கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவின் அலைகள்

Page 1


Page 2


Page 3

நினைவின் a"
- தன் வரலாற்று நூல் -
எஸ்.வீ. தம்பையா
Vy4M [ዐNMቧበዐ)õ[ዛLዘጻ፴ቦU
மல்லிகைப் பந்தல்
201-1/1, பூநீ கதிரேசன் வீதி, 2
கொழும்பு - 13.

Page 4
மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு
6606
Title
Subject Authar No. of Pages Type
Paper Binding Price Publisher
In India
Lazer Printing
Printed at
அக்டோபர் 1977
: Φ. βο.oo
Ninaivin Alaikal Autobiography in Tamil S.V. Thambiah
120
Point
11.6 Kg
Art Board
Rs. 60.00 Malikai Panthal 20l-l/l, Sri Kathiresan St, Colombo - 13.
Kumaran Publishers 79, Ist Street, Kumaran Colony, Vadapalani, Chennai - 600 026.
Chithra Printography,
Chennai - 600 014.

FDiffit fü LJ6Drib
சமூக முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகரும்; முன்னாள் தலைவரும், புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், சமூகத் தொண்டனுமான, திரு. இ.மு. நாகலிங்கம்
அவர்கட்கு.

Page 5
பதிப்புரை
இவர் மலேசியாவில் - சிரம்பானில் இருந்த காலத்தில் ஐம்பதுகளில் என்னுடன் தொடர்புகொள்ள முயன்றிருக் கின்றார். இடையிடையே கடிதங்களும் எழுதியிருக்கின்றார். நான் அப்பொழுது இலக்கிய உலகில் கால்பதித்து வளர்ந்து கொண்டிருக்கும் காலம். யாரோ ஒருவர், என்னை யாழ்ப்பாணத்தில் தெரிந்து வைத்துக் கொண்டுள்ள ஒருவர் என அப்பொழுது நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நட்பைத் தொடர்ந்து பெறுவதில் அப்படியொன்றும் அக்கறை காட்டவில்லை, நான்.
பின்னர் சில ஆண்டுகள் கழிந்துவிட்டன. உரும்பராயில் எங்கள் சொந்தக்காரக் கிழவியின் மரண வீட்டிற்குப் போயிருந்த சமயம் இவரும் அங்கு வந்திருந்தார். இவருக்கும் அந்தக் கிழவி சொந்தம்.
நேரடியாக இருவரும் அந்தச் சமயத்தில்தான் கதைத்துக் கொண்டோம்.
மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளச் சூழ்நிலை அமைந்திருந்தது, W
தொழில் நிமித்தம் இவர் கொழும்பிற்கு இடம் மாறிச் சென்றுவிட்டார்.
நான் யாழ்ப்பாணத்தில் இலக்கியம் செய்து கொண்டிருந்தேன்.
அறுபதுகளுக்கு முன்னர் நான் பல தடவைகள் கொழும்புக்கு வந்து போவதுண்டு. அப்பொழுது கொழும்பில் மலிபன் வீதியில் ஒட்டப்பிடாரம் குருசுவாமி என்பவர் உணவு இறக்குமதி மண்டி வைத்திருந்தார். பெற்றாவில் பெரிய கடை விசாலமான இடம், அண்ணாச்சி குருசுவாமி இலக்கிய நெஞ்சம் கொண்டவர். அந்தக் காலத்திலேயே புதுமைப் பித்தனுக்குப் பணம் சேர்த்து அனுப்பியவர். இளம் இலக்கிய நண்பர்களை வார
இறுதியில் தமது ஸ்தாபனத்திற்கு அழைத்து இலக்கியக்

எஸ்.வீ. தம்பையா 5
கலந்துரையாடல்கள் நடத்த ஒழுங்கு செய்தவர். இலக்கிய அபிமானி அதன் காரணமாக என் மீது தனிப்பாசமும் பற்றும் கொண்டவர்.
அவருடைய கடை மாடியில்தான் நான் தங்குவது வழக்கம். கோட்டை புகையிரத நிலையத்திற்குச் சமீபமாகத்தான் இருந்தது அவரது வியாபார நிறுவனம். அங்கு தங்கிக் காரியங்கள் ஆற்றுவது எனக்குப் பெரும் வசதியாக அமைந்திருந்தது.
இப்படித் தங்கி வந்த காலத்தில்தான் 1961-ல் நான் சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக்கொண்டேன். தண்ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதிக்காக படைப்பு இலக்கியத்திற்குக் கிடைத்த முதலாவது பரிசு இதுவாகும். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நான் பல இலக்கிய நிறுவனங்களால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருநாள் நண்பர் தம்பையா என்னைச் சந்தித்தார். இவருடன் நடராஜா அண்ணர் என்பவரும் உடனிருந்தார். சந்தித்த உடனேயே நண்பர் கேட்டார்: "ஏனண்ணே அங்கை இங்கை நீங்கள் தங்கவேணும்? என்ரை கடைமேலே வசதியிருக்கு. நீங்க அங்கை தங்கிக் கொள்ளலாம். அதோடை ராராவாப் பேசிக்கொள்ளலாம். இனிமேல் கொழும்புக்கு வந்தால் என்னோடை தங்கவேணும்!” என அன்புக் கட்டளை யிட்டார்.
குருசுவாமி அண்ணாச்சி கடையில் சகல வசதிகளும் உண்டு, ஆனால் சாயங்காலம் ஆனதும் அவர் வீட்டிற்குப் புறப்பட்டுவிடுவார். நான் இரவு முழுவதும் தன்னந் தனியாகக் குந்தியிருக்க வேண்டும். இது எனக்குச் சில சமயங்களில் சங்கடமாகக்கூட இருக்கும்.
நண்பர் தம்பையா சொன்னதைக் கூடவந்த நடராஜா
அண்ணரும் வற்புறுத்திக் கூறினார். எனக்கும் அது சரியென்றே பட்டது.

Page 6
6 நினைவின் அலைகள்
அன்று தொடக்கம் கொழும்பில் எனது தங்குமிடம் தம்பையா அவர்களின் கடை மேல் மாடியாக மாறியது.
ஆரவாரமில்லாத. ஆர்ப்பரிப்புக் காட்ட்ாத குணம்கொண்ட நண்பரிடம் அபரிமிதமான சிந்தனைத் திறன் உள்ளிருப்பதைப் பழகிய சொற்ப காலங்களிலேயே தெளிவாகப் புரிந்துகொண்டேன். கடலில் கலந்த கண்ணிர் என்ற சிறுகதைத் தொகுதியொன்றையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் எழுதி வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணத் தில் நடந்த வெளியீட்டு விழாவில் நான் பேச்சாளனாகக் கலந்துகொண்டேன். டானியல் அவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அந்தச் சிறுகதைத் தொகுதிக்குத் தெணியான் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் சரிதவியல்" நூலைக் கையெழுத்துப் பிரதியில் எனக்குப் படிக்கத் தந்தார் தம்பையா. படித்துப் பார்த்தேன். இப்படியான ஒரு சரிதவியல் நூல் பல ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளிவந்திருந்தது. எனது ஞாபகத்திற்குத் தட்டுப்பட்டது. யாழ்நகர பஸ் நிலையத் திற்கு அணித்தாகச் 'சன்னல்ற் லோண்டரி வைத்திருந்தவர் ர்.செல்லையா என்பவர். இவர் 1970-ம் ஆண்டு வாழ்க்கையின் சோதனைகள் என்ற பெயரில் 216 பக்க நூலொன்றை வெளியிட்டிருந்தார். ஒரு சாதாரணனின் சரிதவியல் நூல் யாழ்ப்பாண மண்ணில் வெளிவந்தது இதுவே முதல் முறையாகும். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அந்தக் காலத்திலேயே அவரைத் தேடிப்போய்ப் பாராட்டியிருக்கின்றேன்.
அடுத்து இரண்டாவது வெளிவரும் ஒரு சாத்ாரணனின் சரிதவியல் நூல் இதுவேயாகும்.
மல்லிகைப் பந்தல் மூலம் இந்த நூலை வெளியிடலாமா? இல்லை வெளியிடக் கூடாதா? என நான் மனசுக்குள் விவாதித்துக் கொண்டிருந்த சமயம் தெணியான்

எஸ்.வீ. தம்பையா 7
மாஸ்டரிடம் அபிப்பிராயம் கேட்டுப்பார்த்தேன். நண்பர் ராஜபூரீகாந்தனிடமும் கேட்டு வைத்தேன். 'சிறுகதை, நாவல், கவிதை வெளியிடுவது மாத்திரம் மல்லிகையின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. இலக்கியத்தின் பல்வேறு துறைகளையும் தொட்டுக்கொண்டு செல்ல வேண்டும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்' என அவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். கருத்துச் சொன்னார்கள்.
அவர்கள் தந்த இந்த உற்சாக உந்துதல் காரணமாக இந்தச் சரிதவியல் நூலைப் பரீட்சார்த்த வெளியீடாக மல்லிகைப் பந்தல் மூலம் வெளியிட்டு வைக்கின்றேன்.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளில் இது ஒரு புதிய வடிவம்தான். இந்த முயற்சியில் இந்த நூல் எந்தளவிற்கு வெற்றிபெறப் போகின்றது என முற்கூட்டியே சொல்லிவிட இயலாது.
அதற்காக இப்படியான பரிசோதனை முயற்சிகளுக்கு ஊக்கம் தராமலும் நாம் இருந்துவிடக் கூடாது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு புத்தகம் எழுதக்கூடிய அரிய தகவல்களும், சம்பவங்களும் பொதிந்து போய்க் கிடக்கின்றன, என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு.
அதற்கு உதாரணமாக இந்த "நினைவின் அலைகள்” சரிதவியல்காரரிடமும் சுவையான பல தகவல்கள் இருப்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
முல்லிகைப் பந்தல் வெளியீடுகள் இத்தனை வடிவாகவும். வெகு சீக்கிரமாகவும், மிகப் பொறுப்பாகவும் வெளிவர ஆவன செய்துவரும் இளைய தலைமுறை இலக்கிய ஆர்வலர் தம்பி ககுமரனுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ley or - டொமினிக் ஜீவா

Page 7
UypGörBBhp?
ஒரு சாதாரணனின் சரிதம்
இக்காலத்தில், இலக்கியத்திற்கும் யதார்த்தத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலுள்ள உறவுகள் மிகவும் நெருக்கமானவையாக உள்ளன. உறுதியான வரலாற்றுக்காரணிகள் மற்றும் வாழிடச் சூழ்நிலைகள், தனிநபர்கள் மற்றும் பொதுமக்கள், சமுதாய இயல்புகள் மற்றும் உலகப் பொதுவான இயல்புகள் ஆகிய எல்லாமே இலக்கியத்தில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இன்றைய இலக்கியமானது தனித்தன்மைவாய்ந்த, இறுக்கமாகப் பின்னப்பட்ட, செறிவான அமைப்பாக உள்ளதாக இப்போது விஞ்ஞானபூர்வமாக விளக்கப்படுகிறது.
தனிமனித வாழ்க்கையும் சமூக வரலாறும் இலக்கிய நடைமுறைகளும் மிக நெருக்கமாகச் சந்திக்கக்கூடிய வடிவம் சரிதவியலாகும். சமுதாயத்தின் ஒர் அங்கமாகிய தனிமனிதனுக்கும் மெய்யான யதார்த்தத்திற்கும் இடையே புதிய உறவுகள் உருவாகும்போது அவனாற் படைத்தளிக்கப்படும் இலக்கியத்திலும் தீவிர மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் அவன் எப்போதுமே சமுதாயத்தோடு, உலகத்தோடு, தனது செயற்பாடுகளுடன் ஒத்துப்போகக்கூடிய புற நிகழ்வுகளோடு, தனது வாய்ப்புகளை உறுதிசெய்யக்கூடிய சந்தர்ப்பங்களோடு உறவுகொண்டு காணப்படுகிறான்.
இலக்கிய உலகில் சரிதவியலுக்கு முக்கிய இடமுண்டு. இதற்கு நல்லதொரு சான்றாக பேராசிரியர் சித்தலிங் கையாவின் “ஊரும் சேரியும்” நூலைக் குறிப்பிடலாம். சேரியொன்றில், மிகச் சாதாரணமான குடும்பமொன்றில் பிறந்த சித்தலிங்கையா ஏழ்மையும், போர்க்குணமும்

எஸ்.வீ. தம்பையா 9
நிறைந்த தலித்துக்களின் வாழ்வை கிண்டலும் குறும்பும் நிறைந்த தொனியில் தனது சரிதையில் முன்வைக்கிறார். “ஊரும் சேரியும்’ கன்னட வாசகர்களின் பெருவரவேற்பினைப் பெற்ற நூலாகும். இந்நூல் வேறு பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது.
தமிழிலக்கிய உலகினைப் பொறுத்தமட்டில் சரிதவியல் பெருமளவிற் கைவைக்கப்படாத துறையாகவே இருந்துவருகிறது. இந்த வகையில், எஸ்.வீ. தம்பையா அவர்களினாற் படைக்கப்பட்ட "நினைவின் அலைகள்" என்ற இந்த நூல் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றது. யாழ்ப்பாணத்தில், வளமிகுந்த மண்ணுள்ள கிராமமொன்றில், சாதாரண குடும்பமொன்றில் பிறந்த எஸ்.வீ தம்பையா தனது சரிதையினை ஒரிரு இடங்களில் கற்பனைத் துளிகள் சேர்த்து இலக்கியமாக்கித் தந்துள்ளார். ஆர்ப்பாட்டங்களில்லாத இலகுவான தமிழ்நடை வாசிப்பதற்குச் சுகமாக இருக்கிறது.
எஸ்.வீ. தம்பையா அவர்கள் இலக்கிய உலகிற்குப் புதியவரல்ல. 1956 இல் இவருடைய முதற் சிறுகதை சிங்கப்பூர் “தமிழ் முரசில்” வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் "தமிழ் நேசன்", "பொன்னி" என்பவற்றிலும் இவருடைய சிறுகதைகள் வெளிவந்தன. 1960இல் இலங்கை திரும்பியதும் இங்குள்ள பத்திரிகைகளிலும் சில சிறுகதைகளை எழுதினார். 1983 ஜனவரியில் "கடலிற் கலந்தது கண்ணிர்” என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். நீண்ட இடைவெளியின் பின்னர் "நினைவின் அலைகள்" என்ற இந்நூல் வெளிவருகின்றது.
இன்று புவிக்கோளத்திலுள்ள வளமிக்க நாடுகள் பலவற்றில் சிதறிப்போயுள்ள யாழ்ப்பாணத் தமிழரின் வாழ்க்கை ஐந்தாறு சகாப்தங்களின் முன்னர் எவ்வாறிருந்ததென்பதை சமூகவியல் ஆய்வாளர்களும்

Page 8
10 நினைவின் அலைகள்
இன்றைய மற்றும் எதிர்கால இளந் தலைமுறையினரும் தெளிவாக அறிந்துகொள்வதற்கு உதவும் நல்லதோர் ஆவணமாக இந்நூல் திகழ்கிறது. சாதாரணர்களின் சரிதையிலிருந்துதான் சமுதாயத்தின் அடித்தளங்களை, வேரடிகளைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.
இந்த வகையில் எஸ்.வீ. தம்பையா அவர்களின் "நினைவின் அலைகள்” என்ற இந்நூல் ஒரு வெற்றிகரமான படைப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
ராஜ பூரீகாந்தன் "பவானி", வதிரி.
76/35, பரமானந்த மாவத்தை, கொழும்பு - 13, 1997. O7. 10.

என்னுரை
1953, 1964 பத்தாண்டு கால இடைவெளியில் சிறுகதைகள் எழுதிவந்தவன்தான், இவன்.
1983-ல் 'கடலில் கலந்தது கண்ணிர் என்ற பெயரில், சிறுகதைத் தொகுதியொன்றை வெளியிட்டிருந்தான்.
எதிர்பாராத பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, இவன் தொடர்ந்து எழுதாவிடினும், தூரநின்று ஓர் இலக்கிய இரசிகனாக - சுவைஞனாக தொடர்ந்து இரசித்து - சுவைத்து வந்திருக்கிறான்.
தான் ஒர் எழுத்தாளன் என்றோ, தனக்கும் எழுதமுடியும் என்றோ, எவரிடமும், என்றும் வாய்ப்பந்தல் போட்டதில்லை. தன்னடக்கமாக இருந்துகொண்டு, இலக்கிய உலகை அவதானித்து வந்திருக்கிறான். கதை எழுதிப் புகழடைய வேண்டும் எனும் ஆவலுமில்லை.
இருப்பினும் -
நீண்டகாலமாக இவன் மனச்சிறையில் அடைபட்டுக் கிடந்த, வேதனைகள், துக்கங்கள், ஏக்கங்கள், இவன்பட்ட அனுபவங்கள், அடுத்த தலைமுறையினர்க்கு பயன்பட வேண்டும், அவர்கள் இவற்றை அறிய வேண்டும், என்ற உந்துதலே இதை எழுதத் தூண்டியது. இதில், நீங்கள் கேள்விப்படாத - அறியாத பல உண்மைகள் பரவிக் கிடக்கின்றன.
வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக, தன் சுய முயற்சியால் வளர்ந்து வந்தவன், இவன். இவனின் வளர்ச்சியே “நினைவின் அலைகள்" என்ற பெயரில் உங்கள் கைகளில் நூலாகத் தவழுகின்றது. ஒளிவு மறைவு இன்றி தனது மனச்சுமையை உங்கள் முன் இறக்கி வைத்திருக்கிறான்.

Page 9
12 நினைவின் அலைகள்
"சூரியக்கதிர்" காரணமாக மல்லிகை காரியாலயத்தில் புதைந்து கிடந்த, கையெழுத்துப் பிரதியைத் தேடித் தந்தவர் திரு. சந்திரசேகரம். சில திருத்தங்கள் செய்து வழிகாட்டிய திரு. தெணியான். திரு. டொமினிக் ஜீவா, அட்டைப்படம் வரைந்த ரமணி, மனமுவந்து முன்னுரை வழங்கிய ராஜ பூரீகாந்தன் ஆகியோருக்கு நன்றிகள் பல உரித்தாகுக!
எஸ்.வி. தம்பையா 182, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு - 11, இலங்கை
7. a. s. 263 g

நினைவின் அலைகள்
உரும்பிராய்ச் சந்தி - சிலுவையை நிலத்தில் கிடத்திவைத்தாற்போன்றதொரு நாற்சந்தி
தெற்கே யாழ்ப்பாணம், வடக்கே பலாலி. கிழக்கே கோப்பாய்; மேற்கே இணுவில்.
சந்தியிலிருந்து வடக்கு நோக்கி பலாலி வீதி வழியாக சிறிது தூரம் சென்றால், அரசினர் "டிஸ்பென்ஸரி" அதனை அடுத்து கற்பகப் பிள்ளையார் - சிவன் - காளி கோயிலைக் கடந்து, தெருவின் மேற்குப் பக்கமாக, சிலுவையின் பாதத்தை ஒட்டினாற்போல, அகன்ற மதிற் சுவருக்கு மத்தியில், மருதமர நிழலில் இந்துக் கல்லூரி இரண்டாகப் பிளந்து கிடக்கிறது.
ஒரு பக்கம் தமிழ்ப் பகுதி "சைவத் தமிழ் வித்தியாசாலை" என்ற பெயரிலும், மறுபக்கம் ஆங்கிலம் போதிக்கும் "இந்துக் கல்லூரி” எனும் திருநாமத்துடனும், சிறந்துவிளங்கி அந்தக் கிராமத்துக்கு பெருமை சேர்க்கிறது.
ஒரே வளவுக்குள் இரு கல்விக் கூடங்கள். இலங்கை சுதந்திரமடையாத, ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் அது என்பதால், ஆங்கிலப் பகுதி சீதாராம ஐயரை தலைவராகக்

Page 10
14 நினைவின் அலைகள்
கொண்டு, அவரைப்போலவே கம்பீரமாய் தலைநிமிர்ந்து நின்றது.
தமிழ்ப் பள்ளிக்கூடம் அரைச் சுவருடன் சற்று கட்டையாகத் தோற்றம் தரும் இடைக்க்ாடு கந்தையா வாத்தியார் போல, அவர் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
பொன்னுத்துரை வாத்தியார், சைவத் தமிழ் வித்யாசாலையில் ஒர் ஆசிரியர். அவரிடம் படித்த மாணவர்களில் இவனும் ஒருவன்.
இவனுக்கு அப்போது வயது பத்து. ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். செம்பட்டை முடியை அழுத்திச் சீவியிருப்பான். கன்னங்களில் எண்ணெய் வடியும் நெற்றியிலே அள்ளி அப்பிய திருநீற்றுப் பூச்சு, காதுகளில் சிவப்புக்கல்லு தோடுகள் பளிச்சிடும். சால்வைத் துண்டு ஒன்றை வேட்டியாகக் கட்டியிருப்பான். கையில், சிலேற், புத்தகம், பென்சில் ஆகியவை. பள்ளிக்கூடம் போகும்போது, இந்தக் கோலத்தில்தான் இவனைப் பார்க்கலாம்.
இரண்டாவது d6) மகாயுத்தத்தின்போது, ஜப்பானியரின் குண்டு வீச்சிலிருந்து தம்மைத் தாம் பாதுகாத்துக் கொள்வதற்காக, வகுப்பு மாணவர்களுக்கு சில விதிமுறைகளை ஆசிரியர் சொல்லிக்கொடுப்பார். குண்டு வெடிக்கும் சப்தம் செவிப்பறையைத் தாக்காமலும், அதன் சிதறல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், அரை அடி நீளமான தடிக்கம்பு ஒன்றை வாயின் குறுக்காக குதிரையின் கடிவாளத்தைப்போல கெளவிக் கொண்டும், காதுகளில் பஞ்சை கற்றையாகத் திணித்துக்கொண்டும், நிலத்தில் நெஞ்சு முட்டாமல், இரு கைகளையும் தரையில் முட்டுக் கொடுத்துக் கொண்டு, "தண்டால்" எடுப்பதுபோல முகம்குப்புற படுத்துக் கொள்ளவேண்டும்.
மாணவர்கள் நிரைதப்பாமல் வரிசையாக
படுத்திருக்கும்போது, “நான் சொல்வது உங்களுக்கு

எஸ்.வீ. தம்பையா 15
கேட்கிறதா?” என உரத்த குரலில் கேட்பார், ஆசிரியர். மாணவர்கள் இல்லோரும் சேர்ந்து "இல்லை" என்பார்கள். மேலும் சற்றுப் பலமாக, அழுத்தம் திருத்தமாக "நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா?" என்பார். "இ.ல்.ல்.லை” இப்படிக் குரல் கொடுத்தவர்களில் இவனும் ஒருவன்தான். வாத்தியார் சொண்டுக்குள் சிரித்துக் கொள்வார். அவர் ஏன் சொண்டுக்குள் சிரித்தார் என்பதை, பல வருடங்களுக்குப் பிறகுதான் இந்தச் சிறுவனால் உணர முடிந்தது!
இராசலட்சுமி அக்கா அப்ப குமர்ப்பெட்டை முல்லைக் கொடிபோல, மெலிந்து எடுப்பான தோற்றம். அதிகம் அடிக்கமாட்டார். சிரித்துச் சிரித்துத்தான் பாடம் சொல்லித் தருவார். கோபம் வந்தாலோ, அடிமட்டத்தை நிமிர்த்திப் பிடித்தபடிதான் அடிப்பார்! அப்போது பின்னல்கள் இரண்டும் கருநாகபாம்பு தலைகீழாகத் தொங்குவதுபோல துள்ளும். அடிமட்டத்தால் ஒன்று விழுந்தாலும் அதற்குத் தகுந்த காரம் இருக்கும். இவனுக்கும் இடையிடையே உறைத்திருக்கிறது.
பிள்ளைகளுககு அடிக்காத ஒருவர் உண்டு என்றால் அவர் தங்கமணி அக்காதான். அள்ளி முடிந்த வட்டக் கொண்டையும், பழைய ஒரு சதமளவிலான குங்குமப் பொட்டுடனும், முகமலர்ச்சியாக, "தோடம்பழக்காரா. தோடம்பழம்தாடா." என்ற பாட்டை தனக்கேயுரிய குரல் இனிமையுடன் மனதில் பதியும் வண்ணம் சொல்லித் தருவார். அவர் பாலர் வகுப்பு ஆசிரியை. இவன் பாட்டுப் பைத்தியம் என்பதால் அக்காவின் பாட்டை நன்றாக ரசித்து சுவைத்துப் படிப்பான்; பாடுவான். பள்ளி வாழ்க்கையில் இனிமையான நிகழ்ச்சி இது. . .
பிள்ளைகளுக்கு அடிப்பதில் சாம்பியன் "கின்னஸ்” புத்தகத்தில் பொறிக்கப்பட வேண்டியவர் ஐயர் வாத்தியார்தான். அவருக்குப் பெயர் என்னவோ! ஐயர் வாத்தியார் என்பதே பிரபலம் ஐயர்தான் வாத்தியாராக

Page 11
16 நினைவின் அலைகள்
இருந்தார். சில சமயம் அச்செழு அம்மன் கோயில் திருவிழாவின் போது தேரில் நின்று அவர் பூசை செய்வதை, இவன் தூர நின்று நேரில் பார்த்திருக்கிறான்.
நீர்வேலி வாய்க்கால் தரவையில் மாட்டுச் சவாரி நடக்கும். அப்போது, சவாரி மாட்டுக்கு அடிப்பதைப்போல பற்களைக் கடித்துக்கொண்டு பூவரசம் கம்பு தும்பு பறக்கும்வரை விளாசு விளாசென்று விளாசுவார். மாணவர்களை அடிக்கப் பிடித்தால், சில சமயம் கொட்டைப்பாக்குக் குடுமி அவிழ்ந்தாலும்; அப்போதும் ஆளைவிடமாட்டார்.
சிலவேளைகளில் தானாக பகிடிக் கதைகள் சொல்லி மாணவர்களுக்குச் சிரிப்பை மூட்டிவிட்டு திடீரென உடன் நிறுத்தச் சொல்லுவார். மெக்கானிக் அப்பாமணி சண்முகத்தைப்போல "சடன் பிரேக்” போடத் தெரிந்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். கடகடத்த இபோச பஸ்ஸைப்போல மெது. மெதுவாக. சிரிப்பை அடக்குபவர்களும், அவிட்டுச் சிரிப்புக்காரர்களும், செம்மையாக வாங்கிக் கட்டுவார்கள். எப்பொழுதும் செம்மையாக வாங்கிக் கட்டுகின்ற குழுவில் இவன்தான் முதல் மாணவன்.
2
நவரத்தின வாத்தியார் ஆங்கிலப் பாடம் படிப்பிக்க வருவார். வகுப்பில் எவ்வித சலசலப்புமில்லாமல் அமைதி நிலவும். ஃபியூஜி ஜிப்பா அணிந்திருப்பார். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புபோல, சால்வை கழுத்தைச் சுற்றிப் போட்டிருப்பார். நெற்றியில் அளவான சந்தப்

GTGiu.6S. 5the0)uum 17
பொட்டு. ஆயிரத்து எழுநூற்று மூன்று ஜப்பான் மல்பீஸ் வேட்டி நெளி நெளியான சுருட்டை மயிர் நடு வகிடு எடுத்துச் சீவியிருப்பார். அச்சில் வார்த்ததைப் போல வடித்தெடுத்த தலைக்கோலம். மினு மினு என்று மினுங்கும் - தனி அழகு!
அன்றைய பாடத்தில் (Fish) ஃபிஷ் என்ற ஆங்கிலச் சொல்லை அழகாக உச்சரிக்க வேண்டும். இவனோ சோற்று மாடு. மீனைச் சாப்பிடச் சொன்னால் மூக்கு முட்டச் சாப்பிடுவான்; முழுப் பிடி பிடிப்பான். ஆனால், அதை ஃபிஷ் எனச் சொல்லச் சொன்னால் "பிஸ்” என்பான். சில சமயம் இவன் நினைப்பான் இறைவா! மீனினத்தைப் படைக்காமல் விட்டாலென்ன? எவ்வளவு நல்லாயிருக்கும்! அதை உச்சரிக்கும் தொல்லையுமிருக்காதே! அதோடு தான் தமிழில் "ஷ்" என ஒரு எழுத்தில்லையே, பிறகு ஏன் இந்தக் கெடுபிடியெல்லாம் வாத்தியாருக்கு?
இவனுடன் சண்முகமும் சேர்ந்துகொண்டான். 'ஃபிஷ்" - "பிஸ்" வாத்தியார் 'ஃபிஷ்ஷ்" என அழுத்திச் சொன்னால் இவனும் விடமாட்டான் "பிஸ்ஸ்" இவனுக்குத் தெரிந்தவரை பேச்சுப் பழகுவதற்கு வசம்பை சுட்டு பட்டுப்போல அரைத்து நாக்கில் தடவினாலும் அது நடக்காத சங்கதி அப்படியானால் ஆங்கிலத்தை 6õ) dgኝ கழுவ வேண்டியதுதானே "கிட்டாதானால் வெட்டென மற” பழமொழிதான் எல்லாவற்றுக்கும் கைவசமிருக்கே!
சண்முகத்திற்கும் இவனுக்கும் வகுப்பில் புதுவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டன. சண்முகத்தை தலைகீழாக நிற்கச் சொன்னார். இவனை மேசைக்குக் கீழே தலையை முண்டு கொடுத்து நிற்கவைத்து சுந்தரலிங்கம், சிவலிங்கம், நெத்தலி, குட்டி, பரமலிங்கம், பரமேஸ்வரி, பரிமளம், சிவபாக்கியம், ஆச்சிமுத்து இன்னும் சக மாணவ மாணவியரின் புத்தகங்கள் இவன் முதுகின்மேல் அடுக்கடுக்காக ஏறிக்கொண்டன. பொதி சுமக்கும் கழுதையைப்போல. இவனுக்கு ஒரு சுமை பாரம். வாத்தியார்

Page 12
18 நினைவின் அலைகள்
என்னதான் நினைத்துக் கொண்டார்; பாரம் சுமப்பது என்ன பெரிய வேலையோ இதைப்போல எத்தனை மரவள்ளிக் கிழங்குச் சாக்குகளை தூக்கியிருப்பான், சுமந்திருப்பான்.
பள்ளியின் தெற்குப் பக்கம் அரைச்சுவர் மருத மரத்தை ஒட்டினாற்போல. சண்முகம் கை கால்கள் பதற அரைச்சுவருடன் சாய்ந்துகொண்டு சிரசாசனம் செய்யும் முயற்சியில் இறங்குகிறான். ஐயோ பார்த்தால் பரிதாபம். அவனுக்கு தலைகீழாக நின்று பழக்கமேயில்லை. முன்பின் சிரசாசனத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் இல்லை. சாராயம், தென்னை, பனை, "பூச்சி" நாலும் கலந்து மூக்குமுட்டக் குடித்தவன் தலையில் இரு கைகளையும் ஊன்றி மெதுமெதுவாக எழும்ப முயற்சிப்பதுபோலத் தட்டுத் தடுமாறுகிறான். வலது காலை ஏழு "7இலக்கத்தைப் போல அரைச் சுவரில் மாட்டியபடி, இடதுகாலை “V” வீயை தலைகீழாகப் போட்ட மாதிரி தூக்க முடியாமல் தூக்கி ஒரு பக்கவாட்டாக சரிந்து, விழுந்து தடுமாறுகிறான். ஊ.கும் சண்முகத்துக்கு "தம்" பிடித்து எழும்பவே இயலாது!
சேற்றுக் கிடங்குக்குள்ளே சின்னதொரு "மாபிள்” வைத்து அழுத்தியது போன்று, அவன் சின்னஞ்சிறிய கண்கள். தூர நின்று பார்த்தால் கண்களே இல்லாத மாதிரிக்கூடத் தெரியும். இவனிடம் ஒரு நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ! தனக்குத் தெரிந்த வித்தைகளை தெரியும் என மார்தட்டிச் சொல்லமாட்டான். தெரிந்த வித்தைகளை மனத்துக்குள் புதைத்துக்கொண்டு வாய்ப்பந்தல் போடாது பேயன் மாதிரி இருந்து ஆளை அளப்பான். ஒன்றைச் சொல்வான்; மனதில் இன்னுமொரு திட்டமும் ஒடும். நல்லவன், ஆனால் நரிக்கள்ளன். ஆழமானவன், வாயாலே பேசாது செயலாலே செய்து காட்டுவான். இரு இனத்துக் கலப்புத்தானோ என்னவோ, வன்னிக் காளைக்கும் யாழ்ப்பாணத்துப் பசுவுக்கும் பிறந்த நாம்பன்.
தெரியாததை தெரியும் எனச் சொல்லி தவறாக அதைச் செய்யும்போது பார்த்துப் பொறுக்கமாட்டான்.

எஸ்.வீ. தம்பையா 19
துள்ளுவான், குதிப்பான் செய்வன திருந்தச் செய்ய வேண்டும் இவனுக்கு
மேசைக்கடியில் தலையை முண்டு கொடுத்துக் கொண்டு, சின்னஞ்சிறிய கண்களால் அங்குமிங்கும் துழாவினான். இந்த மடையனை இப்ப என்ன செய்ய! சண்முகத்தை பார்க்க எரிச்சல் எரிச்சலாக இருந்தது. "டேய் சண்முகம்" எனக் கத்த வேண்டும் போல இருந்தது. இருந்தும், பள்ளிக்கூடம் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு, மிக அமைதியாக "வா.த்.தி.யார்” என்றான். "என்னடா!" மிடுக்குடன் கேட்டார். "நான் சண்முகத்தைப்போல நிற்கப்போறேன்", "உம் சரி” வாத்தியார் சம்மதித்தார். தண்டனை மாற்றப்பட்டது.
சால்வைத் துண்டுதான் இவனது வேட்டி உரிந்து உதறி. வரிந்து இடுப்பில் சிக்காராகக் கட்டிக்கொண்டு, வேட்டித் தலைப்பை இரு தொடைகளுக்கிடையில் பசுக்கன்றின் வாலைப்போல, முறுக்கி உருவி, இழுத்துச் சொருகினான். கொடுக்கு சரியாக இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.
வாத்தியார் இவனது செயலைக் கூர்ந்து கவனித்தபடி "இண்டைக்கு இவன் என்னிடம் செம்மையாக வாங்கிக்கட்டப் போறான். ஏதோ போதாத காலம்தான்” என எண்ணிக் கொண்டிருக்கும்போது. இரு கைகளையும் கோத்து நிலத்தில் வைத்து அழுத்தி சூரன் தலையை அங்குமிங்கும் ஆட்டுவதுபோல அசைத்து, மெது மெதுவாக உடலைத் தூக்கி, சிறிது சிறிதாக நேராக்கி, எதிரே நெட்ட நெடுமரமாக காட்சிதந்த தூணைப்போல நிமிர்ந்து ஆடாது அசையாது தலைகீழாக நின்று, யோகாசன நிபுணர் "பெங்களூர் சுந்தரம்" மாதிரி நின்றான். வாத்தியார் அசந்தே போய்விட்டார். ஒவ்வொரு மாணவனிடமும் ஒவ்வொருவிதமான திறமைகள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது. புன்முறுவல் பூத்த முகத்துடன் "அம்பட்டா கெட்டிக்காரன் போய் வாங்கில் இரு" என்றார். நவரத்தின

Page 13
20 நினைவின் அலைகள்
வாத்தியாரிடம் கெட்டிக்காரன் என்று இவன் கேட்ட சரித்திரமேயில்லை. இதுதான் முதற் தடவை.
பள்ளியில் பல பிள்ளைகளுக்கு முன் சாதிப் பெயரை இழுத்ததற்காக இவன் கவலைப்படவில்லை. இவன் தந்தை சிலேற், கொப்பி இல்லாத காலத்தில் முல்லைத்தீவு - மாறாயிலுப்பையில் மணலை நிலத்தில் பரவி கை விரல்களால் எழுதிப் படித்தவர். இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், வள்ளுவரைப் பற்றிய கட்டுக்கதைகள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். எந்தக் கொம்பனுக்கும் பாட்டாலேயே பதில் சொல்லும் ஆற்றல் உடைய அவர், ஒய்வு நேரங்களில் வீட்டில் இவற்றை எல்லாம் மணிக்கணக்கில் சொல்லித் தருவார். “அம்” என்றால் அழகு "பட்டன்" என்றால் அழகுபடுத்துபவன். வாத்தியார் அப்படி என்னதான் பிழை விட்டார். தப்பித்தவறி பிழைவிட்டாலும், பெரியோர் அறியாமல் பிழை செய்தால் சிறியோர் அதை மன்னிக்கக் கூடாதோ?
மாதா பிதா குரு தெய்வம் என வேலைமினைக் கெட்டவனே. சொல்லிவைத்தான்! உச்சிக்கொப்பில் தனியாய் காய்த்திருந்த, செம்பாட்டான் மாங்காய் ஒன்றை குறி பார்த்து ஒரே வீச்சில் எறிந்து வீழ்த்தியது போன்ற இறுமாப்பில், பெரிய சாதனை ஒன்றை வகுப்பில் நிலைநாட்டிய பெருமையுடன் போய் வாங்கில் வீற்றிருந்தான். பின்பக்கம் திரும்பி சகமாணவர்களை ஏளனமாகப் பார்த்து ஒரு பெருமிதச்சிரிப்பு அலட்சியமான ஒரு பார்வை.
அடுத்த வகுப்பில் "சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாட்டை இராசலட்சுமி அக்கா இராகத்தோடு இனிமையாக பாடுவது கேட்டது. மெல்ல மெல்ல காதுவழியே மருவிச் சென்றது. மனதில் ஊடுருவிப் பதிய மறுத்தது. இனிமையாக இராகம் இழுத்துப் பாடுவதுடன் பாரதியார் சரி. இதற்கு மேல் விளக்கம் சொன்னால் பாரதியார் கோபித்துக்கொள்வாரோ, என்னவோ!

எஸ்.வீ. தம்பையா 21
பாவம் சண்முகத்துக்கு இன்னும் தண்டனை முடியவில்லை. மேசைக்குக் கீழ் தலையை முட்டுக்கொடுத்துக்கொண்டு, தொடர்ச்சியாக நிற்க முதுகுத் தண்டு "விண் விண்” என வலித்தது. முதல் நாள்தான் கல்வியங்காடு இராமசாமிப் பரியாரியிடம் பேதி மருந்து சாப்பிட்டவன் போதாக்குறைக்கு ஆங்கிலப் பாடம் வேறு வயிற்றைக் கலக்குவது போல இருந்தது. அழாக்குறையாக "வாத்தியார்” என்றான்."என்னடா"ரண்டுக்கு வருகுது", "ஒடு ஒடு சுறுக்காய் ஒடு" தண்டனையிலிருந்து தப்பி ஓடினான்.
3
பள்ளிக் ஈ.டத்தை ஒட்டினாற்போல தெற்குப் பக்கமாயுள்ள ஒழுங்கையால் மத்தியான சாப்பாட்டுக்காக வீட்டுக்கு ஒடோடிவரும்போது தியாகராச பாகவதரின் "மறைவாய்ப் புதைத்த ஒடு மறைந்த மாயம் ஏதோ” என்ற பாட்டை வாய் முணுமுணுக்கும். பாதையிலுள்ள சிறுசிறு கற்கள் கால்களைப் பதம் பார்ப்பதைக்கூட பொருட்படுத்தாது, “சடன் பிரேக்” போட்டு வீட்டு முற்றத்தில் நிற்பான்.
அடுப்படிக் கதவைத் திறந்து ஆவலுடன் எட்டிப் பார்ப்பான். புளியம்பூவை தண்ணிரில் ஊறவைத்து, அதோடு பனம் பழத்தைச் சுட்டு, வெகு பக்குவமாய் வைத்திருப்பாள் இவனது தாய். கன்னங்கரேலென்ற பழத்திலுள்ள தோலை பற்களால் கடித்து விசர் நாயைப்போல குதறி இழுத்து பிசைந்து சூப்பினால் இரவுவரை வயிற்றில் கருங்கல்லைப் போட்ட மாதிரி இறுகி இருக்கும்.

Page 14
22 • நினைவின் அலைகள்
வரி வரி என்று வரிந்து வேட்டியைக் கட்டுவது இவன் வழக்கம். வயிறு இரண்டாகத் தெரியும். வயிற்றின் மேற்பாகம் தனியாகவும், கீழ்ப்பாகம் வேறாகவும், வேட்டி கட்டிய இடம் மட்டும் சிறுவாய்க்கால்போல பள்ளமாயிருக்கும். வேட்டித் தலைப்பை கயிறுபோல முறுக்கி இழுத்துக் கொடுக்குக் கட்டினால் எந்தக் கொம்பனாலும் அவிழ்க்க முடியாது. பள்ளிக்கூடத்தில் மட்டுந்தான் இவன் கொடுக்கு இல்லாமல் இருப்பான்.
துரையப்பர் வீட்டு "மொண்டி"யில் தாச்சி மறிக்கும் போதோ, கிட்டி புள் விளையாடும்போதோ, மாபிள் விளையாடும்போதோ அல்லது வீட்டில் இருக்கும்போதோ கொடுக்குக் கட்டுக் கோலத்தில்தான் இவனைத் தரிசிக்கலாம். கொடுக்கை அவிழ்த்தானானால் ஒன்றில் "ஒண்டுக்கு" அல்லது "இரண்டுக்கு” அவ்வளவுதான். இவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தாய் சாப்பிடக் கூப்பிட்டுவிட்டால், உடுத்திருந்த வேட்டியில் அவசர அவசரமாகக் கைகளைத் துடைத்துக் கொண்டு சாப்பிடுவான். சாப்பிட்டவுடன் கொடுக்கை அவிழ்க்காமல் அப்படியே ஆனந்தமாக உறங்கியும் விடுவான்.
பள்ளியில் அடி விழாமல் தப்புவதற்கு இவன் ஒரு உபாயம் செய்தான். காலையில் எழுந்ததும் பசுமாட்டில் "முழித்தால் நல்ல சகுனம் என வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை அறிந்திருந்தான். தலைவாசல் விறாந்தையில் தந்தை, தாய், சகோதரங்களுடன் படுத்திருப்பான். அதிகாலையில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, பூனைக்குட்டியைப் போல் மெதுவாய் கண்விழித்துப் பார்ப்பான். அனைவரும் தங்களை மறந்த கும்பகர்ணத் தூக்கம். குறட்டை ஒலிவேறு கூரையைப் பிய்க்கும். மெதுவாகத் தவழ்ந்து தவழ்ந்து மேற்குப் பக்கச் சுவரைப் பிடித்துக்கொண்டு, அப்படியே வடக்குப் பக்கம் பின் கோடிக்குப் போய் திரும்பிப் பார்ப்பான். தாறானியடிச்சுப் பீச்சியபடி பசு மாடு இவனைப் பார்த்துத்

எஸ்.வீ. தம்பையா 23
தலையசைக்கும். இப்போ நல்ல நம்பிக்கை இன்றைக்கு ஐயர் வாத்தியார் அடிக்கமாட்டார். ஐயர் வாத்தியார் வெற்றிலைக்காவி படிந்த பற்கள் தெரிய இவனைப் பார்த்து சிரிப்பது போன்ற நினைப்பு.
பள்ளிக்கூட பின் வளவில் உள்ள விளாத்தி மரத்துக்கு குறி தவறாமல் எறிந்து நாலைந்து விளாங்காயை எடுத்துக்கொண்டு வந்தான்.
"எட எனக்கொரு விளாங்காய் தாடா” என நெத்திலி கெஞ்சினான்.
"அதெல்லாம் தர முடியாது! நான் பாடுபட்டு எறிஞ்சு கொண்டுவாறன், உனக்கு வேணுமெண்டால் நீயும் எறிஞ்சு விழுத்தன்” என மறுத்தான்.
"கெஞ்சிக் கேட்டால் தரமாட்டாய் கையிலுள்ளதை பறிச்சு எடுத்தால் என்னடா செய்வாய்"
"எங்கை ஏலுமெண்டால் பறிபாப்பம்" - வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது. "நெத்திலி" தன் நண்பர்களுடன் சேர்ந்து மல்லுக்கட்டி, அவர்கள் இவனை நிலத்தில் வீழ்த்தி விளாங்காய் முழுவதையும் ஆளுக்கொன்றாய் பறித்து எடுத்துக்கொண்டு நல்ல"சம்பல்” அடியும் கொடுத்தார்கள். இவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.
'படுபாவிகள் எனக்கு ஒண்டுகூட விடாமல் எல்லாத்தையும் பறிச்சுப் போட்டாங்களே" நினைக்க நினைக்க ஆத்திரம் தாங்க முடியவில்லை.
"ஆறுவது சினம்" என வாத்தியார் சொல்லிக் கொடுக்கும் பாடம் இவன் செவிக்குள் நுழையுமாப்போலில்லை. நெத்திலியை எப்படி மடக்க வேண்டும் என திட்டம் தீட்டுவதிலேயே கண்ணாயிருந்தான்.
வகுப்பு மணி அடித்ததும் சவாரி மாட்டைப்போல வறுகிக்கொண்டு போய், புத்தகம் சிலேற்றை தன் வீட்டுப்

Page 15
24 நினைவின் அலைகள்
படலைக்குப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு வேலி ஒரமாய் பதுங்கி நின்றான். நெத்திலி இவன் வீட்டுப் படலையைத் தாண்டித்தான் போக வேண்டும். இவன் நெத்திலியை சும்மா போகவிடுவானா! அன்று நெத்திலிக்கு நெருப்படி ஆத்திரம் தீருமட்டும் அடி குத்து உதை அப்படியே புரட்டி எடுத்துவிட்டான்.
“நாளைக்கு பள்ளிக்கூடம் வாடா. உன்னை பழக்கித்தாறன்", என்றான், நெத்திலி
"போடா! போ. யாரிக்கு யாரி தனிய என்னோடை அடிபடடா பாப்பம்! எல்லோரும் சேர்ந்துகொண்டு தனி ஒருதனை அடிப்பது கெட்டித்தனமே? தூ.” மூக்கில் சளி ஒழுகியபடி அழுதுகொண்டே தன் வீடு நோக்கித் தள்ளாடினான். பாவம் அவனுக்கு நடக்கவே இயக்கமில்லை. இன்னும் இரண்டு கொடுத்தால் அப்படியே சுருண்டு விழுவான் போலிருந்தது, நெத்தலி
4
தம்பிமுத்தர், இவனது தாய் வழிப் பாட்டன். அந்தக் காலத்திலேயே 40 ரூபாய் செலவில் பாய் மரக் கப்பலில் சிங்கப்பூர் சென்று வந்தவர். ஆறரை அடி உயரமிருப்பார் பரந்த மார்பு, உயர்ந்த தோற்றம். அவரின் வீடு இவன் வீட்டிலிருந்து கால் மைல் தூரம் இருக்கும். மாலை வேளையில் நல்ல "சுப்பா”வில் இருப்பார். இவன் போய் அவர் வீட்டுப் படலையுடன், மசுந்தி, மசுந்தி ஒட்டி நிற்பான். இவனைக் கண்டவுடன் "என்னடா உன்ரை கோலம்" என்பார். செம்பாட்டுப் புழுதிபடர்ந்த துண்டில் இழுத்துக்

எஸ்.வீ. தம்பையா 25
கொடுக்குக் கட்டியிருப்பான் இவன் “உரியடா உதை" எனச் சொல்லி, கள்ளிப் பெட்டியைத் திறந்து, சின்னத் துண்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து கட்டச் சொல்லுவார்.
அருகில் இவனை இருக்கச் சொல்லி இருவரும் கூழ் குடிப்பர். அவர் வீட்டுக் கூழ் குடிப்பதென்றால் அது தேவாமிர்தம்போல இருக்கும். நண்டு என்றும், இறால் என்றும் விசேஷமாய் “தீய்ச்சு” அவருக்காக பாட்டி பக்குவமாய் காய்ச்சியிருப்பார். தீய்த்த மீன் துண்டுகளை பக்குவமாய்த் தவத்தி, இருவருக்குமாக பலாவிலையில் வார்த்துவிடுவாள். பனங்கள்ளுச் சிரட்டை அவர் பக்கத்தில் இருக்கும். இவனது பேத்தை வயிறு நிரம்பி வழியும்.
தம்பிமுத்தர் உரும்பராய், இணுவில் ஆகிய ஊர்களில் குடிமைத்தொழில் செய்து வந்தார். தனது மூத்த மகள் செல்லாச்சிக்கு, வன்னிப் பிரதேசத்து மாறாயிலுப்பை மாப்பிள்கைக்கு "சோறு கொடுப்பித்து” தனது மூத்த மருமகனாக்கிக் கொண்டார். அத்துடன் இணுவில் கிராமத்தில் குடிமைத் தொழில் செய்யும் உரிமையை சீதனமாகக் கொடுத்தார், இவனது தந்தைக்கு.
மாறாயிலுப்பையில் பரம்பரை விவசாயியான, இவனின் தந்தை, செல்லாச்சியை மணமுடித்த பின்னர்தான் "தன் தொழில்” பழகினார். தொழிலில் பெரிய தேர்ச்சி இல்லாவிடினும், பஞ்சத்துக்கு ஆண்டியாக, குடிமைத் தொழிலான சவரத்தொழிலைச் செய்து வந்தார்.
இவனுக்கு பள்ளி விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய உத்தியோகம் ஒன்று காத்திருந்தது! இவனது தந்தை விடுமுறை நாட்களில் இவனையும் அழைத்துக்கொண்டு இணுவிலுக்குச் செல்லுவார். போகும் வழியில் நடையில் அலுப்புத் தட்டாதிருக்க, மாறாயிலுப்பைக் காட்டில் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை சொல்லிக்கொண்டே நடப்பார். வேட்டைக்குப்

Page 16
26 நினைவின் அலைகள்
போகும்போது நாலைந்து பேர் சேர்ந்து போவார்கள். எவ்வளவு பழகினாலும், இடைவழியில் பாதை மாறுவதுண்டு. இவர் ஒருநாள் - தனித்துப் போய்விட்டார். கச்சல் கொடியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்று, இவரைச் சுற்றி வளைத்தது. கயிற்றினால் மரத்தைச் சுற்றுவது போல அவரது உடலைச் சுற்றி, அதன் வாயால் வாலைக் கவ்விப்பிடித்து இறுக்கினால், அவரது எலும்புகள் நொறுங்கிவிடும். ஒரு பக்கம் அது சுற்ற, மறுபக்கம் அதன் வாலைச் சுற்றவிடாமல் அவர் கழற்றத் தொடங்கினார். பாம்பும், அவரும் களைத்த நிலையில், ஒரு கையால் இடுப்பில் சொருகி, விரித்து வைத்திருந்த வில்லுக் கத்தியால் அதன் தலையைத் துண்டித்துவிட்டார். கதைப் பராக்கில் இணுவில் கிராமத்தை அடைந்தனர் தந்தையும் மகனும்.
இணுவிலில் நம்பிக்கையான சில வீடுகளில் இவனை இருக்கச் சொல்லி விட்டு, "தன் தொழில்” பார்க்கச் சென்றுவிடுவார். இரக்க சிந்தை கொண்ட முத்து வாத்தியார் வீட்டில் பெரும்பாலும் இவன் இருப்பான். தந்தை திரும்பிவரச் சுணங்கினால் விம்மி விம்மி அழுவான். அப்போது வாத்தியாரின் சகோதரிமார் பெற்றதாயைப்போல ஆறுதல் கூறுவதோடு, இவன் தந்தையால் செதுக்கி வீட்டுக் கூரையில் மறைத்து வைத்திருந்த, சிரட்டையில் தேநீருடன் பனங்கட்டி, புழுக்கொடியல், பனாட்டு, ஏதாவது ஒன்றைக் கொடுத்துத் தேற்றுவார்கள். தேநீர் குடித்து முடிந்ததும் சிரட்டையை தந்தை வழமையாக சொருகிவைக்கும் கூரையில் மறைத்துவைப்பான்.
தந்தை திரும்பிவந்தவுடன் அன்று வசூலான சாமை, குரக்கன், மரவள்ளிக்கிழங்கு முதலியவற்றை ஒரு குட்டிச்சாக்கில் பக்குவமாய்க் கட்டி, தலைச்சுமையாக சுமந்துகொண்டு வீடு வருவான். விளாத்தியடி ஒழுங்கையால் திரும்பி, ஒற்றையடிப்பாதையில் இறங்கி நெத்தலியின் வீட்டைக் கடந்துதான் வரவேண்டும்.

எஸ்.வீ. தம்பையா .27 خمم
ஒரு பக்கம் வாை தீேழ்டிங்களும், மரவள்ளிச் செடிகளும், வானத்ன்த் நீேர்க்இசிகிரந்து நின்று செம்மண்ணின் பெருமையை நிலைநிறுத்தும் அதற்கப்பால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைக் கம்பளத்தை தரையில் விரித்தாற்போல, வெங்காயம் மதாளித்து வளர்ந்து காட்சிதரும்; சற்று உயர்ந்த வெங்காயம் தூரநின்று பார்க்கும்போது கடல்போன்று பரந்திருக்கும். இந்த அழகை இரசித்துக்கொண்டே, தலைச்சுமையுடன் வருவான் இவன். தினைக்கதிர்கள் முற்றித் தலைசாய்ந்து, வெயில் ஒளிபட பவுண்போல மின்னும். அதில் சில கதிர்களை திருகி கைகளால் பிசைந்து உலர்த்தி, வாயில் போட்டுக் கொறித்துக்கொள்வான்.
உரும்பராய் வடக்கு "இருளன்" சுடலையை அண்மித்து வந்துவிடுவான். சுடுகாட்டைக் கடந்து வரும்போது பகலென்றாலும் கொஞ்சம் பயந்தான். தலையில் சுமை; வழியில் சுடலை. இரண்டையும் ஒரே நேரத்தில் மறக்க, கைவசம் இருக்கும் தியாகராசபாகவதரின் பாடல்கள் துணைசெய்யும். "சந்திர சூரியர் போம் கதி மாறினும் விழிலும் நமக்கென்ன” என்ற அம்பிகாபதி பாட்டைப் பிச்சு வாங்கிக்கொண்டு வரும்போது.
"டேய் நில்லு" உச்சந்தலையில் இடி விழுந்தாற்போல ஒரு அதட்டல் குரல்.
சுடலை வைரவரோ? அல்லது, வீரபத்திரராயிருக்குமோ! இவனுக்கு விழி பிதுங்கியது. வீட்டில் பாட்டனார் சொன்ன பேய்க்கதை ஒன்று நினைவுக்கு வந்தது.
தம்பி முத்தர் குடிமைத் தொழில் செய்வதுடன், விவசாயமும் செய்துவந்தார். பயிர்களுக்கு இறைப்பதென்றால், கூலிக்கு ஆட்களைப் பிடிப்பதில்லை. மூன்று தோட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்து தோட்ட வேலைகளைச் செய்வார்கள். ஒருவர் துலாமிதித்தால்; மற்றவர் தண்ணிர் இறைப்பார்; தம்பிமுத்தர் தண்ணிர்

Page 17
28 நினைவின் அலைகள்
கட்டுவார். ஒரு நடுச்சாமம்போல, இறைப்புகாரர் அழைப்பதுபோல, அவரது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். கூப்பிட்டவர்கள் முன் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்தார். இறைப்புத் தொடங்கியது. வாய்க்காலில் வரும் தண்ணிர் வழமைக்கு மாறாக பெருக்கெடுத்து ஓடியது. வரப்புகளை உடைத்துக்கொண்டு தண்ணிர் அங்குமிங்கும் பெருகியது. தண்ணிர் கட்ட முடியாது திணறினார் - தம்பிமுத்தர். அவருக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. இது மனிதர் இறைப்பது மாதிரித் தோன்றவில்லை. உடுத்திருந்த வேட்டியை உரிந்து மண்வெட்டியை நிமிர்த்தி அதில் தலைப்பாகை மாதிரிக் கட்டினார். கோவணத்துடன் ஒடோடியும் வீடு வந்து சேர்ந்தார், தம்பிமுத்தர்.
வெகுநேரம் கழித்து இறைப்புக்காரர் வந்து அவரைக் கூப்பிட்டனர். அவர் நடந்த விஷயத்தைச் சொல்லி, நன்றாக விடிந்ததும் தோட்டம் போய், பார்த்தால், மண்வெட்டியால் தண்ணிர் மறிப்பது போன்ற அடையாளம் மட்டுமே இருந்தது! அன்று முடிவு செய்தனர். ஒவ்வொருவர் பெயரையும் மூன்று முறை கூப்பிட்ட பிறகுதான் இறைப்புக்குப் போகவேண்டுமென்று.
"டேய் நில்லு" மீண்டும் அதே குரல்! மனம் பதற நிலைகுலைந்து அங்குமிங்கும் பார்த்தான். உடல் பதறியது. விழி பிதுங்கியது. வீட்டில் "கிழடு"கள் சொன்ன பேயைப் பற்றிய கதைகள் பூதாகரமாய் மனதில் தோன்றி நிலை தடுமாறச் செய்தது.
புற்றுக்குள் இருந்து நாக பாம்பு ஒன்று தலையை நிமிர்த்தி சீறிக்கொண்டு வருவதுபோல, மரவள்ளிச் செடிக்குள் இருந்து இரத்தினம் தலையை நீட்டினான். இரத்தினத்தைக் கண்டதும் இவனுக்கு வியர்த்துக் கொட்டியது. பேந்தப் பேந்த விழித்தபடி பரிதாபமாகப் பார்த்தான்.

எஸ்.வீ. தம்பையா 29
இரத்தினத்துக்கு நல்ல கட்டான உடல், திரட்சியான முறுக்கேறிய கால்கள். இளந்தாரி வாலிப முறுக்கு. எவரையுமோ அலட்சியமாய் நோக்கும் மனோபாவம், பந்து விளையாட்டில் "இந்துக் கல்லூரியின் சாம்பியன். இவனைப் பந்தாடுவது என்றால் அவனுக்குத் தூசு! ஒரே அடியில் கோல் போஸ்ற்றையும் தாண்டிப்போய் விழுவான் இவன்.
“இறைவா காட்டுவைரவா காளி ஆச்சி என்னைக் காப்பாற்று" என மனதுள் வேண்டிக்கொண்டு மலேரியாக் காய்ச்சல்காரனைப்போல "கிடு கிடு”வென நடுங்கியபடி தலையில் உள்ள பாரத்தை மெதுவாக இறக்கி, செம்பாட்டுப் புழுதி படர்ந்த நிலத்தில் வைத்து கூனிக் குறுகியவாறு திகைத்து நின்றான்.
"ஏன்ரா நேற்று நெத்தலிக்கு அடிச்சனி உமக்கு அவ்வளவு நடப்போ! எல்லாருக்கும் இப்ப வரவர கண்கடை தெரியேல்லை”
வரண்ட நாக்கில் எச்சிலை விழுங்கி கொஞ்சம் ஈரப்பசுமையாக்கிக் கொண்டு, "என்ரை விளாங்காய் எல்லாத்தையும் அவைதான் அடாத்தாக பறிச்சுப்போட்டு எல்லோரும் சேந்து எனக்கு அடிச்சவை"
“அவை அடிச்சால் நீயும் திருப்பி அடிக்கிறதோ நீ என்ன பெரிய ஆளே”
"நான் வலுச் சண்டைக்குப் போகேல்லை. அவைதான் வலிய அடிச்சவை என்ரை விளாங்காயிலை ஒண்டுகூட எனக்குத் தரேல்லை, இது ஞாயமே? உங்களைப் பார்த்தா ஆனையைப்போலவிருக்கு நானோ சின்னப் பூனைக்குட்டி நெத்தலியும் நானும் ஒரு வகுப்பு நீர் விரும்பினால் கூப்பிடும் நெத்தலியை யாரிக்கு யாரி ரண்டுபேரும் ஒருக்கா அடிபட்டுப் பாப்பம்' மனத்தில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு இவன் சொன்னான். நெத்தலி வாழைத்தோட்ட மறைவில் நின்று மெல்ல எட்டிப்பார்த்தான். இவனது ஆனை பூனை உவமானம்

Page 18
30 நினைவின் அலைகள்
இரத்தினத்தின் மனதைத் தொட்டதோ அல்லது உண்மையில் நெத்தலிதான் குற்றவாளி என்பதை உணர்ந்தானோ, என்னவோ!
"இனிமேல் இப்படிச் சேட்டை கீட்டை விட்டால் தப்பமாட்டாய் என்னைத் தெரியுந்தானே?”
"அப்பாடி!” மயிர் இழையில் உயிர் தப்பினான். பெரியதொரு இராசதந்திரத்தை கடைப்பிடித்த பெருமையில் "தீன கருணாகரனே நடராசா" எடுத்துப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி வீறு நடைபோட்டான். s
S
இவன் வாழ்க்கையில் முதன் முதலாக துரையப்பர் வீட்டில்தான் "ஹிஸ் மாஸ்ரர் வாய்ஸ்” கிராமபோன் பெட்டியைக் கண்ணாரக் கண்டான். அவரது மகன் சிங்கப்பூரால் கொண்டுவந்தது. அந்த வீட்டில் இரண்டு முற்றிய குமர்ப்பெட்டைகள். சிங்கப்பூர் மாப்பிள்ளைக்காக காத்திருந்தார்கள். அவர்கள் இவனைவிட வயதில் மூத்தவர்கள் என்றாலும் "தங்கச்சி" என்றுதான் இவன் கூப்பிடுவான். அப்படிக் கூப்பிடுவதுதான் அவர்களுக்கு விருப்பம்.
"தங்கச்சி உந்த ஆதரவற்றவர்கட்கெல்லாம் அமுதமளிக்கும் தீனபந்து" என்ற பாட்டை ஒருக்கா போடுகிறீரே?
"அப்ப சுந்தரம் கடைக்குப் போய் சாமான் வாங்கிக்கொண்டு வாறியோ"

எஸ்.வீ. தம்பையா 31
"ஒம் உடனே வாங்கியாறன்"
"இஞ்சை பாரும் உந்த "சராசரங்கள் வரும் சுழன்றே"யை ஒருக்காப் போடும்"
"அப்ப பூக்கண்டுக்கு இறைக்கவேணும், துலா மிதிக்கிறியே”
"ஒம் ஒம் பத்து முறையும் ஒம்" "சராசரங்கள் சுழலும் அவன் கடை வாயில் எச்சில் ஒழுகும்"
சுந்தரம் கடைக்கு சாமான்கள் வாங்குவதென்றால் இவனுக்கு நடக்கத் தெரியாது. ஒடிக்கொண்டே பாடுவான்; பாடிக்கொண்டே ஓடுவான். ஒழுங்கைக் கரையில் உள்ள வீட்டுக்காரர்கள் இவனை அவதானித்து வைத்திருப்பார்கள். தப்பித்தவறி அந்த வீடுகளுக்குச் செல்ல நேர்ந்தால், இவனை ஒரு பாட்டுப் பாடச்சொல்லி வற்புறுத்துவார்கள். "ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே" என்று பாடத் தொடங்கினால் "ஊனக்கண்” என்ற சொல் தொண்டைக்குள் சிக்கி அமிழ்ந்துவிடும். "இழந்தால் உலகில் குறையுமுண்டோ” என்ற சொற்கள் தண்ணிரில் அமிழ மூச்சுத் திணறியவன்போல, பரிதாபமாக வெளிவரும். அவர்களுக்கு இது ஒரு வேடிக்கை. இவனுக்கோ தான் ஒரு தியாகராச பாகவதர் என்ற நினைப்பு!
எட்டு உடன்பிறப்புகளுடன் கூடிப் பிறந்தவன் நவக்கிரகங்களில் இவன் ஐந்தாவது. ஆதித்தனில்
ஆரம்பித்தால் கிரகம் சனி, சொல்லிவைத்தாற்போல
மூத்தவர்கள் இரு அண்ணன்மார்கள் இரு அக்காள்கள் இளையவர்கள் இருவர் தங்கைகள். அடுத்தாற்போல தம்பிமார் இருவர்.
மூத்த அண்ணா தனது இளமைக் காலத்திலேயே மலேயா சென்றுவிட்டார். இரண்டாவது அண்ணா தாய்மாமன் கடையில் பதுளையில் தொழில் செய்துகொண்டிருந்தார்.

Page 19
32 நினைவின் அலைகள்
இவன்பாடு சொல்லவா வேண்டும். வீட்டில் இவன்தான் தனிக்காட்டு ராஜா அக்காமாருக்கு அடங்கமாட்டான், அவர்களை ஆட்டிப்படைப்பான்.
குருகுருத்தவன் சும்மா இருக்கமாட்டான். சகோதரிகளுடன் எந்த நேரமும் சண்டைதான். மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு அரை நேரப் பள்ளிவிட்டதும், நேராக வீட்டுக்கு வருவான். சாப்பாடு ஏதாவது தரவில்லை என்றால் மூத்த சகோதரிகளுடன் கொளுவு வான். புழுக்கொடியல், பனாட்டு, பண்டிக் கருக்கல், கருவாடு, தேங்காய்ச் சொட்டு, சுட்ட பனம்பழம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டையே புரட்டி எடுப்பான்.
இவன் வீட்டில் போடும் அட்டகாசங்களை அவதானித்து வைத்திருந்தாள் பக்கத்து வளவு வாழைக்காய்ச்சி மாவடியில் குடியிருந்த ஆச்சிக்குட்டி வயது முப்பதுக்கு மேல் விலைபோகாத குமரி அவள். கேப்பை ஆச்சிக்குட்டி என்றால்தான் ஆருக்கும் அச்சொட்டாகத் தெரியும். கேப்பை மாட்டைப்போல நல்ல வளர்த்தி. அரைக் கைச் சட்டை முழங்கைவரை நீண்டிருக்கும். பத்து முழம் பச்சை நிற லங்காச் சேலை பின்கொய்யகம் விட்டு உடுத்தியிருப்பாள். சிறு வெங்காயப் பிடி போல கொய்யகம் ஒரு சாண் நீட்டில் தக்கையாகத் தொங்கும். -
அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் சிறுசிறு சம்பவங்களுக்கு தலை, கால் வைத்து விமர்சிப்பதே இவளது பொழுதுபோக்கு இவர்கள் வீட்டுக்கு இடையில் வேலி அடைப்பில்லை. எல்லையைக் காட்டுவதற்காக முற்றிய பூவரச மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கும். ஆகையால் அடுத்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை கழுகுக் கண்களால் பார்க்கலாம். இவன் சகோதரிகளுடன் சண்டை போடுவதை விடுப்புப் பார்த்து; கூர்ந்து அவதானித்து "இந்தத் தறுதலை பின்னடிக்கு எப்படித்தான் வாழப்

எஸ்.வீ. தம்பையா 33
போறானோ" என்பாள் அடிக்கடி இவளது இந்த வார்த்தை இலந்தைப் பழத்துக்கு எறிந்த கல் ஒன்று இவன் உச்சந்தலையில் வந்து விழுந்தாற் போலிருக்கும். "இந்த உலகத்தில் வாழ்ந்து காட்டத்தான் வேண்டும்” மன உறுதி உள்ளே பிறக்கும்; இதை ஒரு வைராக்கியமாகக் கொண்டான், வடுவாக மனதில் பதிந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒன்றும் கிடைக்காதபோது கோழி பிடிக்கும் கள்ளனைப்போல, அங்குமிங்கும் பதுங்கிப் பதுங்கிப் பார்த்தபடி, கோடிக்குள் நிற்கும் மாதுளை மரத்தில் மெதுவாக ஏறி சிக்கராயிருந்து கொண்டு மாதுளம் பழங்களை வயிறு முட்டத் தின்று தீர்ப்பான். பசியடங்கும்; பின்பு மாலைப் பள்ளிக்கு விரைவான்.
ஆச்சிக் குட்டியின் பாட்டி கண்ணாத்தைக் கிழவி வயது சுமார் தொண்ணுாறுக்கு மேலிருக்கும். பஞ்சுபோல வெள்ளை வெளேரென நரைத்த தலை, குறுக்குக் கட்டிய பழைய சேலை. செம்பாட்டு மண்புழுதியுடன் வியர்வை மணமும் கலந்திருக்கும். உடல் தண்ணிரே கண்டறியாது. தலைக்கு எண்ணெய் வைத்தே அறியாள். நரைத்த மயிர் காற்றில் பறக்கும்போது தும்புமுட்டாஸ் போலிருக்கும். இராமாயணத்தில் வரும் கூனியைப்போல மெலிந்து வளைந்த முதுகு கைகளிரண்டும் சும்மாயிருக்காது. வாயும் அப்படித்தான் வேலி ஒரமுள்ள சிறுசிறு கற்களை கை அரிச்சபடி வாய் நைந்துபோன பழைய சேலை கிழிவதுபோல புறுபுறுத்தபடி சாதித்திமிரின் மொத்த வாரிசு சாதிப் பெருமையே அவளின் தனிப்பெரும் சொத்து. அதைத் தவிர பெருமைப்பட வேறொன்றுமில்லை. யாழ்ப்பாணத்து பழைய தலைமுறையின் அழியாத நினைவுச் சின்னமாக மியூசியத்தில் வைக்கலாம். இன்றைய தலைமுறை இப்படி ஒரு கிழவியை இந்தக் கோலத்தில் பார்த்திரிருப்பார்களோ என எவரையும் சந்தேகப்பட வைக்கும் தோற்றம். இவன் அயல் வீட்டுக்காரன் கிழவியின் வளவுக்குள் தனியாகக் கிணறு இருக்கிறது. ஆனால் அவள் குளித்ததை இவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

Page 20
34 நினைவின் அலைகள்
உம் காலம் கெட்டுப்போச்சு இல்லை எண்டால் இந்தக் கொடுமையும் நடக்குமோ! அம்பட்ட வீட்டுக்கும் ஐயா பெயர் வந்திட்டுதே! ஐயோ, ஐயோ இந்த அநியாயத்தை ஆரிட்டைச் சொல்லியழ! பொன்னையா, சுப்பையா, தங்கையா, செல்லையா, சின்னையா” என்று அவள்
இடையிடையே பெருமூச்சுவிட்டுக் கொள்வாள்.
இவனது தந்தை வன்னிப்பிரதேசத்து மாறாயிலுப்பையில் பிறந்தவர். அதனால் பட்டப்பெயர் 'வன்னியான்” வன்னியானும் விட்டபாடில்லை, ஆண் பிள்ளைகளுக்கு ஐயாப்பெயர். பெண்களுக்கு அம்மாப் பெயர். பொன்னம்மா, அன்னம்மா, கனகம்மா, சின்னம்மா கலி யுகத்தில் இன்னும் என்னென்ன புதினம்தான் நடக்கப்போகுதோ! ஆண்டவனே, ஆர் கண்டார்!
வன்னியான் மடிச்சுக் கட்டிய நாலு முழவேட்டி பிரஷ்ட பாகத்தைச் சொறிந்தபடி ஒரு உறுமல்; ஒரு செருமல், பற்களை நறநறவெனக் கடித்தபடி வளைந்து நெளிந்த பூவரச மர இடுக்குக்கால் மசுந்தி மசுந்தி ஒரக் கண்ணால் கிழவியை நோட்டம்விட்டபடி பாட்டாலே பதில் அடி கொடுப்பார்.
"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்.”
கூனல் கிழவிக்கு பாட்டு எங்கே விளங்கப்போகிறது. பள்ளிக்கூடத்தில் மழைக்குக்கூட ஒதுங்கியிருக்கமாட்டாள். ஒளவைப் பாட்டி ஆரணை ஆச்சி? எனக்கேட்டால் "சந்திரனிலை ஒரு கறுத்தப்புள்ளி தெரியுதே அதுதான் அவ்வை இதென்ன பெரிய பூராயமே!” என பதில் சொல்லுமளவிற்கு பரந்த அறிவு சரியானதொரு பதிலை சொன்னதான சந்தோ சத்தில் பொக்கை வாயால் சிரிக்கும்போது கடைவாயில் வெற்றிலை எச்சில் ஒழுகும். குறுக்குக் கட்டை அவிழ்த்து சேலைத் தலைப்பால் கடைவாயைத் துடைப்பாள். சேலையிலுள்ள அழுக்கு எச்சிலுடன் கலந்து முகத்தில் அரிதாரம் பூசும்.

எஸ்.வீ. தம்பையா 35
6
இவன் தந்தை நிலத்தில் மணலைப் பரவி அதில் விரலால் எழுதிப் படித்தவர். இராமாயணம், மகாபாரதம், நளன், தமயந்தி கதை, வள்ளுவரைப் பற்றிய கதைகள் யாவும் மனப்பாடம்; தண்ணிபட்டபாடு. எந்த ஒரு சொல்லுக்கும் பாட்டாலே பதில் சொல்லும் ஆற்றலுடையவர். இவரது நாக்குத் தாக்குதலுக்கு ஆளாகாதவர் அருமையிலும் அருமை. ஏறுமாறாக எவரும் இவருடன் "தன"கினால் நாக்காலே சுட்டுப் பொசுக்குவார்.
வன்னிப் பிரதேசத்து மாறாயிலுப்பையில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர். செல்லாச்சியைப் மணமுடித்த பின்னர்தான் முத்திரை பதித்த சாதித்தொழிலான மயிர் வெட்டப் பழகியவர். அநியாயம் சொல்லக்கூடாது. அவர் மயிர் வெட்டினால் சிவனொளிபாத மலையின் படிக்கட்டுகள் போல படிப்படியாக இருக்கும். அவ்வளவு நேர்த்தி இந்தக் காலத்தில் "ஸ்ரெப் கட்", "சார்ளிக் கட்” எனச் சொல்வார்களே அதை அந்தக் காலத்திலேயே வெட்டிக் காட்டிய தீர்க்கதரிசி! இவரிடம் தலையைக் கொடுத்தவர்கள் இவர் கூறும் புராண இதிகாச கதைகளைக் கேட்டு இரசிப்பதால், எல்லாவற்றையும் மறந்துபோவார்கள். தலையின் கோலத்தைப் பார்க்க கண்ணாடிதான் எதிரிலில்லையே!
கண்ணாத்தைக் கிழவி புறுபுறுக்கப் புறுபுறுக்க இரண்டு வருடத்துக்கொரு தடவை "ஐயா" பெயரும் "அம்மா” பெயரும் வைத்து ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தை என்ற தனது சாதனையை இவர் நிலைநாட்டினார். அவருடைய குணநலன்களோடு தப்பாமல் பிறந்தவன்தான் இவன். மாறாயிலுப்பைக் காட்டில் கழுத்தில் கயிறு இல்லாமல் சுதந்திரமாக எவ்வித தளைக்கும் அகப்படாமல் வளர்ந்த

Page 21
36 நினைவின் அலைகள்
காளை அவர். கருங்காலிக்கட்டை வாளாலும் உளியாலும் வெட்டிய சாதாரண கருங்காலித் துண்டு.
அவர், விவசாயம் செய்ய முடியாதவரண்ட செம்மண்ணில் பெண் எடுத்ததனால், வயிற்றுச் சீவியத்துக்காக பஞ்சத்துக்கு ஆண்டியாய் "தன் தொழில்" பழகினார். நெற் கதிர்களை அரிந்த கைகளால் மயிர் கற்றைகளை வெட்டத் தொடங்கினார். பெண் கொடுத்த மாமனாரான தம்பிமுத்தர் தன் மூத்த மகளுக்கு இணுவில் கிராமத்தை சீதனமாக வழங்கி அவரைக் குடிமகனாக்கினார்.
ஒரு கிழமையில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத்தான் அரிசிச் சோற்றை கண்ணால் காணலாம். மறுநாட்களில் சாமை அரிசிச் சோறும், குரக்கன் கோதுமை பிட்டுந்தான் இரவுச் சாப்பாடு மதிய உணவுக்கு கூழ் இருக்கவே இருக்கும் - இது நிரந்தரம். அப்படி ஒரு கொடிய பஞ்ச காலம். தினசரி அரிசிச் சோறு உண்பவர்கள் உண்மையில் பெரும் பணக்காரர்கள்தான். பொன்விளையும் செம்மண்ணாயிருந்தும் இரண்டாவது உலகமகா யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி அக்கிராமம் பஞ்சத்தால் திக்குமுக்காடியது.
யாழ்ப்பாணத்துக்கு மேலே அப்போதுதான் முதன்முதலாக ஆகாய விமானங்கள் பறக்கத் தொடங்கின. விமானத்தின் பயங்கர இரைச்சலைக் கேட்டதும் கண்ணாத்தைக் கிழவி "உச்.சு.ச்சு." என நாய்களை ஏவி உச்சுக்காட்டி விரட்டுவாள். சோற்று வழியில்லாத வயிறு ஒட்டி எலும்பும் தோலுமான கிழட்டு நாய்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து “வள்.வள்” என குரைத்து ஊளையிடும். இப்ப கிழவிக்கு ஆறுதாலாயிருக்கும்" என்ரை செல்ல நாய்கள் இல்லாட்டி உந்த கோதாரிலை போன ஆகாசப் பறவையைக் கலைச்சிருக்க முடியுமே? சோத்துக்கு வழியில்லாட்டிலும் நாயளை வளக்கிறதும் நன்மைதான்” என நினைத்துப் பெருமைப்படுவாள். "என்ன உலக அழிவுக்கு எந்தப் போக்கறுவான் உதுகளை கண்டு

எஸ்.வீ. தம்பையா 37
பிடிச்சானோ?” என்று மண் அள்ளித்துாற்றி திட்டுவாள். "என்ரை வாயாலை திட்டினா உன்னாணை பலிக்கும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.
7
இவனின் தந்தை வெள்ளாப்பில் பொழுது புலருமுன்பே உத்தியோகத்துக்கு கிளம்பிவிடுவார். சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை நாட்களில் அவருக்கு இவன் காலை உணவு எடுத்துக்கொண்டு இணுவிலுக்கு புறப்படுவான். இவனின் தாய் கோதுமை அரிசியை இடித்து மாவாக்கி பிட்டவித்து பனை ஒலை மூடல் பெட்டியில் பக்குவமாய்ப் போட்டு இவனிடம் கொடுத்தனுப்புவாள்.
பிட்டுப் பெட்டியை தலையில் சுமந்து நடக்கும்போது பிட்டின் வாசம் இவனது மூக்கைத் துளைக்கும். "கமகம"வென்ற அந்த வாசனை இவனது பொறுமையைச் சோதிக்கும். ஒருவிதமான மனப்போராட்டம் பெட்டியை திறப்பமா? வேண்டாமா?” திறந்து கொஞ்சம் பிட்டைத் தின்றால் என்ன பெற்ற தகப்பனுக்கு அவரது பசிக்கு கொண்டுபோகும் உணவில் களவாக உண்பது பாவமல்லவா! பாவமாவது மண்ணாங்கட்டியாவது. அப்பு நான் கொஞ்சம் புட்டை இடை வழியில் திண்டனான் எண்டால் கோவிக்கவா போறார். பிள்ளைகளை கண்ணின் கருமனிபோல பேணி வளர்ப்பவரல்லவா! பெற்ற பிள்ளைகளுக்காக முழுநாளும் பட்டினி கிடக்கச் சொன்னாலும் கிடப்பாரே!

Page 22
38 நினைவின் அலைகள்
பற்றை மறைவில் குந்தி இருந்துகொண்டு பிட்டுப் பெட்டியை மெதுவாக அவிழ்த்தான். தாய் கட்டித்தந்த மாதிரி அடையாளம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே திரும்பவும் கட்டவேண்டும் என்பதால் கட்டிய முடிச்சுக்களை நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு அவிழ்த்து பெட்டியைத் திறந்ததும், மல்லிகைப் பூவை பரவி வைத்ததுபோல வெள்ளை வெளேரென்ற பிட்டின் வாசம் மூக்கைத் துளைத்தது. புதையலைக் கண்டெடுத்த ஏழையின் சிரிப்பைப்போல முகத்தில் ஒருவித மலர்ச்சி.
ஒரே இடத்தில் பிட்டை அள்ளினால் கண்டுகொள்வார் என்பதால், பரவலாக கூட்டி அள்ளி உண்டான்; உண்டபின் கைகளை வேட்டியில் துடைத்துக்கொண்டு கட்டவிழ்த்த அடையாளம் தெரியாமல் மூடல் பெட்டியை மூடி வரிந்து இறுக்கிக் கட்டிகொண்டு "உலகினில் இன்பம் வேறுண்டோ." - அம்பிகாபதி பாடலை உரத்த குரலில் பாடியபடி கைகளை விசுக்கி இராசநடை நடந்தான்.
பிட்டுப் பெட்டியை அவிழ்த்ததும், தந்தைக்கு விஷயம் விளங்கிவிட்டது. "பொடியன் இடைவழியில் கொஞ்சம் விளையாடி இருக்கிறான்" என்று. இருந்தும் அதைத்தான் அறியாத மாதிரி நடித்து "தம்பி நீயும் கொஞ்சம் தின்னன்ரா" என்று கேட்டார்.
"வேண்டாமெனை அப்பு வேண்டாம்"
ஒரு சிறங்கை பிட்டை அள்ளி வில்லங்கமாக அவன் கையில் திணித்தார். ஏதோ வேண்டாவெறுப்பாக அருக்கி ஒருக்கி சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்து இவன் சாப்பிட்டான். தந்தை கொடுப்புக்குள் சிரித்தார். பாம்பின் கால் பாம்பறியுமல்லவா!

எஸ்.வீ. தம்பையா 39
8
இவனது தாய் வீட்டுக்கு மூத்த மகள் தலைப்பிள்ளை என்பதால் பள்ளிக்கூடப் பக்கம் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. வீட்டு வேலைகள் செய்வதும் தனக்கு இளைய சகோதரங்களைப் பராமரிப்பதும் அன்றாட வேலை. பெருவிரல் ஊன்றும் பேர்வளிதான். ஆனால் மிகக் கெட்டித்தனமானவள். அன்றாடம் வீட்டு வேலைகளைக் கவனிப்பதிலோ, அரிச்சுப் பொரிச்சு சமையலைக் கவனிப்பதிலோ மகா"விண்ணி" ஒரு சதம்கூட அங்காலை இங்காலை அரக்காது கணக்குப் பார்ப்பதில் சூரப்புலி மீன் வாங்கப்போனால் மற்றவர்கள் ஐம்பது சதத்திற்கு வாங்கும் மீனை, எப்பாடுபட்டாவது தங்கமுத்து கிழவியிடம் பேரம் பேசி அடிச்சுப் பிடிச்சு இருபத்தைந்து சதத்திற்கு வாங்கிவிடுவாள். சுறா, திருக்கை, கெளிறு, சூடை இப்படி மலிந்த மீனாகப் பார்த்துத்தான் வாங்குவாள்.
கணவனின் வருவாய் போதாதபடியால் சுன்னாகம் சந்தைக்கு கால்நடையாகச் சென்று வெற்றிலை, பாக்கு, புகையிலை, பனங்கட்டிக்குட்டான் முதலியவற்றை மலிந்த விலையில் வாங்கிவந்து, கொஞ்சம் லாபம் வைத்து, வீட்டிலி ருந்து விற்பாள். சுன்னாகம் சந்தை இரண்டு மைல் தூரம். இருமருங்கும் வாழைத்தோட்டங்களும், இராசவள்ளிக் கொடிகளும், புகையிலைக் கன்றும் செழிப்பாக வளர்ந்து அந்தக் கிராம மக்களின் கடும் உழைப்பை பறைசாற்றி நிற்கும். கிராமத்து உட்பாதைகள் புற்களின் மத்தியில் ஒன்றையடிப் பாதையாகச் சாரைப்பாம்பு நெளிந்து வளைந்து படுத்தாற்போன்றிருக்கும். அந்தப் பாதை வழியாகச் சென்று பொருட்களை வாங்கி பெரியதொரு நார்க்கடகத்தில் வைத்துச் சுமந்தபடி அவள் வருவாள்.
உச்சிப்பொழுது. வெயிலோ சுட்டெரிக்கும் சுடு புழுதியோ

Page 23
40 நினைவின் அலைகள்
காலை அள்ளும். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது வரும் வழியில் அக்கம் பக்கத்திலுள்ள தோட்டங்களில் “தொய்யில் கீரை", வாழைப் பொத்தி, முருங்கையிலை, முசுட்டையிலை என்பவற்றைச் சேகரித்துக்கொண்டு வருவாள்.
தலையிலிருந்து கடகத்தை இறக்கி வைத்துவிட்டு கிணற்றடிக்குப் போய் கை, கால், முகம் கழுவி "மடக் மடக்”கென வயிறு முட்டத் தண்ணிரைக் குடிப்பாள். அதிகாலையில் குடித்த பழைய தண்ணிருடன் இதுவும் கலந்து பசிக் களையை சற்று ஆற்றும்.
இனி மத்தியானச் சாப்பாட்டுக்கு என்று ஒன்றுமேயிருக்காது. செல்லமுத்து மீனாட்சி வீட்டுப்பக்கம் சுழன்று வந்தாளானால் மடியில் ஒடியல் மரவள்ளிக் கிழங்கு பயற்றங்காய் இவற்றுடன் வந்து சேர்வாள். அரிச்சுப் பொரிச்சு மடியில் கொண்டு வந்த பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து "கூழ்” என்ற பெயரால் ஒரு நொடியில் தயாரித்துவிடுவாள்.
வீட்டில் தாய்க்கு உதவியாக அவனின் சகோதரிமார் கூடமாட உதவியாக வேலை செய்வார்கள். தாயில்லாத வேளைகளில் அவர்கள்தான் சமையல் பரிமாறல் முதலி யவற்றுக்குப் பொறுப்பாளிகள்.
ஒருநாள் தாய் சந்தைக்குப் போயிருந்த நேரம், இவன் பள்ளிக்கூடத்தால் பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து குசினிப் பரணில் ஏறி பசிக்கு ஏதாவது தேடினான். அப்போது பனம்பழக் காலமில்லை; மாதுளையில் பழமுமில்லை. உடைந்த தேய்காய்ப் பாதி மட்டுமே இருந்தது. எலி நறுக்குவதுபோல தேங்காய்ப்பாதியை சுற்றிவர வட்டவடிவமாகக் கடித்துச் சுவைத்துக் கொண்டிருக்கும்போது.
இவனது இளைய சகோதரி கண்டுவிட்டாள். குசினிக் கதவை இழுத்து வடிவாய்ச் சாத்திப் போட்டுத்தான் இவன்

எஸ்.வீ. தம்பையா 41
பரணில் ஏறினான். அப்படியிருந்தும் அடுக்களைக்குள் சரசரக்கும் சத்தத்தைக் கேட்டு தமக்கை மெதுவாக எட்டிப்பார்த்தாள். பரண் மேல் கால்களை அகட்டிப் போட்டபடி சிக்காராக இருந்துகொண்டு தேங்காய்க் கயரை இரசித்துச் சுவைத்து உண்டுகொண்டிருந்தான்.
"எட இறங்கடா கீழை"
"ஊ.கும் மாட்டன்"
"சமையலுக்கு உந்த தேங்காய்க் கயர் பாதி மட்டுந்தான் இருக்கு இப்ப இறங்கப் போறியோ இல்லாட்டி அகப்பை காம்பாலே தரட்டோ"
"எங்கை தா பாப்பம்"
அவள் கீழே நின்றபடி அகப்பையால் அங்குமிங்கும் விசுக்கினாள். எக்கச்சக்கமாய் அடிபட்டு பொய் மூக்கு உடைந்து இரத்தம் மெல்லக் கசிந்தது. தடவிப் பார்த்தான், கையில் லேசான இரத்தம். உடனே சிங்கம்போல பாய்ந்து அவளது குடுமியை ஒரு கையால் பற்றியபடி மறு கையால் "பளார் பளார்" என கன்னத்தில் அறைந்தான். தக்காளிப் பழம் போன்ற அவள் கன்னத்தில் ஐந்து விரல்களும் பதிந்தன. இவன் கைப்பட்ட இடம் கன்றி இரத்தச் சிவப்பாகக் காட்சி தந்தது.
அவளும் வலு ரோசக்காரி விம்மி விம்மி அழுதபடி "இண்டைக்கு ஆச்சி சந்தையாலை வரட்டும். எனக்கு அடிச்ச உன்ரை கையை முறிப்பிக்காட்டிப்பார்” எனக் சுறுவிக்கொண்டிருக்கும்போது. ஆச்சியும் வந்து அதுவரை தலையை அழுத்திக் கொண்டிருந்த சுமையை - கடகத்தை இறக்கினாள்.
"ஆச்சி உவன் எனக்கு அடிச்சுப் போட்டான். இங்கை பாரணை" கன்னத்தைத் திருப்பிக் காட்டினாள். இலந்தைப் பழத்துப் புழுப் போன்ற நிறமுள்ள அவள் கன்னத்தில், இவன் விரல் பதிந்த இடம் கன்றிப்போய் இருந்தது. இதைப்

Page 24
42 நினைவின் அலைகள்
பார்த்ததும் ஆச்சிக்கு வயிறு பற்றி எரிந்தது. "என்ன உந்தத் தறுதலையே அடிச்சவன் வயதுக்கு மூத்தவள் எண்டும் பாராமல் இனி இந்த வீட்டில் உயிரோடு இருக்கமாட்டன். என்ரை மானமே போச்சு "இருளன்" சுடலைக் கிணத்திலை விழுந்து இந்த உயிரை மாய்க்கிறன்" எனக் கத்திக்கொண்டு சுடலைப் பக்கமாய் ஒடத் தொடங்கினான்.
இவன் ஆச்சியை பின் தொடர்ந்தபடி "ஆச்சி இனிமேல் இப்பிடி பிழைவிடமாட்டன். என்னை மன்னிச்சுக் கொள்ளெணை எணை நீ சாகாதையெனை நான் தாங்கமாட்டன்" என கெஞ்சிக் குழறியபடி அவளைப் பின்தொடர்ந்தான். ஒழுங்கையிலுள்ள கற்குறுணிகளை அள்ளி அவனுக்கு எறிந்தபடி ஒடி இலுப்பையடி வளைவில் விழுந்தாள் ஆச்சி. அவளது கால்கள் வலுவிழந்தன. காலையிலிருந்து அன்னம் தண்ணிர் கண்டிராத வெறும் வயிறு உச்சி வெயிலில் நடந்துவந்த களையும் சேர்ந்து மேற்கொண்டு ஒடமுடியாமல் கால்கள் தடுக்கித் தடுமாறின. சுடு மண்ணில் அப்படியே கிறுதிபோட்டு மயக்க நிலையில் செத்த பிணம்போலக் கிடந்தாள். அருகில் குடியிருந்தவர்கள் ஓடோடி வந்து முகத்தில் தண்ணிர் தெளித்து சுடச்சுட கோப்பியும் கொண்டு வந்து கொடுத்து களை ஆற்றினர்.
மயக்க நிலை தெளிந்து மெதுவாகக் கண்களை மலர்த்தி சுற்று முற்றும் பார்த்தாள். சனக்கூட்டம் நிறைந்து வழிந்தது விடுப்புப் பார்க்கும் சிலர் வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்தனர். "ஆச்சி என்னை மன்னிச்சுக்கொள். எணை இனி இப்பிடி குழப்படி செய்யமாட்டன். வயதுக்கு மூத்தவைக்கு கை நீட்டமாட்டன். வைரவர் ஆணை இது சத்தியம். நீ வாணை வீட்டுக்கு" கூடி நின்றவர்கள் எல்லோரும் முக்கித் தக்கி கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டுபோய் வீட்டுத் தலைவாசல் விறாந்தையில் கிடத்தினார்கள். ஆச்சியைக் கட்டிப்பிடித்தபடி மீண்டும் விம்மி விம்மி அழுதான். அழுகையை அடக்க முடியவில்லை. இவன் அழுவதைப் பார்த்து தாயுள்ளம் கரைந்தது. இவனின் கன்னத்தைத் தடவி

எஸ்.வீ. தம்பையா 43
"அழதையடா பொடியா" கை மூலம் சைகை காட்டினாள். அன்று முதல் வயதுக்கு மூத்தவர்களுக்குக் கை நீட்டக்கூடாது என்பதை சபதமாக எடுத்துக்கொண்டான். இரவு படுக்கும்போது தாய்க்குத் தெரியாமல் அவளின் சேலைத் தலைப்புடன். தனது கொடுக்கை அவிழ்த்து வட்டித் தலைப்பையும் இணைத்து முடிந்தான். இரவு முழுவதும் கண் உறங்காவல் காவல் காத்தான். தனக்குத் S ரியாமல் ஆச்சி சுடலைக் கிணற்றில் விழுந்துவிடுவாளோ என்ற 11ம் இருந்தும் ஒரு சாமம் எப்படியோ தன்னையுமறியாமல் கண்ணயர்ந்துவிட்டான்.
9
பக்கத்து வீட்டுத் தம்பித்துரை என்ற பையன், இவனைவிட நாலு வயது மூத்தவன். ஒருநாள் இரகசியமாய் காசு கூடுதல் சம்பாதிக்கிறதுக்கு - சேர்ப்பதற்கு ஒரு சுருக்கமான வழி இருக்கு ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது. விசயம் காதும் காதும் வைச்சமாதிரி இருக்கவேணும். நீ ஒருக்கா செய்து பார்க்கிறாயா?" என இவனைக் கேட்டான். இவனுக்கு காசு என்றால் பே.ரா.சை "சொல்லு சொல்லு சுறுக்காச் சொல்லு" என அவசரப்படுத்தினான்.
பொழுதுபட்டவுடன் உரிஞ்சான் குண்டியுடன் கிழக்குப்
L145Lib பார்த்து காட்டுவைர வரை மனதில் கும்பிட்டுக்கொண்டு "பொலியோ பொலி” என மூண்டு தடவை சொல்லி செப்புக்காசு ஒரு சதத்தை ஆருக்கும் தெரியாமல் நடவேணும். விடிய வெள்ளென சூரிய உதயத்துக்கு முன் எழும்பு மூத்திரத்தைப் பெய். காசு மரம் தானாக வளரும்.

Page 25
44 நினைவின் அலைகள்
இவன் யோசித்தான் மாட்டுச் சாணகம் கொஞ்சம் கலந்து போட்டால் சுறுக்காய் வளருமல்லவா!
ஒரு சாண் ஆழத்துக்கு குழிதோண்டி எருவைப் போட்டு அதன் மத்தியில் பவுத்திரமாய் ஒரு சதத்தைப் புதைத்து குழியை மூடி பலாச் சருகுகளால் குழி இருந்த இடம் தெரியாமல் மறைத்தான். அவன் சொன்னபடி இவன் நாள்தோறும் தவறாமல் செய்துவந்தான்.
மாதம் ஒன்றாகியும் பலன்தான் கிட்டவில்லை!
ஒருநாள் யாருக்கும் தெரியாமல் கிடங்கைக் கிளறிப் பார்த்தான். நட்ட காசையே காணவில்லை. 'தம்பித்துரையின் வம்புத்தனந்தான்' எனச் சந்தேகப்பட்டான். இருந்தும் அதனை வெளிக்காட்டாமல் அவனை மடக்குவதற்கு உற்ற தருணம் பார்த்துக் காத்திருந்தான். w
இவனுக்கு தேவனின் "தும்பறியும் சாம்பு"வின் புலனாய்வு வேலை ஒன்று எதிர்பாராமல் வந்து சேர்ந்தது. காசு மரம் முளைக்கும் என இவனைப் பேய்க் காட்டிய தம்பித்துரை, விசர் இராசையா வுக்கு "ஐஸ்" வைத்து இரதை வாழைக்குட்டி ஒன்றை வாங்கி வந்து நட்டான். அது நன்கு மதாளித்து வளர்ந்து பூப்படையக் காத்திருக்கும் வாலைக் குமரியைப் போல "தளதள” என்று நின்றது. இந்த வாழைக்குட்டியை தன் பிள்ளைபோல அவன் பேணி வளர்த்தான்.
ஒருநாள் தம்பித்துரையின் தமையன் முத்துவேலு இந்த வாழையில் தனது ஆட்டுக் குட்டியை மேயக் கட்டினார். ஒருசில நிமிடங்களில் ஆட்டுக்குட்டி அவிழ்த்துவிட்டது. இப்படி மூன்று தடவை உருவுதடம் போட்டுக் கட்டினார். அப்படிக் கட்டியும் ஆடு அவிழ்த்துக் கொண்டது. முத்துவேலுவுக்கு இது பெரும் அதிர்ச்சி மூளை சுறுசுறுப்பாய்

எஸ்.வீ. தம்பையா 45
வேலை செய்தது. அருகே நின்ற வேப்பமரத்தில் பேய் ஒன்று உலாவுவதாக வதந்தி வேப்பமரம் வாழைக்குப் பக்கத்தில் வேலி ஒரமாய் பூதம்போல நிமிர்ந்து நின்றது. "இது வேப்ப மர முனியின் வேலைதான்” என்ற முடிவுக்கு வந்தார். படுமுடிச்சுப் போட்டுக் கட்டியும் ஆடு அவிழ்ப்பதென்றால் இது மனிதரின் செயலல்ல. முனியின் விளையாட்டுத்தான். அடுத்த வீட்டுப் பெரியவரிடம் ஒடிப்போய் விஷயத்தைச் சொன்னார் முத்துவேலு. "இந்தப் பட்டப்பகலில் பேயாவது மயிராவது" அயலில் உள்ள எல்லாரையும் கூப்பிட்டு ஒரு இடத்தில் இருக்கச் சொல்லி, இவனை மறைந்திருந்து உளவு பார்க்கும்படி பணிக்கப்பட்டான். வாழைச் சருகுக்குள் உடலை மறைத்துக்கொண்டு முட்டையிலிருந்து வெளிவரத் தலையை மட்டும் வெளியே நீட்டும் கோழிக் குஞ்சைப்போல் தனது 2 -Ꭵ , ᎶᏈ) ᎧᏂᏪ நிலத்தில் ஒட்டிப்படுத்துக்கொண்டு, தலையை மட்டும் நீட்டிப்பார்த்தான். வாழைக்குட்டியையும், ஆட்டுக்குட்டியையும் வைத்தகண் வாங்காமலே கூர்ந்து பார்த்து பதுங்கிப் படுத்திருந்தான்.
என்ன புதுமை, தம்பித்துரை அடிக்குமேல் அடிவைத்து மெதுமெதுவாக ஆளரவம் கேட்காமல் வந்து ஆட்டுக்குட்டியின் கயிற்றை மெதுவாக அவிழ்க்கத் தொடங்கினான். உடனே இவன் 'ராய்ட்டர்’ செய்தியைப்போல பறந்து வந்து தம்பித்துரை ஆட்டை அவிழ்க்கும் செய்தியை அறிவித்தான் முத்துவேலுவிடம். அப்போதுதான் அவனுக்கு அன்று காலை நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.
சுண்ணாகத்து பிரபல "சேலைப் பொட்டணி” வியாபாரி நாகர் சேலைப் பொட்டணத்துடன் இவர்கள் வீட்டுக்கு வந்தார். எந்த வகையான துணிமணி வேண்டுமென்றாலும் யாழ்ப்பாணம் போகத் தேவையில்லை. நாகரிடம் சொன்னால் போதும். விதவிதமான துணி வகைகளுடன் வீட்டுக்கே கொண்டுவந்துவிடுவார். அன்றும்

Page 26
46 நினைவின் அலைகள்
அப்படித்தான் அவர்கள் வீட்டுக்கு நகர் வந்தபோது தனக்கு ஒரு வேட்டித்துண்டு வேண்டுமென அடம்பிடித்தான் தம்பித்துரை. முத்துவேலு மசிவதாயில்லை. "இப்ப வேட்டிக்கு என்னடா அவசரம்; காசும் இல்லை. தீபாவளி வரட்டும் அப்ப வாங்கித்தாறன்" எனத் தட்டிக் கழித்தார்.
“சல்லிமுட்டி முட்டக்காசு வைத்திருக்கிறார். ஒரு தம்பிக்கு வேட்டி வாங்கித் தரேலாதோ! உவருமொரு அண்ணனோ” 66.7 தம்பித்துரை மனதில் கறுவிக்கொண்டான்.
சிலமணி நேரத்துக்குள் தம்பித்துரையின் வாழைக்குட்டியில், முத்துவேலுவின் ஆடு மேயக்கட்டப்பட்டிருந்தது. தன் ஆத்திரத்தைத் தீர்க்க தருணம் பார்த்திருந்தவன் ஒடிப்போய் ஆட்டை அவிட்டுவிட்டு மறைந்து நின்றான். மறுபடியும் ஆடு கட்டப்பட்டு அவர் கட்டுவதும், தம்பித்துரை அவிழ்ப்பதுமாக தொடர்ந்தது.
புலனாய்வுத்துறையில் துப்புத் துலக்குபவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்குவதுபோல இவனது துப்பறியும் திறமைக்கு ஒரு சதம் பரிசளிக்கப்பட்டது. "இந்தாடா இதுக்கு பல்லி மிட்டாய் வாங்கித் தின்" இவனுக்கு தலைகால் தெரியாத புளுகம். ஒரு சதம் பரிசு கிடைத்தது மட்டுமல்ல; தம்பித்துரையைக் கையும் களவுமாய்ப் பிடித்து பழி தீர்த்துக் கொண்டேனே' என்ற மகிழ்ச்சிதான்.
முத்துவேலு இவனை உற்சாகப்படுத்தும் முகமாக "நாளைக்கு யாழ்ப்பாணம் "வின்சர்"லை "ஆரியமாலா" படத்துக்கு உன்னைக் கூட்டிக்கொண்டு போறன் வாறியா?" என்றார்.
"நான் கேட்டால் அப்பு விடமாட்டார். நீங்கள் ஒருக்கா அவரைக் கேளுங்கோ’ இவன் கெஞ்சினான். முத்துவேலுவ 3 முயற்சியால் ஒருவாறு அனுமதி

எஸ்.வீ. தம்பையா 47
கிடைத்தது. இவன் முத்துவேலுவுடன், "நைற் ஷோ" பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் புறப்பட்டான்.
உரும்பராய் - கோண்டாவில் எல்லையில் "மக்கிக் கிடங்கை" கடந்துதான் போகவேண்டும். அடர்ந்து வளர்ந்த மரங்கள் பகலென்றாலும் இருள் படர்ந்திருக்கும். இந்த மரங்களில் கொள்ளிவால் பேய் குடும்பம் நடத்துவதாக ஒரு வதந்தி!
யாழ்ப்பாணத்துக்கு இருவரும் கால்நடையாக சண்டிக்கட்டு கட்டியபடி, அதனுள் அவரவரது கசங்கிய சேர்ட்டுகள் பதுங்கி, முடங்கிக் கிடந்தன. மக்கிக் கிடங்கை தாண்டியதும் சண்டிக் கட்டுக்குள் கசங்கிக் கிடந்த சேர்ட்டை எடுத்து உதறி அணிந்துகொண்டு, கொள்ளிவால் பேயின் பயத்திலிருந்து விடுபட, "கிட்டப்பா”வின் "காயாத கானகத்தே நின்றுலாவும்” என்ற பாட்டின் வரிகளை முத்துவேலு பாடத் தொடங்கினார். "நற்காரிகையே" என இவன் பின்தொடர்ந்தான் பயம் பறந்தே போனது! இருவரும் ஆரியமாலாவைப் பார்க்கும் ஆவலுடன் எட்டி நடந்தனர்.
10
குசினி வாசற்படியிலுள்ள கதவு நிலையில் ஐந்து, பத்து சதக் குற்றிகளை வீட்டிலுள்ளவர்கள் வைத்திருப்பார்கள். அது இவனுக்குத் தெரியும். அதில் இவன் கை வைக்கத் தொடங்கினான். எண்ணி ஒரு மாதத்தில் அறுபத்தைந்து சதம் சேர்த்துவிட்டான். முதலில்லாத வியாபாரம். கிடைத்தவரை இவனுக்கு லாபம்.

Page 27
48 நினைவின் அலைகள்
பள்ளியில் "அறம் செய்ய விரும்பு" எனச் சொல்லித் தருவார் வாத்தியார். இவனது மூளை அறத்தில் நிலைக்காது. இந்த அறுபத்தைந்து சதத்தை எப்படிப் பெருக்கிறது என மனம் அலைபாயும். இந்தக் காசை வட்டிக்குக் கொடுத்தால் முதல் தொகை பெருகும்தானே! வட்டிக்குக் கொடுப்பதும் லேசான வேலையல்ல. நல்ல நம்பிக்கையான - நாணயமான வர்களுக்கு கொடுக்கவேணும். இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும். ஆர் நம்பிக்கையானவர். சும்மா பொறுப்பில்லாமலும் கொடுக்க முடியாது!
இவனது சிறிய தாயார் அன்னமுத்து, அவதான் வட்டிக்கணக்குப் பார்க்க சரியான ஆள். அத்துடன் எப்படிப்பட்ட இடக்கானவர்களிடமும் இதமாகப் பேசி வட்டியும், முதலும் கறந்துவிடுவதில் கெட்டிக்காரி
பள்ளிக்கூட மணி அடித்ததும் உடன் வறுகிக்கொண்டு போய் சிறிய தாய் வீட்டு முற்றத்தில் நின்றான். "குஞ்சாச்சி என்னட்டை காசு கொஞ்சம் இருக்கு இதை வட்டிக்கு கொடுக்கவேணும். நம்பிக்கையான ஆளாய்ப் பார்த்துக் கொடுங்கோ. இது விசயம் வேறு ஒருத்தருக்கும் தெரியக்கூடாது"
"சரி இப்ப உங்கடை வீட்டுக்கு நான் வாறன். காசைத் தாறPயே"
"நீ மெதுவா வாணை. நான் முதல்லை போய் எல்லாம் அடுக்குப் பண்ணுறன்" இவன் விரைந்தான் வீட்டுக்கு, இவனுக்குத்தான் நடக்கத் தெரியாதே!
வீட்டுக்கு வடக்குப் பக்க பூவரச மர வேலிக் கரையோரத்தில் அடையாளத்துக்கு வைத்திருந்த கல்லை எடுத்துப் போட்டு, சுமார் அரை அடி ஆழத்தில் புதைத்திருந்த "டின்பால்" பேணியைப் பக்குவமாய் எடுத்துத் திறந்தான். ஐந்து பத்து சதக்குற்றிகள் இவனைப் பார்த்துச் சிரித்தன. அடேயப்பா எவ்வளவு பணம் சத்தம் கேட்காமல் எண்ணினான். கணக்குச் சரியாக இருந்தது. இவ்வளவு

எஸ்.வீ. தம்பையா 49
பணத்துக்கும் நான் சொந்தக்காரன் என்ற பெருமிதத்தில் மிதந்தான்.
சிறிய தாய் வீட்டுக்கு வந்து சேர சொல்லி வைத்தாற்போல இவனது தாயும் அங்கு வந்து தலையிலுள்ள புல்லுக்கடகத்தை முற்றத்தில் இறக்கி வைத்தாள். சிறிய தாய் எட்டி இவனது கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு,
"அக்கா இவனுக்கு ஏது காசு"
"இறைவா மோசம் போனேன். குஞ்சாச்சி இப்படி நாரதர் வேலை செய்வா எண்டு தெரிஞ்சால் அவவிட்டைப் போயிருக்கமாட்டன். அந்தப் பக்கமே தலைவைச்சுப் படுத்திருக்கமாட்டன்'
முற்றத்து முருக்க மரத்தில் கைகளிரண்டும் பிணைத்துக் கட்டப்பட்டன. பூவரசங்கம்பால் இருவரும் மாறிமாறி அடி அடிக்கு மேல் அடி வளைந்து நெளிந்தபடி,
"ஐயோ ஆச்சி அடிக்காதை யெணை. நான் தாங்கமாட்டன், காளி ஆச்சி சந்நதி முருகா! என்னைக் காப்பாற்றுங்கோ உள்ளதெல்லாம் சொல்லுறன்" - வாசற் படிக்கதவு நிலையில் காசு களவெடுத்ததை விபரமாகச் சொன்னான். கண்ணிர் "பொல பொல"வெனக் கொட்டியது. தேம்பித் தேம்பி அழுதபடி 'இனிச் சீவியத்தில் களவெடுக்கமாட்டன், வைரவர் ஆணை இது சத்தியம்"
சிறிது நேரம் கழித்து தாயின் கோபம் தணிந்தது. அடித்த தழும்புகள் கொவ்வைப் பழம் போல் சிவந்து திட்டுத் திட்டாய் வீங்கியிருந்தன. “எக்கச் சக்கமாய்த்தான் அடிச்சுப் போட்டனோ!' 6Ꭲ ᎧᏈᎢ எண்ணியபடி நல்லெண்ணெயுடன் மஞ்சளும் கலந்து சூடாக்கி அடிபட்ட காயத்துக்கு மயில் இறகால் ஒற்றுவதுபோல மெதுவாகத் தடவினாள். இதமாக இருந்தது அவனுக்கு.

Page 28
50 நினைவின் அலைகள்
பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பத்து மிளகாய்ப் பழத்தை ஒரே மூச்சில் தான் போட்டிக்குத் தின்ற சாதனையைக் கூறி இவனையும் போட்டிக்கு அழைத்தார். ஒரு பழம் தின்றால் ஒரு சதம் பந்தயம். இச்சவாலுக்கு எதிர் நிற்பதற்காக இவன் நாட்களைக் கடத்திக்கொண்டு வந்தான்.
முற்றத்து பூவரச மர நிழலில் சுற்றிவர வட்டமாக அமர்ந்து பெற்றோர் சகோதரிகளுடன் சேர்ந்து நட்ட நடுவிலமர்ந்து இவன் ஒருநாள் கூழ் குடிக்கத் தொடங்கினான். அந்தக் கூட்டத்தில் மிளகாய்ப் பழம் தின்னும் போட்டியைப் பற்றி அவிழ்த்துவிட்டான். அதோடு "நானும் பத்து மிளகாய்ப்பழம் ஒரே மூச்சில் திண்டு காட்டுறன். உங்களாலும் முடியுமோ?” என வீரம் பேசினான்.
“எங்கை இப்ப நீ தின் பாப்பம்" மூத்த சகோதரி சீண்டிவிட்டாள்.
"திண்டு காட்டினால் என்ன தருவாய்"
"ஒரு மிளகாய்ப்பழம் திண்டால் பத்து இலந்தைப் பழம் பொறுக்கித் தருவன்"
- போட்டி பெற்றோர் முன்னிலையில் ஆரம்பமானது. செக்கச் சிவந்த மிளகாய்ப்பழம் ஒன்றை எடுத்துக் கடித்தபடி கூழ் குடிக்கத் தொடங்கினான்.
கண்களில் நீர் உருண்டு திரண்டு வழிந்தது. உறைப்புத் தாங்க முடியாமல் ஆய்.கூய் என வாயைத் திறந்தான். நாக்கிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.
இரண்டாவது பழத்தை எடுத்துக் கடிக்க முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்துகொண்டிருந்தது. சாரைப்பாம்பு நாக்கை நீட்டுவதுபோல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, விழி பிதுங்க கூடி இருந்தவர்களை பார்த்தான். எச்சில் கடைவாயால் வழிந்தது. இவனின் நிலையைப் பார்த்து கூடி இருந்த அனைவரும் "கொல்" என கெக்கட்டம் விட்டுச் சிரித்தனர். இச்சிரிப்பு இவனது

எஸ்.வீ. தம்பையா
ஆற்றாமைக்கு விட்ட சவாலாகப்பட்டது. கூழ் கூடித்த பலாவிலையை சுழற்றி எறிந்தான். சின்னதொரு கற்குவியல் வீட்டின் பின்புறம் குவித்துக் கிடந்தது. தன் ஆத்திரம் தீரு மட்டும் ஒலையால் வேய்ந்த அந்த வீட்டுக் கூரைக்கு எறிஎறி என்று எறிந்து தீர்த்தான்.
"பொடியா கொஞ்சம் பனங்கட்டி தின்னன்ரா உறைப்பு மாறிவிடும்" - இவனின் பரிதாபத்தைப் பார்த்து தாய் கேட்டாள். அவளின் பேச்சைக் கேட்பதாயில்லை. தலைவாசல் திண்ணையில், கால்களுக்கிடையே கைகளைச் சொருகி குறாவிக்கொண்டு சுருண்டு படுத்தான். மீண்டும் தாய் அருகில் வந்தமர்ந்து இவனது தலையைத் தடவியபடி "கூழ் கொஞ்சம் இருக்கு ஆறிப் போறதுக்கு முன்னம் குடியன்ரா மோனை"
"வேண்டாமெனை வேண்டாம்" உறுதியாகச் சொல்லி விட்டான்.
★ ★
தம்பித்துரைக்கும் இவனுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு தீர ஒரு அணில் குஞ்சு காரணமாயிற்று. மாங்கொப்பிலிருந்து பாய்ந்த அணில் குஞ்சு ஒன்று தவறி நிலத்தில் விழுந்துவிட்டது. அதை எடுத்துவந்து சொன்னான் தம்பித்துரை. "இதை ரண்டு பேரும் சேந்து வளப்பம். உன்னட்டை இருக்கிற மைனாக் கூட்டில்; உன்ரை மைனாவும் செத்துப் போச்சுத்தானே!" இவனும் சம்மதித்தான். இருவர் வீட்டுக்குமிடையே ஒரு வேலிதான் குறுக்கே இருந்தது. இருவரும் மீண்டும் இணைந்தனர். நட்புப் பயிர் மீண்டும் துளிர்த்து வளர்ந்து சடைத்தது.
"மச்சான் காசு மரம் முளைக்கும் எண்டு நல்லாய் உன்னை ஏமாத்திப் போட்டன். அதை மறந்திடடா" மனமுருகிச் சொன்னான்.

Page 29
52 - நினைவின் அலைகள்
"நான் எப்பவோ மறந்திட்டன். நானும் உன்னைச் சும்மா விட்டேனா? கொண்ணற்றை ஆட்டை நீ அவிழ்த்துப் பழி தீர்த்ததை கையும் களவுமாய் பிடிச்சுக் கொடுத்தேனே"
"பழையதுகளை மறப்பம். இனி நேசமாயிருப்பம்" அணில் குஞ்சுடன் இவர்களது பிணக்கு மறைந்தது. நீரினில் எய்த வடுப்போல பழைய சம்பவங்களின் சுவடே தெரியாமல் ஒன்றுபட்டனர்.
சைவத் தமிழ் வித்தியாசாலையின் ஆண்டுவிழா பேச்சுப்போட்டி, நடனம், கூத்து, நாடகம் எனப் பல கலை நிகழ்ச்சிகள். இதில் இராசாராணிக்கதை அமைப்பைக் கொண்ட நாடகமுமொன்று. பொன்னுத்துரை வாத்தியாரின் முதற்தாரத்து மூத்த மகன் கதாநாயகன். தம்பித்துரைதான் கதாநாயகி - இளவரசி வேடம்.
இலந்தைப் பழத்துப் புழுப்போன்ற சிவந்த நிறம் - தம்பித்துரையின் வடிவுக்குப் பச்சைநிற காஞ்சிபுரம் பட்டுச்சேலை அள்ளி எறிந்தது.
"சாமி பிராணநாதா கடைசிவரை என்னைக் கைவிட மாட்டீர்களே" - என குழைந்து குழைந்து வசனம் பேசி நடிக்கும்போது, தம்பித்துரையின் தோற்றமும், சிரிப்பும், கொய்யாப்பழம் டோன்ற அவனது குழிவிழுந்த கன்னத்தை கடித்துத் தின்னவேணும்போல இருக்கும் இவனுக்கு.
இணுவில் ஏரம்புவின் மகன் சுப்பையாதான் அண்ணாவி - ஒப்பனை எல்லாம் பிறகு சொல்லவா வேணும்! குழந்தையும் குண்டுமணியும் டான்ஸ், இவன்தான் பிற்பாட்டு மாணிக்கவாசகம் ஆர்மோனியம் - சிங்கப்பூரால் கொண்டுவந்தது. அன்றைய நிகழ்ச்சியைப் பற்றி அந்த ஊரே சேர்ந்து பாராட்டியது. பெண் வேடப் போட்ட தம்பித்துரைக்கு நல்ல கியாதி. சின்ேைமள சதுர்க் கச்சேரிகளைப் பார்த்துச் சலித்துப்போன பெண்டுகளுக்கு வெறு வாய்க்கு சிறிது அவல் கிடைத்ததைப் போன்று இருந்தது - இந்நாடகம்.

எஸ்.வீ. தம்பையா 53
வாழ்வே நாடகந்தானோ இவனது வாழ்க்கை எனும் நாடகத்தில் கருந்திரை ஒன்று வந்து விழுந்தது; காட்சி மாறியது. பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட்டான். வேறுமையின் காரணமாக தொழில்களை நாடும் ஆயிரமாயிரம் இளம் குருத்துகளில் - சிறுவர்களில் இவனும் ஒருவன் ஆனான்.
11
இப்போது இவனுக்கு வயது பதின் மூன்று. இவனது தாய் LDfT L D GaöT 'தன் தொழில்’ பழக்குவதற்காக பள்ளிக்கூடத்தினின்றும் விலகச் செய்து பதுளைக்கு அழைத்துச் சென்றார். இது காலம்வரை இவன் காதுகளை அலங்கரித்த "டேஞ்சர் லைற்” போல் பளிச்சிட்ட சிகப்புக்கல் தோடுகளை தன் சகோதரி ஒருத்தியின் காதுகளில் அணிந்தான். ws
வாழ்க்கையில் முதன்முதலாக 'கரிக்கோச்சி” - ரயில் பிரயாணம். சுன்னாகத்திலிருந்து புகையைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது. பொல்காவலையில் இறங்கி மறு ரயிலில் மாறி ஏறினான்.
இரு பக்கமும் வானத்தை முட்டும் மலைகள் அதன் முகடுகள் பஞ்சுப் பொதிக்குள் புதைந்து கிடப்பது போன்றதொரு தோற்றம். சுரங்கப் பாதைகளினூடே ரயில் போகும்போது புதினமாகவும் பயமாகவும் இருந்தது. வளைந்த தண்டவாளத்தின் மேல் நெளிந்து செல்லும் ரயிலி ன் முன் பக்கம் ஒரு எஞ்சின், பின்பக்கம் மறு எஞ்சின் ஒன்று இழுக்க - மற்றது தள்ள, நல்ல வேடிக்கை வாழ்நாளில்

Page 30
54 நினைவின் அலைகள்
காணாத காட்சிகள் இவை தவம் செய்யும் முனிவர்களைப் போல ஆடாது அசையாது இருந்த மலைகளும், மலைகளின் மேல் அடர்ந்த மரங்களும் கண்களுக்கு பசுமையாக இருந்தன. கண்களில் விழும் தூசு கரிப்புகையையும் பொருட்படுத்தாது வியப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான்) இமைகள் மூட மறுத்தன.
றம்புக்கனை ரயில் நிலையத்தில் ஏறிய சிலர் நெருக்கியடித்து அமர்ந்துகொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவன் சாரம், சேர்ட் அணிந்திருந்தான்.
ன்னொருவன் சேர்ட்டுக்கு மேல் கறுப்புக்கோட் அணிந்திருந்தான்.இன்னொருவன் வெள்ளைநிற சேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாதவர்கள் போன்று நடித்து, சூதாட்டத்தில் இறங்கி வெற்றியீட்டினர். பணநோட்டுகள் கைமாறின, கபடமறியாத சில தோட்டத்து பாட்டாளிகள் அந்தச் சூதாட்டம் உண்மையென நம்பி தாமும் ஈடுபட்டு கைப்பணத்தை இழந்து வழிச் செலவுக்கும் பணமில்லாது திண்டாடினர். இவன் இதற்கு முன் இப்படிப்பட்ட விளையாட்டுகளைப் பார்த்ததில்லை. இப்படி பெருந்தொகையான பணம் புழங்கியதையும் கண்டறியான். இது விளையாட்டா அல்லது சூதாட்டமா ஒன்றுமே புரியவில்லை. வாயைப் பிளந்தபடி "ஆ"வென்று மிலாந்தினான்.
பதுளை ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தபோது பொழுது புலரவில்லை. பனி படர்ந்து அவனை “கிடுகிடு”வென நடுங்கச் செய்தது. பாலத்தின் மேல் செல்லும்போது கீழே குறுக்கறுத்துச் சென்ற ஆறு பனி மூட்டத்தால் போர்த்திருந்தது. நன்றாகச் சலவை செய்யாத வெள்ளைப் போர்வையை ஆற்றின் மேல் விரித்திருந்தாற் போன்றிருந்தது.
பதுளையில் இவனது தாய்மாமன் கடையில் உத்தியோகம் ஒன்று இவனுக்காக காத்திருந்தது, சமையல்

எஸ்.வீ. தம்பையா 55
வேலை. இவனுக்கு மூக்கு முட்டச் சாப்பிடத்தான் தெரியுமே தவிர, சமையற் கலையைப் பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. சில வேளைகளில் தாய்க்கு உதவியாக கங்குமட்டை, சுள்ளிவிறகு பொறுக்கிக் கொடுத்திருப்பான். காய்கறிகூட நறுக்கிக் கொடுத்திருக்கமாட்டான்.
இரண்டாவது உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால் சில வெள்ளைக்காரர்களின் தலைகளும் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தென்பட்டன. "பிளாக் அவுட்" என்ற பெயரில் விளக்கு வெளிச்சம் வெளியே தெரியக்கூடாது. பதுளை நகர் "மூளி அலங்காரி" போலக் காட்சியளித்தது.
ஜப்பானியரால் கொழும்புத் துறைமுகத்தில் குண்டு இரண்டு வீசப்பட்டது. தென்னை மரத்தில் தேள் கொட்ட பனைமரத்தில் நெறி கட்டினாற்போல பதுளை நகரமே அல்லோ லகல்லோலப்பட்டது. ஜப்பான்காரன் இலங்கையை விழுங்கி ஏப்பம்விடப் போகிறான் என்றும் பேசிக் கொண்டார்கள்.
பஞ்சகாலம் என்பதால் உணவுக்குப் பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. இலங்கை, இந்தியா, பர்மா ஆகிய நாடுகள் சுதந்திரமடையாமல் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் பெரும்பாலும் பர்மிய அரிசியே இங்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை ஒரு விவசாய பூமி என்ற நிலைமாறி பர்மாவிலிருந்து அரிசிக் கப்பல் வராது போனால் வயிற்றை இறுக்கிக் கட்டவேண்டியதுதான்.
இவனது முதலாளி வெள்ளைப் பச்சை அரிசியை ஒரு கள்ளிப் பெட்டியில் நிரப்பி பூட்டுப்போட்டு இழுத்துப் பூட்டியிருப்பார். இரவுச் சாப்பாட்டுக்கு அவர் அளந்து தரும் அரிசியைத்தான் உலையில் போடவேண்டும். இரவு மட்டுந்தான் சோறு.
மத்தியானம் ஆளுக்கு அரை றாத்தல் பாணும். ஐந்து சதத்திற்கு பருப்புக் கறியும்.

Page 31
* 56 நினைவின் அலைகள்
காலையில் அரைப்போத்தல் பசும்பால் வாங்கி அதில் தேநீர் கலக்கி, கடையிலுள்ள ஐவரும் பகிர்ந்து குடிக்க வேண்டும். பணிஸ் கினிஸ் ஊ.கும்.
ஒரு லாச்சியில் சில்லறைக்காசு கொஞ்சம் எண்ணிக்கணக்காக வைத்து லாச்சியின் மேல் சிலேற்றும், பென்சிலும் கட்டித் தொங்க விட்டிருப்பார் எந்தப் பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளையும், அதன் விலையையும் தவறாமல் குறிக்க வேண்டும். இரவு கணக்குப் பார்க்கும்போது கையும் கணக்கும் அட்சரம் பிசகாமல்
சரியாக இருக்க வேண்டும்.
ஒருநாள் இரவு கணக்குப் பார்க்கும்போது பத்துச் சதம் கணக்கில் குறைந்துவிட்டது. உடனே பிரம்பை எடுத்து உருவினார். அடி என்றால் அதுதான் அடி அடிக்குமேல் அடி உடம்பின் அங்கமெல்லாம் கொவ்வைப் பழம்போல் தழும்புகள்.
இவனுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை, புரண்டு படுக்கவும் முடியவில்லை. உடம்பு எங்கும் "விண் விண்” என வலித்தது. செய்யாத குற்றத்திற்கு அடி வாங்கியதை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாய் இருந்தது. நடுச்சாமம போல்தான் நினைவு வந்தது. "வெந்தயம் பத்துச் சதத்துக்கு வாங்கியதை எழுத மறந்துவிட்டேன்' என்பதை. உடனே அவரை எழுப்பிச் சொன்னேன்.
"காசு விசயத்தில் என்னடா மறதி இனிமேல் எண்டாலும் இப்பிடி அடி வாங்காமல் நடந்துகொள்” - அவர் அலட்சியமாய் சொல்லிவிட்டு குறைச் சுருடடை எடுத்துப் பற்றவைத்தார். இவனுக்கோ தீக்குச்சி கிழிக்காமலேயே உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.
இரண்டு சாரங்களும் கொலர் இல்லாத இரண்டு சட்டையுந்தான் இவனது மொத்த உடுப்பு. இதை "ஆபாரம்" எனச் சொல்வார்கள். காமராஜ் நாடார் அணிந்திருப்பாரே! சட்டை அதைப்போல இருக்கும்.

எஸ்.வீ. தம்பையா 57
தினசரி காலை ஐந்து மணிக்கு எழுந்து பனிப் புகாருக்கூடே கிடுகிடுக்கும் குளிரில் நடுங்கியபடி தற்கொலை செய்பவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணிரில் குதிப்பதுபோல ஆற்றில் பாய்ந்தால்தான் குளிரிலிருந்து தப்பலாம்.
காலையில் உடுத்த உடுப்பை களைந்துவிட்டு முதல்நாள் ஆற்று நீரில் தோய்த்த உடைகளை உடுத்துவான். தொடர்ச்சியான மழைக்காலம் என்றால் உடை சரியாகக் காய்ந்திருக்காது. ஈரமென்றாலும் இதையேதான் உடுத்தவேண்டும். வெயிலில் சரியாகக் காயாத உடையில் “சீலைப்பேன்’ தொற்றிக்கொள்ளும், அரைஞான் கொடியில்கூட அது ஒட்டிக்கொள்ளும். இந்தப் பேனை ஒவ்வொன்றாகப் பிடித்து நசுக்கும்போது "நறுக் நறுக்கென்று ஒருவித ஒசை எழும். அதைக் கேட்க மனதுக்கு இதமாயிருக்கும்!
இரவு ஏழு மணிக்குத்தான் சமையலுக்கு ஆயத்தம் செய்வான். பத்து மணிக்கு கடை பூட்டியதும் அனைவரும் ஒன்றாயமர்ந்து உண்பார்கள். வீட்டில் என்றால் எட்டு மணிக்கெல்லாம் மரத்தை வாளால் அறுப்பதுபோல “கர்புர்" என குறட்டை விடுவான். பத்து மணி என்றால் இவனுக்கு நடுச்சாமம். "இற்றி பந்தங் ஹால்" என வழங்கும் வெள்ளைப் பச்சையரிசியை கழுவி உலையில் போட்டுவிட்டு சுவருடன் சாய்ந்து கொள்வான். கடைக்கு எதிரேயுள்ள நந்தன ஹோட்டலில், “அன்னையும் தந்தையும்தானே" என்ற பாகவதரின் பாடலை ஒலிபரப்புவார்கள். செவியைத் \ துளைக்கும் இப்பாடலில் தன்னை மறந்து உறங்கிவிடுவான். வெள்ளைப் பச்சையரிசி, சோறு என்ற நிலை மாறி 'கூழா"கிவிடும். அன்றைக்கு பிரப்பம் பழம் அள்ளு காள்ளையாகக் கிடைக்கும். பிரம்புக்கும் அவனுக்கும் நருங்கிய உறவு, அது அடிக்கடி இவனுடலை ஆரத் தழுவும்.

Page 32
58 நினைவின் அலைகள்
இவன் படுப்பது ஒரு பலகைக் கட்டில் பலகை மூன்று இடைவெளிவிட்டு பரவியிருக்கும். படுத்துக்கொண்டே நிலத்தைப் பார்க்கலாம், அவ்வளவு இடைவெளி கடைவாச லில் மரக்கறி விற்கும். "பண்டையா" தனது மரக்கறிக் கூடைகளை பகலில் வியாபாரம் முடிந்ததும், இரவில் இவன் படுக்கும் கட்டிலுக்குக் கீழ் வைத்துவிட்டுச் செல்வார். அவருக்கு வாடகை ஒன்றும் கிடையாது. அதற்குப் பதில் அன்றாடம் இரவு உணவுக்குத் தேவையான மரக்கறி வகை களை இலவசமாகச் "சப்ளை" செய்வார். இக்காய்கறிகளில் ஒரு குழம்பு தயார் செய்தால் அன்றைய பொழுது அத்தோடு சரி சொதி கிதி என்ற பேச்சுக்கே இடமில்லை!
இரவுச் சாப்பாட்டை முதலாளிதான் பங்கிடுவார். மண்ணினாற் செய்யப்பட்ட காற் சட்டி ஐந்திருக்கும். அன்று சமைத்த உணவை அதில் சமமாகப் பங்கிடுவார். போதுமோ, போதாதோ உள்ளதைச் சாப்பிட்டுவிட்டுத் திருப்தியுடன் எழும்ப வேண்டியதுதான்! சாப்பாடு விசயத்தில் சமத்துவத்தை தவறாது பேணுவார்!
சில சமயங்களில் சோறு வடித்த கஞ்சியில் சோற்றை அள்ளிக் கலந்து இவனது இரண்டாவது தமையன் குடிப்பார். அப்போது சோறு சிறிது பானையில் குறைந்து காணப்படும். உடன் விசாரணை நடத்துவார். உண்மையைச் சொல்லிவிட வேண்டும். இல்லையேல் வாங்கிக்கட்ட வேண்டியதுதான். "அரைவயிறு சோறு; கால் வயிறு தண்ணிர் கால் வயிறு காலியாயிருக்க வேண்டும்" ଗtଗot உபதேசிப்பார். ஆரோக்கியத்துக்கு அதுதான் நல்லது. இப்படிப்பட்ட படிப்பை எந்த சுகாதார வைத்தியரிடம் கற்றாரோ தெரியவில்லை! டாக்டர் நந்தியிட்தோன் விபரமாகக் கேட்க வேண்டும்!
கொழும்பு “எல்பின்ஸ்ரனி"ல் "ஹரிதாஸ்” படம் அப்போதுதான் திரையிடப்பட்டது. "நந்தன ஹோட்ட"லில் பாகவதரின் பாடல்களை அடிக்கடி ခြွစ္ထိ கேட்டு ரசிப்பான்; சுவைப்பான். சமையல் நேரம் "கிருஷ்ண்ா

எஸ்.வீ. தம்பையா 59
முகுந்தா"வை கேட்டு ரசித்துக்கொண்டே உறங்கிவிடுவான். உலையில் போட்டவுடன் கரைந்துவிடும் மெழுகு அரிசி கூழாகிவிடும்; அன்றைக்கு நம்பி இருக்கலாம்!
பதுளை விஹாரைக் கொடைச் சந்தியில் பொதுவான மல சல கூடம். அந்தச் சந்தியிலுள்ள அனேகமானோருக்கு அதுவே தஞ்சம் மலசலம் கழிக்கச் செல்வதென்றால் "தம்" பிடித்துக் கொண்டுதான் அங்கு செல்ல வேண்டும். வாளிக் கக்கூசு, கதவுகள் கிடையாது. அடிமேல் அடிவைத்து வெகு நிதானமாகப் போக வேண்டும். நிதானம் தவறினால் "நர"கலில் மிதித்து விடுவார்கள். "இரண்டு"க்கு போபவர்கள் கவனமாக நடந்துபோய் கண்களை இறுக மூடியபடி "தம்” பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும். நாற்றம் தாங்க முடியாது. இதனால் "வெளி"க்குப் போகும்போது பீடி புகைக்கக் கற்றுக்கொண்டான் இவன். பீடி காசு கொடுத்து வாங்கும் நிலையில்லை. கடை கூட்டும்போது சில பெரிய துண்டு பீடிகளைச் சேகரித்து ஒரு டின்பால் பேணியில் நிரப்பி வைப்பான். சில நாட்களுக்குத் தேவையான குறைபீடிகளை ஒரே நாளில் சேகரித்து விடுவான்.
கடையின் பின்பக்க சுவருக்கு மத்தியில் நிலத்திலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மேல் அக்கம் பக்கம் இரு அலுமாரிகள், அவைகளின் மத்தியில் அரைக் கதவுகள் இரண்டு இருக்கும். ஆகையால் அது ஒரு தனி அறை போன்றிருக்கும். "தண்டால்” எடுப்பதுபோல தரையில் படுத்தபடி அலுமாரிக்குக் கீழால் கடையை நோட்டம் விட்டால் யார் யாருடைய கால்கள் எங்கெங்கு போகின்றன என்பதை இலகுவில் கண்டுகொள்ளலாம். முகக்குப்புற படுத்துக்கொண்டு சாவகாசமாய் பீடி பற்றவைக்கலாம். அனைவரும் தொழில் செய்துகொண்டிருந்தால் சுதந்திரமாய் "தம்"இழுக்கலாம். காலைக் கடனுக்காக பழகிய பீடி புகைக்கும் பழக்கம் இப்பொழுது நேரகாலமின்றி புகைக்கும் அளவுக்கு முன்னேற்றமடைந்தது; வளையம் வளையமாக புகைவிடுவதில் சாம்பியனானான்.

Page 33
60 நினைவின் அலைகள்
ஒருநாள் பீடி பற்றத் தொடங்கும்போது "அவக்”கென முதலாளி வந்துவிட்டார். என்ன செய்வதென அறியாது திகைத்தான். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. அடுப்பு எரிப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்ட விறகு கட்டைகள் இவனுடலைப் பதம் பார்த்தன. “பொடியன் பீடி குடித்துக் கெட்டுப் போகிறானே” என்பதைவிட பீடிவாங்க காசு ஏது என்பதில்தான் கண்ணாயிருந்தார் அவர் அடித்த அடியில் அவரும் களைத்துப் போய்விட்டார். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. "பீடி வாங்க ஏதடா காசு?" இவன் உண்மையைச் சொன்னான் - துண்டு பீடி பொறுக்கி புகைப்பதை ஒப்புக்கொண்டான்.
"இந்தா இந்தப் பேணிமுட்டதுண்டு பீடி பொறுக்கிவை இரவைக்கு எனக்கு முன்னாலே அவ்வளவும் குடித்துக்காட்டவேணும்" - இப்படிக் கூறினாரே தவிர செயல்படுத்தவில்லை. இந்தச் சம்பவத்துடன் புகைப்பதற்கு முழுக்குப் போட்டான்.
12
எதிரே - நந்தன ஹோட்டலை ஒட்டினாற்போல ஒரு வெற்றிலைக்கடை காரைநகரைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. அந்தக் கடையில் இவன் அளவு பொடியன் ஒருவன். முதலாளியின் சொந்தக்காரன். அவன் இவனது கடைக்கு தலைவார வருவான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவனை நன்கு உபசரிப்பான். நாற்காலியில் இருத்தி அவன் தலையில் தேங்காயெண்ணெய் தடவி, தலையை அழகாக வாரி "ஐஸ்” வைப்பான். பரம

எஸ்.வீ. தம்பையா 61
திருப்தியாகச் செல்லும் அவன் தனியாக தனது கடை மேசையில் இருக்கும்போது, இவன் போனால் துண்டம் துண்டமாக வெட்டப்பட்ட புகையிலைத் துண்டு ஒன்றை தட்டிவிடுவான். அதை இரகசியமாய் ஒரு இடத்தில் மறைத்து வைத்து அதிகம் எச்சில் ஊறாமல் கோரோசனை மாத்திரையைப்போல சிறிது கிள்ளி எடுத்து வாய்க்குள் அதக்குவான்.
இவன் புகையிலை போடுவதை இவனது சகோதரன் சந்தேகப்படத் தொடங்கினார். கழுகுக் கண்கள் அவருக்கு அடிக்கடி உளவு பார்ப்பார் கையும் களவுமாகப் பிடித்து நாலு முதுகில் வைத்தால்தான் அவருக்கு பொச்சந்தீரும். கடையின் பின் சுவரில் ஆணி அடித்து தொங்கும் பிரம்பு ஒன்று இவனுக்காகக் காத்திருக்கும்.
புகையிலை இவன் வாய்க்குள் இருக்கும். திடீரென வாயைத் திறக்கச் சொல்லுவார். இவன் வாய்க்குள் இருந்த புகையிலையை விழுங்கிவிட்டு, தானாகவே வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டுவான். பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும், அதுதான் வயிற்றுக்குள் போய்விட்டதே! இனி எக்ஸ்ரே எடுத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்!
இவன் பீடி புகைக்கும் காலத்தில் ஒருநாள், பஸ் ஸ்ராண்டில் மூட்டை சுமக்கும் சிறுவன் ரொமானிஸ் என்பவன், மலசல கூடத்தில் இவன் புகைப்பதை இவனது தமையனுக்கு அள்ளிவைத்துவிட்டான்.
"என்ன புதுப்பழக்கம் எல்லாம் பழகிவிட்டியாம். பீடி குடிக்கிறதாக கேள்விப்பட்டேன். உண்மைதானா?”
"ஆர் சொன்னது? ஆர் சொன்னது?" - துருவித் துருவிக் கேட்டான்.
"உனக்கேன்ரா சொன்ன ஆளை. அவன்தான் ரொமானிஸ்தான் சொன்னான்"

Page 34
62 நினைவின் அலைகள்
“என்ன ரொமானிஸ்ஸோ?" - மனதில் கறுவிக் கொண்டான். அவனுக்கு நல்ல புரியாணிச் சாப்பாடு போடவேணும். அப்பதான் இப்பிடி கோள்சொல்ல மாட்டான். அவன் பீடி குடிக்கலாம். நான் குடிக்கக் கூடாதோ என்னளவு பொடியன்தானே அவனும்
ரொமானிஸ்ஸுக்குப் பாடம் புகட்ட நேரகாலம் பார்த்துக் காத்திருந்தான்.
ஒரு மாலைப் பொழுது ரொமானிஸ் மலசல கூடப் பக்கம் போவதைக் கவனித்துவிட்டு எட்டி நடந்து, எதிரே போய் அவனுடன் நேருக்கு நேர் மோதினான். எடுத்தவாக்கில் அவன் ஒரு அடி அடிச்சுப் போட்டான். அவ்வளவுதான் இடது காலால் ஒரு தட்டு, கீழே சரிந்தான் அவன் உருட்டு உருட்டென்று உருட்டி அவன் மார்புமேல் இருந்து இரு கைகளையும் கோத்துப் பிடித்தபடி, இந்த விசயத்தை கடையில் போய்ச் சொன்னியோ இரவிலை இந்த கக்கூசுப் பக்கம் வரமாட்டாய். இரவென்றால் ரொமானிஸுக்குப் பீப்பயம். இந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லாமல் அப்படியே மழுப்பிவிட்டான்.
அவன் வாய் திறக்காவிட்டாலும் கடைக்கு இந்த சம்பவம் காற்று வாக்கில் எட்டியது.
“டேய் ரொமானிசுக்கு அடிச்சனியோடா” "இல்லை நான் அடிக்கேல்லை" - முழுப் பூசனிக்காயை சோற்றில் புதைப்பதைப்போல முழுப் பொய் சொன்னான். இருந்தும் தமையனுக்கு ஒரு சந்தேகம்
“டேய் அவங்கள் சிங்களவர்கள். அவங்களிட்டை சேட்டை விட்டால், உன்னைத் தொலைச்சுப் போடுவார்கள்"
"தொலைக்க வரேக்கை பாத்துக்கொள்ளுறன். அப்பதான் இலங்கை சுதந்திரமடையவில்லையே? சிங்களவர்களும், தமிழர்களும் கூடிப்பிறந்த சகோதரங்கள் போலத்தானே

எஸ்.வீ. தம்பையா 63
பழகுறோம். அரசியல்வாதிகளுக்கு இன வேற்றுமை எண்ட குளிசை கிடைக்கவில்லை பிறகேன் பயப்படுவான்" என மனதில் நினைத்துக்கொண்டான்.
இந்தக் கடை பகலில் பூட்டிய சரித்திரமேயில்லை. காலை ஐந்து மணிக்கு மஞ்சள் தண்ணிர் தெளித்து சாம்பிராணி புகைகாட்டி கடையைத் திறந்தால் இரவு பத்து மணிவரை நாடகம் தொடரும் பகலில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடைபூட்ட கதவுகளே இல்லையோ' என நினைத்துக்கொள்வார்கள். தைப்பொங்கல். சித்திரை வருடப் பிறப்பு. தீபாவளி எந்தப் பெருநாள் வந்தாலும் கடை மட்டும் பூட்டப்படமாட்டாது.
ஒரு தீபாவளிக்கு முதல் நாள் இரவு இவன் தனக்கு புது உடுப்பு வாங்காததை நினைத்து அழுதுகொண்டே படுத்திருந்தான். நித்திரை வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தான். இரவு ஒரு மணியிருக்கும். முதலாளி சருட்டுப் பற்றவைக்க தீக்குச்சியைக் கிழித்தார்.
ஆச்சி. இந்த தீபாவளிக்கு, அம்மான் எனக்கு உடுப்பு ஒன்றும் எடுத்துத்தரேலை. என சிணுங்கிக்கொண்டு வாய் பிதற்றுவதுபோல பாசாங்கு செய்தான். சுருட்டு பற்றியபடி இதை அவதானித்த முதலாளி, காலை ஒன்பது மணி போல் வெளியே சென்றவர் ஒரு சின்னப் பார்சலுடன் வந்து சேர்ந்தார். பிரித்துப் பார்த்தான். ரெடிமேட் ஆபாரம் ஒன்று மட்டும் இருந்தது. இவன் இப்படி நடித்திருக்காவிட்டால் இதுவும் கிடைத்திராது.
இவனுக்கு மோதிரம் ஒன்று பொன்விரலில் போட்டு அழகு பார்க்கவேண்டுமென்று நீண்டநாள் ஆசை. சமையலுக்கு சாமான்கள் வாங்கும்போது ஒரு சதம், இரண்டு சதமாய் ஐந்து சதம் சேர்த்தான். அந்தக் காசில் பித்தளை மோதிரம் ஒன்று விரலுக்கு அளவாக வாங்கி, அன்றாடம் குளிக்கப் போகும் ஆற்றங்கரையில் கைகளால் குழிபறித்து அதனுள் மோதிரத்தை வைத்துப் புதைத்து

Page 35
64 நினைவின் அலைகள்
பெரிய கல் ஒன்றை எடுத்து அடையாளம் மாறாமல் வைத்தான். மோதிரம் புதிதாக இருந்தால் முதலாளியிடம் மாட்டுப்பட வேண்டும். ஆகையால் கொஞ்சம் துருப்பிடித்து பழசாக இருந்தால் சொல்லித் தப்பலாம்.
எண்ணி ஒரு மாதம் கழித்து அமாவாசை அட்டமி நவமி இல்லாத சுபநாளாக தேர்ந்தெடுத்து - சித்திரா பெளர்ணமியன்று - காலையில் குளித்ததும் பொன்விரலில் மோதிரத்தை மாட்டிக்கொண்டு "மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை" என்ற தியாகராச பாகவதரின் பாடலை வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு கைவீசி நடந்து கடைக்கு வந்து சேர்ந்தான். கடைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் முதலாளியிடம், "இதை ஆற்றங்கரையில் கண்டெடுத்தனான்" - பொன் விரலை நீட்டிக்காட்டினான்.
"எட இது பவுண் மோதிரம் போலக் கிடக்கு கள்ளர் கிள்ளர் கொண்டுபோய் விடுவினம் கவனமாய் வைச்சிரு" - முதலாளிக்கு இவன் கயிறு திரித்தான்; அவர் இவனுக்கு கயிறு திரிக்கிறார். நீண்டகால ஆசை ஒன்றை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனந்தம் நல்ல ஆனந்தம்' என்ற பாடலை எதிரே வசந்த கோகிலம் பாடிக்கொண்டு வருவது போன்றிருந்தது.
சமையல் சாமான்கள் வாங்கும் காசில் ஒரு சதத்தை மிச்சம் பிடித்து பழைய வெள்ளைத் துணியில் முடிந்து இடுப்பிலுள்ள அரைஞாண் கொடியில் இறுக்கி முடிந்தான். 'கதிர்காமக் கந்தா! அடிக்கடி அடி வாங்குறன். இனி எண்டாலும் அடிகிடி விழாமல் பார்த்துக்கொள். நான் பெரியவனானதும் ஒருக்கா உன்னிடம் வந்து இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுறன்"
கந்தன் கருணை காட்டுமாற்போலில்லை. அரைக் கண்ணால்தான் இவனைப் பார்த்தாரோ என்னவோ! அடிக்கு குறைவேயில்லை.
காலம் கரைந்தது. நேர்த்திக்கடன் வைத்து ஒரு

எஸ்.வீ. தம்பையா 65
வருடமிருக்கும். நேர்த்திக்கு காசு வைத்துக் கட்டிய துணி உக்கி நைந்து கழன்று பண்டையாவின் மரக்கறிக் கூடையில் விழுந்துவிட்டது. இவன் அதைக் கவனிக்கவில்லை.
அதிகாலை வியாபாரத்தைத் தொடங்குவதற்காக மரக்கறித் தட்டை பண்டையா எடுத்தார். உக்கிய துணியால் கட்டிய செப்புக்காசு ஒன்று. துணி முடிச்சுக்கிடையே வெள்ளை வெளேரென "சீலைப்பேன்" மினுமினுத்தது. செய்வினை பில்லி சூனியம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர் பண்டையா. இதைப் பார்த்ததும் துடித்துப் பதைத்தவராக “முதலாளி இங்கே வந்து பாருங்கோ தாரோ சூனியங் செய்து போட்டாப்"
முதலாளியும் மந்திர தந்திரத்தில் கரைகண்டவர்தான். "பண்டையா ஒருத்தருக்கும் இப்ப சொல்லாதையுங்கோ, பின்னேரம் ஆறுமணி போல ரண்டுபேரும் தெளிவத்தைக்குப் போவம், அங்கை எனக்குத் தெரிஞ்ச மலையாள மந்திரீகர் இருக்கிறார். வலு கெட்டிக்காரன்” என்று சொன்னபடி இந்த செப்புக்காசை கைகளால் தொடப்பயந்து கத்திரிக்கோல் நுனியால் எடுத்து கவர் ஒன்றில் வைத்து பத்திரப்படுத்தினார்.
இவனுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. மந்திரவாதி குறளியை தன்னிடந்தான் ஏவிவிடப்போறாரோ? இரவைக்கு வீரபத்திரர் வந்து மூட்டு மூட்டாய் முறிக்கப்போறாரோ, இல்லாட்டி அனுமான்தான் வந்து of TG) IT60) 6) சுழட்டி அடிக்கப் போறாரோ? கதிர்காமத்தானும். மாணிக்க கங்கையில் மூழ்கிவிட்டாரோ! இறைவா என்ன செய்வேன்! மனம் பதறியது. மூளை கலங்கியது. நட்டாற்றில் நின்று தத்தளிப்பது போன்ற நிலை. மத்தியானம் சாப்பிட்டவுடன் முதலாளி கொஞ்சம் கண் அயர்வார். பாணும் பருப்பும் கலந்து தின்ற மயக்கம். இவன் மெதுவாக பண்டையா அருகில் போய் இருந்துகொண்டு

Page 36
66 நினைவின் அலைகள்
"பண்டையா நான் ஒரு இரகசியம் சொல்லுறன். தாருக்கும் சொல்லக்கூடாது"
"நீ பயப்படாமை சொல்லு தம்பி, நாங் தாருக்கும் சொல்லமாட்டங்"
அவரது வார்த்தையில் நம்பிக்கை வைத்தான்.
"எனக்கு இஞ்சை ஒவ்வொருநாளும் அடி என்னாலை தாங்கேலாது. அதுதான் நான் "கதறகம தெய்யோ”வுக்கு நேர்த்திக்கடன் வைச்சு TGS) f இடுப்பிலை கட்டியிருந்தனான். அது உக்கி உங்கடை மரக்கறித் தட்டிலை விழுந்திட்டுது"
"அட தம்பி நீ பயப்பட வேணாங். நான் உன்னை தாருக்குங் காட்டிக்கொடுக்க மாட்டாங்"
வயிற்றில் பால் வார்த்ததைப் போன்றிருந்தது இவனுக்கு பாலமுருகன்தான் நேரில் பண்டையா ரூபத்தில் வந்திருக்கிறார் என நினைத்து அவரை நன்றியுடன் பார்த்தான். கண்கள் லேசாகக் கலங்கின.
மாலை ஆறு மணிபோல "பண்டையா காலமை கதைச்ச விசயத்துக்கு போவோமா? அந்த ஆள் சொல்லப்பட்ட மந்திரவாதி எனக்கு எத்தனையோ அலுவல் செய்து தந்தவர்” என முதலாளி கேட்டார்.
"இல்லை முதலாளி எனக்கு மிச்சம் பழக்கமான ஆள் ஒண்ணு புவக்கொடிமுல்லையில் இருக்காங், நாங் அங்கை போறது"
பண்டையாவும் இவனும் கண்களால் பேசிக் கொண்டனர். அவருக்கு என்ன கைமாறு செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு கண்களால் நன்றி சொன்னான். இறைவன்தான் பண்டையா ரூபத்தில் வந்திருக்கிறார் என நினைத்து ஆறுதல் அடைந்தான்.

எஸ்.வீ. தம்பையா 67
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பண்டையாவின் மரக்கறித் தட்டுகளை தானே தூக்கிக் கொண்டுபோய் கொடுப்பான். "வேணாங் தம்பி” என மறுத்தாலும் விடமாட்டான். அவரும் இவன் மேல் அதிக பாசம் வைக்கத் தொடங்கினார். பொக்கை வாய்க் கிழவன் சிரித்தால் காந்தித் தாத்தாவைப் போல இருப்பார் தலையில் மட்டும் கொட்டைப்பாக்கு அளவு குடுமி. அவருக்கு சிரிசேனா என்று மகன் ஒருவன் இருக்கிறான். இவனது வயதுதானிருக்கும். தன் மகனாக நினைத்து இவனுடன் அன்பு செலுத்துவார். சில வேளைகளில் எள்ளுருண்டை இனிப்பு வகை முதலியன வாங்கி தானும் தின்றுகொண்டு, இவனுக்கும் கொடுப்பார். சாடைமாடையாக முதலாளிக்கும் இவனைப்பற்றி சிபார்சு செய்வார். "சின்னப் பொடியன் பாவங்தானே அதிகம் அடிக்க வேணாங்" இவன் தனக்குக் கேட்காத மாதிரி நடந்து, அவரின் சிபாரிசை உள்வாங்கி மகிழ்வான்.
மாதமொன்றுக்கு மூன்று ரூபாய்தான் இவனது மாதச் சம்பளம் நாள் ஒன்றுக்கு பத்தே பத்துச் சதம் அடேயப்பா! எவ்வளவு பெரிய தொகை1 இந்தக் காலத்து பிச்சைக்காரனுக்கு பணத்தின் அருமை எங்கே தெரியப்போகிறது. பிச்சைக்காரனுக்கு பத்துச் சதம் தர்மம் கொடுத்தால் சுழற்றி எறிந்துவிட்டு தூசனத்திலும் அல்லவா பேசுகிறான்!
ஒரு தடவை இவனது சகோதரன் முதலாளியை "குடிகாரன்” என அடைமொழி கொடுத்து, தனது சிறிய தாயாருக்கு கடிதம் எழுதியிருந்தார். முதலாளிக்கு சந்தேகம் என்பது கூடப்பிறந்த குணம். மற்றவர்களை ஆராய்வதில் மன்னன். முதலாளி தனது தங்கை வீட்டில் இருந்த பழைய

Page 37
68 நினைவின் அலைகள்
கடிதங்களை கிளறும்போது தன்னைக் குடிகாரன் என அடைமொழி கொடுத்து எழுதப்பட்ட "போஸ்ற் கார்ட்” கண்ணில் தென்பட்டது. பார்த்தார்; படித்தார். தன்னை அவதூறாக எழுதப்பட்ட கடிதம் அது. அவருக்கு பற்றிக்கொண்டு வந்தது. சுருட்டை எடுத்து பற்றவைத்தார். சால்வையை எடுத்து உதறி தோளில் போட்டார். அஞ்சல் அட்டையை அடிமடியில் பவுத்திரமாக வைத்தார்.
அன்றே பதுளை "கோச்சியில்" புறப்பட்டுவிட்டார்.
பதுளையில் சிறாப்பர் அருமைத்துரைதான் அவரது அந்தரங்கச் செயலாளர் - பிரதம ஆலோசகர் எதிர்பாராமல் முதலாளியைக் கண்டதும் சிறாப்பருக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. "என்ன முதலாளி போன கிழமைதானே சிட்டைக்கு காசு எடுத்துக் கொண்டு போனனிங்கள். அதோடு பனைகொடி ஏறிய காலம் சுணங்காமல் வந்தது புதினமாயிருக்கு"
'இல்லை 89 шГТ, எனக்கும் இப்ப வர விருப்பமில்லைத்தான். உவன் சுப்பையா என்னைக் குடிகாரன் - உவற்றை கடையில் நிண்டு என்னெண்டு
முன்னேறப் போறன் எண்டு என்ரை தங்கைக்கு காயிதம் எழுதியிருக்கிறான். கையோட கடிதம் கொண்டு வந்திருக்கிறன். உவனை விசாரிச்சு விளங்க வேணும்"
"இல்லை முதலாளி இண்டைக்கு எனக்கு நேரமில்லை. பொறுத்த கடன்காரன் ஒருத்தன் என்னை ஏமாத்திக்கொண்டு திரியிறான். அவனைப் போய்ப் பார்த்து கொஞ்சம் காசு கறக்க வேணும். நாளைக்கு கட்டாயம் வாறன். எதுக்கும் ஒரு "அரை” எடுத்துவையும்"
"அதெல்லாம் நான் ஆயத்தமாய் இருப்பன். இரண்டு பேரும் சேர்ந்து "சமா'வைச்சு கனநாளாய்ப் போச்சு நாளை இரவைக்கு கட்டாயம் வாருங்கோ காத்திருப்பேன்."
இவர்களது சம்பாசணையிலிருந்து இவன் சுதாரித்துக்

எஸ்.வீ. தம்பையா 69
கொண்டான். பிரச்சினைக்குரிய அந்தப் போஸ்ற் கார்ட் கடையில் முதலாளியின் லாச்சியில் இருந்தது. மத்தியானம் முதலாளி கண்ணயரும் நேரம் பார்த்து மெதுவாக அஞ்சலட்டையை எடுத்து, சகோதரன் எழுதிய அதே மையினால் எழுத்துக்களை அழிக்காமல் வைத்தான். அதாவது "க" எழுதிய இடத்தில் ஒரு காலை "இழுத்து "த" ஆக்கினான். "ட"வை ஒரு விசிறி போட்டு "டி" -யாக மாற்றினான். இதைப்போலவே வாக்கியங்களை சிதைத்து எழுத்துக்களின் உருவ அமைப்பை மாற்றிவிட்டு தனது சகோதரனிடம் போய்ச் சொன்னான்.
"நீங்க முதலாளியை குடிகாரன் எண்டு எழுதிப் போட்டீங்களாம். அந்தக் காயிதத்தோடு அவசரமா வந்திருக்கிறார். நாளை இரவைக்கு சிறாப்பர் அருமைத்துரை வந்து விசாரிக்க இருக்கிறார். நீங்க கடைசிவரை அப்பிடி எழுதேல்லை எண்டு பிடிவாதமாய் சொல்லுங்க. நான் அதுக்குரிய வேலை செய்திருக்கிறன்"
மறுநாள் இரவு சிறாப்பர் அருமைத்துரை நீதிமன்றத்தில் நீதிபதி கம்பீரமாய் அமர்வதுபோல வந்தமர்ந்து, சுப்பையாவை நோட்டம் விட்டார் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. தங்க பிரேம் போட்ட கண்ணாடியை, கைக்குட்டையால் துடைத்து LDfT L' - Lq-l uLu Lu Lqகடைக்கண்ணால் முதலாளியைப் பார்த்து அந்தக் கடிதத்தை தருமாறு சைகை காட்டினார். கடிதம் அவர் கைக்கு மாறியது. செம்மண் படிந்திருந்த அந்த "போஸ்ற் கார்ட்டை” திரும்பத் திரும்பப் படித்தார். முதலாளி சொன்ன விசயம் ஒன்றையும் காணோம். கண்ணாடியை மீண்டும் கழட்டி கோட் பொக்கற்றிலிருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டு மீண்டும் படித்தார்.
"என்ன முதலாளி நீர் சொன்ன விசயம் ஒண்டும் இதில் இல்லையே! ஏதோ தாறுமாறாய் கிறுக்கி எல்லோ எழுதியிருக்கு"

Page 38
70 நினைவின் அலைகள்
"ஐயா இன்னும் ஒருக்கா வடிவாய்ப் படிச்சுப் பாருங்கோ" - அவருக்கு நம்ப முடியவில்லை.
"நீரே படித்துப் பாரும்” - கடிதம் முதலாளி கைக்கு மாறியது. அரிவரி மாணவனைப் போல ஒவ்வொரு எழுத்தாக கூட்டிப் படித்தார் முதலாளி.
“இந்த விசரன் என்னென்னவோ கிறுக்கி எழுதியிருக்கிறான். நான்தான் பிழையாய் விளங்கிக் கொண்டன்” - முதலாளிக்கு எரிச்சல் எரிச்சலாய் இருந்தது. "இந்த பனை கொடி ஏறிய காலத்தை சரியாய் பயன்படுத்தாமல், அவசரமாய் பதுளைக்கு வந்தேனே” - இந்த ஏமாற்றத்தை மறக்க "அரை” அடிச்சால் போதாது "முழுசு" ஒன்று எடுத்தால்தான் "சமா" சிறப்பாயிருக்கும் எனத் தீர்மானித்தார் - நடைமுறைப் படுத்தினார்! சிறாப்பரும் அவருடன் சேர்ந்து கொண்டார்.
வழக்கு விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டது. இவனுக்கு ஏகப்பட்ட புளுகம்; சகோதரனை இந்த இக்கட்டான தத்திலிருந்து காப்பாற்றி விட்டேன் என்று.
மத்தியானம் பாணும் பருப்பும் தின்றதன் பின்னர் மாலை ஆறு மணிக்கு அரைப்போத்தல் பசும்பால் வாடிக்கையாக வரும். இதை தேநீருடன் கலக்கி இவனுடன் சேர்ந்து ஐவரும் குடிப்பர். இதற்கிடையில் இவனுக்கு வயிறு கிண்டும். ஊரில் என்றால் மாங்காய்ப் பிஞ்சு என்றாலும் பறித்துத் தின்னலாம்; இங்கு அதற்கு இடமேயில்லை. அங்குமிங்கும் சுழலுவான்.
இவனது அதிர்ஷ்டம் கஜ"க்கொட்டை மொத்த வியாபாரி ஒருவர், மட்டக்களப்பிலிருந்து கஜ"க்கொட்டை மூடைக்கணக்கில் கொண்டுவந்து கடையின் ஒரு மூலையில் அடுக்கிவைப்பார் - ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு கொண்டுபோய் சில்லறையாக விற்பார். அதுவரை அந்த மூடைகள் அங்கேயே இருக்கும். இவன் சின்னதொரு தடிக்குச்சியால் சாக்கைத் துளைத்து வயிறு முட்டு மட்டும்

எஸ்.வீ. தம்பையா 71.
தஜுக்கொட்டைகளைத் தின்று தீர்ப்பான். பள்ளம் விழுந்த சாக்கு மூடையை குலுக்கிச் சமப்படுத்தினால் கஜுக்கொட்டை எடுத்த சுவடே தெரியாமல் மறைந்துவிடும். ஒன்று மறியாதவன் போல கடைக்குள் வந்து குந்திக்கொள்வான்.
மலைகளும், ஆறும் இயற்கை வனப்பும் கொண்ட இந்த அழகிய நகரில் இவன் ஒரு சிறை வாழ்க்கையே வாழ்ந்தான்.
சிறிது காலத்துக்குப் பிறகு பதுளைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீடு நோக்கி புறப்பட்டான், இங்கு அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை - வடுக்களாகச் சுமந்து கொண்டு.
இந்த வடுக்களை - தலைச்சுமையை என்றோ ஒருநாள் பலர் முன்னிலையில் இறக்கிவைத்து பகிர்ந்து கொண்டால்தான் மனப்புண் ஆறும் எனக் கனவு கண்டான்.
14
கொழும்பு மாநகர் இருகரம் நீட்டி வரவேற்று, அழைத்து அணைத்துக் கொண்டது.
இவனது மைத்துனரின் கடையில் பத்து ரூபாய் மாதச் சம்பளத்தில் ஆரம்பித்து ஒருசில மாதங்களில் இருபது ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.
இவனின் மைத்துனர் ஒரு பரம சினிமா ரகசிர் இவனும் பாட்டுப் பைத்தியம் என்பதால் இருவருக்கும் ஒத்துப்போனது. தொழிலிலும் நன்கு தேர்ச்சியடைந்து

Page 39
72 நினைவின் அலைகள்
முன்னேறினான். இவர் ஒரு காந்தியவாதி அகிம்சையே அவரது தாரக மந்திரம். எந்தத் தொழிலாளிக்கும் கை நீட்டாது வாயால் சொல்லித் திருத்துவார். இவன் வாழ்விலும் எதிர்பாராத முன்னேற்றம் காணப்பட்டது. ஒய்வு நேரங்களில் தொழில் நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். எந்த ஒருவனும் திறமையான ஆசானின் வழிகாட்டலும். சூழ்நிலையும் அமைந்தால் முன்னேறிவிடுவான் என்பதற்கு இவன் நல்ல உதாரணம். தொழிலை நன்கு ரசித்துச் செய்துவிட்டு அதில் மனம் லயித்தபடி அங்குமிங்கும் ஒரு செல்ல நடை நடப்பார். அவர் அது சிவாஜிகணேசன் சில படங்களில் ஒருவித 'ஸ்ரைல்" நடை நடப்பாரே, அதைப்போல இருக்கும். அவரது முகத்தில் அரும்பும் புன்முறுவல் தொழிலை மனத் திருப்தியுடன் செய்து முடித்திருக்கிறேன் என்பதைப் பறைசாற்றி நிற்கும்.
தரமற்ற குப்பைப் படங்கள் பார்க்கமாட்டார். நல்ல கலைஞன், உயர்ந்த ரசிகர். சில நல்ல படங்களை அவரே சிபார்க செய்வார். கண்ணகி படம் நீ கட்டாயம் பார்க்க வேண்டும். அதில் கண்ணாம்பாவும் சின்னப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் என வாயூறச் சொல்வார்.
இவன் பாகவதரின் பழைய படங்களை ஒன்றுவிடாமல் தேடிப்பிடித்துப் பார்ப்பான். அவர் என்.எஸ்.கிருஷ்ணனின் நகைச்சுவை நடிப்பை அதே மாதிரி நடித்துக் காட்டி "நெவாப்பன் மவனே சிங்கண்டா” எனச் சொல்லி வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பார்.
காலை எழுந்ததும் படிப்பு மாலை முழுதும் விளையாட்டு என்பதுபோல, தொழில் செய்யும்போது ஊக்கத்துடன் முழுத் திறமையுடன் செய்யவேண்டும். வீண் பேச்சுகள் இருக்கக்கூடாது. தொழில் செய்து முடிந்ததும் சிரித்து மகிழ்ந்து பொழுதுபோக்கலாம். முதலாளி தொழிலாளி என்ற பேதம் கிடையாது.

எஸ்.வீ. தம்பையா 73
இவன் இவரிடம் வேலை செய்த காலத்தில்தான் காந்தியார் சுடப்பட்டு இறந்தார். இவர் அன்று சிறு குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதார்; ஒருநாள் முழுவதும் யாருடனும் எதுவித பேச்சுமின்றி மெளனம் காத்தார்; பூசையறையில் அமர்ந்து காந்தியின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்தார். காந்தியின் மேல் இவர் வைத்திருந்த பெருமதிப்பை இவன் நிதர்சனமாகக் கண்டான்.
காந்தியின் அஸ்தி கொழும்பு முகத்துவாரத்திலும் கரைக்கப்பட்டது. அன்று முழு நாளும் கடையைப் பூட்டிவிட்டு முகத் துவாரத்திலேயே பொழுதைக் கழித்தார்; இவனும் அவருடன் கூடச் சென்றிருந்தான்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் கோவிலுக்கு முன்பாக உள்ள திடலில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜனத்திரள் மொய்த்துக் கொண்டு அவரது பேச்சை ரசித்தது. கம்பீரமான தோற்றம். பெரிய மீசை, இவனும் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து மேடைக்கு அருகில் சென்று பார்த்தான். பின்னர் அருகிலி ருந்தவரிடம் விசாரித்து அறிந்து கொண்டான். அவர்தான் ப.ஜீவானந்தம் என்றும், தலைமறைவாக இலங்கை வந்துள்ளார் என்பதையும் விவரமாகச் சொன்னார்.
இவன் பதுளையிலிருந்தபோது ராஜாஜியைப் பார்த்திருக்கிறான். இந்தியாவிலிருந்து பெரிய தலைவர் ஒருவர் சிறையிலிருந்து அண்மையில் விடுதலையாகி இலங்கை வந்துள்ளார் எனப் பேசிக்கொண்டார்கள். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி காரில் பவனி வந்தார். கார் விஹாரைக் கொடை சந்தியால் திரும்பும்போது தனது கடை எனும் சிறைக்கூடப் படிக்கட்டுகளில் நின்று, இவனும் கையசைத்தான். கறுப்புக் கண்ணாடியும், கதர்ச்சட்டையும் நன்கு தெரிந்தது.

Page 40
74 நினைவின் அலைகள்
இலங்கையின் சுதந்திரதினம் கொழும்பில் அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. எங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோட்டை புகையிரத நிலையத்தில் மின் விளக்குகளால் ஒரு ரயில் அமைத்திருந்தார்கள். கோட்டையில் கார்கிஸ்ஸ், மில்லர்ஸ் போன்ற கம்பனிகள் மின்னொளியில் மிதந்தன. காலி முகத்திடலில் ஜன சமுத்திரம் திரண்ட கடலுடன் போட்டி போட்டுக்கொண்டிருந்தது. எங்கும் மனிதத்தலைகள்.இவன் ஒருவிதமாக நெருக்கியடித்துக் கொண்டு கூட்டத்தினுள் நுழைந்து டி.எஸ்.ஸையும் மற்ற தலைவர்களையும் கண் குளிரப் பார்த்தான். தலைவர்களை இப்படிப் பார்ப்பதில் இவனுக்கு பெரிய ஆனந்தம். சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டது. இவனைப் பொறுத்தவரை என்று பதுளையை விட்டு வெளியேறினானோ அன்றே சுதந்திர புருசனாகிவிட்டான்!
இவனிடம் தொழில் செய்விக்கும் ஒரு வாடிக்கையாளர் மாதமொருமுறை மட்டும் வருவார். இவனிடம் தொழில் செய்விப்பதில் அவருக்கு பெரும் திருப்தி. அப்படி வரும்போது பத்து நூல்களுக்குக் குறையாமல் கொண்டுவந்து இவனிடம் கொடுத்து படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அடுத்த தவணைக்கு அவர் கடைக்கு வருமுன் அவ்வளவு நூல்களையும் படித்து முடித்துவிட்டு அவர் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பான் இவன் அநேகமாக பெரியார்களின் வாழ்க்கை வரலாறு சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி முன்னேறிய தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வெற்றிகண்ட தலைவர்களுடன் அண்ணாத்துரை, கருணாநிதியும் கலந்திருப்பர்.
கிணற்றுத் தவளைபோல வெறும் சினிமாவையே சுற்றிவந்த இவனது உலகம் அதனையும் தாண்டி பரந்து விரியத் தொடங்கியது. சினிமாவும் வெறும் பள்ளிப் படிப்பு மட்டுமல்ல அதற்கு அப்பாலும் தேடிக்கற்க வேண்டுமெனும்

எஸ்.வீ. தம்பையா 75
--
வேட்கை தொடர்ந்தது. சாப்பாட்டுக்கு கொடுக்கும் பணத்தில் சிறிது மிச்சம் பிடித்து, ஜெகசிற்பியன் வாசவன் ஆகியோரின் சிறுசிறு புத்தகங்கள் மலிவு விலையில் வாங்கக் கூடியதாக இருந்தது; அவற்றையும் வாங்கிப் படிப்பான்.
இவனது மைத்துனர் இரண்டு பெரிய புத்தகங்கள் வைத்திருந்தார். ஒன்று மகாத்மா காந்தியின் சத்திய சோதனை - கல்கி மொழி பெயர்த்திருந்தார்; மற்றது பெங்களுர் சுந்தரத்தின் யோகாசனம் பற்றியது. வாடிக்கையாளர் புத்தகத்துடன் வரச் சுணங்கும்போது இவற்றையும் படிப்பான்.
முற்றாத இளம் பிஞ்சுப் பராயத்தில் இவன் தேடாமல் தேடிக்கிடைத்த அனுபவங்கள்தான் இவனுக்கான பெரிய சம்பாத்தியங்கள்.
1S
இவனது பதினெட்டாவது வயதில் மலாயாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் தானாக இவனுக்கு வந்து கிடைத்தது.
இளமைக்காலத்தில் மலாயா சென்று அங்கு வாழ்ந்து வந்த இவனது மூத்த சகோதரர் சிரம்பான் நகரில் இரு தொழில் நிலையங்களுக்குச் சொந்தக்காரராயிருந்தார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது மலாயா ஜப்பானியரின் கைக்குள் சிக்கிக் கொண்டதும் தாய் நாட்டுத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த அவர், ஜப்பானியரின் சரணாகதியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்து திருமணம் செய்துகொண்டு மீண்டும் மலாயா சென்று நிரந்தரமாக வாழ்ந்து வந்தார்.

Page 41
76 நினைவின் அலைகள்
தனது தொழில் நிலையங்களைப் பராமரிக்க ஆள் உதவி தேவை என்பதால் இவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.
ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட மலாயாவின் ஒரு மாகாணத்தின் பெயர் நெகிரி சிம்பிலான், அம்மாகாணத்தின் தலைநகரந்தான் சிரம்பான். கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் போகும் வழியில் நாற்பத்திரண்டு மைல் தூரத்திலுள்ள இந்த நகரம், மலைகளாலும், இயற்கை வளங்களாலும் செழுமை கொண்டது. அந்நாட்டுக்கு பெரும் வருமானத்தை அள்ளித் தரும் ரப்பர் மரங்களால் சூழப்பட்ட அழகிய நகரங்களில் சிரம்பான் நகரமும் ஒன்று.
இருபெரும் தெருக்களையும் அதனிடையே குறுக்கறுத்தச் செல்லும் சிறுசிறு வீதிகளையும் உள்ளடக்கி நிழல்தரும் விசாலமான மரங்களும், பூத்துக்குலுங்கும் மலர்ச் செடிகளுடன் சேர்ந்து இயற்கை வளங்களுடன், மசூதி, மாதா கோவில், சுப்பிரமணியர் கோவில் முதலியனவும் இந்த அழகிய நகரத்தை அணி செய்யும்.
சிரம்பான் நகருடன் இவனுக்கு முந்தைய தலைமுறையான பாட்டன், தந்தை, மாமன், சுற்றத்தவர் என இவனது பரம்பரையே அங்கு தொடர்புகொண்டிருந்தனர்.
நகரில் சீன, மலாய், இலங்கை, இந்தியத் தமிழர்கள், பஞ்சாபிகள் என பலதரப்பட்ட சமூகத்தினர் நிரந்தரமாய் வசித்து வருகின்றனர். மலாய்க்காரர்தான் பூர்வீககுடிகள் என்றாலும் சீனர்களின் கைகளிலேதான் வியாபாரம் முழுவதும் தங்கியிருந்தது. அவர்கள் பெரும் உழைப்பாளிகள். விடாமுயற்சி உள்ளவர்கள். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழில் செய்து வருவாயைப் பெருக்குவார்கள்.
இலங்கைத் தமிழர்கள் புகையிரத நிலைய அதிபர்கள், பொறியியலாளர்கள், டாக்டர்கள், ஒவசியர்கள் போன்ற

எஸ்.வீ. தம்பையா 77
பதவிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். இந்தியத் தமிழர்களில் கூடுதலானோர் பெருந்திணைக்கள ஊழியர்களாகவும், சாலைபோடும் கூலிகளாகவும், ரப்பர் பால் எடுக்கும் தொழிலாளர்களாகவும் நாட்டைச் செழுமைப்படுத்தினர். பஞ்சாபிகள் பெரும்பாலும் பொலி
ஸ் உத்தியோகஸ்தர்களாகக் கடமையாற்றினர்.
அந்த நாட்டுச் சூழலுக்கேற்ப இவனது உடைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு சோடி காற்கட்டைகள் தைப்பித்துக் கொண்டான். இதை சிலுவார் என்றே அங்கு அழைப்பர். இயற்கையில் சங்கோஜியான இவன் கூச்சம் தெளிவதற்காக காற்சட்டையை இரவு ஒன்பது மணிபோல, ஊர் உறங்கும் வேளையில் அணிந்துகொண்டு விடியும்வரை நகரை வலம் வந்தான்.
ஆறு மாதத்தில் மலாய் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டான். மலாய் மொழி அறியாதவர்கள் இங்கு வாழவே முடியாது. எந்த இனத்தவர்களுடனும் தொடர்பு கொள்ளப் பயன்படும்.
ஒரு தொழில் நிலையம் இவன் பொறுப்பில் விடப்பட்டது. தனது தொழில் திறமையாலும், இனிமையாகப் பழகும் சுபாவத்தாலும் வாடிக்கையாளரைக் கவர்ந்தான். கடையின் வருமானம் படிப்படியாக உயர்ந்தது. மேன்மேலும் தொழில் நுணுக்கங்களைக் கற்று முன்னேறினான். இவனது வளர்ச்சியில் சகோதரன் பூரண திருப்தியடைந்தார் - உற்சாகமடைந்த அவர் மேற்கொண்டு மூன்று தொழில் நிலையங்களை ஆரம்பித்தார்.
அதில் ஒரு தொழில் நிலையத்தை அந்த நகரமே வியக்கும் வண்ணம் நவீன மோஸ்தரில், குளிர்சாதன வசதிகளுடன் அமைத்து இவனையே நிர்வாகியாகப் பணித்தார். முதன் முதலாக குளிரூட்டப்பட்ட தொழில் நிலையம் என்ற பெயரைத் தட்டிக்கொண்டதுமல்லாமல், மருத்துவமனைகளில் டாக்டர்கள் அணிவது போல

Page 42
78 நினைவின் அலைகள்
வெள்ளைக் கோட் அணிந்து தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் உடைகளும் தூய வெள்ளைதான். கடைக்குள் நுழைந்ததும் மருத்துவமனை ஒன்றுக்குள் நுழைந்துவிட்டோமோ என எண்ணத் தூண்டும் ஒருவித மரியாதை கலந்த அமைதி நிலவும். மின் உபகரணங்கள் பரவிக் கிடக்கும்.
தமிழ், ஆங்கில, சீன, மலாய் சஞ்சிசைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சிறுவன் ஒருவன் அவர்களது விருப்பிற்கேற்ப சஞ்சிகைகளை விநியோகிப்பான். வாடிக்கையாளர்கள் பொறுமையாக இருந்து தாம் விரும்பியவர்களிடம் தொழில் செய்விப்பர்.
தொழில் செய்யும் நேரம் அரசியல் - சினிமா - ஊர் வம்புப் பேச்சு இருக்கவே இருக்காது. ஏன் வானொலிகூட இருக்காது. அத்தகைய அமைதி தட்சணாமூர்த்தி அடக்கமாக தவில் வாசிப்பதுபோல "டக்.டக்-டக்." என தாளம் தவறாத கத்திரி ஒசை மட்டும் கடை முழுவதும் பரவியிருக்கும்.
வாடிக்கையாளரை புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்று சுழலும் நாற்காலியில் இருத்தி மடிப்புக் கலையாத வெள்ளைத் துணியால் உடலைப் போர்த்தி பக்குவமாய் தலையை வாரி மயில் இறகால் ஒற்றுவது போல பிடரியில் பவுடர் பூவால் ஒற்றி ஆளையும் தலையையும் கண்ணாடியில் பார்த்து அமைக்கப் போகும் முறையை மனதில் பதியவைத்துக்கொண்டு கத்திரியை பெருவிரலி லும், பொன்விரலிலும் கொளுவி, மயிர் கற்றைகளை மேய்ந்து வேண்டியவற்றை வைத்து வேண்டாதவற்றைக் களைந்து அழகுபடுத்தும் கலைப்பட்டறையாக அது மிளிர்ந்தது.
ஹறிப்பிகளைப் போல கடைக்குள் நுழைபவர்களை முற்றிலும் புதிய மனிதர்களாய் - மன்மதனாய் வெளியேற்றுவான் இவன். • >

எஸ்.வீ. தம்பையா 79
“உங்களிடம் தொழில் செய்விப்பது ஒரு சுகமான அனுபவம்" - வாடிக்கையாளர் மனம் திறந்து பாராட்டுவார்;
இவனது உச்சி குளிரும்.
16
இவனுடன் சேர்ந்து ஏழு தொழிலாளர்கள். இலங்கையர் இருவர். மற்றவர்கள் இந்தியர்கள். ஒவ்வொருவரும் வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சீர்காழி, மற்றவர் கும்பகோணம், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருவனந்தபுரம், என பலபல இடங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு கதம்ப மாலையைப் போல இணைந்து தொழிற்பட்டனர். யாவரும் சிகையலங்காரத் தொழிலிற் கைதேர்ந்த கலைஞர்கள். அத்துடன் மேலும் பலவித திறமை படைத்தவர்கள். இவர்களுக்குள் முதலாளி தொழிலாளி என்ற பேதமில்லை. இந்தச் சூழல் ஒருவித கலைக்கூடமாகவும் - கல்விக்கூடமாகவும் துலங்கியது. ஏழு மணிக்கு கடை பூட்டப்பட்டதும் முற்றிலும் மாறுபட்ட உலகமாகத் திகழும். முதலில் கடமை. பின்னர் விளையாட்டு என்ற கூற்றிற்கு முற்றிலும் பொருந்தும்.
வீரமோகன் சிறந்த மேடைப் பேச்சாளி - அரசியல் அவர் நாவில் தவழும்.
பாலகிருஷ்ணன் ஆழ்ந்த ஆங்கில - தமிழ் இலக்கிய புலமையுள்ளவர். அவரிடம் இலக்கியம் பேசுவதென்றால் இவனுக்கு தேனாய் இனிக்கும். புதுமைப்பித்தன்,

Page 43
80 நினைவின் அலைகள்
சிரம்பரரகுநாதன், வல்லிக்கண்ணன், காண்டேகர், டாக்டர் மு.வ, திருவிக, பாரதியார், பாரதிதாசன் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். மாப்பாசானின் ஆங்கிலச் சிறுகதைகளைப் படித்துவிட்டு இவனுக்கு தமிழில் விளக்குவார்.
சண்முகம் நல்ல நாடக நடிகர். வசந்தன் குரல் வளமிக்க பாடகர் மாதவன் ஊறவைத்த வெந்தயம், பாதாம் பருப்பு, கொண்டல் கடலையைத் தின்றுவிட்டு "கசறத்" எடுத்து தசைகளை முறுக்கி தண்டால் எடுப்பார். பின்னர் ஒரு பச்சை முட்டையையும் அதே அளவு நல்லெண்ணெயையும் குடித்துவிட்டு ஐந்து அடி நீளமுள்ள தடிக்கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு சிலம்பம் விளையாட மைதானத்தை நோக்கி நடப்பார். திமிர்கொண்ட காளையைப் போன்ற அவரது நடையைப் பார்த்து சில சீனர்கள் அச்சத்துடன் நோட்டம்விடுவர். கராட்டி மாஸ்ரரோ அல்லது ஜூடோ விளையாட்டு வீரனோ என தமது மூளையைக் குடைவர்.
வசந்தனுடன் சேர்ந்து சினிமாப் பாடல்களை இரு குரல் இசையில் பாடுவதும், பாலகிருஷ்ணனிடம் இலக்கியம் பேசுவதும் இவனுக்கு விருப்பமான பொழுதுபோக்கு.
சங்கீத பூஷணம் பாக்கியநாதனிடம் இசை கற்கத் தொடங்கினான். மூன்றே மூன்று மாதங்கள்தான். "சரிகம பதநிச" என்ற சுரவரிசையை உந்தியிலிருந்து இழுக்க வேண்டும் நூறு இறாத்தல் நிறையுள்ள புடலங்காய் உடம்பு; உடல்நிலை ஒத்துவரவில்லை. இருந்தும் உள்ளத்தால் இசையை நேசித்தான். பாக்கியநாதன் ஞாயிற்றுக் கிழமைகளில் தனது சிஷ்யர்களுக்கு இசை கற்பிப்பதை அருகிலிருந்து ரசித்துச் சுவைப்பான். அவர் எங்கு கச்சேரி செய்யச் சென்றாலும் இவனையும் கூட அழைத்துச் செல்வார். இவனது விமர்சனத்தை உளமார வரவேற்பார். பாக்கியநாதனின் பரம ரசிகன் இவன்.
“ஒரு நாளைக்கு இரண்டு திருக்குறளையாவது

எஸ்.வீ. தம்பையா 81
மனப்பாடம் செய்து, கருத்துக்களை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். அன்றாட கடமைகளைச் செய்வதுபோல, தொடர்ந்து செய்ய வேண்டும்” என உபதேசிப்பார் பாலகிருஷ்ணன். இவனும் தவறாமல் செய்வான்.
ஞாயிறு தோறும் விடுமுறை நாட்கள் என்பதால் நல்ல நூல்களைத் தேடி வாங்கி வாசிப்புப் பழக்கத்தை மேலும் மேலும் வளர்த்தான்.
மதுவும், மங்கையும் மலிந்த அந்த நாட்டில் திருவிகவின் "பெண்ணின் பெருமை”யையும் தமிழ்த் தென்றலையும் தேடி அலைந்தான் இவன்.
كمر
★ ★
தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தை தமிழர் திருநாளாக, "தமிழ் எங்கள் உயிர்” என்ற சொல்லை தாரகமந்திரமாகக் கொண்டு, தமிழ் முரசு ஆசிரியர் சாரங்கபாணி ஆண்டுதோறும் கொண்டாட அயராது உழைத்து வந்தார். தமிழகத்திலிருந்து பிரபலமான அறிஞர்களையும், பேராசிரியர்களையும், தனிநாயக அடிகள் போன்றோரையும் வரவழைத்து அவர்களது சொற்பொழிவுகள் நாடெங்கும் நடைபெற ஏற்பாடு செய்து அதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் இசை விழா போல தமிழ் விழாவும் இனிக்கும்.
தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின்போது ஆசைத்தம்பியின் "வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற நாடகத்தில் இவன் கதாநாயகனாக நடித்தான். துணைக் கதாநாயகனாக நடித்த இராமன் பிற்காலத்தில் டேவிட் தலைமையிலான தொழிற் கட்சியில் சேர்ந்து மாகாணசபை அங்கத்தவராகத் திகழ்ந்தார்.

Page 44
82 நினைவின் அலைகள்
1954-lb. ஆண்டு, தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின்போது, சிங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் கோ.சாரங்கபாணி, பெரியார் ஈ.வெ.ரா., மணியம்மை இருவரையும் விருந்தினராக சிங்கப்பூருக்கு அழைத்திருந்தார்.
அப்போது ஒவ்வொரு நகரத்தவர்களும், பெரியாரை அழைத்து வரவேற்புக் கொடுத்தனர். இவன் வாழ்ந்த சிரம்பான் நகரில் அவரை வரவழைக்க எவரும் முயற்சி செய்யாததை அறிந்த இவனும், இவனது நண்பர்களும் ஒருங்கு சேர்ந்து, "சிரம்பான் நகரில் பெரியாரை வரவேற்கக் காத்திருக்கிறோம்" என தமிழ்முரசுக்கு தந்தி மூலம் அறிவித்து அதற்காக ஒரு குழு அமைத்திருக்கும் செய்தியையும் தெரிவித்தனர்.
சிரம்பான் நகரில் உள்ள பிரமுகர்கள் விழித்துக் கொண்டனர். எத்தனையோ பிரமுகர்கள் இருந்தும் சிறுவர்கள் சேர்ந்து வரவேற்பதை அவர்கள் விரும்பவில்லை. இவனது கடை விலாசமே பத்திரிகையில் வெளிவந்திருந்தது. இந்த விலாசத்தைத் தேடிக்கொண்டு, டாக்டர் சாமுவேல், நகரசபை உறுப்பினர் சித்தப்பச் செட்டியார், பாரதி பதிப்பக உரிமையாளர் சின்னையா பிள்ளை ஆகியோர் வந்திருந்தனர். "நீங்கள் அமைத்த குழுவைக் கலைத்துவிட்டு விரிவாக ஒரு குழு அமைத்து அமர்க்களமாய் வரவேற்போம்” என வேண்டினர். அவர்களும் அதற்கு இணங்கி, டாக்டர் சாமுவேல் தலைவராகவும், அவரது தொழில் நிலைய சகாவான வீசுமணியம் இணைச் செயலாளராகவும் பணிபுரிந்தனர்.
இவன் எந்தப் பொறுப்பும் ஏற்காது பெரியார் தங்கியிருந்த 'செஞ்சுரி ஹோட்டல்” அறையின் ஒரு மூலையில் நின்று பெரியாரின் ஒவ்வொரு செயலையும் அவதானித்தான். செஞ்சுரி ஹோட்டல் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் இராசரத்தினத்தின் தந்தை சின்னத்தம்பிக்குச் சொந்தமானது.

எஸ்.வீ. தம்பையா 83
?(, శ్లో
பெரியார் “விடுதலை" ப்த் ஒய் ஆரம்பித்தார். அந்தக் காலத்திலேயே எழுத்துச் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இது. இப்பத்திரிகையை நாத்திகப் பத்திரிகை என ஏராளமானோர் ஒதுக்கி வைத்திருந்தனர்; இப்பத்திரிகையை தொட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என எண்ணிய ஆச்சார சீலர்களும் இருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் அந்தப் பத்திரிகையை தமிழகத்தில், ஒவ்வொரு சிகையலங்கார நிலையங்களிலும் வாங்கி ஆதரித்து, அனைவரையும் படிக்கத் தூண்டியவர்கள் என்பதாலும், நாவிதர் சமூகத்தவர்கள் பெரியாரின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாக இருந்ததாலும், நாவிதர் சமூகத்தின் மீது அதிக மரியாதையும், பற்றும், பாசமும் வைத்திருந்தார் பெரியார். அவர்களில் ஒருவர்தான் கோலாலம்பூரில் பிரபல தொழில் நிலையம் ஒன்றை நடத்தி வந்த திரு. கமதுரைசாமி அவர்கள். பெரியார் கோலாலம்பூர் நகரில் அநேகமாக அவருடன்தான் தங்கியிருந்தார்.
இவன் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படித்தவன் என்பதால், அவரைப் பற்றிய விவரங்களை நன்கு அறிந்து வைத்திருந்தான்.
எந்த நேரமும் கறுப்புச் சட்டையுடன் காணப்படுபவர், தன்னை ஒரு திக. எனச் சொல்லித் திரிபவர், மாரியப்பன் என்ற சிகையலங்காரத் தொழிலாளி. பெரியாருக் குக் கொடுப்பதற்காக, பெரியதொரு பார்சலுடன், பெரியாரின் அறைக்குள் நுழைந்த அவர், பெரியாரை அண்மித்ததும் உணர்ச்சி வேகத்தில் தன்னை மறந்து அழத் தொடங்கிவிட்டார். பெரியார் அவரை அணைத்தபடி, அனுதாபத்துடன், "தோழர் என்ன தொழில் செய்யுறிங்க?" - எந்த வயதினரானாலும் "ஐயா" அல்லது "தோழர்" என அழைப்பதே பெரியாரின் வழக்கம்.
மாரியப்பன் தனது தொழிலை வாய் திறந்து சொல்லக் கூசினார்.

Page 45
84 நினைவின் அலைகள்
அந்த அறையின் மூலையில் நின்று இதை அவதானித்தான் இவன். இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது; உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினான்:
"சொல்லுமையா! நான் ஒரு சவரத் தொழிலாளி என்று. கறுப்புச் சட்டை போட்டால் மட்டும் போதாது. தன் தொழிலைச் சொல்லும் துணிச்சலும் வேணும்" - இவனது
ஆத்திரம் அடங்கியது.
மாரியப்பனது தொழிலை அறிந்துகொண்ட பெரியார், அவரை இறுக அணைத்தபடி "நம்ம பிள்ளை நம்ம பிள்ளை” எனத் தடவிக்கொடுத்து, தனது கட்டிலில் அமரச் செய்து, தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
"தொழிலில் பேதமில்லை. எந்தத் தொழில் செய்பவனும் தனது தொழிலை நேசிக்க வேண்டும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டதற்காக பெருமைப்பட வேண்டும்! அதுவும் உங்களைப் போன்ற இளம் தலைமுறை எந்தச் சவாலையும் ஏற்க வேண்டும்! தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும்" என்றார் பெரியார்.
அவரது பேச்சு மாரியப்பனைத் தலைநிமிரச் செய்தது; இவன் மனதிலும் இக்கருத்து நிலைத்து நின்றது. அவரது சாதி ஒழிப்புக் கொள்கைகளால் வெகுவாகக் | d56).JJL JLIL-L-ITaöT.
கோலாலம்பூரில் நடைபெற்ற பாரதி பாட்டுப் போட்டிக்கு கு.அழகிரிசாமி தலைமை வகித்தார். பின்னணிப் பாடகர் எஸ்.சி.கிருஷ்ணனின் சகோதரர் நாகசாமி பாகவதர் போன்றோர் மத்தியஸ்தராகக் கடமையாற்றினர். இப்போட்டியில் இராமனும், இவனும் கலந்து கொண்டனர். "மூன்று குலத் தமிழ் மன்னர்” என்ற பாடலை இவன் பாடினான். "அல்லா அல்லா" என்ற பாடலை இராமன் பாடினார். பரிசுதான் கிடைக்கவில்லை; பாரதி பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டோம் என்ற

எஸ்.வீ. தம்பையா 85
திருப்தியில் வீடு திரும்பினர்.
சிறு சிறு கட்டுரைகளை தமிழ் முரசு பத்திரிகையில் எழுதி வந்தான். கையெழுத்துக்களை அச்சில் பார்த்த உற்சாகத்தில் மீண்டும் மீண்டும் எழுதினான்.
இச்சந்தர்ப்பத்தில் இவனுக்கு ஒரு பெண்ணை ! மணமுடித்து, இவனையும் தன்னுடன் நிரந்தரமாக மலாயா வாசியாக்க விரும்பினார், இவனது சகோதரர். இத்திட்டத்துக்கு இவனும் இசைந்தான். பின்பு குடும்பத்துக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அது நிகழாது போயிற்று. வாழ்க்கையே சூனியமாகப் போய்விட்டதாக மனம் வருந்தினான். மனமுடைந்த இவன் காண்டேகரின் "கருகிய மொட்டை" திரும்பத் திரும்பப் படித்தான். இதன் தாக்கத்திலிருந்து விடுபட எழுத்துத்துறையை நாடினான். அது "மழலைச் சிரிப்பும் என்ற பெயரில் "தமிழ் முரசில்” சிறுகதையாக வெளிவந்தது. அச்சமயம் குஅழகிரிசாமி "தமிழ்நேசன்" பத்திரிகையில் ஆசிரியராக அமர்ந்து அணி செய்தார். அதிலும் இவனது சில கதைகள் வெளியாயின.
17
டுாயிற்றுக்கிழமை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை தூக்கிக்கொண்டு அவசரமாக வந்தான் பாலகிருஷ்ணன். அப்பத்திரிகையில் ஜப்பான் தலைநகரில் நாடு தழுவிய முறையில் போட்டிவைத்து, அவ்வருடத்துக்கான சிறந்த

Page 46
86 நினைவின் அலைகள்
மயிர் வெட்டுக் கலைஞன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து பாராட்டிக் கவுரவிக்கும் போட்டி, புகைப்படங்களுடன் பிரசுரித்து இருந்தது. விவசாய மன்னன், கிரிக்கெட் சாம்பியன், கால்பந்தாட்ட வீரர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதுபோல. அத்துடன் இக்கலையைப் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றும் வெளியாகி இருந்தது.
"ஜப்பான் போன்ற நாடுகள் தொழில் துறையில் முன்னேறுவதற்குக் காரணம் தொழிலைப் பேணிச் செய்கிறார்கள் - மதிப்புக் கொடுக்கிறார்கள் - அதனால் இன்று உலகத்திலேயே முன்னணியிலிருக்கிறார்கள். நம்மவர்கள் குலப்பெருமை பேசி கைத்தொழிலை இழிவுபடுத்தி பின்னோக்கிச் செல்கிறார்கள்' - பாலகிருஷ்ணன் குட்டிப் பிரசங்கமே செய்தார். அன்றைய பொழுது தொழில், விஞ்ஞானம், சமூகம் என்பவற்றைச் சுற்றி வலம் வந்தது. “ஏன் எமது கடையை எடுத்துக்கொள்வோம். இந்த நகர போலீஸ் தலைமைக் குமாஸ்தா லீ பெங்கின் தங்கைதான் எமது கடைத் துணிகளை சலவை செய்கிறாள். சீனர்கள் ஆணோ. பெண்ணோ ஏதாவது ஒரு தொழிலைச் செய்து முன்னேறுகிறார்கள். தொழிலில் பேதமில்லை; குலப் பெருமையில்லை உழைப்புத்தான் முக்கியம்" தனது கருத்தைச் சொன்னான் இவன்.
"தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ இதை கனவில்கூட நினைச்சுப் பார்க்க முடியுமா?" - சண்முகம் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டான்.
"ஜப்பான், சீனா மேலை நாடுகள் ராக்கட் வேகத்தில் முன்னேறுகின்றன. நாம் இன்னமும் பழைய கிழட்டு மாட்டு வண்டியில் பிரயாணம் செய்கிறோம். எமது முன்னேற்றமும் இந்த வேகத்தில்தான் செல்லுகிறது" - மனம் வெதும்பிச் சொன்னான் வசந்தன்.

எஸ்.வீ. தம்பையா 87
"oாந்தத் தகுத்யும் இல்லாதவர்கள் குலப்பெருமை பேசியே காலத்தைக் கழித்தால் நாடும் மக்களும் எப்படி முன்னேற முடியும் இதை உணர்ந்தால்தான் நமக்கு விடிவு" - மாதவன் சொன்னார். அன்றைய பொழுது தொழில், சமூகம் பற்றிய ஒரு கருத்தரங்கு மனத்துள் சங்கற்பம் செய்து கொண்டனர், தாமும் தலைசிறந்த கலைஞராகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டுமென்று.
女 女 ★
ஐந்து கடைக்கு முதலாளி என்ற பெயருடன் விளங்கிய இவனது சகோதரன், அகலக்கால் வைக்கத் தொடங்கினார். பணம் பெருகியது; அது அவரை ஒரு பிரமுகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. எப்பொழுதும் அவரைச் சுற்றி ஒரு கும்பல் துதிபாடியே பிழைத்தது. அவரது தாராள மனதை பலரும் தத்தம் நன்மைக்காகப் பயன்படுத்தினர். பணத்தை தண்ணிராக இறைத்தனர். உதவி பெறும்வரை போலி த்தனமாக ஒட்டி உறவாடினார்கள். கண்காணாதவிடத்து புறங்கூறி எள்ளி நகைத்தார்கள். சூழ்நிலை என்ற சிலந்திவலைக்குள் சிக்கிக் கொண்டார். இதனால் சில சறுக்கல்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாது அவதிப்பட்டார். பெயரும். புகழும் ஒருபுறம் பணத்தொல்லைகள் ԼՔ DJ Լվ{D ԼOfT Ժ: அவரைச் சூழ்ந்துகொண்டன.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஐந்து கடைகளின் நிர்வாகப் பொறுப்பையும் இவன்தர்னே ஏற்றுக்கொண்டான். வீண் செலவுகளையும், ஆடம்பரச் செலவுகளையும் குறைத்தான். நத்திப் பிழைப்பவர்களை ஒதுக்கிவைத்தான். சிக்கனத்தைக் கடைப்பிடித்து, அவரது கடன் தொல்லைகளை சிறுகச் சிறுகத் தீர்த்து படிப்படியாக மீண்டும் துளிர்க்க - முன்னேற உந்து சக்தியாகத் திகழ்ந்தான். சேது அணைகட்ட மண்ணில் புரண்டு மணலைச் சேர்த்த அணிலைப்போல இதய

Page 47
88 நினைவின் அலைகள்
சுத்தியுடன் பாடுபட்டான், கைகளை மட்டும் சுத்தமாக வைத்திருந்தான்.
வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு தோல்விகள் கூட அவர்களது கடந்தகால தவறுகளை உணர்ந்து மறுபரிசீலனை செய்து முன்னேறத்தான் என்பதை நிதர்சனத்தில் கண்டான்.
18
இலங்கையில் இவனுக்கு திருமணம் செய்ய இவன் தந்தை முயன்றார். பல இடங்களிலும் பெண் பார்த்தார். பணக்கார தந்தை ஒருவர் தன் சொத்துக்களை வைத்துக்கொண்டு அந்த அளவுகோலால் இவனை அளக்க முயன்றார். பணக்கார வீட்டுச் சம்பந்தம் என்றதும் இவன் வீட்டுக்காரர் தலைகால் தெரியாது குதித்துக் கூத்தாடினர்.
இவனுக்கோ பணத்தை வைத்து ஆளை மதிப்பவர்களை பிடிக்கவே பிடிக்காது.
"உந்தச் சம்பந்தம் எனக்கு வேண்டாம்" என ஒரே வரியில் கடிதம் மூலம் தந்தைக்கு அறிவித்தான். அதன்பிறகு தந்தை இவனைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒரு மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அந்தப் பெண் வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் இவன் மறுபேச்சின்றி அவளை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள இசைந்தான்.

எஸ்.வீ. தம்பையா 89
திருமணத்துக்காக இலங்கைக்குப் புறப்பட ஆயத்தமானான். இதுவரை தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் தன் முழுக் குடும்பமுமே முன்னேற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தனது ஆசாபாசங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைத்தான்.
தாயகம் திரும்ப இருப்பதால் தனக்காக தன் அண்ணன் பணம் எவ்வளவு ஒதுக்கிவைத்திருக்கிறார் என்பதை நேரில் அவரிடம் கேட்கக் கூசினான். அதற்காக தனது கிராமத்தைச் சேர்ந்த ஒவசியர் தவராசாவை வைத்து அவர் மூலம் அறிய முற்பட்டான்.
"நான் யார்? நீ யார்? நமக்குள் என்ன வேற்றுப் பிரிப்பு. எல்லாச் சொத்துமே உனக்குத்தான். எல்லாப் பொறுப்பையும் நீயே ஏற்றுக்கொண்டு என்னைவிடு” பிடிகொடாமல் பதில் சொன்னார் அண்ணன்.
"அப்படியல்ல அண்ணா நான் ஊருக்குப் போகிறன். எனக்கும் பலவிதமான செலவுகள் இருக்கு அண்ணன் தம்பி என்றாலும் கணக்கு என்று ஒன்று இருக்க வேணுமெல்லே” - பணிவுடன் எடுத்துச் சொன்னான்.
"கணக்கு என்னடா கணக்கு ஆருக்கு ஆர் கணக்குப் பார்க்கிறது?" - ஒருவித மழுப்பலான பதில்,
"அண்ணன் வழி தவறிப் போகிறாரோ அல்லது தப்புக் கணக்குப் போட்டுவிட்டாரோ இவரைப் புரிந்துகொள்ள முடியவில்லையே” என மனம் புழுங்கினான்.இருவரிடையே விரிசல் ஏற்பட ஒரு சிறு சம்பவம் காரணமாயிருந்தது.
வனது கடைக்கு மூன்றாவது கடை சீனன் ஒருவனின் கோப்பிக்கடை - தேநீர்ச்சாலையை அவ்வாறே அழைப்பர். அதிகாலை ஆறு மணி சிறிது வெந்நீர் எடுப்பதற்காக அந்தக் கடைக்குச் சென்றான் இவன். ரீமேக்கருக்கும் இவனுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வெந்நீர் அள்ளுவதற்காக குவளை ஒன்றில் தடிக்கம்பை நீட்டிச்

Page 48
90 நினைவின் அலைகள்
செருகி அகப்பையைப் போல வைத்திருப்பார்கள். இந்த தடி சுமார் ஒரு முழ நீட்டிருக்கும். இவன் அந்த குவளையை எடுத்து வெந்நீர் அள்ள முயற்சிக்கும்போது அவன் தடுத்தான். அவனிடமே கேட்டான். நீயாவது கொஞ்சம் வெந்நீர் அள்ளித்தா என அதற்கும் மறுத்தான். இவன் குவளையை எடுக்க அவன் பறிக்க இப்படியாக இழுபறி தொடர்ந்து வாய்த்தர்க்கம் முற்றியது. "பாபி" என ஏசினான் அவன். பாபி என்பது பன்றியைக் குறிக்கும். மலாய் மொழியில் பன்றி என அழைப்பது மிகக்கடுமையான கெட்டவார்த்தை இவனது உச்சி விறைத்த்து, சடக்கென அவனை நிமிர்ந்து பார்த்தான்.
"என்னடா முறைத்துப் பார்க்கிறாய்”
“என்னைவிட வயதில் மூத்தவனாய் இருக்கிறாய். அதுதான் பார்க்கிறன்" - சூடாக பதில் சொன்னான் இவன்.
"அப்படி என்றால் எனக்கு அடிக்கப் போறியோ” "அடிச்சுக் காட்டட்டோ" "எங்கை உன்னாலை ஏலுமெண்டால் அடிபாப்பம்"
அவ்வளவுதான் அவன் சொல்லி வாய் மூடுமுன் அவனது கன்னத்தில் பளார் என அறைந்தான். அந்தக் கடையில் எல்லாமே வட்டவடிவமான மாபிள் மேசைகள். இவன் மேசைக்கு மறுபக்கத்தில் நின்று "எம்சியார்” வாளைச் சுழற்றுவது போல கையிலிருந்தவெந்நீர் குவளையால் அங்குமிங்கும் வீசுக்கினான். அவன் மேசையைச் சுற்றி ஒட இவன் விரட்டி விரட்டி அடித்தான். குவளையால் விசுக்கும்போது இவனது நெற்றிப் பொட்டில் பட்டு உடைந்து இரத்தம் லேசாகக் கசிந்தது. தொட்டுப் பார்த்தான். அவ்வளவுதான் கால் தட்டுப் போட்டு நிலத்தில் அவனை வீழ்த்தி கையில் இருந்த பெரிய சாவிக் கொத்தால் அம்மி பொழிவதுபோல பொழிந்தான். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டது. கணப் பொழுதில் சீனர்கள் திரண்டுவிட்டார்கள்.

எஸ்.வீ. தம்பையா 91
சீனர்களது இயற்கைக் குணம் தனது இனத்தவர்களுக்கு யாராவது பிற சமூகம் “கை” வைத்தால் காகக் கூட்டம்போல திரண்டு ஆளையே முடித்துவிடுவார்கள். சரியோ, பிழையோ தனது இனத்தைக் காட்டிக்கொடுக்கமாட்டார்கள்.
இந்த ஜன சந்தடிக்குள் இவனது சகோதரன் கேள்விப்பட்டு. ஒடோடியும் வந்து இவனை அலக்காகத் தூக்கிக் கொண்டு போய் கடைக்குள் விட்டுப் பூட்டிவிட்டார். காகக்கூட்டம்போல திரண்டிருந்த சீனர் கூட்டம் இவன் வெளியே வரட்டும் பார்த்துக் கொள்ளுவம் எனக் கறுவிக் கொண்டிருந்தனர். உடனே பொலிஸ் ஜீப் வந்தது. அதில் தாவி ஏறி தப்பிப் பிழைத்தான். இல்லையேல் இவனது அஸ்திதான் பார்சலில் தாய் நாட்டுக்கு வந்திருக்குமோ, என்னவோ!
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவன் "பணிஷ் மன்ற” என்ற பெயரால், நாலு மைல் தொலைவிலுள்ள “அம்பாங்கன்” என்ற ஊரிலுள்ள கடைக்கு தொழில் மாற்றம் செய்யப்பட்டான். தினசரி காலை ஆறு மணிக்கு சைக்கிளில் புறப்பட்டு வேலை முடித்து வீட்டுக்கு வர ஏழுமனியாகும். வழிநெடுக றம்புட்டான் மரங்களும், மங்குஸ்தான் மரங்களும் கேட்பாரற்று குலை குலையாக காய்த்துத் தொங்கும். தனக்குத் தேவையான குலைகளைப் பறித்து சைக்கிள் கான்ரலில் கொழுவிக்கொண்டு ஒவ்வொரு பழமாக சுவைத்து தின்றுகொண்டே வருவான்; இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி
நாகபாம்பை அடித்தால் அடித்தவனை காத்திருந்து கொத்தும் என்பார்கள். சீனர்களும் அதைப்போலத்தான் காத்திருந்து வஞ்சம் தீர்ப்பார்கள். பொக்கற்றுக்குள் பாதுகாப்புக் கருதி ஆறு அங்குல கத்திரி ஒன்று தயாராக இருக்கும். தொழில் முடிந்ததும் நகரைச் சுற்றி சைக்கிளில்

Page 49
92 நினைவின் அலைகள்
வலம் வருவான்; பயந்து ஒதுங்கி முடங்கியிருக்கவில்லை. தமையன் பயமுறுத்துவார்
“சீனர் உன்னை அடிக்க கர்வம் வைத்துக் காத்திருக்கிறார்கள், இந்தக் கடைப் பக்கம் வராதே"
“என்ரை மேல்லை மேற்கொண்டு எவனாவது தொட்டால், ஒன்றில் நான் இல்லை; அல்லது அவன் இல்லை" சகோதரனிடம் நேரில் சொல்ல அஞ்சி, மனதில் கறுவிக் கொள்வான். ஆனால் ஆளோ சுண்டைக்காய் பயில்வான்தான்!
女 女 女
இவனது ஏழு வருட உழைப்பு சகோதரனிடம் சிக்கிக் கொண்டது. தனது உழைப்பில் அதீத நம்பிக்கை கொண்டவனாகையால், என்றோ ஒருநாள் அந்த உழைப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தளரவில்லை - அதற்காக காத்திருந்தான்!
வாழ்க்கைப் பயணம் திசை மாறியது. சிறந்த தொழிலாளி - நிர்வாகி - எழுத்தாளன் என்ற திறமைகள் யாவும் செயலற்று முடங்கின.இந்த உலகில் வாழ்வதற்கு பணம்தான் முக்கியம். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பதை நிதர்சனமாய் உணர்ந்தான். தோல்விகள் ஏற்பட ஏற்பட மனதை மேலும் திடமாக்கிக் கொண்டான். தோல்விதான் வெற்றியின் முதற்படி, யாரோ ஒரு அறிஞர் சொன்ன பொன்மொழி கண்முன் நின்றது.
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை வடுவாகச் சுமந்துகொண்டு, இலக்கியம், எழுத்துத்துறை என்பவற்றை இறுக இழுத்துப் பூட்டிவிட்டு இலங்கை மண்ணில் உறுதியாக கால்பதித்தான்.

எஸ்.வீ. தம்பையா 93
பொன் கொழிக்கும் நாடான மலாயா, பொன்னைத் தவிர ஏனைய செல்வங்கள் யாவும் அள்ளித் தந்தது, பிறந்த மண்ணுக்கு அவனை வெறுங்கையுடன் வழி அனுப்பி வைத்தது!
அன்றே, என்றோ ஒருநாள் மனம் திறந்து தன் அனுபவங்களை சொல்லி - எழுத்தில் வடித்து ஆறுதல் அடையவேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டான்.
19
இலங்கை மண்ணில் மிதித்தான்) தான் தேடிய அரிய பொக்கிஷங்களாக, நூல்கள் பல அடங்கியதொரு பெரிய டிரங்குப் பெட்டியுடன் வீடு வந்து சேர்ந்தான்.
இதனுள், திருக்குள் பரிமேலழகர் உரை - புலவர் குழந்தை உரை - திருவிகவின் நூல்கள் அனைத்தும் - பாரதியார் கவிதை, கட்டுரை, பாரதிதாசன் கவிதைகள் - புதுமைப்பித்தனின் கதைகள் - காண்டேகர் - முவவின் நாவல்கள் அனைத்தும் - சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகை போன்ற அரிய நூல்கள் அடங்கும்.
பெட்டியைத் திறந்ததும் தாய் மலைத்துப் போய்விட்டாள் சிங்கப்பூரில் இருந்து வருபவர்களின் பெட்டிகளைத் திறந்தால், பட்டுத்துணிகளும், வாசனைத் திரவியங்களும், பகட்டான பொருட்களுந்தான் நிறைந்து பரவிக் கிடக்கும் இவனோ, பெரிய பண்டிதர்கள்போல புத்தகக் கட்டுகளுடன் வந்திருக்கிறான்!

Page 50
94 நினைவின் அலைகள்
இருப்பினும், மூன்று பவுனில் தங்கச் சங்கிலி ஒன்றை தாயின் கழுத்தில் அணிந்து மகிழ்ந்தான்.
திருமணப் பேச்சை எடுத்தனர் பெற்றோர். "உழைத்த உழைப்பை இழந்து வந்திருக்கிறேன். இனி உழைத்து முன்னேறிய பிறகுதான் கலியாணம் கத்தரிக்காய் எல்லாம்" "தம்பி உனக்கு இப்ப பெண் சகோதரிகள் கால் மாடு தலைமாடா இழுபடுகினமோ? அதுதான் எல்லாரும் கரைசேந்திட்டினமே! எங்களுக்கு வயதுபோன நேரத்திலை உன்ரை சிறப்பையும் பாத்திட்டு கண்ணை மூடுவம்" தாயின் இந்த வேண்டுகோளுக்கு ஒருவாறு இசைந்தான்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தியை மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். மிகச் சுருக்கமாக எந்தவித வீண் ஆடம்பரமுமின்றி திருமணத்தை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். இந்த அபிப்பிராயம் பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போயிற்று.அதற்கு அவர்களும் சம்மதித்தனர். செல்வச் சந்நிதி வள்ளியம்மன் வாசலில் மிகச் சிக்கனமாகத் திருமணம் இனிதே நிறைவேறியது. தனது திருமணத்துக்கு உதவியாக இருந்து செயல்பட்ட சிறுவர்களை எல்லாம் தியாகுவின் ஆஸ்ரின் கேம்பிறிட்ஜ் வாழைக்குலையை மாட்டு வண்டியில் அடுக்குவதுபோல நெருக்கியடித்துக் கொண்டு, இணுவில் காலிங்கன் தியேட்டரில் அனார்கலி படம் பார்த்தான். ஏற்கனவே இதே கதையை ஹிந்தியில் பார்த்து ரசித்திருக்கிறான். இன்றும் அனார்கலியின் பாடல்களை ஜிக்கியின் குரலில் கேட்கும்போது மெய்மறந்து ரசிப்பான்.
திருமணமாகி எண்ணி மூன்றே மூன்று மாதங்களில் இவன் மனைவி மாங்காய் தின்னத் தொடங்கினாள்!
ஒருநாள் இருவரும் சோடியாக அச்செழுவிலிருந்து உரும்பராய்க்கு செல்ல வேண்டும். வழமையாக ஒற்றையடிப் பாதையால் நடந்துதான் போவார்கள்; இரண்டு மைல்

எஸ்.வீ. தம்பையா 95
தூரம்கூட இருக்காது. இப்போது நிலைமை வேறு காத்து "கீத்து" படக்கூடாதாம்! இவன் மனைவியின் பாட்டனார் ஒரு விவசாயி. அவரிடம் ஒற்றைத் திருக்கல் வண்டி ஒன்று இருந்தது. அதில் போகும்படி வற்புறுத்தினார்; இந்த யோசனையை முன்வைத்ததே இவனது மாமியார்தான். மாடு கொஞ்சம் கிழடுதான். இவனோ “சிங்கப்பூர் மாப்பிள்ளை” இந்தப் பெயருக்கு திருக்கல் வண்டி பொருத்தக் குறைவுதான். காரில் போவதென்றால் மூன்று ரூபாய் செலவாகும். பட்டப்பகலில் ,வறும் இவனுக்குப் பிடிக்காது. திருக்கில்" வண்டியில் செல்ல இவனும் ஒப்புக்கொண்டான்.
ஆயிரத்து எழுநூற்று மூன்று ஜப்பான் மல்பீஸ், மல்லி கைப்பூப் போன்ற வெள்ளை வேட்டி, நாசனல் அணிந்துகொண்டான். மஞ்சள் நிற மைசூர் பட்டுச் சேலை; கறுப்புநிற போடர்கேப் பொருத்தமாயிருந்தது. அதை அவள் அணிந்துகொண்டாள். கொண்டையில் கனகாம்பர பூச்சரம். செம்மண் பிரளாமல் இருக்க வண்டியில் புற்பாய் ஒன்று விரிக்கப்பட்டது. ராணி தியேட்டரில் அண்மையில் பார்த்த காலம்மாறிப் போச்சு படப்பாடலான "இனிதாய் நாமே இணைந்திருப்போமே ஏதுக்கினி வீண் பேச்சு" என்ற பாடத் தொடங்கினான்.
"மெல்லமாய் பாடும் ஆருக்கும் கேட்கப்போகுது"
"உமக்கு மட்டும் கேக்கத்தானே நான் பாடுறன். ஆரைப் பற்றியும் எனக்கென்ன கவலை” மாடு தள்ளாடித் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தது. ஊரெழுப் பிள்ளையார் கோயிலைத் தாண்டும்போது சில சிறு "வாண்டுகள்" நின்று வேடிக்கை பார்த்து
"அண்ணை மாடு விக்கிறதே?” - கிண்டலாகக் கேட்டனர்.
"டேய் எட்டப் போங்கடா. துவரங்கம்பால் இப்ப செம்மையாய் சாத்திப்போடுவன்” தடியை எடுத்து விசுக்கினான். சிறுவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

Page 51
96 நினைவின் அலைகள்
மனதுக்கேற்ற வாழ்க்கைத் துணை அமைந்ததால் உள்ளம் பூரித்துக் கிடந்தது. இருப்பினும் உழைப்புக்கு ஏதாவது வழி தேட வேண்டும் என்ற எண்ணம் அவனது இனிமையான வாழ்வில் குறுக்கிட்டு கலங்க வைத்தது.
இவனுடைய நாணயத்தையும், நற்குணத்தையும் நன்கு உணர்ந்த கணபதிப்பிள்ளை என்ற பெருந்தகை, கொழும்பில் இவன் ஒரு தொழில் நிலையத்தை வாங்குவதற்குப் பெருந்தொகை பணத்தை எவ்வித பொறுப்புமில்லாமல் கொடுத்து உதவினார். வழமையான விலைப் பருவத்தைவிட இரட்டிப்பு மடங்கு கூடுதல் தொகையை அந்தக் காலத்தில் முதலீடு செய்வது பலருக்கும் பெரும் வியப்பாயிருந்தது. இவனது செயலை அவதானித்த கிணற்றுத் தவளைகள் சிலர், பிறரை வீணே விமர்சிப்பதை தொழிலாகக் கொண்டவர்கள், இவன் மனம் நோகும்படி விமர்சித்து எள்ளி நகைத்தனர்.
ஒரு தொழில் நிலையத்துக்கு ஐயாயிரம் ரூபாவுக்கு மேல் முதலீடு செய்யாத காலம் அந்தச் சூழ்நிலையில், அதைவிட பல மடங்கு தொகையை முதலீடு செய்வதை வியப்பாகவும் - ஏளனமாகவும் பார்த்து விமர்சித்தனர்.
"புதுப் பணமோ தம்பி பழகத்தான் போறான். அல்லது, சிங்கப்பூரிலிருந்து அள்ளிக் கொண்டு வந்திருக்கிறானோ! பின் கதவால்தான் பொடியன் போகப் போறான், இதோடை ஆட்டம் குளோஸ்"
இப்படிப்பட்ட அபிப்பிராயங்கள் பரவலாகப் பரவின, இவன் அசைந்து கொடுப்பதாயில்லை. எல்லாவிதமான விமர்சனங்களையும் உள்வாங்கிக்கொண்டு தன் பலத்தில் தான் நம்பிக்கை கொண்டு அமைதியாக இருந்தான்.

ாஸ்.வீ. தம்பையா 97
20
இறைவன் தந்த இரு கரங்களைத் துணையாகக் கொண்டு, செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மனதில் இருத்தி மெல்ல மெல்ல தலை எடுக்கத் தொடங்கினான். மலேசிய மண்ணில் கண்ணிரை தண்ணிராக ஊற்றி உழைப்பு எனும் பசளையிட்டு விதைத்த விதை தாய் நாட்டு மண்ணில் செழித்து வளர்ந்து நிமிர்ந்து நின்று காய்த்துக் குலுங்கின.
இப்போது ஒரு பிரபல தொழில் நிலையத்துக்குச்
சொந்தக்காரனாகவும், மனிதநேயமுள்ள முன்னோடியாகவும் திகழ்ந்தான். வறுமையின் சுவடு இவனின் விடாமுயற்சியால் - உழைப்பால் மறையத் தொடங்கியது.
இவனை விமர்சித்து ஏளனம் செய்தவர்கள் தாம் போட்ட கணக்கு பிழை என்பதை உணர்ந்து, இவனிடம் அன்பு பாராட்டி, நேசிக்கத் தொடங்கினர்.
இப்போது ஒரு ஆண் மகனுக்குத் தந்தையானான். அவனுக்கு ஜெகன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தான். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கிணங்க மகனின் நலனில் அதிக அக்கறை காட்டினான்.
வருடங்கள் பல உருண்டன. மகன் ஜெகனின் கல்வி வளர்ச்சியில் அதிதீவிர கவனம் செலுத்தினான். அவனைச் சிறந்த கல்விமானாக்க வேண்டுமென தீரா வேட்கை பூண்டான். சமூகத்தில் முன்னேறுவதற்கு பொருளாதாரமும், கல்வியும் இரு கண்களைப் போல என்பதை அனுபவத்தில் உணர்ந்தான். ஆகையால் இவற்றில் தீவிர கவனம் செலுத்தினான்.
ஆரம்பக் கல்வியை உள்ளூரில் ஆரம்பித்த ஜெகன்

Page 52
98 நினைவின் அலைகள்
சொல்லிவைத்தாற்போல ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகத் தேறி, தந்தையின் உச்சி குளிரவைத்தான். இளமையில் வறுமையின் காரணமாக தான் இழந்த கல்விச் செல்வத்தை தன் மகனின் மூலம் அடைய வேண்டுமெனக் கனவுகண்டான் இவன்.
ஜெகன் வருடா வருடம் முதல் மாணவனாகத் தேறுவது அவன் வகுப்பிலுள்ள மற்றப் பிள்ளைகளுக்கு பொறாமையூட்டியது. படிப்பில் அவனுடன் போட்டியிட முடியாத சில மாணவர்கள் "ஆனா" விலாசத்தை இழுத்து அவனைக் கொச்சைப் படுத்தினர்.
“எடே சாதியை இழுத்து கதையாதையடா. நீயும் என்னோடை போட்டிபோட்டு, முதலாம் பிள்ளையா வாடா பாப்பம்" என்று சவால் விட்டான் ஜெகன்.
மறுவருட பரீட்சையிலும் அவனுடன் போட்டியிட முடியவில்லை.
பள்ளிக்குச் செல்லும்போது ஜெகனது உடையில் செம்பாட்டு மண்ணைப் பார்க்க முடியாது. அவ்வளவு துப்புரவாக இருப்பான். அழகான ஸ்கூல் பாக் சப்பாத்து இத்தோற்றம்கூட சக மாணவர்களை உறுத்தும். படிப்பில் கெட்டிக்கார மாணவன் என்பதால் வகுப்பு ஆசிரியரோ, அதிபரோ அதிக அன்பு செலுத்துவர். இதுகூட அவனது வகுப்புப் பிள்ளைகளுக்கு தாங்க முடியாது. ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி வம்புக்கிழுப்பார்கள்.
படிப்பில்லாத நேரம் பொழுது போக்கி சிரித்து மகிழ அவனுக்கொரு தம்பி பிறந்தான். அவனுக்கு அகிலன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். படிப்பு; பின்னர் விளையாட்டு - தம்பியுடன் கொஞ்சி மகிழ்வது என்று வழக்கப்படுத்திக் கொண்டான்.
ஜெகன் படிக்கும் பள்ளிக்கூடத்துடன் அம்மன், பிள்ளையார் கோயிலும் இணைந்திருந்தன. இரண்டுக்கும்

எஸ்.வீ. தம்பையா 99
மத்தியில் குறுக்கறுத்துச் சென்ற ஒழுங்கை இல்லாவிடில் ஒரே காணிபோல இருக்கும். பள்ளிக்கூட கிணற்றில் சிறுவர் கூட்டம் நிரம்பி வழியும்போது, கோயில் கிணற்றிலும் தாகத்துக்கு தண்ணிர் அள்ளிக் குடிப்பர். ஒருநாள் ஜெகன் கோயில் கிணற்றில் தாகத்துக்கு தண்ணிர் அள்ளிக் குடித்துக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த கோயில் நிர்வாகப் பரியவர் ஒருவர் தாகம் அடங்க தண்ணிரும் குடிக்கவிடாது, வேலியிலுள்ள கிளுவந்தடி ஒன்றை முறித்து ஜெகனை ஒடஒட விரட்டினார். தப்பினேன், பிழைத்தேன் என ஒடோடி வீடு வந்து இவனிடம் கூறினான். தாகத்துக்குக்கூட சிறுவன் ஒருவன் தண்ணிர் குடிப்பதற்குச் சமயமும், அதன் ஆச்சாரமும் தடையாக இருக்கும் கொடுமையை எண்ணி வருந்தினான்.
"ஐயா இனிமேல் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போகமாட்டன். சாதியை இழுத்து பகிடி பண்ணினம். தாகத்துக்கு தண்ணி குடிக்க முடியேல்லை” மகன் முறையிட்டான்.
"தம்பி நீ சொல்வது எனக்கும் சரியாகத்தான் படுகுது. சுதந்திரமில்லாத சூழ்நிலையிலை படிப்பது கஷ்டந்தான். அவசரப்படாதை நல்லதொரு பள்ளிக்கூடத்திலை ன்னைச் சேர்க்கவேணும். எனக்கு உன்ரை படிப்புத்தான் முக்கியம். அதுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறன்"
பள்ளியின் அதிபர் இவனுடன் அதிக அன்புள்ளவர். இருப்பினும் அவராலும் இது தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல. அவர் கடும் நடவடிக்கை எடுத்தால் ஊர் மக்களை பகைக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தான்.
"ஏன் பள்ளிக்கூடத்தை மாற்றுகிறீர்" துருவித் துருவிக் கேட்டார் அதிபர். இவன் உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னாலும் அதனால் எதுவித பிரயோசனமுமில்லை என்பது இவனுக்கு நன்கு தெரிந்த விசயம்.

Page 53
100 நினைவின் அலைகள்
"கொழும்பிலை போடிங்கில் சேர்த்து படிப்பிக்கப் போறன்" - மறுக்கமுடியாமல், பள்ளியைவிட்டு விலக இணங்கினார்.
ஜெகன் மகாஜனாக் கல்லூரியில் சேர்க்கப்பட்டான். அங்கும் ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்று நல்லதொரு மாணாக்கனாகத் திகழ்ந்தான். மகனின் கல்வி வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தினான். அவனை சிறந்த கல்விமானாக்க வேண்டுமென்ற தீரா வேட்கையை மெய்ப்பிப்பதுபோல ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகத் தேறினான்.
21
கோயில் கிணற்றில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க முடியாத அவல நிலையும், இலங்கை மண்ணில் பிறந்த தமிழ்ப் பேசும் ஒருவன் தனது சமய தெய்வத்தை ஆலயத்துட் சென்று சுதந்திரமாக வணங்க முடியாத கொடுமையும் தாங்க முடியாத வேதனையைத் தந்தது. இவனைப் பொறுத்தவரை "உள்ளக் கமலத்தில் இறைவன் வீற்றிருக்கிறான்” என்பதை முழுமையாக உணர்ந்தவன், “நட்டகல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில்.” என்ற சித்தர் பாடலில் உடன்பாடுடையவன். இருப்பினும் உரிமைப்பிரச்சினை என்று வரும்போது எள்ளளவும் விட்டுக்
கொடுப்பதாயில்லை. கோயில் நிர்வாகத்துடன் நேருக்கு நேர் மோதினான். அவர்கள் எதற்கும் அசைவதாயில்லை. தமது தொகுதி “எம்.பி.”யைச் சந்தித்து வருடக்கணக்காக அலைந்தான். "சமூகக் குறைபாடுகளை ஒழிப்பது எனது

எஸ்.வீ. தம்பையா 101
கடமை" என வாக்குறுதி தந்தார். கடைசியில் சொன்ன சொல்லைக் காப்பாற்றாமலே போய்ச் சேர்ந்துவிட்டார். எல்லாரையும் திருப்திப்படுத்தி தனது வாக்குகள் சிதறாமல் இருப்பதிலேயே கண்ணாயிருந்தார் எம்பி.
சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்ற சமூக இயக்கங்களுடன் தொடர்புகொண்டான். அவர்களது நெருக்குதல் காரணமாக - தவிர்க்க முடியாத சூழ்நிலையால் கோயில் நிர்வாகிகள் இணங்கினர்; கோயில் கதவுகள் திறந்தன. அதுவரை குறிப்பிட்ட இவர்களிடம் சிறைப்பட்டிருந்த அம்மன் மனம் குளிர்ந்தாள். தன்னையும், தனது மக்களையும் பிரித்துவைத்த கதவுகள் திறக்கப்பட்டதில் பூரித்தாள் அம்மன்.
ஜெகன் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்று மருத்துவத்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
"என்ரை மோன் டாக்குத்தராய் வருவான் எண்டு எனக்கு எப்பவோ தெரியும்" - மகிழ்ச்சி பொங்க, உடல் எல்லாம் பூரிக்க, கண்களில் ஆனந்தக்கண்ணிர் சொரிந்தபடி கூறினாள் ஜெகனின் தாய். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற குறளை அனுபவபூர்வமாக உணர்ந்தாள். "சங்கானை நடராசா சாத்திரி சொன்னது சரியாய் நடந்திட்டுது" அவள் மேலும் பெருமிதமாகச் சொன்னாள். "சாத்திரி சொன்னால் மட்டும் போதுமோ? படிக்கவுமெல்லே வேணும். என்ரை மோன் ஊக்கமாய் படிச்ச படியால்தான் பாஸ்பண்ணினான்" அவனது கல்வி வளர்ச்சியையும் ஊக்கத்தையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தான் இவன், மருத்துவத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுமே டாக்டர் படிப்பை முடித்துவிட்டாற்போல இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அகிலன் படிப்பில் அதிகம் ஊக்கம் காட்டாதது பெற்றோருக்கு மன வேதனையைத் தந்தது. படிப்பைவிட

Page 54
102 நினைவின் அலைகள்
அரசியலைப் பற்றிப் பேசுவதும், தனது சகாக்களுடன் அரட்டை அடிப்பது, ஊர் சுற்றுவது முதலான பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டினான். விளையாட்டுத்துறையும் அவனுக்கு பிடித்ததாயிருந்தது.
அகிலனை ஒரு பொறியியலாளராக்க வேண்டுமென்பதே தந்தையின் திட்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு அதில் அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.
22
கலச் சக்கரம் சுழன்றது. ஜெகன் மருத்துவக் கல்வியை முடித்துக்கொண்டு, பல்லை கக்கழகத்தைவிட்டு வைத்தியக்கலாநிதியாக வெளியேறி தந்தையின் கனவை நனவாக்கினான்.
யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமையைத் தொடங்கினான் ஜெகன். பிறந்த மண்ணுக்கு தொண்டு செய்யக் கிடைத்த சந்தர்ப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைந்தான். இந்தப் போர்க்காலத்தில் தன்னலம் கருதாது கடமையுணர்வுள்ள மகனைப் பெற்றெடுத்ததற்காக பெருமைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்,
சற்றும் எதிர்பாராத நிலையில் பதிவுத் தபால் ஒன்று இவன் பெயருக்கு வந்தது. அனுப்புவரின் பெயரைப் பார்த்ததும் கண்கள் அகல விரிந்தன. ஆச்சரியம் தாங்க முடியவில்லை. வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒருவித

எஸ்.வீ. தம்பையா 103
தவிப்பு. நீண்டகாலத்துக்குப் பிறகு இவனது மூத்த சகோதரனது கடிதம் மலேசியாவில் இருந்து வந்திருந்தது. அவசர அவசரமாக கடிதத்தைப் பிரித்தான். ஆங்கிலத்தில் "ரைப்" செய்யப்பட்டிருந்தது. முதலில் கடிதத்தை படிக்க முயன்றான்.
என்றும் என் மனதைவிட்டகலாத அருமைத்தம்பிக்கும், குடும்பத்தினர்க்கும் அன்புடன் எழுதுவது. நாம் நலம் அதுபோல உங்கள் நலமறிய ஆவல். நீண்ட காலத்துக்குப் பிறகு உங்களை இந்தக் கடித மூலம் சந்திக்கிறேன். உங்களை எல்லாம் நேரில் பார்த்து மனம்விட்டுக் கதைக்க வேண்டும்
எனும் ஆவலுடனிருக்கிறேன்.
எனக்கும் வயது போட்டுது. தள்ளாமை வந்திட்டுது. நடப்பதற்குக்கூட கஷ்டப்படுகிறேன்; பிரம்பு பிடித்துத்தான் நடக்கிறேன். எனக்கு இப்ப வயது எழுபத்து மூன்றாகிறது. இந்தக் கடைசிகாலத்தில் ஒரு நல்ல காரியம் செய்ய முடிவு செய்துவிட்டேன். ஊரில் என்னுடைய பெயரில் உள்ள வீட்டையும், பத்துப் பரப்புக் காணியையும் உமது பெயருக்கு எழுதி அதற்குரிய "அட்டோர்னிபவரையும்" இத்துடன் இணைத்துள்ளேன். இதை உவ்விடமுள்ள பிரக்கிராசி மூலம் பதிவு செய்து உரிமையாக்கிக்கொள்.
உனது ஏழு வருடகால உழைப்பை இவ்வளவு காலமும் தராமல் இருந்துவிட்டேன். அதற்குப் பதிலாக எனது வீட்டையும், காணியையும் ஏற்றுக்கொள்ளவும். அதற்குரிய பத்திரங்கள் இத்துடன் அனுப்பியுள்ளேன். இவ்வளவு காலமும் நீர் பொறுமையாக இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.
இங்கு ஒரு தடவை குடும்பத்துடன் வந்து போகவும். நான் "ஸ்பொன்ஸர்' பண்ணிக் கூப்பிடலாம். தை மாதம் பத்துமலைக் கொண்டாட்டமும் வருகுது. அதோடு வந்தால் இரட்டிப்புச் சந்தோசமடைவேன்.

Page 55
104 நினைவின் அலைகள்
உமது நல்ல முடிவுக்காக காத்திருப்பேன்.
இப்படிக்கு அன்புள்ள அண்ணன் பொன்னையா
கடிதத்தைப் படித்து முடித்ததும் சிறுபிள்ளைபோல தேம்பித் தேம்பி அழுதான்.
“என்ன, என்ன ஏன் அழுகிறீர். சொல்லிப்போட்டு அழுமன்" - மனைவி பதற்றத்துடன் கேட்டாள்.
"மலேசியாவிலிருந்து அண்ணன் கடிதம் போட்டிருக்கிறார்"
"ஏன் அவருக்கு ஏதும் ஆபத்தோ?” மீண்டும் கேட்டாள் அவள்.
"அவருக்கு இப்போதைக்கு ஒரு ஆபத்துமில்லை. அந்த நாளேலை மோட்டார் கார் அடிச்சபோதே இறந்திருப்பார். என்ரை அண்ணன் இப்போதைக்கு சாகமாட்டார்” மனிதருக்கு மரணமே வராது என்பதுபோல உறுதியாகச் சொன்னான்.
காலம் கடந்தும் அவர் இந்த நல்ல முடிவுக்கு வந்ததையிட்டு சந்தோசப்பட்டான். தனது உழைப்பு என்றோ ஒருநாள் தனக்கு வந்து சேரும் என மன உறுதியுடன் நம்பியிருந்தான். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. நேர்மையாக உழைத்த உழைப்பு என்றும் வீண்போகாது என்பதற்கு இவனே சாட்சியாக திகழ்ந்தான்.
அண்ணனின் தாராள மனதை நினைத்துப் பெருமைப்பட்டான். அடுத்த வருடமாவது அவரையும், குடும்பத்தினரையும் போய் பார்த்தால் மனதுக்கு ஆறுதலாயிருக்கும். எப்படியும் தனது நன்றியைத் தெரிவிக்கவேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டான்.

எஸ்.வீ. தம்பையா 105
23
ஒருநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் டாக்டராகப் பணியாற்றும் தன் மகனுக்கு மத்தியான உணவு எடுத்துக்கொண்டு வந்தான் இவன். நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் நிரம்பி வழிந்தனர். அருகே இருந்த வாங்கொன்றில் நெருக்கியடித்துக்கொண்டு ஆளோடு ஆளாக இவனும் அமர்ந்தான். எதிரே இருந்த வாங்கின் மூலையில் சிந்தனை வசப்பட்டவராக வயோதிபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். இவன் அவரை அவதானித்தான். தொளதொளவென கசங்கிய நேசனல் சட்டையை தலையணை உறையைப்போல அணிந்து, அகலக்கரை போட்ட நாலு முழ வேட்டி கட்டியிருந்தார். அவை கைத்தோயலின் மகிமையை பறைசாற்றி, காவி படிந்திருந்தன. அவரைக் கூர்ந்து நோக்கினான். எங்கேயோ பார்த்தமுகம் நினைவைக் கூர்மையாக்கினான். நரைவிழுந்த சுருட்டை மயிர், கண்களிலே கண்ணாடி அதன் முனை நூலால் கட்டப்பட்டிருந்தது. பொக்கை வாய், அள்ளி அப்பிய திருநீற்றுப் பூச்சு நெற்றியிலே பூரணச் சந்திரனைப் போல பெரியதொரு சந்தனப் பொட்டு, கையிலே பிரம்பு, நிலத்தில் ஊன்றியபடி அமர்ந்திருந்தார்.
"எட எங்கடை நவரத்தின வாத்தியார் ஒம் அவரேதான் சந்தேகமில்லை" மிகப் பணிவாக அருகில் சென்று "தாங்கள் நவரத்தின வாத்தியார்தானே?" என கேட்டான்.
தனது பெயரை உச்சரிக்கும் இவனை நிமிர்ந்து பார்த்து "ஓம் நானேதான். உங்களை எனக்கு சரியாய் தெரியேல்லை? எப்படி என்பெயர் தெரியும்?” கண்ணாடியைக் கழற்றி வேட்டித் தலைப்பில் துடைத்தபடி கேட்டார்.

Page 56
106 நினைவின் அலைகள்
"வாத்தியார் நான்தான் தங்களிடம் ஆங்கிலப் பாடத்துக்கு அடிவாங்கி, “ஃபிஷ்'ஷை “ஃபிஸ்” என உச்சரித்து, சிரசாசனம் பண்ணி."
"எ.டடநீயே! எத்தனை வருடமப்பாஎன்ரை அடியை இப்பவும் நினைவில் வைத்திருக்கிறாய்! இப்ப என்ன செய்யுறாய்? எங்கே இந்தப் பக்கம்?" . "உங்களிடம் வாங்கிய அடியை எப்படி மறக்கமுடியும்? அப்படி மறந்திருந்தால், இண்டைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டான். இப்ப கொழும்பிலை கடை வைச்சிருக்கிறன் மகனுக்கு சாப்பாடு கொண்டு வந்தனான்"
'என்ன உன்ரை மோன் ஏதும் வருத்தமாய்
இருக்கிறானோ?
"இல்லை வாத்தியார் அவருக்கு ஒரு வருத்தமுமில்லை. அவர் இங்கை டாக்குத்தராய் உத்தியோகம் பார்க்கிறார்”
"என்ன! என்ன! உம்மடை மோன் இங்கை டாக்குத்தரோ? பேர் என்ன?-
வாத்தியாரின் கைப்பிரம்பு தடுமாறிக் கீழே விழுந்தது. விழுந்த பிரம்பை தடவி எடுத்து, நிலத்தில் பலமாக ஊன்றி தனது தடுமாற்றத்தை வெளிக்காட்டாது, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு கேட்டார், அவர் "டாக்டர் ஜெகன்” - அடக்கத்துடன் பதில் சொன்னான்.
"அவர்தானே என்ரை பேரனுக்கும் வைத்தியம் செய்யுறார். நல்ல கைராசிக்காரர். எனக்குப் பெருமையாக இருக்கு, என்னுடைய மாணவனின் மகன் இங்கு டாக்குத்தராய் இருப்பதைப்பற்றி"
"ஓம் வாத்தியார் தங்களிடம் படிக்கும் காலத்திலேயே, நான் அவ்வளவு படிக்காவிட்டாலும் என்ரை பிற்சந்ததியை எண்டாலும் நல்லாய் படிப்பிச்சு முன்னேற்ற வேண்டுமென்று கனவு கண்டனான். இவரை ஒரு மாதிரி

எஸ்.வீ. தம்பையா 107
படிப்பிச்சுப் போட்டன் இளைய மகன் ஒஎல். படிக்கிறான். அவனையும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திட்டன் என்றால் என்ரை கடமை சரி”
"படிப்பு முக்கியம் மோனை. அதுதானே எங்கடை சொத்து. இந்த விசயத்தில் நீர் உமது கடமையை திருப்தியாய் செய்திருக்கிறீர். எனக்குப் பெருத்த சந்தோசம்”
"எனக்கு இந்த வயதிலையும் படிக்கவேண்டும் என்ற தாகந்தீரவில்லை. சொன்னால் சிரிக்கமாட்டீர்களே! இப்ப நான் மீனை 'ஃபிஷ் என வடிவாய் உச்சரிப்பன்."
"இப்ப நான் உமக்கொரு கதை சொல்லப் போறன். இப்ப வருத்தமாய் கிடக்குறானே என்ரை பேரன்! அவனுக்கு ஆங்கிலப்பாடம் சொல்லிக் கொடுத்தேன். ஒருநாள் ஃபிஷ்ஷை, "ஃபிஸ்ஸ்" என்று உச்சரிச்சுப் போட்டன். அவன் விழுந்து விழுந்து சிரித்தான். எனக்கு வருத்தமாய்ப் போட்டுது. அதுக்குப்பிறகு அவனுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை”ஒரு அவிட்டுச் சிரிப்பு சிரித்தார்; அவரது பொக்கை வாய் மரவள்ளிக் கிழங்கு இழுத்த கிடங்கைப் போல குழி விழுந்திருந்தது.
"வாத்தியார் கனகாலத்துக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறன் பன்னிரண்டு மணி அடிக்க நேரம் கிடக்கு இப்ப பதினொருமணிதானே! முன்னுக்குள்ள கடையிலே ஏதாவது குடிப்பம் வாருங்கோ"
"வேண்டாம் மோனை வேண்டாம். வீட்டிலை குடிச்சிட்டு வந்தனான்"
"இல்லை ஐயா. இப்பிடி தட்டிக் கழிக்க வேண்டாம். என்ரை மன ஆறுதலுக்காக எண்டாலும் ஏதாவது குடிப்பம்) வாருங்கோ” - இவனது வேண்டுகோளைத் தடுக்க முடியாத அவர், இடது கையை வாங்கில் பிடித்துக் கொண்டு வலது கையால் பிரம்பை நிலத்தில் பலமாக ஊன்றியபடி மெது மெதுவாக எழுந்து தள்ளாடித் தள்ளாடி ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தார். அவர் நடக்க மிகவும் கஷ்டப்பட்டார்.

Page 57
108 நினைவின் அலைகள்
கொஞ்சம் தூரமென்றாலும் பரவாயில்லை, நல்லதொரு ஹோட்டலுக்குள் நுழைய வேண்டும் என்னும் ஆவலுடன் அவரை கைத்தாங்கலுடன் அழைத்து வந்து "சுபாஸ் கபே"க் குள் நுழைந்தான். "என்ன குடிப்பம் குடாகவா குளிராகவா?”
"சீனி இல்லாமல் எது எண்டாலும் சரி” "தம்பி இரண்டு நெஸ் கோப்பி போடும் சீனியில்லாமல்" "என்ன நீரும் சீனி பாவிக்கிறதில்லையே”
“ஓம் வாத்தியார். சீனி அதிகம் பாவிக்க வேண்டாமென டாக்டர் விக்கினேஸ்வரன் சொல்லியிருக்கிறார்”
"இப்ப உங்களுக்கு ஐம்பது வயதிருக்குமே” "வாற ஐப்பசி மாதம் அறுபது வயது தொடங்குது"
"நம்ப முடியேல்லை முந்த நாள் போல இருக்கு. அதற்கிடையில் அறுபது ஆகுது. தலையும் இன்னமும் நரைக்கேல்லை”
"வாத்தியார் இவனை நீங்கள் என்று பன்மையில் அழைப்பது இவனுக்கு கூச்சமாயிருக்குது. நீ எண்டு உரிமையுடன் சொல்லுங்கள். என்னதான் இருந்தாலும் நான் உங்கட மாணவன்தானே"
இருவரும் தேநீர் அருந்தி முடிந்ததும், சட்டைப்பைக்குள் இருந்து உருவி ஆயிரம் ரூபா தாள் ஒன்றை எடுத்து ரகசியமாய் அவர் கைக்குள் வைத்து மடித்தான் "சீ.ச்சீ” உது என்ன வேலை மோனை, வேண்டாம் வேண்டாம்"
"வாத்தியார் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் தங்களிடம் படித்த மாணவனின் அன்புக்காணிக்கை. இதை மனங்கோணாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்காத ஒரே தொழில் வாத்தியார் உத்தியோகம்தான். இது எனது அன்புக்காணிக்கை. மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

எஸ்.வீ. தம்பையா 109
உங்களுக்கு என்ன உதவி எப்ப வேணுமோ கூசாமல் கேளுங்கள். தவறாமல் செய்யுறன்.”
மிகக் கூச்சத்துடன் காசை வாங்கி வேட்டித் தலைப்பில் கவனமாக முடிந்து இடுப்பில் செருகினார்.
“உம்மைப் பார்த்தால் பெரிய பரோபகாரி மாதிரித் தெரிகிறதே. ஏதாவது பொதுத் தொண்டு, அரசியல் ஈடுபாடு."
அரசியலுக்கும் எனக்கும் வெகுதூரம். சின்ன வயதிலை, ஐம்பதுக்கு ஐம்பது கேட்ட தலைவரும் மகாதேவாவும் தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்போது நான் யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் வேலை செய்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும் தேவதாசனும் ஸ்ரேசனுக்குமுன் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். வாக்குச் சேகரிக்க வந்த தலைவரைக் கண்டதும் உடனே "ஜி ஜீ க்கு ஜே" எனக்கோசமெழுப்பிக் கொண்டு அவருடன் சுற்றி, அவ்விடத்திலுள்ள வீடுகளைக் காண்பித்துக் கொண்டு வந்தோம். இருண்டு போய்விட்டது "பெட்றோமாக்ஸ்” விளக்கைத் தூக்கிக் கொண்டு வீடுவீடாய் அலைந்தோம். இருவருக்கும் இரண்டு ரூபாய் தந்தார். உடனே ஒடிப்போய் அதற்கு பட்டாசும் வாணமும் வாங்கிவந்து எங்கள் வீட்டுப் படலைக்கு தலைவர் வந்ததும் "ஜீ ஜீக்கு ஜே" என கோஷமிட்டபடி பட்டாசுகளை வெடிக்கவைத்தோம். இது சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவம். மேற்கொண்டு அரசியலில் அக்கறையுமில்லை; அதில் ஈடுபாடுமில்லை.
முருகேசனார் என்று எமது சமூகத்தவர் படிப்பாளி, அறிவாளி. அவர் ஒரு நிறுவனம் ஆரம்பித்து செயல் படுத்துகிறார். ஒவ்வொரு சிறுவனும் பத்தாம் வகுப்புவரை கட்டாயம் படிக்கவேண்டும்; படிப்பிக்கவேண்டும். தந்தையை இழந்த சிறுவர்களுக்கும், விதவை தாய்மார்களுக்கும் மாதம் ஐம்பது ரூபா வீதம் கொடுத்து

Page 58
110 V நினைவின் அலைகள்
உதவுவது. இந்த திட்டத்துக்கு அவருடன் சேர்ந்து நானும் செயற்படுகிறேன். \
அத்துடன் சாதி அமைப்பைக் கொண்ட குடிமைத் தொழிலைச் செய்யாது தடுப்பது, அதற்கு மாற்றுத் தொழில் முறையைக் கற்பிப்பது, அதற்கு ஆதரவு அளிப்பது"
"எனக்கு கந்த முருகேசனாரைத்தான் தெரியும்"
"அவர் தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர் பெருமான். இவர் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக அயராது ஒய்வு உறக்கமின்றி உழைத்து வருபவர்"
"இதை ஏன் ஒரு சமூகத்துக்கு மட்டும் என வரையறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? பொதுவாகச் செய்யலாம்தானே?"
"முதலில் தன் வீடு, பிறகு தனது கிராமம்; பின்னர் இனம்; நாடு என விரிவான திட்டங்கள் அவரிடம் உண்டு. தனது வீட்டு அடுப்பில் பூனைபடுத்திருக்க, அடுத்த வீட்டைப்பற்றி முதலில் சிந்திக்கமுடியாது, அதுமட்டுமல்ல எமக்கு ஒரேயொரு தொழில் மட்டுந்தான் தெரியும் எனப்பரவலாக ஒரு எண்ணம் நிலவுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி பல தொழிலும் கற்க ஊக்கப்படுத்துவது. எந்தவித தகுதியும் இல்லாதவன் கூட இலகுவாக சாதியை தொழிலை இழித்து கேவலமாகப் பேசுகிறான். இந்த எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்து நொருக்கவேண்டும். பல தொழிலும் கற்க வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும். இந்தத் திட்டங்களை நாம் ஒரளவு நடைமுறைப் படுத்திக் கொண்டு வருகிறோம்"
"நல்லனவற்றை யார் செய்தாலும் முகம் கோணாமல் வரவேற்கவேண்டும். நாங்கள் கூட அந்தக் காலத்தில் பெரிய பிழை விட்டிருக்கிறம். தொட்டதற்கும் சாதியை இழுத்துப் பேசிப் பழகிப்போனம். ஒருதடவை உம்மைக்கூட வகுப்பிலை."

எஸ்.வீ. தம்பையா 111
“அதெல்லாம் பழைய கதை. அதை மறந்திடுவம். வாத்தியார்”
"எதையும் பொத்திப் பொத்தி வைக்கத்தான் இதற்குள் ஏதோ இருக்கிறது எனப் பூந்து பிடிச்சுப்பார்ப்பார்கள். தேங்காயை உடைச்சுப் பிளப்பது போல” பிளக்க வேண்டியதுதானே! என்ன மறைப்பு என்ன ஒழிப்பு"
"சரியாய்ச் சொன்னீர். அந்தக் காலத்தில் நாடார் மரம் ஏறும் இனம். அவர்கள் காலப்போக்கில் வணிகத்துறையில் ஈடுபட்டு, தங்கள் கடைகளுக்கு "செல்லச்சாமி நாடார் அன் கோ" என கொட்டை எழுத்தில் எழுதி போட் மாட்டி, தமது சாதியைப் பகிரங்கப் படுத்தினார்கள். ஏன் எங்கள் காமராஜரைப் பாரும் "கிங் மேக்கர் எனப் புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் இந்தியாவின் தலைவிதியே அவர் கையில்தானே இருந்தது. அவர்தானே இந்திராவை பிரதமராக முன்மொழித்தவர் இன்று அவர்களை யாரும் குறைவாக மதிப்பதில்லை"
“உண்மை; முற்றிலும் உண்மை! இதை நாங்கள் முழுமையாக உணர்ந்து செயல்படுகிறோம். கல்வி வளர்ச்சிக்காக அள்ளித் தர எத்தனையோ கொடைவள்ளல்கள் இருக்கிறார்கள். ஒருநாள் நானும் எனது பேரனும் கொக்குவிலிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அண்டைக்கென பஸ்ஸுமில்லை.புத்தம் புதிய வெள்ளைக்கார் ஒன்று எங்களை முந்திச் சென்றது, என்ரை பேரன்தான் சொன்னான். "உந்தக் கார் இஞ்சினியர் புலேந்திரனுடையது" என்று. அவன் என்னட்டைப் படித்தவன். நன்றி கின்றி இருக்கோ! வாத்தியார் மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலிலை தள்ளாடித் தள்ளாடிப் போறாரே, அவருக்கு தன்ரை காரிலை இடம் கொடுக்கவேண்டுமென்று நினைத்தானே! இவ்வளவுக்கும் தனியாகத்தான் காரை ஒட்டிக்கொண்டு போவதாக பேரன் சொன்னான்."

Page 59
112 நினைவின் அலைகள்
உவங்கள் படிச்சாலென்ன படிக்காமல் விட்டால்தான் என்ன! பண்பில்லாத படிப்பு என்ன படிப்பு. உவங்கடை சேர்ட்டிபிக்கற்றைத் தூக்கி அடுப்பிலை போட வேண்டியது தான்! இவ்வளவுக்கும் என்ரை வீட்டிலிருந்து கால்மைல் தூரத்தில்தான் இருக்கிறான் ஒரு நல்ல நாள் பெருநாளுக்குக் கூட வீட்டுக்கு வரமாட்டான். நீர் குருவுக்கு கொடுக்கும் மரியாதையும் அன்பும் எனக்குப் பெருமையாயிருக்கு"
"எனது தந்தை எனக்குச் சொல்லித்தந்த முதற்பாடம் மாதா - பிதா - குரு தெய்வம். இதை நான் என்றும் மறக்கவில்லை. இனிமேல் தங்களை அடிக்கடி சந்திப்பன். உங்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதே இனிமையான அனுபவம்"
“எனக்கும் விளங்குது. இப்படி அனுபவசாலிகள் அறிவாளிகளுடன் பழகித்தான் உமது அறிவை பெருக்கியிருக்கிறீர் என்று"
“மக்களைப் படிக்கவேண்டும். அதுதானே பெரிய அனுபவம் - படிப்பு"
"தெரியாமல்தான் கேட்கிறன்; வாழ்க்கைக்கு பயன்படாத படிப்பு என்ன படிப்பு"
"எனக்கு இன்னமும் நிறையக் கற்கவேண்டும் போல தாகமாயிருக்கு"
"கல்விக்கு ஏது மோனை எல்லை. கற்றனைத் தூறும் மணற் கேணி என்று வள்ளுவரே கூறியிருக்கிறாரே. இனிமேல் இந்த வாத்தியார் மாணவன் என்ற கதை வேண்டாம். உம்மிடமிருந்தும் கன தகவல்கள் நான் அறியவேண்டும் போல இருக்கு"
"ஒண்டு சொல்ல மறந்திட்டன் வாத்தியார் வருகிற மாதம் இருபத்தைந்தாம் திகதி எனது அறுபது வயது தொடங்குது” "அப்பிடி எண்டால் மணிவிழா எண்டு ஏதும் பெரிய கொண்டாட்டமோ?"

எஸ்.வீ. தம்பையா • 113
"அப்படி பெரிசா ஒண்டுமில்லை என்ரை மகன்தான் ஒற்றைக்காலில் நிற்கிறார். தன் நண்பர்களையும் இனசனங்களையும் அழைத்து விருந்து வைக்க வேணுமென்று"
"அப்படி என்றால் நானும் அவசியம் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றவேண்டும். குருபக்தியும் நன்றி மறவாத தன்மையும் கொண்ட என் மாணவனை பெருமையுடன் நான் வாழ்த்தவேணும்"
"தாங்கள் வந்து என்னை வாழ்த்தினால் அது பெரிய கொடை நான் கொடுத்துவைத்தவன் மாதா பிதாவை இழந்திட்டன். குரு என்றாலும் கண் எதிரே இருக்கிறாரே!”
"வருவன். கட்டாயம் வருவன். உம்மை வாழ்த்த எனக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்"
"வாத்தியார் பன்னிரண்டு மணி அடிக்க இன்னமும் பத்து நிமிடம் இருக்கிறது. மெதுமெதுவாய்ப் போவம்" எனக் கூறியவாறு எழுந்து மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினர். வாத்தியாரின் உள்ளம் நிறைந்து வழிந்தது. இவனது கைகளை இறுகப் பற்றியபடி "உம்மை சந்தித்தது ஒரு எதிர்பாராத சம்பவம், வாழ்நாளில் மறக்க முடியாதது. இப்படி நாலு மாணவர்களைச் சந்தித்து அளவளாவுவது எனக்கு பெரும் மன நிறைவைத்தரும்", எனக்கூறியபடி இவனது கையைப் பிடித்தபடி சிறுகுழந்தை நடைபயில்வது போல நடந்தார்.

Page 60
114 நினைவின் அலைகள்
24
ஆஸ்பத்திரி வாசலில் அமர்ந்து மகனின் வருகைக்காகக் காத்திருந்தான். வாத்தியாரைக் கண்டு கதைத்ததில் பெரும் மனச்சாந்தியடைந்தான். இந்தச் சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருந்தபோது.
"ஐயா வந்து கன நேரமாச்சோ? ஏன் உள்ளே வராமல் இங்கே இருக்கிறீங்கள்?” காதில் மாட்டவேண்டிய "ஸ்டெதாஸ்கோப்”பை சால்வையைப் போல் மடித்து தோளில் போட்டபடி கேட்டார், டாக்டர்.
"நேரத்தோடு வந்திட்டன் தம்பி இண்டைக்கு ஒரு புதினம். என்னைப் படிப்பித்த வாத்தியார் ஒருவரைச் சந்தித்தன். அவரோடை கதைச்சுக் கொண்டிருந்ததிலை நேரம் போனதே தெரியவில்லை. அவருடைய பேரனுக்கு நீர்தான் வைத்தியம் செய்யுறிராம்; பெயர் வரதனாம்.”
“அவை கொக்குவிலில் எல்லோ இருக்கிறவை” “ஓம் தம்பி! கொஞ்சம் வடிவா கவனிச்சுப்பாரும். அந்தப் பிள்ளையின் பாட்டன்தான் என்ரை வாத்தியார்”
"நான் வைத்தியத்துறைக்கு வந்தபிறகு தெரிந்தவை தெரியாதவை என்று பார்ப்பதில்லை என் கடமையை மனநிறைவுடன் செய்யுறன்"
"இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் கடமையைச் செய்ய தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையுள்ள பிள்ளை ஒன்றைப் பெற்று அர்ப்பணித்திருக்கிறேன்” என்று மனம் நிறைந்தவனாகக் காணப்பட்டான் இவன்.
தந்தையும் மகனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது பேரனைப் பார்த்துவிட்டு வாத்தியாரும் வந்து சேர்ந்தார். அவரை தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினான் இவன்.

எஸ்.வீ. தம்பையா 115
"மகன் உம்மை உரிச்சு வைச்சது போல இருக்கிறாரே! பத்துப் பன்னிரண்டு என்று பெறாமல் ஒன்று இரண்டைப் பெற்றாலும் இப்படிப்பட்ட மக்களைத்தான் பெற வேண்டும். நீர் கொடுத்து வைத்தனிர் ஒரு சமூகம் முன்னேற கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமமாக உயரவேண்டும். அப்போது சமூகக் குறைபாடுகள் எல்லாம் தானாக அற்றுப் போகும்"
உடனே டாக்டர் இடை மறித்து, "தனி நபர் ஒருவர் மட்டும் முன்னேறிப் பயன் இல்லை. முழுச் சமூகமுமே முன்னேற வேண்டும். தனி மரம் தோப்பாகாது. எங்களை அதிகம் புகழவேண்டாம். இன்னும் எவ்வளவோ சாதிக்கவேண்டியிருக்கு” என அடக்கமாகச் சொன்னார்.
'தம்பி! மணி விழாவுக்கு வாத்தியாரும் வரச் சம்மதித்துள்ளார்" மிகப் பெருமையுடன் சென்னான் இவன்.
"மாஸ்ரர் உங்கள் வீட்டு விலாசத்தை விபரமாகத் தாருங்கோ. நான் வந்து எனது காரில் உங்களை அழைத்துச் செல்லுகிறேன். இருபத்தைந்தாம் தேதி பதினொரு மணிக்கு ஆயத்தமாய் நில்லுங்கோ. நீங்கள் வரச் சம்மதித்ததற்கு நன்றி”
"நான்தான் நன்றி சொல்லவேண்டும். நல்ல மனித நேயமுள்ள ஒருவரின் மணிவிழாவில் கலந்துகொள்ள எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தந்ததற்காக”
"வாத்தியார் அப்படிச் சொல்லக்கூடாது. நீங்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து வந்து கலந்து கொள்வது எனக்குத்தான் பெருமை. உண்மையில் நான் கொடுத்துவைத்தவன். இந்தப் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது" இவனது கண்கள் பனித்தன.
காலச் சக்கரத்தின் சுழற்சியால் ஏற்பட்ட மன மாற்றங்களை எண்ணி எண்ணி வியந்தான்.
உற்சாகத்துடன் சென்று ஸ்கூட்டரை ஒரு மிதி
மிதித்தான்.

Page 61
al
116 நினைவின் அலைகள்
ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டு பலாலி வீதியால் திரும்பும்போது மதிற்சவரில் வரிசையான ஒட்டப் பட்டிருந்த மாவீரர்களின் படங்களில் கண்கள் நிலை குத்தி நின்றன.
எப்பாடுபட்டாவது இளைய மகன் அகிலனை ஒரு பொறியியலாளராக்கிப் போட்டன் என்றால் போதும். இந்தக் கட்டை நிம்மதியாகச் சாகும். அவன் இந்த வருடம் ஓ.எல் சோதனை எடுக்கவிருக்கிறான். ஆனால் நான் நினைத்த அளவு படிப்பிலை ஊக்கம் காட்டுகிறானில்லை. கூட்டாளிகளுடன் கூடிக்கொண்டு வெளியில் சுற்றியபடி இருக்கிறான். ஒரு நிமிடம்கூட வீட்டில் தங்குகிறானில்லை. சாப்பாட்டு நேரம் வருவான் அவசர அவசரமாகச் சாப்பிடுவான். பின்னர் கிளம்பிவிடுவான். படுக்கக்கூட வீட்டுக்கு ஒழுங்காக வரமாட்டான். "நேற்று ஏன் தம்பி படுக்கைக்கு வீட்டுக்கு வரேல்லை" என்று தாய் கேட்டால், "நண்பன் ஒருவன் வீட்டில் தங்கி பாடங்கள் கேட்டுப் படித்தனான்” என்கிறான். எனக்கென்றால் ஒன்றும் விளங்கவில்லை.
எல்லாம் தாய் கொடுத்த செல்லம்தான். கடைக்குட்டி என்று மடிக்குள் வைத்து வளர்த்தால் உப்பிடித்தான். பிள்ளைகளில் அன்பு இருக்கவேணும்; செல்லம் கொடுக்கக் கூடாது. தாயிடம் அதட்டிக்கேட்டால் விடிய எழும்பி உழைப்பு உழைப்பு என்று நீர் திரியும் நான்தானே பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியிருக்கு என்கிறாள். நான் உழைப்பிலை ஊக்கமாயிருந்த படியால்தானே இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறன். அதை உணர்ந்தால்தானே!
அகிலனுக்கு படிப்பிலும் ஊக்கமில்லை உழைப்பைப்பற்றியும் சிந்தனையில்லை. எல்லாம் என்ரை கைகால் மடங்கினால்தான் தெரியும்.
இந்த நாளைப் பொடியனை அதட்டிக் கிதட்டிப் பேசினால், இருங்கோ வாறன் என்று கிளம்பி விடுவாங்கள்

எஸ்.வீ. தம்பையா 117
அதெல்லோ பயமாயிருக்கிறது. இவனும் பலதையும் யோசித்துத்தான் அகிலனிட்டை இடக்குமுடக்காய் ஒன்றும் கதைக்கிறதில்லை.
ஸ்கூட்டர் பழக்கப்பட்ட வீதி வழியே ஊர்ந்தது. மனமோ அலைபாய்ந்து மழையில் நனைந்த பஞ்சுப்பொதிபோல கனத்துக் கிடந்தது.
25
திறந்திருந்த கேற்றின் வழியாக ஸ்கூட்டரை லாவகமாகத் திருப்பி செட்டுக்குள் விட்டான்.
ஸ்கூட்டரின் இரைச்சலைக் கேட்டதும், இவன் மனைவி, "குய்யோ முறையோ” எனக் கத்திக் குமுறியவாறு வீட்டு முன் விராந்தையில் உருண்டு புரண்டாள்.
"என்னப்பா! ஏன் அழுது குழறி ஊரைக் கூப்பிடுகிறீர்? என்னதான் நடந்தது சொல்லிப்போட்டு அழுமன்"
"இனி என்னதான் நடக்கவேணும் என்ரை குடியே மூழ்க்கிப் போச்சு நான் கட்டினமனக்கோட்டை எல்லாம தரைமட்டமாய்ப் போச்சுது என்னுடைய கனவெல்லாம் காற்றாய்ப் போனது. இந்தாரும் இந்தக் கடிதத்தைப் படிச்சுப் பாரும்."
அந்த கசங்கிய கடிதத்தை இவனிடம் நீட்டினாள். அக்கடிதத்தை நடுங்கும் கரங்களால் பிரித்துப் படிக்க முயன்றான்.

Page 62
118 நினைவின் அலைகள்
கண்ணின் கருமணிபோல என்னைப் பேணி வளர்த்த ஐயா அம்மாவுக்கு உங்கள் இளைய மகன் அன்புடன் எழுதிக்கொள்வது. நான் ஒரு திடமான முடிவுக்கு வந்துவிட்டேன். உங்களை விட்டுப் பிரிவது எனக்கு மனக் கஷ்டந்தான். இருப்பினும், தயவு செய்து மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்னைத் தேட வேண்டாம், என்னை மன்னித்துவிடுங்கள். தங்களது நல்லாசியை மனப்பூர்வமாக வேண்டுகிறேன்.
இன்றைய நாட்டுச் சூழ்நிலையில் பெற்ற தாய் தந்தை காணி வீடு சொத்து சுகம் என்று எண்ணிப்பார்க்க முடியாது. எமது சொந்த மண்ணின் மீட்சிக்காக என்னை அர்ப்பணிக்க திட சித்தம் பூண்டுள்ளேன். நாட்டுக்காக என்னையே நான் ஆகுதியாக்கத் தயாராகிவிட்டேன். தயவுசெய்து என்னைத் தேடவேண்டாம்.
இப்படிக்கு அன்புமகன் அகிலன்.
அவள் போட்ட கூச்சலில் ஊரே கூடிவிட்டது. கடிதத்தைப் படித்து முடித்ததும் பேயறைந்தவன் போலானான். அகிலனைப் பற்றி எத்தனையோ மனக்கோட்டை கட்டியிருந்தான். எல்லாம் ஒரு கணத்தில் தவிடுபொடியாகிவிட்டது. கனவில்கூட தனக்கு இப்படி ஒரு நிலை வருமென நினைத்தும் பார்த்திருக்கமாட்டான். கண்கள் கலங்கின. தான் மனம் கலங்குவதை மனைவி அறியக் கூடாது அவளைத் தேற்றவேண்டும் என்ற
"ஏனப்பா ஒப்பாரிவைத்து ஊரைக் கூப்பிடுகிறீர்! நான் ஒருக்கால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்குப் போய் மூத்த மகனைக் கூட்டிக்கொண்டு, அப்படியே “காம்ப்"புக்குப் போய் விசாரித்துக் கொண்டுவாறன் நீர் ஒண்டுக்கும் யோசி யாதையும்" - எவ்வித பதற்றமுமில்லாமல் சொன்னான்.

எஸ்.வீ. தம்பையா 119
"ஐயோ நான் மாட்டன். என்ரை பிள்ளையைக் காணாமல் ஒரு நிமிசம் கூட நான் உயிரோடை இருக்கமாட்டன். நானும் கூட வாறன்"
"நீர் ஆஸ்பத்திரி வாசலிலை க்த்திக்குழறி ஒப்பாரிவைச்சு என்ரை மகன்ரைமானத்தை வாங்கிப் போடுவீர் நீர் இங்கை இரும். நான் போட்டு நல்ல முடிவோடு வாறன்"
'இல்லை! இல்லை! என்னைத் தடுக்காதையும்' பிடிவாதமாகச் சொன்னாள்.
“ஆஸ்பத்திரிக்கு வாறது சரி. மூச்சுக் கீச்சுக் காட்டக்கூடாது. குழறிக் கூத்தாடி மகனின்ரை மதிப்பைக் கெடுத்துப் போடாதையும்.சரி உந்தச் சேலையை மாற்றிக்கட்டும்"
நடந்து நடந்து கட்டிய சேலையை உரிந்து மாற்றுச் சேலையின் முந்தானையை லாவகமாய் சுழற்றிவிசுக்கி, இடுப்பில் செருகியபடி ஸ்கூட்டரின் பின் கரியரில் அமர்ந்தாள். வழக்கமாய் இடக்குப்பண்ணும் ஸ்கூட்டர், ஒரே மிதியில் உறுமியது. வெறிபிடித்த சிங்கம் போல மண்ணெண்ணெய்ப் புகையைக் கக்கிக்கொண்டு, பலாலி வீதி வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. விசர்நாயின் காதைத் திருகுவது போல பலம் கொண்ட மட்டும் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.
நினைவில் ஒரு பொறி “பளிச்”சென மின்னியது. அகிலனிடம் அதிக வாஞ்சை காட்டிய அடுத்த வீட்டில் வசித்த மயில்வாகனத்தார். அண்மையில் சுன்னாகம் சந்தைக்குப் போய் வரும் வழியில் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் வைத்து "ஹெலி"யால் சுடப்பட்டு மண்டை சிதறி அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அகிலனை வெகுவாகப் பாதித்தது. அன்று அவன் அழுதுவிட்ட அழுகை. அவனது அழுகையை அடக்குவதே பெரும் கஷ்டமாய்ப் போச்சு, "அப்பு அப்பு" என வாய் புசத்தி மயங்கி விழுந்தான்.

Page 63
20 நினைவின் அலைகள்
இப்படிப்பட்ட தீர்மானத்துக்கு அன்றே முடிசெய்து விட்டானோ! அன்றிலிருந்து ஒருவரிடமும் கதை காரியமில்லை. சிந்தனை வசப்பட்டவனாய் காணப்பட்டான். சிரிப்பு, கலகலப்பு அவனைவிட்டு அன்றே போய்விட்டது.
-ஸ்கூட்டர் தொடர்ந்து விரைந்தது. உரும்பராய் இந்துக் கல்லூரியைக் கடந்து போகும்போது ஹெலிகாப்டரின் இரைச்சல் மெது மெதுவாகக் கேட்கத் தொடங்கியது. சடக்கென பின்னால் திருப்பிப்பார்த்தவள் "இஞ்சேரும் பின்னாலை ஹெலி ஒண்டு வருகுது. உதிலை சிவன் வீதியாலை திருப்பும்" பதட்டத்துடன் சொன்னாள், அவள். "ஹெலியும் மயிரும் போடி போ! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு எத்தனை நாளைக்கு பயந்து பயந்து சீவிக்கிறது? செத்தா இரண்டு பேரும் ஒருமிக்கச்சாவம்"
கற்பகப் பிள்ளையார் கோவிலைக் கடக்கும்போது "பிக்கப்" வாகனம் ஒன்று மின்னல் வேகத்தில் இவர்களது ஸ்கூட்டரைத் தாண்டி முன்னேறியது.
அரசினர் "டிஸ்பென்ஸரி”யை அண்மித்தபோது, "பட்.பட்படபட" என்ற வெடிச்சத்தங்கள்; சன்னங்கள் அங்குமிங்கும் சிதறிப் பரவின.
"டும்.டும்.டு.மீர்” - இடியோசை போன்ற பேரிரைச்சல், வானந்தான் பிய்த்துக்கொண்டு வீழ்ந்ததோ!
ஸ்கூட்டர் மெல்லச் சரிந்தது.


Page 64


Page 65
நினைவின்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்ை எழுதக்கூடிய அரிய தகவல்களும் போய்க் கிடக்கின்றன. அதற்கு உத கரரிடமும் வையான பல த
தானப் படிப்பவர்கள் தெரிந்து
இலக்கிய உலகில் சரிதவியலுக்கு நல்லதொரு சான்றாக பேராசிரியர் சேரியும் நூவைக் குறிப்பிட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்
தமிழிலக்கிய உலகினைப் பொ பெருமளவில் எகவைக்கப்படா வருகிறது. இந்த வகையில் இந்த ரு வகிக்கின்றது.
ஆசிரியர் எஸ்.வி தம்பையாவின் சிங்கப்பூர் தமிழ் முரசில் ெ கோலாலம்பூர் தமிழ்நேசன், சிறுகதைகள் வெளிவந்தன 1960-ல் இலங்கைப் பத்திரிகைகளில் சிறுக கடவிற் கலந்தது கண்னனீர்
வெளிவந்தது. -
-ராஜபது சு
重、

அலைகள்
கயிலும் ஒவ்வொரு புத்தகம் சம்பவங்களும் பொதிந்து ாரணமாக இந்தச் சரிதவியல் கவல்கள் இருப்பதை இந்த
iu:
- டொமினிக் ஜீவா,
முக்கிய இடமுண்டு இதற்கு சித்தலிங்கையாவின் ஊரும் வாம். இந்நூல் வேறுபல பெற்று வெளியிடப்பட்டது.
'த்தி மட்டில் சரிதவியல் த துறையாகவே இருந்து
ல் ஒரு முக்கிய இடத்தினை
ன் முதற் சிறுகதை 1955-ல் எளிவந்தது தொடர்ந்து பொன்னி பின் இவரது இலங்கைக்குத் திரும்பியதும் வெளிவந்தன. என்ற சிறுகதைத் தொகுதி
ாந்தன் முன் துயி விருந்து
- ܐ - ܒܢܝ ܚܐ