கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக சரித்திரம் 1500 - 1948

Page 1
2) 635 JS
15OO
G. C. E. 5a IJ
C
ஆக்கிே
மு. இளையதம்பி
பயிற்றப்பட்ட ஆங்கில முதலா
C
அச்சுப்
பூ சங்க

fத்திரம்
ப்புக்குரியது
யான்: '
, B. A., (Lond.)
ம் தராதரப்பத்திரமுடையவர்.
பதிப்பு
அச்சகம் Igц", штJLITELJI.
விலை ரூபா 450
v, ́

Page 2

உலக சரித்திரம் 15oo-1 948
ஆக்கியோன்: (p. 325hru 15th, B. A., (Lond.)
பயிற்றப்பட்ட ஆங்கில முதலாம் தராதரப்பத்திரமுடையவர்
CIV
3இ732
அச்சுப்பதிப்பு: பூரீ லங்கா அச்சகம் 234.கே. கே. எஸ். ருேட், யாழ்ப்பாணம்,

Page 3
முதற்பதிப்பு 1958
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே உரியது.
TO
MY BELOVED MOTIIEI
விலை ரூபா 4-50

முகவுரை
sama
நான் எழுதி வெளியிட்ட சரித்திரப் புத் த க ங் கள் மூன்றும் ஆரும், ஏழாம், எட்டாம் வகுப்புகளிற் பல பாடசாலை களிற் பாவிக்கப்பட்டுவருகின்றன. G. C. E. வகுப்புக்குரிய சரித்திரப் பாடத்திட்டத்திற்கேற்ற உலகசரித்திரமொன்றையும் எழுதும்படி கேட்டுக்கொண்ட பல ஆசிரியர்களின் வேண்டு கோளுக்கிணங்கி இந்நூலை எழுதியுள்ளேன். கி. பி. 1500 தொடக்கம் 1948 வரையுமுள்ள உலக சரித்திரம் தெளிவா கவும், வகுப்புக்கேற்றவண்ணம் விரிவாகவும் எழுதப்பட்டிருக் கிறபடியால் இதை ஆசிரியர்களும், மாணவர்களும் தகுந்த சரித்திரப்பாடப்புத்தகமாக ஏற்றுக்கொள்வர் என்பது எனது துணிபு.
இந்நூலுக்கு மதிப்புரை எழுதியுதவிய கலாநிதி வ. பொன் னையா B, A, Hons, Ph.D. அவர்களுக்கு எனது மனமார் ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்நூலைச் செவ்வனே அச்சிட்டுதவிய பூரீ லங்கா அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
18 A ஆஸ்பத்திரி ருேட், மு. இளையதம்பி
கொட்டடி யாழ்ப்பாணம்
1-2-58

Page 4
sit T8, G. Gurir?or uur B. A. (Hons) Ph.D. formi isir 9Infils
மதிப்புரை
இந்நூலாசிரியராகிய திரு. மு. இளையதம்பி என்பார் சரித் திரவறிஞர் உலகில் "உலக சரித்திரம்" என்னும் இந்நூலாலே தமக்கு ஓர் இருப்பிடம் ஆக்கிக்கொண்டாரேன்று சோன்னுல், அது மிகையாகாது. சரித்திரம் கற்பித்தலிலே தமது பல்லாண்டு அனுபவத்தையுந் திரட்டி மாணுக்கருக்குச் சரித்திரத்திற் கவர்ச்சி உண்டாகும் வண்ணம் எழுதியது போற்றத்தக்கது. தமது நூலி லே நிகழ்காலச் செய்திகளுக்குக் காரணம் வினவுவாராய்ப் பதி னைந்தாம் நூற்றண்டுச் செய்திகள் சிலவற்றைக்கூறி அதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றண்டுச் செய்திகள் பலவற்றை உட்படுத்தி எழுதியமை இந்நூலுக்குப் பெரியதோர் அணியாகும். நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்து அவை நிகழ்ந்த முறையே கூழுது விஞ்ஞான முறையைத் தழுவி ஒன்றுக்கொன்று ஏதுவும் பயனு மாக நிற்குமாறு தொகுத்தமை ஆசிரியருடைய நுண்மாணறிவை நன்கு புலப்படுத்துகின்றது. உலகத்துப் பல்வேறு நாடுகளும் வேறு வேருய் விருத்தியடைகின்றன என்னும் கொள்கையை மறுத்து உலகம் முழுவதும் ஒன்றெனும்படி வளர்கின்றதெனக் காட்டியுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் எழுந்த இயக்கங்கள் ஏனை நாடுகளை எவ்வாறு தாக்கி ஓங்கச் செய்தன என்பதை அறிய விரும்பின், இந்நூல் இவ்விருப்பத்தை நிறைவாக்குமென லாம்.
இந்நூல் எளிய நடையில் எளியசொற்கொண்டு கற்பவர் எளிதில் விளங்குமாறு எழுதப்பட்டமையால், மாணுக்கருக்கு நல்விருந்து அளிக்கும் என்பது துணிபு.
கொக்குவில் வ, பொன்னேயா
9-12-57

6,
:
14.
5.
16.
17.
18.
19,
20.
21.
22. 23.
24.
25.
26.
பொருளடக்கம்
தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும் புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் 8 புதிய இராச்சியங்களின் எழுச்சி முப்பதாண்டு யுத்தம் இங்கிலாந்து (1485 - 1688) es e. பதினேழாம் நூற்றண்டில் சில ஐரோப்பிய நாடுகளின் i58)6Odid
இந்தியாவில் மொகலாயர் ஆட்சி
ரூஷியாவும் மகாபீற்றர் செய்த கொண்டுகளும் 0 g e.
பிரஷ்யாவின் எழுச்சி இங்கிலாந்தில் ஹனுேவ மன்னர்களின் ஆட்சி பிரித்தானியாவும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் பிரான்சியப் புரட்சியும், ஐரோப்பிய யுத்தமும், அதன் பயன்களும்
. கைத்தொழிற் புரட்சி
சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும் (1815-1848)
இத்தாலியின் தேசீய ஒற்றுமை ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு e
இந்தியா O 8 ரூஷியா
சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய
நாடுகள் ty s a
19-ம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் சாம்ராச்சியப் பெருக்கம்
ஆசிய கீழ்த்திசை நாடுகள் 8 அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும் . முதலாம் உலக யுத்தம் O. சர்வதேச சங்கம் ரூஷியா
இரண்டாம் உலக யுத்தம் 9 8
பக்கம்
12
28
37
47
68
79
90 98
107
14
126
46
156
166
174
185
207
215
233
244
257 264
278
286
295

Page 5

உலக சரித்திரம் (1500–1948)
முதலாம் அத்தியாயம் தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
கி. பி. நாலாம் நூற்றண்டின் பிற்பகுதி தொடக் கம் அநாகரிக சாதியினரான லொம்டாட்ஸ், சாக்ஸன்ஸ், யூற்ஸ், வான்டல்ஸ், ஹன்ஸ் என்பவர்களின் படையெ டுப்பினல் பழைய ரோம இராச்சியம் நிலைகுலைய மேற்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இரு இராச் சியங்கள் தோன்றின. மேற்கு ஐரோப்பாவுக்கு மில னும், கிழக்கு ஐரோப்பாவுக்குக் கொன்ஸ்தாந்தைன் நோப்பிளும் மத்திய ஸ்தானங்களாக அமைந்தன. இப் பகுதிகளுக்கு முறையே போப்பாண்டவரும், பெரியமதக் குருவும் தலைமைதாங்கினர். லத்தீன்மொழியும் கிரேக்க பாஷையுமே முறையே அவ்விராச்சியங்களில் வழங்கி வந்தன. அந்தப் பரிசுத்த ரோம இராச்சியங்களிலிருந்த மக்கள் ஆலயங்கள் போதித்த கொள்கைகளை விசுவா சத்துடன் ஏற்றுக்கொண்டனர். அவர்களுடைய மனதில் விசுவாசமே குடிகொண்டிருந்தது. இவ்வுலகவாழ்க்கை யின் பின்னல் ஏற்படும் ஆலகத்தில் நம்பிக்கையுடைய வராயும் இவ்வுலகத்தில் அத்ற்கு வேண்டிய ஆயத்தங்க 2ளச் செய்வதே தங்களுடைய முக்கிய கடமையென்று மெண்ணினர். அக்கடமைகளைச் செய்து முடிக்கிறதற்கா கக் கிறிஸ்து தேவாலயத்தை ஸ்தாபித்திருப்பதாகவும் அதன்மூலம் மக்கள் ஞான அறிவைப் பெறலாமென் றும், பாவத்தினின்று விலக்கிக்கொள்ளலாமெனவும், மோட்ஷம், நரகம் என்பனவற்றின் வழியைக் காட்டு மெனவும் மக்கள் நம்பிக்கைகொண்டிருந்தனர். தேவா

Page 6
2 தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
லயமோ அதன் தெய்வீகக் கடமைகளைச் செய்து முடிப் பகறகாகிய முறையில் ஸ்தாபிக்கப்பட்டு, பூமி யில் கிறிஸ்துவின் பிரதிநிதியெனக் கருதப்பட்ட போப்பாண் டவரே அதற்குத் தலைமைதாங்கினர். அவருக்குக் கீளுள்ள ஆர்ச்பிசப், பிசப், குரு என்பவர்களும் மக்க ளின் வாழ்க்கையின் எல்லாப்பகுதிகளிலும் த ங் க ள் கொள்கைகளைப்பரப்பினர். மத்திய காலமனிதனுக்கு இவைகளெல்லாவற்றிலும் சந்தேகமற்ற நம்பிக்கையுண் டானது. தேவாலயத்துக்கு அப்புறமுள்ளவர்களுக்கு இரட்சிப்பில்லையெனவும் அவர்கள் நரகத்துக்கே செல்ல :ேண்டி நேரிடுமென்ற நம்பிக்கை அவர்களிடமிருந் தமையால் ஆலயங்களின் செல்வாக்கு அதிகரித்தன. ஆனல் மத்திய காலத்திலுள்ள தேவாலயம் மக்களை ஏமாற்றவோ அல்லது அறிவிலிகளாய் வைத்திருக்கவோ விரும்பாது மக்களின் இரட்சிப்புக்காகவே உழைக்கும் நோக்கமுடையதாயிருந்தது. அது போதித்தது எதுவோ அவையெல்லாம் உண்மையென மக்கள் கருதலாயினர். மார்க்க விஷயங்களோ, சாஸ்திரமோ, சரித்திரமோ இவையெல்லாம் தேவாலய மேலதிகாரியின் தீர்மானத் திலே தங்கியிருந்தமையால், மக்களிடம் சுதந்திரமான கொள்கைகள் காணப்படவில்லை. இவ்வுலக வாழ்விற் பார்க்க மறுவுலகவாழ்க்கையே பெரிதென நம்பிய மக் கள் சமய அறிவிலேயே விசுவாசமும் சிரத்தையுங் காட்டினர். w
ஆனல் குருமார் அ6ாரிகமாங்கரிடம் கிறீஸ் அறுமதத் தைப் போதித்து நம்பிக்கையுண்டாக்கினதும ல் லாது, கல்வியையும் பாதுகாத்து, ஏழைகளையும், கோயாளிகளை யும் ஆதரித்தனர். சித்திரம், ஒவியம் முதலிய வேலைப் பாடுகளில், ஞானிகளின் உருவம், தேவாலயங்கள், அர சர்கள் இன்னும் சமயத்தோடு சம்பந்தப்பட்டவைகள் வரைந்தும் செதுக்கியுமிருப்பதைக் காணலாம். நாடகங் 'கள் கூட மார்க்கத்தோடு சேர்ந்தவைகளாகக் காணப் பட்டன. அவைகளின் மூலம் மார்க்கமும் அறிவும்

தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும் 3.
பாமர சனங்களுக்கு ஊட்டப்பட்டன. ரோம இராச் சியத்துக்குப் பலபாகங்களிலுமிருந்து வந்த அநாகரிக சாதியினரைத் திருத்தும் விஷயத்திலே தேவாலயம் இன்றியமையாத கடமை களை ச் செய்ததெனலாம். ஐரோப்பரவில் பல்வேறு சாதியினரும், வகுப்பினரும் இருந்தபொழுதிலும் ஒரேசமயமும் ஒரே ஆலயமும் மக் களை ஒன்றுசேர்த்தன. காலஞ்செல்லத் தேசீய உணர்ச்சி மெல்லமெல்லவாகத் தலைகாட்டியது. அதனல் மேற்கு ஐரோப்பாவில் தேசிய உணர்ச்சியினலுக்கப்பட்ட சாதி யினர் இங்கிலாந்திலும், பி ரா ன் சி லும், ஸ்பானியா விலுங் காணப்பட்டனர்.
மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரநிலை நிலமா னிய முறையிலே தங்கியிருந்தது. ஆஸ்தியுள்ள பிரபுக் களுக்குப்பயிரிடும் மக்கள் உதவியாயிருந்தமையால் அவர் களுக்கு அப்பிரபுக்கள் பாதுகாப்பளித்தனர். கிராமங் களே அதிக மாக க் காணப்படினும் இடையிடையே யுள்ள பட்டணங்களில் வர்த்தகர்களும் கம் மாளர் போன்ற தொழிலாளரும் வசித்தனர். அடி  ைம க ள், விவசாயிகளைவிட, அரசர், பிரபுக்கள், குருமார் என்ற வகுப்பினர் இருந்தனர். நிலமானியமுறை விளங்கிய அக்காலத்தில் மக்கள் தங்கள் தங்கள் நாட்டிலிருப்பதல் லாது மறுநாடுகளுக்குச் செல்வதில்லை. கல்வியுஞ் சமய அறிவளவிலே யிருந்தேயன்றி இயற்கையைப்பற்றிய அல்லது மனுஷ வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சி நடை பெறவில்லை. நாளடைவில் அ ங் நிலை மாற்றமடையத் தொடங்கியது. இங்கிலாந்த், பிரான்சு, ஸ்பானியா முத லிய புதிய இராச்சியங்கிள் தோன்றின. சமய அபிமா னங்கொண்ட மேற்கு ஐரோப்பிய மக்கள் பரிசுத்த நகரமாகிய எருசலேமை ஸ்லாமியரின் கையிலிருந்து விடுவிக்கச் சிலுவை யுத்தங்களை நடத்தினர். பன்னி ரண்டாம் நூற்ருரண்டுக்கு முன்பாக ஸ்லாமிய இராச் சியம் நாகரிகத்திலும் பண்பாட்டிலும், கல்வித்துறையி லூம் உன்னத ஸ்தானத்தையடைந்தமையினல் ஐரோப் பாவிலும் பார்க்கச் சிறந்தநிலையிலிருந்ததெனக் கூற

Page 7
4. தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
லாம். நாகரிகத்தில் முன்னேறியிருக்க ம க் களின் தொடர்பால் ஐரோப்பியர் அதிகபலனை யடைந்தனரென லாம். வர்த்தகப் பெருக்கமும் கல்விகற்கும் வேட்கையும் அவர்களிடையே காணப்பட்டன. வர்த்தக விருத்தியேற் பட்டதன் காரணமாக மக்களிடையே பொருள் சம் பாதிக்கும் நோக்கமுண்டானது. இவ்வுலக வாழ்க்கையி லேயே கூ டி ய விருப்பங்கொண்டனர். பணநிலையும் திருத்தமடைய நிலமானிய முறையுங்குன்றிப்போக மக்க ளிடையே முன்னதிலும்பார்க்கச் சுதந்தி ரக் கொள் கைகளுண்டாயின. பிரபுக்களிலே பாமரர் தங்கியிருக் கத் தேவையில்லாமற்போனது. சிறிது சிறிதாக வாழ்க் கையிலும் கொள்கைகளிலு மேற்பட்ட மாற்றங்கள் நிலமானிய காலத்தை ஒழித்துத் தற்கால ஆரம்பத்துக்கு அறிகுறியாயின.
கிழக்கு ஐரோப்பாவின் ம் த் தி ய ஸ்தானமாகிய கொன்ஸ்காங்தையின் 6ோப்பிளை 1453 ல் துருக்கியர் கைப்பற்றினர். அங்குள்ள கிரேக்கபண்டிதர்கள் அங் கிருந்து பெயர்ந்து மேற்குநோக்கிச் செல்வாராயினர். அப்படிப்பெயரும் பொழுது பலகிரேக்க லத்தீன் நூற் சுவடிகளையுங் கொண்டு சென்றனர். அவர்கள் மேற் கேயுள்ள நாடுகளிற் பிரதானமாக இத்தாலி தேசத்து நகரங்களிற் தங்கள் கல்வியைப் பரப்பினர். அவ்விடங் களிலுள்ள பண்டிதர்கள் கிரேக்கபாஷையையும் நூல்க ஆளயும் அவாவுடன் பயிலத்தொடங்கினர். பண்டைக் கால அறிஞருடைய நூல்கள் மத்திய காலத்தினருடைய மறுவுலக நம்பிக்கையைப் பற்றிக்கூறுது, இல்வுலக வாழ்க்கையில் விருப்பத்தையும், உண்மையை ஆராயும் அவாவையும், புதிய உற்சாகத்தையும் உண்டாக்கி விட் டன. அந்நூல்கள் மக்களுக்கு இருளிலிருந்து வெளிச் சத்துக்குச் செல்ல்ம் மார்க்கமாகக் காணப்பட்டது. புதிதாகக் கொண்டுவரப்பட்ட அறிவைப் பெற்று க் கொள்ளும் பொருட்டு, எங்கும் மானுக்கர்கள் கிரேக்க பண்டிதர்களைச் சூழ்ந்துகொண்டனர். பழைய ஏட்டுச்

தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும் 5
சுவடி ஒவ்வொன்றும் ஒருவிசேட சாதனமாக வரவேற் கப்பட்டது. இது வே கல்வியின் மறுமலர்ச்சியாகும். சீக்கிரத்தில் அது ஐரோப்பா முழுவதும் பரவியது.
| மேற்கு ஐரோப்பியர் அரிஸ்ரோட்டில் பிளேட்டோ முதலிய கிர்ேக்க அறிஞர்களின் நூல்களை லத்தீன் பாஷையில் ஏற்கனவே படித்திருந்தும் இப்போதான் கிரேக்கபாஷையில் படிக்கத்தக்கதாயிருந்தது. இதை விடக் கிரேக்க ஒவியம் சிற்பம் முதலியற்றையும் விரும் பிப்பின்பற்றினர். முன்னெருபோதும் அறிந்திராத ஒவி யச்சித்திரங்கள் காணப்பட்டன. மறுமலர்ச்சிகாலத்திற் தோன்றிய கலைஞர்கள் மனுஷசரீரத்தை சித்திரித்துக் காட்டும் பொழுது தேகத்தின் இயற்கை அமைப்பு, மயிர், வஸ்திரத்தின் மடிப்புகள் முதலியனவற்றைத் துலக் கமாக விளக்கிக்காட்டினர். அரசரும், போப்பாண்டவ ரும் தங்களுடைய அரண்மனைகளையும், ஆலயங்களையும், அறைகளையும் சித்திரங்களால் அலங்கரிப்பதற்காகக் கலே ஞர்களை வரவழைத்தார்கள். உலகத்திற் கீர்த்தி பெற்ற மைக்கேல் ஆஞ்சலோ லியனுடோ டாவின்ஸி, றப்பியேல் முதலியோர்கள் இத்தாலியிலும், துாரர், ஹொல்பெயின் ஜேர்மனியிலும், றெம்பினுன்ட் வான் டைக் ஒல்லாந்திலும், வெலாஸ்குவே ஸ்பெயினிலும் அக்காலத்திலேயேயிருந்தனர். ரோமாபுரிக்கும், ஐரோப் பாவிலுள்ள விசேஷ நகரங்களுக்கும் செல்லுமொருவர் இவர்களாலாக்கப்பட்ட ஒஷிய சித்திரப்படங்களைக் காண முடியும்.2. இக்கலைகளின் வளர்ச்சியோடு இலக்கியமும் புத்துயிர் பெற்றது. ஒல்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து தேசத்தவர்கள் கிரேக்க பாஷையை விரும்பிக்கற்ற தோடு தங்கள் தாய்ப்பாஷைகளிலும் பலநூல்களை எழு தக் கொடங்கினர். இத்தாலி நாட்டின் புலவர்களும், பிரான்சிலுள்ள மொன்றெயின், றப்ெலெயிஸ், ஸ்பெயி னிலுள்ள சேவாந்தீஸ், உலகெலாம் கீர்த்திபெற்ற ஆங் கிலேய நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் என்போர் கல்வியின் மறுமலர்ச்சியின் பயனகத்தங்கள் நூல்களை

Page 8
6 தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
எழுதி உலகத்துக்கு ஈந்தனர். சங்கீதக்கலையும் வளர்ச் சியுற்றது.தற்கால உலகத்திலுள்ள விஞ்ஞானசாஸ்தி ரம், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கும் ஊக்கம் மறு மலர்ச்சியின் பயனென்றே சொல்லலாம். கிரேக்கரு டைய பல விஞ்ஞான சாஸ்திரங்களையும் கலைகளையும் படித்ததினல் புதிய ஆராய்ச்சிகளேற்பட்டன. கோப் பேணிக்கஸ், கலீலியோ முதலிய வானசாஸ்திரிகள் பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற தென்ற உண்மையைக் கண்டு பிடித்தனர்.
5கல்விகற்கும் கிளர்ச்சிக்கு அச்சியந்திரமும் பெருங் துணை புரிந்தது. மத்தியகாலத்தில் புத்தகங்களெல்லாம் கையினுலெழுதப்பட்டமையால் அவைகள் அருமையா யும் விலைகூடியனவாயுமிருந்தன. 1460 ன் பின் புத்த கங்கள் மலிவாகவும் ஏராளமாகவும் பெறக்கூடியதாக விருந்தன. ஆரம்பத்தில் மரக்கட்டைகளிற் செதுக்கப் பட்ட எழுத்துக்களைக்கொண்டு புத்தகங்கள் அச்சிடப் பட்டன. ஆனல், தனித்தனி எழுத்துக்களே முதல் உப யோகித்தவர் ஜேர்மனியிலுள்ள கூடன் பேர்க் என்பவ ராவர். பின்பு அச்சியந்திர சாலைகள் இத்தாலி, பிரான்சு, ஒல்லாந்து, இங்கிலாந்து முதலிய தேசங்களில் ஸ்தா பிக்கப்பட்டன. பல்வகைப்பட்ட புத்தகங்கள் வெளிவந் தன. கிரேக்க நூலாசிரியர்களின் புத்தகங்கள் மலிவா கக் கிடைத்தன. புதிய எண்ணங்களும் கொள்கைகளும் ஐரோப்பா முழுவதும் பரவி மக்களிடையே காணப் பட்ட ம ன ப் பான் மை மாறுதலடைந்தமையினுல் வாழ்க்கை முறையிலும் பலமாற்றங்களேற்பட்டன.
இம்மறுமலர்ச்சியின் காரண்மாக கல்வியில் மாத் திரம் மாற்றங்களேற்பட்டனவென்று கூறுதல் அதன் ஒரு பகுதியிற் கவனஞ்செலுத்தலாகும். புதிய இராச் சியங்களின் எழுச்சியென்று கூறலும் இன்னெரு பகுதி யாகும். சித்திரம் ஒவியம் புத்துயிர்பெற்றனவெனலும் இன்னெருபகுதியாகும். ? புதுக்கருவிகளைக் கண்டுபிடித் ததும் பூமியின் பலபாகங்களை அறிந்ததும் மற்ருெரரு

தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
பகுதியெனக் கூறலாம். இவைகளெல்லாம் ஒரேகாலத் தில் ஏற்பட்டனவாயினும் ஒருபொதுவான ஊக்கத்தி னயேயே ஏற்பட்டன வென்பதை யூகிக்க இடமுண்டு. புரதான கிரேக்கர் எழுதிவைத்த நூல்களைப் படித்துப் பூமிசாஸ்திரத்திற் தேர்ந்த சிலஅறிஞர்கள் பூமியின் சுற்றளவைக் கணிக்க முயன்றனர். கலீலியோ, கொப்ப னிக்கஸ், நியூட்டன் என்பவர்களுடைய புதிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் கொலம்பஸ், பதலேமியாடஸ், வாஸ்கோட காமா, கபொற் என்பவர்கள் புதிய5ாடுகளைக் கண்டு பிடிப்பதற்கு உதவியாயிருந்தன. மறுமலர்ச்சியென் பது. பூமியில் ஒரு புதிய சுவர்க்கம் திறக்கப்பட்டதென லாம். அறிவாளிகளுக்கு கடவுளுடைய இராச்சியம் பூமி யிற்றோன்றினதென்றும், பாமரர்களுக்கு வெளியதி காரிகளின் கட்டுப்பாட்டினின்று மனுஷ அறிவும் கொள் கையும் விடுதலையடைந்து இவ்வுலகவாழ்வில் நாட்டத் தையுண்டுபண்ணின தென்றும் கூறுதல் முறையாகும்.
பதினைந்தாம் நூற்றண்டின் பிற்பகுதிவரையும் பூமி யைப் பற்றியவிளக்கம் ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா வின் பூமத்தியரேகை வரையுமுள்ள பகுதியே, மனுஷ. ருக்குத் தெரிந்தாகவிருந்தது. அந்நூற்றண்டு முடிவ டையுங் காலமளவில் ஆபிரிக்காவிலுள்ள நன்நம்பிக்கை முனைவரையும் அறிந்தனர். துருக்கியர் பால்கன்குடா நாட்டைக் கைப்பற்றி 1453ல் கொன் ஸ்காந்தைன் நோப் பிளையுங் கைப்பற்றினதோடு நில்லாது ஒரு நூற்ருரண் டுக்குள்ளே லெவாந்து, மெர்சப்பத்தோமியா, சீரியா, பலஸ் தீனு, எகிப்து, அரேபிபா முதலிய நாடுகளையும் தங்க ளாட்சிக்குட்படுத்தியதன் கா ரணமாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் தரைமாாக்கமாக நடைபெற்றவர்த்த கம் தடைப்பட்டது. அக்காலத்தில் மூன்று பாதைகளி லிருந்தன. இந்தியாவிலும் ஆசியகீழ்த்திசை நாடுகளிலு மிருந்து பார்சியாக்குடாவுக் கூடாக பினிஷியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட வாசனைச்சரக்குகள் ஐரோப்பா வுக்கு அனுப்பப்பட்டன. 1516 ல் சீரியாவைத் துருக்கி

Page 9
8 தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
யர் கைப்பற்றினதும் அப்பாதை தடைபட்டது. மத் திய ஆசியாவிலிருந்து கஸ்பியன்கடல், கருங்கடல்மூலம் கொன்ஸ்தாந்தையின் நோப்பிளுக்குக் கொண்டுசெல் லப்பட்ட பாதை 1453ன் பின் தடைபட்டது. கீழ்நாடு களிலுள்ள பொருட்கள் கடல்மார்க்கமாக எகிப்துக்கு அனுப்பப் பட் டு அலெக்சாந்திரியாவிலிருந்து ஐரோப் பாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட மார்க்கம் மூன்றுவ தாகும். இவ்வழிகளால் ஐரோப்பாவையடைந்த பொருட் கள் வெனிஸ் ஜெனேவா முதலிய இடங்களிற் சேர்க் கப்பட்டமையால் அந்நகரங்கள் வர்த்தகக் களங்களாய மைந்தன. துருக்கியரின் ஆதிக்கத்தால் அவ் வர்த்தகம் குன்றிப்போக ஐரோப்பிய5ாடுகள் இடையூறில்லாத புதுமார்க்கங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை யேற்பட்டது.
ஸ்பானியரையும், போர்த்துக்கீசரையும், வர்த்தக கமும், தனம் சம்பாதிக்கும் நோக்கமும் மாத்திரமே, கடற்பிரயாணஞ்செய்யத் தூண்டினவென நினைக்கிறதற் கிடமில்லை. போத்துக்கீச இளவரசனன க ட் லே ர டி ஹென்றியின் (1394-1460) உற்சாகத்தினல் வான சாஸ்திரம் க்டற்பிரயாணம் என்பவைகளின் ஆராய்ச்சி கள் வெகுகாலமாக நடைபெற்றுவந்தன. இவர்களுக்கு ஒரளவுக்கு அறிவை ஈட்டவும் வர்த்தகத்தை விருத்தி செய்யவும் எண்ணமிருந்தபொழுதிலும் தங்களுடைய மதத்தைப் பரப்புவதே அவர்களின் பிரதானகோக்க மாயிருந்தது, கிறீஸ்தவர்களையும் வாசனைத்திரவியங்க%ள யுந் தேடியேவந்ததாக வஸ்கோடிகாமாவோடு சென்ற கடலோடி ஒருவன் கூறினன். ஸ்பானியருடைய நோக் கமும் அதேயாம். பூமிதட்டைவடிவமுள்ளதென்ற புரா தனமக்களின் 15ம்பிக்கை நாளடைவில் குறைந்து போக, பூமிஉருண்டைவடிவமுள்ளதென உறுதிய டைந்து ஐரோப்பிய கடலோடிகள் நீண்டகடற்பிரயா ணங்கள் செய்யத்தொடங்கினர். கடலோடி ஹென்றி என்ற காரணம் பெயரைப்பெற்ற போத்துக்கீச இளவர

தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும் 9
சனின் ஊக்கத்தினுல் ஆபிரிக்காவின் மேற்குக்கரை முழுவதையும் போத்துக்கீச கடல்வீரர் பரிசோதித்து முடித்தனர்.
துருவநட்சத்திரங்களின் தூரத்தைக் கணிக்கக்கூடிய "அஸ்ருேலேட்' என்ற கருவியும், "கொம்பாஸ்’ என் னுந்திசையறிகருவியும் கடலோடிகளுக்கு மிகவும் உதவி யாயிருந்தன. 1488 ல் ஆபிரிக்காவின் தெற்கு முனைவரை சென்ற பார்தலோமியஸ்டயஸ் என்பவன் அவ்விடத் திற்புயல் அமோகமாகக்காணப்பட்டமையால் அம்முனைக் குப் ‘புயல் முனை' யென்னும் பெயரைக் கொடுத்துப் போர்த்துக்கல்லுக்குச் சென்ற பொழுது அந்நாட்டுமன் னன் அதற்கு 'நன் நம்பிக்கைமுனை ‘ யென்ற பெயரை யிட்டான். பின்பு 1497ல் வாஸ்கோடிகாமா என்பவன் அம்முனையைத் காண்டி ஆபிரிக்காவின் கிழக்குப்பகு திக்குச் சென்று அவ்விடத்திலிருந்து தென்மேற்குப் பரு வக்காற்றின் உதவியுடன் இந்தியாவின் மேற்குக்கரை யிலுள்ள கள்ளிக்கோட்டையைச் சேர்ந்தான். இனி மற் அறும் ஐரோப்பிய கடலோடிகள் செய்த யாத்திரைகளைப் பற்றி அறியவேண்டும். ஜெனேவா நகரத்தைச்சேர்ந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1492ல் ஸ்பானிய மன்னணுகிய பேர்டினுந்தின் உதவியைப்பெற்று மேற்கு நோக்கிப் புறப்பட்டான். அவன் மனஉறுதியோடும் அஞ்சாநெஞ் சத்தோடும் பல இன்னல்களுக்கிடையேதன்னேடு சென்ற கடலோடிகளையும் உற்சாகப்படுத்திக்கொண்டு மூன்று மாசத்தில் மேற்கு இந்திதீேவுகளிலொன்றை அடைந் தான். தான் சென்றடைந்த தேசம் அமெரிக்காக்கண்ட மென்பதை அவன் அப்பொழுது அறியவில்லை. பின்பு போன்கபொட் என்ற இத்தாலிய கடலோடி வெனிஸ் நகரத்திலிருந்து புறப் பட்டு இங்கிலாந்து தேசத்து அரசனகிய ஏழாவது ஹென்றியிடம் உதவிபெற்று அமெரிக்காவின் கிழக்குக்கரையிலுள்ள லபுரடோர் என் னும் தேசத்தை அடைந்தான். 1500 ல் கப்ருல் என்னும் போத்துக்கி சயாத்திரிகன் ஒருவன் தென் அமெரிக்காவி
2

Page 10
10 தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும்
லுள்ள பிரேஸில் என்ற பகுதியின் கரையை அடக் தான். இவ்வண்ணமாக மேற்குக்கடல் வழியாக ஆசியா வுக்குச் செல்ல எண்ணிய ஐரோப்பியர் புதிய ஒரு கண் டம் இருப்பதைச் சிறிது சிறிதாக அறிந்தனர். பின்பு, அமெரிக்கோ வெஸ்புக்கூயி என்ற இன்னெரு போத் துக்கீச யாத்திரிகனும் பிரேஸிலை அடைந்தான். அவ ரின் பெயரே அக்கண்டத்துக்குக் கொடுக்கப்பட்டது. 1519ல் மகலன் என்ற ஸ்பானிய கடலோடியொருவன் மக லன் நீரினேக்கூடாக அமெரிக்காவின் மேற்குப்பாகத் தைச் சேர்ந்து அங்கிருந்து பிலிப்பையின் தீவுக்குச்சென் றபொழுது அவ்வூர்ச்சனங்கள் அவனைக்கொன்றனர்.
அவனுடைய கப்பலொன்று நன்னம்பிக்கை முனைவழி யாக ஸ்பானியாவை வந்து அடைந்தது. முதன் முதலாக உலகத்தைச் சுற்றிய கப்பல் இதென்றே சொல்லலாம்,
அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பானியர் அதன் தென் பாக த் ைத யும் மத்தியபகுதியையும் பார்த்தபொழுது அங்கேபுராதன நாகரிகம் மிளிர்ந்துகிடந்த மெக்ஸிக்கோ பீரு என்ற இராச்சியங்களையும், அங்கேயுள்ள அஸ் டெக்ஸ், இன்காஸ் என்ற சாதியினரையும் வென்று கைப்பற்றினர். அவ்வாறு செய்த ஸ்பானிய வீரர்கள் கோட்டஸ், பிஸாருே என்பவர்களாவர். அவ்விடங்களிற் காணப்பட்ட வெள்ளி தங்கம் முதலியவைகளை ஸ்பானி யாவுக்கு எடுத்துச்சென்றனர். அதனல் ஸ்பானிய மன்னன் செல்வத்தைப் பெற்றன். ஆங்கிலேயரும் பிரென்சு தேசத்தினரும் திரவியங்க?ளக் கொண்டு சென்ற ஸ்பானிய கப்பல் க 2ளக் கொள்ளையடித்துப் பெரும் நயத்தைப் பெற்றனர்.
கல்வியின் மறுமலர்ச்சி காரணமாகச் சாஸ்திர அறிவு, இயற்கையைப்பற்றிய அறிவு, இன்னும் பல துறைகளிலுமேற்பட்ட அறிவின் உதவியைக்கொண்டே உலகத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்லக்கூடிய தாயிருந்தது. அவ்வாறு நடைபெற்ற யாத்திரைகளின்

தற்கால ஆரம்பமும் நவீன மாற்றங்களும் 11
பயனுக ஐரோப்பியர் புதியவிடங்களுக்குச் சென்றதுமல் லாது, கடலோடும் திறமையையும், யுத்தம் 5டத்தும் முறைகளையும் விடாமுயற்சியையும் பழகிக்கொண்டனர். வட அமெரிக்காவின் கிழக்குக்கரையில் ஆங்கிலேயரும் கனடாவில் பிரான்சியரும் குடியேறினர். தென் அமெ ரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலுமுள்ள ஆதிக் குடி களோடு ஸ்பானிய மக்கள் கலந்து புதிய இராச்சியங் க3ள ஸ்தாபித்தனர். அவைகளே பின் லத்தீன் அமெ ரிக்க குடியேற்ற நாடுகளென அழைக்கப்பட்டன.
வினுக்கள்
. பழையகாலத்தில் மக்களுக்குச் சமயக் கல்வியை யார் போதித்தனர்?
தேவாலயங்களின் முக்கிய கடமைகள் யாவை ? பழைய காலத்திலிருந்த நிலமானிய முறையை ஆராய்க.
. துருக்கியர் கொன்ஸ்தாந்தனைக் கைப்பற்றியதினலேற்பட்ட மாற்
றங்கள் யாவை?
5, கல்வியின் மறுமலர்ச்சி என்பது எப்போ, என்ன காரணத்தினு
லேற்பட்டது?
6. கல்வியின் மறுமலர்ச்சியினலுற்பட்ட மாற்றங்களை ஆராய்க,
7. கல்வியின் மறுமலர்ச்சி வ்ேவெவ் பகுதிகனில் மாற்றங்களை உண்
டாக்கின?
8. புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கு எது ஊக்கம் அளித்தது?
கண்டுபிடிக்கப்பட்ட புதிய நாடுகள் யாவை?
9. கல்வியின் மறுமலர்ச்சியினுல் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள்
?/aקu_j T60

Page 11
இரண்டாம் அத்தியாயம் புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
மத்தியகாலத்தில் கத்தோலிக்க சமயமே ஐரோப்பா முழுவதும் பரவியிருந்தது. போப்பாண்டவரைத் தலைவ ராகக்கொண்ட ரோம இராச்சியத்துக்குட் புகுந்த அநாகரிகமற்ற அங்கியர் கத்தோலிக்க சமயத்தவர் களின் மத்தியிற் சீவித்ததினுல் 5ாகரிகமடைந்து சிறப் புற்று வாழ்ந்தனர். கல்வியை மக்களுக்குப் பரப்பிய வர்களும் கத்தோலிக்க சமயத்தவர்களாவர். சமயயறி வும் கல்வியறிவும் நிரம்பிய கத்தோலிக்கத் திருச்சபை மக்களால் நன்குமதிக்கப்பட்டுத் தலைமையான ஒருபத வியைத் தாங்கியது. எல்லா விஷயங்களிலும் பிரதான மாக மார்க்க விஷயங்களில் போப்பரசரிலும் திருச்ச பையிலும் பூரண நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மக்கள் வைத்திருந்தனர்.
ஆனல் பதினேந்தரம் நூற்றண்டில் ரோமஇராச்சி யத்துக்குத் தலைமை தாங்கிய திருச்சபை சிறிது சிர் குலைந்திருந்தது. கத்தோலிக்க குருமார்களும் சங்கியாசி களும் வாழ்ந்த ஒழுக்கமற்ற வாழ்க்கை மக்களின் 5ம் பிக்கையைக் குறைத்தது. சமயாபிமானிகள் அதைக் கண்டு நடுக்கமுற்றனர். கல்வியின் மறுமலர்ச்சி காரண மாக மக்கள் விவிலிய நூலைக் கிரேக்க பாஷையில் படித்தனர். இதுவரையும் லத்தீன் மொழியிற் பயின்ற வர்கள் இப்போ மூலபாஷையில் மார்க்கத்தைப்பற்றிப் படித்து சுயாதீனமான கொள்கைகளைப் பெற்றனர். இதுவரையும், திருச்சபை போதித்ததைவிட வேறுசமய நூல்களைப் பயிலாதவர்கள் இப்போ விவிலிய வேதத் தைத் தாமாகக்கற்றவுடன் தேவாலயத்துக்குரிய அதி காரத்தையும் அதனுடைய போதனைகளையும் பற்றி ஆராயத்தொடங்கினர். கிறிஸ்து உலகத்துக்கு கொண்டு வந்த உண்மையை உள்ளவாறு தேவாலயம் போதிக்

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 13
கிறதா என்ற சந்தேகம் அவர்களுடைய சிங்தையிற் கிளம்பியது. தேவாலயம் காட்டிவந்த தெய்வீக அதிகா ரம் உண்மையில் அதற்குரியதா என்று ஆட்சேபித் தனர். ஆனுற் திருச்சபை அனுசரித்த சிலமுறைகளைக் கண்டித்துத் திருத்தங்களை விரும்பிகின்றனரேயன்றிச் சமயத்தினின்று விலக அல்லது பிளவுண்டாக்க விரும் பவில்லை. ஒல்லாந்து தேசத்து இருஸ்மஸ் என்ற சிறந்த அறிஞன் திருச்சபையின் சீர்கேட்டைக் கண்டித்துப் பலநூல்களை எழுதினன். கிறிஸ்துவும் அவர்களுடைய ஷேர்களும் போதித்தவைகளைப்பற்றி அறியவேண்டில் இரேக்கபாஷையில் எழுதிய பழையவேதத்தைப் பயில வேண்டுமென்று கூறினர். அவர் எழுதிய சிறந்த நூல் கிரேக்கபாஷையில் லத்தீன் மொழிபெயர்ப்போடு எழு திய புதிய ஏற்பாடாகும். மக்கள் அதிகம் படிப்பதால் சிறந்தவர்களாகுவர் என்றும், அவர்களுடைய செல்வாக் குத் தேவாலயத்திற் திருத்தங்களேற்படுவதற்குக் கார ணமாகுமென்றும் எண்ணியிருந்தார். இவரைவிட மத் தியகாலத்தில் வைகிளிப் என்னும் ஆங்கிலேயரும் ஹஸ் என்ற பொஹீமியரும் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரத்தைக் கண்டித்தனர். அவர்களுடைய முயற் சிகள் நிலைத்த பயனை உண்டாக்கவில்லை.
இவர்கள் எல்லோரிலும்பார்க்கக் கத் தோலிக்க தேவாலயத்தின் நிலைகுன்றுவதற்குக் காரணமாயிருந்த வர் பதினரும் நூற்றண்டின் ஆரம்பகாலத்திலுள்ள மாட்டின் லூதர் என்ற ஜெர்மனியிலுள்ள சந்நியாசி யாவர். இவர் ஒரு வறிய ஜேர்மன் விவசாயியின் மகன். பெற்றர் இவரை ஒரு சட்டநூல் வாதியாக்கவேண்டு மென்று விரும்பியிருக்க அவர் உலக இன்பங்களை நீக்கி ஒரு சந்நியாசிமடத்தைச் சேர்ந்தார். பாவங்களினின்று எவ்வண்ணம் நீங்க லா மென்ற மனவேதனைகொண்டு தேவாலயம் விதித்த முறைகளை முதலில் அனுசரித் தார், விரதங்களும் வழிபாடுகளுஞ் செய்தும் ஆத்மசாங் தியை அவர் பெறவில்லை. பவுல், ஒகஸ்டியன் சுவாமிக

Page 12
14 புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
ளுடைய போதனைகளைக் கற்கத்தொடங்கினர். அப்போ ஞானமுதயமானது. மனச்சாந்தியும், மன்னிப்பும், வழி பாட்டினுலும் விரதங்களினலும் பெறுவதொன்றன்று. ஆனல் கிறிஸ்துவில் வைத்திருக்கும் நம்பிக்கை விசு வாசத்தினலேயே அவைகளைப் பெறலாமென்றறிந்தார். அதுவே விவிலிய நூலின் போதனையென்றும் அவ் வேதமே கடவுளிடம் சேர்வதற்கு வழிகாட்டியென்றும் வற்புறுத்தினர். அவ்விதமான நம்பிக்கை கத்தோலிக்க திருச்சபையின் நிலையையும் ஸ்திதியையும் அழிக்கக்கூ டிய தொன்றுகும். இதுவரையும் தேவாலயம், அதன் மூலமே இரட்சிப்பைப் பெறலாமென்று போதித்தது. தேவாலயம் கடவுளுக்கும் மனுஷனுக்கும் இடையிலுள்ள தொடர்பை உண்டாக்குவதற்காகவும், குருமார், மக்க ளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காகவும், கிறிஸ்து அதை உண்டாக்கினரென்ற பழைய நம்பிக்கை நிலவியது. ஆனல் அாதர் சொன்ன பிரகாரம் கிறீஸ் துவிலுள்ள நம்பிக்கையே அவசியம் தேவையென்றால், தேவாலயம் அதனுடைய மதிப்பை இழக்குமென்பது வெளிப்படை,
ஆலூதர் விற்றன் பேர்க் கலாசாலேயில் சமயாசாரப் பேராசிரியராக அமர்ந்து தனது புதியகொள்கைகளையும் போதித்தார். 1517 ம் ஆ ன் டு போப்பாண்டவரால் அனுப்பப்பட்ட ரெட்சல் என்னு மொருவன் ஜேர்மனி தேசத்தில் லூதர் இருந்த அயலில்வந்து போப்பாண்ட வராற் கொடுக்கப்பட்ட பாவமன்னிப்புப் பத்திரங்களை விற்றரன். இவன் உரோமாபுரியிலுள்ள பேதுரு ஆல யத்தைப் புதிதாய்க்கட்டுவதற்கு அப்பத்திரங்களை வாங் கிப் பணங்கொடுப்போர்க்கு 'பாவமன்னிப்பு’க் கிடைக்கு மென்று பொய்ப்பிரசாரஞ் செய்தான். இனி அவைகனை வாங்குவோர்களும் அவர்களுடைய சினேகிதர்களும், உரி த்தாளர்களும் மோட்ஷத்துக்கு அல்லது நரகத்துக்கு அ ணுப்பப்படும்நிலையில் பாவங்களினின்றுமன்னிக்கப்படுவர்
என்பதாகக்கூறினன். இப்பிரசாரத்தைக் கேள்வியுற்ற

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 15
லூகர் கோபா வேசங்கொண்டு, விற்றன்பேக் ஆலயக்கத வில்'பாவமன்னிப்புக்’ கொள்கைக்குமறுப்பான 95கியா யங்களே எழுதி ஒட்டிவிட்டார். முன்பு வைகிளிப் ஹஸ் என்பவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தைப் பல முறை கண்டித்தம், எதிர்த்தும், அவர்கள் சித்தியடைய வில்லை. அவர்களுடைய இயக்கமும் நிலைபெருரது அடக் கப்பட்டன. ஆனல் லூதர் காத்திராப்பிரகாரமாக ஆரம் பித்த இயக்கமோ ஐரோப்பிய சமுதாயத்தில் நிலை பெற்றதொன்றுயிற்று. ஆகையால் அதை விளங்குவ தற்கு அக்காலத்தில் ஜேர்மனியும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளுமிருந்த நிலையைப்பற்றி ஆராயவேண் டியதவசியம். சமயத்தோடு சம்பந்தப்பட்ட இயக்கம் சீக்கிரத்தில் ஜேர்மனியின் அரசியல், சமுதாயம் என்ப வற்றேடு தொடர்பு பெற்றதாயிற்று. ஜேர்மனிதேசத் தவர்களில் அநேகர் போப்பரசனின் ஆளுகையில் அதிருப்தியடைந்தமையினுலும் ஜேர்மன் நாடுகளின் அரசர்கள் அTகருக்குத் தங்களுடைய பாதுகாப்பை யளித்து உதவிபுரிந்ததிலும் அவருடைய இயக்கம் அனு கூலமடையத்தக்காயிருந்தது.
1519 ல் ஸ்பானிய தேசத்து அரசனுகிய சாள்ஸ் என்பவன் பரிசுத்த ரோம இராச்சியத்துக்குச் சர்க்கர வர்த்தியாகத் தெரியப்பட்டான். அந்த இயக்கத்தை அடக்கக்கூடியவன் சாள்ஸ் மன்னன் ஒருவனே. ஆனல் அவன் ஒருபெரிய சாம்ராச்சியத்துக்குத் தலைவனுயிருந்த படியாலும், தனது பகைாைம்புன பிரான்சு தேசத்துடன் இடையருப்போரைநடத்தியமையாலும் ஜேர்மனியிலுண் ட ா ன சமயவிகற்பத்தை யடக்கமுடியாமற்போனது. அவனுடைய இராச்சியம் தனித்தனி நாடுகளாகப் பல 15ரடுகளிருந்தமையினலும் ஒவ்வொன்றுக்கும் வெ வ் வேறு அரசியல் முறையை யேற்படுத்த வேண்டியதா யும் வித்தியாசமான இராசதந்திரத்தையும் கையாளவும் வேண்டியதாயிருந்தது. ஸ்பெயின் தேசத்தில் கஸ்டீல், அர ஹன், வலென்சியா, கற்றலோனியா என்ற ஒவ்வொரு

Page 13
16 புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
பகுதிகளுக்கும் 5ெகலாந்திலுள்ள 17 மாகாணங்களுக்கும் வெவ்வேறு அரசியல் முறையும் பாராளுமன்றமும் ஏற். படுத்தப்பட்டன. இவைகளைவிட இத்தாலிநாட்டிலும், தென் அமெரிக்காவிலும், சில நாடுகள் இவனுடைய ஆளுகைக்குள்ளிருந்தன. ஆகையால் அந்தப்பாக்க சாம் ராச்சியத்தில் சமாதானமும் ஒழுங்கும் நிலவச்செய்வ கோடு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்ப்பதும் ஒருபெரிய பிரச்சினையாய் அவனுக்குத்தோன்றிற்று. ஆனல் இவன் செய்துமுடித்த பெரும் விஷயங்களுமுண்டு. கான் ஆண்ட அமெரிக்கநாடுகளிற் சிறந்த அரசியல் முறையை ஏற் படுத்தினன். வடஆபிரிக்காவிலுள்ள முகமதியருடைய அதிகாரத்தைக் குறைத்துவைத்தான்; நெதலாந்திலுள்ள 17 மாகாணங்களையும் ஒன்று சேர்க்க முயற்சி செய் தான். ஆனல் ஜேர்மனியில் லூதருடைய இயக்கத் துக்கு அனுதாபங்காட்டாது அந்நாட்டில் சமயசம்பந்த மான நெருக்கடிகளுண்டான பொழுதும் ஜேர்மனியி லுள்ள தேசாபிமானிகள் விரும்பியபடி அ ந் நாடு களை ஒற்றுமையாயும், ஒழுங்காகவும் அரசியலே நடக் தப் பல நன் முயற்சிகளைச் செய்தான். அவன் லூத ருடைய இயக்கம் நாளடைவில் குன்றிப்போகுமென் றும், தேவாலயத்தினுல் நியமிக்கப்படும் சபைமூலம் இரு பகுதியாரும் இணங்கக்கூடிய சமாதானத்தை ஏற் படுத்தலாமென்றும் எண்ணியிருந்தான்.
லூதருடைய இயக்கத்தின் அனுகூலத்துக்குரிய கார ணங்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து முதலில் லூதரு டைய அளவுகடந்த விவேகமும் ஒழுக்கமுமேயென்று சொல்லலாம். தன்னைப்பின்பற்றுகிறவர்களே உற்சாகப் படுத் தும் வன்மையும், மனவுறுதியுமுடையவராகக் காணப்பட்டார். ஜேர்மனிதேசத்து மக்களிற் பெரும் பான்மையோர் இவ் வளவு காலமாகக் கத்தோலிக்க தேவாலயத்தின் பொய்ப்பிரசாரத்தினல் ம  ைற ங் து கிடந்த பெரும் உண்மையான அறிவை இப்போ தாங் கள் பெற்றுவிட்டதாக நம்பிக்கை கொண்டனர். இந்த

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 17
உண்மையை அறிந்துவிட்டால் உலகமெங்கும் அது ஏற் மறுக்கொள்ளப்படுமென்றும் வருங்காலத்தில் சமயத்திலும் அரசியலிலும், சமுதாயத்திலும் நல்லமாறுதல்களேற்படு மென்றும் உணர்ந்தனர். இதைவிட ஆலூதரின் இயக் கத்துக்கு அரசியல் நிலையும் சாதகமாய் இருந்தது. பெய ரளவில் ஜேர்மனி ஒரு இராச்சியமாக விருந்தபோதிலும் அது சுதந்திரமானபல சமஸ்தானங்களைக் கொண்டுள்ள ஒரு சமஷ்டி அரசாங்கமாகையால் ஒருமத்திய அரசாங் கம் தலையிடமுடியாமலிருந்தது. பரிசுத்தரோம இராச் சிய சக்ாாதிபதி முக்கிய ஜேர்மன் நாடுகளின் உத்தர வின்றிவரிகள் அறவிடவோ, ஒருசேனையைத்திரட்டவோ சண்டைசெய்யவோ முடியாது. சாள்ஸின் ஏனைய இாாச் சியங்களிலும் பார்க்க அவனுடைய அதிகாரம், ஜேர் மன் நாடுகளில் வலிமைகுறைந்ததாய்க் காணப்பட்டது. அவன் பிரான்சு தேசத் தோடு இடையருரப்போரை நடத்தாவிட்டால் ஸ்பானியா, இத்தாலி, 6ெதலாந்து, அவுஸ்திரியா முதலிய நாடுகளிலிருந்து ஒருபெருஞ்சேனை யைத் திரட்டி அலுTதரின் இயக்கத்தை யடக்கியிருக்கலாம். ஜேர்மன் மக்கள் லூதரின் இயக்கத்தை மார்க்கவிஷய மாக மாத்திரமல்ல அதையொரு தேசிய இயக்கமாக வும் கருதினர். அங்கியர் ஆளுகையை வெறுத்தனர். சாள்ஸ் ஒரு ஸ்பானிய தேசத்தவனென்றும் போப்பாண் டவர் இத் தாலி நாட்டிலுள்ளவரென்றும் அவர்களை வெறுத்தனர். லூகர், ஜேர்மனி ஜேர்மன் மக்களுக்கே யுரியதென வற்புறுத்தியதனல் அநேகர் அவரைப் பின்பற்றினர். முப்பது ஆண்டுகளாக லூதரின் இயக்கம் ஒருவிதமான எதிரிடையுமில்லாது மேலோங்கி வளர்ந்து வந்தது, ஆனல் சாம்ராச்சியத்தின் பாராளுமன்றங்கள் பலமுறையும் அவ்வியக்கத்தைக் கண்டித்ததேயன்றிப் போருக்கெழவில்லை. 1517 ல் லூதர் காட்டியமறுப்பு, போப்பாண்டவரால் அனுப்பப்பட்ட பத்திரங்களுக்கெ திரே ஆரம்பத்திலே தோன்றினும் சீக்கிரத்தில் மற்றும் பெரும் விஷயங்களோடு சம்பந்தப்பட்டுவிட்டது, போப் பாண்டவரின் அதிகாரத்துக்கும், கத்தோலிக்க தேவா

Page 14
18 புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
லய ஸ்தாபனத்துக்குமெதிரே ஏற்பட்ட எதிர்ப்புக்குத் தலைவராக லூதரிருப்பதைக் கண்ட பத்தாவது லியோ என்ற போப்பாண்டவர் 1520 ல் கத்தோலிக்க சமயத் துக்கு விரோதியென லூதருக்கெதிரே ஒரு கட்டளையை ஆஞ்ஞாபித்தார். அவைகள் ஒன்றும் ஆாதரின் கிலே யைக் குறைக்கவில்லை. 1521 ல் ஐந்தாம் சாள்ஸ், உவேம்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற சாம்ராச்சிய பாராளுமன் றத் துக் குத் தலைமைதாங்கவந்தார். ஏனையவிஷயங்க ளோடு லூதரை எவ்வண்ணமாக நடத்தவேண்டுமென்று ஆலோசித்துச் சாம்ராச்சியத்தினின்று அவரைத்துரத்த வேண்டுமென்று தீர்மானஞ் செய்தபொழுது, சாக்ஸனி யின் அரசன் அவருக்குப் பாதுகாப்பு:அளித்தான். மறை விடத்திற் சிலகாலங்தங்கியிருந்த லூகர் ஜேர்மன் பாஷை யில் கிறிஸ்த வேதத்தை மொழிபெயர்த்தார். 1522ல் நுரம் பேக்கில் நடந்தபாராளுமன்றம் போப்பாண்டவருக்கெதி ரேயுள்ள மனஸ்தாபங்களைப்பற்றி ஒரு அறிக்கையை விடுத்ததேயன்றி அாதருக்கெதிரே ஒரு நடவடிக்கையையு மெடுக்க உத்தேசிக்கவில்லை. லூதரின் இயக்கம் சித்தி யடைவதற்கு ஜேர்மனியின் அரசியல்நிலை சாதகமாயி ருந்ததென்பதைப்பற்றி முன்பே அறிந்திருக்கிருேரம்,
இனிச் சமுதாயத்தின் நிலையைப்பற்றி ஆராயவேண் டும். ஜேர்மனியின் மேற்கு, தென்மேற்கிலுள்ள விவ சாயிகளின் மனதில் பலமனஸ்தாபங்கள் குடிகொண் டிருந்தன. நகரங்களிலுள்ள மக்களும் மத்தியவகுப் பினரும் நாட்டின் செழிப்பானநிலையினல் செளகரியங் களோடு வாழ்ந்தபோதிலும் விவசாயிகள் பல கஷ்டங் களே அனுபவித்தனர். அவர்களின் அடிமைத்தனம் நீங்கவில்லை. நில அதிகாரிகளும் வலோற்காரமான ஊழி யத்தை அவர்களைக்கொண்டு செய்வித்தனர். லூதரின் மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட இயக்கமும், அவரின் சுதந்திரத்தைப்பற்றிய போதனையும் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்த விவசாயிகளின் மன தைத் தூண்டியது. தென்மேற்குப்பாகத்தில் கலகமேற்

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 19
பட்டது. 12 கோரிக்கைகளை விடுத் து, அவைகள், வேதத்திற் கூறப்பட்டதற்கிணங்க அளிக்கப்படவேண் டுமென வாதாடினர். அடிமைத்தனம் ஒழியவேண்டு மென்றும் நிலமானிய முறையினலேற்பட்ட பிழைகள் நீங்கப்படி வேண்டுமென்று பிரலாபித்தனர். எ ங் கும் ஒருகிளர்ச்சி உண்டாகி 1524 ல் உள்நாட்டுக்கலகமா யிற்று. கலகத்தை அடக்கும்பொருட்டு பல அநீதியான செயல்கள் செய்யப்பட்டதைக் கண்ணுற்ற லூதர் திகி லடைந்தார். மார்க்கசம்பந்தமான இயக்கத்தின் வெற் றிக்கு அபாயமேற்படுமென நினைந்த லூதர், விவசாயி களுக்கு உதவிகொடாததினலும் பிரபுக்களை அக்கல கத்தை அடக்கச்சொன்னதினுலும் பாமரமக்களின் ஆத ரவை அவருடைய இயக்கம் பெறவில்லை. அக்காலங் தொட்டு மத்தியவகுப்பினரின் ஆத ர வையே அவர் பெற்ருரர். w
இதுவரையும் ஆாதரின் இயக்கத்தை அடக்குவ தற்கு ஒருமுயற்சியுஞ் செய்யாத சாம்ராச்சிய அதிகாரி கள் 1526 ல் ஸ்பீர் என்ற இடத்தில் ஒரு பாராளுமன் றத்தைக் கூட்டி ஜேர்மனியிலுள்ள ஒவ்வொரு5ாடும், அங்காட்டில் எவ்வண்ணம் மக்கள் சீவிக்கவேண்டுமென் றும், ஆளுகை நடத்தப்படவேண்டுமென்றும் தீர்மா னிக்கவேண்டுமென்று சொல்ல, ஆலூதரின் இயக்கத்தை முற்றுக ஆதரித்த சாக்ஸனி, ஹெஸ், என்ற5ாடுகள் புரட்டஸ்தாந்து ஆலயங்களைத் தம்நாடுகளில் ஸ்தாபித் தனர். 1529 ல் ஸ்பீர் ஸ்ன்ற இடத்தில் பின்பும் கூட் டப்பட்ட பாராளுமன்றம் அதனுடைய முதற்தீர்ப்பை மாற்றி புரட்டஸ்தாந்து நாடுகளில் கத்தோலிக்க வழி பாடு அனுமதிக்கப்படவேண்டுமென்று கற்பித்தது. உடனே சிறுபான்மையோர் சேர்ந்து "நாங்கள் உங்க ளுடையதீர்ப்பை மறுக்கிருேம். அதற்கு இணங்கமாட் டோம். உங்களுடைய தீர்மானம் எங்களைக் கட்டுப் படுத்தமாட்டாது' என்று கூறினர். சக்கராதிபதி, கத் தோலிக்கமார்க்கத்துக்கு உடனே திரும்பிவராதோர்

Page 15
20 புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
தண்டிக்கப்படுவரெனப் பயமுறுத்தியவுடன் புரட்டஸ் தாந்து நாடுகள் யாவும் தங்கள் பொதுநலத்தின் பொருட்டு ஒன்றுசேர்ந்தனர். இவைகளுள் சாக்ஸனி, ஹஸ், பிரேன் டன் பேர்க், என்பனமுக்கிய நாடுகளாகும். உவேட்டம் பேர்க்கு பேடன் என்றநாடுகளும், புரட்டஸ்தாந்து நாடு களாயின. சாள்ஸ் 1546 ல் பெருஞ்சேனையைத்திரட்டி யுத்கத்துக்கு ஆயத்தஞ் செய்தான். அாதரும் அவ்வாண் டிலேயே தேகவியோகமானர். ஜேர்மனியின் தென் பாகத்திலுள்ள நாடுகள் சாள்ஸின் சேனையைக் கண்ட தும் அவனுடைய எண்ணத்திற் கிணங்கின. ஆனல் முழுப்பொறுப்பையும் சாக்ஸனிக்கு அரசனை பிரடெரிக் கும், ஹஸ்காட்டதிபதியாகிய பிலிப்புமே தாங்கவேண் டிய சந்தர்ப்பமேற்பட்டது. 1547 ல் முல்பேக்கு என்ற யுத்தத்தில் இவ்விரு நாடுகளின் இளவரசர்களும் தோற் கடிக்கப்பட்டுக் கைதிசெய்யப்பட்டனர். ஜேர்மனியிலோ அல்லது ஏனைய5ாடுகளிலோ சாள்ஸோடு தகுந்த முறை, யிலெதிர்க்கக்கூடியவர்களில்லை. அப்படியிருந்தும் புரட் டஸ்தாந்து நாடுகள் தங்களுடைய நாடுகளில் கத்தோ லிக்க ஆலயங்களை ஸ்தாபிக்க மறுத்தனர். ஆனல் சக் கராதிபதியாகிய சாள்ஸ் தனது எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஐரோப்பிய 15 ர டு க ளின் அரசியல்நிலை தடையாயிருந்தது. '. * * भ्र-5 .
அவுஸ்திரிய நாடுகளை ஆண்டுகொண்டிருந்த சக்க ராதிபதிக்கும் அவனுடைய தம்பியாகிய பேடினுந்துக்கு மிடையில் சச்சரவுகளேற்பட்டன. மோகாஸ் என்ற ஒரு பெரிய சண்டையில் ஹங்கேரியைத் துருக்கியர் தோற் கடித்து அதைக்கைப்பற்றினதோடு பொகீமியாவையுக் தாக்கினர். அந்நாடுகளின் அரசன் சண்டையிலிறக்க அவனது மைத்துனனன பேடினந்து அந்நாடுகளை தனக் குரிமையானவையென்று தம்வசப்படுத்தினன். சா ள் ஸின் பின் பேடினுந்து சக்கராதிபத்தியத்துக்கு உரிமை யுடையவனுகையால் சாள்ஸ் தனது மகன் பிலிப்பே
பேடினுந்தின் பின் ஆளவேண்டுமென்ருலோசனை செய்ய

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 21
அதைப்பேடினுந்து மறுத்துவிட்டான். இதற்கிடையில் பிரென்சுமன்னனுகிய இரண்டாம் ஹென்றி ஸ்பானிய அவுஸ்திரிய அதிகாரிகளுக்கு எதிரே நடவடிக்கைகள் எடுத்தான். புரட்டஸ்தாந்துத் தலைவர்களுக்குத் தான் உதவி செய்வதாயும் அவ்வுதவிக்குப்பதிலாக அவர்கள் மெற்ஸ், ரூல், வேர்டன் என்னும் எல்லைப்புறப்பகுதிகளைக் கொடுக்கவேண்டுமென்றும் பேசிஒற்றுமைபட்டுக்கொண் டான். சாள்ஸ் தேக அசெளக்கியத்தின் காரணமாக முன் போல பூகமாயும் தந்திரமாயும் நடந்துகொள்ள முடியா மையால் 1555ல் சாக்ஸ்னிக்கு இளவரசனுயிருந்த மோரிஸ் போருக்குக்கிளம்பியவுடன் சாள்ஸ் ஜேர்மனியை விட்டு விலகி இத்தாலிக்கு ஒடிப்போக5ேரிட்டது. ஜேர்மனி மோரிஸின் அதிகாரத்துக்குளடங்கியது. ஆனல் 1553 ல் ஒருசிறுச்சண்டையிலவனிறக்க, ஜேர்மனி, தலைவர் ஒரு வருமில்லாத நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தது. பி ரா ன் சே தனக்குத்தோல்வியுண்டாக்கினதென வுணர்ந்த சாள்ஸ் பிரான்சுக்கெதிரே சண்டைக்குக் கிளம்பினன். அதிலுந்தோற்று, அரசியற்பொறுப்பினற் க3ளப்புற்று ஜேர்மனியின் விஷயங்களைத் தீர்க்கும்படி தனது தம்பியாகிய பேடினுந்திடம் ஒப்படைத்தான். ஒக்ஸ்பேர்க்கில் கூட்டப்பட்ட அரசசபை (1555 ல்) ஜேர் மனியின் மார்க்கவிஷயத்தைத் தீர்ப்பதற்கு முயற்சி கள் செய்தது. 300க்கு மேற்படவுள்ள ஜேர்மன் சமஸ் தானங்கள் ஒவ்வொன்றுக்கும் அந்த5ாட்டின் மார்க்கத் தைப்பற்றிய பொறுப்பு விடப்பட்டது. புரட்டஸ்தாந்து சமயமும் கத்தோலிக்கசடியமுமே அந்நாடுகளிலங்கீகரிக் கப்பட்டன. ஒரு5ாட்டிலுள்ள ஒருவர் தான்விரும்பிய சமயத்தினிமித்தம் இன்னெரு5ாட்டுக்குச் செல்ல அனு மதிக்கப்பட்டார். இருசமயங்களில் யாதேனுமொன் றைத் தழுவிய Bாட்டினதிகாரி, அரசனுயன்மந்ததல் alsTjil தனது பரம்பரையினருக்கு ஆளும் பொறுப் பைக் கொடுக்கும் உரிமையையும் பெற்றர். ஆகையால் ஒக்ஸ்பேர்க் சமாதான உடன்படிக்கையின் பிரகாரம்

Page 16
22 புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
1552க்கு முன்பு புரட்டஸ்தாந்து சமயத்தைத்தழுவிய 5ாடுகள் அச்சமயத்தைக்  ைக க் கொள் ள வும், அவ்வாண்டின்பின் அச்சமயத்துக்குமாறிய நாடுகள் கத்தோலிக்க ஆலயத்தின் பொறுப்பிலும் வரவேண்டிய தாயிற்று. ஒக்ஸ்பேர்க் உடன்படிக்கையின்படி கல்வி னுடைய இயக்கத்துக்கு ஜேர்மனியில் இடமேயில்லை. அதனலடுத்த நூற்ருரண்டின் ஆரம்பத்தில் கடூரமான மார்க்க சம்பந்தமான யுத்தம் நடைபெறுவதாயிற்று.
லூதர் கத்தோலிக்க தேவாலயத்தின் சீர்கேடுகளைக் கண்டித்து உரோமன் சமய அதிகாரிகளையல்ல, ஆனல் விபிலிய வேதத்தையே, மார்க்கவிஷங்களில் ஆதாரமா கக் கைக்கொள்ளவேண்டுமென்று கூறினர். சீக்கிரத் தில் அச்சமயக்கிளர்ச்சி அரசியல் சமுதாய விஷயங்க ளிலும் கிளர்ச்சியை யுண்டுபண்ணின. அதுவுமல்லாமல் அவருடைய கொள்கைகள் அவரைப்போல் கத்தோ லிக்க ஆலயத்தின் சீர்கேட்டைக் கண்டித்த மற்றத் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுவிங்கிலி என்ப வர் சுவிச்சலாந்தில் 1518 ல் தனது கொள்கைகளை வெளி யிட்டார். இவர் அTதரைப்போல் திருச்சபையின்குறை களைக் கண்டித்துப் பின் சமயக் கொள்கைகளைப்பற் றியும், தேவாலய நிர்வாகத்தைப்பற்றியும் வெளிப்படுத் திய பொழுது அதிகவித்தியாசங்கள் காணப்பட்டன. அப்பமும் திராட்சரசமும் கிறீஸ்து நாதரின் தசையும் இரத்தமுமாக மாறுவதென்னும் கொள்கையை லூதர் மறுத்து அவை மாறுதலடையாது அப்படியேயிருக்கின் றனவென்று கூறினர். சுவிங்கிலி இருகொள்கைகளை யும் ஏற்றுக்கொள்ளவில்லை.
லூதரின் தேகவியோகத்திற்கு முன்பாகவே கல் வின் என்பவரால் புரட்டஸ்தாந்து இயக்கமொன்று உண்டாக்கப்பட்டது. 1509 ம் ஆண்டு கல்வின் பிரான்சு தேசத்திற்பிறந்தார். பாரிஸ்மாநகரில் அவர் சிறிது காலம் மார்க்கத்தைப்பற்றிப்பயின்று பின்பு அதை

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 23
விட்டு சட்டநூற்கல்விபயின்றர். அவர் புரட்டஸ்தாந்து மகத்தைப்பின்பற்றி பிரான்சுதேசத்தில் அக்காலத் தில் நடைபெற்ற மார்க்கவகைப்பினல் அங்காட்டை விட்டு ஜெனிவாவுக்குச்சென்றார். மற்றப் புரட்டஸ்தாந்து இயக் கங்களிலும் பார்க்கக் கல்வின் போதித்தமதம் விசேஷ மாக மூன்று விஷயங்களில் வித்தியாசப்பட்டது. தேவா லயமும் அரசாங்கமும் வெவ்வேறு ஸ்தாபனங்களாயி ருக்கவேண்டுமென்பது ஒன்றாகும். தேவாலயங்களின் மேற்பார்வை, குருமார்களும் குருமாரல்லாதவர்களும் கொண்டுள்ள சபையிலே விடப்படவேண்டுமென்பது அவரின் மற்றொரு கொள்கையாகும். சிறந்த ஒழுக்க மான வாழ்க்கையின் அவசியத்தையும் வற்புறுத்தினர். கல்வினுடைய எண்ணப்படி ஜெனிவாவில் சிறந்த ஒழுக் கமான வாழ்க்கை நடைபெற்றது. கல்வினுடைய சீஷ னை யோன் நொக்ஸ் மற்றொரு நாட்டிலுமில்லாதமாதிரி ஜெனிவாவில் கிறீஸ்துவின் போதனைகள் பின்பற்றப் பட்டனவென்றர். கல்வின் எழுதிய "கிறீஸ்து சமய ஆல யங்கள்” என்ற நூலை அடிப்படையாகக்கொண்டே ஜெனிவாவிலும் மற்றும் இடங்களிலும் பிரிஸ்பிற்றீரியன் ஆலயங்கள் கட்டப்பட்டன. கல்வினுடைய கொள்கைகள் ஜேர்மனிதேசத்திற் பரவியவுடன் புரட்டஸ்தாந்து இயக் கத்தில் பிளவு உண்டாகி அது முப்பதாண்டுயுத்தக் துக்குக் காரணமாயிற்று. கல்வின் கிறீஸ்தவேதத்தைப் பிரென்சுப் பாஷையில் மொழிபெயர்த்தார். ஜெனீவா வில் பெருங்கட்டுப்பாடான வாழ்க்கை நடந்ததுமல்லாது ஒவ்வொருவிசேஷதினங்களிலும் எவ்விதம் நடந்துகொள் ளவேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. கத்தோ லிக்க தேவாலயத்தைக் கண்டித்த சேவாத்தசு என்ற ஸ்பா னிய தேசத்தவன் பாதுகாப்புக்காக ஜெனிவாவுக்குச் சென்றபொழுது அங்கே அதனுடைய கொள்கைகள் கல்வினுடைய கொள்கைகளுக்கு முரண்பாடாயிருந்த மையால் அவன் மரணதண்டனைக்காளானன். கல்வி னின் கொள்கைகள் புரட்டஸ்தாந்து மதத்துக்கு ஒரு விளக்கமான, வரம்புடைய சமய அறிவைப் புகட்டியது

Page 17
24 புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
மல்லாது 16 ம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் புரட்டஸ் காந்து மதத்திற்கு ஊக்கத்தையுமளித்து கல்வினைப்பின் பற்றியவர்களே பிரான்சுதேசத்தில் புரட்டஸ்தாந்து மதத்திற்கு வெற்றியைக்கொடுத்தனர். அவர்களே Bெத லாந்தில் ஒல்லாந்துக் குடியரசைத் தாபிப்பதற்கு கார ணமாயினர். அவர்களே இங்கிலாந்தில் புரட்டஸ்தாந்து மதம் பரவுவதற்கும் 17 ம் நூற்றாண்டில் பியூரத்தானிய ரின் இயக்கமும் உண்டாவதற்கும் காரணமாயிருந்தனர்.
பதினரும் நூற்ருரண்டின் முதற்பகுதியிலிருந்த போப் பரசர்கள் இத்தாலியின் அரசியல் விஷயங்களிலும், கல்வியின் மறுமலர்ச்சியிலும் அதிகம் சிரத்தையெடுத் தமையால் தங்களுக்குரிய மார்க்க சம்பந்தமான கடமை களிற் கவனஞ்செலுத்தவில்லை. ஆனல் புரட்டஸ்தாந்து சமயம் வெகுதீவிரமாகப் பரவியதனுல் அவர்கள் அசட் டையாயிருக்க முடியவில்லை. ஜேர்மனியிற் முக்காற்பகு தியும். ஒல்லாந்தும், பிரான்சிற் சிலபகுதியும் இங்கிலாங் தும், டென்மார்க்கும் நோர்வேயும் சுவீடினும் அாதரின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கின. போலாக் திலும், பொகீமியாவிலும் சமயக்கிளர்ச்சியுண்டாயின. ஆகையால் அந்நூற்றாண்டின் பிற்பகுதியிலுள்ள போப் பரசர்கள் தங்களுடைய சமயத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலீடுபட்டனர். அவர் கள் அநேகநாடுகளைப் பழையபடி கத்தோலிக்க சமயத்துக்குக் கொண்டுவரத் தக்கதாயிருந்தது. இதுவே சமயப்புரட்சிக்கு எதிர்ப்பு ரட்சியின் ஆரம்பமாகும். கத்தோலிக்கசமயத்தைப் பின் பும் பரப்புவதற்காக ஒருசங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்பானியதேசமே இப்புதிய கிளர்ச்சிக்கு இடமாயிற்று. டொன் இனிக்கோ லோபெஸ் டி றிகால்டி என்பவன் ஒரு ஸ்பானிய பிரபு அவன் ஸ்பானிய சேனையிற் சேவை புரிந்து பல சண்டைகளிற் பங்குபற்றி பம்பெலூனு என்ற சண்டையிற் காயமடைந்து அதனல் அங்கக் குறைவுண்டாகி அமைதியான வாழ்க்கையில் ஈடு பட்டான். இவன் உலகவிஷயங்களைத்தவிர்த்து மார்க்க

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 25
விஷயங்களிலாவல் கொண்டான். அவன் எருசலேமுக்கு யாத்திரை செய்தான். பின்பு மார்க்கத்தைப் படிக்கும் வண்ணமாகப் பாரிஸ் நகருக்குச் சென்றிருந்தபொழுது அங்கே சில நண்பர்களோடு சேர்ந்து எருசலேமுக்குப் போவதாயும் போப்பாண்டவருக்குச் சேவை செய்வதா யும் வாக்குப்பண்ணிப் புறப்பட்டுச் சென்றன். ஆனற் துருக்கியரின் ஆதிக்கம் அதிகம் பலமுற்றிருந்தமையால் வெனிஸ் நகருக்கப்பாற் செல்லமுடியாதாயிற்று. அங் கேயே ஒரு சபையை ஸ்தாபிக்க முயன்றான். அக்கா லக்தொட்டு அவன் இக்நேசியஸ் லோயலா என்றழைக் கப்பட்டான். போப்பரசர் ஆரம்பத்தில் அச்சபை யிற் சந்தேகங்கொண்டிருந்த பொழுதிலும் 1540 வரை யில் அதை அங்கீகரித்தார். அச்சபையின் அங்கத்தி னர் வறுமை, நேர்மை, தாழ்மை, போப்பாண்டவரில் விசுவாசம் என்பவைகளே தங்கள் வாழ்க்கையின் பிர தான அம்சங்களெனச் சத்தியஞ்செய்து கொண்டனர். இது யேசு சபையென்றும் அ த ன் அங்கத்தவர்கள் யேசுசபைக்குருமார் என்று மழைக்கப்பட்டனர். அவர் கள் சில கொள்கைகளைப் பின்பற்றினர். தாம் இன் னரென்று காட்டுவதற்கு விசேஷ அங்கியை அணிவ தில்லையென்றும், கடுமையான சங்கியாச முறையைக் கையாள்வதில்லையென்றும், உ ல கத்தோ டு சேர்ந்து நடந்து தேவாலயத்திற்காகச் சேவைபுரிவதென்றும் சத் தி யஞ் செய்துகொண்டனர். செல்வாக்குவாய்ந்த அவர்களின் பாடசாலைகளில் இலவசமான கல்வி பயிற் றப்பட்டபொழுதும் அக்கல்வி அக்காலத்தில் ஐரோப் பாவிற் காணப்பட்ட கல்வியிலும்பார்க்க மிகச்சிறந்த தொன்றகும். ஆகையால் அடுத்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கத்தோலிக்க நாடுகளிலுள்ள பாடசாலைகளி லும், சர்வகலாசாலைகளிலும் அவர்களுக்கு நன்மதிப் பும் செல்வாக்குமிருந்தன. ஊக்க மும், மனத்திடமும் வாய்ந்த அக்கூட்டத்தினர், போப்பாண்டவரின் கொள் கைக்கிணங்க நடந்துகொண்டமையால், பிரான்சு, ஜேர்
4

Page 18
26, புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம்
மனி, போலாந்து முதலிய தேசங்களில் புரட்டஸ்தாந்து மதம் பரவுவதற்குத் தடையேற்பட்டது.
இனிச் சமய எதிர்ப்புரட்சியின் அனுகூலத்துக்கு றென்ட் என்ற இடத்தில் B  ைட பெற்ற மகா நாடும் உதவியாயிருந்தது. ஐந்தாம் சாள்ஸ் புரட் டஸ்தாந்துமத விரோதத்தைத் தீர்ப்பதற்குக் கத்தோ லிக்க நாடுகளின் பிரதிநிதிகள் கொண்டுள்ள மகாநாடு தேவையென வுணர்ந்தார். இம் மகாநாடு 1545 ல் றென்டிற் கூட்டப்பெற்று 1563 வரையும் இடையி டையே கூட்டங்களை நடத்திக்கொண்டுவந்தது. லூதரின் கொள்கை களுக்கும் சமரசமானமுறையிலேற்பாடு அமைப்பதற்கு முயற்சித்தபொழுது அம்மகாநாடுகளுக் குத் தலைமைதாங்கிய போப்பாண்டவரின் பிரதிநிதிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை. லத்தீன் மொழியிலுள்ள கிறீஸ்தவேதமும் தேவாலயத்தின் பரம்பரையாக வழங் கிவந்த கொள்கைகளுமே முக்கிய அதிகாரமுடையவை யென அவர்கள் வற்புறுத்தினர். ஈற்றில் போப்பாண் டவரின் அதிகாரத்துக்கு அடங்குவதே முறையெனத் தீர்மானஞ் செய்யப்பட்டது. இம் மகாநாட்டின் பயனுகச் சமயவாதம் ஓரளவில் முடிவுபெற்றதுமல்லாமல் குருமா ருடைய வாழ்க்கையிற் காணப்பட்ட சீர்கேடுகள் மறைக் ததுமன்றித் தேவாலய பரிபாலனமும் திருத்தியமைக்கப் பட்டது. தேவாலயத்தின் அடிப்படையான கொள்கை களுக்கு மறுப்புக்காட்டிய சமயபேதிகளைத் தண்டிப்ப தற்காக அமைக்கப்பட்ட ஸ்தலமும் சமய எதிர்ப்புரட் சிக்கு உதவியளித்தது. 1483 ல் ஸ்பானியாவில் ஸ்தா பிக்கப்பட்ட சமயபேதிகளை விசாரண் செய்யும் ஸ்த லத்தைப் போல் 1542 ல் நான் நாம் பவுலாகிய போப் பாண்டவர் ஒன்றை ஸ்காபித்தார். அது சமயபேதிக ளுக்குக் கடுங்கண்டனைகளை விதித்தது. இந்தவிசாரணை ஸ்தலம் பலசமய நூல்களைப் பிரசுரஞ்செய்யாது தடுத் தது. யேசுசபையும், றென்ட் மகாநாடும் சமய எதிர்ப் புரட்சியின் வெற்றிக்குச் சாதகமாயிருந்தன வென்றே

புரட்டஸ்தாந்துமதச் சீர்திருத்தம் 27
சொல்லலாம். ஆனல் சமயவிசாரணை ஸ்தலம் பெரும் உதவி புரியவில்லை. அது அளவு கடந்த எதிர்ப்பையும் மக்களிடையே வெறுப்பையும் உண்டாக்கியது.
10.
வினுக்கள்
பதினைந்தாம் நூற்ருண்டில் போப்பரசரிலும் திருச்சபையிலும் மக்களுக்கிருந்த 5ம்பிக்கைகுறைந்து போனதற்குக் காரணங்க ளென்ன? திருச்சபையின் சீர்கேடுகளைக் கண்டித்தபெரியார்கள் யார்? மாட்டின் ஒாதரைப்பற்றி நீ அறிந்தவற்றைக்கூறு? மாட்டின்லூதர் திருச்சபையையும், போப்பரசரையும் கண்டித்த தற்கு நியாயமென்ன? மாட்டின்லுதருடைய போதனைகள் ஜேர்மனியில் பரவுவதற்கு எக்காரியங்கள் சாதகமாயிருந்தன? சாள்ஸ் மன்னன் புரட்டஸ்தாந்துமதம் பரவாதவண்ணம் தடை செய்துகொள்ள ஏன் முடியவில்லை . கல்வின் என்பவன் யார்? மதப்புரட்சி ஏற்படுவதற்கு அவன்
எவ்வாறு காரணமாயிருந்தான்?
கல்வினுடைய போதனைகளுக்கும் லூதரின் போதனைகளுக்கு மிடையில் பேதங்களேற்பட்டதற்குக் காரணம் என்ன? 'ஒக்ஸ்பேர்க், மகாநாட்டில் மார்க்க விவாதங்கள் எவ்வாறு தீர்க்கப்பட்டன? சமய எதிர்ப்புரட்சி எப்போ ஏற்பட்டது? எதிர்ப்புரட்சிக்காரர் செய்த சேவைகள் என்ன?

Page 19
மூன்றும் அத்தியாயம் புதிய இராச்சியங்களின் எழுச்சி
மத்தியகாலத்தில் சாதி அபிமானம் ஐரோப்பிய மக்களிடையே காணப்படவில்லை. எல்லோரும் கத்தோ லிக்க திருச்சபையென்ற ஸ்தாபனத்தின் அங்கத்தவர் களாகையாலும், ஒரே சமயமாகிய கத்தோலிக்க சம யத்தைத் தழுவி நடந்தமையிலுைம் சாதி அபிமா னமோ அல்லது தேசிய உணர்ச்சியோ அவர்களி டையே உற்பத்தியாகவில்லை. அக்காலத்திலுள்ள சமு தாயத்தில், பிரபுக்கள், வர்த்தகர், விவசாயிகள் என்ற வகுப்பினர் காணப்பட்டனரேயன்றி, தேசிய உணர்ச் சியினலுந்தப்பட்ட 5ாடுகள் தோற்றவில்லை. இப்பொ ழுது வெவ்வேறு பாஷைகளையும், அரசாங்கங்களையும், சமயங்களையும் கொண்டுள்ள நாடுகள் அக்காலத்திலே தகுந்த அரசர்களினளுகைக்குட்படாமல், ஒவ்வொன்றும் சிறிய பிரிவுகளாகப் பிளவுபட்டு அவ்விடங்களிலுள்ள பிரபுக்களின் ஆதிக்கத்திலமர்ந்தன. மத்தியகால முடி விலேயே தேசீய உணர்ச்சி தோன்றிற்று.
மேற்கு ஐரோப்பாவிலுள்ள ரோமராச்சியம் வீழ்ச் சியுற ஒன்ருயிருந்த ஐரோப்பிய நாடுகள் தனித்தனித் தேசங்களாகப் பிரிந்தன. திறமை வாய்ந்த அரசர்கள் சிங்காசனமேறியமையாலும், நிலமானியமுறை யற்றுப் போன்தினுலும், வர்த்தக வகுப்பினர் முன்னேற்றம டைந்ததினுலும், விவசாயிகள் கூடிய சுதந்திரத்தைப் பெற்றமையினுலும், வகுப்புப் பிரிவினைகள் குன்றிப் போகத் தேசீய உணர்ச்சி பெற்றநாடுகள் பிரபலமா யின. பின்பு சமயப் புரட்சி ஏற்பட அந்நாடுகளுக்கிடை யிலுள்ள வித்தியாசங்களதிகரித்தன. இவ் வகையான தேசீய உணர்ச்சி இங்கிலாந்து, ஸ்பானியா, பிரான்சு முதலிய தேசங்களில் மத்திய காலப் பிற்பகுதியிற் தோற்றியது. ஆனல், பத்தொன்பதாம் நூற்றண்டி லேயே அவ்வகையான தேசீய உணர்ச்சி இத்தாலியி

புதிய இராச்சியங்களின் எழுச்சி 29
லும், ஜேர்மனியிலும், \உண்டானது. காலஞ் செல்ல, வியாபார விருத்தியினலும் தேசங்களிடையே மூண்ட யுத்தங்களினலும் ஒவ்வொரு தேசத்திலும் சாதி அபி மானங் கூடியது.
சாக்ஸ்ன்ஸ் இங்கிலாந்தைத் தம்வசப்படுத்தி, சிறுச் சிறு இராச்சியங்களையமைத்து ஒவ்வொன்றையும் சுதந் திரமானதாக்கினர். பின்பு தேனியரின் படையெடுப்பி லுைம் இன்னும் வேறு காரணங்களாலும் அவ்விராச் சியங்கள் ஒன்று சேர்ந்தன, 1066ல் உவீல்லியத்தின் தலைமையின்கீழ் நோர்மன்ஸ் இங்கிலாந்துக்குப் படை யெடுத்துச்சென்று வெற்றிபெற்றனர். ஆகையால் ஆளுஞ் சாதியினரான நோர்மன் ஸ் என்பவர்களும் ஆளப்பட்ட சாக்ஸன்ஸ் சாதியினருமான இருவகைச் சாதியினரும் கலப்புற்று ஆங்கிலேயச் சாதியினரென் றழைக்கப்பட்டனர். அதிகாரம் படைத்த பிரபுக்களை யடக்க ஆங்கிலேய அரசர்களுக்கு வெகுகாலமெடுத்தது. தேசீய சட்டங்கள் வகுத்த இரண்டாம் ஹென்றியும், முதன்முறையாகப் பாராளுமன்றத்தைக் கூட்டிய முத லாம் எட்வேட்டும் சிறந்த அரசியலை நடத்தினர். முத லாம் எட்வேட்டின் காலத்தில் இங்கிலாந்து ஏனைய நாடு களிலும் பார்க்க ஒரு தனிப்பெருமைவாய்ந்த நாடாகத் தோற்றியது. ஆனல் மூன்றம் எட்வேட் பிரான்சுதேசம் தனக்குரிமையானதென்று வெளிப்படுத்தியதினல் இரு நாடுகளுக்குமிடையே போர் தொடங்கியது. இது வே நூருரண்டு யுத்தம். (1338–1453) எனப்படும். இந்த யுத் தத்தின் பிரதான பலாபலின் இங்கிலாந்திலும், பிரான் சிலும் தேசீய உணர்ச்சி அதிகரித்தது என்றே சொல் லலாம். ஆங்கிலேயர் தாங்கள் ஆங்கிலேயரென்றும், பிரான்சியர் தாங்கள் பிரான்சியரென்றும் உணர்ச்சி யோடேயே சண்டைசெய்தனர். இவ் யுத்தத்தின்பின் இரு5ாடுகளும் சாதி அபிமானமுடைய நாடுகளாக முன் னேற்றத்துக்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தன. இனி யுத்தமுறைகளும் மாறுதலடைந்தன. பெரியவில்

Page 20
30 புதிய இராச்சியங்களின் எழுச்சி
லேந்திய காலாட்படைகள் குதிரைப்படைகளிலும் பார்க் கச் சிறந்தனவாயிருந்தன. துவக்கும் உபயோகத்துக் குக் கொண்டுவரப்பட்டன. பிரபுக்களுடைய அதிகாரம் குன்றியது. அரசரின் ஆதிக்கமும் வலிமையும் பெரு கின. இக்காரணங்களால் இங்கிலாந்தும், பிரான்சும் தனிப்பெரும் நாடுகளாக விளங்கின.
ஐரோப்பாவின் ஏனையநாடுகளோடு தொடர்பில்லா மல் ஸ்பானிய தேசம் பிரினிஸ் மலைத்தொடர்பினுற் பிரிக்கப்பட்டு அது புறம்பான நாடாக விளங்கியது. எட்டாம் நூற்றண்டில் முகமதியர் ஸ்பானியாவைக் கைப் பற்றி அதை ஒரு நாகரிகமான நாடாக்கினர். மத்திய காலத்தில் வடக்கேயுள்ள கிறிஸ்தவ இராச்சியங்கள் சில ஒன்றுசேர்ந்து முஸ்லீங் க ளோடு இடையருரப்போர் செய்து கி. பி. 1250 வரையில் அவர்களைத் தெற்கே துரத்தினர். சமய ஒற்றுமையைவிட வேறொரு வகையி லும் ஒற்றுமையில்லாத கிறீஸ்த நாடுகள் ஒன்றுசேர ஆரம்பித்தனர். 1469ல் அரச லு க்கு அரசனுயிருந்த பேர்டினந்துக்கும், காஸ்டீலுக்கு அரசியாயிருந்த இஸ பெல்லாவுக்கும் நடைபெற்ற விவாகத்தின் காரணமாக கிறிஸ்த நாடுகளில் முக்கியமான அவ்விரு நாடுகளும் ஒற்றுமைப்பட்டன. தங்களுடைய நாட்டை தங்களுக் குரியதாக்கவேண்டுமென்ற எண்ணத்தைப் பூர்த்தி செய் வதற்காகத் தொடங்கிய நீண்ட யுத்தத்தின் இறுதியில் முஸ்லீம் இராச்சியத்திலெஞ்சியிருந்த கிரான டா வும் 1492ல் கைப்பற்றப்பட்டது. ஸ்பானியா ஒரு தனி இராச்சியமாக விளங்கியது. ஐபீரியன் குடாநாட்டில் போத்துக்கலைத் தவிர்ந்த ஏனைய பகுதி முழுவதற்கும் பேடினுந்தின் மகனுன பிலிப்பு அரசனனன். பதி னைந்தாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஸ்பானியா ஒரு பெரும் இராச்சியமாக விளங்கியது. விவாக சம்பந்தத் தின் பயணுக நெதலாந்தும் அக் காட்டு அரசலுக்கு உரி மையாயிற்று, இத்தா லி யின் தென்பாகத்திலுள்ள நேப்பிள்ஸ் இராச்சியமும், சிசிலி என்ற தீவும் அவனு டைய ஆளுகைக்குட்பட்டன. பேர்டினுந்தின் போனுன

புதிய இராச்சியங்களின் எழுச்சி 31
ஐந்தாம் சாள்ஸ் சக்கரவர்த்தி தனது தாயின் தங்தை யான மாக்ஸ்மிலியனுடைய ஜேர்மனியிலுள்ள குடும் பச் சொத்துக்களையும் பெற்றரன். பின்பு அவன் மாக்ஸ் மிலியனின் பின் பரிசுத்த ரோம சக்கரவர்த்தியாக 1579-ல் தெரிவு செய்யப்பட்டான். புதிய உலகமாகிய அமெரிக்காவில் ஸ்பானியாவென்ற நாடு களு க் கும் அவனே அரசனுனன். இவ்வாறு பல தேசங்களையுள் ளடக்கிய பெரிய ஏகாதிபத்தியத்துக்குத் தலைவனனன்.
பதினரும் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஸ்பானியா அதிக செல்வாக்கும் பெருமையும் சிறப்பும் படைத்த நாடாக விளங்கியது. அமெரிக்க நாடுகளிலிருந்து அது அளவற்ற பொருளைப் பெற்றது. மக்கள் எல்லோரும் கத்தோலிக்க சமயத்தவர்களாகையால் அவர்களிடம் ஒற்றுமை நிலவியது. ஸ்பானியப் போர்வீரர்கள் ஐரோப் பாவிற் திறமை வாய்ந்தவர்களாவர். அவர்களுடைய கடற்படையே அமெரிக்காவைக் கண்டு பி டி த் த து. ஆனற் செல்வமும், சீரும் வல்லமையும் பெற்று விளங் கிய சாள்ஸ் தனது நாடுகள் பல திக்கிலும் சிதறிக் கிடந்தபடியால் அவற்றை ஒன்றுசேர்த்து ஸ்திரப்படுத்த முடியாமற்போனது. அமெரிக்காவிலுள்ள அவனுடைய சிறந்த முறையான அரசாங்கத்தை ஏற்படுத்தாதபடி யாற் பல 5ஷ்டமும் செலவுமுண்டாயின. சமயாபிமான மும் ஆர்வமுங்கொண்ட மக்கள் அங்கீகரிக்கப்பட்ட சமயத்துக்கு மாருரகவுள்ளவர்களைத் தண்டிப்பதற்காக ஸ்தாபித்த ஸ்தலம், சுதந்திரமான கொள்கைகளையடக் கியதோடு ஐரோப்பா முழுவதும் செறிந்த புதிய கொள்கைகளாற் ஸ்பானியா பயன் பெறுவதற்குத் தடையாயிருந்தது. பரந்த இராச்சியத்தின் பல பாகங் களிலும் இடையரு யுத்தங்கள் நடைபெற்றன. பல வற்ருலும் களைப்புற்று, சாள்ஸ் மன்னன் 1555-ல் இராச்சிய பாரத்தினின்று நீங்க அவனது மகன் இரண் டாம் பிலிப்புச் சிங்காசனமேறினன். ஜேர்மனியிலுள்ள (ஹப்ஸ்பேர்க்) குடும்பச் சொத்துக்கள் இவனுக்குக்

Page 21
32 புதிய இராச்சியங்களின் எழுச்சி
கிடைக்கவில்லை. அவை அவ்வமிசத்திலுள்ள பேர்டினங் தரசனுக்குக் கொடுபட்டன. இங்கி லா ந் தி ல் அரசு செலுத்திய எட்டாவது ஹென்றியின் மகளை விவாகஞ் செய்ததால் சிறிது காலம் இவன் இங்கிலாந்துக்கு அரச னைன். 1580-ல் போத்துக்கலைக் கைப்பற்றியதால் அதுவும் அகன் ஆளுகைக்குட்பட்டிருந்த 5ாடுகளும் இவனுடைய கையிற் சிக்கின. செல்வாக்கும் அதிகார மும் படைத்த சாள்ஸ், இரண்டாம் பிலிப்பு ஆகிய மன்னர்களைக் கண்டு ஐரோப்பிய வேந்தர் நடுக்கமுற் றனர். பிரான்சே அதிக பயங்கரத்தோடிருந்தது. இவ் வரசர்களுடைய காலத்தில் ஸ்பானியா எழுச்சி பெற் அறுப் பெரிய உன்னத நிலையை அடைந்திருந்தது.
சீக்கிரத்தில் ஸ்பானியாவின் நிலை குன்றத் தொடங் கியது. இரண்டாம் பிலிப்பு மன்னன் தனது வல்ல மையில் அதிக நம்பிக்கையும்"மந்திரிகளிடத்து நம்பிக்கை யீனமுங் கொண்டிருந்தபடியால் அவனுங் தனது திட் டங்களொன்றையும் பூர்த்தியாக்க முடியவில்லை. இங்கி லாந்தையும் பிரான்சையும் தனது இராச்சியத்தோடு சேர்க்க எண்ணங்கொண்டும் அதிற் சித்தியடையவில்லை. இங்கிலாந்தில் எலிஸபெத் ராணி தந்திரமாகவும் யூக மாகவும் அரசியலை நடத்தியபடியாலும், பிரான்ஸில் அவனுடைய எதிரியான ஹென்றி திறமையாய் ஆளுகை நடத்தியபடியாலும், அவன் ஒருவிதத்தாலும் வெல்ல முடியவில்லை. கத்தோலிக்க ச ம ய த் தை ஐரோப்பா முழுதும் பரப்பவேண்டுமென்று ஆவல்கொண்ட பிலிப்பு Bெதலாந்திலுள்ள மக்கள் கல்வினின் மதத்தைப் பின் பற்றியதைக்கண்டு அவர்களை அடக்குவதற்கு முயன் ருரன். 1567-ல் ஒரு பெரிய சேனை யு டன் அல்வர் பிரபுவை அனுப்பினன். அங்கே காணப்பட்ட எதிர்ப் பைச் சிறிது காலத்துக்குள் அடக்கியவுடன் நெத லாந்து ஒருபோதும் போருக்கெழமாட்டா தென்றெண் ணக்கூடியதாயிற்று ஆனல் (1572-ல் மறு படி யும் * ஒரேன்சு” வமிசத்தைச் சேர்ந்த மெளனி வில்லியம்

புதிய இராச்சியங்களின் எழுச்சி 33
என்ற பெயர் வாய்ந்த ஒரு பிரபுவின் தலைமையில் கலகமுண்டானது. 40 வருஷ காலம் அந்தச் சுதந்திரப் போர் நடைபெற்றது. எண்ணிறந்த சேனைத் திரளையும், கடற்படையையும், பெரும் நிதியையும், பிலிப்பு மன்னன் அனுப்பியிருந்தும் நெதலாந்து மக்களைத் தோற்சடிக்க முடியாமையால் ஸ்பானியாவின் வீழ்ச்சிக்கு இவ் யுத்தம் ஒரு காரணமாயிருந்தது. ஸ்பானியா தங்கள் கடற்படை யின் உதவியைக் கொண்டாகுதல் நெதலாந்து மக்க ளைத் தோற்கடிக்க முடியவில்லை. ஈற்றில் போதிய பொருளில்லாமற் போய்விட்டது. உவில்லியம் கடல ஃணகளைத் திறந்து வெள்ளத்தை உள்ளே வரவிட் டான். 6ெதலாந்து கடல் மட்டத்துக்குக் கீழேயுள்ள பூமியாகையால் வெள்ளம் பெருகத்தொடங்க எதிரிகள் ஒடவேண்டிய நிலை ஏற்பட்டது. 1576-ல் Bெதலாந்திற் சண்டை செய்த ஸ்பானிய போர்வீரருடைய சம்பளம் நெடு5ாளாகக் கொடாதபடியால் அவர்கள் கலகத்தை உண்டுபண்ணினர். அத்தருணத்தில் இது வ  ைரயும் சண்டைசெய்த Bெதலாந்திலுள்ள வடக்கு மாகாணங்க ளும், தெற்கு மாகாணங்களும் ஒற்றுமைப்பட்டு ஸ்பா னியரைத் துரத்த முயன்றன. சமய வேறுபாட்டினல் இவர்களிடையேயுண்டான ஐக் கி யம் நிலைக்கவில்லை. ஈற்றில் உவில்லியம் ஒரு சதிகாரனற் கொல்லப்பட் டான். மனத்திடமும், ராசதந்திரமும்; பொறுமையும்; சுய நலங் கருதாத தேசாபிமானமும் ஒருங்கேயமைந்த உவில்லியத்தைப் பெரிய அரசியல் நிபுணனுகக் கருத வேண்டும். 丸
- Y.
1588-ல் பிலிப்பு மன்னனல் அ லு ப் பப் பட்ட " ஆமடா" என்ற கடற்படை ஆங்கிலேயராற் தோற் கடிக்கப்பட்டமையால் ஸ்பானியாவின் பலம் குறைக் கது. எலிசபேத் ராணியும் Bெதலாந்து மக்களுக்கு உதவி புரிவதற்காகச் சேனையொன்றை அனுப்பிய மையினுல் ஸ்பானியர் வெற்றிகரமான சண்டையைச் செய்ய முடியவில்லை. அமெரிக்காவிலிருந்து ஸ்பானியா
б

Page 22
34 புதிய இராச்சியங்களின் எழுச்சி
வுக்குத் திரவியங்க?ளக் கொண்டுசென்ற கப்பல்கள் ஆங்கிலேயராலும், பிரென்சுக்காரராலும் சூறையாடப் பட்டன. விவசாயமும் கைத்தொழிலும் வீழ்ச்சியுற்றன. இங்கிலாந்து, ஒல்லாந்து பிரான்சு ஆகிய மூன்று 5ாடு களும் ஸ்பானியாவுக்கெதிரே ஐக்கியம் பூண்டமையால் ஸ்பானியர் வெற்றிபெற முடியாததற்கு அறிகுறியா யிற்று. பின்பு மெளனி உவில்லியத்தினுடைய மகன் மோரிஸ் நெதலாந்துச் சேனைக்குத் தலைமை தாங்கி 1597-ல் ஸ்பானியரைத் கோற்கடித்தான். நீடிக்க யுத் தத்தினுல் இருபகுதியாரும் களைப்புற்றமையினுல் 1609-ல் தற்காலிகமான உடன்படிக்கை எழுதப்பட்டது. அதி லிருந்து சுதந்திரத்தைப் பெற்றனர்.
மத்தியகாலத்தில் இங்கிலாங்கைப்போலப் பிரான்சு தேசத்திலும் நிலம்படைத்த பெரும்பிரபுக்கள் குறுகில மன்னர்போல் அதிகம் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த னர். அரசனிடம் முழு ஆதிக்கமுமிருக்கவில்லை. சில காலங்களில் அரசனுக்கெதிரே போருக்கும் எழும்பினர். ஆனல் நாளடைவில் பிரான்சிய மன்னர்கள் தமது செல்வாக்கைப் பெருக்கியதனுல் குறுநில மன்னரின் அதிகாரம் வீழ்ச்சியுற்றது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இடை இடையே படையெடுத்துச்சென்ற ஆங்கி லேயர் அந்நூற்றண்டின் இறுதியில் துரத்தப்பட்டனர் பின்பு குறுநில மன்னர்களின் பலத்தையுங் குன்றச் செய்து நாடு முழுவதையும் அரசர்கள் ஆளத்தொடங், கியபின் பிரான்சு ஒரு இராச்சியமாக எழுச்சிபெற் றது. 1494ல் எட்டாவது சாள்ஸ் இத்தாலிமீது படை யெடுத்தபடியால் அவ்வரசனுக்கும் ஸ்பானியா வுக்கு மிடையில் போர் உண்டானது. பதினரும், பதினே ழாம் நூற்றண்டில் ஏற்பட்ட சமய விவாதங்கள் பிரான் சையுந் தாக்கின. கல்வினுடைய கொள்கைகள் பிரான்சு தேசத்தில் பிரதானமாகத் தெற்கு மேற்குப்பகுதிகளில் பரவத்தொடங்கின. அடக்குமுறைச் சட்டங்களின்மூலம் சமயக்கிளர்ச்சி தடைசெய்யப்பட்டும் புரட்டஸ்தாந்து சம

புதிய இராச்சியங்களின் எழுச்சி 35
யத்தை அனேகர் கழுவினர். அங்காட்டிற் புரட்டஸ் தாந்து சமயத்தைத் தழுவியவர்கள் “ஹியூஜனட்ஸ்” என்றழைக்கப்பட்டனர். நகரங்களிலுள்ள தொழிலாளி களும், வர்த்தகர்களும், பிரபுக்களும் இம்மதத்திற் சேர்க் திருந்தார்க்ள். பலசமயச் சண்டைகள் கிளம்பின. இங் கிலாந்தை ஆண்ட எலிசபேத் ராணியும் புரட்டஸ்தாந்து மதத்தினருக்கு உதவியளித்தார். அவர்கள் ஜேர்மனி, சுவிச்சலாந்து முதலிய நாடுகளிலிருந்து உதவிபெற்ற னர். கத்தோலிக்க சமயத்தவர்கள் ஸ்பானியாவின் உத வியைப் பெற்றனர். 1570ல் எழுதிய சமாதான உடன் படிக்கையின் பிரகாரம் எல்லா மக்களுக்கும் அவர்கள் மனநம்பிக்கையின்படி ஒழுகிக்கொள்ளவும், வணக்கஞ் செய்யவும் சுதந்திரமளிக்கப்பட்டது. சர்வகலாசாலைகளி லும், அரசாங்க சேவையிலும் இருமதத்தினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. ஆனல் ஆயிரத்து எழு நூற்றுக்கும் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டுக்கு மிடையில் ஒரு நெருக்கடியான காலமேற்பட்டது. பாரிஸ் நகரத்தில் 10000 'ஹியூஜனட்ஸ்" வரையில் கொலை செய்யப்பட்டனர். இக்காலத்தில் தப்பி ஓடிய நவார் நாட்டு ஹென்றி ஹியூஜனட்ஸின் தலைவனனன். முடி வில் சிங்காசனத்தைக் கைப்பற்றினன். அரசுரிமையை அவன் ஏற்றுக்கொள்வதற்குக் கத்தோலிக்கனுக வா வேண்டியிருந்தும் அவன் புரட்டஸ்தாந்து மதத்தின ருக்கு விடுதலையளித்தான். அதன் பயனுக ஒரு நூற் ருரண்டுக்கு அவர்கள் ೨{* சலுகையை அனுபவித் 5@OTIT.
வினுக்கள் 1, மத்தியகால்ப் பிற்பகுதியில் எந்தெந்த நாடுகளிற் தேசிய உணர்ச்சி
உண்டானது? 2. எந்த நாடுகளில் 19ம் நூற்றண்டிற் தேசிய உணர்ச்சி உண்டா
ன் து?
8. இங்கிலாந்தின் எழுச்சிக்குரிய கார்ணங்களை ஆராய்க, 4. ஸ்பானியர் பெரிய இராச்சியமாகத் தோன்றுவதற்குரிய ஏதுக்
éፍት ዜlff6®ቈ/ጶ

Page 23
புதிய இராச்சியங்களின் எழுச்சி ஐந்தாம் சாள்ஸ் மன்ன&னப்பற்றி நீர் அறிந்தவற்றைக் கூறுக! ஸ்பானியாவின் எழுச்சிக்குரிய காரணங்களையும் அதன் வீழ்ச் சிக்குரிய காரணங்களையும் ஆராய்க.
பிரான்சிய மக்களிடையே எப்போ தேசிய உணர்ச்சி உண்டா னது? பிரான்சு தேசத்தின் எழுச்சிக்குரிய காரணங்கள் யாவை?

நாலாம் அத்தியாயம் முப்பதாண்டு யுத்தம்
முப்பதாண்டு யுத்தத்தின் காரணங்களை விளங்கிக் கொள்வதற்கு முன் "ஒக்ஸ்பேக் ' சமாதான உடன்
படிக்கை (1553) யின் அம்சங்களை ஆராய்தல் வேண்டும்.
புரட்டஸ்தாந்து மதப்புரட்சி பல சமய விவாதங் க8ள ஐரோப்பாவில் உண்டாக்கிவிட்டனவென்று முத லிரு அத்தியாயங்களிலும் படித்திருக்கின்ருேம். அவ்வி வாகங்களை ஒருவாறு தீர்ப்பதற்கு 1555ல் 'ஒக்ஸ்பேக்" என்றவிடததிற் கூட்டப்பெற்ற பாராளுமன்றம் ஒரு சமாதான ஒழுங்கை ஏற்படுத்தியது. முப்பதாண்டு யுத் தத்தின் காரணங்களை விளங்கிக்கொள்வதற்கு அதன் அம்சங்களை முதலில் ஆராய்வது அவசியம்ாகும். 300 சமஸ்தானங்களைக் கொண்டுள்ள ஜேர்மனியில் ஒரே சமயத்தை நிலை5ாட்ட முடியாமையால் ஒவ்வொரு சமஸ் தானத்துக்கும் அங்குள்ள மக்களின் மார்க்க விஷயங் களின் பொறுப்பு விடப்பட்டது. அடுத்தபடியாக ஜேர் மனியில் இரு சமய ங்கள்தான் அங்கீகரிக்கப்பட்டன அவை கத்தோலிக்க சமயமும் லூகரின் மார்க்கமுமாம் இதனுல் விளையக்கூடிய அபாயம் அப்பொழுது தோன் றவில்லை. இதன்படி கல்வினின் மதத்தினருக்கு ஜேர் மனியிலிடமேயில்லை. அது ஜேர்மனியின் பலபாகங்களிற் பரவியிருந்ததுமல்லாது ஆதரின் மார்க்கத்திலும் பார்க் கக் கூடிய ஆதரவை பெற்றிருந்தது.
ஆனல் 1555ம் ஆண்டுக்கும் 1618,) ஆண்டுக்கு மிடையிலுள்ள காலத்தில் ஜேர்மனியின் சமயநிலை மாறு தலடைந்தது. ஆரம்பத்தில் இரதரின் கொள்கைகள் சுல பமாகவும் ஏற்கக்கூடியனவாகவுமிருந்தபோதிலும் அவ ரின் மரணத்தின்பின் அவரை ப் பின்பற்றியவர்கள் தேவையற்ற சமய விவாதங்களையுண்டாக்கி விட்டனர். அச்சமயத்தைத் தழுவிய சமஸ்தானங்கள் சிலவற்றுள்

Page 24
38 முப்பதாண்டு யுத்தம்
மார்க்கசம்பந்தமான நிஷ் டு ரங்க ள் காணப்பட்டன, 'ஒக்ஸ்பேக்” சமாதான ஒழுங்கின் பிரகாரம் சமய விஷயங்கள் ஒவ்வொரு சமஸ்தானங்களின் பொறுப் பிலும் விடப்பட்டிருந்தமையால், சிலவற்றுள் கொள் கைகள் சம்பந்தமாகவோ அல்லது வழிபாட்டுமுறை அளவிலையோ மக்கள் சுயாதீனத்தைப் பெறவில்லை. அப்போதிருந்த கிலேபரத்தின்படி அாதரின் இயக்கத் தில் மாத்திரம் புரட்டஸ்தாந்து மதம் தங்கியிருந்திருந்த தால் அம்மகத்தின் நிலை குன்றிப்போகக்கூடும். ஆனல் கல்வினுடைய கொள்கை களை ப் பின்பற்றியவர்கள் அதிக ஆர்வமும் விசுவாசமும் கொண்டிருந்ததல்லாது அந்நேரத்தில் அம் ம க ம் மக்களாலேற்றுக்கொள்ளக் கூடியதாகவுங் காணப்பட்டது. இருசமயத் தலைவர்களி தைரவாளர்களுக்கிடையில் பெரும் பகைமை காணப் பட்டது, ஜேர்மனியிலுள்ள பிரதான நாடுகளாகிய சாக் ஸனியும் பிரான்டன் பேர்க்கும் அாதரின் கொள்கை கஜளப் பின்பற்றியிருந்தும் பிரான்டன் பேர்க்குச் சிறிது காலத்துக்குள் கல்வினின் ஆதரவாளர்களோடு சேர்ந்து கல்வினின் மதத்துக்கு, பலற்றினேற்றுக்கு அரசனும், இங்கிலாந்து அரசனுன முதலாம் ஜேம்ஸின் மருமகனு மான பிரடெரிக்கு மனமுவந்த ஆதரவை அளித்தான். இனி ஜேர்மனியிலுள்ள அரசியல் நிலைக்குத் தகுந்த வாறே 1 ஒக்ஸ் பேர்க்' சமாதான உடன்படிக்கையும் எழுதப்பட்டதென்பது கவனிக்கவேண்டியதாகும். அதுவு மல்லாமல் அவ்வுடன்படிக்கையில் வருங்காலத்தில் வரக் கூடிய மாற்றங்களுக்கும் இடங்கொடுக்கவில்லை. அவ் வுடன்படிக்கை ஒரு தேசீயமயமானதல்லாது தனித்தனி சமஸ்தானமளவில் ஒழுங்குகளை ஏற்படுத்திய காரணத் தினுல் அது ஒரு நிரந்தரமான தீர்ப்பு என்று கருத இடமில்லை.
புரட்டஸ்தாந்து மதத்திற் பிளவுண்டாகி ஆர்வம் குறைந்திருக்கும் நேரத்தில் சமய எதிர்ப்புக்கட்சி கத் தோலிக்க சமயத்துக்குப் புத்துயிரளித்தது. றென் ட்

முப்பதாண்டு யுத்தம் 39
சபை, லத்தீன் மொழி பெயர்ப்பிலுள்ள வேதத்தையே, மார்க்கவிஷயங்களுக்கு அதிகாரமான நூலென்ற தீர்ப் புக் கத்தோலிக்க சமயத்துக்கு வரம்பைக்கட்டிவிட்டது. யேசு சபையினர் நாட்டின் பலவிடங்களிலும் போகனை செய்து வந்ததுமன்றி ஜேர்மனியிலுள்ள கத்கோலிக்க நாடுகளில் வலோற்காரமான பேருணர்ச்சியையும் புகு த்தி விட்டனர். சமய எதிர்ப்புரட்சிக்கு அதிகமூக்க மளித்தவர் ஜேர்மனியின் இளவரசனை பவேரியா நாட்டு மாக்ஸ்மிலியனுகும். இவனுடைய நாட்டிலிருந்து புரட்டஸ்தாந்து நாட்டினர் துரத்கப்பட்டனர். சமய விஷயத்தில் தத்களித்துக்கொண்டிருந்த நாடுகள் யாவும் திரும்பவும் கத்தோலிக்க திருச்சபையில் விசுவாசம் வைத்திருந்தன. புரட்டஸ்தாந்து மதத்துக்குமாறி உலக வாழ்க்கையிலீடுபட்ட கோலோ னின் ஆக்ஸ் பிசப் தனது பதவியினின்று உடனே நீக்கப்பட்டார். கத் கோலிக்க சமயம் இவ்வண்ணமாகப் பயமுறுத்தும் நிலையைக் கையாண்டமையால் 1608ல் லூகரின் மார்க் கத்தினர் சபை, ஐக்கிய சபையை ஸ்காபித்தனர். பலத் தினேற், ஹெஸ், பேடன், உவேட்டன் பேர்க் அதன் அங் கத்தவர்களாய்ச் சேர்ந்தனர். அடுத்த ஆண்டில் இதை எதிர்த்துக் கத்தோலிக்க சபையொன்று ரோம இராச் சிய சக்கரவர்த்தியினனுமதியுடன் பவேரியாவின் அர சனை மாக்ஸ்மிலியனுல் ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபை புரட்டஸ்தாந்து மகத்தை முற்றுக நசுக்கிவிடவேண்டு மென்று எண்ணங்கொண்டது. ஒரு சமயச்சண்டையேற் படுவதற்குப் பல அறிகுழிகள் கோன்றின. சமய விவா தங்களைவிடவிவ்யுத்தத்திற்கு அரசியலோடு சம்பந்தப் பட்ட காரணங்க ளு முள. சக்கராதிபத்தியத்திலோர் தகுந்த அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஹபீஸ் பேர்க்' வம்சத்கரசர்கள் செய்த பல முயற்சிகளும் பயனற்ற தாய்ப்போயின ' ஒக்ஸ் பேர்க் ' உடன்படிக்கையே அதற்குச் சான்ருரகும். அரசனின் கையில் முழு அதி காரத்தையும் அடக்கும் நோக்கமக்காலத்திலெல்லாநாடு களிலுமிருந்த பொழுதும் ஜேர்மனி முழுவதுமவ்வண்

Page 25
40 முப்பதாண்டு யுத்தம்
ணம் காணப் படா மைக்கு என்னகாரணமென்றதை ஆராயவேண்டும். 'ஹபீஸ் பேர்க்' வம்சத்தைச் சேர் ந்த சக்கராதிபதிகள் திறமைவாய்ந்தவர்களாகக் காணப் படவில்லை. உதாரணமாக 1576ல் சக்கிராதிபத்திய சிம் மாசனமேறிய இரண்டாம் றடோலப் யேசு சபையினரின் சீஷனயும், கத்தோலிக்க சமயத்துக்கு ஆதரவாளனயு மிருந்த பொழுதிலும், மன அசெளக்கியத்தினுலதிகம் சிரத்தையெடுக்க முடியவில்லை. ஹப்ஸ் பேர்க் வம்சத்த வர்களின் இராச்சியம் பரந்திருந்த பொழுதிலும் ஹப்ஸ் பேர்க் வமிசத்துக்குரிமையுள்ள ஸ்பானிய அரசனுடைய உதவியிருந்தபொழுதிலும் ஜேர்மனி, ஹங்கேரி, பொகி மியாவினுதவியைப் பெறக்கூடியதாக விருந்தபொழுதி லும் சக்கராதிபதி ஜேர்மனியிற் காணப்பட்ட எதிர்ப்பை யடக்கிச் சிறந்ததொரு அரசாங்கத்தை அமைக்கமுடியா மற் போயிற்று. இவ்வண்ணமாக ஆரம்பத்தில் அரசி யல் சமயசம்பந்தபான விஷயங்கள் ஒன்று சேர்ந்து யுத்தத்துக்குக் காரணமாயிருந்ததைக் கவனிக்கலாம். காலஞ்செல்ல இரண்டும் பிரிந்துகொண்டமையால் ஈற்றி லடையவேண்டிய வெற்றி தடைப்பட்டது, இனிக் கத் தோலிக்க நாடுகள் சக்கராதிபதிமீது பெருமைகொண்டு மிருந்தன.
1617ல் பொகீமியாவுக்கு அரசனுயிருந்த இரண்டாம் பேடினர்ந்தின் கையில் ஹப்ஸ் பேர்க் வம்சத்தவர்களின் இராச்சிய பரிபாலனத் திட்டம் தங்கியிருந்தது. பேர்டி னர்ந்து ஆர்வங்கொண்ட கத்தோலிக்கனும் யேசு சபை யினரின் போதனைகளைப் பின்பற்றியவனுமாகையால் ஹப்ஸ் பேர்க் இராச்சியங்களில் வசதியென்ருரல் சாம் ராச்சிய நாடுகளில் புரட்டஸ்தாச்து மதத்தை நசுக்கி விடவேண்டுமென்று பிடிவாதங்கொண்டிருந்தான். அக் காலத்தில் ஹங்கேரியிற் கல்வினின் மதமும் அவுஸ்திரி யாவில் லூதரின் மதமும் பொகீமியாவில் ஐந்தில் 5ான்கு பங்கு லூதரின் மதமும் பரவியிருந்தன. 1609ல் பொகீ மிய மக்கள் பெற்றுள்ள அரசசட்ட சாதனத்தின் பிர

முப்பதாண்டு யுத்தம் 41
காரம் சமயசுயாதீனத்தைப் பெற்றிருந்தனர். அந்தச் சாதனத்தை ஒழிக்கவும் புரட்டஸ்தாந்து மதத்தை அழிக்கவும் எடுத்த முயற்சியே பிறேக் என்ற இடத் தில் நடந்த சம்பவத்துக்கும் ஜேர்மனியில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பத்திற்கும் உடனடியான காரணமாயி ருந்தன. . பொகீமியாவிலுள்ளவர்கள் புரட்டஸ்தாந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டபொழுது எதிர்ப்புக்காட்டி னர். இச்செய்கை சக்கராதிபதி வாக்குப்பண்ணியதற்கு மாறனதாகும். 1618ல் பொகீமியாவிலுள்ள புரட்டஸ் காந்து மதத்தினர் ஆயுதபாணிகளாய் அவுஸ்திரிய சக் கரவர்த்தியை எதிர்க்கத் தீர்மானஞ் செய்தனர். அவர் களிற் சிலர் பிறேக் அரண்மனையிற் புகுந்து சக்கராதி பதியின் பிரதிநிதிகள் சிலரைச் ஜன்னல் வழியாக வெளியே தூக்கியெறிந்தனர். கலகக்காரர் தற்காலிய மான அரசாங்கமொன்றை நிறுவ1619ல் பலற்றினேற் அரசனும், இங்கிலாந்தின் அரசனகிய முதல்ாம் யேம் ஸின் மருமகனுமாகிய ஐந்தாம் பிரடெரிக்கை அரசன கத் தெரிந்தனர். பொகீமியாவின் அரசை ஏற்றது பிரடெரிக்கின் தவறெனலாம். ஜேர்மனியிலுள்ள மார்க்க விவாதத்தை அது சீர்கெடச் செய்தது. இதனுல் புரட் டஸ்தாந்து மதத்தினர் சாம்ராச்சியத்தின் பகைவர்க ளாகவும் அதிகாரிகளுக்கு மாருரன கலகக்காரரெனவும் கருதப்பட்டனர். பொகீமியாவிலேற்பட்ட புரட்சியின் பலனுல் உண்டாகிய முப்பதாண்டு யுத்தத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை பொகீமியா யுத்தம் (1619-1623), தேனியர் :* (1625-1629), சுவீட னேடு சம்பந்தப்பட்ட யூத்தம் (1630-1635), பிரான் கிய அவுஸ்திரிய ஸ்பானிய யுத்தம் (1635-1648) என்
பனவாம்.
பொகீமியாவின் அரசையேற்ற பலற்றினேற் அர சனன பிரடெரிக் ஜேர்மனியிற் போதிய ஆதரவைப் பெறவில்லை. சில்லியின் தலைமையில் சாம்ராச்சியப்படை 1620ல் பொகீமியாவுட் புகுந்து பிரடெரிக்கைத் தோற் கடித்தது. அவன் பொகீமியோவை இழந்ததோடு தமது
6

Page 26
42 முப்பதாண்டு யுத்தம்
சொந்த நாடுகளையுமிழக்க நேர்ந்ததினுல் ஒல்லாந்துக்கு ஒடிப்போய்த் தமது மாமனுகிய இங்கிலாந்து அரசனின் உதவியைக் கோரினன். ஆனல் இங்கிலாந்திலிருந்து ஓர் உதவியையும் அவன் பெற வில் லை. பொகீமியாவில் அனேக கொடுரமான செயல்கள் நடைபெற்றன. சக் கரவர்த்தியின் எதிரிகள் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். பரந்த நிலங்கள் பறிமுதலாயின. கடுங்குற்றங்கள் விதிக் கப்பட்டன; அனேகர் நாட்டிலிருந்து துரத்தப்பட்ட னர். முப்பதாண்டுகளாக நடைபெற்ற இவ்யுத்தத்தில் அங்நாட்டிலுள்ள நான்கு இலட்ஷம் மக்களில் மூன்று இலட்ஷம் வரையிலிறந்தனர். நாடு கத்தோ லிக் க நாடாக மாறியது பல வெற்றிகளைப்பெற்று விளங்கிய அந்தச் சாம்ராச்சியப் படை வீரர் பலற்றினேற்றைக் கைப்பற்றியதினுல் ஜேர்மனியின் வடக்கிலுள்ள புரட் டஸ்தாந்து நாடுகளுக்குப் பயங்கரத்தையுண்டுபண்ணின. ஆகையாற் புரட்டஸ்தாந்து"5ாடுகள் தங்களுடைய சுதக் திரத்தையும், சலாக்கியங்களையும் பாதுகாக்கில் ஒற்று மையான் எதிர்ப்பைக் காட்டவேண்டியது வெளிப்படை.
டென் மார் க் குக் கும், ஜேர்மனிக்குச் சேர்ந்த ஹொல்ஸ்ரீனுக்கும், அரசனே புரட்டஸ்தாந்து சமயத்த வர்களுக்காக உதவிபுரிய முற்பட்டான். மான்ஸ் பீல்ட் என்ற சேனைத்தலைவனையும் பெற்றரர்கள். ஆனல் கத் தோலிக்க சேனைத்தலைவனுகிய, ரில்லி என் பவனிற் சிறந்த உவலன்ஸ்ரீன் என்பவனுடைய எதிர்ப்பினல் புரட்டஸ்தாந்து சமயத்தவர்களின் முயற்சிகள் பயன் பெறவில்லை. மான்ஸ் பீல்ட் சண்டையிலிறந்தான். டென் மார்க்கரசன் தோல்வியுற்றன். உவலன்ஸ்ரீன் பெற்ற வெற்றிகளால் சக்கராதிபதிக்கு ஜேர்மனியில் அதிகாரங் கூடியது. ஷெலெஸ்விக்கும் ஹொல்ஸ்ரீனும் அவனற் கைப்பற்றப்பட்டன. கத்தோலிக்க சமயத்தின் வெற்றி யும் சாம்ராச்சிய அவாவும் பூர்த்தியாயின. ஆனல் பவே ரியாவுக்கு அரசனுன மக்ஸ் மிலியன் உவலன்ஸ்ரீன் மீது பொருமை கொண்டான். 1629ல் சக்கராதிபதி

முப்பதாண்டு யுத்தம் 43
விடுத்த ஆஞ்ஞையின் பிரகார ம் 1552 தொடக்கம் பொதுமக்களின் கையில டைந்த கோயிலாதனங்கள் திரும்பவும் ஆலயத்துக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. இதனுல் புரட்டஸ்தாந்து சமயத்தவர்கள் அதிகமான வற்றையிழக்க 5ேர்ந்தது. ஆனல், உவலன்ஸ்ரீன் சக் காதிபதியின் ஆஞ்ஞைக்கு இரகசியமான எதிர்ப்பைக் காட்டியமையால் கத்தோலிக்க சபையின் புத்திமதியின் படி உவலன்ஸ்ரீன் பதவியினின்று நீக்கப்பட்டான்.
சக்கராதிபதி ஒரு பெரிய சேனைத்தலைவனையிழந் தான். அதேசமயத்தில் பெரும் வீரனும் சுவீடனுக்கு அரசனுமான ஹஸ்டோபஸ் அடோல்பஸ் சண்டையி லீடுபட்டான். 1611ல் சிம்மாசனமேறிய ஹஸ்டோபஸ் அடோல்பஸ் ஆர்வமும் சமய அபிமானமுமுள்ளவன கையால் ஜேர்மனியில் உள்ள புரட்டஸ்தாந்து மதத்தி னர் படும் அல்லல்களைக் கண்ணுற்று அவ்ர்களுக்கு ஆதரவு அளிக்கத் தீர்மானம் செய்தான். சமய அபி மானத்தை விட வேறுசில காரணங்கள் அவன் ஜேர் மனியில் கடந்த யுத்தத்தில் பங்குபெறத் தூண்டின. சாம்ராச்சியப் போர்வீரர்கள் தன்நாட்டின் எல்லைப் புறத்தில் வெற்றிகரமாய் உலாவுவதைச் சகிக்காது அப் பகுதிகளுக்குத் தன் அதிகாரத்தை நாட்டவேண்டு மென்று எண்ணங்கொண்டான். சுவீடன் அரசுக்குக் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த போலாந்து அரச வமிசத்தினருக்கும் உரிமையுண்டு. ஜேர்மனியில் கத்தோ லிக்க சமயம் பெறும் வெற்றி அவ்வரசுரிமையைப் பலப்படுத்திக்கொள்ளும். கயால் மார்க்கம், வர்த்த கம், அரசுரிமைப்பற்று ஆகிய இவைகள் ஜேர்மனியின் விஷயங்களிற் தலையிட சுவீடன் மன்னனைத் தூண்டின. ஆனலும் ஏனைய காரணங்களிலும் பார்க்கச் சமயப் பற்றே முக்கியமானதாகும். தேசிய உணர்ச்சியும் சம யப்பற்றும் நிரம்பிய சேனைப்படையுடன் புறப்பட்டான். அரசனும் சிறந்த போர்விரணுவான். அவனுடைய சைனி யங்கள் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் சண்டைசெய்

Page 27
44 முப்பதாண்டு யுத்தம்
யக்கூடிய பயிற்சியைப் பெற்றிருந்தன. முதல் நடந்த சண்டையில் அவன் ரில் லி யைத் தோற்கடித்தான். வீயன்ன சரணுகதியடையும் நிலையில் இருந்தது. அடுத்த சண்டையில் ரில்லி காயமடைந்து இறந்தான். பவே ரியா அடொல்பஸ் கையில் சிக்கியது. புரட்டஸ்தாந்து சமய வெற்றிக்கு அறிகுறிகள் தோன்றின. சக்கராதி பதி பல சலுகைகள் அளித்து மீண்டும் உவலன்ஸ்ரீனை சேனைக்குத் தலைவனுக்கினன். பின்பு நடந்த சண்டை யில் உவலன்ஸ்ரீன் தோற்கடிக்கப்பெற்றன். ஆனல் அடொல்பஸ் நெருக்கடியாய் 5டந்த சண்டையில் இறக் தமையால் புரட்டஸ்தாந்து சமயம் பூரண வெற்றியைப் பெறமுடியாமற் போயிற்று. உவலன்ஸ்ரீன் தனது அதிகாரத்தைக் காட்ட ஆரம்பித்தான். சக்கரவர்த்தி கற்பித்தவைகளை அலட்சியம் செய்து பிரான்சோடும் சுவீடனேடும் சி5ேகங் கொண்டான். ஜேர்மனிக்குத் தானே அரசனுகலாமென்ற அவாவும் அவன் மனத் தைத் தூண்டியது. சக்கரவர்த்தி சதியா லோசனை செய்து அவனைக் கொலைசெய்வித்தான். -
ஜேர்மனியில் அமைதி நிலவுவதற்கு இன்னும் பதி ன்ைகு வருடங்களுக்குச் சண்டைசெய்ய வேண்டியதா யிற்று. புரட்டஸ்தாந்து சமயத்துக்கு ஆதரவாளரை ஜேர்மனியின் எல்லைப்புறங்களுக்கப்பாலேயே தேட வேண்டியதாயிற்று. பிரான்சு தேசத்து மந்திரியும் கத் தோலிக்க கார்டினலுமான நிச்சிலியு தான் உதவி யளிக்க ஆயத்தமாயிருந்தார். உவலன்ஸ்ரீனின் வீழ்ச் சிக்கும், பணஉதவியினுல் அடொல்பஸை வெற்றிபெறச் செய்வதற்கும் அவரே காரணமாயிருந்தார். புரட்டஸ் தாந்து சமயத்தவர்களுக்கும் வேண்டிய பண உதவி யையுஞ் செய்து படைத்துனேயும் புரிந்து அவர்கள் வெற்றி பெறத்தக்கதாக உதவியளித்தார். 1635ல் பிரான்சு ஸ்பானியாமீது போருக்கெழுந்தது. றிச்சிலியு தனது யுத்தியினல் ஸ்பானியாவிலே கலகத்தையுண்டு பண்ணிவிட்டான். சமாதானத்தை இரு பகுதியாரும்

முப்பதாண்டு யுத்தம் 45
விரும்பியிருந்தும், பூரண வெற்றியைப் பெறுவதையே நோக்கமாயிருந்தனர். ஈற்றில் பிரான்சே அவ்வெற்றி யைப்பெற்றது. 1642ல் றிச்சிலியு இறந்தவுடன், அவ ரைப்போற்றிறமை வாய்ந்த மசாரின் என்பவர் மந்திரி யானுர், பேடினுந்தின்பின் ஆண்ட மூன்றும் பேடினுந்து சமாதானத்தை ஏற்படுத்த விரும்பி 1648ல் உவெஸ்ற் பேலியா என்ற உடன்படிக்கை எழுதப்பட்டது. மத புரட்சிக்காலம் இவ்வுடன்படிக்கையினுல் முடிவுபெற்ற தெனலாம். ஹஸ்டோபஸ், றிச்சிலியு, மசாரின் என்ப வர்கள் புரட்டஸ்தாந்துமதம் அழியாமற் பாதுகாத்ததல் லாது சமய எதிர்ப்புரட்சி செய்த முயற்சிகளை அவர்க ௗாற் சிகைக்க முடியவில்லே. ஜேர்மனியின் தெற்கும் மேற்கும் கத்தோலிக்க சமயத்தவர்களாயே யிருந்தனர். ஆனல் வடக்கில் புரட்டஸ்தாந்துமதமே நிலைபெற்றது. கல்வினின் மதமும், அாதரின் மதமும் ஒர்ே சலாக்கி யங்களைப் பெற்றன. மக்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பட்டமுறையிற் சுதந் தி ரங் கிடைக்கவில்லை. ஆனல் நாடே அச்சுதந்திரத்தைப் பெற்றது. அச்சமாதான உடன்படிக்கை மார்க்க சம்பந்தமான சு த க் தி ரத் தை அளித்தது. ஜேர்மனியில் 343 சமஸ்தானங்கள் காணப் பட்டன. சுவிச்சலாந்தும் ஐக்கிய 6ெதலாந்தும் சக்கரா திபதியின் ஆதிக்கத்தினின்று விலகி சுதந்திர நாடுக ளாயின. மேட்ஸ், ரூல், வேர்டன், அல்சேசு என்பன பிரான்சின் ஆட்சியின் கீழுட்பட்டன.
நீண்ட யுத்தத்தினுல் ே ஜர் மனி பல கட்டங்களைய 6ರ)L-b5gle Yb>,
வினுக்கள்
'ஒக்ஸ்பேர்க்' உடன்படிக்கையின் பிரதான அம்சங்களே ஆராய்க.
ஜேர்மனியிலுள்ள சமஸ்தானங்களின் சமயநிலையைப்பற்றி ஆராய்,
புரட்டஸ்தாந்து மதத்துக்குப் பாகிகாப்பளித்த அரசர்கள் யாவர்? அம்மதத்திற் பிளவு உண்டானதற்குக் காரணமென்ன?
4. யேசு சபை செய்த தொண்டுகள் என்ன?

Page 28
46
முப்பதாண்டு யுத்தம்
முப்பதாண்டு யுத்தத்தின் காரணங்களை விபரித்து எழுதுக? முப்பதாண்டு யுத்தத்திற் பிரான்சு பங்குபற்றியதற்குக் காரண ରuräötଶot?
முப்பதாண்டு புத்தத்தின் பின் ஐரோப்பாவிலிருந்த சமய நிலையைப் பற்றி ஆராய்க

ஐந்தாம் அத்தியாயம் இங்கிலாந்து (1485-1688)
பனங்காம் நூற்றண்டில் அதிகாரமும் செல்வாக்கு முள்ள பிரபுக்களிடையே அடிக்கடி நடந்த உள்நாட் டுக் குளப்பங்களால் இங்கிலாந்து தேசம் கலக்கமுற்ற நிலையிலிருந்தது. இடையற உள்நாட்டுக் குளப்பங்களாற் களைப்புற்ற மக்கள் நாட்டில் சமாதானம் நிலவுவதற்கு ஒரு திறமை வாய்ந்த அரசன் தேவை யென்றும் அவனை ஆதரிப்பதற்கும் சித்தமானர்கள். அரசன் மனத்திடமும் வலிமையு முடையவன யிருந்தால் நாட்டில் ஒருவிதமான குறையுமில்லை யென்றும், அவன் திறமையற்றவனுயின் ஒழுங்கீனம் காணப்படுமென்றும் எண்ணங்கொண்டி ருக்கும் வேளையில், தியூடர் வம்சத்தைச் சேர்ந்த ஏழா வது ஹென்றி சிங்காசனமேறினன். இவ்வரசன் 1485ல் நாட்டில் அமைதியை யுண்டாக்கி, முடியாட்சியை வலி புறச் செய்யவேண்டுமென உறுதிகொண்டான். அவ் வாறு நிறைவேற்றுவதற்கு அவன் கையாண்ட முறை கள் மிகவும் சாதுரிய மானவையும், சிறந்தனவுமாம். அக்காலத்தில் நடுத்தர வகுப்பென்ற புதிய வகுப்பினர், கம்பளி, சீலை முதலிய பொருட்களைக்கொண்டு வியாபா ரஞ் செய்து செல்வமுடையவர்களாகி, மேன்நிலையை யடைந்திருந்தனர். ஹென்றி இம்மத்திய வகுப்பினரைக் கொண்ட ஒரு சபையின் உதவியைக் கொண்டு ஆண் டான். நீதிவழங்கும் பெருட்டும் சட்டத்தை மீறும் பிர புக்களை அடக்கும் பொருட்டும் நீதிஸ்தலங்களையும் அரச சபைகளையும் ஸ்தாபித்து அவைகளுக்கேற்ற உத்தி யோகஸ்தர்களையும் நியமித் தான். மக்கள் சட்டத்துக் கடங்கி நடக்கத்தக்கதாகவும் சமாதானத்தை நாட்டில் நிலவச்செய்து வைத்ததுமே அவ்வரசனின் மு க் கிய வேலையென்று எண்ணுவது தவறாகும், நாட்டின் பண நிலையைத் திருத்தியமைத்ததும் பிறநாட்டு விஷயங்களைச் சாமர்த்தியத்தோடு நடத்திய முறைகளுமே அரசனு

Page 29
48 இங்கிலாந்து 1485-1688
டைய நிலையை ஸ்திரப்படுத்தியன. கலகங்களே உண் டாக்கியவர்கள், இராசதுரோகிகள், முதலியோருடைய நிலங்களை அபகரித்ததினல் அவைகள் முடிக்குரிய நிலங் களாகின. அதனல் ஹென்றி சிங்காசனமேறிய முதலா வது வருடத்திலேயே வருமானம் நூற்றைம்பது வீதம் கூடியது. நீதிஸ்தலங்கள் விதித்த பெருங் தொகையான குற்றப்பணம் நாட்டின் வருமானத்தோடு சேர்க்கப்பட் டது. ஹென்றி சிக்கனமான வாழ்க்கையை நடத்திய மையால் ஏராளமான பணத்தைச் சேகரிக்கக் கூடிய தாக விருந்தது. பணவிஷயங்களிற் கவனமெடுத்தமை யினுல் பராளுமன்றத்தை அடிக்கடி கூட்டாமலும் பாரா ளுமன்றத்தின் அனுமதியைப் பெருது சட்டங்களை உண் டாக்கியும் அவன் அரசாளத்தக்கதாக விருந்தது. இனி, அரக்கனுக்கு அரசியாயிருந்த கதரீனுவை தனது மகன் ஆர்தருக்கு விவாகஞ் செய்தும், ஆர்தர் இறந்தபின் அவ்வரசியைத் தனது இரண்டாம் மகனுகிய எட்டாம் ஹென்றிக்கு விவாகஞ் செய்து வைத்தமையினுல் இங் கிலாந்துக்கும் ஸ்பானியாவுக்குமிடையில் ஐக்கியத்தை யுண்டுபண்ணினன். ஸ்பானியாவோடு பூண் ட நட்பு பிரான்சு தேசத்தோடிருந்த பகைமைக்குத் தடையா யிருந்தது. ஸ்பானியாவின் அதிகாரத்தைக் குறைக்காமல் விட்டதால் எலிசபேத் ராணி காலத்தில் ஸ்பானிய மன் னன் பெரிய ஒரு கடற்படையை இங்கிலாந்தைக் கைப் பற்றுவதற்காக அனுப்பினன். இவ்வாறு சிலர் அபிப் பிராயப்பட்டனர். அது இங்கிலாந்தின் பிழையன்று. ஆணுல், ஸ்பானியருடைய வலோர்க்காரத்தையடக்க அய லிலுள்ள பிரான்சு, அக்காலத்திற் பலமற்றதாயிருந்ததே காரணமென்று சொல்லவேண்டும். பிரான்சு ஸ்கொத் லாங்தோடு Bட்புக்கொண்டிருந்தமையால் பகைமையா யிருந்த பிரர்ன்சை அவர்களிலிருந்து பிரிப்பதற்காகக் ஹென்றியின் மூத்தமகளாகிய மாக்ரட்டை ஸ்கொத்து லாந்து அரசனுன 5ாலாம் யேம்சுக்கு விவாகம் செய்து வைத்தான் (1502) இதல்ை இருதேசங்களும் ஒற்றுமைப் படுவதற்கு அத்திவாரமா யிருந்தமையினுல் இரு நூற்

இங்கிலாந்த 1485-1688 A9.
ரண்டுகளின் பின் இரு தேசங்களும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரப்பட்டன.
இங்கிலாந்து ஒரு தீவாகையால் அங்கியரின் படை யெடுப்பைத் தடுப்பதற்கு ஒரு பலமுள்ள கடற்படை வேண்டுமென எண்ணினன். அமெரிக்காவுக்கும் இன் னும் மற்றும் இடங்களுக்கும் ஆங்கிலேயரின் கப்பல் கள் சென்றன. நெசவுத் தொழிலும், சீலை வியாபார மும் விருத்தியடைந்தன. பதினருரம் நூற்றண்டில் கண் ஒனுடி கடதாசி செய்யும் தொழிலும் சுரங்கமறுக்கும் தொழிலும் பெருகின.
இவ்வாறு முடியாட்சியைப் பலமுறச் செய்தும் பெருங் தொகையான பணத்தைச் சேகரித்து விட்டும், அயல் நாட்டு அரசகுடும்பங்களின் ஐக்கியத்தை விவா கங்களின் மூலம் பலப்படுத்தியும் விட்டு, ஏழாவது ஹென்றி இறக்க அவனது மகனுகிய எட்டாவது ஹென்றி சிங்காசன மேறினன்.
ஹென்றி அழகும், கல்வியும், மனத்திடமும், சமய பக்தியும் நிரம்பிய சிறந்த மன்னனுக விளங்கினன். அவனில் நற்குணங்களும் தீயகுணங்களும் ஒருங்கே சேர்ந்து காணப்பட்டன. இவனுடைய சாதுரியமும் பின்வரும் விஷயங்களை முன்னறியும் சக்தியும் திறமை வாய்ந்த அரசியல் விற்பன்னர்களைத் தெரிந்தெடுக்க உதவியாயிருந்தன. ஆணுல் தன்னுடைய நோ க் கம் நிறைவேறியவுடன் அவர்க்ஜளப் பதவியினின்று நீக் கவோ அல்லது மரணதண்டனை விதிக்கவோ ஒரு விதமான மனஸ்தாபமுங் காட்டவில்லை. தியூடர் வமிசத் தவர்கள் எல்லோரையும் போலப் பெரும் செல்வாக்கை விரும்பினன். அவனுடைய வசீகரமான புன்முறுவலும் எவரோடும் சகவாசமாய் நடந்துகொள்ளும் குணமும் மக்களுடைய மனதைக் கவர்ந்தன. அவன் கொடுரமா கவும், இரக்கமற்ற முறையிலும் ஆண்டபோதிலும் மக்கள் அவனை வெறுத்திலர். அவன் ஒரு எதேச்
7

Page 30
() இங்கிலாந்து 1485-1688
சாதிகாரியாக ஆண்டு பாராளுமன்றத்தையும் தன்னு டைய எண்ணத்துக்கு இசையத்தக்கதாக நடத்திவந் தான். ஐரோப்பிய விஷயங்களிற் தலையிடாமல் இங்கி லாந்து நன்மதிப்பைப் பெறக்கூடிய நிலையில் வைத் திருந்தான். பிரான்சுதேசம் வெனிசைக் கைப்பற்ற முயன்றபோது போப்பாண்டவர் தமக்குரிய இராச்சி யங்களின் பாதுகாப்புக்காக ஸ்பானிய அரசனையும், மக்ஸ்மிலியனையும், ஐக்கியம் பூணச்செய்து பிரான்சை எதிர்க்கும்படி செய்த 7 ரி. எட்டாம் ஹென்றியையும் அவ்வண்ணம் தூண்ட அவன் அதற்கு இ  ைச ந் து பிரான்சின்மீது போருக்கெழுந்தான். இப்போரில் ஹென்றியின் முயற்சிகள் அதிகம் பலனை அளிக்கா மையால் அவன் இங்கிலாந்துக்குத் திரும்பினன். பிரான் சோடு யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது ஸ்கொத் லாந்து அரசன் படையெடுத்துத் தெற்கு நோக்கிச் சென்றான், புலொடின் என்ற சண்டையில் ஸ்கொத் லாந்து, அரசனையுமிழந்து தோல்வியுமுற்றது. ஹென்றி முதன்முதல் தெரிந்தெடுத்த மந்திரி ஊல்சி ஆகும். அவன் கத்தோலிக்க திருச்சபையில் கார்டினல் என்ற உயர்ந்த பதவியை வகித்திருந்தான். நடுத்தர வகுப்பில் உதித்த இவன் எட்டாம் ஹென்றியின் காலத்திற் சாமா னிய பதவியிலிருந்து உயர்ந்த பதவியைப் பெற்று அரசாங்கத்திலும் ஆலயத்திலும் நன் மதிப்புடன் பதி ணுறு வருடகாலம் முதன்மையான ஆளாக விளங்கி னன். ஊல்சியின் ஐசுவரியம் அளவுகடந்ததாக விருக் தது. அரசனிடம் அதிக செல்வாக்கைப் பெற்றிருக் தான். அவனுடைய களைப்புறச் ச க் தி யும், அவன் எடுத்துக்கொண்ட பெரும் வேலைகளும், அவைகளை அனுகூலத்துடன் செய்துமுடித்த திறமையும் எவரும் எதிர்பார்க்கக் கூடியனவல்ல. அரசன் அவனில் அளவு கடந்த நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தான். அவன் கையாண்ட அரசியல் முறைகள் அரசனுக்கு நன்மை பயக்கத்தக்கனவாயும், அனுகூலமாயுமிருக்கும் வரை அவனுடைய பதவிக்குப் பழுதில்லாமலிருந்தது.

இங்கிலாந்து 1485-1688 51
ஆனல் அவன் தன்னுடைய நிலையிலிருந்து விலகவேண் டிய சந்தர்ப்பம் வந்தவுடன் அவனுக்கு ஓர் ஆதரவு மில்லாமற் போனது. பிரபுக்கள் அவனுடைய கர்வத் தையும் இறுமாப்பையும் வெறுத்தனர். மத்திய வகுப் பினரும் அவனை விரும்பவில்லை. அக்காலத்திலிருந்த பல இலக்கிய நூல்களிலும் அவனுடைய குறைகள் விகட Dif முறையில் எடுத்துக்காட்டப்பட்டன. போப்பாண் டவரின் அதிகாரத்தை நிலை நாட்டித் தேவாலயத்தின் குறைகளை நிவிர்த்தி செய்ததே அவன் தேவாலயத் துக்குச் செய்த சிறந்த சேவையாகும், அவன் கல்வி யில் அதிக விருப்பமுடையவன். பாடசாலைகளையும், கல்லூரிகளையும் ஸ்தாபித்தும், சொந்த காட்டிலுள்ள பண்டிதர்கள் அறிவாளிகளுக்கு வேண்டிய சன்மானங் களைச் செய்தும் அங்கிய நாட்டிலுள்ள சிறந்த அறிஞர் களை வரவழைத்தும் அவர்களை ஆங்கிலக் கல்லூரிக ளிற் போதனுசிரியர்களாகவும் நியமித்தான்.
சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கமே அங்கிய 5ாட்டு விஷயங்களைக் கையாண்ட முறைகளினடிப்படை யாகும். இங்கிலாந்து தனித்து கின்ற நிலையினின்று விலகி ஐரோப்பாவின் அரசியற் பகுதியில் முதன்மை பெற்ற நாடாக விளங்கியது. வல்லரசுகளின் ' சமநிலை அதிகாரம்’ என்ற கொள்கையின் முக்கியத்துவத்தை முதன்முதல் அறிந்த அரசியல் நிபுணன் ஊல்சியே LuíTQJøðr.
இங்கிலாந்தின் சமயபுரட்சி யுண்டாவதற்கு ஏது வாய் ஒரு பலத்த தோன்றியது. சில கால மாக தனது தமயனுகிய ஆர்தரின் மனைவியை மணஞ் செய்தது முறையோ என்பதுபற்றி ஹென்றியின் மன தில் சந்தேகம் உண்டானது. ஆர்தர் இறந்ததின் பின் போப்பாண்டவரின் அனுமதியுடன் இவ்விவாகம் நடக் தேறியது. கதரின ஹென்றியிலும் பார்க்க ஆறு வயது கூடியவளாயும், வசீகரமில்லாதவளாயும் வயதேற தேக செளக்கியத்தை யிழந்தவளாயுமிருந்தமையால் இவ்வி

Page 31
52 இங்கிலாந்து 1485-1688
வாகம் தகுந்ததாகக் காணப்படவில்லை. விவாகஞ்செய்து பதினெட்டு வருஷ காலத்திற்குட் பிறந்த பிள்ளைகளில் மேரியென்ற பெண்பிள்ளையை விட ஏனைய பிள்ளைகள் இறந்து விட்டனர். தனக்குப்பின் அரசாள ஓர் ஆண் மகவு இல்லையே என்று கவலைகொண்ட அ ர ச ன் ஊல்சியோடு ஆலோசிக்கலானன். இதற் கி  ைட யி ல் இராச சபையிலிருந்த அன்னிபோலின் என்ற மாதிற் காதல் கொண்டமையால் கதரினுவில் வெறுப்புண்டா னது. ஆகையால் கதரினுவை விவாகரத்துச் செய்து விட்டு தான் விரும்பிய மாதை விவாகஞ் செய்ய விரும் பினன், அரசனுடைய எண்ணத்தை நிறைவேற்று வதற்கு பல கஷ்டங்களேற்படு மென்றுணர்ந்த ஊல்சி அவ்வெண்ணத்தை விட்டுவிடும்படி பன்முறை மன்ற டியும் அவன் அதற்கு விரும்பவில்லை. விவாகரத்துச் செய்வதற்குப் போப்பாண்டவரின் அனுமதி வேண்டும். ஆனல் கிளெமென்ற் என்ற போப்பாண்டவர் அக்கா லத்திற் கதரினவின் மருமகனுகிய சாள்ஸ் மன்னன் கையில் மறியற்காரனுக இருந்தமையால் அ வ ர | ல் அனுமதியளிக்க முடியவில்லை, ஊல்சியை எப்படியும் அந்த அனுமதியைப் பெறவேண்டுமென்று ஹென்றி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான். அவ்விஷயத்தை ஆராயும்பொருட்டு போப்பாண்டவர் ரோமாபுரியிலுள்ள ஒரு கார்டினலேயும் ஊல்சியையும் நியமித்தார். இத் தாலியிலுள்ள கார்டினல் சிறிது காலம் விசாரண்செய்து விட்டு அதைப் பின்போட்டபடியால் அரசன் கோபா வேசம்கொண்டு ஊல்சியிற் பழி வாங்கினன். அவனு டைய சொத்துக்கள் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டு அவனையும் இராசத்துரோகி எனக் கைது செய்தான். மனவருத்தத்தாலும் அளவுகடந்த தொல்லை களினுலும் உள்ல்சி இறந்தான் (1530).
பின்பு ஹென்றி பாராளுமன்றத்தைக் கூட்டி போப்பரசரின் அனுமதி தனக்கு வேண்டியதில்லை யெனக் கூறி அவரது அதிகாரத்தை முற்ருகத் தள்ளி

இங்கிலாந்து 1485-1688 53
விட்டான். ஆங்கில திருச்சபைக்குத்தானே தலைவனு ணுன். கத்தோலிக்க சங்கியாசிகளின் சலாக்கியங்களைக் குறைப்பதற்குப் பல சட்டங்களை வகுத்து சங்கியாசி மடங்களையும் சூறையாடினன். அ ர சாங் க பொக்கி ஷத்தை அப்பொருளினல் நிரப்பினன். அம்மடங்க ளூக்குரிய நிலங்களையெல்லாம் தனக்கு ஆதரவாளராயி ருந்த பிரபுக்களுக்கு வளங்கினன். 1533-ல் சமய சம் பந்தமான விஷயங்கள் ஆங்கிலத் திருச்சபையிலேயே நீர்க்கப்பட வேண்டுமென்றும் போப்பாண்டவரின் விசாரணைக்கு அவ்விஷயங்கள் விடக்கூடாதென்றும் சட்டம் ஒன்றை வகுத்தான். பின்பு க த ரி ன வின் விவாகத்தை ரத்துச் செய்துவிட்டு, அன்னிபோலிஜன மணஞ் செய்தான். 1533-ல் எலிசபெத் பிறந்தவுடன் முடியாட்சி உரிமைச் சட்டமொன்றை வகுத்து அதன் பிரகாரம் கதரினுவின் விவாகம் முறையற்றதென்றும், அன்னிபோலினுடைய விவாக மே உண்மையானதும் முறையானதென்றும் அவளுடைய பிள்ளைகளுக்கே ஆளுமுரிமையுண்டென்றும் வெளிப்படுத்தினன். பின்பு ஆங்கிலத் திருச்சபைக்கும் ஆலயத்துக்கும் தலைமை யுரிமைபற்றிய சட்டம் 1535-ல் உண்டாக்கப்பட்டது. இதனுல் அரசன் திருச்சபையின் தலைவனுனன். ஆங்கி லேய ஆ ல ய த் தி ற் கும் ரோம ஆலயத்திற்குமுள்ள தொடர்பு நீக்கப்பட்டது. போப்பாண்டவரும் ஏனைய கத்தோலிக்க நாட்ட்ரசர்களும் அவனைக் கண்டித்தி ருந்தும் கத்தோலிக்க திருச்சபையினின்றும் அவன் நீக்கப்பட்டிருந்தும் ஹென்றி, தன்னுடைய இராச்சி யத்தில் ஓர் சுயேச்சாஇகர்ரியாக ஆளத் தீர்மானஞ் செய்தான். சில காலங்களின் பின்பு அன்னிபோ லின் இராசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சிரச் சேதஞ் செய்யப்பட்டாள். இவளுக்குப்பின் " ஜேன் செய்மூர் , என்ற பெண்ணே ஹென்றி மணந்து அவ ளுக்கு ஒர் ஆண்மகவு பிறந்ததும் அவள் இறக் க அதன்பின்லும் அரசன் மூன்றுமுறை மணஞ் செய்

Page 32
54 இங்கிலாந்து 1485-1688
தான். ஆனல் பின்பு பிள்ளைகள் ஒன்றும் பிறக்க வில்லை.
இனி ரோமாபுரியின் அதிகாரம் நீங்கியபின் இங் கிலாந்திலேற்பட்ட மதச் சீர்திருத்தங்களைப்பற்றி ஆராய் வோம். கத்தோலிக்க சங்கியாசிகளின் வாழ்க்கை மற் றவர்களாற் கண்டிக்கக்கூடிய நிலையிலிருந்தது. துஷ்ட நடையும், லெளகீக விஷயங்களில் ஈடுபடுதலும், சுயேச் சையும், அளவற்ற பொருள் வேட்கையும், மார் க் க விஷயங்களில் க வன யீ ன மு ம் இவைபோன்ற பல குறைகள் நிரம்பிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்த னர். ஆகையால் அவர்களுடைய வாழ்க்கையிற் சீர் திருத்தங்கள் இன்றியமையாதனவாயிருந்தன. மேலும் ஆலயவழிபாட்டுக் கொள்கைகளிலும் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன. ஐரோப்பாவிலேற்பட்ட சமயப்புரட் சிக் கொள்கைகள் இங்கிலாந்திலும் மக்களின் மனத் தைக் கவர்ந்தன. புதிய ஏற்பாட்டின் போதனையே பின்பற்றவேண்டிய தென்று எண்ணினர். சங்கியாசி மடங்களைச் சூறையாடி அழித்துவிட்டதினல் கலகங்கள் ஏற்பட்டன. அவை சீக்கிரத்திலடக்கப்பட்டன.
ஹென்றி போப்பரசரின் அதிகாரத்தை இங்கி லாந்தில் அழிக்க விரும்பினதல்லாது, இங்கிலாந்திற் கத்தோலிக்க சமயத்தை ஒழிக்க ஒருபோதும் விரும்ப வில்லை. ஏற்கனவே அா த ர் போப்பாண்டவருக்குக் காட்டிய எதிர்ப்பை ஹென்றி கண்டித்திருக்கிருரர். தன் நாட்டில் புரட்டஸ்தாந்து மதம் பரவுவது அவ ருக்கு விருப்பமில்லை. எல்லா மக்களும் ஒரே சமயத்த வர்களாயிருக்க வேண் டு மென் பதே அவருடைய கொள்கை. ஆனல் ஹென்றிக்கு வயது முதிர்ந்த காலத் தில் சமய வேறுபாடுகளதிகரித்தன. -
ஹென்றியின் பின் அவனது மகனன ஆறுவது எட்வேட் ஐந்துவருட காலமாக அரசாண்டான். அவ னது இராச்சிய பரிபாலன காலத்தில் புரட்டஸ்தாந்து மதக் கொள்கைகள் தலேயெடுத்துப் பரவின. இக்கா

இங்கிலாந்து 1485-1688
லத்தில் ஒரே விதமான சமய வழிபாடு வற்புறுத்தப் பட்டது. எல்லா ஆலயங்களிலும் உபயோகிக்கத்தக்க, வணக்கத்துக்குரிய ஒரே சமய நூல், வெளியிடப்பட் டது. புரட்டஸ்தாச்து மதக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எட்வேட்டின் பின் க த ரி ஞ வின் மகளாகிய மேரி சிங்கா சனமேறி கத்தோலிக்சு மதத் கைப்பரப்ப முயற்சி செய்தபொழுதிலும் புரட்டஸ் தாந்து மதமே தலையெடுத்தது. கத்தோலிக்க மதத் தைத் திரும்பவும் இங்கிலாந்தில் நிலைநாட்டி ரோமா புரியோடு சமாதானஞ் செய்வதே அவளுடைய நோக் கமாகும். அவ்வெண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள் வதற்கு ஸ்பானிய அரசனகிய பிலிப்பை விவா க ஞ் செய்துகொள்ள விரும்பினுள், இங்கிலாந்திலுள்ள மக் களதை விரும்பாதபடியால் பலவிடங்களிலும் கலகங்க ளேற்பட்டன. கலகத்தை அடக்கியபின் தலைவர்களைக் கொலை செய்வித்தாள். இவ்விவாகத்தினல் ஸ்பானிய ஏகாதிபத்தியத்தில் காங்களும் ஒரு பகுதியினராக வர நேரிடுமென்றும், அக்கிய5ாட்டு யுத்தங்களில் இங்கி லாந்தையும் ஸ்பானியா பங்குபற்றச் செய்யுமென்றும், ரோமாபுரியின் தொடர்பை மீண்டும் உண்டாகக் கூடு மென்றும் எண்ணிப் பிரித்தானியப் பிரசைகள் அதிக அதிருப்தி கொண்டிருக்கனர். மக்கள் பழைய வழி பாட்டு முறைகளை அனுசரிக்க விரும்பினுலும் போப் பரசரின் ஆதிக்கத்தை வெறுத்தனர். மேரி 300 புரட் டஸ்காந்து மதத்தினரை உயிருடன் தூணிற் கட்டித் தீக்கிரையாக்கினுள். இங்கிலேயில் மக்களுக்குக் கத்தோ லிக்க மதத்தில் வெற்ப்புண்டானது. கத்தோலிக்க மதம் அங்கியர் ஆட்சியை நிலைநாட்டுமென்று அபிப் பிராயப்பட்டனர். மேரியின் விவாகத்தினுல், பிரான்சு தேசத்தோடுள்ள பகைமையினுல் அபாயமில்லாதிருந் தும், ஸ்பானியாவின் செல்வாக்கு இங்கிலாந்தில் அதிக ரித்தது. அச்சமயத்தில் இங்கிலாந்தில் சமாதான நிலை நிலவுவதற்குப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள் ளக்கூடிய சமய ஒழுங்கைச் செய்யத்தக்கதாயுமுள்ள

Page 33
56 இங்கிலாந்து 1485-1688
அரசரொருவர் மேரியின் பின் சிங்காசனத்துக்கு வக் தாற்ருரன் நல்லதென மக்கள் எண்ணினர்.
மேரிராணி நோயினுற் பீடிக்கப்பட்டு இறந்தபின் எலிஸபெத் அரியாசனமேறினுள் (1558). இராச்சியத் துக்கு உரிய உரிமை மேரி ஸ்ருவெர்ட்டிலும் பார்க்க எலிசபெத் ராணிக்குக் குறைவென்றே சொல்லலாம். பிரான்சின் ஆதரவும் மேரிக்கேயிருந்தது. உள்நாட்டி லும் சமய விவாதங்களும், சமுதாய வேறுபாடுகளும் காணப்பட்டன. அங்கிலையில் எல்லாவற்றையும் சீர் படுத்தும் திறமையுள்ள ஒருவரே இராச்சிய பரிபால னஞ் செய்யமுடியும். ஆனல் எலிசபெத் ராணியோ மனத்தைரியமும், கினைத்ததை முடிக்கும் வன்மையும் அரசியல் விஷயங்களை அறியுமாற்றலும், ஒரு ங் கே அமைந்த ஒருவராக விளங்கினர். இராச்சியத்தைப் பாதுகாப்பதும், மார்க்க விஷயங்களில் ஒரு ஒழுங்கை நிலைநாட்டுவதும், இங்கிலாந்தைச் சண்டையிலீடுபடாமற் செய்வதும் அங்கியர் பகைமையினின்றும் B 7 ட்  ைட விலக்குவதுமே அவ்வரசியின் நோக்கங்களாயின. மக் களின் நன்மையைக் கருதி நடந்தமையினுல் அவர்க ளுடைய ஆதரவைப் பெற்ருள்.
ஸ்கொட்லாந்து ராணியான மேரியின் கணவனிறக் கவே அந்நாட்டிலுள்ள புரட்டஸ்தாந்து மக்கள் கக் தோலிக்க மதத்தவளாகிய அவளை நாட்டினின்று கலை த்தனர். அவள் இங்கிலாந்துக்கு ஓடியபோது அங்கே பாதுகாப்பில் வைக்கப்பட்டாள். அங்குள்ள கத்தோ லிக்க சமயத்தவர்கள் அவளை ஆகரித்து எலிஸபெத் துக்கெதிரே சதிசெய்யத் தொடங்கினர். ஆகையால் மேரி சிரச்சேதஞ் செய்யப்பட்டாள். (1587) எலிஸ் பெத் மணப்ப்ருவமுற்ற காலத்திலும் விவாகம் செய் யாது தான் ஒரு பிரான்சு இளவரசனை அல்லது ஸ்பா னிய இளவரசனை மணக்கப்போவதாகப் பாசாங்கு செய்து வந்தாள். அதனுல் அங்காட்டரசர்கள் சிநேக மாக நடந்து கொண்டனர். ஆனல் அரசியோ தந்திர

இங்கிலாந்து 1485-1688 57
மாக விவாகத்தைப் பின்போட்டாள். அவளுடைய ர்ேத்தி நாடெங்கும் பரவிற்று. மார்க்க விஷயத்தில் எவர் எம்மார்க்கத்தை அனுஷ்டித்தாலும் அதைப்பரா முகமாகவிட்டு மக்கள் எல்லோரும் சாதி அபிமானமும் கீழ்ப்படிவுமூடையவர்களாக இருப்பது மட்டும் அவளுக் குத் திருப்தியளித்தது. முதலில் போப்பாண்டவரினதி காரத்தை அறவே ஒழித்தாள். பின்பு ஆலயத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் எல்லா மக்களும் போகவேண்டுமென்றும், சமயக்கொள்கையளவில் அவ ரவரின் விருப்பத்திற்கேற்றவாறு 15 டந்து கொள்ளலா மெனவும் தீர்மானஞ் செய்தாள். இவ் வண்ணமாக மார்க்கவிஷயத்தைத் தீர்த்துக்கொண்டாள். இது நாட் டில் ஒற்றுமையை உண்டாக்கியது.
கல்வினுடைய போதனையைப் பின்பற்றிய மக்கள் இங்கிலாந்தில் புயூரித்தானியர் என அழ்ைக்கப்பட்ட னர். எலிஸ்பேத் ராணி ஏற்படுத்திய ஆலய ஒழுங்கை அ வர்கள் கத்தோலிக்க ஆலயத்துக்கேற்றதென வெண்ணி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐரோப்பாவிலுள்ள ரோமன் கத்தோலிக்க நாடு களுக்குத் தலைமையாயுள்ள பிலிப் மன்னன் இங்கிலாங் தின் உண்மையான பகைவனுகக் காணப்பட்டான். ஆனல் நெதலாந்தில் நடைபெற்ற சண்டையிலீடுபட்டி ருந்தமையால் இங்கிலாந்துக்கெதிரே தன் பலத்தைச் செலுத்தமுடியவில்லை. பிரான்சு தேசத்திலும் அங்காட்டு மன்னன் புரட்டஸ்தாந்து நழுக்களை இரக்கமின்றி கொலை செய்வித்து அவர்களை அடக்கும் முயற்சியில் சிரத்தை யெடுத்துக்கொண்டிருந்தமையால் இங்கிலாந்துக்கெதிரே அவன் ஒன்றுஞ் செய்ய முடியவில்லே. ஆனல் இருபது வருடங்களுக்கு நீடித்த பகை இங்கிலாந்துக்கும் ஸ்டா னியாவுக்குமிடையில் யுத்தத்தை உண்டாக்கியது. பகை யின் காரணமாக ஏற்பட்ட கடற் சண்டையைப்பற்றி ஆராயுமுன் இங்கிலாந்தின் நிலையைப்பற்றி அறிய வேண்டும். எட்டாவது ஹென்றி கடற்படை விஷயத்
8

Page 34
58 இங்கிலாந்து 1485-1688
திற் சிரத்தை எடுத்ததுபோல் எலிஸ்பேத் ராணியும் அவளது மந்திரியுமாகிய உவில்லியம் சீசிலும் கடற் படையின் வலிமையைப் பெருக்கினர். கடற்படையைப் பெருக்குவதற்குச் சில நியாயங்களுமுள. வடமேற்கு வட கிழக்குப் பக்கங்களில், கடற்பாதைகளைக் கண்டுபிடித்து புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் ஆவல் முன்பேயிருக் தது. கடல்கடந்து வேற்று நாடுகளுக்குப்போய் வர்த்த கஞ் செய்வதற்காக ஆங்கில வர்த்தகர்கள் வியாபார சமுதாயங்களை உண்டாக்கியிருந்தனர். ஸ்பானிய திரவி யக்கப்பல்களைக் கொள்ளையடித்தவர்களில் பிரான்ஸிஸ் டிரேக், கோக்கின்ஸ் முதலிய கடலோடிகள் பேர்வாய்க் தவர்களாவர். இவ்விதமான முயற்சிகள் இங்கிலாந்தின் கடற்படையின் பலத்தைக் கூட்டின. பொருளாதார நிலையிலும் இங்கிலாந்து B ன் னிலை எய்தியிருந்தது. கைத்தொழிலும், வர்த்தகமும் பெருக்கமடைந்தமையி னல் நாடு பெரும் செல்வத்தினற் சிறப்புற்றது.
பிலிப்பு மன்னன் இங்கிலாந்துக்கெதிரே போர் தொடங்கியதற்குப் பல காரணங்களுள. மேரி தனது மரண சாதனத்தில் இங்கிலாந்து இராச்சியத்துக்குத் தனக்குரிய உரிமையைப் பிலிப் மன்னனுக்கே போக வேண்டுமென எழுதிவிட்டாள், ஸ்பானியாவோடு சண்டை செய்துகொண்டிருந்த நெதலாந்து மக்களுக்கு எலிச பெத் உதவி கொடுத்துக்கொண்டிருந்தாள். இங்கிலாந்து ஐரோப்பாவிலுள்ள புரட்டஸ்தாந்து நாடுகளுக்குள் தலைமைவாய்ந்த நாடாகையால், அதை அடக்கவேண்டு மென்றும் பிலிப்பு மன்னனுக்கு விருப்பமிருந்தது. ஸ்பானிய கப்பல்களை ஆங்கிலேயக் கடலோடிகள் குறை யாடினர். அதுவுமல்லாமல் ஆரும் அலெக்சாந்தராகிய போப்பரசர் அமெரிக்காவின் திரவியங்களைப் பங்கீடு செய்யுமுரிமையை ஸ்பானியாவுக்கும் போர்த்துக்கலுக் கும் அளித்தபடியால் ஆங்கிலேயக் கடலோடிகள் கட லிற் கொள்ளையடித்தனர். இவ்விதமான பகைகள் ஏற் பட்டபடியால் பிலிப்பு மன்னன் விறல்மிக்க ஒரு பெரிய கடற்படையை நிறுவினன். ' ஆமடா” என்று

இங்கிலாந்து 1485-1688 59
சொல்லப்பட்ட அக்கடற்படை 1588-ல் இங்கிலாந்துக் கெதிரே அனுப்பப்பட்டது. அப்படை டிறேக், ருரலி முதலிய ஆங்கிலேய வீரர்களால் தோற்கடிக்கப்பட்டது. 1 ஆமடா ' தோற்கடிக்கப்பட்டதினல் ஸ்பானியாவின் கடற்படையின் பலங்குறைய ஆங்கிலேயருடைய கட லாதிக்கம் கூடியது.
எலிஸபெத், மக்களிற் பெரும் பான்மையோருடைய ஆதரவைப் பெற்றதினுலும், சத்திராதிகள் அவ்விரா ணியின் திட்டங்களை அறிய முடியாது அணுப்புப்பட்ட மையின.லூம், சீசில், உவால்சிங்காம் முதலிய சிறந்த இராச தந்திரிகளின் உதவியைப் பெற்றமையினலும் அவள் இங்கிலாந்தைக் காப்பாற்றித் திறமையுடன் ஆளத்தக்கதாக விருந்தது. அக்காலத்திலேயே இங்கி லாந்தில் சி ற ங் த கவிஞர்களும், நாடகாசிரியர்களும் தோன்றினர். ஷேக்ஸ்பியர் என்ற புகழ்வாய்ந்த நாட காசிரியருமிருந்தார். 15ாடு, 5ாளுக்குநாள் செ ல் வ மும் சிரும் பெற்றுச் சிறந்த நாடாக விளங்கியது.
இதுவரையில் தியூடர் வமிசமன்னர் காலத்தைப் பற் றியறிந்தோம். இனி அவர்களுக்குப்பின் ஆண்ட ஸ்ரு வெர்ட் வமிச அரசர்கள் காலத்தில் நடைபெற்ற விசேஷ, சம்பவங்களைப் பற்றி ஆராய்வோம். 1603-ல் எலிஸபெத் இறக்க ஸ்கொத்லாந்து அரசியான மேரியின் மகன் ஜேம்ஸ் என்பான் இங்கிலாந்துக்கும் ஸ்கொத்லாந்துக் கும் அரசனனன். வசீகரமில்லாத பேச்சும், விரும்பத் தகாத பழக்கங்களும் தற்புகழ்ச்சியுமுடைய யேம்ஸ் மன்னன் பிரசைகளிடமிருந்து வேண்டிய மரியாதை யைப் பெறவில்லை. சாதுவான குணமும் நிரம்பிய புத் தகக் கல்வியுமிருந்தபோதிலும் உலக அனுபவமும் யுத்தியும் குறைந்தவராய்க் காணப்பட்டார். ஆகையால் பிரான்சு தேசத்து அரசனுகிய நாலாம் ஹெ ன் றி அவனைப் பொருத்தமான முறையில் * கிறிஸ்த இராச் சியங்களின் புத்தியுள்ள மடையன் ? எனக் கூறியுள் ளார். சுய6ல விருப்பமும் முகஸ்துதியை விரும்பும்

Page 35
60 இங்கிலாந்து 1485-1688
குணமும், கோழைத்தனமும் அவனிடம் காணப்பட்ட வேறு சில குணங்களாம், யேம்ஸ் சிங்காசனமேறிய காலத்தில் பியூரித்தானியர், ரோமன் கத்தோலிக்கர், எப்பிஸ் கோப்பேலியன்ஸ் என்ற மூன்று மதப் பிரிவி னர்களிருந்தனர். முதல் வகுப்பினர் புரட்டஸ்தாந்து மார்க்கத்தைச் சேர்ந்தவராயினும் ஏனைய புரட்டஸ் தாங்து மக்களிலும் பார்க்க சமயாசாரக் கட்டுப்பாடு களை அதிக நுணுக்கமாகத் தழுவி நடந்துகொண்ட னர். இவர்கள் அரசன் தங்கள் மதத்தையே விரும்பு வாரென்றும் அவருடைய ஆதரவை எதிர் பார்த்தனர். மேரியின் மகனுகையால், ரோமன் கத்தோலிக்கர் தங்க ளுக்கு வேண்டிய சலுகைகள் அளிக்கப்படுமென எண் ணங் கொண்டனர். மூன்றும் பிரிவினர் இங்கிலாந்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் அங்கத்தினரும் அதைப் பின்பற்றியவருமாவர். இவ் வகுப்பினருக்கே யேம்ஸ் ஆதரவளித்தான்.
யேம்ஸ் சிறு பராயந்தொட்டு அரசர்களின் உரி மையைப் பற்றி பெருமைகொண்டு அரசர்களுக்கு ஆளு முரிமை கடவுளாற் கொடுக்கப்பட்டதென்றும், பிரசை கள் அதைப்பற்றி ஆட்சேவிப்பது தவறெனவும் கருதி யிருந்தான். ஆனல் அவனது காலத்திலிருந்த பாராளு மன்றப் பொதுமக்கள், சபையின் அங்கத்தவர்கள் எவ் விதமான சுயேச்சாதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதுவுமல்லாமல் அந்நேரத்தில் மக்க ளிடையே சுதந்திர உணர்ச்சியும் தோன் றி ற் று. ஆகையால் அரசன் தனது விருப்பத்தின்படி ஆள முயற்சி செய்தபொழுது, பாராளுமன்றம் எதிர்ப்புக் காட்டியது. மக்களும் அவனை வெறுத்தனர். அவ்வரச னின்பின் அவனுடைய மகன் முதலாம் சாள்ஸ் சிங் காசனமேறினன். அழகும், வனப்பு வாய்ந்த தோற்ற மும், ஒருங்கே அமையப்பெற்ற இவன் நாணமுடைய வணுகையால் மக்கள் இவனுடைய தன்மையைப்பற்றி சிறிதேனும் அறியமுடியாமற் போயிற்று. நேர்மை பில்லா கதினல் வாக்குப் பண்ணிய விஷயங்களை அலட்

இங்கிலாந்து 1485-1688 61
கியஞ் செய்வதுண்டு. மக்களின் உணர்ச்சிகள் ஒரு வாரு கவிருக்க, தான் இன்னுெரு வழியில் பிடிவாதக் காரணுயிருந்தான். ஒரு சிறிதேனும் மற்றவர்களின் விருப்பத்துக்கு இடங்கொடாமையினுலும், அ ர சி ய ல் விஷயங்களைத் துருவி ஆராயும் வன்மையற்றவனுயிருந்த படியாலும், பாராளுமன்றத்துக்கும் அரசனுக்குமிடையி லுள்ள எதிர்ப்பும், பகையும் நாளடைவிற் கூடியது. அரசனுடைய அதிகாரமே மு க் கி ய மா ன து. அவன் பாராளுமன்றத்தின் புத்திமதிகளைக் கேட்கத் தேவை யில்லையென்று அவனுடைய தந்தை கற்பித்த வழி களை அவன் கையாண்டான். சமயபக்தி நிரம்பியவ ணுய் இங்கிலாந்திலுள்ள தேவாலயத்தில் நெருங்கிய விசுவாசமுடையவனுமாய், இலக்கியம், ஒவியம் முதலிய கலைகளில் விருப்பமுடையவனுமாயிருந்தான். 1625-ல் கூடிய முதற் பாராளுமன்றம் அரசனுக்கெனப் பழ மைதொட்டு வழங்கப்பட்ட பணத்தொகையைக் குறைத் துக் கொடுக்கத் தீர்மானஞ் செய்தபொழுது அரசன் அது தனது கெளரவத்துக்கும் நிலைக்குமவமானமென நினைந்து அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இனி விவாக ஒழுங்கு நிபந்தனையின் பிரகாரம் ரோமன் கத்தோலிக்கரை ஆதரிப்பதாகப் பிரான்சிய அரசனுக்கு வாக்களித்திருந்தான். பொதுவாக மக்கள் எல்லோரிடமும் பெருங்கோபம் உண்டானது, ஸ்பானி யாவோடு நடத்திய சண்டையும் வெற்றிகரமாய் நடத் தப்படவில்லை. பணம் தேவைப்பட்டபடியால் அடுத்த ஆண்டில் பாராளுமன்றத்தைக் கூட்டினன். பாராளு மன்றத்தின் அங்கத்தவர்களுக்கும் அரசனுக்குமுள்ள தொடர்பு நாளடைவில் பாதிக்கப்பட்டமையால் மக்க ளுரிமைபற்றிய விண்ணப்பமொன்றை ஆயத்தஞ்செய்து மன்னனுக்குச் சமர்ப்பித்தார்கள். டாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஒருவிதமான வரியும ரசன் அறவிடக் கூடாதென்றும், காரணமுமின்றி யொருவரையும் சிறைச் சாலையிலிடக் கூடாதென்றும், மக்களின் விருப்பத்திற் கெதிராகப் போர்வீரரைத் திரட்டமுடியாதென்றும்,

Page 36
62 இங்கிலாந்து 1485-1688
சமாதானம் நிலவுங் காலத்தில் அவசர சட்டமூலம் ஒருவரையும் கைதிசெய்ய முடியாதென்றும், அ தி ற் குறிப்பிடப்பட்டிருந்தன. அ ர ச ன் நெருக்கடியான நிலையில் அதற்குச் சம்மதங் கொடுத்தான். அரசனு டைய மந்திரியாகிய பக்கிங்காம் மீது கோபம்கொண்ட மக்கள் அவனைக் கொலை செய்ததும் சாள்ஸ் தானே தன்னந்தனியணுய் பிரசைகளின் கோபத்தை எதிர்க்க வேண்டியிருந்தது. சா ள் ஸ் பாராளுமன்றமில்லாமற் சிலகாலமரசாண்டான். பின்பு கூடிய பாராளுமன்றம், அரசனுடைய எண்ணப்படி 5டந்துகொள்ளவில்லை. இவ் வண்ணமேற்பட்ட நெருக்கடியைச் சாதுரியமாக 5டத்த அவனுலியலாதபடியால் உள்நாட்டுக் குளப்பம் 1642-ல் உண்டாயிற்று. அரசனுக்கெதிராக எழுந்த கட்சியார் கலகமுண்டாக்கி வெற்றி பெற்றனர். ஸ்கொத்திலாந்தி அலுள்ள புரட்டஸ்தாந்து மக்களும் துணே புரிந்தனர். அரசனுக்கெதிரே எழுந்த கட்சியினருடைய சேனையின் தலைவர்கள் தீவிரமான போக்கையுடையவர்களாகை யால் 1649-ல் அரசனைச் சிரச்சேதஞ் செய்த னர். அடுத்த பதினெரு வருடகாலமாகத் திறமை வாய்ந்தவ னும், சேனைத்தலைவனும், பராக்கிரமசாலியுமான ஒலிவர் குருெம்வெல் என்பவன் அரசனுக்குச் சமமான அங் தஸ்துடன் இங்கிலாந்தில் ஆட்சி புரிந்தான். ஆனல் இங்கிலாந்திலும் ஸ்கொத்திலாந்திலும் அயர்லாந்திலும், ஒல்லாந்திலுமுள்ள பிரபுக்கள் இம்மாதிரியான ஆட் சியை வெறுத்தனர்.
1653-ல் அரசாங்கத்தை நடத்தும் திட்டமொன்று குருெம்வெலின் ஆதரவாளரால் வகுக்கப்பட்டு அவனுல் அங்கீகரிக்கப்பட்டது. அதில் காட்டின் பாதுகாப்பு அளிக்கும் பிரபுமீது முக்கிய அதிகாரம் விடப்பட வேண்டுமென்றும், பாராளுமன்றத்தில் 400 அங்கத்த வர்கள் இருக்கவேண்டுமென்றும் கிர்வாக அதிகார உரிமை பாதுகாப்பளிக்கும் பிரபுக்கே உண்டென்றும், சட்டங்களை ஆக்குமுரிமை பாராளுமன்றத்துக்கே யுரி மையானதென்ஆறும் மூ ன் அறு வருஷத்துக்கொருமுறை

இங்கிலாந்து 1485-1688 63
பாராளுமன்றத் தெரிவு நடாத்தப்படவேண்டுமென்றும் நாட்டின் பாதுகாப்பளிக்கும் பிரபு சீவிய காலம்வரைக் கும் அந்தஸ்நிதியிலிருக்க வேண்டுமென்றும் குறிக்கப் பட்டிருந்தன. அடிக்கடி அவனின் ஆட்சிக்கெதிரே கல கங்கள் தோன்றினமையாலும், மக்கள் அவனே வெறுத் ததினலும் ப்ாராளுமன்றத்தினல் அங்கீகரிக்கப் பெற்ற திட்டத்திற்கமைக்க நிர்வாகத்தை அறவேயொழித்து தான் ஒரு எதேச்சாதிகாரியாக இருந்து ஆட்சிபு ரிய த் தொடங்கினன். உள்நாட்டு நிர்வாகத்தில் குறைகள் ஏற் பட்ட பொழுதிலும் பிறநாட்டு விஷயங்களில் அவன் கையாண்ட முறைகள் பாராட்டத்தக்கன. ஒல்லாந்து டென்மார்க்கு சுவீடன் முதலிய புரட்டஸ்தாந்து நாடுக ளோடு நட்புப் பூண்டான். பிரான்சுக்கும் ஸ்பானியா வுக்குமிடையில் அக்காலத்தில் நடந்துகொண்டிருந்த யுத் தத்தில் பிரான்சுக்குச் சார்பாக யுத்தஞ் செய் து வெற்றி பெற்றன். 1658-ல் குருெரம்வெல் நோயினுற் பீடிக்கப்பட்டு இறந்தான். சுயநலம் கருதாது தன் நாட்டுக்குச் செய்த சேவை மெச்சத்தக்கதொன்றகும். பின்பு முதலாம் சாள்ஸின் மூத்த மகனை அரச னக்க மக்கள் விரும்பினர். 1660ல் இரண்டாம் சாள்ஸ் என்ற பெயருடன் முடிசூட்டப்பட்டான். அவன் எவர் களோடும் சிநேகித முறையில் நடந்துகொள்ளும் சபாவ முடையவனுயினும் சுயநலமும் இரக்கமின்மையும் நிரம் பிய ஒருவனுகக் காணப்பட்டான். பாராளுமன்றத்தில் விருப்பத்திற்கு மாறக நடந்துகொள்ள விரும்பவில்லே. பல வருடங்களாக அந்நிய ந்யடுகளிற் சஞ்சரித்து பல கஷ்டங்களை அனுபவித்திருந்தும், நாட்டுக்குத் தான் செய்யும் கடமைகளிற் சிரத்தை எடுக்காது குதூகல மான இன்ப வாழ்க்கையை விரும்பியிருந்தான். தகுதி யற்ற ஆடவரும் பெண்டிரும் நிறைந்த அரண்மனையிற் தன் 5ேரத்தையும் பணத்தையும் கவலையற்ற முறையிற் செலவழித்தான். அவனிடம் யாதேனும் சமயபக்தியிருக் திருந்தால் அது கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்திருக்க தெனலாம். நாட்டின் நிலையை ஆராய்ந்து பார்த்து மக்

Page 37
64 இங்கிலாந்து 1485-1688
களுக்குரிய உரிமையை அவர்கள் கைவிடமாட்டார்க ளெனவறிந்தான். பாராளுமன்றத்தில் செல்வாக்குடை யவரின் சொற் படி நடக்க இணங்கிக்கொண்டான். தனது தந்தைக்கெதிராக நடந்துகொண்ட சிலரைத் தண்டித்துவிட்டு, ஆஸ்திகள் வருமானம், 5ாட்டின் பாது காப்பு, சமயம் முதலியவற்றிலே த ன் கவனத்தை ச் செலுத்தினன். வர்த்தகத்தினலேற்பட்ட பொருமையின் காரணமாக இங்கிலாந்துக்கும் ஒல்லாந்துக்குமிடையில் நடந்த சண்டையில் இங்கிலாந்து சிறப்பான வெற்றி யைப்பெற முடியவில்லை.
அரசன் கத்தோலிக்கருக்குச் சில சலுகைகளைக் காட்டியபடியினல் 1673ல் புரட்டஸ்தாந்து மதத்தினரே அரசசேவையிலிருக்கலாமென்ற சட்டத்தைப் பாராளு மன்றமுண்டாக்கியது. சாள்ஸ், லூயி மன்னனேடு இரக சியமான உறவுகொண்டிருந்தமையாலும், அவ னி L-th பணவுதவி பெற்றமையாலும் பாராளுமன்றத்தின் எதி ர்ப்பு அதிகரித்தது. இக்காலத்தில் பாராளுமன்றத்தில் இருகட்சிகள் எற்பட்டன. மன்னன் பக்கத்தைச் சார் ந்க கட்சி டோரி'க் கட்சியென்றும், மற்றது ? விக் கட்சியென்றும் அழைக்கப்பட்டன. ஆனல் பாராளுமன் றத்தையோ அல்லது இங்கிலாந்திலுள்ள திருச்சபை யையோ கைவிட ஒரு கட்சியும் விரும்பவில்லே. மூன்று வருஷகாலமாகப் பாராளுமன்றமில்லாது சாள்ஸ் ஆளு கையை நடத்தினன். இவன் 1685ல் இறக்க அவ னது தம்பியாகிய இரண்டாம் யேம்ஸ் சிங்காசன மேறினன். இவன் கத்தோலிக்க சமயத்தவனயும், அச் சமயத்திற் பற்றுடையவனுயிருந்து புரட்டஸ்தாந்து நாடா கிய இங்கிலாந்தை ஆளத்தொடங்கினன். அளவு கடந்த ஊக்கமுடையவனுயினும், இராசதந்திரமும், விஷயங்க 2ளக் கிரகிக்கும் வல்லமையற்றவனுயும், தன்திறமையில் நம்பிக்கை உடையவனயும். இரக்கம் குறைந்தவனயும், மன்னிக்கும் தன்மை இல்லாதவனுயும் காணப்பட்டான். சிங்காசனமேறிய காலத்திலேதான், அரசாங்கம் தேவா லயம் என்பவற்றின் நிர்வாகத்தை நாட்டின் பழைய

இங்கிலாந்து 1485.1688 65
சட்டத்தின் பிரகாரம் நடத்துவதாக வாக்களித்தான். ஆனல் சிக்கிரத்தில் அதை மறந்து எதேச்சாதிகாரி போல் ஆளத்தொடங்கினன். இரண்டாம் சாள்சின் காலத்தில் பாராளுமன்றமுண்டாக்கிய சட்டமொன்றின் பிரகாரம் கத்தோலிக்க சமயத்தவர்கள் அரசாங்கத்தில் உத்தியோகம் பெறமுடியாது. ஆனல் யேம்ஸ் அச்சட் டத்திற்கு மாரு க க் கத்தோலிக்கருக்கு அரசாங்கத்தி லும், சேனையிலும் உயர்ந்த பதவிகளை அளித்து புரட் டஸ்தாந்து மக்களுக்குக் கோபத்தையுண்டாக்கினன். நூற்றுக்குத் தொண்ணுாறு வீதம் புரட்டஸ்தாந்து மக் கள் இங்கிலாந்திலிருந்தபடியால் அவர்கள் அரசனை இழந்தாலும் தங்கள் சமயத்தை இழக்க விரும்பினால் லர். பாராளுமன்றத்தைக் கூட்டிக் கலகங்கள் ஏற்படா மல் தடுப்பதற்குச் சேனையொன்று எப்பொழுதும் ஆயத்தமாய் வைத்திருக்க வேண்டுமென்றும், அதன் செலவுக்கு வேண்டிய பணத்தைப் பாராளுமன்றம் நிச் சயிக்க வேண்டுமென்றும் யேம்ஸ் அதிற் பேசியபெர் ழுது அச்சபையிலுள்ளோர் மிகவும் கோபங் கொண்ட னர். அதற்கு அவர்கள் மறுத்தபடியால் அரசன் பாரா ளுமன்றத்தைக் கலைத்துப் பின் 1687 வரையும் இடை யிடையே கூட்டியும் அவ்வாண்டின் பின் அச்சபை யில்லாமலே ஆண்டான். அதன்பின் அரசனுக்குரிய கணியதிகாரத்தைப் பா வித் துக் கத்தோலிக்கருக்கு அதிக சலுகைகளைக்காட்டி வந்தான். கத்தோலிக்க சமயத்தவர்களுக்கு மாருரன சட்டங்களை மதியாமலும் கிறுத்தியும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கத் தொடங் கினன். சர்வகலாசாலைகள் மூலம் கத்தோலிக்க சம யத்தைப் பரப்ப பெரும் முயற்சி செய்தான், இவைக ளெல்லாவற்றையும் கண்டு மக்களே அரசனை வெறுத் தனர். பழைய காலத்திலுள்ள அதிகாரம் பெற்ற மேற் கோடுகளை ஸ்தாபித்து அவைகள் மூலம் த ன க் கு எதிர்ப்புக் காட்டியவர்களைத் தண்டித்தான். பின்பு சமய சம்பந்தமான குற்றங்களைத் தண்டிப்பதற்காகச் சட்டங்களே கிராகரிக்கும் ஒரு விளம்பரத்தை விடுத்து
9 −

Page 38
66 இங்கிலாந்து 1485-1688
அது தேவாலயங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை களிலும் வா சிக் க வேண் டு மென் று கற்பித்தான். அதற்கு மறுத்த தேவாலய அதிகாரிகளைச் சிறைச் சாலையிலிட்டான். இவ்வளவு அநீதியான செயல்களைச் சகித்துக்கொண்டு மக்கள் இவ்வரசனின் பின் ஒரு புரட்டஸ்தாந்து சமயத்தவனை அரசனுக்க விரும்பியிருந் தனர். அப்போது யேம்ஸ் அரசனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தவுடன் இவனின் பின்னும் இவன் மகனும் கத்தோலிக்கனுக வளர்க்கப்பட்டு அரசாள நேரிடு மென நினைத்து யேம்ஸின் மகளையும், மருமகனும் ஒல் - லாந்து அரசனுமான உவில்லியத்தை அரசையேற்கும் படி வரவழைத்தனர். அதற்கு உடன்பட்டு அவர்கள் இங்கிலாந்தில் வந்திறங்கியவுடனே யேம்ஸ் பிரான்சு தேசத்துக்கோடிப்போய் அாயி மன்னனின் ஆதரவைப் பெற்ருரன்.
வினுக்கள்
1. பிரபுக்களின் அதிகாரத்தை அடக்க ஏழாவது ஹென்றி கை
யாண்ட முறைகள் யாவை ? 2. ஹென்றி இங்கி லா ந் தி ன் பண நிலையை எவ்வர்று திருத்தி
வைத்தான் ? 3. ஹென்றி அயல் நாடுகளின் ஐக்கியத்தை எவ்வாறு பெற்றன் ? 4. எதேச்சாதிகாரியாக ஆளுகை நடத்திய ஹென்றி எவ்வாறு மக்
களின் நன் மதிப்பைப் பெற்றன் ? 5. ஊல்சியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமுரிய காரணங்களை ஆராய்க.
6. எட்டாவது ஹென்றி போப்பரசரின் அதிகாரத்தை நீக்கிவிட் டதற்குக் காரணம் என்ன ? அதை எவ்வாறு நீக்கினுன் ? 7. இங்கிலாந்திலேற்பட்ட சமயப் புரட்சியைப்பற்றி விபரித்துக் கூறு? 8. ஆருவது எட்வேட் அரசன் காலத்திலும் மேரியின் காலத்திலும்
இங்கிலாந்திலுள்ள சமய நிலையை ஆராய்க. 9. எலிஸபெத் ராணி நாட்டிலுள்ள பிரச்சினேகளை எ வ் வா று
தீர்த்து வைத்தார் ? 10 இங்கிலாந்துக்கெதிரே பிலிப்பு மன்னன் படையெடுத்ததற்கு நியா
யம் என்ன ? அப்படையெடுப்பின் முடிவென்ன ?

11.
12.
13.
4.
15.
இங்கிலாந்து 1485-1688 67
கியூட வமிசத்தரசர்களின் பின் யார் சிங்காசனமேறினுர் ? பாராளுமன்றம் பேம்ஸ் அரசனுக்கு எதிர்ப்புக் காட்டியதற்குக் காரணமென்ன? ܫ முதலாம் சாள்ஸ் மன்னனுடைய வீழ்ச்சிக்குரிய காரணங்களே ஆராய்க 2 இரண்டாம் சாள்ஸ் மன்னனுடைய ஆளுகையைப்பற்றி விப ரித்துக் கூறு. 1688-ல் ஏற்பட்ட புரட்சிக்கு இரண்டாம் யேம்ஸ் ம ன் ன ைேf காரணமாயிருந்தான் என்பதை விளக்கிக் கடறு,

Page 39
ஆரும் அத்தியாயம் பதினேழாம் நூற்றுண்டில் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை.
பதினேழாம் நூற்ருரண்டில் ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும், பிரான்சு தேசம் முதன்மைபெற்ற நா டா க விளங்கிற்று. செல்வத்திலும், கல்வியிலும், படைப் பலத்திலும், பல்வகையான கலைகளிலும் மற் அறும் நாடுகளிலும் பார்க்க மேம்பாடான நிலையிலிருந் தது. உள்நாட்டுக் குழப்பத்தாற் சிதறிக்கிடந்த bாடு வோர் நாட்டுக் ஹென்றி ஆண்டுகொண்டிருந்த காலத் தில் அமைதியைப் பெற்று வளப்பமுடையதாயும் விளங் கியது. அரசன் நாண்டிஸ் சாதனத்தின் மூலம் ஹியூ ஜனட்ஸ் சமயத்தவர்களுக்கு மத சுதந்திரத்தையளித் தான். நிர்வாகத்தைச் சீர்திருத்திச் செலவைச் சுருக் கினன். அவன் 1610-ல் இறக்க அவனின் பின் பதின் மூன்ருரம் அாயி அரசனனுன். இவனது காலத்தில் பெரு மரசியல் விற்பன்னரான நறிச்சலியூ, மஸாரின் என்ப வர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக மந்திரியாகவிருந்து சேவை புரிந்தனர்.
1624 தொடக்கம் பதினெட்டு வருட கால மாக ஐரோப்பாவின் கீர்த்தியும் செல்வாக்கும் படைத்த ஒரு வணுக றிச்சலியு விளங்கினன். அவன் ஒரு பிசப்பா யும் சிறந்த கத்தோலிக்கனுமாயிருந்த பொழுதிலும் ரோமாபுரியில் வெறுக்கப்பட்டவணுகக் காணப்பட்டான். புரட்டஸ்தாந்து சமயம், ஜேர்மனியில், போப்பாண்டவ ராலும் பரிசுத்த ரோமராச்சிய சக்கரவர்த்தியாலும் அழிக்கப்படும் நேரத்தில் அதனேப் பாதுகாத்து வைத் தவன் றிச்சலியூ ஆவன். அவனுக்கு அரசியலை 5டத்தும் முறையில் இரண்டு பிரதான நோக்கங்களிருந்தன. பிரான்சு தேசத்திலே பிரான்சிய அரசனுடைய அதி காரத்தைப் பலப்படுத்துவது ஒன்ருரகும். ஜூரோப்பா வில் பிரான்சை முதன்மைபெற்ற bாடாக்கவேண்டு

பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை 69
மென்றும், அதை நிறைவேற்றுவதற்கு ஸ்பானியா, அவுஸ்திரியா என்ற நாடுகளோடு நட்புப்பூண்ட நாடுக &ளத் தோற்கடிக்க வேண்டுமென்பதே மற்ருென்றகும். நுட்பமான கல்வித்திறனும், மனத்திடமும், தைரியமும் வாய்க்கப்பெற்ற மந்திரி தனது அரசனுக்கும் நாட்டுக் கும் சேவை செய்யலானன்.
மத சுதந்திரத்தைப் பெற்ற ஹியூஜனட்ஸ் அரச னுடைய அதிகாரத்திற் பொருமைகொண்டு தாங்களி ருந்த பகுதிகளைச் சுதந்திரமான சமஸ்தானங்களாக் கும் நோக்கத்துடன் பிரபுக்களுடைய ஆதரவை நாடி னர். அதுவுமல்லாமல் பிரான்சு தேசத்துப் பகைவர்க ளோடும் சினே கங் கொண்டனர். ஐக்கிய மாகாணங் களைப்போல் ஒரு குடியரசை ஸ்தாபிக்க முயன்றனர். இங்கிலாந்து, ஒல்லாந்து, ஜேர்மனி முதலிய புரட்டஸ் தாக்து நாடுகளிலிருந்து உதவியைத் தேடின்ர். அவர் கள் உண்டாக்கிய கலகம் றிச்சிலியுவால் உடனே அடக்கப்பட்டு அவர்களுடைய அரசியல், சமய ஸ்தாப னங்கள் இ ல் ல | ம |ற் செய்யப்பட்டன. ஆனல் சமய வழிபாட்டுச் சுதந்திரம் அவர்களுக்குத் திரும்பவுமளிக் கப்பட்டது. இவர்களை அடக்கியபின் பிரபுக்களின் தொல்லைகளை நீக்குவது அவனது கடமையாயிற்று. பிர புக்கள் மாகாண அதிபதிகளாயிருந்தனர். நிலமானிய முறை நாட்டிலிருக்குமளவும் 5ாடு முழுவதையும் ஒற் அறுமைப்படுத்துவது கஷ்டமாயிருந்தது. பிரான்சிய புரட் சியின் (1789) பின்னே நிலமானியமுறை யற்றுப்போக நாடுமுழுவதும் ஒரே அரசிங்கம் ஏற்படுத் தத்தக்கதாக விருந்தது. ஆனல் லிசிலியு பிரபுக்களுடைய கோட் டைகளையுமரண்மனைகளையும் அழித்துவிட்டுப் பிரபுக்க ளுக்கிடையே நடந்துகொண்டிருந்த சண்டைகளையும் நிறுத்தினுன். 1614ன் பின் பாராளுமன்றம் கூட்டப் படவில்லை. ஆனல் மத்திய அரசாங்கத்திலும் தல ஆட் சியிலும் விசேஷ மாற்றங்களே அவனுண்டாக்கி ஒரு அரச சபையையும் ஸ்தாபிக்கான். அவன் காட்டின் பாதுகாப்புக்காக ஒரு சேனைப்படையையும் கடற்படை

Page 40
10 பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை
யையும் நிறுவின்ை. அங்கியநாட்டு வர்த்தகம் அவனு டைய காலத்தில் விருத்தியடைந்தது. பண விஷயத்தில வன் சிக்கனமாய் B ட க் க வி ல் லை. பல கலைகளையும் வளர்த்து வந்தான். அவன் இறந்து (1642) சிறிது காலத்துக்குள பதின்மூன்ருரம் லூயியும் இறக்கான். அவனின்பின் மஸாரின் அவனது அடிச்சுவட்டைப் பின்பற்றியே அரசியல் விஷயங்களை நடத்திவந்தான். இவர்கள் இருவர் காலத்திலும் பிரதிநிதிகள் சபை கூட்டப்படாமல் விடப்பட்டது. அரசன் ஆஃணக்குக் கீழ்ப்படிந்து ஒழுகக்கூடிய இராச உத்தியோகத்தர் கள் எல்லா மாகாணங்களிலும் நியமிக்கப்பட்டனர். நாட்டைக் காப்பாற்றக்கூடிய வலிமை மிகுந்த ஒரு அரசன் ஆளுவதைச் சனங்கள் விரும்பினரல்லாது, சுயாட்சி, குடியாட்சி முறைகளை விரும்பினரல்லர்.
பதினலாம் லூயிக்கு ஐந்துவயதாயிருக்கும் காலத் தில் அவனது தந்தை இறந்துவிட்டான். (1643) மஸா ரின் 1661-ல் இறக்கும் வரையும் மந்திரியின் புத்தி மதிப்படி நடந்து பின்பு சுயேச்சையான ஆளுகை முறையை அாயி கையாண்டான். லூயி ஒரு பெரிய போர்வீரனுமல்ல, ஓர் இராசதந்திரியுமல்ல. ஆன ல் அக்காலத்திலுள்ள அரசனுக்குரிய சிறந்த இலட்ஷ ணங்களோடும் மற்றைய அரசர்களுக்கு ஒரு உதாரண மாக விளங்கினன். அழகு வாய்ந்த வதனமும், கெம் பீரமான தோற்றமும், அரசனுக்குரிய பல குணங்க ளும் ஒருங்கே அமையப்பெற்ற ஒருவனுகும். அரசனுக விருந்து மந்திரி ஒருவருமில்லாது ஆளுங்காலத்தில் சகல பிரபுக்களும் நிரம்பிய இவனுடைய மாளிகையில் ஆடம் பரமான வாழ்க்கை நடைபெற்றது. ஒவியம், சிற்பம், இலக்கியம் ஆதிய கலைகளை ஆ த ரித் தான். சிறந்த புலவர்களும் காடகாசிரியர்களும் இவனது சபையை அலங்கரித்துக் கஃலகளை வளர்த்து வந்தனர். றேசின், மொலியர், போன்ற கிர்த்திவாய்ந்த நாடக சிரியர்கள் இவன் காலத்திலேயே இருந்தனர்.

பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை 71
அரசன் பாராளுமன்றத்தைக் கூ ட் ட (ா ம லும், மாகாணங்களிலுள்ள ஸ்தாபனங்களையும், மாநகர சபை களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவங் தும் சுயேச்சாதிகாரியாக ஆள ஆரம்பித்தான். தன் ல்ை நியமிக்கப்பட்ட அரச சபை, உப சபைகள் மூலம் அரசாங்க நிர்வாகத்தைத் கன்னிச்சைப்படி நடத்தலா னன். இச்சபைகளில் மத்திய வகுப்பினரே அங்கத்க வர்களாயிருந்தனர். ரூறின், கொன்ட் முதலிய புகழ் பெற்ற சேனைத்தலைவர்கள் இவனுக்கு உதவியாயிருந் தனர். அரசன் சிங்காசனமேறிய காலத்தில் பிரான்சு தேசம் உன்னத நிலையையடைந்திருந்தது. ஐரோப்பா விலுள்ள எந்த நாடாவது போட்டியிடமுடியாத நிலை பரத்தில் பிரான்சு தேசமிருந்தது. ஆனல் பணநிலை திருப்திகரமாயிருக்கவில்லை. அாயி அங்கிலையைத் திருத்தி அமைப்பதற்காக கொபேட்' என்பவனை நிதி மந்திரி யாக நியமித்தான். முதலில் வரிகளை அறவிடும் முறை யைச் சீர்ப்படுத்தி வருமானத்தைக் கூட்டினன். கைத்  ெத N லை விருத்திசெய்யும் நோக்கத்துடன் இங்கி லாந்து, இத்தாலி, ஒல்லாந்து முதலிய விடங்களிலிருந்து தொழில் விற்பன்னர்களை வரவழைத்தான். கைத் தொழில் விருத்தியேற்பட்டவுடன் பிரான்சுக்கு வரும் அங்கிய நாட்டுப் பொருட்கள்மீது தீர்வைப் பணத்தைக் கூட்டித் கனது நாட்டின் பொருளுற்பத்தியை ஊக் கப்படுத்தினன். அதோடு வர்த்தகமும் நன்நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. புது வீதிகள் அமைக்கப்பட் டன, கால்வாய்கள் வெட்டிப்பட்டன. சிறந்த கப்பற் படை நிறுவப்பட்டது. 3ாயி ஆரம்பத்தில் நீதியை முறைப்படி வழங்கிப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் காலஞ்செல்ல யுத் தங்களிலீடுபட்டுப் பெருக்கொகையான பணத்தையும் செலவழித்து ஐரோப்பா முழுவதும் பெரும் பகயை புங் தேடிக்கொண்டான்.
நாட்டின் பாதுகாப்புக்காக நாட்டின் எல்லைப்புறங் க3ள வடகிழக்கிலுள்ள றைன் 5 திவரையும், தெற்கி

Page 41
72 பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை
லுள்ள பிரினிஸ் மலைவரையும், தென் கிழக்கிலுள்ள அல்ப்ஸ் மலைவரையும் கைப்பற்றுவதே அவனுடைய பிரதான நோக்கமாயிருந்தது. ஏனைய எல்லைப்புறங்களைப் பிடித்தபொழுதிலும், றைன் மாகாணங்களைக் கைப் பற்றுவதிற் கஷ்டமேற்பட்டது. Bெதலாந்து மக்கள் எதிர்ப்புக் காட்டினர். 1665-ல் ஸ்பானிய அரசனுகிய நான்காம் பிலிப்பு இறந்தவுடன் லூயி நெதலாந்தில் ஸ்பானியருக்குள்ள பகுதியை உரிமை ப ா ரா ட் டி க் கைப்பற்ற எண்ணினன். இதன் காரணமாகத் தொடங் கிய சண்டையில ஸ்பானியா தோற்கடிக்கப்படும் நேரத் தில் இங்கிலாந்து, ஒல்லாந்து, சுவீடன் ஆகியவை ஒரு மித்து இாயியை எதிர்த்தன. லூயி சண்டையை விட்டு விட நேரிட்டது. சில வருடங்களாகச் சமாதானம் நில வியும் திரும்பவும் ஒல்லாங்கோடு கடும்போர் தொடங் கியது (1672). இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகத் திற் போட்டியேற்பட்டது. குடியரசாட்சியையுடைய ஒல் லாந்துமீது எதேச்சாதிகாரியாக ஆண்டுகொண்டிருந்த பிரான்சிய அரசனுக்கு வெறுப்புண்டானது. மார்க்க சம்பந்தமாகவோ அல்லது அரசியல் சம்பந்தமாகவோ பிரான்சிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் ஒல்லாந்தில் பாதுகாப்பைப் பெற்றனர். லூயியினுடைய குணங் கள் கொள்கைகளைக் கண்டித்துப் புத்தகங்களும் ஒல் லாந்தில் வெளியிடப்பட்டன. எல்லாவிதத்திலும் லூயி யினுடைய எண்ணங்களுக்கு ஒல்லாந்து தடையாயிருங் தது. லூயி தந்திரமாக இங்கிலாங்தோடும், சுவீடனே டும் நட்புக்கொண்டமையால் 1672-ல் சண்டை சொடங் கியபோது ஒல்லாந்து தனித்து நின்று சண்டைசெய்ய நேர்ந்தது. லூயி பல நகரங்களையும் அரண்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டு சென்றபொழுது ஒல் லாந்து சரணடைய வேண்டிய 5ேரத்தில் அங்காட்டி லொரு புரட்சியேற்பட்டது. அதன் கா ர ண மாக ஒரேஞ்சு வம்சத்தைச் சேர்ந்த உவில்லியம் என்ற இளவரசன் அதிகாரத்தைப் பெற்றுப் போரை நடத் தினன். அவனுடைய கலேமையில் ஒல்லாக்கர் லூயி

பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் கிலேமை 73
அரசனுடைய சேனைகளே வீரத்தோடு எ தி ர் த் து ச் சண்டை செய்தனர். ஒல்லாந்து கடல்மட்டத்துக்குக் கீழுள்ள நாடாகையால் வரம்புகளை உடைத்துக் கடல் ைேர உட்புகச் செய்தான். அவன் தனது தந்திரத்தி ஞல் ஐரோப்பிய நாடுகளோடு நட்புப்பூண்டு பிரான்சை எதிர்க்கச் செய்தான், ஸ்பானியா ஒல்லாந்தோடு சேர்க் தது. இங்கிலாந்து ஆரம்பத்தில் லூயியோடு சேர்ந்த பொழுதிலும் பிற்பகுதியில் ஒல்லாங்தோடு சேர்ந்தது, ஜேர்மன் சமஸ்தானங்கள் சிலவும் சேர்ந்து பிரான்சை எதிர்த்தன. இவ்வளவு எதிர்ப்பு இருந்தபொழுதிலும் பிரான்சியப்படை மற்ற நாடுகளின் சேனைகளிலும் பார்க்க திறமை வாய்ந்ததாய்க் காணப்பட்டது. 1678-ல் எழுதப்பட்ட 1 கிமிக்குவென்" உடன்படிக்கையின் பிர காரம் பிரான்சின் வடக்குக் கிழக்கு எல்லைப்புறங்களி லுள்ள மாகாணங்களின் சில பகுதிகள் லூயி மன்ன னுக்குக் கிடைத்தன. மீண்டும் லக்ஸம்பேர்க்கையும் இத்தாலியிலுள்ள கசேல் என்ற இடத்தையும் பெற் முன், ஜேர்மனியர் அவனுடைய செய்கைகளைக்கண்டு கோபங் கொண்டும் ஈற்றில் அவனேடு இணங்கிக்கொண் டனர். இக்காலத்தில் லூயி உச்சமான நிலையை எய் தினன் எனலாம்.
அதன்பின்பு பிரான்சின் அதிகாரம் குன் ற த் தொடங்கியது. இவ்வாறு மாறுகலடைய வேண்டிய காா ணங்களை ஆராயவேண்டும், லூயியின் ஆளுகையின் பிற்பகுதியில் அரசியல் விஷயங்களில் மாத்திரமல்லாது மார்க்க விஷயங்களிலும் *தலைமை வகிக்க ஆரம்பித் தான். பிரான்சிலுள்ள கத்தோலிக்க திருச்சபைக்கும் தேவாலயத்துக்கும் தலைமை வகிக்குமுரிமை தனக்கே உண்டென்று 1882-ல் பிரசித்தி செய்தான். போப் பாண்டவரில் அ ர சன் தங்கியிருக்கவில்லையென்றும் அரசனை இராச்சியத்தினின்று நீக்கவோ அல்லது பிர சைகளை அரசனுக்குக் கீழ்ப்படியாமல் வலோற்காாஞ் செய்யவோ போப்பாண்டவருக்கு அதிகாரமில்லையென வெளிப்படுத்தினன். அக்காலத்தில் பிரான்சு தேசத்தி
10

Page 42
74 பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை
லிருந்த கியூஜனட்ஸ் அரசனுக்குக் கீழ்ப்படிவாயும் வர்த்தகம் முதலிய தொழில்களிலீடுபட்டும் வாழ்ந்து வந்தனர். ஆனல் லூயி அவர்கள் நாட்டிலிருப்பது கத் தோலிக்க ச ம ய த் து க்கு மாமுனதென்று நினைந்து, அவர்களுடைய சுதந்திரத்தையும் உ ரி ை ம க ஆள யும் கவர்ந்துகொள்ள எண்ணங் கொண்டான். ஒரு அற்ப நியாயத்தைக்காட்டி அவர்களுடைய ஆலயங்களை அழித் கான். அவர்களுடைய ஆஸ்திகளும், பிள்ளைகளும் கவ ரப்பட்டன. வலோற்காரமாகக் கத்தோலிக்க சமயத் துக்கு மாற்றிக்கொள்ள எத்தனித்தான். மார்க்க சுதந் திரம் முற்ருரக இல்லாமற் செய்யப்பட்டது. அனேக புரட்டஸ்தாந்து மக்கள் அந்நாட்டைவிட்டு விலகி ஒல் லாந்து, இங்கிலாந்து, சுவிற்செலாந்து ஆகிய நாடுக ளுக்கு ஒடினர். இந்நாடுகள் இவர்கள் வரவால் பல னைப் பெற்றன. கைத்தொழிலே அவர்கள் அங்காடுக ளிற் பரப்பினர். ஆயிரக் கணக்கான இவ்வகையான மக்கள் பிரான்சைவிட்டு விலகியமையால் அங்நாட்டின் பலம் குறைந்தது. அதுவுமல்லாமல் இங்கிலாந்தும் ஒல் லாந்தும் ஒன்று சேரவேண்டிய சந்தர்ப்பம் நேரிட் டது. இரண்டாம் யேம்ஸின் மீது வெறுப்புற்று இங்கி லாந்து மக்கள் ஒல்லாந்து "அரசனுகிய உவில்லியத்தை அரசனுக்கினர் (1688). அதனுல் புரட்டஸ்தாந்து நாடு களுக்கு இங்கிலாந்து முதன்மையான நாடாகியது. இனி ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளாகிய டென்மார்க்கு சுவீடன் ஸ்பானியாவும் பிரான்சுக்கெதிரே சண்டை செய்ய உவில்லியத்தோடு சேர்ந்தன. அயர்லாந்து மக் களிலநேகர் இரண்டாம் யேம்சக்கு உதவியளித்தபடி யால் அங்நாடும் சண்டையிற் பங்குபற்றியது. Bெதலாங் தில் மாத்திரமல்ல கடலிலும் சண்டைகள் நடைபெற் றன. ஒன்பது வருடகாலமாக நடைபெற்ற அவ்யுத்தம் 1697-ல் முடிவடைந்தது. றிஸ்விக் உடன்படிக்கையின் பிரகாரம் பிரான்சு கைப்பற்றிய இடங்களைத் திரும்ப வும் கொடுக்கவேண்டி நேர்ந்தது. லூ யி ஸ்ரூவர்ட் வமிசத்தரசருக்கு உதவி செய்வதில்லையெனவும் உறுதி

பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை 75
பண்ணி உவில்லியத்தை இங்கிலாந்து அரசனுகவும் ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தான். இவ்வாறு கடந்தே மிய யுத்தமே ஆங்கிலேய சிங்காசனப் போர் எனப் படும்.
பதினேழாம் நூற்றுண்டின் பிற்பகுதில் ஸ்பானியா தேசத்தின் பணநிலை மிகவும் நெருக்கடியான நிலையி லிருந்தது. தேவாலயத்தினதும் பிரபுக்களினதுமான சலாக்கியங்களே அந்நிலைக்குப் பிரதான காரணமாயி ருந்தன. வரிகளை விதித்த முறைகள் 5ாட்டின் கைத் தொழிலைச் சிதைத்துவிட்டன. அரசியலிலோ, மார்க் கத்திலையோ அல்லது விஞ்ஞா ன ஆராய்ச்சியிலோ சுதந்திரம் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அறிவுத் துறை யிலும், அரசியற்றுறையிலும் இக்காலத்தில் முன்னேற் றம் தோன்றவில்லை. சாம்ராச்சியப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஸ்பானிய அரசர்கள் நாட்டின் பணக்கஷ்டத்தை உண்டுபண்ணி விட்டனர். இக்காலக் தில் இரண்டாம் சாள்ஸ் அரசனுயிருந்தான். இவனுக்குப் பிள்ளைகளில்லாமையால் பெரிய ஸ்பானியா சாம்ராச் சியத்திற்கு யார் அரசனுகக் கூடுமென ஐரோப்பிய அர சர்கள் ஆலோசிக்கலாயினர். இவ்வரசுக்குரிமையுள்ளவர் கள் பதினலாம் லூயி, லியபோல்ட் சக்கரவர்த்தி, பவேரிய வரசன் என்பவர்களாம். அாயி மன்னனுக்கு அச்சாம்ராச்சியம் சேருமென்ருரல் அது வல்லரசுகளின் சமநிலை அதிகாரத்துக்கு மாறு குமெனவுணர்ந்த இங்கி லாந்த ரசனன உவில்லியம் ஒரு உபாயமெண்ணினன், அவன் அாயியோடு சேர்ந்து இரண்டு பங்கீட்டு உடன் படிக்கைகள் எழுதிக்கொண்டான். முதலாவது உடன் படிக்கையின் பிரகாரம் ஸ்பானிய சாம்ராச்சியத்தின் பெரும்பகுதி பவேரியா இளவரசனுக்குச் சேரவேண்டு மென்றும் எஞ்சிய பாகங்கள் பிரான்சுக்கும் அவுஸ்தி ரியாவுக்கும் சேரவேண்டுமென்றும் சம்மதம் செய்து கொண்டனர். ஆணுல் அவ்விளவரசன் சடுதியாய் இறக் தமையால் இன்னுெரு உடன்படிக்கை எழுதவேண்டி, 5ேர்ந்தது. அதன் பிரகாரம் சக்கரவர்த்தியின் இரண்

Page 43
76 பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலமை
டாம் மகனன சாள்ஸ் இளவரசனுக்கு பெரும்பகுதியும் இத்தாலியில் ஸ்பானியாவுக்குள்ள பகுதிகள் பிரான் சுக்குச் சேரவேண்டுமென்பதாக இருவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனல் இரண்டாம் சாள்ஸ் மன்னன் இறக்கும்போது எழுதிவிட்ட மரண சாதனத்தின்படி லூயி மன்னனின் பேரனகிய பிலிப்புக்கு (முழு இராச் சியமும் சேரவேண்டியிருந்தது. லூயி பங்கிட்டு உடன் படிக்கைகளை மீறி மரண சாதனத்தை ஏற்றுக்கொண் டமையால் உவில்லியத்துக்கும் கோபமுண்டானது. அதிலும் பெரிதான பிழையொன்றை அாயி செய்ததி னல் ஆங்கிலேய மக்களே பெரும் சினங்கொண்டனர். றிஸ்விக் உடன்படிக்கையின்படி லூயி உவில்லியத்தை இங்கிலாந்தின் அரசனக ஏற்றுக் கொண்டு விட் டு யேம்சின் மகனை இங்கிலாந்துக்கு அரசனுக்க முயற்சி செய்தான், றிஸ்விக் உடன்படிக்கையை மீறியமை ஆாயிமீது பெரும் வெறுப்பை உண்டாக்கியது. இனி நெதலாந்தில் ஸ்பானியருக்குள்ள நாடுகளில் தனது சேனைகளைக்கொண்டு சென்றன். அதுவுமல்லால் இங்கி லாந்து அமெரிக்காவில் பெற்றுள்ள வர்த்தகத்துக்குரிய சலுகைகளைக் கைப்பற்ற ஆாயி முயன்றன். இன்னுே ரன்ன காரணங்களால் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கு மிடையில் யுத்தம் தொடங்கியது. 1702-ல் தொடங்கிய இவ்யுத்தம் ஸ்பானிய சிங்காசனப் போர் எனப்படும். இதற்கிடையில் உவில்லியம் இறந்துபோனன். அவ னின்யின் சிங்காசனமேறிய அன்னி, ஜோன் சர்ச்சில் என்ற மாள்பருே பிரபுவை சேனைத்தலைவனுக கியமித் தான். அவன் ஒல்லாந்து மக்களையும் அவுஸ்திரியரை யும் துணைக்கொண்டு கடத்திய ஒவ்வொரு சண்டையி லும் வெற்றி பெற்ருரன். இவன் நடத்திய சண்டைகள் * பிளென்ஹீம், ரூமிலீஸ் : மால்பிளகுவே, ஊட5ார்ட் என்பனவாம். இவ்யுத்தம் 1713-ல் GP 19. aj 60) ... të gj உற்றெச்ட்' உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன் பிரகாரம் ஸ்பானியாவுக்கு ஐந்தாம் பிலிப்பு அரசனு ஒன். ஆனல் ஸ்பானியாவும், பிரான்சும், ஒருபொழு

பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலமை 77
தும் ஒன்றுசேர மாட்டாவெனச் சம்மதங் கொடுபட்டது. bெதலாந்து, மிலன், நேப்பிள்ஸ், சார்டினியா முதலிய | டுகளை அவுஸ்திரியா பெற்றது. இங்கிலாந்து ஜிப் ருேரல்ாரையும், மைனேக்காவையும், பெற்றது. இவை களைவிட , நியூபவுண்ட்லாந்தும், நோவாஸ்கோஷியும் இங்கிலாந்துக்கே கொடுபட்டன.
நெதலாந்திலுள்ள ஐக்கிய மாகாணங்களின் வர லாற்றைப்பற்றி அறிதல்வேண்டும். நெதலாந்து, ஐந் காம் சாள்சும், அவனுடைய மகனுகிய இரண்டாம் பிலிப்பின் கா லத் தி லும் இருந்த நிலையைப்பற்றி முன்னுெரு அத்தியாயத்திற் படித்திருக்கிறுேம். இடை யருரப் போரின் ஈற்றில் புரட்டஸ்தாந்து மக்கள் வசித்த உத்தர Bெதலாந்தே பூரண அரசியற் சுதந்திரத்தைப் பெற்றது. (1579). பத்து வருஷங்களின் பின்பு டச் சுக்குடியரசு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. தெற்கே யுள்ள மாகாணங்களும் ஒன்று சேர் ங் த ன அதே பின்பு பெல்சியமென்றழைக்கப்பட்டு வருகிறது, ஆணுல் 1609-ம் ஆண்டுதான் வட நெதலாந்துச் சுதந்திரம் ஸ்பானியரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. உத்தர 6ெத லாந்தில் ஏழு மாகாணங்களிருந்தன. ஒவ்வொரு மாகா ணமும் சுயாட்சி நடத்தியபோதும் எல்லாவற்றிற்கும் பொதுவாக ஒரு பிரதிநிதிகளைக் கொண்டுள்ள சபை யொன்றுண்டு. குடியாட்சியின் தலைவர் ஸ்ராத்ஹோல் டர் என்றழைக்கப்பட்டார். இவர் ஒரேஞ்சு வமிசத்தைச் சேர்ந்தவர். ஒல்லாந்து இம்மாகாணங்களின் ஒன்றி னது பெயராகும். அம்மாகாணத்தின் வாசிகளே டச் சுக்காரரென் றழைக்கப்பட்டனர். இப்பெயரே மற்ற மாகாணங்களுக்கும் வழங்கிவந்தது. அவர்க ளு  ைடய சமயம் புரட்டஸ்தாந்து சமயமாகும். அடிக்கடி டச்சுக் காரருக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையிற் சண்டைக ளேற்பட்ட பொழுதிலும் மக்கள் Bாட்டின் வளத்தைப் பெருக்குவதிற் சிரத்தை எடுத்தார்கள். 1602-ல் ' டச்சு ஐக்கிய கிழக்கிந்திய சங்கம் ' என்ற வியாபார ஸ்தாப னம் நிறுவப்பட்டபின் அவர்களின் வர்த்தகம் விருத்தி

Page 44
18 பதினேழாம் நூற்றண்டில் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை
யடைந்ததோடு, பல நாடுகளும் அவர்கள் கையிற்சிக் கின. டச்சுக் கப்பல்கள் எல்லாத் துறைமுகங்களிலும் காணப்பட்டன. அம்ஸ்ரடாம் அங்குள்ள ஒரு சிறந்த துறைமுகமாகும். அங்குள்ள லெய்டன் சர்வகலா சாலையில் பெரும் அறிவாளிகளும் புலமை வாய்ந்தவர்க ளுமிருந்தனர். ஒவியம், சித்திரம் சிறந்து விளங்கின. இவர்களுடைய வியாபாரப் பெருக்கத்தைக் கண்ணுற்ற ஆங்கிலேயர்கூடப் பொருரமைப்பட்டனர், அ த ஞ ல் இருபகுதியாருக்குமிடையில் மூன்றுகடல் யுத்தங்கள் 5டைபெற்றன. அவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றனர்.
வினுக்கள் 1. றிச்சலியு ஏன் போப்பரசரால் வெறுக்கப்பட்டான்? 2. றிச்சலியு பிரான்சு தேசத்தில் உண்டாக்கிய விசேஷ மாற்றங்
கள் யாவை ? VA 3. மஸாரின் தன் நாட்டுக்குச் செய்த சேவைகள் யாவை ? 4- பதிஞன் காழ் லூயி மன்னனின் காலத்தில் பிரான்சுதேசம் அதி
காரம் பெற்றதற்குக் காரணம் என்ன? 5. லூயி மன்னனுேடு எதிர்த்துப் போராடிய ஐரோப்பிய நாடுகள்
iuᏛᎶ0) Ꭷ/ ?
6, லூயி மன்னன் அரசாண்ட காலத்தின் பிற்பகுதியில் அவனு
டைய செல்வாக்குக் குன்றியதற்குக் காரணம் யாது? 7, ஸ்பானிய சிங்காசனப் போர் ஏற்பட்டதற்குரிய காரணங்களே
ஆராய்க. 8. உத்தர நெதலாந்து எப்போ பூரண சுதந்திரத்தைப் பெற்றது? அதன்பின் அந்நாடு இருந்த நிலையைப்பற்றி சுருக்கமாகக் கூறு.

ஏழாவது அத்தியாயம் இந்தியாவில் மொகலாயர் ஆட்சி
முகமதியர் பல முறையும் இந்தியாவுக்குப் படை யெடுத்துச் சென்றபொழுதிலும் ஒருவராகுதல் அங் ஈாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்ற முடியாமற் போனது. ஆனல் மொகலாய ஆட்சியே இந்தியாவில், பிரதானமாக வட இந்தியா முழுவதும் கி ல வியது. மொகலாயர் மங்கோலிய சாதியினரைச் சேர்ந்தவர்கள். சீனரும், துருக்கியரும் அச்சாதியையே சேர்ந்தவராகும். மொகலாயருள் முதலாவதாக இந்தியாவுக்குப் படை யெடுத்து வந்தவன் ரிமூர் என்பவனுகும். ரிமூர் ஓர் மூர்க்ககுணமுள்ளவனும், தற்பெருமையுடையவனும் மத் திய ஆசியாவிலுள்ள அநாகரிகமற்ற ஒருவனுமாகக் காணப்பட்டான். ஆனல் ஒரு திறமை வாய்ந்த போர் வீரணுவான். சென்றவிடமெல்லாம் பெரும் அழிவை புண்டாக்கினன். அவன் பார்சியாவையும், ஆப்கா ரிைஸ்தானையுங் கைப்பற்றி சின்ன ஆசியாவுக்குள்ளும் புகுந்தான். அவன் 1898-ல் இந்தியாவுக்குப் படை யெடுத்துச் சென்று வெற்றிபெற்ற பொழுதிலும், ஆறு மாதகாலமே அங்கே இருந்து பின் அவ்விடத்திலிருந்து திரும்பினன்.
ஆனல் இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்று மொகலாய அதிகாரத்தை ஆங்காட்டில் நிலைநாட்டியவன் பாபூர் என்பவனுகும். அவன் ரிமூரின் வமிச வழித் தோன் ற லா கும். 1325-ல் பாபூர் 12000 வீரரைக் கொண்ட பெருஞ் சேனையுடன் கபூல் என்ற இடத்தி திலிருந்து புறப்பட்டு பாஞ்சாலத்துட் புகுந்து அங்கி ருச்து டில்லிமார்க்கமாகச் சென் ருர ன். பணிப்பத்து என்ற இடத்தில் நடந்தேறிய யுத்தத்தில் (1526) அவன் பூரண வெற்றிபெற்றன். அவனுடைய புகழ் எங்கும் பரவியது. வடவிந்தியாவின் பல பாகங்கள் அவன் கையிற் சிக்கின. அடுத்த ஆண்டில் இராச புத்தான

Page 45
80 இந்தியாவில் மோகலாயர் ஆட்சி
யையும் தம் வசப்படுத்தினன். பாபூர் ஒரு அரசியல் நிபுணனல்ல. ஆனல் அவன் ஒரு சிறந்த போர்வீரன். அவன் தனது மகன் குமாயனுக்கு ஒரு பெரும் இராச்
ܨܒܥܐ
S ۔۔
S) 岑, ནཱ་ இ
சியத்தை விட்டிறந்தான். குமாயன் ஷேஷா என்பவ னுடன் பல சண்டைகளை நடத்தி அவைகளிற் கோல்வி யுற்று தனது இராச்சியத்தினின்று ஒடித்தப்பினன். (1542) அதன்பின் ஷேஷா என்பவனே வட இந்தியா முழுவதுக்கும் அதிகாரியாக அமர்ந்தான். அவன் தென் பீகாரிலுள்ள ஒரு பிரபு, தன்னுடைய போர்த்திறமையி னுல் உயர்ந்த நிலையை எய்தின்ை. அவன் சில விசேஷ, மாற்றங்களையுண்டாக்கினன். நிர்வாக முறை  ைய த் திருத்தியமைத்தான், நிலங்கள் எல்லாம் ஒரே அளவை
 
 

இந்தியாவில் மோகலாயர் ஆட்சி }
முறையினல் அளக்கப்பட்டன. நிலங்கள் ஒவ்வொன்றி லும் விளையும் பொருட்களில் மூன்றிலொருபங்கு அர சாங்கத்துக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. நிலங்களை யுடைய சொந்தக்காரர் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டியவைகளையும், அவர்களுக்கு நிலங்களிலுள்ள உரிமைகளைப் பற்றியும் எழுதப்பட்ட சாதனங்களிருக் தன. நிலங்களிலிருந்து பெறும் வருமானத்தைவிட காணிகளை அளக்குஞ் செலவும், வரியறவிடுவோனுடைய சம்பளமும் கொடுக்கவேண்டியிருந்தது. நாணயங்களிற் திருத்தங்களேற்படுத்திய பொறுப்பும் அவனுக்கேயுரி யது. அவனே வெள்ளி நாணயங்களை உபயோகத் துக்குக் கொண்டுவந்தான். சுங்கவரிகளைக் குறைத்து வர்த்தகத்தை விருத்திசெய்தான். கேர்த்தியான வீதி களை அ  ைம த் தான். கிராம விதானமார்களுக்கு அவர்களுடைய கிராமங்களில் ச மா த ரன த்  ைத நிலவச் செய்யும் பொறுப்பு விடப்பட்டது. நீதி ஒரு விதமான பட்சபாதகமில்லாது வழங்கப்பட்டது. ஷேசா ஒரு பெரிய சேனையை ஆயத்தமாய் வைத்திருந்தான். சில இந்துக்களுக்கும் பொறுப்பான உத்தியோகங்க ளைக் கொடுத்தான். அவன் ஆட்சிபுரிந்த ஐந்து வரு டங்களுள் வட இந்தியா முழுவதையும் கை ப் பற்றி ச் சிறந்த நிர்வாக முறையையும் நிலை 15ாட்டினன். அவன் சமயச் சகிப்புத்தன்மை யுடையவனுகையால் இந்துக்க ளுக்கு உதவிசெய்து அவர்களின் ஆதரவைப் பெற்றன். அவனின் பின் அவனுடைய மகன் சிறிதுகாலம் ஆண் டான். குமாயன் திரும்பன்ம் தனது இராச்சியத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிசெய்தான். 1556-ல் குமாயன் இறந்துபோக அவனுடைய மகனுகிய அக்பர் சிங்கா சன மேறினன். அப்பொழுது சிறுபிள்ளையாயிருந்தபடியால் அவனுடைய மந்திரிமாரே அரசாங்க விஷயங்களை நடத்த வேண்டியிருந்தது. 1562-ல் அரசாங்கப் பொறுப்பைத் தானே ஏற்று நடத்த ஆரம்பித்தான். அக்பர் அயல் நாடுகளைக் கைப்பற்றித் தனது இராச்சியத்தைப் பெரி
11

Page 46
82 இந்தியாவில் மோகலாயர் ஆட்சி
தாக்கினன். இராசபுத்தானம், குஜராத்து முதலிய பகுதி களைக் கைப்பற்றிக்கொண்டு வங்காளத்துக்குப் படை யெடுத்துச் சென்றன். அதுவும் அவன் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. பின்பு காபுல் என்ற இடத்தைக் கைப்பற்றினன். வடமேற்கு எல்லேப்புறத்துக்குக் காவல் வைக்கவேண்டியிருந்தது. காஷ்மீரத்தின் மேற்கு எல்லே தொட்டு இந்துநதிப்பள்ளத்தாக்குவரையுமுள்ள நாட்டுக் கூடாகவும் கைபர் கணவாய் காபுலோடு தொடுக்கும் வடபகுதிக்கூடாகவும், ஆப்கானிஸ்தனுக்குச் செல்லும் வர்த்தகர்களுடைய பாதைகள் காணப்பட்டன. ஆகை யால் அப்பகுதிகளுக்குக் காவல் மிகவும் தேவைப்பட் டது. வடமேற்குப் பகுதியைப் பலப்படுத்தியபின் வட இந்தியாவில் அக்பரின் ஆட்சி நன்நிலையடைந்தது. ஆகையால் தென்னிந்தியாவிற் கவனஞ் செலுத்தினன். அங்கே பிரதானமான மூன்று மாகாணங்களைத் தன் வசப்படுத்தினன்,
அக்பரின் ஆட்சியில் அரசனே மத்தியஸ்தானத் தைப் பெற்றதுமல்லாது நிர்வாக அதிகாரமும் அவனி லேயே தங்கியிருந்தது. அக்பர் தினமும் மூன்று கூட் டங்களைக் கூட்டுவது வழக்கம். ஒன்று நாளாந்தம் நடத் தும் கடமைகளைப்பற்றியது; இன்னென்று அரசசபை யின் கூட்டமாகும்; மற்றது சமயம் அல்லது அரசியல் சம்பந்தமான விஷயங்களைப்பற்றியது. உத்தியோக நிய மனம், உத்தியோக உயர்வு, பணச்செலவு, தேசாதிபதி களனுப்பும் முறைப்பாடுகள் இவைபோன்ற முக்கிய விஷயங்கள் யாவும் அரசன் முன்னிலையிலேயே ஆலோ சனைக்கு எடுக்கப்பட்டன. வருமானம், பணவிஷயங்க ளுக்குப் பொறுப்பாக ஒரு மந்திரியையும், போர்த் தொழில் நடத்தும் பொறுப்புக்கு இன்னெரு மந்திரியை யும், கைத்தொழிற்சாலை, பண்டகசாலைகளை நடத்தும் பொறுப்புக்கு வேருெரு மந்திரியையும், மார்க்கம், நீதி என்பவைகளோடு தொடர்புடைய விஷயங்களுக்கு ஒரு மந்திரியையும், எல்லாமாக நான்கு மந்திரிகளை அக்பர்

இந்தியாவில் மோகலாயர் ஆட்சி 83
நியமித்திருந்தார். சாம்ராச்சியத்தின் நான்கு தூண்கள் போல் நான்கு மந்திரிகளும் அரசாங்க நிர்வாகத்தை நடத்துவதற்குத் துணேபுரிந்துவந்தனர். இவர்களைவிட இன்னும் இரண்டு உத்தியோகஸ்தர்களிருந்தனர். ஒரு வர் சக்கராதிபதியின் அந்தரங்கக் காரியதரிசியாயும், மற்றவர் அவருடைய சட்டங்களை ஆராய்ந்து திரும்ப வும் அவருடைய அனுமதிக்குச் சமர்ப்பிப்பவராயும் இருந்தனர். அவருடைய காலத்தில் மூன்று வருமான முறைகள் கையாளப்பட்டன. விளைபொருட்களிலொரு பகுதி அரசாங்கத்துக்கு அறவிடப்பட்டது. விளைபொருட் களின் பங்கு காலத்துக்குக்காலம் கூடியுங் குறைந்து மிருந்தபடியால் அப்பங்குக்குப் பதிலாக விவசாயிகள் இறுக்கவேண்டிய பணவிகிதமொன்று நியமிக்கப்பட் டது. தானியங்கள் மலிவாயிருந்தபடியால் அவைகளின் பெறுமதி இன்னதென்று உத்தேசிக்கப்பட்டது.
அக்பருடைய சாம்ராச்சியம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாகாண நிர்வாகமும் மத்திய அரசாங்க முறைப்படி நடைபெற்றுவந்தது. நாஜிம் என்று சொல்லப்பட்ட உத்தியோகத்தரே மாகாண ஆட்சிக்குத் தலைமைதாங்கினர். அவரின்கீழ் பல உத் தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மாகாணங்க ளில் நடைபெறும் விஷயங்களை பத்திரிகை நிருபர்கள் மூலம் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் மத்திய அர சாங்கமறிந்துகொண்டது. துர்வியாச்சியத்தைத் தடுக்கும் முறையே திேவழங்கும் ஸ்தானத்திற் கவனிக்கக்கூடிய தொன்றகும், இந்துக்களின் சமயச் சட்ட ஒழுங்கின் பிரகாரமே இந்துக்களின் நிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டன. ஆஸ்திகள், நிலங்களைப்பற் நிய வழக்குகளிலும் பார்க்க, குற்றஞ்செய்தோர்களிற் தொடரப்பட்ட வழக்குகள் அவர் முன்னிலையிற் கொண்டு வரப்பட்டன. அரசாங்கத்துக்கெதிரே காணப்பட்ட குற் றச்சாட்டுகளும் அவர்முன்னிலையிலேயே தீர்க்கப்பட்டன

Page 47
84 இந்தியாவில் மோகலாயர் ஆட்சி
அக்பர் சமய பக்தியுடையவர். காலேநேரத்தைத் தியானஞ்செய்வதிற் செலவழித்தார். முஸ்லிங்கள், இக் துக்கள், கிறீஸ்தவர்கள் ஆகிய பல சமயத்தவர்களும் ஆராதனை செய்வதற்காக ஒரு ஆராதனை மண்டபத் தைக் கட்டி அதில் நடைபெறும் சமய விவாதங்களிற் பங்குபெறுவது வழக்கம். இந்து யாத்திரீகர்கள் கொடுத்து வந்த வரியை இல்லாமற்செய்தார். போரில் கைதுசெய் யப்பட்ட போர்வீரர்களை அடிமையாக்கும் வழக்கத்தை அறவே ஒழித்தார். பல சமயத்தினருக்கும் சுயாதீன மளிக்கும் முறையைக் கையாண்டார். தன் விவாகத்தின் தொடர்பினுற் சேர்ந்த இந்துசமயத்தைச் சேர்ந்த உற வினர் உயர்ந்த பட்டங்களைப்பெற்று அரச உறவின ராகக் கெளரவிக்கப்பட்டனர். இந்து ஆலயங்கள் கட்டு வதற்கு அனு மதி அளிக்கப்பட்டது. இந்துக்களின் ஆதரவைப் பெற்றமையால் அக்பர் மொகலாய அர சாட்சியை இந்தியாவில் ஸ்திரப்படுத்தினு ரெனலாம். அக்பரின் காலத்தில் இந்தியா ஐக்கிய நாடாக அரசி யல் ஒற்றுமையிலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கி யது. இங்கிலாந்தில் எலிஸபெத் ராணி ஆண்டுகொண் டிருந்த காலத்திலேயே அக்பர் இந்தியாவில் ஆளுகையை நடத்தினர். 1556-ம் ஆண்டு தொடக்கம் 49 வருடகால மாக அவர் ஆளுகை நடத்திய காலத்தில் இந்தியா செல்வத்திலும் சிறப்பிலும் முதன்மைபெற்ற நாடாக விருந்தமையினல் அவருடைய பெயர் இன்றும் மங்க வில்லை.
1605-ல் அக்பர் இறக்க அவனது மகனன ஜெஹாங் கீர் அரசனுனன். அவனுடைய தந்தை வெளிநாட்டு விஷயங்களிற் கையாண்ட முறையையே இவனும் பின் பற்றினன். வங்காளத்திலுள்ள ஆப்கானிஸ்தரை அடக் கினன். 1620-ல் நாகர்கோட்டை அல்லது கங்கரா என்ற இடத்தைக் கைப்பற்றினன். சிலவேளைகளில் கொடுரச் செய்கைகளைச் செய்தபோதிலும் பிரபுத்தன்மையும் நீதி வழங்கும் குணமும் இவனிற் காணப்பட்டன. ஆனல்

இந்தியாவில் மோகலாயர் ஆட்சி 85
அடக்கமற்ற வாழ்க்கை மற்றுஞ் சிறந்த குணங்களைப் பழுதாக்கின. மார்க்க விஷயத்தில் தன் தங்தையைப் போல் சமய சகிப்புத்தன்மையைக் காட்டவில்லை. 1627-ல் இவன் இறக்க இவனது மகனுன ஷாஜஹான் என்ப வன் அரசனனன். பதினருரம் நூற்றண்டின் பிற்பகுதி யில் வங்காளத்தில் போத்துக்கீசர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தனர். அவர்களுடைய பிரதான வர்த் தக நிலையமாகிய கல்கத்தாவை இவ்வரசன் கைப்பற்றி அநேக போத்துக்கீசரையும் கைதுசெய்தான். பின் தக்ஷண பூமியிற் கவனஞ்செலுத்தினன். ஆமட் நகரத் தைக் கைப்பற்றி பிஜாப்பூரையும் கொல்கொங்தையை யும் தாக்கினன். 1636-ல் பிஜாப்பூர் அரசன் சமாதான உடன்படிக்கை ஒன்றை எழுதவேண்டியதாயிற்று. இவ னது நாட்டின் எல்லையே மொகலாய இராச்சியத்தின் எல்லையாக்கப்பட்டது. தகஷ்ணத்தில் தனது மகன் அவு ரங்கசீப் என்பவனை மகாதேசாதிபதியாக்கிவிட்டு வடக்கி லுள்ள நாடுகளிற் கவனஞ்செலுத்தினன். ஷாஜஹான் செவ்வனே அரசாண்டபொழுதிலும் 1657 தொடக்கம் மூன்று வருடகாலமாக நடந்த உள்நாட்டுக் கலகம் அரசியல் நிர்வாகத்தைச் சிதைவுபடச்செய்தது. இவன் நீதி வழங்கும் குணமுடையவனுகவும் இரக்கமுடையவ ணுகவும் காணப்பட்டான். பஞ்சத்தினுல் மக்களுக்கு ஏற் பட்ட கஷ்டத்தை நீக்கினன். அவ ன து காலத்தில் பொருளாதார நிலையில் அநேக குறைகள் காணப்பட் டன. மாகாணத் தேசாதிபதிகளின் கொடுரச்செய்கை களினல் விவசாயிகளும்,தொழிலாளரும் சீவனஞ்செய்வ் தற்கும் பல இன்னல்களை அனுபவித்தனர். மார்க்க விஷயங்களில் சமய சகிப்புத்தன்மையுடையவனுகக் காணப்படவில்லே. ஸ்லாமிய சமயத்துக்குச் சனங்களை மாற்றிக்கொள்ள முயற்சிகள் செய்தான்; ஆலயங்கள் கட்டுவதைத் தடுத்தான்; யாத்திரை செய்வோரிடம் வரி அறவிட்டான். ஆனல் அவன் அன்பும், விவேகமு முடையவனுமாவான். பிரபுத்தன்மையுடைய உத்தியோ

Page 48
86 இந்தியாவில் மொகலாயர் ஆட்சி
கத்தரையே நியமித்தான். மக்கள் முறையிட்ட காலத் தில் ஒழுங்கீனமற்ற தேசாதிபதிகளை வேலையினின்றும் நிறுத்தினன். இவ்வரசனே தாஜ்மஹால் என்ற சிற் பக் கழஞ்சியத்தை மும்தாஸ்மஹால் என்ற அவனது மனைவியின் ஞாபகார்த்தமாக 1648-ல் கட்டுவித்தான்.
இவனது மகனன அவுரங்கசீப் ஒரு சிறந்த அரச வைான். இவன் மொகலாய சக்கராதிபத்தியத்துக்குள் ளமர்ந்த நாடுகளில் ஸ்லாம் சமயத்தையே பரப்ப முயற்சி செய்தான். பெரும்பான்மையோர் இந்துக்களாயிருந்த போதிலும் தன் மதத்தையே பரப்பவேண்டுமென்ற எண்ணங்கொண்டமையால் இந்துக்கள் வெறுப்புக் காட் டினர். முஸ்லீம் வர்த்தகர்கள் 2 வீதமும் இந்து சம யத்தைச்சேர்ந்த வர்த்தகர்கள் 5 வீதமும் சுங்கவரி கொடுக்கவேண்டுமென்ற ஒரு சட்டத்தை 1665-ல் உண் டாக்கினன். இரு வருடங்களின் பின் முஸ்லிங்கள் 22 வீத வரியையும் இறுக்கவேண்டியதில்லையென்றும் மற்றும் வர்த்தகர்கள் மாத்திரம் கொடுக்கவேண்டுமென்றும் கட் களை பிறப்பித்தான். பின்பு மாகாணத் தேசாதிபதி கள்மூலம் இந்துக் கோயில்களையும் பாடசாலைகளையும் அழிப்பித்தான். அரசசேவையில் முஸ்லீங்களையே எழுத் தாளர்களாக நியமிக்க வேண்டுமென்று தீர்மானஞ் செய்தபொழுது இந்துக்களின் உதவியில்லாது நிர்வா கம் நடத்துவது கஷ்டமாயிருந்தபடியால் நூற்றுக்கு ஐம்பது வீதமே இந்துக்கள் உத்தியோகம் வகிக்கமுடியு மென்று சட்டமுண்டாக்கினன். இவ்விதமாக முஸ்லீங் களுக்குப் பல சலுகைகளையுண்டாக்கினன். இந்துக்கள் மீது ஒரு தலைவரியை விதித்தான். இந்துக்கள் யானை யிலும் குதிரையிலும் சவாரிசெய்ய முடியாது. இந்துக்க ளிடம் அதிக அதிருப்தி உண்டானது. இக்காரணங்க ளால் பல இடங்க ளி லும் குழப்பங்களுண்டாயின. சிவாஜி என்ற மகாராஷ்டிர வீரன் ஒர் இந்து ஏகாதி பத்தியத்தை ஸ்தாபிக்க முயற்சி செய்தான். ஆரம்பத் தில் மொகலாய அரசனற் தோற்கடிக்கப்பட்டும் 1671

இந்தியாவில் மொகலாயர் ஆட்சி 87
தொடக்கம் இரண்டு வருடங்களுக்குள் பெரும் வெற்றி கள் பெற்று மகாராஷ்டிர ஏகாதிபத்தியமொன்றை நிறு வினன். சிவாஜி ஒரு எதேச்சாதிகாரியாக ஆளுகை Bடத்தியபொழுதிலும் தனக்கு உதவிபுரியும்பொருட்டு எட்டு மந்திரிகளைக்கொண்டுள்ள சபையை ஸ்தாபித் திருந்தான். ஒரு மந்திரி பிரதம மந்திரியாயும் ஏனையோர் சேனை, நிதி, சமயம் சம்பந்தமான பல்வகைப்பட்ட விஷயங்களுக்குப் பொறுப்பேற்றும் கடமையாற்றிவந்த னர். அவனது இராச்சியம் பல மாகாணங்களாகவும் ஒவ்வொன்றுஞ் சிறு பகுதிகளாகவும் பின்பு அவை ஒவ்வொன்றும் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. கோட்டைகள் கட்டுவதற்கும், புதிதாகக் கைப்பற்றிய இடங்களைப் பாதுகாப்பதற்கும் சேனையை வைத்திருப் பதற்கும் கடற்கொள்ளக்காரரை அடக்குவதற்கும் ஒரு கடற்படையை நிறுவுவதற்கும் நிலவருமானத்தில் 33 விகிதத்தைப் பெற்று வேண்டிய பணத்தை அறவிடுவ தற்கும் பல சேனதிபதிகள் அரசனலேயே நியமிக்கப் பட்டனர். குதிரைப்படையும், காலாட்படையுமே அவ னுடைய சேனையின் பிரதான படைகளாகும். அவன் 240 கோட்டைகள்வரையிற் கட்டியிருந்தான்.
மகாராஷ்டிரர் எல்லோரையும் ஒன்று சேர்த்து அவர்களிடையே சாதி அபிமானத்தை யுண்டுபண்ணி திறமைவாய்ந்த நிர்வாக முறையையும் ஸ்தாபித்துவிட் டது அவனுடைய சிறந்த செயலெணலாம். சிவாஜி ஒரு மதப்பற்றுள்ள இந்து, சமயத்தவனுயினும் மற்றும் சம யத்தினருக்கும் சகிப்புத்தன்மை காட்டிவந்தான். அவன் 1680-ல் இறக்க அவன் நிலைநாட்டிய ஸ்தாபனங்கள் 18-ம் நூற்ருரண்டுவரையில் சிதைவுற்றதற்குக் காரணம் அவனின் பின் அங்கே ஏற்பட்ட நிர்வாகமென்றே கூற வேண்டும். பதினெட்டாம் நூற்ருரண்டில் மகாராஷ்டிர ஏகாதிபத்தியம் பல சமஸ்தானங்களாயின. சிவாஜியின் பின் மொகலாய சக்கரவர்த்தியாகிய அவுரங்கசீப் மகா ராஷ்டருடைய கோட்டைகளையும் தலைநகரையும் கைப்

Page 49
88 இந்தியாவில் மோகலாயர் ஆட்சி
பற்றினன். அவுரங்கசீப் அரசாண்ட காலத்தில் மொக லாய சக்கராதிபத்தியம் காஷ்மீரம் தொடக்கம் தட்கூடிண பூமிவரையும் பரந்ததொன்ருரகும். 1689-ல் அவன் உன் னத நிலையையடைந்திருந்தபோதிலும் அவனது பரந்த இராச்சியத்தைத் தனித்து ஆளுவது கஷ்டமாயிருந்தது. தட்கூடிண பூமியில் நடந்துகொண்டிருந்த இடையருப் போரினல் பெரும் பணகஷ்டம் நேர்ந்தது. அரசாங்கத் தின் பணநிலை குன்றியது. மகாராஷ்டிரர் நடத்திய போரும் அவனுக்குத் தோல்வியையுண்டாக்கியது. 1707ல் அவன் இறக்க அவனுடைய ஏகாதிபத்தியமும் நிலை குலையத்தொடங்கியது.
இந்தியாவுக்கு அக்காலத்திற்சென்ற ஐரோப்பிய பிரயாணிகள் இந்தியாவின் சமூகநிலை, பொருளாதார நிலையைப்பற்றிக் கூறியது கவனிக்கித்தக்கதாகும். இங் தியாவிலுள்ள பரந்த சனத்தொகையில் சிறுபான்மை யோர் ஐசுவரியம்படைத்த மேல்வகுப்பினராவர். சிக் கனமாகச் செலவுசெய்து மத்திய வகுப்பினர் வாழ்ந்து வந்தனர். வறுமையான வாழ்க்கையை கீழ்வகுப்பினர் Bடத்திவந்தனர். அரசாங்கத்தின் வருமானத்துக்குப் பெரும்பகுதியைக் கொடுத்துவந்தோர் விவசாயிகளாகும். சிறிய அளவில் கைத்தொழிலும் சுரங்கவேலைகளும் நடைபெற்றன. மொகலாயர் காலத்தில் வர்த்தகக் கப் பல்களில்லாமையால் அங்கிய நாடுகளோடு இ க் தியர் வர்த்தகஞ்செய்ய முடியாமலிருந்தது. புகையிலை, பருத்தி பட்டு முதலியன அமோகமாக விளைவுசெய்யப்பட்டன. சில காலங்களிலேற்படும் பஞ்சமே நாட்டின் பொருளா தார நிலையைக் குழப்பமடையச்செய்தது. நா ட் டி ன் செழிப்புநிலையே உணவுப்பொருட்களே மலிவாக வாங்கு வதற்குக் காரணமாயிருந்தது. 1630 தொடக்கம் இரு வருடங்களாக நிலைத்திருந்த பஞ்சம், விவசாயம், கைத் தொழில், வர்த்தகம் முதலியவற்றை நிலைகுலையச்செய்தது.

0.
ll.
இந்தியாவில் மொகலாயர் ஆட்சி 89
வினுக்கள்
இந்தியாவில் மொகலாயர் ஆட்சி எப்போ தொடங்கியது? அக்பருக்கு முன் ஆண்ட மொகலாய மன்னர்கள் யாவர்? அக்பர் கைப்பற்றிய இடங்கள் யாவை? அக்பரின் கிர்வாக முறையை விபரித்து எழுதுக. அக்பர் மொகலாய ஆட்சியை எப்படி ஸ்கிரப்படுத்தினர்? சமய விவாதங்களே அக்பர் எவ்வாறு தீர்த்துவைத்தார்? ஜெஹாங்கீரைப்பற்றி நீ அறிந்தவற்றைக் கூறு. ஷாஜஹான் தன்னுடைய காலத்திற் செய்துமுடித்த வேலைகள் யாவை? இந்துசமயத்தவர்கள் அவுரங்கசீப்பில் ஏன் வெறுப்புக்கொண் டனர்? சிவாஜி என்பவன் யாவன்? அவனைப்பற்றி மீ அறிந்தவற்றைக் கடறு? அக்காலத்தில் இந்தியாவிலிருந்த பொருளாதார நிலையைப்பற்றி விபரி.
12

Page 50
எட்டாம் அத்தியாயம்.
ஆஷியாவும் மகாபீற்றர் செய்த தொண்டுகளும்,
ரூ விதி யா சனத்தொகையிலும் விஸ்தீரணத்திலும் பெரிய நாடாகவிருந்தபோதிலும், பதினேழாம் நூற் முண்டுவரையிலும் அதனுடைய செல்வாக்கு ஐரோப்பா வின் எப்பாகத்திலாவது செறிந்திருக்கவில்லை. ஆனல் அங்காடு ஒரு மனிதனின் விடாமுயற்சியின.இலும், ஆற் றலினலும் அக்கண்டத்தில் ஒரு பிரபலமான இடத் தைப் பெற்றது. அவனே மகாபீற்றராகும். அவன் செய்த சேவையைப்பற்றி அறியுமுன் ரூஷியாவின் நிலை யைப்பற்றியும் அதனுடைய பழைய சரித்திரத்தைப் பற்றியும் ஆராய்வது அவசியமாகும். சிலேவியச் சாதி யினரே அங்காட்டில் வசித்துவந்தனர். ஆனல் காலத் துக்குக்காலம் ஆசியாவிலுள்ள சில சாதியினர் அங்காட் டுக்குப் படையெடுத்துச்சென்றனர். அச்சாதியினரின் பரம்பரையினர் அங்நாட்டின் பலபாகங்களிலும் வசிக் கின்றனர். பதின்மூன்ருரம் நூற்றாண்டில் படையெடுத் துச்சென்ற தார்ட்டார் அல்லது மங்கோலியர் என்ற சாதியினரின் படையெடுப்பே கவனிக்கவேண்டியதொன் ருகும். அவர்கள் கிழக்கு ஐரோப்பா முழுதுஞ்சென்றமை யால் நகரங்களும், மக்கள் வசித்த பல இடங்களும் மறைவுற்றன. மூன்று நூற்றாண்டுகளாக அவர்களுடைய அநாகரிக ஆளுகையினல் அந்நாட்டு மக்கள் நிலைகுலைக் திருந்தனர்.
அக்காலத்தில் ரூ ஷியர் ஆசியாமயமாயிருந்ததே யன்றி மேற்கு ஐரோப்பிய நாகரிகம் அங்காட்டிற் பரவ வில்லை. போலாந்துச் சம வெளிகள் பால்றிக்கடல் தொடக்கம் கருங்கடல்வரையும் மேற்கு ஐரோப்பா வோடு தொடர்பில்லாமற் தடுத்துவிட்டன. வடக்கே சுவீஸ் மாகாணங்கள் பால்றிக்கடலின் தொடர்பைத் தடுத்தன. கஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்குமிடையி

ரூஷியாவும் மகாபீற்றர் செய்த தோண்டுகளும் 9.
லுள்ளவிடங்கள் தார்ட்டார் சாதியினருக்கும் துருக்கிய ருக்குமுரியனவாயின. இவ்விதமான எல்லாப் பக்கங்களி லும் தடைபட்டிருந்த ரூஷிய மக்கள் மேற்கு ஐரோப் பிய நாடுகளின் நாகரிகத்தைக் கைக்கொள்ள முடியா மற்போயிற்று. இங்கிலையில் ஆசியாவின் நாகரிகமே விளங்கியது. ஆடவர், தூங்கும் அங்கிகளை அணிந்து, நீண்ட தாடிகளையும் வளர்த்தனர். பெண்கள் தலையை வஸ்திரங்களால் மூடிக்கொண்டனர். மக்கள் 3a)עיס6נ6ש" ஒருவர் சந்தித்தவுடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ் காரஞ்செய்தனர், ஆனல் கிரேக்க வைதிகச் சமயத் தையே தழுவிக்கொண்டனர். பரிசுத்தமான கிறிஸ்த சமய வாழ்க்கையை இழந்து சமயசம்பந்தமான மூட நம்பிக்கைகளையுங் கைக்கொண்டனர்.
தற்கால ரூஷிய சரித்திர ஆரம்பத்தில் இவான் ரெரிபிள் (1533-1584) என்பவனே அரசனுக்விருந்தான். அவன் மக்களை வதைப்பதிலும், கொடுரச்செயல்களைச் செய்வதிலும் மனந்தயங்கவில்லை. மத்திய வகுப்பினருக் கும், கீழ் வகுப்பினருக்கும் அதிக சலுகைகளைச்செய்து மேற்கு ஐரோப்பாவோடு வர்த்தகத் தொடர்பையுண் டாக்கி, கல்வி விஷயத்திலும் சிரத்தைகாட்டினன். மேல் வகுப்பினருக்கு இரக்கமின்றிக் கஷ்டங்களையுண்டாக்கி னன். அவன் இறந்ததன்பின் ரூஷியா உள்நாட்டுக் கலகங்களாலும், பஞ்சத்தினுலும் பல இன்னல்களை அனுபவிக்க 5ேர்ந்தது. 1682-ல் மகாபீற்றர் சிங்காசன மேறியவுடன் ரூஷியா மேனிலையடைந்தது. அவன் ரோமனுேப்ஸ் என்ற nju அரசவமிசத்தைச் சேர்ந்த வன். மேற்கு ஐர்ேப்பாவின் Fாகரிகத்தைத் தன் நாட்டிற் பரப்புவதே அவனது முதல் நோக்கமாகும். அதை நிறைவேற்றுவதற்கு அளவுகடந்த மனத்திடத் தோடும் தைரியத்தோடும் முயற்சிசெய்தான்.
அவன் ஆறடி ஆறங்குல உயரமும், பெருந்தோற் றமுமுடையவனுவான். காருண்யமற்ற பார்வையும் பயங் கரமான குணங்களும் நிறைந்தவன். கோபங்கொள்ளுஞ்

Page 51
92 ருஷியாவும் மகாபீற்றர் செய்த தோண்டுகளும்
சுபாவத்தினல் அடிக்கடி பைத்தியக்காரன்போல் கடுமை யாய் நடந்துகொள்வது வழக்கம். பழிவாங்கும் குணமும், இரக்கமின்மையும், கொடுரச்செய்கையும் காணப்பட்ட போதிலும் சிறந்த இலட்ஷணங்களும் காணப்பட்டன. தன் கடமைகளிற் சிரத்தையெடுத்துத் தன் நாட்டின் மேலுள்ள பக்தியினுல் அதனுடைய நலத்தையே பெரி தாக நினைத்துச் சேவைசெய்தான். அறிவை வளர்ப்ப திலும் பேரவாவுடையன். அவன் தன் காலத்தில் அடக்க மற்ற முறையில் நடந்துகொள்வதற்கு இளம்பராயத்தி லேற்பட்ட சூழலும், நிலைமையுமே காரணங்களாயிருந் தன. இளம்வயதிலே அவன் நினைத்தபடி 5டந்துகொண் டான். தன்னிலும் பார்க்க முதிர்ந்தவர்களே அவனு டைய தோழர்களானர்கள். பாடசாலையில் புத்தகப்படிப் பில் அவன்மனஞ் செல்லவில்லை. கைத்தொழிலிலதிக ஊக்கத்தைக் காட்டினன். தச்சுவேலை, இரும்புவேலை நடக்கும் தொழிற்சாலைகளில் தனது நேரம் முழுவதை யுஞ் செலவழித்தான். பதினேழாவது வயதில் அரசாங் கத்தை நடத்தும்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அர சனுடைய அதிகாரத்தைக் கூட்டுவதும், மேற்கு ஐரோப் பிய வாழ்க்கை முறையை தன் நாட்டிற் புகுத்துவதும், ரூஷியாவின் ஐசுவரியத்தை வர்த்தகம், கைத்தொழில் மூலம் பெருக்குவதும் பிரபுக்களின் செல்வாக்கைக் குறைப்பதும் தன்னுடைய மு க் கிய கடமைகளென உணர்ந்தான் பிரபுக்களின் சலாக்கியங்கள், கைலஞ் சம் முதலியவற்றை மிகவும் கண்டித்தான். பழைய ரூஷிய அரசர்களுக்குப் பாதுகாப்பாளராயிருந்த போர் வீரர்கள் தனது புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற் குத் தடையாயிருந்ததினுல் அவர்களிலநேகர் அழிக்கப் பட்டனர். ரூஷிய பிரபுக்கள் மீண்ட தாடிகளை வளர்த் திருந்தமையால் அவைகள் ரூஷியாவின் பழைய வாழ்க் கைச் சின்னங்களாகுமென நினைந்து அவர்கள் தாடி களே வெட்டிக்கொள்ள வேண்டுமென்று கட்டளையிட் டான். அநேக பிரபுக்களின் தாடிகளைத் தானே

ருஷிபாவும் மகாபீற்றர் சேய்த தோண்டுகளும் 93
அறுத்துவிட்டான். பழைய முறைப்படி தாடி வளர்த் தோர்மீது ஒரு வரியும் அறவிட்டான். ஐரோப்பியரு டைய உடையையணிய வேண்டுமென்றும், பெண்கள் கீழ்நாட்டு வழக்கத்தின்படி ஒதுங்கி 15டக்கும் வாழ்க் கையையொழிக்க வேண்டுமென்னும் எண்ணமுடையவனு யிருந்தான். புரட்டாதி முதலாக்தேதியை வருட ஆரம்ப மாக வழங்காமல் மேற்கு ஐரோப்பியரைப்போல தை மாதம் முதலாங் திகதியையே வருட ஆரம்பமாக வழங்க வேண்டுமென்று கட்டளை உண்டாக்கினன், விஞ்ஞானக் கல்வியையும் கணித சாஸ்திரத்தையும் பரப்பி, அர சாங்க நிர்வாகத்தையும் திருத்தியமைத்தான். ரூஷியா வுக்குக் கடலுக்குச்செல்லும் மார்க்கமொன்றும், துறை முகமும் அவசியங் தேவையெனவுணர்ந்து கடற்படை யொன்று நிறுவப்படவேண்டுமென்று தீர்மானித்தான். தன் கோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒல்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குச்சென்று கப்பல் செய்யுந்தொழிலைத் திறமையுடன் கற்றுக்கொண் டான். ஒரு வேலையைத் திறமையுடன் செய்துமுடிக்க வேண்டின் தானகவே செய்யவேண்டுமென்று பீற்றர் கூறிக்கொள்வர். ஒரு தொழிலாளிபோலுடையணிந்து கொண்டு அம்ஸ்ரடாம் துறைமுகத்திலுள்ள கப்பல்செய் யும் தொழிற்சாலையில் வேலைசெய்து அத்தொழிலைப் பழகிக்கொண்டான். அங்கிருந்த நான்கு மாதகாலத்தி லும் கடதாசி செய்யுக் தொழிற்சாலை, மாவரைக்குங் தொழிற்சாலை, அச்சியந்திரசாலைகள் இன்னும் பல தொழிற்சாலைகளுக்குக் சன்று ஆங்காங்கேயுள்ள கைத் தொழில்களை கெதியாகவும் நுணுக்கமாகவும் பழகிக் கொண் டான். ஒல்லாந்திலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று அரசருக்குரிய ஆடம்பர வாழ்க்கையை நீக்கி சாமானிய தொழிலாளிபோல் கப்பல்செய்யும் தொழிற் சாலைகளில் வேலைசெய்தான். அங்கிருந்து தன் நாட் டுக்குச் சென்றபொழுது 700 ஆங்கிலேயத் தொழிலா ளரை அழைத்துச்சென்று வீதிகளையும், பாலங்களையும்,

Page 52
9: ருஷியாவும் மகாபீற்றர் செய்த தொண்டுகளும்
கப்பல்களையும், கால்வாய்களையும், பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் கட்டுவித்தான். ஒரு சிறந்த கடற் படையொன்றை நிறுவி அசோவ் என்ற துருக்கியரு டைய அரணைக் கைப்பற்றினன் (1696). பின்பு ஜேர் மனியருடைய சேனையைப்போல் ஒரு சேனையையுங் திரட்டி அதற்குப் பயிற்சி அளித்துச் சிறந்ததொன்ருரக ஆக்கிவைத்தான்.
இவைகள் எல்லாம் நிறைவேற்றியபின் பால்றிக் கடலுட் பிரவேசிப்பதற்கு ஒரு துறைமுகம் ரூஷியா வுக்கு வேண்டுமென்று நினைந்து அவ்வெண்ணத்தையும் பூர்த்திசெய்ய ஆரம்பித்தான். பால்றிக் கடலைச் சூழ்ந் துள்ள மாகாணங்கள் யாவும் சுவீடனுக்கேயுரியன. அக் காலத்தில் சுவீடனுக்கு அ ர ச ன் பன்னிரண்டாவது சாள்ஸ். இவன் 1897-ல் சிங்காசனமேறியபொழுது பதி னைந்து வயதுடைய இளைஞனகவிருந்தான். இவன் பிடி வாதமும், மனத்திடமும், போர்த்திறமையு முடையவன். டென்மார்க், ரூஷியா, போலாந்து முதலிய வட ஐரோப் பிய இராச்சியங்கள், பால்றிக் கடலின் தென்கரைக் கணித்தாயுள்ள சுவீடனுக்குரிய மாகாணங்களைக் கைப் பற்றுவதற்காக 1700-ல் ஒன்றுசேர்ந்து படையெடுத் துச் சென்றன. சாள்ஸ் துணிவோடு எதிர்த்து நின்று போர்செய்து டென்மார்க்கரசனையும், போலாந்து அரச னையும் பல சண்டைகளிற் தோற்கடித்து ரூஷியா வோடு சண்ட்ைசெய்து ஆரம்பத்தில் வெற்றிபெற்றன். பின்பு மொஸ்கோ 5 கர்மீது பெருஞ்சேனையோடு படை யெடுத்துச் சென்றன். புல்ரோவா என்ற இடத்தில் 5ாலு பங்கு கூடிய ரூஷிய சேனையோடு சண்டைசெய்ய நேர்ந் தது. சாள்ஸின் போர்வீரர்கள் கடந்த களைப்பும், தாக மும், பசியும் மேலிட்டு இருந்தபோதிலும் வீரத்தோடு சண்டைசெய்தனர். எண்ணற்ற பெருஞ் சேனையோடு செய்த அச்சண்டை பயனற்றதாயிற்று. அவர் க ள் தோல்வியுற்றதுமல்லாமல் முற்றுக அழிக்கப்பட்டனர் (1709), சாள்ஸ் தெற்குbோக்கித் துருக்கைக்கு ஓடினுன்

ரூஷியாவும் மகாபீற்றர் செய்த தொண்டுகளும் 95
பின்பு ஐரோப்பாவுக்கூடாக ஒரே ஒரு தோழனேடு சென்று தன் நாட்டையடைந்தான். நான்கு வருடங் களின்பின் நோர்வேயில் நடந்த ஒரு சண்டையிலிறக் தான,
புல்ரோவா சண்டையின்பின், பின்லாந்துக் குடா நாட்டின் கரைக்கண்மையில் சுவீடனுக்குரிய மாகாணங் கள் யாவும் மகாபீற்றர் கையிற்சிக்கின. இப்பகுதியி லேயே பீற்றேர்ஸ்பேக் தலைநகரைக் கட்டினன். கனது இராச்சியத்துக்கு மொஸ்கோ தகுந்த தஃநகரமல்ல வென்று பீற்றர் நினைத்திருந்தான். அது நாட்டின் நடு மத்தியிலிருந்தமையால் ஏனைய தலைநகரங்களிலிருந்து போக்குவரவு கஷ்டமாகக் காணப்பட்டதுமல்லாது அத அனுடைய வீதிகள், கட்டடங்கள், சூழ்நிலை யாவும் ஆசிய மயமாயிருந்தனவேயன்றி மேற்கு ஐரோப்பிய நாடுக ளின் நிலைபோற் காணப்படவில்லை. இக்கர் ரணங்களி னலேயே அதை நீக்கி, வசதியான கலைநகரம் ஒன்றை அமைக்க வேண்டுமென மகாபீற்றர் எண்ணங்கொண் டார். நேவா ஆறு பின்லாந்துக் குடாவுக்குள் விழும் பகு தியில் தனது புதிய தலைநகரத்தை அமைக்கும் ஸ்தான மாகக்கொண்டு அவ்வேலையை முடிப்பதற்கு ஒரு இலட் ஷம் தொழிலாளிகளை இராச்சியத்தின் பல பாகங்களிலு மிருந்து தெரிந்தெடுத்து அவ்வேலையை ஆரம்பித்தான். ஒன்பது வருடகாலமாகக் கோடையிலும் மாரியிலும், உணவின்றியும், ஒதுக்கில்லாவிடங்களிலும், தகுந்த ஆயு தங்களில்லாமலும், மண்வெட்டியின்றித் த டி க ள |ால் நிலத்தை உரோஞ்சி மண்ட் எடுத்தும் ஏழைத் தொழி லாளர் அநேகர் தினமுமிறந்தும் ஓயாது வேலை செய்வா ராயினர்.
அந்தத் தலைநகரத்தைக் கட்டிமுடித்தபின்பு நாட் டின் பலபாகத்திலுமிருந்து 30000 விவசாயிகளே அங்கே குடியேற்றினன். ரூஷியாவிலுள்ள பிரபுக்கள் ஒவ்வொரு வரையும் அந்நகரத்தில் மேல்வீடுகளைக் கட்டும்படி ஏற் பாடுசெய்தான். தானும் விசித்திரமான அரண்மனைகளை

Page 53
96 ருஷியாவும் மகாபீற்றர் செய்த தொண்டுகளும்
யும், ஆலயங்களையும், பொது ஸ்தாபனங்களையும் கட்டி அலங்கரித்தான். மகாபீற்றரின் ஞாபகசின்னமாக அந்த அழகுவாய்ந்த நகரம் விளங்குகின்றது. முழு ரூஷியா வுக்கும் சக்கரவர்த்தியாகவும், மகாபீற்றரெனவும், தங் தையர்நாட்டுத் தந்தையாகவும் 1721-ல் மக்களால் பாராட் டப்பட்டான். ஐம்பத்துமூன்றாவது வயதில் (1725) தன் நாட்டின் சேவையினலும் உழைப்பினலும் இளைப்புற் நுத் தேகவியோகமானன். கைத்தொழிலை விருத்திசெய் தும், பாடசாலைகள், நூல்நிலையங்கள், நூதனசாலைகள் ஒவியக் களஞ்சியங்கள் என்பனவற்றை ஸ்தாபித்தும், பல மாகாணங்களைக் கைப்பற்றி ரூஷியாவைப் பரந்த இராச்சியமாக்கியும் இன்னும் பல்வேறு நன்முயற்சிக ஆளச் செய்தும் தற்கால ரூஷியாவுக்கு அடிகோலி வைத்தான்.
பீற்றரின் பின் ஆண்ட அரசர்களுக்கு ஓர் வலோற் காரமான இராசதந்திரமுறையைக் ன்கயாளத்தக்கதாக வழிகாட்டிவைத்தான். ரூஷியாவைச் சூழ்ந்திருந்த நாடு கள் சுவீடனைப்போல் பலமற்றதாய் அல்லது துருக்கி யைப்போல் வலிமைகுன்றியதாய் அல்லது போலாங் தைப்போல் கிலைகுலைந்ததாய் அல்லது சீரற்ற மத்திய ஆசியாவைப்போல் இருந்தன. ஆனல் ரூஷியா மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடுகளையோ அ ல் ல து பலத்த இராச்சியமெதனையோ கைப்பற்றிப் பெருமையடைய வில்லை. ஆனல் பீற்றர் செய்த நன்முயற்சியினுல் ரூஷியா 18-ம் நூற்ருரண்டில் படிப்படியாக முன்னேற்றமடைந்து தற்போது ஒரு ஐரோப்பிய வல்லரசாக விளங்குகிறது.
வினுக்கள்
1. பழைய காலத்தில் ரூஷியாவுக்குப் படையெடுத்துச்சென்ற சாகி
யினர் யாவர்?
2. எந்த நாகரிகம் அந்நாட்டிற் பரவியது?
3, இவான் ரெரிபிள் என்பவனின் ஆளுகையைப்பற்றிக் கூறு

ரூஷியாவும் மகாபீற்றர் செய்த தோண்டுகளும் 97
4. மகாபீற்றரின் குனுதிசயங்கள் யாவை?
5. மகாற்ேறர் தனது முக்கிய கடமைகள் யாவையென உணர்ந்தான்?
மேற்கு ஐரோப்பிய நாகரிகத்தைப் புகுத்துவதற்காக மகாற்ேறர் என்ன மாற்றங்களைச் செய்தார்?
ரூஷியாவுக்குக் கடற்படை வேண்டுமென மகாற்ேறர் எண்ணிய
தற்குக் காரணமென்ன?
8. மகாபீற்றர் பிறநாடுகளுக்கு ஏன் சென்ருர்?
I0,
சுவீடன்தேசத்து அரசைேடு மகாபீற்றர் சண்டைசெய்ததற்குக் காரணமென்ன?
ரூஷியாவுக்கு மசுாபீற்றர் செய்த கொண்டுகள் யாவை?
13

Page 54
ஒன்பதாம் அத்தியாயம் பிரஷ்யாவின் எழுச்சி
ஜேர்மன் நாடுகள் யாவும் ஐக்கியம் பூண்டு, ஜேர் மனி ஐரோப்பாவில் ஓர் வல்லரசாகத் திகழ்வதற்கு பிரஷ்யாவின் எழுச்சியே காரணமாயிருந்தது. ஆகை யால் பிரஷ்யாவின் முன்னேற்றத்திற்கும் எழுச்சிக்கு முரிய காரணங்களை ஆராய்தல் வேண்டும். பிரஷ்யா வின் வளர்ச்சிக்கு மூன்று பிரதான நியாயங்களுள. பிரான்டன்பர்க் என்ற பகுதியே அந்நாட்டின் இரு தயம்போல் வி ள ங் கி யது. பிரான்டன்பர்க்கோடு சேர்ந்து பிரஷ்யாவென வழங்கிவந்த நாடுகள் இரண் டாவது கா ர ண  ெம ன ல 7 ம், அப்பெயரையே முழு நாடும் பின்பு பெற்ற து. ஹொஹென்ஸொல்லேண் வமிசம், விவாகத் தொடர்புகளாலும் , இராச தந்திரத்தி ணு,லும், அதிர்ஷ்டத்தினுலும் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு ஸ்திரமான நாடாக்கியது. பிரான்டன் பர்க்கை ஆண்டுகொண்டிருந்தவன், பரிசுத்த ரோம சக்கராதிபதியைத் தெரிவு செய்வதற்குக்கூடிய உரி மையைப் பெற்றிருந்ததனுல் அவன் 'மகா தேர்தல் தலைவன்’ என அழைக்கப்பட்டான். 1640-ல் பிரெட ரிக் உலில்லியம், மகா தேர்தல் தலைவன் என்ற பெய ருடன் அரசனனன். கற்காலப் பிரஷ்யாவின் பெரு மைக்கு அத்திவாரமிட்ட பெரியார்களிற் சிறந்த ஒருவ குைம். மனத்திடமும், எடுத்த காரியத்தை முடிக்கும் வன்மையும், எதேச்சாதிகாரியாக ஆளுங் தன்மையும், வசீகரமற்ற இயல்புமுடையவன். நாட்டின் நன்மைக்கா கச் சேவை செய்வதில் அவனும் அவனைச் சேர்க்கோ ரும் ஊக்கம் குன்றமலுழைத்தனர்.
அவன் சிங்காசனமேறிய காலத்தில் முப்பதாண்டு யுத்தத்தால் நாடு சனத்தொகையில் அரைவாசியை இழந்துவிட்டது. பணத்தையும், நிலங்களையும், ஐரோப்

பிரஷ்யாவின் எழுச்சி 99
பாவின் பல பாகங்களிலுமுள்ள மக்களுக்கு இலவச மாக ஈந்து தன் நாட்டிற் குடியேற்றினன். பிரான்சு தேசத்திலிருந்து வெளியேறிய புரட்டஸ்தாந்து மக் களைத் தன் நாட்டிற் குடியேற வசதிகளை ஏட்படுத்தி னன். இவ்விதமாக 50000 தொழிலாளிகள் பேர்லின் நகரத்திலும் அதன் அயற் பாகங்களிலும் குடியேறி னர். முப்பதாண்டு யுத்தத்தின்பின் எழுதப்பட்ட உவெஸ்ட்பேலியா உடன்படிக்கையின் பிரகாரம் கிழக்கு போமெரேனியாவைப் பிரஷ்யா பெற்றதில் கடலுட் பிரவேசிக்கும் வழியும் திறக்கப்பட்டது. அதன்பின் 15ாடு முழுவதையும் ஒன்றுபடுத்துவதே மகா தேர்தற் தலைவனின் முக்கிய கடமையாயிருந்தது. வர்த்தக முன் னேற்றத்திற்கும் சேனைப்படையைத் திருத்தியமைப்ப தற்கும் வேண்டிய முயற்சிகளைச் செய்தான்.
நாட்டின் பல பாகங்களிலும் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள சபைகள் யாவற்றையும் நீக்கி நிர்வாகப் பொறுப்பு முழுவதையும் தானே ஏற்று தன்னுடைய ஆலோசனைச் சபைமூலம் விஷயங்களே நடத்தினன். இதுவே நாடு முழுவதையும் ஒன்று சேர்ப்பதற்குச் செய்த முதல் முயற்சியாகும். கால்வாய்களையும் வெட்டி 5ாட்டின் கைத்தொழில்களை பாதுகாப்புத் தீர்வைச் சட்டங்கள் மூலம் ஆதரித்தான். பிரான்சு தேசத்திலி ருந்து நாடு கடத்தப்பட்டு பேர்லின் நகரத்திற் குடி யேறிய புரட்டஸ்தாந்து மக்கள் பல சலுகைகளை அனு பவித்து விவசாயம், கைத்இதாழில் ஆகிய இரு துறை களிலும் நன்முயற்சிகள் செய்து காட்டின் பண நிலை யையும் வருவாயையும் பெருக்கினர்.
1700-ல் மகா தேர்தல் தலைவ5ரின் மகன் முத லாம் பிரடெரிக் பிரஷ்யாவின் அரசனுகச் சிங்காகன மேறினன். அவன் அதி விவேகமும் பைத்தியத்தன மும் பொருந்திய ஒருவனுகக் காணப்பட்டான். மகா
பீற்றரைப்போல் அடிக்கடி சினங்கொள்ளுங் குணமு

Page 55
100 பிரஷ்யாவின் எழுச்சி
டையவனுகையால் அவனுடைய மந்திரிமாரும், அவ லுக்குக் கிட்டவுள்ள மற்றையோரும் பயத்தினுல் நடுங் கினர். அவன் வீதி வழியே உலாவச் செல்லும்போது வழியிற்காணும் பிரசைகள் கரடியைக்கண்டு பயந்தது போல் ஒடி ஒளிப்பார்கள். உணவு அருந்தும்போது காரணத்தோடோ அல்லது காரணமில்லாமலோ பாத்தி ரங்களை எடுத்து வீசிவிடுவதுண்டு. அந்நேரத்தில் தன் பிள்ளைகளை அடிப்பதும் உதைவதும் மயிரிற் பிடித்து இழுப்பதுமுண்டு. தங்தைக்கும், மகன் மகா பிரடெரிக் குக்குமிடையில் கித்திய ச ச் ச ர வு ஏற்படுவதுண்டு. தந்தைக்கு நிஷ்டூரமும், கல்வியில் விருப்பின்மையும் வெறுக்கத்தக்க குணங்களும் உடையவனுயும், மகன் கல்வியில் அவாவும், பரந்த நோக்கமும், குடிவகையில் வெறுப்பும், உடையவனுய் இருபேரும் ஒருவருக்கொரு வர் நேர்மாருரன குணங்களையுடையவரானுர்கள். தங் தையிடமிருந்து தப்பி ஓடுவதற்கு எத்தனித்தபொழுது அவன் கைதிசெய்யப்பட்டு அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சக் க ர வர் த் தி தலையிட்டமையால் அவன் ஈற்றில் மன்னிக்கப்பட்டான்.
ஆனல் பிரஷ்யா, ஐரோப்பாவில் முத ன்  ைம பெற்ற நாடாக்கப்படவேண்டுமென்ற பேரவா அவ்வர சனுக்கு உண்டு. அதை கிறைவேற்றுவதற்கு நிறைந்த பொக்கிஷமும், பெருஞ் சேனையும் தே  ைவ யெ ன உணர்ந்தான். பொருளை ஈட்டும்பொருட்டுத் தந்தையின் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்ததோடு, பல மந்திரி மார்களை வேலையினின்று நிறுத்திவிட்டான். தானும் சிக்கனமான வாழ்க்கையை நடாத்தி குடும்பச் செல வையும் குறைத்து 15டத்தினன். தனது குதிரைகளையும் விலையேறப்பெற்ற வண்டிகளையும் விற்று பொன் வெள் ளியினற் செய்யப்பட்ட நகைகளையுமுருக்கி நாணயங் கள் செய்தான். இவ்விதமாக ஏராளமான பொருளைச் சம் பா தி த் தா ன். தான் ஒரு எதேச்சாதிகாரியாக ஆளுகை நடத்திவந்தான். பழைய சரித்திரம், அங்கிய

பிரஷ்யாவின் எழுச்சி 10.
நாடுகளின் சரித்திரம் கற்பதிலொரு பிரயோசனமில்லை யென்றும் யாபேரும் பிரஷ்யாவின் சரித்திரத்தையே படிக்கவேண்டுமென்ற எண்ணமுடையவன யிருந்தான். அவன் சண்டையிலீடுபடாமற் சமாதானம் நிலவச் செய்தபோதிலும், மாபெருஞ் சேனையொன்றை நிறுவி னன். அவன் அரசனுன காலத்தில் 20000 போர்வீரர் களைக் கொண்டுள்ள சேனை அவன் இராச்சிய பரி பாலனத்தைக் கைவிடும்பொழுது 80000 போர்வீரர்க ளைக் கொண்டுள்ள கிரந்தரப்படையாக விளங்கியது.
1740-ல் முதலாம் பிரெடரிக் உலில்லியத்தின் மக னை இரண்டாவது பிரெடரிக் சிம்மாசனமேறியபொ ழுது அவுஸ்திரிய சிம்மாசனப் போர் தொடங்கியது. அவுஸ்திரியாவின் அரசனும், சக்கரவர்த்தியுமரன ஆரும் சாள்ஸ் ஆண் மக்களில்லாமையால் தனது மகள் மரியா திறெஸா, தானிறந்தபின் அரசியாகவேண்டுமென்று ஐரோப்பாவிலுள்ள வல்லரசுகளின் சம்மதத்தைப் பெற் ருரன். அதுவே பிறெக்மாற்றி சாங்ஸன் அல்லது தத்து வார்த்த அனுமதி எனப்படும். 1740-ல் சாள்ஸ் இறக்க பிரான்சு, ஸ்பானியா, பவேரியா, சாக்ஸனி அவுஸ்தி ரியா இராச்சியத்தின் பல்வேறு பாகங்களையும் கவர்ந்து கொள்ள முன்வந்தன. அதற்கிடையில் பிரஷ்ய மன் னணுகிய பிரெடரிக் போருக்கெழாமல் அவுஸ்திரியா வுக்குரிய சிலீவியா என்ற செழிப்பான மாகாணத் துக்குள் பெரிய சேனையுடன் புகுந்தான். பொக்கிஷம் வெறுமையாயும் சேனை ஆயத்தமுமின்றி யிருந்தமையா ஆறும் அவுஸ்திரியா எதிர்த்து போராட முடியாத நிலை யிலிருந்தது. ஆனல் மரிய திறெசா தேசாபிமான உணர்ச்சியை பிரசைகளிடத்து உண்டாக்கியபடியால் பெருஞ் சேனை ஒன் ஆறு திரட்டப்பட்டது. யுத்தங் தொடங்கியவுடன் பிரான்சு, பிரஷ்யாவையும் பிரித்தா னியா, அவுஸ்திரியாவையும் சேர்ந்துகொண்டன. சிலீஸி யாவில் மரியா திறெசாவின் படை தோற்கடிக்கப்பட் டது. பொகீமியாவுக்குள் பிரான்சிய பவேரியப்படை

Page 56
102 பிரஷ்யாவின் ஏழுச்சி
கள் புகுந்துவிட்டன. அந்நிலைபரத்தில் மரியா திறெசா ஹங்கேரியிலுள்ள பிரசைகளுக்கு வேண்டிய சலுகை களைக் கொடுத்து அவர்களுடைய உதவியைக் கோரி ள்ை. உடனே ஒரு பெரிய ஹங்கேரியபடை பொகீமி யாவுட் புகுந்தவுடன் பிரான்சியப்படை தப்பி ஒட நேர்ந்தது. ஆங்கிலேயர் பணவுதவி செய்ததோடு Bெத லாந்துக்கு ஒரு சேனையையுமனுப்பினர். டெற்றின்ஜன் என்ற சண்டையில் வெற்றிபெற்றனர். பின்பு பொன் ரினுேய் (1745) என்ற சண்டைபிற் தோல்வியுற்றதினல் பிரான்சியப்படைகள் Bெதலாந்துக்குள் புகுந்தனர். 1748-ல் எச்சிலாச் சப்பேல் என்ற உடன்படிக்கை எழு தப்பட்டது. சிலீஸியா பிரெடரிக் கையிற் சிக்கியது. அதனல் பிரஷ்யாவின் இராச்சியம் கூடிய விஸ்தீரண மும் சனத்தொகையும் கூடியதொன்ருரனது மல்லாது ஐசுவரியமும் செழிப்புமடைந்தது. அவ்வண்ணமான ஒரு நாட்டை இழக்க மரியா திறெசாவுக்கு மனவிருப்ப மில்லை. அதை எவ்விதமும் கைப்பற்றவேண்டுமென்ற நோக்கத்துடன் எட்டு ஆண்டுகளாக ச ன்  ைட க் கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தாள்.
இதுவரையும் எதிரிகளாகவிருந்த பிரான்சு ம் அவுஸ்திரியாவும் ஒற்றுமைபூண்டு, பிரஷ்யாவின் செல் வாக்கிற் பெருமை கொண்டிருந்தரூஷியா, சுவீடன், சாக் பெனி, போலாந்து என்ற நாடுகளையுந் தங்களுடைய பக்கஞ் சேர்த்துக்கொண்டனர். அவுஸ்திரியா பிரான் சோடு நட்புப்பூண்டமையால் இங்கிலாந்து பிரெடரிக் கோடுசேர்ந்து கொண்டது. 1756 ல் தொடங்கிய அவ்யுத் தமே ஏழாண்டுயுத்தமெனப்படும். அவுஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்குமிடையிலுள்ள பகைமையயும், ஆங்கிலே யருக்கும் பிரென்சுக்காரருக்கும் இந்தியாவிலும், கனடா விலும் ஏற்பட்டவர்த்தகப்போட்டியே இவ்யுத்தத்துக் குரிய பிரதான காரணங்களாம். கனடாவிலும், இந்தி யாவிலும் ஆங்கிலேயர் பெரும் வெற்றிகளைப் பெற்று பிரென்சுக்காரரின் ஆதிக்கத்தையுங் குறைத்து கனடா

ழிரஷ்யாவின் எழுச்சி 103
விலிருந்து அவர்களே முற்றுகத் துரத்தியும் விட்டனர். ஆரம்பத்தில் ஆங்கிலேயர் பெரும் வெற்றிகளை ஐரோப் பாவில் பெருரதிருந்தபொழுதிலும் மூத்தபிற் இங்கிலாங் துக்குப் பிரதமமந்திரியாகவந்தவுடன் ஏழாண்டுயுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது" பிரான்சியருடைய பலத்தை ஐரோப்பாவிலேயே குறைத்து கனடாவைச் கைப்பற்றுவதகாகக் கூறினன். பிரெடரிக்கின் சேனை கள் சில வெற்றிகளைப்பெற்ற பொழுதிலும் அவுஸ்திரிய ரூஷியப் படைகளாற் தோற்கடிக்கப்பட்டன. பேர்லின் நகரமே எதிரிகளின் கையிற்சிக்கின. ஆங்கிலேயப் போர் வீரர்களும் ஹனேவப் போர்வீரர்களும் கொண்டுள்ள படையின் உதவியைக்கொண்டு திறமையுடன் போர் செய்து 1757 ல் ருே ஸ்பாக் என்ற இடத்தில் பிரான்சி யப் படையைத் தோற்கடித்தான். பின்பு உ லூ த ன் சண்டையிலும் வெற்றிபெற்றன். பிற் அனுப்பிய ஆங்கி லேயப்படையும் பெருந்துண் புரிந்தது ஆனல் சீக்கிரத் தில் பிரெடரிக் மன்னனுக்குத் தோல்விக்குரிய அறி குறிகள் தோன்றின. ஆரம்பத்தில் பிரெடரிக்கிடமிருந்த சிறந்த போர்வீரர்கள் இறந்து விட்டனர். பணநிலையும் குன்றியது. மூன்றும் ஜோர்ஜ் மன்னனேடுரிய அதிருப்தி காரணமாக பிரதம மந்திரியாகிய மூத்தபிற்றும் தனது பதவியினின்று விலகிவிட்டார்.
பிரஷ்யாவின் அதிஷ்டத்துக்கு ரூஷிய அரசியாகிய எலிஸபெத் இறந்துவிட மூன்றாவது பீற்றர் அரசனுக வந்ததும் அவன் பிரெடிக்கோடு நட்புப்பூண்டான். இந்தப்பெரிய புத்தத்தினுல் ஐரோப்பா முழு வ தும் களைப்புற்றது. 1763 ல் பாரிஸ் உடன்படிக்கையின்படி யுத்தம் முடிவடைந்தது. சிலீஸியா பிரஸ்யாவின் ஒரு பகுதியாயே அமர்ந்தது. மனறுவுதியினலும் ஊக்கத்தி னுலும் வெற்றியடைந்த பிரடெரிக்கைக் கண்டு யாவரும் வியந்தனர். பாரிஸ் உடன்படிக்கையின் பின் பிரெட ரிக் ஒரு சண்டையிலும் கலந்துகொள்ளவில்லை. நாட் டின் நன்மைக்காக உழைப்பதே மக்களின் முதன்

Page 57
60T 6Tps
பிரஷ்யாவி
104
내해學法****해 Ç'ijski Loss
·... X șit shōssigt Joil_GusGỬį}?
cosseï
 

பிரஷ்யாவின் எழுச்சி ()5
நோக்கமெனக் கருதினன் பெரும் கடமைக?ளத்கானே ஏற்றுக்கொண்டதன்று மற்றவர்களும் அதேபோன்ற கடமைகளைச் செய்து கொள்ளவேண்டுமென ஏற்பாடு செய்தான். யுத்தத்தினலேற்பட்ட அழிவு அதிகமாகை யால் காட்டைப் பழையபடிதிருத்தி அமைக்கவேண்டி யிருந்தது. விவசாயமும் வர்த்தகமும் அரசாங்கத்தினுதவி யுடன் உற்சாகப்படுத்தப்பட்டன. யெளவனப்பருவங் தொட்டு பிரான்சிய தத்துவஞானிகளின் மாணுக்கனகை யால்,சமய சகிப்புத்தன்மை யுடையவனனன். அதோடு குற்றவாளிகளை வ ைத க்கும் வழக்கத்தை அறவே யொழித்தான். அவனுடைய நன்முயற்சிகள் நல்லபலனை நாட்டுக்கு அளித்தன. 1772 ல் போலாந்தில் ஏற்பட்ட குழப்பங்காரணமாக பிரஷ்யா, ரூஷியா அவுஸ்திரியா மூன்றும் ஒன்று சேர்ந்து அங்காட்டைத் தங்களுக்குட் பங்கீடுசெய்தனர். இதுவே போலாந்தின் "பங்கீட்டுப்பிரி வினை’ எனப்படும். பெரும்பகுதியை ரூஷியாபெற்றது. ஆனல் பிரஷ்யா சிறியளவாயினும், விசேஷமான பகு தியைப்பெற்றது. பிரான்டன்பேர்க்கோடு அ ப் பகுதி இஃணக்கப்பட்டதால் பிரஷ்யா பலத்தையும் ஒற்றுமை யையும் பெற்றது.
சிதறிக்கிடந்த பிரான்டன்பர்க், பிரஷ்யா, சிலி ஸியா ஆகிய பகுதிகளை ஒன்றுபடுத்தி பிரஷ்யாவை 69Cl5 வல்லரசாக்கி வைத்த பெருமை மகா பிரெடரிக் குக்கே உரியது. பின்பு ஜேர்மன் நாடுகளை ஒன்று சேர்த்து ஐக்கியம் பூணச்செய்த பெருமை வல்லரசாய் விளங்கிய பிரஷ்யாவுக்கே உரியது.
வினுக்கள்
1. பிரஷ்யாவின் வளர்ச்சிக்குரிய காரணங்கள் யாவை ? 2. டிரெடரிக் உலில்லியத்தைப் பிரஷ்யமக்கள் ஞாபகத்தில் வைத்
திருப்பதற்கு நியாயமென்ன? 3. பிரெடரிக் உவில்லியத்தின் நிர்வாக முறையை விபரி,
14

Page 58
பிரஷ்யாவின் எழுச்சி
முதலாம் பிரெடரிக்கைப்பற்றி மீ அறிந்தவற்றைக் கூறு அவுஸ்திரிய சிம்மாசனப்போரின் காரணங்களை ஆராய்க.
அவுஸ்திரிய சிம்மாசனப் போரில்ை மரிய கிறெசாவுக்கு Sri
பட்ட நஷ்டங்கள் யாவை ?
ஏழாண்டு யுத்தத்தின் காரணங்களை ஆராய்க. ஏழாண்டு யுத்தத்தின்பின் மகா பிரெடரிக் பிரஷ்யாவில் ஏற் படுத்திய விசேஷ மாற்றங்கள் யாவை?
மகா பிரெடரிக் தன் காட்டுக்குச் செய்த சேவைகள் என்ன ?

பத்தாம் அத்தியாயம்
இங்கிலாந்தில் ஹனுேவமன்னர்களின் ஆட்சி இங்கிலாந்தில் 1688-ல் நடைபெ ற்ற மாபெரும் புரட்சி
யின் பயனக யாவராலும் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் உரிமைச்சட்டமும், அரசுரிமைத் தீர்ப்புச்சட்டமும் வரம் புடை முடியரசை ஸ்தாபித்துவிட்டன. புரட்டஸ்தாந்து மதத்தைச்சேர்ந்த ஒருவரே இங்கிலாந்தை ஆளலா மென்று அச்சட்டங்களில் வற்புறுத்தப்பட்டமையால் ஜேர்மனியிலுள்ள ஹனுேவ வமிசத்தைச்சேர்ந்த இள வரசனே முதலாம் ஜோர்ஜ் மன்னன் என்ற பெயருடன் 1714-ல் இங்கிலாந்துக்கு அரசனனுன்.
தற்காலத்தில் சன5ாயக ஆட்சிமுறையைத்தழுவி அரசாங்கத்தை நடத்தும் நாடுகளில் பெரும்பான்மைக் கட்சியே அரசாங்கப் பொறுப்பையேற்று நிர்வாகத்தை நடத்துவதை நாம் அறிவோம். இங்கிலாந்தில் கட்சிகள் எப்போ தோன்றினவென்றும், கட்சி ஆட்சிமுறை யாருடைய காலத்திற் தோன்றி எப்போ பலமடைந்தது என்பனவற்றைப்பற்றி ஆராயவேண்டும். இரண்டாம் சாள்ஸ் மன்னன் காலத்தில் இங்கிலாந்து மக்களில் ஒரு சாரார் அரசனுடைய சகோதரன் இரண்டாம் ஜேம்சை அரசனுக்க முடியாதென்றும், இன்னுெருசாரார் அவ ஃனயே அரசனுக்கவேண்டுமென்றும் வாதித்தனர். அந்த இருசாராரும் பின்பு விக், டோரி என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். డిrg ம் உவில்லியம் ஆண்ட காலத்தில் கட்சி ஆட்சிமுறை ஆரம்பித்தது. அன்னி இராணியினுடைய காலத்தில் பிரதானமாக பிற்பகுதி யில் கட்சி விவாதங்கள் அதிகரித்தன. விக் கட்சியினர் வரம்புடை முடியாட்சியை ஆதரித்தனர். டோரிக்கட்சி பினர் பழைய தெய்வீக அரசுரிமைக் கொள்கையை பும் சம்மதமான கீழ்ப்படிவையும் விரும்பினர். விக் கட்சியினர் சமய சகிப்புத்தன்மையையும், எதிர்க்கட்சி

Page 59
U8 இங்கிலாந்தில் ஹனேவமன்னர்களின் ஆட்சி
யினர் ஆங்கிலேய ஆலய வழிபாட்டையே ஆதரிக்கும் தன்மையுடையவர்களாயும் காணப்பட்டனர். விக் கட்சி யினர் ஹனேவ வமிச மன்னனையும், டோரிக்கட்சியி னர் இரண்டாம் யேம்ஸின் மகனையும் ஆதரித்தனர். முதலாம், இரண்டாம் ஜோர்ஜ் மன்னர்களுடைய காலத்தில் விக் கட்சி அரசாங்கத்தில் பிரபல ஸ்கா னத்தைப் பெற்றது. டோரிக்கட்சியினருக்கு ஸ்ரூவட் வமிசத்தவர்களின் அனுதாபமிருந்தமையால் அவர்க ளில் நம்பிக்கை குறைந்தது. முதலாம் ஜோர்ஜ் மன் னன் காலத்தில் முதல் கூட்டப்பட்ட பாராளுமன்றத் தில் விக் கட்சியினரே பெரும்பான்மைக் கட்சியினராக விருந்தனர். முதலாம் ஜோர்ஜ் மன்னனுக்கு ஆங்கிலம் கொஞ்சமேனுங் தெரியாது. அவன் சிங்காசனமேறிய காலத்தில் அவனுக்கு வயது ஐம்பத்துநாலாகும். ஆங் கிலப் பாஷையைப் படிக்கவோ அல்லது இங்கிலாங் தின் அரசியல் விஷயத்தைப்பற்றி அறியவோ அவன் சிரத்தை எடுக்கவில்லை. ஹனேவரிலேயே அரைவாசிக் காலத்தைச் செலவிட்டதினல் பிரித் தா னியா வில் அவனது செல்வாக்கு மிகவுங் குறைவாகவேயிருந்தது.
1688-ல் ஏற்பட்ட மாபெரும் புரட்சியினுல் சட் டங்களுண்டாக்கும் உரிமையையும், வரி விதிக்கும் உரி மையையும் ஆங்கிலேயப் பாராளுமன்றம் பெற்றது. மூன்றும் உவில்லியம் மந்திரிமாரைத் தானே தெரிங் தும் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களைத் தானுகவே நடத்திவந்தான். அன்னிராணி மங் திரி மார் சு ஆள க் தானகவே நியமித்து கபினெட் மந்திரிசபைக் கூட் டங்களுக்குத் தலைமை வகித்து நடத்திவந்தாள். ஆனல் ஹனேவ மன்னர்கள் காலத்திற் பெரும் மாற்றங்கள் உண்டாயின. 'அரசுரிமைத் தீர்ப்புச் சட்டம் எங்க ளுக்கு ஒரு அங்கிய அரசனைத் தந்தது. அ ங் கிய அரசன் ஒரு பிரதம மந்திரியைத் தந்தான் " என்று ஆங்கிலேயன் ஒருவன் கூறினன். 1721-ன் பின் அர

இங்கிலாந்தில் ஹனுேவமன்னர்களின் ஆட்சி 109
சனுடைய "முதன் மந்திரியாகிய சேர் ரொபேட் வால் போல் அரசனேடு லத்தீன் பாஷையிற் பேசுவது வழக்கம். முதலாம் ஜோர்ஜ் மன்னனுக்கு ஆங்கிலம் முற்ருகத் தெரியாது. இரண்டாம் ஜோர்ஜ் மன்ன ணுக்கு ஓரளவுக்குத் தெரியும். இருவரில் ஒருவராகுதல் ஆங்கிலேய அரசியல் முறையை அறிவ தற்கு ச் சிரத்தை எடாதபடியால் அதனுடைய விபரங்களை யறிந்துகொள்ள முடியாமற் போயிற்று. ஆகையால் மந்திரிசபையின் கூட்டங்களுக்கு அவர்கள் தலைமை தாங்கி நடத்த முடியவில்லை. மங் திரி ஒருவனே கூட்டங்களை நடத்தவேண்டிய சந்தர்ப்பமேற்பட்டது: மந்திரி சபையின் அதிகாரமும் அதிகரித்தது. மந்திரி மார்களை அரசன் நியமியாது பிரதான மந்திரியே நியமிக்கவேண்டியிருந்தது. ஆகையால் அவன் பிரதம மந்திரியென அழைக்கப்பட்டான். அரசன் ம ந் தி ர ஆலோசனைக் கூட்டங்களிற் கலந்து கொள்ளாமையால் கிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தீர்க்கும் அதிகா ர த்  ைத இழக்கவேண்டியதாயிற்று. அங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளைப்பற்றி முதன் மந்திரி அர சனிடம் போய்க் கூறி மந்திரியின் புத்திமதி இது வெனக் கூறினன். அரசன் அதை விளங்கிக்கொள்ளா விட்டாலென்ன, சிரத்தை காட்டாவிட்டாலென்ன தன் சம்மதத்தைக் கொடுப்பதுண்டு. நாளடைவில் அரசனு டைய அதிகாரம், குன்றிப்போக மந்திரிசபை அதைப் பெற்றது.
படிப்படியாக கபினெட் அரசாங்க முறையின் மற்றைய அம்சங்களும் தோற்றின. மந்திரிமார்கள் எல்லோரும் ஒரே கட்சியிலிருந்தே தெரிந்தெடுக்கப் பட்டனர். எல்லோரும் ஒரு பொதுக்கொள்கையுடைய வராகையால் கூ ட் டு ப் பொறுப்புடன் விளங்கினர் பொதுக்கொள்கையிலHப்பிராய பேதம் ஒரு மந்திரி யாகுதல் காட்டினல் அவர் அப்பதவியினின்று ங்ேகி விடுவர். தற்காலத்திலுள்ள மந்திரி சபையினதிகாரம்

Page 60
110 இங்கிலாந்தில் ஹனேவமன்னர்களின் ஆட்சி
வால்போல் காலத்தில் முற்றுகக் காணப்பட்டதென்று கூறுதல் த வரு கும். அக்காலத்தில் மந்திரிமார்கள் ஒவ்வொருவரும் அரசதிகாரத்துள் அடங்கி நடக்க வேண்டுமல்லாது ஒருவருக்கொருவர் கடமைப்பட்டவர ல்லர். ஆணுல் வால்போல் காலத்தில் அக்கொள்கை ஆரம்பமாகிவிட்டது. இது வ  ைர யும் மந்திரிமார்களு டைய ஆலோசனையைப் பெற்றபொழுதிலும் அரசனே பிரதான தீர்மானங்களைச் செய்தான். ஆனல் காலஞ் செல்ல அரசனுடைய ஆலோசனையைப் பெற்றே, பெருமலோ மந்திரிமார் தீர்மானங்களைச் செய்தனர். பாராளுமன்றத்தின் தீர்ப் புக் கு அரசன் சம்மதங் கொடுக்கவேண்டியிருந்தது, இவ்விதமான நிலைபரத்தில் மந்திரி சபைக்குத் தலைமை வகித்த மந்திரி பிரதம மந்திரியெனக் கருதப்பட்டார். ஆகையால் வால்போலே முதற் பிரதம மந்திரியெனக் கூறலாம். 1742-வரை யும் வால்போல் அரசியல் விஷயங்களைத் திறமையு டன் நடத்தியதோடு இங்கிலாந்தின் பணநிலையைத் திருத்தியும், இங்கில்ாந்து யுத்தத்திலீடுபடாமலும் சமா தானம் நிலவத்தக்கதாகவும் நடத்திவந்தார். விக் கட்சிக்குத் தலைவராய் விளங்கிய வால்போல் பலமுறை யும் எதிர்க்கட்சியினரால் கண்டிக்கப்பட்டார். கைலஞ் சம் வாங்கும் முறை விக் கட்சியிலுள்ள இளம் அரசி யல் வ1 திகளாலும் கண்டிக்கப்பட்டது. ஆனல் முத லாம், இரண்டாம் ஜோர்ஜ் மன்னர்களின் ஆதரவை வால்போல் பெற்றிருந்தமையால் அரசாங்கத்தை நடத் த க்கூடியதாக விருந்தது. பிரித்தானியாவிலுள்ள வர்த் தக வகுப்பைச் சேர் ங் த வர் க ள் ஸ்பானியரோடும் பிரென்சுக்காரரோடும் வியாபாரப் போட்டியினலேற் பட்ட யுத்தத்தை ஆரம்பித்ததினலே சமாதானத்தை விரும்பிய வால்போல் 1742-ல் தன் பதவியினின்று நீங்கினர். இவருக்குப் பின் வந்த மந்திரிகள் இவரைப் போல் திறமை வாய்ந்தவர்களல்ல. இதுவரையும் விக் கட்சி அதிக செல்வாக்குடன் அரசாங்கத்தை bடக்

இங்கிலாந்தில் ஹனுேவமன்னர்களின் ஆட்சி 111
தியது. 1760-ல் மூன்றும் ஜோர்ஜ் சிங்காசனமேறியவு டன் அதனுடைய செல்வாக்குக் குறைந்தது.
முதலாம் இரண்டாம் ஜோர்ஜ் மன்னர்கள் இழந்த அ தி கா ரத்  ைக மீண்டும் பெறவேண்டு மென்றும் மாபெரும் புரட்சியின் பின் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குப் பிரகாரம் அரசனுக்குரிய நிலையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மூன்றும் ஜோர்ஜ் மன்னன் எண் ணங்கொண்டான், விக் கட்சியினரின் அதிகாரத்தை வெறுத்த பிற்றும் எதிர்க்கட்சியாரும் அவ்விதமாகவே அபிப்பிராயப்பட்டனர். ஜோர்ஜ் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தமையினல் தான் ஆங்கிலேயனென்றே கினைத்து நேர்மையும் துணிவும் தன்நம்பிக்கையுமுடை யவனுகக் காணப்பட்டான். ஜோர்ஜ் சிங்காசனமேறிய வுடன் தான் ஆளவேண்டுமென்றவெண்ணமுடையவன னன். அவனுடைய ஜேர்மன் தாயார் " ஜோர்ஜே அரசனுகவிரு” என்று பலமுறையும் கூறினதுண்டு. ஆகையால் ஜோர்ஜ், விக் கட்சியினர் அரசனிடம்பெற்ற ஆத ர வையும், அவர்களுக்கிருந்த அதிகாரத்தையும் ஒழிக்க வேண்டியதாயிற்று. அதுவுமல்லாமல் அரசன் தான் விரும்பிய மந்திரிமார்களைக் கட்சிபேதம் கவனி யாது நியமிக்கவேண்டிய அவசியமுமேற்பட்டது. அர சாங்கத்தின் முக்கிய விஷயங்களை ஆராயும் போதும், பிரச்சினைகளைத் தீர்க்கும்போதும் அரசனுடைய அபிப் பிராயம் கவனிக்கப்படவேண்டியதவசியம். ஒத்துழைக் காத மந்திரியை அப்பகலுயினின்று நீக்கும் பொறுப்பு அரசனுக்கல்லாது கபின்ெட் சபைக்கு இல்லை. இவ்வி தமான அரசியல் முறைக்குப் பிற் ஒருவரே அரச லுக்கு ஆதரவளித்தார். ஆனல் பாரிஸ் உடன்படிக்கை யினுல் அதிருப்திகொண்டு பிற் 1766 லேயே மீண்டும் தன் பதவியை ஏற்றுக்கொண்டார். 1761-ல் நடை பெற்ற பொதுத்தேர்தலில் விக் கட்சியினர் பெரும் பான்மையான அங்கத்தவர்களைப்பெற முடியவில்லை. அடுத்த ஆண்டில் நியூகாஸிலும் தம் பதவியினின்று

Page 61
112 இங்கிலாந்தில் ஹனுேவமன்னர்களின் ஆட்சி
விலகவேண்டிய சந்தர்ப்பமேற்பட்டது. அச்செயலும், அரச ஆதரவில்லாமையாலும், ஐம்பதாண்டுகளாகச் செல்வாக்கைச் செலுத்திய விக் கட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. அப்போதுள்ள நிலையில் அரசனுடைய ஆதரவைப்பெற்ற எந்தச் சபையோ அதே பெரும் பான்மையான அங்கத்தவர்களையுடையதாய் அரசாங் கத்தை நடத்தமுடியும். அந்நேரத்தில் டோரிக்கட்சியி னரும் ஹனுேவ மன்னர்களுக்கு ஆதரவளிக்கச் சித்த மாயினர். பதவிகளையும், வெகுமதிகளையும் விருப்பத் தின்படி அளித்து பாராளுமன்றப் பொதுச்சபையில் அரசன் பலருடைய வாக்குகளைப் பெறக்கூடியதாகவி ருந்தது. அரசனுடைய கொள்கைகளையும், விருப்பத் தையுமனுசரித்த அரசனுடைய நட்பினரும் அச்சபை யிலிருந்தனர். அவ்வண்ணமாக பாராளுமன்றத்தில் தன் செல்வாக்கைக் காட்டியுள்ளான். விக் கட்சியிலும் பிரிவு ஏற்பட்டது. ·
1751-ல் பிற் தன் பதவியினின்று விலகியமை யால் அவ்விடத்துக்கு அ ர சனின் ஆசிரியராயிருந்த பியூட் என்பவர் நியமிக்கப்பட்டார், தன்னுடைய செல் வாக்கை நிலைநாட்டுவதற்காக கைலஞ்சம் கொடுக்கிருரர் என்ற குற்றச்சாட்டுக்காளானர். அவர் தன் பதவியி னின்று நீங்க ஜோர்ஜ் கிறென்வில் என்ருெரு நியாய துரந்த ரைப் பிரதம மந் தி ரியா க நியமித்தார். அமெரிக்க குடியேற்ற நாடுகளோடுள்ள விவாதத்தைப் புத்தியாகத் தீர்த்துக்கொள்ள முடி யா ம ல் அதைக் கூட்டிவிட்டாரென்றே சொல்லலாம். அவரும் 1765-ல் தன் பதவியினின்று விலகினர். பின்பு ருெக்கிங்காம் பிரபு பிரதமராக நியமிக்கப்பட்டார். பிற் அவரின்கீழ் வேலை செய்ய விரும்பாமையால் ருெக்கிங்காம் விலக பின் அப்பதவியை ஏற்றர். அடிக்கடி சுகயினமாயிருக் தமையால் பிற் முன்போற் திறமையுடன் அரசாங் கத்தை நடத்தமுடியவில்லை. 1770 தொடக்கம் பன்னி ரண்டு வருடகாலம் நோர்த் பிரபுவே அரசாங்கப்

இந்தியாவில் ஹனுேவமன்னர்களின் ஆட்சி 113
பொறுப்பையேற்று அரசனுடைய இஷ்டப்படி நடந்து கொண்டார். -
நீண்ட காலமாக அரசாண்ட ஜோர்ஜ் மன்னன் (1760 - 1820) காலத்தில் பெரும் விஷயங்கள் நடை பெற்றன: அரசன் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறச்செய்த முயற்சிகளைப் பற்றி இந்த அதிகாரத் திற் படித்திருக்கிருேம். இனி அமெரிக்க குடியேற்ற நாடுகளையிழந்த வரலாற்றையும், இந்தியாவிலேற்பட்ட சம்பவங்களையும், பிரான்சியப் புரட்சியையும், நெப்போ லியனுடைய யுத்தத்தையும், அயலாந்திலுள்ள நிலைப ரத்தையும் பற்றி அடுத்த அத்தியாயங்களிற் படிப் போம்.
வினுக்கள்
1. ஹனேவர் நாட்டு இளவரசன் இங்கிலாந்தின் அரசுரிமையை
எப்படிப் பெற்றன்? 2. முதலாம் இரண்டாம் ஜோர்ஜ் மன்னர்கள் முன்னிருந்த அர சர்களின் அதிகாரங்களில் எவற்றை இழந்தனர் ? அப்படி இழப் பதற்குரிய காரணங்கள் யாவை ? 3. முதலாம் ஜோர்ஜ் மன்னன் காலத்தில் எந்த அரசியல் கட்சி
அரசாங்கப் பொறுப்பை ஏற்று நடத்தியது ? 4. விக் கட்சியின் எழுச்சிக்குக் காரணம் யாது? 5. வால்போலே முதற் பிரதம மந்திரியென்று கூறலாமா? 6. வால்போலின் நிர்வாகத்தைப்பற்றி விபரி. 7. வால்போலின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமுரிய காரணங்களை
ஆராய்க. 8. விக் கட்சியின் வீழ்ச்சிக்குரிய காரணங்களே ஆராய்க. 9. மூன்ரும் ஜோர்ஜ் மன்னன் இழந்த அரச அதிகாரத்தை மீண்
டும் எவ்வாறு பெற முயற்சித்தான் ? 10. மூன்றம் ஜோர்ஜ் மன்னன் காலத்தில் என்ன விசேஷ சம்ப
வங்கள் நடைபெற்றன.
15

Page 62
பதினுேராம் அத்தியாயம்
பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும்
ஏழாண்டு யுத்தத்திற்பெற்ற வெற்றியின் பலனுக கனடாவிலிருந்து பிரென்சுக்காரர் ஆங்கிலேயராற் துரத் தப்பட்டனர். ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ்ப்பட்ட அமெரிக்க குடியேற்ற நாடுகள் பதின்மூன்றும் கன டாவில் பிரென்சுக்காரருக்கிருந்த ஆதிக்கமற்றுப்போன வுடன் அச்சமின்றித் தாய் நாட்டின் தொடர்பை நீக்கிச் சுயேச்சையாக வாழ எண்ணங் கொண்டனர். இனி ஸ்ரூவர்ட் வமிசத்தரசர்களுக்குக் குடியேற்ற நாட்டுமக் கள் ஆதரவாயும் கீழ்ப்படிவாயுமிருந்தனர். ஆனல் ஹனுேவ மன்னர்களுக்கு அவ்விதமான ஆதரவைய ளிக்கும் நோக்கமில்லை. அவர்கள் தாய் நாடாகிய இங் கிலாந்தின் அல்லது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நன்மையைக் கருதினரல்லர்.
அந்நேரத்தில் மூன்று பிரதானமான பிரச்சினைகள் தோன்றின. அங்கேயுள்ள அரசியல் முறையும், வர்த் தகம் நடத்திய முறையும், குடியேற்ற நாடுகளின் பாது காப்பும், புதிய நிலங்களை ஒழுங்கு படுத்தும் பிரச்சினை யும் இருபகுதியாருக்குமிடையில் பல குறைகளையுண் டாக்கி விட்டன.
குடியேற்ற நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் முறையின்படி அரசனுல் நியமிக்கப்பட்ட தேசாதிபதி யிலும், நியமிக்கப்பட்டவொரு நிர்வாக சபையிலும் நிர் வாகப் பொறுப்பு விடப்பட்டிருந்தது. வரிகளே விதிக் கும் பொறுப்பும், சட்டங்களை யாக்கும் அதிகாரமும் குடியேற்ற மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி க3ளக் கொண்டுள்ள சபையில் விடப்பட்டன. இது இங்கிலாந்திலுள்ள முறையைப் பின்பற்றியதொன்ற கும். ஆனல் அவ்வண்ணமாக ஸ்தாபிக்கப்பட்ட அர சியல் முறையின்படி தங்களுடைய விஷயங்களை நடத் தும் முழுப்பொறுப்பும் குடியேற்ற 15 ர டு களு க் குக்

பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் 115
கிடைக்கவில்லை. சுதந்திரத்தை விரும்புவது எவர்க்கு மியல்பாகையால், நிர்வாக அரசியற் பொறுப்பைக் குடி யேற்ற வாசிகள் விரும்பியது தடுக்கமுடியாத சம்பவ மாகும். குடியேற்ற நாடுகளிலுள்ள சில சட்டசபைகள் தேசாதிபதிக்கும், நீதிவான்களுக்கும் கொடுக்கவேண் டிய சம்பளத்தைக் கொடுக்க மறுத்துத் தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்தினர். அதனல் அவ்வுத்தியோ கத்தர்களுக்கு அவமானமுண்டானதென்று இங்கி லாந்து அரசாங்கம் எண்ணியது. நீதிவான்களுக்கு நீதி வழங்கும் சுதந்திரத்திற்குப் பங்கமேற்பட்டதெனவுணர்க் தனர். இதனுல் இருபகுதியாருக்குமிடையில் மனஸ்தாப முண்டானது. ஆனல் சம்பளங்கொடுக்க மறுப்புக் காட் டியதனுல் பெரும் விவாதமுண்டானதென்று சொல்ல இடமில்லை. சுதந்திர உணர்ச்சியே அவர்களுடைய உள்ளத்தில் பதிந்து கிடந்ததெனலாம்.
இரண்டாவது பிரச்சனை வர்த்தகத்தினலேற்பட் டது. 1660 தொடக்கம் வர்த்தகத் தொடர்பும், பிரித் தானிய ஏகாதிபத்தியமெங்கும் ஒரே மாதிரியாகக் கவ னிக்கப்பட்ட வர்த்தக சம்பந்தமான சட்டங்களும் ஏகாதி பத்தியத்தின் ஒற்றுமைக்குக் காரணமாகவிருந்தன. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற வர்த்த கப் பொருட்கள் பிரித்தானியருடைய அல்லது குடி யேற்ற நாடுகளின் கப்பல்களிற் கொண் டு செ ல் ல வேண்டுமென்பதும், குடியேற்ற நாடுகளிற் சில பிர தான விளைபொருட்களை இங்கிலாந்துக்கே ஏற்றுமதி செய்யவேண்டுமென்பதும் பிறநாடுகளிலிருந்து அமெ ரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் இங்கி லாந்துக்கூடாகவே செல்லவேண்டுமென்பதும், குடி யேற்ற நாடுகளின் விளைப்பொருட்களைப் பிரித்தானி யாவே வாங்குவதற்குத் தனி உரிமையுடையதென்பதும் அவ்வர்த்தக முறையின் விசேஷ அம்சங்களாம். தாய் நாட்டின் நன்மையைக் கருதியே இம்முறை ஸ்தாபிக் கப்பட்டதென்று பலர் கூறுவர். பிரித்தானியர் தங்க ளுடைய வியாபாரத்துக்குப் போட்டி இல்லாவுண்ணம்

Page 63
116 பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும்
குடியேற்ற நாடுகள், கம்பளம், உருக்கு, தொப்பி முத லியன செய்யாத முறையிற் சட்டங்களை உண்டாக்கி னர். புகையிலை, பஞ்சு முதலிய அமெரிக்காவிலுள்ள விளைபொருட்கள் பிரித்தானியாவுக்கு மாத்திரம் அனுப் பலாம். ஆனல் தானியங்கள், மீன் முதலியன அமெ ரிக்க நாடுகள் விரும்பிய இடத்துக்கு அனுப்பமுடியும். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் இங்கிலாந்து மூலம் அனுப் பப்பட்டமையால் சுங்கவரியிறுக்க வேண்டியிருந்தது. பிரித்தானியர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய் யப்படும் புகையிலையையே பாவிக்கவேண்டும். இக்கட் டுப்பாடுகள் எல்லாம் தங்களைப் பாதிக்காவண்ணம் @9– யேற்ற வாசிகள் கள்ள வியாபாரத்தை ஒழுங்காக நடத்திவந்தனர். 1763-ல் கிரென்வில் இங்கிலாந்தின் பிர தம மந்திரியாய் வந்தவுடன் அமெரிக்க சுங்கவரியினி ன்று சேர்ந்த வருமானம் வருடம் 2000 பவுண் மாத் திரமாகையால் அதைக் கூட்டுவதற்காகக் கள்ள வியா பாரத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் சட்டங்களை ஏற் படுத்தினன். இதனற் குடியேற்ற வாசிகளுக்குக் கோப மேற்பட்டது.
இவ்வகையர்ய் வர்த்தக சம்பந்தமான கட்டுப்பாடு களை, முழு ஏகாதிபத்தியத்திற்கும், பொதுவாக சட்ட நிரூபண அதிகாரத்தைச் செலுத்திய பிரித் தா னிய பாராளுமன்றமே உண்டாக்கியது. அதனுடைய அதி காரத்துக்கு இதுவரையும் ஒரு மறுப்பும் ஏற்படவில்லை. பிரித்தானிய பாராளுமன்றம் குடியேற்ற நாடுகளிலும் பார்க்க பிரித்தானியாவின் பொருளாதாரத் தேவை களையே கவனித்தது. விக் கட்சியினரின் ஆட்சி காலத் தில் இவ்விதமான சட்டங்கள் உண்டாக்கப்பட்டன. இச்சட்டங்கள் நடைமுறையில் பெரும்பாலும் அலட்சி யஞ் செய்யப்பட்டபொழுதிலும் வர்த்தகமுறை தாய் நாட்டின் நன்மைக்காகவே ஸ்தாபிக்கப்பட்டதென்று கருத இடமுண்டு. குடியேற்ற வாசிகள் கள்ள வியா பாரத்தை 5டத்தியபொழுதிலும் இம்முறையை யேம்

பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் 117
அறுக்கொண்டனர். பிரான்சிய மேற்கு இந்திய தீவுகளி லிருந்து குடியேற்ற நாடுகள் சீனியை ஏராளமாக வாங் கினர். ஆகையால் 1733-ல் வால்போல் பிரித்தானிய மேற்கிந்திய தீவுகளின் நன்மைக்காக அங்கிருந்துவந்த சீனிக்கு ' தீர்வைப்பணத்தை அதிகமாகக் கூட்டிவிட் டார். குடியேற்ற வாசிகள் கள்ள வியாபாரஞ் செய்து அச்சட்டத்தை அலட்சியஞ் செய்துவிட்டனர். கிரென் வில் அந்தத் தீர்  ைவ ைய யறவிடும் நோக்கத்துடன் அரைவாசியாகக் குறைத்துவிட்டார். இதுவும் அவர்க ளுக்குக் கோபத்தை மூட்டியது.
அலக்ஹனிக்கும் மிசிசிப்பிக்குமிடையிலுள்ள பரந்த நிலப்பரப்பில் 'சிவப்பு இந்தியர்' என்ற சாதியினர் வசித்துவந்தனர். வர்த்தகர்கள் நிலங்களை வாங்கும் பிர புக்களின் அநீதியிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவேண் டியிருந்தது. சிவப்பு இந்தியர் கிலங்களை பிரித்தானியரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்மூலமல்லாது இலவசமாக வழங்காவண்ணம் சட்டம் உண்டாக்கப்பட்டது. தங்க ளுடைய சுதந்திரமான உரிமைக்கும், நாட்டின் பெருக் கத்துக்கும் இது பாதகமாயிருக்கென்று அவர்களுக்குக் கோபமும் பிரித்தானியர்மேற் சங்கேகமுமுண்டானது. சிவப்பு இந்தியருக்குச் சமீபத்திலுள்ள குடியேற்ற நாடு கள், அவர்களால் இடையிடையே கொள்ளையடிக்கப் பட்டன. ஆகையால் பிரெஞ்சுக்காரரிலும், சிவப்பு இங் தியரிலுமிருந்து குடியேற்றநாடுக%ளப் பாதுகாப்பதற்காக ஒரு கிரந்தரமான சேனைப்பூடையொன்றை வைத்திருக்க வேண்டியிருந்தது. அச்சேனையை வைத்திருக்குஞ் செலவு க்கு வேண்டிய பணத்தில் ஒருபகுதியைக் குடியேற்றவாசி கள் கொடுக்கவேண்டுமென்று கிரென்வில் அபிப்பிராயங் கொண்டது ஒரு அநீதியான செய்கையென்று எண்ணு வதற்கு இடமில்லை, ஏழாண்டு யுத்தத்தினலே இங்கிலாங் தின் கடன் இருமடங்கதிகரித்தது. இங்கிலாந்து மக்க ளும் பல வரிகளுமிறுத்துக் களைத்துப்போயிருந்தனர். பிரான்சும், ஸ்பானியாவும் ஒன்றுசேர்ந்து இங்கிலாங் துக்கெதிரே சண்டைசெய்ய ஆயத்தஞ்செய்துகொண்

Page 64
118 பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும்
டிருந்தனர். இங்கிலையில் மூன்றிலொருபங்கு பணத்தைக் கொடுத்தாற்போதுமென்றும், சட்டத்துக்கடங்கிய ஒவ் வொரு சாதனங்களிலும் முத்திரை ஒட்டப்படவேண்டு மென்றும் அதன் வருவாயைக்கொண்டு தேவையான பணத்தை அறவிடுவதற்கு கிரென்வில் சட்டமொன்றை ஏற்படுத்த யோசித்தார். அதைப்பற்றி விவாதிக்கிற தற்கு ஒருவருடகாலங்கொடுத்து, அமெரிக்க வாசிகள் வேறேதேனும் தகுந்தவழியைக் கூறினல் அதை ஏற் அறுக்கொள்வதாயுங்கூறினர். அதற்குப்பதிலாக வேறொரு வழியையும் அவர்கள் கூறத்தவறினமையால் முத்திரைச் சட்டம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. (1765) குடியேற்றவாசிகளின்மீது வரியறவிடும் இச்சட்டத்தைப் புகுத்த பிரித்தானிய பாராளுமன்றத் துக்கு உரிமையுண்டென்பதற்குச் சந்தேகமில்லை. ஆனற் சுதந்திரத்தை விரும்பிய அம்மக்கள் தங்களுடைய பிரதி நிதிகளில்லாததும், மூவாயிரம் மைலுக்கப்பாலுள்ளது மாகிய பாராளுமன்றம் உண்டாக்கிய அவ்வகையான சட்டத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ' பிரதி நிதித்துவம் இல்லாவிடத்து வரிவிதிக்க முடி யா து' என்று கூச்சலிட்டனர். அது ஆங்கிலேயர் மறுக்க முடியாத எதிர்ப்பையுண்டாக்கியது. கிரென்வில் உண் டாக்கிய வர் த் த க க் கட்டுப்பாடுகளினு லேற்பட்ட கோபத்தை இது மேலுங்கூட்டியது. வர்த்தகக் கட்டுப் பாட்டின்மூலம் வரியிறுத்துவந்ததை ஒருபோதும் குடி யேற்றமக்கள் விவாதிக்கவில்லை. ஆனல் நேரடியான உள்நாட்டுவரி அநீதியானதென்று கூறினர். பேச்சா ளர்கள் அநீதி, அடிமைத்தனம் என்பவைகளைப்பற்றி உணர்ச்சி ததும்பும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினர் கள். அந்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டவுடன் கலகங்களேற்பட்டன. ஒரு தேசாதிபதியி ணுடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டது. ஒருவராகுதல் முத்திரைகளைப் பாவிக்கவில்லை. 13 குடியேற்ற நாடுக ளில் ஒன்பது குடியேற்ற நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு காலமுமில்லாத ஒற்றுமையுடன் சந்தித்து அச்சட்டத்தை

பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் 119
மறுத்தார்கள். இதைக்கேள்வியுற்ற பிரித்தானிய மந்திரி களும் இராசதந்திரிகளும் வித்தியாசமான அபிப்பிரா யங்களைக் கூறினர். கிரென்வில் பிரித்தானியாவுக்கு உரிமையுண்டென்றார். பிற், நேரடியான அந்த வரி அநீதியென்றும் அதற்கு குடியேற்றவாசிகள் எதிர்ப்புக் காட்டாமல்விட்டால் அவர்கள் அடிமைகளாவரென்றும் கூறினர். பின்பு கிரென்வில் தன் பதவியினின்று நீங்க ருெக்கிங்காம் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் சமாதானமுறையைக் கையாளும் நோக்கத்துடன் முத்திரைச்சட்டத்தை நீக்கிவிட்டார். ஆனல் குடியேற்ற நாடுகளின்மீது வரிவிதிக்கப் பிரித்தானியாவுக்குரிமை யுண்டெனவுமொரு அறிக்கையை விடுத்தார். அமெரிக்க நாட்டினர் திருப்தியடைக்கமையினல் கஷ்டம் நீங்கியது போற் காணப்பட்டது. ع
குடி யேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கு மிடையிலேற்பட்ட மனஸ்தாபத்தின் மூலகாரணமியா தென ஆராய்வது அவசியமாகும். செழிப்பாகவும் 15ன் நிலையிலுமிருந்த குடியேற்றவாசிகள் அவர்கள்மேலற விடப்பட்ட சிறு வரிகளைச் சம்மதமாகக் கொடுத்திருக் கலாம். அப்பணம் நாடுகளின் பாதுகாப்புக்காகவே செலவிடப்பட்டன. இனி அப்போர் மூன்றும் ஜோர்ஜ் மன்னனும் அவனுடைய மந்திரிமார்களும் புத்தியீன மான முறைகளை அனுசரித்தமையிலேற்பட்டதென்று கூறுவதும் தவிருரகும். உண்மையை ஆராய்ந்தால் இரண் டாம் சாள்ஸ் மன்னனுடிைய காலத்தில் உண்டாக்கப் பட்ட குடியேற்ற அரசியல்முறை தற்போது சுதந்தி ரத்தை விரும்பிப் பெரிய ஐசுவரியமுள்ள சாதியினருக் குத் தகுதியற்றதாய்ப்போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். அவர்களின் சம்மதமில்லாது ஒருபோதும் நேரடியான வரிவிதிக்கப்படவில்லை. சட்டங்களை உண் டாக்கும் பொறுப்பு அவர்களிலேயேயிருந்தது. தாய் நாட்டு அரசாங்கத்துக்கு எவ்வகையான தி  ைற யும் கொடுத்திலர். அவர்களுடைய விருப்பத்தின்படியல்லாது Fாடுகளின் எல்லைப்புறங்களின் பாதுகாப்புக்காக போர்

Page 65
120 பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும்
வீரர் திரட்டப்படவில்லை. ஆணுல் தாய்நாட்டின் மக்களே அங்கே குடியேறியமையால் அவர்களுடைய இரத்தத்தி லேயே சுதந்திர உணர்ச்சி செறிந்திருந்தது. அவர்க ளுக்கிருந்த அதிகாரம் இரு பிரதான வழிகளாற் குறைக் கப்பட்டிருந்தன. நிர்வாகமும், நீதிவழங்கும் உத்தியோ கத்தர்களும் அவர்களால் நியமிக்கப்படாமல் இங்கிலாந்தி லுள்ள அரசாங்கத்தாலே நியமிக்கப்பட்டனர். இரண்டா வது வெளிநாடுகளோடு செய்யப்பட்ட வர்த்தகத்தின் பிரமாணங்கள் அவர்களாலாக்கப்படாமல், பிரித்தானிய பாராளுமன்றத்தா லுண்டாக்கப்பட்டன. தங்களுடைய அரசாங்க நிர்வாகத்தில் முழு உரிமையையும் பெற்ற லல்லாது சுய ஆட்சியை விரும்பும் சாதியினர் அதிருப்தி யடைவது இயற்கை பொறுப்பை மறுத்தவிடத்து பொறுப்பற்றவர்கள்போல் நடந்துகொள்வர், நீதிவான் கள் அரசனுல் நியமிக்கப்பட்டபடியால் அவர்களுக்குச் சம்பளங்கொடுக்க மறுத்தனர். பிரென்சுக்காரருக்கும் சிவப்பு இந்தியருக்குமெதிரே நடத்திய சண்டையில் தங்களுடைய படைகளையனுப்பி உதவிசெய்ய மறுத்த னர். கள்ள வியாபாரத்தை ஊக்கப்படுத்திப் பிரமாணங் கள் பயனற்றனவாய்ப்போகச்செய்தனர். சுய நம்பிக்கை யும், சுதந்திர உணர்ச்சியும், பொருளாதாரமும் ஒருங்கே >யமையப்பெற்ற குடியேற்றவாசிகள் அவர்கள் மத்தியி லுள்ள நிலைமையின் காரணமாக அவ்வாறு நடந்து கொண்டனரெனலாம். முத்திரைச்சட்டத்தை உண்டாக் காமல்விட்டாலும் இரு பகுதியாருக்குமிடையி லுள்ள உறவு பாதிக்கப்பட்டிருக்கும். கிரென்வில் 1764-ல் தன் புதிய திட்டத்தைப் புகுத்தமுன்னரே குடியேற்ற அர சியல்முறை திருப்திகரமாய் நடைபெறவில்லை. குடியேற்ற அரசியல்முறை திருத்தியமைக்கப்பட் டிருந்தால் இரு பகுதியாருக்குமிடையிலுள்ள பிணக்குகள் தீர்ந்திருக்கக் கூடும். w
முத்திரைச் சட்டம் நீக்கப்பட்டவுடன் சமாதான மேற்பட்டதுபோற் கோற்றியது. ஆனல் பின்னுமொரு விவாதம் தொடங்கியது. 1767-ல் ரவுண்ஷென்ட் என்ற

பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் 121
பொக்கிஷாதிபதி அமெரிக்க நாடுகளிலிறக்குமதி செய் யப்பட்ட தேயிலை, கண்ணுடி கடதாசிக்குத் தீர்வை கட்டவேண்டுமென்று ஒரு சட்டம் வகுத்தார். துறை முகங்களிலறவிட்டபடியால் அவைகள் உள்நாட்டு வரி யல்லவென்றும் அவைகளுக்குக் குடியேற்ற வாசிகள் எதிர்ப்புக்காட்ட முடியாகென்றுங் கூறினர். அவ்வரிக ளினுல் பெறக்கூடிய தொகை வருஷம் 40000 பவுண் வரையிலிருக்குமென்றும் அப்பணத்திலிருந்து தேசாதி பதிகளும் மேலுத்தியோகத்தரும் சம்பளத்தைப் பெற லாமென்றும் கருதலானர். இது குடியேற்ற வாசிகளின் சுய ஆட்சியை வேரோடு அறுத்துவிடுமென்று அவர் கள் பெரும் எதிர்ப்புக் காட்டினர். நோர்த் பிரபு மக் திரியாய் வந்தவுடன் கண்ணுடி, கடதாசியிலுள்ள வரி களே நிறுத்தித் தேயிலையிலுள்ள வரியை மாத்திரமற விட்டுத் தாய் நாட்டு க்கு வரி விதிக்குமுரிமையுண் டென்று வற்புறுத்தினர். இருபகுதியாருக்குமிடையில் ஒற்றுமை குறைந்தவிடத்து அற்ப விஷயங்களும் பெரி தாகக் கவனிப்பதற்கு இடமுண்டு. போஸ்டன் நகரி லுள்ள மக்கள் பிரித்தானிய போர்வீரர்களுக்கு அவ மதிப்பை உண்டாக்கினர். கள்ள வியாபாரத்தைத் தடுப் பதற்குச் சென்ற ஒரு ஆங்கிலேயக் கப்பலொன்றில் குடியேற்ற வாசிகள் சிலர் உள்ளிட்டு அதனைத் தீக் கிரையாக்கினர்.
ஆங்கிலேய கிழக்கிந்திய சங்கம் தேயிலையை இங் கிலாந்துக்கு முதல் அனுப்பாமல் அமெரிக்காவுக்கு நேரே அனுப்ப உ த் தீர  ைவ ப் பெற்றது. குடி யேற்ற வாசிகளிற் சிலர் ஆங்கிலேய அரசாங்கம் தேயி லையின் விலையைக் குறைத்துத் தாங்கள் வரி கொடுக் கத்தக்கதாகத் தந்திரமான வழியைக் கையாண்டிருக் கென்று சந்தேகங் கொண்டனர். பின்பு போஸ்டன் துறைமுகத்தில் தேயிலையுடன் வந்து சேர்ந்த கப்பல் களுள், மாறுவேடம் பூண்டு அவர்கள் புகுந்து 300 பெட்டி தேயிலையைக் கடலுக்குள் வீசினர். உடனே பிரித்தானிய அரசாங்கம் கோபுங்கொண்டு மசாக்கு
1f

Page 66
122 பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும்
 

பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் 123
சேற்ஸிலுள்ள மேலுத்தியோகத்தர்களை அரசனே நிய மிக்கவேண்டுமென்றும் தேசாதிபதியின் உத்தரவின்றிப் பிரசித்தமான கூட்டங்கள் நடத்த முடியாதென்றும் கட்டளை விடுத்தது. போஸ்டன் துறைமுகமும் மூடப் பட்டது. பிலாடெல்பியா என்ற இடத்தில் ஜோர்ஜி யாவைத் தவிர்ந்த ஏனைய பன்னிரண்டு நாடுகளும் ஒரு மகாநாடு கூடித் தங்கள் உரிமைக%ள நிலைநாட் டத் தீர்மானித்தன. உரிமைப் பிரகடன அறிக்கை ஒன்றைத் தயார்செய்து பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 13 சட்டங்களையும் நீக்குமாறு கேட்ட னர். பிரித்தானியருடைய பொருட்களைத் தங்க ள் நாடுகளிலேற்றுக்கொள்ளவும் மறு த் த னர். கோர்த் பிரபு சமாதான முறையைக் கையாள எத்தனித்தனர். லெக்சிங்டனிற் தொடங்கிய சண்டை (1775) யோடு அவரது முயற்சி பயனற்றதாய்ப்போனது. " அ டு த் த ஆண்டில் 13 குடியேற்ற bாடுகளும் தங்களுடைய சுதக் திரத்தை நிலைநாட்டினர். அன்றுதொட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரம் ஆரம்பமானது.
மூவாயிரம் மையிலுக்கப்பாலுள்ள நாட்டிற் சண்டை செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் கஷ்டம். ஏழாண்டு புத்தத்தில் இங்கிலாந்தும் பிரான்சும் ஐரோப்பாவிலி ருந்து படைகளையனுப்பி கனடாவிற் சண்டை செய் தனர். ஆனல் இந்த யுத்தத்தில் அமெரிக்கர் தங்களு டைய நாட்டிலிருந்தே சண்டை செய்தனர். பிரென் சுக்காரர் தங்க ளு  ைடய கடற்படையைக் கொடுத்து அமெரிக்க நாடுகளுக்கு உதவிசெய்தனர். பிரித்தானி யர் எதிரிகளின் பலத்தை அற்பமாகக் கருதினர். அதுவுமல்லாமல் சண்டைக்குப் போதிய ஆயத்தமுஞ் செய்யவில்லை. இனி அவர்கள் சமாதானத்தைக்கொண்டு வரும் நோக்கத்துடன் அரைமனத்துடன் சண்டை செய்தனர். பிரித்தானியர் சி ற ந் த சேனைத்தலைவனு மில்லாமல் சம்பளத்துக்காகப் போர் புரியவந்த ஜேர் மன் போர்வீரரைக் கொண்டுள்ள சேனையோடு சண்டை செய்தனர். ஆனல் அமெரிக்க நாட்டுவாசிகள் உவா

Page 67
124 பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும்
ஷிங்டன் என்ற ஒரு பெரும் வீரனைச் சேனதிபதியா கப் பெற்றனர், அவன் களைப்புருரது மனதிடத்துடன் சண்டை செய்தான். எட்டு வருடங்களாக நடந்த அச் சண்டையின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் கடலாதிக்கத் தையிழந்தமையினல் பிரான்சும், ஸ்பானியாவும் குடி யேற்ற வாசிகளுக்கு உதவியளித்தன.
புறூக்லின் (1776) என்ற சண்டையில் ஆங்கிலே யர் வெற்றிபெற்றனர். பின்பு சரடோகா என்ற சண் டையில் 4000 போர்வீரர்களைக் கொண்டுள்ள பிரித்தா னிய சேனை சரணடைந்தது. பிரான்சும், ஸ்பானியா வும் பிரித்தானியாவுக்கெதிரே போருக்கெழுந்தன. ஒல் லாந்தும் அவைகளோடு சேர்ந்தது. நடுநிலைமை நாடுக ளின் கப்பல்களை ஆங்கிலேயர் பரிசோதிக்கத் தொடங் கியமையால் ரூஷிய, டென்மார்க், சுவீடன் நடுநிலைத் தற்காப்பு ஐக்கியம் பூண்டு பிரித்தானியரை எதிர்த்த னர். ஸ்பானியா ஜிப்ருல்ரரைத் தாக் கியது. பின்பு யோர்க்டவுனில் நடந்த சண்டையிலும் பிரித்தானியர் தோல்வியுற்றனர். பின்பு வேர்சேயில்ஸில் சமாதான உடன்படிக்கை எழுதப்பட்டது. அமெரிக்க நாடுகள் சுதந்திரத்தைப் பெற்றன. பிரித்தானியர் மைனேக்கா, புளோரிடாவை ஸ்பானியாவுக்குக் கொடுத்தது. அமெ ரிக்க சுதந்திரப்போர் பிரித்தானிய ஏகாதிபத்தியத் தின் பலத்தைக் குறைத்தாலும், ஆங்கிலேயர் இந்தி யாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி மீண்டும் பல முற்றனர்.
இந்தப் போர், ஜனநாயக அரசியல் முறை  ைய ஸ்தாபித்த பெருமையை அமெரிக்க நாட்டவர்களுக்குக் கொடுத்தது. சுய இர்ாச்சியத்தின் மூலம் ஒற்றுமை யில்லாது சிதறிக்கிடக்கும் பல நாடுகளும் ஐக்கியம்பெற முடியுமென்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது. பழைய கண்டங்களிலும், புதிய கண்டத்திலும் வெற்றி கரமாய் ஸ்தாபிக்கப்பட்ட சுயஆட்சி, ஜன நாயக க் கொள்கையைப் பலமுறச் செய்ததெனலாம். அமெரிக்

பிரித்தானியரும் அமெரிக்க குடியேற்ற நாடுகளும் 125
காவிற் சண்டைசெய்த பிரான்சியப் போர்வீரர் சுதந் திர உணர்ச்சியைப் பெற்றதினுல் தாய் நாட்டுக்குச் சென்றதும் அவ்வகையான சுதந்திரத்தைப் பெற வேண்டுமென்று புரட்சியையுண்டாக்கினர்.
1787-ல் குடியேற்ற நாடுகளெல்லாம் ஒ ன் நூறு சேர்ந்த ஒரு ஆட்சியின்கீழ் ஒற்றுமைப்பட்டு அமெ ரிக்க ஐக்கிய நாடுகளென அழைக்கப்பட்டன. அதற்கு ஜோர்ஜ் வாஷிங்டன் முதல் தலைவரானர்.
வினுக்கள்
1. அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியருக்குமிடையில்
எத்துறைகளில் விவாதங்களேற்பட்டன?
2. பிரித்தானிய அரசாங்கம் ஏற்படுத்திய வர்த்தகக் கட்டுப்பாடுகள்
குடியேற்ற நாடுகளை எவ்வாறு பாதித்துவிட்டன?"
அமெரிக்க சுதந்திரப்போரின் காரணங்களை ஆராய்க. 4. பிரித்தானிய அரசாங்கம் அமெரிக்க குடியேற்ற நாடுகளில் ஏற்
படுத்திய நிர்வாகத்திலென்ன குறைகள் காணப்பட்டன? 5. ஏழாண்டு யுத்தத்தில் வெற்றிபெற்ற ஆங்கிலேயர் அமெரிக்க
சுதந்திரப்போரில் தோல்வியுற்றதற்குக் காரணமென்ன?

Page 68
é. i é á s பன்னிரண்டாம் அத்தியாயம்
பிரான்சியப்புரட்சியும், ஐரோப்பியயுத்தமும், அதன்பயன்களும்
உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறுகாலங்க ளில் புரட்சிகளேற்பட்டிருக்கின்றன. ஆனல் பிரான்சி யப் புரட்சியினல் மக்கள் அடைந்துள்ள பயன்களைப் போல வேறுபுரட்சியிகளினலடையவில்லை. அதைப்பி ரான்சியப் புரட்சியென்று தனித்துக்கூருது உலகப்புரட் சியென்றே கூறவேண்டும். அதை நிலமானியமுறை நில வியகாலத்திலுள்ள சமுதாய ஒழுங்குக்கெதிரே காட் டப்பட்ட எதிர்ப்பெனலாம்; எதேச்சாதிகாரியாக ஆளும் அரசியல் முறைக்கும் பிரேத்தியமாகச் சலுகைகளை அனுபவித்த வகுப்பினருக்குமெதிரே எழுந்த எதிர்ப் பெனலாம்; மக்களின் சுதந்திரம் சமத்துவம் என்பன வற்றை வற்புறுத்தி ன தென லாம்; மக்களின் உரிமைக்கேற்றவாறு அவர் க ளின் சமுதாயத்தைத் திருத்தியமைப்பதற்குச் செய்து ஸ்ள துணிவுகரமான முயற்சியெனலாம். இவ்வகையான புரட்சி பிரான்சு தேசத்திலே ஏற்பட்டதற்கும் ஏனையநாடுகளிலேற்படாத தற்குமுரிய காரணங்களை ஆராய்ந்துபார்த்தால் ஐரோப் பிய நாடுகளுக்குள்ளே கல்வியறிவும் விளக்கமுமுள்ள மக் கள் அங்காட்டில் அக்காலத்தில் வசித்தனரெனலாம். அதுவுமல்லாமல் அங்கேயுள்ள அரசியல் முறையும் பெருங் குறைகளையுடையதாகையால் மக்களுக்கு அதில் நம்பிக்கை குறைந்துவிட்டது.
பிரித்தானியாவில் வெகுகாலத்துக்கு முன்பே யற் றுப்போன நிலமானியமுறையிற் காணப்பட்ட சகிக்க முடியாச் சிலவழக்கங்கள் பிரான்சு தேசத்திற் காணப் பட்டன. அக்குறைபாடுகள் நீக்கப்படவேண்டுமென்னும் நோக்கமே புரட்சிக்கு மூலகாரணமாகும். அந்நாட்டி அலுள்ள மத்தியவகுப்பினர் இங்கிலாந்தையும் ஒல்லாந்தை யும் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 127
கல்வியறிவில் மேம்பட்டவர்களாகவிருந்தனர். ஆனல் தங் களுண்டய விஷயங்களை நடத்தும் பொறுப்பில் அவர்க ளுக்கு ஒருபங்குமில்லை; மேல்வகுப்பினர் வரிகொடுக்கா மலிருந்தமையால் மத்திய வகுப்பினர் பலவரிகளை யிறுக் கவேண்டி யிருந்த தின ல் சுயேச்சையான முயற்சிக ளொன்றும் செய்ய முடியவில்லை. அதிருப்திகொண்ட மத்தியவகுப்பினரே புரட்சியை நடத்தினர். 170,000 வரையிலுள்ள பிரபுக்கள் பலசலுகைகளையும் பரம்பரை யாக அனுபவித்துப் பிரத்தியேகமான வகுப்பினராக வாழ்ந்தனர். வரிகள் ஒன்றுங் கொடுக்கவில்லை. பிரான் சின் ஐந்திலொரு நிலத்தைப்பெற்றிருந்ததோடு ஏனைய பகுதி யி ன் பிரயோசனத்தில் பத்திலொருபாகத்தை உரிமையாக்கிய தேவாலயம் தனிப்பட்டமுறையில் அதற் குரிய உரிமைகளைப்பாதுகாத்தது. அதிகாரிகள் உண் டாக்கும் துன்பத்தினின்று ஏழைகளைக் காப்பாற்றும் கடமைகளையுஞ் செய்யத் தேவாலயங் தவறிவிட்டது.
பிரான்சுதேசத்திலிருந்த பிரபுக்கள், சமயகுருமார் கள், மத்திய வகுப்பினர் என்றமூன்று வகுப்பினருள் ளும் முதல்வகுப்பினராகிய பிரபுக்கள் வரியிறுக்காத சலாக்கியத்தை அனுபவிக்குமளவும் நாட்டின் பண நிலையைத்திருத்தி அமைப்பதற்கு முடியாமலிருந்தது. பிர புக்கள் கவலையற்ற குதூகலமான வாழ்க்கையை வாழ்ந்து, குறைந்த மத்திய வகுப்பினரை இழிவான முறையில் நடத்தினர். அவர்கள்மற்ற வகுப்பினருக்கில்லாத உரி மைகளையுஞ் சலாக்கியங்கyாயும் அனுபவித்ததன்றித் தங்களுடைய நிலங்களிற் குடியிருந்த விவசாயிகளையும் துன்புறுத்தினர். அவர்களுடைய பயிர்கள் இருக்குமிட மெல்லாம் வேட்டையாடியழித்தனர். பிரபுக்கள் வளர்த்த புருக்கள் முதலிய பறவைகளும் பயிர்களுக்கு அழிவை யுண்டாக்கின. விவசாயிகள் அரசனுக்கு ஏராளமான வரியிறுத்தலோடு, பிரபுக்களுக்குச் சரீரசேவையும் வரி யுங் கொடுத்து வந்தனர். சொந்த நிலங்களையுள்ள விவ சாயிகள் சுதந்திரமாகவோ சுகமாகவோ வாழமுடிய வில்லை. மத்தியவகுப்பினரில் அனேகவிவேகிகளும் கல்

Page 69
128 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
வியறிவுள்ளவர்களும் மிருந்தபோதினும் திருச்சபைகளி லும் அரசாங்கத்திலும் உயர்ந்த உத்தியோகப் பதவி களைப் பிரபுக்களே கவர்ந்தனர். சமுதாயகிலை இவ்வி தமாக விருந்தபோதிலும் அரசாங்கம் திறமையாய் ைேட பெறும்வரையிற் சனங்கள் இக்குறைகளைச் சகித்துக் கொண்டிருந்தனர்.
சமுதாயத்திலிருந்த குறைகளைவிட அரசியலிலும் பல குறைகள் காணப்பட்டன. பதினுலாம் லூயிமன்ன ணுடைய காலத்தில் பிரான்சுதேசம், ஐசுவரியத்திலும், நாகரிகத்திலும் கல்வித்துறையிலும் அதிகமேம்பாடுற் றிருந்த போதிலும் அவன்திருப்தியடையாது தனது 6ாட்டை ஐரோப்பாவில் போட்டியில்லாத முதன்மை பெற்ற நடாக்கவேண்டுமென அவாவுற்றரன். இக் கார ணத்தினலே ஐரோப்பாவிலுள்ள ஏனையநாடுகள்யாவும் ஒருமித்து அாயி அரசனுக்கெதிரே சண்டையிட்டதினல் ஈற்றில் பிரான்சுதேசத்தின் வலிமை குன்றியது. லூயி ஒரு எதேச்சாதிகாரியாயிருந்தபோதிலும் அரசியலை ச் செவ்வனே நடத்தும் திறமைவாய்ந்தவனுயிருந்தமையி னற் பிரசைகள் அவன்மேல் விருப்பமுடையவர்களாயி ருந்தனர். அவ்வரசனுக்குப்பின் ஆண்ட இருஅரசர்க ளாகிய பதினைந்தாம் அாயியும் பதினருரம் அாயியும் திற மையற்றவர்களாகையாற் பிரசைகள் அவர்கள் மேல் வெறுப்புக்கொண்டனர். அவர்கள் நாட்டின் நன்மைக் காகிய வேலைகளிற் சிரத்தை யெடுக்கவில்லை. அரசாங் கத்தில் மக்கள் பங்குபற்றவில்லை. 1614-ன் பின் பிரான் சியபாராளுமன்றமுங் கூட்டப்படவில்லை. பதினரும் லூயி யும் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் தன் எண்ணப் படி அரசியலை நடத்தினன். பிரான்சிய மக்கள் அரச ணுக்குக் கீழ்ப்படிவாயிருந்தனர். ஒருபெரிய அரசன் தேவையானதிருத்தங்களைச் செய்து புரட்சி ஏற்படாமற் தடுத்திருக்கலாம். ஆனுல் பதினரும் அாயி நன்நோக்க மும் தயாளகுணமுமுடையவனுயினும் உறுதியான மன நிலையற்றவனயும், அரசியும் அழகுவாய்ந்தவளாயினும் யுக்தியற்றவளாயும் மக்களின் நன்மதிப்பைப் பெருதவ

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 129
ளாயும், இருவரும் அரசியலிலேற்பட்ட கு  ைற க ளே நிவிர்த்திசெய்யாது கவனயீனமாகயிருந்தனர். மே ரி அன்ரோயினட் அவுஸ்திரியாவின் இளவரசி யா வள் அவர் அங்கியநாட்டவளாகையால் பிரான்சு தேசத்தின் பிரச்சினைகளையோ அல்லது அதன் அரசியலையோ விளங் கிக்கொள்ளவில்லை. ஆகையால் அரசன்மேல் அவள் காட்டிய செல்வாக்கு தீமையையே விளைத்தது. அங்கிய நாட்டவள் என்று மக்களும் வெறுத்தனர்.
1774 பிரான்சுதேசத்தின் பணநிலை நெருக்கடி யான நிலைபரத்திலிருந்தது. வருடம்தோறும் கடனும் அதிகரித்தது. பதினருரம் லூயி தேகொற் என்ற சிறந்த வீரனை முதன்மந்திரியாக நியமித்தார். அவன் பிரபுக் களின் சலாக்கியங்களை நீக்குவதற்காகவும், அரசாங்கத்  ைத ச் சீர்ப்படுத்துவதற்காகவும் பெருந்திட்டங்களை ஆயத்தஞ் செய்தான். ஆனல் அரசனேடு சேர்ந்த சில பிரபுக்களின் சூழ்ச்சியினல் அவன் வீழ்ச்சியுற நேர்க் தது. பின்பு நெக்கர் என்பவர் நிதிமந்திரியாக நியமிக் கப்பட்டார். நெக்கர் பிரான்சுதேசத்தின் வரவையுஞ் செலவையுஞ் சமன்படுத்தி பணநிலையைத்திருத்தி முயன் றவிடத்தில் அமெரிக்க நா டு க ளின் சுதந்திரப்போர் தொடங்கியதும் பிரான்சுதேசம் அமெரிக்காவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. அதனும் பணநிலை அதிகம் குன் றியது. ஈற்றில் நெக்கர், பிரபுக்களும் வ ரி யிறு க் க வேண்டுமென்று அபிப்பிராயப்பட அவருக்கு மாறாக எதிர்ப்பு உண்டானது. 1784-ல் அவருக்தனது பதவியி னின்று நீங்கநேரிட்டது பின்பு அரசன் எல்லாவகுப் பினரும் வரிகொடுக்கவேண்டுமென்று அரச அதிகாரத் தைப் பாவித்துக் கட்டளையிடப் பிரசைகள் எதிர்த்தனர். லூயி பின்பு நெக்கரைப் பழையடி நியமித்து அவனு டைய புத்திமதியின் பிரகாரம் "ஸ்டேட்ஸ்ஜெனரல்” என்ற பாராளுமன்றத்தைக் கூட்டினர் இதுவரையும் கூட்டப்படாத பாராளுமன்றம், இப்போ பணக்கஷ்ட மேற்பட்டதனல் கூட்டப்பட்டது.

Page 70
130 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
இனி அமெரிக்காவிலுள்ள குடியேற்ற நாடுகளின் சுதந்திரப்போர் நடைபெற்ற பொழுது பிரான்சியப் போர் வீரர்கள் அங்நாடுகளுக்காகச் சண்டை செய்து அவர்கள் வெற்றிபெற உதவி செய்தனர். அந்த சுதந் திரப்போரிற் பங்குபற்றினவர்கள், தாங்களும் தங்களு டைய சுதந்திரத்திற்காக வாதாடவேண்டுமென்ற எண்ண முடையவர்களானர்கள். லூயிவேண்டியமாற்றங்களைச் செய்து பிரசைகளுக்குத் திருப்தியுண்டாக்கவில்லை. தத் துவ ஞானிகளும் அறிவாளிகளும் அங்கிருந்த சீர்கேட் டைப்பற்றிக் கண்டித்து எழுதினர்கள். வொல்ற்றெயிர் அங்கே காணப்பட்ட பழைய ஸ்தாபனங்களிலுள்ள குறைகளைக் கண்டித்தார் டிடெறெட் என்னும் பெரி யார் ள்வ்விதமான பிரச்சனைகளையும் மனுஷன் தனது அறிவைக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி னர். மொன்ரெஸ்கியு, மனுஷ சமுதாயத்திற் பெற க் கூடிய பெரிய நன்மை சுதந்திரமென்றும், பிரித்தானிய ஸ்தாபனங்களைச் சுட்டிக்காட்டி, சுதந்திரத்தை எவ்வண் ணம் அரசியல் முறைகள் மூலம்பெற்றுக் கொள்ளலா மென்று போதித்தார். திருத்தமான நிலையை நாட்டி லுண்டாக்குவதென்ருரல் அப்போதுள்ள ஸ்தாபனங்க ளெல்லாம் முற்ருரக அழிக்கப்படவேண்டுமென்றும் கூறி னர். அவர்களுடைய கொள்கைகள் மக்களுடைய மன திற் பதிந்தன. அவர்கள் எல்லோரிலும் பார்க்க றுாஸோ செய்த போதனையே வரப்போகின்ற புரட்சிக்கு பிர தான காரணமாயிருந்து மக்களுடைய மனத்தைத் தூண் டிவிட்டது. அவருடைய போதனை ஐந்து பிரதான நியா யங்களைக் கொண்டுள்ளது. அரசாங்கத்திற் காணப்படும் சீர்கேட்டினலேயே மக்களுக்குத் துன்பமுண்டாகின் றது; ஒவ்வொரு மனுஷனுக்கும் சுதந்திரத்தை யளிக்க மறுப்பதே அச்சீர்கேடுகளுக்கு மூலகாரணமாகும்; மக் களின் பூரண ஆட்சிமுறையினலேயே அவ்விதசுதந்தி ரத்தைப் பெற் அறுக் கொள்ளலாம்; மக்களினுடைய பொதுவான கொள்கை, சரியானமுறையில் நிலைநாட் டப்பட்டால், பிழைகள் ஏற்படஇடமில்லை. ஆகையால்

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 3.
விரும்பத்தக்க ஒரு சமுதாயத்தை திருத்தியமைப்பதற்கு பழைய ஸ்தாபனங்கள், பழைய வழக்கங்கள் ஒருங்கே அழிக்கப்பட்டு, ஜனநாயக அரசியல் முறை ஸ்தாபிக்கப் படவேண்டுமெனக் கூறினர். சுதந்திரம் நீதி, சகோ தரத்துவம் என்னும் சிறந்தகொள்கைகளை நிலைநாட்டுவ தற்கு மக்கள் எல்லோரும் ஏகமனதோடு முயற்சிப்ப தற்கு தத்துவஞானிகளுடைய போதனைகள் சாதகமா யிருந்தனவெனலாம். மக்க ளின் சம்மதத்தின் பிரகா ரமே, அரசன் அதிகாரத்தைப் பெற்றுள்ளான். ஆகை யால் அதிகாரம் அரசனிற் தங்கியிருக்கவில்லையென்றும், மக்களின் பொது தீர்மானத்திற் தங்கியிருக்கிறதென் அறும் நாட்டின் அரசாங்கத்தில் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்க வேண்டுமென்றும் றூசோ கூச்சலிட்டார். இவ்வெண்ணங்கள் மத்தியவகுப்பினரைச் சிந்திக்கச் செய்தன.
1789-ல் 'ஸ்டேட்ஸ் ஜெனரல்’ என்ற பாராளுமன் றம் கூட்டப்பட்டவுடன், ஆரம்பத்தில் மூன்று வகுப் பினருடைய பிரதிநிதிகளும் வெவ்வேருகக் கூடி ஆலோ சித்தனர். ஆனல் எல்லா வகுப்பினரும் ஒரு மித் து ஆலோசனை செய்து வேண்டியதிருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று மத்தியவகுப்பினர் அபிப்பிராயப்பட்ட னர். இரண்டாம் வகுப்பைச்சேர்ந்த சமயகுருமார்களும் மத்தியவகுப்பினருடன் சேர்ந்தனர். மூன்று வகுப்பின ரும் ஒருமித்துக்கூடிய படி யால் அது தேசியமக்கட் சபையென அழைக்கப்பட்டது. இச்சபையைக் கூட்டி வேண்டியதிருத்தங்தளைச் செய்ய வேண்டுமென்று தீர் மானஞ் செய்தனர். இப்புதிய சபையின் ஒரு சாரார் அரசனின் ஆளுகையை இல்லாமற் செய்து மக்களின் ஆளு  ைக  ைய ஸ்தாபிக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டனர். "யாக் கோபின்ஸ்' என்று சொல்லப் பட்ட இப்பகுதியார் அதிகாரத்தோடு முன்னணியி னின் று போராடத்தொடங்கினர். சீக்கிரத்திலொரு ளெர்ச்சியுண்டானது. அத்தீவிரவாதிகள் ‘பாஸ்ரையில்’ என்ற பழைய கோட்டையைக் கைப்பற்றினர் இக்

Page 71
132 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
செய்கை பழைய ஆளுகைமுறையின் வீழ்ச்சிக்கு அறி குறியென பலர் எண்ணினர் ஆனல் பிரான்சுதேசத் தில் தீவிரவாதிகளின் ஆளுகை ஆரம்பமானது. பாரிஸ் நகரத்திலுள்ள தீவிரவாதிகள் வேர்செவில்ஸ் அரண் மனைக்குச் சென்று பலமற்ற லூயிமன்னனை பாரிஸ் நகரத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுடைய செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. 1791-ம் ஆண்டுக் கிடையில் இருசம்பவங்கள் நடைபெற்றன. புதிய அரசி யற்திட்டமொன்று வகுக்கப்பட்டதொன்ருரகும். மற்றது பிரான்சுதேசத்தின் எல்லாப்பகுதிகளிலும் சீர்குலைந்த நிலை மேலும் மேலும் அதிகரித்தது. தேசியமக்கட் சபை மக்கள் உரிமைத்திட்டமொன்றைப் பிரகடனஞ் செய்தது. அது நிலமானிய முறையிற் காணப்பட்ட வழக்கங்களை அறவேயொழித்து விட்டது. கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன, புது அதிகாரிகள் அதிகாரத்தைச் செலுத்த முடிய வில்லை, அவர்களால் வரியறவிட முடியவில்லை. சேனை யிலும் பட்டாளத்திலும் ஒழுங்கீனம் காணப்பட்டது. தீவிரவாதிகளின் செல்வாக்கே கூடிக்கொண்டது. அர சனும் மனைவியும் ஒடித்தப்பிக்கொள்ள எத்தனித்த பொழுது அவர்கள் கைதி செய்யப்பட்டனர். கைதி செய்யப்பட்டபின்னரே புதிய அரசியல் முறைக்குச் சம்மதங் கொடுத்தார்.
புதிய அரசியற்திட்டத்தின்படி ஸ்தாபிக்கப்பட்ட சட்டநிரூபண சபைக்கு அனுபவமற்றவர்களும் மனத் தைரியமுமற்ற அங்கத்தவர்களே தெரியப் பட்டனர். அதனல் தீவிரவாதிகள் தங்கள் செல்வாக்கை மேலும் மேலும் காட்டினர். பாரிஸ் நகரில் பயங்கரமான நிலை யேற்பட்டது. அரசன் சிறைச்சாலையிலிடப்பட்டான். மக்களுடைய பிரதிநிதிகளைக் கொண்டுள்ள " கொன் வென்ஷன்” என்ற சபை உண்டாக்கப்பட்டது. அத னுடைய புதிய அரசியற்திட்டத்தின்படி பிரான் சில் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. புதிய கொள்கைகளுக்கு மாறனவர்கள் வாளுக்கிரையாகினர். பாரிஸ்5கரில் அதே

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 133
கர் கொல்லப்பட்டனர். பயங்கர ஆட்சி முறை நிலவி யது. பலர் “கிலற்றின்” என்ற பெரிய யந்திரத்தினற் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். பதினருரம் லூயியே முதற் சிரச்சேதஞ் செய்யப்பட்டான். (1793) ஐரோப்பிய நாட்டு அரசர்களெல்லோரும் ஏக்கமுற்றனர். ஐரோப் பிய நாட்டு அரசர்களெல்லோரும் தற்பாதுகாப்புக்காக வும், லூயியின் மேலுள்ள அனுதாபத்தினுலும், பிரான் சுக்கெதிரே படையெடுத்துச் செல்ல பெருஞ்சேனை யைத் திரட்டினர். வேகரமான உணர்ச்சியினுற் தாக் கப்பட்ட பிரான்சிய மக்கள், இங்கிலாந்துக்கும், ஒல் லாந்துக்கும், ஸ்பானியாவுக்கும் எதிரே போர்தொடங்கு வதாக வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் ஐரோப்பிய வல்லரசுகளின் சேனை கள் எல்லாப் பக்கங்களிலுமிருந்து எல்லைப்புறங்களைத் தாண்டி உட்புகுந்தன. உள்நாட்டுக் கலகங்களுமேற்பட் டன. இங்கிலையில் புரட்சிக்காரரின் தலைவர்கள் பொது மக்களின் பாதுகாப்புச்சபையொன்றை நிறுவி ( p அதிகாரத்தையும் தமக்குரிமையாக்கினர். புரட்சிக்க ) நீதிஸ்தலமூலம் தங்களுக்கு மாருரன எல்லோரையும் கொலைசெய்வித்தனர். இவ்வகையாகக் கலகங்களடக்கப் பட்டன. பின்பு ஏனைய பகைவர்களை துரத்துவதற்காக நாட்டில் கட்டாயப் போர்ச்சேவைமுறையை ஸ்தாபித் தனர். கானுெற் என்ற வீரனின் தலைமையின் கீழ் பெருஞ் சேனை திரட்டப்பட்டது. நாடு முழுவதும் போர்மயமா யிருந்தது. பிரான்சிய மக்கள் புரட்சியினலேற்பட்ட ஊக்கத்தோடும், தேசாபிக்ரனத்தோடும் சண்டைசெய் தமையினல் 1793-ம் ஆண்டு முடிவதற்குமுன் படை யெடுத்துவந்த அங்கிய5ாட்டுச் சேனைகளெல்லாம் துரத் தப்பட்டன. அவுஸ்திரியா, பிரஸ்ஸியா, பிரித்தானியா ஒல்லாந்து, ஸ்பானியா, சார்டினியா முதலிய நாடுகள் ஒன்றுசேர்ந்து ஐக்கிய எதிர்ப்புக்கட்சியை ஸ்தாபித்து அனுப்பிய சேனை ஐக்கிய எதிர்ப்புக்கட்சியினர். ஒரு வரோடொருவர் பொருமை கொண்டமையாலும், ஒவ் வொருவரும் சமாதானமேற்படுங்காலத்தில் தாம் பெற்

Page 72
184 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
அறுக்கொள்ளக்கூடிய நாட்டையும்பற்றி அவாவுற்றிருந் தமையில்ை, ஒரு தகுந்த தளகர்த்தனில்லாமையினுலும் வெற்றிகரமாய்ப் போரை நடத்தமுடியவில்லை. ஒல் லாந்து, பெல்ஜியம் என்ற இரு நாடுகளிலிருந்தும் ஐக் கியக் கட்சியினருடைய சேனைகள் எல்லாம் துரத்தப் பட்டு றைன் ஆறு வரையிலுள்ள பகுதிகளெல்லாம் பிரான்சியருடைய அதிகாரத்துக்குட்பட்டது. ஆகை யால் ஒல்லாந்தும், பிரஸ்ஸியாவும், ஸ்பானியாவும் ஐக் கிய எதிர்ப்புக்கட்சியினின்று விலகினர்.
பயங்கர ஆட்சியின் தலைவரான ருெபிஸ்பீர் டான் ரன் மாறற் முதலியோர் கொல்லப்பட அவ்வாட்சியும் முடிவடைய 1795-ல் சனநாயக ஆட்சிமுறை அழிக்கப் பட்டு இருசபைகள் கொண்ட ஒரு சட்டநிரூபண சபை ஸ்தாபிக்கப்பட்டது. அச்சபை ஐந்து அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ' டிறெக்டறி' என்று சொல்லப்பட்ட நிர்வாகசபைக்கு அதிகாரத்தைக் கொடுத்தது. இது ஸ்தாபிக்கப்பட்டதும் (1795) புரட்சி காலம் முடிவடைந் தது என்று சொல்லலாம்.
அப்பயங்கரமான காலத்தை அனுபவித்த பிரான்சு தேசம் என்ன பயனைப்பெற்றது என்று ஆராய்ந்து பார்த்தால், நாட்டில் பழைய நிலமானிய முறையும், வகுப்பு பேதங்களும் அறவே ஒழிக்கப்பட்டு மக்கள் யாபேருக்கும் சமத்துவம் கிடைத்தது. ஆனல் சமாதான முறையைக் கையாளாமையால் அரசியற் சுதந்திரத்தை மக்கள் இழந்தனர். அதோடு திேயும், சகோதரத்துவ மும், சமாதானமுமே நோக்கமாக எழுந்த புரட்சி சிறிது காலத்துக்குள் ஐரோப்பா முழுவதும் என்றுமில்லாத பயங்கரமான போரையும் நிஷ்டூரத்தையும் உண்டாக்கி விட்டது. அது எப்படி என்றதைப்பற்றி இனி ஆராய் வோம். பிரான்சிய வீரர் ஒல்லாந்துக்குப் படையெடுத் துச் சென்று பட்டேவியா என்ற மக்கள் ஆட்சி முறையை ஸ்தாபித்தனர்.
பிரான்சியருடைய அதிர்ஷ்டமென்று சொல்லத்தக் கதாக நெப்போலியன் என்ற யுத்தவீரன் சேனைக்குத்

பிரான்சியப் புரட்சியும் ஐரே 'பிய 'pth 135
தலைமைதாங்கி 1796-ல் அவுஸ்திரியாவின் அதிகாரத்தை அழிப்பகற்கு படையெடுத்துச்சென் ரன். ஆரம்பத்தில் இத்தாலி நாட்டினுட் புகுந்து சார்டிஸ்னியாவைத் தாக் கினமையால் அது அவனேடு சமாதானஞ் செய்து கொண்டது. பின்பு லொம்பாடியைக் கைப்பற்றி அவுஸ் திரியாவ்ை இத்தாலியிலிருந்து துரத்தினன். பின்பு அவுஸ்திரியாவைப் பல சண்டைகளிலும் தோற்கடித்த படியால் அங்காடு சமாதானஞ்செய்ய உடன்பட்டது. இவ்விதமான குதூகலமான வெற்றிகள் ஸ்பானியாவை பிரான்சோடு சேர்ந்துகொள்ளத் தூண்டியது. பிான் சியர் ஒல்லாந்தைக் கைப்பற்றியபடியால் ஒல்லாம். ரு டைய கடற்படையையும் ஸ்பானியருடைய கடற்படையை யும் தங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தனர். அவுஸ் திரியாவின் தோல்வி பிரித்தானியாவைத் தனியேகின்று சண்டைசெய்யும் நிலையில்விட்டது. பெல்ஜியும், மேற்கு ஜேர்மனி, ஒல்லாந்து, வடக்கு இத்தாலி பிரான்சிய ரின் ஆதிக்கத்துக்குட்பட்டன. மத்தித்தரைக்கடலிலும் பிரான்சின் ஆதிக்கம் கூடிக்கொண்டது. ஸ்பானியா வும் சேர்ந்துவிட்டது. ஐரோப்பாவில் ஒரு வல்லரசாகு தல் பிரான்சை எதிர்க்கத் தயாராயில்லை. பிரான்சிய கடற்படையும் ஸ்பானியக் கடற்படையும் ஒன்றுசேர் வதைத் தடுப்பதற்காகப் பிரித்தானிய கடற்படைத் தலைவனுகிய யேர்விஸ் என்பவன் அனுப்பப்பட்டான். சென்ற வின்சென்ற் முனையில ஸ்பானியக் கடற்படை யோடு செய்த சண்டையில் நெல்சன் பெற்ற வெற்றி ஆங்கிலேயருக்கு உற்சாகத்தை ஊட்டியது. பின்பு ஒல் லாந்தர் காம்படவுன் என்ற கடற்சண்டையில் டன்கன் என்ற பிரித்தானிய கடற்படைத் தளகர்த்தனம் தோற் கடிக்கப்பட்டனர். அவ்விரு வெற்றிகளின் பயனக ஆங் கிலேயருடைய கடலாதிக்கம் திரும்பவும் ஸ்தாபிக்கப் ill-L-g
பிரித்தானியாவுக்குப் படையெடுத்துச்சென்று அங் நாட்டைக் கைப்பற்றுவதற்கு பிரான்சியக் கடற்படை பெலப்படுத்த வேண்டுமாகையால் பிரித்தானியருடைய

Page 73
36 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
வெளிநாட்டு வர்த்தகத்தை அழிப்பதே யுக்தி என வுணர்ந்த நெப்போலியன் 1798-ல் எகிப்தைக் கைப் பற்றும் நோக்கத்துடன் 35000 போர்வீரர்களுடன் பிரான்சியக் கடற்படையை கொண்டுசென்ருரன். அவன் அலெக்சாந்திரியாவுக்குப் போய் அங்கே சண்டைசெய்து வெற்றிபெற்றபின் கெயிரோவையுங் கைப்பற்றினன். நெப்போலியன் எகிப்துக்குச் செல்வதைக் கவனித்த நெல்சன் அவனைப் பின்தொடர்ந்தான். அபூக்கர் முனை யில் கடைபெற்ற சண்டையில் நெப்போலியன் தோற் கடிக்கப்பட்டான். இந்தச் சிறந்த வெற்றியின் காரண மாக மத்தித்தரைக்கடலில் ஆங்கிலேயருடை ஆதிக்கம் பெலமடைந்தது. இதற்கிடையில் பிரித்தானியா, ரூஷியா அவுஸ்திரியா, துருக்கை ஒன்றுசேர்ந்து இரண்டாம் ஐக்கிய எதிர்ப்புக்கட்சியை ஸ்தாபித்தன. சீக்கிரத்தில் பிரித்தானியர் மைனேக்காவைக் கைப்பற்றினர்.
எகிப்திற் தோல்வியடைந்த நெப்போலியன் சீரியா வுக்குச்செல்ல அங்கே சேர் சிட்னிசிமித்தினுற் தடுக்கப் பட்டுப் பிரான்சுக்குத் திரும்பினன். எகிப்துக்கு நெப் போலியன் சென்ற காலத்தில் பிரான்சின் கிர்வாகத்தை நடத்திய டிறக்டறி என்ற அரசாங்க ஸ்தாபனம் திறமை யற்றதாயும் பணக்கஷ்டமுடையதாயும் இருந்தமையில்ை மக்கள் அதை வெறுக்கத்தொடங்கினர். நெப்போலிய னற் கைப்பற்றப்பட்ட பெல்ஜியம், மேற்கு ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகள் அங்கே அனுப்பப்பட்ட
பிரான்சிய நிர்வாகிகளின் கொடுமையினுல் கஷ்டமடைந்
தனர். சுவிட்ஸலாந்து, பைட்மொன்ற, நேப்பிள்ஸ் ஆகிய நாடுகளிலும் பிரென்சுக்காரர் குடியரசை ஸ்தாபித்த னர். இதனுல் இரண்டாம் ஐக்கிய எதிர்ப்புக்கட்சியை ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. இக்கட்சியிற் சேர்ந்த ரூஷியா, அவுஸ்திரியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் பிரான்சின் ஆதிக்கத்திலிருந்த நாடுகளைக் கைப்பற்ற எண்ணங்கொண்டு ஒல்லாந்துக்கும் இத்தா லிக்கும் படையெடுத்துச் சென்றனர். ஒல்லாந்தில் அவர் கள் பிரென்சுக்காரராம் தோற்கடிக் கப்பட்டனர்.

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 37
ரூஷியா ஆரம்பத்தில் வெற்றிபெற்றபொழுதிலும் ஈற் றில் தோல்வியடைந்தமையினுல் அக்கட்சியினின்றும் விலக, இங்கிலாந்தும், அவுஸ்திரியாவுமே பிரான்சை எதிர்க்கவேண்டியிருந்தது. அந்த நேரத்திலேயே நெப் போலியன்’எகிப்திலிருந்து பிரான்சுக்குத் திரும்பினன். நெப்போலியன் பிரான்சு தேசத்தில் முழு அதிகாரத்தை யும் பெறுவதற்காக *டிறக்டறி'யை இல்லாமற்செய்து தான் முதற் 'கொன்ஸல் ? என்ற பெயரோடு தலைவன னன். பின்பு பிரான்சு தேசத்திற் பல திருத்தங்களைச் செய்தான். அரசசேவையைத் திருத்தி அமைத்து எல் லோரும் ஊக்கத்துடன் உழைக்கத்தக்கதாகச் செய் தான். பிரான்சியக் கத்தோலிக்கரோடு நட்புப் பூண் டான். கைத்தொழிலேயும் வர்த்தகத்தையும் விருத்தி செய்வதற்காக வழிவகைகளைத் தேடினன். தெருக்க ளைத் திருத்தி அமைத்தான். நீதிச்சட்டங்கள்ை வகுத்து அது சிறந்ததாயிருந்தமையினுற் பெருமையடைந்தான். பின்பு மறங்கோ, கொகின்லிண்டன் (1800) என்ற சண்டைகளில் அவுஸ்திரியாவைத் கோற்கடித் தான். இதன்பயனக இரண்டாம் ஐக்கிய எதிர்ப்புக்கட்சி யும் நிலைகுலைந்தது. ரூஷியா, டென்மார்க்கு. சுவீடன், பிரஸ்ஸியா ஒற்றுமைப் பொதுக்கட்சியினராகச்சேர்ந்து நெப்போலியனேடு சினேகங்கொள்ளச் சித்தமாயினர். ஆங்கிலேயர் டென்மார்க்கைத் தாக்கும்படி சேர் ஹைட் பாக்கரை ஒரு கடற்படையுடன் அனுப்ப அவன் கொப்பனேஜன் என்ற கடிற்சண்டையில் வெற்றிபெற் முன், டென்மார்க்கு ஒற்றும்ைப் பொதுக்கட்சியினின்று நீங்க ரூஷியாவும் சீக்கிரத்தில் அதைவிட்டு விலகியது. இதனுல் நெப்போலியன் வடக்கு ஐரோப்பிய நாடுகளி லிருந்து காத்திருந்த கடற்படைத் துண்யுமில்லாமற் போயிற்று. ஆங்கிலேயரும் நெப்போலியனும் சமாதா னஞ் செய்துகொள்ள விரும்பி 1802-ல் ஏமியன்ஸ் உடன் படிக்கையை எழுதிக்கொண்டனர். அதன்பிரகாரம் ஆங் கிலேயர் இலங்கையையும், ரினிடாட்டையுந் தவிர தாங் கள் கைப்பற்றிய ஏனைய இடங்களைக் கொடுப்பதாகவும்
18

Page 74
38 பிரான்சியுப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
பிரான்சியர் பெல்ஜியத்தையும் றைன் பகுதியையும் மாத்திரம் தங்களாட்சியில் வைத்திருப்பதாகவும் உடன் பட்டுக்கொண்டனர். 1802-ல் எழுதிய இவ்வுடன்படிக்கை பிரான்சிய புரட்சி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததெனலாம். ஏமியன்ஸ் உடன்படிக்கை ஒரு கிாங் கரமானதாகக் காணப்படவில்லை.
படிப்ட்டியாக நெப்போலியன் முழு அதிகாரத்தை யும் பெற்று எதேச்சாதிகாரியாக நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தான். அங்காட்டு மக்கள் அவனை சக்கராதி பதியாக ஏற்றுக்கொண்டனர். ஒரு பெருஞ்சேனையும் அவனுடைய அதிகாரத்தின் கீழமர்ந்திருந்தது. புரட்சி யினுலேற்பட்ட சுதந்திரம் அற்றுப்போனதுமல்லாமல் பழைய எதேச்சாதிகாரிகளினும் பார்க்கக் கூடிய அதி காரத்தை அவன் பெற்றதினுல் மக்கள் அவன் எண் ணப்படியே நடந்துகொள்ள வேண்டியிருந்தது. ஒல் லாந்து, சுவிட்ஸலாந்து, வடக்கு இத்தாலி, மேற்கு ஜேர்மனி பிரான்சுக்குக் கீழ்ப்பட்ட நாடுகளாயின. ஸ்பானியாவும் நட்புப்பூண்டது. அவுஸ்திரியா கான் அடைந்துள்ள தோல்வியின் காரணமாக எதிர்க்கச் சக்தியில்லாமலிருந்தது. பிரஸ்ஸியா நடுநிலைமை நாடாக விருக்க விரும்பியது. ரூஷியாவும் அங்நேரத்தில் பிரான் சோடு சேர்ந்துகொண்டது. ஆகையால் மேற்கு ஐரோப் பாவில் நெப்போலியனுடைய ஆதிக்கம் மேலும்மேலும் கூடிவிட்டது. ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடாவது அவ னுடன் எதிர்க்கத் தயாராயில்லை.
எகிப்து, நன்நம்பிக்கைமுனை, இந்தியா, அவுஸ்திரே லியா முதலிய நாடுகளையுங் கைப்பற்றத் திட்டம்போட் டிருந்தான். 1802-ல் நிறைவேறிய ஏமியன்ஸ் உடன் படிக்கைக்கு மாமுகப் பிரித்தானியர் மோல்ராவைத் தங்கள்வசம் வைத்திருக்கிருரர்களென்று நெப்போலி யன் கோபங்கொண்டு 1803-ல் மீண்டும் பிரித்தானிய ருக்கெதிரே போர் தொடங்கினன், இதுவே நெப் போலிய யுத்தமெனப்படும். பிரித்தானிய நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 139 வேண்டிய ஆயத்தங்களைச் செய்தனர். பிரித்தானிய
கடற்படையும் பலப்படுத்தப்பட்டது. நெல்சன், பாகாம், வின்சென்ற் முதலிய தளகர்த்தர்களும் பெரும் வெற் நிகளைப் பெற்ற வீரர்களாவர். இங்கிலாந்து மக்கள் எல்லோரும் யுத்தமுனையில் நின்று சண்டைசெய்ய சித்தமாயிருந்தனர். விக் கட்சி, டோறிக் கட்சியென்ற பேதமின்றி ஆர்வத்துடன் யுத்தத்தை நடத்த அர சாங்கத்தினரும் தயாராகியிருந்தனர்.
நெப்போலியன் ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்துக்குப் படையெடுத்துச் செல்ல உத்தேசித் துத் தனது கடற் ப  ைட க ளை பிறெஸ்ற், ரூலன், ருெட்ஸ்போட், பெருேரல் எ ன் ற துறைமுகங்களில் நிறுத்தியிருந்தான். பிரித்தானியருடைய கடற்படை அவைகளைத் தடுத்துக்கொண்டிருந்தது. ஆகை யா ல் நெப்போலியன் ஸ்பானியருடைய கடற்படையையும் பிரான்சியருடைய கடற்படையையும் மேற்கு இந்திய தீவுகளிற் சக்திக்கச் செய்து பின்பு இரு கடற்படை களும் ஐரோப்பாவுக்குத் திரும்புவதாகவும் அதனுல் ஆங்கிலேயக் கால்வாயின் காவலை விலக்கிவிடலாமென் றும் எண்ணத்தைப் பூர்த்தி செய்யலாமென்றுந் திட் டம் போட்டான். ஒழுங்குசெய்த பிரகாரம் பிரான் சியக் கடற்படை மேற்கு இந்திய தீவுகளுக்குச் செல்ல, அங்கேயே சென்றிருக்க வேண்டுமென்று ஐயுறவுற்ற நெல்சன் பின் தொடர்ந்து சென்ருரன். அதை அறிந் ததும் பிரான்சியக் கடற்படை ஐரோப்பாவுக்குத் திரும்பிச்செல்ல பின்பும் நெல்சன் அதைப் பின் தொடர்ந்து வந்து அக்கடற்படையை * றபல்கார்’ என்ற கடற்சண்டையிற் தோற்கடித்தான். இந்தப் பெரிய வெற்றி யின் மத்தியில் நெல்சன் காயப் பட்டு இறந்தான். இவ்வெற்றி இங்கிலாந்துக்குப் படை யெடுத்துத் செல்லும் எண்ணத்தைச் சிதைத்துவிட்டது. பிரித்தானியருடைய கடலாதிக்கமும் பலமுற்றது.
பல ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையினலேயே கெப்போலியனுடைய அ வா வைத் தடுக்கலாமெனக்

Page 75
40 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
கருதி பிரித்தானிய பிரதம மந்திரியாகிய இளையபிற் ரூஷியா சுவீடன் அவுஸ்திரியா ஆகிய நாடுகளோடு சேர்ந்து மூன்றும் ஐக்கிய எதிர்ப்புக் கட்சியை ஸ்தா பித்தான். இதையறிந்த நெப்போலியன் மாபெருஞ் சேனையோடு சென் அறு அவுஸ்திரியாவை 9 அல்ம் " என்ற சண்டையிற் தோற்கடித்து மீண்டும் * ஒஸ்ர லிட்ஸ்' என்ற சண்டையிற் தோற்கடித்தமையினல் அவுஸ்திரியாவின் எதிர்ப்பு சிதைவுற்றது. அதனல் மூன்றும் எதிர்ப்புக்கட்சியும் நிலைகுலைய நேரிட்டது. பின்பு நெப்போலியன் சேனையொன்றை நேப்பிள்ஸ் இராச்சியத்துக்கு அனுப்பி அதைக் கைப்பற்றி தனது சகோதரனுன யோசேப்பை அங்காட்டுக்கு அரசனுக் கினன். பின்பு ஒல்லாந்துக்கு தனது சகோதரனன அலுயியை அரசனுக்கினன். ஜேர்மன் நாடுகளைச் சேர்த்து றைன் குடியரசை ஸ்தாபித்து அந்நாடுகளிலிருந்து தான் நடத்தும் யுத்தத்துக்கு 68000 போர்வீரர்களைத் திரட்டினன். பிரான்சு, ஒல்லாந்து, இத்தாலி, மேற்கு ஜேர்மனி முதலிய நாடுகளில் நெப்போலியனுடைய செல்வாக்கே பரவியது. அவுஸ்திரியா தோல்வியடைந்த தாரு நாடாகும். ஸ்பானியா உதவியற்ற சிநேக நாடாகும். பிரஸ்ஸியா நடுநிலைமை பூண்ட நாடாகும். அச்சமயத்தில் Bெ ப் போ லிய னின் அதிகாரம் உன்னத நிலையை அ  ைட ந் தி ரு ங் த து. ஆனல் 1806-ல் பிரஸ்ஸியாவை நெப்போலியன் நடத்திய இழி வான முறையினுல் அந்நாடு அவனை எ தி ர் த் த து. உடனே யேணு என்ற சண்டையில் பிரஸ்ஸியாவைத் தோற்கடித்தான். அதற்கு உதவியளித்த ரூஷியாவைத் * பிறைட்லன்ட்” என்ற சண்டையில் தோற்கடித்தான். பின்பு பிரான்சும் ரூஷியாவும் ரில்சிற் என்ற உடன் படிக்கையின்படி பிரித்தானியாவுக்கெதிரே ஒற்றுமை பூண்ட சிநேக நாடுகளாயின.
மீண்டும், நெப்போலியன் இரு அம்சங்களைக்கொண் டுள்ள திட்டமொன்றை வகுத்தான். ஒன்று பிரித்தா னியருடைய கடலாதிக்கத்தை அழிக்கும் யோசனையும்

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 141
மற்ருெரன்று பிரித்தானியருடைய வர்த்தகத்தை அழிக் கும் யோசனையுமாகும். இதுவரையில் நடுநிலையைக் கடைப்பிடித்திருந்த டென்மார்க்கை பிரான்சோடும், ரூஷியாவோடும் சேரும்படி நெப்போலியன் கேட்டுக் கொண்டான். பிரித்தானியாவோடு சேரும்படி டென் மார்க்குக் 'ஒரு எச்சரிக்கையை கானிங் என்ற மந்திரி கொடுத்தபொழுது அந்நாடு அதை மறுத்ததினுல் சேர் ஹைட்பாக்கர் ஒரு கடற்படையுடன் சென்று கொப்ப னேஜன் என்ற கடற்சண்டையில் தோற்கடித்தான். அதனல் டென்மார்க்குத் தேசத்தின் கடற்படை அவர் கள் கையிற் சிக்கின. 1807-ல் நெப்போலியன் போத் துக்கல் நாட்டை வலோற்காரமாகக் கைப்பற்றினன்.
இங்கிலாந்தைத் தோற்கடிக்க இயலாதெனக் கருதி நெப்போலியன் பிரித்தானியரின் வர்த்தகத்தை அழிப் பதற்காக பேர்லின் அதிகாரச் சட்டங்களை விடுத்தான். இதுவே * கொன்ரினென்ரல் சிஸ்ரம் ’ எனப்படும். இதன் படி பிரித்தானியாவிலிருந்தோ அல்லது அதன் குடி யரசு நாடுகளிலிருந்தோ வருங் கப்பல்க்ள் பிரான்சு தேசத் துறைமுகங்களுக்கோ அல்லது அதன் சிநேக நாடுகளுக்கோ செல்லமுடியாது. இதை பிரஸ்ஸியா, அவுஸ்திரியா, ரூஷியா, ஒல்லாந்து ஜேர்மனி, இத்தாலி எனும் நாடுகள் கவனிக்கவேண்டியதாயிற்று. உடனே பிரித்தானியா அதைப்போன்ற சட்டங்களைத் தாங்களும் வகுத்தனர். அதன் பிரகாரம் சண்டையிலீடுபடாத நாடுகளின் கப்பல்கள் தங்களுக்கு மாருரன தேசங்க ளுக்குப் போகாமற் தடுக்கிப்பட்டன. சிக் கி ரத் தில் மோறிஷஷ் ஒல்லாந்தரின் கிழக்கிந்திய தீவுகள் பிரித் தானியராற் கைப்பற்றப்பட்டன.
' கொன்ரினென்ரல் சிஸ்ரம் ’ ஐரோப்பிய நாடுக ளுக்குக் கஷ்டத்தை மேலும் மேலும் உண்டாக்கியது ஆகையால் கள்ள வியாபாரம் ஒல்லாந்து, ஜேர்மனி இத்தாலி முதலிய நாடுகளுக்கூடாக ஐரோப்பிய நாடு களில் நடைபெற்றது. கொன்ரினென்ரல் சிஸ்ரத்தை

Page 76
142 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
ஸ்பானிய தேசம் ஏற்றுக்கொள்ளாதபடியால் அந்நாட் டுக்குப் படையெடுத்துச் சென்று அங்காட்டு அரசனைத் துரத்திவிட்டுத் தனது சகோதரனன யோசேப்பை 1808-ல் அரசனுக்கினன். தேசாபிமான உணர்ச்சி யுடன் அங்காட்டு மக்கள் எதிர்த்துச் சண்டைசெய்யத் தொடங்கினர். பிரான்சியப்படை பலவிடங்களிலும் காத் திராத தோல்வியை யடைந்ததுமல்லாது பல போர்வீரர் களையுமிழந்தது. ஸ்பானிய மக்கள் அடைந்த வெற்றி கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆச்சரியத்தையும் Bெப் போலியனுக்குத் திகிலையுமுண்டாக்கின. ஸ்பானியரின் வேண்டுகோளின்படி பிரித்தானியா பணவுதவியையும் போர்வீரர்களையும் அனுப்பிக்கொண்டிருந்தது. ஆர்தர் உவெலெஸ்லியின் தலைமையின் கீழ்ச்சென்ற பிரித்தா னிய சேனை பிரான்சியப் படைகளைப் பலமுறையும் தோற்கடித்தது. பின்பு நெப்போலியன் அந்நாட்டுக் குக் கொண்டுவந்த பெரிய சேனைத்திரளின் உதவியைக் கொண்டு முன்னேறிச் செல்ல பிரித்தானிய சேனை பின் நோக்கிச்செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடை யில் அவுஸ்திரியா போருக்கு எழுந்தமையினல் நெப் போலியன் அ ங் கே செல்லவேண்டியிருந்தமையினுல் தன்னுடைய முழுக்கவனத்தையும் ஸ்பானியப் போரிற் செலுத்த முடியவில்லை. 1812-ல் ரூஷியாவுக்கு எதிரே படையெடுத்துச் சென்றதினுல் நெப்போலியன் ஸ்பர னிய யுத்தத்தை முடிவுபெறச் செய்துகொள்ள இயலா மற்போனது. நீடித்த ஸ்பானிய யுத்தமே த ன க் கு ஆருரத புண்போல வேதனையையுண்டாக்கினதென்று நெப்போலியன் கூறினன், ரூஷியாவுக்கெதிரே நெப் போலியன் தன் கவனத்தைச் செலுத்தியபொழுது ஆர்தர் உவெலெஸ்லியாகிய உ வெ லிங் டன் பிரபு பிரான்சியப் படைகளை பல விடங்களிலும் தோற் கடித்து ஸ்பானிய நாட்டிலிருந்து துரத்திவிட்டான்.
ரூஷியா கொன்ரினென்ரல் சிஸ்ரத்தினுற் களப் புற்றுத் தங்களுடைய நாட்டைச் சிறந்த முறையிற் பெரும் இராச்சியமாக்க முயற்சிசெய்தது. ஐரோப்பr

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 43
வில் பிரான்சிய இராச்சியத்தைவிட வேறு பெரும் இராச்சியமிருக்கக் கூட டா தெ ன நினைத்து 1812-ல் மாபெருஞ் சேனையோடு ரூஷியாவுக்குப் படையெடுத் துச் சென்ருரன். 600,000 போர்வீரர்களைக் கொண் டுள்ள அவனது சேனை ரூஷியாவின் தலைநகரமான மொஸ்கோ வரைக்கும் முன்னேறியவுடன் ரூஷியர் பின்வாங்கி மொஸ்கோவுக்குத் தீயிட்டதினல் நெப்போ லியன் தனது சேனைக்கு உணவு கொடுக்க முடியாமல் பின்வாங்கவேண்டியிருந்தது. அங்கேயுள்ள தாங்கொ ணுக் குளிரினலும், உணவின்மையாலும் அநேக போர் வீரர்களிறந்தனர். எஞ்சிய போர்வீரர்களோடு திரும்பி வரும்பொழுது, பிரஸ்ஸியா, அவுஸ்திரியா, ஜேர்மனியி இலுள்ள நாடுகள் போருக்கெழுந்தன. நெப்போலியன் பிரான்சு தேசத்துக்கு வந்து ஒரு படையைத் திரட்டிக் கொண்டு எதிர்த்துவந்த ஐரோப்பிய சேன்ைகளோடு சண்டையிட்டான். லீப்ஸிக் என்ற இடத்தில் 1813-ல் தோற்கடிக்கப்பட்டான். இதன்பின் தன் இராச்சி யத்தைவிட்டு ஒட நேரிட்டது. எல்பா என்ற தீவுக்கு அனுப்பப்பட்டான். -
இந்த யுத்தத்திலீடுபட்ட ஐரோப்பிய நாடுகளெல் லாம் யுத்தத்தினுலேற்பட்ட மாறுதல்களையெல்லாம் ஒழுங் குபடுத்துவதற்காக 1815-ல் வீயென்னவில் ஒரு மகா Bாட்டைக் கூடினர். மகாநாடு கூடி மூன்று மாதத்திற் குள் நெப்போலியன் பிரான்சுக்குப் போய்ச்சேர்ந்தான். அவனைக் கண்டதும் பழைய போர்வீரர்களெல்லாம் அவனிடஞ் சென்றனர். ஆனல் அவன் திரட்டிய பெருஞ் சேனையானது பிரித்தானியா, ரூஷியா, அவுஸ்" திரியா, பிரஸ்லீயா அனுப்பிய சேனைகளுக்குத் தலைமை தாங்கிய உவெல்லிங்டனுல் உவரற்றலு என்ற சண்டை யில் தோற்கடிக்கப்பட்டது. பின் பு நெப்போலியன் சென்ற்கெலினு என்ற தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கே ஆறு வருஷங்களின்பின் இறக்கான். இவ்யுத்தத்தின் பயனுகச் சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ உணர்ச் சிகள் மக்களிடையே ஏற்பட்டன. மேல் வகுப்பினர்

Page 77
44 பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும்
தாழ்ந்த வகுப்பினர் என்ற பேதங்கள் குன்றிப்போ யின. நெப்போலியனுடைய யுத்தத்தினுல் வலோற்கார மாக நாடுகளைக் கைப்பற்றுங் தன்மை, நாடுமுழுவதை யும் போர்முனையில் நிறுத்தும் நிலைமை முதலிய கீமை களும் இடம் பெற்றன.
1815-ல் வீயன்னவில் ஒர் மகா நாடு கூட்டப்பட்டது. நெப்போலிய யுத்தத்தினலேற்பட்ட மாறுதல்களை ஒழுங் குபடுத்தும் நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளாகிய சார் அலெக்சாந்தரும், அவுஸ்திரியா வின் நிதிபொறுப்பாளனுகிய மெற்றணிச்சும், பிரித்தா னிய வெளிநாட்டு மந்திரியாகிய காஸிள்நீயும் மகாநாட் டைக் கூட்டினர். பிரான்சின் மீது அனுதாபங்காட்டி பழைய அரச வம்சத்தவனகிய பதினெட்டாம் லூயியை அரசனுக்கி 1791-ல் அங்காட்டின் எல்லைகள் எவ்வாறி ருந்தனவோ அவ்வாறே இருக்கவேண்டுமென்று சம் மதித்தனர். பிரான்சு நட்டஈடுங் கொடுக்கவேண்டியி ருந்தது. ஒல்லாங்தோடு பெல்ஜியமுமிணைக்கப்பட்டது. ரூஷியா பின்லாந்தையும், போலாந்தையும் பெற்றது. அவுஸ்திரியா இத்தாலியிற் சிலபாகங்களைப் பெற்றது. ஜேர்மனியிலுள்ள 39 நாடுகளும் ஒன்று சேர்க்கப்பட்டு அதற்கு அவுஸ்திரியா தலைமைதாங்கியது. ஜேர்மன் நாடுகள் ஐக்கியம் பூணுத வண்ணம் அவுஸ்திரியா அவை களை நடத்தியது. பிரித்தானியா கைப்பற்றிய இடங்களை மீண்டும் கொடுத்தபோதிலும் ஆபிரிக்காவின் கெற்கு முனைப்பகுதியையும் இலங்கையையும் தம்வசம் வைத்தி ருந்தது.
ஜேர்மனி இத்தாலிமுதலிய நாடுகளிற் தோன்றிய தேசீய உணர்ச்சிக்கேற்றவாறு ஒழுங்குகள் செய்யத் தவறினமையால் பத்தொன்பதாம் நூற்றண்டில் பலயுத் தங்கள் நேரிட்டன. இந்நாடுகள் ஒவ்வொன்றும் பத் தொன்பகாம் நூற்றண்டில் எவ்விதமாக ஐக்கியம் பூண்டு மேனிலை எய்தின என்ற வரலாற்றைப் பற்றிப் பின்வரும் அத்தியாயங்களிற் படித்துக் கொள்ளலாம்.

பிரான்சியப் புரட்சியும் ஐரோப்பிய யுத்தமும் 145
வினுக்கள்
பிரான்சியப்புரட்சியின் காரணங்களை ஆராய்க.
பிரான்சியப்புரட்சி நடைபெருமல் 16-ம் ஆாயிமன்னன் தடுத்திருக் லாமென்பதை நீ ஏற்றுக்கொள்ளுகிருயா?
பயங்கரமான, ஆட்சிக்காலத்தைப்பற்றி விபரித்து எழுதுக. புரட்சியுத்தம் எப்போ தொடங்கியது? அதனுடைய விசேஷ சம்
பவங்கள் யாவை?
10.
நெப்போலியன் எகிப்துக்குச் சென்றவரலாற்றை எழுதுக.
நெப்போலியன் தலைமைதாங்கிப்போரை நடத்தாவிட்டால் பிரான்சு ஐரோப்பிய வல்லரசுகளாற் தோற்கடி க் கப்பட்டிருக்கு மென sitt u6oTLDT ?
மேற்கு ஐரோப்பா முழுவதிலும் எவ்வாறு நெப்போலியன் தனது செல்வாக்கைப் பரப்பினுன். நெப்போலியனுடைய யுத்தத்தை விபரித்து எழுதுக. நெப்போலியனுடைய வீழ்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்க?
வீயன்னு மகா நாட்டில் என்ன தீர்மானங்கள் செய்யப்பட்டன?
19

Page 78
பதின்மூன்றும் அத்தியாயம் கைத்தொழிற் புரட்சி
உலகத்தின் பல்வேறு காலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்ட இயக்கங்கள் எல்லாவற்றிலும் பிரான்சியப் புரட்சியும், கைத்தொழிற் புரட்சியுமே மக் களுடைய கொள்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் முற்றாகமாற்றி அமைத்தனவெனலாம். இவைகள் பதி னெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் தோன்றினவாயினும் படிப்படியாக உலகத்தின் மற் றையபாகங்களிலும் பிரமிக்கத்தக்க மாற்றங்களை உண்டு பண்ணிவிட்டன. முன்னுெரு அத்தியாயத்தில் பிரான்சி யப் புரட்சியைப்பற்றிப் படித்திருக்கின்ருேரம். இதிற் கைத்தொழிற் புரட்சியினலேற்பட்ட மாற்றங்களையும் அவைளினலுண்டாய பயன்களையும் பற்றி ஆராய்வோம்
கைத்தொழிலும் விஞ்ஞானத்திலும் ஏற்பட்ட மாற் றங்கள் பத்தொன்பதாம் இருபதாம் நூற்ருரண்டுகளில் மிகவிரைவாக மக்களின் வாழ்க்கை நிலையை மாறுத லடையச் செய்தன. பதினெட்டாம் நூற்றண்டுவரையில் மக்கள் தங்கள் கிராமங்களோடும் அயற்கிராமங்களோடு மல்லாது உலகத்தின் மற்றைய பாகங்களோடு தொடர்பு பெற்று வாழவில்லை. பத்தொன்பதாம் இருபதாம் நூற் ருரண்டுகளில் ஒரு நாடாவது பிறநாடுகளோடு தொடர் பில்லாமலிருக்கவில்லை. கைத்தொழிலிலும் விஞ்ஞானத் தி லும், போக்குவரவுவசதிகளிலும் ஏற்பட்டமாற்றங் களே அவ்வகைப்பட்ட நெருங்கிய வாழ்க்கைக்குக் காரணங்களாகும்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களின் உதவியுடன் செய்யப்பட்ட ஏராளமான வர்த்த கப் பொருட்களின் உற்பத்தியே கைத்தொழிற் புரட்சியின் முக்கிய அம்சமாகும், இயந்திரங்கள் உபயோகத்துக்குக் கொண்டுவரப்பட்டவுடன் தொழிற்சாலைகள் தோன்றின ஆகையால் மக்கள் தொழில் செய்வதற்காக நகரங்களை நாடினர். குடிசைக் கைத்தொழில்களும் கிராமக் கைத்

கைத்தோழிற்புரட்சி 147
தொழில்களும் மறைவுற்றன. கைத்தொழிற்சாலைகள் தோன்றியவுடன் மக்கட் கூட்டம் பட்டணங்களிலும் Bக ரங்களிலும், அதிகரித்தமையால், அவர்களுக்கு உண வும், கைத்தொழிலுக்குவேண்டிய விளை பொருள்களும் கொண்டுப்ோகவேண்டியிருந்தது. அதுவுமல்லா மல் தொழிற்சாலைகளில் உற்பத்தியாக்கப்பட்ட பொருட்கள் அவ்விடங்களிலிருந்து வியாபார ஸ்தானங்களுக்கும், வெளி நாடுக ளு க்கும் அனுப்பவேண்டியதுமாயிற்று. ஆகையால் தெருக்களும் புகையிரத வீதிகளும், கப்பல் களும் தேவைப்பட்டன. இவ்வண்ணமாகத் தேவைப் பட்டயாவும் ஒரேகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஒன்றுக் கொன்று ஆதரவாக இருந்தமையே இப்புரட்சியிற் கவ னிக்கக்கூடிய விஷயமாகும்.
விஞ்ஞான ஆராய்ச்சியின் பயணுக, கரிச்சுரங்கங்களி லிருந்து நீரைப்பாய்ச்சுவதற்காக உபயோகிக்கப்பட்ட நீராவி இயங் தி ர மே முதலிற் கண்டுபிடிக்கப்பட்டது தொழிற்சாலைகளிலுள்ள இயந் தி ரங் க 8ள நீராவி யந்திரத்தின் உதவியைக்கொண்டு இயக்கலாமென்று யேம்ஸ் உவாட் என்பவர் கண்டுபிடித்தார். (1785) நெச வுத்தொழிலிலேயே முதன் முதலாகப் புதியமாற்றங்கள் தோன்றின. 1738-ல் யோன்கேய் என்பவர் கண்டுபிடித்த புதியமுறை நெசவுத்தொழிலை விருத்திசெய்வதற்கு உதவி யாயிருந்தது. அதனல் ஏராளமான நூல் தேவைப்பட் டமையால் நூல் நூற்கும் இயந்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்படியூடது. 'ஸ்பின்னிங்யெனணி” (1764) 'முயூல்” என்னும் நூல்நூற்கும் இயந்திரங்களை யேம்ஸ்காக்கிறீவ்ஸ் சாமுவேல்குருெம்ரன் முறையே கண்டு பிடித்தமையால் நெசவுத்தொழிலுக்குப் போதிய நூல் கிடைத்தது. பின்பு காட்றைட் என்பவர் நெசவு செய்யும் புதிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்தமையால் ஏரா ளமான சீலைகள் நெசவுசெய்யப்பட்டு வெளிநாடுகளுக் கும் அனுப்பப்பட்டன. அ 5ே க தொழிலாளருக்கு வேலைகள் கிடைத் தன. நெசவுத்தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கப்பட்டு அத்தொழில் விருத்தியடைந்தது,

Page 79
148 கைத்தோழிற்புரட்சி
இயந்திரங்களின் தேவை அதிகரித்தவுடன் இரும் பும், உருக்கும் உபயோகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. இரும்பை உருக்குவதற்கு நிலக்கரி உபயோகிக்கப்பட் டது. யேம்ஸ் உவாட் கண்டுபிடித்த நீராவியந்திரம் ஆரம் பத்தில் சுரங்கங்களிலிருந்து தண்ணீரை வெளியே பாய்ச்சுவதற்கே உபயோகிக்கப்பட்டதாயினும் பின்பு தரையில் ஒடக்கூடியதான வழி காணப்பட்டது. 1812-ல் புல்ரன் என்ற அமெரிக்கன் நீராவி இயங் தி ரத் தின் உதவியைக்கொண்டு தரைமார்க்கமாகச் செல்வ தைப்போல் கடல்மார்க்கமாகவுஞ் செல்லக்கூடிய வச தியைக் காட்டிவைத்தார். சீக்கிரத்தில் நீராவிக்கப்பல் கள் உபயோகத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
கைத்தொழிற் சாலைகள் நிலக்கரி இரும்பு உள்ள இடங்களுக்கு அணித்தாக ஸ்தாபிக்கப்பட்டன. பேமிங் காம், ஷெபீல்ட் முதலிய இடங்கள் கைத்தொழில் ஸ்தா பனங்களாயமர்ந்தன. இரும்புத் தொழிலைவிட ஏனைய கைத்தொழில்களும் நிலக்கரிபெறும் இடங்களிற் தோன் றின. இயந்திரங்களும் அவைகளை இயக்க நீராவியின் சக்தியும் உபயோகத்துக்குக் கொண்டுவந்தபின் கைத் தொழிற்புரட்சியேற்பட்டது. தொழிற்சாலைகள் ஸ்தா பிக்கப்பட்டன; மக்கட் கூட்டம் அதிகரித்தன; புதிய நக ரங்கள் தோன்றின; ஏராளமான பொருட்கள் வர்த்த கத்துக்கு ஏற்றமுறையில் விரைவாக உண்டாக்கப்பட் டன. தொழிலாளர், வீடுகளிற் செய்த சிறு கைத்தொழில் க3ள நீக்கி விட்டுத் தொழிற்சாலைகளிற் பெற்றவேலை களிலமர்ந்தனர். அத்தொழிற்சாலைகளை நிறுவிய கன வந்தர்கள் முதலாளிமார்களாயமர்ந்தனர். மக்கள் கிரா மங்களிலிருந்து நகரங்களுக்குச் சென்றமையால் இங்கி லாந்தின் தெற்குப்பாகத்தில் சனத்தொகைகுறைய வடக் குப்பாகத்தில் அதிகரித்தது. ஆனல் பாராளுமன்றத்து மக்கள் பிரதிநிதிச்சபையில், சனத்தொகை குறைந்த விடங்கள்ல் கூடிய அங்கத்தவர்களும், சனத்தொகை கூடியவிடங்களில் அங்கத்தவர்கள் குறைவாகவுமிருந் மையினுல் அரசியலில் மாற்றங்கள் தேவைப்பட்டன.

கைத்தொழிற்புரட்சி 149
இனிப்புதிதாக எழுந்த நகரங்களில் மக்க ளின் நிலை திருப்திகரமாகவில்லை.
ஆரம்பத்தில் கி முறு வ ப்ப ட் ட தொழிற்சாலைகள் போதிய வெளிச்சமில்லாதனவுமாய், சுகாதாரமற்றன வுமாய் இருத்தமையாற் தொழிலாளர் அதிககஷ்டப்பட் டனர். தொழிற்சாலை முதலாளிமார் தொழிலாளருடைய சுகத்தையோ, நன்மையையோ கவனியாதிருந்தபோதி லும் தொழிலாளர் எல்லாவற்றையுஞ் சகித்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டவில்லை. வேலைப்பஞ்சத்தின் நெருக்கடியி னல் தொழிலாளர் கூடின நேரத்துக்கும், குன்றந்த சம்ப ளத்துக்கும் பல கஷ்டங்களுக்குமிடையில் வேலைசெய்ய நேர்ந்தது. இதுவரையும் ஒரு தொழிலாளி தன் முயற் சியினலும் சிக்கனத்தினுலும் முதலாளியாக வரக்கூடும். இப்போ ஒரு தொழிற்சாலையை ஸ்தாபிப்பதற்கு பெருந் தொகையான பணம் தேவையா யிருந்தபடியால் ஒரு தொழிலாளி ஒரு தொழிற்சாலையை ஸ்தாபிக்கச் சக்தி யற்றவனைன். அதுவுமல்லாமற் தொழிற்சாலையில் வேலை செய்வதனல் வரும் சம்பளமோ தன்னையும் தனது குடும் பத்தையும் பாதுகாக்கப் போதாமையினல் தொழிற் சாலேயை ஸ்தாபிப்பது முடியாதவொருகாரியமாயிற்று. இக்காரணங்களினுல், தொழிலாளர் முதலாளிமார் என்ற இரு வகுப்பினருக்குமிடையில் சச்சரவுகளேற்பட்டன. சீக்கிரத்தில் தொழிலாளர் தங்கள் நலத்தைப் பாது காப்பதற்காக ஒருமித்து ஐக்கிய சங்கங்களை நிறுவி முதலாளிமார்களோடு வாதாடத் தொடங்கினர். அரசாங் கத்தார் ஆரம்பத்தில் ர்களுடைய முயற்சி களை அடக்க முயன்றும் சீக்கிரத்தில் அனுதாபங்காட்டத் தொடங்கினர். தொழிலாளர்களுடைய நிலையைத் திருத் துவதற்காகச் சட்டங்களையும் வகுத்தனர். ஷாவ்ஸ்பரி பிரபு தொழிற்சாலைகளின் நிலையைத் திருத்துவதற்கும் தொழில் செய்யும் சிறுபிள்ளைகளின் நிலையைக் கண் டித்து அதற்குவேண்டிய மாற்றங்களையுண்டாக்குவதற் கும் முயற்சிகள் செய்ததும் பாராட்டத்தக்க வொரு
விஷயமாகும்.

Page 80
150 கைத்தோழிற்புரட்சி
பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னெரு இடத் துக்குக் கொண்டுசெல்லும் வசதிகளும் கைத்தொழிற் புரட்சிக்கு ஆதரவாயிருந்தன. மூன்றும் ஜோர்ஜ் மன் னன் அரசனக வந்த காலத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகள் கால்வாய்களினுல் இணைக்கப்பட் டிருந்தன. நிலக்கரி பலவிடங்களுக்குங் கொண்டுசெல்ல இக் கால் வாய்கள் உதவியாயிருந்தன. கால்வாய்களை வெட்டி வசதி க3ளயளித்த பிரபுக்களில் பிறைன்ட்லி என்பவர் ஒரு சிறந்தவராகும். பதினெட்டாம் நூற்ருரண்டின் பிற்பகுதி யில் பிரான்சு தேசத்தில் தெருக்கள் எல்லாம் திருத்தி யமைக்கப் பட்டிருந்தன. அதேகாலத்தில் ரெல்போட், மெற்காவ் போன்ற அறிஞர்கள் இங்கிலாந்தில் வீதிகளை யும் பாலங்களையும் சிறக்கமுறையிற் திருத்தியமைத்த னர். பின்பு மக்கடம் என்பவர் சிறு கற்களைப் பரவி வீதிகளை அமைக்கத்தக்க வழியைக்காட்டி வைத்ததி ல்ை உணவுப்பொருட்கள், கிலக்கரி, விளைபொருட்கள், உற்பத்திப்பொருட்கள் முதலியவைகளைக் கொண்டுசெல் வதற்கு வசதியாகவிருந்தது. நிலக்கரிச்சு ரங்கங்களிலடிக் கடி ஏற்பட்ட அபாயங்கள் கம்பிரிடேவியினுற் கண்டு பிடிக்கப்பட்ட பாதுகாப்பு விளக்கினல் நீங்கின.
பழைய காலத்தில் வண்டிகளிலும், மிருகங்களிலும் ஒரு இடத்திலிருந்து இன்னெரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் தற்போது நீராவி இயந்தி ரங்களின் உதவியினல் சுலபமாகவும், குறைந்த செல வோடும் கொண்டுசெல்லப்படுகின்றன. புகையிரதவீதி கள் அமைக்கப்பட்டன. 1830-ல் ஜோர்ஜ் ஸ்ரீபின்சன் கண்டுபிடித்த 'ருெக்கெற்’ என்ற இயந்திரம் மணித் தியாலத்துக்கு 30 மைல்வரையில் ஒடி மக்களுக்கு அதி சயத்தை உண்டாக்கியது. அக்காலங்தொட்டு புகையிரத வீதிகள் உலகத்தின் எல்லாப்பாகங்களிலும் அமைக்கப் பட்டு போக்குவரவு வசதிகளை உண்டாக்கின. கடலில் பாய்க்கப்பல்களுக்குப் பதிலாக நீராவிக்கப்பல்கள் ஒடத் தொடங்கின. இக்கப்பல்களில் விரைவாகவும், பயங்கர மன்றியும் மக்கள் தூரதேசங்களுக்கு கடற்பிரயாணஞ்

கைத்தொழிற்புரட்சி 15
செய்யத் தொடங்கினர். சண்டைக்கப்பல்களும் நீராவி இயந்திரத்தினலேயே ஒட்டப்பட்டன. இனிக் கப்பல்க ளெல்லாம் இரும்பினுற் செய்யப்பட்டன. அமெரிக்கரும் பிரித்தானியருமே ஆரம்பத்தில் அவ்விதமான கப்பல் களைச் செய்தனர். கைத்தொழில் விருத்திக்கும், வர்த் தக விருத்திக்கும் புகையிரதமும் நீராவிக்கப்பல்களும் இன்றியமையாதனவாக இருந்தனவெனலாம். உற்பத் திப் பொருட்களும், விளைபொருட்களும் ஒரு நாட்டி லிருந்து இன்னெரு நாட்டுக்கு விரைவில் கொண்டு செல்லத்தக்கதாயிருக்கிறது.
பெற்றேல் எண்ணெய் உபயோகத்துக்குக் கொண்டு வரப்பட்டபின் மோட்டோர் வண்டிகள் பு தி த ர க அமைத்த தெருக்களில் ஒடத்தொடங்கின. டேயிம்லர் என்ற ஜேர்மன் தேசத்தவர் 1896-ல் கண்டுபிடித்த மோட்டோர் வண்டியும் உவில்பறைட் என்ற அமெரிக்க தேசத்தவர் 1903-ல் கண்டுபிடித்த ஆகாய விமானமும் அளவுகடந்த மாற்றங்களை உண்டுபண்ணிவிட்டன. தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்க மாகவும் பிரயாணஞ் செய்வதற்கு வசதிகள் ஏற்பட்ட தல்ை உலகத்தின் எல்லாப்பாகங்களும் ஒன்ருேரடொன்று தொடர்புபெற்றன. சுருக்கமான செலவிலும், குறைந்த நேரத்திலும் தூரமான இடங்களுக்கு மக்கள் செல்ல வும் ஒரு நாட்டவர்களோடு இன்னெரு நாட்டவர்கள் பழகிக்கொள்ளவும் வர்த்தகத்தை விருத்திசெய்யவும் கடி தங்கள் அனுப்பவும் சுலபமாகயிருந்தது. ஆகாய விமா னங்கள் உலகத்தின் எல்ல்ாப்பாகங்களையும் இஃனத்து விட்டதுமன்றி பிரயாணிஞ்செய்யும் நேரத்தையும் தூரத் தையும் மிகவும் குறைத்துவிட்டது. யுக்க காலத்தில் ஆகாய விமானங்கள் பகைவரின் நாடுகளில் குண்டுகளை வீசி அழிவையுண்டாக்குகின்றன. இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றபொழுது ஆகாய விமானங்கள் அதிக சேதத்தை உண்டுபண்ணின.
பழைய காலத்தில் கையினுல் அல்லது காற்றின் சக்தியினுல் அல்லது நீரின் சக்தியினுல் இயந்திரங்கள்

Page 81
152 கைத்தொழிற்புரட்சி
இயக்க பட்டன. தற்காலத்தில் இவ்வகையான இயற் கைச் சக்திகளை நீக்கி நீராவி, எண்ணெய், மின்சாரம் ஆகிய சிறந்த சக்திகள் உபயோகத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நீராவி, எண்ணெய் என்பவை களிற் பார்க்க மின்சார சக்தியே பிரமிக்கத்தக்க மாற் றங்களை உண்டாக்கிவிட்டது. வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குக&ளக் காணலாம். மின்சாரக் கம்பி கள்மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன. பத்தொன் பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்திலுள்ள உவீட்சன் என்பவனும் அமெரிக்காவிலுள்ள மோர்ஸ் என்பவனும் மின்சாரத்தின் உதவியைக்கொண்டு தந்தி அனுப்பக்கூடிய புதியவழியைக் காட்டிவைத்தனர். முப்ப தாண்டுகளின் பின்பு அமெரிக்காவில் வசித்த பெல் என்ற ஸ்கொத்துலாந்து நாட்டவன் மின்சாரக் கம்பி மூலம் மனுஷ சத்தத்தைக் கேட்கக்கூடிய புதிய முறை யைக்காட்டி மக்களைத் திகிலடையச் செய்தான், இவ் வண்ணமாக ஒரு நாட்டிலல்லாது கடலுக்கப்பாலுள்ள நாடுகளுக்கும் செய்தி அனுப்பக்கூடியதாகக் கடலூடாக மின்சாரக் கம்பிகளை அமைத்து வசதிகளை ஏற்படுத்தி னர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈற்றில் இத்தாலி தேசத்திலுள்ள மாக்கோனி என்பவன் மின்சாரக்கம்பி கள் இல்லாமல் செய்திகள் அனுப்பக்கூடிய புதுமுறை யைக் கண்டுபிடித்தபின் ஒலியை எல்லாவிடமும் பரப் பக்கூடிய புதியவழிதோன்றியது. கற்காலத்தில் வானெலி யைக் கேட்கிறதல்ை அடையும் நன்மைகள் பல. ஒரு இடத்தில் நடக்கும் சங்கீதக்கச்சேரி, உபங்கியாசங்கள் இன்னும் மற்றுஞ் செய்திகள் வானெலியின்மூலம் எங் கும் பரவுகின்றன. வானெலியின் மூலம் உலகத்தின் ஒரு பாகத்தில் நடைபெறுகின்ற சம்பவங்கள் யாவும் மற் றைய எல்லாப்பாகங்களிலுமுள்ள மக்கள் அறியக்கூடிய தாகவிருக்கிறது. இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் மின்சாரத்திலும் பார்க்கத் திறமைவாய்ந்த அணுக்சத்தி கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அது அழிவையுண்டாக்கும் ஒரு ஆயுதமாக உபயோகிக்கப்

கைத்தொழிற்புரட்சி 1 is
பட்டபோதிலும் விஞ்ஞானிகள் அதை மக்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு சக்தியாக மாற்ற லா மென ஆராய்ச்சியின்மூலம் அறிந்திருக்கின்றனர்.
இனி கிருஷி கத்தொழிலிற் காணப்பட்ட மாற்றங் களைப்பற்றி ஆராய்வோம். 1688-ல் இங்கிலாந்தில் கடை பெற்ற புரட்சியின் பயனக அரசியலில் செல்வாக்கை விரும்பியோர் நிலம்படைத்த பிரபுக்களாகவேண்டியதா யிற்று. ஆகையால் வர்த்தக வகுப்பினர் நிலங்களை வாங் கும் வேலையில் ஈடுபட்டனர். குதூகலமான வாழ்க்கையை நடத்துவதற்கு அப்பிரபுக்களுக்கு போதிய வருமானம் தேவைப்பட்டமையால் நிலங்களிலிருந்து வரும் வருவா யையே காத்திருந்தனர். சிறுநிலங்கள் பெரும் வருமா னத்தைக் கொடுக்காததினுல் கிருஷிகத்தொழிலைச் செய் வதற்குப் புதியமுறைகளைக் கையாளவேண்டியிருந்தது அப்புதிய முறைகளை உபயோகிப்பதற்கு பரந்த தோட் டங்கள் தேவைப்பட்டன. அதன்பயனக சிறிய விவ சாயிகள் தங்கள் நிலங்களை விற்று சொந்கமாய்க் காணி யில்லாத வறியவர்களாகி கூலிவே%ல செய்து சம்பளத் தைப் பெறவேண்டிநேரிட்டது. பொதுநிலங்களும் விவ சாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களாயின. அதனுல் பொதுமக்களுக்கே கஷ்டமேற்பட்டது. 1760-ம் ஆண் டுக்கும் 1843-ம் ஆண்டுக்குமிடையில் 7000,000 ஏக்கர் நிலம் இவ்வண்ண்ம்ாக ஒதுக்கப்பட்டது.
பதினெட்டாம் நூற்றரண்டுவரையும் நிலங்கள் அடுத்து இரண்டு வருஷங்களுக்கு. பயிர்செய்யப்பட்டு ஒரு வரு ஷத்துக்கு ஒன்றுஞ் செய்யாமல் விடப்பட்டிருந்தன. **டெர்னிப்ஸ்” போன்ற கிழங்குவகைகளையும், ஒருசாதிப் புல்லையும் இடையிடையே உண்டாக்குவதனல் நிலத் துக்கு ஒருவருஷஓய்வுகொடாமல் மாறிமாறிக் கோதுமை, வாளி முதலிய தானியங்கள் செய்யலாமென்பதை ரவுன் ஸென்ட் என்ற அறிஞர் கண்டுபிடித்தார். இதனல் நிலங்களுக்கு பசளை உண்ட்ாவதுமல்லாமல் மாடு ஆடுக ளுக்கு உணவுகொடுக்கும் வசதியுமேற்பட்டது. ரல் என்ற
20

Page 82
54 கைத்தொழிற்புரட்சி
ஒரு விவசாயி, நிலங்களே உழவுசெய்யும் முறையிலும், தானியங்களை விதைக்கும் முறையிலும் திருத்தங்களே உண்டாக்கினர். பேக்வெல் என்பவர் புதுமுறைகளின் மூலம் கால்நடைகளே விருத்திசெய்யக் காட்டிவைத்தார். நிலங்களே விஞ்ஞான சாஸ்திர முறைப்படி பண்படுத்த வும் மிருகங்களுக்கு உணவு உண்டாக்கவும் பேரறிஞர் கள் அக்காலத்திற் கண்டுபிடித்தனர்.
இம்மாற்றங்களின் பயனுக இங்கிலாந்துதேசம் கைத் தொழிலிலே ஈடுபட்ட பெருஞ்சனத்தொகைக்கு உணவு கொடுக்கக்கூடியதாக விருந்தது. பிரகானமாக நெப் போலிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யாமையால் அங்கே ஏற் பட்ட கஷ்டத்துக்கு உணவு உற்பத்தி ஒரு நிவாரண மாகவிருந்தது. 1750-ல் 6,000,000 சனத்தொகை 1820-ல் 20,000,000மாக அதிகரித்தபோதிலும் விவசாயத்தொழி லின் விருத்தியில் மக்களுக்குக் கஷ்டமேற்படவில்லை, ஆனல் அத்தொழிலின் விருத்தியினல் சில தீமைகளு மேற்பட்டதெனலாம். காட்டிலிருந்து கூலிவேலைசெய்து சீவனம் நடத்தியோர் மிகவும் வறுமைப்பட்டனர். அனே கர் தங்கள் சீவனத்துக்கு உழைப்பதற்காக நகரங்க ளுக்குச் சென்றனர். நாட்டிலேயேயிருந்தோர் அரசாங் கத்திலிருந்து பணவுதவி பெற்றுக் காலத்தைக்கழிக்க னர். 1834-ம் ஆண்டுவரையும் அவ்வுதவியளித்த “ஸ்பீன் காம்லான்ட் முறை" இங்கிலாந்தில் வழங்கிவந்தது.
கைத்தொழிற்புரட்சியின் பயனக உலகத்திலுள்ள பல்வேறு கண்டங்களும், ஆங்காங்கேயுள்ள நாடுகள் யாவும் ஒன்றுேடொன்று தொடர்புடையதாகவும், கூட் டுறவுடையதாகவும் விளங்கின. ஓரளவில் வெவ்வேறு நாடுகளிலுள்ள மக்கள் ஒரேவிதமான வாழ்க்கைமுறை களையும் அனுசரித்து, ஒரேவிதமான உணவையும் உண்டு ஒருவரோடு ஒருவர் பழகியும், வாழ்ந்துவருகின்றனர். இவைகளெல்லாம் ம்க்களின் ஒற்றுமையையும், நட்பை யும் உண்டாக்கிவிட்டன. சாதி வித்தியாசம் சமய வித்

ைேகத்தொழிற்புரட்சி 155
தியாசம், அங்கியர் என்ற மனப்பான்மை எல்லாம் அகன்று விசாலமான மனப்போக்கையும் உணர்ச்சியை யும் உண்டாக்கிவிட்டது. இவ்வண்ணம் பொருளாதாரப் புரட்சியினலேற்பட்ட நன்மைகளனந்தம், ஆரம்பத்தில் பிரித்தானியர் கைத்தொழிலிலும் வர்த்தகத்திலும் மற் றைய ாேட்டவர்களிலும் பார்க்க அதிக முன்னேற்ற மடைந்தனர். காலஞ்செல்ல அமெரிக்கா, யப்பான், ஜேர் மணி முதலிய நாடுகளும் கைத்தொழிலிலும் வர்த்தகத் திலும் போட்டியிடக்கூடிய நிலையில் வந்துவிட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின்பின் இந்தியா, சீனு முத லிய வேறும் அநேக நாடுகள் கைத்தொழிலில் விருத்தி யடைந்துவருவதை நாங்கள் கவனிக்கலாம். இப்புரட்சி யினுலேற்பட்ட நன்மைகள் பலவுளவாயினும் தீமைகளும் சில காணப்படுகின்றன. விஞ்ஞானிகள் புதிய முறை கள், சக்திகளைக்கொண்டு மனுஷவர்க்கத்தை அழிக்கக் கூடிய ஆயுதங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நச்சுப் புகைகளும், அணுக்குண்டுகளும் அவைகளுள் சிலவாம். மக்களுடைய வாழ்க்கைமுறை நாளாந்தம் மாறிக்கொண்டு போகிறது. கஷ்டமில்லாத சுகமான வாழ்க்கையில் மக் கள் விருப்பங்கொண்டு இருக்கின்றமையினல் சோம்ப லுள்ளவர்களாக மாறிவிடவுங்கூடுமென இடமுண்டு கைத்தொழிற்புரட்சி பல மாற்றங்களையுண்டாக்கிவிட் டது. இன்றும் மாற்றங்கள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன.
வினுக்கள்
1. கைத்தொழில் விருத்திவடைந்ததற்குக் காரணங்கள் யாவை?
2. நெசவுத்தொழிலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
3. தெழிலாளர் தங்களுடைய நிலையை எவ்வாறு சீர்ப்படுத்தினர்?
அரசாங்கங்கள் எவ்வாறு உதவிபுரிந்தது?
4. கிருஷிகத்தொழிலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
5, மக்களுடைய வாழ்க்கைமுறை மாறுதலடைந்ததற்குரிய காரணங்
களே ஆராய்க.
(). தற்காலத்தில் போக்குவரவு வ ச தி கி ஸ் சுலபமாயிருப்பதற்கு
6 Ill Juers)” tiāi ssir u " vovalu?

Page 83
பதினுன்காம் அத்தியாயம்
சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும் (1815-1848)
ஐரோப்பாவில், நெப்போலிய யுத்தத்தினலேற்பட்ட ஒழுங்கீனமான நிலையைச் சீர்படுத்துவதற்காக வீயன்ன மகாநாட்டிற் சந்தித்த இராசதந்திரிகள் எதிர்காலத்தில் வேறொரு புரட்சி ஏற்படாவண்ணம் விஷயங்களைத் தீர்த்துவைக்கவேண்டியது தங்களுடைய கடமையென வுண்ர்ந்தனர். புரட்சியென்பது ஒரு நாட்டின் அதிக ரிக்கு மாருக எதிர்ப்புக்காட்டுவதே என்று யோசித் தனரேயன்றி சமுதாயத்தின் திருத்தம் அத்தியாவசிய மென்பதையுணர்ந்திலர். ஐரோப்பாவில் சமாதானத்தை யும், ஒழுங்கையும் நிலவச்செய்வதே அவர்களுடைய நோக்கம். ஆனல் பிரான்சியப்புரட்சிக்கு முன்னிருந்த நிலையை ஏற்படுத்துவதற்கு ஒன்றுசேர்ந்த பிரபுக்களாக அவர்கள் காணப்பட்டனரேயன்றி மக் களிடையே செறிந்துகிடந்த விரிவான கொள்கைகளையும் தேசிய உணர்ச்சியையும் விளங்கி அவைக்கேற்ற தகுதியான ஒழுங்கைச் செய்துகொள்ள முயற்சிசெய்யவில்லை.
வீயன்னு மகாகாட்டில் அவர்கள் செய்துகொண்ட ஒழுங்குகளை ஆராய்ந்த பின்னரே அவர்கள் கவனி யாதுவிட்ட தவறுகளை விளங்கிக்கொள்ளலாம். 1792-ம் ஆண்டுக்கு முன்பாக பிரான்சு தேசத்துக்கு இருந்த எல்லை மீண்டும் அம்மகாநாட்டில் அங்கீகாரம்பெற்றது. பழைய அரசவமிசத்தினரே சிங்கா சனத்துக்கு உரிமை யானவர்களாகக் கொண்டுவரப்பட்டனர். ஜேர்மனியி னுடைய எதிர்கால நிலையை நிச்சயிப்பது ஒரு கஷ்ட மான பிரச்சினையாகத் தோன்றிற்று. நெப்போலியன் ஜேர்மன் நாடுகளைக் கைப்பற்றியபொழுது அவனுக் கெதிரே காட்டிய எதிர்ப்பினல் அங்கே எழுந்த தீவிர மான தேசீய உணர்ச்சிக்கேற்றவாறு சுகந்திரமான ஜேர்மன் இராச்சியம் வியன்னு மகாகாட்டில் ஆக்கப்

சுதந்திர உணர்ச்சியும் தேசிய இயக்கமும் 157
படுமெனப் பலர் காத்திருந்தனர். 350 தனிநாடுகளும் 39 நாடுகளாகக் குறைக்கப்பட்டு அவைகளனைத்தும் சமஷ்டி அரசியல் முறையை அவுஸ்திரியாவின் தலைமை யின்கீழ் பெற்றன. பிரஸ்ஸியா, ஜேர்மன் நாடுகளுக்குள் செல்வாக்குள்ள பெருங்காடாக விளங்கியது. அவுஸ் திரியா பெல்ஜியத்தை இழந்ததனுல், அது வெனிஸ், லொம்பாடி, இலீரியாவைப் பெற்றது. இத்தாலி பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஆனல் அங்கு அவுஸ் திரியாவின் செல்வாக்கு அதிகமாகக் காணப்பட்டது. வெனிஸ், லொம்பாடி, மொடின, பாமா, ரஸ்கனி அவுஸ் திரியாவின் கீழமர்ந்தன. மத்திய இத்தாலி போப்பரச ரின் ஆளுகைக்குட்பட்டது. நேப்பிள்ஸ், சிசிலி, ஸ்பா னிய அரசனுக்கே சேர்ந்தன. சார்டினியாவின் அர சன் பைட் மொன்ற், சவோய் ஆகிய பகுதிகளுக்கு அர சனனன். பெல்ஜியம், ஒல்லாங்தோடு சேர்க்கப்பட்டது. இரு சிறு 5ாடுகளும், மார்க்கம், சாதிவேறுபாடுக்ளினல் ஒற்றுமையாயிருக்கமுடியவில்லை. 5ோர்வே சுவீடனுேடு சேர்க்கப்பட்டது. ரூஷியாவாற் கைப்பற்றப்பட்ட பின் லாந்து ரூஷியாவுக்கே கொடுக்கப்பட்டது.
வீயன்ன மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பு களை அனுசரஃணக்கு கொண்டுவந்து நிலைநாட்டும் நோக் கத்துடன் அவுஸ்திரியா, ரூஷியா பிரஸ்ஸியா, ஒன்று சேர்ந்து பரிசுத்த ஒப்பந்த சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிறுவினர். வீயன்னு மகா6ாட்டின் தீர்ப்புகளை அனுசர ஃணக்குக் கொண்டுவருவதோடு ஒப்பந்தத்திற் சேர்ந்த '6ாடுகளனைத்தும் Bான்கு வஞ்டங்களுக்கொருமுறை கூட் 1உங்களைக் கூட்டி காலத்திக்குக்காலம் காணப்பட்ட கஷ், டங்களைச் சமாதானமுறையிற் தீர்த்துவைப்பதாக உடன் பட்டுக்கொண்டனர். எந்நாட்டிலும் புரட்சியையுண்டாக் கும் இயக்கங்களை அடக்கவேண்டுமென்பதும் அவர்க ளுடைய கொள்கையாகும். ஆனல் புரட்சிகளை அடக்க அவர்களால் முடியவில்லை. ஸ்பானிய நாட்டை அர சாண்ட பழைய அரசவமிசத்தவர்கள் எதேச்சாதிகாரி களாக ஆண்டமையால் கலகமேற்பட்டது. 1820-ல் அக்

Page 84
158 சுதந்திர உணர்ச்சியும் தேசீய:இயக்கமும்
நாட்டுச்சேனை கலகத்தையுண்டுபண்ணி புதிய அரசியற் சீர்திருத்தங்களை உண்டுபண்ணவேண்டுமென்று வாதாடி னது. அரசன் சம்மதிக்கவேண்டி சேர்ந்தது. விரிவான கொள்கைகள் ஸ்பானியாவிற் புகுந்ததைக்கண்டு,ஐரோப் பாவின் வடக்கு மத்திய நாடுகள் திகிலடைந்தன. ஆனல் அந்த இயக்கம் அடக்கப்பட்டு மீண்டு எதேச் சாதிகார ஆளுகை நிலைநாட்டப்பட்டது. அந்தப்புரட்சி தென் அமெரிக்காவில் ஸ்பானியருக்குள்ள நாடுகளில்
அதிக பயனையுண்டாக்கியது. அங்கேயுள்ள எட்டுக் குடியரசு நாடுகள் எதேச்சாதிகார ஆளுகையை மறுத்து சுயேச்சையான ஆட்சிமுறையை பிரித் தா னிய
வெளிநாட்டு மந்திரியாகிய கானிங் என்பவரின் ஆதர வோடு ஸ்தாபித்தன.
ஸ்பானிய நாடுகளின் தொல்லைகள் நீங்கியவுடன் கிரேக்கர் தங்கள் சுதந்திரத்துக்காகப் போராடத் தொடங்கினர். காலத்துக்குக்காலம் அங்கியருடைய படை யெடுப்பினல் கிரேக்கநாடு அல்லலுற்றது. அவர்கள் தங்க ளுடைய பண்டை5ாட் பெருமையை நினைந்தனர். ஒரு 'வாறு திரிவுயடைந்த கிரேக்க பாஷையே அங்காட்டு மக்களாற் பேசப்பட்டது. இரகசிய சங்கங்கள் மூலம், சுதந்திர உணர்ச்சியினலுந்தப்பட்ட மக்கள் போராட ஆயத்தஞ்செய்தனர். 1821-ல் கலகமேற்பட்டது. சுதந் திரத்தை விரும்பிய மக்களுக்கு ஊக்கத்தையும் ஆர் வத்தையும் அக்கலகம் உண்டாக்கியது. அப்போது துருக்கியரினதிக்கத்துக்குட்பட்ட அந்நாட்டுக்கு, விடுதலை யடைவது கஷ்டமாயிருந்தது. தனித்திருந்து சண்டை யிடின் தோற்றிருக்கக்கூடிய அங்காடு பிரித்தானியர் ரூஷியரின் உதவியோடு சண்டைசெய்து வெற்றிபெற் றது. 1827-ல் நவாரினுே என்ற கடற்சண்டையில் துருக் கியருடைய கடற்படை அழிக்கப்பட்டதினுல் அங்காட் டில் அவர்களுக்குரிய ஆதிக்கம் குன்றியது. அவ் வரு டத்திலேயே அது சுதந்திரத்தைப் பெற்றது. ஆங்கிலே யப் புலவனுகிய பயிரன் என்பவன் இந்நாட்டுச் சுதந்
திரப்போரிற் பங்குபற்றி அந்த யுத்தத்திலேயே மாண்

சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும் 59
டான். கிரேக்க சுதந்திரப்போர் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு புது உணர்ச்சியை உண்டாக்கியது. கிரேக்க சுதந்திரப்போர் அந்நியரின் ஆளுகைக்கெதிரேயெழுந்த தேசியக்கலகமாகும். அந்நூற்றண்டின், பின் அரைவா சிக் காலத்தில் தேசீயக் கொள்கை ஐரோப்பாவில் வலிமைபெற்றது.
தேசீய உணர்ச்சி ஒரே சாதி, ஒரேபாஷை, ஒரே மார்க்கம், ஒரேபண்பாடு என்பவைகளுள் ஒன்றினலோ அல்லது பலவற்றினலோ உண்டாவ கொன்றன்று. ஆனல் இவைகள் அவ்வுணர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தபோதினும் சரித்திரத்தில் ஒரே தொடர்புடைய மக்களிடமே அது காணப்படும். ஒரு நாட்டிலுள்ள மக் கள் யாபேரும் தங்களின் பொது நன்மைக்காகவும், பொதுவான நோக்கத்துடனும் போராடி ஒன்றுசேர் வகற்கிடமுண்டு. இவ்வண்ணமாக ஐக்கியப்பட்ட சாதி யினரே தேசீய உணர்ச்சியைப் பெறுகின்றனர். பத் தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வகையான தேசீய உணர்ச்சியைப் பெற்றவர்கள் தாங்கள் வசித்த 5ாட் டைத் தங்களுக்குரிய தனிநாடாக்க விரும்பினர். ஒவ் வொரு தனிச்சாதியினரும் தங்களுடைய விஷயங்களைத் தாங்கள் நடத்தவேண்டுமென்றும், அந்நியரின் ஆளு கையினின்று நீக்கப்படவேண்டுமென்றும் எண்ணத்தை யுடையராயினர். ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகள் இவ்வகையான தேசீயயுணர்ச்சியினல் ஐக்கியத்தை நிலை நாட்டும் தனிநாடுகளாக விளங்கவேண்டுமென்று முயற்சி செய்தன. இதேபோன்ற கிளர்ச்சி போலாந்து, பெல் ஜியம், அயர்லாந்து, பின்லாந்து முதலிய நாடுகளிற் தோன்றியது,
ஐரோப்பிய நாடுகள் பலவற்றுள்ளும் குடிகொண் டிருந்த அதிருப்தி 1830-ல் புரட்சியை உண்டாக்கியது, முதலில் பெல்ஜியத்திற் புரட்சியேற்பட்டது. வீயன்ன மகாநாட்டில் உவில் லியம் ஒல்லாந்துக்கரசனுகவும், அவன் ஆளுகையின்கீழ் பெல்ஜியமும் இருக்கவேண்டு

Page 85
60 சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும்
மென்று ஒழுங்குசெய்யப்பட்டது. ஒல்லாந்து மக்களிலும் பார்க்க, பெல்ஜியத்து மக்கள் சனத்தொகையிற் கூடிய வர்களாயும், கத்தோலிக்க சமயத்தவர்களாயும், பிரான் சியப் பாஷைக்குத் தொடர்புடைய பாஷையைப் பேசிய வர்களாயு மிருந்தமையால் புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஒல்லாந்கரின் ஆளுகையின்கீழ் இருக்கச் சம் மகப்படவில்லை. சுதந்திரத்தை விரும்பிய அங்காட்டவர் கள் கலகத்கையுண்டுபண்ணினர். ஒல்லாந்தரசன் கல கத்தையடக்க எத்தனித்தான். பிரித்தானியரின் உதவி யோடு பிரான்சியர் பெல்ஜியத்துக்குத் துணேபுரிய அவ் வரசன் இணக்கத்துக்குச் சம்மதித்தான். பெல்ஜியம் சுதந்திரத்தைப் பெற்றது. சுதந்திர பெல்ஜியத்துக்கு லியப்போல்ட் அரசனுக நியமிக்கப்பட்டான். பின்பு இங்கிலாந்து, பிரான்சு, அவுஸ்திரியா, ரூஷியா, பிரஸ் ஸியா பெல்ஜியத்தைப் பொதுநிலைமை நாடாக அங்கீ களித்தனர். முதலாம் உலகயுத்த ஆரம்பகாலம் வரைக் கும் அந்நாட்டின் பொதுநிலைமை எல்லா நாடுகளாலும் பாதுகாக்கப்பட்டது.
இதிலும்பார்க்கப் பெரிய இயக்கமொன்று பிரான்சு தேசத்திற் கொடங்கியது. நெப்போலியன் வீழ் ச் சி யடைந்ததன்பின் பதினரும் லூயியின் சகோதரனன பதினெட்டாம் லூயி அரசனனன். பிரான்சியப் புரட்சி காலத்தில் பிரான்சு தேசத்தைவிட்டுப் பிறநாடுகளுக்கு ஒடிய மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள் திரும்பவுக் கங்க ளுடைய நாட்டுக்குவந்து பழைய நிலைக்குத் தங்களுடைய நாட்டைக்கொண்டுவர முயற்சித்தனர். 1824 வரைக்கும் ஆண்ட பதினெட்டாம் லூயியும், பின் ஆண்டுகொண் டிருந்த பத்தாம் சாள்ஸ் மன்னனும் பழைய முறைப் படியே ஆளுகை கடத்தினால்லாது சட்ட அமைப்பின் பிரகாரம் ஆள விரும்பவில்லை. சாள்ஸ் அரசனுடைய செய்கையினுல் 1830-ம் ஆண்டு ஆடி மாதம் ஒரு கலக மேற்பட அவன் இராச்சியத்தைவிட்டு விலகநேரிட்டது. அவன் இங்கிலாந்துக்கோட அவனுடைய மைத்துனன் லூயியிலிப்பி அரசனுனன். இவனுக்குமுன் சிங்காசன

சுதந்திர உணர்ச்சியும் தேசிய இயக்கமும் 161
மேறிய பிரான்சிய அரசர்களைப்போலல்லாது இவன் விரிந்த மனப்பான்மையுடையவனுகக் காணப்பட்டான். இவன் சட்டவரம்புடைய அரசியலே நிறுவி இங்கிலாங் தோடு நட்புப்பூண்டு சமாதானத்தை நிலவச்செய்து கைத்தொழில் வர்த்தகவிருத்திக்கு வேண்டிய முயற்சி களையுஞ் செய்தான். நாடு முழுவதும் புகையிரதவீதிகளை அமைத்ததோடு தந்தி அனுப்பும் வசதிகளையுமேற்படுத் தினன். அல்ஜியேர்ஜ் கைப்பற்றப்பட்டமையால் வர்த் தகம் விருத்தியடைவதற்கு வசதியாகவிருந்தது. அவன் பதினெட்டு வருஷங்களாக ஆண்டுகொண்டிருந்த காலத் திற் பல நன்மைகளைச் செய்தபோதிலும் பிரான்சிய மக்களுள் ஒருசாரார் நெப்போலியனுடைய வீரத்திற மையையும், கெம்பீரத்தையும் ஞாபகத்துக்கு எடுத்துக் கொண்டனர். பிரான்சுதேசம், சுதந்திரமான கொள்கை யில்லாது பிரித்தானியாவைப் பின்பற்றும் நாடாகிவிட்ட தெனச் சிலர் கூறினர். அப்போதுள்ள சமுதாயத்தி லும் பார்க்க சிறந்த சமுதாயத்தை ஏற்படுத்தி சங் தோஷமாக வாழலாமென மக்கள் யோசிக்கலாயினர். சமுதாய புனருத்தாரணம் ஏற்படுத்தும் வழியை அாயி பிளாங்க் என்பவர் எடுத்துக்காட்டினர். அக்காலத்தில் பிரான்சின் சமுதாயநிலை கேவலமான நிலையிலிருப்பதா கச் சுட்டிக்காட்டினன். அரசாங்கமே மக்களனவோருக் கும் வேலைகொடுக்க வேண்டுமென வற்புறுத்தினன். *நாங்கள் வேலைசெய்து சீவிப்பேர்ம் அல்லது சண்டை செய்து இறப்போம்" என பாரிஸ்5கர மாந்தர் கூச்ச லிடச்செய்தான். இவர்கஞ்டைய மனதிற் சமத்துவக் கொள்கை புகுந்தது. மக்களுக்கு அதிகாரம் கிடைக்கக் கூடிய அரசாங்கத்தை நிறுவ முயற்சிகள் நடைபெற்ற பொழுது லூயிபிலிப்பி அவ்வியக்கத்தையடக்கி அல் லது சினேகமுறையில் நிறுத்தி யிருக்கலாம், ஆனல் அவர் 1848-ல் இராச்சியத்தினின்று நீங்கி இங்கிலாங் துக்கு ஓடினர்.
லூயிபிலிப்பி இராச்சியத்தினின்று நீங்கியபின் குடி யரசு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம் பம்
2.

Page 86
62 சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும்
தொட்டே இவ்வரசாங்கத்துக்கு பல கஷ்டங்கள் ஏற் பட்டன. பாரிஸ் மாநகரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தேசீய தொழிற்சாலைகளில் வேலை கேட்பவர்களுக் கெல்லாம் வேலை கொடுபட்டது. அத்தொழிற்சாலையை நடத்தியவர் கள் அவ்ஸ்தாபனங்கள் அநுகூலமடையவேண்டுமென்று விரும்பினரல்லர். அத்தொழிற்சாலைகளின் செலவு மிக வும் அதிகரித்தும் அங்கே நடைபெற்றவேலை பலனற்ற தாயுங் காணப்பட்டமையால் அவ்வாண்டிலேயே (1848) அவைகள் மூடப்பட்டன. அதனுலேற்பட்ட கலகம் அடக் கப்பட்டு தேசீய மக்கட்சபைக்கு கூடிய அதிகாரங் கொடுபட்டு அது சட்ட அமைப்புக்கேற்றவாறு நிர்வா கத்தை நடத்தத் தொடங்கியது. அந்நேரத்தில் பெரிய நெப்போலியனுடைய சகோதரனுடைய மகன் லூயி நெப்போலியன் தேசீய மக்கட்சபைக்குத் தெரிவுசெய். யப்பட்டான். பின்பு அவன் தலைவனுகத் தெரிவுசெய் யப்பட்டான். 1852-ல் அவன் தன்னைச் சக்கரவர்த்தி யாக்கிக்கொண்டான். இவனே மூன்றும் நெப்போலிய வைான். இவன் பிரான்சிய கத்தோலிக்கருடைய ஆதர வைப் பெற்றன்.
பிரான்சுதேசத்தில் ஏற்பட்ட இவ்விதமான புரட்சி கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் தாக்கியது. மக்கள் தங்களுடைய தேசீய கொள்கைகளை நிறை வேற்றுவதற்காக சட்ட அமைப்புள்ள அரசாங்கத்தை நிறுவவேண்டுமென்ற நோக்கத்தாலேயே அந்நாடுகளில் புரட்சிகளேற்பட்டன. அவுஸ்திரியாவை இவ்விதமான கொள்கைகள் பாதிக்காவண்ணம் அந்நாட்டு மந்திரியா கிய மெற்றணிட்ச் ஊக்கமாயிருந்தபோதிலும் 1848-ல் வீயன்னவில் கலகமேற்பட்டது. அதனல் அம்மந்திரி தன் பதவியினின்று விலக நேரிட்டதுமன்றி மக்கட்சபை கூட்டப்பட்டு அது அவுஸ்திரிய ஏகாதிபத்தியத்தின் எல்லா நாடுகளுக்குமேற்றமுறையில் சட்டங்களை உண் டாக்கியது. வீயன்னுவில் கலகமேற்பட்டவுடன் அவுஸ் திரிய ஏகாதிபத்தியத்தின் மற்றைய நாடுகளிலும் கிளர்ச்சி உண்டானது. பொகீமியாவிலும், ஹங்கேரியிலும் புரட்

சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும் 163
சிகளேற்பட்டன. தேசீய் உணர்ச்சி அவைகளைத் தூண் டியது. ஹங்கேரி சுதந்திரநாடாக விளம்பரப்படுத்தியது. இவ்வியக்கத்துக்கு கொசுத் என்பவனே ஊக்கமளித் தான். தீவிரமாக எழுந்த மக்யாஸ் என்ற பொகீமியச் சாதியினர் அவுஸ்திரியச் சக்கரவர்த்தியினுலும் ரூஷிய மன்னனலும் தோற்கடிக்கப்பட்டனர். அதே சமயத்தில் அவுஸ்திரியாவின் கீழமைந்திருந்த இத்தாலியிலுள்ள பகுதிகளில் கலகமேற்பட்டது. மிலனில் கலகமுண்டாகி அவுஸ்திரியர் துரத்தப்பட்டனர். வெனிஸ், குடியரசை ஸ்தாபித்தது. இந்நாடுகளுக்கு ஆதரவளித்த சாடினியா வின் அரசனன சாள்ஸ் அல்பேட் என்பவன் கஸ்ரோசா, நோவாரா என்ற சண்டைகளில் தோற்கடிக்கப்பட்ட பின் (1849) அவுஸ்திரியா இத்தாலியிலுள்ள இராச்சி யங்களை மீண்டும் பெற்றது.
ஜேர்மனியிலுள்ள 39 நாடுகளும் தேசிய உணர்ச்சி பரவியதால், ஒருமித்துச் சட்ட அமைப்புள்ள சமஷ்டி அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென்று விரும்பின. 1848-ல் பிரான்சுதேசத்தில் புரட்சியுண்டானவுடன், ஜேர்மன் நாடுகளிலுள்ள தேசீயக் கொள்கையாளர் பிராங்போட் என்ற இடத்தில் ஒரு பாராளுமன்றத்தைக் கூட்டி ஜேர்மனிக்கு ஒரு புதிய சட்ட அமைப்புள்ள அரசாங்கத்தை நிறுவவேண்டு மென்று ஆலோசனை செய்தனர். அவ்விரிவான கொள்கைகள் வெற்றிபெறு மெனத் தோற்றியது. புதிய ஜேர்மன் நாட்டில் அவுஸ் திரியாவின் செல்வாக்கிருக்க வேண்டுமா, அவுஸ்திரியா வின் பிரதிநிதிகள் ஜேர்மன் பாராளுமன்றத்தில் இடம் பெற வேண்டுமா என்று ஆலோசனை செய்யப்பட்டது. ஈற்றில் அவுஸ்திரியாவை முற்றுக நீக்கிவிட வேண்டு மென்றும் அதனுலேற்படும் பகைமையை எதிர்க்கவேண்டு மென்றும் தீர்மானஞ் செய்யப்பட்டது, பின்பு ஜேர்மன் சாதியினருள்ள ஷெல்ஸ்விக், கொல்ஸ்ரீன் என்ற இரு நாடுகளையும் டென்மார்க்க ரசனிட மிருந்து கைப்பற்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக அனுப்பப் பட்ட சேனே அவ்வரசனும் தோற்கடிக்கப்பட்டது. இங்

Page 87
164 சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும்
தத் தோல்வி பிராங்போட் மகாநாட்டின் தோல்விக்குக் காரணமாயிற்று,
பிரான்சியப் புரட்சியினலுண்டான பலாபலன்கள் பிரித்தானிய மக்களையும் தாக்கிவிட்டன. அரசாங்கத்தை Bடத்தும் பொறுப்பை மேல்மக்களிலே மாத்திரம்விடாது மத்திய வகுப்பினரும் கீழ் வகுப்பினரும் பங்குபெற வேண்டுமென்ற உணர்ச்சி அங்காட்டிற் பரவியது. அக் காலத்தில் அரசாங்கத்திற் தலைமைவகித்தோர் இவ் வுணர்ச்சி, பு ர ட் சி  ைய உண்டுபண்ணுமோவென்று பயந்து அடக்குவதற்கு வேண்டிய சட்டங்களைப் பிர யோகித்தனர். திருத்தங்களின் தேவையை உணர்ந்த வர்கள் சாத்வீகத் தன்மையுடையவர்களாகையால் மக்க ளிடையே கலகங்கள் உண்டாகவில்லை. 1830-ல் 'விக்' கட்சித் தலைவர்களாகிய கிறே, றசல் என்பவர்களே பாராளுமன்றத்தில் ஒரு பிரேரஃணயைக் கொண்டுவந்த னர். பாராளுமன்றத்திலுள்ள பிரபுக்கள்சபை அதை அங்கீகரிக்காதுவிடச் சில இடங்களிற் கலகமேற்பட்டது. பின்பு 1832-ல் அது இருசபைகளாலும் அங்கீகரிக்கப் பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன் பிரகாரம் மத்தியவகுப் பினர் வாக்குரிமையைப் பெற்றனர். இதனல் வைத்தி யர்கள், ஆசிரியர்கள், நியாயதுரந்தர்கள், வர்த்தகர் கள், விவசாயிகள் வாக்குரிமையைப் பெற்றதல்லாமல் தொழிலாளர் பெறவில்லை. தொழிலாளரிற் காணப்பட்ட அதிருப்தி காரணமாக 1837 வரையில் தொழிலாளர் இயக்கமொன்று காணப்பட்டது, ஆறு கோரிக்கை களையுள்ள ஒரு மனுவொன்று தயாரிக்கப்பட்டது. அதன் அம்சங்கள் (1) ஆண்மக்களின் வாக்குரிமை (2) பாராளு மன்ற அங்கத்தவர்களுக்குச் சம்பளங்கொடுத்தல் (3) இர கசியச் சீட்டுமூலம் வாக்குரிமையளித்தல் (4) அங்கத்த வர்களுக்கு ஆஸ்திதராத லமில்லாது செய்தல் (5) ஒரே அளவு சனத்தொகை உள்ள தொகுதிகளை ஸ்தாபித் தல் (6) ஒவ்வொரு வருஷமும் புதுப்பாராளுமன்றத்தைத் தெரிதல். முதல் 6ான்கு கோரிக்கைகளும் சட்டரூபமாக ஆக்கப்பட்டன. 1839-ன் மேல் இந்த இயக்கம் குன்றி

சுதந்திர உணர்ச்சியும் தேசீய இயக்கமும் 165
யது. ஆனல் 1840-ன் பின் ஏற்பட்ட பண நெருக்கடி யினல் ஒரு பிரமாண்டமான இன்னுெரு மனுவொன்று தயாரிக்கப்பட்டுப் பாராளுமன்றச் சபைக்குத் திரளாகச் சென்று அதைச்சமர்ப்பிக்க மக்கள் ஆரம்பித்தனர். அதிற் கள்ளக் கைச்சான்றுகள் அநேகம் காணப்பட்ட மையால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வீயன்ன மகா 5ாட்டின் சமாதான உடன் படிக்கை ஐரோப்பிய நாட்டுமக்களின் சுதந்திர தேசீயக்கொள்கை களுக்கேற்றவாறு எழுதப்படாமையால் 1830, 1848-ல் புரட்சிகள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. பிரான் சியப் புரட்சியின் பின் சிங்காசனமேறிய அரசர்களும் அக்கொள்கைகளை அலட்சியஞ் செய்தனர். மக்களை அடக்கி ஆளும் முறையையே கையாண்டனரேயன்றி விரிந்த கொள்கைகளுக்கேற்றவிதமாக நிர்வாகத்தைத் திருத்தியமைக்கவில்லை. படிப்படியாக ஒவ்வ்ொரு நாடும் வாதாடிச் சுதந்திரத்தைப் பெற முயற்சிசெய்ய ஆரம் பித்தது. எல்லா நாடுகளிலும் பார்க்க இத்தாலி, ஜேர் மன் நாடுகளில் சுதந்திர உணர்ச்சி அரசர்களால் அடக்க முடியாத நிலையிலிருந்தது. 1848-ல் இந்நாடுகளிற்கோன் றிய புரட்சிக்கலகங்கள் அநுகூலமடையாதபோதிலும் சீக்கிரத்தில் அங்காடுகள் ஐக்கியம் பூண்டு மக்களுடைய உணர்ச்சிக் கேற்றவாறு அரசாங்கத்தை நிறு விக் கொண்ட வரலாற்றைப்பற்றி அடுத்த அதிகாரங்களிற் படிப்போம்.
வி னு க் க ள்
1. ஐரோப்பிய நாடுகளில் எப்ரே சுதந்திர உணர்ச்சி உண்டானது?
அவ்வுணர்ச்சி உண்டானதற்குக் காரணம் யாது? 2. 1830-ல் எந்நாடுகளில் புரட்சிகனேற்பட்டன? ஏற்பட்டதற்குரிய
காரணங்களே ஆராய்க, 3. லூயி நெப்போலியனைப்பற்றி மீ அறிந்தவற்றைக் கடறு,
4. பிரான்சியப் புரட்சியினலேற்பட்ட பலாபலன்கள் பிரித்தானியாவை
எவ்வாறு தாக்கிவிட்டன? ܗܝ
5. பிரித்தானிய பாராளுமன்றத்தின் அங்கீகாரம்பெற்ற சீர்திருத்தச்
சட்டத்தை (1832) ஆராய்க.
6. 1848-ல் எந்நாடுகளிற் புரட்சியேற்பட்டது? ஒவ்வொன்றைப்பற்றி
պւb தெரிந்தவற்றை எழுதுக.

Page 88
பதினைந்தாம் அத்தியாயம் இத்தாலியின் தேசீய ஒற்றுமை
பத்தொன்பதாம் நூற்றண்டின் ஐரோப்பிய அர சியல் அரங்கில் சுதந்திர, தேசீய உணர்ச்சியை அடிப் படையாகவுள்ள பரந்த கொள்கைகள் முக்கியமான இடத்தைப் பெற்றன. இவ்விதமான கொள்கைகள் எங் கும் ஒரேவிதமான மாற்றத்தை உண்டாக்கவில்லை. இத் தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் இவ்வுணர்ச்சிகள் அக் நாடுகளின் ஒற்றுமையைப் பலப்படுத்தின, துருக்கியர் சாம்ராச்சியத்தில் அச்சாம்ராச்சியம் பிளவுபடச் செய்து சிறுச்சிறு சுகந்திர நாடுகள் தோன்றச்செய்தன. அந் நூற்ருரண்டின் தேசிய இயக்கங்களுள் இத்தாலியில் ஏற்பட்ட இயக்கமே வீரத்தன்மைவாய்ந்ததாகும்.
இத்தாலியின் தேசீய உணர்ச்சி, நெப்போலியன் அங்காட்டைக் கைப்பற்றி, புதிய மாற்றங்களை உண்டாக் கியபொழுதே உண்டானது. 1796-ல் அவன் இத்தா லிக்குப் படையெடுத்துச் சென்றபொழுது அங்கே 12 சிறுச்சிறு பிரிவுகள் காணப்பட்டன. சில வருடங்க ளுக்குள் நேப்பிள்ஸ் அரசாங்கத்தைவிட மற்றையதெல் லாம் மறைவுற்றன. நேப்பிள்ஸ் இராச்சியத்துக்குத் தனது சகோதரனன யோசேப்பை அரசனுக்கி எஞ்சிய பாகம் முழுவதுக்கும் தானே அரசனுகவிருந்தான். இத் தாலி ஒருகாலத்தில் ஒற்றுமைபூண்ட தனி நாடாக விளங்குமெனவுணர்ந்து அவ்வண்ணம் அது பூர்த்தியாவ தற்கும் சிலவழிவகைகளைத் தேடினன். அவன் பாலங் கள் தெருக்களை அமைத்தான். பலவகையான சட்டங் களுக்குப் பதிலாக ஒரேமாதிரியான சட்டத்தை வகுத்து வைத்தான். நிலமானியமுறையிற் காணப்பட்ட சலாக் கியங்கள் யாவற்றையுமொழித்து எல்லா வகுப்பினரும் வரியிறுக்கக்கூடிய ஒழுங்கைச் செய்துவைத்தான். நாட் டிற் கல்வியைப் பரப்பியதோடு மத்திய நிர்வாகமுறையை ஏற்படுத்தினன். எல்லாவற்றிலும் பார்க்க அங்காட்டு மக்

இத்தாலியின் தேசீய ஒற்றுமை 167
களை இத்காலி தேசத்தவர்களென்ற உணர்ச்சியோடு வாழச்செய்தான்.
வீயன்ன மகாநாட்டிற் (1815) கூடிய இராசதந்திரி கள் அங்நாட்டுக்கு நெப்போலியன் செய்த வேலைகள் யாவும் அற்றுப்போகக்கூடியவண்ணம் முயற்சி செய்த னர். அவர்களுடைய ஒழுங்கின்படி வெனிஸ் லொம்பாடி யோடு சேர்க்கப்பட்டது. ஜெனேவா, பைட்மொன்ட் சார்டினியா இராச்சியத்தோடு சேர்ந்தன. தேவாலயங் களுக்குரிய நாடுகள் போப்பாண்டவரின் ஆதிக்கத்தில் விடப்பட்டன. சிசிலி இராச்சியத்தோடு நேப்பிள்ஸ் சேர்க்கப்பட்டு ஸ்பானிய அரசவமிசத்தவனகிய நாலாம் பேடினந்து அவ்விராச்சியத்துக்கு அரசனனன். ஆனல் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளாக மெட்டனிட்ஸின் செல்வாக்கே இத்தாலியிற்காணப்பட்டது. 1815 தொடக் கம் 1848 வரைக்கும் இடையிடையே கலகங்கள் ஏற் பட்டபோதிலும் தேசீய உணர்ச்சியடக்கப்பட்டு பழைய அரசியல்முறையே ஸ்தாபிக்கப்பட்டது. 1820-ல் நேப் பிள்ஸ் இராச்சியத்திலும் அடுத்த ஆண்டில் பைட் மொன்ட் இராச்சியத்திலும் சட்ட அமைப்புள்ள அர சாங்கத்தைப் பெறுவதற்காக மக்கள் வாதாடினர். இவ் வகையான கிளர்ச்சி கரியெரிப்போர் சங்கத்தின் செல் வாக்கினல் உண்டாயது. தேசாபிமானமும், விளக்கமு முள்ள ஒரு சிறுபான்மையருடைய முயற்சியினலே கலகங்களேற்பட்டதேயன்றி தேசீய, சுதந்திர உணர்ச்சி பெரும்பான்மையான மக்களிடம் காணப்படவில்லை. ஆனல் 1830-ல் பிரான்சு தேசத்தில் ஏற்பட்ட புரட்சி இத்தாலியிலும் சில கிளர்ச்சிகளை யுண்டாக்கின. அப் போது மத்திய இத்தாலியிலும் மொடினு, பாமா முதலிய பகுதிகளிலும் உண்டான கலகங்கள் அவுஸ்திரிய சேனை யால் அடக்கப்பட்டன. இவ்வகையாக யிடையிடையே சம்பவித்த கலகங்களின் பயனுக யோசேப் மஸ்ஸினி என்னும் இளைஞன் கரியெரிப்போர் சங்கத்தின் முயற்சி களைக் கண்டித்து யெளவான இத்தாலி என்னும் சங்

Page 89
168 இத்தாலியின் தேசீய ஒற்றுமை
கத்தை ஸ்தாபித்தான். இத்தாலியின் சுதந்திரத்தைப் பெறுவதே அதன் பிரதான நோக்கமாகும். அறிவைப் பரப்புவதிலும் கலகத்தையுண்டுபண்ணுவதிலும் அதிகம் சிரத்தையெடுத்து உடனடியாக அவுஸ்திரியாவின் செல் வாக்கை சேனைப்படையின் உதவியினல் முற்ருரக நீக்க வேண்டு மென்று, அச்சங்கத்தார் தீர்மானஞ் செய்து கொண்டனர். மஸ்ஸினி தன் நாட்டைவிட்டு விலக வேண்டி நேரிட்டபோதிலும் இங்கிலாந்திலிருந்து அச். சங்கத்தின் விஷயங்களை நடத்திக்கொண்டிருந்தான்.
1848-ல் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளிலும், புரட்சிகள் ஏற்பட்டபொழுது இத்தாலியிலுள்ளதேசாபி மானிகள் அங்கே கலகத்தை யுண்டாக்கினர். போப் பரசராலாளப்பட்ட பகுதிகளிலும் 5ேப்பிள்ஸ், சிசிலி, ரஸ்கனி, பைட்மொன்ட் முதலிய பகுதிகளிலும் சட்ட அமைப்புள்ள அரசாங்கம்ஸ்தாபிக்கப்பட்டது. வெனிஸ், சுதந்திரத்தை நிலைநாட்டியது. லொம்பாடி அவுஸ்திரி யாவின் ஆளுகையிலிருந்து விலகிக்கொண்டது. பைட் மொன்டுக்கு அரசனகிய சாள்ஸ் அல்பேட் அவுஸ்திரி யாவுக்கெதிரே போருக்கெழுந்தான். போர்த்திறமை வாய்ந்த அவுஸ்திரியாவின் சேனை இவ்வரசனைக் கஸ் தோசா, நோவாரை என்ற சண்டைகளிற் தோற்கடித் தது. அதனல் சாள்ஸ் அல்பேட் தனது இராச்சியத்தி னின்றும் விலக அவனது மகன் விக்ரர் இமானுவேல் சிங் காசனமேறினன். பல பிரிவுகளையுடைய இத்தாலி அவுஸ் திரியாவோடு சமர்புரிந்து வெற்றிபெறுவது ஒவ்வாத தொரு விஷயமாகும். ஆன ல் இத்தாலியின் எல்லாப் பாகங்களிலுள்ள மக்களிடையே சு தங் திர உணர்ச்சி ததும்பியது. இத்தாலியை ஒற்றுமைப் படுத்துதற்கு விக் ரர் இம்மானுவேல் சார்டினியாவுக்கு அரசனுகவந்தவு டன் அந்நாட்டுமக்கள் அவனைத்தலைவனுக ஏ ற் று க் கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிற் சிறந்த இராசதந்திரியாக விளங்கிய கவுண்ட் கவூரை முதன் மந்திரியாக அவன் நியமித்தான்.

இத்தாலியின் தேசீய ஒற்றுமை 169
பல பிரிவினைகளுள்ள இத்தாலி நாட்டின் ஒற்று மையை நிலைநாட்டுவது கஷ்டமாயிருந்தபோதிலும் மக்க ளிடையே காணப்பட்ட தேசீய உணர்ச்சியும், தேசாபி மானிகளாகிய மஸ்ஸினி கரிபோல்டி, விக்ர ர் இம்மானு வேல், கவுன்ற் கவூர் என்பவர்களின் முயற்சியும் ஒன்று சேர்ந்து எவ்வாறு அந்நாட்டின் ஒற்றுமை பூர்த்தியா கப்பட்டதென்பதைப் பற்றி இனி ஆராய்வோம். பைட் மொந்திலுள்ள பிரபுவாகிய கவூர் இங்கிலாந்திலுள்ள அர சியலைப்பற்றியும் அங்கே காணப்பட்ட சமுதாய, பொரு ளாதார திருத்தங்களைப்பற்றியும், பாராளுமன்ற அரசி யல் முறையைப்பற்றியும் நல்லாக அறிந்திருந்தான். ஆங் கிலேய இராச தந்திரிபோல் அவன் மதிக்கப்பட்டான். அவன் பிரதமமந்திரியாக நியமிக்கப்பட்டவுடன் சமய விஷயங்களிலும், சேனை, கடற்படை இன்னுமற்றுங் துறைகளிலும் சிறந்த திருத்தங்களை ஏற்படுத்தினன். தனது சீவிய காலம் முழுவதையும் இத்தாலியின் சுதந் திரத்திற்காக அர்ப்பணஞ் செய்யச்சித்தமாகி தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன் சுயமரியா தைக்குப் பங்கமேற்படினும் அதைச்செய்து முடிப்ப தற்குத் தயாராயிருந்தான். அவன் பின்வரும் விஷயங் களே முன்னறியக்கூடிய யூகமுடைய அரசியல் நிபுணன வன். இத்தாலியை ஒற்றுமைப்படுத்துவதற்கு இத்தாலி மக்களிடையே காணப்பட்ட சுதந்திர உணர்ச்சியும், பைட்மொந்தின் சேனையும் அவனுக்கு ஆதரவாகவிருங் தன. ஆனல் இத்தாலியில் அவுஸ்திரியாவுக்குள்ள செல் வாக்கை யழிப்பதற்கு அவையிரண்டும் மாத்திரம்போதா மையால் அங்கிய oಿ? தேவையென வுணர்ந் தான.
பிரான்சுதேசத்தின் உதவியைப் பெறுவதற்காக, கிறிமியன்போரில் பிரான்சியப் போர்வீரருக்கு உதவி யாகச் சார்டினியாவிலிருந்து சேனையொன்றை கவூர் அனுப்பினன். அச்சேனை திறமையுடன் போர்புரிந்தது. இங்கிலாந்து, பிரான்சு ஆகிய இரு நாடுகளின் சிநே கம் கவூருக்குக் கிடைத்தது. பாரிஸில் 5டைபெற்ற
22

Page 90
170 இத்தாலியின் தேசீய ஒற்றுமை
சமாதான மகாநாட்டில் கவூருக்கும் ஒரு இடங் கொடு
பட்டது. அம்மகாநாட்டில் இத்தாலியின் பரிதாபநிலையை ஐரோப்பிய வல்லரசுகளுக்கு விளக்கிக்காட்டி, அங்
நிலைக்கு அவுஸ்திரியாவே காரணமாயிருக்கிறதென்றும்
கவூர் கூறினன். இங்கிலாந்தும் பிரான்சும் மனப்பூர்வ
மான அனுதாபத்தைக் காட்டின. பிரான்சுக்கரசனகிய
மூன்ருரம் நெப்போ லியன் கூடிய அனுதாபங் காட்டி இத்தாலி நாட்டிலிருந்து அவுஸ்திரியாவைத் துரத்துவ
தற்குச் சில நிபந்தனைகளுடன் உதவிபுரிவதாக கவூ
ருக்கு வாக்களித்தான். இருவருக்குமிடையில் நடந்த
இரகசிய ஒப்பந்தத்தின் பிரகாரம் விக்ரர் இமானுவேலி
அனுடைய மகள் நெப்போலிய இளவரசனுக்கு மனைவி
யாக்கப்பட்டாள். (1859) அவுஸ்திரியாவுக்கும், சார்டி
னியா அரசனுக்குமிடையில் யுத்தங் தொடங்கியவுடன்
நெப்போலியன் 200,000 போர்வீரர்க2ளக்கொண்டுள்ள
சேனையுடன் உதவியளிப்பதும், லொம்பாடி, வெனிஸ்,
பாமா, மொடின பைத்மொங்தோடு சேர்க்கப்படுவதும்,
சவோய், நைஸ் பிரான்சிய அரசனுக்கு வெகுமதியாகக்
கொடுப்பதும் மற்றுக் நிபந்தனைகளாம்.
இனி அவுஸ்திரியாவோடு போரைத்தொடங்குவது கவூரின் கடமையாயிற்று. இத்தாலிய மக்கள் போரை நடத்துவதற்குச் செய்த ஆயத்தங்கள் அவுஸ்திரிய அர சாங்கத்தைத் திகிலடையச்செய்தது. உடனே அவ்வர சாங்கம் பைட்மொந்தின்சேனை குறைக்கப்படவேண்டு மென அங்காட்டரசனுக்கு ஒரு ஆஞ்ஞையைவிடுத்தது. கவூர் பாராளுமன்றத்தைக் கூட்டி இதுவே பைட்மொங் தின் கடைசிப்பாராளுமன்றமென்றும் இனிவரப்போ வது இத்தாலிய இராச்சியத்தின் பாராளுமன்றமாகு மெனக் கூறினன். அவுஸ்திரியாவுக் கெதிரே யுத்தங் தொடங்கியதும் நெப்போலியன் மாபெருஞ்சேனையுடன் இத்தாலிக்கு வந்தான். கடும்போரின் ஈற்றில் மாகெந்தா, சொல்பெரினே என்ற சண்டைகளில் அவுஸ்திரியாவைத் தோற்கடித்தான். கவூர் தன்னுடைய நோக்கம் முற்
முக நிறைவேறுமென ஆவலோடு பார்த்திருக்கும்வேளை

இத்தாலியின் தேசீய ஒற்றுமை 171
யில் நெப்போலியன் அவுஸ்திரியாவின் அரசனன பிரான் சிஸ் யோசேப்போடு சமாதான ஞ் செய்துகொண்டான். அவ்வாறு நெப்போலியன் செய்துகொண்டதின் நோக் கம் யாது என்று சரியாகக் கூறமுடியாது. பிரான்சிய வீரரின் போர்த்திறமையில் நம்பிக்கைவைக்க முடிய வில்லை. இத்தாலியத் தலைவர்கள் எல்லா விஷயங்களி லும் அவனுடைய எண்ணத்துக்கு இணங்கவில்லை. எல் லாவற்றிலும் பார்க்கப் பிரஸ் ஸியா தனது சேனைப்படை யைத் திரட்டியது. ஆகையால் சமாதானம் ஏற்பட்டது. ஆனல் அவ்யுத்தம் இத்தாலியரின் தேசீய இயக்கத்தில் முக்கிய ஸ்தானத்தை ஏற்படுத்தியதெனலாம், லொம் பாடியும், மத்திய இத்தாலியிலுள்ள ரஸ் கனி, மொடின, பாமா முதலிய பகுதிகளும் பழைய அரசர்களைத் துரத்தி விட்டு பைட்மொங்தோடு சேர்ந்துகொண்டன. வடக்கு இத்தாலியும் மத்திய இத்தாலியும் ஒன்றுசேர்ந்தன. வெனிஸ் அவுஸ்திரியாவின் கையிலேயே மீண்டும் சிக் கிக்கொண்டது. நெப்போலியன் அவ்யுத்தத்திலீடுபட்ட திற்கு வெகுமதியாக சவோய், நைஸ் என்ற பகுதிக 2ளத் தனக்காக்கிக்கொண்டான். இத்தாலியின் மத்திய பகுதி சனங்களின் விருப்பத்தின்படியே பைட்மொங் தோடு சேர்க்கப்படுமென, கவூர் பிரான்சிய சக்கர வர்த்தியைச் சமாதானப்படுத்தி மக்களின் வாக்கை எடுக் கத்தொடங்கினன். பெரும்பான்மையோர் சேர்ந்துகொள் வதற்குவிருப்பங்காட்டியமையினுல் மத்திய இத்தாலியும் வட இத்தாலியும் ஒன்றுசேர்ந்தன.
அடுத்தபடியாக இத்தாலிய தேசீய ஒற்றுமை கரி போல்டியின் தலைமையில் ஏற்பட்டது. மஸினி, கவூர் என்பவர்களைப்போல் ஆரிபோல்டியும் பைட்மொந்தின் பிரசையாவான். தென் அமெரிக்காவில் வீரத்தன்மை ள்ள வாழ்க்கையை வாழ்ந்த பின்பு புரட்சிக்காலமா கிய 1848-ல் ஐரோப்பாவுக்கு வந்து புரட்சிகளில் பங்கு பற்றினன். 1859-ல் நடைபெற்ற சண்டையில் தன் புகழை 5ாட்டி அடுத்த ஆண்டில் சிவப்பு அங்கி அணிந்த 1072 தொண்டர்களோடு ஜெனேவாவிலிருந்து புறப் பட்டு, ஸ்பானிய அரசை வெறுத்திருந்த சிசிலியுட் புகுந்து அதைத் தன்வசப்படுத்தினன். பின்பு கேப் பிள்ஸ் இராச்சியத்தைக் கைப்பற்றினன். கரிபோல்டி

Page 91
172 இத்தாலியின் தேசீய ஒற்றுமை
யின் சடுதியான வெற்றிகளைக் கண்ணுற்ற கவூர் கேப் பிள்ஸ்-சிசிலி இராச்சியத்தை வடஇத்தாலியோடு சேர்க் காது, தெற்கே குடியரசு அரசை கரிபோல்டி ஸ்தா பிக்கக்கூடுமெனப் பயந்திருந்தான். போப்பாண்டவரின் நாடுகளை கரிபோல்டி கைப்பற்ற எத்தனித்தால் அங் நிய நாடுகள் தலையிடவும்நேரிடுமெனவும் பயந்திருந்தான் போப்பாண்டவரின் இராச்சியம் திறமையாக ஆளப் படாதிருந்தபோதிலும் ஐரோப்பிய வல்லரசுகள் ஆதர வளித்துக்கொண் டிருந்தனர். போப்பரசருக் கெதிரே ஒருவிதமான பகைமையுமில்லாதிருந்தபோதிலும் போப் பரசரின் 20000 போர்வீரர்களைக்கொண்டுள்ள சேனை விக்ரர் இமானுவேலுக்கு ஆறுதலின்மையைக் கொடுத் ததினுல் அவன் அச்சேனையை நீக்கவேண்டுமென அவ ரைக்கேட்டான். அதற்குச் சம்மதப்படாமையால் இத் தாலியசேனை உட்புகுந்து போப்பரசரின் சேனையைத் தோற்கடித்தது. கேப்பிள்ஸ் மார்க்கமாகச்சென்ற விக் ரர் இமானுவேலிடம் கரிபோல்டி தான் கைப்பற்றிய நாடுகளைக் கொடுத்தான். இச்சம்பவங்கள் யாவும் இத் தாலியின் ஒற்றுமைக்குச் சாதகமாயின. ஆனல் ரோமா புரி பிரான்சியப்படையால் காக்கப்பட்டிருந்தது. வெனி சும் அவுஸ்திரியாவசம் இருந்தது. இந்த இரு இடங்க ளும் அடுத்த பத்து வருடங்களுக்குள் ஒற்றுமைபெற்ற இத்தாலிவசம் கிடைத்தன. ரூறின் தலை5கரமாக்கப் பட்டு 1861-ல் முதற்பாராளுமன்றம் கூடியது. அதன் பின் அவ்வாண்டிலேயே கவூரும் இறந்தான்.
புதிய நாட்டுக்குப் பொருளாதாரம் அரசியல் சமயம் சம்பந்தமான பல கஷ்டங்கள் ஏற்பட்டன. 1866-ல் அவுஸ்திரியாவுக்கும் பிரஸ்ஸியாவுக்குமிடையில் கடந்த போரில் விக்ரர் இமானுவேல் வெனிசை இத்தாலியிடம் ஒப்படைத்தால் அவுஸ்திரியாவுக்கு உதவிபுரிவதாகக் கூறியபோது அவுஸ்திரியா அதற்கு மறுத்தது. பிரஸ் ஸியாவுக்கு அவ்வுதவியைக் கொடுத்தமையால் போர் முடிந்தவுடன் வெனிஸ் இத்தாலிக்குக் கொடுக்கப்பட் டது. 1867-ல் கரிபோல்டி ரோமாபுரியைக் கைப்பற்று

இத்தாலியின் Ggກົ້ມ ஒற்றுமை 173
வதற்கு எத்தனித்தபோது பிரான்சியப்படை அவனு டைய சேனையைத் தோற்கடித்தது. 1870-ல் நடந்த போரில் பிரான்சு பிரஸ்ஸியாவாற் தோற்கடிக்கப்பட் டமையால் ரோமாபுரி விக்ரர் இமானுவேலின் வசமா கியது. பின்பு ஒற்றுமைப்பட்ட இத்தாலிக்கு அதுவே தலைநகரமாக்கப்பட்டது. м
வட இத்தாலியும் தென் இத்தாலியும் அரசியல் ஒற்றுமையைப் பெற்றபொழுதிலும் இரண்டும் சமுதாய நிலையிலும், பொருளாதார நிலையிலும் வேறுபட்டன. இங்கிலாந்தைப் பின்பற்றி ஸ்தாபிக்கப்பட்ட பாராளு மன்ற அரசாங்கமுறையும் திருப்திகரமாகக் காணப்பட வில்லை. தற்காலத்திலுள்ள ஏனைய நாடுகளைப்போல் ஸ்தாபிப்பதற்குக் கடும் வரிகளை விதித்துப் பணத்தைச் சேர்த்தமையால் மக்களிடையே நம்பிக்கையீனமும் அதி ருப்தியும் உண்டாயின. சமுதாயத்திற் கரணப்பட்ட ஒழுங்கீனங்களும் புதிய நாட்டின் ஸ்திரத்தைப் பய முறுத்தின. இத்தாலிக்கும் பிரான்சுக்கு மிடையிற் காணப்பட்ட ஒற்றுமையும் இடையிடையே பங்கப்பட் டது. போப்பரசருக்கும் இத்தாலிய அரசாங்கத்துக்கு மிடையில் ஒருவிதமான அனுதாபமு மில்லாமையால் ப்ோப்பரசரோடு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பல முறையும் இத்தாலிய அரசாங்கம் முயற்சி செய்தது. முசோலினி 1929-ல் போப்பரசரோடு ஒருவகையான ஒற்றுமையை ஏற்படுத்தும்வரையும் இருபகுதியாருக்கு மிடையில் மனஸ்தாபங் காணப்பட்டது.
- - - - வினுக்கள் 1. இத்தாலியின் ஒற்றுமைக்குத் தொண்டாற்றியவர்கள் யாவர்? 2. கவூரை ஒரு அரசியல் நிபுணன் என்று கூறுவதற்கு நியாய
மென்ன ? 3. இத்தாலியை ஒற்றுமைப்படுத்துவதற்குக் கரிபோல்டி செய்தசேவை
யாது? 4. இத்தாலி தேசீய ஒற்றுமையைப் பெற்றவரலாற்றை எழுதுக. 5. ஒற்றுமைப்பட்ட இத்தாலி எவ்வகைப்பட்ட கஷ்டங்களே மீக்க
வேண்டியிருந்தது ?

Page 92
பதினுரும் அத்தியாயம் ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு
பரிசுத்த ரோம இராச்சியம் நிலைகுலைந்த காலம் (1806) தொட்டு ஜேர்மன் சாதியினரென்று அழைக்கக் கூடிய தனி நாடொன்று இருக்கவில்லை. ஆகையால் வீயன்ன மகாகாட்டில் அவ்விதமானவொரு நாட்டை ஸ்தாபிக்கவேண்டியது அங்கு கூடியிருந்த பிரமுகர்க ளின் கடமையாயிற்று. நெப்போலியன் படையெடுத்துச் சென்ற காலத்தில் விடுதலைப்போரை (1813-14) நடத் திய ஜேர்மன் நாடுகளிலுள்ள மக்களிடையே தேசிய வுணர்ச்சி உண்டானது. வீயன்ன மகாநாட்டிற் கூடிய பிரமுகர்கள் ஜேர்மன் நாடுகளிற் தோன்றிய புத்துணர்ச் சிக்கேற்றவாறு ஒரு அரசியலை ஸ்தாபிப்பார்களோ என்றகேள்வி யாவரிடத்தும் எழுந்தது. பழைய சக்க ராதிபத்தியத்தை மீண்டும் நிறுவுவதற்கு ஒரு வரும் விரும்பமாட்டார்க ளென்பது வெளிப்படை. வடஜேர் மனி, கென்ஜேர்மனி யென இரண்டாகப் பிரித்து முறையே அவுஸ்திரியா, பிரஸ்ஸியாவின் தலைமையின் கீழ்ச் சமஷ்டி அரசியலை நிறுவுவதற்காகக் கொண்டு வரப்பட்ட பிரோஃணக்கு அவுஸ்திரியா மறுப்புக்காட் டியது. ஈற்றில் அவுஸ்திரியாவின் தலைமையின் கீழ் ஒரு சமஷ்டி அரசாங்கத்தையும் 39 நாடுகளின் பிரதிநிதி களைக்கொண்டுள்ள சமஷ்டி அரசாங்கப் பாராளுமன் றத்தையும் ஸ்தாபிப்பதாக அம்மகாநாட்டிற் தீர்மானஞ் செய்யப்பட்டது. அப்பாராளுமன்றம் வெளித்தோற்றத் துக்கு பெரும் அதிகாரத்தையுடையதாகத் தோற்றினும் செய்கையளவில் பலமற்றதாகக் காணப்பட்டது. சமஷ்டி நிர்வாகம் நடைபெறவில்லை. அவுஸ்திரியாவின் மந்திரி யாகிய மெற்றணிட்ச் இவ்வொழுங்கு நல்லதெனத் திருப்தி யடைந்தார். 1815க்கும் 1848க்குமிடையில் இடையிடையே ஏற்பட்ட கலகங்களைவிட இத்தாலியைப்போல் ஜேர் மனியிலும் பழைய அரசியல்முறைகளை ஸ்தாபிப்பதற்கு அவுஸ்திரியா பல எத்தனங்களைச் செய்தது. அரசியல்,

ஜேர்மனி ஐக்கியம் பூண்டவரலாறு 175
வர்த்தகம் என்பவைபற்றி ஜேர்மனி அதிகம் பிளவு பட்டிருந்தமையால் அவுஸ்திரியாவின் எத்தனங்கள் பய னற்றதாய்ப்போயின. ஜேர்மனியின் செல்வநிலையையும் வர்த்தகத் ைகயும் மேம்படுத்தும் நோக்கத்துடன் எல்லா நாடுகளுஞ்சேர்ந்த சுங்கவரி ஐக்கிய சங்கமொன்றை பிரஸ்ஸியா ஸ்தாபித்தது. அதன்பிரகாரம் எல்லா நாடு களிலும் உள்நாட்டு வர்த்தகத்தை விருத்திசெய்வதற் காகக் காணப்பட்ட தடைகள் யாவும் நீக்கப்பட்டது மல்லாமல், வெளிநாட்டு வர்த்தகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பொதுவான சுங்கவரிவிகிகமு மேற்படுத்தப் பட்டது. வீதிகள், கால்வாய்கள், புகையிரத வீதிகள் அமைக்கப்பட்டன. காகிதப் போக்குவரவு வசதிகள் அளிக்கப்பட்டன. இவ்வண்ணமாக ஜேர்மன் நாடுக ளின் வர்த்தகம் மேலோங்கத்தக்கதாக ஊக்கமளிக்கப் பட்டது. வர்த்தக வளர்ச்சி அரசியல் ஒற்றுமைக்கு சாதகமாயிருந்தது. அவுஸ்திரியாவைவிட ஏனைய நாடுகள் பிரஸ்ஸியாவின் ஆதரவையே எதிர்பார்த்தன.
இறுகாறும் மெற்றணிட்ச் மந்திரியால் அடக்கப்பட்ட தேசிய உணர்ச்சி 1848-ல் ஐரோப்பிய நாடுகளில் கலக முண்டாக, ஜேர்மன் நாடுகளிலும் கிளர்ச்சியையுண் டாக்கியது. அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களிடம் இரண்டு நோக்கங்களிருந்தன. ஜேர்மனியிலுள்ள ஒவ் வொரு நாடுகளிலுமுள்ள சட்ட அமைப்பில் சீர்திருத் தங்களேற்பட வேண்டுமென்பதும், ஜேர்மனி முழுவதி லும் ஐக்கியமேற்பட வேண்டுமென்பதும் அவர்களின் நோக்கமாகும். அவ்வாண்டில் நிர்வாகப்பொறுப்புள்ள பாராளுமன்ற அரசியல்முறை பேடின், பவேரியா, சாக் ஸ்னி முதலிய நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டது. அவுஸ் திரிய சக்கராதிபத்தியத்தை மக்கள் வெறுத்து எல்லாப் பாகங்களிலும் கலகமுண்டாக்க இரண்டாம் பிரான்சிஸ் சக்கரவர்த்தியும், மெற்றணிட்ச் மந்திரியும் காட்டை விட்டுவிலக நேரிட்டது. ஆனல் சுவாஸன்பேர்க் என்னும் இராசதந்திரி சேனையின் உதவியைக்கொண்டு க ல கத்தை அடக்கி எல்லாப்பாகங்களிலும் சமாதானத்தை

Page 93
176 ஜேர்மனி ஐக்கியம் பூண்டவரலாறு
நிலைநாட்டினன். அதனல் எதேச்சாதிகாரம் அவுஸ்திரியா வில் நிலைநாட்டப்பட்டது. ....
பின்பு ஜேர்மன் நாடுகள் எல்லாவற்றிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட 576 பிரதிநிதிகளைக்கொண்டுள்ள சபையொன்று பிராங்போட் என்ற இடத்திற் கூட்டப் பட்டது. ஜேர்மனி முழுவதிலும் ஒரு சமஷ்டி அரசாங் கம் ஸ்தாபிக்கப்படவேண்டுமென்றும் அது ஒரு பரம் பரையான சக்கராதிபதியின் கீழிருக்கவேண்டுமென்றும் இரண்டு சபைகளையுடைய பாராளுமன்றமும், கிர்வாகப் பொறுப்புள்ள இன்னவொன்றும் இருக்க வேண்டு மென்று தீர்மானஞ்செய்யப்பட்டது. அதன் பின் பிரஸ் ஸியாவுக்கு அரசனன நாலாம் பிரரெடிக் உவீல்லியத் துக்கு முடியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டபொழுது, அவன் அவுஸ்திரியாவுக்குரிய பயத்தினிமித்தமும், மரி யாதையினிமித்தமும் சனநாயகமுறையில் தனக்குரிய நம்பிக்கைக் குறைவினுலும், அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதனல் பிராங்போட் சபை யின் முயற்சிகள் வீணுய்ப்போயினமையால் மீண்டும் 1815-ல் ஏற்படுத்தப்பட்ட சமஷ்டி அரசாங்கமே ஸ்தா பிக்கப்பட்டது, -
ஜேர்மன் தேசிய ஒற்றுமையைப் பூர்த்தி செய்வ தற்குத் தலைவனக இருந்தவன் பிஸ்மார்க் என்னும் வீர வைான். அப்போது பிரஸ்ஸியாவில் முதலாம் உவில் லியமென்ற அரசனும், மொல்க் என்ற சேனதிபதியும், பிஸ்மார்க் என்ற முதன்மந்திரியும் திறமைவாய்ந்த தலை வர்களாகக் காணப்பட்டனர். பிஸ்மார்க் 1815-ம் ஆண்டு பொமெரேனியாவிற் பிறந்தான். சர்வகலாசாலையிற் கற் கும்பொழுது தன்னுடைய பாடங்களிலும் பார்க்க வாள் விஜளயாட்டில் கூடிய சிரத்தை யெடுத்தான். சிறிது காலத்தின் பின் பிரஸ்ஸியாவின் அரசியல் விஷயங்க ளிற் தலையிட்டான். சுதந்திரத்தை அடிப்படையாகவுள்ள அரசியலில் நம்பிக்கையற்றவனயும் 1848-ல் ஏற்பட்ட புரட்சிகளுக்கு எதிரான நோக்கமுடையவனுகவுங்காணப்

ஜேர்மனி ஐக்கியம் பூண்டவரலா 177
பட்டான். ஆனல் ஜேர்மனியின் தேசிய ஒற்றுமையின் அவசியத்தை நன்குணர்ந்தான். அவன் எவ்விதமான ஜனநாயக அரசியல் முறையை ஏற்றுக்கொள்ளவும், தனது நாடாகிய பிரஸ்ஸியா ஏனைய ஜேர்மன் நாடு களைப்போல் கவனிக்கப்படவும் சித்தமுடையவனுயிருக்க விரும்பவில்லை. ஆகையால் எதேச்சாதிகாரியாகிய பிரஸ் விய அரசனின் கீழ் ஜேர்மன் நாடுகளே ஐக்கியப்படுத்து வகே அவனுடைய நோக்கமாகும். தனது நோக்கத்தை கிறைவேற்றுவதற்கு அவுஸ்திரியாவுக்கு ஜேர்மன் நாடு களிலுள்ள செல்வாக்கையழிக்கவேண்டுமென்று அவன் உணர்ந்தான். அந்நோக்கத்தை மேற்கொண்டவனப் உண்மை, நேர்மை என்பவைகளைக் கைக்கொள்ளாத வ னயும் பேச்சிலும் தீர்மானங்களிலும் நம்பிக் கையில்லா தவஞயும் தன் கடமையைச் செய்யத்தொடங்கினுன். அவன் `இரத்தத்தினுலும் இரும்பினுலம்'கான் ஜேர் மனியை ஐக்கியப்படுத்தலாமென்று 1862-ல் பிரஸ்ஸியா வின் பாராளுமன்றத்திற் சொன்னுன் சென்ற் பீற்றேர்ஸ் டோக்கிலும், பாரிஸிலும் பிரஸ்லிய நாட்டுப் பிரதிநிதி யாக் விருந்த காலத்தில் ஐரோப்பிய இராசதந்திரமுறை களே பிஸ்மார்க் நன்குணர்ந்திருந்தான்.
தன் அயல்நாடாகிய ரூஷியாவோடு நட்புப்பூண் டான். பிரஸ்ஸிய பாராளுமன்றத்திலுள்ள அநேகர் இங்கிலாந்திலுள்ள அரசியலைப் போன்ற ஒன்  ைற அமைக்கவேண்டுமென்று கருதியபொழுதிலும் அவன் அகற்கு மறுப்புக்காட்டி எதேச்சாதிகாரமும் சேணேப் பலமுமே தேவையெனவுணர்ந்தான். பின்பு பாராளு மன்றத்தின் அங்கீகாரழில்லாது வரிகள் அறவிடப் பெருஞ்சேனையைத் திரட்டினன். வொன்றுான், வொன் மொல்க் என்ற வீரர்களின் உதவியுடன் பிரஸ்ஸியா வின் சேனையை ஐரோப்பாவிற் திறமைவாய்ந்த சேனை யாக்கிவைத்தான். ஜேர்மனியில் அவுஸ்திரியாவின் செல் வாக்கை அறவே யொழிக்கவேண்டுமென உணர்ந்து கொண்டான். இத்தாலியோடு ஒரு உடன்படிக்கை எழு கினதுமல்லாது ரூஷியாவையும் நடுநிலைமை நாடாக

Page 94
178 ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு
விருக்கும்படி செய்தான், மூன்ருரம் நெப்போலியனுக்கு றைன் நாடுகளே அளிப்பதாகப் பொய்கம்பிக்கையுண் டாக்கி அவ்வரசன் அவுஸ்திரியாவுக்கு உதவிசெய்யா வண்ணம் ஏமாற்றிவைத்திருந்தான்.
ஜேர்மன் சாதியினர் வாழ்ந்த ஷெல்ஸ்விக் கொல்ஸ்? என்ற இரு நாடுகளும் டென்மார்க் அரசனுல் ஆளப் பட்டுவந்தன. 1863-ல் முடிக்குரிமையுள்ள ஆண் சந்ததியா ரில்லாது ஏழாம் பிரடெரிக் மன்னனிறக்க அங்க இரு நாடுகளையும் கைப்பற்றுவதற்கு எண்ணங்கொண்டு பிஸ் மார்க் அவுஸ்திரியாவோடு தற்காலிகமாக நட்புப்பூண்டு டென்மாக்குக்கெதிரே போருக்குக் கிளம்பினன். இரு நாடுகளும் ஒன்றுசேர்க்கதினுல் சீக்கிரத்தில் வெற்றி பெற்றனர். பிராங்போட்டிற் கூடிய பாராளுமன்றம், ஒக்கஸ்ரின்பேர்க் என்னும் ஜேர்மன் பிரபுவுக்கே அவ் விருநாடுகளுஞ் சேரவேண்டுமென்று விரும்பினர். பிஸ் மார்க் பிரஸ்ஸியாவுக்கே அவைகள் சேரவேண்டுமெனத் தீர்மானஞ் செய்துகொண்டான். ஆனல் அவுஸ்திரியா ஒக்கஸ்ரின்பேர்க்குக்கே சேரவேண்டுமென விரும்பி ஆக ரவளித்தனர். பிரஸ்ஸியாவின் அரசன் சமாதா னத்தை விரும்பியபொழுதும் பிஸ்மார்க் போர்செய் யத் தீர்மானித்தான். அவுஸ்திரியாவின் செய்கைக்கு பிரஸ்ஸியா மறுப்புக் காட்டியமையினுல் இரு நாடுக ளுக்குமிடையில் பகைமையேற்பட்டது. ஜேர்மன் நாடு களின் சமஷ்டி அரசியலை, அவுஸ்திரியாவை நீக்கிச் சீர்திருத்தி அமைப்பதற்கு பிரஸ்ஸியா எத் தன ஞ் செய்தது. இக்காரணங்களால் இரு நாடுகளுக்குமிடை யில் 1866-ல் போர் தொடங்கியது. ஐரோப்பிய நாடுக ளெல்லாம் பிரதானமாகப் பிரான்சுதேசம், நீடித்த போர் நடக்குமென்றும். ஈற்றில் அவுஸ்திரியா வெற்றி பெறுமென்றும் காத்திருந்தது. ஆனல் பிரஸ்ஸியாவுக் குச் சாதகமாய் அநேக காரியங்களிருந்தன. பிஸ்மார்க் குக்குக் இத்தாலியின் உதவியிருந்தமையினுல், பெரிய அவுஸ்திரியாச் சேனையொன்று அல்ப்ஸ் மலைகளுக்குத் தெற்கே இத்தாலியராற் த டு க் க ப் பட் டி ரு ங் த து

ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு 179
வொன்கொல்க் ஒரு சிறந்த வீரன். பிரஸ்ஸிய சேனை பாவித்த ஊசித்துவக்கு, அவுஸ்திரிய காலாட்படைகள் பாவித்த துவக்குகளிலும் பார்க்கச் சிறந்தது. வொன் றான்’ சேனையை முற்றகத் திருத்தியமைத்தான். சிறிது காலத்துக்குள் பிரஸ்ஸியாவின் சேனை, அவுஸ்திரியா வின் நாடாகிய பொகீமியாமீது படை யெடுத் து ச் சென்று சடோவா அல்லது கொனிக்கிருட்ஸ் என்ற சண்டையில் அவுஸ்திரியருடைய சேனையைத் தோற் கடித்தது. உடனே பிஸ்மார்க் அவுஸ்திரியாவோடும், சமாதான ஒழுங்கைப் பரபரப்பாகச் செய்துமுடித்தான். அதன்பிரகாரம் அவுஸ்திரியா வெனிசை இத்தாலிய ருக்குக் கொடுத்ததுமல்லாது ஜேர்மன் B 7 டு க ளின் குடியரசு ஐக்கிய சங்கத்தினின்றும் விலக நேரிட்டது. பின்பு பிரஸ்ஸியாவின் தலைமையின்கீழ் வட ஜேர்மன் நாடுகள் ஒற்றுமைக்குக் கொண்டுவரப்பட்டது.
பிரஸ்ஸியாவின் வெற்றி நெப்போலியனைத் திகில டையச் செய்தது. இந்தப் போர் தொடங்கிய காலத் தில் பிரஸ்ஸியா அவுஸ்திரியாவாற் தோற்கடிக்கப்படு மென்றும் ஈற்றில் தான் தலையிட்டு வேண்டிய நயத் தைப் பெற்றுக்கொள்ளலாமென்றும் நெப்போலியன் காத்திருந்தான். ஐரோப்பாவின் முதன்மை பெற்ற நாடாகிய பிரான்சு தேசத்துக்குப் போட்டியாகப் பிரஸ் ஸியா அதிகாரம் பெற்று வருகிறதென்று நெப்போ லியன் பொருமையுற்றிருந்தான்.
புதிதாக ஸ்தாபிக்கப்பூட்ட வடஜேர்மன் சமஷ்டி அரசாங்கத்துக்கு தெகிவுசெய்யப்பட்ட பிரதிநிதிக%ளக் கொண்டுள்ள சமஷ்டி அரசியல் மன்றமொன்று இருந் தது. நிர்வாகப் பொறுப்பும் சட்டங்களை உண்டாக்கும் அதிகாரமும் அச்சபைக்கே உரியதாயிற்று. நீட்ஸ்ராக் என்னும் பாராளுமன்றமும் அதற்கு அடுத்தபடியாக அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அதிலுள்ள பிரதிநிதி கள் பொதுமக்களாற் தெரியப்பட்டவர்களாவார்கள்.
பண விஷயங்களும் சமஷ்டி அரசியல் மன்றத்தால்

Page 95
80 ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு
ஆக்கப்பட்ட சட்டங்களை அங்கீகரிக்கவோ அல்லது விலக்கிவிடவோ அதற்கு அதிகாரமுண்டு. ஆனல் மங் திரிமார்களின் செய்கைகளைக் கண்டிக்கும் அதிகாரத்தை அப்பாராளுமன்றம் பெறவில்லை. நிர்வாகப்பொறுப்பு மந்திரிமார்களிலே விடப்பட்டிருந்தது. முதன் மந்தி ரியே மந்திரிகளுக்குத் தலைமைதாங்கினுர். இங்கிலாந்தி ஆலுள்ள பிரதம மந்திரியிலும் பார்க்கக் கூடிய அதிகா ரத்தைப் பெற்றிருந்தான். மந்திரிமார்களுடைய செய் கைக்கு அவனே பொறுப்பாயிருந்தான். பிஸ்மார்க்கே முதன் மந்திரியாகவிருந்தான். கடந்த யுத்தமும் அதிற் பெற்ற விசேஷ வெற்றியும் அவனை ஒருபெரும் தலை வனுக்கியது. இவ் யுத்தம் அவுஸ்திரியாவை - ஹங்கேரி யோடு சிநேகமுறையில் நடந்துகொள்ளத் தூண்டியது. ஹங்கேரி வேறன பாராளுமன்றமொன்றைப் பெற்று அரசாங்கத்தை 5டத்த ஆரம்பித்தது. ஆனல் அவுஸ் திரியாவின் அரசனேயே தன் காட்டு அரசனுகவும் ஏற் அறுக்கொண்டது.
பிரான்சு தேசத்தில் ஏற்பட்ட முன்னேற்றங் கார ணமாக மூன்றும் 5ெப்போலியனுடைய செல்வாக்கு அந்நாட்டிலதிகரித்தது. கைத்தொழில் வர்த்தகத் துறை களில் பிரான்சு முன்னேற்றமடைந்தது. பாரிஸ் நகரம் ஐரோப்பிய நாகரிகத்துக்கு முகன் மைபெற்ற நகர மாக விளங்கியது. தெப்போலியன் க த் தே (ா லி க் க கேவாலயத்தினதும், வர்த்தக வகுப்பினரதும் ஆகா வைப் பெற்றன். கெப்போலியன் எதேச்சாதிகாரியாக ஆண்டபொழுதிலும் பெரும்பான்மையோர் அவனே மதித்து வந்தனர். பாராளுமன்றத்தின் அங்கத்தவர் கள் மக்களாற் கெரிவு செய்யப்பட்டவராயினும் அவர் களுக்கிருந்த அதிகாரம் மிகக்குறைவு. மேற்சபை சக் கரவர்த்தியால் நியமிக்கப்பட்ட 150 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அவனுடைய விருப்பத்திற் கிணங்க நடந்துகொண்டனர். கீழ்ச்சபையின் செய்கை முறைகளைக் கண்டிப்பதும் மேற்பார்வையிடுவதும் இச் சபையின் முக்கிய கடமையாகும். மந்திரிமார்களைக்

ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு 181
கொண்டுள்ள அரச சபையே நிர்வாகப் பொறுப்பைப் பெற்றது. ஆனல் நெப்போலியனின் அதிகாரமே எல் லாவற்றிலும் மேலாகக் கவனிக்கப்பட்டது.
போர் 5டக் துவதில் விருப்பங்கொண்ட மக்களுக்
குத் திருப்தியளிக்கவேண்டுமென Bெ ப் போ லிய ன் உணர்ந்தான். அகனுல் கிறிமியன் யுத்தத்திலும், இத் தாலியில் bடைபெற்ற போர்களிலும் அவர்களைப் பங்குபெறச் செய்து வெற்றியடையச் செ ய் த ர ன். சவோய், நைஸ் என்னும் மாகாணங்களை அவன் தன் வசப்படுத்தியகனல், ஐரோப்பிய நாடுகள், இவனும் பெரிய நெப்போலியனைப்போல் பலாத் காரமான சண் டைகள் செய்வதில் விருப்பமுடையவனென விளங்கிக் கொண்டனர். 1860-ல் பிரான்சிய வர்த்தக வகுப்பின ரின் விருப்பத்திற்குமாருரக இங்கிலாந்தோடு வர்த்தக உடன்படிக்கையொன்றை எழுதினன். மூன்று ஆண்டு களின் பின்பு மெக்ஸிக்கோவைக் கைப்பற்றும் நோக் கத்தோடு அங்கு சென்றன். அதைக்  ைக ப் பற்றி அவுஸ்திரியாவின் சக்கரவர்த்தியாகிய மக்ஸ்மிலிய?ன அரசனுக்கினன். அக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவி லேற்பட்ட புரட்சி முடிவடைந்த தும் அவ்வரசாங்கம் நெப்போ லியனுடைய சூழ்ச்சியைத் தடுப் ப த நிற் கா க தனது முழுப்பலத்தையும் உபயோகிக்க ஆரம்பித்தது. ஆகையால் பிரான்சியப் போர்வீரர்கள் வெளியேறி னர். இதனுல் பிரான்சு கட்டமுமடைந்து அவமானமு முற்றது. அந்நிலையில் நெப்போலியனுடைய செல்வாக்கு குன்றக் கூடிய அறிகுகள் கோன்றின. கத்தோ லிக்க குருமாரும், வர்த்தீக வகுப்பினரும் நெப்போலி யனுக்கு மாருகப் பகைம்ை காட்டினர். ஆகையால் நெப்போலியன் தனக்கு ஆக ரவை இன்னெரு வழியிற் தேடினன். ஒரு புது அரசியற் தி ட் ட மொ ன்  ைற வகுத்து மக்களாற் தெரிவுசெய்யப்பட்ட சபைக்கு சட் டங்களை ஆக்கும் அதிகாரத்தை ஈந்ததோடு மந்திரி, மார்களுக்கே அப்பொறுப்பையுங் கொடுத்தான். மேற் சபையின் கூட்டங்களும் பகிரங்கமாக bடைபெற்றன.

Page 96
182 ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வர்லாறு
இப்புதிய திட்டம் பெரும்பான்மையான மக்களின் ஆக ரவைப்பெற்றது.
ஆனற் சிறிது நாட்களுள் பிரஸ்ஸியாவோடு யுத்தம் ஆரம்பித்தது.பிரான்சுதேசமோ, பிரஸ்ஸியாவோ போ ரை விரும்பினவல்ல. நெப்போலியன் இழந்த செல்வா க்கை நிலைநாட்டுவதற்கு சித்திகரமான யுத்தம் நல்லதென வுணர்ந்தான். அசெளக்கிய காரணமாக அவனது மனத்திடமும், விவேகமும் பழைய  ைத ரிய த்  ைத க் கொடுக்கவில்லை. ஆனல் மற்றப்பக்கத்தில் பிஸ்மார்க் மொல்க், றுான் என்பவர்கள் போரை விரும்பி நின் றனர். தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு அந்த யுத்தம் முடிவான சித்தி அளிக்குமெனக் கருதலாயி னர். அவுஸ்திரியா தோல்வியடைந்ததினுல் ஜேர்மனி யில் பிரஸ்ஸியா முதன்மைபெற்ற நாடாக விளங்கி யது. பிரான்சும் தோல்வியடையுமெனில் பிரஸ்ஸியா வின் தலைமையில் ஜேர்மன் சக்கராதிபத்தியம் ஸ்தா பிக்கப்படுமென வுணர்ந்தனர். பி ரா ன் சு தேசமோ, ஜேர் ம னி யோ கூடிய பலத்தையுடையதென்பதை விளக்கிக்காட்ட ஒரு யுத்தம் தேவையெனத் தென் பட்டது.
இரு நாடுகளுக்குமிடையே தொடங்கிய யுத்தத்தின் காரணம் முக்கியமானதொன்றல்ல. ஸ்பானியாவில் ஓர் புரட்சி ஏற்பட்டவுடன் அந்நாட்டுக்கு அரசியாகிய இஸபெலா பிரான்சு தேசத்துக்கு ஓடினள். முடிக்குரிமை யாருக்குடையது என்பதைப்ப்ற்றித் தீர்மானஞ் செய்ய வேண்டியிருந்தது. கத்தோலிக்க சமயத்தவனும், பிரஸ் ஸியாவின் அ ர சனி ன் உரித்தாளனுமாகிய லியப் போல்ட் என்பவனும் ஸ்பானிய முடிக்கு உரிமையுடை யவனென முன்வந்தான். அவனுக்கு உரிய உரிமையை நெப்போலியன் ஆட்சேபித்தான். பிரஸ்லிய அரசன கிய உவில்லியமும் நெப்போலியனின் எதிர்ப்பை ஏற் றுக்கொண்டு லியப்போல்ட் விலகிக்கொள்வானென அ வித்தான், ஆனல் லியப்போல்ட் தனது உரிமையை

ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு 183
எப்போகாகிலும் நிலைநாட்ட முன்வந்தால் உவில்லியம் அதை எதிர்ப்பகாக வாக்களிக்கவேண்டுமென நெப் போலியன் கேட்டான். அவ்விதமாக வாக்களிக்க முடி யாதென்று கூறி, பிஸ்மார்க்குக்கு அகைப்பற்றிச் செய்தி அனுப்பினன். யுத்தம் ஆரம்பிப்பதற்கு வேண்டிய சக் தர்ப்பம் நீங்கியதென பிஸ்மாக் துக்கப்பட்டு பின்பு தனக்குக் கிடைத்த செய்தியை பிரஸ்ஸிய அரசனுக்கு அவமானமேற்பட்டதென்பதாக கருத்தை மாற்றி நாட் டில் எல்லோருமறியத்தக்கதாக பிரஸ்தாபப்படுத்தினன். ஜேர்மனி முழுவதிலும் யுத்தம் கொடங்கவேண்டுமெனக் கூச்சலிடப்பட்டது.
உடனே பிரான்சுக்கும் ஜேர்மனிக்குமிடையிற் போர் தொடங்கியது. (1870) பிரான்சு வெற்றியை எதிர்பார்த்தது. ஆனல் பிரான்சியச் சேனை ஒரு சண் டையிலாகுகல் வெற்றியைப் பெறவில்லை. ஜேர்மனி யுத்தஞ் செய்வதற்கு பூரண ஆயத்தத்தோடு இருந்தது ஆனல் பிரான்சில் ஒழுங்கீனங் கா ண ப் பட்ட து. ஜேர்மன் படை எதிரியின் படையினும் பார்க்க கூடிய போர்வீரர்களைக் கொண்டுள்ளது. ஜேர்மன் படைகளு டன் மொல்க் என்னும் சேனைத்தலைவன் திறமையுடன் சண்டை செய்தான். பிரான்சில் அவ்விதமான சிறந்த தலைவைெருவன் கொண்டு நடத்தவில்லை. அரைஇலட் சம் ஜேர்மன் போர்வீரர்கள் பிரான்சின் எல்லைப்புறத் தில் திரளாகப்போய்ச் சேர்ந்தனர். மெற்ஸ், சீடான் என்ற சண்டைகளில் பிரான்சியப்படை தோற்கடிக் கப்பட்டமையால் நெப்போஜியன் 17000 போர்வீரர் களேயிழந்து பின் 85009 போர்வீரர்களோடு சரணு கதியடைந்தான்.
இந்தச் செய்தி கிடைத்தவுடன் பாரிஸில் குடியரசு ஆட்சிமுறை ஸ்தாபிக்கப்பட்டது. பிரான்சிய நாட்டின் ஒரு அங்குல நிலமாகுதல் பறிகொடுக்க முடியாதென்று அவ்வரசாங்கம் கூறித் தொடர்ந்து போரை நடத்தியது, ஜேர்மனியருடைய சேனை பாரிஸ் நகரைச் சூழ்ந்து கொண்டதினுல் அந்நகர மக்கள் அதிக அல்லற்பட்

Page 97
184 ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாறு
டனர். ஐரோப்பிய நாடுகளொன்றேனும் உதவியளிக்க முன்வராமையால் பாரிஸ் சரணுகதியடைய 5ேர்ந்தது. பின் பிராங்போட் உடன்படிக்கையின் பி ர கா ரம் ஸ்ராஸ்பேர்க்கும், மெற்சும், அல்ஸே சும், லொரேயினும் ஜேர்மனியருக்கு கொடுபட்டது. அதுவுமல்லாமல் பெருங் தொகையான பணமும் நட்டஈடாகக் கொடுக்கப்பட் டது. பின்பு வேர்சேயில்ஸிலுள்ள பெரிய மண்டபத்தில் பிரான்ஸிய அரசன் ஜேர்மன் சக்கரவர்த்தியாக பிரஸ் காபப்படுத்தப்பட்டான். பிரான்சியப் பிரஸ்ஸிய யுக்கத் தின்பின் முழு ஜேர்மன் நாடுகளும் ஐக்கியப்பட்டு ஜேர்மன் நாடாக விளங்கியது.
இவ்வாறு ஐக்கியம்பூண்ட ஜேர்மன் நாடு ஒருவகை யான யுத்கத்திலும் ஈடுபடாவண்ணம் பிஸ்மார்க் விஷ, யங்களை நடத்த ஆரம்பித்தான். படிப்படியாக ஜேர் மனியருடைய ஐக்கியம் பல முற்று ஐரோப்பாவில் ஒரு பெரிய வல்லரசாக விளங்கியது. கைத்தொழில், வர்த் தகம் என்னும் துறைகளில் அந்நாடு முன்னேற்றம டைந்தது. மக்களிடையே தேசாபிமான உ ண ர் ச் சி செறிந்து அ வ ர் க ள் கங்களுடைய நாட்டைப்பற்றிப் பெருமையுற்றிருந்தனர். இவ்வகையாக முன்னேற்றி மடைந்த நாடு முதலாம் உலகயுத்தத்திலீடுபட்டு ஆரம்பத் தில் பெற்ற வெற்றிகள் மெச்சத்தக்கனவாம்.
வினுக்கள் 1. நெப்போலியன் ஜேர்மனிக்குப் படையெடுத்துச் செல்வதற்கு
முன்னிருந்த ஜேர்மனியைப்பற்றி விபரித்து எழுதுக.
2
வீயன்ன மகாகாட்டில் ஜேர்மனியைப்பற்றி என்ன ஒழுங்குகள் செய்யப்பட்டன ?
3. ஜேர்மன் ந 1 டு க ள் ஒற்றுமைப் படாமலிருந்ததற்குக் காரண
மென்ன?
4. ஜேர்மன் நாடுகளை ஒற்றுமைப்படுத்துவதற்கு பிஸ்மர்ர்க் செய்த
சேவைகள் யாவை ?
5. பிஸ்மார்க் ஒரு பெரிய இராசதந்திரி என்று எண்ணப்படுவதற்
குரிய காரணங்கள் யாவை ?
6. ஜேர்மனி ஐக்கியம்பூண்ட வரலாற்றைச் சுருக்கமாக எழுதுக.

பதினேழாம் அத்தியாயம் 95 ULI
இந்தியா, ஐரோப்பாவிலுள்ள பிரான்சு, ஜேர்மனி முதலிய நாடுகளைப்போன்ற ஒரு சிறு 5ாடல்ல. அது ஒரு உபகண்டமாகும். அது ஐரோப்பாவில் ரூஷியா வைத் த வி ர் ங் த ஏனைய5ாடுகளின் விஸ்தீரணமளவு கொண்டதும், சனத்தொகையிற் கூடியதுமான நாடா கும். அங்காட்டில் 50 பாஷைகள் வரையில் வழங்கிவரு வதுமல்லாது மக்களுடைய பழக்கவழக்கங்களும் வித்தி யாசமானவையாகக் காணப்படுகின்றன. பல்வகைப்பட்ட சாதியினர் அங்கு காணப்பட்டாராயினும் இந்துசமயம் ஒற்றுமைக்குக் காரணமாயிருந்தது. ஆனல் சிறுபான் மையினராயினும் முகமதிய சமயத்தவர்களும் அதிக செல்வாக்குடையவர்கள். இந்துக்களிடையே 3000 சாதி யினர் வரையிலுண்டு. அந்நாட்டில் வசிக்கின்ற இந்து சமயத்தவர்களின் தொகை பிரித்தானிய சாம்ராச்சியத் தின் சனத்தொகையின் அரைப்பங்களவும் உலகத்தி லுள்ள சனத்தொகையின் எட்டிலொருபங்களவுமாகும். மொகலாயருடைய ஆளுகை நடந்தபொழுது பிர கானமாக அக்பர், அவுராங்கிசீப் முதலிய சக்கரவர்த்தி களின் காலத்தில் முழு இந்தியாவும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1707ல் அவுராங்கிசீப் இறக்க சக்கராதிபத்தியம் சீர்குலையத் தொடங்க ஆரம்பித் தது. 参
பதினரும் நூற்றாண்டின் ஆரம்பகாலங் கொ ட் டு ஐரோப்பியர் பிரதானமாக பிரித்தானியரும் பிரான்சி யரும் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் வந்தபொழுது முஸ்லீங்களுடைய மொகலாய சக்கராதி பத்தியம் உன்னகநிலையையடைந்திருந்தது. கரையோ ரப் பகுதிகளில் வியாபாரத் தலங்களை ஸ்தாபித்த ஐரோப்பியரைப்பற்றி மொகலாயர் அதிகம் கவனமெடுக் கவில்லை. பிரித்தானியர் கல்கத்தா, சென்னை, பம்பாய்
24

Page 98
186 இந்தியா
ஆகிய மூன்று இடங்களிலும், பிரான்சியர், புதுச்சேரி, சந்திரநாகூர், மாகி என்ற இடங்களிலும் வியாபாரத் தலங்களை ஸ்தாபித்தனர். மொகலாய சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் குன்றுங்காலத்தில் அவர்களுடைய மேல் உத்தி யோகத்தர்களான நவாப்புகளும், இந்து இராசாக்களும் சுயாதீனமான தேசாதிபதிகளாயினர். இவர்களிடையே ஒற்றுமையின்மை காரணமாகச் சச்சரவுகள் உண்டான மையினல் அங்கிய நாட்டவர்கள் தங்கள் செல்வாக்கை நிலை5ாட்டக் கூடிய நிலைபரம் ஏற்பட்டது. பார்சியாவின் அரசன் மொகலாயருடைய தலைநகரமாகிய டில்லியை 1739-ல் கைப்பற்றினன். ஆப்கானிஸ்தர் படையெடுக்
துச் சென்று பாஞ்சாலத்தைத் தம்வசப்படுத்தினர். இந்தியாவின் வடகிழக்குப் பாகத்தில் வங்காள5ாடு சுகக் திரமான முறையில் ஆட்சிபுரியத் தொடங்கியது. மத்திய இந்தியாவில் மருரட்டியர், வடக்கேயும் கிழக்கேயும் படை யெடுத்துச் சென்றனர். தெற்கே ஹைத்ராபாக்கை ஆட்சிபுரிந்த நிசாம் ஒரு பெரிய அதிகாரத்தைச் rெஅலுத் தினன். தென்மேற்கில் மைசூர் அரசன் செல்வாக் குடையவனுகக் காணப்பட்டான். இவ்வகையான போட் டிக்கிடையில் ஐரோப்பியர் இந்தியாவுக்குட் புகுந்து கொள்ள வசதியாகவிருந்தது. 1741-ல் பிரான்சியர் வச மிருந்த புதுச்சேரிக்குத் தேசாதிபதியாக டுப்பிளேக்ஸ் என்பவன் நியமிக்கப்பட்டான். அவன் மிகத் திறமை வாய்க்கவனும், அளவுகடந்த ஆசையுமுடையவனுவான். அவனுடைய மனத்திலே இந்தியாவைக் கைப்பற்றலா மென்ற வெண்ணம் உதயமானது. அவன் ஆங்கிலே யரைத் துரத்திவிட்டு, நாட்டு அரசர்களை வென்று இக் தியாவைப் பிரான்சியரின் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென அவாவுற்ருன். ஹைத்ராபாத்தின் அர சுரிமையைப்பற்றி விவாதமேற்பட டுப்பிளேக்சும் ஆங் கிலேயரும் தங்களுக்கியைந்த ஒவ்வொரு அபேட்சகருக்கு ஆதரவளித்தனர். பிரான்சியர் துண்புரிந்த அபேட்ச கனே வெற்றிபெற்றன்.

(9ჩ தியா 187
இவ்விதமான கஷ்டநேரத்தில் ருெபேட் கிளைவ் இந் தியாவுக்கு வந்து (1751) ஆங்கிலேயரின் நிலையைப் பாது காத்தான். ருெரபேட்கிளைவ் மாணக்கணுயிருக்குங்காலத் தில் பிடிவாதக் குணமும் அஞ்சாமையும் உள்ளவனயு மிருந்தான். ஒருமுறை தேவாலயச் சிகரத்தின் நுனியி லிருந்து அந்நகரத்திலுள்ள மக்களைப் பயப்படச் செய் தான். அவனை என்ன செய்வதென்று தெரியாது அவ னுடைய பெற்ற்ரர் கிழக்கிந்தியசங்கத்துக்கு ஒரு எழுத் தாளனுக அனுப்பினர். அக்காலத்தில் இங்கிலாந்திலி ருந்து இந்தியாவுக்குக் கடல்மார்க்கமாகச் செல்வதற்கு ஒருவருடகாலம் செலவழிக்கது. இந்தியாவிலுள்ள தாங் கொணு உஷ்ணத்தினல் அவனுடைய சுகம் பாதிக்கப் பட்டமையினலும் ஒரு இடத்திலிருந்து இருந்து வேலை செ ய் வ த ப் குப் பொறுமையில்லாமையினலும் தனது சொந்தநாட்டை நினைத்துக் கவலைப்பட்டு இருமுறை தற் கொலைபுரியவும் எத்தனித்தான். அவனது உயிருக்கு இடையூறு நிகழாமையால் தான் பெருங்காரியத்தைச் செய்துமுடிப்பதற்கு நியமனமிருக்கவேண்டுமென எண் ணினன். பின்பு டுப்பிளேக்ஸ் மதராசைக் கைப்பற்றிய பொழுது கிளைவ் தானகப் போரில் சேவை செய்வதாக முன்வந்து ஆர்க்காட்டை முற்றுக்கையிட்டான். 500 போர்வீரர்களைக் கொண்டுள்ள சேனையுடன் ஆர்க்காட் டைக் கைப்பற்றினன். 10000 வீரர்களைக் கொண்ட சேனையோடு பிரான்சியர் அதைக் கைப்பற்ற எத்தனஞ் செய்தபொழுது 230 வீரர்களோடு கிளைவ் அவர்களுடைய சேனையைப் பின்வாங்கச்செய்தான். ஆர்க்காட்டைப் பாதுகாத்த நாளே கீழ்த்திசையில் பிரித்தானியருடைய ப  ைடத் திறன் பெருமையுறுவதற்கு ஆரம்பமான தென்று மக்காலை என்னும் சரித்திர நிபுணன் கூறினன்.
இந்த வெற்றியும் இன்னும் வேறு வீரச்செயல்களும் அவனுக்குக் கீர்த்தியைக் கொடுத்தன. வங்காளத்தை அரசாண்ட சுருஜ்டவுலா என்னும் நவாப்பு, ஆங்கிலேயர் வசமிருந்த கல்கத்தாவைக் கைப்பற்றி 146 ஆங்கிலேயப்

Page 99
188 இந்தியா
போர்வீரர்களையும் கைதுசெய்தான். பின்பு அவர்க*ளச் சிறிய இருட்டறை ஒன்றிலடைத்துவிட்டான். ஒரு இரவு சென்றதின்பின் 23 பேரைத்தவிர ஏனையோர் காற்றின் மையாலும் வெப்பத்தினுலும் இறந்துகிடந்தனர். சென் னையிலிருந்து 3000 போர்வீரர்களோடு கிளைவ் புறப்பட் டுச் சென்று 60000 வீரர்களைக் கொண்டுள்ள சேனை யோடு எதிர்த்துச் சண்டைசெய்ய நேரிட்டது. சிறிது நேரம் யோசனைசெய்து பின்பு மனத்தைரியத்தோடு ஏற்ற தருணம்பார்த்துச் சண்டைசெய்யத்தொடங்கினன் பகைவர்கள் ஒட5ேரிட்டது. ஈ ற் றில் அவன் பெற்ற வெற்றியின் பயனுக வங்காளம் கைப்பற்றப்பட்டது.(1757) 1760-ல் கிளைவ் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்குச் செல்லும்பொழுது வங்காள5ாட்டின் ஆட்சி பிரித்தானிய கிழக்கிந்திய சங்கத்திலேயே விடப்பட்டிருந்தது. ஆனல் அச் சங்க ம் அரசாங்கத்தை 5டத்தும் பொறுப்பை நவாப்புக்கே கொடுத்தது. பழைய ஆட்சிமுறையே நடைபெற்றுவந்தது. 15ாட்டிலிருந்து அறவிடக்கூடிய பணத்தை அறவிடுவதே நவாப்பின் நோக்கமாயிருந்தது. கிழக்கிந்திய சங்கத்தின் உத்தியோகத்தர் சங்கத்துக்கும் தங்களுக்கும் வேண்டிய வருமானத்தை நவாப்பிட மிருந்து பெற்றனர். இவ்வகையான குறைகளை நிவிர்த்தி செய்வதற்கு இங்கிலாந்தில் அக்5ேரத்திலிருந்த அரசி யல் நிலை தடையாயிருந்தது.
பின்பு கிளைவ் பிரபு வங்காளத்துக்குத் தேசாதிபதி யாக அனுப்பப்பட்டான். அவன் அங்கே காணப்பட்ட குறைகளே நிவிர்த்தி செய்வதற்கு பல மாற்றங்களை உண் டாக்கினன். மொகலாய சர்க்கரவர்த்தியிடமிருந்து வங்கா ளம், பீகாரின் பண நிர்வாகத்தைப் பெற்றன். அதன் பின் நவாப்போடு சினேகம்பூண்டு மருரட்டியரோ அல் லது ஆப்கானிஸ்தானி லுள்ளவர்களோ வலோற்கார மான சண்டை செய்யாது தடுத்தான். கிழக்கிந்திய சங் கத்தின் உத்தியோகத்கர்களுக்குக் கூடிய சம்பளத்தைக் கொடுத்து அவர்கள் சொந்தமானமுறையில் வர்த்தகம்

இந்தியா s 189
15டத்தாது திருப்தியடையும்படி செய்தான். இவ்வண்ண மாக இந்தியாவிற் பிரித்தானியருடைய ஆளுகையைச் சிறந்ததாகத் திருத்திவைத்தான். சிறந்த முறையில் நிர் வாகம் 5டத்துவதற்கு முயற்சிகள் செய்தபொழுதிலும் கிளைவ் தன்காட்டிற்குத் திரும் பி ச் சென்றபொழுது அவன்மேற் பல குற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
nuagram aba
é i Slum {&#ം
rr ရို့စ္ထိ 2ாரைக்க சிசித்தானியர் \ର୍ତ୍ତୀ 8ኝ
ஆளுகைக்கு உட்கட்ட பகுதி 畿 ع۹غدی و یہ نشلة r&
S & errarrrls as
*** ** r i F,
rs PT Satar
1770-ல் கிழக்கிந்திய சீங்கத்தின் ஆட்சிக்குப் பங்க முறக்கூடிய நிலையேற்பட்டது. ஒரு பயங்கரமான பஞ்ச மொன்று நாட்டைத் தாக்கியதினுல் மூன்றிலொருபங்கு மக்கள் பட்டினியால் இறந்தனர். இந்தக் கஷ்டமான நிலைபரத்திலும் பட்டினியால் வருந்திய விவசாயிகளிடம் வருமானம் அறவிடப்பட்டது. அதுவுமல்லாமல் அதிக லாபம் பெறும் bோக்கத்துடன் ஆங்கிலேயர் உணவுப் பொருட்களைச் சேகரித்து வைத்தனரென்ற வதந்தியும்

Page 100
190 இந்தியா
பரவியது. அதனல் ஆங்கிலேய அரசாங்கம் கோபங் கொண்டு உடனடியாக இந்தியாவின் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யவேண்டுமென எண்ணினர். இதற் கிடையில் தென்னிந்தியாவில் சில சம்பவங்கள் கடை பெற்றன. சென்னையிலுள்ள தேசாதிபதி, மைசூர் அரச னை ஹைடர் அலியோடு சண்டைசெய்ய நேரிட்டது. அவ்வரசன் அbேகரை வாளுக்கிரையாக்கி அதிக அழி வையுண்டாக்கினன். சண்டையை நடத்துவதற்கு அநேக பே ா ர் வீ ரர் க ளு ம் பெருந்தொகையான பணமும் தேவைப்பட்டமையால் கிழக்கிந்திய சங்கத்தின் பண நிலை பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் மருட்டியரும் போருக்கெழுந்தனர் இவைகளைவிட வங்காளத்தின் நிர்வாகத்திற் காணப்பட்ட பல குறைபாடுகளும் கிழக்கிக் திய சங்கத்துக்கு பெரும் இழுக்கை உண்டாக்கியது. கிழக்கிந்திய சங்கம் வீழ்ச்சியுறும் நிலையிலிருந்தது. அந்த வேளையில் வங்காளத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வருமானத்தை அறவிடும் கடமையையும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென சங்கம் தீர்மானித்தது. இவ்வாறு அரசியல் விஷயங்களிலும் சங்கம் ஈடுபடவேண்டியதா
பிரித்தானிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறை வேற்றிய சட்டத்தின் (1773) பிரகாரம் ஒரு மகாதேசாதி பதியும் நான்கு அங்கத்தவர்களைக் கொண்டுள்ள சபை யொன்றும் நியமிக்கப்பட்டு சங்கத்தின் ஆட்சியிலமர்ந்த பகுதிகள் மகாதேசாதிபதியின் கீழ்க் கொண்டுவரப்பட் டன. உவாரன் கேஸ்டிங்ஸ் முதற் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவருடைய வருகையினல் பிரித்தா னியருடைய ஆளுகையில் புதியவொரு காலம் ஆரம்ப மானதெனலாம்.
நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் கடமை நவாப் புக்கும் வருமானத்தை அறவிடும் கடமை சங்கத்துக் கும் கிளைவ் கொடுத்திருந்தார். இவ்வகையான இருபகுதி யினரின் ஆட்சிமுறையை கேஸ்டிங்ஸ் ஒழித்துவிட்டார்.

இந்தியா 191
எல்லாவிஷயங்களுக்கும் தனது மேற்பார்வையிலிருக்கக் கூடியதாக கல்கத்தாவை நிர்வாக மத்திய ஸ்கானமாக ஆக்கிவைத்தார். வங்காளத்தில் நீதிஸ்கலங்களை ஸ்கா பித்து நீதிவழங்கக்கூடிய முறையைக் கொண்டுவந்தார். பிரித்தானிய் நீதிவதிகளுக்கு உத வியாக இந்துக்கள் முகமதியரின் சட்டங்களைத் திரட்டி கன்சொந்தச் செல வில் வெளியிட்டார். இந்தியரின் வழக்கங்களின்படியே வங்காளம் ஆளப்படவேண்டுமென்பதே அவரின் நோக் கமாகும். சங்கத்தின் உத்தியோகத்தர் சொந்த ஆதா யத்துக்காக நடத்திய வர்த்தகத்தை நடத்தாவண்ணம் சம்பளத்தைக் கூட்டிக்கொடுத்து அதைத் தடுத்துவைத் தார். வங்காளத்தில் நிலவருமானம் அறவிடும் முறை யைத் திருத்தியைமைத்தார். பண்டைக்காலக் தொட்டு நிலத்தின் வருமானத்திலொருபகுதி அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுவந்தது. கி%ள வ் காலத்திலுள்ள இரு பகுதியினரின் ஆட்சிமுறைப்படி விவசாயியும் அரசாங் கமும் ஒருங்கே கஷ்டமடைந்தனர். ஆகையால் வருமா னத்தை அறவிடும்முறை திருத்தியமைக்க வேண்டியிருந் தது. அரசாங்கத்துக்கு வரவேண்டிய வருமானத்தை அறவிடும்போது விவசாயியும் கஷ்டப்படக்கூடாதென் பதே அவருடை கொள்கையாகும்,
கேஸ்டிங்ஸ் தனது யுக்தியினலும் தைரியத்தினுலும் ஆபத்தான நிலைபரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயருக் குள்ள ஆதிக்கத்தைப் பாதுகாத்து வைத்தார். அமெ ரிக்க சுதந்திரப்போர் நடக்குஞ்பொழுது பிரென்சுக்காரர் இந்தியாவிலுள்ள மருரட்டிங்ருக்கு உதவியளித்து போருக் கிழுத்தனர். தென்னிந்தியாவிலும் மைசூர் அரசனகிய ஹைடர் அலிக்கு அவர்கள் உதவிசெய்தமையால் கேஸ் டிங்ஸ் சண்டை செய்யவேண்டியிருந்தது. கேஸ்டிங்ஸ் மருட்டியரையும், மைசூர் அரசனையும் தோற்கடித்து ஈற்றில் சமாதான உடன்படிக்கை எழுதிக்கொண்டார். கேஸ்டிங்ஸ் இந்தியாவுக்கு வந்து இரு வருடங்களுக் குள் வங்காளத்தில் சிறந்த திருத்தங்களைச்செய்து செழிப்

Page 101
192 இந்தியா
பான நடாகவும் ஆக்கிவைத்தார். இந்தியாவில் பிரித் தானிய சாம்ராச்சியத்தை ஸ்தாபிக்க ஆரம்பித்தது கிளைவ் என்ருலும் கேஸ்டிங்கே அதைப் பலப்படுத்தி வைத்தார். கேஸ்டிங்ஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றபொழுது அவருடைய நிர்வாகத்திற் காணப்பட்ட குறைகள் சிலவற்றின் நிமித்கம் குற்றஞ்சாட்டப்பட்டு ஏழுவருடகாலத்துக்கு நீடித்த விளக்கம் 5டைபெற்றது. ஈற்றில் விடுதலையாக்கப்பட்டார்.
நோத் பிரபு 1773ல் பாராளுமன்றத்தில் நிறைவேற் றிய சட்டம் இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவந்த அளவில் அனுகூலமாகக் காணப்படவில்லை. ஆகையால் இளைய பிற் இந்தியாவில் ஆங்கிலேயருக்குள்ள பகுதி களின் அரசாங்கத்தைத் திருத்தியமைக்கும் பொருட்டு ஒரு திட்டத்தை (1784) கொண்டுவந்து பாராளுமன்றத் தின் அங்கீகாரத்தைப் பெற்ருரர். அதன்பிரகாரம் மகா தேசாதிபதியின் அதிகாரம் கூட்டப்பட்டு, லண்டனிலி ருக்கும் ஒரு அதிகாரசபை இந்தியாவின் அரசியல் விஷ யங்களை நடத்தியது. மகாதேசாதிபதியும் அச்சபையும் அ ர ச ன ல் நியமிக்கப்பட்டமையால் இந்திய அரசாங் கத்தை நடத்துவதற்கு பி ரித் தா னிய அரசாங்கமே பொறுப்பாகவிருந்தது.வர்த்தகவிஷயங்களும் அரசாங்க ஏனைய உத்தியோகத்தர்களை நியமிக்கும் பொறுப்பும் கிழக்கிந்திய சங்கத்துக்குக் கொடுபட்டது.
அந்தப் புதிய ஒழுங்கின்படி நியமிக்கப்பட்ட மகா தேசாதிபதி கோர்ன்வாலிஸ் பிரபுவ ாகும் (1783-93), அவர் இந்தியாவிற் காணப்பட்ட நீதிவழங்கும் முறையைத் திருத்தியமைத்தார். நீதிவளங்கும் கடமைகள் நிர்வாக வேலையிலிருந்து விலக்கப்பட்டன. கிழக்கிந்திய சங்கத்

இந்தியா, 193
தின் சேவையும் திருப்திகரமான முறை பிற் திருத்தி யமைக்கப்பட்டது. இந்திய நாடுகளின் சொந்த அரசர் களின் ஆளுகையிலும்பார்க்க பிரித்தானியரின் அரசாங் கம் சிறந்ததாகவும் பலமுடையதாகவுமிருந்தது. வங்கா ளத்தின் நிலவருமானத்கைப்பற்றி பிரச்சினை தீர்க்கப் பட்டது. மைசூர் அரசனுகிய ரிப்புசாகிப்போடு நடத்திய சண்டையும் அவருடைய காலத்தில் நடந்த இருபெரும் சமபவங்களாகும.
வங்காளத்தில் நிலவருமானத்தைப்பற்றி ஒரு கிரக் * தரமான ஒழுங்கை ஏற்படுத்தி வரியறவிடுவோராகிய ஜெமிந்தார்களே நில அதிகாரிகளாக்கி அவர்கள் அர சாங்கத்துக்கு ஒரு குறித்த பணத்தை கொடுக்கத்தக்க கானமுறையை ஸ்தாபித்தார். மைசூருக்கு அரசனன ரிப்புசாகிப் பிரான்சோடும், துருக்கிக்கு அரசனை சுளுத் காைேடும் நட்புக்கொண்டு பிரித்தானியருடைய ஆதிக் கத்தையும் மற்றும் அயலிலுள்ள சுதேச நாடுகளையும் பய முறுத்தியமையால் மகாதேசாதிபதி மருரட்டியர், ஹைத் திரபாத்து அரசன் ஆகியவர்களின் உதவியுடன் ரிப்பு வைத் தோற்கடித்து அவனுடைய தலைநகரக்கையும் கைப்பற்றினர். ரிப்பு அரசாண்ட பகுதியில் அரை வாசியை மூன்று பகுதியினரும் பிரித்தெடுத்துக்கொண்ட னர். க்ோர்ன்வாலிஸ் தேசாதிபதி இங்கிலாந்துக்குச் சென்ற சிறிது காலத்துக்குப்பின் உவெலிங்டனின் மூத்த சகோதரனுன உவெலெஸ்லி என்பவன் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான். 35 வந்துள்ள அவன் 1798-ல் இக் தியாவுக்கு வந்த பொழுது அங்கிருந்த நிலைமையைத் கிருத்துவகற்கு தனது ஆற்றல் முழுதும் தேவையென வுணர்ந்தான். பிரென் சுக் கா ரர் ரிப்புசாகிப்போடும், ஹைத்திரபாத்து அரசைேடும் 5ே கம்பூண்டு அதிக செல்வாக்கைப் பெற்றனர். ஆரம்பத்தில் ஹைத்திர பாக்கை ஆண்ட நிஜாமை அவனது சேவையிலிருக்க பிரெஞ்சுப் போர்வீரரை விலக்கும்படி உவெலெஸ்லி நூண்டினன். பின்பு மறட்டியரின் தலைவனின் ஐக்கி
3)

Page 102
194 இந்தியா
யத்தையும் பெற்றதினுல் ரிப்புசாகிப் உதவியற்றுத் கனித்துக்கொண்டான். அந் நிலை யில் ரிப்புசாகிப்புக் கெதிரே போருக்கெழுந்து அவனது தலைநகராகிய செரிங்கப்பட்டத்தையுங் கைப்பற்றினன். அச்சண்டை யின் மத்தியில் ரிப்புவும் உயிர்துறந்தான். பின்னர் மைசூரின் பெரும்பகுதி கிழக்கிந்திய சங்கத்தின்கீழ்க் கொண்டுவரப்பட்டது. ஒருசிறு பகுதி நிஜாமுக்குக் கொடுபட்டது. பின்பு தென்னிந்தியாவின் மற்றும் சில பாகங்களும் பிரித்தானியரின் கைவசம் கிடைத்தன.
இ க் தி ய ப் போர்வீரர்களுக்குப் போர்ப்பயிற்சி கொடுத்து அவர்களின் உதவியுடன் மருரட்டியரையும் அந் நாட்டுப் பல அரசர்களையும் உவெலெஸ்லி வென்ருரன் மற்றும் சில அரசர்களோடு சினேகமுறையில் உடன்" படிக்கை எழுதிக்கொண்டான். வேறு சில அரசர்க ளோடு செய்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சங்கத்தாரிட மிருந்த சேனைகளின் செலவு அவ்வரச்ர்களாற் கொடு பட்டது. 1825 வரையில் கங்கைப்பிரதேசம் முழுதும், ஏறக்குறைய தென்னிந்தியா முழுவதும் மத்திய இந்தி யாவிலுள்ள மருரட்டியர் கே சமும் கிழக்கிந்திய சங்கக் தின் ஆட்சிக்குட் கொண்டுவரப்பட்டது. சுதந்திர ஆட் சியோடிருந்த சிந்து 1843லும் பாஞ்சாலம் 1848லும் சேர்க்கப்பட்டன. அயல்நாடாகிய பர்மாவும் 1886 வரை யில் கைப்பற்றப்பட்டது. உவெலெஸ்லி டில்லியிலிருந்து கில்கக்காவரையும், கல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரையுமுள்ள நாடுகளே ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தமையாலும் செலவு அதிகரித்தமையாலும் 1805 ல் பிரித்தானிய அரசாங்கம் உவெலெஸ்லியை இங் கிலாந்துக்குத் திரும்பிப்போகும்படியாக ஆஞ்ஞையிட் டனர்.
இனிப் பிரித்தானிய கிழக்கிந்தியசங்கத்தின் ஆட்சி யைப் பற்றி ஆராய்வோம். இந்திய மக்களின் பெரும் பால்ோர் பயிரிடுங்தொழிலையே நடத்திவந்தனர். அவ் விவசாயிகள் தங்கள் வருமானத்திலிருந்து ஒருபகுதியில்

இந்தியா 195
நிலவரியைக்கொடுத்து எஞ்சியபகுதியைத் தங்கள் குடும் பங்களின் சீவனத்துக்குச் செலவழித்தனர். அந்தவரியை அறவிடும் பொறுப்பு கீழ் உத்தியோகத்தர்களுக்குப் பழைய அரசர்களாற் கொடுபட்டது. விவசாயிகளுக்கு வரியறவிடுவோர் அதிக நஷ்டத்தை உண்டுபண்ணினர். அதுவுமல்லாமற் திருடரும் கொள்ளைக்காரரும் அவர்க ளுடையபொருளைச் சூறையாடினர், மழைவளங்குன்றிய காலத்தில் பயிர்கள் சேதமடைந்தன. எந்த அரசாங் கத்தாருக்கும் இதொரு பெரும் பிரச்சினையாகும். சமு தாயத்தில் சாதிக்கட்டுப்பாடுகளிருந்தன. பி ரா ம ன னென்றுலென்ன அடிமையென்ற லென்ன கிண்டாச் சாதியினரென்ற லென்ன அந்தந்தச் சாதிக்குரிய தொழி லேயே 15ட்த்திவந்தனர். ஒரு சாதியைச்சேர்ந்தவன் இன் ைெரு சாதியினணுக முடியாது. ஒவ்வொருவனுடைய சாதியும் அவன் சமயத்தையே ஆதாரமாகக்கொண்டது, நாகரிகமான வாழ்க்கைக்குத் தேவையான ந ல் லொழுங்கையும் பாதுகாப்பையும் பிரித்தானியர் காங் கள் ஆளும் காடெல்லாம் அளிப்பது வழக்கம். ஆனல் அவர்கள் தங்களாட்சியின் சிறப்புக்களை ஸ்தாபிக்க வெகுகாலமெடுத்தும் வர்த்தக சங்கத்தாரினுட்சி முடி வடைந்த காலமாகிய 1858 வரையில் ஓரளவுக்கு அவை க3ளச் செய்துமுடித்தனரெனலாம், விவசாயிகள் கஷ்ட மின்றி உழைக்கக்கூடியதாகவிருந்தது. சனத்தொகை பெருகிக்கொண்டிருந்தமையால் வறுமை Bாட்டிற் குறைய வில்லை. பிரித்தானியர் இந்தியாவிலுள்ள நீதிச்சட்டங் களிலும் தேசவழக்கங்க ம் தலையிடவில்லை. ஆனல் அடிமை, நரபலி, சதி (உடன்கட்டையேறுதல்) இன் ணும் அநாகரிகமாகத் தோற்றியவைகளை நீக்கிவிட்டனர். கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தாரின் ஆட்சி முடிவடைவ தற்குமுன் ஆங்கிலேயர் மேனுட்டுக்கைத்தொழில்களையும் மேட்ைடுக்கல்வியையும், கிறிஸ்த பாதிரிமார் சமயப்பிர சாரஞ் செய்யவும் திறமையான அரசியல்முறையையும் ஸ்தாபித்தனர். இவ்வண்ணமாக மக்களின் நன்மை யைக் கருதிப் பல நன்மைகளைச்செய்தனர்.

Page 103
196 இந்தியா
1848-ல் மகாதேசாதிபதியாகவந்த டல்லெளசி என் பவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நன்மைக்காகவும் பல மாற்றங்களையுண்டாக்கினர். ஆங் கிலேயர் தங்களுடைய ஆளுகை மக்களுக்கு நன்மை யையே யளிக்கிறது என்ற அபிப்பிராயத்தை வைத் திருந்த அக்காலத்திலேயே டல்லெள சி தேசாதிபதியாக இந்தியாவுக்கு வந்தான். இந்தியாவிலுள்ள வழக்கப்படி கிட்டிய உரித்தாளரில்லாவிடத்து இந்து அரசர்கள் வளர்ப்புப்பிள்ளைகளைத் தங்கள் காலத்துக்குப்பின் அர சாள்வதற்கு நியமித்தனர். ஐரோப்பாவில் அவ்வகை யான வழக்கமில்லா திருந்தபோதிலும் கீழ்நாடுகளில் அந்த முறை சட்டத்துக்கு ஏற்றதும் தகுந்ததுமாகக் கருதப்பட்டது. ஆனல் டல்லெளசி அம்முறையை அங் கீகரிக்க மறுத்து, ஒரு அரசன் பிள்ளைகளில்லாமலிறக் தால் அவனுடைய இராச்சியம் முக்கிய அதிகாரத்கை யுடைய அரசாங்கத்துக்கே உரிமையுடைய தென்று சொன்னன். பழையகாலத்தில் மொகலாய அரசர்களுக் குரிய அவ்வுரிமை இப்போ கிழக்கிந்திய வர்த்தகங் கத்துக்கே உரியதென்று வற்புறுத்தினன். அசன் பிர காரம் மத்திய இந்தியாவிலுள்ள 7 நாடுகளைக் கைப் பற்றிக்கொண்டான். சொந்த நாடுகளே ஆண்ட அரசர் கள் யாபேரும் அது ஆபத்கான நிலையேற்பட்டகென வுணர்ந்தனர். ஆனல் தேசாதிபதி மக்களுக்கு அதனுல் நன்மையுண்டென்று எண்ணி இதுபோன்ற பல மாற் றங்களையுண்டுபண்ணினர். இவருக்குச் சிறிதுகாலத்துக்கு முன்னிருந்த பென்ரிங்பிரபு ஆகிய தேசாதிபதியும் சமு தாயத்தில5ேக சீர்திருத்தங்களை ஏற்படுத்தினர். அவர் ஒரு பரந்த கொள்கைகளையுடையவராய் இந்தியாவிற் பிரித்தானியருடைய ஆளுகையின் 5ோக்கம் இந்திய மக்கள் தாங்களே ஆட்சிபுரியக்கூடிய நிலையையுண்டாக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார். அக்காலத்தில் இங் கிலாந்திலும் பல மாற்றங்கள் காணப்பட்டன. கைத் தொழிலாலும், வர்த்தகத்தினனும் இங்கிலாந்து ஐசுவரிய மடைந்தாற் போகாதென்றும் மக்களுடைய நிலைமை

இந்தியா − 19
இங்கிலாந்தில் மாத்திரமல்லாது, சாம்ராச்சிய நாடுகளி லும் திருப்திகரமாயிருக்க வேண்டுமென்று ப ர ந் த கொள்கையாளர்கள் அபிப்பிராயப்பட்டனர். பிரித்தா னிய பாராளுமன்றத்தில் 1832-ல் நிறைவேற்றப்பட்ட அரசியற்சிர்திருத்தச் சட்டப்பிரகாரம் பாராளுமன்றத் தில் அங்கத்துவம் அதிகரித்ததுபோல் ஏனைய பகுதிகளி லும் திருத்தங்கள் ஆக்கவேண்டியது அவசியமாயிற்று. சகிஎன்றும் உடன் கட்டை ஏறும் வழக்கமும், அடிமைத் கனமும் ஒழிக்கப்பட்டன. அவருடைய காலத்திலே கல்வி விருத்தியுமேற்பட்டது. இந்தியர்கள் கல்வி பயிலவேண்டு மெனவுணர்ந்து அவர்களுக்கு உற்சாகமளித்தான். பாட சாலைகளும் கல்லூரிகளும் ஸ்தாபிக்கப்பட்டன.
டல்லெளசியும் அதேகொள்கையை யுடையவனுய் அரசாங்க நிர்வாகத்தையும் திருத்தியமைத்துக் கல்வியை யும் விருத்தியடையச்செய்தான். புகையிரதவீதி முதன் முகலாக வமைக்கப்பட்டது. தந்தி அனுப்பும் வசதியை உண்டாக்கினன். வறுமையை நாட்டினின் அறு ஒழிக்க வேண்டுமெனக்கருதி கால்வாய்களை வெட்டியும் நீர்ப் பாய்ச்சும் வசதிகளையும் உண்டாக்கினன். தெருக்களை அமைத்தகோடு சுலபமான கபாற்போக்குமுறையை ஸ்தாபித்தான், கல்கத்தாவில் பெண்கள் கல்லூரி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நிதியொன்றை வளங்கினன். நன்நோக் கத்தோடே அவனுல் இம்மாற்றங்கள் செய்யப்பட்டன. இவ்விதமாகத் திருத்தங்கள் உண்டாக்கப்பட்ட பொழுதிலும், பிரித்தானிக்ருடைய ஆளுகை இந்திய மக்களிடையே அதிருப்தியையுண்டாக்கியது. மொகலா யர், மருரட்டியர் ஆகிய இருபகுதியாரும் தங்கள்வசமிருந்த 5ாட்டை இழந்துவிட்டனர். ஆங்கிலேயருடைய ஆதிக் கம் பரவியதால் தங்கள் முன்னேராற் கைப்பற்றப்பட்ட நாட்டைத் தாங்தள் ஆளமுடியாமற்போனதே என்ற காரணத்தினுல் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. பிரித்கானியராற் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்க ளும் கொள்கைகளும் மனப்பயத்தை யுண்டாக்கியது

Page 104
198 இந்தியா
இரண்டாவது காரணமாகும், அதிருப்தியடைந்த பகுதி யினர், பிரித்தானியர் செய்த நன்மைகளெல்லாம் இந்திய மக்களுக்கு இடையூருகச் செய்யப்பட்டனவென்ற தப் பபிப்பிராயத்தை பாமரமக்களிடையே புகுத்திவிட்ட னர். பிரித்தானியர் தங்களுடைய அதிகாரத் கையும் செல்வாக்கையும் பலப்படுத்துவதற்காகவும், இந்து சம யத்தையழிக்கும் 5ோக்கத்துடனும் அந்த மாற்றங்களைச் செய்துள்ளார்களென நினைத்தனர். டல்லெளசி உண் டாக்கிய மாற்றங்களே கலகமேற்படுவதற்குக் காரணமா யிருந்தன. அக்காலத்தில் அம்மாற்றங்களின் நன்மையை அறியக்கூடிய முன்னேற்றத்தை இந்தியர் அடைந்திருக்க வில்லை. புகையிரத வண்டிகளிற் பல சாதியினரும் பிர யாணஞ் செய்தமையினுல் சாதிக்கட்டுப்பாட்டுக்குப் பங்க மேற்பட்டதென எண்ணங்கொண்டனர். பிளாஸி என்ற சண்டைக்கு 100 வருடங்களின் பின்பு பிரித்தானிய ருடைய ஆளுகை முடிவடையுமென ஒரு சோதிடனுற் கூறப்பட்டிருந்தமையினுல் அக்காலம் வந்தவுடன் அது நிறைவேறுமென்று காத்திருந்த லார். அக்காட்டிலிருந்த நிலமானியமுறை மாற்றப்பட்டமையால் தனவந்தர்கள் பகைமைகொண்டனர்.
ஆப்கானிஸ்தன் சண்டையிலும் கிறிமியன் யுத்கத் திலும் பிரித்தானியருடைய போர்த்திறமை குன்றியமை யால் அதிருப்தியடைந்த மக்கள் மனத்தைரியமுற்றனர். இவ்வகையான காரணங்களால் 1857-ல் இந்தியக்கலகம் என்று சொல்லப்படும் கலகம் உண்டானது. கிழக்கிங் திய சங்கத்தாரின் இந்தியப்படைகளுக்கு கொடுக்கப் பட்ட ஒரு புதிய துப்பாக்கிக்கு வேண்டிய சன்னங்கள் பசுவின் அல்லது பன்றியின் கொழுப்பினுற் பூசப்பட் டது. அந்தப்படையிலுள்ள போர்வீரர்கள் இந்துக்க ளும் முஸ்லீங்களுமாயிருந்தபடியால் அவைகளைப்பாவிக்க மறுத்தனர். உடனே கலகக்தொடங்கி மீராத்திலுள்ள போர்வீரர்கள் தங்களுடைய மேலுத்தியோகத்தர்க2ளச் சுட்டனர். வடக்கிலும், மத்தியபகுதியிலும் கலகக்தொடங் கியது. 48 மணித்தியாலங்களுள் டில்லியைக் கைப்பற்றி

இந்தியா 199)
மொகலாய வமிசத்திலுள்ள பகதூர் ஷா என்பவனை முழு இந்தியாவுக்கும் சக்கரவர்த்தியாக நியமித்தனர். வட இந்தியா முழுவதும் பிரகானமாக, லக்னுே, கோன் பூர், டில்லி, மீராத் முதலிய இடங்களில் கலகம் பர வியது. ஆனல் அக் கலகம் ஒற்றுமையுடனும் ஒழுங்காக வும் நடக்கவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு தலைவர் பொறுப்பை ஏற்றதல்லாது, தனிப்பெரும் அதி காரி ஒருவன் பொறுப்பாயிருந்து நடத்தவில்லை. முதல் நான்கு மாகங்களிலும் பிரித்தானியர் தகுந்தமுறையில் கலகத்கையடக்கவில்லை. அக்காலத்துள் கலகக்காரர் ஒரு மத்திய அதிகாரியின் உதவியோடு கலகத்தை நடத்தி யிருந்தால் பிரிக்கானியரைப் பின்வாங்கச் செய்திருக்க லாம். பிரித்தானியர் ஒவ்வொரு கனி பகுதியினரையும் தோற்கடித்தனர். இந்தியரில் அநேகர் பிரித்தானிய ருக்கு உதவியாகநின்று சண்டைசெய்தனர். ஆனல் பல கிஷ்டுரமான செயல்கள் கடந்தன. கலகம் அடக்கப் பட்டதும் பிரித்தானியருடைய ஆளுகைக்கு ஏற்படக் கூடிய அபாயமும் நீங்கியது.
இந்தியக் கலகத்தின்பயணுக கிழக்கிந்திய சங்கத்கா ரின் ஆளுகை 1858-ல் ஒழிக்கப்பட்டு பிரித்தானிய அர சாங்கத்தின் நேரடியான ஆளுகையின்கீழ் இந்தியா கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் விஷயங்களை நடத்து வதற்கு மந்திரிமாரைக் கொண்டுள்ள ஒரு சபையின் உதவியைப்பெற்ற அரசாங்க காரியகரிசி ஒருவருக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆங்கிலேய அரசனின் பிரதிநிதியாக மகாதேசாதிதியொருவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். விக்ாேறியா இராணி இந்தியாவின் சக்கரவர்த்தினியாகப் பிரசித்தன்செய்யப்பட்டு அப்பிர சித்தப் பத்திரத்தில் இந்தியாவின் பண்டைக்கால வழக் கங்களும் உரிமைகளும் 5ன்கு மதிக்கப்படுமென்றும் கைத்தொழிலபிவிருத்தி ஊக்கப்படுத்தப்படு மென்றும் பிறர் இராச்சியங்கள் அபகரிக்கப்படமாட்டாதென்றும் குறிப்பிடப்பட்டன. அக்கலகத்தின் பின் இந்தியாவின் சமுதாய நிலையைத் திருத்தியமைக்க வேண்டுமென்று

Page 105
200 இந்தியா
பிரிக்கானியர் உணர்ந்தனர். பேதிநோயும், பஞ்சமும் நாட்டிலில்லாமற் செய்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தனர். வைத்தியசாஸ்திர ஆராய்ச்சியின் பயனுக டேதிநோயுண்டாவதற்குரிய காரணங்களை அறிந்தபின் அக்கொள்ளைநோய் பரவாவண்ணம் தடுக்கப்பட்டது. இந்தியாவில் உணவுப்பொருள் விளைவு குன்றியகாலத் தில், அரிசி கோதுமை பஞ்சமுள்ள பகுதிகளுக்கு புகை யிரதவழியாகக் கொண்டுபோகும் வசதிகள் அளிக்கப் பட்டன. நீர்ப்பாய்ச்சும் வசதிகளை உண்டாக்கி பயிரிடுங் தொழிலை விருத்திசெய்து பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் உணவைப்பெறக்கூடியதாக உதவியளித்தனர். கல்வியை நாடெங்கும் பரப்புவதற்காக பலவிடங்களிலும் பாடசாலைகளை ஸ்தாபித்தனர். 1857-ல் சென்னையிலம், கல்கத்காவிலும், பம்பாயிலும் சர்வகலாசாலைகள் ஸ்கா பிக்கப்பட்டன. இவைகளோ டிஃணக்கப்பட்ட கல்லூரிகள் அரசாங்கத்தாராலும், சமயபரிபாலன சபைகளாலும், 5ாட்டிலுள்ள தனவந்தர்களாலும் ஸ்காபிக்கப்பட்டன. ஆங்கிலப் பாஷையையே கல்லூரிகளிற் பயின்றனர். இந்தியமக்கள் மேனுட்டுக்கல்வியைப் பயின்று ஆங்கில இலக்கியத்தையும், ஆங்கிலேய அரசியல்முறைகளை செவ் வனே கற்றனர். அவவிதமான கல்வியைப் பயின்றவர் கள் சிலராயினும் அவர்களின் கொள்கைகள் எல்லா மக்களிடமும் செறிந்தன. புகையிரதவீதிகளும், குறைக்க விகிக கடிகப்போக்குவரவும், புதினப் பத்திரிகையும், பாடசாலேகளும், சர்வகலாசாலேகளும், பரந்த ஆங்கில அறிவும் ஒன்றுசேர்ந்து வேற்றுமையடைந்திருக்க நாட் டில் ஒர்வகை ஒற்றுமையை உண்டாக்கின. சாதி, சம யம், பாஷை முதலிய வேற்றுமைகள் சாந்தப்படாத விடத்தும் புதிதாக மக்களிடையே செறிக்க கல்வி இக் தியாவின் வருங்காலநிலைக்குப் புத் துயிர் அளித்தகென as D.
றிப்போன் பிரபு மகாதேசாதிபதியாய் (1880-84) இருக்ககாலத்தில் பாக்ககொள்கைகளை அடிப்படையா

இந்தியா 201
யுள்ள மாற்றங்கள் உண்டாக்கப்பட்டன. புதினப் பத் திரிகைகளை வெளியிடும் அச்சியந்திர சாலைகளுக்கு முன் னிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்திய மக்க ளுக்குச் சுதந்திர ஆளுகையைப் பயிற்றும் நோக்கத் துடன் தெரிவுசெய்யப்பட்ட மா6கர சபைகள் ஸ்தாபிக் கப்பட்டன். (1882) அக்காலத்திலிருந்த கல்விமுறையைப் பற்றி விசாரஃண செய்வதற்காக ஒர் விசாரணைக் குழு வொன்றை நியமித்து அதன் அறிக்கையின் பிரகாரம் மாற்றங்கள் கல்வித்துறையிலேற்பட்டன. நான்காவதாக நீதிவழங்கும் முறையிற் காணப்பட்ட தவறுகள் நீக்கப் பட்டன. இச்சம்பவங்கள் எ ல் ல |ா ம் ஒன்றுசேர்ந்து கல்விபயின்ற வகுப்பினரிடையே தேசீய உணர்ச்சியை உண்டாக்கின. இவ்விதமான உணர்ச்சிகளுண்டாதன் பயனுக 1885-ல் இந்தியச் தேசீய சங்கமொன்று ஸ்தா பிக்கப்பட்டது. இதனங்கத்தவர்கள் 18-ம், 19-ம் நூற் ருரண்டுகளிலுள்ள விக்' கட்சியாரின் அரசியல் ஞானத் தைப் பின்பற்றி, பிரதிநிதிகளையுடைய ஸ்தாபனங் கள் இந்தியாவில் ஸ்தாபிக்கப்படவேண்டுமென்றும் சட்டநிரூபண, சட்டநிர்வாக சபைகளில் இந்திய மக்க ளுக்குப் பங்கு இருக்கவேண்டுமென்றும் வாதாடினர். அச்சங்கத்துக்குத் தலைவராயிருந்த தாதபாய் நவுருேஜி அரசர்கள் மக்க ளு க் கா க ஆக்கப்பட்டனரேயன்றி ம க்க ள் அரசர்களுக்காக ஆக்கப்படவில்லையென்று கூறினர். ஆனல் அச்சங்கம் இந்துக்களையே கொண் டுள்ள ஸ்தாபனமாயிருந்தது. மு க ம தி ய ர் ஒருவரும் சேரவில்லை. M
மேனட்டுக் கொள்கைகளை அடிப்படையாகவுள்ள தேசீய இயக்கத்தினர் மேனுட்டு அரசியல் முறையை இந்தியாவில் ஸ்தாபிக்கவேண்டுமென்ற நோக்கத்தை யுடையவராயினர். ஆனல் இந்துசமய சம்பந்தமான இயக்கங்களைச் சேர்ந்தோர் இந்தியா மேனுடுகளிலும் பார்கக் சிறந்த நாடென்று வற்புறுத்தினர். 1902-ற் காலஞ்சென்ற சுவாமி விவேகானந்தர் இந்தியா, ஆத்ம
26

Page 106
2U2 இந்தியா
சக்தியினல் உலகத்தை வெல்லவேண்டுமெனக் கூறினர். இவ்வாறு மேல்நாட்டு மயமாக்கும் அரசியல், சமுதாய இயக்கங்களும், அக்கொள்கைகளுக்கு எதிரான இயக் கங்களும் ஒன்றுசேர்ந்து தேசீய உணர்ச்சியை உண் டாக்கின. மருரட்டியர் நாட்டிலுள்ள, திலகர் என்ற ஒரு பிராமணன் ஒருவர், இந்தியாவிலுள்ள வறுமை, நோய், ஆகியவற்றிற்குப் பிரித்தானியருடைய ஆளுகையே காரணமென மக்களுக்கு விளங்கப்படுத்தி ஒரு கிளர்ச் சியை யுண்டுபண்ணினர்.
கோக்கலேயும், ஆமட்கான் முதலியோர் பிரித்தா னிய அரசாங்கம் இந்தியாவுக்குச் சுயராச்சியத்தை சீக் கிரத்தில் வளங்கவேண்டுமென்ற வழியில் முயற்சிகள் செய்தனர். திலகர், காந்தி முதலியோர் அரசாங்கத் தைப் பலவழியிலும் எதிர்த்தனர். 1892-ல் ஏற்படுத்தப் பட்ட அரசியற் திருத்தத்தின் பிரகாரம் இந்திய அர சாங்கத்திலுள்ள சட்டநிரூபண சபைகளிலும், 1909 ல் மோர்லிமின் ருேரத் திட்டத்தின் பிரகாரம் மாகாண கிர் வாகசபைகளிலும் அங்கத்தவர்கள் தொகை கூட்டப்பட் டது. முதலாம் உலகயுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தியப் படைகள் நேசதேச கட்சியினரோடு சேர்ந்து போராடினமையாற் சுயஆட்சி சீக்கிரத்தில் கிடைக்கு மென்று இந்தியருட் பலர் எதிர்பார்த்தனர்.
முதலாம் உலகயுத்தத்தில் இந்தியாவில் கைத்தொ ழில் விருத்தியேற்பட்டது. நெசவுத்தொழில், நில க் க ரி இரும்பு முதலிய தொழில்கள் ஆரம்பமாயின. இந்தி யாவின் வர்த்தகப் பொருட்களைப் பாதுகாக்கத் தொடங் கியதால் பிரித்தானிய வர்த்தகப் பொருட்களுக்கு விருப் பம் குறைந்தது. வர்த்தக் வகுப்பினர் தனவந்த ராய் விட்டனர். ஆனல் யுத்தத்தின் நிமித்தம் பொருட்களின் விலை அதிகரித்ததால் ஏழைகள் அதிகம் கஷ்டப்பட் டனர். இவ்விதமான பொருளாதார நிலை, பிரித்தானி யருக்கு மாருரகத் தொடங்கிய இயக்கத்துக்குச் சாதக

இந்தியா 203
மாயிருந்தது. இதுவரையில் இந்துக்களிடமிருந்த எதிர்ப்பு, இப்போ முஸ்லீங்களிடமும் காணப்பட்டது. மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் பூரண சுதந்திரத்தைப் பெறுவதற்கு இந்தியமக்கள் போராடத் தொடங்கினர். முதலாம் உலகயுத்தம் முடிவடைந்தபின் பல்வகைப்பட்ட கிளர்ச்சிகளும் உண்டாயின. காந்தியைப் பின்பற்றி யோர் இந்துசமயப் பண்பாட்டையும் கொள்கைகளையும் மீண்டும் கொண்டுவருவதற்கு எத்தனஞ் செய்தனர். முஸ்லீம்கள் முஸ்லீம் ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டு மென அவாவுற்றனர். மேனுட்டுக் கல்வியைப் பயின்ற வர்கள் மேனுட்டு ஜனநாயக முறையைப் பின்பற்ற விருப்பமுடையராயினர். வர்த்தகப் பொருட்களை உற் பத்தி செய்வோர்களும் வர்த்தகர்களும் மே ன ட் டு ப் பொருட்களை இறக்குமதி செய்யாமற் தடுக்கவேண்டு மென முயற் சித் த ன ர் இவ்வண்ணமாகப் பலவித அபிப்பிராயமுடையோர்கள் ஒன்றுசேர்ந்து மேனுட்டு ஆதிக்கத்தை வெறுத்தனர்.
மோர்லிமின்றே அரசியல்முறை திருப்திகரமாய்க் காணப்படவில்லை. சுதந்திரத்தை இந்தியமக்கள் விரும் பியிருந்தமையால் படிப்படியாக அவர்கள் தங்களுடைய நோக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக ஏற்ற அரசாங்கம் நிறுவும் எண்ணத்தை ஆங்கிலேயர் 1917-ல் வெளிப்படுத்தினர். 1919-ல் பிரித்தானிய பாராளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட மொன்ரேக் செல்ம்ஸ்போட் திட்டத்தின் பிரகாரம் காணங்களிலுள்ள ஆட்சி மாகாணச்சபையிலுள்ள இந்திய மந்திரிகளிடம் ஒப்புவிக் கப்பட்டது. மாகாணச் சட்டநிரூபண சபைகளில் எழு பது வீதத்திற்குக்குறையாமற் தெரிவுசெய்யப்பட்ட அங் கத்தினர்கள் இருந்தனர். முஸ்லீம்கள் ஐரோப்பியர், சிக்ஸ், கிறிஸ்த இந்தியர்கள் முதலியோருக்குப் பிரத்தி யேகமான தொகுதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. நான்கு வருஷங்களின் பின்பு சபைத்தலைவரை தெரிவுசெய்யும் உரிமை சபைகளுக்குக் கொடுக்கப்பட்டன. சட்ட

Page 107
204 இந்தியர்
நிர்வாக சபையிலும் மாற்றங்கள் ஏற் பட்ட ன. மத் திய அர சாங்கத் தி ல் இந்தியா முழுவதிலும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் சபையொன்றும் ஆக்கப்பட்டது. ஆனல் பூரண சுதந்திரத்தை விரும்பி நின்றவர்களுக்கு இம்மாற்றங்கள் திருப்தியளிக்கவில்லை. புதிதான இன்ணுெரு கிளர்ச்சி உண்டானது. உலகம் போற்றும் உத்தம மகாத்மா காந்தியின் தலைமையில் அது ஏற்பட்டது. அவருடைய இயக்கம் அஹிம்சையே அடிப்படையாகக் கொண்டதாகும். சத்தியா க் கி ரக முறையில் அமைந்த சட்டமறுப்பியக்கம் ஆரம்பமா னது. 1930-ல் அரசாங்கத்துக்கு எதிர்ப்புக்காட்டும் முறை யில் காந்தி உப்பை அள்ளும் இயக்கத்தை தொடங்கி யதனுல் அவர் சிறைச்சாலையிலிடப்பட்டார். அடுத்த மூன்று வருடங்களுக்குள் லண்டனில் 3 வட்டமேசை மகாநாடுகள் நடைபெற்றன. இந்திய மாகாணங்கள் எல்லாவற்றையும் ஒரே அரசாங்கத்தின் கீழிணைக்க வேண்டுமென்று 1935-ல் சட்டமொன்று நிறைவேற் றப்பட்டது. மாகாணங்களில் சட்டங்களை ஆக் கும் பொறுப்புள்ள மந்திரி சபைகளையுடைய மாகாண ஆட்சிமுறை ஸ்தாபிக்கப்பட்டது. ஆஸ்தி, கல்வித் தரா தரமுடையவர்களுக்கே வாக்குரிமை யளிக்கப்பட்டது. அத்திட்டத்தின் பயனக 1937-ல் 5டைபெற்ற முதற் தேர்தலில் மகாத்மா காந்தியின் யோசனைப்படி இந்திய தேசீயசங்கம் பங்குபற்றி 11 மாகாணங்களில் 7 மாகா ணங்களின் ஆட்சி அச்சங்கத்தினருக்கு கிடைத்தது. அடுத்த இரு ஆண்டுகளிலும் மாகாண சுதந்திர ஆட்சி அனுகூலமாக நடைபெற்றது. ஆனல் சுதந்திர ஆட் சியே வேண்டுமென்று இந்தியத் தலைவர்கள் வாதாடி னர்கள். இரண்டாம் உலகயுத்தம் நடந்துகொண்டிருக் தமையால், அக்காலத்தில் இந்தியர் விரும்பிய ஆட்சி யைப் பிரித் தா னியர் அளிக்கமுடியாமற் போனது. 1942-ல் கொழிலாளர் கட்சியிலுள்ள கிறிப்ஸ் ւ9Tւ, இந்தியாவின் நிலையை ஆராய்ந்து யுத்தம் முடிவடைந்து பின், சுதந்திரத்தை வழங்குவதற்கு வேண்டிய அறிக்

இந்தியா -
கையை வெளிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டார். சாம்ராச்சியத்தின் ஏனைய நாடுகளைப்போல் ஆளு கைப்பொறுப்புள்ள சம அ ங் த ஸ் து வழங்கவேண்டு மென்று அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்த பின் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாயிருந்த கிளமென்ட் அட்லி 1948-id ஆண்டு ஆனிமாதத்திற்குப் பிந்தாமல் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படவேண்டுமென பாராளுமன்றப் பிரதிநிதிச் சபையில் கூறினர். இந்தி யாவில் இராசப் பிரதிநிதியாயிருந்த மவுன் பற்றன் பிரபுவும் அக்கொள்கையே வெளிப்படுத்தினர். இதற் கிடையில் இந்து முஸ்லீம்களுக்கிடையே பேதமேற்பட் டது. முஸ்லீம்க்ளினுடைய தலைவரான ஜின்னு தனி முஸ்லீம் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்று வாதாடினர். ஆகையால் இந்தியா, பாக்கிஸ்தான் என்று இரு ஜனநாயக நாடுகள் ஸ்தாபிக்கப்பட்ட்ன. இரு நாடுகளுக்குமிடையே உள்ள காஷ்மீரம் என்ற լ ՊՄ தேசம் யாருக்குரியது என்ற வாக்குவாதம் தொடங்கி யது. அந்தப் பிரச்னை இன்னுங் தீரவில்லை. இந்தியா, பாகிஸ்தான் என்பவைகளுக்கு மு ைற யே நேருவும், ஜின்னவும் முதற் பிரதம மந்திரிகளாக நியமிக்கப்பட் டனர். 1950-ல் இந்திய பாராளுமன்றம், இந்தியாவை இராச அதிகாரமுள்ள ஜனநாயக குடியரசாக்குவதாக வெளியரங்கப்படுத்தியது. அதற்கு இராசேந்திர பிர சாத் என்பவர் முதற் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்காலத்திற் சிறந்த அரசியல் நிபுணனுகப் கரு தப்பட்ட பிரதம மந்திரியாகிய நேருவின் தலைமையின் கீழ் இந்தியா அ தி க முன்னேற்றமடைந்திருக்கிறது. நாட்டுக்கு வேண்டிய உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1951-ல் கொண்டுவரப்பட்ட ஐந்துவருடத் திட்டத்தின் பயனுக விவசாயம் நன்னிலே அடைந்திருக் கிறது. வீதிகள் திருத்தியமைக்கப்பட்டதும் ஆகாயபோக் குவரத்து வசதிகளும் கப்பற் பிரயாண வசதிகளளிக் கப்பட்டதும் கவனிக்கக்கூடிய பிரதான வேலைகளாம்.

Page 108
206 இந்தியா
கைத்தொழிலும் அதிக விருத்தியடைந்திருக்கிறது. கிரா மங்களின் பொருள்ாதார சமுதாய நிலைகளும் திருத்த மடைந்தன. தற்போது இந்தியா உலகத்தின் ஏனைய நாடுகளோடு நட்பான முறையில் நடந்து சமாதானத்தை விரும்பி நாட்டைச் செழிக்கச்செய்து வருகின்ற நன் முயற்சியை யாவரும் அறிவர்.
வினுக்கள்
1. ஐரோப்பியர் இந்தியாவுக்கு ஏன் வந்தனர்? அவர்கள் தங்களு
டைய செல்வாக்கை எப்படி நிலை நாட்டினர்?
V
2. ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்குமிட்ையில் ஏற் பட்ட
போர்ை விபரித்து எழுதுக.
3, இந்தியாவிற் பிரித்தானியர் தங்களாகிக்கத்தை எவ்வண்ணம்
நிலைநாட்டினர்.
4. @&Tວມໍ, கேஸ்டிங் ஆங்கிலேயரின் ஆகிக்கத்தை எவ்வாறு பல
மடையச் செய்தனர். 5. பிரித்தானிய கிழக்கிந்திய சங்கத்தின் ஆட்சியைப்பற்றிக் கூறுக.
6. 1857-ல் ஏற்பட்ட இந்தியக் கலகத்தின் காரணங்களை ஆராய்க. 7. கலகத்தின் பின் காணப்பட்ட மாற்றங்கள் யாவை?
8. இந்திய மக்களின் சுதந்திரப் போராட்டத்தைப்பற்றி விபரித்துக்
கிடறுகி.
9. சுதந்திரத்தைப் பெற்றபின் இந்தியா எவ்வெவ் துறையில் முன்
னேற்றமடைந்திருக்கிறது?

பதினெட்டாம் அத்தியாயம்
ரூஷியா
ரூஷியாவை ஆண்டுவந்த சார் எனப்பட்ட அரசர் கள் எதேச்சாதிகாரிகளாவர். அவர்கள் பரந்த இராச் சியமாகிய ரூஷியாவையும், பின்லாந்து, போலாந்து முதலிய நாடுகளையும் ஆண்டனர். பின் லாங் து ம் போலாந்தும் சாரின் ஆளுகையை வெறுத்தன. ரூஷி யாவிலுள்ள மக்கள் சிலாவியச் சாதியினரைச் சேர்ந்த வர்கள். மேற்கு ஐரோப்பா முழுவதும் ஜனநாயகக் கொள்கைகள் பரவியிருந்தன. ஆனல் ரூஷியா மாத்தி ரம் அக்கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட நாடாக விளங் கியது. ஒருவேளை ரூஷியாவின் சமுதாயநிலை அக்கொள் கைகள் பரவுவதற்குச் சாதகமாயிருக்கவில்லையெனலாம். நகரங்கள் மிகக் குறைவாயிருந்தமையினுல் மக்கள் கிரா மங்களிலேயே வசித்துவந்தனர். தற்கால உலகத்திற் தோன்றிய மாற்றங்கள் எவையேனும் அங்காட்டைத் தாக்கவில்லை.
ரூஷியா ஒரு பரந்த நாடாகையால் போக்குவரவு வசதிகள் கஷ்டமாகவிருந்தன, அதனற் பல பகுதிக ளில் அரசாங்கம் செவ்வனே நடத்தப் பட வில் லே. தங்கள் நாட்டுக்கு இருந்தபற்றே அங்காட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தியது. பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்ருரண்டுகளில் ரூஷியா அயல்நாடுகளைக் கைப்பற்றும் 5ோக்கத்துடன் 33 போர்க்ள்வரையில் 5 ட த் தி யது. அதன் பயனுக ரூஷியா துருக்கி, பாரசீகம் ஆப்கா னிஸ்தன் முதலிய நாடுகளின் எல்லைவரையும் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். ரூஷியாவிலுள்ள மேல்வகுப் பினராகிய பிரபுக்கள் மேலுத்தியோகங்களிலமர்ந்த னர். உத்தியோகத்தரல்லாத பிரபுக்கள் தங்கள் நிலங் களிற் குடியிருந்த விவசாயிகளிடம் அதிக அதிகாரமும் செல்வாக்கும் உடையவராயிருந்தனர். விவசாயிகளிற் பெரும்பான்மையோர் அடிமைகளாகவும், கல்வியறிவில்

Page 109
208 56: LLUIT
லாதவர்களாயும், மூடத்தனமுள்ளவர்களாகவும் காணப் பட்டனர். இவ்வகையான நிலையில் இருந்தும் பிரபுக் களுக்கு எதிர்ப்புக்காட்டாமல் எல்லாக் கஷ்டங்களையும் சகித்துவந்தனர். சா ரின் அதிகாரத்துக்குட்பட்ட கிரேக்க வைதிகத் திருச்சபையிடம் பெரும் நம்பிக்கை யுடையவராவர். ஐரோப்பாவின் மற்ற நாடுகளிலுள்ள மத்திய வகுப்பினரைப் போலல்லாது ரூஷியாவிலுள்ள மத்திய வகுப்பினர் ஒன்றிலும் சிரத்தை எடுக்கவில்லை.
மகாபீற்றர் தனது நாடு மேற்கு ஐரோப்பிய நாடு களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது முன்னேற்ற மடையாதிருந்ததைக்கண்டு அந்நாடுகளின் வாழ்க்கை முறைகளை ரூஷியாவிற் புகுத்தச்செய்த நன் முயற்சிக ளைப்பற்றி முன்னெரு அதிகாரத்திற் படித்திருக்கிறோம். ஆனல் அவர் பாடசாலைகள், தொழிற்சாலைகளை ஸ்தா பித்து தெருக்களையும் அமைத்து வேண்டிய திருத்தங் களைச் செய்தபோதிலும் பண்டைக்காலக் கொள்கைக ளும், பழக்கவழக்கங்களுமே வேரூன்றி நின்றன. சாரி அனுடைய அதிகாரத்துக்குக்கீழடங்கியே மக்கள் வாழ்ந்து வந்தனர். பீற்றர், நிலங்களாற் சூளப்பட்ட நாட்டுக்குத் துறைமுகங்களும் அவசியமென உணர்ந்து பால்ரிக்கட லில் ஒரு துறைமுகத்தைக் கைப் பற்றி ன ன். பின் ஆண்ட சார் கருங்கடலில் இன்னெரு துறைமுகத்தைப் பெற்றரன்,
இரண்டாம் கதரின காலத்திலும் பின் ஆண்ட அரசினர் காலத்திலும் ரூஷியர் தென்மேற்குப் பக்க மாகத் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப முயற்சி செய் தனர். கருங்கடலிலும் இன்னும் ஐரோப்பாவிற் துருக் கியருக்கிருந்த ஆதிக்கத்தைக் குறைத்துக் கொன்ஸ் தாங்து கோப்பிளையும் கைப்பற்ற எண்ணங்கொண்ட னர். இவ்வகையான ஆசைக்குப் பல காரணங்களிருந் தன. கொன்ஸ்தாந்து நோப்பிளைக் கைப்பற்றினல் மத்தித்தரைக் கடலுக்குச் செல்வதற்குச் சுலபமாயிருக் கும். அதுவுமல்லாமல் கொன்ஸ்தாந்து நோ ப் பிள்

ருஷியா 209
பழையகாலத்தில் கிரேக்க வைதீக சமயத்துக்கு மத்திய ஸ்தானமாயிருந்தது. துருக்கியராட்சியிலிருந்த பால்கன் நாடுகளிற் கிரேக்க வைதிகசமயக் கோயில்களைச்சேர்ந்த சிலாவியச் சாதிமக்களிருந்தனர். அங்நாடுகள் துன் புறுத்தப்பட்டதல்லாமலும் அங்கே ஏற்படுத்தப்பட்ட அர சாங்கமும் திருப்திகரமானதல்ல. அம்மக்கள்மீது சார் அனுதாபமுடையவராய் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்க விரும்பினர். பல சிலாவியச் சாதியினர் அவுஸ் திரியாவின் ஆட்சியிலிருந்தபடியால் அங்நாடும் பால்கன் நாடுகள்மீது அனுதாபங்கொண்டது. ரூஷியா கீழ்த்தி சையிற் செல்வாக்கை நாட்டுவதற்கு எத்தனித்தபடியால் இந்தியாவுக்குச் செல்லும் மார்க்கத்திற்கு இடையூறு உண்டாகக்கூடுமென ஆங்கிலேயர் அச்சமுற்றிருந்தனர்.
பதினைந்தாம் பதினரும் நூற்றரண்டுகள் துருக்கிய ராற் கைப்பற்றி ஆளப்பட்டுவந்த சேர்பியா, பல்கேரியா றுாமேனியா, கிறீஸ் ஆகிய பால்கன் நாடுகள் பத்தொன் பதாம் நூற்றண்டில் சுதந்திரம்பெறும் நோக்கத்துடன் வாதாடின பிரித்தானியர் கிரேக்கருச்கு அனுதாபங் காட்டினர். பொதுவாக அவர்கள் துருக்கிக்கு எதிர்ப் புக் காட்டியிருக்கக்கூடும் ஆனல் ரூஷியர் மத்தித்தரைக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட எண்ணங் கொண்டமையால் பிரித்தானியர் இந்தியாவைக் கைப் பற்றும் நோக்கம் ரூஷியருக்கிருக்கெனச் சந்தேகங் கொண்டனர். அதுவுமல்லாமல் துருக்கியருடைய சாம் ராச்சியம் வலிகுன்றிப் போன்மையால் யார் அந்தச் சாம் ராச்சியத்தைப் பங்கீடு செய்ய வேண்டுமென்று ஆலோ சனையுமெழுந்தது. அக்காலத்தில் ரூஷியா வை ஆண்டு கொண்டிருந்த முதலாம் நீக்கிலாஸ் என்ற சார் பிரித் தானியா, பிரான்சு, ரூஷியா என்ற மூன்று நாடுகளும் துருக்கியருடைய சாம்ராச்சியத்திலுள்ள நாடுகளைத் தங் களுக்குள் சிநேக முறையில் பிரித்தெடுத்துக் கொள்ள லாமென யோசனை கூறினர். எகிப்தையும் கிறீட் தீவை யும் பிரித்தானியர் தங்கள் வசமாக்க லா மென் றும்,
27

Page 110
210 ருஷியா
ரூஷியா, சேபியா, பல்கேரியா, றுமேனியா, கொன்ஸ் தாங்தையின்-நோப்பிளைப் பெறலாமென்றும் கூறினர். பிரித்தானியா அவ்வகையான ஒழுங்குக்கு எதிர்ப்புக் காட்டியது.
ரூஷியா, கிரேக்க வைதிக தேவாலய ங் களு க் குத் தலைமை தாங்கியமையால் துருக்கியரால் ஆளப்பட்ட நாடுகளிலிருந்த அச் சமயத்தவர்களுக்குப் பாதுகாப்ப ளிக்க விரும்பியது. அதுவுமல்லாமல் எருசலேமிலுள்ள பரிசுத்த தேவாலயங்களின் பாதுகாக்குமுரிமையையும் நிலைநாட்டின. அந்த உரிமையை பிரான்சு எதிர்த் தது, ஆகையால் இருபகுதியாருக்குமிடையில் பகைமை யேற்பட்டது. துருக்கியராண்ட நாடுகளிலிருந்த கிறீ ஸ்த பிரசைகள் யாபேரையும் பாதுகாக்குமுரிமை தங் களுக்குண்டென்று ரூஷியா கூறியபொழுது ரூஷியரு டைய அடிப்படையான எண்ணமின்ன்தென்பது தெளி வாயிற்று. பால்கன் நாடுகளின் அரசியல் அதிகா ரத்தை ரூஷியா பெறுவதற்கு எண்ணங் கொண்டிருப் பதை பிரித்தானியாவும் பிரான்சும் அறிந்தன. பிரித் தானியர் போருக்கு வரமாட்டார்களென்ற நம்பிக்கையி னுல் மோல்டேவியா, வலாஸியா என்ற இரு மாகாணங் க2ளயும் கைப்பற்றித் துருக்கியருடைய கடற்படையை யும் சினேப் என்ற இடத்தில் 1853-ல் ரூஷியர் தாக்கி னர். பிரித்தானியரும் பிரான்சியரும் போருக்கெழுந்து கருங்கடலிலுள்ள செபாஸ்தப்போல் என்ற கோட்டை யைக் கைப்பற்றினர். நேசதேசப் படைகள் கிறிமியா வுட் புகுந்து அல்மா என்ற சண்டையில்வெற்றிபெற்றன. (1854). பலக்கிளவா என்ற சண்டையில் ரூ ஷி ய ர் திறமையுடன் போர்புரிந்து வெற்றி எய்தினர். இங்க மன் என்ற இடத்தில் நடைபெற்ற சண்டையில் நேச தேசப் படைகளால் ரூஷியர் துரத்தப்பட்டனர். பிரித் தானிய பிரான்சியத் துருப்புகள் கிறிமியாவிலுள்ள குளிரினலும், உணவுக்குறைவினலும் நோயி ன லு ம் அதிக கஷ்டப்பட்டனர். காயப்பட்ட போர்வீரர்களை

ரூஷியா 211
வைத்தியசாலைகளில் வைத்து வேண்டிய சிகிச்சைகளைச் செய்து உதவிபுரிய புலோரன்ஸ் 5ைட்டிங்கேல் அம்மை யார் புறப்பட்டார். அவ்வம்மையார் தொடங்கிய வேலை உலகத்துக்கு விசேஷ நன்மைகளை அளித்தன.
நேசதேச படைகள் பல இன்னல்களை அவ்யுத் தத்தில் அடைந்தபோதிலும் 1855 ல் அவைகளின் கிலே திருத்தமடைந்தன. அவ்வாண்டில் சார் மீக் கி லா ஸ் இறக்க, இரண்டாம் அலெக்சாந்தர் அவருடைய இடத் தைப் பெற்றர். அவர் சமாதானத்தை விரும்பியமை யால் யுத்தம் முடிவடைந்தது. பாரிஸ் உடன்படிக்கை யின் பிரகாரம் துருக்கியர் சாம்ராச்சியம் பாதுகாக்கப் பட்டது. சுல்த்தான் தனது சாம்ராச்சியத்திற் திருத் தங்களைச் செய்வதாக உடன்பட்டார். மொல்டேவியா, வலாஸியா என்ற இருமாகாணங்களும் ஒன்று சேர்க்கப் பட்டு றுமேனியா என்ற பெயருடன் சுதந்திர ஆட்சி யைப் பெற்றன. கருங்கடல் நடுவுநிலைமைப் பகுதியாகக் கைக்கொள்ளப்பட்டது. சண்டைக் கப்பல்கள் அங்கே செல்ல முடியாதென்றும் கோட்டைகள் கட்ட முடியா தென்றும் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டன. கிறி மியன் யுத்தத்தின் பயனக ரூஷியா துருக்கியருடைய இராச்சியத்திற் தலையிடும் எண்ணம் நீக்கப்பட்டு ஆசி யாவிலுள்ள பகுதிகளிற் கவனஞ் செலுத்த வேண்டிய தாயிற்று.
1870-ன் பின் ரூஷியா மீண்டும் துருக்கியிற் கவனஞ் செலுத்தத் தொடங்கியது. எல்லாச் சிலாவியச் சாதியி னரையும் ஐக்கியப்படுத்ஆம்”நோக்கத்துடன் சிலாவியச் சாதியின் ஐக்கியம் என்னுமொரு இயக்கத்தை ரூஷியா உண்டாக்கி உற்சாகப்படுத்தியது. அதனுல் பால்கன் நாடுகளில் அமைதிக்குறைவு ஏற்பட அதைத் துருக் கியர் கொடூரமான முறையில் அடக்கினர். ரூஷியா அதற்கு மறுப்புக்காட்டி 1877-ல் போருக்கெழுந்தது துருக்கியர் மனத்திடத்துடன் சண்டை செய்தபொழுதி அலும் ஈற்றில் ரூஷியாவால் தோற்கடிக்கப்பட்டனர், அக்

Page 111
212 ரூஷியா நேரத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் தலையிட்டு பேர்லின் நகரத்தில் ஒரு மகாநாட்டைக் கூடி மீண்டும் வேண்டிய ஒழுங்கை ஏற்படுத்தினர். பால்கன் நாடுகளிற் சிலாவி யச் சாதியினரிடம் சுதந்திர உணர்ச்சி வளரத்தக்கதாக உதவியளித்தனர். ஒவ்வொரு சிறுநாடும் சுதந்திரத்தை விரும்பினதல்லாது ரூஷியரின் ஆளுகையை விரும்ப வில்லை. மத்திய ஆசியாவில் மீண்டும் ரூஷியா கவனத்தைச் செலுத்தத் தொடங்கினமையால் பிரித்தானியருடைய பகைமையைப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்ருரண் டின் பிற்பகுதி முழுவதும் ரூஷியா ஐரோப்பிய நாடுக ளுக்குப் பகைமையுடைய நாடாகப் பிரித்தானியராற் கருதப்பட்டது.
ரூஷியா கிழக்கு நோக்கி இராச்சியத்தைப் பெருப் பித்துக்கொண்டு போனமையால் 1904-ல் யப்பானேடு சண்டை செய்ய நேரிட்டது. மஞ்சூரியாவை ரூஷியா கைப்பற்றியமையினுல் யப்பானியர் தங்கள் நாட்டுக்கும் அபாயமேற்பட்டதென எண்ணினர். 1902-ல் யப்பான் இங்கிலாந்தோடு ஒப்பந்தம் எழுதிக்கொண்டது. 1904ல் ரூஷியாவுக்கும் யப்பானுக்கு மிடையில் போர் தொடங் கியது. மேல்நாடுகள் அதிசயப்படக்கூடியதாக யப்பான் ரூஷியாவை தரைச்சண்டைகளிலும் கடற் சண்டைகளி லும் தோற்கடித்தது. 1805-ல் சமாதான உடன்படிக்கை எழுதினதின்பின் கீழைத் தேசங்களைக் கைப்பற்றும் எண்ணம் ரூஷியாவுக்கு நீங்கியதெனலாம்.
கிறிமியன் யுத்தம் நடக்கும்பொழுது மரணமடைந்த முதலாம் நீக்கிலாஸ் என்றசார் ஒரு எதேச்சாதிகாரி. அரசியலிலும் அநேக குறைகள் காணப்பட்டன. அவ ருக்குப்பின் ஆண்ட இரண்டாம் அலெக்சாந்தர் என்ற சார் அக்குறைகளை நிவிர்த்தி செய்ய ஆரம்பித்தார். அடிமைத்தனத்தை ஒழித்தார். நீக்கப்பட்ட அடிமை கள் எல்லோரையும் விவசாயிகளாக்கினர். அந்த விவ சாயிகள் யூத வர்த்தகர்களுக்குக் கடன்காரராகினமை யால் அடிக்கடி கலகங்களேற்பட்டன. அதுவுமல்லாமல்

ருஷியா 213
கைத்தொழிற் புரட்சியின் பயனுகப் புது ந க ரங்க ள் தோன்றின. தொழிற்சாலைகளில் அமர்ந்த வேலையாட் கள் அதிக அதிருப்தியுடையவர்களாயினர். "ஜெமிஸ் ரொவ்ஸ்’ என்னும் கிராமச்சங்கங்களும் ஏற்படுத்தப்பட் டன. கல்வியும் பரவியது. அதிருப்தி யடைந்த கல்வி கற்றவர்களும் தொழிலாளரும் புரட்சி உண்டாக்க எத் தனித்தனர். அவ்விதமான கிளர்ச்சியை அரசாங்கம் அ ட க் கியது. புரட்சியை உண்டாக்கக் கூடியவர்க ளெனச் சந்தேகத்திற்கிடமானவர்கள் கூட நாடுகடத்த்ப் பட்டு சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவ்விதமான செய்கை புரட்சிக்காரரைக் கொடிய செய்கைகளைச் செய் யத் தூண்டின. கெடுதியானவை என அவர் க ள் நினைத்த ஸ்தாபனங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் நோக்கத்துடன் "கிகிலிஸ்ம்” என்னுமிய க் க த் ைத த் தொடக்கினர். பல கொடுரமான செய்கைகள் செய் யப்பட்டன. உயர்தர உத்தியோகத்தர்கள் வாளுக்கிரை யாயினர். இரண்டாம் அலெக்சாந்தராகிய சார் கொலை செய்யப்பட்டார் (1881). அவர் பல திருத்த ங் க ஆள ச் செய்ய ஆரம்பித்த போதிலும் அவருக்கு அங்கிலைமை ஏற்பட்டது. ஆனல் அந்தக் கொலே நாட்டின் முன் னேற்றத்துக்குத் தடையாயிருந்தது. அவருக்குப் பின் ஆண்ட மூன்ருரம் அலெக்சாந்தரும் இரண்டாம் நீக்கி லாசும் (கடைசியாக ஆண்ட சக்கரவர்த்திகள்) எதேச்சா திகாரிகளாகவே ஆண்டு வந்தனர்.
யப்பானேடு நடத்திய போரில் ரூஷியா தோற்ற தின் காரணமாக நாட்டில்“அதிக அதிருப்தி உண்டா னது. சாரினுடைய மந்திரிமார் டூமா என்று சொல்லப் படும் பாராளுமன்றத்தை ஸ்தாபிப்பது நல்லது என யோசனை கூறினர். ஆனல் அப்பாராளுமன்றத்தால் விசேஷ வேலையொன்றும் செய்யப்படவில்லை. இவ்வித மான நிலையில் ரூஷியா 1914 வரையுமிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் மத் திய வகுப்பினரும் மேல்வகுப்பினரும் கல்வியறிவிலும்

Page 112
214. ருஷியா
பண்பாட்டிலும் மேம்பட்ட நிலையை எய்தினர். விவசா யிகள் வறியவர்களாயும் கல்வியறிவில்லாதவர்களாயுமி ருந்தனர். கல்வியறிவு படைத்த விவேகிகளும், சில பெ ரும் எழுத்தாளர்களுமே அங்காட்டிலேற்பட்ட புரட்சிக் குக் காரணமாயிருந்தனர். எழுத்தாளர்களுள் உலகப் பிரசித்திபெற்ற ரொல் ஸ்ரோயும் ஒருவராகும். கைத் தொழில் அரசாங்கத்தின் ஆதரவோடு பெரும் விருத்தி யடைந்தது. ஏராளமாகக் கோதுமை செய்யப்பட்டது. புகையிரத வீதிகளும், தந்தியனுப்பும் வசதிகளும் ஏற் படுத்தப்பட்டன. ஐரோப்பாவிலிருந்து பசிபிக் சமுத்தி ரம் வரையும் சைபீரியாவுக்கூடாக புகையிரத வீதி யமைக்கப்பட்டது. ரூஷியாவால் ஆளப்பட்டுவந்த பின் லாந்து, போலாந்து, எஸ்தோனியா, லட்வியா, லிதுவா னியா என்ற நாடுகளிலும் அதிருப்தி காணப்பட்டது. பின்வரும் அதிகாரத்தில் எவ்வாறு சாரின் ஆளுகை முதலாம் உலக யுத்தத்தினுல் அற்றுப்போக மக்கள் ஆட்சி நிறுவப்பெற்றதென்பதைப்பற்றிப் படிப்போம்.
வினுக்கள்
1, ரூஷியர் பால்கன் காட்டுவிஷயங்களிற் சிரத்தை காட்டியதற்குக்
காரணமென்ன? 2. பிரித்தானியா ரூஷியாவில் ஏன் சந்தேகங்கொண்டது?
கிறிமியன் யுத்தத்தின் காரணங்களை ஆராய்க. 4. ரூஷியாவில் புரட்சியுண்டாவதற்கு ஏதுவாயிருந்த காரணங்கள்
யாவை?

பத்தொன்பதாம் அத்தியாயம் சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய
நாடுகள்
எலிசபெத் ராணி காலத்தில் இங்கிலாந்துக்கு அய லிலுள்ள அயர்லாந்துத் தீவைவிட வேறுபிற நாடுகள் ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கவில்லை. ஆங்கிலேயக் கடற்படையின் வெற்றியும் கடலோடிகளின் திறமையும் வட அமெரிக்காவின் கீழ்த்திசையில் குடியரசு நாடுகளை ஸ்தாபிக்கவும், மேற்குக் கிழக்கிந்திய தீவுகளில் வர்த் தக ஸ்தலங்களை நிறுவவும் உதவியாயிருந்தன. ஆனல் பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியில் அமெரிக்க குடியரசு நாடுகளுக்கும் மூன்ருரம் ஜோர்ச் மன்னனுக்கு மிடையில் நேர்ந்த வாக்குவாதங்களின் விளைவாக அங் நாடுகள் இங்கிலாந்தின் தொடர்பை நீக்கிச் சுதந்திரத் தைப் பெற்றன. இச்சம்பவம் பிரித்தானியருடைய ‘முத லாவது சாம்ராச்சிய மறைவு’ எனக் கூறப்படும். ஆங் கிலேயருடைய விடாமுயற்சியும் கடற்படைத் திறமை யும் ஒன்று சேர்ந்தமையினல் அவர்கள் இரண்டாவது பிரித்தானிய சாம்ராச்சிய மொன்றை ஸ்தாபித்தனர். அதிற் கனடா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா முதலியன பிரதான நாடுகளாம்.
ஆரம்பத்தில் பிரித்தானிய சாம்பிராச்சியத்திலுள்ள முடிக்குரிய குடியரசு நாடுகள் பல, இப்பொழுது சுதந்திர ஆட்சிபெற்று ஒவ்வொன்றும் மற்ற நாடுகளோடு சம அந்தஸ்து உடையனவ்ாய் தங்கள் விஷயங்களை நடத்தி வருகின்றன. இங்கிலாந்து தேசத்தின் நன்மைக்காகவே சாம்ராச்சியத்திலுள்ள நாடுகளிற் குடியரசியல் ஸ்தா பிக்கப்பட்டதெனக் கூறலாம். தற்போது அதிலுள்ள நாடுகள் யாவும் அரசியற்பொறுப்பை ஏற்று நடத்து வதுமல்லாமல் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாகவும் ஒரு நோக்குடையனவாயு மிருக்கின்றன. பத்தொன்பதாம் நூண்ருரண்டிற் சிலவும் இருபதாம் நூற்றண்டிற் சில

Page 113
216 சுதந்திர ஆட்சிபேற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
வும் சாம்ராச்சியத்தில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு சுதந்திர ஆட்சியைப் பெற்றுவிட்டன. கனடா, அவுஸ் திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை இன்னும் பல நாடுகள் சுதந்திர ஆட்சிபுரியும் அந்தஸ்தைப் பெற்றுச் சுதந்திர நாடுகளாக விளங்கு கின்றன. இவைகளுள் ஏறக்குறைய எல்லாம் இங்கி லாந்து அரசியைத் தங்கள் ராணியாக ஏற்றுக்கொண் டன. இந்தியா, சாம்ராச்சியத்தில் அங்கத்துவம் வகித் தும் அவ்வண்ணம் ஏற்றுக்கொள்ளவில்லை. ۔۔۔۔
இந்நாடுகளில் முதலாவதாகச் சுதந்திர ஆட்சி பெற்ற நாடு கனடாவாகும். ஏழாண்டு யுத்தம் முடிவ டைந்த காலந்தொடக்கம் கனடா ஆங்கிலேயரின் ஆட் சியின் கீழமர்ந்தது.
பாரிஸ் (1763) உடன்படிக்கையின் காரணமாக கனடா ஆங்கிலேயருடைய ஆட்சியின் கீழ் வந்தகாலத் தில் இருபகுதியான குடியேற்றங்கள் காணப்பட்டன. அதிகமாக ஆங்கிலேய மக்கள் வசித்த நியூபவுண் லாந்து, நோவாஸ்கோஷியா முதலிய கரையோரப் பிர தேசங்கள் ஒன்ருகும். குவீபெக்கைத் தலைநகரமாக வுள்ள லோஹன்ஸ் நதிப்பிரதேசக் குடியேற்றப் பகுதி இன்னென்றாகும். கனடா ஆங்கிலேயராற் கைப்பற்றப் பட்டபின் குவீபெக் மொன் ரீல் என்ற இடங்களிற் குடி யேறிய சில ஆங்கில வர்த்தகர்களைவிட 60000க்கு மேற் பட்ட பிரான்சிய மக்களே அப்பிரதேசத்தில் வசித்த னர். அமெரிக்க சுதந்திரப்போர் நடைபெற்ற காலத் தில் ஆங்கிலேயருக்குப் பணிவாகவிருந்த 60000 குடி யேற்றவாசிகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளைவிட்டு நீங்கி தற்போது ஒன்தாரியோ என்று வழங்கிவரும் மாகாணத் தில் வந்து குடியேறினர்.
கனடாவிலுள்ள பிரான்சிய மக்கள் கல்வியறிவில் லாத விவசாயிகளாயும், அரசியல் விஷயங்களிற் சிரத்தை எடுக்காதவர்களாயும், சுதந்திர அரசியற் கொள்கைக ஜளப்பற்றித் தெரியாதவர்களாயும் காணப்பட்டனர்.

சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 217
எல்லோரும் கத்தோலிக்க சமயத்திற் பக்தியும் விசுவா சமுமுடையவர்கள். ஆங்கிலேயர் தங்களுடைய மார்க்கக் திலேயோ அல்லது நிலங்கள் சம்பந்தமான விஷயங்க ளிலேயோ தலையிடக்கூடுமென அச்சமுற்றிருந்தனர். பிரதிநிதிகளையுடைய சபைகளையும், ஆங்கில நீதிச் சட்டங் களையும் கனடாவில் ஏற்படுத்துவதாக ஆங்கிலேய 9 Ir சாங்கம் அறிவித்தல் ஒன்றை விடுத்தது. பிரான்சிய மக்கள் பிரதிநிதிச் சபைகளை விரும்பவில்லை. ஆனல், பிரான்சியக் கத்தோலிக்க மக்களுக்கு இவ்வாறு அதி காரம் அளிக்கப்பட்டிருந்தால் குவீபெக்கிலுள்ள குடி யேற்றவாசிகள் புரட்டஸ்தாந்து மதத்தினராகையால் எதிர்ப்புக் காட்டியிருப்பார்கள். மேலும் புரட்டஸ்தாந்து மக்கள் தங்களுக்கே பிரதிநிதிகளையுடைய அரசியற் சபைகள் அளிக்கப்பட வேண்டுமென வாதாடினர். அது அநீதியென ஆங்கிலேய ஆரசாங்கம் உணர்ந்தது. அப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பத்துவருடகாலமாக நீடித்த விவாதம் நடந்து ஈற்றில் குவீபெக் சட்டம் (1774) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பிரகாரம் கத்தோலிக்க சமயத்தவர்களுக்குச் சம யசம்பந்தமாகப் பூரண சுதந்திரமளிக்கப்பட்டு, பிரென் சுக்காரரின் சட்டங்களும், வழக்கங்களும் கவனிக்கப்பட் டன. ஆங்கிலேய அரசனுல் நியமிக்கப்பட்ட ஒரு சிறுச் சபையும், அதற்குச் சட்டங்களை ஆக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. சம்யத்தைப் பாதிக்கக் கூடியதாக அல்லது கடுந்தண்டனை விதிக்கக்கூடியதாகச் சட்டங் க3ள உண்டாக்க அச்சடிைக்கு அதிகாரமில்லை. குவீ பெக் சட்டம் கனடாவிலுள்ள மக்களைச் சாந்தப்படுத்தி ஆங்கிலேயரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உண்டாக்கியது. அமெரிக்க சுதந்திரப்போரின் பின் அமெரிக்க நாடுகளிலிருந்து கனடாவிற் குடியே றிய மக்களின் தொகை ஏறக்குறைய கனடாவிலுள்ள பிரான்சிய மக்களளவாகியது. கனடாவிற் குடியேறிய ஆங்கிலேயப் பிரசைகள் ஏரிப்பிரதேசங்களிலும், பிரான்சிய மக்கள் வசித்த இடங்களுக்கு மேற்குப்பக்
28

Page 114
218 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
சுந்திலும் வசித்தனர். சுதந்திர அரசாங்க ஆட்சியில் நம்பிக்கையுள்ள மக்களுக்குக் குவீபெக் சட்டம் திருப் தியளிக்கவில்லை. அதனல் ஏற்பட்ட பிரச்னை 1779-ல் ஆங்கிலேயப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கனடாச் சட்டத்தினற் தீர்க்கப்பட்டது. அதன்பிரகா ரம் ஆங்கிலம் பேசப்படும் மாகாணம் அல்லது ஒன்ராரியா எனப்படும் மேற்குக் கனடா என்றும், பிரென்சு வழங் கப்படும் மாகாணம் அல்லது குவிபெக் எனப்படும் கிழக் குக் கனடா என்றும் இருமாகாணங்களாகக் கனடா பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றிலும் பிரதிநிதிச் சபை கள் ஸ்தாபிக்கப்பட்டன. சட்டங்களை ஆக்கவும், வரி விதிக்கவும் அதிகாரம் பிரதிநிதிகளையுள்ள சட்டநிரூ பண சபைக்குக் கொடுக்கப்பட்டது. அமெரிக்க சுதந்தி ரப்போர் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்குள் பொறுப் பாட்சியைப் பெற்ற கனடாவில் ஆறு மாகாணங்கள் பிரித்தானிய சாம்ராச்சியத்தில் இடம்பெற்றன. சுதக் திர ஆட்சியை வழங்கும் கொள்கையும், ஆளப்படும் மக்களை ஆளுபவர்கள் தங்கள் எண்ணத்திற்கியைய வலோற்காரப்படுத்தாத தன்மையும் பிரித்தானிய அர சியல் முறையிற் கவனிக்கக்கூடிய இரு அம்சங்களா கும்.
1830 வரையில் ஒன்ராரியா, குவீபெக், நோவாஸ், கோஷியா, கியூபவுண்லாந்து நியூபிரன்சுவிக், பிறின்ஸ் எட்வேட் தீவு ஆகிய ஆறு குடியேற்ற மாகாணங்களி லும் பிரித்தானியரின் பழமையான அரசியல் ஸ்தாபனங் கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றிலும் பிரதி நிதிகளையுடைய சட்டநிரூபண சபைகளும், கிர்வாகசபை களும், பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தேசாதிபதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனல் சட்ட நிரூபண சபைகளுக்கும், நிரவாகசபைகளுக்கு மிடையில் சச்சரவுகள் வளர்ந்துகொண்டு வந்தன. சட்ட நிரூபண சபையினர் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட அதிகாரம் போதாதெனக் கோபமடைந்தனர்.

சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 219
பிரென்சுமாகாணமாகிய குவீபெக்கிலேயே கூ டி ய தொல்லைகள் காணப்பட்டன. அங்கிருந்த பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையோர் பிரென்சுக்காரராயி ருந்த போதிலும் நிர்வாகசபையில் ஆங்கிலேயரே. அங்கத்தவர்களாயிருந்தனர். நிர்வாகசபை தேவையெ னக் கேட்ட சட்டங்களை உண்டாக்குவதற்கும் பிரதி நிதி சபை மறுத்தது. சாதிவேற்றுமை கூடிக்கொண்டு போனமையால் குவீபெக் பிரித்தானியரின் அதிகா ரத்தை நீக்கி சுதந்திரத்தைப் பெறுவதற்கும் சித்த மாயிருந்தது. இருமாகாணங்களிலும் கலகமேற்பட் டது. பிரித்தானிய அரசாங்கம் டேகாம் பிரபு, சாள்ஸ் புல்லர், கிபன் உவேக் பீல்ட் என்னும் மூவரையும் விசாரணைசெய்யும்படி அனுப்பியது. 1838ல் கனடாவுக் குப் போய்ச்சேர்ந்த விசாரணைக் குழுவினர், கலகமுண் டாவதற்கு உடனடியாயிருந்த காரணமும், கனடாவில் வருங்காலத்திலேற்படுத்த வேண்டிய அரசியல் முறை யும், ஆகிய இரண்டு பெரிய பிரச்னைகளை ஆராயவேண்டி யிருந்தது. டேகாம்பிரபு விடுத்த அறிக்கை பிரித்தா னிய சாம்ராச்சியத்தில் ஒருசிறந்த சாதனமாகக் கருதப் பட்டது. அவ்வறிக்கையில் பொறுப்பாட்சிமுறை கொடுக்கப்படவேண்டுமென்று குறிப்பிடப்பட்டது. இரு மாகாணங்களும் ஒன்ருரகச் சேர்க்கப்பட வேண்டுமென் றும் அபிப்பிராயப்பட்டனர். 1840ல் பாராளுமன்றத் தில் உண்டாக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம் இரு மாகாணங்களும் ஒன்றுபடுத்தப்பட்டன. கிரந்தரமான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள சட்டநிரூபண சபை யொன்றும், இரு மாகாணங்களிலுமிருந்து ஒரேகணக் கான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள பிரதிநிதிச் சபை யும் ஸ்தாபிக்கப்பட்டன. பின்பு இரு மாகாணங்களி அலும் வாழ்ந்த ஆங்கிலேயரும் பிரென்சுக்காரரும் ஐக் கியமடைய முயற்சி செய்தனர். எல்லா மாகாணங்களுஞ் சேர்ந்த ஒரு ஐக்கிய சமஷ்டி ஆட்சிமுறை ஸ்தாபிக் கப்படவேண்டுமெனப் பலர் விரும்பினர். 1867ல் பிரித்

Page 115
220 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
தானிய பாராளுமன்றம் பிரித்தானிய வட அமெரிக்காச் சட்டமென்ற பெயருடன் ஒரு சட்டத்தை ஆக்கியது. அதன்பயணுக ஒன்ரேரியா, குவீபெக் நோவாஸ் கோஷியா, கியூ பிரன்ஸ்விக் என்ற நான்கு மாகாணங் களையும் கொண்டுள்ள கனடா இராச்சியம் சமஷ்டி அரசியல் முறையில் ஸ்தாபிக்கப்பட்டது. நாளடைவில் பிரித்தானிய கொலம்பியா, பிரின்ஸ் எட்வேட்திவு, மானிடோபா, சஸ்கட்செவான், அல்பட்டா என்ற மாகா ணங்களும் அவ்விராச்சியத்தோடு சேர்ந்துகொண்டன. ஒவ்வொரு மாகாணமும் தத்தமக்குரிய ஒரு நிர்வாக சபையையும் ஆட்சிமுறையையும் ஸ்தாபிப்பதோடு மேற் சபைக்குக் குறித்தளவு அங்கத்தவர்களையும் அனுப்ப வேண்டுமென அச்சட்டத்திற் குறிப்பிடப்பட்டது. மற் ஆறும் விஷயங்களெல்லாம் மத்திய அரசாங்கத்திற்கு விடப்பட்டது. கீழ்ச்சபைக்கு மக்கள் அங்கத்தவர் களைத் தெரிந்தனுப்பினர். மந்திரிமார் பெரும்பான் மைக் கட்சியாரிலிருந்து நியமிக்கப்பட்டனர். LD 5E5T தோசாதிபதியைத் தெரிவு செய்தலும் மக்களின் வேண் டுகோளின்படி அரசியற் திட்டத்தை மாற்றுமுரிமை யையும், வெளிநாட்டு விஷயங்களைக் கட்டுப்பாடு செய் யும் உரிமையையும் பிரித்தானிய அரசாங்கத்தார் தங் கள் பொறுப்பில் வைத்திருந்தனர். கனடாவின் அர சியற் திட்டம் பிரித்தானிய சாம்ராச்சியத்தில் சுதந் திர ஆட்சிபெற்ற மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகக் காணப்பட்டது. பிரித்தானிய சாம்ராச்சியத்தில் கன டாவே டொமினியன் அந்தஸ்தைப் பெற்ற முதன் 5ாடாகும்.
வர்த்தகத்தை விருத்தி செய்வதற்காக 1821ல் ஸ்தா பிக்கப்பட்ட சங்கம் கனடாவின் வடபகுதியில் பெரும் நிலப்பரப்பைத் திருத்தி அவ்விராச்சியத்தோடு சேர்ப் பதற்குப் பொறுப்பாயிருந்தது. கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு மிடையில் ஒற்றுமைக் குறைவேற்பட்ட தால் இரு நாடுகளுக்குமிடையிலுள்ள எல்லே நாற்பத் தொன்பதாவது சமரேகையென குறிக்கப்பட்டது.

சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 221
கனடா செல்வமும் சிறப்புமெய்தி உன்னத நிலையை யடையக்கூடிய வசதிகளைப் பெற்றிருக்கின்றது. கன டாவின் சனத்தொகை அதிகரித்துக்கொண்டு போன லும் நாட்டின் வளர்ச்சிக்குப் போதிய நிலப்பரப்புக் காணப்படுகிறது. புகையிரத வீதிகள் அமைக்கப்பட் டதால் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. கோதுமை முதலிய தானியங்கள் ஏராளமாக விளைவிக்கப்படுகிற படியாலும் பொன் சுரங்கங்களிருக்கிறபடியாலும் கைத் தொழில் விருத்தி செய்யத்தக்கதாயிருக்கிறபடியாலும் கனடா ஒரு சிறந்த நாடாக விளங்குகிறது. சென்ற இரு உலக யுத்தங்களிலும் கனடாவிலுள்ள போர் வீரர் கள் பிரித்தானியரோடு நின்று போர்புரிந்தனர்.
அவுஸ்திரேலியா எனும் கண்டமொன்றிருப்பதாக பதினேழாம் நூற்றண்டில் ஒல்லாந்த மாலுமிகள் அறிந் திருந்த போதிலும், பசிபிக் சமுத்திரத்தின் தென்பா கத்தை யேம்ஸ் குக் என்னும் ஆங்கிலேய மாலுமித் தலைவன் ஆராய்ந்த பின்னரே அக்கண்டத்தின் எல் லைப் புறங்களைப் பற்றிப் பூரணமாக அறியக் கூடியதாக விருந்தது. யேம்ஸ்குக் யோக்சையரிலுள்ள ஒரு தொழி லாளியின் மகன். அவன் ஆரம்பத்தில் கப்பலில் வேலை செய்து பின்பு மாலுமிகளுடன் பலவிடங்க ளு க் குஞ் சென்று இராணுவப்படையிலுஞ் சேவைசெய்து தன் னுடைய திறமையினல் பதவியிலுயர்ச்சி பெற்றன். அவன் 1768 க்கும் 1779 க்குமிடையில் பல கடற்பிரயா ணங்கள் செய்து அவைகளின் பயனக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய பகுதிகளை ஆராய்ந்ததுமன்றி, பசிபிக் சமுத்திரத்திலுள்ள ஏனைய தீவுகளையும் கண்டு பிடித்ததினுல் பூமியின் தென்பாகத்தில் தொடர்ச்சி யான பரந்த ஒரு கண்டமிருக்கிறதென்ற பிழையான நம்பிக்கை அற்றுப்போகத் தக்கதாகச் செய்தான். ஐரோப்பியர் வசிக்கிறதற்கு ஏற்ற சுவாத்தியமும் செழிப்பும் வளப்பமும் பொருந்திய கண்டமிருப்பதை வெளிப்படுத்தினன். குற்றவாளியாகக் காணப்பட்ட

Page 116
222 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
மறியற்காரர் இதுவரையும் அமெரிக்க குடியேற்ற நாடு கள் சிலவற்றிற்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்க நாடு கள் சுதந்திரத்தைப் பெற்றபின்னர் அதேபோன்ற இன்னுெரு இடம் தேவைப்பட்டது. ஆகையால் அவுஸ் திரேலியாவே வசதியான இடமாகக் காணப்பட்டது. 1788ல் அவுஸ்திரேலியாவின் கீழ்த்திசையிலுள்ள குடா வுக்கு ஆயிரக்கணக்கான மறியற்காரரைக் கொண் டுள்ள கப்பல்கள் போய்ச்சேர்ந்தன. அவர்கள் தற் போதுள்ள சிட்னி என்ற நகரப் பகுதியிற் குடியேறி னர். பின்பும் அனேக குற்றவாளிகள் அனுப்பப்பட் டனர். காலஞ்செல்ல அக்கண்டத்தின் பல பகுதிகளி லும் சாதாரண சனங்களும் வந்து குடியேறினர். தங் கள் விருப்பப்படி குடியேறிய சாதாரண மக்களின் வமிசத்தவர்களே இன்று அங்கே காணப்படும் மக்க ளாகும்.
புதிய தென்உவேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி யில் வசித்த மக்கள் ஆட்டுமந்தைகளை வைத்திருந்தனர். 1821 வரையில் 250000 கால்நடைகள் அவர்களிடமிருந் தன. அவுஸ்திரேலியாவுக்குக் தென் பாகத்திலுள்ள ரஸ்மேனியா என்ற தீவில் 10000 குடிசனங்கள் வரை யிலிருந்தனர். குடியேறிய மக்களின் வேண்டுகோளின் படி 1840ல் மறியற்காரரை அனுப்பும் வழக்கம் நிறுத் தப்பட்டது. 1828ல் மேற்கு அவுஸ்திரேலியா 1836-ல் தென் அவுஸ்திரேலியா, 1850ல் விக்ரோறியா 1850-ல் குவின்ஸ்லாந்து என்ற குடியேற்றநாடுகள் தோன்றின. 1841 தொடக்கம் நான்கு வருடங்களாகத் தேசாதிபதி யாயிருந்த ஜோர்ஜ்கிறே என்பவரின் நன்முயற்சிகளால் தெற்கு அவுஸ்திரேலியா முன்னேற்றமடைந்தது. சுதந் திர ஆட்சிபெற்ற மற்ற காடுகளைப்போலல்லாது அவுஸ் திரேலியாவின் வளர்ச்சி மெதுவாக மேலோங்கியது. சிறிது காலத்திற்குள் பொன், வெள்ளி கரிச்சுரங்கங் கள் கண்டுபிடிக்கப்பட்டன. குடியேற்றம் பெருகியது. மங்தை வளர்க்குக் தொழிலும், சுரங்கங்களிலுள்ள

சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 223
தொழிலும் முக்கிய தொழில்களாயமர்ந்தன. 1856ல் ரஸ் மேனியா புதியதென் உவேல்ஸ், விக்ரோறியா தென் அவுஸ்திரேலியா சுதந்திர ஆட்சியைப் பெற்றன. சிறிது காலத்திற்குள் மற்ற நாடுகளும் சம அந்தஸ்தைப் பெற் றன. ஈற்றில் எல்லா நாடுகளும் ஒன்றுசேர எண்ணங் கொண்டதினுல் 1909ல் பிரித்தானிய பாராளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஒரு சமஷ்டி அரசியற் திட் டத்தை வளங்கியது. கன்பெரா அவுஸ்திரேலியாவின் தலைநகரமாக ஸ்காபிக்கப்பட்டது. ஆறு நாடுகளுஞ் சேர்ந்த சமஷ்டி அரசியல் செவ்வனே நடத்தப்பட்டு வருகின்றன. முதலாம் இரண்டாம் யுத்தங்கள் நடை பெற்ற காலத்தில் அவுஸ்திரேலியர் பிரித்தானிய அர சுக்காக யுத்தத்திற் பங்குபற்றித் தங்கள் உண்மை யான விசுவாசத்தைக் காட்டியுள்ளார்கள்.
1769ல் குக் என்ற கப்பற்படைத் கலேவ்ன் நியூசி லாந்தை அடைந்தபின் அது பிரித்தானியருடைய ஆளு கைக்குட்பட்ட நாடாயிற்று. அந்நாட்டு வாசிகளாகிய *மயோநிகள்? விவேகமுள்ள சாதியினராக அங்கே சென்ற ஐரோப்பியரால் மதிக்கப்பட்டனர். 1839ல் நியூ சிலாந்துக் கொம்பெனியொன்று இங்கிலாந்தில் கிபன் உவேக்பீல்ட் என்பவரின் முயற்சியினல் ஸ்தாபிக்கப் பட்டது. ஆரம்பத்தில் அங்காட்டு வாசிகளுக்கும் ஆங்கி லேயருக்குமிடையில் இரு யுத்தங்கள் நடைபெற்றன. 1870 வரையில் அரசாங்கத்தில் ஐரோப்பியரைப்போல் மயோநிகளுக்கும் சமஉரிமை அளிக்கப்பட்டது. 1856ல் பொறுப்பாட்சி அரசியுல்ஸ்தாபிக்கப்பட்டது. மந்தை களை வளர்ப்பதே அங்காட்டு மக்களின் பிரதான தொ ழிலாகும்.
பதினேழாம் நூற்றண்டில் நன்நம்பிக்கை முனைப் பகு தியில் ஒல்லாந்தர் ஒரு குடியரசை ஸ்தாபித்தனர். நெப் போலியனுடைய யுத்தம் நடந்தகாலத்தில் ஒல்லாந்து பிரான்சின் ஆதிக்கத்தில் அமர்ந்ததினல், தென்ஆபிரிக் காவிலுள்ள முனைப்பகுதியும் பிரென்சுக் காரராற் கைப்

Page 117
224 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
பற்றப்படுமென நினைத்த ஆங்கிலேயர் உடனே அதைக் கைப்பற்றினர். 1815ல் சமாதான உடன் படிக்கை எழு தியபொழுது பிரித்தானியருக்கு அது உரிமையாயிற்று.
போயர்கள் என்ற ஒல்லாந்த விவசாயிகளே அப் பிரதேசத்தில் அதிகமாகக் குடியேறியிருந்தனர். அவர் கள் சுயநம்பிக்கையும் பிடிவாதமு முடையவர்கள். அங் நாட்டிலுள்ள சுதேசிகளும் போர்செய்யும் இயல்புடைய வர்கள். அங்கே குடியேறிய ஒல்லாந்தராகிய போயர் கள் குடியேறிய காலத்திலிருந்த ஒரே பண்பாட்டையும் தன்மையு முடையவர்கள் ஆனர்கள். இங்கிலாந்திலிருந்த பியூரித்தானியரைப்போல் அவர்களுக்கும் பழையஏற் பாட்டிலல்லாது புதியேற்பாட்டில் நம்பிக்கையில்லை. முரட்டுக்குணமும் பிடிவாதமுள்ள போயர்கள் பு தி ய விஷயங்களில் ஐயுறவும், தங்கள் உரிமைகளைக் கடைப் பிடிக்கும் தன்மையும், பரந்த கொள்கைகளும், அனு தாபமு மற்றவர்களாயிருந்தனர். தென் ஆபிரிக்காவில் நாகரிகமற்ற சுதேசிகளும் காணப்பட்டனர். அவர்களிற் பெரும்பாலோர் பாந்து சாதியினரைச் சேர்ந்த காபிர், குலுக் கூட்டதினராகும். முனைக்குடியேற்றப் பகுதியில் குடியேறிய ஐரோப்பியரும் பாதிரிமாரும் அடிமையை யொழிக்க வேண்டுமென்று முயற்சித்தபொழுது அடி மைகளை வைத்திருந்த போயர்கள் கோபாவேசங்கொண் டனர். அடிமைகளே வைத்திருந்தவர்களுக்கு நட்டஈடாக பணங்கொடுத்தபோதிலும் அவர்கள் திருப்தியடைய வில்லை. முனைப் பிரதேசத்திலிருந்த சுதே சிக ஞ க்கு ஐரோப்பியரைப் போல அரசியல் உரிமை வழங்கப் பட்டபொழுது போயர்கள் பெருங் திகிலடைந்தனர். காபீர் கூட்டத்தினர் வடக்கிலிருந்து படையெடுத்துச் சென்ற பொழுது முனைப்பகுதியிலிருந்த தேசாதிபதி அவர்களைத் துரத்தி அவர்களுடைய பிரதேசத்திலொரு பகுதியையுஞ் சேர்த்துக்கொண்டான். அது அநீதியான செய்கையென உணர்ந்து பிரித்தானியர் அப்பகுதி யைக் காபீர் சாதியினருக்கே கொடுத்தபொழுது போயர்

சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 225
கள் காபீர்களினுல் தாங்கள் பயமுறுத்தப்பட்டனரென் அறும் பிரித்தானியரின் பாதுகாப்புமில்லை யெ ன் நூறு ம் கோபங்கொண்டனர். அடிமை நீக்கப்பட்டதாலும், அத, னல் போயர்களின் விவசாயத்துக்கு நஷ்டம் ஏற் பட்டதாலும், பிரித்தானியர் மேன்மேலுங் குடியேறின மையாலும் அவர்கள் அ வ் விட த்தை விட்டு உள்நாட்டுக்குச் சென்று நேத்தால் பிரதேசத்திற் குடி யேறினர். இதுவே அவர்களுடைய 'பெரும் பிரயாணம்’ எனப்படும். பிரித்தானியர் அப்பிரதேசத்தையுங் கைப் பற்றியபொழுது போயர்கள் திரான்ஸ்வால், ஒரேஞ்ஸ் நாடு என்ற இடங்களிற் குடியரசை ஸ்தாபித்தன்ர். ஆரம்பத்தில் இவைகள் ஆங்கிலேய அரசாங்கத்தால் குடியரசாக அங்கீகரிக்கப்பட்டன. முனைக்குடியரசு நாட் டுக்கு 1853ல் பிரதிநிதி அரசியல்முறை யளிக்கப்பட்ட் பொழுது ஜோர்ஜ் கிறே அவ்விடம் தேசாதிபதியாக அனுப்பப்பட்டார். முனைக்குடியரசு அரசாங்கம் கன் நிலையெய்திய காலத்தில் கிம்பிளி என்ற இடத்தில் இரத் தினக்கற்கள் காணப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவ்விடத்துக்குப் போய்ச்சேர்ந்தனர். அவ் விடத்தைச் சுற்றியுள்ள பிரேதசம் ஒரெஞ்ஸ் நாட்டோடு சேர்க்கப்படாமையால் சுதேச மக்களுக்குள் போர்செய் யும் சுபாவமுடைய குலுக்கள் கலகத்தை யுண்டுபண்ணி னர். அவர்கள் ஒரு பெரிய சேனையைத் திரட்டி திரான்ஸ் வாலைக் கைப்பற்ற எத்தனித்தனர். போயர்களுக்கு அச் சேனையைத் துரத்தக்கூடிய வலிமையின்மையால் பிரித் தானியர் தலையிட்டுச் சூலுக்கீளத் தோற்கடித்து 1877 ல் திரான்ஸ்வாலையும் தங்கள் வசப்படுத்தினர்.
குலுக்கள் தோற்கடிக்கப்பட்டபின் திரான்ஸ்வா லில் இருந்த போயர்கள் சுய ஆட்சி தங்களுக்குக் கொடு படவேண்டுமென்று போருக்கெழுந்தனர். இது முதற் போயர் யுத்தமாகும். பிரித்தானியர் இரு யுத்தங்களிலும் கோற்கடிக்கப்பட்டனர். இங்கிலாந்தின் பிரதம மந்திரி யாயிருந்த கிளாட்ஸ்ரன் போயர்களுக்குச் சுய ஆட்சி
29

Page 118
226 சுதந்திர ஆட்சிபேற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
வழங்கவேண்டுமென விரும்பி 1881ல் அதை வழங்கினன். அங்கிய நாடுகளோடு போயர்கள் ஒப்பந்தம் செய்யின் அதைத் தடுக்கப் பிரித்தானியாவுக்கு அதிகாரமுண் டென்றும், கட்டுப்பாடில்லாத வர்த்தகஞ் செய்யலாமென் முறும், ஐரோப்பியர் எவ்விடத்திலும் வசிப்பதற்கு இடை யூறுகளிருக்கக்கூடா தென்றும் சுய ஆட்சி வழங்கும் போது குறிப்பிடப்பட்டது.
இதன்பின் போல்குரூக்கர், செசில்ரோட்ஸ் என் னும் வேற்றுமைப்பட்ட இலட்சியங்களை யுடைய இருவர் ஆபிரிக்காவின் அரசியல் அரங்கிற் தோன்றினர். குரூகர் ஒருபோயர் விவசாயியின் மகனவன். திடசாலி யாகிய அவன் பதின்மூன்றாவது வயதிலேயே குலுக்க ளோடு நடத்தப்பட்ட சண்டையிற் பங்குபற்றினன். தனது கூட்டத்தினரை வழி காட்டுவதற்காகக் கடவு ளாற் தெரிந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசியென அவன் தனக்குள் நினைத்திருந்தான். தென் ஆபிரிக்காவில் சிறந்த ஒருவகை விளங்கிய அவன் குடியரசு அர சாங்கத்துக்குத் தலைவனுகத் தெரியப்பட்டான் (1883). தென் ஆபிரிக்கா முழுவதையும் போயர் இராச்சிய மாக்க வேண்டுமென மனத்திற் துணிவுகொண்டான்.
செசில்ரோட்ஸ் என்னும் ஆங்கிலேயன் ஆரோக் கியமின்மை காரணமாகச் சிறுவயதிலேயே ஆபிரிக் காவுக்கு அனுப்பப்பட்டான். அவன் பிரித்தானிய சாம்ராச்சியத்தில் நம்பிக்கையுடைய வணுகையால் பிரித் தானியருடைய செல்வாக்கை நன் நம்பிக்கைமுனை தொடங்கி வடக்கே கெய்ரோ வரையும் பரப்புவதில் முயற்சிசெய்தான். தென் ஆபிரிக்கா என்ற பெரும் இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்றும் அதில், போயர்களும் பிரித்தான்ரியரும் ஒன்று சேரவேண்டு மென்றும் கொள்கைகளை, உடையவனுயிருந்தான். வைரச் சுரங்கச் சொந்தக்காரணுய்ப் பெரும் பொருஆள ஈட்டினன். பின்பு திரான்ஸ்வாலுக்கு வடபாகத்தி அலுள்ள பகுதிகளிற் குடியேற்ற நாடொன்றை ஸ்தா

சுதந்திர ஆட்சிபேற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 227
பித்ததினல் அதற்கு ருெடீசியா என்றபெயர் வழங்க லாயிற்று. இது திரான்ஸ்வாலிலுள்ள போயர்களுக் குத் தடையாயிருந்தது. திரான்ஸ்வால் நிலத்திற் பொன் விஜள நிலங்கள் காணப்பட்டமையால் பல ஐரோப்பிய சுரங்க வேலைக்காரர்கள் வந்தனர். யோகானஸ்பர்க் என்ற பட்டணமும் விரைவிற் தோன்றியது. அங்கிய ருடைய வருகையை வெறுத்த போயர்கள் குரூ கர் என்ற தலைவனின் கீழ் அரசியல் அங்கியருக்குப் பங்கை யளிக்க மறுத்தனர். அங்கியர்கள் கிளர்ச்சியை யுண்டுபண்ணினர். அங்கியரில் ஒரு பகுதியினர் ஆயுத பாணிகளாய்த் திரான்ஸ்வாலுக்குள் நுழைந்தமையினுற் போயர்கள் அதிக சீற்றங் கொண்டனர். செசில் ரோட்ஸ் அந்நியருக்கு உதவிசெய்வதாக வாக்களித்த மையால் டாக்டர் யேம்சன் என்ற பாதிரியின் தலைமை யின் கீழ் 600 போர் வீரர்களை அனுப்பினுன், திரா ன்ஸ் வாலின் எல்லேப்புறத்தைக் கடந்ததும் போயர் களால் அவன் தோற்கடிக்கப் பட்டதால் அவன் சர ணுகதியடைய நேரிட்டது. அந்நியர்கள் ஆங்கிலேயரின் உதவியைக் கோரினர். பின் குரூகரின் தலைமையில் போயர் குடியேற்ற மக்கள் போருக்கெழுந்தனர் (1899). இதுவே இரண்டாம் போயர் யுத்தமாகும். ஜேர்மனி, ஒல்லாந்து, பிரான்சு பிரித்தானியாவைக் கண்டித்தன. ஜேர்மன் சக்கிராதிபதியான கெய்சர் உவில்லியம் முன்பு யேம்சனுக்கெதிரே போயர் பெற்ற வெற்றி யைப் பற்றி பவுல் குரூகருக்குச் சந்தோஷச் செய்தி அனுப்பினன். ஆரம்பத்தில் வெற்றி பெற்ற போயர் முனை அவர்களுக்கு உதீவிபுரிய முன் வரவில்லை; அவர் கள் காந்திருந்த வண்ணம் ஐரோப்பிய நாடுகளும் உதவி புரியவில்லை; ஆங்கிலேயர் பக்கத்தில் கிச்னர்பிர புவும், ருெரபேட்ஸ் பிரபுவும் போரை (5டத்தினர். கடும் போர் நடந்தபின் திரான்ஸ்வால், ஒரேன்ஸ் நாடு ஆகிய போயர் குடியரசுகள் கைப்பற்றப் பட்டன. 1902-ல் சமாதான உடன் படிக்கை எழுதப்பட்டது. இதன்

Page 119
228 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
பின்னுற் போயர்களுடைய தலைவர்களாகிய போத்த சிமட்சு மற்றும் பலரும் பிரித்தானியரோடு சினேகித முறையில் ஐக்கியமாக நடந்து கொண்டனர். ஆகையால் 1907ல் இரு குடியரசு நாடுகளுக்கும் பொறுப்பாட்சி அளிக்கப்பட்டது. நேத்தாலுக்கும் அதேவிதமான அரசியற் பொறுப்பு அளிக்கப்பட்டமையால் தென் ஆபிரிக்காவில் 4 சுதந்திர ஆட்சி பெற்ற நாடுகள் விளங் கின. அவைகள் ஒன்று சேர்ந்து 1909ல் சமஷ்டி அர சாங்கத்தை ஸ்தாபித்தனர். அந்தச் சமஷ்டி அரசாங் கத்துக்குப் போத்தாவே முதன் மந்திரியானன். முத லாம் உலக யுத்தத்தில் ஆபிரிக்காவில் ஜேர்மனியருக் கிருந்த தென்மேற்காபிரிக்கா, கிழக்காபிரிக்காவோடு சண்டை செய்து வெற்றிபெற்றது. அதேமாதிரி இரண்டாம் உலகயுத்தம் 5டைபெற்ற பொழுது ஆபி ரிக்க துருப்புகள் அபிசீனியாவிலும் வட ஆபிரிக்கா விலும் இத்தாலியருக் கெதிரே போர்புரிந்தனர். யுத்தம் முடிந்தபின் நடந்த தேர்தலில் சிமட்சினுடைய கட்சி தோல்வியுற்றது. பின்பு மாலன் பிரதம மந்திரிப் பதவி யேற்றுக் குடியேற்ற வாசிகளின் முன்னேற்றத்திற்கு வேண்டிய நன்முயற்சிகள் செய்து வந்தார்.
தென் ஆபிரிக்க ஐக்கிய நாட்டில் பல பிரச்சினைகள் தோன்றின. ஒல்லாந்து தேசத்துக் குடியேற்ற வாசி களுக்கும் பிரித்தானிய குடியேற்ற வாசிகளுக்கு மிடை யிலுள்ள சச்சரவு ஒரு பிரச்சினையாகும். குடியேறிய இந்தியத் தொழிலாளரின் பிரச்சினை இன்னுமொன்ற கும். சுதேசவாசிகளாகிய கறுப்புச் சாதியாரின் பிரச்சினை மற்றொன்ருகும். மாலனின் அரசாங்கம் தென்ஆபிரிக் காவிலுள்ள கறுப்பு நிறத்தினரை வெள்ளைக்காரர் ஆதிக்கத்தின் கீழடக்கி, 5டத்த நிற்கின்றது. இது வர்ணதுவேஷமாகும். சாதிக்கேற்ப மக்களைப் பிரித்து ஒவ்வொரு சாதியினரும் தத்தம் முன்னேற்றத்திற்காக உழைக்க விடுவதே இக் கொள்கையின் நோக்கமாகும்.
அயர்லாந்தும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் சுதந்

சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 229
திர நாடுகளிலொன்ருரகும். பல நூற்ருரண்டுகளாக அயர் லாந்து ஆங்கிலேயரால் கியாயமற்ற வழியில் நடத்தப் பட்டது. அதனல் அயர்லாந்து மக்களுக்கு ஆங்கிலே யரில் வெறுப்புண்டானது. 1800ல் அயர்லாந்து பிரித் தானியாவுடன் சேர்க்கப்பட்டபின் அயர்லாந்து மக்கள் தங்களுக்குத் தனிப்பட்ட ஒரு பாராளுமன்றம் கொடுக் கப்படவேண்டுமென்று வாதாடினர். இவ் வெண்ணத் தைப் பூர்த்தியாக்குவதற்கு அவர்கள் பல கிளர்ச்சிகளை உண்டாக்கிய பொழுதும் பிரித்தானியா அதற்குச் சம் மதிக்கவில்லை. வறுமையினும் பீடிக்கப்பட்ட அயர் லாந்து மக்களுடைய கிலேயைத் திருத்தும் நோக்கத் துடன் பல சட்டங்கள் பிரித்தானிய பாராளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டன. முதலாம் உலகயுத்தம் தொடங்குவதற்கு முன்பாக சின் பீன என்ற கட்சி தோன்றிப் புரட்சியை யுண்டாக்க எத்தனித்தது. போர் முடிவுறுங் காலத்தில் எற்பட்ட புரட்சியைக் கடுமை யான முறையினல் அடக்கினர். 1921ல் அயர்லாந்து மக்கள் விரும்பிய சுய ஆட்சியைக் கொடுக்கப் பிரித் தானியா எண்ணங் கொண்டு வடபாகத்திலுள்ள அல்ஸ் டர் என்ற பிரிவைத் தவிர ஏனைய பகுதிக்குச் சுதந் திர ஆட்சியை யளித்தனர். அப்பகுதி பிரித்தானியா வின் ஓர் பகுதியாக இருந்து வந்ததினுல் பிரித்தானிய பாராளுமன்றம் "பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ’ப் பாராளுமன்றமென அழைக்கப்படுகிறது. சுதந்திர ஆட் சியைப் பெற்றபகுதி சுதந்திர அயரிஷ் நாடென விளங்குகிறது. செல்வ விருத்திக்கும் முன்னேற்றத்திற் கும் வேண்டிய முயற்சிக்ளே அப்பகுதியிலுள்ள மக்கள் செய்து வந்தனர். 1932ல் டீவலரா என்பவர் அதிகா ரத்துக்கு வத்தவுடன் பிரித்தானியருக்கும் அயர்லாங் துக்கு மிடையிலுள்ள ஒற்றுமை குறைந்தது. அதனம் பிரித்தானியா அயர்லாந்து நாட்டு உணவுப் பொருட் களில் அதிகமான வரியை விதித்தனர். 1938 வரையும் இந்நிலை ஏற்பட்டது. அவ்வருடத்தில் டீவலரா இங்கி

Page 120
230 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
லாந்துக்குச் சென்று பிரித்தானிய அரசாங்கத்துடன் கலந்துபேசி மனஸ்தாபத்தைக் குறைத்து வைத்தார். 1939ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியபொழுது முழு அயர்லாந்தையும் பிரிவினையில்லாது ஒற்றுமைப் படுத்த வேண்டுமென்று கேட்டபொழுது பிரித்தானி யர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனல் யுத்தத்தில் அதிகம் பங்கு பற்றவில்லை. 1948ல் நடந்த பொதுத் தேர்தலில் டீவலரா பதவியை இழந்தார்.
இங்கிலாந்துக்கும் சாம்ராச்சிய நாடுகளுக்குமிடையே யுள்ள வர்த்தகத்தொடர்பே பழைய "சாம்ராச்சியக் கொள்கை”க்கு அடிப்படையான காரணமாகும். ஆனல் அடம்சிமித் வெளியிட்ட பொருளாதாரக் கொள்கைகள், சாம்ராச்சிய நாடுகளில் நடந்தும் வர்த்தகம் மூலம் அதிகமான வருவாயை, தாய்நாடு எதிர்பார்த்திருப்பது பிழையென உணரச் செய்தன. அந்நாடுகளிலிருந்து தாய்நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதல்லாது நயமில்லையென அவர் குறிப்பிட்டார். ஆகையால் குடியரசு 15ாடுகள் ஒவ் வொன்றும் தத்தமக் கேற்றவாறு வர்த்தகமோ ஏனைய விஷயங்களோ நடத்து வதற்குத் தாய்காடு ஊக்கப் படுத்த வேண்டுமென்ற கொள்கை பரவியது. பின்பு கனடாவைப்பற்றி டேகாம்பிரபு வெளியிட்ட அறிக்கை சாம்ராச்சியக் கொள்கையைத் தாய்நாடு மாற்றியமைக் கச் செய்தது. ஒவ்வொரு குடியரசு நாட்டிலும் அத னுடைய அரசாங்கத்தில் அங்காட்டு மக்களுக்குக் கூடிய செல்வாக்கை யளிப்பதனலும், அங்காட்டு விஷயங்களில் தாய்நாட்டின் அதிகாரம் குறைப்பதினுலும், அங்காட் டிற் சமாதானம் நிலவச்செய்யலா மென்பது வலியுறுத் தப் பட்டது. இது சாம்ராச்சிய நாடுகளோடு தாய்நாடு வைத்திருக்கக் கூடிய த்ொடர்பை விளக்கக்கூடிய சாத னமாயமைந்தது. சாம்ராச்சிய நாடுகளின் தொடர்பை யும் ஒற்றுமையையும் பலப்படுத்துவதற்கு சுய ஆட்சி முறை வழங்கவேண்டு மென்று அவ்வறிக்கையிற் குறிப் பிடப்பட்டது. அவ்வண்ணமே கனடா, அவுஸ்திரே

சுதந்திர ஆட்சிபெற்றபிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள் 231
லியா, தென் ஆபிரிக்க, வட அயர்லாந்து முதலியன "டொமினியன் அந்தஸ்தைப் 'ப் பெற்று நன்னிலை யெய்தி யிருக்கின்றன. காலஞ்செல்லத் தாய்நாடு அதிகா ரத்தைக் குறைத்ததினல், ஒவ்வொரு சாம்ராச்சிய நாடும் அங்கிய நாடுகளோடு வியாபார உறவு, அயல் நாடுகளின் உறவு பாதுகாப்பு முதலிய விஷயங்களைப் பற்றித் தீர்மானிக்கும் பொறுப்பைப் பெற்றன. 1931ல் நிறைவேற்றப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் சட்டத்தின் பிரகாரம் சாம்ராச்சிய மென்ற பெயர் மறைந்து சுய ஆட்சி பெற்ற நாடுகளைக் கொண்டுள்ள ' பிரித்தானிய கொம்மன் வெல்த்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. அதன் பயனகச் சாம்ராச்சியத்திலுள்ள நாடுகள் தாய் நாட்டோடு சம அந்தஸ்தைப் பெற்றுவிட்டன. அதனல் சட்டங்களை யுண்டாக்கவோ அல்லது மாற்றவோ அந்தந்த நாடுகளுக்கு உரிமை யுண்டன்றித் தாய் நாட்டுக்கு அந்நாடுகள் மீது சட்டமுண்டாக்கு முரிமை யில்லாமற் போனது.
வெஸ்ட்மினிஸ்டர் சட்டத்தின் பின்பு அரசியல் விஷயங்களிலும் பார்க்கப் பொருளாதார விஷயங்களிற் கவனஞ் செலுத்த வேண்டியிருந்தது. “வர்த்தகமங் தம்’ ‘இங்கிலாந்தையும் சாம்ராச்சிய சுதந்திர நாடு களையும் அதிகமாகத் தாக்கியதால் வர்த்தகத்தை நன் நிலைப் படுத்தும் நோக்கத்துடன் 1932ல் ஒட்டாவாவில் ஒரு சாம்ராச்சிய சலுகை மகாநாடு கூடியது. அதில் சாம்ராச்சிய நாடுகளில் வியாபார உறவை வளர்ப்ப தற்கு வேண்டிய வழிகள் வ்குக்கப்பட்டன. ஒவ்வொரு சாம்ராச்சிய நாட்டிலும் மக்கள் அங்கியநாட்டு வர்த்த கப் பொருட்கள் தங்களுடைய நாட்டுக்கு வராவண் ணம் பாதுகாக்க வேண்டு மென்றும், ஆனல் சாம்ராச் சிய நாடுகளுக்கிடையே சாதாரணமான பாதுகாப்புச் செய்யலாமென்றும் மகாநாட்டிற் குறிப்பிடப்டட்டது. அடுத்த 5 வருடங்களில் பொருளாதார நிலையிற் திருத் தங்காணப் பட்டவுடன் லண்டனில் ஒரு சாம்ராச்சிய

Page 121
232 சுதந்திர ஆட்சிபெற்ற பிரித்தானிய சாம்ராச்சிய நாடுகள்
சலுகை மகாநாடு (1937) நடைபெற்றது. அதில், ஒவ் வொரு சாம்ராச்சிய நாடும் ஏனைய சாம்ராச்சிய நாடு களோடு ஒற்றுமைப்பட்ட நிபந்தனைகளுக் குட்பட்ட ஒழுங்குகள் செய்து கொள்ளலாமெனத் தீர்மானஞ்செய் யப்பட்டது. 1950ல் நடைபெற்ற மகாநாட்டில் சுதந் திரம் பெற்ற நாடுகளையுடைய சாம்ராச்சியத்துக்கு ஆங் கில மன்னர் தலைவரென எல்லோராலும் அங்கீகரிக் கப்பட்டது. அவ்விதமான விரிந்த மனப்பான்மை யோடு தாய்நாடு ஏனைய நாடுகளின் தொடர்பையும், ஒற்றுமையையும் கிலேBாட்டி வருகின்றது.
வினுக்கள் 1. பிரித்தானிய சாம்ராச்சியத்தில் சுதந்திர ஆட்சிபெற்ற நாடு
கள் எவை? 2. கனடா சுதந்திர ஆட்சிபெற்ற வரலாற்றை எழுதுக. 3, அவுஸ்திரேலியாவில் அந்நியர் குடியேற்றம் எப்போது ஏற்
பட்டது? சுதந்திர ஆட்சியை எவ்வாறு பெற்றது? 4. தென் ஆபிரிக்காவில் சுதந்திர ஆட்சி பெறுவதற்கு முன்னி
ருந்த இடர்ப்பாடுக ளென்ன? 5. அயர்லாந்தில் எப்போது சுதந்திர உணர்ச்சி உண்டானது? அது சுதந்திர ஆட்சியைப் பெறுவதற்கு என்ன கஷ்டங்கள் இருந்தன?

இருபதாம் அத்தியாயம் பத்தொன்பதாம் நூற்றுண்டில் ஐரோப்பிய நாடுகளின் சாம்ராச்சியப் பெருக்கம்
1815-ம் ஆண்டுக்குப்பின் தேசிய சுதந்திரக்கொள் கைகள் நாளடைவில் ஐரோப்பாவில் வெற்றி பெற்றதும் ஐரோப்பிய நாடுகள் உலகத்தின் ஏனைய பகுதிகளில் தங் கள் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு முயற்சி செய்தன. புதிய கைத்தொழில்களே நடத்து வதற்குவேண்டிய விளை, பொருட்களைப் பெறக்கூடிய நாடுகளேதங்கள் ஆதிக்கத் துக்குள் கொண்டுவர ஒவ்வொருநாட்டினரும் அவாவுற்ற னர். அதுவுமல்லாமல் அங்நாடுகளில் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனைசெய்து வர்த்தகத்தை விருத்தி செய்யலாமெனவும் எண்ணினர். பத்தொன்பதாம் நூற்ருரண்டிற் தோன்றிய புதியநாடுகள் தங்கள் செல் வாக்கைப் பரப்புவதற்கு மூன்று பெரும் சாம்ராச்சி யங்கள் தடையாயிருந்தன. அவை ரூஷிய, அமெரிக்க, பிரித்தானிய சாம்ராச்சியங்களாம். இம் மூன்றையும் போன்ற புதிய ஐரோப்பிய நாடுகளும் சாம்ராச்சியப் பெருக்கமடைய முயற்சித்தமையால் அவைகளினிடையே பெரும் போட்டி உண்டானது. குடியேற்றங்களை ஸ்தா பிக்கும் முயற்சி அதிவேகரமாய் நடந்தமையால் ஏறக் குறைய 25 ஆண்டுகளுக்குள் வசதியான பகுதிகளெல் லாம் வலிமையுள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத் திற் கொண்டுவரப் பட்டமையால் பூமியின் எல்லாப் பாகங்களிலும் அவைகளுக்கிடையே முரண்பாடு ஏற் பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானியர் பராமுகமாயி ருந்த பொழுதிலும் தாங்கள் வர்த்தகம் நடத்திய நாடு கள் யாவும் ஏனைய ஐரோப்பிய இராச்சியங்களுடைய கையிற் சிக்கிக்கொள்கின்றன வென அறிந்தவுடன், அந்நாடுகளைப் பங்கீடு செய்யும் முயற்சியிலீடுபட்டனர். அநாகரிகமற்ற மக்கள் வசித்த உஷ்ணவலையப் பகுதி களிலுள்ள நாடுகளே அவர்கள் கைப்பற்றிய நாடுக
30 &

Page 122
234 19ம் நூற்றண்டில் ஐ. நா. சாம்ராச்சியப் பெருக்கம்
ளாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் முன்னுெருபோதும் போயறியாக பகுதியிலேயே அவர்கள் கவனஞ் சென்றது.
ஆபிரிக்காவின் வடபகுதியிலுள்ள மத்தித்தரைக் கடலுக்கருகாமையிலுள்ள நிலப்பரப்பு பழைய காலங் தொட்டு ஐரோப்பாவோடு தொடர்புடையதாக இருந்து வந்தது. இப்பகுதி அக்கண்டத்தின் பெரும் பகுதியிலி ருந்து சகாராவனந்திரத்தினுல் பிரிக்கப்பட்டு இருக் கிறது. இப் பகுதியிற் பிரான்சு அதிக கவனத்தைச் செலுத்தி 1830ன் பின் சிலவாண்டுகளுக்குள் அல்ஜீரி யாவைக் கைப்பற்றியது. நெப்போலியனுடைய காலக் தொட்டு எகிப்தின் அரசியல் விஷயங்களிலும் அங்நாடு பிரதானமான விருப்பங்காட்டியது. 1870ல் ஜேர்மனி யால் தோற்கடிக்கப்பட்டபின் பிரன்சு, இழந்துபோன செல்வாக்கையும், கெளரவத்தையும் மீண்டும் பெறுவ தற்காக வட ஆபிரிக்காவிற் கவனஞ் செலுத்தத் தொடங்கியது 1881ல் தூனிசைக் கைப்பற்றியது. அத னல் இத்தாலி ஜேர்மனியோடு சேர5ேர்ந்தது.
ஆனல் ஆபிரிக்காவின் உஷ்ண பிரதேசத்திற்கான் ஐரோப்பிய புது இராச்சியங்களின் போட்டி அதிவேக மாகக் காணப்பட்டது. பெல்ஜியத்தின் அரசனன லியப்போல்டு கொங்கோ நதிப் பிரதேசத்தைத் தன்வச மாக்கினன் (1979). கொங்கோ நதிக்கு வடக்கேயுள்ள பிரதேசத்தில் பிரென்சு அரசாங்கத்தினர் தங்கள் உரிமையை நிலைநாட்டினர் (1880). இதற்கிடையில் போத்துக்கீசர் அப்பகுதிகளிற் தங்களுக்குப் பழைய யுரிமையுண்டென்று ஆபிரிக்காவில் அத்திலாந்திச் சமுத்திரக்கரை தொடக்கம் இந்து சமுத்திரக்கரை வரையுமுள்ள முழுப்பகுதியும் தங்களுடையதென வாதா டினர். இவ்வண்ணமாக ஐரோப்பிய வல்லரசுக்கிடை யில், சச்சரவுகள் ஏற்பட்டன. بر
1815-ம் ஆண்டுதொட்டு ஆபிரிக்காவின் மேற்குப் பாகத்திலுள்ள செனிகல் ஆற்றுப் பிரதேசத்தை

19ம் தூற்றண்டில் ஐ நா. சாம்ராச்சியப் பெருக்கம் 235
பிரான்சியர் கைப்பற்றியதால் அவர்களுடைய ஆதிக் கம் மேற்குச் சூடான் வரையும் பரவியது. செழிப் புள்ள அவ்வுஷ்ணப் பிரதேசம் ஒரு பெரிய இராச் சியத்தை ஸ்தாபிப்பதற்கு பிரான்சுக்குப் பெரிய வச தியை அளித்ததெனலாம். ஆகையால் அங்கங்கிருந்த சுதேசச் சிற்றரசர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டமையால் கரையோரப் பகுதிகளிலிருந்த பிரித் தானிய வர்த்தகர்கள் திகிலடைந்தனர். தங்களுடைய ஆதிக்கமுள்ள பகுதிகளைப் பாதுகாப்பதற்கு முயற்சி செய்தனர். இத்தாலிய அரசாங்கத்தாரும் தங்கள் செல்வாக்கை நாட்டும் நோக்கத்துடன் செங்கடலினரு காமையிலுள்ள எரித்தீரியா என்னும் பகுதியைத் தங் கள் வசப்படுத்தினர்.
உஷ்ணப்பிரதேசப் பொருட்களைப் பெறுவதற்கு ஆபிரிக்காவிலுள்ள நாடுகள் பிரதான மென்பதை யுணர்ந்த ஜேர்மனிய வியாபாரிகள் தென்மேற் காபி ரிக்காவில் பரந்த பிரதேசத்தை தங்களுடைய வச மாக்குவதற்காகச் சுதேச அதிகாரியுடன் ஒப்பந்தஞ் செய்துகொண்டனர். ஆனற் பிரித்தானிய அரசாங்கம் அவர்களுக்கு ஒரு எதிர்ப்புங் காட்டவில்லை. ஆபிரிக்கா வில் தங்கள் செல்வாக்கைப் பரப்புவதற்குப் போட்டி யிட்ட ஐரோப்பிய வல்லரசுக்கிடையே விவாதங்களேற் படாமற் தடுப்பதற்காக 1884ல் பேர்லின் நகரத்தில் ஒரு மகாநாடு கூடியது. வருங்காலத்தில் சாம்ராச்சிய வேட்கையுடைய ஐரோப் பிய நாடுக ள் அனு சரிக்க வேண்டிய சில கொள்கைகளை விபரித்ததோடு, இது காறும் ஒவ்வொரு வல்லரசும் கைப்பற்றிய பகுதி கள் அவையவைக்கே யுரியன வெனவும் அம்மகாநாட் டிற் தீர்மானஞ் செய்யப்பட்டது. அதன்பின் போரில் லாது ஐரோப்பியர் ஆபிரிக்காவின் பெரும்பகுதியைப் பங்கீடு செய்யத் தொடங்கினர். இருபது வருடங்களுக் குள் அபிசீனியா, லிபீரியா, திறிப்போலி, மொருெக்கோ எனும் பகுதிகளைவிட ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகள்

Page 123
236 19ம் நூற்றண்டில் ஐ. நீா. சாம்ராச்சியப் பேருக்கம்
ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கத்துக் குட்பட்டன. 1886ன் பின் பிரித்தானியா ஏனைய ஐரோப்பிய வல் லரசுகளிலும் பார்க்க ஆபிரிக்காவில் கூடிய சிரத்தை எடுத்தது. பிரித்தானிய வர்த்தக கூட்டத்தினர் சிலர் கேனியாப்பகுதியிலுள்ள அதிகாரிகளோடு ஒப்பந்தஞ் செய்து பிரித்தானிய கிழக்காபிரிக்காச் சங்கத்தையுங் தாபித்தனர். ஆனல் ஜேர்மனி அந் நடவடிக்கை களுக்கு ஒரு எதிர்ப்புங் காட்டவில்லையெனக் கூறிய பின்தான், பிரித்தானிய அரசாங்கம் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதாக அபிப்பிராயந் தெரிவித் தது. 1886ல் ஆபிரிக்காவில் பிரித்தானியாவுக்கும் ஜேர் மனிக்குமுள்ள பகுதிகளின் எல்லை வகுக்கப்பட்டது. தென்மேற்கு ஆபிரிக்கா, தொகோலாந்து, கீழ் ஆபி ரிக்கா, கமறுரன் முதலியன ஜேர்மனிக்குரியவையென பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. ஆபிரிக்காவின் எல் லாப் பகுதிகளிலும் பிரித்தானியாவின் செல்வாக்கிருந் தமையால் ஆபிரிக்காவின் குடியரசை தாபிக்கமுயன்ற ஐரோப்பிய வல்லரசுகளாகிய ஜேர்மனி, பிரான்சு, போத்துக்கல், இத்தாலியோடு சினேகமுறையில் ஒப் பந்தஞ் செய்து கொண்டன. கீழ் ஆபிரிக்காவிலும் யுகந்தை என்னும் இரு பகுதிகளிலும் பிரித்தானி யரின் செல்வாக்கு அங்கீகரிக்கப்பட்டது. பிரான்சோடு ஜேர்மனி செய்த ஒப்பந்தத்தின் பயனுக இருபகுதியா ரின் செல்வாக்கிலுள்ள பகுதிகளின் எல்லை வகுக்கப் பட்டது. ஜேர்மனி 1000,000 சதுர மைல் விஸ்தீான முள்ள நிலப்பரப்பையுடைய இராச்சியத்தைப் பெற்றது.
பிரித்தானியாவும், பிரான்சும் தத்தமக்குரிய ஆதிக் கமான பகுதிகளின் எல்லேகளை வகுப்பதில் முரண்பட் டனர். 1885ல் மடகாஸ்கர் என்னும் பெருந்தீவு தங் களுடைய பாதுகாப்புக் குட்பட்டதெனப் பிரான்சியர் கூறினர். ஆனய் பிரித்தானிய வர்த்தகர்களும், பாதிரி மார்களும் அத்தீவில் வெகுகாலமாக முயற்சி செய்து வந்தனர். ஆனல் 1865ல் அத்தீவின் சுதநதிரத்தை

19ம் நூற்றண்டில் ஐ. நீரி. சாம்ராச்சியப் பேருக்கம் 23?
ஏற்றுக் கொள்வதாக இருவல்லரசுகளும் சம்மதித்துக் கொண்டனராகையால் பிரான்சின் செய்கை இருபகுதி யாருக்குமிடையிற் பிரிவினையை யுண்டாக்கியது. வட மேற்காபிரிக்காவிலும் பிரான்சியர் மத்தித் தரைக் கடல் தொடக்கம் கேனியா வரையுமுள்ள பிரதேசத்தை தங்களுக்குரியதென வாக்கிக் கொண்டமையால் பிரித் தானியருக்கு அது தடையாயிருந்தது. கைகர் நதிப் பிரதேசத்திலும் இருபகுதியாருக்கு மிடையில் முரண் பாடு ஏற்பட்டது. 1890ல் இருபகுதியாருக்கு மிடையில் ஒரு ஒப்பந்தஞ் செய்யப்பட்டது. அதன் பயனக மட காஸ்காரில் பிரான்சியருடைய பாதுகாப்புரிமை ஏற் நூறுக் கொள்ளப்பட்டது. ஆனல் நைசீரியாப் பகுதியில் பிரித்தானியரின் ஆதிக்கம் பெலமடைந்தது.
சூடானின் மத்திய, மேற்குப் பகுதிகளைக் கைப் பற்றியபின் பிரான்சு கிழக்குச் சூடானையும் செங்கடல்
எல்லேவரையும் தம் வசமாக்க எத்தனித்தது. நைல் நதிப் பிரதேசம் பிரித்தானியரின் ஆதிக்கத்திற் கொண்டுவரப்பட்டது. ஒரே தொடர்பான 4000000
சதுரமைல் விஸ்தீரண முள்ள இராச்சியத்தைப் பிரான்சு ஸ்தாபித்தது. இத்தாலி செங்கடலுக்கரு காமையில் எரித்திரியாக் குடியேற்றத்தையும் கிழக்குக் கரைப் பகுதியிலுள்ள சோமாலிலாந்தையும் தம் வச மாக்கியது. இத்தாலியரின் செல்வாக்கிலிருந்த இருபகு திக்குமிடையிலுள்ள பிரதேசம் ஆங்கிலேயரின் வசமா னது. பின்பு அபிசீனியர்வைக் கைப்பற்றும் நோக் கத்துடன் அங்காட்டுச் சக்கரவர்த்தியோடு இத்தாலி சண்டை செய்து அதிற் தோல்வியுற்று அதைக்கைப் பற்றும் எண்ணத்தை நீக்கியது. ஆபிரிக்காவில் அபி சீனியா ஒன்றே சுதந்திரத்தைக் காப்பாற்றியது.
ஐரோப்பிய வல்லரசுகளின் செல்வாக்குச் செறிந் ததன் பயனுக அங்கே அநேக மாற்றங்கள் தோன் றின. பல பகுதிகளிலும் ஒழுங்கு முறையும் அர.

Page 124
238 19ம் நூற்றண்டில் ஐ. நா. யாம்ராச்சியப் பேருக்கம்
சாங்க நிர்வாகமும், தாபிக்கப் பட்டன. அ5ாகரிகமற்ற சுதேச சாதியினரிடையே காணப்பட்ட இடையருச் சச்சரவுகள் நீங்கின. அடிமை வியாபாரம் முற்ருரக யொழியாதிருந்த பொழுதிலும் அது வெளியரங்கமாக நடத்தப்படவில்லை. அ5ாகரிகமற்ற பழக்கவழக்கங்கள் நீங்கின. தற்கால போக்குவரத்து வசதிகள் காணப் பட்டன; தெருக்களும், புகையிரத வீதிகளும், அமைக் கப்பட்டன. பாடசாலைகளும், தேவாலயங்களும் தாபிக் கப்பட்டன. உஷ்ண தேசங்களிலுள்ள நோய்களுக்கு விஞ்ஞான அறிவு நிவாரண மளித்தது. ஆபிரிக்கா வின் அநாகரிக மற்ற சாதியினர் சமாதானமுறையில் வேலைசெய்து சீவனஞ் செய்யும் பழக்கத்தைப் பழகிக் கொண்டனர். ஏனைய ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதிக்கத்திலுள்ள குடியேற்றப் பகுதிகளிலும் பார்க்க ஆங்கிலேயரின் குடியேற்றப் பகுதிகளிலுள்ள கிர்வாகம் சிறந்ததெனலாம். 6ோக்கம் எவ்வண்கப் பட்டதாயி னும், கையாண்ட முறைகள் எவ்வகைப் பட்டதாயி னும், ஐரோப்பியர் தங்கள் ஆதிக்கத்தை ஆபிரிக்கா வில் அனுகூலமாகப் பரப்யியது ஒருபெருஞ் செயலாகும்.
ஐரோப்பிய நாடுகளின் சாம்ராச்சியப் பெருக்கம் ஆபிரிக்காவோடு மாத்திரம் கில்லாது கீழ்த்திசை நாடு களையும் தாக்கியது. மலாய்க் குடாநாடு பிரித்தானி யரின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டது. அதற்குக் கிழக்கேயுள்ள தொங்கிங்கு, அனம், கொச்சின் சிணு முதலிய பகுதிகள் பிரான்சின் ஆதிக்கத்திற் கொண்டு வரப்பட்டன. பின்பு சீயம் என்ற நாட்டையும் பிரான்சு கவர்ந்து கொள்ள முயற்சித்தது. ஆனல் பிரித்தானி யாவும், பிரான்சும் 1896ல் செய்து கொண்ட ஒப்பங் தந்தின் பிரகாரம் சீயம் ஒரு சுதந்திர நாடாக அங்கி கரிக்கப்பட்டது. மலாய்க் குடாநாட்டுக் கருகாமையி லுள்ள தீவுகளில் ஒல்லாந்தரின் செல்வாக்குப் பரவி யிருந்த பொழுதிலும் போனியாதீவின் வடபகுதி பிரித் தானியருடைய பாது காப்பிற் கொண்டு வரப்பட்டது.

19ம் நூற்றுண்டில் ஐ. நா. சாம்ராச்சியப் பெருக்கம் 239
பசிபிக் சமுத்திரத்திலிடையிடையே பரந்து கிடந்த தீவு களும் சாம்ராச்சிய வேட்கையையுடைய ஐரோப்பிய நாட்டவர்களின் கண்களைக் கவர்ந்தன. பிரித்தானியர் அப்பகுதிகளில் தலையிட விரும்பாமலிருந்த போதிலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூண் டுதலினுலும், ஜேர்மனி அப்பகுதிகளிற் சிரத்தை காட் டினதினுலும், அவர்கள் தங்களுடைய கவனத்தைச் செலுத்த வேண்டியிருந்தது. புதிய கினியாவின், வட பகுதியை ஜேர்மனி தம் வசமாக்கிய பொழுது தென் பகுதியைப் பிரித்தானியா கைப்பற்றியது. பத்தொன்ப. தாம் நூற்ருரண்டு முடிவடைதற்குமுன் பிரித்தானியர் பசிபிக் சமுத்திரத்திலுள்ள சிறுத் தீவுகள் பலவற் றைத் தம்வசமாக்கினர். 1898ல் பிலிப்பைன் தீவுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்துளமர்ந்தன.
கீழ்த்திசை நாடுகளில் வர்த்தகஞ் செய்வதற்கு சிங்கபூர், பினங்கு வசதியான துறைமுகங்களாகக் காணப்பட்டன. அவைகளைவிட கொங்கோங்கும் சிறந் ததுறை முகமாகும். பசிபிக் சமுத்திரத்தில் பிரித்தா னியர் பெற்ற நாடுகளும், துறைமுகங்களும் அவர்க ளுக்குப் பெரும் பயனை அளித்தன. பிரதானமாக மலாய் நாட்டிலுள்ள தகரச் சுரங்கங்களும், பரந்த றப் பர் தோட்டங்களும் பிரித்தானியருக்கு அதிக ஊதிபத் தைக் கொடுத்தன. மக்களும், செல்வமும் சீரும் பெற்று வாழ்ந்து வந்தனர். இந்து சமுத்திரத்தின் முத்துப் போன்ற இலங்கைத் தீவு ஆங்கிலேயர் ஆதிக்கத்திற் குட்பட்ட காலந்தொட்டு படிப்படியாக செல்வங்கொளிக் கும் நாடாக விளங்கியது கோப்பி, தேயிலை, றப்பர் முதலிய வர்த்தகப் பொருட்கள் அத்தீவிற் செழிப் படைந்தமையால் நாட்டின் வருவாய் கூடியது. ஆயி ரக்கணக்கான தென்னிந்தியர் வந்து அத் தோட்டங் களில் வேலைசெய்தனர். இலங்கை கல்வியிலும் நாகரி கத்திலும் முன்னேறிக் கொண்டிருந்தமையால் 9ےyIT சாங்க பொறுப்பாட்சியைப் படிப் படியாகப் பெற்றது.

Page 125
240 19ம் நூற்றண்டில் ஐ. நா. சாம்ராச்சியப் பெருக்கம
1869ல் பிரான்சின் முயற்சியால் வெட்டப் பட்ட சுயேஸ் கால்வாய் இந்தியாவுக்குச் செல்வதற்கு கிட்டி யதும், பிரதானமானதுமான பாதையாய் இருந்தது. எகிப்தை ஆண்டுகொண்டிருந்த கேடிவ் இஸ்மேயில் ஐரோப்பிய தனவந்தர்களிடமிருந்து பெருந்தொகை யான கடனை வாங்கினன். அதனல் 13 வருடங்களுக் குள் 3000,000 பவுணிலிருந்து 100,000,000 பவுண் வரையில் கடன் அதிகரித்தது. அவ்வண்ணம் பெற்ற கடனிலொரு பகுதியை தெருக்கள், புகையிரத வீதிகள் அமைப்பதிற் செலவழித்தான். மிகுதியான பணம் வீண்செலவு செய்யப்பட்டது. 1876 வரையில் தான் பெற்ற கடனைச் செலுத்த சக்தியற்ற வனுயிருந்த படி யால் கடன் கொடுத்த ஐரோப்பியர் ஒன்றுசேர்ந்து எகிப்தின் பிரதானமான வருவாயிலிருந்து வட்டியைப் பெறுவதற்கு ஒழுங்கு செய்தனர். அதுவுமல்லாமல் எகிப்தின் பணநிலையை திருத்தும் நோக்கத்துடன் பிரான்சும் பிரித்தானியாவும் தலையிட்டதைக் கண்ட அரசன் அவர்களுக்கு எதிர்ப்புக் காட்டினன். அதனல் அவர்கள் சுல்தானுடைய உதவியைக்கொண்டு அவனை இராச்சியத்தினின்று நீக்கி அவனது மகனும் இளவர சனுமான தியுபிக்கைக் * கேடிவ்” ஆக நியமித்தனர். அதன்பயணுக அராபிபாஷாவின் தலைமையின் கீழ் எகிப்தியபடை பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பியர் கொல்லப்பட்டதினல் பிரித்தானிய போர்க்கப்பல்கள் சில அலெக்சாந்திரியாவுக்கு அனுப் பப்பட்டன. பிரான்சு தொடக்கத்தில் ஊக்கம்காட்டி பின்பு எதுவுஞ் செய்யாது விலகிக்கொண்டது. தெல கெபீர் என்ற சண்டையில் அராபிப்பாஷா தோற் கடிக்கப்பட்டான் (1882). அராபிப்பாஷாவும் அவனு டைய தோழர்களும் கைதி செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். பின்பு சேர் எவலின் பேரிங் என் பவர் பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதான தூதன கவும், புதிய கேடிவுக்கு புத்தி கூறுவதற்காகவும் எகிப்துக்கு அனுப்பப்பட்டான். எகிப்தின் அரசாட்சி முறை முற்ருரகச் சீர்திருத்தப்பட்டது.

19ம் நூற்றண்டில் ஐ. நா. சாம்ராச்சியப் பெருக்கம் 241
எதிப்துக்குத் தெற்கேயுள்ள சூடானில் மாதி” என் ணும் சமயப்பித்தனுெருவன் இஸ்லாமியக் கிளர்ச்சி யொன்றை உண்டாக்கினன். அங்கிருந்த பலசுட்டத் தினரைத் தோற்கடித்து வீரனக விளங்கினன். சூடானில் இருந்த எகிப்தியரின் படையும், எகிப்து5ாடும் ஆபத் தான கில்ேயிலிருந்தது. ஆகையால் 10000 வீரர்கஜளக் கொண்ட எகிப்தியப் படையுடன் பிரித்தானிய சேனைத் தலைவன் சென்று மாதி உண்டாக்கிய கிளர்ச்சியை அடக்கச்செய்த சண்டையில் அச்சேனை அழிக்கப்பட் L-3 எகிப்தியப் படையுடன் வெல்லமுடியாதென வுணர்ந்த பிரித்தானிய உத்தியோகத்தர் சூடானைக் கைப்பற்றும் நோக்கத்தை விட்டு எகிப்தையே பாது காப்பதாகத் தீர்மானஞ் செய்தனர். ஆனல் அங்கிருந்த எகிப்தியப்படைகள் அழைக்கப்பட வேண்டுமென ஆலோசித்து கோடன் என்னும் ஆங்கிலப் படைக் தலைவனை அனுப்பினர். அவன் அங்கு சென்றதும் மாதியின் கூட்டத்தினர் காட்டுமில் அவனைக்கொன் றனர்.
இதற்கிடையில் சேர் எவலிங் பேரிங் என்பவரும் அவருடைய தோழரும் எகிப்தை நன்னிலைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிசெய்தனர். எகிப்தின் பணநிலையையுந் திருத்தி சேனைக்கும் பயிற்சியளித்த னர்; புகையிரத வீதிகள் அமைக்கப்பட்டன; பாட
சாலைகள் தாபிக்கப்பட்டன; சுகாதார முறைகள் புகுத்தப்பட்டன; வைத்தியசாலைகள் தாபிக்கப்பட் டன; நீதிவழங்கும் முற்ை. முற்ருரகமாற்றி யமைக்கப் பட்டது; வரிகள் குறைக்கப்பட்டன; விவசாயம்
விருத்தி செய்யப்பட்டது. -
பின்பு சூடானை அதனுடைய அநாகரிக நிலையி னின்று திருத்தி வைக்கவேண்டிய தவசியமெனவுணர் ந்து கிச்சினர் பிரபுவின் தலைமையில் பயிற்சி பெற்ற எகிப்தியப்படையை, அதனைக் கைப்பற்றுவதற்கு பிரித் தானியர் அனுப்பினர். சூடானிலுள்ள படைகள் தோற்
3.

Page 126
242 19ம் நூற்றண்டில் ஐ. நா. சாம்ராச்சியப் பேருக்கம்
கடிக்கப்பட்டு அங்காடு கைப்பற்றப்பட்டது. பிரித்தா னிய உத்தியோகத்தர் பல திருத்தங்களே அந்நாட்டி லேற்படுத்த தீர்மானித்தனர். ஆரம்பத்திலேயே அடிமை வியாபாரம் முற்றுக நீக்கப்பட்டது. சுதேசிக்கூட்டத் தினருடைய சண்டைகள் ஒழிக்கப்பட்டன. விவசாய மும் வர்த்தகமும் ஊக்கப்படுத்தப் பட்டன. மதக் கொள்கைகள் யாவும் அங்கீகரிக்கப் பட்டன. பாட சாலைகளும் நீதிஸ்தலங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. குறைந்த விகிதத்துக்கு அறவிடப்பட்ட வரிகளைக் கொண்டே அவ்வேலைகள் செய்யப்பட்டன. பத்துவரு டங்களுக்குள் வருமானம் பத்து மடங்கு கூடியது. எகிப்திய அரசாங்கமும் பலமடைந்தது. பிரித்தானிய ருடைய ஆதரவில் வளர்ந்த எகிப்தியர் பின்பு ஐரோப் பியருடைய செல்வாக்கை முற்ருரக வொழித்துத் தாங் களே தங்களுடைய விஷயங்களைச் செவ்வனே நடத்த ஆரம்பித்தனர்.
ஐரோப்பியரின் செல்வாக்கு உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் பரவியமையால் மேனுட்டு நாகரிகமும் கல்வியும் விஞ்ஞான சாஸ்திரவறிவும் பத்தொன்பதாம் நூற்ருரண்டு தொட்டுப் பரவத்தொடங்கின. ஐரோப்பி யரின் முயற்சியினலேயே நாகரிகமற்ற மக்கள் வாழ்ந்த ஆபிரிக்கா சீர்திருத்தமடைந்தது. மேனுடு களிற் காணப்படும் அரசியல்ஸ்தாபனங்கள் உலகமெங் கும் காணப்படுகின்றன. குடியேற்றத்திற்காகவோ அல் லது வர்த்தகஞ் செய்வதற்காகவோ ஐரோப்பியர் செல் லாத நாடுகளில்லை யெனலாம். பிரதானமாகப் பிரித் தானியர் தாங்கள் சென்ற இடமெல்லாம் பெரும் நன் மைகளைச் செய்திருப்பதைக் கவனிக்கலாம்.
வினுக்கள் 1. பத்தொன்பதாம் நூற்றண்டில் சாம்ராச்சியப் பெருக்கத்தில்
வேட்கைகொண்ட ஐரோப்பிய வல்லரசுகள் யாவை?
2. ஆபிரிக்காவில் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆகிக்கத்தில்
எப்பகுதிகளமைந்தன?

19ம் நூற்றண்டில் ஐ. நா. சாம்ராச்சியப் பெருக்கம் 248
3.
பிரித்தானியருக்கும் போயர்களுக்குமிடையில் நடந்த யுத்தங் கஃள விபரித்தெழுது. ஆசியாவில் எப்பகுதிகளில் ஐரோப்பியர் தங்களுடைய செல் வாக்கைப் பரப்பினர். எகிப்தில் ஐரோப்பியர் தலையிட்டதற்குக் காரணமென்ன? எகிப்துக்கு ஆங்கிலேயர் செய்த நன்மைகளெவை?
பத்தொன்பதாம் ஆாற்ருண்டில் ஐரோப்பிய நாடுகள் தங்க
ளுடைய சாம்ராச்சியத்தைப் பெருப்பிப்பதற்குச் செய்த
முயற்சிகளே விபரித்து எழுது.

Page 127
இருபத்தொராம் அத்தியாயம் ஆசிய கீழ்த்திசை நாடுகள் சீனவுக்கு வடக்குப்பக்கத்திலுள்ள அயல் நாட்டவா கள் ரூஷியராவர். ஏனைய ஐரோப்பிய சாதியினரும் கடல்மார்க்க வர்த்தகத்தின் கிமித்தம் சீனுவுக்கு வந்து சேர்ந்தனர். முதலில் போத்துக்கீசரும் அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் பின்பு ஆங்கிலேயரும் அங்கு சென்றனர்.
பண்டைக்காலத்தில் நாகரிகமடைந்த சாதியருள் சீனரும் ஒருவராவர். ஏறக் குறைய இரண்டாயிரம் வருடங்களாகச் சீனரின் நாகரிகம் அவர்களுடைய சில நம்பிக்கைகளிற் தங்கியிருந்தது. சீன சக்கராதிபத்தி யமே உலகத்தில் நாகரிகமுள்ள பகுதியெனவும், அது மலைகளாலும் கடலாலும் பாதுகாக்கப்பட்டிருப்பதென வும் அவர்கள் எண்ணிக்கொண்டனர். கொன்பூசியஸ் என்பவரின் போதனைகளை அடிப்படையாகவில்லாத நாகரிகம் தகுந்த நாகரிகமல்லவெனவும் அவைகளைப் பின்பற்றி நடவாத மக்கள் அ5ாகரிகமுள்ளவர்களென வும் கருதியிருந்தனர். விவசாயமே சீனருடைய காகரி கத்தின் அத்திவாரமெனலாம். கால்வாய்களை வெட்டி நீர்ப்பாய்ச்சும் முறைகளை கண்டுபிடித்துக் ஆதிகாலங் தொட்டு அவர்கள் பயிரிடுந்தொழிலே விருத்திசெய்த னர். கைத்தொழிலை விருத்திசெய்யவோ அல்லது பிற நாடுகளோடு வர்த்தகம் நடத்தவோ அவர்கள் விரும்ப வில்லை. தங்களுடைய தேவைக்குப்போதிய கைத்தொ ழிலையே நடத்திவந்தனர். தங்களுடைய நாட்டுக்கப்பா லுள்ளவர்களோடு வியாபாரஞ்செய்ய அவர்கள் விரும்ப
மேனட்டவர் வருகையினல் சீனருடைய பழைய கொள்கைகளும் நம்பிக்கைகளும் குறையத்தொடங்கின. ஐரோப்பியர் வர்த்தகப் பொருட்களைச் சீனவுக்குக் கொண்டு சென் ற வுடன் சீனுவே சீர்திருத்தமும் திற

ஆசிய கீழ்த்திசை நாடுகள் 245
மையுமுடைய நாடென்ற எண்ணம் அவர்களிடமிருந்து மாறியது.அங்கியநாட்டவர்கள் புதிய அரசியற் கொள்கை களையும் புதிய சமய வழிபாடுகளையும் பரப்ப எத்தனித்த பொழுது அவர்களுடைய பழைய கொள்கைகளிலுள்ள நம்பிக்கை , குறையவேண்டியதாயிற்று. சனத்தொகை மிகவும் அதிகரித்தமையினல் விவசாயத்திலேயே முற்ற கத் தங்கியிருக்க முடியாதென்று, கைத்தொழிலை விருத்திசெய்து வர்த்தகம் கடத்தவேண்டிய நிலையுமேற் பட்டது.
இரண்டு நூற்ருரண்டுகளாக கான்டன், சங்காய் முத லிய துறைமுகங்களில் வர்த்தகஞ் செய்வதற்கு ஐரோப் பியர் முயற்சிசெய்தனர். ஆனல் சீனர் ஐரோப்பிய வர்த்தகர்களைத் தங்களுக்குச் சமமானவர்களாக நடத்த விரும்பவில்லை. சமமானமுறையிலிருபகுதியாரும் நடந்து கொள்வதற்காகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் அக்காட்டு வழக்கத்தின்படி சீன சக்கரவர்த்திக்குமுன் ஒன்பதுமுறை நிலத்தில் தங்கள் தலைகளைத் தட்டிக்கொண்டுதான் -பின்பு பேச ஆரம்பிக்கலாம். அவ்விதமான தாழ்மைக்குள்ளாக்கியும் ஐரோப்பிய வர்த்தகருக்கு வியாபாரஞ்செய்யும் சலாக் கியத்தை வழங்கச் சீனர் மறுத்தனர்.
இவ்வாருரன நிலையிருந்தபொழுதிலும் ஐரோப்பியர் வியாபாரம் நடத்திவந்தனர். பதினெட்டாம் நூற்ருரண் டில் பிரித்தானிய கிழக்கிந்திய சங்கம் இந்தியாவிலிருந்து அபினையும், பிரித்தானிய உற்பத்திப் பொருட்களையும் சீனுவில் விற்பனைசெய்துசீனரிடமிருந்து பட்டு, தேயிலை, களிமண் பாத்திரங்களை வாங்கி வியாபாரத்தை நடத்தி வந்தனர். அபின் வியாபாரத்தில் மாத்திரமே வருட மொன்றுக்கு 1000000 பவுண்வரையில் ஆதாயத்தைப் பெற்றனர். 1796-ல் அபின் இறக்குமதியை சீன அர எாங்கம் தடுத்தவுடன் பிரித்தானிய வர்த்தகர் களவாக யாபாரம் நடத்தினர். 1839-ல் சீனர் அவ்வியாபாரத் தைப் பாதிக்கக்கூடிய வழிகளைக்கையாண்டு பிரித்தா

Page 128
246 ஆசிய கீழ்த்திசை நாடுகள்
னிய வர்த்தகரையும் துன்புறுத்தினர். அதனுற் பிரித்தா னியர் சீனவோடு சண்டைசெய்ய நேரிட்டது. சண்டை யிற் பிரித்தானியர் வெற்றிபெற்று (1842) ஒரு உடன் படிக்கையையும் எழுதிக்கொண்டனர். அதன்பிரகாரம் கொங்கொங் தீவு பிரித்தானியருக்கு அளிக்கப்பட்ட தோடு தென்சீனவிலுள்ள துறைமுகங்களில் வியாபா ரஞ் செய்யுமுரிமையையும் பெற்றனர். பின்பு பிறநாடு களோடு தொடர்புவைக்கவும், வியாபாரிகளும், மதப் பாதிரிமாரும் காட்டினுட் புகவும் சீனச் சக்கரவர்த்தி உத் தரவளித்தார். பிற5ாட்டினரோடு தொடர்புள்ள வழக்கு களை விசாரிப்பதற்கு விசேட நீதிஸ்தலங்களை ஏற்படுத்த வும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அவ்யுத்தத்தின் பயனுக மேனுட்டு 15 க ரி க ம் கீழைத்தேசங்களிற் பரவத் தொடங்கியது. V−
அயலிலுள்ள கோறியாத்தீவு சீர்கேடானமுறையில் ஆளப்பட்டுவந்தது. நாட்டிற் கலகம் அடிக்கடி காணப் பட்டது. 1894-ல் கோறியா நாட்டு அரசன் அங்கே காணப்பட்ட சச்சரவுகளை கிவிர்த்திசெய்வதற்காகச் சீனு விடம் உதவிகேட்டான். சீனப்படைகள் அனுப்பப் பட்டவுடன் யப்பானியரும் தங்களுடைய படைகளை அனுப்பினர். இருபகுதியாருக்குமிடையில் ஏற் பட்ட சண்டையில் யப்பானியர் வெற்றிபெற்றனர். யுத்தமுடி வில் எழுதப்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி கோறியாவின் சுதந்திரம் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டது. யப்பானியருக்குப் பெருந்தொகையான பணமுங் கொடு பட்டது. குற்றஞ்செய்த யப்பானியரை யப்பானியரே விசாரணைசெய்யும் உரிமையும், போர்மோசா, பெஸ்க டோசு என்னும் தீவுகளும் லியோதுங்குத் தீபகற்பமும் யப்பானுக்குக் கொடுக்கப்பட்டன. இவ்யுத்தம் முடி வடைந்தபின் லிகுங்ஷாங் என்ற அரசியல் கிபுணன். ரூஷியாவோடும் மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் இர கசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டான். இதன்பயணுக ரூஷியாவும், பிரான்சும், ஜேர்மனியும் லியோதுங்கை

ஆசிய கீழ்த்திசை நாடுகள் 247
யப்பானுக்குக் கொடுப்பதைப்பற்றி ஆட்சேபித்து எச் சரிக்கை செய்தனர். யப்பானியர் கோபத்தோடு இணங் கினர். பின்பு ஐரோப்பிய நாடுகள் தாங்கள் சீனர்க ளுடைய விஷயங்களிற் தலையிட்டதற்காகக் கைம்மாறு கேட்டனர். பிரான்சியர் இந்துச்சீனவில் விருப்பங்கொண் டவராகையால் 1885 வரையில் சீனரின் சம்மதத்துடன் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை5ாட்டினர். பின்பு தென்சீனவில் வர்த்தக உரிமைகளையும் பெற்ற னர். ரூஷியர் வலடிவொஸ்சொக்குத் துறைமுகம் உட் படக் கிழக்குக்கரையோரப் பகுதிகளைப் பெறுவதற்குச் சீனவோடு ஒழுங்குகள் செய்தனர். மஞ்சூரியாவில் தங்க' ளுடைய விருப்பத்தைக் காட்டி லியோதுங்குக் குடாநாட் டின் மேற்பார்வையையும் யப்பானியரிடமிருந்து பெற்ற னர். 1897-ல் இரு ஜேர்மன் பாதிரிமார் கொலைசெய் யப்பட்டமையால் கியோச்செள என்ற துறைமுகத்தை ஜேர்மனி கைப்பற்றியது. பிரித்தானியர் வேய்காய்வேய் என்ற துறைமுகத்தைப் பெற்றனர்.
அங்கிய நாட்டினர் பலர் சீனவிற் தங்கள் ஆதிக் கத்தைப் பரப்பியதனல் "குத்துச்சண்டைக்காரர்கள் இயக்கம்” என்பதை தாபித்து அதன்மூலம் அந்நியரை நாட்டினின்று துரத்துவதற்கு முயற்சிகள் செய்தனர். 1900-ம் ஆண்டுவரையில் கிறிஸ்த பாதிரிமாரும் சீனக் கிறீஸ்தவர்களும் அதிகம் தாக்கப்பட்டனர். ஒரு ஜேர் மன் மந்திரியும், யப்பானிய உத்தியோகத்தனுெருவனும் பீக்கிங்கு நகரத்தில் கொலையுண்டிறந்தனர். அங்நகரத்தி லுள்ள அங்கியர் கடுமையாக்த் தாக்கப்பட்டனர். அதன் காரணமாக பிரித்தானியா, ரூஷியா, பிரான்சு, ஜேர் மனி, இத்தாலி, யப்பான், அமெரிக்க ஐக்கியநாடுகள் துருப்புகளை அனுப்பிச் சீனருடைய இயக்கத்தின் முயற்சிகளைக் குறைத்துவிட்டனர்.
1908-ல் மஞ்சூரியவம்ச சக்கரவர்த்தியிறக்க சீனப் படைத்தலைவன் தான் சக்கரவர்த்தியாவதற்கு வேண் டிய வழிவகைகளைத் தேடினன். மக்கள் அவனுக்கு எதிர்ப்புக்காட்டினர். அவனைப்போன்ற பலர் சுயேச்சை

Page 129
248 ஆசிய கீழ்த்திசை நாடுகள்
யான அரசாங்கத்தை நிறுவி மக்களிடம் அளவுகடந்த வரியையறவிட்டனர். 1911-ல் மேனடுகளிற் கல்விபயின்ற சன்யாட்சென் என்பவன் 'கோமிங்டாங்கு” என்னும் மக்கள் கட்சியொன்றை தாபித்து அதன்மூலம் குடியரசு அரசாங்கமுறையை நிறுவி நாட்டின் நிலையைத் திருத்தி யமைக்க முயன்ருரன். சீனருக்கு சனநாயகமுறையும் பாராளுமன்ற அரசாங்கமும் புதிதானவையாகையால் அம்முறைகளை 5டைமுறையிற் கொண்டுவருவதற்கு அவ னுக்குப் பல கஷ்டங்களேற்பட்டன. இதற்கிடையில் விவசாயிகளின் நிலை கேவலமாகவே காணப்பட்டது. ஆகையால் 1921-ல் சன்யாட்சென், பழைய அரசர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்தை நடத்தும் ரூஷியாவின் உதவி யைக் கோரினன். ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க ரூஷியா சீனுவுக்கு அதிக அனுதாபத்தைக் காட்டியமையால் ரூஷியாவிலுள்ள சில அரசியல் விற் பன்னர்கள் சீனுவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்க ளுடைய உதவியுடன் கோமிங்டாங்குக்கட்சி ரூஷியாவி லுள்ள கம்யூனிஸ்கட்சிமாதிரித் திருத்தியமைக்கப்பட் டது. அதேகாலத்தில் சீனுவில் கம்யூனிஸ்கட்சியொன் றும் ஸ்தாபிக்கப்பட்டு அதில் செள-என்-லாய் அங்கத் தவர்களுள் ஒருவனுகச் சேர்ந்தான். தென்சீனுவிலேயே கோமிங்டாங்குக்கூடிய ஆதரவு இருந்தது. ஆகை யால் முழுச்சீனவையும் ஒரு ஐக்கிய நாடாக்க சன்யாட் சென் முயற்சிசெய்தும் சித்தியடையவில்லை. 1925-ல் அவன் இறந்தான். கம்யூனிஸ் கொள்கைகளுக்குமாருரன ஐரோப்பிய நாட்டினர் சீனவிற் தங்களுக்குரிய சலுகை கள் இல்லாமற்போகக் கூடுமெனவுணர்ந்து சீன ஒற் றுமைப்படாவண்ணம் பல முறைகளைக் கையாண்டனர். சீனர் கோபாவேசங்கொண்டு ஐரோப்பியரைத் துரத்தி விட்டுச் சீன முழுவதையும் ஐக்கியப்படுத்துவதில் முயன்ற னர். சியாங்கைசேக் என்பவனே கோமிங்டாங் சேனைக் குத் தலைவனைன். 1927-ல் அவன் கான்டனிலிருந்து தனது சேனையுடன் வடக்குநோக்கிப் புறப்பட்டு ஷங் காய் என்ற நகரத்தைவிட ஏனைய பகுதிகளைக் கைப்

ஆசிய கீழ்த்திசை நாடுகள் 249
பற்றினன். ஷங்காய் ஐரோப்பியரும் பலசாதியினரும் காணப்படும் ஒரு பொது நகரமாகும். அது சீனுவின் கைத்தொழிற் தானமாகும். சீனர் எல்லோரும் ஒரு மித்துச் சண்டைசெய்தால் ஐரோப்பியர் துரத்தப்பட் டிருப்பார்கள். ஆனல் கம்யூனிஸ் கட்சியினருடைய உதவியுடன் சீன ஐக்கியமடைந்தால் கம்யூனிஸ் கொள் கைகள் நாட்டில் நிலைபெற்றுவிடுமென சியாங்கைசேக் என்பவரும் மற்றும் செல்வந்தரும் நிலம்படைத்த பிர புக்களும் பயமுற்றிருந்தனர். தங்களுடைய செல்வம் பொதுவுடைமைக் கொள்கையாளரின் அரசாங்கத்துக் குப் போய்ச்சேர நேரிடுமென ஏக்கமுற்றனர். ஆகை யால் பொது உடமைக்கட்சித் தலைவர்களனைவோரை யும் கொன்றுவிட்டு சியாங்கைசேக் புதிய அரசாங்க மொன்றை நாங்கிங்கு என்ற புதிய தலைநகரத்தில் தாபித்தான். ரூஷிய அரசியல் நிபுணர்கள் மொஸ்கோ வுக்குத் திரும்பினர். பின்பு சியாங்கைசேக் ஒரு பெரிய சேனையுடன் வடசீனவுக்குப் புறப்பட்டு பீக்கிங்கு என்ற பழைய தலைநகரத்தைக் கைப்பற்றினுன். இவ்வாறு புது அரசாங்கம் தாபிக்கப்பட்டும் விவசாயிகள் தாழ்ந்த நிலையிலேயே இருந்தனர். நிலம்படைத்த கனவந்தரும் வர்த்தகரும் முன்னிருந்த நிலையிலும்பார்க்கச் செல்வ ரானர்கள். தென்சீனவிலிருந்த பொதுவுடமைக் கொள் கையாளர்கள் கிராமங்களிற் சென்று சேவைசெய்யத் தொடங்கினர். விவசாயிகளுக்குக் கல்விபுகட்டப்பட்டது. அவர்களுக்குத் தங்களைப் பாதுகாப்பதற்குப் பயிற்சி யளிக்கப்பட்டது. கோமிங்டங் கட்சியிலும் படைகளைத் தாக்கினர். மலைகளினிடையே மறைந்திருந்து தருணங் கிடைக்கும்பொழுது எதிர்க் கட்சியினரைத் தாக்கிக் கொண்டும் இளம் வாலிபர்களுக்குச் சிறந்த பயிற்சி யளித்தும் கிராமமக்களுக்குச் சேவை புரிந்தனர். சியாங் கைசேக் ஒரு பெருஞ் சேனையுடன் புறப்பட்டு தென் கிழக்குச் சீனவை முற்றுக்கையிட்டான். அங்கிருந்த பொதுவுடைமைக் கட்சியினர் அவ்விடத்திலிருந்து புறப் பட்டு 6000 மைல்களுக்கப்பாற் சென்று வடமேற்குச் சீனவில் தங்கினர்,
32

Page 130
250 ஆசிய கீழ்த்திசை நாடுகள்
1935ல் யப்பானியர் சீனவைத் தாக்கியபொழுது முழுச்சீனவும் ஒற்றுமைப்பட்டுச் சியாங்கை சேக்கின் தலைமையில் சண்டை செய்தும் பல இடங்கள் யப்பானிய ராற் கைப்பற்றப்பட்டன.இருந்தும் மனந்தளராது சீனர் சண்டை செய்தனர். 10 வருடங்களின்பின் யப்பான் அமெரிக்காவுக்குச் சரணுகதியடைந்த பொழுது சீனுவுக் கும் விடுதலை கிடைத்தது. பின் உள்நாட்டுக் கலகம் சியா ங்கை சேக்குக்கும் பொதுவுடமைக் கட்சிகளுக்குமிடை யில் நடைபெற்றது. 1949 வரையில் பொதுவுடமைக் கட்சியினரின் படைகள் தெற்கு நோக்கிச் சென்று அங் குள்ள பிரதான பட்டணங்களையுங் கைப்பற்றிப் பின்பு சீன முழுவதுக்கும் சீன மக்களின் குடியரசு அரசாங்கத் தையும் தாபித்தன.
சீனவுக்குக் கிழக்குப்பக்கத்திலுள்ள பல தீவுகள் சேர்ந்த நாடே யப்பானுகும். சாதிக் கட்டுப்பாடுள்ள நில மானிய முறை நிலவிய யப்பான் தேசம் சிணுவைப்போல் மேனுட்டு நாகரிகத்தையும் வர்த்தகத்தையும் பத்தொன் பதாம் நூற்ருரண்டுவரையும் முற்ற கப் புறக்கணித்து விட்டது. பழைய காலந்தொட்டு யப்பான் மிக்காடோ என்றழைக்கப்பட்ட அரசரால் ஆளப்பட்டு வந்தது. காலஞ் செல்ல மிக்காடோ பெயரளவில் அரசனுக இருக்க, அதிகாரம் ஷோகன் என்ற மந்திரியிடமும் பிரபுக்களிடமுமிருந்தது. 1853 ல் பிறநாட்டவர்கள் யப் பானுக்குள் புகவிடும் வண்ணம் பெரி என்ற அமெரிக்க கடற்படைத் தலைவன் ஷோகனேடு ஒழுங்குசெய்தான். பின்பு அமெரிக்கர் வர்த்தகஞ் செய்யுமுரிமையை யப்பா னியரிடமிருந்து பெற்றுக்கொள்ள பிரித் தா னி யரும் ஏனைய சில ஐரோப்பியரும் அங்கு சென்றனர். சென்ற மேனுட்டவர்களுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புக்காட்டினர். பிரித்தானியர், அமெரிக்கர், பிரான்சியர், ஒல்லாந்தர் ஆகியோரின் கடற்படைகள் யப்பானிய துறைமுகங் களுக்குச் சென்று இருமுறைகளில் அவைகளைத் தாக் கின. தங்களிலும் பார்க்க மேனுட்டவர் படைப்பலத்திற் கூடியவர்கள் என்பது அவர்களுக்குப் புலப்பட்டது.

ஆசிய கீழ்த்திசை ETG sisir 251
பிரபுக்களின் உதவியோடு இழந்துபோன அதிகா ரத்தைப் பெற்ற முத்சுயிட்டோ என்ற மிக்காடோ சிம் மாசனமேறியவுடன் தன்னுடைய மந்திரிமாருடைய யோசனைப்படி யப்பான் தேசத்தை மேல்நாடுகளைப் போல் பலமடையச் செய்யவேண்டுமென்று தீர்மானஞ் செய்தனர். பின்பு இங்கிலாந்திலுள்ள சில விற்பன் னர்களை அழைப்பித்து அவர்களுடைய உதவியுடன் புகையிரத வீதிகளும் அமைக்கப்பட்டு கடற்படையும் நிறு வப்பட்டது. பிரான்சியரால் யப்பானிய போர்வீரர்கட் குப் படைப்பயிற்சி யளிக்கப்பட்டதுமல்லாது நாட்டின் சட்டங்களுந் திருத்தியமைக்கப்பட்டன. தபாற்சேவையி லும், கல்வி முறையிலும் அமெரிக்கருடைய உதவியுடன் திருத்தங்களேற்படுத்தப்பட்டன. ஜேர்மனியர் வைத்தி யக் கல்வியிலும் தலதாபனங்களிலும் வேண்டிய திருத் தங்களைச் செய்துதவினர். பத்து வருடங்களுக்குள் யப்பான் மேனுட்டின் பயிற்சி பெற்றதனுல் அங்நாடு க3ளப் போன்ற நிலையை எய்தியது. யப்பானியரிற் சில தலைவர்கள் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கே பல கஜலத்துறைகளிலும் பயிற்சிபெற்றனர். மக்களனைவோ ரும் மிக்காடோவுக்குத் தங்கள் விசுவாசத்தைக் காட்டித் தேசப்பற்றுடையவர்களானர்கள்.மிக்காடோவுக்குப் பல அரசியல் நிபுணர்கள் அதிக உதவிபுரிந்தனர். பிரதான மாக மார்க்குவிஸ் இட்டோ ஐரோப்பாவுக்குச் சென்று ஜேர்மனிய தேசத்தின் சேனையையும் அரசாங்கத்தை யும் போல யப்பானில் அமைத்தான். பின்பு பிரித்தானி யருடைய கடற்படையைப்போல ஒரு கடற்படையும் நிறுவப்பட்டது. ”ܪ
ரூஷியர் தங்கள் செல்வாக்கை மஞ்சூரியாவில் பரப் பும் நோக்கமுடையவர்களா யிருந்தபடியால், கோரியா வையுங் கைப்பற்றுவர் எனக் கருதி 1902-ல் யப்பானும் பிரித்தானியாவும் தங்களிலொருவரையும் பிறநாடுகள் தாக்கினல் ஒருவர்க்கொருவர் படைத்துணே புரிவதாக உடன்படிக்கை எழுதிக்கொண்டனர். ரூஷியர் மஞ்சூரி யாவிலும் கோரியாவிலும் தங்கள் கவனத்தைச் செலுத்

Page 131
252 ஆசிய கீழ்த்திசை நாடுகள்
தியபடியால் 1904-ல் யப்பான் ரூஷியாமீது போருக் கெழுந்தது. இந்த யுத்தத்தில் கடற்சண்டையிலும் தரைச் சண்டையிலும் யப்பானியர் ரூஷியரைத் தோற்கடித்த னர். அமெரிக் க ஐக் கி ய B ர ட் டு த் தலைவரான றுTசெவெல்டு தலையிட்டு இருபகுதியாருக்குமிடையிற் சமா தானத்தை ஏற்படுத்தினர். ரூஷியா மஞ்சூரியாவை விட்டுவிலகவும் கோரியாவில் யப்பானியருக்கு விசேஷ உரிமையுங் கொடுக்க கேரிட்டது. லியதுங்கிலும் யப்பா னியர் உரிமை பெற்றனர். சிறிது காலத்திற்குள் கோரி யாவை யப்பானியர் தங்கள் ஆளுகைக் குட்படுத்தினர். முதலாம் உலக யுத்தத்தில் யப்பான் செய்த சேவைக் காக, யுத்தம் முடிவடைந்தவுடன் சீனவில் யப்பானிய ருக்கு விசேஷ உரிமையும் கியாச்செளவுங் கொடுக்கப்
Lt-GOT.
வினுக்கள் 1. சீனர் ஐரோப்பியரோடு தொடர்புவைக்க வேண்டி நேர்ந்த சம்ப
வங்களை விபரித்தெழுதுக. 2. பொதுவுடமைக் கட்சி சீனுவிற் பலமடைந்ததற்குக் காரணம்
என்ன?
சன்யாட்சென் சீனுவிற்குச் செய்த சேவைகள் யாவை ?
4. யப்பானியர் மேனுட்டு முறைப்படி தங்கள் நாட்டில் என்ன மாற்
றங்களைச் செய்தனர்? 5. ரூஷியாவுக்கும் யப்பானுக்குமிடையில் நடந்த போரைப்பற்றி
விபரித்தெழுதுக.

இருபத்திரண்டாம் அத்தியாயம் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும்
அமெரிக்காவிலுள்ள பதின்மூன்று குடியேற்ற நாடு களும் ஏழு வருடங்களாகத் தொடர்ந்து சண்டைசெய்து மூன்ருரம் ஜோர்ஜ் மன்னனிடமிருந்து தங்களுடைய சுதந்திரத்தைப் பெற்றனர் என்ற வரலாற்றை முன் னுெரு அத்தியாயத்திற் படித்திருக்கிருேரம். ஆனல் 1783ல் அந்நாடுகள் சுதந்திரத்தைப் பெற்றபொழுது, யுத் தத்தை நடத்துவதற்காக கூட்டப்பெற்ற 'காங்கிரஸ்" என்னும் பிரதிநிதிச் சபையைவிட அவைகளை ஒன்று சேர்க்கக்கூடிய தாபனமொன்றுமே கிடையாது. பிரதி நிதிகளைக்கொண்டுள்ள அச்சபைக்கு குடியேற்ற நாடு கள்மீது ஒருவகையான அதிகாரமுங் கிடையாது. ஒவ் வொரு தனிநாடும் அதனுடைய சுதந்திரத்தைப் பாது காக்கும் நோக்கத்தினுல் ஏனைய குடியேற்ற நாடுகளி லிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களில்கூட வரி விதித்தது. அவைகளிடையே சச்சரவுகளும் காணப் பட்டன. சுதந்திரப்போர் தொடங்கும் வரையும் ஒவ் வொரு நாடும் தமக்குரிய விஷயங்களைத் தாமே நடத்தி வந்தது. ஆனல் வருங்காலத்தில் ஒரு சாதியினராக ஐக்கியப்பட்டு அரசாங்கத்தையும் மற்றும் விஷயங்களை யும் நடத்துவதற்கு வழிவகை தேடவேண்டியது அத்தி யாவசியமாயிற்று.
எல்லா நாடுகளிலுமுள்ள தலைவர்களுஞ் சேர்ந்து தங்களுடைய பாதுகாப்புக்கும் நலனுக்காகவும் ஐக்கி யப்பட வேண்டுமென உணர்ந்து, அ வ் வித மா ன வழியைத் தேடிக்கொள்ளாதவிடத்து ஐரோப்பிய வல்லா கஜளத் தங்கள் விஷயங்களிலே தலையிடும்படி தாங்களே வரவழைப்பதாகுமென அபிப்பிராயப்பட்டனர். தங்களு டைய கருத்துக்களை வெளிப்படுத்தித் தீர்மானஞ் செய் வதற்காக 1787-ல் பிலாடெல்பியா என்ற இடத்தில் ால்லா 5ாடுகளின் பிரதிநிதிகளுஞ் சந்தித்து ஒரு மகா

Page 132
254 அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும்
நாட்டை நடத்தினர். தனது சொந்த நாட்டின் பிரதி நிதியாக வந்த உவாஷிங்டன் அம்மகாநாட்டின் தலைவ ராகத் தெரியப்பட்டார். என்னென்ன செய்யவேண்டு மென்ற நிபந்தனைகளைக்கொண்டுள்ள சாதனமொன்று வரையப்பட்டது. அதுவே கீர்த்திவாய்ந்த அமெரிக்க அரசியற்திட்டமாகும். எல்லா நாடுகளுஞ்சேர்ந்த சமஷ்டி அரசாங்கம் நிறுவப்படவேண்டுமெனத் தீர்மானஞ்செய் யப்பட்டது. அதன்பிரகாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் தம் சொந்தவிஷயங்களை நடத்தும்பொறுப்பு விடப்பட்டது. ஆனல் பாதுகாப்பு, பணவிஷயம், தபாற்சேவை, புகை யிரதசேவை, வெளிநாட்டு வர்த்தகம், அங்கியநாடுகளோடு போர்தொடுத்தல், உடன்படிக்கை எழுதல் ஆகிய முழு அமெரிக் க சாதியினரைப்பற்றிய பொறுப்பான விஷயங்களை நடத்துவதற்கு ஒ வ் வொரு மாகா ணத்திலுள்ள பிரதிநிதிகளைக்கொண்டுள்ள மத்திய அர சாங்கம் தாபிக்கப்படவேண்டுமென்றுழ் குறிப்பிடப்பட் டது. அரசனெருவனை நியமிக்கும் கொள்கைக்கு முழு அமெரிக்கரும் வெறுப்புக்காட்டி, நான்கு வருடங்களுக் கொருமுறை ஒரு தலைவனைத் தெரிவுசெய்ய வேண்டு மென்றும் அபிப்பிராயப்பட்டனர். ஜோர்ஜ் உவாஜிங் டனே முதற்தலைவனுகத் தெரிவுசெய்யப்பட்டான். மந்திரி மார்களே நியமிக்கும் அதிகாரம் இன்னும் பல அதிகா ரங்களும் தலைவனுக்கு அளிக்கப்பட்டன. திேவழங்கும் பெரிய நீதிஸ்தலமும் இரு சபைகளைக் கொண்டுள்ள பெரும் மன்றமொன்றும் தாபிக்கப்படவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டது. ஒன்று மேற்சபை அல்லது செனேட் சபையென்றும் மற்றது கீழ்ச்சபை அல்லது மக்கள் பிரதிநிதிச்சபை யென்றும் அழைக்கப்பட்டது. மேற் சபைக்கு ஒவ்வொரு நாடும் இரு அங்கத்தவர்களே அனுப் பினது. சனத்தொகையின் பிரகாரமே அங்கத்தவர் கள் கீழ்ச்சபைக் குத் தெரியப்பட்டனர். அந்தச் சிறந்த சமஷ்டி அரசியல்முறை கனடா, அவுஸ்திரேலியா முத லிய 5ாடுகள் பின்பற்றக்கூடியதாக விருந்தது, குடி யேற்ற நாடுகளின் சுதந்திரத்துக்காக போரை நடத்தி

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும் 255
வெற்றியீட்டிய உவாஷிங்டனே புதிய அரசாங்கத்துக் குத் தலைவனுகத் தெரிவுசெய்யப்பட்டான். சுயநலங்கரு தாத கீர்த்திபெற்ற அப்பெரியார் எட்டுவருடங்களாக தனது நண்பனும். காரியதரிசியுமான அலெக்சாந்தர் கமில்டனுடைய உதவியுடன் புதிய அரசாங்கத்தை ஸ்திரப்படுத்திவைத்தார்.
அமெரிக்க சுதந்திரப்போர் முடிந்தபின் 1783-ல் எழுதிய உடன்படிக்கையின் பிரகாரம் போர் நடக்கும் போது பிரித்தானியாவுக்கு விசுவாசங் காட்டிநின்ற குடியேற்றவாசிகளுக்கு நட்டஈடு கொடுப்பதாக வாக்குச் செய்த அமெரிக்க நாடுகள் அதை நிறைவேற்றத் தவ றினமையால் அது பிரித்தானியருக்குக் கோபத்தை உண்டாக்கியது. பிரான்சிய புரட்சியேற்பட்டபொழுது இரு நாட்டவர்களுக்குமிடையிலுள்ள பிரிவினை கூடிக் கொண்டது. சுதந்திரப்போரில் தங்களுக்காகப் பங்கு பற்றிய பிரான்சிய மக்களுக்காக அமெரிக்கநாடுகள் சண்டைசெய்ய வேண்டுமென விரும்பியபொழுதும் உவா ஷிங்டன் நடுவுநிலைமையை விரும்பினன். அமெரிக்க ருடைய வெளிநாட்டு வியாபாரத்தில் பிரித்தானிய கடற் படை தலையிட்டபொழுது அமெரிக்க மக்களுக்குப் பிரான்சுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற உணர்ச்சி கூடியது. பிரான்சின் குடியேற்ற நாடுகளிலிருந்து அங் குள்ள பொருட்கள் அமெரிக்க கப்பல்களில் பிரான் சுக்குக் கொண்டுபோகப்பட்டபொழுது பிரித்தானியர் அதைத் தடுத்தனர். மேலும் பிரித்தானிய கடற்படையி லிருந்து விலகி ஓடிய மாலும்கள் அமெரிக்க கப்பல்க 'ளில் பாதுகாப்புக்காக போய்ச்சேர்ந்தனர். வலோற்கார மாக அமெரிக்க கப்பல்களிலிருந்த அவ்விதமானவர் களை கைதுசெய்தபொழுது அமெரிக்காவிலுள்ள மக்கள் கோபாவேசங்கொண்டனர்.
இதுவரையில் அமெரிக்காவிற் தோன்றிய சமஷ்டிக் கட்சி, குடியரசுக்கட்சி ஆகிய ஒவ்வொரு அரசியற்கட்சி யும் ஐரோப்பிய யுத்தத்தைப்பற்றி வேறுபட்ட கொள்

Page 133
256 அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும்
مجھی
கைகளை வைத்திருந்தது. சமஷ்டிக்கட்சிக்குத் தலைவன கிய உவாஷிங்டன் பிரித்தானியாவோடு பகைமைகாட்ட விரும்பவில்லை. ஆனல் மற்றக்கட்சியின் தலைவன் யெபே சன் பிரித்தானியாவுக்கு மாருரக பிரான்சுக்கு அனுதா பத்தைக் காட்டினன். 1801-ல் சமஷ்டிக் கட்சியினர் அதிகாரத்தையிழக்க குடியரசுக் கட்சியைச் சார்ந்த யெபேசன் அமெரிக்காவுக்குத் தலைவனனன். அக்காலத் தில் அமெரிக்காவில் பிரான்சின் கையிலிருந்த லூசியனு மாகாணத்தை, பிரித்தானியாவுக்கும் அமெரிக்க நாடு களுக்கும் ஒற்றுமை ஏற்படாமற் தடுக்கும் நோக்கத் துடன் விற்றுவிடுவதற்குச் சம்மதித்தான். உடனே யெபேசன் அமெரிக்க நாடுகளுடன் அம்மாகாணத்தைச் சேர்த்துக்கொண்டான். நெப்போலிய யுத்தம் நடை பெற்றபொழுது பிரித்தானியாவாலும், நெப்போலியனு அலும் ஏற்படுத்தப்பட்ட வர்த்தகக் கட்டுப்பாடு அமெரிக்க ருடைய வர்த்தகத்தை மிகவும் பாதித்தது. அதுவுமல்லா மல் அமெரிக்காவின் கடற்பகுதியும் கட்டுப்பாட்டிலமர்க் தது. அக்கட்டுப்பாட்டை நடத்திய கப்பல்கள் அமெரிக்க ரின் கப்பல் ஒன்றைத் தாக்கியபொழுது (1807) அமெ ரிக்க நாட்டு மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பாது காக்க வேண்டுமென்றும், பிரித்தானியரின் கடலாட் சியை நிராகரிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தனர். கனடாவைக் கைப்பற்றுமெண்ணமும் அமெரிக்கருக்கு இருந்தது. இவ்விதமான மனநிலை போரைத்தொடங்கத் துாண்டியது. கடற்சண்டைகளில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். கனடாவைக் கைப்பற்றுவதற்கு அமெரிக் காவிலிருந்து புறப்பட்ட சேனை கனடாவிலுள்ள சேனை யிலும்பார்க்கப் பன்மடங்கு பெரிதாகவிருந்தபோதிலும் அது விரைவில் சரணுகதியடைய நேரிட்டது. இப் போரின் பிற்பகுதியில் பிரித்தானிய கடற்படையும் போர்வீரரும் கனடாவுக்குச் சென்றதும் போர் சீக்கிரத் தில் முடிவடைந்தது. இப்போர் கனடாவிலுள்ள மக்க ளின் தேசாபிமானத்தை மேலும் கூட்டியது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப் போரும் 25
தென் அமெரிக்காவில் ஸ்பானியரா லாளப்பட்ட குடியேற்ற நாடுகளில் செவ்வனே நிர்வாகம் நடத்தப் படாமையால் அங்காடுகள் கிளர்ச்சியை உண்டாக்கின. ஸ்பானியாவுக்கு உதவிசெய்வதற்காக பிரான்சும், ரூஷி யாவும் முன்வந்தன. ஆனல் அவர்களின் துருப்புகள் தென் அமெரிக்காவுக்குச் செல்லாவண்ணம் பிரித்தா னியருடைய கடற்படை தடுத்தது. பின்பு பிரித்தானியா தென் அமெரிக்க குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அதுவுமல்லாமல் பிரித்தானிய வெளி நாட்டு மந்திரியாகிய கானிங் பிரபு ஐக்கிய அமெரிக்கா வும் பகிரங்கமாக அதேவிதமான கொள்கை வெளிப் படுத்தவேண்டுமென அங்காட்டுத் தலைவனுக்குச் செய்தி யனுப்பினன். அதன்பயணுக அமெரிக்க நாடுகளின் தலைவரான மொன்றே என்பவர் ஐரோப்பிய வல்லரசு கள் தென் அமெரிக்காவில் தலையிட்டால் ஐக்கிய அமெ ரிக்க நாடுகள் எதிர்ப்புக் காட்டுமென வெளியரங்கப் படுத்தினர். ஆரம்பத்தில் மொன்றேரக்கொள்கை பிரித் தானியருடைய கொள்கைக்கு ஆதரவாகவிருந்தபோதி லும் அது பிரித்தானியாவுக்கும் ஏனைய ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் ஓர் எச்சரிக்கையாகவிருந்தது.
வீயன்னு மகாநாட்டின் (1815) அடுத்த 45 வருடங் களுக்குள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சனத்தொகை விரைவாகக் கூடியது. ஐரோப்பாக் கண்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் போய்ச்சேர்ந்தனர். ஆரம் பத்தில் பிரித்தானியாவி லிருந்தும் பின் அயர்லாந்தி லிருந்தும் ஏராளமான மக்கள் அமெரிக்காவிற்போய்க் குடியேறினர். 1822-ல் ஏற்பட்ட பஞ்சத்தினுலும் 1845-ல் அங்கே காணப்பட்ட கஷ்டமான நிலையினுலும் அயர் லாந்திலுள்ள மக்கள் தங்களுடைய நாட்டைவிட்டு வெளி யேறினர். 1848-ல் ஏற்பட்ட புரட்சியின்புயணுக ஜேர் மனி, வட ஐரோப்பா முதலிய நாடுகளிலிருந்து அ5ே கர் புறப்பட்டனர். திரள் திரளாக வந்த ஐரோபியர் பிரதானமாக அயர்லாந்து மக்கள், மேற்கு 5ோக்கிச் சென்ற அமெரிக்க மக்களால் வெற்றிடமாக்கப்பட்ட
33

Page 134
258 அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப்போரும்,
கீழ்த்திசையிலுள்ள நகரங்களிற் குடியேறினர். அமெ ரிக்கர் மேற்குத்திசையிற் பரவி புதிய குடியேற்றங்களை அமைத்துக்கொண்டனர். பின்பு ருெக்கி மலைகளையுங் கடந்து கலிபோனியாப் பகுதியையும் தம் வசமாக்கினர். அங்கு பொன், வெள்ளி ஏராளமாய்க் காணப்பட்டமை யால் சனச்செறிவு அதிகரித்தது. 1815-ம் ஆண்டுக்கும் 1860-ம் ஆண்டுக்குமிடையிலுள்ள 45 வருடகாலத்திலும் 13 புதிய குடியேற்றநாடுகள் ஐக்கிய அமெரிக்காவோடு சேர்க்கப்பட்டன. 1860-ல் காணப்பட்ட 31 நாடுகளி ஆலும் 16 நாடுகள் அலக்கணி மலைகளுக்கு மேற்கே யிருந்தன. -
இவ்விதமாகச் சனத்தொகை கூடினமையாலும் புதிய குடியேற்றங்கள் தோன்றினமையாலும், வெவ் வேறன கொள்கைகளும், மனப்பான்மையுமுள்ள மக் கட்கூட்டம் செறிந்த மேற்கு, வடக்கு, தெற்கு என் னும் மூன்று பகுதிகள் அமெரிக்காவிற் காணப்பட்டன. மேற்குத்திசைப் பகுதியிற் பரவிய குடியேற்றக்காரர் செய்த முயற்சிகள் வியக்கத்தக்கன. ஆரம்பத்திற் சென்ற குடியேற்றவீரர் காடுகளை வெட்டியும், மிருகங் களே வேட்டையாடியும், நாகரிகமற்ற செவ்விந்தியரை துரத்தியுஞ் சென்றனர். அவர்களோடு எ தி ர் த் து ச் சண்டைசெய்ய ஆயுதமேனும், பெருந்தொகையான மக்க ளேனும் செவ்விந்தியரிடமில்லை. குடியேற்றக்காரர் முரட் டுக்குணமும், சண்டைசெய்யும் இயல்பும் சகிப்புத்தன்மை யும் உடையர். செவ்விந்தியர் மேற்குநோக்கிச் செல்லக் குடியேற்றக்காரரும் தொடர்ந்து சென்று நிலங்களை வயல்களாக மாற்றியும் பாதைகளையும் பட்டணங்களை யும் அமைத்தும் அவ்விடங்களைத் தம் வசப்படுத்தினர். கலிபோர்னியாவிலும், அலெஸ்காவிலும் பொன் கண்டு பிடிக்கப்பட்ட்போது அநேகர் பெரும் தனவந்த ராயி னர். வடக்கு தெற்கு நாடுகளுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டபோது மேற்குப்பகுதி திருத்தப்பட்டு மன்னிலை எய்தியிருந்தது.

அமேரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப்போரும் 259
அமெரிக்காவின் வடபகுதியிலுள்ள நாடுகளில் கைத் தொழிற் புரட்சியின் பயணுக கைத்தொழில்கள் அதிக முன்னேற்றமடைந்திருந்தன. பெருங் தொழிற்சாலைகள் தாபிக்கப்பட்டு அவைகளில் உற்பத்திபண்ணப்பட்ட பொருள்கள் வியாபாரப் போட்டியினின்று காக்கப் படுவதற்கர்கக் கூடுதலான சுங்கவரி பிறநாட்டுப் பொருட் களில் விதிக்கப்பட்டது. தென்பகுதியிலுள்ள நாடுகளின் விவசாயமே முக்கிய தொழிலாகும். உஷ்ணப்பிரதேசங் களில் விளையும் கரும்பு, கோப்பி, புகையிலை பருத்தி முதலியனவே அப்பகுதியில் உண்டாக்கப்பட்டன. இவற் அறுள் விசேடமானது பருத்திச்செய்கையாம். பருத்திப் பஞ்சிலிருந்து விதைகளைப் பிரிக்குமொரு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் (1793) பருத்திப்பஞ்சின் ஏற்று மதி அதிகரித்திது. பருத்தி ஏற்றுமதி கூடினமையால் தோட்டவேலை செய்வதற்கு தொழிலாளரும் அநேகர் தேவைப்பட்டனர். அவ்வேலையைச் செய்வதற்கு அடிமை களே தேவைப்பட்டமையால் குறைந்துவந்த அடிமை வியாபாரம் மீண்டும் பிரதானமாயிற்று. ஆபிரிக்காவி லிருந்து அடிமைகளைக் கொண்டுவரும் வழக்கம் ஏற் கனவே நிறுத்தப்பட்டிருந்தும் களவாக அடிமை வியா பாரம் பின்பும் நடைபெற்றது. 1833-ல் பிரித்தானிய சக்கராதிபத்தியத்துள் அடங்கிய நாடுகளில் அடிமை யொழிக்கப்பட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் பிரித்தானியாவைப் பின்பற்றின. அமெரிக்கத் தென் நாடுகளில் அடிமைகள் தோட்டங்களில் வேலைசெய்வ தற்குத் தேவையாக இருக்தமையால் அடிமையொழிக் கப்படவேண்டுமென்ற சட்டத்தைக்கொண்டுவர முடியாம லிருந்தது. 1861 வரையில் நான்கு இலட்சம் அடிமை களுக்குமேல் அமெரிக்காவி லிருந்தனர். அவ்வடிமைக ளுக்கு விடுதலை அளித்தால் தங்களுடைய விவசாயத் துக்கு பெரும் 5ட்டமேற்படுமென தென்பகுதியிலுள்ள நாடுகள் அச்சமுற்றன. ஆனல் வடநாட்டினர் அடிமை முறையை வெறுத்தனர். தென்நாடுகளின் பொருளா தாரமும், சமுதாயமும் அடிமை முறையிலேயே தங்கி

Page 135
260 அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப்போரும்
யிருந்தது. வடநாட்டினரிடையே காணப்பட்ட அடிமை முறை எதிர்ப்பும், வர்த்தகக் கட்டுப்பாடும் தென்காட் டினருக்கு கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கி யது. 1850 தொடக்கம் பத்து வருடங்களாக அடிமை யைப்பற்றிய பிரச்சினை இருபகுதியாருக்கு மிடையில் பெருஞ் சச்சரவுகளை உண்டாக கியது. வடபகுதியினர் எழுதி வெளியிட்ட ‘ரொம் மாமனின் குடிசை” என்ற நூல் அடிமைகள் அனுபவித்த கஷ்டங்களையும் கிஷ்டு ரங்களையும் படம்போன்று விஸ்திரித்துக் காட்டினமை யால் மக்களனைபேரும் அடிமைகளுக்கு அனுதாபங் கொண்டிருந்தனர். ஆனல் தங்களுடைய முன்னேற்றம் அடிமைகளின் முயற்சியிலே தங்கியிருந்தமையால் தாங் கள் அடிமையை யொழித்துவிடுவதிற் பார்க்க ஐக்கிய அரசாங்கத்தினின்று நீக்கிவிடுவது நன்றெனக்கூறினர். அதுவுமல்லாமல் வடநாடுகளிற் சனத்தொகை கூடிக் கொண்டுபோனமையாலும், மேற்கே புதிய குடியேற்ற நாடு க ள் அதிகரித்துக்கொண்டு போனமையினுலும் அடிமை ஒழிக்க நேரிடுமென்றும் அச்சமுற்றனர். ஆகை யால் தாங்கள் ஐக்கிய அரசாங்கத்தினின்று விலகிக் கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டென்றும் வாதாடத் தொடங்கினர். ஆனல் வடநாட்டினர் அவ்வுரிமையை மறுத்தனர்.
1860-ல் நடந்த தேர்தலில் மேற்குக் குடியேற்றப் பகுதியிலுள்ள ஆபிரகாம்லிங்கன் என்பவன் ஜனதிபதி யாகத் தெரிவுசெய்யப்பட்டான். லிங்கன் 1809ம் ஆண்டு கென்ரக்கி என்ற குடியேற்ற 5ாட்டிற் பிறந்தான். அவ னுடைய தந்தை எழுதவோ வாசிக்கவோ தெரியாத ஒரு விவசாயி. லிங்கன் பத்தொன்பதாவது வயதா யிருக்கும்பொழுது அவனுடைய தந்தை இலினுேயிஸ் என்ற இடத்திற் குடியேறினன். இதுவரையில் லிங்கன் எழுதவ்ாசிக்கப் பழகிக்கொண்டான். இவன் பருத்தித் தொழில் செய்யுமிடத்துக்குச் சென்றபொழுது அடிமை களின் நிலையைக் கண்ணுற்று அடிமையை ஒழிப்பதற் குத் தான் சண்டையிடவேண்டுமென உணர்ந்தான்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்நாட்டுப்போரும் 261
பின்பு அவனது சொந்த இடத்தில் நடைபெற்ற தேர்த லில் அவனுக்கு எழுத்துவேலை கொடுபட்டபொழுது அவன் தான் அரசியற்துறையில் ஈடுபடவேண்டுமென நினைந்தான். அவன் தன்னுடைய இருபத்தேழாவது வயதில் தான் வசித்த குடியேற்றநாட்டின் நிர்வாக ச  ைபக்கு அங்கத்தவனகத் தெரிவுசெய்யப்பட்டான். பின்பு சட்ட கல்வி பயின்று அத்தொழிலை நடத்த ஆரம்பித்தான். பத்து வருடங்களின் பின்பு அவன் அமெரிக்காவிலுள்ள சனபிரதிநிதி சபைக்கு ஒரு அங் கத்தவனுகத் தெரிவுசெய்யப்பட்டான். அடிமைமுறை ஒழிக்கப்படவேண்டுமென்ற இயக்கத்தில் அவன் செய்த பெரும் முயற்சிகளால் அவனுக்குப் பெரும் கீர்த்தி யுண்டானது. 1860-ல் அவன் ஜனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாலு நாட்களின்பின் உள்நாட்டுப்போர் தொடங்கியது. தென்காட்டவர்கள் ஐக்கிய அரசாங்கத்தி னின்று நீங்கி சுதந்திர அரசாங்கத்தை தாபிக்கும் 5ோக்கத்துடன் போர்செய்யத் தொடங்கினர். ஆனல் அடிமையை ஒழிக்கவேண்டுமென்ற ஒரே எண்ணம் மாத் திரமல்ல லிங்கனுடைய மனத்தில் எழுந்தது. அமெரிக்க நாடுகளின் ஐக்கியம் சிதைவுபடாமலிருக்க வேண்டு மென்ற பிரதான எண்ணமே அவனைச் சண்டைசெய் யத் துரண்டியது. தெற்கிலுள்ள பத்துக் குடியேற்ற நாடுகள் ஒன்றுசேர்ந்து செய்த போரில் ஆரம்பத்திற் சில வெற்றிகளைப்பெற்றன. மேற்கு நாடுகளும் வடக்கு நாடுகளோடு சேர்ந்தன. சேனைப் பலத்தினுலும், செல் வத்தினுலும், போர்த் திற்மையினுலும் தென்நாட்டவர் களின் எதிர்ப்பை அட்டிக்கின. 1865 வரையில் தென் நாட்டினர் தோல்வியுறும் நிலையேற்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பே லிங்கன் அடிமையொழிக்கப்பட வேண்டுமென்றும், ஐக்கிய அரசாங்கத்தினின்று பிரிந்து கொள்ள முடியாதென்றும் கூறியதற்கு அவர்கள் சம் மதத்தைக் கொடுத்தனர். யுத்தம் முடிவடைந்த ஐந்தா வது நாள் லிங்கன் கொலைசெய்யப்பட்டிறந்தான். 'இக்
தச் சாதியினர் ஒரு புதிய சுதந்திரத்தைப் பெற்றுக்

Page 136
62 அமெரிக்க ஐக்கிய hTC) களும் உள்நாட்டுப்போரும்
கொள்வர். மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக் களினுடைய அரசாங்கம் பூமியில் ஒருபோதும் அழி வுரு து” என்பதாக லிங்கன் ஒரு பிடிவாத உணர்ச்சி யோடு கூறியது மெச்சத்தக்கதொன்ருரகும். போரினல் இருபகுதியாருக்கு மிடையிற் காணப்பட்ட மனவேற்று மையைச் சாந்தப்படுத்த லிங்கனில்லாமற்போனது ஒரு துரதிர்ஷ்டமெனலாம். லிங்கனின் பின் விஷயங்களைக் கையாண்ட தலைவர்கள் தென்நாடுகளைச் சிறந்தமுறை யில் நடத்தி அவைகளின் நட்பைப் பெறவில்லை. அடிமை களும் விடுதலைபெற்றபின் பிரசாவுரிமையும் பெற்றனர்.
பத்தொன்பதாம் நூற்ருரண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சனத்தொகையும் செல்வமும் அதிகரித்தன. மேற்குப்பகுதியில் இருந்ததிலும்பார்க்க பல குடியேற்ற நாடுகள் கூடினமையால் ஒருமித்து 48 நாடுகள் காணப் பட்டன. புகையிரதவீதிகள் அமைக்கப்பட்டதோடு விவ சாயத்தை விருத்திசெய்வதற்கு வேண்டிய இயந்திரங் கள் பாவிப்புக்குக் கொண்டுவரப்பட்டன. ஐரோப்பாவி லிருந்து திரளான மக்கள் போய்க் குடியேறினர். சீன ரும், யப்பானியரும் கலிபோர்னியாவிற் குடியேறிய பொழுது ஆசியாவிலுள்ளோர் மேலும் வராமற் கட்டுப்பாடுகளுண்டாக்கப்பட்டன. பல புதிய நகரங்கள் தோன்றின. கைத்தொழிலில் நாடு முன்னேற்றமடைந் தது. சங்கவரி வெளிநாட்டு இறக்குமதிப்பொருட்களில் விதிக்கப்பட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் போட்டியினின்று பாதுகாக்கப்பட்டன. பிற நாடுகளின் விஷயங்களிலே தலையிடாமலிருப்பது அமெ ரிக்க அரசாங்கத்தின் கொள்கையா யிருந்தபோதிலும் பசிபிக்சமுத்திரத்திலுள்ள சமோவாவையும் ஹாவாய்த் தீவுகளையும் பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி யில் தம் வசமாக்கியது. பின்பு பிலிப்பைன் தீவுகளும் ஸ்பானியாவிடமிருந்து கைப்பற்றப்பட்டன. அக்காலத் திலேயே மத்திய அமெரிக்காவிலுள்ள பனமாக்கால் வாயை வெட்டி கப்பல்கள் தென் அமெரிக்காவைச் சுற்

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்காட்டுப்போரும் 263
றிப் போகாமல் அக்கால்வாயைப் பாவிக்கக்கூடிய வசதி அளிக்கப்பட்டது.
முதலாம் உலகயுத்தம் நடைபெற்றபொழுது அங் கிய நாட்டு விஷயங்களிலே கலையிடாத கொள்கையி னின்று வழுவாதிருக்கவேண்டுமென்று எண்ணியிருந்த பொழுதிலும் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களுண்டாக் கிய இடையூறினுலும் ஜனநாயகமுறையைக் காப்பாற் றிக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினலும் பிரித் தானியர் பக்கஞ்சேர்ந்து சண்டையிற் பங்குபற்றினர். ஜனதிபதியாயிருந்த உட்ருே உவில்சன் கரிசனையுடன் போதிய ஆதரவளித்தபடியால் யுத்தம் விரைவில் முடி வடைந்தது. சமாதான உடன்படிக்கையும் உவில்சனின் சிறந்த சில கொள்கைகளை அடிப்படையாக வைத்துத் தான் எழுதப்பட்டது. ஆனல் அமெரிக்க மக்களின் அபிப்பிராயத்தின்படி சர்வதேச சங்கத்தில் அமெரிக்கா சேரவில்லை.
வினுக்கள் 1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிரிவினை ஏற்பட்டதற்குக் காரணங்
கள் யாவை? 2. நெப்போலியனுடைய யுத்தம் நடந்தபொழுது பிரித்தானியாவுக் கெதிரே அமெரிக்கா சண்டை செய்ததற்குரிய காரணங்களை
gh (TITULI 36. 3. மொன்றே கொள்கை என்பதை விளக்குக.
அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் காரணங்களை ஆராய்க. 5. ஆபிரகாம்லிங்கனுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவன் அமெ
ரிக்காவுக்குச் செய்த தொண்டுகளையும்பற்றி எழுதுக. 6. ஐக்கிய அமெரிக்க நாடுகளிேன் பொருளாதார நிலையைப்பற்றி
அறிந்தவற்றைக் لوك ستة .

Page 137
இருபத்துமூன்ரும் அத்தியாயம் dpᏧ5ᎦᏔTIb Ꭷ ,ᎯᎠᏜlllᏧ5ᏧᏏIh ( 1914-1918)
ஜேர்மனி ஐக்கியம்பூண்ட காலங்கொட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்போல ஒரு வலிமைமிகுந்த நாடாக விளங்கியது. பத்தொன்பதாம் நூற்ருரண்டில் ஐரோப் பிய நாடுகள் உலகத்தின் பல்வேறு இடங்களிலும் பரந்த பிரதேசங்களைப் பெற்றிருக்க, ஜேர்மனி அவ்விஷயத் தில் பிற்போக்கான நாடாயிருந்தமையால் ஜேர்மனியர் அதிகம் கவலையும், மற்ற நாடுகளிற் பொருமையுங் கொண்டிருந்தனர். 1870-ல் பிரான்சுக்கும் ஜேர்மனிக்கு மிடையில் நடந்த போரின் முடிவில் பிரான்சியருக்குரிய அல்சேஸ்-லோறேன் மாகாணங்களை ஜேர்மனி அவர் களிடமிருந்து அபகரித்ததையிட்டு அவர்கள் ஜேர்மனி மீது மறக்கமுடியாத கோபமுடையவர்களாயினர். இனித் துருக்கியருடைய வன்மையும் ஐரோப்பாவில் குன்றிப் போனமையால் அங்கே ஒரு சிக்கலான நிலையுமேற்பட் டது. இவ்வாறு பல பிரச்சினைகள் தோன்றினமையால் அவைகள் அதிக சாவதானமாகத் தீர்க்கப்படவேண்டி யிருந்தன. பழைய காலந்தொட்டு வழங்கிவந்த வல்லர சுச்சமநிலை ஒரு நிலையற்றதாகக் காணப்பட்டது. போர்க் கட்சியினர் அதிக அதிகாரத்துட னிருக்கும்பொழுது வல்லரசுச் சமநிலை கவனிக்கப்படமாட்டா தென்பது வெளிப்படை.
ஜேர்மனியில் புதிகாக ஏற்படுத்தப்பட்ட ஐக்கியம் பலமடையும் வரையும் பிஸ்மார்க் அயல்நாடுகளின் நட் பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக்கருதி 1879-ல் அவுஸ்திரிய-ஹங்கேரியுடனும் 1881-ல் ரூஷியாவுடனும் சமாதான உடன்படிக்கைகளை எழுதிக்கொண்டான். இது மூன்று சக்கரவர்த்திகளின் ஒற்றுமை எனப்படும். ஆனல் ரூஷியாவும் அவுஸ்திரிய-ஹங்கேரியும் பால்கன் நாட்டு விஷயங்களில் சிநேகமுறையில் நடந்துகொள் ளாமையால் மூவர் ஒற்றுமை நீடித்திருக்கவில்லை, ரூஷியா

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 265
சிலாவியச் சாதியருள்ள நாடுகளில் ஒரு பலமுடைய நாடாகும். பால்கன் நாடுகளிலுள்ள சிலாவியச் சாதியின ருடைய முன்னேற்றத்தை அவுஸ்திரிய-ஹங்கேரி சிறி தேனும் விரும்பவில்லை. இருபகுதியாருடைய வேற்றுமை யுள்ள மனப்பான்மையே அவர்களிடையே காணப் பட்ட ஒற்றுமைக்குறைவுக்குக் காரணமாகும். ஜேர்மனி ஐக்கியம்பூண்டவுடன் பிரஸ்ஸியாவின் அரசன் ஜேர் மன் சக்கரவர்த்தியாயும் பிஸ்மார்க் பிரதம சக்கராதி பத்திய மந்திரியாகவும் அமர்ந்தனர். வெளிநாட்டு விஷ யங்களும் போர்ப்படைகளின் மீது அதிகாரமும் இருவர் கையிலுமிருந்தன. ஆனல் பிஸ்மார்க்கின் செல்வாக்கு இருக்குமளவும் முழு அதிகாரமும் அவன் பொறுப்பி லேயேயிருந்தது. ஆனல் கடற்படையும், குடியேற்ற நாடுகளின் விஷயங்களும் "மீஸ் ராக்" (மக்கட் தேசீய சபை) என்ற சபையின் பொறுப்பிலிருந்தன.
பிஸ்மார்க் 1884-ம் ஆண்டுவரையும் ஜேர்மனிக்கு ஒரு கடற்படையை நிறுவுவதிலோ அல்லது குடியேற்ற நாடுகளை ஸ்காபிப்பதிலோ கவனஞ் செலுத்தவில்லை. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்பார்க்கிலும் உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் குடியரசு ஸ்தாபனங்களை நாட்டு வதில் முற்போக்கடையாமையினல், அவ்வண்ணஞ் செய் வதற்கும், அவைகளைப் பாதுகாப்பகற்கும் ஒரு திறமை வாய்ந்த கடற்படை தேவையென வுணர்ந்தான். இனி ஜேர்மனி கைத்தொழிலிலும் வர்த்தகத்திலும் அதிக விருத்தியடைந்தமையினுல் உலகத்திலுள்ள வியாபார ஸ்தலங்களெல்லாவற்றிலும்பிரித்தானியாவோடும் அமெ ரிக்க ஐக்கிய நாடுகள்ேடும் போட்டியிடக் கூடியதாக விருந்தது.
ஜேர்மனி, முன்பு மூன்று சக்கரவர்த்திகளின் ஒற்று மையை நிலை5ாட்டும் உடன்படிக்கையை எழுதியதுபோல் 1882-ல் இத்தாலி, அவுஸ்திரிய-ஹங்கேரியோடு சேர்ந்து தற்பாதுகாப்பான மூவர் ஒப்பந்தத்தைச் செய்துகொண் டது. யாதேனுமிரு5ாடுகள் சொல்லப்பட்ட் மூன்று
34

Page 138
266 முதலாம் உலகயுத்தம் (1914-1918)
நாடுகளிலுமொன்றுக்கெதிரே போருக்கெழுக்தால் மற்ற இருகாடுகளும் ஒப்பந்தஞ்செய்துகொண்ட நாட்டின் சார் பிற் சண்டை செய்வதாயும், தங்களிலொருவர் இன் னுெரு நாட்டிற்கெதிரே போருக்கெழுந்தால் மற்ற இரு நாடுகளும் உதவிசெய்ய வேண்டியதில்லையென்றும் நிய மனஞ் செய்துகொள்ளப்பட்டது. 1888-ல் இளவரசனன உவில்லியம் சிங்கா சனமேறியவுடன் ஜேர்மனியின் கடற் படை, தரைப்படைகளைப் பெருப்பிக்கவேண்டுமென்று பகிரங்கமாகக் கூறினன். இரண்டு ஆண்டுகளின்பின் அவன் பிஸ்மார்க்கை நீக்கிவிட்டுத் தானே அரசாளத் தொடங்கினன். ஜேர்மன் சாதியினரிடம் தேசப்பற்றை உண்டாக்கினன். பாடசாலைகளிலும், சர்வகலாசாலைகளி லும் மாணவர்களுக்குப் பாட5ேரங்களிற் தேசபக்தி யுண்டாகக்கூடிய முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது. ஜேர்மனி புதிதாகப் பெற்றுள்ள பெருமையை மக்க ளிடம் செறியத்தக்கதாக அரசாங்கம் முயன்றது. புதிய கெய்சருக்கு (சக்கரவர்த்தி) மக்களிடம் விசுவாசம் உண் டாகத்தக்கதாகவும், தேசபக்தி உண்டாகத்தக்கதாக வும் பிரசாரஞ் செய்யப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிர்ப் புக்காட்டியவர்கள் அடக்கப்பட்டனர். ஜேர்மனியர் தங் களுடைய கடற்படையைப் பெருப்பித்துப் பலமுறச் செய்தவுடன் பிரித்தானியர் தங்க%ளத் தாக்கவே அக் கடற்படை நிறுவப்பட்டதெனச் சிந்திக்கலாயினர்.
மூவர் ஒப்பந்தஞ் செய்யப்பட்டபொழுது பிரான்சும் ரூஷியாவும் சிநேக நாடுகளாயின. பிரித்தானியா மாத் திரம் அவசியமின்றி ஐரோப்பிய விஷயங்களிற் தலையிட விருப்பமில்லாது தனிநாடாகவிருந்தது. ஆனல் ஐரோப் பியருடைய செல்வாக்கு உலகத்தின் பலபாகங்களிலுஞ் செறிந்திருந்தமையால் ஆங் கிலேயருக்கும் ஏனைய ஐரோப்பிய வல்லரசுகளுக்குமிடையில் சச்சரவுகளும் மன வேற்றுமையுங் காணப்பட்டன. ஆபிரிக்காவில் ஒல் லாந்த விவசாயிகளான போயர்களுக்கும் ஆங்கிலேய ருக்குமிடையில் போர் நடந்தபொழுது ஜேர்மனி போயர்

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 267
களுக்கு அனுதாபத்தைக் காட்டியது. ஆகையால், பிரித் தானியா விலகி ஒரு தனி நாடாக மேலும் இருத்தல் கூடாதென நினைந்து யப்பானேடு நேச நாடாகச் சேர்ந்து கொண்டது (1902). 1904-ல் இங்கிலாந்தும் பிரான்சும் மனமுவந்த நட்பு 5ாடுகளாக ஒற்றுமைப்பட்டுக்கொண் டன. அதோடு வடகடலிலிருக்கும் கடற்படையையும் அவர்கள் பலப்படுத்திக்கொள்ள ஜேர்மனியர் அதிக மனததாக கமடைBதனா.
இவ்விதமான நிலையில் சமாதானத்தை நிலைநாட்ட என்ன முயற்சிகள் நடைபெற்றனவென்பதை ஆராய் வோம். ரூஷிய அரசனை சார், ஹேக்கில் ஒரு மகாநாட் டைக் கூடி போருக்குவேண்டிய ஆயத்தங்கள் செப்வ தைத் தடுப்பதற்கு வழிவகைகளைப்பற்றி ஆலோசிப்ப தற்காக ஐரோப்பிய வல்லரசுகளை அழைத்தார். படைப் பலத்தைக் குறைக்கும் எண்ணத்தை ஐரோப்பிய வல் லரசுகள் ஏற்றுக்கொளாவிடினும், இரு5ாடுகளுக்குமிடை யில் எழுந்த விவாதங்களை சமாதானமுறையில் தீர்த்து வைக்கலாமென்ற வழியுணர்த்தப்பட்டது. மீண்டும் 1907ல் கூடிய அம்மகாநாடு விசேஷ தீர்மானங்கள் ஒன்றை யுஞ் செய்ய முடியவில்லை. அப்போது ஐரோப்பிய நாட் டவர்களிடையே காணப்பட்ட மனநிலை ஒரு முடிவான
ஒழுங்கைச் செய்வதற்கு இடங்கொடுக்கவில்லை.
குடியேற்ற நாடுகளை ஸ்தாபிக்கும் போட்டியும் பால் கன் குடாகாட்டில் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு ஏற்பட்ட போட்டியும் ஆகிய இரண்டும் யுத்தத்தின் பிரதான இரு காரணங்களாகும். ஜேர்மனியர் தங்களுடைய 5ாட் டிற் பெருக்கமடைந்த சனத்தொகைக்கு இடங்தேவைப் பட்டமையால் உலகத்தின் ஏனைய பகுதிகளில் குடியரசை ஸ்தாபிக்க எண்ணங்கொண்டனர். அவர்கள் விரைவிற் பெற்ற செல்வமும் செல்வாக்கும் ஐரோப்பாவுக்கப் பாற்பட்ட வ ச தி யு ள் ள இடங்களில் அவர்களுடைய ஆதிக்கத்தை நிலைகாட்ட வேண்டுமென்றும் தூண்டின. உலகத்தில் வசதியுள்ள இடங்களெல்லாம் ஐரோப்பிய

Page 139
268 முதலாம் உலகயுத்தம் (1914-1918)
வல்லரசுகளால் குடியேற்றங்களாக்கப்பட்டன. ஆகை யால் ஜேர்மனி தம் ஆசைபைப் பூர்த்திசெய்வதென்ருரல் மற்ற வல்லரசுகளிட மிருந்து குடியேற்ற நாடுகளைக் கவர்ந்துகொள்ள வேண்டும். ஆனல் ஆபிரிக்காவிலும் பெரும்பகுதியை தமது ஆதிக்கத்தில் முன்பே கொண்டு வந்துவிட்டது. சீனவிலும் சில இடங்க%ளப்பெற்றது. இப்போது வட ஆபிரிக்காவில் கவனத்தைச்செலுத்தத் தொடங்கியது. ஆபிரிக்காவின் வடகரைப்பகுதியிலுள்ள அல்ஜெசிருரசு, மொருெரக்கோ என்ற இரு நாடுகளில் முதலாவது நாடு பிரான்சியருடைய கையிலிருந்தது. அமைதியற்றிருந்த மொருெக்கோவிலும் பிரான்சியர் தங்களாதிக்கத்தைப் பரப்ப முயன்றனர். ஸ்பானியருக் கும் அவ்வெண்ணமிருந்தது. பிரான்சின் சூழ்ச்சியைக் கெடுக்க எண்ணிய ஜேர்மன் சக்கராதிபதி மொருெக்கோ ஒரு சுதந்திரமான நாடாக தாபிப்பதற்கு மகாநாடு ஒன்று கூட்டப்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டமை யால் 1906-ல் கூடிய மகாகாட்டில் ஜேர்மனியின் எண் ணம் பூர்த்தியானது. 1911-ல் மொருெக்கோவில் அமைதி யின்மையுற்றபோது ஜேர்மனி ஒரு பீரங்கிப்படையை யனுப்பப் பிரித்தானியரும் பிரான்சியரும் தலையிட்ட வுடன் ஜேர்மனி விலக5ேரிட்டது.
அவுஸ்திரிய-ஹங்கேரி ஜேர்மனியின் உதவியோடு பால்கன் நாடுகளைக்கவர எண்ணங்கொண்டது. ஆனல் இருநாடுகளும் ரூஷியாவுக்குப் பயந்தன. ரூஷியா பால் கன் நாட்டுச் சிலாவியச் சாதியினருக்கு உதவிபுரிய ஆயத்தமாயிருந்தது. ஆகையால் ஐரோப்பா பொருமை, பயம், கோபம், மனத்தாக்கல் எல்லாம் ஒருமித்துப் பொருந்திய பாசறைபோற் காணப்பட்டது. 1907-ல் பிரித் தானியா, பிரான்சு, ரூஷியா மூன்றுஞ்சேர்ந்து நட்புப் பூண்ட நாடுகளாயின. மூவர் ஒப்பங்கத்திற் சேர்ந்த Bாடுகளாற் தாக்கப்பட்டால நட்புப்பூண்ட மூன்று நாடுக ளும்ஒருவர்க்கொருவர் உதவிசெய்வதாகத்தீர்மானித்தன. ஜேர்மனி, துருக்கியரிலும் பற்றுதல் காட்டியது. கெய்சர் உவில்லியம் கொன் ஸ்தாந்தைன்கோப்பிளையும்

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 269
பலஸ்தீனுவையும் தரிசித்துத் தான் இஸ்லாம் மக்களின் விசேஷ நண்பனுக இருப்பேனென்று கூ றி ன ன். கொன்ஸ்தாந்தைன் கோப்பிளுக்கு எதிரேயுள்ள ஸ்குட் டாரியிலிருந்து பாக்தாதுக்கு ஒரு புகையிரத வீதி அமைப் பதாகவுங். கூறினன். பேர்லினிலிருந்து பாக்தாதுக்கு அமைக்கப்படும் புகையிரத வீதி பிரித்தானியருக்கும் ரூஷி யருக்கும் பெருந்திகிலே உண்டாக்கியது. இதற்கிடையில் பல்கேரியாவுக்கு அரசனுன பேர்டினுந்து பல்கேரியா வைத் துருக்கியரின் ஆதிக்கத்தினின்று நீக்கி அதைச் சுதந்திரநாடெனப் பிரசித்த ஞ்செய்தான். அதன்பின் அவுஸ்திரியா, போஸ்னியா-எர்சகொவினுவைத் தனது இராச்சியத்துடன் சேர்த்துக்கொள்ளச் சேர்பியர் அச்ச முற்றனர்.
இதற்கிடையில் இத்தாலி வட ஆபிரிக்காவிலுள்ள துருக்கியருடைய மாகாணமான திரிப்போலியின்மீது படையெடுத்துச் சென்றது. 1912-ல் பால்கன் நாடுகள் எல்லாம் ஒருமித் துத் துருக்கியரைக் கொன்ஸ்தாந்தைன் கோப்பிளைத் தவிர ஏனைய இடங்களினின்று துரத்தி னர். ஐரோப்பிய வல்லரசுகள் தலையிட்டு ஏற்படுத்திய நிபந்தனைகளின் காரணமாகப் பல்கேரியாவுக்கும் மற் றைய பால்கன் 15ாடுகளுக்குமிடையில் பகைமையுண்டா னது. இதனுல் சேர்பியா, றுமேனியா, கிறீஸ் தங்க ளுக்குள் ஒற்றுமைப்பட்டன. பல்கேரியா, ஜேர்மனி அவுஸ்திரியாவோடு சேர்ந்துகொண்டது. வல்லரசுகளும் அவைகளைச் சேர்ந்த சிறுபூஇராச்சியங்களையுங் கொண் டுள்ள இரு கட்சிகள் தோன்றிவிட்டதைக் கவனிக்க லாம். இரு கட்சிகளையுஞ் சேர்ந்த ந்ாடுகள் போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டன. ஒவ் வொருவரிடமும் அடக்கமுடியாத ஆத்திரமான நிலை காணப்பட்டது. ஒவ்வொரு5ாடும் மற்ற நாட்டின்மேல் உள்ள பயத்தினலேயே போருக்கெழுந்தனரெனலாம்.
யுத்தம் ஆரம்பிப்பதற்கு உடனடியான காரணம் பால்கன் 5ாடுகளில் 5டைபெற்ற சில சம்பவங்களினு

Page 140
270 முதலாம் உலகயுத்தம் (1914-1918)
லேயே உண்டானது. அவுஸ்திரியா-ஹங்கேரியின் இள வரசனன பிரான்சு பேர்டினுந்து தனது 5ாட்டுச் சிலாவி யப் பிரசைகளுக்கு நிர்வாகம் 5டத்தும் விஷயங்களில் ஒரளவு அதிகாரத்தை அளிக்கவிரும்பினன். அதுவரை யும் அவ்விஷயங்கள் அவுஸ்திரிய-ஹங்கேரி மக்களால் 5டத்தப்பட்டன. முதலில் சேர்பியாவின் பலத்தைக் குறைக்க எண்ணினன். 1914-ம் ஆண்டு ஆனிமாதம் அவ னும் அவனுடைய மனைவியும் போஸ்னியாவுக்கூடாகப் பிரயாணஞ் செய்தபொழுது சேர்பியாவுக்குச் சார்பான போஸ்னிய இ%ளஞன் ஒருவனல் அவர்கள் செராஜவோ என்னும் நகரத்தில் கொலைசெய்யப்பட்டனர். அவுஸ் திரியர் ஜேர்மனியின் அனுமதியுடன் போருக்குக்கிளம்ப ஆயத்தப்பட்டனர். சேர்பியாவில் அவுஸ்திரியாவுக்கு விரோதமான எல்லாப் பிரசாரமும் அவுஸ்திரிய உத்தி யோகஸ்தரின் உதவியோடு அடக்கப்பட வேண்டுமென் றும் இன்னும் அவமானமுண்டாகக் கூடிய பல நிபந்த ஐகளோடு 48 மணி நேரத்திற்குள் பதில் அனுப்பவேண் டுமென்றும் ஒரு கடைசி மனுவை அவுஸ்திரியா சேர்பி யாவுக்கு அனுப்பியது. சேர்பிய அரசாங்கத்தார் எல்லாநி பந்தனைகளுக்கும் இணங்காவிடினும் பயத்தோடும் கிதா னமாகவும் பதிலளித்தனர். ஆடி 28-ந் தேதி அவுஸ்திரிய இங்கேரி சேர்பியாமீது போருக்கெழுக்தது. ரூஷியர் (ஒர்பியாவுக்கு உதவி செய்வதற்காகத் தங்கள் படை யைக் திரட்டினர். ரூஷியாவுக்கு எச்சரிக்கை கொடுத்து விட்டு ஜேர்மனி ரூ ஷியா மீது போருக்கெழுந்தது. பிரான்சு படையைத் திரட்டியபொழுது பிரித்தானியா பெல்ஜியத்தின் நடுவுநிலைமையைப் பிரான்சும் ஜேர்மனி யும் rத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்க ஜேர்மனி அதற்கு இணங்காமையால் பிரித்தானியர் ஜேர்மனிக் கெதிரே போர்புரிவதாக பிரசித்தஞ்செய்தனர். யுத்தம் ஆரம்பமானவுடன் மத்திய வல்லரசுகள் என்றழைக்கப் பட்ட் ஜேர்மனி, அவுஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகள் நேரதேச நாடுகளாகிய பெரிய பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம், ரூஷியா,

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 271
பியா, இத்தாலி, யப்பான் முதலிய நாடுகளுக்கெதிரா கச் சண்டைசெய்தன.
இவ்விதமாகத் தொடங்கிய யுத்தத்தில் 50 இலட்சம் போர்வீரர்களுக்குமேல் சண்டைசெய்தனர். புதியமுறை யான ஆய்தங்கள் உபயோகிக்கப்பட்டன. பழையகாலத் தில் தரையிலும், கடலிலும் மாத்திரம் சண்டைகள் செய்யப்பட்டன. இந்த யுத்தத்தில் ஆகாயத்திலும், நீரின் கீழும் சண்டை நடைபெற்றது. ஆகாய மார்க்கமாகப் பறந்து எதிரிகளின் படைப்பலம், அணிவகுப்பு ஆகிய வைகளைப் பார்வையிடுவதற்கும், கோட்டைகளின்மீது குண்டுகளை வீசவும் ஆகாயக்கப்பல்கள் உபயோகிக்கப் பட்டன. நீர்மூழ்கிக் கப்பல்கள் போர்க்கப்பல்களுக்கும் வர்த்தகக் கப்பல்களுக்கும் பெரும் இடையூறுகளை விளைத்தன. யுத்தம் Bடந்துகொண்டிருக்கும்பொழுது நச்சுப்புகை, காங்கிகள் முதலிய புது முறைகளாற் பகைவர் தாக்கப்பட்டனர். இருபகுதியாருக்கும் களைப்பு, இளைப்பு உண்டாகக்கூடிய நிலைபரம் யுத்தம் முடிவடை யும் வரையும் ஏற்பட்டது.
பிரதான போர்க்களங்கள் ஐரோப்பாவி லிருந்த போதிலும், ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் சில இருந் தன. ஜேர்மனி, மேற்கில் பிரித்தானிய பிரான்சியப் படைகளோடும், கிழக்கில் ரூஷியப் படைகளோடும் சண்டை செய்யவேண்டியிருந்தது. பெல்ஜியத்தினூடா கப் பிரான்சை உ ட ன டி யா க க் கைப்பற்றவேண்டு மென்று ஜேர்மனிக்கு நோக்கமிருந்தது. பிரமாண்ட மான ஜேர்மன் சே ைபெல்ஜியத்தைத் தோற்கடித்து பிரான்சின் எல்லேயைச் சேர்ந்தது. பாரிஸ் நகரைக் கைப்பற்ற எண்ணங்கொண்ட ஜேர்மன் சேனை பிரித் தானிய பிரான்சியப் படைகளாற் சிறிது தூரம் பின் வாங்கிச்செல்ல நேரிட்டது. பின்பு அகழிகளைத்தோண்டி அவைகளிலிருந்து சண்டை செய்தனர். இதற்கிடையில் ரூஷியர் ஜேர்மனிக்குட் புகுந்து தானன் பேர்க்கு என்ற சண்டையிற் தோற்கடிக்கப்பட்டகோடு ஜேர்மனியி

Page 141
272 முதலாம் உலகயுத்தம் (1914-1918)
லிருந்தும் துரத்தப்பட்டனர். இந்த இரு போர்க்களங்க ளோடும் நில்லாது வேறு இடங்களையுந் தாக்கவேண்டு மென்றுணர்ந்து நேசதேசப் படைகள் ஜேர்மனிக்குச் சிநேகிதரான துருக்கியரை வெருட்டும் நோக்கதுடன் மொசப்பத்தோமியாவையும் கலிப்போலியையுங் தாக்கி ன. ஆனல் அவர்களுடைய யோசனை ஒரு பலனையும் அளிக்கவில்லை. பல்கேரியா ஜேர்மனியோடு சேர்ந்து சேர்பியைத் தோற்கடித்தது. அந்த வேளையில் இத்தாலி யும் நேசதேச நாடுகளோடு சேர்ந்தது. அநேக போர் வீரர்கள் தேவைப்பட்டமையால் கட்டாய போர்ச்சேவை பிரித்தானியாவில் எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டது. கைத்தொழிற்சாலைகளில் பெண் கள் வேலைசெய்ய வேண்டியிருக்தது. ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் சண்டையில் மாண்டனர். அந்த நேரத்தில் ரூஷியா அவுஸ்திரியாவைத் தாக்கிச் சில வெற்றிகளைப் பெற்றது. இத்தாலியும் அவுஸ்திரியாவைத் தென்பாகத்திற் தாக் கியது.
அவ்வேளையில் லோயிட் ஜோர்ஜ் இங்கிலாந்தின் பிரதம மந்திரியானன். ஜேர்மனி கடற்படைப் பலத்தைக் கொண்டு வெற்றியை ஈட்டலாமென நினைந்து பிரித்தா னிய கடற்படையைத் காக்கியது. பிரித்தானியாவை எதிரியின் படையெடுப்பினின்று காப்பாற்றுவதும், போர் வீரர்களையும் ஆயுதங்களையும் போர்க்களங்களுக்குக் கொண்டுசெல்வதும், எதிரிகளினுடைய அங்கிய6ாட்டு வர்த்தகத்தைச் சிகைப்பதும், தேசதேசத்தினரின் வர்த் தகத்தைக் காப்பாற்றுவதும், ஜேர்மன் கடற்படையை வெளியேற விடாது தடைப்படுத்தி வைப்பதும், பிரித் தானிய கடற்படையின் முக்கிய கடமைகளாயின.
1915-ல் ஜேர்மனி நீர்மூழ்கிக் கப்பல்களின் உதவி மூலம் வர்த்தகத்தை அழிப்பதாகவும் பின்பு 1917-ல் பிரித்தானிய துறைமுகங்களுக்குச் செல்லும், அல்லது அத்துறைமுகங்களிலிருந்து புற ப் படும் எச்சாதியின ருடைய கப்பல்களும் அழிக்கப்படுமென பிரசித்தஞ்

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 273
செய்தது. அதனல் பிரித்தானியா பெரும் நஷ்டத்தைப் பெற்றது. ரூஷியா யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியி னலும் அங்குள்ள தலைவர்களின் திறமைக்குறைவின இலும் தொடர்ந்து சண்டைசெய்ய இயலாமற் போயிற்று. அங்கே புரட்சி ஏற்பட்டதால் சார் இராட்சியத்தை விட்டு விலகினர். அதனல் ரூஷியாவின் மேற்கு மாகா ணங்கள் ஜேர்மனிக்குக் கொடுக்கவேண்டி நேர்ந்தது. ஜேர்மனியருடைய நீர்மூழ்கிக் கப்பல்கள் வர்த்தகக் கப் பல்களையோ, உணவுகொண்டு சென்ற கப்பல்களையோ எச்சரிக்கை யில்லாது தாழ்த்துவிட்டன. இவ்விதமாக அமெரிக்கரின் கப்பல்கள் தாழ்த்தப்பட்டமையால் அமெ ரிக்கா யுத்தத்திற் சேர நேரிட்டது. அமெரிக்க ஜனதி பதி உவில்சன் ஜனநாயக ஆட்சி, உலகத்துக்காகக் காப்பாற்றப்படவேண்டுமெனக் கூறினர்.
ஐக்கிய அமெரிக்க நாடுகள் நேசதேச ாேடுகளுக்கு அளவுகடந்த பண உதவியையும், பெருந்தொகையான போர்வீரர்களையும் கொடுத்துதவின. இரண்டு இலட்சத் துக்கு மேற்பட்ட போர் வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஐரோப்பாவின் மேற்குப் போர்க்களத்தில் தீவிரமான தாக்குதல் ஏற்பட்டபடியால் ஜேர்மன் சேனை பின் வாங்க நேரிட்டது. யுத்தத்தை நீடிக்க ஜேர்மனியரால் முடியவில்லை. ஆகையால் 1918-ம் ஆண்டு கார்த்திகை 11-க் திகதி ஜேர்மனியர் சமாதான ஞ் செய்ய உடன்பட் டனர். சமாதான உடன்படிக்கையின் நிபந்தனைகள் ஜனதிபதி உவில்சன் சமர்ப்பித்த 14 அம்சத் திட்டத்தை அடிப்படையாகக்கொண்டுள்ளன. 14 அம்சங்களாவன:- (1) வெளியரங்கமான சமாதான உடன்படிக்கையும் அதன்பின் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லாமையும் (2)சமா தான காலத்திலும் யுத்தகாலத்திலும் கடல்களிற் போக்கு வரத்துச் சுதந்திரம் (3) வர்த்தகக் கட்டுப்பாடுகள் நீக் கப்படுகல் (4) படைப்பலமும் ஆயுதங்களும் குறைக்கப் படுதல் (5) சாம்ராச்சிய உரிமைகளை நீதியான வழியில். தீர்த்துவிடல் (6) ரூஷியாவிலிருந்து அக்கியர் வெளியேறு
35

Page 142
274 முதலாம் உலகயுத்தம் (1914-1918)
தல் (7) பெல்ஜியத்திற்குச் சுதந்திரமளித்தல் (8) கைப் பற்றப்பட்ட பிரான்சிய நாட்டின் பகுதியும் அல்சேஸ். லோரையினும் மீண்டும் பிரான்சுக்குக் கொடுக்கப்படு தல் (9) இத்தாலியின் எல்லைகள் மீண்டும் வரையறுக்கப் படுதல் (10) அவுஸ்திரிய ஹங்கேரி சாம்ராச்சிய மக்கள் சுதந்திர ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுமுரிமை (11) பால்கன் நாடுகளிலிருந்து அக்கியர் வெளியேறுதல் (12) துருக்கியரின் சாம்ராச்சியத்திலுள்ள மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெறும் உரிமையும், டால்டனஸ் வழியே எல்லோருக்கும் கப்பல்களைச் செலுத்தும் உரிமை (13) போலந்து சுதந்திரகாடாதல் (14) சர்வதேசசங்கம் தாபித் தல். »
1919-ல் வேர்சேல்சில் நேசதேச நாடுகளின் பிரதி நிதிகளில் உட்ருே உவில்சன், கிளமென் குலோயிட் ஜோர்ஜ், ஒர்லாந்தோ பிரபலமான பிரதிநிதிகளாகும். சாதியபிமானம் தேசியக் கொள்கைகள் முதலியவை வளுக்கேற்ப நாடுகளின் எல்லைகளை வ்குப்பதும் பல் வேறு இடங்களிலுமுள்ள குடியரசு நாடுகளின் எதிர் கால நிலைமையைப் பற்றியும், போரிலுண்டான கட்டத் துக்கேற்றவாறு ஜேர்மனி கொடுக்கவேண்டிய பணத் தொகையைப் பற்றியும், எதிர்காலத்தில் யுத்தம் தொடங் காவண்ணம் தடுக்கும் வழிவகைகளைப்பற்றியும் தீர்மா னஞ் செய்யவேண்டியது அவர்களின் முக்கிய கடமை களாயின. சார் பள்ளத்தாக்கிலுள்ள கரிச்சுரங்கங்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிரான்சுக்கு நட்டஈடாகக் கொடுக்கப்பட்டன. பெல்ஜியத்துக்கு அதன் எல்லைப் புறத்திலுள்ள மூன்று சிறு பிரிவுகளும், இத்தாலிக்குத் திரியஸ்தி துறைமுகமும், மத்திய ஷெல்ஸ்விக் ஜேர்மனிக் கும், அதன் வடபகுதி டென்மார்க்குக்கும் அளிக்கப் பட்டன. போலந்துக்கு நீண்டகாலமாகக் கொடுபடா திருந்த சுதந்திரம் கொடுக்கப்பட்டது. போலந்தின் வட பாகத்தில், லட்வியா, எஸ்கோனியா, லிதுவேனியா, பின் லாந்து என்னும் குடியரசுகள் தோன்றின. முன் இவை கள் ரூஷியராட்சிக்குட்பட்டிருந்தன. பொகீமியா, கலி

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 275
சியா என்ற நாடுகள் இரண்டையுஞ் சேர்த்து செக்கோ சிலோவேக்கியா என்ற புதிய நாடொன்று ஆக்கப்பட் டது. சேர்பியாவோடு அதன் அயல்நாடுகளாகிய போஸ் னியா, எசகொவின என்ற நாடுகள் சேர்க்கப்பட்டு யூக்கோசிலாவியா என்ற புதிய நாடு உருவாக்கப்பிட் டது. அல்பேனியா சுதந்திரத்தைப் பெற்றது.
எகிப்து, சீரியா, மொசப்பொத்தோமியா, பலஸ் தீனு, யோர்தான்நதிக் கிழக்குப்பிரதேசங்கள் ஜேர்மன் குடியேற்ற நாடுகளைப்போல் சுயராச்சிய நிலைக்கான தகைமையைப் பெற்றிராதபடியால் அவைகளைப் பாது காக்கும் பொறுப்பு வெவ்வேறு நாடுகளுக்குக் கொடுக் கப்பட்டது. எகிப்து, பலஸ்தீன, மொசப்பொத்தேமியா (இராக்கு) என்பவற்றைப் பரிபாலனஞ்செய்யும் பொறுப் புப் பிரித்தானியாவுக்குக் கொடுக்கப்பட்டது. சீரியாவின் பரிபாலனத்தைப் பிரான்சு பெற்றது. இந்நாடுகளைப் பரிபாலனம் நடத்துவதாக ஏற்றுக்கொண்ட இராச்சி யங்கள் அங்காடுகளுக்குப் புத்திமதியும், உதவியும் புரிவ தில்லாது வேறு விஷயங்களிற் தலையிடமுடியாது. ஆபி ரிக்காவில் ஜேர்மீனியருக்குரிய குடியேற்ற நாடுகளில் பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய இராச்சி யங்கள் நேர்முகமான அதிகாரஞ் செலுத்தலாயினர். மூன்ருவதாக தென்மேற்காபிரிக்க ஐக்கிய அரசாங்கத் துக்கும், சமோஷா நியூசிலாந்துக்கும் பசுபிக் சமுத் திரத்திலுள்ள தீவுகள் யப்பான், பிரித்தானியா, அவுஸ் திரேலியாவுக்கும் கட்டளை ப்பிரதேசங்களாக அளிக்கப் பட்டு அவைகள் Lగిగీణrద్ర செய்யப்பட்டுவந்தன.
ஜேர்மனியின் கடற்படை, தரைப்படைகள் அதி கம் குறைக்கப்பட்டன. ஜேர்மனியுண்டாக்கிய அழிவுக ன் நட்டஈடாகப் பெருந்தொகையான பணமிறுக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டது. ஏராளமான நிலக் கரி, போர்க்கப்பல்கள் இன்னும் அநேக பொருட்களை ஜேர்மனி கொடுக்கவேண்டியதாயிற்று. எதிர்காலத்தில் சமாதானமும், அமைதியும் நிலவுவதற்காக வேண்டிய வழிவகைகள் தேடப்பட்டன.

Page 143
276 முதலாம் உலகயுத்தம் (1914-1918)
ஜேர்மனி இவ்யுத்தத்திற் தோல்வியடைந்ததின் கார
காலத்தில் படைப்பலமுடைய நாடாகவிருந்தது. ஆனல் நேசதேச வல்லரசுகளின் பிரமாண்டமான பொருளா தாரப்பலத்தை ஜேர்மனி எதிர்க்கவேண்டி யிருந்தது. ஆனல் ஜேர்மனி போரில் அனுகூலமடைவதற்கு போர்க் களத்தில் விரைவான வெற்றிகளைப் பெற்றிருக்கவேண் டும். நீடித்த போரை நடத்துவதற்குப் படைப்பலமும் பொருளாதாரப்பலமும் ஏதிரிகளோடு ஒப்பிட்டுப்பார்க் கும்போது போதியளவு அவர்களிடமில்லை. சண்டை ளில் அளவுகடந்த ஜேர்மன் போர்வீரர்கள் இறந்தமை யால் படைப்பலம் குன்றத்தொடங்கியது. பிரித்தானிய ருடைய கடலாதிக்கம் ஜேர்மனியின் பொருளாதார நிலை யைக் குன்றச்செய்தது. அதோடு உணவுக்கஷ்டமும், (ஒர்மன் மக்களுக்கு மனச்சோர்வும் ஏற்படத்தொடங் கின. மனத்தைரியமும், உடல்வலியும். போர் நீடித்துக் கொண்டுபோக குறையத்தொடங்கின. யுத்தத்தின் இறு இப்பகுதியில் ஜேர்மன் மக்களுக்கு அங்கிருந்த உண வுக்கட்டுப்பாட்டினல் அதிக துன்பமேற்பட்டது. பேர் லின் நகரத்தில் ஒரு கிழமைக்கு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட உணவு 4 ருத்தல் ருெரட்டியும், 7 ருரத் தல் உருளைக்கிழக்கும், க் ருத்தல் இறைச்சியும், ; முத் தல் சீனியும் ஆகும். வீயன்னுவில் தினசரிக்குக் கொடுக் கப்பட்ட உணவு 3 அவுன்சு ருெரட்டியும், 1 அவுன்சு இறைச்சியும், 22 அவுன்சு உருஃாக்கிழங்குமாகும். உண வுக் கஷ்டத்தில்ை துன்பப்பட்ட மக்களின் வாட்டம் போர்க்களத்தில் நின்று சண்ட்ைசெய்த வீரரின் உற் சாகத்தையும் கெடுத்தது. போரை நடத்தும் ஸ்தா பனமே கஜளப்புற்றமையால் சேனைத்தலைவர்கள் சமா தானத்தை விரும்பினர். அடுத்தபடியாக ரூஷ்யொவிலேற் புரட்சியும் ஜேர்மனியின் தோல்விக்குச் சாதக -اشالسا மாயிருந்தது. ஜேர்மனியின் கிழக்குப்பாகத்தில் இருந்த நிஜலயைத் த னிப் ப த நிற்கு ரூஷியாவின் புரட்சி ஆதரவளித்தது. ரூஷியராற் கைப்பற்றப்பட்ட கைதிகள்

முதலாம் உலகயுத்தம் (1914-1918) 27?
விடுதலைபெற்று மீண்டும் சேனையிற் சேர்ந்தபொழுது சேனையின் மனத்தைரியம் குறையத்தொடங்கியது. இனி ஐக்கிய அமெரிக்க நாடுகள் நேசதேசத்தினர் பக்கம் சேர்ந்தவுடன், தாங்கள் போரில் வெற்றிபெறுவது கஷ்ட மென ஜேர்மன் மக்கள் யோசித்தனர். பிரான்சிய மக்களின் பொறுமையும், பிடிவாதக்குணமும் ஈற்றில் வெற்றிபெறுவதற்கு உதவியாயிருந்தன.
யுத்தத்தில் மாண்டவர் தொகை எட்டு இலட்சம் வரையிலும் காயப்பட்டோர் தொகை இருபது இலட்சம் வரையிலுமிருக்கும். செலவழிக்த பணத்தொகை கணக் கிட முடியாததாகும். பிரித்தானியா நாளொன்றுக்கு 13 இலட்சம் பவுண் வரையில் 1915 வரையும் பின்பு 4 இலட்சமும் பிற்பகுதியில் 6 இலட்சம் பவுனும் செல வழித்தது. எதிரிகளாற் கைப்பற்றப்பட்ட இடங்களி லுள்ள கைத்தொழில் விவசாயம் சிதைவுற்றன. அழி வடைந்த நகரங்களையும், கைத்தொழில்களையும் திருத்தி அமைப்பது ஒரு பிரமாண்டமான வேலையாகவிருந்தது.
வினுக்கள்
1. மூவர் ஒப்பந்தத்திற் சேர்ந்த நாடுகள் யாவை? அது நிலைபெருத
தற்குக் காரணம் யாது? 2. மத்திய வல்லரசுக்கட்சி, நேசதேசக்கட்சி என இரு கட்சிகள் தோன்
றினமைக்குக் காரணம் என்ன? 3. முதலாம் உலக யுத்தத்தின் காரணங்களே ஆராய்க. 4, முதலாம் உலக யுத்தத்தின் ரலாற்றை எழுதுக.
” . 5. யுத்தம் முடிந்தபின் எழுதப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனை
கள் யாவை? −
6. முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோல்வியுற்றதற்குரிய கார
ணங்களே ஆராய்க.

Page 144
இருபத்துநான்காம் அத்தியாயம் சர்வதேசசங்கம்
முதலாம் உலக யுத்தத்திலேற்பட்ட நஷ்டங்களும், அழிவுகளேற்பட்ட தேசங்களிலுள்ள பொதுமக்களின் துன்பமும், அளவுகடந்த பண அழிவும், போரினலே விவாதங்களைத் தீர்த்துக்கொள்ளுதல் இயலாத காரிய மென்பதும், சமாதான முறையே தகுந்த முறையெனப் பலரைச் சிந்திக்கச்செய்தது. அவ்வெண்ணத்தைப்பூர்த்தி செய்வதற்காக ஜனதிபதி வில்சனது பதினன்கு அம்சத் திட்டத்திலெர்ன்றன சர்வதேசசங்கம் தாபிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடும் சுயேச்சையாக நடந்துகொள்ளாமற் ஐக்கியமடைந்த பல நாடுகளின் யோசனைக்கிணங்க நடந்துகொள்ள எண்ணங்கொண்டமையால் வருங்காலத் தில் போர் நிகழ்வதற்கு இடமில்லையென பலர் அபிப் பிராயப்பட்டனர். போர் செய்யும் மனப்பான்மையை நீக்கிச் சமாதானத்தை விரும்பும் மனப்பான்மையை யுண்டாக்குவதே அச்சங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
வார்சேல்சு உடன்படிக்கையிற் கலந்துகொண்ட நாடுகளிடையே சர்வதேச சங்கத்தை தாபிக்கும் தீர்மா னத்தைப் பூர்த்திசெய்வதற்குப் பிரத்தியேகமான ஒப் பந்தத்தைச் செய்துகொள்ளாது, அதை வார்சேல்சு உடன் படிக்கையின் அம்சமாக எடுத்துக்கொண்டனர். அதுவுமல்லாமல் அவ்வுடன்படிக்கையில் தோற்கடிக்கப் பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மித மிஞ்சியவையாகக் காணப்பட்டால் அக்காடுகள் இச்சங் கத்தின் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளத் தக்க தாகவுமிருந்தது. அந்த ஒப்பந்தத்தின் முதற் தொடக் கத்திலேயே, தேசங்களிடையே சமாதானமும் பாது காப்பும் நிலவவேண்டுமென்றும், போர் நடத்துவதில்லை யென்றும், உடன்படிக்கைகளை அலட்சியஞ் செய்யக் கூடாதென்றும் குறிப்பிடப்பட்டது. சங்கத்தின் அங் கத்தவர்களது நாடுகளின் சுதந்திரம் ஏனைய நாடுகளின்

சர்வதேசசங்கம் 279
வலோற்காரமான செய்கைகளினின்றும் காப்பாற்றப் படுமென்றும் மேலும் கூறப்பட்டது. அங்கத்தவர்க ளிடையே விவாதங்கள் யாதேனும் ஏற்படின் அவை கள் சங்கத்தினல் அதற்கென கியமிக்கப்பட்ட சபையால் விசாரணைசெய்யப்பட்டு அறிக்கை அனுப்பப்படுமென வும் குறிப்பிட்ப்பட்டது. அதுவுமல்லாமல் சங்கத்திலுள்ள அங்கத்தினரில் ஒருவரேனும் ஒப்பந்தத்துக்கு மாருரக போர்தொடங்க ஆரம்பித்தால் ஏனைய அங்கத்தவர்கள் அந்நாட்டோடு வர்த்தகத்தொடர்பு வைத்திருப்பதில்லை யென்றும், ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும்பொருட்டு யுத் தத்துக்கு வேண்டிய படைத்துனே புரிவதாகவும் ஏற் பாடு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் அங்கத்தவர் கள் நீதியும் மனுவதீகத்தன்மையுள்ள தொழில்முறையை ஆண், பெண், பிள்ளைகள் ஆகிய அனைவோருக்கும் தாபிப்பதற்கு முயற்சி செய்வதாகவும் யாவராலும் ஏற் அறுக்கொள்ளப்பட்டது. மனுஷ, சமுதாயத்தின் ஒற்று மைக்கும் சமாதான வாழ்க்கைக்கும் தொழிலாளருடைய முன்னேற்றத்துக்கும் சர்வதேச சங்கம் பொறுப்புள்ள தாபனமாகுமென சிமட்சு என்பவர் அபிப்பிராயப்பட் டார். இச்சங்கத்தை ஆகரித்தவர்களின் நம்பிக்கை, அது தாபித்தபின் இருபது வருடங்களுக்குள் பலமடைக் தது. 1920-ல் ஜெனிவாவில் முதன்முதலாக நடந்த கூட்டத்தில் 42 அங்கத்தவர்கள் சமுகமளித்தபோதிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதி சமுகமளிக்க வில்லை. ஜனதிபதி வில்சன் அச்சங்கத்தை ஸ்தாபிப்ப தற்கு பொறுப்பாயிருந்தபூொழுதிலும் அவர் கன்நாட் டினரின் ஆதரவைப் பெறச் யவில்லை. அவ்வாண்டில் வெளிநாட்டு விஷயத்திை அடிப்படையாக எடுத்துக் கொண்டு ஜனதிபதித் தெரிவில் குடியரசுக் கட்சியினர் வெற்றிபெற்றனர். வேர்சேல்சு உடன்படிக்கை மேற் சபையால் அங்கீகரிக்கப்படாம லிருந்ததினுல் ஐக்கிய அமெரிக்கா சர்வதேசசங்கத்தில் அங்கத்துவத்தைப் பெற வில்லை. அதிகம் செல்வாக்குடைய நாடாகிய அமெரிக்கா சேர்ந்து கொள்ளாததினுல் சங்கத்தின் முன்னேற்றம்

Page 145
280 சர்வதேசசங்கம்
தடைப்பட்டதெனலாம். அதிகாரமும் செல்வாக்குமுள்ள வேறெந்த நாடாகுதல் சங்கத்திற் ச்ேராதிருக்கவில்லை. 1921-ல் 51 அங்கத்தவர்களும் 1932-ல் 57 அங்கத்தவர் கிளும் 1934-ல் 60 அங்கத்தவர்களுமாகப் படிப்படியா கச் சங்கம் பலமுற்றது.
ஆரம்பத்தில் பல நாடுகளுக்குமிடையே காணப்பட்ட விவாதங்களை சித்திகரமாக அச்சங்கம் தீர்த்துவைத்தது. 1921-ல் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச நீதிச்சபை ஹேக் என்னும் இடத்திற் கூடியது. அதே ஆண்டில் அல் பேனியாவுட் புகுந்த சேர்பியத் துருப்புக்கள் சங்கத் தின் முயற்சியினல் மீண்டும் தங்கள் நாட்டுக்குச்செல்ல நேரிட்டது. இத்தாலிக்கும், கிறீசுக்குமிடையிலுள்ள சச் சரவைத் தீர்த்துவைத்தது. அவுஸ்திரிய-ஹங்கேரியின் பணக்கஷ்டத்தைத் தீர்த்துவைத்தது. கிறீசுக்கும் பல் கேரியாவுக்கு மிடையில் எல்லைப்புறத்தைப்பற்றியுள்ள வாக்குவாதத்தை சிநேகமுறையிற் தீர்க் கப்பட்ட து: 1926-ல் பிரேசிலும் ஸ்பானியாவும் சங்கத்தினின்று வில கின. மெக்சிக்கோ, ரூஷியா, துருக்கை ஆகிய நாடுகளும் பின்பு விலகிக்கொண்டன. ஆனல் ஜேர்மனி அங்கத் அவத்தைப் பெற்று ஏனைய நாடுகளின் அந்தஸ்தை அடைந்தது.
சர்வதேச தாபனம் சர்வதேச நீதிச்சபையையும் சர்வதேச தொழிலாளர் சங்கத்தையுங் கொண்டுள்ளது. அது பிரதிகிதிகளின் ஆலோசனைச்சபை, பொதுச்சபை, நிரந்தர காரியாலயம் என்ற மூன்று பிரிவுக?ாயுமுடை யது. பல்வேறு தேசங்களின் வெளிநாட்டு மந்திரிகளே ஆலோசனைச்சபை அங்கத்தவர்களானர்கள். பொதுச் சபை வருடமொருமுறை கூடியது. பல சாதியினரின் பிரதிநிதிகளாகிய 500 கிரந்தர உத்தியோகத்தர்கள் நிரந்தர காரியாலயத்திற் கடமையாற்றினர். சர்வதேச நீதிச்சன்ப ஒல்லாந்துதேசத்திற் கூடியது. அது சர்வ தேச சங்கத்தின் பொதுச்சபையாலும் ஆலோசனைச் சபையாலும் தெரியப்பட்ட பதினெரு நீதிபதிகளையும்

சர்வதேசசங்கம் 28.
நான்கு உப நீதிபதிகளையும் கொண்டுள்ளது. அவர் கள் வெவ்வேறு நாடுகளிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட னர். இனித் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினர்கள் சர்வதேச சங்கத்தின் அங்கத்தவர்களாவர். அச்சங்கத் தின் பொதுச்சபையொன்றும் நிர்வாகசபையொன்று முண்டு. அதிலுள்ள இருபத்துநான்கு அங்கத்தவர்க ளில் அரைவாசிப்பேர் அரசாங்கங்களின் பிரதிநிதிகளா யும் 6 பேர் தொழில் முதலாளிகளின் பிரதிநிதிகளாயும் 6 பேர் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுமாவர்.
1931ன் பின்பு சர்வதேச சங்கத்தின் பலம் குன் றத்தொடங்கியது. ஐக்கிய அமெரிக்கா சங்கத்திற் சேரா தது ஒரு காரணமென்று சொல்லலாம். சர்வதேச சங் கத்தினரால் பெரிய பிரச்ஃனகளைத் தீர்த்துவைக்க இய லாமலிருந்தது இன்னெரு காரணமாகும். 1932 வரையில் ஐரோப்பிய வல்லரசுகளின் படைப்பலம் குறைக்கப்பட வேண்டுமெனப் பலர் அபிப்பிராயப்பட்டு ஒரு மகாநாட் டைக் கூட்டினர். ரூஷியாவும், அமெரிக்காவும் உட்பட 64-வல்லரசுகள் அம்மகாநாட்டிற் சமூகமளித்தனர். பல நாடுகளிலுமிருந்து அனுப்பப்பட்ட சேனைகளைகொண் டுள்ள சேனைப்படையொன்று தயாரிக்கப்பட வேண்டு மென்றும் வலோற்காரமான சண்டை நேரிடுங்காலத் தில் சர்வதேச தாபனம் அச்சேனைப்படையை உப யோகிக்க அதிகாரமளிக்க வேண்டுமென்றும் பிரென்சுக் காரர் ஆலோசனை கூறினர். ஒவ்வொரு நாட்டின் படைப்பலத்தின் மூன்றிலொரு பங்கு குறைக்கப்பட வேண்டுமென ஐக்கிய அமெரிக்கா கூறியது. பலத்த பீரங்கிகள், குண்டுவீசும் விமானப்படை, தாங்கிகள், நச்சுப்புகை ஆகிய பெரும் அழிவையுண்டாக்கும் ஆயு தங்கள் உபயோகிக்காவண்ணம் தடுக்கப்பட வேண்டு மென ஏனைய நாடுகள் கூறின. ஜேர்மனியும் படைப் பலத்தைப் பொறுத்த அளவில் சம அந்தஸ்தை ஏனைய நாடுகளைப்போல் பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானஞ்செய்யப்பட்டது. ஆனல் ஜேர்
36

Page 146
282 சர்வதேசசங்கம்
மனியில் புதிதாக அதிகாரத்தைப்பெற்ற தேசிய பொதுக் கொள்கையாளர் அந்த மகாநாட்டிற் பங்குபற்றது விலகி நின்றனர். அவர்கள் படைப்பலத்தைக் கூட்டிக்கொள்ள முயற்சிசெய்தனர். பின்பு பிரித்கானியரும் தங்களுடைய பாதுகாப்புக்காகவும் ஏனைய நாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் சேனைப்படைகளைத் திருத்தியமைப்பதற்கு எண்ணங்கொண்டனர்.
சீனவிலுள்ள மஞ்சூரியா என்ற மாகாணத்தில் ஒப் பந்தத்தினற் கொடுக்கப்பட்ட உரிமைகளின் பயனுக பொருளாதார சம்பந்தமாகப் பெருந்தொகையான பணத்தை யப்பானியர் செலவழித்தனர். ஆனல் அம் மாகாணத்திலுள்ள அதிகாரிகளின் எதிர்ப்பினுல் யப் பானியருக்கு நஷ்டமேற்படக்கூடியதாகவிருந்தது. 6) சம்பவங்களின் காரணத்தால் சீனருக்கும் யப்பானிய ருக்குமிடையிலுள்ள பகை அதிகரிக்க யப்பானியருடைய சேனை அம்மாகாணத்துக்குள் புகுந்தது. மஞ்சூரியாவில் யப்பானியருக்கிருந்த ஆதிக்கம் சீனருடைய தேசிய உணர்ச்சியினல் தடைப்பட்டது. விவசாயப் பொருட்க வின் விஜலக்குறைவும், வேலைப்பஞ்சமும் யப்பானில் அமைதிக்குறைவை உண்டுபண்ணியது. பொருளாதார மந்தம் ஏற்பட்டதால் ஐரோப்பியரும், அமெரிக்கரும் கீழ்த்திசை நாடுகளின் விஷயங்களிற் தலைபிட விரும்ப வில்லை. இவ்வகைப்பட்ட நிலையில் யப்பானியர் மஞ்சூரியா வின் தலைநகராகிய முக்டினைக் கைப்பற்றினர் (1931). சீனவில் யப்பானியருக்குக் காட்டப்படும் எதிர்ப்பு நிறுத் தப்படவேண்டுமென்றும், மஞ்சூரியாவில் தங்களுக்குரிய சலுகைகள் மீண்டும் தாபிக்கப்பட வேண்டுமென்றும் யப்பானியர் வற்புறுத்தி நின்றனர். ஆகையால் சின அரசாங்கம் சர்வதேச சங்கத்தின் உதவியைக் கேட்டுக் கொண்டது. சங்கம் மஞ்சூரியாவிலிருந்து யப்பான வில கும்படி கற்பித்து ஒரு விசாரணைக்குழுவை அனுப்பி யது. அக்குழுவின் அறிக்கை வெளியிடப்படமுன், மஞ் சூரியா மஞ்குக்கோ என்ற பெயருடன் சீனுவிலிருந்து பிரத்தியேகமான தனிநாடாக தாபிக்கப்பட்ட தென

சர்வதேசசங்கம் 283
யப்பானியர் வெளிப்படுத்தினர். விசாரணைக் குழுவின் அறிக்கையில் மஞ்சூக்கோ ஒரு தனிநாடாகக் கைக் கொள்ள முடியாதென்றும், யப்பானியருடைய செய்கை அநீதியான தென்றும் குறிப்பிடப்பட்டது. சர்வதேச சங்கம் மஞ்சூக்கோவை ஒரு தனிநாடாகக் கைக்கொள் ளக்கூடாதென சங்கத்தின் அங்கத்தினருக்கு அறிவித்த வுடன் யப்பான் உடனே சங்கத்தினின்று விலகியது. யப்பானுடைய செய்கைக்கேற்ற நடவடிக்கையைச் சங் கம் எடுக்கத்தவறியது. அதனுல் சர்வதேச சங்கத்தின் மதிப்புக் குறைந்தது.
அபிசீனியாவை இத்தாலி கைப்பற்றச் சண்டை செய்தபொழுது (1935) சங்கத்தின் திறமையை அறியும் சந்தர்ப்பமேற்பட்டது. இத்தாலி சர்வதேச சங்கத்தில் அங்கத்துவம் வகித்திருந்தது. அது சமாதான மகாநாட் டிற் கலந்துகொண்ட 5ாடுகளிலொன்ருரகும். அது ஐரோப் பிய வல்லரசுகளிலொன்றாகும். ஆகையால் சங்கத்தின் நோக்கங்களுக்கு மாருக வலோற்காரமாக அபிசீனியா வைக் கைப்பற்ற எத்தனித்தமையால் ஐரோப்பிய நாடு கள் கோபாவேசங்கொண்டன. அபிசீனியா சர்வதேச சங்கத்துக்கு முறையிட்டது. இத்தாலிக்குச் சர்வாதிகாரி யாகவிருந்த முசோலினி தன்னுடைய நாட்டு அரசாங்க மும், மக்களும் தீர்மானித்து எடுத்துக்கொண்ட விஷ யம் முடிவடையும் வரையும் தான் பின்வாங்குவதில்லை யெனக் கூறினன். பின்பு பிரித்தானிய வெளிநாட்டு மந்திரி ஜெனிவாவில் கூடிய சங்க மகாநாட்டில் கூறி யவை யாவும் ஏனைய அங்கத்தினரால் அங்கீகரிக்கப் பட்டது. எல்லோரும் ஒருமித்து வலோற்காரமான சண்டையைத் தடுக்கும்பொருட்டு இத்தாலிக்குப் பல சலுகைகளை அளிக்கச் சித்தமாயினர். அவைகள் ஒன் றுக்கும் இணங்கிக்கொள்ளாது முசோலினி சண்டையை நடத்தினன். சங்கத்தின் அங்கத்தவர்கள் பொருளாதார் வர்த்தகத்தொடர்பை இத்தாலியோடு நீக்கிவிடத் தீர் மானஞ் செய்தனர். முசோலினி அக்காடுகளிலிருந்து வரும் இறக்குமதிப்பொருட்களைத் தடைசெய்துவிட்டுச்

Page 147
284 சர்வதேசசங்கம்
சீக்கிரத்தில் சண்டையை முடித்துக்கொள்ள முயற்சி செய்தான். புதிய ஆயுதங்கள், 5ச்சுப்புகை முதலியன வற்றை உபயோகித்து முசோலினி அபிசீனியாவில் பூரண வெற்றியைப்பெற்றன். சர்வதேச சங்கத்தின் பலக்குறைவு வெளிப்படையாகக் காணப்பட்டது.
இனிச் சங்கத்தின் வீழ்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்ந்து பார்ப்போம். முதலாவதாக சர்வதேச சங் கத்தில் அங்கத்துவம் வகித்த இத்தாலி ஐம்பது நாடு களுக்கு மேற்படவுள்ள அச்சங்கத்தின் அதிகாரத்தை அலட்சியஞ் செய்தது. அதன்பின்னர் சர்வதேச சங் கம் அதனுடைய கெளரவத்தை இழந்தது. இவ்வகை யாகச் சங்கம் கெளரவத்தை இழக்கவேண்டியதற்குப் பல காரணங்களுள. உலகத்திலுள்ள நாடுகள் யாவும் அதிலங்கத்துவம் பெருமையால் அதனுடைய பல ம் குறைந்ததெனலாம். அதுவுமல்லாது ஒரு கஷ்டமான நிலை ஏற்படும்வரையும் சங்கம் தலேயிடிவில்லை. அங்கத் துவம் வகித்த நாடுகள் தவருரன வழியில் நடந்துகொண்ட பின் தங்களுடைய மரியாதைக்குப் பங்கமேற்படுமென நினைந்து அச்செயல்களை நீக்கிவிட விரும்பவில்லை. கூட் டுறவுப் பாதுகாப்புக்கு படைத்துணை இன்றியமையாதது. ஆனல் சங்கத்தினர் எல்லோரும் தங்களுடைய கடமை யைச் செய்வதற்கு முன்வரவில்லை. ஐக்கியமான படைத் துணையைப் புரிவதற்கு கூட்டுறவு ஒப்பந்தம் இருந்திருக்க வேண்டும். ஆனல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற் காக ஒரு நாடாகுதல் இத்தாலிக்கெதிரே சண்டையிட விரும்பாமையால் அதை நிறைவேற்ற முடியாமற்போ னது. பிரான்சின் மனப்பான்மையும் வேறுபட்டது. இந்நாட்டின் ஆதரவு சங்கத்துக்குப் பலத்தைக்கொடுத் தது. ஆனல் கஷ்டமான நேரத்தில் அந்நாடு மனப் பூர்த்தியான முழு ஆக ரன்வயுங் காட்டவில்லை. இத்தாலி யும் பிரான்சும் தங்களுக்கிடையிலுள்ள பழைய நட்பை உண்டுபண்ணும் நோக்கத்துடன் உடன் படிக்கை ஒன்றை எழுதிக்கொண்டன. பிரான்சு ஜேர்மனியோடு முரண்பட்டுக்கொள்ளவும் விரும்பவில்லை. அதோடு பிரித்

சர்வதேசசங்கம் 285
தானியாவோடுள்ள ஒற்றுமையைக் குறைத்துக்கொள்ள வும் சிறிதளவும் விரும்பவில்லை. இனி சங்கத்துக்குரிய கடமைகளை நீக்கிவிடுவதாக வெளியரங்கமாகக் கூறவு மில்லை. பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மனப்பூர்வமான ஒற்றுமை காணப்பட்டமையால் இரு நாடுகளும் திருப்திகரமற்ற வழிவகையைக் கையாண்டனர்.
சர்வதேச சங்கத்தில் ஐக்கிய அமெரிக்க நாடு அங் கத்துவம் வகிக்கவில்லை. ஏனைய வல்லரசுகள் ஜேர்மனி யும் யப்பானும் சங்கத்தினின்று நீங்கிவிட்டன. இத் தாலி வலோற்காரமான சண்டையி லீடுபட்டுவிட்டது. பிரித்தானியாவும் பிரான்சும் மாத்திரம் வல்லரசுகளுக் குள் எஞ்சிய அங்கத்தினராகும். சர்வதேச சங்கத்தின் பலம் குன்றியவுடன் அவுஸ்திரியாவும், செக்கோசிலே வாக்கியாவும் வலோற்காரமான முறையிற் கைப்பற்றப் பட்டன. இச்சங்கத்தின் கூட்டுறவாதரவு பயனற்றதாகி விட்டது.
வினுக்கள்
1. சர்வதேச சங்கம் தாபிக்கப்பட்டதற்குக் காரணமென்ன? அதன்
நோக்கங்களே ஆராய்க. 2. சர்வதேச சங்கத்தின் நிர்வாகமுறையை ஆராய்க. 3. சர்வதேச சங்கத்தினினறு சில வல்லரசுகள் விலகியதற்குக் காச
ணங்கள் யாவை? 4. சர்வதேச சங்கம் செய்த விசேட முயற்சிகள் யாவை?
5. சங்கத்தின் வீழ்ச்சிக்குரிய காரணங்களை எழுதுக.

Page 148
இருபத்தைந்தாம் அத்தியாயம்
(Gu
ரூஷியாவுக்கும் யப்பானுக்குமிடையில் 1904-ல் நடந்த போரைப்பற்றி முன்னெரு அத்தியாயத்திற் படித்திருக் கிருேரம். அவ்யுத்தத்திற் தோல்வியுற்ற ரூஷிய அரசாங் கத்துக்கு அத்தோல்வியொரு இழுக்காக விருந்தது. அதன் காரணமாக நாட்டில் புரட்சியை உண்டாக்கிச் சாரின் எதேச்சாதிகார ஆளுகையை ஒழிக்க முன்வந்த ரூஷிய மக்களின் முயற்சிகள் சிதைவுற்றன. அடுத்த பத்து ஆண்டுகளாக புரட்சிக்காரர் கடுமையாக அடக் கப்பட்டனர். முதலாம் உலக யுத்தம் (1914-18) நடை பெற்ற காலத்தில் பிரித்தானியாவோடும் பிரான்சோடுஞ் சேர்ந்து ஜேர்மனிக்கெதிரே சார் சண்டைசெய்தார். அக் காலத்திலேயே ரூஷியாவிற் பெரும் புரட்சியேற்பட்டது. அக்காலத்திலேற்பட்ட புரட்சி ரூஷியாவின் அர சாங்கத்தையும், சமுதாய நிலையையும் முற்ருரக அழித்து விட்டது. முதலாவதாக அரசியற்புரட்சியும் இரண்டாவ தாக சமுதாயப்புரட்சியும் ஏற்பட்டன. ஆனல் அவை கள் இருதுறைகளிலேற்பட்ட ஒரு புரட்சியெனவே கூற வேண்டும். 1917-ம் ஆண்டு பங்குனி மாதத்திலேற்பட்ட புரட்சி மக்களுக்கு ஏற்பட்ட உணவுக்கஷ்டத்தினலேற் பட்டது. உணவுக்கஷ்டத்தினுல் தொடங்கிய வேலைநிறுத் தம், சச்சரவுகள் யாவும் சீக்கிரத்தில் சார் நீக்கிலாஸ் என்பவருக்கும், முதலாம் உலக யுத்தத்தை நீடித்து நடத்துமெண்ணத்திற்கு மெதிரே பெருங்குழப்பத்தை யுண்டுபண்ணின. ஜேர்மனிக்கெதிரே ரூஷியா வெற்றி கரமாகச் சண்டைசெய்ய முடியாத நிலைமையும், பொரு ளாதாரக் கஷ்டத்தினல் மக்களுக்கேற்பட்ட துன்பமும் சாரின் மீது வெறுப்பையுண்டாக்கியது. பங்குனி மாதம் 8-ந் திகதி நெசவுத்தொழிலாளர்கள் உணவு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் வேலைநிறுத்தஞ் செய் தனர். மற்ற5ாள் ஏனைய தொழிலாளர்களுஞ் சேர்ந்து யுத்தம் வேண்டாம், எதேச்சாதிகாரியின் ஆளுகை

ருஷியா 287
வேண்டாமெனக் கூச்சலிட்டனர். மூன்றும்நாள் புரட்சி யுண்டாவதற்குரிய அறிகுறிகள் தோன்றின. போர் வீரர்களில் ஒருபகுதியாரும் சேர்ந்துகொண்டனர். இரண் டாம் நீக்கிலாஸ் என்ற சார் குழப்பம் அதிகரித்தவுடன் சிம்மாசனத்திலிருந்து நீங்க நேரிட்டது. தொழிலாளர் கள் அதிகாரத்தைப் பெற்றபொழுதிலும் அவர்களால் அரசாங்கத்தை ஏற்று நடத்தச் சக்தியில்லாமையால் அவர்கள் மத்திய வகுப்பினரிடமே அதை ஒப்படைத்த னர். கெரென்சி என்பவனுடைய தலைமையில் மென்ஷி விக் என்ற மிதவாதிகளின் ஆட்சி நிறுவப்பட்டது. பொருளாதார நிலையினலேற்பட்ட இன்னல்களும், கொழி லாளர்களின் புரட்சிக்கொள்கைகளும் இவைபோன்ற பல பிரச்னைகளும் தீர்க்கப்படவேண்டியிருந்தன.
அக்காலத்தில் நிகழ்ந்த உலக யுத்கமும் புரட்சி யுண்டாவதற்குச் சாதகமாகவிருந்தது. யுத்தத்திலீடுபட்ட ஏனைய வல்லரசுகளிலும் பார்க்க ரூஷியாவுக்குக் கூடிய நஷ்டமேற்பட்டது. சண்டையில் அளவுகடந்த உயிர் கள் சேதமடைந்ததோடு நோய்வாய்ப்பட்டும் அநேகர் இறந்தனர். ஐரோப்பாவின் மேற்கு நாடுகளைப்போல ரூஷியர் நவீன படைப்பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களும் அவர்களிட மில்லை. போருக்குவேண்டிய யாவும் யுத்தமுனைக்கு விரை வாகக் கொண்டுசெல்லக்கூடிய வசதிகள் ரூஷியாவில் அங்நேரத்திலில்லாமையால் மேற்கு நாட்டினர் அவர்க ளுக்கு அளித்த உதவியும் பயனற்றதாய்ப்போய்விட்டது. எதிரிகளிலும் பார்க்கக் கூடிய சனத்தொகையிருந்த போதிலும் திருப்தியற்றி பொருளாதாரநிலை நாட்டின் பலத்தைக் குறைத்துவிட்டது. ஆனல் புதிதாக அமைக் கப்பட்ட அரசாங்கத்தில் சமதர்மக்கட்சியினர் சேர்ந்து கெரென்சியை யுத்தமந்திரியாகத் தெரிந்து யுத்தத்தை ஊக்கத்தோடு நடத்த ஆரம்பித்தனர். மீண்டும் யுத்தத்தி லடைந்த தோல்வி கெரென்சியின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. யுத்தம் வேண்டாமென்ற

Page 149
288 ருஷியா
எதிர்ப்பு மீளவுந்தொடங்கியது. விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்படவேண்டுமென்ற பிரச்னையும் சமாதானத்தை விரும்பிகின்ற போல்ஷிவிக் கட்சியினருக்கு உதவியா யிருந்தது. விவசாயிகளுக்கு தங்களுடைய தொழிலைத் திருப்திகரமாகச் செய்வதற்கு போதிய நிலம் கொடுக் கப்படவில்லை. விவசாயத் தொழிலிலும் புதிய முறைகள் அனுஷ்டிக்கப்படவில்லை. நிலம்படைத்த பிரபுக்களின் ஆஸ்திகள் வறுமையுற்ற விவசாயிகளின் கண்களைக் கவர்ந்தன. புரட்சியுண்டாவதற்கு முன்னரே விவசாயி கள் தங்களுக்குப் போதிய நிலம் வழங்கப்படவேண்டு மென்று வாதாடினர். 1906-ல் கொண்டுவரப்பட்ட சட் டத்தின்பிரகாரம் கிராமங்களிலுள்ள பொதுநிலங்கள் விரும்பிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. அதனல் விவசாயிகளினிடையே பொருள்படைத்த வகுப்பினர் தோன்றினர்.
புரட்சியுண்டாக்கும் இயக்கத்துக்கு பல காரணங் கள் ஆதரவாயிருந்தன. போர்வீரர் சமாதானத்தை விரும்பி நின்றனர்; நகரங்களிலுள்ள பொதுமக்கள் ப ண க்  ைத த் தம்வசப்படுத்திய முதலாளிமார்களுக் கெதிரே கிளம்பினர்; விவசாயிகள் நிலம் வழங்கப்பட வேண்டுமென வாதாடினர். விவசாயிகள் தைரியமடைந்து விஷயங்களைத் தாங்களே கையாளத்தொடங்கினர். பிர புக்களின் நிலங்களை அபகரித்ததோடு அவர்களுடைய அரண்மனைகளையும் எ ரித் து முதலாளிமார்களையும் கொன்றனர். விவசாயிகளின் பயங்கரமான செய்கை கள் அப்போதுள்ள அரசாங்கத்தில் 5 ம் பிக்கை க் குறைவையுண்டாக்க போல்ஷிவிக் கட்சியினர் பிரசா ரஞ்செய்ய ஆரம்பித்தனர். விவசாயிகளும், கைத்தொழி லாளர்களும் ஒன்றுசேர்ந்து மத்திய வகுப்பினருடைய அதிகாரத்தை ஒழிக்க முயன்றனர். இந்நிலையில் போரி னல் களைப்புற்ற போர்வீரர்க*ாயும், அதிருப்தியடைந் திருந்த விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து தொழிலாளருடைய குடியரசு அரசாங்கத்தை நிறுவுவதற்கு போல்ஷிவிக் கட்சியினர் முன்வந்தனர்.

ருஷியா 289
மென்ஷிவிக் கட்சியினருடைய கொள்கைகளை போல்ஷி விக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. மென்ஷிவிக் கர் சமதர்மக் கொள்கைகளையுடையவர்கள். தொழிலாள ரும், மத்திய வகுப்பினரும் ஐக்கியப்பட்டு ஜனநாயக நாடொன்றை தாபிக்கவேண்டுமென்று அவர்கள் விரும் பினர். ஆனல் போல்ஷிவிக்கர் மத்திய வகுப்பினருடைய கொள்கைகளை மறுத்ததோடு அவர்கள் தாபிக்கமுயன்ற பொருளாதார, சமுதாயமுறைகளையும் ஏற்றுக்கொள்ள வில்லை. வறிய விவசாயிகளும், தொழிலாளரும் ஒன்று சேர்ந்து தாபிக்கும் பொதுமக்களின் குடியரசு அர சாங்கமே தேவையென யாவருக்கும் உணர்த்தினர். பங் குனிமாதப் புரட்சி தொடங்கியபொழுது போல்ஷிவிக் கட்சியினரின் தலைவனை லெனின் என்பவன் சுவிட்ச லாந்திலிருந்து ரூஷியாவுக்கு வந்தான். லெனின் 1907 தொடக்கம் 1917 வரையும் தன் நாட்டைத் துறந்து வெளிநாடுகளிற் காலத்தைச் செலவழித்தார். தன் நாட் டுக்குத் திரும்பிவந்ததும் புரட்சிவீரனகத் திகழ்ந்தார். உலகசரித்திரத்திற் தோன்றிய புரட்சித் தலைவர்களுள் லெனின் சிறந்தவனுகும். லெனின் தலைமைதாங்காவிட் டால் போல்ஷிவிக் கட்சியினர் புரட்சியுண்டாக்கியிருக்க முடியாது.
லெனின் தன்னுடைய கொள்கைகளைப் பின்வரு மாறு கூறினர். " பாராளுமன்றமுள்ள குடியரசு அர சாங்கம் எங்களுக்குத் தேவையில்லை; மத்திய வகுப்பின ரின் ஜனநாயகமுறை မြို့-ချွ႕:: எவ்வகையான அரசாங்கமும் தேவையில்லை; தொழிலாளர்கள், போர் வீரர்கள், விவசாயிகள் ஆகியவர்களுடைய பிரதிநிதிக 2ளக் கொண்டுள்ள 'சோவியத்" சபையே தேவை." புரட்சியின் முதற்பகுதி மத்திய வகுப்பினருக்கு அதி காரத்தைக் கொடுத்தது. ஆனல் இரண்டாம்பகுதி பொது மக்களுக்கு அவ்வதிகாரத்தைக் கொடுத்தது. நிலமா னியமுறையைத் தழுவிய சமுதாயம் சமதர்மக் கொள் கையையுடைய சமுதாயமாக மாறவேண்டு மென்றும், எதேச்சாதிகார ஆளுகை பொதுமக்களின் ஆட்சியாக 37 بی

Page 150
290 ருஷியா
மாறவேண்டுமென்றும் லெனின் வகுத்த திட்டம் தனம் படைத்த முதலாளிவர்க்கத்தையும், ஜனநாயகமுறையை யும் ஒருங்கே அழித்துவிட்டது. விவசாயிகளுக்கும் உட னடியாக நிலம் வழங்கப்படவேண்டும் என்றும் யுத் தத்தை நிறுத்தவேண்டுமென்றும் லெனின் கூறினன். விவசாயிகளின் தொகை கூடியவொரு நாட்டில் விவ சாயிகளின் மனப்பான்மையே புரட்சியின் பலத்துக்கு அடிப்படையாகவிருந்தது. நிலம் சம்பந்தமான பிரச் னையை மத்திய வகுப்பினர் திருப்திகரமாகத் தீர்த்திருக் தால் பொதுமக்கள் 1917-ல் அதிகாரத்தைப் பெற்றிருக்க முடியாதென்று போல்ஷிவிக் கட்சித் தலைவர் ஒருவர் சொன்னர். விவசாயிகள் மாத்திரம் தனித்து நின்று மத்திய வகுப்பினரின் எதிர்ப்பை வெல்லமுடியாது. ஆனல் விவசாயிகள், பொதுமக்கள் ஆகிய இருபாலா ரின் ஆதரவையுங்கொண்டே போல்ஷிவிக்கர் அதிகா ரத்தைப் பெற்றனர். அவ்வொற்றுமையினுல் கிராம. வாசிகள் நிலங்களைப்பெற்றனர். நகரத்திலுள்ள தொழி லாளர்கள் அரசாங்கத்தில் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டனர். இதிலிருந்து ரூஷியப் புரட்சிக்கும் பிரான் சியப் புரட்சிக்குமுள்ள வேறுபாட்டை, அவதானிக்க லாம். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பிரான்சிலுள்ள மத்திய வகுப்பினர் சித்தமாயிருந்தமை யால் சமுதாய, அரசியல் முறைகள் அதிகம் சிதைவு படாமலிருந்தன, ரூஷியாவில் நிலம்படைத்த பிரபுக்கள் பொதுமக்களின் உரிமைகளை அலட்சியஞ் செய்ததினல் பழைய சமுதாயமுறை முற்ருரக அழிந்தது.
போல்ஷிவிக் கட்சியினரின் பொருள்நிலை குறை வாயிருந்தபோதிலும், ' சமாதானம், நிலம், உணவு' என்ற தந்திரமான பிரசாரத்தால் மக்களின் ஆதரவைப் பெற்ற னர். விடாமுயற்சியோடும், ஊக்கத்தோடும் தொழிற்சாலைகளிலும், பொதுமக்களின் மத்தியிலும் அல்லும்பகலும் அக்கட்சியின் தலைவர்கள் நேரத்தைச் செலவழித்தனர். போல்ஷிவிக்கர் இவ்வண்ணமாக முன்
னேற அதிகாரிகளின் செல்வாக்குக்குன்றியது, மென்ஷி

ரூஷியா 291
விக் கட்சியினர் நாளடைவில் மக்களின் ஆதரவை இழந்தனர். இதற்கிடையில் கைத்தொழில் அபிவிருத்தி யும், உணவுசம்பந்தமான , லயும் நாட்டில் கேவலமான நிலையையடைந்தன. பொதுமக்களின் பசிப்பிணி |-|Tւ சிக்காரரின் பிரசாரத்துக்கு இடங்கொடுத்தது. விஜள பொருட்க ளில்லாமையால் கொழிற்சா%லக.யில் கைத் தொழில் நடைபெறவில்லை. பொருட்களே அனுப்பும் முறையிலும் வசதிகள் போதியளவி "ல. "இவ்வகைப் பட்ட பொருளாதார நிலையில் போ, 'yle, li jisser 2ے{ lT சாங்கத்தைத் தம்வசப்படுத்த எத்தனித்தனர். அரசாங்க அடக்குமுறையைப் பாவிக்க லெனின்போன்ற கலைவர் மறைவிடம் செல்லவும் ரொட்ஸ்கிபோன்றவர்கள் சிறைச் சாலைக்குச் செல்லவும் நேர்ந்தது. பின்பு சேனைத்தலை வர்கள் கலகமுண்டாக்கினர். அரசாங்கம் சமாதானப் படுத்தும் நோக்கத்துடன் ரொட்ஸ்கியை விடுதலையாக் கியது. கார்த்திகை மாதம் ரொட்ஸ்கியின் தஐலமைடுல் கலகமேற்பட பொதுசனங்கள் அவனுக்கு ஆதரவளித் தனர். லெனின் தங்களுக்கு ஏற்ற தருணம் கிடைத்து விட்டதென நினைந்து 25000 தொழிலாளரைக்கொண் டுள்ள சேனையைத் திரட்டினன். அரசாங்கக் கங்தோர் யாவற்றுள்ளும் கலகக்காரர் புகுந்தனர். ஆரம்பத்தில் ஒழுங்கானமுறையில் புரட்சியேற்பட்டபோதிலும் சிக் கிரத்தில் இரத்தஞ் சிந்தக்கூடிய நிலையேற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். தெற்கு, கிழக்கு ரூஷியா குறையாடப்பட்டது. கைத்தொழில் முற்ருக அழிக்கப்பட்டது. பயங்கர ஆட்சி நிலவியது.
லெனின் புதிய அரசிங்கத்தைக்கூட்டி சண்டையை நீடிக்காது சம்ாகானத்தைக் கொண்டுவரவேண்டுமென்று அறிவித்தான். அதற்கு நேசதேசBாடுகள் சம்மதிக்காத படியால் ரூஷியா உலக யுத்தத்தினின்றும் விலகியது. பிரபுக்களின் கிலங்களும் தோட்டங்களும் அரசாங்கத் தால் கவரப்படு மென்னும் ஆஞ்ஞையிடப்பட்டவுடன் விவசாயிகள் மனமுவந்த ஆதரவைப் புரட்சித்தலேவர் களுக்குக் காட்டினர். பின்பு சாரின் அரசியல்முறை

Page 151
293 ருஷியா
முற்முக நீக்கப்பட்டுத் தொழிலாளர், விவசாயிகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள 'சோவியத்து சபைகள் மூலம் ஆட்சிபுரியும்முறை தாபிக்கப்பட்டது. நிலங்களை யிழந்த பிரபுக்கள் நேசதேசங்களின் ஆதர வோடு சண்டைசெய்ய ஆரம்பித்தனர். இவ்வண்ணமாக ஏற் பட்ட உள்நாட்டுக்கலகம் போல்ஷிவிக்கரால் அடக்கப் பட்டது. பின்பு போலாந்து, பின்லாந்து, லிதுவானியா, எஸ்டோனியா, லற்வியா முதலிய நாடுகளுக்கு குடியரசு அரசாங்கம் வழங்கப்பட்டது.
மேல்நாடுகளிலுள்ள தனவந்தர்களின் சமுதாயம் முதலாம் உலக யுத்தத்தின்பின் அழிந்துபோகுமென லெனின் முழு நம்பிக்கையுடனிருந்தான், ஐரோப்பா முழுவதும் சமதர்மக்கொள்கை, புரட்சியையுண்டுபண்ணி விடுமெனவும் கூறினன். உலகத்தில் பொதுவுடமைக் கொள்கை பரப்புவதற்காக கொம்மின்டேன்’ என்ற சர்வதேச பொதுவுடமைக்கட்சி 1919-ல் உருவாக்கப் பட்டது, ஆனல் உலகப்புரட்சியை யுண்டாக்குவதற்கு போல்ஷிவிக்கரால் முடியவில்லை. அதனல் அவர்களுடைய கட்சியில் பிளவு ஏற்பட்டது. லெனின் 1924-ல் இறக் கவே அப்பிளவு அதிகரித்தது. அக்கட்சியிலுள்ள பெரும்பான்மையோரின் தலைவனுக ஸ்டாலின் விளங்கி னன்.மற்றக்கட்சிக்கு ரொட்ஸ்கி தலைவனனன். ரொட்ஸ்கி உலகப்புரட்சியில் 5ம்பிக்கை வைத்தான். அயல்நாடு கள் யாவும் தனவந்தர்களின் ஆதிக்கத்திலிருந்தமையால் ரூஷியா தனித்துகின்று சமதர்மக்கொள்கை நிலைநாட் டும் நாடாகவிருக்க முடியாதென்றெண்ணினன். ரூஷி யாவின் பொருளாதாரநிலை அக்கொள்கைகளைப் பரப்பு வதற்கு ஏற்றதாயிருக்கவில்லை யென்பது அவனுடைய இரண்டாவது நியாயமாகும். பல தேசங்களில் நடை பெறும் புரட்சிகளுக்கு ரூஷியாவில் உண்டான புரட்சி ஆரம்பமாகுமென்றன். அவ்வகைப்பட்ட கிரந்தர புரட் சிக்கொள்கைக்கு மாருக ஸ்டாலின் "ஒரே நாட்டிலுள்ள சமதர்மக்கொள்கை' என்ற முறையே தகுந்ததென வெளிப்படுத்தினன். சமதர்ம இன்னதென்பதை விளக்

ருஷியா 293 கிக்காட்ட ரூஷியாவே சமதர்ம ஆட்சிமுறையை முத லிற் கையாளவேண்டுமெனக் கூறினன். ரூஷியாவே தன்னுடைய பொருளாதார நிலையைத் திருத்தியமைக்க வேண்டும். தனவந்தரின் செல்வாக்குள்ள நாடுகளோடும் ரூஷியா சிநேகமுறையில் நடந்துகொள்ளவேண்டியதவ சியமென வற்புறுத்தினன். பொதுமக்களின் அரசாங் கத்துக்கு வேண்டிய இயந்திரங்களையும், விளைபொருட் க2ளயும், தொழிலிற் திறமைவாய்ந்தோரையும் அங்நாடு களிலிருந்தே ரூஷியா பெறவேண்டியிருந்தது. இவ்வித மாக இரு தலைவர்களுக்கு மிடையில் முரண்பாடுள்ள கொள்கைகள் தோன்றின. ஈற்றில் ஸ்டாலின் வெற்றி பெற்றரன். 1929-ல் ரொட்ஸ்கி நாட்டிலிருந்து துரத் தப்பட்டான்.
புதிய அரசாங்கம் தொழிற்சாலைகளைத் தேசீயமய மாக்கியதோடு தனிப்பட்ட முறையில் நடந்துவந்த வியா பாரத்தையும் நிறுத்திவிட்டது. வங்கிகள் மறைவுற்றன. பணத்திற்கு மதிப்பு இல்லாமற்போய்விட்டது. கலகங்கள் ஏற்பட்டதினல் மறுபடியும் பணம் உபயோகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பின்பு படிப்படியாக மாற்றங் கள் கொண்டுவரப்பட்டன. நிலங்கள் தனவந்தர்களிட மிருந்து எடுக்கப்பட்டதோடு கூட்டுறவு விவ சா யம் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. தனிப்பட்ட முறையில் நடைபெற்ற விவசாயம் குறைந்துவிட்டது.
ரூஷிய சமதர்ம குடியரசு அரசாங்கங்களின் ஐக்கியம், விவசாயிகள், தொழிலாளர் என்பவர்களின் நாடென 1936-ல் வெளிவந்த அரஇயற்திட்டத்திற் கூறப்பட்டது. நிலங்கள், சுரங்கங்கள், காடுகள், தொழிற்சாலைகள். புகையிரதவீதிகள். போக்குவரவு வசதிகள், வங்கிகள், விவசாயம், மாநகரத்தொழில்கள், வீடுகள் ஆகிய யாவும் அரசாங்கத்தின் உடமைகளென்றும் அதனல் அவை கள் எல்லா மக்களின் சொத்துக்களெனவும் வெளி யரங்கப்படுத்தப்பட்டன. சோவியத் அரசாங்க ஐக்கியம் 11 சமதர்மக் குடியரசு அரசாங்கங்களைக் கொண்டுள்ள சமஷ்டி அரசாங்கமாகும். பொதுமக்களின் ஆட்சியென்

Page 152
294 குஷியா
பது, பொதுமக்களை வழிகாட்டும் பொதுவுடமைக் கட்சி யாளரின் சர்வாதிகாரமென்று ஸ்டாலின் கூறினர். அதன்பிரகாரம் ஒரு அரசியற்கட்சியே அங்கு இருக்க GՔգ-պմ, -
இரண்டாம் உலகயுத்த ஆரம்ப காலத்திலே ஸ்டா லின் பெரும் ஆதரவையும், பலத்தையும் பெற்றிருந் தான். பழைய போல்ஷிவிக் கட்சியினரும் அவருடைய அதிகாரத்தைக் குறைக்கமுடியவில்லை. இரகசிய பொலீ சாரின் முயற்சிகளைக் குறைத்து மக்களுக்குக் கூடிய சுதந்திரத்தைக் கொடுத்தான். இவ்வாறு ரூஷியாவை ஐரோப்பாவில் சிறந்த ஒரு நாடாக்க முயற்சிகள் செய்து வந்தான். இரண்டாம் உலகப்போரில் பெற்ற வெற்றி ரூஷியாவின் முன்னேற்றத்திற்கு அறிகுறியாகும். வினுக்கள் 1. ரூஷியாவில் 1917-ல் புரட்சியுண்டாவதற்குக் காரணங்கள் யாவை? 2. புரட்சியை உண்டாக்கும் நோக்கத்துடன் தோன்றிய கட்சிகள் யாவை? மென்ஷிவிக் கட்சியின் பலம் குன்றியதற்குக் காரணம் என்ன? போல்ஷிவிக் கட்சி எவ்வாறு அதிகாரத்தைப் பெற்றது? லெனின் செய்த சேவைகள் யாவை? ரொட்ஸ்கியையும், ஸ்டாலினையும் ஒப்பிடுக.
:
ரூஷியாவின் பொருளாதார, சமுதாய, அரசியல் முறைகள் எவ் வாறு மாற்றமடைந்தன என்பதை விளக்கிக்காட்டுக.

இருபத்தாருவது அத்தியாயம் இரண்டாம் உலக யுத்தம்
எந்த யுத்தம் நடைபெறுங் காலத்திலும் பல்லாயி ரம் மக்கள் இறப்பதுண்டு. கைத்தொழில், வர்த்தகம், விவசாயம் முதலியன குன்றிப்போகின்றன. யுத்தம் முடிவடைந்தபின் ஏற்படும் கஷ்டங்களும் பல. பொரு ளாதார மந்தம், வேலைப்பஞ்சம் உண்டாகி மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்படுவதைக் கவனிக்கலாம். முதலாம் உலக யுத்தத்தின்பின் அங்கிலே ஐரோப்பாவிலும் உல கத்தின் ஏனைய காடுகளிலும் உண்டானதைக் கவனிக்க லாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள்போன்ற செல்வப் பெருக்கமுள்ள நாடுகளிற்கூடக் கோடிக் கணக்கான சனங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். வேலையி லிருந்தவர்கள் கூட குறைந்த வேதனத்தையே பெற்ற னர். வியாபாரமும் முன்பிருந்ததிலும் பார்க்க அரை வாசிக்குமேல் குறைந்துபோயிற்று. பணக்கஷ்டமேற் பட்டபடியால் பொருட்களை விற்பனவுசெய்தல் கஷ்டமா யிருந்தது.
ஜேர்மனி தேசத்தை வியாபாரப்பன மந்தம் அதிக மாகத் தாக்கியது. யுத்தத்தின் நட்டஈடாகக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கமுடியாதென ஜேர்மன் தலைவர்கள் கூறினர். அக்காட்டிற் பணமே இல்லாமற் போய்விட்டது. ஆயிரக்கணத்கான மக்கள் வேலையின் றித் தவித்தனர். மக்களுக்கு அரசாங்கத்தில் கம்பிக்கை குறைந்தது. “ தேசீய அபேதவாதிகள் ’ என்ற பெய ருடன் ஒரு கட்சியினர் அடோல்ப் ஹிட்லரைத் தலைவ ணுகக்கொண்டு தோன்றினர். அரசாங்கத் தலைவர்கள் தங்கள் செல்வாக்கையிழக்கும்படி முயற்சிகள் செய்த னர். ஹிட்லர் அவுஸ்திரியாவில் மிகத்தாழ்ந்த குடியொன் றிற் பிறந்தவன். முதலாவது உலக யுத்தத்தில் ஜேர் மனியின் சார்பாகச் சண்டைசெய்தான். 1923-ல் ஒரு புரட்சியையேற்படுத்த அவன் முயற்சிகள் செய்தும்

Page 153
296 இாண்டாம் உலக யுத்தம்
அவைகள் அநுகூலப்படவில்லை. அவன் சிறையிலிடப் பட்டான். சிறையிலிருந்த காலத்தில் ' மெயின் காய்ம்பு" என்ற புத்தகத்தை எழுதினன். அதில் ஜேர்மனி எதிர் காலத்திற் செய்யவேண்டியதைப் பற்றியதொரு முழுத் திட்டமொன்றை விளக்கியுள்ளான். விடுதலைபெற்றபின் அதில் கூறப்பட்டவைகள் ஒவ்வொன்றையும் செய்கை யிலே காட்டினன். தனது கட்சியினரைச் செம்புநிறச் சட்டைகள் அணியும்படிசெய்து “நாஜிகள்’ (தொழிலா ளர் கட்சி) என்றழைத்தான். பொருளாதார மந்தத்திற் தாக்கப்பட்ட மக்கள் அவனுடைய புத்தகத்தை ஆவ லோடு படித்து, அதனுடைய கொள்கைகளை நம்பினர். ஜேர்மனியர் முதலாம் உலக யுத்தத்தில் அடைந்த தோல்வியினல் நீங்காத வசையைப்பெற்றதென உணர்ந் தனர். குடியரசு அரசாங்கம் வீழ்ச்சியடைவதை விரும் பினர்கள். 1933-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஹிட் லரும் அவனுடைய கட்சியினரும் வெற்றிபெற்று வலிமை கூடினவர்களாயினர்.
எதிர்காலத்தில் போர் உண்டாகாமல் தடுப்பதற் காக ஸ்தாபீக்கப்பட்ட சர்வதேச சங்கம் முதலாம் உலக யுத்தத்திற் தோல்வியடைந்த நாடுகளின் நம்பிக்கையைப் பெறவில்லை. ஜேர்மனியும், இத்தாலியும் அரைமனத் துடன் சேர்ந்திருந்ததும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ரூஷியாவும் சேராதிருந்ததும், பிறநாடுகள் இரகசிய உடன்படிக்கைகளைச் செய்துகொண்டதும், அச்சங்கத்தி லுடைய பலம் குறைவதற்குக் காரணமா யிருந்தது. பின்பு ரூஷியா சேர்ந்தபொழுதிலும் அதன் வலிமை குறைந்துகொண்டே போனது. ஜேர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சர்வதேச சங்கத்தி லிருந்து விலகிப் பேர்லின்-உரோம் ரோக்கியோ “அச்சு வல்லரசு' நாடுகளாக ஒற்றுமைப்பட்டன. இந்நாடுகள் ஜனநாயகத்தை வெறுத்தன. ஐரோப்பாவிலுள்ள மற் அறும் சிறு இராச்சியங்களும் ஜனநாயக ஸ்தாபனங்களை விலக்கிச் சர்வாதிகார ஆட்சியை விரும்பினர். ஐரோப்பா வில் பழைய 'வல்லரசுச் சமநிலை’ போன்றதொரு

இரண்டாம் உலக யுத்தம் 297
நிலைமை ஏற்பட்டது. ஜேர்மனியும் இத்தாலியும் ஒரு பக்கமும், பிரிட்டனும் பிரான்சும் இன்னெருபக்கமுமாக நின்றன. சிறுநாடுகள் ஏதோவொரு பத்கத்தைச் சேர்க் தன. சிலநாடுகள் நடுவுநிலமை வகித்தன.
சீன.வி ல் ஐரோப்பியருக்கும், அமெரிக்கருக்கும் இருந்த செல்வாக்கையும், வர்த்தகத்தையும் அழிக்க வேண்டுமென யப்பானியர் முனைந்து நின்றனர். சீன வும் மஞ்சூரியாவும் ஒற்றுமையடைந்ததும் சியாங்கை சேக் பெருஞ்செல்வாக்குடன் இருந்ததும் அவர்களுக்கு மனத்தளர்ச்சியைக் கொடுத்தது. சீனுவிலுள்ள வியா பாரத்தைக் கைப்பற்றவும் நோக்கங்கொண்டிருந்தனர். ஆகையால் தங்களாட்சிக்குள்ளிருந்த மஞ்சூரியாப் புகை யிரதப்பகுதியில் சீனர்களால் ஆபத்து நேர்ந்தது என்ற சாட்டினல் 1931-ல் மஞ்சூரியாவைத் தாக்கினர். அதைக் கைப்பற்றி "மஞ்சுக்கோ? என்ற பெயரைக் கொடுத்து அதை ஒரு தனி இராச்சியமாக அமைத்துத் தங்கள் மேற்பார்வையில் வைத்திருந்தனர். சீனுவின் அரசபரம் பரையிலுள்ள ஒருவரை அதற்கு அரசனுக்கச் சீன அரசாங்கம் சர்வதேச சங்கத்திற்கு முறையிட்டது. சங் கம் யப்பானுக்கெதிரே தீர்ப்பைக் கொடுத்தபோதிலும் யப்பானியர் அத்தீர்ப்பை அலட்சியம் செய்தனர். சீன வுக்கும் யப்பானுக்குமிடையில் போர் தொடங்கியது. வடசீன முழுவதையுங் கைப்பற்றினர். சர்வதேசசங்கம் இப்போரிற் தலையிடாமல்விட்டது. அது வலியிழந்து விட்டதற்கு அறிகுறியாகுடி
முசோலினி இத்தாலிய சோமாலிலாந்தின் எல்லைப் புறத்தில் ஏற்பட்ட சச்சரவினைக் காரணமாகக்கொண்டு அபிசீனியாவைத் தாக்குவதற்கு ஆயத்தஞ் செய்தான். 1935-ல் அங்காட்டுக்கெதிரே போருக்கெழுந்தான். ஒரு வருஷத்திற்கு அது இத்தாலிய குடியேற்ற நாட்டுச் சக்கராதிபத்தியத்துடன் சேர்க்கப்பட்டது. சர்வதேச சங்கம் இந்த யுத்தத்தையுந் தடுக்கமுடியாமற்போனது. பின்பு முசோலினியும் ஹிட்லரும் ஒரு மனப்பான்மை
38

Page 154
208 இரண்டாம் உலக யுத்தம்
யுடையவர்களாய் இருந்தபடியால் இருவருஞ் சேர்ந்து "உரோம-பேர்லின் அச்சுவல்லரசுகள்" என ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனர். யப்பானும் அவர் களுடன் சேர்ந்துகொண்டது,
1920-ன் பின் ஸ்பானியா தேசத்தில், குழப்பங்கள் பல ஏற்பட்டன. 1931-ல் அல்பொன்சோ அரசன் துரத்தப்பட்டு அங்கே குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. அந்த அரசாங்கம் அநேக புதிய மாற்றங்களைச் செய்த போதிலும் சில ஆண்டுகளுள் அதனுடைய பலங் குன் றிப்போனது. பல வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டபொழுது அவைகள் தீவிரமான முறைகளினல் அடக்கப்பட்டன. 1936-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் குடியரசு அர சாங்கத்தினர் வெற்றிபெற்றனர். ஸ்பானிய மொருெரக் கோவில் பிராங்கோ என்ற தளபதியின் தலைமையில் ஒரு கலகம் உண்டாயிற்று. அநேகர் அவனுக்கு ஆதர வளித்தனர். மற்றும் சிலர் குடியரசு அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். உள்நாட்டுக் கலகமேற்பட்டு அநீதி யான செயல்கள் நடைபெற்றன. பிராங்கோ பல வெற்றிகளைப் பெற்ருரன். ரூஷியா குடியரசு அரசாங்கத் துக்கு, ஜேர்மனியும் இத்தாலியும் பிராங்கோவுக்கும் படைகளை அனுப்பின. பிரித்தானியா பிரான்சு அமெ ரிக்க ஐக்கியநாடுகள் தலையிட்டு அது ஐரோப்பிய யுத்த மாகாதவண்ணம் பொது உடன்படிக்கை ஒன்று எழு திக்கொண்டன. ஆனல் ஜேர்மனியும் இத்தாலியும் இர கசியமாக உதவியளித்துக்கொண்டே கின்றன. சிறிது காலத்திற்குள் பிராங்கோ பூரண வெற்றியடைந்தான். இனி ஜேர்மனியின் பிரதம மந்திரியாயிருந்து ஹிட்லர் செய்த முயற்சிகளை ஆராய்வோம். அவன் ஜேர்மனியின் படைப்பலத்தைக் கூட்டியும், யுத்தகரு விகஜளச் செய்தும் மெயின் காய்ம்பிற் கூறியிருந்த திட்டத்தைச் செய்கை முறையிற் காட்டக் கவனஞ் செலுத்தினன். ஜேர்மனியின் குடியரசு அரசாங்கத் திற்குத் தலைவராயிருந்த ஹின்டன் பார்க்குக்கும், அங் நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை யளித்தன. பெரிய

இரண்டாம் உலக யுத்தம் 299
விமானப் படையொன்றையும் கோரிங் என்ற தளபதி மூலம் ஆக்குவித்தான். பின்பு 1 ஜிப்படையினரு டைய உதவியுடன் சமவுடமைக் கட்சியினரையும் யூதர் க3ளயுந் தாக்கினன். அநேகர் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானேர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட் டனர். ஜேர்மனியரிலநேகர் அவனது செய்கைகளை அங்கீகரித்தனர். / அடுத்தபடியாகக் குடியரசு ஸ்தா பனங்களை அழிக்கத் தொடங்கினன். அரசாங்க அதி காரம் முழுவதும் தலைவனிலேயே தங்கியிருக்கத்தக்க தாக ' எஸ் ஒ' என்ற நாஜிப்படையினரும் " எஸ் எஸ்* படையினரும் * கெஸ்ரபோ " என்ற இரகசியப் போலீஸ் படையினரும் உதவியளித்து வந்தனர். ஹிட்லர் ஒரு தேசீய வீரனுகக் கருதப்பட்டான். பாட சாலைகளிற் பிள்ளைகளுக்கு நாஜிக்கொள்கைகள் புகுத் தப்பட்டன. 1934-ல் ஹின்டன் பேர்க் இறந்தவுடன் ஹிட்லரே அப்பதவியைப் பெற்ருரன். யூதர்கள் அங்கு பெற்ற தண்டனையைப் பொறுக்க முடியாமல் ஜேர் மனியிலிருந்து வெளியேறினர்கள். 1935-ல் கட்டாயப் போர்ப்பயிற்சி ஜேர்மன் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
இவைகளெல்லாஞ் செய்து முடிந்தபின் றைன் நதிப் பிரதேசத்தில் ஹிட்லர் தனது புதிய படைகளைக் கொண்டுசென்று நிறுத்தினன். பிரான்சும் பிரித் தானியாவும் எதிர்ப்புக்காட்டவில்லை. அப்பகுதியைத் தன் வசப்படுத்தியது அவனுக்கு ஒர் வெற்றியாக அமைந்தது. பின்பு அப்பிரதேசத்தை "சீக்பிறீட்" அரண் அமைத்துப் பலுப்படுத்தினன். 1938-ல் அவுஸ் திரியாவை ஜேர்மனியோடு சேர்த்துக்கொண்டான் அடுத்தபடியாக ஜேர்மன் மக்கள் வசித்த செக்கோசி லாவாக்கியிலுள்ள சுடேற்றன் காட்டையும் டான்சிக் எனப்பட்ட பிரதேசத்தையும் கவருவதற்கு எண்ணங் கொண்டவுடன் பிரித்தானிய பிரதம மந்திரியாகிய நெவீல் சேம்பர்லேன் 1989-ம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் ஹிட்லரைச் சந்தித்து உரையாடுவதற்காக ஜேர்மனிக்குச் சென்றர். அங்கே சென்று, ஹிட்லர்

Page 155
300 இரண்டாம் உலக யுத்தம்
தனக்கு இனிமேல் நாடுகளைக் கைப்பற்றுமெண்ண் மில்லை என்று வாக்குப்பண்ணியபடியால் சுடேற்றன் பிரதேசத்தை ஜேர்மனியோடு இணைக்க அவர் சம் மதங் கொடுத்தார். ஆனல் ஹிட்லருடைய ஆசை அவ் வளவோடு நிற்கவில்லை. அடுத்த ஆண்டில் செக்கோ சிலவாக்கியில் எஞ்சியிருந்த பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். அவனைப் பின்பற்றி அச்சு வல்லரசு நண்பனுகிய முசோலினி பால்கள் நாடுகளிலொன்ருரகிய அல்பேனியாவுக்குப் படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றினன்.
இச்செய்கைகளைக் கண்ணுற்ற பிரித்தானியரும், பிரென்சுச்காரரும் யுத்தத்துக்கு வேண்டிய ஆயுதங் க&ாச் செய்தனர். கட்டாய இராணுவச் சேவை பிரித் தானியாவில் ஏற்படுத்தப்பட்டது. துருக்கியும் பிரித் தானியாவும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. இதற்கிடையில் ஹிட்லர் டான்சிக் பகுதியிலுள்ள ஜேர்மன் மக்களுக்கு அதிக கொடுமை செய்யப்படுகிற தென்று அதைக் கைப்பற்றுவதற்குப் போலாந்துக் கூடாய் ஒரு பாதை வேண்டுமென்றும் தெரிவித்தான். 1939-ல் ரூஷிய தேசத்துத் தலைவனுகிய ஸ்ராலினும் ஹிட்லரும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர் பின்பு ஹிட்லர் போலாந்தின் மீது படையெடுத்துச் சென்றான். உடனே பிரித்தானியாவும் பிரான்சும் ஜேர்மனிக்கெதிரே போருக்குக் கிளம்பின.
இவ்வண்ணமாகத் தொடக்கிய போர் உலகெங்கும் பரவியது. சுவிட்சர்லாந்து, ஸ்பானியா, சுவீடின், போர்த்துக்கல் முதலிய நாடுகள் நடுநிலைமை நாடுகளா யிருந்தன. பிரித்தானிய சேனை, பிரான்சிய சேனை யோடு சேர்ந்து 'மஜினேட்' பாதுகாப்பு அரண்பின் நின்றது. ஆரம்பத்தில் யப்பான், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போரிற் கலந்து கொள்ளவில்லை. ரூஷியா பின்லாந்தைத் தாக்கி அதனுடைய ஒரு பகு தியைக் கைப்பற்றியது. பின் ஜேர்மனியர் நடுநிலைமை நாடுகளாகிய நோர்வே, டென்மார்க், ஒல்லாந்து, பெல்

இரண்டாம் உலக் யுத்தம் 30.
ஜியம் முதலிய நாடுகள் ஒவ்வொன்றையும் தாக்கினர். நோர்வேக்குத் துணைபுரியச் சென்ற பிரித்தானியப் படைகள் துரத்தியடிக்கப்பட்டன. பிரித்தானிய மக்க ளுக்கு இது பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது. பிரதம மந்திரியாயிருந்த சேம்பர்லின் தனது பதவியி னின்று விலக வின்ஸ்ரன் சேர்ச்சில் அப்பதவியை யேற்ருரர். புதிய மந்திரிசபைக்குத் தலைவராய் இருந்த அவர் தன் திறமையினலும், சாமர்த்தியத்தினுலும் வெற்றிகரமாகப் போரை நடத்தினர். ஆனல் ஜேர் மனியின் தாக்குதல்கள் பயங்கரத்தை யுண்டாக்கின. அவர்கள் பிரான்சிய அரண்களைத் தகர்த்து முன் னேறி, நேசதேசப் படைகளைத் தோற்கடித்துப் பிரான்சைச் சரணுகதியடையச் செய்து விட்டனர். பிரித்தானியத் துருப்புகள் தங்கள் தேசத்துக்கு ஒடிப் போக நேரிட்டது. இந்தச் சமயத்தில் இத்தாலியும் போரிற் கலந்து கொண்டது. பிரித்தானியாவில் ஜேர் மன் துருப்புகளிறங்குவதற்குப் பிரித்தானிய கால்வா யும், அவர்களின் கடற்படையுமே தடையாயிருந்தன ஆகையால் ஜேர்மனியர் தங்கள் நீர்மூழ்கிக் கப்பல் களாலும் கடற் சுரங்கங்களாலும் அவர்களுடைய கப் பல்களுக்கு அதிக சேதமுண்டாக்கினர். ஆனல் பிரித் தானியரின் கடற்படை வலிமையை இழக்கவில்லை. பின்பு * ஆனூற்வாவ்' என்ற ஜேர்மனிய விமானப் படைகள் பிரித்தானியருடைய துறைமுகங்களையும் விமானத்தளங்களையுக் த ர க்க ஆரம் பித் தன. ஆனல் பிரித்தானியருடைம். துறைமுகங்களையும் விமா னப்படையினர் ஆகாயத்தில் நடத்திய போரிற் பகை வரை முதுகிடச் செய்ததுமன்றி அவர்களுடைய * லூற்வாவ்" விமானங்களையும் அழித்தனர். பின்பு ஜேர்மனியர் இராக்காலங்களில் துறைமுகங்கள், தளங் கள், நகரங்கள், கிராமங்கள்மீது குண்டுகளைப் பொழிந் தனர். அவர்கள் செய்ததுபோல் பிரித்தானிய குண்டு விமானங்கள் ஜேர்மனியிலுள்ள தளங்கள் மீதும். ஆயுதச்சாலைகள் மீதும் குண்டுகளைச் சொரிந்து அழிவை உண்டாக்கின.

Page 156
ჭ02 இரண்டாம் உலக் யுத்தம்
இந்தச் சந்தர்ப்பத்தில் முசோலினி எகிப்தையும், கெனியாவையுங் தாக்க ஆரம்பித்தான். பிரித்தானிய சேனைகள், தென்னபிரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்தி ரேலியா, இந்தியா முதலிய நாடுகளின் துருப்புக்களு டன் சேர்ந்து இத்தாலியரைத் தோற்கடித்தன. இத ஞல் அபிசீனியாவையும் விட்டோட வேண்டிய நிலை இத்தாலியருக்கு ஏற்பட்டது. 1941-ல் ஜேர்மனியர் பால்கள் குடாநாட்டின் பெரும்பகுதியைத் தம்வசப் படுத்தினர். கிரீட்தீவும் அவர்கள் கையிலகப்பட்டது. சுவிட்சர்லாந்து, சுவீடின், ஐபீரியன் குடாநாடு, ரூஷியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளெல்லாம் அச்சு வல்லரசுகளின் ஆதிக்கத்துக்குட்பட்டன. ரூஷியா வோடு செய்த உடன்படிக்கையை மீறி அங்காட்டுக் கெதிரே படையெடுத்துச் செல்லக் ஹிட்லர் தீர்மானஞ் செய்தான். ரூஷியப் படைகள் அடிக்கடி தோல்வி யுற்றபோதிலும் முற்ருகத் தோல்வியுறவில்லை. ஹிட்லர் வெற்றிபெறவும் முடியவில்லை.
இதற்கிடையில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஜனதி பதியான ரூஸ் வெல்ற்றும் சேர்ச்சிலும், 'அத்திலாங் திச்சாதனம்’ என்னும் உடன்படிக்கை ஒன்றை எழு திக்கொண்டனர். கீழைத்தேசத்தில், யப்பானும் மற்ற நாடுகளைக்கைப்பற்றி ஐரோப்பியரின் செல்வாக்கைக் குறைக்க எண்ணங்கொண்டது. இந்தோனேசியப் படைத் தலங்களிற் புகுந்துகொண்ட யப்பான் சடுதி யாக அமெரிக்காவைத் தாக்கத் தொடங்கியது. ஹாவா விலிருந்த அமெரிக்க கப்பற்படைமீது ஜப்பானிய விமானப் படைகள் குண்டு பொழிந்து அதை அழிக்க முயன்றன. ஹொங்கொங், மலாயா, பர்மா ஆகிய பிரித்தானியருடைய இராச்சியங்களை யப்பானியர் கைப்பற்றினர். கிழக்கிந்திய தீவுகளும், பிலிப்பைன் தீவுகளும் கைப்பற்றப்பட்டன.
1942-ல் ரூஷியாவுக்குப் படையெடுத்துச் சென்ற ஜேர்மன் சேனைகள் ஸ்ரான்லின்கிருட் மாநகர தற்

இரண்டாம் உலக யுத்தம் 03
காப்புப் போரிலிருந்து மீளமுடியாது தோல்வியுற்றன. 1943-ல் ரூஷியப்படைகள் ஜேர்மன் சைனியங்களைத் துரத்தத் தொடங்கின. கீழ்த்திசையில் ரூஷியப்படை கள் ஜேர்மனியைத் தாக்கி முன்னேறிவர மேற்கி லிருந்து பிரித்தானியத் துருப்புக்களும், அமெரிக்க துருப்புக்களுஞ் சேர்ந்த சேனை ஜேர்மன் சேனையைப் பின்வாங்கச் செய்தது. இதற்கிடையில் முசோலினி தன் தேசத்தின் யாராலோ கொலைசெய்யப் பட்டான். ரூஷியரும் பேர்லினை முற்றுக்கையிட்டுச் சீக்கிரத்தில் அதைக்கைப்பற்றினர். ஹிட்லர் தற்கொலைபுரிந்து கொண்டான். ஜேர்மன் படைகள் சரணுகதியடைந்தன.
ஐரோப்பியயுத்தம் நின்றவுடன் பிரித்தானியர் கீழ்த்திசையில் நடைபெற்ற சண்டைகளிற் கவனஞ் செலுத்தினர். லூயிமவுண்பற்றன் பிரபுவைத் தளபதி யாக நியமித்தனர். பர்மாவைத் திருப்பிக் கைப்பற்றி னர். அமெரிக்கருடைய ' கோட்டை விமானங்கள்’ யப்பானிற் குண்டுகளை வீசத்தொடங்கின. அதற்கும் அஞ்சாமற் சண்டைசெய்த யப்பானியரைத் தோற்கடிப் பதற்காக அமெரிக்கர் இரண்டு அணுகுண்டுகளைக் கிருேரஷிமாவிலும், நாகசாகியிலும் வீசினர். இதனல் நேர்ந்த சேதம் யப்பானியரைச் சரணுகதியடையச் செய்தது.
ஜேர்மன், அவுஸ்திரியா என்ற இருநாடுகளும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அமெரிக்கரும், பிரித்தானி யரும், பிரான்சியரும், ரூஷியரும் ஒவ்வொரு பகுதியிலு மிருந்துகொண்டனர். யப்பானில் அமெரிக்கத் துருப்பு களேயிருந்தன. போர் முடிவடைந்து மூன்று வருடங் களுள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பொதுவுடமை யாட்சி நாடுகளாக மாற்றியமைக்கப்பட்டன. அவை செக்கோசிலாவாக்கியா, போலாந்து, ரூமேனியா, ஹங் கேரி, பல்கேரியா, பூக்கோசிலாவியா என்பனவாம். ரீற்ருேலின் தலைமையின் கீழுள்ள யூக்கோசிலாவியா, ரூஷிய ஆதிக்கத்தினின்று விலகிக்கொண்டது.

Page 157
304 இரண்டாம் உலக யுத்தம்
ஆறுவருடகாலமாக நடைபெற்ற இவ்யுத்தம் முடி வடைந்ததும் தலைவர்கள் பலருஞ்சேர்ந்து சர்வதேச உறவு ஸ்தாபனமொன்றை ஸ்தாபிக்க முயன்றனர். அந்த ஸ்தாபனம் நன்முயற்சிக3ளச் செய்துவருகின்றதை நாம் கவனிக்கலாம். பொதுவுடமை நாடுகளும், ஜன நாயக நாடுகளும் முரண்பட்டு மீண்டும் யுத்தத்திற்குச் செல்லாமற் தடுத்தும், உலகத்தின் பல்வேறு நாடுக ளுக்குமிடையிற் தோன்றும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டும் இச்சங்கம் வருகிறது. இந்த ஐக்கிய நாட்டுத் தாபனத்தில் 51 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
பண்டைக்காலத்தில் ஒரு நாட்டில் நடந்த சம்பவங் கள் மற்ற நாடுகளைத் தாக்கவில்லை. தற்காலத்தில் போக்குவரவு வசதிகள் அதிகமாக இருக்கிறபடியால் ஒருநாட்டில் ஏற்படும் யுத்தமோ அல்லது ஒரு இயக்கமோ உலகமனைத்தையும் தாக்கிவிடுன்றது. ஒருநாடு வறுமைப் பட்டிருந்தால் மற்ற நாடுகளில் உற்புத்திசெய்யப்படும் பொருட்களை வாங்குவதற்கு இயலாமலிருக்கிறது. ஆகை யால் செல்வமுற்ற நாடுகளாகிய ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரூஷியா, வறிய நாடுகள் செழிப்படையக் கூடியதாக உதவிசெய்கின்றன. அதுவுமல்லாமல் எல்லா நாடுகளும் சந்தோஷமாகவும், செளக்கியமாகவும் வாழ வேண்டுமென்னும் நோக்கத்துடன் உதவிபுரிந்துவரு கின்றன. உலகம் முழுவதற்கும் ஒரு தனி அரசாங்கமே இருந்தால் மிகவும் நல்லது. ஆனல் அங்கிலேயேற்படுவ தற்கு மக்கள் தங்களுடைய வேற்றுமைகளைச் சிநேக முறையில் தீர்த்துக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். அந்தப் பெரும் நோக்கத்துடனேயே 1945ல் ஐக்கிய நாட்டுத் தாபனம் தாபிக்கப்பட்டது. 1945-ல் 50 நாடு களின் பிரதிநிதிகளை மாாத்திரம் கொண்டுள்ள அந்தத் தாபனம் 1953-ல் 60 பிரதிநிதிகஜளயும் 1956-ல் 80 பிரதி நிதிகளையுங் கொண்டுள்ளது. இவ்விதமாக ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்காக எழுதிய சாதனத்தில் 4 பிரதான அம்சங்கள் குறிப்பிடப்பட்டன. அவை: (1) சர்வதேசங் களிடையே பாதுகாப்பும் சமாதானமும் நிலவச்செய்

இரண்டாம் உலக யுத்தம் 305
தல், (2) பல நாடுகளுக்கிடையே பரஸ்பர மனப்பான் மையையும் நட்பையும் உண்டாக்கிவிடுதல், (3) பொரு ளாதார, சமுதாய, பண்பாடுள்ள மனுவீக பிரச்னைக ஐளத் தீர்த்துவைப்பதற்கு சர்வதேசங்களின் ஐக்கியத் தைப் பெறுதல், (4) இவ்விதமான நன்நோக்கங்களைப் பெறுவதற்கு இத்தாபனத்தை மத்திய தானமாகக் கொள்ளுதல் என்பனவாம்.
இப்பெரும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இத்தாபனத்துக்கு (1) பொதுச்சபை, (2) பாதுகாப்புச் சபை, (3) காரியாலயம், (4) சர்வதேச நீதிமன்றம் என் னும் நாலு அங்கங்களுண்டு. அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளின் அங்கத்தினரைக்கொண்டுள்ள பொதுச்சபை வருடமொருமுறை கூட்டப்படும். பாதுகாப்புச்சபையில் 11 அங்கத்தவர்களுண்டு. அவர் க ளி ல் அமெரிக்கா, பிரித்தானியா, ரூஷியா, சீன, பிரான்சு முதலிய 5 வல்லரசுகளின் பிரதிநிதிகளிடம்பெறுவர். எஞ்சிய 6 பேர்களும் இரண்டு வருடங்களுக்கொருமுறை பொதுச் சபையாற் தெரிவுசெய்யப்படுவர். பரதுகாப்புச் சபை பொதுச்சபையின் நிர்வாகசபையாகும். சர்வதேச நீதிச் சபையில் பாதுகாப்புச்சபையால் தெரிவுசெய்யப்பட்ட 15 நீதிபதிகளிடம்பெறுவர். இந்த ஐக்கியநாடுகளின் தாபனத்தின் எஞ்சிய அங்கங்கள் நம்பிக்கையாளரின் சபை, பொருளாதார, சமுதாயச் சபைகளாகும். இவை களுள் முதலாவது சுதந்திரம் பெற்றுக்கொள்ளாத நாடு களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள உதவிபுரி யும், இரண்டாவது (1) ஐக்கிய5ாடுகளின் கல்வி, விஞ் ஞானம், பண்பாடு சம்பந்தமான தாபனம்; (2) உணவு விவசாய தாபனம்; (3) சர்வதேசத் தொழிலாளர் தாப னம் (4) உலக சுகாதார தாபனம் என்னும் அங்கங் களைக்கொண்டுள்ளது. இவைகள் ஒவ்வொன்றிலும் பல நாடுகளிலுள்ள திறமையுள்ள நிபுணர்களிருந்து பல பிரச்னைகளையுங் தீர்த்துவைப்பதற்கு முயற்சிசெய்கின்ற னர். உலகத்தின் பலபாகங்களிலும் மலேரியா, கொள்ளே நோய் முதலியவைகள் அற்றுப்போகச் செய்ததோடு

Page 158
嫌
306. இரண்டாம் உலக யுத்தம்
பாடசாலைகளில்லாதவிடங்களில் அவைகளை தாபித்தும் இவைபோன்ற நன்முயற்சிகளை இத்தாபனங்கள் செய்து வருவதை நாங்கள் கவனிக்கலாம்.
கோறியாவில் நடைபெற்ற யுத்தத்தை இத்தாப னம் நிறுத்திவைத்தது. பலஸ்தீனுவில் யூதருக்கும், அரே பியருக்குமிடையிலுள்ள பகைமையை தீர்த்துவிட முயற் சிக்கிறது; இந்தியாவுக்கும், பாக்கிஸ்தானுக்கும் காஷ் மீரத்தினுலேற்பட்ட விவாதத்தைத் தீர்ப்பதற்கு நன் முயற்சிகள் செய்துவருகின்றது. 1956-ல் சுவேஸ்கால் வாய் சம்பந்தமாய் எழுந்த சச்சரவுகளை இத்தாபனமே தீர்த்துவைத்தது. உலகத்திலுள்ள பல பிரச்னைகளையும் ஐக்கிய நாட்டுத் தாபனத்தின்முன் கொண்டுவரப்பட் டால் பல நாடுகளின் அங்கத்தினர்கள் ஒன்றுசேர்ந்து அவைகளைத் தீர்த்துவைக்க முடியும் என்பது துணிபு. ஆகையால் அழிவையுண்டாக்கக்கூடிய புதிய ஆயுதங்க ளுள்ள இக்காலத்தில் யுத்தம் ஏற்படாவண்ணம் வேலே செய்துவருகின்ற தாபனத்தின் நன்முயற்சிகள் பாராட் டத்தக்கன. .
வினுக்கள் 1. முதலாம் உலகயுத்தம் முடிவடைந்தபின் உலகத்தில் என்ன கர்
டங்கள் ஏற்பட்டன?
2. அடோல்ப் ஹிட்லர் எப்படி ஜேர்மனிக்குத் தலைவனுக வ* நான்:
3. இரண்டாம் உலகயுத்தத்தின் காரணங்களே ஆராய்க.
4. சர்வதேச சங்கம் வலிகுன்றியதற்குக் காரணம் 61 இன்ன?
5, ஹிட்லர் ஐரோப்பாவிற் கைப்பற்றிய இடங்கள் யாவை ஐரோப் பாப் படமொன்று வரைந்து அகில் அவ்விடங்களைக் குறிப்பிடுக.
6. அமெரிக்கா இரண்டாம் உலகயுத்தத்திற் + ' க்துகொண்டதற்கு
t
7. ஐக்கிய நாடுகளின் தாபனம் உலகத்துக்கு என்ன சேவைகளைச்
செய்துவருகின்றது?
யாழ்ப்பாணம். நீ லங்கா அச்சியந்திரசாலேயி தப்பிக்கபபட்டது


Page 159

லங்கா
ச் சக ம்
ற்ப்பாணம்.