ச்சி
நாங்கள் சென்ற வீடு தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில் மரக் குத்திகளின்மேல் அமைக்கப்பட்டிருந் தது. தரை முழுவதும் மரப் பலகைகளினலானது. வீட்டினுள் சென்று தரையில் தான் நாங்கள் அமர்ந் தோம். மற்றும் பல உறவினர்களும் நண்பர்களும் ஏற்கனவே அங்கு கூடியிருந்தார்கள். “மெளத்தான” வருடைய பெயரில் "கத்தம்" ஒதப்பட்டது. ஓதுதலில் இரண்டொருவர் கலந்துகொண்டார்கள். அறபு மொழியில் இவர்களுக்கு நல்ல தேர்ச்சியுண்டு. மேலும், ஒதியவர்கள் மிகவும் இனிமையான குரலில் ஒதினர்கள். அறபு மொழி உச்சரிப்பும் மிகவும் தெளிவாகவும் மொழி மரபுக்கேற்றவாறும் அமைந் திருந்தது.
மலேவியாவிலிருந்து வந்து தாய்லாந்தில் குடி யேறியுள்ள சில மலாய் முஸ்லிம் சளையும் அவ்வீட்டில் நான் சந்தித்தேன்.
"கத்தம்’ நிகழ்ச்சிகளில் வீட்டுப் பெண்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் புறம்பாகவே வீட்டின் உட்புறத்தில் இருந்தார்கள்.
ஒதுதல் முடிந்த பிறகு, வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட்துது சோறும் கோழிக்கறியும் பலவகை மரக் கறிகளும் வைக்கப்பட்டிருந்தன. இலங் கையில் ஐந்து அல்லது ஆறு பேர்கள் ஒரு பெரிய பீங்கானைச் (சஹனை) சுற்றியிருந்து கொண்டு கூட்டாக

69
உணவருந்துவது போலவே இங்கும் ஒரு தட்டில் நான்கு பேர் கூடிச் சாப்பிட்டோம்.
(poinc6b 356T FITO in
உணவருந்துவதற்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் உப்புக்கட்டிகள் தரப்பட்டன. முதலில் உப்புக்கட் டியை சுவைத்துவிட்டே சாப்பிட ஆரம்பித்தோம். இப்பழக்கம் தமிழகத்திலும், இலங்கையிலும் முஸ்லிம் களிடையே இருந்து வருகிறது. குடிப்பதற்காக வைக் கப்பட்டிருந்த தண்ணிரில் பன்னீர் ஒரளவு தெளிக்கப் பட்டிருந்தது. உணவு மிகவும் ருசிகரமாகத் தயாரிக் கப்பட்டிருந்ததென்பதைக் கூற வேண்டியதில்லை.
அன்றிரவு நான் கலந்துகொண்ட மார்க்கச் சடங் கும், உணவுப் பரிமாற்றமும் பெரும்பாலும் நம் நாட் டுப் பழக்க வழக்கங்களையே ஒட்டியிருக்கக் கண்டேன். தாய் முஸ்லிம்களின் கலாசாரமும் இந்தியா, மலேயா முதலிய நாடுகளிலிருந்து பரவியதாகவே காணப்படு கின்றது.

Page 36
9. அன்ஜுமன் இஸ்லாம் LI TL LJFIT25)
பங்கொக் நகரை விட்டும் பிரிந்து செல்வதற் கான நாள் நெருங்கி விட்டது!
கடந்த இரவு ஒரு தாய் முஸ்லிமின் வீட்டில் நடை பெற்ற மார்க்கச் சடங்கில் கலந்து கொண்ட எனக்குச் சில தாய்லந்து முஸ்லிம்களைக் கா ணவும் அவர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்புக்கிட்டியது.
நான் தங்கியிருக்குமிடத்திற்குச் சமீபத்திலேயே ஒரு முஸ்லிம் பள்ளிவாயலும் அதற்குப் பக்கத்தில் ஒரு முஸ்லீம் பாடசாலையும் இருப்பதாக அன்றிரவு கேள்வி பட்டேன். தாய்லந்தின் தலைநகரை விட்டுச் செல்லு வதற்கு முன்னர் அந்நாட்டு முஸ்லீம்கள் பற்றி மேலும் பல தகவல்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். முஸ்லிம் பள்ளிவாயல்
நான் அந்தப் பள்ளிவாயலுக்குச் சென்ற நேரம் தொழுகைக்கு உரிய நேரமன்று. எனவே இரண்டொரு வர் மட்டுமே அப்பள்ளியில் காணப்பட்டனர். மிகவும் சிறியதொரு பள்ளிவாயல் அது. பழைய கட்டிடமான அலும் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. வியாபாரத் கலங்களுக்கு அண்மையில் அப்பள்ளிவாயல் இருப்ப

7.
தால் பெரும்பாலும் அப்பகுதியில் கடமையாற்றும் இந்தியக் காவல் தொழிலாளரும், ஏனைய தாய் முஸ் லிம்களும் இப்பள்ளியை உபயோகித்து வருகின்றனர். தாய் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கச் சடங்குகளில் அறபு மொழியைத்தான கையாண்டு வருகிறர்கள், திருக்குர் ஆனைத் தாய் மொழியில் மொழி பெயர்க்கும் முயற்சியும் அங்கு நடைபெற்று வருகின்றது. ஏற் கனவே திருமறையின் சில அத்தியாயங்கள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்று பள்ளி வாயலில் நான் சந்தித்த முஸ்லிம் ஒருவர் கூறினர்.
கலாச்சாரத் தனித்தன்மை
தாய்லந்தில் வாழும் முஸ்லீம்களைப் பற்றி நான் சந்திக்கும் போது பலவகைகளில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கும் இவர்களுக்குமிடையே ஒப்புமை காணக் கூடியதாயிருந்தது. தாய்லந்தில் பெரும் பான்மையோர் பெ ள த் த மதத்தினர். 1960ம் ஆண்டின் சனக் கணக்கெடுப்பின்படி 1,025,569 மிஸ்லிம் கள் அங்கு வாழ்கிறர்கள். சிறுபான்மைச் சமூகமான தாய் முஸ்லீம்களை எதிர் நோக்கும் மத, கலாச்சாரப் பிரச்னைகள் இந்நாட்டிலும் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுடைய பிரச்னைகளை ஒத்திருக்கின் றன. இலங்கையிலும் முஸ்லிம்கள் தாய் முஸ்லிம்களைப் போலவே பெளத்த மதத்தை அனுஷ்டிக்கும் பெரும் பான்மையினர் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே இவ்விரு தரத்தினரும் தங்களுடைய கலாச் சாரத் தனித் தன்மையைப் பாதுகாப்பதில் கவனஞ் செலுத்தி வருவது இயல்பே
தாய் முஸ்லிம்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பேணி வளர்ப்பதற்கான வசதிகளை அரசாங்கம் அளித்

Page 37
துள்ளளது. அவர்கள் தங்களுக்கெனப் பிரத்தியேக மான பாடசாலைகளை நடத்தி வருகிரு ர்கள். பாங் கொக் நகரில் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய 695 65) 622/T if) G) ulu T. Gör pi (Islamic College Of Thailand) இயங்கி வருகின்றது. சிறுபான்மையோர் பிரச்னை
தாய்லந்து முஸ்லிம்கள் நிலைபற்றி ஆராயும் போது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பற்றிய சில அழுத்த மான கருத்துக்கள் உருப்பெறுகின்றன.
ஒரே மொழியைப் பேசும் மக்களாயிருந்தும் கூட இஸ்லாத்தின் வழிப் பிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட முஸ்லிம்கள் தங்கள் தனித்துவத்தை கலாச் சாரத் தத்துவத்தை நிலைநாட்டி, அதன் ஆக்கத்திற்கு உதவப் பிரத்தியேகமான நிறுவனங்களையும், இலக்கி யத்தையும் கலைகளையும் பேண வேண்டியவர்களாயிருக் கின்றர்கள்.
சிறப்பாகச் சிறுபான்மை நிலையில் வாழும் முஸ்லிம் கள் இதற்கு முயற்சிகள் எடுக்காவிட்டால் தங்க ளுடயை தனித்துவத்தை இழந்து, முஸ்லீம்களென்ற வகையில் உருக்குலைந்து விடுவார்கள்.
அன்று நான் பார்வையிடச் சென்றது பாங்காக்கி லுள்ள ஓர் "அன் ஜூம் இஸ்லாம்” பாடசாலையாகும் (Anjuman Islam School) 32) jibg5, L u mr L JFIT ês) 60DuLulti பற்றிக் கூறுவதற்கு முன் தாய்லந்தின் கல்வி முறை பற்றிச் சில வார்த்தைகள் கூறுவது அவசியமாகும். தாய் கல்வி முறை
முற் காலத்திலெல்லாம் :ெ1ளத்த மடங்களில்தான் தாய்ச் சிறுவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வந்தது. இ க் கல் வி பெரும்பாலும் மதசார்பானதாகவே

73
யிருக்கும். இன்றும்கூட தாய்லந்தில் பெரும்பான்மை யான பாடசாலைகள் பெளத்த ஆலயங்களை அடுத்தே அமைந்துள்ளன. பெண் கல்வி முக்கியத்துவம் பெற்றி ருக்கவில்லை. சிறுமியருக்கு வீடுகளிலேயே பெற்ருே ராலும் உடன் பிறந்தோராலும் ஒரளவு கல்வியூட்டப் பட்டது. பத்தொன்பதாம் நூற்றண்டில் ஏற்பட்ட மேல் நாட்டு நாகரிகத் தாகத்தினல் தான் பெண் கல்விக்கு ஆதரவேற்பட்டது.
தாய்லந்தின் அரசாங்கப் பாடசாலைகள் அனைத் தும் பாங்கொக்கிலுள்ள கல்வி மந்திரி காரியாலயத் தினுல் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசாங்கப் பாடசாலைகளைத் தவிர மற்றும் தனியார் பாடசாலைகளும், நகரசபைப் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. பெரும்பாலான தனியார் துறைப் பாடசாலைகள் மத ஸ்தாபனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையான பாடசாலையொன்முகிய அன்ஜுமன் இஸ்லாம் பாடசாலை தான் நான் அன்று பார்வ்ையிட்டது.
1935ம் ஆண்டில் ஆரம்பப் பாடசாலைக் கல்வி நாடெங்கும் கட்டாயமாக்கப்பட்டது. சுமார் 40 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் நாட்டின் பல பாகங் களிலும் நடைபெற்று வருகின்றன. பாங்கொக் நகரில் நான்கு வருடப் பயிற்சியளிக்கும் இரு பெரும் ஆசிரிய கலாசாலைகள் உள்ளன. இவை தவிர நான்கு பல்கலைக்கழகங்கள் தலைநகரில் உண்டு. அவை சூல லொங்கோர்ன் பல்கலைக்கழகம், தம்மஸார்ட் பல்கலைக் கழகம், மருத்துவஞான பல்கலைக்கழகம், கஸெட்சார்ட் பல்கலைக்கழகம் என்பனவாம். 1952ல் ஆரம்பிக்கப் பட்ட பாங்கொக் பொறி இயல் நிறுவனம் தென்கிழக் காசியாவிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது
தா. ~ 5 s رنہ

Page 38
74
முஸ்லிம் பாடசாலை
அன்ஜ"சமன் இஸ்லாம் பாடசாலை ஒரு பெண்பாட சாலையாகும். ஆனல் கீழ் வகுப்புக்களில் ஆண் சிறுவர் களும் அனுமதிக்கப் படுகிறர்கள். சுமார் முன்னுாறு பிள்ளைகளைக் கொண்ட இப்பாடசாலை நான் சென்ற சமயத்தில் இடை வேளைக்காக விடப்பட்டிருந்தது. எனவே பாடசாலை முற்ற வெளியில் பெருந்தொகை யான பிள்ளைகள் ஒடி விளையாடிக் கொண்டிருந்தார் கள். அவர்களனைவருமே சுறுசுறுப்பானவர்களாகவும் மலர்ந்த முகங்களைக் கொண்டவர்களாகவும் காணப் Lul "L-Tsj4567.
நான் நேராகத் தலைமையாசிரியையின் அறைக்குச் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் மிகவும் குதூகலத்தோடு என்னை வரவேற்று உப சரித்தார். அவரது பெயர் ஹபீபா பின் ஹாஜி இஸ் மாயில் ஆகும். பாடசாலை அதிபரும் ஏனைய ஆசிரி யைகளை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் களனைவருமே ஆங்கில உடை தரித்திருந்தார். தலை மயிர் கட்டையாகக் கத்தரித்து விடப்பட்டிருந்தது. அவர்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சியுடையவர் களாகவுமிருந்தார்கள்.
தலைமை ஆசிரியை ஹபீபா மிகுந்த உற்சாகத் தோடு இலங்கையைப் பற்றிய விபரங்கள் பலவற்றை என்னிடம் கேட்டறிந்தார். எனது கையில் புகைப்படக் கருவியொன்று இருப்பதை கண்டோம். தமது பாட சாலை மாணவிகள் அன்று ஏதோ விசேஷ சாரண உடையணிந்து வந்திருப்பதாகவும் அவர்களைப் படம் பிடித்துத் த ரு மா று ம் என்னிடம் வேண்டிக் கொண்டார்.

i5
எனது திண்டாட்டம்
புகைப்படம் பிடிப்பதற்காக நான் பாடசாலை முற்றத்திற்கு அதிபரோடு சென்றதுதான் தாமதம். கும்பல் கும்பலாக நின்ற பிள்ளைகள் என்னைச் சூழ்ந்து கொண்டு தங்களையெல்லாம் படம் பிடிக்குமாறு கெஞ்சத் துவங்கி விட்டார்கள். என்பாடு பெருந் திண்டாட்டமாகி விட்டது! இதன் விளைவாக அன்று காலையில் தான் எனது காமிராவில் போட்ட பிலிம் சுருள் முழுவதும் பாடசாலையிலேயே செலவாகி விட்டது!
சுமார் இரண்டு மணிநேரம் பாடசாலையிலேயே அன்று கழிந்தது. தமது பாடசாலையின் வளர்ச்சியை யும் எதிர்காலத் திட்டங்களையும் பற்றி அதிபர் ஹபீபா விரிவாக என்னிடம் விளக்கினர். கடந்த கால நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கைகள் புகைப்படங்கள் பல வற்றையும் எடுத்துக் காட்டினர்.
பாடசாலையில் பெரும்பாலான ஆசிரியைகள் முஸ் லிம்களே. இரண்டொரு ஆண்களும் அங்கு கடமை யாற்றுகிருர்கள். தாய்மொழிப் பயிற்சியோடு ஆங் கிலமும் அங்கு பயிற்றப்படுகிறது.
அதிபரின் அன்பளிப்பு w
பாடசாலையை விட்டு வெளியேறு முன் அதிபர் ஹபீபா எனக்கொரு தாய்-ஆங்கிலம் அகராதியொன் றினை அன்பளிப்புச் செய்தார். மறுபடியும் பாங் கொக் நகருக்கு வந்தால் தம்முடைய பாடசாலையை மறந்துவிடக் கூடாதென்று கேட்டுக் கொண்டார். நான் எடுத்த புகைபடங்களையும் அவர் மறக்கவில்லை. இலங்கை திரும்பியதும் படங்களை அனுப்பி வைப்ப தாக உறுதி கூறினேன்.

Page 39
76
"நீங்கள் போவதற்கு முன் எங்கள் முஸ்லிம் பெரி யார் ஒருவரைச் சந்திக்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டார் அதிபர் ஹபீபா.
நேரம் கிடைத்தால் நிச்சயமாக சந்திக்க வரு கிறேன். அப்பெரியார் யார் என்று கேட்டேன் நான்.
அவர்தான் அரசாங்க சபையில் முஸ்லிம் விவகா ரங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதி, என்ருர் பாடசாலை அதிபர்.
"அப்படியென்றல் இன்று பின்னேரமே நான் வருகின்றேன். தவருமல் என்னை அவருக்கு அறிமுகஞ் செய்து வையுங்கள். அதற்காக நான் உங்களுக்கு மிகுந்த நன்றியுடையவனுகயிருப்பேன் என்று கூறிக் கொண்டே அன்ஜ"மன் இஸ்லாம் பாடசாலையிலிருந்து வெளியேறினேன்.

10. பிரியா விடை
அன்ஜ"மன் இஸ்லாம் பாடசாலை அதிபர் எனது வரவிற்காக அன்றுமாலை காத்திருந்தார். தாய் சட்டசபைப் பிரதிநிதி யொருவரிடம் என்னை அழைத்துச் செல்வதாக அன்றுகாலை நான் அவருடைய பாடசாலைக்குச் சென்ற போது அவர் ஒப்புக் கொண் டிருந்தார். அதற்கான ஏற்பாட்டைத் தாம் செய் துள்ளதாகவும் அப் பெரியார் தமது பாடசாலைக்குப் பக்கத்திலேயே வசிப்பதாகவும் கூறினர். எனவே இருவருமாகப் பேசிக் கொண்டே அவருடைய வீட் டிற்குச் சென்ருேம்.
gö/6), TGör «ör6) I GÖTağF6Fm) (639) (Tulan swamasasına) p5 |Tfiq56ir சென்றபோது வீட்டினுள் ஏதோ வேலையில் ஈடுபட் டிருந்தார். எனவே என்னை வீட்டின் முன் தட்டில் ஒரு நாற்காலியில் இருக்கும்படி சொல்லிவிட்டு அதிபர் ஹபீபா வீட்டிற்குள் எனது வருகையை அறிவிப்பதற் காகச் சென்ருர்.
வெளியில் அமர்ந்திருந்த எனது கண்கள் வீட்டுத் தள பாடங்களின் மீதும் சுவர்களில் மாட்டப்பட் டிருந்த படங்களின் மீதும் படர்ந்தன. ஆடம்பரமில் லாத வகையிலும் மிகவும் ஒழுங்காகவும் அந்த மனை அமைந்திருந்தது. துவான் சுவனசஸ்ன கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளும், வரவேற்புக்கள் முதலான

Page 40
78
வைகளும் புகைப்பட உருவில் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.
சொற்ப நேரத்தில் நீண்ட அங்கியணிந்து தலைப் பாகையுடன் என்முன் காட்சியளித்தார் துவான் சுவன சஸ்ஞ. நான் எழுந்து நின்று ஸ்லா முரைத்தேன். புன்சிரிப்போடு எனது சலாத்திற்குப் பதிலுரைத்து என்னை அமருமாறு சைகை காட்டிப் பணிந்துவிட்டு அவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
துவான் சுவனசஸ்ணு
துவான் சுவனசஸ்ணுவுக்கு ஆங்கிலத்தில் பரிச்சய மில்லை என்று ஏற்கனவே அதிபர் ஹபிபா எனக்குச் சொல்லி வைத்திருந்தார். எனவே அப்பெரியாருடன் நேரடியாக சம்பாஷிக்க இயலாதவனக நானிருந்தேன். அதிபர் ஹபீபாவின் துணையுடன் தான் கருத்துப் பரி மாறிக் கொண்டேன். அவ்வம்மையாரும் களைக்காது என்னுடைய பல கேள்விகளையும் துவான் சுவனசஸ்ணு விடம் விடுத்து விரிவான பதில்களையும் ஆங்கிலத்தில் கூறி உதவினர்.
துவான் சுவனசஸ்ன முஸ்லிம் விவகாரங்களுக்காக தாய்லந்தின் சட்டசபையில் பிரதிநிதியாக நியமிக்கப் Lul G6ir 6TIT ii (State Councill for Muslim affairs) முஸ்லிம்களுக்கான பாடசாலைகள் பிரத்தியேகமாக நடைபெறுவது பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டுள் ளேன். துவான் சுவனசஸ்னவும் தாய்லந்திலுள்ள முஸ்லிம்களின் நிலை பற்றியும், அவர்களது கல்வி கலாசார விஷயங்கள் பற்றியும் பல விளக்கங்களைத் தந்தார். திருக்குர் ஆனைத் தாய்மொழியில் ஆக்குவது பற்றிய முயற்சிகளையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. தாம் மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள

இருப்பதாகவும் அவ்வாறு செல்லும்போது இலங் கையையும் கண்டு செல்ல விரும்புவதாகவும் கூறினர்.
சைகோன் பயணம்
மறுதினம் காலையிலேயே நான் பாங்கொக் நகரை விட்டுச் செல்லவிருந்ததால் அதிக நேரம் அப்பெரியா ருடன் தங்கியிருக்க வசதி இருக்கவில்லை. மேலும் எங்களிருவருக்கு மிடையே மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிய அதிபர் ஹபீபாவின் செளகரியத் தையும் நான் பொருட்படுத்த வேண்டியிருந்ததால், துவான் சுவனசஸ்னவிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
எங்களுடைய சம்பாஷணையின் போது அவர் சிற் றுண்டி வழங்கி உபசரித்தார். நான் அன்று காலையில் கண்டு வந்த அன்ஜ"மன் இஸ்லாம் பாடசாலை இப் பெரியாரின் கண்காணிப்பில் நடைபெற்று வருவ தையும் அப்போதுதான் அறிந்து கொண்டேன்.
நான் அவ் வீட்டிலிருந்து போவதற்கு முன் துவான் சுவனசஸ்னவின் புகைப்படமொன்று கிடைத் தால் நலமென்று கருத்துத் தெரிவித்தேன். அதற்கு அப்பெரியார் குறுநகை புரிந்துவிட்டு, என் கையி லிருந்த காமிராவைக்ச் சுட்டிக் காட்டி, "ஏன், வேண் டியமட்டும் உங்கள் காமிராவிலேயே பிடித்துக் கொள் ளுங்களேன்’ என்ருர், இனிக் கேட்க வேண்டுமா? எனது காமிராக் கண்கள் பலமுறை திறந்து மூடின. நானும் ஸலாத்துடன் விடைபெற்று மீண்டேன். அதிபர் ஹிபீபாவுடன் பாடசாலை வரை சென்று அவ ரிடமும் நன்றியும் ஸலாமும் கூறி விடைபெற்றுக் கொண்டு ஹோட்டலுக்கு விரைந்தேன்.

Page 41
80
நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமை யிலேயே பல முக்கிய விமான நிறுவனங்களின் அலுவல கங்கள் உள்ளன. நான் சைகோனுக்குச் செல்வதற்குத் தாய் இன்டர் நேஷனல் (Thai International) விமானத் தில்தான் இடம் கிடைத்திருந்தது. எனவே அந்த விமான அலுவலகத்திற்குச் சென்று விமானம் புறப் படும் நேரத்தில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா வென்று விசாரித்து எனது மறுநாள் பிரயாணத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். இவ்வாறு செய்வ தற்குக் காரணம் நான் சைகோன் மாநாட்டிற்குச் செல்ல வேண்டிய நாள் பிந்தி விட்டதேயாகும். பாங்கொக் நகரின் சிறப்பினைக் கண்டு களிப்பதில் ஈடுபட்ட எனக்கு நாட்கள் உருண்டோடியதே தெரியவில்லை!
அரசருக்கு வரவேற்பு
நான் பாங்கொக் நகரில் தங்கியிருந்தபோது அந் நகர் மிகவும் மும்முரமாக அலங்கரிக்கப்பட்டுக் கொண் டிருந்தது. விமான நிலையத்திலிருந்து தலை நகர் செல்லும் சாலை வழியே பல இடங்களில் பெரிய அலங் கார விதானங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இந்த ஏற்பாடுகளெல்லாம் நாட்டு மன்னர், பூமி பல் அதுல் தெட் (Bhumibo Aduldej) அவர்களை வரவேற்பதற் காகவே நடைபெற்றுக் கொண்டிருந்தன.
பிரமாண்டமான தோரணங்கள் தாய் மன்னரின் உருவப்படங்களைத் தாங்கிநின்றன. மன்னரும், அவரது அரசியார் சிரிகித் (Queen Sirikit) அவர்களும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டுத் தாய்லந்து திரும் புகையில் அவர்களுக்கு வர வேற்பளிக்கவே பாங்கொக் மக்கள் மிகுந்த உற்சாகத்

8.
தோடு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண்பதற்கு
எனது பிரயாணத் திட்டம் வாய்ப்பளிக்காதது குறித்து
நான் மிகவும் மனவருத்தப்பட்டேன். தாய்லந்து
பற்றிய கட்டுரை யெதுவும் அந் நாட்டின் மன்னரைப்
பற்றிக் குறிப்பிடாத வரையில் பூர்த்தியடையாது.
தொன்று தொட்டு இந்நாட்டை ஆண்டுவந்த அர
சர்கள் பற்றி அவ்வப்போது கூறிவந்தேன். தற்போது
தாய் நாட்டின் அரசராகவுள்ள அதுல்தெட் மன்னர் தாய் மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவராக
இருந்து வருகின்ருர், நாட்டில் நிகழும் வைபவங்கள்
அனைத்திலும் அரச குடும்பத்தினர் மிகவும் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றர்கள்.
அரசியல் புரட்சி
தாய்லந்தின் பூரண முடியாட்சி 1932-ம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சியின் விளைவாக ஒழிக்கப்பட்டது. சூல லங்கோன் அரசருக்குப் பிறகு அரச பதவியேற்ற பிரஜாதிபொக் மன்னர் காலத்தில்தான் இப்புரட்சி யேற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சென்று கல்வி பயின்ற தாய் அதிகாரிகள் தான் இப்புரட்சியை முன் னின்று நடத்தி வைத்தனர்.
தற்போது அரச பதவியிலிருக்கும் மன்னர் அதுல் தெட் அவர்களுக்கு முன், சொற்ப காலத்திற்கு அவரது சகோதரர் அரசராக இருந்தார். அவர் பெயர் மஹிதொல் என்பதாகும். அரண்மனையில் நடைபெற்ற ஒரு சதியின் காரணமாக மஹிதொல் மன்னர் ஒரிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பந்தமாக நீண்ட விசாரணைகள் நடைபெற்றும் திருப்திகரமான விளக்கம் எதுவும் கிட்டவில்லை.

Page 42
82
அதுல்தெட் அரசர் அரச பதவியேற்றபோது மிகவும் இளம் வயதினராயிருந்தார். இவர் சுவிட்சர் லாந்தில் கல்வி பயின்றவர். அவர் அங்கு கல்விக்காகச் சென்றிருந்தபோது தான் தமது எதிர்கால மனைவி யான அழகு செளந்தர்யம் வாய்ந்த சிரிகித் என்பவ ரைச் சந்தித்தார். பிரெஞ்சு நாட்டில் தாய்நாட்டின் பிரதிநிதியாகக் கடமை யாற்றிக் கொண்டிருந்தவரின் மகள்தான் சிரிகித்.
அபிமானத் தம்பதிகள்
தாய் மன்னர் அதுல்தெட்டும் சிரிகித் அரசியாரும் உலகில் பல நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்கள். தங்கள் சொந்த நாட்டில் ஆட்சி முறையில் மாற்றங் கள் ஏற்பட்ட பிறகும்கூட அவர்கள் மிகுந்த செல்வாக் கையும் மக்களின் பேரபிமானத்தையும் பெற்று விளங்குகிருர்கள்.
மறுநாட் காலையில் திட்டப்படி விமானத்தளத் திற்கு பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் எனது ஹோட்டலின் முன் நிறுத்தப்பட்டது. நானும் இன் னும் இரண்டொரு அமெரிக்கப் பிரயாணிகளும் பஸ் வில் ஏறிக்கொண்டோம். மற்றும் இரண்டொரு ஹோட்டல்களில் சில பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு விமானத்தளம் நோக்கி ஓடியது பஸ்.
பிரியாவிடை
விமானத்தளத்தில் ஏற்கனவே அறிமுகமான சில அதிகாரிகள் புன்னகை காட்டி சேமம் விசாரித்தனர். பாங்கோக் நகரில் எனது அநுபவங்கள் மகிழ்ச்சிகர மாய் அமைந்தனவாவென்று கேட்டனர். மீண்டும் தங்கள் நகருக்கு வரத் தவற வேண்டாமென்று பிரியா

83
விடை கூறினர். எல்லோருக்கும் எனது மகிழ்ச்சியை யும் நன்றியையும் கூறிக்கொண்டு தாய் இன்டர் நேஷனல் விமானத்தை நோக்கி நடந்தேன்.
விமானத்தி லிருந்தவாறே பார்வையிலிருந்து மறைந்து கொண்டே சென்ற தாய்லந்தின் இயற்கைக் காட்சிகளில் மனதைச் செலுத்தினேன். மிகுந்த வேகத்தோடு சைகோனை நோக்கிப் பறந்தது விமானம்!

Page 43


Page 44


Page 45
இளமை தொட்டே'
"" - Huss ... ii i
எஸ். எம். கமாலுத்த மிட்டுமல்ல தமிழர்களிடை பெற்ற எழுத்த ளர் : செ பக்திரிகை மூலமும் புகழ் பல்கலேக் கழகத்தில் பி. ஏ டிப்ளோமா பட்டமும் ெ டொரன்டோ பல்கலேக் பட்டமும் பெற்றவர். ! TE TĚJI 5.fsnesisu Tuh முன் ே கொழும்பு நூல் நிஜலயத்தி வருகிருர்,
ஆர்வமும் பிரயாணத்தி கமாலுத்தீன் உலக ந பார்த்தவர். ஈழத்துப் பத்தி அனுபவங்களேத் தொடர் புகழ் பெற்றவர். அவரது நோக்கையும் எழுத்தின் வ தமிழக மக்களுக்கு அறிமு
 

ன்ே ஈழத்து முஸ்லிம்களிட்ை யேயும் மிகவும் செல்வாக்குப் ாற்பொழிவாசளர். வாஞெலி, பெற்ற இவர் இலங்கைப்
--!
" பட்டமும் நூலகக் க3லயில் பற்றவர் ; கனடா சென்று கழகத்தில் கல்வித்துறைப் த்ெது முஸ்லிம்களின் இயக் i அடியாக நிற்கும் இவர் ; ம் நூலகராகக் கடமையாற்றி
தமிழ் இலக் கி ய த் தி ல் ாட்டமும் கொண்ட iாடுகளே யெல்லாம் சுற்றிப் ரிகைகளில் தமது பிரயான ந்து சுவைபட எழுதியும் புலமையையும் ஆராய்ச்சி ன்ேமையையும் இச்சிறு நூல் கப் படுத்தும்.
st-sessess---...i
l'RT FRER E, L HDEA : - :
- - - -