கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொலை இடங்கட்குச் செல்வழிகள்

Page 1
\ \ := |N *
察瞰
• !=) -
别|
四 图 从
~). *~). **----_ _\ "_"+
3) cĘ
 


Page 2

தொலையிடங்கட்குச் செல்வழிகள்
ROADS TO FAR PLACES

Page 3
இது
ROADS TO FAR PLACES
by
ROY CHAPMAN ANDREWS
என்னும் ஆங்கில நூலின்
தமிழாக்கம்

தொலையிடங்கட்குச் செல்வழிகள்
றேய் சாப்மன் அன்ட்றுாஸ்
மார்க்க நிறுவகம் 6 I இசிப்பத்தன மாவத்தை கொழும்பு. 5

Page 4
முதற்பதிப்பு: 1980
முழு உரிமையும் உறுதி செய்யப்பட்டது
இந் நூலில் எப்பகுதியேனும் எடுத்தாள வேண்டில் மார்க்க நிறுவகத்திட
மிருந்து அனுமதி பெறல் வேண்டும்
மொழிப்பெயர்ப்பும் வெளியீடும்
மார்க்க நிறுவகம் 61 இசிப்பத்தன மாவத்தை கொழும்பு 5
தெஹிவளையில் உள்ள திஸ்ஸர அச்சகத்தில் அச்சிடப்பட்டது

சிறுவர் நூல் மொழிபெயர்ப்புத் திட்டம்
இத்திட்டத்தின் படி 9 இலிருந்து 11 வயதுவரையான சிறுவர், 12 இலிருந்து 15 வயதுவரையான சிறுவர் என இரு வயதுத் தொகுதியினர்க்காக நூல்கள் மொழிபெயர்த்து வெளியிடப்படு கின்றன. முதல் வயதுத் தொகுதியினர்க்கு 20 நூல்களும் இரண் டாவது தொகுதியினர்க்கு 7 நூல்களும் வெளியிடப்படும். இந் நூல் முதல் வயதுத் தொகுதியினர்க்காம்.
முதலாவது வயதுத் தொகுதியினர்க்குள்ள நூல்களில், விஞ் ஞான வரிசைகளில் 16 சிறு நூல்களும், வரலாற்றில் 2 நூல் களும், "மனிதனும் அவன் சூழலும்' 'மனித குலத்து முன் னேற்றம்’ என்ற தலைப்புகளில் ஒவ்வொன்றும் 100 கேள்வி களும் விடைகளும் கொண்ட 2 நூல்களும் அடங்கும்.
இத்திட்டம் மாணவரிடை நூல் வாசிக்கும் பழக்கத்தைச் செம் மைப்படுத்துவதற்காக வாம். இது பாடசாலையில் படிப்பிக்கும் பாடப்பொருட்களுடன் நேர்த்தொடர்புடையதன்று. ஆயின் பாடங்களுக்கு உவந்த துணை நூல்களை இத்திட்டம் அளிக்கின் sigil.
மார்க்க நிறுவகம் வகுத்த இத்திட்டத்திற்கு அனைத்துலக அபி விருத்தி ஒத்துழைப்புக்கான நெதலந்து அமைப்பு (NOVIB) நிதி உதவி அளித்துள்ளது. இதனை இந்நிறுவகம் நன்றியுடன் வரவேற்கின்றது.

Page 5

உள்ளுறை
இந்நூலைப்பற்றி
1. முதலாம் பாகம் 1
நான் ஒரு வழியைக் காண்பேன் அல்லது ஒரு வழியை அமைப்பேன்’
2. இரண்டாம் பாகம் 51
ஆபிரிக்காவில் அக்லி
3. மூன்றம் பாகம் 97
தொலையிடங்கட்குச் செல்வழிகள்

Page 6

இந்நூலைப் பற்றி
இந்நூல் மூவர் வாழ்வினை விவரிக்கின்றது. மூவருள் நான் ஒருவன், மற்றையோர் ருெ பேட் இ பியரி, சாள்ஸ் அக்லி என்பார் ஆவர். கதைகள் அவை நிகழ்ந்த நாடுகளைப் போல் வேறு பட்டன; எனினும் ஒரு வகையில் ஒத்தவை. நாம் எல்லோரும் நாடு ஆய்வினர். பியரி புவியியலிலும், அக்லி இயற்கை வர லாற்றிலும், நான் விஞ்ஞானத்திலும் ஆர்வம் கொண்டிருந் தோம். எங்கள் ஒவ்வொரு வரையும் ஒரு பெரும் கருத்து உள் நின்று துரத்தியது. எம் கருத்திற்கியைய நாம் ஒழுகாதிருந்திருப் பின் நாம் எம் வாழ்வில் வெற்றி பெறவில்லை என்றே கருதி யிருப்போம். -
பியரி வடதுருவத்தை அடைய எண்ணினன். அக்லியோ ஆபிரிக்க விலங்குகளை அவை தம் அழகுடன் அமெரிக்கா கொண்டு வர அவாவினன். நானே மத்திய ஆசியாவை ஒரு பெரு விஞ்ஞான ஆய்குழுவுடன் ஆராய விரும்பினேன்.
எங்கள் பெற்றேர் வறியரோ செல்வரோ அல்லர். அவர் எங்களை நாடு ஆய்வாளராக்கக் கருதவில்லை. கட்டிடக்கலைஞர், ஆசிரியர், கமத்தோர் ஆக வளர விரும்பினர். ஆயினும் நாடாய் வாரிடம் அவர் மேற்கொள்ளும் வழியை மேற்கொள்ளத் தூண் டும் ஓர் சக்தி இருந்தது.
பியரி அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்தார். அக்லியும் நானும் அரும்பொருட்சாலை வேலைக்குச் சென்ருேம். வேலை தொடங்கவும் நாங்கள் ஒவ்வொரு வரும் ஆயத்தம் செய்வதும் அதை விருத்தி செய்வதுமாக இருந்தோம். எங்கள் ஒவ்வொரு வரிலும் கருத்தொன்று புகுந்து உருப்பெற்றது.
எம் ஒவ்வொருவருக்கும் அவரவர் திட்டத்திற்கு வேண்டிய பணம் பெறுவது கடினமாயிருந்தது. சிலை வேளைகளில் நாம் துயர்கொண்டு எம் கனவு பலியாது என்று கருதுவோம். ஒவ் வொருவரும் தாம் அவாவிய நாடுகட்குப் போகவும் அவரவர் ஆர்வம் இன்னும் கிளர்ந்தது.
பியரியின் வாழ்வு மிகக் கடினமாயிருந்தது. வடதுருவத்தை அடையுமுன் அவன் ஆக்டிக்கில் 23 ஆண்டுகள் கழித்தான். பல்காலும் அவன் மனைவி மக்களைப் பிரிந்திருந்தான். சில வேளை களில் வாழ்வு மனிதன் உடம்பிற்கு மிகவும் கடினமாயிருந்தது.
ix

Page 7
ஆயின் பியரி துணிந்த கருமத்தைக் கைவிட நினைக்கவில்லை. இறுதியில் அவன் வீடு சென்று தன் வெற்றியைக் காணக் கூடியவனுயிருந்தான், -
நியுயோக் நகரின் இயற்கை வரலாற்று அரும்பொருட் காட்சிச்சாலையில் ஓர் ஆபிரிக்க மண்டபம் எழுப்ப அக்லி கனக் கண் டான். அவன் தன் வேலையில் ஓய்ந்ததில்லை. ஆபிரிக்க மலைச் சிகரம் ஒன்றில் அவன் மெலிவாலும் கடின வேலையாலும் உயிரிழந்தான். ஆயினும் தன் கனவு ந ைவானதென்பதை அவன் அறிந்திருந்தான்.
நான் கோபிப்பாலைவனம் சென்றேன். உலகத்துப் பெரிய உலர் பாலைவனங்களுள் அதுவும் ஒன்று. சிலவேளை குளிரான, சில வேளை வெப்பமான கொடிய கடும்புயல்கள் நிறைந்த பூமி அது. அங்கு நீரோ உயிரோ கிடையா, ஆயினும் தேடி வரு வார்க்கு அப்பூமி அரிய கொடைகள் நல்கியது.
இனிய மனையை விட்டுக் கொடிய நிலங்கள் ஆராய மனி தனைத் தூண்டும் விசித்திர சக்தி யாதோ? இயற்கையிலும் துணிகரச் செயல்களிலும் கொள்ளும் வாஞ்சை ஒரு காரணம்; மற்றக் காரணம் புதியது கற்கும் விருப்பம். நாடாய்வானுக்கு துணிந்த வாழ்வு ஒரு தீப்பிழம்பு போன்றது. அதின்றி அவன் வாழ்வு வறியதாகும். அதுவரை அறியப்படா நிலங்கள் காண் பதும், புதியன பயிலலும் பிறவிடங்களில் பெற முடியா ஒரு வளத்தை வாழ்விற்கு அளிக்கிறது. இயற்கையில் அவன் தன்னை இனங்கண்டு உண்மையையும் இன்பத்தையும் உணர்கின்றன். மிகச் சிலரே இக்கருத்துக்களை விளங்குபவர், ஆயின் இக் கருத்துக்கள் மனித குலமளவு பழையவை. ஆதி மனிதன் ஒர் ஆய்வாளனே. அவன் புதிய வேட்டை நிலங்களையும் பிற பள்ளத் தாக்குகளையும் கண்டுபிடித்தான். அதன் பேருய் இன்று உலகம் முழுவதும் பெருமளவில் அறியப்பட்டுள்ளது; மனிதன் நிலம் கடல், காற்று மூன்றிற்கும் அதிபதியாயுளன்.
காலால் நடந்து சென்றதும், விலங்குகளில் ஊர்ந்து சென் றதுமான மந்த பயணக் காலம் மறைந்தது. நாடாய்வார் இன்று விமானத்திலோ காரிலோ செல்கின்றனர். நாடாய்வார் போ காத இடங்கள் இன்று உலகில் மிகச் சிலவே.
ஆயின் நாடாய்வு முடிவுற்றது என்பதன்று. பிரச்சினைகளும் வழிவகைகளும் மாறியுள; அம் மட்டே. மனித வாழ்வை வளம் படுத்த பூமியைப் பற்றி அறிய வேண்டியன இன்னும் பல உள. வளிக்கு அப்பாலும் கடற் கீழும் ஆய்வதற்குப் பல பதிய உலகு கள் உள. அவை பற்றிய செய்திகளை அறியும் வரை மனிதன் ஒயான். -

முதலாம் பாகம்
* நான் ஒரு வழியைக் காண்பேன்
அல்லது ஒரு வழியை அமைப்பேன்’

Page 8

பகுதி !
பூமியில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு யாவும் ஒன்ருகிய ஓரிடத்தில் 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆந் திகதியன்று ருெபேட் ஈ. பியரி நின்றன். அவ்விடத்தை அடைவதற்காக அவன் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரும்பாடு பட்டான். அம் முயற்சியை அடுத்து தன் மனைவி மக்களை மீண்டும் காணப்போவ தில்லை எனும் தோரணையில் ஆண்டுதோறும் அவர்களுக்குப் பிரியாவிடை கூறிக்கொண்டும் வந்திருந்தான். குளிரும், பனிக் கட்டிகளும் நிறைந்த பிரதேசத்தில் பசியினல் வாடிக் குளிரினல் அவன் துன்புற்றன். அவ்வாரு ன கடின வாழ்க்கை அவனுடைய உடலுக்கும் உள்ளத்திற்கும் தாங்கொணுத கஷ்டங்களை அளித் தது. ஆயினும், தான் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை அவனை உந்தித் தள்ளியது.
மிகவும் துயருற்ற தருணங்களிலும் அவன் தன் முயற்சி யைக் கைவிட விரும்பவில்லை. நம்பிக்கையிழந்து, பணியால் மரத்த பாதங்களினல் ஏற்பட்ட பெரும் வேதனையையும் தாங் கிக் கொண்டு குளிர் படர்ந்த கூடாரத்தில் தங்கியிருந்த போதும் *நான் ஒரு வழியைக் காண்பேன், அல்லது ஒரு வழியை அமைப் பேன்' எனும் வார்த்தைகளை அவன் அக்கூடாரத்தின் சுவரில் எழுதினன். r
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்தோபர் கொலம்ப சுக்குப் பின்னர் எந்தவொரு நாடு காண் பயணியும், ருெபேட் ஈ. பியரியைப் போன்று தனது எண்ணக் கருத்தில் அத்துணை உறுதி கொண்டிருந்ததோ அன்றி அதற்காக அத்துணை துன்பம் பட்டதோ இல்லை. உலகின் உச்சியில் நின்று அந்த இளவேனிற் கால நாளில் தனது குறிப்புப் புத்தகத்தில் பின்வருமாறு பியரி
3

Page 9
எழுதினன். 'ஈற்றில் வடதுருவத்தை அடைந்தேன் . . . . . . இஃது எனது 20 ஆண்டுக் கனவு . . . . . நான் இச்சாதனையை யிட்டு நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை . . . . அவ்வளவு எளிதானதாக இப்போ இது தோன்றுகிறது.”* ፩ ̊
துருவத்தில் 30 மணி நேரம் சூரியனுடைய நிலைகளை ஆராய்ந்த பின்னர் வீட்டை நோக்கித் தனது பயணத்தை பியரி மேற்கொண்டான். 15 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் நிலத்தில் அடி பதித்தான். மறுநாள் கொலம்பியாவிலுள்ள தனது கூடாரத்தை அடைந்தான். இரண்டு நாட்கள் அங்கு உறங்கிய பின் 92 மைல் தூரத்தில் பணியில் உறைந்து கிடந்த ரூஸ்வெல்ட் எனும் தனது கப்பலை சென்றடைந்தான். கப்பல் தென்முகமாக தாய் நாடு நோக்கிச் சென்றது. அங்கு தாம் எடுத்த கருமம் சிறப்பாக முடிந்ததையிட்டு நல்வார்த்தைகள் கிடைக்கும் என்று யாவரும் எதிர்பார்த்தனர்.
ஆனல், கிறீன்லாந்தைச் சேர்ந்ததும், முதலாவது கிரா மத்திலேயே மனக் குழப்பந்தரும் செய்தியை அவர்கள் கேட்க
ஏதுவாயிற்று. வடதுருவத்தில் பயணம் செய்வதாக பியரி அறிந்
திருந்த பிரெடரிக் ஏ. குக் எனும் டாக்டர் இளவேனிற்கால ஆரம்பத்திலேயே அக்கிராமத்திற்குத் திரும்பிவிட்டார் என எஸ்கிமோக்கள் அவர்களுக்குக் கூறினர். தான் வடக்கே அதிதூரம் சென்றிருந்ததாக குக் சொல்லியிருந்தான். ஆனல், எஸ்கிமோக்கள் அவன் கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை. 'அது உண்மையன்று, நமது ஆட்களில் இருவர் அவனுடன் இருந் தனர்' என்றனர்.
பின்னர் ஈற்ரு எனும் நகரில் குக்குடன் சென்று திரும்பிய இற்றுக்கு, அப்பிலா ஆகிய இரு எஸ்கிமோக்களுடனும் பியரி கதைத் தான், அவர்கள் இரு நாட்களாக கடற் பணியில் மட்டுமே தாம் உலாவி வந்ததாகவும், தம் பார்வையிலிருந்து நிலம் மறைவுறும் வகையில் தாம் அதி தூரம் செல்லவில்லையென்றும் கூறினர். குக் பயன்படுத்திய பணியில் சறுக்கிச் செல்லும் வண்டி கள் இரண்டினில் ஒன்றையும் பியரி சோதித்ததிலிருந்து கெட்டி யான, நொறுங்கிய கடற்பனியில் நெடுந்தூரம் அது செல்ல வில்லை என்பதையும் அவன் அறிந்து கொண்டான்.
"ரூஸ்வெல்ட்' கப்பல் இந்தியத் துறைமுகமான லப்பிர டோரை அடைந்த பொழுதே பியரி மீண்டும் உலகத்துடன்
தொடர்பு கொண்டான். குக் டென்மார்க் போகிருன் எனவும்,
4.

1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆந் தேதி-அதாவது பியரிக்கு ராண்டுக்கு முன்னதாகவே - வடதுருவத்தைத் தான் அடைந்து ட்டதாகப் பொது மக்களிடம் குக் கூறிவிட்டான் என்பதாகவும் பியரி அறியலானன். குக் அவ்வாரு ன ஒரு கதையைத் துணிந்து சொல்லுவான் என்பதை பியரியால் நம்பமுடியவில்லை. அவன் 1891 இல் பியரியுடன் ஒரு நீண்ட பயணத்தில் பங்கு பற்றியு மிருந்தான். குக்கின் வார்த்தைகளை உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று பியரியும் அவனது ஆட்களும் நம்பவில்லை. குக்கின் கதையை நம்பக்கூடாதென்றும், அவன் வடக்கு நோக்கி ஒரு குறும் பயணத்தை மேற்கொண்டா னன்றி. நிலம் மறைவுறும் வரை செல்லவில்லையென்று அவனுடன் சென்று வந்த இரு எஸ்கி மோக்கள் கூறினர் என்றும் பியரி உடனடியாகப் பத்திரிகை களுக்குத் தெரிவித்தான்.
இவ்வார்த்தைகளினல் குக்கிற்கு விளைவித்த துன்பத்தைக் காட்டிலும் அதிக துன்பத்தை பியரி தானே தனக்கு விளைவித்
தான.
உலகம் ஏமாற்றப்படுகின்றது
குக்கின் கதை வேறெந்த ஒரு மனிதனும் இதற்கு முன்னர் ச் செய்ததிலும் பார்க்க உலகத்தினரைப் பெரிதும் ஏமாற்றியது எனலாம். அக்கதை துணிச்சலான நாடுகாண் பயணியான பியரி யின் வாழ்க்கையைத் துயரத்தில் ஆழ்த்தியது. அது தென் துருவத்திற்கு ஒரு விசேட பயணத்தை மேற்கொள்வதிலிருந்தும் அவனைத் தடுத்தது. மேலும், பல ஆண்டுகளாக எந்த ஒரு நாடு காண் பயணியும் தன் சொந்த கண்டுபிடிப்புக்களைப் பற்றிக் கூறுவதைப் பொது மக்கள் நம்பமுடியாதும் தவிர்த்தது.
அமெரிக்காவில் மிக முக்கியமான பத்திரிகைகள் குக் கூறி யதை அல்லது பியரி கூறியதை ஏற்றுக் கொண்டு தாம் தாம் நம்பிக்கை வைத்திருந்த நாடுகாண் பயணிக்காகப் போராடின. இவ்விடயம் கடைகளிலும், கழகங்களிலும், அரசாங்க அலுவல கங்களிலும் விவாதிக்கப்பட்டது. அது நட்புறவுகள் முறிந்து போகவும், குடும்பங்கள் பிரிவு கொள்ளவும் வழியை வகுத்தது எனலாம்.

Page 10
உலகத்துப் பிரசித்தி பெற்ற புவியியலாளர்கள் குக்கினது கதையைப் பிழையென்று நிரூபித்ததையடுத்து மேலும் ட ரச்சி கள் உருவாயின. குக்கினது கதையை நம்பிய பத்திரிகைகள் உண்மையையிட்டு எவ்வித அறிக்கைகளையும் விடுக்கவில்லை அன்றி, உண்மையை வெளியிடுமிடத்தும் பொதுமக்களின் கவ னத்துக்குள்ளாகாத முறையில் அது பற்றிப் பிரசுரித்தன. பொதுவாக நாடுகாண் பயணி ஒருவன் வெளியிடவேண்டிய அறிக்கைகளின் தன்மையையிட்டு மக்கள் அறிந்திருக்கவில்லை. அது பற்றிய அக்கறையை அவர்கள் காட்டியதுமில்லை. அவர்கள் தாம் எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையை எடுத்துக் கொண்டு உண்மைகள் என்ன வென்பதைப்பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆயினும் நாடுகாண் பயணிகளையிட்டு சர்ச்சை பொது மக்களிடையே பெரிதும் தீவிரம் அடைந்தது.
மக்கள் குக்கை ஏன் நம்பினர்
அன்று அத்தகைய விசித்திரமான பொது உணர்ச்சி நில வியதைப்பற்றி 50 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று நினைத்துப் பார்ப்பது நன்று. 300 ஆண்டுகளாக பல நாடுகளைச் சேர்ந்த நாடுகாண் பயணிகள் வடதுருவத்தை அடைவதற்கு முயன்று வந்திருந்தனர். அமெரிக்கர் நம்பிக்கை வைத்திருந்த ஒரே மனி. தன் பியரி மட்டுமே. அவன் ஒரு பிரசித்தி பெற்ற நாடுகாண் பயணி. அவனது பயணங்களைப் பற்றிய அறிக்கைகள் பரக்க வெளியிடப்பட்டன. பொதுமக்கள் குக்கையிட்டு அதிகம் அறிந் திருக்கவில்லை.
'சிறிய மனிதனுகிய” குக் பிரசாரங்களின்றி தனியாக ஆக்டிக் பிரதேசம் சென்று துருவத்தை ஒரே பருவகாலத்தில் அடைந்து திரும்பி வருவதைப் பொதுமக்கள் விரும்பினர். எனி னும் அச்சாதனையைப் பூர்த்தி செய்வதற்கு பியரி 20 ஆண்டு களாக முயற்சி கொண்டுள்ளான்.
பத்திரிகைகளுக்கு குக்கைப்பற்றித்தான் கூறியதையிட்டு 19u? பின்னர் வருத்தமடைந்தான். இவ்விடயத்தைத் தொடுத்து பியரி பொது மக்களின் கவனத்தை ஈர்க்காதிருப் பின் குக்கே தன் கதையைப் பாழாக்கியிருப்பன். அவன் தனது பயணத்தைப்பற்றிய முழுமையான குறிப்புகளை வைத்திருக்கவில்லை. பின்னர் அவனுடைய அறிக்கைகள் உண்மை யற்றவை யென்பது ஊர்ச்சிதமாயிற்று.
6

ஆனல், பியரியின் நடவடிக்கைகள் மனிதனுக்கு இயல்பான வையே. அவன் வட துருவத்தை அடைய வேண்டுமென்ற முயற்சி யில் 23 ஆண்டுகளாகத் துன்பம் அனுபவித்துக் கடும் உழைப் ப்ையும் மேற்கொண்டிருந்தான். அதற்கான புகழை வேருெரு வன் பெறுவது அவனுக்கு மிகவும் மன இடரைக் கொடுத்தது.
பியரி பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கைகள், அவன் தோல்வியைக் கண்டவன் என்றும் வேருெருவன் அவனிலும் சிறந்த நாடுகாண் பயணி என்பதை ஏற்றுக்கொள்வதற்கு அவன் விரும்பவில்லை என்றும் பொது மக்கள் கருத்துக் கொள்வதற்கு அனுகூலமாயின. அதற்கு எதிராக குக் பியரியின் செயலைத் தனக் குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டான். 'அனைவருக்கும் போதுமான புகழ் உண்டு' என்பதே அவனது பதிலுரை. வெற்றியினல் பெருமிதம் கொள்பவனுயினும் ஒரு சாதாரண சிறிய மனிதனைப் போன்று குக் நடித்தான்.
கொப்பன்ஹேகனுக்கு வியக்கத்தக்க ஒரு விஜயத்தை மேற் கொண்டு அங்கு, டென்மார்க் மன்னனும் மக்களும் வழங்கிய கெளரவத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், குக் அமெரிக்காவுக்கு கடல் வழி சென்ரு ன். நாடெங்கும் பல பெரும் கூட்டங்களில் பேசினன். அதற்கு அவனுக்குப் பெருந்தொகைப் பணம் கொடுக் கப்பட்டது. தன்னை நன்ருக விளம்பரம் செய்யவல்ல குக், மக்கள் தன்னிடமிருந்து எதனை அறிந்து கொள்ள விரும்பினர் கள் என்பதனைத் தெரிந்தறிந்து அதனை அவர்களுக்குச் சொன் ஞன். தூர வடக்கில் வாழ்க்கை மிகவும் கடினமானதென் றும், மனித உயிருக்கே ஆபத்தான அநுபவங்கள் அங்கு நேர்ந் தனவென்றும், அவன் கூறினன். அவன் எவ்வகையான குறிப் புக்களையும் வழங்கவில்லை என்பது பற்றி எவரும் கவலைப்பட வில்லை. அவனின் வாய் மொழியே முற்றன அறிக்கையாக அமைந்தது.
பியிரியின் எதிரிகள்
ஆக்டிக்கிலிருந்து பியரி திரும்பியதும் நேரடியாக மெய்னி லுள்ள தனது கோடைக்கால இல்லத்திற்குச் சென்ருன், பிரபல புவியியலாளர்கள் அவனுடைய குறிப்புகளை ஆராயும் வரை அவன் அங்கே தங்கியிருந்தான். இதே, வேளையில் குக் தனது கதைகளைத் துரிதமாகப் பரவச் செய்தான். s
7

Page 11
அதே கால வேளையில் பியரி பொதுமக்களின் முன் ஒரு தடவை மட்டுமே தோன்றினன். அது, கடற்படை வரலாற்றில் பிரசித்தி பெற்ற ஒருநாளைக் குறிக்குமுகமாகப் பெயர் கொண் "ரூஸ்வெல்ட்' என்னும் தனது கப்பலில் தோன்றிய நாளாகும் பியரியும் அவனது சகாக்களும் கப்பலில் நின்று அமைதியாகக் காட்சியளித்தபோது, அவ்வழியே சென்ற படகுகளிலிருந்த குக் கினது நண்பர்கள் அவர்களைப் பழித்து இகழ்ந்தனர். "ரூஸ் வெல்ட்' இல் இருந்த எவரும் அவர்களுக்குப்பதிற் சொற்கள் வழங்க அனுமதிக்கப்படவில்லை.
நாடு காண் பயணிகளிடையேயும் புவியியலாளர்களுக் கிடையேயும் பியரிக்குப் பல எதிரிகள் இருந்தனர். அவர்கள்
குக் கூறியதை ஏற்றுக் கொள்வதற்குப தாம் விரும்பாத பியரி
யைப் புண் படுத்தவும் தயாராயிருந்தனர். அவர்களுள் பலர் தோல்வி கண்ட விடயங்களில் பியரி வெற்றிசளை ஈட்டியிருந் தான். அமெரிக்காவில் அவனுக்கு மிகப் பிரதான எதிரிகளாக இருந்தவர்கள் ஜெனரல் ஏ. டபிள்யு. எஸ். கிறீலி என்பவனும் கடற்படைத் தளபதி டபிள்யூ. எஸ். ஷிலே என்பவனுமாவார்.
1883 இல் ஆக்டிக் அனுபவமற்ற இளம் அலுவலரான கிறிலி, லேடி பிருங்கிலின் விரிகுடாக் கடற்பயணத்திற்குத் தலைமை வகித் தான். அப்பயணம் ஒரு பயங்கரமான நிகழ்ச்சியாக முடிவுற்றது,
அந்நெடும் பயணத்தில் பங்கு கொண்டோர் மேலதிக உண வுப் பொருட்களுடன் கப்பல் ஒன்று வருமென்று காத்திருந்தனர். ஆனல் எதிர்பார்த்தபடி கப்பல் வராததால் ஆக்டிக் குளிரில் தாம் இறக்க நேரிடும் என்று அஞ்சினர். அச்சத்தால் தம் நிலை மறந்த அவர்கள் போட் கொங்கரிலிருந்த தம் முகாமை நிலையத் தைக் கைவிட்டு, எல்ல ஸ்மியர் தீவுக்கரையிலிருந்த கேப்சபை னுக்கு தெற்கு நோக்கி விரைந்தனர். போதிய அளவில் உணவுப் பொருட்களைத் தம்முடன் அவர்கள் எடுத்துச் செல்லாததன் கார ணத்தால் அவர்களுள் பலர் பசியால் மடிந்தனர். இறந்தவர் களின் சடலங்களை உயிரோடிருந்தவர் உண்டனர் என்றும் சொல் லப்பட்டது. ஷிலேயின் தலைமையில் செலுத்தப்பட்ட கப்பல் அவர் சளைக் காப்பதற்கு வந்தபோது 24 பேரில் எழுவர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.
பியரி தனது நெடும் பயணங்களில் ஒன்றைப்பற்றி எழுதி யுள்ள குறிப்புகளில், கேப் சபைனிலுள்ள கிறீலியின் பட்டினி
8
 

முகாமைப் பற்றிக் கூறியதாவது: 1896 ஒகஸ்டில் கண்களை மறைக்க பனிப்புயல் வீசிய நேரத்தில் நான் முதன்முறையாக
வ்விடத்தைக் கண்டேன். அன்றைய தினம் எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் . அங்கு சென்றவர்கள் எவ்வாரு ன இடரை அனுபவித்திருக்கக்கூடும் என்று நான் ஊகித்தபோது எனக்கு ஏற்பட்ட துயரமும் வெறுப் பும் என் மனதில் படியலாயின. இதில் மிகத் துயரமான கட்டம் என்னவெனில் அவ்வளவு துன்பங்களையும் அவர்கள் அனுபவிக் கும் அவசியம் இருக்கவில்லை என்பதை நான் தெரிந்து கொண்ட தேயாகும் . நானும் எனது சகாக்களும் ஆக்டிக்கில் குளிரால் வாடி பசியால் இறந்துவிடுமளவுக்குத் துயருற்றேம். ஆங்கு குளிரிலிருந்தும் பட்டினியிலிருந்தும் தப்புவது அசாத்தியம், ஆனல் கேப் சடைனில் ஏற்பட்ட துன்பத்தைத் தவிர்த்திருக்க முடியும். அங்கு இடம்பெற்ற சம்பவம் அமெரிக்க ஆக்டிக் நாடு காண் பயண வரலாற்றினில் பெரும் கதையாகத் திகழ்கின்றது.
பியரி உண்மையையே கூறினன். வனவிலங்குகளை எங்கு கண்டுகொள்ளலாமென்றும் அவற்றினை எவ்வாறு கைப்பற்றலா மென்று மட்டும் கிறீலி அறிந்திருப்பானபின் அவற்றினை அவன் பெற்றிருப்பான், அவனுடைய ஆட்கள் உணவைப் பெற்றிருக்க லாம். போட்கொங்கருக்கு மீண்டும் போயிருக்கலாம். இவ் ரு ன பியரியின் கூற்றுகள் கிறீலியை அவனுடைய கடும் எதிரி யாக மாற்றின. அன்றியும், ஆக்டிக் சமுத்திரத்தில் நிலத்தைக் கண், டு கொண்டதாகக் கிறீலி நினைத்தான். அந்த இடத்திற்குத் தனது உயிரைக் காப்பாற்றியவனைக் கெளரவிக்கும் பெருமை செய்யும் வகையில் 'விலி நிலம்' என்று அவன் பெயரிட்டான். ஆனல் அஃது ஒரு நில மன்று என்பதைப் பியரியின் நாடுகாண் பயணங்கள் நிரூபித்தன. பியரி நிறுவிய அக்கருத்து சரி யானது என்பதை ஏனைய நாடுகாண் பயணிகள் பின்னர் எடுத் துரைத்தபோதிலும், பியரி வெளியிட்டதற்காக அவன் மேல் எக்காலமும் கிறீலி வெறுப்புக் கொண்டான்.
கிறிலி செல்வாக்கு வாய்ந்தவன். பியரிக்கு எதிரான போராட்ட முயற்சியில் கடும் ஆர்வத்தை அவன் காட்டினன். குக்கினது கட்டுக்கதைகளுக்கு எதிராக பியரி ஒருபோதும் போராடவில்லை. அக்கதைகள் உண்மையானவையல்ல என்ப தைக் காலம் நிரூபித்தது. ஆயினும், பியரி இன்னும் மனம் வருந்தியவனுகவே யிருந்தான். ஆக்டிக்கில் 23 ஆண்டுகாலமாக மனித முயற்சிக்கும் மேம்பட்ட வகையில் அவன் கஷ்டப்பட்டும்

Page 12
அதன் பின்னர் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக அவனது பிற்கால வாழ்வு துயரத்துக்குள்ளானது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், திருப்பிக் கொடுக்க முடியாத ஒரு பொருள் ಶ್ರೆ? மிருந்து எடுக்கப்பட்டுவிட்டது என்று ஒரு பத்திரிகை கூறியது. அதுஎன்னவெனில் ‘வடதுருவத்தைக் கண்டுபிடித்தற்கான பெரு மகிழ்ச்சியை ஒருபோதும் அவன் அனுபவிக்க முடியாது போயிற்று' என்பது.
பியரியின் ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
பியரியின் வாழ்க்கையை இரு பிரிவுகளாக வகுக்கலாம்: ஒன்று, ஆயத்தஞ் செய்தல், மற்ருெ ன்று செயலில் இறங்குதல். அவன் பென்சில்வேனியாவிலுள்ள கிறேசீன் என்னும் இடத்தில், 1856ஆம் ஆண்டு, மே 6 ஆம் தேதி பிறந்தான். ஆரம்ப நாட்கள் தொட்டே தான் பெற்ற அல்லது செய்து முடித்த ஒவ்வொரு பொருளுக்கும் செயலுக்கும் கடுமையாக உழைக்கவேண்டிய அவ சியம் அவனுக்கு இருந்தது. அவனுடைய குடும்பம் வறியது. மூன்று வயதாக அவன் இருந்தபோதே தன் தந்தையை அவன் இழந்தான். அவன் தாய் தன் சிறிய மகனைத் தன்னுடைய சொந்த மாகாணமாகிய மெய்னுக்கு அழைத்துச் சென்ருள். பியரி தன் னுடைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை அங்கேயே தங்கி யிருந்தான்.
அவன் இயற்கையை மிகவும் விரும்பினன். இறந்த விலங்கு களின் தோல்களுக்குப்பஞ்சு அடையும் கலையைத் (தோற்றச்சு) தானே பயின்று, அவ்வேலையிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு தன் குடும்பத்திற்கு அவன் உதவி வந்தான். எந்த வொரு விளையாட்டினை மேற்கொள்ளவும், சுடுவதற்கும், குதி ரைச் சவாரி செய்யவும், அவனுக்கு ஆற்றல் இருந்தது. ஏழு அல்லது எட்டு மணி நேரத்தில் 25 மைல் தூரம் நடந்து செல்ல - அவனல் முடிந்தது. ஒவ்வொரு கிழமையும் அவன் அவ்வாறு நடந்து வந்தான்.
gp, u li li பாடசாலைப் படிப்பை முடித்த பின் பியரி பெளடுயின் கல்லூரியிற் சேர்ந்தான். தெருக்கள், பாலங்கள் முதலானவற்றைக் கட்டுவதற்கு அவசியமான அறிவியற் கலை யான சிவில் பொறியியலை அவன் கற்றன். தனது இருபதாவது வயதில் பெளடுயின் கல்லூரிப் படிப்பை முடித்தான். அவன் வகுப்பில் இரண்டாவது மாணவனுக விளங்கியதுடன், சிவில் பொறியியற்றுறையில் உயர்தரச் சிறப்பும் பெற்ருன்.
0.

அவன் சிலகாலம் தனது சொந்த ஊருக்கு அருகாமையில் ஒரு பொறியியலாளனுகத் தொழில் புரிந்தான். பின்னர் ஒரு இரு ஆண்டுகள் வாஷிங்டனில் வேலை செய்தான். தனது வேலை யில் மகிழ்ச்சியாக இருந்தானெனினும், நாடுகாண் ஆய்வு செய்ய வேண்டுமென்று உணரத் தொடங்கினன். அவன் பஞமாவைப் பற்றிச் சிந்தித்தான். அங்கே ஒரு கால்வாயை - அதாவது ஒரு சமுத்திரத்திலிருந்து இன்னெரு சமுத்திரத்திற்கு கப்பல்கள் செல்வதற்கான ஒரு நீர் வழியை அமைக்க வேண்டுமென்ற பேச்சு எழுந்தது. நாட்டின் இயல்பையும் பொறியியல் முறையையும் ஆராய்வதற்காக பன மாவை ஆராய வேண்டுமென்று அவன் விரும்பினன். ஆனல், அவனின் அன்னை அவன் அங்கு செல்வதை விரும்பவில்லை. எனவே, அவன் கடற்படையில் சேர்ந்தான்.
அவனின் முதலாவதான கடற்படைவேலை புளோரிடாவில் பிரசித்தி பெற்ற சிவில் பொறியியலாளஞெருவனன மெனேக் கலின் கீழ்க் கொண்டதாகும். வேலையைச் சிறப்பாகச் செய்யும் வழிமுறைகள் பற்றி பியரி கொண்டிருந்த கருத்துக்களை மெனேக் கல் பெரிதும் விரும்பினன். பனமாக் கால்வாய் திட்டமிடல் தொடர்பான சில வேலைகளைச் செய்து வந்த பொறியியலாளர் களுக்குப் பொறுப்பாக மெனேக்கல் நியமிக்கப்பட்டபோது அவன் பியரியைத் தனது பிரதான உதவியாளனுக இருக்கு மாறு கேட்டுக் கொண்டான். அப்போதும், அந்த வெப்பமான பூமியில் வேலை செய்யும் நேரத்திலும், பியரி வடதுருவம் பற்றியே கனவு கண்டு வந்தான் எனலாம்.
நிகராகுவாவில் ஒரு கால்வாய்க்குத் திட்டமிடல்
பியரி தனது குறிப்புப் புத்தகத்தில் கிறிஸ்தோபர் கொலம் பசு கண்ட முதலாவது அமெரிக்க நிலப்பகுதியான சன் சல்வ டோரைத் தான் கண்டது பற்றிக் குறித்தான். கொலம்பசைப் போன்று பிரசித்தி கொள்ள வல்ல வேருெரு மனிதன் இருக்க முடியும் என்று பியரி எழுதினன். கிழக்கு, மேற்கு என்று பகுக்க முடியாத ஓரிடத்தில் நிற்பவனே அதாவது, வடதுருவத்தைக் கண்டறிபவனே அம்மனிதனுக இருப்பான் என்ருன்.
நிகராகுவாவில் மிகக் கடுமையான வேலை செய்ய வேண்டி யிருந்தது. பியரியும் அவனுடைய ஆட்களும் அடர்ந்த காடு களூடாகச் செல்ல வேண்டிய அவசியமிருந்தது. பல தடவை களில் அவர்கள் ஆழமான நீர்வழிகளையும் சேற்றையும் கடந்து
l

Page 13
செல்ல வேண்டியவராயுமிருந்தனர். அவர்களுடைய தலை மட்டத்திற்கிருத்த குழிகளில் அவர்கள் பல தடவைகள் விழுந் தெழும்பினர். பியரி தனது வேலையைத் திறம்படச் செய்தான். ஆகவே, கடற் படையினருக்கு அவனையிட்டு மெனேக்கல் குறிப் பிடும்போது எத்துணை நல்வார்த்தைகளைச் சொல்வதற்கும் தனக் குச் சக்தியில்லையே என்று குறிப்பிட்டான்.
கால்வாயைக் கட்டும் வேலை விரைவிலே ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்தது. பியரி தொடர்ந்தும் வெப்ப நாடுகளிலேயே வேலை செய்வான் எனத் தோன்றிற்று. ஆனல் பியரி வேருெரு தொழிலை மேற்கொள்ளப் பிறந்தவன் எனப்பட்டது. தோற்றத் திலும், அவன் உயரமாகவும் பலம் வாய்ந்த வனகவும், நீலநிறக் கண்களையும், அடர்த்தி குறைந்த தலைமயிரையும் கொண்ட வனயும் காட்சியளித்து வடக்கினைச் சேர்ந்த ஒரு மனிதனைப்
போன்று காணப்பட்டான்.
ஒரு மாலை வாஷிங்டனுக்குப் போயிருந்த வேளையில் பழைய புத்தகக் கடை யொன்றில் கிறீன்லாந்தைப் பற்றிக் கூறிய ஒரு பத்திரிகை அவனது கைகளுக்கு எட்டியது. கேன் எனும் பெயருடைய ஒருவனல் தூர வடக்கைப் பற்றி எழுதப் பெற்ற அருமையான ஒரு புத்தகத்தை, சிறுவனுகத் தான் இருந்தபோது வாசித்துப் பெற்ற அனுபவ உணர்ச்சியை மீண்டும் பெற்றதாக அப்போது பியரி உணர்ந்தான். கிறீன்லாந்தின் விடயம் பற்றித் தான் வாசிக்கக்கூடிய அனைத்தையும் அவன் வாசித்தான். ஆங்கு ஏனைய நாடுகாண் ஆய்வாளர்கள் வெவ் வேறு வித அனுபவங்களைப் பெற்றிருந்தனர் என்பதை அவன் அறிய ஏதுவாயிற்று. எனவே, அவ்விடத்தைப் பற்றிய உண்மை யான நிலைமையைத் தானே கண்டறிய வேண்டுமென அவன் ஆசைப்பட்டான்.
கடந்த நூற்ருண்டு முடிவுறும் தறுவாயில் ஆக்டிக் பகுதி களுள் பெரும்பாலானவை ஆராயப்படாதிருந்தன. கிறீன லாந்து ஒரு தீவுதான? எவ்வளவு பெரியது என்று ஒருவரும் அறியார். அங்கு, சென்ற ஒருசில நாடுகாண் ஆய்வாளர்கள் கட்டியான பனியையும், பெரிய குழிகளையும் உயர்ந்த மலைகளை யும் கண்டனர். கோடை காலத்திலும் அங்கு பெரும் பனிப் புயல்கள் வீசின. பியரி, தான் ஒரு கடற்கரையிலிருந்து மற்ருெரு கடற்கரைக்குச் செல்வதன் மூலம் கிறீன்லாந்தைக் கடக்கும் முதலாவது நபராக் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
12

கிறீன்லாந்துக்கு முதலாவது நெடும் பயணம்-1886
பியரி தனது கடமைகளிலிருந்து சிறிது காலத்திற்கு விலகி யிருப்பதற்குக் கடற்படை அவனுக்கு அனுமதியளித்தது. அவ னுடைய அன்னை கிறீன்லாந்து நெடும் பயணத்திற்காக அவ னுக்கு 500 டொலர் பணம் கொடுத்தாள். இளைஞனன இந் நாடுகாண் ஆய்வாளனைக் கப்பலொன்று டிஸ்கோ தீவுக்கு எடுத் துச் சென்று 1886ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி அங்கு அவனே இறக்கியது. மிருகத் தோலால் அமைந்த வள்ளமொன்று நிலப் பகுதிக்கு அவனைக் கொண்டு சேர்த்தது. அங்கே சிறிய எஸ்கிமோ கிராமமொன்றிற்கு இரண்டாவது தலைமைப் பொறுப்பு வகித்த கிறிஸ்தியன் மெய்காட் என்பவன் பியரியுடன் பனிப்பயணம் செய்வதற்கு உடன்பட்டான்.
முதலாவதாக, மிகத் தடிப்பான பனி உறைவுற்று நீர் மெதுவாக ஊர்ந்து செல்லும் ஒர் ஆற்றின் ஆரம்பப் பகுதிக்கு தம் சறுக்கு வண்டிகளை அவர்கள் கொண்டு சேர்த்தனர். அது கடினமான வேலையெனினும் 1956 அடி உயரமுள்ள அந்த உச்சியை இரு நாட்களில் அவர்கள் அடைந்தனர். கிழக்குப் பக்கத்தில் தட்டையான பனிக் களமொன்று இருந்தது. அதில் ஆழமான நீண்ட குழிகள் காணப்பட்டன. இக்குழிகள் பனி பிளவுபட்டாயவை. குழிகள் பொதுவாகப் பனிப்பாலங்களால் இணைக்கப்பட்டிருந்தன. அவ்வாருகக் குழிகளை இணைத்த ஒரு பாலத்தை பியரி கடந்தபோது அது தகர்ந்தது. அவன் ஒரு வாறு தனது கைகளை நீட்டித் தொங்கி குழியில் விழாது தப்பித்துக் கொண்டான். கீழே பார்த்தபோது அந்த மில்லாத கரு - நீல இருட்டினில் மறைந்து போகும் நீலப் பணிச் சுவர்களைக் கண்டு அவன் ஓரளவு திகிலுற்றன்.
நாள்தோறும் அவர்கள் தம் பயணத்தைத் தொடர்ந்து, கடல் மட்டத்திற்கு மேல் 7,525 அடி உயரத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்பொழுது ஒரு புயல் வீசத் தொடங்கியது. இரண்டு நாட்கள் இரவும் பகலுமாக அவர்கள் ஒரு மெல்லிய உறையின் கீழ் படுத்திருந்தனர். அவர்களுக்கு மேலாகக் காற் றும் பனியும் விரைவாகவும் மூர்க்கமாகவும் வீசின. யூலை 19 ஆம் தேதி புயல் தணிந்தது. சூரியனின் நிலையைக் கொண்டு, தாங்கள் எங்கிருக்கின்றனர் என்பதைப் பியரி அறிந்து கொண் டான். அவர்கள் 100 மைல் தூரம் சென்றிருந்தனர். கைவசமிருந்த உணவு தீர்ந்து விட்டமையால் அவர்கள் திரும்ப வேண்டிய வராயினர்.
13

Page 14
பியரியின் முதலாவது ஆக்டிக் ஆய்வுப் பயணத்தின் விளைவு கள் அத்துணை சிறப்பானவையல்ல. ஆனல் வேறு எந்தவொரு நாடுகாண் ஆய்வாளனும் அவனைப் போன்று நாட்டினுள் அவ் வளவு தூரத்திற்கோ, அன்றி உயரத்திற்கோ சென்றது கிடை யாது. எனினும், அனைத்திற்கும் மேலாக, அவன் அங்கிருந்த பணியின் இயல்புகளைப் பற்றியும் ஆக்டிக் பயணத்தின் தன்மை பற்றியும், அதற்குத் தேவையாகும் உணவு முதலான பொருள் கள் பற்றியும் தெரிந்து கொண்டமையே மிகவும் முக்கியமான தாகும். வடதுருவத்திற்கு தன்னை இட்டுச் செல்லும் பாதையில் இப்பொழுது பியரி இருந்தான்.
வாஷிங்டனுக்குத் திரும்பிய பின் அவன் மீண்டும் நிகரா குவாவின் கால்வாய் கட்டும் வேலைக்சாகத் தென்பகுதிக்கு அனுப் பப்பட்டான். மெனேக்கல் என்பவனே திரும்பவும் அவ்வேலைக் குப் பொறுப்பாக இருக்க, பியரி அவனுக்கு அடுத்த பொறுப்பை வகித்தான்.
பியரிக்காக வேலை செய்த 'மாற்’ என்று அழைக்கப்பட்ட மத்தே யூ ஹென்சன் எனும் நீக்ரோ, பியரியோடு நிகராகுவா விற்குச் சென்றன். அதன்பின் ஹென்சன் பியரியைவிட்டு ஒரு போதும் விலகவில்லை. பியரி வடதுருவத்தை அடைந்தபோது ஹென்சன் அவனுக்கு அருகில் நின்றிருந்தான்.
1888 இல், பியரி 32 வயதினனுக இருந்தபோது, கால்வாய்த் திட்டமிடல் முற்றுப் பெற்றது. அவ்வேளையில் அவன் ஜோசப் பின் டீபிச் எனும் மங்கையை மணமுடித்தான். அவள் பிரசித்தி பெற்ற அரும்பொருட்சாலை சிமித்சோனியன் நிறுவனத்தின் ஆசிரியர் ஒருவரின் மகளாவாள். அவர்களின் மணவாழ்வு வெற்றிகரமானதாக இருந்தது. ஆனலும் இளம் பெண்ணுக்குத் தனது கணவன் மேற்கொண்டிருந்த தொழில் கடினமாகக் காண ப்பட்டது. நாடுகாண் ஆய்வாளன் என்ற நிலையில் அவன் நெடுங் காலத்திற்குத் தன்னை விட்டு அடிக்கடி பிரிந்திருக்க நேரிடும் என்பதனை அவள் அறிந்திருந்தாள். ஆனல், அவன் விரும்பியதைச் செய்வதற்கு அவள் எப்பொழுதும் அவனுக்குத் துணை புரிந்தாள்.
அவர்கள் மணம் முடித்து ஒரு மாதங்கழித்து சில நாட்களில் "நான் சென்' எனும் இன்னெரு நாடுகாண் ஆய்வாளன் கிறீன் லாந்தை முதலாவதாகக் கடந்து விட்டான் என்ற செய்தி கிடைத்தது. பியரி தானே அச்சாதனையை முடிக்கவில்லையென்று
14

கவலையடைந்தான். எனினும் புதியதோர் திட்டத்தை வகுத் தான். வடகிழக்குத் திசையில் பயணஞ் செய்து, கிறீன்லாந்து ஒரு தீவுதான என்பதையும், அது வடதுருவத்திற்குத் தன்னை இட்டுச் செல்லுமா என்பதையும் கண்டறிவதே பியரியின் புதிய திட்டமாகும்.
கிறீன்லாந்திற்கு இரண்டாவது நெடும் பயணம், 1891-1892
இப்பயணத்திற்குத் தேவையான பணத்தைச் சேகரிப்பதில் பியரி முயன்ருன். 1891 இல் அவனிடம் 10,000 டொலர் பணம் இருந்தது. அவன் 1891 யூன் 6 ஆம் தேதியில் தன் மனைவி யுடனும், பிரெட்ரிக் ஏ குக் உட்பட மற்றும் அறுவருடனும் கடற்பயணத்தை மேற்கொண்டான். வடக்கினை நோக்கி குக்" மேற்கொண்ட முதலாவது பயணம் அது. பயணக்குழுவிற்கு வைத்தியனுக குக் சென்றன். '
அவர்கள் வடக்கே சென்று கொண்டிருந்தபோது தண்ணி ரில் மிதந்து வந்த ஒரு பெரும் பனிக் கண்டம் கப்பலில் மோதி கப்பலின் திசை திருப்பும் சக்கரத்தை உடைத்தது. மரத்தாலான சக்கரத்தின் ஒரு பகுதி பியரியின் காலைத் தாக்கி அது இரண்டு இடங்களில் முறிவுற்றது. வைத்தியனன குக் அக் காலைப் பொருத் தினன். பியரியை அதே கப்பலில் அமெரிக்காவிற்கு திருப்பி விடுமாறு ஏனையோர் விரும்பினர். ஆனல் அவன் விரும்பவில்லை. கப்பல் இங்கிள் பீல்ட் வளைகுடாவை அடைந்த போது பியரி கரைக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். அங்கே அக்குழுவினர் பனிக்காலத்தைப் போக்குவதெனத் தீர்மானித்தனர். ஐந்து கிழமை கழிந்த பின்னரே பியரியினல் நடக்க முடிந்தது. எனி னும், அவ்விடைவெளியில் தங்கும் தளமொன்றை அவன் கட்டி முடிப்பித்தான்.
நீண்ட ஆக்டிக் இரவு தொடங்கு முன், பனிக்காலத்திற்கு வேண்டிய இறைச்சியைச் சேகரிக்க வேண்டியிருந்தது. பியரி, அவன் மனைவி, குக், மற்ஹென்சன், இரண்டு எஸ்கிமோக்கள் ஆகியோர் ஒரு சிறிய படகினில் இருந்தபோது ஒரு பிரமாண்ட மான பனிக்கட்டியின் மேல் பல கடல் விலங்குகள் (வோல்ற சுகள்) இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் அதிலொன்றினைச் சுட்டனர். அதன்பின் நடந்ததையிட்டு பியரி எழுதியது பின் வருமாறு " . . . . . சில நிமிடங்களுக்குப் பின்னர் எங்களுக்குச் சுவையான ஓர் புதிய அனுபவம் நேர்ந்தது. நாங்கள் நீரிலே
15

Page 15
சில விலங்குகளைக் கண்டு, அவற்றுள் இரண்டைச் சுட்டோம். ஏனைய விலங்குகள் எங்கள் மீது சீற்றம் கொண்டன. வேட்டைக் காரர்களாக இருந்த நாங்கள் திடீரென்று வேட்டையாடப்படு பவராக மாறினுேம் சீற்றமடைந்த ஏறக்குறைய நூறு விலங்கு கள் அங்கு காணப்பட்டன. அவற்றைப் படகின் பக்கம் வர விடாது தடுப்பது மிகக் கடினமான வேலையாயிற்று. எங்க ளுடைய துவக்குகளால் இடைவிடாது சுட்டோம். அங்கிருந்த இரைச்சல் போதா தென்று எ ஸ்கிமோக்களுள் ஒருவனன இக்லா படகில் தன் ஈட்டியால் தட்டி அரவம் செய்து ஆச்சரியமான கூச்சல்களை எழுப்பினன். இவையனைத்துக்கும் மத்தியில் படகின் தளத்தில் வீற்றிருந்து, எனது உடைந்த காலைத் தனது உடலால் மறைத்து ஏனையோரின் முரட்டுத்தனமான அசைவுகளால் அக் காலுக்கு ஊறுவிளையாதபடி எனது மனைவி பாதுகாத்தாள். அவள் சத்த மின்றி நிதானமாக எங்களுடைய துவக்குகளைத் தோட்டக்களால் நிரப்பி அவ்விலங்குகளின் மேல் நாம் சுடு வதற்கு உடந்தையாக இருந்து, வெடியொலியும் கூச்சல்களும் சேர்ந்து அவ்விலங்குகள் திரும்பவும் எம்மை துன்புறுத்தாத வகையில் எமக்கு உதவி வழங்கினள்.' ےى.
சூரிய்ன் மறைந்தபோது, நூற்றுக்கணக்கான சிறிய பற வைகள் உட்படப் பனிக்காலத்திற்குப் போதுமான அளவில் இறைச்சி அவர்களிடம் இருந்தது. அவ்வகைப் பறவைகள் எஸ்கி மோக்களுக்கும் ஆக்டிக் நாடுகாண் ஆய்வாளருக்கும் முக்கிய மான உணவாகும்.
பல ஆண்டுகளுக்குப் பின், 1909 இல் துருவத்திற்கு வெற்றி கரமாக நெடும் பயணஞ் சென்ற பியரியின் பயணக் குழுவின் ஒர் உறுப்பின னகிய ஜோர்ஜ் பொருப் என்பவன் எழுதியதாவது ‘ஆக்’ என்றுவழங்கிய சிறிய பறவைகளைப் பிடிப்பதற்காக எஸ்கி மோக்கள் பயன்படுத்திய உபாயங்களை நாங்கள் கண்டோம். செய்ய வேண்டியதென்னவெனில் பாறைகளில் அமர்ந்திருக்க வேண்டியது மட்டுமே. பறவைகளின் கண்களில் நீங்கள் பட் டாலுமோ, படாவிட்டாலுமோ அது பற்றி நீவிர் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. இரையைக் கொண் டபின் கடலி லிருந்து திரும்புகின்ற ஆக் பறவைகள் ஒரு பெரிய நீரோடை போன்று கணக்கற்ற முறையில் பறந்து வரும். அவற்றின் உண் மையான எண்ணிக்கையையிட்டு குறிப்பாகக் கூறுவது சாத்திய மன்று. அவை உயரப் பறப்பதில்லை. நீங்கள் செய்யவேண்டிய தெல்லாம் கைகளை லாகவமாக வீசவேண் டியது மட்டுமே. அப் பறவைகளில் சிலவற்றினை நீங்கள் நிச்சயமாகக் கைப்பற்றுவீர் கள். '"
I 6

சுதந்திர விரிகுடா கண்டுபிடிக்கப்பட்டது
இருண்ட பனிக்காலம் கழிந்தது. பணியைக் கடந்து செல் லும் பயணத்திற்குத் தன்னுடன் செல்வதற்காக டென்மார்க் கைச் சேர்ந்த இளைஞனன * எய்வின்ட் அஸ்ரப்' என்பவனை மாத்திரமே பியரி தெரிவு செய்தான். பெரியதிலும் பார்க்கச் சிறிய குழுவே சிறந்தது என்பது பியரியின் நம்பிக்கை. ஜிப்சன் என்பவனும், வைத்தியரான குக்கும் உணவை எடுத்துச் செல்வ தற்காக முதல் 130 மைல் அவர்களுடன் சென்று பின்னர் தம் கூடாரத்துக்கு வந்தனர்.
1892, மே 3 ஆம் தேதியன்று நாடு காண் ஆய்வாளர்கள் மூன்று சறுக்கு வண்டிகளுடனும் பதினன்கு நாய்களுடனும் பயணத்தை ஆரம்பித்தனர். வடகிழக்குத் திசையில் பயணம் செய்தனர். கண் சளைக் குருடாக்கும் சூரிய ஒளியைத் தவிர்ப்பதற் காக அவர்கள் இரவு நேரங்களிலே பயணம் செய்தனர். அவர் கள் ஒவ்வொரு நாளும் கடும் பனி மீது நீண்ட பயணம் செய்தன ராயினும் புயல்களுக்காகத் தாமதிக்கவும் பனியிலுள்ள பெருங் குழிகளையும் சிறிய குளங்களையும் சுற்றி வரவும் வேண்டியதா யிற்று. சில வேளே களில் தங்களுடைய கனத்த உடைகளிலிருந்து வந்த வெப்பத்தால் அவர்கள் வருந்தினர்.
யூன் 26 ஆம் தேதியன்று அவர்களுக்கு நிலம் தென்பட்டது. ஐந்து நாட்கள் கழித்து பனிக்களத்தில் பரந்த திறந்த வெளி யொன்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒர் உயர்ந்த பனிச் சுவரைக் கடந்து கீழிறங்கவும், ஒவ்வொரு சில மைல் துரத்திலும் பனிநீர் ஓடைகளைக் கடந்து செல்லவேண்டி யும் இருந்தது. உடைந்த கற்கள் நிறைந்த பெரிய களத்தின் மீது பயணஞ் செய்வது கடினமாக இருந்தது. அக்கற்கள் அவர் களுடைய சப்பாத்துக்களை மோசமாகக் கிழித்தன. அதனல் அவ் விரு வரும் தங்களுடைய பாதங்களை மூடிக்கொள்வதற்காகத் துணிகளையும், தம் தொப்பிகளையும் உபயோகித்தனர்.
26 மைல் தூரம் சென்ற பின், அவர்கள் ஒரு மேட்டுச் சம வெளிமீது - ஒரு உயர்ந்த சமதளத்தின் மீது - ஏறத் தொடங்கினர். மறுபக்கம் அது 3800 அடி உயரமுள்ள ஒரு சுவராகக் கீழே இறங்கியது. அதன் கீழே கடலின் ஒரு பெரும் விரிகுடா காணப்பட்டது. அவர்களுக்கு முன் புதிய நிலங்களும் நீர் வழிகளும் அமைந்திருந்தன. நாடுகாண் ஆய்வாளர்களின்
7

Page 16
பொது முறைப்படி பியரி அவற்றுக்குப் பெயரிடத் தொடங்கி ஞன். அவர்களுக்குக் கீழே அமைந்திருந்த அந்தப் பாரிய நீர் வழிக்கு "சுதந்திர விரிகுடா" என அவன் பெயரிட்டான்.
இரு வரையும் சுற்றிச் சூரியன் பிரகாசமாக ஒளிகொண் டிருந்தாலும், அவர்களுடைய பாதங்களுக்கடியில் மஞ்சள் மலர் கள் வளர்ந்து பூத்திருந்ததாலும் தாங்கள் கிறீன்லாந்தின் வட கடற்கரையில் நின்றுளரென்பதை உணர்ந்த அவ்விரு வரும் வியப்பிற்குள்ளாகி, தம்மையே நம்பமுடியாதிருந்தனர்.
སྐ
நிலம் கடந்த தமது சாதனையைப் பற்றிய ஒரு பதி வேட்டை, அவர்கள் ஆங்கு விட்டுச் சென்றனர். அது பாது காப்பாக இருக்கும் பொருட்டு அதன் மேல் பல கற்களை வைத் தனர். 20 ஆண் டுகள் கழித்து, அதாவது 1912 இல் டென்மார்க் கின் பிரசித்திபெற்ற நாடுகாண் ஆய்வாளனன நட் ரஸ்முஸன் என்பவன் அப்பதிவேட்டைக் கண்டெடுத்தான்.
பியரி அவ்வேட்டில் கூறியிருந்தது பின்வருமாறு: 'நான் இந்நாளில் எய்வின்ட் அஸ்ரப் என்பவனுடனும், எட்டு நாய் களுடனும், மக்கோ மிக் விரிகுடாவிலிருந்து உள்நாட்டுப் பணி யைக் கடந்து இவ்விடத்தை அடைந்தேன். நாங்கள் 500 மைல் தாண்டினேம். நாமும் நாய்களும் நல்ல நிலையிலேயே இருக் கிருேம். அம்ெரிக்கர் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான யூலை 4 ஆம் தேதியன்று இவ்விரிகுடா வினை நாம் கண்ட தாகக் கொண்டு அதற்கு ‘சுதந்திர விரிகுடாவென' நாமம் குட்டியுள்ளேன். நாம் தங்கும் தலத்திற்கு நாளை புறப்படுகின் றேன்."
ரஸ்முஸனுடன் சென்ற நாடுகாண் ஆய்வாளனும் எழுத் தாளனுமான "பீட்டர் றுரசென்' இருபதாண்டுகள் மேலாகி யும் பியரி, அஸ்ரப் ஆகியவருடைய பாதச் சுவடுகளைத் தாங் கள் அன்றும் பார்க்கக் கூடியதாக இருந்ததது, என்று அறி வித்தான்.
சுதந்திர விரிகுடாவைக் கண்டு பிடித்த மறுநாள் பியரியும் அஸ்ரப்பும் தம் தங்கும் தலத்தை நோக்கிப் புறப்பட்டனர். பணியைக் கடந்து கூடாரம் திரும்பும் பயணத்தின் போது மோச மான காலநிலையையும், கடுமையான காற்றையும் பல பணிப் புயல்களையும் அவர்கள் எதிர்நோக்கினர். நாய்களுள் பல மேற்
18

கொண்டு பயணஞ் செய்ய முடியவில்லை. எனவே, அவை ஏனைய நாய்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டன. ஒகஸ்ட் 3 ஆம் தேதி அவர்கள் புறப்பட்டு 3 மாதங்கள் கழித்து, தம் கூடராத் திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் 1200 மைல் தூரம் பயணஞ் செய்திருந்தனர். கிறீன்லாந்து ஒரு தீவு என்பதை பியரியால் நிறுவ முடியாது போயினும் அது அவ்வாறு இருக்கக் கூடும் என்று இப்பொழுது கருத்துக்கொள்ள ஏதுவாயிற்று.
கிறீன்லாந்துக்கு மூன்றவது நெடும்பயணம் 1893 - 1897
பியரி அமெரிக்கா திரும்பினபோது மகிழ்ச்சியுடன் வர வேற்கப்பட்டான். பின்னைய ஆண்டுகளில் அவன் கூறியதாவது: "ஒருவன் வெற்றிகரமான ஒரு பயணத்திலிருந்து திரும்பிய அக்கணமே தனது அடுத்த நெடும் பயணத்திற்கு ஆயத்தஞ் செய்யும் நேரமாகும்.’’ எட்டு ஆட்களைக்கொண்ட சறுக்கு வண் டிக் குழுவுடன் கிறீன்லாந்தை ஆராய்வதற்கு மீண்டும் அவன் திட்டமிட்டான். சுதந்திர விரிகுடாவை அடைந்ததும் வடக்கு தெற்கு ஆகிய இரு பகுதிகளையும் ஆராய்வதற்காக அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொள்வது என்பது அவன் திட்டம்.
பின் அப்பயணத்திற்கு அனுமதி வழங்க கடற்படையினர் விரும்பவில்லை. ஆனல் நெடுநாட்களுக்குப் பின் மூன்று ஆண்டு காலத்திற்கு நாடுகாண் ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டது. தேவையான பணத்திற் பெரும் பகுதி பியரி பொது மக்களுக்கு ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து கிடைத்தது. 100 நாட்களில் அவன் 165 சொற்பொழிவு ஆற்றினன்.
1893, யூன் 26 ஆம் தேதி குழுவினர் பிலடெல்பியாவிலிருந்து "பால்கன்' எனும் கப்பலில் பயணமாயினர். குழுவிலிருந்த 14 உறுப்பினருள் கருவுற்றிருந்த பியரியின் மனைவியும், அவளைக் கவனித்துக் கொள்வதற்காக இருந்த திருவாட்டி சூசன் ஜே. குருேஸ் என்பவளும் அடங்கினர்.
கிறீன்லாந்தில் இங்கிள்பீல்ட் வளைகுடாவிலிருந்த பெளடு யின் விரிகுடாவில் அவர்கள் ஒரு வீட்டைக் கட்டினர். ஓகஸ்ட் 20 ஆம் தேதி, 'பால்கன்' நாடு நோக்கிப் புறப்பட்டது. செப்டம் பர் 12 ஆம் தேதி பியரியின் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு ‘மேரி அணிகிற்ருே’ - பியரி எனப் பெயரிடப்பட்டது. அவளுடைய இரண்டாவது பெயர் ஒரு
19

Page 17
பெரிய விண்கல்லை-விண்வெளியிலிருந்து விழுந்த ஒர் இரும்புக் கல்லைக்-குறித்ததாகும். இக்கல் இந்தப் பயணத்தின் போது பியரியினுற் கண்டு பிடிக்கப்பட்டதாகும். அச்சிறு குழந்தை “ ‘பனிக்குழந்தை' எனவும் அழைக்கப்பட்டது.
பியரி எதிர்பார்த்த அளவிற்கு இந்நெடும் பயணத்தின் விளைவுகள் அத்துணை முக்கியத்துவம் கொண்டு இருக்கவில்லை. குழுவினருட் பலர் நோயுற்றனர், அல்லது பனி மீது மேற் கொண்ட கடினமான வாழ்க்கையைத் தாங்க முடியா மற் போயி னர். மூன்று ஆண்டுகளின் பின்னர் பியரி மற்ருெரு தடவை கிறீன்லாந்தைக் கடந்து அதன் காலநிலையைப் பற்றி மேலும் அறிந்தான். மக்கள் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் அளவிற்கு எச்சாதனையையும் நிலைநாட்டவில்லை யெனினும், அவன் உலகின் மிகப் பெரிய விண் கல்லினைக் கண் டு பிடித்தது பொது மக்கள் கதைப்பதற்கு ஒரு அம்சமாகக் காணப்பட்டது.
உலகின் மிகப் பெரிய விண்கற்களைக் கண்டுபிடித்தல்
1818 இல் ஆக்டிக் நாடுகாண் பயணியான "கப்டன் யோன்" ருெ ஸ்' "இரும்பு’’ மலை யொன்றைப் பற்றி எ ஸ்கிமோக்கள் கூறுவதைக் கேட்டிருந்தான். எஸ்கிமோக்கள் இரும்பு வெட்டும் உபாயங்களையும், ஈட்டிமுனைகளையும் பயன்படுத்தி வைத்திருந் ததை ருெ ஸ் அறிந்திருந்தான். விண்கல்லில் இருந்து இரும்பு எடுக்கப்படுகின்றதென்று அவன் ஊகித்தான். 75 ஆண்டுகளாக, விண்கற்கள் எங்கிருந்தன என்பதனை எஸ்கிமோக்கள் எவருக் குமே சொல்லவில்லை. இதற்குக் காரணம், அதன் இரும்பு அவர் களுக்குத் தேவைப்பட்டதும், அதனை எவரும் எடுத்துச் சென்று விடுவர் என்று அவர்கள் அச்சங்கொண்டதுமேயாகும். ஆனல் பியரி அவர்களுடைய நண்பனுக இருந்தபடியால், அவனை அவை இருந்த இடத்திற்குக் கூட்டிச்செல்ல அவர்கள் உடன்பட்டனர்.
பியரி தனது குழுவின் அங்கத்தவர்களில் ஒருவனுடனும் எஸ்கிமோ ஒருவனுடனும் தனது முழு வாழ்க்கையிலுமே மிகக் கடினமான ஒரு பயணத்தை ஆரம்பித்தான். அம்முயற்சி மிக மோசமான காலநிலைக்குள்ளாயதும் உடைந்த பனிக்கட்டி மீதும் திறந்த நீர் வழிகள் மீதும் மேற்கொள்ள வேண்டியதுமான பயங் கர பயணத்தை உள்ளடக்கியதாகும். பியரி கடலுக்கு அண்மை யில் விண்கற்கள் மூன்றினைக் கண்டான். கடந்த காலத்தில் வானத்திலிருந்து அவ்விடத்தில் அவை வீழ்ந்தனவாகும்.
20

எஸ்கிமோக்கள் அவ்விண்கற்களுள் ஒன்றைப் "பெண், ** என்று அழைத்தனர். அது அவர்களுக்கு தரையில் உட்கார்ந் திருக்கும் பெண் ஞெருத்தியைப் பேர்ன்று காட்சியளித்த தைக் கண்டு அதனை அவ்வாறு அழைத்தனர். மற்ருெரு விண்கல் ‘நாய்' எனப் பெயரிடப்பட்டது. ஆனல் ஆறு மைல்களுக்கப் பால் "வீடு' (அணிகிற்ருே) என்று அழைக்கப்பட்ட பெரிய விண் கல்லு நிலத்தில் பதிந்து கிடந்தது. சிறிய விண்கற்களும் பாறை களில் தங்கியிருந்தன. ஆனல் ‘அணிகிற்ருே’ நீரிலிருந்து 100 யார் தூரத்தில் மண்ணினுற் பெரிதும் மூடப்பட்டிருந்தது. உல கிற்குத் தெரிந்திருந்த எந்தவொரு விண்கல்லைக் காட்டிலும் அது பெரிதாக இருந்ததைப் பியரி கண்டான். மூன்று விண்கற் களும் அறிவியலுக்கு மிகவும் முக்கியத்துவ முடையனவாக இருந் தன. அவன் அவற்றை நியுயோக் நகருக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று எண்ணினன். ஆனல் அது கடினமான வேலை யாகும்.
கூடாரத்திற்குத் திரும்பும் பயணத்தில் உண்பதற்கு எதுவு மின்றி நான்கு நாட்களாக 200 மைலுக்கு மேல் அவர்கள் சென்றனர். பனி மிகவுங் கெட்டியாக இருந்தது. 1000 அடி தொட்டு 3000 அடி உயரம் பனி மலைகளைத் தாண்ட வேண்டிய அவசியமிருந்தது. ஒரு தடவை பணிச்சுவரின் மீது சறுக்கு வண்டி களையும் நாய்களையும் அவர்கள் தங்கள் முதுகின் மேற் சுமந்தும் சென்றனர்.
பின்னர், பியரி விண்கற்களைத் திரும்பவும் காண்பதற்கு முயன்றன். ஆனல், பளுவான பனியும் பெரும்புயலும் நில வியமையால் அவனுட்ைய முயற்சி பயனளிக்கவில்லை. 1895 ஆம் ஆண்டு வரை தன்னுடைய கப்பலுடன் சென்று விண்கற்களை ஏற்றிவர அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவ்வருடம் திரும்பி வந்து பெருமுயற்சியின் பேரால் இரு சிறிய விண்கற் களும் கப்பலில் ஏற்றப்பட்டன. ஆனல் 'அணிகிற்றே வை' அதன் படுக்கையிலிருந்து பெயர்க்க முடியவில்லை. பின்னர் எதிர் வரவிருந்த பனிக்காலத்தில் உறையும் பனிக்குச் சிக்குண்டு போவ தற்கு முன்னர் கப்பல் அவ்விடத்திலிருந்து புறப்பட வேண்டிய தாயிற்று.
1896 ஆன அடுத்த ஆண்டில், ஒரு பெரிய கப்பலுடன் மேலும் உறுதியான பாரம் தூக்கும் பொறிகளுடனும் வடக்கே பியரி சென்ருன். பெரும் முயற்சிகளூடாக அவனும், அவனின்,
2丑

Page 18
ஆட்களும் பொறிகளும் ஒன்று சேர்ந்து பல நூறு ஆண்டுகளாகப் பூமியிற் பதிந்து கிடந்த பாரிய விண்கல்லை மெதுவாகப் பெயர்த் தனர். மரத்தினலும், இரும்பினுலும் ஆக்கப்பெற்ற பொறிகள் அடிக்கடி உடைந்து போகுமளவிற்கு அல்லது நிலத்திற் புதைந்து போகுமளவுக்கு அவ்விண் கல் அத்துணைப் பளுவுடையதாயிருந் ტნ ჭ5/.
மிக மெதுவாகவே வேலை முன்னேறியது. கரையோரத் திற்கு விண்கல்லை அவர்கள் கொண்டுவருவதற்குள், விரிகுடா வினுள் பணி விரைந்து வரத்தொடங்கியது. கப்பல், பனிக்கட்டி களினல் முட்டையைப்போன்று உடைந்து போகாதிருக்க விரை வில் அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டியிருந்தது.
பியரி, 1897 இல் அதே கப்பலில் முன்னரிலும் அதிக சக்தி வாய்ந்த பொறிகளுடன் மீளவும் வடக்கே சென்றன். கரையி லிருந்து கப்பல் வரை கட்டியெழுப்பிய ஒரு பாலத்தின் வழியாக அந்தப் பாரிய விண் கல் ஒவ்வோர் அடியால் நகர்த்தப்பட்டது. மோசகரமான காலநிலை வந்து கொண்டிருந்ததன் காரணமாக நாடுகாண் பயணிகள் அவசரத்துடன் வெளியேறினர். அங்கி ருந்து கடும் புயலொன்று வீசத் தொடங்கியது. அது கப்பலின் பக்க வாட்டினை உடைத்தது. அனைவரையும் கொன்றுவிடும் என அவர்கள் அஞ்சினர். ஆனல், அவர்கள் எவ்விடையூறு மின்றி அம் முயற்சியில் வெற்றி கண்டனர். விண்கல்லை நியூ யோக்குக்குக் கொண்டு வந்தது, பியரியின் வாழ்க்கையில் ஏற் பட்ட மிகப் பெருமை வாய்ந்த நிகழ்ச்சிகளுளொன் ருகும்.
1898-1902 வடதுருவத்தை அடைதல் - யிவரியினுடைய வாழ்க்கையின் அரிய சாதனையாகும்
பியரி அமெரிக்காவிற்குத் திரும்பிய பின், வடதுருவத்தை அடைவது தனது வாழ்க்கையின் அரிய சாதனையாக விருக்கும் எனத் தீர்மானித்தான். 1898 இல் இலண்டனில் 'ருேயல் புவி யியல் சங்கம்' அவனுக்குப் பாராட்டு வழங்கிய பொழுது தன்னுடைய திட்டங்கள் பற்றி அச்சங்கத்தில் அவன் எடுத் துரைத்தான். அவன் 'அமெரிக்க புவியியற் சங்கத்தில்" ஏற் கனவே தன்னுடைய திட்டங்கள் பற்றிக் கூறியிருந்தான். குறிப் பாக, ஆக்டிக் சமுத்திரத்திலேயே பணியை உடைத்துச் செல்லக் கூடிய உறுதியான கப்பலொன்றைப் பெற அவன் விரும்பினன். ஆங்கிலப் புதினப் பத்திரிகை நிறுவன அதிபரான நோர்த்கிளிப்
2岛

பிரபு ‘வின்ட்வாட்’ எனும் உறுதியான கப்பல் ஒன்றினை அவ னுக்கு வழங்கினர்.
மொரிஸ் ஜெசுப் என்பவர் அமெரிக்க இயற்கை வரலாற்று அரும் பொருட்சாலைத் தலைவராகவும், அமெரிக்க புவியியற் சங் கத்தின் தலைவராகவும், பியரியின் உற்ற நண்பராகவும் இருந் தார். அவரும் மற்றைய முக்கியஸ்தர்களும் பயணத்திற்கான பணத்தைச் சேகரிப்பதற்கு உதவினர். ஆணுல், கடற்படை பிய ரிக்கு மேலும் அவகாசம் அளிப்பதற்கு விரும்பாது வேலைக்குத் திரும்புமாறு கட்டளையிட்டது.
அவ்வேளையில், வில்லியம் மெக்கின்லே அமெரிக்க ஜனதி பதியாக வருவதற்கு உதவிய வணிகரொருவர், பியரி யின் பிரச்சினைகள் பற்றி ஜனதிபதியை நேரிற் சந்தித்தார். அதன் பேரால் பியரிக்கு பயணஞ் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஜேசுப் என்பாரின் நண்பர் இருபத்தைந்து பேர் அவனுக்கு 100,000 டொலர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனல் ஸ்பெயினில் போர் ஒன்று ஆரம்பித்ததனுல் எட்டுப்பேர் மட்டுமே தம் வாக்குறுதியைக் காப்பாற்றினர். மேலும், தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக "வின்ட்வாட்' கப்பலில் மிக சக்தி வாய்ந்த பொறிகளைப் பொருத்த முடியாது போயிற்று.
அப்போது, அனுபவம் பெற்ற ஆக்டிக் நாடுகாண் பயணி யான நோர்வே நாட்டு ஸ்வர்டிரப் என்பவன், தானும் துரு வத்தைக் கணிப்பதற்கு ஒரு கப்பலில் வடக்கே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினன். பியரியால் மேலும் தாமதித் திருக்க முடியவில்லை. அவன் 'ஹோப்" எனும் மற்ருெரு கப்பலில் வடக்கே சென்றன். அதனைத் தொடர்ந்து வின்ட்வாட் மெது வாகச் சென்றது.
ஸ்வர்டிரப் தன் கப்பலை ஆக்டிக் சமுத்திரத்தில் கொண்டு செலுத்த முடியாது போயினன். இதனல் அவன் துருவத்தை அடைவதற்கு முயற்சி செய்யவில்லை. ஆயினும், பியரி இருந்த அதே இடங்களில் அவனும் சில சமயங்களில் சஞ்சரித்தான். அவர்கள் இருவருக்குமிடையே கூடுதலான நிலத்தை யார் கண்டு பிடித்தனர் என்பது பற்றி இணக்கம் ஏற்படவில்லை. பின்னர், வைத்தியர் குக் என்பவரே வட துருவத்தைக் கண்டுபிடித்தார் என்று நம்பியதாக ஸ்வர்டிரப் கூறினன்.
83 Tr 2

Page 19
பியரியும் பனிக்கட்டியை உடைத்து ஆக்டிக் சமுத்திரத்
தைக் கடந்து செல்ல தன்னல் முடியாதிருப்பதை உணர்ந்தான். சக்தி குறைந்த ‘வின்ட்வாட்' கப்பல் தூர தெற்கிலுள்ள கேன் பள்ளத்தாக்கில் பனிக்கட்டிகளுக்கிடையே அகப்பட்டுக் கொண் டது. பியரி துருவத்தை நோக்கிப் புறப்படுவதற்கு முன் 400 மைல் தூரம் தன்னுடைய உணவுவகைகளைத் தூக்கிச் செல்ல வேண் டிய அவசியமிருந்தது. துருவம் அதிலிருந்து மேலும் 400
மைல் தூரம் பனிக்கடலுக்கு அப்பால் இருந்தது. தன் உணவுப் பொருட்களை இறக்கி, அவற்றை போர்ட் கொங்கருக்குக் கொண்டு செல்ல அவன் தீர்மானித்தான். இத்தங்கு நிலையத்தை கிறீலி 15 ஆண்டுகளுக்கு முன் பனிக் காலத்திலிருந்து தான் தப்பித்துக்கொள்ளும் முகமாகக் கைவிட்டுச் சென்றிருந்தான்.
பியரி போர்ட் கொங்கரை விட்டேகு முன், கேன் பள்ளத் தாக்கிற்கு மேற்குப்புறமாக ஆராய்ந்தான். அங்கு அவன் ஸ்வர் டிரப்பைச் சந்தித்தான். இவ்விரு நாடுகாண் பயணிகளும் ஒருவ ரோடொருவர் கைகுலுக்கிக் கொண0 ட போதிலும், அவர்க ளுடைய சந்திப்பு அத்துணை நட்புரிமையுடையதாக இருக்கவில்லை. நாடுகாண் பயணத்திலே கிறீலி கூறியது போன்ற 'விலே லாண்ட்’ என்ற பிரதேசம் எதுவுமில்லை என்பதை பியரி நிரூ பித்தான்.
போர்ட் கொங்கர்
1898 ஆம் ஆண்டு பனிக்காலத்தில் பியரி தனது உணவுப் பொருட்களைப் போர்ட் கொங்கருக்கு வண்டிகளில் ஏற்றிச் செல் லத் தொடங்கினன். அத்தொழில் எத்துணை கடினமானது என் பதனை அனுபவம் பெற்றிராத எவரும் தெரிந்துகொள்ள முடியா தென்று அவன் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதினன். அப் பொருட்களை, கரைவழியே, எவ்விடமும் காணப்பட்ட பயங்கர மான பணிச்சுவர் மீது, முற்ருன இருட்டிலே அல்லது அரை குறையான இருட்டிலே ஏற்றிச் செல்ல வேண் டியிருந்தது. 24 மணி நேர இரவில் சில மணி நேரம் மட்டுமே நிலாவொளி வீசியது. அச்சொற்ப கால நிலா வெளிச்சம் கடற்பனிமேற் செல்லுதற்குப் போதியதாக இருக்கவில்லை. பனிச்சுவர் மீது பயணம் செய்வதிலும் பார்க்க கடற்பனியில் பயணம் செய்வது இலகுவாக இருந்தது. ஈற்றில் அவர்களுடைய உணவு முழுவ துமே தீர்ந்துவிட்டன.
24

பின்னர், நிலவு மறைந்தது. பனிச்சுவர் மீது பயனஞ் செய்யக்கூடிய வகையில் தகுந்த வெளிச்சம் நிலவாததால் அவர் கள் கடற்பனி மீது அடிமேல் அடிவைத்து தம் பயணத்தை மேற்கொண்டனர். 18 மணி நேரமாக இருட்டில் அவர்கள் ‘லேடி பிராங்கிளின்’ விரிகுடா வின் உடைந்த பனிக்கட்டிகளைக் கடந்து சென்றனர். கரையோரப் பணிச்சுவர் 100 அடி உயரமாக விருந்தது. ஆயினும், அதனூடாக ஒரு வாறு வழியொன்றை அவர்கள் கண்டனர். பலமணி நேரம் கழித்து அவர்கள் பழைய போர்ட் கொங்கரின் வாயிலுக்கு வந்து சேர்ந்து, அதற்குள் நெருப்பு மூட்டினர்.
பியரியின் பாதங்கள் மரத்துப்போன உணர்வைக் கொடுத் தன, சப்பாத்துக்களை அகற்றிப் பார்த்தபோது அவை விறைத் திருந்ததை அவன் உணர்ந்தான். தனது பாதங்களின் சில பகுதி களை இழந்து, சில கிழமைகளுக்குத் தான் வெளியிற் செல்ல முடியாதிருக்கும் என்பது அவனுக்குப் புலனுயிற்று.
அவன் ஆறு கிழமைகளாகப் போர்ட் கொங்கரிலுள்ள பழைய கட்டடத்தில் அரைகுறை இருட்டில் தங்கியிருந்தான். விறைத்துப்போன கால்களால் கடுந் துன்பத்தை அவன் அனு பவித்தான். வடதுருவத்தை தான் அடைய முடியும் என்ற அவனுடைய உள்ளுணர்வு அப்பயனத்தை நிறுத்துவதற்கு இட மளிக்கவில்லை. அவன் அதிகம் மனந்தளர்ந்துபோன தருணத்தில் ‘நான் ஒரு வழியைக் காண்பேன், அல்லது ஒன்றை அமைப்
பேன்’ என்று தங்கியிருந்த கூடாரச் சுவரில் எழுதினன்.
சில நிமிடங்களுக்கு எழுந்து நிற்க மீண்டும் இயலுமா யிருந்த போது, 'வின்ட்வாட்' கப்பலுக்குத் திரும்பிச் செல்ல அவன் தீர்மானித்தான். கப்பலிலே அவனுடைய பாதங்களின் உயிரற்றுப்போன பாகங்களைத் துண்டித்துக் கொள்ள முடியும். ஆகவே குழுவினர் 250 மைல் துர்ரப் பயணத்தை நிலாவொளி யில் தொடங்கினர். பியரி ஒரு சறுக்கு வண்டியின் மேல் கட்டப் பட்டவாறு இழுத்துச் செல்லப்பட்டான். அசைவற்ற வெள்ளை நிறக் குன்றுகள் உயிரற்ற கரிய வானமளவு உயர்ந்து விரிகுடாவி னுாடாக கரிய கடற்கரைக்குச் செல்வதை அவன் கண்ணுற்றன். கடந்த ஆறு கிழமைகளிலிருந்த இருள் மயமான உணர்வு ஒரு கெட்ட கனவு போல அவனிடமிருந்து நீங்கியது.
25

Page 20
மார்ச் 13 ஆம் தேதியன்று பியரியின் இரு பாதங்களின் முன் பாகங்கள் துண்டிக்கப்பட்டன. பாதங்கள் நன்ருகக் குண மடைந்து வருவதற்கு முன்னமே அவன் பள்ளத்தாக்கின் மேற் குப் பகுதியை ஆராய்வதற்காகப் பலமுறை பயணஞ் செய்தான். அப்போது கோடைக்காலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. சில விடங்களில் ஆட்கள், பனியை மூடியிருந்த ஆழ்ந்த நீர் வழியி னுடாக நடந்து செல்லவேண்டிய அவசியமிருந்தது. இதனுல் பியரியின் பாதங்களுக்குப் பெரும் நோவு உண்டாயிற்று.
இவ்வேளையில், பியரியின் நெருங்கிய நண்பரான மொரிஸ் ஜேசுப்பின் தலைமையில் சிலர் கூடி "பியரி ஆக்டிக் சங்கத்தை' தோற்று வித்தனர். பியரி ஆக்டிக்கில் தங்கியிருக்கும் காலம்பூராக ஒவ்வொரு கோடையிலும் அவனுக்கு வழங்கும் முகமாக கப்ப லொன்றை வடக்கே அனுப்பிவைப்பதற்கு அவர்கள் தீர்மானித் தனர். "டயான’’ எனும் கப்பல் 1899 ஒகஸ்ட் 12 ஆம் தேதி யன்று ஈற்றவை வந்தடைந்தது. அக்கப்பலிலிருந்த பியரியின் நண்பனெருவன் பியரியின் ஊறுபட்ட பாதங்களை முன்னிட்டு நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு அவனைத் தெண்டித்தான். 'கடற்படைக் கடமைக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நியதி யில் அல்லது வடதுருவத்தை அடைந்த பின்னர், நாடு திரும்பு வதற்கு நான் ஆயத்தமாக இருப்பேன்" என்று பியரி பதிலிறுத் தான.
வடதுருவத்தை அடைவதற்கு முதலாவது முயற்சி-1902
1902 ஆம் ஆண்டின் இளவேனிற் காலம் வரும் வரை பியரி வடதுருவத்தை அடைவதற்கு உறுதியான முயற்சியை மேற் கொள்ள முடியவில்லை. மோசமான காலநிலையும் திறந்த நீர் வழிகளும் அவனைத் தடுத்துவிட்டன.
ஒகஸ்ட் 5 ஆம் தேதியன்று பியரியை வீட்டுக்குக் கூட்டிச் செல்வதற்காக அவன் மனைவியும், மேரியும் வின்ட்வாட் கப்ப லில் வந்து சேர்ந்தனர். அவன் ஆக்டிக் பிரதேசத்தில் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக இருந்துள்ளான்.
அவன் தன் நெடுநாள் முயற்சிகளால் கிறீன்லாந்தின் வட கோடியைக் கண்டு கொண்டான். அதன் மூலம், வடதுருவம் பற்றிப் புவியியலாளர்கள் கேட்டுவந்த பெருங்கேள்விகளுள் ஒன்றுக்கு அவன் விடையைக் கண் டான். எனினும் பியரி தான் தோற்றுவிட்டதாகவே கருத்துக் கொண்டான்.
26

எந்தவொரு மனிதனும் வடதுருவத்தை அடைய முடியுமா என்று கேட்டிருப்பின் முடியாது என்று பியரி விடைகொடுத் திருக்க மாட்டான்.
பியரி பிலடெல்பியாவுக்குத் திரும்பிய பின், தன்னுடைய விறைத்துப்போன பாதங்களுக்கு மேலும் சிகிச்சை செய்வதற் காக ஒரு வைத்தியரை நாடினன். அவர் பியரியின் பாதங்களின் பயனற்றுப்போன சில பகுதிகளை நீக்கியதுடன் குறுகலாக்கப் பட்ட அப்பாதங்களின் எஞ்சிய பகுதிவரை தோலை இழுத்துக் கீழ்ப்புறமாகக் கொண்டு வந்தார். பியரி திராணியற்ற இக் கால்களுடன் எஞ்சிய நாடுகாண் முயற்சியில் ஈடுபட்டான்.
ஆக்டிக் சமுத்திரத்திலுள்ள பனிக்கட்டியை உடைத்துச் செல்லவல்ல ஒரு கப்பல் தனக்கு இருக்கவேண் டும் என்பதனைப் பியரி இப்பொழுது உணர்ந்தான். அக்கப்பலைக் கொண்டு நிலத் தின் கிட்டிய நிலையத்தையடைந்து, சறுக்கு வண்டிப் பயணத்தை மேற்கொண்டு, அதனுல் அதி தென்பகுதி சென்று தொடங்காது, வடதுருவத்திற்குச் சீக்கிரம் செல்ல முடியும்.
ஆணுல் அவ்வாறன கப்பல் கிடைக்கவில்லை. அக்கப்பலைக் கட்டுவதற்கு அவனுக்கு 100,000 டொலர் தேவைப்படும். பியரி ஆக்டிக் சங்கம் பாதித் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாயின், மறுபாதித் தொகையைத் தாம் கொடுப்போ மென்று இரு நண் பர்கள் இணக்கமளித்தனர். அவ்வாறே செய்யப்பட்டது. பியரி தானே கப்பலுக்கான திட்டங்களை வகுத்தான், கப்பலுக்கு அப் பொழுது அமெரிக்க ஜனதிபதியாகக் கடமையாற்றிய தியடோர் ரூஸ்வெல்டின் பெயர் சூட்டப்பட விருந்தது. 1905, மார்ச் திங் களில் ரூஸ்வெல்ட் கட்டிமுடிக்கப்பட்டது. அது 184 அடி நீளமும், 35 அடிக்குச் சற்று அதிகமான அகலமுமானது. கிடைக் கத் தக்க மிக உறுதியான பொருட்களைக் கொண்டு அது கட்டப் பட்டதாகும்.
வடதுருவத்தை அடைவதற்கான இரண்டாவது முயற்சி 1905- 1906
1905 யூலை 16 ஆம் தேதியன்று பொப்பாட்லெட் என்பவனைக் கப்பல் தலைவனுகக் கொண்டு ரூஸ்வெல்ட் வடக்கே புறப்பட்டது. பியரி தன்னுடன் 50 எஸ்கிமோக்களையும் 200 நாய்களையும் கூட்டிச்சென்ருன். இரவு பகல் எந்நேரமும் காதுகளைச் செவி டாக்கும் வகையில் சப்தம் கப்பலில் இடம் கொண்டது.
27

Page 21
கப்பல் பனிக்கட்டியை உடைத்துச் சென்ற காட்சியைப் பற்றி பியரி எழுதியது பின்வருமாறு:
"ரூஸ்வெல்ட் கப்பல் கடலில் ஒரு வழியை நிர்ணயிப்ப தற்கு பணிக்கட்டியை உடைத்துச் சென்ற வேகமும், அதன் அசைவும், அது எழுப்பிய ‘சத்தமும் சேர்ந்து அளித்த வியப்பு உணர்வை விட வேறு எதுவும் என்னுடைய அனுபவம் முழுவு திலும் நினைவிலில்லை. இரு பெரும் பனித்தளங்களிடையே கப்பல் சிக்கி அதன் பக்கங்கள் ஒன்ருக நெருங்குண்ட நிலையில் அதன் தளம் மெதுவாக எழும்பியதைக் கண்டபோது எனக்குற்ற அபூர் வமான உணர்ச்சி எனது நினைவிலிருக்கின்றது . . . . . பாட்லெட் ஒரு பைத்தியக்காரனைப் போன்று மேலும், கீழும் குதித்து, கப்பலுக்கு வலுவும் உணர்வும் ஊட்டுவதைப் போல அதனைப் பார்த்து சப்தமிட்டான் . . . . . கப்பலோ கோபங்கொண்ட ஒரு மனிதனைப் போன்று பனிக்கட்டியோடு போர் தொடுத்து, தொடுத்து, காட்டுக் குதிரையைப் போன்று முன்னேக்கி விரைந் தது.'
பனிக்கட்டியோடு செய்த போரிலிருந்து கப்பல் சேதப் படாமல் தப்பிக் கொள்ளவில்லை. ஆயினும் அது பணியின் பிடியிற் சிக்கிக் கொள்ளவில்லை. அதற்கு ஏற்பட்ட பழுதுகளைச் சீர் படுத்தும் முகமாக பிரவூட் முனையில் ஐந்து நாட்கள் அது தரித்து நின்றது. ஈற்றில் அது ஆக்டிக் சமுத்திரத்திற்கு வழியைக் கண்டு ஷெரிடன் முனையை அடைந்தது. அங்கு கப்பலில் இருந்த ஆட்கள் வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்கும் சென்ற னர். மீன்களைப் பிடித்து, உறைந்து போகும் வரை அவற்றைப் பனியில் வீசியெறிந்தது பற்றிப்பியரி குறிப்பிடுகிருன். பின்னர் அவற்றைப் பிளந்து, உறைந்த துண்டங்களைப் பழம் தின்பது போன்று தான் தின்பான் என்ருன்,
மார்ச் 6 ஆம் தேதியன்று வடதுருவத்தை நோக்கிப் பல பயணங்கள் ஆரம்பமாயின. பலபேர் பியரியோடு சென்று உண வையும் ஏனைய தேவைப் பொருட்களையும் சமர்ப்பித்து விட்டு தம் பெரிய தங்கும் நிலையத்துக்குத் திரும்பினர். அப்போது அங்கு தாங்க முடியாத குளிர் காணப்பட்டதெனினும் சூரியன் உயர எழத் தொடங்கிற்று. மக்கள் முன் ஒருபோதும் கண் டிராத அதிக உக்கிரமான காற்றுகள் வீசி, கிழக்குப் பக்கமாக பணி யைத் தள்ளிக்கொண்டிருந்தன. பனிப்படலத்தில் ஒரே ஒரு பெரிய பிளவு (பிக் லீட்) காணப்பட்டது. அதில் நீர் மட்டுமே
28

இருந்தது. அங்கு அவர்கள் ஆறு நாட்கள் தாமதித்தனர். பின் னர் அவர்கள் நகர்ந்து சுருண் டு கொண்டு சென்ற மெல்லிய புதிய பனிக்கட்டியின் மேல் நடந்து அப்பிளவைக் கடந்தனர். ஆட்கள் உணவுப் பொருட்சளைக் கொண் டு செல்வதில் இட ருற்றனர். நகர்ந்து சென்ற பனி நீர் இடைவெளிகளை உண் டாக் கிற்று அல்லது அவர்கள் கடந்து செல்ல முடியாத பெரும் குன்று களை உருவாக்கிற்று. அவ்வாறிருந்தும் பியரி ஹென்சனுடன் வடதுருவத்திற்கு விரைந்து செல்லத் தீர்மானித்தான்.
குறைவான நித்திரையுடன் அவர்கள் மேற்கொண் ட நெடும் பயணங்கள், முன்னர் எவரும் சென்றிருந்ததைக் காட்டி லும் வடக்கு நோக்கி மிகத் தூரமாக அவர்களை இட்டுச் சென் றன. ஆயினும் அவர்கள் வடதுருவத்தை அடைய முடியவில்லை. உயிருடன் திரும்பிவரும் வாய்ப்புடன் அதற்கு மேலும் செல்வது அசாத்தியமாகக் காணப்பட்டது. மனத்துயருடன் அண்மையி லிருந்த நிலக்கண் டமான கிறீன்லாந்தை நோக்கி பியரி திரும்பி
திரும்பும் பயணம் உயிர்ப் பயணமாகத் திகழ்ந்தது. உடை ந்த பணி, திறந்த நீர்ப்படலம், புயல்கள், உணவுப் பற்றக் குறை யாவும் ஒன்று சேர்ந்து அம் மனிதர்களுடைய கடைசிப் பலத்தையும் உறிஞ்சின. எனினும் அவர்கள் தெற்கு நோக்கித் தொடர்ந்து பயணம் செய்தனர்.
வெள்ளைப்பனியில் பிரதிபலித்த பிரகாசமான சூரிய கதிர் ஒளியினுல் பியரியின் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டது. கண் களில் உண்டான வலியைத் தணிப்பதற்காக அவன் அவ்வப் போது தனது முகத்தைப் பணியில் வைத்துக்கொண் டான். மீண் டும் அவர்கள் ஐந்து நாட்களாக பனி உறையும் வரை "பீக்லீட்" இற்கு அண்மையில் தாமதிக்க வேண் டியதாயிற்று. பின்னர் பேச்சு வார்த்தைகளின்றி, புதிய மெல்லிய பனிப்படலத்தை விரை வாகக் கடந்து சென்றனர். அவர்கள் அவ்வாறு பாதுகாப்புடன் கடந்து முடித்தவுடன் அவர்களுக்குப் பின்னிருந்த பனிப்படலம் பிரிந்து சென்றது. அடுத்த மூன்று பயணங்களிலும் அவர்கள் முன்னெருபோதும் கண் டிராத மலை போன்று குவிந்திருந்த புனிப் படலமூடாகச் செல்லவேண் டியதாயிற்று. பியரி தன்னுடைய பாதங்களினல் பெருமளவு துன்பத்துக்குள்ளானன்.
அவர்கள் கிறீன்லாந்தின் வட கடற்கரையை அடைந்த போது பசிக் கொடுமையால் குறையுயிரில் இருந்தனர்.
29

Page 22
காட்டு விலங்குகளின் இறைச்சி அவர்களின் உயிர்களை ஒரள வில் காப்பாற்றியது. வேட்டையில் காணக்கூடிய மகிழ்ச்சியைப் பற்றி அவர்கள் அப்போது நினைக்கவில்லை. இறைச்சியையிட்டே அக்கறை கொண்டனர். பெற்றுக் கொண்ட இறைச்சியை சமை க்கவுமில்லை மடிந்த மிருகங்களிலிருந்து இறைச்சியை வெட்டி எடுத்ததும் அதில் காணப்பட்ட சூட்டுடனும் மெதுமையுடனும் அதனைப் புசித்தனர். மேலும் உண்ண முடியாத அளவிற்கு அவர்
i Goi 2.600 - Gi,
ரூஸ்வெல்ட் கப்பலை நோக்கி தம் பயணத்தைத் தொடர முன்னர் இரு நாட்களை உணவிலும் உறக்கத்திலும் அவர்கள் கழித்தனர். பயணத்தில் புறப்பட்ட 120 நாய்களுள் 41 மட்டுமே திரும்பின. ஏனையவை உயிருடனிருந்த நாய்களுக்கு இரையா கவோ அன்றி மனிதர்களுக்கு உணவாகவோ பயன்படுத்தப் பட்டன. விரும்பத்தகாத காலநிலையாலும் பணியின் பெயர் ச்சியாலும் வடதுருவத்தை அடைவதிலிருந்து பியரி தடைப் பட்டான். எனினும், அவன் மீண்டும் முயற்சி செய்வான் என்பது வெளிப்படை யாயிற்று.
கிராண்ட் லாண்ட் கடற்கரையை ஆராய்தல்
வீடு நோக்கிய பயணத்திற்காகக் கப்பலை தென்திசை நோக் கித் திருப்புமுன் அதுவரை கண்டறியப்படாத கிராண்ட்லாண்ட் கடற்கரையில் 300 மைல் தூரத்தை துருவி ஆராய்வதற்கு பியரி தீர்மானித்தான். பியரியின் அப்பயணம் ஸ்வர்டிரப் என்ப வணின் மேற்குப்பக்க ஆராய்ச்சிகளுடன் இணைப்புக்கொள்ளும். பியரி அப்பயணத்தைத் தாமதித்தே ஆரம்பித்தானுயினும் பெருந் துன்பத்தோடு தனது வேலையை முற்றுவித்தான். சில வேளைகளில் தம் தோள் அளவு வரை பனிநீரில் நடக்கவேண்டிய அவசியம் பியரியின் சகாக்களுக்கு இருந்தது. அவர்கள் தம்பால் இருந்த நாய்களைக் கொன்று அவற்றின் இறைச்சியை உணவாகக் கொண்டனர். ஆனல் அவர்களின் உடைகள் ஒருபோதும் உல ராது இருந்தமை அவர்களுக்குப் பெரும் இடர்ப்பாடாகத் திகழ்ந் தது. பியரியின் சப்பாத்துக்கள் பிளவுற்றன. அவனுடைய பாதங் களின் நிலைமை மிக மோசமாகியது. அவை எந்நேரமும் அவனைப் புண்படுத்தின. கப்பலுக்குத் திரும்பியபோது உயிரற்ற வணுக அவன் தோன்றினன்.
கப்பலில் மகிழ்ச்சியற்ற செய்தி காத்திருந்தது. "ரூஸ் வெல்ட்" கடலோரப் பணிச்சு வருடன் மோதியதால் அதன் சில
30

பிரதான உறுப்புக்கள் தகர்க்கப்பட்டிருந்தன. அச்செய்தியைப் பியரி நல்ல முறையில் ஏற்றுக்கொண் டான். மறுநாள் கப்பல் தலைவனன பாட்லற்றுக்கு அவன் கூறியதாவது: "கப்பித்தானே நாம் கப்பலைத் திரும்ப எடுத்துச் செல்லவேண்டும். நாம் அடுத்த வருடம் மீண்டும் வரப்போகின்ருேம்'. பியரி வடதுருவத்தை அடைவதற்கான அடுத்த நடவடிக்கைகளை யிட்டு ஏற்கனவே கற் பனை செய்து கொண்டிருந்தான்.
பியரி தனது ஏழாவது நாடுகாண் பயணத்திலிருந்து நியூ யோக் திரும்பியபோது அவன் ஐம்பதாவது வயதைத் தாண்டி யிருந்தான். அவ்வயதினில் 20 ஆண்டுகள் ஆக்டிக்கில் அல்லது அங்கு செல்வதற்கு ஆயத்தம் செய்வதில் செலவழிந்தன. பியரி தனது சிறப்பான வாழ்காலம் முடிந்துவிட்டது என்பதை உணர் ந்தான். கடந்த பயணம் அவனது வலிமையைப் பெரிதளவு தாழ்த்தியிருந்தது. எனினும் தனது கடற்பணி பற்றிய அறிவும் அனுபவமும் வடதுருவத்தைத் தான் அடைவதற்கு உதவியாக இருக்குமென்று அவன் கருதினன்.
அடுத்த பயணம் தனது இறுதியானது என்பதைப் பியரி நன்கு உணர்ந்தான். திரு. ஜேசுப்பினதும் பியரி ஆக்டிக் சங்கத்தி னதும் முயற்சிகளால் “ரூஸ் வெல்ட்' கப்பலைத் திருத்துவதற் கும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பியரி பணம் பெற்றன். 1907 யூலை முதலாம் தேதியன்று பியரி தனது பயணத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருந்தான். ஆனல் கப்பல் வேலை முற்றுப் பெறவில்லை அதேவேளை பியரியின் உற்ற நண்பரும் ஆதரவாளருமான திரு ஜேசுப் மரணமானர். அது அவனுக்கு ஒரு பேரிடியாக இருந்தது. ஆனல் அவனுடைய இலட்சியம் மடிந்துவிடாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனைப் பியரி உணர்ந்தான்.
பியரியுடன் எனது முதற் சந்திப்பு
1906 ஆம் ஆண்டு பனிக்கால ஆரம்பத்தில் நான் பியரியை முதன் முறையாகச் சந்தித்தேன். நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இயற்கை வரலாறு சம்பந்தமான அமெரிக்க அரும் பொருட்சாலையில் அப்போது தான் தொழில் கொள்ள வந்திருந்தேன். பியரியைக் காட்டிலும் பெரியவன் எவனும் இலன் என்று பல்லாண்டுகளாக நான் நினைத்திருந்தேன். இப்
3.

Page 23
பொழுது அதே பியரி அரும்பொருட் சாலையில் அன்றைய தினம் மாலை உரையாற்றுவதற்கு இருந்தான். அவன் வரும் வரை அணி கிற்றே என்ற பெரிய விண்கல்லுக்கு அருகில் நான் காத்திருந் தேன். அவன் தனியாகவே உள்ளே வந்தான். அவன் சிறிது நேரம் நின்று அப்பெரிய இரும்புத் துண்டத்தை தன் கையால் தடவினன். அவனுடைய கண்களில் ஒரு தொலைத்தூரப் பார்வை புலனுயிற்று. அவன் கிறீன்லாந்திலிருந்து விண்கல்லைக் கொண்டு வந்தபோது கடலின் சீற்றத்தையும் பெரும் முயற்சியில் ஈடுபட்ட கப்பலையும், திரும்பவும், தனது மனக்கண் முன் கொணர்ந்தான் என்று எனக்குப் புலனயிற்று. பின்னர் அவன் அரும்பொருட் சாலை அதிபரின் அலுவலகத்தினுள் நுழைந்தான்.
பியரி உரையாற்றியதைக் கேட்டபோது நான் மற்றுமோர் உலகத்திற்கு - பனியும் கடும் புயலும் நகரும் பனிப்படல மும் கொண்ட ஒரு உலகத்திற்கு - போவதாகத் தோன்றியது. பியரி தனது கதையை மிக எளிதான முறையில் கூறினன். எனினும், அவன் எவ்வாரு ன துன்பங்களுக்குள்ளானன் என் பதை என்னுல் உணர முடிந்தது. எவரும் முன்னர் சென்றிராத தொலைவிற்கு வடக்கு நோக்கிச் சென்றிருந்தும் வடதுருவத்தை அடையாமற் போனது பேரளவு மனக் கஷ்டத்தை அவனுக்கு விளைவித்திருக்கும் என்பதை நான் உணர்ந்தேன்.
மறுநாள் அவனை நான் சந்தித்தேன் எனக்குப் பேச வர வில்லை. அவனுக்கு நான் ஒரு அமைதியான இளைஞனுக மட்டுமே காணப்பட்டேன். எனக்கோ அவன் நான் கனவு கண்டு வந்த ஒரு நாடுகாண் பயணியாகத் தோன்றினன்.
சில மாதங்கள் கழித்து நான் அவனை மீண்டும் கண்டேன். நான் திமிங்கிலங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அரும்பொருட்சாலைப் பணிப்பாளரான கலாநிதி பம்பஸ் என் பவர் திமிங்கிலங்களையும் ஏனைய நீர் வாழ் முலையூட்டிகளையும் அரும் பொருட்சாலைக்குக் கொண்டு வருவதற்காக நான் பியரி யின் உணவுவகைகளைக் கொண்டு செல்லும் "எரிக்’ எனும் கப்பலில் பியரியுடன் போகலாமா என்பதை அவனிடம் கேட் டிார். பணிப்பாளர் என்னைத் தனது அலுவலகத்தினுள் அழை த்து, பியரியுடன் நான் பேசிக்கொள்ளும் முகமாக எங்கள் இரு வரையும் தனியாக விட்டுச் சென்ருர். ஒரு சில நிமிடங்களுக்கு என்னுல் எதுவும் பேச முடியாதிருந்தது. ஆனல், பியரி புன் முறுவல் செய்து திமிங்கிலங்களுடனன எனது வேலையைப் பற்றி
32

விசாரித்தான். இயற்கை வரலாற்றில் தான் ஆர்விம் கொண் டிருப்பதாகவும், பஞ்சடைநத போலி மிருகங்களைச் செய்து தான் பணம் சம்பாதித்ததாகவும் அவன் கூறினன். அதுவே என்னைப் பேச வைத்தது. எனெனில், அதே வேலையை நானும் செய்திருந்தேன். அரை மணிநேரம் உரையாடிய பின் நான் "எரிக் கப்பலில் செல்லலாம் என அவன் அனுமதி வழங்கினன்.
அவன் புன்சிரிப்புடன் எனக்கு விடையளித்ததையும் அன் புடன் என்னுடன் கைகுலுக்கிச் சென்றதையும் நினைத்து நான். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனல் அதிக நாட்கள் கழிய முன் ரூஸ்வெல்ட் கப்பல் மறு வருடம் வரை பயணத்திற்கு தயாராக இருக்க மாட்டாது என நான் கேள்வியுற்றேன். எனவே, எங்களுடைய பயணம் தாமதிப்பிற்குள்ளாயிற்று. காத்திருக்க வேண் டிய காலத்தின்போது, திமிங்கிலம் பிடிக்கும் கப்பலொன் றில் அரும்பொருட்சாலை என்னை அலாஸ்கா விற்கு அனுப்பி வைத் தது. நான் திரும்பியபொழுது “எரிக்’ கப்பல் பயணமாகி முன்று மாதங்களாகியிருந்தன. பியரியை ஆக்டிக்கில் காண முடியாதது பற்றி நான் மிகவும் வருத்த முற்றேன். எனினும், அவர்கள் திரும்பியபோது, ஆக்டிக்கில் உயிரிழந்த ருேஸ் மார்வின் என் பவனைத் தவிர, பியரியையும், அவனுடைய குழுவினர் ஒவ் வொரு வரையும் நான் நன்ருக அறிந்து கொண்டேன்.
பொப் பாட்லெட் ருே ஸ்மார்வின், டொனல்ட் மக்மில்லன் - இவன், 'மாக் என அழைக்கப்பட்டான் - மருத்துவர் குட்செல், ஜோர்ஜ் பொருப், மற் ஹென்சன் ஆகிய அனைவரும்' ஒர் அதியசமான குழுவினராவர். அவர்கள் ஒவ்வொரு வருமே ஏதுமொன்றினைச் சிறப்பாகச் செய்யக்கூடியவராக இருந்தனர். எனது வயதை யொத்த வஞன ஜோர்ஜ் பொருப் எனக்கு மிக நெருங்கிய நண்பனஞன். வடக்கிலிருந்து திரும்பிய பின் அவன் அமெரிக்க இயற்கை வரலாற்று அரும்பொருட்சாலையில் புவிச் சரிதவியல் கற்ருன். நான் அவனை அங்கு சந்தித்தேன். அவன், ஆக்டிக் பிரதேசத்தில் அலாதியான விருப்பம் கொண் டிருந்தான். நாம் இருவரும் வடதுருவத்தை அடைவது பற்றி மணித்தியா லக் கணக்கில் பேசுவோம். குருேக்கர் - லாந்தைக் கண்டு ஆய்வதற் சான பயணத்தில் ஜோர்ஜ் என்னைத் தன்னுடன் சேர்ந்து கொள்ளு மாறு விரும்பினன். ஆனல், நானே ஆசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன்.
ஆக்டிக் இடையூறுகள் அனைத்தையும் எதிர்கொண்டபின் ஜோர்ஜ் 1912 இல் நியூ யோக்கிற்கு அண்மையிலிருந்த தனது
33

Page 24
காடைக்கால இல்லத்திற்கு அருகாமையில் உல்லாசப் பயண
படகொன்றைச் செலுத்திக் கொண்டிருந்த போது உயிரிழிந் தான். அவனுடைய ஞாபகார்த்தமாக எனது மூத்த மகனுக்கு ஜோர்ஜ் பொருப் அஸ்ட்ரூஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எனது மகனிடம் வட துருவப் பயணம் பற்றி ஜோர்ஜ் பொருப் எழுதிய குறிப்புப் புத்தகம் இருந்தது. பின்னர் அவன் அதனை நியூயோக் நகரின் நாடுகாண் பயணிச் சங்கத்திற்கு வழங்கினன். அக்குறிப்புப் புத்தகம் பியரி தன் ஆட்களைப் பனிக் கால நீண்ட இரவு நேரங்களில் எத்துணை மகிழ்ச்சியிலும், உடல் நலத்திலும் வைத்திருந்தான் என்பது பற்றி உண்மையான விளக் கம் கொடுக்கின்றது. பியரி தொடர்பான இவ்விடயத்தைச் சொல்வதற்கு நான் அடிக்கடி ஜோர்ஜின் குறிப்புப் புத்தகத் தையே பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில் அவனுடைய கருத்து அத்துணை புதுமையானதாகும்.
வடதுருவத்திற்குப் பயணமாகுதல்-1908-1909
1908 யூலை 9 இல் ரூஸ்வெல்ட் கப்பல் நியூயோக்கிலிருந்து புறப்பட்டது. நியூயோக்கிற்கு அருகில் அது ஒய்ஸ்ட்டர் விரி குடாவில் தங்கியது. அங்கு அமெரிக்க ஜனதிபதியும் அவரு டைய குடும்பத்த வரும் கப்பலைக் காண வந்தனர். ஜனதிபதி ரூஸ்வெல்ட் அவ்விடத்தை விட்டகலும்போது 'பியரி உன்னில் எனக்கு நம்பிக்கையுண்டு, உனது வெற்றியிலும் எனக்கு நம் பிக்கையுண்டு' எனக் கூறினர்.
கப்பல், புயல் எழும்பிய கடலலைகளைத் தாண்டி, லப்ர டோர் கரையிலுள்ள சாள்ஸ் முனைக்குச் சென்றது. நாய்களின் உணவிற்காக கப்பல் அங்கு திமிங்கில இறைச்சியை நிறைய ஏற்றுக்கொண்டது. இவ்விறைச்சியில் ஒரு பகுதி கெட்டுப்போய், அதனை உட்கொண்ட நாய்களுள் சில பின்னர் இறந்தன.
கிறீன்லாந்தில் யோர்க் முனையில் எஸ்கிமோக்களில் முதல் தொகுதியினர் பயணக்குழுவைச் சேர்ந்தனர். குட்டையாகவும் விலங்குத் தோல்களிலான உடையிலும் அவர்கள் இருந்த தன்மை இளைஞனன ஜோர்ஜ்"க்குப் புதுமையாகக் காணப் Lட்டது. ஆனல் விரைவில் அனைவரும் ஒருவரையொருவர் அறிந் தும் புரிந்தும் கொண்டனர். அவர்கள் தம் குடும்பங்களையும் நாய்களையும் தங்களோடு கொண்டு வந்திருந்தனர்.
34

வோல்றசுகளை (கடல் விலங்குகள்) வேட்டையாடுதல்
ஜோர்ஜ் முதன் முதலாக யோர்க் முனைக்கு அருகில் வோல் றசு வேட்டையாடுவதற்குச் சென்ரு ன். பனியில் ஏறக்குறைய မ္ဘီ)မှူး வோல்ற சுகளைக் கண்ணுற்ற கப்பல் தலைவன் பாட்லெட் வேட்டையாடுவதற்குச் செல்வது நல்ல அனுபவமாக இருக்கும் என நினைத்தான். சிறிய படகொன்றில் தன்னுடன் மாக்கையும், ஜோர்ஜ்ஜையும் அவன் கூட்டிச் சென்ரு ன். படகைச் செலுத்து வதற்கு டெனிஸ் மார்பி என்னும் மாலுமியையும் கூட்டிச் சென்ருன். எஸ்கிமோக்கள் பலரும் அவர்களுடன் சென்றனர். பனியில் தங்கியிருந்து வோல்ற சுகளுக்குக் கிட்டச் சென்றபோது தம் கையால் தொடக்கூடிய முறையில் மற்றும் பல வோல்றசு கள் நீரில் இருந்ததை அவர்கள் காணமுடிந்தது.
நீரிலிருந்த விலங்குகள் எதனையும் கொல்வதற்கு அவர்கள் முயலவில்லை. பனியிலிருந்த விலங்குகள் நீரிலிருந்தவற்றினும் சிறந்தவையாகத் தோன்றின. ஆனல் எஸ்கிமோக்கள் அவற் றிற்கு அருகிற் செல்ல விரும்பவில்லை. அவை தோற்றத்தில் முரடானவையாகவும், வலுக் கொண்டனவாகவும் காணப்பட் டன. யாது செய்யலாம் என்று அவர்கள் தீர்மானம் கொள்ள முன்னர் சில வோல்ற சுகள் அவ்விடத்திலிருந்து விலகிச் செல்லத்
தொடங்கின.
மாக் தனது துவக் கைக் கொண்டு சுட்டான். அவற்றினில் இரண்டு அடிபட்டன. மூன்ற வது ஒன்று காயமுற்றது. ஆனல் எஸ்கிமோக்கள் அது நீருள் அமிழத் தொடங்கியபோது ஈட்டி கொண்டு அதனை அமிழாது தடுத்துப் பிடித்தனர். வோல்றசு கொல்லப்பட்டவுடன் கல்லைப்போன்று அது கடலின் அடித் தளத்திற்கு தாழ்வது பொதுத் தன்மை. எனவே, அவ்வாறு தாழ் வதற்கு முன்னர் அதனை உடனடியாகத் தடுத்து விடவேண்டும். பின்னர் ஏறத்தாழ 40 விலங்குகள் படகை நோக்கி முன்னேறின. வளி முழுதும் நீரால் நிரம்பியது. நீரும் பெருமளவு தளம்பியது.
அவ்வேளை மூன்று வோல்றசுகள் அடியிலிருந்து நீர் மட்டத் திற்கு வந்தன. உடனே போராட்டம் தொடங்கிற்று. ஆட்கள் இரண்டு விலங்குகளை வீழ்த்தினர். மூன்ரு வது தம் எதிரிகளைக் கொல்லும் நோக்க வெறியுடன் அவர்கட்குச் சில அங்குல தூரத்தில் வந்தபோது அதுவும் சுடப்பட்டது. அது நீருக்குக் கீழ்ப்போகு முன் எஸ்கிமோக்கள் ஈட்டியை அதன் மீது எறிந்து அதனை மீட்டுக் கொண்டனர்.
35

Page 25
"ரூஸ்வெல்ட்" ஒரு சிறிய கப்பல். அது ஈற்றவை விட் அகன்றபோது அதில் நிறைய நிலக்கரியும், திமிங்கில இறைச்சி 50 வோல்ற சுகளின் கொழுப்பும் நிறைந்திருந்தன. மேலும் அதில் ஒன்ருே டொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்கள் இருந்தன. 49 எஸ்கிமோக்களும் இருந்தனர்.
ஆக்டிக்கின் நீண்ட இரவுகள்
ரூஸ்வெல்ட் கப்பல் பனி உறைந்த கடல்களை இடையூ றின்றிக் கடந்து சென்றது. கிறீன்லாந்தின் கரையிலிருந்து ஷெரி டன் முனையில் பனிக்காலத்திற்காக கப்பல் தங்கியது. அங்கிருந்து 90 மைல் தூரத்தில் நிலத்தில் நிறுவப்படும் இறுதி நிலையமான கொலம்பியா முனைக்கு உணவுப் பொருட்கள் சறுக்கு வண்டி மூலம் சேர்க்கப்படும். கொலம்பியா முனையிலிருந்து வடதுரு வத்தை நோக்கிய பயணம் தொடரும்.
தனது ஆட்களின் உடலையும் உள்ளத்தினையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் பியரி பெரிதும் நம்பிக்கை கொண்டவன். ஆக் டிக் இரவுகளில் சறுக்கு வண்டிக் குழுவினர் அல்லது வேட்டைக் குழுவினர் நிலாவொளி திருப்தியாக விருந்த நேரமெல்லாம் கூடா ரத்தை விட்டு வெளியிற் சென்றனர். இளவேனிற் காலத்தில் சூரிய வெளிச்சம் வரும் தறுவாயில் ஆட்கள் அனைவரும் உடல் நலத்துடன் இருந்தனர். வெளியில் வேலை செய்வது அவர்களுக் குக் குளிரைத் தாங்க வல்ல வலுவை வழங்கியது.
செப்டம்பர் 16 இல் கொலம்பியா முனைக்கு உணவுப் பொருட்களைச் சறுக்கு வண்டிகளில் எடுத்துச் செல்லும் வேலை ஆரம்பமாயது. விரைவில் பணிக்காலம் ஆரம்பித்தது. ஆட்கள் கடைசியாக ஒக்டோபர் 8 ஆந் தேதியன்றே சூரியனைப் பார்த்தனர். அதன் பின்னர் நிலா வொளியில் அல்லது ஆட்கள் எடுத்துச் சென்ற வெளிச்சங்களின் துணையுடன் பயணம் மேற் கொள்ளப் பட்டது.
பயணத்தைப் புதிதாக மேற்கொள்வோருக்கு அக்சூழ்நிலை புதுமையாக இருந்தது என்று ஜோர்ஜ் பொருப் குறிப்பிட்டான். சில வேளைகளில் சாலநேரம் பகலா அல்லது இரவா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. காலநிலை அதிக கடினமான குளி ராக விருந்தது. ஆனல், காற்று வீசாததால் குளிர் அத்துணை கொடூரமானதென்று எளிதில் ஆட்கள் உணரவில்லை. அவர்கள்
36
 

சில சமயங்களில் தம் உள்சட்டைகளுடன், குளிரால் பாதிக்கப் Y. வகையில், சில நிமிடங்களுக்கு வெளியிலும் கூடச் சென்
னர்.
டிசம்பர் 22 ஆந் தேதியின்று சூரியன் தெற்கில் மிகத் தொலை வால் நிலையத்தைக் கொள்ளும். பின்னர் பின்னேக்கி வரும். 1904 இல் அவ்வாறு பின்னேக்கி வரும் நாளன்று மதிய நேரத்தில் தெற்கு வானத்தில் ஒரு சிறிய வெளிச்சம் தென்பட்டது. பியரி தன் ஆட்களை அழைத்து, சூரியன் தான் திரும்பிச் செல்லும் பயணத்தைத் தொடங்கி விட்டது என்று காட்டினன். ருே ஸ் மார்வின் கப்பல் மணியை ஒலித் தான். மற் ஹென்சன் மூன்று தரம் துவக்கினைக்கொண்டு வெடி வைத்தான். ஜோர்ஜ் பத்து எண்ணெய்ப் பந்தங்களைக் கொளுத்தினன்.
பின்னர், அவர்கள் தங்கள் கூடாரத்துள் சென்று உணவும் மதுவும் அருந்தினர். மேல் அங்கி மட்டும் அணிந்திருந்த எஸ்கி மோப் பையன் ஒருவன் சூரியனைப் பார்ப்பதற்காக வெளியே ஓடினன். ஆட்கள் அவனுக்குப் பின்னல் ஓடிச் சென்று அவனை மீட்டு உள் கொண்டு வந்தனர்.
இருளடர்ந்த மாதங்களில் பியரி தனது ஆட்களைச் சுறு சுறுப்பாக வைத்திருப்பதில் கொண்டிருந்த நம்பிக்கையைப்பற்றி பொருப் எழுதினதாவது:
நாடுகாண் பயணிகள் பலரால் பெரிதும் அஞ்சப்பட்ட ஆக்டிக் இரவுகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வல்லவை, துயரம் தரவல்லவை, இருட்டு நிறைந்தவை, ஆட்கள் தம் சுயவுணர்வு களை இழக்கச் செய்ய வல்லவை. அவற்றைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வதற்கு முன்னரே பாதி இரவுகள் கழிந்து விட்டன. பியரியின் வழிமுறைகளைப் பின்பற்றி நாங்கள் நிலாவொளியிலே பயணம் செய்தோம். எப்பொழுதும் கப்பலில் சுறுசுறுப்பாக இருந்தோம். எஸ்கிமோக்களுடன் பேசி அவர்க ளிடமிருந்து பல விடயங்களை அறிந்து கொண்டோம். எப்பொ ழுதும் சுறுசுறுப்பாக இருந்ததால் மகிழ்ச்சியோடு நாம் இருந்தோம். வேலைக்கான நாளின் கால அளவு அதிகம் நீடித்திருக்கவில்லை. வாழ்க்கையின் உண்மையான இன்பத்தை அதுவரை ஒருபோதும் நான் அறிந்திருக்கவில்லை. . . . . '
37

Page 26
கிறீன்லாந்தில் மேற்கொண்ட தனது முதலாவது பயணங் களில் எஸ்கிமோக்களின் உருண்டை வடிவான பனிக்கட்டி வீ களைக் கட்டிக் கொள்வதற்கு பியரி அறிந்திருக்கவில்லை. இ வனுபவமில்லாத் தன்மையில் தேவைக்கதிகமான துன்பத் ஏரித அவன் அனுபவித்திருந்தான். இப்பொழுது அவ்வாரு ன /வீடு களைக் கட்டுவதற்கு எஸ்கிமோக்களிடமிருந்து கற்றுக் கொள்ளு மாறு பியரி தனது ஆட்களை ஊக்குவித்தான்.
பொருப் எழுதினதாவது:
எஸ்கிமோ ஒவ்வொருவரும் சதுரமான பனித்துண் டங்களை வெட்டத் தொடங்குவர். பின்னர், போதுமான எண்ணிக்கையில் பனித்துண்டங்களை வெட்டிக் கொண்டதும், ஒருவன் பனியில் ஒரு வட்டத்தை நிர்மாணிக்கின்றன். அவன் அவ்வட்டத்தினுள் நிற்க ஏனையோர் பணித்துண். டங்களைக் கொண் டு வருகிருர்கள். நிற்பவன் உருண்டை வடிவம் அமையும் முறையில் அத்துண்டங் களே வரிசையில் ஒன்றின் மேல் ஒன்முக அடுக்குகின்ரு ன். கடைசி யான துண்டத்தை உச்சியில் வைப்பதே மிக்க கடினமான வேலை யாகும். வீட்டின் உட்புறத்தில் தரையின் பின்புறப்பகுதி ஏனைய பகுதிகளிலும் உயர்ந்ததாக அமைக்கப்படுகிறது. இதுவே படுக் கையாகும். தரையிலிருந்து மூட்டப்படும் சிறு நெருப்பிலிருந்து எழும் வெப்பமான வளியினல் இப்படுக்கை சூடேற்றப்படுகின்
O gil.
வடதுருவத்திற்கு விரைவதற்கான திட்டம்
பியரி தன் நெடுங்கால அனுபவத்தைக் கொண்டு கட தாசித் தாளில் வடதுருவத்தை அடைவதற்கான திட்டமொன்று வகுத்தான். அத்திட்டப் பிரகாரம் ஐந்து குழுக்கள் இடம் பெறும் ஒனறு பியரியினது. ஏனைய நான்கு குழுக்களும் வட துருவத்திலிருந்து 150 மைல் தூரத்தில் கடற் பனி மீது கூடாரம் அமைப்பதற்கு அவனுக்கு உதவி செய்யும். பின்னர் பியரி சிறந்த சறுக்கு வண்டிகளோடும், நாய்களோடும் வண்டியோட்டுநரோ டும், எஞ்சிய தூரத்தைப் பூர்த்தி செய்வான, பியரியும் அவ னுடைய குழுவினரும் திரும்பி வரும்போது ஏனைய குழுவினர் நிறுவி வைக்கும் பணி வீடுகளையும் ஆங்காங்கு வைத்துள்ள உணவு வகைகளையும் பாவிப்பர்.
38
 
 

அது மிகச் சிறந்த திட்டம் எனினும், ஆக்டிக் பணியின் இடமாற்றத்திற்கு ஏற்ப முழுமையான திட்டமொன்றை வகுப் து அசாத்தியமாகும். அங்கு ஏற்படக் கூடிய புயல்கள் பனியை ப்பொழுதும் ஒதுக்கி நீரைத் திறந்து விடலாம்; பனி பெயர்ந்து ல்லலாம். திட்டமிட்ட வழி தவறிப் போகலாம். 1906 இல் அல்வாறு நேர்ந்தது, பியரியால் கடவுளின் உதவியை நாடி கால நிலைக்காக பிரார்த்திக்கவே அச்சந்தர்ப்பங்களில்
V
னியில் ஏற்படவல்ல திறப்பு வெளிகள் மிகப் பெரும் பிரச்சினையாக இருந்தன. பயணம் செய்வதற்குப் போதுமான அளவிற்கு வெளிச்சம் வந்ததும் குழுவினர்கள் புறப்படுவார்கள். வருடத்தின் அக்கால நேரத்தில் மிகக் குளிராக இருந்ததனல் பலத்த காற்று இருந்தாலன்றி மற்றப்படி திறப்புகளின் மீது பனி விரைவாக உறைந்து கட்டியாகி விடும். ஆனல் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சோ டைக்கால நிலைமையில் அவர்கள் திரும்பிவரும் போது பனி மிக மெதுவாகவே உறைந்து கொள் ளும். பனிப்பெயர்ச்சிகள் அதி கூடுதலாக விருக்கும். எனவே, உணவுப் பொருட்களைப் பல்வேறு இடங்களில் வைக்கவேண்டும். பியரி வேருெரு வழியாக வரவேண்டியிருப்பினும், அவனும் அவனுடைய குழுவினரும் உணவைப் பெற்றுக்கொள்ள ஏது வாகும். 1906 இல் இவ்வாறன ஏற்பாடுகள் இடம் பெறவில்லை. இதனல், பியரி பசியால் கிட்டத்தட்ட உயிரிழக்க நேரிட்டது எனலாம்.
பெப்ரவரி 15 ஆந் தேதியன்று கப்பித்தான் பாட்லெட் கப்பலை விட்டு கொலம்பியா முனைக்குச் சென்ரு ன். சில நாட் களில் ஏனைய உறுப்பினர்கள் யாபேரும் அவனைப் பின் தொடர்ந் தனர். அப்போது மிகக் குளிரான கால நிலை நிலவியது. ஜோர்ஜ், மக்மில்லன் ஆகியோர் கொலம்பியா முனைக்கு வந்து சேர்ந்ததும் "பொருப், உனது முகம் உறைந்து கட்டி பற்றியுள்ளது, மாக் மில்லன், உனது மூக்கு ஒரு பணித்துண்டமாகக் காணப்படு கின்றது' என்று பியரி கூறினன்.
இரு பெரும் நெருப்புகள் எரிந்து கொண்டிருந்ததெனினும் எஸ்கிமோக்களுமே உறக்கம் கொள்ளாத வகையில் அத்துணை கடும் குளிர் நிலவியது, என்று ஜோர்ஜ் எழுதினுன். காலை உணவு அருந்திய பின் அடுத்த ஆறு கிழமைகளில் இதற்கு முன் னிருந்ததிலும் அதிக இக்கட்டான நிலைமை ஏற்படும் என்று பியரி தனது ஆட்களிடம் கூறினன்.
39

Page 27
பெப்ரவரி 28ஆந் தேதியன்று வடதுருவம் நோக்கி அவர்கள் புறப்பட்டனர். இரண்டாம் நாள் இறுதியில் பாட்லட் தான் முன்னுேக்கிச் சென்று கொண்டு, உணவுப்பொருட்களைத் திரும்ப வும் எடுத்து வருவதற்காக பொருப்பை நிலையத்திற்கு அனு பினன். இம் முறையமைப்பு திருப்திகரமாகக் காணப்பட்டதி
சில உடைந்து போயின. இதனல் பியரி வடதுருவத்திற்குப் போய் வருவதற்குப் போதுமான அளவு எண்ணெய் இருக்க வில்லை. எரி பொருளின்றேல் முழுப்பயணமும் தோல்வியுறலாம்.
பியரிக்கு எண்ணெய் கொண்டு போகுமாறு அறிவிக்கும் குறிப்புகள் பனிவீடுகளில் தங்களுக்காக வைக்கப்பட்டிருந்ததை மார்வினும், பொருப்பும் கண்டனர். பியரி அப்பொழுது கடற் பணியில் 40 மைல் தூரம் முன் சென்று ஒவ்வொரு நாளும் முன் னேறிக் கொண்டிருந்தான். கொலம்பியா முனையிலிருந்து ஐந் தாவது மைல் தூரத்தில் மார்வினும் பொருப்பும் முன்னேரு து தடுத்து நிறுத்தப் பட்டனர். அவர்களின் கண்களுக்கு எட்டிய வரையில் திறந்த நீர்ப்பிரதேசம் காணப்பட்டது.
அவர்கள் பெரிதும் மனமுடைந்தனர். உணவுப் பொருட் களைப் பியரிக்குச் சேர்ப்பது எத்துணை முக்கியமானது என்பதனை அவர்கள் அறிவர். எனினும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மறுநாள் திறந்த நீர் வழி முன்னரிலும் பார்க்கப் பரவலாகியது. சூரியனை முதன் முறையாக அப்போது கண்டது ஒன்றே அவர்களுக்கு இன்பமான விடயமாக இருந்தது. அவர் கள் சூரியனைக் கண்டு ஐந்து மாதங்களாகும்.
பொருப்பும் மார்வினும் ஐந்து நாட்களாக மனத்திகிலுடன் காத்திருந்தனர். பியரி கடற் பணியில் 90 மைல் தூரம் முன் னேறிச் சென்றிருப்பான். ஆகவே, அவர்கள் அவனைக் கண்டு கொள்ளாது போகவும் கூடும். பின்னர் மார்ச்சு 10 ஆத் தேதியன்று நீர்ப்படலம் பணியால் மூடப்பட்டது. அவர்கள் முன்னேக்கி விரைவுற்றனர்.
நான்கு நாட்களுக்குப் பின்னர் பியரியை அவர்கள் கண் ட4 னர், அவனும் திறந்த நீர் வழியின் பேரால் தடுத்து நிறுத்தப்
பட்டிருந்தான். அங்கு நிலவிய அமைதியான குளிர்காற்றினில் கூடாரத்தைக் காண்பதற்கு முன்பே நாய்கள் குரைக்கும் சப்
40
 
 
 
 
 

தத்தை அவர்களால் கேட்க ஏதுவாயிற்று. பியரி அவர்களைச் சந்திப்பதற்கு வந்தான். பெருமையும் மகிழ்ச்சியும் தரும் ஒரு
ந்தர்ப்பமாக அது இருந்தது என்று பொருப் எழுதினன்.
மக்மில்லனின் பாதங்கள் விறைத்து உறைந்து சாணப் பட்டன. அவற்றினல் ஏற்பட்ட நோவு வலி அவனை அடுத்த நாளே அங்கிருந்து திரும்பச் செய்தது. அவன் மனமுடைந்தான். ஏனையோரும் தங்களுடன் தங்கள் நண்பன் இறுதிவரை போக முடியாது போயிற்று என்று துக்கித்தனர். v,
திட்டமிட்டபடி வடதுருவத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தது. ஒவ்வொரு ஐந்து செலவுகளின் இறுதியிலும் அவர் களுள் ஒரு வன் திரும்பினுன். முதலாவதாக மருத்துவர் குட் செல் திரும்பினர். அதன் பின் மக்மில்லன், பொருப், மார்வின், பாட்லெட் ஆகியோர் முறையே திரும்பினர். ஹென்சனும் பியரி யும் வடதுருவத்தை நோக்கிச் சென்றனர்.
வடதுருவத்திற்குப் போவதற்கு தன்னிடமுள்ள எதனை யும் தான் கொடுத்திருப்பா ன் என்றும் ஆனல் தான் சென்ற தூரம் வரை சென்றதையிட்டு மனமுவந்தான் என்றும் பொருப் எழுதினன். 'நான் எனது வாழ்க்கையில் ஒரு பொழுதுமே அத் துணை மனம் வருந்தியதில்லை. - ஆயினும் அது நாடுகாண் பயன விளையாட்டில் ஒரு பகுதியாகும்' . . . . . .
பாட்லெட்டுடனும், ஹென்சனுடனும் பியரி பயணத்தைத் தொடர்ந்தான். மார் வின் திரும்பியபின், ஐந்து செலவுகளுக்குப் பின் கப்பித்தான் பாட்லெட் திரும்பிவிட்டான். அவன் அவ் வமயம் வேறு எந்தவொரு மனிதனும் சென்றிராத தூரத்திற்கு வடக்கே சென்றிருந்தான். ஆயினும் அவன் மனத்துயரோடு தெற்கு நோக்கிப் பயணம் கொண்டான்.
பியரி பாட்லெட்டைத் தன்னுடன் கூட்டிச் சென்றிருக்க வேண்டும் எனப் பலர் நினைத்தனர். ஆனல் பியரி அவ்வாறு செய்யாதிருந்ததிற்குத் தகுந்த காரணங்கள் இருந்தன. தாம் மூன்று பேரும் இறக்கக் கூடும், பியரியையும் பாட்லெட்டையும் தவிர வேருெரு வரும் கடற்பனியினூடு "'ரூஸ்வெல்ட்' கப் பலைத் திருப்பிச் செல்வதற்குப் போதிய அனுபவம் பெற்றிருக்க வில்லை. அவர்கள் இருவரும் இறந்து போயின் ஏனையோரும் இறந்து போகலாம். எஸ்கிமோக்கள். நீங்கலாக ஹென்சனே
莒五

Page 28
அக்குழுவினருள் சிறந்த நாயோட்டியாக இருந்தான். “ஹென் சன் எங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தவனக இருந்தான்’ என்பதனைக் கொண்டே அவனைப் பியரி அழைத்துச் சென்ரு ஷ் என்று மக்மில்லன் கூறினன். பியரி சரியான காரியத்தை செய்தான் என்று பாட்லெட் எப்போதும் கூறினன்.
கப்பித்தான் சென்ற பின் பியரி தனது பயணத்தின் /இறு திக் கட்டத்தை மேற்கொள்வதற்குச் சாதகமான நிலையில் இருந் தான். அவனிடம் நல்ல நிலையில் ஐந்து சறுக்கு வண்டிகள் இருந்தன. 40 நாய்களும் போதுமான அளவில் உணவும் இருந் தன, மிகச் சிறந்த வண்டியோட்டுநரான நான்கு எஸ்கிமோக் களும் இருந்தனர். அவர்களை அவன் முற்ருக நம்பினன். கால நிலை நல்லதாக விருப்பின் அவன் வடதுருவத்தை ஐந்து செலவு களில் அடைந்து விடமுடியும்.
பியரியும் ஹென்சனும் செலவுகளிடையே மூன்று அல்லது நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கி எழுந்து முன்னுேக்கி விரைந்தனர். வடதுருவத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் தரிப்புக் கொண்டு அவர்கள் கூடாரம் அமைத்தனர். இக்கூடா ரத்திற்கு தனது உற்ற நண்பனைக் கெளரவிக்குமுகமாக "ஜேசுப் கூடாரம்' எனப் பியரி பெயரிட்டான். மதிய வேளையில் வட துருவத்திலிருந்து தாம் உண்மையில் மூன்று மைல்தூரத்தில் இருந்ததைக் கண்டனர். இரண்டு எஸ்கிமோக்களுடன் 10 மைல் தூரம் சென்ற பின், தான் வடதுருவத்தைத் தாண்டி விட்ட
தைப் பியரி உணர்ந்தான்.
பியரி அந்த அனுபவத்தையிட்டு எழுதியதாவது ". . . . . அந்தக் கட்டத்தில் சூரியன் தெற்கினில் இருந்தது - ஆனல், உலகின் மறுபகுதியில் 10 மைல் தூரத்தில் கூடாரத்தில் இருந் தோருக்கு அது வடக்கினில் இருந்தது.”
ஈற்றில் வடதுருவம் அடைதல்-1909,ஏப்ரல் 6 ஆந் தேதி
பியரி, ஜேசுப் கூடாரத்திற்குத் திரும்பினன். மறுநாள் அவன் சூரியனின் நிலையத்திற் கேற்பத் தான் இருந்த நிலையத் தைப் பற்றிப் பல அளவீடுகள் மேற்கொண்டான். அவன் நான்கு வெவ்வேருண நேரங்களில் இரண்டு இடங்களில் மூன்று திசை களில் 13 தொகுதிகளாக அளவீடுகளைச் செய்தான். பின்னர் அவன் வெவ்வேறு திசைகளில் எட்டு அல்லது பத்து மைல்
49

தூரம் பயணம் செய்தான். இப்பயணங்களின் போது ஒரு நேரத் தில் வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் ஒன்முகக் கூடும் நிலயத்தை அவன் கடந்தான். அவன் தனது கண்டு பிடிப்பு பற்றிய இரு பதிவேடுகளை எவருமே அவற்றினை ஒரு போதும் கண்ணுற மாட்டார் என்று உணர்ந்திருந்த போதும் சிறிய பனிக்குன்ருென்றின் அடியில் வைத்தான்.
இளவேனிற் காலம் வருவதற்கு முன்னர், அதாவது, பனிப் படலம் சிறந்த வெளியிலிருந்து விலகுவதற்கு முன்னர், குழு வினர் நிலத்திற்குத் திருப்பிவிட முடியுமா எனும் கேள்வி இப் போது எழுந்தது. நாய்களுக்கு வழமைக்கு மேலாக உணவு வழங்கப்பட்டது. ஆட்கள் தமக்குத் தேவைப்படாதிருக்கக் .&h-LLuu பொருட்கள் அனைத்தையும் எறிந்தனர். 62. Η - துருவத்தை அடைவதற்கு மேற் கொண்ட வேகத்தைக் காட்டி லும் இரு மடங்கு வேகத்துடன் நாள்தோறும் திரும்பிப் போவ தற்கு பியரி திட்டமிட்டான். அனைத்தும் நன்முறையில் நடை பெற்றது. பனி வீடுகளை அவர்கள் பயன்படுத்தினர். புதிய பணிப் படலங்களின் மீதிருந்த நீரையும் கடந்தனர். ஏப்ரல் 22 ஆந் தேதியன்று கிறீன்லாந்தை அவர்கள் அடைந்தனர். எஸ்கிமோக் கள் மகிழ்ச்சியால் ஆடிப்பாடத் தொடங்கினர்.
ருேஸ் மார்வினின் மரணம்
அவர்கள் கொலம்பியா முனையில் உணவுக்கும் உறக்கத் துக்குமாக இரு முழு நாட்கள் தங்கினர். பின்னர் கப்பலுக்குச் சென்றனர். பியரி “ரூஸ்வெல்ட் கப்பலை" அடைந்தபோது ருேஸ் மார்வின் இறந்து விட்ட துக்கச் செய்தியை கப்பித்தான் பாட்லெட் பியரிக்குக் கூறினன். வெற்றியின்பேரால் ஏற் பட்ட களிப்பினைத் தாழ்த்தக் கூடிய அப்பேரிடியான துயரச் செய்தி பியரிக்குத் திடீரெனவாக விருந்தது. பியரியோ தனக்கு உதவி செய்வதற்காக மிகக் கடினமாக உழைத்த ஒருவன் தனக் கருகில் ஒரு போதும் நிற்க மாட்டான் . . . . என்பதை எளிதில் நம்பமுடியாத வனக இருத்தான்.
பியரி 23 ஆண்டுகளாக ஆக்டிக்கில் செய்த நெடும் பய ணங்களில் இருந்த ஒரேயொரு மனிதன் ருே ஸ் மார்வினுகும். அவனுக்கு யாது நேர்ந்தது என்பது பற்றி ஒன்றுமே தெளி வாக்கப்படவில்லை. ஜோர்ஜ் பொருப்பின் செய்திக் குறிப்பில் அது பற்றி வருமாறு காணப்படுகிறது.
43

Page 29
ஏட்ரல் 17 ஆந் தேதியன்று நாம் ' ரூஸ்வெல்ட்' கப்பலில் இருந்தோம். கப்பலை நோக்கி வந்து சறுக்கு வண்டியை இழுத்த நாய்களின் அரவம் கேட்டது. பனியூடாக விரைந்து கொண் ே நாய்கள் வருவது வழக்கம். ஆனல் இந்நாய்களோ மெதுவா! வந்து கொண் டிருந்தன. எங்களிற் சிலர் அவற்றினைச் சந்திப் பதற்காக வெளியில் ஓடினுேம். எஸ்கிமோக்களில் ஒருவனன குட்லுக்டு என்பவன் மார் வின் இறந்துவிட்டதாக எம்மிடம்
கூறினன்.
குட்லுக்டும் மார் வினுடன் இருந்த மற்ருேர் எஸ்கிமோ வ ஞன ஹரிகனும் மனக்குழப்பம் கொண் டவர்களாகத் தோன்றி னர். ஈற்றில் கப்பலுக்கு வந்து சேர்ந்த குட்லுக்டு பின்வரும் விடயத்தைக் கூறினன். பியரியை மார் வின் விட்டுப் பிரிந்த பின்னர் அவனும் இரண் டு எஸ்கிமோக்களும் திறந்த நீர் வெளியை எதிர் நோக்கியதன் காரணமாக ஒவ்வொரு நாளும், குறுகிய தூர அளவே பயணம் செய்ய ஏதுவாயிருந்தது. ஒரு நாள் காலை வழக்கம் போன்று எஸ்கிமோக்களுக்கு முன்னரே மார்வின் புறப்பட்டான். சில மைல் தூரத்தில் 'பிக் லீட்' இருந்தது. குட்லுக்டுவும் ஹரிகனும் அங்கு வந்து சேர்ந்த போது: மார்வின் திறந்த நீர் வழியிற் கிடந்ததைக் கிண் டனர். அவர்கள் கூப்பிட்டும் அவன் பதிலிறுக்கவில்லை. அவனை வெளியே எடுப்ப" தற்கு அவர்கள் முயன்ற போது மெல்லிய பனி இளகி விட்டது. அவர்கள் அண்மையில் ஒரு கூடாரத்தை அமைத்தனர். மறு நாட் காலையில் அவனுடைய சடலம் தண் ணிரில் அமிழ்ந்து விட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பின் இன்னெரு நாடுகாண் பயணி குட்லுக்டு என்பான் மார் வினைத் தானே கொன்றதாக அவர் களிடம் கூறியிருந்தானென்று, கிறீன்லாந்து எஸ்கிமோ க்கள் கூறக் கேட்டுள்ளான். ஹரிகனேடு மார்வின் கோபம் கொண்ட தாகவும், உணவில்லாமல் அவனை விட்டுச் செல்வதாக அவனைப் பயமுறுத்தியதாகவும் அதன் காரணமாக தான் அவனைக் கொன்றதாகவும் குட்லுக்டு சொல்லியிருந்தான். தன் நண்பனைக் காப்பாற்றும் நோக்கமாகவே அவ்வாறு செய்தான் என்றும் கூறியிருந்தான்,
மார் வின் அவ்வாருக ஒருபோதும் நடந்து கொள்ளவோ அன்றி கூறியிருக்கவோ மாட்டான் என்பதை அவனை நன்கு
அறிந்தவர்கள் உணர்வர். மார் வின் நற்பண் புடைய ஒரு நல்ல
A4

மனிதன். அவன், பியரி நீங்கலாக வேறு எவரைக் காட்டிலும்,
கூடுதலாக எஸ்கிமோக்களையிட்டு அறிந்த வஞவன். ஆக்டிக் பய
ணங்களில் ஏற்படும் பைத்தியத்தினுல் குட்லுக்டு ஓரளவு மதி
யிழந்தான் என்றே நான் நம்புகின்றேன். பெரும் கஷ்டங்களுக்
குள்ளான மனிதரும் நாய்களும் இவ்வாறு மதியிழந்து சிறிது
மனத்தளம் பல் கொள்வதுண்டு. குட்லுக்டு வேறுபட்ட இரு கதைகளைக் கூறியதற்குக் காரணம் மற்றையோர் தன்னை ஒரு பைத்தியக்காரக் கொலையாளி என்று நினைக்கக் கூடாதென்று அவன் எண் ணியதே என்பது எனது கருத்து.
குக்கினது அறிக்கையையிட்ட முதற் செய்தி
யூலை, 18ஆ ம் திகதியன்று பனி உருகிய போது ரூஸ்வெல்ட் கப்பல் ஷெரிடன் முனையை விட்டகன்றது. அவர்கள் முதலாவ தாக நொக் என்னும் கிராமத்தில் தங்கினர். அங்கு இளவேனிற் காலத் தொடக்கத்தில் குக் இரண்டு எஸ்கிமோக்களுடன் திரும்பி வந்து விட்டான் என்று அவர்கள் கேள்விப்பட்டனர். தான் கடற் பணியில் நெடுந்தூரம் பயணம் செய்திருந்ததாகவும் குக் சொல்லியிருந்தான். ஆனல் அவன் உண்மையைச் சொல்லவில்லை என்றும் அவ்விரண்டு எஸ்கிமோக்களும் சொல்லியிருந்தனர். குக் ஏற்கனவே தென் கிறீன்லாந்துக்குப் போய்விட்டான். ஈற் ருவை அடையும் கால் குக்கின் பயணம் பற்றிய அறிக்கைக்குத் தாம் எவ்வகை முக்கிப்பத்துவமும் கொடுக்கவில்லை என்று ஜோர்ஜ் பொருப் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதினன். அங்கே குக்கிற்கு உதவியாளர்களாக இருந்த இரண்டு எஸ்கிமோக்களும் ரூஸ்வெல்ட் கப்பலுக்கு வந்தனர். பொருப் அது சம்பந்தமாக எழுதியதாவது.
அவர்கள் தூர வடக்கு வரையில் சென்றிருந்தனர் என் பதை நாங்கள் அறிந்தது போல நடித்தோம். கடற் பணியில் பத்து அல்லது பதினைந்து பயண அளவுகள் செய்திருந்தார்கள் என்று அவர்களையே ஒப்புக் கொள்ளும்படி நாங்கள் முயன் ருேம். ஆனல் அவர்களோ குக்கின் துருவம் இருந்த திசையில் இரண்டு வெளிப்பயண அளவுகள் மட்டும் சென்றதாகத் தொடர் ந்து சொன்னுர்கள்.
கடற்கரையில் குக் பயன்படுத்திய சறுக்கு வண் டியை நாங் கள் கண்ணுற்றேம். ஈற்ருவிலிருந்து இரு பயணங்கள் தாங்கள் செய்த போதும் ஈற்ருவுக்குத் திரும்பியபோதும் தாங்களும்
45

Page 30
அச்சறுக்கு வண்டியும் பிரிக்கப்படாமலே இருந்ததாக எஸ்கி மோக்கள் கூறினர் . . . . சறுக்கு வண்டி பயணத்திற்குப் புறப் பட்டபோது எப்படியிருந்ததோ அப்படியே இருந்தது. அது மிகப் பளுக்குறைந்தும் மெல்லியதாகவும் இருந்தது. ஆனல் அதிலே இரு சிறிய உடைவுகள் மட்டும் காணப்பட்டன.
எங்களுடைய பயணத் தொடர்பாக கொலம்பியாவிலிருந்து முதல் நாள் செய்த பிரயாணத்தில் எங்களுடைய சறுக்கு வண், டி கள் இரண்டு அதிக அளவு உடைந்தமையால் அவற்றின் சொந் தக்காரர் புதிய சறுக்கு வண்டிகளைக் கொண்டு வரும் பொருட்டு திரும்பிச் செல்ல நேரிட்டது. ஏறக்குறைய வேறு ஆறு சறுக்கு வண்டிகளும் மோசமாக உடைந்து போயின. ஒவ்வொரு நாளும் இவ் வண்டிகளில் அநேகம் உடைந்தன. பயணத்தின் பதினரு வது நாளில் ஹென்சன் குழுவினர் தங்களிடமிருந்த மூன்று சறுக்கு வண்டிகளும் உடைந்து விட்டதனுல் உடைந்து போன வண் டிகளிலுள்ள துண்டங்களைக் கொண்டு இரு புதிய சறுக்கு வண்டிகளைப் புதிதாக அமைத்தனர்.
எங்களுடைய சறுக்கு வண் டிகள் குக்கின் வண்டிகளைக் காட்டிலும் இரண் டு மூன்று மடங்கு கூடுதலான கனமுடையன வாயும் அதி வலுவுடையனவாயும் இருந்தன. குக்கின் சறுக்கு வண்டி வடதுருவத்தின் பணியைப் பெரிதும் அனுபவித்திராது என்பது அதனை ஒரு முறை பார்த்ததும் புலனுகும்.
தோமஸ் ஹப்பட்டுமுனையிலிருந்து வட துருவம் செல்ல வும் அங்கிருந்து திரும்பி வரவும் தான் 1040 மைல் தூரம் கடற் பணியைக் கடந்து சறுக்கு வண்டியிற் பயணஞ் செய்ததாகவும், தனக்கு உதவி புரிவதற்கு குழுக்கள் எதுவும் இல்லாமலும், அல்லது இரண் டு சறுக்கு வண்டிகளில் ஏற்றி வரப்பட்ட உணவு வகைகளுக்கு மேலதிகமாக உணவு வகைகளை எடுத்துச் செல் லாமல் தான் பயணம் செய்ததாகவும், குக் கூறியமையைக் கவனிப்பது விரும்பத்தக்கது. குக்கின் பயணத்தூரம் பியரி சறுக்கு வண்டியிற் செய்த பயணத்தின் மொத்த தூரத்தினும் 214 மைல் அதிகமானது.
அறிக்கைகளின் உண்மையைப் பற்றிச் சிறிதளவு மட்டும் நம்பிக்கை கொண்ட பியரியும் அவனுடைய குழுவினரும் கோப் பன்ஹேகனில் குக்கிற்கு எத்துணை வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதை அறிந்தபோது வியப்படைந்தனர். கோபத்தால்
46

பொங்கி யெழுந்த பியரி பத்திரிகைகளுக்கு அறிக்கையை விடுத்து அதன் காரணமாக தனது துன்பங்களை மேலும் அதிகரித்துக் கொண்டான்.
அறிவியலாளர்கள் குக்கை நம்பவில்லை
டென்மார்க்கில் குக் கெளரவிக்கப்பட்டபோது புவியிய லில் அக்கறை கொண்ட இரு குழுக்கள் அவனிடம் வடதுரு வத்தில் சூரியனின் அளவீடுகளைப் பற்றிய பதிவேடுகளையும் நாய் கள் இழுத்துச் சென்ற சறுக்கு வண்டியின் பயணக் குறிப்புகளை யும் காட்டுமாறு கேட்டனர். குக் அவர்களுக்கு மறுமொழியாக தனது கதையை நிருபிக்க வல்ல விலை மதிப்புள்ள பதிவேடு களாகிய அக்குறிப்புகள் கிறீன்லாந்தில் நண்பனெருவனிடம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை அவர்களுக்குப் பின்னர் காட்டுவதாகவும் கூறினன்.
புவியியலில் அக்கறை கொண்ட அம் முக்கியமான குழு வினர் இவ்வாரு ன விசித்திர அறிக்கை யொன்றை ஒரு கணம் தானும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்புவது சாத்திய மாகத் தோன்றவில்லை. தனக்கு சில அளவீட்டு உபாயங்களைத் தவிர வேறு எதனையும் கொடுக்கவில்லை என்று அவனின் நண்பன் கூறியபோது குக் மறுமொழியாக "அது பற்றி அக்கறை இல்லை. ஏனெனில் உண்மையான பதிவேட்டைப் போன்று நான் இன்று எழுதி உள்ளேன் என்று கூறினன். உண்மையான பதிவேடுகள் மட்டுமே பொதுவாகப் பெறுமதி கொண்டனவாகும்.
பல மாதங்கள் சென்ற பின், அவன் வேறு பதிவேடுகளைக் காட்டினன். ஆனல் அறிவியலாளர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. ஈற்றில் வடதுருவத்தை அடைந்ததை நிறுவு மாறு பலர் குக்கை கேட்டதனல் அவன் தனது கதையை மாற்றிச் சொல்லத் தொடங்கினன். அவன் பத்திரிகையாளரிடம் சென்று தான் தவறு செய்திருக்கலாம் என்றும் கூறினன். இதனை அடுத்து அவன் சனங்களுடைய பார்வையினின்றும் அகன்ருன். பின்னர் வடதுருவத்தைத் தான் அடைந்து விட்டதெனக் காட்டி எழுதிய ஒரு புத்தகத்துடன் ஏறக்குறைய ஓராண்டு கழித்து நாடு திரும் பினுன்.
பின்னர் அவன் பத்திரிகையாளரிடம் தான் வடதுருவத்தை அடைந்திருக்கக்கூடும் எனக் கூறினன். பின் ஒரு பொதுச் சொற்
47

Page 31
பொழிவில் தான் வெற்றி கொண்டதாக முன்னரிலும் பார்க்க நிச்சயத்துடன் கூறினன்.
குக் ஆக்டிக்கில் ஆய்வு செய்த போது வட அமெரிக்காவின் மிக உயர்ந்த அலஸ்காவிலுள்ள மக்கின்லி மலையின் உச்சியை அவன் உண்மையில் அடைந்தான என்பதை நாடு காண் பயணி கள் சங்கம் கண்டுபிடிப்பதற்கு முயன்றது. குக் கூறியது போன்று அவன் உச்சியை அடையவில்லை என்பது வெளிப்படையாயிற்று. குக் நாடுகாண் பயணிகள் சங்கத்திலிருந்தும் ஆக்டிக் சங்கத்தி லிருந்தும், மற்றுமொரு கலை விஞ்ஞான வளர்ச்சிக் குழுவிலிருந் தும் விலகுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டான்.
குக் நாடு காண் பயணத்துறை முழுவதையும் அழிவுபடுத்தி விட்டான். பியரிக்கும் குக்கிற்கு மிடையே எழுந்த தகராறுக்குப் பின்னர் சனங்கள் எந்த ஒரு நாடுகாண் பயணியையும் அவன் எவ்வளவு பிரசித்தி பெற்றவனுயினும், அல்லது நம்பத்தகுந்த வனயினும் நம்பவில்லை. பியரி தென் துருவத்தை அடையும் முதலாவது நாடுகாண் பயணியாக இருப்பதற்கும் குக்கே தடை யாக இருந்தான். பியரிக்குத் தேவையான பணத்தை பொது மக்கள் வழங்காதமையால் நன்கு தயாரித்த தனது திட்டத்தை அவன் கைவிட வேண்டிய அவசிய மேற்பட்டது.
பியரி கெளரவிக்கப்படுதல்
அமெரிக்காவின் மிகப் பிரசித்தி பெற்ற புவியியலாளர்கள் பியரியின் பதிவேடுகளை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டனர். அவனை உலகமெங்கணுமிருந்து அறிவியலாளர்கள் கெளரவித்தனர். பின்னர் அவன் ஐரோப்பாவின் ஊடாக வெற்றிகரமான சொற் பொழிவுப் பயணமொன்றை மேற்கொண்டான்.
1910 இல் ஜனதிபதி வில்லியம் எச். டாப்ட் நாட்டின் சட்டமியற்றுநரிடம் பியரியின் அரும் பொருட்களை யெல்லாம் நினைவு கூருமாறு கேட்டுக் கொண்டார். பியரி வடதுருவத்தை அடைந்ததன் மூலம் கடற்படைக்கும் அவனுடைய நாட்டிற் கும் புகழைத் தேடிக் கொடுத்திருப்பதாக அவர் கூறினர். அமெ ரிக்க அரசாங்கம் பியரியின் சாதனைக்கு மதிப்பளிக்க வேண் டும் என்று டாப்ட் கூறினர்.
இதற்குப் பின்னரும் குக்கின் நண்பர்கள் பியரியுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். எனினும் அவனின் மதிப்
48

பிற்கு இடையூறு விளைவிப்பதில், அவர்கள் வெற்றியடைய வில்லை. கடற்படையில் அவனுக்கு உயர்ந்த பதவி வழங்கப் பட்டது. பின்னர் ஊதியத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே கடற்படைச் சேவையிலிருந்து விலகுவதற்கு அவ னுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அவனுக்குப் பல கெளரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. 1920 இல் கடற்படைக் கப்ப லொன்றுக்கும் "பியரி" எனும் பெயர் சூட்டப்பட்டது.
பியரி சொற்பொழிவாற்றும் நீண்ட பயணத்தை மேற் கொண்டபின் 1917 இல் அவனுக்கு ஓர் கெட்ட இரத்த நோய் இருப்பதாக அவனுடைய மருத்துவர்கள் தெரிவித்தனர். எவ்: வித உதவியும் அவனுக்கு நன்மையை வழங்கவில்லை. ஆனல் அவன் சக்திக்கு அப்பால் தொடர்ந்து வேலை செய்தான். 1920 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 20 ஆம் நாளன்று அவன் இறந்தான். அவனை வாஷிங்டனில் பல மரியாதைகளோடு அடக் கம் செய்தனர்.
ஈராண்டுகளுக்குப் பின்னர் - வடதுருவத்தைக் கண்டு பிடித்து 13 ஆண்டுகள் கழிந்து - அமெரிக்க ஜனதிபதியும் மற்றும் பல பிரமுகர்களும் அவனுடைய அரும்பொருட்களை நினைவுகூருமுகமாக அவனது கல்லறையில் கூடினர். அவனின் கல்லறை மீது பூமியைப் போன்ற வடிவத்தில் ஒரு பெரிய வெண்கல்லைச் செதுக்கி அதில் வடதுருவத்திலுள்ள ஒரு விண் மீனைப் பொறித்து வைத்தனர். அக்கல்லின் ஒரு புறத்தில், ‘‘நான் ஒரு வழியைக் காண்பேன் அல்லது ஒரு வழியை அமைப் பேன்' எனும் பியரியின் வழிகாட்டும் வார்த்தைகள் செதுக்கப் பட்டு இருந்தன.
49、

Page 32

இரண்டாம் பாகம்
ஆபிரிக்காவில் அக்லி

Page 33

துார கிழக்கில் ஓராண்டு இருந்த பின்னர், 1925 இன் முடிவில் நியூயோக்கிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அரும் பொருட்சாலைக்குத் திரும்பினேன். அரும்பொருட்சாலையில் நான் கண்ட முதலாவது நபர் தான் அக்லி ஆகும். கண்டதும் அவனை நான் ஆரத் தழுவினேன். ஏனெனில் அக்லி போன்று உற்ற நண்பர்களாக இருக்கக் கூடியவர் ஒரு சிலரே.
"உடல் நலம் எப்படி அக்லி?" என்று நான் அவனை விசாரித்ததுடன் நீ வருகின்ரு யா? போகின்ரு யா என்றும் வின வினேன்.
‘நான் விரைவில் போக இருக்கின்றேன் ருேய், ஒரு மாதத் துள் பிரிட்டிஷ் கிழக்கு ஆபிரிக்காவிற்கு நாங்கள் கப்பலில் செல்ல இருக்கின்ருேம். அப்பயணம் ஒரு நெடும் போராட்ட மாக இருந்துள்ளது. ஆயினும் 'ஆபிரிக்க மண்டபம்" வெற்றி கொண்டுள்ளது. எனது அறைக்கு வா' என்று அவன் கூறினன்.
அக்லி தனது வேலை அறையாகப் பயன்படுத்திய பெரிய மண்டபத்தில் நிலவிய அரை வெளிச்சத்துள் நான் சென்றேன். ஒரு யானையின் சாம்பல் நிறப் பெரிய வடிவமொன்றை அங்கு கண்டேன். முழுப் பருமன் கொண்ட இரண்டு ஆபிரிக்க ஆண் மக்களின் உருவங்கள் சினங்கொண்டிருந்த இரு சிங்கங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. யன்னலுக்கு அருகில் ஒரு வெள்ளைக் காண்டா மிருகம் நின்றது. தரையில் பெட்டி களும் வேலை உபகரணங்களும் மற்றும் பல வகைப் பொருள் களும் பரவிக் கிடந்தன. மேசை மீது யானையைச் சுடும் துவக்கு ஒன்று இருந்தது.
53

Page 34
தரையிலிருந்த பொருள்களினூடாக ஒரு வழியைக் கண்டு சென்று நாம் அமர்ந்தோம். தனது பெருங் கருமமாகிய "ஆபி ரிக்க மண்டபம்’ சம்பந்தமாக நிதி திரட்டுவதற்காக தான் கடந்த ஆண்டிற் செய்த முயற்சிகளைப்பற்றி அக்லி எனக்கு எடுத்துரைத் தான். தான் முதன் முதலாக விலங்குகளை மண் ட பத்திற்கு கொண்டு வருவதற்காக விரைவில் ஆபிரிக்காவிற்குப் போகவிருப்பதாகச் சொன்னன்.
அக்லி தனது மனத்தில் எழுந்த கருத்துப் பிரகாரம் கட்டி யெழுப்பவிருந்த மண்டபத்தின் சிறிய திட்டப் படிவத்தை (படத்தை) என்னிடம் காட்டினன். மண் டபம் முற்றுவிக்கப் பட்ட அமைப்பில் தோற்றமளிக்கும் வகையில் அனைத்துமே விலங்குகள், படங்கள் உருவங்கள் - மிகச் சிறிய பரும அமைப் பில் காணப்பட்டன. 'இப்பொழுது அம்மண்டபம் உண்மை யாகிவிடும் அதனை நான் நம்புவதே கடினமாக இருக்கிறது." என்ரு ன்.
தனது வேலையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டானெனினும் அக்லி தனது 61 வயதில் உண்மையான கிழவனைப் போன்று தோற்ற மளித்தான். அவனுடைய வலுவான தோள்கள் வளைந் திருந்தன. முகம் பெருமளவு இன்னல்களையும் துன்பங்களையும் வெளிக்காட்டின. அவனது முகத்தின் குறுக்கே பாதி வழி வரை வெள்ளை அடையாளம் இழையோடியது. சினங்கொண்ட ஒர் ஆண் யானை ஏற்படுத்திய வடு அது.
அவன் தனது வலக்கையை உயர்த்திய போது, ஒரு சிறு த்தை ஏற்படுத்திய காய அடையாளங்களை நான் கண்டேன். அக்லி தன் கைகளைக் கொண்டே அச் சிறுத்தையைக் கொன்றன. வேறு ஒருவரும் அவ்வாறு ஒரு போதும் செய்ததில்லை. அந்த அனுபவம் பற்றி அவன் அடிக்கடி பேசுவதில்லை. ஏனெனில் அது நெடுங்காலத்திற்கு முன்னர், 1896 இல் முதன் முறையாக ஆபிரிக்காவிற்கு அவன் பயணஞ் சென்ற போது சோமாலி லந்தில் நடைபெற்றது. ஆனல் ஓரிரவு நாம் இருவரும் அரும் பொருட்சாலையில் நின்று கொண்டு நியூயோக் நகரின் பிரகாச மான ஒளி விளக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவ் விடயம் பற்றி எனக்குச் சொல்லுமாறு அவனை நான் கேட்டேன்.
'நான் மற்ருெரு விலங்கைச் சுட்டிருந்தேன், அதனைக் கூடா ரத்திற்குக் கொண்டு வருவதற்காக ஒரு வழிகாட்டியுடன்
54

அதனைத் தேடிச் சென்றேன். அப்பொழுது பெரும்பாலும் இருட் டாக இருந்தது. சுட்ட விலங்கை நாம் அடைவதற்குச் சற்று முன் அவ்விலங்கின், தலையைத் தனது வாயிற் கவ்விக் கொண்டு ஒரு கழுதைப் புலி எங்களுக்கு முனனல் ஓடியது. கழுதைப்புலி உணவிற்காக எவ்விலங்கையும் கொல்வதில்லை. ஆனல் அது ஏனைய விலங்குகள் விட்டுச் செல்வதை உண்ணும். நான் கொன்ற விலங்கினைப் பஞ்சடைத்து வைத்திருக்க விரும்பியதால் அக் கழுதைப் புலியின் செய்கையைக் கண்டு கோபமடைந்தேன்.
கூடாரத்திற்கு திரும்பும் வழியில் ஒரு மரத்திற்குப் பின் னல் ஒரு கரிய உருவமொன்று ஓடுவதை நான் க ைடேன். அது இன்னுெரு கழுதைப் புலியெனக் கருதி வெடி வைத்தேன். உண்மையில் அவ்வாறு செய்தது ஒரு பைத்தியக்காரத்தனம். நான் சுட்டதிற்கு பதிலாக ஒரு சிறுத்தை சீறியது. அதனைக் கேட்ட நான் அச்சமுற்றேன். ஏனெனில் மிக இருட்டான வேளை யில் குறிப்பாக வெடிவைக்க முடியாத தன்மையில் சிறுத்தை யுடன் போராடுவதற்கு நான் சிறிதளவும் விருப்பம் கொள்ள வில்லை. சிறுத்தைகள் எந்நேரத்திலும் ஆபத்தான மிருகங்கள். ஆனல் சூடு வாங்கிய சிறுத்தை தான் இறந்து போகும் வரை சண்டையிடுவதை நிறுத்தாது.
நான் அவ்விடத்தை விட்டு விரைந்துபோக விரும்பினேன். ஆனல் சிறுத்தை சினங்கொண்டு என்னை விரைந்து பிடிப்பதற்கு வட்டமிட்டது. நான் இரு தடவைகள் சுட்டேன், இரண்டும் குறி தவறின. பின்னர் தோட்டாக்களை நிரப்ப வேண்டிய அவ சியமிருந்தது. அவ்வாறு நிரப்பும் முயற்சி முகமாக நான் ஓடிச் சென்று ஒர் ஆற்றுப்படுக்கையினுள் குதித்தேன். அத்தறுவாயில் சிறுத்தை என்னைத் தாக்கியது. துவக்கு என் கையிலிருந்து நழுவி விழுந்தது. அவ்விலங்கு எனது கழுத்தைப் பிடிக்க முயன்றது. நான் திரும்பினேன், அது எனது வலக்கையை தோள் அளவில் தனது வாயிற் கவ்வியது. எனது முதலாவது சூட்டுடன் அதன் கால் முறிந்திருந்ததனல் நான் உயிர் பிழைக்க ஏதுவாயிற்று. அதன் ஒரு கால் புண்பட்டிருந்ததால் தனது பின்னங் கால் களால் என்னைக் கீறிப்பிளக்கும் அளவிற்கு அதனல் நிமிர்ந்து நிற்க முடியவில்லை.
வெறிகொண்ட இரைச்சல்களும் எனது தோள் கிழிந்து வரும் சப்தமும் எனக்குக் கேட்டன. ஆனல் அந்நேரம் நோவு எதனையும் நான் உணரவில்லை. அதனுடைய கழுத்தை எனது
55 T 3

Page 35
இடக்கையினல் அழுத்தினேன். அதன் மூச்சு சிறிது நேரம் நின்றது. அதன் பிடி தளர்ந்து எனது கையை இழுத்து விடு வித்துக் கொள்வதற்கு முயன்றேன். ஆனல் முடியவில்லை. அது எனது கையின் கீழ்ப் பகுதியில் வேருெரு இடத்தில் வாயால் கவ்விக் கொண்டது. நான் அதன் கழுத்தை மீண்டும் அழுத்தி னேன். சிறிது சிறிதாக எனது இடதுகையை அதன் வாயி லிருந்து எடுத்த அதே வேளையில் வலக்கையை இயன்ற அளவு அதன் வாயினுள் திணித்தேன். ஈற்றில் இருவரும் ஒன்ருகத் தரையில் விழுந்தோம். சில தடவை இருவரும் புரண்டு உருண் டோம். கடைசியில் நான் அதன்மேல் இருந்தேன். அது அதன் முதுகில் கிடந்தது; எனது வலக்கை அதன் வாயினுள்ளும், எனது இடக்கை அதன் கழுத்தை நெருக்கிக் கொண்டும் இருந் தன.
நான் எனது முழங்கால்களால் அதனுடம்பை அழுத்தி னேன். அதன் எலும்புகள் முறிவதை நான் உணர்ந்தேன். அதன் வாயிலிருந்து இரத்தம் வெளிவந்து அது தளர்ச்சி அடைந்தது. அது போன்று நானும் தளர்ச்சியுற்றேன். அந்நிலையில் அம் மிருகத்திலும் நீண்டகாலம் நான் வாழ்வேனே என்று யோசித் தேன். என்னல் இயன்ற அளவு இரு முழங்கால்களையும் உறுதியாக அதனுடம்பில் அழுத்தினேன். இவ்வாறு எவ்வளவு நேரம் நாம் இருந்தோம் என்பது எனக்குத் தெரியாது. பல மணிநேரம் போன்று தோன்றியது. கடைசியில் அது அசைவற்றுக் கிடந்தது. நான் எழுந்து நின்றேன். கரிய உருவமைப்புகள் என் கண் களுக்கு முன் ஊசலாடின. நான் களைத்துச் சோர்ந்தேன். வழி காட்டி ஓடிவிட்டான். ஆனல் நான் அழைத்தபோது திரும்பி வந்தான், சிறுத்தை இறந்து கிடந்தது.
நாங்கள் கூடாரத்தை அடைந்தபோது நான் மிகவும் மோச மான நிலைமையில் இருந்தேன். கிழிந்த இறைச்சி போன்று எனது கை தோற்றமளித்தது. அதில் எஞ்சியிருந்த எனது ஆடை ஊடாக இரத்தம் கசிந்தது. எனது சகாக்கள் இரவு உணவருந் திக் கொண் டிருந்தனர். என்னைக் கண்டதும் அவர்கள் அரு வருப்புக் கொண்டனர். பீல்ட் அரும் பொருட்சாலை மருத்துவரான எலியற் எனது கையிலிருந்த ஒவ்வொரு துவாரத்தையும் கழு வினர், கையில் நூற்றுக் கணக்கான துளைகள் காணப்பட்டன. மருத்துவர் நிறைய நீர் விட்டுக் கழுவினர். ஒரு துளையில் விட்ட நீர், மற்ருெரு துளையூடாக வெளிவந்தது. இந்த வேலை முற்றுப் பெறுவதற்கு முன் எமது சண்டையில் சிறுத்தை வெற்றி பெற்
56

றிருக்கக் கூடாதா என்று நான் விரும்பினேன். ஆனல் நான் மற்றேர் போன்று அரு வருப்புக் கொள்ளவில்லை.
அக்லியின் கனவு
நியுயோக் நகர வீதிகளில் எழுந்த சப்தம் எங்கள் செவி களில் ஒலிக்க நாம் இருவரும் அக்லியின் சிறிய அலுவலகத்தில் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டிருந்த போது ஆபிரிக்கா இன் னெரு உலகத்தின் ஒரு பாகமெனத் தோன்றியது. ஆனல் அக்லி யின் மனதில் ஆபிரிக்கா மிக்க அண்மையிலுள்ள ஒரு கனவாகவே எப்பொழுதும் இருந்தது என்பது எனக்குத் தெரியும். அக்லி அங்கு முதன் முறையாகப் பயணஞ் செய்தது தொட்டு, அமெ ரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு நன்கு அறியப்படாதிருந்த ஆபிரிக்கா வைப்பற்றி அவர் நன்முகத் தெரிந்து கொள்ள வேண் டும் என்பதையே அவன் பெரு நோக்காகக் கொண்டிருந்தான். 30 ஆ30 டுகளாக அக்லி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு மணி நேரமும் ஈடுபட்டிருந்த மிக உயர்ந்த வேலை ஆபிரிக்க மண்ட பத்தை நிறுவுவதாகும். இப்பொழுது அக்கனவு நனவாகி வந்தது.
உண்மையில் அக்கனவிற் பெரும் பகுதி ஏற்கனவே உண் மையா யது. இன்று நல்லதோர் இயற்கை அரும் பொருட்சாலை நுழைந்து, உயிர்த்துடிப்புடைய காட்சிகளில் பார்வையாளர்கள் அக்கறை செலுத்துவதை உற்று நோக்குங்கள். சிறு பையன்கள் பெரிய யானையைக் கண்டு வெளிப்படுத்தும் வியப்பினை செவி கொள்ளுங்கள். விலங்குகளுக்குப் பின்னுல் வைக்கப்பட்டுள்ள அழகிய வண்ணந் தீட்டிய காட்சிகளைக் கண்டும், குட்டி மிருகங் கள் அவற்றின் தாய்மார்களாலே பராமரிப்பதைக் கண்டும் பார்வையாளர்கள் கூறும் அதிசயச் சொற்களைக் கேளுங்கள். அவையெல்லாம் காள் அக்லியின் முயற்சிகளைக் கெளரவிப்ப தாகும்.
அக்லியின் காலத்திற்கு முன் அரும் பொருட்சாலை யொன் றில் இடம் கொண்டிருந்த யானை ஒரு சாதாரண சுவரின் முன்னல் ஒரு சதுரக் கல்லின் மேல் நிற்கும். பெரும்பாலும் அந்த விலங்கு கீழே விழாதிருக்கும் வகையில் தரையிலிருந்து இரண்டோர் இரும்புக் கம்பிகள் நிறுத்தப்பட்டிருக்கும். அது போன்றே மற்றும் மிருகங்கள் அனைத்தும் உயிரற்றுத் தோன் றும். ஆனல் அக்லி அவற்றிற்கு உயிரூட்டினன். அது மட்டு மன்றி அவற்றின் நாடுகளுக்குரிய உண் மைக் காட்சிகளுக்கிடை யேயும் அவற்றினை வைத்தான்.
57

Page 36
அம்மாற்றத்தைக் கொணர்வதற்கு பெரிதளவு ஆற்றலும் முயற்சியும் தேவையாயிற்று. அக்லி பஞ்சடைந்த போலி மிரு கங்களைச் செய்யத் தொடங்கி அதிலிருந்து மேலும் பல விடயங் களிற் கவனத்தை செலுத்தினன். துவக்கை யேந்திய மிகப் பெரிய வேட்டைக்காரர்களுள் ஒரு வணுக அவன் மாறினன். ஆனல் அவனைப் பொறுத்த வரையில் வேட்டையாடல் அவனு டைய பரந்த தொழில்களில் ஓர் அங்கமாகவே துவங்கியது. அவன் இன்பத்தை நாடி வேட்டையாடவில்லை. அரும்பொருட் சாலைக்கு தேவைப்பட்டாலன்றி அல்லது ஒரு உயிரைக் காப் பாற்றுதற்க ன்றி தான் ஒரு போதும் எந்த மிருகத்தையும் சுட்ட தில்லை என்று அவன் கூறினன்.
காள் அக்லி நியுயோக்கில் ருெச்சிஸ்டருக்கு அருகில் உள்ள ஒரு பண்ணையில் 1864 ஆம் ஆண்டில் பிறந்தான் என்னும் விவரத்தை இன்று அப்பண்ணையிலுள்ள அறிகுறி யொன்று புல னக்குகின்றது. எந்த ஒரு பண்ணைப் பையனையும் போன்று அவனும் அவ்விடத்திற்குரிய வேலைகளில் பங்கு கொண்டான். ஆனல் அவன் தனது ஒய்வு நேரத்தைக் காடுகளிலும் வயல்களிலும் பறவைகளையும், மிருகங்களையும் ஆய்வதில் கழித்தான். அவை அவனின் சிறந்த நண்பர்களாயின. தனது சிறிய பராயம் தொட்டே பஞ்சடைந்த, போலி மிருகஞ் செய்யும் கலையில் அவன் ஆர்வம் கொண் டான். அவ்விடயம் பற்றிய ஒரு நூலை அவன் படித்ததுடன், கலைத்திறனேடு வகை வகையான பஞ் சடைந்த போலி மிருகங்களைத் தான் செய்துள்ளதைப் பொது மக்கள் அறியும்படியும் செய்தான்.
பெரிய யானையைக் காப்பாற்றுதல்
அக்லி 19 வயதினனுக இருந்தபோது அவன் பண்ணையை விட்டு விலகி ருெச்சிஸ்டரிலுள்ள "வாட் இயற்கை வரலாற்றுக் கம்பனியில்' வேலைக்கு அமர்ந்தான். அக்கம்பனி இயற்கை வர லாற்று ஆய்வு உபகரணங்களை விற்பனை செய்து வந்தது, அது ஒரு வியாபாரக் கம்பனி. அங்கே போலி மிருகங்களைச் செய்வது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட பழைய முறைகளைக் கண்டு அக்லி கோபமுற்றன். எனவே அவன் புதிய சிறந்த முறைகள் பற்றி பரீட்சிப்பதற்கு விரும்பினன். ஆனல் அவன் வாட் கம் பணியில் ஈராண் டுகள் வேலை செய்து முடியும் வரை அம்முறை கள் பற்றி எடுத்துக் காட்டுவதற்கு அவனுக்கு அதிக வாய்ப்புக் கிடைக்கவில்லை.
58

பீ. ரி. பார்ணம் மிருகக் காட்சிக் குழுவொன்றின் சொந்தக் காரணுக இருந்தான். அக்குழு இடத்துக்கிடம் சென்று திறந்த வெளியரங்குகளில் பயிற்றப்பட்டதும் படாததுமான விலங்கு களுடனும், பல்வகைத் துணிகரச் செயல்களைச் செய்யும் ஆட் களுடனும் காட்சிகளை வழங்கி வந்தது. அவனிடமிருந்த பெரிய யானையை 1885 இல் ஒரு ரயில் வண்டி கொன்று விட்டது. ஆயி னும் அந்த யானையைக் காட்சியில் வைத்திருப்பதற்கு பார்ணம் பெரிதும் விரும்பினன். திரு வாட் யானையைக் காட்சிக்குத் தயார் செய்யும் வேலையை அக்லியிடம் ஒப்படைத்தான். அஃது ஒரு விரும்பத்தகும் வேலையன்று. யானையின் சடலம் ஒன்றரை நாட்களாக சூரிய வெப்பத்துக்குள்ளாயிருந்தது. அதிக அளவு முயற்சியுடன் அக்லியும் மற்றுமோர் உதவியாளனும் அந்த யானை யின் தோலை துண்டங்களாகச் சதையிலிருந்து பிரித்தெடுத்தனர்.
உயிருடன் இருந்தபோது உலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு மிருகமாக எவ்வாறு பயன்படுத்தப் பட்டதோ அவ்வாறே இப்போதும் மிருகக் காட்சிக் குழுவோடு அது பயணஞ் செல்ல வும் தெருக்களில் பவனி வரவும் வேண் டும் என்றும் டார்ணம் விரும்பினன். மேலும் ஐந்து மாத காலத்துடன் திரும்பவும் காட்சி தொடங்கும் போது திறப்பு விழாவிற்கு அம் மிருகம் தயாராக இருக்க வேண்டுமென்றும் அவன் விரும்பினன். மிரு கத்தை நகர்த்துவற்காக, அதன் தோல் பளுக்குறைவாக இருக்கச் செய்வதும் அதே வேளையில் மழையையும் மோசமான கால நிலையையும் எதிர்த்து நிற்கக் கூடியவகையில் வலுவுள்ளதாக இருக்கச் செய்வதும் மிக முக்கியமான வேலைப் பொறுப்பாக இருந்தது. போலி மிருகங்களைச் செய்யும் ஏனைய கலைஞர் கள் அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறினர். ஆனல் அக்லி மனமகிழ்ச்சி அடைந்தான். அவ்வகையான பிரச்சினையையே அவன் விரும்பினுன்.
அக்லி மரத்தினுலும் இரும்பிஞலும் ஒரு யானையின் உரு வத்தைச் செய்தான். அதன் மேல் மெல்லிதா ன மரத்துண்டுகளை அச்சொட்டாக யானையின் வடிவத்தில் பதித்தான். அதன் மீது யானைத் தோலைப் பொருத்தினன். அது மிகச் சிறந்த வேலையாக அமைந்தது. பெரிய மிருகங்களின் இறந்த சடலங்களைக் கொண்டு போலி மிருகங்களைச் செய்யும் கலையில் புதிய முறையொன்று பழக்கத்துக்குள்ளாகியது. பெரிய யானை உரிய காலத்தில் ஆயத் தப்படுத்தப்பட்டது. அது பல ஆண்டுகளாக மிருகக் காட்சிக் குழுவுடன் பயணம் செய்தது.
59

Page 37
அக்லி வாட்டின் அரும்பொருட்சாலையில் அடுத்த ஆண்டும் வேலை செய்தான். பின்னர் விஸ்கொன்சினிலுள்ள மில்வோக்கி எனும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த அரும் பொருட்சாலை யில் வேலைக்கு அமர்ந்தான். தான் கல்லூரியில் அறிவியல் பயில வேண்டும் என்பது அவனுடைய இளமைக்கால விருப்பங்களில் ஒன்று. ஆனல் இன்னெரு கனவும் அவனுள்ளத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. அதனை அவன் ஒருபோதும் மறக்கவில்லை. அது பஞ்சடைந்த போலி மிருகங்களைச் செய்யும் வேலையை (தோல் தச்சு) ஒர் உண்மையான கலையாக்குவதாகும். அவன் தனக்கு கல்லூரி வாழ்க்கை பொருத்தமற்றது என்பதனை உணர் ந்தான். மில்வோக்கி அரும்பொருட்சாலையில் சிறிய மிருகங் களை அவன் தயாரித்து அவை இயற்கைச் சூழ்நிலைகளில் - சிறு மரங்கள் செடிகள் ஆகியவற்றிடையே வாழ்வதைப் போன்று காட்டினன். மிருகங்கள் உண்மையில் எவ்வாறு வாழ்ந்தன என் பதனைக் சாட்டும் முகமாக அவற்றின் உருவங்களுக்குப் பின்னல் வர்ணம் தீட்டிய காட்சிகளை முதன் முறையாக அமைக்கும் வகையில் அவன் ஒரு தொகுதியைத் தயாரித்தான்.
மில்வோக்கியில் எட்டு ஆண் டுகள் கடமை புரிந்தபின் 1894 இல் அவன் 30 வயதாக இருந்தபோது, இலண்டனுக்கு வருமாறும் பிரித்தானிய இயற்கை வரலாற்று அரும் பொருட்சாலையில் போலி மிருகங்களைத் தயாரிக்கும் அலுவலகத்தைப் பொறுப் பேற்குமாறும் அக்லி கேட்டுக் கொள்ளப்பட்டான். அஃது ஒர் அருமையான வாய்ப்பாக இருந்தது. ஆனல் அவன் இங்கிலாந் திற்குப் போகும் வழியில் சிக்கா கோவில் புதிதாக அமைக்கப் பட்ட பீல்ட் அரும்பொருட்சாலையில் தங்கினன். அங்கே டாக்டர் டி. ஜி. எலியா அவனை அங்கு தங்கியிருந்து பாலூட்டிகளைத் தயாரிக்குமாறு கேட்டார். அக்லி தனது இலண்டன் போகும் திட்டங்களை மாற்றி புதிய வேலையில் ஈடுபடத் தொடங் கிஞன்.
ஈராண்டுகளுக்குப் பின்னர் அக்லி தான் பெரிதும் நேசித்த ஆபிரிக்காவிற்கு டாக்டர் எலியற்றுடன் தனது முதலாவது கப்பற் பிரயாணத்தை மேற்கொண்டான்.
அரும் பொருட்சாலைக்குத் தான் தயாரிக்க வேண்டிய மிரு கங்களை நேரில் காண்பதற்கு அவனுக்குப் போதிய வாய்ப்புக் கிடைத்துள்ளதையிட்டு அக்லி நிறைந்த மனமகிழ்ச்சி உற்றன். புதிதாகக் கொல்லப்படும் சடலங்களை ஆராய்ந்து அவற்றின்
60

அளவீடுகளைத் தானே, மேற்கொள்வதற்கும் அவனுக்கு இப் பொழுது வாய்ப்புக் கிடைக்கும். அவ்வாரு ன ஆய்வுகளைத் தானே மேற்கொள்ளாது போலி மிருகங்களுக்கு உருவம் கொடுக் கும் கலையின் வளர்ச்சிக்குத் தான் கனவு கண்ட முறைகளைக் கையாள முடியாது என்று அவன் நம்பினன்.
இந் நெடும் பயணத்திலேயே சிறுத்தையோடு போரா டிய அனுபவம் அவனுக்குக் கிடைத்தது. அவனுடைய பெரும் உடல் வலிமையும் தன்னம்பிக்கையும் சேர்ந்து வியக்கத்தகு குறுகிய காலத்தில் உடல் நலத்தை மீண் டும் அவன் பெற உதவின.
இந்த அனுபவம் உட்பட மேலும் பல புதிய அனுபவங்கள் கிடைத்து வந்த நியதியில் அவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்தான். அவற்றிலிருந்து கற்ற பாடங்களைக் காட்டு மிரு கங்களை யொட்டித் அவன் தனித்தனி அம்ச கங்களாகக் கருத்துக் கொடுத்தான்; அதன் வழியே மிருகங்களைப் பற்றி தான் கொண்டிருந்த உயர்ந்த கருத்துக்களையும் அவற்றின் மீது கொண்டிருந்த அன் பினை யும் நாள்தோறும் விஸ்தரித்துக் கொண் டான். மிருகங்களில் அன்பைக் கொண்டிருக்கும் ஒருவனே அவ்வாறு செய்யமுடியும். பெரும் வேட்டைக் காரணுக அவன் உருவாகியதற்கும் அதுவே காரணமாகும்.
ஆபிரிக்க அனுபவங்கள்
இந்த முதலாவது நெடும் பயணம் ஆபிரிக்காவை அக்லி நேசிக்க வைத்ததுடன் அவனுடைய வாழ்க்கைத் தொழில் எது வாக இருக்கும் என்பதனை அவனே தீர்மானிக்கவும் செய்தது. ஆபிரிக்காவில் மிரு சங்கள் ஆதிகா லத்தில் எவ்வாறு வாழ்ந்த னவோ அவ்வாறே இப்போதும் வாழ்வதை அவன் சண்டான். வெள்ளை நிற மக்கள் ஒருபோதும் கண் டிராத மனிதர் அங்கு வாழ்வதையும் அவன் அறிந்தான்.
இறக்கும் நாள் வரை அவன் ஒவ்வோர் உயிர்ப் பிராணி யையும் - அது மனிதனுயினு மென் மிருகமாயினு மென்- ஒவ் வொரு அனுபவத்தையும் முற்ருகத் திறந்த மனத்துடன் நோக் கினன். அவன் மனிதனையோ மிருகத்தையோ அவ்வவ் உயிர்ப் பிராணியின் சொந்தப் பெறுமதியின் அடிப்படையில் மாத்திரமே விரும்பினன். யானைகள் - கொண்டிருந்த அறிவிற்கும்,
61

Page 38
காட்டும் அன்பிற்கும் அவன் பெருமளவு அக்கறை காட்டினுன். இறந்த எதனையும் புசிக்கும் சிறுத்தைகளை அவன் ஒரு போதும் விரும்பவில்லை. சிங்கங்கள் சிறந்த மிருகங்களென அவன் கருதி னன். காண்டா மிருகங்கள் அவனுக்கு சிரிப்பூட்டின.
காண்டா மிருகங்கள் ஏனைய மிருகங்களைக் காட்டிலும் அதிக ஆபத்தானவை என்று அக்லி கேட்டுள்ளான். அவற்றின் பருமன் பெரிது. எக்காரணமுமின்றி அவை மனிதரைத் தாக்கு வன வாகும். அவற்றிடையே மனிதன் சிக்கிக் கொண்டால் அவன் மரிப்பது திண்ணம். அவற்றினின்று தப்புதற்கு ஒரே வழி ஈவிரக்க மன்றி அவற்றைச் சுடுவதே. ஆயினும் சாண்டா மிரு கம் முட்டாள்தனமாக இயங்குகின்றது என அக்லி நினைத்தான். ஆகவே மேற்கூறப்படும் கருத்துக்களை அவன் பெரிதும் பொருட்படுத்தவில்லை.
காலப் போக்கில் காண் டாமிருகம் உணரும் தன்மையற்ற பிராணி என்பதை அக்லி கண்டறிந்தான். அதன் ஐம்புலன்களுள் நன்ருக செயல் புரியத்தக்கது அதன் மூக்கு மாத்திரமேயாகும். காற்றிலிருந்து ஏதும் ஒன்றினை உணர்ந்து கொண் டவிடத்து தெளி வான நோக்கம் எதுவும் இன்றி முதலில் ஒரு திசையிலும் பின்னர் வேருெரு திசையிலும் மூர்க்கத்தனமாக அங்கும் இங் கும் அது ஒடும். தான் தேடிக் கொண்டிருப்பதை தன் மூக்கினைக் கொண் டு அடையாளம் சொள்ளாதவிடத்தும் தன் சிறிய கண் களால் பார்க்க முடியாதவிடத்தும் தான் செயல் புரியத் தொடங் கிய முயற்சியை மறந்து அமைதியாகத் துரங்கத் தொடங்கும்.
போலி மிருகங்களின் தயாரிப்பில் புதிய முறைகள்
1896 இல் மேற்கொண்ட சோமாலிலாந்து நெடும் பயணத் தின் பின் சிக்காகோ விற்குத் திரும்பியபோது விரைவாக விஸ் தரிக்கப்பட்ட பீல்ட் அரும்பொருட்சாலையின் போலி மிருகங் களைத் தயாரிக்கும் தொகுதிக்கு அக்லி தலைவனுக நியமிக்கப் பட்டான். நடுத்தர வயதுக்கேற்ப முழுப் பலம் அவனிடம் காணப்பட்டது. பருமனில் உயரமாகவோ குட்டையாகவோ இல்லாது பெரிய தலையையும் சக்தி வாய்ந்த தோள்களையும் அவன் கொண்டிருந்தான். அவனுடைய வாய் பொதுவில் உறுதி யாக ஒரு நேராக அமைந்திருந்ததெனினும் நண்பன் ஒருவனைக் காணும்போது நேசப் புன்னகையை உதிர்க்கும் வகையாக விரி ந்து கொள்ளும்.
62

அவனின் வாழ்க்கை முக்கியமான ஒரு நோக்கத்தை நாடி இயக்கப்படுவதை எவரும் காண ஏதுவாயிற்று. காலம் குறு கியது, நில்லாது ஒடுவது, செய்யவே ைடியவற்றை முடிப்பதற்கு ஒரு நாளில் முழு மணி நேரம் போதுமானதல்ல என அவன் அறிவான். இளைத் துப் போன உடம்புக்கு கட்டாயமாக ஓய்வு தேவைப்படும் போது மட்டுமே அவன் நித்திரையை நாடினன். நித்திரை தவிர்க்க முடியாத ஒர் இடர்ப்பாடாக அவனுக்குத் தோன்றியது.
தன் தொழிலில் கையாள வேண்டிய முறைகளைப் புதிது புதிதாக விரைவிற் கண்டு பிடித்தான். அவற்றுட் சில அவை பயன்படுத்தப்பட்ட தறுவாயிலே கைவிடப்பட்டன. ஆனல்அவை ஒவ்வொன்றும் அரும் பொருட்சாலைக் கண்காட்சிகளை மேம் படுத்துவதையிட்ட பரந்த வழி முறைக்கு அடி கோலின. எதி லும் நிறைவையே எதிர்நோக்கும் அக்லி ஒருபோதும் மனத் திருப்தி கொள்வதில்லை. பொருட்சாலையின் பொறுப்பானவர் களால் உணர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு அக்லியின் நோக்கு மிக உயர்ந்ததாகக் காணப்பட்டது. சில வேளைகளில் அவனுடைய வேலையின் பெறுபேறு உலகினில் வேறெங்கும் கிடைக்கப்படாது சிறப்பானவையாகக் காணப்பட்டபோதிலும் பூரண நிறைவைத் தேடும் அவன் முயற்சி சற்றுத் தணிய மாட்டாதா என்று அவர்கள் மனக்குழப்பம் கொள்வதுமுண்டு. ஆனல் அவன் பூரண நிறைவுக்குக் குறைந்ததை ஏற்றுக் கொள் ளான். அரும்பொருட்சாலையின் இயக்குநர்கள் பெரியவன் ஒரு வனைத் தாம் கண்டு கொண்டதை உணர்ந்து இயன்ற உதவியை அவனுக்கு வழங்கினர்.
அக்லி போலி மிருகங்களை தயாரிக்கும் கலையை ஒர் நிறை கலையாக மாற்றிக் கொள்வதற்கு எடுத்த நடவடிக்கைக்ளை இங்கு விளக்குவதற்கு இடம் போதாது. அது பற்றிய சுருக்கிய விளக் கம் பின்வருமாறு.
இந்தக் கலை தோன்றிய ஆரம்ப நாட்களில் இரும்புக் கோல்கள் மிருகத்தின் கால்களினூடாகச் செலுத்தப்பட்டு அதன் உடம்பிலுள்ள பலகை யொன்றுடன் பிணைக்கப்பட்டன. தளர்ச் சியான தோலினுள் அது கொள்ளக்கூடிய அளவிற்கு மிருதுவான பொருட்கள் நிரப்பப்பட்டன.
அக்லி, வாட்டின் இயற்கை வரலாற்றுக் கம்பனிக்கு முதல் சென்ற போது பழைய முறை பயன்படுத்துவது ஏற்
63

Page 39
கனவே அங்கு கைவிடப்பட்டிருந்தது. புதிய முறைப்படி மிருகத் தின் பொது வடிவத்தில் ஓர் உருவம் அமைக்கப்பட்டது. அது களிமண்ணினல் மூடப்பட்டது. களிமண் ஈரப்பற்ருக இருக்கும் போதே தோலை அதன்மேல் போர்த்தி, சாத்தியமான அள விற்கு நிஜ மிருகத்திற்கு இருப்பன போன்ற முகமும் தலையும் அமைக்கப்பட்டன. இந்த முறையும் திருப்தியற்றதாகும். தலை உலர்ந்தபோது தோல் தொங்கத் தொடங்கி உருவம் மாற்றம் கொண்டு, சிறிதாகப் போய்விடும். மிருகத்தின் நிஜ உருவம் அங்கு சிறிதளவும் பிரதிபலிக்க மாட்டாது.
இதற்கு அடுத்த முற்போக்கான வழிமுறை நிஜமிருகத் தைப் போன்றே கவனமாக எடுத்த அளவுகளைக் கொண்டு களிமண் உருவமொன்றை அமைப்பதாகும். அந்தக் களிமண் உருவத்திலிருந்து வடிவம் மாரு த வகையில் கனங்குறைந்த ஆனல் உறுதியான, பொருளைக் கொண்டு அக்லி மற்றுமோர் உருவத்தை அமைப்பான். இந்த இரண்டாவது உருவத்தில் தோல் போர்த்தப்படும்.
அக்லியின் முறைகள் அரும்பொருட்சாலைக் கண் காட்சிக் காக பெரிய மிருகங்களைத் தயாரிப்பதில் புதிய வழிக்கு அடி கோலின. அவற்றின் பெறுபேறுகளை இன்று உலகிலுள்ள ஒவ் வொரு நவீன அரும்பொருட் சாலையிலும் காணலாம். அக்லி தனது வேலையைப் பற்றி எவ்வித மறைவு மின்றி எவருக்கும் விப ரித்தான். அவனிடம் கற்றுக்கொள்வதற்குப் பலர் வந்தனர்.
ஜேம்ஸ் எல். கிளாக் அவனுடைய சிறந்த மாணவனவான். அக்லியின் முறைகளைப் பயிலுவதற்காக அமெரிக்க இயற்கை வரலாற்று அரும்பொருட்சாலையிலிருந்து கிளாக் அவனிடம் வந் தான். அக்லி அவனுக்கு மகிழ்வோடு கற்பித்தான். பின்னர் இருவரும் சேர்ந்து யானை வேட்டைக்காக ஆபிரிக்காவிற்குச் சென்றனர். நெடுங்காலம் களித்து அக்லி மரணமடைந்த பின் னர் கிளாக் ஆபிரிக்க மண்டபத்தை முற்றுவிக்கும் பணியை நெறிப்படுத்தினன்.
அக்லி பீல்ட் அரும்பொருட்சாலையில் கடமையாற்றிய போது அழகும் அமைதியும் கொண்ட டெலியா என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண் டான். அவள் அவன் வாழ்வை தன் வாழ்க்கையுடன் முற்ருக இணைத்துக் கொண்ட பின்னர் அவனேடு ஆபிரிக்காவிற்குப் பலமுறை பயணமும் செய்
64

தாள். அக்லி தம்பதிகள் தங்களுடைய நண்பர்களை அன்பாக வரவேற்றனர். ஆபிரிக்காவில் டெலியா தன் கணவனின் வேலை யில் பெரிதும் உதவியாக இருந்தாள். அவள் வேட்டையாடு வதில் திறமை பெற்ருள். அவர்கள் மேற்கொண்ட பயணங் களுள் ஒரு தடவை அவள் ஒரு யானையைச் சுட்டாள். அது ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய யானை எனச் சொல்லப்பட்டது.
கவர்ச்சியான யானை
காட்சிக்குழுவின் பெரிய யானையைப் பற்றிய அனுபவம் ஏற்பட்ட காலம் தொட்டு அக்லி யானைகளில் அதிக அக்கறை காட்டினன். அவற்றினது பருமன், பெரும் வலிமை, மனிதனைப் போன்ற உணர்ச்சித் தன்மை, ஆகியவற்றுக்காக அவன் அவற்றைப் பெரிதும் விரும்பினுன். யானைகளை அவற்றின் வன வாசங்களிலேயே கண் டு சொள்ளவும் அவற்றைப் பற்றி ஆராய வும் எப்போதும் விரும்பினன். எனவே 1906 இல் பீல்ட் அரும் பொருட்சாலையினர் அநேக யானைகளைக் கொண் டு வருவதற்காக பிரிட்டிஷ் கிழக்கு ஆபிரிக்காவிற்கு அவனை அனுப்பியபோது ஒரு குழந்தையைப் போன்று அவன் மகிழ்ச்சியடைந்தான்.
யானைகளைப் பற்றி ஆராய்வது மிகக் கடினம் என்பதனை அவன் கண் டு கொண் டான். அத்துணைப் பெரிய விலங்கைப் பார்ப்பது இலகுவானதென்று எவரும் கருதலாம். அஃது உண் மையன்று. அதன் கருமை உடல் காட்டில் நிழலிலும் வெளிச் சத்திலும் மறைந்து கொள்வது சாத்தியம். அது அசையாது நிற்கும் போதும், எங்கே அது நிற்கின்றது என்று அறிந்து கொள்ளாமலே எவரும் அதனண்டை போய்விட நேரிடும். மேலும் இப்பெரிய விலங்கிற்கு எவ்வித சப்தமுமின்றி மிக அடர்த்தியான காட்டினூடாகச் சென்று வர முடியும்.
ஒரு தடவை ஓர் அடர்ந்த காட்டில் கிழயான ஒன் றுக்கு அருகில் சென்று அவ் விலங்கு உண்ணும் போது அத னுடைய உடம்பில் ஏற்பட்ட சப்தத்தைக் கேட்கக் கூடியதாக இருந்தது என்று அக்லி கூறுகிருன். ஆனல் அதன் அருகில் இருந்ததை உணர்ந்ததும் அந்த யானை தான் செய்த சப்தங்களை நிறுத்திச் சந்தடியின்றி அவனுக்குக் கேட்காமலே விலகிவிட்டது.
யானைகள், சிங்கங்கள், மற்று விலங்குகள் ஆகியவற்றுள் மனித உயிருக்குப் பெரிதும் ஆபத்து விளைவிக்கக் கூடியன எவை
65

Page 40
என்பது பற்றி ஆபிரிக்க வேட்டைக்காரர்களிடையே தொடர்ச்சி யான கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. மனித உயிருக்குப் பெரிதும் ஆபத்து விளைவிப்பவை யானைகளே என்று அக்லி கருதினன். ஒரு யானையால் தான் பாதிக்கப்பட்டதற்காக அவன் அப்படிக் கருதவில்லை. ஒருவன் தொடர்ச்சியாக யானை சளை வேட்டையாடுவானயின் அவன் ஒன்றில் கொல்லப்படுவான் அல்லது தப்புவது அரிது என்று அக்லி அடிக்கடி கூறினன். அக்லியோடு வேட்டைக்குச் சென்ற அவனின் நண்பர்கள் எப் பொழுதும் மிக்க கவனமாக அவன் இருந்தானென்றும் அவ்வாறி ருந்தும் ஒரு யானையின் பிடியிற் சிக்குண் டான் என்றும் என் னிடம் கூறினர்.
இந்நிகழ்ச்சி கெனியா மலையின் உச்சியில் நிகழ்ந்தது. அக்லி மூன்று பெரிய யானைகள் விட்டுச் சென்ற அறிகுறிகளைப் பின் பற்றிக் கொண்டிருந்தான். அதிகாலையில் அவற்றை அவன் ஒரு காட்டில் கண் டான்.
அவன் தன் உடம்புடன் அழுத்தித் துப்பாக்கியை வைத்து நின்றிருந்தபோது அவ் யானைகளுள் ஒன்று திடீரென அவனை நோக்கி விரைந்தது. அவன் துப்பாக்கியைப் பாவிக்க இயலாது போயிற்று. யானையோ அவனுடைய உடம்பை அழுத்தும் வகை யில் அவனை வலித்துக் கீழே தள்ளியது. அவனுடைய எலும்பு களுட் பல உடைந்தன. ஆனல் அவனுடைய உடம்பிலும் உயர் வாக இருந்த ஒரு பாறைக்கு அருகில் அவன் வீழ்ந்து கிடந் தான். யானையின் தலை பாறையில் மோதியது. அது அக்லியை மேலும் நிலத்தினுள் அழுத்த முடியாதிருந்ததால் அவனது உயிர் தப்பிற்று. யானை அவனிடமிருந்து விலகும் தறுவாயில் அவ னுடன் வந்த வழிகாட்டிகள் ஓட்டமெடுப்பதை அது கண்டது. அது அக்லியை விட்டு விட்டு அவர்களைக் கலைக்கத் தொடங்கி யது. எனினும் அவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடினர். அத னிடம் எவரும் அகப்படவில்லை. அக்லி இரவு முழுவதும் குளி ரிலே கிடந்தான். அவன் இறந்து போனதாக வழிகாட்டிகள் கருதி அவனையிட்டு எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. பின்னர் அவன் கதைக்க முயலுமிடத்து உயிருடன் இருந்தான் என்பதை அவர்கள் உணர்ந்து அவனைக் கவனித்தனர். ஒருவன் அக்லியின் மனைவியைக் கூட்டிக் கொண்டு வருவதற்கு ஓடினன், ஆனல் சூரிய உதயமாகும் வரை அவள் வந்து சேரவில்லை.
அக்லியைப் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது என்று அவன் மனைவி பின்னர் என்னிடம் கூறினள். அவனுடைய
66

தோலும் மயிரும் அவனது தலையுச்சியிலிருந்து அகற்றப்பட்டி ருந்தன. ஒரு கண் மூடியிருந்தது. அவனது மூக்கு உடைந்திருந் தது. அவனது பாதிமுகம் கீறிக் கிழிக்கப்பட்டிருந்தது. எலும்பு கள் பெரும்பாலும் உடைந்திருந்தன. இரு கடைவாய்களிலிருந் தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதன் தாற்பரியம் எதுவாக இருக்குமென்பதை அவள் அறிந்தாள். ஈற்றில் மருத்து வர் ஒருவர் அவனுக்குச் சிகிச்சை யளித்து அவனது உயிரைக் காப்பாற்றினர்.
யானை இவ்வாரு ன பயங்கரப் பிராணியாக இருப்பினும், அதனைத் தனியே விட்டு விட்டால் தனது குடும்பத்துடன் சேர் ந்து அமைதியான வாழ்க்கையையே அது விரும்பும் என்று அக்லி எப்பொழுதும் சொல் வான். அஃது அறிவுள்ள ஒரு மிருகம், பல வேலைகளைச் செய்யக்கூடியது. ஒரு வகையான நட்புணர்ச்சி கொள்ளக்கூடியது. இவை காரணமாக அவனுக்கு மிகக் கவர்ச்சி யுள்ள மிருகமாக யானை இருந்தது.
புதிய வகையான துப்பாக்கி
பீல்ட் அரும்பொருட் சாலைக்காக யானைகளைத் தயாரித்த போது அக்லி முற்ருகப் புதிய முறைகளைப் பயன்படுத்தினன். அதன் விளைவாகப் புதிய வகையான துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதைக் கொண்டு சில வகையான மண்ணும் நீரும் கலந்து உருவாக்கப்பட்ட 'சீமெந்து' என்னும் கட்டடப் பொருளை உன்னிப்பாக, குறிக்கப்பட்ட இடத்தில் செலுத்தலாம். அவ்வாறு செறிவாகச் செலுத்தப்படும் குழையல் காய்ந்தவுடன் கல்லினைப் போன்று கட்டியாகும்.
பழைய, மோசமாகக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தில் பொருட்சாலை அப்போது அமைந்திருந்தது. அக்கட்டிடத்தின் வெள்ளைச் சுவர்களிலிருந்த சீமெந்துப் பூச்சு தளர்ந்து விழுந்தது. சுவர்களைப் புதுப்பிக்கும் பொருட்டுச் சாலையிடம் போதிய பணம் இருக்கவில்லை. பொதுவாக எந்த ஒரு பொதுப் பிரச்சினையும் எழும்போது அஃது எதுவாக இருப்பினும், அக்லியின் உதவி நாடப்படுவது வழக்கம். இங்கும் அவனின் உதவி கோரப் lu. L-gl ·
யானையின் உருவத்தின் மீது தோலைப் பொருத்திய பின் தோலின் கீழ் திணிக்கப்படும் பொருட்களை உறுதியாக்கும் முக
67

Page 41
மாக காற்றின் சக்தியைக் கொண்டு இயக்க வல்ல பெரிய உப கரண மொன்றினை (ஒரு வகையான துப்பாக்கியை) அக்லி பயன் படுத்தி வந்திருந்தான். அதே போன்று கட்டடத்தின் பக்கங் களுக்குச் சீமெந்தைத் திணிப்பதற்கும் பொறி ஒன்றை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அவன் எண்ணிணன். அவ்வகை யான பொறி எதுவும் விற்பனைக் கடைகளில் கிடைக்காததால் அக்லி தானே ஒரு பொறியை அமைத்தான். அத்தருணம் சிகாக் கோவில் அக்லியைச் சந்திப்பதற்காக நான் சென்ற போது கட்டடத்தைச் சீராக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த ஆட்சளை அவன் நெறிப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண் டேன். அவனது வேலைக்களத்திலிருந்து மிருகங்களைத் தயாரிக்கும் வேலையினின்றும் இது பெரிதும் வேறுபட்டது எனத் தோன்றியது. ஆயினும் அக்லி செய்த வேலையைக் கண்டு எவரும் ஒரு போதுமே ஆச்சரியப் படவில்லை.
துப்பாக்கி பெரும் வெற்றியளித்ததால் அவனும் அவனு டைய உதவியாளனும் சேர்ந்து அதனிலும் சிறந்த தொன்றை அமைப்பதில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகள் கழித்து அவ் வேலை நிறைவு பெற்றது. சீமெந்துத் துப்பாக்கிக் கம்பனி எனும் நிறுவகம் அதன் பிரகாரம் இடம் கொண் டு, அத்துப்பாக்கி உலகமெங்கும் பயன்படுத்தப்பட்டது. பனமா கால் வாய், முத லாவது உலகப் போரின் போது சீமெந்துக் கப்பல்கள், பல சிவில் எந்திரவியல் வேலைகள் ஆகியவற்றில் இத்துப்பாக்கி பெரு மளவில் உபயோகிக்கப்பட்டது.
ஆபிரிக்காவில் அவன் நோய்வாய்ப்பட்டுப் பின் உடல் நலம் பெற்றுவரும்போது சிறிய பண்ணை மிருக மொன்றிலிருந்து ஒரு பெண் பால் கறப்பதை அக்லி கவனித்தான். அவன், தனது சொந்த மகிழ்ச்சிக்காக பால் கறக்கும் பொறி யொன்றை உருவாக்கினன். அதுவும் பெரும் வெற்றியளித்தது.
அக்லி பீல்ட் அரும் பொருட்சாலையில் 13 ஆண்டுகள் கடமை செலுத்திய காலத் தறுவாயில், இரு பெரிய மண்டபங் களை நிறுவுவதற்கு எண்ணங் கொண்டிருந்தான். ஒரு மண் டபம் இலனெயிஸ் மாநிலத்தில் சஞ்சரிக்கும் பறவைகளுக்காகவும் மற் றது வட அமெரிக்காவின் மிருகங்களுக்குமாகும். ஆனல், அவ னுடைய நண்பரும், அரும் பொருட்சாலையின் தலைவருமான மார்ஷல் பீல்ட் இறந்ததும், இரு மண்டபங்களையுமிட்ட யோசனை கள் கைவிடப்பட்டன. பீல்ட் அரும் பொருட் சாலைக்காகத்
68

தன்னல் செய்யவல்லதைச் செய்து விட்டதாக அக்லி உணர்ந் தான். எனவே 1908 இல் நியூயோக்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அரும் பொருட்சாலைக்கு ஒரு தொகை யானைகளைக் கொண்டு வருவதற்காக ஆபிரிக்காவிற்குப் போகத் தனது சேவையை வழங்கினன். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்லி அந்த நெடும் பயணத்திற்கு ஆயத்தஞ் செய்தான்.
இத்திட்டத்திற்கு சற்று முன்னதாக அமெரிக்க ஜனதிபதி தியடோர் ரூஸ்வெல்ட் அக்லியை வெள்ளை மாளிகையில் உண வருந்த வருமாறு கேட்டிருந்தார். தான் வாஷிங்டனில் இருந்து போன பின் வேட்டையாடுவதற்காக அலஸ்காரிற்குப் போகத் திட்டம் கொண்டிருப்பதாக அம்மாலை வேளையில் அக்லியிடம் அவர் தெரிவித்தார். ஆனல், மாலை வேளை முடிவதற்குள் அக்லி ஆபிரிக்காவைப் பற்றிக் கூறிய செய்திகளில் ஜனதிபதி மிகுந்த அக்கறை கொண்டு தான் அலாஸ்கா போவதற்குப் பதிலாக ஆபிரிக்காவிற்குச் சென்று புகழ் பெற்ற வாஷிங்டன் அரும் பொருட் சாலையாகிய 'ஸ்மித் சோனியன் நிறுவனத்திற்காக' மிருகங்களை வேட்டையாடி வரத் தீர்மானித்தார்.
ஆபிரிக்காவில் ரூஸ்வெல்ட்டுடன்
ரூஸ்வெல்ட் மேற்கொள்ளவிருந்த ஆபிரிக்க நெடும் பய ணத்திற்கு ஆயத்தம் செய்யுமுகமாக அக்லி அடிக்கடி வெள்ளை மாளிகைக்குச் சென்று, ஜனதிபதியோடு மிக நெருங்கிய நட் புறவு கொண்டான். தன்னுடன் அக்லி வரவேண்டுமென்று ரூஸ் வெல்ட் விரும்பினர். ஆனல் அக்லி அமெரிக்க இயற்கை வர லாற்று அரும்பொருட்சாலைக்கு யானைகளைக் கொண் டுவருவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்தான். தம் வெவ்வேரு ன நெடும் பயணங்களை எவ்வாறு இணைக்க முடியுமென்பது, ஒரு பிரச்சினை யாகத் தோன்றிற்று. ஆயினும் இருவரும் ஆபிரிக்கா வில் சந்திப்ப தாகத் திட்டமிட்டனர். அங்கிருந்து கொண் டுவர இருந்த ஆண் பெண் குட்டியாவும் அடங்கிய யானைத் தொகுதியில் ஒரு மிரு கத்தையேனும் தான் சுடுவதற்கு ஜனதிபதி உடன்பட்டார்.
அக்லியின் முன்னள் நண்பன் ஜிம்மி கிளார்க் 1909 இல் அக்லி நியூயோக்கை விட்டுச் செல்லும்போது ஆபிரிக்காவில் ஒன்பது மாதங்களாகத் தங்கியிருந்தான். அக்லி அங்கு சேர்ந்த வுடன் ஜிம்மிஅவனின் உதவியாளனுகச் சேர்ந்தான். அவர்கள் ரூஸ் வெல்ட் குழுவினரைச் சந்தித்தனர். ஜிம்மியைத் தன் கூடாரத்
69

Page 42
தில் விட்டு விட்டு ரூஸ்வெல்ட்டுடன் அக்லி அந்த இரவைக் கழித்தான். அந்த நாளன்று அக்குழுவினர் யானைகளைக் கண் டிருந்தனர். மறுநாட் காலையில் எட்டுப் பெண் யானைகளும் குட்டிகளும் ஒரு மரத்தினடியில் உறங்குவதை அவர்கள் கண்ட னர். சிறிய குகை யொன்றின் பின்னலிருந்து அம்மிருகங்களை ஆட்கள் கவனித்தனர். தனது குழுவிற்காகத் தான் விரும்பிய ஒரு பெண் யானையை அக்லி சுட்டிக் காட்டினன்.
அதனைச் சுடும்போது ரூஸ்வெல்ட் தான் நின்றிருந்த இடத் திலிருந்தே சுடுவார் என்று அக்லி எதிர்பார்த்தான். ஆனல் அதற்கெதிராக அவர் யானைகளை நோக்கி நேராகச் சென்ருர் . யானைகள் எத்தகைய கொடூரமான மிருகங்கள் என்பதை அவன் உணர்வாணுகையால் அக்லி அதனைச் சிறிதும் விரும்பவில்லை. எனினும் ஜனதிபதியின் மகனன கெர் மிட் ரூஸ்வெல்ட்டைப் பின் தொடர்வதைத் தவிர வேறு வழியெதுவும் அவனுக்கு இருக்கவில்லை.
திறந்த வெளியின் நடு வழியில் பெண் யானை தனது காது களை விரித்து சினங்கொண்ட குரலோடு ரூஸ்வெல்ட்டைத் தாக்கு முகமாக முன்னேக்கி விரைந்தது. ரூஸ்வெல்ட் சுட்டார். யானை தன் முழங்கால்களில் விழுந்து, திரும்பி எழுந்தது. அவ்வேளையில் யானைக் கூட்டம் ஒன்ருக முழுக்கூட்டத்துடன் அவரை நோக்கி விரைந்தது. ஜனதிபதி மறுமுறையும் சுட்டார். பெண் யானை விழுந்த இடத்திலேயே கிடந்தது. ஆனல் ஏனைய யானைகள் முன்னுேக்கி விரைந்தன. அக் கூட்டத்தைத் திருப்புவதற்கு அக்லி யும் கெர்மிற்றும் அவற்றினை நோக்கிச்சுட வேண்டிய அவசியம் இருந்தது. அவர்கள் வெற்றி கண் டனர். ஆனல் அவர்கள் மேலும் இரண்டு மிருகங்களைக் கொலை செய்ய வேண்டியிருந்தது. சூடு படாத மிருகங்கள் இறுதிவரை முன்நோக்கி விரைந்திருப்பின் குழுவினர் யாபேரும் கொல்லப்பட்டிருப்பர்.
கூரிய சூரிய வெப்பத்தில் இறைச்சி கெடுவதற்கு முன்னர் கொல்லப்பட்ட மூன்று யானைகளின் தோல்களையும் உரிக்கும் பெரும் பொறுப்பு அக்லியை எதிர்நோக்கியது. தனது கூடாரத் தில் தங்கியிருந்த கிளார்க்கை தோல்களைத் தயார்ப்படுத்துதற் காக ஆட்களுடனும் உப்புடனும் உடனே வருமாறு அக்லி செய்தி அனுப்பினுன். கிளார்க் ஒரு வழிகாட்டியுடன் உடனே புறப் பட்டா னயினும் வழி தவறிவிட்டான். ஈற்றில் கெர் மிட் ரூஸ் வெல்ட்டின் குழுவினரைச் சந்தித்தான். வேறு இரண்டு வழி
70

காட்டிகள் அவனுக்குக் கொடுக்கப்பட்டனர். அவர்களும் வழி தவறிப் போயினர். கிளார்க் திறந்த வெளியில் இரவைக் கழிக்க வேண்டிய அவசியம் நேரிட்டது. மறுநாள் காலை நேரம் கழித்தே அவன் அக்லியைக் கண்டான்.
அக்லி 3 யானைகளின் தோல்களையும் தானுக உரித்து விட்ட தை அவன் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். அக்லியும் அவனுடைய ஆட்களும் பெரு முயற்சியுடன் வேலை செய்திருந் தனர். வேலையை முடிப்பதற்கு அவர்கள் தங்களுடைய முழுச் சக்தியையும் பயன்படுத்தியிருந்தனர். அவ்வாறிருந்தும், தங் களுடைய முயற்சியின் வெற்றிப் பெறுபேறுகளையும் சொந்த உயிர்களையும் இழந்து போகும் நியதி அவர்கட்கு வரும்போ லிருந்தது. சற்றுத் தொலைவில் திடீரென நெருப்பொன்று பல மான காற்று வீசியதால் அவர்களுடைய கூடாரத்தை நோக்கி விரையத் தொடங்கியது. ஆனல் அதற்கு எதிராக தம் முழுச் சக்தியுடன் போராடி நெருப்பிலும் உயிரோடு வெந்து போகாது அவர்கள் தப்பித்துக் கொண்டனர். சிலர் மோசமாகக் காயப் பட்டனர். யா பேரும் தத்தம் வேலையிலிருந்து ஒதுங்கிக் கொள் வதற்கு ஏதுவாயிற்று.
இறந்த யானையைத் தயாரித்தல்
அக்லியின் முறைகளுக்கு ஏற்ப இறந்த யானை ஒன்றைத் தயாரிப்பதற்கு பெரு முயற்சி தேவைப்படும். பொதுவாக கூரிய சூரிய வெப்பமும், இறந்த சடலத்தினுள் இடம் பெறும் மற்றும் நிலைமைகளும் சேர்ந்து சில மணித்தியாலங்களுள் தோல் கெட்டுவிடும். அக்லியின் முறை வழி, பொதுவாக, சூரிய வெப் பம் தோலைப் பாதிக்காத வகையில், அதற்கு மேல் எதனையும் போர்த்தி, கார சாரமான, உப்புக் கலவையைக் கொண்டு ஆட்கள் இடைவிடாது அதனைக் கழுவுவதாகும்.
தோல், முதல் முதலாக உடம்பின் ஒரு பக்கத்திலும் பின் அடுத்த பக்கத்திலிருந்தும் நான்கு துண்டுகளாக உரிக்கப்படும். அவ்வாறு உரிக்கப்பட்ட பின்னரே நிஜ வேலை ஆரம்பமாகும் என லாம். யானைத்தோல் சுமார் 24 அங்குலத் தடிப்புக் கொண்டது. உப்புக் கலவை உறிஞ்சப்படும் வரை அதன் தடிப்பைப் படிப்படி யாகக் குறைக்க வேண்டும். பின்னர் உப்பிட்டு உலர்த்தப்பட்ட
7 I

Page 43
தோல்களை நீருட்புகாத முறையில் எண் ணெய்த் தன்மை கொண்ட பொருளால் சுற்றிச் சீலைகளில் வைக்க வேண்டும்.
அமெரிக்க அரும் பொருட்சாலையில் இடம்பெற்றுள்ள யானைத் தொகுப்பில் ஒரு பெரிய ஆண் யானை உள்ளது. அதனைக் கொன்றது ஏனைய யானைகளைக் கொன்றதிலும் வேறுபட்ட ஒர் அனுபவமாகும். அந்த யானை சூடு பெற்றதன்பின் வேட்டைக் காரர்களை வேட்டையாடத் தொடங்கியது.
அக்லி மிக அடர்த்தியான கானகத்தில் ஒரு யானைக் கூட் டத்தைக் கண்ணுற்று இருந்தான். இடைவெளி யொன்றின் வழி LiT 5 வியக்கத்தக்க ஒரு யானையை அடையாளம் க ைடான். உலகின் மிகப் பெரிய விலங்குகளில் ஒன்று எவ்வாறு இருக்கும் என்பதனை நன்ற க அந்த விலங்கு புலனுக்க வல்லது.
மிருகத்தின் கண்ணைப் பார்க்க முடியாதிருந்ததால் அதன் தலையில் சுடுவதற்கு எது உவந்த இடம் என்பதனை அக்லி கணிக்க வேண்டியிருந்தது. அவன் சுட்டபோது யானைக் கூட்டம் வெருண்டு ஓடிப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆண் யானை கீழே விழுந்தது. ஆனல் பின்னர் அது எழுந்து தனிமையாகச் சென்றது. இரு மணி நேரமாக, அக்லியும் அவனுடைய வழி காட்டியும் அதனைப் பின் தொடர்ந்தனர். திடீரென அந்த யானை காட்டில் இருந்து வெளிப்பட்டு அவவிரு வரையும் எதிர் த்து விரைந்தது. யானை அவர்களுக்கு நேராக ஓடி வந்திருக்கு மாயின் அவர்களால் ஒரு போதும் தப்பியிருக்க முடியாது. ஆனல், அந்த அடர்த்தியான காட்டில் அவர்களை அம்மிருகம் காண முடியாததால் தன் மூக்கையும் காதுகளையுமே அது பயன் படுத்த வேண்டியிருந்தது. ஆகவே தன்னை வேட்டை ஆடு வோர்களுக்காக திரும்பி வந்து அது காத்திருந்தது.
அக்லி அடுத்தடுத்து இரு தடவைகள் சுட்டான். யானை சிறிது தூரத்திற்கு தொடர்ந்து முன்னேறி வந்த பின் மீண்டும் நின்றது. அக்லிக்கு அதன் முனகலைக் கேட்க முடிந்தது. அது சிறிது நேரத்தில் தரையில் விழக்கூடும் என நினைத்து மேலும் சுடாது காத்திருந்தான். சிறு பொழுதில் அது ஓரளவு பலம் பெற்று ஆட்களை நோக்கி மீளவும் மூர்க்கமாக விரைந்தது. ஆயினும் அவர்களை நெருங்க முடியவில்லை. அது இறந்து கீழ் விழுந்தது. ஈராண்டுகளாக அக்லி தேடி வந்த யானை அதுவே.
72

நியூயோக்கில் அவ் யானையைத் தயாரிப்பதையிட்டு முற் ருகப் புதிய முறையொன்றை அக்லி கையாண டான். முதலில் தடிப்பான தோலினைச் சீலையைப் போன்று மென்மையாகச் செய்வது மிக முக்கியமானதாகவும் இருந்தது. அவ்வாறு பக் குவப்படுத்துவதற்கான வழியினைக் கொள்வதற்குப் பல ஆண்டு களாக அக்லி முயன்ருன். ஈற்றில் வெற்றி கண் டான். தோலைத் தயாரிப்பதற்குப் பின்னிரு வாரங்கள் தேவைப்பட்டன. அக் கால வேளையில் தோல் முழுவதும் கால் அங்குலத்திற்கும் குறை ந்த கனமுடையதாக வரும் வரை மிகு கவனத்துடன் சீவப்பட்டு மெல்லியதாக்கப்பட்டது.
அக்லியின் முறையை முற்ருக விளக்குவது கடினமாகும். ஆனல் இத்தருணம் அவன் யானையின் உருவத்தை ஆரம்பத்தில் செய்து அதன் மீது தோலைப் பொருத்துவதற்குப் பதிலாக தோலின் உட்புற அளவுக்கே அவ்வுருவத்தை அமைத்தான். திரும்பவும் பெரிய யானைகளைத் தயாரிப்பதற்கான முறைகளை முற்ருக அவன் மாற்றியமைத்தான் எனலாம்.
அவன் தன் வழிமுறைகளை முற்ருக மாற்றினன் என்று அதிகம் சிந்திக்காமலே நான் கூறுவதாகத் தோன்றலாம். ஆணுல் அதுதான் உண்மை. உலகத்து அரும் பொருட்சாலைகள் யாவும் அக்லியின் முறைகளைப் படிப்படியாகப் பின்பற்றின. அவன் தன் வேலையின் ஒவ்வொரு அலகினையும் தங்கு தடையின்றி எவருக் கும் விளக்கினன். தயாரிப்புத் துறை சம்பந்தமாக, எப்பகுதி யிலும் அவனுடைய முயற்சிகள் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய அல்லது சிறந்த முறையை உருவாக்கிய போது, அதனைப் பயன்படுத்தக் கூடியவர்களிடையே சாத்தியமான வரையில் அது பரவியது. அவன் தனது முறைகளை விளக்குவதற்காகத் தன் னுடைய நேரத்தையோ உடல் நலத்தையோ பொருட்படுத் தாது அரும் பொருட்சாலைக் கூட்டங்களுக்கு அடிக்கடி செல்
Gf Gif
ஒரு மிருகத்தைத் தயாரிக்கும் போது களிமண்ணுல் ஒரு சிறிய உருவத்தைச் செய்து, உயிருள்ள மிருகத்தின் உண்மை நிலை, வடிவம், போக்கு ஆகியவற்றை அதற்கு அவன் கொடுத் தான். அவ்வுருவங்கள் யாவும் முற்றுப் பெற்ற அழகான கலைப் பொருட்களாக அமையும். அவை நேர்த்தியானவையாக இருப் பதால் விற்பனைக்குத் தகுந்தவை என்று அவனுடைய கலையுலக நண்பர் சொல்வர். ஆனல் அக்லி அவற்றினை விற்க விரும்பவில்லை.
73

Page 44
பின்னர் ஆபிரிக்க மண்டபம் பற்றிய கனவு அவனது மனதில் எழுந்தபோது, அவ்வாறன கலைப்பொருட்கள் அவனுடைய வாழ்க்கைப் பணி வெற்றியடைவதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு வழியாக அமையலாம் என்பதை அவன் உணர்ந்தான். அவ்வாரு ன உருவங்களின் வாயிலாக போலி மிருகங்களைச் செய் யும் தொழில் உண்மையான கலையொன்று என்பதனை அவனல் எடுத்துக்காட்ட முடியும். ஆனலும் அவ்வுருவங்கள் அவன் நேசித்த மிருகங்களின் கதைகளை எடுத்துக்கூறும் என்று அவன் நம்பினுன்.
இத்தறுவாயில் யானைகள் அவன் மனத்தினில் மிக முக்கிய இடத்தினைப் பெற்றிருந்தன. எனவே தன் முதலாவது முக்கிய உருவத்தை அமைக்கும் தறுவாயில் மிருகங்களின் ஆழ்ந்த சகோ தர வாஞ்சையைக் காட்டும் ஒரு கதையைத் தெரிவு செய்தான். முன்னர் ஒரு வேளை பெரிய ஆண், யானை யொன்றின் இருதயத் திற்கு குறிவைத்துச் சுட்டதை அவன் ஒருபோதும் மறந்த தில்லை. அதற்கு முன்னர் எப்பொழுதும் தலைக்குக் குறிவைத்தே யானைகளைக் கொன்றிருந்தான். ஆனல் இந்த மிருகத்தின் தலையை நன்ருகப் பார்க்கக் கூடியதாக இருக்கவில்லை. இருதயம் இருக்க வேண்டுமெனக் கருதிய இடத்தில் இரு தடவைகள் அவன் சுட்டான். மேலும் யானைக் கூட்டம் தனனைத் தாக்குமுகமாக விரைந்து வரும் என்றும் அவன் எதிர்பார்த்தான். அதற்குப் பதிலாக அவை மற்றெரு திசையில் ஓடின. ஒரு சிறிய குன்றின் மீது ஏறிய அக்லி ஆச்சரியமான ஒரு காட்சியைக் கண்ணுற்ருன். யானை தன் சரீரப் பக்கவாட்டில் விழுந்து கிடந்தது. அதனைச் சுற்றியிருந்த ஏனைய பத்துப் பன்னிரண், டு யானைகள் தங்களது முழுப்பலத்தையும் கொண்டு விழுந்த யானையை எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தன. அதன் கனத்த உடம்பை பெரு முயற்சி செய்து 15 அல்லது 20 யார் தூரத்திற்கு அவை நகர்த் தின. ஆனல், அதனைத் நிமிர்த்திவிட முடியவில்லை. அவற்றின் தலைவன் இறந்துவிட்டான்.
இன்னெரு தடவை யானை வேட்டைக்காரன் ஒருவன் கொங்கோவில் நான்கு யானைகளடங்கிய ஒரு கூட்டத்தை கண் டது பற்றி அக்லிக்கு விவரித்தான். அவற்றினுள் அவன் ஒன் றைக் கொன்று மற்றென்றைக் காயப்படுத்தினன். உடனே மற்ற இரு யானைகளும் காயமுற்ற யானையை எழுப்ப உதவி அதனை இரு கக்கங்களிலும் தாங்கிக் கொண் டு காட்டினுள் சென்றன என்பதையும் விளக்கினுன்.
74

இவ்விரு கதைகளும் அக்லியினது முதலாவதும் மிகப் பிர சித்தி பெற்றதுமான கலைப் பொருளை உருவாக்குவதற்குக் காரண மாக விருந்தன. அக்கலை அமைப்பு இரு ஆண்யானைகள் காய முற்ற சகோதரனை அரைகுறையாகத் தூக்கிக் செல்வதைச் சித் திரிக்கின்றது. அந்த உருவம் அக்லியின் வேலை யறையிலுள்ள மேசையில் வைக்கப்பட்டிருந்தது.
'ருே ய் அதோ அங்கே இருக்கின்ற அது பற்றி உன் கணிப்பு என்ன” என்று அவன் என்னைக் கேட்டான்.
எனக்கு அது பூரண நிறைவாகத் தோன்றியது. நான் அவ் வாறு சொன்னேன்.
**ஆனல் நீ கலைத் துறையில் ஈடுபட்டிருப்பவனல்லன், பிமிஸ் டர் புருெக்டர் சிறிது நேரத்தில் இங்கு வரவிருக்கின்றன், அவன் அமெரிக்காவில் மிருகங்களின் உருவங்களைச் செய்வதிற் சிறந்த வன் என்று நான் நினைக்கின்றேன். அது பற்றி தான் என்ன நினைக்கிருன் என்பதைப் புருெக்டர் எனக்குச் சொல்வான். அது மிக முக்கியமானதாகும்.’’ என்று அக்லி எனக்குப் பதிலிறுத்தான்.
புருெக்டர் வந்தான். வேலையறையினுள் நுழைந்ததும் அங் கிருந்த யானை உருவத்தில் அவனுடைய கண்கள் பதிந்தன. எங்களை நோக்கி "ஹலோ” என்று மாத்திரம் சொல்லிவிட்டு, நெடுநேரமாக அவன் அவ்வுருவத்தை ஆராய்ந்து கொண்டு நின்ரு ன். ஈற்றில் ** அக்லி இது அருமையானது இதனை நான் செய்திருந்தாலோ என்று எண்ணுகிறேன்”, என்று உறுதியான குரலில் சொன்னன். பின்னர் அக்கலைப் பொருளைப் போன்ற இன்னெரு அமைப்பு ஜனதிபதி ரூஸ்வெல்ட்டுக்கு வழங்கப்பட் டது. பெருமைக்குரிய ஒரு மிருகத்திற்கு கலைவடிவம் அளிப் பது அதற்குக் கொடுக்கின்ற மிகச் சிறந்த மதிப்பாகும். அக்லி ஒருவனற்ருன் அதனைச் செய்திருக்க முடியும் என்று ரூஸ்வெல்ட் என்னிடம் ஒரு நாள் கூறினர்.
அக்லியின் குணவியல்புகள்
அக்லி பொதுவான மக்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழவில்லை. அவ்வாழ்க்கையில் வேலை,
75

Page 45
ஒய்வு, மகிழ்ச்சி பலவும் உள்ளடங்கும். மற்றேர் பலருக்கு இருப்பது போன்று விளையாட்டுக்கென்று அவனுக்கு நேரம் இரு க்கவில்லை. அவ்வப்பொழுது மேற் கொண்டுள்ள வேலையைப் பற்றிய விசேட பிரச்சினையே அவனது மனதில் முற்ருகப் பதிந்து காணப்படும். அப் பிரச்சினையையிட்டு சிறிது பொழுது மட்டுமே அவனல் மறக்க முடியும். அவனுடைய நண்பர்களும் அவனைப் போன்று அதே விடயங்களில் அக்கறை கொண்டிருந்தனர். அவர்களுடைய பேச்சு யாவும் அரும் பொருட்சாலை, சுடுதல் இயற்கை வரலாறு, ஆகியவை பற்றியனவாக இருந்தன. அவனும் அவனுடைய மனைவியும் அரும் பொருட்சாலைக்கு அரு காமையிலிருந்த சாதாரண ஆனல் மகிழ்ச்சி தர வல்ல சில அறை களில் வசித்தனர்.
ஒவ்வொரு நாடு காண் பயணியையும் போன்று அக்லியும் தனது நெடும் பயணங்களுக்குத் தேவையான பணத்தைத் தனது வேலையில் அக்கறை கொண்டிருந்தவர்களிடமிருந்து நன்கொடை யாகப் பெற வேண்டிய அவசியமிருந்தது. நாடுகாண் பயணி யொருவன் மேற்கொள்ளும் பயணங்களுக்கு அரும் பொருட் சாலை செலவிடுவதற்குப் போதுமான பணம் பொதுவாகக் ஒொடுப்பதில்லை. சிறு பயணங்கள் தொடர்பாக சில செலவுகள் இடம் பெறலாமே யொழிய பெரும் பயணங்களிலன்று. ஆகவே தனக்குத் தேவையான பணத்தை நாடு காண் பயணி தானே தேடிக்கொள்ள வேண்டும். அரும் பொருட்சாலை சிறிதளவு உதவியை வழங்கும். அவ்வுதவி, வேலையாட்களாயும் சிறு தொகைப்பணமாயும் அமையும். ஒரு நெடும் பயணத்தைச் சாத்தியமாக்குகின்ற பணத்தைத் தேடும் வேலையுடன் அப்பய ணத்தில் எதிர்ப்படும் மிகப் பெரிய இடையூறுகளுமே மிக மகிழ்ச்சியளிப்பனவாகும். எனவே எல்லா நாடுகாண் பயணி களையும் போன்று அக்லி தனது பயணங்களுக்காக பணத்தைப் பெறுவதற்குப்பல காரியங்களைச் செய்ய வேண்டிய அவசிய மிருந்தது. தனக்கு விருப்பமற்ற உணவுகளை உண்பதும் பழக்க மில்லாத மக்களுடைய கவனத்தை ஈர்த்தலும் அக்காரியங்களுள் சிலவாக இருந்தன.
அக்லி உலகப் பிரசித்தி பெற்ற பல பெரியவர்கள் உட்பட பலரை அறிந்திருந்தான். அவர்கள் எவராயினும், சிறியவரா யினு மென், பிரமுகராயினு மென் அவர்களை அவன் ஒரே மாதிரி யாகவே வரவேற்றன். களிமண் புள்ளிகள் படர்ந்த வேலை உடைகளோடும், திறந்த உள்சட்டையுடனும், மேற்சட்டை
76

யின்றியும் எப்பொழுதும் புகைத்துக் கொண்டும் அவன் அவர் களை வரவேற்பது வழக்கம்.
ஏதேனும் பிரச்சினையையிட்டுக் கவனத்தை செலுத்தும் போது அவனது மனம் அன்ருட உலகிலிருந்து அப்பாற் போயி ருக்கும். ஆனல் எப்பொழுதும் பிறருக்கு அன்பைச் செலுத்தி சனங்கள் தன்னை நேசிப்பதற்குக் காரணமாகவிருந்த பெருந் தன்மையை ஒரு போதும் அவன் கைவிடவில்லை.
தனது வேலையில் தான் ஈடு படுவதற்குப் பணம் உதவி செய்யும் அளவிலன்றிப் பணம் பற்றி அக்லி சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவன் பகிரங்க சொற்பொழிவுகளை ஆற்று வதற்கு விரும்பவில்லை. ஆனல், அவை மூலம் தனது நெடும் பயணங்களுக்குப் பணம் கிடைத்தது எனபதற்காகப் பல சொற் பொழிவுகளை யாற்றினன். அவனுடைய சொற்பொழிவுகள் அவனைப் போலவே எளிமையாயும் இனிமையாயும் இருந்தன. அவன் பொது மக்களுக்கு எதிரில் தோன்றி தனது விசித்திர மானதும் சுவையானதுமான வாழ்க்கையைப் பற்றி தனது வீட் டிலோ வேலை யறையிலோ ஒரு சில நண்பர்கள் மத்தியில் கதைப்பது போன்று விபரிப்பான். அவன் பேசுவதைக் கேட் போர் அவனின் பேச்சுக்களை மேலும் விரும்புவர்.
அக்லியின் வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான பகுதி நிழற்படத் தொழிலில் அவனுக்கிருந்த அக்கறையாகும். அவ னது வேலைக்கு அது முக்கியமாக இருந்தது. மேலும் ஆபிரிக்கா வில் ஏற்கனவே மாய்ந்து கொண்டிருந்த மிருகங்கள் பலவற்றின் உருவங்களைப் பதிவு செய்வதற்கும் அத்தொழில் உதவியது.
அமெரிக்க அரும் பொருட்சாலைத் தொகுதிக்கென, பெரிய ஆண் யானை யொன்றைத் தேடித்திரிந்த போது எடுக்கப்பட்ட நிழற்படம் ஒன்று இன்னும் அதனைப் போன்று வேறெதுவும் இல்லாத தனிப் பெருமை கொண்டு விளங்குகின்றது. மூர்க்கமான, சினங்கொண்ட யானை யொன்று புகைப்படக் கரு வியை நோக்கி விரைந்து வருகின்ற போது அதற்கு மிக நெருங் கிய நிலையில் எடுக்கப்பட்ட படம் அது. அப்படம் எடுக்கப்பட்ட சந்தர்ப்பம் பின்வருமாறு: ஜிம் கிளார்க் துப்பாக்கியுடன் தயா ராக நிற்க அக்லி புகைப்படக் கருவியை இயக்கலானன். அவர் கள் மூன்று பெண் யானைகளையும் ஒரு குட்டியையும் கண்டனர். அக்லி தனது புகைப்படக் கருவியைத் தயார் செய்யும் போது,
77

Page 46
பெண் யானை ஒன்று அவர்கள் நிற்பதை உணர்ந்து கொண்டு அவர்களை நோக்கித் தன்னல் இயலுமானவரையில் வேகமாக விரைந்தது. புகைப்படக் கருவி இயங்கும் வரை ஜிம் தாமதித் திருக்கத் தீர்மானித்தானுயினும் அதனைச் சுடுவதிலிருந்து தாம திப்பது அவனுக்கு மிகக் கடினமாக இருந்தது. அந்த யானை தனது காதுகளை மேன் மேலும் அகட்டி விரித்துக் கொண்டு அவர்களை நோக்கி நேராக விரைந்து அதனுடைய முழு உருவ: மும் புகைப்படக் கருவியின் படக் கோணத்தை நிறைத்தபோது அக்லி அதன் படத்தை எடுத்தான். கிளார்க் உடனடியாகச் சுட்டான். அச்சூடு யானையைத் திருப்பியது எனினும் மீண்டும் அது அவர்களைத் தாக்குவதிலிருந்து தடுக்கும் முகமாக மேலும் இரு தடவைகள் சுடவேண் டியதாயிற்று. அக்லி படம் எடுப்பதில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்ததால் எவ்வாறன இடர்ப்பாடு களுக்குள் தாம் அகப்பட்டிருந்தனர் என்பதைக் கூட உணர முடியவில்லை.
சிங்கத்தை வேட்டையாடுதல்
படப்பிடிப்புக் கருவிகளில், குறிப்பாக அசைவுறும் மிருகங் களைப் படம் எடுப்பவற்றில், அக்லி திருப்தி கொள்ள வில்லை. பெரிய சிங்க வேட்டை யொன்றின் போது எடுக்கப்பட்ட மோச மான இயங்கு படங்கள் சிலவற்றையிட்டு அவன் மிகவும் மன வருத்தம் கொண் டான்.
அச்சிங்க வேட்டைக்கென நூறு 'நந்தி' வேட்டை வீரர் களை அவன் திரட்டியிருந்தான். முதல் நாட்காலை சிங்கமொன்று அடர்ந்த செடி கொடிகளுள் நுழைவதை அவர்கள் சண்டார் கள். புதருக்குள் மறைந்த சிங்கத்தை வெளிக்கொணர ஈட்டிகள் எறியப்படும் போது அம் மிருகத்தைப் படம் எடுக்கலாம் என எதிர்பார்த்து அக்லி தன் புகைப்படக் கருவியைத் தயார் செய்தான். ஆணுல் அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை.
ஈட்டி தாங்கியோர் அந்த மிருகத்தைச் சுற்றி வளைத்து: முன்னேறிச் சென்றனர். ஆனல் சிங்கத்தின் குரலொலிக்குப் பதிலாக சிறுத்தையின் கோபக் குரலொலி அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு மேலாக எழுந்தது. பின்னர் கோர நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றது.
சில கணங்கள் கழித்து வேட்டைக்காரருள் இருவர் மூன்றவது நபரொருவனைத் தாங்கிக் கொண்டு அடர்ந்த புதரிலிருந்து:
78

வெளியே வந்தனர். அவனின் உச்சித் தலையின் தோலும், மயிர்க் கற்றையும் அவனின் முகத்தின் மீது படிந்திருந்தன. அவன் தோள் இருபது இடங்களில் கிழிக்கப்பட்டு இருந்தது. அவர் களுக்குப் பின்னல் நந்தி வீரர்கள் சிலர் உயிரற்ற சிறுத்தையைத் தூக்கி வந்தனர். அதன் உடம்பில் 60 ஈட்டித் துளைகள் காணப் பட்டன.
அக்லி காயமுற்ற வேட்டையாளனை ஒரு மரநிழலுக்குக் கூட்டிச் சென்று அவனது தலைக்காயத்திற்குப் பரிகாரம் செய் தான். அவனே அங்கு என்ன நடக்கின்றது என்று வினவிஞனே யொழிய வேறு எதுவும் கூறவில்லை. அடுத்தநாள் தன்னை வீட் டிற்கு அனுப்பிவைப்பதை அவன் விரும்பவில்லை. அவன் வேதனை எதையும் கொண்டதாகத் தோன்றவில்லை. மற்றவர்களோடு தொடர்ந்து வேட்டையாட விரும்பினன்.
சில நாட்களுக்குப்பின் குழுவினர் ஓர் அடர்ந்த புதருக்குள் பல சிங்கங்கள் நுழைவதைக் கண்டனர். ஈட்டி ஏந்தியோர் அவற்றைச் சுற்றி வளைத்தனர். சிங்கங்கள் தப்பிச் செல்ல முனைந்தன. ஆனல் அவை ஒடிய ஒவ்வொரு திக்கிலும் ஒருவன் அவற்றிற்கு முன்னல் பாய்ந்து மறித்தான். கோபமுற்ற சிங்க மொன்று தன்னைத் தாக்க வருவதைக் கையில் ஈட்டியை மட்டும் வைத்துக் கொன டு எதிர்ப்பதற்கு எவருக்கும் பெரும் துணிவு தேவை. ஆனல் நந்திகள் ஒருபோதும் தாம் அஞ்சியதாகக் காட்டிக் கொண்டதில்லை. போராட்டத்தின் முடிவில் மூன்று சிங்கங்கள் இறந்தன. ஆனல் புகைப்படம் எடுபடவில்லை. மிகப் பருமனும் பளுவும் கொண்ட புகைப்படக் கருவியை போராட் டத்தைப் பதிவதற்கு ஏற்ற விரைவில் நகர்த்த முடியாது போயிற்று.
ஈற்றில் அக்லி ஒரு படத்தை எடுத்தான். அது மிகச் சிறந்ததன்று. தனியான ஓர் ஈட்டிக்காரனுக்கும் ஒரு பெண் சிங்கத்திற்கும் இடையே நடந்த மூர்க்கமான சண்டைப்படம் அது. வேட்டைவீரன் மிருகத்தின் மேல் ஏறத்தாழ விழுந்தும் விட்டான். இருவரும் உடற் சண்டையிட்டனர். ஏனையோர் வந்தடைந்த போது நந்தி தன் முதுகுப்புறமாகக் கிடந்தான். அவனுடைய காலில் ஒரு கீறல் மட்டும் காணப்பட்டது. சிங்கம் அவனருகில் இறந்து கிடந்தது.
இன்னெரு வேட்டை முடிவில் இடம் கொண்ட நிகழ்ச்சி காரணமாகச்சிறந்த புகைப்படக்கருவி ஒன்றுமின்றி ஆபிரிக்கா
79

Page 47
விற்குத் திரும்புவதில்லை என்று அக்லி தீர்மானித்தான். ஈட்டி தாங்கியோர் மலையுச்சி யொன்றில் சூரிய வெளிச்சம் நிறைந்த வெளியில் சிங்கமொன்றை துரத்தி வந்தனர். அவ்வாறன நிலைமை புகைப்பட மெடுப்பதற்கு விசேட சூழலை வழங்குவ தாகும். ஆனல் அவர்கள் அவசரப்பட்டனர். அக்லி தனது புகைப்படக்கருவியை ஆயத்தப்படுத்துமுன் அவர்கள் ஈட்டி எறி ந்து அதனேக் கொன்று விட்டனர். அவ்வாறு படமெடுக்காது விட்டதையிட்டு அக்லி மிகவும் துயரமடைந்தான். மீண்டும் அவ்வாறு நடைபெற விடுவதில்லை என்று அக்லி உறுதி பூண்டு குறுகிய நேரத்தில் ஆயத்தப்படுத்த வல்ல புகைப்படக்கருவி ஒன்றை உருவாக்குவதில் தனது மனதைப் பதித்தான்.
தான் விரும்பிய பெறுபேறுகளை வழங்க வல்ல கருவி எது வும் இல்லை என்று அறிந்த அக்லி அசையும் படங்களை எடுக்க வல்ல புகைப்படக் கருவியொன்றைத் தானே அமைத்துக் கொள்ள தீர்மானித்து நியூயோக்கைச் சேர முன் அதையிட்ட திட்டப்படிவங்களைத் தனது மனதில் தெளிவாக வைத்திருந்தான். ஏனைய புகைப்படக் கருவிகள் அனைத்தும் சதுரமானவை. அவ னுடையதோ வட்டமானதாக விருந்து இடங்கொள்ளளவிலும் பளுவிலும் சிக்கனமாயிருந்தது. அவனின் கருவி மேலும் கீழும் பக்க வாட்டிலும் இயங்கக் கூடியதாயும் எத்திசையிலும் விரை வில் திருப்ப வல்லதாயும், இருக்க வேண்டும். கானகத்தில் நிழற் படம் எடுக்கும்போது வெளிச்சம் பெரும் முக்கியத்துவம் கொண்டதெனும் வகையில் சாத்தியமான அளவிற்கு வெளிச் சத்தை கருவியின் கண்ணுடித் துவாரத்தினுள் அனுமதிப்பதாய் இருக்க வேண்டும். மேலும், தொலைவில் உள்ள பொருட்களைப் படம் எடுப்பதற்காக விரைவாக ஆயத்தப்படுத்தற்குச் சாத்திய மானதாகவும் அது இருக்க வேண்டும். இவையே மிக முக்கிய மான தேவைகளாகும்.
அக்லியின் புகைப்படக் கருவி
அக்லி அமெரிக்க அரும்பொருட்சாலைக்குத் திரும்பிய போது அவன் வேண் டிநின்றது புகைப்படக்கருவியை ஆக்கு வதற்கான பொருட்களுக்கான பணத்தை வழங்க வல்ல ஒரு வரையே. ரெட் ஸ்லோகும் எனும் என் நண் பனை அக்லி சந்திப்ப தற்கு நான் உதவினேன். அவன் அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தான். அவனுக்கு எவ்வித அனுபவமும் கிடையாது. ஆனல் நிறையப் பணம் வைத்திருந்தான். அக்லி
80

யின் யோசனையை ஏற்று புகைப்படக் கருவி செய்வதற்கான பணம் கொடுக்கவும் தீர்மானித்தான். அக்லியுடன் வேலை செய் வதால் பெருமளவு அனுவபம் அவன் பெறலாம் என்றும் ஆனல் ஒரு நிறைவான புகைப்படக் கருவியைச் செய்து முடிக்கும் வரை அக்லி வாளா விருக்கமாட்டான் என்பனைதயும் அவன் அறிந்து கொள்ளவேண்டும் என்றும் நான் அவனிடம் கூறி வைத்தேன்.
அரும் பொருட்சாலைக்கு அருகில் ஒரு பெரிய வேலை அறையை அக்லி அமைத்துக் கொண் டான். தன்னுடன் ஜிம்மி கிளார்க்கை வேலை செய்யுமாறு கேட்டான். அத்தருணம் விற் பனையான புகைப்படக் கருவியிலும் பார்க்கச் சிறந்த தொன்றை ஆக்குவதற்கு இருவரும் திட்டமிட்டனர். ஆனல் அக்கருவி ஆக்கப்படும் காலவேளையில் மேலும் அதனை சிறப் பாகச் செய்வதற்கான பலவழி முறைகளைப் பற்றி அக்லி சிந் தித்தான். உடனடியாக உற்பத்தி முயற்சிகளை நிறுத்தினன். நிறுத்தப்பட்ட கருவியிலும் முற்ருக வேறுபட்டதும் மிகச் சிறந் ததுமான இன்னெரு பொறியை ஆக்குவதற்கு அக்லி திட்ட மிட்டு இருவரும் அதன் ஆக்கம் தொடர்பான வேலையைத் தொடக்கினர். ஆனல் அக்லி இதனைக் காட்டிலும் மேலும் சிறந்த கருத்துக்களை ஏற்கனவே கவனத்திற் கொண்டிருந்ததால் உற்பத்தி இரண்டாவது தடவையாக நிறுத்தப்பட்டது.
சில மாதங்களாக இந்நிலையே தொடர்ந்தது. எதனையும் நிறைவாக்குவதில் அக்லிக்கு இருந்த பற்றுக் காரணமாக முற்ருக திருப்தியளிக்காத ஒரு புகைப்படக் கருவியை விற்பனை செய்வதற்கு அவன் மறுத்தான்.
ரெட் ஸ்லோ கும் பண இன்னல்களுக்குள்ளானன். ஆயிரக் கணக்கான டொலர்களை வழங்கி அவ்வேலை பூர்த்தியாக்கப்படும் தறுவாயில் அது கைவிடப்படுவதைக் கண் டான். ஈற்றில் அவன் பொறுமையின் எல்லையை அடைந்தான். புகைப்படக்கருவியின் பெறுமதியில் இன்னும் அவன் நம்பிக்கை கொண்டிருந்தான். அக்லியைப் பெரிதும் விரும்பினன். ஆனல், அவனுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தினன். நிறைவான புகைப்படக் கருவி யொன்று உற்பத்தியாகும் தறுவாயில் தனது வேலை தம் பிப்பதை அக்லி கண் டான். ஆனல் ஒரு வணிகர் குழு அப்புகைப் படக் கருவியை உற்பத்தி செய்வதற்காக ஒரு கம்பனியை நிறுவினர்.
8.

Page 48
ஈராண்டு புரிந்த கடின வேலைக்காக மிகச் சிறிதளவு பணத் தையே அக்லி பெற்ருன். ஆனல் அவ்வேலை நன்கு பூர்த்தியானதை யிட்டு அவன் மகிழ்ச்சியுற்றன்.
இப்பொழுது அவன் ஆபிரிக்காவிற்குச் சென்று சிறந்த \ படங்களைப் பெற முடியும். அவனைப் பொறுத்தவரையில் அந்த வாய்ப்பு அவனுக்குப் போதிய ஊதியமாக இருந்தது. அக்லியின் புகைப்படக்கருவி உலகின் எல்லாப் பாகங்களிலும் பயன்படுத் தப்பட்டது. பல்லாண் டுகளாக விரைவான செயல்களைப் படங் களில் பதிவு செய்யப்பட வேண்டியிருந்த போதெல்லாம் அக்லி யின் புகைப்படக் கருவியே முன்னிலை பெற்றது.
ஆபிரிக்க மண்டபம் பற்றிய கனவு நனவானது
முதலாம் உலக யுத்தத்தின் போது அக்லி தனது நாட்டிற் குச் சேவை செய்தான். எனவே அரும்பொருட்சாலை தொடர் பான வேலை பிற்போடப்பட்டது. ஆனல் மகா யுத்தம் முடிந்த பின் மீண்டும் தன் முன்னைய கனவுகளை அக்லி காணத் தொடங் கினன்.
அவன் அமெரிக்க இயற்கை வரலாற்று அரும்பொருட் சாலை பற்றி ஏற்கனவே சிந்தனை செய்திருந்தான். அந்த மண்ட பம் ஆபிரிக்காவின் மிருகங்களை மட்டுமன்றி ஆபிரிக்காவின் உண்மையான பகுதிகளையும் அமெரிக்காவிற்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
'ஆபிரிக்க மண்டபம் கானக அமைதியின் கதையைக் கூறும்.’’ என்று அவன் எழுதினன். அவன் அறிந்துள்ளது போன்று ஆபிரிக்க மிருகங்களை யிட்ட உண் மைக் கதையை அம் மண்டபம் எடுத்துரைக்கும். மேலும் அது கானகங்களையும் காடு களையும் பற்றி மக்கள் பலர் கொண்டிருந்த தவருன கருத்துக் களையும் மாற்றியமைக்கும்.
அக்லியின் வாழ்க்கையில் இவ் வெண்ணமே மிக முக்கிய மான விடயமாகும். 1911 இல் அவன் முதன் முதலாக இது பற்றி அமெரிக்க அரும்பொருட் சாலையின் பணிப்பாளர்களுக் குக் கூறியிருந்தான். அவர்கள் அதனை உடனே ஏற்றுக்கொண்ட தன் பேரில் யானைத் தொகுதி தொடர்பான வேலையும் ஆரம் பிக்கப்பட்டது. ஏனைய பல விடயங்களைப் போன்று இத்திட்ட
82

மும், முதலாம் உலக மகா யுத்தம் முடியும் வரை தாமதப் பட்டது எனினும் 1920 இல் மீண்டும் அது உயிர் பெற்றது. இம் மண்டபத்திற்கான பொருட்களை ஆபிரிக்காவில் சேகரிப் பதற்கு அக்லி தொடங்கினன்.
அவனுடைய பட்டியலில் முதலாவதாகக் காணப்பட்டவை கொரில்லாக்கள். அமைப்பில் மனிதனை பொத்த இப்பெரும் மிருகங்கள் உலகின் பெரும் மிருகங்களுள் அதிகம் அறியப் படாதவையாக இருந்தன. கொரில்லாக்களைப் பற்றிய பெரும் பாலான விபரங்கள் பவுல்டி செய்லூ என்ற பிரெஞ்சுக்காரனிட மிருந்து பெறப்பட்டன. 1855 இல் கொரில்லா ஒன்றைக் கொன்ற முதலாவது வெள்ளையன் அவனே. அம் மிருகத்தை விபரிக்கும் போது 'அது பெரிய உடம்பையும் சக்தியுடைய நீண்ட கைகளையும் கோபமுடைய ஆழ்ந்த சாம்பல் நிறக் கண் களையும் பயங்கரக் கனவு கண்டதைப் போன்ற வெறி கொண் ட முக பாவனையையும் ஆச்சரியமான அரை குறை மனித அழு குரலையும் கொண்டது.' என்று அவன் சித்திரித்தான். இக் காட்டுமிருகம் ஆண்கள் பெண்களைக் கானகத்திற்குள் தூக்கிச் செல்லும் என்று அவன் கூறியிருந்தான்.
இன்னெரு பிரெஞ்சுக்காரணுன பிறெமியற் அக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிஜ உருவ அளவில் பெரிய கொரி ல்லா வொன்றைச் சிருஷ்டித்து அஃது ஒரு இளம் பெண் ணை த் தனது கமக்கட்டுக்குள் வைத்துத் துரக்கிச் செல்வதாகக் காட்டி ஞன். அம் மிருகத்தின் முகத்தில் ஒரு வெறி கொண்ட தோற்றம் காணப்பட்டது. நன் நோக்கமுடைய யாரோ ஒருவர், அவர் யார் என்பதை நான் மறந்து விட்டேன் அவ்வுருவத்தை அமெ ரிக்க இயற்கை வரலாற்று அரும் பொருட்சாலைக்கு வழங்கி யிருந்தார். உண்மையில், அதனை அங்கு காட்சிக்கு வைத்திருக்க முடியாது. ஆகவே பல்லாண்டுகளாக பொதுமக்களின் பார்வை யிலிருந்து அதுதவிர்க்கப்பட்டிருந்தது. அதனைக் கண்ணுற்ற ஒவ் வொரு தடவையும் அக்லி கோபமுற்ருன், 'ஏன் எவனும் தன் கலைத் திறமைகளைப் பயன்படுத்தி, உண்மையற்ற தொன்றை உருவாக்க வேண்டும். இம் முழு விடயமும் நகைப்பிற்குரியது' என்று அக்லி கூறுவான்.
காட்டுக் கொரில்லா வொன்றை ஒரு போதும் கண்டிராத போதிலும், அதனுடைய கோபக் குணம் பற்றிய கதைகளுட்
83

Page 49
பட பல தவருனவை என்பதனை அக்லி நன்கறிந்திருந்தான். ஏனைய வன மிருகங்களைப் பற்றிய தனது நெடுங்கால அனு பவத்தில் இருந்து முற்ருகப் பெருந்தன்மையும் நல்லியல்பும் உள்ள ஒரு மிருகமாகவே கொரில்லா இருக்குமென்று அக்லி நம்பினன். மனிதனேடு அது சண்டையிடுமாயின், அவன் தன்னைத் தாக்குவதற்காக வருகிருன் என்று அது நினைப்பதன் காரணமாகவேயிருக்கும் என்று அக்லி கருதினன். அத்தருணம் அது தனது முழு வலிமையுடனும் சக்தியுடனும் இறுதிவரை போரிடும். எனவே அக்லி கொரில்லா வில் விருப்பமுறுவதற்கு ஆயத்தமாயிருந்தான். பெரும்பாலான மிருகங்களை நண்பர்க ளாக அவன் கருதியதால் அப்போக்கு புரிந்துகொள்ளத் தக்கதே.
அக்லி ஆபிரிக்க மண்டபத்திற்கென கொரில்லாக்களை மாத் திரம் விரும்பவில்லை. அவற்றேடு மற்றும் உயிர் வாழும் மிருகங் களின் இயங்கும் படங்களையும் அவன் விரும் பினன். முதன் முதலாக தான் நெடுங்காலமாக முயன்று உருவாக்கிய அக்லி புகைப்படக் கருவியைப் பயன்படுத்தவும் விரும்பினன். காட்டுக் கொரில்லாக்களைப் பற்றி எவ்வகையான படங்களும் அது வரை எடுக்கப்படவில்லை. இவ்வாரு ன ஒரு நெடும் பயணத்தை இத் துணை மிகுந்த மகிழ்ச்சியோடு தான் ஒரு போதும் எதிர்பார்த் திருக்கவில்லை என்று அவன் எனக்குக் கூறினன்.
கொரில்லாக்களுக்காக ஆபிரிக்காவிற்கு அக்லி போதல்
அக்லி அத்துணை மிகு உற்சாகத்தோடு இருந்தபோதிலும் அவனுடைய நெருங்கிய நண்பர்களுட் பலர் அவனது உடல் நலம் பற்றிக் கவலைப்பட்டனர். அவனின் உடல் நலம் திருப்தி யாக இருக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அக்லி ஒய்வேது மின்றி வேலை செய்து வந்திருந்தான். விளையாடுவதற்கோ , உட லுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதற்கோ ஒரு நாளே னும் அவன் கழித்திருப்பான் என்று நான் நம்பவில்லை.
அக்லி எமது ஐயப்பாடுகளுக்குச் செவி கொடுக்கவில்லை. 1921 இல் பெல்ஜியன் கொங்கோவின் லேக் கிவூப் பகுதிக்கு இவன் சென்ருன். மைக்னே மலைச் சாரல்களிலே கொரில்லாக் களை வேட்டையாடத் தொடங்கினன். ஒரு சேற்று நீர்த்துணை யில் கொரில்லா வொன்றின் கை அடையாளங்கள் நான்கினை அவன் கண்டபோது மிகவும் ஆனந்தமடைந்தான்.
84

இரண்டு நாட்கள் கழித்து அக்லி முதன்முதலான கொரில் லாக்கள் இரண் டினைக் கண் டான். வழிகளை வெட்டி அமைத்துப் போகவேண்டிய அளவிற்கு அடர்த்தியான காட்டுப்பகுதியூடாக வேட்டைக் குழுவினர் மேற்கொண்ட மலைப்பிரதேசப் பிரயா ணம் பல இக்கட்டுக்களைக் கொண்டதாக விருந்தது.
திடீரென வழிகாட்டிகளுள் ஒருவன் மலைச்சரிவுகளிலுள்ள மிக ஆழ்ந்த பள்ளத்தாக்கினுட்டாக ஓர் ஓசையைக் கேட்க ஏது வாயிற்று. ஏதோ நகர்வதை அவன் சுட்டிக் காட்டினன். கொரில் லாக்கள் அங்கே காணப்பட்டன.
வெடிவைப்பதற்கு அவ்விடம் மிகத் தொலைவாக இருந்தது. எனவே அக்லியும் வழிகாட்டிகளும் கீழ்ப்பக்கமாக இறங்கி, பின் னர் உயர்ந்த செங்குத்தான பாறைகளில் ஏறினர். அவர்கள் குன்றினது உச்சியின் கீழ் மற்ருெரு பக்கமாக நகர்ந்து செல்லும் போது தங்களுக்கு முன்னல் மேற்புறமாக எதிர்பாராத ஒரு பலத்த ஓசையைச் செவியுற்றனர். 150 யார் தூரத்திற்குத் தொடர்ந்து கவனத்துடன் அவர்கள் மேற் சென்றனர். அப் பொழுது அக்குழுவினருள் ஒருவன் நின்று தங்களுக்கு மேலிருந்த அடர்த்தியான மரங்களுள் உற்று நோக்கினன்.
அக்லி செங்குத்தான பாறையின் விளிம்பில் நின்று கொண் டிருந்தான். கீழிருந்த பாறைகளுக்கும் அவனுக்குமிடையே நான்கு அங்குல தடிப்பான மரம் ஒன்று மட்டுமே இருந்தது. ஓசை மீண்டும் எழுந்தது. பின்னர் ஒரு கட்டுக்க டங்சாத இரைச் சல் இடம் பெற்றது. அசையும் மரங்களைத் தவிர வேறு எதனே யும் காணவில்லை. பின்னர் மெதுவாக கொரில்லாவின் தலையை அவன் கண் டான். துவக்கின் வெடிச் சப்தத்தில் கொரில்லாவின் கோபக் குரல் அமிழ்ந்து விட்டது.
அடுத்து நடந்தது பற்றித் தனக்குச் சிறிதும் ஞாபகம் இல்லை என்று அக்லி கூறினன். ஒரு பெரிய வெள்ளை - சாம்பல் நிற உடலொன்று அவனிருந்த இடத்திலிருந்து ஒரு சில அங் குலத்திற்கப்பால் கீழ் விழுந்தது. அவ்வுடல் அங்கிருந்த செங் குத்தான பாறையின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய மரத்தினல் தடுக்கப்பட்டு ஈற்றில் நின்றது. அத்தனி மரம் அக்லியின் முதலாவது கொரில்லாவைக் காப்பாற்றியது. அம் மரம் அப்பெருமுடலைத் தடுத்திருக்காவிடின் கீழிருந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கினுள் கொரில்லா விழுந்திருக்கும், அதனை அவர் களால் வெளியே எடுத்திருக்கவும் முடியாது.
85

Page 50
கொரில்லாவிலிருந்து தோலை அகற்றுவதற்கு அக்லி அதிகம் இடர்ப்பட்டான். நாள் முழுவதும் அத்தோலைப் பதப்படுத்து வதிலும் அடுத்த நாள் கொரில்லாவின் கைகள், பாதங்கள், முகம் ஆகியவற்றின் உண்மையான உருவங்களைச் செய்வதிலும் வன் தன் நேரத்தைத் தன் கூடாரத்தில் கழித்தான். அவன் ஓர் இரத்த நோயினுல் பாதிக்கப்பட்டிருந்தமையால் ஒய்வெடுத் திருக்க வேண் டும். ஆழ்ந்த பள்ளத்தாக்குகளையும் துளைகளையும் கொண்ட அந்த மலைச்சாரலில் கொரில்லாக்களை வேட்டையாடு வது 'முதுகை முறிக்கும்” கடினமான வேலையாக இருந்தது. ஆனல் கொரில்லாவின் தோலைப் பதப்படுத்தியவுடன் மீண்டும் அவன் வெளியிற சென்ருன். அவனுக்கு இன்னெரு பெரிய அனுபவம் காத்திருந்தது.
அவர்கள் அடர்ந்த கானத்தின் வழியாகப் பாதைகளை அமைத்து, கரடு முரடான குன்றுகள் பலவற்றினைத் தாண்டிய பின்னர் கொரில்லாக் கூட்டமொன்று நடமாடும் அறிகுறிகளைக் கண்டனர். அக்குறிகள் உயர்ந்த குன்றின் சாரல் பிரதேசத் திற்கு அவர்களை இட்டுச் சென்றது. அப்பெரிய மிருகங்கள் வழி வழியே இரையைக் கொண்டு மெதுவாகச் சென்றிருக்காவிடில் வேட்டைக்காரர்கள் அவற்றினைக் கண்ணுற்றிரார். மரங்களில் இடம் பெற்ற அசைவுகளைக் கொண்டு கொரில்லாக்களை அவர் கள் உடனே கண்டனர். 150 கெஜ தூரத்திலிருந்து அக்லி தனது பெரிய துப்பாக்கியினல் வெள்ளைநிற முதுகைக் கொண் ட ஒரு பெரிய ஆண் கொரில்லாவிற்கு வெடிவைத்தான். ஆனல் குறி தவறிவிட்டது. அவ்வாறிருந்தும் கொரில்லாக்கள் விரைந்து ஓடி விடவில்லை.
உண்மையில் அவை விரைந்து ஒடும் தன்மையற்றன. அவற் றின் உடம்புகள் உறுதியாகவும் பளுவாகவும் இருப்பினும் கால் கள் குட்டையாகவும் மெலிவாகவும் காணப்படும். அவை செடி கொடிகளை உண்பதாலும் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் அவசியமில்லாததாலும் அவை விரைந்து செல்வதற்குக் காரணம் எதுவுமில்லை. எந்த ஒரு காட்டு மிருகமும் கொரில்லாவுடன் சண்டையிட விரும்புவதில்லை. சிங்கமும் அவற்றின் நீண்ட கைக ளுள் அகப்படுமளவிற்கு அருகில் வருமாயின் உயிர் தப்பும் வாய்ப்பு அதற்குக் குறைவாகவே இருக்கும்.
ஈற்றில் அக்குழுவினர் கொரில்லாக் கூட்டத்திற்கு அண் மையில் வந்தபோது, மீளவும் ஓர் உயர்ந்த குன்றுச் சரிவில்
86

அவர்கள் நின்றனர். அவர்களிருந்த இடத்திலிருந்து 200 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கு இருந்தது. அக்லி ஒரு சிறிய மரத்தில் சாய்ந்து கொண்டு சுடுவதற்கு ஆயத்தமாக நின்றன். ஒரு கரிய நிற கிழட்டுப் பெண் கொரில்லா அவனுக்கு மேலே குன்றில் நிற்பது தெரிந்தது. அவன் சுட்டபோது அது அவனுக்கு நேராக வந்து விழுந்தது. அது விழுந்து வரும் வழியிலிருந்து விலக அவன் முயற்சித்தான். அவ்வாறு செய்ய முடியாத நிலையில் முகம் குப்புற நிலத்தில் விழுந்து படுத்தான். இறந்த கொரில்லா அவனுக்கு மேலாக உருண்டு சென்றதாயினும் அதன் பெரிய உடம்பின் பாரம் அவனை முழு வேகத்துடன் அமுக்காத தன்மை யில் அவனுக்கேற்பட்டிருந்த காயம் சிறிதாக இருந்தது. அக்லி எழுந்திருப்பதற்கு முன் பெரும் எண்ணிக்கையில் கொரில்லாக் கள் ஒன்றின் பின் ஒன்ருக அவன் மேல் உருண்டு சென்றன. அவன் எழுந்திருந்து துப்பாக்கியை ஆயத்தப்படுத்துவதற்கு முன் னர் கொரில்லாக்கள் யாவும் மறைந்து விட்டன.
ஒரு சிங்கம் அல்லது யானை திட்டமிட்டு நிறைவேற்றும் தாக்கல் போன்ற தாக்கல் அது என்று அக்லி கருதவில்லை. ஏனெனில் பெண் கொரில்லா விழுந்தபோது அது இறந்துவிட் டது. அவனின் அபிப்பிராயப்படி ஏனைய கொரில்லாக்களும் அந்தப் பெண் கொரில்லா இறந்ததை அறியாது குருட்டுத் தனமாக அதனைப் பின்பற்றின. அவனுடன் சண்டையிடுவதற்கு திட்டமிட்டிருப்பின் மிக எளிதாக அவனை செங்குத்தான பாறை யிலிருந்து அவை எதிர்த்திருக்கலாம். கொரில்லாக்கள் நடந்து கொண்ட முறையிலிருந்து அவை மனிதனக் கண்டதும் சண்டை யிடுவன அல்ல என்பதை உறுதியாக அவன் நம்பினன்.
இறந்து கிடந்த பெண் கொரில்லாவின் சடலத்தை மீட் பதற்குப் பள்ளத்தாக்கின் அடிவரை இறங்குவது சாத்தியமில்லை என்று வழிகாட்டிகள் சொன்னர்கள். அங்கே அவர்கள் கொட் டும் மழையில் நின்றனர் எனினும் கீழ் நோக்கி இறங்குவதற்குத் தானும் முயற்சிக்கவில்லை. ஒரு அபூர்வமான மிருகத்தைக் கொன்று அதனை இருட்டான கிடங்கின் தளத்தில், விட்டுச் செல்லும் எண்ணத்தை அக்லியால் தாங்கமுடியவில்லை. எனவே, அவன் சிறு மரங்களிலும் செடிகளிலும் பிடித்துக் கொண்டு செங்குத்தான பாறையில் அடித்தளத்தை அடைந்து அங்கிருந்து இறந்த மிருகம் கிடந்த கற்பாறைக்குப் போதற்காக மற்றும் ஒரு செங்குத்தான பாறையின் மீது ஏறிஞன். மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர்.
87 T4

Page 51
கொரில்லாக்களின் படங்கள்
அப் பெரிய கொரில்லாவின் தோலை அகற்றுவது கடினமான
வேலையாக இருந்தது. இருவர் மட்டுமே கற்பாறையில் ஒரே நேரத்தில் வேலை செய்யச் சாத்தியமாக விருந்தது. மிக எளிதில் கீழே இருந்த பள்ளத்தாக்கினுள் விழுந்துபோகும் நிலைமை அங்கு இருந்தது. மற்றும் வேலை முடிந்ததும், அவ்விபத்தில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்னும் பிரச்சினை அவர்களுக்கு உதய மாயிற்று. கனமான தோலைச் சுமந்து கொண்டு ஏறத்தாழ செங்குத்தான மலைச்சரிவில் மெல்ல மெல்ல ஏறிய ஆபிரிக்கரின் திறமையையிட்டு அக்லி மிகவும் மெச்சிக் கூறினன். சில சந் தர்ப்பங்களில் தங்களுக்குள் எவரும் தம் கூடாரத்தைச் சென் றடைய மாட்டார் என்று அக்லி நினைத்தான். தனது வாழ்க் கையில் அன்றைய தினமே மிகக் கடுமையான தினமாகும். உலகி லுள்ள எந்த அரும் பொருட்சாலை பொருட்டோ அன்றி கொரில்லா பொருட்டோ தான் மீண்டும் இவ்வாறு கஷ்டப் படுவதில்லை என்றும் அக்லி கூறினன். அவன் அவ்வாறு கூறினன் ஆனல் நான் அதை நம்பவில்லை.
இப்பொழுது அவனுடைய கூடாரத்தில் மூன்று அருமை யான கொரில்லாக்கள் கிழட்டு ஆண், ஒரு பெண், ஒரு குட்டி இருந்தன. ஆனல் அக்லி நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆபிரிக்கர் மேலும் வேட்டையாட விரும்பவில்லை. அவ்வேலை அவர்களுக் குமே மிகக் கடினமாகக் காணப்பட்டது. ஆயினும் இவ்வேலை யின் வெற்றித்தன்மையை நிர்ணயித்துக் கொள்ளும் பொருட்டு இன்னுமொரு வேலையை அக்லி பூர்த்திசெய்ய விருந்தான். அவர் கள் அவனேடு தங்கிக் கொள்வதற்கு உடன்பட்டனர். அவ் வேலை கொரில்லாக்களின் இயங்கும் படங்களை எடுப்பதேயாகும்.
எனினும் தான் ஏற்கனவே அகப்பட்டுக் கஷ்டப்பட்ட நேரான சுவர்களும் ஆழ மான பள்ளத்தாக்குகளும் நிமிர்ந்த சுவர்களும் உள்ள உயிருக்கா பத்தான இடத்திற்கு தன்னை இட் டுச் செல்லக் கூடாதென்று தன் வழிகாட்டியிடம் அக்லி கேட்டுக் கொண்டான். அப்பிரதேசத்தில் அசையும் புகைப்படக் கரு வியை இயக்குவது கடினம். மேலும் அங்கு ஏற்படவல்ல இன் னல்களைத் தாங்குவதற்கு அவனுடைய உடல் நலமும் இட மளிக்கவில்லை. வழிகாட்டிகள் எளிதான ஓரிடத்திற்கு அவனைக் கூட்டிச் செல்வதாக உறுதியளித்து மைக்னே மலைக்கும் கரி சிம்பி மலைக்குமிடையுேள்ள மேட்டு நிலத்திற்கு அழைத்துப் போயினர். அப்பயணமும் கடினமானதாகக் காணப்பட்டது.
88

அவர்கள் ஒரு கொரில்லாக் கூட்டத்தைக் கண்ணுற்ற போது ஏறக்குறைய முழுப்பலத்தையும் அக்லி இழந்திருந்தான். 50 யார் தூரத்தில் ஒரு மரக்கிளையிலிருந்து கரிய பந்தை யொத்த உருவம் ஒன்று நகர்ந்து சென்றதை அக்லி கண்டான். இதனை யடுத்து, பெரிய கொரில்லா ஒன்றும் அதே கிளையிலிருந்து வெளி யேறிச் சென்றது. தனது இரு வயதுக் குட்டியை இட்டுச் சென்ற தாய்க் சொரில்லா அது தான் செய்வது என்னவென்று அறிந்து கொள்ளும் முன்னரே எவரும் எடுத்திராத கொரில்லாக்களின் இயங்கு படத்தை அக்லி எடுத்துக் கொண்டிருந்தான்.
இப்படத்தை நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். அழகிய பசுமையான மரங்களுக்கிடையே தாயும் சேயும் முழுமை யாகத் தோற்றமளிக்கின்றன. ஒரு கணம் கழித்து மற்ருெரு சேய் அருகிலுள்ள மரத்தில் ஏறுகின்றது. அவை மூன்றும் அக்லியை பயமின்றி ஆளுல் ஆவலோடு நோக்குகின்றன. பின்னர் தாய் அக்கறையற்றுத் தூங்கு மாற் போன்று காட்சியளிக்கின்றது. கொரில்லாக்கள் மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தைப் போன்று காணப்படுகின்றன. அந்தத் தாய் இரு குழந்தைகளுடன் மனிதத் தாய் போன்று செயற்படுகின்றது. உண்மையிலே கொரில்லா மனிதனைக் கண்டவுடன் அவனைத் தாக்கி மகிழ்வோடு அவனைத் துண்டம் துண்டமாகக்கீறிப் பிளக்கும், சினம் கொண்ட ஒரு மிருகம் என்பதற்கான அறிகுறி எதுவுமில்லை.
படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து மைக்னே மலை கரு நீல வானத்திற்கு எதிராக நின்றதைக் காணலாம். உயர்ந்த செங்குத்தான பாறைகள் மென்மையான பச்சைநிற கபில நிறச் செடி கொடிகளால் மூடப்பட்டிருந்தன. அவற்றிற்கு அப்பால் வியக்கத்தக்க வண்ணக் காட்சிகள் இடம் பெற அவற்றிடையே பளபளக்கும் ஏரிகளுடனும் அடர்ந்த வளங்களுடனும் பார்க்க முடியாத தூரத்திற்கு மலைகள் எழுந்து நின்றன.
ஆபிரிக்க மண்டபத்தின் மிருகத் தொகுதிக்கேற்ற மிகு நிறைவான காட்சி இதுவே என அக்லி தீர்மானித்தான். ஒவிய னெருவன் இதனை வரைவதற்காக நியூயோக்கிலிருந்து நெடும் பயணஞ் செய்ய வேண்டும். ஆயினும் அப்பயணம் அதன் சிர மத்திற்கும் செலவிற்கும், தகுதியானதாகவே இருக்கும். அக்லி யின் உள்ளம் இயற்கையன்னையின் அழகில், ஈடு கொள்வதாகத் தோன்றியது. அதுதான் தனது இறுதி ஒய்வு பெறும் இடமாக இருக்கு மென்று அவன் அப்போது அறிந்திருப்பானபின் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான்.
89

Page 52
கொரில்லாக்களைப் பற்றிய விடயங்கள் போதுமான அள வில் விளக்கப்படவில்லை என்று அக்லி உறுதியாக உணர்ந்தான். அவன் மைக்னே மலையை விட்டகலும்போது அவனுடைய மன தில் ஒரு புதிய எண்ணக் கருத்து உதயமாயிற்று, அதற்குச் சற்று முன்னர் அவனும் ஏனைய உண்மையான வேட்டைக்காரர்களும், தனியொரு மனிதன் ஒருவன் மிருகங்களைக் கொல்ல வேண்டும் என்ற மகிழ்ச்சிக்காக 18 கொரில்லாக்களைக் கொண்டிருந்தான் எனக் கேள்விப்பட்டு மிகவும் கோபமுற்றிருந்தனர். மற்றும் ஆட்கள் இவ்வாறு கொலை செய்யின் விரைவில் இம்மிருகங்கள் முற்ருக அழிந்து போய்விடும். கொரில்லாக்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய ஓரிடத்தை பெல்ஜிய அரசாங்கம் அமைக்க வேண் டும் என்று அக்லி நினைத்தான். அவ்வாரு ன இடம் மைக்னுேமலை, கரிசிம்மலை, விசோக் மலை ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக் கலாம். இம்மலைகள் முப்பக்க வடிவில் நான்கு மைல் தூர இடை வெளியில் அமைந்துள்ளன. அங்கு ஏறத்தாழ நூறு மிருகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் அவ்விடத்தை விட்டு அகல் வ தில்லை. இக் கொரில்லாக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டால், மனிதருக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பதனை அவை சீக்கிரம் உணர்ந்து கொள்ளும். அவற்றின் நிஜவாழ்க்கையை ஆராய்ந்து கொள்ள ஏதுவாகுவதுடன் அறிவியல் ஆய்வுக்கு அது பெரும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடும்.
அக்லியின் எண்ணக் கருத்து பெல்ஜிய மன்னனன அல் பேட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன் மிருகங்களையும் நாட் டின் வளங்களையும் பாதுகாப்பதில் உறுதியாக நம்பினன். அதன் பயணுகத்தான் இறப்பதற்கு ஒராண்டுக்கு முன் தனது கருத்து செயலுருப் பெறுவதை அக்லி கண்டான். அவனுற் குறிப்பிடப் பட்ட இடம் அல்பேட் தேசிய பூங்கா எனும் பெயரில் உருப் பெற்றது. கொரில்லாக்கள் அப்பூங்காவிலே பாதுகாப்புடன் வாழும்.
அக்லி நியூயோக்கிற்குத் திரும்பி வந்தவுடன் கொரில்லாக் களின் உருவங்களைத் தயாரிக்கும் வேலையைத் தொடங்கினன். அஃது ஒர் அன்புப் பணியாக இருந்தது. முதல் தடவையாக அப்பெரிய மிருகங்கள், அவற்றின் வாழ்க்கையைப் பற்றி மக்கள் எண்ணியிருந்த வழக்கமற்ற வழிமுறையிலன்றி தம் சொந்த இல்லச் சூழல்களில் வாழும் தன்மையில் காண்பிக்கப்படும். பெரிய ஆண் கொரில்லாவை நேரே நிமிர்ந்து நிற்கச் செய்து அதன் முகத்தில் மூர்க்கக் கோபத்துடன் அது காண்பிக்கப்படுமாயின்,
90

அக்காட்சி அச்சந்தரும் மிருகங்களை விரும்புகின்ற மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது அக்லிக்குத் தெரியும். ஆனல் ஆபிரிக்க மண்டபத்தில், மிருகங்கள் எப்படியாக இருக்கும் என்று மக்கள் நினைப்பதைப் போன்றல்லாது, அவை, நிஜ வாழ்க்கையில் இருக் கின்ற முறையே எடுத்துக் காட்டப்படும்.
அக்லியின் கொரில்லாத் தொகுதி வியக்கத்தக்க அழகான ஓரிடத்தில் அமைதியான ஒரு குடும்பக் காட்சியாகத் தோற்ற மளிக்கும். அக்லி தெரிவு செய்த இடத்தைப் போன்று அச்சொட் டாக அஃது அமைந்திருக்கும். ஒவியன் அங்கு சென்று படம் வரைவான். அத்தொகுதி முற்றுப் பெறுவதை அக்லி உயிருடன் காணவில்லை. ஆனல் இன்று அது அக்லி ஆபிரிக்க மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.
அடுத்து வந்த ஆண்டுகள் அக்லியின் வாழ்க்கையில் ஆழ்ந்த துயரமும் பேரளவான மகிழ்ச்சியும் கலந்து அமைந்தன. ஆபிரிக்க மண்டபம் பற்றிய முயற்சி அவனது வாழ்வில் முற்ருக நிறைந்திருந்தது. தன் நண்பர்களுடன் சிறிது நேரமே செல விட்டான். மண்டபத்தையிட்ட திட்டங்களுக்கும் பணம் பெறும் நோக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும் நாட்களில் ஒவ் வொரு மணி நேரமும் செலவிடப்பட்டது. அவ்வேளையில் அவ னும் டெலியா அக்லியும் பிரிந்தனர். 20 ஆண் டுகளுக்கு மேலான அவர்களது மணவாழ்க்கை முடிவுற்றது. இப்பொழுது அக்லி முழுவீச்சுடன் தனது வேலையில் ஈடு கொண்டான், பல மாதக் கணக்கில் கடுமையாக அவன் உழைத்தான். அவ்வாறு இன் னுெருவன் உழைத்திருப்பானுயின் ஒரு கிழமையில் இறந்திருக்கக்
கூடும்.
ஆபிரிக்க மண்டபத்திற்கான திட்டங்கள்
ஆபிரிக்க மண்டபம் தனது நண்பரான தியடோர் ரூஸ் வெல்ட்டின் பெயரைக் கொண்டிருக்க வேண் டும் என்று அக்லி எப்பொழுதுமே நினைத்திருந்தான். 'என் வசமுள்ள சிறந்தவை யாவும், ரூஸ்வெல்ட் ஆபிரிக்க மண்டபத்தை அமைப்பதற்கு வழங்கப்படும். ரூஸ்வெல்ட் எனும் நாமம் எத்துணை மதிப்புக் கொண்டதோ அத்துணை மதிப்பிற்கு அம் மண்டபம் அமையும்.' என்று அவன் எழுதினன். இத்திட்டத்திற்குப் பெருமளவு பணச் செலவாகும். நியூயோக் நகரம் பத்துலட்சம் டொலருக்கு அதிகமான செலவில் அருமபொருட்சாலைக்கு மேலதிக கட்டட
91

Page 53
மொன்றை நிறுவ வேண்டும். பொருட்களைச் சேகரிப்பதற்கும் மிருகத் தொகுதிக்கான உருவங்கள் காட்சிகள் ஆகியவற்றை முற்றுவிப்பதற்கும் மேலும் பத்துலட்சம் டொலர் தேவைப் பட்டது. ஆபிரிக்க மண்டபம் பற்றி மக்களுக்கு விளக்கும் முகமாக ஐக்கிய அமெரிக்கா பூராவும் அக்லி பயணஞ் செய் தான். அது பற்றி அவன் கட்டுரைகள் எழுதினன், “மிக ஒளிர்வு பெற்ற, ஆபிரிக்காவில்’ என்னும் பெயரில் அவன் ஓர் ஆங்கில நூலையும் எழுதினன். தனக்கு உதவி அளிக்க வல்லவன் என்று கண்ட ஒவ்வொருவரிடமும் அவன் அது பற்றிக் கூறினன்.
அக்லியின் நண்பர்கள் அவனையிட்டுக் கவலை கொண் டனர். அவன் மிகக் கடினமாக உழைக்கின்ருன் என்றும், அவனுடைய திட்டங்கள் மிகப் பெரியவை என்றும் அவற்றுக்கு அதிகமான பணம் செலவாகும் என்றும் அவர்கள் கருதினர். அரும்பொருட் சாலையில் ஏற்கனவே காணப்படும் ஒரு மண்டபத்தைப் பயன் படுத்தினுலன்றி ஆபிரிக்க மண்டபம் அமைவது சாத்திய மாகாது என்று அவர்கள் உணர்ந்தனர்.
நான் அக்லியிடம் அது பற்றிப் பேசுவதற்கு ஒத்துக் கொண்; டேன். ஆனல் அவன் உணர்ச்சி எவ்வாறிருந்தது என்பது எனக்குத் தெரியும். ஐயத்துக்கிடமின்றி 'இல்லை’ என்று அவன் சொன் ஞன். அவன் ஆபிரிக்க மண்டபம் பற்றிய தனது கருத்துக்களைக் காட்டுவதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தான் வகுத்து வைத்திருந்த அழகிய சிறிய படிவத் திட்டத்தைக் காட்டினன். சகலதும் சிறிய அளவில் அப்படத்தில் இடம்பெற்றிருந்தன. மண்டபத்தின் மத்தியில் பெரிய யானைகள் இடம் பெற்றிருந் தது தொட்டு ஏனைய 40 தொகுதிகளும், தனிப்பட்ட ஒவியம் தீட்டப் பெற்ற காட்சிகள், மரங்கள், மிருகங்கள் யாவும் அங்கு காணப்பட்டன. **ருேய்! இம் மண்டபம் முற்றுவிக்கப்படுமு ன் நான் இறப்பினும் முழுத்திட்டமும் இங்கு உண்டு, விசேடமாகக் கட்டப்படும் ஒரு மண்டபம் மாத்திரம் போதுமானதாக இருக் கும் என்பதனை மக்கள் ஈற்றில் தெரிந்து கொள்வர்.” இதுவரை தனது வேலையைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்ததாகவும் தான் ஆய்ந்தவற்றை யெல்லாம் நிறைவான ஒரு அரும்பொருட்சாலை அமைப்பதிற் பயன்படுத்துவதற்கு இப்பொழுது தயாராக இருந்ததாகவும் அக்லி என்னிடம் கூறினன்.
பின்னர் பல நிகழ்ச்சிகள் இடம் கொண்டன. 1924 இல் அக்லி மீண்டும் திருமணம் செய்தான். அடுத்த ஆண்டில் ஆபிரிக்க
92

மண்டபத்தின் எதிர்காலம் ஒளிர் மயமானது புலனுயிற்று. ருேச்
செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஈஸ்ட்மன் என்பவன் தனது
71 வயதினைப் பொருட்படுத்தாது வேட்டையாடுவதற்கு ஆபிரிக்க நெடும் பயணமொன்றை மேற்கொள்ள விரும்பினன்.
திரு ஈஸ்ட்மன் உடன் டானியல் ஈ பொமரு ய் என்னும் மற்
ருெரு நண்பரும் சேர்ந்து 1926 இல் அக்லி - ஈஸ்ட்மன் - பொம ரு ய் நெடும் பயணத்திற்காகப் போதிய பணம் வழங்கினர்.
அக்லி பெரும் மகிழ்ச்சியுற்ருன், அவனது கனவு நனவு
ஆகிக் கொண்டிருந்தது.
அப்பயணம் ஆரம்பமாவதற்கு முன்னைய சில கிழமை கள் தோறும் நான் அக்லியைப் பல தடவைகள் சந்தித்தேன். காலை ஏழு மணி தொட்டு மாலை மிகு நேரம் வரை அவன் வேலை செய்தான். ஆயினும், முன் ஒரு போதும் அவ்வாரு ன மகிழ்ச் சியை அவன் கொண்டிருந்ததில்லை. அவன் கடற்பயணஞ் செய் வதற்கு முன் ஒரு மாலை தன்னுடைய இளம் பிராயத்தைப் பற்றியும், தன் எதிர்ப்புக்களையும் தனது வாழ்க்கையில் ஆபிரிக்க மண் டபம் பெற்றிருந்த முக்கியத்துவம் பற்றியும் என்னிடம் கூறினன். நாங்கள் விடைபெற்றுக் கொண் டபோது அவ னுடைய அன்புமிகுந்த கைகுலுக்கலும் அவன் கண்களில் நிலவிய நட்புறவுப் பார்வையும் இன்றும் என் நினைவிலிருக்கின்றன. சொற்பொழிவுகள் ஆற்றுவதற்காக மறுநாள் நான் பயண மானேன். அவனை நான் பின்னர்க் காணவில்லை.
கடைசியான நெடும் பயணம்
அக்லியும் அவன் மனைவியும் 1926 ஆம் ஆண்டின் தொடக் கத்தில் கப்பலிற் பயணமாயினர்; அவர்கள் முதல் இங்கிலாந்து சென்றனர். பின் பெல்ஜியம் போயினர். அங்கே அல்பேட் மன் னன், அல்பேட் தேசிய பூங்கா பற்றிய அவனுடைய கருத்துக் காக நன்றி வழங்கினர். ஈற்றில் அக்லியும் அவன் மனைவியும் ஆபிரிக்கா அடைந்தனர். அங்கே ஈஸ்ட்மன், பொமரு ய் போலி மிருகங்களைத் தயாரிக்கும் இருவர், ஒவியர் இருவர் ஆகியோர் அக்லி தம்பதிகளுடன் சேர்ந்து கொண்டனர்.
எட்டு மாதங்களாக அக்லி முழுத் தொகுதிக்கான மிருகங் களையும் பொருட்களையும் சேகரித்தான். அது மிகக் கடினமான வேலையாக இருந்தது. மிதமிஞ்சிய வேலைப் பளுவின் காரணமாக அவன் நோய்வாய்ப்பட்டு ஒய்வெடுப்பதற்காக நைரோபி நக
93

Page 54
ருக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கே மூன்று கிழமைகள் தங்கியிருந்தாளுயினும் தனது வேலைக்குத் திரும்புவதற்கே மனம் விரும்பினன். பூரண பல மெய்துமு ன் கொரில்லாக்கள் நிறைற் திருந்த சிவூப்பிரதேசத்திற்குச் சென்ருன். அப்பகுதியில் ஒவியர் களுளொருவன் காட்சிகள் வரைவதில் ஈடுபட்டிருந்தான்.
ஒக்டோபர் மாதத்தில் நெடும்பயணம் நிறைவுறும் என்று திட்டமிடப்பட்டது. நிறைவு பெற்றிருந்த பெருமளவு வேலைகள் அப்பயணத்திற்கு ஏற்கனவே பெரும் வெற்றியைக் கொடுத்திருந்த தன. ஈஸ்ட்மனும் பொமரு யும் தாய் நாடு திரும்பத் தயாராயி னர். ஆனல் அக்லி புறப்பட விரும்பவில்லை. பூர்த்தியாய வேலைகள் எந்த மட்டிலிருந்தனவாயினும் மேலும் பூர்த்தியாக்கு தற்கு அதிக வேலை மிஞ்சி இருந்தது. அவ்வேலையைத் தவிர்த்து விடுவதற்கு அவன் சிறிதளவும் விரும்பவில்லை. ஒரு வேளை அவன் தனக்கு அதிக காலம் இல்லை என்று உணர்ந்திருக்கலாம்.
கொங்கோ நோக்கி ஒரு நெடும் பயணம் மேற்கொள்ள அக்லி திட்டம் கொண்டான். "அவ்வாரு ன நெடும் பயணத்தை மேற்கொள்வதற்கு உன்னிடம் போதிய பலம் உண்டா' என்று நண்பஞெருவன் அவனைக் கேட்டதற்கு அந் நெடும் பயணம் அவ்வினவிற்கு விடையளிக்கும் என்று அக்லி பதிலிறுத்தான். 'உலகத்தின் மிக அழகான இடத்தில்’ இறப்பதற்கு அவன் விரும்பினன் என்றே நான் நினைக்கிறேன்.
அப்பயணம் மிகக் கடினமாக இருந்தது. அங்கே பல குன்று கள் இருந்தன. வெப்பம் அதிகம் காணப்பட்டது. அக்லி நோயுற்று நடக்க முடியாத அளவிற்கு வலுவற்றிருந்தான். பலத்த மழைப் புயலொன்று தொடங்கிய போது ஏறக்குறைய நான்கு மைல் தூரத்திற்கு அவன் தூக்கிச் செல்லப்பட்டான். வழியில் தங்கிக் கூடாரம் நிறுவப்பட்டது. மறுநாள் உடல் நலம் சிறிது தேறி குற்சுறுவிற்கு நடந்து செல்ல அவனுக்கு முடிந்தது. உலகத்தில் எந்த நாட்டுப் பக்கத்தைக் காட்டிலும் மிகக் கூடுத லாக நேசித்த நாட்டுப்பக்கத்தின் அணித்தாக அக்லி வந்து கொண்டிருந்தான்.
மிகவும் நோயுற்றிருந்தாஞயினும் மைக்கெனே மலைக்கும் சரிசிம்மி மலைக்கும் இடையே கிடந்த, தான் முன் கொரில்லாக் களை கொன்ற பிரதேசத்திற்கு ஏறிச் சென்ருன். பாதி வழி தூரம் அவனைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அது 11,000 அடி உயரமாகவும் அதி குளிரான இடமாகவும் இருந்தது. அவர்
94

களால் மூட்டக்கூடியதாக இருந்த சிறிய நெருப்பு அதிகம் துணை செய்யவில்லை. அவ்விடத்தின் உயரம் அவனுடைய இருதயத் திற்குப் பாதகமாயிருந்தது. கடும் பனிப்புயலொன்று அக்லியின் நோயை அதிகரிக்கச் செய்தது. தான் மிகவும் விரும்பிய இடத்தை அடைந்த மூன்ரும் நாள் அவன் மரணம் அடைந்தான்.
காள் அக்லியின் இறுதித் தங்குமிடம், அழகிய மைக்னே மலையின் பக்கத்தில் அமைந்துள்ளது. அவ் அறையில் அவனு டைய பெயரும் இறந்த நாளான 1926 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியும் பொறிக்கப்பட்டுள்ளன. அக்லியினுடைய வாழ்க் கைக் கனவாகிய ‘ஆபிரிக்க மண்டபம்’ அவருடைய மனைவி யாலும் பல நண்பர்களாலும் முற்றுவிக்கப்பட்டது. அக்லி அதற் குத் தியடோர் ரூஸ்வெல்டின் நாமத்தைச் சூட்ட விரும்பினு னெனினும், அஃது 'அக்லி ஆபிரிக்க மண்டபம்’ எனும் பெயரில் 1936 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆந் திகதி திறக்கப் பட்டது. ஆபிரிக்காவின் இயற்கை சார்ந்த அமைதியும், அழகும் நிறைந்திருந்த அழகான மண்டபத்தில் அக்லிக்கு மதிப்பு வழங்கு முகமாக 1300 பேருக்கும் அதிகமானேர் கூடினர்.
மண்டபத்தின் சுவர்கள் ஆழ்ந்த, பச்சைப் பளபளப்பான கற்களால் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சிக்கூட்டிற்கும் மேல் ஆபிரிக்கக் காட்சிகளை வழங்கும் வெள்ளி உருவங்கள் நிற்கின்றன. அடர்ந்த வனத்தின் நிழலைப் போன்று காட்சிதரும் கருமை நிறைந்த மண்டபத்தின் மத்தியில், எட்டுப் பெரிய யானைகள் நிற்கின்றன. ஒளியூட்டப் பெற்றுள்ள தொகுதிகளுக் குள்ளே பார்க்கும்போது ஆபிரிக்காவையே காணலாம். தண்ணிரற்ற பாலைவனங்கள், மிருகங்கள் நிறைந்த சமதளங் கள், பெரும் மலைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியன அங்கு இடம் கொண் டுள்ளன. வனவிலங்குகள் சூரிய வெளிச்சத்திலும் நிழலி லும் காணப்படுகின்றன. அங்குள்ள மிருகங்கள் மனித எதிரிகளின் தொல்லைகட்கு அப்பால் மரத்தின் கீழ் ஒய்வெடுத்துக் கொண்டு அல்லது மலர்கள் நிறைந்துள்ள காட்டின் அரைகுறை வெளிச் சத்தில் உணவூட்டிக் கொண்டு நிற்கின்றன.
ஆண் டு தோறும் இரண்டு மில்லியன் மக்கள் அம்மண்டபத் தின் காட்சிகளைக் கண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தம்மை அறியாமலே காள் அக்லி தனது உயிரைக் கொடுத்து நன வாக்கிய கனவின் பெருமையை மேன்மைப்படுத்துகின்றனர்.
95

Page 55

மூன்றம் பாகம்
தொலையிடங்கட்குச் செல்வழிகள்

Page 56

பகுதி 3
ஒருவனுடைய வாழ்க்கையை நினைவு கூருவதும் அதுபற்றிச் சிந்
தனை செய்வதும், வரலாற்றுத் தொடர்கதைகளைப் போன்று, பல விடயங்களை ஒருவன் அறிந்து கொளளச் செய்கின்றன. தவருண முயற்சிகள், வெற்றிகள், முக்கியமான திருப்பங்கள் யாவும் அதனல் தெளிவாகினறன. எனது வாழ்க்கையின் இச் சிறிய வரலாறு, எனது சீவிய கால வேலைக்கு மிக முக்கியத்துவ மாய் இருந்த ஓரிடத்திலிருந்து, ஒரு நிகழ்ச்சியோடு ஆரம்ப மாகின்றது.
1922 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் மத்திய ஆசிய நெடும் பயணம் செய்தோர் எனது தலைமையில் புறமொங் கோலியாவின் மையத்தில் முகாமிட்டனர். கோடைக்காலம் முழு வதும், ஆய்வுப் பயணத்தில் முதன் முதலாக, மோட்டார் வாக னங்களைப் பயனபடுத்தி, கோபிப்பாலைவனத்தில் மிகத் தூரம் நாம் சென்றிருந்தோம். ஆனல் இப்பொழுது பணிக்காலத்தினை எந்த நாளும் எதிர்பார்க்கும் நிலைமை இடம் பெற்றது. ஆக்டிக்கி லிருந்து பறவைகள் காற்றும் , குளிரும் காரணமாக விருப்ப மின்றியே வெளியேறி, சாம்பல் நிற வானத்தில் கருநிறக் கோடு களாக உயரப் பறந்து கொண் டிருந்தன. திடீரெனப் பாலைவனம் மென் பணித் தடங்களாலே பரவல் கொள்ளும். நாடுகாண் ஆய்வுப்பயணி ஒவ்வொருவனும் இவ்வறிகுறிகளைக் கவனிக்க வேண்டியவனவான். இன்னும் ஆராய்ந்து கண்டு கொள்ளப் படாத ஒரு பிரதேசத்தினூடாக நூற்றுக் கணக்கான மைல் களுக்கப்பால் நல்ல தண்ணிர்க் கிணறு இருந்தது. அங்கே, ஒட்டகங்களை இட்டு வரும் குழுவொன்றினை நாம் சந்திக்க வேண் டும். மொங்கோலிய கடும் பனிப்புயலில் நாம் அகப்படுவோ மாயின் அக்கிணற்றை நாம் ஒரு போதும் அடைய முடியாது.
99

Page 57
எங்களுக்கும் கிணற்றுக்குமிடையே 6000 அடி உயரமான மலைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று நாம் கேள்விப் பட்டிருந்தோம். மோட்டார் கார்கள் மலைமீது ஏறுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனல் அங்கு போவதற்கு வேறு வழியில்லை. கிணற்றை நோக்கி நேராக நாம் முன்னேற வேண் டியதாயிற்று.
மூன்று நாட்களாக ஒவ்வொரு மைல் கணிப்பில் நாம் கிழக்கு நோக்கி மிகக் கஷ்டத்துடன் முன்னேறினுேம். பெரும் ப7 லும் பாறைகளும் மணலும் துளைகளும் நிறைந்த நிலத்தில் கார்கள் போவது மிகக் கடினமாக இருந்தது. நீர் இருக்கும் அறிகுறியே காணப்படவில்லை. மலைகளைப் பற்றியே நாம் நினைத் தோம்; ஆனல் மலையெதுவும் கண்ணிற் படவில்லை. இரண்டர் வது நாளன்று நட்சத்திரங்களைக் கொண்டு எமது நிலையத்தைக் கணித்தோம். ஏற்கனவே நாம் மலைகளைக் கடந்திருந்தோம். ஆனல் மலைகள் எதுவும் இருக்கவில்லை.
எமது நீர் நிலைமையொட்டி எனக்கு அச்சம் இருந்தது. கொள்கலங்கள் யாவும் வெற்ருக இருந்தன. கடைசி நீர்த்துளி களைக் கார்களுக்குப் பயன்படுத்த வேண் டியிருந்தது. சகலருக் கும் நீர் தேவைப்பட்டது. பின்னர் மூன்றம் நாளன்று இருள் மூடுவதற்குச் சற்றுமுன் பாலைவனத்தில் அதிதூரத்தில் ஒரு மொங்கோலியக் கூடாரத்தைக் கண்டோம். மக்கள் இருக்கும் இடத்தில் நீரும் இருக்க வேண்டும் என்பது விளங்கும்.
நெடும் பயணப் புகைப்படங்களை எடுக்கும் ஜே. பி. ஷக்கில் போர்ட் என்பவன் மற்றவர்களுக்கு ஒரு மைல் தூரத்தில் முன் சென்று கொண்டிருந்த வழிகாட்டும் காரில் என்னுடன் இருந் தான். அங்கு நின்று, மற்றவர்கள் வந்தவுடன் அவர்களை நிறுத்தி வைக்குமாறும் நான் கூடாரத்திற்குச் சென்று, நீர் கிடைக்குமr என்று விசாரித்து வருவதாகவும், அவனிடம் கூறினேன். அவன் காரை விட்டிறங்கினன். நான் மொங்கோலிய கூடாரத்திற்குக் காரில் சென்றேன்.
கூடாரத்தில் ஒரு மனிதனும் அவன் மனைவியும் மட்டுமே இருந்தனர். அவர்கள் எனது காரைக் கண்டு மிகவும் அஞ்சினர். அலுர்கள் அவ்வாருனதொன்றைக் கனவிலும் கண் டிரார்கள். அப்பெண் ஒரு மூலையில் முழந்தாளிட்டு அழுதாள். என்னைக் கண்டவுட ன் நோயுற்ருள். மனிதன் ஓடிப் போவதற்கு முயன்
1 00

ருன். முகம் பார்க்கும் கண் ணுடி யொன்றை நான் அவளிடம் கொடுத்தேன். அதிலே அவள் முதன் முதலாகத் தனது முகத் தைப் பார்த்தாள். கண்ணுடியில் திருப்தியடைந்ததாகத் தோன் றியது. மிகத் தொலைவிலில்லாத ஒரு கிணற்றின் விபரத்தை எனக்கு அவள் கூறினள்.
நான் கார்கள் நின்ற இடத்திற்குத் திரும்பி வந்தபோது குழுவினர் கலாநிதி வோல்டர் கிறேஞ்சர் என்பவரைச் சூழ்ந் திருந்தனர். அவர் தாவரங்களிலிருந்தும் மிருகங்களின் உயிர்ச் சுவடுகளிலிருந்தும் புவிச்சரிதவியலைக் கற்றிருந்த அறிஞர் எட்டு அங்குல நீளமான வெளிளைநிற மண், டையோடு ஒன்றினைத் தனது கையில் அவர் வைத்திருந்தார்.
**இதனை ஒருக்கால் பார்வையிடு' என்று அவர் கூறினர். நான் அதனைக் கவனமாகப் பார்த்தேன். அஃது ஊர்வன இனத் தைச் சேர்ந்த ஒரு விலங்கு, டைனசோர் என்று வழங்கப்பட்ட தாகும். அதைப் போன்ற ஒன்றை நான் என்றுமே கண்டதில்லை. கிறேஞ்சர், புவிச்சரிதவியலை விசேடமாகக் கற்றிருந்த பெர்க்கி ஆகியோரும் இவ்வாருனதொன்றை முனனர் கண் டதில்லை.
**இது எங்கு கிடைத்தது என்று நான் வினவினேன்.” ஷக்கில் போர்ட் வடக்குப் பக்கத்திலிருந்து கண் டெடுத்தான் என்று கூறி கிறேஞ்சர் ஒரு சிவத்த செங்குத்துப் பாறையின் விளிம்பின் பக்கமாகச் சுட்டிக் காட்டினன். நாங்கள் நின்ற இடத்திலிருந்து அதனை ஒரளவு பார்க்க முடிந்தது.
எனக்காகக் குழுவினரைக் கார்களில் தாமதித்து இருக்கு மாறு ஷக்கில் போர்ட் கூறிப் பின்னர் ஆராய்ச்சி செய்வதற் காகப் போயிருந்தான். அவன் பாலைவனத்தில் ஒரு பரந்த தாழ் வான இடத்தின் விளிம்புவரையிற் சென்று, அதிலிருந்து சிறிது தூரம் கீழே இறங்கி, அது எப்படியிருந்தது என்பதனைப் பார்க்க முயன்ருன். அவனுக்கு முன்னுல் ஒரு பாறையின் மீது அந்த வெள்ளைநிற மண் டையோடு காணப்பட்டது. அவன் அதனை எடுத்துக் கொண் டு கார்கள் இருந்த இடத்திற்கு விரைந்து வந்தான். மேற்கொண்டு ஆராய்வதற்கு மண்டையோடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எமக்குத் தெரியும். தாழ்ந்த இடத்தின் தளத்திலே கிணறு இருந்ததாக மொங்கோலியன் கூறியிருந்தான். இரவு நாங்கள் அங்கு கூடாரமடித்து தண் ணிரை நிரப்பிக் கொண்டு இருளும் வரை உயிர்ச்சுவடுகளைத் தேடலாம் என்று திட்டமிட்டோம்.
101

Page 58
எரிகொழுந்துக் குன்றுகள்
அஃது ஒரு புதுமையான இடமாகத் தோன்றியது. மிகப் பெரிதான வட்டவடிவமான இளஞ்சிவப்பான பள்ளத் தாக்குள்ள அவ்விடம் காற்று, மழை, பனி ஆகியவற்றல் சம நிலத்திலிருந்து வெட்டப்பட்டிருப்பதாகக் காணப்பட்டது. நேரான பக்க வாடி சளைக் கொண்டு நெடித்துயர்ந்த குன்றுகள், கல்லினல் செதுக்கப்பட்ட முற்கால மிருகங்களைப் போன்று தனித்து நின்றன. குன்றுகளில் ஆழமான வாயில்கள் வெட்டப் பட்டிருந்தன. இருளத் தொடங்கியதும் அவ்விடத்தில் நீல, சிவப்பு நிறங்களைக் கொண்டமைந்த அபூர்வ வியத்தகு அழகு நிலவியது. சூரியன் மேற்கே மறைந்ததும், பாறைகள் தீப்பிடித் தவை போன்று தோற்றமளித்தன. நாம் அவ்விடத்தை 'எரி கொழுந்துக் குன்றுகள்” எனப் பெயரிட்டோம்.
அங்கு ஒரு கூடாரத்தை நாம் அமைத்தோம். பின்னர் அனைவரும் உயிர்ச்சுவடுகளைத் தேடி ஒவ்வொரு திசையிலும் சென்ருேம். சிறிய வெள்ளை எலும்புத் துண்டங்கள் எங்கணும் காணப்பட்டன. குழுவினருட் பலர் பெரிய எலும்புக் கூடுகளின் பாகங்களைப் பாறைமீது கண்டனர். ஆனல் இரவுற்றமையால் அவற்றினை அகற்றுவதற்கு நேரம் போதவில்லை.
மறுகாலை அவ்வாரு ன ஒரு வியத்தகு இடத்தை விட்டுப் பிரிவது கடினமாகவிருந்தது. மனிதனுல் கண்டுபிடிக்கப்பட்ட, இயற்கை வரலாறு சார்முக்கிய இடங்களுள் அதுவும் ஒன்று என்பதனை நாம் உணர்ந்திருப்போமாயின் அவ்விடத்தை விட்டுச் செல்வது இன்னும் கடினமாக இருந்திருக்கும். ஆனல் பணித் தன்மை இருப்பதை வளி உணர்த்திற்று: மேலும் சில மணி நேரம் நாம் தாமதித்திருப்போமாயின் எங்களால் அவ்விட மிருந்து வெளியேறியிருந்திருக்க முடியாது. சிறிது நேரங் கழித்து ஆக்டிக் வேகத்துடன் பணிப்புயலொன்று வீசியது. ஆனல் அதற் குள் நன்னீர்க் கிணற்றில் இருந்த குழுவினரை நாம் அடைந்து பாதுகாப்புற்ருேம்.
பீக்கிங்கிலுள்ள நெடும்பயண அலுவலகத்தை நாம் அடை ந்தவுடன் ஷக்கில் போர்ட் கண் டெடுத்த மண்டையோட்டை நியூயோக்கிற்கு அனுப்பினேம். சில கிழமைகளில் அமெரிக்க இயற்கை வரலாற்று அரும் பொருட் சாலையின் தலைவரான ஹென்றி பெயர் சைல்ட் ஒஸ்போன் எங்களுடன் தொடர்பு கொண்டார். அவர் மிகுந்த ஆர்வமும் திருப்தியும் காட்டினர்.
102

**டைனசோர்களுள் முதலானதொன்றை நீங்கள் கண் டீர்கள்; திரும்பவும் அவ்விடம் சென்று மேலும் பலவற்றைக் கண்டு எடுங்கள்’ என்று அவர் வேண்டினர்.
நாம் கண்டுபிடித்த டைனசோர் வகை 70 அல்லது 80 மில்லியன் ஆண்டுகட்கு முன் வசித்தது. அவ்வகையின் எலும்பு கள் அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனல் அவை எங்கிருந்து வந்தன என்பது எவருக்கும் தெரியாது. நாம் கண் டெடுத்த சிறிய மண் டையோடு அந்த ஐயப்பாட்டை நீக்கியது.
அடுத்த ஆண்டில் "எரி கொழுந்துக் குன்றுகளுக்கு’ நாம் திரும்பிச் சென்ருேம். திடீரென கோடைக் காலம் வந்தது, பகற் பொழுது மிகுந்த வெப்பமாக இருந்தது. ஓராண் டு காலமாக அங்கு மழை பெய்யவில்லை. வறண்டு போயிருந்த கபில நிற நிலத்தில் கார்கள் பயணம் செய்தன. வெப்பத்தில் அபூர்வமான நகரும் வடிவங்கள் எங்கள் க முன்னல் தோன்றின. நீரே இல்லை என நாம் அறிந்த இடங்களில் அஃது இருப்பதாகத் தோன்றியது. மிருகங்கள் ஆகாயத்தில் நடமாடுவதாகவும், பற க்கும் பறவைகள் தரையில் ஒடித்திரிவதாகவும் எங்களுக்குத் தோன்றின. உண் மையற்ற உலக அனுபவங்கள் இடம் கொண் டன. கார்களில் பல மைல்கள் தூரம் சென்ருேம். ஒட்டகத்தின் வெள்ளைநிற மண் டையோடுகளும், ஏனைய மிருகங்களின் எலும்பு களும் நாம் சென்ற பாதைகளில் காணப்பட்டன. அங்கு மனிதர் வாழ்ந்தனர் என்பதற்கு அத்தா ட்சியான அறிகுறிகளுள் ஒன் றென ஒரு பெண்ணின் எலும்புக்கூடு காணப்பட்டது. அவள் அந்தப் பாலைவனத்திலே தனியொருவளாக விடப்பட்டு இறந் திருந்தாள். நாங்கள் " அணிகலப் பள்ளத்தாக்கினை” அடைந்த போது வெப்பம் மிகுந்த சிவப்பு நிறச் சூரியன் மறைவதற்கு மேலும் ஒரு மணி நரம் இருந்தது. ஆழத்தில் நல்ல நீரைக் கொண் டிருந்த மிகப் பழையதொரு கிணற்றிலிருந்து 30 அடி தூரத்தில் ஒரு கூடாரத்தை நாம் அமைத்தோம்.
பாலைவனத்திற் குரலொலிகள்
மொங்கோலிய இளைஞனுெருவன் எமக்கு வழிகாட்டியாக இருந்தான். அவனை நாம் சந்தித்த சில காலத்திற்கு முன்னர் சட்டத்தை மீறிய ஒருவன் அவனின் முழுக் குடும்பத்தையும் கொன்றிருந்தான். அன்றிரவு அவன் படுத்துக்கொண்டு நட் சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென அவன்
I 03

Page 59
அபூர்வமான குரல்களைச் செவியுற்ருன். அவை மனிதருடை யவையுமல்ல, மிருகங்களுடையவையுமல்ல, அவை உண்மை யான குரலொலிகளாக அவனுக்குத் தெரியவில்லை. அவை எழுந்து, மறைந்து பின்னர் வளியை மீளவும் நிரப்பின. மிகவும் அச்சமடைந்து உறங்கும் கிறேஞ்சரை அழைப்பதற்கு அவன் விரைந்தான், கிறேஞ்சர் குதித்தெழுந்து துவக்கைக் கையில் கொண்டு வெளியே வந்தான். பிரகாசமான சந்திரவொளியில் அங்கே பகற்பொழுதைப் போன்ற வெளிச்சம் நிலவியது. அங் கிருந்த ஒவ்வொன்றையும், ஒவ்வொரு பாறையையும் கல்லையும் தன் கையிலிருந்த வரிகளையுங்கூட அவனுல் தெளிவாகப் பார்க்க முடிந்தது. குளிர்ந்த காற்றென்று பாலைவனத்தூடாக வீசியது.
ஐந்து நிமிடங்களாகக் கிறேஞ்சர் சமநிலத்தினூடாகப் பார்த்தான். பின்னர் மிகத் தொலைவிலிருந்து புவியிற் கேட்கரி யத்தக்க தாழ்ந்த மெல்லிய ஒலிகள் எழுவதும் வீழ்வதுமாக இருந்தன. 'இறந்தோரின் ஆவிகள் தம்மிடம் பேசிக் கொள்வது போன்ற குரலொலிகளாக அவை காணப்படுகின்றன’’ என்று கிறேஞ்சர் நினைத்தான்.
*ருே ய் எழுந்திரு பாலைவனத்தில் ஏதோ சப்தம் கேட் கிறது” என்று கூறி என்னை அழைத்தான்.
**அஃது என்ன?
'எனக்கு விளங்கவில்லை. குரலொலிகள் போன்ற சப்தங் கள்'. ஒரு கணத்தில் நான் வெளியே வந்தேன். சிறிது நேரம் நாம் நின்று கொண்டு அதனைக் கவனித்தோம். முற்ருன அமைதி அங்கு நிலவியது. பின்னர் மிருதுவான, அதிசயமான சப்தங்கள் மீண்டும் ஒலித்தன. இறந்தவருடைய ஆத்மாவின் குரலைப் போன்று ஒரு முனகலுடன் இக்குரலொலிகள் முடிவுற்றன.
அஃது என்னவாகும் என்று நான் கேட்டேன். 'அஃது நிசமானதன்று. ஆனல் நிச்சயமாக ஏதோ சப்தத்தைக் கேட் டேன்'.
வழிகாட்டியின் முகம் பீதியால் நிலாவொளியில் சாம்பல் நிறமாகக் காணப்பட்டது. ‘எனது குடும்பத்தினரின் ஆவிகள் அவர்கள் வசித்த இடத்திற்குத் திரும்பி வந்துள்ளன’’ என்று தாழ்ந்த குரலில் அவன் சொன்னன்.
I 04

திடீரென நான் கிறேஞ்சரின் தோளைப் பற்றி இழுத்து "பார்! அங்கே பார்! நீ அதனைக் கண்ணுற்ருயா ஆகாயத்தில் அது போகிறதை'?
ஒரு வடிவம் - மேகத்தைப் போன்று மெல்லியதானது - கிணற்றின் கரிய வாயிலில் உருவாகி, வானத்தை நோக்கிக் கிளம்பியது. அது நீண்டு, நீண்டு, வளைந்து வளைந்து மேல் நோக்கிச் செனறது. அவ்வடிவத்திலிருந்து இரு பெரும் கரங் கள் உருவாகி, விரல்களைப்போன்று மாற்றம் கொண்டு இருட்டி னுள் மறைந்தன. பின்னர் ஏனைய வடிவங்கள் நீண்ட வரிசை யில் குழந்தைகள் ஒவ்வொன்ருகத்தம் கைகளைப் பிடித்துக் கொண்டு நடமாடுவதைப்போன்று உருவெடுத்தன. காற்று அவர்களேத் தள்ளிச் சென்றதாகத் தோன்றியது. பின்னர் அவர் கள் உயரப் பறந்து சந்திரனுடன் சேர்ந்து கொண்டனவாகத் தோன்றின.
நான் அவர்களைக் கண்டேன், அவ்வாறே கிறேஞ்சரும், வழிகாட்டியும் கண்டனர். எங்களில் எவரும் நினைத்தது போன்று அவை இருக்கவில்லை ஒரே பொருளை அது அங்கே இல்லாதிருப்பின் மூவரும் பார்த்திருக்க முடியாது! திடீரென அங்கிருந்த அமைதி பெரிய பறவை யொன்றின் கூச்சலால் கலைவுற்றது. கூச்சல் தணிந்தவுடன் அது இடம்கொண்டிருந்த அந்த இரவில் ஒரு இடைவெளி இருந்ததாகத் தோன்றியது.
கிறேஞ்சரும் நானும் வளியில் அந்தப் பொருள் தொங்கிக் கொண்டிருந்த இடத்தைக் கவனித்தோம். ஆனல் நாங்கள் கிணற்றின் கரிய வாயிலையும் பளபளப்பான மணலையும் மட்டுமே காண ஏதுவாயிற்று. காற்று எத்துணை விரைவாக ஆரம்பித் ததோ அதே விரைவாகத் தணிந்தது. சந்திரனை மறைத்துக் கொண்டு ஒரு மேகம் சென்றது.
ஒரு மணி நேரமாக வோல்ட்டரும் நானும் உட்கார்ந்து புகைத்தோம். நாங்கள் உற்று நோக்கியும் கவனமாகக் கேட்டுக் கொண்டும் இருந்தோம். சப்தங்களோ வடிவங்களோ மீண்டும் இடம் பெறவில்லை. பாலைவனம் எங்கணும் நிசப்தம் கூடிகொண் டிருந்தது.
**பயணங்கள்’ எனும் பெரிய நூலில், முன்னுள் இத்தாலிய பயணியான மார்க்கோ போலோ தான் கோபியைக் கடந்து
1 ዐ 5

Page 60
சென்ற போது இதே விடயம் பற்றிக் குறிப்பிட்டான், என்று நான் சொன்னேன். “அவனது கதையின் பிரகாரம் குரலொலி கள் பயணிகளைப் பாலைவனத்திற்குப் போகுமாறு தூண் டுவித் தன. தண்ணிர் இல்லாத நிலைமையில் அவர்கள் மரித்தனர். வெண் ஹீடின் எனும் பிரசித்தி பெற்ற சுவீடன் நாட்டு நாடு காண் ஆய்வுப் பயணியும் அக் குரல்களைத் தான் கேட்டிருந்தான் என்றும், மொங்கோலியர் அக்குரல்களுக்கு அஞ்சினர் என்றும் சொன்னன். இரசிய நாடு காண் பயணிகளும் அவற்றைப் பற்றிக் கூறியுள்ளனர். உண்மையில் இக்குரல்களுக்குக் காரணம் ஒன்று இருக்க வேண்டும். ஆவிகளில் எனக்கு நம்பிக்கையில்லை."
வோல்ட்டர் முறுவலித்தான். "எனக்கும் நம்பிக்கையில்லை ஆனல் நாம் கேட்பதும் கண்டதும் உண்மையானவையே' என்று அவன் சொன்னன்.
மறுநாட் காலையில் கிறேஞ்சரும் நானும் இரவில் நடந்த வற்றைப் பற்றிப் பேசினுேம். கலாநிதி பெர்க்கி அதற்கான விளக்கத்தை வழங்கினர். 'நீங்கள் ஆவிகள் பேசுவதைக் கேட்க வில்லை. நேற்று 148 பாகையில் வெப்பம் நிலவியது. நான் தூங்கச் சென்ற வேளையில் வெப்பம் 76 பாகையாக தாழ்ந்தது. ஒருசில மணிநேரத்துள் 72 பாகையாக வீழ்ந்தது. நள்ளிரவில் வெப்பம் தணிந்திருக்க வேண்டும். நான் பாலைவனத்தில் உலாவி வந்த போது பல பாறைகளில் புதிய வெடிப்புகள் தோன்றுவதற் கான அறிகுறிகள் காணப்பட்டன. ஐயத்திற்கிடமின்றி, பகலில் இடம் கொண்ட மிகுந்த வெப்பத்தின் காரணமாகவும் இரவில் ஏற்பட்ட திடீர்க் குளிரினலும் பாறைகள் முதலில் பெரியன வாகவும், பின்னர் சிறியனவாகவும் மாறி அதுவே அப்பாறை களில் வெடிப்பு ஏற்படுவதற்குக் காரணமாயது. வெப்பமான பாலைவனத்தைக் குளிர்காற்று கடந்த போது பல பாறைகளும் கற்களும் வெடிக்கும் சப்தங்களை நீங்கள் கேட்டீர்கள், காற்று நின்ற பின் நீங்கள் அவற்றைக் கேட்கவில்லை.
நீங்கள் கண்ட வடிவங்கள் இயற்கைக் காரணங்களால் உண்டாயின. கிணற்றின் குளிர்ந்த நீர் பாலைவன வெப்பத்தினுல் சூடாக்கப்பட்டது. அதில் ஓரளவு நீர் ஈரமான காற்ருக மாறி மேலே எழுந்து, நீங்கள் கண்டது போன்ற ஆவிகளாகவும் நட மாடும் பெண்களாகவும் உருவெடுத்தது. பெரும்பாலும் நிலா வொளி உங்கள் கண்களிலும், காதுகளிலும் கூட நுழைந்தது என்று தோழமைச் சிரிப்போடு அவர் கூறினர். இவ்வாருக,
I 0.6

அவ்விடயம் நன்றக விளக்கப்பட்டது. ஆனல் எங்கள் வழி காட்டியோ தனது இறந்த குடும்பத்தினரின் குரல்களைக் கேட்ட தாகவும் அவர்களின் ஆவிகளைக் கண்டதாகவுமே எப்பொழு தும் நம்புவான்.
இல்லாத ஏரி
புவியியலாளர்கள் மறுநாட் காலை ஏனையோர் வெளியேறு வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னமே வெளியேறினர். முன்னெரு போதும் கண்டு ஆராயப்படாத ஒரு நாட்டைப் பற்றி ஒரு 'நிலப்படம்’ வரைவதில் அவர்கள் ஈடுபட்டிருந்த னர். அவ்வேலை மெதுவாகவே நடைபெற்றது. எங்கள் கூடா ரத்திற்குப் பத்துமைல் தூரத்தில் அவர்களுடைய கார் ஒரு சிறிய குன்றின் உச்சியில் நிறுத்தப்பட்டிருப்பதை நான் கவ னித்தேன். நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது குழுவினருள் ஒருவன் மேற்குப் பக்கமாகச் சுட்டிக் காட்டினன். அங்கே ஒரு சிறிய ஏரி இருந்தது. அது, ஏறத்தாழ ஒரு மைல் தூரத்திலிருந்த தாகத் தோன்றியது.
* கீழே இறங்கி அது இருக்குமிடத்திற்குப் போகுமுன்னர் இங்கிருந்தே அதன் வடிவத்தை வரைய வேண்டுமென்று நான் நினேத்தேன்’ என்று அவன் சொன்னன்.
கடற்பறவைகள் தெள்ளிய நீரின் மீது பறந்து கொண்டிருந் தன. ஏரியின் மத்திக்கருகில் ஒரு பசுமையான தீவு இருந்தது. நான் அதனைக் கவனமாக ஆராய்ந்தேன். ஏரியில் ஏதோ குறை பாடு இருப்பதை நான் மெதுவாக உணரத் தொடங்கினேன். அதன் கரை தெளிவாகக் காணப்படவில்லை. தீவு வியக்கத்தக்க முறையில் நடனமாடிக் கொண்டிருந்தது.
சற்றுத் தாமதித்து, மேற்கொண்டு வரைவதற்கு முன் நான் அங்கு போக நினைக்கிறேன் என்று நான் கூறினேன். ஐந்து நிமிடங்களில் ஏரியின் கரையென்று ஊகிக்கப்பட்ட இடத்தில் நான் நின்றேன். ஆனல், அங்கு கரையுமிருக்கவில்லை ஏரியுமிருக்க வில்லை. நீரோ தாவரமோ இருக்கும் அறிகுறி கூட இல்லை. அண்மையில் தம் கழுத்து வரை வெப்ப அலைகளில் நடந்து கொண்டிருந்த மிருசங்களின தலைகள், பறக்கும் பறவைகள் போன்று தோற்றமளித்தன.
107

Page 61
மலை உச்சிக்குத் திரும்பி வந்து படம் வரைவோனிடம் பின் வருமாறு கூறினேன். 'நீ வரைந்த ஏரியை கானல் ஏரியென்று அழைக்கலாம். கானல் என்பது நிலவாத ஒரு பொய்க் காட்சி. அது வெவ்வேறு வகைகளுக்குள்ளான வெப்ப நிலைகளையும் அடர் த்திகளையும் கொண்ட வளியூடாக ஒளி ஊடுருவிச் செல்வதால் உண்டாகிறது. நான் கண்ட மிக நிறைவு கொண்ட 'கானல்* அதுவாகும்’’.
குழுவைச் சேர்ந்த ஏனையோர் வந்து சேர்ந்ததும் அவர்கள் கண்ணுற்றது நீரல்ல என்று அவர்களை நம்பவைப்பது கடின மாகக் காணப்பட்டது. வெப்பம், வெளிச்சம், காற்று எவ்வாறு எங்களை ஏமாற்றி விட்டன என்பதனை நாங்கள் பின்னர் கண்டு கொண் டோம். அங்கு நிலவிய சூழ்நிலைகள் நூறு மைல் தூரத் திற்கும் மேலாக இருந்த சாகன் நோர் எனும் வெள்ளை ஏரியின் ஒரு தோற்றத்தை எம்முன் கொணர்ந்தன.
மேற்கு நோக்கி நாம் பயணம் செய்த பொழுது தனியாக நின்ற மலைகளின் முனைகள் தெற்கு நோக்கிக் காணப்பட்டன. சிறிது பொழுதில் அவை ஒன்ருக இணைக்கப்பட்டிருந்ததை எங் களால் காண முடிந்தது. அவை மொங்கோலியாவைப் பாதி யாகப் பிரிக்கின்ற பெரிய அல்ற்ருய் மலைத் தொடரின் பகுதி
யாகும்.
இந்த நிலத்தைக் கடப்பது எளிதாக இருக்கவில்லை. அங்கே மிருதுவான செம்மணலும் கூர்மை நிறைந்த தாவரங்கள் படர் ந்த சிறிய பணிவான குன்றுகளும் காணப்பட்டன. ஆனல் எமது வலிமை பாலைவனத்தின் கடும் பயணத்தால் குன்றிவிடும் வேளையில் பலமைல் தூரம் சம தரையில் இலகுவாகப் பயணம் செய்யும் வாய்ப்பு எமக்கு எட்டும். அவ்வப்போது பாலைவனத்தி னுடாக முன்னைய ஒட்டகப் பாதைகளின் அறிகுறிகள் தென் பட்டன. அப்பாதை வழிகளில் எங்கேனும் கிணறுகள் இருக்க லாம் எனும் அபிப்பிராயத்துடன் இயலுமானவரையில் அவ்வழி களை நாம் பின்பற்றினுேம்.
டைனசோர் முட்டைகள்
எரி கொழுந்துக் குன்றுகளில் இரண்டாவது தடவையாக நாம் முகாமிட்டது எமது நெடும் பயணத்தின் ஒரு முக்கியமான
கட்டமாகும். குழுவினர் உடனடியாகப் பள்ளத் தாக்கினுள் இறங்
08

கினர். மாலை வேளைக்குள் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ் வொரு டைனசோர் எலும்புக் கூட்டைக் கண்டு கொண் டோம். நிலமெல்லாம் உயிர்ச்சுவட்டு எலும்புகளால் நிறைந்திருந்ததா கத் தோன்றியது.
இரண்டாம் நாளன்று ஜோர்ஜ் ஒல்சென் ஒர் அபூர்வமான கதையுடன் கூடாரத்திற்குத் திரும்பினன். கல்லாக மாறிவிட்ட சில முட்டைகளைத் தான் கண்டுள்ளதாக அவன் சொன்னன். நாம் அனைவரும் அதனைக் கேட்டு ஆரம்பத்தில் சிரித்தோம். அவை முட்டை வடிவிலமைந்த கற்களாகவே இருக்கும் என்று கருதினுேம் .
*சிரிக்க விரும்பினுல் சிரியுங்கள், ஆனல் அவை உண்மை யில் முட்டைகளே. என்னுடன் வாருங்கள்’ என்று எல்லோரை யும் அவன் அழைத்தான்.
நாங்கள் சிறிது தூரமே நடக்க வேண்டியிருந்தது. ஒல்சென் ஒரு சிறிய பாறையின் விளிம்பைச் சுட்டிக் காட்டினன். இங்கே முட்டை வடிவம் கொண்ட மூன்று பொருட்கள் கிடந்தன. அவை ஏறக்குறைய எட்டு அங்குல நீளமுடையனவாய் இருந் தன. கலாநிதி கிறேஞ்சர் அவற்றுள் ஒன்றைக் சையிலெடுத்தார். நாம் அனைவரும் அவரைச் சூழ்ந்தோம். முட்டையின் உட்புறம் கல்லுத்தன்மையாக இருந்ததால் அது கனமாக இருந்தது. வெளிப் புறம் சாதாரணமான முட்டையைப் போன்று ஆனல் தடித்துக் காணப்பட்டது. இது கபில நிற முள்ளதாகவும் முற்ருகக் கடின மானதாகவும் இருந்தது.
*’ என்னுல் இதற்கு விளக்கம் தரமுடியாது' என்று தமது தலையை அசைத்து கொண்டே கிறேஞ்சர் கூறிப் 'பின் இது ஆதி காலப் பறவைகளின் முட்டையைப் போன்று காணப்படுகின் றது. ஆனல் இந்த அளவில் முட்டையிடத்தக்க அத்துணை பெரிய பறவைகள் முன்னர் இருந்திருக்கவில்லை. இஃது ஒரு முட்டை வடிவத்திலும் இல்லை. டைனசோர் எலும்புகள் மட்டுமே இங்கு காணக்கிடக்கின்றன. ஆகவே இஃது ஒரு டைனசோர் முட்டை யாக இருக்குமா? டைனசோர் எவ்வாறு இனவிருத்தி செய்தது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. பெரும்பாலான ஊர் வன முட்டையிடுவனவாகும். டைனசோர்கள் ஊர்வன இனத் தைச் சேர்ந்தன. ஆகவே அவையும் முட்டைகளை இட்டு இருக்க வேண்டும். ஆனல் அவ்வாரு ன முட்டைகளை உலகில்
109

Page 62
எங்கணும் எவரும் கண்டதில்லை. நாம் தாம் மனிதன் முதலாகக் கண்டுள்ள டைனசோர் முட்டையை இங்கு காண் கின்ருேம் என்று நான் எண்ணுகின்றேன்' என்று கிறேஞ்சர் கூறி முடித் தார்.
நாங்கள் சுற்றிப் பார்க்கையில் மேலும் இரு முட்டைகளைக் கண்ணுற்ருேம். பின்னர் சில பாறைகளின் கீழ் சிறிய டைன சோர் ஒன்றின் எலும்புக் கூட்டை ஜோர்ஜ் ஒல்சென் கண்டார். அது முட்டைகளுக்கு மேலாக நான்கு அங்குல உயரத்தில் கிடந் தது. இஃது அறிவியலுக்கு முற்றும் புதிய ஒரு வகையான டைன சோராகக் காணப்பட்டது. அது முழு வளர்ச்சியடைந்ததாக இருந்ததெனினும் நான்கு அடி நீளமானதாகவே காணப்பட் டது. இவ்வகையான டைனசோர் ஏனைய வகையான டைன சோர்களின் முட்டைகளை இரையாகக் கொண்டு வாழ்ந்தது எனத் தான் நம்புவதாக குழுவைச் சேர்ந்த கலாநிதி ஒஸ்போன் கூறினர்.
வடிவமைப்பில் முட்டைகள் நீளமாக இருந்தன. அவற்றுள் பாதிகளாக உடைந்திருந்த இரண்டு முட்டைகள் சிறிய டைன சோர்களின் வெள்ளைநிற எலும்புகளை உள்ளடக்கிக் காணப்பட் டன. சில முட்டைகள் சிறிய துண்டங்களாக உடைக்கப்பட்டி ருந்தன. ஆனல் வெளிப்புற ஒடுகள், அம் முட்டைகள் 70 அல்லது 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டனவல்லாது ஒரு நாளுக்கு முந்தியே வெளிவந்தவை போலத் தோற்றமளித்தன. நுண் மணல் முட்டைகளிலிருந்த வெடிப்புகள் வழியாக உட் புகுந்து உட்புறங்களைக் கல்லுப் போன்று கடினமாக மாற்றி யிருந்தது. இம்முட்டைகள் பறவைகளின் அல்லது ஊர்வனவற் றின் முட்டைகளினின்றும் முற்றக வேறுபட்டனவென்பதை பின்னர் செய்த ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டின. பல முட்டை களை உள்ளடக்கியிருந்த வெள்ளை எலும்புகள் உண்மையில் குட்டி டைனசோர்களின் எலும்புகள் என்று ஆராய்ச்சிகள் நிறுவின.
முதலாவதான முட்டைகளைக் கண்டெடுத்த சில நாட்களின் பின்னர், மேலும் ஒரு கூட்டமாக ஐந்து முட்டைகளும் கண் டெடுக்கப்பட்டன. நெடும் பயணத்தைச் செய்த ஒவ்வொரு வரும் முட்டைகளைத் தேடுவதிற் சுறுசுறுப்புக் கொன் டு ஒவ் வொருவரும் வெற்றி பெற்றனர். எம்மிடையே நாம் மொத்தம் 25 முட்டைகளைச் சேகரித்தோம். அத்தோடு எரி சொழுந்துக் குன்றுகளில் சிறிய டைனசோர்களின் 75 எலும்புக் கூடுகளையும், மண்டையோடுகளையும் நாம் கண்டெடுத்தோம்.
1 1 0.

உலகம் முட்டைகளில் காட்டிய ஆர்வம்
டைனசோர் முட்டைகளைக் கண்டு பிடித்ததனுல், நெடும் பயணத்திற்கும், எனக்கும் எத்தகைய பயன்கள் உருவாகலாம் என்பது பறறி அவ்வமயம் எங்களுக்குள் எவருமே சிந்திக்க வில்லை. உண்மையில், அம்முட்டைகள் ஆர்வம் ஊட்டத்தக்கவை யாகவும், முக்கியத்துவ முடையனவாகவும் இருந்தன என்பது எமக்குத் தெரியும். ஆனல் முக்கியத்துவம் வாய்ந்த மேலும் பல பொருள்களையும் நாம் கண்டு பிடித்திருந்தோம். டைன சோர் முட்டைகள் பற்றிய செய்திகளை மக்கள் எத்துணையளவு வரவேற்றிருந்தனர் என்பதை நாம் பீக்கிங்கிற்குத் திரும்பிய பின்னரே புரிந்து கொள்ள ஏதுவாயிற்று.
பத்திரிகை நிருபர்களுடன் கூடிய எமது முதலாவது கூட் டத்தில் எங்களுடைய நெடும் பயண விபரங்களை அறிவதற்காக உலகப் பெரும் பத்திரிகைகளைச் சேர்ந்த 15 பத்திரிகையாளர் கள் சமுகமளித்திருந்தனர். டைனசோர் முட்டைகளைப் பற்றி அவர்கள் கேள்வியுற்றதும் அச் செய்தியைத் தம் பத்திரிகை களுக்கு அனுப்புவதற்கு விரைந்தனர். சில மணி நேரத்தில் அச்செய்தி உலகத்தின் நாற்றிசைகளிலும் பரவியது. அவ்வேளை யில் பீக்கிங்கிற்கும் ஷங்கய்க்குமிடையே போர் நிலவியது. ஆயி னும் ஒரு முக்கியமான இலண்டன் பத்திரிகை தனது நிருபருக்கு ** போரைப்பற்றி 30 வார்த்தைகளை மாத்திரம் அனுப்புக, அன்ட்றுாசின் நெடும் பயணம் பற்றி அனைத்தையும் விபரிக்க** என்று குறிப்பிட்டது.
முட்டைகள் பொதுசன ஆர்வத்தைப் பெற்றுக் கொண் டன என்பதனை உண், மையில் நாம் அனைவரும் உணர்ந்தோம். ஆனல், அதன் பின்னர் நிகழ்ந்தவற்றையிட்டு எதிர்நோக்க நாம் எவருமே ஆயத்தமாக இருக்கவில்லை.
அவ்வமயம், நெடும்பயணத்ற்திகாக மேலும் 250,000 டொலர்ப் பணம் பெறுவதற்கு நான் அமெரிக்கா திரும்புவது அவசியமாயிற்று. பிரிட்டிஷ் கொலம்பியாவில் விக்டோரியாவி லிருக்கும் எனது இல்லத்தை நோக்கிப்போகும் பயணத்தின் போது, பல நிருபர்கள் கப்பலில் வந்தனர். சியற்றிலைச் சேர்ந்த ஒரு நிருபர் தமது பத்திரிகையில் மட்டுமே டைனசோர் முட்டை களின் படமொன்றை வெளியிடுவதற்கு 1500 டொலர் தருவ தாகக் கூறிஞர். மற்றும் ஒரு பத்திரிகையாளர் 3000 டொலர்
11 I

Page 63
வழங்குவதாகவும், சன் பிரான்சிஸ்கோ பத்திரிகையாளர் 5000 டொலர் கொடுப்பதாகவும் கூறினர்கள். நான் உங்களுக்குச் செய்திக் கதையைக் கொடுப்பேன், ஆனல் படங்களை விற்கப் போவதில்லை என்று அவர்களுக்குப் பதிலிறுத்தேன்.
தான் அமெரிக்கா வூடாக நியூயோக் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது ஒவ்வொரு நிலையத்திலும் புகைவண்டியில் நிருபர்கள் கூடினர். நியூயோக் நகரிலோ நிருபர்கள் மேலும் அதிகம் ஆர்வம் காட்டினர். டைனசோர் முட்டைகள்! நான் காதாரக் கேட்டதெல்லாம் இஃது ஒன்றே. ஆரம்பத்தில் கோபம் கொண் டேன். நெடும் பயணத்தில் டைனசோர் முட்டைகளைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் எத்தனையோ விடயங்கள் இடம் பெற்றன. அவ்விடயங்களை மக்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். “பெரிய முட்டை மனிதன்" என்று மட்டுமே மக்கள் என்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனல் பொது மக்கள் முட்டைகளிலேயே அதிக ஆர்வம் காட்டினர்.
ஆயினும் முட்டைகளின் பெறுமதியையும் மீறி மக்கள் அதிக ஆர்வத்தைக் காட்டியதால் அவை மூலம் எனது எதிர் பார்ப்புக்கு மேலாக மிக விரைவில் இரண்டரை லட்சம் டொலர் களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
*நீ நாடு காண் பயண ஆய்வை எவ்வாறு தொடங்கினுய் ?”
முட்டைகள் சம்பந்தமாக இடம் பெற்றிருந்த விமர்சன வேளையிலும் பெரும்பாலும் அதற்குப் பின்னரும் 'நாடு காண் பயண ஆய்வை நீ எவ்வாறு தொடங்கி கோபிப்பாலைவனத்தில் டைனசோர் முட்டைகளைக் கண்டு பிடித்தாய்’ என்று மக்கள்
என்னைக் கேட்டனர்.
‘நான் வேறு எதனையும் செய்ய முடியவில்லை. நான் அவ் வழி பிறந்தேன்’ என்ற மறுமொழியே எளிதாக இருந்தது.
1884 ஜனவரி மாதம் 26 ஆந் திகதியன்று நான் பிறந்தேன். எதனையும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய காலம் தொட்டு நான் ஒரு நாடுகாண் பயணியாவதற்கு விரும்பினேன். என் ஆவலைச் சிறு பருவத்திலேயே புரிந்து கொண்ட பெற்றேர் நான் விரும்பியதைச் செய்ய எனக்கு இடமளிக்கத் தீர்மானித்தார்கள்.
12

எனது வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கு அவர்கள் முயல வில்லை. விஸ்கொன்சினிலுள்ள எங்களது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள வயல்கள், காடுகள் யாவுமூடாக நான் விரும்பிய அளவிற்கு உலா விவர அவர்கள் அனுமதியளித்தனர்.
நான் வளர்ந்து வந்த பொழுது எனது சீவியம் ருே பட் ஈ பியரி, காள் அக்லி ஆகியோரின் வாழ்க்கைகளைப் பெரிதும் ஒத்த தாகவிருந்தது. நாம் மூவரும் இயற்கையை அதிக அளவு விரும் பியதால் வீட்டுக்குப்புறத்தே சீவிக்க முடியும் என்னும் சுபாவம் எம்மிடம் இடம் கொண்டது, அவர்களைப் போலவே நானும் போலி மிருகங்களைச் செய்யும் கலையை எனது போக்கில் பயின்று கொண்டேன். இந்த வேலையிலிருந்து எனக்குக் கிடைத்த பணம் பெலோயிற் கல்லூரியில் எனது படிப்புச் செலவுக்கு உதவியது.
எனது நோக்கம், நியூயோக்கில் அமெரிக்க இயற்கை வர லாற்று அரும் பொருட்சாலையில் வேலை செய்ய வேண்டுமென் பதே. அவ்வாறன ஓர் அரும் பொருட்சாலையில் தொழில் புரி வதும் நெடும் பயணங்களை மேற்கொள்வதும் பெரும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எனது கல்லூரிப் படிப்பு முடிவதற்கு முன் அரும் பொருட்சாலையின் அந்நாள் இயக்குநராக விருந்த கலாநிதி பம்பஸ் என்பவருக்கு எழுதினேன். அரும் பொருட் சாலையில் எனக்கு அங்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் ஆணுலும் எப்போதாவது நான் நியூயோக்கில் இருப்பின் தாம் என்னைக் சாண் பதில் மகிழ்ச்சி அடைவார் என்றும் அவர் பதிலிறுத்தார். மேலும் எனக்கு அங்கு போவதற்கு வேறு வேலை ஏதும் இருந்தா லொழிய வரவேண்டாம் என்றும் அவர் மேலும் குறிப் பிட்டிருந்தார். அப்பதில் எனக்குத் திருப்தியாக இருந்தது. கல்லூரிப் படிப்பு முடிவுற்ற மறு கிழமையே நான் நியூயோக்
நோக்கிச் சென்றேன்.
1906 இல் ஒரு நாள் காலை 11 மணியளவில் நான் அரும் பொருட்சாலையின் பெருங்கதவின் முன் குனுல் நின்றேன். பின்னர் மிகத் தாழ்மையுடன் இயக்குநர் அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே இயக்குநரின் நாற்காலியில் அமர்ந்திருந்தேன், இளம் ஆண்களும் பெண் களும் அச்சத்தோடு என்னைக் காண வந்தனர். முதல் நாளன்று நான் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது எனக்கு இன்றும் நினை விருக்கிறது. ஆனல் கலாநிதி பம்பஸ் அன்று எனக்குக் காட்டிய நட்பு விருப்பத்திற்கு மேலாக அவர் காட்டியிருந்திருக்க முடியாது.
13

Page 64
அவர் உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தார். மேலும் அவர் பெரும் வலிமையும் ஊக்கமும் உடையவராகத் தோன்றினர்.
நாங்கள் சிறிது நேரம் உரையாடினுேம். என்னிடம் பல கேள்விகளை அவர் கேட்டார். நான் பதிலிறுத்தேன். ஈற்றில் அரும் பொருட்சாலையில் எவ்வகையான தொழில் வாய்ப்பும் இல்லை என்று அவர் மனவருத்தத்தோடு கூறினர். எனக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. நான் பதவி எதனையும் கேட்க வில்லை, நான் இங்கு வேலை செய்யவே விரும்புகிறேன் தரை களைத் துப்பரவாக்க நீங்கள் யாரையேனும் வைத்திருக்க வேண்டு மல்லவா. நான் அதனைச் செய்யலாமா? என்று இறுதியாகக் கேட்டேன்.
'ஆனல் கல்லூரிக்குச் சென்று வந்தவன் தரைகளைத் துப் பரவு செய்வதற்கு விரும்புவதில்லையே' என்ருர்,
**இல்லை* சாதாரணமான தரைகளையன்று. அரும்பொருட் சாலையின் தரைகள் வேறு தரம் கொண்டவை. அவற்றைத் துப்பரவு செய்வேன். என்னை அனுமதித்தால் அவ் வேலையை விரும்பிச் செய்வேன்' என்று நான் கூறினேன். அவர் முறு வலித்தார்.
*நீ அவ்வாரு ன கருத்துக் கொண்டுள்ளமையால் உனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறேன். நீ போலி மிருகங்களைச் செய்யும் அலுவலகத்தில் ஜேம்ஸ் எல் கிளார்க்குடன் வேலையைத் தொடங் கலாம். இப்போது என்னுடன் வந்து உணவு அருந்து: ஏனை யோரை நீ சந்திப்பதற்கு நான் உதவி செய்கிறேன்’’.
அரும் பொருட்சாலையில் முதற் சில மாதங்கள்
அரும் பொருட்சாலையில் எனது கடமைகள் காலையில் தரை களைக் கழுவுவதும் அறையைத் துப்பரவு செய்வதும் களிமண் ணை ஆயத்தப்படுத்துவதும், ஜிம்மி கிளார்க்கிற்கு உதவியாளராக இருப்பதுமாகும். நான் அவனை எவ்வளவு காலத்திற்கு அறிந் தேனே அந்த அளவிற்கு அவனை அதிகமாக விரும்பினேன். ஜிம் நேர காலத்தை வீணுக்குவதற்கு விரும்பவில்லை. நானும் அவ்வாறே; எங்களது ஒய்வு நேரத்திலும் நாம் இருவரும் அக் கூடத்தில் எங்கேனும் எமது சொந்த விருப்பத்திற்குள்ளான கருமங்களில் சுறுசுறுப்பாக ஈடு பட்டிருப்போம்.
114

கலாநிதி பம்பஸ் என்னை மறந்துவிடவில்லை. ஏதேனும் சிறு வேலைகளைச் செய்யுமாறு அடிக்கடி என்னைக் கேட்டார். எனது கல்லூரிப் பயிற்சி என் வேலையைச் செய்வதற்குத் தடையாக விருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப் போது எனது தரையைக் கவனிப்பார். எட்டுக் கிழமைகளுக்குப் பின்னர் எனக்குச் சிறிது ஊதிய உயர்வு கிடைத்தது. முன்ன ரிலும் சிறிது நன்ருகச் சாப்பிடுவதற்கு எனக்கு வாய்ப்பு ஏற் tull-gil.
நான் அரும் பொருட்சாலையிற் சேர்ந்த ஒரு சில மாதங் களில் என் திறமையைக் காட்டுவதற்கு பெரும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. றிச் சட்சன் என்னும் பெயருடைய ஒருவனுக்கு உதவியாக இருக்குமாறு இயக்குநர் என்னிடம் கூறினர். முழு உயிர் அளவிலான திமிங்கிலம் ஒன்றின் உருவத்தைக் கடதாசித் தாளிலிருந்து அவன் உருவாக்குவதற்கு முனைந்திருந்தான். திமிங் கிலங்களைப் பற்றி சிறிதளவே தெரிந்திருந்தது என்பதைக் காட் டிக் கொள்ளாதிருக்க நான் முயன்றேன். ஆனல் அவ்வேலை ஊகிக்கப்பட்ட அளவு கடினமானதன்று. ஜிம் கிளார்க் ஏற் கனவே அமைத்திருந்ததைக் காட்டிலும் பெரிதான உருவத்தை நாங்கள் அமைக்க வேண்டியதாயிற்று.
தொடக்கத்தில் அனைத்தும் சரியாக இருந்தது. உருவத் தைத் தாளால் உறையிட நாம் ஆரம்பிக்கும் வரை றிச்சட்சன் தான் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தான். இரும் பினலும் மெல்லிய மரத்துண்டுகளாலும் அமைக்கப்பட்ட 76 அடி நீளமான அந்த உருவமைப்பு வியக்கத்தக்கதாக இருந்தது. ஆனல், கடதாசித் தாளினைக் கொண்டு உறையிட்டது திருப்தி யற்றதாகப்பட்டது. தாள் பிளந்து உருவத்தின் வடிவத்தை மாற் றியதுடன் எலும்புகளுக்கிடையிலும் உரு தளர்ந்து கொண்டது. எங்களுடைய திமிங்கிலம் நெடுங்காலமாக உணவின்றி இருந் ததுபோன்று பார்வைக்கு மிகு மோசமாகத் தோன்றியது. இர வில் அது பற்றிக் கெட்ட கனவுகள் நான் கண்டிருப்பேன். என்ன செய்வது என்று இயக்குநருக்குப் புரியவில்லை.
ஈற்றில் அவர் ஜிம் கிளாக்கையும் என்னையும் தனது அலு
வலகத்திற்கு அழைத்து ‘இத் திமிங்கிலம் என்னைப் பைத்திய மாக்குகிறது நாம் என்ன செய்யலாம்?’ என்று வினவினர்.
என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி ஜிம்மியும் நானும் அறிந்திருந்தோம். இப்பிரச்சினைகள் பற்றி நாம் பல தடவை
1 I5

Page 65
களாகக் கதைத்துள்ளோம். *தாளைக் கொண் டு வேலை செய்யும் திரு றிச் சட்சனை இனிமேல் வைத்திருக்க வேண்டாம், மற்றும் பொருள்களைக் கொண் டு திமிங்கிலத்தை நாமே பூர்த்தியாக்கு வோம்’ என்று கூறினுேம்.
இயக்குநர் புன்முறுவல் செய்து "நல்லது அந்த மோசமான உருவத்தை அருமையான கொழுத்த திமிங்கிலமாக நீங்கள் தோன்றச் செய்வீர்களாயின் உங்களை விசேடமாகக் கெளர விப்பேன்’ என்ருர்.
ஜிம்மியும் நானும் 12 உதவியாளர்களுடன் உடனடியாகவே அவ்வேலையில் ஈடுபட்டோம். திமிங்கிலம் நல்ல தோற்றமளிக்கத் தொடங்கியது. அதன் பக்கங்கள் நிரம்பின. நீரில் உருண்டு விளையாடும் அளவிற்கு உயிருள்ளது போன்று அது தோற்ற மளித்தது. எட்டு மாதங்களுக்குப் பின் அவ்வேலை முற்றுப் பெற்றது. அரும்பொருட்சாலையில் ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தொங்கியிருந்தும் அது இன்னும் புதியது போன்று காட்சி அளிக்கின்றது.
அமகன்செற் திமிங்கிலம்
திமிங்கிலத்தை அமைத்தது எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. த ரைகளைத் துப்பரவு செய்யும் தொழி லில் இருந்து அது என்னைத் தவிர்த்தது; நான் திமிங்கிலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் படித்தறியவும் துணை புரிந்தது. நியூயோக் நகருக்கு அருகில் இருந்த அமகன்செற் என்னும் பட்டினத்தின் லோங் ஐலண்ட் கடற்கரையில் ஒர் உண்மைத் திமிங்கிலம் கொல் ப்பட்டது. அதன் எலும்புக் கூட்டைக் கொண்டு வருவதற்காக ஜிம் கிளார்க்கும் நானும் அனுப்பப்பட்டிருந்தோம். அத்திமிங் கிலத்தை யொட்டிய சகல அம்சங்களையும் கொண்டுள்ள படங் கள், அளவீடுகள், எலும்புக் கூடு, ஒவ்வொரு எலும்பும் அவ சியம் என்று இயக்குநர் எங்களிடம் கூறினர்.
நாங்கள் அமகன்செற் கிராமத்திற்குச் சென்று திமிங்கி லத்தை வாங்கும் வேலையை விரைவாக முடித்தோம். திமிங் கிலத்தின் எலும்பு விலையுள்ள பகுதியாகும். சில கைத்தொழில் முயற்சியில் இன்னும் அது பயனுக்குள்ளாக்கப்படுகின்றது. முழுத் திமிங்கிலத்தையும் 3200 டொலருக்குக் கொண்டோம் என நினைக்கிறேன். எமக்கு எலும்புக்கூடு வழங்கப்பட்டது. ஆணுல் எலும் புகளை நாமே பிரித்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
6

திமிங்கிலத்தின் சடலம் நீரின் விளிம்பில் கிடந்தது. மீன வர்கள் திமிங்கிலத்திலிருந்து கொழுப்பை மீட்டெடுத்துக் கொண்டனர். அந்நிலையில் ஜிம்மிக்கும் எனக்கும் பெரும் பிரச் சினை எழுந்தது. திமிங்கிலத்தின் எலும்புக்கூடு பெரும் மலை போன்றிருந்த சதைப்பில் டத்தினுள் இருந்தது. எம்மால் தனி யாக எதுவும் செய்ய முடியவில்லை. மீனவர்களுக்கும் வேலை செய் வதற்கு விருப்பமில்லை. அவ்வேளையில் குளிரும் அதிகமாகியது. காற்று பலமாக வீசியது. ஈற்றில் திமிங்கிலத்தின் சதைப் பிண் டத்தை வெட்டி அகற்ற ஆறு பேர் வேலை தொடங்கினர். வெட்டப்பட்ட துண்டுகளை அகற்றுவதற்கு ஒரு குதிரை உதவி யது. பின்னர் மோசமான ஒரு விடயம் நடந்தது. கிழக்கி லிருந்து புயலொன்று வீசி கடற்கரையை முழு வலிமையோடு தாக்கியது. ஆனல் அது வருவதை நாம் கண்டு டர்னிக்கட்டி போன்று குளிர்ந்திருந்த நீரிலே வேலை செய்து இயன்றவரை திமிங்கிலத்தை ஒரிடத்தில் கட்டி வைத்தோம்.
புயல் தொடர்ந்து வீசியதால் மூன்று நாட்களாக நாம் மனக் கிலேசத்துடன் காத்திருந்தோம். எலும்புக்கூட்டின் அரைப்பகுதி மட்டுமே கரையில் கிடந்தது. எஞ்சியது இழக்கப் படுவதாயின் அதன் பெறுமதி மிகக் குறைவே. ஆனல் மிகக் குளிராக இருந்தது. நாங்கள் கடற்கரையை அடைந்தபோது கடல் மணலை மட்டுமே கண்டோம். எலும்புகள் காணப்பட வில்லை. ஜிம்மியும் நானும் சினமடைந்தோம். ஆனல் அவ்வெ லும்புகள் மணலின் கீழே இருக்கக்கூடும் என உணர்ந்தோம். சிறு முயற்சியின் பின் எலும்புக்கூடு மணலில் புதைந்து இருப் பதை நாம் கண்டோம். அதனை வெளிக் கொண் டு வருவது சாத்தியமாகத் தோன்றவில்லை. எலும் பொன்றை எடுப்பதற் காகச் சிறிதளவு மணலைத் தோண்டியதும் தோண்டப்பட்ட குழி நீரால் நிரப்பப்பட்டது. ஒவ்வோர் எலும்பாக வெட்டி எடுப் பதற்கு எங்கள் தோள் வரை பனி போன்ற குளிர்ந்த நீரில் கைகளை விட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.
ஜிம்மியும் நானும் மட்டும் மூன்று நாட்களாக வேலை செய் தோம். மிகக் குளிராக இருந்ததால், உயர்ந்த ஊதியத்திற்கும் வேலை செய்யக் கிராம மக்கள் விரும்பவில்லை. முயற்சியில் எமக்கு நம்பிக்கை தளர்ந்து விட்டதாகத் தோன்றியது. ஆனல் இயக்கு நர் எலும்புகள் கொண்டுவருமாறு எங்களைப் பணித்திருந்தார். எங்களால் வேலையை நிறுத்த முடியவில்லை. ஈற்றில் மீனவர் களுட் சிலர் எமக்கு உதவியளிக்கத் தீர்மானித்தனர். அக்கிழமை
I 1 7

Page 66
இறுதியில் எலும்புக் கூடு கரையில் இருந்து தொலைவான இடத் தில் சேர்க்கப்பட்டது. முழு எலும்புகளுடனும் நியூயோக்கிற்கு நாம் திரும்பினுேம் .
நான் முதலாவது பார்த்த உயிருள்ள திமிங்கிலம்
சிறிது காலத்திற்கு முன்னதாக மூன்று கரையோர திமிங் கில நிலையங்கள் வன்கூவர் தீவிற்கு மேற்குப் பாகத்திலும் அலஸ் காவிலும் நிறுவப்பட்டிருந்தன. 90 அடி நீளமான சிறு படகு களிலிருந்து அப் பெரிய திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட் டன. அப்படகுகளிலிருந்து பெரிய துவக்கைக் கொண்டு விடப் பட்ட ஈட்டிகளினுல் அவை கொல்லப்படும். பின்னர் கரையி லுள்ள நிலையங்களுக்கு எடுத்து வரப்பட்டு எண்ணெயும் மற்றும் பொருட்களும் எடுக்கப்படும். திமிங்கிலத்தையிட்டு ஆராய்ச்சி செய்வதற்கு அது ஒரு பெரிய அரிய வாய்ப்பாகக் காணப் பட்டது. எனது வாழ்க்கைச் செலவை மட்டும் ஏற்றுக்கொள்வ தாயின் உறுதிய மின்றி நெடும் பயணம் ஒன்று நான் மேற்கொள் வதற்கு சம்மதம் கொள்வாரோ என்று இயக்குநரிடம் நான் கேட்டேன். அவர் ஒப்புக் கொண்டார். எனவே, 1908 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் எனது முதலாவது உண்மை யான நெடும் பயணத்தை மேற்கொண்டேன்.
வன்கூவர்த்தீவின் மேற்குப் பக்கத்தில், பார்க்ளே சவுண் டின் நீரினல் ஏற்றப்பட்ட பெரும் வளைவில், இருபது மைல் தூரத்தில் மரங்கள் சூழ்ந்த மலைக்கு எதிராக அத் திமிங்கில நிலையம் அமைந்திருந்தது. கடல் நோயினுல் பாதிக்கப்பட்ட நான் எனது திமிங்கில வேட்டைப் பயணக் காலம் பூராவும் அந் நோயினுல் பாதிப்புக்குள்ளாகிப் பல வருடங்கள் இருந்தேன். ஒரு சிறிய கப்பலில் அந்நிலையத்தை அடைந்தேன். அவ்வாறன சுகவீனத்துடன் தினமும் திமிங்கில வேட்டைகளில் கடலில் சென்று வந்தேன். திமிங்கிலங்களையிட்டு நான் கவனமாக ஆராய் ந்து வந்தேன். அவை உணவருந்துவதற்காக எத் துணை காலம் நீரின் மேற்பகுதியில் இருந்தன, தம் தலையுச்சியிலுள்ள மூக்கின் வழியாக எத்தனை தடவைகள் நீரை வெளியாக்கின, அவை எவ்வாறு அசைந்து திரிந்தன, என்பவற்றையும் திமிங்கில வேட் டைக்காரன் போராட்டத்தின் மத்தியில் கவனித்திருக்க முடி யாத நூற்றுக் கணக்கான பல்வேறு விடயங்களையும் நான் கவனித்தேன்.
8

கப்பலுக்கு அருகில் முதல் தடவையாக திமிங்கிலம் ஒன்று நெருங்கி வந்ததை நான் ஒருபோதும் மறக்கமுடியாது. அந்த மிருகம் ஆழ்ந்த நீரில் இருந்து உயர எழும்புவதைக் கண் டேன். ஒரு பெரிய கரு நிற உருவம் கப்பலுக்கு அருகில் மலையொன்று நிற்பது போன்று நீரைப் பிளந்து கொண்டு மேலே விரைந்து வந்தது. திடீரென்று அது பெரும் திரளான நீரையும் காற்றை யும் எனது முகத்தில் உமிழ்ந்தபோது நான் அதன் கரும் மூக்குத் துவாரங்களைப் பார்க்கக் கூடியதாயிருந்தது. ஒரு கணம் கழித்து ஈட்டிமுனைத் துவக்கின் சப்தம் கேட்டு நான் பின்வாங்கினேன். படகின் பக்கமாக நான் திரும்பியபோது எங்களுடைய சிறிய படகுகளைச்சுக்கு நூருக உடைக்கும் சக்தியைக் கொண்ட பெரிய வாலொன்று எழுந்து விழுவதை நான் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. பின்னர் உயிரற்ற அத்திமிங்கிலத்தின் உடல், ஆழ்ந்த நீல நிற நீரினுள் தாழ்ந்த போது ஈட்டி முனைக் கயிறுகளின் மெதுவான சப்தம் மட்டுமே கேட்டது. மற்றும்படி எங்கணும் நிசப்தம் நிலவியது.
கோடைக்கால இறுதியில் அரும் பொருட்சாலைக்காக ஒரு பெரிய திமிங்கிலத்தின் எலும்புக் கூட்டினைக் கொணர்ந்தேன். அத்துடன் இறந்த, உயிருடனிருந்த, திமிங்கிலங்கள் பற்றி முன் தொகுக்கப்பட்ட விபரங்களைக் காட்டிலும் கூடுதலான புதியி விபரங்களைக் கொண்ட ஒரு குறிப்புப் புத்தகம் என் கைவசம் இருந்தது. உண்மையில் திமிங்கிலங்களை அவற்றின் சொந்தச் சூழ்நிலைகளில் ஆராய்ச்சி செய்த முதலாவது அறிவியலாளன் நான் எனலாம்.
நான் எடுத்த உயிர்த் திமிங்கிலங்களின் படங்கள் பத்திரிகை வாசகர்களுக்கு அதிக ஆர்வமூட்டின. ஏனெனில் உலகிலுள்ள மிகப் பெரியனவும் மக்களால் நன்கு அறியப்படாதனவுமான முலையூட்டிகள் பற்றி முதல் தடவையாக எடுக்கப்பட்ட படங் கள் என்னுடையவையாய் இருந்தமையேயாம். நான் திமிங் கிலங்களைப் பற்றிக் கட்டுரைகள் வரைந்தேன். பகிரங்கச் சொற் பொழிவுகள் ஆற்றினேன். மேலும் ஆராய்ச்சி செய்வதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்திற் சேர்ந்தேன். நான் அப்பொ ழுது அரும் பொருட்சாலையில் முலையூட்டிகள் பறவைகள் அலு வலகத்தில் தொழில் செய்து கொண்டிருந்தேன். கூடிய ஊதி யத்திற்குப் பதிலாகக் காலையில் அரும்பொருட் சாலையில் வேலை செய்த பின்னர் மாலையில் கல்லூரி போவதற்கு எனக்கு இயக்கு நர் அனுமதி வழங்கினர். எனக்கு மாதம் ஒன்றுக்கு நூறு
119 r 5

Page 67
டொலர் கிடைத்தது. ஆயினும் எனது வேலைக்குப் புறம்பாக வேறு வகையான வாழ்க்கை எதிலும் ஈடுபடுவதற்கு எனக்கு நேரம் கிடையாத தன்மையால் அந்த ஊதியம் எனக்குத் திருப்தி யாக இருந்தது. கிழமை நாள்தோறும் வேலை செய்தும் படித்தும் வந்தேன். இரவிலும் மிகுந்த நேரம் பெரும்பாலும் படிப்பில் ஈடுபட்டேன்.
அடுத்த வருடப் பணிக்காலத்தில் பல பகிரங்கச் சொற் பொழிவுகள் நடத்தினேன். அவ்வாறு ன சொற்பொழிவுகள் கட் டுரை வரைவதைப்போன்று முக்கியத்துவத்தை நாடு காண் பயணிகளுக்கு வழங்குகின்றன. தனது வேலைக்குப் பொது மக் கள் பணம் கொடுத்து உதவ வேண்டுமென்று நாடுகாண் பயணி கள் எதிர்ப்பார்ப்பின், தான் செய்தவை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தல் அவசியமாகும்.
1909 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் வெள்ளைப் போப்பசுப் பிராணிகளுக்காக கனடாவிலுள்ள சென்ற் லோறன்ஸ், சகுனே ஆறுகளுக்கு, குறுங்காலப் பயணமொன்றை நான் மேற்கொண்டேன். போப்பசுக்கள் திமிங்கிலம் போன்ற, ஆனல் மிகச் சிறிய முலையூட்டிகளாகும். பொதுவாக அவை ஐந்து முதல் எட்டு அடி வரை நீளமானவை. நாங்கள் இவ் வாரு ன சிறிய முலையூட்டியை நியூயோக் நீர் வாழியகத்திற்கு (உயிருள்ள கடற் பிராணிகளுக்கான அரும் பொருட்சாலைக்கு) உயிரோடு கொண்டுவர எதிர்பார்த்தோம். ஆயினும், அங்கு நிலவிய சூழ்நிலைகள் திருப்திகரமாக இல்லாதிருந்ததால் எதனை யும் நாம் பிடிக்க முடியவில்லை. ஆனல் அருமையான நான்கு சிறிய போப்பசுக்களை ஈட்டி முனை கொண் டு கொன்று, அவற் றுள் பெரிதானதின் உடலைக் கொண் டு நல்ல உருவம் ஒன்றை அமைத்தேன். அது இப்போது அமெரிக்க அரும் பொருட்சாலையி லுள்ள சமுத்திர வாழிகள் மண்டபத்தில் தொங்குகிறது.
சென்ற் லோ றன்சிலிருந்து திரும்பி வந்த ஒரு மாதத்தில் மீண்டும் நான் பயண மானேன். இத்தருணம் உலகின் தூர இடங்களில் பயணம் செய்வதற்காக நாடு விட்டுச் சென்றேன். ஒரு நாள் இயக்குநர் என்னைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து "போணியோவிற்கும், ஒல்லாந்த கிழக்கிந்தியத் தீவு களுக்கும் நீ போக விரும்புகிருயா’? என்று கேட்டார். அது ஒரு சாதாரண கேள்வியைப் போன்றிருந்ததெனினும் எனக்கு அது மோட்சத்திற்குப் போவதற்குச் சம்மதிக்கின்ரு யா என்ற கேள்வியைப் போன்றிருந்து அதிக மகிழ்வை வழங்கிற்று.
120

கிழக்கிந்தியத் தீவுகளுக்கான பயணம்
"அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசாங்க மீன் வாழ் சம்பந்த மான அலுவலகம் தனது அல்பட்ருெஸ் எனும் கப்பலில், நீர் செல்வதை அனுமதிக்க முடியுமா என்று என்னைக் கேட்டுள்ளது. இந்தோனீசியா என்று அழைக்கப்படும், கிழக்கிந்தியத் தீவுக ளில் சிறிய தீவுகள் சிலவற்றை ஆய்வதற்கும் கடலின் அடித் தளத்திலிருந்து பொருட்களைச் சேமிப்பதற்கும் அலுவலகத் தினர் விரும்புகின்றனர். கடல் வாழ் போப்பசுக்களை யிட்டு ஆராய்வதும் நிலம் வாழ் முலையூட்டிகளையும் பறவைகளையும் சேகரிப்பதும் உனது வேலையாகும். அல்பட்ருெஸ் கப்பலை பிலிப் பீன் தீவுகளில் சேர்ந்து கொள்வாய்” என்று இயக்குநர் என் னிடம் கூறினர்.
அவருக்கு அவ்வாரு ன தொழிலும் கருத்தும் சர்வசாதா ரணமானவை, அவரின் அறையிலிருந்து வெளியேறினேன். அல் பட்ருெஸ் அதன் இனத்தைச் சேர்ந்த கப்பல்களுள் மிகப் பிர சித்தி பெற்றது. அதைப் போன்று ஆராய்ச்சி முயற்சிகளுக்கென வேறு எந்தக் கப்பலும் திட்டம் இடப்பட்டிருக்கவில்லை. இயற்கை வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் அக் கப்பலில் வேலை செய்திருந்தனர். கிழக்கிந்தியத் தீவுகளின் அழகிய சிறு தீவுகளில் பயணம் செய்யும் வாய்ப்பு இல்லாது போயினும் அக்கப்பற் குழுவில் ஒருவனுகச் சேர்த்துக் கொள்ளப் படுவது போதிய மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
ஒரு மாதத்தினுள் மணிலாவை அடைந்தேன். அல்பட் ருெஸ் தெற்குப் பகுதியில் இயங்கி வருகிறதென்றும் தளத்திற் குத் திரும்பப் பல கிழமைகள் ஆகும் என்றும் நான் அறிந்தேன். ஆணுல் உடனடியாக வேலை செய்ய விரும்பினேன். கப்பல்கள் அடிக்கடி போகாத ஒரு சிறிய தீவு உண்டு என்றும் பல வகைப் பறவைகள் அங்கு இருப்பதாகக் கருதப்படுகின்றதென்றும் நான் கேள்விப்பட்டேன். அத்தீவை அடைந்து அங்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன்.
ஒரு கிழமைக்குப் பின்னர், அழகு தரும் காலை நேரம் ஒன் றில் நான் இரு பிலிப்பினுேக்களுடன் மரங்கள் சூழ்ந்த தீவில் தாழ்ந்ததரைகளை நோக்கிப் படகில் பயணம் செய்தேன். பிர
2.

Page 68
காசமுற்ற பசும் நீரில் பல வர்ண மீன்களை நாம் காண முடிந்தது. ஒரு சிறிய விரிகுடாவின் மணலில் இறங்கி தீவினை நாம் உடனே சுற்றிப்பார்த்தோம். அங்கு எவரும் வசிக்கவில்லை. ஆனல் நல்ல நீர் காணப்பட்டது. நீர் முக்கியமான ஒரு பொருள், ஐந்து நாட் களுக்கான உணவையும் வேலைக்கான கருவிகளையும் எமக்கு விட்டு விட்டு எங்களை இட்டு வந்த கப்பல் திரும்பி விட்டது.
ஒரு பெரிய பாறைக்கு அருகாமையில் நாம் கூடாரம் நிறுவினுேம். ஒரு சில சிறிய முலையூட்டிகள் மட்டுமே அங்கு காணப்பட்டன. ஆனல் ஏராளமான பறவைகள் தென்பட்டன. மரங்களில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் ஆகிய வர்ணங்களில் கிளிகளைக் காண முடிந்தது. கரிய சிறகுகளையும் வால்களையும் கொண்ட அழகிய வெள்ளைநிறப் புருக்கள் மென்மையான கீதங் களை இசைத்தும் இறைக்கைகளைப் பண் பாக அடித்தும் காற்றில் மிதந்தன.
ஒவ்வொரு நாளும் விடியத் தொடங்கியதும் தீவின் ஒவ் வொரு பொந்தையும், மூலையையும் ஆராய்ந்து புதிய பறவை களை அடையாளம் கொள்ளும் முயற்சியைத் தொடங்கி விடு வேன். பின்னர் அந்தந்த நாளுக்கான பறவைகளைப் பிடிப்பதற்கு ஆயத்தம் செய்யுமுன் இளைப்பாறுவதற்கும் நீரில் விளையாடு வதற்கும் எனது கூடாரத்திற்குத் திரும்புவேன். பிற்பகலில் நாங்கள் மீன் பிடித்தோம். காலநிலை தொடர்ந்து சிறப்பாக இருந்தது. பகல் நேரம் வெப்பமாக இருந்தது. ஆனல், இரவு கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தன.
நிறைவுற்ற மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் ஐந்து நாட்கள் வாழ்ந்தேன். ஆனல், என்னுடைய தீவுக்கனவை முடித்து விடு வதற்குள் கப்பல் வந்து விடும் என்பதையிட்டுக் கவலைப்பட் டேன். ஆனல், ஐந்தாவது நாளன்று இருள் கழிந்ததே அன்றிக் கப்பல் வரவில்லை. அடுத்தடுத்து நாட்களும் வந்துபோயின. ஆயினும் கப்பல் வரவில்லை. எங்களுடைய பாணின் கடைசித் துவிடும் முடிந்தது. ஆனல் பறவைகளைச் சுடுவதற்கு எனக்கு ஏதுவாயிற்று.
பிலிப்பினேக்களின் மன உறுதி தளரத் தொடங்கியது" ஆனல் நான் மனம் தளரவில்லை. மிகு மகிழ்ச்சியுடன் இருந்தேன்" இரவில் மரங்களில் ஏறிப் பறவைகளை நாம் பிடித்தோம். மீன்
122

பிடிப்பது எளிதாக இருந்தது. உப்புப் பெறுவதற்குக் கடல் நீரை வெயிலில் காயவைத்தோம். இவ்வாறு எளிதாக உணவு கிடைக் கும் தன்மையால் நாம் பட்டினியால் மடியப் போவதில்லை.
இவ்வாறு இரு கிழமைகளாக, நாம் வாழ்ந்தோம். பின்னர் ஒரு நாள் ஒரு சிறிய புகைப்படலம், வானத்திற்கு எதிராகத் தோன்றியது. அந்தச் சிறிய கப்பல் தீவினை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு பக்கமாகப் படகு ஒன்று இறக்கப்பட்டு இரு கப்பலோட்டிகள் அதனை எங்களுடைய சிறிய விரிகுடா விற்குள் கொண்டு வந்தனர். நன்கு சமைக்கப்பட்ட புரு இறைச் சியை நாம் உண்டு கொண்டு இருந்ததை அவர்கள் கண்டனர். அவர்களுக்கு அதில் ஒரு பங்கு கொடுத்தோம். பாறைக்கு அரு கில் இருந்த கூடாரத்தில் இருந்து, எங்களுடைய சில பொருட் களை மூட்டை கட்டும்போது எனக்குத் துக்கமாக இருந்தது. அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்த அவ்வாறன சூழ்நிலையில் திரும்பவும் ஒருபோதுமே வாழமுடியாதென்பது எனக்குப் புரிந் திது.
கப்பலை நாம் அடைந்தபோது கப்பல் தலைவன் ஏறத்தாழ மன உறுதி தளர்ந்து சோர்வுற்றிருந்ததைக் கவனித்தேன். நாம் எத்துணை மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் நாட்களைக் கழித் தோம் என்பதனை அறிந்த போது அவன் சினந்தான். கப்பலின் எந்திரத்தின் ஒரு பகுதி உடைந்து விட்டதனுல், நாம் அப்பாலை வனத்திலே இறந்து போவோமோ என்று அவன் மிகவும் பயந் திருந்தான்.
"அல்பட்றெஸில்" என் பயணம்
'அல் பட்ருெஸ்' கப்பலை க ைவட் என்னுமிடத்தில் நான் சேர்ந்தேன், பின்னர் அது தெற்கு நோக்கி ' சுலு கடல்' வழி யாகச் சென்று பிரிட்டிஷ். வட போனியாவில் "ரூவா ஒ” என்னு மிடத்தில் சற்றுத் தங்கி, பின்னர் நிலக்கரிக்காக சிபற்றிக் விரி குடாவிற்குச் சென்றது. அது சிபற்றிக் விரிகுடாவில் தங்கிய அந்நாள் மிக வெப்பமாக இருந்தது.
நேரான சுவரைப் போன்று காடும், நெடித்துயர்ந்த பெரிய 'கற்பூர' மரங்களும், ‘‘மன்னன்' மரங்களும் மென்மேலும் உய ர்ந்து அவற்றின் உச்சிகள் வானத்தைத் தொடுவது போன்று வளர்ந்து நிற்பதுமான காட்சி, எனது மனதில் நிலவுகின்றது.
I 23

Page 69
எனது காதுகள் வலி எடுக்கும் வகையில் ரீங்காரமிட்டுக்கொண்டு வானத்தில் பறந்து செல்லும் எண்ணிக்கையற்ற பூச்சிகள் எழுப் பிய சப்தங்களை நான் இன்னும் கேட்பது போன்று தோன்று கின்றது. பின்னர் பிற்பகல் நான்கு மணியளவில் எங்கணும் நிசப்தமாக இருந்தது. காடு பூராவும் முற்ருன அமைதி நிலவ கடலிலிருந்து மேகங்கள் விரைந்தெழுந்து வானத்திலிருந்த ஆறு கள் போன்று மழை கொட்டின. திடீரென மழைப்புயல் நின்றது. வெப்பமான ஈரக் கசிவான மேகங்கள் காட்டை நிறைத்திருந்ததாகத் தோன்றியது. திரும்பவும் முன்னரிலும் அதிக சப்தத்துடன் பூச்சிகள் ரீங்காரமிடத் தொடங்கின. காட்டு மிருகங்கள் புயல் காரணமாக ஒதுங்கியிருந்த நிலையினின்று வெளி ப்பட்டு தங்களது தனிப்பட்ட வாழ்க்கைகளைத் தொடங் கின.
நான் காட்டு வழியாகச் செல்வதற்குச் செய்த முதலாவது முயற்சியும் எனக்கு நினைவில் இருக்கின்றது. ஒரே ஒரு தடவை காட்டினுடாக நான் வலிந்து வழிகோல முயன்றேன். கூர்மை யான இலைகளைக் கொண்டு கம்புகள் கிளைகளுக்கிடையே இருபது இடங்களில் நான் அகப்பட்டு முன்னேருது தடுக்கப்பட்டேன். எனது உடம்பு அவற்றின் நடுவில் அகப்பட்டு எனது கைகளும் கால்களும் நெருக்கி அழுத்தப்பட்டன. எனது ஒவ்வொரு அசை வும் நோவைக் கொடுத்தது. ஒவ்வொன்ருக அவற்றை இழுத் தெடுத்து என்னை விடுதலையாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.
எனது வாழ்க்கை பூராவும் பாம்புகளுக்கு நான் அஞ்சி னேன். அவற்றினை நான் கட்டாயமாகத் தொடவேண்டிய நிலை யில் இருந்தேன். ஆயினும் அரும் பொருட்சாலைக்காக நூற்றுக் கணக்கான பாம்புகளைக் கொண்டு வந்துள்ளேன். உண்மையில் காட்டில் அநேக பாம்புகள் காணப்படுமென நினைத்தேன். எனது தொழிலின் பெயரில் அவற்றினைக் கண்டு கொள்வதற்கு முயன் றேனெனினும், தாவரங்களின் அடர்த்தியின் காரணமாகவும் பாம்புகள் பல வர்ணங்களைக் கொண்டிருந்தமையாலும் முற்ருக அவை என் பார்வையிலிருந்தும் தப்பிவிட்டன. ஆயினும் ஒரே ஒரு விதிவிலக்கு இருந்தது. ஒரு சிறிய காட்டுப் பாதையால் எனது பிலிப்பினே உதவியாளனுன மிராண்டாவுடன் நான் போய்க்கொண்டிருந்த போது அவன் தனது முழுச் சக்தியுடனும் திடீரென என்னைப் பின்னுக்கு இழுத்தான்.
124

'நில்! நேரே பார்! ஒரு பெரிய பாம்பு அதனைச் சீக்கிரம் சுடு" என்று கூறி அதனைச் சுட்டிக்காட்டினன். நான் பார்த்தேன், ஆனல் பயனில்லை. பாம்பு எதனையும் பார்க்க முடியவில்லை. ஒரு பெரிய மரம் பாதைக்கு மேலாக வளைந்து நின்றது. “அதோ அதோ ‘'நீ அதனைப் பார்க்கவில்லையா? சரியாக அந்தக் கிளையின் மேல் இருக்கின்றது.’ என்று மிராண்டா கூறிக்கொண்டே யிருந் தான.
திடீரென ஒரு பெரிய காற்று மரத்தை அசைத்தது. சூரிய ஒளிக்கற்றை யொன்று மரங்களுக்கூடாகப் புகுந்தது. அது கிளை யுடன் அழுந்தியிருந்த பெரும் தட்டையான தலையில் அமைந் திருந்த மின்னும் கண்ணிற் பதிந்தது. அதனைத் தொடர்ந்து பின்னல் பார்த்தபோது மரத்தில் நீண்டு கிடந்த பல யார் நீளமுள்ள பாம்பை நான் கண்டேன். அசைகின்ற எந்தவொரு பொருளின் மேல் விழுவதற்கும் அது ஆயத்தமாக விருந்தது. நான் பின்னல் நகர்ந்து மின்னுகின்ற அக் கண்ணை நோக்கி எனது துவக்கை நீட்டினேன்.
துவக்கின் வெடிச்சத்தம் காட்டை ஒரு புயல் தாக்கியதா கத் தோற்றுவித்தது. மூர்க்கம் கொண்ட, நெளிந்து துடிக்கின்ற உடம்பொன்று தாவரங்களைக் கிழித்தும் சிறு மரங்களை முறித் தும் அடர்ந்த புதருக்குள் சென்று தன்னை மறைத்துக் கொண் டது. மிரண்டாவும் நானும் ஓடினுேம். ஒரு பாதுகாப்பான தூரத்தில் நின்று கவனித்தோம். பின்னர் மெதுவாகவும் கவன மாகவும் நாம் திரும்பிச் சென்ருேம். அங்கே தரையில் அப் பாம்பு கட்டுப்பாடின்றிச் சுருண்டு அசைந்து கொண்டு கிடந்தது. அதன் தலை அடிபட்டிருந்தது. அதன் உடலை நீட்டமாக்கிய போது 20 அடி நீளமாக அது இருந்ததைக் கண்டோம். அந்தப் பெரிய பாம்பு அதிக பசியுடன் இருந்திருக்க வேண்டும். மிருகங் கள் நீரைக் குடிப்பதற்காக பயன்படுத்தும் அவ்வழியில் செல் லும் எப்பிராணியின் மேலும் விழுந்து அதனைக் கொல்வதற்கு அப்பாம்பு மரக்கிளை யில் படுத்திருந்திருக்க வேண்டும். மிராண் டாவின் கூர்மையான கண் கள் என்னைப் பயங்கரமான மரணத்தி லிருந்து காப்பாற்றின என்பதில் ஐயமில்லை.
அல்பட்ருெ ஸில் பயணஞ் செய்த ஒவ்வொரு நாளும் ஆர்வ மூட்டுவதாக இருந்தது. கப்பல் அருகாமையிலிருந்த கடலில் ஆராய்ச்சி நடாத்தும் தறுவாயில் மனித சஞ்சாரமற்ற சிறிய தீவில் நான் அடிக்கடி இரண்டொரு நாட்களைக் கழித்தேன்.
125

Page 70
அதிசய தோற்றமுடைய மிருகங்களை நான் வேட்டையாடினேன். என்னை வியப்பில் ஆழ்த்திய அழகிய பறவைகளையும் எண்ணி றந்த பறவைக் கூட்டங்களையும் கண்டேன். இயற்கை வரலாற் றில் ஆர்வங் கொண்டிருந்த ஒருவனுக்கு அஃது ஒரு விண்ணகமாக இருந்தது.
சுலு கடல் வழியாகச் சென்று செலிபஸ் கடலைக் கடந்த பின்னர், அல் பட்ருெஸ், பிலிப்பீன் தீவுகளுக்குத் திரும்பி அத னுடைய மூன்ருண்டுப் பயணம் முடிந்து விட்டதையடுத்து, இரு கிழமைகளளவில் அங்கு தங்கியது. பின்னர் வடக்கு நோக் கிப் புறப்பட்டு போர்மோசாவின் தென் முனையை அடைந்தது. நான் அங்கே புதிய முலையூட்டிகளையும் பறவைகளையும் சேகரித் தேன். பின் அக்கப்பல் வடக்கில் இருந்த சூ வான் என்னும் சிறிய கிராமத்தை அடைந்தது.
அல்பட்ருெஸ் கப்பலும் அதிலிருந்தவர்களும் இவ்வுலகில் கடைசியாக தங்கக் கூடியதாக இருந்த இடம் சூ வான் கிராம மாகும். குருவளி (டைபூன்) யொன்றில் அங்கே தான் நாம் அகப்பட்டோம். குருவளி (டைபூன்), சக்தியுடைய காற்றும் பெரும் மழையும் கொண்ட ஒரு பெரும் புயல். சூரு வளி பற்றிய அனுபவம் எனக்குக் கிடைக்க வேண்டுமென்று நான் எப்போதும் விரும்பி இருந்தேன். ஆனல் அனுபவித்த அந்த ஒன்றும் போது
10ானது.
சூவானிலிருந்து 40 மைல் தூரத்தில் நாம் இருந்த போது எதிர்பாராத நேரத்தில் சூரு வளியில் சிக்குண்டோம். அதன் ஆரம்பத்தில், எங்களுக்கு இடப்புறமாக ஒரு சில யார் தூரத் தில் ஒரு சிறிய ஆங்கிலேயக் கப்பலை நாம் கடந்து சென்ருேம். அந்தப் படகின் பின்புறமாக பெரும் பச்சை நிற அலை ஒன்று எழும்பி மனிதனுெருவன, அவன் ஒரு மூட்டைப் பூச்சி என்ற வகையில், படகிலிருந்து கடலுக்குள் இழுத்து அமிழ்த்தியது. வெள்ளை முடி கொண்ட அலைகளின் பெரும் பாழில் தவிக்கும் ஒருவன் விழுந்து திடீரெனப் பார்வையிலிருந்து மறைவது பயங் கரமான ஒரு அனுபவமாகும்.
இது காறும் நல்லுழைப்பு வழங்கிய ‘அல்பட்ருெ ஸ்' தனது 28 ஆண்டுச் சேவையைக் கடலில் அடித்தளத்தில் முடித் துக் கொள்ளும் என்று நாம் உணரத் தொடங்கினுேம், சில மணி நேரத்தில் பயங்கரமான கடல் நீர் எம்மையும் அமிழ்த்தி விடுவதையும் உணரலாம். நடுக்கமான நிசப்தம் கப்பலில் குடி
126

கொண்டது. இயற்கையின் சக்தியை எதிர்த்து நாம் உயிர்ப் போராட்டம் நடத்தினுேம். இயற்கையின் வலிமைக்கு எதிரே எமது எங்கே? காற்றினதும் சிதறியெழும் அலைகளினதும் ஒலி களுக்கு மேலாக எவரும் பேசுவதைக் கேட்க முடியாததால் எவருமே அதிகமாகப் பேசவில்லை. ".
"அல்பட்ருெ ஸ்’ மலைபோன்று எழுந்த பச்சை நிற அலை களுக்குள் நேராகச் சென்று கொண்டிருந்தது. அவ்வலைகள் கப்ப லின் முன்புறம் ஒவ்வொரு தரமும் தாழ்ந்து டோகும் தறுவாயில் கப்பலைப் பூரணமாக மூடி அகன்றன. இடப்புறமாக ஒரு மைல் தூரத்தில் வெள்ளை நீரால் மூடப்பட்ட கரைக்கு மேலிருந்த ஒரு மதிலைப் போன்று, உயர்ந்த செங்குத்தான பாறைகள் எழுந்தன. ஒவ்வொரு அடிஅடியாக 20 மைலுக்கப்பால் வடக்கி லிருந்து கீலங் எனும் இடத்தை நோக்கிக் கப்பல் முன்னேறியது. சில சமயங்களில் முன்னேற்றம் கொண்டதிலும் பார்க்கப் பின் நோக்கிக் கப்பல் தள்ளப்பட்டது அதிகமாகும். ஆயினும் சக்தி வாய்ந்த அலைகளை எதிர்த்து மற்றுமொரு போராட்டத்திற்கு மீண்டும் அது ஆயத்தமாக மாறியது. இங்கு மனிதன் இயற் கையை எதிர்த்துப் போராடினன். கப்பலில் இருந்த ஒவ்வொரு வரும் போராட்டத்திற் பங்குபற்றினர். நான் பயம் கொள்ள வில்லை. மற்றவர்களும் பயந்ததாகத் தெரியவில்லை. "அல்பட் ருெஸ்” சூரு வளியால் அடிக்கப்பட்டுப் பின்வாங்கும் போது எங்களுடைய உள்ளம், இருதயம் வலிமை ஆகிய அனைத்தும் அதற்கு உதவும் முகமாகச் செயற்பட்டன.
இரவானதும் எமது இடப்பக்கத்தில் வெளிச்சங்கள் தெரிந் தன. ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் உடைந்து தகர்ந் திருந்ததெனினும் உயிருடன் கீலங் என்ற கிராமத்தை "அல்பட் ருெ ஸ்' அடைந்தது.
கப்பல் பழுது பார்க்கும் வரை நாம் கீலங்கில் ஒரு கிழமை தங்கினுேம். பின்னர் ஒக்சின வாவுக்கும் யப்பானில் நாகசாகி எனும் இடத்திற்கும் சென்ருேம். அங்கே "அல்பட்ருெசில்”* நான் செய்த பயணம் முற்றுப் பெற்று வேறு வகைக்கான புதிய பயணம் ஆரம்பமாயிற்று.
யப்பானில் திமிங்கில வேட்டை
நாகசாகி பட்டணத்துச் சந்தையில் நான் மேற்கொண்ட ஒரு உலா எனது வாழ்க்கையில் பூரண மாற்றத்தைத் தோற்று
127

Page 71
வித்தது எனலாம். அச்சந்தையில் திமிங்கில இறைச்சி பெரிய துண்டங்களில் உணவு பொருட்டு விற்கப்பட்டது. யப்பானில் கரையோரமாகத் திமிங்கில வேட்டை நடப்பது எனக்குத் தெரி யாது. பசிபிக் பிரதேச திமிங்கிலங்களைப் பற்றிய விபரங்கள் அக்காலத்தில் அறியப்படாதிருந்ததால் அவை பற்றி ஆராய்வ தற்கு யப்பானில் நான் தங்கமுடியுமாயின் இயற்கை வர லாற்றுக்கு அது பெருஞ் சேவையாக இருக்குமென நான் கருதி னேன். அரும் பொருட்சாலையினர் அவ்வாறு நான் தங்குவதற்கு மகிழ்வுடன் அனுமதி வழங்கினர்.
திமிங்கில வேட்டைக்கான கம்பனி ஷிமொனெசெக்கி என் னும் இடத்தில் இருந்தது. நான் அடுத்த நாளே அங்கு சென் றேன். அங்கிருந்தோரனை வரும் என்னுடன் மிக நட்புறவு கொண்டு, தம் வேட்டை நிலையங்களில் ஒர் அமெரிக்கன் ஆய்வு செய்வது பற்றி அகமகிழ்ந்தனர். அமெரிக்க அரும்பொருட் சாலைக்குத் தேவையான எலும்புக் கூடுகளை நான் எடுத்துச் செல்ல அனுமதித்தனர். சில நாட்களுக்குப் பின் ஒலிமா எனும் ஒரு சிறிய மீன்பிடிக் கிராமத்தில் எனது ஆராய்ச்சியில் ஈடு
பட்டேன்.
அப்போது திமிங்கில வேட்டைப் பருவத்தின் நடுப்பகுதிக் காலம். ஒவ்வொரு நாளும் ஒரு திமிங்கிலமேனும் பிடிக்கப் பட்டது. மிகக் குறுகிய காலத்தினுள் சந்தைக்கு இறைச்சியை அனுப்பிவைப்பது பெரும் முக்கியத்துவம் கொண்ட அம்சம். திமிங்கிலம் ஒன்று வந்தடைந்தவுடன், ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் யாவரும் சேர்ந்து இறைச்சியைப் பெருந்துண் டங்களாக வெட்டுவர். இறுதி இறைச்சித் துண்டமும் சந் தைக்குப் போகும் வரை வேலை நிறுத்தப்படமாட்டாது.
பல்காலும் திமிங்கிலம் நள்ளிரவில் வந்து சேரும். எனது வேலையைச் செய்வதற்காக மட்டுமன்றி, அங்கு நிலவும் அதி சயக் காட்சிகளைக் காண்பதற்காகவும் நான் எப்பொழுதும் கடற் கரைக்குப் போவேன். நிலையம் எண்ணெய் விளக்குகளால் ஒளி யூட்டப்பட்டு இருக்கும். ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள், குழந்தைகள் அனைவரும் வெளிச்சத்தில் பிரகாசிக்கும் இரத்த வெள்ளத்தினூடாக நடப்பர். சில வேளைகளில் தரையை மூடிக் கிடக்கும் கொழுப்பில் விழுவர். மலை போன்று வெது வெதுப் புடன் குவிந்து கிடக்கும் இறைச்சியை இழுத்தெடுப்பர். பெரிய எலும்பு இழுத்தெடுக்கும் போது ‘யற குறசோ' என்று அர்த்த மில்லாது பாடுவர்.
128

மறறவர்களைப் போன்றே நானும் கடுமையாகவும் நெடு நேரமும் வேலை செய்வேன். ஏனெனில் இரத்த மும் கொழுப் பும் அகற்றப்பட்ட பின்னர் அங்கு நடைபெற்றவற்றை இட்டு குறிப்புகளையும் திமிங்கிலங்களைப் பற்றிய அளவீடுகளையும் அவை எனது நினைவிலிருந்து அகலமுன்னரே எழுதவேண்டியிருந்தது. நான் வழக்கமாக இரவில் ஐந்து அல்லது ஆறு மணி நேரமே உறங்கினேன். இங்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்ன வெனின் அத்திலாந்திக்கிலும் பசுபிக்கிலும் வாழும் திமிங்கிலங் கள் ஒரே மாதிரியானவையா அல்லது வேறுபட்டவையா என் பதை அறிந்து கொள்வதே. ஒரு சமுத்திரத்தில் இருந்து அவை மற்ருென்றுக்குச் சென்றனவா? எதிர்கால ஆராய்ச்சி பொருட்டு ஒவ்வொரு திமிங்கிலத்தையும் நான் படமெடுத்ததுடன் அதற் குரிய 40 அளவீடுகளையும் கணித்து எலும்புக் கூடுகளை அமெரிக்க அரும்பொருட்சாலைக்கு அனுப்பவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.
ஒவதிமாவிலிருந்து யப்பானின் வடக்கிலிருக்கும் அய்க்கவா எனும் கிராமத்திற்கு நான் சென்றேன். திமிங்கில வேட்டைக் கொம்பனியின் பெரிய நிலையங்களுளொன்று அங்கு இருந்தது. அக்கிராமத்தில் விரிகுடாவைப் பார்த்துக் கொண்டு நின்ற அழ கான ஒரு சிறிய வீட்டில் நான் வசித்தேன். கடற்கரையில் "பைன்’ மரங்கள் வரிசையாக நின்றன. மிகவும் வயது முதிர்ந் தனவாய்த் தோன்றிய அம்மரங்கள் தம் பல நூற்ருண்டுக் கால சீவிய காலத்துள் அதிக அளவு வரலாற்றினைக் கண்டு கழித்ததன் காரணமாக இன்றைய வாழ்க்கையில் உற்சாகமிழந்து விட்ட னவாகக் காணப்பட்டன.
அய்க்கவா நிலையத்தில் 14 கப்பல்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் நோர்வே நாட்டு துவக்கு இயக்குநன் ஒருவன் இருந்தான். நோர்வேயிடமிருந்தே யப்பான் திமிங்கில வேட் டைத் தொழிலைக் கற்றிருந்தது. உயிருள்ள திமிங்கிலங்களைப் பற்றி ஆராயவும் அவற்றைப் படமெடுக்கவும் அக்கப்பல்களில் நான் பயணம் செய்தேன். ஒகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட எனது உயிரை இழக்கும் வகையில் ஓர் அனுபவம் எனக்கு ஏற் Lu L -L-gil -
நான் யோன்சன் எனும் பெயருடைய ஒருவனுடன் இருந் தேன். அவன் யப்பானில் சிறந்த துவக்கு இயக்குவார்களில் ஒருவனுக இருந்தபோதும் எங்களுள் ஒருவனும் அவனை விரும்ப
129

Page 72
வில்லை. நாங்கள் ஒரு திமிங்கிலத்தின் மீது ஒரு ஈட்டியைச் சுட்டோம். ஆணுல் அது அத்திமிங்கிலத்தின் தோள்களிடையே அதனைத் தாக்கியது. கடும் காயத்தை ஏற்படுத்தாவிடினும் ஈட்டி முனைக் கயிறு திமிங்கிலத்தைத் தப்பிக் கொள்ளா வண்ணம் கப்ப லுடன் தொடுத்து வைத்திருந்தது. தாக்கப்பட்டவுடன் விரை ந்து சென்ற திமிங்கிலம் ஒரு மைல் தூரம் வரை அக்கயிற்றைத் தன்னுடன் இழுத்துச் சென்றது. பின்னர் கயிற்றின் இறுதிை அடைந்ததும் திமிங்கிலம் தன்னல் இயன்ற வேகத்துடன் கப்பலை இழுத்துச் சென்றது. ஒரு மணி நேரமாக அவ்வாறு இழுத்துச் சென்ற பின் அதன் வலிமை குன்றத் தொடங்கியது. மெதுவாக உள்நோக்கி இழுக்கப்பட்ட ஈட்டிக் கயிறு தீடீரென அறுந்தது. திமிங்கிலம் தப்பிக் கொண்டது. அதனை அனேக மணித்தியாலங் களாகத் தேடினுேம். ஈற்றில் துவக்கு இயக்குவோன் மற்றுமோர் ஈட்டி முனை கொண்டு அதனைச் சுட்டான்.
“அதனை உள் இழுப்பதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது. நான் ஒரு போதும் இத்துணை வலிமையுள்ள திமிங்கிலத்தைக் கண்டதில்லை. அதனை ஈட்டியினுற் குத்தி வருவதற்கு நான் ஒரு படகை அனுப்புகிறேன்' என்று யோன்சன் கூறினன்.
'நான் போகலாமா?’ என்று நான் அவனைக் கேட்டேன் “சரி” பிரும் (படகு) எடுத்துக்கொள்' என்று பதிலிறுத்தான்.
"பிரும்' என்று அழைக்கப்படும் நோர்வே நாட்டுப் படகு மூன்று அல்லது நான்கு ஆட்கள் பயணம் செய்வதற்கு இடம் கொண்டதாகும். அதன் பிற்புறம் நீரில் ஆழமாகத் தங்குவதற்கு அமைக்கப்பட்டது. ஒரு பந்தின் வட்டப் பாதி எப்படிச் சுற்றித் திருப்பப்படலாமோ அது போன்றே அதனையும் விரும்பியபடி இலகு வில் திருப்பலாம். யப்பானிய உயர்ந்த கடல் அதிகாரி ஒருவன் நீளமான மெல்லிய ஈட்டியைக் கொணர்ந்தான். ஒரு மாலுமி யும் நானும் படகைச் செலுத்தினுேம் .
திமிங்கிலம் ஏறக்குறைய கால் மைல் தூரத்தில் நீரின் மேற் பாட்டில் கிடந்தது, அது இடைக்கிடை மெதுவாகப்பெருமளவு நீரை உமிழ்ந்தது. அதன் பின்புறமாக எமது சிறிய படகு அத்னை நோக்கிச் சென்ற போது அதன் உடம்பு படிப்படியாக நீரி லிருந்து வெளிவந்தது. மலையைப் போன்று அது அத்துணை பெரிதாயிற்று. உண்மையில் அதன் நீளம் 72 அடியாகும்.
I 30

அதனைப் படகு தொடும்வரை நாம் அதனை நோக்கிச் சென்ருேம். அத்திமிங்கிலத்தின் உடலுள் தனது ஈட்டியை அவ் வதிகாரி ஆழமாகப் பாய்ச்சினன். அதன் உடம்பு நனைந்த மலை யைப்போன்று உயர்ந்து பின்னர் கீழே தாழ்ந்தது. எனது தோள் கள் சில அங்குலத்தால் தப்பின. ஆனல் படகின் பக்கம் உடைந் திதி.
நான் நீரில் விழுந்தேன். என் கனமான உடைகள் மேலும் என்னைக் கீழே அமிழ்த்தின. நான் மேலே வந்த போது எனது தலை மரப்பலகையில் மோதியது. நான் படகில் எஞ்சியிருந்த பகுதியைப் பற்றிக் கொண் டேன். யப்பானிய அதிகாரி உடைந்த படகைப் பிடித்துக் கொண்டிருந்தான். மாலுமி இறந்து விட்ட தைப் போன்று முதலில் தோன்றியது. ஆனல் பின்னர் அவன் திரும்பி ஒரு பலகைத் துண்டைப் பிடிக்க முயற்சித்தான். திமிங் கிலம் அதன் பக்கமாகக் கிடந்தது. இரத்தம் அதனுடைய மூக்குத் துளையிலிருந்து வெளிவந்தது.
திடீரென நிலக்கரி நிறமுடைய உடல் கொண்ட கூட்டம் ஒன்று மடியும் திமிங்கிலத்தின் மேல் பாய்வதை நான் கண்டேன். திமிங்கிலத்தின் இறைச்சியையும் கொழுப்பையும் துண்டம் துண் டங்களாக அவற்றின் கூரிய வாய்கள் பிய்த்தெடுத்தன. இரத்த அறிகுறிகளைத் தொடர்ந்து நூற்றுக்கணக்காக அவை - சுரு மீன்கள் - வந்தன. ஒரு பெரிய தலை எனது காலில் முட்டி அதன் திறந்த வாயுடன் என் பக்கமாகத் திரும்பியது. அதனை நான் எனது காலால் தாக்கினேன். அது திரும்பிற்று. மற்றென்று எனது கரத்தின் கீழ் பக்கமாக வந்தது. நான் அதனை மூக்கினில் எனது கரத்தால் அடித்தேன். பயத்தினுல் பெரிதும் நடுங்கினே னெனினும் படகிலிருந்து ஒரு துண்டை உடைத்து அதனை அடி தடியாகப் பயன்படுத்தும்படி முன் யோசனையுடன் அதிகாரியை நோக்கி உரத்துக் கூறினேன். ஒவ்வொரு தடவையும் சுரு மீன் எங்கள் பக்கமாக வந்த போது அதனை நாம் அதன் வாயிலோ அல்லது தலையிலோ அடித்தோம்.
சுரு ஒன்று எனது சப்பாத்தின் முனையைக் கவ்விக் கொண் டது. நான் அதனை மூர்க்கத்துடன் தாக்கினேன். ஈற்றில் சப் பாத்து அதன் வாயில் தங்கிவிட்டது. இரத்த உருசி கொண்ட அம்மிருகங்கள் அசைந்த எந்த ஒரு பொருளின் மீதும் பாய்ந் தன. ஒரு சுரு மீன் திரும்பி வந்து யப்பானிய மாலுமியின் காலைத்தன் வாயினுல் கவ்வியது. அவன் தாங்க முடியாத வேதனை யால் ஓலமிட்டுக் கொண்டு படகுப் பலகைத் துண்டிலிருந்து
131

Page 73
நழுவிக் கடலில் விழுந்தான். ஆனல், நான் அவனுடைய மயி ரைக் கொண்டு அவனைப் பிடித்து படகின் பக்கமாக இழுத்து விட்டேன். சில நிமிடங்களுக்குப் பின்னர் வேட்டைக் கப்பல் எம்மைத் தாண்டிச் சென்றது. யோன்சன் துவக்கை இயக்கிக் கொண்டிருந்தான்.
நான் அவனின் கவனத்தைப் பெறும் நோக்கத்துடன் ப மாகக் கத்தினேன். ஆனல் அவன் தனது கையை மட்டு அசைத்துச் சைகை செய்தான். அவன் கப்பலை மெதுவாகவும் கவனமாகவும் நெறிப்படுத்தி திமிங்கிலத்தினுள் ஓர் ஈட்டி முனையை துவக்கின் மூலம் பாய்ச்சினன்.
ஈற்றில் திமிங்கிலம் நீரினுள் அமிழ்ந்தபோது படகொன்று கப்பலில் இருந்து விடப்பட்டது. இரு மாலுமிகள் எங்களைப் படகில் ஏற்றிக் கொண்டனர். ஜப்பானிய அதிகாரி அழுது கொண்டு இருந்தார். ஆனல் நான் கடும் கோபமுற்று இருந் தேன். துவக்கருகே நின்றுகொண்டிருந்த யோன்சனுக்கு எதிரே நான் சென்றேன். மகிழ்வுடன் அவன் முறுவலித்தான்.
"எவ்வாருயினும் திமிங்கிலம் எமக்குக் கிடைத்துவிட்டது. அதனை இழந்து விடுவோமோ என்று அச்சமுற்றேன் என்று அவன் கூறினன்.
"ஆம், எங்களைச் சுரு மீன்களிடம் விட்டு விட்டு நீ உன் வேலையைச் செய்தாய், ஏன்?" என்று கேட்டேன்.
"நாம் திமிங்கிலத்தை மேல் இழுத்தபோது ஈட்டி வெளியே வந்திருக்கும். அது தண்ணிரில் தாழமுன்னர் இன்னெரு ஈட்டி யைச் செலுத்த வேண்டிய அவசியம் இருந்தது."
"எங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை நீ பார்த்தாய் இல்லையா?*
ஆம் உங்களைச் சுற்றி ஒரு சில சுரு மீன்கள் இருந்தன. ஆயினும் நீங்கள் கஷ்டப்படவில்லையே. நீங்கள் அவற்றிற்குப் பயப்பட்டு இருக்கத் தேவை இல்லையே."
ஒரு கணம் நான் அவனைப் பார்த்தேன். பின்னர் நான் செயற்படத் தொடங்கினேன்.
132

"யோன்சன் நீ ஒன்றுக்கும் உதவாத உணர்ச்சியற்ற ஒரு மிருகம்”. நான் அவனைத் தாக்குவதற்கு முயன்றேன். அவன் தனக்கு என்ன நேரிடப் போகின்றது என்பதனை உணர்ந்து தனது தலையைத் திருப்பினன். எனது கை அவனது முகத்தைத் தொட்டது. நான் கோபங்கொண் ட ஒரு குழந்தை என்ற முறை யில் அவன் என்னைப் பார்த்தான்.
‘'நீ சற்றுச் சீற்றம் கொண்டுள்ளாய். நடந்தவற்றை மற த்து விடுவாய், முட்டாளாக நடக்காதே என்று அவன் கூ ன்.
Cp (GE)
பின்னர் அவன் இறந்து போன திமிங்கிலத்தின் உடலைக் காணக் கூடியதாக இருந்த நீருக்குள் பார்க்கும் நோக்கத்துடன் திரும்பினன். அவ்வாறன மனிதனை என்ன செய்யலாம். அவ னிடம் மனிதத்தன்மை காணப்படவில்லை. நான் அவனை விட்டு அகன்றேன். யப்பானிய மாலுமி முழங்காலுக்குக் கீழே தன் காலை இழந்தான். யோன்சன் தனது வேலையை இழந்தான். நான் அவனை மீண்டும் சந்திக்கவே இல்லை. பனி நிறைந்த அன் டாக்டிக் கடலுக்குப் போயிருந்தான் என்று அறிக்கைகள் கூறின. அப்பிரதேசத்திற்கே இவன் அருகதையானவன்.
கோடைக்கால முடிவில் நான் நான்கு பெரிய திமிங்கிலங் களின் எலும்புக் கூடுகளையும், 12 போப் பசுக்களையும் இரண்டு கொல்லித் திமிங்கிலங்களையும் நியூயோக்கிற்கு அனுப்பினேன். அமெரிக்க அரும் பொருட்சாலை இவ்விலங்குத் தொகுப்புகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டது. அவற்றுள் பெரும்பாலா னவை இன்றும் சமுத்திர வாழினங்கள் மண்டபத்தில் தொங்கு கின்றன.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகக் கிழக்குப் பிரதேசங் களில் வாழ்ந்துவிட்டு வீடு நோக்கி நான் புறப்பட்டேன். பல மாதங்களாக நான் அரும்பொருட் சாலைக்கு விஜயம் செய்தும் ஆர்வமுள்ள மக்களைச் சந்தித்தும், ஐரோப்பாவினூடாகப் பய ணம் செய்தேன். என்னிடமிருந்த பணம் முழுவதும் செல வழிந்த பின்னரே நான் நியூயோக்கிற்குப் பயணமானேன்.
கொரியாவில் ஆராய்ச்சி செய்தல்
யப்பானில் இருக்கும் போது கொரியாவின் கடற்கரைக்கப் பால் பிடிக்கப்பட்ட அதிசயமான திமிங்கிலம் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். இத் திமிங்கிலம் கலிபோணியாவின் சாம்பல் நிறத் திமிங்கிலத்தைப் பெரிதும் ஒத்திருந்ததாக அறிந்
133

Page 74
தேன். ஆனல், அவ்வகையான திமிங்கிலம் 50 ஆண்டுகளாகக் காணப்படவில்லை. மேலும், அத்திமிங்கிலங்கள் அனைத்துமே இறந்து விட்டன என்றும் கருதப்பட்டது. நான் கொரியாவுக் குச் சென்று அந்த அதிசயமான திமிங்கிலம் எப்படிப்பட்டது என்பதனை அறிந்து கொள்ள விரும்பினேன். அன்றியும் வட கொரியாவின் பெருமைமிக்கக் காடுகளை "நெடிய வெள்ளை மலை’ என்று வழங்கப்படும் பாய்க் - தோ - சான் வரைக்கு சென்று ஆராய்வதற்கும் நான் விரும்பினேன்.
அமெரிக்க அரும்பொருட்சாலை எனக்குத் தேவையான பனின த்திலே பாதிக்கும் குறைந்த தொகையைக் கொடுக்கக் கூடிய தாக இருந்தது. ஆனல் சிமித்சோனியன் நிறுவனம் தங்கட்கு ஒரு திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டை நான் அனுப்பினுல் எனக் குச் சிறிது பணம் தருவதற்கு உடன்பட்டது. நியூயோக்கில் இருந்த எனது நண்பர்கள் எஞ்சிய பணத்தை எனக்குக் கொடுத் தனா.
எனவே, 1912 புத்தாண்டு கழித்து சில நாட்களில், நான் கொரியாவின் கிழக்குப் பகுதியில் உருசன் எனும் இடத்திலுள்ள மரங்கள் அற்ற குன்றுகளுக்கிடையே அமைந்த அழகிய விரி குடாவில் நிறுவப்பட்டுள்ள திமிங்கில வேட்டை நிலையத்திற்கு யப்பானியக் கடலினூடாகப் பயணம் செய்தேன். எனது முதல் நாள் இரவில் ஒரு திமிங்கிலம் தென்பட்டது. எங்கிருந்தோ திடீரென நெருப்புகள் தோன்றி விரிகுடாவின் கரிய நீரில் மெல்லிய வெளிச்சத்தைப் பரப்பின. பத்து நிமிடங்களில் நான் எனது மாரிகால ஆடைகளையும் கனத்த கோட்டையும் உடுத்திக் கொண்டேன். வெளியே கடுங்குளிராக இருந்தது. பனியால் மூடப்பட்ட திமிங்கிலக் கப்பல் தலை நிமிர்ந்து விரிகுடா வினுள் நுழைந்து, நெருக்கடி மிகுந்த நீர் முனைக்கு வந்தது. அக்கப்ப லில் ஒரு பெரிய திமிங்கிலம் காணப்பட்டது. நான் அதனைக் கவனமாக ஆராய்ந்தேன், அது ஐயத்துக்கிடமின்றி "இழந்து" போனதாகக் கருதப்பட்ட சாம்பல்நிறத் திமிங்கிலமாக இருந் 应g列·
அடுத்து வந்த ஆறு கிழமைகளில் நான் 40 சாம்பல் நிறத் திமிங்கிலங்களுக்கு மேலாக ஆராய்ந்து அளவீடு செய்து படங்: களும் எடுத்தேன். அவை எவ்வாறு தங்களுடைய எதிரிகளிட மிருந்து விவேகமாகத் தப்பிச் சென்றன என்பதனையும் அறிந்து
கொண் டேன்.
134 .

நான் கடலில் கழித்த நாட்கள் மிகவும் மோசமானவை யாகும். எப்பொழுதுமே கடுங்குளிரான காலநிலை நிலவியது: உறைந்த பனியும் மழையுமாக இருந்தது. நான் ஈட்டி முனைத் துவக்கின் பின்னுல் பல மணிநேரம் நின்றிருந்த வேளைகளில் எனது உடைகள் கெட்டியாக உறைந்தன. அப்போது கடலைப் பார்த்துக் கோபமான வார்த்தைகளில் கூச்சலிடுவேன். ஆனல் கரைக்கு மீண்டும் வந்து அறிந்து கொண்டவற்றையிட்டுக் குறிப் பெழுதியவுடன் எனது துன்பமெல்லாம் மறைந்து விடும். மீள
நான் கடலுக்குப் போவதற்கு விரும்பினேன்.
ஒரு நாள் கொல்லித் திமிங்கிலக் கூட்டமொன்று எங் களுக்கு அபூர்வமான ஆனல் பயங்கரமான ஒரு காட்சியை அளித்தது. கொல்லித் திமிங்கிலங்கள் கடற் பட்டினி நாய்களைப் போன்றவை. அவை கூட்டமாக வந்து வேட்டை செய்வன வாகும். பெரும் வாய்களைக் கொண் டு திமிங்கில மொன்றினை உயிரோடு உண்ணத் தகுந்தனவாக அவை காணப்படும். நாம் கரையோரமாக 50 அடி நீளமான சாம்பல் நிறத் திமிங்கில மொன்றை வேட்டை ஆடிக் கொண்டிருந்தோம். திடீரென கொல்லிகள் கூட்டம் ஒன்று தென்பட்டது.
அவை எங்களுடைய கப்பலைக் கவனிக்கவில்லை. ஆனல் சாம்பல் நிறத் திமிங்கிலத்தை நோக்கி நேராக விரைந்தன. அத்திமிங்கிலம் கொல்லிகளைக் காட்டிலும் இருமடங்கு நீளமாக இருந்ததெனினும் அச்சத்தின் நிமித் தம் அசையாது நின்றது. தப்பிச் செல்வதற்கு பதிலாக அது முதுகுப் புறமாகத் திரும்பி ஒரு வித முயற்சியுமின்றி அமைதியாக இறப்பதற்குத் தயாராகக் கிடந்தது. கொல்லி ஒன்று அத்திமிங்கிலத்தின் பக்கமாக விரை ந்து தனது தலையை அதன் வாயினுள் திணித்து பெரிய சதைத் துண்டங்களைக் கிழித்தெடுத்தது. திமிங்கிலம் வேதனையால் உருண்டு புரண்டபோது ஏனைய கொல்லிகள் அதன் கீழ்ப்பாகத் தைக் கிழித்துக்கொண்டிருந்தன. அதன் துன்பத்தை ஈட்டிமுனை யொன்று முற்றுவித்தபோது நான் மகிழ்ச்சியுற்றேன்.
திமிங்கில வேட்டை நிலையம் இளவேனிற் காலத்தில் மூடப் பட்டபோது இரு சாம்பல் நிறத் திமிங்கிலங்களின் எலும் புக் கூடுகள் நியூயோக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டன. பின்னர் நான் வடக்கிலுள்ள காடுகளில் நெடும் பயணஞ் செய்வதற்கான ஆயத்தஞ் செய்யும் பொருட்டுச் சியோல் நகரம் வரை சென் றேன். இரசியாவில் விலா டிவொஸ்டாக்கிற்குத் தெற்கு அரு காமையிலுள்ள செஷின் எனும் கிராமத்திற்கு நான் ஒரு சிறிய கப்பலில் சென்றேன்.
135

Page 75
நெடிய வெள்ளை மலை
ஆறு நபர்களுடனும் எட்டுச் சிறிய குதிரைகளுடனும் உள் நாட்டை நோக்கி நான் புறப்பட்டேன். அவ்வறுவருள் எவரும் பெருங்காட்டினுள் ஒரு போதுமே சென்றதில்லை. வழி தவறி இறந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர்.
ஒவ்வொரு மைல் தூரமும் உட்செல்ல காடு அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. அந்த இடம் மகிழ்ச்சியளிக்கும் தன்ை யற்றதாகக் காணப்பட்டது. அவ்வப்போது எங்களுடைய கு ரைகள் சேற்றில் புதையுண்டன. அவற்றை வெளியே தூக்கி விடவேண்டியிருந்தது. உயர்ந்து வளர்ந்த தாவரங்கள் நடப் பதற்கு இடையூருக இருந்தன. அதிசயமான சாம்பல் நிறச் செடிகொடிகள் மரங்களை மூடி வளர்ந்து, சூரிய வொளியைத் தடுத்தன. நான்காம் நாளன்று ஒரு காட்டு மிருகத்தை நான் கொன்றேன். ஆகவே எமக்குப் புதிய இறைச்சி கிடைத்தது. ஆனல் அதன் பின் பல நாட்களாக எந்தவொரு உயிர்ப் பிராணி யின் அறிகுறியும் எமக்குத் தென்படவில்லை. எமது மனிதர் களுடைய குரல்களைத் தவிர வேறெந்த ஒலிகளும் அக்காட்டில் நிலவிய அமைதியைக் கலைக்கவில்லை. பறவைகளோ மிருகங் களோ அங்கு காணப்படவில்லை. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. புயற் காற்றும் மழையுமன்று அது. ஆனல் சிறிதளவான சாம்பல் நிற மழை ஒரு கிழமையாகப் பெய்தது.
கொரியர்கள் துக்கத்துடன் இருந்தனர். காட்டின் ஆழ்ந்த அமைதி அவர்களை அஞ்சச் செய்தது. கடின உழைப்பினுல் இளைத் துப் போயிருந்தனர். தமக்குள்ளே பொதுவாகப் பேசத் தொடங்கினர். கூடாரம் அடித்துத் தங்கியிருந்தபோது அவர் கட்கு அருகே நான் போகும் தறுவாயில் பேச்சை நிறுத்திக் கொண்டனர். குதிரைகளையும் உணவையும் எடுத்துக் கொண்டு என்னைக் காட்டில் விட்டுவிட்டுப் போவதற்கு அவர்கள் திட்ட மிட்டுக் கொண்டிருந்தனர் என எனக்குத் தெரிய வந்தது. நாம் நெடிய "வெள்ளை மலை எனப்படும்” பாயக் - தோ - சான் மலை யடிவாரத்தை இரு நாட்களுக்குள் சென்று அடைந்து விடலாம் என்று நான் நம்பினேன். நாம் விரைவில் மலையை அடைந்து விடுவோம் என்றும் அவர்களுடைய ஊதியத்தை இரட்டிப்பாக்கு வேன் என்றும் குதிரை எதனையும் தொடுபவனைச் சுடுவேன் என்றும் நான் அவர்களிடம் கூறினேன்.
அவர்கள் எனது கூற்றை விரும்பாவிடினும், என்னை விட் டுச் செல்லவில்லை. ஈற்றில் இரண்டாம் நாள் அந்தி வேளையில்
13 6

காட்டினில் திறந்த வெளி யொன்றினை அடைந்தோம். எங் களுக்குச் சரி முன்பாக மலை இருந்தது. உச்சிவரை பனியால் மூடப்பட்டு புவி மீது வந்து தங்கியுள்ள ஒரு பெரிய வெள்ளை மேகத்தைப் போன்று அம் மலை தோற்றம் அளித்தது.
அழகிய மலையும், மரமற்ற வெளியும் சேர்ந்து அவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியூட்டின. தம்முள் பேசிக் கொள்ளவும் ஒரு வரை ஒருவர் சிரித்த குரலில் அழைக்கவும் தொடங்கினர். அவர்களுடைய பிரச்சினை தீர்ந்து விட்டது என்பதனையும் அவர் கள் என்னை விட்டுப் போக மாட்டார்கள் என்பதனையும் நான் அறிந்தேன். அந்த இரவில் நாங்கள் பாயக் - தோ - சான் மலை யடிவாரத்தில் பணி நீரைக் கொண்டிருந்த சிறிய ஏரியின் அரு காமையில் கூடாரம் அடித்தோம். நான் வேட்டையாடினேன். உண்பதற்குப் பச்சை இறைச்சி எமக்குக் கிடைத்தது. எங்கள் குழுவினரின் மகிழ்ச்சி முழுமை பெற்றது.
நாம் அங்கு நான்கு நாட்கள் தங்கினுேம். மலைமீது ஏறுவது முக்கியமானதாக இருக்கவில்லை. 1879 இல் வேருெரு நாடு காண் ஆய்வுப் பயணி அம்மலை மேல் ஏறியிருந்தான். என் னுடைய நோக்கமெல்லாம் இதற்கு முன்னர் எவராலும் ஆராய ப்படாத கொரிய காட்டிலே யாது இருந்தது என்பதனைத் தெரி ந்து கொள்வதே.
நான் வேருெரு வழியாகத் திரும்புவதற்குத் தீர்மானித் தேன். நாம் காட்டின் வழியாக யாலு ஆறு தொடங்குகின்ற இடத்திற்குப் போனேம். அது கடினமான பயணமெனினும் இறுதியாக அப்பெரிய ஆற்றின் கரையிலே கூடாரமடித்தோம். அங்கிருந்து ஒருவனைத் தவிர மற்றனவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அவனும் நானும் கொரியாவின் கிழக்குக் கரையிலுள்ள அன்டங் எனுமிடத்தில் அந்த ஆறு சங்கமாகும் இடத்திற்கு ஆற்றின் வழியாக மிக மகிழ்ச்சிகரமான ஒரு பய ணத்தை மேற்கொண்டோம்.
நான் மேற்கொண்ட நெடும் பயணம் வெற்றியானதாக இருந்தது. நான் பற்பல புதிய முலையூட்டிகளையும் பறவைகளை யும் சேகரித்தேன். பெருங்கானகங்களைக் கண்டறிந்து ஆராய்ந் தமை புவியியல் துறைக்கு முக்கியமானதாக இருந்தது. நான் இரசியாவிலும், ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் பயணஞ் செய்த பின்னர் 1912 இல் அரும்பொருட்சாலைக்குத் திரும்பினேன்.
137

Page 76
அடுத்த ஈராண்டுகளும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றேன். கலிபோனிய சாம்பல் நிறத் திமிங்கிலம் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். மேலும் நான் ஆக்டிக் கடலில் திமிங்கில வேட்டையாடுவதற்கும் சென்றேன். ஆணுல் அப்பயணத்தின் போது திமிங்கிலம் ஒன்றையேனும் நான் பிடிக்கவில்லை.
சகோதரியான வெற்றே பொருப்பை மணம் முடித்தேன். பிய யின் வெற்றிகரமான வடதுருவ நெடும் பயணக்குழுவில் பொருட் ஓர் உறுப்பினராக இருந்தவன்.
பின்னர் 1914 ஒகஸ்ட் மாதம் ஜோர்ஜ் န္တီ နှီးမြှုံ့' f}
சீனுவில் புதிய நிலங்களைத் தேடிக் கண்டமை
திமிங்கிலங்கள் பற்றி ஆராய்ந்ததை விட்டுவிட நான் தீர் மானித்தேன். அமெரிக்க அரும்பொருட்சாலை இப்பொழுது உல கிலே மிகப் பெரியதும் நிறைவானதுமான திமிங்கிலத் தொகுப் பைக் கொண்டிருந்தது. நான் எப்பொழுதுமே நிலங்கள் சம் பந்தமான ஆராய்ச்சியில் ஈடுகொள்ள வேண்டுமென்று விரும்பி வந்திருந்தேன். அரும்பொருட்சாலையின் தலைவரான கலாநிதி ஒஸ்போன் நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு உடன் பட்டார்.
மானிட வர்க்கம் தோன்றிய இடமும் மிருக வாழினங் களின் பிறப்பிடமும் ஆசியா என்று அவர் நெடுங்காலமாகக் கருதியிருந்தார். ஆனல் ஆசியாவின் பெரும் பகுதி ஒரு போதும் ஆராய்ந்து அறியப்படவில்லை. இந்நிலப் பகுதியைக் கவனமாக ஆராயுமிடத்து முக்கியமான பெறுபேறுகள் இடம் பெறும்.
எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நாம் எங்கே தொடங்க வேண்டும் என்பதனை அறியும் முகமாக பல நெடும் பயணங்களையிட்ட சீரான திட்டமொன்றை நான் நிர்ண யித்திருந்தேன். முதலாவதான நெடும் பயணம் யுன்னனில் இடம் பெறும். திபெத்திற்கும் பர்மாவிற்கும் அருகேயுள்ள சீனுவின் தென்கிழக்குப் பகுதியில் யுன்னன் இருக்கிறது. காடடர்ந்த அம் மலைப் பகுதியின் புவியியலைப் பற்றியோ மிருக வாழினங் களைப் பற்றியோ எதுவும் அறியப்படவில்லை.
1916 மார்ச்சு மாதம் நாங்கள் யப்பானுக்குக் கடற் பய ணஞ் செய்தோம். பின்னர் நாங்கள் சீனுவிற்கூடாக திபெத்தி னுடைய வடக்கு எல்லைக்குச் சென்ருேம்.
138

அங்கிருந்த மலைகள் மிக உயரமாகக் காணப்பட்டன. நாங் கள் யங் ஹிசி நதிக்கு மேலாக 16,000 அடி உயரமுள்ள மலையைக் கடந்து சென்றது எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. அவ்வாறு அம்மலையைத் தாண்டியதால் சில மணி நேரத்தில் நாங்கள் ஒக்டோபர் மாத சூரிய வெப்பத்தில் இருந்து நடுப் பனிக்காலச் சூழ்நிலையில் இருந்தோம். நாம் சிறிய காட்டினூடாக ஏறி இறுதியாக நின்ற மர வரிசையைத் தாண்டி தாவரங்களற்று உறை பணியால் மூடப்பட்டிருந்த மலையின் உச்சியை அடைந் தோம். குளிரான பனிக்காற்று ஒன்று எங்களது கூடாரத்தைச் சுற்றி வீசியது. அதிக குளிரின் காரணமாக எமக்குத் தூக்கம் வரவில்லை. நெருப்பு வளர்க்க வல்ல மரம் தடிகள் இல்லாததால் இரவு முழுவதும் நாங்கள் ஒரு சிறு நெருப்பைச் சுற்றி இருந்து குளிரால் நடுங்கினுேம். குதிரைகளில் மூன்று குளிரினலும் அடர் த்தியிலா வளியின் காரணமாகவும் இறந்தன. நாம் அனைவரும் இன்னலுற்ருேம். சடுதியாக விட்டுச் சென்ற ஒக்டோபர் மாதப் பிரகாசமான கதிர் ஒளியை நோக்கி மறுநாள் மீண்டும் கீழே இறங்கிய எமது குழு, மிகவும் மனம் உடைந்ததாக இருந்தது.
மலைகளூடாகத் திபெத்தின் விளிம்புவரை நாங்கள் சென்று புதிய பாலூட்டிகளையும் பறவைகளையும், புதிய தாவரங்களை யும், புதிய மக்களையும், புதிய நிலப்பகுதியையும் பார்த்துச் சென்ருேம். 50 யார் அகலத்திற்கும் குறைவாக இருந்த ஓர் இடத்தில் யங் ஹிசி நதியைக் கடந்து ஒர் இருண்ட பள்ளத்தாக்கி னுள் சென்ருேம். பின்னர் மெக்கொங் நதிப் பள்ளத்தாக்கு வழியாக தெற்குத் திசை சென்று, பர்மாவின் விளிம்பிலுள்ள வெப்பம் மிகுந்த காடுகளுக்குள் நாம் புகுந்தோம்.
சல்வீன் நதி எங்களுக்குமுன் ஒடியது. சல்வீன் பள்ளத் தாக்கினுட் செல்ல நான் விரும்பினேன். ஆனல் அதற்கு எங்கள் உயிர்களைப் பணயம் வைப்பது உகந்ததா என்று யோசித்தேன். அஃது ஒரு பயங்கரமான இடம். மனித சஞ்சாரம் அற்ற இடம். பறவைகளும், சிறுத்தைகளும் வெறி கொண்ட செந் நாய்களும் மாத்திரமே அங்கு உண்டு. அத்துடன் நோய்வாய்ப்படும் சந்தர்ப் பங்களும் அங்கு அதிகம். எனினும் அங்கு போவதற்கு நான் தீர்மானித்தேன். ஏனெனில் நாம் அங்கு கைப்பற்றக் கூடிய முலையூட்டிகள் அறிவியலுக்குப் புதியனவாக விருக்கும். எனவே நாம் அங்கு சென்று பத்து நாட்கள் தங்கியிருந்தோம். பல மிருகங்களைச் சேர்த்தோம். நான் ஒருவனே நோய் வாய்ப்பட்
こ* ごツ
டேன். 3 நாட்களாக மலேரியாக் காய்ச்சலால் அவதியுற்றேன்.
139

Page 77
ஆக்டிக் குளிரால் உறைந்து போவதான அல்லது மாரி நெருப்பினுல் பொசுக்கப்படுவதான உணர்ச்சியைப் பெற்றேன். ஆயினும் கெதியில் சுகம் அடைந்தேன்.
இப்பயணத்தின் பின்னர் எத்தனையோ மாதங்களுக்குப்பின் வெளி உலகத்தைப் பற்றிய முதலாவது செய்திகள் கேட் டோம். அமெரிக்கா முதலாம் யுத்தத்தில் பங்கு கொண்டு இருந்தது. உடனடியாக நாடு திரும்பி யுத்த சேவையில், ஈடு கொள்ள நான் விரும்பினேன். ஆனல் எம்மை இட்டுச் செல்ல வல்ல எந்த ஒரு கப்பலிலும் ஏறத்தாழ உலகத்தைச் சுற்றி வர வேண்டிய அவசியம் இருந்தது.
ஈற்றில் அரும் பொருட்சாலைகளுக்காக நாம் சேகரித்த பொருட்கள் அனைத்துடனும் நியூயோக்கை அடைந்தோம். டிசம்பர் 26ஆம் திகதி அன்று எனது முதலாவது மகன் பிறந்தான். அவனுக்கு ஜோர்ஜ் பொருப் அன்ட்றுாஸ் என்று பெயரிடப்பட் டது. பின்னர் எனது சேவையை வழங்கும் முகமாக வா ஷிங்ட னுக்கு நான் சென்றேன். ஒரு கிழமைக்குப் பின் கடற்படையிற் சேருவதற்காக பீக்கிங்கிற்கு நான் திரும்பிச் சென்று கொண்டி ருந்தேன்.
யுத்தகாலத்தில் சீனுவில்
முதலாம் உலக யுத்தத்தில் பீக்கிங்கை மையமாகக் கொண்டு சீனுவின் கூடுதலான பிரதேசத்திலும் மஞ்சூரியாவி லும் நான் பயணம் செய்தேன். கோபிப்பாலைவனத்தினூடாக உர்காவிற்கு இரு தடவைகள் போனேன். மொங்கோலியா வின் பிரதான நகரான உர்கா (இப்பொழுது அது உவான் பற்றர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.) எனது அமைதிக் காலத் தொழிலிற்கு ஏற்ப ஆசியாக் கண்டத்தை ஆராயும் இப்பயணம் மிகப் பொருத்தமாக இருந்தது.
நேரச் சிக்கனம் எனக்கு முக்கியமானதால் கோபிப்பாலை வனத்தை மோட்டார் காரில் நான் கடந்தேன். அப்பயணத்தை 5 முதல் 7 நாட்களுக்குட் பூர்த்தியாக்கலாம். முதல்தடவை உர்கா சென்ற போது ஓகஸ்ற் மாத முற்பகுதியாக இருந்தது. பகல் வேளை வெப்பமாகவும் ஒளியுள்ளதாகவும் இருந்தது, இரவு கள் குளிராகவும் இதமாகவும் இருந்தன. இரண்டாம் நாளன்று, நானும் இன்னுெருவனும் கெட்டியான சமதரையில் காரில் சென்று கொண்டிருந்த போது பாறைக்குப் பின்னலிருந்து திடீ.
I 40

ரென 5 பேர் தோன்றினர். பெரும்பாலும் எங்களுடைய காரை அபகரிக்க விரும்பியே அவர்கள் எங்களை நோக்கிச் சுட்டனர். நாமும் திருப்பிச் சுட்டோம். அவர்களின் பார்வையிலிருந்து மறையும் வரை நான் காரை எத்துணை வேகமாக ஒட்ட முடி யுமோ அவ்வாறு ஒட்டினேன்.
இரண்டாவது தடவையாக நானும் இன்னெருவனும் பனிக் கால நடுப்பகுதியில் கோபிப் பாலைவனத்தைக் கடந்தோம். சற்று முன்னரே காற்றும் பனிப்புயலும் வீசியிருந்தன. உர் காவை அடைந்த போது நாம் ஏறக்குறைய பணியால் உறைந்து போன நிலையில் இருந்தோம். குளிர் எங்களுடைய எலும்புகளுள் ஊடுருவிச் சென்றிருந்தது போன்ற உணர்ச்சி எமக்கிருந்தது. பின்னர் குதிரை மீதேறி வடக்கு நோக்கிக் காட்டு வழியாக சை பிரீயாவிற்குச் சென்ருேம். அது மிகு மோசமான அனுபவ மாக இருந்தது. என் நண்பரின் விரல்களுள் மூன்று உறைந்து கட்டிபற்றியபடியால் அவற்றை அகற்ற வேண்டியதாயிற்று. ஆயினும் அங்கே துன்பத்தை அனுபவித்த போதிலும் அந்நாட்டி லும் - மக்களிலும் எனக்குப் பெரிதளவு அக்கறை இருந்தது.
இங்கிருந்தே மத்திய ஆசியா பற்றிய எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். என்ஐயப்பாடுகளுக்கான தீர்வுகள் அனைத் தையும் மொங்கோலியா கொண்டிருந்ததாகத் தோன்றியது. ஆகவே நான் அந்நாட்டைப்பற்றி மேலும் அறிய வேண்டிய அவசியமிருந்தது. பாலைவனத்தினூடாக ஒட்டகத்திலும், குதி ரையிலும் நான் செல்ல வே30. டும். யுத்தம் முடிவுற்றபோது பின்னரும் நான் பீக்கிங்கில் இருந்தேன். எனவே நான் மொங் கோலியாவிற்குத் திரும்பிச் சென்று, ஐந்து மாதங்கள் தங்கி இருப்பதற்குப் போதுமான பணத்தை அனுப்பிவைக்குமாறு நியூ யோக்கில் இருந்த என் நண்பர்களைக் கேட்டேன்.
கோடைக்காலம் அதிவிரைவாகக் கழிந்தது. பின்னர் பீக் கிங்கிற்குத் திரும்பி வந்து, அரும் பொருட்சாலைக்காக நான் சேகரித்து வைத்த பொருட்கள் அனைத்தையும் சரிபார்த்தேன். நான் ஆராய்ந்தறிந்த இடங்களிலிருந்து எப்பொருளேனும் அரும் பொருட்சாலையில் முன்னர் இடம் பெறவில்லை. இப்பொழுது 1500 மிருகங்கள் ஆங்கு இடம் பெறும். ஆனல் அனைத்தினும் முக்கியமானது கோபிப் பாலைவனத்தைப் பற்றி நான் அறிந்து கொண்டதேயாம். எனது நெடும் பயணத்திற்கான வேலைக்கு கோபிப் பாலைவனமே நடுநிலையமாக அமைந்திருந்தது. முன்னர்
141

Page 78
மேற்கொள்ளப்பட்டிருந்த ஆராய்ச்சிப் பயணங்களினின்றும் இப் போது நான் தொடங்க விருப்பது வேறுபட்டதாகும். அது புதிய வகையினதாகக் காணப்படும். அப்பயணம் தொடர்பான திட் டத்தின் ஒவ்வோர் அம்சமும் எனது மனத்தில் தெளிவாக இருந்தது. அமெரிக்காவிற்குத் திரும்புவதற்கு நான் தாமதம் கொள்ள விரும்பவில்லை.
நான் நியூயோக்கைச் சென்றடைந்து மூன்று நாட்களுக் குப் பின்னர் அரும்பொருட்சாலையில் கலாநிதி ஒஸ்போனைக் கண் டு பேசினேன். உலகின் மிருக வாழினங்கள் ஆரம்பித்த இடம் மத்திய ஆசியா தா ன என்பதைத் தெரிந்து கொள்வதற் காக நான் நெடும் பயணம் செய்ய விரும்புவதாக அவரிடம் கூறினேன். அவரும் எனது அபிப்பிராயத்தில் அத்துணை ஆர்வங் கொண்டிருந்தார் என்பதனை அவருடைய கண்கள் எடுத்துக் காட்டின.
*அஃது ஒரு அருமையான யோசனை, ஆனல்நீ அதனை எவ்வாறு சாதிப்பாய்’ என்று வினவினர்.
நான் பேசுவதற்கு ஆரம்பித்தேன். 'நாம் மத்திய ஆசியா
வின் முழு வரலாற்றையும் அறிந்தாக வேண்டும். அதன் புவிச் சரித்திரம், உயிர்ச்சுவடுகள், கடந்த காலத்தில் இருந்த கால நிலை, அதன் தாவரங்கள், அங்கு வாழ்கின்ற முலையூட்டிகள்,
பறவைகள், மீன்கள், ஊர்வன, பூச்சிகள், தாவரங்கள் யாவற்
றையும் சேகரிக்க வேண்டும். இதற்கு முன்னர் ஆராய்ந்து அறி யப்படாத பிரதேசங்களையிட்டுப் படங்கள் வரைய வேண்டும்.
தனியொரு பிரச்சினையை ஆராய்வதில் நாம் பற்பல அறிவியற் கலைகளையும் பயன்படுத்த வேண்டும். அறிவியலாளர் ஒவ்வொரு வரும் தாம் கண் டவற்றை, அவை காணப்பட்ட அதே தன்மை களில் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு உதவுவார்கள். இவ்
வம்சங்களைக் கொண்டு அமையப்படும் நெடும் பயணம், அமெ. ரிக்க ஐக்கிய நாட்டை விட்டு நில மார்க்கமாக மேற்கொள்ளப் படும் மிகப் பெரிய பயணமாக இருக்கும்.”*
* உண்மையில் எந்தவொரு உயிர்ச் சுவட்டையும் கண்டு எடுப்பாய் என்பது ஒரு தற்செயலான நிகழ்ச்சியாகலாம். இரசி யர்கள் மொங்கோலியாவில் எதனையுமே காணவில்லை; உன்னல் காண முடியும் என்று நீ ஏன் நினைக்கிருய்?’ என்று ஒஸ்போன் கேட்டார்.
星42

இரசியர்கள் அறிவியல் நோக்கங்களுக்காக நெடும் பயணங் களை மேற்கொள்ளவில்லை என்பதே அதற்குக் காரணமாகும். ஒரு சில சிறந்த அறிவியலாளர்கள் இருந்துள்ளனர். ஆணுல் அவர்கள் அரசாங்கத்தைத் திருப்தி செய்வதற்கான பெறுபேறு களை வழங்க வேண்டிய அவசியம் இருந்தது. எந்தவொரு இரசிய நெடும் பயணத்திற்கும் அறிவியல் ஒரு முக்கிய காரணமாக ஒரு போதும் இருந்ததில்லை. அவர்களுடைய படங்கள் சிறப்பாக வரையப்படவில்லை. மேலும் நெடும் பயண ஆய்வாளர்கள் அனை வரும் ஒட்டகங்களைப் பயன்படுத்தினர். அவர்களால் நாளொன் றுக்குப் பத்து மைல் தூரமே செல்ல முடிந்தது. கார்களே நாம் பயன்படுத்துவோம். நாளொன்றுக்கு நூறு மைல் தூரம் நாம் போக முடியும். அவர்கள் பத்துப் பருவங்களிலே செய்ததை எங்களால் ஒரு பருவத்தில் பூர்த்தி செய்ய முடியும். அவர்களைப் போன்று பாலைவனத்தில் பனிக்காலத்தைக் கழித்து குளிரால் நடுங்கிச் சாகும் நிலைக்குப் பதிலாக ஆரம்பிக்கு முன்னரே நாம் திரும்பி விடுவோம்.”
* பாலைவனத்தில் கார்களைப் பயன்படுத்தலாமா”
பாலைவனத்தில் காரிற் பயணஞ் செய்யமுடியும் என்பதை நான் திண்ணமாகச் சொல்ல முடியாது. ஆணுல் அப்பிரதேசம் பற்றி நான் கண்டறிந்தவற்றிலிருந்து அவ்வாறு செய்ய முடியு மென்று நான் நம்புகிறேன். அதற்குப் போதிய அளவு ஆயத் தங்களைச் செய்ய வேண்டியிருக்கும். காருக்குரிய சகல எந்திர உறுப்புக்களையும், அவசியம் ஏற்படுமிடத்து ஒரு புதிய காரையே உருவாக்கக் கூடிய ஆட்களையும் கொண் டு செல்ல வேண்டும்.”
"போதுமான அளவு உணவுப் பொருட்களை எவ்வாறு நீ கொண்டு போவாய்? ஒரு காரில் அதிக அளவு உணவை வைக்க முடியாதே."
"நாங்கள் புறப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்ன ரேயே ஒட்டகங்களுடன் ஒரு குழுவினரை அனுப்பி வைப்போம். பாலைவனத்தில் அறுநூறு அல்லது எழுநூறு மைல் தூரத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் கார்கள் அவர்களைச் சந்திக்கும். அவை உணவுப் பொருட்களைக் கொண்டு சேர்த்ததும், பின்னர் நாம் கண்டு எடுக்கும் பொருட்களைத் தம் திரும்பும் பயணத்தில் கொண்டுவரும்.
ஒஸ்போன் மேலும் பல கேள்விகளைக் கேட்டார். அறிவிய லின் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களை நெடும் பயணத்திற்கு
1 43

Page 79
உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறியதை ஏற்றுக் கொண்டார். மேலும், நெடும் பயணக் குழு வினரை மூன்று அல்லது நான்கு தொகுதிகளாகப் பிரிக்க வேண் டும் என்ற எனது கருத்து ஒரு சிறந்த திட்டமென்றும் அவர் நினைத்தார். ஒவ்வொரு குழுவும் பூரணத்தன்மை கொண்டதாக விருந்தால் இரு கிழமைக்குத் தனியாக வேலை செய்வதாக இருக்கும். பிரதான தங்கு நிலையம் அவர்களினது வேலைக்கு நடுமையமாக இயங்கும். அவர்கள் அங்கிருந்து வெளிச் சென்று அதே யிடத்துக்குத் திரும்புவர்.
எங்களது நெடும் பயணத்திற்குத் தேவையான பெருந் தொகைப் பணத்தைப் பெறுவது அடுத்த வேலைக்கட்டமாக இருந்தது. பல மாதங்களாக எமக்குப் பணம் கொடுத்து உதவக் கூடியோரை நான் சந்தித்துப் பேசினேன். சொற்பொழிவுகள் ஆற்றினேன், பல கட்டுரைகளையும் ஒரு நூலையும் எழுதினேன். சம்பிரதாயமற்ற நூற்றுக் கணக்கான விருந்துகளில் கலந்து கொண்டேன். பல்லாயிரக்கணக்கான வார்த்தைகளைப் பேசி னேன். ஈற்றில் எமக்குப் போதுமான பணம் கிடைத்தது. எமது திட்டங்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்குச் சந்தர்ப்பம் வந்து விட்டது என்று நான் உணர்ந்தேன். செய்திக் கூட்டத்தில் 21 நிருபர்கள் இருந்தனர். நெடும் பயணத்தை யிட்ட கதை நியூயோக்கின் ஒவ்வொரு பத்திரிகையின் முற் பக்கத்திலும் வெளியாகிற்று. உலகமெங்கினும் அச்செய்தி அனு
ப்பப்பட்டது.
எமது நெடும் பயணத்தில் பத்தாயிரம் நபர்கள் சேர்ந்து கொள்ள விரும்பினர். அவர்களுள் 3000 பெண் கள். நெடும் பயணத்திற்கான ஆயத்தங்கள் செய்ய வேண்டிய அத்துணை நெருக்கமான நிலையில் நான்கு அல்லது ஜந்து மணிநேரம் மட் டுமே இரவில் எனக்கு உறங்குவதற்கு முடிந்தது. 1921 மார்ச் மாதம் சீனவிற்குக் கடற் பிரயாணம் செய்வதற்கு நாம் ஆயத்த மாக இருந்தோம். ஐக்கிய அமெரிக்க ஜனதிபதி எங்களுக்கு நல்வாழ்த்துத் தெரிவித்தார். V−
நாம் 1921 ஆம் ஆண்டுக் கோடைக்காலத்தில் மொங் கோலியாவிற்குப் போக முடியவில்லை. செய்ய வேண்டியவேலை ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. எனது நெடும் பயணம் தொடர்பில் அலுவலகமாக உபயோகிப்பதற்கு ஒரு வீட்டைத் தேடல், சீன மொங்கோலியா அரசாங்கங்களிடம் எங்களுடைய
I 44

திட்டங்களைப் பற்றி எடுத்துக் கூறல், ஒட்டகங்களை விலைக்குக் கொள்ளல், வேலையாட்களைத் தேடல், உணவையும் பிற பொருட் களையும் பெற்றுக் கொள்ளல், இன்னும் பாலைவனத்தில் அறு நூறு மைல் தொலைவில், காரில் செல்லவிருந்த எங்கள் குழு வினரைச் சந்திக்கும் வகையில் குளிர்காலத்திலே ஒட்டகக் குழு வினரை அனுப்பி வைத்தல் முதலியன சம்பந்தமாகப் பல வேலைகள் இருந்தன.
இவையனைத்தும் ஈற்றில் செய்து முடிக்கப்பட்டு 1922 ஏப்றல் மாதம் பெரிய பாலைவனத்தின் நுழைவாயிலாகவுள்ள கால்கன் எனுமிடத்திற்குச் செல்வதற்காக நாங்கள் பீக்கிங்கை விட்டுப் புறப்பட்டோம். அந்த வியக்கத்தக்க மாதங்களில் பாலை வனத்தில் நடந்த அனைத்தையும் பற்றி நான் இங்கு கூறப் போவதில்லை. ஆனல், முதலாவதாக உயிர்ச்சுவடுகளை நாம் கண்டதே எமது மிகப் பெரிய அனுபவங்களில் ஒன்று.
தாழ்ந்த சாம்பல் - வெள்ளை நிறக் குன்றுகளின் அடி வாரத்தில் நாம் கூடாரம் அமைத்திருந்தோம். வானத்தை தங்க, சிவப்பு வர்ணங்களால் நிரப்பிக் கொண்டு சூரியன் மறை வதை நான் பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு கார் கூடாரத் திற்கு விரைந்து வந்தது. ஒருவரும் பேசவில்லை. ஆனல் வோல் டர் கிறேஞ்சரின் கண்கள் பளபளத்தன. அவரே எமது குழுவின் பிரதான, பழைய உயிரியலாளர். அமைதியுடன் சில உயிர்ச் சுவடுகளை அவர் எனக்குக் காட்டினர். இரு புவிச் சரிதவிய லாளர்களும் சிலவற்றை வைத்திருந்தனர். நாம் அனைவரும் சிரித்து மகிழ்ச்சியுடன் ஆரவாரஞ் செய்தோம்.
முதலாவது டைனசோர்
மறுநாள் காலையில் கலாநிதி பேர்க்கி எனது கூடாரத்திற்கு வந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரசித்தி பெற்ற புவிச்சரிதவியல் ஆசிரியரான அவர் விசித்திரமாக நடந்து கொண்டார். ஆயினும் என்னிடம் எதுவும் கூறுவதற்கு மறுத் grrri.
"என்னுடன் வா’ என்று என்னை அழைத்தார்.
அவர் என்ன ஓரிடத்திற்குக் கூட்டிச் சென்ருர். அங்கே கிறேஞ்சர் தன் முழந்தாழ்களிலிருந்தவாறு ஏதோ வொன்றி லிருந்து மணலை அகற்றிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
1 45

Page 80
“அதனைப்பார்த்து விட்டு அது பற்றி என்ன நினைக்கிருய் என்பதனை நீ சொல் என்று பேர்க்கி கூறினர். பெரிய எலும் பொன்று அழிவுறு நிலையில் இருப்பதைக் கண்டேன். எவ்வித ஐயமும் இன்றி அது ஒரு டைனசோரின் எலும்பு என்று புலன யிற்று.
"இமாலய மலைகளுக்கு வடக்கே ஆசியாவில் முதன்முத லாகக் கண்டெடுத்த டைனசோர் இது என்று பெர்க்கி சொன் ஞர்.
ஒருவர் அறிவியல் பயின்றவராக இருந்தாலன்றி இக்கண்டு பிடிப்பு எத்துணை முக்கியத்துவமுடையது என்பதனைப் புரிந்து கொள்வது கடினம். இதன் மூலம் மத்திய ஆசியாவின் புவிச் சரிதவியல், புவியியல் என்பன பற்றி ஏற்கனவே அறிந்திருந்த சிலவற்றுடன் முற்றும் புதிதான ஒரு உண்மை இப்பொழுதும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே இதற்குப் பொருளாகும். கண் டெடுக்கப்பட்ட எலும்பும் உயிர்ச்சுவடுகளும், எமது நெடும் பயணத்தைப் பற்றிய நோக்கு உண்மையாக இருக்கக் கூடும் என்பதிற்கான முதலாவது அறிகுறிகளாக இருந்தன. அதாவது ஆசியாவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் காணப்படும் உயிரமைப்புகளின் பிறப்பிடம்.
சில நாட்களின் பின்னர் நாம் கால்கனிலிருந்து கார்களில் புறப்படுவதற்கு முன்பாக குளிர் காலத்தின் மத்தியில் புறப் பட்டிருந்த எங்களுடைய ஒட்டகக் குழுவினரைச் சந்தித்தோம். நாம் சந்திப்பதென்றிருந்த இடம் முதிர்ந்த மலையொன்றின் அடிவாரத்திலுள்ள கிணறு ஒன்றுக்குக் கிட்டியதாக இருந்தது. அந்த மலை நெடுங்காலத்திற்கு முன் மிக உயரமாக இருந்தது. ஆனல் காற்றினலும் புயலினலும் அது பெரும்பாலும் சமதள மாக்கப்பட்டிருந்தது. அந்த ‘மலையின்’ அடிவாரத்தை நாம் மத்தியான வேளையில் வந்தடைந்தோம். எங்களுடைய ஒட்டகக் குழுவினர் கிணற்றின் பக்கத்திலே கூடாரமிட்டிருந்ததைத் தூரத்திலிருந்தே கவனித்தோம். பல மாதங்களுக்கு முன் நாம் ஏற்பாடு செய்தவாறு அதே நாளில், நாம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அக்குழுவினர் வந்து சேர்ந்திருந்த
னர்.
உலகின் மிகப் பெரிய முலையூட்டியைக் கண்டுபிடித்தல்
1921 இல் மேற்கொண்ட முதலாவது நெடும் பயணத்தின் மிக முக்கியமான கட்டங்களுள் ஒன்று ஒகஸ்ற் 4 ஆம் திகதி நடை
146

பெற்றது. அந்நாள், பிற்பகலில் வோல்டர் கிறேஞ்சர் “பலுச் சுத்தேறியம் எனும் முலையூட்டியுறுப்புக்களைக் கண் டார். புவி யில் எக்காலத்தும் நடமாடிய மிகப் பெரிய முலையூட்டி அதுவே. ஆஞல் எவருமே அஃது எவ்வகையான மிருகம் என்பதனை உண் மையில் அறிந்திருக்கவில்லை. இதற்கு முன்னர் பாக்கிஸ்தானில் பலுச்சிஸ்தான் பிரதேசத்தில் எலும்புத் துண்டங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. அதையொத்த அதி முக்கியத்துவம் வாய் ந்த கண்டுபிடிப்புகள் மிக்க குறைவாகும்.
முன்காலில் உயர்ந்த பாதத்தின் எலும்பொன்றையும் முக த்தின் கீழ் எலும்பின் பக்கமொன்றையும் கிறேஞ்சர் கண்டிருந் தார். இவை எமக்குத் திருப்தியளித்தனவாயினும் எங்களுக்கு அதன் மண்டை ஒடே பெரிதும் தேவைப்பட்டது. பலுச்சித் தேறியத்தை முதலாக நினைத்துக் கொண்டே நான் உறங்கி னேன். அம்மிருகத்தின் ம ைடையோட்டைக் கண்டு கொண்ட தாக ஓர் அழகான கனவும் கண் டேன். தன் கண் பார்வைக் கெட்டிய எலும்புகள் அனைத்தும் அடையாளம் கொள்ளப்பட்ட தென்று கிறேஞ்சர் உறுதியாக நம்பினுரெனினும் நான் அவ் விடத்திற்கு மீண்டும் சென்று திரும்பவும் பார்வையிட வேண்டும் எனத் தீர்மானித்தேன்.
அடுத்த நாளன்று நானும் வேறிருவரும் அந்த இடத்திற்கு மீண்டும் சென்று தரையை மிகக் கவனமாகப் பார்வையிட் டோம். ஐந்து நிமிடங்களில் சிறிய ஒரு குன்றின் உச்சியை நான் அடைந்து கீழே நோக்கினேன். எலும்புத் துண்டொன்று எனது கண்ணிற்பட்டது, ஒரு கூச்சலுடன் குன்றுப்பக்கமாகக் கீழே குதித்தேன். மற்றிருவரும் குன்றின்மூலையைச் சுற்றி ஓடிவந்த பொழுது என் முழந்தாழ்களிலிருந்து கொண்டு ஒரு சிறிய நாயைப் போன்று நான் வேலை செய்து கொண்டிருந்தேன். மிகச் சீக்கிரத்தில் நாங்கள் ஒரு பெரிய எலும்புத் துண்டை வெளியில் எடுத்துவிட்டோம். மேலும் குறைந்தது பத்து எலு புகளை நாம் பார்க்க முடிந்தது. அவை கல்லைப்போன்று மாற்ற முற்றுக் கனமாக இருந்தமையால் அவற்றை உடைத்து விடு வோமோ என்ற பயம் எங்களுக்கு உண்டாகவில்லை. நாங்கள் மகிழ்ச்சியால் உரக்கச் சிரித்துக் கொண் டு எலும்புத் துண்டுகளே ஒவ்வொன்ருகக் கிளறி எடுத்த போது மணலைச் சிதறச் செய் தோம்.
திடீரென மிகப் பெரியதும் கடினமானதுமான ஏதோ ஒரு பொருள் எனது விரல்களில் தட்டுப்பட்டது. அது 'பலுச்
147

Page 81
சுத்தேறியம்’ ஒன்றின் மண்டையோடாக இருந்தது. எனது கனவு நனவாகி விட்டது. ஆறு மணியளவில் குழந்தைகளே ப் போன்று நாம் கூச்சலிட்டுக் கொண்டு கூடாரத்தினுள் விரைந் தோம். கிறேஞ்சர் தனது வாழ்க்கையில் எத்தனையோ முக் கியத்துவமுடைய பொருள்களைக் கண்டுபிடித்திருந்ததால் அத் துணை எளிதாக உணர்ச்சி வசப்படக் கூடிய வரல்லர். ஆனல் எங்களுடைய கதையைக் கேட்டவுடன் அவரும் எழுந்து எம்மை நோக்கி வந்தார்.
"பலுச்சுத்தேறியம் பேரளவான ஒரு மிருகம் என்பதனை நாங்கள் உணர்ந்திருந்த போதிலும் எலும்புகளின் பருமன் எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அரும்பொருட்சாலையில், தலைவர் ஒஸ்போன் எலும்புகளை ஆராய்ந்த பொழுது அம்மிருகம் ஒரு வகையான பெரிய காண் டாமிருகம் என்று கூறினர். அதன் தோள்கள் 17 அடி உயரம், அதன் நீளம் 24 அடி. நீண்ட கழுத் தையும் கால்களையும் அது கொண்டிருக்கும்; உயர்ந்த மரக் கிளை களிலிருந்தே அது உணவு கொண்டிருக்க வேண்டும். ஆறடி உயர முள்ள மனிதனுெருவன் அதன் கீழ் எளிதாக நடந்திருக்க முடி யும். "பலுச்சுத்தேறியம்** ஏறத்தாழ 35 அல்லது 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். அதன் வாழ் பிரதேசத்தில் காலநிலையும் தாவர அமைப்பும் மாறுபாடடைந்த போது தன் வாழ்க்கைப் படிவத்தை மாற்றி அமைக்க முடியா மலோ அன்றி அவ்விடத்திலிருந்து வேறு இடம் போக முடியா மலோ இது மத்திய ஆசியாவை விட்டு வெளியேறது இறந்து போயிற்று. v,
எங்களது முதலாவது நெடும் பயணத்தில் மறக்க முடியாத மற்ருெரு நாள் நானும் வோல்டர் கிறேஞ்சரும் அல்ற்ருய் மலைத்தொடரைச் சேர்ந்த பெயரற்ற மலை ஒன்றின் உச்சியில் நின்ற நாளாம். நாம் நின்ற இடத்திலிருந்து தூர வடக்கில் பாலைவனத்தரைக்கு மேலாக உயர்ந்திருந்த ஒரு பெரிய சிவப் பான சமதளத்தை எங்களால் காண முடிந்தது. அதன் மேற் பாகம் கருங்கல்லினல் மூடப்பட்டிருந்தது.
மறுநாள் நாம் அங்கு சென்ருேம். அச்சமதளம் அதிசய மாணவடிவங்களாக வெட்டப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் என்ருே மறைந்து விட்ட உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்ப தாகத் தோன்றியது. எந்தவொரு கண நேரத்திலும் டைன சோர்கள் எமது கூடாரத்தினுள் நுழையலாம்! எமது குழுவின
互4&

ருள் ஒருவன் முற்ருக இரும்பாக மாறிய டைனசோர் ஒன்றினது எலும்புக் கூட்டினைக் கண் டான். அது ஒரு பெரிய பாறைத் துண்டிற் பதிந்து கிடந்தது. அதனை அங்கிருந்து அகற்ற முடிய வில்லை. அறிவியல் துறையில் முன்னெருபோதும் அறிந்திராத ஒரு வகையைச் சேர்ந்த டைனசோரின் எலும்புக்கூடு எனும் வகையில் அதனை அப்புறப்படுத்தமுடியாநிலை எமக்குத் துன் பத்தைக் கொடுத்தது.
ஓகஸ்ற் 30 ஆம் திகதியன்று நாம் தங்கியிருந்த இக் கூடாரத்தை விட்டு அகன்று நன்னீர்க் கிணற்றை நோக்கிப் புறப்பட்டோம். இப்பயணத்தில்தான் உண்மையில் காணப் படாத ‘மலைகளை' நாங்கள் கடந்து சென்று எரி சொழுந்துக் குன்றுகளைக் கண்டுபிடித்தோம். இங்கு தான் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனசோர்கள் முட்டையிட்டு இருந் தன.
செப்டம்பர் மாதப் பிற் கூற்றில் பனிக்காலத்தைக் கழிக்கு முகமாகவும், மறு ஆண்டில் முன்னரிலும் பார்க்கப் பெரிய குழுவொன்றுடன் பயணஞ் செய்வதற்கான ஆயத்தங்களை மேற் கொள்ளவும் பீக்கிங்கிற்கு நாம் திரும்பினுேம். எமது முதலாவது நெடும் பயணம் பூர்த்தி பெற்ற பன்னிரண் டு மாதங்கள் கழிந்து மீண்டும் கோபிப் பாலைவனத்திற்குச் செல்வதற்காக பீக்கிங்கை விட்டுப் புறப்பட்டோம்.
இரண்டாவது நெடும் பயணமும் முதலாவது போன்று வெற்றியானது. எரி கொழுந்துக் குன்றுகளுக்குச் சென்று முதன் முறையாக டைனசோர் முட்டைகளைக் கண் டு பிடித்தமை பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பின்னர் நாம் மேற்கு நோக்கிப் புதிய பிரதேசங்களுக்குச் சென்றும் அவ்வப் பிரதேசங்களுக்கான படங்களை வரைந்தும் அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் முக்கியமான விடயங்களைக் கண்டு பிடித்தோம்.
பருவகாலத்தின் இறுதியில் நாங்கள் வீடு நோக்கித் திரும் பும் வழியில் கால்கன் எனும் பட்டினத்துக்கு வடக்கில் தலைவர் ஒஸ்போன் எமது நெடும் பயணத்தில் பங்கு கொண்டார். இராப் போசனத்திற்குப் பின் கடைசி இரவன்று ஒஸ்போனும் நானும் நெடும் பயணத்தின் எதிர் காலத்தையிட்டுக் கதைத் தோம். நாம் திட்டமிட்டு இருந்தபடி ஐந்து ஆண்டுகளில் எமது வேலை பூர்த்தியுருது என்பது தெளிவாயிற்று. அதற்குப் பத்து
五49

Page 82
ஆண்டுகள் தேவைப்பட்டன. அவ்வாருயின் மேலும் பணம் சேகரிப்பதற்கு நான் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்பது அவசியமாயிற்று. அன்றியும் எமது குழுவினருட் சிலர் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த வேலைகளின் பெறுமதியை ஆராய்வதற்குத் திரும்பிச் செல்ல வேண்டிய அவசியமிருந்தது . எனவே நெடும் பயணத்தைச் சிறிது காலம் ஒத்திவைத்து மீண்டும் 1925 இல் தொடங்குவதெனத் தீர்மானித்தோம்.
புகழ் பெற்ற டைணசோர் முட்டை விற்பனை
டைனசோர் முட்டைகள்! டைனசோர் முட்டைகள்! இவ் வார்த்தை நான் அமெரிக்காவில் எட்டு மாதங்களாகக் கேட்ட வையாம். அவ்வார்த்தைகளிலிருந்து நான் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. நாம் கண் டு பிடித்திருந்த ஏனைய மிக முக்கியமான் விடயங்களைக் கூறுவதற்கு நான் முயன்றேன். எவருமே அவற் றிற்குச் செவிசாய்க்கவில்லை. ஈற்றில் டைனசோர் முட்டைகளைப் பயன்படுத்தி எனது எண்ணத்தைச் செயற்படுத்த முயன்றேன்.
செல்வந்தர் சிலர் எங்களுக்குப் பணம் கொடுத்திருந்தனர். ஆனல் அது எமது தேவைக்குப் போதாதிருந்தது. நெடும் பயணத் திற்கான பணம் மந்தமாகவே சேர்ந்தது. பின்னர் நான் தலைவர் ஒஸ்போனுக்குக் கூறினேன்; 'பொதுமக்கள் நெடும் பயணத்திற் கான செலவைக் கொடுத்து உதவுவார்கள் என்று நினைக்கிறேன். ஆணுல் சிறு தொகைகள் எமக்குத் தேவைப்படாதென நினைக் கின்றனர் போலும். ஆகவே நாம் டைனசோர் முட்டை யொன்றை விற்போம், மிகக் கூடுதலான பணம் கொடுப்பவர் கள் அதனைப் பெற்றுக் கொள்ள ட்டும். பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதி, சிறிய பெரிய நன்கொடைகள் எமக்குத் தேவை என்பதனை எடுத்துக் கூறவேண் டும்'.
இவ்வாறே ‘பெருமைக்குரிய டைனசோர்” முட்டை விற் பண் ஆரம்பமாயிற்று. இத்திட்டம் பற்றி 40 பத்திரிகை நிருபர் களிடம் நான் எடுத்துக் கூறினேன். அவர்கள் உதவிபுரிவதற்கு உடன்பட்டனர்.
மறுநாள் இலண்டன் பத்திரிகை யொன்று அம் முட்டைக்கு 2000 டொலர் தருவதாகக் கூறிற்று. அமெரிக்காவிலுள்ள தேசிய புவியியற் சங்கம் விலையை 3000 டொலராக உயர்த் திற்று. அவுஸ்திரேலியாவிலுள்ள ஓர் அரும்பொருட்சாலை 3500 டொலராக உயர்த்தியது. யேல் பல்கலைக்கழகம் 4000 டொலர்
150

தருவதாகக் கூறியது. ஒரு டொலர் தொட்டு பத்தாயிரம் டொலர் வரை தபால் மூலம் பணம் வரத் தொடங்கிற்று. ஈற்றில் ஒஸ்ற்றின் தொல்கேட் என்பார் 5000 டொலர் கொடுத்து அம் முட்டையை வாங்கினர். அவர் அதனை கொல்கேட் பல்கலைக் கழகத்திற்கு வழங்கினர். பொது மக்கள் 50,000 டொலர் கொடுத்துதவினர்கள்.
அவ்வருடப் பனிக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய் நாட்டி லுள்ள ஒவ்வொரு மாகாணத்திலும் 80 நாட்களில் 80 சொற் பொழிவுகளை நான் ஆற்றினேன். அச் சுற்றுப் பயணத்தின் முடிவில் நான் பெரிதும் களைப்புற்று இருந்தேனுயினும் நெடும் பயணத்திற்கான பணத்தைப் பெற்றுக் கொண் டோம்.
மீண்டும் கோபிப்பாலே வணத்தில்
1925 ஆம் ஆண் டு நெடும் பயணக்குழு மற்றெல்லாவற்றி லும் பெரிதானதாகும். உண்மையில் திறனுகச் செயற்படுவதற்கு அது மிகப் பெரிதாக இருந்தது. பயண அழைப்பில் 50 மனித ருடன் 8 கார்கள் 150 ஒட்டகங்கள் இடம் கொண்டன. எமக்கும் பெருந் தொகையில் உணவும் மறு பொருட்களும் பல கார்களும் வேண்டியிருந்தமையால் எமது பெரிய குழு எளிதாகவும் விரை வாகவும் இயங்குவதற்குக் கடினமாக இருந்தது. ஆயினும் அப் பயணம் அதி வெற்றியானதாகத் திகழ்ந்தது.
பல தன்மைகளில் இப்பயணமும் முன் மேற்கொண்டிருந்த பயணங்களைப்போல் இருந்தது. நாம் புதிய பிரதேசங்களை ஆராய்ந்தோம். புதிய உயிர்ச் சுவடுகளையும் கண்டு எடுத்தோம். மத்திய ஆசியா, வடக்கில் மிருக வாழினங்கள் முதலில் தோன்று வதற்கு, நடுநிலையமாக இருந்தது எனும் ஒஸ்போனின் கருத்துத் தெளிவாக வலியுறுத்தப்பட்டது. ஆனல், நாம் இப்பொழுது மற்றும் பல முக்கியமான உண்மைகளை அறிந்தோம். மத்திய ஆசியா உலகின் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் நெடுங் காலமாக வறண்ட நிலமாக இருந்திருந்தது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல பகுதிகள் வெவ்வேறு காலங்களில் கடல் மட்டத்திற்கு மேல் உயர்ந்தும் அதற்குக் கீழ் தாழ்ந்தும் இருந் திருக்க, மத்திய ஆசியாவோ 150 மில்லியன் ஆண்டுகளாக உயர்ந்து வந்துள்ளது. ஐரோப்பிய அமெரிக்கப் பிரதேசங்களைப் போன்று மொங்கோ லியா ஒருபோதும் பணியால் மூடப்பட டிருந்ததில்லை. ஆகவே மத்திய ஆசியாவில் மிருக வாழினங்கண்
51 'r 6

Page 83
யிட்ட பதிவுகள் இடைவெளியின்றித் தொடர்ச்சியாகப் பதியப் பட்டு வந்திருந்தன. அதுபோன்ற பதிவுகள் உலகின் வேறெந்தப் பகுதியிலும் இடம் பெறவில்லை.
எரி கொழுந்துக் குன்றுகளில் நாங்கள் அதிக அளவு பரு மனில் பெரிய சிறந்த டைனசோர் முட்டைகளை மேலும் கண் டோம். அன்றியும் எங்களது கூடாரத்துக்கு அருகில் ஆரம்ப மனித வாழ்க்கை இருந்ததற்கான அறிகுறிகளேயும் நாம் கண் டோம். எரிகொழுந்துக் குன்றுகளுக்கு அண்மையில் ஒர் இடத் தைப் பல்லாயிரம் ஆண் டுகளாக மனித இனம் பயன்படுத்தி இருந்தது புலனயிற்று.
அம்மனிதர் ஏறத்தாழ 10 - 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொங்கோலியா பூராவும் பயணம் செய்துள்ளனர். பின் னர் அவர்கள் பற்றிய அறிகுறிகள் அலஸ்காவில் காணப்பட்டன. பெறிங் சலச்சந்தியினூடாக அமெரிக்காவிற்கு அவர்கள் வந்தி ருக்க வேண்டும். இன்று அது ஆசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள நீர் நிலையாய் உள்ளது. ஆனல் முன்னெரு காலத் தில் அது வறண்ட நிலமாக இருந்திருக்கலாம். அமெரிக்காவில் வசித்த மக்களில் முதற் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கலாம்.
1925 ஆம் ஆண்டுக் கோடைகாலத்தில் எரி கொழுந்துக் குன்றுகளில் மற்றும் ஒரு பெரிய கண்டுபிடிப்பு இடம் பெற்றது. எமது முதலாம் நெடும் பயணத்தின் போது வோல்டர் கிறேஞ்சர் மிகச் சிறியதொரு மண் டை ஓட்டைப் பாறை மீது கண்டெடுத் தார். அவர் அதனை 'ஊர்ந்து செல்லும் இனம் தெரியாத பிராணியின் ஒடு’ என்று கூறியிருந்தார். பின்னர் பாறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆராயப்பட்டபோது, ஆரம்ப காலத் திற்குரிய முலையூட்டிகளின் மண் டை ஓடுகளுள் ஒன்ருக அது இருந்ததென நிரூபிக்கப்பட்டது. இந்த நெடும் பயணத்தில் அதே முலையூட்டிகளின் எலும்புக்கூடுசளையும் 7 மண் டையோடு களையும் நாம் கண் டோம், அவை மிகவும் சிறியனவாய் இருந் தன. 70 அல்லது அதற்கு மேற்பட்ட மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த டைனசோர்களின் கால்களுக்கிடையே இவை ஒடித் திரிந்திருக்கக் கூடும். டைனசோர் முட்டைகள் மறக்கப்பட்ட பின் அவைகளுக்காக இச் சிறிய மண் டையோடுகள் ஆசியாவில் எங்களுடைய தனிப்பெரும் கண் டுபிடிப்பாக அறிவியற் கலைஞர் களால் நினைவு கூரப்படும்.
5

எரி கொழுந்துக் குன்றுகளை விட்டு நீங்குவதற்கு நாம் வருந்தினுேம். முழுக் கோபிப் பாலைவனத்திலிருந்தும் பெறுவ தெனத் துணிந்து எதிர்பார்த்ததிலும் கூடுதலான கண்டுபிடிப்பு களை இக்குன்றுகள் எங்களுக்கு வழங்கின. எனது கார் உயர்ந்த தரைக்குப்போன பொழுது நான் கடைசி முறையாக அந்தப் பெரிய செந்நிறப் பள்ளத்தாக்கை நோக்கினேன். அதனை மீண் டும் ஒரு போதும் நான் காணப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.
இப்பருவத்தில் எமது கடைசிக் கூடாரத்திலிருந்து ஒரு பாம்புக் கூட்டம் எம்மைக் கட்டாயமாக வெளியேற்றியது. பாலைவனத்திலுள்ள பாம்புகளில் 'குழிவிரியன்' பாம்பு அதி அபாயகரமானது. எங்களுடைய கூடாரம் உயர்ந்த பாறைச் சரிவுகளில் ஒரு குன்றின் மீது இருந்தது. இரவு நேரம் அப் பிரதேசம் மிகக் குளிராக இருந்ததால் உஷ்ணத்தை நாடி பாம்பு கள் மேலே வந்தன.
எங்கள் குழுவினருள் ஒரு வன் கட்டிலில் படுத்திருந்தபோது தரையில் படிந்த சிறிது நிலா வொளியை நீண்ட மெல்லிய உருவமொன்று கடந்து சென்றதைக் கண்டான். எழுந்து பாம் பைக் கொல்வதற்கு எத்தனித்தானுயினும் தரையில் தனது சால்களை ஊன்றுவதற்கு முன்னர் கீழே பார்ப்பதற்குத் தீர்மா னித்தான். அவனுடைய கட்டில் கால்கள் ஒவ்வொன்றையும் சுற்றி ஒரு பாம்பு இருந்தது. அவனது படுக்கை யைப் பகிர்ந்து சொள்ளப் பார்த்திருந்த இரு பாம்புகளை அவன் கொன்ருன். பின்னர் தான் முதலாவது கண்ட பாம்பைத் தேடத் தொடங்கி ஞன். திடீரெனப் பாம்புகளுக்குத் தலைவனகிய பாம்பு அவனது கட்டிலின் தலைப்பக்கத்தில் இருந்த பெட்டியின் கீழ் இருந்து வெளிப்பட்டது.
அவன் சுவராசியமாக அந்த இரவைக் கழித்தானுயினும் தனியனுக இருக்கவில்லை. வேருெருவன் தனது கட்டிலுக்கருகில் ஐந்து பாம்புகளைக் கொன்ற ஃ. இன்னெருவன் தன் சப்பாத்தி னுள் ஒரு பாம்பையும், இன்னுெருவன் தொப்பியில் ஒன்றையும் கண்டனர். அன்றிரவு ஒருமித்து 47 பாம்புகளை நாம் கொன் ருேம்.
குளிரான காலநிலை பாம்புகளை மெதுவாக நகரச் செய்தது. ஆனல் நாம் மிகவுங் கலவரமுற்ருேம். ஒரு இரவு நான் கூடாரத் தினுள் நுழைந்தபோது மிருதுவாகவும் வட்டமாகவும் இருந்த ஏதோ ஒன்றை மிதித்து விட்டேன். எனது கூச்சலைக் கேட்டு
1.59

Page 84
முழுக் குழுவினரும் வந்தனர்; ஆனல், அஃது ஒது ஒரு துண்டுக் கயிருக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் வோல்டர் கிறேஞ்சர் ‘என்னிடம் நீ அகப்பட்டுக் கொண் டாய்’ என்று கூச்சலிட்டு ஏதோ வொன்றை ஒரு தடியினல் அடித்தார். ஆனல் அவர் அடித்தது ஒரு சிறிய மரத் துண்டாக இருந்தது.
புதிய கூடாரம் உயிர்ச்சுவடுகளை நிறையக் கொண் டு இருந் தது. ஆனல் ஈற்றிலே பாம்புகள் வெற்றி பெற்றன. காற்றில் கலந்திருந்த பனி எங்களைத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு கூறிற்று. செப்டம்பர் 12 ஆந் தேதியன்று பாம்புகளுக்குக் கூடாரத்தை விட்டுவிட்டு எமது கார்கள் வெளியேறின. 1925 ஆம் ஆண் டு நெடும் பயணம் முடிவுற்றது.
சீனுவில் குழப்பங்களுக்கான அறிகுறிகள் 1926, 1927 இல் புலனுயிற்று. அந்நியர்கள் நம்பப்படாக் காலம் அது. மேலும் இரு நெடும் பயணங்களை, ஒன்றினை 1928 இலும் மற்றதனை 1930 இலும் மேற்கொண்டேன். ஆனல், அரசாங் கத்தோடு செயல் தொடர்புகளை வைத்துக் கொள்வது மிகக் கடினமாக இருந்தது. கோபிப் பாலைவனத்தின் மேலதிக வேலை களைச் செய்ய வேண்டியிருந்த போதிலும் எனது ஆராய்ச்சி வேலையை முடித்துக்கொள்ள நான் தீர்மானித்தேன்.
*மத்திய ஆசியாவைப் புதிதாக வெற்றி கொள்ளல்" எனும் (ஆங்கில) நூலை எழுதுவதற்காகப் பீக்கிங்கில் தங்கி னேன். 1932 ஆம் ஆண்டுக் கோடைகால இறுதியில் அந் நூல் முற்றுப் பெற்றது. 12 ஆண் டுகளாக நான் வசித்திருந்த பீக்கிங் இல்லத்தை மேலும் வைத்திருப்பதற்கு மேலதிக காரணமும் இருக்கவில்லை. கடைசித் தடவையாக அதன் பெரிய சிவப்பு வாயில்களைக் கடந்த போது நான் மிகவும் துக்க முற்றேன். நானும் என் மனைவியும் 1930 இல் எமது மண வாழ்க்கையை முடிவாக்கிக் கொண்டோம். 1932 இல் நான் நியூயோக்கிற்குத் திரும்பிய போது எனக்கெனப் புதிய ஒரு வாழ்க்கையை அமைத் துக் கொண் டேன். அமெரிக்க அரும் பொருட்சாலையின் இயக்குந ராகி, நாடு காண் ஆராய்ச்சித் துறைக்குப் பொறுப்பினை மேற் கொண்டேன். மேலும் நான் நியூயோக் நாடு காண் ஆராய்ச்சிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தேன், எனக்குச் சில கெளரவங் களும் கிடைத்தன. இவற்றுடன் நான் மகிழ்ச்சியாக இருந் திருக்க வேண்டும். ஆனல், நான் அவ்வாறு இருக்கவில்லை. பாலை வனத்திற்குத் திரும்பிச் செல்ல நான் விரும்பினேன். எனவே 1933 இல் இந்தியா வழியாக சீன - ருசியா துருக்கிஸ்தானுக்கு நெடும் பயணம் செய்வதற்காகத் திட்டமிடத் தொடங்கினேன்.
I 54

பின்னர் எனது முழு வாழ்க்கையையும் மாற்றி அமைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்பொழுது அரும் பொருட் சாலை யின் இயக்குநராக இருந்த ஜோர்ஜ் ஷெர்வூட் கடும் சுகவீன முற்றர். அவர் குணமாகும் வரை அவரது பதவியை வகிக்கும் படி நான் கேட்கப்பட்டேன். அது பேரார்வம் தருவதும் பய னுள்ளதுமான ஒரு பொறுப்பாக இருந்தது. ஆகவே பயணம் செய்ய வேண் டும் எனும் எனது ஆசையைக் கைவிட்டேன்.
அக் காலத்தில் விகல் மிஞ கிறிஸ்மஸ் - சகலராலும் பில்லி என்று அழைக்கப்படும் - ஒரு பெண்ணை நான் சந்தித்தேன். மீண்டும் ஒருபோதும் நான் மணம் செய்வதில்லை என்று முன் னர் தீர்மானித்திருந்தேன். ஆணுல், பில்லியை சந்தித்த பின்னர் என் மனம் மாறியது. மூன்று மாதங்களுக்குப் பின் நாம் மணம் முடித்துக் கொண்டோம்.
கல. நிதி ஷெர்வூட் தமது வேலைக்குத் திரும்பமாட்டார் என்பது தெளிவாயிற்று. என்னே அரும்பொருட் சாலையின் இயக் குநர் ஆகுமாறு கேட்டுக் கொண் டனர். நாடு காண் பயன ஆராய்ச்சியில் இனிமேல் ஈடுபட முடியாமல் போகும் என் பதனைக் கொண்டு அப்பதவியை ஏற்க நான் விரும்பவில்லை. ஆனல், கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்ட நாள் தொட்டு நான் அரும் பொருட்சாலையுடன் தொழில் கொண் டுவந்துள் ளேன். சுவராசியமான பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டிருந் தன. எனது முன்னுள் நண்பனுன காள் அக்லியின் கனவாகிய ‘ஆபிரிக்க மண்டலம்' முற்றும் நிலையில் இருந்தது. ' வட அமெரிக்க முலையூட்டிகள் மண் டபம்’ ஒன்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் அரும்பொருட் சாலையைப் பார்க்க வருவர். ஆகவே, இயக்குநர் பதவி சுறுசுறுப்பானதும் உற்சாகமூட்டுவது மான ஒரு வேலையாக இருந்தது.
ஆயினும் நகரத்தில் வாழ்ந்து அலுவலகம் ஒன்றில் வேலை செய்வதை நான் விரும்பவில்லை. 28 ஆண்டுகளாக நான் திறந்த வெளியிலேயே வசித்து வந்திருந்தேன். முதிர்ந்த வயதில் கைப் பற்றப்பட்டு வேலிகளிடை வைக்கப்பட்டிருந்த காட்டு மிருகம் ஒன்றைப் போன்று நான் இருந்ததாக உணர்ந்தேன். 1937 இல் நானும் பில்லியும் நியூயோக் நகரத்திற்குப் புறத்தே ஒரு பண்ணையை விலைக்கு வாங்கினுேம், அங்கு சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டுமே நாம் தங்கியிருக்க இயலு மாயிருந்த கெனினும், ஒரு காட்டுப் பகுதி போன்று இருந்த அவ்
I 55

Page 85
விடத்தை வாழத் தகுந்த இடமாக மாற்றி உருவாக்குவதில் நாம் மகிழ்ச்சி அடைந்தோம். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அரும் பொருட்சாலையை விட்டு நீங்கியபின் அப்பண்ணையையே எங்களுடைய நிரந்தர இல்லமாக்கிக் கொண் டோம்.
எனது வேலை, முற்ருகப் பணம் தேடும் வேலையாகப் பெரி தும் மாறியிருந்தது. எனக்கு அது மகிழ்ச்சியை அளிக்கவில்லை. நான் இயக்குநராகத் தொடர்ந்து இருப்பது அரும் பொருட் சாலைக்கோ அன்றி எனக்கோ நியாயமானதன்று என நான் உணர்ந் தேன். எனவே நான் 1942 ஆம் ஆண்டில் எனது வேலையி லிருந்து விலகினேன்.
அப்பொழுது நியூயோக் பத்திரிகை ஒன்று என்னைப் பற் றிக் கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
‘ஒருவன் தனது வேலையை நேசிப்பதால் அவன் அதனை விட்டு விலகு கிருன் என்பது வழக்கத்திற்கு மாறனது. ஆயினும், இது காரணமாகவே ருேய் சாப்மன் அன்ட்றுாஸ் இயற்கை வர் லாற்று அரும்பொருட் சாலையின் இயக்குநர் பதவியை விட்டு விலகுகின்ருர், முன்னர் நாடு காண் ஆய்வுப் பயணங்களைச் செய்தது போன்று இன்றைய உலக நிலைமைகள் அவரை இப் போது பயணம் மேற்கொள்வதற்கு அனுமதிப்பதில்லை. அதே வேளையில் அரும் பொருட் சாலைக்குப் பணப் பிரச்சினைகள் புதிதாக எழுந்துள்ளன. அவ்வாறன பிரச்சினைகளைத் தீர்க்க வல் லவர் தானல்ல, என்று கலாநிதி அன்ட்றுாஸ் கூறுகிறர். எனவே தாமே முக்கியமான பங்கு எடுத்துத் தோற்றுவித்த வளர்ச்சியின் பெறுபேறுகளைப் பாதுகாப்பதற்கு வேறு ஒருவருக்கு இடம் கொடுப்பதாக அவர் ஒதுங்கிக் கொள்கிருர்,
அக்காலத்து வளர்ச்சிக்கு அவர் தகுந்த மனிதராக இருந் தார். அறிவுக் கலை உலகில் அரும்பொருட்சாலை ஒரு பலமான சக்தியாக இயங்கும் வகையில் அதனை உருவாக்கினர். மேலும், அரும்பொருட்சாலையில் ஆர்வம் கொள்வதற்கு பொதுமக்களே ஊக்குவித்தார். 35 ஆண்டுகளாக, தமது வாழ்க்கையின் அரைப் பகுதிக்கு மேலாக, கலாநிதி அன்ட் றுாஸ் அரும் பொருட் சாலையோடு, அதற்காக வாழ்ந்துள்ளார். அவரது வாழ்க்கையின் எஞ்சிய காலப் பகுதியில் அரும் பொருட்சாலைக்கு அவரது உதவி இலவசமாகக் கிடைக்கு மென்பது நற்செய்தியாகும்.'
(ஆசிரியர் குறிப்பு:- ருேய் சாப்மென் அன்ட் றுஸ் 1960 ல் மார்ச் மாதத்தில் இறந்தார்).
1 56


Page 86
al Published for Marga Institute & Printed by K. Hemachandra at the Tisara Press, 137, Dutugemunu Street, Dehiwala,


Page 87
غیی
சோராத உள்ளமும் த சாதிக்க முடியாதது
வடதுருவப் புள்ளி ஆபிரிக்காவின் அபூர்வ விலங்குக2 அவற்றை ஒவியம் மத்திய ஆசியாவின் ம மிகப் புழக்கான விலங் சுவருகன் அகழ்ந்து ஆ துணிவும் உழைப்பும் இவை எல்லாவற்ை நூ)ே வாசியுங்கள் இவற்றைப் பெறுவீர்க
இநநூல் 2முதல் 5 வயது கல்வித் து20 நூலாக அ
 
 

ராத முயற்சியும் ன்றில்2
றயும் சாதிக்கலாம்
வரையுள் சிறுவக்கு EIறு ஆக்கபட்டது.