கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அண்ணா ஒரு நோக்கு

Page 1


Page 2


Page 3

அண்ணு- ஒரு நோக்கு
-கரிகாலன்
இரஞ்சனு பதிப்பகம், கொழும்பு

Page 4
அண்ணு - ஒரு நோக்கு
ஆசிரியர் கரிகாலன்
இரண்டாம் பதிப்பு : அக்டோபர் 69
լ/էջ ösir , 5 O Ο Ο
வி&ல ரூபா 2-5O
அச்சுப் பதிப்பு : இாஞ்சனு அச்சகம்,
98, விவேகானந்தர் மேடு, கொழும்பு - 13 (இலங்கை). தொலைபேசி : 3 22 21

பதிப் புரை
-ബം
அண்ணு ஒரு யுகத்தின் தலைவன். தாழ்ந்த தமிழினத் தைத் தட்டியெழுப்பத் தோன்றிய தவப்புதல்வன்.
அண்ணு பிறந்தகத்தில் மட்டுமல்ல கடல்கடந்த நாடு களிலும் தன்னிகரற்ற செல்வாக்குடன் விளங்கிய ஒரே தலைவன். அண்ணுவுக்கு முன்னரும் இத்தகைய ஒரு தலைவன் தமிழினத்தில் தோன்றியதில்லை. அண்ணுவுக்குப் பின்னரும் தோன்றப் போவதில்லை.
அண்ணு மிக எளிமையான குடும்பத்தில் தோன்றிய வர். உலகத் தமிழனின் ஒப்பற்ற தலைவனுக எழுத்து நின்ற போதும் அவர் மிக மிக எளிமையானவராகவே - அவர் மொழியில் 'சாமானியராகவே "-வாழ்ந்தார். இந்த உண் மைகளை இந்நூலில் ஒரளவு தரிசிக்கலாம்.
அண்ணு அமரரான மறுநாள் கரிகாலன் அவர்கள் 'தினகரன் தினசரியில் ‘அண்ணுதுரை என்பதோர் சகாப் தம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிஞர். அக் கட்டு ரையை விரிவுபடுத்தித் தருமாறு நாம் வேண்டியதின் விளைவே இந்நூல்.
கரிகாலன் அவர்கள் தமிழ் உலகிற்குப் புதியவர் அல் லர். ஈழத் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எல்லாம் இவர் குரல் ஒரு காலத்தில் ஒலித்தது. மாணவ சமூகத்தின் இலட்சியப் பேச்சாளராக விளங்கியவர். எழுத்துத் துறையி லும் பல பரிசோதனைகளை நடாத்தியவர். அரசியல் கருத்து களுக்கு இலக்கிய வடிவங் கொடுத்துத் தனக்கெனத் தனி பான வாசகர் கூட்டத்தையும் சம்பாதித்துக் கொண்டவர்.
பள்ளிப் பருவம் தொட்டே அரசியலில் பங்கு கொண்டு பணியாற்றிய கரிகாலன் அவர்கள், ஒரு இலண்டன் பல் கலைக்கழக பீ. ஏ. பட்டதாரி.

Page 5
1961- Ꭵb ஆண்டு அறப்போரைத் தொடர்ந்து ஆறு மாத காலம் அரசாங்கத்தின் விருத்தாளியாக இருந்தவர். இன்று அரசியல் கட்சிகளிடமிருந்தும் அரசியலில் இருந்தும் நெடுந் தூரம் ஒதுங்கி வாழ்கின்றர். இந்நூல் தமிழ் மக்களின் சிந் தனைப் போக்கை மாற்றியமைக்கச் சிறிதளவாவது வழி சமைக்கும் என்று நம்புகின் ருேம்
பதிப்பகத்தார். இரஞ்சனு பதிப்பகம், கொழும்பு-13, 21-10- 1969.

சிலம்புச்செல்வர் நோக்கில்.
ud. GLust. சிவஞானம் எம்.எல். ஏ. 1129, இருசப்ப கிராமணி தெரு,
தலைவர்: தமிழரசுக் கழகம். Ga Git 250T-5.
அன்பர் கரிகாலன் எழுதியுள்ள 'அண்ணு - ஒரு நோக்கு' என்ற நூலைப் படித்தேன். நூலாசிரியர் அ ண் ணு வின் கருத்துக்களிலே தோய்ந்துள்ளவர். அதனல் அண்ணுவைப் பல கோணங்களில் நின்று நமக்கு அறிமுகப்படுத்துகின்ருர், அண்ணுவின் முழு வடிவத்தை நமக்கு அறிமுகப்படுத்த முயன்று அதில் பெருமளவு வெற் றியும் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம்.
அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை ஆராய்வோர் கொள்கை வேறு நடைமுறைவேறு என்பதனைத் தெளிவாக உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அண்ணு போன்ற தலைவர்கள் கொள்கைகளிலே ஊன்றி நிற்குமிடத்தும் நடைமுறைகளை மாற்றிக் கொள்கின்றனர். இந்த மாறு தல்களையும் நினைவில் கொண்டு அவர்கள் வாழ்க்கையை ஆராய வேண்டும்.
அண்ணுவிடம் எனக்கு அன்பும் மதிப்பும் எப்போதும் உண்டு. ஆனல் ஆசிரியர் கரிகாலன் அவர்கள் இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ள அண்ணுவின் கருத்துக்கள் அத்தனை யையும் நான் ஏற்றுக் கொண்டவன் என்று பாசாங்கு செய்வதற்கில்லை. எங்களுக்குள் உடன்பாடுள்ள கொள் கைகளுமுண்டு; ஆனல் நான் அவரோடு மாறுபடும் கருத் துக்களிலேயும் அவரைப் பெரிதும் மதிக்கின்றேன்.

Page 6
'அண்ணு - ஒரு நோக்கு' என்ற இந்த நூல் இது வரை அண்ணுவைப்பற்றி வெளிவந்த நூல்களிலே மிகவும் சிறந்ததென்று கூறுவேன். பெரிதும் உழைத்து இந்தநூலை உருவாக்கி இருக்கிருர் ஆசிரியர் கரிகாலன். அண்ணுவின் புகழ் மணம்போல இந்நூலும் மணக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் இதனை வாங்கி ஆசிரியரை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தின் முப்பதாண்டு வர லாற்றுக் குறிப்புக்கள் இந்த நூலில் குவிந்திருக்கின்றன.
ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.
恋
17-10-1969 ம. பொ. சிவஞானம்

புலவர் நோக்கில். . . . .
தமிழினத்தினது மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெரியார் சார்பு பெற்றுத் தமிழினத்தினது தனித்தகைமையை உலக முழுவதுமறிந்து பாராட்டும்படி பரப்பிய சிறப்பு திரா விட முன்னேற்றக் கழகத் தந்தை காஞ்சி திரு. அண்ணு துரைக்கு உரியதென்பது உலகமறியும்.
அறிஞர் திரு. அண்ணுவின் அறிவு, நினைவு, சொல், செயல் அனைத்தும் நாளெல்லாம் தமிழினத்தின் அரசியல், பொருட்டுறை , இனக்கட்டு விடுதலையும் முன்னேற்றமும் பற்றியே நிகழ்ந்து கொண்டிருந்தன.
தம் பொதுநலக் கொள்கைகளை நிறைவேற்றுதற்கு வேண்டும் துணையும், ஆற்றலும், வழியும், திட்டங்களும் அமைத்துக்கொண்டு அயராது உழைத்த பெரியார் அறி ஞர் திரு. அண்ணு.
தமிழ் மரபினரது புதிய எழுச்சிக் காலத்தைத் தொடக்கிவைத்த மறைந்த திரு. அண்ணுவின் வாழ்க்கை வரலாறு தமிழர் தந்தலைமுறை தலைமுறையாகப் போற் றத்தக்க அரிய வைப்பாகும்.
அது கருதி, அறிஞர் அண்ணுவின் வாழ்க்கை வர லாறு முழுதின யும் ஒருவாறு சுருக்கித் தொகுத்து ‘அண்ணு - ஒரு நோக்கு" என்ற பெயரால் ஒரு சிறு உரை நூல் ஆக்கியுளார் அன்பர் திரு. கரிகாலன்.
இவர், இச்சிறு நூலில் யாவரும் படித்துணரத் தக்க வாறு நல்ல எளிய வழக்கு நடையிற் சுவை குன்ரு மற் குறிப்புகள் பல பொதிந்துகாட்டி எழுதிக்கொண்டு போகின் ருர்,
‘அண்ணு அறிமுகம்" என்பது முதல் 'அமரர் அண்ணு" என்பது வரையுமுள்ள பல தலைப்புக்களால் விளங்கும் பல

Page 7
பாத்திகளாகக் கூறுபட்டுச் சான்றுகளோடு முறையாகத் தொடர்ந்து செல்லும் இக்கட்டுரைக் கோவையைப் படிக் கின்றவர்க்கு, ஆக்கியோர் திரு. அண்ணுவை எவ்வளவு தெளிவாகவும் உண்மையாகவும் நுணுக்கமாகவும் கண்ட றிந்து விளக்குகின்ருர் என்பதும் இவரது சொல்வன்மை யும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிப்பன.
புறநானூற்றுச் செய்யுட் பகுதிகளும் பாரதிதாசன் பாடற்பகுதிகளும் ஆங்காங்கு பொருத்தமாக அமைந் திருப்பது அறிஞர் திரு. அண்ணுவின் பெரும் புகழை விளக்குதலோடு நூற்குச் சிறப்பளித்தலுமுடையது.
தம் பலவேறு கலைத்திறமை முதலான திறமையெல் லாவற்றையும் தம் பழம்பெருமைவாய்ந்த தமிழினத்தின் மீட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கருவியாக்கிக்கொண்ட திரு. அண்ணு இறைவன் தமிழினத்துக்கு அளித்த நன் கொடையாம். m
அப் பெருந்த கையாரது அடிச்சுவட்டைப் பின்பற்றிக் கடல்சூழிலங்கைக் காளைத் தமிழரும் தமது வாழ்வைத் தமது இனத்தின் மீட்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழங் கல் வேண்டுமென்ற உயரிய நோக்கத்தை இந்நூல் இனிது நிறைவேற்றுமென நினைக்கின்றேன்.
இ இளந்தமிழர் குழுவில் இந்நூலுக்கு நல்ல வரவேற்பு
ருக்கும்.
இங்ங்ணம் இரத்துமலான, புலவர் பாண்டியனுர் 23-9-'69. N

யான் நோக்குங் காலே.
ஏகலைவன் துரோணரிடம் வில்வித்தை கற்ருற்போல அண்ணுவிடம் சொல்வித்தை பயின்றவன் நான். எனின், இந்நூல் நான் ஆசானுக்குக் காணிக்கையாகத் தரும் கட்டை விரலா? அல்லது, "இவன் யார் என்குவையாயின் ." எனப் புறநானூற்றின் பாங்கில் தமிழர் காவியத்தலைவன் அண்ணுவை அடையாளம் காட்டும் சுட்டுவிரலா?
தமிழ்கூறும் நல்லுலகின் வாழ்வுத்துறை அனைத்தும் தனியொரு மனிதனுக அண்ணு ஏற்படுத்திய தாக்கமும் செலுத்திய செல்வாக்கும் இருபதாம் நூற்றண்டின் தமிழி னத்து வரலாற்றுச் சுவடிகளில் காலத்தால் சாகாத ஆழ மான சுவடுகளைப் பதித்துள்ளன. இதனை வருங்கால வர லாறு கூறும்வரை வழக்கம் போல தாம் காத்திருக்க வேண் டியதில்லை. எம்மைச் சுற்றிலும் ஒருமுறை பார்வையைச் செலுத்தினலே புரிந்துகொள்ள முடியும். கண்ணுடியின்றிப் பார்ப்பதே அழகு. அங்கனம் பார்த்ததில் பூத்ததே இந் நூல்.
அண்ணு முதலமைச்சரான பின், அதிகாரச்செல்வப் பெருக்கின்போது அன்னுரைச் சுற்றி வளைத்துக்கொண்ட புதிய உறவினரில் ஒருவனல்லன் தான். அன்னர் வெறும் "ஆண்டி"களின் தலைவனுக இருந்தபோதே ஈர்க்கப்பட்ட வன்; நெடுநாள் உறவினன்-அண்ணுவுக்கு, தி. மு .க வுக்
so).
இவ்வாண்டு அண்ணு நோயுற்ற சேதி கேட்டு இங்கு ஆயிரமாயிரம் உள்ளங்கள் நலிவுற்றிருந்தன. அவற்றுள் எனதும் ஒன்று. பெப்ரவரி மாதம் 2-ம் தேதி இரவு அன்ன ரின் உடல்நிலைபற்றிய செய்தியறிக்கையைக் கேட்டுக் கொண்ட கண்ணயர்ந்தவன், 3-ம் தேதி காலை 4 மணிக்கு வேளையோடு எழுத்து அன்றைய தினசரியைப் பிரித்த போது அண்ணு தெடும்பயணம் போய்விட்ட சேதியை

Page 8
கண்டேன். எதிரேயிருந்த தமிழ்க் கடவுள் குமரவேளை நோக்கி என் கைகள் குவிந்தன. என் உணர்ச்சிக் கொதிப் பிலே எழுந்திட்ட கொப்புளங்கள் எத்தனையோ. 'விதியே! விதியே! தமிழச் சாதியை என் செயக்கருதி இருக்கின்
Gop uu l-nt ?'' '
கால வறுமையினுல் இம் முயற்சியை முழுமைப்படுத்த முடியவில்லை. நேர நெருக்கடிகளின் தாக்கத்தால் விளைந்த தழும்புகளும் தொய்வுகளும் ஆங்காங்கு கண்களை உறுத்து கின்றன.
தமீழ் மக்களின் நிலையை எண்ணி ஒசைப்படாமலே அழுகின்ற ஊமை உள்ளங்கள் சில உள. அவற்றின் விம்மல் கள் விளம்பரமாவதில்லை. அ வ ற் று ஸ் ஒன்று ஊன்று கோலாக, இல்லை உயிராக, துணை நிற்க உருவானதே இந் நூல். அண்ணுவின் பிறந்தநாளையொட்டி இந்நூல் வெளி வர வேண்டுமெனப் பெரிதும் முயன்ற இவ்வன்பர், தம் பெயருக்கும் தாழிட்டுக் கொண்டனர். இவர் வாழ்க 1 இந் நூலை வெளிக்கொணர விழைந்து பல்லாற்ருனும் தூண்டு கோலாகி நின்ற கெழுதகை நண்பர் திரு. ஈழவேந்தன் என் நினைவுக்குரியர்.
வர்த்தக வரன்முறைகளை மேவி இந்நூலை உற்சாகத் துடன் அச்சிட்டுதவிய இர ஞ் ச ஞ அச்சகத்தினருக்கும், குறிப்பாக திரு ஆ. நடராசா அவர்களுக்கும் நன்றியுடை. யேன்.
தமிழ் மக்களிடையே புதிய சிந்தனைமொட்டுக்கள் முகைவிரிக்கட்டும்.
கொழும்பு, அன்பன், 25-9--*69. கரிகாலன்.
பி-பு
மதிப்புரை வழங்கிய தமிழரசுக்கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களுக்கும், புலவர் கருணுலய பாண்டியஞர் அவர்க
ளுக்கும் மிக்க கன்றி.
கரிகரலன்

உள்ளுறை
MNMNMMNMNMMNMNA AMNMNMMNMNMNAMN,
அண்ணு-அறிமுகம் அரசியற் பள்ளியில் அண்ணு தி. மு. க. வில் அண்ணு பேச்சாளர் அண்ணு எழுத்தாளர் அண்ணு கலைத்துறையில் அண்ணு தமிழ் எழுச்சியில் அண்ணு ஆங்கிலத்தில் அண்ணு சிந்தனைச் சிற்பி அண்ணு சமய நெறியில் அண்ணு ஒப்புரவாளர் அண்ணு தென்னுட்டின் குரல் அண்ணு ஈழத் தமிழர் கண்ட அண்ணு முதலமைச்சர் அண்ணு அமரர் அண்ணு V−
13 31
41
52
62
70
79
84
95 104 112
120
132

Page 9
அமரத்துவம் பெற்ற தமிழ்த் தலைவன் வன் னிய சிங் கம் நினை
 

"நீதோன் றினேயே நிரைத்தா ரண்ணல்
கோடை நீடிய பைதறு காலை
இருநில நெளிய வீண்டி உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே’’
- புறநானூறு
அண்ணு-அறிமுகம்
Tெடுப்பான தோற்றமல்ல - சாதாரண தோற்றம் கூட அல்ல - எவரும் எடுத்தெறிந்து விடும் குள்ளஉருவம், காவியப் புலவனின் கற்பனைக்கு ஒட்டாத ஒழுங்கற்ற பல் வரிசை, அதிலே நிரந்தரமாகப்படிந்துவிட்ட வெற்றிலை வடுக்கள், சவரம்செய்து கொள்ளாத முகம், சீப்புப் படியாத கலைந்த கேசம், அவசரத்தில் அணியப் பெற்ற அலங்கோல உடை - இவற்ருேடு நமக்கு அறிமுகமான மனிதர்தான் அண்ணு. அன்னர் தம்மை மட்டும் அறிமுகப்படுத்தின சில்லை. குறளொன்றின் கருப்பொருளையும் துல்லியமாகத் துணியத் தந்தனர்.
'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னுர் உடைத்து’

Page 10
பொது வாழ்வு அரங்கிலே அண்ணு தோற்றிய கால கட்டம் சமூக அரசியல் வாழ்விலே அபூர்வ சக்திகள் பல ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நாட்கள். ஆள் வலி யும் அணிவலியும் அந்தஸ்து வலியும் மிக்கோரே தமிழகத் தின் சமூக அரசியல் வாழ்வில் தலையெடுத்திருந்த காலம். பிறப்பாலுயர்ந்த பேரரசுக்கள் தமிழகத்தின் வாழ்வுத் துறையனைத்தும் வக்கரித்துக் கொண்டிருந்த நாட்கள். பெரும் புள்ளிகளின் ஆதிக்கம் வலுத்திருந்த துறைகளிற் முன் சாமானியரான அண்ணுவும் "துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நுழைந்தார். மேல் மட்டத் தினரின் ஆதிக்கத்தின் கீழ் சாதாரண குடிமகன் சமூக அர சியல் சங்கதிகளில் பங்கேற்க முடியவில்லை. தமிழ் மொழி தலையெடுக்க முடியவில்லை சமூக அரசியல் விடயங்களை ஆய்வதற்குத் தமிழ் மொழிக்குத் தகுதியும் வாய்ப்பும் தரப் படவில்லை. இலக்கிய அரங்குகளை வட மொழி விரவிய "பிராமணுள் தமிழ்" ஆட்சி கொண்டிருந்தது. "அத்திம் பேரும் 'அம்மாமியும் ஏடுகளிலும் நல்ல வீடுகளிலும் ஏறி இறங்கினர். வடமொழிச் செல்வாக்குப் படர்ந்த மகாபாரதம், இராமாயணம் போன்றவை ஏனைய தமிழ் இலக்கியங்களை மேவி மிளிர்ந்திருந்தன. தமிழ் வாழ்வின் தனித்தன்மை அடையாளம் காண முடியாதவாறு அருகி விடுமோ என்ற அச்சம் இயல்பாகவே எழக் கூடிய நில யிருந்தது.
வேற்றுச் செல்வாக்கின் ஆதிக்கத்தைப் பெயர்த் தெறிந்து தமிழ் வாழ்வின் தனித்தன்மையை நிறுவவேண் Լգ սյ கடமை, பிராமணிய வர்ணுச்சிரம தர்மத்தின் பயங் கர வடுக்களைப் போக்கி சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டிய கடமை, மேட்டுக் குடியினரின் பிடியிலே மட்டும் இயங்குகிற தமிழகத்தின் சமூக, அரசியல் பொருளியல் வாழ்விலே பாமரக் குடிமகனையும் பங்காளியாக்க வேண்டிய கடமை, இன்னுேரன்ன கடமைகளை ஆற்ற வேண்டிய பொறுப்பு அண்ணுவைக் காத்திருந்தது. இப்பாரிய பொறுப்புக்களை எதிர்கொண்டு கையேற்கத் தன் பயணத் தைத் தொடங்கிய அண்ணுவோ, பரிதாபம், ஒர் பராரி, அன்னரிடமிருந்ததோ எளிமை. அன்ஞரின் கையுறையுள் இருந்த மூலதனமோ வெறுமை.
2

வாழ்க்கைக் குறிப்புகள்.
முழுப் பெயர்: தோற்றம்:
கல்வி:
பட்டம்:
தொடக்கத்
தொழில்:
பொழுது
போக்கு
பொதுவாழ்வு:
சிறை வாழ்வு:
வெளிநாட்டுச்
செலவு:
காஞ்சிபுரம் நடராஜன் அண்ணுதுரை.
5-9-1909.
தொடக்கம் - காஞ்சிபுரம் பச்சையப்பன் தொடக்கப் பள்ளி. உயர்கல்வி-சென்னை பச் சையப்பன் கல்லூரி.
எம். ஏ; பாடங்கள் அரசியல், வரலாறு பொருளியல்,
எழுது வினைஞர், காஞ்சி நகராட்சி மன்றம். ஆசிரியர், காஞ்சி தனியார் பள்ளி. ஆசிரியர், சென்னே கோவிந்தப்ப நாயகன் பள்ளி.
நூல்கள் படித்தல் (சென்னை பண்டிட் ஆனத் தம் நூலகம், பல்கலைக்கழக நூலகம், மாநக ராட்சி மன்ற நூலகம், சென்னை கன்னி மாரா நூலகம்.) தி. மு. க. தலைவர், ஏட்டாசிரியர், எழுத்தா ளர் (கதாசிரியர், நாடகாசிரியர், கட்டுரை யாசிரியர், திரைப்பட எழுத்தாளர்), பேச் சாளர். சென்னை சட்ட மன்ற உறுப்பினர் (1957 - 1962), இந்திய மாநிலங்களவை உறுப்பினர் (1962 - 1967), தமிழ் நாடு முத லமைச்சர் (1967 - 1969) 7 தடவைகள் (இந்தி எதிர்ப்புப் போர் 4, நூல்கள் எழுதியமை, மும்முனைப் போராட் டம், விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட் L-b)
இரு முறை - அமெரிக்காவுக்கு (1968 முற் பகுதியில் யேல் பல்கலைக் கழகத்தின் அழைப் 1657 Guisi Fi Lul Lib I Chubb Fellowship ஏற்பதற்காக; 1968 பிற்பகுதியில் நோய்க்கு சிகிச்சை பெறுதற்காக.)
3

Page 11
"இறைந்த நற் றமிழர் தம்மை
இணைத்த சீர் இராம சாமி அறைந்த நல் வழியே. . ...”
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
அரசியற் பள்ளியில் அண்ணு
அண்ணு அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டது ஈரோட்டுப் பெரியார் ஈ. வே. ரா. வின் பள்ளியிலே, தமது பொது வாழ்வுத் திட்டத்தின் பரப்பு எது வரப்பு எது என நிர்ணயித்துக் கொள்ளும் பருவத்திலே அண்ணு பெரியா ரின் தெளிவற்ற தத்துவப் பிரவாகத்தின் செல்வாக்கிலே தெப்பமாக நனைந்து போயிருந்தார். குருகுலவாசத்தின் கண்டிப்பு, கட்டுப்பாடு, தண்டிப்பு இத்தியாதிஇலட்சணங் களுடன் அமைந்த பெரியாரின் அரசியற் பள்ளியில், வேறு சாமான்யர்களாக இருந்திருப்பின் ஒன்று பெரியாரது கண் டிப்பின் கட்டுக்கடங்கி அன்ஞரின் கண்மூடி அரசியலில் மூழ்கியிருப்பர்; அல்லது பெரியாருடன் பிணங்கி மூன்றம் நாளே பெரியாரின் பாதையினின்றும் விலகி வெளியேறி யிருப்பர். பெரியாரின் அரசியல் தடுமாற்றங்கள், தீவிர வாதம் இவற்றுடன் தம்மை இரண்டறக் கலக்கவொட் டாது தம் தனித்தன்மையையும் பேணி, பெரியாரிடத்துக்
4

காணக்கிடந்த நன்மைகளையும் பேணி, தமக்கெனத் தனி அரசியல் உணர்வுகளை உருவாக்கிக் கொண்டவர் அண்ணு ஆவார். சுருங்கக் கூறின், அன்ஞர் தம் ஆரம்ப அரசியற் பள்ளியில் நடந்த பரீட்சையில் தேர்ச்சியுற்ருர் .
கருத்துக்கள் மட்டுமல்ல; அவற்றை நிலைநிறுத்துவதற் கான கருவிகளும் புனிதமானவையாக இருக்க வேண்டு மென்பது அண்ணுவின் கொள்கை. கருத்துக்களை நிலைநாட்டு வதற்காக எத்தகைய கருவிகளையும் பாவிக்கலாம் என்பது பெரியாரின் வாதம். இராமாயணத்தின் பாத்திரப்படைப் புக்களின் தெய்வீக அமைப்பில் அண்ணு நம்பிக்கையற்ற வர். பிள்ளையார் உருவ வழிபாட்டில் அவர் உற்சாகம் கண்டதில்லை. திராவிடப் பெருங் குடி மக்களுக்கு உண்மை யான சுதந்திரம் கிடைத்து விட்டது என்பதை அவர் ஒப்ப வில்லை. எனினும், இராமர் பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, ஆகஸ்ட், 15ம் தேதி-துக்கதினம் அனுட்டிப்பு போன்ற பெரியாரின் கிளர்ச்சிகளில் அண்ணு மகிழ்ச்சி கண் டதில்லை. அவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மறுத் தார் என்பது மட்டும் மகிமைக்குரியதல்ல; அவற்றை வெளிப்படையாகவே எதிர்த்தார்-அதுவும், பெரியாரின் கோபாக்கினி எத்துணை கொழுந்து விட்டெரியும் என்ப தைத் தெரிந்தும் எதிர்த்தார் என்பதே அண்ணுவின் சிறு மை கண்டு பொங்கும் பண்பைச் சித்தரிப்பதாகும்.
வெண்தாடி வேந்தரென்றும், தென்னுட்டு கார்ல் மார்க்ஸ் என்றும் தன்மானத் தந்தை என்றும் விதந்தோதப் பெறும் பெரியாரின் அரசியல் வாழ்வு தமிழ் மக்களின் வாழ் வில் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத வெறும்பாம் நிலம் தானு? தமிழ் மாநிலத்தில் அனர்த்தங்களை மட்டுமே விளைவித்த அர்த்த புஷ்டியற்ற வாழ்வா அது? பெரியாரின் தொடர்பு அண்ணுவுக்கு அனுகூலம் தரவில்லையா?.
தமது வாழ்வில் சுமார் அறுபதுவருடங்களுக்கு மேலாக சமூக அரசியல் வாழ்வில் செலவிட்டுவிட்ட பெரியார் தனி யொரு மனிதராக தமிழக சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை செப்பேடுகளிலன்றே செதுக்கி வைக்க வேண் டும். வைதீகக் கொடுமைகள் வர்ணுச்சிரம தர்மங்கள்,
5

Page 12
மத மாச்சரியங்கள், மூட நம்பிக்கைகள் இவற்றின் வேட் டைக் காடாக இருந்த தமிழகத்திலே, பாமர மக்களி டையே, புத்துணர்ச்சிக்கும் சித்தனைப் புரட்சிக்கும் அத்தி வாரமிட்டவர் பெரியாரல்லவா? அண்ணு நிறுவிய பகுத் தறிவுப் பாசறை இந்த அத்திவாரத்தில் அமைக்கப்பட்ட தன்ருே? பகுத்தறிவுப் பிரச்சாரம் செ வி மடுக்கப்படும் இந்த நாட்களிலல்ல, வைதீக வெறி வலிமைமிக்க சக்தி களையெல்லாம் அணிதிரட்டி நின்ற நேரத்தில், தனியொரு மனிதஞக அந்த உருக்கு மாளிகையை உடைத்தெறிந்தவர் பெரியார். தமிழகத்தில் தலையெடுத்த பிராமணிய ஆதிக் கத்தின் குரல்வளையை நெரித்து, தாழ்த்தப் பட்ட மக்க ளுக்கு வாழ்வு தந்தவர் பெரியார். கேரள மாநிலத்தில் வைக்கம் என்றஇடத்தில் காங்கிரஸ் தொண்டனுக தீண் டாமை எதிர்ப்புப் போர் நடாத்தி அண்ணல் காந்தியடி களின் வாயிலாகவே வைக்கம் வீரர்" என்று பாராட்டப் பெற்றவர் தன்மானத்தந்தை. பெரியார் நடாத்திய சமுதா யப்புரட்சியில் பிறந்த பெருமகனே அண்ணு ஆவர். "பிரெஞ் சுப் புரட்சியின் புதல்வன் நெப்போலியன்", என்பர் வர லாற்ருசிரியர். தமிழ் நாட்டை ஆக்கிரமிக்க வந்த இந்தி ஆதிக்கத்திற்கு விழுந்த முதல் அடி பெரியாரின் கைப்பட வீழ்ந்ததே. சூத்திரனுக்கு சுயமரியாதை உணர்வைத் தரு வதற்கென சுயமரியாதை இயக்கத்தை நிறுவிய பெரியார் தான் தமிழினத்தின் அறிவை ஆக்கிரமித்துக் கொண்ட மூட நம்பிக்கைகளை மூர்க்கத் தனமாகச் சாடிஞர். இப் பணியில் அவர் மத நிந்தனை செய்யக் கூடிய அளவுக்கு தீவிர வாதம் காட்டினர் என்பது உண்மையே. எனினும், பெரியார் இவ்விடயத்தில் நிதானம் காட்டியிருந்தால் பிற் போக்கு சக்திகளின் வலியை இவ்வளவு தூரம் அழித் திருக்க முடியுமோ என்பது சந்தேகமே. கல்லூரிப் படிப்பு அற்ற இந்தக் கர்ம வீரர் இன்னும் தமது தொண்ணுரருவது வயதிலும், கர்ச்சிக்கும் சிம்மமாக தமிழக அரசியலில் உயிரோட்டத்துடன் உலவுவது தமிழ் மக்களின் பாக்கி யமே. தம் சொல்லிலும் செயலிலும் அஞ்சாத, துஞ்சாத நெஞ்சுரம் மிக்க தலைவர், பெரியாராவர். ஆதித்திராவிடன் இன்று சமுதாயத்தில் அனுபவிக்கின்ற அந்தஸ்து, பெரி யார் பெற்றுத் தந்த அந்தஸ்து. பெரியாரைப் போன்ற
6

ஓர் தனிப்பெரும் சக்தி ஈழத் தமிழகத்திலும் தோன்றியி ருப்பின் இன்று தாழ்த்தப் பட்ட தமிழ்மக்கள் தம் உரிமை நிலைநிறுத்தப்பெற்றிருக்கும்.
அண்ணுவின் பகுத்தறிவுக் கருத்துக்கள் இந்தி எதிர்ப் புப் பாரம்பரியம் சீர் திருத்தக் கருத்துக்கள், சோஷலிசச் சித்தாந்தம் பொதுவுடமைத் தத்துவங்கள், சமத்துவ சமுதாயச் சால்புக்கள், கலப்பு மணம், சீர்திருத்தத் திரு மணம் போன்ற சடங்குகளை மறுக்கும் சாதனைகள் இத்த னைக்கும் உருவும், உணர்வும், தந்தவர் பெரியாரே. இப் பெறற்கரிய பாடங்களேயெல்லாம் பெரியாரின் பள்ளியி லேயே அண்ணு படித்தார். அவற்றின் பெருமையுணர்ந்து பேணிஞர்.
அவர் பேண மறுத்த பாடங்களும் இருந்தன. அவை யாவை?
அண்ணு முதன்முதலாக அரசியலில் நுழைந்தது நீதிக் கட்சியின் மூலமாகவே. "சண்டே ஒப்சேவர்' பத்திரிகை ஆசிரியரும் அண்ணுவின் மதிப்புக்குரிய நண்பருமான திரு. பாலசுப்பிரமணியம் என்பாரின் மூலமாக நீதிக்கட்சியில் நுழைந்த அண்ணுவுக்கு இங்குதான் பெரியாரின் அறிமுகம் கிடைத்தது. நீதிக்கட்சி அன்றைய இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய காங்கிரஸ் இயக்கத்திற்கு எதிர்ப்பான இயக்கமாகையால், அரசியல் குரோதம் காரணமாக, வெள்ளை ஏகாதிபத்தியவாதிக ளுக்கு அவ்வப்போது அனுசரணையாக நடக்கத் தலைப்பட் டது. அச்சமயங்களிலெல்லாம் நீதிக்கட்சியின் தவறைச் சுட்டிக் காட்டியவரும் தட்டிக்கேட்டவரும் நீதிக்கட்சியை இந்தியத் விடுதலை உணர்வுகளுக்கு இணக்கமான இயக்க மாகக் கட்டிக்காக்கத் தலைப்பட்டோரும் அண்ணுவே. விடு தலை வேட்கையால் கனன்று கொண்டிருந்த அண்ணுவின் உள்ளம் வெள்ளை ஏகாதிபத்தியம் இந்தியமண்ணை அடிமை கொண்டிருப்பதை ஒப்பவில்லை. அன்றை அண்ணுவின் கருத் தோட்டத்தின்படி வடவர் தென்னகத்தாரின் வைரிகளாக, தென்னகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்போராக இருப்பினும், இந்தியமண்ணை ஆக்கிரமித்துவிட்ட ஏகாதி பத்தியவாதி இருதரப்பினரினதும் பொது எதிரி, அவனை
7

Page 13
வெளியேற்றிவிட்டு வடவரோடு கொண்ட பிணக்குகளைத் தீர்க்கலாம் என எண்ணினர். மேலும்,ஆதிபத்திய உணர்வு எந்த வட்டாரத்திலிருந்து வந்தாலும் அது முறியடிக்கப் பட வேண்டியதே எனனண் ணிஞர். ஆனல் தமது காங்கிரஸ் எதிர்ப்பைக் கருவியாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளி டம் சலுகைகளைப் பெற விழைந்த நீதிக்கட்சித் தலைவர்கள் பலர் அண்ணுவின் எண்ணங்களில் பங்கு கொள்ள மறுத்த
னர்.
ஏகாதிபத்தியத்திற்கு அண்ணு துணைபோக மறுத்த
நிகழ்ச்சிகளில் சில பின்வருமாறு:
.
காங்கிரஸ் அமைச்சரவை கட்சியின் தீர்மானத்திற்க மைய சென்னை இராச்சியத்தினின்றும் பதவிவிலகியது. நீதிக்கட்சித் தலைவர்கள் பலரின் பதவி அபிலாஷைக ளைப் புரிந்து கொண்ட வெள்ளைக்காரக்கவர்ணர் நீதிக் கட்சித் தலைவர்களை அமைச்சரவை அமைக்கும்படி வேண்டினர். அமைச்சரவை அமைப்பதற்குநீதிக்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு திரட்டி நின்ற நேரத்தில், தனியொரு மனிதராக இந்தத்துரோகத்தை எதிர்த்து, தடுமாற்றமுற்ற பெரியாரையும் மனமாற்றமுறச் செய்து, இத்திட்டத்தை முறியடித்து வெள்ளையரின் முகத்தில் கரி பூசியவர் அண்ணு.
இரண்டாவது உலக யுத்தத்தில் இந்தியா ஈடுபடுத்தப் படுவதை இந்தியக்காங்கிரஸ் எதிர்த்தது. இந்திய மக் களின் உணர்வுகளை மதிக்காத ஏகாதிபத்தியம் தனது எடுபிடிகளைக் கொண்டு யுத்தத்திற்கு ஆதரவான பிரச் சாரத்தை மேற் கொண்டது. தமிழ்நாட்டில் செல் வாக்கு மிக்கதும், நீதிக்கட்சியின் பிரச்சார ஏடும் அண் ணுவை ஆசிரியராகக் கொண்டதுமான ' வி டு த லை " ஏட்டை யுத்தப் பிரச்சாரத்திற்கு உதவுமாறு வெள்ளை யர் விடுத்த வேண்டுகோளை அண்ணு புறக்கணித்தார். பின்னர் தமது விருப்பத்திற்கு மாருக நீதிக்கட்சியினர் "விடுதலை ஏட்டை வெள்ளையரின் பிரச்சாரப் படைக் கலன் ஆக்க முனைந்தபோது, ஏட்டின் ஆசிரியர் பத வியை தூக்கி வீசிவிட்டு வெளியேறினர்.
8

3. 1944ம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ஏகாதிபத்திய எஜமானர்களால் வழங்கப்பட்ட ‘சர்’ 'இராவ் பகதூர்' 'இராவ் சாகிப் போன்ற பட்டங் களைத் தாங்கியுள்ள நீதிக்கட்சித்தலைவர்கள் அவற்றைத் துறந்துவிட வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந் தார்.
4. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, வெள்ளையன் வெளி யேறிய ஆகஸ்ட் 15ம் தேதியைத் திராவிடர்கள் துக்க தினமாக அனுட்டிக்க வேண்டுமென்ற பெரியாரின் அறிக்கைக்கு 'இந்தியமண்ணை விட்டு ஏகாதிபத்திய வாதிகள் வெளியேறிய நாள், திராவிடர்களின் மகிழ்ச் சிக்குரியதினம், என மறுப்பு வெளியிட்டார். பெரியா ரோடு கொண்ட கருத்து வேறுபாடுகளைத் தாக்கமா கத் தொனித்த கட்டங்களில் இது தலையாயதாகும். பெரியாரிடமிருந்து பின்னர் சின்னுட்களுட் பிரிவதற்கு அரசியலுக்குப் புறம்பான காரணமே உடனடிக் கார ணமாயினும், கருத்துப் பிளவைப் புட்டுக் காட்டியதும் மனத்தாங்கலை ஏற்படுத்தியதும் மேற்படி நிகழ்ச்சியே யாகும் .
பரிபக்குவம் . . . . .
அண்ணு தி. மு. க. வைத் தொடங்கிய காலத்தில் தாம் தொட்டதுறையனைத்திலும் பரிபக்குவம் அடைந்த நிலை யிலிருந்தார், அதற்கு முன்னுேடியாக அவர் தொட்டதுறை யனைத்தும் துலங்கத்தலைப்பட்டதும் பெரியாரின் பள்ளி யிலேயே. பேச்சாளனுக, எழுத்தாளனுக, நூலாசிரியனுக, அரசியல் ஆய்வாளனக, நாடகாசிரியணு 5, நடிகஞக, தேர் தற் களத்து வீரனுக போராட்டத் தளபதியாக மட்டுமல்ல, கைதியாகக் கூட அண்ணு சிறைப்பயிற்சி பெற்றதும் இந்தப் பள்ளிப் பருவத்திலேதான்.
"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக் கும் சிறைச்சாலை’ என்ற கவியின் உரத்துடன் பின்னர் பன் முறை சிறைவாழ்வை அனுபவித்த அண்ணு, 1937ம் ஆண் டில் இந்தி எதிர்ப்புப் போரின் தளபதி என்ற பெருமையு டன் முதன் முறையாகச் சிறை சென்ருர். அண்ணுவின் அர சியற் பணியை மட்டுமல்ல இலக்கியப்பணியைக் கண்டு
9

Page 14
கூடச் சட்டம் தன் புருவத்தை நெரித்துக்கொண்டது. அண்ணு செய்த எழுத்துப் புரட்சியினுல், 'ஆரியமாயை', "இலட்சிய வரலாறு" என்ற நூல்களுக்குத் தடைவிதிக் கப்பட்டதுடன் அண்ணு சிறைச்சாலைக்கும் அனுப்பப்பட்
L-ITI.
பத்திரிகைத் துறையில் அண்ணுவின் கைவண்ணத்தைத் தாங்கி முதன்முதலில் வெளிவந்தது பெரியாரின் 'விடுதலை’ யாகும். விடுதலை இதழ்களில் செள மிய வருடத்தில் பிறந்த அண்ணு "செளமியன்" என்ற புனைப்பெயரிலும், ‘பரதன்' ‘வீரன்’ போன்ற புனைப்பெயர்களிலும் தீட்டியகட்டுரைக ளும் அரசியல் விமர்சனங்களும் மேட்டுக்குடியினர் மட்டுமே அறிந்திருந்த நாட்டுநடப்புகளை பாட்டாளியினரும் பஞ் சையரும் அறியத் தந்தன. நீதிக்கட்சியின் ஆங்கில ஏடான "ஜஸ்டிஸ் (Justice) சஞ்சிகையின் ஆசிரியராகவும் அண்ணு பணியாற்றி நறுக்கானதலேயங்கங்களைப்புதுமுறுக்குடன் தீட் டினர். நீதிக்கட்சி பணக்காரர்களின் உணர்வுகளை மட்டுமே பிரதிபலிக்கும் பான்மையையும் ஏழைத் திராவிடன் ஏங்கி நிற்கும் பரிதாபத்தையும் கண்ட அண்ணு பெரியாரின் இசை வுடன் 1944 - ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றுவ தற்குத்தீர்மானம்கொண்டுவந்துநிறைவேற்றினர். திராவிட கழகத்திற்கு தந்தை பெரியார் தலைவரானர். அண்ணு தள பதியாஞர். தளபதி அண்ணுவின் எழுத்தாணி உழுதிட்ட உயிரோட்டமான கருத்துக்களைத் தாங்கி வெளிவந்தது 'திராவிடன்’ பத்திரிகை. இதில் அண்ணு தீட்டிய “கல்சுத்தா காய்ச்சல் ,ரிப்பன் மாளிகைச் சீமான்கள் போன்ற தலை யங்கங்கள் ஏனையோரைப் பாராட்டுவதில் மிகவும் உலோ பியான பெரியாரைக்கூட மனம்விட்டுப் பாராட்ட வைத் தன.
நீதிக்கட்சியின் பேச்சாளஞக ஆந்திராவிலுள்ள குண்டு ரில் தமதுகன்னிச்சொற்பொழிவை நிகழ்த்திய அண்ணு தொ டர்ந்து நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் பெரியாருக்குப் பிடித்த, இளைஞர் வட்டாரங்களை ஈர்த்தெ டுக்கின்ற, பிரதம பிரச்சாரகர் ஆனர். ‘மாநகரசபைத்தேர்
10

தலில் தமிழ்தென்றல் திரு. வி. க், வுடன் சொற்கணை தொடுக்கும் வாய்ப்பு அண்ணுவுக்குக் கிட்டியது. சென்னை மாநகரசபைத் தேர்தலில் அண்ணு தோற்கடிக்கப்பட்டிருப் பினும்,தேர்தல் கூட்டங்களில் மக்களின் பிரச்சினைகளை அல சுகின்ற ஜனநாயக சம்பிரதாயத்தை தம் கூட்டங்களில் புகுத்திநிலைநிறுத்தும் பணிசெய்தார். இந்தி எதிர்ப்பு மாதா டுகளென்றும் சுயமரியாதை மாநாடுகளென்றும்,இலக்கியச் சொற்போர்களென்றும், அரசியற் பள்ளியில் அகரவரிசை படித்த மாணுக்கப் பருவத்திலேயே அண்ணு ஏருத மேடை தான் எதுவோ? எடுத்துப் பேசாத பிரச்சினைதான் ஏது முண்டோ? தம்பியருடன் . . . . .
பெரியாரின் பள்ளியிலே கீழ்மட்டப் படிவங்களிலே பயின்ற மாணவர்களான நெடுஞ்செழியன், அன்பழகன், சம்பத், மதியழகன், கருணுநிதி போன்ருேருக்கெல்லாம் அண்ணு வழிகாட்டியாரூர். தெரியாத விடைகளையும் புரி யாத விளக்கங்களையும் பேராசிரியர் பெரியாரிடம் திரும்ப வும் கேட்க அஞ்சிய இவ்வுடன் மானுக்கர் அண்ணுவிடமே விளக்கம் பெற்றனர்.
தந்தையின் கண்டனங்களுக்கும் தண்டனைகளுக்கும் அஞ்சி மூத்த தமையனிடம் தஞ்சமும் ஆறுதலும் பெற்ற தம்பியரைப் போன்று, பெரியாரின் கெடுபிடிகளுக்கெதி ராக அரசியல் தம்பிகள் அண்ணுவிடமே ஆறுதலும் தேறு தலும் பெற்றனர்.
நலிவுற்ற தமிழகத்தில் புதியபொலிவும் வலிவும் காணப் புறப்பட்ட இந்த நல்ல குடும்பத்தில் 1949ம் ஆண்டு தத் தைக்கும் தனயர்க்கும் ஏற்பட்ட பிளவு திராவிடர் கழ கத்தை இரண்டாகப் பிளந்தது. திராவிடர் கழகத்தின் பரமவைரியாகப் படம் பிடித்துக் காட்டப்பெற்ற இராஜா ஜியை 1949ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி திருவண்ணு மலையில் பெரியார் கண்டு தனிமையில் பேசியமைக்கு, மே மாதம் இறுதியில் கோயம்புத்தூரில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் அண்ணு விளக்கம் கோரவும், பெரியார் தமது ‘விடுதலை’ இதழ்மூலம் 'தன் சொந்த விஷயம் பற்றி விளக்
11

Page 15
கம் தரவும், பெரியாரின் பொருந்தாத் திருமணம் திரா விடர் கழகத்தில் பெரிய பூகம்பத்தையே உருவாக்கிற்று.
தாம் போதித்த சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளுக்கு மாரு க பெரியார் முதுமைப்பருவத்தில் இளமைப்பருவத் துப் பெண்ணை மணம் முடிக்கவிருக்கும் சேதி கேட்டு அண்ணு வும் தம்பியரும் அலமலந்தனர். “பெரியாரின் பொருந்தாச் செய்கை கண்டு கண்ணிர்த்துளிகளுடன் வெளியேறுகி ருேம்' என அறிக்கை விடுத்து தம்பியருடன் திராவிடர் கழகத்தினின்றும் வெளியேறினர் அண்ணு. 'கண்ணீர்த்துளி கள், போகிருர்கள்' என எடுத்தெறிந்து கேலி பேசினர், தம் கொள்கையினின்றும் தடம் புரண்டு மணவினையை முடித் துக் கொண்ட பெரியார்.
1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னை பவளக்காரத் தெருவிலே ஒரு சிறு அறையிலே வெம்பிய உள்ளத்துடன் புதிய இயக்கம் காண்பதற்குக் கூடிடி தன் தம்பியரின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அண்ணு, அவர்களை விழித்து, ‘கண்ணிர்த்துளிகளே! என் கண்ணின் மணிகளே' எனப் பேச்சைத் தொடங்கினர்.
12

*தம்பியர் அல்லது தனக்கு வே(று) உயிர் இம்பரின் இல(து) என எண்ணி ஏய்ந்தவன்”
-கம்பராமாயணம்.
தி.மு. க. வில் அண்ணு
அசோசியேற்றட் பிரஸ்" என்ற இலண்டனிலுள்ள செய்தி நிறுவனத்தின் ஆசிய நிருபரான திரு. ஹரிசன் என் பார் ‘இந்தியா-மிகவும் ஆபத்தான காலகட்டம்" (IndiaThe most dangerous decades) 676ir so as LD5, 5.7 GSai gyóir ணுவைக் குறித்துப் பின்வருமாறு எழுதினர்.
“. . . ...Periyar's popularity suffered a disastrous blow in 1949 when at the age of 72 he married a 28 year old girl providing a pretext for his ambitious lieutenant C. N. Annadurai to secede with his followers to find the Dravida Munne tra Kazhagam...... Annadura i's admirers exaggerate why they call him Dravidian Mao; but there is no doubt that this powerful orator is the single most popular mass figure in this region ... ...... Communist prospects in Tamilnad seems darker than ever now that Annadurai has become major Dravidian leader... . '
13

Page 16
இதன் தமிழாக்கமாவது:
f : . . . . . பெரியாரின் செல்வாக்கு, 1949ம் ஆண்டு அவர் தமது 72வது வயதில் 28 வயதுள்ள மங்கையொருத்தியை மணந்த போது பலமான தாக்குதலுக்குள்ளாயிற்று. இது அவரது உளவேட்கை மிக்கத் தளபதியான அண்ணுதுரை தமது கூட்டத்தினரோடு பிரிந்து சென்று திராவிட முன் னேற்றக் கழகத்தைத் தோற்றுவதற்குச் சாக்காக அமைந் தது. அண்ணுதுரையின் அபிமானிகள் தாம் அவரை திரா விடத்தின் மாவோ என அழைப்பதுபற்றி மிகைப்படுத்திக் கூறுவதுண்டு. எனினும் இச் சக்திவாய்ந்த பேச்சாளtதாம் இப்பகுதியின் தனியொரு செல்வாக்குமிக்க பொது மக் களின் தலைவனுவார் . '
a . இப்போது அண்ணுத்துரை தலையாய திராவிடத் தல்ைவராக எழுச்சி பெற்றதுடன், கம்யூனிஸ்டுகளின் எதிர் காலப்பலன் முன் எப்பொழுதைக் காட்டிலும் இருள டைந்ததாகத் தோற்றுகிறது.
அண்ணுவின் உளவேட்கையையிட்டு குறிப்பிட்ட செய்தி நிருபரின் கருத்து விவாதத்திற்குரியதேயாயினும் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தளர்ச்சிபற்றி அன்னர் குறிப்பிட்டது சாலவும் உண்மையுடைத்தே. தமிழ்நாட்டிலே அன்றைய ஆளுங்கட்சியின் வலிமைமிக்க எதிர்க்கட்சியாகத் திரண்டுவந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழ்மக்களின் அரசியலரங்கிலே தலையெடுக்க வொண்ணுது விலாசமற்ற நிலைக்குக் கருக்கி விட்டவர் அண்ணுவே. சமூ கத்தின் அடித்தளத்தில் உழல்வோரைக் கவர்ந்திழுக்கும் சமதர்மத்திட்டங்களனைத்தையும் தி. மு. க. வின் வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொண்டார். கம்யூனிஸ்டுகளின் சர்வதேசச் சித்தாந்தங்களில் சிக்கியிருந்த இத் திட்டங் களைத் தமிழ்நாட்டு மக்களுடன் நெருக்கமானதும் அவர் தம் உணர்வுக்கு உருக்கமானதுமான திராவிட அல்லது தமிழ்த் தேசியத்துடன் இணைத்தார். இந்திய அரசியல், சமு தாய, பொருளாதார அமைப்பும் அண்ணுவின் கொள்கை வகுப்பை நியாயமானதாகக் காட்டும் தன்மையது. ஏன கில், அண்ணு துலக்கிக் காட்டிய வடநாடு-தென்னுடு,
14

ஆரியன்-திராவிடன், என்ற உணர்ச்சிப் பிளவு, ஆண் டான்-அடிமை, சுரண்டுவோன் -சுரண்டப்படுவோன், முதலாளி-தொழிலாளி, செல்வன்-ஏழை, என்பன போன்ற வர்க்கப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவன வாக அமைந்திருந்தது. இதனுல் இயல்பாக இடதுசாரி இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவனவும் ஒர் அரசியல் இயக் கத்தைக் களையுடன் வைத்திருக்கக் கூடியனவும், சமுதாயத் தின் துருப்பிடிக்காத, துடிப்புள்ள உறுப்புக்சளுமாகிய, தொழிலாளர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர், விரிவு ரையாளர், தாழ்த்தப்பட்டோர், எழுத்தாளர், கவிஞர் என்போர் தி. மு. க. இயக்கத்தில் அணிதிரண்டனர்.
சாம்பர் மேட்டிலே . . . . .
"மழையிலே முளைத்த காளான்கள்; முளையிலேயே கரு கிவிடுவார்கள்" என ஆரூடம் கணித்தவர்கள் நாணத்தக்க விதமாக தி. மு. க. அன்று அறுகுபோல் வேரூன்றி இன்று ஆல்போல் விழுதுான்றி விரிந்து பரந்து தமிழகத்து மாந்த ருக்கெல்லாம் நிழல் தருகின்றதெனின் இதைச் சாதித்த சாமான்யரான அண்ணுவின் ஆற்றல் சாற்றக் கூடியதோ? சருகுகள் எரிந்து போன வெறும் சாம்பர் மேட்டின் மேலே பெரியதோர் சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பியது போல, ஆள்வலியும் அணிவலியும் அந்தஸ்து வலியும் தோள்வலியும் துணைவலியுமில்லாத ஒரு தொடக்கத்திலி ருந்து, தெருவோரத்திலும் திண்ணையோரத்துத் தாழ்வா ரத்திலும் இரண்டொரு தம்பியரைக் கூடிப் பேசிப்பேசியே பரந்த ஓர் இராச்சியத்தின் அரசையே கைப்பற்றும் அள வுக்கு அணுவணுவாக வளர்ந்தார். 'கல்போட்டால் கலைந்துவிடும் காக்கைகளின் கூட்டம்" எனக் கிண்டல் செய் யப்பட்ட தி. மு. க. வை; தமிழகமெங்கணும் ஆயிரக் கணக்கான கிளைகளையும் சார்பு மன்றங்களையும் கொண்ட மாபெரும் பாரிய அமைப்பாகவும், சென்னை மாநகரத்து தி. மு. க. தலைமை நிலையத்திலிருந்து தகுதிவாய்ந்த ஒருவர் ஒரு பித்தானை அழுத்தினல், தமிழ்நாடெங்கணும் பட்டி தொட்டியனைத்தும் பரத்துபட்ட கிளைக் கழகங்கள் அத் தனையும் இயங்கத்தக்க பின்னிப்பிணைந்த ஒரு கட்டுக்கோப் பான இயந்திரமாகவும், கிளைகளின் நிர்வாகிகள் தொட்டு தலைமை நிர்வாகிகள் வரை ஒவ்வொரு மட்டத்திலும், சமூ
15

Page 17
கத்தின் அடித்தளத்துச் சாதாரண குடிமகனும் பங்கு கொள்ளத்தக்கதான தேர்வை நடாத்தி இயக்கத் தலைவர் களை நிர்ணயிக்கும் ஜனநாயகத்தின் பயிற்சிக்கூடமாகவும் வளர்த்தெடுத்தார் அண்ணு: இந்திய உபகண்டத்திலேயே திண்ணிய அமைப்புடன் திகழ்ந்திடும் அரசியற்கட்சி தி. மு. க. வே. பிரச்சாரப் புதுமை
தி. மு. க. வின் வலிவுக்கும் பொலிவுக்கும் அண்ணுவின் கூரிய அறிவும் சீரிய பேராற்றலும் அடித்தளமாக, அத் தளத்திலே நிறுவிய பல்முனைப் பணிகள் முதலீடுகளாயின. அரசியலில் நாவன்மையும் எழுத்து வன்மையும் எத்துணை சக்தி வாய்ந்த சாதனங்கள் என்பதைச் சாதித்துக் காட்டி யவர் அண்ணுவே. தமது நாவை இயக்கத்தின் தலையாய படைக் கலனுக்கிய அண்ணு, எழுத்து என்ற ஏவாயுதத்தை, எத்தனை திசைகளில் செலுத்தினர். கதைகள், கவிதைகள் கட்டுரைகள், நாடகங்கள் இத்தனையையும்பிரச்சாரப் பீரங் கிகளாக உருமாற்றிய புதுமையான பிரச்சாரக் கலைஞனகத் திகழ்ந்தார். தமது பத்திரிகையை தி மு.க வின் அரணுக் கினர். இதனை முன்னேடியாகக்கொண்டு தம்பியரின் சிற்ற ரண்கள் பல தோன்றி கழகத்தை வளைத்து அகழி அமைத் துக்கொண்டன. தமது பிரச்சாரயந்திரத்தின் உபரிப் பாகங்களாக கலைத்துறையைச் சார்ந்த சாதனங்களான திரைப்படத்தை, நாடகங்களை மட்டுமன்றி, வில்லுப் பாட்டு, கதாகாலட்சேபம் ஆகியனவற்றையும் வெற்றிகர மாகப் பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசியலிலே வீறுநடை போட்டவர் அண்ணு. அரசியற்பிரச்சார முறைகளிலேயே, கவர்ச்சியற்றனவும் வேட்டு வைக்காத தோட்டாக்களை யுடையனவுமாகிய பழையபடைக்கலன்களே வீசிவிட்டு, புதிய உத்திகளைப்புகுத்திய புரட்சியாளராயினர். அவ் வளவு ஏன்? வீதியோரத்து மதில்களை யெல்லாம் அலங்கோ லப்படுத்தி அனுதரவாகக் கிடந்த சுவரொட்டிகளை போர்க் கோலம் காட்டும் கருவிகளாக சிந்தனைப் புரட்சி செய்யும் சித்திரங்களாக மாற்றியமைத்த வித்தகர் அண்ணுவல்லவா? இதோ சுவரொட்டிகள் எங்ஙனம் அமையவேண்டுமென அண்ணுவே 'திராவிடநாடு 'இதழ்களில் தீட்டிக்காட்டு கிருர், அவற்றுள் சில காண்க.
16

* 'இந்தி, தமிழ் மரபு அழிக்கும் செந்தீ" * *திருவிடம் விடுபட தீமைகள் பொடிபட
தி. மு. க. தொண்டு நாட்டுக்கு என்றும் உண்டு”
* “வாட்டம் போக்காக் காங்கிரசு
நோட்டம் பார்க்குது வோட்டுப் பெற’
* *எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் ஏட்டினிலே
- இந்தி குட்டக் குட்டக் குனியும் கேடர்கள் நாட்டினிலே’ * “கடன் பட்ட நாடு காவல் இல்லா வீடு” * “உரிமையிழந்த நாடு உயிரற்ற என்புக் கூடு”
மூத்த அண்ணன்.
தி. மு. க. வின் வலிவுக்கும் வளத்துக்கும் காத்திர மான கருவியாக அமைந்தது தி. மு. க. தொண்டர்களுக் கும் தலைவர் அண்ணுவுக்குமிடையே நிலவிய அபூர்வமான உறவுமுறைதான். உலகின் வேறு எந்த அரசியல் இயக்கத் திலும் காணமுடியாத புதுமையை, தலைவருக்கும் தொண்ட ருக்குமிடையில், தலைவருக்கும் இரண்டாவது மூன்ருவதுமட் டத் தலைமைக்குமிடையிலிருந்த வாஞ்சையை, சாதித்தது அண்ணுவின் விரிந்து பரந்ததும் ஈரம் செறிந்ததுமான இத யம். இயக்கத்தைக் குடும்பபாசத்துடன் கட்டிவளர்த்தார். அண்ணுவின் தலைமையை என்றும் எவரும் தட்டிக் கேட்ட தில்லை. அண்ணுவைக் காட்டிலும் தாம் எவ்வாற்ருனும் மேம்பட்டோரென எந்த இரண்டாவதுமட்டத்தலைவனும் கருதியதில்லை. அண்ணுவின் கருத்தைக்காட்டிலும் தமது கருத்து வலுவுடைத்து என எந்தத் தலைவனும் கருதிய தில்லை. தமது கருத்தில் நம்பிக்கையிருப்பினும், குடும்பத் தலைவன் அண்ணுவின் கருத்து வேறு விதமாக இருக்கிறதே, "என்னை வளர்த்து ஆளாக்கிய அவருக்குத் தெரியாததா எனக்குத்தெரிந்தது" என்ற அசையாத நம்பிக்கை தம்பிக்கு அண்ணுவின் பால் இருந்தது. இத்தனிப் பெரும் தலைமையை யும் ஆணையையும் அண்ணு அதிகாரபலத்தால்பெற்றரில்லை, அன்பின் வலிமையால் பெற்ருர் . அவராக கேட்டுப் பெற்
17

Page 18
றதுமல்ல, தம்பிகளாகவே தந்தவ்ை அவை. தம்பிகள் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்பதற்காக தான் தோன் றித்தனமாக அண்ணு நடந்தாரில்லை, தம்பியரை உசா வியே திட்டங்களை வகுத்தார், தீர்மானங்களைச் செய்தார். "தந்தை பெரியாரைப் பிரிந்து வந்த தனயர்கள் மூத்த அண்ணனுடைய அறிவுரைகளுக்குச் செவிசாய்த்து, ஆலோ சனைகளைக் கேட்டு, ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பது என் பது தி. மு. க என்ற அரசியற் குடும்பத்தினரின் தத்துவ மாக இருந்தது. தவறிழைத்திருந்தாலும் தந்தை தந்தை தானே என்ற மதிப்பும், தந்தை ஏசினலும் எதிர்வார்த்தை பேசாத தனயனின் பாங்கும் பெரியார்பால் அண்ணுவுக்கும் தி. மு. க. தம்பிகளுக்கும் இருந்தன. அந்தப் பண்பாடும் அண்ணு வளர்த்ததே.
அண்ணுவின் மறைவின் போது வெளிவந்த 3-2-1969ம் தேதி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் நி ரு பர் "அண்ணு' வின் அற்புதத்தை பின்வருமாறு இரத்தினச் சுருக் கமாகக் குறிப்பிட்டார்.
*. அண்ணு' என்பது "அண்ணுதுரை" என்பதன் சுருக் கமே. திரு. அண்ணுதுரை இதையே தமது புனை பெயராக வும் கொண்டார். இது அவருடைய 'தம்பிமார்' என்ற தகுதியில் பெருமையுற்ற தொண்டர்களின் மீது ஒரு மந்திர சக்தியாக இயங்கிற்று. திரு. அண்ணுதுரையின் ஒரு சிறு ஆணையும் அட்டியின்றிப் பணியப் பெற்றதால், அவர் தடி யெடுத்துத் தண்டிக்கவேண்டிய அவசியமேற்பட்டதில்லை. அண்ணு வகுத்த பாதையினின்றும் அவர் தொண்டர்கள் விலகி உலவிய காலையிலெல்லாம், அண்ணுவின் ஒரு வேண்டு கோள் அவர்களைத் திரும்பவும் அவர் சுட்டிக் காட்டிய பாதைக்கு இட்டு வந்தது. கட்சிக்குள் எழுந்த பிணக்குக ளிலெல்லாம் அவரே இறுதித் தீர்ப்பாளராக இருந்தார். அனுபவ சாத்தியமான அறிவுத் திற்னுடனும், தூண்டு தல் தரும் உரைத் திறத்தாலும், அவர்கள் தாம் கூறுவதை ஏற்கச் செய்வார். அவர் "தந்தை" பெரியாரின் திராவிட கழகத்திலிருந்து பிரிந்து சென்றகாலையிலும், அ வ ர து எதிர்ப்பு தந்தையை எதிர்த்த தனயனின் தகைமைத்தே.
18

புதிய கட்சியில் (தி. மு. க) அவர் வகுத்துக் கொண்ட நிலை வழிகாட்டும் அண்ணனின் நிலையாகும்."
தி. மு. க. வின் இரண்டாவது மூன்ருவது மட்டத் தலைவர்களுக்கு மட்டுமல்ல தி.மு.க. வின் கடைசித் தொண் டனுக்கும் அவர் அண்ணுதான். இதனல் தி. மு. காவின் கடைசித் தொண்டன் "கடைசித் தம்பி’ என்ற முறையில் ‘தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே' என அறிந் திருந்த அண்ணுவின் இதயத்தை இறுகப் பற்றிக் கொண் டான். இதனல், தமிழ் நாட்டின் ஒரு குக்கிராமத்திலி ருந்து தம் அரசியற் கட்சியின் மாபெரும் தலைவனைக் காண வருகின்ற சாதாரண தொண்டனுக்கு, இடையிலுள்ள "தர கர்’களின் அறிமுகக் கடிதம் தேவைப்படுவதில்லை. நேராக தொண்டன் அண்ணுவிடம் சென்று "வணக்கம் அண்ணு’ என்னும் போது அந்த "அண்ணு' என்ற பதத்திலிருந்து எழுகின்ற நாதம் நெருக்கமான உணர்வுகளை நிறைத்து விடுகிறது. தொண்டனும் த டு மாற் றம் எதுவுமின்றி தனது குறைகளை சொந்த அண்ணனிடம் கூறும் சரளமான உணர்வுடன் கூறுகிருன் . கட்சி விடயங்கள் மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்ட குடும்பப் பிரச்சினைகளுக்குக் கூட இயக்கத் தொண்டர்கள் அண்ணுவிடம் ஆலோசனை கேட்டு வருவதுண்டு. இயக்கத்தினருக்கும் அண்ணுவுக்கு மிடையேயிருந்த அன்பு பரஸ்பரமானது. கழக த் தி ன் கடைசித் தொண்டனுடைய சொந்த வாழ்வுப் பிரச்சினைகளி லும் பங்கு கொண்டார். அவர்களுடைய மணவினைகளி லும் ஏனைய வைபவங்களிலும் பங்கு கொள்ளும் போதெல் லாம் குடும்பத் தலைவன் என்ற உணர்வுடனேயே பங்கு கொண்டார். இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டு இடிந்து போன தொண்டர்களின் குடும்பங்களே நிவாரணமளித்து வாழவைப்பதில் அக்கறையாக இருந்தார். கழகத்தின் இதர தலைவர்களும் தொண்டர்களும் எவ்வளவுக்கு அண்ணு வின் தயவிலே தங்கி அவர் நிழலிலே தஞ்சம் கண்டார் களோ அவ்வளவுக் கவ்வளவு அண்ணுவும் தன் வலிமையை அவர்களிடமிருந்தே த ர ன் பெற்றதாக உணர்ந்தார். 'தம்பியுடையான் படைக் கஞ்சான்" என அண்ணு அடிக்கடி மார்பு தட்டியமை மனப்பூர்வமானதே.
19

Page 19
தெருவோரத்து மனிதர்.
அண்ணுவுக்கு இன்பமயமான இந்த இறுமாப்பைத் தந்த மக்கள், பெரும்பாலும், எண்ணிக்கையால் பொலித் தும் சமுதாயச் செல்வாக்கிலே மெலிந்தும் வாழுகின்ற சமூக மட்டத்தின் அடித்தளத்து உறுப்புகளே. '"நான் தெருவோரத்து மனிதனின் பிரதிநிதி " ("1 &m a representative of the man in the street”) GT GOT Lg6iv 669 Dmrtav på 35 ளவையில் அண்ணு பெருமிதத்துடன் கூறியமை வெறுமை யான வார்த்தைகளல்ல. உரிமை குறைந்த தாழ்த்தப்பட்ட மக்களும், வசதி குறைந்த வறிய மக்களும், வாழ்க்கைத் தரம் அமையாத தொழிலாளர் வர்க்கத்தினருமான தரப்பினரே, அண்ணு அமைத்த பாசறையின் முன்னணியில் படைவீர ராயினர். பிறர் தயவிலே வாழ்வதற்கெனவே சமுதாய அமைப்பினல் ஆளாக்கப்பட்டுவிட்ட இந்த அடித்தளத்து மக்கள் அண்ணு என்ற சுமைதாங்கியிலே தாம் ஆறுதல் காணலாம் என நம்பினர். அண்ணுவின் அரவணைப்புக்குள் அடைக்கலம் புகுந்தனர். அண்ணுவிலே தம் துயர இருள் நீக்கும் நம்பிக்கையொளியைக் கண்டனர். அண்ணு நோய் வாய்ப்பட்ட நாள் முதலாக அண்ணுவின் உடல் கடற்கரை யிலே அடக்கம் செய்தற்கென இட்டுச் செல்லப்படுகின்ற வரையில், புற்றுநோய் மருத்துவ மனைக்குப் புறத்தேயும் பின்னர் இராஜாஜி மண்டபத்திற்குப் புறத்தேயும், சுமார் இரண்டு வார காலமாக, இரவு பகலாக, கொட்டும் பணியி லும் கொழுத்தும் வெய்யிலிலும், உண்ணுது உறங்காது தவ மிருந்து தெய்வத்திடம் அண்ணுவின் உயிரை இரந்த மாந் தர் அன்ருடங் காய்ச்சிகளான சமுதாயத்தின் ஆண்டிகளே. தமது அன்ருட உழைப்பையும் துறந்துவிட்டு உலர்ந்த உத டும் ஒட்டிய வயிறும் பஞ்சடைந்த கண்களுமாக, மருத்துவ மனையின்பால் வைத்த விழி வாங்காது அண்ணுவின் உயிருக் காகக் கடவுளிடம் கையெடுத்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான பஞ்சையர், தமக்கு வாழ்வு தந்தவனை, இன்னும் தரவேண்டியவன, எங்கே கடவுள் அரையும் குறையுமாகப் பறித்துவிடுமோ என ஏங்கினர். ஆயிரக்கணக்கான ஆதித் திராவிடப் பெண் கள் (ஹரி ஜனங்கள்), முதியோரும் இளையோருமாக,
20

அண்ணுவின் பிரிவு கேட்டு தமது மார்பிலும் தலையிலும் அறைந்து அழுகுரல் எழுப்பி ஆற்றெணுத் துயரத்தால் மயங்கினரென்ருல் அண்ணு என்ற மன்னன் ஆண்ட இதய சாம்ராஜ்யத்தின் பரப்புக்கு வரப்பேது?
கண்ணின் மணிகள்.
"கண்ணிர்த் துளிகளே! என் கண்ணின் மணிகளே’ எனத் தம்பியரை விழித்துக் கழகத்தைத் தொடக்கிய அண்ணு தன் தம்பியரைக் கண்ணின் மணிகளாகவே போற் றிஞர். அருமை மிக்கவர் எனக் கருதி உரிமையுடனும் பெருமையுடனும் அவர்களே உருவாக்கினர். உதாரணமாக,
* தமக்குப் பின்னர் கழகத்திற்குத் தலைமை தாங்கும் தகுதியுடையராகத் தன் தம்பியரை உருவாக்க விளைந்த அண்ணு, தன் மதிப்புக்கும் அன்புக்குமுரியாரும், தன் நிழலிலே நெடிது நின்றவரும் தமக்கு அடுத்த அணி யிலே முதன்மையானவராக அவரால் கணிக்கப் பெற் றவருமான நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களை கழகம் தொடங்கிய நாட் தொட்டு தாம் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியிலமர்த்தத் தீர்மானித் தார். இத் தீர்மானத்திற்கமைய 1956-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் திரு. நெடுஞ்செழியனின் பெயரை பொதுச் செயலாளர் பத விக்கு முன்மொழிந்து அண்ணு அழைத்த அழகு கழகத் தவர் உள்ளத்தையெல்லாம் உருக்குவதாக அமைந் தது. தமக்கே உரித்தான குரலில் அன்பும் பெருமை யும் உரிமையும் குழைய, 'தம்பி வா, தலைமை தாங்க வா; உன் ஆணைக்கு அடங்கி நடக்கக் காத்திருக்கி ருேம் வா" என்றல்லவா அண்ணு அழைத்தார்.
* 1961-ம் ஆண்டு கழகத்தில் கருத்து வேறுபாடு கொண்ட திரு. சம்பத், தாம் வன்செயல் எனக் கருதிய சில நிகழ்ச்சிகளுக்கெதிராக உண்ணு விரதம் மேற் கொண்ட போது அண்ணு மனம் நொந்தார். சம்பத் தின் எழுத்தும் பேச்சும் தனிப்பட்ட முறையில் - கழ கத்தவர் வேறு எவரும் துணிந்திருக்காத வகையில் - தம்மைத் தாக்கியிருப்பதை உணர்ந்தும், விசாலமான
21

Page 20
மனம் படைத்த அன்ஞர், சம்பத்தின் உண்ணு விரதத் தைக் கைவிடுமாறு வேண்ட தாமே நேரில் சென்ருர் . தம் உறுதிமொழியின்பேரில் சம்பத் உண்ணு விரதத் தைக் கைவிட்டபோது சம்பத்தை உச்சிமோந்து முத்தமிட்டுத் தழுவிக் கொண்டார்.
* 1962-ம் ஆண்டு விலைவாசி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திரு. மு. கருணுநிதி ஆறுமாத காலத்திற்குப் பின் விடுதலை பெற்றபோது வரவேற்கச் சென்ற அண்ணு, உள்ளம் நெகிழவும் மகிழவும் தக்க உணர்வு மோதிய நிலையில் கண்கலங்க உச்சி மோந்து முத்தமிட்டு வரவேற்ருர் . ** அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்' என்பதை உணராத சில ஏடு கள் அன்று அந்நிகழ்ச்சியைக் கிண்டல் செய்து எழுதவும் தவறவில்லை.
மேற்படி நிகழ்ச்சிகளில் இரண்டோடு தொடர்புண்ட குறிப்புகளைக் கூறுவது பொருத்தமற்றதன்று.
தனிப்பெருந் தலைவன் ஒருவனைச் சுற்றிப் படர்ந்த இயக்கங்கள் பல, அத்தலைவன் மறைந்தவுடன் தாமும் மறைந்துள்ளன. தனிப்பட்ட அண்ணுவையே கொழுகொம் பாகக் கொண்டு பற்றிப் படர்ந்த கழகக் கொடி, தாம் பட்ட பின்னரும் பசுமையோடு பரவிப் படர வேண்டுமென எண்ணிப் போலும், அண்ணு தமக்கு அடுத்த அடுத்த அணிக ளில் கழகத்தைப் பொறுப்பேற்கும் தகுதி மிக்கார் பலரை உருவாக்கிவிட்டுச் சென்றர். இத்தன்மையால், மற்றைய இயக்கங்களின் தலைவர்கள் தமது இயக்கங்களுக்குச் செய்ய மறந்த தலையாய கடமையை, அண்ணு தி. மு. க. வுக்கு மறக்காது செய்துள்ளார். திரு நெடுஞ்செழியன் அவர்களிடம் கழகத்தின் த லே மை ப் பொறுப்பாகிய பொதுச் செயலாளர் பதவியைக் கையளிப்பதற்கு முன்ன தாக, திரு. நெடுஞ்செழியனுடன் பன்னுட்கள் உடனிருந்து நாவலரைத் தலைமைத் தகுதிக்குப் பயிற்றுவித்த பாங்கை, பல்வேறு பிரச்சினைகளில் நாவலர் எத்தகைய சிந்தனைகளைப்
22.

பிரதிபலிக்கின்ருர் எனக் கண்காணித்த சீர்மையை, அண்ணுவே பின்னர் அழகுபட 'திராவிட நாடு" இதழ் களிலே தீட்டியுள்ளார்.
அண்ணுவினல் உருவாக்கப்பட்டு ஊருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட திரு. சம்பத், 1957-ம் ஆண்டுத் தேர் தலில் தி. மு. க. வின் நாடாளுமன்ற உறுப்பினராக நாமக் கல் தொகுதியிலிருந்து தேர்வு பெற்ருர் . புது டில்லி நாடாளுமன்றத்தின் நாவன்மைமிக்க கழக உறுப்பினன் என்ற தகுதியுடன், நாடாளுமன்றக் குழுவுடன் உருஷ்ஷியா வுக்கும் சென்று திரும்பியதால், உலகம் சுற்றிய தனியொரு கழகத்தவன் என்ற தகுதியும் திரு. சம்பத்துக்குக் கிடைத் தது. இதனுல் ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக திரு. சம்பத் தமது தகுதிக்கு மேலாக நினைக்கவும் பேசவும், அண்ணுவின் தகுதி பற்றிச் சந்தேகம் தெரிவிக்கவும் தலைப் பட்டதுடன் கசப்புணர்ச்சிகளை வளர்த்து கழகத்திலிருந்தும் வெளியேறிஞர். திரு. சம்பத் தமது சகாக்களோடு வெளி யேறியமை கழகத்தின் செல்வாக்கைப் பாதித்திராத போதிலும், அகலியதும் இளகியதுமான மனத்தைக் கொண்ட அண்ணுவிஞல் தன் தம்பியொருவன் தன்னை விட்டு நீங்கும் நிலையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அந்நிலை யில், அண்ணு அவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் மிகவும் உருக்கமானது. "வேறெங்கும் செல்லாதீர்கள். என் உள் ளம் விசாலமானது; இங்கேயே அனைவரும் தங்கலாம். இதைப் போன்ற இளகிய இதயப் பரப்பை நீங்கள் எங்கும் காணமாட்டீர்கள். திரும்பி வாருங்கள்’’ என வேண்டினர்.
களம் பல கண்டும்.
போராட்டங்களையிட்டு அண்ணு சில வரையறைகளை விதித்துக் கொண்டிருந்தார். 'போராட்டங்களைத் தேடிச் செல்வதில்லை, வந்த போராட்டத்தை விடுவதுமில்லை' என்பது ஒன்று. ‘கட்சியிலுள்ள கடைசித் தொண்டன் எந்த அளவு தியாகம் செய்ய அவன் சூழ்நிலை இடம் தருகிறது என்பதைப் பார்த்துத்தான் போராட்டத் திட்டங்களை வகுக்க வேண்டும் தலைவர்கள் எந்த அளவுக்குத் தியாகம் செய்வார்கள் என்பதைப் பார்த்துத் திட்டம் தீட்டக்
23

Page 21
கூடாது" என்பது இன்னென்று. இந்த வரையறைகளைச் சற்று உற்றுப் பார்த்தால் போராட்டம் போராட்டத்திற் காக வல்ல, போராட்டம் மக்களுக்காக என்ற தத்துவத்தை அண்ணு கடைப்பிடித்தமை புலணுகும். தி. மு. க. அமைக் கப்பட்ட பின்னர் அதன் கன்னிப் போராட்டம், கழகம் தோன்றிய நான்கு ஆண்டுகளுக்குள், 1953-ம் ஆண்டு நடை பெற்றது. மும்முனைப் போராட்டம் எனத் தி. மு. க. வர லாற்றிலே தியாகத்தால் தீட்டப்பட்ட இக்களப் பரணி தி. மு. க. வின் கன்னி வெற்றியின் பெற்றி கூறும். (1) தமிழக முதலமைச்சராக இருந்த இராஜாஜியின் குலதர்மக் கல்வித் திட்டத்தை (வர்ணுச்சிரம கல்வித் திட்டம்) எதிர்த்தும் (2) தமிழ் நாட்டில் பிழைக்க வந்த டால்மியாவின் பெய ரால் தமிழ் ஊரான கல்லக்குடி டால் மியாபுரம் என மாற்றி யமைக்கப் பெற்றமையால், பழைய கல்லக்குடி என்ற பெயரைச் சூட்டவும் (3) தமிழர் கோரிக்கையை "நொன் சென்ஸ்" எனச் சினந்த பிரதமர் நேருவுக்கு தமிழகத்தின் புண் பட்ட உணர்ச்சியைப் புலப்படுத்தவும், தமிழகம் எங் கும் அண்ணுவின் ஆணையின்படி நடைபெற்ற இப்போராட் டத்தில், அண்ணு உட்பட ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் ஒரேநாளில் சிறைப்பட்ட சிறப்பு தி. மு. க. வளரும் சக்தி யென்பதையும் அண்ணு வல்லாண்மை மிக்கார் என்பதை யும் அழுத்தமாகத் தெரிவித்தது. தி. மு. க. போராட்டத் தின் தாக்கத்தைத் தாங்க இயலாது முதலமைச்சர் இராஜாஜி பதவி விலகினர்; ‘பச்சைத் தமிழர் காம ராஜரும் பதவிக்கு வந்தார். அன்று இராஜாஜியை பதவியி லிருந்து விரட்டியது மட்டுமன்று அண்ணுவின் சாதனை. அன்று தன்னையும் தம்பியரையும் மூன்று மாதம் தொட்டு ஆறு மாதத்திற்குச் சிறைச்சாலைக்கு அனுப்பிய இராஜாஜி யின் அன்பையும் அறிவையும் பின்னர் தமக்குத் துணையா கக் கொண்டாரே, அதுவும் சாதனைதான். இந்தித் திணிப் பாளராக இருந்த இராஜாஜியை இந்தி எதிர்ப்பாளராக, இந்தி எதிர்ப்பு சக்திகளின் தெய்வீகமான தார்மீக வலிமை யாக மாற்றினரே அது மகத்தான சாதனையாகும். தி. மு. க. எனது எதிரி நம்பர் (1) என வஞ்சம் கொண்டிருந்த இம் முதுபெரும் தலைவரை ‘தி. மு. க. தம்பிகள் என் தத்துப் பிள்ளைகள்? எனக் கூறும்படி வைத்தாரே, அது மாபெரும்
24

சாதனையாகும். அண்ணுவின் வெற்றிகள் எதிரிகளைக் கொன் று சாதித்தவையன்று அவர்தம் இதயங்களை வென்று சாதித்தவை. அதனுல் அவை நிரந்தரமானவை யும் கூட. மும்முனைப் போராட்டத்தின் பின்னர் நடை பெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவை தமிழக மக்களின் இதயக் குமுறல்களின் எதிரொலிகளே தவிர கட்சி
வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகளல்ல.
தேர்தற் களத்திலே.
1956 ம் ஆண்டு திருச்சி மாநாடு தி.மு.க வரலாற்றில் பல்லாற்ருனும் ஒரு திருப்பு முனையாகும். தி.மு.க. நேரடி யாகத் தேர்தலில் ஈடுபடுவது என்ற தீர்மானம் எடுக்கப் பட்டதும் இந்த மாநாட்டிலேதான். ஐனநாயகவாதி யான அண்ணு இத்தீர்மானத்தை மாநாட்டுப்பந்தல் முகப்பில் வாக்குப்பெட்டி யொன்றில் மாநாட்டுக்கு வரு வோரை வாக்களிக்கவைத்தே தீர்மானித்தார். இதனைத் தொடர்ந்து 1957 ம் ஆண்டு, 1962 ம் ஆண்டுத் தேர்தல் களில் ஆட்சிப்பீடத்தை நோக்கித் தாம் நிச்சயமாகவும் நிதானமாகவும் நடப்பதை உலகுக்கு உணர்த்திய அண்ணு, 1967 ம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு அரசையும் கைப் பற்றினர். 1957 ம் ஆண்டுத்தேர்தலில் தமிழ்நாடு சட்ட சபையில் 15 இடங்களையும் ஏறக்குறைய 17 லட்சம் வாக்கு களையும் டெல்லி நாடாளுமன்றத்தில் 2 இடங்களையும் கைப்பற்றிய அண்ணு, 1962 ம் ஆண்டு தேர்தலில் சட்ட சபையில் 50 இடங்களையும் சுமார் 34 லட்சம் வாக்கு களையும் நாடளுமன்றத்தில் 7 இடங்களையும் கைப்பற்றி தி. மு. க. தமிழ் நாட்டின் தலையாய எதிர்க்கட்சி என்ற நிலையை நிறுவினர். தி. மு. க. தினமும் வளர்ந்து கொண் டிருக்கிறது என்ற சேதியை மென்மேலும் இட்டுவந்தன திருச்செங்கோடு, திருவண்ணுமலை நாடாளுமன்ற இடைத் தேர்தல்களின் வெற்றிகள்.
1962 ம் ஆண்டின் தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள் இந்திய எல்லைகளுக்கு அப்பாலிருந்தவர்களின் கண்களை யும் அகலத்திறக்க வைத்தன வென்ருல் ஆளுங்கட்சியான
25

Page 22
காங்கிரஸ் கட்சியின் அச்சமும், அசூசையும் சொற்பமன்று. திராவிட தேசியத்தின் எழுச்சி எங்கே இந்தியாவைக் கூறு போட்டுவிடுமோ என்றும் போகிற போக்கில் 1967 ம் ஆண்டுத் தேர்தலில் தி. மு. க. தன் பிரிவினைக் கொள் கையுடன் தமிழகத்தின் அரசைக்கைப்பற்றுமானல் அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் இந்திய அரசு அஞ்சிற்று. இதஞல், ஒன்று தி. மு.க. தன்பிரிவினைக் கொள்கையை விடுக்க வேண்டும் அல்லது தி. மு.க. வை 1967 ம் ஆண்டுத் தேர்தலில் பங்கு கெள்ளாது தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினல் உந்தப்பட்ட இந்திய அரசு, f6sari கட்சிகளைத் தேர்தலில் போட்டியிடாது விலக்கும் விதியையும் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. திராவிடநாட்டுப் பிரி வினையை தமது கழகத்தின் உயிர் நாடியாகக் கொண் டிருந்த அண்ணுவின் மேதா விலாசத்திற்கு அவர் அரசியல் வாழ்விலேயே ஏற்பட்ட தலையாய சோதனை இதுவாகும். தி. மு.க. வையே ஆணிவேரோடு பிடுங்கி வீசி விடக்கூடிய சக்தியாக தேசிய ஒருமைப்பாட்டுச் சட்டம் பூதாகார உருவெடுத்து நின்றவேளையில், இந்த அறைகூவலைச் சமாளிக்க உணர்ச்சிமயமான வீரம் மட்டுமல்ல, தம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை ஊடுருவிப்பார்க்கும் விவேகமும் தேவைப்பட்டது.
அறைகூவலைச் சமாளித்து.
அகில இந்தியாவும் என்ன ஆகுமோ என துரிதகதியில் அடிக்கின்ற நாடித்துடிப்புடன் மூச்சைப்பிடித்து நின்ற நேரத்தில், அண்ணு பிரிவினைக் கொள்கையைக் கைவிடும் தம் தீர்மானத்தை அறிவித்தார். இதன்படி பொதுக்குழுக் கூட்டத்தில் கழக அமைப்பு விதியும் மாற்றியமைக்கப் பட்டது. திராவிடநாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை அண்ணு கைவிட்டமை சரியானதா தவமுனதா என்பது சில வட்டாரங்களில் விவாதத்திற்குரிய தாக்கப்பட்டிருப் பினும் இக்கோரிக்கையை வலியுறுத்துவதைக் காட்டிலும் இதனைக் கைவிடுவதற்கு அண்ணுவுக்கு அதிகமான துணிவு வேண்டியிருந்தது என்பது உணரற்பாலது. காரணம், பிரிவி னைக் கொள்கையையே உண்டு ஊட்டம் பெற்றவர்கள் தி.
மு. க. தம்பிகள். அவர்களைப் பி ரி வினை  ைய க்
26

 ைக வி டு ம் கருத்துக்கு இணங்க வைப்பது எளி தானதாக இருந்திருக்க முடியாது. எனினும், கழகத் தின் எந்த ஒரு உறுப்பினனின் முணு முணுப்புக் கூட வெளியே கேட்காது, அண்ணு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாரென்ருல், அது அண்ணுவின் வானளாவிய தனிப் பட்ட வெற்றியாகும். பிரிவினைத்தடைச்சட்டம் வந்த நேரத் திலேயே இந்தியா மீது சீன ஆக்கிரமிப்புச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்திய-சீன யுத்தம் அண்ணுவுக்குச் சுலபமான சூழ்நிலையை உண்டாக்கிற்று எனலாம். தாம் பிரி வினைக் கோரிக்கையைக் கைவிட்டமைக்கு அண்ணு கூறிய காரணங்கள் இரண்டு. அவை அனைவரையும் திருப்திப் படுத்தாமலிருக்கலாம். எனினும், மிகவும் புத்திசாலித்தன மாகப் புலப்படுத்தப்பட்ட சாதுரியமான சமாதானங்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவை யாவன (1) 'தி. மு. க. வாக்குமுறையிலே நம்பிக்கை கொண் டது ம் வேட்டு முறையிலே நம்பிக்கையற்ற துமான ஐனநாயக அமைப்பாகும். அது சட்ட த் தின் பிடிக்கு அஞ்சி நிலவறைகளில் பதுங்கி வாழும் பயங்கரவாதி களின் இயக்கமாக மாறுவதில் எனக்கு தம்பிக்கையில்லை. அது அனுபவசாத்தியமானதுமல்ல ' (2) " இந்தியா மீது சீன மேற்கொண்ட ஆக்கிரமிப்பு, திராவிடநாடு போன்ற சிறிய நாடு தன்னைத் தனித்துக் காத்துக்கொள் ளும் தகுதியுடைத்தோ என்ற சந்தேகத்தை உண்டுபண்ணி யுள்ளது. *
தமது தனித் திராவிடத்திற்கு மாற்றுத் திட்டமாக அண்ணு குறிப்பிட்ட ‘இந்தியக் குடியரசுக்குட்பட்ட திரா விடக் கூட்டரசு" என்ற தத்துவத்தை அன்னர் பொருளா தார, மொழி-கலாச்சார, நிர்வாகக் கருத்துகளில் தான் கூறியிருக்க முடியும். ஏஞகில் அரசியல் ரீதியாக இச் சொற்ருெடருக்கு அர்த்தம் இருக்க முடியாது.
1967-ம் ஆண்டு.
திராவிட நாடு கோரிக்கையை அண்ணு கைவிட்டதன் பின்னர் அவர் அகில இந்திய கணிப்புப் பெற்ற தலைவராகப்
பரிணமித்தமை ஆச்சரியத்துக்குரியதல்ல; தமிழ் நாட்டில் அன்னருடைய செல்வாக்கு தளராது மென்மேலும் பரந்த
27

Page 23
அடிப்படையில் பரவியது வியப்பே. அண்ணு திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டதுடன் தேசியவாதிக ளான முது பெரும் தலைவர் இராஜாஜி, சிலம்புச் செல்வரி ம. பொ. சி. போன்றேருடனும், இடதுசாரி இயக்கங்களுட னும் இணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இந்த இணக்கமே 1967-ம் ஆண்டில் தி. மு. க. வின் தலைமையி லான தேர்தற் கூட்டணிக்கு அடித்தளமாயிற்று. இராஜாஜி யின் சிந்தனையும் அண்ணுவின் கை தேர்ந்த சிற்ப வேலைப்பா டும் இணைந்து கட்டியெழுப்பிய கூட்டணிக்கு, ஏனைய கட்சி களையும் தழுவி அணைத்துச் செல்லும் அண்ணுவின் பண்பாடு பட்டை தீட்டிற்று. தீவிர வலதுசாரியான இராஜாஜியை யும் தீவிர இடதுசாரிகளான மார்க்சிச கம்யூனிஸ்டுகளையும் ஒரே நுகத்தில் இணைக்கும் நுட்பமான வேலையை நட்பைப் பேணி ஏனைய தலைவர்களின் நல்லெண்ணத்தை சீசர்க்கும் அண்ணுவைத் தவிர வேறு எவராலும் சாதித்திருக்க முடி и т.ј.
ஜனநாயகப் புரட்சி
1967-ம் ஆண்டுத் தேர்தலில் அண்ணு தொகுதி ஒதுக் கீடு செய்த நுணுக்கம் நூற்றுக்கு நூறு வெற்றிகரமானதா கும். '"நான் நல்லெண்ணத்துடன் ஒதுக்குவதைத் திருப்தி யுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்" எனத் தோழமைக் கட்சிக ளுக்கு வேண்டுகோள் விடுத்து தொகுதி ஒதுக்கீடு செய்த அன்ஞர், தன்வலியும் ஏனையோர் வலியும் மாற்ருன் வலி யும் சீர்தூக்கிச் செயற்பட்டார். புதுடில்லி நாடாளுமன்றத் திற்கு நிறுத்தப்பட்ட தி. மு. க. வேட்பாளர் அனைவரும் வெற்றி பெற்றமை அண்ணுவின் கணிப்புக்குக் கிடைத்த பாராட்டாகும். பொதுத் தேர்தலில் தமிழ் நாடு சட்ட சபைக்கான 234 இடங்களில் தி. மு. க. 138 இடங்களையும் சுமார் 63 இலட்சம் வாக்குகளையும் பெற்றது. தோழமைக் கட்சிகள் 38 இடங்களையும் காங்கிரஸ் 49 இடங்களையும் பெற்றன. 1962 ஆண்டுத் தேர்தலில் முறையே 139 - 50 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், தி. மு. க. கட்சிகள் 1967-ம் ஆண்டுத் தேர்தலில் முறையே 138 - 49 இடங்க ளைக் கைப்பற்றியமை தமிழ் நாட்டு அரசியலில் மிகவும் தர்க்கரீதியான ஓர் தலைகீழ் மாற்றம் - ஜனநாயகப் புரட்சிஏற்பட்டுவிட்டதை அகிலத்திற்கு உணர்த்திற்று. புதுடில்லி
28

நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற வாக்குப் பதிவில் தி.மு. க. கூட்டணியினர் 36 இடங்களையும் காங்கிரஸ் கட்சி யினர் 3 இடங்களையும் பெற்றனர். ஏக இந்தியாவையும்ஏன், அகிலத்தின் அரசியல் வட்டாரங்களையே - அதிர்ச்சி யடைய வைத்த இந்த வெற்றி யை வேட்டினு லல்ல, வாக் குச் சீட்டினுல் உருவான புரட்சி' (Revolution, not by bullets, but by ballots) 6Taur அ ண் ணு வர்ணித்தார். இவ் வர் ண னை  ைய இந் திய அரசி ய ல் வட்டாரங்களும் ஆமோதித்து ஏற்றுக் கொண்டன. காங்கிரஸ் வீழ்ச்சியுற்ற மற்றைய மாநிலங் களைப் போலன்றி, கூட்டணி ஆட்சிக் குழப்பங்களுக்கு இட மில்லாத தனித்து ஆட்சி செய்யும் தகுதியை தி. மு. க.
Ο ஃந்ேத தமிழ் மக்கள் நிதானமானவர்கள்தாம்.
அரசியல் அர்த்தத்தில் கூறுவதாஞல், "ஊமைகளும் ஊனர்களும் குருடர்களும் செவிடர்களுமான வெறும் ஆண் டிகள் என அரசியல் அதிகாரப் பாரம்பரியம் கொண்ட வர்களால் கணிக்கப்பட்டவர்கள் "திருவோடும் தண்டும்" ஏந்தியே ஆட்சிக்கு வந்த அற்புதம் தமிழ் நாட்டில் நிகழ்ந் தது. இந்திய பத்திரிகை உலகினுல் இதுவரை எடுத்தெ றியப் பட்டவரும் எள்ளிநகையாடப்பட்ட குள்ள உருவத் தினருமான 'கமராக் கவஜ்ேசியற்ற அண்ணு மின் ன ல் வேகத்தில் செய்தியாளரின் ‘கவர்ச்சிக் கன்னி'யாஞர் முன்பு காணுத 'கமராக் கவர்ச்சியனைத்தும் பத்திரிகை புலகு இன்று அன்ஞரிடம் கண்டது. அண்ணு, இருபத்தி நான்கு மணிநேரத்தில் இந்திய அரசியலரங்கின் கதாநாயக ஞஞர். அண்ணுவின் பெருமையைத் "திடுதிப் பென்று அங்கீகரித்த இந்திய அரசியல் வட்டாரங்களின் உணர்ச்சி யின் உச்சக் கட்டத்தைக் கூறுவதானுல், தென்னக மக்க ளின் உணர்ச்சிகளை மதிக்கும் வண்ணம் அண்ணுவை இந்தி யக் குடியரசின் துணைத் தலைவர் (உப ஜனுதிபதி) ஆக்க வேண்டுமென்ற பொறுப்புள்ள புதுடில்லி வட்டாரங்களின் ஆலோசனையைக் கூறலாம்.
சகோதரத்துவம்
அண்ணுவுக்கு எங்கிருந்து வந்ததோ இந்த வலிமை?
எ ப் படி ப் பிறந்ததோ இந்தப் பெருமை ? தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் யார் யாரோ வயிற்றில்
29

Page 24
பிறந்தவர்களெல்லாம், சாதி, சமய, அந்தஸ்து வேறுபா டின்றி இந்தக் கள்ளமற்ற குள்ள உருவின் அணைப்பிலே "அண்ணு' என அசந்து கிடக்க, அவர்களைத் 'தம்பி"யெனத் தழுவிக் கொண்டனரே; நண்ணினுேரையெல்லாம் உடன் பிறப்பாக்கினரே; அந்தச் சகோதரத்துவத்திலே பிறந் தது இந்த வலிமை. இந்தப் பெரும் பண்பாட்டை அன்று கம்பன் கூற இராமாயணத்தில் கேட்டோம்.
'குகணுெடும் ஐவர் ஆனேம்; முன்புபின் குன்று சூழ் வான் மகனுெடும் அறுவர் ஆனேம்; எம்உழை அன்பின் வந்த அகன்அமர் காதல் ஐய! நின்ணுெடும் எழுவர் ஆனேம் புகல் அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை'
இன்று அதனை அண்ணுவிடத்தில் கண்டோம்.
30

*கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கோளரும் வேட்ப மொழிவதாம் சொல்”
- குறள்
GIIj FISI i 36bIS)
தமது நாவன்மையையும் வெற்றிகரமான முறையில் அரசியல் மூலதனமாக்கி, தம் நாவின் அசைவிலே நாட் டையே அசைத்திட்ட நாவேந்தர்கள் உலக வரலாற்றிலே வெகுசிலரே. அச்சிலரிலே ஒருவர் தமிழ்நாட்டைத் தம் நாவினுல் அடிமைகொண்ட அண்ணு அவர்கள், ஆற்றெழுக் கின் அழகுகாட்டும் தம் நாவின் தமிழ்வளத்தால் அறிஞர் சார்ந்த பல்கலைக்கழக அரங்குகள் தொட்டு திறந்தவெளி யின் பொதுக் கூட்ட அரங்குகள் வரை கட்டியாண்டார். தம் நாவின் ஆங்கில வளத்தால் அறிவியல் அரங்குகளில் தமிழ் நாட்டின் தூதுவஞயினர்.
அண்ணுவின் பேச்சுத்துறை வாழ்வை இருகூறுகளாகப் பிரிக்கலாம். முதற்கூறில் துடி கும் இளமையுள்ளம் தான் கொடுமையெனக் கண்டவற்றையிட்டு வெடிக்கும் எரிமலை யாகக் குமுறுவதையும், சமுதாயத்திலே ஒர் புதுமையை,
31

Page 25
புரட்சியை, புத்துணர்ச்சியைக் காணப் பொருமுவதையும் காணமுடிந்தது. கடைக்கூறில், தாம் கண்ட புதுமைகளை, புரட்சிகளை, புத்துணர்ச்சிகளை முழுமைப்படுத்த விழையும் பொறுமைமிக்கப் பேச்சாளர் அண்ணுவைக் காண்கிருேம். இவ்விரு கூறுகளின் மாறுபாட்டுக்கு பெரியார்-அண்ணு தொடர்பில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரளவுக்குக் காரண மாகலாம் என்ற ஐதீகம் கவனத்திற்குரியதே. முதற்கூறில் பெரும்பாலும் பெரியாரின் சிந்தனைகளுக்கு வார்த்தைவடி வம் கொடுக்கவேண்டிய பிரச்சாரகராக அண்ணு இருத்தி ருக்கலாம். பின்னர், தி. மு. க. வைத் தோற்றிய பின் சுதந் திரமான தம் சொந்தச் சிந்தனைகளை தமக்கு இயல்பான தேர்ந்த வார்த்தைகளில் தெளியத்தந்திருக்கலாம். தலை மைப் பொறுப்பும் தம்பியரை வழிநடாத்த வேண்டிய கட மையுணர்வும் பேச்சின் சுருதியை மாற்றத் தூண்டியன போலும். 1956 ம் ஆண்டு தி. மு. க. வை ஒரு தேர்தல் கட்சி யாக்கிய பின்னர் இந்த மாற்றம் மிகவும் நிச்சயப்படுத்திக்
கொள்ளப்பட்டது.
சொற்போர் செய்தும்.
அண்ணுவின் பேச்சுப் பருவத்தின் முதற்கூறு முடிவடை யும் கட்டத்தில் நடைபெற்ற கம்பராமாயணம் பற்றிய சொற்போர் அவர் தெரிவித்த கருத்துக்களே ஏற்கமுடியாத ஒருவருக்குக்கூட, அண்ணுவின் வாதத்திறம் காட்டும் வன் மையுடைத்து, தமிழ்நாட்டின் தவப்புதல்வர்களான வரும் தமிழாய்ந்த சான்ருேர்களுமான பேராசிரியர் சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களுடன் அண்ணு தமது தமிழ்த் திறமும் கம்ப ராமாயணத் திறனை ஆய்ந்த இலக்கியத் திறமும் காட்டி வாதாடி, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் பாராட்டை யும் பெற்ருர். குறிப்பாக, சீதா பிராட்டியாரின் சிறப்பை ஆய்ந்த போது, தமது தூய்மையை உலகுக்கு உணர்த்த பிராட்டியார் தீயில் புகுத்த கட்டத்தைச் சுட்டிக் காட்டி ஞர் அண்ணு,
*மனத்தினுல் வாக்கினுல் மறுவுற் றேனெனில்
சினத்தினுல் சுடுகநீ தீச்செல்வா என்ருள்”
32

என்ருர் கம்பர். எனவே "உடலினல் மறுவுற்றனளோ?" என்றேர் மிகுந்த ஆய்வுத் திறனேடு கூடிய ஐயப்பாட்டை அண்ணு கிளப்பினர். "மனத்தினுல் மறுவுருதகண் உடலி ஞல் மறுவுற்றமைமறுவாகாது’ என்ற வன்மையான குறிப் பினுல் நாவலர் பாரதியார் அண்ணுவின் வாதத்தை முறி யடித்தாராயினும், அன்னர் அண்ணு எழுப்பிய ஐயப் பாட்டை வெகுவாகச் சுவைத்தனர்.
அண்ணுவின் பேச்சுத் துறையின் வெற்றியை அன்னரது அடுக்குத் தொடரும் அணியழகும் மிக்க சொல்லாட்சி உறுதி செய்தது. வார்த்தைகளுக்காக அண்ணு காத்திருப்ப தில்லை, வார்த்தைகள் அன்னருக்காகக் காத்திருந்தன என் பர். அச்சொற்கள் வெறுமையானவையாக, கருத்து வறு மையுடையனவாக இருக்கவில்லை. பல்துறைப் பொருட் கள் பற்றியும் அன்னர் ஆழமாக அறிந்திருந்தமையாலும், அத்துறைகள்பற்றித் தாம் சுயமாகச் சிந்தித்திருந்தமை யாலும், தெளிந்த சிந்தனையினின்றும் கருத்துக்கள் இடை யருது ஊறிக்கொண்டிருத்தன. அந்த ஊற்று கவினுறு வார்த்தைகளாக வடிவம்பெற்றன. 'உள்ளத்தில் உண்மை ஒளியுண்டானல் வாக்கினில் ஒளியுண்டாம்” என்ருனல் லவா பாரதி.
இடமறிந்து பேசியும்.
பேச்சுக்கலையின் நுணுக்கமனைத்தும் அறிந்திருந்த அண்ணு, இடம், பொருள், காலம், ஏவல் இவற்றைக் கணித்துப் பேசினர். அறிவாய்ந்த மன்றங்களில் பேசும் போது அதற்கமையப் படியேறி, மேற்கோள்கள் சரித்திரச் சான்றுகள் காட்டிப் பேசினர். சட்டமன்ற, மாநிலங்கள் அவைக் கூட்டங்களில் விவாதிக்கும்போது புள்ளிவிபரங்கள் காட்டிப் பேசினர். மாநிலங்களவையில் மொழிப்பிரச்சினை யின் மீதும் வரவு-செலவுத் திட்டவாதத்தின் போதும் அண்ணு ஆற்றிய உரைகள் தலைசிறந்த பாராளுமன்றவாதி ('பார்லிமென்டேரியன்") யின் தகமை பெற்றவையாகும். அதே அண்ணு, கழகக் கூட்டங்களிலும், பொதுக் கூட்டங் களிலும் உரையாற்றும் போது படியிறங்கிப் பேசினர். அத் தகைய கூட்டங்களில் குட்டிக் கதைகள், நாடோடிக் கதை
33

Page 26
கள், நகைச்சுவைத் துணுக்குகள் அவர் பேச்சை அணிசெய் தன. இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளன்று அண்ணு உலகெங்கணுமிருந்துவந்த புலமை சால் ஆராய்ச்சி அறிஞர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் ஆற் றிய உரையின் புலமைத் தொனியும், அடுத்து அதை முடித் துக் கொண்டு ‘பூம்புகார் சென்று பொது மக்கள் கூட்டத் தில் நிகழ்த்திய உரையின் பாமரத்தொனியும், அவையை அளந்து பேசிய பேச்சாளர் அண்ணு என்பதைக் கூருநின் றன. இந்த அற்புத ஆற்றலை அன்று செய்தித்துறையினரும் பாராட்டியிருந்தனர்.
அண்ணுவின் அரசியற் பேச்சுக்களைப் போன்றே பொரு ளியல் வாதங்களும் வலிவுடையனவாகும். 1967ம் ஆண்டு முதலமைச்சர்-நிதியமைச்சர் என்ற முறையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் ஆற்றிய உரையும் சட்ட மன்றச் சரித்திரத்திலேயே புதிய மரபுகளை உருவாக்கின. நுணுக்கம் நிறைந்த பொருளியற்றுறையின் நுட்பமான கருத்துக்களை உள்ளடக்கி முதன் முதலில் தனித் தமிழில் வரவு செலவுத் திட்டத்தை மாற்ருரும் மெச்சும் வண்ணம் தயாரித்தளித்த அண்ணு, தொடர்ந்து அத்திட்டத்தை விளக்கித் திண்ணிய கருத்துக்களைக் கூறினர். அண்ணுவின் வரவு செலவுத் திட் டத்தைத் தயாரித்த திறமையை மட்டுமல்ல, அதனைத் தமிழ் இலக்கியமோ என வியக்கும்படி, வழக்கமாக "சோம்ப லுண்டாகும்" உரையைத் தனித்தமிழில் சுவைபட அளித்த திறமையையும் செய்தித் தாள்கள் பாராட்டியிருந்தன. 1962ம்ஆண்டு ஜூன் மாதம் 20ம்திகதி மாநிலங்களவை யில் வரவு-செலவுத்திட்ட வாதத்தில் கலந்து கொண்டு அண்ணுநிகழ்த்திய உரை டில்லி வட்டாரங்ளில் விதந்தோ தப்பெற்றதாகும். இது இவ்வவையில் அண்ணுவின் இரண் டாவது உரையே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வு ரையின் சில பகுதிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:-
f'... . இவர்களின் திட்டத்தின் தன்மை என்ன; திட் டம் சமதர்ம அடிப்படையில் இருக்கப்போகிறதா அன்றி வேறு விதமாகவா என்று ஆய்வாளர்கள் கேட்டால், இவர் கள் "இங்கொன்றும் அங்கொன்றுமாக எடுத்துக் கலந்து
34

ஒரு கலப்புப் பொருளாதாரத் திட்டம் தயாரிக்கிருேம்" என்கிருர்கள். துணைத் தலைவர் அவர்களே! கலப்படம் ஒரு குற்றம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நிதி மந்திரி நாடாளுமன்றத்திலே கலப்படக் குற்றத்தைக் கண்டித்துப் பேசியுள்ளார். பொருளாதாரக் கலப் படம் எத்துணை பெரிய குற்றம். இதற்கான விளைவை இக்கால மக்கள் மட்டுமல்லாமல் வருக்கால மக்களுமல்லவா அனுபவித் தாக வேண்டும். . . 270லட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை கிடைக்கிறது. 200லட்சம் மக்களுக்கு இரண்டு மணி நேரம், 450லட்சம் மக்களுக்கு நான்கு மணி நேரம் வேலை கிடைக்கிறது. மற்ற நேரத்தில் வேலை இல்லை. கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக் கிருேம் -மக்களிடமிருந்து பெற்ற பணம்-கடனுகவும் உதவித் தொகையாகவும் வெளியேயிருந்து பெற்ற பணம் -15வருடச் சுய ஆட்சிக்குப்பிறகு, 12வருடத்திட்ட வேலைக் குப் பிறகு, 270 லட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் தான் வேலை கிடைக்கிறது. இந்த நிலை இருக் கக் காரணம் என்ன? என்ன விளக்கம் இதற்கு?. '
தளத்தினின்றும் தழும்பாது.
இதே உரையின் போது, அண்ணு தமது தளம் எங்கே என்பதையும் மறந்தாரில்லை. அண்ணு தமது போக்கை மாற்றிக் கொண்டால் தாமும் அவருடன் இணைந்து பணி யாற்றுவதாகக் கூறிய வலது சாரி கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தாவுக்கும் இடைமறித்துப் பேசிய ஏனையோருக் கும் அண்ணு பின்வருமாறு கூறினர்.
"'என்னுடன் இருக்கவேண்டுமென ஆவலாக இருப்ப தற்காக நான் திரு.புபேஷ் குப்தாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆளுல், எனது இலட்சியத்தை விட்டுக் கொடுத்து அவரை எனது கூட்டாளியாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. ...ஆனல் திட்டவட்டமாக ஒன்று கூறுவேன். எரிகுண்டு,இழிமொழி எதுவும் என்னை, நான் ஏற்றுக்கொண்டுள்ள புனிதப் பணியிலிருந்து தடுத்து நிறுத்தப் போவதில்லை. அது குறித்துப் பேரப்பேச் சுக்கே இடமில்லை'
35

Page 27
பொறுப்புடன் பேசி.
தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் வாழ்வு இவை சூறை யிடப்பட்டன, தாழ்த்தப்பட்டன, என்னும் போது மிக வும் உணர்ச்சி வசப்பட்டவராக, தரணியனைத்தும் பரணி பாடிய தமிழனின் பாரம்பரியப் பெருமையனைத்தும் கூறி இன்றுற்ற இழிவினையும் கூறி, தமிழ் மக்களை உணர்ச்சியின் எல்லைக்கு இட்டுச்சென்று நேர்ந்துவிட்ட இன்னலைத் தொட்டுக்காட்டும் அண்ணு, இதர விடயங்களில் மிகவும் பொறுமையுடன் பேசினர். மிகவும் பொறுப்புடன் வார்த் தைகளைத் தெரிந்தெடுத்துத் தொடுத்துப் பேசினர். கேட் போர் மனதில் பதியும்படி பக்குவமாகக் கூறினர். உதார ணமாக, "படிக்கும்போது அரசியல் வேண்டாம்" என்ற பொறுப்புள்ள கருத்தை மாணவர்களுக்கு அடிக்கடி கூறி வந்த அண்ணு, 26-4-1967ல் செங்குன்றம்உயர்நிலைப்பள்ளி யில் இதனை வலியுறுத்திப் பேசும் போது பின் வருமாறு கூறிஞர்.
"மாணவ மணிகளாகிய நீங்கள் படிக்கும் காலத்தில் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. இப்பொழுது அரசி பலில் ஈடுபட்டால்தான் பின்னர் பெரிய தலைவர் ஆகலாம் என்று கருதுவது தவறு. நாற்றை நட்டுவிட்டு குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகுதான் அதனுடைய வேர் நன்ருக வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்று பார்ப்பார்களே தவிர தினசரி பிடுங்கிப் பார்க்கமாட்டார்கள். அப்படிப் பார்த் தால் நாற்றுப் பாழாகிவிடும். அதுபோல, மாணவர்களா கிய நீங்கள் நன்கு வளர்ச்சியடைந்த நாற்றைப்போல படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் அரசியலில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நான் கூட பள்ளியில் படிக் கும்போது எந்தவிதமான அரசியல் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டது கிடையாது. ஆனல் படிப்பு முடிந்த பிறகு தான் பார்க்காத போராட்டங்களா? நீங்களும் எ ன் வழியைப் பின்பற்ற வேண்டும்’
மாணவர்களின் அளவுகடந்த அபிமானத்திற்குரிய ஒர் அரசியல் கட்சியின் தலைவர்; தமது கட்சியின் வலுவுக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய கருத்தைக் கூறிஞரென்ருல் அவருக்கு கட்சி நலனைக்காட்டிலும் வளரும் சமுதாயத் நின் நலன் பெரிதாகப்பட்டிருக்க வேண்டும் அத்துடன்
36

தமது சொந்தப்பலத்தில் மிகுந்த நம்பிக்கையும் வேண்டும். இவை அண்ணுவிடம் இருந்தன. அண்ணுவின் பொறுப் புணர்ச்சிக்குச் சான்று கூறும் இன்னெரு நிகழ்ச்சியை இங்கு கூறுவது பொருத்தமற்றதல்ல. காங்கிரசாரின் வன் செயல்களால் பொறுமையிழந்த ஒரு தி மு. க. தலைவர் மேடையில் 'காங்கிரஸ்காரரைக் கல்லா லடிக்க வேண்டும்’ எனக் கூறினர். மேடையிலிருந்த அண்ணு உடனே எழுந்து சென்று அத்தலைவர் அங்ங்ணம் கூறியமைக்கு வருத்தம் தெரிவித்து, அத்தலைவரை - பெருந்தலைவர் என்றும் பாராட்டாது - அவர் கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்தனர். குறிப்பிட்ட த லை வ ரு ம் அண்ணுவின் ஆணைக்குப் பணிந்தனர்.
இனிமையாக.
'இனிய உளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' எனக் கருதினர் போலும். அண்ணு மாற்ரு ரையும் புண்படுத்தாத சொற்களையே பயன்படுத்திஞர். *"மாற்ருர் மனத்தைப் பண்படுத்துவதே தவிர புண்படுத் தக் கூடாது' என்பது அன்ஞரின் கொள்கை. இத்தகைய பண்பாட்டிஞலேயே எதிர்க்கட்சித் தலைவர்களும் அண்ணு விடம் தனிப்பட்ட குரோதங்கள் அற்றவர்களாகவும், அண்ணுவின் நெருங்கிய நண்பர்களாகவும் விளங்கினர். அண்ணு இயன்றவரை எதிர்க்கட்சியினரின் விவாதங்களை நகைச்சுவை உணர்வுடனேயே சந்தித்து முறியடித்தார். உதாரணமாக:-
'காமராசர் தி. மு. கழகத்தைப் பார்த்துச் செக்கு மாடுகள் என்ருராம். நாங்கள் செக்கு மாடுகள்தான் செக்குமாடுகளுக்குத் தீனி அதிகம் போடவேண்டிய தில்லை. ஆனல் அவைகள் பாதை தவருமல் போகும்" செக்கில் உள்ள எள் எண்ணெய் ஆகும் வரை ஓயாது சுற்றும் ஆனல் கோயில் மாடு இருக்கிறதே அது கண்ட இடத்திற்குப் போகும். கண்டதைத் தின்னும். தெரு வில் போவோரை மிரட்டும். பொருள்களை நாசப் படுத்தும். அதைப்போல்தான் காங்கிரஸ் கட்சி. "'
37

Page 28
( 'அண்ணுவின் பல் உடைப்போம்’ எனத் தீவிரமான காங்கிரஸ் பேச்சாளர் ஒருவர் பேசியதையிட்டு வேத னைப்பட்ட தி. மு. க. தம்பியொருவர் கூட்டத்தில் பேசவந்த அண்ணுவிடம் இதுபற்றிப் பேசிக் குறைப் பட்டார். அண்ணு தொடர்ந்து பேசும் போது பின் வருமாறு நிதானமாகக் கூறிஞர். 'எனக்கு யாரோ பல் கொட்டப் போவதாக தம்பியொருவன் கூறி வருத்தப்பட்டான். நான் கூட மிகவும் வருத்தப்பட்டி ருப்பேன் - பத்து இருபது வருடங்களுக்கு முன்பு. இப் போது எந்த மாற்றுக் கட்சித் தோழருக்கும் அந்தச் சிர மம் வேண்டியதில்லை. அவை தாமாகவே வலிய உதிர் கின்றன.'
எனினும், ஆணித்தரமாக.
அண்ணு தமது பேச்சுக்களில் எதிர்க்கட்சியினரின் வாதங்களை ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் தர்க்கரீதி யாகவும் சந்தித்து நிர்மூலமாக்கினுர் . உதாரணமாக;- இ9 தி. மு. க. திராவிடப் பிரிவினை கோரிய நாட்களில், "தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய மூன்று மாநிலங்களும் இதற்குத் தயாராகவில்லையே, அங்கு தி. மு. க வுக்கு ஆதரவுகூடக் கிடையாதே' என்ற வாதத்தைப் பின் வருமாறு முறியடித்தார்: ‘ஒரு ரூபாய் திரட்டப் புறப்பட்டவன் கால் ரூபாய் மட் டு மே முதலில் கிடைத்தால் முழு ரூபாயும் முதலில் கிடைக்கவில்லை யென்று கிடைத்த கால் ரூபாவையும் வீசி எறிந்து விடமாட்டான். அதைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மிகுதியையும் திரட்டமுற்படுவான். முடியு மானல், கால் ரூபாய், கால் ரூபாயாகத் திரட்டுவான். இதேபோல், நாலு மாடி வீடுகட்ட நினைப்பவன் இருக்கும் பணத்தைக் கொண்டு இப்போது அடித்தள வீட்டை மட்டும் கட்டுகிருன் மேலே மூன்று மாடி கட்டுவதற்கு இடம் விட்டுத்தான் கட்டுகிருன். அதே போலத்தான் திராவிடநாட்டுப் பிரச்சினையும்”*
9 1953-ம் ஆண்டு அன்று முதலமைச்சராக இருந்த இரா ஜாஜி கொணர்ந்த குலத் தொழில் கற்கும் கல்வித்
38

திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் தொடக்கிய அண்ணு 'திருடன் மகன் திருட்டுத் தொழில் கற்க வேண்டுமா?" என்று கேட்டார். இ9 தி.மு.க. இதர தோழமைக் கட்சிகளுடன் அமைத்த தேர்தல் கூட்டணிபற்றி, ஒவ்வொரு கட்சியும் ஒவ் வொரு தொனியில் பேசுகிறதே; கூட்டணியில் ஒருமைப் ப்ாடில்லை என்ற கிண்டலை பின் வருமாறு முறிய டித்தார்: ‘கையின் விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு அளவினதாய்தான் இருக்கின்றது. ஆனல் எதிரி யைத் தாக்கும்போது ஐந்தையும் இணைத்து முஷ்டியை மடக்கித்தான் தாக்குவோம். தாக்கப்படும்போது வலி தாங்க முடியாத காங்கிரசார் இதனைத் தாமாகவே அப்போது புரிந்து கொள்வர்".
*சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் இவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது'
என்ருர் வள்ளுவர். வள்ளுவன் சுட்டிக்காட்டிய சொல் லின் செல்வன் அண்ணுதான் என்பதை அரசியல் ஆசா பாசங்களினுல் சிலர் ஏற்க மறுக்கலாம். எனினும் தகர்க்க முடியாத சில உண்மைகளை ஏற்றுத்தான் தீர வேண்டும். ஏற்பினும் ஏற்காவிடினும் சரித்திரம் இச் சங்கதிகளைக் கூறத்தான் போகிறது. அவையாவன (அ) தமிழ்கூறும் நல்லுலகைப் பொறுத்தவரை மேடைப் பேச்சை ஒரு தனிக் கலையாக உருவாக்கியவர் அண்ணு. அண்ணுவைப் பின்பற்றி தி. மு. கழகத்திலும் சரி, கழகத்திற்குப் புறம் பாகவும் சரி ஆயிரமாயிரம் இளைஞர்கள் அன்னுரின் அடி யொற்றிச் சென்று இக்கலை கைவரப் பெற்றிருக்கிருர்கள். கல்லூரிக் காளையர், இளைஞர்களைச் சுண்டி இழுத்திட்டதும், சந்த ஒசையும் சிந்து நடையும் மிக்க அடுக்குமொழியாலும் அலங்கார அணியாலுமானதுமான தமக்கே உரித்தான பாணியில் இக்கலையைக் கட்டிக்காக்க அன்ஞர் ஒரு சந்ததி யையே உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தலைசிறந்த பேச் சாளரெனத் தமிழ்கூறும் நல்லுலகில் பொறுக்கி எடுக்கப் படுவோர் அண்ணுவின் உணர்வையோ, உறவையோ பெற் ருேரேயாவர் (ஆ) பேச்சுக் கலையைப் பொதுவாழ்வுத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கக்
39

Page 29
கூடியதோர் சக்தி மிக்க ஆயுதமாக வடி ந் துத் தந்தவர் அண்ணு. இதனுல் பேச்சாளன் எனப்படு வோனுக்கு சமுதா யத் தை மாற்றியமைக்கக்கூடிய சிற்பியென்ற கணிப்பையும் சமூகத்தில் பெற்றுத் தந்தார். (இ) தமிழ்கூறும் நல்லுலகிலேயே ஒருவர் பேசக் கேட்பதற் காகவே இலட்சக் கணக்கான மக்களைத் திரட்டிய பேச்சா ளர் அண்ணு. அண்ணுவின் பேச்சைக் கேட்பதற்கெனத் திர ளும் தொகையினர் வேறு எந்தப் பேச்சாளருக்கும் திரண்ட தில்லை. திரைப்படம், நாடகம், நடனம், இசை, இவற்றிற் கென உள்ள சுவைஞர் (ரசிகர்) கூட்டம்போல, சொற் பொழிவைக் கேட்கவென ஒரு சுவைஞர் கூட்டத்தை உரு வாக்கியவரே அண்ணுதான்.
40

*கருத்தூற்று மலேயூற்ருய்ப் பெருக்கெடுக்க வேண் டும் கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங் கால்
இருக்கும்நிலை மாற்றஒர் புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனும்' - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
எழுத்தாளர் அண்ணு
பேச்சுத்துறையை ஒரு தனிக்கலையாக உருவாக்கிய அண்ணு எழுத்துத்துறையில் தனது செல்வாக்கினைச் சித்த ரிக்கும் தனிமரபுக்களை ஏற்படுத்தினர். தாம் தொட்ட துறையனைத்தும் துலக்கி, அத்துறையில் புதிய மரபுக்களைத் தோற்றுவித்து, அம்மரபுக்களைக் கட்டிக்காக்கும் தனிப் பெரும் மண்டலத்தையும் தோற்றி, ஆங்கு தன் வெற்றிக் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கவிடுவதே அண்ணு வின் வழக்காக இருந்தது. அவ் வழக்குக்கு எழுத்துத் துறை விலக்கல்லவே.
அன்னரது பேச்சுத்துறையைப் போன்றே எழுத்துத் துறையும் இருவயப்பட்டதாகும். தமிழ்நாட்டில் மிக்க வலி மையுடையனவாகிய வைதீக உலகும் மதபீடங்களும் மருட் சியுற்றுப் புரட்சிக்கொடியும், போர்க்குரலும் எழுப்பக் காரணமாகவிருந்த அண்ணுவின் எழுத்துக்கள் பல முதற் கூறில் தீட்டப்பட்டவையாகும். பரந்தாமனுக்குப் பகி
41

Page 30
ரங்கக் கடிதம், பரமசிவனுக்குப் பகிரங்கக் கடிதம், ஆரிய மாயை, புராணமதங்கள், தேவலீலைகள்' போன்றவை அ ண் ணு வின் சிந்தனையின் முதற்கூறுக்குரியனவாகும். இ வ ற் று ன், "ஆரிய மா யை க் காட்டியமைக்காக சிறை க்கும் “இலட்சிய வரலாறு' தீட் டி ய மை க் காக வழக்கு மன்றத்திற்கும் அண்ணுவை அனுப்பி அழகு பார்த்தது ச ட் டம். அண்ணுவின் அன்றைய சி ந் த னை யி ன் பெறுபேறுகள் ஏற்புடைத்தோ என் னவோ, சிந்தனைப் புரட்சிக்காகச் சிறை சென்ற செம்மல் களின் பட்டியலில் அன்னரும் இடம் பெற்ருர் என்பது மட் டும் உண்மை. அதே போன்று,அண்ணுவின் அன்றைய சமய சம்பந்தமான கருத்தோட்டம் வரன்முறைகளை மீறிய தன் மைத்தாகக் கணிக்கப்பட்டிருப்பினும் (இக்கருத் தோட் டத்திற்கான ஏதுக்கள் வேறு இடத்தில் கூறப்பட்டுள்ளன) அவை மிகவும் கவர்ச்சிகரமானதாகவே வெளிவந்தன. அன்ஞரின் மதத்துறைபற்றிய எழுத்துக்கள் மக்கள் மன் றத்தில் பரந்த அடிப்படையிலான எதிரொலிகளையும் வாதப்பிரதிவாதங்களையும் கிளப்பியதுடன், வைதிகஉலகு பகுத்தறிவு உலகு ஆகிய இரு அணிகளையும் எதிரும் புதிரு மான சொற்போர் மேடைகளையும் தமிழ் கூறும் நல்லுல கெங்கும் தோற்றுவித்தன. அண்ணுவின் வாதங்களும் வழக் கம்போல வைரம் பாய்ந்தனவாகவே விளங்கின. அவரின் பொதுவாழ்வின் பிற்கூறில் சமய நெறிபற்றிச் சுருதி' இறங்கியது என்பதுடன், அரசியற்பணிகளின் பெருக்கத் தின் காரணமாகப் போலும், "அசல் அரசியல் தவிர்ந்த ஏனைய எழுத்துப்படைப்புக்களும் அருகத் தலைப்பட்டன.
ஏட்டாசிரியணுக.
எழுத்துத்துறையில் அண்ணுவின் கன்னிப்பணி பத்திரி கைத் தொடர்பே. 'சன்டே ஒப்சேவர்' செய்தி ஏட்டின் துணையாசிரியராகப் பணி தொடங்கிய அண்ணு, ‘விடுதலை’ *திராவிடன்”, “ஜஸ்டிஸ்" இதழ்களில் ஆற்றிய எழுத்துப் பணி பிறிதோரிடத்தில் கூறப்பட்டுள்ளது. தி. மு. க. தம்பி களின் கையேடாக விளங்கியதும், அண்ணுவின் ஆணைகளை நாட்டின் பட்டிதொட்டியெங்கும் வாழும் கழகத்தவர்க்கு இட்டுச் சென்றதும், தி. மு. க. வின் வளர்ச்சிக்கு அச் சாணியாக விளங்கியதுமான 'திராவிடநாடு" வார ஏடு தி.
42

மு. க. வின் தலையாய படைக்கலனக, அண்ணுவின் கைவண் ணமும் கருத்து வண்ணமும் தாங்கி வெளிவத்தது. அண் ணுவை அடியொற்றிய தம்பிகள் போல, அண்ணுவின் ‘திரா விட நாடு’ ஏட்டை அடியொற்றி தம்பிகளின் ஏடுகள் பல துணைப்படைக் கலன்களாகத் தோற்றின. மன்றம்”, “முர சொலி, திராவிடன்’, ‘போர்வாள்'; 'தீப்பொறி", "தனிய ரசு’, ‘தென்னகம்’, ‘தென்றல்", போன்ற இன்னுேரன்ன தம்பியரின் ஏடுகள், அண்ணுவால் வெற்றிகரமாகவும், புது மையாகவும் கையாளப்பட்ட அடுக்குத் தொடரில், அணி நடையில் எழுதப்பெற்றன.
தம் பேச்சின் வளமொப்பவே எழுத்து வளத்திலும் ஏற்றம் பெற்றிருந்த அண்ணுவுக்கு பத்திரிகைத் துறையி லிருந்த ஈடுபாட்டை உணர்த்த இரு அம்சங்கள் போது மானவையாகும்.
0 பெண்களும் நாட்டு நடப்புகளை அறிந்திருக்க வேண்டு மென்ற எண்ணத்திரூற் போலும், அந்தி நேரத்தில் சிலர் கூடி பல பொருள் குறித்து "அரட்டை அடிப்ப தாக ஒரு பகுதியை 'திராவிட நாட்"டில் வெளியிட் டார். அதற்கு 'அந்திக் கலம்பகம்’ என மகுடமிட் டார். நந்திவர்மன் பற்றிக் கூறும் 'நந்திக் கலம்பகம்’ நாம் அறிந்ததே. "கலம்பகம்’ என்ருல் பல்வகை மலர் களால் தொடுக்கப் பெற்ற மாலையென்பது காண்க.
() அன்ஞரின் செய்தித் தலைப்புகள் தாக்கமானவையா கும். உதாரணமாக, இந்தி மொழிப் பிரச்சினையில் அன் றைய மைய அரசின் அமைச்சர் சி. சுப்பிரமணியம் உறுதி காட்டாமையைக் கண்டித்தும், பழமை சான்ற தமிழும் வங்க மொழியும் ஆட்சி மொழிகளாக வேண்டு மென்று வங்காளத்தில் பேசப்பட்டமையைக் சுட்டிக் காட்டியும், “கொங்கு நாடு கேட்காததை வங்க நாடு கேட்கிறது” எனத் தலைப்பிட்டுச் செய்தி வெளியிட் டார். அவ்வாறே 'அத்தைக்கு மீசை முளைத்துவிட் டது (கேரளத்தில் இடதுசாரிகளின் வெற்றி) ‘ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது" போன்ற தலைப்புக்களும்.
43

Page 31
கவிஞர் அண்ணு
அண்ணுவின் எழுத்துப் பணி ஏட்டாசிரியர், கட்டுரை ஆசிரியர், கதாசிரியர், நூலாசிரியர், நாடகாசிரியர், கவி ஞர் எனப் பல்துறைப்பட்டனவாகும். கவிஞராக அண்ணு பரிமளிக்க முடியவில்லை. கவித் துறையில் அன்னர் ஈடுபாடு காட்டாது தேவையையொட்டியே கவிதை யாத்தார். *திராவிட நாடு" இதழ்களின் முகப்பை அணி செய்யக் கவிதைகள் கிடைக்காத போது தாமே யாத்து இட்டுக் கொண்டார். அவ்வப்போது அரசியல் கட்டுரைகளின் இடைவெளியை நிரப்புதற்காக சிறு கவிதைகளை ஆக்கியுள் ளார். உதாரணமாக, வேலைக்கார முனியனும் முத்தம்மா வும் தம் எஜமானரின் அரசியலை ஆய்கிருரர்கள். ('திராவிட நாடு" 26-11-1961) மு னியன் : “மண்டலக் கங்கிரஸ் தலைவரடி மந்திரிக்கும் அவர் சொந்தமடி கதரும் கட்டிப் பழக்கமில்லை கண்ட பயல்களைக் காண்பதில்லை கண்டிப் பான பேர்வழி நான் என்றும் சொன்னுர் எஜமானர்."
கட்டுரையாளராக.
கட்டுரையாசிரியராக அண்ணு மிகவும் வெற்றிகரமாக நடை போட்டார். அன்னுரின் சமயநெறி ஆய்வுக் கட்டுரை கள் போக, தமிழ் வாழ்வுக்குப் புறம்பானதென எண்ணிய இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைகளின் நோக்கமும் தாக்க மும் வேறிடத்தில் விளக்கப்பட்டுள்ளன. அண்ணுவின் அர சியல் கட்டுரைகள் திண்ணியவை. தாம் எடுத்துக் கொள் ளும் கருத்தை நிறுவும் சக்தி மிக்கவை. எடுத்துக்காட் டாக, தாம் பிரிவினைவாதியாக இருந்த நாட்களில் அண்ணு *தேசியம்" பற்றித் தந்த தெளிவுரையைப் பார்ப்போம். ('திராவிட நாடு" 18-9-1960)
... ... தெருக் கோடியில் உள்ள வைக்கோற் போரில் தீப்பிடித்து எரிகின்றபோது அதைக் காணும் நல்லவன் ஒரு வன் "ஐயோ-நெருப்பு-நெருப்பு" என்று கூக்குரல் எழுப்பு வது உண்டல்லவா?' 'வாருங்கள் அணைப்போம்" என்று
44

அழைப்பதில்லையா? அந்தக் கூக்குரலும் அழைப்பும் தான் பாரதியின் பாடல்கள். வீர சுதந்திரம் வேண்டி நின்ற காலத்தில் எழுந்த போர் முழக்கங்கள் அவை, அந்தக் காலத்தில் அவை பொருள் பொதிந்த அறிவுரைகள். நெருப்பு நீருண்தும் அணைக்க வந்தோர் அனைவரும் அவரவர் இல்லம் ஏகுவர். அவரவர் இல்லம் ஏகுவதைக் கண்டு "பார்த்தீர்களா - முன்பு நாம் பிரிந்திருந்தோம்; அதனல் நெருப்புப் பிடித்துவிட்டது. அனைவரும் சேர்ந்து அதனை அணைத்தோம். இப்போது நீங்கள் மறுபடியும் பிரிந்து செல் லத் தொடங்குகிறீர்கள். மறுபடியும் நெருப்புப் பிடித்துக் கொண்டால் . . என்று ஒருவன் பேசுவதாக வைத்துக் கொள்வோம். மற்றவர்கள், ‘. பேதையே எப்போது இணைந்திருக்க வேண்டும், எப்போது பிரித்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்' " என்று சொல்லிச் செல்வர். அதுதான் முறை.
'. மன்னும் இமய மலை எங்கள் மலையே' என்பதி லிருந்து இந்த வரி வேருெருவன் முன் பாடிக் காட்ட வேண் டியது என்பது விளங்கவில்லையா ?"
''... . . . நாடகத்தில் வேடம் போடும்போது ‘யாரடா நீ என் முன் வந்தவன்" என்று அரங்கத்திலே கேட்கும் கேள் விக்கு "நான் தூதுவன், சேவகன்" என்று ஏதோ ஒன்றை விடையாகச் சொல்லலாம். நாடகம் முடிந்த பின்பும் "நான் தூதுவன்' என்ருல் அது நகைப்புக்கே இடமாகும். இன்னும் நாடக மயக்கம் கலையவில்லை என்றே சொல்வர். , '
தம்பிக்கு.
அண்ணுவின் ஆக்கப்படைப்புகளில் அன்னர் 'திராவிட நாடு’ இதழ்களில் 'தம்பிக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் காத்திரமானவையாகும். தம்பியரின் சிந்தனைகளை நெறிப் படுத்தியன என்ற மட்டிலன்றி, அன்ருட உலக, உள்நாட்டு அரசியல்பற்றிய ஆய்வுரைகள் என்ற முறையிலும் இக்கடி தங்கள் மிகவும் செல்வாக்குமிக்கவையாகும். இக்கடிதங் களை அன்னர் மிகவும் அனுபவித்து எழுதினர் என்பது பெறப்பெற்ரும்.
45

Page 32
'தம்பி-சொல்லும் போதே சுவைதரும் 'தம்பி’ என்ற இந்தச் சொல்லே ஒரு திங்களாகச் சொல்ல இயலாமற் போய்விட்டதை எண்ணி எண்ணி, இனிப்பூட்டும் அந்தச் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிச் சுவை பெறலாமா என்று தோ ன் று கி றது . " " (திராவிடநாடு 20-10-1961)
இத்தகைய இனிய தன் தம்பிக்கு தன் கடிதங்களில் பொருளியல், இலக்கியம், அரசியல், வரலாறு, இன்னே ரன்ன துறைகளனைத்தையும் தொட்டு வாராவாரம் விளக் கம் தந்தார். எடுத்துக்காட்டாக 'திராவிடநாடு’ 8-5-1960
இதழைப் பார்ப்போமா?
அவ்விதழில், ஒட்டாண்டிகளின் வரிப்பணம் எங்ங்னம் ஊதாரித்தனம் செய்யப்படுகிறது எனக் காட்டியவர், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவனையும் காட்டி மணிமேகலை சென்றடைந்த ‘வெயில் நுழைபு அறியாகுயில் நுழை பொதும்பர்' காட்டி, விடுதலை வேட்கை குமுறுகின்ற ஆபிரிக்க நாடுகளுக்கு இட்டுச் செல்கிருர். அங்கு சிறையிலி டப்பட்ட ஆபிரிக்கத் தேசிய எழுச்சியின் சின்னம் மங்கா
லிசோவைக் காட்டுகிருரர். 'சிறையில் தள்ளப்பட்ட மற் ருேர் வீரன் வெளியே வந்து வீரமுழக்கம் செய்கிருன் , காணலாம் வா தம்பி.’’ எனக் கை பற்றி அழைத்துச்
சென்று எழுச்சியுற்ற நயாசாலந்தின் தலைவன் டாக்டர் ஹேஸ்டிங்ஸ் பண்டாவைக் காட்டுகிறார். பின்னர் விடு தல பெற்ற சிறிய நாடுகளான டொக்கோலாந்து, மட காஸ்கார் இவற்றின் விடுதலைக் கிளர்ச்சிகளையும் வீரத்தியா கங்களையும் வாய் நிறைந்த ஆர்வத்துடன் கூறிவிட்டு," . . பிரான்சு ஆசை காட்டிப் பார்த்தது, அச்ச மூட்டிப் பார்த் தது; மடகாஸ்கார் பணிய மறுத்தது. விடுதலை பெற்றுவிட் டது. தீவு தம்பி, தனி அரசு ஆகிறது; திருவிடம் தேம்பித் தவிக்கிறது. ஏன்?" எனச் சிந்தனையைக் கிளறி, "" கேவலம், சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடக் கூடத் திராணியின்றி இருக்கிறதே தமிழ்நாட்டின் காங்கி ரஸ் ஆட்சி' என மனமுடைந்து கடிதத்தை முடிக்கிருர்,
46

சொல்லும் சுவையும்.
வேற்றுமையால் கழகத்தை விட்டுச் சிலர் பிரிந்து சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டமையையும் அதைக் காங்கிரசார் நன்கு பயன்படுத்திப் பிரச்சாரம் செய்ததையுமிட்டு அண்ணு 'தம்பி" க்குத்தீட்டிய கடித மொன்றில் குறிப்பிடுவது சுவையுடைத்து.
*" முத்தமிழ் வித்த கர், சண்டடிமாருதம், சொற் கொண்டல், என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் தந்து பேச் சாளர்களின் தரத்தை மக்களுக்கு அறிவிப்பார்கள் - முன் பெல்லாம். இப்போது காங்கிரஸ் மேடையில் முதல்தர மான பேச்சாளருக்கு என்ன அடைமொழி என்கிருய்? தடி யடிபட்டவர், தண்டியாத்திரை போனவர், உப்புக் காய்ச் சியவர், கதர் விற்றவர், கள்ளுக்கடை மறியல் செய்தவர், காந்தி பஜனைக் கூடம் கட்டியவர், என்றஇந்தப்பெயர்களா? அல்லவே அல்ல. தி. மு. க. வை விட்டு விலகியவர் - இது தான் முதல்தரமான அடைமொழி: ஆமாம், தம்பி. பெருங் காயம் இருந்த பாண்ட மல்லவா, தி. மு. கழகத்தை விட்டு விலகியவர்! அந்த மணம்தான் இப்போது நல்ல விலைக்கு விற்கிறது, காங்கிரஸ் வட்டாரத்தில். *" (திராவிட நாடு 10-12-1961)
.... தம்பி, ஓசை கேட்டாலே விசையொ டிந்த தேகத் திலும் வீரம் வந்து சேரும். கூறட்டுமா?' எனக் கேட்டுக் கலிங்கத்துப்பரணியின் காட்சிகளையும் ஏனைய இலக்கிய மாட்சிகளையும் அண்ணு காட்டும் கடிதங்களும் உளவாயி னும் அவை பெரும்பாலும் அரசியல் நயம் காட்டவே. அண்ணுவின் கடிதங்கள் தமிழ்மொழிக்கு மெருகூட்டின என்பதில் ஐயப்பாடு தெரிவிக்கப்படினும், தமிழ் கூறும் நல் லுலகின் சிந்தனைக்கு மெருகூட்டின என்பதை மறுப்பது கடினமே. 1962ம் ஆண்டுத் தேர்தலில் கழகத்தவர் ஐம்ப தின்மர் வெற்றிவாகை குடியும் தாம் தோல்வியுற்றது கண்டு மனம்தளர்ந்த தம்பிக்கு அண்ணு எழுதிய கடிதத்தில் (திராவிடநாடு- 18-3-1962) ஜெரூசலம் நகருக்காக நடந்த புனிதப் போரில், றிச்சர்ட் மன்னனின் படையணி யினர் ஜெரூசலம் நகருக்குள் நுழையலாம், மன்னன் றிச்
47

Page 33
சர்ட் நுழையக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட தைச் சுட்டிக்காட்டுகிருர். "என்னை ரிச்சர்ட் நிலைக்கு தான் உயர்த்திக் கொள்ள இதனை எழுதவில்லை. இதனைப் படித்து விட்டு மாற்ருரும் தம்மை சாலடீனுடன் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம் என்கிருர். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணு இன்றி இத்தகைய தரமான உவமைகள் தலை யெடுத்திருக்குமோ என்பது சந்தேகமே.
அண்ணுவின் ஆசிரியத்தலையங்கங்கள் இறுக்கமானவை. தமது திராவிடநாட்டுக்கான கோரிக்கையை இந்திய எல் லைக் கோடுகளைத் தாண்டிய உலகப் பிரச்சினையின் மட்டத் திற்கு உயர்த்த வேண்டுமென்ற உற்சாகத்தை அன்னரின் தலையங்கங்களிலே காணமுடிந்தது. சர்வதேச அரங்கிலே விடுதலைக் கிளர்ச்சி நடாத்திய நாடுகளைப்பற்றியெல்லாம் அவர் தோழமையுறவுடன் எழுதியமை இந்த உற்சாகத்தின் மிகையான தோற்றமே. அல்ஜீரிய விடுதலை", "அல்ஜீரி யாவும் திராவிடநாடும், "தங்கனிகா விடுதலை, காமன் வெல்த் கேலிக்கூத்து’-இவைபோன்ற மகுடமிடப்பட்ட தலையங்கங்கள் இதுவிடயத்தில் நோக்கற்பாலவை.
நாவல்கள், நாடகங்கள்.
கதாசிரியர் அண்ணுவின் ‘நாவல்”கள் முழுமைபெற்ற பெருங் கதைகள் தாம் எனினும் சோஷலிச நாடுகளின் இலக்கியங்களைப் போன்று இவையும் பிரச்சாரப் பிடியினின் றும் விடுபட முடியவில்லை. இதனல், அரசியல் வயப்பட்ட வாசகர் உலகமே அண்ணுவின் நாவல்களையும் கவர்ந்து உண் டது. அரசியலுக்கு அப்பாற்பட்டதும், அரசியல் வாசகர் உலகைக் காட்டினும் பரப்பில் மிகவும் குறுகியதுமான பொழுதுபோக்கு வாசகர்களுக்கு அண்ணுவின் நாவல்களைப் படிக்கவும் திறனயவும் வாய்ப்பில்லாது போயிற்று. அண்ணு வைப் பின் தொடர்ந்த திரு. மு. கருணுநிதியின் சிறுகதை களுக்கும் ஏற்பட்ட இந்நிலை, ஏனே இதர கழக எழுத்தா ளர்களான திருவாளர்கள் ஆசைத்தம்பி, இராதாமணுளன், தில்லைவில்லாளன் போன்றேரின் படைப்புகளுக்கு ஏற்பட வில்லை. அண்ணுவின் நாவல்களில் ‘இரங்கூன் இராதா' மூட நம்பிக்கைகளையும் பத்தாம் பசலித் தத்துவங்களையும் படம்
48

பிடித்துக் காட்டி சுவையாகப் பின்னப் பெற்ற கதையாகும். இந் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு, இதனை திரைப்பட மாகத் தயாரிக்கவும் திரைப்படத்துறையினரைத் தூண் டிற்று. 'பார்வதி பீ. ஏ. என்ற நாவல் ஆடம்பர வாழ்வின் வெறுமையைக் காட்டும் நவீனமாகும். அண்ணு கதையின் கருப்பொருளைக் கொண்டே கட்டுரைகள் தீட்டியமையும் உண்டு. பிரச்சாரகன் பேணு பிடிக்கும்போது எழும் "திணை மயக்கங்களை’ இவை புலப்படுத்துவனவாகும். கிருஷ்ண லீலா, வள்ளி திருமணம், பாமா விஜயம் போன்ற இன்னே ரன்ன அண்ணுவின் சிறுகதைகள் பல முழுமையானவையா யினும் அவற்றின் தலைப்புக்கள் அன்னுரின் பிரச்சாரப் பான் மையைப் புலப்படுத்துவன.
ஒரு நாடகாசிரியன் என்ற முறையில் அண்ணுவின் படைப்புக்கள் அத்தனையும் முத்தனையவாகும். நாடகாசிரி யனுக்குரிய உத்திகள் அத்தனையும் காட்டி அண்ணு சித்த ரித்த நாடகங்கள் தமிழ் நாட்டின் மாறுபட்ட கருத்துக் களங்களிலும் அண்ணுவுக்கு மதிப்பைத் தேடித்தந்தன. மாற்றுக் கருத்தினரும் அண்ணுவின் படைப்புக்களை மதிப் பீடு செய்ய முன்வந்தமை அன்ஞரின் நாடகங்களின்பால் அவர்கள் கொண்ட ஈடுபாட்டையே காட்டுவதாகும். அண்ணுவுடன் அரசியலில் அன்று முரண்பட்டிருந்த பேராசி ரியர் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ‘ஓர் இரவு நாட கத்தைப் பார்த்துவிட்டு 'இங்கும் ஒரு பெர்ணுட்ஷோ இருக் கிருர்; இப்சனும் இருக்கிருர்" என வியந்து வாயாரப் புகழ்ந் தாரெனின் அண்ணுவின் புலமை அற்புதமானதாகும். *சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்', ‘நீதி தேவன் மயக்கம்", *சந்திரமோகன்’, ‘சந்திரோதயம்’, ‘வேலைக்காரி’, ‘காதல் ஜோதி போன்ற நாடகங்கள் நாடக உலகில் அண்ணுவின் வெற்றிக் கொடியை நிலைநிறுத்தின. இவற்றுள் "வேலைக் காரியும் ‘ஓர் இரவும் திரைப்படங்களாக்கப்பெற்று திரை யிலும் வெற்றியீட்டின.
நூலாசிரியராக.
அண்ணுவின் எழுத்துக்கள் பேச்சுக்கள் இவற்றிற்கு
பொதுமக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கையும் வரவேற்
பையும் ஏதுவாகக் கொண்டு, ஏறக்குறைய அவர் கூற்றுக்
49

Page 34
கள் எழுத்துக்கள் அத்தனையும் நூல் வடிவம் பெற்றுள்ளன. ஒரு தனி எழுத்தாளனின் எண்ணங்களை நூலாக்கி வெளியிட வெளியீட்டாளர் பலர் பலத்த போட்டியிட்டனரென்றல் அந்தப் பெருமை அண்ணுவுக்குரியதாகும். அன்னரின் நூல் களை வெளியிடுதற்கென்றே சில பதிப்பகங்கள் தோன்றிய மையும் உண்டு. அண்ணு ஏடுகளில் எழுதியவை மேடைக ளில் பேசியவை உட்பட, நூலாசிரியன் என்ற பெற்றியில் வெளிவந்த அன்ஞரின் நூல்களை நான்கு வகையினதாகப் பகுக்கலாம்.
T.
தம்பிக்கு கடிதங்கள் (இரண்டு பாகங்கள்), பணத்
தோட்டம், இலட்சிய வரலாறு, குமரிக்கோட்டம், கற்பனைச் சித்திரங்கள், எல்லோரும் இந்நாட்டு மன் னர், விளைக்காது விளையும் கழனி, வளம் காண வழி உரோமாபுரி இராணிகள், தமிழர் மறுமலர்ச்சி, தேன் துளிகள், போன்றவை சமூக, பொருளியல் அரசியல் பிரச்சினைகளை ஆயும் கட்டுரைகளும் கட்டுரைக்
கோவைகளுமாகும்.
கம்பரசம், பரந்தாமனுக்குப் பகிரங்கக் கடிதம், பரம சிவனுக்குப் பகிரங்கக் கடிதம், ஆரியமாயை, தேவ லீலைகள், புராண மதங்கள், வர்ணுச்சிரமம், மாஜி கட
வுள்கள் போன்றவை சமய நெறி, புராண, இதிகாசங்
கள் பற்றி அண்ணு ஒரு காலத்திற் கொண்டிருந்த கருத்தின் அடிப்படையிலான ஆய்வுரைகளும் மதிப் பீட்டு விளக்கங்களுமாகும்.
ஏ தாழ்ந்த தமிழகமே!, தீ பரவட்டும், நாடும் ஏடும், மேதின விழா, உழவர் திருநாள், தீண்டர்மை, மகாத்மா காந்தி, நூல்நிலையங்கள், வீட்டுக்கொரு புத் தகசாலை, சமதர்மம் போன்றவை, வானெலியில் ஆற் றிய உரைகள் உட்பட பல்வேறு இடங்களிலும் நிகழ்த் திய சொற்பொழிவுகளாகும்.
பார்வதி பி. ஏ., இரங்கூன் இராதா, கலிங்கராணி, காதல் ஜோதி, அண்ணுவின் ஆறுகதைகள், கபோதி புரத்துக் காதல் போன்றவை கதை, நாடகம், சிறு கதைத் தொகுதி ஆகியனவாம்.
50

எழுத்துத்துறையிலும் அண்ணு தமக்கெனத் தனி மண் டலமொன்றை உருவாக்கி, அதில் தம் பெயரைப் பேணும் ஓர் சந்ததியை விட்டுச் சென்றுள்ளார். அண் ஞவின் குலக்கொழுந்துகளான கதாசிரியர், கட்டுரை யாசிரியர், நாடகாசிரியர், கவிஞர் என்போர், ஒன்று அண் ஞவிடம் பாடம் கேட்டுப் பயின்ருேராவர், அ ல் ல து அண்ணு விதைத்திட்ட உணர்விலே விளைந்தோராவர்.

Page 35
'சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்'
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
கலைத்துறையில் அண்ணு
கலைஞர்கள் சமூகத்தின் கண்களில் கேலிக்குரிய ஒர் வர்க்கமாகக் கணிக்கப்பட்ட நாட்களிலேதான் கலேயுலகு டன் தொடர்பு கொண்டார் அண்ணு. நலித்தும் மெலிந் தும் நிந்திக்கப்பட்டும் சமுதாயத்தின் சாக்கடை வாய்க் கால்களின் ஓரங்களிலே ஒண்டி வாழ்ந்த கலைஞர் வர்க் கம், அண்ணு மறைத்த காலகட்டத்தில் சட்டங்கள் செய்ய வும் பட்டங்கள் ஆளவும் தக்க செல்வாக்கு மிக்க ஓர் சக்தி யாக பரிணமித்தது என்ருல், இத்தகைய வளர்ச்சியை, சமு தாயப் புரட்சியை உருவாக்கிய சிற்பி அண்ணுவல்லவா ? கூத்தாடிகள் எனக் கிண்டல் செய்யப்பட்டோரைத் தன் கூட்டாளிகள் ஆக்கிக் கொண்டார். நடத்தை கெட்டோ ரென நையாண்டி செய்யப்பட்ட திரைப்படக் கலைஞர் களைத் தம் நண்பர்க்ளாக்கிக் கொண்டார். செய்தித் தாள்களைப் போன்று, நாடக ங் களை யும், திரைப் படங்களையும் சமுதா ய த்  ைத உருவாக்கும் சாத னங்களாக்கிஞர். திரைப்படங்களிலும் நாடகங்களி
52

லும் சமூக, பொருளியல், அரசியல் பிரச்சினைகளை கருப் பொருளாக்கி, அவற்றை பாத்திரப் படைப்புகளின் வாயி லாக மக்கள் மன்றத்தில் அலசி ஆராய வைத்தார். இத ஞல் நாடோடி வாழ்க்கை நடாத்திய நடிப்புக் கலைஞர்கள் சமுதாயத்தின் காவலர்களாக, சமுதாயப்புரட்சித் தூது வர்களாக மாறினர். முடிசார்ந்த மன்னரைப் பற்றியும் முனிவர்களையும் தேவர்களையும் பற்றியும் மட்டுமே அரங்கு களிலே கண்டு கண்டு களைத்திருந்த மக்கள் மத்தியிலே, குடி சார்ந்த விவசாயி, உடல் காய்ந்த தொழிலாளி, வாழ்க்கை யில் நொடிந்தவன், வழுக்கி விழுந்தவள், இன்னேரன்ன அன்ருட ம னி த ர் க ளின் அல்லல்களையும் ஆசாபா சங் களையும் சித்தரிக்கும் காட்சிகளைக் காண வழி சமைத்தார். இதனல், கலைஞர்களும் தம்மை வெறுமனே கழைக்கூத் தாடிவிட்டுக் கலந்து செல்வோராகக் கருதாது சமுதாயத் தின்பால் தமக்கொரு பொறுப்பும் கடமையும் இருக் கின்றனவென உணர வைத்தார்.
கலையில் அரசியலா?
திரைப்படங்களையும் P நாடகங்களையும் பி ர ச் ச |ா ர சாதனங்களாக்கி அதில் வெற்றிகண்ட தலைமகன் அண்ணு ஆவார். கலையில் அரசியல்லப் புகுத்துவதா? எனக் கர்ச்சித்த மாற்றுக்கட்சியினரிடம் அண்ணு ஆணித்தரமாகக் கேட் டார்; ' கலை கலைக்காகவன்றி மக்களுக்காகவல்லவோ? அர சியல் அரசியலுக்காகவன்றி மக்களுக்காகவல்ல்வோ? இரு மக்கள் சாதனங்களும் இணைவதிலே தவறென்ன?’ என்ருர், கலைஞர்களை சமுதாயத்தின் கண்க்ள் என்ற நிலைக்கு உயர்த் திய அண்ணுவினுல் ஈர்க்கப்பட்ட கலைஞர்கள் பலர் அன்னு ரின் இயக்கத்திற்கு வலிமை தருவதைக் கண்டு மாற்றுக்கட் சியினர் மனம் பதறினர். கலைவாணர் என். எஸ். கிருஷ் ணன், கே. ஆர். இராமசாமி, டி. வி. நாராயணசாமி, எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ். எஸ். இராஜேந்திரன் போன்ற இன் னும் பல நாடகத்துறைத் திரைத்துறைக் கலைஞர்கள் அண் ணுவின் பாசறைக்கு அரணுயினர். அண்ணுவின் சேதிகளைத் தமிழ்கூறும் நல்லுலகின் எட்டுத்திக்கும் இட்டுச் சென்ற னர். இதஞல், "கலைஞர்க்கும் அரசியலா?’’ எனக் காழ்ப்
53

Page 36
புற்றனர் மாற்றர். 'ஏன், கலைஞர்கள் மனிதர்களில்லையா? அவர்கள் மனித சமுதாயத்திற்கு அப்பாற்பட்டோரா? அவர்களுக்கு வயிறு பசிக்காதா? வாழ்க்கைப் பிரச்சினைகள் இருக்காதா?’ என நிதானமாகக் கேட்டார் அண்ணு. மாற்றுக்கட்சியினர் நாவடங்கினர். அதுமட்டுமல்ல, தாமும் இத்துறைகளைப் பிரச்சார சாதனங்களாக்க முற் பட்டனர். தமது இயக்கத்திற்குச் சார்பான கலைஞர்களைக் கொண்ட அணிகளையும் மாற்றுக்கட்சியினர் உருவாக்கினர். இம் மனமாற்றம் திரைப்படத்துறையில் அண்ணு நிலைநிறுத் திய பெற்றிவாய்ந்த வெற்றியாகும்.
நாடகத்தில்.
நாடகத்துறையில் அண்ணுவின் ஈடுபாடு நாடகாசிரி யன் என்ற முறையில் மட்டுமல்ல. கலப்புத் திருமணம், சமத் துவ சமுதாயம், சீர்திருத்தத் திருமணம் போன்ற மறு மலர்ச்சிக் கருத்துக்களைத் தமது எழுத்தாணியிஞல் அழுத் தமாக உழுது, உழுத்துப்போன சமுதாயத்தின் எண் ணத்தை பரிபக்குவம்செய்ய நாடகங்கள் படைத்தஅண்ணு, தாமே அரிதாரம் பூசி வேட்ம்தாங்கி நடித்த காட்சி, அரசி யல் உலகு காணுத மாட்சியன் ருே? தமிழகத்தின் அரசியல் வானிலே ஒளிவிடும் ஒர் துருவ நட்சத்திரம், லட்சோபலட் சம் மக்களின் தானத்தலைவன், எம். ஏ. படித்தவர், கற் ருேர் மன்றத்தில் கணிக்கப் பெறுபவர், 'கூத்தாடி"கள் கேலிக்குரியராகக் கணிக்கப்பட்ட அற்றைநாட்களில், தம் சமூக அத்தஸ்தைக் கருத்தில் கொள்ளாது தாமே கூத்தாடி யாக மாறினரெனின் அந்தப் பெற்றிமைதான் பேசுந்தரத் ததோ? இச்சாதனை அண்ணுவின் சாமான்ய மனித உணர்வு களுக்கு அப்பாற்பட்ட பரந்த உணர்வுகளின் பான்மை கூறும். மூக்குமுனைக்கு அப்பாலே நோக்கிய உயர்ந்த மதிப் பீடுகளின் மாண்பு கூறும். தம் கருத்துக்களை நிலை நிறுத்துவ தற்கு எந்த மட்டத்திற்கும் செல்லத் தயார் என எடுத்தி யம்பும் அண்ணுவின் இலட்சியத் துடிப்பின் ஆழம் கூறும்; வேகம் கூறும். அதுமட்டுமன்று, ‘சந்திரமோகன்' நாடகத் தில் காகபட்டராகவும், ‘சிவாஜி கண்ட இந்துராஜ்யம்'நாட கத்தில் அரசகுருவாகவும், ‘நீதி தேவன் மயக்கம்’நாடகத் தில் இராவணனுகவும் அண்ணு காட்டிய நடிப்பின் தேர்ச்சி
54

தொட்டபணியனைத்தும் துலங்கவைக்கும் அன்ஞரின் அதிச யப் பேராற்றல் கூறும். சமூக அந்தஸ்துப் பெற்ற அண்ணு, சமூகத்தின் அழுக்கடைக் கணவாய்களில் உழல்கின்ற கூத் தாடிகளின் வர்க்கத்திற்கு மட்டுமே உரியதெனக் கருதப் பட்ட நடிப்புத்துறையில் தாமே ஈடுபட்டதனல் இதர நடி கர்களின் அந்தஸ்தும் நாடகத்துறையின் மதிப்பும் மேம்பட்
6.
திரைப்படத்தில்.
நாடகத்துறையில் தமது தனி முத்திரையை ஆழப் பொறித்திட்ட வித்தகர் திரைப்படத்துறையிலும் தம் கை வண்ணமும் கருத்துவண்ணமும் சேர்த்துக் கலைப்புரட்சி செய்யத் தவறவில்லை. இத்துறையிலே அண்ணு எண்ணத்தி லும் எழுத்திலும் புதிய நோக்கும் புதிய போக்கும் கொண்ட தோர் புதுமையான சகாப்தத்தையே உண்டாக்கிஞர் என் பதை அன்னரின் விரோதிகள் கூட ஒப்புவர். திரைப்படத் துறை வரலாற்றிலே அண்ணுவின் சுவடுகள் ஆழமாகப் பதி யப் பெற்ற புதிய சகாப்தம் ‘நல்லதம்பி" திரைப்படத் துடன் தொடங்கியதாயினும், திருப்புமுனையைத் திடப்படுத் தியது வேலைக்காரி'யாகும். இத்துறையில் புதிய சக்தி யொன்று புகுந்துவிட்ட சேதியைக் கட்டியங்கூறுவதற்கு *நல்லதம்பி" தவறவில்லை.
**தாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி'யாக, 'சிரிக்க வைத்து நாட்டைச் செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி"யாக கலைவாணர் கிருஷ் ணன் தோன்றி அறிஞரின் கருத்தோட்டத்திற்கு உயிரூட்டி ஞர். 'மழை வரு மென்றே மந்திரம் ஜெபித்தது அந்தக் காலம், மழையைப் பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம்" என அண்ணுவின் எண்ணத்தில் ஊற் றெடுத்த பகுத்தறிவுக் கருத்துக்கள் பல கலைவாணரினல் நல்லதம்பி மூலம் பாய்ச்சப்பட்டன. அண்ணு-கலைவாணர் இணைப்பு கலையுலகப் புரட்சியில் சாகாத சரித்திரம் கண்டது. அண்ணுவின் பகுத்தறிவுப் பணிக்கு சிரிக்கவைத்துச் சிந்திக்க வைத்த கலைவாணர் பயனுள்ளதோர் படைக்கலன் ஆயி Gift.
55

Page 37
மாபெரும் புரட்சி
அண்ணுவின் ‘வேலைக்காரி? தமிழ்த் திரைப் பட உலகில் மாபெரும் புரட்சியை உண்டுபண்ணியதோர் மகத்தான காவியம். அன்ருடம் வாழ்வில் நிலவும் சமூக பொருளா தாரப் போராட்டங்களில் நாம் சந்திக்கும் வெவ்வேறு வர்க்கங்களின் பிரதிநிதிகளான ஆனந்தனையும் வேதாசல முதலியாரையும் முழுமையான உருவத்துடன் தம் செழுமை யான சிந்தனையில் உருவாக்கி அவர்களைத் திரையில் நட மாடவிட்ட அண்ணுவின் எண்ணத்தின் பரப்பைக் கூறவா, எழுத்தின் சிறப்பைக் கூறவா? அன்னரின் கற்பனைப் படை யலான கதையின் அற்புதக் கருத்துக்களைக் கூறுவதா, அல் லது ஒப்பனைத் தமிழில்வடித்த உரையாடலின் பொலிவைக் கூறவா? அண்ணு அணியழகு ஊட்டி, மறுமலர்ச்சித் தமிழ் கூட்டி, புதிய நடையில் உரையாடல்களைத் தீட்டி, விளைத் திட்ட வசனப் புரட்சி, அன்னருக்குப் பின்வந்த திரைப்பட வசனகர்த்தாக்களுக்கு ஒர் முன்னேடியாயிற்று; வழிகாட் டி யாயிற்று வரவிலக்கணமும் ஆயிற்று.
அண்ணுவின் பாணி திரைப்படத் துறையில் ஒர் புதிய சகாப்தத்தை மட்டுமல்ல, புதிய எழுத்தாளர் சத்ததி யொன்றையே படைத்துவிட்டது. திருவாளர்கள் மு, கருணுநிதி, கண்ணதாசன், ஆசைத்தம்பி, அரங்கண்ணல் மாறன், இராதா மணளன், ஏ. எஸ். ஏ. சாமி போன்ற தி. மு. க. இயக்க அனுதாபிகளான திரைப் பட எழுத்தாளர்கள் மட்டுமல்ல, திருவாளர்கள் ஏ. கே. வேலன், எஸ். டி. சுந். தரம், சக்தி கிருஷ்ணசாமி போன்ற இன்ன பிறரும் இச் சந்ததிக்குரியோரே. திரைப்பட எழுத்துத்துறையில் அண்ணு ஏற்படுத்திய தாக்கத்தின் செல்வாக்குத்தான் இன் றும் ஏதாவது ஒரு வகையில் திரைப்பட எழுத்தாளர் கள் அனைவரதும் ள்முத்துக்களில் எதிரொலித்துக் கொண் டிருக்கிறது. கட்சி அபிமானங்களால் சிலர் இதை மறுக்க லாம். எனினும் இவர்களின் எழுத்துக்களில் இச் செல் வாக்கை இவர்களால் மறைக்க முடியவில்லை. அல்லது, தம் மையறியாமலே இச்செல்வாக்குக்கு அடிமைப்பட்டுவிட்ட னர் என்பதா? எது எப்படியாயினும்,திரைப்படத் தயாரிப்
56

Hக்கு "இவையும் உப உறுப்புக்கள்" என இருந்த கதை, வச னம், ஆகிய அம்சங்களை 'இவைதான் உயிர் நாடியான உறுப்புக்கள்' என்ற நிலைக்கு மாற்றியமைத்தவர் அண்ணு என்பன்த மறுக்க முடியுமா? திரைப்படத் தயாரிப்பில் உதவியாட்களுள் ஒருவர் என்ற நிலையிலிருந்த கதை வசன கர்த்தாவை, திரைப்படத்தின் சிருட்டிகர்த்தா என மதிக் கத்தக்க நிலைக்கு உயர்த்தியவர் அண்ணு என்பதை மறைக் கந் தான் முடியுமா? இன்ன நடிகரை நடிக்கவைத்தால் படம் வெற்றி பெறும் என்ற நிலையையும் மேவி, இன்னவர் கதை வசனம் எழுதினுல் படம் வசூலைக் கொடுக்கும் என் ருேர் நிலையை திரைப்படத் துறையில் ஏற்படுத்தியவர் அண்ணு என்பதை நிராகரிக்க முடியுமா? தம் எழுத்தாற்ற லேத் திரைப்படத்தின் மூலதனமாக்கித் தமக்கு இத்தகைய நிலையான மதிப்பைத் தேடிக் கொண்ட அண்ணு, தம்மைப் பின் தொடர்ந்த எழுத்தாளர் சந்ததிக்கும், படத்தின் வெற்றி தோல்வியில் அவர்களைப் பாரிய பங்காளிகளாக் கியதன் மூலம், இத்தகைய மதிப்புக்குரிய அந்தஸ்தை அளித்துச் சென்றுள்ளார். திரைப்படத்துறையில் எழுத் தாளனின் மதிப்பீட்டை மாற்றியமைத்த "வேலைக்காரி" யில் அண்ணுவின் கவின் மிகு கைவண்ணத்திற்கு எடுத்துக் காட்டுகள் சில:- ۔۔۔۔
(தன் தந்தை பட்ட கடனுக்காக மரக்கிளையில் பிண மாகத் தொங்குவதற்குக் காரணமாகஇருந்த வேதாசல முதலியாரைப் பழிவாங்கத் துடிக்கும் ஆனந்தன் தன் நண் பன் மணியின் ஆலோசனையுடன் பரமானந்தனுக மாறி வேதாசல முதலியாரின் மகள் சரசாவையே மணம் முடிக் கிருன்; பழிவாங்கவும் தலைப்படுகிருன் :)
)ே ஆனந்தன் அப்பன் ஒரு பாவி, நான் ஒரு அப்பாவி, மகள்
ஒரு அகம்பாவி . கல்ல குடும்பம்,
9 ஆனந்தன் மோடி செய்யாத மாது. சேடி இல்லாத ராஜகு மாரி, சோடி இல்லாத மாடப்புரு இருக்க முடி யாதாம்.
(9 (ஆனந்தன் சரசாவின் ஆத்திரத்தைத் தூண்டுவதற்காக வேலைக்காரியிடம் விருப்பம் கொண்டவன்போல கடிக்கிருன்.)
57

Page 38
வேலேக்காரி: ... ஆ. .ாகான் உங்கள் வீட்டு வேலைக்
ஆனந்தன்:
O ஆனந்தன்
C) வேதாசலம்:
ஆனந்தன்:
() வேதாசலம்:
60 figsfi:
மணி:
O La Gorff:
ஆனக்தன்: மணி:
so.
அதனுலென்ன. ..சிங்காரிப்பவள் சிங்காரி ஒய்யாரிப்பவன் ஒய்யாரி, அலங்கரிப்பவள் அலங்காரி, பூ விற்பவள் பூக்காரி, வேலை செய் பவள் வேலைக்காரி; (சரசாவிடம்) பணத்தை வைத்து என்னத்தைக் கண்டானடி உன் அப்பன் 2 தங்கத்தாலே சோறு சமைத்து வைர வறுவலும் முத்துப் பச்ச டியும் கோமேதகக் குழம்பும் வைத்துச் சாப்பிட் LTS)? ஏனப்பா வெந்த புண்ணில வேலைப்பாய்ச்சு சிருய்?
(தந்தையின் கதியை எண் ணி ய வ னு ய்) வெந்த புண்ணிலே வேல்! மரக்கிளேயிலே
GOOTh
ஏனப்பா என் உயிரை வாங்கிறே? எங்காவது மரக்கிளையில் உயிரை விட்டுவிடலாம் போலி ருக்கு. கேட்டியாப்பா மணி, மகாகனம் பொருந்திய மாமனுர் மரக்கிளையில் பிணமாகத் தொங்கப் போகின்ருர். . . . அந்த மங்களகரமான காளை சபையோர் அனை வரும் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனந்தா, அப்பா வீட்டைவிட்டு வெளியே போடா காயே என்னுட்டார்.
அடடே . அப்புறம்! கான் "நீ வீட்டைக் காத்துக்கொள் காயே" என் னுட்டு வந்திட்டன்.
கருத்துச்சுவையும் சொற்சுவையும் அங்கதச் சுவை யும் இணையுமாறு காட்சிகளின் கட்டுக்கோப்பையும் உத்தி களையும் பேணி அண்ணு “வேலைக்காரி'யைப் படைத்த
58

பாணி ஆழமான அனுபவ முத்திரை கொண்டது. ஆள்மா முட்டப் படலம்’, ‘அடுத்துக்கெடுக்கும் படலம்’, 'பழி வாங்கும் படலம்" என இராமாயணப் படலம் பாங்கில் மணி ஆனந்தனுக்கு வகுத்துக் கொடுத்த திட்டம் நகைச் சுவையோடு பொருட் சுவையும் கொண்டது. நீதிமன்றக் காட்சியை நிலைகுலையாது திரையில் படைத்தவர் அண்ணு. வட நாட்டு வக்கீலாக நடிகர் கே. ஆர். இராமசாமியை வனப்புடன் உருவாக்கிக் காட்டினுர்,
வேலைக்காரியைத், தொடர்ந்து . . . . . .
வேலைக்காரியைத் தொடர்ந்து அண்ணு, "ஓர் இரவு' 'சொர்க்க வாசல்", "நல்லவன் வாழ்வான்', 'தாய் மகளுக் குக் கட்டிய தாலி’, ‘இரங்கூன் இராதா", போன்ற பல கற்பனைக் கருவூலங்களைத் திரைப்படத்தில் தீட்டிக் காட்டி னர். ஏற்கனவே நாடகமாக நடிக்கப்பெற்றுப் புகழ் பூத் தது ‘ஓர் இரவு' நாவலாக வெளிவந்து நயந்துரைக்கப் பட்டது ‘இரங்கூன் இராதா". ஆயிரம் அரசியல் பொறுப் புகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த அண்ணுவின் சுவடுகள் திரைப்படத் துறையி லும் பதிந்ததே ஆச்சரியம்தான். எனினும், பதிந்த சுவடு கள் அழிக்க முடியாதபடி, புதிய பாதசாரிகள் அடிபதித்து வழி தெரிந்துகொள்ளத் தக்கதாக ஆழமாகப் பதிந்தன. இன்னும் அகலமாகப் பதித்திருக்கும்-அண்ணுவை மட்டும் பொதுவாழ்வின் அவசிய அவசரமான ஆயிரமாயிரம் பிரச் சினைகள் அழைக்காமல் இருந்திருக்குமானுல்,
கலைவாணர் மறைவு
அண்ணு கலைஞர்கள் பால் கொண்ட மதிப்பை, ஈடு பாட்டை, நட்புரிமையை விளக்குவதற்கு கலைவாணர் என். எஸ். கே. மறைந்தபோது தமது "ஹோம்லண்ட் ஆங்கில வார இதழில் தீட்டிய உணர்ச்சிமயமான தலையங் கம் போதுமானது. கலைவாணரைப்பற்றி அறிய வேட்கும் பாமர மக்களைத் திருப்தி செய்யவேண்டிய தமிழ்ச் சஞ்சிகை களே கலைவாணரின் மறைவினை முக்கியத்துவத்துடன்
59

Page 39
வெளியிட உற்சாகம் காட்டாத காலையில், அண்ணு தமது ஆங்கில ஏட்டின் 1957 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி இதழைக் கலைவாணர் நினைவுக்கு அர்ப்பணித்து நின் காலடிகளின் தூசி படிந்த இடங்கள் அருள் நிறைந்தவை" என மகுடமிட்டுப் பின்வருமாறு எழுதினர்:-
* ஒர் மகாத்மா மறைந்துவிட்டது. ஒர் அன்புடமை மிக்கானின் இறுதிமூச்சுப் பறிந்துவிட்டது. சாவின் கொடிய கரங்கள் ஓர் சான்ருேனைப் பிடுங்கிக் கொண்டன. கண்ணீர் வெள்ளத்தினல் மட்டுமே நிரம்பியுள்ள ஓர் சூன் யம் தோன்றியுள்ளது. ஓர் சகாப்தம் முடிவடைந்து விட் டது. என். எஸ். கே. மறைந்து விட்டார். தமிழ் நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் இத்தகைய உள்ளத்தை உலுக் கும் வேறு நிகழ்ச்சி நடந்ததில்லை. இவர் மறைவிலேற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்புப் போன்ற பிறிதோர் இழப்பு எமக்கு ஏற்பட முடியாது P. p.
கனவான் உலகுக்கு வெறும் கூத்தாடியாக மட்டும் தோற்றிய கலைவாணர், அண்ணுவின் உலகுக்கு மட்டுமே நாட்டின் பெருநிதியாகத் தோன்றினர். கலைஞர்கள் பால் அண்ணுகொண்ட மதிப்பே பின்னர் அவருக்கு வாய்ப்புக் கிடைத்த நாட்களில் அவர்களைத் தமிழ் நாட்டு மேலவைக்கு நியமித்தமைக்கும் சட்ட சபைக்கு தெரிவு செய்வித்தமைக்கும் வித்தாகும்.
அண்ணுவின் ஈடுபாடு நாடக திரைப்பட உலகுடன் மட்டும் கட்டுண்டதல்ல. இசைத்தமிழோடு இணைந்து சிந்துபாடியநெஞ்சம் அவர் நெஞ்சம்; நடன அரங்குகளிலே நாட்டியமாடியது அவர் கலையுள்ளம். கர்னுடகஇசையில் பேரார்வம்மிக்க அண்ணு இசையரசு தண்டபாணி தேசி கர் போன்றருடன் தமிழிசை இயக்கத்திற்கு உறுதுணை யாக நின்றதை இசையுலகு அறியும். நாதசுர இசையின் தொன்மையும்மென்மையும் தமிழ்த்தன்மையும் தம்பை ஈர்த்ததால், 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி. மு. க. மாநாட்டில் மறைந்த நாதசுர இசை மேதை திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளை அவர்களைக் கெளர வித்தவர் அண்ணு. நாதசுர இசையைத் தமிழ்ச்சந்ததிக்குக்
60

காத்துக் கையளிக்கும் நோக்குடன் தாம் முதலமைச்சரா னதும் தமிழ்நாட்டில் நாதசுர இசைக் கல்லூரியை நிறுவி யதும் அண்ணுவின் இசையுள்ளமே. அந்த இசையுள்ளம் எங்ங்னம் "பல பல இராகங்களில் பாடி' என அர்த்தம்பட வந்த ஒர் பாடலின் அடியை, பல்வேறுவகையான இராகங் களில் அமைத்துப்பாடும்படி தம்மைப் பணித்ததையும், அங்ங்னம் பாடித் தாம் அவையோரிடம் பாராட்டுப் பெற் றமையையும இசைச்சித்தர் சிதம்பரம் ஜயராமன் அவர் களே பின்னர் கூறி இறும்பூ தெய்தியுள்ளார்.
61

Page 40
'வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்”
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
தமிழ் எழுச்சியில் அண்ணு
தமிழினத்தினதும் தமிழ் மொழியினதும் எழுச்சிக்கும் மறுமலர்ச்சிக்குமென நூற்றுக் கணக்கான மறுமலர்ச்சி எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, கவிஞர்களைக் கொண்ட வாழும் சந்ததியொன்றை உருவாக்கியும், வளரும் சந்ததி யொன்றைக் கருவாக்கியும் விட்டுச் சென்ற அண்ணு, வீழ்ச்சி யுற்ற தமிழகத்தில் எழுச்சி கண்ட முன்னுேடி தாமே என்ப தற்கான முத்திரையையும் இட்டுச் சென்ருர், இந்த எழுச் சிக்கு இந்தித் திணிப்பு முயற்சியும், அதனை முறியடிப்பதற் கெனத் தமிழ்நாட்டில் திரண்ட எதிர்ப்புணர்ச்சியுமே பெரும்பாலும் காரணங்களாகும். இந்த உணர்ச்சியைத் திரட்டித் தேக்கும் பணியோடு, கன்னித் தமிழ் தொன்மை யானது, வன்மையானது, இனிமையானது, செழுமையா னது என்ற உணர்வை தெருட்டி ஊக்கும் பணியும் இணைந் தது. அண்ணுவின் அரசியல் வாழ்வுப் பரப்பை தமிழ்ப் புத்
62

Ggњgdjdž, đпGolo (Period of Tamil Resurgence), gb16. Loud Guiddi, 3, Taoid (Period of Tamil Renaissance), blf
f5 faj, d, Tuo (Period of Tamil Revival) 67 GOT is dist56ir அமையும்.
தாழ்வுற்ற தமிழ்
அரசியல் விடயங்களை நல்ல தமிழில் அலசி ஆராய முடி யாது எனக் கருதப்பட்ட காலம் அது. சமூகத்தின் மேட்டுக் குடி மக்கள், அதிலும் ஆங்கிலம் படித்தவர், அரசியலை ஆக் கிரமித்திருந்தனர். அரசியல் தமிழில் பேசப்பட்ட இடங்க ளிற் கூட நல்ல தமிழ் பேசப்படாது, நுணுக்கமான கருத் துக்களையெல்லாம் சொல் வறுமையுடன் - தமிழ்ச் சொல் இல்லாததாலல்ல, இருக்கின்றதெனத் தெரியாததால் - வட மொழியிலோ ஆங்கிலத்திலோ குறிப்பிட்ட நாட்கள். சாதாரண குடிமக்கள் அரசியலைத் தம் அறிவுக்கும் அக் கறைக்கும் அப்பாற்பட்டதும் மேதை"களால் கையாளப் பட வேண்டியதுமான துறையென விலகி வாழ்ந்த நாட்கள் இந்நாட்களிற்ருன் அண்ணு அரசியலை, அதன் நுணுக்கமான கருத்துக்களை, தொழிற்றுறை நுட்பங்களை, பொருளியற் றுறையின் பிணக்குகளை, சமூகச் சச்சரவுகளை, அறிவுத் துறையின் ஆய்வுகளே, ஆக்கங்களை தமிழிலும் தங்கு தடை யின்றிப் பேச முடியும், எழுத முடியும், ஆராய முடியும், சிந்திக்க முடியும் என்பதைத் தம் செயலால் நிலை நிறுத்தி ஞர். "முடியுமா முடியாதா” என்று பிணங்கி நின்றரில்லை. இயல்பாகவே இனிமையாக எழுதிக் காட்டினர், அழுத்த மாக ஆணித்தரமாகப் பேசிக் காட்டினர், அக்கு வேறு ஆணி வேருக ஆராய்ந்து காட்டினர்; செம்மையாகச் சிந் தித்துக் காட்டினர்.
அண்ணுவைப் பொறுத்தவரை இது ஒர் செயற்கை முயற்சியல்ல, இயல்பான எழுச்சியாகும். ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தவன், எழுதத் தெரிந்தவன், பேசி எழுதிக் காட்டியவன், தமிழிலும் அத்தனையும் தடையின்றிச் செய்து காட்டுகின்ருனே என்றபோது "கையாலாகாதவன்" எனக் கூறித் தமிழின் இயல்பான வன்மையை எவராலும் மறுக்க முடியவில்லை. தமிழ்ப் பேச்சுக்கு மக்கள் மன்றம் செவி
63

Page 41
சாய்த்தது என்பதுடன், மேட்டுக் குடியினரின் “சொந்தச் சொத்தாக இருந்த நாட்டின் அரசியல் தமிழ் மட்டுமே தெரிந்த பொது மக்களின் மட்டத்திற்கு இறக்கப்பட்டது. சாய்வு நாற்காலிகளில் சாய்ந்து கொண்டே உரையாடப் பட்ட அரசியல் விடயங்கள் சந்தியிலும் சாவடியிலும் தெரு விலும் திண்ணையிலும் வைத்து உரையாடப்படும் நிலை எழுந் தது. தமிழின் மறுமலர்ச்சியின் வழியே எழுந்த இந்தச் சிந் தனைப் புரட்சி பத்திரிகை உலகிலும் படிந்தது. தமிழ்ச் செய்தி ஏடுகளும் "ஜோதிடம் பற்றிய குறிப்புகளைக் குறைத்துக்கொண்டு அரசியல் விடயங்களை ஆயத் தலைப்பட் டன. 'சுதேசமித்திரன்' செய்தி ஏட்டினல் இந்தச் சிந்தனைப் புரட்சியோடு இணைந்து வேகமாக நடக்க முடியவில்லையாயி னும், (அதன் தளர்ச்சிக்கும் இதுவே காரணம் போலும்.) இவ்வேட்டின் பழைய இதழ்களைப் புதிய இதழ்களுடன் ஒப்பிடின், தமிழ் மறுமலர்ச்சியின் தாக்கங்களைக் காண
முடியும். இம்மறுமலர்ச்சிக்குத் துணை நின்றது 'தமிழ் நாடு' நாளேடு. r
பங்கும் பணியும்.
தமிழ் எழுச்சி இயக்கத்தில் அண்ணுவின் பணியையும் மறுமலர்ச்சித் தமிழ் மீது ஆட்சி செய்த அண்ணுவின் செல் வாக்கையும் பல தரத்தினதாகப் பகுக்கலாம். சில சந்தர்ப் பங்களில் அண்ணுவின் நேரடிப் பங்கு இல்லேயாயினும், அண்ணுவின் செல்வாக்கு பங்குகொண்டுள்ளதையும், அன் னர் தந்த கருவி பயன்படுத்தப்பட்டிருப்பதையும், அன்னர் கட்டவிழ்த்துவிட்ட உண்ர்வுகள் உயிரோட்டமாக அமைவ தையும் காணலாம். உதாரணமாகச் சில்வற்றை நோக்கு Geau nr Dmr ?
திரும்பிப் பார் !
1. தமிழ் மக்களின் வரலாற்று, இலக்கிய, அரசியல், பண் பாட்டுப் பெருமைகளை நினைவூட்டியவர் அண்ணுவே. - நினைவூட்டியவர் என்றேன், நிலை நிறுத்தியவர் என்றே னல்லேன் (நிலைபெற்றுவிட்ட இப்பெருமைகளை நிலை
நிறுத்தினர் எனக் கூறுவது அமையாததாயினும், தமிழ்நாடு’ பெயர் மாற்றம் போன்ற சாதனைகளை
64

நினைவிற் கொள்ளும்போது நிலை நிறுத்தினர்' என்றும் அமையலாம்). முடியுடை மூவேந்தர் பற்றியும், புற நானுாற்றின் பெருமை பற்றியும், முல்லைக்குத் தேரீந்த காதையும் இலக்கிய உலகு ஏற்கனவே அறிந்ததாயி னும், பரந்துபட்ட பல லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் அரசியல் உலகுக்கு இவற்றை இட்டு வந்தவர் அண்ணுவே பாரம்பரியப் பெருமை உணர்வு களை அன்ஞர் பொதுமக்கள் மயமாக்கினர். பண்டைப் பெருமையையும் இற்றை இழிநிலையையும் தமிழ் மக்க
ளுக்குப் படம் பிடித்துக் காட்டி அரசியல் அறுவடை
செய்வது அவர் நோக்கமெனச் சில வட்டாரங்கள் குற் றங் காணலாம். அதுவே நோக்கமாயினும், தூங்கிக் கிடக்கும் ஒரு இன்த்தினைத் தட்டியெழுப்புவதற்குத் தரமான கருவியைப் பயன்படுத்தாவிடில், ஒரு தலைவ னின் தகுதிதான் என்ன? அண்ணு கயமையற்ற ஓர் கருவியைப் பயன்படுத்தினர். அதையும் சீராகப் பயன் படுத்தினர்; வெற்றியும் கண்டார். அதுவே சிறப்பு.
தமிழ் ஓர் அரசியல் தளம்.
2.
அண்ணு தமிழை அரசியலில் ஓர் சக்தியாக்கிஞர். மொழி, இன, நாட்டு எல்லேகளைக் கடந்து வானவெளி யையும் அளாவிய அரசியற் சித்தாத்தங்களைக் கொண்ட அரசியற் கட்சிகள் கூட, தமிழ்நாட்டிலே புறக்கணிக்க வொட்டாத, - தமிழ் வாழ்வு பற்றியும் பேசியே ஆத ரவு திரட்ட வேண்டிய அளவுக்கு - ஓர் சக்தியாக தமிழை ஆக்கி, அதற்கு அரசியல் அரண் அமைத்தவர் அண்ணு. இந்த நிலையை உருவாக்கியது இந்தியின் அறை கூவலே என்பது உண்மைதான். தமிழ் அரசியல் சக்தி யானவுடன் தமிழோடிணைந்து வாழ்க்கை நடாத்திய வர்களும், அரசியலுக்குப் புறம்பாகவே வாழ்ந்து பழக் கப்பட்டுவிட்டோருமாகிய புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், தமிழிசை யாளர் என்போர் அரசியலுணர்வு பெறத் தலைப்பட்ட
6TIT.
65

Page 42
தமிழ்ப் பெயர் சூடியும்.
அண்ணுவின் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் வளர்ச் சியை தமிழ்ப் பெயர் சூடும் புரட்சியிலே காண முடிந் தது. இப் புரட்சிக்கு வித் திட்டவர் தானித் தமிழியக்கத் தந்தையான மறைமலையடிகளென்ற சுவாமி வேதா சலம் அவர்களே. எனினும் தேக்கமுற்ற இவ்வியக்கம் பரவ வேண்டிய அரசியல் உற்சாகத்தையும் பிரச்சாரத் ாதயும், உனர்ச்சியையும் ஊட்டியவர் அவள் இணுவே . அண்ணுவிஞலேயே இவ்வியக்கம் பொதுமக்கள் மய மானது. தனித்தமிழ்ப் பெயர் சூடுவே விரக் குறுநோக் கர் என நிந்தித்தோரைக் கண்டித்து அண்ணு தமது "ஹோம்லன்ட் ஏட்டின் 1959ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி இதழில் "இன்னும் குறு நோக்கரா' ('1ill FAds?) எனத் தலேப்பிட்டு ஓர் தலேயங்கம் நீட்டிஞர். அதில் மறைமண்iயடிகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி விட்டு எதிரிகளின் வாதங்களச் சந்திக்க விளேந்த அண்ணு, ஆங்கிலக் கலப்பற்ற மொழித் தூய்மைக்காக பிரெஞ்சு நாட்டில் தோன்றிய இயக்கம் பற்றியும், ஆய்ர்லாந்து நாட்டின் "சின் பெயின்' (Sinh Cit) இயக்கம் பற்றியும் ஆராய்கிருர், அண்ணுவின் மறு மலர்ச்சி யுகத்தில் சூடப்பெற்ற வரலாற்றுப் புகழ் சார்ந்த பெயர்களும், தனித்தமிழ்ப் பெயர்களுமான நெடுஞ்செழியன், மதியழகன், இளம்வழுதி, நெடு மாறன், மாறன், சிற்றரசு, பொன்னிவளவன், இளந் திரையன், செங்குட்டுவன், இளங்கோ, பாண்டியன் போன்ற ஆண்பாற் பெயர்களும், மலர்க்கொடி, மல் லிகா, அங்கயற்கண்ணி, அல்லி, தேன்மொழி, பூங் கோதை, பொற்செல்வி போன்ற பெண்பாற் பெயர் களும் தமிழினத்தின் எழுச்சியின் நிச்சயமான எதி ரொவிகளே என்பதை எவரே மறுப்பர் , தி.மு.க.வின் தஃலவர்கள் இப் பெயர்சுஃத் தாமே குடியும் பெயரி டும் வைபவங்களில் தமிழ்க்குழந்தைகளுக்குச் சூட்டி யும் இப்புதிய உணர்ச்சிக்கு வலிவு ஊட்டினர்.
GÉ

தமிழ்ச் சொல் தேடியும். . . . . .
= آد
தனித்தமிழ்ப் பெயர்களேச் சூடிய உணர்வுடன் தமிழ் மக்களின் வழக்கிலிருந்து நன்றுக வேரூன்றிவிட்ட வட மொழிச் சொற்களேயும் ஆங்கிலச் சொற்களேயும் வேரோடு பிடுங்கி வீசிவிட்டு அவற்றிற்கு ஏற்ப தனிக் தமிழ்ச் சொற்களேத் தேர்ந்ததுடன் தமது எழுத்தி லும் பேச்சிலும் பயன்படுத்தியும் ஏனய கழிக ஏடுகளில் பயன்படுத்த ஏதுவாகி நின்றும், அவற்றை மக்களின் இயல்பான பழக்கத்திற்குக் கொணர்ந்தார். இத்த கைய மாற்றங்கள், அண்ணு மொழியாக்கப் பணியைத் த&வப்பணியாகக் கொள்ளாது, அரசியற் பணியாற் றுங்கால் கிடைத்த துணேப் பயன்களேயான சுயினுல், குறிக்கப்பட்ட சொற்கள் பெரும்பாலும் அரசிய லோடு தொடர்புடையனவேயாகும். அ என் னு வின் வாயிலாக, அல்லது அண்ணு தோற்றிய உணர்வினின் றும் ஊற்றெடுத்த இத்தனித் தமிழ்ச் சொற்கள் நாட் டின் அரசியலரங்கையும் கடந்து தமிழ்கூறும் நல்லு கெங்கும் வழக்கில் வந்துவிட்டனமயும் குறிப்பிடத்திக்க தாகும். அண்ணு தோற்றிய மாற்றங்கள் தமிழ் மக்களி டையே செல்வாக்குமிக்க சுழகத்தின் வாயிலாக இயக்க ரீதியாகப் பரவுவது எளிதாக இருந்தது. இத்தகைய தனித்தமிழ்ச் சொற்கள் இரு தன்மைத்தாகும்.
(அ) ஏற்கனவே தமிழ் இலக்கியங்களிலே விரவிக் கிடந்தவைகள் வழக்கிற்குக் கொண்டு வரப்பட்டன.
உதாரனம் :
அன்று இன்று
மந்திரிசடை - அமைச்சு மந்திரி அமைச்சர் ETELJI FLIT - அவை, அரங்கு மன்றம், தீபஸ்தம்பம் கலங்கரை விளக்கு பஞ்சாயத்து - ஒன்றியம் மைதானம திடல் (மை-தமிழ், தானம்
வடசொல்)
67

Page 43
அனுதாபம் (தீர்மானம்) -
ராஜ்யம்
(ஆ) தமிழ் இலக்கண இலக்கியங்கஃன்த் தளமாகக் கொண்டு புதிய சொற்கள் தோற்றுவிக்கப் பெற்றன: மரபுச் சொற்களே தேவைக்கேற்றவாறு இஃணக்கப் பெற்றன.
அல்வது
உதாரனம் :
அன்று
அபேட்சகர் நியமனப்பத்திரம் பிரேரித்தல் ஆமோதித்தல்,
அணுவநித்தல்
காரியதரிசி தணுதிகாரி,
பொக்கிஷாதிபதி
ஸ்தலஸ்தாபனம்
சிபார்சு
கவர்னர்
வால்போஸ்டர், வால்
(Efın L'La 51
பஸ்
Sö1LT&Lf ஆபீசர்
தமிழ்த் திருநாள்
3. அள்ளுணு தமிழ் வாழ்வோடு இஃணந்த விழாக்களே வர வேற்று அசுவக்கு வலிவும் வனப்பும் ஊட்டியும், அங் நனம் இஃணயாத வேறு பண்பாட்டிற்கமைந்தன - தமிழ் மக்களின் அறிவுக்குப் பொருந்தாதன - என அவர் எண்ணியவற்றைப் புறக்கணித்தும் செய்திட்ட பிரச்சாரம் நிரந்தரமான விண்ாவுகளே ஏற்படுத்திற்று. இன்று தீபாவளித் திருநாள் தமிழர் மதிதியில் பொலி விழந்தமையும் பொங்கல் திருநாள் வலிவு பெற்றமை
யும் கிங் கூடு.
68
இரங்கல் (தீர்மானம்)
மாநிலம்
இன்று
வேட்பாளர் வேட்புமனு
முன்மொழிதல்
வழிமொழிதல்
Gaugurt
பொருளாளர் ஐரோட்சி மன்றம் பரிந்துரை, தந்துரை. ஆளுநர்
சுவரொட்டி
பேருந்து இயக்குநர், நெறியாளர். அலுவலர்

இலக்கிய மேற்கோள்
G.
அரசியல் பேச்சுக்களில் இலக்கிய மேற்கோள்கஃப் பயன்படுத்தியவர் அண்ணு. இதனுல் இலக்கியம் தனக்கு எட்டாத பொருளல்ல என்ற உணர்வு பாமர னுக்கு ஏற்பட்டதுடன், அரசியற் பேச்சுக்களும் தமிழ் நயமுடைத்தாயின. உதாரணமாக, 'அரசியல் பிழைத் தோர்க்கு அறங்கூற்றுதல்" (சிலப்பதிகாரம்), அல்லற் பட்டாம்gது அழுத கண்ணிர்", "இரத்தும் உயிர் வாழ் தல் வேண்டின்" (குறள்) போன்ற அடிகளும், அடிகளே யுடைய பாடல்களும், அரசியல் பொருளாதாரக் கருத் துக்களே வற்புறுத்தற்குப் பயன்படுத்தப் பெற்றன. இவ்வாறே சித்தர் பாடல்கள் சமுதாய சமபக் கருத் துக்களே வலியுறுத்தற்கு மேற்கோள் காட்டப்பெற் ,[i] &tit.
அரசியற்றமிழ்
구",
தமது பேச்சாலும் எழுத்தாலும் அழுத்தமான பிள்யும், சக்திவாய்ந்தவையுமான சொற்களே யும் சொற்றுெ டர்களேயும் தமிழ்மொழிக்குத் தந்துவிட்டுச் சென்ருர் அண்ணு அவை ஏற்கனவே தமிழ்மொழியில் இருப் பவை என்பதும் உண்மை. அவற்ருல் இலக்கியத் தமிழ் வளம்பெற்றுவிடவில்ஃபயென் பதும் உண்மை, எனினும், அரசியற்றமிழை அழுத்தமானதாக்கினுர் என்பதும். அரசியலரங்கிற்கு புதிய சொற்களே இட்டு வந்தார் at säT பதும், அவற்றைச் சக்திவாய்ந்தவையாக இணேத்துச் சாற்றினூர் என்பதும் எவரே உறுப்பர் . உதாரணமாக: நாடாள்வோர், ஆளவந்தார், துரைத் தனித்தார்.
(அரசினர்) ஏனுேதானுேக்கள், (அக் கறையற்றேர்)
சோற்றுத்துருத்திகள் (அனுகூலத்திற்காக அண்டிப் பிழைப்போர்) போன்ற சொற்களேயும். "துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போன்ற சொற்ருெடர்களேயும் குறிப்பிடலாம். இரண்டாம் உலகப்போரின்போது தமது பேச்சு வண்ணத்தால் ஆங்கில அகராதியைப் பெருக்கிக்கொண்ட சர். வின் சன் சர்ச்சிலே நினேவுகூருதல் பொருத்தமானதாகும்.
அண்ணுவின் மறுமலர்ச்சி யுகம் பற்றி இந் நாட்டிற் கூடச் சில வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டுச் சந்தே கங்கள் கிளப்பப்பட்டிருக்கின்றன. அவர்களும் அண்ணு வின் மறுமலர்ச்சித் தமிழிலேயே தமது விவாதங்களே நடாத்துகின்றனர் என்பது ஆறுதலளிப்பதாகும்.
69

Page 44
**ஆங்கிலம் வாழுமாயின் அறிவுலகனேத்தும் வாழும் பாங்குறு தமிழுமாங்கே பண்புடன் செழிக்கும் .'
ஆங்கிலத்தில் அண்ணு
தமிழணங்கின் கொள்ளை அழகனத்தும் அள்ளிப்பருகி
அவள் கொஞ்சுமொழியே தஞ்சமெனக்கிடந்து தன் நா வின் நயத்தாலும் எண்ணத்தின் புதுமையாலும் கைவண்ணத்தின் கவர்ச்சியாலும் அவளுக்கு அணிகலன் கள் சூட்டி ஆனந்தித்த அண்ணு, ஆங்கில மாதிடமும் சு கிந்துக்கிடந்து அவள் தந்த சுகத்தை மாந்தி மகிழ்ந்தமை கற்பெனும் திண்மைக்குக் களங்கமோ என்னவோ, அற்புத மான அனுபவமல்லவோ? தமிழில் பாண்டித்தியமுடை யோர் அதே தரத்தில் ஆங்கிலத்திலும் புலமையும் சொல் வலிமையும் கொண்டு விளங்குதல் அபூர்வமே. உலகின் எக் கோடியில் வாழும் தமிழனயினும் தாய்த்தமிழையும் ஆங் கிலத்தையும் கைவிடின் அவனுக்கு வேறு கதியில்லை என உணர்த்தப் போலும் அண்ணு இந்த அபூர்வப் புலமையைக் கொண்டிருந்தார்.
70

வசிட்டர் வாயால் மகரிஷி.
‘விடுதலை"யிலும் 'திராவிடநாடு" இதழிலும் வேறு எண்ணற்ற ஏடுகளிலும் நூல்களிலும் தமிழ்ச்சொற்சிலம்ப மாடிய அண்ணுவின் எழுத்தாணிதான் "ஜஸ்டிஸ்' "ஹோம் லண்ட்' பத்திரிகைகளின் ஆசிரியணுக ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் ஆசிரியத் தலையங்கங்களையும் அணியழகுடன் தீட்டியது. பொதுக்கூட்டங்களிலே, தமிழ் மழை பொழிந்த அண்ணுவின் நா, அதிகாரபூர்வமான அரங்குகளிலே ஆங்கிலத்தில் நிதானமான அருவியைப் பெருக்கிற்று. நற்றமிழ் உரைப்பதில் ஒப்பாரும் மிக்காரு மின்றி விளங்கிய நாவேந்தணுகிய அண்ணுவின் ஆங்கில உரையைக்கேட்ட ஆங்கிலச் சொல்லின் செல்வர் சர். சி. பி. இராமசாமி ஐயர் அன்னரைத் தமது "வாரிசு" எனப் போற் றினரென் ருல் வசிட்டர் வாயால் மகரிஷி' என வாழ்த்தப் பெற்ற அண்ணுவின் புலமை அளவிடுந்தரத்ததோ. இரண் டாவது உலகத் தமிழ் மாநாட்டின் அயல்நாட்டுப் பிரதி நிதிகளுக்கு அண்ணு ஆற்றிய ஆற்றெழுக்குப் போன்ற அழ கிய, ஆராய்ச்சி பூர்வமான, ஆழமான, ஆங்கில உரையைக் கேட்டு உவக்காத உள்ளம் ஏது? அமெரிக்க நாட்டில் அண்ணு ஆற்றிய உரைகள், தமிழ் நாட்டில் ஐ. நா. தினத் தில் ஆற்றிய உரை, சீன ஆக்கிரமிப்பின் போது வானுெவி யில் ஆற்றிய உரை, புதுடில்லி இராஜ்ய சபையில் மொழிப் பிரச்சினையையொட்டி ஆற்றிய உரை, இன்னுேரன்ன உரை கள் அண்ணுவின் சொல்லாட்சிக்கும் சித்தனையின் மாட்சிக் கும் சா சுவதமான சாட்சிகளாகும்.
முதல் முழக்கம்.
குறிப்பாக, புதுடில்லி மாநிலங்களவையில் அண்ணு வின் முதன் முழக்கம் இந்தியா எங்கணும் எதிரொலிகளைக் கிளறிவிட்ட எடுப்பான உரையாகும். இவ்வுரையை பொட்டி இந்தியாவின் தலையாய தினசரிகள் அனைத்தும், வாளாவிருக்கவொட்டாது, கருத்துக் கள் எழுதின. அன்று பிரிவினைவாதியாகவிருந்த அண்ணுவின் கருத்தை ஏற்காதோரும்கூட அண்ணுவின் திராவிடப் பிரிவினைக்கான வாதங்கள் ஆணித்தரமானவை, சொல்லாட்சி வியக்கத்
71

Page 45
தக்கது என விதந்து போற்றினர். தம் கன்னிப் பேச்சி லேயே அனைவரையும் கவர்ந்து விட்ட அண்ணுவின் உரை யையிட்டுத் தலையம்கம் தீட்டிய "இந்து" (Hindu) "'. கொள்கையிலே கொண்ட உண்மைப்பிடிப்பாலும், தமது சக்திவாய்ந்த பேச்சுத் திறத்தாலும் அண்ணுதுரை சத் தேகமின்றி மாநிலங்களவையைக் கவர்ந்து விட்டார். ' எனக் குறிப்பிட்டது.
பம்பாயிலிருந்து வெளிவரும் “டைம்ஸ் ஒவ் இந்தியா (Times of India) என்ற நாளேடு, " " இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டுமென்ற குரல் முதன்முதலாக சுதந் திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இன்று ஒலித்தது. இந்த முழக்கத்தை தி. மு. க. தலைவர் அண்ணுதுரை இன்று மாநிலங்களவையில் முழங்கினர். இந்திய யூனியனிலிருந்து தென்னுடு பிரிய வேண்டுமென்ற அண்ணுதுரையின் துணி வான வாதம் நிலைகுலையச் செய்துவிட்டது." என்று கூறிற்று.
புதுடில்லியிலிருந்து வெளி வரும் "இந்துஸ்தான் GoLoGiho' (Hindustan Times) ?airaug Lontoy ang ibpy:-
**. தி. மு. க. தலைவர் திரு. அண்ணுதுரை தென்ன கத்திற்குச் சுயநிர்ணய உரிமை வேண்டுமென்ற கோரிக்கை யைத் தெளிவாக எடுத்துரைத்தார். மாநிலங்களவை இன்று கூடியிருந்து திராவிட நாட்டுக்காகப் பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சைக் கேட்டது. தேசியத்திற்கு அவர் புதிய வரவிலக்கணம் தந்தார் , '
மலையாள நாளேடாகிய 'மாத்ருபூமி பின்வருமாறு எழுதிற்று:-
*1. ஆட்சியமைப்புமுறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட அண்ணுதுரையின் சொற்பொழிவு, பலரை - குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை - வியப்பில் ஆழ்த்தாமல் இருக்கவில்லை. சிறந்த பேச்சாளர் என நிறைந்த பெயர் பெற்றுள்ள அண்ணுதுரை இன்று மாநிலங்களவையில் தம் திறமை முழு வதையும் வெளிப்படுத்திஞர். "'
72

நூல்கள் நுகர்ந்தும்.
அண்ணுவின் ஆங்கிலப் புலமை க்கு அடித்தளமாக அமைந்தது அவரது நூல் மோகமாகும். அறவாழ்வுக்கு வேண்டிய அடிப்படைக் கருத்துக்களையெல்லாம் தமிழ் நூல்களிலிருந்து கிரகித்துக் கொண்ட அண்ணு, புதிய உல கின் நுண்ணிய எண்ணங்களனைத்தையும் நுகர்ந்து கொண் டது நூல் நிலையங்களின் நூற்றுக்கணக்கான ஆங்கில நூல் களின் வாயிலாகவே. தமது கருத்துக்களை நிறுவுவதற்கு அன்ஞர் பயன்படுத்திய ஆங்கில மேற்கோள்கள் இதனே உறுதிசெய்வன. உதாரணமாக, அண்ணு முதலமைச்சரா கப் பதவியேற்றபோது, அன்ஞரது திட்டம் பற்றி செய்தி நிருபர்கள் விஞவினர். அண்ணு அதற்கு விடையாக தமக் குப் பிடித்தமான சொமசெற் மோம் (Somerset Maugham) அவர்களின் 'தொகுப்புரை” (Summing up) யிலிருந்து பின்வரும் மேற்கோளைக் கூறினர். 'ஒவ்வொருவரும் தமது இயல்புக்கும் பணிக்கும் ஏற்ப நடப்பதைத் தவிர வாழ்க்கை usair 61 GOT'll Gal sidia'' 6T6ircuit. (“Beauty of life is nothing but this - each should act in conformity with his nature and his business') as a gll IT 600Tri LDon Apps 5 Gurgi தமது "ஹோம்லண்ட்" இதழில் கவிஞர் 'காம்பெல்'லின் (Campbelt) கவிதையடியை மேற்கோள் காட்டி எழுதினர். (“ Blessed the spot that holds thy du st”) SITT 69Lrts ளின் தீனநிலையை விளக்குவதற்குத் தலையங்கம் தீட்டப் புகுந்த அண்ணு விவிலிய வேதநூலின் (Bible) அழுத்த மான தலைப்புக்களைப் பயன்படுத்தினர். எடுத்துக்காட் டாக, 'ஆன்மா தயாராக இருக்கிறது, தசையோ வலு 6ớyppö S(g, di 6 sog. ’ ” (“Spirit is willing but the flesh is weak") என்ற வேதவாக்கியத்திலிருந்து தாக்கமான தசையோ வலுவிழந்திருக்கிறது" என்ற தலைப்பை எடுத்து "ஹோம்லண்டில் ஆணித்தரமான தலையங்கங்க ளைத் தீட்டிஞர்.
(Homeland 22, 29.6-62)
அண்ணுவின் ஆசிரியத் தலையங்கங்களுக்கான தலைப்புக் கள் மிகவும் அழுத்தமானவையும் அணியழகுமிக்கவையு
மாகும். எடுத்துக்காட்டாக,
73

Page 46
O 'விஜயவாடாவிலிருந்து வரும் அதைப்பலைகள்
(Vibrations from Vijayawada - Homeland, 22-2-1959) விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுபற் றியது.
CD "udbgøLDIC5opio i Daviådfuld' (The Breeze and the
Blossom - Homeland, 26-2-1961)
*சாம் மாமாவின் சாண்ட்விச்" உண்டிகள்’ (Uncle Sam's Sandwiches - Homeland, 6-8-1961)-J9Quoflé55 fr மீது தொடுக்கப்பட்ட கிண்டலான கண்டனக்கணை. சியாட்டோ, சென்டோ உடன்படிக்கைகள், கியூபா பிரச்சினை, அயூப்கானின் அமெரிக்கச் செலவு போன்ற வற்றையொட்டிய அரசியல் ஆய்வு"
C “குப்பைத் தொட்டியில் வைரம் இல்லை” (No Diamond
in the Dustbin - Homeland, 20–8-1961)
தனிநடை தேர்ந்தும்.
தம் தமிழ்ப்படைப்புக்களில் தமக்கென ஒர் தனிப் பாணி வகுத்து அடுக்குத்தொடரிலே எதுகைமோனை இழை யோட எழுதிய அண்ணு, ஆங்கிலத்திலும் இத்தகைய புதிய நடையைக் கையாண்டார்; அதில் வெற்றியும் பெற்றர் என்றே கூறவேண்டும். உதாரணமாக, 12-3-1961ம் தேதி "ஹோம் லண்ட்’ இதழில் 'அமைச்சரில்லையேல் அதியற் Llgúb!” (Minus the Minister, Marvellous!) 6767 los மிட்டுத் தீட்டிய தலையங்கத்தில் ஒரு பந்தியின் சந்த அழகு 凸茄T●町5,
• Ambiguity clothed with authority is passed on as assurance. Abuses are raised to the ranks of arguments. Logic is kept under lock and key. The Lord brooks no question and refuses to accomodate even a request. It is the minister we meet, a ot the man . . . .''
"ஹோம்லண்ட் 28-5-1961 இதழில் வாணவெளிக்கு அப்பால்” (Outer - Space) எனத் தலைப்பிட்டு எழுதிய தலை யங்கத்தின் பகுதிகள் பின்வருமாறு:
74

''..... Arguments for and against this contention could be advanced – nay, the very theory could be applauded or exploded...... Periyar is definite in his statement. He is still a crusader and his support to Kamraj is incidental, an interlude as it were ...... Just for an electoral victory, the Congress takes all these taunts and insults lying lownay, it even wags pleasure in being petted ahd patted by Periyar. ... Not content with eating this humble pie, the Congress is busy exhibiting its glee over the rift in the D. M. K. The propaganda bullets are sent buzzing all around...... Its propagandists big and small have opened “broadsides' against alliances - pacts - agreements. On what authority they talk about these none dare ask. Where from they gathered these “chips' we are not informed. But their voice is shrill, their threats vindictive, their advice pa ternal, pronouncements pontificial... ...”
வாதத்தில் வலிவு காட்டியும்.
தி. மு. க. வின் ஒரு சிறு பிரிவினர் திரு. சம்பத் தலை மையில் வெளியேறியமைகண்டு மாற்றுக் கட்சியினரான காங்கிரசார் மிகவும் கூவிக் குதூகலித்தனர். இதையிட்டு அண்ணு தீட்டிய குறிப்புரைகள் அவரின் வாதத்திறங் காட்ட வல்லன.
“..... Of course the most enjoyable scene for the Congress today is the denunciation delivered by the dissidents against the D M. K., its policy and the persons conduct
ing its affairs. Congressmen bubble out their joy - “‘ah these attacks are hard, swift and merciless The D. M. K. will be shattered into smithereens soon - they fondly
hope. In their fervour they even forget the simple truth that a part can never be bigger than the whole, and however depleted, the “rest' will always be bigger and stronger than the 'crest’. Dissidents can never be in a majority that is a contradiction in terms. They are dissidents simply because they are not able to convince and convert
75

Page 47
others to their point of view. Conscious of their inability to convert the organisation to their point of view, and impatient to wait for better times, dissidents usually mistake their fury for strength and para de their pugilistic power - sure of a new audience. But the organisation withstands the jolt, and since there is no need for fury or hurry, carries on its work calmly, conscious of its own solid strength......
* . கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்து சென்றவர் கள் தி. மு. க. மீது மேற்கொண்டுள்ள தாக்குதலைக் கண்டு, தி. மு. க. சுக்கு நூருகிவிடும் எனக் காங்கிரசார் களி கூரு கின்றனரே. பிரிந்து சென்ருேர் பெரும்பான்மையினராகி விட முடியாதே. அவர்கள் பிரிந்து சென்றதே இயக்கத்தை அதன் பெரும்பான்மையினரை தமது கருத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியாத காரணத்தினற்றனே. எனத் தர்க்க வாதத்தைத் தகர்க்க முடியாதவாறு நிறுவுகிருர் அண்ணு.
தம்பிக்கு அறிவு ஊட்டியும்.
'திராவிடநாடு' இதழ்களில் வாராவாரம் 'தம்பிக்கு? கடிதம் தீட்டி, அவனுக்கு உலக, உள்நாட்டு அரசியல், சமூக, பொருளியல் பிரச்சினைகளை ஊட்டி வந்தாற் போன்றே, "ஹோம்லண்ட்’ இதழ்களிலும் 'தம்பிக்கு கடி தம் தீட்டினர். இக்கடிதங்கள் வரலாற்றுக் குறிப்புகள் பொருளியல் தத்துவங்கள், சர்வதேச அரங்கின் அரசியல் துணுக்குகள், விளக்கங்கள் என்பனவற்றை அகத்துள்ளடக் கியதால், 'ஹோம்லண்ட் ஏட்டின் இப்பகுதி அரசியல் மாணுக்கருக்கு நல்லதோர் ஆய்வுக்கூடமாயிற்று. ‘தேசாபி மானியின் உணவுப்பட்டியல்" (Patriot’s Menu), ஜென் sig DSP-u 35 frgbI 6ståmjø Bl 1ri" ( War of the Jenkin's ear) * - spidbás iditD8gotá (8a (1926úla úd' (Post - office Socialism) போன்ற இன்னுேரன்ன தலைப்புக்களில் அண்ணு தீட்டிய கடி தங்கள் கருத்துக்கு விருந்தானவை. குறிப்பாக ‘அஞ்சல் மனைச் சோஷலிசம்" என்ற தலைப்பில், சிறந்த பொருளியல் மேதையும், இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்தவரு
76

மான பேராசிரியர் கல்பிறெப்த் (Dr. Galbraith) அவர்களு டைய குறிப்பை அடிப்படையாகக் கொண்டு, அண்ணு தொடர்ச்சியாக மூன்று இதழ்களில் இந்திய பொருளா தார அமைப்பின் இணைப்புகளை அக்குவேறு ஆணிவேருகப் பிரித்து வைத்தார். அண்ணுவின் ஆய்வுரைக்கு அவருக்கே priš5 GOT ' Mediocrity on a magnificient scale”, “Stupen. dous Stupidity போன்ற அடுக்குத் தொடர்கள் அழகூட்டு
Go.
தமிழின் பொலிவு கூட்டியும்.
அண்ணு தமிழ்மொழியில் கொண்ட ஈடுபாட்டிற்கும் ஆங்கிலத்தின் பால் கொண்ட ஈடுபாட்டிற்குமிடையே ஓர் வேறுபாடு உண்டு. தமிழன்னையிடம் தமிழ்ப்பாலை உண்டு வளர்ந்த அண்ணு தன் தமிழ்ப்பணியால் தமிழ்மொழியில் தன் செல்வாக்கின் சுவடுகளை விட்டுச் சென்றார். அண்ணு வின் ஆங்கில அறிவு அன்ஞரின் தமிழ்நடையிலும் பேச்சி லும் ஒர் நலத்தகு தாக்கத்தை ஏற்படுத்திற்று. அத்தாக் கம் அண்ணுவின் வாயிலாகத் தமிழ் மொழியின் மீதும் சிறிது படர்ந்தது எனலாம். அண்ணு தமது தமிழ்ப் பேச்சி லும் எழுத்திலும், சொற்சுருக்கமும் பொருள் விளக்கமும் கொண்ட பல ஆங்கிலச் சொற்ருெடர்களை, அவற்றின் மிடுக்கு கெடா வண்ணம் தமிழ் மொழியில் பெயர்த்துப் பயன்படுத்தினர். அவை இன்று தமிழ்த்தன்மை பெற்று ‘எப்படி வந்தது? எவர் கொணர்ந்தவர் ?' என எண்ணப் படாமலேயே பலராலும் பயன்படுத்தப்படுமளவுக்குப் பக் குவப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக :-
* Do or Die' என்ற சொற்ருெடரை செயலாற்று அல் லது செத்து மடி' எனப் பயன்படுத்திஞர். ‘செய் அல் லது சாவு" என மொட்டையாகக் கூருது அழுத்தமாகப் பயன்படுத்தியமை காண்க,
* Live, Let live' என்ற சொற்ருெடரை ‘வாழு, வாழ
விடு' எனப் பெயர்த்துப் பாவித்தார்.
“Forgive and forget” GT skrip GSF rrfib@(g? L. GMT “LDSör Gofi'i போம், மறப்போம்" என உருவாக்கினர்.
மேலை நாட்டுத் தத்துவஞானிகள் பலரின் பொருள்
புதைந்த கருத்துக்களையொப்ப தாமும் கருத்துக் கருவூலங் களைப் படைத்தார். உதாரணமாக "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்ற அண்ணுவின் மணிவாசகம்,
77

Page 48
அன்னரின் அபிமானத்திற்குரிய கிரேக்க தத்துவஞானி எப்பிக்ரெரஸ்ஸின் (Epictetus) தாங்கிக் கொள், பொறுத் துக் கொள்’ (Bear, forebear) என்ற கருத்தினின்றும், கரு வுற்றிருக்கலாம். இங்ங்ணமே 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது', 'தம்பியுடையான் படைக்கஞ்சான்', 'இப் படை தோற்கின் எப்படை வெல்லும் போன்ற அணியுரை களும் ஆங்கிலக் கவிகளின் வாசனையுடைத்தே.
அண்ணுவின் பேச்சிலும் எழுத்திலும் இழையப்பட் டிருந்த தசைப்பிடிப்பான, 'காட்ட வேண்டியதைக் காட்டி பெற வேண்டியதைப் பெறுவோம்', 'கொள்ள வேண்டிய தைக் கொள்ளுக தள்ள வேண்டியதைத் தள்ளுக’ போன்ற சொற்ருெடர்கள் ஆங்கிலச் செல்வாக்கு மிக் கவை. அண்ணு தமது ஆங்கில எழுத்திலும் இத்தகைய தர மான சொற்ருெடர்களை வெற்றிகரமாக பின்னிக் கொண் L60Tri. a sing 600TLDIris : - 'North flourishes South perishes' (* வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது"), "Determination ever, Deviation never' (GT airpy h a di Su Lair, sco போதும் வழுவாது) போன்ற சொற்ருெடர்களைக் கூற -6) fTLD •
தமிழ் நாட்டு அரசியலில் Opposition party' (எதிர்க் கட்சி) என்ற தொடருக்கு "alternative party" (மாற்றுக் கட்சி) எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பத விளக்கம் தத் தவர் அண்ணுவே.
தமிழ்மக்களுக்குத் தமிழ் மொழியும் ஆங்கிலமும் இன்றியமையாதன என அண்ணு எண்ணிஞர். தமிழ் மக னின் உள்நாட்டுத் தொடர்பு தமிழிலும் உலகத் தொடர்பு ஆங்கிலத்திலும் என்பதே அவர் நிலையாகும். எனினும் உயிரனைய தமிழ்த்தா யுடன் ஆங்கிலத்தை ஒப்ப நினைக்க மவும் அவர் மனம் ஒப்பினரில்லை. ‘உரிமைக்குத் தமிழ்த் தாய், உதவிக்கு ஆங்கில அணங்கு' என நிறுவிக் கொண்ட அண்ணு, தாம் முதலமைச்சரானதும் தமிழ் நாடு பொலீஸ் துறையினரால் நடாத்தப்பெற்ற விழாவொன்றில் பங்கு கொண்டு விருது வழங்கிப் பேசும்போது 'தமிழரான தமிழ் நாட்டுத் தலைமைப் பொலீஸ் அதிபர், தமிழ் தெரிந்த பொலிஸ்காரர்கள் மத்தியில், தமிழ் தெரிந்த தம்மை ஆங் கிலத்தில் வரவேற்பதன் அர்த்தம் தெரியவில்லை" யென எவர் மனமும் புண்படாது நகைச்சுவையோடு குறிப்பிட் டார். அண்ணு ஆங்கிலத்தில் வல்லவராயினும் தமிழ்த் தாயைப் புறக்கணித்து ஆங்கிலத்தை மோகித்த பொல் லார் அல்லர்.
78

'உள்ளத்திலே நல்ல உள்ளத்திலே - எழுந்
துாறிவரும் எண்ண மாகிய பைம்புனல் வெள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே - இந்த மேதினி மக்கள் நலம்பெறு வாரென்று
y 9
- புரட்சிக்கவி பாரதிதாசன்
சிந்தனைச் சிற்பி அண்ணு
அண்ணுவின் சிந்தனைச் சிதறல்களாகத் தெறித்த அணிமொழிகள் ஆயிரம். உலகின் சிந்தனைச் சிற்பிகளின் வரிசையிலே அண்ணுவையும் அமரவைக்கும் அன்னரது சிரஞ்சீவித்துவம் பெற்ற சிந்தனைகள் தந்தமிழர் நினைவுக் கோர் சிறப்புப்பாயிரம். சீனத்துச் சிற்பி மாவோவின் சித் தனைகளையொத்த தறுகண் மை சார்ந்த நிந்தனைகளல்ல அவை; அன்புமுனையிலே ஊற்றெடுத்த அருஞ்சுனைகள்; அகலமாக அல்ல, "ஆழமாக உழுதிட்ட ஏர் முனைகள்,
நாட்டுக்குச் சேவை செய்யவந்த நாகரிகக் கோமாளி யாம் ‘நல்லதம்பி’யின் வாயிலாக அண்ணு சிந்திய சிந்தனை கள் முளை விட்டுச் செடியாகி கிளைவிட்டு மரமாகி நிற்கும் சீர்த்தி அண்ணுவின் கீர்த்தி கூறும். வியர்வை சிந்தாமலேயே ஆண்டாண்டு காலமாக அறுவடை செய்துவரும் ஓர் வர்க் கத்தின் வார்ப்படமான வேதாசல முதலியாரின் மகளை *வேலைக்காரி" மூலமாகக் கேட்கிருர் அண்ணு, " (பணத்தை
79

Page 49
ஈயாது காத்து) தங்கத்தாலே சோறு சமைத்து வைரவறு வலும் முத்துப்பச்சடியும் கோமேதகக் குழம்புமா வைத் துச் சாப்பிட்டான் உன் அப்பன்? என்று. இந்தக் கேள்வி யிலும் கிண்டலிலும் ஊற்றெடுக்கும் கருத்துப் புரட்சிதான் என்ன? "முத்துப் பச்சடி" என்னும் போதுதான் எத்துணை இயல்பான வார்த்தைச் செறிவு! அதே வேலைக்காரி' திரைப்படத்தில் வடநாட்டு வக்கீலின் வாயிலாக சட்டம் பொருளியலுடன் சம்பந்தப்பட்டது என்பதைப் புட்டுக் காட்டுகிறர்:- "சட்டம் ஓர் இருட்டறை; அதிலே வக்கீ லின் வாதம் ஓர் விளக்கு. அது ஏழைகளுக்குக் கிட்டாது.” வேதாசல முதலியாரைப் பழிவாங்குவதற்காக கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிருன் அப்பாவி ஆனந்தன். ஆனந்த னுக்கு அவன் நண்பன் மணி கூறும் கூற்று, சமுதாயப் புரட்சி காண ஆயுதப்புரட்சி அவசியம் என்னும் அவசரச் சித்தாந்திகளுக்கு அண்ணு கூறும் ஆலோசனையாகும். 'நறுக் கென்று சுருக்கமாகச் சொன்னர் அண்ணு, கத்தி யைத் தீட்டாதே ஆனந்தா, உன் புத்தியைத் தீட்டு என்று.
"எதற்கு அழைப்பு? அரசமைக்கவா, அரசோச்சவா?" என்ற அண்ணுவின் வாசகம் ஈழத் தமிழ்மக்களின் இற்றை அரசியல் மயக்கங்களின் பின்னணியில் விளக்கம் தரும் விடி வெள்ளியாகும். முன்னையது முதுகு சொறிவது பின்னையது அதிகாரம் பெறுவது முன்னையது படிக்கல்லாகத் தேய்வது பின்னேயது முனைக்கல்லாக நிற்பது. முன்னையது இன்னுெரு வர் ஆட்சிப்பீடம் ஏற உதவுவது பின்னையது தானே ஆட்சி செலுத்துவது. எத்துணை தாக்கமான வார்த்தைகள்!
தெறித்த முத்துக்கள்.
அண்ணுவின் அரசியல் வாழ்விலே பல்வேறு கட்டங்களி லும் காலத்தால் சாகாத வார்த்தைகளை அன்னர் சிந்திய துண்டு . அவ்வித்த கனின் நாவிலிருந்து தெறித்த முத்துக் கள் சிலவற்றைக் காண்போமா?
'கண்ணிர்த் துளிகளே! என் கண்ணின் மணி களே!” - பெரியார் ஈ. வே. ராவின் திராவிட கழகத் திலிருந்து ‘கண்ணிர்த்துளியுடன் வெளியேறுகிருேம்"
80

என அண்ணுவின் தலைமையிலான தம்பிகள் வெளியே றியபோது, பெரியார் அண்ணுவையும் தம்பியரையும் "கண்ணிர்த் துளிகள்" என நிந்தித்தார். தி. மு. க. வைத் தொடக்கிய அண்ணு அதன் முதற்கூட்டத்தி லேயே பெரியாரின் நிந்தனையைப் பல்ல வியா கக் கொண்டு தன் தம்பியரை விழித்தார். ‘கண்ணிர்த் துளி களே ! என் கண்ணின் மணிகளே !' என்று தன் தலை மையுரையைத் தொடக்கினர்.
‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு'- இவை தம் தம்பி யருக்கு அண்ணு வழங்கிய தாரகமந்திரம். இன்று தி. மு. க. வை இணைத்து வைத்திருப்பவை இம் மூல மந்திரங்களே. இவை ‘கடமை, ஆணை, இறைமை, வன்மை’ எனத் தத்துவஞானி ஆஸ்டின் (Austin) வகுத்த தத்துவங்களை நினைவூட்டுவன.
‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" - அரசியல் எதிரிகளால் வrயடியும் கையடியும் பட்டு உள்ளமும், சில சமயங்களில் உட்லும் புண்பட்டுப்போன தம்பிய ருக்கு அண்ணு தந்த மாமருந்து.
'தம்பியுடையான் படைக்கஞ்சான்"-ஆளுங்கட்சியின ரின் அடக்குமுறைப் பயமுறுத்தலுக்கு அண் ணு வைத்த ஆப்பு. பணப்பெருமையோ பாரம்பரியப் பெருமையோ, பதவிப்பெருமையோ அற்று, அந் தஸ்துவலியும் அணிவலியும் தோள்வலியுமற்ற நாட் களில் அண்ணுவுக்கிருத்த ஒரே பெருமிதம் இதுவே.
"வெட்டி வா என்ருல் கட்டி வரும் தன்மையர் -தன் தம்பியர் தன் ஆணைக்கு எத்துணை கட்டுண்டவர்
என்பதையும், அவர்தம் தாளாண்மை எத்தன்மைத்து என்பதையும் விளக்க விழைந்த அண்ணுவின் பெருமிதப் பேச்சு இது. எள்ளென்று கூறிமுடிக்குமுன்னரே எண் ணெயாக்கித் தரும் தன் தம்பியர், வயலில் சாய்ந்து விட்ட கதிர்களை அறுவசிை செய் என அனுப்பினல், அவற்றை அறுவடை செய்து கட்டி வீட்டுக்கும் இட்டு வந்து விடுவார்களாம்.
81

Page 50
大
“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' - அறப் போரில் குதிக்குமாறு தன் தம்பியருக்கு ஆணையிட்ட காலையிலும், தேர்தற்களத்தில் குதிக்கத் தீர்மானித்த போதும் அன்று நாடாண்ட கட்சியினர் நகைத்த துண்டு. ஆணிவேரோடு கருகிவிடுவர் என ஆரூடம் கணித்ததுண்டு. தன் தம்பியரின் வலிமையை அறிந்த அண்ணுவின் நம்பிக்கையை உணர்த்தும் இவ்வார்த்தை கள் வீர வரலாறு படைத்த சரித்திரச் சான்ருேர் களின் கூற்றுக்களை எதிரொலிக்கும். தம்பியர் பட்டாளத் திற்கு இவை தூண்டுகோலென் ருல், தானத் தளபதி அண்ணுவுக்கும் அவையே ஊன்றுகோலாம்.
மறப்போம், மன்னிப்போம்" - "சென்றேன், கண் டேன், வென்றேன்’ என்ற சீசரின் வரலாற்றுப் பெருமைமிக்க வார்த்தைச் சிக்கனத்துடன் அண்ணு கூறிய இவ்வார்த்தைகள், வெற்றிகொண்ட தன் தம்பியர் விரோதிகளைப் பழிவாங்கத் தலைப்பட்ட போது கூறியவையாகும். இவ்வார்த்தைகள் அண்ணு வின் விரிந்த உள்ளத்தை மட்டுமல்ல, வார்த்தைகளைத் தெரிந்து தொடுத்த உத்தியையும் காட்டுவன.
'மாற்ருன் வீட்டுத் "தோட்டத்து மல்லிகையும் மணம் கமழும்' - தமது கோரிக்கைகளின் நியாயத்தை, தமது இயக்கத்தின் சாதனைகளை, தன் தம்பியரின் திறமைகளை, கணிக்க மறுத்த மாற்றுக் கட்சியினரிடம் எவ்வளவு நளினத்துடன் கூறினர். மாற்றுக்கட்சிக ளின் சாதனைகளையும், திறமைகளையும் நன்மைகளையும் கணிக்குமாறு தன் தம்பியருக்கு அவர் இடித்துரைத்த இங்கிதமும் இதுவே.
‘எங்கிருந்தாலும் வாழ்க" - தனது தோட்டத்தி லிருந்த சிவாஜி கணேசன் என்ற மல்லிகை இன்று மாற் முன் வீட்டுத் தோட்டத்திலிருந்தாலும் நன்ருக மணம் கமழ்கிறது என்பதைக் கண்ட அண்ணு நடிகர் கணேச னுக்கு வழங்கிய வாழ்த்து இது. தன்னல் கருவாக்கி உருவாக்கப்பட்ட மலர்க்கொடி, இன்று மாற்ருனுக்கு மணம் தருகின்றதே, கருக்கிவிடுகிறேன் எனக் கறுவிக் கொள்ளவில்லை அண்ணு. தான் தொட்டு வளர்த்த
82

கொடி பட்டுப் போக வேண்டாம் என்ற பரந்த உள்ளம் அன்னருக்கு, ‘வாழ்க’ என்கிறர்.
‘என்னிதயம் பரந்தது; எங்கும் செல்லாதீர்கள், இங் கேயே அனைவரும் குடியிருக்கலாம்' - திரு. ஈ. வி. கே. சம்பத் தம்மைவிட்டுப் பிரியத் துணிந்தபோது அண்ணு நெகிழ்ச்சியுடன் கூறிய வார்த்தைகள் இவை கள் .
'நாம் எதிர்க்கட்சியினர், எதிரிக்கட்சியினரல்ல" - பாராளுமன்ற சம்பிரதாயங்களையிட்டு ம ய க் கம் கொண்ட ஆளுங்கட்சிக்கு அன்று அண்ணு தந்த விளக் கம் இது.
''Tap the rich and pat the poor' ('Lugorjds TJ Giorgi தட்டி எடு, பஞ்சையரைத் தட்டிக் கொடு") - முத லமைச்சரான அண்ணு நிதியமைச்சராகவும் பணியாற் றினர். அப்போது வரி விதிப்புப் பற்றிய தமது கொள் கையை மிகவும் அழகான ஆங்கிலத்தில் தெளியத்தந் தார். வார்த்தைச் சிக்கனம், வார்த்தைச் சிலம்பம், "சோஷலிசத் திட்டம்" என்று கூருமற் கூறும் பொருட் செறிவு, இத்தனையும் இழையோட எத்துணை நளினத் துடன் எடுத்துரைத்தார்.
நான் சாமானியன் - தான் தொட்ட துறை அத்தனை யும் துலக்கி, தானும் துருவ நட்சத்திரமாகத் துலங் கிய அண்ணு, தன் எளிமையும் தன்னடக்கமும் இழை யோட என்றுமே இவ்வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டார். 'சாமானியன், சாமானியன்" எனக் கூறிக்கொண்டே பாரிய ஒர் அரசையே கைப்பற்றிய அதிசய மனிதர் அண்ணு ஒருவரே. தமிழ் நாட்டின் சக் கரவர்த்தியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னரும் தான் 'சாமானியன்’ என நிறுவத் துடித்த விசித்திர மனிதரும் அவரே.
83

Page 51
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்?
- திருமூலர்
சமயநெறியில் அண்ணு
சிண்ணுவின் சமயநெறி விவாதத்திற்கு விக்ாநிலமா கும். மதமாச்சரியங்களைச் சாடுவதில் அண்ணு தொடக்க காலத்தில் காட்டிய தீவிரமும் இடைக்காலத்திலே இப் போக்கில் விரவிய இங்கிதமும் இறுதிக் காலத்திலே உறுதி யாக நிறுவப்பட்ட " சமரச சகவாழ்வு' கொள்கையும் சம யத்துறையில் அன்னரை அடையாளம் கண்டுகொள்வதில் மயக்கத்தை உண்டுபண்ணுவன. சமயத்துறையில் அண்ணு வின் நிலைபற்றி மூன்றுவிதமான கருத்துக்கள் நிலவ இட முண்டு. (1) கடவுளையே மறுத்துரைத்த நாத்திகன் என் பது. நாத்திகம் பேசிப் பேசி நாத்தழும்பேறியவர்கள் என வைதிகர்களால் சாடப்பட்டவர்கள் அண்ணுவும் அவரது அணியினரும். அண்ணுவின் பரந்தாமனுக்குப் பகிரங்கக் கடிதம்', 'பரமசிவனுக்குப் பகிரங்கக் கடிதம்', 'தேவலீலை கள் போன்ற எழுத்துக்கள் இக்கருத்தை வலியுறுத்து வன. (2) சமயத்தின் நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து மூடநம்பிக்கைகளை மட்டும் சாடிய பகுத்தறிவுவாதி என்
84

பது. பல்லவநாடு தந்த பகுத்தறிவுச் சிங்கம் என விதந் தோதப்பெற்றவர் அண்ணு. அன்னர் தீட்டிய 'நல்லதம்பி" (திரைப்படம்), ‘இரங்கூன் இராதா" (நாவல்), 'புராண மதங்கள்" என்பன இக் கருத்தை நிறுவுதற்கு ஏதுவா னவை. (3) பதினரும் நூற்றண்டிலே கிறித்துவ மண்டலத் தின் மத பீடங்களிலும் மடாலயங்களிலும் ஊடறுத்துப் பரவிய ஊழல்களையெல்லாம் களையப் புறப்பட்ட மாட்டின் லூதரை யொத்த மதப்புரட்சியாளர் அண்ணு என்பது. அண்ணுவின் சொர்க்கவாசல்" (திரைப்படம்) போன்ற படைப்புக்கள் இக் கருத்தை ஊக்குவிப்பன.
வேற்றுச் செல்வாக்கிற்கு எதிராக . . . .
அண்ணுவின் சமயக் கண்ணுேட்டங்கள் எவ்வெக் கால கட்டங்களில் எத்தகைய சமூக அரசியல் பின்னணியிலி ருந்து எத்தகைய பின்னணிக்கெதிராக வெளிவந்தன என் பதை எண்ணிப் பார்ப்போர் அன்னுரை நாத்திகன் என நாத்தடிக்கக் கூறர். அண்ணுவின் ஆரம்ப, இடை, இறுதிக் காலங்களில் ஏற்பட்ட வேறுபாடுகளுக்கும் இந்த சமூக அர சியல் பின்னணிகளின் மாறுபாடே காரணமாகும்.
மாட்டின் லூதருடைய மதப்புரட்சி" எனப்பெற்ற மதச் சீர்திருத்தம் (Reformation) இங்கிலாந்தில் எதிரொ லித்தபோது, அங்கு அது புதிய, மாறுபட்ட, உணர்வுட னும் உருவுடனும் பரவியதை வரலாற்று மாணவர் அறி வர். எட்டாம் ஹென்றி மன்னன் தலைமையில் செயற்பட்ட இவ்வியக்கம், ஜெர்மனியிலும் இதர ஐரோப்பிய நாடுகளி லும் நிகழ்ந்தது போன்று கத்தோலிக்க கோட்பாடுகளை யும் நடைமுறைகளையும் எதிர்க்கும் ஒர் இயக்கமாக மாற வில்லை, "கத்தோலிக்க மதத்தின் காவலன்' (Defender of the Faith) எனப் போப்பாண்டவரிடமே புகழாரம் பெற்ற வஞயிற்றே ஹென்றி ம ன் ன ன். இங்கிலாந்தின் மதப் புரட்சி இயக்கம் ஒர் சுதேசிய - விதேசிய போராட்ட இயக்கமாக மாறியது. இங்கிலாந்து நாட்டிலே உரோமா புரி நடாத்துகின்ற அரசியல் ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல், சமூகச் சீரழிவு இவற்றிற்கெதிரான இயக்கமாக உருவெடுத்தது. அன்றைய போப்பாண்டவர்கள் இன்றைய
85

Page 52
வர்களைப் போன்று புனித நீர்மையர் அல்லர்; போர் வேட் கை கொண்டவர்கள், அரசியல் 'தில்லு முல்லுகளில்" உழன்றவர்கள், அரசுக்களை ஆட்டிப்படைத்தவர்கள். தன் சொந்தநாட்டிலேயே எந்த நாட்டிலோ இருக்கும் ஒரு போப் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதையும், தனது தீர்ப் புகளுக்கு எதிராக உள்நாட்டு மதபீடங்களிடமிருந்து வரும் மேன்முறையீடுகளைக் கேட்பதையும், மத மரபு வரிகளாக ஏராளமான செல்வத்தை இங்கிலாந்திலிருந்து பெறுவ தையும், கத்தோலிக்க மக்களின் சமய நெறியை மட்டு மல்ல சமூக நெறியையும் நிர்ணயிக்கத் தலைப்படுவதையும், தன் ஆதிக்கத்திற்கும் இங்கிலாந்தின் தேசியத்திற்கும் இந் தாலிவிடுக்கும் ஓர் அறைகூவலாகவே மன்னன் கருதி ஞன்.
‘ஆரிய மாயை'
அண்ணுவின் சமயக் கண்ணுேட்டமும் பெரிதும் இத்த கைய உணர்வுகளால் உருவாக்கப்பட்டதே. திராவிட மக்களை ஆரியர்கள் அரசியற்றுறையில் அடிமைகொண்டு ஆதிக்கம் செலுத்தவும், பொருளாதாரத் துறையில் சுரண் டவும், சமூகத்துறையில் சமத்துவத்தை மறு த் து பிற் போக்குவாதிகளாக்கவும் தலைப்படுகின்றனர் என அண்ணு கருதிஞர். திருவெண்ணெய் நல்லூர் சிவலிங்கமும் எள் ளெண்ணெய் ஊற்றும் செக்கும் ஆரியவாத அணுச்சாரங் களிஞல் பாமரப்பார்வைக்கு ஒரே அமைப்புடன் காட்சி தந்த நாட்கள். அன்று தமிழர் சமயம் எது ஆரியர் சமயம் எது எனப் பிரிக்கமுடியாதபடி சமயச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் பிணைந்துபோய்க் கிடந்தன. வைதீகமும் வர் ஞச்சிரம தர்மங்களும், பிராமணியமும் தமிழ்நாட்டுக் கோவில்களில் தர்பார் நடாத்தின. இத்தனையும் ஆரியம் தான் என உறுதி செய்வது போ ன் று சமஸ்கிருதம் கோவில்களில் கோலோச்சிற்று. தமிழ் உயர்ந்ததா சமஸ் கிருதம் உயர்த்ததா? தனித்தமிழ் என ஒன்று இருக்க முடி யுமா? என்ற வாதப்பிரதிவாதங்கள் கூடத் தமிழ்நாட்டில் ஆச்சாரியார்கள், ஐயங்கார்களால் நடாத்தப்பட்ட வேளை அது .
அத்தகைய சூழ்நிலையில் இத்தனையும் "ஆரியமாயை' தான் என அண்ணு என்ற ஈட்டி பாய்ந்து சமயத்தை, சம்
86

பிரதாயங்களை, சடங்குகளை, தாக்கியதில் ஆச் சரிய
மென்ன?
பின்னணியில்.
எத்தகைய சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி யிலிருந்து இந்த ஈட்டி பாய்ந்தது என்பதையும் நோக்க வேண்டும். பிராமணர்கள் நாட்டின் சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்து பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறி விட் டார். இன்னும் பலர் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். பிராமணரல்லாதார் நீதிக் கட்சியை நிறுவியுள்ளனர். தமது அரசியல் ஆதிக்க பலத்தைக்கொண்டு ஆரியர்கள் கள் இந்திமொழியைத் தமிழர்மீது திணிக்க முற்படுகின் றனர். இதனை எதிர்த்து 1937-ம் ஆண்டு தொட்டு தமிழர் கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்தி எதிர்ப்புப் போரில் மாண்ட தாளமுத்து நடராஜன் பிணங்கள் தரை யிலே குருதி வெள்ளத்திலே கிடக்கின்றன. அந்த இந்தியின் மூலமொழி சமஸ்கிருதம் தேவபாஷையாக தமிழகத்துக் கோவில்களிலே கோலோச்சுகிறது. அதற்குப் பிராமணியம் அரண் செய்கிறது. இவை அரசியற்றுறையிலே.
சமுதாயத்துறையிலே, திராவிட இனம் ஆரியர்களால் திணிக்கப்பட்ட சாதிமுறையால் பிளவுண்டு சின்னபின்ன மாகிக் கிடக்கிறது. சாதி முறைக்கு நான்மறைகள் ஆதா ரம் தருகின்றன. 'நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவநீதி விளங்குக’, என ஏத்தி நான்மறைகளைத் தமிழ் மக்கள் ஏற்றுவிட்டனர் 'தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்றும் 'அரியானை அந்தணர்தம் சிந்தையானை' எள் றும் பிராமணியத்தையும் பெருமைப்படுத்தி விட்டது தமி ழினம். பிராமணியத்திலிருந்து தமிழர் சமயத்தைப் பிரித் தெடுக்க முடியாதபடியும் , சாதிமுறை ஆரியரின் திணிப்பு என்று கூற முடியாதவாறும் தமிழ்மக்களின் மனமட்டத் திலே அவை இனந்தெரியாதவாறு இணைந்து விட்டன. இந்த நிலையில் ‘பாதி ஆரியநெறி மீதிதான் எமதுநெறி
87

Page 53
தமிழர் நெறி' எனக் கூறுவது பாமரமனத்தில் பதியக் கூடிய பலமான வாதமாகத் தெரியவில்லை. முழுவதையுமே ஆரியமாக்கி நிராகரிப்பதன்மூலம்தான் தமிழ்மக்களை மீட்க முடியும் என்ற நிலை இருந்தது.
பேரணிகள்
பொருளாதாரத்துறையிலே வடநாட்டிலே இல்லாத , வறுமை தென்னுட்டை வாட்டுகிறது. பாரதமாதாவின் புதல்வர்களில் திராவிடர் மட்டுமே வேலைதேடி வெளிநாட் டுக்குக் கப்பல் ஏறுகின்றனர்-கள்ளத்தனமாக, தமிழகத்து வீதிகளிலே பிள்ளைகளை விலை கூறி விற்கின்றனர்.
இந்த நிலையில், ஆரிய ஆதிக்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பிராமணியம், பிராமணர்களைத் தமது முகத்தி லிருந்து உருவாக்கிய கடவுள், அந்தக் கடவுளின் "பாஷை யான சமஸ்கிருதம், அதனை மூலமொழியாகக் கொண்ட ஆதிக்க இந்தி இவை ஒருபுறமும், இவைக்கெதிராக எளிய ஞன சூத்திரத்தமிழனும் இந்தி, ஆதிக்கத்தால் இடர்ப் பட்ட தமிழ் மொழியும் எதிரும் புதிருமாக அணிதிரண் டுள்ளது போன்ற அரசியல், சமூக பொருளியல் பின்னணி யிலிருந்து புறப்பட்ட ஈட்டி, எதிர்ப்புறத்தில் தோன்றிய அத்தனை சக்திகளையும் 'ஆரியத்தின் அரண்களாக எண் னித் துளைக்க முற்பட்டமை வியப்புக்குரியதல்ல; ஒரு வகை யில் அன்று அது அவசியமே.
இதிகாச எதிர்ப்பு.
இராமாயணம், மாகாபாரதம் ஆகிய இதிகாசங்களுக்கு எதிராக அண்ணு தொடுத்த போரும் இந்த உணர்வின் விளைவேயாகும். இராமாயண எதிர்ப்புவாதங்கள் கவிய ரசன் கம்பனுக்கு எதிராக ஏவப்பட்டவையல்ல; இரா மாயண இதிகர் சபாத்திரங்களுக்கு எதிராக ஏவப்பட்டவை அவை. மகாபாரத எதிர்ப்புவாதங்களும் அத்தன்மைத்தே இராமர், சீதை, அர்ச்சுனன், வீமன், தருமர், திரெளபதை இத் தி யா தி பாத்திரப்படைப்புகள் தமிழர் வாழ்வை
88

நெறிப்படுத்தும் தன்மையன அல்லவென அண்ணு கருதி னர். அவைக்குத் தெய்வாம்சம் தரப்பட்டு அவை தமிழர் நெஞ்சிலும் நினைவிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கண்டு அண்ணு அஞ்சினர். திராவிடர் வாழ்வைக் கப்பிவிட்ட எந்த ஆரியச் செல்வாக் கைத் தாம் பெயர்த்தெறியப் புறப்பட்டோமோ அந்தச் செல்வாக்கை இப்பாத்திர வழிபாடுகள் நிலைநிறுத்திவிடுமே எனப் பேதலித்தார். அதனல், இப்பாத்திரப்படைப்புக் களின் தெ ய் வா ம் சங் களை உடைத்தெறிய வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் வீரனுவான? பஞ்சவரை மணந்த திரெள பதி பத்தினியா வாளா? என்பன போன்ற வாதங்களும், கற்புக்குக் கண்ணகி, வில்லுக்குச் சேரன், சொல்லுக்கு கீரன் என்ற வழக்குகளும் உறுதிபெற்றன. கற்புக்கு சாவித்திரி, அருந்ததி, நளாயினி, திரெளபதி, என்றிருந்த நிலையும் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன் என்றிருந்த நிலையும் இற்றுப் போனமைக்கு அண்ணுவே காரணகர்த்தா. கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப் பெருந்தேவி, போன்ற தமிழ்வேரில் தளைத்த படைப்புக் களுக்கும், திரெளபதை, போன்ற படைப்புகளுக்குமிடை யேயுள்ள பண்பாட்டு வேறுபாடுகள் ஆய்வுக்குரியன. அவற் றைப் படம்பிடித்துக்காட்டியவர் அண்ணு.
கம்பனும் இளங்கோவும்.
கவியரசன் கம்பனின் கவித்துவத்தின் மகத்துவத்தை அண்ணு ஏற்றுக்கொண்டாரா? கம்பனின் கவிகளால் புனை யப்பட்ட பாத்திரப்படைப்புகளை சிரஞ்சீவித்துவமற்றவை எனத் தமது 'தீ பரவட்டும்” வாதங்களினல் நிறுவுவதில் அண்ணு வெற்றிபெற்ருரா? அண்ணுவின் இராமாயண எதிர்ப்பு வாதங்கள் தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் இராமர் - சீதா வழிபாட்டில் ஏற்படுத்திய தாக்கம்தான் என்ன? இவைபோன்ற கேள்விகட்கு 1968 ம் ஆண்டு சென் னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு விடைதந்துள் ளது. கம்பனின் கவிச்சிறப்பு காலத்தால் கட்டுண்டதல்ல, சிரஞ்சீவித்துவம் வாய்ந்த பெருமைமிக்கான் அவள் என்
89

Page 54
பதை உறுதிசெய்ய உருவாகியதன் குே மரீனுக்கடற்கரை யில் கம்பனுக்கோர் சிலே. ஆணுல், அவன் படைத்த பாத்தி ரங்களுக்கு? அவை செந்தமிழர் சிந்தையிலே சிரஞ்சீவித் துவம் பெறவில் லேப் போலும், ஆணுல் சிரஞ்சீவித்துவம் பெற்ற கற்பனேக்கெட்டாத அற்புதப்படைப்பு ஒன்றுக் கும் அங்கு சிலேநிறுவப்பட்டது. அது தான் கற்புத் தெய் வம் கண்ணகி. இங்கு சிறப்பிக்கப்பட்டது கவிஞர் இளங்கோ வடிகள் அல்லர், அன்ஞரின் படைப்பே சிறப்புப்பெற்றது. கண்ணகி சிரஞ்சீவித்துவம் பெற்றமையால் இளங்கோவடி களும் சிரஞ்சீவித்துவம் பெற்ருர். இதனுல் சேரன் தம்பிக்கு இரட்டைச்சிறப்பு. தமது நோக்கிலே அண்ணு வெற்றிபெற் றதை பாவரே மறுப்பார்? இராமாயணப் படைப்புகளுக் கெதிராக அண்ணு கண்ட குறை அவற்றின் தெய்ன்ாம்சம் என்பதல்ல; அத்தெய்வாம்சம் தமிழர்க்குப் புறம்பானதும் நீமை பயக்கும் தன்மையதும் என்பதே. அன்குறரின் கருத் துத் தெளிவாக வேண்டும். கண்ணகிகூடத் தெய்வீராம்சம் பெ ா ரு ந் தி ய படைப்பே எனினும், தத்தெய்வாம்சம் தமிழர் சால்பில் உருவானது. எனவே அது ஏற்புடைத்து,
திருமொழிகள் தேர்ந்து.
தமிழர் சா ல் பி ல் உருவான தெய்வீகத்தை, சமய நெறியை அண்ணு எதிர்க்கவில்லே என்பதை அன்ஞரது இடைக்காலத்து எழுத்துகளும் பேச்சுக்களும் தெளியத் தந்தன. மூட நம்பிக்கைகளேக் கண்டிக்க முற்பட்ட அவர் சமயச்சான்ருேரர்களும், சித்தர்களும், சிவநெறிச் செல்வர்க ளூம் நிறுவிய தளத்தின் மீது நின்றே கண்டித்துள்ளார்.
திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமொழியைத் தமது தாரகமந்திரமாகக்  ெகா எண் ட அண்ணு தாத்தி சுராசு முடியாது.
"கண்மூடி வழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்"
(வள்ளார்)
"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பர் பித்த மனிதர்.--
(பாரதியார்)
90
 
 
 
 

'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலே வணிகன் ஆய் அலன் .
(ஏணிச்சேரி முடமோசியார்)
"கோயில் முழுதும் கண்டேன் கோபுரமேறிக்
கண்டேன் தேவாதிதேவனே நான் தேடியும் கண்டிலனே'
(கவிமணி தேசிக விநாயகம் பிள்ளே)
இன்னுேரன்ன மேற்கோள்களேக் காட்டியே அண்ணு தம் சமயக் கருத்துக்களே நிறுவத் துடித்தார் என்பதைக் கொண்டு அவர் மேற்கொண்டது மத இகழ்ச்சியல்ல, மதப் புரட்சி என்பதும், அவர் தூண்டியது தெய்வ நிந்தனே பல்ல, தேர்ந்த சிந்தனேயென்பதும் தெளிவாகும். தமது குருவாகிய பெரியார் ஈ. வே. ரா. தீவிரவாதப் போக்கி னுல் மேற்கொண்ட பிள்ள பார் உடைப்புப் போராட்டம் இராமர் பட வரிப்புப் போராட்டம் போன்றவற்றில் அண்ணு ஈடுபட மறுத்தார் என்பதுடன், அ வ ற் ன ற க் காட்டு மிராண்டித்தனமானது எனவும் கண்டித்தார் என்பதைக் கொண்டு அண்ணுவின் சமயக் கண்ணுேட்டம் புலணுகும். அங்ஙனமாயின் அண்ணு துரண்டிய சிந்தனேயின் நோக்குத் தான் என்ன?
தெய்வத்தலாகா(து) எனினும்.
அதனே அவர் வாயிலாகவே கேட்போமே. கேட்கின் குர் அண்ணு, 'ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த சரஸ்வதி படத்திற்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்த கற்பூரத்தை கொழுத்தி தலேயில் குட்டிக் கொள்கிருயே, நியாயமா இது? உனக்கு வெட்கமாக இல்லையா' என்று. 'தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன் மெய் வருந்தக் கூவி தரும்' என வள்ளுவன் கூறியதை அனுபவ உணர் வோடு கூறுகிருர் அண்ணு; அவ்வளவுதான். வள்ளுவன் வாச கத்திலுள்ள 'உம்' விகுதியை அண்ணு மறுக்கவில்லை, 'படத் தையும் கற்பூரத்தையும் உனது முயற்சியால் உருவாக்கி வணங்கிக் கொள் " என்கிருர், "எனது புனித யாத்திரைத்
9|

Page 55
தலங்கள் இந்நாட்டின் நாலாபக்கங்களிலுமுள்ள தொழிற் சாலைகளே, என்று அமரர்நேரு கூறியதும் இக்கருத்தேயாம்
மூடநம்பிக்கைகள்
அண்ணுவின் புரட்சிகரமான மதக்கருத்துக்கள் தமிழ கத்தில் வரவேற்கத்தக்க ஆழமான தாக்கங்களை ஏற்படுத் தின என்பதை எவரும் மறுக்க முடியாது. கல்வியறிவற்ற பாமர மக்களிடையே நிலவிய அறிவுக்கொவ்வாத மூட நம்பிக்கைகளை, முற்ருக ஒழிக்க முடியாவிடினும், ஒரளவுக் காவது கட்டுப்படுத்திய பெருமை அண்ணுவுக்குண்டு. கண் மூடித்தனமான சமயச்சடங்குகளிலும் சம்பிரதாயங்களி லும் காலத்தையும் பணத்தையும் விரயம் செய்த பாமர மக்களிடையே ஒருவித புத்தறிவைப் பாய்ச்சிய அண்ணு, படாடோபமற்ற சிக்கனமான சீர்திருத்த திருமணங்களை ஊக்குவித்ததனுல் ஏழை மக்கள் உய்ந்துள்ளனர். இராகு காலத்தில் திருமணம், மரணயோகத்தில் வேட்பாளர் மனு தாக்கல் போன்ற செயல்களை உற்சாகப் படுத்தி சமுதாயத் தின் சிந்தனையைத் தூண்டி வளர்த்துள்ளார். அறியாமை யிலே மூழ்கிக்கிடந்த பாமரன் இனந்தெரியாத சம்பிரதா யங்களுக்கு அஞ்சி அடங்கிக் கிடந்த பரிதா பநிலையைக் தன் பகுத்தறிவுப் பணியால் போக்கியுள்ளார்.
தமிழ் வழிபாடு
தமிழகத்திலுள்ள திருக் கோவில்களில் நிலவிய நிர் வாக ஊழல்கள் நீங்கவும், ஆட்சியாளர் ஆலய பரிபால னத்தைக் கண்காணிக்கவும் அதற்கான சட்டதிட்டம் ஆக் கவும் ஏதுவாக, தமது கணைகளால் அரசாங்கத்தின் பார் வையை ஆலயங்களில் படியவைத்தவர் அண்ணு. ஆரியச் செல்வாக்கின் சின்னமாகிய சாதி உணர்வு ஆண்டவன் சந் நிதியில் படராவண்ணம் கோயில் தர்மகர்த்தாக்களாக தாழ்த்தப்பட்டோரும் பொறுப்பேற்கும் நிலையை உண்டு பண்ணியவர் அண்ணு. இத்தனைக்கும் மேலாக, த மிழ் மொழியே கோவில்களில் வழிபாட்டு மொழியாக வேண் டும் எனக் கோருவதற்கு வழிவகுத்தவரும், இதற்கென வாதிடுவதற்கோர் அணியை உருவாக்கியவரும் அன்னரே,
92

கோவில்களில் தமிழில் ஆராதனை நடைபெறவேண்டுமென இன்று குன்றக்குடி அடிகளும் சுத்தானந்த பாரதியாரும் சிவநெறியாய்ந்த தவநெறிச் செல்வர் பலரும் எழுப்பும் கோரிக்கைக்கு கருவும் உருவும் தந்தவர் அண்ணுவன்ருே.
பரிணும வளர்ச்சி
அண்ணுவின் தொடக்ககால தீவிர நோக்குக்கும் இறு திக்கால நோக்குக்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்கள் ஒருவரின் கருத்து, கண்ணுேட்டம், இவற்றின் பரிணும வளர்ச்சியைப் புலப்படுத்துவனவாகும். எந்தெந்த சக்திக ளுக்கெதிராக அண்ணுவின் தீவிரவாதம் அன்று பிரயோகிக் கப்பட்டதோ, அந்தச் சக்திகள் இன்று வலுவிழந்துவிட் டன. பிராமணியச் செல்வாக்கு பெயர்த்தெறியப்பட்டு விட்ட காலகட்டத்தில், ஆரிய ஆதிக்கத்தின் பிரதிநிதி யான இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதுமே திரண்டெழுந்து போர்க்கொடி உயர்த்தியுள்ளபோது, அன்று தூங்கிக்கிடந்த தமிழகத்தோடு பேசிய தொனியில் இன்று விழித்துக் கொண்ட தமிழகத்தோடு பேசவேண்டிய அவசியம் அண்ணுவுக்கு இல்லை. 'சாமான்யனுன" அண்ணு தமிழகத்தின் முதலமைச்சராக முடிசூடியதே தமிழ் மக்க ளின் எழுச்சிக்கும் விழிப்புக்கும் முத்திரையாகும்.
தாக்கமும் நோக்கமும்.
மேலும், தமிழ்மொழியின் வாழ்வையும் வளத்தை யுமே தனது வாழ்வின் வேட்கையாகக் கொண்ட அண்ணு, அம்மொழியின் உயிர்நாடியான இலக்கியங்களுடன் இரண் டறக் கலந்துவிட்ட சமய இலக்கியங்களின் தொன்மையும் வன்மையும் அறிந்திருந்தார். அவை தமிழ்வாழ்வின் பிரிக்க வொண்ணுத ஓர் பெரும்பகுதி என்பதையும் அறிந்திருந் தார். அத்தகைய இலக்கியச் செல்வங்களையும், அவை கூறும் சேதிகளையும், அச்சேதிகள் தமிழ் மக்கள் சிந்தை யிலே நிரந்தரமான நிலைக்களனைப் பெற்றுவிட்டன என்ப தையும் அறிந்திருந்தார். இதனல் முதலமைச்சரான அண்ணு கோவிலுக்கு விளக்கேற்றி வைத்த பவ்வியத்தை யும் அறிந்தோம். இராஜாஜியின் தொடர்பு அண்ணுவின்
93

Page 56
கருத்தோட்டத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நாடாளுமன் றக்கட்சி என்ற நிலையில் நாட்டுமக்களின் நினைப்பை ஒட் டிச் செல்லும் நோக்கமும் அண்ணுவின் இறுதிக்காலக் கண் ணுேட்டங்களை ஒரளவு செப்பனிட்டிருக்கலாம். மரணப் படுக்கையில் அண்ணு மயங்கிக்கிடந்த வேளையில், நாட்டு மக்களனைவரும் தம் அன்புத் தலைவன் உயிரைக் காக்கு மாறு ஆண்டவனிடமல்லவா வேண்டி நின்றனர். எனவே தமிழ்நாட்டுமக்கள் அண்ணுவை அறிந்து கொண்டது நாத்திகளுக அல்ல; அண்ணு தன்னை அவர்களிடம் அறி முகம் செய்ததும் நாத்திகளுக அல்ல.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்தோட்டத்திலே
காணக்கிடந்த புதுமையொன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அண்ணுவிலும் தீவிரப் போக்குடையவர் புரட்சிக்கவிஞர். எனினும்
*தென்னுடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற அடிகளிலே கவிஞருக்கோர் கவர்ச்சியுண்டு. 'பொன் முடி’ திரைப்படத்தில் (கவிஞரின் "எதிர்பாராத முத்தம்")
இது புலணுகும். "எதிர்பாராத முத்தத்'திலே பொன்முடி மேலும் கூறுவான்.
* புலமையில் மிக்கீர்; நாங்கள் தென்னுட்டார்; தமிழர்; சைவர் சீவனை வதைப்ப தான இன்னல்சேர் யாகந் தன்னை
யாம் ஒப்ப மாட்டோம் .
94

*எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்பதான் இடம்நோக்கி நடக்கின்ற திந்தவையம்'
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஒப்புரவாளர் அண்ணு
* முற்போக்கு சக்திகளனைத்தையும் ஒன் று ப டு த் தி காங்கிரசைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த பெருமை அனைத்தும் அண்ணுவின் போர்த் தந்திரத் திறனுக்கும் மேதைத் தன்மைக்குமே சாரும். மாநிலத்தின் தி.மு.க.வுக் கும் அண்ணுவுக்கும் இதர இடதுசாரி சக்திகளுக்கும் எல்லாப் புகழும் சேருவதாக. இந்தியாவின் ஜனநாயக சோஷலிச இயக்கங்களுக்கு வலிவைக் கூட்டக் கூடியவராகவும், இந் நாட்டின் முற்போக்கு சக்திகளை ஒற்றுமைப்படுத்தவும் அண்ணுஅவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டுமென வாழ்த்துகிறேன்." - இது இந்திய இடதுசாரி கம்யூ னிஸ்ட் தலைவர் ஏ. கே. கோபாலன் அவர்கள் அண்ணுவின் 59-வது பிறந்த தினத்தையொட்டி 'முரசொலி”-அண்ணு மலருக்கு அனுப்பிய செய்தியின் ஒரு பகுதியாகும்.
"மகத்தான தமிழ் மக்கள் உருவாக்கிய புகழ்மிக்க காங்கிரசல்லாத அரசின் தலைவராக இப்போது இருக்கும் அவரிடம் (அண்ணுவிடம்) இந்நாட்டின் முற்போக்கு ஜன நாயக சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி மக்களின் துயரங்களை அகற்றுவதற்கான தலைமையை நாங்கள் இயற் கையாகவே எதிர்பார்க்கிருேம் . .’-இது இந்திய வலது
95

Page 57
சாரி கம்யூனிஸ்ட் தலைவர் திரு. புபேஷ் குப்தா அண்ணு வின் 59-வது பிறந்ததினத்திற்கு அனுப்பிய செய்தியின் பகுதியாகும்.
*சயன்ரிபிக் சோஷலிசம்’
ஆக, இந்தியாவின் இடதுசாரி உலகு அண்ணுவை ஒர்
சோஷலிச சக்தியாக, முற்போக்கு சக்தியாக ஏற்றுக் கொண்டது. எனினும் அண்ணுவின் சோஷலிசச் சித்தாந் தம் மாஸ்கோவிலிருந்தோ பீக்கிங்கிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்டதல்ல; அண்ணு தமிழ்நாட்டு மக்களின் சூழ் நிலைக்கும் தேவைக்குமேற்பத் தாமாக வகுத்துக்கொண் டது, அனுபவரீதியான சோஷலிசம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு தமது தத்துவத்தை சயன்ரிபிக் சோஷலி jib” (Scientific Socialism) 6T63T 36?!pägi i G 5 Tai Ln si. அண்ணு ஒரு சித்தாந்தத்தைத் தேர்ந்துவிட்டு அச் சிந்தாந் தத்தைத் திணிப்பதற்கு ஒரு சமூகத்தைத் தேடித்திரிந்தவ ரல்லர். சமூகப் பிரச்சினைகளை ஆழமாகவும் அகலமாகவும் பார்த்தும் படித்தும் அனுபவித்தும்விட்டு அவைகளைத் தீர்க்கக்கூடிய மருந்தாக ஒரு சித்தாந்தத்தைத் தேர்ந்து கொண்டவர். அண்ணுவுக்குச் சித்தாந்தம் ஒரு கருவிப் பொருளே தவிர இறுதிப் பொருளல்ல. (Means, and not the end)
சமுதாய அமைப்பின் பலவீனமான உறுப்புக்களின் பிரதிநிதியான அண்ணு சே (ா ஷ லி ச வா தி யா க விளங்கியது வியப்புக்குரியதல்ல. அண்ணு சோஷலிச வாதம் பேசியவர் மட்டுமல்ல, சோஷலிசவாதியாக வாழ்ந்தவரும் கூட. இயல்பாக அவரிடம் அமைந்திருந்த ஆடம்பரங்களை வெறுத்த எளிமையிலே சோஷலிசவாதிக்குரிய பரிபக்குவம் காணக்கிடந்தது. அன்னரால் தமிழ் நாட்டின் லட்சோப லட்சம் தொழிலாளர்கள் ஏ  ைழ எ ஸ்ரீ ய வ ர் களு ட ன் தோழமை கொள்ளவும், அவர்தம் துயரங்களைப் புரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது. அண்ணு சோஷலிசத்தை ஒரு கருவியாகக் கைக்கொண்டதுடன் கம் யூனிஸ்டுகளின் தளங்களும் மிக வு ம் தளர்ச்சியடையத்
96

தலைப்பட்டன. தமிழ்நாட்டில் சோஷலிச சமுதாய அமைப் புக்கு மக்களைப் பக்குவப்படுத்தும் பணியில் கம்யூனிச இயக் கங்கள் சாதிக்க முடியாதவற்றை, சாதிக்க மறந்தவற்றை, அண்ணு சாதித்தார் எனின் அது மிகையாகாது.
சமுதாயப் புரட்சி
பொதுவாழ்க்கையில் தமது கன்னி முயற்சியாகத் தொழிற்சங்கத்துறையில் ஈடுபட்டவர் அண்ணு. விம்கோ தொழிலாளர் சங்கம், துறைமுகத் தொழிலாளர் சங்கம் இவற்றில் பணியாற்றிய அண்ணுவுக்கு சோஷலிச உணர்வு கள் இயல்பாக அமைந்தவை. அன்னுரைப் பொறுத்தவரை சோஷலிசக் கொள்கை பொருளியலளவுக்கு சமூகவியலை யும் சார்ந்த கொள்கையாகும். அண்ணுவின் பணிகளும் புரட்சிகரமான சாதனைகள் பலவும் அவர் சமுதாயப் புரட் சியில் கொ எண் ட நம்பிக்கையின் பிரதிபலிப்புகளாகும். அண்ணு சோஷலிசப் புரட்சியில் நம்பிக்கைகொண்டிருந் தாரா ? "ஆம்" என்பதற்கு ஆதாரங்கள் பல அண்ணுவின் வார்த்தைகளில் விரவிக்கிடக்கின்றன. உதார ண மாக * சொர்க்கவாசல் திரைப்படத்திலே ஒரு காட்சி. மன்ன னைப் பார்த்துக் கேட்கிருன் கவிஞன். "மன்னனே, வேலை யற்றதுகள், அவர்களின் மனத்திலே விபரீதமான எண் ணங்கள், அதன் விழைவுகள் என்னவென்று புரிகிறதா தங்களுக்கு?’’ சமுதாயத்திலே நிந்திக்கப்பட்டுக் கிடப்பவ னுடைய மனத்திலே சிந்தனைப்புரட்சி ஏற்படுமானல் சோஷலிசப் புரட்சி தவிர்க்க முடியாததென்றல்லவா எச்ச ரிக்கிருர் அண்ணு.
சமூக பொருளியல் திட்டங்களில் அண்ணு தம்மைச் சோஷலிசவாதி என நிறுவிக்கொண்ட சாதனைகளிற் சில
வற்றைக் காண்போமா ?
தீண்டாமைத் தளங்கள்
தமிழ் நாட்டிலே ஆங்காங்கே திட்டாகிநின்ற தீண்
டாமைத் தளங்களை உடைத்தெறிவதற்குத் தனியொரு மனிதராகவும் இயக்க ரீதியாகவும் அண்ணு எ டு த் து க்
97

Page 58
கொண்ட முயற்சி அளவிடற்கரியது. சாதிவெறியினல் சல் லடைக் கண்களாகத் துளைக்கப் பெற்றுள்ள ஒரு சமுதாய அமைப்பையும், அதனுல் பலவீனப்பட்ட பாதுகாப்பு அரண்களையுமுடைய ஒரு பின்னணியில் நின்று பேதலிக் கின்ற இலங்கைத் தமிழ் மக்களுக்கு அண்ணு இப்பிரச்சினை யை அணுகிய தன்மை சிந்தனைக்குரியதாகும். தாழ்த்தப் பட்ட தமிழர்கள் - "தாழ்த்தப்பட்ட தான், "தாழ்ந்த” அல்ல-தாம் தமிழினத்திற்குப் புறம்பான உறுப்புக்கள் அல் லது தமிழினத்தின் உப உறுப்புக்கள் என்று எண்ணுது தமி பூழினத்தின் அடித்தளம் போன்ற உயிர் நாடியான உறுப் புக்கள் என்ற உணர்வு பெற வேண்டும் - என்று ஏனையோ ரால் கணிக்கப்பட வேண்டும்-எனப் போலும், அண்ணு அவர்களை 'ஆதித் தமிழர்" அல்லது ‘ஆதித்திராவிடர்” என்ற பெயர்களால் அழைத்தார். அரசியல் ரீ தி யா க அவர்களை ஒரு வலிமைமிக்க உறுப்பாக, சக்தியாக ஒரு மைப்படுத்தியதும் அண்ணுவே. ஒருமைப்படுத்தப்பட்ட அவ்வுறுப்பு தான் தனித்தன்மையானது என்ற உணர்வை யும், அதனுல் சாதி உணர்வையும், வளர்த்துக் கொள் ளாது, அந்த உறுப்பை தி. மு. க. விலிருந்து ஏனைய சமூக உறுப்புக்களுடன் இணைந்து இரண்டறக் கலந்து செயற்பட வைத்தார். அதாவது, ஒரு சாதிக்கென ஒரு சங்க ம் அமைக்கப்படுவதை வரவேற்ருரில்லை.
சாதியுணர்வை வளர்ப்பதற்கு ஏதுவாக அமைந்து பெயர்களோடு ஒட்டப்பட்டிருந்தவையான சாதிப் பெயர்களை நீக்கி எழுதவும், பேசவும் தலைப்பட்டவர் அண்ணுவே. தமிழ் நாட்டிலேயே எந்த இடதுசாரி இயக்கத்திற்கும் முன்னேடியாக, தம் எண்ணத்திலும் செயலிலும் அண்ணுதுரை முதலியார், இராமசாமி நாயக்கர், காமராஜ் நாடார், சிவஞானக் கிராமணியார் எனச் சாதிப் பெயரையும் இணைத்துப் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கத்தை இயக்கரீதியாக நிராகரித்தது தி. மு. க. அண்ணு தொடங்கிவைத்த இந்தச் சமூகப் புனரமைப்புப் பணி இன்று நிச்சயமாகவும் நிதானமாகவும், தமிழ்நாடெங் கணும் பரவிக் கொண்டிருக்கிறது.
98

கலப்பு மணம்
பெரியாரால் முன்மொழியப்பட்ட கலப்புத் திரும ணத் திட்டத்தை வழிமொழிந்தவரும் பர ந் த அளவில் செயற்படுத்தியவரும் அண்ணுவே. தி. மு. க. வின் தீவிரப் பணியினல் கலப்புமணம் செய்திட்ட இருவெவ்வேறு சாதிக ளுக்குரிய ஆணும் பெண்ணும் சமூகத்தின் கண்களில் புறக் கணிக்கப்பட்ட நிலைமாறி, பொதுவாக சமூகத்திலும், குறிப்பாக தி. மு. க. வட்டாரத்திலும், அவர்கள் செயற் கரிய செய்திட்ட தீரர்களாக மதிக்கப்படும் நிலை உருவா னது. இக் கலப்புமணங்களை அண்ணுவும், அவரை அடி பொற்றி ஏனைய தி. மு. க. த&லவர்களும் முன்னின்று நடாத்தி வைத்தமையால், தி. மு. க. வைச் சுற்றி வளர்த்த செல்வா க்கு கலப்புமணத் திட்டத்தையும் சுற்றி வளரலா யிற்று. தம் தலைவர்களின் ஆசிபெறுவதற்கு கலப்பு மணம் செய்வதே கணிப்புக்குரியதாகும் என்னும் நினைப்பு தி.மு.க. இளைஞர்கள் மத் தி யில் நிலைபெற்றது.
தீண்டாமையின் மென்னியைத் திருகி எறியும் சாதன மொன்றை கலப்புமணத் திட்டத்திலே கண்ட அண்ணு,தாம் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் முதல் நடவடிக்கை யாக கலப்புமணம் செய்தவர்களுக்கு தங்கப் பதக்கம் போ ன்ற அரசாங்க விருதுகள் வழங்கப்படும் அரிய திட்டத்தை வெளியிட்டார்; செயற்படுத்தினர். தொடக்க காலத் திலே சமூகத்தின் அடிமட்டத்திலே நிகழ்ந்த "அருவருப் பான செயலெனக் கருதப்பட்ட கலப்பு மணத்திட்டம், சமூக மதிப்பீட்டில் உச்சத்திற்கு உயர்த்தப்பட்டு, அரசின் ஆசியையும் பாராட்டையும் பெற்றதோர் திட்டமாக உரு மாறிற்றென்றல், இதனைச் சாதித்த அண்ணுவை அந்தப் பெருமை சாரட்டும். அண்ணு அளித்த இத்தூண்டுதல் சமு தாயத்தின் செயற்கை வேலிகளைத் தாண்டி இளைஞர் பலர் வெற்றிவீரர்களாகத் தாழ்த்தப்பட்ட "பெண்களைக் கைப் பிடிக்கவும், உயர் சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட இளை ஞர்களை மணக்கவுமான நிலையை பரந்த அளவில் விரிவு படுத்தியதன் மூலம், வேலிகள் வேண்டாதவை எ ன் ற உணர்வை ஊட்டி வருகிறது.
99.

Page 59
கல்விச் சலுகை
தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வித்துறையின் வளர்ச்சி அவர்களைச் சமூகத்தின் மட்டத்தில் உயர்த்தும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அண்ணு, அவர்களுக்கு ஏற்க னவே கல்வித்துறையிலிருந்த சலுகைகளைப் பெருக்கியது டன் புதிய சலுகைகளையும் ஊக்கத்தையும் உற்சாகத்தை யும் வழங்கினர். மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்ட சலுகைகள் குறிப்பிடத் தக்கவை. தாழ்த்தப்பட்ட வர்க் கங்களின் கல்வித் துறையும் ஆதனல் பொருள்வளமும் மேம் படும்போது சமுதாயத்தின் செயற்கை வேலிகள் உக்கி உலர்ந்து சரியத் தலைப்படுவது கண்கூடு. தமிழ் நாட்டின் பாரியபங்கினரான தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் தலையெ டுப்பதற்குத் துணைநின்ற தலைவன் அண்ணு என்பதை உறுதி செய்வான்டோலும், இன்று தமிழ்நாடு சட்ட மன் றத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து தெரிவு பெற்ற உறுப்பினர்களில் நூற்றுக்குத் தொண்ணுாறு வீதத்தினர் தி. மு க வினரே.
சீர்திருத்த மணம்
(2) கலப்புத் திருமணத்தோடு இணைந்த இனனுெரு புரட்சி சீர்திருத்தத் திருமணமாகும். தி. மு. க. தலைவர்க ளால் நடாத்தி வைக்கப் பெற்ற கலப்புத் திருமணங்கள் அனைத்தும் சீர்திருத்த மணங்களே. சாதிக்கு அடிப்படை இந்து தர்மம் என்ற கருத்து, சரியாகவோ தவருகவோ, நிலவிய காரணத்தினுல் கலப்புத்திருமணங்கள் சமய சடங் குகளின் றியே நடைபெற்றன. சமயச் சடங்குகளை நடாத்த வேண்டிய குரவர்களும் கலப்பு மணங்களில் பங்கு கொள் ளத் தயங்கியமை இன்னுெரு காரணமாகும் சீர்திருத்தத் திருமணங்கள் மிக வு ம் சிக்கனமுடையனவாகையால், பொருள்வளத்திலும் பின் தங்கியனவாகிய தாழ்த்தப் பட்ட சமூகங்களில் அண்ணுவின் ஆசியுடன் எண்ணிறந்த : சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றன. அண்ணுவின் ஆட்சிக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி இச்சீர்திருத்தத் திருமணங்களைச் சட்டபூர்வமானதாக்க மறுத்தது. இத னல், சட்டத்தின் கணிப்புப் பெருத சீர்திருத்தத் திரு
100

மணங்களைச் செய்துகொண்ட குடும்பங்கள் பல்லாண்டு காலமாக பல உரிமைப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண் டியிருந்ததுடன் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் சட்டத்தின் கண்ணில் தந்தையில்லாத குழந்தைகளாக" கருதப்படும் நிலை இருந்தது. அண்ணு முதலமைச்சரானதும் இத்திருமணங்களனைத்தையும் சட்ட பூர்வமானதாக்கிச் சட்டம் நிறைவேற்றினர்.
9 UEFL60s)
(3) பொதுமக்களின் போக்குவரத்து சாதனமாகிய பேருந்து (பஸ்) சேவையை அரசுடம்ையாக்கிய்மை அண்ணுவின் முற்போக்கான திட்டங்களில் ஒன்ருகும். பொதுமக்களுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் பயன்தரும் இத் திட்டத்தை பல செல்வாக்குள்ள வட்டாரங்களின் எதிர்ப் பின் மத்தியில் அண்ணு பொதுமக்களின் உடமையாக் கியமை சோஷலிசத்திற்கோர் வெற்றியாகும். எனினும் இத்திட்டத்தைப் படிப்படியாக அன்னர் செயற்படுத்தி வருவது அன்னரின் நிலைகுலையாத நிதானம் காட்டும். இத்திட்டம் படிப்படியாகச் செயற்படுத்தப்படுதலாலேயே வெற்றிகரமாகவும் செயற்படுத்தப்படுகிறது.
உச்சவரம்புடி
(4) செல்வம் ஒரு சிலரின் கையில் தேங்கிவிடக் கூடாது என்பதாலும் , ஓரளவு பொருளாதார சமபலத்தை உண்டாக்குதற்காகவும் தனிப்பட்ட நிலக்கிழார் வைத் திருக்கக்கூடிய நிலப்பரப்பின் உச்சவரம்பை அண்ணு குறைத்துள்ளார். தம்முடன் அரசியற் தோழமை பூண்ட சுதந்திரக் கட்சியினரின் எதிர்ப்பின் மத்தியிலேயே இதனைத் துணிகரமாகச் சாதித்தவர் அண்ணு. தனிப்பட்ட நிலக் கிழார்கள் அரசின் உணவுற்பத்தித் திட்டத்தை முறியடிக் கும் நோக்குடன் நிலத்தைப் பயிரிடாது தரிசாகப் போட் டால், அத்தகைய நிலத்தை அரசுடமையாக்குவதற்கு அர சாங்கம் தயங்காது என்ற அண்ணுவின் எச்சரிக்கை நிலக் கிழார்களைப் பணியவைத்ததுடன், நிதானம் மிக்க அண்ணு
O1

Page 60
வின் அகத்திலே நெறிபிழைத்தோரைத் தீய்க்கும் புரட்சி நெருப்பும் இருக்கிறது என்பதை தெரியத்தந்தது.
படியரிசித் திட்டம்
(5) அண்ணுவின் படியரிசித்திட்டம் இந்தியாவின் ஏனையமாநிலங்களிலும் மக்களின் எதிரொலிகளைத் தூண்டி விட்ட ஏற்ற மிகு திட்டமாகும். தமிழக அரசின் பொருளா தாரம் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு திட்டமாயினும், அதனைத் தீரமுடன் எதிர்நோக்கத் துணிந்தாரென்ருல், பசித்த மக்களின்பால் அண்ணுவுக்கிருந்த பரிவும் பச்சாத் தாபமும் ஆழமானதாகும். படியரிசித்திட்டம் வெற்றிகர மாக தமிழ்நாடெங்கணும் விரிவுபடுத்தப்படவில்லையென் பது உண்மையே. உற்பத்திப் பெருக்கமும், உள்ளதை சமநிலைப்படுத்தலும் தாம் சோஷலிசத்திற்கு ஏற்குமென் ரு ல், அண்ணு அதையேதான் சாதித்துள்ளார். அரிசி விளைக்கும் பகுதிகளுக்குக் கிடைக்கக்கூடிய அற்ப திருப்தி பையாவது அரிசி வாங்கும் பகுதிகளுக்கும் பங்கீடுசெய்ய முற்பட்டுள்ளார். இத்திட்டம் நல்லதோர் தொடக்கம் என்பதும், மக்கள் பசி போக்குவதில் அரசு காட்டும் ஆர் வத்திற்கும் அக்கறைக்கும் ஆணித்தரமான அடையாளம் என்பதும் பாராட்டுக்குரியனவே.
இலவசக் கல்வி
6. கட்டணமற்ற இலவசக்கல்வியைப் பல்கலைக்கழ கப் படிப்புவரை விரிவுபடுத்தியுள்ள அண்ணுவின் சாதனை விதந்தோதத்தக்கதாகும். இச்சாதனையால் தேறும் அரசி யல் வாய்ப்புக்கள் காங்கிரசுக்குக் கிட்டாது கழகத்திற்குக் கிட்டிவிடும் என்ற கலக்கத்தால் போலும், தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவர் திரு. சுப்பிரமணியம், காங்கிரசுத்
திட்டத்தைத்தான் கழக அரசு செயற்படுத்துகிறது; இதில்
புதுமையொன்றும் இல்லையென வாதிட முயன்ருர், இச் சாதனை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தர மானதே.
7. 1967ம் ஆண்டு முதலமைச்சரான அண்ணு நிதிய மைச்சர் என்ற முறையில் உருவாக்கிய வரவு செலவுத் திட்
102

டம் எவ்வளவோ பொருளாதார நெருக்கடிக்குள் தயாரிக் கப்பட்ட தாயினும் ஏழை எளியவர்களுக்கு வரி விலக்கும் வாழ்க்கைத்தர உயர்வும் அளித்த சோஷலிசத் திட்டமா கும். இந்தியாவின் பழுத்த சோஷலிசவாதிகளின் பாராட்டையும் பெற்ற திட்டமாகும்.
கழகத்தின் கன்னிப்பருவத்திலே கைத்தறியாளரின் கண்ணிர் துடைப்பதற்காகத் தனது தலைமைத் தகுதியை யும் புறக்கணித்துவிட்டுத் தம்பியருடன் தோளில் துணி மூட்டை சுமந்து கைத்தறி ஆடை விற்ற கைகளல்லவா அண்ணுவின் கைகள்? சோஷலிசவாதம் என்பது அனைத்து அரசியல்வாதிகளினதும் அலங்கார அணியாக திரிந்து விட்ட காலையில், அண்ணு தத்துவத் தர்க்கங்களிலும் சித் தாந்த விசாரணைகளிலும் ஈடுபடாமலேயே, ஒசைப்படா மலேயே சோஷலிசத்தைச் செயற்படுத்தினர்.
103

Page 61
"பார்கலந்த கீர்த்திப் பழைய திராவிடத்தை வேர்கலங்கச் செய்ய ..விரைகின்ருர் கார்குழலீர் காளேயரே வாரீரோ வாரீரோ!??
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
தென்னுட்டின் குரல் அண்ணு
1957 ஆண்டுத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று சட்ட மன்றத்தில் விவாதங் களின்போது தமிழ்மழை போழித்தும் மின்வெட்டுப் பேச் சுக்களால் அமைச்சர்களை மடக்கியும் அறிவும் தமிழின் திரு வும் கலந்து சொற்சிலம்பமாடிய அண்ணு, 1962ம் ஆண்டுத் தேர்தலில் தம்பியர் ஐம்பதின்மர் வெற்றி பெற்றும் தாம் தோல்வியுற்ருர் . அச்சேதிகேட்டு கழகத்துத் தம்பிகளின் இதயங்களிலிருந்து இரத்தம் கசிந்திட்டதாயினும், ஒரு விதத்தில் அது அண்ணுவின் அரசியல் வாழ்வில் ஒர் முன் னேற்றப்படியாகவே அமைந்தது. ஏனுகில், அண்ணு புது டில்லி மாநிலங்களவைக்கு (இராஜ்ய சபை)ச் செல்லவும், அங்கு அனைத்திந்திய அரசியல் அவதானிகளின் பார்வைக்கு இலக்காகவும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இத் தோல்வியே.
104

திராவிட நாட்டுக்காக.
புதுடில்லியில் மாநிலங்களவையில் தம் கன்னிப் பேச்சி லேயே அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துவிட்ட அண்ணு வின் குரல் தமிழ்நாட்டுக்காக மட்டும் ஒலிக்கவில்லை, தென்னடு முழுவதுக்குமாகவே ஒலித்தது. தி. மு. க. வின் மொழியில் கூறுவதானல், திராவிடநாட்டுக்காக ஒலித்தது. அண்ணுபிரிவினைக் கொள்கையைக் கைவிடுவதற்கு முன்னர் கோரிய திராவிடநாட்டின் நிலப்பரப்பு, திராவிட இனத் தவர்கராகிய தெலுங்கர், மலையாளிகள், கன்னடர், தமி ழர் ஆகியோரது மொழிவழி மாநிலங்களான ஆந்திரம், கேரளம், மைசூர், தமிழ்நாடு இவற்றைக் கொண்டதாகும். இவற்றுள் தமிழ் நாட்டைத்தவிர ஏனைய மாநிலங்களில், திராவிடநாட்டுக் கோரிக்கைக்கு அடிப்படையான ஆதர வைத் தி. மு. க. விஞல் பெறமுடியவில்லை என்பதோடு, அண்ணு தமக்காகப் பேசும் உரிமையை இம்மாநிலங்களோ, மைய அரசின் தலைவர்களோ அங்கீகரிக்கவில்லை. இதை யிட்டு காங்கிரசார் தி.மு.க. வை கிண்டல் செய்ததுண்டு.
அண்ணு மாநிலங்களவைக்கு வந்த பின்னர் இத்தக் கண்ணுேட்டத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. தென்னுட் டின் அரசியல் பொருளியல் உரிமைகளை அண்ணு தட்டிக் கேட்ட போதெல்லாம், அங்கனம் கேட்க அன்னருக் கிருந்த உரிமையை டில்லி வட்டாரங்கள் கணித்துக் கொண் டதுடன், இதர தென்னக மாநிலங்களும் அங்கீகரித்தனஅங்கீகரித்தன என்பதைக் காட்டிலும், தமது உரிமைகள் பற்றி மைய அரசைத் தட்டிக்கேட்கவேண்டிய தலைவன் அண்ணுவே என எதிர்பார்த்தன எனலாம். மைய அரசும் தென்னகத்தின் தேவைகளையிட்டு அண்ணுவின் கோரிக்கை களையே அளவுகோலாகக் கொண்டன எனலாம். அதாவது, அண்ணுவின் மனதுக்குத் திருப்தியென்ருல் தென்னகத்திற் குத் திருப்தியாக இருக்கும் என்ற கணிப்பு ஏற்பட்டது. மாநி லங்களவையில் அண்ணு பேசும்போது தமக்கும் சேர்த்துத் தான் அன்னர் பேசுகின்ருர் என்ற உண ர் வு இதர மாநிலத் தலைவர்களுக்கு இருந்தது. -
105

Page 62
இந்தி எதிர்ப்பு
1962ல் அண்ணு பிற மாநிலங்களில் பெற்ற இக் கணிப்பு படிப்படியாக வளர்ந்து 1965ல் முழுமை பெற்றது. தமது திராவிடநாடு கோரிக்கையை மு ன்  ைவ த் து தன் தலைமைக்கு இதர மாநிலங்களின் கணிப்பை பெறுவ தில் தவறிய அண்ணு இத்திஎதிர்ப்பின் ஈட்டிமுனை என்ற தகுதியைக் கொண்டு அக் கணிப்பைப் பெற்ருர். உண்மை தான்; விரிந்துபரந்த இந்திய உபகண்டத்திலேயே, இன்று வரை வடக்கிலிருந்து அவ்வப்போது வீறுகொண்டெழு கின்ற இந்தி ஆதிக்க வெள்ளத்தைத் தடுத்து, நிறுத்தி, தென்னிந்தியாவின் அரணுக நின்ற ஒரே சக்தி இந்தக் குள்ள உருவமான அண்ணுவே. இன்று மத்திய அரசுக்கு நித்திய தலைவலியைத் தருகின்ற மொழிப் பிரச்சிக்னயை இன்னும் பிரச்சினை என்று கூறும்படியாக வைத்திருந்ததே அண்ணு தான். ஒரு பிரச்சினையைத் தம் மக்களின் நலன் பேனும் விதத்தில் தீர்க்கமுடியாவிட்டால், தீர்க்கக்கூடிய சாத்தி யக்கூறுகள் காணப்படாவிட்டால், அது தம் மக்களின் நலனுக்கு விரோதமாகத் தீர்க்கப்படாது, பிரச்சினையைப் பிரச்சினையாகவே பாதுகாத்து, அடுத்த சந்ததியிடம் தொடர்ந்து போராடுவதற்காகக் கையளிக்க வேண்டியதே தலைவனின் கடப்பாடாகும். எதிர்ப்பு நெருப்பை அணைய விடக்கூடாது. எப்படியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் திறமைசாலியான தலைவனின் பண் பென் ரு ல், எத்த னையோ பிரச்சினைகளைத் தீர்த்திருக்கமுடியும், எத்தனையோ திறமைசாலிகளும் தோன்றியிருக்க முடியும். எப்படித் தீர்க் கப் பட்டது என்பதல்லவா திறம்ைக்கு உரைகல்
அணி திரட்டியும் . . . .
1965-ம் ஆண்டு தென்னிந்திய மாநிலங்கள் நான்கும் இந்தி எதிர்ப்புப் போரில் அண்ணுவுக்குப் பின்னே அணி வகுத்து நின்றனவென்ருல், அத்தச் சாதனை மிகவும் எளி தாகக்கிட்டியதொன்றன்று. இந் தி த் திணிப்பையிட்டு தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்கள் கவலைகொள் ளாத காலமொன்றும் இருந்தது. ஏன், தமிழ்நாட்டி லேயே இந்தி எதிர்ப்பு வெகுசன இயக்கமாக அன்றி, அண் ணுவின் தலைமையிலான செல்வாக்கற்ற சிறு கூட்டத்தின ரால் நடாத்தப்பட்டதுதானே. தமிழ்நாட்டின் கன தன
106

வான்கள் அனைவரும் இந்தி எதிர்ப்பைக் கிளர்ச்சிக்காரரின் கூச்சல் என்றல்லவா புறக்கணித்தனர். அவ்வளவு ஏன், இன்று இந்தியை எதிர்த்து கனல் கக்கும் முதுபெருந் தலைவர் இராஜாஜி கூட அன்று இந்தி எதிர்ப்பை நிராகரித்தவர் என் பதுடன் முன்பு இந்தியைத் திணிப்பதற்குத் தாமே கருவி யாகவல்லவா நின்றர். இங்ங்னம், உணர்ச்சியின்றி எழுச்சி குன்றிக் கிடந்திட்ட தமிழகத்தில் படிப்படியாக இந் தி ஆதிக்க எதிர்ப்புப் பேரணியொன்றை உருவாக்கி, தமிழ கத்து மனிதன் ஒவ்வொருவனையும் இந்தப் படையணியில் ஒர் பட்டாள வீரனுக்கிய பாங்கும், தமிழகத்தின் எல்லைக ளைத் தாண்டி, ஆந்திர, கன்னட, கேரள மாநிலங்களிலும் உணர்ச்சியலைகளைக் கொந்தளிக்கச் செ ய் த திட்பமும், தென்னடுகளின் எல்லைகளைத்தாண்டி வங்கக் கடலிலேயே இந்தி எதிர்ப்பு அலைகளைக் கொந்தளிக்கச் செய்த நுட்ப மும், தனியொரு மனிதனுடையவை என்பதையும், அம் மனிதன் சாமானியன் என்பதையும், அவன்தான் அண்ணு என்பதையும் எவரே மறுப்பார். இதனைச் சாதாரணமாகச் சாதிக்க முடிந்ததா ?
கண்காணித்தும் . . . .
1965-ம் ஆண்டு தென்னகமெங்கணும் அக்கினிப் பிழம் பாக வெடித்துச் சிதறிய இந்தி எ தி ர் ப் பு ப் பெரும் போருக்கு முன்னதாக, ஏனையோர் தூங்கிக் கிடந்த வேளை யில் 1937-ம் ஆண்டு தொட்டு அவ்வப்போது தலையெடுத் துத் தென்னகத்தின் மீது படையெடுத்த இந்தி ஆதிக் கத்தை அடக்குவதற்காக, நான்கு பெரிய போராட்டங் களையல்லவா நடாத்திஞர் ! எத்தனை தோழர்களைக் களப் பலி கொடுத்தார் . எத்தனை தடவைகள் சிறை சென்ருர் ! தி. மு. க. வின் தலைவர்களும் தொண்டர்களும் இத்துறை யில் செய்திட்ட தியாகம்தான் இன்று இந்தி ஆதிக்கத்திற் கெதிராக இடப்பட்ட வச்சிர அரணுகும். அண்ணு மேற் கொண்ட போராட்டத்தின் பயணுக, 1960-ம் ஆண்டு அன் றையப் பிரதமர் நேரு அவர்களே 'தென்னுட்டு மக்கள் விரும்புகின்ற வரையில் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும்" என்ற பாரதூரமான ஓர் உறுதிமொழியைப்
107

Page 63
பிரகடனம் செய்தாரென் ருல், போராட்டத்தின் வலிமை உணரற்பா லதாகும். இந்த உறுதிமொழியை அ ண் ணு தமிழ்நாட்டுக்காக மட்டும் பெறவில்லை; தென்னுடு முழு வ துக்குமாகவே பெற்றர். தொடர்ந்தும் அண்ணு ‘இந்தியா வின் பதினுன்கு மொழிகளும் ஆட்சி மொழியாகும் பக்கு வம்பெறும் வரை ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்க வேண்டும்', 'தொடர்புமொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும்" என்ற தமது மொழிக் கொள்கையில் விட்டுக்கொடாமலே, பிரதமர் நேருவின் உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம், அதற்குச் சட்ட அந்தஸ்து வ ழ ங் க வேண்டுமென வேண்டினர். மொழிப்பிரச்சினையில், தன் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு விநாடித்துளியிலும் தென்னுட்டு மக்களின் மொழி உரிமை யைக் காக்கவேண்டி தம் விழிகளை அகல விரித்துக் கொண் டும் செவிகளைச் செம்மையாகத் தீட்டிக்கொண்டும் கண் காணித்தார் அண்ணு. இக் கண்காணிப்பில் பிற்காலத்தில் அண்ணுவுக்குப் பெருந்துணையாக நின்றவர் இராஜாஜியா (5 lb.
“இந்தியாவின் பதினுன்கு மொழிகளும் ஆட்சி மொழி யாகும் பக்குவம் பெறும்வரை. "" என்ற வார்த்தை கள் அனுபவ சாத்தியமான கருத்தைக் கொண்டனவா? அரசியல்ரீதியாக அர்த்தமுள்ளவையா? அண்ணு இவ் வார்த்தைகளையிட்டு எவ்வளவு தூரம் விசுவாசமாக இருந் தார்? என்பனபோன்ற கேள்விகள் அரசியல் வட்டாரங் கள் சிலவற்றுள் இயல்பாகவே எழுந்ததுண்டு. தாம் ஆங்கில அடிமை என்ற அபவாதத்தையும் முறியடித்து, ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிப்பதையும் நிரந்தரப்படுத்துவதற் காக, நிறைவேற்றமுடியாத நிபந்தனையொன்றை விதித் தார் போலும் என்பது சில வட்டாரங்களின் ஐயமாக இருந்தது. இவ்வையப்பாடு தவருனதாக இருக்கலாம். எனினும் தர்க்கரீதியாகவே தோன்றுகிறது.
வெடித்த எரிமலை
1965ம் ஆண்டு எகிறி வெடித்த இந்தி எதிர்ப்பு எரி மலை தென்னுட்டின் உணர்ச்சிக் குமுறலின் உச்சக்கட்டத்
108.

தைத் தொட்டுக்காட்டியது. தமிழ்கூறும் நல்லுலகில் தமிழ்த்தாயின் விலங்கொடிக்கத் தமிழ்மறவர் நடாத்திய போராட்ட வரலாற்றில் தலையாய அத்தியாயம் தீட்டப் பட்ட ஆண்டு இதுவே. நூற்று ஐம்பதின்மருக்கும் மேற் பட்ட மறவர்கள், தாயின் மடியிலே தவழ்ந்திட்ட தீரர்கள் தாயின் அடியிலே தலைசாய்ந்து மடிந்தார்கள். பொலீசா ரால் வெறிநாய்களைப் போலச் சுட்டுவிழ்த்தப்பட்ட வீரர் கூட்டமும், தமிழ்த்தாயின் பெயரால் தமக்குத் தாமே எரி யூட்டித் தீக்குளித்த தீரர் கூட்டமும் சடசடவெனப் பிணமாகச் சரிந்ததால் எழுந்த பேரொலியும், தமிழ்நாட் டின் புத்தெழுச்சியின் வித்துக்களான மாணவ முத்துக்கள் இந்தி எதிர்ப்புப் படை நடாத்தியதால் எழுந்த பேரொலி யும், இந்தப் பின்னணியின் முன்னணியிலே நின்று தானத் தலைவன் அண்ணு இந்தி ஏகாதிபத்தியத்திற்கெதிராக எழுப்பிய போரொலியும் தமிழ்நாட்டின் எல்லைகளைக் கடந்து ஏனைய திராவிட மாநிலங்களிலும் எதிரொலித்தன. ஹைதராபாத்தும் (ஆந்திரம்) திருவனந்தபுரமும் (கேரளம்) பங்களுரும் (மைசூர் ) சென்னைக்குத் தாம் சளைத்தவை யல்ல என்பதை உறுதி செய்வது போல் போரொலி எழுப் பும் பாசறைகளாக மாறின.
இம்மாநிலங்களின் மாணவர்கள் இந்தி எதிர்ப் புப் போரை தம் மாநிலமெங்கணும் விரிவுபடுத்தினர். பொலிசாரின் வேட்டுக்கள் மு ழ ங் கி ன. ஏனைய மும்மாநிலங்களின் மாணவர் இயக்கங்கள் தமிழ்நாட்டு மாணவர் இயக்கங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டன. ஏனைய மாநிலங்களின் இந்தி எதிர்ப்பு இயக் கங்களிலிருந்து மொழிப்பிரச்சினைபற்றி விளக்க வருமாறு அண்ணுவுக்கு அழைப்புகள் பறந்தன. இம் மாநிலங்களின் அரசுக்கள் தங்களையும் மீறிய ஓர் சக்தி தம் மாநிலத்து அரசியலில் அலைகளை உண்டாக்குவதை உணர்ந்து நெற் றியைச் சுருக்கிக் கொண்டன, பின் புருவத்தை உயர்த்திக் கொண்டன. அந்தச் சக்தி அண்ணுதான் என்பதிலே ஆச் சரியமென்ன? அந்தச் சக்தியினின்றும் பிறந்த அதிர்ச்சி யலைகள் திராவிட மாநிலங்களில் மட்டும் பொங்கவில்லை, மேற்கு வங்காளத்திலும் பொங்கின. வளமும் வனப்பும் வாய்ந்த வங்காளமொழி இந்தி ஏகாதிபத்தியத்திற்கு இரையாகிவிட்க்கூடாது என அஞ்சிய மேற்கு வங்காளத்து
109

Page 64
இந்தி எதிர்ப்பினர் அண்ணுவைப் பேச அழைத்தனர். தி. மு. க. தம்பிகள் அண்ணுவின் ஆணை திராவிட மாநிலங் கள் நான்கிலும் அதிகாரபூர்வமுடையதாகவேண்டும் என காலமெல்லாம் விரும்பினர். அது ஒரு விதத்தில் நிறை வேறிற்றென்றே கூறவேண்டும். திராவிட மாநிலங்கள் நான்கினுக்கும் ஒரு தனி அரசியலமைப்பு, ஒரு தனிப்பண் பாட்டுப் பிணைப்பு, ஒரு தனி நிர்வாக இணைப்பு, ஏற்பட வேண்டும் என அண்ணு எண்ணியிருந்தார். அது ஒருமித்த உணர்ச்சித் துடிப்பு - இந்திக்கு எதிர்ப்பு என்ற வரையிலா வது நிறைவேறிற்றென்றே கூற வேண்டும். இதற்கு ஆதா ரமாக மூன்று நிகழ்ச்சிகளை கூறலாம்.
கிடைத்த வெற்றி.
* மொழி விடயத்தில் உறுதியற்றும், கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகவும் இருந்த ஏனைய மூன்று மாநிலங்களின் அரசுக்கள் மீதும் அண்ணுவின் மொழிக் கொள்கையோடு முரண்படாத மொழிக் கொள்கையை அவை கடைப்பிடிக்கவேண்டுமென்ற வற்புறுத்தல் - மொழிப் பிரச்சினையில் விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற அழுத்தம் - மாநிலத்தின் அரசியல் சிந்தனை யுடைய வட்டாரங்களிலிருந்து எழுந்தது. இதற்குப் பணிந்து அம்மாநிலங்களின் மூன்று அரசுகளும் தமிழ் நாடு அரசு செய்தது போன்று = அத்துணை தீவிரமாக இல்லாவிடினும் - தமது மொழிக்கொள்கை குறித்தும், இந்தி வெறிக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தும் அதிகாரபூர்வமான அறிக்கைகளை சட்டமன்றத்தில் வெளியிட்டனர்.
* மற்றைய மூன்று மாநிலங்களின் த லே வர் களு ம், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், இந் தி  ைய த் தென்னுட்டின் மீது திணித்தால் நாடு பிளவுபடும் என அண்ணுவின் தொனியில் எச்சரிக்கத் தலைப்பட்டனர். இங்ங்ணம் அவர்கள் புதுடில்லி நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் விடுத்த எச்சரிக்கைகள் தாக்க மானவை. உதாரணமாக, கேரளத்தின் புரட்சிவாத சோஷலிஸ்ற் கட்சி (R.S.P.) நாடாளுமன்ற உறுப்பின
110

ரான திரு. சுகுமாரன் நாயர் தென்னுட்டின் இந்தி எதிர்ப்பு எழுச்சியை அடிக்கடி மிகவும் உணர்ச்சிவசப் பட்டநிலையில் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறினர். “இத்தீவிரவாதப் போக்கை மாற்ருவிட்டால் தென்னடு நிச்சயம் பிரிந்து செல்லும் என்றும் எச்சரித்தார்.
* புதுடில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட் டில் பெரும்பாலும் இந்தி தெரியாத, ஆங்கிலமே தெரிந்த, முதலமைச்சர்கள் மத்தியில், ஆங்கிலம் தெரிந்த பீஹார் மாநில முதலமைச்சர் இந்தியில் பேசிய போது, எதிர்ப்புக்குரல் கொடுத்தவர்கள் ஆந்திர,
கேரள, மைசூர் முதலமைச்சர்களே. அண்ணு ' என் பணியை அவர்கள் செய்கின்ருர்கள்" என்று வாளாவி ருந்துவிட்டார்.
இந்த உணர்வைத்தான் அண்ணு " இந்தியக் குடியர சுக்குட்பட்ட திராவிடக்கூட்டாட்சி ? என்ற வார்த் தைகளில் வடித்தாரோ என்னவோ.
111

Page 65
"பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவியில் வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடும் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
இஃதெலாம் கேட்டும் . . . . .
-புதுமைக்கவி பாரதி.
ஈழத்தமிழர் கண்ட அண்ணு
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் வாழ்கின்ற தம்பியரின், குறிப்பாக கையடியும் வாயடியும்பட்டுக் கண்கலங்கித் தேம்புகின்ற திராவிடர்களின் நம்பிக்கையொளியாக, நந்தா விளக்காக உணர்வூட்டிய அண்ணு ஈழம்வாழ் இருபத் தைந்து லட்சம் தமிழ்பேசும் மக்களின் இதயங்களை ஈர்த் துக் கொள்ளவும் தவறவில்லை. உலகின் கோடியிலே ஒடுக் கப்பட்டு உரிமை பறிக்கப்பட்டு பெருமூச்சுவிடும் தமிழ் மக்கள் அண்ணுவைப்பற்றிய நினைப்பிலே ஒர் அரவணைப் பைக் கண்டது மானசீக உணர்வே. இத்தகையு இதயதாபங் களின் எதிரொலியாக, இதர நாடுகளிலே வாழும் தமிழ் மக் களின் உள்ளத்துடிப்புகளைப் புரிந்துகொண்டு தாமும் துடித் ததும், துவண்டதும் அண்ணுவின் தவரு அல்லது தம் நாட்
12

டுத் தமிழ் மக்களுக்கு மனித உரிமைகளை வழங்க மறுத்த மற்றைய நாடுகளின் தவரு? சைப்பிரஸ் நாட்டின் சிறு பான்மையினருக்காகத் துடிப்பது துருக்கியின் தவரு காது; அங்ங்ணம் துடிக்காவிட்டால் துருக்கியில் வாழ்பவன் துருக் கியனுமா கான்.
காக்கையின் உரிமைகூட . . . .
ஈழத் தமிழ் மக்களின் இன்னல்களைக் கண்டு அண்ணு இதயம் நெகிழ்ந்ததைக் கேட்டு இலங்கையின் புெரு ம் பான்மை வட்டாரங்கள் புரு வ த்  ைத நெரித்ததுண்டு. *இலங்கை அரசியலில் தி. மு. க. வின் தலையீடு" எனப் புது மையான வாதங்களும் நிறுவப்பட்டன. ஆயிரம், மைல்க ளுக்கப்பாலிருக்கும் வியட்நாம் பெளத்தர்களுக்காக மதத் தால் மட்டுமே ஒருமைப்பாடுடைய இலங்கைப் பெளத்தர் கள் நேசக்குரல் எழுப்பியதையும் அமெரிக்க ஆக்கிரமிப்பா ளர்க்கெதிராக ஆட்சேபக்குரல் எழுப்பியதையும் இயல் பானதாக, நியாயமானதாக இவ்வட்டாரங்கள் போற் றின. உண்மைதான்; பெளத்தனுக்காக ஒரு பெளத்தன் துடிக்காவிட்டால் வேறு யார் துடிப்பது. ஆயிரம் மைல்க ளுக்கப்பாலிருக்கும் அரேபியர்களுக்காக மதத்தால் மட் டுமே ஒருமைப்பாடுடைய இலங்கை இஸ்லாமியர்கள் துடிப் பதும், இஸ்ரேலுக்கெதிராக கண்டனக் கூட்டங்கள் நடாத் தியமையும், எகிப்து-இஸ்ரவேல் யுத்தத்தில் எகிப்தியருக் காகப் போராடத் தொண்டர்களை அனுப்ப விருப்பம் தெரி வித்தமையும் இயல்பானதாக, நியாயமானதாகப்படுகிறது இவ்வட்டாரங்களுக்கு. பாராட்டுக்குரியதே இஸ்லாமிய னுக்காக இஸ்லாமியன் துடிக்காவிட்டால் வேறு யார் துடிப்பது? எனினும், ஆயிரம் மைல்களுக்கப்பால் அல்ல, அண்டை நாட்டில், அதிலும் வெறும் மதத்தால் மட்டு மல்ல, பிறப்பால், இனத்தால், மொழியால், பண்பாட் டால், வரலாற்ருல், ஊனல், உயிரால், உதிரத்தால், உணர்வால் இலங்கைத் தமிழர்களோடு உறவுகொண்ட தமிழர்கள், அத்தமிழர் தலைவன் அண்ணு, இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் துடிப்பதை இந்த வட்டாரங்களால் புரிந்துகொள்ள முடியாது போயினமை பரிதாபமே. தமிழ
113

Page 66
னுக்காகத் தமிழன் துடிக்காவிட்டால் வேறுயார் துடிப் பதோ? கரைகின்ற காக்கையோடு இணைந்து கத்துகின்ற காக்கைக்கூட்டத்தின் உரிமைகூடச் செத்துவிட்டதோ தமிழ்க்குடிக்கு?
இதயத் துடிப்பு
நிறவெறிக்கெதிராகவும் நீக்கிரோவரின் உரிமைக ளுக்காகவும் இந்த நாட்டில் அடிக்கடி கண்ணிர் வடிக்கப் படுகிறதே. நீக்ரோவரின் விடுதலை வேட்கையுடன் ஒரு மைப்பாடு தெரிவித்துக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன; நல்லது, நயமானது. நீக்ரோவன் இங்குள்ள பெரும்பான்மை வட்டாரங்களுக்கு உற்ருனே, உறவினனே அல்லன்; மாமஞே மைத்துனஞே அல்லன்; ஆளுல் மனிதன். ஆபிரிக் காவின் ஒடுக்கப்பட்ட நீக்ரோ மனிதனுக்காக இலங்கையி லுள்ள மனிதன் மனித உணர்வினுல் ஒன்றுபட்டுத் துடிக் கிருனென்றல், அண்டைநாட்டுத் தமிழன் இந்நாட்டுத் தமிழனுக்காக, தமிழனென்ற உணர்வுடன் துடிக்காவிட் டாலும் மனிதன் என்ற உணர்விலாவது துடிப்பது மாச்ச ரியமுடையதா? அன்றி, ஆச்சரியத்துக்குரியதா? அண்ணு வுக்கும் இலங்கைத் தமிழர்க்குமிடையில் ஏற்பட்டது அரசிய லடிப்படையிலான ஆட்சேபகரமான தொடர்பல்ல, இனத் தொடர்பாலான இதயத்துடிப்பு, இயல்பான துடிப்பு. "இலங்கை அரசியலுக்கும் எமது அரசியலுக்கும் தொடர் பில்லையெனத் தெட்டத் தெளிவாகக் கூறிஞர் அண்ணு. தொடர்புபடுத்திப் பேசப்பட்ட அரசியற் குறும்பர்களின் பேச்சுக்களை “வெறும் பிதற்றல்" என வைதார். இலங்கைத் தமிழ்மக்களைப் பாதுகாக்கப் படை அனுப்புவேன் என அவர் கூறவில்லை: அவரிடம் இராணுவப்படை இருந்தது மில்லை. பெரிய வல்லரசுகளான உருஷ்ஷியாவுடனும் செஞ்சீளுவுடனும் அரசியல்ரீதியாக இணைந்து செயலாற்று கின்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் இயக்கங்களைக் கண்டு புரு வத்தை நெரிக்காத பெரும்பான்மை வட்டாரங்கள், அல் லற்பட்ட அபலை உள்ளங்கள் இரண்டின் உறவின் கணுக்க ளிலே ஆபத்தான உணர்வுகள் கரந்துறைவதாகக் கற்பனை செய்து ஒலமிடுவது புரிந்துகொள்ள முடியாத ஓர் புதுமை.
114

இருமுனைப் பணி
இலங்கைத் தமிழ் மக்களுக்காக அண்ணு துடித்த காலை யிலெல்லாம் சட்டபூர்வமான, சந்தேகத்திற்கிடமளிக்காத, அரசியற் பண்பாட்டு வரம்புசஞக்குட்பட்டே தமது இதயத் தின் எதிரொலிகளை எழுப்பினர். இந்நாட்டின் தமிழர் சார் பில் அண்ணுவின் பணி இருமுனை கொண்டதாகும். ஒரு முனையில், இத்திய அரசு இலங்கை அரசுடன் கொண்ட நட் புறவையும் நல்லெண்ணத்தையும் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் வழங்கச் செய்யவேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பினுர் . மறுமுனையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வர முயன்ருர் . உலக அபிப்பிராயம் எத்துணை சக் தி வாய்ந்த ஆயுதம் என்பதை உணர்ந்த அண்ணு ஈழம்வாழ் தமிழ்மக்களின் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் ஐக் கிய நாடுகள் சபைக்கு விண்ணப்பமறு அனுப்பிய சேதி வேடிக்கையான செயலல்ல.
1958-ம் ஆண்டு ஜூன் மாதம் - பத்தாண்டுகட்கு மேலாகியும் திரும்பிப் பார்க்க முடியாதபடி படுபயங்கர நினைவுகள் கப்பிவிட்ட நாட்கள். த மி ழ் ம க் களு  ைட ய இரத்த வெள்ளம் 'ஏன்-எப்படி?, என நெற்றியைச் சுருக்கி நோக்குவோர் எவருமின்றி மிகவும் தாராளமாக நாதி யற்று வீதியெங்கணும் ஒடிய நாட்கள். உயிரிழந்தும், உட லுறுப்பிழந்தும், உடமையிழந்தும், பெண்கள் மானமிழந் தும், தலைவிரிகோலமாகத் தமிழ்மக்கள் கூவியழுத நாட் கள். தமிழ்மக்களின் கூக்குரல் அண்ணுவுக்குக் கேட்டது போலும். 1958-ம் ஆண்டு 'ஜூன் 22-ம் தேதி இலங்கைத் தமிழர் உரிமைத் தினம்" எனப் பிரகடன்ப்படுத்தி தமிழ் நாடெங்கணும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் பொதுக் கூட்டங்களையும் தமது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு செய் வித்தார். இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை விளக்கும் சுவரொட்டிகள் தமிழ்நாடெங்கணும் கண்ணிரின் காவியம் தீட்டின. சென்னை மாநகரில் நேப்பியர் பூங்காவில் அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட பிரமாண்டமான கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழ்
115

Page 67
நாட்டுமக்களின் இரத்தத்துடிப்பை வெளிப்படுத்தியது டன், இலங்கை அரசியல்வாதிகள் தி. மு. க. அரசுக்கு அறைகூவல் விடுப்பதுபோலவன்றி, வரம்புக்குட்பட்டுச் செயல்படும் அண் ணு வின் அரசியல் வாய்மையையும் உணர்த்திற்று.
1961-ம் ஆண்டு இலங்கையின் வடக்குக் கி ழ க் கு மாகாணங்களின் நிர்வாக இயந்திரங்களே செயலற்றுப் போகும் படி, தமிழ்மக்கள் பொலீஸ் தாக்குதல் இராணுவப் பயமுறுத்தல் இவற்றையும் தம் தியாகத்தால் சமாளித்து நடத்திய போராட்டத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி திரு வல்லிக்கேணிக் கடற்கரையில் அண்ணு மாபெரும் கூட் டத்தை ஒழுங்குசெய்தார். தமிழ்நாட்டு மக்களின் தார்மீக அனுதாபத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், தமது நட் புறவைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் உரிமைகளை வழங்குமாறு இந்திய அரசு இலங்கையைக் கோரவேண்டும் என்னும் வகையிலும், தீர்மானங்களை முன்மொழிந்து பேசிய அண்ணு நாலுகோடித் தமிழர்களின் குமுறும் உணர் வுகளை அரசியல் வரம்புநெறிகளை மீருது நாகரிகமாகப் படம் பிடித்துக் காட்டினர்.
உலகைக் கூவியழைத்து . . . . .
இலங்கைத் தமிழ்மக்களுக்கு இயக்கரீதியான தார்மீக ஆதரவைத் தெரிவித்துக்கொண்ட அண்ணு, தமது தனிப் பட்ட உள்ளக் கிளர்ச்சிகளைத் 'திராவிடநாடு’ (தமிழ்), *ஹோம்லண்ட்” (ஆங்கிலம்) இதழ்களின் மூலம் தேரியத்தந் தார். வாய்ப்புக்கிடைத்த வேளையிலெல்லாம் தமிழர்தம் வேதனைகளை வடித்துக் காட்டவும் வெளியுலகுக்கு எடுத்துக் கூறவும் தவறிஞரில்லை. எடுத்துக்காட்டாக,
* ஹோம்லண்ட் 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி இதழ் அக்கோரநாட்களின் கொடுமைகளைச் சித்தரித் ss. Saosi GS)35uisit is Lu2a).5Gir' (Cinderellas in Ceylon) என்ற தலைப்பில் முதற்பக்கத்தில் ஒரு விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழ்மக்கள் என்ற மங்கை இலங்கை
16

யில் காலஞ்சென்ற பண்டாரநாயக்காவால் மானபங்கம் செய்யப்படுவது போலும், மங்  ைக ஒலமிடுவதாகவும், அதையிட்டு பிரதமர் நேருவும் காமராஜரும் பாராமுக மாசு வேறுபுறம் பார்த்து நிற்பதாகவும் கேலிச்சித்திரம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
* "ஹோம்லண்ட் - 29 ஜூன், 1958 இதழ் 'இலங் கைத் தமிழர் உரிமைத் தினத் , திற்கென ஒதுக்கப்பட்டு, இத்தினத்தின் நிகழ்ச்சிகள் பற்றி ய செய்திகளோடும் செய்திப்படங்களோடும் வெளிவந்தது.
* ஹோம்லண்ட் - 20 ஜூலை 1958 இதழ், வகுப்புக் கலவரத்தின்போது ஓர் இரவிலேயே உடமையிழந்து ஒட் டாண்டியான தமிழர்களின் கண்ணிரால் தீட்டிய கடிதங்க ளேத் தாங்கிவந்தது.
* "ஹோம்லண்ட்"-10 ஆகஸ்ட் 1958 இதழில் முதற் பக்கத்தில் 'அணி திரள்க! நீதி கோருக! தமிழர்களைக் காட்டிக்கொடாதே! பண்டாவின் கொடுரச் செயல்கள் உலகுக்குத் தெரியட்டும்’ எனத் தலைப்புகளிட்டு அண்ணு உணர்ச்சிமயமானதோர் கட்டுரையைத் தீட்டினர். தமிழ்த் தலைவர்களைச் சிறையிலடைத்துவிட்டு நியாயமான அளவு தமிழ் பாவிப்புச் சட்டத்தைப் பண்டாரநாயக்கா நிறை வேற்றிய நேரம் அது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தாம் வரம்பு மீறி நின்று வாதிடவில்லையென்பதையும், தமது நோக்கம் என்ன என்பதையும் கோடிட்டு, தடித்த எழுத்தில் அழுத்திக் காட்டினர் அண்ணு.
-That does not necessarily mean, demand .... 6ه ing a Tamil Raj comprising Tamil Nad and that portion of Ceylon wherein Tamilians are in a majority ... The task immediately ahead is to focus public attention on the problem. World opinion should be harnessed to the cause for justice and fairplay. The plight of the Tamilians in Ceylon should be placed before the discerning public all over the world.....'
17

Page 68
இதன் தமிழாக்கமாவது:
" . இது தமிழ்நாட்டையும் இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக உள்ள பகுதியையும் இணைத்து ஒர் தமிழ்ராச்சியம் அமைக்கக் கோருவதாக அர்த்தமாகாது. எம்மை உடனடியாக எதிர்நோக்கியுள்ள பணி இப் பிரச்சினையின் பால் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்ப தாகும். தர்ம நியாயத்திற்காக நடைபெறும் போராட்டத் திற்கு அரணுக உலக மக்களின் கருத்தைத் திரட்டிப் பிணைத்துக் கொள்ள வேண்டும். உலகெங்கணுமிருக்கின்ற விஷயமறிந்த மக்கள் மன்றத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் பரிதா பமான நிலை எடுத்துரைக்கப்பட வேண்டும். . . p.9
* 'ஹோம்லண்ட்-14,டிசம்பர் 1958 இதழ் 'இலங்கை மொழிக் கலவரத்தின்போது தமிழர் துரத்தப்பட்டனர், துகிலுரியப்பட்டனர், நையப்புடைக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். காடையர்கள் சுதந்திரமாக செயற்பட் டனர். மாஞ்செஸ்டர் கார்டியனின் அதிகாரபூர்வமான படப்பிடிப்பு'எனத் தலைப்பிட்டு இங்கிலாந்திலிருந்து வரும் *மாஞ்செஸ்ரர் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்த கட்டு ரையை மறுபிரசுரம் செய்திருந்தது.
* "ஹோம்லண்ட்-23,ஆகஸ்ட் 1959 இதழில் 'இலங் கைத் தமிழர் எனத் தலைப்பிட்டு *டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டின் ஆகஸ்ட் 11ம் திகதி இதழில் இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமாகத் தீட்டப் ஆசிரியத்தலையங்கத்தை மறுபிரசுரம் செய் ساسكالا திருந்தார்.
* "ஹோம்லண்ட்- 28,மே,1961 இதழில் 'அவசரகால நிலைப் பிரகடனம் அவசியமற்றது. இராணுவத்தினரின் அட்டுழியத்திற்கு கண்டனம்' எனத் தலைப் பிட் டு இலங்கைச் சனப்பிரதிநிதிகள் சபையிலும் செனட் சபை யிலும் திருவாளர்கள் சிவசிதம்பரமும், மூதவை உறுப் பினர் நடேசனும் ஆற்றிய உரைகளை மறுபிரசுரம் செய் திருந்தார்.
118

* ஹோம்லண்ட்-4 ஜூன் 1961 இதழில் 'பிரச்சிஜன யின் பிடியில் இலங்கை’ எனத் தலைப்பிட்டு அமெரிக் காவிலிருந்து சுரேந்திரநாத் என்பவர் இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி எழுதியதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.
* இலங்கைத் தமிழர்களின் போராட்டச் சேதிகளை 'திராவிடநாடு' தவருது தமிழ்நாட்டுக்கு அறியத் தந்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அண்ணு எவ்வாறு கண்காணித்தார், அவற்றையிட்டு எவ்வளவுதூரம் கண் கலங்கினர் என்பது நோக்கற்பாலது. அத்தோடு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை நன்கறிந்தோர், அவை அகிலத்தின் கண்களை ஈர்க்கத்தக்கனவாக ஆங்கிலத் தில் வெளிவருவதன் அவசியத்தை உணர்வர். இத்துறை யில் அண்ணு ஆற்றிய பணி இன்றியமையாதது.
அண்ணுவின் வாழ்வில் உடைப்பெடுக்காத ஓர் உணர்ச்சிப் பெருக்கு அன்னரின் மறைவிலே உடைப் பெடுத்து வரம்புகளை மேவிப் பாய்ந்திருக்கிறது, ஈழத் தமி ழகத்திலே. அந்த உணர்ச்சிப்பெருக்கின் ஊற்றுக்கள் இன்னும் அடைபடவில்லை.
119

Page 69
'தமிழர்ய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் 99
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
முதலமைச்சர் அண்ணு
1967-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றியீட்டி யதைத் தொடர்ந்து மக்களின் உற்சாகப் பெரும்பேரலை கள் எழுப்பிய வாழ்த்தொலி சுற்றி வளைத்துக்கொள்ள, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எந்தவொரு முதலமைச்' சருக்கும் கிடைக்காதவாறு மக்கள் ஆதரவும் தோழமைக் கட்சிகளின் நல்லெண்ணமும் உறுதுணைநிற்க, அண்ணு முத லமைச்சராக அரசுக்கட்டில் ஏறினர். அண்ணு தம் ஆட்சிக் காலம்வரையில் இந்த மக்கள் ஆதரவும் மற்றையோர் நல்லெண்ணமும் அருகாவண்ணம் பேணிஞர் என்பதுமட்டு மல்ல அவற்றைப் பெருக்கிக்கொண்டார் என்பதும் அன்னு ரின் பெருமைக்கும் திறமைக்கும் ஒரு முத்திரையாகும். அண்ணு இதனைச் சாதிப்பதற்கு ஏதுவாக இருந்த அடிப் படை வலிமை அவரது தன்னடக்கமாகும். எத்துணைக் கெத்துணை அவர் பெருமைபெற்ருரோ, அத்தனைக்கத்தனை அன்ஞர் எளிமை பெற்ருர் . தி. மு. க. ஆட்சியமைந்ததும் வாழ்த்துவதற்கென சென்னை நகரின் மரீனு கடற்கரையில்,
120

திரண்டுநின்ற லட்சோபலட்சம் மக்கள் மு ன் னி லை யில் பேசிய அண்ணு, தமிழ்நாட்டின் தலைமை கிடைத்த பூரிப் பில், தன் நிலைமை மறந்து தலைகால் தெரியாது பேசின ரில்லை. 'சாமானியனுன என்மீது இத்துணை ந ம் பிக்  ைக வைத்து என்னிடம் இந்தப் பாரிய பொறுப்பைத் தந்துள் ளிர்களே, உங்கள் நம்பிக்கைக்கு நான் தகுதியுடையவன் தானு?’ என்றல்லவா மக்கள் வெள்ளத்தைப் பார்த்துத் தன்னடக்கத்துடன் கேட்டார். இந்தக் கேள்வியின் உணர் விலேயே அண்ணுவின் ஆட்சியின் வெற்றிக்கான உ ட் க ரு அடங்கியிருந்தது. தனது ஆற்றலின் எல்லைகளை அறிந்திருந் தார் அவர்.
நிதானமே நிலைக்களன் . . . . .
அண்ணுவின் ஆட்சியின் அழுத்தமான ஓர் அம்சம், நிதானமாகும். உணர்ச்சிப் பெருக்கும் புரட்சிப் போக்கும் நிறைந்த சூழ்நிலையில் ஆட்சிக்குவந்த அண்ணு, அர சமைப்பு உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட, உண்மை நிலைகளுக் குட்பட்ட கைங்கரியம் என்பதைத் தமது ஆதரவாளர் சுளுக்கும் தம்பியருக்கும் அவர்சளுக்கே புரியக்கூடிய மொழி யில் கூறிவைத்தார்.
... ... புதிய மரபுகளைப் புதிய ஆட்சியால் ஏற்படுத்து வோம் என்றுதான் நம்பி வந்தோம். ஆணுல் இன்றிருக்கும் நிலையில் செட்டாகக் குடும்பத்தை நடத்தி நல்ல பெயர் எடுக்க நினைக்கும் குடும்பத்துப் பெண் போன்ற நிலையில் இருக்கிருேம் ' என்று மயக்க மெதுவுமற்ற நிலையில் தெளி வாகக் கூறிவைத்தார். ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண் டவுடனேயே இராஜாஜியின் ஆசியைப் பெற்றுக்கொண்ட அண்ணு, காங்கிரஸ் தலைவர்கள் உ புட் பட தமிழ்நாட்டின் ஏனைய முதுபெரும் தலைவர்களுடைய ஆசியைப் பெற்றுக் கொள்ள விழைந்தமை அந்நிதானப்போக்கை நிச்சயப் படுத்துவதாகும். தம் ஆட்சிக்காலம் முழுவதும் அண்ணு இந்நிதானத்தை வெவ்வேறு உருவில் கடைப்பிடித்த காட் சிகள் பல. அவற்றுட் சிலவற்றை நோக்கின் .
121

Page 70
எடுத்துக்காட்டுகள்
கட்சிப்பற்றற்றவராக நடுவுநிலையில் நிற் க வேண்டிய மாநில ஆளுநர் (கவர்னர்) சர்தார் உஜ்ஜயில் சிங் காங்கிரஸ் கட்சியே மீண்டும் பதவிக்கு வரும் என்ற நினைப்பில் தேர்தல் காலத்தில் தி. மு.க. வுக்கு எதிராக சில குறிப்புகளைக் கூறினர். பொதுத் தேர்தல் சமயத் தில் தி. மு. க. வினர் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுப் பினராயினும், ஆட்சிக்கு வந்த பின்னர் - இந்நிகழ்ச் சியைவைத்து அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தியி ருக்க முடியுமாயினும் - அண்ணு பெருந்தன்மையுடன் ஆளுநரே நாணத்தக்க முறையில் இவ்விடயத்தை மறந்து செயலாற்றினர். இதஞல் மனம்நெகிழ்ந்த ஆளுநர் அண்ணுவின் பால் அளப்பரிய அ ன்  ைப யும் மதிப்பையும் வளர்த்துக்கொண்டார். அண்ணு பிரிந்த போது தம் ‘அரும் சகோதரன்’ பீரிந்ததாகவல்லவா ஆளுநர் துயருற்ருர் .
தி. மு. க. வுடன் கூட்டணியமைத்திருத்த தோழமைக் கட்சிகளில் தீவிர வலதுசாரியான சுதந்திராக் கட்சியி னரும் தீவிர இடதுசாரியான இடதுசாரி கம்யூனிஸ்டு களும் அண்ணுவைத் தத்தம் பக்கம் இழுக்க முற்பட்ட னர், அண்ணு இருதுருவங்களை யும் தவிர்த்து நிதான
மான ஒரு நடுவழியே நடந்தார். போக்குவரத்து பஸ்
வண்டிகளை அரசுடமையாக்குவதை சுதந்திராக்கட்சி விரும்பவில்லை. இருந்தும் அண்ணு அவற்றை அரசுட மையாக்கினர். ஆக்கிடும்போதும் இடதுசாரியினர் விரும்பியதுபோல் ஒரே நாளில் அனைத்தையும் அரசு டமையாக்கவில்லை. தாம் விரும்பியவாறு, படிப்படியா கவே ஆக்கினர். மதுவிலக்குக் கொள்  ைக  ைய க் கைவிடும்படி இடதுசாரியினர் கோரினர். அண் ணு பிடிவாதத்துடன் மறுத்து நின்றர். இதனல் தமது நிதானப் போக்கையும், எல்லோர்க்கும் இனியராயி னும் தாம் எடுப்பார் கைப்பிள்ளையல்ல என்பதையும், சொந்த புத் தி யி ல் இயங்குபவர் என்பதையும் நிலை நிறுத்தினர். ‘நீங்கள் இடதுசாரியினரா வலதுசாரியி னரா?’ எனச் செய்தி நிரு பர் க ள் விஞவியபோது,
122

'நான் இடதுசாரியோ வலதுசாரியோ அல்ல; ஆனல் நான் சரியானதைச் செய்ய விரும்புகிறேன்?" என்ருர், (“I am neither a right ist nor a leflist; but I like to do the right thing.'") .
தமிழ் மாநிலத்தின் உரிமைகளை மைய அரசிடம் மிக வும் கண்டிப்புடன் தட்டிக் கேட்டுக்கொண்டே, மாநில அரசு - மைய அரசு இவற்றுக்கிடையே நல்லெண்ணத் தையும் வளர்த்துக் கொண்டார். இதஞல், மைய அர சின் தலைவர்கள் அண்ணுவின்பால் அச்சத்தோடு கூடிய ஒரு மதிப்பையும் தனிப்பட்ட அன்பையும் வளர்த்துக் கொண்டனர். அண்ணுவின் மறைவின்போது பிரத மர் இந்திரா காந்தி உட்பட, ஏனைய மைய அரசின் தலைவர்கள் விடுத்த செய்திகள் இந்த உணர்வுகளின் பிரதிபலிப்புகளே. ۔۔۔۔
தமிழ்நாட்டு மாணவர்கள். தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கை எழுப்பி தி. மு. க. அரசுக்குத் தர்மசங்கட மான நிலையை உண்டாக்கியபோது, அண்ணு அவர் களை நேரடியாகச் சென்று கண்டு, அவர்களது கோரிக் கையைக் கைவிடுமாறு செய்தார்.
தொழிலாளர்கள் விவசாயிகளது உரிமைகளைப் புறக் கணிக்காமலும், உணர்ச்சிகளைப் புண்படுத்தாமலுமே, தொழிலாளர்-முதலாளிகள், விவசாயிகள்- நிலக் கிழார் இவர்களிடையே இணக்கமான நல்லுறவை ஏற்படுத்த முயன்ருர்,
தகுதியாற் சிறந்தும்.
அண்ணுவுக்கு சட்டமன்றத்தினுள்ளே ஓர் முதலமைச்
சருக்கு வேண்டிய வலிமையும் பண்புகளும் நிறைந்திருந் தன. சட்டமன்றத்திற்குப் புறத்தே இருப்பதைக் காட்டி லும், மன்றத்தினுள்ளே ஒரு முதலமைச்சரின் ஆணை அவர் தலைமைதாங்கும் கட்சியினரை வலிவுடன் கட்டுப்படுத்துவ தாக இருக்க வேண்டும். அண்ணுவின் ஆணையோ மன்றத்தி னுள்ளேயும் புறத்தேயும் தம்பியருக்கு ஆண்டவன் கட்டளை
123

Page 71
யாகவன்ருே அமைந்தது. எதிர்க்கட்சியினரின் கொள்ளத் தக்க கருத்துக்களைக் கொண்டு, அவர்களை மதித்து அணைத் துச் செல்லும் அத்தியாவசியப் பண்பு அண்ணுவினிடம் பரந்து கிடந்தது. சிரித்த முகத்துடன் எதிர்க்கட்சியினரை எதிர்கொண்டவர் அவர். அத்தோடு எதிர்க்கட்சியின் விவாதங்களுக்கு விடையிறுத்து, முடக்கு வாதங்களை மடக்கி, குறுக்குப் பேச்சுக்களை நறுக்கிப் பேசும் அறிவுக் கூர்மையுடன் அமைந்த நாவன்மை அண்ணுவின் தனியுட மையாக இருந்தது. உதாரணமாக “உங்களுடைய (ஆட் சியின்) நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, (*Your days are numbered') என்ற எதிர்க்கட்சியினரின் குறுக்குப் பேச்சை, “எனது காலடிகளை அளந்தே எடுத்து வைக்கிறேன்' ("My steps are measured') 6T60Ti, inst pipi di Su Jarian LD யர் அண்ணு
பணியினுற் பொலிந்தும்.
அண்ணு தன் ஆட்சிக்காலத்தின்போது சமூக பொரு ளியல் துறைகளில் நிறைவேற்றிய "சோசலிசத் திட்டங்கள்" வேருே ரிடத்தில் கூறப்பட்டுள்ளன. இத்திட்டங்களனைத் தும் ஏழை எளியோர்கள் ஏற்றம் பெற்றிட வகுக்கப்பட்ட னவே ' ஏழை மக்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கி ருர்கள். நாங்கள் உருப்படியாகப் பல செய்தேயாகவேண் டும்” என்றேர் கடமைத்துடிப்பை அடிக்கடி தம் துணைய மைச்சர்களான, சட்டமன்ற உறுப்பினர்களான, தம்பி மாரிடம் நினைவூட்டிவந்தவர் அன்னர், ஏழ்மையிலே பிறந்து ஏழ்மையிலே வளர்ந்து ஏழ்மைத் துடிப்புகளை எடை போட்டுவைத்திருந்த அண்ணு ' ஏழைகளுக்காக என்ன செய்யலாம்?" என்ருேர் வேட்கையை வளர்த்து வந்ததுடன், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதலாக அல்லும் பகலும் சிந் தித்து வந்தார். ஊருறங்கும் வேளையிலும் உடலுறங்காது, விடியற்காலம் இரண்டுமணிவரை நாளாந்தம் விழித் திருந்து அவர் பணியாற்றியமை இந்த வேட்கையினலே யாம். கர்மவீரன் என்பார்களே; அண்ணுதான் அந்தச் சொல்லுக்கு விளக்கமா? ஏழைகளின் உணர்வோடு தமக் குள்ள ஒருமைப்பாட்டைப் புலப்படுத்த, தமது சம்பளத்
124

தையும், ஏனைய அமைச்சர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகி யோரின் சம்பளத்தையும், எந்த மாநிலத்திலும் இல்லா ததுபோல் குறைத்தே பெற ஏற்பாடு செய்தார் அண்ணு.
மதுவிலக்குக் கொள்கையின் தார்மீக தர்ம நியாயங் களை ஆராயுமுன்னர், அது ஏழை எளியோரின் ஏற்றத் திற்கு அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மது பாமரரான ஏழைசளின் வாழ்வைச் சூறையிட்டு விடும் என்ற எண்ணமே அண்ணுவைக் காந்தியடிகளின் மது விலக்குக் கொள்கையை உறுதியுடன் கடைப்பிடிக்கத் தூண்டிற்று. தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்தியிருந்தால், தி. மு. க. அரசுக்கு மதுவரியாக கோடிக்கணக்கான பணம் கிடைத்திருக்கும் என்பதையும் காந்தியடிகளின் வாரிசுக்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோரான் காங்கிரசார் ஆட்சி நடாத்தும் மாநிலங் கள் பல இதனுல் மதுவிலக்கைக் கைவிட்டு, தம் ஆட்சி வலிவுபெற ஏதுவாக வருமானத்தைப் பெருக்கிக் கொண் டன என்பதையும், அவற்றுள் சில தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் என்பதையும், கூட்டாக எடுத்துக் கணிக்கும் போது அண்ணுவின் கொள்கையுறுதி பாராட் டத்தக்கதாகும்.
தென்னுட்டுக் காந்தி
அண்ணுவின் r உறுதியான மதுவிலக்குக் கொள்கை, எளிமை,வன்முறையற்றபோராட்டங்கள், ஏழை எளியோர் பாலும், தாழ்த்தப்பட்டோர்பாலும் பெருங்கருணை, இலட் சோபலட்சம் ஆதித்திராவிடர்களின் (ஹரிஜனர்கள்) உள் ளத்திலே கொலுவீற்றிருந்த மாட்சி, ஏழைக்குத் தொண்டு செய்வதில்தான் இறைவன் தொண்டு அடக்கம் என்ற நம் பிக்கை, இன்னேரன்ன பண்புக்களால் ஈர்க்கப்பட்ட கழக வட்டாரங்கள் அண்ணுவைத் தென்னுட்டின் காந்தி என அழைத்தனர். இந்த உவமை மாற்றுக் கட்சி வட்டாரங்க ளில் ‘காந்தியடிகள் எங்கே அண்ணு எங்கே ; அண்ணுவை மகான் காந்தியுடன் ஒப்பிடுவதா?’ எனக் கிண்டல் செய்யப் பட்டதுண்டு. அண்ணுவை தென்னுட்டின் காந்தியென
125

Page 72
அழைத்தார்களே தவிர, அண்ணல் காந்தியடிகளை இந்தியா வின் அண்ணு எனக் குறிப்பிட்டார்களில்லையாகையினல், இத்தகைய உவமைகளால் இருவரையும் ஒரே தரத்தினரக் கக் கருதினர் எனக் கூறுவது பொருத்தமற்றதாகும். அண் ணலின் தன்மைகளை அண்ணு பிரதிபலித்தார் என்பதே கருத்தாகும். உவமானப் பொருள் அண்ணலும் உவமேயப் பொருள் அண்ணுவும் என்பதை உணர்ந்தோர், அண்ணு வைத் தென்னுட்டின் காந்தி என அழைத்தமை சாலப் பொருத்தமே என ஏற்பர்.
தமிழ்ப்பணி
தமிழ்ப்பணி செய்தற்பொருட்டு தமிழன்னை ஈன்றெ டுத்த தவப்புதல்வனும், தமிழ்மக்களின் தவப் பயனுமாகிய அண்ணு, தன் ஆட்சி அமைத்திட்ட வினடிமுதல் மருத்துவ மனை நுழையும் வரை தேர்ந்து தேர்ந்து ஆற்றிய தமிழ்ப் பணியை எழுதப்புகின் அது தனியொரு காப்பியமாகும். சுருங்கக் கூறுவதாயின், இந்தத் தலைமுறையில் எவளுெரு வன் இங்ங்ணம் பணிசெய்தான் எனக்கேட்கலாம். ஆங்கிலம் இத்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும் எனக் கோரிய அதே உறுதியுடன் தமிழ்நாட்டில் அரசின் பணியனைத்தும் தமிழ்மயமாக்கிய தகவு தொட்டு உலககினத்தும் புகழ் பரக்க உலகத் தமிழாராயச்சி மாநாடு நடாத்திய மகிமைவரை அண்ணு எத்தனை அற்புதங்களைப் படைத்தனர்! எதிர் காலத் தமிழ்த் தலைமுறைகளுக்கு உயிர்ப்புள்ள எப்பெரும் தமிழ்ச் செல்வம் சேமித்து வைத்தனர்! தமிழர்தம் வாழ் வுக்கு அன்று மூவேந்தர் சேர்த்திட்ட நலன் அனைத்தும் இன்று முதலமைச்சர் அண்ணுவன்ருே சேர்த்தனர்! தமிழ் மக்களின் உணர்ச்சிப்பசி தீர்த்து, எழுச்சிக்குப் பலம் தந்த பஞ்சாமிர்தப் படையலில் சில பதார்த்தங்களை மட்டும் சுவை பார்ப்போமா?
* தமிழ்நாடு’ 1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ் நாடு எனப் பெயர்
சூட்டிய பேராண்மை - ஆம், பேராண்மைதான் - தமிழர்தம் பெருவரலாற்றுப் பேரேடுகளில் எழுதித்
126

தொலையாத பெருமை மிக்கதல்லவா? என்று தணியும் இந்தத் தாகம் எனத் 'தமிழ் நாடு' எனப் பெயர் மாற் றம் காண ஏங்கிக்கிடந்த தமிழர்கள் இதற்கென மேற் கொண்ட போராட்டங்கள் கொஞ்சமா? காங்கிரசா ரின் ஆட்சிக்காலத்திலே பழுத்த பழம் பெரும் காங்கி ரஸ்வாதியான சங்கரலிங்கம் அவர்களே "தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டுமாறு உண்ணுநோன் பிருந்து உயிர் நீத்தார். காங்கிரசாரின் முரட்டுப் பிடிவாதம் தளர வில்லை. அன்று சங்கரலிங்களுருக்காக வழக்குரைத்த அண்ணு, 'தமிழ் நாடு’ பெயர் மாற்றம் கோரி ஆயிரம் மேடைகளில் முழங்கியும் எண்ணற்ற தலையங்கங்களில் கருத்துக்கள் வழங்கியும் வாதிட்டு வந்தார். தமக்கு அரசுரிமை கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தமிழ்நாடு பெயர்மாற்றத்தை நிறைவேற்றி விட்டுத்தான் விழி களை மூடினர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தினுல் 6 C. LO 6ðir தாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட பெயர்மாற் றக் கோரிக்கைக்கான தீர்மானம், அண்ணுவின் மறை வுக்குச் சின்னுட்களுக்கு முன்னர், அவர் மீண்டும் நோயின் வாய்ப்பட்டிருந்த நேரத்தில்தான், புதுடில்லி நாடாளுமன்றத்திலும் நிறைவேறி சட்ட அந்தஸ்துப் பெற்றது. இதனையொட்டிய மகிழ்ச்சிப் பெருவிழாவில் அண்ணுவைக் கலந்துகொள்ளவொட்டாது மருத்து வர்கள் தடுத்தபோது, அண்ணு கூறிய வார்த்தைகள் அன்ஞரின் உள்ளத்தில் எழுச்சிகொண்ட தமிழ்க்காமம் பற்றிக் கூறுவன. 'தமிழ்த்தாய் ஏற்றம் பெறும் இந்த விழாவில் தமிழனுகிய என்னுல் கலந்துகொள்ள முடியவில்லையென்ருல் இந்த உடலிருந்தே பயனில்லை யென்று, என்னுடலுக்கு ஊறு நேருமென்று தடுத்த டாக்டர்களிடமும் நண்பர்களிடமும் கூறிவிட்டு வந்து விட்டேன்" என்ருர், இத்தத் திருவிழா நடந்து ஏறக் குறைய ஒரு மாதத்திற்குள் அண்ணு மறைந்து விட் டார். இப் பெரும்பணிக்காகத்தான் அண்ணு பிறப் பெடுத்தாரா என்றே கேட்கத் தோன்றும். இப்பணி ஒரு தனி அவதாரம் சாதித்திருக்கவேண்டிய பெரும் பணிதான் என்பதில் ஐயமேது?
127

Page 73
சென்னை மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சித் தலை வர்கள் தமது புதுடில்லி மைய அரசின் காங்கிரஸ் தலை வர்களைக்கொண்டு வேளையோ டு சாதிக்கமுடியாத பெயர் மாற்றத்தை, தி. மு. க. அரசு தமது மாற்றுக் கட்சியான காங்கிரசாரின் மைய அரசைக்கொண்டு சாதித்ததென்ருல் ,அந்தத் தனித் திறமை அணணுவின் அரசியல் தகைமையாகும். அதிலும், ஏனைய கட்சிகளே யும் அணைத்து, இக்கோரிக்சையைத் தமிழ்நாட்டின் ஒரு மனமான வேண்டுகோளாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பிய வண்ணமும், மைய அரசும் ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறை வேற்றிய வண்ணமும், வீண் ஆர்ப்பாட்டம் எதுவு மின்றி அரசியற் சட்ட ரீதியாக இம்மாற்றம் நிகழ்ந்த வண்ணமும், இவ்வெற்றியை முழுமைப்படுத்துவன வாரும்.
*ஆகாஷ்வாணி’ என இந்திமொழியில் வழங்கிய தமிழ் நாட்டின் ஒலிபரப்புத் துறையை முன்பு இருந்தது போல் 'வானெலி என மாற்றம் பெற ஏற்பாடு செய் தார். இம் மாற்றத்திற்கெனத் தமிழ்நாட்டை காங்கி ரஸ் கட்சி ஆண்ட நாட்களில் நடந்த கிளர்ச்சிகளையும், முத்தமிழ்க்காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் போன் ருேர் போராட்டம் நடத்தி சிறைப்பட்டதையும், இன் னுேரன்ன பின்னணிகளையும் அறிந்தோர், இச்சாதன யின் தன்மையினை உணர்வர்.
இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுச் சிறைப்பட் டோரைச் சிறைவீடு செய்ததும், வழக்குத் தொடரப் பட்டோரின் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்ற தும் அண்ணுவின் ஆட்சியின் துணிவான செயல்களா கும். நிதானப் போக்குள்ள அண்ணு, சட்டமும் ஒழுங் கும் மதிக்கப்படவேண்டுமென்பதில் அசையாத நம் பிக்கை கொண்டவர்; தமிழ் நாட்டில் சட்டம் அவ மதிக்கப்படுகிறது என்ற அவதூறு தமக்கு நேரலாம் எனத் தெரிந்தும் இவர்களை விடுதலை செய்வித்தாரென் ரு ல், தாம் எந்தக் கொள்கையை முன்வைத்து, எவ
28

ரெவரின் தியாகத்தின் பயணுக, ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறவாமையே காரணமாகும். "தி. மு. க. அர சின் கண்களில் இந்தி எதிர்ப்பாளர்கள் சட்ட விரோதி களல்லர்’ என்ற அண்ணுவின் உறுதியான தொனி ஒரு இலட்சியவாதியின் தொனியாகும்.
தமிழ் மாநாடு
4.
தமிழ் வளர்த்த வேந்தராட்சியின் காட்சியைக் காட்டி ஞற்போல், அரசின் யந்திரமனைத்தும் தமிழ்ப்பணியி லீடுபடுத்தி, தமிழ்கூறும் நல்லுலகினரை அழைத்து அண்ணு ந டா த் தி ய இரண்டாவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டின் சிறப்பு சொல்லருந்த கைத் தே. மாநாட்டைத் தமிழகத்தில் நடாத்துவது ஏற்கனவே தீர்மானமானதாயினும், குறித்த காலத்தில் அண்ணு வின் ஆட்சி பதவிக்கு வந்தது தமிழ்த்தாயின் சக்தி யாற் போலும்.
சிறப்புப் பண்புகள்
முதலமைச்சர் அண்ணுவின் தனித்தன்மையான பண்பு
கள் சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாகும்.
( ஜனநாயகத் தத்துவங்களையிட்டு சிலருக்கு கருத் து
வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், அண்ணு ஜன நாயகப் பண்பாடுகளின் நிலைக்களஞக இரு ந் தா ர். 1962-ம் ஆண்டுத் தேர்தலில் திரு. காமராஜர் விருது நகர் தொகுதியில் தி. மு. க. இளஞனுல் தோற்கடிக் கப்பட்டார். இச்செய்தியையிட்டுத் தமது கருத்தை வினவிய நிருபர்களிடம் அண்ணு, திடுக்குற்றேன்' என்ருர்,
மிகவும் இளகியமனம் படைத்தவாரன அண்ணு, பழைய விசுவாசம், நட்பு, அன்பு இவற்றை மீற முடி யாதவராக இருந்தார். "பெரியாருக்கு மட்டுமே உரிய இடம் எனத் தி. மு. க. வின் தலைவர்' என்ற பதவியை என்றும் காலியாகவே வைத்திருந்த அண்ணு, தி.மு.க.
129

Page 74
1967-ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்றதும், தேர்
தல் காலத்தில் தம்மை எதிர்த்துநின்றவர் என்பதை யும் பாராட்டாது, தம்பியருடன் சென்று பெரியாரின் ஆசியை வேண்டிநின்ருர், தம் அரசியல் வாழ்வில் தலை யாய முன்னேற்றம் கண்டபோது, தம்மை ஒருகாலத் தில் ஆளாக்கி, இவ்வெற்றிப்பாதையில் செல்ல வழி கோலிய அரசியற் குருவை நன்றி யு டன் நினைத்துக் கொண்ட அண்ணுவின் உள்ளம் , தம் வெற்றி கண்டு தந்தை பெரியார் மகிழ்வாரே தவிர மனக்கொதிப் படையார் என எண்ணிய உள்ளம், பரந்த, மாசிமறு வற்ற உள்ளம். இப்பெருமுள்ளம் கண்டு பெரியாரே நாணமுற்ருர் .
விட்டுக்கொடுக்கும் தளர்ந்த மனத்தினரான அண்ணு மொழிப்பிரச்சினையில் மிகுந்த உறுதியைக் கைக்கொண் டார். மைய அரசின் மும்மொழித் தி ட் ட த்தி ற்கு (இந்தி, ஆங்கிலம், மாநில மொழி) எதிராக அண்ணு இருமொழித் திட்டத்தை (தமிழ், ஆங்கிலம்) செயற்
படுத்திய உறுதி நோக்கற்பாலது.
அண்ணுவின் எளிமையும், இனிய பண்பும், ஆட ம்
பரமோ ஆர்ப்பாட்டமோ அற்ற தன்மையும் நாடறிந் தவை. இவை எவரும் அன்னுரை எளிதில் அணுக ஏது வாயிருந்தன. முதலமைச்சரான பின்னரும் த மது போக்கை மாற்றிக்கொண்டாரில்லை. புகைவண்டி நிலை யத்தில் நின்று தம் சட்டையை மாற்றி அணிந்து கொண்ட ஒரே முதலமைச்சர் அண்ணுவே.
முதலமைச்சரானபின் அண்ணுவின் போக்கில் ஏற் பட்ட மாற்றம் ஒன்றே - அதுவும் நண்பர்களால் திணிக்கப்பட்டது. வெற்றிலைக்காவிபடிந்த பற்களும், கலைந்த தலையும், ஷேவ் செய்யாத முகமும், கசங்கிய உடைகளுமாக காட்சி தந்த அண் ணு, தலைவாரிக் கொள்ளவும், ஒழுங்காக உடையணியவும் தினமும் சவ ரம் செய்துகொள்ளவும் பயிற்றப்பட்டார்.
30

தொண்டுள்ளம்
தொண்டுள்ளத்தின் தூய்மையாலும், பொது ம க் க ளுக்கு நல்வாழ்வு தரவேண்டும் என்ற பான்மையாலும் , தன்னையொறுத்துப் பணியாற்றி, உணவையும், உறக்கத் தையும் ஓய்வையும் ஒழித்து தம் உடல்நலத்துக்கு ஊறு தேடிக்கொண்டவர் அண்ணு. அமெரிக் காவிலிருந்து சிகிச்சைபெற்று வந்தபின்னரும் கூடவிடியற்காலை இரண்டு மணிவரை பணியாற்றும் தன் வழக்கத்தை மாற்றினரில்லை. இந்த ஆர்வம் அன்னரின் உயிரையே அரித்துண்டது.
அண்ணு முதலமைச்சராகப் பணியாற்றிய காலமோ
மிகவும் குறுகியது - இரண்டே இரண்டு ஆண்டுகள் அதி
லும் நோய்வாய்ப்பட்டு உள்ளூரிலும், அமெரிக்காவிலும்
மருத்துவமனையில் கழித்த நாட்கள் போக எஞ்சியது ஏறக்
குறைய ஓராண்டே, இந்த ஓராண்டிலும் தமிழ்மக்கள் மன்த்திலே அன்னர் விதைத்திட்ட இனிய நினைவுகளும் விளேத்திட்ட இன்பக் கனவுகளும் ஓராயிரத்திற்கு மேல். அன்ஞரின் மறைவின்போது அன்னுர்பால் ஈர்க்கப்பட்டி ருந்த நெஞ்சங்கள் எத்தனை கோடியோ ?
'குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு"
என்பதல்லவோ குறள்,
131

Page 75
“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
யாம் எந்தையும் இலமே?”
- பாரி மகளிர் (பறநானூறு)
அமரர் அண்ணு
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் ஒளிக்கதிர் பரப்பிய எழு ஞாயிறு திடீரென மேலைக்கடலில் மூழ்கி விட்டான். இவ் வாண்டு பெப்ரவரி மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கழிந்து 22 நிமிடங்களின் மேல் அண்ணுவின் விழிகள் நிரந் தரமாகவே மூடி நீள்துயிலில் ஆழ்ந்துவிட்டன. கொடுத்து வைக்காத தமிழினத்தைக் கூவியழவிட்டு நின்றதுபோல் நின்ற தலைவன் நெடும்பயணம் போய்விட்டான். தமிழ்த் தாயின் தலைமகன் அண்ணுவின் பிரிவு என்ற பேரிடியால் தாக்குண்ட தமிழ்கூறும் உலகின் இதயத்திலிருந்து இன்னும் இரத்தம் கசிந்துகொண்டே இருக்கிறது.
கேள்விக் குறிகள்.
இந்திய அரசியல் அரங்கைப் பொறுத்தவரை அண்ணு வின் மறைவு பல கேள்விக்குறிகளைத் தூக்கி நிறுத்திவிட் டது. அண்ணுவின் மறைவு இந்திய துணைக்கண்டத்தின்
32

அரசியல் மட்டத்தில் எட்டுத்திக்குகளிலும் எதிரொலித் ததென்ருல், அவ்வெதிரொலி அண்ணுவின் செல்வாக் கான கைப்பிடிக்குள் அன்ஞர் கட்டுப்படுத்திவைத்திருந்த சக்திகள், அகில இந்திய அரசியலிலே அண்ணு கொள்ள இருந்த பங்கு, அதன் பரப்பு, இவற்றின் தன்மைகளைக் கூருமல் கூறிற்று. உலர்ந்து வரும் காங்கிரஸ் கட்சி, உறுதி யற்ற ஒருமைப்பாட்டு உணர்வு, அதனை உறுதிசெய்யும் ஒரேவழியான மைய அரசில் வேண்டிய தென்னுட்டின் தலைமை, அத்தலேமைக்கான பிரதிநிதித்துவ் ப் பெருமையு டைய பகைமையுமற்ற தகமை, அடுத்த பொதுத்தேர் தலில் மைய அரசில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமை வதற்கான நிலைமை- இத்தகைய பின்னணியில் அண்ணுவின் வாழ்வு இந்தியாவின் வரலாற்று ஓட்டத்தையே மாற்றி அமைத்திருக்கலாம். அண்ணுவின் பிரிவையொட்டி இந்தியா வின் முதுபெரும் ஞானியும், அண்ணுவின் மதிப்புக்கும் அன் புக்கும் உரியருமான இராஜாஜி தெரிவித்த அனுதாபச் செய்தியின் இறுதிவரிகள் பொருள் பொதிந்தவையாகும்.
*". நான் எவ்வளவுதூரம் மனம் நொந்து போயிருக் கிறேன் என்பதை அனைவரும் அறிவர். ஏன் மனம் நொந் திருக்கிறேன் என்பதையும் அறிவர்" என்ருர் . உண்மை தான், அண்ணுவின் ஆட்சி தமிழ்நாட்டில் அமையவேண்டு மென்ற ஆரூடத்தை வெற்றிகரமாகக் கணித்த இராஜாஜி இன்னும் என்னென்ன திட்டத்தைத் தீட்டியிருந்தனரோ,
உறைந்த துயரம்
- அண்ணுவின் பிரிவிலே தமிழ்நாடு உற்ற துயரையும் இராஜாஜியின் தேர்ந்த வார்த்தைகளிலேதான் இரத்தி னச் சுருக்கமாகக் கூறமுடிகிறது. இரங்கல் கூட்டத்தில் இராஜாஜி பின்வருமாறு கூறினர் :- " . இளைஞர்களாகிய உங்களது மனவேதனையை அழுது கண் ணி ருட ன் கரைத்துவிடுகிறீர்கள். நான் கிழவன்; என்னுல் அழமுடி யாது. என் துயரம் அத்தனையும் உள்ளத்தில் உறைந்து போயிருக்கிறது' என்ருர், தமிழ்நாட்டின் துயரமும், ஏன், தமிழ்கூறும் நல்லுலகின் து ய ர மும் உறைந்துபோயிருக் கிறது.
133

Page 76
ஏழ்மையிலே பிறந்து எளிமையிலே வாழ்ந்து எளியவர் களாலேயே தமிழ்நாட்டின் தலைமைப்பதவிக்கு உயர்த்தப் பட்ட அண்ணு, முதலமைச்சராக மறைந்தபோது, இரா ணுவ, பொலீஸ் அணிவகுப்புகளுடன் மரியாதைப் பீரங்கி கள் முழங்க, இராசோபசாரங்களுடன் அன்ஞரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலட்சியக் கனவுகள் கண்ட அண்ணுவின் ஆன்மா இவற்றையெல்லாம் தமது பணிக்குக் கிடைத்த பாராட்டுகளாக எண் ணி ப் பூரித்திருக் சமுடி யாது. அன்ஞரின் நிலையான சுற்றத்தினரும் சொந்தக்கார ருமாகிய தெருவோரத்து மனிதர்கள் வழங்கிய பாராட்டு ரையைப் படம்பிடித்துக் காட்டுகிருர் 'இந்தியன் எக்ஸ் பிரஸ்' செய்தி நிருபர். 'அவரே கடவுள்' என மகுடமிடப் பட்ட அச்செய்தியைச் சிறிது பார்ப்போமா ?
*அவரே கடவுள்"
* கண்ணிர் இறந்த ஒருவருக்கு உயிரூட்டுமென்ருல் திரு. அண்ணுதுரை இன்றும் உயிருடனிருப்பார். அன்னரின் பூ த வுட லை க் கடைசித் தடவையாக ஒருமுறை பார்த்து விடக்காத்திருந்த இனந்தெரியாத ஆயிரக்கணக்காஞேர் அவருக்காக அழுதனர். பொதுமக்கள் பார்வைக்கென அண்ணுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இராஜாஜி மண்ட பத்திலும், அதனைச் சுற்றியிருந்த பரந்த மைதானத்திலும், அதனைச்சுற்றிப் பல மைல் கணக்கில் விரிந்திருந்த வீதிகளி லும் ‘அண்ணு நீ போய்விட்டாயே’’ என்ற வேதனைக் குரல் தொடர்ந்து கேட்டது. அவர்களில் கூவி அழுதவர்கள் ஏழையரிலும் ஏழையரே. அவர்களுக்கு அன்னர் ஒர் அண் ணன் - கொஞ்சமாவது அவர்களுக்கு ஆறுதல் தந்த உற வினன். பெண்கள் மட்டுமல்ல, வளர்ந்த ஆண்களும் நான மின்றி, துன்பத்தை அடக்கமுடியாது கூவி அழுதனர் ' d இராஜாஜி மண்டபத்தை நோக்கி கரைபுரண்டு வந்த லட்சோ பலட்சம் மக்களில் ஒரு சிறுபகுதியினரே மண்டபத் தினுள்ளே நு  ைழ ந் து பூதவுடலுக்கு இறுதிமரியாதை செலுத்த முடிந்தது. ஆயிரக்கணக்காஞேர் நகருள் முக்கிய இடத்தில் நிறுவப்பட்டிருந்த அன்னரின் முழு உரு வ ச் சிலைக்கு மரியாதை செலுத்துவதுடன் தி ரு ப் தி ப் பட வேண்டியிருந்தது. சிலையிருந்த இடத்திலும் முடிவில்லாத
134

வரிசைகள் உண்டாகிவிட்டன. சிலைக்குமுன்பாகவும் பலர் விழுந்து வணங்கி நகர மறுத்ததால் தூக்கிச்செல்ல வேண்டி யிருந்தது. பெண்கள் தேற்றமுடியாதவர்களாயினர். பலர் சிலையின் அடித்தளத்தில் தமது தலையை மோதினர். பலர் பித்துப்பிடித்தோர் போலாயினர். ஒரு பெண் தரை யில் வீழ்ந்து மேலே சிலையை வெறித்துப் பார்த்தவண்ணம் "நீயே என் தெய்வம்! நீயே என் தெய்வம்! நீ எப்படி என்னை விட்டுவிட்டுப் போனுய்" என்று தொடர்ந்து கூக்குரலிட் டாள். அவள் கணவனும் மகனும் கண்ணிர்மல்கியபடியே அவளைத் தூக்கிச் சென்றனர் 9
(இந்தியன் எக்ஸ்பிரஸ்' - 5 - 2 - 1969)
ஏழை எளியவர்களின் தலைவன் ஒருவனுக்கு இதைவிட
என்ன பாராட்டு வேண்டும். அண்ணுவின் ஆன்மாவுக்கு,
தனது பணியை ஏழை எளியோர் அங்கீகரித்தனர், அதற்கு அடையாளமாகத் தன் பிணத்தின் மீது கண்ணிர் சிந்தினர் என்பதைத் தவிர ஆனந்தம் தருவது ஏது? அண்ணுவின் மறைவுகேட்டு ஏக்க்த்தால் உயிர் நீத்தோர், துயரம் தாளாது தற்கொலை செய்துகொண்டோர், விரக்தியினுல் உயிரை வெறுத்து அபாயகரமான நிலைக்கு ஆளாகி உயிர் துறந்தோர் என் போர் முப்பதுக்கும் மேற்பட்டோ ரென்றல், ஒரு தலைவனின் மகிமைக்குச் சான்றென்ன வேண்டும். எந்த நாட்டிலும், எந்த இயக்கத்தின் தலைவ னுக்கும் நமது தலைமுறையில் கிடைக்காத நற்சான்றுகளல் லவோ இவைகள்? சரித்திர நாயகர்கள் ஈட்டாத,
எடுத்துக் காட்டாத, சான்றுக்களல்லவோ!
தமிழர்க்கொரு பொற்காலம்
வரலாற்றுப் பேராசிரியர்களே! வருக. இருபதாம் நூற்ருண்டின் இடைக்காலத்திலே தமிழர் வரலாற்றிலே இங்கோர் பொற்காலம், புறநானூற்றுக் காட்சிகளும் பூம் புகார்க் காட்சிகளும், தங்கத் தமிழ் வளர்த்த சங்க காலக் காட்சிகளும் காணிரோ. இத் தமிழ்த்தானைத் தலைவனின் சாகாத சரித்திரம் படைக்கீரோ. காவி யப் புலவர்களே! கன்னித் தமிழ் வளர்த்த காவலனின் புகழ் கூறும் காப்பி
135

Page 77
பங்கன் பாடீரோ, ஓவியப் புலவர்களே! இன்று பிடிசாமப ராய்விட்ட பெம்மான் முடிசார்ந்து மூவேந்தராண்டிருந்த அரசுக் கட்டில் வீற்றிருந்த காட்சி தீட்டிரோ. சிற்பக் கலை ஞர்களே வம்மின்! சிந்தனைச் சிற்பி அண்ணுற்வின் அற்புதக் கோலங்களைச் செதுக்குமின். நாடகமும் நாட்டியமும் ஆடு கின்ற கூட்டங்களே ! அண்ணுவின் ஆக்கங்களை ஆட்டத்தில் தோற்றீரோ, இசைவலாளர்களே கேட்டீரோ, தமிழிசை காக்கத் தருக்கிப் தலைமகனின் இசைபற்றிப் பாடீரோஅந்திப் பொழுதினிலே ஆடுகின்ற ஆரணங்கீர்! தென் னன் தமிழ் மகனைத் தெம்மாங்கில் பாடீரோ.
136


Page 78


Page 79