கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுனாமி சொல்லாத சோகங்கள்

Page 1
I
| |
I
|
|
 
 
 
 
 
 

பமாலை அண்புராசா

Page 2


Page 3
நுால் கிடைக்கும் இடங்கள்
சுவாமி ஞானபிரகாசர் நூலகம் 657, தொடர்பகம் ஆஸ்பத்திரி வீதி
யாழ்ப்பாணம். தொலைபேசி இல. 0212 222 721
26, அமைதியகம் குட்ஸ் செட் வீதி
வவுனியா. தொலைபேசி இல. 0242 221 777
வளனகம் மறைக்கல்வி நடுநிலையம் புனித செபஸ்தியார் வீதி மன்னார்.
யுனைட்டெட் பிரின்ட்ரெக் 23, டிவாஸ் லேன் கிராண்ட்பாஸ்
கொழும்பு - 14 தொ. பே. இல. 0114 611 196
Lanka Book Depot F. L. 1.4 Dias Place Gunasinghapura Colombo - 12 T.Ph. 011234942

நுாலின் பெயர் ஆசிரியர் மொழி
பொருள் முதற்பதிப்பு அசசு எழுதது பக்கங்கள் உரிமை வெளியீடு அட்டைப்படம் அச்சகம் விலை தொடர்புகளுக்கு
ISBN 955 - 1389 - 00 - 3
: சுனாமி சொல்லாத சோகங்கள்!. : செபமாலை அன்புராசா : தமிழ்
; விழிப்புணர்வு : 15. 12. 2005 : 12 புள்ளி
: 85
: ஆசிரியருக்கு
அமலமரித்தியாகிகள் ரமேஸ் பிரகாஷ் : யுனைட்டெட் பிரின்ட்ரெக் : 140 bum : செ. அன்புராசா
26, குடஸ் செட் வீதி 666fluff
தொ. இல. 0776 552 407,
0242 221 777

Page 4
சமர்ப்பணம்
ஆழிப்பேர் அடுக்கு
அலையினால் தம் இன்னுயிரை இழந்துபோன ஆயிரமாயிரம் அன்பர்களுக்கும், அலையில் அலைக்கழிக்கப்பட்டு உயிர் பிழைத்து இழப்புக்களால் இன்னும் மீள முடியாமல்
அல்லல்படும்
குழந்தைகள்,
தம்பிமார், தங்கைமார், அண்ணன்மார், அக்காமார், அன்னைமார், அப்பாமார் ஆகியோருக்கும், இவர்கள் வாழ்வு
Զ --Ա.JJ,
சிறக்க,
புதுப்பொலிவு பெற, உண்மையாக உழைக்கும் தொண்டர்கள், தொண்டு நிறுவனங்கள் எல்லாருக்கும்.

பொருளடக்கம்
ஆசியுரை
அணிந்துரை
வாழ்த்துரை
என்னுரை
கடலன்னை மானிடத்திற்கு வரைந்த மடல்
அனுபவத்தை ஆரம்பிக்கும் முன்
ரைடல் உவேஸ்' சோ, கடல் கோளோ அல்ல சுனாமி
களத்தில் கண்டவை
சிறுவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும்
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்
சுனாமி புகட்டும் போதனை
முடிவுரை
உசாத்துணை நுால்கள்
உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும்
- V =
... 03
... 05
. 07
... ll
. 14
19
47
. 66
... 81
... 84
85
பக்கங்கள்
01 - 02
04
06
08
10 -
13
18
46
59
- 65
80
83

Page 5

ஆசியுரை
சுனாமி வந்தது. பலரையும் பலவற்றையும் அள்ளிக்கொண்டு போனது. அனைத்தும் சில நிமிட நேரங்களில் நடந்து முடிந்தது.
இழப்போ பிரமாண்டமானது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று, பாதிக்கப்பட்ட எமது மக்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளானார்கள். உடனடி உதவி உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்தது.
கறுமையான ஒரு காலத்தில் வெள்ளிக் கோடொன்றைக் கண்டோம். இருள் நிறைந்த ஒரு நேரத்தில் நம்பிக்கை கீற்றொன்றைப் பார்த்தோம். ஆனால், அதை மீண்டும் கறுமையாக்க முனைந்தது உள்ளுர் கூட்டமொன்று. எரியும் வீட்டில் சொகுசாக சுருட்டுப் பற்ற முனைந்தது ஒரு வட்டம்.
சுனாமி வந்து இம் மார்கழி இருபத்தி ஆறாம் நாளுடன் ஒரு வருடமாகிறது. எமது வாழ்நாளில் நடந்த ஒரு பயங்கர அனர்த்தத்தை இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் நாமும், அடுத்தடுத்த தலைமுறையினரும் மறந்து விடக்கூடாதென்று இந்நூலைத் தந்துள்ளார் அருள்திரு செ. அன்புராசா, அ.ம.தி அவர்கள்.
சுனாமிக்கு விளக்கம் கொடுத்து, பாதிக்கப்பட்ட சிலரின் நெஞ்சுருக்கும் கதைகள் சொல்லி, L60TL9. உதவிக் கரம் நீட்டியோரை சுட்டிக்காட்டி, வளரக்கூடிய உளவியல் பிரச்சினைகளை எடுத்துரைத்து எதிர்காலத்திற்கு எச்சரிக்கை விடுத்து இந்நூலை எழுதியுள்ளார் அடிகளார். மிகப் பாராட்டிற்குரியது. பாராட்டுகிறேன்.
- 01 -

Page 6
சுனாமி வந்து ஓராண்டுகாலம் முடிகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? அதாவது, அவர்கள் எங்குள்ளார்கள்? எப்படி உள்ளார்கள்? வெளிநாட்டவர் அள்ளித் தந்ததைக் கிள்ளிக்கொண்டு போனவர்களின் நிலைப்பாடென்ன?
இவற்றையும் இணைத்திருந்தால் நூல் மெருகூட்டப்பட்டிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
அன்புராசா அவர்கள் எடுத்த முயற்சி அதுவும் அவர் நேரில் சென்று சந்தித்து எழுதிய கதைகள் வாசக நெஞ்சங்களில் படங்களாகப் பதியும். எச்சரிக்கைகள் எமது உள்ளங்களில் உறையும்.
அடிகளாரின் நோக்கம் நிறைவு காணும். இது, எனது நம்பிக்கை.
அடிகளாருக்கு எனது வாழ்த்துக்கள்!
செல்வம், அ.ம.தி.
- 02

அணிந்துரை
85L6) DLDIT... உன் கருணையெங்கே போனது அம்மா. கடில் போல பெருமனது கதைகள் எங்கே தொலைந்தது அம்மா கடலம்மா. எங்கள் கண்ணிரே கடலானது அம்மா.
ஒரு வருடமாகிறது; சுனாமி அனர்த்தத்தின் அலைகள் ஒயவில்லை.
உட்ைந்துபோன வள்ளங்களை மீளமைத்தல், புதிய வலைகளைப் பின்னுதல், அழிந்த வீட்டுக்குப் பதில் இடைத்தங்கல் முகாம்களில் இருத்தல். என பொருள்சார் நிவாரண செய்ன்முறைகள்
உடைந்துபோன மனங்களை மீளமைக்கும் - வாழ்வளிக்கும் பணி தொடர்பாகவும் ஆங்காங்கே சில ஏற்பாடுகள்.
ஆனாலும் மீள் வாழ்வு என்பது கேள்விக் குறியாக நீள்கின்றது.
மீள் வாழ்வுக்கான செயற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்கேற்பினை உறுதி செய்வதற்கான பொதுக் கட்டமைப்பு ஏற்பாட்டினையும் நாட்டின் பேரினவாத சுனாமி விழுங்கி விட்டது.
རྗེ་
இயற்கையிடம் மனிதம் படித்த பாடம் போதவில்லையா.
'மரணித்த மனிதர்களின் சார்பில்
மனிதம் வாழ வழிசமையுங்கள் என்ற வேண்டுதலோடு
அன்புராசா அடிகளாரின் 'சுனாமி சொல்லாத சோகங்கள1. வெளியாகிறது.
- 03 -

Page 7
துயரப்படும் மக்களுக்காக துடிக்கின்ற அவள் உள்ளத்தின் மேன்மையை 'காலத்தின் பதிவுகள் ஆகக் கண்டோம். இப்பொழுது சுனாமி அனர்த்த களங்களில் துயரிடை கலந்த அவரின் அனுபவ வாக்கு மூலமாக இந்தப் புதிய நூலின் வரவு உள்ளது.
வெறும் அனுபவ பதிவாக அல்லாமல் உள சமூகவியல் பகுப்பாய்வாகவும் அமையும் இந்நுால் சுனாமி அனர்த்தத்தில் அல்லாடிப்போன மனிதர்களாக - மனிதத்தை மீட்பதில் காப்பதில் கைகொடுக்கும் கைவிளக்காக எமக்கு வாய்த்துள்ளதெனலாம்.
இறை பணியென்பதனை மானுட சேவையாக, மனம் ஒன்றிய தியாகப் பணியாகக் காணும் அன்புராசா அடிகளாரின் அன்பு மனதை வாழ்த்துவோம். செயல் இயக்கமான அவரது அன்பின் ஆக்கங்களை வரவேற்போம்.
நீபறித்த பிள்ளைகளை தேடியின்னும் முடியவில்லை நீளுகின்ற துயர் அலைகள் நெஞ்சினிலே ஒய்வதில்லை ஆனாலும் உனை வெறுக்க மனது இன்னும் வருகுது இல்லை. 35L6)LibLDIT... எங்கள் கண்ணிரே கடலாகுது அம்மா.
பேராசிரியர் என். சண்முகலிங்கன் சமூகவியல பேராசிரியர், தலைவர் அரசறிவியல் - சமூகவியல்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திருநெல்வேலி.
- 04 -

வாழ்த்தரை
2004, டிசம்பர் 26. இந்தோனேசியா, இந்தியா, இலங்கை,
முதலிய நாடுகளை சுனாமி வெள்ளம் துன்ப வெள்ளத்துள் ஆழ்த்திய நாள்.
இலங்கைத் திருநாட்டின் கடற்கரைப் பகுதிகளைக் கலங்கடித்த சுனாமி எனும் ஆழிப்பேரலையின் அனர்த்தச் சுவடுகள் நீண்டகாலத்திற்கு அழியாத சுவடுகளாகிவிட்டன.
இவ்வாண்டில் சுனாமி பற்றிய கவிதைகள், கட்டுரைகள், ஒவியங்கள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இசைப்பாடல்கள், நாட்டியநாடகங்கள் என கலை இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் சுனாமியே பெரிதும் ஆக்கிரமிப்புச் செய்கிறது.
சுனாமியால் அழிந்த சொத்துக்களை ஆக்கமுடியாது. இழந்த உயிர்களை மீட்க முடியாது. ஆனால், தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வை மீட்டுக்கொடுத்தேயாக வேண்டும்.
உள்நாட்டு வெளிநாட்டு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இன்றும், அழிவுப் பிரதேசத்தில் ஆக்க வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றன.
மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் மனதைத் தேற்றுவதற்கும் வாழ்க்கையில் பிடிப்பை ஊட்டுவதற்கும் உளவியல் ரீதியான அணுகுமுறைகள் பெருமளவு மேற்கொள்ளப்படுகின்றன.
தொண்டு நிறுவனங்களினூடாக துயர்துடைக்கச் சென்றோர்
பலர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபக் கதைகளைப் பலவாறாகச் சொல்கின்றார்கள். நூல்களாக வெளிக்கொணர்கிறார்கள்.
- 05 -

Page 8
அனுபவங்களை ஆவணப்படுத்துவது தான் அடுத்த சந்ததிக்கு ஆதாரமாக இருக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்தவகையில் அருட்திரு அன்புராசா அவர்கள் வட கிழக்கில் சுனாமிப் பாதிப்புக்குள்ளான அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று துயர்துடைப்புப் பணியில் ஈடுபட்டு அங்குள்ள மக்களின் துயரங்களைத் தன்னெழுத்தில் வடிக்கின்றார்.
இதுதான் “சுனாமி சொல்லாத சோகங்கள்!.’ எனும் இந்நூல் “அனுபவத்தை ஆரம்பிக்கும் முன்”, களத்தில் கண்டவை” “சிறுவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் சிகிச்சைகளும்” “பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்” “சுனாமி புகட்டும் போதனை” போன்ற ஏழு பிரிவுகளாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்நூலை வாசிப்பவர்களுக்கு, சுனாமியின் கொடுமையும் மக்கள் அனுபவித்த கொடுரங்களும் உள்ளங்களை உருக்கும். குறிப்பாக சிறுவர்களதும் பெண் களதும் வேதனைகளும், கையறுநிலையும் கவலைதரும். நல்ல மனம் படைத்தவர் யாவரும் நிச்சயமாகக் கைகொடுக்க முன்வருவர். இந்நூலாசிரியர் அருட்திரு அன்புராசா அவர்களின் நோக்கமும் அதுதான்.
அருட்திரு அன்புராசா அவர்களோடு அவரது தந்தையுார் கலாபூசணம் செபமாலை குழந்தை அவர்களோடு எனக்கிருந்த நட்பின் மூலமாக பழகநேர்ந்தது. அவரது ஆய்வுத்திறனை அவரது M. phil. பட்டத்திற்கான மன்னார் பிரதேச நாடகங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
18 மிகத் தெளிவான நடையில் எளிமையான சொற்பிரயோகங்களோடு உணர்வு கலந்து உண்மையைச் சொல்லியிருக்கின்றார். அதுவே இலக்கியப்படுத்தலாக மாறிய யதார்த்தப்பண்பாக விளங்குகிறது. அவரது இந்நூல் அவரது எண்ணத்தை முழுமையாக ஈடேற்றும் எனும் நம்பிக்கை எனக்குண்டு. அவரது நூல் சிறக்கவும் அவர் மூலமாக அவர் எண்ணம் ஈடேறவும் வாழ்த்துகிறேன்.
தமிழ்மணி அகளங்கண்
- 06

என்னுரை
ஒரே முறையில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எம் கண்களின் முன்னே இறந்து போனது பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் நம் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் சுனாமியில் உயிர் பிழைத்தவர்களோடு உடனிருத்தல், அவர்களின் கண்ணிர்க் கதைகளுக்கு செவிமடுத்தல் போன்ற உடனடி ஆற்றுப்படுத்தலின் ஆரம்பப் பணிகள் பரந்து விரிந்து கிடந்ததை உணர்ந்தேன்.
பாதிப்புற்ற இடங்களிலே தங்கி நின்று பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் எழுந்த வண்ணமாயிருந்தது.
இதற்கு ஒருசில மாதங்களே சாத்தியமாயின.
இக்காலப் பகுதியில் பலரைச் சந்தித்தேன். திருகோணமலைஇ முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் இந்நாட்களைக் கழித்தேன். துன்பியல் வழியாக வாழ்வியலுக்கான உண்மைகளைக் அறிந்துகொண்டேன். துன்பியலின் உச்ச நிலையை உணர்ந்தேன். இந்த வரலாறுகளை இலகுவாக நாம், மறந்தவிடக்கூடாது, மறந்துவிடவும் (முடியாது என்பதால் இவற்றை எழுதத் துணிந்தேன்.
ஏனெனில் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டுt நிகழ்கால அனுபவங்களை ஆய் ந்தறிந்து, வருங்காலத்தை வளமுள்ளதாக்கவேண்டும் என்பதனாலாகும்.
இம்முயற்சிக்கு ஆதரவு காட்டிய அத்தனை அன்புள்ளங்களையும் மிக நன்றி உணர்வுடன் எண்ணிப்பார்க்கிறேன். ஆசியுரை தந்த அமலமரித் தியாகிகள் முதல்வர் அன்புக்குரிய அருட்கலாநிதி எஸ். எம்0 செல்வரட்ணம் அடிகளாருக்கும் அணிந்துரை எழுதிய பெருந்தகைக் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கட்கும் வாழ்த்துரை வழங்கிய
- 07 -

Page 9
என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எழுத்தாளர் அகளங்கன் ஆசிரியர் அவர்கட்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
மேலும் எனக்கு எல்லா வகையிலும் உடனிருந்து உற்சாகப்படுத்தும் என் அன்பு ஐயா செபமாலை (குழந்தை மாஸ்ரர்), பாசமுள்ள அம்மா றோஸ்மேரி, சகோதரர், சகோதரிகள் எல்லாருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
இன்னும் இந்நூலை எழுதுவதற்கான நல் எண்ணத்தை என் உள்ளத்தில் விதைத்து, ஆர்வமூட்டிய அருள்திரு ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களுக்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை தந்து உற்சாகமூட்டிய அருட்கலாநிதி அ. பி. யெயசேகரம் அவர்களுக்கும் என் இதய நன்றிகள்.
மற்றும் பல வழிகளில் ஆதரவாயிருந்த என் அமையகக் குடும்ப அன்பர்களுக்கும் முன்னாள் அ. ம. தி. கள் முதல்வர் ஜிவேந்திராபோல் அவர்கட்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றைக் கணனியிற் பொறித்துத் தந்த திரு. மரியதாஸ் இயூஜின், தகவல்களைத் தந்துதவிய திரு. சியோன், நூலை அழகுற வடிவமைத்துத் தந்த திரு. மு. சற்குருநாதன், திரு. கணேஷ், இதனைத் தரமாக அச்சேற்றிய “யுனைட்டட் பிரின்ற்ரெக்” அச்சக உரிமையாளர் திரு. அல்பேட் அவர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.
இன்னும் பல்வேறு முறையில் எனக்கு உற்சாகத்தைத் தரும் என் அன்புக்கினிய நண்பர்கள், வாசக அபிமானிகளுக்கும் என் நன்றிகளைக் கூறி நிற்கிறேன்.
அன்பர்களே, இந்த ஆண்டு முழுவதும் என் உள்ளத்திலும் எண்ணத்திலும் ஒடிக்கொண்டிருந்தவற்றையே உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.
இந்நூலின் ஒவ்வொரு வரியும் உங்களோடு பேசும் என்பது என் நம்பிக்கை. உங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் அன்போடு எதிர்பார்க்கிறேன்.
செ. அன்புராசா
- 08 -

01. கடலன்னை மானிடத்திற்கு வரைந்த மடல்
இத்தனை நாளும் தாயே என்று என்னைத் தால்ாட்டினாய்!. சீதேவியே எனச் சீராட்டினாய் 1. அன்னையே என அரவணைத்தாய்!.
இப்போது பேய் என்கிறாய், நாய் என்கிறாய், பூதமென்கிறாய், அரக்கனென்கிறாய்.
gाीि.
மானிடமே நீ,
போரினாலும்
பூசலாலும்
சண்டையாலும்
மோதலாலும்
அணுக்குண்டாலும்
ஆக்கிரமிப்பாலும் என்னை எவ்வளவு காயப்படுத்தினாய்? எத்தனை காலமாய் பொறுத்திருந்தேன்? நீ கொன்று குவித்த உயிர்கள் எத்தனை? நீ கொன்றழித்த உடமைகள் எத்தனை?
- 09.

Page 10
LDsroof (3LD!... நீ எனக்குச் செய்த, நீயே உனக்குச் செய்த, அக்கிரமங்களையும் அடாவடித்தனங்களையும் விடவா நான் செய்து விட்டேன்!.?.
நீ செய்த தீங்குகளால், எனக்குள்ளே அழுதழுது என் உருவத்தையே இழந்தேன். இப்படி எத்தனை காலம் எனக்குள்ளே அழுவது? முடியவில்லை. வாய் விட்டு அழுது விட்டேன்.
இதனை நெடுநாளாய் உன்னிடம் சொல்லவேண்டும் என்றிருந்தேன். இப்போது சொல்லி விட்டேன்.
நான் பகிர்வது பிழையாயின் மறந்து விடு. சரியாயின் உனைச்சரிப்படுத்து. சரியா?.
- 10

01. அனுபவத்தை ஆரம்பிக்கும் முன்.
சுனாமி’ என்ற சொல் பல தரப்பினரிடையே இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பலருக்கு அறியப்படாமல் இருந்த இந்த வார்த்தை அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு சொல்லாக மாறியிருக்கிறது.
“ டேய் சுனாமி வர்றாண்டா’ எனப் பலரை கெளரவ அடைமொழியில் அழைப்பதைக் கேட்டிருக்கிறோம். குழந்தை முதல் குடுகுடு கிழவன் வரை இந்த வார்த்தையால் வர்ணிக்கப்படுகிறார்கள்.
ஒரு தடவை நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். A -9 இருக்கிற திறத்தில் பயணம் எப்படி இருக்குமென எண்ணிப் பாருங்களேன். நன்றாகக் களைத்த நேரம். தேனீர் குடிக்க மோட்டார் சைக்கிளை நிறுத்தினோம்.
'தம்பி ஐயாமாருக்கு இரண்டு சுனாமி ரீ போடு' என்றார் வயது முதிர்ந்த ஒருவர். ஆளை ஆள் பார்த்துவிட்டு சுனாமி ரீயைக் குடித்தோம்.
இன்னும் ஒருமுறை வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நண்பருடன் அவர் குடும்பத்திற்குத் தேவையான உடுபுடவைகளை வாங்க ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். நண்பர் கேட்ட குறிப்பிட்ட வகை இல்லாததால் அடுத்த கடைக்குப் போகலாம் என எண்ணிக் கொண்டிருக்க, “கொஞ்சம் பொறுங்கிேடதம்பியவ, சுனாமி வேகத்தில நீங்கள் கேட்டத ஸ்ரோரில இருந்து எடுத்துத் தருகிறோம் என்று சொல்லியபடி ஒரிரு நிமிடங்களில் பொருளைப் பெற்றுத்தந்தார்கள்.
சுனாமி வேகத்தில் அவர்கள் பெற்றுக் கொடுத்த அப்பொருளை பக்கத்துக் கடையில் வாங்கி அதிலும் ஒரு பிஸ் னஸ்’
செய்திருக்கிறார்கள் என்ற உண்மை பின்னர்தான் தெரியவந்தது.
சுனாமியின் கோலத்தை தற்கால சினிமா உலகிலும் சேர்த்திருக்கிறார்கள் என்று கூறிய என்னுடைய நண்பன் ஒருவன்,
-11

Page 11
சுனாமி வந்து போகிற பாடலின் ஒருசில வரிகளை சுட்டிக்காட்டினார். “..நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ.” எனச் சுனாமி வேகத்தில் செல்கிறது இப்பாடல்.
மிகக் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யப்படக் கூடிய கீரை வகை ஒன்றை பரீட்சார்த்த ரீதியாக இப்போது வடபுலத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வகைக் கீரைக்கு ‘சுனாமி கீரை எனப் பெயர் இடப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனை ஓரிரு கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் சென்று வந்த நண்பர் ஒருவர் கூறினார்.
இரு மாதங்களுக்கு முன் வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு போய்க் கொண்டிருந்தேன். பஸ்சுக்குள் நல்ல நித்திரையாகி வாழைச்சேனையில் விழித்துக் கொண்டேன். யன்னல் பக்கமாக இருந்ததால் வெளியே நடந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டு சென்றேன். சித்தாண்டிச் சந்தியில் சுனாமி ஓய்வகம் எனப் பெயரிடப்பட்ட பலகை ஒன்றைக் கவனித்தேன்.
*
E USEལྔ་ ཆོས་
4. :3
:ேல் லே
57 varay.
భళ &
அதனை நீங்களும் பார்த்து சுவைக்க வேண்டும் என்பதற்காக வேலை மினக்கட்டு ஒரு மாலைவேளை மட்டக்களப்பிலிருந்து சித்தாண்டிக்கு ஒரு புகைப்படக் கருவியோடு வந்து இச்சுனாமி ஒய்வகத்தைப் படம் பிடித்தேன்.
- 12
 
 
 
 
 
 
 
 

இவ்வாறு ஆட்களுக்கும், பொருட்களுக்கும் சுனாமி என்ற சொகுசான பெயரைச் சூட்டி சுகம் அனுபவிப்பது போல நடந்துகொள்கிறார்கள். அதில் என்ன அவ்வளவு ஆனந்தம் இருக்கின்றதோ தெரியவில்லை!.
சுனாமி பற்றி கொழும்புப் பக்கத்தில் பரவலாகப் பேசப்பட்ட பகிடி ஒன்று உண்டு. அதனைத் தினக்குரல் பத்திரிகையும் வெளியிட்டிருந்தது.
நம் நாட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு இந்தோனேசியாவில் இருந்து, “சுனாமி இலங்கைக்கு ஓரிரு மணித்தியாலங்களில் வந்துவிடும். ஆயத்தமாயிருங்கள்.’ என அவசர தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. சுனாமி என்றால் ஆழிப்பேர் இராட்சத அடுக்கு அலைகள் என்று அப்போது யாருக்குத் தெரிந்திருந்தது?
அந்த வகையில் இந்தோனேசியாவில் இருந்து யாரோ சுனாமி என்ற இராஜதந்திரி வருகிறார் என எண்ணியிருக்கிறார்கள் ஜனாதிபதி அலுவலகத்தினர்.
உடனே ஜனாதிபதி அலுவலக உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று, “MR. TSUNAMI MOST WELCOME TO SRI LANKA” (frb. சுனாமி அவர்களே உங்களை இலங்கை க்கு அன்புடன் வரவேற்கிறோம்.) என எழுதப்பட்ட மட்டையைத் தாங்கிப் பிடித்திருந்து காத்திருந்திருக்கிறார்கள்!
இக்கதை பகிடியாகச் சொல்லப்பட்டதுதான். அப்படித்தான்
இது நம் நாட்டில் நடந்திருந்தாலும் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!.
- 13 -

Page 12
o2.'60J 6ö 2 (36.6mo'Ga sy, (Tidal Wave) as 65 கோளோ அல்ல சுனாமி
“சுனாமி” (Tsunami) எனும் சொல் யப்பானியர்கள் உருவாக்கியதாகும். எப்படித் தமிழ்ப் பதங்களான கட்டுமரமும், மிளகுதண்ணியும் ஆங்கிலத்தில் முறையே, 'Catamaran', 'mulgatawny' ஆனதோ அதேபோல Tsunami என்ற யப் பானியச் சொல் லும் ஆங்கில மொழி வழக் கில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யப்பானில் கரையோரங்களில் பல துறைமுகங்கள் உள்ளது போல் அந்நாட்டில் பல எரிமலைகளும் உள்ளன.
கடலுக் கடியில இவ எரிமலைகள் வெடிக்கும் போது அலி லது நில அதிர்வுகள் ஏற்படும் போது கடலில் பேரலைகள் உருவாகி கரையோரங்களின் துறைமுகங்களைத் தாக்கி அழிக்கின்றன.
யப்பானிய மொழியில் ‘சு’ என்பது துறைமுகம் என்றும், ‘‘னாமி’ என்பது அலை எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
துறைமுகங்களைத் தாக்கியழிக்கும் அலைகள் என்ற அர்த்தத்தில் தொடக்கத்தில் Tsunami" என்ற சொல் புழக்கத்தில் வந்தது. இதனைத் தமிழில் ஆழிப்பேர் அடுக்கு இராட்சத அலைகள் எனக்கூறலாம்.
- 14
 

எனினும் சுனாமி என்ற சொல்லுக்குப் பதிலாக Tidal Wave, கடல்கோள், நில அதிர்வுப் பேரலை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சுனாமி என்ற பதத்துக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.
Tidal Wave - ரைடல் உவேவ்ஸ் என்பது சந்திரனின் ஈர்ப்புச் சக்தியால் ஏற்படுவதாகும். சந்திரனின் ஈர்ப்புச் சக்தியால் கடலிற்
சில நாட்களில் A, அலைகள் உயர்ந்து எழும் . கடலினி
நடுப்பகுதியில் புயல் தோனி நூறும் போதும் பெரிய அலைகள் உருவாகுவதும் உண்டு.
இவ் அலைகளின் *ܨܵܬܼܵܐ܀ உயரம் சில மீற்றர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் மிக நீளமான அலைகளாக அவை இருப்பதில்லை. ஆயினும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தி, மற்றும் புயலால் ஏற்படும் அலைகளினால் அல்லது நீரோ ட் ட த தரினா ல நடுக் கடலில் பெரும் கப் பல கள் கூடப் பாதிப்புக்குள்ளாகின்றன.
கடல்கோள் என்பதும் சுனாமியல்ல. கடல்கோள் என்பது கடல் நீர் பெருக்கெடுத்து, நிலப்பகுதியை ஆக்கிரமித்து அப்பகுதியைக் கடல் நீர் முழுவதும் மூடிக்கொள்வதாகும்.
- 15 -

Page 13
கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினம் கடல் மூழ்கடித்துக்கொண்ட ஒரு பகுதியாகும்.
இவ்வாறு கடல்கோள் ஏற்பட்ட பகுதியிலிருந்துதான் இன்றும் கடலுக்கடியில் கிடைக்கப் பெறுகின்ற எச்சங்களை வைத்துக்கொண்டு முற்காலத்தில் இவ்வாறாக ஏற்பட்ட இயற்கை அழிவுகளை உறுதிப்படுத்துகிறார்கள் அறிஞர்கள்.
இந்தவகையில் தென் தமிழகப் பகுதி கடலால் மூழ்கடிக்கப்பட்ட தகவலைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். ‘ப. றுளியாறும் மிக நீண்ட குமரி மலையும் கொடுமையான கடலால் ஆட்கொள்ளப்பட்டதை அடுத்து வடக்குத் திசையில் கங்கையும் இமயமும் உருவான பின்பு தென் திசையை ஆண்ட மன்னன்’ என பாண்டிய மன்னனைப் பற்றிப் பாடுகிறார் இளங்கோவடிகள்.
ஆயினும் ஆழிப்பேர் அடுக்கு இராட்சத அலைகள் மிக மிக நீளமானதாகும். ஒருதொகுதி நீர்த்திரள் அலையின் நீளம் 100 மைல்களுக்கு மேலாகவும் இருக்கலாம். எனினும் ஆழிப்பேர் அடுக்கு இராட்சத அலைகளின் உயரம் ஆழ்கடலில் ஒரிரு அடிகளுக்கு மேற்படாதிருக்கலாம். இதனால் சுனாமி அலைகளால் நடுக்கடலிலுள்ள சிறு படகுகளுக்கோ அல்லது பெரும் கப்பல்களுக்கோ பாதிப்பு ஏற்படுவதில்லை.
ஆயினும் சுனாமி கரையைத் தாக்குகின்ற போது அதன் உயரம் மிக உயர்ந்ததாகும். 1896 இல் யப்பானைச் சுனாமி தாக்கியபோது ஏழு மாடிக் கட்டிட உயரத்துக்கு அலைகள் உயர்ந்ததாக அறியப்படுகிறது. இதில் சுமார் 25,000 க்கு மேற்பட்டோர் இறந்துபோயினர்.
அதேபோல 1964 ஆம் ஆண்டில் அலஸ்கா வளைகுடாவில் ஏற்பட்ட சுனாமி அலை 70 மீற்றர் (230 அடி) உயரத்துக்கு உயர்ந்து கரையோரப் பிரதேசங்களைத் தாக்கியதாக அறியக்கிடக்கிறது. இற்றைவரை அறியப்பட்ட சுனாமிகளிலே அலஸ்கா வளைகுடாவில் ஏற்பட்ட சுனாமியே அதிசமான உயரத்துக்கு எழுந்ததாகப் பதியப்பட்டுள்ளது.
- 16

சினாமி ஆயிரக் கணக்கான மைல்களுக்குக் கூடப் பயணிக்கக் கூடியது. 2004.12.26 இல் சுமாத்திரா தீவுக்கருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏறக்குறைய 2,000 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து வந்து இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் கரையோரங்களைத் தாக்கிய Nத்துள்ளது.
சுனாமி கரையை நெருங்க நெருங்க, அதாவது ஆழம் குறையத் தொடங்க அலைகளின் நீளம் குறைந்து உயரம் மிக வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். இவ் அலைகளின் வேகம் 700 - 800 கிலோ மீற்றர் வேகத்துக்குக் கூடக் கரையை வந்து மோதலாம்;
இதனால் இவ் ஆழிப்பேர் அடுக்கு இராட்சத அலைகள் வந்த வேகத்திலேயே கரையை மோதியடித்துக் கடற்கரையை அண்மித்த பிரதேசத்திலுள்ள அனைத்தையும் வாரிச் சுருட்டிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகின்றன.
விண்ணில் மிதக்கும் குறுங்கோள்கள் (விண்கற்கள் - Mete(ries) நிலத்தில் மோதுதல், மற்றும் பூமியதிர்ச்சி (நிலநடுக்கம்), மண் சரிவு, (நிலச்சரிவு) எரிமலைக் குமுறல் (வெடிப்பு) போன்றவை கடலுக்கடியில் நிகழ்வதால் சுனாமி - ஆழிப்பேர் அடுக்கு இராட்சத அலைகள் தோன்றுகின்றன.
1, 2, 3 நீர்த்தொகுதி அலைகளாகக் கரையைத் தாக்கலாம். முதல் அலைக்கும் அடுத்த அலைக்கும் இடைப்பட்ட நேரம் மிகச் சொற்ப நொடிப்பொழுதாகவோ அல்லது ஒரிரு நிமிடங்களாகவோ இருப்பதுடன், ஒரு அலை அடித் மற்றைய அலை அடிக்கும் இடைவெளிக்குள் கடல் நீர் உள்ளே உறுஞ்சட்படுவது போலிருக்கும்.
அதாவது பொதுவாகக் கடற்கரையிலிருந்து சுமார் 100 200 மீற்றர் வரையிலான பகுதிக் கடல் நீர் பின்நோக்கிச் செல்லும் போது கடல் வற்றிக்கொண்டு, போவது போன்று காட்சியளிக்கும், ஆனால் அது மீண்டும் ஓங்கியடிப்பதற்கான ஒத்திகையே என்ர்ை நன்கு மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
7

Page 14
ஏனெனில் கடல் வற்றிக்கொண்டு போகும் போது இதனைட் பலர் விளங்கிக்கொள்ளாமல் புதினம் பார்ப்பதற்காகக் கடலுக்குச் செல்வர். இப்படிச் செல்கின்ற போது ஓரிரு நிமிடங்களில் மீண்டும் 500, 600, 700 கிலோ மீற்றர் வேகத்தில் வருகின்ற ஆழிப்பேர் அடுக்கு இராட்சத அலைகளுக்கு இரையாவர். இப்படி வரலாற்றில் இறந்துபோனவர்கள் ஆயிரமாயிரம்.
2004.12.26 லும் இவ்வாறு கடலின் வேடிக்கை பார்க்கச்சென்று பலர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. எனவேதான் கடல் பின்வாங்கிச் செல்கின்ற நேரங்களில் அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருந்து கடற்கரையையும், கடலையண்டிய பகுதியிலிருந்தும் எவ்வளவு தூரத்துக்கு, எவ்வளவு விரைவாக நிலப்பகுதியை நோக்கி நகர்ந்துவிட முடியுமோ, அவ்வளவுக்கு விரைவாக முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் உடனடியாகவே பாதுகாப்பான நிலப்பகுதிக்குச் செல்ல வேண்டும். இதுபற்றிப் பர்டசாலைகள், கல்லூரிகள், நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் போன்ற சூழலில் விளக்கங்கள் கொடுக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு அறிவைப் பெற்றுக் கொண்டதனால் தான இந்தோனேஷியாவில் விடுமுறையைக் கழிப்பதற்காக ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த 60 க்கும் மேற்பட்டவர்களின் உயிரை 9 வயதுச்சிறுமி காப்பாற்றியிருக்கிறாள்.
கடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமி அவை சுனாமிக்கான அறிகுறி என்பதைப் புரிந்துகொணி டிருக்கிறாள். அக் கணமே தாயின் மூலம் ஏனையவர்களுக்கு எடுத்துச்சொல்லியதால் அவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்ததால் அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
- 18

03. களத்தில் கண்டவை
சுனாமி அடித்தபோது திருகோணமலை சாம்பல்தீவு என்ற கிராமத்தில் இருந்தேன். “கடல் வருது. கடல் வருது.” எனக் கத்திக்கொண்டு பலர் குழந்தை குட்டிகளோடும், கையில் அகப்பட்ட பொருட்களோடும் கிராமத்தின் உயர்நிலப் பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். கடல் எப்படி ஊருக்குள் வரும், வரமுடியும்? என்ற கேள்விதான் என் எண்ணத்தில் அவ்வேளையில் எழுந்தது.
உண்மையில் நடந்தது என்ன? என்பதைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடற்கரைக்குச் சென்ற சிலரோடு நானும் சேர்ந்து கொண்டேன்.
முதலாவது அலை கரையை மோதி பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. முதலாவது பேரலைக்கும் இரண்டாவது பேரலைக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் கடற்கரையில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் நாம் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
கடலைப் பற்றிய அனுபவம் எனக்கு அவ்வளவு இல்லை. குளத்தைப் பற்றிய அனுபவங்கள் நிறைய உண்டு. ஒருதடவை குளத்தில் தாண்டு மரணத் தறுவாயிலிருந்து உயிர் தப்பிப் பிழைத்த அனுபவம் இருக்கிறது. அதனால் அவ்வேளையில் கடலைப் பற்றி மற்றவர்கள் சொல்ல நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஊர் பெரியவர் ஒருவர், “இந்தக் கடல் ஒரு நாளும் இப்பிடி இருந்ததில்ல!. ஏதோ வித்தியாசமாக இருக்கு. சரியா கொதிச்சு கொந்தழிச்சுக் கொண்டிருக்கு.’ என்றார்.
மேலும் இதனை உறுதிப்படுத்துவதாக இன்னொரு பெரியவரின்
அவதானிப்பும் இருந்தது. “ஒரு காலமும் கடலை இப்பிடி நாங்கள் கண்டதில்ல.” என்றார்.
- 19 -

Page 15
இப்படிக் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென படைகள் பின்வாங்குவது போன்ற ஒரு நிலை!. நீர் உள்ளே உறிஞ்சப்பட்டு எடுப்பது போல கடல் கரையிலிருந்து 100 - 200 மீற்றர் வரையிலான நீர்ப்பகுதி சாதாரண கட்டான் தரை போல காட்சியளித்தது. புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பார்களே. அதுபோலதான் அன்றும் இருந்தது.
எனவே, உடனடியாக அங்கு நின்றுகொண்டிருந்த எல்லாரும் உயர்வான தரைப் பகுதிக்கு ஓடி வந்துவிட்டோம். நாங்கள் ஓடிவந்து சேர்வதற்குள் இரண்டாவது பேரலை தரையை அடித்துத் தாண்டவமாடியது. எனினும் இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து உயர்வான மலைப்பாங்கான இடமாக இருந்ததால் பேரலை ஊரை ஊடறுத்து உள்ளே வந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்த முடியவில்லை.
இதற்கிடையில் திருகோணமலை நிலாவெளி வீதியில் “அம்புலன்ஸ்” வண்டிகளில் விபத்து எச்சரிக்கை ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. ஒருநாளும் இல்லாத சலசலப்பும், அங்கலாய்ப்பும் அன்றைய தினம்.
அன்றைய நாள் வவுனியாவிற்கு பயணம் செய்ய இருந்த நான் என் பயணத்தை இரத்துச் செய்துவிட்டு மூன்று நாட்களாகத் தங்கிநின்ற நிலாவெளி ஆலயத்திற்குச் செல்வோம் என முடிவு செய்தேன். போகும் வழியிலேயே அம்புலன்ஸ் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக விரைந்து கொண்டிருந்தன.
முதலில் ஒன்றும் எனக்குப் புரியவில்லை. நிலாவெளியை நெருங்கியபோதுதான் மக்களின் அழுகுரல் விண்ணைத் தொட்டு எதிரொலிப்பது போல இருந்தது.
பேரலையாலி அடித்துச் செல் லப் பட்டு ஒதுக் கப்பட்டவர்களுடைய உடலங்களைக் கொண்டுவந்து மரங்களுக்குக் கீழேயும் வீதிகளுக்கு அருகிலும் கிடத்திக் கொண்டிருந்தார்கள். அழுகைச் சத்தத்தையும் மக்கள் அங்கும் இங்கும் நின்று புலம்பி அழும் காட்சிகளையுமே காணக்கூடியதாக இருந்தது.
- 20

சோகம் மேலிட அழுத வண்ணமும் அங்கலாய்த்த வண்ணமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்துபோய் இருந்தார்கள்.
இளைஞர்கள் காயமடைந்தவர்களையும் குற்றுயிராய்க் கிடந்தவர்களையும் காப்பாற்றிக் கொண்டு இருந்தார்கள். எங்கும் ஐயோ. ஐயோ, அம்மா. அம்மா, கடவுளே. கடவுளே என்ற அபயக் குரலும் அழுகுரலும் கேட்டுக் கொண்டிருந்தது. யாரை யார் பார்ப்பது? இல்லாதவர்களை எங்கே தேடுவது? எங்கு போவது? என்ன செய்வது? என்று திணறிப்போய் செய்வதறியாது குழம்பிப் போயிருந்தார்கள்.
இன்னும் சிலர் அப்பகுதியில் இருக்கின்ற மலைக் குன்றுகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இறந்து போனவர்களின் உடலங்களை வைத்து மற்றும் சிலர் அழுதுகொண்டிருந்தார்கள். காணாமல் போனவர்களைத் தேடுவதில் இன்னும் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
இக்கட்டத்தில் ஒரு இளம்தாய் தன் கைகளிலே ஒரு குழந்தையைத் தாங்கியபடி, "ஐயோ மற்றெல்லாப் பிள்ளைகளையும் கடல் கொண்டுபோயிற்றுது. இதுவும் கண்ணத் திறக்காதோ? பாத்துச் சொல்லுங்க, நல் லாப் பாத்துச் சொல்லுங்க. உங்களை கையெடுத்துக் கும்பிடுறன் இதுவும் செத்திற்றுது எண்டு மட்டும் சொல்லிப் போடாதீங்க!...” எனத் தன் மார்பை அடித்தபடி ஏற்கனவே இறந்துவிட்ட பிள்ளைக்காக தலைவிரி கோலமாகக் கிடந்து அழுது புரண்ட அந்த ஏழைத் தாயின் துயரக் காட்சி இன்னும் என் நினைவை விட்டு நீங்கவில்லை.
26 ஆம், 27 ஆம், திகதியும் நிலாவெளியில் நின்று நிர்க்கதியானோர்க்கு உதவிவிட்டு மறுநாள் வவுனியா வரவேண்டிய தேவையிருந்தது. வவுனியா வந்த பின்னர்தான் வன்னி கடற்பிரதேசம் மிகப் பாரிய பாதிப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருப்பதாக செய்திகள் வந்தவண்ணமிருந்தன. 29 ஆம் திகதி காலை புறப்பட்டு முல்லைத்தீவுப் பிரதேசத்தின் அளம்பில், கள்ளப்பாடு, வண்ணான் குளம், மணற்குடியிருப்பு போன்ற கிராமங்களையும் கிளிநொச்சி பிரதேசத்தின் தாழையடி, செம்பியன்பற்று, உடுத்துறை, ஆழியவளை,
- 21 -

Page 16
வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு போன்ற ஊர்களையும் யாழ்ப்பாணத்தில் குடாரப்பு, குடத்தனை, மணற்காடு, பருத்தித்துறை, பொலிகண்டி போன்ற இடங்களையும் என் நண்பர் ஒருவரின் உதவியோடு சென்று பார்த்தேன்.
பாதிப்புற்ற ஏதாவது ஒரு இடத்தில் தங்கிநின்று இவ்விக்கட்டான நேரத்தில் மக்களின் துன்ப துயரங்களில் உடனிருக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தது. ஏதோ தெரியவில்லை முல்லைத்தீவுப் பிரதேசத்தில் நிற்போம் எனத் தீர்மானித்துவிட்டு 30 ஆம் திகதி மாலையிலிருந்து சுமார் 3 வாரங்களாக மக்களோடு தங்கிநின்றேன்.
இந்த 3 வார காலமும் முல்லைத்தீவு முள்ளியவளைப் பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலைகளிலேயே மக்கள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். இவர்களோடு உடனிருந்து, இவர்களின் கண்ணிர்க் கதைகளுக்கு செவிமடுப்பதுதான் அப்போது எம்முன் கிடந்த பெரும் பணியாக விளங்கியது.
பலரும் குறிப்பிட்டதை நோக்கும்போது 1 ஆவது, 2 ஆவது, 3 ஆவது அலைகள் என அடுத்தடுத்து அடித்திருக்கின்றன. இவ் அலைகள் சுமார் 20 - 40 அடிவரை உயர்ந்து எழுந்து வந்திருக்கின்றன. இவற்றின் வேகம் அணிந்திருந்த ஆடைகளைக் கூட பறித்துக் கொண்டும், கிழித்துக் கொண்டும் செல்லும் அளவிற்கு மின்னல் வேகத்தில் அடித்திருக்கிறது. ஏறக்குறைய 500 கிலோ மீற்றர் வேகத்தில் ஆழிப்பேர் அடுக்கு அலைகள் அடித்திருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
90, 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வாகனங்களின் காற்றே வீதி ஓரமாக நிற்கும் எம்மைத் தூக்கிப் போடுவதுபோல இருந்தால் 500 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கும் ஆழிப்பேர் இராட்சத அடுக்கு அலைகளின் வேகம் எப்படி இருந்திருக்கும்.!
உயிர் பிழைத்தவர்களில் பலர் ஆடையில்லாமல் ஓடி வந்ததும், குற்றுயிராய்க் கிடந்தவர்களிலும், இறந்து போனவர்களின் அநேக உடலங்களில் ஆடைகள் இல்லாதிருந்ததும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகின்றன.
- 22

ஒரு பெரியவர், “முதலாவது அலையில் தப்பியவர்களில் பலரை நான் கண்டேன். அவர்களில் பலர் பெண் பிள்ளைகள். இவர்கள் இரண்டாவது அலை வருவதற்குள் ஒடித் தப்பியிருக்கலாம். ஆனால் இவர்களில் பலர், முதல் அலையில் தம் ஆடைகளைப் பறி கொடுத்ததால் அவர்கள் வெட்கத்தில் உடைந்த வீடுகளின் சுவர்களுக்குப் பின்னாலும் மரங்களுக்குப் பின்னாலும் மறைந்து நன்றுகொண்டிருந்தார்கள்.
ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள் திரும்ப அலை வரும் எனச் சொன்னேன். ஆனால், அவர்கள் என்ன செய்வது? எங்கு போவது? எப்படிப் போவது? என அங்கலாய்த்துக் கொண்டிருந்த அக்கணமே, ஐயோ அம்மா அந்தா அலை வருது. என்று அவர்கள் கூக்குரலிடும் போதே அடுத்த அலை வந்து இப்படி மறைந்து நின்றுகொண்டிருந்த பலரை வாரி அடித்துக்கொண்டு போவதை நான் என் கண்களால் கண்டேன்.” என்று கண்ணிரோடு குறிப்பிட்டார்.
இதே விடயத்தை இன்னுமொருவர் “என்னுடைய மனைவி ஒரு உடுப்பும் இல்லாமலே ஒடி வந்தா. என்னுடைய சறத்தை கழற்றிக் கொடுத்துவிட்டு நான் சும்மா நின்றேன்.” எனச் சொல்லி அழுதார்.
இதே நிலைமையினை மற்றுமொரு தொழிலாளி குறிப்பிடும்போது, “பாயை சுத்திக்கொண்டுதானையா நானும் என்
என்றார் கண்ணிர் மல்க.
33
மகளும் றோட்டுக்கு வந்தோம்!.
“கடல் எம்மைப் பிறந்த மேனியாயப்த்தான் விட்டுச் சென்றது.’ என்றார் வேறொரு பெண்மணி.
“தண்ணிரில் மிதந்து
வந்த இந்த ஒரு முழத்
துணி டுதான் எம் மானம்
காத்தது!...” எனர் று
வேதனையோடு குறிப்பிட்டார் ஒரு குடும்பஸ்தர்.
- 23

Page 17
“மானத்தைக் காக்க ஒரு ஆடை கூட இல்லாம போனதே!. “ஒரு துண்டு துணி கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டோமே!...” என்று பலர் மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஒரு தாய் தன் இரு குழந்தைகளோடு நீரில் தத்தளித்துக் கொண்டு மரக்கட்டையொன்றை பற்றிப் பிடித்துக்கொள்ளுகின்ற வேளையில் , “அம்மா ஒரு பிள்ளையை விட்டுவிட்டு ஒரு பிள்ளையையாவது காப்பாற்று!...” என்று சொல்லும்போது அவள் என்ன செய்வது என பரிதவித்த வேளையிலேயே அடுத்த அலை வந்து தாயோடு இரண்டு பிள்ளைகளையும் அடித்துச்சென்ற காட்சியை எப்படிக் கூறுவது!...” எனக் கலங்கி நின்றார் இக்குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர்.
“ஒரு தாயும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் இறுகக் கட்டிப்பிடித்தபடி இறந்து கிடந்தார்கள்’ என்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குறிப்பிட்டார்.
தந்தையொருவர் தனது இரு சிறு பிள்ளைகளைத் தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தபடி நீருக்கு மேலே வந்தபோது ஒரு பனை மரத்தின் ஒலையை பற்றிப் பிடித்துக் கொள்கிறார். அந்த அளவு உயரத்திற்கு அடுக்கு அலை நீர் உயர்ந்திருக்கிறது. இரண்டு பிள்ளைகளையும் இறுக அணைத்தபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு என்ன செய்வது என அந்தரித்திருக்கிறார்.
இந்நேரத்தில் ஒரு குழந்தையின் தலை அவரது வலது கையில் சரிவதை உணர்ந்திருக்கிறார். பார்த்தபோது அக்குழந்தை ஏற்கனவே இறந்திருப்பதைக் கண்டு மற்றைய குழந்தையையாவது காப்பாற்றுவோம் என எண்ணி இறந்த குழந்தையை விட்டுவிட அதனை
நீரடித்துச் செல்கிறது.
வலது கையால் பனையோலையை நன்றாகப் பிடித்துக் கொண்டு மற்றைய குழந்தையின் நிலையை அவதானித்த போது அக்குழந்தையின் தலை பனங்கருக்கினால் அறுபட்டிருப்பதைக் கண்டு அக் குழந்தையோடு பனையிலேயே தொங்கிக் கொணி டு
- 24

புலம்பியிருக்கிறார். “இவ்வளவு தூரம் நான் என் பிள்ளைகளை காப்பாற்றியும் ஒரு பிள்ளைகூட தப்பவில்லையே!...” எனத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தார் அத்தந்தை.
ஒரு பெரியவர் சொல்லிச் சொல்லி அழுதார். “சொத்துக்கள். போனால் போகட்டும். உடமைகள். அதுவும் போகட்டும். பரவாயில்லை. உயிர்கள். அதையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் என்ர சந்ததியையே அழித்துவிட்டதே.
அதுமட்டும் இல்லாம இவர்களெல்லாம் என்ர கண் முன்னால கடல் பறிச்சுக்கொண்டு போனது என்னால தாங்க முடியாம இருக்கு. அப்படியாவது போகட்டும். பொடிகளாவது கிடைச்சதா? . அதுகளும் இல்ல, அதுகளின் முகங்களை பார்க்க ஒரு படம் கூட இல்ல.” என வாய்விட்டுக் கதறி அழுதார்.
இறந்தவர்களின் ஆபரணங்கள் கழற்றி சேர்க்கப்பட்ட இடத்திற்கு அவைகளைப் பார்க்க வேண்டும் என்று ஒருவர் வந்தார். தன் மனைவியின் நகைகளை அடையாளம் கண்ட அவர், “ஐயா! இந்த நகையை எடுக்க நான் வரையில்ல.
என் மனைவி முதல்ல இறந்துவிட்டாளா என்பதையும் இரண்டாவது அவள் அடக்கம் செய்யப்பட்டுவிட்டாளா என்பதையும் அறிவதற்காகவே நகைகளைப் பார்க்க வந்தேன்’ என்று காயங்களுடன் உயிர் தப்பிய இந்நபர் கண்ணிரோடு அழுதழுது குறிப்பிட்டார்.
எட்டு வயது நிரம்பிய மதுஷாவும், இரண்டரை வயதுடைய விதுஷாவும் சுனாமியினால் இப்போது தாய் தந்தையை இழந்த குழந்தைகள். இவர்கள் தமது சித்தியின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இவர்களைப் பல தடவைகள் என்னுடைய சந்திப்பின்போது காண்பது வழக்கம். ஒரு நாள் மதுவடிா தனிமையில் தன் இரு கைகளாலும் நாடியைத் தாங்கியவாறு ஒரு மூலையில் தனிமையில் யோசித்துக் கொண்டிருந்தாள்.
- 25 -

Page 18
“என்னம்மா மதுஷா யோசிக்கிறீங்க? என்று 3, 4 தடவைகள் கேட்டபொழுதும் கூட “ஒன்றுமில்ல”, “சும்மா இருக்கிறன்’ என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டாள். “இல்ல, நீங்க யாரையோ பற்றி யேர்சிக்கிறீங்க? அப்படித்தானே!’ என்றதும் மதுவடிா ஓடி வந்து என்னைக் கட்டி அணைத்தாள். பின் மடியில் ஏறிக்கொண்டாள்.
ஓடி வந்து மடியில் ஏறிக் கொண்ட விதம் அவள் தன் தாய் தந்தையினுடைய மிகவும் அன்பான அரவணைப்பை இப்போது மிக மோசமாக இழ நீது நிற் கிறாள் எனபதை அபபடடமாக உணர்த்தியது.
மதுஷாவும் விதுஷாவும்
மீண்டும் “யாரைப் பற்றி நினைச்சுக்கொண்டு இருந்தனிங்க?’ எனக் கேட்டேன். மதுவடிா சொல்கிறாள், “அம்மா, அப்பாவைத்தான்!...”. அவள் சொன்ன
விதத்தில் என் கண்கள் குளமாயின.
ཉཉ
“அப்பா செத்திற்றார். அம்மாட பொடி (Body) எடுக்கல்ல!. என்று கூறிவிட்டு என்னுடைய முகத்தை உற்றுப்பார்த்து, “அம்மாட பொடியை (Body) எடுத்துத் தருவீங்களா?” என்று கேட்ட போது என் கண்ணிரை கட்டுப்படுத்த முடியவில்லை.
என் இயலாமையை உணர்ந்தவளாக மதுவடிா தொடர்ந்து சொல்கிறாள், “எல்லாரோடையும் சேர்த்து அம்மாவையும் தாட்டிருப்பாங்க..” என்று கூறி பெருமூச்சுவிட்டாள். இத்தனைக்கும் விதுஷா அடிக்கடி கூறிக்கொள்வாள், “அப்பா கடல் கொண்டு. அம்மா செத்து.” தாய் தந்தையின் இழப்பை இப்போதுதான் அணுவணுவாக அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இப்பிஞ்சு மழலைகள்.
- 26
 
 

நவரத்தினம் அபிராமி என்பவர்களுடைய மகள்தான் மாலதி. நான்கு வயது நிரம்பியவள். பாலர் பாடசாலை செல்கிறாள். சில தடவைகள் இவர்களைச் சந்தித்ததால் மாலதி பழக்கமாகிவிட்டாள்.
ஒரு தடவை, “மாலதிக் குட்டி நேசறிக்குப் போவோமா? எனக் கேட்டேன். “நான் வரமாட்டேன். கடல் வரும்!’ என்றாள். “இனிக் கடல் அப்படி வராது” என்றேன். மாலதி அதனை ஏற்றுக் கொண்டாலும், “கடல் வராட்டியும் லட்சி இல்ல, சசி இல்ல, மதுஷா இல்ல, சுதன் இல்ல, இவங்க இல்லாம நா மட்டு எப்பிடி போய் படிக்கிறது’ என்றாள்.
இவர்கள் எல்லாரும் மாலதியோடு படிக்கின்ற குழந்தைகள். இவர்கள் கடலலையினால் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்பதை தாய் மூலமாக அறிந்துகொண்ட மாலதி இப்போது கடல் என்றதும் பயந்து நடுங்குகிறாள். நண்பிகளின் இழப்பினால் துன்பப்படுகிறாள்.
மாலதியின் தாயாரோடு கதைத்துக் கொண்டிருந்த வேளை மாலதி தன் சகோதரியோடு சேர்ந்து எதையோ கேட்டு அழுதார்கள். அப்போது தாய், “எல்லாரையும் கடலுக்குத் தான் கூட்டிப் போகப் போறேன்!...” என்றதும், “நாங்க இனி குழப்படி செய்யமாட்டோம். எங்கள கடலுக்குக் கூட்டிக் கொண்டு போகவேண்டாம்” என கூறிவிட்டு அமைதியாகப் பாயிலே படுத்துவிட்டாள்.
விளையாட்டு என்றால் நான்கே வயதான மாலதிக்கு கடற்கரைதான் மைதானம். இப்போது கடல் என்றதும் பயந்து நடுங்குகிறாள். மாலதியின் தாயாரை இப்படி ஒருபோதும் கூற வேண்டாம் என்றும் அதற்கான காரணத்தையும் பின்னர் விளக்கமாக எடுத்துக் கூறினேன்.
நாகேஸ்வரன் சத்தியவதனி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒருவன் மேனகன், மற்றையவன் ஜனனன். தந்தை மேனகனைத் தூக்கிக் கொண்டு ஓடி வர, தாய் ஜனனனைக் கொண்டு வந்திருக்கிறாள். முதலலை ஜனனனையும் தாயையும் பிரித்துவிட்டது. ஒருவாறு தந்தை மனைவியையும் மேனகனையும் காப்பாற்றுகிறார்.
இப்போது மேனகன், தாயிடம் செல்லப் பின்னிற்கிறான். “எனக்குத் தம்பி வேணும்” என்று கூறும் 5 வயது நிரம்பிய மேனகன்,
- 27

Page 19
“அம்மாட்ட போகமாட்டன். அம்மா தம்பியை துலைச்சது போல என்னையும் துலைச்சிடுவா.” எனக் கூறி தந்தையோடு தான் இந்நாட்களைக் கழிக்கிறான்.
தம் உறவுகளை இழந்து, சோகத்தில் உறைந்திருந்த 27 மாணவ, மாணவியரை சகோதரன் ஜெயசீலனும் நானும் ஒரு தடவை சந்தித்தோம். அதில் பலர் தாய்மாரை இழந்தவர்கள். இன்னும் சிலர் தந்தை, சகோதரர்களை இழந்தவர்கள். மற்றும் சிலர் குடும்பத்திலுள்ள அத்தனை உறவுகளிையும் இழந்து தனி நபர்களாக எஞ்சியிருப்பவர்கள்.
இவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருந்ததால் இவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன. எனவே இவர்களுடன் உடனிருக்கவும், இவர்களின் துன்பங்களை செவிமடுக்கவும், இவர்களுக்கு கல்வி புகட்டுகின்ற அருட்தந்தை ஜோசப் றொபின்சன் இவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்திருந்தார்.
ஒரு சில பகிர்தல்கள் குழுவாக நடைபெற்ற பின் அருட்தந்தை ஜோசப் றொபின்சன், “யார் யார், உங்களுடைய குடும்பத்தில் இறந்துபோன உறவுகளை அடக்கம் செய்தீர்கள்?’ எனக் கேட்டபொழுது ஓரிரு கைகள் உயர்ந்தன. இன்னும் சில தலைகள் “ஆம்” என்று சொல்லுவது போல அசைந்தன.
அப்போது அருட்தந்தை அவர்கள், “நீங்கள் உங்களுடைய இறந்துபோன தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்களை அடக்கம் *ー செயப் யா விட் டா லுமி அவர்களை நாங்கள் மரியாதையோடு அடக்கம் செயப் தோம் . இதற்கு நாங்களே சாட்சிகள் . எனவே நீங்களும் அவர்களை அடக்கம்.” எனக் கண்ணிரோடு கூறி முடிப்பதற்கு முன்பே
 

அவர்கள் எல்லோரும் ஓவென்று அழுத காட்சி உள்ளத்தையே உறைய வைக்கிறது.
உயர்தரம் படிக்கும் மேரி பிறில்டா தன் தாய், தந்தை, ஒரேயொரு சகோதரன் ஆகியோரை இழந்து தனித்திருக்கிறாள். அவளே இவ்வாறு கூறுகிறாள், “டிசம்பர் - 26 என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகக் கசப்பான நாள். என்றுமே சந்தோசம் என நினைத்த எனக்கு தடையாக வந்த நாள்.
எத்தனையோ எதிர்பார்ப்புக்கள், கனவுகள், எண்ணங்கள் கலைந்த நாள். இப் படியொரு நிலைமை ஏற்படுமெனத் தெரிந்திருந்தால் நானே கர்ப்பத்தில் கலைந்திருப்பேன்.
அன்று காலை வெள்ளை மலை வந்தாற்போல் ஏற்பட்ட சுனாமி அலை என் அன்பிற்கினிய அம்மா, அப்பா, தம்பி மற்றும் எத்தனையோ உறவுகள் அனைத்தையும் என்னிடமிருந்து பிரித்து என்னைத் தனிமைப்படுத்தியது.
எந்த நிலையிலும் எனக்கு உதவிசெய்யும் என் அம்மா, அப்பா, இல்லாத இந்த உலகில் வாழவே விருப்பமில்லை. என் ஆருயிர் நண்பி போல் என்னோடு பழகிய என் அம்மா இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்று தத்தளிக்கின்றேன். எனக்கு உலகமே எனது குடும்பம் என்று வாழ்ந்தேன். எல்லாமே வீணாகிவிட்டது.
இனிமேல் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றேன். வாழ்க்கையே என்னவென்று தெரியிாமல் வெறும் பெற்றோரின் அரவணைப்பிலும், நண்பர்கள், உறவினர்கள் அன்பிலும் வாழ்ந்த எனக்கு இனி எவ்வாறு வாழ்வது, என்ன செய்வது எல்லாமே குழப்பமாக இருக்கிறது.
எனது கைக்குட்டை தொலைந்தால் கூட அந்த இழப்பை தாங்க முடியாது. ஆனால், இப்போது எனது குடும்பத்தை இழந்து மேலும் எனது நண்பர்கள் எல்லோரையும் பிரிந்து வாழ சக்தியில்லை. தற்கால சமூகத்தில் எனது பெயர் அநாதை!.
- 29 -

Page 20
இன்னும் எத்தனை எத்தனை சவால்கள்!. எவ்வாறு சமாளிப்பேன். எந்த தீர்மானம் எடுத்தாலும் எனது பெற்றோரிடம் கலந்தாலோசிப்பதாக அமையும். இனி காலம் தான் துணை. ஆனால், பெற்றோரின் இழப்பை ஏற்க முடியாமல் என்னைத் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றேன். வாழுவேன்.”
தாழையடி புனித அந்தோனியார் ஆலய உதவிப் பங்குத் தந்தை கானி ஸ் போவர் அவர் களை பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். கரிய பெரிய தாடியை வைத்திருந்தாலும் இவரை சந்திக்கின்ற போதெல்லாம் புன்முறுவல் செய்யும் முகத்துடன் காணப்படுவார்.
ஆனால், இவ் அனர்த்தத்தின் பின் சந்தித்தபோது சோகம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். இவரோடு பேச வேண்டுமென்று ஓரிரு தடவைகள் உணர்ந்தேன். எனினும் அதற்கான சூழல் கைகூடவில்லை
ஒரு நாள் மாலை வேளை நாங்கள் சென்றபோது ஆலயத்திற்குள்ளே அமைதியாக அமர்ந்திருந்தார். எம்மை கண்டதும் வெளியே வந்து வரவேற்றார். சுனாமி அடித்த முதல் வாரமான காலப்பகுதி ஆகையால் மீட்புப் பணிகளிலே தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டிருந்தவர் என்பதை அவர் அணிந்திருந்த ‘கசக் (அணிந்திருந்த உடை) வெளிக்காட்டியது.
அன்றைய தினம் அடிகளார் நன்றாகக் களைத்திருந்த படியினால் எங்களோடு வந்து ஆலய வராந்தையில் அமர்ந்துகொண்டார்.
’ என்றேன்.
s
“தாழையடிக்குத்தான் போய்வருகிறோம்.’ “இன்றைக்கும் ஒரு சிறுவனுடைய பொடி (Body) எடுத்தோம்!. என்று ஆரம்பித்த அருட்தந்தை மார்கழி - 26 ஆம் நாள் கொடுமையான அனுபவத்தைத் தாமாகவே சொல்லத் தொடங்கினார்.
- 30

“ஒளிவிழாவிற்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரிய இரைச்சல் சத்தம் கேட்டது. ‘ரோட்டுப் போட ரோளர் வருது’, என்று ஒரு சிறுமி கூறினாள். ‘அது நேவி அடிக்கிறான்.’ என்று இன்னுமொரு சிறுமி ჯ??? ჯჯ. XX கூற, ‘இல்ல கிபிர்தான் அடிக்கிறான் போல...' என மற்றொரு சிறுமி கூறும்போது நானும் வெளியே வந்து uார்த்தேன்.
கடல் அலை கரிய நிறத்தில் ஒரு பனை உயரத்திற்கு எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தது. எல்லோரும் ஒடுங்கள் எனக் கத்தினேன். சொல்லி ஒாரு வினாடிக்குள் கடல் அலை எங்கள எ ல லோரையும் ஆக் கிரமித் துக் கொண்டது.
‘ஐயோ! பாதர். பாதர். எங்களை காப்பாற்றுங்கோ. காப்பாற்றுங்கோ.காப்பாற்றுங்கோ.’ என தண்ணரில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த 9 பிள்ளைகள் க்த்துவதை என்னால் தொடக்கத்தில் கேட்கக் கூடியதாக இருந்தது. பின்னர் அவர்களின் சத்தம் படிப்படியாக குறைந்துகொண்டு போவதையும் என்னால் உணர முடிந்தது, இதற்கிடையில் கடலலை மேலும் கீழுமாக சுற்றிச் சுழன்று மூன்று தடவை என்னையும் நீருக்குள் அமிழ்திச் சென்றது. நீந்த நினைத்தேன். ஆனா முடியல்ல.
மூன்றாவது தடவை நீருக்கு மேலே வந்தபோது நான் பிடித்திருந்த சிறுவனை கடலலை பறித்திருந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து அலை அடித்துச் சென்றபோது ஆலமரக்கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டேன்.
எனினும் அதிலிருந்து மீண்டும் இழுத்துச் செல்லப்பட்டு வடலி
ஒன்றுக்குள் செருகப்பட்டேன். மீண்டும் வந்த அலை என்னை இழுத்துச் சென்றபோது, பெரிய ஆலமரத்துக் கிளைகளிடையே செருகப்பர்
- 31 -

Page 21
இதே மரக்கிளைகளிடையே என்னைப் போல இன்னுமொரு சிறுமி கொப்புகளிடையே செருகுண்டு கிடந்தாள். மிகவும் களைப்படைந்து போயிருந்தேன். இதனால் எப்படி மரத்திலிருந்து இறங்குவதென்று தெரியாத குழம்பிய நிலையிலும் ஒருவாறு இறங்கி காயமுற்ற அச்சிறுமியையும் இறக்கிவிட்டேன்.
இதற்கிடையில் குற்றுயிராய் கிடந்தவருடைய அனுங்கல்கள், முனங்கல்கள், அழுகுரல்களையும் கேட்கக் கூடியதாக இருந்தது. இவ்வேளையில்தான என் உள்ளத்தையே உறைய வைத்த ஒரு காட்சி!.
சிட்டுக் குருவிகள் போல ஒரு சில நிமிடங்களுக்கு முன் ஆடிப்பாடி ஒடித் திரிந்த சிறுமிகளில் 9 பேர் உயிரற்ற உடல்களோடு ஆங்காங்கே கிடந்த அந்தக் கொடுரக் காட்சிதான்!.
அப்போது கூட நான் காண்பது என்ன கனவா அல்லது நனவா என்ற ஒரு பிரமையிலேயே செய்வதறியாது அப்படியே நின்றுகொண்டிருந்தேன். இவையெல்லாம் 3, 4 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டன!.
இறந்த பிள்ளைகளை சேர்ப்பதா? காயமுற்றவர்களை காப்பாற் றுவதா? கொழுவுணர் டவர் களை மீட்பதா? உடையில்லாதவருக்கு உடை கொடுப்பதா? என ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாது நின்றேன். எனினும் குற்றுயிராய்க் கிடந்தவர்களின் நிலையைக் கண்டு உடனடியாக அவர்களை மீட்கும் பணியில் இறங்கினேன்.
அன்று தொடங்கிய மீட்புப் பணி இன்னும் தொடர்கிறது. அதை நினைக்கவே எனக்கு மிகக் கஷ்ரமாக, கவலையாக, வேதனையாக இருக்கிறது.
எப்படி எம் வாழ் நாட்களில், இதனை மறக்கமுடியும்? ..!” எனக் கூறும்போதே குரல் தளம்ப, வார்த்தைகள் குறைய, இமைகள் கீழிறங்க, கண்கள் பனிக்க, கன்னங்களில் வடிந்த கண்ணிர் அவருடைய தாடிக்குள் புகுந்து மறைந்து கொண்டது.
- 32

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பிரதேசத்தில் தங்கிநின்று சஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாட்களில் பலர் அவ்வப்போது இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். ஒருநாள் ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு குழுவினரோடு எங்களில் சிலர் , முல்லைத்தீவு நகரப் பகுதிக்குச் சென்று வந்தவர்களுக்கு இடங்களைக் காட்டிவிட்டு வருவோம் எனப் புறப்பட்டோம்.
வாகனத்தைச் செலுத்திய சாரதி கவனமாக செலுத்தினாலும் சற்று வேகமாகவே செலுத்திக் கொண்டிருந்தார். ஒரு சந்தியில் மக்கள் வீதியைக் கடந்துகொண்டிருந்த வேளை வாகனத்தை நிறுத்த வேண்டியதாயிற்று.
அப்போது ஒரு தாய், “கடல் கொஞ்சப் பேரைத்தான் விட்டு வைச்சிருக்கு மிச்சத்த நீங்க அடிச்சுக்கிண்டு போயிராதிங்க!” எனக் கூறியபோது ஒவ்வொருவரும் பலரை இழந்திருப்பது புரிந்தது.
அப்படியே போகும் வழியில் ஒரு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றோம். ஓரிரு வகுப்பறைகள் இணைக்கப்பட்டதாக ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்கி இருந்தார்கள்.
கூட வந்தவர்களில் ஒருவர், “என்ன பத்து குடும்பங்கள் இதற்குள் இருப்பதாகச் சொல்லுறீக. ஆனால் கொஞ்சப் பேர்தான் இருக்றீக?..” எனக் கேட்டபோது, “சுனாமிக்கு முதல் பெரிய குடும்பங்களா நிறையப்பேர் இருந்தம். இப்ப சுனாமி சுருக்கிவிட்டது. சின்னனாயிற்றம்..!” என்றார் நடுத்தர வயதான ஒரு பெண்மணி.
இழப்பதற்கு இனி என்ன இருக்கிறது என்ற மனநிலையில்தான் அம்மக்கள் அப்போதிருந்ததை எம்மால் உணர முடிந்தது.
அப்படியே முல்லைத்தீவு புனித பேதுரு ஆலயத்தை அடைந்தோம். அதில் கோயில் இருந்தது என்று சொல்வதற்கு அவ்வாலயத்தின் உடைந்த போட்டிக்கோவையும் உருக்குலைந்த
- 33

Page 22
முகப்பையும் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருந்தது.
சுனாமி அடித்த நேரம் ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி நடந்திருக்க வேண்டும். ஆனால், அன்று அந்நேரத்தில் அவ்வாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவில்லை.
பங்குத் தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அன்றைய தினம் திருக்குடும்ப திருவிழா என்ற படியால் அத்திருப்பலியை கோயிலிலிருந்து பெருநிலப்பகுதி நோக்கி சுமார் 1 1/2 கிலோ மீற்றர் துரத்தில் இருந்த எரிபொருள் நிலையத்தோடு அமைக்கப்பட்டிருந்த புனித சூசையப்பர் திருச்சுரூபம் முன்பாக ஒழுங்குபடுத்தி இருந்திருக்கிறார்.
அன்றைய தினத்தில் மட்டும் அவ்விடத்தில் நான்கு அருட்தந்தையர்கள், மூன்று அருட்சகோதரிகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் அளவில் அத்திருப்பலியில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
திருப்பலி முடிந்து திருச்சுரூப ஆசீர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் சுனாமி அடித்திருக்கிறது. அவ்விடத்தை கடந்தும் தண்ணிர் சென்றிருக்கிறது என்றால் பாருங்களேன்!.
இத்திருப்பலி புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தால் இத்தனை மக்களுடைய கதி என்னவாயிருக்கும்?. இவர்களில் யாருமே உயிர் தப்புவதற்கான சாத்தியக்கூறு எள்ளளவும் இல்லையென்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஆலயம் பாதிப்புற்ற விதத்தினையும் ஆலயத்தை அண்டிய பிரதேசத்தையும் பார்க்கும்போது இது புரியும்.
அன்றைய திருப்பலியை வேறிடத்தில் ஒழுங்கு செய்ததால் அன்று இத்தனை மக்களும் இப்பேராபத்திலிருந்து தப்பியிருக்கிறார்கள். அத்துடன் திருப்பலியை நிறைவேற்றிய அவ்விடத்தில் அன்றைய நாள்தான் முதன்முதலாக திருப்பலி கொண்டாடப்பட்டிருக்கிறது.
-34 -

இவி அருட் த நீ தையோடு முல்லைத்தீவுப் பகுதியைத் தரிசிக்க மேலும் S) Ch தடவை சென்றிருந்தோம். அப்போதுதான் தன் தாய், தந்தை உட்பட நெருங்கிய பல உறவுகளை இழந்துபோன 21 வயதான நித்தியா என்ற இளம் யுவதி, “பாதர். அம்மா போட்டா, அப்பா போட்டார். நான் இருந்து இனி எனர் ன செயப் வது? உங் கட கையாலதானே நான் வளர்ந்தேன். இப்ப, உங்கட கையாலேயே கொஞ்ச நஞ்சையும் தாங்க, குடிச்சிற்று, உங்கட கையாலயே சாகிறன்.”என அவள் அழுது கொணர் டே அருட்தந்தையினர் கையைப் பற்றிக்கொள்ளும் காட்சிதான் இது.
O . ، لاہC) ஒரு நாள் மத்தியான நேரம் புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்குப் போய்கொண்டிருந்தோம். வழியில் ஒரு குடும்பத்தைச் சந்திப்பதற்காக எனது நண்பர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
வீட்டிற்கு வெளியே வீதியோரமாக ஒரு மரநிழலின் கீழ் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருவர் படுத்திருந்தார்கள். அவர்கள்தான் என் நண்பருக்குத் தெரிந்தவர்கள்.
மணல் குடியிருப்பைச் சேர்ந்த திருச்செல்வம் செல்வகுமாரும், அவர் மனைவியும். மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த ஆறாத்துயரில் இருந்தார்கள். செல்வகுமார் பிள்ளைகளின் இழப்பைக் குறிப்பிடும்போது, “நீச்சல் தெரிந்தபடியால தப்பிட்டன். அதனால நிம்மதி இழந்திட்டன். இல்லாட்டி அப்படியே குடும்பத்தோடு போயிருக்கலாம்.
என்ர பிள்ளைகளோட தான் ஒடவெளிக்கிட்டஜ்,8ஒத்தவன் என்ர கழுத்த பிடித்திருந்தான். இடையில் கைமிைகிவிட்டுவிட்டான்.
-35

Page 23
கடைசி மகள் 1 1/2 வயது நிரம்பியவள். கடைசிவரையில் நான்தான் வைத்திருந்தேன். அவள் சாகும்போதுகூட சிரித்துக்கொண்டுதான் செத்தாள்.
ஏனென்டா தண்ணிர் என்றால் அவளுக்கு நல்ல விருப்பம். தண்ணியைக் கண்டால் போதும், தப்பித்தப்பி விளையாடுவாள். நாங்கள் தண்ணரில் தத்தளிக்கிறோம் என்றே தெரியாம, விளையாடிக்கொண்டு, சிரித்தபடியே செத்துப்போனாள். மூன்று பிள்ளைகளினுடைய பொடியைக் கூட எடுக்கையில..” என்று சொல்லிக் குமுறினார்.
“10, 15 நாட்களுக்கு முன்னுக்குத்தான் மூத்தமகன் பைபிளில் உள்ள நோவாவின் காலத்து வெள்ளப்பெருக்கு. கதய கேட்டான். அத பற்றி நா" சொல்லியும் என் விளக்கத்தில! அவன் முழுமையாக திருப்தி காணயில் ல. அநீத கத மாதிரியே எங்கள் கதையும்.’ என உறவினர்களிடத்தில் எஞ்சியிருந்த பிள்ளைகளுடைய ஓரிரு புகைப்படங்களைக் காட்டி செல்வக்குமாரின் மனைவி மனதுருகினாள்.
'g 2. క్లిస్క్రి* ཅན་པ་
“அலை அடிச்சுக் கொண்டு வந்தபோது நாங்கள் அகப்பட்டுக் கொண்ட இடம் முல்லைத்தீவு நகருக்கு பின்னால இருக்கிற வயல் பகுதி. நிறையப்பேர் இப்பிடி ஒடி அந்த பகுதிக்கு வந்தோம். கிட்டத்தட்ட 500 - 600 பேர்வரை இவ்வயல்கள் வழியா ஒடிக்கொண்டிருந்தோம்.
இவ்வளவு பேரும் கூக்குரல் இட்டு கத்தி அழும்போது எப்படி இருந்திருக்கும்?. பெரும் மனித அவலம், அழுகைச் சத்தமே எழுந்தது. நான் நீருக்குள் தாண்டு மேலே வந்தபோது வெள்ளக்காடாகவே அந்த வயல் பகுதி தெரிந்தது.
-36 -
 
 
 
 

10, 15 பேரைத் தவிர இவ்வயல் பகுதியில் அகப்பட்ட மற்றவங்க எல்லோரும் இறந்துதான் போயிருப்பாங்க!...” என்று கூறிய செல்வகுமார், “எங்களில ஆறுபேர், மாமா குடும்பத்தில ஒன்பது பேர், இன்னுமொரு மாமி குடும்பத்தில எட்டுப் பேர்!. எங்களிலே எத்தின பேர் இல்ல!. இந்த நிலையில மலேரியா குளிசை அடிக்கத்தான் இருந்தன்.
ஆனா அம்மாவையும், மனிசியையும் தவிக்க விடக்கூடாது என்ற படியினால இன்னும் உயிருடன் இருக்கிறன்.1.” என தன் உள்ளத்து ஆழ்துயரை வெளிப்படுத்தினார்.
இவ்வேளையில்தான் நடுத்தர வயதுடைய ஒரு குடும்பஸ்தரை சந்தித்தோம். “ஐயா! பாதர் என்ர தெய்வத்தையும், குஞ்சையும்
தேடி முள்ளியவளைக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் தண்ணி வென்ன இல்லாம மூன்று, நாலு நாளா அலையிறன். அதுகள பாக்க ஒரு படம கூட இல்லையே!. கண்டா சொல்லுங்க இல்லையண்டா என்றார் கண்ணிர் மல்க.
לל
நானும் இப்படியே செத்துப் போயிருவன்!.
இந்த வரிசையில்தான் 24 வயது நிரம் பரிய கள்ளப்பாட்டைச் சேர்ந்த சுந்தர் ராஜனைச் சந்திக்க நேர்ந்தது. மிதிவெடியில் இடது காலை இழந்தும் தன் 22 6խ եւ 15 T 601 மனைவி ராஜினிக்காகவும், 4 வயதான சஜந்தனுக்காகவும் நாளாந்தம் மிகவும் கடினப்பட்டு உழைத்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் தன் அன்புக்குரிய மனைவியையும், பாசத்துக்குரிய ஒரே மகனையும் இழந்து தனிமைப்பட்டவராகத் தவிக்கிறார்.
தாம் அணிந்திருந்த காற்சட்டையைக் காட்டி, 'இப்போது இந்த சோட்ஸ்தான் என்ர சொத்து. இனி என்ன இருக்கு? யாருக்காக நான் வாழ வேணும்? நினைக்கவே பைத்தியம் பிடிக்கிது.” என்று
- 37

Page 24
தம் துயர் பகிர்ந்துகொண்டார். “கஸ்ரத்திலும் உழைப்பதை உண்டு, சந்தோஷமாக இருந்தோம். கடவுளுக்கும் பிடிக்கயில்லப் போல.” எனச் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
சுனாமி அடித்து முதல் மூன்று வாரங்கள் முல்லைத்தீவு பகுதியில் நின்றதால் 2005 ஜனவரி - 26 முதல் அதாவது சுனாமி அடித்து ஒரு மாதத்தின் பின் சுமார் இரு கிழமைகள் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் பாதிப்புற்றவர்களோடு செலவிடலாம் எனச் சென்றிருந்தேன்.
மட்டக்களப்பு சென்றிருந்த முதல் நாளே, கல்லடி பாலத்தை அண்மித்ததாக உள்ள திருச்செந்தூர், டச்பார், நாவலடி, முகத்துவாரம், அமிர்தகழி போன்ற இடங்களின் அழிவைப் பார்த்தபோது இவ்விடங்களுக்குள் அகப்பட்ட மக்களுடைய நிலையை எண்ணிப் பார்க்க முடியாத பிரமையே ஏற்பட்டது.
இந்நிலையை விபரித்த நாவலடி வாசி ஒருவர், “மதிலில் ஏறியபடி, கம்பிவேலியில் சிக்கியபடி, சிவரோடு சாய்ந்தபடி, மரங்களைப் பிடித்தபடி, தண்ணிரில் மிதந்த படி, பற்றைக்குள், புதருக்குள் என்று மீன் அடைவது போலத்தான் சவங்கள் பார்கிற இடமெல்லாம் பரவிக் கிடந்தன!...” என்றார்.
டச்பார் திரேசா டலிமா கூறுகையில், “நானும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டேன். கல்லடி பாலத்துக்கு கீழால ஆட்கள், ரீவிகள், பிறிச்சுக்கள், ஆட்டோ, வான், மேசை, கதிரை, கட்டில், மெத்தை, அலுமாரி, பானை, சட்டி என்று மிதந் து போய்கொண்டிருந்தன. நானொரு மரக் கட்டைய பிடிச்சுக் கொண்டேன்.
அந்தக் கட்டையில இரண்டு பக்கத்திலும் இரண்டு பாம்புகள். கட்டைய விட்டால் தப்புவதற்கு வேறுவழியில்ல என்பதால் கண்ண இறுக மூடிக்கொண்டு ஒரு பாம்பை தட்டினேன். அது தண்ணிருக்குள் விழுந்தது. கொஞ்ச நேரத்தால மற்றையதும் இல்லாமல் போனது.” என்று தனது தப்பிப் பிழைத்த அனுபவத்தை கூறினாள்.
- 38 -

இப்படி பேசிக்கொண்டிருக்க மாலை நேரமாகிவிட்டது. அவ்வேளையில் நாங்கள் இருந்து கதைத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஒரு பெண்மணி வந்து அவளுடைய உறவினர் ஒருவரிடத்தில், 'சேமக்காலைக்கு போயிற்று வருவமா?’ எனக் (885 LITT.
அவளும், “ஏன் இப்ப அங்க?” என வினவ, ‘அம்மா, தங்கச்சி, பிள்ளைகளின்ர முகங்களத்தான் பார்க்கயில்ல, அவர்களின்ர (குழியையாவது பார்ப்போம்!...” எனக் கூறி மனம் கலங்கியபோதுதான் உயிரிழப்புக்களினால் நாளாந்தம் மக்கள் படும் மனவேதனையையும் துயரினையும் ஆழமாக மேலும் உணரக் கூடியதாக இருந்தது.
அன்றைய முதல் நாள் மாலைப்பொழுது சந்திப்பை முடித்துக் கொள்வோம் என எண்ணிக் கொண்டு அவர்களிடமிருந்து எழுந்து விடை பெற்றுக் கொண்டு அவ்வளாகத்தை விட்டு வெளியேறும் போது 75 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் தனிமையாக நின்று யோசித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து புன்முறுவல் செய்தேன். அவரும் மரியாதையாக மாலை வணக்கத்தை, "Good Evening 6T60T 6JTgp5560TT T.
எனக்கு அந்த மாலைப் பொழுது "Good" (நன்று) ஆக இருக்க வேண்டும் என அவர் வாழ்த்தினாலும் அவருக்கு அன்றைய பொழுது Good" (நன்று) ஆக இருக்கவில்லை என்பதை "Good Evening’ (வணக்கம்) சொன்ன முறையிலிருந்தே விளங்கிக் கொண்டேன்.
அவரோடு சற்று நேரம் பேதுவேண்டும் போல் இருந்தது. அவரும் சுனாமியால் பாதிக்கப்பட்டவூர் என்பதைப் புரிந்துகொண்டேன்.
“எப்பிடி ஐயா இருக்கிறீங்க?’ என அன்போடு கேட்ட எனக்கு ஆச்சரியமான பதில் கிடைத்தது. “பைத்தியக்காரன் மாதிரி வானத்தையும், பூமியையும் பாத்துக்கொண்டு இருக்கிறோம். சாகிற வயதில இப்படியான காட்சிகள எல்லாம் காண்றதுக்கு நாங்கள் என்ன செய்தோமோ?.” எனத் தம்மைத் தாமே நொந்துகொண்டார்.
- 39

Page 25
அப்பெரியவருடன் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்த போதே இன்னும் ஒரு சிலர் அவ்விடத்தில் வந்து கூடிவிட்டார்கள். இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு குடும்பஸ்தர், “ஆட்களோட இருக்கும் போது கவலயக் கொஞ்சம் மறந்து சிரிச்சுக் கதைக்கிறோம். தனிமையாக இருக்கும் போது அழுவம்.” என்றார். கூடியிருந்தவர்கள் அவர் கூறுவதை வழிமொழிவது போல் தலையசைத்தார்கள்.
மறுநாள் மட்டக்களப்பு புனித சிசிலியா, புனித மைக்கல் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். இக்கல்லுாரிகளில் மக்களைப் பராமரித்த முறையைப் பார்த்து உண்மையில் வியந்து போனேன். அவ்வளவு கரிசனையோடு மக்களைக் கவனித்துக் கொண்டார்கள்.
இந்த வகையில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களைத் தேடி, ஓடிச்சென்று உடனடித் தேவைகளை நிறைவேற்றி உள, ஆன்மீக ஆற்றுப்படுத்தலில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்ட பல இறை பணியாளர், ஆலய பரிபாலன சபையினர், படையினர், போராளிகள், அரச - அரச சார்பற்ற உள்நாட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பணியாளர், வெவ்வேறு கழகங்கள், மன்றங்கள், சங்கங்கள், ஒன்றியங்கள், பேரவைகள் போன்றவற்றின் தொண்டர்கள் ஆகியோரின் தொண்டாற்றும் மனோநிலையை நான் சந்தித்த மக்கள் மத்தியில் கண்டு உண்மையில் மலைத்துப் போனேன்.
இது பற்றிச் சிந்திக்கும்போது குழு ஆற்றுப்படுத்தலில் ஈடுபட்ட வேளையில் கொக்குத்தொடுவாய டினேஸ்காந் என்ற சிறுவன் பின்வருமாறு தனது உள்ளக்கிடக்கையை தன் எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தான். அவன் எழுதியதை அப்படியே தருகிறேன்.
“எம் மக்களின் கஸ்ரம் தீர்க்க, கவலை தீர்க்க வந்த போராளி அண்ணன்மார், அக்காமார், அரசாங்கம், பல நாடுகளில் இருந்து வந்த பல தொண்டர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அத்தோடு கிறீஸ்தவ பணி குருக்கள் சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகள்.
- 40

எம் மக்களின் கண்ணிர் துடைத்ததுக்கு எம்மை காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்” என்று துன்ப வேளையிலும் தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தியிருந்தான்.
மட்டக்களப்பு சென்ற இரண்டாம் நாளிலும் புனித சிசிலியா கல்லூரிக்குச் சென்றிருந்தேன். மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு இருந்தார்கள். விடயத்தை விசாரித்தேன். நடந்தது இதுதான்.
இப்பாடசாலையில் மக்கள் பெருந்தொகையில் தங்க வைக்கப்பட்டிருந்ததால் இவர்களுக்கான தேவைகளில குறிப்பாகத் தண்ணிர் முக்கியமாக விளங்கியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட நல்ல தண்ணிரை பெரிய பவுசர்’களில் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
அன்றைய காலைப் பொழுதிலும் வழமையான பவுசர்’ தண்ணிருடன் வந்து நின்றது. மக்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு அங்கு நின்ற சிலர், “தண்ணி வந்திற்றுது” என்று சொல்ல, சற்றுத் தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் காதில் இது விழுந்துவிட்டது.
“தண்ணி வந்திற்றுதாம்” என அழுது புலம்பிக் கொண்டு அங்கு நின்ற சிறுவர்கள் ஒட, சனமும் வெருண்டடித்துக் கொண்டு சிதறி ஓடினர். சில சிறார்கள் அன்றைய நாள் மாலைவரை பாடசாலையின் மேல்மாடி மண்டபத்திலிருந்து கீழே வரப் பயந்து மேலறைகளிலேயே மறைந்துகொண்ட நிலையைப் பெற்றோர் கவலையோடு தெரிவித்தார்கள்.
இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் இது போன்ற இன்னுமோர் நிகழ்வு நடந்தது. நகரின் மையப் பகுதியைக் கடந்து கல்முனை வீதியிலிருக்கும் கல்லடி பாலத்திற்கு அருகில் வீதி விபத்து ஒன்று நடந்துவிட்டது.
அதில் காயமுற்றவர்களை அங்கு நின்ற சிலர் அப்புறப்படுத்தி
மருத்துவமனைக்கு அவசர அவசரமாக ‘அம்பியூலன்ஸ்’ வண்டி மூலம் கூட்டிச் சென்றார்கள்.
- 41 -

Page 26
இதனைக் கேள்வியுற்ற காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஓட்டமும் நடையுமாக மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். இதனைப் பார்த்த சிலர் விபரத்தை விசாரித்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சரியாக விளங்கவில்லை.
“ஏன் இவர்கள் இப் படி ஓட வேணர் டும் . கடல் வருகிறபடியால்தான் ஓடுகிறார்கள்!...” என முடிவு கட்டிவிட்டு, “கடல் வருகுதாம்” எனக் கத்திக் கொண்டு திக்குத் திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வேளை நானும் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தேன். வீதிகள் மிக மிக நெருசலாக இருந்தபடியால் வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, “என்ன செய்வோம்?” என எண்ணிக்கொண்டிருந்தேன்.
துரதிஷ்டவசமாக கைத்தொலைபேசியும் செயலிழந்திருந்தது. இயல்பாகவே இது நடக்கும். காரணம் என்னவெனில் எல்லாரும் ஒரே நேரத்தில் விடயத்தை அறிய, நடந்ததைக் கேட்க, வீட்டுக்குச் சொல்ல என “டயல்’ செய்தால் அது செயலிழக்கத்தானே செய்யும்.
இப்படியே யோசித்துக் கொண்டு நின்றபோது 4 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அழுதுகொண்டு வீதியில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போகிற போக்கில் எங்கேயாவது வீதி விபத்தைச் சந்திப்பார்கள் என எண்ணிவிட்டு அவர்களை மறித்து விடயத்தை விசாரித்தேன்.
இதற்கிடையில் நடந்தது என்ன என்பதை அறிந்துகொண்டேன். அவர்கள் நின்று கதைக்க நேரமில்லாதவர்கள் போல் ஓடியோடியே, “கடல் வருகுதாம்’ எனப் பதில் சொல்லிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். நானும், “எங்க வருதாம்?” எனக் கேட்டேன். “கல்லடி பாலத்துக்கு வந்திற்றுதாம்” என்றார்கள்.
இதில் சுவாரசியமான விடயம் என்ன என்றால் அச்சிறார்கள் கல்லடிப் பாலத்தை நோக்கியே ஒடிக்கொண்டிருந்தார்கள்.
- 42 -

அவர்களை நிறுத்தி அவர்கள் கல்லடி பாலத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியபோது அவர்கள் என்னை விழித்துப் பார்த்தார்கள்.
அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு, நிலமையை எடுத்து விளக்கி, இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுத்து, அவர்கள் தங்கிநின்ற பாடசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவர்களது மகிழ்ச்சியை அளவிட முடியவில்லை.
எவ்வளவு பயத்தில் நாளும் பொழுதும் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இத்தகைய சம்பவங்கள் மூலமாக உற்று நோக்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு பல வகையாகப் பாதிப்புற்ற பலரை சந்தித்த வரிசையில்தான் லக்கி என்ற நபரையும் சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. .
ஒரு நாள் மாலை சுமார் 3.30 மணிக்கு தன் துயரைப் பகிர ஆரம்பித்த லக்கி 6 மணிவரை அழுதழுது கண்ணரில் மிதந்தவனாக தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டான்.
நான் சந்தித்த நபர்களில் வித்தியாசமான, தனித்துவமான, வியக்கத்தக்க, நான் மலைத்துப் போன ஒரு இளம் குடும்பஸ்தனாகவே காணப்பட்டான். அவனைப் பற்றியதும், அவன் குடும்பம் பற்றிய தகவல்களையும் அவன் கூறியவற்றிலிருந்து தருகிறேன்.
திருமணமாகி மூன்று ஆண்டுகள். அவளைத் துணைவியாகப் பெற்றது அவனுக்குக் கிடைத்த ஆசீர்வாதம்தான். லக்கிக்கு அவள் பெரிய 'லக்'தான்.
அவளுடைய அகத்தின் அழகு முகத்தில் வெளிப்பட்டது. எப்போதும் 'ஸ்மைலிங் பேஸ்’ (Smiling face)தான். புன்னகைத்துக் கொண்டிருக்கும் முகம். அனைத்து குணநலன்களையும் ஒருங்கே கொண்டவள். அவனும் பண்பான இளைஞன் என்பதால் இவர்கள் இருவரும் இணைந்து அன்பான குடும்பம் அமைத்ததில் வியப்பில்லை.
- 43

Page 27
ஐந்து ஆண்டுகளாக காதலித்துத் திருமணம் செய்தவர்கள். கடைசி மூன்று வருடங்களும் அவன் சவுதியில் வேலைபார்த்ததால் இவர்களுக்கிடையிலான காதல் கடிதம் மூலமாகவே வளர்ந்திருக்கிறது.
அவளுக்கு இடுப்புடன் இணைந்த முள்ளம்தண்டுப் பகுதி பிறப்பிலிருந்தே மோசமாகப் பாதிப்புற்றிருந்தது. அதனால் அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே சாதாரண பிள்ளையைப் போல நடமாட முடியாத நிலை. விரைவாக நடக்க முடியாது, ஓட முடியாது, உடனே எழுந்து நிற்க முடியாது. எல்லாவற்றிகும் இன்னுமொருவருடைய உதவிக்காக தங்கியிருக்க வேண்டிய நிலை.
இப்படிப் பல அசெளகரியங்களுக்கு உட்பட்டாலும் இவளின் அன்பான குணநலன்களால் ஈர்க்கப்பட்ட அவன் அவளைத் துணைவியாக்கிக் கொண்டான். இத்தனைக்கும் இவளுடைய உடல் நிலை காரணமாக இவளுக்குத் திருமண வாழ்வு சரிவராது என்றும், அப்படி திருமணமாகிக் கருவுற்றால் அவளுடைய உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
இத்தனை பேராபத்துக்களுக்கு மத்தியிலும் ஓர் அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
திருமணமான நாளிலிருந்து தன் மனைவியின் அத்தனை தேவைகளையும் சந்தோஷமாகச் செய்திருக்கிறான். சமைத்தல், சாப்பாடு கொடுத்தல், தோய்த்தல், குளிப்பாட்டுதல், வெளியே கூட்டிச் செல்லுதல் எனப் பல நிலைகளில் பணியாற்றி இருக்கிறான்.
சுமார் மூன்று வருட திருமண வாழ்வில் ஒருவரை ஒருவர் ஒரு நாளேனும் விட்டுப் பிரிந்தது கிடையாது. அப்படி இருப்பதற்குரிய நிலையிலும் அவள் இல்லை.
மனைவிக்கு துணையாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதால் தன்னுடைய முதலைக் கொண்டு ஒரு சிலரின் துணையோடு கடற்றொழிலைச் செய்தான். இவ்வாறு தொழிலைப் பார்க்க என்றோ, கடைத் தெருவுக்கு என்றோ சென்றால் 2, 3 மணித்தியாலங்களில்
- 44 -

திரும்பிவிடுவான். காரணம் அவனுடைய வருகையின் பின்னர்தான் தன்னுடைய உணவையோ, ஓய்வையோ பற்றிச் சிந்திப்பாள்.
ஒரே ஒரு பெண் குழந்தையை “சிசேறியன்’ மூலமாகவே பிரசவித்தாள். இதற்காக மருத்துவர் திகதி கொடுத்த வேளையில் சத்திர சிகிச்சைக்காக மயங்கும் வரை தன் துணைவர் தன்னோடே நிற்க வேண்டும்’ என்பதற்காகவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவ்வாறே மயக்க ஊசி போட்ட பின்னரும் அவளின் கைகள் அவனைப் பற்றிப் பிடித்தவாறே இருந்திருக்கின்றன.
இப்படியாக அவர்கள் ஒருமனப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவளுடைய முள்ளந்தண்டோடு இணைந்த இடுப்புப் பகுதி பாதிப்புற்றிருந்ததனால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதால் பல சவால்களுக்கு (Risks) மத்தியில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உண்மை அன்பைக் காட்டி அதில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களின் வீடு கடற்கரையை அண்மித்திருந்தது. ஆழிப்பேரலை அடித்தபோது குழந்தையுடன் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். முதலாவது அலை மூவரையும் அடித்துச் சென்றபோது குழந்தையை இழந்து விடுகின்றனர்.
இரண்டாவது அலை இருவரையும் பிரித்துவிடுகிறது. மனைவியை இழந்து தண்ணிருக்குள் மூழ்கும் நிலையில், உடைந்துபோன வள்ளம் இவன் உயிரைக் காப்பாற்றுகிறது, காயங்களுடன் இவன் உயிர் பிழைத்துக் கொள்கிறான்.
இச்சகோதரனை ஆழிப் பேரலை அடித்து சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் சந்திக்க நேர்ந்தது. அவனின் அனுபவப் பகிர்வே இது. அவனே தொடர்ந்து பகிர்ந்து கொண்டவற்றிலிருந்து ஒருசில முக்கியமான உணர்வு வெளிப்படுத்தல்களை இப்போது தருகிறேன்.
“நான் போட்டுவிட்ட உடுப்புகளோடு ஒரு வேலியில் சிக்கி என்ர மனைவி கிடந்தாள். அவளின் உடல் கிடைத்தது. ஆனால், இப்ப உயிரைத் தேடி அலைகிறேன்.” என்று அழுது தீர்த்தான்.
- 45

Page 28
“சாவிலும் ஒண்டாத்தான் நாம் சாவோம் என்று கூறுபவள் என்னவிட்டு எப்படி அவ மட்டும் போனா?” எனத் துடிக்கிறான் அவன்.
“நடந்தது எல்லாம் கனவாகவே இருந்துவிடக் கூடாதா..?” எனச் சொல்லி ஏங்குகிறான்.
‘பைத்தியம் பிடித்தாலும் பரவாயில்ல. ஏனென்டா இந்த உண்மை நிலை தெரியாமப் போய்விடும்’ என அங்கலாய்கிறான்.
“இவட பிரிவை என் இதயம் தாங்காது. தாங்கவும் முடியாது. தாங்குவதென்டா வேறொரு இதயம் வேண்டும். இல்லையென்டால் நானும் கெதியா அவவிடம் போய் விடுவேன்’ என வேதனையுறுகிறான்.
சுவரின் உதவியோடு மெல்ல நடந்து வரும்போது, “அம்மா என்னையும் ஒருக்கா தூக்கமா? என்று கேட்பாளாம் மகள். “பிள்ளய
அம்மாவால தூக்க ஏலாது .’ என்று கூற, "அப்ப அம்மாவ நா தூக்கட்டா?’ என்பாளாம் ஒன்றரை வயதான அன்பு மகள். “என் மறுபிறவி தான் இவள், உங்கள் மகள்’ என்பாளாம் அடிக்கடி
மகளைக் குறித்து மனைவி.
“இப்போது ஒரு பிறவியும் இல்லாமல் கண்ணிரில்
கரைகிறேனே!. இப்படி அழுது அழுதே இறந்து. விடுவேன்.” என்று துடியாய்த் துடிக்கிறான்.
- 46

04. சிறுவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும்
சுனாமியால் உடல், உள, ஆன்மீக ரீதியில் பலரும் பாதிப்புற்றாலும் குறிப்பாக சிறுவர்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தாக்கப்பட்ட பகுதிகளில் உயிர் இழப்புக்களை நோக்குகின்றபோது ஏறக்குறைய 50 வீதமானவர்கள் சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.
இதனைவிட உயிர்தப்பிய சிறுவர்களை எடுத்துக் கொண்டால் உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில் மட்டும் 241 சிறுவர்கள் தமது தாயையோ அல்லது தந்தையையோ சுனாமியால் இழந்திருக்கிறார்கள்.
சுனாமியால் இழந்தவர்கள் என ஏன் கோடிட்டுக் காட்டப்படுகிறது என்றால், 20 வருட காலப் போரினால் சிறுவர்கள் இழந்த பெற்றோரின் தொகை இன்னுமொரு பட்டியலாக இருக்கிறது.
அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் 286 சிறுவர்கள் தாயை இழந்துள்ளார்கள். 99 சிறுவர்கள் தந்தையை இழந்துள்ளார்கள். 73 சிறுவர்கள் தாயையும் தந்தையையும் இழந்திருக்கிறார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் 1, 2, 3, சகோதரங்களை இழந்துள்ளார்கள். இன்னும் சிலர் குடும் ப அங்கத்தவர்கள் அனைவரையும் இழந்து தனித்து விடப்பட்டுள்ளார்கள்.
மேலும் ஆயிரக் கணக்கான சிறுவர்கள் தமது பாடசாலை நணர் பர் களை இழந்திருக்கிறார்கள். இதிலும் 07, 08 வயது தொடக்கம் 15, 16 வயது வரையுள்ளவர்கள் பாரிய உள நெருக்கீட்டுக் கோளாறுக்கு
- 47

Page 29
(Post Traumatic Stress Disorder - PTSD) od 6i 6MT Taślubů Lugi அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிப்புற்ற சிறுவர்களில் காணப்படும் அறிகுறிகளைத் தொகுத்து உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) அதிகார பூர்வமாக வெளியிடாத அறிக்கையில் இருந்து பின்வரும் விடயம் எடுக்கப்பட்டுள்ளது.
தாக்கத்தின் பின்னரான
நடத்தைகள்
t a J elj ; i j
0-5 அழுதல், அனுங்குதல், கீச்சிட்டுக்கத்துதல், நடுக்கம்,
பயந்த முகம்,பெற்றோரை இழந்து விடுவோம் எனும் பயம், மற்றவர்களுடன் சேராது இருத்தல், இன்னமும் ஆபத்துள்ளது என்னும் உணர்வு.
6 - 12 ஒதுங்கியிருத்தல், செயற்பாடுகளைக் குழப்புதல்,
தொடர்ச்சியாக மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமை, பின்னகர்வு (முன்னைய விருத்திப் படிநிலையிலுள்ள நடத்தைக்குச் செல்லல்), பயங்கரக் கனவுகள், காரணமற்ற பயம், சினம், பாடசாலைக்குப் போக விருப்பமின்மை, திடீர்க் கோபம், சண்டை பிடித்தல், மருத்துவ ஆதாரமற்ற
நோய்கள்.
12 வயதுக்கு அதிர்ச்சியைத் தந்த நிகழ்வு திரும்ப நடப்பது போல
மேல் உணர்தல்,
பயங்கரக் கனவுகள், உணர்வுகள் மரத்துப் போன தன்மை, அதிர்ச்சியான நிகழ்வை நினைத்துப் பார்க்க முடியாத தன்மை,
ஒதுங்கியிருத்தல், வயது ஒத்தவர்களுடன் உறவுப் பிரச்சினை, சமூக விரோத நடத்தை, பாடசாலையைத் தவிர்த்தல், கல்விச் செயற்பாட்டில் வீழ்ச்சி,
நித்திரைக் குழப்பம்.
س 48 -

பொதுவாக பயத்தினால் கணிசமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சுனாமியைக் கனவுகளில் காண்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் பெரிய வாகன இரைச்சல்கள், கடுங்காற்று வீசுகின்ற சத்தங்களின் போது சுனாமியின் நினைவுகள் மனதில் வந்து தம் பிள்ளைகள் துன்பப்படுவதாகப் பெற்றோர் கூறுகிறார்கள்.
இது ஒரு யதார்த்தமில்லாத கற்பனைப் பயமாக (maginative fear) இருக்கிறது. இவற்றை எதிர்த்துச் சமாளிக்கும் திறன்களை (Coping Mechanism) இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் இக்கற்பனைப் பயமானது அதீத பயமாக (Phobia) மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்கிறார் அகவொளி குடும்ப உளவள இயக்குனர் அருட்திரு இராஜநாயகம் அடிகளார்.
கட்டைக்காட்டை சேர்ந்த 3 ஆம் ஆண்டு படிக்கும் 8 வயதான றேகா தன் தாயை இழந்து தவிக்கிறாள். இவர்களின் எஞ்சிய ஒருசில சொத்துக்களில் இவர்களின் ஒரு புகைப்பட அல்பமும் மிஞ்சியிருக்கிறது.
றேகா தனது தாயாரின் போட்டோக்கள் ஒவ்வொன்றையும் கவனமாக எடுத்து அவற்றைக் காயவைத்து அவற்றின் பின்னால், ‘என்ன விட்டுட்டு என்ர அம்மா போட்டா’ என எழுதி வைத்திருந்ததை அவளுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது கண்டுகொண்டோம்.
ဒွိ ဒွိပ္ျငိမ္း မွို
இதுதான் றேகாவின் தாய்.
- 49

Page 30
இப்புகைப்படத்தின் பின்னால் றேகா தானே தன் கைபட எழுதிய எழுத்துக்கள் இவை.
స్వాగ@్ళ :ܐܡܢܘ
ఇన్విత ་་་་་་་་་་
ஒரு முறை குழு ஆற்றுப்படுத்தல் நிகழ்வை சகோதரன் ஜெயசீலன் அவர்களும் நானும் நடத்தினோம். இக்குழுவில் சுமார் 26 சிறுவர் சிறுமியர் பங்கெடுத்தார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் தம் குடும் பத்தில் ஒருவரையோ அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களையோ இழந்திருந்தார்கள்.
இவர்கள் எல்லாரும் மிகவும் துயருற்று வேதனைப்படுவதை அவர்களின் சித்திரங்கள் ஊடாகத் தெரிந்து கொண்டோம்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்திக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தோம். இந்நிகழ்வில் பங்குகொண்ட சிறுவன் ஒருவன்தான் ஞா.ஜேன்சன். இவன் கீறிய படம் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. சந்திப்பின்போது நடைற்ெற உரையாடலின் ஒரு பகுதி வருமாறு:
கேள்வி: இந்த படத்தில் இருக்கும் உருவம்? பதில்: மனித உருவம்
கேள்வி: படத்தில் இருப்பவர் ஆணா, பெண்ணா? பதில்: பெண்
- 50 -

கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
கேள்வி:
பதில்:
இந்தப் படத்தை கீறும்போது யாராவது உங்கள் மனதில் இருந்தார்களா? எங்கட அம்மாதான்.
அப்படியா! ஏன் அவவுடைய சட்டைய பச்சை களறாலும் மரக்களறாலும்
கீறியிருக்கிறீங்க? அதுதான் எங்கட அம்மா கடைசியாக போட்டிருந்த சட்டை.
ஏன் உங்கட அம்மா படத்தில நிறைய தலைமுடி உள்ளதுபோல கீறியிருக்கிறீங்க? அம்மாவுக்கு நீண்ட தலைமுடி இருந்தது.அது பனவடலிக்குள்ள சிக்கினதாலதான் அவ செத்திருக்க வேணும்.
இவ்வாறு, ஜென்சன் தன் உளக்கிடக்கைகளைச் சொல்லிக்
கொண்டிருந்தான். பனையோடு அம்மா நிற்பது போலவும், வடலிகளுக்குள் சிக்கிக்கிடப்பது போலவும் நித்திரையில் கனவு காண்பதாகக் கூறினான்.

Page 31
இறுதியாக, “ஜேன்சன் வேறு ஏதாவது சொல்றதுக்கு இருக்கா?” எனக் கேட்டபோது, "அப்பா இல்லாம இருக்கலாம். அம்மா இல்லாம எப்படி இருக்கிறது?. இருக்க ஏலாது.” எனக் குறிப்பிட்டவன், “எங்களுக்கு அம்மா வேணும்.” என்றான் கண்களில் நீர் ததும்ப.
இதே சாரம் படப் பலர் கூறியிருக்கிறார்கள். க.பொ.த. (சாதாரணம்), படிக்கும் த.நிலாந்தினி குறிப்பிடும் போது, ‘அம்மா இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கையா?.” எனக் கேட்டாள்.
ஞா.ஜெனனி தன் துயரைப் பகிர்ந்துகொண்டபோது, “ஏழேழு பிறவி எடுத்தாலும் எம்மை பெற்ற தாயை, தாயின் முகத்தை பார்ப்போமா? அவவின் அன்பைப் பெறுவோமா?..!” எனத் தாயைப் பற்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
இவ் ஆற்றுப்படுத்தல் அமர்வுக்கு பத்தாம் ஆண்டு பயிலும் R. அபிலஷா வந்திருந்தாள். தத்தமது உள் உணர்வுகளை வெளிக்கொணரும் நேரம் இவள் தன் தாயை இழந்த தவிப்பால் ஒரு கவிதை எழுதியிருந்தாள். அதில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
“.. அம்மா நீங்கள் எங்கே நாங்கள் இங்கே தாயில்லா அநாதைகள்! உன்னைப் போல் ஒரு தெய்வம் இல்லையம்மா. உன்னைப் போல் யாரம்மா எம்மை ஆதரிப்பது அன்பு காட்டுவது? கடைசியாக உங்களை பூசைக்கு போகும் போது தானம்மா பார்த்தோம். இனி எப்போது பார்ப்போம் உங்களை? முடியாதம்மா எம் அப்பா பிறந்த நாளிலே நீங்கள் இறந்த நாளென்று நாங்கள் சொல்லும் நிலையோ
அம்மா . அம்மா . சொல்லம்மா..!”
எனத் தொடர்ந்தாள்.
- 52

சுனாமியினால் உயிரிழந்தவர்கள் ஒப்பட்டளவில் அதிகமானவர்கள் குழந்தைகளும் சிறுவர்களுமே. சிறுவர்களுக்கு அடுத்து, முன்னணியில் நிற்பது பெண்கள்தான். அதிலும் குறிப்பாகத் தாய்மார்களே.
பொதுவாக நம் பாரம்பரியத்தில் குடும்பங்களின் குழந்தைகள் வளர்ப்பில் தாயே , பிரதான பங்கு வகிப்பவளாகத் திகழ்கிறாள். ஒரு குடும்பத்தினுடைய இயக்கம் நம் சமுதாய கட்டமைப்பை பொறுத்தவரையில் வீட்டுத்தலைவியின் கரங்களிலே தங்கியிருக்கிறது.
இந்நிலையில் தாயை இழந்து நிற்கும் பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி பல சிக்கல்களை உருவாக்குகிறது. ஆகவேதான் பிள்ளைகளின் பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மிகுந்த பொறுமையோடும் பொறுப்புணர்வோடும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, இந்நிலையில் சிறுவர்களுக்கான உளவள, ஆன்மீக ஆற்றுப்படுத்தல் அவசியமானதும் இன்றியமையாததும் கூட. பாதிக்கப்பட்ட சிறுவர்களை இத்தாக்கத்திலிருந்து குணம் பெற வழிநடத்த வேண்டும்.
இல்லையேல் இவ்வனர்த்தத்தின் பாதிப்பைத் தொடர்ந்தும் எதிர்கொள்ள முடியாமல் மன அழுத்தமும் (StreSS), மனக்கோளாறும் பீடித்து நடத்தை பிறழ்வுள்ளவர்களாக, ஏன் மன நோயாளர்களாகவும் இவர்கள் ஆவதற்கு வாய்ப்புண்டு.
மேலும் இவர்கள் பிற்காலத்தில் குடி, போதை போன்ற அடிமைத்தனங்களுக்கும், தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபடக்கூடிய ஆபத்தும் நேரிட வாய்ப்பிருக்கின்றன.
எனவே இவர்களுக்கான உள சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமான தேவையாகிறது. உள சிகிச்சை என்பது ஊசி மருந்தைக் கொடுத்து, ‘இந்த ஊசியை இப்போது போடுங்கள். இந்த குளிசையை ஒரு நாளுக்கு மூன்று முறை விழுங்குங்கள்’ என்று கொடுக்கின்ற ஒரு சிகிச்சை முறை அல்ல என்பதை எல்லாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
- 53 -

Page 32
அன்பாக, ஆறுதலாக, ஆதரவாக, ஆற்றுப்படுத்துபவர்களாக நாம் தொடர்ந்து செயற்படுவதன் மூலமே இவர்களின் மனஅழுத்தம், மனக்கோளாற்றில் இருந்து இவர்களைக் குணமாக்க முடியும்.
இதற்கான ஊட்டத்தையும் , உற்சாகத் தையும் , மனத்தைரியத்தையும், உளவலிமையையும் கொடுக்கின்ற மையங்களாக நம் குடும்பங்கள், சமூகங்கள், மாறவேண்டும்.
எனவேதான் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றுப்படுத்துபவராக உருவாகின்றபோது குணமடைந்த ஒரு புதிய சமூதாயத்தை நாம் கட்டியெழுப்ப முடியும். இதனைத்தான் முல்லைத்தீவு மணல் குடியிருப்பை சேர்ந்த ப.லக்கி நம்பிக்கையோடு குறிப்பிடுகிறான்.
“ஒரு மரம் பல கிளைகள் என வாழ்ந்தோம்.
ஒடிந்து கீழே வீழ்ந்தோம். தளரவில்லை,
மீண்டும் வேர்விடுவோம்.”
லக்கியே வரைந்து எழுதியது இது. 38S, - 54
 
 

சிறுவர்களுக்கான உளவளத்துணை எளிமையானதல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள சுகவாழ்வு உளவளத்துணை நிலைய இயக்குனர் அருட்தந்தை சூசை டேமியன் அ.ம.தி, அவர்களும், கிளிநொச்சியில் உள்ள அன்னை உளவளத்துணை இல்ல இயக்குனர் அருட்தந்தை எட்மன் றெஜினோல்ட் அ.ம.தி. அவர்களும் குறிப்பிடும் போது பாதிப்புற்ற சிறுவர்களுக்கு வயதுக்கு ஏற்ப விசேட உள வளத்துணை அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
ஏனெனில் எல்லாச் சிறுவர்களுமே ஏதோ ஒரு வகையில் பாதிப்புற்றிருக்கிறார்கள் என்பதை உளவளத்துணையில் ஈடுபட்டிருக்கும் இவ் இயக்குனர்களும் இவாகளின் குழுவினரும் அவதானிக்கிறார்கள்.
வளர்ந்தவர்கள் தமது வேதனைகளை மனம் விட்டுப் பேசுகிறார்கள். தமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் இவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தலை நேரடியான சந்திப்புக்கள் மூலமாக ஆற்றலாம்.
ஆனால், சிறுவர்கள் நேரடியாகத் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவது குறைவு. அதனால் இவர்களின மனங்களின் செயற்பாட்டை கண்டுபிடிப்பது இலகுவானதல்ல. எனினும் இவர்களை வேறு ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்த வைக்கவேண்டும்.
அப்போதுதான் இவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தலைச் சரியாகச் செய்யமுடியும். காரணம் சிறுவர்கள் தம்மை அறியாமலே இவ் ஊடகங்கள் ஊடாக தமது ஆழ்மன இருப்புக்களை வெளிப்படுத்துகிறார்கள்.
எனவேதான் கூடி விளையாடுதல், சித்திரம் வரைதல், கதை சொல்லுதல், நாடகம் நடித்தல் போன்ற பல ஊடகங்கள் மூலமாக இவர்களின் உள்ளக் கிடக் கைகளைக் கண்டு கொள்கிறார்கள்.
- 55

Page 33
உதாரணம் Oli விளையாடும் போது ஆக்கிரமிப்பு மனநிலையை அல்லது ஒதுங் கரிக் கொள்கின்ற மனப்பாங்கை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் மனத்தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றார்கள் எனக் கண்டுகொள்ளலாம்.
உதாரணம் 02 சித்திரம் வரையும் போது கடல் பெருக்கெடுத்தல், கிராமமே நிர்மூலமாக்கப்படல், வீடு அழிந்து போதல் போன்றவற்றை வெளிப்படுத்தினால் பாதிப்பினுடைய தாக்கம் மனதுக்குள் மறைந்திருப்பது
ரெ புலனாகும்.
".
s
=
T
உதாரணம் 03: ஒரு :* கதையைத் தொடங்கிவிட்டு "1 அதனை வளர்த்து அக்கதைக்கு மேலும் உருகொடுங்கள் என்னும் போது அவர்கள் அக்கதையைச் சுனாமியோடு கொண்டுபோய் தொடர் பு படுதி து வார்களே என்றால் அதனுாடாக தாம் பாதிப்புற்ற ஏதோ ஓர் உணர்வை வெளிக்கொணர்கிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகிறது.
உதாரணம் 04. நாடகம் நடிக்கும்போது சிறுவர்கள் பாத்திரமேற்று நடிக்கின்ற பாத்திரங்களை அவதானிப்பதன் மூலமும் கண்டுகொள்ளலாம். நாடகத்தை அவர்களே உருவாக்குகிறார்கள் என்றால் நாடகத்தின் உருவத்தையும், உள்ளடக்கத்தையும் பார்க்கும்போது, அவை சுனாமி அனர்த்தத்தை வெளிக்காட்டுவதாக இருந்தால் அவர்கள் தம் மனப் பாதிப் புக் களையே வெளிப்படுத்துகிறார்கள் என்றே கணிக்கவேண்டி இருக்கிறது.
- 56
 
 


Page 34

இந்நிலையில் இச்சிறுவர்களோடு கூடப் பயணித்தல் ( cojourneying) மிக முக்கியமான தொன்றாகும். சில நிறுவனங்கள், நிலையங்கள் இந்தா அந்தா வெட்டி வீழ்த்துகிறோம் என ஆற்றுப்படுத்தல் பணியில் இறங்கியவைகள் ஒரு வருடத்திற்குள் மெளனமாகி விட்டன. அல்லது ஏதோ தம் பணி நிறைவுகண்டது போன்ற போக்கை கடைப்பிடிக்கின்றன. இத்தகைய நிலைப்பாடு சிறுவர்களின் குணமாக்கலுக்கு துணை செய்யப்போவதில்லை.
இது பற்றி உரையாடிக்கொண்டிருந்த போது சுகவாழ்வு, அன்னை இல்ல உளவளத்துணை இயக்குனர்கள் இச்சிறுவர்களுக்காக இப்போதைக்கு ஆகக்குறைந்த 3 ஆண்டுகளுக்காவது காத்திரமான நிகழ்ச்சி நிரலை அமைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.
முதலாம் ஆண்டு, இச்சிறுவர்களுடைய தேவைகளை உணர்ந்துகொண்டு தனிப்பட்ட, குழு ஆற்றுப்படுத்தலில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இக்காலப்பகுதியில் உள மேம்பாட்டு செயற்பாடுகளிலே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
இனி வரும் காலத்தில் உள சமூக மேம்பாடுகளில் (Psycho Social Well Being or Activities) 356160TLb Ostglisg5 (3(bsidipstirab6ft. ஏனெனில் உள ஆற்றுப்படுத்தல் (counseling) உள சமூக (3LDiburtigb(5 6...g6 (55.35|Tg5 6.j60J (Psycho Social Well Being) இப்பாதிப்புற்ற சிறுவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் முழுமை பெறாத ஒன்றாகவே இருந்து விடும்.
அருட்தந்தை போல் சற்குணநாயகம் S.J., பாதிப்புற்ற சிறுவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது வீட்டில் பெற்றோரின் சகோதரர்களின் பராமரிப்பு இல்லாத பிள்ளைகள் நிர்க்கதியான நிலையினை உணர்வதாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
திடீரென தம் குடும்பத்தவர்கள், பாடசாலை நண்பர்களின் இழப்பினால் தனிமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தனிமை நிலையை கையாளத் தெரியாத சூழலில் கோப உணர்வால் வழிகாட்டலை ஏற்க மறுக்கிறபோது நடத்தைப் பிறழ்வுகளுக்கு உள்ளாகிறார்கள்.
- 57.

Page 35
இதனால் இச்சிறுவர்களைப் பிரிந்திருக்கும் குடும்பத்தோடு சேர்த்தல், பாதுகாப்பான பராமரிப்பாளர்களிடம் கையளித்தல், பிரதி வீடுகளை (Alternative Homes) அமைத்துக் கொடுத்தல், ஆலோசனை கூறி ஆற்றுப்படுத்தல், கல்விக்கான உதவி அளித்தல், தனிமை, கோப உணர்வு போன்றவற்றை கையாளக் கற்றுக் கொடுத்தல் போன்ற கோணங்களிலிருந்து இவர்களோடு கூட வழி நடந்து வழிகாட்டவேண்டும் என்கிறார்.
இப்பாதிப்புற்ற சிறுவர் பராமரிப்புப் பணியில் ஈடுபடுவோர் (yp(up60o LDulu T 60T SÐ GOOGö(yp60opus60d60T aš (Wholistic Approach) கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்.
இத்தகைய திட்டங்களோடும், மனநிலையோடும் நிறுவனங்கள், நிலையங்கள் சிறுவருக்கான ஆற்றுப்படுத்தும் பணியிலே தம்மை அர்ப்பணிக்க முன்வரவேண்டும்.
இதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியதாகும். உயிரிழப்புக்களை அதிகம் சந்தித்த பிள்ளைகள் நம் அனுபவத்தில் காண்பதுபோல் தனித்து ஒதுங்கிக் கொள்பவர்களாக இருக்கலாம். அல்லது குழப்பம் ஏற்படுத்துபவர்களாகக் கூட மாறலாம். அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே இவர்கள் மட்டில் அதிக அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், பொறுப்பானவர்கள இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடுகள்தான் இந்நடத்தை மாற்றங்கள் என்பதை முதலில் புரிந்துகொண்டு இவர்களுக்கு உதவ விசேட கவனம் செலுத்தவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பாடசாலையின் 7 ஆம் ஆண்டு மாணவர்கள் இவ் அனர்த்தத்தின் பின்னா கொஞ்சம் “குழப்படி” பிள்ளைகளாக நடந்துகொள்வதை வகுப்பாசிரியர் அவதானித்திருக்கிறார். இந்நடத்தை மாற்றம் நடந்த சம்பவத்தினால் இவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் உண்டான விளைவுகளுள் ஒன்று என்கிறார்கள்.
-58

சில வேளைகளில இவர்களுடைய குழப் படி கட்டுக்கடங்காதபோது, “வந்த சுனாமி உங்களை ஏன் விட்டுட்டுப் போனது? கொண்டுபோய் இருந்தால் ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல.” என்பாராம். ஆசிரியர், இவர்களின் நடத்தையினால் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறுவதனால் இச்சிறுவர்கள் மேலும் உளரீதியில் பாதிப்படைவதை, மாணவர்கள் வெளிப்படுத்திய கருத்திலிருந்து கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது.
இன்னுமொரு பாடசாலையின் ஆரம்பப்பிரிவு வகுப்பாசிரியை ஒருவர் பெற்றோருக்கான சந்திப்புக்கு குறித்த ஒருநாளில் தாய், தந்தை இருவரும் தவறாது சமூகம் தரும் படியாக வகுப்பில் அறிவித்திருக்கிறார். இத்தனைக்கும் அவ்வகுப்பில் பெரும்பாலான பிள்ளைகள் சுனாமியினால் தாயையோ அல்லது தந்தையையோ இழந்தவர்கள் ஆவர். இப்படியான பொதுவான அறிவித்தல்கள் பாதிப்புற்ற பிள்ளைகளை மேலும் உள ரீதியாகப் பாதிப்படையச் செய்யலாம். ع
எனவேதான், இது போன்ற சந்தர்ப்பங்களின்போது சற்று விவேகமாக நடந்து கொள்வதும், முறையான வழிமுறைகளைக் கைக்கொள்வதும், சரியான அணுகு முறைகளைக் கடைப்பிடிப்பதும் பொருத்தமானதாக அமையும்.
நம் நாட்டில் * இறந்தவர்களில் சுமார் 50% மானவர்கள் சிறுவர்கள். 9 45 பேர் பெற்றோர் இல்லாத சிறுவர்களாவர். இவர்கள்
நிறுவனங்களிலோ அல்லது உறவினர் அல்லாதவர்களோடோ இருப்பவர்களு(Unaccompanied Children) 9 1,074 பேர் பெற்றோரைப் பிரிந்து உறவினர்களோடு
5|rigsluic bis(5b floofrib6ft. (Separated Children) 9 4,076 பேர் குறைந்தது ஒரு பெற்றோரையேனும் இழந்த
சிறுவர்கள். 9 வடக்குக் கிழக்கில சுனாமிக்கு முன்னதாக அதாவது 20
வருட போரின் விளைவாக சுமார் 2,500 சிறுவர்கள் 41 பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் வாழுகின்றார்கள். மேலும் பதியப்படாத சுமார் 50 சிறுவர் இல்லங்களில் இன்னும் முழுமையாக கணக்கெடுக்கப்படாமல் பெருந்தொகையான சிறுவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
- 59 -

Page 36
05. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்,
அவற்றுக்கான தீர்வுகளும்
இனப் பிரச்சனையால் எம் நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளும் சிக்கல்களும், சவால்களும் ஏராளம். அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு போர் நடவடிக் கைகளினால் பெண்கள் ஏற்கனவே மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இப்பிரச்சனையை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது சுனாமி.
பல நெருங்கிய உறவுகளை இழந்த நிலையில் பல பெண்கள் உளத் தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கணவனை, பிள்ளைகளை இழந்து தவிக்கிற பெண்கள் இத்துயரிலிருந்து மீள முடியாமல் அவதியுறுகிறார்கள்.
வசதி வாய்ப்புக்களோடு வாழ்ந்தவர்கள் முகாம்களிலிலும், தற்காலிக கொட்டகைகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
-'60
 

துணை இழப்பு, வீடு இழப்பு, குடும்பப்பிரிவு, பொருளாதார வறுமை போன்றவற்றால் வெகுவாகத் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் பிறரில் தங்கியிருக்க வேண்டியதோடல்லாமல் பிறரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இடைத் தங்கல் முகாம்களிலோ அல்லது தற்காலிக இடங்களிலோ குடியமர்த்தப்பட்டிருக்கும் பெண்கள் தனித் தேவைகளை நிறைவு செய்ய முடியாத சூழலில் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகிறார்கள். உதாரணமாக தோய்த்தல், குளித்தல், உடுப்பு மாற்றுதல், குழந்தைகளுக்கு பால் ஊட்டுதல் போன்றவற்றிற்கான பிரத்தியேகம் பெண்களுக்கும், தாய்மாருக்கும் அவசியமாகிறது.
பெண்களைச் சாதாரணமாகத் தரக்குறைவாக நோக்கும் எம் சமுதாயத்தில் இவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், இம்சைகளுக்கும், வல்லுறவுகளுக்கும் உட்படுத்தப்படுகின்ற உண்மையான பல சம்பவங்கள் வெளிக்கொணர முன்வராத காரணத்தினால் இவை திரைமறைவில் நடந்தேறுவதாகவே சொல்லுகிறார்கள்.
அனர்த்த காலங்களிலும் போர்க் காலங்களிலும் பெண்கள், சிறுவர் களின் பாதுகாப்பு மீறப் படுவது உலகளாவிய "அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
迄
மேலும் ஏற்பட்ட இழப்பினால்மன அழுத்தத்திற்கு உள்ளாகி மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு மீள முடியாத சூழலில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகப் பலர் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் மனைவியை இழந்து தவிக்கும் 25 - 45 வயதான
ஆண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சனைகளான எஞ்சிய பிள்ளைகளைப் பார்த்தல், தங்கியிருக்கும் தற்காலிக வீட்டைப்
- 61 -

Page 37
பாதுகாத்தல், சமைத்தல் போன்றவற்றோடு தமக்கு வாழ்க்கைத் துணையாக புதிதாக மறுமணம் செய்கிறார்கள்.
கணவனை இழந்த பெண்ணோ அல்லது மனைவியை இழந்த ஆணோ புதிதாக திருமணம் செய்துகொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அப்படியான ஒரு வழியும் நாளடைவில் காட்டப்படவேண்டிய ஒரு அவசியத் தேவை இருக்கிறது.
ஒரு துன்பியல் உச்ச நிலை ஒரு மனிதனுக்கு தனிமை, பாதுகாப்பு இன்மையைக் கொடுக்கும். அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு தோழமையைத் தேடுவது நியாயமானதாகத் தோன்றலாம். இது மேலதிக உளவியல், சமுகவியல் ஆய்வுக்குரியது.
ஆனால், இவ்வாறு நடைபெறும் மறுமணங்கள் மிகக் குறுகிய காலத்தில் அதாவது சுனாமி அடித்து 3, 4 மாதங்களுக்கிடையில் நடைபெற்று; மிக மிகக் குறுகிய காலத்திலேயே அதாவது ஏறக்குறைய 2, 3 மாதங்களிலேயே பிரிந்துபோவது அவதானிக்கப்படுகிறது.
இவற்றிற் குக் காரணம் உளத் தாக்கங்களை ஆற்றுப்படுத்தாமல் மறுமணங்கள் நடந்தேறுவதால் இன்னும் பல சிக்கல்களை உருவாக்கியிருக்கின்றன.
ஆக, இவர்களின் ஆழமான உளத் தாக்கங்கள், பிரச்சனைகள் தீர்க்கப்படாத சூழலில் வாழ்க்கைத் தீர்மானங்கள் தொடர்ந்தும் உறவுச் சிக்கல்களையே உருவாக்கும்.
சுனாமிக்குப் பின்னர் சுனாமித் தாக்கத்துக்குள்ளாகிய கிராமங்களில் இளவயதுத் திருமணங்கள் கணிசமான எண்ணிக்கையில் நடந்தேறுகின்றன. நம் நாட்டில் திருமணம் செய்வதற்கான தகைமை ஆண்களுக்கு 21 வயது எனவும், பெண்களுக்கு 18 வயது என இருப்பினும் இவ்வயதுகளை அடையாத ஆண்களும், பெண்களும் பதிவுத் திருமணங்களைச் செய்ய முடியாத போதும் கூடிவாழும (Living together) தம்பதிகளாகக் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் உள்ளனர்.
- 62

மேலும் தமக்கு விருப்பப்பட்டவர்களோடு கூடிக்கொண்டு வாழ்வது (Eloping) இன்னுமோர் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனையாக மாறிவருகிறது.
இவற்றை ஆராய்கின்ற போது உணர்வுபூர்வமான ஆதரவு (Emotional Support) பெறுவதற்கான வழிமுறைகளாகவே இவற்றைத் தெரிபவர்கள் தேர்ந்து கொள்கிறார்கள்.
அனேகமான முறைப்பாடுகளை ஆராய்கின்ற போது இவற்றால் பாதிப்படைவது பெரும்பாலும் பெண்களாகவே இருப்பது தெரிய வருகிறது. ஆக, இத்தகைய சமுக ரீதியான புதிய பிரச்சனைகளைப் பற்றிய தெளிந்த அறிவைக் கொடுப்பதோடு இளையோருக்கு வழிகாட்டவும் வேண்டும்.
இழப்புக்களைக் கடுமையாகச் சந்தித்த ஆண்களிற் பலர் குடிப்பழக்கத்துக்கு உள்ளாகியிருப்பது தெரிகிறது. இது, குடும்பத்தில் உயிர் பிழைத்து எஞ்சியிருப்போருக்கு மேலும் துயரங்களை உருவாக்கியிருக்கிறது.
இத் தீயபழக்கத்தினுள் புதியவர்கள் விழாதிருக்க விழிப்புணர்வுத் திட்டங்களை வகுப்பதும், விழுந்தவர்களை விடுவிக்க &LDIT6flig5lb gp6356ss) (Coping Mechanism) Luigibgp6. Lugjib, இதனால் மேலும் பல பெண்கள் உளத் தாக்கங்களுக்கு உள்ளாகாதிருக்க வழி செய்யும்.
வீட்டு வன்முறையை (DomestcViolence) பற்றிக் குறிப்பிட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பணியாற்றும் பெண் ஆர்வலர் ஒருவர் சுனாமிக்குப் பின் வீட்டு வன்முறை பெருமளவில் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் சுமார் 250 வரையிலான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றில் 15 வரையிலானவையே அதிகாரபூர்வமாக வெளிக் கொணரப் பட்டிருக்கின்றன என்றும், அம்பாறையில் ஏறக்குறைய 50 வரையிலான சம்பவங்களில் 4
- 63 -

Page 38
சம்பவங்களே சட்ட நடவடிக்கைக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் இவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தப்படும் சம்பவங்கள் நாளடைவில் மழுங்கடிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் நிலையே தொடர்வதாகவும் கவலையோடு தெரிவித்தார்.
இன்னும் கணவனை இழந்த தனித்துப் போன பெண்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பற்ற சூழல் தொடர்ந்து பல சிக்கல்களை தோற்றுவிக்கிறது. “உன்ர புருஷன் இவ்வளவு கடன் பட்டான்” என கணவனை இழந்து அவதியுறும் பெணி களை மேலும் அவஸ்தைப் படுத்துவதையும் , கொடுமைப்படுத்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இதனால் இப்பெணி களைத் தம் அதிகாரத்திற்கு உட்படுத்துவதும், தம் அடிமைத் தனத்திற்குள் அக்குடும்பத்தில் எஞ்சியோரை குறிப்பாகச் சிறுவர்களை வைத்திருப்பதும் ஆங்காங்கே
飘 2.
கண்டுகொள்ளக் கூடிய பெண்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன.
- 64
 
 

துணை இழந்த, உறவுகளை இழந்த பெண்கள் உயர சுயதொழில் முயற்சிகளான கடன் திட்டங்கள், கொடுக்கப்படுகின்றன.
இம்முயற்சிகளில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற தொடர்பும், உறவும் நாளடைவில் வேணி டாத பல விளைவுகளை உருவாக்குவதாக பெண்களும், இவர்களுக்குப் பணிபுரியும் தொண்டர்களும் குறிப்பிடுகிறார்கள்.
உதாரணமாக கடை போடுவதற்கு கடன் உதவி வழங்குதலை எடுத்துக் கொள்வோமேயானால்; கடன் பெற்று கடையை அமைத்து அதனால் உண்டாகும் வெளித் தொடர்புகள் பல சிக்கல்களையே உருவாக்குவதாக இம் முயற்சியில் ஈடுபடுகின்ற பல பெண்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
எனவேதான் பெணிகளின் நிலையை அவர்களே உணர்ந்துகொள்ள உதவுதல், இவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்துதல், இழப்புக்களை பிரச்சனைகளை கையாளக் கற்றுக் கொடுத்தல், வாழ்வாதாரத்திற்கான வெவ்வேறு வழி முறைகளை காண்பித்தல், பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்துதல், பெண்களின் உரிமைகளை உணரச் செய்தல், பெண்கள் குழுக்களை வலுவூட்டல் போன்ற நிலைகளில் தொடர்ந்து வழி நடத்துவதற்கு அர்ப்பணிப்புள்ளவர்களும், அர்ப்பணிப்புள்ள அமைப்புக்களும் செயற்பட வேண்டும்.
குறிப்பாக பெண்களுக்கான குழு கூர் உணர்வுப்படுத்தல் (Group Conscientization or Mobilization) பூாதிப் புற்ற பெண களின் ஆற்றுப்படுத்தலின் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
ஏனெனில் தங்களுடைய பிரச்சனைகளைத் தாங்களே படிப்படியாக இனம் கண்டு, அவற்றுக்கான தீர்வைக் கண்டு தங்களுடைய காலில் நிற்க குழு கூர் உணர்வுப்படுத்தல் சிறந்த பங்காற்ற முடியும்.
- 65 -

Page 39
06. சுனாமி புகட்டும் போதனை
வோஷிங்டன் பல்கலைக்கழக புவி, விண்வெளி (Earth and Space Sciences) விஞ்ஞானப் பேராசிரியர் ஜோடி போவாயஸ் (Jody Boujeois) என்பவர் வரலாற்றில் அறியப்பட்டதும், வரலாற்றுக்கு முற்பட்டதுமான சுனாமிகளைப் பற்றிக் கற்றுக்கொண்டிருப்பவர்.
சுனாமிகள் குறிப்பிட்ட காலத்துக்குக் காலம், சிலவேளைகளில் பல யுகங்களுக்குப் பின்னர் இயற்கையான அழிவுகளாக நடந்தேறுகின்றன என்கிறார்.
கடந்த அரை நூற்றாண்டில் இவ்வாறு பல சுனாமிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறோம். எனினும் இவற்றால் நேரடியாகத் துன்பப்படாதவர்கள் சுனாமி புகட்டும் படிப்பினைகளைப் பெருமளவில் புறக்கணிக்கிறார்கள் அல்லது மறந்துபோய் விடுகிறார்கள் என்கிறார் பேராசிரியர் ஜோடி.
இங்கிலாந்தில் ஒரு முறை குதிரை ஒன்றைத் திருடிய குற்றத்திற்காக நீதிபதியினால் திருடியவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளியோ, “ஒரு குதிரை ஒன்றைத் திருடியதற்காக மரண தண்டனைத் தீர்ப்பு நியாயமற்றது அநீதியானது.” என்ற வாதத்தை முன் வைத்தான்.
நீதிபதியோ அவனிடத்தில், “நீ குதிரை திருடியதற்காக இத்தண்டனை உனக்கு வழங்கப்படவில்லை. இனிமேல் யாரும் திருடாமல் இருக்கவே இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது!..” என்று கூறி தண்டனையை நிறைவேற்றினார்: திருடாமல் இருக்க இது ஒரு எச்சரிக்கை!.
ஜேர்மனியில் கிட்லரினால் கொல்லப்பட்ட ஆறு இலட்சம்
யூத மக்கள் நினைவாக நாசி சித்திரவதை முகாம்களின் ஒரு பகுதி இப்போதும் பேணப்படுகிறது.
- 66 -

அதன் நுழைவாயிலில், ‘இறந்தவர்களுக்கு வணக்கம், வாழுகின்றவர்களுக்கு எச்சரிக்கை’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோலதான் சுனாமியின் சுவடுகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு பல போதனைகளை புகட்டுகின்றன. அடித்த சுனாமி இனம், மொழி, சாதி, சமய, பால், வயது, வர்க்க வேறுபாடின்றி, பாரபட்சமின்றி சமத்துவத்தை நிரூபித்துள்ளது.
இந்த அவலத்தைக் கேட்ட உடனே துடித்து துவண்டு போகாதவர்கள் இல்லை என்றே துணிந்து கூறிவிடலாம். "ஐயோ’ என்று ஒடிச்சென்று அவர்களோடு உடனிருந்தோம். ஆறுதல் கூறினோம். ஆற்றுப்படுத்தினோம். எப்படி எல்லாம் உதவ முடியுமோ அப்படியெல்லாம் உதவிக்கரம் நீட்டினோம்.
மனித நேயமும் மனிதாபிமானமும் எம் மண்ணில் மடியவில்லை, இன்னும் உயிர்த்துடிப்புடன வாழுகிறது என்பதை எண்பித்தோம். அடுத்தவரின் அவலங்களில் உளமாரப் பங்கு கொண்டு மனிதத்தை வாழவைக்கும், மனிதத்துவத்திற்கு வாழ்வு கொடுக்கும் உயர்ந்த பொது நலப் பணி பு இநீத வலியோரையே வாழ்த்தும் உலகினில இனர் றும் வாழ்கிறது என்பதை நிரூபித்தோம்
ஆனால் இவற்றையெல்லாம் மிக இலகுவாக குறுகிய காலத்தில் மறந்து விட்டோம் என்பதுதான் கசப்பான உண்மை. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே எங்களின் கதையும் மாறிக்கொண்டிருக்கிறது.
- 67

Page 40
எல்லை கடந்த பார்வை
எத்தகைய வேறுபாடுகளை, வித்தியாசங்களை, தடைகளைத் தாண்டிச் சென்று மனிதநேயத்தை வெளிப்படுத்தினோமோ, இப்போது அதே தடைகளையும் வேறுபாடுகளையும் வெளிக்காட்டி மனிதத்தை குழிதோண்டிப் புதைக்கிறோம். ‘இவன் இங்கும் அவன் அங்கும்’ என மரணத்தின் பின்பும் வேற்றுமை பாராட்டுகிறோம்.
சுனாமி ஏற்படுத்திய சமத்துவத்தில் ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், படித்தவன் - பாமரன், வடபுலத்தான் - தென்புலத்தான், தமிழர் - சிங்களவர் - முஸ்லிம்கள் என்ற நமது ஏற்றத்தாழ்வுகள் அப்போது எங்கே போனது? அவ்வேளையில் வேற்றுமை பாராட்ட நேரம் கிடைக்கவில்லைபோலும்!. −
ஒன்றாக போட்டுப் புதைத்தோம், எரித்தோம்!. அவசர அவசரமாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதாலோ!.
பேராசிரியர் மரிய சேவியர் அடிகளாரின் வார்த்தையில், “சமாதியில் மட்டும் அன்று, வாழ் விலும் சமத்துவம் போற்றப்படவேண்டும். கட்டி வளர்க்கப்படவேண்டும்” அதாவது அன்றாடம் சமத்துவம் வாழப்பட வேண்டும்.
இந்த வகையில் சுனாமி ஏற்படுத்திய கொடுரங்களை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதனால் மனிதத்தை நேசிக்க அழைக்கப்படாதவர்களும் இருக்கமுடியாது என்றே கூறலாம்.
இருப்பினும் எம் அன்றாட வாழ்க்கைச் சூழலில் பிரச்சனைகள், சிக்கல்கள் எழும்போது பலரும் பலவாறாக நொந்து கூறுவதைப் பார்க்கிறோம்.
ஏதோ காணித்தகராற்றில் மனமுடைந்த பெண்மணி, “வந்த
சுனாமி எங்கட ஊர்ப்பக்கம் வராமல் போட்டுதே!...” என தம் உரையாடலில் குறிப்பிடத் தக்க தடவைகள் கோடிட்டுக் காட்டினாள்.
- 68

இன்னுமொரு இடத்திலே இரண்டு அயல் வீட்டாரிடையே வேலிச் சண்டை. ஒரு வீட்டாருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது, “சுனாமி யாரைக் கொண்டு போயிருக்கவேண்டுமோ அவர்களை விட்டுட்டு போய்றுதே!...” எனக் கோபத்தோடு கூறினார்.
வேறு ஒரு இடத்தில் சகோதரர்களிடையே சொத்துகள் பிரிக்கப்படும்போது தன் சகோதரன் கூடுதலாக எடுத்துக்கொண்டான் என மனவேதனைப்பட்டு, “அடிச்ச சுனாமி இன்னு கொஞ்சப் பேரை கொண்டு போகாமல் போட்டுதே!.என்று கூறி வேதனைப்பட்டார்.
மற்றொரு தடவை சமுதாய நலனில் அக்கறைகொண்ட ஒருவர் மக்களின் அற்ப சொற்ப பொருளாசையால் ஏற்படும் பிணக்குகளால மனம் உடைந்துபோய், “நல்லவர்கள், வாழவேண்டியவர்களை எடுத்துக்கொண்டு விசமிகள சுனாமி விட்டுட்டுப் போட்டுது!...” என்று சொல்லி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
காணிச் சண்டை, வீட்டுச்சண்டை, வேலிச்சண்டை, உறுதிச் சண்டை, உடைமைச் சண்டை என எம்மிடையே சொந்த உறவுகளிடையே எத்தனை சண்டைகள்!. மோதல்கள்!. பிரிவினைகள் 1. வெட்டுக்கள்1. கொத்துக்கள்1. கோட்டுக்கள் 1.
ஒரு துண்டு காணிக்கு, ஒரு அடி வேலிக்கு, ஒரு அங்குல நிலத்திற்கு பரம்பரை பரம் பரையாக சநீததி சந்ததியாக இன்னும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறோம்!.
ஆனால் எங்கள் கண்களுக்கு முன்பாக 6) நிலப்பிரதேசங்கள், கிராமங்களின் எல்லைகள் கூடத்தெரியாத அளவிற்கு ஊரினுடைய வனப்பையும், செழிப்பையும், முகத்தையும், முகவரியையும், அடையாளத்தையும், மண்வாசனையையும் இழந்து நிர்மூலமாக்கப்பட்ட நிலையினைப் பார்க்கிறோம்.
- 69

Page 41
சில இடங்களினி வரைபடங்களையே (Map) மாற்றத்திற்குள்ளாக்க வேண்டி இருக்கிறதாம்1. இலங்கை வரைபடத்தில் கரையோரங்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையிலான கிழக்கு கரையோரப் பிரதேசங்களை இனி வரையும் போது சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டி இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!.
இது தான் இன்ன கிராமம் என்று சொல்வதற்கு ஒரு துண்டு நிலப்பகுதி இருக்கிறதே தவிர, சில கிராமங்கள் வெறும் வெட்டைவெளியாகவே இன்னும் காட்சியளிக்கின்றன.
இவற்றைக் கேட்டும் பார்த்தும் கண்டும் உணரவில்லை என்றால் இச்சம்பவங்கள் எங்களோடு பேசவில்லை, எங்களைப் பாதிக்கவில்லை என்பதே பொருளாகிறது.
அப்படி எனில் இவ் அவலங்களைப பார்த்தபோதும் கேட்டபோதும் வெறும் கழிவிரக்கம் கொண்டு, அனுதாபப்பட்டு, முதலைக்கண்ணிர் வடித்திருக்கிறோமே தவிர இச்சம்பவங்கள் எம்மை மாற்றவில்லை. அதாவது சுனாமி புகட்டும் போதனைகள், அது விடுக்கும் எச்சரிக்கைகளை நாங்கள் செவிசாய்க்கவில்லை என்பதாகிறது.
- 70 -
 

வேலியைக் கடந்து, காணியைத் தாண்டி, எல்லைகளைத்
துறந்து, தோழமையை ஏற்று, மானிட சகோதரத்துவத்தில் வாழ இனிமேலாவது கற்றுக்கொள்வோம்.
- 71 -

Page 42
உலகத் தோழமை
அனர்த்தம் ஏற்பட்டு அடுத்த கணமே பாதிப்புற்ற மக்களைத் தேடி ஏனைய பிரதேசத்து மக்கள் தாரை தாரையாக படையெடுத்தனர்.
உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் உதவிகள் வந்து குவிந்த வண்ணமாகவே இருந்தன.
கொண்டுவந்து குவித்த பொருட்களை வேண்டிய அளவிற்கு பகிர்ந்தளித்த பின், மிகுதியை "ஸ்ரோர்'களில் நிறைத்து அவையும் நிரம்பி வழிய, வந்து சேர்ந்து கொண்டிருக்கும் பொருட்களை எங்கே சேர்த்துவைப்பது எனத் திண்டாடிய சந்தர்ப்பத்தையும் நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது.
உணவுப் பண்டங்கள், உடுபுடவைகள், மருத்துவ, நிவாரணப் பொருட்கள் என ஒரு பக்கம் பொருட்கள் குவிந்து கொண்டிருக்க மறுபக்கம் மீட்புப் பணியாளர்கள், வைத்தியர்கள், ஆற்றுப்படுத்துனர்கள், வெவ்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொண்டு நிறுவனங்களின் சார்பாகவும், தனிப்பட்ட விதத்திலும் வந்து கூடினர்.
ஒரு கட்டத்தில் நிவாரணப் பொருட்கள் மேல் மிச்சமாகின. அநேக வெளிநாட்டுப் பணியாளர்கள் மிகக் குறுகிய காலத்தில் நாடு திரும்பினர்.
ஆனால் இவையெல்லாம் உடனடி நேர உதவிகளாகவே வழங்கப்பட்டன. பொதுவாக அனர்த்த காலப் பணிகள் மூன்று நிலைகளாக செய்யப்படத் திட்டமிட்டனர்.
1. உடனடி மீட்பு, நிவாரணப் பணிகள் 2. தற்காலிக வதிவிடம் அமைக்கும் பணிகள் 3. நிரந்தரப் புனர்நிர்மானப் பணிகள்
இவற்றில் உடனடி நிவாரணப் பணி நிறைவுபெற்று, தற்காலிக வதிவிடப் பணிகளும் பூர்த்தி அடைந்து நிரந்தரப் புனர்நிர்மாணப் பணிகளான நிரந்தர வீடுகள் அமைத்தல், சுயவருமானத் திட்டங்களை
- 72
 

நம் நாட்டில் சுனாமி ஏற்படுத்திய அழிவுகள்
F'TE םiנוי חיה- ח sa tri
。
ရွီးဇူး,
È
ஆதாரம்: தேசிய நடவடிக்கை மத்திய நிலையம் 29 தை 2005

Page 43

உருவாக்குதல், வாழ்வியல் பயிற்சி வழங்கல், பொது சுகாதாரம் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய காலமாகும்.
ஆங்காங்கே தனி நபர்களாகவும் , தொணி டு அமைப்புக்களாகவும், சமய நிறுவனங்களாகவும் நிரந்தரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இப்பணிகள் துரிதமாகவும், கிரமமாகவும் செய்யப்படாமல் உட்ள்ளதை பல பொது அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மனிதாபிமானம் அற்ற அரசியல், ஆபத்து
கோடிக் கணக்கான பணம் வந்து குவிந்த போதிலும் அவை மக்களுக்காக செலவிடப்பட்டதா? என்பது விடைகாணாத வினாவே. ஏனெனில் பெரும்பாலான மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமக்கான உதவிகோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார்கள்.
வடக்கு கிழக்கில் ཡོད༽ * வடக்கு கிழக்கில் சுனாமியால் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்கள் (இறந்தவர்களாகக் கணக்கெடுக்கப்பட்டவர்களும் காணாமல் போனவர்களும் அடங்குவர்.) 24, 612 பேராகும். இத்தொகையானது தேசிய மட்டத்திலான எண்ணிக்கையில் அரைவாசியைக் கடந்து நிற்கிறது. அதாவது சுமார் 50 வீதமானவர்கள் வடக்கு கிழக்கில் உயிரிழந்தவர்களாவர்.
*உயிரழிவுக்கு அடுத்தபடியாக உடமை அழிவுகளில் தேசிய மட்டத்தில் நோக்குகிறபோது அழிவுற்ற வீடுகளில் 58 வீதமானவை வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலாகும்.
segb|Tyb: The tsunami and recovery, Policy Research & Information
Unit (PRIU) From the Office of the President, Sri Lanka, June 2005.
Tamils Rehabilitation Organization, Report on Emergency Re
lief and Rehabilitation for Tsunami Affected Sri Lanka; 26 December,
2004 - 26 June, 2005. ノ
- 73 -

Page 44
இச் சுனாமியாவது எங்களை ஒன்று சேர்க்கும் என நம்பியிருந்த போதும் அதுவும் சாத்தியமற்றதாக மாறியிருக்கிறது.
Ji6OTITLf Qurrgslds 35L6DLD 160L(Suu (Post Tsunami Operational Management - PTOM) so (b6).It is85 (piquTg5 bloodsoulsi) 36 ஏழைகளுக்காக வந்த பணம் எங்கே? எப்போது இது செலவிடப்படும்? எப்போது மக்கள் நிரந்தர வீடுகளை அமைக்கப் போகிறார்கள்? எவ்வாறு இவர்கள் வாழப் போகிறார்கள்? என்பன போன்ற அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகள் சின்னத்திரை, “மெகா சீரிஸ்”ஆகவே தொடர்கின்றன.
இவ் ஏழை மக்களுக்குரியதை பதுக்குவது, ஏனையவர்கள் பங்கிடுவது, ஒதுக்குவது, சுருட்டுவது, சுற்றிக்கொண்டு போவது தீமையானது. அநீதியானது. கொடுமையானது.
ஒடுக்கப்பட்ட குரலிழந்த ஏழை மக்களுக்குரிய அவசர, அவசியத் தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் மனித நேயத்தோடு இனிமேலாவது செயற்படுவார்களா?
மனிதாபிமானப் பணிகளில் அரசியலையும், இனவாதத்தையும், சுயநலத்தையும் புகுத்தி ஏழை மக்களுக்குரியதை தடுப்பதும் மனித விரோதச் செயலே.
இயற்கை, மட்டுமீறிய தேவைக்கும ஆசைக்குமல்ல
நாம் வாழும் சூழலின் காலநிலை மாற்றமடைவதை உணருகிறோம். கடந்த ஆண்டு தென்கிழக்காசியாசில் சுனாமி. இவ்வாண்டு அமெரிக்காவை கத்ரினா, ரீட்டா, வில்மா என அடுத்தடுத்து புயல் தாக்கியது. இந்தியாவில் பீகார், மும்பை போன்ற இடங்களிலும், இப்போது தமிழகத்திலும் நம் நாட்டின் ஒருசில பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு.
-74 -

இயற்கையினுடைய செயற்பாடுகள் தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. பசுமையும் செழுமையும் படிப்படியாக மறைந்து போகிறது. இவற்றுக்குக் காரணம் என்ன என்று சிந்தித்தோமா?.
இயற்கை வளத்தையும், இயற்கை விதிகளையும் பேணி நடக்காதது ஒரு புறமிருக்க, இயற்கையை அழித்து இயற்கை சூழலை மாசு படுத்துவதனால் இயல்பாகவே நம் சூழல்கள் பலவகையான மாறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு செயல் திறன் அற்றுப் போகும் போது வேண்டாத பல விளைவுகள் வெளிவரத் தொடங்குகின்றன.
4. sa ar காடுகள் காப்பாற்றின. ༄༽ “எங்கள் நாடு பெரும் அழிவிலிருந்து தப்பிக்கக் காரணம் மாங் குரோவ் காடுகள். கிழக்கு தெரங்கானு மாநிலத்தில் மட்டும் அதிகமாக மாங்குரோவ் காடுகள் இருக்கின்றன. சுற்றுச் சூழலை அது காக்கிறது. சுனாமியின் வேகத்தைக் குறைக்கிறது. கடல் அரிப்பையும் தடுக்கிறது. இத்தகைய இயற்கையின் பாதுகாப்பு வலயத்தை நாம் அழிக்கக்கூடாது. எல்லா முகத்துவராங்களிலும் அவற்றை வளர்க்க அரசே ஏற்பாடு செய்யலாம்.”
முனைவர். அகமுத்த, தங்றைத் தலைவர், சுற்றச் சூழல் தறை, மலேசிய பல்கலைக் கழகம். மலேசியா,
演_ \তষ্ঠা ஜூனியர் விகடன், 6.01.2005, ப. "ノ
இதன் விபரீதங்கள்தான் பாதகமான சூழலைத் தொடர்ந்து தோற்றுவித்துத் கொண்டிருக்கிறது.
இது பற்றி அருட்கலாநிதி அ. பி. யெயசேகரம், மன்னா,
ஏப்பிரல், 2005 ஆம் இதழில் எழுதும் போது, “.தனி மனிதனாக மட்டுமல்ல சமுதாயமாகவும் மனமாற்றமடையவேண்டும். ஒரு
- 75 -

Page 45
முழுமையான மனமாற்றத்திற்கு புரட்சிகரமாற்றம், நிலைப்பாடு எடுத்தல் அவசியம் என்பதை வாழ்வோர் எம்மவர்க்கு சுனாமி சொல்லிவிட்டுச்
சென்றுள்ளது. ஒரு நினைவூட்டலைக் கொடுத்திருக்கிறது.
எம்மவர் வருவதும் போவதும் இக்கோளத்தில் மட்டும் தான். வேறு தெரிவு எமக்கு இல்லை. இதைப் பாது காப்பது எமது கடமை.
வாழ்விற்கு இவ்வுலகம். ஆனால் மட்டுமீறிய தேவைக்கும் ஆசைக்குமல்ல.
எமக்குத்தான் இவ்வுலகம் என்று இயங்கினால் இயற்கையோடு மனிதனும் அழிவான்.
மீன்வளங்களை வெடிமருந்தினால் அழித்தல், இயற்கையை மாசுபடுத்தல் பாவம், தர்மத்திற்கு எதிரானவை என்றும் மறைகள் உணர்த்தவேண்டும்.
எமது வாழ்வு குறுகியது பலவீனமானது. பல அழிவுகளுக்கு உட்பட்டது.
இயற்கைக்கும் கடவுளுக்கும் முன்னால் நொடிப்பொழுதில் அழியக் கூடியவர்கள் நாம். எமது மேட்டிமை தற்பெருமைகளை உடைக்க இது உதவ வேண்டும்.” என அழைப்பு விடுக்கிறார்.
பேராசிரியர் நீ. மரிய சேவியர் அடிகள், கலைமுகம், கலை இலக்கிய சமூக இதழ், ஜனவரி - மார்ச் 2005 இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “...இயற்கையின் செயற்பாட்டைக் குறித்து ஆத்திரப்பட்டும், அச்சம் கொண்டும், அள்ளித் தந்தாய்! கிள்ளியும் சென்றாய்! என அழுது புலம்பும் நாம், நமக்கும் இயற்கைக்கும் உள்ள ஆழ்ந்த உறவை மீள் ஆய்வு செய்தல் அவசியம்! இயற்கையை அன்னையாக ஏற்கும் நாம் முன்னேற்றத்தின் பெயரால் அதை மாசுபடுத்தக் கூசுவதில்லை.
அணுகுண்டுப் பரிசோதனைகள் தொடக்கம் நஞ்சுப் பொருட்களை, பல்லாண்டு காலம் அழியாதிருக்கும் குழைப்பொருட்
76

குழுமங்களை, ஏன் கொலை செய்யப்பட்ட அரசியற் கைதிகளின் அல்லது ஆதரவாளர்களின் உடலங்களை கடலுக்குள் வீசுவது வரை, காடுகளை வெட்டியும் கடற்கரையோரங்களை அழித்தும் பொருளிட்டுவதிலிருந்து ஒசோன் மண்டலத்தில் ஒட்டைகள் உருவாக்கி விரிவாக்கும் செயற்பாடுகள் வரை இயற்கையை உதாசீனப்படுத்துகின்றோம்!
இது பற்றி ஆழச் சிந்தனை செய்வது வருங்கால வாழ்வின் தேவை இயற்கையை மதியாது மிதித்தால் நின்று கொல்லும்' அதன் சீற்றத்திற்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருக்கும்.” என்ற கசப்பான எச்சரிக்கையாக எதிரொலித்துக் கொண்டிருக்கும் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் எனப் பல மட்டங்களில் சிந்தித்து தீர்க்கமான தீர்மானங்களை எடுத்து அவற்றுக்கு அமைந்து, அவற்றை நடைமுறைப்படுத்த எம்மை அர்ப்பணிப்பது வருங்கால மனித வர்க்கம்
வாழ வழி வகுக்கும்.
ά
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் (Sethusamudram Shipping Canal Project - SSCP) ugó gól g}ú (8urgöl eg5lab LDTasai கேள்விப்படுகிறோம். ஆரம்ப கட்ட வேலைகள் சில ஆரம்பித்துவிட்டன போலத் தெரிகிறது. கன்னியாகுமரியிலிருந்து மன்னார் வளைகுடா வழியாக வங்கக் கடல் சென்றடைய ஒரு கடல் வழிப் பாதை அமைப்பதே சேது சமுத்திரக் கால்வாய் திட்டமாகும்.
இதனால் இந்திய கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கைத் தீவைச் சுற்றாமல் குறுக்குவழியாச் செல்வதற்கான திட்டமாகும்.
இத்திட்டம் நிறைவேறுமானால் காங்கேசன்துறை போன்ற
வடபகுதி துறைமுகங்கள் கூட வளர்ச்சிபெறும், வேலைவாய்ப்புக்கள் பெருகும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
- 77.

Page 46
இத்திட்டத்தினால் பயணநேரம், தூரம், எரிபொருள் போன்றவற்றின் விரயம் குறைந்து போய்விடும். அத்துடன் துறைமுகங்களின் வளர்ச்சி, ஏற்றுமதி - இறக்குமதியை துரிதப்படுத்தல், அன்னியச் செலாவணியின் அதிகரிப்புப் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார்கள்.
ஆனால் இக்கடல்வழிப் பாதை அமைக்கப்படப் போகின்ற பகுதி ஏறக்குறைய 08 மீற்றர் ஆழமுள்ளதாகும். இதனை சுமார் 14.5 மீற்றர் வரை ஆழப்படுத்தி, 300 மீற்றர் அகலமாக்கி, 167 கிலோ மீற்றர் நீளமும் உள்ள பாதையை செயற்கையாக செயலாக்க இருக்கிறார்கள்!.
இதனால் இப்பகுதியில் “தேசிய கடல்வாழ் உயிரினங்களின் பூங்கா’ என இனங்காணப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 21 பவளப் பாறைத் தீவுகள் அழிந்து போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
இக்கடல் பிரதேசத்தில் 3268 வகைத் தாவரங்களும் உயிரினங்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இவற்றில் பலநூறு அழிந்து போகும் சாத்தியப் பாடுகள் இருக்கின்றன.
இக்கடல் பிரதேசத்தில் சுமார் 600 வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இம் மீன்கள் வளர்வதற்கான உறைவிடமாகவும், இனப்பெருக்க மையமாகவும், இப்பகுதியின் பவளப் பாறைகள் திகழ்கின்றன.
இப்பாறைகளின் அழிவு கடல் வளத்தையே நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான இலங்கை, இந்திய மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்தையே பறிப்பதற்கு ஒப்பாகும்.
இலங்கையில் கடல் தொழிலை நம்பி வாழும் நூற்றுக்
கணக்கான கிராமங்களும், ஆயிரக்கணக்கான மக்களும் இதனால் ஏதோ ஒரு வகையில் பாதிப்படைவார்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது.
- 78

翻siji, siis,#####*, штjpҹ“.
#,#######################- ------¡¡¡¡¡¡¡¡¡ ¿fosssssssssssssssss#########ішін 115:111 -###########¿шығыңыз...»####ůři:| -sae--------- ----sử sĩ -is.Hússísississä, sae||×
%ŴŴŶŶ),* ( - ( ) sae:Hɔsɛ sɔsɔɛsɩɣ-ɩ ɖɔɖɛyʊ;&###Ħ,ĦI!!!!!!!ī£WI WWW.

Page 47

தொழிலும் , தள்ளப்பட்டிருக்கிறது.
மாவட்டம் கிராமங்கள் குடும்பங்கள்
மட்டக்களப்பு 172 18,920 கொழும்பு 27 2,020 நீர்கொழும்பு 82 11,660 காலி 155 4,530 தங்காலை 37 4,920 களுத்துறை 33 3,420 கல்முனை 258 15,150 மாத்தறை 86 5,670 afoortub 40 8,220 புத்தளம் 108 16,500 திருகோணமலை 120 8,120 முல்லைத்தீவு 31 3,100 கிளிநொச்சி 40 5,100 யாழ்ப்பாணம் 170 15,360 மன்னார் 41 7,280
மொத்தம் 1337 1,23,970
இதில் குறிப்பாக புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம்,
இந்தியாவைப் பொறுத்தவரிை*4 மாவட்டங்களைச் சார்ந்த 140 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வும் பெரும் நெருக்கடி நிலைக் குத்
இந்நிலையில், வெறுமனே வர்த்தக நலன்களையே வைத்துக்கொண்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நடத்தியே முடிப்பேன் என இந்திய அரசு ஒற்றைக் காலில் நிற்கிறது.
79
முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை போன்ற ஆறு மாவட்டங்களைச் சார்ந்த 510 மீனவக் கிராமங்கள் நேரடியான பல பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளன.

Page 48
இலங்கை அரசு ஒனர் றும் விளங் காதது போல நடந்துகொள்கிறது. இத்திட்டம் சாத்தியமானால் பல அழிவுகளுக்கு இது வித்திடலாம் என எச்சரிக்கைகள் எழுந்த வண்ணமாக உள்ளன.
ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தினால் சாதகங்களை விடப் பாதகங்களே கூடுதலாக இருக்கின்றன.
இந்நிலையில் இப்பாதக விளைவுகளால் பாதிப்புக்களுக்கு உள்ளாவது கடலை நம்பி வாழும் அப்பாவி மக்களே.
ஆகவே சுனாமியின் பின்னரேனும் இத்திட்டத்தினை அரசுகள் மீள் பரிசீலனைக்கும், மீள் ஆய்வுக்கும் உட்படுத்தக் கூடாதா? இது குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டாமா?
இயற்கைச் சூழல் அமைவை அழித்தால் இயல்பாகவே இயற்கை பல மாற்றங்களை வெளிக்கொணரும்,
அது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இனிமேலாவது புரிந்துகொள்ளக் கூடாதா? இவ் உண்மையைப் புரிவதற்கு இன்னுமொரு அனர்த்தம் ஏற்படவேண்டுமா?
- 80 -

ssssss!!! sēņu): 'Nos sraesusaeg Nots, sae,
sisijųosťðs, suae", paesaenixae, soos LEE, FÅŋŋ Ɔ sƆŋ ŋɔɔ ɲɔ sɔsɔ, sraeg Nossae;
dəəp tu ç'pi opțAA ILI 00£ issuɔI us lux! L9 I
[buto Đl|1 J0 SHB}}{I}
-|- ----sae %%| T國 國;*的.|-, !)), ±(√≠√≠√°',- ------
LLLL LLL LLLL LLLL LLLLLLL LLLLLLL LLL LL LLLL L LL LL LLL

Page 49

(p.660)
ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சுனாமியும், மீள் கட்டுமானமும் (The tsunami and recovery) எனத் தலைப்பிட்டு ஜூன் 2005 இல் வெளியிடப்பட்ட அறிக்கையானது,
"The December 26th Tsunami that devastated South Asia's Coastlines killed more than 2,00,000 people. Sri Lanka was one of the two worst affected COuntries. People of all races in Coastal areas of this island nation Were denuded Within minutes,
Nearly the same number of people who perished in twenty years civil strife died within twenty minutes on the twenty sixth of December. This was a powerful reminder to those of us in this COuntry that nature's fury spares no One. The Catastrophe We faced as a nation Will hopefully change Our attitudes and help us rise above all Our differences be they ethnic, religious or political."
('மார்கழித் திங்கள் 26 ஆம் நாள் தென் ஆசியக் கரையோரங்களை நிர்மூலமாக்கிய சுனாமி 2,00,000 க்கும் அதிகமானவர்களை கொன்றுகுவித்தது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளில் இலங்கையும் ஒன்று. எல்லா இனங்களைச் சார்ந்த இத்தீவின் கரையோரப்பகுதிகளில் வாழ்ந்துவந்தவர்களை ஓரிரு நிமிடங்களில் அழித்தொழித்தது.
20 ஆண்டுகால உள்நாட்டுச் சண்டையில் இறந்துபோன ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான மக்கள் மார்கழித் திங்கள் 26 ஆம் நாள் 20 நிமிடங்களில் மாண்டுபோயினர். இயற்கையின் கோபம் யாரையும் விட்டுவைப்பதில்லை என்பது இந்த நாட்டில் வாழும் எமக்கு ஒரு ஆணித்தரமான எச்சரிக்கையோடு கூடிய நினைவூட்டலாகும். ஒரு நாட்டு மக்களாக நாம் சந்தித்த இப்பேரழிவு எம் மனநிலைகளை நிச்சயமாக மாற்றுவதோடு இன, மத, அரசியல் முதலான எல்லாவகையான வேறுபாடுகளைக் களைந்து மேலெழ உதவும்”). என ஆரம்பிக்கிறது.
- 81

Page 50
ஆனால், அரசாங்கத்தின் மனப்பான்மையில் எந்தவிதமான மாற்றமும் இதுவரை ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
இலண்டன் பி. பி. சி. (B. B. C) 19.11.2005 அன்று தமிழோசைச் செய்தியில், குறிப்பிட்ட ஒரு போாசிரியர், பின்வரும் விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
அதாவது இலங்கைக்கு வழங்கப்பட்ட சுனாமி மீள்கட்டுமானப் பணிக்கான பணத்தில் 12 வீதமே இதுவரை செலவிடப்பட்டதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயத்தைக் கோடிட்டுக் காட்டினார்.
அரச அதிகாரிகளும், தலைவர்களும் இதனை நோக்க வேண்டியிருக்கிறது.
நாட்டில் போரும் இல்லாத அதேவேளை சமாதானமும் g6)6 ms (No Peace and No War Time) ஒரு சூனிய காலமாகவே இச்சமாதான ஒப்பந்த காலம் அமைந்திருக்கிறது. இக்காலப் பகுதியிலும் அநியாயமாகப் பல உயிரிழப்புக்கள்!.
சுனாமி, ஆள் பார்த்தா அடித்தது?
ܝܬܐ܆
சுனாமி கோவில், ஆலயம், பள்ளிவாசல், 'பன்சல பார்த்தா மோதியது? படைமுகாம் , போராளிகளின் பாசறை, பொது மக்கள் குடியிருப்புப் பார்த்தா ஊடுருவியது?
ஒருமை, பன்மை பார்க்காமால் ஒன்றாய்ச் சேர்ந்து ஓங்கி அடித்தது.
- 82 -
 
 

என்ன செய்தோம்?
ஆள் பார்த்து, இனம் பார்த்து, மதம் பார்த்தா உதவினோம்? இல்லையே.
படைவீரர்கள், போராளிகள், பொதுமக்கள் என்று மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது உதவிக் கரம் நீட்டினோம்.
கிறீஸ்தவ, இந்து, இஸ்லாமிய பெளத்த மரண அடக்க முறைகள் வெவ்வேறாயினும் ஒன்றாய்த்தானே சேர்த்து
பொதுச் சேமக்காலையையும், பொது மயானத்தையும், பொது மையவாடியையும், பொதுக் 'கனத்தை யையும் உருவாக்கினோம். 4%
மாண்டுபோயிருந்த மனிதத்திற்க் மீண்டும் உயிர் கொ
*x
டுத்தோம்.
ஆகவேதான்,
இப்போது
மனிதத்தின் பெயரால், மனிதர்களாக வாழத் துடிக்கும் உயிர் பிழைத்தவர்களின் பெயரால், மரணித்த மனித பிணக்குவியல்களின் பெயரால் கேட்கிறோம். மனிதம் வாழ வழி சமையுங்கள்.
-83.

Page 51
உசாத்துணை நூல்கள்
கென்னடி, S. M. ஜான், அவர்களும் செல்வா, A, அவர்களும்,
சுனாமி ஓர் எச்சரிக்கை, வைகறை வெளியீடு, திண்டுக்கல், 2005.
கோபால் வெல்லவுர்க், சுனாமி - ஒரு மீள் பார்வை - விபுலம்
வெளியீடு - 12, மட்டக்களப்பு, 2005.
Tamils Rehabilitation Organization, Report on Emergency Relief
and Rehabilitation for Tsunami Affected Sri Lanka; 26 December, 2004 - 26 June, 2005.
கட்டுரைகள்
இலக்கியத்தில் சுனாமி, வீரகேசரி, கொழும்பு, 09.01.2005.
இணையம், சுழன்று அடிக்கும் சுனாமி அலைகள், வீரகேசரி,
கொழும்பு, 02.01.2005.
மரியசேவியர், நீ, 26.12.2004 ஆழிப்பேர் அடுக்கு அலைகளின்
அகோரத் தாண்டவம், கலைமுகம், திருமறைக் கலாமன்றம், யாழ்ப்பாணம், ஜனவரி - மார்ச் 2005.
யெயசேகரம், அ. பி., இறைவன் கடல்கோளைத் தடுத்திருக்க
முடியாதா? (இறையியல் அலசல்), மன்னா, மன்னார், ஏப்றல் - 2005.
The tsunami and recovery, Policy Research & Information Unit
(PRIU) From the Office of the President, Sri Lanka, June 2005.
- 84 -

உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும்
சேரல்: செ. அன்புராசா
26, அமைதியகம் வவுனியா
- 85

Page 52


Page 53


Page 54
I
மானிடத்திற்கும் இயற்:ை வரலாற்று நிகழ்வு. ஆழிப்பேரலை எ வடு, மகப்பேற்றின் வேதனை ! மனிதத்தின் கொடுமுடியான உறவு ஆழமான துன்பியலுக்கு யார் விடை
இவை அனைத்தையுமே சொல்லாமல் சொல்லும் “சுனா இளையோடுகின்றன.
"மரணித்த மனிதர்களில் வழிசமையுங்கள்' என்ற வேண்டு "சுனாமி சொல்லாத சோகங்கள்!.
வெறும் அனுபவ பதிவ பகுப்பாய்வாகவும் அமையும் இ அல்லாடிப்போன மனிதர்களாக - கைகொடுக்கும் கைவிளக்காக எமக்
இறை பணியை மானுட கே பணியாகக் காணும் அன்புராசா வாழ்த்துவோம். செயல் இயக்கமா வரவேற்போம்.
ISEN 955 - 1389 - O00 - 3
i Printed by Uni
 
 

கக்குமான பிணைப்பின் பிரழ்வு
மது நினைவில் நெடிய கால நிலை இயற்கையின் உள்ளிடு. ஆனால் களை இழந்தவர்களின் மனநோயின்
காண்பர்?
எனது தோழன் அன்புராசா, ாமி சொல்லாத சோகங்களில்
அருள்கலாநிதிஅ.பி.யெசேகரம்
i சார்பில் மனிதம் ՃiIII Lք தலோடு அன்புராசா அடிகளாரின் வெளியாகிறது.
ாக அல்லாமல் உள சமூகவியல்
இந்நூல் சுனாமி அனர்த்தத்தில் மனிதத்தை மீட்பதில் காப்பதில்
க்கு வாய்த்துள்ளதெனலாம்.
சவையாக, மனம் ஒன்றிய தியாகப் அடிகளாரின் அன்பு மனதை ன அவரது அன்பின் ஆக்கங்களை
பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
tPiters