கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இதோ ஒரு வெளிச்சம்

Page 1

* ( :¿No.|×
£ €

Page 2


Page 3

இதோ ஒரு வெளிச்சம்
ஆக்கியோன்: தி.க. சந்திரசேகரன்
வி.ரி.வி. பவுண்டேஷன் லிமிடெட்
267, செட்டியார் தெரு கொழும்பு - 11.

Page 4
முதற்பதிப்பு: 1996 அக்டோபர் உரிமை : வி.ரி.வி. பவுண்டேஷன் லிமிடெட்
விலை:ரூ. 100/-
இந்த நூலின் விற்பனையால் வரும் முழுத்தொகையும், கொழும்பு ஜிந்துப்பிட்டி அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணி நிதிக்கு வழங்கப் பெறும்.
சொ.இரமேஷ், ! ser ஓவியர்: அ. சந்திரஹாசன், காத் ம், சென்னை எதிர்மறை சக்தி வண்ண ஆய்வகம், சித் திரிப்பேட்.ை சென்னை அச்சு குவாட்ரா அச்சகம், தத் சென்னை கட்டாளர்: செந்தில் கட்டாளரகம், திரு க்கேணி சென்னை ܬܹܬܐ
ல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்,
காத்தளசகம், 4 முதல்மாடி, 834, அண்ணாசாலை, சென்னை - 600 002. தொலைபேசி 83 45 05.
 

முகவுரை
நூற்றுக்கணக்கானப் பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்கங் கள், தலைமைப் பண்பு முகாம்கள்.
தொழிற்சாலைகளில், கல்லூரிகளில், ஜூனியர் சேம்பர் இயக்கங்களில். பல இந்தியாவில், சில அயல்நாடுகளில்.
பெரும்பாலானவை மனித வளத்தை மேம்படுத்தி, மனித ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட நிகழ்ச்சிகளாக இருக்கும்.
. இங்கெல்லாம் பேசும் போது என் உள்மனத்தைச் சில கேள்விகள் அரித்துக் கொண்டேயிருக்கும்:
'திருவள்ளுவர், டேல்கார்னிகி, நெப்போலியன்ஹில், வைன் டபள்யூ டியர், ஒக் மான்டினோ, பீட்டர் ட்ரக்கர் - என்று எத்தனையோ எழுத்தாளர்களின் அறிவுரைகளை அலசுகின் றோமே, இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேறிய யாரையாவது என் கண்களால் என்றைக்காவது காணமுடியுமா?"
'லீ இயாகாக்கோ, ஹென்றிபோர்டு, தாமஸ் ஆல்வா எடிசன், கிம் ஊ துங் - போன்ற சாதனையாளர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோமே - அத்தகைய வாழ்வில் ர்ந்த ஒரு சாதனையாளரை என்றைக்காவது காண்போமா? s
கடவுளைப் பற்றி அன்றாடம் பேசும் ஒரு பக்திச் சொற் பொழிவாளர் முன் கடவுளே வந்து நின்றால் எப்படியிருக்கும்?
- அந்த உணர்வுதான் தேசபந்து வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை ஜே.பி. அவர்களைச் சந்தித்த போது எனக்கு ஏற் Lull-gil.
நான் தேடிக் கொண்டிருந்த ஒர் அவதார புருஷராக, மிகப் பெரிய முன்மாதிரியாக என் எதிரிலே நின்றார் ஐயா அவர் கள்.

Page 5
இன்றைக்கும் தன் எண்பத்தி ஆறாம் வயதிலும், தளராமல் ஓர் இளைஞரைப் போல உழைக்கும் மனிதரை - இரத்தமும், சதையும், இதயமுமாய் எதிரிலே காட்டி,
'இப்போது கூட நீங்கள் உறக்கத்திலிருந்து எழமாட்டீர் களா? இந்த வெளிச்சம் உங்கள் கண்களை உறுத்த வில்லையா?" - என்று கூவி, உறங்கியபடியே கற்பனையில் காலத்தை ஒட்டும் இளைஞர்களை எழுப்ப வேண்டும்!
- என்னுடைய இந்த உணர்வுகளின் வெளிப்பாடுதான் 'இதோ ஒரு வெளிச்சம்!”
தேசபந்து. வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளையைப் புகழ் வதற்காக அன்று இந்த நூல்!
நான் புகழ்வதால் பெருமையடையும் நிலையில் அவர் இல்லை. ஆனால் அவரைப் பற்றி எழுதுவதால் பெருமை யடைபவன் நான்.
ஒடுகின்ற ஆற்றைப் புகழுவதால் ஆற்றுக்கு என்ன பெருமை! ஆனால் அந்த ஆற்று நீரை அள்ளிக் கொண்டால், கொள்பவனுக்கு எத்தனை நன்மை!
பல ஆயிரம் தெய்வநாயகங்கள் இலங்கை - இந்திய நாடு களிலே தோன்ற வேண்டும்!
அவரைப்போல் உழைக்கக்கூடிய உரமான உள்ளங்கள் உருவாக வேண்டும்!
மனிதனை, மனிதனாக மட்டுமே பார்த்து மதிக்கின்ற மன நிலை மக்களிடம் மலர வேண்டும்!
பயனுள்ள வாழ்க்கை வாழும் வளமான இளைஞர்கள் இந்த மண்ணில் வலம் வர வேண்டும்!
- இந்த இலட்சியங்களின் அடிப்படையில்தான் இந்த நூல் உருவாகியுள்ளது. ممبر
என்னுடைய நூல் ஒரு தியாக ஜோதியை, ஒரு நல்ல உள்ளத்தை, ஒரு சிறந்த வழிகாட்டியைப் பற்றிய நூலாக அமைந்தது என் முன்னோர்கள் செய்த தவப்பலன்.

ஆனால் ஒரு பெரிய விந்தை!
இத்தனை நூல்களைப் படித்தோ அல்லது சாதனையாளர் களின் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றியோ அவர் சாதனை யாளராக உருவாகவில்லை. உண்மையில் நான் குறிப்பிட் டிருந்த யாருடைய பெயரும்கூட அவருக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் கூடத் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இவரிடம் உள்ளன!
மிக எளிமையான மனிதர். ஆனால் அவர் எட்டியதோ பல சாதனைச் சிகரங்களை!
வறுமையில் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று பெருமை யாக வாழ்ந்து கொண்டிருப்பவர்!
எத்தனை இடையூறுகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், தகர்த் தெறியும் அவருடைய ஆயுதம் அன்பு.
தொழில், ஆன்மிகம், குடும்பம், சமூகம் என்று அவர் எந்தத் துறையில் விரல் வைத்தாலும் அந்தத் துறை தங்கமாகிறது!
எந்தக் கோணத்தில் திருப்பினாலும் மின்னுகின்ற வைரத் தைப் போல அவர் வாழ்க்கை அமைந்திருக்கும் அழகைக் கண் டேன்!
'இந்த ஒளி விளக்கினை இருண்டு போயிருக்கின்ற மனித சமுதாயத்தின் முன் எடுத்து வைக்க வேண்டும்' என்ற உணர்வு என் நெஞ்சைக் கிளற, அதன் விளைவே இந்த நூல்.
வாழத்துடிக்கும் மனிதர்கள் பலகோடி!-
வெற்றி நோக்கு வெறியோடு அலையும் இளைஞர் கூட்டம் ஏராளம். போலியான மனிதர்களை முன்னால் நிறுத்தி வைத்து விட்டுப் பொய்யாகப் புகழ்ந்து, இல்லாத கற்பனை இருட்டுலகத் தில் வாழும் இளைஞர்கள் ஏராளம்!
அத்தகைய இருளிலே மூழ்கியிருக்கும் மனிதர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வெளிச்சத்தைக் காட்ட வேண்டும்!
எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்?' என்ற உண் மையை உலகுக்குப் பறைசாற்ற வேண்டும்!

Page 6
ஐயா அவர்களின் தொண்டு மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்நூலில் தெறிக்கும் என் உணர்வுகளை தேசபந்து வி.ரி.வி. ஐயா அவர்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்.
இந்த நூலை என் பாசமிகுந்த தாய் திருமதி. சரோஜா அவர்களுக்கும், மறைந்த என் அன்புத்தந்தை திரு. தி.து. கலி யாணசுந்தரம் அவர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன்!
வளர்க மானிட ஆற்றல்! வாழ்க மனித நேயம்!
அன்பன் தி.க. சந்திரசேகரன்.
5. சதாசிவன் தெரு திருப்பத்தூர் - 635601
இந்தியா. தொலைபேசி 04179 - 21291
 

THE WONDER THAT SEEKS THY ATTENTION
During. Our life many things happen and We meet many people. Making an analysis later On, most of the events are insignificant, and the majority of the people leave Only a slight trace of memory Or flow away like Water, Wetting the emerging Stones of a river Only for the time necessary for the Sun to dry them or for other Water to flow again. On tOp.
It may easily OCCur that you meet and deal With SOmeOne every day for a few years, acquiring apparent familiarity. Some year's later, having lost the Opportunity of meeting for different. reasons, you do not even remember the face of the perSon. Viceversa there are people that you meet Once in life and you Will remember forever. This is the Case of Mr. Deivanayagam Pillai.
The chance of meeting him for the first time happened to me almOSt twenty years ago. When his elder SOn Mr. EaSSuWarentOld me, "AlbertO, we are developing a friendship and, in Spite Of the fact that we are from different COuntries and CUltures, we realize that we are able to generate a high grade of mutual understanding. I WOuld like to introduce you to my father, and this is Something very important". immediately Said, "I would be honoured of this Opportunity!" But he added, "The reason for me to ask in this way is linked to the fact that my father is a Special person, a religious authority for Our Community and it WOuld be required for us to pray together in Our temple before We pay a visit to him. Would it be possible for you?"
My reply was immediate and heartfelt "Yes!" and in the same seconds I was recalling the casual reason to be in Sri Lanka, visiting Mr. EasSuwaren in Colombo. We met in Cairobychance. We Were

Page 7
sittting in the lobby of one of the biggest hotels of the city and it happened that we got to exchange a few Words. Immediately We disCOvered to have rmanythings to talk about, including possible busineSS, but mainly We Were Willing to dialogue abOut Our perSOnal experiences and points Of view, about the WOrld around
aS.
We decided then to meet again and, a few days later, a Curious event happened. While We Were taking a drink On the top of a Seventeen flOO'r hotel-restaurant, admiring the CairO panorama, my pair of spectacles fell down from the balcony to the garden below, landing Safely in the middle of the table of Some nice people. They very kindly brought them up Smiling and Commenting about this almOSt unbelievable event. "Perfectly Safe after a SeVenteen flOOIrS fall"
While triving to explain to the people around how it happened, tOuched again the Spectacles With an awkward movement and they broke badly on the terrace floor.
Everybody, including me, started to laugh of this Comic situation.
We Commented that the Concept of easy Or difficult, is a matter
of individual perception as it is the Same for poSsible and impoSSi
ble. We ended with the Comment that the intervention of luck is SOmething undetermined.
For this reaSOn We decided that We should not expect Only for luck to have a new chance of meeting and we must do our best to generate and make possible new viable Opportunities of exchanging visitS to Italy and Sri Lanka.
This marked the development of a relationship. I knew Mr. EaSSuWaren as an intelligent and prepared busineSSman, a perSon with internal values, but I was unable to underStafhd clearly the possible source of Sinergic elements to his behaviour and positive approach to the life and, therefore, the possiblity of meeting Mr. Deivanayagam Pillai was clearly welcome.
I am Italian and born a Catholic but, more in general, believe in GOCd, WithOut tOO many" COnStraintS, SO, the prO'SpeCtive tO pray

in a Hindu temple, was generating to me only the question on how I Could have followed the prayer in the proper way. I was then well prepared for the meeting, but sincerely have to say today that, the actual event, has influenced my way of thinking in the following years much more than expected at that nOnent.
The seed for deep thinking was sown immediately the morning after when went to pray with my friend. I remember clearly after SO many years the WOrds Of the priest: "You are here to pray before meeting a person that we highly respect as an authority and a Shining example of life in our religion. This person is the
father of your friend and with this visit you make a dear thing
yourself well known to him and also to all of us. We thank you
for this and you have not to be offended if you are requested
tO pray in a temple not belonging to your religion. DO you believe
in GOC?"
| immediately anSWered "Yes!" and the priest asked "May We pray With you to yOur GOC, that is Our GOd? God is everywhere and in all of US, and the Ways we utilize to describe him are Only elements to facilitate the people to address to him. So, if you acCept this COncept, let US pray together with you". These WOrds generated a great emotion in me and when with a blessed floral homage in the hands moved to the house of Mr. Deivanayagam Pillai I felt that something Special, was happening to me.
When I met him I understood that the Seed was Starting to bloSSOm already. He was in the garden of his house, sitting with Crossed legs over a small wooden table, with a hieratic but in the same time welcoming expression. He was wearing only a white waist cloth and a gold necklace putting in evidence a calm, and sereneface, denoting an interior tranquility, but in the same time with vivid and penetrating eyes. W
He didn't talk to me directly in English, but the perSonality and the atmosphere around him Spoke volumes to me more than direct words. I felt was understanding before the translation and receiving Communication of concepts from the enviornment in

Page 8
fluenced by him and not Only from actual words.
From that experience, that had the Opportunity to renew recently, I feel now able to understand the internal Strength that Mr. Deivanayagam Pillai is able to COmmunicate to his family and in general to the people going to him, asking for Suggestions and guideliness for normal life and for busineSS.
Reading the message from the Chairman of the V.T.V. Group of Companies it is possible to find the basics of his Concept of life that underlines respect, Service and loyalty aS Supreme value.S.
Many management writers are looking for the Secrect of Success and trying to describe the concepts. I have tried too, several times, and written often On it, But after many years have to Say that the values described by Mr. Deivanayagam Pillai as a Chairman, do include a philosophy of life that makes much more than the techniques to lead to a successful life, and in my opinion, this is a much more valid target than the Sole SucCeSS in busineSS.
"The priceleSS ingredient of every product is the honour and the
integrity Of the Seller", Cannot be Only a Simple motto, becomes
a rule of life. In the message in fact he has written also "I have
also Strived to Show my SOnS and managers by example." Con
CeptS and example. This is the reaSOn tO Write a bOOk On his life
experience and Story, to give the Opportunity to others and particularly to the new generation to get the benefit of this asset,
making it permanent in the memory as Something to make
reference to, and to Cultivate in the memory for improving the
personal approach in business and in normal life.
Dr. Alberto Camporesi
VIA, CESENA, 10-47037, RIMINI (RN), TALY.

பொருளடக்கம்
Uës&sub
1. இதோ ஒரு வெளிச்சம்!. oo e o or on e o so a 2. அடிமேல் அடி. . . . . . . . . . . . . . so e o o os e o os e o o e o so a 5 3. கற்றால் தான் கல்வியா?. 9 4. பயணங்கள் முடிவதில்லை. • *••• • • 13 5. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ. 21 6. மணத்தால் மலர்ந்த வாழ்வு. ................. 28 7. எங்கே அந்தச் சிறுவன்?. . . . . . . . . . . . . . . . . 33 8. முதலாளியின் முதலாளி. . . . . . . . . . . . . . . . . . 40 9. குண்டு விழுந்தது. 47 10. மீண்டும் வசந்தம். 56 1. சுமைதாங்கி. LL LLL LLL LLLLL S LLLLL LLLS LLLLL S 0L LLSLL LLL Y LLLLLL LL LLL LLL LLLL 0S 00 LLLLL LLL LLLL LS L Y L L L L L L L L L L L L L 0S LLLLL LL LSS LL LLL LLLS LLL S0S LLL LSL 64 12. இதயத்தில் தைத்த அம்பு. 80 13. இறைவன் கொடுத்த வரம். ... ... 86 14. தனி மரம்.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 90 15. வழிநெடுக வாய்ப்புகள் . . . . . . . . . . 96 18. பாசமலர்கள். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 10 17. இதுகூடவா எனக்குத் தெரியவில்லை. - - - - - - - - 8 18. மாற்றத்திற்கு ஏமாற்றம். - 130 19. குடும்ப விளக்குகள்!. - - - - - - - - - - - ... 1 39 20. புயலொன்று பூவானது.................... 59 21 சிதறிய எரிமலை. 170 22. சமயத்தில் உதவிய சமயம். ............ 1 98 23. ஆண்டவனுக்கு எதற்கு வேலி?. . . . . . . . . . . 207

Page 9
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
& 5.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
'விழிமின், எழுமின்'. 223
தாய் நாட்டுக்கு ஒரு தவப்புதல்வன்................ 235 சென்னையில் வீசும் தென்றல். 2 4 3 ஆலமரம். 250 தொழிலாளர்கள் - அன்றும், இன்றும். số & & & w a + & 264 ஏழு தரம் மட்டுமோ?. 276 'மானுடம் வென்றதம்மா!'. 290 கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக்கொடுப்பவர். 305 உத்தரவு தரவில்லை. 321 இன்னும் ஏன் உழைக்க வேண்டும். 325 அழையா விருந்தாளி. 346 'யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம்'. 355 பாடத்துடிக்கும் பறவைகள்............... 368 பேதமில்லா அன்பு. 378
வாழையடி வாழை. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ) » u e es e o e a so e o eo e e 382 வாரியார் தோற்றார். 392 பரிசுக்குப் பரிசு. 398 இன்று நாம் என்ன செய்தோம்?. 405 பாதங்களை நனைத்த பன்னிர்த் துளிகள். 414 ஈர்ப்புச் சக்தி. 429
காலடிகள். 432

1. இதோ ஒரு வெளிச்சம்!
வானத்தில் விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. நள்ளிரவிலும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த அந்த நட் சத்திரங்கள் 'தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கின்றனவா, அல்லது வாழ்த்துக் கூறிக் கண் சிமிட்டுகின்றவா’ என்று அந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை.
சட்டையில்லாத தன் மேனியின் மீது சில்லென்ற காற்றுப் படும்போது, குளிரால் நடுங்க வேண்டிய தன் உடல் ஏன் கன லாய்த் தகிக்கின்றது?
ஊரெல்லாம் உறங்கிப் போனாலும் ஏன் தன் கண்களை உறக்கம் தழுவ மறுக்கின்றது?
தூணில் சாய்ந்தபடி அரைகுறை வெளிச்சத்தில் முத்தாரம் மன் கோவிலின் உட்பகுதியைக் கண்களால் அந்தச் சிறுவன் துழாவியபோது முத்தாரம்மன் உருவமே எதிரில் நிற்பதுபோல ஒரு பிரமை!
'அம்மா பராசக்தி எனக்கு எல்லாமே நீதான்!” என்று அவன் வாய் விட்டுப் புலம்பினான்.
ஆறுவயதில் தன்னைத் தவிக்க விட்டுச் சென்ற அன்னை யின் அன்பு முகம் மனத்திரையில் பளிச்சிட்டது!
பத்து வயதில் தன்னைப் பதற வைத்து விட்டுச் சென்ற தந்தையின் திருமுகம் தன்முன் நின்றது!
பத்து வயதில் கிட்டத்தட்ட, தான் ஓர் அனாதை
இரண்டாவது நாளாக பன்னம்பாறை முத்தாரம்மன் கோவிலில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தபோது பசி தன்னை வாட்டவில்லை. அம்மன் கோவில் பிரசாதம் ஒரளவுக்குப் பசியைத் தணித்திருந்தது. ஆனால் வெறுமை வேதன்ையைத் ჯაlbჭbტl.

Page 10
2 இதோ ஒரு வெளிச்சம்
உற்றவர் சிலர் எடுத்தெறிந்து பேசிய அனல் கக்கும் சொற் கள் அவனுடைய தன்மான நெஞ்சின் மீது பழுக்கச் சூடுபோட் டிருந்தன.
"பன்னிரண்டு வயதில் யாருமற்ற அனாதை!
பன்னிரண்டு வயதில் வதைக்கின்ற வறுமை! பன்னிரண்டு வயதில் பாதை நிறையத் துயர் முட்கள்! 'அன்னை பராசக்தியே! முத்தாரம்மனே! இதோ உன்பிள்ளை இங்கே உன் வீட்டில் நீயே கதி என்று தவித்துக் கொண்டிருக்கிறேன்! காப்பாற்றம்மா!'
Ý೨
மூன்றாம் நாள் முத்தாரம்மன் கோவிலை விட்டு அந்தச் சிறுவன் வெளியே வந்தபோது ஒரு புதிய வெளிச்சத்தை அவன் கண் கள் உணர்ந்தன. முட்புதர்களுக்கிடையில் வளைந்து சென்ற மண்பாதையில் அவன் காலூன்றி நடந்து சென்றபோது அந்தக் கால்களில் தனிஉரமும், வலிவும் இருந்தன. நடையில் ஒரு கம் பீரம் இருந்தது. இதுவரை கண்ணீர் வடிந்த கண்களில், காந்த சக்தி பரவியிருந்தது. கனத்துப் போயிருந்த நெஞ்சினை ஒரு புதிய கனல் நிரப்பியிருந்தது!
Y S S SY S S L S S S LY S S S LS S LLS S LLLL S S S LS S S LLLLS S SLLLLSS S SS LLLL
அறையை ஒளி வெள்ளம் நிரப்பியிருந்தது. புகைப்படக் கருவிகள் பளிச்சிட்டன. தொலைக்கர்ட்சிக் கருவிகள் நிகழ்ச் சியைப் படம் பிடித்து நாடுமுழுவதும் மலர்ந்திருந்த தொலைக் காட்சிப் பெட்டிகளுக்குப் பெருமை சேர்த்த வண்ணம் இருந் தன. s
 

இதோ ஒரு வெளிச்சம்
ஆன்றோர்களும், சான்றோர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் நிரம்பியிருந்த அந்த அரங்கின் மேடையை நோக்கி மலர்ந்த முகத்துடனும், கூப்பிய கரங்க்ளுடனும் அந்தப் பெரியவர் நிமிர்ந்து நடந்தபோது, பலத்த கரஒலி அவையை அதிரச் செய்தது!
இலங்கை அரசு சான்றோர்களுக்கு வழங்கும் உயரிய விரு தான ‘தேச பந்து விருதினை மிகுந்த பணிவுடன் இலங்கை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பிய போது அந்த மாமனிதரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல் பதிக்கப்பெற்றது!
பன்னிரண்டு வயதில் தன்னைத் தத்தெடுத்துக் கொள்ள ஒரு குடும்பம் கூட இல்லாமல் தத்தளித்த அந்தச் சிறுவனை இன்று ஒரு நாடே தத்தெடுத்துக் கொண்டது!
'நாடு இவரைத் தத்தெடுத்துக் கொண்டதா? அல்லது இவர் நாட்டைத் தத்தெடுத்துக் கொண்டாரா?
வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தம் தனிமனித வளர்ச்சியைத் தலை தூக்கிப் பார்க்கும் படி உருவாக்கிய சாதனை!
எத்தனை பட்டங்களை, எத்தனைபேர் கொடுத்தாலும் அத்தனைக்கும் அப்பால் பல நல்லியல்புகளை இயற்கையாகவே தன்னகப்படுத்தி வைத்திருக்கும் தகைசால் ஏந்தல்!
ஈரமற்ற மணல் நிலத்தில், ஆதாரமற்று நடப்பெற்ற செடி, பரிவு நீர் ஊற்றப்படாமல், வசை எனும் அனல் காற்றுக்குள் சிக்கிக் கொண்டால், வாடிக் கருகிப் போகுமன்றோ?
ஆனால் எரிந்த சாம்பலிலிருந்து உயிர்பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாய்ப் பலமுறை புத்துயிர் கொண்டு அருட் பொலிவோடு சிலிர்த்து எழுந்தவர்தாம் அருட் செல்வர் தெய்வ நாயகம்,
இளம் வயதில் அவர் சந்தித்த,
சோதனைகள் எப்படிச் சாதனைகள் ஆயின? தடைக்கற்கள் எப்படிப் படிக்கட்டுகள் ஆயின?

Page 11
4. இதோ ஒரு வெளிச்சம்
புயற் காற்று எப்படிப் பூங்காற்றாக மாறியது? முட்கிரீடங்கள் எப்படி மணிமகுடங்கள் ஆயின?
எப்படி அவர் இன்னும் அடிப்படை நற்குணங்களிலிருந்து இன்னும் இம்மியளவும் மாறாமலிருக்கிறார்? ‘தெய்வநாயகம் என்ற சொல் ஓர் இடுகுறிப் பெயரன்று.
காரணப்பெயர்.
அழைக்கப்படுவதற்காக வைக்கப்பட்ட பெயரன்று.
வரலாற்றுப் பேழையை இழைப்பதற்காக இடப்பட்ட பெயர்.
தான் மட்டும் மூச்சு விடுவதற்காக வாழும் வாழ்க்கையன்று அவர் வாழ்க்கை;
பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்காக வாழும் வாழ்க் கையே அவர் வாழ்க்கை!
அவர் வாழ்க்கையின் வெற்றி ஒரு மூடுமந்திரமன்று; அது ஒரு திறந்த புத்தகம்.
வியர்த்த மேனியின் மீது வீசும் குளிர்த் தென்றல் புத் துணர்வை ஊட்டுவது போல, ச்ோர்ந்து போன மனிதனுக்குச் சொர்க்க பூமியைக் காட்டும் உற்சாகத் தென்றல் அவர்.
இதயத்தின் எந்தப் பாகம் இருண்டு போயிருந்தாலும், அங்கே தன் வெளிச்ச ஒளிக் கற்றைகளைச் செலுத்தி இருளகற்றி வழிகாட்டும் வல்லமை இந்தக் கலங்கரை விளக்கத்துக்கு உண்டு!
ஒரு விளக்கின் சுவாலையிலிருந்து, மற்ற விளக்குகளின் திரிகளைப் பற்ற வைத்துக் கொள்வது போல, இவருடைய நற்பண்புகளை நாம் பற்றிக் கொள்வோமாக!
 

2. அடிமேல் அடி
தோன்றும் இடத்திற்கும் துலங்கும் இடத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?
குடகிலே தோன்றும் காவேரி குடகிலேயே தங்கி விட்டால் அதற்குக் காவேரி என்று பெயரன்று!
ஆழ்கடலில் மூச்சடக்கி எடுத்து வரப்பட்ட முத்து எங்கோ ஓர் அரசியின் கழுத்தில் மாலையாக ஜொலிக்கிறது.
சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட வைரங்கள் மகுடங் களை அலங்கரிக்கின்றன.
ஜவ்வாது மலையில் எங்கோ காட்டில் வளர்ந்த சந்தனம் திருச்செந்தூர் முருகனுக்கு அபிஷேகமாகத் தன்னை உயர்த்திக் கொள்கிறது.
மிக நல்ல பொருள்கள் எந்தச் சாதாரண இடத்தில் தோன்றினாலும் உயரிய இடங்களுக்குச் சென்று, உயரிய நிலையை அடைந்து உயர்ந்தோர் உள்ளங்களில் இடம் பெறு கின்றன.
தமிழ்நாட்டில் திருச்செந்தூர் வட்டத்தில் சாத்தான்குளம் அருகில் உள்ள அழகிய சிற்றுார் பன்னம்பாறை.
தமிழ்நாட்டு வரைபடத்தில் இடம்பிடிக்காத அந்த ஊரில் தான் இலங்கை நாட்டு வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய மாமனிதர் தோன்றினார்.
ஆம்! தெய்வநாயகம் பிறந்த அந்தச் சின்ன கிராமம் தான் பன்னம்பாறை
அனேகமான கிறித்தவர்கள் சுற்றுப்புறக் கிராமங்களிலும், நகரங்களிலும் வாழ, அதிகமான இந்து, சைவக்குடும்பங்கள் கொண்டது பன்னம்பாறை

Page 12
6 இதோ ஒரு வெளிச்சம்
சைவமணம் கமழும் அந்தச் சிற்றுாரில் சிறந்த சைவ நெறிக் குடும்பத்தில் உதித்தவர் தெய்வநாயகம்.
அவருடைய முன்னோர் வழிவழியாகச் சிவனையும், அம்பாளையும், விநாயகனையும், முருகனையும் வழிபட்டவர். கள். சிவ சிந்தனைகளை எல்லா நொடியிலும் நெஞ்சிலே தேக்கி வைத்திருந்தவர்கள்.
'தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன் உண்பான் எங்ங்னம் ஆளும் அருள்' எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க வாழ்ந்து சைவ உணவை உண்டவர்கள்.
S A
நீறில்லா நெற்றி பாழ்' என்பதறிந்து சைவ சின்னங்கள் நெற்றியிலும், உடலிலும் திகழ வாழ்ந்தவர்கள். " . .ڈ
ஒழுக்கத்தையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கட்டிக் காத்து வந்த அந்நற் பரம்பரையில் வீரவாகுப்பிள்ளை அவர் களும் முத்துவடிவு அவர்களும் ஈன்றெடுத்த நல் முத்துதான் தெய்வநாயகம். -
1911ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் நாள் திருச் செந்தூர் முருகன் அருளால் பிறந்தமையால் இடப்பெற்ற திரு நாமம் 'தெய்வநாயகம்'
வீரவாகுப்பிள்ளை சிறந்த வணிகர். 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப அன்றே இலங்கை சென்றவர்.
கொழும்பு புறக்கோட்டையில் 1907 வரை அவருடைய நவதானியக் கடை கொடிகட்டிப் பறந்தது. அந்த அளவுக்கு வணிகத்தைச் சீரும், சிறப்புமாக வழிநடத்திச் சென்றவர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 1908ல் ஏற்பட்ட பெரிய வியாபாரச் சீர்குலைவு அவருடைய வாழ்க்கைப் பட கினைச் சுக்கு நூறாக உடைத்தெறிந்தது. போட்ட முதலை இழந்து, கடனாளியாய், மனவேதனைகளைச் சுமந்து மீண்டும் தாய் நாடு திரும்பி, பன்னம்பாறையில் காலெடுத்து வைத்த போது அவருடைய வெந்தபுண்ணுக்கு மருந்திட்டவர் அவ 'கடைய அன்புத் துணைவியார் முத்துவடிவுத் தாயார் தான். நொந்து போன அவர் உள்ளத்திற்கு ஆறுதல் தென்றலை வீசி யவை துணைவியார் இன்சொற்கள்தான்.

அடிமேல் அடி 7
கணவர் இலங்கையிலும், மனைவி தமிழகத்திலுமாக வாழ்ந்து பழகிவிட்ட அவர்கள் வாழ்வில் ஒரு திருப்பம்.
‘கைகளும், கால்களும் இருக்கின்றன! கடவுள் கொடுத்த காணி நிலம் இருக்கின்றது! போன வியாபாரத்தைப் பற்றிக் கவலைப்படுவதை மூட்டைகட்டுங்கள். விவசாயத்திலே ஆர்வம் காட்டுவோம்!’ என்று ஊக்கமூட்டி, உரமிட்டு, வாடிப் போயி ருந்த தன் அன்புக் கணவருக்குப் புத்துயிர் ஊட்டினார் அந்த ஆற்றல்மிகு மனைவி. சொந்த வீடு, நெல்வயல்கள், புன் செய் நிலங்கள், பனந்தோப்பு, மாடு கன்றுகள் என ஏற்கனவே இருந்த சொத்துக்களின்மீது வீரவாகுப்பிள்ளை ஆர்வம் காட்டினார்.
வாழ்க்கை வெகுவாக முன்னேறியது அதுவரை நிகழ்ந்த இன்னல்கள், பன்னம்பாறையில் படிப்படியாகக் குறைந்தன.
முதலில் சுடலைமுத்து என்ற ஆண் மகவைப் பெற்ற வீரவாகு, முத்துவடிவுத் தம்பதியினர் அடுத்து 1911ல் இந் நூலின் நாயகன் தெய்வநாயகத்தைப் பெற்றனர். அடுத்த சில ஆண்டுகளில் தங்கம்மா, திரவியம் ஆகிய பெண்கள் பிறந்தனர்.
1916 - அப்போது தெய்வநாயகத்தின் வயது ஆறு! , ஒர் அண்ணன் - இரு தங்கைகள் என வாழ்ந்த தெய்வ நாயகத்தின் ஆறாவது வயது ஆறாத் துயரத்தைத் தந்த வயது!
அன்பைச் சொரிந்த அன்னையை, மலராத மொட்டாக இருந்த தன்னைப் பாசத்துடன் உச்சி முகர்ந்த தாயை, பாலூட்

Page 13
8 இதோ ஒரு வெளிச்சம்
டிச் சீராட்டிய தெய்வத்தை அந்த ஆறாம் வயதிலே கூற்று வனின் கொடுங்கரங்கள் கொத்திச் செல்ல, துயர அலை களிலே தத்தளித்தார் தெய்வநாயகம்.
முத்துவடிவுத் தாயார் ஒர் ஆறாத வடுவினை மகனின் நெஞ்சிலே இட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார்.
ஆறுவயதில் தாயை இழந்த அவர் மீண்டும் பதைபதைத்துப் போனது பத்தாம் வயதில்.
ஆம். பட்ட காலிலேயே மீண்டும் அடிபட்டது! நொந்த புண்ணில் மற்றொரு பழுக்கக் காய்ச்சிய வேல் செருகப்பட்டது!
1921ம் ஆண்டில் தெய்வநாயகம் தம் அன்புத் தந்தையைப் பறி கொடுத்தார்.
வி.ரி.வி. நிறுவனம் இன்று இலங்கையின் தலைசிறந்த வணிக நிறுவனம். 22 குழுமங்கள் உள்நாட்டு வணிகத்திலும் வெளிநாட்டு இறக்குமதி - ஏற்றுமதித் துறையிலும் பெருஞ் சாதனைகளைச் சாதித்து ஒரு தனி முத்திரையைப் பொறித்து வரும் நிறுவனம்.
இதன் தலைவர் அன்று பத்தாம் வயதில் அனாதையாகி நின்ற திரு. வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை அவர்களே!
 

3. கற்றால் தான் கல்வியா?
அண்ணாவி பாடசாலை
பன்னம்பாறையில் இருந்த பழைய பள்ளிக்கூடம். அரிச் சுவடியையும் - பால பாடத்தையும் தெய்வநாயகத்திற்கு அறி முகப்படுத்தி வைத்தது அண்ணாவி பாடசாலைதான். ஐந்தாம் வயதில் இப்பள்ளியில் சேர்ந்தார் தெய்வநாயகம்.
பால பாடத்திற்கு மேல் பயில, சாத்தான்குளம் செல்ல வேண்டும்.
இரண்டுகல் தொலைவு அன்றாடம் நடந்து சென்று சுடலை முத்துவும், தெய்வநாயகமும் பள்ளிக் கல்வி பெற்றனர்.
இன்றைய நாட்களைப் போல் அன்று சீருடை கிடையாது. பள்ளிக்கு மாணவர்கள் சட்டை கூட இல்லாமல் வரலாம். பெரும்பாலான மாணவர்கள் வெற்றுடம்புடன் தான் வருவார். கள். இடுப்பில் ஒரு வேட்டியோ, துண்டோ தான்!
ஆடை வகையில் வீரவாகு அவர்கள் மகனை மிக்க கண் டிப்புடன்தான் நடத்தினார். எப்போதும் கோவணம் அணிந்து கொள்ள வேண்டும். P
தாள், பாடபுத்தகங்கள், பேனா, பென்சில், இவை எல்லாம் என்னவென்று கூடத் தெரியாத வகையில்தான் அவருடைய பள்ளிப் படிப்பு இருந்தது. பனை ஓலைச்சுவடி களும் அவற்றில் எழுதுவதற்கு எழுத்தாணிகளுமாகப் பள் ளிக்குச் செல்வார் தெய்வநாயகம்.
விடியற்காலையில் அண்ணனும், தம்பியும் எழுவார்கள். கட்டுச் சோற்று மூட்டையைத் தோளில் சுமந்தபடி பள்ளிக்குச் செல்வார்கள்.
கட்டுச் சோறு என்பது அறுசுவை உண்டியன்று! பழஞ்

Page 14
1 0 இதோ ஒரு வெளிச்சம்
சோறும், பழைய காய்கறிக் கூட்டுகளுமே! அந்த எளிய உணவைத்தான் அன்று உண்டார்கள்.
ஐந்தாம் வகுப்பு வரைதான் தெய்வநாயகத்தால் கற்க முடிந்தது. அதற்குள் தன் அருமைத் தந்தையையும் இழந்த காரணத்தால் கல்விக் கடவுள் கலைமகளின் அருள் பார்வை அத்துடன் நின்று போயிற்று!
அன்றைக்குக் கற்க முடியவில்லையே என்ற ஏக்கம் இன்ற ளவும் அவரை விட்டுப் போகவில்லை. தன் பிள்ளைகளை நன் றாகப் படிக்க வைத்திருக்கிறார். 'படிப்பு’ என்று யார் வீட்டுப் பிள்ளை உதவி நாடிச் சென்றாலும் தயங்காமல் அள்ளிக் கொடுக்கிறார். இன்று வல்லநாட்டில் அவருடைய நன்கொடை யால் அமைந்துவரும் பள்ளிக் கட்டடங்கள் கம்பீரமாக உருவா கின்றன. பல நூறு மாணவர்கள் இன்று அப்பள்ளியில் படிப் பதைக் காணும்போது அவருடைய ஏக்கம் நிறைந்த நெஞ்சில் பெருமித உணர்வே தோன்றுகின்றது!
கல்வி என்பது என்ன?
அச்சடித்த புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவித் தலோ அல்லது ஒரு வெள்ளைத்தாளில் எழுதித் தருவதோ கல்வி அன்று!
வாழ்வின் சிக்கல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்ற லைத் தருவதுதான் கல்வி.
அந்தக் கல்வியைத் தெய்வநாயகம் பள்ளியிலும், கல்லூரி யிலும் கற்கவில்லை. பத்தாம் வயதிலேயே, வாழ்க்கை என்ற
 

கற்றால் தான் கல்வியா
சொல்லுக்குப் பொருள் புரியாத வயதிலேயே கற்க ஆரம்பித்து
விட்டார்.
தாயையும், தந்தையையும் இழந்து விட்ட நிலையில் அவ
ரைத் தாய்வழிப் பாட்டனார் அன்புடன் ஏற்றுக் கொண்டார்.
பாட்டியும், பாட்டனாரும் அவர் மீது பாசத்தைப் பொழிந் தார்கள், ஆனால் உற்றவர்கள் சிலர் அவரைக் கொடுமைப் படுத்தினார்கள். அவர்களுடைய, ஏளனமும், அலட்சியமும், அவமதிப்பும் அவரை மிகவும் பாதித்தன.
பத்து வயது என்பது பாசத்திற்கு ஏங்கும் வயது. அந்த வயதில் எது கிடைத்திருக்க வேண்டுமோ, அது கிடைக்காமல் எது கிடைக்கக் கூடாதோ அது கிடைத்தது!
தன்மான உணர்ச்சியும், சுதந்திர வேட்கையும் இயற்கை யாகவே பெற்றிருந்த தெய்வநாயகத்திற்குத் தன் உரிமைச் சிறகு கள் வெட்டப்படுவது புலனாயிற்று!
ஒருமுறை தெய்வநாயகத்திற்கும் அவருடைய மாமன்மார் களுக்குமிடையே தகராறு வந்தது. அதனால் தெய்வநாயகம் மனம் உடைந்தார். உளம் நொந்தார்.
நன்றாக உலை கொதித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் மேலும் சில காய்ந்த விறகுகளைக் கொண்டு போய் வைத்தது போல் அவருடைய தன்மான உணர்ச்சி பொங்கி வழிந்தது. தன் பாட்டனார் வீட்டை விட்டுக் கிளம்பி, முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார்.
தங்கள் குலதெய்வமான முத்தாரம்மனை மனத்தில் வேண்டி அந்தக் கோயிலில் இரண்டு பகல், இரண்டு இரவுகள் தங்கினார். கோயிலை விட்டு வெளியே வந்தபோது அவருடைய உள்ளத்தில் புதிய உறுதியும், உடலில் புத்துணர்ச்சியும் இருந்தன.
தன் இரு கைகளுடன் மூன்றாம் கையாம் நம்பிக்கையும் கூடியிருப்பதை உணர்ந்தார்.
அத்துடன் அவர் மனம் நான்காம் கையை நாடுவதை உணர்ந்தார். ஆம், அந்த நான்காம் கை இலங்கை.
'இனிமேல் தாம் இருக்க வேண்டிய இடம் இந்தியா

Page 15
12 இதோ ஒரு வெளிச்சம்
இல்லை. இலங்கை' என்று தீர்மானித்தார். 'விழுந்த @-ಜ್ಷ! தான் எழ வேண்டும்; தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும்' என்று பன்னிரண்டாம் வயதிலேயே உணர்ந் திருந்தார் போலும். தம் தந்தை எந்த நாட்டில் வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தாரோ ஆனால் எந்த நாட்டில் அத் தனையையும் இழந்துவிட்டு, வெறுங்கையுடனும் வேதனை யுடனும் ஊர் திரும்பினாரோ அதே இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் அவர் மனத்தில் உதய மாயிருந்தது.
தந்தையின் தோல்வி அவரைத் தளரச் செய்யவில்லை; மாறாக நெஞ்சில் தணலை நிரப்பியிருந்தது.
பல சிங்கள இனத்தவர்களை விட மிக அழகாகச் சிங்களம் பேச வல்லவர் தெய்வநாயகம். அவருடைய பேச்சில் சொல் லழகு மட்டுமன்று; கனிவும், பாசமும் கலந்து மிளிருவது தான் தனிச் சிறப்பு.
முகாமைப் பட்டம் பெற்று வணிகங்களை நிர்வகிப்பவர் களெல்லாம் தோற்றுப்போன இடங்களில் வெற்றிப் புன்னகை யோடு எழுந்து நிற்பவர் தெய்வநாயகம்.
இன்றைக்கும் அவருக்குக் கடிதம் எழுதினால், உடனே தன்கைப்பட பாசத்துடன் பதிலெழுதி அனுப்புகின்ற பண்பு அவருக்கு உண்டு. நீங்கள் எழுதும் கடிதம் வியாபாரக் கடிதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பணத்திற்காக மட்டுமே கடிதப் பரிவர்த்தனைகள் நடத்தும் வணிகர்களிடையே, பாசத் திற்காகவும், மனித நேயத்திற்காகவும் கடிதங்கள் எழுதும் உத் தமர் தெய்வநாயகம். பள்ளியில் அவர் பயின்ற வகுப்பென் னவோ ஐந்து வரை தான்!
 

4. பயணங்கள் முடிவதில்லை
அந்த வண்டு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு காருக்குள் சிக்கிக் கொண்டது. காரின் பின் பகுதியில் இருந்த கண்ணாடியின் மீது முட்டி முட்டிப் பார்த்துக் கொண்டே யிருந்தது, வெளியேற வழியே தெரியவில்லை. கொஞ்சம் திரும்பிப் பார்த்தது. ஒட்டுநருக்குப் பக்கத்தில் இருந்த கண் ணாடிச் சன்னல் திறப்பின் வழியே பறந்து சாலையின் அருகில் இருந்த செடியொன்றின் மலரில் அமர்ந்து மதுவினை அருந்தத் தொடங்கியது.
e 8 o 0 o o lo o a
ممبر
"விடாமுயற்சி - விடுதலை - வெற்றி" இதுவே வி.ரி.வி. யின் தாரக மந்திரம் என்றால் மிகையாகாது.
LLLLLL S S LLLL S SLLLLSS S SS LLLLLS LLLLLSSLLLS LLLLL S LLLL S S LLLLLL
தூத்துக்குடியிலிருந்து அந்தக் கப்பல் இலங்கையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தது. செல்வந்தர்களும், வெள்ளையர்களும் 15 ரூபாய் கட்டணத்தில் மேல்தளத்திலும், நடுத்தர வர்க்கத்தினர் ரூ 12.50 கட்டணத்தில் நடுத்தளத் திலும், மற்றவர்கள் ரூ 7.50 செலுத்தி கீழ்த்தளத்திலும் பயணம் செய்தனர். V
தெய்வநாயகத்தின் முதல் கடற்பயணம் மூன்றாம் வகுப்புப் பயணியாகத் தொடங்கியது. பிற்காலத்தில் அதே பாதையில் கப்பல்கள் தங்கள் சரக்குகளோடு ஏற்றுமதி - இறக்குமதிக்காகச் செல்லும் என்று அவர் அப்போது எண்ணியிருக்கமாட்டார்.
நீலக்கடலலைகள் அவரைக் கொழும்பிற்கு ‘வா வாவென அழைப்பது போலத் தோன்றின! கடற்காற்று அவர் மீது பட்ட போது , அதன் குளுமை கூட வெம்மையாகத் தோன்றியது. கடல் நீரின் உப்புக்குச் சமமாக அவர் கண்ணிர் உப்பைச் சுமந்து

Page 16
4 இதோ ஒரு வெளிச்சம்
கன்னங்களில் வழிந்தது. கடல் அலைகள் தாலாட்ட அசைந் தாடிய கப்பல் ஒரு வழியாகக் கொழும்புப் போய்ச் சேர்ந்தது!
கொழும்புக்குத் தன்னை அழைத்துவந்த தெய்வநாயகத்தின் சிறிய தந்தை வீரவாகுப்பிள்ளை, அவரை தெய்வநாயகத்தின் தாய்மாமா சுப்பையாபிள்ளை மேலாளராகப் பணியாற்றிய கடையில் ஒப்படைத்தார்.
சுப்பைய்யாபிள்ளை அவரை மினுவாங்கொடைக்கு அனுப்பி வைத்தார்.
மினுவாங்கொடை என்னும் சிற்றுாரில் தமக்குச் சித்தப்பா முறையிலுள்ள அய்யம் பெருமாள்பிள்ளை வீரவாகுப் பிள்ளை என்பவ்ர் மளிகைக்கடை வைத்திருந்தார். "அவரிடம் வேலை கேட்டுப் பார்க்கலாமே" என்றனண்ணத்தில், மினுவாங்கொடை எங்கே இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கால் நடையாகவே அவ்வூருக்குச் சென்றார். மனத்தில் இருந்த உறுதி அவருடைய கால்களுக்கு அந்த உரத்தைக் கொடுத்திருந்தது.
மினுவாங்கொடையில் வீரவாகுப் பிள்ளையின் கடையில் ஒரு வேலைக்காரச் சிறுவனாகச் சேர்ந்தார்.
தெய்வநாயகத்தின் அன்றைய வேலை என்ன?
எடுத்த எடுப்பிலேயே கல்லாப் பெட்டியருகில் உட்கார்ந்து பொருள்களை விற்றுக் காசினை வாங்கி வியாபாரம் செய்தாரா என்ன?
 

பயணங்கள் முடிவதில்லை 15
கடையைப் பெருக்குவது, வெங்காயச் சருகுகளை உரிப் பது, புளி உருண்டை உருட்டுவது, பலசரக்குகளில் தூசி பொறுக்கித் துப்புரவாக்குவது, சாமான் மூட்டைகளை வண்டி யில் ஏற்றுவது, வருகின்ற சரக்குகளை இறக்குவது இப்படிப் பட்ட எடுபிடி வேலைகளைத் தான் செய்து வந்தார். எந்த வேலையைச் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்யும் குணம் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்தது. மினு வாங்கொடை அனுபவம் அவருக்கு ஒரு நல்ல அனுபவம். பிற் காலத்தில் பெரிய வணிக நிறுவனங்களை வழிநடத்தப் போது மான அடிப்படைத் துப்புரவு, தூய்மை, வழிமுறைகளை இந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்தன!
இருப்பினும் ஒரு வேலை மட்டும் அவருக்குப் பிடிக்க வில்லை. அது. சமையல் வேலை. கடையில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் கடையிலேயே சாப்பாடு அதைச் சமைக் கும் வேலையைத் தெய்வநாயகத்திற்கு முதலாளி கொடுத்திருந் தார். இதிலிருந்து விடுதலை பெற ஒருவழி பிறந்தது. ஒருநாள் உணவில் எதிர்பாராமல் சற்று அதிக உப்பையும், காரத்தையும் சேர்த்துச் சமைத்திருந்தார். வீரவாகுப்பிள்ளையின் சினம் தலைக்கேறியது. தெய்வநாயகத்தைக் கை நீட்டி அடித்தும் விட்டார்.
அந்த நிகழ்ச்சி தெய்வநாயகத்தின் மினுவாங்கொடை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. இதற்கு மேல் இங்கிருப்பதில் பயனில்லை என்று துணிந்து அந்தக் கடையை விட்டு விலகிக் கொழும்புக்குப் பயணமானார்.

Page 17
6 இதோ ஒரு வெளிச்சம்
ஆறு மாத காலம் அந்த மளிகைக் கடையில் பணியாற்றி யமைக்காக அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஒரு சதம் கூட இல்லை! ஆம் வேலை கொடுத்து, சாப்பாடு போட்டுத் தங்க இடம் கொடுத்தாலே பெரியது' என்கின்ற மன உணர்விலே முதலாளிகள் இருந்த காலம்; உயிர் வாழ்ந் தால் போதும் என்று வேலை செய்பவர்களிருந்த நேரம். நாடு விட்டு நாடு வந்தவுடன் முதன் முதலில் தனக்கு, தங்க நிழலும், உண்ண உணவும் அளித்தவரை நன்றியோடு நினைத்தாலும் எத்தனை நாள்கள் தான் அப்படி வாழ இயலும்?
மீண்டும் கையில் காசில்லாமல், நெஞ்சில் உறுதியையும் கால்களில் உரத்தையும் கூட்டியபடி மினுவாங்கொடையி லிருந்து, கொழும்பு நோக்கி நடந்தார் தெய்வநாயகம்; விடியற் காலை கிளம்பி நண்பகலுக்குள் 30 கி.மீ. தூரம் நடந்து கொழும்பு வந்த போது அவர் மனத்திலிருந்த ஒரே கேள்வி?
'இனி, என்ன செய்வது?’
கொழும்பில் அப்போது மனேஜராக வேலை பார்த்து வந்த தம் தாய்மாமன் சுப்பையாவிடம் மீண்டும் வந்து சேர்ந் தார். வேலை தரும் தகுதியில் அவர் இல்லை. எனவே தம்மை மாத்தறை என்னும் ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டார்.
மாத்தறை கொட்டுவகொட பகுதியில் சண்முகம் பிள்ளை என்பவருடைய கடையில் வேலைக்குச் சேர்ந்தார். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், என்று நவதானியங்கள் மற்றும் பலசரக்குகளைப் பெரிய அளவில் விற்பனை செய்யும் நிறுவனமாக அந்தக் கடை அமைந்திருந்தது.
அந்த கடையிலும் அவர் எடுபிடி வேலைகளைத்தான் செய்தார். கூட்டுதல், வெங்காயச்சருகு உரித்தல், பல சரக்கு களைத் துப்புரவு செய்தல், பொருள்களை அடுக்கி வைத்தல், அரிசி, தானியங்களை அளந்து கொடுத்தல், வண்டியில் வரும் சாமான்களை முதுகு கொடுத்து இறக்குதல் ஆகிய பல வேலை களை ஆர்வத்துடனும், முழுஈடுபாட்டுடனும் செய்தார். ஒரே ஒரு வேறுபாடு; இங்கு வேறு இரண்டு சமையற்காரர்களிருந்த தால் சமையல் செய்யும் வேலை இல்லை.
'தங்கள் உடல் முழுக்க முட்கள் குத்தியிருந்தாலும், வாடிப்

பயணங்கள் முடிவதில்லை 7
போன ரோஜாவுக்காக வருத்தப்படும் மனிதர்கள் உண்டு' என் பார்கள். தங்கள் உள்ளம் வாடியிருந்தாலும் மற்றவர்பால் அன்பைச் சொரிகின்றவர்கள் அவர்கள். தெய்வநாயகமும் அப் படித்தான். யாரோடும், எப்போதும் அன்பாகவும், கனிவாக வும், இனிமையாகவும் பழகுபவர். தம் உடன் பணியாற்றும் சிப்பந்திகள், மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் அத்தனை பேருடனும் இனிமையாகப் பழகுவார். அவர்களனைவரும் அவரைத் ‘தெய்வு' என்றே சுருக்கமாகவும், பாசமாகவும் அழைப்பார்கள்.
இந்தக் கடையிலும் சம்பளம் கிடையாது. சாப்பாடு போடு வார்கள்; துணி கொடுப்பார்கள். துணி என்பது ஒர் இடுப்புத் துண்டு. அதற்கு யாழ்ப்பாணம் சாய வேட்டி' என்று பெயர், எவ்வளவு அழுக்கேறினாலும் தெரியாது. அடிக்கடி துவைத்தால் சோப்பு செலவாகுமே" என்பதற்காகத் தான் அந்தத் துண்டு.
முதலாளி, வேலையாட்களின் தலையையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பார், தலைமுடி குறிப்பிட்ட நீளத்தைத் தாண்டினால் உடனே 'அடி மொட்டை' என்கின்ற உத்தரவு தான். முடி அதிகமாக இருந்தால் அதிகமாக தேங்காய் எண்ணெய் தலைக்குத் தடவச் செலவாகிறது என்பதால் இப்படி ஒரு கட்டளை.
உணவு தயாரிக்க அரிசியை உலையில் இடுமுன், அத்தனை பேர் தலையையும் எண்ணிவிட்டுக் கச்சிதமாக அதற்கேற்ப அரிசியை இடுவார்களேயொழிய அதிக அரிசி எப்போதும் சமைக்க மாட்டார்கள்.
காலையில் பழைய சோறு, பகலிலும் சோறு, இரவிலும் சோறுதான். காப்பி எப்போதும் பாலில்லாத கறுப்புக் காப்பி தான் வாரத்தில் ஒரு நாள் இட்லி. இட்லி பரிமாறும் நாட் களில் காப்பி கிடையாது. அப்போதெல்லாம் அரிசி விலை மிக மலிவு. சர்க்கரை விலையும் மலிவு. எது எவ்வளவு மலிவாக இருந்தாலும் சிக்கனம் - சிக்கனம் தான்.
இன்றைக்குப் பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகத் தெய்வநாயகம் விளங்கினாலும் மிகவும் சிக்கனமாக இருக் கிறார். ஒரு கை வாரி, வாரி வழங்கினாலும் மறு கை இழுத் துப் பிடித்துச் சிக்கனமாகக் கண்காணித்துக் கணக்கெழுதி வரு

Page 18
18 இதோ ஒரு வெளிச்சம்
வதைப் பார்க்கலாம். 'வீண் செலவு செய்யக்கூடாது. என்ற கொள்கையை அவர் அனுபவ பாடமாக இங்கே கற்றுக் கொண்டார்' என்றே சொல்ல வேண்டும்.
கொழும்பில் கால்வைத்தபோது ஒரு சிங்கள வார்த்தை கூட தெரியாது. முறையாகச் சிங்களம் பேசத்தெரிந்து கொண் டதே மாத்தறையில்தான்.
அவருடன் சண்முகம்பிள்ளை கடையில் பாளையங் கோட்டை சுடலையாண்டிப் பிள்ளை என்பவர் பணியாற்றி வந்தார். அவர்தான் தெய்வுக்குக் குருவாக மாறினார். 'ததுரு, மாதுரு, மிரிஸ், லூணு' என்று சிங்களச் சொற்களை யெல்லாம் கற்றுக் கொடுத்தார். இப்படிக் கற்றுக் கொடுத்த குருவுக்குச் சிறப்புப் பணிவிடைகளைப் பாசத்தோடு செய்தார் தெய்வநாயகம். சிங்கள வகுப்புகள் இரவில் தான் நடக்கும், அறிவுக்கூர்மையும், ஆர்வமும் நிரம்பியிருந்தமையால் அவர் வேகமாகச் சிங்களம் கற்றார். இன்றைக்கும் கூட தமிழில் பேசுவதைவிட, விரைவாகவும், எளிதாகவும், சிறப்பாகவும் சிங்களத்தில் பேசும் ஆற்றல் தெய்வநாயகத்திடம் உண்டு.
நாட்கள் ஒடிக்கொண்டேயிருந்தன. ஒவ்வொரு நாளும் தெய்வநாயகத்தின் ஆற்றலில் முன்னேற்றமான மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. வெறும் எடுபிடி வேலைகளை மட்டுமே செய்து வந்தவர், பொருள்களை அளந்து கொடுக்கவும், விலை பேசவும், சீட்டெழுதிக் கொடுத்து விற்கவும் ஆரம்பித்தார். மாத்தறையிலிருந்தும், புகையிரத நிலையத்திலிருந்தும் சரக்கு களை உரிய பத்திரங்களை சமர்ப்பித்து எடுத்து வருதல், மற்ற வியாபாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்துதல் ஆகியனவற்றை யும் திறம்படச் செய்யும் நிலைக்கும் வந்துவிட்டார்.
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. பதினெட்டாம் வயதில் ஆர்வம் ததும்ப அன்றாடம் பாடுபட்டு வந்த அவருக்குச் சம் பளம். ஒன்றுமேயில்லை!
'முட்டாள்கள் வீடு கட்டுகிறார்கள்; அறிவாளிகள் அதில் குடியிருக்கிறார்கள்' என்று ஒரு கூற்று உண்டு, அப்படி வாழ்க்கை முழுக்க ஒரு பயனும் இல்லாமல் உழைத்து, உழைத்து முட்டாளாக இருக்க தெய்வநாயகம் எண்ணியதில்லை. 'முயற்சி

பயணங்கள் முடிவதில்லை 1 9
எங்கே இருந்தாலும் கண்கள் என்னவோ முன்னேற்றப் பாதையை நோக்கியபடிதான் இருந்தன.”
இதே இடத்தில் தொடர்ந்து இருந்தால் முன்னேற ஒரு வழியும் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அவர் அவ் விடத்தை விட்டு வெளியேற வழிதேடினார். அன்பாகப் பேசி, அன்பாகவே பழகி வந்த அவர் விலகிச் செல்ல மற்றவர்கள் அவரை அனுமதிக்கமாட்டார்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். 'சட்டென்று நான் வெளியேறுகிறேன்' என்று கத்தரி யால் வெட்டிக் கொள்வது போல விலகிச் செல்லவும் அவரால் இயலவில்லை. அதேபோல் சொல்லாமல் கொள்ளாமல் கள் ளனைப் போல் ஒடிப்போகவும் விரும்பவில்லை. யார் மனமும் புண்படாமல் எப்படி வெளியேறுவது என திட்டமிட்டு, ஒரு நாள் 'வயிற்று வலி' நாடகம் போட ஆரம்பித்தார். கடுமையான வயிற்று வலியென அடிக்கடி நடித்தார். "இனி மேலும் இங்கு வைத்திருப்பதில் பயனில்லை. வைத்தியம் பார்க்க ஊருக்குப் போயாக வேண்டும்" என்று அவரை வேறு வழியின்றிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். ஐந்து ஆண்டு கால உழைப்பிற்கு இறுதியாகக் கையில் கொடுத்த தொகை ரூ.36/- கொழும்பிலிருந்து மாத்தறைக்கு வந்தவர் இப்போது திரும்பி மீண்டும் கொழும்புக்கே வந்தார்!
'இனி, என்ன செய்வது'?
கொழும்பை விட்டு நகருவதாக இல்லை. எப்படியேனும் இம்மாநகரிலேயே ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாக முயன்றார். தம் தந்தையின் தம்பி - ஈஸ்வரம் பிள்ளை என்பவர் ஒரு கடையில் மனேஜராக இருந்

Page 19
2 O இதோ ஒரு வெளிச்சம்
தார். அவரிடம் வேலை கேட்டுப் பார்த்தார். ஏனோ
அவருக்குத் தெய்வநாயகத்தை தன் கடையில் வைத்துக் கொள்ள இயலவில்லை. ஒல்டு புச்சர் சாலையில் உள்ள வெ.க. கல்யாண
சுந்தரம் என்பவருடைய கடைக்கு அனுப்பி வைத்தார்.
அந்தக் கடையில் வேலை கிடைத்தது. இளைஞரான தெய்வ நாயகத்தை மதிப்பாக நடத்தினார்கள். ஆனால் இங்கும் சம் பளம் தருவதாக இல்லை. 'பொறுத்துப் பார்த்த அவர் ஒரு நாள் தனக்குச் சம்பளம் போட்டுத் தரவேண்டும்’ என்று கேட்டு விட்டார். 'எவ்வளவு சம்பளம்? என்று கேட்ட போது, மாதம் ரூ.30/- என்றார். ‘வேலைதானே கேட்டாய், கொடுத்து விட் டோம் சாப்பாடு போடுகிறோம், சம்பளம் வேறு எதற்கு?
மீண்டும் தெய்வநாயகம் சிந்திக்க ஆரம்பித்தார். 'வெறும் சாப்பாட்டிற்காக மட்டுமே உழைப்பதா? மூச்சு விடுவதற்காக மட்டுமே உயிர்வாழ்வதா? பெரிய இலட்சியங்கள், ஆசைக் கனவுகள், எதிர்கால ஏக்கங்கள் எல்லாவற்றையும் சில சோற்றுக் கவளங்களுக்கு அடகு வைத்து விட்டுப் பேசும், நடமாடும், உழைக்கும் எந்திரமாக வாழ்வதா?
சிந்தனையின் விளைவு. வேறு இடத்தைப்பார்க்கத் தொடங்கினார். ஒரு சிப்பந்தியாக, கடைசியாக வேலை பார்த்த அடுத்த இடம்தான் அவர் வாழ்வின் திருப்புமுனை.
இதுவரை உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, சம் மட்டியால் அடிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட வாள், அங்கே தான் கூர்மையாக்கப்பட்டு பளபளப்பாக மெருகேற்றப்பட்டது.
 

5. உழைப்பின் வாரா
உறுதிகள் plant Gauntil
பெரும்பாலான மனித இதயங்கள் அன்புக்காக ஏங்கு கின்றன. சிலர் அன்பைத் தராமலேயே தங்களுக்கு மட்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சிலர் அன்பை வாரி வழங்கிவிட்டுத் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கிறார்கள். சிலர் அன்பைத் தருவதுமில்லை; பெற்றுக் கொள்வதுமில்லை.
தெய்வநாயகம் விவரம் புரியாத ஆறாம் வயதில் தாயை யும், சற்றே வளர்ந்த போது தந்தையையும் இழந்தவர். பன்னி ரண்டாம் வயதில் தன்னுடைய வாழ்க்கையைத் தானே வாழ வேண்டிய துழநிலைக்கு உந்தித் தள்ளப்பட்டவர்.
அன்பைச் சுமக்க வேண்டிய காலத்தில் அரிசி மூட்டை களைச் சுமந்தவர். பாசத்தை எடை போட வேண்டிய வயதில் பலசரக்குகளை எடைபோட்டவர். தந்தை வழிகாட்ட, தாய் பரிவைப் பொழிய வேண்டிய காலத்தில் கடை முதலாளி கூச் சல்போட, வாடிக்கையாளர்கள் வேதனையைக் கூட்ட, வாழ்ந் தவர்.
பழகியவர்களிடம் அவர் பாசத்தைச் சொரிந்தார். பண் பான சொற்களால் அவர்தம் இதயங்களை ஈரப்படுத்தினார். ஆனால் அவருக்கு உரிய அன்பு கிடைத்ததா என்றால் இல்லை.
முதலாளிகள் அவர் விட்ட பெருமூச்சை தென்றலாக்கிக் கொண்டார்கள்; அவர் சிந்திய வியர்வையைப் பன்னீராக மாற் றித் தெளித்துக் கொண்டார்கள். அவர் பாரங்களைச் சுமந்தார். முதலாளிகள் பணக்கற்றைகளைச் சுமந்தனர். அவருடைய இதயத்தின் வேதனைக் கீதத்தைக் கேட்க யாருக்கும் காது களில்லை; உயரத் துடிக்கும் அவருடைய இதயதாபத்தைத் துல் லியமாகக் கேட்கும் கருவியைக் கணக்குப் பார்க்கும் அவர்கள் யாரும் கையில் வைத்திருக்கவில்லை.

Page 20
22 இதோ ஒரு வெளிச்சம்
இந்த நிலையில் தான் ஓர் அவதாரப் புருஷனாய் கடலிலே அல்லாடிய கட்டு மரத்திற்குக் கரை காட்டிய கலங்கரை விளக்க மாய் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார் அருணாசலம் பிள்ளை அவர்கள்.
கொழும்பு தெமட்டகொடையில் கடை வைத்திருந்த ச. அருணாசலம்பிள்ளை கடையில் வேலைக்கு ஆள்தேவை என்ற செய்தி கிடைத்தவுடன் தெய்வநாயகம் ஆர்வத்தோடு அங்கே சென்றார். அவருக்கு வேலையும் கிடைத்தது. ‘பொடியன் - தெய்வநாயகம் அங்கேதான் தெய்வநாயகம் பிள்ளையாக உரு வெடுத்தார். மொட்டு அங்கேதான் மலர்ந்தது.
ஒரு மளிகைக் கடையில் 'பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வருகிறார்கள் என்று எண்ணுவது தவறு. வாடிக்கையாளர்கள் தரமான பொருளை, உரிய விலையில் எதிர்பார்ப்பது மட்டுமின்றி, அன்பான சொற்களையும், ஆதர வான உபசரிப்பையும், தான் ஒரு முக்கியமான நபர்' என்ற உணர்வினைத் தூண்டக் கூடிய கவனிப்பையுமே முக்கியமாக எதிர்பார்க்கிறார்கள்.
தெய்வநாயகம் பிற்காலத்தில் பெற்ற வெற்றி வெறும் குருட்டு அதிர்ஷ்டத்தில் பெற்றதல்ல. எந்தச் செயலையும் ஆழ்ந்த ஈடுபாட்டோடும், முனைப்போடும் செய்ததால் பெற்ற வெற்றியே!
தங்களுடைய வணிக நிலையத்திற்கு வருபவர்களிடையே இன்முகத்தோடு, கனிவாகப் பேசி வணிகம் செய்ய, அவர் கொஞ்சமும் முயல வேண்டிய தேவையேயில்லை. மல்லிகையிலிருந்து மணம் வருவதைப்போல அது அவருக்கு இயல்பாக வந்த கலை. ஆகவே வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே ஏராளமான வாடிக்கையாளர்களைத் தம்பால் ஈர்த்து விட்டார். கடைக்கு வருபவர்களுடைய கண்கள் முதலில் தேடுவது "தெய்வு'வைத் தான். மிகச் சரளமாக அவர் பேசும் சிங்களம், சிங்கள மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இத்தகைய சிறப்பியல்புகளால் அவர், ஏற்கனவே அக்கடையில் பணியாற்றி வந்த முகாமையாளருக்கு அடுத்த நிலையை விரைவிலேயே அடைந்து விட்டார். முதல் மாதத்திலேயே ரூ.20/- சம்பளமும் கிடைத்தது. அனைத்துக்கும் மேலாக தன் முதலாளி ச. அருணா

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! 23
சலம் பிள்ளை அவர்களுடைய இதயத்தில் மகத்தான ஓர் இடத் தையும் பிடித்து விட்டார்.
இதற்கிடையில் முகாமையாளர் திருமணம் செய்து கொள் வதற்காக ஆறுமாத விடுமுறையில் இந்தியா கிளம்பினார். அவர் திரும்பி வரும் வரை கடையை மேற்பார்வை செய்ய யாரை நியமிப்பது?’ என்ற தயக்கம் சிறிதும் இல்லாத நிலையில் தெய்வநாயகத்தின் விருப்பத்தை அருணாசலம் பிள்ளை கேட் டார். தம் பதினெட்டாம் வயதில் கிடைத்த இந்த வாய்ப்பை மிகுந்த விருப்பத்துடனும், பொறுப்போடும் தெய்வநாயகம் ஏற் றுக் கொண்டார். அவருடைய சம்பளம் ரூ.30/- ஆக உயர்ந் தது. வெற்றிக்கு என்ன தத்திரம்? என்று கேட்டபோது ஒரு வெற்றியாளர் கூறினார்.
முன் அனுபவங்கள் + வாய்ப்பு = வெற்றி. ஏற்கனவே 6 ஆண்டுகளாக உழைத்துப் பெற்று வைத்திருந்த முன்னேற்பாடு களுடன், இந்த வாய்ப்பும் அவருக்குச் சாதகமாக இணைய வெற்றித் தேவதை அவருடைய கதவுகளைத் தட்ட ஆரம்பித் தாள்.
அந்நாட்களில் சரக்குகளைக் கொள்முதல் செய்ய வேண்டு மானால் தெமட்டகொடை வாவியைப்படகில் கடந்து, ஆமர் வீதி சந்திக்கு வந்து, அங்கிருந்து டிராம் வண்டியில் புறக்கோட் டைக்கு வந்து சரக்குகளைக் கொள்முதல் செய்யவேண்டும். இதனைத் தெய்வநாயகம் தாமாகவே செய்வார். பேரம் பேசி சரக்குகளைக் கொள்முதல் செய்வதில் அவர் மிகவும் சிறந்து விளங்கினார். அதேபோல் வாங்கிய பொருள்களை நியாய மான விலையில் விற்பதிலும் சிறந்து விளங்கினார்.
பொருள்கள் மிக மலிவாக இருந்த காலம் அது. இருபத் தைந்து சதத்தைக் கடைக்கு எடுத்து வந்து 10 சதம் அரிசி, 15 சதத்துக்கு எஞ்சிய் சரக்குகள் என்று மக்கள் மகிழ்ச்சியாக வாங் கிச் சென்ற காலம்.
வர்த்தகத்தில் ஒரு சிறந்த குறிக்கோளைத் தெய்வநாயகம் கடைப்பிடித்தார். அது அடிக்கடி அவருடையமுதலாளி அருணா சலம் பிள்ளை சொல்லுவது, "குறைத்து அளக்காதே, குறைத்து நிறுக்காதே சரியான அளவில், சரியான நிறையில் வியாபாரம் செய். ஆதாயம் தானாக வரும்" இன்றளவும் அந்தக் கொள் கையைத் தெய்வநாயகம் கடைப்பிடித்து வருகிறார்.

Page 21
24 இதோ ஒரு வெளிச்சம்
வியாபாரம் மிகச் சிறப்பாக நடந்தது. சிங்கள மக்கள் ‘எங்கே தெய்வநாயகம் மாத்தையா?’ என்று கேட்டபடி, எங் கிருந்தோவெல்லாம் வந்து பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இஸ்லாமியர், தமிழர், சிங்களவர் என அனைவரும் திரளாக வந்து பொருட்களை வாங்க வியாபாரம் சிறக்கத் தொடங்கி விட்டது. முதலாளிக்கு மிகவும் மகிழ்ச்சி, அதே நேரத்தில் தெய்வநாயகத்தின் ஆற்றலுக்கும் ஈடுபாட்டிற்கும் மிகப் பெரிய வெற்றி.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள இந்தியா சென்றிருந்த மனேஜர் மீண்டும் கொழும்பு திரும்பினார். தாம் இல்லாத போது நடைபெற்ற வியாபாரத்தின் அளவு அவரை மலைக்கச் செய்தது. ஏற்பட்டுள்ள முன்னேற்றமோ அவரைத் திடுக்கிட வைத்தது. பொறாமை மேகங்கள் அவர் இதயத்தின் மீது கவிழ்ந்தன. இருண்ட நெஞ்சத்திற்கு இனி அவர் சொந்தக்காரரானார்.
'கொசுக்கள் மனிதர்களை விட எவ்வளவோ மேல்; காரணம் அவைகள் ஒன்றையொன்று கடித்துக் கொள் வதில்லை’
மனேஜர் கடிக்க ஆரம்பித்தார். எப்படியெல்லாம் தெய்வநாயகத்திற்குத் தொல்லை கொடுக்க முடியுமோ அப்படி யெல்லாம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
கடைக்கு வருபவர்களெல்லாம் மனேஜராகிய தம்மை விட்டுவிட்டு, தெய்வநாயகத்திடம் ஒடிப் போய்ப் பேசுவது, பழகுவது போன்ற காட்சிகள் எரிந்து கொண்டிருந்த பொறா மைத் தீக்கு நெய் சேர்த்தது.
தங்களால் உயரமாக வளர முடியாத சில மனிதர்கள் ஏற் கனவே வளர்ந்து விட்ட மற்றவர்களின் கால்களை வெட்டப் பார்ப்பார்கள்.
அத்தகையை அருவருப்பான செயலில் முகாமையாளர் இறங்கினார். அடுக்கடுக்கான தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தார். 'ஒரு கட்டத்தில் தானே வேலையை விட்டு வில கினால் என்ன?’ என்று சிந்திக்கும் நிலைக்குத் தெய்வநாயகம் வந்து விட்டார்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! 25
ஆழ்ந்த இறைபக்தியையும், முருகப் பெருமானுடைய திரு வருளையும் ஒருங்கே பெற்றிருந்த தெய்வநாயகத்திற்கு இந்தத் தடைக்கல்லும் படிக்கட்டாகவே மாறிவிட்டது. காலில் குத்துவது ஆணி போலத் தோன்றினாலும், அது தன்னை உயர்த்துவதற் காக நிறுத்தப்பட்ட ஏணி என்பது மெல்லப் புரிந்தது.
அருணாசலம்பிள்ளை அவர்களுக்கு மற்றுமொரு அரிசிக்கடை இருந்தது. அந்தச்சிறிய கடையைச் சங்கரன் என்பவர் நிர்வகித்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக என்ன முயன்றாலும் அந்தக் கடை நட்டத்திலேயே நடந்து கொண்டிருந்தது. அவருக்கு உடல்நலனும் சரியில்லாமலிருந் தது. சங்கரன் பிள்ளையும் கடையை விட்டு விலக விருப்பமாக இருந்தார்.
அவ்வப்போது, மனேஜருக்கும், தெய்வநாயகத்துக்கும் சச்சரவுகள் ஏற்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணா சலம்பிள்ளை இருவரையும் பிரிக்க எண்ணினார்.
அவர் தெய்வநாயகத்தை அழைத்து 'அரிசிக் கடையின் பொறுப்பை ஏற்று நடத்துகிறாயா?" என்று கேட்டார்.
தம் வாழ்க்கையின் மற்றுமொரு திருப்புமுனை தம் வாசலில் நிற்பதனைத் தெய்வநாயகத்தால் உணர முடிந்தது.
உடனே துணிச்சலுடன் “சரி” என்று கூறி வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.
உள்ளூர அளவு கடந்த விருப்பம் விரவினாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் மிக்கப் பணிவாக கேட்கலானார்.
'ஐயா, காலமெல்லாம் நட்டத்திலே நடந்து வருகின்ற நிறுவனத்தைக் கையிலே கொடுத்து நடத்தச் சொல்லுகிறீர்
R 9 அப்படியானால், என்ன செய்யலாம்? சொல்
'ஐயா, கடந்த நான்காண்டுகளாக நான் தங்களிடம் பணி யாற்றி வருகிறேன். இதுவரை சம்பளமாக எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. அந்தப் பணமே ரூ.2000/- இருக்கும். அதனை நீங்களே வைத்துக் கொண்டு, கடையை எனக்குக் கிரய மாகக் கொடுத்து விடுங்களேன். மேலும் பணம் கேட்பீர்களா யின் நான் உழைத்துக் கொடுத்து விடுகிறேன்'

Page 22
26 இதோ ஒரு வெளிச்சம்
அருணாசலம்பிள்ளை ஒன்றும் சொல்லவில்லை.
இருபத்திரண்டு வயதில், கம்பீரமான இளைஞனாகத் தன் முன் கோரிக்கை வைத்து நின்ற தெய்வநாயகத்தைப் பார்த் தார். 'தனியாக எப்படி வியாபாரம் செய்யப் போகிறான்? என்ற கேள்வி அவரைக் குடைந்தது. அதுவும் இது நாள் வரை இலாபத்தைப் பார்க்காத கடை வேறு!
இதற்குள் சங்கரம் பிள்ளை, திட்டவட்டமாக விலக விருப் பம் தெரிவித்தும் விட்டார்.
ஆகவே, அருணாசலம் பிள்ளை, தெய்வநாயகத்திடம் 'கடையை ஓராண்டு நடத்து பார்க்கலாம்' என்று ஒப்படைத் தார். அப்போது அவர் சம்பளம் ரூ. 100
சாதாரண மீன் குஞ்சுக்கே நீந்தக் கற்றுத்தர வேண்டியதில்லை. தெய்வநாயகத்துக்குச் சொல்லித்தரவா வேண்டும்? தோல்விப் புயலில் இதுகாறும் சிக்கியிருந்த அந்தக் கடையில் வெற்றித் தென்றல் வீசத் தொடங்கி விட்டது.
f
d56) மாறியவுடன், வாடிக்கையாளர் பலரும் கடையை மாற்றிக் கொண்டனர். தெமட்டகொடையில் அவரிடம் வாங் கிக் கொண்டிருந்தவர்கள் கூட, காஸ் வேர்க்ஸ் வீதிக் கடைக்கு ஓடி வந்து அரிசி வாங்கினார்கள். பெரேரா என்ற அரசு கொந்தரத்துக்காரர் மூடை மூடையாக அரிசி வாங்கினார், வியாபாரம் சிறப்பாக நடந்தது. நல்ல"இலாபமும் முதலாளிக்குக் கிடைத்தது.
'தனி ஒருவராகக் கடையை வெற்றிகரமாக நடத்திக் காட்ட முடியும்’ என்பதனை அனைவருக்கும் உணர்த்திக் காட்டி விட் டார் தெய்வநாயகம். W
 

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! 27
'தன் தொண்டர்கள் தோற்கும்போது, வெற்றி பெற்று நிரூபித்துக் காட்டுபவனே தலைவன்’ என்பதனை ஒரு நல்ல தலைவனுக்குரிய பண்பாக வரையறுப்பார்கள். அந்த வகையில் தோல்வியைச் சுமந்து கொண்டிருந்த ஒரு கடையின் தோளி லிருந்து அந்தச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கூன் போட் டிருந்த கடையை நிமிர்த்தி வைத்து அதன் கழுத்தில் வெற்றி மாலையை அணிவித்தார் தெய்வநாயகம்.
மாலை சூட்டியவரின் கழுத்தில் மணமாலை துட்டப்பட்ட வரலாறை நாம் காண வேண்டாமா?

Page 23
6. மணத்தால் மலர்ந்த வாழ்வு
'ஒரு மனிதன் திருமணத்திற்குப் பின்னரே முழு மனிதனாக மாறுகின்றான்' என்பது சிந்திக்க வேண்டிய கூற்று. தன் அன் பைப் பரிமாறிக்கொள்ள, தன் ஏக்கங்களைப் போக்கிக் கொள்ள, தன் தாபங்களைப் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு ஆடவனுக்கும் ஓர் அன்பான மனைவி தேவைப்படுகிறாள்.
இருபத்திரண்டு வயது என்பது இளமை துடிக்கும் வயது. மனம் துணை நாடி அலையும் வயது! அந்தவயதில் மகனிருந் தால் பெற்றோர்கள் மகனுக்கு ஒரு நல்ல மனைவியைத் தேர்ந் தெடுப்பார்கள்.
ஆனால், தெய்வநாயகம் நிலைமையோ வேறு பெற்றோர் அற்ற தழ்நிலையில், அவர் திருமணத்தைப் பற்றி எண்ணக் கூட இல்லை. அந்த நிலையில்தான் அருணாசலம்பிள்ளை முதலாளி என்கின்ற நிலையிலிருந்து மாறுபட்டு ஒரு தந்தை யாகவும், உற்ற நண்பனாகவும் உருவெடுத்தார்.
இளமை, அழகு இவற்றுடன் நல்லொழுக்கம், கடும் உழைப்பு, நேர்மை அனைத்துக்கும் மேலாக வாழ்வில் முன் னேறத் துடிக்கும் உள்ளம் அனைத்தும் ஒரு சேர அமைந்த தெய்வநாயகத்திற்கு அருணாசலம்பிள்ளை தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மங்கை நல்லாளை வாழ்க்கைத் துணையாக இணைத்திட நாட்டம் கொண்டு அணுகினார்.
'கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?’ என்பார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தவுடன் கரும்பைச் சுவைத்திட தெய்வநாயகம் விரும்பிடவில்லை.
'இதயம் வேகமாகத் துடிக்கும் போது மூளை வேலை செய்ய மறந்து விடும்' என்பார்கள்.
ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தம்முடைய பொறுப்
 

மணத்தால் மலர்ந்த வாழ்வு 29
புணர்வையும், கடமையுணர்வையும் இழக்க விரும்பாத தெய்வ நாயகம் ஒன்றை உறுதியாகக் கூறினார்.
'முதலில் என் அண்ணன் சுடலைமுத்துவுக்குத் திருமணம் நடக்கட்டும். அதன் பின்னரே, என் திருமணத்தைப் பற்றிச் சிந் திப்பேன்."
சுடலைமுத்து அப்போது கொழும்பில் தம் தாய்மாமன் தெ. சண்முகம்பிள்ளை என்பவரின் கடையில் பணியாற்றி வந்தார்.
தெய்வநாயகத்திற்குப் பெண் தரப் பலபேர் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தார்கள். இவர் இப்படியொரு நிபந்தனை போட்டபின், அனைவரும் சுடலைமுத்துவுக்குப் பெண் தேடத் தொடங்கினார்கள்.
இதற்கிடையில் தன் இரு சகோதரிகளுக்கும் திருமணங் களை மிக எளிமையாக நடத்தி விட்டிருந்த தெய்வநாயகம் அண்ணனை விட்டுவிட விரும்பவில்லை.
அண்ணனுக்குப் போதிய சொத்துக்களில்லை என்ற காரணம் தான் திருமணத்திற்குத் தடையாக இருக்கின்றது என் பதனை நன்குணர்ந்த தெய்வநாயகம் ஒரு தியாக முடிவினை எடுத்தார்.
தம்பூர்வீக சொத்துக்கள் அனைத்திலும் தமக்கிருந்த முழு பாத்தியதையை அண்ணன் பெயருக்கு மாற்றி விடுதலைப் பத் திரம் எழுதிக் கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாத ஒட்டாண்டி யாய் நின்றார்.
ஒரு சதத்தைக் கூட வீணாக்காமல் மிகமிகச் சிக்கனமாக இருந்த ஒருவர், வாழ்க்கையில் வேறு சொத்து சுதந்திரங்கள் இல்லாத ஒருவர் தம்முடைய முழு சொத்துக்களையும் இழக் கிறார் என்றால் அது எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தி u 16ů66) T?
இவருடைய தியாகத்திற்கு இரண்டே காரணங்களைக் கூற முடியும்.
வாழ்வதற்குத் தான் பணம் தேவையே ஒழிய, பணமே வாழ்க்கையாகி விடாது. வாழ்க்கையென்பது தனிமனிதனுக்காக இல்லை; கடமையுணர்வோடும் - நெறிகளோடும் - குறிக்

Page 24
30 இதோ ஒரு வெளிச்சம்
கோள்களோடும் வாழ்வதுதான் வாழ்க்கையே தவிர தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று வாழ்வது வாழ்க்கை யாகாது. மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி முயலுவதுதான் வாழ்க்கை. உயிரோடு இருப்பவர்களை யெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.
இரண்டாவதாக, எதை இழந்தாலும் பின்னால் அதைவிடப் பலமடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியும், என்ற அளவற்ற தன்னம்பிக்கையே தம் சொத்தாக இருந்த காரணத்தால் துணிந்து தம் சொத்துக்களைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.
இன்றைக்கும் அவரோடு பழகுபவர்களுக்கு மூன்றாவது காரணம் தெரியும். 'கொடை' என்பது அவருடைய இரத்தத் தில் ஊறிய இயல்பான குணமாகவே அமைந்து விட்டது.
அண்ணனுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் தான் அவருடைய மனம் ஆறுதல் அடைந்தது.
ஆனால், அருணாசலம்பிள்ளையின் மனம் ஆறுதலடைய வில்லை. ஆகவே தெய்வநாயகத்தின் சேமிப்பிலிருந்து ரூ. 1200/- ஐ எடுத்து அவருடைய விஜயநாராயணன் என்ற சொந்த ஊரில் ஒரு நன்செய் நிலத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் பின்னர் தம்தாய் மாமன் மகளையே அவருக்கு மணம் பேசினார்.
1934ம் ஆண்டு தெய்வநாயகத்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டில்தான், தன் இருபத்து மூன் றாவது வயதில் தம்மை வளைய வரப்போகின்ற ஒரு இளம் பெண்ணின் வளைக்கரத்தை வாழ்க்கைத் துணைவியாகக் கைப் பிடித்தார்.
மாணிக்கம்பிள்ளை அவர்கள் ஈன்றெடுத்த செல்வி, ஈஸ் வரம் என்கின்ற நல் மாணிக்கமே அவருக்கு மனைவியாக வாய்த்த நல் மங்கை, ஆழ்வார்திருநகரி என்கின்ற அழகிய நகரில் தான் அவருடைய மணவாழ்வு தொடங்கியது. அது தான் அவருடைய மனைவியின் ஊர்.
நாடற்ற நிலையில், வீடற்ற நிலையில் ஆழ்வார் திரு

மணத்தால் மலர்ந்த வாழ்வு
திருக்கலாம். ஆனால் அதே ஊரில் ஒரு வாடகை வீட்டில் தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கி ஓராண்டு இல்லற வாழ்க் கையை நடத்தினார்.
பின்னர் துணைவியுடன் இலங்கை வந்து கொழும்பு நக ரில், புதிய சோனகத் தெருவில் 100ம் எண்ணுள்ள வீட்டில் குடிபுகுந்தார். அது புறாக்கூடு போன்ற வீடு. 12 குடும்பங்கள் 12 அறைகளில் வாழ்ந்தன. தெய்வநாயகம் 7 ரூபாய் வாடகை யில் ஒரே அறையில் வாழ்ந்தார்.
சில நாட்களில் அதே தெருவில் 144ம் எண்ணுள்ள பெரிய வீட்டிற்கு 15 ரூபாய் வாடகையில் குடிபெயர்ந்தார்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மூன் றாம் ஆண்டு திருமதி. ஈசுவரம் உடல் நலம் குன்றினார். தெய்வ நாயகம் கலக்கமுற்றார். ஆழ்வார் திருநகரிக்கே தன் மனைவியை அழைத்து வந்து மருத்துவம் பார்த்தார்.
திருமணமாகி நான்காவது ஆண்டு நடந்து கொண்டிருந்தது. நாட்கள் சோதனையாக நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள், தெய்வநாயகத்தின் இதயத்தில் மலர்ந்திருந்த ரோஜா மலர் வாடி உதிர்ந்து விட, எஞ்சியிருந்த நினைவு முட்கள் இதயத்தைக் குத்திக் காயப்படுத்திக் கொண்டிருந்தன.
எது உடல், எது உள்ளம்' என்று பிரிக்க முடியாத அளவு ஒன்றி வாழ்ந்த அந்த அன்றில் பறவைகளைக் காலன் பிரித்து விட்டான். -- WM
காலம் என்கின்ற வானில் களித்துப் பறந்து கொண்டிருந்த இரு பறவைகளில் ஒன்றினைக் காலன் என்கின்ற வேடன் மரண அம்பை எய்து கொடுமையாகக் கொன்று விட்டான்.

Page 25
32 இதோ ஒரு வெளிச்சம்
தெய்வநாயகம் விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்று விட்டார். ஒடி, ஆடி எறும்பு போல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்த அவர் எதிலும் ஈடுபாடில்லாமல், உயிரற்ற உ. லாய் நடமாடிக் கொண்டிருந்தார்.
தம்மிடம் வேலை பார்க்கும் தொழிலாளியாக எண்ணா மல், தம் மகனுக்குரிய பாசத்தை அவரிடம் வைத்திருந்த அருணாசலம்பிள்ளை இதே நிலையில் அவரை விட்டு விட விரும்பவில்லை. தம் தங்கையின் மகளையே அவருக்கு மணம் பேசி முடித்தார்.
1938ல் விஜயநாராயணன் கிராமத்தில் அருணாசலம் பிள்ளையின் வீட்டில் இந்தத் திருமணம் நடந்தது. பாளையங் கோட்டையிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லநாடு என்ற மிகச்சிறிய கிராமத்தைச் சேர்ந்த பிரமநாயகம் பிள்ளையின் அன்புமகள் வள்ளியம்மை என்ற மங்கை நல் லாளைத்தான் தெய்வநாயகம் மணந்து கொண்டார்.
கருகிக் கொண்டிருந்த மலர் மீண்டும் மலரத் தொடங்கி விட்டது. வாடிய வாழ்க்கையை வசந்தம் அணைத்துக் கொண் டது.
பிற்காலத்தில் தெய்வநாயகம் பெற்ற பெரிய வெற்றிகளுக் குப் பின்னால் உறுதுணையாக அமைந்தவர் வள்ளியம்மை. முருகனுக்கு, வள்ளி அமைந்தது போல, வள்ளியம்மை அமைந்தார்கள்.
மனித வாழ்க்கையில் பிறப்பு - இறப்பு இரண்டையும் தீர்
மானிக்கும் திறன் நம் கையில் இல்லை. ஆனால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே உள்ள வாழ்க்கையை வாழும் திறனும் உரிமையும் மட்டுமே நம் கையில் இருக்கிறது.
வாழ்க்கையின் பின்னால் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும் மரணம் என்னும் கருமையான திரையின் மீதுதான் வாழ்க்கையின் மென்மையான வண்ணங்கள் பரிசுத்த
ான நிலையில் வெளிப்படுகின்றன.
.. grirë சத்தயானா "உலகின் மிகப் பெரிய இரகசியம்
iiii
 
 
 
 
 
 
 
 

7. எங்கே அந்தச் சிறுவன்?
கடல்ரசன் தலைகுப்புற நெடுஞ்சாண் கிடையாக கீழே படுத்துக் கொண்டு தன் அலைக்கரங்களால் கந்தனின் கால் களைத் தொட மீண்டும், மீண்டும் முயலும் திருச்செந்தூர்க் கடற்
கரை,
குன்றிருக்குமிடமெல்லாம் குடியிருக்கும் குமரக்கடவுள், கடற்கரையிலிருந்து நானிலங்களைக் காப்பாற்றும் திருச்செந்
5/T Гт.
அந்த அழகிய கடற்கரையில், பல்லாயிரம் பக்தர்கள் ஆங் காங்கே சிதறிக்கிடக்க, நம் கண்ணில் குறிப்பாகப் படும் மூவரை இன்னும் கொஞ்ச நேரம் நன்றாகக் கவனிக்கலாமே!
அதில் ஒருவர் தற்போது 27 வயதை எட்டிவிட்ட இளை ஞர் நம் தெய்வநாயகம்.
வாட்டசாட்டமான உடல்; கம்பீரமான முகம், நிமிர்ந்த, நேரான நடை.
அன்றைக்கும் இன்றைக்கும் அவரிடம் எத்தனை மாற்றங் கள் :
கை விரல்களில் மோதிரங்கள்; வலது கையில் தங்கச் சங் கிலி, கழுத்தில் தங்கச் சங்கிலி, கைக் கடியாரத்தின் கைப்பட்டி தங்கத்தில்; காதிலே வைரக் கடுக்கன் இப்படி உடல் முழுக்க தங்க அணிகலன்கள் அதிக அழகைக் கூட்டின. முடியோ தியாக ராஜ பாகவதர் போல பின்னால் நீண்டு விழ வாரப்பட்டிருந்
bgl.
ஒரு காலத்தில் கொஞ்சம் முடி வளர்ந்தாலே எண்ணெய் செலவுக்கு அஞ்சி மொட்டையடிக்க வைக்கப்பட்டபோது அவர் உள்ளம் தலைமுடி வளர்ச்சிக்கும், கம்பீரத்திற்கும் எவ்வளவு ஏங்கியிருக்கக்கூடும்! அதற்கெல்லாம் சேர்த்து

Page 26
34 இதோ ஒரு வெளிச்சம்
வைத்து வளர்த்தது போல் நீண்டமுடி. இன்றைக்கும் அவர் தலையில் வழுக்கை இல்லை; அதே நீண்ட முடிதான் அதைக் குடுமியாக முடிந்திருக்கிறார்.
அன்று திருச்செந்தூரில் அவர் வந்த போது, அவருடைய உடலைத் தங்க அணிகலன்கள் அலங்கரித்துக் கொண்டிருந் தாலும் ஆடையாக உடுத்தியிருந்தது கதர்தான். தூய வெண் கதரில் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். இந்தியாவில் அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் சுதந்திரப் போராட் டங்களின் விளைவாக விவேகமுள்ள மக்கள் கதர் உடுத்தி வந்த நேரம். அண்ணலால் ஈர்க்கப்பட்ட அவர் கதர் ஆடை அணி வார். அதே நேரத்தில் பயணங்களின் போதும், இலங்கையின் முக்கிய நிகழ்ச்சிகளின் போதும் “கோட்டு' அணியும் வழக்க மும் உண்டு.
அன்று அவருடன் வந்து கொண்டிருந்த அடுத்தவர் இரண்டு மாதங்களுக்கு முன் அவர் கரம் பற்றிய அன்பு மனைவி வள்ளி யம்மை. அவர் மீதும் அதிக அணிகலன்கள். பட்டாடை உடுத்தி அன்புக் கணவரோடு ஆவல் ததும்ப, பெருமை பொங்க பூரிப் புடன் கடற்கரை மணலில் நடந்து வருகிறார்.
மூன்றாவதாக அவர்களுடன் சேர்ந்திருந்தது பாண்டியன் பிள்ளை. அவர் வள்ளியம்மையின் அண்ணன், தெய்வநாயகத் தின் மைத்துனர்.
ஐப்பசி வெள்ளிக்கிழமை, திருச்செந்தூர் முருகனின் அருளைப் பெற வேண்டி ஆலயம் வந்த அவர்கள் முறைப்படி கடலில் நீராடி விட்டுப் பின்னர் ஆலயத்திற்குள் செல்ல விரும் பினர்.
ஒர் ஆரவாரமற்ற பகுதியில் நின்று தங்கள் தங்க நகை களையெல்லாம் கழற்றி ஒரு துண்டில் சின்ன மூட்டையாகக் கட்டி மற்ற ஆடைகளோடு சேர்த்துக் கடற்கரையில் வைத்து விட்டுப் பாண்டியனைக் காவலுக்கு வைத்துவிட்டுத் தம்பதியர் இருவரும் கடலிலே நீராட இறங்கினர். வெதுவெதுப்பான கடல் நீர், அலைகளின் ஆட்டம் இவற்றில் மகிழ்ச்சியாக இரு வரும் நீராடிக் கொண்டிருந்தனர்.
பாண்டியனுக்கு. அந்தத் துணிகளுடன் நகை மூட்டை இருப்பது தெரியாது. கொஞ்சநேரம் காவலிருந்த அவரும்

எங்கே அந்தச் சிறுவன்? 35
நீராடப் போய்விட்டார். ஒரு பெரிய கடலலை வந்திருக்கக் கூடும் நகை மூட்டை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டது. இது எப்போது இழுத்துச் செல்லப்பட்டது என்று
கூட அறியாத தம்பதியர் கரைக்கு வந்து பார்த்தபோது.
தாங்கள் வைத்திருந்த மூட்டையைக் காணவில்லை. துணி யோடு சேர்த்துக் கட்டியிருந்த நகை மூட்டை இல்லை; அது மட்டுமல்ல காவலுக்கு அமர்ந்திருந்த பாண்டியனைக் காண வில்லை.
பகீரென்றது இருவருக்கும் தெய்வநாயகம் அரும்பாடுபட் டுச் சேர்த்த அத்தனை ரூபாய்களும் நகைகளாக்கப்பட்டுச் சேமிப்பாய்த் தங்க வடிவில் இருந்தன. அவை காணாமல் போனால் அவ்வளவுதான்; எல்லாம் இழந்த பழைய நிலைமை தான.
பாண்டியன் நிச்சயமாக நகைகளை எடுத்துக் கொண்டு ஒடக்கூடியவரல்லர். நகைகள் என்ன ஆகியிருக்கும்?
முருகா! உன் அருளைப் பெற வேண்டிவந்த பக்தனுக்கு இப்படி ஒரு சோதனையா?
காலமெல்லாம் உழைத்து, உழைத்து நேர்மையாகப் பொரு ளைச் சேர்த்தவனுக்கு அருளையல்லவா நீ அருளவேண்டும்; நீ இப்படி மருள வைத்து விட்டாயா? 'முருகா! முருகா!' என்று புலம்பியபடி இருவரும் அந்த நீண்ட கடற்கரையில் தங்கள் உடமைகளைத் தேட ஆரம்பித்தனர்.
அப்போது கரையிலிருந்த ஒருவர் இவர்களைப் பார்த்து என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்ட போது எங்கள் உடை மூட்டையைக் காணவில்லை என்று கூறினார் தெய்வநாயகம்.
அப்போது கூட அவர் நகைகளைக் காணவில்லை என்று கூறவில்லை. அப்படிக் கூறினால் அது மற்றவர்களைக் கவர்ந்து முதலுக்கே மோசமாகப் போய் விடக்கூடும் என்று அஞ்சி அந் தப் பதட்டமான நேரத்தில் கூட எச்சரிக்கையாகக் கூறினார்.
அவருக்கு உடனே மறுமொழி கூறினார் அந்த மனிதர் 'உங்கள் மூட்டைதானே; அதோ பாருங்கள் கரையில் இருக் கிறது. சற்றுமுன் ஒர் ஆறுவயது பிராமணச் சிறுவன் கடலி

Page 27
36 جسمبر இதோ ஒரு வெளிச்சம்
லிருந்து இதை எடுத்து வந்து வைத்து விட்டு அதோ போகிறான் பாருங்கள்!' என்று நகைப் பொட்டலத்தைக் காட்டினார்.
இருவரும் ஒடிப்போய் மூட்டையை எடுத்துப் பார்த்தனர். கட்டு அவிழ வில்லை. பிரித்துப்பார்த்தனர். அத்தனை நகை களும் அவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தன. ஒன்று கூடத் தவறவில்லை.
கல்லாய்ச் சமைந்து நின்றார் தெய்வநாயகம். இப்படிக்கூட நடக்குமா! 'தொலைந்தது' என்ற முடிவுக்கு வந்த பின் இப் போது கையிலே வந்து விட்டதே கண்ணைப் பறிக்கும் நகை கள்! இறைவா இது எப்படி நடந்தது?
உடனே அந்த ஆறுவயது பிராமணச் சிறுவன் பற்றிய எண்ணம் நினைவுக்கு வந்தது. கடலிலிருந்து கரைக்குக் கொண்டு வந்து போட்ட அந்தச்சிறுவன், “அதோ போய்க் கொண்டிருக்கிறானே, அந்தச் சிறுவன் என்று சொன்னாரே எங்கே அந்த சிறுவன்?"
அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?
இருவரும் அந்தச் சிறுவனைத் தேட ஆரம்பித்தார்கள். தொலைவில் இருந்த பக்தர் கூட்டத்துக்குள் புகுந்த அந்தச் சிறு வனைப் பிறகு காண முடியவில்லை. கடற்கரை முழுக்கத் தேடியும் அந்தச் சிறுவனைக் காணவில்லை.
அந்த சிறுவன் வேறு எங்கேயும் போகவில்லை. தம் இதயத்துக்குள் வேகமாக ஓடிவந்து நிரந்தரமாக உட்கார்ந்து கொண்டான் என்ற உண்மை கொஞ்ச நேரம் கழித்துதான் அவருக்கு விளங்கியது.
 

எங்கே அந்தச் சிறுவன்? 37 ܀ - ܝ ܫ
ஆம் ஆறுவயது பிராமணச் சிறுவன்! என்று கரையிலிருந் தவர் சொன்னரே அவர் வெறும் சிறுவன் என்று சொல்லாமல் ஏன் ஆறு வயது என்று ஆறாம் எண்ணைச் சொல்ல வேண்டும். ஆறுமுகமாய் - அறுபடைவீட்டுக்குச் சொந்தக்காரனாய் - சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தில் அடங்கிய வனாம் முருகப்பெருமானுக்கல்லவா அந்த ஆறு என்கின்ற எண் சொந்தம்! அது மட்டுமா முருகன்’ என்றாலே அழகனல் லவா! ஆகவேதான் பிராமணச் சிறுவனாய்ப் பொலிவுடன், வெண்மையாய் முருகன் வந்தாரோ!
மெய்சிலிர்த்துப் போயிற்று தெய்வநாயகத்திற்கு!
தமக்கு வேண்டிய பக்தர்களிடம் சோதனைத் திருவிளை யாடல்கள் நடத்திய ஈசனின் பிள்ளைக்குத்தன் தந்தையின் குணத்தில் கொஞ்சமாவது இருக்காதா?
நகைப் பொட்டலம் கடலுக்குள் பிரித்து கடலிலே சிதறி யிருந்தால்? தண்ணிருக்குள் விழுந்திருந்தால்? எங்கே கிடைத் திருக்கும்?
ஆகவே, தன்னை நாடி வந்து தம்மைத் தேடி அலைய வைத்து இறுதியில் அருளைச் சொரிந்து விட்டு மறைந்து விட்ட வன் 'திருச்செந்தூர் முருகனே' என்று திட்டவட்டமாக நம்பி னார் தெய்வநாயகம்.
கண்ணிரைக் கந்தன் கை துடைக்காமல் எந்தக் கை துடைக்கும்! ஆறுதலை ஆறுமுகன் தராமல் வேறு
எந்தமுகம் தரும்! அழுகின்ற நெஞ்சிற்கு அமைதியை அழகன்
தராமல் யார் தருவார்!
“முருகா! முருகா! முருகா! முருகா!' என்று முருகனின் நாமத்தை அவருடைய நா உச்சரிக்க ஆரம்பித்தது. அவருடைய கால்களை ஏதோ ஒரு விசை உந்தித் தள்ளுவது போல உணர்ந் தார். சில வினாடிகளில் தம்பதியர் இருவரும் முருகன் சன்னதி யில் இருந்தனர். சிறப்புப் பூசை ஒன்றை நடத்தி முருகனுக்கு நடந்த அபிஷேகங்களைப் பார்த்துப் பரவசத்தில் ஆனந்தக் கண்ணிர் விட்டார் தெய்வநாயகம்!

Page 28
33 இதோ ஒரு வெளிச்சம்
‘சாஸ்தா வழிபாடு' என்னும் ஒரு மாய தேவதை வழிபாடு அவருக்கு இருந்தது. தங்கள் குலதெய்வமாக சாஸ்தா தெய்வத்தை அவர் தீவிரமாக வழிபட்டு வந்தவர்.
இந்த நிகழ்ச்சி அவர் நெஞ்சில் ஒரு புதிய மாற்றத்தைத் தோற்றுவித்து விட்டது.
கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கரையில் தூக்கியெறியப்பட்ட தன் அணிகலன்களைப் போல் - சாஸ்தா வழிபாடு என்ற மாயக்கடலுக்குள் இருந்த அவரை முருகன்" இழுத்து வந்து கரையில் போட்டுவிட்டான். --
‘தெய்வநாயகம் - நீ என்னுடையவன், உன் அன்பு எனக்கு வேண்டும். உன்னை அலங்களிக்க உன் நகைகளை மீட்டு உனக் குத் தருகிறேன். என்னை உன் அன்பாலும், அணிகலன்களாலும் அலங்கரி” என்று முருகன் சொல்லாமல் சொல்லிவிட்டு எங் கும் மறையவில்லை. என்றென்றும் மறையாதபடி அவர் இதய பீடத்திலே ஏறி உட்கார்ந்து கொண்டான்.
இன்று இருபத்து நான்கு மணிநேரமும் முருகனின் நினை வாக இருக்கிறார் தெய்வநாயகம். எப்போதும் அவர் தப்பாமல் சொல்லுகின்ற சொல் 'முருகா! முருகா!'
முருகனுக்குள் முழுமையாக ஐக்கியமாகி விட்ட அவர் நகைகளை மீட்டுத் தந்த முருகனுக்குத் தன்னை அடகுவைத்து விட்டார்.
முருகனுக்கு அவர் ஆற்றியுள்ள இறைபணிகள் ஏராளம்.
 

எங்கே அந்தச் சிறுவன்? 39
கொழும்பு ஜிந்துப்பிட்டி முருகன் கோவில் அறங்காவல ராக இருந்து அவர் எடுத்த விழாக்கள் இந்து சமய வரலாற்றில் இடம் பெறவேண்டியவை. அவர் எழுதும் கடிதங்களில் 'ஜிந்துப் பிட்டி முருகன் கிருபை புரிவாராக! என்ற வரி நிச்சயம் இருக்கும்!
இப்படி இறை சேவையை அவர் ஆற்ற வேண்டும் என்ற இறை நோக்கத்தை ஆற்றுப்படுத்தத்தான் அன்றே ஆறுமுகன் இப்படித் திருச்செந்துாரிலே விளையாடியிருக்கிறான். முருகா! என்னே உன் அருள்!
தடயங்களைக் காணவில்லையே! இது எ வுள் கூறினார், 'என் அன்பிற்குரியவனே நீ தனி பார்த்த ஒரு ஜோடிக் காலடிச் சுவடுகள் நீ என போல உன்னுடையதல்ல.

Page 29
8. முதலாளியின் முதலாளி
அந்தக் கொடிக் கம்பத்தின் மீது ஒருவர் தோளின் மீது ஒருவராக ஏறி நின்று நாடா அளவுகோலை வைத்துக் கொடிக் கம்பத்தின் உயரத்தை அளந்து கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கேட்டார், “என்னப்பா செய்கிறீர்கள்?"
‘இன்று மாலை எங்க தலைவர் வந்து கட்சிக் கொடியேற் றப் போகிறார், அப்போ கொடிக்கம்பம் எவ்வளவு உயரம்னு கேட்பார். அவருக்கு சொல்லத்தான் உயரத்தை அளக்கிறோம்.'
“இந்தக் கம்பத்தை எப்போது நட்டீர்கள்?" "நேத்துக் காலையிலே!"
"அப்படியானால் நீங்க புதைக்குமுன்னே தரையிலிருந்த போதே எவ்வளவு நீளம் இருக்குண்ணு அளந்து பார்த்துவிட்டு நட்டிருக்கலாமில்லையா?”
'அட நீங்க ஒண்ணு! எங்க தலைவர் கொடிக்கம்பம் எவ் வளவு உயரம்னு தான் கேப்பார்! நீளம் எவ்வளவுண்ணு கேக்க மாட்டார்'
கேட்டவர் திகைத்துப் போனார்! அன்று இரவே கொடி யேற்றிய தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது கேட் டார், ‘என்னங்க! உங்க தொண்டர்களுக்கு நீளத்துக்கும், உயரத் துக்கும் வேறுபாடே தெரியலையே!' பதறியபடியே தலைவர் கேட்டார், 'நீங்க சொல்லிட்டீங்களா?”
'இல்லைங்க!” 'நல்லவேளை! சொல்லாம விட்டுட்டீங்க! அவங்களுக்கு நீளத்துக்கும் உயரத்துக்கும் வித்தியாசம் தெரியாததனாலத் தானே என்னால தலைவனா இருக்க முடியுது'
இது விளையாட்டுக்காகக் கூறப்படும் நகைச்சுவைத் துணுக்
 

முதலாளியின் முதலாளி - 4.
காக இருந்தாலும் கூட இதில் ஒரு எதார்த்தமான உண்மை பளிச்சிடுகின்றது.
தங்கள் கீழே இருக்கும் தொண்டனை விவரம் தெரியாத ஆளாக வைத்துப் பிழைக்கவே பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள்.
தெய்வநாயகம் நிறைய முதலாளிகளைச் சந்தித்தவர் தலை தூக்கவிடாமல், நிமிர்ந்து நிற்கக் கூட விடாமல் அவரை ஒடுக் கியே, தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் அவர்கள்.
ஆனால், ஆயிரக்கணக்கான விண்மீன்களுக்கு நடுவே பளிச்சிடும் துருவ நட்சத்திரமாய்த் துலங்கியவர் அருணாசலம் பிள்ளை. அலைகடலில் சிக்கித் தவிக்கும் கலங்களுக்கு ஒளி காட்டி, வழிகாட்டும் கலங்கரை விளக்கம் தான் அருணாசலம் பிள்ளை.
தெய்வநாயகத்தை அவர் தம்முடைய தொழிலாளியாகப் பார்க்கவில்லை - தம் பிள்ளையாகவே பார்த்தார். ஒடியாடி சுறுசுறுப்பாக, வியர்வை சிந்திக் கடமையே கண்ணாக, கருத் தாக உழைத்துக் கொண்டிருக்கும் தெய்வநாயகத்தைப் பார்க் கும் போதெல்லாம் அவர் நெஞ்சிலே பாச ஊற்று பொங்கியது.
பெற்ற மகனுக்கும் மேலாகப் பாசத்தைத் தெய்வநாயகத் திடம் பொழிந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆற்றலின் உச்சகட்டமாகத் தெய்வநாயகம் தன் திறமைகள் வெளிப்படுத்திய போதெல்லாம் தம்மையே மறந்து தன் முதலாளி தெய்வநாயகம் என்று மற்ற வர்களிடம் சொல்லவும் துணிந்தவர் அருணாசலம்பிள்ளை.
ஒருநல்ல முதலாளி கிடைப்பது என்பது அவ்வளவு எளி தான செய்தியல்ல. எல்லாவகையிலும் சிறந்த மனிதராக அருணாசலம் அமைந்திருந்தார்.
கடையில் முதலாளியின் இருக்கையில் அருணாசலம் பிள்ளை அமர்ந்திருப்பார். வருகின்ற வாடிக்கையாளர்கள் அவரிடமே கேட்பார்கள், 'என்னங்க முதலாளி இல்லையா?” என்று.
ஒரு சராசரி மனிதனின் இதயமாக இருந்தால் பொறாமை

Page 30
42 இதோ ஒரு வெளிச்சம்
யாலும், கோபத்தாலும் வெடித்திருக்கும். ஆனால் பெருந்தன் மையின் சிகரமாய்த் திகழ்ந்த அருணாசலம் பிள்ளைக்கோ பெருமையாக இருந்தது. மற்றவர்கள் ‘முதலாளி' என்று எண்ணக்கூடிய அளவுக்கு ஈடுபாடோடு தெய்வநாயகம் உழைக் கிறாரே என்று.
வாடிக்கையாளர்கள் அருணாசலம்பிள்ளையிடம் கேட் பார்கள். 'முதலாளியைப் பார்க்க வேண்டும்' மாறாத புன்ன கையோடு, மலர்ந்த முகத்துடன் அவர் கடைக்குள் சென்று தெய்வநாயகத்திடம், ‘தெய்வு, உன்னைத்தான் கூப்பிடுகிறார் கள்’ என்று சொல்லி அனுப்பி வைப்பார்.
சில நாட்டுப்புற வியாபாரிகள் கடைக்கு வரும் போது தெய்வநாயகம் கடையில் இல்லாமல் வெளியே போயிருப்பார். ஆனால் அவர்களோ முதலாளியைப் பார்த்துவிட்டுத் தான் பேர்க வேண்டும் என்று கூறிவிட்டு மணிக்கணக்காகக் காத்திருப் பார்கள். அருணாசலம் பிள்ளை வியாபாரிகள் தெய்வநாயகத் திடம் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் பார்த்து மனம் நெகிழ்ந்து போவார்.
இறக்குமதியாளர்களிடமிருந்தும், பெரும் வணிகர்களிட மிருந்தும் சரக்குகள் வாங்கி இறக்குவார்கள், தரவேண்டிய, தொகைக்காக 'ஆன் டிமாண்டு நோட் எழுதி இன்ன தேதியில் தருகிறேன் என்று உத்திரவாதம் தர வேண்டும். வழக்கமாக வும், நியாயமாகவும் இதை எழுதித் தரவேண்டியது கடையின் முதலாளி அருணாசலம்பிள்ளை. ஆனால் ஆன் டிமாண்ட் நோட்டீஸ் எழுதிக் கொடுப்பது தெய்வநாயகம். அதைப் பெற்றுக் கொள்ளும் வியாபாரிகளுக்கே நன்றாகத் தெரியும் தெய்வநாயகம் முதலாளி இல்லை என்று. இருப்பினும் அவர் கள் ஏற்றுக் கொள்வார்கள்.
தம்மிடம் வேலை பார்த்துக் கை நீட்டிச் சம்பளம் வாங்கும் நிலையில் இருக்கும் ஒருவருக்குத் தம்மை விட மதிப்பு இருக் கிறதே! என்று அவர் மாய்ந்து மருகவில்லை. பொறாமைப்பட வில்லை. மாறாக மகிழ்ந்தார்.
'அன்பு செலுத்துவது' என்பது ஓர் அரியகுணம். அதுவும் தன் கீழ் வேலை செய்யும் ஒருவரிடம் அன்பைக் காட்டுவதும், பாராட்டுவதும், போற்றுவதும் நாம் காணக் கிடைக்காத அரும்

முதலாளியின் முதலாளி 43
காட்சிகள். அருணாசலம் பிள்ளை ஒப்பற்ற ஒரு தலைவனுக் குரிய அத்தனை நற்குணங்களையும் ஒருசேரப் பெற்றிருந்தார்.
இருப்பினும் ஒர் ஐயம்! இவ்வளவு அன்பையும் பெறுவதற் குரிய தகுதி தெய்வநாயகத்திற்கு இருந்ததா? எதனால் தம் இடத் தையே அருணாசலம்பிள்ளை, தெய்வநாயகத்திற்கு வழங்கி மகிழ்ந்தார்? எத்தகைய நற்பண்புகளையும், ஆற்றல்களையும் தெய்வநாயகம் பெற்றிருந்தார்?
ஆயிரம் காகங்களுக்கிடையே ஒளித்து வைத்திருந்தாலும் குயில் தன் இனிய ஓசையை எழுப்ப மறந்து விடுமா?
வான் கோழிகள் கூட்டத்திலே அலைந்து திரிந்தாலும் மயில் தன் தோகையை விரித்து ஆட மறந்திடுமா?
இரும்பு, தகரத்துண்டுகளுக்கிடையே வீழ்ந்துகிடக்கும் தங் கத் தகடு துரிய ஒளியில் மின்னாமல் போய் விடுமா?
தெய்வநாயகத்தின் ஆற்றல்க்ளும், நற்பண்புகளையும் அப் படிப்பட்டவையே! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக அவை மிளிர்ந்து கொண்டே வந்தன!
அவர் மிக அன்பாகப் பேசுவார்; அழகாகப் பேசுவார்! சொல்லப் போனால் தமிழை விட சிங்களத்தில் இன்னும் சிறப்பாகப் பேசுவார். ஒரு வியாபாரியின் தலையாய பண்பு பேச்சாற்றலே! அந்த ஆற்றல் அவரிடம் நிறைய இருந்தது.
தம்மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பவருக்கு துரோகம் செய்யாமலிருப்பது உயரிய ஒரு நற்பண்பு. தெய்வ நாயகத்தின் ஆற்றலைப் பார்த்து வியந்த பல வணிகர்கள் கொக்கி போட்டு அவரை இழுத்துப் பார்த்தனர். தூண்டிலைத் தூவி ஆசைக்கடலிலே எறிந்து அவரைப் பிடிக்க முடியுமா? என்று படாதபாடுபட்டனர்.
*அதிக சம்பளம் தருகிறோம்!" என்று சில முதலாளிகள். லாபத்தில் பங்கு தருகிறோம்' என்று சிலர். 'ஒரு கூட்டாளி யாகச் சேர்த்துக் கொள்கிறோம்!' என்று சிலர்.
இப்படி எத்தனையோ முதலாளிகள் வலை விரித்தும் அந் தக் கொடிய வலைகளைத் தம் மன உறுதியால் வெட்டி எறிந் தார் தெய்வநாயகம்.

Page 31
44 இதோ ஒரு வெளிச்சம்
4.
'உண்மையே உயர்ந்த மார்க்கம்; நேர்மையே சிறந்த வழி!' என்பது அவருடைய தாரக மந்திரமாக இருந்தது.
சிக்கனம் என்பது தெய்வநாயகத்தின் சீரிய குணம். மாதச் சாப்பாட்டிற்கு ஆகும் செலவு ரூ. 15 தான். தேவையில்லாமல் செலவு செய்யும் பழக்கம் அவருக்குக் கிடையாது. அப்போது அவருக்கு இருந்த ஒரே ஒரு நாட்டம் ‘வெற்றிலை போடுவது தான்.
தம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் - வியாபாரி களுக்கு வெற்றிலை வாங்கித் தருவது அவர் வழக்கம். அதே நேரத்தில் அவரும் அடிக்கடி வெற்றிலை போடுவார். மற்றவர் களுக்கு வாங்கித் தரும் வெற்றிலைக்கான செலவைக் கடையின் வியாபாரக் கணக்கில் எழுதுவார். ஆனால் தம்முடைய வெற் றிலைச் செலவைத் தானாகச் செய்வாரேயொழிய, கடைக் கணக்கில் எழுதமாட்டார். அந்த அளவுக்கு 'வியாபாரம் வேறு - சொந்தச் செலவு வேறு’ என்று நேர்மையாகப் பிரிக்கும் குணம் மிக இளம் வயதிலேயே அவரிடம் இருந்தது.
வணிகம் செய்வோருக்கு வாக்குத் திறமையும் அதே நேரத் தில் சற்றுத் தந்திரமும் வேண்டும். தம் கடையை நாடி வரும் வாடிக்கையாளரை எப்படியாவது சம்மதிக்க வைத்து, வெறுங் கையோடு திரும்ப அனுப்பாமல் பொருள்களை விரும்பி வாங் கச் செய்து அனுப்புவதுதான் ஒரு நல்ல விற்பனையாளரின் இலக்கணம்.
அருணாசலம்பிள்ளையின் முன் ஒரு வியாபாரி அரிசி மூட்டைகள் வாங்கிச் செல்ல உட்கார்ந்திருப்பார். அவர்
 

முதலாளியின் முதலாளி 45
y
காட்டும் மாதிரி அரிசிகள் அவருக்குப் பிடித்திருக்காது. அந்த நேரத்தில் அங்கே தெய்வநாயகம் குறுக்கிட்டுக் கடைப்பையனை அழைப்பார் உள்ளே ஒவ்வொரு மூடையிலிருந்து கொஞ்சம் அரிசிப் பிடிகளை எடுத்து வைத்து வணிகர் முன்னால் குவிக்கச் சொல்லுவார். -
அவர் வரிசையாக ஒவ்வொரு குவியலாகப் பார்த்து எந்த அரிசியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த அரிசி மூடைகளை, அவர் விரும்பியபடி விற்பனை செய்வார். தான் விரும்பிய அரிசியை வாங்கிய பெருமையுடன் வியாபாரி கிளம்புவார்.
ஆனால் உள்ளே நடந்த செயல்வேறு ஒரே மூடை யிலிருந்து தான் அத்தனை பிடி அரிசிகளும் மாதிரியாகக் கொண்டு வரப்பட்டு தனித்தனியாக வைக்கப்பட்டன. நல்ல அரிசியாக எப்போதும் விற்பனை செய்யும் வழக்கமிருந்ததால் வாங்கியவருக்கு மனக்குறைவு ஏற்பட வழியில்லை. அதே நேரத் தில் வணிகமும் நடந்தேறியது. வாடிக்கையாளரையும் தக்க வைத்துக் கொண்டார்.
ஒருவரைப் பார்த்தமாத்திரத்திலேயே அவர் யார்?' 'எப் படிப்பட்டவர்?' 'எவ்வளவு வாங்குவார்?' 'அவர் வாங்கும் திறன் எவ்வளவு?’ என்றெல்லாம் நொடியில் கணக்குப் போடும் ஆற்றல் தெய்வநாயகத்திற்கிருந்தது. பேசும் போதே மனோதத் துவ ரீதியாக அணுகக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார்.
கடையில் முதலாளி - கணக்காளர் - மனேஜர் கடையாள் என்று பலவேலைகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றல் இருந் தது. கடையில் அவருக்குக் கீழே இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே உதவிக்கு இருப்பார்கள்.
இன்றைக்கிருப்பது போல அன்றாடம் சேர்ந்த தொகையை வங்கியில் செலுத்துவது; காசோலை, பணவரைவு இவற்றின் மூலம் வணிகம் செய்வது போன்ற வழக்கங்கள் அன்று கிடை யாது! சொல்லப்போனால் காகித நோட்டுக்கள் கூட குறைவு தான். பணம் - சல்லியாக நாணயங்களாக இருக்கும். கணக் கெழுதி வியாபாரம் செய்யவும் இல்லை - செய்யவும் முடியாது. அன்றாடம் இரவு வதலான தொகையை மூடையாகக் கட்டி எடுத்துச் சென்று இரவிலே எண்ண வேண்டும். அப்படி நாண

Page 32
46 இதோ ஒரு வெளிச்சம்
யங்களை வேகமாக எண்ணுவதிலும் கூடத் தெய்வநாயகம் மிக வும் திறன் படைத்தவராக இருந்தார்.
வியாபாரத்தில் கிடைக்கும் இலாப சதவீதம் கூட ஐந்து முதல் இருபத்திஐந்தாக இருந்தது. இருப்பினும் பெரிய அள வில் வணிகம் நடந்ததால் கணிசமான இலாபத்தைத் தெய்வ நாயகம் ஈட்டித் தந்தார்.
தம் முதலாளியாய், தோழனாய், தந்தையாய், ஆசானாய், வழிகாட்டியாய் இருந்த அருணாசலம்பிள்ளை அடிக்கடி சொல்லிக் கொடுத்த ஒரு கோட்பாடு குறைத்து அளக்காதே! குறைத்து நிறுக்காதே! அந்த வணிக நாணயத்தை இன்றளவும் கடைப் பிடித்து வருகிறார்.
கொழும்பு, செட்டியார் தெருவில் உள்ள தெய்வநாயகத் தின் அலுவலகத்தில் அருணாசலம் பிள்ளை அவர்களுடைய பெரிய உருவப்படம் மாட்டப்பட்டுள்ளது. இன்றைக்கும் தெய்வ நாயகம் அன்றாடம் தம் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் முதலில் சென்று நிற்பது அப்படத்தின் முன்னால் தான். ஊது வத்தி கொளுத்தி தூபம் காட்டிக் கை கூப்பி அவ்வுருவத்தை நெஞ்சார நன்றியோடும், பெருமையோடும் வணங்கிவிட்டுத் தான் தம் அலுவலக நாற்காலியில் உட்கார்ந்து பணிகளைத் துவக்குகிறார். இன்றைக்குப் பல்வேறு தொழில் நிறுவனங் களுக்குத் தாமே முதலாளியாக இருந்தாலும் அருணாசலம் பிள்ளையைப் பெயரிட்டுக் குறிப்பிடுவதைத் தவிர்த்து விட்டு 'என் முதலாளி' என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார். தெய்வநாயகத்தின் புதல்வர்களில் ஒருவரின் பெயர் அருணா
9F6)D.
 

9. குண்டு விழுந்தது!
1942ம் ஆண்டு ஏப்ரல் மாதம்!
விழாக்களைக் கொண்டாடுவதில் ஒருவருக்கொருவர் சளைக்காத சிங்களவர்களும் தமிழர்களும் வரப்போகும் புத் தாண்டு விழாக்களைக் கொண்டாட முனைப்பாக இருந்த காலம்!
கொழும்பு நகரெங்கும் மக்கள் வெள்ளம்! ஒவ்வோரு வணிக நிலையத்திலும் கூட்டம்! களையான, மகிழ்ச்சியான முகங்கள்!
பிடிக்கப் போகின்ற கிரகணத்தை அறியாமல் ஒளியைப் பொழிந்து கொண்டிருந்த நிலவைப்போல் இலங்கை மகிழ்ச்சி ஒளியை மக்களிடம் பொழிந்துகொண்டிருந்தது.
ஏப்ரல் மாதம் 5ம் திகதி!
விடிவெள்ளி மறைந்து கதிரவன் தன் ஒளிக் கரங்களால் உறங்கிக் கொண்டிருந்த இலங்கைத் தீவின் இனிய மக்களை எழுப்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் முன்பின் கேட்டிராத ஒரு விசித்திர ஒலி கொழும்பு மக்களைப் பதறி எழவைத்துவிட்டது.
ஜப்பானிய விமானங்கள் இலங்கைத் துறைமுகத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஐரோப்பாவை ஹிட்லர் ஆட் டிப் படைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிழக்காசியாவில் தன் வல்லமையைக் காட்ட ஜப்பான் துணிந்த நேரம் அது.
ஜப்பானிய குண்டு வீச்சு விமானங்கள் வானத்தில் வட்ட மிட்டதைக் கண்ணுற்ற மக்கள் பதறியோடினர். வந்த விமானங் கள் துறைமுகப் பகுதியில் குண்டுகளைப் பொழிந்து போர் முரசைக் கொட்டி விட்டு மறைந்து போயின!

Page 33
48 இதோ ஒரு வெளிச்சம்
பறவைகள் உறங்கிக் கொண்டிருக்கும் மரத்தின் மீது இரவில் கல்லெறிந்தால் பதறியபடி தோன்றிய திசையில் பறக் கும் பறவைகளைப்போல மக்கள் பதறியோடினர்.
வணிக நிலையங்கள் வெறிச்சோடிப் போயின! பலர் கடை களை இழுத்து மூடிவிட்டனர். போர்ப் பயம் மக்கள் நெஞ் சினைக் கவ்விக் கொண்டது. கொழும்பு போன்ற பெரிய நக ரில், அதுவும் தலைநகரில் இருந்தால் நிச்சயம் தலைதப்பாது என்ற உணர்வு தோன்றிய சிங்களவர் பலரும் இலங்கையின் பல்வேறு கிராமங்களுக்குப் பறந்தோடினர். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் மனநிலை பெரிதும் மாறி விட்டது. ‘குடும்பங் களை விட்டு விட்டு வந்து இங்கே சிக்கிக் கொண்டோமே, உயிரோடு ஊர் திரும்புவோமா?’ என்கின்ற அச்சம் புகுந்து அலைக்கழித்தது.
பெரும்பாலானோர் மூட்டை முடிச்சுக்களுடன் கப்பலேறி இந்தியா கிளம்பி விட்டனர்.
தெய்வநாயகம் பிள்ளையின் முதலாளி அருணாசலம் பிள்ளையும் இந்தியாவிற்குக் கப்பலேறி விட்டார்.
தெய்வநாயகம் சற்றும் அசரவில்லை. அவருடைய கொள்கை மிகத் தெளிவாக இருந்தது. 'ஒரு மனிதனுக்கு மரணம் வருவதாக இருந்தால் அது எந்த ஊரில், எந்த இடத் தில் இருந்தாலும் வரும். அது ஜப்பான்காரனுடைய குண்டு வீச்சினால் மட்டும்தான் வரும் என்பது இல்லை. ஆகவே, நான் இலங்கையை விட்டு ஓடிப் போகமாட்டேன்' என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
முடிவு எடுப்பது என்பதும், அப்படி எடுத்த முடிவை எளி தில் மாற்றிக்கொள்ளாமல் அதில் உறுதியாக இருப்பது என் பதும் அவருடைய சிறப்புக் குணங்கள்.
குண்டு வீச்சினால் எந்தக் கட்டிடங்களும் நொறுங்கி, எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாவிட்டாலும் இலங்கையில் அது வேறு எல்லா வகையிலும் கொடிய விளைவுகளை உண்டாக்கி விட் டது.
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கிராமப் புறத்து விளை பொருள்கள் நகருக்குள் வரமுடியாத நிலை ஏற்

குண்டு விழுந்தது! 49
பட்டுவிட்டது. ஆகவே பொருட்களின் விலையோ விஷம் போல் உயர்ந்து கொண்டே போனது. பொருட்களுக்கு அதிக மான தட்டுப்பாடும் தோன்றிவிட்டது. பல் வியாபாரிகள் கடை களை மூடிவிட்டு இந்தியாவிற்கும், இலங்கையின் கிராமப் பகுதி களுக்கும் ஓடிவிட்டதால் வெறிச்சோடிய வணிக வீதிகளில் நிலையற்ற வியாபாரம் என்கின்ற நிலை உருவாகிவிட்டது.
இந்நிலையினைச் சமாளிக்க இலங்கையை ஆட்சி செய்து வந்த ஆங்கில அரசாங்கம் ஆலிவர் குணதிலக என்பவரை சிவில் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தது. அவர் பொருள் பங்கீட்டு முறையிலும், விலைக்கட்டுப்பாட்டிலும் புதிய நெறி களைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக அரிசி, மாவுப் பொருள்களின் பங்கீட்டுப் பொறுப்பினை அரசாங்கமே, மேற் கொண்டது!
பல்வேறு வணிக நிலையங்களைப் போல் தெய்வநாயகத் தின் கடையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரிடம் பெரும் பாலும் கடனுக்குச் சரக்கு கொள்முதல் செய்யும் சிறுவியாபாரி களே அதிகமாக வியாபாரம் செய்தார்கள்.
அரிசி மூடைகளைக் கடனுக்கு எடுத்துச் செல்லுவார்கள். அவற்றை விற்றுவிட்டுத் திரும்ப வந்து கடனைச் செலுத்தி விட்டு மீண்டும் கடனுக்கு அரிசி மூடைகளை வாங்கிச் செல்லு வார்கள். மொத்தத்தில் அவர்களுக்கு எப்போதும் கடையில் நிலுவை இருந்து கொண்டேயிருக்கும்.
இந்தச் சூழ்நிலையில் அனைவருமே பாதிக்கப்பட்டார்கள். நிலுவையைச் செலுத்திவிட்டுத் திரும்ப வாங்கிச் செல்ல தெய்வ நாயகத்திடம் அரிசி இல்லை. ஆகவே ஏராளமான கடன் தொகை வெளியே நிற்க தெய்வநாயகத்தின் வணிகம் முடங்கிப் போய் விட்டது.
அதேபோல் கடனுக்குப் பெறும் இறக்குமதியாளர்களிட மிருந்து தெய்வநாயகம் கொள்முதல் செய்துதான் சிறு வியா பாரிகளுக்கு விற்றிருந்தார். இங்கு நிலுவை வதலாகாத நிலை யில் அங்கே பெறும் கடன் தொகையைச் செலுத்தமுடியாத நிலையில் தத்தளித்து தடுமாறி நின்றார் தெய்வநாயகம்.
எழுதிக் கொடுத்த பிராமிசரி நோட்டுக்கள், தவணை செக்குகள், வாய்மொழிக் கடன்கள் இவையனைத்துக்கும் ஈடு

Page 34
50 இதோ ஒரு வெளிச்சம்
கொடுத்து இறக்குமதியாளர்களை சமாளிக்க வேண்டும்.
அதேநேரத்தில் வெளியிலே நிற்கும் ஏராளமான நிலு வையை வதுல் செய்தாக வேண்டும்; ஆனால் வதுலக்க (ԼՔւգயாத தழ்நிலை.
கடையின் முதலாளி அருணாசலம்பிள்ளையோ போட் டது போட்டபடி இந்தியா போய் சேர்ந்து விட அத்துணைப் பொறுப்புகளையும் ஒருங்கே சுமந்தபடி நின்றார் தெய்வ நாயகம்.
இந்நிலையில் இலங்கை அரசு அரிசி விநியோகத்தைக் “கோட்டா' முறையில் பழைய பெரும் விற்பனையாளர்களிடம் ஒப்படைத்தது. இஸ்லாமிய வியாபாரிகள் தான் பெரும்பாலும் இந்த விற்பனையாளர்களாக இருந்தனர். அவர்களிடம் அரி சியை ஒப்படைத்து விற்பனை முறையைக் கண்காணிக்கும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றது.
பிரச்சினைகள் வரும் போது சாதாரண மனிதர்கள் துவண்டு போவார்கள்; வலுவிழந்தாற் போல் சுருண்டு விடு வார்கள். சிந்திக்கக்கூடத் தோன்றாது. ஒவ்வொரு பிரச்சினை யும் தடைக்கல்லாகவே தோன்றும்.
ஆனால் தலைவர்கள் நிலைவேறு. பிரச்சினைகள் வரும் போது அவர்கள் மேலும் நிமிர்ந்து நிற்பார்கள்; உடலில் ஒரு புதிய வலு அதிகரிக்கும். மிகவும் ஆற்றலோடு சிந்திப்பார்கள். அவர்கள் பார்வையில் ஒரு கூர்மை இருக்கும். தடைக் கற்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்குப் படிக்கட்டுகளாகவே அமையும். பத்து வயதிலிருந்தே பல்வேறு சோதனைகளைச் சந்தித்துப்
பழக்கப்பட்ட அவருக்கு இந்தச் சோதனையும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
ஆதம்பாய், சண்முகசுந்தரம் என்ற இரண்டு புரோக்கர் களின் உதவியுடன் தெய்வநாயகம் பெரிய வணிகர்களைச் சந் தித்துப் பேசினார். حمیبر
Y
அவர்களிடமிருந்து கணிசமான கோட்டா அரிசியினை ஒரு குறுகிய காலத் தவணையில் கடனாகக் கொடுத்து உதவு மாறு தெய்வநாயகம் கேட்டுக் கொண்டார்.

குண்டு விழுந்தது! 5.
தெய்வநாயகத்தின் நேர்மை, இனிய பண்புகள், நாணயம், வணிகத் திறமை இவையனைத்தையும் அந்த வணிகர்கள் நன்கு அறிவார்கள். அத்துடன் மற்ற சிறு வணிகர்கள் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கோடு அவர்களைத் தெய்வ நாயகம் ஊக்குவித்து உயர்த்திய வரலாற்றையும் அவர்கள் நன் றாக அறிவார்கள். மேலும் ஆதம்பாய் போன்ற பெரிய தரகர் களும் முன்மொழியவே பெரும் வணிகர்கள் அவருக்கு உதவ முன் வந்தனர்.
‘விற்பனைக்குத் தேவையான அரிசி கிடைக்கிறது' என்று உறுதியானவுடன் தெய்வநாயகம் விரைவாக மேற் கொண்டு செயல்படத் திட்டமிட்டார்.
கொழும்பு, செட்டியார் தெரு 91ம் இலக்க மேடையில் தரன் அவர் அலுவலகம் இருந்தது. கடையில் பணியாற்று வோர் இரவு தங்குவதற்கு அங்கு தான் வருவார்கள். அன் றாடம் கடையில் வியாபாரம் முடிந்ததும் சேர்ந்த பணம் அனைத்தையும் மூடையாகக் கட்டிக் கொண்டு வந்து கொட்டி அங்கே தான் எண்ணுவார்கள். இந்த அலுவலகம் பல ஆண்டு களாக அங்கு தான் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகத்திற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வருமாறு தம்முடைய சில்லறை வியாபாரிகள் அனைவரையும் அவர் அழைத்தார்.
குறிப்பிட்ட அந்த நாளில் அனைத்து சில்லறை வியாபாரி களும் கொழும்பிற்கு வந்து, செட்டியார் தெரு அலுவலகத்தில் கூடினார்கள். வந்திருந்தவர்களில் ஒரிருவர் தவிர அத்தனை பேருமே சிங்களர்கள். பிற்பகல் அனைவருக்கும் நாவிற்கினிய நற்சுவை விருந்தினை அன்போடு அளித்தார். எப்போதுமே அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட வியாபாரி கள் ‘ஒன்றுமே புரியாமல்’ விருந்தினை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டனர். தாம்பூலம் வழங்கினார். 'என்னவோ நடக்கப் போகின்றது?’ என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு பென்ச்சின் மீது ஏறி நின்று கொண்டு, அழகிய சிங்களத்தில் மனம் உருகும் வண்ணம் தம் உரையைத் தொடங்கினார்:
'என் உயிரினும் மேலான வியாபாரிகளே! நம்மை ஒரு

Page 35
52 இதோ ஒரு வெளிச்சம்
- הר צד
-வருக்கொருவர் பல ஆண்டுகளாக அறிவோம். இன்றைக்கு நாம் எந்தச் சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்" என் பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. ஜப்பானிய விமானங்கள் நம் நாட்டின் மீது குண்டு வீச்சினை நடத்தியுள்ளன. அதன் விளை வாக நாம் இவ்வளவு காலம் நடத்திவந்திவியாபாரம் அடியோடு முடங்கிப் போயுள்ளது.
'நீங்கள் எங்களுக்குக் கடனாளியாக இருக்கிறீர்கள், நாங் களோ பெரும் இறக்குமதியாளருக்குக் கடனாளியாக இருக் கிறோம். நீங்கள் உங்கள் கடனைச் செலுத்தினால்தான் நாங் கள் எங்கள் கடனை அடைக்கமுடியும். ஆனால் வியாபாரம் தொடர்ந்து நடந்தால் தானே நீங்கள் உங்கள் கடனை அடைக்க முடியும்?
'இந்த தழ்நிலையில் வியாபாரிகளாகிய நாம் அனை வரும் ஒன்று கூடி இந்த சிக்க்லிலிருந்து விடுபட என்ன செய்வது என்று முடிவெடுக்கவே உங்களை வரவழைத்துள்ளேன்.
'அருமை வியாபாரிகளே, இத்தனை நாட்கள் வரை நாம் வெறும் வியாபாரத்துக்காக, வியாபாரிகளாக மட்டும் பழக வில்லை. நண்பர்களாகப் பழகினோம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாக, சகோதரர்களாகப் பழகினோம். ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தோம். இன் பங்களில் மட்டுமல்ல, துன்பங்களிலும்சேர்ந்து பங்கு கொண் டோம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என்மீது பொழிந்த அன்பை, நட்பை, சகோதர பாசத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது.'
இவ்வாறு தெய்வநாயகம் உணர்ச்சிப் பிழம்பாய்ப் பேசி வந்த போது அவருடைய நெஞ்சை ஏதோ அடைத்தது. கண் களில் கண்ணிர் மல்கியது; குரல் கம்மியது. ஒரு நிலையில் அழுதே விட்டார்!
சிங்கள வியாபாரிகள் திகைத்துப் போய் நின்று விட்டனர். அவருடைய உண்மையான பேச்சும், நியாயமான உணர்வு களும் அவர்களை மிகவும் பாதித்தன. அவர்களுடைய கண் களும் கலங்க ஆரம்பித்தன.
'நம் ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒன்றுக்கொன்று பின் னிக் கிடக்கின்றது. நாங்கள் நன்றாக இருந்தால் தான் நீங்கள்

குண்டு விழுந்தது! ss
நன்றாக இருக்கமுடியும்; அதேபோல் நீங்கள் நன்றாக வாழ்ந் தால் தான் நாங்கள் நன்றாக வாழ முடியும். இந்தச் சூழ்நிலை யில் நம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு வகையில் உங் களுக்கு அரிசி மூடைகள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து அரிசி மூடைகளைப் பெற்றுக் கொள்ளுமுன் ஒரு மூடைக்கு 5 ரூபாய் வீதம் செலுத்தி அதை உங்கள் நிலுவை யில் கழித்துக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். எடுத்துக் காட் டாக, என்னிடம் நூறு மூடைகள் வாங்கிச் செல்வதாக இருந் தால் ஐநூறு ரூபாயைச் செலுத்தி அதை உங்கள் கடனில் வரவு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடன் தீரும் வரை தயவு செய்து ஒரு மூடைக்கு ஐந்து ரூபாய் வீதம் அதிகம் செலுத் துங்கள். தீர்ந்தபின் வழக்கமான முறையில் முன்பு போல் வியாபாரம் செய்யலாம். அருள்கூர்ந்து இந்த இடர்ப்பாட்டைப் பொறுத்துக் கொண்டு சற்று ஒத்துழைப்புத் தாருங்கள். இதைத் தவிர வேறு வழி எனக்குத் தோன்றவில்லை."
அழகான, சரளமான, எளிய சிங்களத்தில் உருக்கமாகப் பேசியது தெய்வநாயகம்தானா?’ என்பது உண்மையில் நாம் ஐயப்பட வேண்டிய ஒன்று!
சொல்லுக்குச் சொல் முருகா! முருகா! என்று எப்போதும் அவர் அழைக்கும் "முருகனே சொற்களாக அவர் நாவினின்று வந்தான்' என்று தான் நாம் கொள்ள வேண்டும். காரணம்.
அந்தச் சொற்களுக்கு அவ்வளவு அற்புதமான விளைவுகள் இருந்தன! கேட்டவர்கள் நெகிழ்ந்து போனார்கள்! அவர் களுடைய கண்களும் கலங்கிப் போயிருந்தன.
பிரச்சினைகளிலிருந்து ஒடி ஒளியும் சாதாரண மனிதர் களிலிருந்து மாறாக, பிரச்சினைகளுக்குச் சாவு மணியடிக்க வந்திருக்கும் ஆற்றல் மிக்க மாமனிதனை அவர்கள் கண்ணெ திரே கண்டார்கள்.
அதுமட்டுமல்ல! வேறு வழியில் அவர்களுக்கு அரிசி கிடைக்கும் மார்க்கம் இல்லை. தங்கள் தொழிலும் நடக்கும். தாங்களும் பிழைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் கடனை யும் ஒழித்து விட்டுத் தலை நிமிர்ந்து கடைத்தெருவில் நடக் கலாம்' என்ற தழ்நிலையை அவருடைய பேச்சு உருவாக்கிக் கொடுத்து விட்டது.

Page 36
54 இதோ ஒரு வெளிச்சம்
எனவே அத்தனை பேரும் மாயசக்தியால் கட்டுண்டு, பின் விடுபட்ட நிலைக்கு வந்தார்கள் ஒரே மனமாக தெய்வநாயகத் தின் அன்பு வேண்டுகோள் ஏற்கப்பட்டது.
ஆதம்பாயின் உதவியோடு அன்றாடம் ஆயிரக்கணக்கான மூடை அரிசிகளை வாங்கித் தெய்வநாயகம் விநியோகம் செய் தார். பதினைந்தே நாட்கள்! எண்ணிப் பதினைந்தே நாட்கள்! அவருடைய நிலுவை அத்தனையும் வதலாயிற்று! நடக்குமோ, நடக்காதோ என்று நடுங்க வைத்துக் கொண்டிருந்த நிலுவை வதுல் நடந்தேறி விட்டது. அதே நேரத்தில் இறக்குமதியாளர் களிடமும், பெருவணிகர்களிடமும் தாம் வைத்திருந்த பாக் கியை முழுமையாக தெய்வநாயகம் அடைத்துவிட்டார்!
தடைக்கற்கள் அவருடைய முன்னேற்றத்திற்காகப் பதிக்கப் பட்ட படிக்கட்டுகளாக மாறிவிட்டன!
அருணாசலம்பிள்ளை குண்டு விழுந்த உடனே இந்தியா திரும்பினார். போகும்போதே 'குண்டு கொழும்பில் மட்டும் விழவில்லை; தம் வியாபாரத்தின் மீதும் தான் விழுந்துவிட்டது. இனி எல்லாம் ஒழிந்தே விட்டது. தலை முழுக வேண்டியது தான்' என்ற முடிவோடு தான் போனார். ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து "எதற்கும் நிலைமை எப்படியிருக் கிறது' என்று நோட்டம் பார்க்க வந்தவர் அதிசயத்தில் தம் கண்களையே நம்ப முடியாமல் நின்றார்.
கடன்கள் அத்தனையும் அடைபட்டுப் போயிருந்தன; வியாபாரமும் நன்றாக நடந்து கொண்டிருந்தது. எல்லாவற்றுக் கும் மேலாக இதுவரை திரட்டிய பெரும் லாபத்தையும் ரொக்க மாகத் தெய்வநாயகம் அருணாசலம் பிள்ளையின் கரங்களில்
 

குண்டு விழுந்தது 55
ஒப்படைத்த போது அருணாசலம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
"நீ உண்மையிலேயே சிறந்த அறிவாளி வியாபாரத் தந் திரம் தெரிந்தவன்! நிச்சயமாக நானாக இருந்திருந்தால், இந்தச் சிக்கலிலிருந்து விடுபட்டிருக்க மாட்டேன்' என்று மனம் நெகிழ்ந்து அருணாசலம்பிள்ளை தெய்வநாயகத்தைப் பாராட் цg-6ятfї.
அருணாசலம்பிள்ளை அதற்கு மேலும் கொழும்பில் வியாபாரம் செய்ய விரும்பவில்லை. ஆகவே தெய்வநாயகத் திடம் தாம் கடையை மூடிவிட்டு இந்தியா செல்லவிருப்பதாகக் கூறி அவரையும் தம்முடன் வருமாறு அழைத்தார். ஆனால் தெய்வநாயகம் இலங்கையை விட்டு வர விருப்பமில்லை. தாம் அங்கேயே இருக்க விரும்பியதைக் கூறியவுடன் அருணாசலம் பிள்ளை அவரிடம் ஒரு கணிசமான தொகையை அன்பளிப்பாக வழங்கி, நன்றி பாராட்டி, வாழ்த்தி விடை பெற்றுக் கொண் Lntr.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பார் கள். ஆனால் இங்கு தலைக்கு வந்தது தங்கக்கிரீடமாக மாறி விட்டது!
மீண்டும் கொழும்பில் தெய்வநாயகம் தனித்து நின்றார். இந்த முறையும் தவிப்போடுதான் நின்றார்! தனியாகத் தொழில் செய்யப் போகின்றோம் என்ற ஆர்வம் மட்டுமல்ல அவர் தவிப்பிற்குக் காரணம். விரைவில் தந்தையாகப் போகிறா ரல்லவா! நாடே பாராட்டப்போகும் அவருடைய முதல் அன்பு மகன் ஈஸ்வரனை, அவருடைய மனைவி தன் மணி வயிற்றில் சுமந்த அந்த நேரத்தில்தான் சுதந்திரப் பறவையாகத் தெய்வ நாயகம் நின்றார்!

Page 37
10. மீண்டும் வசந்தம்
இரண்டாம் உலகயுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந் தது. ஜெர்மனியும், ஜப்பானும் - ஐரோப்பாவிலும், ஆசியா விலும் தங்கள் வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்திக் கொண் டிருந்த நேரம். இந்தக் கால கட்டத்தில் இலங்கையில் வாழ்ந்து வந்த இந்தியர்களின் மனத்தில் ஒரு குழப்பமான நிலையே தோன்றியிருந்தது. 'நாடு விட்டு நாடு வந்து ஏன் இங்கே குண் டடிபட்டுச்சாக வேண்டும்? ஒழுங்காக ஊர் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. அதன் விளைவு இந்தியர்கள் கும்பல் கும்பலாக மூட்டை கட்ட ஆரம் பித்தார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் அருணாசலம் பிள்ளையும் இலங்கையை விட்டு வெளியேறினார்.
வெளியேற விருப்பமில்லாமல், இலங்கையிலேயே தொடர்ந்து வியாபாரம் செய்ய தெய்வநாயகம் பிள்ளை விரும்பினாலும், அருணாசலம்பிள்ளை அதை விரும்பவில்லை. கடையை மூடி விட்டு இந்தியா திரும்பும் படி தெய்வநாயகத்தை வற்புறுத்த ஆரம்பித்தார். தாம் மிகவும் நேசித்த தெய்வநாயகம் இலங்கையில் தனியாக - ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
தம் முதலாளியின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வழக்க மில்லாத தெய்வநாயகமும் தாயகம் திரும்புவதென முடிவுக்கு வந்தார்.
கடையிலிருந்த பொருட்களையெல்லாம் கொண்டு போய் அவிசாவளையிலிருந்த ஒரு சிங்கள முதலாளியிடம் ஒப்படைத் தார். தம்மிடம் அருணாசலம் பிள்ளை வழங்கிய தொகையில் ஒரு பகுதியையும் அவரிடம் கொடுத்து விட்டு எஞ்சிய தொகையை எடுத்துக் கொண்டு தம் மனைவி வள்ளியம்மை யுடன் இந்தியா திரும்பினார்.
 

மீண்டும் வசந்தம் 57
தாயகம் திரும்பியவுடன் தம் மனைவியின் ஊரான வல்ல நாட்டிற்குத் தம்பதியர் இருவரும் வந்து சேர்ந்தனர். குடியிருக்க வீடில்லாத நிலையில் தம் மாமியார் வீட்டில் சில நாட்கள் தங் கினார். பக்கத்து வீட்டை விலைக்கு வாங்க விலை கேட்டால் ரூ. 2500 என்று விலை கூறினார்கள். அது அதிகம் என்று தோன்றிய படியால் மாதவாடகை ரூ.10/- என்று பேசி அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்.
தெய்வநாயகத்தின் வாழ்க்கை ஒரு விசித்திரமான வாழ்க்கை, "இதோ வெளிச்சம் தெரிகின்றது' என்று சில வினாடிகள் இருளிலே தோன்றிய நிலவை நம்பிக் கொஞ்ச தூரம் நடந்தபின் கருமேகம் நிலவை மறைத்து இருளையே மீண்டும் தருவதுபோல இருளும், ஒளியுமாக இத்துணை நாட் கள் கழிந்தன.
ஆனால் 1942ம் வருடம் அவருக்கு மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த வருடம். இந்த ஆண்டில் தான் அவர் தன் வாழ்வில் கதிரவன் ஒளியைக் காண ஆரம்பித்தார் வள்ளி யம்மை தன் முதல் மகவைச் சுமந்து வந்திருந்தார். 1942 ஆகஸ்டு 12ம் தேதி தெய்வநாயகம் குடும்ப வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்று தான் வல்ல நாட்டிலிருந்த குடும்பத்தில் ஒரு வல்லவன் பிறந் தார். திருநெல்வேலியருகில் இருந்த டோனாவூரில் இருந்த புகழ் பெற்ற ஒரு அமெரிக்கன் மருத்துவமனையில் ஈஸ்வரன் பிறந் தாா.
ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது ஒரு முக்கிய மான நிகழ்ச்சி. ஆனால் அந்த மணவாழ்க்கை, அந்த மனிதன் தந்தையான பிறகுதான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாறு கிறது.
எதையும் சரியாக நினைவில் நிறுத்திக் கொள்ளமுடியாத தம் பத்தாம் வயதில் பெற்றோர்களை இழந்தவர் தெய்வ நாயகம். கொஞ்சி, முத்த மழைபொழிந்து, பாசச்சோறுாட்டி வளர்க்க அன்னை இல்லை; படிக்கவைத்துப் பாராட்டி வளர்க் கத் தந்தை இல்லை. அந்த இருவருடைய பாசத்துக்காகவும் தெய்வநாயகம் எவ்வளவு ஏங்கினாரோ, அவ்வளவு ஏக்கத்தை யும் தீர்த்துக் காட்ட, ஆண்டவன் அருளால் அவருக்கு அன்பு மகன் பிறந்தான்.

Page 38
58 இதோ ஒரு வெளிச்சம்
தெய்வநாயகத்தின் ஆற்றல், அறிவு, மனிதநேயம், விடா முயற்சி எல்லாவற்றிற்கும் மேலாக இறைபக்தி இவையனைத் தின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக இறைவன் அளித்த வர மாகப் பிறந்த பிள்ளைதான் ஈஸ்வரன்
வல்லநாட்டில் தெய்வநாயகத்தின் நாட்கள் வெறுமையாக ஒடிக்கொண்டிருந்தன. அவருடைய இதயமோ இலங்கை நாட் டின் கொழும்பு நகரத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந் தது. தினம் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு, முத்துவிநாயகர் ஆலயத்திற்குச் சென்று, தடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து நெஞ்சார விநாயகரை வழிபட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன.
முத்துவிநாயகர், அவரை இழுத்துக் கொண்டிருந்தார்! நூற்றுக்கணக்கான வியாபாரிகளுடன் சிங்களத்திலும், தமிழி லும் அன்பாகப் பேசி வியாபாாம் செய்த இனிய நாட்கள் நெஞ்சை நெருடிக் கொண்டேயிருந்தன. ஒருநாள் தம் அண் ணன் சுடலைமுத்துவை அழைத்துக் கூறினார்.
‘'வேலை வெட்டி இல்லாமல், வெறுமனே இந்தியாவில் நாட்களைக் கழிக்க எனக்குப் பிடிக்கவில்லை. நம்முடைய எதிர் காலம் இங்கில்லை, இலங்கையில் தான்' என்று என் உள் மனத்தில் தெளிவாகப்படுகிறது. ஆகவே உடனடியாக இலங்கை செல்ல வேண்டும். முதலில் நீங்கள் கொழும்பு செல்லுங்கள். நாம் இருவரும் சேர்ந்து கூட்டாக வியாபாரம் செய்யலாம். அதற்கு ஏற்ப வாடகைக்கு ஒரு கடையை ஏற்பாடு செய்யுங் கள்!"
சுடலைமுத்து கொழும்பு கிளம்பினார். வந்த சிறிது நாட் கள் கழித்துக் கடிதம் எழுதினார். "இங்கு 'கடை கிடைத்த பாடில்லை; தேடினாலும் கிடைப்பதாக இல்லை. ஆனால் வேலை தாராளமாகக் கிடைக்கிறது. வேலை செய்து பிழைத் துக்கொள்ள வேண்டுமென்றால் கிளம்பிவா!'
அந்தக் கடிதம் தெய்வநாயகத்திற்கு மகிழ்ச்சியைத் தர வில்லை! இதற்குமேலும், அவர் யாரிடமும் கைகட்டிச் சேவகம் செய்யத் தயாராக இல்லை. தனியாக நின்று, தானாகத் தன் தொழிலைச் செய்து முன்னேற வேண்டும்' என்ற முடிவுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டிருந்தார். ஆகவே மீண்டும் எழுதி னார், 'வியாபாரம் செய்யக் கடை தேவை! கடையை மட்டும் பார்க்கவும்!"

மீண்டும் வசந்தம் 59
கொழும்பு 5ம் குறுக்குத் தெருவில் 37ம் எண் கடையில் சண்முகம்பிள்ளை என்பவர் வியாபாரம் செய்து வந்தார். இலங்கையின் மீது குண்டு விழுந்ததும் அவர் தன் கடையை மூடிவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். இப்படி விட்டுப் போன பலருடைய கடைகளையெல்லாம் சிவில் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் கையகப்படுத்திய பாதுகாப்பு ஆணையாளர் ஒலிவர் குணதிலக வெவ்வேறு நபர்களுக்கு வியாபாரம் செய்ய ஒப் படைத்திருந்தார். அந்த வகையில் சண்முகம்பிள்ளையின் 37ம் எண் கடையை பர்னாந்து என்கிற கருவாட்டு வியாபாரி பெற் றிருந்தார். அந்தக் கடையின் ஒரு பகுதியை ரூ 150 வாட கைக்குத்தர முன்வந்தார்.
சுடலைமுத்து மூலம் இந்தத் தகவல் கிடைத்தது. தெய்வ நாயகம் பணத்தை அனுப்பி உடனே அந்த இடத்தைப் பார்க்கச் சொல்லிக் கடிதம் எழுதினார். அத்துடன் கடைக்கு ‘வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை' என்று விலாசம் போடுங்கள்' என்றும் கேட்டுக் கொண்டாார். இதுதான் 'வி.ரி.வி நிறுவனங்களின் தொடக்கம்.
கடை உறுதியானவுடன் தெய்வநாயகம் கொழும்பு வந்து சேர்ந்தார். அவருக்கு மிகவும் கைவந்த நவதானியம் வியாபாரத் தைத் தொடங்கினார்.
தம்முடன் தம் அண்ணன் சுடலைமுத்துவை ஒரு பங்காள ராகவும், தம் நெருங்கிய நண்பர் ஒருவரை இன்னொரு பங் காளராகவும் சேர்த்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடங் " கினார்.
வியாபாரத்திற்கான மொத்த மூலதனமும் தெய்வநாயகத்

Page 39
60 இதோ ஒரு வெளிச்சம்
- தினுடையதே தம்முடைய அண்ணனுக்கு ஏதேனும் ஒரு வகை யில் உதவவேண்டும் என்று தெய்வநாயகம் எண்ணினார். எத் தனை நாள் தன் அண்ணனும் வேறிடத்தில் வேலை செய்வது? தம்மோடு சேர்ந்து அவரும் ஒரு முதலாளியாக இருக்கட்டுமே!’ என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஒரு முதலீடுமின்றி அண்ண னைப் பங்குதாரராக்கிக் கொண்டார்.
மற்றொரு பங்காளர் தெய்வநாயகத்தின் நண்பர். அதே நேரத்தில் நவதானிய வியாபாரத்தில் பெரிய நிபுணர். இனிமை யாகப் பேசக் கூடியவர். வியாபாரத்தின் நெளிவு சுளிவு தெரிந் தவர். எனவே தம்முடைய தொழிலுக்கு அவருடைய அனு பவமும், திறமையும் பெரிதும் பயன்படும் என்று கருதி அவரை யும் எந்த முதலீடுமின்றி மற்றுமொரு பங்குதாரராக்கிக் கொண்
ι πή.
குறைந்த முதலிட்டு வணிகத்தைத் தொடங்கினாலும், திற மையான நிர்வாகத்தினால் இலாபம் குவியத் தொடங்கியது.
போர் நெருக்கடி! வெளிநாட்டுப் படைகள் குவிப்பு! பொருட்களுக்கோ பெரும் தட்டுப்பாடு! இந்தச் சூழ்நிலைகள் அத்தனையையும் ஒழுங்காகப் பயன்படுத் திக் கொண்டார் தெய்வநாயகம்.
இந்த நேரத்தில் தெய்வநாயகத்தின் மனைவியும், அன்புக் குழந்தை ஈஸ்வரனும் வல்ல நாட்டில் 10 ரூபாய் வாடகை வீட் டிலேயே வாழ்ந்து வந்தனர். மனைவியையும், மழலையையும் காண்பதற்காகத் தெய்வநாயகம் வல்லநாடு வந்து கொண்டிருந் தார்.
ஒரு முறை வந்தபோது, ஏற்கனவே விலைகேட்ட பக்கத்து வீட்டை விலை பேசினார். ரூ2500 விலை சொன்னவர் இப் போது ரூ5000 கூறினார். இறுதியில் 2500க்கு விலைபேசி அந்த வீட்டை விலைக்கு வாங்கிவிட்டார். எனவே ஈஸ்வரன் பிறந்ததும் இலங்கை வியாபாரம் மட்டும் பெருகி வளர வில்லை, தெய்வநாயகத்திற்குத் தாய் நாட்டில் சொந்த வீடு வாய்த்தது. ஏற்கனவே விவசாய நிலமும், பசுக்களும் இருந்தன. ஆகவே வல்லநாட்டில் வளமான வாழ்க்கை அழகாக அமைந்து விட்டது.

மீண்டும் வசந்தம் 6
வல்லநாட்டில் வலுவான அமைப்புக்களை உருவாக்கி விட்டு மீண்டும் கொழும்பு திரும்பியபோது அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி பர்னாந்து மூலமாகக் காத்திருந்தது. "ஒரு மனி தனின் உணவு மற்றொருவனுக்கு நஞ்சு' என்று சொல்லுவார்
956.
ரூ.150க்குத்தான் வாடகைக்கு விட்ட கடையில் மிகச்சிறந்த முறையில் வியாபாரம் நடைபெறுவதைக் கண்ட பர்னாந்தின் நெஞ்சம் பொறாமைத் தீயால் பொசுங்கியது. உடனே மாத வாடகையை உயர்த்திக் கூறினார். ‘மாதவாடகை ரூ.1500 கொடுங்கள்; இல்லாவிடில் கடையைக் காலி செய்யுங்கள்' என்று தெய்வநாயகத்திடம் கூறிவிட்டார்.
பர்னாந்தின் இச்செயல் தெய்வநாயகத்தின் நெஞ்சைப் பெரிதும் நோகடித்தது. கொஞ்சமும் நியாயமில்லாத பெரும் வாடகையைப் பொறாமையின் அடிப்படையில் பர்னாந்து கேட்டதில் எந்த நியாயமுமில்லை என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது.
நெருக்கடி வரும் போதெல்லாம் சற்று மேலும் நிமிர்ந்து உட்காருவது தெய்வநாயகத்தின் வழக்கம். எந்தச் சிக்கலும் அவரை மேலும் செம்மைப்படுத்தினதேயொழிய சீர்குலைக்க வில்லை.
நேர்மையான முறையில் அணுகுபவர்களிடம் நேர்மை யாக நடப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குத் தவறான வழியில் செல்பவர்களை அவர்கள் வழியிலேயே தாக்குவதும் முக்கியம் என்பதையும் தெய்வநாயகம் உணர்ந்திருந்தார்.
யார் யாரிடம் எந்த மொழியில் பேசவேண்டுமோ, அந்த மொழியில் பேசினால் தானே புரியும்? பர்னாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்வதென்று முடிவுக்கு வந்தார். அதிர்ச்சியை அளித்தவருக்கு, அதிர்ச்சியை அல்லவா திருப்பித் தரவேண்டும்?
அந்த முழுக்கடைக்கும் சொந்தக்காரர் ஹனிபா இதுரிஸ் என்ற முஸ்லீம் பெருமகனார் என்பதைத் தெய்வநாயகம் விசாரித்துத் தெரிந்து கொண்டார். அத்துடன் தம் பங்காள ரின் தமையனாருக்கு வேண்டியவர் என்பதையும் தெரிந்து கொண்டு அவரையும் உடன் அழைத்துக் கொண்டு, போதுமான

Page 40
62 இதோ ஒரு வெளிச்சம்
பணத்தை மடியில் கட்டிக் கொண்டு ஹனிபாவைப் பார்க்கச் சென்றார்.
தெய்வநாயகத்தின் பக்திபூர்வமான தோற்றம், இனிமை யான பேச்சு, நேர்மை அத்தனையும் ஹனிபாவை மிகவும் ஈர்த் தன. தான் செய்யும் தொழில், தான் கடையினை வாடகைக்கு எடுத்த தழ்நிலை ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறி னார் தெய்வநாயகம். அத்துடன் 150 ரூபாய் வாடகையை எவ் வாறு பர்னாந்து 1500க்கு உயர்த்திக் கேட்கிறார் என்பதையும் அவர் எடுத்துக் கூறினார். அத்துடன் 'முழுக்கடையையும் எனக் குக் கொடுத்து விடுங்கள். நான் மூன்று மாத வாடகையை முன் பணமாகக் கொடுத்து விடுகிறேன்' என்று கூறினார். அந்தக் காலத்தில் மூன்று மாத முன்பணம் என்பது ஒரு பெரிய விஷயம்.
தெய்வநாயகத்தின் நியாயமான உணர்வுகள், பொருத்த மான வாதங்கள் - மூன்று மாத முன்பணம் ஆகிய அனைத்தும் ஹனிபா இதுரிஸை உடனே ஏற்றுக் கொள்ளச் செய்தது.
அப்போதே மூன்று மாத முன் பணத்தைச் செலுத்தி ரசீது வாங்கிக் கொண்டு, முழுக்கடைக்கும் பொறுப்பேற்றுக் கொண்
T
கடைக்கு வந்ததும் பர்னாந்தை அழைத்துத் தெய்வநாயகம் கூறினார், ‘இனி முழுக்கடையும் என் பொறுப்பில் வந்து விட் டது. இருந்தாலும் நீங்கள் உங்கள் கடையைக் காலி செய்ய வேண்டிய அவசியமில்லை. தாராளமாக உங்கள் கருவாட்டுக் கடையை நடத்துங்கள். நீங்கள் மாத வாடகையாக ரூ.100 கொடுத்தால் போதும்'
பர்னாந்தின் முகம் வெளிறிப்போயிற்று மிரட்டி உருட்டி அதிகப் பணம் வாங்கி விடலாம் என்ற எண்ணிக் கொண் டிருந்த அவர் எண்ணத்தில் மட்டும் இடிவிழவில்லை; அவரே தெய்வநாயகத்திற்கு வாடகை தர வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்.
'இன்னா செய்தாரை ஒறுத்த்ல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'
என்ற திருக்குறளைத் தெய்வநாயகம் படித்ததில்லை. ஆனால் வள்ளுவரின் அந்தத் திருக்குறளின் வழியே அன்றும் இன்றும்

மீண்டும் வசந்தம் 63
வாழ்ந்து வருபவர் தெய்வநாயகம். அவருடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பலமுறை நடந்திருப்பதைக் காண லாம்.
தனக்குத் தொல்லை கொடுத்த பர்னாந்துக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்?
'கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுன்னக் கெடும்' தீமை செய்ய பர்னாந்து முயன்றாலும் ஒரு காலத்தில் கடை வேண்டும் என்று தெய்வநாயகம் தவித்த போது, கடை வைத் துக் கொள்ள இடம் தந்தவரல்லவா பர்னாந்து! ஆகவே அவரி டமும் அன்பு செலுத்தினார் தெய்வநாயகம்!
ஆனால் அதே நேரத்தில் தன்னை ஒடுக்க நினைத்த ஒரு வருக்குத் தாம் யார்?' என்கின்ற பாடத்தையும் முள்ளை முள் ளாலே எடுத்துக் கற்பித்தார்.

Page 41
11. சுமைதாங்கி
நாணயம்!
ஓர் அழகான சொல்! பணத்தையும் குறிக்கும் பண்பாட் டையும் குறிக்கும்.
நாணயம் புழங்குமிடத்தில் நாணயமும் புழங்கவேண்டும். அருணாசலம்பிள்ளையின் கடையில் வேலை பார்த்துக் கொண் டிருந்த காலம்.
காகித நோட்டுக்கள் அதிமாகப் புழக்கத்தில் இல்லாத காலம் நாணயங்கள் மிக அதிகமாகக் குவிந்தன. அன்றாடம் இரவு கடை மூடும் போது எஞ்சி நின்ற தொகையை மூடை யாகச் சாக்குப்பையில் இட்டு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லு வார். பகல் முழுக்க சேர்ந்த தொகையை இரவில் எண்ணி முடிந்தபின் தான் உணவு, உறக்கம் எல்லாம். அப்போதெல் லாம் அவருடன் பணியாற்றிய சில தொழிலாளர்கள் அடிக்கடி நச்சரிப்பதுண்டு.
'முதலாளி எங்கோ இருக்கிறார், 'எவ்வளவு பணம் வரு கிறது; எவ்வளவு பணம் போகிறது?’ என்று நமக்கே தெரிவ தில்லை. இவ்வளவு உழைக்கிறோமே, இந்தப் பணத்தில் அவ் வப்போது ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டாலென்ன?”
இப்படிப் பேச்சு வரும்போதெல்லாம் மிகக்கடுமையான குரலில் பேசி, எச்சரித்துத் தடுத்து விடுவார் தெய்வநாயகம்.
“முதலாளி பார்க்க வேண்டிய அவசியமில்லை; முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். முருகனே பார்க்காவிட்டாலும் நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும்" இது அவருடைய திட்டவட்டமான கொள்கை.
நாணயம் - ஒரு நல்ல கோட்பாடு!
புதிய கடை, மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருந்த வேளை.
 

சுமைதாங்கி 65
கடைக்குள் தெய்வநாயகம் புகுந்துவிட்டால் அவருக்கு வெளியுலகம் தெரியாது. முழுக்க, முழுக்க வாடிக்கையாளர் கள், கடையிலே இருக்கும் சரக்குகள், வியாபாரம் என்று முழு மையாகத் தம்மை ஆட்படுத்திக் கொள்வார்.
அவருடைய பங்காளரர்களுள் ஒருவரான அவருடைய நண்பர் நிலையோ வேறு. கடையிலிருந்து அடிக்கடி காணாமல் போய்விடுவார். என்ன காரணம்?
கடையில் வேலை செய்பவர்களுக்குச் சாப்பாடு கடை யிலேயேதான். இவர்களுக்கு உணவு தயாரிக்க அங்கேயே சமையல் கட்டும் இருந்தது. அங்கே சமையல்காரனுக்கு உதவி யாக ஒரு பெண் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருந்தாள். இளமை யோடு, கவர்ச்சியாக இருந்த அந்தப் பெண் நண்பரைக் காந்தம் போல் கவர ஆரம்பித்தாள். சலன மனம் கொண்ட நண்பருடன் அப்பெண்ணின் தொடர்பு வலுப்பெற ஆரம்பித்தது.
கம்பளிப்புழு இலையை உண்கிறது; மெதுவாக ஊர்கிறது. பார்ப்பவர்கள் அருவருப்பால் முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஆனால் அதே கம்பளிப்புழு தன்னைச் சுற்றி ஒரு கூடு கட்டிக் கொண்டு சில நாட்கள் தன்னை அதில் அடைத்துக் கொள்கிறது. பின்னர் ஒரு நாள் பலரும் பாராட்டும் வண்ணத்துப்பூச்சியாக வானில் சிறகடித்துப் பறக்கிறது.
வாழ்க்கையின் தத்துவம் இதுதான். புழு போல வாழும் மனிதர்கள் என்றைக்குக் கட்டுப்பாடு, ஒழுக்கம், போன்ற நல் லுணர்வுகளால் தம்மைச் சுற்றி ஒரு கூட்டை அமைத்து அதிலே உருவாகிறார்களோ அவர்கள் தாம் வெற்றிகரமான வண்ணத் துப்பூச்சி மனிதர்களாகப் பிற்காலத்தில் வெளியே வரமுடியும்.
கம்பளிப் புழுபோன்ற அருவருப்பான விடயங்களில் கூட ஒரு கட்டுப்பாட்டை அமைத்துக் கொண்ட்ால் அதனை வண்ணத் துப்பூச்சிக்கு ஒப்பாக மாற்ற முடியும்.
தெய்வநாயகத்தின் வாழ்க்கைச் சித்தாந்தமே கிட்டத்தட்ட இந்தத் தத்துவத்தில் அடங்கியிருக்கிறது எனலாம். மனதைச் சிதற விடாமல் எண்ணியதை எண்ணிய வாங்குச் செயல்படும் திண்ணியராக இருந்தார்.
தம்முடைய கடைப்பகுதியில், தம் பங்காளர் ஒருவர், தங்

Page 42
66 இதோ ஒரு வெளிச்சம்
களிடம் பணியாற்றும் ஒரு பெண்ணிடம் உறவு வைத்திருப் பதும், அது மளிகைக்கடை வட்டாரங்களில் பரவலாகக் 'கிசு கிசுக்கப்படுவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள இயல வில்லை.
"செய்யும் தொழிலே தெய்வம்' என்பது உண்மையானால் “தொழிற்கூடம் கோயிலல்லவா! ஆகவே, அந்தக் கோயில், கோயிலாக அல்லவா பராமரிக்கப்பட வேண்டும்?"
ஒருநாள் நண்பரைத் தெய்வநாயகம் அழைத்துப் பேசினார். 'நீங்கள் நடந்துகொள்ளும் முறை சரியில்லை. நான் உங்களுக்கு குடியிருக்க வீடு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்களுடைய மனைவியை ஊரிலிருந்து அழைத்து வந்து குடும்பம் நடத்துங் கள். இப்படிப்பட்ட உறவு உங்களுக்கும் நல்லதல்ல; நம்முடைய தொழிலுக்கும் ஏற்புடையதல்ல."
காமம் கண்களை மறைத்திருக்கும்போது கரும்பான கருத் துக்கள் கூட கசக்குமல்லவா! தெய்வநாயகத்தின் சொற்கள் எதிர் பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை. மனைவியை இலங் கைக்கு அழைத்து வந்து குடித்தனம் நடத்த நண்பர் விருப்பமாக இல்லை. அதே நேரத்தில் தன்னுடைய புதிய தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் விரும்பவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு புதிய குண்டையும் தூக்கிப் போட்டார். 'என் பங்கை எனக்குப் பிரித்துக் கொடுங்கள்! நான் உறவை முறித்துக் கொண்டு தனியாகச் சென்று விடு கிறேன்.'
தெய்வநாயகம் அதிர்ந்து போனார். 'ஒன்றாகக் கூடித் தானே தொழிலைத் தொடங்கினோம். ஒன்றாகவே இருப் போம்! பாடுபடுவோம்! முன்னேறுவோம்! உங்கள் நடவடிக் கையை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் நண்பர் விடுவதாக இல்லை.
‘என் பங்கைப் பிரித்துக் கொடுங்கள்!" என்று முனைப் பாக வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
இப்படி அவர் வலியுறுத்தக் காரணம் இருந்தது. வி.ரி.வி. நவதானியக் கடை சிறப்பாக நடைபெற "தான் மட்டுமே காரணம் என்று அவர் நம்ப ஆரம்பித்தது தான்.

சுமைதாங்கி 67.
'வியாபார நுட்பங்கள் எனக்குத் தெரியும். நான் வியா பாரத்தில் வல்லவன். இவ்வளவு வருவாயும் என்னால் தான் வருகிறது!’ என்று நண்பர் நம்பினார்.
வணிகம் சிறப்பாக நடக்க நடக்கப் பெருமைக்குப் பதிலாக அவருடைய நெஞ்சில் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந் தது. "நான் மட்டும் கூட்டுச் சேராமல் தனியாக வியாபாரம் செய்திருந்தால் இவ்வளவு லாபமும் எனக்கல்லவா வந்திருக் கும்?' என்கின்ற பாணியில் சிந்திக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
ஆகவே அவர் தன் பங்கை வாங்கிக் கொண்டு பிரிவதில் முனைப்பாக இருந்தார். இதற்குமேல் அவரை வற்புறுத்துவதில் பயனில்லை என்று புரிந்து கொண்ட தெய்வநாயகம் பங்கினைப் பிரித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
உட்கார்ந்து கணக்குப் பார்த்ததும் நண்பருக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஒரு ரூபாய் கூட முதல் போடாமல் வணிகத் தில் பங்காளராகச் சேர்ந்தவர் நண்பர். அவ்வப்போது அவர் செலவுக்காகப் பற்றுவைத்துக் கொண்ட தொகை, அவருக்கு வரவேண்டிய் தொகையைவிட மிக அதிகமாக இருந்தது. சொல்லப் போனால் வி.ரி.வி. கடைக்கு நண்பரே பணம் தர வேண்டியிருந்தது. தன் பரிதாபமான நிலையைப் புரிந்து கொண்டவுடன் நண்பர் தொடர்ந்து தொழிலில் பங்காளராக நீடிக்கத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
‘எப்போது பிரிந்து போய் விடுவது' என்ற உணர்வு உங் களுக்கு வந்து விட்டதோ, அதற்குப் பின்னர் சேர வேண்டு மென்று எண்ணினாலும் அது சரிப்பட்டு வராது. ஆகவே நீங்கள் பிரிந்து செல்வதுதான் சரி' என்று தெய்வநாயகம் திட்டவட்ட மாகக் கூறிவிட்டார். விரிசல் விட்ட கண்ணாடியை எப்படி ஒட்டினாலும் விரிசல் தெளிவாகத் தெரியுமல்லவா!
அதிர்ச்சியடைந்த நண்பர், 'உங்களுக்கு நான் தரவேண் டிய தொகை ஏதுமில்லை. சொல்லப்போனால், கடைக்கு நீங்களே பாக்கி வைத்திருக்கிறீர்கள். அதையும் நான் கேட்கப் போவதில்லை. இருப்பினும் ஒரு கணிசமான தொகையை உங் களுக்குத் தருகிறேன்' என்று கூறிய தெய்வநாயகம் ஒரு பெருந் தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார்.

Page 43
68 இதோ ஒரு வெளிச்சம்
கொழும்பு 4ம் குறுக்குத் தெருவில் 50ம் எண்ணுள்ள கடையை நண்பர் திறக்கவும், தொழிலைத் தொடங்கவும் தெய்வ நாயகம் உதவி செய்தார். அவ்வப்போது கடனுக்குச் சரக்குக் கொடுத்து உதவியும் செய்தார்.
'தீட்டிய மரத்தில் குத்திப் பார்ப்பது' என்பது சிலருடைய சுபாவம்.
ஆனால் எந்த வகையிலாவது, தமக்கு இன்னல் விளை விக்க வருபவர்களுக்கும், உதவுவது என்பது தெய்வநாயகத்தின் உயரிய குணங்களுள் ஒன்று.
தெய்வநாயகத்தின் உதவியோடு தனிக்கடை தொடங்கிய நண்பர் செய்த முதல் வேலை, வி.ரி.வி கடையில் சரக்கு வாங் கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கும், கிராமத்து வியா பாரிகளுக்கும் கடிதம் எழுதியதுதான். தான் மலிவுவிலையிலும், தவணை முறையிலும், கடனுக்கும் சரக்கு தருவதாக எழுதி தெய்வநாயகத்தின் வாடிக்கையாளர்களைத் தன்பால் இழுக்கும் வேலையில் இறங்கினார். சில வியாபாரிகள் அவரிடம் சென் றாலும், பெரும்பாலானோர் தெய்வநாயகத்திடமே, தொடர்ந்து வியாபாரம் செய்தனர்.
ஒரு நீரோடையில் தேள் விழுந்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைக் காப்பாற்ற எடுத்தார். அதுவோ அவர் கையில் கொட்டியது. அந்த வலியால் காப் பாற்ற முடியாமல் தண்ணிரிலேயே போடவேண்டியதாயிற்று. துறவி ஒவ்வொரு முறையும் காப்பாற்ற முயன்ற போதும் அது கொட்டிக் கொண்டேயிருந்தது. ஒரு வழிப்போக்கன் துறவியைக் கேட்டான். “கொட்டுவது தெரிந்தும் ஏன் தேளைக் காப்பாற்று கிறீர்கள்?’ அவர் கூறினார். 'கொட்டுவது தேளின் குணம்; காப்பாற்றுவது என்னுடைய குணம். தேளுக்காக என் குணத்தை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்."
இராமகிருஷ்ண பரமஹம்சருடைய இந்தக் கதை தெய்வ நாயகத்திற்குப் பொருந்துவதை அவருடைய வாழ்க்கையில் பல இடங்களிலும் காணலாம்.
இரண்டாண்டுகள் முயன்றும் வியாபாரத்தில் வெற்றி பெற முடியாமல் நண்பர் இந்தியா திரும்பினார்.

சுமைதாங்கி 69
மூவராகத் தொடங்கிய தொழிலை இப்போது தெய்வ நாயகமும், சுடலைமுத்துவுமே நடத்தி வந்தனர்.
பழம் நிறைந்த மரங்களை நாடிப் பறவைகள் வருவதைப் போல, திறமை மிக்க தெய்வநாயகத்தை நாடிப்பல வியாபார வாய்ப்புகள் குவிந்தன.
தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கப்பிள்ளை என்பவர் தெய்வ நாயகத்தின் நண்பராக ஆனார். அவர் வியாபாரத்தில் மிகவும் வல்லவர். பல புதிய சிங்கள வியாபாரிகளைத் தெய்வநாயகத் திற்கு அறிமுகம் செய்து வைத்தார். வேறு புதிய தொழில்களைத் தொடங்கி நடத்தினால் என்ன என்கிற எண்ணம் இப்போது தோன்றியது? ஏற்கனவே வி.ரி.வி நிறுவனம் வெற்றிப் பாதை யில் வீறு நடை போட்டுக் கொண்டிருந்தது. இந்த தழ்நிலை யில் தெய்வநாயகமும் வேறு தொழில்களை எண்ணியதில் வியப் பில்லை. தூண்டில்களை வீசி மீன்களைப் பிடித்தவர், வலையை வீசிப் பெரும் மீன்களைப் பிடிக்க எண்ணினார்.
புதிய நண்பர்களுடன் ஜி.டி. விக்ரமரத்ன அன் கம்பனி என்ற வர்த்தக நிலையம் தொடங்கப்பெற்றது. இந்த நிறுவனத் தில் அதிக முதலீடு செய்த பங்குதாரர் தெய்வநாயகம் தான். தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் இதற்குக் கிளைகள் தோன்றியதோடு, சிங்கப்பூரிலும் இதற்குக் கிளை அமைந்தது. கிழங்கு, வெங்காயம், மிளகாய், கறிச்சரக் குகள் ஆகியவற்றை இறக்குமதி செய்து விற்றது.
எச்.டி. பிரேமரத்ன என்பவரோடு இணைந்து ஒரு பருப்பு ஆலையைத் தொடங்கினர். பிரேமா கிரைண்டிங் மில் என்ற அந்த ஆலை இரவு பகல் ஓய்வின்றி சிலகாலம் இயங்கிக் கொண்டிருந்தது. .
இடையில் விக்ரமரத்ன நிறுவனத்திற்காக ஒரு கப்பல் நிறைய கிழங்குகளைத் தெய்வநாயகத்தின் நண்பர் தங்கப் பிள்ளை செய்திருந்தார். இவர்களுக்காகவே ஏற்பாடு செய்த கப்பல் அது. அந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது, அதிலிருந்த கிழங்குகளில் பெரும்பகுதி அழுகிப் போயிருந்தது.
வங்கியில் ஒவர்டிராப்ட் வசதி பெற்றுத்தான் இந்த கிழங்குகள் வரவழைக்கப்பட்டிருந்தன. நாற்றமடித்துக்

Page 44
7 O இதோ ஒரு வெளிச்சம்
கொண்டிருந்த அந்தப் பெரும் பகுதிக் கிழங்குகளைக் கடலி லேயே கொட்ட வேண்டியதாயிற்று ஜி.டி. விக்ரமரத்ன நிறுவனத்திற்குப் பெரிய இடி! பெருத்த நட்டம்! பங்குதாரர் கள் தலையில் கையை வைத்து உட்கார்ந்து கொண்டார்கள்.
அதிலும் மிக அதிகமான முதல் போட்டவர் தெய்வ நாயகம்தான். வங்கிக்குப் பெரும் பணம் கட்ட வேண்டிய நிலை; ஆனால் கூட்டாளிகளோ நிலைகுலைந்திருக்கிறார் கள்.
இக்கட்டான தழ்நிலைகள் வரும்போது, மேலும் வாடி வதங்கி நிற்பது தெய்வநாயகத்தின் வழக்கம் அல்ல. புதை குழியில் சிக்கும் மனிதன் எவ்வளவு இலகுவாக, எவ்வளவு வேகமாக வெளியேற முயலுவானோ, அந்த இலகுவும், வேகமும், துணிவும் அவருக்கிருந்தன.
அந்த நிறுவனம் சந்தித்திருந்த நட்டம் ரூ. 80,000/- இதை நியாயமாக எல்லா பங்குதாரர்களும் தான் ஏற்க வேண்டும்.
"பெருமை வரும்போது இது எங்கள் அனைவருடைய கூட்டு முயற்சி; இழப்பு வரும்போது இது என்னால் நிகழ்ந் தது. இதற்கு நானே பொறுப்பு' என்று கூறுபவனே நல்ல தலைவன் என்பார்கள்.
'இருளாக இருக்கிறதே என்று இருட்டைப் பற்றி பட்டி மண்டபம் நடத்துவதை விட்டுவிட்டு, என்னால் முடிந்த ஒளி யைத் தருகிறேன் என்று ஒரு விண்மீன் தன் விளக்கை ஏற்று கிறது' என்று கவியரசர் தாகூர் கூறியதைப் போல்,
 

சுமைதாங்கி
ரூ. 80,000/- நட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். சார்ட்டர் வங்கியில் - கோல்டன் செக் வசதி இருந்தவர் நட்டத் தொகை முழுவதையும் வங்கியில் கட்டிவிட்டி ஒதுங்கிக் கொண்டார். இந்தத் தொழிலில் அவர் ஒரு சதம் லாபம்கூடப் பெறவில்லை என்பது மட்டுமல்ல, பெரிய இழப்பையும் சந்தித்தார் என்பதும் முக்கியம். 1951ல் ரூ 80,000/- என்பது இன்றைக்கு ரூ 1 கோடிக்கும் மேல் பெறுமதி இருந்திருக்கும். அவ்வளவு பெரிய இழப்பைத் துணிந்து, வலிய ஏற்றுக்கொண்டு, பின்னர் கெளரவமாக ஒதுங்கிக் கொண்டார்.
இதேபோல் பிரேமா கிரைண்டிங் மில்லும் முடங்கிப் போயிற்று. இருந்த பொருள்கள், வியாபாரம் எல்லாவற்றை யும் கூட்டாளிகளுக்கே கொடுத்துவிட்டு அந்த தொழிலிலிருந் தும் விலகி விட்டார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும், ஒரு பெருந்தன்மை யான குணத்தைப் பார்க்கிறோம். இன்பம் வரும்போது இணைபவர்கள், துன்பம் வரும்போது ஓடிவிடவே பார்ப் பார்கள். ஆனால் துன்பம் வரும்போது தானே சுமக்க வரு பவர்களைப் பார்ப்பது அரிது. அதுவும் தன்னோடு இணைந்து பாடுபட்டவர்கள், மனம் வாடிப் பிரிந்து செல் வதை அவர் விரும்பியதில்லை.
இந்த அனுபவங்கள் அவருக்கு ஒரு படிப்பினையைச் சொல்லிக் கொடுத்தன. ‘இனி யாரோடும் கூட்டுச் சேர்ந்து எந்த வணிகமும் செய்யாதே பட்டதே போதும்!"
இன்றைக்கு இலங்கையின் அவருடைய பெரும்பாலான நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் தெய்வ நாயகத்தின் பிள்ளைகள் மட்டுமே!
7

Page 45
12. இதயத்தில் தைத்த அம்பு
துன்பங்கள் வரும்போது அவை தனியாக வருவதில்லை; ஒரு பட்டாள அணிவகுப்பைப் போல அணி திரண்டு வரும் என்று ஷேக்ஸ்பியர் ஒரு நாடகத்தில் குறிப்பிடுவார். அது ஒரு வகையில் தெய்வநாயகத்தின் வாழ்க்கையில் உண்மையாகிவிட் டது.
1951ம் வருடம்! மறக்க முடியாத வருடம். அந்த ஆண்டில்தான் ஜி.டி. விக்ரமரத்ன நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டது!
அந்த ஆண்டில்தான் பிரேமா கிரைண்டிங் மில்லை இழுத்து மூடவேண்டியதாயிற்று!
அந்த ஆண்டில் தான் வாழ்க்கை முழுக்கத் தவிக்க வேண் டிய பேரிழப்பு ஒன்றும் ஏற்பட்டது.
வாழ்க்கைப் பாதையில்தான் எத்தனை வளைவு, நெளிவுகள்! பல ஆண்டுகளாகப் பணியாளராகவே இருந்த அவர் முத லாளியாக மாறினார்!
சொந்த வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார்! புதிய சோனகத் தெருவில் ஏழு ரூபாய் வாடகை வீட்டில் இல்வாழ்க்கையைத் தொடங்கியவர், கொட்டாஞ்சேனையில் ஒர் அழகான, பெரிய வீட்டைச் சொந்தமாகக் கட்டிக் கொண் t_fTrir!
அதேபோல் வல்லநாட்டில் வள்ளியம்மைக்கு என வாங்கி யிருந்த நிலத்தில் இருந்த சிறிய வீட்டினை மேலும் பெரிதாகக் கட்டினார்.
வல்லநாடு மிகச்சிறிய கிராமம். ஈஸ்வரன் போன்ற வல் லவர் பிறக்கப் போகும் உண்மை அறிந்தே இடப்பட்ட பெயர்
 

இதயத்தில் தைத்த அம்பு 79
போன்று அமைந்த பெயரே 'வல்லநாடு' அந்த சிறிய கிராமத் தில் இன்றைக்கு உள்ள பெரிய வீடு தெய்வநாயகத்தின் வீடு தான். பல அறைகள், விருந்தினர்அறை என்று அனேக வசதி களோடு கம்பீரமாக நிற்கும் அந்த வீட்டை இந்தியா திரும் பினால், தங்குவதற்கெனக் கட்டிவிட்டார். ஆக, கொழும் பிலும், வல்லநாட்டிலும் இரு சொந்தவீடுகள் அமைந்துவிட்டன.
வள்ளியம்மையும், தெய்வநாயகமும் வாழ்ந்த வாழ்க்கை பெருமைக்குரியது, மகிழ்ச்சி நிறைந்தது. ஈஸ்வரனைப் பெற் றெடுத்துத் தந்தை என்கின்ற பெருமையைத் தெய்வநாயகத் திற்கு நல்கிய வள்ளியம்மை ஆறு குழந்தைகளுக்கு அன்னையாக விளங்கினார். இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை சண் முகவல்லி பிறந்த சில ஆண்டுகளில் தவறிவிட்டது. ஈஸ்வரன், வீரபாகு, பிரமநாயகம், அருணாசலம், ஆகிய நான்கு ஆண் கள் பகவதி என்ற ஒரு பெண் என நற்செல்வங்களை நல்கிய அந்தத் தாய் குழந்தைகளைப் பாலும் சோறும் ஊட்டி மட்டும் வளர்க்கவில்லை, நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்த்தார்.
1951ம் ஆண்டு பகவதி என்கின்ற அழகிய பெண் குழந் தையை வள்ளியம்மை ஈன்றார்கள். குழந்தை பிறந்த சில நாட் களிலேயே அவருடைய உடல் நலம் குன்றியது. வைத்திய நிபுணர் ஹண்டியும் மற்றும் பல வைத்திய நிபுணர்களும் அவருக்கு வைத்தியம் பார்த்தார்கள். கொழும்பின் சுலைமான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் அவ ருக்குச் சிகிச்சை அளிக்கப்பெற்றது. மருத்துவர்கள் எவ்வளவோ பாடுபட்டும், கூற்றுவனின் கொடுங்கரங்களிலிருந்து வள்ளி யம்மையைக் காப்பாற்ற முடியவில்லை.
விதியின் விசித்திரமான விளையாட்டை என்னவென்று விவரிப்பது?
குடும்ப விளக்கைச் சூறைக்காற்று தாக்கிய பின் தெய்வ நாயகத்தின் இல்லத்தினைக் காரிருள் கவ்வியது!
அப்போது மூத்த மகன் ஈஸ்வரனின் வயது 9. கைக் குழந்தை பகவதியோ இரண்டு மாதக் குழந்தை. பாலுக்காகக் கடைசிக் குழந்தையும், பாசத்துக்காக மற்ற குழந்தைகளும் அழுதன!

Page 46
74 இதோ ஒரு வெளிச்சம்
தான் ஆறுவயதிலே தாயை இழந்ததுபோல, இன்று தோளிலும், மார்பிலும், மடியிலும் தவழ்ந்த தன்னுடைய மக் கள் தாயை இழந்து இருட்டிலே நின்ற காட்சியைக் கண்டு தெய்வ நாயகம் மனம் வெதும்பினார்.
மாட்சிமை பொருந்திய மனைவி மட்டும் கிடைத்து விட் டால் அதைவிடப் பெரிய சக்தி ஓர் ஆணுக்கு வேறேது? தெய்வநாயகத்தின் வாழ்க்கையில் அமுதைப் பொழிந்து, பால் நிலா வெளிச்சத்தை ஊட்டிய வள்ளியம்மையின் மறைவுக்காக அவர் அழுவதா? அல்லது, தாயை இழுந்து தவிக்கும் தன் தங்கக் குழந்தைகளுக்காக அழுவதா?
ஒடி ஒரு பேருந்தைத் துரத்துகிறோம்; பேருந்தில் ஏறி உட் கார்ந்த பின்னும் நாம் ஒடிக் கொண்டிருப்பதில்லை; சரியான வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டால், அது நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்க வேண்டுமோ, அங்கு போய்ச் சேர்த்து விடுமல்லவா!
தெய்வநாயகத்தின் வாழ்க்கை அணுகுமுறையும் அப்படித் தான். பிரச்சினைகள் வரும்போது போராடுவார். பாடுபடு வார். இறுதியில் பேருந்தில் உட்கார்ந்து கொள்ளும் பயணியைப் போல, இறைவன் கொண்டு போய் விடும் வழி என பாரத்தை இறைவனிடம் போட்டுவிட்டுப் பக்தியில் மூழ்கி விடுவார்!
'முத்து விநாயகனே! திருச்செந்தூர் முருகனே' என் பிள் ளைகளைக் காப்பாற்று' என்று உளமார வேண்டினார்.
அருகிலிருந்து அன்பு பாராட்ட உறவினர்கள் இல்லை; வியாபாரம் ஒருபுறம் குழந்தைகள் ஒருபுறம்! அதுவும் அந்த ஆண்டில்தான் இரண்டு வணிகங்களில் தோல்வி ரூ80,000/- ԶԱՔւնւյ!
‘சோதனைமேல் சோதனைகள் வரும்போது மேலும் உறுதி யாகச் சமாளிப்பது' என்பது தெய்வநாயகத்தின் சிறந்த பண்பு என்பதை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம்!
இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கிடையிலும், அவருடைய வி.ரி.வி. நிறுவனம் மட்டும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந் தது. துன்பங்களால் மனத்தைச் சிதறவிடாமல் முனைப்பாக

இதயத்தில் தைத்த அம்பு 75
வி.ரி.வி.யை நிர்வகிப்பதில் அவர் எந்தக் குறையையும் வைக்க வில்லை.
தம் வீட்டில் இரு பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். சமைப்பது, கூட்டுவது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண், குழந்தைகளைக் குளிப்பாட்டி, ஆடை உடுத்திப் பள்ளிக்கனுப்பி அவர்களைப் பார்த்துக் கொள்ள மற்றொரு பெண்.
குழந்தைகளையும், வீட்டையும் பராமரிக்க ஏற்பாடு செய்து விட்டபின், தம்முடைய முழுக் கவனத்தையும் வியாபாரத்தில் செலுத்தினார். செட்டித் தெருவிலிருந்த முத்துவிநாயகர் ஒரு வரிடம் மட்டும் தன் ஆறாத துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட ஓராண்டுகாலத்தை இவ்வாறு ஒட்டினார். இதற்கிடையில் தெய்வநாயகத்தின் மாமியார் கொழும்பு வந்து சில நாட்கள் அங்கே தங்கினார். குழந்தைகளை அந்த அம்மை யாரும் பராமரித்தார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியா திரும்ப வேண்டிய நாள் வந்தது. மனம் தாங்க முடியாமல் தன் மருமகனை அழைத்துப் பேசினார்கள்.
'இதற்குமேலும் நீங்கள் தனியாக இருப்பதில் எந்தப் பலனு மில்லை. உங்களுடைய குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்க நிச்சயம் ஒரு சிற்றன்னை வேண்டும். ஆகவே நீங்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே என் பேச்சுக்கு இணங்கி, சம்மதம் கொடுங்கள். நீங்கள் அனுமதி கொடுத்தால் நானே ஒரு நல்ல பெண்ணாக தேர்ந்தெடுத்துத் தருகிறேன்!’
இன்னுமொரு திருமணமா?
நினைக்கவே தெய்வநாயகத்திற்கு நடுக்கமாக இருந்தது. தம் குழந்தைகள் மீது அவர் உயிரையே வைத்திருந்தார். அவர் கள் மீது ஒரு சிறு துரும்பு விழுந்தாலும் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாது! இப்போது மறுமணம் செய்து கொண் டால் வரப்போகும் சிற்றன்னை எப்படி இருப்பாள்? ஆயிரம் இருந்தாலும் ஈன்றெடுத்த தாயைப் போல யாரால் இருக்க முடியும்? மேலும் தான் சிறுவனாகத் தாயை இழந்து தவித்த போது, தன் சிற்றன்னையால் தமக்கேற்பட்ட கொடிய இன்னல்

Page 47
了凸 இதோ ஒரு வெளிச்சம்
கள் அவர் நினைவுக்கு வந்தன. தமக்கு ஏற்பட்ட துன்பங்கள் தன் குழந்தைகளைத் தொடருவதை அவர் விரும்பவில்லை. தாமே தாயாகவும் இருந்து தம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதே சிறந்தது' என்று எண்ணினார். ஆனால், இருப் பினும் மாமியாரும் "அன்றாடம் வற்புறுத்திக் கொண்டே இருந் தார். ஆகவே முழு மனதாக இல்லாவிட்டாலும், வேறு வழியில் லாமல் மறுமணத்துக்கு ஒப்புக் கொண்டார்.
'குடும்பத்திற்கு ஏற்ற, குழந்தைகளைத் தம் பிள்ளைகளைப் போல் பராமரிக்க முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு, அதற் குரிய பண்புகள் கொண்ட பெண்ணாக இருந்தால் மணந்து கொள்கிறேன்' என்று தெய்வநாயகம் கூறியதைக் கேட்டு நிம் மதிப் பெருமூச்சு விட்டு, மகிழ்ச்சியுடன் கிளம்பினார் அவரு டைய மாமியார்.
அவருடைய நெருங்கிய உறவிலேயே பெண்ணைத் தேடி னார். சாத்தான்குளத்தில் புகழ் பெற்ற வியாபாரியாக விளங் கிய நிலச்சுவான்தார் ச.அ. சட்டநாதன் பிள்ளையின் பேத்தி யும், சண்முகசுந்தரத்தின் மகளுமாகத் திகழ்ந்த மங்கை நல்லாள் சிதம்பரத்தம்மாளை, மணமகளாகத் தெரிந்தெடுத்தனர்.
1952ம் ஆண்டில் சாத்தான்குளத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர், சிதம்பர்த்தம்மாளுடன் தெய்வ நாயகம் இலங்கை கிளம்பினார். தம் குழந்தைகளுக்கு ஒரு சிற் தன்னையைக் கூட்டிக் கொண்டு செல்லவில்லை. தாயையே மீண்டும் அழைத்துக் கொண்டு சென்றார்.
 
 
 
 
 

தா ஒரு பொரி
麵 翌 历 历 活 研 圆穗哑 繁 珊 舞sā强 聊死瓯 娜娜娜
ফ্ৰ-ছাত্রীলঙ্ক
[G

Page 48
7 இதோ ஒரு வெளிச்சம்
தெய்வநாயகம் பிள்ளை - சிதம்பரத்தம்மாள்
சிதம்பர பவனம் - வல்லநாடு
 
 
 
 

TE ( l" |-晶 Y -
يحا வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்
AANVATTNI
ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனம்

Page 49
{J இதோ ஒரு வெளிச்சம்
தேசபந்து வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை ஜே.பி அரசு மேல்நிலைப் பள்ளி, வல்லநாடு - புதிய கட்டட வேலை தொடங்குகிறது.
 
 
 
 
 
 

இதே ஒ , பெரி 1 出止

Page 50
இதோ ஒரு வெளிச்சம்
அ தெ. பிரமநாயகம் - அலுவலகத்தில்
 

இதோ ஒரு பெனிச்சர் 岛、

Page 51
h இதோ ஒரு வெளிச்சம்
பகவதி - வள்ளி - கெளரி - சாரதா
 

இதயத்தில் தைத்த அம்பு 品喜
வாழ்க்கையில் சரியென்று படுவதை மற்றவர்கள் ஏற்றுக்
கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், நமக்கே விருப்பமில்லா விட்டாலும் செய்துதான் ஆகவேண்டும்.
ரோஜாவைப் பறிப்பவன் முள்ளைப் பற்றிக் எண்ணுதல்
சீமான் அனுபவங்கள் தான் சிறந்த மனிதனை உரு
தகனறன:இ
உறுத்தலின் விளைவால் உருவாவதுதான் முத்து.
கத்திகளை யாரும் வெல்வெட் துணியினால் தீட்டிக்
|
தாமரையைப் பறிப்பவன் சேற்றைப்
E. 3. இ

Page 52
13. இறைவன் கொடுத்த வரம்
பதினேழு வயது!
கள்ளங் கபடமில்லாமல் கன்று போல் துள்ளிக் குதித்துச் சிரித்து ஒடியாடும் வயது!
இந்த வயதில்தான் சிதம்பரத்தம்மாள் தெய்வநாயகத்தை மணந்து கொண்டார். 'ኳ
அப்போது அவருக்கு வெளியுலகம் தெரியாது!
சாத்தான்குளத்திலிருந்த தன் பெரிய மாடிவிடே உலகம். தன் வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டி வாயில் உள்ளே வரும் போது முன்னாலே இருந்த பசுப் பண்ணையிலிருந்த பசுக் களின் இனிய குரலே அவர் அடிக்கடி கேட்ட இசை வீட்டின் உள்ளே பூசை அறையை அலங்கரித்த 30 இறைவனின் படங் களுக்கு அன்றாடம் பூசை செய்து அதன் பின்னரே உண்பது என்பது அவர் வழக்கம். இன்றைக்கும் சாத்தான்குளம் வீட் டிற்குப் போனால் முதலில் செய்வது அந்தப் பூசைதான்!
பக்தியான தழ்நிலையில், பண்பான குடும்பத்திலே உரு வாக்கப்பட்டவர்தான் சிதம்பரத்தம்மாள்!
இந்த மங்கையின் திருமணம் ஒருவகையில் விந்தையான திருமணம்தான்.
மூன்றாந்தாரமாக, அதுவும் ஏற்கனவே வீட்டில் ஐந்து குழந்தைகளிருக்கும்போது ஒரு இளம் பெண் ஒருவரை மணந்து கொண்டால் கணவனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க முடியும்? சிதம்பரத்தம்மாளும் அப்படித்தான் ஆட்டிப் படைத் தார் தன் கணவரையும், பிள்ளைகளையும்! ஆம், ஆனால் அதி காரத்தாலல்ல! அன்பினால் ஆட்டிப் படைத்தார்!
ஒராண்டுக் காலம் தங்கள் தாயைப் பிரிந்த குழந்தைகள் அந்த இழப்பை அடியோடு மறந்தே விட்டன! அந்த அளவுக்கு
 

இறைவன் கொடுத்த வரம் 87
பெறாமல் பெற்ற பிள்ளைகள் மீது பாச மழையைப் பொழிந் தார் சிதம்பரத்தம்மாள்.
'பெரிய வீடு ஐந்து குழந்தைகள்! இரவும் பகலும் வியா பாரத்தில் முனைப்பாயிருக்கும் கணவரின் தேவைகள்! ஒவ் வொரு வினாடியும் ஏதேனும் வேலைகள்! இவ்வளவையும் சமாளிக்க அவர் எப்படிக் கற்றுக் கொண்டார்? இதனால் தான் பெண்களைச் சக்தி என்கிறார்களோ!
இத்தனைக்கும் வீட்டிற்குள் புகுந்த போது, குழந்தைகளைக் குளிப்பாட்டிவிடக் கூட அவருக்குத் தெரியாது! தெய்வநாயகம் குழந்தைகளுக்கு எண்ணெய் தடவி விட்டால், இவர் சியக்காய்த் தூளைக் கரைத்துக் குளிப்பாட்டுவார். ஆனால் நாட்கள் நகரத் தொடங்கியவுடன் அவரே குழந்தைகளை முழுமையாகக் கவ னித்துக் கொண்டார்.
தம்மையும், தம் குழந்தைகளையும் காப்பதற்காகவே முத்து விநாயகரும், திருச்செந்தூர் முருகனும் சிதம்பரத்தம்மாளை அனுப்பி வைத்ததாகத் தெய்வநாயகம் உறுதியாக நம்புகிறார்.
இல்வாழ்க்கை' என்பது மூன்றுகால் ஒட்டப் பந்தயம் போன்றது. சிறுவர்களுடைய இந்தப் போட்டியில் அனுசரணை யில்லாமல் அடுத்தவனை விட வேகமாகவோ அல்லது மந்த மாகவோ ஒருவன் ஒட முயன்றால் இருவருமே கீழே விழுந் தாக வேண்டும்.
தெய்வநாயகத்தின் வாழ்க்கை ரதம் தடம்புரளாமல் ஓடிய தற்கு முக்கிய காரணம் தம்பதியர் இருவரும் எல்லா வகை யிலும் அனுசரணையாக வாழ்ந்ததே!
தெய்வநாயகம் எந்த அளவுக்கு ஆழ்ந்த இறைபக்தி கொண் டிருந்தாரோ, அந்த அளவு இறைவனிடத்தில் ஈடுபாடு அவருக் கும் இருந்தது!
வரும் விருந்தினர்களோடு அன்போடு உபசரித்து விருந் தோம்பும் உயரிய பண்பில் கணவன் மனைவியரில் யார் உயர்ந் தவர் - குறைந்தவர் என்பதைச் சொல்ல முடியாது!
வாரி வழங்கும் வள்ளலாகத் தெய்வநாயகம் திகழ்ந்தால் 'இன்னும் சற்று சேர்த்துக் கொடுங்களேன்’ என்று ஊக்கமுட்டும் உயரிய பண்பாட்டோடு திகழ்கிறவர் சிதம்பரத்தம்மாள்.

Page 53
88 இதோ ஒரு வெளிச்சம்
'குழந்தைகளிடம் இருவரில் யாருக்கு அன்பு அதிகம்?" என்று பட்டி மண்டபம் வைத்தால் தீர்ப்பு சொல்வது மிகக் கடினம். அப்படி ஒரு பக்கம் "சார்ந்து தீர்ப்பு சொன்னாலும் அது சிதம்பரத்தம்மாள் சார்பாகவே சொல்லப்பட்டாக வேண் டும்.
குழந்தைகள் அவரைச் சித்தி என்று அழைத்ததில்லை 'சித்தி' என்று எண்ணிக் கொண்டு 'அம்மா’ என்று போலி யாகவும் அழைத்ததில்லை. தூய்மையான தாய் - சேய் உறவே அன்றும் இன்றும் என்றும் நிலவி வருகிறது.
சிதம்பரத்தம்மாள் நான்கு நன் மக்களை ஈன்றெடுத்தார். வள்ளியம்மை, சண்முகசுந்தரம் (முருகேசு), ஆழ்வார் (கெளரி), முத்துவடிவு (சாரதா) ஆகிய மூன்று பெண்களும் ஓர் ஆண் மகனும் அந்த நான்கு செல்வங்கள்.
ஒன்பது பிள்ளைகளின் தாயாக விளங்கும் சிதம்பரத்தம் மாளின் பத்தாவது குழந்தை தெய்வநாயகமே! தாய் என்ற சொல்லுக்கு இலக்கணத்தை அகராதியில் தேடவேண்டாம். இந்த அன்னையைப் பார்த்தாலே போதும்.
பிள்ளைகளும், பெண்களும், மருமகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என்று ஆலமரமாக அமைந்திருக்கிற இந்தக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பழகும் விதமும், கொட்டுகின்ற பாசமும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை; நம்புவதற்கு அரியவை!
இவ்வளவு பெருமைக்கும் உரியவர் தாய்மைக் குணநலன் களின் ஒட்டு மொத்த உருவாய்த் திகழும் சிதம்பரத்தம்மாள் அவர்களே!
 

இறைவன் கொடுத்த வரம் 89
சிதம்பரத்தம்மாள் தெய்வநாயகத்தின் மனைவியாக அந்த இல்லத்திற்குள் நுழையும்போது அருணாசலத்தின் வயது 1%. அருணாசலம் 10வயதுச் சிறுவனாக இருந்தபோது, வீட்டு வேலைக்காரன் ஒருநாள் கதை சொல்லுவது போல சொல்லிக் கொண்டே வந்த போதுதான் அருணாசலத்துக்குச் சிதம்பரத் தம்மாள் தன்னைப் பெற்றெடுக்காத தாய் - சித்தி என்ற செய்தி தெரிந்தது. குழம்பிப்போன சிறுவனாகச் சிதம்பரத்தம்மாளிடம் சென்று 'அம்மா, நீங்கள் என்னுடைய அம்மா இல்லையா?” என்று கேட்டபோது, தன் வாழ்நாட்களிலேயே என்றைக்கும் அழாத அளவுக்கு அழுது விட்டார் சிதம்பரத்தம்மாள். 'என் மகனிடம் இதைச் சொல்லி விட்டார்களே!"

Page 54
14. தனி மரம்
1957ம் ஆண்டு! வி.ரி.வி.யின் வளர்ச்சி அற்புதமாக இருந்தது.
1942ல் தொடங்கிய போது ஒரு சிறிய கடை இப்போது 3 கடைகள் கடைகளில் சிப்பந்திகள்!
தெய்வநாயகத்திற்குச் சொந்தமான பெரிய வீடு! அத்துடன் கார் ஒன்று வாங்கியிருந்தார்.
கடும் உழைப்பு: அதற்கேற்ப நிறைந்த வருவாய்! 1942ல் கடையைத் தொடங்கிய போது மொத்த முதலீடும் செய்தது தெய்வநாயகம் தான். திறமையை மதித்து முதலீடின்றிச் சேர்த் துக் கொண்டது அவருடைய நண்பரை உறவை மதித்து, எந்த முதலுமின்றி இணைத்துக் கொண்டது அண்ணன் சுடலை முத்துவை!
இதில் ஏற்கனவே நண்பர் பிரிந்து விட்டார்.
சுடலைமுத்து அதிக நாட்களைக் கழித்தது இந்தியாவில் தான். தம் சொந்த வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த அவருக்குக் கொழும்பு வியாபாரத்தில் அவ்வளவாகப் பிடிப் பில்லை. ஆனாலும் மாதாமாதம் அவருடைய செலவுக்குப் பணம் தவறாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரு டத்திற்கு ஒருமுறை வரவு செலவு பார்த்து லாபத்தில் அண்ண னுக்கு உரிய பங்கையும் கொடுத்து வந்தார்.
1957ம் ஆண்டு சுடலைமுத்து தன் மனைவியுடன் கொழும்பு வந்தார். நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. மூன்று கடைகள், நிறைந்த வணிகம், பெருகிவரும் செல்வம், சொந்தமாக லாரிகள், கார் இதையெல்லாம் பார்த்தவுடன் மலைப்பாக இருந்தது!
 

தனி மரம் 9.
சில நாட்கள் கொழும்பிலிருந்து விட்டு ஊர் திரும்பிய சுடலைமுத்து தம்பிக்குக் கடிதம் எழுதினார்.
'இதற்கு மேல் நான் வி.ரி.வி.யில் பங்காளராக இருக்க விரும்பவில்லை; என்னுடைய பங்கைப் பிரித்துக் கொடுத்து விடு' s
விசுவாமித்திரர் ஒலை சோதிடத்தில் நம்பிக்கை கொண் டவர் சுடலைமுத்து; தனியாகப் பிரிந்து தொழில் செய்வீர்கள் - முன்பின் தொடர்பில்லாத ஒருவர் தொழிலில் உதவுவார் என்ற சோதிடக் குறிப்பை அவர் அதிகமாக நம்பினார். அத னால்தான் அந்த கடிதம்.
கடிதம் தெய்வநாயகத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மனம் முழுக்க வேதனை.
அவரைப் பொருத்த வரையில் இது அண்ணனுடைய சிந் தனையல்ல. வளர்ந்துவரும் வியாபாரத்தைச் சீர்குலைய வைக்க, சொத்தைப் பிரிக்க, தெய்வநாயகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் தன் அப்பாவி அண்ணனை யாரோ தூபம் போட்டுத் தூண்டி இருக்கிறார்கள் என்று தான் உறுதி யாக நம்பினார். இன்றும் அதுதான் அவர் எண்ணம். அண்ண னைத் தவறாக எண்ணிப்பார்க்க முடியவில்லை. தம்மால் உயர மாக வளரமுடியாதவர்கள் வளர்ந்து விட்டவர்கள் காலை வெட்ட முயல்வதில்லையா? தெய்வநாயகம், சுடலைமுத்து வுக்குக் கடிதம் எழுதினார்.
'அண்ணா, நீங்கள் ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? அப்பாவுக்குப் பிறகு நான் உங்களை அண்ணாவாக மட்டுமில் லாமல், அப்பாவாகவுமல்லவா மதித்து வருகிறேன். எல்லா உறவினர்களும் போய் விட்ட பிறகு எனக்கு யார் இருக்கிறார் கள்? ஆகவே பிரிந்து போகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். தொடர்ந்து நாம் வியாபாரத்தில் ஈடுபடுவோம். நான் எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து கவனித்துக் கொள்கிறேன். பிரிந்து போக வேண்டாம்!”
வந்த பதில் கொடுமையாக இருந்தது ‘நான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பங்காளியாக நீடிக்க விரும்பவில்லை. உடனடியாக எனக்குச் சேர வேண்டிய பங்கைப் பிரித்துக்

Page 55
92 இதோ ஒரு வெளிச்சம்
கொடு” கடிதத்தைக் கண்ட தெய்வநாயகம் கண்ணிர் விட்டு அழுதார். பிரிந்து போக அவர் இளகிய மனம் ஒப்பவில்லை.
முத்து விநாயகரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டவர் தெய்வநாயகம். காற்று, மழை, புயல் எப்படியிருப் பினும் கடைக்குப் போகுமுன் விநாயகரை வணங்கி விட்டுப் போவதும், திரும்பி வரும் போது ஆலயத்தில் இறங்கி மீண்டும் வணங்கிவிட்டு வீடு திரும்புவதும் அவர் வழக்கம்!
விநாயகனிடம் மனமுருக வேண்டினார். 'விநாயகா! எனக்கு ஏன் இந்தச் சோதனை? என் அண்ணன் ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறார்?' மனம் விட்டுப்பேசிக கண்ணீர் விட்டு அழுதபின் இரவு வீட்டுக்கு வந்தார்.
இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. 'இந்தியா சென்று, அண்ணனைப் பார்த்துப் பேசி கேட்டுப் பார்க்கலாமா?’ என்று ஓர் எண்ணம்.
பொழுது விடியும் நேரத்தில் மனத்தில் வேறு ஒரு சிந் னை உதித்தது. எல்லா வகையிலும் வழிகாட்டியாகத் திகழ்கின்ற முத்து விநாயகரையே விடை கேட்டுவிட்டால்
என்ன?
எப்போதெல்லாம் தம்மால் பிரச்சினைகளுக்கு முடிவு காண இயலவில்லையோ, அந்த நேரங்களில் விநாயகரின் முன் பூக்கட்டி வைத்து முடிவு கேட்பது என்பது தெய்வநாயகத் தின் வழக்கம். ஒவ்வொரு முறையும் முத்து விநாயகர் நல்ல வழிகளைத் தான் காட்டியிருக்கிறார். ஆகவே இந்த முக்கியமான பிரச்சினையையும் அவர் கையிலே விட்டு விடுவது என்ற முடி வோடு அன்றைய பொழுது விடிந்தது!
வைகறைப் பொழுதில் முத்து விநாயகர் ஆலயத்திற்கு வந்து அர்ச்சகரிடம் தீப ஆராதனை நடத்துமாறு கேட்டுக் கொண்டு இரண்டு நிற மலர்களைத் தனியாக மறைத்துக் கட்டி விநாயகரின் பாதங்களில் வைக்கச் சொன்னார்!
வெள்ளை வண்ணமலரை எடுத்தால் அண்ணன் கேட்ட வண்ணம் சொத்தைப் பிரிப்பது; செந்நிற மலர் எடுத்தால் இந் தியா சென்று நேரிலேயே அண்ணனிடம் மன்றாடிக் கேட்பது என்று தீர்மானித்தபடி விநாயகரின் பாதங்களிலிருந்து மலர்ப் பொட்டலங்களில் ஒன்றை எடுத்துப் பிரித்தார்.

தனி மரம் 93
வெண்ணிற மலர்கள் அவரைப் பார்த்துப் புன்னகை சிந் தின!
"சொத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டுத் தனியாக நில்!” என்று முத்து விநாயகர் உத்தரவு கொடுத்து விட்டார்.
திடீரென மனத்திலே ஒரு நிறைவு! இதற்கு மேல் ஏன் கவலைப்பட வேண்டும்?
எதற்காக கண்ணிர் விடவேண்டும்?
ஏன் பாசஉணர்வுகள் அவரைப் பதட்டமடையச் செய்ய வேண்டும்?
இனி எதைச் செய்தாலும் அது இறைவனுடைய ஆணை! பக்தன் என்ற வகையில் அவனுடைய கட்டளையைச் செய்ய வேண்டும்.
பாரதப் போரிலே கலங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, 'உறவுக்கு மிஞ்சிய கடமை இருக்கிறது' என்று கண்களைத் திறக்க வைத்து வழி காட்டினான் கண்ணன்.
கிட்டத்தட்ட அதேநிலையில் தடுமாறி நின்ற தெய்வநாயகத் திற்கு முத்து விநாயகர் வழி காட்டி விட்டார்.
முனைப்பாகச் செயலில் இறங்கினார். சொத்தில் பாதி யைத் தரவேண்டும்!
நடக்கும் வியாபாரத்தில் முதலீடு பெரும்பாலும் பொருட் களாகவே இருந்தன! எல்லாவற்றிற்கும் மதிப்புப்போட்டு, சேர வேண்டிய தொகையை அண்ணனுக்குத் தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கடையிலும் ரொக்கமாகப் பண மில்லை.
பொதுவாகவே தெய்வநாயகத்திற்கு கடன் வாங்கும் வழக் கம் கிடையாது! ஆனால் இந்த நெருக்கடியில் எங்கே செல் வது?
மலைநாட்டுப் பகுதியில் அவருக்கு ஒரு சிங்கள நண்பர் இருந்தார். எஸ்.டி. பீட்டர் அப்புஹாமி. அவருடைய வீட்டிற்கு அதிகாலையில் சென்றார் தெய்வநாயகம்.
‘என்ன, இத்தனை அதிகாலையில் இங்கே வந்திருக்கிறீர்

Page 56
94 இதோ ஒரு வெளிச்சம்
கள்?’ என்றவுடன் தன் நிலையை விளக்கிப் பணம் கேட்டார் தெய்வநாயகம்.
அந்த சிங்கள நண்பர், தெய்வநாயகத்தின் கையில் தன் வீட்டு இரும்புப்பெட்டியின் சாவியைக் கொடுத்து "நீயே பெட் டியைத் திறந்து, எவ்வளவு பணம் வேண்டுமோ, தாராளமாக எடுத்துக் கொள். உடனே தர வேண்டும் என்பதில்லை; எனக் குத் தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்!”
இன்றைக்கும் அந்த அன்பரின் உயரிய உள்ளத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போவார் தெய்வநாயகம்! மனித நேயத்திற்கு நிறம் ஏது? சாதி ஏது? இனம் ஏது? மதம் ஏது? நாடுதான் ஏது?
தெய்வநாயகத்தின் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சிங்கள மக்கள் அன்பைக் காட்டியிருக்கிறார்கள்.
இன்றைக்கும் அவருடைய வி.ரி.வி. நிறுவனங்களில் ஏராளமான சிங்களவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார். அதிலும் பலருக்கு நல்ல பொறுப்பான, பெரும் பதவிகளையே கொடுத்திருக்கிறார்.
பங்காகத் தரவேண்டிய பணத்துடன் மேலும் ஒரு பெருந் தொகையை அன்பளிப்பாகச் சேர்த்து உரிய முறையில் தெய்வ நாயகம் கொடுத்து கணக்கை முடித்துக் கொண்டார்.
பின்னர் எஸ்.டி. பீட்டர் அப்புஹாமிக்குச் சேரவேண்டிய தொகையுடன், மேலும் சற்று சேர்த்து அவர் விரும்பியபடியே, அவருடைய மகளின் திருமண நேரத்தின் போது கொடுத்து வாங்கிய கடனை அடைத்து விட்டார்.
 

ո՞ւքgւb 95
சுடலைமுத்து தம்பி மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தமிழ் நாட்டில் பல வியாபார முயற்சிகளைத் தொடங்கினார்.
இன்றைக்கு அவருடைய பிள்ளைகள் நன்முறையில் தீப் பெட்டித் தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டு, விவசாயத் தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தெய்வநாயகத்தைப் பொறுத்தவரையில் ஆழ்மனத்தில் ‘அண்ணன் பிரிந்து போய் விட்டாரே என்ற வேதனை நீண்ட நாள் இருந்தது.
மீண்டும் ஓர் அடி! வளர்ந்து வரும் மரத்தின் சில கிளை கள் வெட்டப்ப்ட்டன! ஆனாலும் தெய்வநாயகம் பெரும் பணத்தை - பாதிச் சொத்தை இழந்தாலும் வாடவில்லை. நிமிர்ந்தே நின்றார்.
YA

Page 57
15. வழிநெடுக வாய்ப்புகள்
'கடவுள் தன் தூதர்களை மனித வடிவத்தில் அனுப்பி வைக்கிறான்' என்று சொல்லுவார்கள்.
'தயா அபயசேகர, கடவுளால் அனுப்பி வைக்கப் பட்ட தூதர் என்றால் மிகையாகாது!
காலம்காலமாக முருக உணர்விலேயே மூழ்கியிருக்கும் தெய்வநாயகத்தின் ஆழ்ந்த பக்திக்குப் பரிசாக, முருகனாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய தூதர் அபயசேகர!
தெய்வநாயகத்திற்குள் ஒளிந்திருந்த பல்வேறு ஆற்றல்களை அடையாளம் கண்டு, அவை வெளியுலகிற்கு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த அற்புதமான மனிதர் தயா அபயசேகர!
தெய்வநாயகத்தின் வெற்றிப் பயணத்திற்குச் சாலை போட் டுக் கொடுத்தவர் அவரே!
1948ல் இலங்கை, ஆங்கிலேயர் கையிலிருந்து விடுதலை பெற்றது. அரசியல் சுதந்திரம் பெற்று விட்டதேயொழிய, பொருளாதார விடுதலையை இலங்கையால் அன்று பெறமுடிய வில்லை.
பல ஆண்டுகாலமாக இலங்கையில் வணிகம் செய்து வந்த ‘லிவர் பிரதர்ஸ் பிரிட்டிஷ் சிலோன் கார்ப்பரேஷன் (பி.சி.சி), றெக்கெட் அண் கோல்மன் போன்ற வணிக நிறுவனங்கள் தொடர்ந்து இலங்கை வணிக உலகினைத் தங்கள் கைகளிலே வைத்திருந்தன.
பிறப்பால் சிங்களவராக இருந்தாலும், ஆங்கிலேயேருடன் பழகி, ஆங்கில அரசில் பதவிகள் வகித்து, வாழ்ந்து விட்ட அபய சேகரவிற்கு புதிய இலங்கை அரசில் பெருந்தடையாக இருந் தது அவரால் சரளமாகக் கையாள முடியாத அவருடைய தாய்மொழி சிங்களம் தான்.
 

வழிநெடுக வாய்ப்புகள் 9.
ஆகவே அரசு அலுவலராக இருந்த அவர் அரசுப் பணி யிலிருந்து விலகி 1962ல் பி.சி.சியில் பணி புரிய முன் வந் தார். மார்க்கெட்டிங் சர்வீஸ் பிரிவில் ஒரு பெரிய பதவி அவருக்குக் கிடைத்தது.
பி.சி.சி. நிறுவனம் இலங்கையில் எல்லாவகையான சோப் புக்கள், அடைத்து வைக்கப்பட்ட உணவு வகைகள், கால் நடை தீவனங்கள், மிகவும் புகழ்பெற்ற அயல் நாட்டு மதுவகைகள் மற்றும் பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்தல், ஏற்று மதி செய்தல், நாடுமுழுக்க விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடு பட்டிருந்தது.
நன்கு படித்தவரும், கடுமையான உழைப்பாளருமாகிய அபயசேகரவிற்கு மிக முக்கியமான பொறுப்பை, பி.சி.சி. வழங்கியிருந்தது. இலங்கை முழுக்க பொருள்களைப் பரவலாக் கும் பணிதான் அது. :
பொதுவாக பி.சி.சியின் போட்டியாளராக இருந்த மற் றொரு ஆங்கில நிறுவனம் 'லீவர் பிரதர்ஸ்'. லீவர் பிரதர்ஸ் ஒரு பகுதியில் தன்னுடைய முகவர்களாக 5 பேரை நியமித்திருந் தால் பி.சி.சி. ஒரு முகவரை மட்டுமே நியமித்திருக்கும். அதா வது 5:1 என்ற விகிதத்தில் முகவர்கள் அமைந்திருந்தனர்.
தன்னுடைய பொருட்கள் அதிகமாக விற்பனையாக வேண் டும் என்று லிவர் பிரதர்ஸ் விரும்பியது ஆகவே ஐந்து முகவர் களை நியமித்திருந்தது. ஆனால் பி.சி.சி.யோ தன்னுடைய முக வர்களைக் குறைவாக நியமித்து, பெரிய விற்பனைப் பகுதியை ஒப்படைத்தது. தன்னுடைய முகவர்கள் நிறைய இலாபம் சம்
பாதிக்க வேண்டும் என பி.சி.சி. விரும்பியது. ' .. ઈ}િ
மார்க்கெட்டிங் தன் பொறுப்பில் வந்தவுடன் அபயசேகர எங்கெல்லாம் விற்பனை குறைவாக இருக்கிறது, எங்கே முகவர் களை மேலும் நியமிக்கலாம், என்றெல்லாம் திட்டமிட் ஆரம் பித்தார். .
"கொழும்பின் வியாபார இதயம்' என்று சொல்லப்படும் பகுதி 'புறக்கோட்டை. அந்தப் பகுதியில் வியாபாரம் எப்படி யிருக்கிறது என்று ஆராய்ந்த போது, அது அவ்வளவு நிறைவா இல்லை.

Page 58
93 இதோ ஒரு வெளிச்சம்
அங்கிருந்த திறமையான வணிகர்களைப் பட்டியல் போட்டு வந்த போது ஒருமித்தக் கருத்தாக முதலில் வந்த பெயர் தெய்வநாயகம் பிள்ளை. அவர் பி.சி.சியோடு தொடர்பு கொள்ள ஆர்வம் கொண்டிருப்பதாக அறிந்தவுடன் அவரைச் சந்திக்க அழைத்தார் அபயசேகர!
தன் அலுவலகத்திற்குத் தன்னை நோக்கி நடந்து வந்த தெய்வநாயகத்தைப் பார்த்த போது அபயசேகரவிற்கு மிகவும் வியப்பாக இருந்தது.
வெண்மையான சட்டை, வேட்டி, காதிலே ஒளிவிடும் வைரக் காதணிகள், கழுத்திலும் கையிலும் தங்க அணிகள், வாரி முடிந்து விடப்பட்ட குடுமி, நெற்றி நிறைந்த திருநீறு, பளிச்சிட்ட குங்குமமாக அவர் நடந்து வந்த போது அந்த நடை யில் தென்றலின் மென்மையையும், ஒரு யானையின் கம்பீரத் தையும் ஒருங்கே உணர்ந்தார் அபய சேகர!
“மூன்று ஆண்டுகளாக நீ தேடிக் கொண்டிருக்கிறாயே இதோ, அதே மனிதர்தான் உன்னை நோக்கி வந்து கொண் டிருக்கிறார்’ என்று அவருக்குள் ஏதோ ஒரு குரல் ஒலிப்பதை அவரால் உணர முடிந்தது.
அவரைத்தன் அறையில் எதிரிலே உட்காரவைத்துப் பார்த் துக் கொண்டிருந்த போது, அவருடைய எளிய தோற்றத்திலே ஒரு கம்பீரமும், தெய்வீகக்களையும் ஒளிவிட்டதை அவரால் தீவிரமாக அறிய முடிந்தது.
அவருக்காக அபயசேகர ஒதுக்கியிருந்த நேரம் பத்து நிமிடம் தான். ஆனால் இருவரும் பேச ஆரம்பித்ததும் நேரத்தைக் கட்
 

வழிநெடுக வாய்ப்புகள் 99.
டுப்படுத்தும் ஆற்றல் தன்கையை விட்டு விட்டுப் போய் விட் டதை அபயசேகர உணர்ந்தார். பத்து நிமிடம் கடந்து போய், பேச்சு முடியும் போது ஒருமணி நேரமாகியிருந்தது. பேசும் போதே அவருடைய திறமை, நாணயம், ஆர்வம், பரிவு, நட் புணர்வு, செல்வாக்கு போன்ற பல்வேறு திறன்கள் வெளிப் படுவதை அவர் புரிந்து கொண்டார்.
பேச்சின் இறுதியில் பி.சி.சி.யின் முகவராக இருக்கத்
தெய்வநாயகம் ஒப்புக்கொண்டார்.
ஆனாலும் அதில் முட்டுக்கட்டை இருந்தது. ஏற்கனவே புறக்கோட்டை பகுதியில் வேறு ஒருவர் பி.சி.சி.யின் முகவராக இருந்து ஓரளவு நல்ல வியாபாரம் செய்து வந்தார் அவரை நீக்குவதற்கு நிறுவனத்திற்கு மனமில்லை, அவர்களுடைய சட் டமும் இடங்கொடுக்கவில்லை. ஆகவே ஒரு மூன்று மாதம் வரை தெய்வநாயகத்திற்கு முகவர் பொறுப்பு அளிப்பதென்றும் இந்த மூன்று மாதங்களில் இருவரில் யார் அதிக அளவு பி.சி.சி பொருட்களை விற்கிறார்களோ, அவர்களையே நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான முகவராக நியமிப்பது என்றும் பி.சி.சி முடிவெடுத்தது.
மூன்று மாதங்கள் ஓடின! பி.சி.சி.யால் நம்ப முடியாத அளவு மிக அற்புதமாக அதன் பொருள்களை விற்றுக் கொடுத் தார் தெய்வநாயகம். அவர் வியாபாரம் செய்யும் அழகை, நேர்த் தியை பி.சி.சி உற்றுக் கவனித்தது.
சிறு வியாபாரிகளுடனும், வாடிக்கையாளர்களுடனும் அவர் பழகுகின்ற முறை, வியாபாரக் கொள்கைக்ள், வியா பாரத்தின் மேல் அவருக்கிருந்த அளவற்ற ஈடுபாடு, எடுத்துக் கொண்ட முயற்சியில் முனைப்பாக இருத்தல் அத்தனையையும் கவனித்த பி.சி.சி. தன் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான முக வராகத் தெய்வநாயகத்தை நியமித்தது.
ஒரு சிறந்த வியாபாரியின் இலக்கணம் என்ன? வியாபாரம் என்று இறங்கி விட்டால் தன் உடல், பொருள், ஆவி அத்தனை யையும் முழுவதாக ஈடுபடுத்தி உச்ச கட்ட்ச் செயல்பாட்டில் கொண்டு போய் வியாபாரத்தை வைத்திருக்க வேண்டும். அதைத் தான் தெய்வநாயகம் செய்தார். தன்னிடம் கொள் முதல் செய்யும் வியாபாரிகள் கடன் வசதியில் பொருட்களை

Page 59
100 இதோ ஒரு வெளிச்சம்
எடுத்துச் செல்ல வழிவகை செய்தார். பி.சி.சி பொருட்களின் விற்பனை வெகுவாக உயர்ந்தது.
தெய்வநாயகத்தின் ஆற்றல்களைக் கண்டு புல்லரித்துப் போன அபயசேகர அவருக்கு வேறு எவ்வகையிலாவது உதவ முடியுமா?’ என்று சிந்தித்தார்.
பொதுவாக பி.சி.சி நிறுவனம் தன்னுடைய முகவர்களுக்கு கடன் சலுகை தருவதில்லை. பணம் செலுத்திய பின்னரே கொள் முதல் செய்யும் வழக்கம் அங்கே இருந்தது.
பெருமளவில் வியாபாரம் செய்யும் தெய்வநாயகத்தின் பணம் இங்கே முடங்கிவிடுவதைப் பார்த்த அபயசேகர தன் இயக்குநர்களிடம் பேசிப் பார்த்தார். "கடன் வசதி பெற்று தெய்வநாயகம் வியாபாரம் செய்ய வழி செய்ய வேண்டும் என்று வாதாடினார். ஆனால் அந்தக் கோரிக்கையை இயக்கு நர்கள் முன் வைக்கும் முன்னர் அவருடைய வங்கியோடு கலந்து பேசினார். சார்ட்டர்ட் வங்கியின் இயக்குநர்கள் அபயசேகர விடம் கூறினார்கள் தெய்வநாயகம் என்ன கேட்டாலும் தர லாம்; என்ன சொன்னாலும் செய்யலாம், அவருடைய கணக்கு, தங்கக் கணக்கு, அவர் கையெழுத்துப் போட்டுத் தரும் காசோ லையைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக் கொள்ளலாம்'.
ஆரம்பத்தில் பத்துலட்ச ரூபாய் கடன் வசதி செய்து கொடுத்த பி.சி.சி. பின்னர் முப்பது முதல் நாற்பது லட்ச ரூபாய்கள் வரை கடனில் சரக்கெடுக்க வசதி செய்து தந்தது. 1970ஆம் ஆண்டுகளில் இது மிகப் பெருந்தொகை.
கடனுக்குச் சரக்கெடுத்த தெய்வநாயகம், தம்முடைய சிறு வியாபாரிகளுக்கும் கடனில் சரக்குக் கொடுத்து உதவினார்.
ஒரு முறையாவது அவர் கொடுத்த காசோலைகள் செல் லாக் காசோலைகளாகத் திரும்பி வந்ததில்லை. நாணயம் என் றால் வி.ரி.வி; வி.ரி.வி என்றால் நாணயம் என்கின்ற அளவில் புகழை நிலைநாட்டிக் கொண்டார்.
பி.சி.சி. நேரடி விற்பனையில் ஈடுபடுவதில்லை. முகவர் களை நியமித்து அவர்கள் மூலம் மட்டுமே விற்க வேண்டும். இலங்கை நாட்டின் வியாபார மையம் கொழும்பு. கொழும் பின் உயிர்நாடி புறக்கோட்டை. இந்தப் பகுதியில் நடைபெறும்

வழிநெடுக வாய்ப்புகள் 0.
வியாபாரம் தான் பி.சி.சி.யின் பெருமையை, இலாபத்தை நிலைநாட்டும் வியாபாரம். அதைச் செம்மையாகச் செய்ய வேண்டுமென்றால் அங்கே ஆற்றல்மிக்க முகவர் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த வியாபாரியை அடையாளம் கண்டு, அவர் மூலம் மிகப் பெரும் வியாபாரத்தைச் செய்வதில் வெற்றிகண்டு, தான் சாதிக்க வேண்டியதை சாதித்து விட்டார் அபயசேகர.
பி.சி.சி. விற்பனை செய்து வந்த பொருள்களுள் ஒன்று பால் பவுடர். அதிலும் குழந்தை உணவாக 'விட்டா ஸ்ப்ரே என்ற பெயரில் ஹாலந்து, டென்மார்க் நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பால் உணவுப் பெட்டிகளை பி.சி.சி இலங்கை முழுக்க விற்று வந்தது.
மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விழித்துக் கொண்டிருப்பவன் தான் சிறந்த வியாபாரி என்பார்கள்.
தெய்வநாயகத்தின் ஒரு தலை சிறந்த பண்பு அவருடைய விழிப்புணர்வுதான், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது; கப்பல் கள் எப்போது கிளம்பின? எப்போது வரும்? மழை நிலவரம் என்ன? விளைச்சல் எப்படி?’ என்று எப்போதும் தகவல்களைத் திரட்டியபடி இருப்பார்.
ஒரு முறை அபயசேகரவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கூறினார். ‘இன்னும் ஆறு மாதத்தில், பொருளாதாரக் காரணங்களால், இலங்கையில் பயங்கரமான பாலுணவுத் தட் டுப்பாடு வரப்போகிறது. பால் மாவுப் பெட்டிகள் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் முடிந்தால் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்.' :
வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது தூங்கினேன்; வந்த போது துரங்கி விட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன். கரம் கொடுக்கும் வாய்ப்புக்களை கைகழுவி வீசினேன்; கை கழுவி வீசிவிட்டு காலமெல்லாம் பேசினேன்"
斜
கவிஞர் மு.மேத்தா பாடியதுபோல் வாய்ப்பை நழுவ விட்டு

Page 60
O2 இதோ ஒரு வெளிச்சம்
வாழ்க்கையெல்லாம் முகாரி பாடும் மனிதர்கட்கு நடுவில், அதிர்ஷ்ட தேவதைக் கதவைத் தட்ட கையைத் துரக்குமுன், அந் தக் கையைக் குலுக்கும் சுறுசுறுப்போடு செயல்படும் தெய்வ நாயகம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
அடுத்த நாள் அவருடைய பத்து லாரிகள். பி.சி.சி. நிறு வனத்தின் கிடங்குகளை நோக்கிச் சென்றன. ஒரு பெட்டியைக் கூட விட்டுவைக்காமல் அத்தனை பெட்டிகளையும் வாங்கித் தம்முடைய சேமிப்புக் கிடங்கில் கொண்டு போய் இறக்கினார் தெய்வநாயகம். இதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் சோம சுந்தரம்.
வியாபார உலகம் வியப்போடு, விழி மிரள, அவரைப் பார்த்தது. ‘என்ன ஆயிற்று என்று அந்த மனிதர் இவ்வளவை யும் வாங்குகிறார்? மிகப் பெருந்தொகையை முதல் போட்டு செய்கிறாரே இவ்வளவு பெரிய முயற்சி தேவையா? இன்னும் சிலர் அவர் எங்கோ ஏமாறப் போகிறார் என்று ஏளனமாகப் பார்த்தனர்.
ஆறுமாதங்கள் ஓடின, ஹாலந்து, டென்மார்க் கப்பல்கள் பாலுணவுப் பொருட்களை மறந்து விட்டன. இலங்கை முழு வதும் அந்த உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு; அபயசேகர சொன்னது சரியாகப் போய்விட்டது.
அன்றைய நாளில் வி.ரி.வி. நிறுவனத்தைத் தவிர வேறு எங்கும் பாலுணவு இல்லை அந்தச் சூழ்நிலையிலும் தெய்வ நாயகம் மிக நியாயமான விலையை வைத்தே விற்றார். அந்த வியாபாரத்தில் பெருந்தொகையை ஈட்டினார்.
ஒரு வியாபாரி விழிப்போடு, முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டால் சிறப்பாக முன்னேற முடியும் என்பதைத் தெய்வநாயகம் தம் அனுபவங்களின் மூலம் உணர்த்தி விட்டார்.
1972-ல் அபயசேகர பி.சி.சி.யிலிருந்து விலகி, பூரீலங்கா புகையிரத கூட்டுறவுத்தாபனத்தில் சேர்ந்தார். பின்னர் உணவு, கூட்டுறவு, சிறு தொழில் அமைச்சரவையில் விற்பனை விரிவாக்க அறிவுரையாளராகப் பொறுப்பேற்றார். அந்தப் பதவி மிகவும் சக்தி வாய்ந்த பதவியாகும்.

வழிநெடுக வாய்ப்புகள் 03
பதவிக்கு வந்தவுடன தெய்வநாயகத்திற்கு அவர் கொடுத்த ஆலோசனைகளுள் ஒன்று புகையிலைத் தொழிலில் ஈடுபடுவது என்பதாகும். பீடித்தொழிலில் ஈடுபட முதலில் தெய்வநாயகம் தயங்கினாலும் பின்பு முழுமூச்சுடன் இறங்கி, புகையிலைக் கார்ப்பரேஷன் முகவராக மாறினார். இந்தப் புதிய தொழிலும் அவருக்கு நிறைந்த வருவாயைக் கொடுத்தது.
அபயசேகரவிற்கு இலங்கை அரசு மேலும் ஒரு பதவியைக் கொடுத்தது. துணி விற்பனைத்துறையின் தலைவராக நிய மித்தது. இலங்கையில் உற்பத்தியாகும் கைத்தறி, ஆலைத்துணி களின் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றை நெறிப் படுத்தும் மிக உயரிய பொறுப்பு அவரிடம் இருந்தது.
இந்த துறை மிகவும் ஆபத்தான ஒரு துறை. கொஞ்சம் சரி யில்லர்த வியாபாரியிடம் துணிகளை விற்கும் பொறுப்பை ஒப்படைத்தால் விளைவுகள் சரிவராது. கறுப்புச் சந்தையில் விலையைக் கூட்டி விற்று ஒரே இரவில் பெரும்பணக்காராக வியாபாரி மாறி விடலாம். அதேநேரத்தில் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்.
இந்தத் துறையிலும் தெய்வநாயகத்திற்கு வாய்ப்பை உருவாக்கித் தர அபயசேகர விரும்பினார். அமைச்சரோடு அவர் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்தார். அவரோடு கலந்து உரையாடிய அமைச்சர் மிகவும் மன நிறைவு பெற்றார். மிக்க நேர்மையான வணிகரிடம்தான் பொறுப்பைப் பகிர்ந்தளிக் கிறோம் என்ற மகிழ்ச்சி அமைச்சரின் மனத்தில் தோன்றியது.
இந்தத் தொழிலும் தெய்வநாயகத்திற்கு மிகுந்த வருவாயை ஈட்டிக் கொடுத்தது. அரசு நிர்ணயித்த விலையைக் கொஞ்சமும் கூட்டாமல் அதே விலையில் விற்றதால் இலங்கை முழுக்க அவருடைய நாணயம் பாராட்டப்பட்டது. 'குறைந்த லாபம்; அதிக விற்பனை' என்பதே இன்று வரை அவர் நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும் கொள்கை.
ஒவ்வொரு வாய்ப்பையும் அபயசேகர உருவாக்கிக் கொடுக் கும் போதெல்லாம் அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. எதற்காக நிறுவனமும், அரசும் தன்னை வேலைக்கு அமர்த் தினவோ, அந்த வேலையைத் தன்னால் .தெய்வநாயகத்தின் மூலம் சிறப்பாகச் செய்ய முடிந்ததற்காக அபயசேகர மட்டற்ற

Page 61
04 இதோ ஒரு வெளிச்சம்
மகிழ்ச்சி அடைந்தார். மக்களுக்குப் பரவலாகப் போய்ச் சேர வேண்டிய நன்மைகள் முழுமையாகப் போய்ச் சேர்ந்ததில் உள் ளம் களிப்புற்றது.
நேர்மை, கடமையுணர்ச்சி, ஆற்றல், தன்மானம் இப்படிப் பல குணங்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்த அபயசேகர விற்கு எப்போது தெய்வநாயகத்தைப் பார்த்தாலும் பெரிய வியப்பு. அவரிடம் வெளிப்படும் ஒரு கவர்ச்சிகரமான ஒளிக்கு என்ன காரணம்? அபயசேகரவிற்குத் தோன்றும் விடை அவர் முழுக்க முழுக்க சைவ உணவு உண்பதுதான்
ஒய்வு பெற்றபின் அபயசேகர தனக்கென்று ஒரு மார்க் கெட்டிங் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதற்கு வேண் டிய அனேக உதவிகளை தெய்வநாயகம் செய்து கொடுத்தார். அது மட்டுமல்ல, தமக்கு மிகவும் இலாபம் கொடுத்து வந்த ஒரு பொருளை இலங்கை முழுக்க விற்றுத்தரும் பணியையும் அவருக்கு ஒப்படைத்தார்.
தெய்வநாயகம் இதுவரை தனியாக விற்றுக்கொண்டிருந்த, இதற்குமேலும் விற்கமுடிந்த, அவருக்கு மிகவும் இலாபம் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பொருளைத் தன் பொறுப்பில் விட்டவுடன் அபயசேகர மிகவும் மனம் நெகிழ்ந்து போனார்.
ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் வேறு வகையான சிக்கல்கள் தோன்றிய போது தன்னுடைய தொழிலை அபய சேகர நிறுத்திக் கொள்ள வேண்டிய துழநிலை உருவாகியது. ஆனால் அபயசேகர அதற்காக வருந்தவில்லை.
அவரைப் பொறுத்த வரையில் தெய்வநாயகம் தன்னுடைய அண்ணன். அவருக்குக் கிடைத்த பாசமும், பரிவும் சொல்லி மாளமுடியாது. தனக்கு ஒரு சிக்கல் என்றால் அதைத் தீர்க்க வரிந்து கட்டிக் கொண்டு முன்னால் வந்து நிற்பவர் தெய்வ நாயகம். இருவரும் இணைந்து சென்று தரிசித்த கோயில்கள் ஏராளம். பெளத்த கோயில்கள், இந்து கோயில்கள் என்று பாகுபாடின்றி சென்று வணங்கிய கிாட்சிகள் அபயசேகரவின் மனத்தில் என்றும் நிழலாடும் நினைவுகள்.
தெய்வநாயகத்தின் கடுமையான முயற்சியாலும், உழைப் பாலும் இலங்கையின் தலைசிறந்த முதல் பத்து நிறுவனங்களில்

வழிநெடுக வாய்ப்புகள் 05
உயரிய இடத்தை தெய்வநாயகத்தின் நிறுவனங்கள் பெற்று விட்டன.
இப்போது அபயசேகரவின் வயது 63. தன்னை விட இரு பது வயது அதிகமாக உள்ள தெய்வநாயகத்தைப் பற்றிச் சொல் லும் போது ‘என்னுடைய 63 வயதில் இவ்வளவு கடுமையாக வும், நேர்மையாகவும், சிறப்பாகவும் உழைக்கக் கூடிய வேறொரு மனிதனை நான் கண்டதில்லை; இனிக் காணப் போவதுமில்லை'
அபயசேகரவிற்கு வேறு பல பெருமிதங்கள் உண்டு.
பொதுவாக தந்தை வியாபாரத்தை வளர்ப்பதில் முனைப் பாக இருந்தால் பிள்ளைகளை வளர்ப்பதில் கோட்டை விட்டு விடுவார். ஆனால் தெய்வநாயகமோ பிள்ளைகளை நல்லவர்" களாகவும், வல்லவர்களாகவும் வளர்த்து இந்த நாட்டிற்குச் சிறந்த குடிமகன்களைக் கொடுத்திருக்கிறார்.
என்றைக்கும் அபயசேகரவிற்கு வி.ரி.வி. குடும்பங்களில் ஒரு தனி இடம் உண்டு. அவருடைய தம்பியின் பிள்ளை பெரக் கும் அபயசேகரா வி.ரி.வி குழுமத்தில் மிகப் பெரிய பொறுப் பில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு வரியில் அபயசேகர, தெய்வநாயகத்தை வர்ணிப்பது.
‘தெய்வநாயகம் ஒரு மிடாஸ்; அவர் எதைத் தொட்டாலும் அது பொன்னாக மாறுகிறது!’
கிம் ஆன சூங் - “எவ்ரி ஸ்ட்ரீட் இஸ் பேவ்ட் என்ற நூலில.

Page 62
16. பாசமலர்கள்
மூன்று மாதக் குழந்தையாக பகவதி வீறிட்டு அழுதபோது அது பாலுக்கு மட்டுமன்று. பாசத்துக்காகவும் தான். பிறந்த மூன்றாம் மாதத்தில் தாயை இழந்த அந்தப் பெண் குழந்தை யின் ஆரம்பம் அவலம் தோய்ந்ததாகவே இருந்தது.
பின்ன்ர் தெய்வநாயகம் சிதம்பரத்தம்மாளை மணந்த பின்பு மாபெரும் மாற்றங்கள். சில ஆண்டுகள் ஓடிய பின்னர் அக்குடும்பம் முழுமை பெற்றது. ஐந்து ஆண்கள்; நான்கு பெண்கள்!
பகவதி, வள்ளி, கெளரி, சாரதா என்று நான்கு பெண் குழந்தைகள் தெய்வநாயகத்தின் இல்லத்தை அழகுபடுத்தினார் கள். பகவதி மட்டும் தெய்வநாயகத்தின் இரண்டாம் மனைவி யின் பெண்; மற்ற மூவரும், முருகேசுவும் மூன்றாம் மனைவி யின் பிள்ளைகள் என்ற உண்மை சாரதாவுக்குத் தன் 16வது வயதில், திருமணத்திற்குச் சில நாட்கள் முன்தான் தெரிந்தது.
ஒருமுறை பகவதி பூஜை அறையில் சுவர் நிறைய மாட்டி யிருக்கும் சுவாமி படங்களோடு ஒரு பெண்ணின் படத்துக்கு மாலையிட்டிருப்பதைக் காட்டி 'அம்மா, அது யார்?' என்று கேட்க, 'அது உன் பெரியம்மா’ என்று சிதம்பரத்தம்மாள் கூறினார். உடனே பகவதி கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டாரே ஒழிய “பெரியம்மா என்றால் எப்படி? என்ன உறவுமுறை?’ என்று கேட்கத் தோன்றவில்லை. உண்மையில் அந்தப் படத்திலிருப்பவர்தான் தன்னை ஈன்றெடுத்த தாய் என்று தெரிந்து கொள்ளும்போது பகவதியின் வயது 15. கெளரிக்கும் தன்தாய் தன் தந்தையின் மூன்றாவது மனைவி என்ற செய்தி தெரிந்தது அவருடைய பதினைந்தாம் வயதில்.
நான்கு பெண்களுக்குமே தங்களுக்குள் இரண்டாம் மனைவியின் குழந்தைகள் - மூன்றாம் மனைவியின் குழந்தை கள் என்ற நிலை இருப்பது வெகு காலத்திற்குப் பிறகே தெரிந்
 

nrg i DSL fir g6sr O 7
தது. அதுவும் வேறு யாராவது உறவினர்கள், வேலையாட்கள் சொல்லித்தான் தெரிந்ததேயொழிய தாய், தந்தை அதைப்பற்றி சொல்லக்கூட இல்லை. தகவலைத் தெரிந்து கொண்ட பிள்ளை கள் ஒடிப்போய் மற்ற பிள்ளைகளிடம் அதை சொல்லியதே இல்லை; அதனால்தான் கடைசிப் பெண் சாரதாவுக்குக் கூட இந்தச் செய்தி அவருடைய பதினாறாம் வயதிலே தான் தெரிந் தது.
அந்த அளவுக்கு அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை உறவு முறைகள் அந்த வீட்டிலே வளமாக இருந்தன. எவையேனும் பிணக்குகளோ, பெற்றோரின் அரவணைப்பில் பாகுபாடோ இருந்தால் தானே இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதற்கு?
காலப் போக்கில் உண்மை வெளியான போதும் அவர் களிடையே அன்பு சற்றும் குறையவில்லை. மேலும் வலு வடைந்தது. 'எவ்வளவு சிறந்த தந்தை? எவ்வளவு உயர்ந்த தாய்? எத்தனை அன்பான அண்ணன்மார்? எவ்வளவு பாசமான தங்கையர்? எவ்வளவு இனிமையான அண்ணியர்?' என்று ஒவ்வொருவரும் மேலும் உணர ஆரம்பித்ததன் விளைவு அவர் களுடைய பாச உறவுகள் மேலும் வலுப்பெற்று விட்டன என்று சொல்ல வேண்டும்.
‘தெய்வநாயகம் தம் ஐந்து மகன்களை எப்படி உருவாக் கினார் என்பது ஒரு சாதனை என்றால், தன் நான்கு பெண் களையும் எப்படி சிறந்த பெண்களாக வளர்த்தார்’ என்பது ஒரு காவியம் எனலாம்.
அவர்கள் சின்னக்குழந்தைகளாக இருந்தபோது வியா பாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தது தெய்வநாயகம் ஒருவர் மட்டுமே!
ஈஸ்வரன் முதல் மற்ற அனைவரும் பள்ளி மாணவ, மாணவியர் குழந்தைகள். ---
இப்போது பிள்ளைகள் தொழிலுக்கு வந்துவிட்டதால் தெய்வநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் கொஞ்சநேர ஓய்வு கூட, அன்றைக்கு அவருக்கு இல்லை.
விடியற்காலையில் எழுந்து எல்லா வேலைகளையும் அவ சர கதியில் முடித்துவிட்டு கடைக்குச் செல்லும்போது, குழந்

Page 63
08 இதோ ஒரு வெளிச்சம்
தைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள்; மதியம் உணவுக்காக வரும்போதும் அவசரகதிதான். பின்னர், இரவு 12.00 அல்லது 1.00 மணிக்கு வீட்டுக்கு வரும்போது, குழந்தைகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பார்கள். விடுமுறை நாட்களில் கூட அவருக்கு ஓயாத வேலை.
உண்மையைச் சொல்லப்போனால் குழந்தைகளைக் கொஞ் சக்கூட அவருக்கு நேரமிருந்ததில்லை; அவர்களோடு பேசவோ, அவர்களுடன் உட்கார்ந்து உணவருந்தவோகூட அவரால் இயலாமலிருந்தது. ஆனாலும் எப்படி அவரால் அவ்வளவு பாசமாகவும், சிறப்பாகவும் குழந்தைகளை வளர்க்க முடிந்தது?
'இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், அவர் தூங்கிக் கொண்டிருந்த எங்களை எழுப்புவார். தூக்கக் கலக் கத்தில், கண்கள் செருக, மறுபடியும் படுத்துக் கொள்வதற்காக தளர்வுடன் நாங்கள் உட்காரும்போது அவர் எங்களுக்காக வாங்கி வந்த இனிப்புகள், தின்பண்டங்கள், பழங்களைக் கொடுப்பார்! பழச்சுளைகளை ஆசையோடு ஊட்டி விடுவார்! சாப்பிட்டபின் அப்படியே படுக்கையில் சாய்ந்து கொள்வோம். பழத்தோல்களைக் கொண்டுபோய் அப்பாவே வெளியில் போடுவார்! அவருக்குக் கிடைத்த நேரம் கொஞ்ச நேரமாக இருந்தாலும், எங்களிடம் ஓர் ஆழ்ந்த அன்பை உண்டாக்கும் அளவுக்கு மிகவும் பாசமாக வளர்த்தார்!
தன் தந்தையை எண்ணும்போது சாரதாவின் மனத்திலே நிழலாடும் இனிய நினைவுகள் இவை!
நான்கு பெண்களும் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு கான்வென்டில்தான் படித்தார்கள். பெற்றோர் தினவிழா,
 

பாசமலர்கள் 09
பள்ளியின் ஆண்டு விழா, பரிசளிப்புநாள் போன்ற நாட்களில் தெய்வநாயகம் தவறாது கலந்துகொள்ளுவார்.
'அப்பா! நீங்க எவ்வளவு பெரிய மனிதர்! ஊர்ல ரொம்ப முக்கியமான ஒரு நபர். ஆனா, ஏம்பா பள்ளிக்கூடத்துக்கு இப்படி வாரிங்க? குடுமி, காதில கடுக்கன், இவ்வளவு பெரிய பொட்டு, வேட்டி, சட்டை! நல்லா, டீசன்டா வாங்களேம்பா, இந்த மாதிரி நீங்க பள்ளிக் கூடத்துக்கு வந்தா எங்களுக்கு கூச்சமா இருக்கு' இம்மாதிரி வள்ளி தன் அப்பாவைப் பல முறை கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. தெய்வநாயகத்தின் ஒரே பதில் இதுதான். 'உங்களுக்காக நான் எதுவேணும்ன்ணாலும் செய்யறேம்மா, ஆனா, இந்த தலைமுடி, காதணி, ஆடை வகையில் மாத்திரம் நான் என்னை மாத்திக்க முடியாது.'
சின்ன வயதில், நடை, உடை, பாவனைகளுக்கு அதிகமாக மதிப்பு தரும் வயதில் வள்ளிக்குத் தான் கேட்டது நியாயமாக வும், தந்தை மறுத்தது தவறாகவும் தோன்றியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில், 'ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மரியாதை ஆடை அணிகலன்களாலோ, பொருளாலோ, பதவியாலோ அல்ல; அவருடைய நல்ல உள்ளத்தாலும், செயலாலும் மட் டுமே" என்கின்ற உண்மை புலப்பட ஆரம்பித்தவுடன் அந்தத் தோற்றத்திற்காகவே தந்தையை மேலும் அதிகமாக மதிக்க வேண்டுமென்ற உணர்வு தோன்றியது.
வள்ளியின் கணவர் தமிழகத்தில் மதுரா வங்கியில் மனே ஜராகப் பணிபுரிகிறார்.
வாழ்க்கை முழுக்கத் தெய்வநாயகத்திற்கு இருந்துவரும் ஏக் கங்கள் சில. அவற்றுள் ஒன்று தன் தந்தை, தாய்க்கு எதுவுமே செய்யமுடியவில்லையே! ஆறுவயதில் தாயையும், பத்துவயதில் தந்தையையும் இழந்துவிட்டுக் கிட்டத்தட்ட அனாதையாக நின்று விட்ட அவரால், எப்படிப் பெற்றவர்களுக்கு எதையேனும் செய்யமுடியும்?
தன்னை ஈன்ற தெய்வங்களுக்கு ஏதும் செய்ய இயலாத தழ்நிலையில் அவரால் செய்ய முடிந்த ஒன்று தானும் தன் மனைவியும் சிறந்த தந்தையாகவும் தாயாகவும் திகழுவதே.
அவருடைய அடுத்த குறை - தன்னால் படிக்க முடியவில் லையே! அந்தக் குறையை அவர் பல வகைகளில் போக்கிக்

Page 64
0, இதோ ஒரு வெளிச்சம்
கொண்டார். தன் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் படிக்கவைப்பது மட்டுமல்ல, படிப்பு என்று யார் உதவி கேட்டு வந்தாலும் அவர்களைப் படிக்க வைக்கிறார்.
‘எங்களுடைய படிப்பில் அவர் மிகுந்த அக்கறை காட்டி னார். தொடர்ந்து விடுமுறை நாட்கள் வரும் போது, அவர் எங்களுக்கென்று சில வேலைகள் வைப்பார். அதில் ஒன்று கையெழுத்து. நாங்கள் நான்குபேரும் தமிழில் இரண்டு பக்கம், ஆங்கிலத்தில் இரண்டு பக்கம் எழுதி, தினம் அவர் மூன்று மணிக்கு மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும்போது காட்ட வேண் டும். இன்றைக்கு நான்கு சகோதரிகளின் கையெழுத்துக்களும் முத்துக்களைப் போல இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பா தான்!
பெரிய கடல், விமானப்பயணம், விசா வாங்கும் நடை முறை, தாமதங்கள் - இவைதாம் மகள்களையும் பெற்றோர்களை யும் பிரித்து வைத்திருக்கின்றனவே ஒழிய தகவல் தொடர்பு சாதனங்கள் அல்ல. சர்வதேச தொலைப்பேச்சா? அல்லது உள்ளூர் பேச்சா?’ என்று கேட்பவர்கள் வியக்கும் வண்ணம் கொழும்பிலிருந்து நீண்டநேரம் மகள்களிடம் அம்மாவும், அப் பாவும் உரையாடும் போது நெருக்கம் அதிகரித்துவிடும்.
தன் தந்தையைப் பற்றி இவ்வாறு நினைவு கூர்வது சாரதா
வசதியான குடும்பம்; வீட்டிலே வேலைக்காரர்கள் இருந் தாலும் எங்கள் வேலைகளை நாங்களே செய்து கொள்ள வேண்டும். எங்களுடைய ஆடைகளை நாங்களே துவைத்து, நாங் களே அயன் பண்ணித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். திடீரென்று ஒருநாள் பரிசோதனை செய்வார் - ஒவ்வொரு வரும் நான்கு செட் உடைகளை அயன் பண்ணி ஒழுங்காக அடுக்கி வைத்திருக்கிறோமா?’ என்று. தரையில் ஏதேனும் துணிகளோ, பொருள்களோ சிதறியிருந்தால் அவருக்கு உடனே கோபம் வரும்!'
'அன்று அப்படிப்பட்ட தழ்நிலையில் வளர்ந்த காரணத் தால் இன்றைக்கு நாங்கள் புகுந்த வீட்டிலும், யாருடைய உதவியுமின்றி எங்கள் வேலைகளை நாங்களே செய்து கொள்ள முடிகிறது. எதற்கும், யாருடைய தயவையும் எதிர்பார்க்கும் மன நிலை எங்களுக்கு அன்றும் இல்லை; இன்றும் இல்லை.'

பாசமலர்கள் 1
இப்படித் தன் தந்தையைப் பற்றி எண்ணும் கெளரி திருச் செந்தூர் அருகில் அழகாபுரியில் தன் கணவர் டாக்டர். சண்முக சுந்தரத்துடன் தன் பிள்ளைகள் சீதாலஷ்மி, சிதம்பரநாதன், தெய்வநாயகி ஆகியோருடன் சிறந்த இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்.
‘சோம்பேறித்தனம் என்பது எங்கள் தந்தைக்குப் பிடிக்காத" ஒன்று. அவர் எப்படி எல்லாவற்றிலும் ஒழுங்காக ஒரு கட்டுப் பாடுடன் செயல்படுகிறாரோ, அதே போல் நாங்களும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார். பள்ளிக்கூடம் இயங்கும் நாளோ, விடுமுறையோ, காலையில் எல்லோருமே குறிப்பிட்ட நேரத்தில் எழுந்தாக வேண்டும். காலைக் கடனை முடித்துக் கொண்டு கண்டிப்பாகப் பூசை அறைக்குச் சென்று இறைவனை வணங்கியாக வேண்டும். வீட்டில் வேலையாட்கள் இருந்தாலும் கூட எங்கள் நான்கு பேருக்கும் வேலையைப் பங்கு போட்டுக் கொடுப்பார். நானும், கெளரியும் இரண்டு வாரம் பூசையறை யைத் தூய்மை செய்வதானால் வள்ளியும், சாரதாவும் சமைய லறையைத் துாய்மை செய்ய வேண்டும். இரண்டு வாரம் கழித்து வேலை மாறும். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தானே, ஒய் வாக இருக்கலாம்' என்றால் முடியாது. அதே நேரத்தில் இந்த வேலைகள் எங்களுக்குத் தண்டனையாக இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாகச் செய்தோம். அதனுடைய விளைவு நாங்கள் நால் வரும் இன்று வாழ்கின்ற வீடுகளில் வேலையாட்களின் தேவை யில்லாமல், நாங்களாகவே வேலை செய்கின்ற வழக்கம் இயல் பாகவே அமைந்து விட்டது. மேலும் பூசை செய்யாமல், காலை உணவு சாப்பிடுகின்ற வழக்கமும் இல்லை. சின்ன வயதில் கற்றுக் கொண்ட பாடங்கள் எங்களோடு இன்னும் தொடருகின் றன. அவை வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன’ என்று கூறும் பகவதி, தென்காசியில் உலகநாதன் அவர்களின் மனைவியாக வாழ்கின்றார். உலகநாதன் ஒரு வணிகர்.
உலகநாதன் தம்பதிகட்கு இருவர் பெண்கள். கமலாகாந்தி, சிதம்பரம். இருவர் ஆண்கள் தெய்வநாயகம், மகாராஜன்.
வள்ளி, நான்கு சகோதரிகளில் அப்போதே தந்தையிடம் சற்றுத் துணிச்சலாகப் பேசக்கூடியவர். எல்லோருக்கும் தந்தை யிடம் அதிகமான பாசமிருந்தாலும், கூடவே ஓர் அச்சம் கலந்த மரியாதை இருந்தது. எதைக் கேட்டாலும், அது கட்டாயம்

Page 65
12 இதோ ஒரு வெளிச்சம்
தேவைப்பட்டால் அதை வாங்கித்தரும் தெய்வநாயகத்திடம் ஏதாவது கேட்க வேண்டுமென்றால் அனேகமாகத் தூது போகும் சகோதரி வள்ளியாகத் தானிருக்கும்.
‘என்றைக்காவது அப்பா வெளியே கிளம்பும் போது வேட்டியில் இலேசாகக் கிழிசல் இருக்கும். அதை எடுத்துச் சொன்னால் 'இருக்கட்டும்மா!' என்பார். அதையே ஊசி நூலால் தைத்துப் போட்டுக்கொண்டு போகும்போது வள் ளிக்குக் குறையாக இருக்கும். 'அப்பா, எத்தனையோ பேர் வீடு தேடி உதவி கேட்டு வரும்போதெல்லாம், புதிய வேட்டியும், புடவையுமாக அள்ளி அள்ளிக் கொடுக்கிறீங்களே, நீங்க மட் டும் ஏன் இந்தமாதிரி வேட்டியை உடுத்துக்கிட்டு போறிங்க?" என்று வள்ளி கேட்கும்போது வரக்கூடிய பதில் இதுதான்:
'நான் வாழ்க்கையில மிகவும் சிரமப்பட்டு மேலே வந்த வனம்மா! என் முதலாளிகளுக்குத் துணி துவைச்சுப் போட்டு, பணி விடை செய்து படிப்படியா வந்தவன். அதனால இது எனக்குக் குறையாத் தெரியல! அது மட்டுமில்லை; இது ஒரு நல்ல புது வேட்டிதான், ஏதோ ஒர் ஆணிபட்டு லேசா கிழிஞ்சி ருக்கு. இத நாம சரிப்பண்ணிக்கணுமேயொழிய, ஒரு நல்ல வேட்டியைத் தூக்கி எறிஞ்சி வீணாக்கிடக்கூடாது'
'எந்தப் பொருளுக்கும் ஒரு பயனுண்டு, அதை வீணாக்கக் கூடாது' என்ற அடிப்படைப் பாடத்தைத் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தவர் தெய்வநாயகம். அதனுடைய விளைவு இன்றைக்கு அவருடைய பெண்கள் வரவுக்கு ஏற்ப செலவு செய்து வாழும் இல்லத்தரசிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
தன்னுடைய நான்கு அருமையான மாப்பிள்ளைகளிடம் தெய்வநாயகம் எதிர்பார்த்ததெல்லாம் நல்ல குணம் ஒன்று தான். 'நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; நல்ல பிள்ளைகள்' என்று தெரிந்து கொண்ட பின்னரே திருமணம் செய்து கொடுத் தார். நான்கு மருமகன்களுமே நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். "பணம் பணத்தோடு சேரும்’ என்ற கொள்கையில் என்றைக்கும் தெய்வநாயகத்துக்கு நம்பிக்கையில்லை. பணம் குணத்தோடு சேர வேண்டும்' என்பதுதான் அவருடைய வாழ்க்கைநெறி. -
திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளையும் பெண்ணும்

பாசமலர்கள் 13
இலங்கை வந்தால் மிக அன்பாகக் கவனிப்பார். அவரவர்கள் வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
'நீங்கள் என்ன சம்பாதிக்கிறீர்கள்? என்ன செலவு செய்கி றீர்கள்? உங்கள் வீட்டில் பெரியவர்களுக்கும் உங்களுக்கும் ஒத்து வருகிறதா? - இப்படியான தமது மக்களின் விவகாரங்களில் தலையிடுவதே கிடையாது. "அவரவர் குடும்ப விவகாரங்கள், அவரவர் சம்பந்தப்பட்டது. அவற்றில் நமக்கு இடமில்லை’ என்பது அவருடைய முடிவு. ஆனால் அதே நேரத்தில் தம்மை நாடிச் சம்மந்தி வீட்டினர் ஏதேனும் கருத்துக் கேட்க வந்தால் உரிய கருத்துக்களையும், உதவிகளையும் வழங்கத் தயங்கியதே யில்லை.
‘எங்கள் வீட்டில் நாங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா?"
எங்கள் அப்பாவுக்கு எத்தனை கார்கள் இருக்கின்றன தெரியுமா?"
- பெரும்பாலான இல்லங்களில் கணவன் - மனைவி தகராறுகள் தோன்றுவதற்கெனவே உருவாக்கப்பட்ட ஆரம்பக் கேள்விகள் இவை.
இதிலிருந்து தான் எல்லாம் தொடக்கம்.
ஆனால் தெய்வநாயகத்தின் பெண்களைப் பொறுத்த வரை யில் இந்த 'நான்’ என்கின்ற உணர்வுக்கே இடமில்லை.
பள்ளியில் படிக்கும்போது வீட்டிலிருந்து காரில் செல்லு வார்கள்; சில நாட்களில் ரிக்ஷாக்களில் செல்லுவார்கள். பள்ளி முடிந்து வெளியே வந்து பார்த்தால் சில நாட்களில் கார் வந் திருக்காது; மற்ற மாணவிகளோடு நடந்தே வீட்டுக்கு வந்து விடுவார்கள். எனவே கார் இருந்தால் தான் செல்லமுடியும் என்ற வாழ்க்கை நிலையை அவர்கள் அன்றைக்கு உருவாக்கிக் கொள்ளவில்லை. . . .
தென்காசி அருகில் இலஞ்சி என்ற ஊரில் ஒர் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சாரதா செல்கிறார். அந்த உறவினர் கள் ஏற்கனவே இலங்கை சென்று தெய்வநாயகம் வீட்டில் தங்கி அவருடைய விருந்தோம்பலை அனுபவித்தவர்கள். சாரதாவைப்

Page 66
14 இதோ ஒரு வெளிச்சம்
பார்த்தவுடன் அவர்களுக்கு மிக்க பெருமை. திருமணம் முடிந்த வுடன் அருகிலே உள்ள ஒரு வீட்டிற்கு சாரதா கிளம்புகிறார். அவரைக் காரில் அனுப்பவேண்டுமென்று உறவினர்கள் துடிக் கிறார்கள். அவர்களிடம் திருமணத்திற்கென ஏற்பாடு செய்த கார்கள் இரண்டுதான். அவையும் அப்போது எங்கோ போய் விட்டிருந்தன. 'பக்கத்திலிருக்கிற வீடுதானே! ஐந்து நிமிடத்தில் நடந்து போய் விடுகிறேனே!"
கொஞ்ச நாளுக்கு முன்னால்தானே உங்க காலில் ஆபரே ஷன் நடந்தது. நடக்கமுடியுமா?"
பரவாயில்லைங்க! நான் நடந்தே போய் விடுகிறேன்!"
'யாரோ ஒரு மூன்றாவது ஆள் உங்க வீட்டுக்கு வந்தாக் கூட உங்க அப்பா கார் கொடுத்து அனுப்புவாரு உங்களுக்கு நான் உதவ முடியலையே!'
உறவினர்கள் வருத்தத்துடன் நிற்க, சிரித்த முகத்துடன் சாரதா இறங்கி, நடந்து செல்கின்றார். இது தந்தை அவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுத்த பாடம்.
'எல்லாம் இருந்தும் எங்க அப்பாவே, எளிமையாக இருக்கும் போது, எங்களுக்கு எதற்கு ஆடம்பரம்?’
சாரதாவின் கணவர் அருணாசலம் மக்கள் சொக்கலிங்கம், அன்னலஷ்மி, என இருவர். அருணாசலம் குடும்பம் சென்னை யில் உள்ளது.
சாரதாவிற்கு எப்போது நினைத்தாலும் ஒரு விஷயம் அதிசயமாகவே இருக்கும். -
ஏதாவது ஒரு வருத்தம்; வேதன்ை - இப்படிப்பட்ட தழ் நிலையில் ஆழ்ந்துகிடக்கும் நேரத்தில் தாயிடமிருந்தோ, தந்தை யிடமிருந்தோ தொலைபேசி அழைப்புவரும். நாம் துன்பப் படுவது இவர்களுக்கு எப்படி தெரியும்? சொல்லி வைத்தாற் போல் வரும் அந்த அழைப்பு அவருக்கு ஒரு பெரிய வியப்பு.
பெரிய கடல், விமானப்பயணம், விசா வாங்கும் நடை முறை, தாமதங்கள் - இவைதாம் மகள்களையும் பெற்றோர்களையும் பிரித்து வைத்திருக்கின்றனவே ஒழிய தகவல் தொடர்பு சாதனங்கள் அல்ல. ‘சர்வதேச தொலைப்

Lingud6lff S567 1 ፲ 5
பேச்சா? அல்லது உள்ளூர் பேச்சா?’ என்று கேட்பவர்கள் வியக்கும் வண்ணம் கொழும்பிலிருந்து நீண்டநேரம் மகள் களிடம் அம்மாவும், அப்பாவும் உரையாடும் போது நெருக்கம் அதிகரித்துவிடும்.
ஒருமுறை சாரதாவிற்கு ஏற்பட்ட பெரியதோர் விபத்தில் இரண்டு கால்களும் முறிந்துபோய்விட்டன. உயிர் பிழைத்ததே விந்தை என்ற நிலை. சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
செய்தி அறிந்ததும் அடுத்த விமானத்தில் சிதம்பரத்தம் மாள் சென்னை வந்து சேர்ந்தார்.
இரண்டு மாதங்கள் ஒடின மகளுடனே அவர் இருந்தார்.
சாரதாவிற்கு மிகவும் வருத்தம். 'தந்தை அங்கே தனியாக என்ன செய்வார்?"
இரண்டு மாதங்களுக்குப் பிறகு 'ஊன்றுகோல்கள் உதவி யால் நீங்கள் நடக்கலாம்' என்று டாக்டர்கள் சாரதாவிடம் சொல்ல, 'அம்மா இதற்குமேல் நான் ஊன்றுகோல்கள் மூலம் சமாளித்துக் கொள்வேன். அப்பாவை நீங்கள் விட்டு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன! நீங்கள் கொழும்பு செல்லுங் கள்!'
'கண்ணே! உன்னுடைய இரண்டு கால்களாலும் நீயர்கவே நடப்பதைப் பார்க்காமல் நான் கொழும்பு செல்ல மாட்டேன்! உன் அப்பாவுக்கும் நான் அப்படி விட்டு வருவது பிடிக்காது'

Page 67
6 இதோ ஒரு வெளிச்சம்
மேலும் ஒரு மாதம் தங்கி மகள் முழுவதுமாக குணம் அடைந்த பின்னரே சிதம்பரத்தம்மாள் கொழும்பு திரும்பிச் சென்றார்.
நாட்கள் ஒடுகின்றன! பெருமை நிறைந்த பெரிய வீட்டில் பிறந்த அந்தப் பாசமலர்கள் தாயையும், தாய் நாட்டையும் விட்டு விட்டு, புகுந்த வீட்டிற்குப் பெருமை சேர்த்தபடி வாழ்கின்றார் கள். அவர்களுடைய வாழ்க்கையில் எளிமை உண்டு; சிக்கனம் உண்டு; போதும் என்ற மனநிலை உண்டு; குடும்பத்தை முன் னேற்ற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் உண்டு; பக்தி உண்டு; பாசம் உண்டு; யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும், மரியாதையாகப் பழக வேண்டும் என்கிற வாழ்வியல் நெறி முறை உண்டு.
ஆகவே அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், உறவினர்கள், மாமனார்-மாமியார் அத்தனை பேரின் பாராட்டுக்கள் அவர் களுக்கு உண்டு.
அருகிலே குடியிருக்கின்ற பல பேருக்கு, அவர்களோடு பழகுகின்ற பலருக்கும்கூட கொழும்பில் எப்படிப்பட்ட குடும் பத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள் என்று தெரியாது!
இருந்தாலும் ஒரு சில ஆதங்கங்கள் உண்டு. ‘நினைத்த போது அப்பா, அம்மாவைக் காணமுடியவில்லையே? அதை விடப் பெரிய ஆதங்கம், 'நம்மை இவ்வளவு சிறப்பாக வளர்த் தார்களே, நம்மால் அந்த அளவுக்கு சிறப்பாக நம் பிள்ளைகளை வளர்க்க முடியுமா?’
சிதம்பரத்தம்மாளுக்கு மனதில் ஒரு பெரிய குறை. தன் மகள்கள்நான்கு பேரையுமே, இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை களாகப் பார்த்து அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்து விட் டார்களே! பக்கத்தில் ஒரு மகள்கூட இல்லையே!
புதுவருடம் பிறக்கும்போது ஒவ்வொரு மகள் வீட்டிற்கும் வருவது போல பகவதியின் வீட்டிற்கும் ஒரு கட்டு வரும். அதைப் பிரித்தால் மிகப்பெரிய பத்து டைரிகள் இருக்கும். பகவதிக்கு ஒன்று, அவருடைய மாமாவிற்கு, கணவரின் அண் ணாவுக்கு, தம்பிக்கு. என்று ஒவ்வொரு நாட்குறிப்பு புத் கத்திலும் அவரவர் பெயர்களை எழுதி, கையொப்பமிட்டு தெய்வநாயகம் அனுப்பி வைத்திருப்பார்.

பாசமலர்கள் 1 7
திருமணம் செய்து, மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்த அடுத்த நாளே மறந்துவிடும் பெற்றோர்கள் ஏராளம். இந்த நிலையில் மகளுக்கு மட்டுமல்லாமல், மகளின் உற வினர்களுக்கெல்லாம் பட்டியல்போட்டு தவறாமல் அனுப்புவது அரிதன்றோ?
அதுவும் திருமணமாகி இருபது வருடங்கள் ஆகி விட்ட பின்னரும்கூட!

Page 68
17. இதுகூடவா எனக்குத்
தெரியவில்லை
\४ வருபவர்களெல்லாம் அவரை வணங்கி, நெஞ்சார வாழ்த்தி, முகமலர்ச்சியுடன் திரும்பிச் செல்லும்போது அந்தச் சிறுவனுக்கு ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் குழப்பமாக இருந்தது!
'மற்றவர்கள் இப்படிப் புகழும் அளவுக்கு இவரிடம் என்ன இருக்கிறது?’
ஏனோ தெரியவில்லை, பல பேரைக் காந்தமாக இழுத்த தந்தை தெய்வநாயகத்தால் அவருடைய முதல் மகன் ஈஸ்வரனை இளம் வயதில் அவ்வளவாக ஈர்க்க முடியவில்லை.
ஐந்து மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டால் அடுத்த சில நிமிடங்களில் வீட்டில் இருந்தாக வேண்டும். தெருவிலே விளையாட முடியாது; ஊர் சுற்ற முடியாது. பள்ளிக் கூடத்தில் தான் படிப்பு என்றால் வீட்டுக்கு வந்தால் வீடும் ஒரு பள்ளிக் கூடம் தான். ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து தனியாக ட்யூஷன் சொல்லிக் கொடுப்பார்கள். தம்பி, தங்கைகள் எல்லோருக் குமே வீட்டில் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள்.
மாதாமாதம் தேர்ச்சிக் குறிப்புக்களைத் தவறாமல் தந்தை யிடம் காட்டிக் கையெழுத்து வாங்க வேண்டும். வகுப்பின் தகுதியில் தாழ்ந்தாலோ, மதிப்பெண்கள் குறைந்தாலோ நிறைய ஏச்சுக்கள்! ஈஸ்வரனுக்கு வீடே ஒரு சிறையாக அந்தச் சின்ன வயதில் தெரிந்தது.
விடுமுறை நாட்கள் வரும் மற்றப்பிள்ளைகள் உறவினர் வீடுகளுக்கு செல்வார்கள். சுற்றுலா மையங்களுக்குப் பயணம் போவார்கள். ஆனால் ஈஸ்வரனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி, கடைக்குச் சென்றாக வேண்டும்! கடையில் வேலை செய் வோரைக் கண்காணிக்க வேண்டும். ஒரு முதலாளியின் மகன் என்கின்ற தோரணையில் அதிகாரம் செய்யவும் முடியாது, காரணம், அப்பாவே யாரையும் விரட்டுவதில்லை.
 

இதுகூடவா எனக்குத் தெரியவில்லை 19
கணக்குப் பார்க்கும் போது, கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுக்களை எண்ணவேண்டும்.
பணவதுலுக்காக அப்பா காரில் கிளம்பும் போது ஈஸ்வர னும் கூடவே செல்ல வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒய்வு ஒழிச்சல் இல் லாத, கேளிக்கைகள் இல்லாத வாழ்க்கையாக ஈஸ்வரனின் பள்ளிப் பருவ வாழ்க்கை அமைந்து விட்டது.
ஈஸ்வரனுக்கு இன்னுமொரு குறை! எல்லாக் கட்டுப்பாடு களும், 'கெடுபிடிகளும் தன்னிடம் மட்டும்தான். தன்னுடைய தம்பி, தங்கைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். தெய்வ நாயகம் இவ்வளவு கண்டிப்புடன் அவர்களை வளர்க்கவே யில்லை. அப்படியானால்,
'அப்பாவுக்கு என்னைப் பிடிக்கவில்லையா? என்னிடம் மட்டும் ஏன் இந்த வேறுபாடு?’
இலங்கையில் பள்ளிப்படிப்பு முடிந்துவிட்டது. ஈஸ் வரனுக்கோ மேற்கொண்டு படிக்க ஆசை. அதுவும் இந்தியா வில் படிக்க வேண்டும் என்ற ஆசை! ஆனால் கொழும்பைத் தாண்டி எங்கும் செல்லக் கூடாது என்பது தெய்வநாயகத்தின் தீர்க்கமான முடிவு.
தாயார் சிதம்பரத்தம்மாள்தான் மகனுக்காக வாதாடினார் கள். "பையன் நம் கண்காணிப்பில் இல்லாமல் வெளிநாட்டில் இருந்தால் கெட்டுப்போய் விடுவான் என்று தானே பயப்படு கிறீர்கள்? என் மகனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். தைரியமாக அனுப்புங்க. நம்ம பிள்ளை படிக்கட்டுங்க”
இவ்வளவு சொன்ன பிறகுதான் பிள்ளையைச் சென்னை அனுப்பி, பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். பட்டப்படிப்பில் சேர்த்தார். அப்போதும் ஈஸ்வரனின் மனதில் அதே கேள்வி தான். எல்லோரிடமும் அப்பா, அன்பாக, “ பாசமாகக், கனி வாகப் பழகுகின்றார். ஆனால் என்னிடம் மட்டும் ஏன் இவ் வளவு கடுமையாக நடந்து கொள்கிறார்? ஆண்டுகள் ஒடின!
ஈஸ்வரனுக்குத் திருமணம் முடிந்தது. திலகவதியைக் கைப் பிடித்தார். மகன் பிறந்தான். கணேஷ் என்கிற தெய்வநாயகம் அவருடைய முதல் மகன். கணேஷ் சிறுபிள்ளையாக இருக்கும்

Page 69
20 இதோ ஒ ந வெளிச்சம்
போது ஒருநாள் கடுமையான காய்ச்சல் வந்தது. உடலைத் தொட்டால் நெருப்பைத் தொட்டதைப் போல் இருந்தது. காய்ச்சலில் அந்த இளம் சிறுவன் பிதற்றியபடியும், முனகிய படியும் படுத்துக் கொண்டிருந்தான்.
ஈஸ்வரனுக்கும் அவருடைய மனைவிக்கும் தூக்கம் வர வில்லை.
இரவு முழுக்க கட்டிலுக்கு அருகில் நாற்காலியில் உட் கார்ந்தபடி மகனையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு திடீரென மூளையில் ஏதோ பொறிதட்டியது போல இருந்தது.
தன்னுடைய தந்தை தன்மீது எவ்வளவு பாசமாக இருந் திருப்பார்?
எவ்வளவு பாதுகாப்பாக, பொறுப்பாக, அக்கறையாக வளர்த்திருப்பார்?
இளம் வயதிலே தம்பிள்ளை எங்கே கெட்டுப் போய் விடுவானோ’ என்ற பயத்தில் எவ்வளவு எச்சரிக்கையாகத் தன்னை ஒவ்வொரு நிமிடமும் பொறுமையாக உருவாக்கி இருக் கிறார்?’ என்ற எண்ணம் பளிச்சிட்ட போதுதான் தன் தந்தை யின் பாசம் ஈஸ்வரனுக்குத் தெரிந்தது! ,
திரு. இராஜகருணா அவர்கள், இலங்கை அரசில் அமைச் சராக இருந்தவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக திகழ் பவர். அவருடைய வியப்பெல்லாம் 'ஒரு குடும்பத்தில் தந்தை சிறந்து விளங்கலாம். ஆனால் பிள்ளைகளும் சிறந்து விளங்கு வது மிகவும் கடினம். அதிலும் ஐந்து மகன்களும் மற்றவர்கள்
 

இதுகூடவா எனக்குத் தெரியவில்லை 2.
குறை சுட்டிக் காட்டாத வண்ணம் நல்லவர்களாகவும், வல்லவர் களாகவும் இருப்பது மிக மிக அரிது. எனக்குத் தெரிந்த ரகசியம் ஈஸ்வரனுடைய வளர்ப்பு முறைதான் இதற்குக் காரணம். எப் போதும் முதல் ஆடு நல்ல பாதையில் ஒழுங்காகப் போனால் பின்னால் வருகின்ற ஆடுகளும் அதே வழியில் தான் போவார் கள்!'
அன்று ‘எங்கும் சுற்றக் கூடாது!’ என்று கட்டுதிட்டத்தில் வளர்ந்த ஈஸ்வரன் தான் இன்று உலகெங்கும் சுற்றிக் கொண்டு வருகிறார்.
சின்ன வயதிலேயே வியாபாரப் பார்வையை வளர்த்துக் கொண்டது இன்று பலகோடி ரூபாய் பெறுமான வணிகத்தை மேற்பார்வை செய்யக் கூடிய ஆற்றலுக்கு வழிவகுத்து விட்டது.
அது மட்டுமல்ல, அப்பாவுக்கு அடுத்து அண்ணா என்ன சொன்னாலும் மறுபேச்சின்றி தம்பியர் நால்வரும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் மாறிவிட்
LITT T.
பி.காம். பட்டம் பெற்றவுடன் இலண்ட்ன் மாநகர் சென்று அங்கே காஸ்ட் அக்கவுன்ட்டிங் படிக்க வேண்டும் என்பது ஈஸ்வரனுடைய அவா.
‘என்ன படித்தாலும் யாரிடமும் கைகட்டிச் சம்பளம் வாங் கக் கூடாது. சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும்’ என் பது தெய்வநாயகத்தின் எண்ணம்.
ஆகவே, படிப்பதற்காகச் சென்று அங்கே நாட்களை செலவு செய்வதற்குப் பதிலாக ஏன் உடனே ஒரு துறையில் இறங்கக்கூடாது? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் தெய்வநாயகத்தின் நண்பரும் உறவினருமாகிய கே.வி. கண பதியா பிள்ளை என்பவர் "ஈஸ்வரனை ஏன் தேயிலை ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது' என்று கேட்டார்.
ஆனால் தெய்வநாயகத்திற்கு ஏற்றுமதியைப் பற்றி ஒன் றும் தெரியாது.
ஈஸ்வரனுக்காக ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை உருவாக்கும் பொறுப்பு விநாயகசுந்தரம்பிள்ளையிடம் ஒப்படைக்கப் பெற் றது. அவர் தேயிலைஏற்றுமதியில் பரிச்சயப்பட்டவர். அவருக்கு

Page 70
22 இதோ ஒரு வெளிச்சம்
மாதம் நானூறு ரூபாய் சம்பளம், மொத்த இலாபத்தில் 20% பங்கு. விநாயகசுந்தரம்பிள்ளை - ஈஸ்வரன் மற்றும் ஒரு டைப் பிஸ்ட் ஆக மூன்று பேரை வைத்துக் கொண்டு ஈஸ்வரன் பிர தர்ஸ் நிறுவனம் 1964ல் தொடங்கப் பட்டது.
தெய்வநாயகம் மகனை அழைத்துக் கூறினார். நீ முதலாளி யின் மகனாக இருக்கலாம்; ஆனால் இந்தத் தொழிலைப் பொறுத்தவரையில் உன் முதலாளி விநாயக சுந்தரம் பிள்ளை தான். தெய்வங்களில் விநாயகர் எப்படி குருவாகவும், வழி காட்டியாகவும், முழுமுதற் கடவுளாகவும் இருக்கிறாரோ, அப்படி அவரை ஏற்றுக் கொண்டு அவரிடம் வேலை செய்து, வேலைகற்றுக் கொள்ள வேண்டும்.
செட்டித் தெருவில் அவர்களுடைய நிறுவனம் செயல்படத் தொடங்கியது, இரண்டாண்டுகள் ஓடின.
அவ்வப்போது நிறுவனத்திற்கு வந்து கணக்கு வழக்கு களைச் சரிபார்க்கும் தெய்வநாயகம் அன்று கணக்குப் பார்க் கும் போது வியாபாரம் சிறிது நட்டத்திலிருப்பதைக் கண்டார்.
எழுந்து போய் சேமிப்புக் கிடங்கில் பார்த்தபோது தேயி லைத் தூள் பெட்டிகள் பல இருந்ததைக் கண்டார். அவை ஏழு மாதமாக அங்கேயே இருப்பாக இருந்தது தெரிந்தது.
வணிகத்தில் நட்டம் ஏற்பட்டதற்கு அது ஒரு காரணம். இது தொடர்பாக நடந்த பேச்சுக்களின் விளைவாக விநாயக சுந் தரம் பிள்ளை ஏற்றுமதி நிறுவனத்தினை விட்டு விலக வேண்டிய தாயிற்று.
மேலும் தந்தை தன்னை அணுகி, ‘நிர்வாகத்தை உன்னால் மேற்கொண்டு நடத்த இயலுமா?’ என்று கேட்டவுடன் ஈஸ் வரன் 'செய்ய இயலும்ப்பா!' என்று பதிலளித்தார்.
இரண்டு மாதங்கள் கழித்து விநாயகசுந்தரம்பிள்ளை வேலையை விட்டு விலகும் போது, அவருடைய மகள் திருமணத் திற்கு வேண்டிய பொருளுதவியைக் கொடுத்து அனுப்பி வைத் தார் தெய்வநாயகம். \
அதன் பின்னர் ஈஸ்வரனுடைய முழுப்பொறுப்பில் அந்த நிறுவனம் வெற்றி நடைபோடத் தொடங்கியது. ஒர் உலகப் பயணத்தை ஈஸ்வரன் மேற்கொண்டு பல ஆர்டர்களோடு

இதுகூடவா எனக்குத் தெரியவில்லை 23
கொழும்பு திரும்பினார். ஏற்றுமதி வியாபாரம் துளிர்விடத் தொடங்கி விட்டது.
ஈஸ்வரனுக்கு முதன்முதலில் கிடைத்த ஏற்றுமதி ஆர்டர் லண்டனில் இருந்து கிடைத்தது. 5 டன் ஜாதிக்காய்! அவருக்கு மிகுந்த பரபரப்பு. அங்கிருந்து கொழும்புக்கு மகிழ்ச்சியாய் ஒரு தந்தி கொடுத்தார். ஒரே ஆனந்தம். தந்தையை நேரில் பார்த்தபோது 'அவர் மிகவும் பரவசப்படுவார்; தட்டிக் கொடுப் பார்; தான் பெற்று வந்த முதல் ஆர்டருக்காகப் பாராட்டுவார்’ என்று எதிர்பார்த்த ஈஸ்வரனுக்கு மிகுந்த ஏமாற்றம்.
'பி.காம். படித்திருக்கிறோம்! லண்டனில் இருந்து ஏற்று மதி ஆர்டர் வாங்கி வந்திருக்கிறோம். அதுவும் 5 டன் ஜாதிக்காய்! ஒரு பாராட்டும் இல்லையே!”
அதற்கு மேல் அப்பா கேட்ட ஒவ்வொரு கேள்வியையும் இன்றளவும் ஈஸ்வரனால் மறக்க முடியவில்லை.
'இப்ப ஜாதிக்காய் காலமா?" ‘தெரியாதுப்பா, அனேகமாக இருக்கலாம்!" 'உனக்குத் தேவையான அளவு ஜாதிக்காய் கடைத்தெரு விலே இருக்கா?
'அனேகமாக இருக்கும்; தரகர் சொல்லியிருக்காருப்பா' 'இருப்பு ஏதாவது இருக்கா? ‘தெரியலப்பா, தரகரைக் கேட்கணும்!" 'காய்வு இருக்குமே!’
அப்படியேதானே வாங்கிச் சாக்கிலே போட்டு கட்டப் போறோம்"
‘யார் உன்னுடைய தரகர்?
ஒரு கேள்விக்கும் ஈஸ்வரனால் பதில் சொல்லமுடிய வில்லை. ஆனால் ஒரு வருத்தம். ஏன் அப்பா பாராட்டுவதை விட்டு விட்டு இப்படி கேள்வியாகக் கேட்டுக் குடைகிறார்?
ஈஸ்வரன் விற்பதாக ஒப்புக் கொண்டிருந்த விலை ஒரு ராத்தல் ஒரு ரூபாய் இருபத்தைந்து சதம். அவர் வாங்க ஆரம்

Page 71
124 இதோ ஒரு வெளிச்சம்
பித்தது ஒரு ராத்தல் எழுபது சதம் உள்ளுர நிறைய மகிழ்ச்சி. ஒரு ராத்தலுக்கு மேல் ஐம்பத்தைந்து சதம் விலை கூட இருந் தது.
1% டன் வாங்குவதற்குள் விலை 80 சதமாக உயர்ந்தது. அத்துடன் ஜாதிக்காய் சீசனும் முடிந்து போய் விட்டது. மீதி 3% டன் வாங்குவதற்குள் படாதபாடு படவேண்டியதாயிற்று. விலை 1.00, 1. 10, 1.20, 1.30 என்று மாறிக் கொண்டே வந்தது. a
5 டன் வாங்கி முடித்த பின் கடைசியாக எடைபோட்டால் பகீரென்றது.
3% டன் தான் இருந்தது. ஈரம் சொட்ட, சொட்ட வாங்கிய காய்கள் எல்லாம் காய்ந்து முடிந்த பின் 3% டன்னுக்கு வந்து விட்டது.
எல்லாம் சரிப்படுத்தி அனுப்பிய பிறகு அந்த வியாபாரத் தில் ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட அடி பெரிய அடி. ரூ. 5000/- இழப்பு!
1963ல் நிச்சயமாக அது ஒரு பெரிய நட்டம்தான். ‘நான் ஒரு பி.காம்.'
என்று தன்னைப் பற்றி பெருமிதமாக எண்ணிக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. பி.காமில் ஜாதிக் காயைப் பற்றிச் சொல்லித் தருவதில்லை. அது காய்ந்து போனால் எத்தனை சதவீதம் எடைகுறையும்' என்று பாடத் தில் வருவதில்லை.
கல்லூரியில் படித்து விட்டதாலே தனக்கு எல்லாம் தெரி
யும்' என்று எண்ணுவது எவ்வளவு தவறு! 'படிப்பு என்பது வேறு; நிஜ வாழ்க்கை என்பது வேறு தந்தையிடம் கற்ற கல் வியை எந்தக் கல்லூரியும் தர முடியாது. இதற்கு மேல் எதையும் எண்ணி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.
'எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு என்ற திருக்குறளைப் படித்த போது புரியாத பொருள் தந்தை யோடு ஏற்பட்ட அனுபவத்தில் புரிந்து போயிற்று!

இதுகூடவா எனக்குத் தெரியவில்லை I 25
இன்றைக்கு 'இலங்கையின் தலைசிறந்த ஏற்றுமதி நிறுவன மாக' பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்று ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனம் திகழ்கிறது. ஆனால் அதற்கு ஒரு மோதிரக் குட்டு விழுந்தது தெய்வநாயகத்தின் திருக்கரத்தால்தான்.
'எதைச் செய்தாலும் கேட்டுச் செய்!” இது தெய்வநாயகம் அடிக்கடி சொல்லும் ஓர் அறிவுரை. ஆரம்பத்தில் இந்த அறி வுரை கூட ஈஸ்வரனுக்கு கொஞ்சம் கசப்பாக இருந்தது.
‘எல்லாமே கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? இந்தக் கேள்வி அவர் மனத்தில் எழாமல் இல்லை.
கிடங்கில் தேயிலைத் தூள் பொட்டலங்கள் அடங்கிய பெரிய பெட்டிகளைத் தரையில் அப்படியே வைக்காமல் கீழே மர, ரீப்பர் சட்டங்களை வைத்து அதன் மேல் வைத்து அடுக்கு வார்கள்.
ஒரு முறை ரீப்பர் கட்டைகளை ஒரு பணியாளர் மூலம் வாங்கினார் ஈஸ்வரன்.
அன்றுமாலை நிறுவனத்துக்கு வந்த தெய்வநாயகம் கேட் டார், 'யார் மூலம் இந்தக் கட்டைகளை வாங்கினாய்?"
தான் அனுப்பிய சிப்பந்தியைப் பற்றி ஈஸ்வரன் கூறினார். 'ஏன் இதை என்னிடம் கேட்டுச் செய்யவில்லை?”
ஈஸ்வரன் ஒருபதிலும் சொல்லவில்லை. ஆனால் மனம் உள்ளூர குமுறிக் கொண்டிருந்தது.
'சாதாரண மரக்கட்டை இதை வாங்குவதற்குக் கூடவா கேட்டுச் செய்யவேண்டும்? நான் பி.காம். படித்திருக்கிறேன். மரக்கட்டை வாங்கக் கூடவா, எனக்குத் திறமையில்லை! இது கூடவா எனக்குத் தெரியவில்லை!
தெய்வநாயகத்திற்கு ஒரு நெருங்கிய நண்பர் இருந்தார். ராஜபக்ச என்ற அவர் நன்கு படித்தவர். நல்ல அறிவாளி. ஏற்றுமதி - இறக்குமதித் துறையில் எந்த ஐயம் இருந்தாலும் ஈஸ்வரன் அவரை அணுகுவது வழக்கம். அவரிடம் ஒரு நாள் ஈஸ்வரன் கிட்டத்தட்ட அழுதே விட்டார்.
'அப்பா எனக்கு எந்த உரிமையும் வழங்கவில்லை. மரக்

Page 72
126 இதோ ஒரு வெளிச்சம்
கட்டை வாங்கக்கூட நான் ஏற்றவனில்லையா? என்மீது அவ ருக்கு நம்பிக்கையில்லையா? நான் திறமையற்றவனா?”
ராஜபக்ச கூறினார். ‘முதலாவது உன் அப்பா என்னை ஏன் கேட்டுச் செய்யவில்லை என்று சொன்னவுடன், 'நான் செய்ததில் என்ன தப்பு?’ என்று நீ அப்பாவைக் கேட்டிருக்க வேண்டும். கேட்டிருந்தால் அதற்கான விளக்கத்தை நீ அறிந்து கொண்டிருப்பாய். கேட்டாயா?
'இரண்டாவது, நீயாக ஒரு வேலையை சுயமாகச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உன் தந்தைக்கு வரும்வரை நீ அவரைக் கேட்டுச் செய்வதுதான் நல்லது.”
இன்றைய தலைமுறையைப் போல அன்றைய தலைமுறை இல்லையே! இன்று உங்கள் பிள்ளையிடம் நீங்கள் ஒரு வேலை யைச் சொன்னால் அதை 'ஏன் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கி ஒத்துக் கொள்ள வைத்த பிறகு தான் அந்த வேலையைச் செய்ய வைக்க முடியும். ஆனால் தெய்வநாயகம் அவருடைய பிள்ளைகள் உறவுமுறை அப்படி யில்லையே! ஆகவே ராஜபக்ச சொல்லியது போல உடனே போய் கேட்க ஈஸ்வரனால் முடியவில்லை.
இருந்தாலும் ஒரு நாள், தெய்வநாயகம் சற்று எளிதில், அணுகக் கூடிய மன நிலையில் இருந்தபோது துணிச்சலை வர வழைத்துக் கொண்டு ஈஸ்வரன் மெல்லிய குரலில் கேட்டார். 'அப்பா, அந்த சிப்பந்தியைக் கட்டை வாங்கி வரச் சொல்லி நான் அனுப்பியதில் என்ன தப்பு?’
அந்த ஆளுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும் கொஞ சம் விலையைக் கூட்டி, அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. ஆகவே கட்டை வாங்கியதில் நிச்சயமாகக் கொஞ்சம் பணம் எடுத்திருப்பான். என்னிடம் கேட்டுச் செய் திருந்தால் பொருட்களை வாங்குவதற்கென்றே சில ஆட்களை வைத்திருக்கிறேன். அவர்களில் யாரையாவது அனுப்பியிருப் பேன். அவர்கள் நியாயமாக நடந்திருப்பார்கள். அதற்காகத் தான் கேட்டுச் செய்ய வேண்டுமென்று சொன்னேன்'
ஈஸ்வரனின் மனம் கொஞ்சம் சமாதானமடைந்தாலும்,
திடீரென ஒருகேள்வி அந்த மனதில் உதித்தது. ‘நம்மிடம் வேலை செய்து கொண்டு, நமக்காக வாங்கும் பொருள்களில்

இதுகூடவா எனக்குத் தெரியவில்லை 27
கமிஷன் எடுக்கும் அந்த ஆளை ஏன் வேலையை விட்டு நீக்க வில்லை? இப்படிப்பட்ட நேர்மையில்லாத மனிதனுக்கு இங்கு எதற்கு வேலை?"
இந்தக் கேள்வியை ஈஸ்வரனால் தன் மனதிற்குள் மட் டுமே கேட்டுக் கொள்ள முடிந்தது. உதட்டிலிருந்து ஒலிவடிவம் கொடுத்துக் கேட்கும் தைரியம் வரவில்லை. எப்படியோ ஒரு கேள்வியாவது கேட்க முடிந்ததே!
பல மாதங்கள் ஓடின!
ஒருநாள் அந்த் சிப்பந்தி வீடுதேடி வந்தான், ஏதோ குடும்பப்பிரச்சினை; அவசரமாகப் பணம் தேவை. தெய்வநாய கத்திடம் தன் நிலைமையைச் சொல்லி பணம் கேட்டான். அது வரையில் இலேசாக மறந்து போயிருந்த பழைய உணர்வுகள் தீப்பொறியுடன் புகைய ஆரம்பித்தன. “ஓர் ஏமாற்றுப் பேர் வழிக்கு உதவுவதா? நம்பிக்கையான ஊழியனுக்கு உதவலாம்; ஆனால் இவனுக்கா?" தெய்வநாயகம் வழக்கம்போல வந்த வனுக்கு 'இல்லை' என்று சொல்லாமல் அள்ளிக் கொடுத்து அனுப்பியபோது ஈஸ்வரனுக்கு கொஞ்சம் கோபமாக இருந்தது.
துணிந்து அப்பாவிட்ம் கேட்டார். 'அப்பா, இந்த ஆளுக்கு வேலை கொடுத்திருப்பதே தப்பு. வாங்கும் பொருட்களில் கமி ஷன் வைப்பவனுக்கு இவ்வளவு பண உதவி செய்ய் வேண் டுமா?’ தெய்வநாயகம் ஏதோ ஒரு மழுப்பலான பதிலைக் கூறினார். ஈஸ்வரனால் மறுப்பு சொல்ல இயலவில்லை.

Page 73
28 இதோ ஒரு வெளிச்சம்
ஓராண்டு ஓடியது!
நிறுவனத்தில் புதிய மனேஜர் ஒருவரை வேலைக்கு அமர்த் தும் போது தெய்வநாயகம், அவருக்கு, அவருடைய பணிகளைப் பற்றிப் பேசினார்.
'ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துறையில் சிறப்பான திறமை இருக்கும். திறமை இல்லாத மனிதன் என்று யாருமே கிடையாது. ஒரு நிர்வாகியின் கடமை, தன்னிடம் வேலை செய் பவர்கள் எதில் கெட்டிக்காரர்கள் என்று பார்த்து, அந்தத் துறையில் அது தொடர்பான வேலையை வாங்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, அந்த சிப்பந்தியை பாருங்கள்! கடன் வதல் செய்வதில் அவனை விடத்திறமைசாலி நம் நிறு வனத்தில் கிடையாது. பணம் வதுவிக்கக் கிளம்பி விட்டால், வதுலக்காமல் வரவேமாட்டான். கடன்காரன் எங்கே ஒளிந் திருந்தாலும் தேடிப்பிடித்து விடுவான். மூன்று நாள் தங் கினால் தான் வதுலாகும் என்றால் மூன்று நாள் அங்கேயே, தங்கி, உண்டு, உறங்கி கடைசியில் பணத்தோடு வந்துவிடு வான். அதுதான் அவனுடைய தனித்திறமை. ஆகவே தான் ரீப்பர் கட்டைகளை வாங்க அனுப்பிய சிப்பந்தியைப் பற்றி அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு மீண்டும் திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்
றாய்ந்து அதனை அவன்கண் விடல்' தன் தந்தையின் வெற்றிக்கான காரணமும் பளிச்செனப் புலப்பட்டது.
அந்த சிப்பந்தியின் திறமையை உணர்ந்து பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், அவனுக்குச் சிக்கல் வரும்போது ஒரு தலைவனின் கடமையுணர்வோடும், தந்தையின் பாசத்' தோடும் அந்த சிக்கலையும் தீர்க்கிறார். நாம் பலவீனத்தை மட்டும் பார்க்கிறோம்; ஆனால் அவர் பலத்தைப் பார்க்கிறார். அந்த பலவீனத்துக்காக அவனைப் பந்த்ாடியிருந்தால் அவனு டைய பலத்தைக் கொண்ட வேறு ஆளை எங்கிருந்து கொண்டு வருவது? அப்படியே வரும் புதிய ஆளுக்கு வேறு ஒரு பலவீனம் இருக்காது’ என்பது என்ன நிச்சயம்? அந்தப் பலவீனத்துக்காக

இதுகூடவா எனக்குத் தெரியவில்லை 129
அந்த மனிதனையும் தூக்கி எறிந்து விட்டால் யாரை வைத்துக் கொண்டுதான் என்ன செய்வது?

Page 74
18. மாற்றத்திற்கு ஏமாற்றம்
'உங்கள் கையில் எலுமிச்சம்பழம் இருந்தால் அதை வைத்துக் கொண்டு எலுமிச்சைச் சாறு செய்யுங்கள்' இது டேல் கார்னிகி என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரின் கூற்று.
தன் தந்தை தெய்வநாயகத்தின் வெற்றிக்கு இந்தக் கொள் கையை அவர் கடைப்பிடித்தது ஒரு முக்கிய காரணம் என் கிறார் வீரவாகு. மேலோட்டமாக பார்ப்பதற்கு இந்தக் கோட் பாடு வேடிக்கையாகத் தெரிந்தாலும் அதிலே அடங்கியிருக்கிற செய்தி நுணுக்கமானது.
எலுமிச்சையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பவர் சிலர், எலுமிச்சையை வைத்துக் கொண்டு ஆப்பிள் சாறு செய்யமுடியுமா என்று ஏங்குபவர் θουίτ.
உங்கள் கையில் இருப்பதை ஒழுங்காகப் பயன்படுத்துங் கள். உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள்’ என்பதுதான் டேல் கார்னிகியின் அறிவுரை.
‘கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?’ என்றும்
"இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்காதே' என்றும் நம் நாட்டுப்புறங்களில் இதே கருத்தைப் பழ மொழியாக நம் மக்கள் கூறுவதை இன்றும் கேட்கலாம்
வீரவாகு தெய்வநாயகத்தின் இரண்டாவது மகன். தெய்வ நாயகத்தின் வீட்டை ஒட்டித் தன் வீட்டில் வசிக்கும் இவருடைய மனைவி சிவகாமி மக்கள், குமார், ராஜா, முரளி, முருகன். இன்றைக்கும் அப்பாவோடு ஒரு நாளைக்கும் மூன்று முறையாவது பேசிக் கொள்ளும் பிள்ளை வீரவாகுதான்.
 

மாற்றத்திற்கு ஏமாற்றம் 131
ஏதாவது முக்கிய தகவல்கள் இருந்தால் அதை முதலில் தெரிந்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது வீரவாகுதான்.
1963ல் ஈஸ்வரன் தேயிலை வணிகத்திற்கு வந்தார். 1968ல் அவரைத் தொடர்ந்து வீரவாகு வணிகத் துறைக்கு வந்தார்.
1964ல் 'எஸ்டேட் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை வாங்கி, தெய்வநாயகம் நடத்தி வந்தார். பேருந்துகளை வைத்துப் போக்குவரத்துச் சேவையை நடத்தும் பொறுப்பு 1968ல் வீர வாகுவின் கைக்கு வந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலைப் பகுதியில் பேருந்துகளை ஒட்டிச் சேவை செய்யும் அந்த தொழில் 1970 வரை நீடித்தது.
1970ல் இலங்கை அரசு கொண்டு வந்த சில சட்டங் களால் தோட்டப் பகுதியில் போக்குவரத்துத் தொழிலைச் சரி வரச் செய்ய முடியவில்லை. அரசு நிர்ணயம் செய்த பேருந்துக் கட்டணங்களை வைத்து ஊர்திகளை இயக்கினால் பெருத்த நட்டம் ஏற்படுவது உறுதியாகத் தெரிந்தவுடன் அந்தப் போக்கு வரத்து நிறுவனத்தை நிறுத்த வேண்டிய தழ்நிலை ஏற்பட்டது.
அதே நேரத்தில் தெய்வநாயகத்தின் குடும்பத்தினர் தங் களுக்காக ஆங்காங்கே வீடுகள், கடைகள், ஆகியவற்றைக் கட்ட வேண்டியிருந்தது. இப்போது சென்னை ப்ரீஸ் ஹோட் டலின் நிர்வாக இயக்குநராகவும், கொழும்பில் புகழ்பெற்ற கட்டடக் கலைஞருமான ராஜ" சிவராமன் தெய்வநாயகத்தின் கட்டடங்களுக்கு வரைபடம் தீட்டி, வடிவமைத்துக் கொடுப்பார். அந்த அழகிய திட்டங்களுக்கு ஏற்ப வீடுகளையும், பிற கட்ட டங்களையும் கட்டும் பொறுப்பை ஏற்றவர் வீரவாகு.
தங்களுக்குத் தேவையான கட்டடங்களைத் தங்கள் ஆட் களை வைத்துத் தாங்களே கட்டிக் கொள்ளும் எண்ணம் ஒர் அற்புதமான எண்ணம். அதனால் பணம் வீணாகாமல், சிக்கன மாகக் கட்ட முடிந்தது மட்டுமல்ல, தரமான, உறுதியான கட்டடங்களையும் கட்ட முடிந்தது.
அதே நேரத்தில் வி.ரி.வி. நிறுவனத்தினர் ஏலக்காய், கிராம்பு ஆகிய நறுமண கறிப் பொருட்களை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தனர்.

Page 75
132 ኳሳ இதோ ஒரு வெளிச்சம்
சர்வதேச அளவில் இந்தத் தொழிலில் போட்டி இருந்தது. இலங்கையின் விற்பனை விலையை விட மிகக் குறைந்த விலைக்கு அப்பொருள்களை விற்க வேறு நாடுகள் ஆயத்தமாக இருந்த நிலையில் வி.ரி.வி. நிறுவனத்தினர் ஏலக்காய், கிராம்பு ஏற்றுமதித் தொழிலைச் சற்று மட்டுப்படுத்தி நடத்த வேண்டிய ஆழ்நிலை உருவாகியது. ஆக, போக்குவரத்துத் தொழிலையும் நடத்த முடியவில்லை; ஏலக்காய் - கிராம்பு ஏற்றுமதியையும் பழைய வேகத்தில் தொடர முடியவில்லை. இந்த இரண்டு தொழிலையும் செய்வதற்காகப் பலபேரை வேலைக்கு வைத் திருந்தார் தெய்வநாயகம். வழக்கமாக இப்படித் தொழிலை முடித்துக் கொள்ளும் போதும் ஆட்களைக் குறைக்கும் போதும் அது வரை பணியாற்றியவர்களுக்கு வணக்கம் சொல்லி, கை குலுக்கி, முடிந்தால் ஏதாவது ஒரு தொகையைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவது பல நிறுவனங்களின் வழக்கம். ஆனால் தம்மை நாடிவந்து, தங்களுக்காக உழைத்தவர்களை நட்டாற்றில் விடும் வழக்கம் தெய்வநாயகத்தின் குடும்பத் தினருக்கு என்றும் இருந்ததில்லை.
அவர்களை வேறு எந்தத் தொழிலில் அமர்த்துவது என்று எண்ணிய போது தான் ஒரு புதிய திட்டம் உதித்தது.
ஏற்கனவே தங்களுடைய சொந்த கட்டடங்களை மிக நேர்த் தியாகவும், சிறப்பாகவும் கட்டிய அனுபவம் வீரவாகுவுக்கு இருந்தது. இவ்வளவு ஆற்றலை வைத்துக் கொண்டிருந்த அவரை ஏன் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?’
அதன் விளைவாக உருவாகிய நிறுவனம்தான் புராகி ரஸிவ் பில்டர்ஸ் லிமிடெட்.
இந்த நிறுவனத்தின் பெருமைக்குரிய வழிகாட்டி கட்டடக் கலைஞர் ராஜ" சிவராமன். அவர் வடிவமைத்துக் கொடுக்க, இன்றைக்கு இலங்கையில் ஏராளமான குடியிருப்புகள் கட்டப் பட்டு வருகின்றன. இந்த நூல் உருவாகி வரும் வேளையில் 260 மாடிக் குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாயினர், அதிக வருவாய் பெறுபவர் என மூன்று வகையினருக்கும் ஏற்ற வகையில் அடுக்கு வீடுகளைக் கட்டி விற்று வருகின்றார் வீரவாகு.
ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஆனந்தமாக வாழ வழி

மாற்றத்திற்கு ஏமாற்றம் 133
செய்து வருகின்றனர் தெய்வநாயகத்தின் குடும்பத்தினர்.
கையிலே ஒரு திறமை இருக்கும் போது அதைக் காசாக்க வேண்டுமல்லவா?
தெய்வநாயகத்தின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கியமான காரணம் 'வாய்ப்புக்கள் வரும் போது அவற்றை வேகமாகப் பற்றிக் கொள்வதுதான்' என்று கூறுகிறார் வீரவாகு
1977க்கு முந்தைய இலங்கை அரசு இறக்குமதியைப் பொறுத்தவரையில் கடுமையான கோட்பாடுகளை வைத்திருந் தது. பொதுவாகப் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யத் தடை இருந்தது. ஆனால் 1977ல் பதவி வகித்த அரசு இறக்கு மதிகளுக்கான தடைகளைத் தளர்த்தியவுடன் உடனே விழித் துக் கொண்ட நிறுவனங்களில் வி.ரி.வி. நிறுவனமும் ஒன்று.
ஏற்கனவே ஈஸ்வரன் பிரதர்ஸ் பல நாடுகளுக்குத் தேயி லையை ஏற்றுமதி செய்து கொண்டிருந்ததால் கிடைத்த அன்னிய நாட்டுத்தொடர்புகள் இப்போது அங்கேயிருந்து தேவைப்படும் பொருள்களை இறக்குமதி செய்ய உதவின.
குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல பொருள்களை இறக்குமதி செய்ய ஆரம் பித்தனர். இந்த இறக்குமதித் தொழிலும் வீரவாகுவின் பொறுப்பில் வந்தது.
முழுமையான ஒரு பொருளை இறக்குமதி செய்யும் போது அரசு விதித்த இறக்குமதி வரிகளை விட, உதிரிப் பாகங்களாக வாங்கும் பொருட்களுக்கு வரி விகிதம் மிகக் குறைவாக அமை யும் என்று இலங்கை அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த உடன் இது வரை முழுப்பொருட்களாக வாங்கிய வி.ரி.வி நிறு வனத்தினர் உதிரிப் பாகங்களை வாங்கினர். எடுத்துக்காட்டாக சுவர்க் கடிகாரங்களாக வாங்காமல் சுவர் கடிகாரங்களின் பாகங்களைத் தனித்தனியாக வாங்கினர். கொழும்பில் தனி அலுவலகம் ஒன்றில் இப்பாகங்களை வைத்து, சுவர்க்கடிகாரங் களை உற்பத்தி செய்தனர். இப்படிப் பல பொருள்கள் உற் பத்தி ஆயின. அரசின் வரிச் சலுகை கிடைத்தது மட்டுமல்ல; பல பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவும், வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளவும் முடிந்தது.

Page 76
34 இதோ ஒரு வெளிச்சம்
மாற்றங்கள் வரும் போது அதற்கேற்றாற் போல் மாறிக் கொள்பவன் அறிவாளி; மாற்றங்களை உருவாக்கிக் காட்டு பவன் தலைவன்’ என்பார்கள்.
மாற்றங்கள் வரும் போது அதற்கேற்றாற் போல மாறும் ஓர் அரிய குணமும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலும் இன் றளவும் தெய்வநாயகத்திடம் உண்டு.
1965 வரை கடையில் அவரே வியாபாரம் செய்து வரும் வரை நின்று கொண்டுதான் வியாபாரம் செய்வார். காலை 9.00 மணிக்கு கடைக்குள் புகுந்து விட்டால் இரவு 9.00 வரை வியாபாரம் நடக்கும். அதுவரை நின்றவர் நின்றவரே! தினம் கணக்குகளைச் சரிபார்ப்பது. குறிப்பாக எல்லா ரசீதுகளை யும் சரிபார்ப்பது அவருடைய வேலை. கணக்குகளை எல்லாம் தமிழ் முறைப்படி எழுதி வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு பிள்ளையாகப் படித்து விட்டுத் தொழிலுக்கு வந்தவுடன் ‘நாம் கணக்கெழுதும் முறையை மாற்ற வேண்டும்; புதிய வழிமுறைகளைப் புகுத்த வேண்டும் உள்ளகக் கணக்காளர் களை நியமித்து நம் கணக்குகளைப் பரிசோதிக்க வேண்டும்’ என்று கூற ஆரம்பித்தனர்.
எத்தனையோ ஆண்டுகளாகத் தன் பொறுப்பில் கணக்கு களை வைத்து, தானே சரிபார்த்து வியாபாரத்தை வெற்றிகர மாக நடத்திவரும் ஒருவர் பொதுவாக மாற்றத்திற்கு ஒத்துக் கொள்ளமாட்டார். ‘இது ஒழுங்காகத் தானே நடக்கிறது; இனி மேல் எதற்குப் புதிய முறை?" என்று எளிதாக ஒதுக்கி விடு
GITT
ஆனால் தெய்வநாயகம் தன் பிள்ளைகள் கூறியதில் பொருள் இருப்பதை உணர்ந்து புதிய கொள்கைக்கு இணக்கம் தெரிவித்து விட்டார்.
கடைகளில் நடக்கும் அன்றாட வரவு செலவுக் கணக்கு களைப் பேரேட்டில் எடுத்து எழுதி எல்லாவற்றையும் பதிவு செய்யும் பணியை ஒன்பது பேர் கொண்ட குழு செய்து வந்தது. இவர்கள் எப்போதும் கணக்கில் ஒராண்டு பின் தங்கியிருந்தார்
56.
உள்ளகக் கணக்காளர்களை நியமித்த உடன், அலுவலகத்

மாற்றத்திற்கு ஏமாற்றம் 135
திலிருந்த கணக்குத் தொடர்பான அத்தனை ரசீதுகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றுடன் அந்த ஒன்பது பேரும் காணாமல் போய் விட்டனர். அவர்களைத் தேடிப் பிடித்தும் தகவல்களைப் பெற முடியவில்லை. பிறகு ஒரு வழியாக எல்லாவற்றையும் சரி பார்த்த போது ஒரு பெருந்தொகை கையாளப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது.
தங்களை ஏமாற்றிச் சென்றவர்களைப்பிடித்துக் காவல் துறையில் ஒப்படைக்கலாம் என்று பிள்ளைகள் ஆவேசமாக தெய்வநாயகத்திடம் கூறினர். பண இழப்பைவிட நம்பிக்கை துரோகத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனாலும் தெய்வநாயகம் 'அவர்களை விட்டுவிடுங்கள் வேண்டாம்! அவர்கள் என்னோடு பலகாலம் நம்பிக்கையாக உழைத்தவர்கள் அவர்கள் துன்புறுத்தப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று தடைபோட்டு விட்டார்.
தவறு செய்பவர்கள், எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் ‘போனால் போகிறது' என்று மன்னித்து விடுகின்ற ஒரு குணம் தெய்வநாயகத்தின் கூடப்பிறந்த குணம். ஆகவே ஏமாற்றியவர் கள் சட்டத்தின் பிடிக்கே போகாமல் தப்பிவிட்டனர்.
பின்னால் டெலக்ஸ், கணிப்பொறிகள், ஃபேக்ஸ் என்று புதுமைகள் வந்தவுடன் அவற்றை உடனே தங்கள் அலுவலகத் தில் உடன் பயன்படுத்திய சில நிறுவனங்களில் வி.ரி.வி நிறு வனமும் ஒன்று.

Page 77
136 இதோ ஒரு வெளிச்சம்
‘மளிகைக் கடை வியாபாரம்' என்ற எளிமையான வியா பாரமாகத் தொடங்கினாலும் மேலாண்மைத் துறையின் புதிய உத்திகளைக் கையாண்டு நெறிமுறைகளைப் புகுத்தி அறிவியல் முறைப்படி வணிகம் செய்யும் நிறுவனமாக அமைந்தது வி.ரி.வி.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' - என்றெண்ணும் பிள்ளைகள் இருக்கும் போது தந்தை தம் விருப்பப்படி அவர் களை ஆட்டி வைத்திருக்கலாம். ஆனால் 'பிள்ளைகள் அறி வாளிகள்; பொறுப்பானவர்கள்' என்பதை நன்கு உணர்ந்து கொண்ட தெய்வநாயகம் 'பிள்ளைகளின் ஆர்வத்திற்கு அணை போடாத அப்பா'வாக அமைந்துவிட்டார். அவருடைய தோற் றத்தில் தான் பழமையே ஒழிய அவருடைய உள்ளம் புதுமையை நாடும் உள்ளம்; மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் உள்ளம்; அது மட்டுமல்ல மாற்றங்களை உருவாக்கிக் காட்டும் உள்ளம்.
தன் தந்தையைப் பார்த்து மிகவும் வியக்கும் குணமாக வீரவாகு எண்ணுவதெல்லாம் விழுந்த உடனே வேகமாக எழுந்து நிற்கும் குணம் தான்!
1983ம் ஆண்டு!
இலங்கையிலிருந்த யாராலும் மறக்க முடியாத ஆண்டு! அந்த ஆண்டில்தான் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் ஏற்பட்ட நட்டம் 45 மில்லியன்கள்!
ஆனால் எல்லாம் இழந்து மீண்டும் தம் தொழில்களை தெய்வநாயகம் தொடங்கியபோது, மிக நிதானமாகப் படிப்படி யாக, மெல்ல அடியெடுத்துத் தொடங்கவில்லை, கலவரத்திற்கு முன்பு எந்த நிலையில், எந்த அளவில் வணிகத்தை நடத்தி னாரோ, அதே அளவில், அதே வேகத்தில் நடத்தியதைக் கண்டு வணிக உலகமே அதிசயப்பட்டது.
நூறு மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர் கள் தொடங்கும் போது என்ன வேகத்தில் கிளம்புவார்களோ, அதே வேகத்தில்தான் முடிப்பார்கள். முதலில் கொஞ்சம் நிதான மாகத் தொடங்கிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட் டால், அவர்கள் கதி அதோகதிதான். அப்படிப்பட்ட பந்தய

மாற்றத்திற்கு ஏமாற்றம் ﷽ 1 3 7
வீரராக தெய்வநாயகம் தொழிலை மீண்டும் தொடங்கி நடத்திய வேகத்தைத்தான் எண்ணி வியக்கிறார் வீரவாகு
இரண்டு மனிதர்கள் எங்கே ஒன்று சேருகிறார்களோ அங்கே நிச்சயம் ஏதாவது ஒரு சிக்கல் உருவாகிவிடுமே; இங்கே ஐந்து சகோதரர்கள் ஒன்றாக இணைந்து தொழில் செய்கிறீர் களே, உங்களுக்குள் சிக்கல்கள் வருவதில்லையா? ஐந்துபேரும் மணமானவர்கள், மனைவி-குழந்தைகளோடு குடித்தனம் நடத்து கிறீர்கள் உங்களுக்கு நான்கு சகோதரிகள்; அவர்களுக்கும் குழந்தைகள். மொத்தத்தில் பெரிய குடும்பம்; நிறையச் சொத்து நிச்சயம் சிக்கல்கள் வந்துதானே தீரவேண்டும்!
வீரவாகு தரும் விளக்கம் இதுதான்!
ஐந்து சகோதரர்களும் ஐந்து தனித்தனி வீடுகளில் வாழ் கிறார்கள். யாருடைய வீடும் அதே தெருவிலோ அருகருகிலோ கிடையாது! திட்டமிட்டே வீடுகளைக் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தள்ளியாவது வாங்கியிருக்கிறார்கள்.
அவ்வப்போது குடும்பக் கூட்டங்கள் நடைபெறும். தெய்வ நாயகத்தின் தலைமையில் ஒரு கூட்டம்; அவரில்லாமல் சகோத ரர்கள் மட்டும் கூடும் கூட்டம். இந்தக் கூட்டங்களில் இதற்கு மேல் செய்ய வேண்டிய செயல்கள், புதிய தொழில்கள், புதிய முதலீடுகள், தீர்க்கப்படவேண்டிய சிக்கல்கள், செய்ய வேண்டிய அறப்பணிகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். எல்லா உரை யாடல்களும் ‘மேலும் எப்படி முன்னேறுவது?’ என்ற மையக் கருத்தை அடிப்படையாக வைத்து அமையுமே ஒழிய அங்கே வேறு பிரச்சினைகள் இடம்பெறுவதில்லை. --
அது மட்டுமல்ல-பேச்சு வார்த்தையில் ஈடுபடும் சகோதரர் களுக்கிடையில் 'தான்’ என்கின்ற உணர்வே இல்லாமல் 'நாம் என்ற ஒருமித்த உணர்வு மட்டுமே துலங்குகின்ற காரணத்தால் எப்போதும் சிக்கல்களில்லாத இனிய உறவு துலங்குகின்ற அழகை இந்தக் குடும்பத்தில் காணலாம்.
கையில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுதல், வாய்ப்புக்களை சிதறவிடாமல் பற்றிக் கொள்ளுதல், விழுந் தாலும் வேகமாக எழுந்து நிற்றல், அனைவருடைய கருத்து

Page 78
138 இதோ ஒரு வெளிச்சம்
களுக்கும் கொள்கைகளுக்கும் மதிப்பளித்தல்' ஆகிய உயரிய பண்புகளைத் தன் தந்தையிடம் கண்டு மகிழ்ந்து கற்று வரும் வீரவாகு இன்று இறக்குமதி/வணிகத்தை திறம்பட நிர்வகித்து வருகிறார். இவர் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி 'இன்னும் அப்பாவிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய குணங்கள் தான் எத்தனை?”
 

19. குடும்ப விளக்குகள்
திலகவதிக்குப் பதினாறு வயது நடந்து கொண்டிருந்தது! கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் குழந்தைத் தனத்திலிருந்தும் விளையாட்டுப் பருவத்தி லிருந்தும் முழுமையாக விடுபடாத நிலையில் தன் மகனுக்குப் பெண் பார்க்க கொழும்பின் புகழ்பெற்ற வர்த்தகர் வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை வந்திருக்கிறார் என்றவுடன் திலக வதிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘வாழ்க்கை என்றால் என்ன? இல்லறம் என்றால் என்ன?’ என்றெல்லாம் சரிவர விளங்காத சூழ்நிலையில் தனக்குத் திருமணமா?
'மாப்பிள்ளை யார்?'
‘எப்படி இருப்பார்?"
'அவர் குணம் எப்படிப்பட்டது!’
இதெல்லாம் அவருக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம்
ஒன்றுதான். 'இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற ஒரு பெரிய குடும்பத்தின் முதல் மருமகளாகக் காலடி எடுத்து வைக்கப் போகிறார்’ என்பது.
புகழ்பெற்ற குடும்பத்தின் ஒப்பற்ற தலைவர் தெய்வநாய கத்தின் மருமகளாக வலதுகால் எடுத்து வீட்டிற்குள் நுழைந்த திலகவதிக்கு ஈஸ்வரனைப் பற்றி அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. சொல்லப் போனால் அக்குடும்பங்களின் வழக் கப்படி இருவரும் திருமணத்தின் போதுதான் முதன்முதலாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
பெரிய் குடும்பத்தின் முதல் மருமகள்!
மிகவும் கட்டுப்பாடான குடும்பம்!
பழைமையிலும், பக்தியிலும் ஊறித்திளைக்கும் மாமனார்!

Page 79
40 - இதோ ஒரு வெளிச்சம்
முன்பின் தெரியாத உறவு முறையிலும் அறிமுகமாகாத மாமி
இந்தச் சூழ்நிலையில் திலகவதியின் நிலை என்னவாக இருக்கும்? கூச்சம் மிகுந்த, அனுபவம் குறைந்த, வெளியுலக அனுபவம் ஏதும் இல்லாத, வாழ்க்கையென்றால் என்ன என்று புரியாத பதினாறு வயதில் என்னவெல்லாம் இடர்ப்பாடுகளை அந்த இளம் பெண் அனுபவித்திருக்க வேண்டும்?
ஆனால் வழக்கமான கற்பனைகளுக்கும் அப்பால் அந்த வீட்டின் உண்மைநிலை இருந்தது.
வீட்டில் இருந்த பல பிள்ள்ைகளோடும், பெண்களோடும் அவரும் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டது தான் உண்மை.
மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் பழக ஆரம்பித்தவுடன் வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருள் துலங்க ஆரம்பித்து விட்டது.
எந்தப் பொறுப்புகளும் இல்லை; எந்த வேலையும் இல்லை. எல்லாவற்றிற்கும் வேலையாட்கள்.
'மருமகள் வந்து விட்டாள் - இதற்கு மேல் எனக்கு எந்த வேலையும் இல்லை!" என்று சிதம்பரத்தம்மாள் எதையும் திலக வதியின் மீது திணிக்கவில்லை. தனக்கு இன்னொரு மகள் வந்து விட்ட மகிழ்ச்சியில் மேலும் அன்போடு கவனிக்க ஆரம் பித்தார்.
இன்றைக்கு திருமதி. ஈஸ்வரனாகத் தன் இல்லத்தை மிக அற்புதமாக நிர்வகிக்கும் திறன் திலகவதிக்கு எப்படி வந்தது?
விளையாட்டுப் பெண்ணாக வீட்டிற்குள் வளைய வந்தவர் மூத்த மகன் கணேஷ் என்கிற தெய்வநாயகம். அமெரிக்க நாட் டில் எம்.பி.ஏ படித்து முடித்து, கணக்காளர் பட்டம் பெறவும் முதல் மகள் லல்லி கணவர் சுதாஹரனோடும் குழந்தைகளோ டும் லண்டனில் இனிமையாக இல்லறம் நடத்தவும் இரண்டாக் மகன் சுப்பிரமணியம் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் சட்டக் கல்வி பயின்று வரவும், கடைசிச் செல்லப் பெண் சண்முகப் பிரியா, கொழும்பில் அனைத்துலகப் பள்ளி யில் தன் வகுப்பில் தொடர்ந்து முதல் நிலையைப் பெற்றுத் திறமைசாலிப் பெண்ணாக விளங்கவும் முழுமுதற் காரண

குடும்ப விளக்குகள்! · • , 4 , , , ... ... ۔.
மாகத் திகழ்கின்றார் என்றால் அந்த திறமையைத் திலகவதி எப்படி வளர்த்துக் கொண்டார்?
பாசமும், பரிவும், பண்பும், கட்டுப்பாடும் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு நல்ல மருமகள் உருவாக முடியும் என்பதற்குத் திலகவதி ஒர் எடுத்துக் காட்டு!
தெய்வநாயகம் மிகவும் பெருமையோடு என்றைக்கும் சொல்லுவார். ‘என்னுடைய முதல் மருமகள், மிக நல்ல மரு மகள்; அப்படி நல்ல மருமகளாக அமைந்ததால் தான் வரிசை யாக எல்லோருமே நல்ல மருமகள்களாக அமைந்தார்கள்.'
எல்லோரும் தெய்வநாயகத்தை மிகவும் மதித்துப் பாராட்டி னாலும் திலகவதி அவருக்கும் சற்றும் மேலே அதிக மதிப்புக் கொடுப்பது தன்னுடைய மாமியார் சிதம்பரத்தம்மாளை!
'அத்தை என்று அவர்களை அழைத்தாலும் அவர்கள் உண்மையிலேயே அம்மாதான். மாமனாரிடம் நாங்கள் அதிகம் பேசமாட்டோம். பய பக்தி மட்டுமல்ல காரணம். பேசு வதற்கு அவருக்கு நேரம்கூட கிடைக்காது. வீட்டில் எப்போதும் இருந்தது அத்தையோடுதான். அளவு கடந்த பாசத்தைத் தவிர அந்தத் தெய்வத்திடம் நாங்கள் வேறு எதையும் கண்டதில்லை. நாங்கள் பல பிறவிகளில் செய்த புண்ணியம்தான் இந்த வீட்டில் மருமகள்களாகக் கால் வைத்திருக்கிறோம்' என்று தன் மாம னார் - மாமியாரை வர்ணிக்கும்போது திலகவதியின் கண்களில் கண்ணிர் கலங்குவதைக் காணலாம்.
தெய்வநாயகம் வீட்டின் மருமகளாக வர என்ன தகுதி இருக்க வேண்டும்?
அவர் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும்தான் 'நல்ல குடும் பத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பணத்தை அவர் பார்ப்பதே கிடையாது; குணம் ஒன்று தான் அவருடைய குறிக் கோள்.
குணவதிகளாக மருமகள்கள் அமைந்த காரணத்தால் தான் பணமும் அந்த வீட்டில் பெருக ஆரம்பித்துவிட்டது என்பது தெளிவாகி விட்டது.
தெய்வநாயகத்தின் முதல் பேரன் கணேஷ் அமெரிக்க

Page 80
4. இதோ ஒரு வெளிச்சம்
நாட்டில் எம்.பி.ஏ பட்டம் பெற்ற இளைஞர். கம்பீரமான தோற்றமும் மிக உயர்ந்த குணங்களும் கொண்டவர். தற்போது துணி ஆலை ஒன்றின் நிர்வாக இயக்குநர். பெரிய கோடீசு வரக் குடும்பத்தின் முதல் பேரன். இப்படிப்பட்ட ஒருவருக்குப் பெண் தர எவ்வளவு போட்டியிருக்கும்?
பெரும் செல்வந்தர்கள் ‘நான் 'நீ என்று முந்திய போது, தெய்வநாயகம் கூறிய சொற்கள் இவைதாம்.
‘எங்கள் வீட்டில் லக்ஷமி குடியிருக்கிறாள்; இனி எங்களுக் குத் தேவை சரசுவதிதான்!’
தன் பேரனுக்குத் தானே பெண்தேடி, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டர் பட்டம் பெற்ற பண்பும், அழகும் படைத்த மருதினியை மணமுடித்து மகிழ்ந் தார்.
பணம் இன்று வரும்; நாளை போகும். ஆனால் உயரிய நற்பண்புகள் என்றைக்கும் கூட வரும் என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை.
திலகவதிக்குத் தன் மாமனாரிடம் மிகவும் பிடித்த குணம் ‘ஒருவர் துன்பப்படும் போது அதை அவரால் கண்டு சகித்துக் கொள்ள இயலாது. எப்படியாவது சென்று உதவுவது ~ என்பது அவருடைய இரத்தத்தில் ஊறிய குணம்.'
ஒவ்வொரு பிள்ளையும் தனித்தனியாக வாழ்ந்தாலும் பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாக்கள் அனைத்தும் அவருடைய வீட்டில் தான் நடைபெறும். எல்ல்ோரும் ஒன் றாகக் கூடி மகிழ்ந்து கொண்டாடும் அந்த நாட்கள் இனிமை
t lfTGö606) 1,
திருமணமான புதிதில் இரண்டாண்டுகள் வரை மகனும் மருமகளும் அவரோடு இருப்பார்கள். இரண்டாண்டுகள் முடிந்த வுடன் அவர்களை அழைத்து தனிக்குடித்தனத்தைத் தானே அமைத்துத் தருவது அவர் வழக்கம்.
"மாமா, அத்தை நாங்கள் உங்களுடனே இருக்கிறோம்"
என்று மருமகள் கெஞ்சி அழுவதும் - தந்தையைப் பிரிந்து செல்ல மகன் தயங்குவதும்'

குடும்ப விளக்குகள் 4
நீங்கள் தனியாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது' என்று கூறி அவர்களைச் சிறந்த முறையில் குடிவைப்பதும் இந்த இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சி.
'கண்ணை இமை காப்பதற்கும் மேலாக என் பிள்ளைகள் என்னை வைத்துக் காப்பார்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் தனியாகவே வாழ விரும்புகிறேன். பெரிய வர்கள் வீட்டிலே இருந்தால் சிறியவர்கள் தயங்குவார்கள் கூச் சப்படுவார்கள் மனம் திறந்த, முழு மகிழ்ச்சியான வாழ்வை அவர்களால் வாழமுடியாது. எதற்கெடுத்தாலும் எங்களைக் கேட்டுச் செய்வார்கள்; அதனால் அவர்களுடைய திறமை மங் கிப் போய்விடும். என் பிள்ளைகள் எங்கிருந்தாலும் நல்ல முறை யில் வாழ்வார்கள்; முன்னேற்றமடைவார்கள்; எங்கள் மீது பாசமாக இருப்பார்கள்’ என்று தெய்வநாயகம் பெருமையோடு தம் பிள்ளைகளைப் பற்றியும், மருமகள்களைப் பற்றியும் கூறு வது வழக்கம்.
கொழும்பு அனைத்துலகப் பள்ளியில் படித்துக் கொண் டிருந்தபோது சுப்பிரமணியன் தன் தாய் திலகவதியிடம் அடிக் கடி சொல்லிப் பெருமைபட்டுக் கொள்ளும் செய்தி இதுதான்.
'அம்மா! என்கூடப் படிக்கும் மாணவர்களின் குடும்பங் களில் எவ்வளவோ சிக்கல்கள் நிறைய தகராறுகள். என் னுடைய நண்பர்கள் எவ்வளவு வேதனையை சுமந்து கிட்டுப் பள்ளிக்கூடம் வராங்க தெரியுங்களா..? ஆண்டவன் புண்ணி யத்தில் நாம எல்லோரும் மகிழ்ச்சியா, ஒற்றுமையா இருக் கோம்!'
இந்த உணர்வு ஒர் இளம் உள்ளத்தில் எழும்பியிருப்பதைக் காணும் போது அதற்கு யார் காரணம் என்று நமக்குத் தெரிய Gailabama wurr?
குடும்ப ஒற்றுமைக்கு என்ன காரணம்?
திலகவதி தருகின்ற தெளிவான விளக்கம் இதுதான்:
"அடிப்படையில் நாங்கள் அனைவரும் மற்றக் குடும்பங் கள் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார விரும்பு
கிறோம். ஒருவருக்கு ஏதேனும் சிக்கல் என்றால் ஓடி வந்து விடுவோம். இந்த அடிப்படை நல்லெண்ணம்தான் எங்கள்

Page 81
1 44 இதோ ஒரு வெளிச்சம்
அனைவரையும் மகிழ்ச்சியாக இணைத்து வைத்திருக்கிறது. இதற் குக் காரணம் இதைத் தாங்களும் கடைப்பிடித்து, எங்களுக்கும் சொல்லிக் கொடுத்துப் பயிற்றுவித்த எங்கள் மாமாவும் அத் தையும்தான்.'
திருமணமாகுமுன் வரை சிவகாமிக்கு ஒருகுறை இருந்தது. 'தனக்குத் தாயில்லையே; இளம் வயதிலேயே தாயை இழந்து விட்டோமே
ஆனால் தெய்வநாயகத்தின் இரண்டாம் மகன் வீரபாகு வைத் திருமணம் செய்து இரண்டாவது மருமகளாக வீட்டிற்குள் நுழைந்த போது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு தாய்கள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தான். மாமியாரின் வடிவத்தில் அன்னையைக் கண்ட அவர் தாய்ப் பாசத்தைத் தெய்வநாயகதத்திடமும் கண்டார். யாராவது கோபித்துக் கொள்ளும் தழ்நிலை வந்தால் அவர் 'தாயில்லாத பெண்; யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது!’ என்று இடை யில் புகுந்து தடுப்பது அவர் வழக்கம்.
சிவகாமி இலங்கையைச் சார்ந்தவராக இருந்தாலும் பூர் வீகம் தூத்துக்குடிதான். யாழ்ப்பாணத் தமிழில் விரைவாகவும், அழகாகவும் பேச வல்ல அவருக்கு ஏக்கமெல்லாம் தூத்துக் குடித் தமிழின் மீதுதான். அங்கே மகளை அழைப்பது போல தெய்வநாயகம் 'வாலா’ என்று பாசத்தோடு அழைக்கும் போது உருகிப் போய் விடுவார்.
சிதம்பரத்தம்மாள் அவருக்குக் குரு' என்ற நிலையிலும் இருக்கிறார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எப்படி விருந் தோம்புவது என்கின்ற பாடத்தைக் கற்றுக் கொடுத்ததே அவர் கள்தான்.
‘ஒரு குடும்பத்தில் பெண் எடுத்த பிறகு, பெண் மட்டும் தான் வேண்டும், அவர்களுடைய குடும்பம் எப்படிப் போனால் என்ன?’ என்ற மனநிலை உலவ ஆரம்பித்திருக்கின்ற இந் நாளில் தெய்வநாயகம் தன் சம்பந்திகளை மதிக்கின்ற விதம் சிறப்பானது. சிவகாமியின் தந்தையார் ஓர் இதய நோயாளி, உடல் நலம் குன்றியவர். சிவகாமியிடம் 'அப்பாவை அடிக்கடி பார்த்து நலம் விசாரிக்கச் சொல்லி அனுப்புவார்.'
தந்தையைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போனாலும் சிவ

குடும்ப விளக்குகள்! 145
காமியால் இருப்புப் கொள்ள முடியாது. 'அத்தையும், மாமா வும் எப்படி இருக்கிறார்களோ' என்ற நினைப்புத்தான் அதிக மாக இருக்கும். எவ்வளவு விரைவில் வீடு திரும்ப முடியுமோ அவ்வளவு வேகமாக வீடு திரும்பி, அவர்களிருவரையும் பார்த் தால் தான் மன நிம்மதி.
வீரவாகு - சிவகாமி தம்பதியருக்கு நான்கு ஆண்பிள்ளை கள், முதல் மகன் குமார் ஆஸ்திரேலியாவில் சிட்னி யு.ரி.எஸ். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்க, இரண்டாவது மகன் ராஜா மான்செஸ்டரில் படிக்க, அடுத்த இரண்டு பிள்ளை கள் முரளி, முருகன் கொழும்பு அனைத்துலகப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தன் கணவர் மிகவும் கண்டிப் பான முறையில் பிள்ளைகளை வளர்க்கிறார் என்பது சிவகாமி யின் எண்ணம். 'கிரிக்கெட், கால்பந்து எதுவும் விளையாடக் கூடாது. கருப்பு வண்ணச் சட்டை அணியக் கூடாது' இது போன்று நிறையக் கட்டுதிட்டங்கள். கிட்டத்தட்ட ஒரு காலத்தில் தெய்வநாயகம் அப்படித்தான் அவர்களை வளர்த்தார்.
சிவகாமியின் நினைவில் எப்போதும் நெகிழ்ச்சியை உண் டாக்கும் நிகழ்ச்சிகள் தன் மாமியாரைப் பற்றியதாக இருக்கும்.
பேறு காலத்தின் போது, வலி எடுக்க, மருத்துவமனைக்குச் சிவகாமியை அழைத்துச் செல்லவேண்டிய நேரம். வெளியிலே கார் காத்துக் கொண்டிருக்கிறது. சிவகாமியோ துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சிதம்பரத்தம்மாள் தன் மரு மகளுக்கு மிகவும் பிடித்த உணவைத் தயாரித்துப் பிசைந்து தன் கையால் அவர் வாயில் ஊட்டுகிறார். 'பிரசவமாகிவிட்டால்

Page 82
46 இதோ ஒரு வெளிச்சம்
பல நாட்களுக்குப் பத்தியம் இருக்கணும், நீ ஆசைப்படறதைச் சாப்பிட முடியாதம்மா? சாப்பிடு' என்று பாசமாகச் சொல் லும்போது உடலின் வலி எங்கோ மறைந்து போகப் பாசம் என்னும் பரவச உணர்வு மனமெங்கும் நிறைந்து போகும் நிகழ்ச். சியைக் கலங்கும் கண்ணிரோடு எண்ணுகிறார் சிவகாமி.
தங்களுடைய குடும்பம் என்றைக்கும் ஒற்றுமையாய், மகிழ் வோடு முன்னேறுவதற்குக் காரணம் பக்தி என்பது சிவகாமியின் எண்ணம். தன் மகன் குமார் அதிக பக்தியோடு வளர்வதில் அவருக்கு மிகவும் பெருமை.
மாமாவிடமிருந்து அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள் வரும். ‘இன்று உபயம் - வாருங்கள்!' 'இன்று அபிஷேகம் - வாருங்கள்!' குடும்பமே வாரிச் சுருட்டிக் கொண்டு கோயிலுக்கு ஒடும். இன்று அந்த பக்தி உணர்வு எல்லா குடும்பங்களையும் ஒட்டிக் கொள்ள, தெய்வீக சக்தி தெய்வநாயகம் குடும்பத்தைப் பெருமைப் படத்தக்க நிலையில் வைத்திருக்கிறது என்று பெரு மிதத்துடன் கூறுகிறார் சிவகாமி.
மிகமிகச் சிறிய பெண்ணாக இருக்கும்போது தெய்வநாயகத்தை தெய்வநாயகி பார்த்திருக்கிறார். கருப்பு நிறக் காரை வேகமாக ஒட்டி வருவார். கோயிலிலிருந்து நேராக வரு வதால் சட்டையிருக்காது. வீயூதி, குங்குமம் பளிச்சிட காரை விட்டுக் கம்பீரமாக இறங்குவது சோமசுந்தரம் அண்ணாச்சி வீட்டெதிரில்தான். அவரை உடன் அழைத்துப் போக வந் தாலும் காரை நிறுத்தி அருகிலே உள்ள நண்பர்கள், உறவினர் கள் வீட்டில் ஒவ்வொரு நிமிடம் தலை காட்டி விட்டுச் செல்வது வழக்கம்.
சிறுமி தெய்வநாயகியின் வீட்டுக்குள் நுழையும் போதே 'என்பேர் கொண்டவள் எங்கே?' என்று அன்பாகக் கேட்டுக் கொண்டே நுழையும்போது ‘இதோ, பெரியப்பா!' என்று கூறியபடி அவரைப் பாசத்தோடு வரவேற்பது தெய்வநாயகி யின் வழக்கம். மிகப்பெரிய மனிதர் எந்த ஆடம்பரமும் இல்லா மல், எளிமையாக வீட்டிற்கு வருவது அவருக்குப் பெருமையாக இருக்கும்; அதே நேரத்தில் உரிமையோடு சமையற்கட்டு வரை சென்று 'குடிக்க என்ன இருக்கிறது?’ என்று கேட்டபடி அரைக் குவளை பால் அல்லது மோர் வாங்கிக் குடித்து விட்டுக் குழந்தையின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்து விட்டுக் காரில்

குடும்ப விளக்குகள்! 47
ஏறிச் செல்வது வியப்பாக இருக்கும். அத்ே நேரத்தில் 'என் னைக்கிருந்தாலும் உங்க மக என்னுடைய மருமகள்தான்' என்று அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போவது மேலும் வியப் பாக இருக்கும்.
'பெரியப்பா!' என்று தெய்வநாயகி அழைத்தபோது திருமணம் என்றால் என்ன?’ என்பது கூடத்தெரியாத வயது. வருங்காலத்தில் அவரை ‘மாமா' என்று அழைக்க வேண்டி யிருக்கும், அவருடைய மூன்றாம் மகன் பிரமநாயகத்தைத் திரு மணம் செய்துகொள்வோம் என்று அவர் கனவில்கூட எண்ணி யிருக்க மாட்டார். இப்போதும் அவர் மனத்தில் ஒரு சந்தேகம். 'குழந்தையாக என்னைப் பார்த்தபோதே - இவள்தான் என் மருமகள் - என்று முடிவெடுத்திருப்பாரோ?' ஒரு ஆதங்கம். கூட உண்டு; “பெரியப்பா' என்று அழைத்தவரை ஒரு நெருக்கம் இருந்தது - உரிமை இருந்தது. 'மாமா' என்று முறை கொண்டாட வரும் போது இடையில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது போன்ற உணர்வு தோன்றியது.
ஆனால் ஒருவேளை வேறு யார் வீட்டிலாவது வாழ்க் கைப் பட்டிருந்தால் ஒட்டு மொத்தமாகவே தெய்வநாயகத்தின் பாசத்தை இழந்திருக்கக் கூடுமல்லவா! ஆகவே கடவுளின் அரு ளால் அவருக்கு மருமகளாகத் திகழும் பாக்கியமல்லவா கிட்டி யிருக்கிறது.
தெய்வநாயகத்தைப் பார்த்து பிரமிக்கும் செய்திகள் பல. அதில் ஒன்று அவருடைய கடுமையான உழைப்பு. மற்றவர் களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பதறிப் போகும்

Page 83
48 இதோ ஒரு வெளிச்சம்
அவர் தன் உடலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 'எனக்கு உடல்நிலை சரியில்லை!" என்று அவர் சொல்வதில்லை; அப் படிச் சொல்லவே அவருக்குப் பிடிக்காது.
'சாப்பிட்டாச்சா?’ என்று வாயால் கேட்க மாட்டார். கண்ணாலேயே கேட்கும் சிறப்பே தனி. தனக்காக யாரும் காத் திருப்பது அவருக்குப் பிடிப்பதில்லை. வீட்டுக்கு வந்தவர்கள் முதலில் சாப்பிட்டாக வேண்டும்.
ஆறுதல் சொல்லி மனத்தைத் தேற்றுவதில் அவருக்கு நிகர் அவரே. தெய்வநாயகியின் தந்தை இறந்த போது அவருடைய ஆறுதல் சொற்கள்தான் வேதனைச் சுமையை இறக்கி வைத்தன.
பிரமநாயகம் - தெய்வநாயகியின் செல்லப்பெண் கலா அந்தச் சின்னக் குழந்தையின் சிரிப்பிலும், பேச்சிலும் மயங்கிப் போனவர்கள் ஏராளம். அந்தப்பட்டியலில் முதல் பெயர் நிச்சய மாக தெய்வநாயகம்தான். பேத்தியின்மீது அவருக்குக் கொள்ளை ஆசை.
கலாவின் மீது ஆசை கொண்ட மூளைக் காய்ச்சல் அவளைப் பிடித்து உலுக்கியது. அந்தச் சின்ன மலர் சூறா வளிக் காற்றில் தடுமாறியது.
ஒரு வழியாகத் தேறினாள். மஞ்சட்காமாலை அவளைத் தீண்டிப் பார்த்தது. மீண்டும் அந்தக் குழந்தையின் வாழ்க்கையில் தடுமாற்றம். மெள்ள நலம் தேறிய உடன் வாயிலே சுணக்கம்; சில நாட்கள் வரை "கோமா நிலை. 'கலா'வைக் கடவுள் கூடக்காப்பாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்து காலக் கணக் கிட்டுக் கவலை ததும்பக் காத்திருந்தார்கள்.
ஒருநாள் வீட்டிலிருந்து தெருவுக்கு விளையாட்டுக் காட்ட் வேகமாக ஓடி வந்த கலாவின் மீது, மறுபக்கம் வேகமாக வந்து கொண்டிருந்த செங்கல் லாரி மோத, அதே இடத்தில் கலா, கடவுளின் பாதத்தில் விழுந்த மலராகிப் போய்விட்டாள்.
ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்த போது எல்லோர் மனமும் ஒரு பக்குவ்த்துக்கு வந்து விட்டிருந் தது. ஆனால் ஒரு நொடியில் எதிர்பாராமல் மின்னல் போல் வந்து இடி எனத் தாக்கிய அந்த மரணத்தின் அதிர்ச்சி அனை வரையும் நிலை குலையச் செய்தது.

குடும்ப விளக்குகள்! 49
கலாவின் பூவுடலைச் சுற்றிப் பெருங் கூட்டம். அலை மோதி அழுத அவர்களின் கண்களைத் துடைத்து ஆறுதல் சொன்ன மனிதர் தெய்வநாயகம் மட்டுமே.
செங்கல் லாரியை ஒட்டி வந்தவனைச் சும்மா விடக் கூடாது!
‘வெட்டு’ - 'குத்து “பொலீசில் ஒப்படையுங்கள்.
லாரி ஒட்டுநரை வசை பாடிய வார்த்தைகள் அறையை நிரப்பின.
'ஐயா, அந்த ஆளை ஒன்றும் செய்யக் கூடாது. விட்டு விடுங்கள்; அவர் வேண்டுமென்றே கலா மீது வண்டியை ஏற்ற வில்லை.
'தவறு ஒருவேளை அவர்மீது இருந்தாலும் கூட, இறந்து போன என்பேத்தி எழுந்து வரப்போவதில்லை. முருகன் தன் னோடு அந்தக் குழந்தை இருக்க வேண்டுமென்று சித்தமாயிருந் தால் யார் அதைத் தடுக்கமுடியும்? பாவம் அந்த லாரிக்காரர், அவரை ஒன்றும் செய்யாதீர்கள்?’ கைகூப்பி ஆத்திரத்திலிருந்த வர்களிடம் அவர் பேசியபோது மெளனமாக அவர்கள் கலைந்து சென்றனர். அவர்களுடைய உள்ளங்களில் பலத்த ஒலியோடு, எழுந்த கேள்வி ‘எப்படிப்பட்ட மனிதர் இவர்?
தம் உயிருக்குயிரான பேத்தி மறைந்தாலும் அவளுடைய அன்புப்பெயர் என்றைக்கும் நிலைக்கவேண்டும் என்று விரும் பியதால் அடுத்துப்பிறந்த குழந்தைக்கும் கலா என்ற பெயரை வைத்தார்.
தெய்வநாயகியின் கண்களில் வழிந்த கண்ணிரைத் துடைத்து, வாடிய நெஞ்சிற்கு ஆறுதலை அளித்தது தெய்வ நாயகம்தான். புண்பட்டுப் போன இதயத்திற்கு மருந்தாக அமைந்தது அவருடைய கனிவான சொற்கள்தான்.
கலங்கும் மனிதனுக்கு ஆறுதல் சொல்லும் ஒப்பற்ற ஆற் றல் மாமாவின் சிறப்பு' என்கிறார் தெய்வநாயகி.
நான்காவது மருமகளாக சீதா தன் இல்லத்துக்குள் நுழைந்த போது தெய்வநாயகத்துக்கு மிகவும்பெருமை. பார்ப்பவர்களிட

Page 84
50 இதோ ஒரு வெளிச்ச
மெல்லாம் ‘என் மருமகள் பி.ஏ. படித்திருக்கிறார். இன்றைக்கு பி.ஏ ஒரு சாதாரண படிப்பாக இருந்தாலும் அன்று ஒரு பெரிய படிப்பு. தம்மால் படிக்க முடியாமல் போய்விட்ட குறை இன் றைக்கும் அவரிடமுண்டு. அதேநேரத்தில் படித்தவர்கள் என் றால் அவருக்கு மிகவும் ஆசை. நிறையப் பேரை படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு துடிப்பு. தம் வீட்டிற்குப் பட்டப்படிப்பு படித்த மருமகளே வந்தபோது மிகவும் பெருமை.
‘ஒரு செடி ஓரிடத்தில் வளருகிறது. அதை அப்படியே பெயர்த்து முற்றிலும் மாறுபட்ட தட்பவெப்ப நிலை கொண்ட, துழலில் வேறு வகையான மண்ணில் நடும்போது அந்தச் செடி வளருவதற்குத் தடுமாறும். இதே நிலைதான் ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது. தான் பிறந்த வீட்டுச் சூழ்நிலை யும் தான் வளர்க்கப்படும் விதமும் வேறு. ஆனால் புகுந்த வீட்டு சூழ்நிலையும்,வாழ்கின்ற விதமும் வேறு. இரண்டு வீட் டிற்குமிடையே பெரிய வேறுபாடுகளிலிருந்தால் பாதிக்கப்படு வது அந்தப் பெண் மட்டுமல்ல; அவ்விரு குடும்பங்களும் கூடத் தான்.
தாவரங்களின் மீது அன்புகொண்ட ஒரு விவசாயி, மாற்றி நட்ட செடியைப் பந்தலிட்டுப் பாதுகாப்பது போல எங்கள் மாமா அன்புப் பந்தலிட்டு, பாச உரமிட்டுக் காத்ததால் நாங் கள் புதிய இடத்தில் சிக்கிக் கொண்டோம் என்று எண்ணு வதற்கே வாய்ப்பில்லாமல், ஒரு தெய்வத்தின் சன்னதியில் வாழ்கிறோம் என்ற உணர்வில் எங்கள் வாழ்வை இங்கே தொடங்குகிறோம்" என்கிறார் அருணாசலத்தின் அன்பு மனைவி சீதா.
தெய்வநாயகத்தின் ஐந்து மருமகள்களில் சீதா கொஞ்சம் வேறுபட்டவர். அவர்மட்டும்தான் இந்தியாவில் இருக்கிறார். இல்லத்தரசியாக இருந்தவர் இரண்டாண்டுகளாக தன் கணவர் பொறுப்பேற்று நடத்தும் "ஈஸ்ட்ர்ன் எக்ஸ்போர்ட்ஸ்' மற்றும் 'அப்போலோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களின் இயக்குநராக வும் பணியாற்றுகிறார்.
இன்றைக்கு ஓர் ஏற்றுமதி நிறுவனத்தில் முக்கிய பொறுப் பேற்று நடத்தும் ஆற்றலை அவர் தன் கணவரிடமிருந்தும், மாமா தெய்வநாயகத்திடமும் இருந்து திறம்பட கற்றுக் கொண் டார் என்றால் அது மிகையல்ல!

குடும்ப விளக்குகள்
வீட்டிலிருந்து குடும்பம், குழந்தைகள், உறவினர்கள் என்று கவனிப்பதை விட்டுவிட்டு மன உளைச்சல் மிகுந்த ஏற்றுமதி வணிகத்தில் மருமகள் ஈடுபட்டு உழைப்பதைத் தெய்வநாயகத் தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது?
முதலில் அவருக்குச் சிறிது தயக்கம்தான். ‘அருணாசலத்தை முழுமையாகக் கவனிக்க முடியாத அளவுக்குச் சீதாவின் வேலைச்சுமை கூடிவிடுமோ!' என்று.
ஆனால் சீதாவின் உதவியால் அருணாசலத்தின் மனச் சுமைகள் பெரும்பாலும் இறங்கி அவருடைய நிறுவனத்தைச் சிறப்பாகவும், "சிக்கலில்லாமலும் நடத்துவதைக் காணும்போது அவருக்குப் பெரும் ஆறுதல்.
அலுவலகத்துக் குழப்பங்களை மனத்தில் சுமந்தபடி கண வன் வீட்டுக்கு வந்து தூக்கமில்லாமல் புரள வேண்டிய அவசிய்ம் இல்லை. சிக்கல்களை இருவருமே ஒன்றாக உட்கார்ந்து அலசித் தீர்ப்பதால் மனநிறைவு அவர்களுக்கு எளிதில் கிட்டிவிடுகிறது.
தன் மாமாவிடம் அவருக்குப் பிடித்த செய்திகள் பல. அவற்றுள் ஒன்று அவரிடம் வேலை செய்வோரை அவர் பயிற்று விக்கின்ற முறை. ஒரு கற்பாறையைக் கூடச் செதுக்கிக் கவி னுறும் சிலையாக மாற்றக் கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. ஆரம்ப நாட்களில் இலங்கையில் அவருடைய ஒரு கையாக இருந்து பணியாற்றிய சுப்பையா அத்தான் இன்று அருணா சலத்தின் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.
65 வயதில் அவர் சுறுசுறுப்பு பிரமிக்கத்தக்கது. மனித நேயத்தின் மூலம் அவர் சாதிக்கின்ற செயல்கள் அதிகம். அவர் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு சீதா கேட்டார்கள், 'அண் ணாச்சி ஏன் நின்றுகொண்டே சாப்பிடறிங்க, உக்காரலாமில் லையா?' வந்த பதில் 'இல்லைம்மா, நான் உக்காரமாட்டேன். நாம மக்கார்ந்தா வியாபாரம் உக்காந்திடும்; நாம படுத்தா வியாபாரம் படுத்திடும்ணு' என் முதலாளி சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
பெண்மையைப் போற்றுவதில் தெய்வநாயகம் ஒரு பாரதி. ஒருமுறை அவருடைய வீட்டின் சுவர்களுக்கு வண்ணப்பூச்சு கொடுக்கும் வேலை நடைபெறுகிறது. படங்களையெல்லாம்

Page 85
152 இத்ோ ஒரு வெளிச்சம்
கழற்றி எங்கெங்கோ வைத்திருக்கிறார்கள். இவரோ ஒடிப் போய்த் தரையில் வைத்திருந்த தம் மனைவியின் புகைப்படத்தை எடுத்து அருகிலிருந்து சோபாவின்மீது வைத்து விட்டு அருகி லிருந்த தம் உறவினரிடம் ‘என் மனைவியை நான் எப்படி வைத்திருக்கிறேன், பார்த்தீங்களா?" என்று பெருமையுடன் கேட்கிறார். எந்த வகையிலும் பெண்களை இழிவுபடுத்துவதை என்றைக்குமே அவர் ஏற்றுக்கொண்டதில்லை.
மூச்சுக்கு மூன்றுமுறை 'முருகா!' என்று உள்ளமுருக வேண்டும். அவரைப் பார்த்து இன்னுமொரு வியப்பு- 'எல்லா வற்றுக்குமே 'முருகா’தானா? மகிழ்ச்சி, வேதனை, ஏமாற்றம், அன்பு, பக்தி' எந்த தழ்நிலையிலும் 'முருகா' என்று சொல்லும் போது அந்தச் சூழ்நிலைக்கு முருகன் பொருந்தி வருவது போலவே தோன்றும்.
அதனால்தானோ என்னவோ ‘தெய்வத்திடம் முறையிட் டால் கூட அதன் காதில் விழுமோ, செயல்படுமோ, தெரி யாது. மாமாவிடம் குறையைச் சொன்னால் உடனே அதைப் போக்கிவிடுவார்' என்கிறார் சீதா.
அருணாசலம் - சீதா இருவருக்கும் மூன்று ஆண்பிள்ளை கள் பிரசாத் - வினோத் - பாலாஜி.
'மாமா என்பிள்ளை கொழும்பு சர்வதேசப் பள்ளியில் படிக்க வேண்டும். அவன் முன்னேற நீங்கள்தான் முயல வேண் டும்.' ܫ
சொல்லி முடித்த மூன்றாம்நாள் பிரசாத் அந்தப் பள்ளி யில் சேர்ந்து விட்டான். சென்னையிலிருந்து மாற்றுச் சான்றிதழ் எல்லாம் பிறகுதான் இலங்கை வந்தன. −
 

குடும்ப விளக்குகள்! 星53 ”
தெய்வநாயகத்திடம் மிகவும் கவர்ந்த ஒரு பண்பு- அவர் நோயுற்றவர்களிடம் காட்டும் அன்புதான். காலையில் கடற் கரைக்கு நடக்கச் சென்றுவிட்டுத் திரும்பும்போது யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் வீட்டிற்கோ, மருத்துவ மனைக்கோ சென்றுவிட்டுத் திரும்புவது. ஒரு சிறிய விபத்தில் கால் எலும்பு முறிந்து படுக்கையில் சீதா இருந்த போது ஒவ் வொரு நாளும் தொலைபேசியில் அழைத்து அழுகையோடு அவர் விசாரித்த நாட்களை சீதா நினைவுகூரும்போது 'அடி பட்டதே கூட ஒருவகையில் நல்லதாகி விட்டதே! இவ்வளவு பாசத்தை உணரமுடிகிறதே!’ என்கிறார்.
‘எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டேயிருக்கிறாரே, இவருக்கு நாம் என்ன தரமுடியும்?”
ஒன்றுமே தோன்றவில்லை. ஆனால் ஒரு புதிய சிந்தனை பிறந்தது.
வயதான மனிதர்களிடம் நாம் ஏன் அதிக அன்பைச் செலுத்தக் கூடாது?
வயதான மனிதர்களில் பெரும்பாலானோர் பணம், வசதி களுக்காகக் கூட ஏங்குவதில்லை. அவர்கள் தவிப்பதெல்லாம், பாசத்திற்கும், அன்பிற்கும்தான். இப்போதெல்லாம் சீதா வய தானவர்களை எங்கு பார்த்தாலும் கனிவாகப் பேசுவதோடு, இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்.
ஒரு நாள் இலண்டன் விம்பிள்டன் விநாயகர் கோவிலில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த வயதான ஒரு மூதாட் டியிடம் வலியச்சென்று பேசியபோது அவருடைய முகத்தில் பரவிய மலர்ச்சி அலாதியாக இருந்தது. மங்கிவரும் கண்பார்வை குறித்துக் கலங்கிய அவருக்கு சீதா ஆறுதல் கூறிவிட்டுத் திரும் பும் போது அவர் மனத்தில் ஒரு வைராக்கியம் பிறந்தது. ‘என் வாழ்வின் இலட்சியம் முதியவர்களுக்கு உதவும் ஒரு தொண்டு அமைப்பை உருவாக்கி நடத்துவதே'
ஒருமுறை தெய்வநாயகம் சென்னை வந்திருந்த போது அவருடைய பிறந்தநாள் வந்தது. ஏதோ ஒரு வேலையாக தெய்வ நாயகமும், சிதம்பரத்தம்மாளும் வெளியே செல்லப் போவது சீதாவுக்குத்தெரியும். அவர்கள் வெளியே கிளம்பியவுடன் அவர் களுடையை வீட்டிற்குச் சென்ற சீதாவும், அருணாசலமும், ஆட்

Page 86
54 இதோ ஒரு வெளிச்சம்
களை வைத்துக்கொண்டு வீட்டை அலங்கரிக்க ஆரம்பித்தார் கள். வீடெங்கும் அகல் விளக்குகள், மலர்த் தோரணங்கள், அவருக்குப் பிடித்த கோலங்கள், வாசற்படியருகில் அகல் விளக்குகள், மலர்கள். சிறிது நேரத்தில் வீடே முற்றிலும் மாறிவிட்டது. நிறுவனத்தின் பணியாளர்கள், நண்பர்கள் குழும ஆரம்பித்து விட்டார்கள். வீட்டின் மைய அறையில் ஒரு பெரிய கேக்.
மூன்று மணிநேரம் கழித்து தெய்வநாயகம், தன் மனைவி யுடன் வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கியவுடன் முதலில் அவருக்குத் தன்வீட்டை அடையாளம் தெரியவில்லை. "எதற்கு இத்தனை விளக்குகள், ஏன் இவ்வளவு கூட்டம்' என்ற திகைப் புடன் இறங்கி உள்ளே நுழைந்தபோது புகைப்படக் கருவிகள் பளிச்சிட, வீடியோ பதிவின் ஒளிவெள்ளம் கண்ணைக் கூச வைக்க மேலும் திகைத்த போது அவர் கழுத்திலே விழுந்த மாலைகள் தான் அன்று அவருக்குப் பிறந்த நாள் விழா என் பதையே நினைவூட்டியது.
அன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போன அவர் மருமகளைப் பார்த்துப் பெருமையுடன் கூறினார். 'சீதா! என் சதாபி ஷேகத்தை விட இந்த விழா எனக்குப் பிடிச்சிருக்கு. இதை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்!”
தெய்வநாயகத்தின் கடைசி மருமகள் மீனா. திருநெல் வேலி அருகில் உள்ள முன்னிர்பள்ளத்தைச் சேர்ந்த மீனா கல் லூரி விடுமுறையின் போது விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்
 

குடும்ப விளக்குகள்! 55
திருந்த நேரம். தன்னைப் பெண் பார்க்க தெய்வநாயகம் வந் திருக்கிறார் என்ற செய்தி வந்தது. யாரைப் பார்த்தாலும், கண்ட மாத்திரத்திலேயே எடைபோடும் திறமை படைத்தவர் தெய்வ நாயகம் மீனாதான் தன் கடைசிப் பிள்ளை முருகேஷன் மனைவி என்பதை முடிவு செய்துவிட்டார்.
ஆனால் வி.ரி.வி. குடும்பத்தைப் பற்றி மிக உயர்வாகவும், அதிகமாகவும் கேள்விப்பட்டிருந்தாலும், மீனாவின் தந்தைக்கு ஒரே தயக்கம். 'மகளை நீண்ட தூரத்தில் மணமுடித்து அனுப்பு வதா? அதுவும் கடல் கடந்தா பெண் தருவது?
அவர் தயக்கத்தைக் கண்ட தெய்வநாயகம் உறுதி கூறி னார். 'உங்களுடைய மகள் என்னுடைய மகள். அவளைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு'
திருமணம் மிகச்சிறப்பாக வல்ல நாட்டிலே நடந்தது. அந்த வட்டாரம் கண்டிராத வகையில் விருந்தோம்பலுடன் இசை மணி சீர்காழி கோவிந்தராஜன் இசைக் கச்சேரியுடன், ஏராள மான உறவினர், நண்பர்கள் வந்திருந்து, வாழ்த்த திருமணம் நடந்தது.
திருமணம் ஆன புதிதில் முருகேஷ் அதிகமாகப் பேசமாட் டார். விறுவிறுப்பாக வேலை தொடர்பாகப் பறந்து கொண்டே யிருப்பார். அப்படிப்பட்ட நேரங்களில் நாடு விட்டு நாடு வந்த மீனாவிற்கு ஆறுதல் மாமாவும், அத்தையும் தான்.
17 வயது வரை தன் வீட்டில் ஒன்றுமே தெரியாத விளை யாட்டுப் பெண்ணாக இருந்த மீனாவிற்கு வெளியுலகம் தெரிந் தது கொழும்பில் தான்.
மீனாவைப் பொருத்தவரையில் அவர் அதிகமாக பிரமிப் பது தெய்வநாயகத்திடம் இருக்கும் ஒரு கம்பீரமான, காந்த சக்தி.
'பிள்ளைகளே பெற்றவர்களை மதிக்காத காலம் இது. இந்த நிலையில் பேரப்பிள்ளைகள் தங்கள் தாத்தா, பாட்டி களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் மிகை தான். இந்த தலைமுறை இடைவெளி’ எல்லா இடங்களிலும் பரவி வருவதைக் காண்கிறோம். வயதானவர்கள் மதிப்பிழந்து வருகின்ற இந்தக் காலத்தில் தான் எதிர்பார்க்காமலே, இதற்

Page 87
56 இதோ ஒரு வெளிச்சம்
கென முயற்சி எடுக்காமலேயே சுயமாக மதிப்பைப் பெறுபவர் ‘எங்கள் மாமா'.
அவரை முன்பின் அறியாதவர்கள் கூட, பார்த்தவுடன் தலைவணங்குவதும், பாதங்களைத் தொட்டு வணங்குவதும் இயல்பாக நடக்கும். அவர் ஒரிடத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அங்கே ஒரு தனி அழகும், கம்பீரமும் அந்த இடத்திற்குப் பெரு மையும் கூடிவிடுவதைப் பார்க்கலாம் என்கிறார் மீனா.
தெய்வநாயகத்தின் இல்லத்திலேயே வாழும் பெருமை முருகேஷ"க்கும் மீனாவுக்கும் உண்டு. அவர்களுடைய ஒரே மகள் கலா தெய்வநாயகத்தின் செல்லமான பேத்தி.
1983 கலவரத்தின் போது கலா ஒரு வயது நிரம்பாத சின்னக் குழந்தை.
கலவரத்தின் போது எல்லோரும், தப்பிப் பிழைத்து கட்டிய உடுப்புக்களோடு இந்தியா வந்தனர்.
இந்தியா வந்து சேர்ந்ததும் தெய்வநாயகம் செய்த முதல் வேலை தன் மருமகள்கள் அனைவருக்கும் நிறைய துணிகளை வாங்கிக் கொண்டுவந்து குவித்ததும், அவர்கள் வழக்கமாக அணிந்து கொள்ளும் நகைகளை வாங்கிக் கொடுத்ததும் தான். தயங்கித் தயங்கி மீனா கேட்டார், 'மாமா, ஏற்கனவே வியா பாரத்தில் எக்கச்சக்கமான இழப்பு ஏற்பட்டிருக்கே, இந்த நிலை யில் எங்களுக்கு நகைக்கென்ன அவசரம்? நாங்கள் கேட் டோமா? நீங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்?"
 

குடும்ப விளக்குகள்! 57
அவருடைய பதில் தெளிவாக வந்தது.
'எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் எங்களால் உழைத்து அதைச் சரிக்கட்ட முடியும்; அதற்கு மேலும் எங்களால் சம் பாதிக்க முடியும். 'நேற்று நன்றாக இருந்தோம்; இன்றைக்கு இப்படியாகி விட்டோமே என்ற வாட்டம் உங்களுக்கு வரவே கூடாது. நீங்கள் தளர்ந்து போனால் குடும்பமே தளர்ந்து போய்
விடும்!”
ஐந்து வெவ்வேறு குடும்பங்களிலிருந்து வந்த வெவ்றுே பெண்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கும் மேலாக இணைந்து, பழகி குடும்பத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும், புகழுக்கும் பாடுபடுவதைக் காணும்போது நம் இதயம் மலர்ச்சியடைகிறது.
வீடு செங்கற்களாலும், கருங்கற்களாலும் கட்டப்படலாம். ஆனால் இல்லம் என்பது அன்பு உள்ளங்களாலும் மனித நேயத் தாலுமே கட்டப்படுகிறது.
மிகச் சக்தி வாய்ந்த மின் விளக்குகளைப் போட்டு வீட்டிலே ஒளியைச் செயற்கையாக ஊட்டலாம். பொறாமையும், வெறுப் பும், அடுத்துக் கெடுக்கும் மனமும் கொண்டு இருண்ட உள்ளங் களோடு உலவும் மக்கள் நிரம்பியவர்கள் அந்த வீட்டிலிருந்தால் அந்த வீடு பாழடைந்த இருட்டுக் குகைதான்.
தெய்வநாயகத்தின் வீட்டில் முதலில் ஒளியேற்றி வெளிச் சத்தைக் கொண்டு வந்தவர் சிதம்பரத்தம்மாள். அந்த குத்து விளக்கிலிருந்து தங்கள் திரிகளைப் பற்ற வைத்துக் கொண்ட ஐந்து விளக்குகளாகத் திகழும் ஐந்து மருமகள்கள் திலகவதி, சிவகாமி, தெய்வநாயகி, சீதா, மீனா ஆகியோர். V.
இந்த ஆறு குத்து விளக்குகளும் வி.ரி.வியின் குடும்பப் பெருமையைச் சமுதாயத்திற்குப் பறைசாற்றுகின்றன.
'நம் குடும்ப்மும் ஏன் இப்படியிருக்கக்கூடாது?’ என்ற ஏக் கத்தை மற்றவர் மனத்திலே உருவாக்குகின்றன. பொறாமை யோடு அவர்களை முதலில் பார்க்கும் கண்கள்கூட விரை விலேயே பெருமையோடு பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
‘வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்' என்று சொல்லுவார்கள். அது உண்மை தான். இக்குடும்பத் தலைவர் தெய்வநாயகமும் அவருடைய

Page 88
58 இதோ ஒரு வெளிச்சம்
பிள்ளைகள் ஐவரும் வெற்றியுடன் திகழக் காரணம் சிதம்பரத் தம்மாளும் அவருடைய மருமகள்களுமே என்பதில் ஐயமில்லை.
இந்த ஆறு பெண்களும் இவ்வளவு நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ யார் காரணம்? அந்த ஆறு ஆண்கள் தானே?
 

20. புயலொன்று பூவானது
முருகேஷ"க்கு இரண்டு முகங்கள்!
வெளி நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கு, தொலைபேசி எடுத்துப் பேசும் போது அவர் முகத்தில் ஒர் உற்சாகம், வெறி, வேகம், மிடுக்கு அத்தனையும் தெரிகிறது. சொல்லவேண்டியதை வேகமாகச் சொல்ல வேண்டும், தெளி வாகச் சொல்ல வேண்டும் அதே நேரத்தில் பேச்சு வியாபார மாக மட்டும் அமைந்து விடாமல் அதிலே கொஞ்சம் மனித நேயத்தையும் கலக்க வேண்டும்; அனைத்துக்கும் மேலாக அந்த அழைப்பு எதற்காக வந்ததோ, அதுவும் நிறைவேற வேண்டும்’ என்ற அனைத்தையும் அவருடைய ஓரிரு நிமிடப் பேச்சிலே காண முடியும். அப்போது அவரை யார் கவனித்தாலும் இவர் கொஞ்சம் ஆகாயத்திலே மிதக்கிற, மிடுக்கான, எதையும் சாதிக்க வல்ல இளைஞர், இவரை எளிதிலே நெருங்க முடி யாது’ என்கின்ற எண்ணம் தான் மனத்தில் தோன்றும்.
தொலைபேசியை வைத்து விட்டு, எதிரிலே இருப்பவரைப் பார்த்துக் கனிவான முகத்தில், அழகான புன்னகையோடு, இனிய குரலில் ‘எப்படியிருக்கீங்க! நலமா என்ன எடுத்துக் கிறீங்க? காபியா - டீயா?’ என்றவுடன் முதலில் தோன்றிய எண்ணத்திற்கு ஒரு பலத்த அடி விழும்; எதிரிலே இருப்பவர் தெய்வநாயகத்தின் கடைசிப் பிள்ளை முருகேஷ் என்ற உணர்வு மின்னலெனப் பளிச்சிடும்.
வி.ரி.வி. நிறுவனத்தில் இறக்குமதியைப் பொறுத்தவரை யில் முழுப்பொறுப்பேற்று நிர்வகிப்பவர் முருகேஷ். அதுமட்டு மல்ல, வேறு சில அத்தியாவசியப் பொருள்கள், உரவியாபாரம் ஆகியனவும் இவருடைய பொறுப்பில் வருகின்றன. ஈஸ்வரனு டைய முதல் மகன் கணேஷ் பொறுப்பில் இயங்கும் மிகப்பெரிய துணி ஆலை - உற்பத்தி - ஏற்றுமதியில் முருகேஷின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

Page 89
Η 6 0 இதோ ஒரு வெளிச்சம்
முருகேஷின் மனைவி மீனா, இவர்களின் மகள் கலா,
தந்தையைப் பற்றி என்ன சொல்வது? என்று தயங்கும் முருகேஷ"க்கு அப்பாவை எண்ணும் போது தோன்றும் முதல் எண்ணம் ‘என் அப்பா எனக்கு அப்பா மட்டுமல்ல - மிக நெருங் கிய நண்பரும் கூட அப்பாவிடம் எதையும் சொல்லலாம்; தைரியமாகச் சொல்லலாம்; தயங்காமல் சொல்லலாம்! தெய்வ நாயகத்திற்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே எந்தச் சுவரும் இல்லை.
கோணி மூட்டைகளை முதுகு கொடுத்து இறக்கிவைத்துக் கொண்டிருந்த அவர் கோடீசுவரராக மாறியதை அவரே சாதனையாக நினைக்கவில்லை. ஆனால் தன்னுடைய பிள்ளை கள் ஐவரையும் நல்ல பிள்ளைகளாக, தரணி போற்றும் தனயன் களாக வளர்த்தாரே அதைத்தான் பெரிய சாதனையாக நினைக் கிறார்.
பிள்ளைகளை நன்றாக வளர்த்துவிட்டு ‘நீங்கள் நன்றாக உழையுங்கள் - நிறையச் சம்பாதியுங்கள் நல்ல முறையில் செலவு செய்யுங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்' என்று ஆசி கூறி அப்படி வாழ வழியும் செய்து கொடுப்பவர் தெய்வநாயகம்.
'நல்ல முறையில் பிள்ளைகளை வளர்த்து விட்டால் அவர் கள் செய்யும் எந்தச் செயலும் நல்ல செயலாக அமைந்து விடும்’ என்பது தெய்வநாயகத்தின் நம்பிக்கை.
எல்லா கெடுபிடியும், கண்டிப்பும், கட்டுதிட்டமும் இருபது வயது வரையில்தான். 'எதைச் செய்தாலும், என்னைக் கேட்டுச் செய்ய வேண்டாமா?’ என்று ஒரு காலத்தில் கேட்ட தெய்வ நாயகம், இன்று தன் பிள்ளைகளை ஏனப்பா, இதைச் செய்ய லாமா?’ என்று கேட்டுச்செய்வதற்கான காரணம் காலத்தின் கட்டாயமல்ல. தன் பிள்ளைகளை தன்னுடைய நிலைக்குச் சமமாக உயர்த்தி விட்டார்’ என்பதுதான். 'தோளுக்கு மிஞ் சினால் தோழன்தானே!"
தன்தந்தையைப் பார்த்து முருகேஷ் வியந்து மகிழும் குணங் களுள் ஒன்று, 'யார் எந்தக் குறையைச் சொன்னாலும் மனம் வாடாமல் அதனை ஏற்றுக் கொள்வது'. இன்றைய மனிதர்கள் தங்களை யாராவது பாராட்டுவார்களா? என்று தான் ஏங்கு கிறார்களே ஒழிய "ஒரே ஒரு நியாயமான சின்னக் குறையைச்

புயலொன்று பூவானது 6
சொன்னால் கூட உடனே முகம் வாடிப் போய் விடுகிறார்கள். இன்றைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது அப்பாவிடம் ஏதாவது ஒரு விஷயத்தில் இப்படிச் செய்தாலென்ன?’ என்று விவாதம் செய்யும் பிள்ளை அனேகமாக 'முருகேஷாகத் தான்" இருக்கும். ஒவ்வொருமுறையும் பொறுமையாகக் கேட்டு தெய்வ நாயகம் ஒரு முடிவுக்கு வரும்போதெல்லாம் வெற்றி பெறுவது முருகேஷாகத் தான் இருக்க முடியும். காரணம் அப்பாவிடம் இருந்து அவர் கற்றுக் கொண்ட விஷயம் மகனுடைய ஆற்றலை இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்குமல்லவா?
'மாற்றம்’ என்ற சொல் இன்றைய உலகில் மிக முக்கிய மான சொல். 'மாற்றம் ஒன்றுதான் நிலையானது' என்று சொல்லுவார்கள்.
'உலகத்தொடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
என்று கூறும் வள்ளுவர் உலகம் எதைச் சொல்லுகிறதோ அதற் கேற்ப மாறமுடியாதவர் என்ன கற்றிருந்தாலும், கல்லாதவர் களுக்குச் சமம்' என்று ஒரு பெரிய "மேலாண்மைத் தத்துவத்தைக் கூறியுள்ளார்.
தெய்வநாயகம் தன்னுடைய தொழிலைத் தொடங்கிய காலம் வேறு; இன்றைய காலம் வேறு!
அன்று இருந்த மக்கள் மனநிலை வேறு; இன்றைய மன நிலைவேறு!
கணக்குப் போடுவதில் தெய்வநாயகம் வல்லவர். அவர் மூளையில் ஒரு கம்ப்யூட்டர் இருக்கிறது என்று கூடச் சொல்லு வார்கள். %, % என்று இருந்த காலத்திலேயே வாயாலே பெருக்கிக் கணக்கை சொல்லும் சாமார்த்தியம் இன்றும் அவ ருக்கு உண்டு.
ஆனால் இன்று, பேனாவுக்கும் பேப்பருக்கும் வேலை குறைந்துபோய். அதைக் கணிப்பொறி எடுத்துக் கொண்ட காலம்.
கம்ப்யூட்டர், பிரிண்டர், டெலெக்ஸ், பேக்ஸ் என்று அறி வியல் புதுமைகள் நுழைந்து விட்ட காலத்தில் அந்தப் புதுமை களுக்கு மதிப்புக் கொடுத்து ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்ளு

Page 90
162 இதோ ஒரு வெளிச்சம்
கின்ற மனப்பான்மை அவருக்கு வந்து விட்டது. அந்த காலத தைச் சேர்ந்தவர், பழைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்று எண்ணி, புதுமைகளுக்கும் மாற்றங்களுக்கும் அவரிடம் இட மில்லை என்று எண்ணினால் ஏமாந்து போய்விடுவோம்.
தலைவன் என்பவன் யார்?
இந்த கேள்விக்கு எத்தனையோ விதமான விடைகளை அளிக்கலாம்.
அதிலே ஒன்றுதான் 'சிக்கல்கள் வரும்போது அவற்றைத் திறம்பட சமாளித்து நல்ல முடிவுகளை எடுப்பவனே நல்ல தலைவன்!"
சிக்கல் வரும்போது தெய்வநாயகம் எப்படிச் சம்ாளிக் கிறார்? தெய்வநாயகத்தைப் பொறுத்தவரையில் 'சிக்கல்கள் இல்லாவிட்டால் வியாபாரம் என்பதே இல்லை". ஆகவே கண் டிப்பாகச் சிக்கல்கள் இருந்தேயாக வேண்டும். அதை சமாளிப் பதில்தான் நம் திறமையே இருக்கிறது. அதுமட்டுமல்ல தெய்வ நாயகத்திற்குச் சிக்கல்கள் என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. சிக்கல்களை அவர் சிக்கல்கள் என்று எண்ணுவதில்லை; மாறாக, சிக்கல்களை நிறைவேற்ற வேண்டிய கடமைகள்; செய்து முடிக்க வேண்டிய வேலைகள்' என்று மட்டுமே எண்ணு வதால், சிக்கலைத் தீர்த்தல் என்ற மனச்சுமையைத் தனியாக சுமப்பதில்லை.
முருகேஷைப் பொறுத்தவரையில் தெய்வநாயகம் சிக்கல் களைக் கையாளுவதில் கடைப்பிடிக்கும் பலபடிகளில் முதல் படி நேர்மை. நேர்மையான செயலை மேற்கொண்டாலே வரக் கூடிய சிக்கல்களுள் பாதிக்குமேல் குறைந்து போய்விடும். தவறு செய்தால் தானே, தவறை மறைக்கப் பல தவறுகள். அதிலே சிக்கல்கள். - -
அடுத்து எந்தச் சிக்கல் வந்தாலும் தானே முன் நின்று அத னைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது அவருடைய உயரிய குணம். மலர்க் கிரீடங்களை மட்டுமே என் தலை சுமக் கும்; முட்கிரீடங்கள் எனக்கு வேண்டாம்; என்று கூறிப் பொறுப் புக்களைத் தட்டிக்கழிக்க அவருக்கு முடியாது.
'பிரச்சினைகளிலிருந்து ஒடி ஒளிபவன் தலைவனல்ல;

புயலொன்று பூவானது 63
எதிர்த்து நின்று சமாளிப்பவனே தலைவன்’ என்று பல மேலாண்மை நூல்களில் படிப்போம்; ஆனால் அப்படி வாழ் பவர் தெய்வநாயகம்.
ஒரு சிக்கலை அணுக, தெய்வநாயகம் எடுத்து வைக்கும் மூன்றாவது படி ‘காது கொடுத்துக் கேட்பது' யார் சொல் வதையும், அக்கறையோடும், பொறுப்பாகவும், பொறுமையாக வும் கேட்பது அவருடைய சிக்கல் தீர்க்கும் குணங்களுக்கு அரண் சேர்க்கும் பண்பாகும்.
"அவருடைய கோணத்தில் அவருக்குச் சரியென்று பட்ட தைச் சொல்லி விட்டார். அவர் சொன்னதைப் பற்றி கவலைப் படாமல் உங்களுடைய கோணத்தில் உங்களுக்குச் சரியென்று பட்டதைச் சொல்லுங்கள் என்று மற்றவரைப் பேசச் சொல்லு வார். பிரச்சினைக்கு விடை எங்காவது ஓரிடத்தில் இருந்து தானே ஆகவேண்டும்!
கப்பலில் வந்து இறங்கிய ஒரு கன்டெய்னரில் சில பெட்டி களைப் பிரித்து எப்படி இருக்கிறது?’ என்று பார்த்து தெய்வ நாயகம் தன்னுடைய கருத்தைச் சொல்லியிருப்பார்.இருந்தாலும் முருகேஷ"க்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கும். “கொஞ்சம் பெட்டிகளைத் தானே பார்த்தார்! மீதி எப்படி இருக்கும்?' தந் தையின் கருத்தையும் மீறித் தன் உதவியாளரை அனுப்ப ஓர் எண்ணம் வரும். 'அப்பா நீங்க தான் பாத்திட்டிங்களே: ஆகவே இன்னொரு முறை பாக்க வேண்டியதில்லை தானே' என்று தயங்கினால் அதைப்புரிந்து கொண்டு 'இன்னொரு முறை பார்க்கணும்னு தானே நினைக்கிறே. தாராளமா அவர்களை அனுப்பிச் சரி பார்த்துவிடு எப்போ அந்த எண் ணம் வந்து விட்டதோ, அப்புறம் தயங்கக் கூடாது! அதுமட்டு மல்ல, உனக்கு வந்த எண்ணம் தப்பே கிடையாது! ஆனால் முருகேஷ"க்கு ஒர் எண்ணம், தன்னை யாராவது இப்படிச் சொல்லியிருந்தால் 'நான்தான் பார்த்துட்டுச் சொல்றேனே, அப்ப, என் பேரில நம்பிக்கையில்லையா? எதுக்கு இரண்டாம் முறை செக்கிங்' என்று சீறியிருப்போம், எப்படி அப்பாவால் கோபித்துக் கொள்ளாமல், பொறுமையாக இருக்க முடிகிறது?
பிரச்சினைகளைத் தீர்க்கும்போது தெய்வநாயகத்தால் எளிதாக வெற்றி பெற முடிவதற்கு மிக முக்கியமான காரணம் அவருக்குத் 'தான்’ என்கின்ற அகந்தையுணர்வு அறவே இல்

Page 91
64 இதோ ஒரு வெளிச்சம்
லாததுதான். இன்றைக்குப் பல இடங்களில், பல தலைவர்கள் தோற்றுப் போவதற்குப் பெரிய காரணம் அவர்களுடைய 'தான்' என்ற உணர்வுதான். தன் கீழே இருப்பவர்கள் சொல்ல 'நான் என்ன கேட்பது?’ என்ற உணர்வும், 'தான் மட்டுமே பெரிய அறிவாளி' என்கின்ற மமதையாலும் அழிந்துபோன நிறுவனங்கள் ஏராளம்.
தெய்வநாயகத்தின் நிழலாகக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு களாக அவரோடு இணைந்து செயல்படும் சோமு அண்ணாச்சி யின் நினைவலைகளில் இன்று வரை தத்தளிக்கும் ஓர் அனுபவம் தெய்வநாயகத்தின் குணநலன்களை நன்கு புரிந்து கொள்ள உதவும்.
கொழும்பிலிருந்து பல மைல் தூரத்தில் கடை வைத்திருக் கும் ஒரு சிங்கள வியாபாரி ஒரு நாள் மிகுந்த ஆத்திரத்துடன் வி.ரி.வி.யின் கடைக்குள் நுழைகிறார். அவர் கையிலே ஒரு அட்டைப் பெட்டி. அவர் சட்டென்று நுழைந்தது கூடத் தெரி யாமல் நாற்காலியில் அமர்ந்தபடி, தம் மேசையின் மேலிருந்த நோட்டுப் புத்தகத்தில் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்
மனுஷன் வாங்குவானா இதை' என்று ஆத்திரமாக திறந்திருந்த ஒரு சிறிய டின்னை பலமாக மேசைமேல் வைக் கிறார். வைத்த வேகத்தில் டின்னிலிருந்த திரவம் சிதறி தெய்வ நாயகத்தின் சட்டையிலும் முகத்திலும் தெறிக்கிறது. அதுவேறு ஏதாவது சாதாரண எண்ணெயாக இருந்தால் கூடப் பரவா யில்லை. பதப்படுத்தப்பட்ட மீன் டின் அது முட்டையைக் கூட இதுவரையில் சாப்பிட்டுப் பார்க்காத சுத்த சைவரான தெய்வ
 

புயலொன்று பூவானது 65
நாயகத்தின் மேல் சிறியமின் துணுக்குகள், மீனின்நெடி கொண்ட எண்ணெய், திகைத்து, திடுக்கிட்டுப் போய் விழிக்கும் தெய்வ நாயகம், எதிரில் முகம் சிவக்கச், சினம் கொப்புளிக்க, சிங் களத்திலே உரத்த குரலிலே சத்தம் போடும் ஒரு சின்ன வியா Listrft
அப்போதே "பெரிய முதலாளி' என்று பெயர் எடுத்திருந்த தெய்வநாயகத்தின் கடையில் கிட்டத்தட்ட இருபது பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய வாடிக்கையாளர்கள்!
ஒரு நிமிடம் கடையே ஸ்தம்பித்துப் போய்விடுகிறது! அடுத்த கணம் புன்னகையோடு எழுந்து நிற்கிறார் தெய்வ நாயகம். 'ஆயுபோவான்’ என்று சிங்களத்தில் வணக்கம் கூறிய வாறே, வாங்க! வாங்க! உட்காருங்க என்று நாற்காலியைக் காட்டுகிறார். பேசிக்கொண்டே ஒரு துணியால் தன்முகத்தை துடைத்தபடியே கேட்கிறார்.
'மாத்தைய்யா! என்ன பிரச்சினை? நான் என்ன செய்ய வேண்டும்?"
‘ஒரு டின் ஒரு ரூபாய் என்று 50 ரூபாய் கொடுத்து இந்தப் பெட்டியை வாங்கினேன். ஊரிலே போய் விற்றேன். வாங்கிப் போனவர்கள் திரும்பக் கொண்டு வந்து என்மேல் எறிந்தார் கள் உள்ளே இருந்த மீன் அழுகிப் போயிருந்தது! மீதியிருக்கிற மீன் டின்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அழுகல் மீனை ஏன் என் தலையில் கட்டினீர்கள்?"
'மாத்தையா என்ன சாப்பிடுகிறீர்கள்? to எடுத்துக்கிறீங்களா?”
'எனக்கு டீயும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம் இப்ப எனக்கு என்ன சொல்றீங்க?"
“கொஞ்சம் பொறுங்க! கோபப்படாதீங்க! ... யாரப்பா அங்கே! வாங்க! இதப் பாருங்க, நம்ம மாத்தையா வாங்கிட்டுப் போன மீன்கள் அழுகிப் போயிருக்கு. இந்த டின்கள் அத்தனை யையும் அப்படியே எடுத்துப் போய்த் தொலைவில் ஒரு குப்பைத் தொட்டியில போடுங்க இந்த கெட்டுப் ப்ோன டின்கள் நம்ம கடைக்குள்ள திரும்ப வரவே கூடாது சீக்கிரம். அப்படியே இந்த மேசையை துடைச்சி வையுங்க!” ". .

Page 92
66 இதோ ஒரு வெளிச்சம்
மேசை சுத்தமாகிறது. ஒரு வேலையாள் மீன் டின்களை தூக்கிப் போகிறான்.
“மாத்தைய்யா, எதையும் மனசிலே வெச்சிக்காதீங்க! வாங்கின சரக்கு கெட்டுப் போயிருந்தா எனக்குக்கூட இப்படித் தான் கோபம் வரும் இது ரொம்ப நியாயமான கோபம். இந்த மீன் பெட்டியை நீங்க 50 ரூபாய்க்கு வாங்கியிருக்கீங்க, ஊரி லிருந்து இங்க வந்துபோக எப்படியும் 5 ரூபா செலவாகியிருக் கும். தப்பா எடுத்துக்காம இந்த 55 ரூபாயை வாங்கிக்கிங்க!”
சிங்கள வியாபாரி கொஞ்சம் தயங்குகிறார்.
经
‘என்னால உங்களுக்கு நட்டம் வரவே கூடாது" தன் சட்டைப் பையிலிருந்து 55 ரூபாய்களை எடுத்து வந்தவரின் சட்ட்ைப்பையில் திணிக்கிறார். அதற்குள் தேநீர் வருகிறது.
வியாபாரி சற்று சங்கடத்துடன் அதைக் குடிக்கிறார்.
“மாத்தைய்யா, என்னிடம் தான் நீங்கள் சரக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் உங்களுக்கு இல்லை. இதோ, அக்கம் பக்கத்தில் நிறைய மொத்த வியாபாரிகள் இருக்காங்க! உங்க விருப்பப்படி யாரிடம் வேணும்னாலும் நீங்க சரக்கு எடுங்க! எப்படியோ கெட்டுப்போன மீன் டின் உங்களுக்கு வந்திடுச்சு டின்னுக்குள்ள மீன் எப்படியிருக்கும்ணு எங் களுக்குத் தெரியல; அது எங்கள மீறி நடந்த விஷயம். இதுக்கு மேலே அப்படி நடக்காம பாத்துக்கறோம். இந்த வியாபாரத்துக்கு மேலே முக்கியமா ஒண்ணு இருக்கு அது நமக்குள்ள இருக்கிற நட்பு. எப்ப வந்தாலும் மறக்காம கடைக்கு வாங்க!”
நிறையக் கூச்சல் போட்டுக் கத்தி, கூக்குரலிடப் போகி றோம் என்ற உணர்வுடன் வந்த வியாபாரிக்கு வாயடைத்துப் போகிறது.
தோளின் மீது கைபோட்டு அவரைக் கடையின் பின் பகுதியிலிருந்த உணவுக்கூடத்துக்கு அழைத்துப் போகிறார். சுவையான சாப்பாடு வருகிறது. உண்டபின் அந்த வியாபாரி ஒரு பட்டியலை எடுத்து "சரக்குகளைக்கட்டி எடுத்து வையுங் கள் நான் இரண்டு மணி நேரத்தில் என் வேலைகளை முடித்து விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுப் போகிறார். திரும்பி வந்து சரக்குகளை எடுத்துக் கொண்டு பில்லுக்குண்டான

புயலொன்று, பூவானது 67
தொகையைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக கிளம்பிப் போகி றார். வாசல் வரை வந்து வழி அனுப்பி வைக்கிறார் தெய்வ நாயகம். அவர் செலுத்திய பில் தொகை ரூ.6000/-
தன் ஊழியர்களை அழைத்துச் சொல்லுகிறார். 'மீன் டின்னை வெளியில் கொட்டியதால் நமக்கு நட்டம் 55ரூ. அவர் வாங்கிய 6000 ரூபாயில் 10 சதவீதம் லாபம் என்றால் கூட லாபம் 600 ரூ. மீனால் ஏற்பட்ட நட்டத்தைக் கழித்தாலும் கூட இவரால் நமக்கு லாபம் ரூ.545/. அது இன்றோடு முடிகிற வியாபாரமும் அல்ல. இந்த வருமானத்தை விட முக்கியம் நம் முடைய வாடிக்கையாளர் மனம் வாடக்கூடாது! அவர் எவ் வளவு கோபித்துக் கொண்டாலும் நமக்குக் கோபம் வரக் கூடாது'
‘இன்றைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் செய்தாலும் அன்றைக்குப் புளியைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி நான் விற்றவன் என்பதை என்றைக்கும் மறக்கமாட்டேன்’ என்று எல்லோரிடமும் கூறுபவர் தெய்வநாயகம்.
சிக்கல்களைத் தீர்ப்பதில் வெற்றி காணத் தன் தந்தை பயன்படுத்தும் கடைசிப்படி அவருடைய உழைப்புதான்.
கடுமையான உழைப்புக்கு அவருக்கு நிகர் அவரேதான். ஒரு செயலை எடுத்துவிட்டால் அதை நிறைவேற்றி முடிக்கும் வரை ஒய்வதில்லை. மனம் திறந்து முருகேஷ் சொல்லும் வார்த்தைகள் இவை. "அவர் ஒருவர் தனியாகச் செய்து முடிக்கும் வேலையை நான் செய்ய வேண்டுமானால் எனக்கு நூறுபேர் தேவை.'
'நாங்கள் காலையில் கண்விழிப்பதற்கு முன்னால் அவர் தன்னுடைய மூன்று மணிநேர வேலையை முடித்து விடுகிறார். அப்பா, இவ்வளவு உழைக்கக் கூடாது, சீக்கிரம் தூங்கப் போகணும், நிறைய ஒய்வெடுக்கணும்,' என்று நாங்கள் சொல்லும்போதெல்லாம் தலையை ஆட்டிவிட்டு வழக்கம் போல் உழைத்துக் கொண்டிருக்கும் அவரை அந்த வகையில் என்னால் ஏதும் செய்யமுடியவில்லை.
ஆனால் தன் பிள்ளைகளுக்கோ, பேரன் பேத்திகளுக்கோ உடல்நிலை சரியில்லாவிட்டால் துடித்துப் போய்விடுவார்.

Page 93
68 இதோ ஒரு வெளிச்சம்
ஒருமுறை தம் பேத்தி தெய்வநாயகியின் உடல்நிலை சரியில்லா மல் பாளையங்கோட்டை மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்த போது மருத்துவமனையில் பேத்தி அருகிலே பல மணிநேரங் கள் உட்கார்ந்து கடவுளை வேண்டிய நிகழ்ச்சிகள் ஒரு தாத் தாவுக்கே உரிய பாசம் நிறைந்த அனுபவங்கள்.
ஒரு பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் அதனை மற்றப் பிள்ளைகள் கூட்டாகச் சேர்ந்து அப்பாவுக்குத் தெரி யாமல் மறைப்பதும், அதனை எப்படியாவது தெரிந்துகொண்டு அவர் பதைப்பதும் அவருடைய குடும்பத்தில் நடக்கும் வழக்க மான நிகழ்ச்சிகள்.
எப்போதாவது இந்தியா வந்தால் சில நாட்களுக்கு மேல் அவருக்கு இருப்புக் கொள்ளாது! 1993ல் ஒருமுறை திருநெல் வேலி சென்றபோது படுத்த படுக்கையாகி விட்டார். நிற்கக்கூட முடியவில்லை; எப்போதுமே அவர் அப்படி ஆனதில்லை. நடக்கும்போது கூட யார் கையையாவது பிடித்துக் கொண்டு தான் நடந்தாக வேண்டும். உதவியாளர் குழந்தைவேலு உடனி ருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார். இருப்பினும் அவரிடம் கூடத் தான் ஒரு நோயாளி என்று காட்டிக் கொள் ளாமல் இருக்க முயலுவார். கிட்டத்தட்ட இரண்டு நீண்ட மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் திருநெல்வேலியில் கழித்துவிட்ட பிறகு ஒரு நாள் மாலை 5.00 மணிக்கு கொழும் புக்கு வந்து இறங்கினார்.
ஆறு மணிக்கு வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு ஏழு மணிக்கு யாரும் கையைக் கூடப்பிடிக்காமல் அவரே எழுந்து நடந்து, காரில் ஏறி வெளியே கிளம்பி இத்தனை நாள் விட்டு வைத்திருந்த வேலைகளை வழக்கம்போல் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
இரண்டு மாதங்களாக தெய்வநாயகத்தை ஆட்டிப் படைத்த நோய் இரண்டு மணிநேரத்தில் எப்படி மறைந்தது?
 

புயலொன்று பூவானது 69

Page 94
21. சிதறிய எரிமலை
எம்.எல். வசந்தகுமாரியின் தேனிசை அந்த அவையை நிரப்பியிருந்தது. புகழ்பெற்ற அந்த இசையரசியின் குழுவினர் தங்கள் முழுத்திறமையையும் காட்டி அவையினரை மயக்கி வைத் திருந்தனர். ஆடாத தலைகள் இல்லை, இளகாத நெஞ்சம் இல்லை; முருகனைப் பற்றி எம்.எல். வி. பாடியபோது பக்திப் பரவசத்தால் அந்த மண்டபம் மூழ்கியிருந்தது. ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலில் ஆடிவேல் விழா!
ஒவ்வொரு ஆண்டும் தமிழன்பர்கள் ஏக்கத்தோடு எதிர் பார்க்கும் விழா ஆடிவேல் விழா!
அன்று ஆடி வெள்ளி. காலை பித்துக்குளி முருகதாசின் கச்சேரி முடிந்து மாலை எம்.எல். வியின் இசை.
....சில நாட்களுக்கு முன் இலங்கையின் வடக்குப் பகுதியில் ஒரு இராணுவ வாகனம் கண்ணி வெடிக்குள் சிக்கியதால் 13 இராணுவ வீரர்கள் சிதறுண்டு தூக்கி எறியப்படுகிறார்கள். இலங்கை முழுக்கப் பரபரப்பு. மாண்டவர்களின் சடலங்கள் பொரளையில் உள்ள கனத்தை சுடுகாட்டுக்குக் கொண்டு வரப் பட்டு ஒரே இடத்தில் எரிக்கப்படுகின்றன. உணர்ச்சியைத் தூண்டும் இந்தத் தகன நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்பும் ஒரு கூட்டம் வருகின்ற வழியில் ஒர் உணவு விடுதியில் குடிக்கத் தண்ணிர் கேட்கச் செல்கிறது.
'தண்ணீர் கேட்க வருகிறார்களா? தாக்க வருகிறார்களா? என்ற பதட்டத்தில் உணவு விடுதிக்காரர் விடுதியை மூடுகின் றார். அருகிலே உள்ள கடைகள் பல அடைக்கப்படுகின்றன. ஏற்கனவே ஆத்திரத்திலிருந்த கும்பல் கடைகளைத் தாக்குகின் றது.
அதிகாலையில் படுக்கையை விட்டு எழும்பும்போதே விக்ரம சிங்கவின் மனத்தில் ஒர் இனம் புரியாத உணர்வு நிரம்பி
 

சிதறிய எரிமலை 7
யிருந்தது. ‘இன்று ஏதோ நடக்கக் கூடாதது ஒன்று நடைபெறப் போகிறது' என்று அவருடைய உள்ளுணர்வு சொல்ல ஆரம் பித்துவிட்டது. தன்னுடைய முக்கியமான உடைமைகளைப் பெட்டியில் போட்டுக் கொண்டு மனைவி, குழந்தையோடும் தனது தெகிவலை வீட்டை விட்டு வெளியேறுவது எனத் தீர் மானித்தார்.
முதலில் இந்தியத் தூதரகத்தில் ஓர் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் தன்னுடைய நண்பரின் வீட்டிற்குப் போகலாமா என்று எண்ணினார்.
பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். வீரகேசரி யில் பணியாற்றிய காலத்தில் அவர் அடிக்கடி ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலுக்கு வந்திருக்கிறார். முருகனோடு இருந்த ஐக்கியம் அவரை இழுத்தது. ஆகவே மூட்டை முடிச்சுக்களுடன் முருகன் கோயிலை நோக்கி நடைபோட ஆரம்பித்தார். காலை யிலேயே அவர் குடும்பம் முருகன் ஆலயத்தில் பாதுகாப்பாக அடைக்கலமாகி விட்டது.
கொஞ்ச நாட்களாகவே தெய்வநாயத்தின் வீட்டிற்கு அடிக் கடி தொலைபேசியின் மூலம் எச்சரிக்கைகள், 'ஐயா, ஏதோ ஒரு பெரிய ஆபத்து வரப்போகிறது; எச்சரிக்கையாக இருங் கள்' என்ற முன்னறிவிப்புக்களாகவே அந்தத் தொலைபேசி செய்திகள் இருந்தன.
'நம்மை யார் என்ன செய்யப் போகிறார்கள்? நாம் யாருக் காவது கெடுதல் செய்திருந்தால்தானே நமக்கு கெடுதல் வரும்? நமக்கு யார் எதிரிகள்?’ என்ற சிந்தனை ஒட்டத்தில் தெய்வ நாயகம் இந்த எச்சரிக்கைகளை ஒருபோதும் பொருட் படுத்தியதில்லை.
1983 ஜூலை மாதம் 24ந் தேதி ஆடிவெள்ளி! அன்றுதான் இந்த இன்னிசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
'எந்த நிலையில் அல்லல் படப்போகிறோம்’ என்று தெரி யாத நிலையில் வசந்தகுமாரி குழுவினர் தேனிசை பொழிய,
இன்னும் சில மணிநேரத்தில் இசைபட வாழ்ந்தவர்கள்

Page 95
72 இதோ ஒரு வெளிச்சம்
ஒல அழுகைக் குரலெழுப்பப் போவது தெரியாமல் இசை கேட்க,
அகதி முகாமாக மாறப்போகும் ஆலயம் இவற்றிற்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்தது!
தெய்வநாயகம், முழுமையாகத் தம்மை மறந்து முருகனுக்கு நடக்கும் விழாவில் உள்ளமுருக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, 'எல்லாம் ஒழுங்காகப் போகிறதா?’ என்று கவனித் துக் கொண்டிருக்கிறார்.
சோமு அண்ணாச்சி ஓடி வந்து குனிந்து காதருகில் 'கல வரம் வெடித்து விட்டதாம்! ஆங்காங்கே வீடுகள் தீப்பிடித்து எரியுதாம்! நாம கச்சேரியை முடிச்சுகிட்டா நல்லது!’
‘'நீ ஒரு பயந்தாங்கொள்ளி! அதெல்லாம் ஒரு தொல்லை யும் வராது போ! போ! போய் வேலையைக் கவனி! முருகன் சந்நிதியில் கச்சேரி பாதியில் முடியக்கூடாது!’
தொடர்ந்து இரண்டு மூன்று பேர் கொழும்பைச் சுற்றிக் கலவரம் வெடிக்கிறது' என்று கூற ஆரம்பித்த உடன் தான் தெய்வநாயகம் கச்சேரியை நிறுத்தும் முடிவுக்கு வந்தார். அந்த அறிவிப்பைச் செய்யுமுன் மக்கள் அவரவர்களுடைய வீட்டிற்குச் செல்வதற்கான, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. 'நம்மைச் சுற்றி ஆபத்து காத்திருக்கிறது. அச்சப் படாமல் வீட்டிற்குக் கிளம்புங்கள். வாகன வசதி செய்திருக் கிறோம்’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்தபின் அவரவர்களை அவர்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கும் வேலைகள் தொடங்கின!
பதட்டமான இதயங்களுடனும், சுருங்கிய முகங்களுடனும் வேகவேகமாக மக்கள் பதறியபடி கோவிலை விட்டுச் சென் றனர். சிலர் முருகனே கதி! என்று கோயிலிலேயே தங்கிவிட் டனர்.
இதை முற்றிலும் எதிர்பாராத இசைக் குழுவினர் 'உயி ரோடு இந்தியா போய்ச் சேருவோமா? ஏன் இலங்கை வந் தோம்?’ என்று அங்கலாய்க்க, ஆரம்பித்தனர். எல்லோரையும் அனுப்பி வைத்து விட்டு தெய்வநாயகம் 'இசைக் குழுவினரை என்ன செய்வது? என்று எண்ணியபடி அவர்கள் ஏற்கனவே

சிதறிய எரிமலை 73
தங்கியிருந்த தன்வீட்டிற்கு அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
'தம்பூராவாவது, தவிலாவது!’ என்று இசைக் கருவி களைப் போட்டது, போட்டபடி எம்.எல்.வி குழுவினரும் காரில் ஏறி தெய்வநாயகத்தின் வீடு நோக்கிக் கிளம்பினர்.
சுற்றிலும் சிங்களவர்கள் வீடுகளிருந்தாலும் தெய்நாயகத் தின் வீடு மிகவும் பாதுகாப்பான பகுதி. அவருக்கு எதிரிகள் கிடையாது;~ எல்லோரும் நண்பர்களே! ஆகவே மிகவும் பாது காப்பான தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறோம். தன் அழைப்பை ஏற்று கொழும்பு வந்த கலைஞர்களுக்கு எந்தத் துன்பமும் வராது’ என்று தனக்குள் எண்ணியவாறு அனை வரையும் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
ஆபத்தான அந்த இரவு மெதுவாக நகரத் தொடங்கியது. நகரெங்கும் ஒலக்குரல்களாகவும், புகை மண்டலங்களாகவும் இருந்தன. இலங்கைக்கு ஒரு சாபக்கேடு போலும்; அன்று அனுமனால் இலங்கை எரிந்தது. இன்று சீற்றமும், சிறுமதியும் கொண்ட கும்பலினால் இலங்கையின் சில பகுதிகள் எரிந்து கொண்டிருந்தன.
‘எங்கே புகலிடம் தேடுவது?’ என்ற கேள்விக்குறியைப் புருவங்களிலே சுமந்தபடி பல தமிழ்க் குடும்பங்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன!
மிகவும் வசதியான குடும்பங்கள் நட்சத்திர விடுதிகளில் ஒண்டிக் கொண்டன! பலர் தங்களை மிகவும் நேசித்த சிங்களக் குடும்பங்களில் தஞ்சம் புகுந்து அவர்களுடைய வீடுகளிலே தங்கி விட்டார்கள்! வசதியும் இல்லாமல், நண்பர்களும் இல்லாமல் போக்கிடமும் இல்லாதவர்கள் அகதி முகாம்களிலும், கோயில் களிலும் தஞ்சம் புகுந்தார்கள்.
விடியாத அந்த இரவின் கோரங்களைப் பற்றி எண்ணக் கூட முடியாத நிலையில் இருந்தார் தெய்வநாயகம்.
சாவைப் பற்றி அஞ்சுகின்ற வழக்கம் என்றைக்குமே அவருக்கு இருந்ததில்லை!
வெவ்வேறு வீடுகளில் இருக்கும் தன் பிள்ளைகளைப் பற் றிய கவலைகூட அதிகமாக இல்லை; தன் பிள்ளைகள் புத்திசாலி

Page 96
I 7 4 இதோ ஒரு வெளிச்சம்
கள், நல்லவர்கள்; வல்லவர்கள்; அவர்களுக்கு ஆபத்து வராது; அப்படியே வந்தாலும் தப்பித்துக் கொள்வார்கள் என்று உறுதி யாக நம்பினார்.
'முருகன் கோயிலிலிருந்து தங்கள் இல்லங்களுக்குப் போனவர்கள் என்ன ஆகியிருப்பார்களோ?
எத்தனை குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின் றனவோ?
பெண்களின் நிலை என்ன?
சின்னக் குழந்தைகளின் கதி என்ன?
முருகா! இந்த மக்களை, உன் குழந்தைகளைக் காப் பாற்று' கண்ணிர் விட்டுத் தன் பூஜை அறையிலே உட்கார்ந்து முருகனிடம் வேண்டினார். ஆனால் அப்படி நீண்ட நேரம் வேண்டி அழக்கூட அவருக்கு நேரமில்லை. காரணம், அதை விடப் பெரிய பொறுப்பு அவர் கண்முன் காத்து நின்றது!
ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலிலே, தமிழன்பர்கள் முன்னி லையில் இசை மழை பொழிவோம்; தமிழ் மக்களின் பாராட் டுக்களை ஏற்போம்; அழகிய இலங்கையின் புண்ணியத் தலங் களைச் சுற்றிப் பார்ப்போம்; பல நற்குடும்பங்களின் விருந் தோம்பலிலே திளைப்போம் என்று எத்தனையோ கனவு களைச் சுமந்தபடி எம்.எல்.வியின் இசைக்குழு இலங்கை வந் திருக்கும்!
ஜிந்துப்பிட்டி முருகன் ஆலய நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றுத்தானே வந்தார்கள்! அவர்களை எப்படித் திரும்ப இந் தியா அனுப்பி வைப்பது?
அடுத்த நாள். கண்ணீர்க் கடலில் நனைந்தபடி கலக்கமாகக் கதிரவன் உதித்தான்!
நேற்றைய நிகழ்ச்சிகள் ஒருவேளை மிரண்டுபோய் நாம் கண்ட கனவுகளாக இருந்திருக்கக் கூடும். இன்றைய நாள் நன் னாளாக இருக்கும்’ என்ற அசட்டு நம்பிக்கையோடு மக்கள் எழுந்தனர்.

சிதறிய எரிமலை 75
மலை குலைந்தாலும் நிலைகுலையாத ஈஸ்வரன் வருவது வரட்டும்' என்று உறுதியோடு அலுவலகம் சென்றார். ஆனால் அலுவலகத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாக இருந்தது. வராமைக்குக் காரணம் அச்சம் கூட இல்லை; வருவதற்கே வாய்ப்பில்லாமல் சிக்கல்கள் என்பதைப் புரிந்து கொண்டார்.
தொலைபேசி மூலம் வந்த செய்திகள்; அன்பான எச்சரிக் கைகள் அவருக்கு தழ்ந்துவரும் பேரபாயத்தின் கொடூரத்தைப் புரிய வைத்தது. 'தனியாக இருக்கும் தந்தை என்ன செய்வார்? என்ற எண்ணத்தில் அலுவலகத்திலுள்ளவர்களை வீடுகளுக்கு அனுப்பிவிட்டு, பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு, தன் வீட்டி லிருக்கும் மனைவி, மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் நேரா கத் தந்தையின் இல்லம் நோக்கி விரைந்தார். "தந்தை வீட்டிற் குச் சென்று பார்த்து விட்டுப் பின்னால் தன் வீட்டிற்குப் போக முடியாமல் அங்கேயே சிக்கிக் கொள்ளப் போகிறோம்’ என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!
ஷீலா டிசில்வா!
ஒரு பாரம்பரியம் மிக்க பணக்காரக் குடும்பத்திலே பிறந்து செல்வாக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்மணி. கணவர், கம்பீரமான இரண்டு பிள்ளைகள், அழகான மகள் ஆக ஐந்து பேர் கொண்ட அவர்களுடைய மகிழ்ச்சியான குடும்பத்தின் பக்கத்து வீடு ஒருகாலத்தில் வசீலாவின் அம்மாவிற்குச் சொந்த மாக இருந்தது. அந்த வீட்டின் வெளிப்புறச் சுவரை அடுத்து உள்ளே இருக்கின்ற பெரிய பலா மரத்தை நட்டது அம்மா தான். வெட்டினால் பால் சுரக்கின்ற பலா, இரப்பர் போன்ற மரங்களை வீட்டின் முற்பகுதியில் நட்டால் அந்த வீடு செல்வச் செழிப்போடு விளங்கும் என்பது சிங்களவர்களின் நம்பிக்கை! அத்தைகளின் திருமணச் செலவுக்குப் பணம் தேவைப்படவே, அந்த வீட்டை ஒரு தமிழ்க் குடும்பத்திற்கு ஷரீலாவின் அம்மா விற்றார்கள்.
ஷிலா, டிசில்வா சிறுமியாக இருந்தபோது எப்போதும் விளையாடும் வீடு அந்தத் தமிழ் வீடுதான்; அங்கேதான் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டது! அந்த வீட்டுக் குழந்தைகள் அவர் களுடைய தாயை 'அம்மா’ என்று அழைத்தால், ஷீலா "ஆச்சி’ என்று கூப்பிடுவார். அதுதான் வேறுபாடு. மூன்று ஆண்களுக்

Page 97
76 இதோ ஒரு வெளிச்சம்
குப் பின் நான்காவதாகப் பிறந்த பெண் வீலா, வளர்ந்தது கூட ஒர் ஆணைப் போலத்தான். ஆச்சி வீட்டிலிருந்து தன் வீட் டிற்குச் செல்லவோ, அங்கிருந்து இந்த வீட்டிற்கு வர வேண்டு மென்றால் வாயிற் கதவின் வழியாக வந்து பழக்கமில்லை. இடையிலே உள்ள குறுக்குச் சுவரின் மீது ஏறிக் குதிப்பதுதான் அவருக்குத் தெரிந்த வழி.
ஆச்சி பதறிக்கொண்டே 'ஷரீலா - அசட்டுப் பெண்ணே, ஒரு வயதுக்கு வந்த பெண் இப்படியெல்லாம், தாண்டி குதிக் கக் கூடாதும்மா!' என்று புத்தி சொன்னால் 'போங்க ஆச்சி! நான் அப்படித்தான் குதிப்பேன்!” என்று சிரித்துக்கொண்டே பேசிய இளம் பெண் வுலா டிசில்வா 1983 கலவர காலத்தின் போது ஒரு நடுத்தர வயதுப்பெண்மணி - மூன்று இளம் பிள்ளை களின் தாய்!
அன்றைய நாளில் ஷீலா டிசில்வாவின் மனம் மிகவும் குழம்பிப் போயிருந்தது. சாலைகளில் பரபரப்பும், கூச்சலும் அவரைக் கவலை கொள்ளச் செய்தன!
எதிர் வீட்டில் தன் குழந்தையோடு தனியாக இருந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் கூக்குரலைக் கேட்டவுடன் அவருடைய வயிறு கலங்கியது. வீட்டின் முன் கதவை ஒரு கூட்டம் உடைக்க முயற்சி செய்ய, புறக்கடையில் உயர்ந்த சுவருக்கு அப்பால் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் நிலையை வீலாவால் புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த சில நிமிடங்களில் அவருடைய மூத்த மகன் ஏணியுடன் எதிர்ச் சுவருக்கு ஒடினான். சுவரின் மீது ஏணியைச் சாத்தி மேலே ஏறி, அதே ஏணியை மறுபுறம் வீட்டுக்குள் இறக்கி அந்தப் பெண்ணையும், குழந்தையையும் ஏற்றித் தெருவிலே இறக்கிக் கண் இமைக்கும் நேரத்தில் சாலையைக் கடந்து ஷிலா வீட்டிற் குள் ஒடினார்கள். தோளிலே குழந்தையும் மடியிலே நகைகளும் கட்டிய துணியோடும் உள்ளே ஓடி வந்த அந்தப்பெண் மயக்க மாக விழுந்தாள். சிறுவயதிலே சுவரைக் குறுக்காகத் தாண்டிய வுலா டிசில்வாவிற்குத் தன் மகன் சுவரைத் தாண்டி இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. சுவரிலே மாட்டியிருந்த இயேசுநாதரின் படத்தைப் பார்த்தபடி "கர்த் தரே, உங்களுக்கு நன்றி!' என்று முணுமுணுத்தபடி திரும் பினார். 'திபுதிபு’வெனத் தன் வீட்டினுள் சிலர் ஓடி வந்து

சிதறிய எரிமலை 77
நுழைவதைக் கண்டார். ஒரு குடும்பம் வீலாவின் படுக்கையறைக் குள்நுழைந்து எல்லாக் கதவுகளையும் இறுக்கித் தாளிட்டுக் கொண்டுவிட்டது. அதுமட்டுமன்று, யார் சொன்னாலும் கதவைத் திறக்க மறுத்தும்விட்டது.
இருந்தும் ஷீலா டிசில்வாவிற்கு ஒரு குறை இருந்தது. பக் கத்து வீட்டிலிருப்பவர்கள் என்ன ஆனார்கள்? தெருவெங்கும் பரபரப்பாக இருக்கிறதே, அவர்களுக்கு ஏதும் ஆபத்தில் லையே?’ கூச்சல் போட்டால் அவருக்கே ஆபத்து என்று இருந்த போதும் வீலா பக்கத்து வீட்டிலிருந்தவர்களைப் பார்த்துத் தமி ழில் எச்சரிக்கையுடன் கூவினார் 'ஆச்சி வாங்க! ஆச்சி வாங்க! எல்லோரும் வாங்க! உடனே வந்திடுங்க!” அதுவரையில் பர பரப்புடன், குழப்பத்திலிருந்த பக்கத்து வீட்டிலிருந்த தமிழ்க் குடும்பம் சில வினாடிகளில் வீட்டின் பின்னாலிருந்த சந்தின் வழியாக, தெருவிலிருந்தவர்கள் கண்ணில் படாமல் அந்தப் பிற்பகல் நேரத்தில் டிசில்வாவின் வீட்டிற்குள் நுழைந்தது. உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்து டிசில்வா உணர்ச்சியுடன் கூவினார். 'ஆச்சி, முதலாளி, உங்களையெல்லாம் நாங்க காப் பாத்தறோம். தைரியமாக இருங்க!' ஆம்! வீலா டிசில்வாவின் பக்கத்து வீட்டிலிருந்தவர்தான் தெய்வநாயகம்.
தெய்வநாயகம் குடும்பத்தில் எல்லோரும் அங்கு இல்லை என்றாலும் நிறையப் பேர் இருந்தார்கள். பல குடும்பங்களைச் சார்ந்த தமிழர்கள், கட்டிய உடுப்புக்களோடு, அங்கே திரண்டி ருந்தார்கள்.
கிட்டத்தட்ட அறுபத்து ஆறுபேர் அந்த வீட்டில் இருந்தார் கள். குழந்தைகள் முதல் முதியவரான தெய்வநாயகம் வரை. அத்தனை பேர் முகங்களிலும் கலக்கம். ‘இனி என்ன நடக்கப் போகுமோ?’ என்ற கேள்விக்குறி:
ஆங்காங்கே இருக்கிற நண்பர்கள் - உறவினர்கள் என்ன ஆனார்களோ?’ என்கின்ற கலவர உணர்வு. சாலையில் ஆர வாரங்கள்!
சத்தம் போட்டால் ஆபத்து' என்று சின்னக் குழந்தை யைக் கூட அழவிடாமல் பார்த்துக் கொண்டு அத்தனை பேரும் இருந்த தழ்நிலையில்,
இரண்டு சிறிய குழந்தைகள் - ஒன்று முருகேஷின் மனைவி

Page 98
78 இதோ ஒரு வெளிச்சம்
மீனாவின் கைக்குழந்தை கலா, மற்றக் குழந்தை எம். எல். வசந்த குமாரியின் பேத்தி.
இந்தக் குழந்தைகளுக்குப் பாலைப்புகட்டிவிட பாலூட்டும் போத்தலும் இல்லை; அவை குடிக்கும் பால் மாவும் இல்லை ... வெளியே தலைகாட்ட நடுங்கும் அந்த வேளையில் தெய்வ நாயகத்தின் கார் ஒட்டுநர் ஒருவர் சுவர் தாண்டி ஒடிப்போய்ப் பக்கத்து வீட்டிலிருந்த பால் போத்தலையும் பால் மாவையும் கொண்டு வந்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி வந்தது.
அத்தனை முகங்களையும் பார்த்த ஷிலா டிசில்வா, மெது வான ஆனால் உறுதியான குரலில் கூறினார். ‘ஒரே நம்பிக்கை யோடு நாம் கர்த்தரை நோக்கிப் பிரார்த்தனை செய்வோம். நான் வழிபாட்டை நடத்துகிறேன்.'
A சுவரிலே மாட்டப்பட்டிருந்த இயேசுநாதரின் திருவுரு வத்தின் கீழே, ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியின் ஒளி, நம்பிக்கை வெளிச்சத்தைப் புகட்ட, அனைவரும் ஷிலா வின் உள்ளத்தை உருக்கும் ஜெபத்தில் தங்களை மறந்து மண்டி யிட்டு நின்றார்கள். −
இரத்தினபுரியைச் சேர்ந்த ஒரு சிறுவியாபாரி தங்கராஜா மெள்ள, மெள்ள வளர்ந்து, தன் வணிகத்தை வளர்த்து, சில இலட்ச ரூபாய் சொத்தும் சேர்த்து வைத்திருந்தார். கலவரம் வெடித்த நேரத்தில் வேறு ஒரு கட்டிடத்தில் நான்கு பேரோடு பதுங்கியிருந்தபோது ஒரு வெடிகுண்டு உள்ளே விழுந்து சிதறி யது. உடனிருந்த ஒருவர் அங்கேயே சின்னாபின்னமாகச்
 

சிதறிய எரிமலை 79
சிதறிய காட்சியைப் பார்த்ததும், எந்த இடமும் பாதுகாப் பில்லை என்று அச்சத்தைத் துறந்துவிட்டுத் தன் கடையோடு ஒட்டிய வீட்டிற்கு வந்தார். அவர் கடை, வீடு, பொருள்கள் எல்லாம் அன்றைய மதிப்பின்படி ரூபாய்நாற்பது இலட்சம் பெறும். அத்தனையும் கொழுந்து விட்டு எரிவதைப் பார்த்தார். இதயத்தில் அதிக அனலா - அல்ல தன் உடைமைகளில் அதிக அனலா என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சட்டென்று ஏதோ உணர்வு வந்தவுடன் சட்டைப்பையில் விரல் களை விட்டுத் துழாவினார். இனி அவருக்கு எஞ்சிய சொத்து அவரும், அவர் சட்டை, வேட்டி, சட்டைப் பையில் இருந்ததும் தான். எண்ணிப் பார்த்தபோது நூற்றி இருபது ரூபாய் இருந் தது. 'இப்போதைக்கு இது போதும். இதை வைத்துக் கொண்டு எப்படியாவது கொழும்பு போகலாம். தெய்வநாயகம் முதலாளி யிடம் போய்ச் சேர்ந்து விட்டால் நம் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.'
எரியும் வீட்டுக்கு நடுவில் கூட தன்னம்பிக்கைச் செடி துளிர்விட, தன் வீடாக இருந்த தணல் பிழம்புகளைப் பார்த்த tut தங்கராஜா நின்று கொண்டிருந்தார்.
அதிக அழிவை அள்ளிக் கொட்டிய அந்த நாள்தான் இலங்கை வரலாற்றில் அழியாத நாள். கொடூரமான அந்த நாளில் அரக்க உணர்வுகள் கோரத் தாண்டவத்தை ஒரே இரவில் அரங்கேற்றிய அரங்குகள் ஏராளம்!
மாத்தளை ஓர் அழகிய ஊர். இலங்கையின் மிகப் பெரிய மாரியம்மன் கோயில் அந்த ஊரின் புகழுக்கு அணி சேர்த்தது. அக்கோயிலின் தேர் மிகப்பழமையான தேர் மட்டுமன்று; இலங்கையின் மிகப்பெரிய தேரும் கூட.
மாரியம்மன் கோயிலின் அறங்காவல் குழுத்தலைவர் த. மாரிமுத்துச் செட்டியார் ஒரு சிறந்த வர்த்தகர். எண்ணெய் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த அவர் பல லாரிகளையும் வைத்துப் போக்குவரத்துத் தொழிலையும் திறம்பட நடத்தி வந் தவர். தன் பெரிய மாளிகையும், முன்னே நின்று கொண் டிருந்த பல லாரிகளும் அந்த இரவில் எரிவதை அவரும், அவர் மனைவியும், பிள்ளைகளும் பார்த்தபடி நின்றனர்.
தீப்பிழம்பின் அத்தனை வெளிச்சத்திலும் அவருடைய கண்

Page 99
80 இதோ ஒரு வெளிச்சம்
கள் இருண்டன; மயக்கம் வருவது போலத் தோன்றியது!
'மாரியம்மா! உன்னையே எண்ணி நம்பி, உன்னையே வழிபட்ட எங்களுக்கா இந்த கதி! இது நியாயமா தாயே!” என்று அழுதபடியே, கோயிலிருந்த திசையை நோக்கித் திரும் பினால்,
இலங்கையின் மிகப் பெரிய சித்திரத் தேர் 'திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் என்று பெருந்தலை வர்களெல்லாம் இருந்து அந்தத் தேரின், தேரோட்டும் விழாக் களில் கலந்து கொண்ட நாள்களெல்லாம், கண்களின் நீரோட் டத்தில் கரைந்து கொண்டிருந்தன.
பல இலட்சம் பக்தர்களைப் பரவசப்படுத்திய அந்தத் தேர் பிழம்பாக எரிந்து, சாம்பலாக மாறிக் கொண்டிருந்த காட்சியை மாரிமுத்து கண்டார்.
தாங்கள் கட்டி வைத்த சாம்ராஜ்யமும், தங்களுக்காகக் காத்திருந்த சாம்ராஜ்யமும், ஒரே நேரத்தில் எதிரும், புதிருமாக எரிவதைக் கண்டனர் மாரிமுத்துச் செட்டியாரின் குடும்பத் தினர்.
கட்டிய உடுப்புகளோடு நின்ற அவர்கள் ஒரு மணி நேரம் முன்பு வரை இலட்சாதிபதிகள், இப்போது.
கொடிய விதியின் கரங்கள் அன்று உண்மையில் கற்பனைக் கும் எட்டாத வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தன!
தெய்வநாயகத்தின் முகம் மேலுக்கு அமைதியைக் காட்டிக் கொண்டிருந்தாலும் அவருடைய சிந்தனைகள் துறாவளி வேகத் தில் இயங்கிக் கொண்டிருந்தன. - விதியை நொந்து அழக்கூட நேரமில்லை, விதியின் கொடுமையை விமர்சிக்க நேரமில்லை. வருவது ஏதாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை! உடனடியாக ஏதேனும் செய்தாக வேண்டும். முதலில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற குடும்ப உறுப்பினர்களை ஒன்று திரட்ட வேண்டும்.

சிதறிய எரிமலை 8
நல்ல வேளையாக தொலைபேசித் தொடர்புகள் துண்டிக் கப்படவில்லை.
இதற்கிடையில் இலங்கையின் பல அமைச்சர்கள், அதிகாரி கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘என்ன வேண் டும்?' 'என்ன செய்யட்டும்? என்று பரிவுடன் கேட்டபடியிருந் தனர்.
தெய்வநாயகம் கேட்ட முதல் உதவி திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் குழுவினரைப் பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி இந்தியா அனுப்ப வேண்டுமென்பதே!
சற்றுநேரத்தில் இரண்டு வாகனங்கள் நிறைய இராணுவ வீரர்கள் நடுவில் ஒரு காரோடு வர அந்தக் காரில் எம்.எல்.வி யின் குழு ஏறிக் கொள்ள மிக்க பாதுகாப்புடன் அவர்கள்
கட்டுநாயக்க விமான நிலையம் சென்றார்கள்.
அங்கிருந்து 'நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். அடுத்த விமானத்தில் சென்னை சென்று விடுவோம். எங்களைப் பற்றி இனி பயமில்லை; ஐயா, நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்! மிக்க நன்றி ஐயா!' என்று எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் நாத்தழுக்க விமான நிலையத்திலிருந்து பேசியபோது 'முருகா! கலைஞர்களைக் காப்பாற்றி விட்டாய்! உனக்கு நன்றி!' என்று தெய்வநாயகம் வேண்டிக் கொண்டார்.
இரவு நகர மனமில்லாமல் மெதுவாக நகர்ந்து கொண்டி ருந்தது. தங்களை நம்பி வந்த கலைஞர்களைப் பாதுகாப்பாக வழியனுப்பிய பின் சற்று நிம்மதியடைந்த தெய்வநாயகமும், ஈஸ்வரனும் அடுத்த நடவடிக்கையில் இறங்குவதெனத் தீர் மானித்தனர். சிதறிக் கிடக்கின்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிடைக்கும் பாதுகாப்புகளை வைத்துக் கொண்டு 'ஹாலிடே இன்’ விடுதிக்கு வந்து சேர்ந்து கொள்வது என்று முடிவெடுக் கப்பட்டிருந்தது. அடுத்த நடவடிக்கையை விடுதி யில் திட்டமிடலாம் என்று முடிவுக்கு வந்தனர்.
முதல்நாள் மாலை "ஆச்சி வாங்க! ஆச்சி வாங்க!' என்று வுலா டிசில்வா தங்கள் குடும்பத்தைக் கூவி அழைத்த போது தெய்வநாயகம் ஒரு விந்தையான செயலைச் செய்தார். எல்லோ ரையும் பக்கத்து வீட்டிற்கு ஓடச் சொல்லிவிட்டுக் கடைசியாகத் தான் அவர் வுலாவின் வீட்டிற்கு வந்தார்.

Page 100
82 இதோ ஒரு வெளிச்சம்
தம் வீட்டை ஒருமுறை ஆசைதீரப் பார்த்தார். ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் னர்தான் அந்த வீட்டைக் கட்டிப் புதுமனை புகு விழா நடத்தி யிருந்தார்.
ஒவ்வொரு கதவும், சன்னலும் உறுதியான தேக்கினால் கடைந்து அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. வீட்டின் முகப் பில் இரண்டு யானைச் சிலைகள் அழகாகச் செதுக்கப்பட்டு, வரவேற்பதுபோல் நின்றிருந்தன!
இரண்டு ஆண்டுகளே ஆன அந்த வீட்டின் புதுமெருகு இன்னும் குலையவில்லை.
இனி இந்தவீட்டின் அழகையும், பெருமையையும் எண்ணிப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை.
முதல் வேலையாக, வீட்டின் அத்தனை கதவுகளையும், சன்னல்களையும் திறந்து வைத்தார். தம் வீட்டுக் கதவுகளை யாரும் உடைத்துச் சின்னாபின்னப்படுத்துவதை, அவர் விரும்ப வில்லை. ·
வீடு நிறைய பொருள்களாக இருந்தன!
தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம் என்று நிறைய கருவிகள்; புதுமனை புகுவிழாவிற்கென அன்பளிப்பாக வந்து மலைபோல் குவிந் திருந்த பரிசுப் பொருள்கள், ஆடைகள், பாத்திரங்கள், குறிப் பாக பட்டுப்புடவைகள் என்று எவ்வளவோ பொருட்கள் வீடு முழுக்க இருந்தன!
வி.ரி.வியின் வியர்வைத் துளிகள் விதவிதமான பொருள் கள் வடிவத்தில் வீட்டை நிரப்பி வைத்திருந்தன.
‘கொள்ளை அடித்துப் போகிறவர்கள் கூட சிரமப்படாமல் வசதியாக எடுத்துப் போகட்டுமே" என்று இரும்புப் பெட்டிகள் உட்பட, எல்லா பெட்டிகளையும் திறந்து வைத்தார். திறந்த வீட்டின் திறந்திருந்த கதவுகள், திறந்திருந்த பெட்டிகள். மனமும் விசாலமாகத் திறந்திருந்தது.
தம்மை நாடி வருபவர்களுக்கெல்லாம் சேவை செய்தே பழக்கப்பட்டவர், கொள்ளையடிக்க வருபவர்களுக்கும் வசதி

சிதறிய எரிமலை 83
செய்து வைத்து விட்டு பக்கத்திற்கு வீட்டிற்கு வந்தார். ஆனால், கிளம்புமுன் மிக எச்சரிக்கையாக பெட்டிகளிலிருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.
இரவின் ஆர்ப்பாட்டங்கள் அலைக்கழிக்க அடுத்த நாள் இரத்தத்தில் குளித்திருந்த துரியன் வெம்மையாக எழுந்தான்.
தெய்வநாயத்தின் வீட்டின் முன்னால் நின்றிருந்த அவரு டைய மிகவும் விலையுயர்ந்த ஜப்பானியக் கார் சாம்பலாகவும், இரும்புக் கூடாகவும் இருந்தது!
நேற்றைய காலை கண் விழித்தபோது, பணக்காரர்களாக விழித்த பலர், இன்று காலை ஒட்டாண்டிகளாக நிலை மாறி யிருந்தனர். நேற்றுப் பஞ்சு மெத்தைக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பலர் இன்று கோயில் மண்டபங்களில், கட்டாந் தரையில் படுத்துக் கிடந்தார்கள்.
மகிழ்ச்சியும், மனநிறைவும் இதயங்களைக் காலி செய்து விட்டு ஓடிமறைய, வேதனையும், அச்சமும் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டன.
'காலம் என்பது கறங்குபோல் சுழன்று மேலது கீழாக் கீழது மேலாய், மாற்றிடுந் தோற்றம்.
என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மனோன்மணியத்தில் கூறியது போல, காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி வைத்துவிட்டது. m

Page 101
8.4 - இதோ ஒரு வெளிச்சக்
இரவிலே தொடங்கிய கலவரம் பகலிலே மேலும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
கண்டியில் அரசு ஊழியராகப் பணியாற்றி வந்த அரிய ரத்தினம் பேராதனைப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தன் மனைவி பாலினோடும் பெண்கள் மனோராணி, நிர்மலா, ஜீவாவோடும் வாழ்ந்து வந்தவர். குறி வைத்து அவர் வீடு தாக்கப்பட்டது! எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தப்பியோடி யவருக்கு அடைக்கலம் கொடுத்தது அருகே இருந்த ஒரு சிங் களவர் வீடு. கட்டிலுக்கு அடியில் ஒளிந்தபடி நாட்களைக் கடத்த வேண்டியதாயிற்று! அப்போது அவர் மனம் எண்ணியது ‘இனி நாம் வாழ இலங்கை உதவாது லண்டனில் இருக்கும் தன் மனைவியின் சகோதரிகள் தர்மக்கன், சாரா இருவருடனும் போய்ச் சேர்ந்து விடுவதே நல்லது.
வின்சென்ட் பெரேரா மிக எளிமையான மனிதர். தன் அரசியல் வாழ்க்கையை நகர மன்ற உறுப்பினராகத் தொடங்கி யவர். படிப்படியாக உயர்ந்து இலங்கை அரசின் அமைச்சராக வந்தவர். பல ஆண்டுக்காலமாக தெய்வநாயகத்தின் நெருங்கிய நண்பர். யாருக்காவது வேலை வாங்கித்தர வேண்டுமென விரும் பினால் அவர் வி.ரி.வி நிறுவனத்துக்கு ஆளை அனுப்பி வைப் பார். வேலையும் கிடைத்துவிடும்.
அன்று அவர் நிலை கொள்ள முடியாமல் தவித்தார். தன் நண்பர் தெய்வநாயகம் எப்படி இருக்கிறாரோ? தொலைபேசி யில் தொடர்பு கொண்டு அவரே கிளம்பி ஷீலா டிசில்வாவின் வீட்டுக்கு வந்தார்.
போலீஸ் பாதுகாப்பு வசதிகளோடு தெய்வநாயகத்தின் குடும்பத்தினரைக் கொண்டு போய் 'ஹாலிடே இன்னில் விட்டு விட்ட பிறகே அவர் நிம்மதியாகத் தன் வீட்டிற்குத் திரும்பி οοτΓτή .
அதே நேரத்தில் ஈஸ்வரன் மனைவி திலகவதியும் பிள்ளை களும் ஒருபுறமிருந்தும், பிரமநாயகம் குடும்பத்தினர் இன் னொரு திக்கிலிருந்தும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே அருணாசலம் சென்னையிலிருந்ததால் அவரைப் பற்றிய கவலை இல்லை. s
வந்து சேர்ந்து கொண்டிருந்த செய்திகள் மன நிறைவை

சிதறிய எரிமலை 85.
அளிப்பதாக இல்லை! கடைத் தெருவிலே இருந்த பல கடைகள் கொளுத்தப்பட்டன! துறையாடப்பட்டன! துணிச்சலாகச் சில நண்பர்கள் சுவடு தெரியாவண்ணம் கடையின் பெயர்ப் பலகை களை அகற்றிச் சில கடைகளைக் காப்பாற்றினர். இந்தப் போராட்டம் என்பது சிங்களவர் - தமிழர் என்ற ஒரே கோணத் தில் அமையாமல் தொழில் போட்டி என்ற வகையிலும் அமைந்ததால், ஒரு போட்டியாளர், தன் தொழில் எதிரியின் நிறுவனங்களை, இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஆள் வைத்துத் தாக்குவதற்கான வசதியும் உருவாகிவிட்டது. மொத்தத் தில் குழம்பிய குட்டையை மேலும் கலக்கி மீனைப் பிடிப்பது சமூக விரோதிகளுக்கு மிகவும் எளிதாகிவிட்டது!
ஆலயமாக இது நாள் வரை இருந்த ஜிந்துப்பிட்டி முருகன் கோயில் அன்றே சரணாலயமாக மாறிவிட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கோயிலில் தங்கிவிட்டார்கள். பல்வேறு கோயில்கள் மூடப்பட்ட நிலையில், திறந்திருந்த ஒரு சில கோயில்களில் ஒன்று ஜிந்துப்பிட்டி முருகன் கோயில்.
விக்கிரமசிங்க முருகன் கோயிலில் புகலிடம் தேடியது, இறைவனின் சித்தமாகத்தான் இருக்கவேண்டும். அவர் முதலில் தங்க எண்ணியிருந்த, இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதி காரியின் வீடு பலமாகத் தாக்கப்பட்டதாகவும், அவர் பின்னர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கச் சென்று விட்ட செய்தியும் வந்தபோதுதான் முருகன் தனக்களித்த உள்ளுணர்வை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
வி.ரி.வி. குரூப்பில் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந் தன. ஆயினும் அவசரகாலங்களில் தெய்வநாயகம் செயல் படும் வேகமும், நுணுக்கமும் விக்கிரமசிங்காவை நன்கு உரு வாக்கியிருந்தது. கோயிலில் இருந்தபடியே அரசின் பல அதி காரிகளோடு தொடர்பு கொண்டு கோயிலையே அகதிமுகா மாக அரசை அறிவிக்கச் செய்து, அதற்குரிய பாதுகாப்பையும், சலுகைகளையும் பெற முடிந்தது!
இக்கட்டான தழ்நிலைகளில் தமிழர்கள் கோயிலுக்குள் வந்து கொண்டிருந்தனர். ஒரு நட்சத்திர விடுதியில் பணியாற் றிக் கொண்டிருந்தவர் கழுத்து அறுபட்டு ஆலயத்துக்கு வந்தார். ஒரு வழியாக முதலுதவி செய்து அவரை மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.

Page 102
86 இதோ ஒரு வெளிச்சம்
அகதிகளாகக் கோயிலிலே அல்லல்பட்டுக் கொண்டிருந்த குடும்பங்களுக்கு உதவ பல உயர்ந்த உள்ளங்கள் முன் வந்தன.
அசோகன் பல மூடை சீனியை ஆலயத்துக்கு அனுப்பி வைத்தார். ஆர். வீரவாகு அரிசி, பருப்பு மூடைகளை அனுப்பி னார். தெ. ஈஸ்வரன் தேயிலைத் தூள் பெட்டிகளை அனுப்பி னார். மணி விஸ்வநாதன் சவர்க்காரக் கட்டிகளை அனுப்பி GTITIT.
மேலும் பல வணிகர்கள் தங்களால் இயன்றதைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். எல்லோராலும் கொடுக்க இயலும்; ஆயினும் அந்த சூழ்நிலையில் வணிக நிலையங்களைத் திறந் தும், வீட்டிலிருந்தும் எடுத்து கோயிலுக்கு அனுப்புவதற்குத் தனியான துணிச்சல் வேண்டியதாயிருந்தது.
ஆனால் இப்படிப்பட்ட தழ்நிலையிலும் வழக்கம் போல கோயில் மூன்று வேளை பூசையும், தவறாமல் முறைப்படி நடத்து வந்தது குறிப்பிடத்தக்கது!
கலவரம் ஓயவில்லை!
கொழும்பைப் புகை மண்டலம் நிரந்தரமாகக் கவ்விக் கொள்ளும் போலிருந்தது!
சாலை நெடுக எரிந்துபோன கார்கள், கடைகள்;
தெய்வநாயகத்தின் மனம் வேதனையால் துடித்துக் கொண் டிருந்தது!
பண இழப்புக்கு அவர் என்றும் வாடியதில்லை! 'முருகன் கொடுத்ததை முருகனே எடுத்துக் கொண்டான்' என்று ஒரே வரியில் அவர் இந்து மதத்தின் தத்துவத்தை, கீதையின் சாரத்தை அடக்கிவிட்டு இழப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
'எதை இழந்தோம்; உழைச்சுச் சம்பாதிச்சதை தானே இழந் தோம்; இன்னும் உடம்பில் உயிர் இருக்கும் வரை, உயிரோடு உழைக்கும் உணர்வு கூடியிருக்கும்வரை நாம் எதற்காக வருத் தப்பட வேண்டும்?
'எனக்கு மாத்திரம் ஏதும் நேர்ந்து விடவில்லையே! எல் லோருக்கும் நடந்தது தானே எனக்கும் நடந்தது!
“எத்தனையோ பேருக்கு உடலில் மோசமான காயங்கள்

சிதறிய எரிமலை 87
ஏற்பட்டன. இன்னும் எவ்வளவோ பேர் உயிரையேவிட்டார் கள் படுகொலை செய்யப்பட்டார்கள்! அப்படிப்பட்ட மோச மான கதிக்கு நாம் ஆளாகவில்லையே! முருகன் அருளால் இந்த அளவுக்காவது நாம் மிஞ்சியிருக்கிறோமே!’
மூன்று நாட்களையும் தம் மனதில் இப்படிப்பட்ட சிந்தனை களோடு போராடிக் கழித்தார் தெய்வநாயகம். 'இப்படிப் பட்ட தழ்நிலையில் நீங்கள் இந்தியாவுக்குப் போயாக வேண் டும்' என்று நான்கு பிள்ளைகளும் வற்புறுத்தினர்.
தெய்வநாயகம் அசைவதாக இல்லை! பிள்ளைகள் வேறு ஓர் ஆயுதத்தை வைத்திருந்தனர். நம்முடைய வீட்டுப் பெண் களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ஆகவே நீங் கள் பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கிடைக்கின்ற அடுத்த விமானத்தில் சென்னை செல்கிறீர்கள்.'
'நீங்கள் என்னப்பா செய்யப் போறிங்க' "நாங்கள் உங்கள் பிள்ளைகள். எப்படி எங்களைக் காத் துக் கொள்வது, அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும்.'
வேறு வழியில்லாமல், கட்டிய துணிகளோடு சென்னைக்கு விமானம் ஏறத் தெய்வநாயகம் சம்மதித்தார்.
இதற்குள் ஆங்காங்கே நடைபெற்று வந்த கலவரம் தொடர் பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
1981ல் கட்டி, புதுமனை புகுந்து மகிழ்ச்சியாகக் கொண் டாடிப் போற்றிய தெய்வநாயகத்தின் இல்லம் துறையாடப் பட்டு, நெருப்பில் சிக்கிக் கருகிக் கொண்டிருந்தது!
வீரவாகுவின் வீட்டின் முற்பகுதி முழுவதும் எரிந்து சிதைந்து விட்டது.
கடைத்தெருவில் இருந்த கடைகள் எரிந்துவிட்டன. துறை முகப் பகுதியில் சரக்குகள் வைப்பதற்காக வைத்திருந்த களஞ்சி யங்கள் எரிக்கப்பட்டுவிட்டன.
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து விற்பதற்காக வைக் கப்பட்டிருந்த பல புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்கள் முழு மையாக எரிந்து போய் விட்டன!

Page 103
இதோ ஒரு வெளிச்சம்
விலையுயர்ந்த பென்ஸ், டயோட்டா போன்ற 29 வாகனங் கள் எரிந்து போய்விட்டன.
தெய்வநாயகம் குடும்பத்தினரின் தெய்வபக்தியையும், தன் னம்பிக்கையையும் தவிர எல்லாம் அழிந்து போய்விட்டன!
பல கோடி ரூபாய்களை இரண்டு நாட்களில் அந்தக் குடும்பம் இழந்திருந்தது.
அந்த விமானம் களையிழந்த முகங்களைச் சுமந்தபடி இந் தியப் பெருங்கடலின் மீது சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. தம் மனைவியோடும், மருமகள்களோடும் பேரக்குழந்தைகளோடும் தெய்வநாயகமும், பிரமநாயகமும் இறுக்கமான முகத்தோடு அந்த விமானத்தில் அமர்ந்திருந்தனர்.
எழுவதும் - விழுவதுமாக அமைந்துவிட்ட அவர் வாழ்க் கையில் ஒரு மாபெரும் வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் மாபெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டதை அவர் மனம் எண்ணியபடி இருந்தது!
மாற்று உடை கூட இல்லாமல், தாமும் தம் குடும்பத் தினரும் பயணம் செய்ய வேண்டிவரும் என்று ஒருபோதும் யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு வேறு நாடு தான். இங்கே என்ன செய்வது எங்கே இருப்பது? யாரிருக் கிறார்கள்? என்ற கேள்விகளுடன் மீனம்பாக்கம் விமான நிலை
 

இதே ஒரு வெளிச்சம்
தெய்வநாயகம் - சிதம்பரத்தம்மாள்
ilië الله
閭
— திருச்செந்தூரில் சதாபிஷேக விழா (செப்டம்பர் 1991)
தங்கள் பிள்ளைகள் - பெண்களோடு வி.ரி.வி தம்பதியர்.

Page 104
J盟四 இதோ ஒரு வெளிச்சம்
 

இதோ ஒரு வெளிச்சம்
லா டிசில்வாܣܛܘ
** 後
சாது ஜினரத்னதேரோ - கொட்டாஞ்சேனை புத்தர் விகாரை

Page 105
இதோ ஒரு வெளிச்சம்
புறக்கோட்டைப் பகுதி புத்தர் விகாரை
 
 

இதோ ஒரு வெளிச்சம்
புனிதஜ"ட் ஆலயம் - கம்பஹா
தெ ய்வநாயகம் இப்பள்ளிவாசலை
அன்பளிப்பாக வழங்கினார்.
" போபஸ்லேன்

Page 106
இதோ ஒரு வெளிச்சம்
 

臀
வி.ரி.வி. அறக்கட்டளைக் குழந்தைகள் தெய்வநாயகத்திற்கு மாலை சூட்டி மகிழ்கின்றனர்.

Page 107
盟盟蛤 இதோ ஒரு வெளிச்சம்
கணேஷ் அபிராமி
E SY2ë. | 《24 பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்துவதில் இன்பம்.
 
 

சிதறிய எரிமலை 97
பத்திலிருந்து இறங்கி வெளியே வந்தவுடன் "வாங்கப்பா' என்ற குரலும் 'வாங்க மாமா' என்ற குரலும் கேட்டு நிமிர்த்து பார்த்தார் தெய்வநாயகம். இங்கே நமக்குத் தங்க நிழலிருக்கிறது. நம் பிள்ளையைத் தவிர வேறு யாரிடமும் ஒண்ட வேண்டிய அவசியமில்லை என்ற பெருமித ஒளி அவர் கண்களில் ஜொலித் தது. கண்கள் குளமாக, பாசத்தோடும், பக்தியோடும் இருகரம் நீட்டி வரவேற்று நின்றவர்கள் அருணாசலமும், சீதாவும்!
28

Page 108
22. சமயத்தில் உதவிய சமயம்
1962ல் தீட்சை ஏற்று காஷாயம் அணிந்து புத்த மதத் துறவியாக மாறியபோது மறைதிரு. ஜினரத்னதேரோவுக்கு வயது 20. கம்பீரமும், தன்னடக்கமும் மிக்க இளம் சாதுவாகத் தன் அறப்பணியைத் துவக்கிய இரண்டு வருடத்துக்கெல்லாம், தன்னுடைய 22வது வயதில் கொட்டாஞ்சேனை புத்தர் கோயி லின் பொறுப்பு அளிக்கப்பட்டது.
கொழும்பு நகரின் மிகவும் பழைமையான அந்தக் கோயி லின் பொறுப்பு ஏற்பது பெருமைக்குரிய செய்தி என்பதோடு, மிகவும் கடுமையானதொன்றாகும். பல்வேறு அறப்பணிகளைத் தன் முயற்சியில் செய்து முடிக்க வேண்டிய நிலையில் அந்த சாது இருந்தார்.
அடிக்கடி புத்த விழாக்களின்போது பெரும் ஊர்வலங் களை ஏற்பாடு செய்வதும், ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு விருந்தளிப்பதும் அவருடைய பொறுப்பில் இருந்தன.
கொட்டாஞ்சேனைக்கு வந்த போதில் தருமகாரியங்களுக்கு யாரையெல்லாம் அணுகலாம்' என்ற பட்டியல் அந்த இளம் துறவிக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த முதல் பெயர் 'திரு. தெய்வநாயகம் பிள்ளை.'
அந்தப் பெயர் அவருக்குத் திகைப்பூட்டியது! கொழும்பு நகரில் எவ்வளவோ பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள், சமூக அந்தஸ்து பெற்ற பெரிய மனிதர்கள் இருந்தார்கள். அதில் அனேகர் புத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர்கள். ஆனால் அவர் களையெல்லாம் கீழே தள்ளிவிட்டு பட்டியலில் இருந்த முதல் பெயர் தெய்வநாயகம். ---
மிகப்பெரிய கற்பனைகளோடு சாது ஜினரத்னதேரோ புறக்கோட்டைப் பகுதியிலிருந்த வி.ரி.வி.யின் கடைக்குச்
 

சமயத்தில் உதவிய சமயம் 1 99
சென்று "தெய்வநாயகம் அவர்களைப் பார்க்கவேண்டும்' என்று தெரிவித்தார். மாடியறையிலிருந்த அவருக்குத் தகவல் போயிற்று.
'தன்னை யாராவது வந்து அவருடைய அறைக்கு அழைத் துச் செல்லுவார்கள்’ என்று எதிர்பார்த்தபடி இருந்த அவரை நோக்கி மாடியிலிருந்து 'ஆயுபோவன்’ என்று கூப்பிய கரங் களோடு இறங்கி வந்த தெய்வ நாயகத்தைச் சாது கண் இமைக் காமல் உற்று கவனித்தார். h
கழுத்தில் தங்கச்சங்கிலிகள், கைவிரல்களில் மோதிரங்கள், காதுகளில் வைரக் கடுக்கன்கள், நீண்ட முடியை முடிச்சாகக் கட்டிய குடுமி, நெற்றியில் வீயூதி, பெரிய குங்குமப் பொட் டோடு கம்பீரமாக அவர் நின்ற அழகு அவர் மனத்தைக் கவர்ந்
தது.
உரிமையோடு, அவரை மாடிக்குத் தம் அறைக்கு அழைத் துச் சென்றார். அறை முழுக்க, மூட்டைகள், பல்வேறு ரக தானியங்களின் மாதிரிகள், மளிகைக் கடைக்கே உரிய மணம், இவற்றைக் கண்டு நுகர்ந்து ரசித்தபடி அமர்ந்த சாதுவிடம் மிக வும் பணிவாக சாது அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு நன்கொடை வேண்டும்?' என்று கேட்டார். அப்படி அவர் நேரிடையாகக் கேட்டது துறவிக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘எப்படிக் கேட்பது? எப்படி ஆரம்பிப்பது?’ என்ற தயக்கமெல் லாம் பறந்து போய்விட்டது. இருந்தாலும் சற்று யோசித்தபடி "ரூபாய் ஆயிரம் வேண்டும்' என்றார். அந்த நாளில் அது ஒரு பெரிய தொகை
இன்றைக்கு எப்படியும் இருபதாயிரம் ரூபாய் இருக்கும்! மலர்ந்த முகத்தோடு, அப்போதே ஆயிரத்து ஒரு ரூபாய் எடுத்து அவருடைய கரங்களில் கொடுத்தபடி, "வேறு ஏதாவது வேண்டுமா? என்ன வேண்டுமென்றாலும் கூச்சப்படாமல் கேளுங்கள்; எப்போது வேண்டுமென்றாலும் கேளுங்கள்!" என்று தெய்வநாயகம் கூறியபோது சாதுவின் மனம் நன்றிப் பெருக்கால் நிரம்பியிருந்தது.
'திருவிழாவுக்கு வருபவர்களுக்கு உணவளிக்க எனக்குச் சில பண்டங்கள் வேண்டும். சரக்குகளை உங்களிடமே வாங்க விரும்புகிறேன். பணம் கொடுத்து வாங்குவேன்' என்றார் சாது.

Page 109
200 இதோ ஒரு வெளிச்சம்
'தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று கூறி அவரை வாயிற்படி வரை வந்து வழியனுப்பி வைத்தார் தெய்வ நாயகம்.
சில நாட்களுக்குப் பின் வெசாக் திருவிழா வந்தது. மளிகைப் பட்டியலைச் சாது அனுப்பி வைக்க அத்தனைப் பொருட்களையும் தெய்வநாயகம் அனுப்பி வைத்தார். சரக்கு களுக்கான “பில்லையும் கடைப் பையன் சாதுவிடம் கொடுத்து விட்டு "பணம் இருந்தால் கொடுங்கள்; அல்லது கொடுக்க முடிந்ததைக் கொடுங்கள் இப்போது முடியாவிட்டாலும் எப் போது கொடுத்தாலும் சரி, எதுவுமே தராவிட்டாலும் பரவா யில்லை' என்று முதலாளி கூறினார்’ என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
சாதுவினால் முழுப் பணத்தையும் தர முடியவில்லை முடிந்தவரை கொடுத்தார். அப்போது தொடங்கிய அவர் களுடைய நட்பு இன்றளவும் ஆல் போல் தழைத்து வளரு வதைக் காணலாம்.
வெசாக் திருவிழா என்பது புத்த மதத்தினரின் பெரும் விழா இது புத்த பூர்ணிமா நாளில் வரும் விழா. புத்தர் ஞானோதயம் பெற்ற நாள். இந்நாட்களில் நாடெங்கும் ஒளி விளக்குகளால் கட்டிடங்களும், கோயில்களும் அலங்களிக்கப் படும். மைதர் தசராவைப் போன்ற அழகைக் கொழும்பில் காணலாம். பெரு நகரங்களில், சாலைகளில் தன்சலை எனப் படும் உணவுக் கூடங்களை மக்கள் அமைப்பார்கள். கிராமப் புறத்திலிருந்து விழாவைக் காண வரும் மக்களுக்கு அன்பாக, இலவசமாக உணவளிப்பார்கள். ஆங்காங்கே 'உண்டிகொடுத் தோர் உயிர் கொடுத்தோராவர்' என்பதற்கிணங்க, அறச்சாலை களில் இந்த உணவளிக்கும் காட்சி கண்கொள்ளா அற்புதக் காட்சியாகும். சாது ஜினரத்னதேரோவுக்குப் பிறகுதான் தெரிந்தது. 'பல ஆண்டுகளாக தெய்வநாயகம் இப்படிப்பட்ட தன்சலைகளுக்கு அரிசியும், பருப்பும், வேறு பண்டங்களையும் அள்ளி வழங்கியிருக்கிறார்’ என்று.
சாதுவைப் பொறுத்தவரையில் 'தெய்வநாயகம் மிகமிக எளிமையானவர். எந்தவிதமான பகட்டும், ஆடம்பரமும் இல் லாதவர். அதேபோல் தன் பிள்ளைகள் அனைவரையும் வளர்த் திருக்கிறார்.'

சமயத்தில் உதவிய சமயம் 20
‘தெய்வநாயகம் ஒரு வியாபாரி அல்லர்; அவர் வியாபாரத் தினை நாடி அதன் பின்னால் போகவில்லை; ஆனால் அவரை நாடி வியாபாரம் அவர் பின்னால் வருகிறது.'
அவருடைய எளிமையையும், பண்பையும், உதவும் குணங் களையும் பார்க்கும் மக்கள் விரும்பி வியாபாரத் தொடர்பு வைத்திருக்கிறார்கள்' என்பது சாதுவின் வாதம்.
1977ம் ஆண்டு கொழும்பு நகரில் ஊரடங்குசட்டம் அமுலிலிருக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் சாலையில் யார், எப்படி நடமாடினாலும் சுட்டுக் கொல்ல அரசின் கண்டிப்பான உத்தரவு இருந்த நேரம் கொட்டாஞ்சேனை பகுதியில் தெய்வ நாயகம் தன்னுடைய காரை மிகவும் வேகமாக ஒட்டிக் கொண்டு வருகிறார். நேரம் அப்போது தான் மணி 6 ஐக் கடந்திருக்கிறது. புத்தர் கோவிலிற்கு எதிரில் இருந்த கான்ஸ்டபிள் 'ஹால்ட் என்று கூவிக் காரை நிறுத்த ஆணையிடுகிறார். சற்றும் எதிர் பாராத அதிர்ச்சியால் காரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தடுமாறி நிறுத்துகிறார். அதற்குள் கான்ஸ்ட பிளின் துப்பாக்கி தோளில் இருக்க அவருடைய குறி தெய்வ நாயகத்தின் நெஞ்சில் இருந்தது. சற்று எட்ட இருந்த சாது விரைந்து சாலைக்கு ஓடி வருகிறார். 'சுடாதே லொக்கு முதலாளியைச் சுடாதே' என்று சிங்களத்தில் கூவியவாறு பொலிசின் மீது பாய்ந்து துப்பாக்கியை வேறு திசையில் திருப்பி விடுகிறார். - - --
காஷாயம் அணிந்த சாதுவின் தோற்றத்தைக் கண்டவுடன் துப்பாக்கி முனை தரையை நோக்கித் தாழ்கிறது. 'முதலாளி,

Page 110
202 இதோ ஒரு வெளிச்சம்
நீங்கள் பத்திரமாக வீட்டுக்குப் போங்கள். வேகம் வேண்டாம்" என்று சாது கூற தெய்வநாயகம் மெளனமாக வீட்டுக்குக் கிளம்புகிறார். அடுத்தநாள் கோவிலுக்கு வந்து சாதுவுக்கு நெஞ்சார நன்றி தெரிவிக்கிறார்.
மிக இக்கட்டான அந்த நேரத்தில், மாடியில் தன் அறையில் இருக்கவேண்டிய அந்தத் துறவியை வெளியே இருக்கச் செய்து, தெய்வநாயகத்தைக் காப்பாற்ற வைத்தது 'முருகரா, இல்லை புத்தரா அல்லது இருவருமா?
1983ல் இனக்கலவரம் வெடிக்கிறது; இலங்கை தீப்பற்றி எரிய, கொழும்பு கொந்தளிக்கிறது! வெடிகுண்டுகள்; துப்பாக் கிச் சூடுகள், எரியும் கார்கள், கட்டிடங்கள்.
மிகமிகப் பாதுகாப்பான தன் கோயிலில் நிம்மதியாகத் தங்கியிருக்கத் துறவியால் முடியவில்லை. ஜாதி மத பேதங் களையெல்லாம் கடந்து 'அன்பே கடவுள்' என்று புத்தன் கூற் றுக்கு இலக்கணமாக வாழும் அந்தத் தமிழன் தெய்வநாயகத் தின் குடும்பம் எப்படித் தத்தளிக்கிறதோ?’ என்ற வேதனையும், திகிலும் அவர் நெஞ்சிற்குள் புகுந்து விட்டது. மற்றொரு இளம் துறவியையும் உடன் அழைத்துக் கொண்டு தெய்வநாயகத்தின் வீட்டை நோக்கிக் கிளம்பினார். வழக்கமாகப் பத்து நிமிடங் களில் கடக்க வேண்டிய தூரம் அது. ஆனால் வெகு நேரம் ஆன பிறகே அங்கு போய்ச் சேர முடிந்தது. தெய்வநாயகத்தின் வீட்டு எதிரில் போய் நின்றபோது அவர் இதயத்தில் இரத்தம் வடிந்தது. புகைந்தது அவர் மனம் மட்டுமல்ல தெய்வநாயகத் தின் வீடு மட்டுமல்ல. துறவியின் மனமும் தான்.
புகைந்து கொண்டிருந்த வீட்டினுள் புகுந்து கலவரம் செய் தவர்கள் எடுத்துச் சென்றது போக எஞ்சியிருந்த பொருட் களையெல்லாம் திரட்டித் தன் காரில் ஏற்றி, அங்கிருந்த மக் களை அப்புறப்படுத்திவிட்டுக் கோவிலுக்குச் சென்றார்.
ஒரு வாரம் வரை இரண்டு துறவிகளும் ஒரு சிலரைத் துணைக்கு வைத்துக் கொண்டு கொட்டாஞ்சேனைப் பகுதியில் காவலிருந்தார்கள். மேலும் வன்முன்ற பரவாமலிருக்கப் பாடு பட்டார்கள்.
கலவரம் ஒய்ந்து 15 நாட்கள் கழிந்த பின்னர் ஒரு நாள் ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தார். தெய்வநாயகத்தின் வீட்டி

சம்யத்தில் உதவிய சமயம் 203
லிருந்து தான் எடுத்து வந்த பொருட்களைச் சாது எடுத்துக் காட்ட அவரில் தன் தந்தை மிகவும் அன்போடும், பக்தி யோடும் பயன்படுத்தி வைத்திருந்த சில பொருட்களை மட்டும் நினைவுப் பொருள்களாக நன்றிப் பெருக்குடன் ஈஸ்வரன் திரும்ப எடுத்துச் சென்றார்.
அன்பைப் போதித்தவன் புத்தன். புத்தரின் கருத்துக்கள் ஆழமானவை. இல்லறத்திலிருந்து துறவு மேற்கொண்டாலும் இல்லறத்தினருக்கு புத்தர் கூறும் அறிவுரைகள் ஏராளம்! 'உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தினை மனைவியிடம் கொண்டு வந்து கொடு; எந்தெந்த வகையில் பணத்தைச் செலவிட வேண்டும் என்று திட்டமிடு. நிச்சயமாக தரும காரி யங்களுக்காக வருமானத்தில் ஒரு பகுதியைச் செலவிடு. உனக் காக மட்டும் வாழாதே! உன்னைச் சார்ந்தவர்களை மகிழ்ச்சி யாக வைத்திரு' என்பது போன்ற எண்ணற்ற அறிவுரைகளை புத்தர் தன் நீண்ட சுலோகங்களிலே கூறியிருக்கிறார்.
புத்த பிரானின் இந்தக் கருத்துக்களை எண்ணும்போதெல் லாம் ஜினரத்னதேரோவிற்கு உடனே நினைவுக்கு வருவது தெய்வநாயகம் தான்.
தம்முடைய வருவாயில் பெரும் பகுதியைத் தம்மிடம் உழைக்கும் ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார். தனக்காக உழைப்பவர்கள் உள்ளம் வாடக்கூடாது என்பது அவர் குறிக் கோள். அதேபோல் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியை அறச்செயல்களுக்காகவே ஒதுக்கி வைத்துவிட்டு இல்லையென் னாத மனத்துடன் அள்ளிக் கொடுக்கிறார். அப்படி வாரிக் கொடுக்கும் போது, பெறுபவர்கள் இந்துக்களா, முகமதியர் களா, கிறித்தவர்களா, சிங்களவர்களா என்று பேதம் பார்ப்ப தில்லை. கொட்டாஞ்சேனையில் தெய்வநாயகத்தின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கிற புத்தர் கோயில் ஒன்றின் முழுப் பரா மரிப்பையும் தெய்வநாயகம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அன் றாடம் தம்முடைய கடைக்கு வரும்போது அதே தெருவில் இருக்கின்ற புத்தர் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு உண் டியலில் காணிக்கையைச் செலுத்தி விட்டுத் தான் தம் அலு வல்களைக் கவனிப்பது இன்று வரையிலும் அவருக்குள்ள வழக்கம்.

Page 111
204 இதோ ஒரு வெளிச்சம்
அன்றாடம் விடியற்காலையில் கடற்கரையில் நீண்டதுரம் நடந்து செல்வது அவரது மூத்த மகன் ஈஸ்வரனுடைய வழக்கம். ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாஜ்சமுத்திராவிற்கு எதிரே தொடங்கி துறைமுகம் அருகில் உள்ள பெரிய வளைவு வரை நடந்து விட்டு அங்கே இருக்கின்ற அழகிய புத்தர் உருவத்தை வணங்கிவிட்டு அவர் திரும்புவதைப் பார்க்கும் போது அவர் நடப்பதற்காக வந்தாரா அல்லது புத்தரை வழிபடுவதற்காக நடந்தாரா?' என்ற ஐயம் தோன்றும்.
வரதராஜ விநாயகப் பெருமான் கோயிலின் அறங் காவலர் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின்னர் ஒருநாள் ஈஸ்வரன் சாது ஜினரத்னதேரோவைக் கேட்டார். 'சாது, எங் கள் விநாயகரை ஊர்வலமாகத் தங்கள் தெரு வழியே அழைத்து வரலாம் என்று எண்ணுகிறோம். இந்த புத்த ஆலயத்தின் அரு கில் ஏதேனும் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடி யுமா?’
ஜினரத்ன தேரோவின் மனம் வேறெப்போதும் இவ்வளவு மகிழ்ந்திருக்குமா என்று சொல்வது கடினம். மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட அவர் தன் ஆலயத்திற்கு அருகில் குடியிருக் கும் மூர்த்தி போன்ற இந்து நண்பர்களை அழைத்து ‘இந்துக் களுடைய சிலை ஊர்வலம் எப்படி இருக்கும்? விநாயகர் வந் தால் எப்படி வரவேற்க வேண்டும்? இந்து வழிபாட்டு முறை கள் எப்படிப்பட்டவை?’ என்று விசாரித்து உடனே தன் சிங்கள நண்பர்களோடு சேர்ந்து ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டார்.
விநாயகர் ஊர்வலம் கொட்டாஞ்சேனைப் பகுதியில் புத்தர் ஆலயம் அருகே வருகிறது. ஒரு அழகான மேடை, மலர் மாலை கள், வண்ணத்துணிகளால் அலங்காரம். மின் விளக்குகள். தேங்காய்கள் உடைப்பதற்கெனத் தடுப்புக்கள் கட்டப்பட்ட பகுதி; சுமார் நானூறு பக்தர்களுக்கு சிறிய விருந்துபசரிப்புக் கான ஏற்பாடுகள் இவ்வளவையும் புத்த துறவிகளும், புத்த மதத்தினரும், அப்பகுதியை சேர்ந்த மக்களும் செய்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஊர்வத்தில் வந்த மக்களை ஆழ்த்தினர்.
ஆண்டுதோறும் விநாயகருடைய ஊர்வலம் கிளம்பிவிட் டால் இந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் கொட்டாஞ்சேனைப் பகுதி யில் நடைபெறுவதைப் பார்க்கும் போது 'மனிதநேயம் மறைந்

சமயத்தில் உதவிய சமயம் - 205
துப் போய்விடவில்லை, ஆனால் இங்கே மணி மகுடம் துட்டிக் கொண்டது' என்று வியக்கத் தோன்றும்.
தவறாமல் புத்தர் கோயிலுக்கு வரும் பக்தர்களுள் ஒருவர் தெய்வநாயகத்தின் தனிச் செயலாளர் விக்ரமசிங்க. சில நாட் களாக ஆலயத்தில் சாது ஜினரத்னதேரோவைக் காணமுடிய வில்லையே என்று விசாரித்த போதுதான் அவர் கொழும்பில் மருத்துவமனை ஒன்றில் இருக்கிறார் என்று தெரிய வந்தது. பதறிப்போய் அவரைப் பார்த்தவுடன் அவர் நிலை தெரியவர அடுத்த நாளே தெய்வநாயகமும், அவருடைய பிள்ளைகளும் அவரைப் பார்க்க ஓடோடி வந்தார்கள்.
அடுத்த நாள் இந்தியா வந்த ஈஸ்வரன் முதலில் சென்றது சென்னை கே.ஜி. மருத்துவமனைக்குத் தான். எல்லா செய்தி களையும் விளக்கிக் கூறி ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டார். - וי " :" ::
சாதுவிற்கான பாஸ்போர்ட், விசா, விமானப் பயண ஏற் பாடுகளைச் செய்து தெய்வநாயகத்தின் குடும்பத்தினர் சாதுவை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையிலேயே இருக் கும் தெய்வநாயகத்தின் புதல்வர் அருணாசலம் எல்லா ஏற் பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.
கே.ஜி. மருத்துவமனையின் மருத்துவர்கள், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரின் பொறுப்பான, அன்பான கவனிப்பு பற்றற்ற துறவியின் மனதில் பாச நீரைச் சுரக்க வைத்துவிட்டது.
டாக்டர். ஜெகதீசன் அவர்களுடைய திறமையான சிகிச் சையால் மறுவாழ்வு பெற்றார் சாது. ஒருநாள் டாக்டர் சாது வைக் கேட்டார் ‘நீங்கள் தமிழர்களை நேசிக்கிறீர்களா?
சாது ஜினரத்னதேரோ கூறினார் ‘நான் எல்லா உயிர்
களையும் நேசிக்கிறேன். எல்லா மனிதர்களையும் நேசிக்கிறேன். மனிதர்களில் யார் என்ற வேறுபாடு கிடையாது! சொல்லப் போனால் விலங்குகளையும் அன்பாக நேசிக்கிறேன். என்னு டைய அறையிலே மான்குட்டிகளும், அல்சேஷன், டெரியர் நாய் களும் கூட ஒன்றாக விளையாடுகின்றன!
"தீயைத் தீயினால் அணைக்க முடியாது!
சினத்தைத் சினத்தினால் அழிக்க முடியாது!
ஆனால் அன்பால் எதையுமே சாதிக்க முடியும்!

Page 112
206 இதோ ஒரு வெளிச்சம்
என்ற புத்தரின் வாக்கு எவ்வளவு நிதர்சனமான உண்மை என் பதனை புத்தன் பிறந்த இந்திய மண்ணில் சாதுவால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
அன்பின் பெருமையைக் கேட்ட மாத்திரத்திலேயே அன் பைச் சொரிந்த டாக்டர். ஜெகதீசனின் பரந்த உள்ளத்தைப் பாராட்டத் தேரோவிற்கு சொற்கள் கிட்டவில்லை.
மருத்துவச் செலவுகளை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இப்போதும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னை வந்து சிகிச்சை பெறும் அவருடைய செலவில் பெரும் பகுதியை அகம் குளிர யார் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்?
இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டிய அவ சியத்தை வாசகர்கள் வைக்கமாட்டீர்கள் என்பதில் எங்களுக்கு ஐயம் உண்டா என்ன?
 

23. கு எதற்கு வேலி?
"சிரி! உலகமே உன்னோடு சேர்ந்து சிரிக்கும்! அழு! நீ மட்டும் அழுவாய்'
வாழ்க்கையில் நிரம்ப அடிபட்ட ஓர் ஆங்கில எழுத்தாளன் எழுதிவைத்த வரிகள் எவ்வளவு உண்மையானவை என்பதை தெய்வநாயகம் இந்தியா வந்ததும் புரிந்து கொண்டார்.
ஒரு தீர்க்கதரிசனத்தோடு இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு தொழிலிருக்க வேண்டும் என்று திட்ட மிட்டிருந்ததால் அன்று சென்னையில் இறங்கியவுடன் அவர் களை அரவணைத்து, அழைத்துச் செல்ல மகனும், மருமகளும் இருந்தார்கள். தங்குவதற்கென சென்னையில் அவர்களுக்கு ஒரு இல்லமும் வாய்த்திருந்தது!
இல்லாவிடில் அனாதைகள் போன்ற உணர்வுடன் அல் லவா விமானத்தை விட்டு இறங்கியிருக்க வேண்டும்!
விமான நிலையத்தில் தெய்வநாயகத்தைப் பல பத்திரிகை நிருபர்கள் துழந்து கொண்டனர். பரபரப்பான செய்திகளுக் காகத் தவித்துக் கொண்டிருந்த அவர்கள் பல கேள்விகளை அடுக்கினார்கள்.
“உங்களுக்கு என்ன ஆயிற்று?
“எவ்வளவு இழப்பு?"
“ஏதேனும் கொடுமை இழைக்கப்பட்டதா?”
“இலங்கையில் எப்படிப்பட்ட கலவரம் நடக்கிறது?"
'இந்தக் கலவரத்தைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?"
தெய்வநாயகம் சுருக்கமாக பதில் சொன்னார்.
"சிங்களவர்கள் நல்லவர்கள். நாங்கள் வாழ்க்கையில் முன்னேறிட உதவியவர்கள். சிங்களவர்கள். இன்றைக்கும் எவ்

Page 113
208 இதோ ஒரு வெளிச்சம்
வளவோ பேருக்குப் பாதுகாப்புத் தந்து கொண்டிருக்கும் சிங்கள வர்கள் ஏராளமுாக இருக்கிறார்கள்'
'அப்படியானால், இவ்வளவு அக்கிரமங்களைச் செய்தவர் கள் யார்?"
'அதுவும் சிங்களவர்கள்தான்!'
'அப்படியானால் நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர் 56it?'
‘எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும் இருப்பது போல சிங்கள மக்களிலும் பல நல்லவர்களும் சில கொடியவர்களும் இருக்கிறார்கள். அடிப்பவர்களும் அவர்களே காப்பாற்றுவதும் அவர்களே? ஒருவன் தாக்கினால், ஒன்பது பேர் உதவிக்கு வரு கிறார்கள். எதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக சிங் களவர்களை நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ சொல்வது? ஏன் தமிழ் மக்களிலே நல்லவர்கள், கொடியவர் கள் என்று இரு பிரிவினர் இல்லையா என்ன? ஆகவே நான் யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் குறை சொல்லமாட்டேன். இது முருகனின் சித்தம். மேற்கொண்டு ஏதும் கேட்காதீர்கள்' என்று கூறியபடி நிருபர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வத்துவிட்டார்.
அதே நேரத்தில் தம்மோடு விமானத்தில் வந்த வேறு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை உருக்கமாக பட்டியல் போட்டு நிருபர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
 

ஆண்டவனுக்கு எதற்கு வேலி? 209
பத்து ரூபாய் காணாமல் போய் விட்டாலே ஒரு நாள் முழுக்கப் பத்துபேரிடம் சொல்லி சலித்துக் கொள்ளும் பெரும்
பறிகொடுத்து விட்டு, அதைப் பொருட்படுத்தாமல் அடுத்தது என்ன? என்ற சிந்தனையோடு வாழும் மனிதராக தெய்வ நாயகம் விளங்கினார்.
சென்னையில் இருந்த சில நாட்கள் வெறுமையாகக் கழிந் தன!
கொழும்பிலே அவர் வாழ்ந்த போது இந்தியாவிலிருந்து வந்த பலர் அவருடைய இல்லம் நாடி வந்தவர்கள், அவருடைய அற்புதமான விருந்தோம்பலை அணுவணுவாக ரசித்து ருசித்த உறவினர், நண்பர்கள், இலக்கியவாதிகள் பட்டியல் போட்டுக் கூற முடியாது. அவருடைய திருக்கரங்களால் பண உதவி பெற்ற வர்கள் எண்ணிக்கையோ ஏராளம்!
இருப்பினும் அவர் இந்தியா வந்துவிட்ட செய்தி அறிந்தும் அவரை வந்து பார்த்தவர்கள் மிகக் குறைவே.
மற்றவர்கள் ஆறுதல் சொல்லியோ, பணஉதவி செய்தோ தான் வாழவேண்டிய நிலையில் நிச்சயமாக தெய்வநாயகம் இல்லை. இருந்தாலும் உயரிய மானுடப் பண்புகள் ஏங்கே மறைந்து போயின?
சென்னைவந்த ஒரிரு நாட்களில் வீடுதேடி வந்தவர் இசை மணி. சீர்காழி கோவிந்தராசன் அவர்கள். திருமதி. எம்.எல். வியின் மூலமாக, கொழும்பு கலவரத்தைக் கேள்விப்பட்டவர். ஒரு பட்டுவேட்டியும், பட்டுப்புடவையும் எடுத்துக் கொண்டு வந்து அன்போடு வழங்கினார். இலங்கைக் கோயில் விழாக் களுக்கு மட்டுமல்லாமல் தன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளுக் கெல்லாம்கூட இசைக்கலைஞர் சீர்காழியை வரவழைத்து அன் போடு விருந்தோம்பியவர் தெய்வநாயகம். அந்த அன்புதான் அவரை இப்போது ஈர்த்தது.
சென்னையிலும் வல்ல நாட்டிலுமாக தெயவநாயகம் நாட் களைக் கடத்தினார்.
விடியற்காலை 4.00 மணிக்கு எழுந்து இரவு 11.00 வரை அன்றாடம் உழைத்து வாழ்ந்து பழகிவிட்ட அவருக்கு இந்தியா

Page 114
2 1 Ꭴ இதோ ஒரு வெளிச்சம்
வில் செய்யத் தொழிலில்லை! மேலும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒருபணி என்று சுறுசுறுப்பாக வாழ்ந்த அவருக்கு உழைக்காமல் வீட்டிலிருப்பது பிடிக்கவில்லை. மீண்டும் எப் போது இலங்கை திரும்புவது?’ என்று தெளிவாகத் தெரியாத தழ்நிலையில் நேரத்தை என்ன செய்வது?
எப்போதும் வேலை, வேலை என்று தொழிலிலேயே மூழ்கிக் கொண்டிருக்கிறாயே, என்னை வந்து பார்’ என்று ஒவ்வொரு தெய்வமாக அழைப்பது போலத் தோன்றியது. ஆகவே, சில புண்ணியத்தலங்களை சென்று வழிபட்டு விட்டு வரலாமே' என்ற வேட்கையோடு கிளம்பினார். தன்னுடைய துணைவியார் சிதம்பரத்தம்மாளுடனும், தம்செயலர் குழந்தை வேலுவோடும் பலதலங்களுக்குச் சென்றார். திருப்பதி, பூரீரங் கம், தர்மஸ்தலா போன்ற பலதலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அவருடைய வேண்டுகோள் ஒன்றாகவே இருந்தது. 'இலங்கையில் அமைதி நிலவட்டும்; ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு, போராடும் நிலை மாறட்டும்; மனிதர்கள் ஒருவரையொருவர் நேசித்து ஒற்றுமையாக வாழட்டும்! இறைவா, அந்த நல்ல தாளை விரைவில் உருவாக்கிக் கொடு.'
கோயில்கள் என்பவை அவருடைய உயிரோடும் உணர்வு களோடும் கலந்தவையாக அமைந்து விட்டன!
கோயில்களில் பெரிய கோயில்கள், சிறிய கோயில்கள், இந்து கோயில்கள், கிறித்தவக் கோயில்கள், பெளத்தக் கோயில் கள் என்று வேறுபாடு பார்க்கும் வழக்கம் எப்போதும் அவரிடம் கிடையாது!
எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், அந்தக் கோயிலின் வரலாறு, அந்தக் கோயிலின் சிறப்புகள் போன்ற செய்தி களைக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
அத்துடன் அந்தக் கோயிலின் தேவைகள் என்ன என்பதை யும் தெரிந்துகொண்டு, அந்தத் தேவையை நிறைவு செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார். கும்பாபிஷேகங்கள், தேர் திருவிழாக்கள், தீப ஆராதனைகள் ஆகியவற்றில் மன முருகக் கலந்து கொள்வார்.
இன்றைக்கு வல்ல உள்ள இலக்ஷமி விநாயகர்

ஆண்டவனுக்கு எதற்கு வேலி? 2 1 1
கோவிலைப் புனரமைப்பு செய்து, அதைக் குடும்பக் கோயிலா கவே வைத்துப் பராமரித்து வருகிறார். அந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோவிலின் முக்கிய விழாக்கள் நடை பெறும்போது தவறாமல் முன்னின்று நடத்துவதும், ஆயிரக் கணக்கான மக்களுக்கு உணவளித்து விருந்தோம்புதலும் அவரு டைய வழக்கம்.
‘எங்கு சென்றாலும், எங்கே நல்ல செய்திகள் எழுதப்பட் டிருக்கின்றன?’ என்று தேடி அவற்றை தம்முடன் உள்ள நாட் குறிப்புச் சுவடியில் எழுதிக் கொண்டு வருவது வழக்கம். கோவை மாநகர் சென்றபோது ஒரு கோயிலில் படித்த செய்தி, அவரை மிகவும் கவர்ந்தது.
சென்றதைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி ஏக்கம் கொள்ளாதே நேர்மையும், உறுதியும் உனது செயலில் உரம் பெற வேண்டும்! இந்த வரிகளை கொழும்பில் உள்ள தம் வீட்டில் எழுதி வைத்திருப்பது மட்டுமல்ல; அந்த மன உணர்வோடும் வாழ்ந்து வருகிறார்.
இறைவனை வழிபடவேண்டும் என்று வந்து விட்டால் தன் உடல் நலம் என்பது கூட அவருக்கு இரண்டாவது தான். ஒருமுறை அவர் கார்த்திகை தீபம் திருவிழாவிற்குச் சென்ற போது உடல் நலம் அவ்வளவாக சரியில்லை. பெருந்திரளான கும்பலில் அவரும், அவருடைய மனைவியும், செயல்ர் குழந்தை வேலுவும் நண்பர் ஆவுடையப்பனும் சிக்கியிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்களுக்கிடையே தீபம் பார்க்கும்வரை உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்கிறார். மாலை மயங்கும் நேரம். திருவண்ணாமலையின் - மலை உச்சியில் தீபம் ஏற்றப் படுகிறது! இலட்சக்கணக்கான பக்தர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு, தீபத்தை நோக்கிக் கரம் நீட்டி, வணங்கி, தலைக்கு மேல் உயர்த்தி ‘அண்ணாமலையானுக்கு அரோகரா’ என்று முழங்குகிறார்கள்.
அதுவரை உடல்நலக்குறைவாலும், உணவு உட்கொள்ளா மையாலும் சோர்வாகத் தோன்றிய தெய்வநாயகம் திடீரென சிலிர்த்து எழுந்து நிற்கிறார். அண்ணாமலையானை வணங்கித்

Page 115
2 12 இதோ ஒரு வெளிச்சம்
தொழுது, தீபத்தைப் பார்த்த பரவசத்தில், அவருடைய களைப்பு எங்கே பறந்தது?’ என்று யாருக்கும் தெரியவில்லை. அவருடனிருந்த குழந்தைவ்ேலுவுக்கும், ஆவுடையப்பனுக்கும் ஒன்று தெளிவாகப் புரிந்தது. 'இந்த மாமனிதரின் திடமான வலுவுக்கும், உறுதிக்கும் ஒரே காரணம் ஆழ்ந்த கடவுள் பக்தி யாக மட்டுமே இருக்க முடியும்'
திருச்செந்தூர்!
தெய்வநாயகத்தைத் தீவிரமான முருகபக்தியில் ஆழ்த்திய அறுபடை வீடு திருச்செந்துார்.
இறைவன் பஞ்சபூதங்களாக அமைந்து, அருள்பாலிக்கும் தலம்!
இந்தத் திருச்செந்தூர் முருகன் மேல் அளவற்ற பக்தி கொண்டவர் அவர் .
இந்தக் கோயிலில் இவர்களுடைய குடும்பத்திற்காகவே நியமித்திருக்கின்ற அர்ச்ச்கர் ராமசாமி ஐயர். வி.ரி.வி கட்டளை ஐயர். குடும்பத்தினரின் பிறந்த நாள், மணநாள், மற்றும் விழா நாட்களின் போது, யார் திருச்செந்தூருக்கு வந்தாலும், வர 1 விட்டாலும் அவரவர் பெயரில் நடைபெற வேண்டிய சிறப்பு அர்ச்சனைகள், அபிஷேகங்கள் ஆகியவற்றைத் தவறாது, முறைப்படி செய்து பிரசாதங்களை அனுப்பி வைப்பவர் இராம சாமி ஐயர்.
அதுமட்டுமல்ல, வி.ரி.வி குடும்பத்தினருக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் திருச்செந்தூர் வரும்போது அவர் களையும் அழைத்துச் சென்று முருகனின் தரிசனத்துக்கு வேண் டிய ஏற்பாடுகளைச் செய்வதும் கட்டளை ஐயரின் மற்றொரு பணியாகும்.
இராமசாமி ஐயர் தெய்வநாயகத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் தன்னை இழந்து விடுகின்றார் என்றே சொல்ல வேண்டும். -
'என்னுடைய அப்பா, அம்மா இருவரும் என்றோ இறந்து விட்டார்கள்! என்னைப் பொறுத்தவரையில் இன்று என்னு டைய அப்பா தெய்வநாயகம் பிள்ளை; அம்மா சிதம்பரத்தம் மாள். அவர்கள் என் மீது காட்டும் பாசத்திற்கு அளவே யில்லை!

ஆண்டவனுக்கு எதற்கு வேலி? 23 .
அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் என்னை அழைக்காமல் விட்டதில்லை!"
பலமுறை இவர் இலங்கைக்கு விமானத்தில் பறந்து சென் றிருக்கிறார்.
இராமசாமி ஐயரின் குடும்பச் சிக்கல்களையும், தேவை களையும் தங்கள் குடும்ப உறுப்பினரின் சிக்கல்களாகவும், தேவைகளாகவும் எடுத்துக்கொண்டு அவற்றிற்குத் தீர்வு காணும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள் தெய்வநாயகத்தின் குடும்பத்தினர்.
'எனக்குத் திருச்செந்தூர் முருகன் கடவுள்; அதற்கடுத்து கடவுளாக, நடமாடும் தெய்வமாக, நான் பார்ப்பது தெய்வ நாயகத்தைத் தான்’ என்று கூறும் இராமசாமி ஐயர் மற்றொரு செய்தியைச் சொல்லி வியக்கிறார்.
அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந் தூர் முருகனின் திருவருளைப் பெற ஒடோடி வருகிறார்கள். வழிபடுகின்ற முறைகள் வேறுபடுகின்றன. அவருடைய பல் லாண்டு அர்ச்சகர் அனுபவத்தில் முருகனை வழிபடுவதில் இரண்டு பக்தர்களிடம் ஓர் ஒற்றுமை இருக்கிறது. ஒருவர் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர்; மற்றவர் தெய்வநாயகம் சில நேரங்களில் இருவருடைய தோற்ற ஒற்றுமையைப் பார்க்கும்போது அவர்கள் உடன்பிறந்த சகோதரர்களோ' என்று எண்ணத் தோன்றும்.
முருகன் சன்னிதியில் நின்று முருகனைப் பார்த்த உடனே கண்களில் தாரைதாரையாக கண்ணிர் விடுவது தேவரும்; தெய்வ நாயகம்தான். தங்களை மறந்து கண்ணிர் விடும் வழக்கம் இவர்களுடைய சிறப்பு.
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்’
என்றக் குறளுக்கிணங்க, அளவற்ற அன்பே அந்தச் சூழ்நிலையில் கண்ணிராக வெளிப்படுகின்ற காட்சியைப் பார்க்கலாம்!
திருச்செந்தூரில் ஒரு திருவிழாவென்றால் ஒன்று தெய்வ

Page 116
24 இதோ ஒரு வெளிச்சம்
நாயகம் அங்கே இருப்பார் அல்லது அவருடைய பிள்ளை களில் யாராவது இருப்பார்கள்.
தெய்வநாயகம் திருச்செந்தூரிலே முருக வழிபாட்டிற்கு வந்துவிட்டால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டத்தைக் காண லாம்.
வயதான அவர் முகத்தில் காணப்படும் மலர்ச்சி, முதிர்ச்சி, திருநீறு பூசி குங்குமம் வைக்கப்பட்ட நெற்றி, கழுத்தில் உருத் திராட்ச மாலை இவற்றோடு கூடிய தெய்வீக ஒளியோடு அவர் நிற்கும்போது, தங்களையறியாமல் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி 'முருகா, முருகா' என்று அவர் வாழ்த்த அவர் கையால் நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ளும் பக்தர் களைக் காணலாம்.
1991 செப்டம்பர் மாதம் திருச்செந்தூரில் நடைபெற்ற தெய்வநாயகம் தம்பதியரின் சதாபிஷேக விழா அவர் குடும்ப நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
நட்சத்திரங்களைக் கணக்கு வைத்துப் பார்க்கும்போது 80 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர் 1000 வளர்பிறைகளைக் காண் கிறார் என்பார்கள். சந்திரனை வைத்துக் கணக்கிடுபவர்கள் 84 ஆண்டில் 1000 வளர் பிறைகளைக் காண்கிறார்கள். வழக்கத்தில் 27 நட்சத்திரங்களை ஒரு மாதம் என்று கொண்டு 80ம் வருடம் சதாபிஷேகம் கொண்டாடுவதுண்டு!
தெய்வநாயகத்தின் சதாபிஷேக விழாவைக் கொழும் பிலேயே கொண்டாடியிருக்கலாம். கூட்டத்திற்காகவும், பெரு மைக்காகவும் கொண்டாட எண்ணியிருந்தால் அது எங்கோ நடந்திருக்கும். தங்கள் வாழ்வோடு ஒன்றப் பிணைந்து விட்ட திருச்செந்தூர் முருகன் ஆலயத் திருமண மண்டபத்தில் வைதீக முறைப்படி நடந்த சதாபிஷேக விழா, மட்டற்ற மகிழ்ச்சியான விழா! குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குதூகலத்தோடு கொண்டர்டிய விழாவில் ஏழை, எளியவருக்குப் பல்வேறு வகையில் தான தருமங்களை அக்குடும்பம் மகிழ்ச்சியோடு செய்தது.
சிற்பி கணேசன்! நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைத்துக்

ஆண்டவனுக்கு எதற்கு வேலி? 215
கொடுத்த இவருடைய அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர் பிருக்காது! இளைஞராக இருந்தாலும் அவருடைய சாதனை கள் ஏராளம்!
திருச்செந்தூரில் குடியிருக்கும் இந்த இளைஞரின் ஆற் றலைப் பற்றிக் கேள்விப்பட்ட தெய்வநாயகம் அவரை வல்ல
விநாயகர் கோயிலை வடிவமைக்கும் பணியை ஒப்படைத்தார். அந்தக் கோயிலை நிர்மாணிக்க தெய்வநாயகத்தோடு விவாதிக் கும்போதுதான் ஆகம சாத்திரங்களை முறையாகப் படித்திரா விட்டாலும் பல அற்புதமான சங்கதிகள் அவருக்குத் தெரிந் திருக்கின்றன என்ற உண்மை சிற்பிக்குத் தெரிந்தது. ஓர் ஆலயம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும்' என்று நுணுக்க மாக அவர் கூறியபோது அவர் எப்படி எல்லாக் கோயில்களை யும் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதும், அந்தத்துறையில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பதும் தெளிவாகப் புலனாகிறது.
தம்முடைய கோயிலை நிர்மாணிக்கும் பணிக்கு மட்டும் தன்னைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் சிற்பி கணேசனின் புகழ் குடத்திலிட்ட விளக்காக அமைந்திருக்கும். ஒருநாள் சிற்பிக்கு இலங்கை வருமாறு அழைப்பு வந்தது. திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் அறங்காவல் குழுத்தலைவர் உவரி. ஆ. கிருபாநிதியுடன் கொழும்பு சென்றார். அது அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம். வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம். விமான நிலையத்தில் இறங்கிய நிமிடத்திலிருந்து, திரும்ப இந்தியா கிளம்பும் வரை தெய்வநாயகம் குடும்பத் தினரின் விருந்தோம்பல் அவரைத் திணற வைத்தது.
தான் ஒரு கோயில் கட்டும் தொழிலாளி' என்று எண்ணிக் கொண்டிருந்த ஒருவர் தனக்கு இவ்வளவு மதிப்பிருக்கும் என்று முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
சிற்பியார், உவரியார் ஆகியோருடைய வருகை, புகைப் படங்கள், பேட்டிகள் இலங்கைத் தமிழ் நாளிதழ்களில் வெளி யாயின.
இலங்கை வானொலி பேட்டியெடுத்து ஒலிபரப்பியது இலங்கைத் தொலைக் காட்சி ரூபவாகினி அவர்களு டைய பேட்டியை ஒளிபரப்பு செய்தது!

Page 117
2 1 6 ° V− இதோ ஒரு வெளிச்சம்
இலங்கையின் பல்வேறு கோவில்களுக்கு இந்தக் குழு சென்றது. பல கோயில்களின் அமைப்பைப் பார்வையிட்டு மேலும் தெரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியது. எல்லா வற்றுக்கும் மேலாக கொழும்பைச் சுற்றிப், பல்வேறு கோயில் களுக்குத் திருப்பணி செய்யும் ஒப்பந்தம் சிற்பிக்குக் கிடைத்தது! அதனால், அவருடன் செல்கின்ற பல தொழிலாளர்கட்கு புகழும் வருமானமும் கிடைக்கின்றது.
அண்மையில், 1995ல் திருச்செந்தூர் கோயிலின் கும்பா பிஷேகம் நடந்த போது ஒரு புதிய கோபுரத்தைக் கட்டி முடிக்கும் பெரிய பணியை ஏற்று அதை மிக அற்புதமாக நிறைவேற்றி முடித்தவர் சிற்பி கணேசன்.
உள்ளூரிலே பெருமை பெற்ற அவருக்குக் கடல் கடந்தும் பெருமை கிடைக்கிறதென்றால் அதற்குக் காரணம் தெய்வ நாயகமே!
திருச்செந்தூரில் தினபூமி பத்திரிகையின் நிருபராகவும், ஒர் இலக்கியப் பேச்சாளராகவும் திகழுகின்ற எம். இராம கிருஷ்ணன் அவர்கள் ஒரு வரலாற்றுச் செய்தியை நினைவு கூர்ந்தார்.
இராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டும் போது, மாறு வேடத்தில் வந்து அங்கே பணியாற்றிக் கொண் டிருந்த சிற்பிகளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்ததாகச் சொல்லுவார்களாம். தெய்வநாயகம் தமிழகச் சிற்பிகளுக்கு ஆதரவு நல்கி, அன்போடு உபசரிக்கும் போது இராஜராஜ சோழன் தான் நினைவுக்கு வருகிறான்.
கலைஞர்களுக்கு ஆதரவு காட்டுவதில், பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே!
உவரி. ஆ. கிருபாநிதி!
திருச்செந்தூர் வட்டார மக்களால் மிகவும் மதிக்கப்படு கின்ற ஒரு முக்கியமான மனிதர்.
سمبر
திருச்செந்தூரை அடுத்த ஒரு சிறிய கிராமம் உவரி, அங்கே நிலச்சுவான்தாரராகத் திகழும் கிருபாநிதி அவர்கள் சிறுவயதி லிருந்தே முருகன் மீது காதல் கொண்டவர். 'பக்திதான் சக்தி என்பதை உணர்ந்தவர். 'எவ்வளவு பெரிய பதவியில் இருப்ப

ஆண்டவனுக்கு எதற்கு வேலி? 21 7
வர்கள்; பணக்காரர்கள்; அறிஞர்கள் ஆகியோரோடு பழகினா லும் அவற்றிற்கெல்லாம் மேலாக இறைவனருள் என்பது இன்றி யமையாதது' என்பதை நன்கு உணர்ந்தவர்.
கிருபாநிதி உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். காரணம் முருகன் அருளால் 'திருச்செந்தூர் முருகர் கோயிலின் அறங்காவல் குழுத் தலைவர் பொறுப்பு அவருக்குக் கொடுக் கப்பட்டது. 1995ம் ஆண்டு தமிழ்கூறும் நல்லுலலகமே வியக் கும் வண்ணம் அவர் பொறுப்பேற்று நடத்திய ‘கும்பாபிஷேக' விழா, திருச்செந்தூர் வரலாற்றில் ஒரு மைல் கல்.
ஒரு மாசிமாதம்; எட்டாம் திருநாள், இறைவனுக்குப் பச்சை சாத்தி தீப ஆராதனை நடந்து கொண்டிருக்கும் போது உவரி யார் அந்த கம்பீரமான மனிதரைக் கண்டார். மக்கள் கூட்டத்திற் கிடையில், நெரிசலில் நின்றபடி அவர் முருகனை வழிபட்ட விதம்; முருகனிடம் வேண்டிய விதம் உவரியாருக்குப் பேருவகை யூட்டியது. முருகன் என்றாலே இளகிப் போய்விடும் அவருக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் 'முருகன்' என்ற சிந்தனை யிலேயே வாழும் தெய்வநாயகத்தை முதன் முதலாகப் பார்த்த வுடனே மனத்தை அவரிடம் இழந்தார். பலமுறை கேள்விப்பட் டிருந்தாலும், முதன்முறையாக அன்றுதான் அவரைச் சந்திக்கும் பேற்றினைப் பெற்ற உவரியார் அந்த நட்பைப் பெரும் பேறாகப் போற்றி வருகிறார்.
உவரியாரும் சிற்பி கணேசனும் கொழும்பு சென்றபோது தெய்வநாயகம் காட்டிய பாசத்தை எண்ணும்போதெல்லாம் கிருபாநிதிக்கு இளம் வயதில் தன்மீது மிகவும் பாசத்தைப் பொழிந்து தன்னை மிகச் செல்லமாக வளர்த்த தன் தாத்தா, பெருமலிங்கம் கோவிலின் பரம்ப்ரை தர்மகர்த்தா சோட்டைக் கல் நாடாரின் நினைவுதான் வரும். இருவரின் உருவ அமைப் பும் அப்படியே!
1995ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தெய்வ நாயகம் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் அவருடைய மைந் தர் முருகேசு விழாவில் முழுமையாகக் கலந்து கொண்டு பேரு வகை அடைந்தார்.

Page 118
28 இதோ ஒரு வெளிச்சம்
ஒரு கணிசமான தொகையை தெய்வநாயகம் நன்கொடை யாக வழங்கினார். அன்று தன் நகைகளை வைத்து விளையாடி, துடிக்க வைத்துப் பின்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தித் தன்னை ஆட் கொண்ட திருச்செந்தூர் முருகனுக்குத் தன்னால் இயன்றதை மகிழ்வோடும், பணிவோடும் செய்யும் அவர் எப்போதும் சொல்வது 'முருகன் எனக்குக் கொடுக்கிறான்; அதைத் தான் நான் அவனுக்குத் திரும்பக் கொடுக்கிறேன்’
கம்பஹாவில் உள்ளது புனித ஜூட் தேவாலயம்
தமிழ்நாட்டிற்கு ஒரு வேளாங்கன்னி என்றால் இலங் கைக்கு செயிண்ட் ஜூட் தேவாலயம்! கொழும்பிலிருந்து இருபத் தைந்து மைல் தூரத்திலிருக்கின்ற இந்தத் தேவாலயத்திற்கு எப் போதும் திரளான மக்கள் வருவதுண்டு. பல்வேறு வேண்டுதல்களை முன் வைத்துப் பல மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வருவார்கள்!
அதுவும் வியாழக்கிழமை என்றால் சொல்லவே வேண் டாம்! அவ்வளவு கூட்டம் வரும்! கோவிலுக்கு ஒவ்வொரு வியாழனும் திருவிழா நாளே!
நோய், நொடி, குடும்பக் கவலைகள், வேறு சிக்கல்கள் தீர வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் பல கோரிக்கைகள் நிறை வேறியிருக்கின்றன. பல அற்புதங்கள் இங்கே நிகழ்ந்திருக்கின்
றன.
இந்த தேவாலயத்திற்குப் பொறுப்பேற்று பூசைகளை நிகழ்த்தி வரும் மறைதிரு. எல்மோ அடிகளார் அவர்கள், தேவாலயப் பொறுப்பேற்ற புதிதில் ஒரு பெரியவரையும், அவருடைய பாரியாரையும் சற்று வியப்போடு பார்ப்பதுண்டு.
பெரும்பாலும் இருவரும் இல்லாவிடில் பெரியவர் மட்டு மாக ஒவ்வொரு வியாழக்கிழமை காலையும் கோவிலுக்கு வரு வதை அவர் பார்த்தார். இருவரும் வழக்கமாக நடைபெறும் பிரார்த்தனை, வழிபாட்டு முறைகளைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் அவர்கள் வரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது, இயேசு பிரானின் அழகிய சிலையையே பார்த்தபடி நீண்டநேரம் உட்கார்ந்திருப்பது போன்ற செயல்களைப் பார்த்த அவருக்குப் பல வகையில் வியப்பு!

ஆண்டவனுக்கு எதற்கு வேலி? 29
பெரும்பாலான கிறித்தவர்கள் கூட ஒவ்வொரு வியாழ னும் தவறாமல் வருவது கிடையாது, ஆனால் இவரும், இவர் பாரியாரும், பல நேரங்களில் இவர் பிள்ன்ளகளும் தவறாமல் வருகிறார்களே, ஏன்?
பார்த்த மாத்திரத்திலேயே தீவிர சைவர், இந்து என்பதை அவருடைய நெற்றியில் உள்ள திருநீறும், பெரிய குங்குமமும், மார்பிலே உள்ள சந்தனமும் பளிச்செனப் படம் பிடித்துக் காட்டுகிறதே, இவ்வளவு தீவிரமான இந்துக்களுக்கு, இயேசு நாதரின் மீது இவ்வளவு ஆழ்ந்த பக்தியா?
கொழும்பிலிருந்து தேவாலயம் இருபத்தைந்து மைல்கள். ஒவ்வொரு முறையும் வந்து போவதென்றால் குறைந்தது ஐம்பது மைல்களுக்கு மேல் பயணம் செய்யவேண்டும். அதுவும் வியாழக் கிழமை போக்குவரத்து நெரிசலில் இவ்வளவு தூரம் பயணம் செய்து, உடலை வருத்திக் கொண்டு, ஆண்டவனை வழிபட வேண்டுமென்றால் எவ்வளவு இறை ஈடுபாடு இருக்க வேண் டும்!
கிளம்பும்போது அவர் மறைதிரு. எல்மோ அடிகளாரிடம் கேட்பார். ‘ஏதாவது நாங்கள் செய்ய வேண்டுமா? அருள் கூர்ந்து உத்தரவிடுங்கள்.'
கோயிலின் சார்பாக, ஆங்காங்கே நடைபெறும் சமூக நல திட்டங்களுக்கு உதவி தேவைப்படும். ஏழை, அனாதை சிறுவர் களுக்கு உணவளிக்க வேண்டி வரும்’ என்றெல்லாம் அடிகளார் கேட்கும் போது தெய்வநாயகம் மிகுந்த மகிழ்ச்சியோடு உதவு வது வழக்கம். . . .
தமக்கு அருளும், ஆசியும் மட்டும் வேண்டி தெய்வநாய கம் வரவில்லை; அங்கும் ஏதாவது ஒரு நற்செயலைச் செய்ய லாமா? என்றுதான் வருகிறார் என்பது அடிகளாருக்கு அவர் மேல் மேலும் மதிப்பைக் கூட்டியது. அதே போல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கொழும்பில் புனித அந்தோனியார் சர்ச்சுக்கு செல்வதும் தெய்வநாயகத்தின் வழக்கம்.
இப்படி மாதா கோயில்களுக்குச் செல்லும் வழக்கம் அக் குடும்பத்தில் எல்லோரிடமும் இருப்பதைப் பார்க்கலாம்.
முருகேஷ் மாலை வேளையில் தன் அலுவல்கள் முடிந்ததும்

Page 119
220 இதோ ஒரு வெளிச்சம்
அலுவலகத்திலேயே சிறியதாக அமைத்திருக்கும் கோயிலில் உள்ள விநாயகரை வழிபட்டுவிட்டு, நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு காரில் ஏறி வீடுநோக்கி கிளம்புகிறார். ஆனால் வீட் டிற்குப் போகும் முன் அவர் கார் நிற்குமிடம் 'குழந்தை இயேசு கோயில்' அங்கே நுழைந்து மண்டியிட்டு வணங்கி விட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி விட்டுத்தான் அவர் வீட்டுக்குச் செல் கிறார்.
ஒரு நாள் தெய்வநாயகத்தின் அன்பு வேண்டுகோளுக் கிணங்க கொட்டாஞ்சேனையிலுள்ள அவருடைய இல்லத்திற்கு மறைதிரு. எல்மோ அடிகளார் சென்றார்.
'தம் வீட்டின் ஒவ்வொரு அறைக்குள்ளும் அடிகளாரை தெய்வநாயகம் அழைத்துச் சென்று காட்டியபோது அடிகளார் கேட்டார், 'ஆமாம், ஏன் எல்லா அறைகளையும் என்னிடம்
'காட்டுகிறீர்கள்?’
'உங்களைப் போன்ற புனிதமான மனிதரின் பாதங்கள் எங்கள் வீட்டில் எல்லா அறைகளிலும் பட்டால் எங்கள் இல்லம் புனிதமாகும்; மேலும் நலமடையும்’ என்று சொன்ன போது அடிகளார் அதிர்ந்து போனார். 'எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட மனிதர் தெய்வநாயகம்!'
பூசை அறைக்குள் நுழைந்தார் அடிகளார். வரிசையாகப் பல்வேறு இந்துக் கடவுளரின் படங்கள். விநாயகர், முருகர், பெருமாள், லக்ஷமி, சரசுவதி என்று பல படங்கள். வலது பக்கம் இருந்த ஒரு படத்தைப் பார்த்தவுடன் ஒருமுறை கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் . புனித மேரியன்னை தோளில் குழந்தை இயேசுவைச் சார்த்தி வைத்திருக்கிற படமும் அவரு டைய புனிதமான பூசை அறையிலே இடம் பெற்றிருந்தது!
கொழும்பு போபஸ்லேன் பகுதி இசுலாமிய சகோதரர்கள் நிறைந்த பகுதி! அந்த இடத்திலே பழைமையான ஒரு பள்ளி வாசல்.
அந்தப் பள்ளி வாசலை ஒட்டி, ஒரு காலி இடம் தெய்வ நாயகத்திற்குச் சொந்தமாக இருந்தது. மக்கள் அதிகமாக குடி யிருக்கும் பகுதியாக இருந்ததால், அங்கே சில கடைகளைத் தொகுப்பாகக் கட்டலாம் என்று தெய்வநாயகம் எண்ணியிருந் தாா.

ஆண் வனுக்கு எதற்கு வேலி? 22
அதே நேரத்தில் அந்தப் பகுதியில் நிறைய இருந்த இசுலா மிய சகோதரர்களுக்குத் தொழுகை நடத்த அந்தச் சிறிய பள்ளிவாசல் போதாமல் இருந்தமையால், பள்ளிவாசல் தர்ம கர்த்தா, அல்ஹாஜ் சாஹஜூல் ஹமீது, தக்கியா அல் மஜ்ஜிதுல் புகாரி ஆகியோருடன் பல இஸ்லாமிய நண்பர்கள் தெய்வ நாயகத்திடம் திரளாக வந்தார்கள். மிக்க மலர்ச்சியோடு, அன்பாக அவர்களை அவர் வரவேற்றார். m
ஐயா, அருள் கூர்ந்து உங்கள் இடத்தைப் பள்ளி வாசல் கட்ட நீங்கள் விற்றால் நாங்கள் மகிழ்வோம். நீங்கள் என்ன தொகை கேட்கிறீர்களோ, அதைக் கொடுத்து விடுகிறோம்.'
கோரிக்கையை முன் வைத்து விட்டு அனைவரும் அவரு டைய முகத்தையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்
56.
'அந்த இடத்தை நான் விற்பதாக இல்லை. ஆனால் என் னுடைய சிறிய அன்பளிப்பாக உங்களுக்குக் கொடுத்து விடுவ தாக இருக்கிறேன். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!'
வந்திருந்த இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தங்களையே நம்பமுடியவில்லை.
'விற்பாரோ, மாட்டாரோ? விற்கமாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன சொல்வது?
விற்பதாக இருந்தால் என்ன விலை சொல்லுவார்? அதிக விலை சொல்லி விட்டால் என்ன செய்வது?’ என்று ஆயிரம் குழப்பங்களுடன் வந்த இஸ்லாமிய சகோதரர்கள், பல லட்சம் மதிப்புள்ள அந்த இடத்தை அன்பளிப்பாகவே பெற்ற போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
தெய்வநாயகம் அவர்களுக்கு, இலங்கை அமைச்சர் இராஜ துரை அவர்கள் 'அருட் செல்வர்' என்ற பட்டம் வழங்கிய விழாவில் பேசிய அல்ஹாஜ் சாஹ"ல் ஹமீது அவர்கள் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டியது குறிப்பிடத் தக்கது.
'மனித வாழ்க்கையில் பணம் சேர்ப்பது, வாழ்க்கை வசதி களைப் பெருக்கிக் கொள்வது என்பது ஒரு பக்கம்; ஆனால் இன்னொரு பக்கம் உள்ளது; அது ஆன்மீக வாழ்க்கை. அதை

Page 120
222 இதே ஒரு வெளிச்சம்
நிறைய பேர் மறந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் ஆன்மீக வாழ்க்கைப் பக்கத்தை மறக்காதவர் தெய்வநாயகம்' என்கிறார் மறைதிரு. எல்மோ.
'ஒவ்வொரு மனிதனும் தன் வருவாயில் மூன்று சத வீதத்தை அறப்பணிகளில் செலவழிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்த வழியில் அறப்பணிகளுக்காகத் தயங்காமல் பாகு பாடின்றி செலவழிக்கும் தெய்வநாயகம் அவர் கள் நீடுழி வாழ அல்லாஹற் அருள் புரிய வேண்டும்' என்று கூறுகிறார். சாஹஜூல் ஹமீது
ஒவ்வொரு வியாழக்கிழமையும் அருகே உள்ள பள்ளி வாசலுக்குச் சென்று தொழுது விட்டு அங்கே திரளும் ஏழை எளியவர்கட்கு பிஸ்கட் துண்டுகளை மகிழ்வோடு வழங்கியபடி நிற்கும் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அண்ணல் காந்தியடி களுக்கு மிகவும் பிடித்த அந்தப் பாடலின் வரிகள் காதில் ஒலிக்கின்றன.
ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதா ராம் ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சம்மதிதே பகவான்
 

24. 'விழிமின், எழுமின்'
'இனக்கலவரம் ஒய்ந்ததா, இல்லையா?’ என்று சொல்ல முடியாத தழ்நிலை; ஆனால் மக்களின் மனக்கலவரம் மட்டும் ஒய்ந்த பாடில்லை.
வசதியும், வாய்ப்பும் கிடைத்தவர்கள் ‘இனிமேல் நமக்கு வேண்டாம் இலங்கை' என்று முடிவெடுத்துத் தமிழகம் திரும்பி விட்டார்கள். அகதிமுகாம்கள் நிரம்பி வழிந்தன!
பெரும்பாலான வணிக நிலையங்களும், அலுவலகங்களும் மூடியே கிடந்தன! ஆங்காங்கே, தீவைப்பு, கொள்ளை, கொலை, கலவரங்கள் நடந்த வண்ணமாக இருந்தனவே யொழிய, நிற்கவில்லை!
தந்தையையும், பிரமநாயகத்தையும், எஞ்சிய பெண்கள், குழந்தைகளையும் அனுப்பி வைத்தபிறகு ஈஸ்வரன், வீரவாகு, முருகேஷ் மூவர் மட்டும் கொழும்பில் இருந்தார்கள்.
இந்த நிலையில் வி.ரி.வி. நிறுவனங்கள் மட்டும் தினம் இயங்கின.
இயங்கின’ என்பதை அவ்வளவு அழுத்தமாகச் சொல்ல முடியாது. அலுவலகங்களை உரிய நேரத்தில் திறந்தாலும் வேலைக்கு வருபவர்கள் அவரவர்களுக்கு வசதிப்பட்ட நேரங் களில் வந்து போக ஆரம்பித்தார்கள். S.
வீரவாகு முருகேஷ் - இருவரின் மனநிலைகள் வேறாக இருந்தன. 'தந்தையும்-மனைவி மக்களும் வேறு இடத்தில்; தந் தைக்கு அடுத்த இடத்தில் இருந்து வழிநடத்தும் ஈஸ்வரனோ விடாப்பிடியாக அங்கும் இங்கும் நடமாடியபடி வியாபாரத் தில் முனைப்பாக இருக்கிறார். சமூக விரோத சக்திகளோ, சந்தர்ப்பம் தேடி அலைந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஈஸ்வரனைக் காப்பாற்றியாக வேண்டும். ஆகவே, ஒருவர் மாற்றி ஒருவராக ஈஸ்வரனை ‘அண்ணா,

Page 121
224 இதோ ஒரு வெளிச்சம்
நீங்கள் இந்தியா போய் விடுங்கள்! வியாபாரத்தை எப்படியும் பின்னால் கவனித்துக் கொள்ளலாம்!' என்று வற்புறுத்திய வண்ணம் இருந்தார்கள்.
ஈஸ்வரன் மனநிலையோ வேறுமாதிரி இருந்தது. ‘வி.ரி.வி நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். வியாபாரம் நடந்தாலும், நடக்காவிட் டாலும் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தவிர வழக்க மான செலவுகள் இருக்கவே செய்தன. மேலும் இனக்கலவரங் களால் பாதிக்கப்பட்ட கட்டடங்களைச் சரி செய்தல், காப் பீட்டுத் "தொகைக்காக எழுதிப் போட்டுத் தொகையைப் பெற முயலுதல், கொடுக்கல் - வாங்கல் தொடர்பான பலவேலை கள் அப்படியே இருந்தன. இந்தச் சூழ்நிலையில் இந்தியா செல்வது சரியில்லை’
'நிலைமை சரியில்லைதான்; இந்தச் சூழ்நிலையில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் இருந்து சிக்கிக் கொள்வதை விட யாராவது ஒருவர் இருந்தால் போதுமானது' என்று கருதிய ஈஸ்வரன், தம்மை இந்தியாவுக்குத் திரும்பச் சொன்ன தம் தம்பி களையே ஒருவர் பின் ஒருவராக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். இருவருமே அரை மனத்தோடு, 'அண்ணனை விட்டுச் செல்லுகிறோமே என்ற கவலையோடு தமிழகம் போய்ச் சேர்ந்தார்கள்.
‘வெற்றியை எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம். நாங் கள் தாம் வெற்றிக்குக் காரணம் என்று தோளைக் குலுக்கி, நெஞ்சைத் தட்டிக் கொள்ளலாம். ஆனால் தோல்வி என்று வரும்போது, ஒரு சிறந்த தலைவன் தோல்விக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும். அந்த நேரத்தில் 'அவரால் தோற் றோம்; இவரால் தோற்றோம்' என்று வேறு ஆட்களைச் சுட்டிக் காட்டக் கூடாது. --
இதனை மிக நன்கு அறிந்திருந்த ஈஸ்வரன் இந்த இடர்ப் பாடுகளுக்குப்பின், தோல்வி வருவதாக இருந்தால், அந்தத் தோல்வியைத் தம் தம்பியர்கள் சுமப்பதை விரும்பவில்லை. ‘வெற்றி வரலாம் - வராமல் போகலாம். ஆனால் வரப்போவது தோல்வி போல் தோன்றியதால் அதைத் தாம் மட்டும் சுமப்பது; அதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வது என்ற முடிவில்

'விழிமின், எழுமின்' 225
தான் துரத்தாத குறையாகத் தம்பிகளை இந்தியா அனுப்பி
னார்.
பல நாட்கள் அலுவலகங்களில் அவர் மட்டும் தனி யாகவோ, அல்லது மிகக்குறைந்த ஊழியர்களுடனோ இருந்து வேலை பார்த்த நாட்களாக இருந்தன. பத்து மணிக்கு அலு வலகத்தைத் திறந்து விட்டுப் பன்னிரண்டு மணிக்கும், ஒரு மணிக்கும் மூடிவிட்டுத் திரும்பிய நாட்கள் ஏராளம்.
பலருடைய மனங்களிலே பெரிய பாதிப்புக்கள் இருந்தன. மனங்கள் இறுகிப் போயிருந்தன. கலகலப்பு காணாமற் போய்ப் பல நாட்களாகியிருந்தன. கவலைக் கோடுகள் முகங்களிலே தெளிவாகப் பதிவாயிருந்தன. பேசுவதற்குக் கூட அஞ்சியபடி, மூச்சு மட்டும் விட்டபடி நடைப்பிணமாய் உலவிய அந்த மனிதர் களிடையே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வெளிச்சத் தைப் பரப்பி வந்தார் ஈஸ்வரன்.
வசதி வாய்ப்புப் படைத்த, நிறுவனத்தின் நிர்வாக இயக் குனரே, உயிரைப் பற்றிக் கவலைபடாமல் அலுவலகத்திற்கு வரும்போது, நாமும் சென்றாக வேண்டும்' என்ற உணர்வு மற்றவர்களைப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
கொழும்பு நகரம் இலேசாகப் பழைய நிலைக்குத் திரும்பி னாலும் தொல்லைகளிருந்தன.
'உங்கள் கடையில் வெடிகுண்டுகள் இருப்பதாகத் தொலை பேசித் தகவல் வந்திருக்கிறது. கடைகளைச் சோதனை போட வேண்டும்' என்று கூறியபடி பொலிஸ், இராணுவ வீரர்கள்
வருவார்கள்.
இந்தச் சோதனைகள் நடைபெறும் போது கடையின் உரி மையாளர் முதல் கடைசி ஊழியர்வரை அனைவரையும் வெளி யேற்றி நடுத் தெருவில் நிறுத்திவிட்டுச் சோதனை நடத்துவார் கள்.
கொழும்பு செட்டித் தெருவோ, தங்க நகை வியாபாரங் களுக்குப் பெயர் போனது கொழும்பின் கருவறைப் பெட்டி என்று அதனைச் சொல்லலாம். வரிசையாக நகைக் கடைகள்; தங்கம், வெள்ளி, நவரத்தினக்கல் வியாபாரங்கள்.
இப்படிப்பட்ட கடைகளிலிருந்து அனைவரையும் வெளியே

Page 122
226 இதோ ஒரு வெளிச்சம்
அனுப்பிவிட்டு சோதனை நடக்கும். லலிதா ஜூவல்லரி உரிமை யாளர் கந்தசாமி அப்படித்தன் கடைக்கு எதிரே நின்று கொண் டிருந்தவர்களில் ஒருவர்.
இந்த நேரத்தில் திடீர் 'தாதாக்கள்' முளைத்தார்கள். 'உங் கள் கடைகளுக்கு நாங்கள் பாதுகாப்புத் தருகிறோம். எங்களுக்கு எத்தனை ஆயிரம் தருகிறீர்கள்?
அவர்களைப் பாதுகாப்புக்குப் போடாவிட்டால், அவர் களே கடைகளை, உடைத்துக் கொள்ளையடிப்பவர்களைப் போலக் காட்சி தந்தார்கள்.
'நியமித்தாலும் கோளாறு; நியமிக்காவிட்டாலும் கோளாறு என்று மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவர் களை வைத்துக் கொண்டு தடுமாறினர் வியாபாரிகள்.
எரிந்து போன வீடுகளிலிருந்தும் தரை மட்டமான வீடு களில் இருந்தும் பலபொருள்கள் சிக்கின. சமூக விரோதிகள் எடுத்தவை போக எஞ்சியவை, எடுக்க மறந்தவை, எடுக்க முய லும் போது துரத்தப்படவே மிஞ்சியவை ஆகிய பொருள்களை இலங்கை அரசு திரட்டி சாது ஜினரத்னதேரோவின் பொறுப் பிலிருந்த கொட்டாஞ்சேனை புத்த விஹாரத்தில் குவித்து வைத் திருந்தது. m
பலதரப்பட்ட இப்பொருள்களைப் பாதுகாப்பில் வைத் திருக்கும் பொறுப்பு மேஜர் ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
பொருட்களைப் பறிகொடுத்தவர்கள் புத்தர் ஆலயத்திற்கு வந்து தங்கள் பொருட்களை அடையாளம் கூறித்தேடி எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
இழந்து போன பொருட்களைப் பற்றி ஈஸ்வரன் அதிக மாகக் கவலைப்படாவிட்டாலும், தம் தந்தை மிகவும் விரும்பிய சில பொருட்கள், குறிப்பாக சுவாமி படங்கள், சிலைகள் போன்றவை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற உணர் வோடு ஆலயத்திற்குச் சென்றபோது தான் ஈஸ்வரன் மேஜரை சந்திக்க நேரிட்டது!
இராணுவ அதிகாரியின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட

'விழிமின், எழுமின்” 227.
மக்களிடம் அவர் பழகியவிதம், அவருடைய பரந்த உள்ளம் ஈஸ்வரனை மிகவும் கவர்ந்தன.
கலவரம் தொடங்கியபோது ஹாலிடேஇன் ஒட்டலுக்கு வந்த ஈஸ்வரன் சுமார் மூன்று வாரங்கள் வரை அங்கேயே தான் இருந்தார். அங்கிருந்தே அலுவலகம் வருவதும், திரும்பு வதுமாக இருந்தார். அதுவரை அவருடைய தெருவில் நுழை வதே அவருக்கு எளிதாக இருக்கவில்லை.
மூன்று வாரங்கள் ஒடிய பின்னர் ஈஸ்வரன் தம் வீட்டிற்கு வந்து தனியாகத் தங்கினார். w
வெறுமையும், சலிப்பும், தனிமையும் நிறைந்த நாட்கள் அவை. மனைவி, குழந்தைகள், உறவினர் யாருமில்லாமல் வீடு பாலைவனமாக இருந்தது.
தன்னுடைய வழியில் என்றைக்காவது சற்று திசைமாறி, மேஜர் ஈஸ்வரனின் வீட்டிற்கு வருவார். சிறிது நேரம் பேசி விட்டுச் செல்வார்.
'தமிழர்களின் பிரச்சினை, யாருக்கு என்ன உதவி அரசிடம் தேவை இப்படிப் பல செய்திகளைப் பற்றி இருவரும் பேசு வார்கள்.
ஒருநாள் மேஜரிடமிருந்து ஈஸ்வரனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே வாருங்கள், நாம் பேச வேண்டும்.'

Page 123
298 இதோ ஒரு வெளிச்சம்
மேஜரின் அறைக்குள் நுழைந்த போது ஈஸ்வரனுக்கு ஒரு வியப்புக் காத்துக் கொண்டிருந்தது. ஒரு பையிலிருந்ததை அப்படியே மேஜர் தம் மேசைமீது கொட்டினார்.
கிட்டத்தட்ட இருநூறு பவுன்களுக்கு மேல் எடை கொண்ட பல்வேறு தங்க நகைகள் மேசையின் மீது குவிந்தன.
காதணிகள், கழுத்தணிகள், கைவளையல்கள், சில தாலி கள் உட்பட பலவிதமான, பளபளப்பான நகைகள். நிச்சயமாக இவை ஒரு குடும்பத்திற்கு மட்டும் சொந்தமாக இருக்க முடி யாது!’
ஆம்! சட்டத்திற்குப் புறம்பாக வாழ்வதையே வாடிக்கை யாகக் கொண்ட ஒரு கொடூர மனிதன், ‘எரிகின்ற வீடுகளில் பிடுங்கிய நகைகள் தாம் அவை. கத்தி முனையில் மிரட்டிப் பல வீடுகளில் கழற்றி வாங்கிய நகைகளே அவை.
அளவுக்கு மிஞ்சிச் சேகரித்த நகைகளை, அப்போதே விற்றுப் பணம் பண்ண முடியாத நிலையில் மண்ணுக்குக் கீழே மறைத்து வைத்திருந்தான் அந்தக் கொடியவன்.
எப்படியோ அவனைப் பற்றிய தகவல் இராணுவ உயர் அதிகாரிக்குக் கிடைக்க, விழுந்த அடியில் கதறியபடியே, பள்ளம் தோண்டி, புதைத்தவற்றை எடுத்து இராணுவ அதிகாரியிடம் சேர்த்துவிட்டான். நரி முழுங்கியதாக எண்ணப் பட்ட சேவல் ஆனந்தமாகக் குடிசையேறிக் கூவவும் ஆரம்பித்து விட்டது.
யார் வீட்டு நகைகள் இவை எனத் தெரியவில்லை. யார் இவற்றிற்கு உரியவர்களோ அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதற்கு உங்கள் உதவி தேவை; அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன். என்ன செய்யலாம்?"
ராணுவச் சீருடை அணிந்திருந்த மேஜர் ஒன்றும் செல்வத் தில் புரளும் சீமானல்லர்! அவர் கையிலே இருந்த இருநூறு பவுன் நகைகளை அவர் அப்படியே எடுத்துக் கொண்டால், அது யாருக்கும் தெரியப் போவதில்லை. சொல்லப் போனால் அவரிடம் அந்த நகைகள் இருக்கும் செய்தியே யாருக்கும் தெரி யாது! இந்தச் சூழ்நிலையில் ஒரு மனிதன் நேர்மையாகவும்,

'விழிமின், எழுமின்’ 229
நாணயமாகவும் நடக்க முயல்கின்றானே அவன் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதனாக இருக்க வேண்டும்? - ஈஸ்வரன் மனத்திலே மேஜர், பல படிகள் உயர்ந்து மேலே சென்று விட்டார்.
நகைகள் யாருடையவகையாக இருக்கும்? யாரைப் பார்த் தால் உண்மை தெரியும்?' என்றெல்லாம் விசாரித்து இருவரும் வீடுவீடாக அலைந்து உரியவர்களிடம் அணிகலன்களை ஒப் படைத்தனர். கையிலிருந்த கடைசி மூக்குத்தியையும் ஒப்படைத் தப் பின்னர் தான் மேஜர் நிம்மதியாகத் துரங்கப் போனார்.
அகதி முகாம்களுக்குச் சென்று, அங்கே அடைக்கலம் புகுந் திருந்தவர்களிடம் மேஜர் உரையாடுவது வழக்கம். நீங்கள் இந் நாட்டு மக்கள்; இந்த நாட்டுக்குள்ளேயே நீங்கள் அகதிகளாக வாழ்வது மிகவும் வேதனையான விடயம். ஆகவே அருள்கூர்ந்து உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். இந்தப் பகுதி என்னுடைய பொறுப்பிலிருக்கிறது. உங்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அவருடைய வேண்டுகோளுக் குச் செவி சாய்த்து மெள்ள மெள்ளப் பல தமிழ்க் குடும்பங்கள் தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர்.
அதிகாரம் என்பது நீரைப்போல
நீரைப்பசு பருகும் போது அதுபாலைத் தருகிறது!
அதே நீரைப் பாம்பு பருகினால் அது நஞ்சைத்
தருகிறது!
அதிகாரம் நல்லவர்கள் கையில் அமுதமாகவும், கொடியவர் களின் கையில் ஆலகால நஞ்சாகவும் உருமாறுவதை அன்றாட அரசியலில் நாம் அலுத்துப் போகுமளவிற்குப் பார்த்துக் கொண் டேயிருக்கிறோம். இராணுவ அதிகாரியின் கையிலிருந்த அதி காரம் பாலாகவே பரிமளித்தது.
பெரும்பாலும் அன்றைய தழ்நிலையில் தமிழர்களைச் சந் தேகக் கண்களோடு பார்த்த பல அதிகாரிகளுக்கிடையில் அன் போடும், அனுதாபத்தோடும் பார்த்தவர் மேஜர். இன்று அவர் பிரிகேடியராகப் பதவி உயர்வு பெற்று சேவை செய்து வரு கிறார். ܚ
புயலின் சீற்றம் தணிந்ததும், பாய்மரங்களைப் பறக்கவிட்டு மரக்கலங்களை நகர்த்துவதைப் போல, இலங்கை வணிகர்

Page 124
230 இதோ ஒரு வெளிச்சம்
களும் மெல்லத் தங்கள் தொழிலுக்குத் திரும்பி வரத் தொடங்கி னார்கள்.
இதயத்தை இலங்கையிலே வைத்துவிட்டு, இந்தியாவில் தங்கியிருந்த தெய்வநாயகமும், அவருடைய பிள்ளைகளும் மூன்று மாதங்களிலேயே கொழும்பு திரும்பினர்.
இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனா கொழும்பு மத்திய பொதுச்சந்தையைத் திறந்து வைக்கின்ற விழா நடைபெற்றது. விழாவில் தெரிந்த ஒரு முகம் தெய்வநாயகத்தின் திருமுகம். அவரைப் பார்த்தவுடன் இலங்கையின் இறக்குமதியாளர் கருப் பையாவுக்கு மனத்தில் ஒரு பெரிய ஆறுதல்.
பெரும்பாலான வணிகர்களுக்கு தெய்வநாயகம் ஒரு வழி காட்டி. அவர் எதைச் செய்தாலும் அதில் இலாபம் இருக்கும் என்று முழுமையாக நம்பி அந்தச் செயலில் இறங்குபவர்கள் GJUntantLib!
'தமிழ் வியாபாரிகளின் வாழ்வு முடிந்துவிட்டது. இனி இங்கே கடை வைத்தால் வெடிகுண்டு விழும் தீப்பற்றி எரியும்; ஆகவே தமிழர்களின் வியாபார வாழ்க்கைக்குக் கல்லறை கட்டி மூன்று மாதங்களாகி விட்டன என்று முடிவு கட்டிவிட்டிருந்த பல வணிகர்கள் அந்த விழாவில் தெய்வநாயகத்தின் உருவத் தைப் பார்த்தவுடன் நெகிழ்ந்துவிட்டார்கள்.
 

'விழிமின், எழுமின்' 23.
இந்தியா சென்றவர் "இனி "முருகா! முருகா!' என்று முருகன் பெயரைச் சொல்லியபடி வல்லநாட்டிலோ, சென்னை யிலோ தங்கி விடுவார்' என்று எண்ணிக் கொண்டிருந்தவர் களின் எண்ணங்களெல்லாம் தவிடு பொடியாகச் சிதறிப் போயின!
எழுபத்து மூன்று வயது தெய்வநாயகம் திரும்ப வந்து நிற் கிறார் என்றால் 'இன்னும் இங்கே வாழ வழி இருக்கிறது' என்ற உண்மை பளிச்செனப் புலப்பட்டது.
வாழ்க்கையை இனக்கலவரம் என்ற இருள் கவ்விக் கொண் டிருந்தாலும், அந்த இருளை விரட்டியடிக்கும் வெளிச்சமாய் தெய்வநாயகம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பல வியா பாரிகள் ‘இனி நாமும் நம்பிக்கையோடு தொழில் செய்யலாம்' என்ற உணர்வைப் பெற்றார்கள். அவரைக் கண்டவுடன் பெரிய ஆறுதல், தன்னம்பிக்கை, புத்துணர்ச்சி ஆகிய பல்வேறு நல் லுணர்வுகள் ‘என்னைச் சூழ்ந்து கொண்டன." என்று மனம் நெகிழக் கூறுகிறார் கருப்பையா!
பீனிக்ஸ் பறவை மீண்டும் சாம்பலிலிருந்து உயிர்த் தெழுந்து, சிலிர்த்து நிற்கிறது!’
இந்த இலங்கை நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன! ஏன் இந்தியாவிலும்கூட உள்ளன. ஆனால் முழுக்க முழுக்கத் தங்கள் குடும்ப உறுப்பின்ர்களையே வைத்து நடக்கும் நிறுவனங்கள் மிகமிகக் குறைவு. அப்படிப்பட்ட நிறு வனங்களில்கூட ஏதேனும் ஒரு சிக்கல் வந்தால் டபிளவுகள் ஏற் படுகின்றன. நிறுவனம் நொடித்துப்போய் விடுகிறது. ஆனால் வி.ரி.வி. தொகுப்பு நிறுவனங்களோ ஒரு மாபெரும் சக்தியாக இலங்கையில் நீடிக்கின்றன’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராகத் திகழும் யோக ராஜன். மாண்புமிகு அமைச்சர் தொண்டமான் அவர்களின் வலது கரமாகத் திகழும் யோகராஜன் அவர்கள் பல இழப்பு களுக்குப் பின்னும் வி.ரி.வி. நிறுவனங்கள் தலை நிமிர்ந்து நிற்ப தற்கான காரணங்களை ஆராய்கிறார்.
"கொழும்பு வியாபாரிகள் பலருக்கு ஒய்வு எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை உண்டு. ஓரளவு பணம் சேர்ந்துவிட்

Page 125
232 இதோ ஒரு வெளிச்சம்
டால் ‘போதும், இனி வாழ்க்கையை அனுபவிக்கலாம்' என்ற உணர்வுடன் ஒதுங்கிக் கொள்வார்கள். ஆனால் தெய்வநாயகம் இன்னும் இளைஞரைப் போல் சுறுசுறுப்பாக உழைக்கிறார். அவரே உழைக்கும்போது அவருடைய பிள்ளைகளும் அதே ஆர்வத்தோடு உழைக்கிறார்கள். அதுமட்டுமன்று, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவர். அவர்களுக்கு என தனித்திறமைகள் உண்டு. இந்த ஒட்டு மொத்த ஆற்றலே அவர்களுடைய மூலதனம். மேலும் நல்ல வழிகாட்டுதல் என்பது மூன்றாவது தலைமுறைக்கும் தொடர்ந்து கிடைத்து வருவது அவர்கள் குடும்பத்திற்குக் கிடைத்த பெரும் பேறு' என்கிறார் யோகராஜன்.
தெய்வநாயகம் திரும்பியபின் அவருக்குக் கிடைத்த முதல் மகிழ்ச்சியான செய்தி ‘நாம் இழந்தோம் என்பது உண்மை; எல்லாவற்றையும் இழந்து விடவில்லை.”
அறிவுக்கூர்மை நிறைந்த அவருடைய பிள்ளைகள் அதிகப் பணம் செலுத்தினாலும் பரவாயில்லை என்று, தங்கள் நிறு வனங்களை, எந்திரங்களை எல்லாம் பொதுக் காப்பீட்டு நிறு வனங்களில் காப்பீடு செய்திருந்தார்கள். அதன்விளைவாக சுமார் நான்கு கோடி ரூபாய்களை அவர்கள் கலவரத்தின் போது இழந்திருந்தாலும் சுமார் மூன்று கோடி ரூபாய்களைக் காப் பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறமுடிந்தது. கிட்டத்தட்ட எழுபத்திஐந்து சதவீதம் திரும்பக் கிடைத்து விட்டதில் அவர் களுக்குப் பெரிய ஆறுதல்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பார்கள். ஆனால் புல்லுக்குப் பதிலாக இங்கு வில்லம்பே கிடைத்திருந்தது. வல்ல நாட்டு வல்லவர்களுக்கு வேறென்ன தேவை!
எந்த அளவுக்கு மாற்றத்திற்கு மதிப்புக் கொடுத்து, மாறவும் தெரிந்து வைத்திருந்தாரோ, அந்த அளவுக்கு சில விடயங் களில் தம்முடைய பிடிவாதத்தில் தளராத குணமும் தெய்வ நாயகத்திடம் உண்டு.
கொழும்பு வந்தவுடன் பிள்ளைகள் திட்டமிட்டார்கள். கலவரத்தின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட வீடு, தந்தை யின் வீடுதான். ஆகவே, அவர் இனியும் அந்த இடத்தில் இருக்

'விழிமின், எழுமின் 233
கக்கூடாது. வேறு ஒரு வீட்டில், மிகவும் பாதுகாப்பான பகுதி யிலே அவரைக் குடியமர்த்த வேண்டும்'
ஆனால் எவ்வளவு மன்றாடியும் தெய்வநாயகம் தம்முடைய வீட்டிலிருந்து நகர மறுத்துவிட்டார். ‘என் சொர்க்கம் இந்த வீடுதான். இந்த வீட்டிற்குக் குடி வந்த பிறகுதான் என் வாழ்க் கையில் எல்லா நற்பேறுகளும் எனக்கு வந்தன. எனக்கு இது ராசியான வீடு. ஆனால் அவை எல்லாவற்றையும் விட முக் கியம் - இது என் குழந்தைகள் தவழ்ந்த இடம், வளர்ந்த இடம், விளையாடிய இடம். எங்கள் உடலோடும், உயிரோடும், உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட இடம். எங்களை உருவாக் கிய இந்த வீட்டை விட்டு நான் நகரவே மாட்டேன். எவ்வளவு பெரிய் ஆபத்து வந்தாலும் அதைச் சந்திப்பேனேயொழிய, இந்த வீட்டை விட்டு நான் காலி செய்ய மாட்டேன்."
தந்தை ஒன்றை உறுதியாகச் சொல்லிவிட்டால், அதில் வேறொன்றும் செய்யமுடியாது என்பது பிள்ளைகளுக்குத் தெரியும். ஆகவே கலவரத்தில் பழுதடைந்த வீட்டைப் புதுப் பித்து, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து திந்தையை அதிலேயே மீண்டும் குடியமர்த்தினார் ள்.
கீழே விழுவது என்பது யார்வாழ்விலும் இயல்பாகவே நிகழக் கூடியது.
எவரெஸ்ட் சிகரத்தின்மீது முதன்முதலாக ஏறி நின்ற டென்சிங் கூட மாடிப்படி ஏறும்போது கால் தடுக்கிக் கீழே விழலாம்.
விழுவதில் வியப்புமில்லை, அவமானமும் இல்லை. ஆனால் விழுந்தபின் எழவேண்டும்.
விழுந்தபின் தன்நிலையை உணர்தலும், உணர்ந்த பின் எழுந்து நிற்றலும் அவசியமாகிறது.
எழுவதில் கூட ‘எப்படி எழுந்து நின்றோம்?' என்பதில் தான் சிறப்பு உள்ளது.
தெய்வநாயகமும், அவருடைய ஆற்றல் மிகுந்த மகன் களும், கீழே விழுந்த சுவடுகூடத் தெரியாமல் நின்றார்கள்.

Page 126
234 இதோ ஒரு வெளிச்சம்
பல இடர்ப்பாடுகளைச் சந்தித்த நிறுவனங்கள் என்ற உணர்வுகள் கூட இல்லாமல் புதுமுனைப்போடு, தங்கள் நிறு வனங்களை நடத்திச் சென்ற வேகம் பாராட்டுக்குரியது!
அவர்களுடைய ஒட்டு மொத்த ஆற்றலின் கூட்டு விளைவு தான் வி.ரி.வி. நிறுவனங்களின் வெற்றி வரலாறு
 

25. தாய் நாட்டுக்கு
ஒரு தவப்புதல்வன்
'சீட்டுப் பிடிக்கும் வேலை!"
ஒரு மொத்த வியாபார நிறுவனத்தில் மிகச் சாதாரணமாக கருதப்படும் வேலை.
'களஞ்சியத்துக்கு எத்தனை மூடை சரக்குகள் வருகின்றன? எத்தனை மூடை களஞ்சியத்திலிருந்து வெளியே செல்கின்றன?
இதைக் கணக்கெடுத்து வைப்பதுதான் 'சீட்டுப் பிடிக்கும் வேலை இதைச் செய்யப் பெரிய படிப்போ, திறமையோ தேவையில்லை!
வேலை செய்பவரைக் கேலி பேசிக் குறைசொல்ல வேண்டு மென்று விரும்பினால், அவரைப் பார்த்து, 'சீட்டுப் பிடிக்கக் கூடத் தகுதியில்லை!' என்று சொல்லுவது வழக்கம்.
அருணாசலத்துக்குப் பள்ளி நாட்களில் வழங்கப்பட்ட வேலை இந்தச் சீட்டுப்பிடிக்கும் வேலைதான்!
இன்று சென்னையில் இரண்டு பெரிய ஏற்றுமதி நிறுவனங் களின் நிர்வாக இயக்குநராகவும், ஒரு நட்சத்திர ஓட்டலின் இயக்குநராகவும் செயல்பட்டு வரும், தெய்வநாயகத்தின் நான் காவது மகன் அருணாசலம் விடுமுறை நாட்களில் செய்த வேலைதான் அது.
ஒரு பெரிய முதலாளியின் மகனாக இருந்தாலும், 'தான்' என்கின்ற அகந்தை வருவதற்குக் கொஞ்சமும் வாய்ப்பில்லாத வேலை அது.
கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும், அதனை விரும்பி, ஆவலுடன் ஏற்றுக்கொள்ளுகின்ற மனப்பக்குவம் மற்ற எல்லாப் பிள்ளைகளுக்கும் இருந்தது போலவே அருணாசலத் துக்கும் இருந்தது. இன்றைக்கும் அவரிடம் காணப்படுகின்ற பணிவு, இன்முகம், தொழிலாளர்களுக்கு உதவும் மனப்

Page 127
236 இதோ ஒரு வெளிச்சம்
பான்மை அத்தனைக்கும் காரணம், 'சிறுவயதிலிருந்து கடும்ை யாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு அருகிலேயே இருந் அவர்களுடைய துன்பங்களை நன்றாக உணர்ந்திருந்ததே' என் லாம்.
வெட்டிப்பேச்சு, வீண் அரட்டை இரண்டும் தெய்வநாயகத் திற்கு ஒத்துவராத செய்திகள். 'பிள்ளைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது சம்பளமே இல்லா விட்டாலும் பர்வாயில்லை; அவர்கள் ஏதேனும் ஓரிடத்தில் உழைத்தாக வேண்டும். வேலை செய்யாமல் விட்டு விட்டால் அவர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிடும். அதிலிருந்து விடு விப்பது கடினம்’ என்று அடிக்கடி சொல்லுவார்.
அருணாசலத்தின் வயது ஏற, ஏற, கல்வித்தகுதி உயர உயர வணிகத்தில் அவருடைய பொறுப்பும் கூடிக்கொண்டே வந்தது. வங்கிகளுக்குச் செல்வது; பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்றல் போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித் தார். அவர் ஒவ்வொரு வேலையையும் முடித்துவிட்டுத் தந்தை யிடம் அன்று தான் செய்த வேலைகளைப் பற்றி சொல்லிய போதெல்லாம் தெய்வநாயகம் தன் பிள்ளையை மனமாரப் பாராட்டுவது வழக்கம்.
'ஊக்கமூட்டுவது என்பது உரமிடுவது போல' என்று சொல்லுவார்கள். உரமிட்டால் தாவரங்கள் செழிப்பாக வள ரும்; உற்சாகப்படுத்தினால் மனிதர்கள் சிறப்பாக வளர்வார் கள். அந்த வகையில் அருணாசலத்தின் ஆற்றல் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் தெய்வநாயகத்தின் ஊக்கமூட்டும் சொற்களே என்றால் மிகையாகாது!
தந்தை ஈஸ்வரன், வீரவாகு, பிரமநாயகம் நால்வரும் ஒவ் வொரு துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த தழ் நிலையில், தம்முடைய திறமையை எப்படி வெளிக்காட்டுவது? என்று அருணாசலம் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது!
தெய்வநாயகத்திற்கு ஓர் எண்ண்ம் இருந்தது.
ஆசிய நாடுகளிலும் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம் பிக்க வேண்டும். முதற்கட்டமாக சென்னையில் ஒரு கிளை நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் தன்னை

தாய் நாட்டுக்கு ஒரு தவப்புதல்வன் 237
வாழ வைத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கும் தரமான பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் எனவும் நினைத்தார்.
இதற்கும் பல காரணங்கள் இருந்தன. இந்தியாவிலிருந்து வேறு யார் மூலமாவது இறக்குமதி செய்தால் அவ்வளவு தர மான பொருட்களை, உரிய நேரத்தில் அனுப்புவார் என்று சொல்லமுடியாது. இது அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் எப்போதும் காலூன்ற ஓர் அடித்தளம் வேண்டுமென்று விரும் பினார். அதன் விளைவாகத்தான் ஈஸ்வரனைச் சென்னைக்கு அனுப்பி, அருணாசலத்துக்கு ஒர் அலுவலகமும், வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
என்னதான் வணிகம், பணம்’ என்றாலும்கூடப் பிள்ளை யைப் பிரிவதென்பது சாதாரண செயல் அல்லவே!
தெய்வநாயகம், ஈஸ்வரனிடம் தெளிவாகக் கூறினார், 'இங்கு நாம் எவ்வளவோ வசதியாக இருக்கிறோம். கொழும்பை விட்டு விட்டு, சென்னை சென்ற பிறகு, அருணா சலம் 'கொழும்பிலேயிருந்த வசதிகள் இங்கே இல்லையே!” என்று குறைபட்டுக் கொள்ளா வண்ணம், எல்லா ஏற்பாடுகளு மிருக்க வேண்டும்.'
தந்தையின் எதிர்பார்ப்புக்கும் மேலே, எல்லாவற்றையும் ஈஸ்வரன் சிறப்பாகவே செய்து முடித்தார்.
நுங்கம்பாக்கத்தில், ஒரு சிறப்பான இடத்திலே அலுவல கம்; மாம்பலத்தில் ஓர் அழகான வீடு, ஒட்டுவதற்குச் சொகுசான கார், அலுவலகத்திற்குத் தேவையான அத்தனை தளவாடங் கள், அவ்வளவையும் சிறப்பாக ஈஸ்வரன் ஒழுங்கு செய்து கொடுத்தார்.
அருணாசலம் சென்னைக்கு வந்து, அலுவலகத்தில் புகுந்த முதல் நாளே, தம்முடைய வேலையை எந்த ஆரம்பச் சிக்கலு மில்லாமல், சிறப்பாக தொடங்க முடிந்தது.
தம் தந்தையைப் பற்றி எண்ணும்போதெல்லாம் ‘தாம் எந்த அளவுக்கு வசதியாக இருக்கவேண்டுமென்று தந்தை எண்ணினார்' என்பதே மனக்கண் முன் வந்து நிற்கும்.
அது மட்டுமன்று, ஒரு புதிய நாட்டில், புதிய இடத்தில்,

Page 128
238 இதோ ஒரு வெளிச்சம்
புதியதாக ஒரு வியாபாரம் செய்யத்தொடங்கும் ஓர் இளைஞ ருக்கு ‘மேசை இல்லை; நாற்காலி இல்லை; மின்விசிறி இல்லை; குளிரூட்டி இல்லை; தட்டெழுத்து எந்திரம் இல்லை" என்று வரிசையாகச் சிக்கல்களே வருமானால், அவருடைய சிந்தனை முழுக்கச் சின்ன சின்ன சிக்கல்களைத் தீர்ப்பதில் தான் தீவிரமாக ஈடுபடுமேயொழிய, அவருடைய அடிப்படைக் குறிக்கோளில் முழு அக்கறையையும் காட்ட முடியாது!’ என் கின்ற நிர்வாக உண்மையை அறியாதவரா என்ன தெய்வ நாயகம்
1981ம் ஆண்டு! அருணாசலம் ஈஸ்டர்ன் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் பொறுப்பேற்ற ஆண்டு. அந்த வருட முடிவில், முதலாண் டிலேயே நல்ல லாபம் ஈட்டினார். பெருமையாக இருந்தது!
1982, 83ம் ஆண்டுகள்: மிகச்சிறந்த ஆண்டுகள்!
அற்புதமான வணிகம்; அருணாசலம் தம் முத்திரையைச் சிறப்பாகப் பதித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல லாபத்தை ஏற்றுமதி நிறுவனம் ஈட்டித் தந்தது.
1984ம் ஆண்டு!
மிகப் பெரிய நட்டம்! வேகமாக ஓடிவந்த வீரனொருவனின் கால்கள் திடீரென வெட்டப்பட்டது போன்ற உணர்வை நிறுவனம் பெற்றது. மிகப் பெரிய அடி!
‘இனி எழுந்து நிற்க முடியுமா?’ என்ற கேள்விக் குறியைச் சுமந்தபடி நின்றது ‘ஈஸ்டர்ன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!
அருணாசலத்தின் நிலை அவலத்துக்குரியதாகி விட்டது! அவருடைய சகோதரர்களோ, “அருணாசலம், இலங்கை வந்து விடட்டும். இங்கேயே நாம் செய்வதற்கு எவ்வளவோ இருக் கிறது! அங்கே ஏன் தனியாக உட்கார்ந்து திண்டாட வேண் டும்?' என்று ஒருமித்த குரலில் கூறுகிறார்கள்.
அருணாசலத்திற்கோ ஒரு தோல்வியாளராக நாடு திரும் பும் எண்ணமில்லை.

தாய் நாட்டுக்கு ஒரு தவப்புதல்வன் 239
ஆனால் அந்த குடும்பத்தில் முடிவு என்பது ஒருவர் எடுப்ப தில்லையே!
இறுதியில் தெய்வநாயகத்தின் குரல் தனியாக ஒலித்தது! 'அருணாசலம் சென்னையிலேயே இருக்கட்டும்! தொடர்ந்து ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தட்டும். இனி எந்த நட்டமும் வராது! அருணாசலத்தால் திறமையாக நடத்திச் செல்லமுடியும்! எது நேரிட்டாலும் நாம் பார்த்துக் கொள்ளலாம்!'
1985ம் ஆண்டு!
பல நள்ளிரவு நேரங்களில் திடீரென அருணாசலம் தூக் கத்திலிருந்து விழித்துக் கொண்டு படுக்கையின்மீது உட்கார்ந்த படி, ஆழ்ந்து சிந்தித்த வண்ணம் இருப்பார்!
அவருடைய மனம் ஒரே ஒரு எண்ணத்திலேதான் முழுமை யாக அழுந்தியிருந்தது!
அது தன்னுடைய நிறுவனம் இழப்பைச் சரிக்கட்டி எப்படி இலாபத்தை ஈட்டப்போவது என்று எண்ணவில்லை!
தன்தந்தை தன்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கி றாரே, இந்த நம்பிக்கை வீண்போகாமல் அதற்குரியவனாக எப்படி விளங்குவது?
1985ம் ஆண்டின் முடிவில், சென்ற ஆண்டு ஏற்பட்ட இழப்பு சரிக்கட்டப்பட்டுவிட்டது மட்டுமல்ல; சற்று இலாபத் தையும் ஈட்டியபின்னரே அருணாசலம் நிமிர்ந்து உட்கார்ந் தார்.

Page 129
240 இதோ ஒரு வெளிச்சம்
தன்னுடைய நிறுவனம் மீண்டும் தலைதுாக்கி நின்றதற்கு யார் காரணம்?
தன்னுடைய ஆற்றலும், கடுமையான உழைப்புமா? அல் லது தெய்வநாயகத்தின் ஆழமான நம்பிக்கையா?
அருணாசலம் தன் தந்தையைக்கண்டு வியக்கும் செய்திகள் பல உண்டு!
‘என்னால் முடியுமா? இது நடக்குமா?’ என்று மனம் ஐயப்படுகின்ற காலங்களில் 'இது நிச்சயமாக நடக்கும்; உன் னால் முடியும்' என்று கூறித் தன்னம்பிக்கையை ஊட்டுகின்ற பெரும் ஆற்றல் தெய்வநாயகத்திடமிருந்தது.
தந்தையும், மகனும் சந்தித்துக் கொள்ளுகின்ற நேரங்களில் பேசுவது மிகக்குறைவாகவே இருக்கும்.
தொலைபேசியில் மட்டுமன்று; கொழும்பிலே சந்தித் தாலும்கூட அவர்கள் பேசிக்கொள்ளும் நேரம் குறைவாகவே இருக்கும்! W .
அந்தக் குறைந்த நேரத்திலே கூட தெய்வநாயகம் கேட்கக் கூடிய கேள்விகள் மிகக்கூர்மையாக இருக்கும்.
"அப்பா என்னிடம் ஐந்தாறு கேள்விகள்தான் கேட்பார்! ஆனால் என்னுடைய பதில்களிலிருந்து என்னுடைய முழு நிலையையும் தெரிந்து கொள்ளுவார். அவருடைய பார்வைக் கோணத்திலிருந்து எதுவுமே தப்ப முடியாது. அவருடன் நான் பேசப் போகிறேன் என்றால் ஒரு தேர்வு எழுதும் மாணவர் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் செல்வாரோ, அந்த அள வுக்கு நான் செல்ல வேண்டும்.'
எந்த முகமூடியையும் தூக்கியெறிந்து விட்டு முழுமுகத் தைப் பார்க்கக்கூடிய சக்தி தன் தந்தைக்கே உரிய சிறப்பு சக்தி என்பது அருணாசலத்தின் மற்றுமொரு கணிப்பு.
மனத்திலே ஆயிரம் வேதனைகள் இருக்கும்; பல குழப்பங் களிருக்கும். இத்தனைக்கும் நடுவில் தந்தையைச் சந்திக்கும் போது அவற்றை வெளிக்காட்டக் கூடாது' என்று உறுதியுடன் அவர் முன் நின்றாலும், முகத்தைப் பார்த்தவுடன் என்ன நடந் தது, என்ன நடக்கிறது' என்பதை ஒரு நொடியில் புரிந்து கொள்ளும் தனி ஆற்றல் தெய்வநாயகத்தின் சிறப்பு!

தாய் நாட்டுக்கு ஒரு தவப் புதல்வன் 24
‘நான் என்ன உணருகிறேனோ, அதை அப்படியே என் நிலையில் இருந்து அவரால் உணர்ந்து கொள்ள முடியும்'
என் வாழ்க்கையின் குறிக்கோள் ஒன்றுதான்! “என்னைப் பார்த்து என் தந்தை வருத்தப்படக்கூடாது; என்னால் அவர் மனம் வாடக்கூடாது; அவர் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே நான் மேலும், மேலும் திறம்பட உழைப்பேன்!
தன்தந்தையைப் பார்த்துப் பெருமையடையும் அவருடைய பண்புகளுள் ஒன்று. அவருடைய வாரி வழங்கும் குணம். சாதி, மத, இனபேதமின்றி யார் உதவி கேட்டாலும் இல்லையெனாது உதவுகின்ற தந்தையைக் கண்டு, 'நானும் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுவேன்’ என்று கூறுகிறார் அருணாசலம்.
முதலில் ஈஸ்டர்ன் எக்ஸ்போர்ட்டில் தொடங்கி, பின்னர் அப்போலோ எக்ஸ்போர்ட்ஸ்' என்ற இன்னுமொரு ஏற்றுமதி நிறுவனத்தையும் உருவாக்கி இரண்டையும் சிறப்பாக நடத்தி வருகிறார் அருணாசலம். அவருடைய துணைவி சீதாவின் அறி வாற்றலும், கடும் உழைப்பும் அருணாசலத்தின் வெற்றிக்கு மிகவும் துணைபுரிகிறது என்றால் அது மிகையில்லை.
அதனால்தான் 1982-83ல் சுமார் 60 இலட்சம் ரூபாய்க்கு வணிகம் செய்த அவர்களுன்டய நிறுவனம் 1995-96ல் 5கோடி ரூபாய்க்கு வணிகம் செய்ய முடிகிறது!
இந்தியாவிலிருந்து சரக்கை வாங்கி இலங்கைக்கு அனுப் பினால் போதும்' என்று தொடங்கிய நிறுவனம், இன்று அதன் சிறப்பான செயல்பாட்டின் விளைவாக, ஜப்பான், வங்காள தேசம், மாலத்தீவு, கனடா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடு களுக்கெல்லாம் ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள நெசவாளர் களிடமிருந்து 'ஆர்டர் கொடுத்துத் துணிகளை அனுப்பி வந்தது ஈஸ்டர்ன் எக்ஸ்போர்ட்ஸ்.
மெள்ள, மெள்ள அந்த நிலையிலிருந்து மொத்தமாக விடு படாமல், ஒரளவு ஆடைகளைத் தாமே தயாரிக்கும் நிலை உரு வாகவே, அருணாசலம் அவர்களே ‘சிருஷ்டி கார்மெண்ட்ஸ்’ என்னும் தொழிற்சாலையை சென்னைக்கு அருகே போரூரில்

Page 130
242 இதோ ஒரு வெளிச்சம்
நிறுவினார். அந்தத் தொழிற்சாலையும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது! இதிலே சுமார் 120 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
14 ஆண்டுகளுக்கு முன் தெய்வநாயகம் கண்ட கனவு இன்று நனவாகி விட்டது!
இலட்சியவாதிகளின் கனவுகள் என்றைக்காவது நிறை வேறியே தீரும்’ என்பார்கள்.
தெய்வநாயகத்தின் ஆரம்ப எண்ணம் என்ற சிறிய ஆல விதை இன்று செடியாய்த் துளிர்விட்டு வளர்ந்து வருவதைப் பெருமிதத்துடன் காணலாம்.
KaSDDDDSS0SS லகளை மேம்படுத்திக் கொள்ள வேண் க்கள் நிரம்பவும் துடிப்பாக இருக்கிறார்கள்
 
 
 

26. சென்னையில் வீசும் தென்றல்
சென்னையில் மெரினா, சாந்தோம் பகுதியில் இனிய கடற்காற்று வீசுவதை நாமறிவோம், ஆனால் பூந்தமல்லி நெடுஞ் சாலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருபத்தி நான்கு மணி நேரமும் வீசிக்கொண்டிருக்கும் தென்றலை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
தென்றல் என்ற பொருளைத் தருகின்ற 'ஹோட்டல் ப்ரீஸ் என்கின்ற மூன்று நட்சத்திர விடுதி சென்னைக்குப் பெருமை சேர்க்கும் விடுதிகளுள் ஒன்று!
சென்னையிலே இருக்கும் அருணாசலம், இதன் இயக்குநர் களில் ஒருவர்.
'தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இணைந்து தொழில் செய்ய வேண்டும்’ என்ற கருத்தைத் தெய்வநாயகம் காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டார்’ என்பதற்கு ப்ரீஸ் ஓர் எடுத்துக்காட்டு.
கொழும்பைச் சேர்ந்த திரு. ராஜூ சிவராமன் இதன் நிர் வாக இயக்குநர். கொழும்பிலே கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தக்காரராகத் திகழும் இவர் ஆற்றல் மிக்க கட்டடக்கலை வல்லுநர் சிறந்த வடிவமைப்பாளர்.
பல மிகப் பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளுக்குள் நுழை யும் போதும் கிடைக்காத பிரமிப்பு, அழகுணர்ச்சி, காந்தம் போல் இழுக்கும் கவர்ச்சி 'ப்ரீஸில்' கிடைக்கிறதென்றால் அந்தக் கலை வண்ணம் சிவராமனுக்கே உரியது. ஏதோ, வாசற்படியிலிருந்து, வீட்டின் பின்புற அறைக்குச் சென்று வரு வது போல, வாரத்தில் மூன்று நாட்கள் சென்னை, நான்கு நாட்கள் கொழும்பு என்று றந்தபடியே நிர்வகிப்பவர்.
இந்த விடுதியின் செயல் இயக்குநர் ஈஸ்வரனுடைய மூத்த மகன் கணேஷ்.

Page 131
244 இதோ ஒரு வெளிச்சம்
ப்ரீஸின் இயக்குநர்களில் ஒருவர் தன் விளம்பரங்களா லும், வியாபாரத் திறமையாலும் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கின்ற நகை வணிகர், லலிதா ஜுவல்லரி நிறு வனத்தின் தலைவர் கந்தசாமி.
எல்லாவற்றுக்கும் மேலாகக் கட்டுப்பாட்டுக் கருவியை இலங்கையில் வைத்துக் கொண்டு, சென்னையில் 'ப்ரீஸை’ இயக்கிக் கொண்டு வருபவர் இந்த விடுதியின் தலைவர்
ஈஸ்வரன்.
பெரும்பாலான நட்சத்திர விடுதிகள் பெருத்த முதலீட்டில் தொடங்கி, மெதுவாகத் தடுமாறித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் பொதுவாக ஏழு முதல் பத்து வருடங்களாகும் என் பார்கள். ஆனால் ப்ரீஸோ தொடங்கிய நான்காம் ஆண்டிலேயே வெற்றி நடை போட ஆரம்பித்துவிட்டது. அதன் அறைகள் போதாமையால், . மேலும் புதியதாக அறைகள் கட்டப்பட்டு இப்போது கிட்டத்தட்ட முழுமையான அறைகள் நிரம்பியவை களாகவே இருக்கின்றன.
காரணம்?
விடுதியின் இவ்வளவு சிறப்புக்கும் என்ன
மூன்று நட்சத்திர விடுதியில் ஐந்து நட்சத்திர விடுதியின் அத்தனை வசதிகளும் கிடைக்கின்றன என்பது மட்டுமா?
ஒவ்வொரு நாளும் மேலும் என்ன முன்னேற்றத்தைத் தர முடியும்?' என்று விடுதியின் ஒவ்வொரு ஊழியரும் எண்ணி அதற்காகப் பாடுபடுவது ஒரு காரணமா?
ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரு மனிதர் மட்டும் காரண மாக முடியுமா?
ஒரு மனிதன் இழுத்து ஒரு பெருந்தேர் நகரமுடியுமா? கட்டுக் கோப்பான அதன் ஊழியர்களின் திறமையான உழைப்பே ப்ரீஸின் வெற்றிக்குக் காரணம்.
1983 கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, நாட் டைத் துறந்து பல நாடுகளில் உழைத்தவர் இலங்கையைச் சேர்ந்த ஜோசப், இங்கிலாந்து, அரபிய நாடுகள், கனடா என்றெல்லாம் சுற்றிய ஜோசப் மனம் நொடிந்து சொல்லும் சொற்கள் இவை.

சென்னையில் வீசும் தென்றல் 245
நம்முடைய ஆற்றல் நிச்சயம் உயர்ந்தது; ஐரோப்பியர் களையும், அமெரிக்கர்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் நிச் சயம் நம்மிடம் இருக்கிறது; ஆனால் நம்முடைய கறுப்புத் தோலை அயல் நாட்டவர்கள் அங்கீகரிப்பதில்லை. குறிப்பாக ஒட்டல் துறையில் நம்மைத் தீண்டுவாரில்லை."
மனம் வெம்பி ப்ரீஸுக்கு வந்தவுடன் அவருடைய ஆற்ற லைப் போற்றி அவருக்குக் குடியிருப்பு மேலாளர் பதவியை ப்ரீஸ் வழங்கியது. எப்போதும் இறையுணர்வில் ஆழ்ந்திருக்கும் கண்ணியமும், கண்டிப்பும் நிறைந்த ஜோசப் ப்ரீஸின் வெற்றிக்கு ஒரு காரணம்.
குலசேகரன் இலங்கையிலே பலகாலம் வாழ்ந்தவர். இன் றும் அவர் குடும்பம் அங்குதான் இருக்கிறது. ப்ரீஸ் ஹோட்டல் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டவுடன் அதில் “பெர்சோ னேல் துறைக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குல சேகரன்.
ப்ரீஸ் வெற்றி நடைபோடுகிறதென்றால் அங்கே பணிபுரி கின்ற ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்தும், மிக முக்கியமான பொறுப்பைக் குலசேகரன் வகிக்கிறார். பல சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு தங்கள் ஊழியர்களுக் குப் பயிற்சி நடத்துவதும் அவர்தான்.
ப்ரீஸின் பொது முகாமையாளர் அமரேந்திரன் ஒர் அரிய கண்டுபிடிப்பு. கவர்ச்சிகரமான, கம்பீரமான அவருடைய தனி ஆற்றலே ப்ரீஸுக்கு மேலும் மெருகூட்டுகிறது எனலாம்.
எல்லோரையும் ஊக்கமூட்டி இயக்குகின்ற அவரை இயக்கு வது யார்?
அனேகமாக வருடத்திற்கு ஒரு முறை தெய்வநாயகம் சென்னை வரும்போது, ப்ரீஸஅக்கு வருவார்.
அவரைப் பார்க்கும் போதே பழைய பணியாளர்களுக்குப் பரவசமும், புதியதாகச் சேர்ந்தவர்களுக்கு வியப்புமாக இருக் கும்.
தன் எதிரில் படுகின்ற எந்தப் பணியாளரிடமும் நின்று, கையைப் பிடித்தபடிப் பேசி நலம் விசாரித்து விட்டுச் செல்லு வது தெய்வநாயகத்தின் வழக்கம்.

Page 132
246 இதோ ஒரு வெளிச்சம்
'நான் எவ்வளவோ வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் கேட்கின்ற முதல் கேள்வி, வியாபாரம் எந்த நிலையில் இருக்கிறது? எவ்வளவு லாபம்? ஆனால் வி.ரி.வி அவர்களோ தன்னுடைய மேலாளர் யாரைப் பார்த் தாலும் விசாரிப்பது அவரவர்களுடைய உடல்நலம், குடும்ப உறுப்பினர்கள் நலம், பிள்ளைகள் படிப்பு இப்படிப்பட்ட செய்திகள் தான். அதற்குப் பிறகு தான் அவர் தொழிலைப் பற்றிய செய்திகளுக்கு வருவார்.
'வியாபாரம் எப்படி நடக்கிறது?’ என்பதே மிக முக்கிய மான கேள்வி. பெரிய மனிதர்கள் முதலில் அதைத்தான் கேட் பார்கள் - கேட்கவேண்டும்' என்று நான் எண்ணிக் கொண் டிருந்தேன். ஆனால் அது சரியன்று என்பதைத் தெய்வநாயகம் உணர்த்தி விட்டார்.
'தன்னிடம் வேலை செய்பவரை முதலில் மனிதனாக நடத்தி, மனிதனாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே தொழி லாளியாகப் பார்க்க வேண்டும்’ என்ற பெரும் உண்மையை எங்களுக்கு உணர்த்திக் காட்டியவர், அதனை அப்படியே கடைப்பிடிக்கும் வி.ரி.வி. அவர்கள்.
மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தக்கூடியவர்கள் மிக எளிமையாகவும் திகழமுடியும் என்பதைக் கண்கூடாகப் பார்க் கும் போதுதான், 'தான்’ என்கின்ற அகந்தை உணர்வு எவ் வளவு போலியானது என்று தெரிகின்றது என்கிறார் அமரேந் திரன்.
ஒட்டல் நிர்வாகம் பற்றிய ஒரு கருத்தரங்கம் சிங்கப்பூரில் நடந்தது. அமரேந்திரன் அதிலே கலந்து கொண்டார். தெய்வ நாயகத்திற்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அதற்கான அழைப்பு வந்து அமரேந்திரன் கொழும்பு சென்றபோது மிகச் சிறந்த ஐந்து நட்சத்திர ஓட்டலிலே தங்க வைத்தார்கள். அண்மை யில் ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயக் கும்பாபிஷேகம் நடந்தது. அமரேந்திரன் தன்னுடைய மனைவியோடு கலந்து கொண் டார். இருவரும் ஒரு வாரம் தங்கி இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பினர்.
'நான் சம்பளத்துக்கு உழைக்கும் தொழிலாளி. என்னை இப்படியெல்லாம் அவர்கள் சிறப்பளித்து கவனிக்க வேண்டும்

சென்னையில் வீசும் தென்றல 247
என்கிற அவசியமில்லை. இருந்தாலும் என்னை ஒரு பொது முகாமையாளர் என்று எண்ணாமல் குடும்பத்தில் ஒருவனாக எண்ணுகின்ற காரணத்தால்தான் எனக்கு இப்படி ஒரு கவனிப்பு. அதே நேரத்தில் இப்படிப்பட்டவர்களுடைய ப்ரீஸ்ை மேலும் மேலும் சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என் கின்ற வெறி என்னை உந்தித் தள்ளுவதை நான் தெளிவாக உணருகிறேன்' என்கிறார் அமரேந்திரன்.
ப்ரீஸின் தலைவர் ஈஸ்வரன் எப்போது சென்னை வந்தா லும், அவருடைய சொந்த உடமைகளைவிட, அவர் மற்றவர் களுக்காக வாங்கிவரும் பரிசுப் பொருட்கள் ஏராளமாக இருக் கும். திடீரென உணவு தயாரிக்கும் பகுதியில் பணியாற்றிவரும் இரண்டு சமையற்காரர்களுக்கு அழைப்பு வரும் "எதற்காகத் தலைவர் நம்மை அழைக்கிறார்?’ என்ற ஐயத்தையும், பெரிய தொப்பிகளையும் ஒருங்கே தலையில் சுமந்தபடி அந்த இரு வரும் தலைவர் அறையில் நுழைவார்கள்.
'இலங்கையிலிருந்து உங்களுக்காகக் கெர்ஞ்சம் தேயிலை யும், உங்கள் குழந்தைகளுக்காகச் சாக்கோலெட், பிஸ்கட்டுகள் கொண்டு வந்திருக்கிறேன். இதை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்' என்று ஆளுக்கொரு பெரிய பையைத் தரும் போது அவர்கள் முகங்கள் மலருவதை வர்ணிப்பது மிகக் கடின மான செயலாகும்.
பரிசுப் பொருள்களால் தங்கள் நண்பர்களையும், விருந் தினர்களையும் திணற வைப்பதில் வி.ரி.வியின் குடும்பத்திற்குப் பெரிய அர்வம் உண்டு.

Page 133
248 இதோ ஒரு வெளிச்சம்
குறிப்பாகக் கொழும்பிலிருந்து யாராவது இந்தியா திரும் பினால் சுமக்க முடியாத அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வருவார்கள். வழியனுப்பு வதற்காக வி.ரி.வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உடன் வருவதுண்டு. அப்படி வருபவர்கள் 'அதிக சுமைக்காகப் பணம் கட்ட வேண்டிய நிலை பயணிக்கு வந்தால் அந்தப் பணத் தையும் செலுத்திவிட்டு, வழியனுப்பியபின் திரும்புவார்கள்.
'இந்த அளவுக்கு விருந்தோம்ப முடியுமா?’ என்று வியக் கிறார் அமரேந்திரன்.
ப்ரீஸ் ஊழியர்களுள் கலைஞர்களும் உண்டு; ஆண்டு விழாவின் போது அவர்களுடைய நடனங்கள், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் அவர்களுடைய திறமையைப் பறை சாற்றும். .
அவர்களுக்கென்று கிரிக்கெட் அணி உண்டு; அது பல்வேறு அணிகளுடன் பல போட்டிகளில் விளையாடுகிறது.
‘தென்றல்' விருந்தினர்களுக்கு மட்டும் தென்றலன்று; வியர்வை சிந்த அங்கே உழைப்பவர்களுக்கும் தென்றலாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்!
அமரேந்திரன் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அனு பவம் ஒன்று உண்டு.
ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழாவொன்று சென்னையில் நடக்கின்றது. தெய்வநாயகத்தின் குடும்பமே சென்னையிலிருக் கிறது. அமரேந்திரனின் தாயார் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்ற செய்தியை தெய்வநாயகம் அறிவார்.
சென்னை வந்த அவர் யாருக்கும் அறிவிக்காமல் அமரேந் திரன் தாயார் இருந்த மருத்துவமனைக்குப் பழக்கூடைகளுடன் செல்கிறார். மூன்றாம் அடுக்கிலே உள்ள ஓர் அறையில் அந்த மூதாட்டி தன் கடைசி நாட்களை எதிர்நோக்கியபடி படுத்துக் கொண்டிருக்கிறார்.
மாடிப்படிக்கட்டுகளை ஏறக்கூடாது என்ற மருத்துவரின் கண்டிப்பான உத்தரவுகளை 84 வயது தெய்வநாயகம் புறக்

சென்னையில் வீசும் தென்றல் 249
கணித்துவிட்டு மெதுவாகப் படியேறி அமரேந்திரனுடைய, அன்னையின் அறைக்குள் நுழைகிறார்.
அந்த மூதாட்டிக்கு வந்தவர் யார் என்று கூடத் தெரிய வில்லை. அவரே தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அன்பும், ஆறுதலும், கனிவும் நிறைந்த சொற்களைப் பேசிவிட்டு மெது வாக இறங்கித் தம் இருப்பிடம் வந்து சேருகிறார்.
அமரேந்திரனுக்குச் செய்தி தெரிந்ததும் பதறியபடி ஓடி வருகிறார். 'ஐயா, என்ன வேலை செய்தீர்கள்? என்னிடம் முன் கூட்டி ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? மாடிப்படி நீங் கள் ஏறலாமா?"
தெய்வநாயகத்தின் சொற்கள் தெளிவாக வருகின்றன. 'நான் முன்கூட்டியே சொல்லியிருந்தால், மாடிப்படி ஏற வேண்டும்; வரவேண்டாம் என்று தடுத்திருப்பீர்கள்! உங்கள் தாயாரை நான் பார்க்காமலேயே போயிருக்கக்கூடும். ஆகவே தான் அவர்களைப் பார்க்க நானாகவே சென்றேன்.
ஒரு தாயின் அருமையும், பெருமையும் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும்'
அழகான ஹோட்டல் ப்ரீஸின் சுவர்கள் கருங்கற்களாலும், செங்கல்களாலும் கட்டப்படவில்லை; அன்பாலும், மனித நேயத்தாலும் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன!

Page 134
27. ஆலமரம்
'பனைமரத்தின் விதையாகிய பனங்கொட்டை மிகப் பெரியது. அதிலிருந்து முளைத்து வளரும் பனைமரத்தின் நிழ லில் யாரும் ஒதுங்கி நிற்க முடிவதில்லை. ஆலம் விதையோ மிகவும் சிறியது, ஆனால் அதிலிருந்து முளைத்து வளரும் ஆல மரமோ பெரியது. அதன் நிழலிலே ஒரு படையே தங்கலாம்.
சிலபெரிய பணக்காரர்களால் தோற்றுவிக்கப்படுகின்ற நிறுவனங்களில் யாரும் ஒண்ட முடிவதில்லை. ஆனால் சில எளிய மனிதர்களால் தோற்றுவிக்கப்படுகின்ற நிறுவனங்கள் ஆல்போல் தழைத்து வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு வாழ்வளிக் கின்றன.
மிகவும் ஏழையாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய தெய்வநாயகத்தின் வி.ரி.வி குரூப் நிறுவனங்கள் இன்று இலங் கையின் மிகப்பெரிய பத்து நிறுவனங்களுள் முதல் நிலையில் நிற்கின்றன. பலநூறு தொழிலாளிகள் இதில் பணியாற்ற, பல் லாயிரம் மக்கள் பயனடைகிறார்கள்.'
தான் என்றோ படித்த செய்யுளின் வரிகளைக் கொண்டு தெய்வநாயகத்தை ஆலமரத்திற்கு ஒப்படுகிறார் ரி.எம். ஆவுடை யப்ப பிள்ளை.
‘செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்' என்ற கோட் பாட்டிற்கிணங்கத் தன் சுற்றம், நட்பு ஆகியோரைத் தாங்கு கிறார் என்று அவரைப் புகழ்கின்றார் அவருடைய நிழலாக இன்றும் உழைத்துவரும் சோம அண்ணாச்சி என்று அழைக்கப் படுகின்ற சோமசுந்தரம்.
உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலைக் கட்டிமுடிக்க இருபத்தி இரண்டு ஆண்டுகளாயின. பல்லாயிரம் வேலையாட்கள் இரவு, பகலாக வேலை செய்து அந்தப் பளிங்கிலே ஒரு கனவைக் கட்டி முடித்தனர். ஆனால் ஒரே ஒரு வெடிகுண்டு மூலம் ஒரு நொடியில் அதைத் தூளாக்கிவிட முடியும்.
 

ஆலமரம் 25及
வி.ரி.வி நிறுவனமும் அப்படித்தான் தகர்ந்து போக வேண்டிய நிலையை அவ்வப்போது சந்தித்துப் பார்த்தது.
1942ல் தொடங்கிய அந்த நிறுவனம் நாற்பது ஆண்டு களில் மளமளவென்று வேகமாக வளர்ந்து வந்தது.
இடையில் 1951 ல் பேரிழப்பு ஏற்பட்டது! அதை சரிக் கட்டியப் பின் 1962ல் நிறுவனம் ஏற்றுமதித்துறையில் இறங்கி சாதனை படைத்தது. 1981 ல் ஏற்றுமதிக்கான இலங்கை அர சின் பரிசினைத் தட்டிச் சென்றது. ஆனால் 1983ல் இனக் கலவரத்தால் இலங்கையே சிக்கித் தடுமாறிய போது வி.ரி.வி நிறுவனங்களும் தடுமாறிப் போயின. எவ்வளவோ பேரிழப்பு களுக்குப்பின் உடனே உயிர்த் துடிப்போடு எழுந்து நின்று தழைக்கத் தொடங்கி விட்டது. ஐம்பத்தி ஐந்தாம் ஆண்டில் காலடி வைத்திருக்கும் வி.ரி.வி தொகுப்பு நிறுவனங்களின் பெரிய வளர்ச்சிக்கு யாரெல்லாம் காரணகர்த்தாக்கள்?
ஆதிமூலமாக இருந்து அனைவரையும் இயக்கி, ஒருங் கிணைத்து, ஊக்குவித்து இத்தனை வளர்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தவர் தெய்வநாயகம் என்பது வெள்ளிடை மலை.
எப்படிப்பட்ட மனிதர்களைக் கொண்டு இந்த நிறுவனங் களை தெய்வநாயகம் உருவாக்கினார்?
அந்த மனிதர்களை எப்படி நிறுவனத்தில் இணைத்தார்? எப்படி உருவாக்கினார்? m
அவர்களை எப்படிப் போற்றிக் காத்து வருகிறார்?
ஒரு அணி, விழுந்தாலும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்றால் அதன் கட்டமைப்பு எப்படியுள்ளது?
'இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?' என்று பாரதி தாசனார் முழங்கியது போல், வெல்லுவதற்கே படைக்கப்பட்ட அணியாக அவருடைய நிறுவனங்கள் அமைந்திருக்கின்றனவே இந்த அணியின் இரகசியங்கள் யாவை?
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நாட்டின் மீது
இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. அந்நாட்டின் அனைத்து இருப்புப்பாதை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்நாட்

Page 135
252 இதோ ஒரு வெளிச்சம்
டின் இயற்கை வளமோ குறைவு; எரிமலைகள் நிறைந்த நாடு; மண்ணிலோ குண்டூசி செய்யக்கூடிய அளவுக்குக் கூட இரும்பு கிடையாது. இவ்வளவு மோசமான நாடு, போரால் பேரிழப் புக்களைச் சந்தித்த நாடு இன்று மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந் திருக்க காரணங்கள் என்ன?
பல காரணங்களில் முக்கியமானது, 'அந்த நாட்டிலே, இயங்கும் தொழிற்சாலைகள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன? என்பதே.
'ஜப்பானிய நிர்வாகம்' என்பது இன்று ஏனைய உலக நாடுகள் பார்த்தும், படித்தும், பாராட்டியும் வருகின்ற ஒரு நெறிமுறையாகும்.
பொதுவாக ஜப்பானிய நிர்வாக முறைகளிலுள்ள ஒரு சில சிறப்பு அம்சங்களைக் காணலாம்.
"கெய்ஷா” என்கின்ற சொல் 'என்னுடைய நிறுவனம் என்கின்ற பொருளைத் தருகின்ற சொல்.
வேலை செய்கின்ற ஒவ்வொருவரும் இது ' தம்முடைய நிறுவனம்' என்கின்ற உணர்வோடு ஒன்றி வேலை செய்கின்ற செய்தியைக் குறிக்கின்ற சொல் தான் ‘கெய்ஷா"
'ஒயாபன் - கோபன்'
இந்த இரண்டு சொற்களும் தந்தை-மகன் என்ற பொரு ளைத் தரும் சொற்கள். இத்தகைய உறவு முறையை அடிப் படையாக வைத்தே அங்கு எல்லா நிறுவனங்களும் இயங்கு வதைக் காணலாம்.
ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளை எப்படி அரவணைத் துச் செல்லுவாரோ அதே அரவணைப்பை நிர்வாகம் தன்னு டைய தொழிலாளர்களிடம் காட்டுகின்றது. சொல்லப் போனால் இயக்குநர், மேலாளர், கணக்காளர் போன்றப் பதவிப் பெயர்களுக்கு மாறாக, தாத்தா, பெரியப்பா, சிற் றப்பா, அண்ணன், தம்பி என்ற பெயர்களையே வைத்திருக் கிறார்கள். ஒரு தந்தை பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் தரு வாரோ அதை நிர்வாகம் தரவேண்டும். முக்கியமாக

ஆலமரம் 253
ஆயுட்காலம் வரை வேலை
* சேவைக் காலத்திற்கேற்ப ஊதிய உயர்வு, பணி உயர்வு
முதலாளி - தொழிலாளி; பழைய தொழிலாளர் - புதிய தொழிலாளர்; நிர்வாகப் பொறுப்பிலுள்ளோர் - பணி யாளர் அனைவரிடமும் குடும்பப் பாங்கான உறவு முறை
குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை
தொழிலாளியின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, கல்வி, மருத்துவ, பொழுதுபோக்கு வசதிகள்.
ஆகியவற்றை ஜப்பானிய நிர்வாகங்கள் கவனிக்கின்றன. சம் பளம் கொடுத்து விட்டோம்; பிறகு என்ன ஆனால் நமக் கென்ன? வாங்குகிற சம்பளத்திற்கு வந்து வேலை செய்துவிட்டுப் போனால் போதும்' என்ற உணர்வு நிச்சயமாக அங்கு இல்லை.
A.
'ஈ - முக்கோ - யோஷி' என்கின்ற உணர்வு எல்லா நிறு வனங்களிலும் உண்டு. 'குடும்பம் - மூத்தமகன்’ என்கின்ற உணர்வுதான்.
ஒரு குடும்பத்தில் தலைப்பிள்ளைக்கு எப்போதுமே கூடுத லான உரிமையும் - பொறுப்பும் உண்டு. ஜப்பானிய நிறுவனங் களில் முதிர்ந்த தொழிலாளிகள் மற்றவர்களுக்கு மூத்த அண்ண னாக இருந்து கற்பித்தல், கண்டித்தல், காத்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதைக் காணலாம்.
‘செய்வுPன் க்யோய்க்கு’ என்பது ஆன்மீகக் கல்வியைக் குறிக்கும். தொழிலாளர்களின் ஆன்மீக வளர்ச்சியை மேம் படுத்துவதற்கான, எல்லா வழிகளிலும் ஜப்பானிய நிறுவனங் கள் ஈடுபடுவதையும் நாம் காணலாம்.
இப்படிப்பட்ட மாற்றங்களெல்லாம், ஜப்பான் நாட்டில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட மாற்றங்கள்;
நீண்டகாலச் சிந்தனைக்குப் பின் தோன்றிய மாற்றங்கள்; சொல்லப்போனால் கடந்த இருபதாண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் தான் ஜப்பானின் வளர்ச்சி வியக்கத் தகுந்த வகையில் அமைந்தது எனலாம். அதிலும் தரக்கட்டுப்பாடும் கூட அண்மைக்கால சிந்தனைதான்.

Page 136
54 இதோ ஒரு வெளிச்சம்
ஆனால் ஐம்பதாண்டு காலத்திற்கு முன் தன் நிறுவனத் தைத் தொடங்கிய தமிழர், தெய்வநாயகத்தின், சிந்தனைகளும், இன்று உலகமே வியக்கும் ஜப்பானிய நிர்வாக சிந்தனைகளும் எப்படி ஒன்றுபோல் பரிமளிக்கின்றன ’ என்று எண்ணும் போது நாம் மிகவும் பெருமையடையலாம்.
1942ல் வி.ரி.வி. நிறுவனத்தைத் துவக்கிய பொழுது அவருடன் இருந்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. அவர் களும் அவருடைய உறவினரே. முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் விலகிவிட தெய்வநாயகம் தன் சித்தப்பாவின் பிள்ளை யாகிய சோமு அண்ணாச்சியை பாளையங்கோட்டையிலிருந்து வரவழைத்து அவருடன் சேர்த்துக்கொண்டார். 1946 ல் அவர் வந்த சில மாதங்களில், மற்றொரு நெருங்கிய உறவினர் சுப் பையா அத்தானும் வந்து சேர்ந்து விட்டார்.
சோமு அண்ணாச்சியும், சுப்பையா அத்தானும் தெய்வ நாயகத்தின் இரண்டு கரங்களாக விளங்கினார்கள். இரவு ஒரு மணி இரண்டு மணி ஆனாலுங்கூட, எல்லா வேலையையும் முடித்துவிட்டு இவர்கள் மூவரும் ஒன்றாக வீட்டிற்கு வந்து சேருவார்கள். தனியாக வீடு பார்த்துத்தரும்வரை சோமண் ணாச்சியும், சுப்பையாவும் தெய்வநாயகத்தின் வீட்டிலேதான் தங்கியிருந்தார்கள்.
வி.ரி.வி. நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில் வேலை செய்த அத்தனை பேருமே அவருடைய உறவினர்களாக இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோருமே உறவினர்களாக அமைந்துவிட்டதில் பல நல்ல விளைவுகள் இருந்தன. குறிப்பாக, யாரோ ஒருவருக்காக வேலை செய்கின்றோம் என்கின்ற உணர்வு தோன்றவில்லை. மாறாக நம்மீது மிகவும் அன்பு வைத்திருக்கின்ற நெருங்கிய உற வினருக்காக உழைக்கின்றோம்’ என்ற உணர்வு முதலில் தோன் றினாலும் அது விரைவிலேயே மறைந்து போய் நமக்காக உழைக்கிறோம்; இது எங்களுடைய நிறுவனம், என்னுடைய நிறுவனம்' என்கின்ற உணர்வு தோன்றியது. இந்த உணர்வைத் தான் ஜப்பானியர்கள் ‘கெய்ஷா என்கிறார்கள். 'என் குடும் பம், என் நிறுவ்னம்’ என்கின்ற அந்த உணர்வு அவர்களோடு அன்று ஒட்டிக் கொண்டது இன்று வரை விடவில்லை.

ஆலமரம் 2 55
பல ஆண்டுகளுக்கு முன் அவரோடு உழைத்து இன்று ஓய்வு
பெற்று தமிழகத்திலும், இலங்கையிலும் பல்வேறு இடங்களில் வாழும் அவருடைய பழைய தொழிலாளர்களைக் கேட்கும் போது அவர்களுடைய உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
பசுமை நிறைந்த அந்த இனிய நாட்களை அவர்கள் இன்றும் மகிழ்ச்சியாக நினைவு கூருகிறார்கள். கடும் உழைப்பான நாட் களாக அந்த நாட்கள் அவர்களுக்குத் தோன்றவில்லை. மாறாக அந்த நாட்கள் சாதனை நிறைந்த நாட்களாகவே தோன்று கின்றன.
தம்முடைய உறவினர்களாகவே பார்த்து தெய்வநாயகம் வேலைக்கு அமர்த்தியது ஒரு வகையில் ஒரு குறுகிய கண் ணோட்டமான செயலாகக்கூடப் படலாம். ஆனால் அன்றைய நாட்கள் வேறுபட்ட நாட்கள். இன்றைய நாட்கள் போல பத்திரி கையில் விளம்பரம் கொடுத்து, பேட்டி நடத்தி, ஆட்களை நன்றாக அலசி ஆராய்ந்து, தகுதியை உறுதி செய்து பணிக்கு நியமிக்கும் நாட்களல்ல அந்த நாட்கள். மேலும் அவருடைய அன்றைய தொழிலுக்குப் பெரிய படிப்பும் தேவைப்பட வில்லை.
'நம்பகமான ஆட்கள் வேண்டும்; கடுமையாக உழைக்கக் கூடிய, சுறுசுறுப்பானவர்கள் வேண்டும். தெரியாத ஒருவரை வைத்துக்கொள்வதைவிட, நமக்கு நன்கு அறிமுகமான, பல ஆண்டுகளாகப் பழக்கப்பட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதே சிறந்தது' என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும். ஆகவேதான் தம் உறவினர்களையே வேலைக்கு அமர்த் தினார். இன்றைய நிலைவேறாக இருந்தாலும், அன்று அந்த திட்டம் அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது.
குடும்ப உணர்வை உண்டாக்க அவர் முயல வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. காரணம் ஏற்கனவே அங்கு குடும்ப உணர்வு இருந்தது.
அடுத்து, தம்மை நம்பி வேலைக்கு வந்து விட்டவர்களை நிர்வாகம் நடத்திய முறை சிறப்பாக இருந்தது.
தம் ஊழியர்கள் அனைவரும் உறவு முறையை மறந்து விட்டு அவரை ‘முதலாளி' என்று அழைத்தாலும் அவர் அவர்

Page 137
256 இதோ ஒரு வெளிச்சம்
கள் மீது தந்தைக்குரிய பாசத்தோடும், தனயனுக்குரிய உரிமை யோடும் பழகினர்.
இவரை நன்கு கூர்ந்து கவனித்த முன்னாள் அமைச்சரும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. ராஜ கருண, "மக்கள் அவரை 'முதலாளி' என்றும் 'லொக்கு முதலாளி' என்றும் அழைத்தனர். ஆனால் முதலாளி என்றால் நாம் ஆங் காங்கே பார்க்கின்ற முதலாளிகள் மாதிரி அவர் அதிகாரத் தோரணையோடு நடந்து கொள்வதில்லை. சொல்லப்போனால் அவர் முதலாளியே இல்லை' என்கிறார்.
அருணாசலம் பிள்ளையிடம் வேலைபார்க்கும் போது இவரை ‘முதலாளி' என்று பலர் எண்ணினார்கள். ஆனால், இவரே "முதலாளி'யாக உருவான பிறகு இவருடைய கடுமை யான உழைப்பையும், எளிமையையும் பார்த்து விட்டு 'இப்படி ஒரு முதலாளியா?’ என்று வியந்தார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உணவு இல்லை. அதையேதான் அன்றைய நாட்களில் தெய்வநாயகம் கடைபிடித்தவர். தமக்கென்ன உணவோ அதே உணவுதான் அனைவருக்கும். 'எல்லோரும் உண்டு முடித்தபின்னர்தான் அவர் உணவு உண்ணச் செல்லுவார். இந்த 86வது வயதிலும் எந்த விருந்திலும் 'எல்லோரும் சாப்பிட்டார்களா?' என்பதை உறுதி செய்து கொண்ட பின்புதான் கடைசியாக உண்பார். தம் வீட்டிலும் கடைசியாக அவரும், அவர் உண்ட பின்பே அவருடைய துணைவியார் சிதம்பரத்தம்மாளும் உண்ணுவது வழக்கம்.
தாம் நிம்மதியாக உட்கார்ந்து கொள்வது, மற்றவர்கள் பாடுபடுவது' என்பது அவர் வழக்கமன்று. முழுமையாகப் பாடுபடுவது என்பதே அவருடைய வழக்கம்.
இன்று வி.ரி.வி நிறுவனத்தில் பணியாற்றுகின்ற பெரும் பாலான பொறுப்பாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தங்கு வதற்கான வீட்டுவசதிகளை அவர் ஏற்பாடு செய்து கொடுத் திருக்கிறார். மருத்துவ வசதி உண்டு. அனைத்துத் தொழிலாளர் களின் பிள்ளைகளுக்கும் பாடபுத்தகங்கள் வாங்க உதவியுண்டு. அரசாங்க வேலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு என் ன்ென்ன வசதிகள் உண்டோ நலநிதி, சேமிப்பு, ஆயுள்காப்பீடு

ஆலமரம் 257
அத்தனையும் இங்கு உண்டு. அவர்களுக்கு 'போனஸ்' 'ஊக்க ஊதியம்' ஆகிய வசதிகளும் உண்டு. பிற தனியார் நிறுவனங் கள் என்ன தருகிறதோ, அரசாங்கம் என்ன வசதிகளை அளிக் கின்றனவோ, அதைவிட அதிக சம்பளம், வசதிகளை நிறுவனம் தருகிறது. முக்கிய பொறுப்பிலுள்ளவர்களுக்கு கார் முதலான வசதிகளை செய்து கொடுத்திருப்பதையும் நாம் காணலாம்.
தன்னுடைய பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டும், அவர் களுக்குத் தந்தை என்னென்ன செய்ய வேண்டும் என்ற உணர் வோடு நிறுவனங்கள் ஜப்பான் நாட்டில் செயல்படுவதை 'ஒயாபன் - கோபன்’ என்று குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட தந்தை-பிள்ளைகள் உணர்வோடே, தெய்வநாயகம் பல்லாண்டு களாக வாழ்ந்தும், செயல்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தை என்கின்ற நிலையில் ஒதுங்கி உட்கார்ந்து தேவை யான உதவிகளை மட்டும் செய்து வாழலாம். ஆனால் ஒரு குடும்பத்தின் மூத்தமகன் என்று வந்துவிட்டால் மேலும் அதிக மான பொறுப்பைச் சுமக்க வேண்டி வருகிறது.
பொதுவாக முதலாளி என்பவர் வேலை வாங்குவார். தொழிலாளர்கள் உழைப்பார்கள். முதலாளி எப்போதாவது வருவார், நினைத்த நேரத்தில் போய்விடுவார்; ஆனால் தொழி லாளிகளோ குறித்த நேரத்தில் வரவேண்டும்; குறிப்பிட்ட நேரம் வரை உழைத்தே ஆகவேண்டும். ‘முதலாளி மிகவும் மகிழ்ச்சி யாக இருப்பார்; தொழிலாளிகளோ உழைத்து, உழைத்து உருகி ஓடாகப் போய்விடுவார்கள்
- இவையெல்லாம் பெரும்பாலான மக்களின் பொது வான கருத்துக்கள். ஆனால் இவற்றையெல்லாம் உடைத் எறிந்தவர் தெய்வநாயகம்.
காலை 9.00 மணிக்கு கடைக்குள் நுழைந்தால், நுழையும் போதே ஒரு கவர்ச்சி அவரைச் சுற்றியிருக்கும். உற்சாகம் கடை யிலிருக்கும் அத்தனை பேரையும் தொற்றிக் கொள்ளும், உட் கார்ந்து வியாபாரம் செய்யும் வழக்கமில்லை.
ஒரே நேரத்தில் பலவேலைகளைச் செய்யும் வழக்கம் உண்டு. ஆனால் தம்முடைய தொழிலாளர்கள் ஒழுங்காக சாப்பிட்டார்களா? அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள்

Page 138
258 இதோ ஒரு வெளிச்சம்
கிடைத்ததா?’ என்று கவனித்தபடியே இருப்பார். வேலை முடிந்தபின் வீட்டுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பி விட்டு, ஒரு சிலபேரை வைத்துக் கொண்டு அன்றாட கணக்கு வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்தால் இரவு 1.00 அல்லது 2.00 கூட சில நாட்களில் ஆகலாம். அன்றைய கணக்கை அன்றே முடித்து விட்ட பிறகேதான் வீட்டிற்குச் செல்வது அவருடைய வழக்கம். இந்தக் கடும் உழைப்பு தான் அவருடைய பெரும் வெற்றிக்குக் காரணம்.
இன்றைய உலகம் வேறு; அன்றைய உலகம் வேறு. இன்று 'அலுவலகத்தில் நான் முதலாளி-நீ தொழிலாளி. அலுவலகம் முடிந்து வெளியே வந்தால் நான் யாரோ, நீ யாரோ!' இந்த உறவு பெரும்பாலான இடங்களில் நீடிப்பதைப் பார்க்கிறோம். வேலை செய்கின்ற இடத்திலேயே 'நீ யாரோ - நான் யாரோ?' என்கின்ற உணர்விலேயே தொழில் செய்பவர்களையும் பார்க் கிறோம்.
ஆனால் தெய்வநாயகத்தின் காலம் வேறாக இருந்தாலும் அவருடைய நடைமுறையும் வேறாக இருந்தது. தம் கடையில் மூட்டை தூக்கிவைக்கும் ஒரு தொழிலாளிக்கு உடல் நலம் சரி யில்லை என்று தெரிந்தால் அவருடைய குடிசைக்கும் சென்று பார்த்துவிட்டு வருவது அவர் வழக்கம்.
மனித வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் திருமணம், மரணம், வேறுசில வைபவங்கள் என்று எது நிகழ்ந்தாலும் தெரிந்து விட்டாலேயே கிளம்பிவிடும் பழக்கம் உண்டு.
 

ஆலமரம் 259
குழந்தைகள் பிறந்து வளர ஆரம்பிக்கும் போது முதன் முறையாக அதற்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியின்போது இவரை அழைத்து இவர் கையால் குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப் பெருமையாக எண்ணும் தமிழ், சிங்களக் குடும்பங்கள் ஏராளம்.
'பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கவேண்டுமா? ஐயாவிடம் ஆசி வாங்கியபின் சேர்த்தால் பிள்ளை நன்றாகப் படிக்கும்?"
“வேலைக்கு முதல் முறையாகச் செல்லுகிறார்களா? இவ ரிடம் ஆசி வாங்கினால் பதவி நிலைக்கும்; உயர்வு கிடைக்கும்.'
இப்படி எத்தனை அழைப்புக்கள்! விழாக்கள்! முகம் கோணாமல், மன நிறைவோடு கலந்து கொள்ளும் வழக்கம் அவரை மாறுப்ட்ட ஒரு முதலாளியாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
'பக்கத்துத் தெருவிலே ஒரு நிகழ்ச்சி; நண்பர் வீட்டு நிகழ்ச்சி, நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்து விட் டுச் செல்கிறார். அதே நாளில் ஊரில் இருந்தாலும், செல்லாமல் தப்பிக்க வழியுண்டா என்று நாம் பார்ப்போம். ஆனால் முப் பதாண்டுகளுக்கு முன் தம்மிடம் வேலை பார்த்த ஒருவர், பக் கத்து ஊரிலே திருமணம் வைத்திருந்தால் அந்த விழாவிலே தெய்வநாயகத்தைப் பார்க்கலாம். ஒரு வேளை அதே நேரத்தில் வேறு ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டால் இந்த திரு மணத்தில் தெய்வநாயகத்தின் பிள்ளைகளில் யாராவது ஒரு வரைக் காணலாம்.
நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் ஏழையா, பணக்காரரா, என்ன மதம், என்ன இனம்," என்ற பாகுபாடுகளையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு அழைப்புக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற உயரிய பண்பைப் பார்க்கலாம்.
இவர் காட்டிய அன்பே கூட சில நேரங்களில் ஆபத்தாக அமைந்து விடுவதும் உண்டு.
ஓர் உறவினரை வேலையில் அமர்த்தினார். அவருக்கு ஒரு வேலையைச் சொல்லும்போது 'அதை எப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்?' என்று ஆலோசனை கேட்பார். இவருக்குத் தெரியாததால் யோசனை கேட்பதில்லை. ஒரு "ஈடுபாடு உண் டாக்க வேண்டும்' என்ற காரணத்திற்காக வேண்டுமென்றே

Page 139
260 இதோ ஒரு வெளிச்சம்
கேட்பதுண்டு. இதை புரிந்து கொள்ள முடியாத அவர் தெய்வ நாயகத்திற்கே வழிகாட்டி' என்பது போல பேசவும், நடந்து கொள்ளவும் ஆரம்பித்தார். அதே நேரத்தில் மதுப்பழக்கமும் அந்த மனிதரைத் தொற்றிக் கொண்டது.
எப்படியாவது இந்த நபரைக் கழற்றிவிட வேண்டும் என்று எண்ணினார் தெய்வநாயகம். அந்த நேரத்தில் வேறு ஒரு மனி தருடன் இந்த உறவினர் கூட்டுசேர்ந்து வியாபாரம் தனியாகத் தொடங்க, சில நாட்களில் பெரும் தோல்வியடைந்தார்.
தோல்விவெறி, மது போதை இரண்டும் ஒன்றுசேர என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ‘தெய்வநாயகத்தின் காலை வெட்டுவேன்' என்று பல இடங்களில் சத்தம் போட்டிருக்கிறார். இதைக்கேட்டு சிலர் தெய்வநாயகத்தை எச்சரித்தும் தெய்வ நாயகம் ‘வெட்டினால் வெட்டட்டும் நான் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை' என்று கூறி இயல்பாகவே இருந்தார்
ஒருநாள் கால் வெட்டப்பட்டது; மைலன் தியேட்டர் முன்னாலேயே காலில் கத்தி வெட்டு விழுந்தது. ‘எந்த மனிதர் தெய்வநாயகத்தின் காலை வெட்டுவேன்’ மன்று ஏக்காளமிட்டுக் கொண்டிருந்தாரோ, அவருடைய காலை வேறு ஒருவன் வெட்டிவிட்டான். ஒழுக்கக் குறைவானவர்களோடு சேர்ந்து பழகியதன் விளைவு, தகராறு, அதனால் காலில் வெட்டு!
மருத்துவமனையில் சேர்ந்த பின்னும் தன்னைப் பழிவாங் கியவர் தெய்வநாயகம்' என்று காவல் நிலையத்தில் முறையிட் டார் அவர். மிரட்டிப் பணம் வாங்கச் செய்த முயற்சியும் பயனளிக்கவில்லை. காவலதிகாரிகள் உண்மையைத் தெரிந்து கொண்டபின், மனு செய்தவரையே சாட ஆரம்பித்தார்கள்.
இப்போது அந்த ஆள் இந்தியாவில் இருக்கிறார். நேரில் வரக் கூச்சப்பட்டுத் தன் மனைவியின் மூலம் உதவி கேட்கும் போதெல்லாம் தயங்காமல் உதவி செய்கிறார் தெய்வநாயகம். யாராவது இதைப்பற்றிக் கேட்டால், 'உங்கள் தம்பி தவறு செய் தால் அவனை ஒதுக்கி விடுகிறீர்களா?"
'ஈ முக்கோ யோஷி' என்ற ஜப்பானியப் பெயரால் வழங் கப்படுகின்ற சகோதர உறவை, மூத்த அண்ணன் தன் தம்பிகளை

ஆலமரம் 26
அரவணைத்துச் செல்லுகின்ற முறையை தெய்வநாயகம் முழு 6) Of கடைபிடிக்கின்றார் என்பதைச் சொல்லவா வேண்டும்?
ஆன்மீகக் கல்வி"யைத் தன் தொழிலாளர்களுக்கு அளிப், பதில் ஜப்பானிய நிர்வாகங்கள் ஆர்வம் காட்டுகின்றன’ என்று பார்த்தோம்.
வி.ரி.வி நிறுவனங்களில் எந்த அலுவலகத்திலும் தெய்வீக மணம் கமழுவதைப் பார்க்கலாம். ஒரு சிறிய பூஜை அறையே அங்கு இருப்பது போன்று அத்தனை உருவங்கள், படங்கள், மலர்கள் அமைத்திருக்கிறார்கள். பக்தியும், ஆன்மீகமும் எங் களுடைய வணிகத்தோடு ஒன்றிவிட்டன என்பதை அந்த அலு வலகங்கள் உணர்த்துகின்றன.
இரத்தினம், "ஈஸ்வரன் பிரதர்ஸ்" தேயிலைஏற்றுமதிப் பிரி வில் ஒரு கண்காணிப்பாளர். கொழும்புக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள கோவிலின் விழாவுக்கு நன்கொடை வேண்டி, முதலாளியிடம் ஒரு கொப்பிப் புத்தகத்தை நீட்டினார். ஆயிரத்து ஒன்று கிடைத்தது! விரைவில் வசூல் இருபதாயிரத் தைத் தாண்டி, எதிர்பார்த்த தொகைக்கும் மேலாக சேர்ந்து விட்டது!
எந்தத் தொழிலாளியும் இப்படிப்பட்ட விஷயங்களுக்காக” முதலாளியைத் தயங்காமல் அணுக முடியும்; வெற்றியோடு திரும்பலாம்!
அலுவலகத்தில் எந்தப் பிரச்சினையாகஇருந்தாலும், அவை எந்த வழியில் அணுகப்பட் வேண்டுமோ அந்த வழியில் வர வேண்டும்! ஆனால் எந்தத் தொழிலாளியும், தெய்வநாயகத் தையோ, அவருடைய பிள்ளைகளையோ சொந்த விஷயமாக அவரவர்களுடைய வீட்டில் எப்போதும் சந்திக்கலாம். அந்த உரிமை அவர்களுக்கு உண்டு.
1973ல் கார் ஒட்டுநராக தெய்வநாயகத்திடம் வேலைக்கு வந்து சேர்ந்தவர் அருணாசலம். முதலில் லாரி ஒட்டிக் கொண் டிருந்தார். மிகவும் சிறப்பாக உழைக்கிறார் என்று தெரிந்ததும் தமமுடைய ஒட்டுநராக அவரை தெய்வநாயகம் வேலைக்கு வைத்துக் கொண்டார்.

Page 140
262 இதோ ஒரு வெளிச்சம்
எங்கே சென்றாலும், எந்த விருந்தாக இருந்தாலும் அதே பந்தியில் உட்கார்ந்து அவருக்கு அளிக்கப்படும் அதே உணவை அருணாசலமும் சாப்பிடுவார். தனியாக வேறு அறையில், வேறு உணவு அல்லது கையிலே ரூபாயைக் கொடுத்து விட்டு ஏதாவது உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வரச்சொல்வது இவையிரண்டுமே தெய்வநாயகம் கடைபிடிக்கின்ற வழிகளல்ல! அருணாசலத்தின் குடியிருப்பு தெய்வநாயகத்தின் வீட்டுக்கரு கிலே வழங்கப்பட்டிருந்தது. அவர் தெய்வநாயகத்தை முதலாளி என்ற கோணத்தில் பார்க்காமல் தம்முடைய தந்தையாகவே எண்ணிப் போற்றினார் என்று சொல்ல வேண்டும்.
1983ல் இனக்கலவரம் வெடித்தவுடன் அருணாசலத்தின் மனத்தில் பல குழப்பங்கள். இந்தியா நோக்கிக் கிளம்பிய கூட்ட்ங்களில் ஒன்றோடு தமிழகம் வந்தார். தமிழக அரசு திருவள்ளுவர் போக்குவரத்து நிறுவனத்தில் ஒட்டுநர் வேலை கிடைக்கவே இரண்டு ஆண்டுகள் உழைத்தார். தெய்வநாயகத் திடம் உழைத்துப் பழகிவிட்ட அவரை மீண்டும் இலங்கை'ஈர்க்க கொழும்பு வந்தார். மீண்டும் அவருக்கு வேலை. பழைய பாசம், உறவு எதுவுமே விட்டுப் போக்வில்லை.
பொதுவாக வி.ரி.வி நிறுவனத்தில் ஒருவர் வேலைக்குச் சேர்ந்து விட்டால், வேறு நிறுவனத்தில் வேலைக்குச் செல்லக் கொஞ்சமும் விரும்புவதில்லை. வேறு இடங்களில் கிடைப் பதைவிட அதிக ஊதியம் கிடைப்பது ஒரு காரணம்; அவர்களே முதல் போட்டுத் தொழில் செய்தால் என்ன ஆதாயம் கிடைக் குமோ அதைவிட அதிக ஊதியம் கிடைப்பது இன்னொரு
 

ஆலமரம் 263
காரணம்; ஒரு சராசரி மனிதனின் நியாயமான எதிர்பார்ப்பு
கள் இங்கே நிறைவேற்றப்படுகின்றன என்பதும் ஒரு காரணம்;
எல்லாவற்றிற்கும் மேலாக ‘என் நிறுவனம்; என் குடும்பம்;
என் சகோதரர்கள்’ என்கின்ற உணர்வுகள் வி.ரி.வி நிறுவனத்
தின் இரத்த நாளங்களிலே இடையறாது பாய்கின்றமையால்
வி.ரி.வி.யின் வளர்ச்சியே என் உயிர்மூச்சு' என்று சொல்ல
வைக்கின்ற ஆரோக்கியமான தழ்நிலை அங்கே தென்றலாகத் தவழுவதே மிக முக்கிய காரணம்!
魏 ت
"ت
魏
en

Page 141
28. தொழிலாளர்கள்
அன்றும், இன்றும்
‘என்னை விட ஆற்றலில் குறைந்த சிறியவர்களை வேலைக்கு வைத்தால் என்னுடைய நிறுவனம் சிறுத்துப் போன சின்ன நிறுவனமாகிவிடும்; ஆனால் என்னைவிட ஆற்றலில் வல்லவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் என்னுடைய
நிறுவனம் ஒரு மாபெரும் நிறுவனமாக மாறிவிடும்.' இது ஒர் அமெரிக்க தொழிலதிபரின் கொள்கை
உண்மையில் இது விவாதத்திற்குரிய ஒரு கோட்பாடு. அதுவும் இந்தியா, இலங்கை போன்ற பழமையில் ஊறிய நாடு களுக்கும், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளுக்கும் உள்ள சிந்தனை முரண்பாடுகளை நோக்கும்போது இது ஆழ்ந்து சிந் திக்க வேண்டிய ஒரு கோட்பாடு!
தொழிலாளி தனக்கு அடங்கி நடப்பவனாக, பணிவுள்ள வனாக, அறியாமை நிறைந்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதும், அப்படிப்பட்ட ஆட்களையே வேலைக்கு வைத் துக் கொள்வதும் பொதுவான வழக்காக இருந்தது; இன்றும் இருந்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிவுக்கும், திறமைக்கும் அதிக மதிப்புத் தருவதை நாம் காண்கிறோம். நம் முடைய நாடுகளைச் சேர்ந்த மிகச் சிறந்த மருத்துவர்கள், பொறி யியல் வல்லுநர்கள், கணிப்பொறியாளர்கள் ஆகியோருக்கு உயரிய பதவிகள் அமெரிக்க நாட்டு நிறுவனங்களில் கிடைத்து விடுகின்றன! அமெரிக்காவின் பெரும் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.
சுருக்கமாகச் சொல்லப்போனால்,
'அடங்கியவர்களை வேலையில் அமர்த்துவதா? இல்லை அறிவாளிகளை வேலைக்கு அமர்த்துவதா?”
 

தொழிலாளர்கள் - அன்றும், இன்றும் 265
இதுதான் கேள்வி! 'யாரை வைத்தால் நிறுவனம் வளரும்?
'ஒருகை தட்டினால் ஓசை கேட்காது; தனிமரம் தோப்பா காது' என்று நாம் அறிவோம்.
எவ்வளவுதான் சிறந்த தலைவனாக இருந்தாலும் தன் பின்னே நடந்துவர ஆற்றல் மிகுந்த தொண்டர்கள் வேண்டு
மல்லவா?
ஆரம்ப நாட்களில் அவருக்கு இரண்டு கரங்களாக திகழ்ந் தவர்கள் சோமு அண்ணாச்சியும், சுப்பையா அத்தானும். இன்றுகூட கொழும்பில் தெய்வநாயகத்திற்குத் துணையாகச் செயலாற்றி வருபவர் சோமு அண்ணாச்சி.
இலங்கையை விட்டு இந்தியா வந்துவிட்டாலும், சென்னை யில் தெய்வநாயகத்தின் பிள்ளை அருணாசலத்தின் ஏற்றுமதி நிறுவனத்தில் இன்றும் பணியாற்றி, அன்றைய தொடர்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளவர் சுப்பையா அத்தான்.
அன்றைய நாட்களில் காலை 9.00 முதல் மாலை 7.00 வரை என்று வேலையாட்கள், வேலை நேரம் பார்த்துப் பணி யாற்றியதில்லை. குறிப்பாக சோமுஅண்ணாச்சியும், சுப்பையா அத்தானும் தெய்வநாயகம் வீட்டிலேயே சாப்பிட்டார்கள்; தங் கினார்கள். கிட்டதட்ட 24 மணி நேர தொழிலாளர்களாகவே இருந்தார்கள்.
சுப்பையா அத்தான் அன்றாடம் 14 கணக்குப் புத்தகங் களை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு "பேரேட்டில் பதிந்து கணக்கு எழுதுவார். இது அனேகமாக இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலுமாக இருக்கும். இந்த கணக்கை எப்படி எழுதுவது? என்று சிறுவனாக இருந்த ஈஸ்வரனுக்குச் சொல்லித் தருவார் சுப்பையா அத்தான்.
சுப்பையா அத்தான் கடையில் வேலை செய்யும் வெறும் சிப்பந்தியாக மட்டும் இல்லை. அவருக்கு நிரம்ப இலக்கிய ஞானம் உண்டு. n
சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் தங்கள் நாட்டுப் பெருமைகளைப் பாடல்களாகப் போட்டிபோட்டுக் கொண்டு

Page 142
266 இதோ ஒரு வெளிச்சம்
விவாதிக்கும் பாடல்களை 'கடகட'வென மனப்பாடமாக ஒப் படைக்கும் போது ஈஸ்வரன் கண்கள் வியப்பால் விரியும்.
தேவாரம், திருவாசகம், முருகனைப் பற்றிய எண்ணிறந்த தனிப்பாடல்களை இசையோடு பாடியும் வேகமாக ஒப்புவித் துச் சொல்லும் போதும் ஈஸ்வரன் திறந்த வாய் மூடாமல் கேட்டபடி இருப்பார், இன்றைக்கு ஈஸ்வரனுக்கு இலக்கியத் தில் ஈடு இணையற்ற ஆர்வம் உண்டென்றால், அதற்கு வித் திட்டவர்களுள் முக்கியமானவர் சுப்பையா அத்தான்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சுப்பையா அத்தான் கணக்கு களை பேரேடில் எழுதிக் கொண்டிருப்பார். ஈஸ்வரனும் அவ ருடைய தம்பிகள், நண்பர்கள் பலாமரத்தின் கீழே பந்து விளை யாடுவார்கள். குறும்புத்தனமாக அவர்மீதும், நோட்டுகளின் மீதும் பந்தெறிவதும் உண்டு.
தூளியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை வள்ளி 'வீல்' என்று தூக்கம் கலைந்து அழ ஆரம்பிப்பார். ‘சுப்பையா அத்தான், தூளியை ஆட்டி, குழந்தையை தூங்கவை' என்று தெய்வநாயகம் உத்தரவிடுவார். கணக்குகளை அப்படியே விட்டு விட்டு சுப்பையா தூளியை ஆட்டப் போவார். 'கரி பச வப்பா, குண்டு பசவப்பா, கண்மூடி தூங்கப்பா’ என்று பாடிய
படியே தூளியாட்டுவார்.
சிறுவனாக இருந்து இளைஞனாக மாறிக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்குசுப்பையா அத்தான் மீது மேலும் மிகுந்த ஈடுபாடு இருந்ததற்கு இன்னுமொரு காரணம் 'பெண்களிடம் எப்படிப் பேசுவது? பழகுவது' என்ற மிகவும் கவர்ச்சிகரமான செய்தியை சொல்லிக் கொடுத்தவர் சுப்பையா அத்தான்.
தன் முதலாளியை 'ஆலமரம்' என்று வர்ணிக்கும் சுப் பையா அத்தான் இந்த மரத்தில் நாம் ஒண்டிக் கொண்டால் நமக்கு மிகவும் பாதுகாப்பு என்பார். இன்றைக்கு அவருடைய குடும்பத்தினர், உறவினர் பலர் இவர் மூலமாகவே வேலை பெற்றிருக்கிறார்கள். سمبر
சென்னையில் இவரோடு சுற்றினால் அவருடைய வேகம் புரியும். டி.வி.எஸ் மொப்பெடில் ஏறி ஓர் இளைஞனைப் போல் வேகமாகச் செல்லும் இவருக்கு, பாஸ்போர்ட் அலுவல கமும், இலங்கைத் தூதராலயமும் சொந்த வீடு போல. தூத

தொழிலாளர்கள் - அன்றும், இன்றும் 2 6ጎ”
ராலயத்தில் இவருடைய சரளமான சிங்களம் அங்குப் பணி யாற்றுவோருக்கு இளந்தென்றலாக அமைகிறது.
இன்முகத்தோடு, கலகலப்பாகப் பேசும் இவர் அடிக்கடி இது என் முதலாளியிடம் நான் கற்றுக் கொண்ட பாடம் என்பதை சொல்லிக் கொண்டேயிருப்பார்.
வி.ரி.வியின் ஆரம்பகாலத்தில் இப்படிப்பட்ட அன்பான, பண்பான உறவினர்களைத்தான் அவர் தம் ஊழியர்களாக அமைத்துக் கொண்டார்.
ஒரு சிறிய செடி வளர ஆரம்பிக்கும் காலத்தில் அதிக அக் கறையோடு கண்காணிக்கப்பட வேண்டும். அதன் மேல் உண் மையான அன்பு கொண்டவர்களின் சேவை அதற்கு வேண்டும். வளர்ந்து, மரமானபின் யார் வேண்டுமானாலும் அதை எளிதில் காக்க முடியும். எனவே தெய்வநாயகம் மிகவும் வேண்டியவர் களுக்கே வேலை கொடுத்தார்.
ஒரளவுக்கு வளர ஆரம்பித்தவுடன் தெய்வநாயகம் மிகச் சாதாரணமானவர்களை, கண்ணில் பட்டவர்களை வேலைக்கு வைத்தார். ஆனால், நாளாவட்டத்தில் அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றிவிட்டார். இதுதான் அவருடைய வெற்றி யின் ரகசியம்.
அவரோடு சேர்ந்து, பழகி, உழைத்து அவருடைய நல்லி யல்புகளை அவருடைய தொழிலாளர்களும் பெற்றுக் கொண் டார்கள் என்றால் அது மிகையாகாது.
மேலும், யாரை வேலைக்கு அமர்த்தினாலும், அவர்களுக் கும் மேலே ஒரு படி சென்று அவர்களை வேலை வாங்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது!
குறிப்பாக கால்குலேட்டரை வைத்துக்கூட்டி, கழித்து பெருக்கி, வகுத்துக் கணக்குப் போட்டு இவ்வளவு ரூபாய் ஆகிறது என்று கணக்காளர் சொல்லுமுன் மனதிலே கணக்குப் போட்டு இவ்வளவு வருகிறது' என்று சொல்லக்கூடிய அபூர்வ ஆற்றல் அவருக்கு இருந்தது.
தாம் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் மற்றவர் களை அனுப்பும்போது 'அவர் இந்த விலை சொல்லுவார்; நீங்கள் இவ்வளவு சொல்ல வேண்டும். கடைசியில் இந்த

Page 143
26.8 இதோ ஒரு வெளிச்சம்
விலைக்கு வருவார்கள்; அதில் முடித்து விடுங்கள்' என்று சொல்லுவார். வியாபாரம் பேசப் போனவர் அசந்து போய் விடுவார்; காரணம் அவர் என்ன சொன்னாரோ, எல்லாம். அதன்படியே நடந்திருக்கும்.
மற்ற வியாபாரிகளுடன் பேசுவார் கப்பல்கள் போக்கு வரத்தைக் கவனிப்பார்! அன்றாட வியாபார நிலையைக் கூர்ந்து கவனிப்பார். அவருடைய உள்ளுணர்வு சொல்லும். “இந்தப் பொருளுக்குத் தட்டுப்பாடு வரும் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள். அல்லது விலை இறங்கும்; இருப்பதை விற்று விடுங்கள்.’ அவருடைய உள்ளுணர்வு மிகச்சரியாகவே இருக் (95 p.
அவருடைய நினைவாற்றல், கணக்குத் திறமை, மனித மனங்களை எடைபோடும் ஆற்றல், பேசும் ஆற்றல், மற்றவர் களைத் தம்பால் ஈர்க்கக்கூடிய திறமை இவையனைத்துமே, அவரிடம் சேரும் யாருக்கும் அவரை அதிசய மனிதனாக நினைக்க தோன்றும்.
வி.ரி.வி. நிறுவனம் தம்முடைய நடைவண்டிக் காலத்தை விட்டு, நடைபோடும் காலம் வந்தவுடன் தெய்வநாயகம் தம் முடைய ஆட்களை நியமிப்பதில் பெரும் அக்கறையைக் காட்டி னார். அவருடைய கண்கள் திறமை மிகுந்த இளைஞர்களைத் தேடியபடியே இருந்தன. அதே நேரத்தில் அனுபவம் மிக்க முதியவர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.
அபயசேகரவை அவர் அப்படித்தான் பிடித்தார். பி.சி.சி. நிறுவனத்தில் 'மார்க்கெட்டிங்’ ‘வதல்' 'இருப்பு வைத்தல் போன்ற பல பொறுப்புகளை வகித்தவர் அபயசேகர. வி.ரி.வி. நிறுவனத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த அவர், சில நேரங்களில் அவரே கடையில் இறங்கி விற்பனை கூட செய்து கொடுப்பார். நிலுவை வதல் செய்து கொடுப்பார்.
போதுமான அளவு சரக்குகள் கையிருப்பாக இருக்கிறதா? என்று சோதிப்பார். 'சரக்குகளை வி.ரி.விக்கு கொடுத்து விட் டோம். அவர்கள் எப்படி விற்றால் என்ன?’ என்று விட்டு விடாமல் இவரே ஓர் ஊழியரைப் போல அங்கே உழைத்த விதம் தெய்வநாயகத்தை மிகவும் கவர்ந்தது.

தொழிலாளர்கள் - அன்றும், இன்றும் 269
என்றைக்காவது இந்த வேலை வேண்டாம்! வேறு வேலை கிடைத்தால் செய்வேன், என்ற முடிவை நீங்கள் எடுத்தால் என்னிடம் வாருங்கள். உங்களுக்கு நிச்சயம் ஒரு வேலை தரு கிறேன்!’ என்று தெய்வநாயகம் அவரிடம் ஒருமுறை சொல்லி வைத்திருந்தார்.
திடீரென்று அபயசேகரவிற்கும் அவருடைய நிறுவனத் துக்குமிடையே முரண்பாடு உருவாக, நிர்வாகம் அவரைப் பணி நீக்கம் செய்ய, அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் அபயசேகரவிற்கு முழு ஊதியம் கிடைக்க வில்லை. பல சிக்கல்கள். வேலையை உதறிவிட்டு வி.ரி.வியில் இணைந்து விடலாம். ஆனால் ஒரு குற்றவாளி என்ற பெய ரோடு வேலையிலிருந்து விலக அவர் விரும்பவில்லை. ஆகவே நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இந்த இடைப்பட் காலத்தில் தெய்வநாயகம் அவருக்கு உதவியது மட்டுமன்று: 'அவரை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று அவருடைய நிறுவனத்தின் இயக்குநர்களுடன் பேசியும் பார்த்
தாா.
ஆறுமாதத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் சாதகமாகவே வந்த தால் அபயசேகர மீண்டும் பி.சி.சி. நிறுவனத்திற்கே, தன்னு டைய பழைய வேலைக்குச் சென்றுவிட்டார். இருந்தாலும் அவர் மனம் தெய்வநாயகத்தின் மீதே சுற்றி வந்தது. 'நீங்கள் என்ன சம்பளம் வாங்குகிறீர்களோ அதே சம்பளத்தை நான் தருகிறேன். கவலைப்படாதீர்கள்!' என்று தனக்கு ஆறுதலூட் டிய அவரை எண்ணிப்பார்த்தார். வேலையைத் தற்காலிகமாக இழந்து, நீதிமன்றத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டி ருந்த நாட்களில் அவருடைய சொற்களும் உதவியும் பெரும் ஆறுதலாக இருந்ததை எண்ணிப் பார்த்தார்.
1988ல் அபயசேகர வி.ரி.வி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
எந்த நேரத்திலும் அவர் தெய்வநாயகத்தைச் சந்திக்க முடி யும். எந்த சிக்கலை எடுத்துக் கூறினாலும் அடுத்த வினாடியே அவர் நடவடிக்கை எடுக்கிறார். .
அபயசேகர கூறுகிறார். 'நான் இங்கே ஒரு பொம்மலாட் டப் பொம்மையாக இல்ன்ல. என்னை யாரும் 'இப்படிச் செய்,

Page 144
270 இதோ ஒரு வெளிச்சம்
அப்படிச் செய்' என்று ஆட்டி வைப்பதில்லை. எனக்கு முழு சுதந்திரம் உண்டு. நான் செய்யும் வேலைகளில் எந்தத் தலை யீடும் இல்லை. நான் எந்தக் கருத்தைச் சொன்னாலும் தெய்வ நாயகமும், அவருடைய பிள்ளைகளும் பொறுமையோடு கேட் கிறார்கள். அன்போடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். எனக்கு என் தொழில் நன்றாகத் தெரியும். எனக்கு உரிய மதிப் பைக் கொடுத்து ஊக்கப்படுத்துவதால் என்னால் மகிழ்ச்சியாக வும் சிற்ப்பாகவும் வேலை செய்ய முடிகிறது.'
நான் சாதாரண மனிதன்தான். திடீரென ஒரு நாள் 'மாத் தைய்யா, வாங்க கோயிலுக்குப் போகலாம்' என்று தெய்வ நாயகம் என்னை அழைத்துச் செல்வார்.
'ஐயா ஒரு திருமணத்திற்குப் போக வேண்டும். கார் வேண்டும்' என்று கேட்டால் நாம் கேட்கின்ற ஒட்டுநரோடு கார் அனுப்பி வைப்பார்.
இன்று அவரிடம் ஒரு ரூபாயைக் கொடுத்தால் மூன்று வருடத்தில் அதை ஆயிரம் ரூபாயாக மாற்றக் கூடிய சக்தி அவரிடம் இருக்கிறது.
'அவ்வளவு ஆற்றல் படைத்த அவர் எங்களிடம் எளிமை யாகப் பழகுகிறார். தொழில் முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வகையிலும் உதவுகிறார்.'
அதேபோல் சிவஞானம் பி.சி.சி. நிறுவனத்தில் பணியாற் றியவர். 44 ஆண்டுகள் பணிபுரிந்து ஒய்வுபெற்ற பின், வி.ரி.வி. நிறுவனத்துக்கு வேலைக்கு வந்தவர்.
‘விட்டாஸ்ப்ரே' என்று ஒரு பாலுணவு இலங்கை அரசின் தயாரிப்பாக இருந்தது. இதை அரசால் சரியாக விற்கமுடிய வில்லை. இதன் விற்பனை உரிமையைப் பெற இரண்டு நிறு வனங்கள் போட்டியிட்டன; பி.சி.சி, நெஸ்லே. இறுதியில் பி.சி.சிக்கு உரிமை கிடைத்தது.
பி.சி.சிக்கு தெய்வநாயகம் வந்தபோது ஒரு விற்பனை அதிகாரி தெய்வநாயகத்தைக் கேட்டார். 'ஐயா, உங்களால் எவ்வளவு விட்டாஸ்ப்ரே டின்கள் விற்க முடியும்?”
'நான் எவ்வளவு விற்றுத்தர வேண்டுமோ சொல்லுங் கள். விற்றுத் தருகிறேன்!'

தொழிலாளர்கள் - அன்றும், இன்றும் 27
தெய்வநாயகத்தின் பதில் அவர்களை அசத்தியது. பத்தே நாட்களில் விட்டாஸ்ப்ரே டின்கள் அனைத்தையும் தெய்வநாய கம் விற்று விட்டார்.
‘என்ன செய்வது? எப்படி விற்பது?’ என்று தன்னிடம் வைத்து தடுமாறிக் கொண்டிருந்த அத்தனை டின்களையும் தெய்வநாயகம் விற்றுத்தீர்த்தவுடன், இருப்பு இல்லாமல் அர சாங்கம் தடுமாறியது.
இந்த நிகழ்ச்சியைக் கண்டு ம் எய்தினார் சிவ ஞானம்.
ஒருநாள் சிவஞானத்தை, தெய்வநாயகம் கோயிலில் பார்த் தார். "ஏதாவது சேதியுண்டா?" "நேற்றுதான் வேலையி லிருந்து ஓய்வு பெற்றேன்.' 'அப்படியா, நாளையிலிருந்து என்னிடம் வேலைக்கு வாங்களேன்.’ சிவஞானம் இதை எதிர் பார்க்கவில்லை. அவர் ஒரு கடும் உழைப்பாளி; நேர்மையான வர்; பி.சி.சியில் தேங்காய் எண்ணெய் விற்பனைப்பிரிவில் மிகுந்த திறமையோடு பணியாற்றியவர். நாற்பத்தி நான்கு வருட ஆற்றல் அவர் பின்னே ஒளிந்திருந்தது. அவற்றை தெய்வநாயகம் அப்படியே பயன்படுத்திக் கொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தெய்வநாயகத்தின் தனிச்செயலராகப் பணியாற்றிவரும் மைதிலி, 'தினமும் நாங்கள் அவரிடம் நிறைய செய்திகளைப் படிக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் கற்றுக் கொள்ளும் நாட் களாகவே அமைகின்றன. குறிப்பாக ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சிக்கலில்லாமல் கையாளும் அழகு எங்களைக் கவர்ந்துவிடுகின்றது. காலையில் 11.00 மணிக்கு அலுவலகத் திற்கு வந்தால் மாலை 4 மணி வரை இங்கு இருப்பார். இந்த ஐந்து மணிநேரம் அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுப்பதற் குள் தடுமாறிப் போய்விடுவோம்!
முதலாளியின் சுறுசுறுப்புக்கேற்ப ஈடுகொடுக்கும் இவர் இதற்கு முன் எந்த நிறுவனத்திலும் பணியாற்றியதில்லை. தன்னுடைய முதல்பணியே இலங்கையின் மிகப்பெரிய வணி கரின் செயலாளர் என்பதில் அவர் பெருமிதம் கொள்வதில் வியப்பில்லை அல்லவா?

Page 145
272 இதோ ஒரு வெளிச்சம்
தன் முதலாளியை எண்ணும்போதெல்லாம் அவருடைய உயரிய குணங்கள் அவர் மனக்கண்முன் வந்து நிற்கின்றன.
'கோபமே அவருக்கு வருவதில்லை; அவருக்கு நியாயமாகக் கோபம் வரவேண்டிய அளவுக்கு நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் கூட அவருடைய முக பாவனைகள், பேச்சு ஆகியவற்றை வைத்தே எங்கள் தவறை உணர்ந்து நாங்கள்
திருந்திவிடுவோம்.' W
ஒருநாள் தன் செயலாளரின் முகத்தையே உற்று கவனிக் கிறார் தெய்வநாயகம். 'என்னம்மா உடம்புக்கு என்ன?”
கடுமையான வயிற்றுவலியை மறைத்துக் கொண்டு என்ன தான் பணியாற்றினாலும், வாடிய அவர் முகம் அவரைக் காட் டிக் கொடுத்துவிட்டது. தயங்கியபடியே 'உடல்நிலை சரி யில்லை' என்று சொல்லுகிறார்.
அடுத்த நிமிடம் தெய்வநாயகத்தின் காரில் மைதிலி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மைதிலிக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடக்கின்றன. அங்கு அவர் தங்கி யிருந்த சிலமணி நேரங்களில் மூன்றுமுறை தெய்வநாயகம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரிக்கிறார். மைதிலிக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்து வர்களிடம் பேசுகிறார்.
அடுத்தநாள் காலை மைதிலியின் வீட்டுக்கதவு தட்டும் ஒலி கேட்டு, அவருடைய பெற்றோர்கள் கதவைத் திறக்க, உள்ளே பழக்கூடைகளுடன் நுழையும் தெய்வநாயகத்தைப் பார்த்து,
 

தொழிலாளர்கள் - அன்றும், இன்றும் 273
அதிர்ச்சியில் கல்லாய் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். இவ்வளவு பெரிய முதலாளி நம்முடைய வீட்டிற்கு வந்திருக்கிறாரே? அன்போடு பேசி, ஆறுதல் கூறி, உடல்நிலை தேறிய பின் வர லாம்’ என்று சொல்லிவிட்டு அவர் வெளியே செல்லும்போது, மைதிலியின் விழிகள் கண்ணிலே நீந்துகின்றன.
'என் தந்தையின் கணிவையும், பாசத்தையும் இவரிடம் காண்கிறேன்; என் ஆசானாக இருந்து வாழ்க்கைக்குத் தேவை யான, பண்புகளையும், அறிவையும் கற்றுத் தருகிறார். ஒரு மூத்த சகோதரனைப் போல் எனக்குரிய பாதுகாப்புகளை அளிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரிடம் பணியாற்று வது கடவுள் எனக்கு அளித்த கொடை' என்கிறார் மைதிலி.
சிறப்பான மனிதர்களை வேலைக்கு அமர்த்திவிட்டால் மட்டும் ஒரு நிர்வாகம் சிறப்பாக நடந்து விடாது, அவர்களை சிறப்பாக வேலை வாங்கவும், அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளவும் வேண்டும் என்பதையும் நாம் இங்கே அறிந்து கொள்கிறோம்.
‘எல்லாம் வேகமாக மாறிக் கொண்டே வருகின்றது' என் பதை நாமறிவோம்.
கொலம்பஸ் அமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்த செய் தியை ஆறுமாதம் கழித்துத்தான் ஐரோப்பிய நாடுகளால் அறிந்து கொள்ள முடிந்தது.
ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை உலகம் 11 நாட்களுக்குப் பின்னர்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. −
இன்று உலகத்தின் எந்தக் கோடியில் நடைபெறும் செய்தி யையும் வீட்டில் உட்கார்ந்து தொலைக்காட்சிப்பெட்டியில் அதே நொடியில் பார்க்கும் அளவு தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்து விட்டன! எவ்வளவோ மாற்றங்கள்!
‘எங்களுடைய தந்தை மாற்றங்களுக்கு மறுப்புச் சொல்ல வில்லை; மாறாக ஒத்துழைத்தார். எங்கள் வெற்றிக்கு இதுவும்
ஒரு காரணம் என்கிறார் ஈஸ்வரன்.
அப்போதெல்லாம் மாதம் முந்நூறு ரூபாய் சம்பளம் கொடுத்தால் கடையில் கணக்கெழுதுவதற்கு ஆட்கள் தயாராக

Page 146
274 இதோ ஒரு வெளிச்சம்
இருந்தார்கள். ஈஸ்வரனும், மற்ற சகோதரர்களும், படித்து விட்டு நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த உடன் வழக்கமான நடைமுறையில், பல மாறுதல்களை செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக, கணக்கு வைக்கும் முறைகளை மாற்ற விரும்பினர்.
அதற்கென்றே கணக்கியல் படித்தவர்களை, உள்ளகக் கணக்காளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினர்.
'முந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஆட்கள் கிடைத்தபோது மூவாயிரம் ரூபாய் கொடுத்து அதே வேலையைச் செய்ய ஒரு ஆளை வேலைக்கு வைக்க வேண்டுமா?
இந்தக் கேள்வியை யாராக இருந்தாலும் கேட்பார்கள். முதலில் தெய்வநாயகம் கூட தயங்கியதென்னவோ உண்மை தான். ஆனால் பிள்ளைகள் விளக்கிச் சொன்ன பிறகு அவர் ஏற்றுக்கொண்டார். அப்படி நியமனம் செய்தபின் ஏற்பட்ட நல்ல விளைவுகளை ஆராய்ந்தபின், கண்கூடாகப் பார்த்தபின் மகிழ்ச்சியும் அடைந்தார்.
இன்றைக்கு எல்லாத் துறையிலும் வல்லுநர்கள் வந்துவிட் டனர். நூற்றுக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண் களும், மற்ற வயது நிலைகளிலுள்ளோரும் வி.ரி.வி நிறுவனத் தில் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் அதற்கெனப் படித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் இன்று வி.ரி.வியின் அங்கமாகத் திகழ்கின்றனர்.
வி.ரி.வி தொகுப்பு நிறுவனங்களின் அனைத்து அலுவல கத்திலும் கணிப்பொறிகள் வந்துவிட்டன.
அன்று சுப்பையா அத்தான் ஒவ்வொரு கணக்குப் புத்தகத் திலிருந்தும் எடுத்து ஒரு பேரேட்டில் இரவு முழுக்கப் பதிவு செய்த நாட்கள் போய்விட்டன.
ஈஸ்வரன் பிரதர்ஸ் அலுவலகத்தில் அவருடைய உதவி யாளர் ராஜி புதிதாக வேலைக்குச் சேர்ந்தவரிடம் சொல்வது காதில் விழுகிறது. 'நாங்க ஹார்டு டிஸ்க்கில் தான் ஸ்டோர் செய்து வைக்கிறோம். இந்த டிஸ்க்கை அங்கே வைப்பதில்லை; வைரஸ் தொல்லை'
அன்றைக்கு தெய்வநாயகம் வேலைக்கு வைத்த ஆட்கள்

தொழிலாளர்கள் - அன்றும், இன்றும் 275
வேட்டியை மடித்துக் கொண்டு கடையில் வேலை செய்தார்கள், வீட்டிலே ஒரு குடும்ப உறுப்பினர் போல் பழகினார்கள்.
இன்றைக்கு ஈஸ்வரன் ஒருவரை வேலைக்கு வைக்கும் போது சொல்லுகிறார். "திங்கட்கிழமையிலிருந்து நீங்க வேலைக்கு வரலாம். தினம் வரும்போது 'டை கட்டி, பொருத்த மாக ஆடை அணிந்து வரவேண்டும். கொஞ்சம் கூட ‘ஈகோ' பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடாது. மிகவும் நம்பகமாக நடந்துகொண்டால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்.' தன் கீழ் ப்ணயாற்றும் தன் மேலாளர்கள் தன்னை 'சார்' என்று அழைப்பதற்கு பதிலாக 'திரு. ஈஸ்வரன்’ என்று அழைப் பதையே அவர் விரும்புகிறார்.
காலம் எவ்வளவு மாறிவிட்டது? ஆனாலும் நிறுவனத்தின் அடிப்படைக் கலாச்சாரம் மாறவில்லை. பாச உணர்வுகள் குறையவில்லை.
தொழிலாளியைத் தோழனாக நடத்தும் உணர்வு தொய்ந்து போகவில்லை.
இன்றைக்கு முதியவர்களும், இளைய தலைமுறையும் கை கோத்து, இனம், மொழி, மத உணர்வுகளுக்கு அப்பால் ஒற் றுமை உணர்வுடன் செயலாற்றும் அழகை அங்கே காணலாம்.

Page 147
29. ஏழு தரம் மட்டுமோ?
லக்ஷ்மன் பெரெரா, தெய்வநாயகத்தைச் சந்தித்தது 1983ல். அப்போது அவர் "லங்கா மில்க் புட் நிறுவனத்தில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்தார். தன்னுடைய நிறு வனத்தின் பொருட்களைப் பல வியாபாரிகளிடம் அறிமுகப் படுத்தி விளம்பரப்படுத்தி, வியாபாரத்தை அதிகப்படுத்துவது அவர் பணி. அத்துடன் பொருள்கள் விற்பனையான பிறகு நிலுவையை வதுல் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
மிகவும் பிரச்சினையான ஆண்டு 1983ம் ஆண்டு. அந்த ஆண்டில் இனக்கலவரம் வெடித்தது. பல வியாபாரங்கள் பாதிக் கப்பட்டன. லங்கா மில்க் புட் நிறுவனம் நிறைய வியாபாரி களுக்குக் கடன் கொடுத்திருந்தது. கலவரத்திற்குப் பின் நிறைய கடைகள் மூடப்பட்டு விட்டன. மூடுவதற்குமுன் எரிந்துபோன கடைகள் ஏராளம். இந்த நிலையில் வியாபாரிகள் பலர் ஊரை விட்டும், நாட்டையும் விட்டும் ஓடிவிட்டனர். இந்த வியாபாரி களெல்லாம் வங்கி உறுதி பெற்றே கடன் வாங்கியிருந்தார் கள். ஆகவே, "லங்கா மில்க் புட் நிறுவனத்திற்குப் பெரும் பாதிப்பு இல்லை. ஆனாலும் அந்த நிறுவனத்திற்குப் பெரும் சங் கடமான நிலை ஒரே ஒருவரால் மட்டுமே தோன்றியது. அவர் தான் தெய்வநாயகம்!
தெய்வநாயகத்திற்கு அந்த நிறுவனம் தாராளமாகக் கடன் கொடுத்திருந்தது. 1983ல் எண்பது இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களைக் கடனாக அளித்திருந்தது ‘வாக்குத் தவறாதவர் தெய்வநாயகம்' என்ற தழ்நிலையில் அவருடன் வியாபாரம் செய்தவர்கள் லங்கா மில்க் புட் நிறுவனத்தினர்.
அவரிடமிருந்து வங்கி உறுதியும் வாங்கவில்லை; எந்தப் பத்திரத்திலும் கையொப்பம் வாங்கவுமில்லை. கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுள் அவருடைய நிறுவன மும் ஒன்று' என்று கொழும்பே அறியும். கலவரம் நடந்து
 

ஏழு தரம் மட்டுமோ? 277
கொண்டிருந்தபோதே அவருடைய பிள்ளைகள் அவரை வலுக் கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார்கள்.
லக்ஷ்மன் பெரெரா முன் நின்ற கேள்விகள். 'தெய்வ நாயகம் இந்தியாவிலிருந்து திரும்புவாரா? வந்தாலும் வியா பாரத்தைத் தொடங்குவாரா? தொடங்கினாலும் 83 இலட்சம் ரூபாய்களைத் திருப்பித் தருவாரா?
அவரே பல சிறு வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்திருக்கி றாரே, அவர்கள் திருப்பித் தந்தால்தானே இவர் நிறுவனத் திற்குத் திருப்பித் தரமுடியும்?
இவர் கடன் வாங்கியதற்கு எந்த விதமான ஆதாரமுமில் லையே, தர மறுத்துவிட்டால் நாம் என்ன்தான் செய்ய முடி யும்?’
இச்சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து மூன்றே மாதத்தில் மீண்டும் கொழும்பு திரும்பிய தெய்வநாயகம், அவரே நேரடி யாக "லங்கா மில்க் புட் நிறுவனத்திற்கு வந்தார்! ஒரே காசோ லையில் தாம் செலுத்த வேண்டிய தொகையான 83 லட்சம் ரூபாயை செலுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அபய சேகர.
நிச்சயமாக தெய்வநாயகத்திற்கு வரவேண்டிய தொகையில் பெரும்பகுதி வரவில்லை என்பது லக்ஷ்மன் பெரராவுக்குத் தெரியும். தமக்கே நட்டம், தமக்கு வரவேண்டிய வகையிலும் நட்டம். ஆனாலும் தமக்குப் பொருளை நம்பிக் கொடுத்த நிறு வனத்தைக் கொஞ்சமும் ஏமாற்றாத பண்பு அபயசேகரவைக் கவர்ந்தது.
குப்புற விழுந்தாலும் அதே வேகத்தில் எழுந்த அழகை லக்ஷ்மன் பெரெரா மிகவும் இரசித்தார். தம்மை நம்பி 83 லட்சம் ரூபாய் சரக்கைக் கடனாகக் கொடுத்தவர்களின் மனக் கலக்கத்தை ஒரு நொடியில் போக்கிய நாணயத்தையும், நேர் மையையும் கண்டு லக்ஷ்மன் பெரெரா மனம் நெகிழ்ந்து போனார். பின்னர் அவர் ஐந்து ஆண்டுகள் கழித்து தெய்வ நாயகத்திடம் வேலைக்கு வந்து சேர்ந்தது இன்னொரு கதை!
யாரையும் ஏமாற்றக் கூடாது!’ என்பது தெய்வநாயகத்
தின் திட்டவட்டமான கொள்கை.
ஆனால் தெய்வநாயகத்தின் தனிப்பட்ட அனுபவங்கள்

Page 148
278 இதோ ஒரு வெளிச்சம்
தலைகீழாக இருந்தன அவரை ஏமாற்றியவர்கள் பட்டியலை, ஒரு புத்தகமாகவே போடலாம்.
'யாரையும் தண்டிக்க என் தந்தை விரும்புவதில்லை" - இது ஈஸ்வரன் தந்தையைப் பற்றிக் கூறும் சொற்கள். மளிகை வியாபாரத்தில் பல்வேறு பொருட்களைக் கையாளும்போது, தவறாக நடந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருந்தன.
'திடீரென்று பத்துப்பெட்டி நிறைய சன்லைட் சோப்பு கள் காணாமல் போயிருக்கும்.'
'கணக்குப் பார்க்கும் போது ரூ.1000/, ரூ2000/ காணா மல் போயிருக்கும்.'
‘காணாமற் போன காசோலைகள், வதுலித்துக் கொண்டு வரவேண்டிய தொகையை முழுமையாகக் கொண்டு வந்து சேர்க் காமை."
'வதுலித்த தொகையோடு காணாமற் போனவர்கள்' இப்படி ஏமாற்றியவர் சிலபேர் வகையாகச் சிக்கிக் கொள்வார் கள். தக்க சாட்சியத்தோடும் சிக்கிக் கொள்வார்கள்.
எவ்வளவு ஆதாரங்களோடு திறமையாக வாதாடிக் குற் றங்கள்ை நிரூபித்தாலும் நீதிபதி தெய்வநாயகத்தின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தானிருக்கும். 'போனால் போகட்டும்; மன்னித்து விட்டுவிடுங்கள்.'
‘என்னப்பா இது, இவ்வளவு ஏமாற்று வேலை செய்து விட்டானே, இந்த ஆளை விடுவதா?”
"ஆமாம் விட்டுவிடுங்கள்!"
'இல்லைங்கப்பா, இந்த ஆளைப் பொலிசில் ஒப்படைத்து விடலாம்.'
'கண்டிப்பாக பொலீசுக்குப் போகக்கூடாது'
தெய்வநாயகத்தின் பேச்சை மீறி யாருக்கும் பழக்கமில்லை. விட்டுவிடுவார்கள்.
இதற்கு அவருடைய விளக்கங்கள் விந்தையாக இருக்கும்.
'இல்லாதவன், பாவம் எடுத்துக் கொண்டான்' நாம் எச் சரிக்கையாக இருந்திருக்கவேண்டும்.'

ஏழு தரம் மட்டுமோ? 279
'ஆயிரம் ரூப்ாய் எடுத்துக் கொண்டான் அப்படிண்ணு தானே சொல்றீங்க! நமக்கு அதனாலே என்ன பெரிய நட்டம். மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிங்க, அதிலே ஒரு ஆயி ரம் போச்சு, அப்பவும் நாற்பத்தி ஒம்பதாயிரம் லாபம் இருக் கில்ல. அவன்தான் சாப்பிட்டு விட்டுப் போகிறான். போகட்
டுமே!’
“பொலீசுக்குப் போனால் வீணாக அவனை அடித்துத் தொல்லை தருவார்கள், சிறையில் தள்ளுவார்கள்; கொடுமை யான வார்த்தைகளால் ஏசுவார்கள். இவ்வளவு நாள் நமக்காக உழைத்த அந்த ஆள், தான் செய்த ஒரு தவறுக்காக, நம்மால் ஏன் துன்பம் அடைய வேண்டும்?"
பொதுவாக ஒரு ஆளின் மீது குற்றம்சாட்ட பல காரணம் தேடுவோம். ஆனால் குற்றவாளியைத் தப்ப வைக்க அவர் காரணம் தேடுவார். நமக்கு மற்றவர்கள் துன்பம் தரலாம்; ஆனால் தம்மால் யாருக்கும் சிறுதுன்பம் கூட நேரக் கூடாது என்பதில் கருத்தாக இருந்தார். 1.
"அப்படியானால் தப்பு செய்தவர்களுக்கு தண்டனையே இல்லையா?”
'தண்டனை தரவேண்டுமென்று ஆசைப் பட்டால் வேலையை விட்டு நீக்கிவிடு'
எந்தத் தவறு செய்தவர்களுக்கும் அளிக்கப்பட்ட பெரிய தண்டனை வேலையை விட்டு நீக்குவதே!
அப்படி வேலையை விட்டு யாராவது போகும் போதும் ஒரு கணிசமான தொகையைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பது அவர் வழக்கம்.
குறையோடு ஒரு மனிதன் நம்மை விட்டுப் போகிறான். அப்போதுகூட ஏதாவது ஒரு நிறைவைத் தந்து அனுப்பலாமே!
பெரும்பாலும் ஏமாற்றிவிட்டு வேலையைவிட்டு விலகிய வர்கள், சிலநாட்கள் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு மறுபடி யும் ஒருநாள் அவர் முன்னாலேயே வந்து நிற்பார்கள். 'ஐயா, மறுபடியும் எனக்கு வேலை போட்டுக்கொடுங்கள்!' என்று மன்றாடும் போது நிச்சயம் மீண்டும் வேலை கொடுத்து விடு வார். அந்த மனிதன் செய்த தவறை அவர் மன்னிப்பதில்லை;

Page 149
280 இதோ ஒரு வெளிச்சம்
மறந்தே விடுவார். நினைத்துக் கொண்டிருந்தாலல்லவா, மன்னிப்பதற்கு!
ஒறுத்தலின் பொறுத்தல் நன்று; பொறுத்தலின் அதனை மறத்தல் நன்று. இப்படி வேலைக்கு வந்து சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்!
இயல்பாகவே நம் மனதில் தோன்றுகின்ற கேள்வி, 'இப் படித் தவறு செய்பவர்களுக்கு தண்டனையே கிடையாதா? அவர் களை வேலையில் சேர்த்துக் கொள்வது சரிதானா? சேர்ந்த பிறகு மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச் சயம்?’
இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் முன்னால் வேறு ஒரு தொழிலதிபரின் அனுபவத்தை ஆராயலாம். கிம்-வூச்சூங் என்கின்ற கொரிய நாட்டுத் தொழிலதிபர் தம் வாழ்க்கையை கிட்டத்தட்ட தெய்வநாயகத்தைப் போலவேதான் தொடங் கினார்.
தந்தையை யாரோ கடத்திச்சென்றுவிட, அண்ணன் இராணுவத்தில் சேர்ந்து போராடச் சென்றுவிட, தாயையும், தன்னுடைய இரண்டு தம்பிகளையும் செய்தித்தாள் விற்றுத் தான் காப்பாற்ற வேண்டிய நிலையில், வறுமைச் சூழலில் வாழ்க்கையைத் தொடங்கிய கிம்-வூச்தங் இன்று வருடம் 25 பில்லியன் டாலர் வியாபாரம் செய்யும் ‘தே வூ நிறுவனத் தின் அதிபர். அவருடைய தொழிலாளர்களின் எண்ணிக்கை 90,000.
ஒருமுறை அவருடைய தொழிலாளர் ஒருவர், நிறுவனத் தின் பணத்தில் பத்தாயிரம் டாலரை காசினோவில் ததாடித், தொலைத்து விடுகிறார். வழக்கமான துழநிலையில் அந்த ஆளுக்கு வேலை போயிருக்க வேண்டும். ஆனால் கிம்-வூ ச்சூங், தன்னுடைய சொந்தப் பத்தாயிரம் டாலரை அவருக்காக செலுத்திவிட்டு மீண்டும் தன் நிறுவனத்திலேயே வேலைக்கு வைத்துக் கொள்கிறார். அதற்கு அவர்தரும் விளக்கம் 'அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அந்த மனிதனின் உணர்வை நான் பாராட்டுகிறேன். அப்படிப்பட்ட ஆள் எனக் குத் தேவை!

3 J 4 5 uni u LGS 3 uvíT ? 281
அடுத்து, எப்போதோ ஒரு சபலத்தில் செய்யும் தவறுக் காக நான் ஒரு மனிதனையே இழக்க விரும்பவில்லை. அவனுக் கும் ஒரு வாய்ப்புத் தந்து பார்ப்பேன். ஆனால் அதே நேரத் தில் அந்த மனிதன் மீண்டும் ஒருமுறை இப்படிப்பட்ட தவறு களைச் செய்தால், வேலையை விட்டே விலக்கிவிடுவேன்.'
தெய்வநாயகத்தின் வாதமெல்லாம், 'தவறு செய்யாதவர் கள் யார்?'
'தவறு செய்தவர்களுக்கு ஏன் திருந்துவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரக்கூடாது?’
வல்லநாடு ஒர் ஆரவாரமற்ற அமைதியான கிராமம். பன்னம்பாறை இன்றும் அமைதியான கிராமம். பொதுவாக கிராமங்களில் ஒய்வு நேரம் அதிகம். பட்டணங்களைப் போல் ஒரு நிமிடத்திற்கு ஒரு வேலை என்று காலில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டு ஓடவேண்டிய நிலை பெரும்பாலான மக்களுக்கு இருக்காது.
தெய்வநாயகத்தின் உறவினர் ஒருவர் இன்றைக்கும் வல்ல நாட்டிலே இருக்கிறார். அவருடைய இனிமையான பொழுது போக்கு, ‘எந்த அளவுக்கு தெய்வநாயகத்தைக் குறையாகவும், ஏளனமாகவும் பேசமுடியுமோ அந்த அளவுக்குக் கேவலமாகப் பேசுவது என்பதே!
வருடம் ஒருமுறை தெய்வநாயகம் வல்லநாடு வரும்போ தெல்லாம் மற்றவர்கள் அவரிடம் 'குறை கூறிப் பேசிவரும் உறவினரைப் பற்றிய தகவலைக் கொடுத்து விடுவார்கள். வந்த செய்தி அறிந்த உடனே அவரும் தெய்வநாயகத்தைப் பார்ப் பதற்காக வந்து நிற்பார். 'தம்மை இந்த மனிதர் கேவலமாகப் பேசி வருகிறார்' என்பது கூடத் தமக்குத் தெரியாதது போல் மலர்ந்த முகத்துடன் 'முருகா! வாங்க! வாங்க!' என்று வர வேற்று, அவருடன் அன்பாகப் பேசி, சிற்றுண்டி கொடுத்து உபசரிப்பார்.
அவர் அங்கே தங்கியிருக்கும் நாட்களில் பலபேர் அவரை வந்து பார்ப்பார்கள். சிலபேர் கொழும்பில் அவரிடம் வேலை செய்தவர்களாகவும், ஏமாற்றிப் பணம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் அவரிடம் அவர்கள் போகலாம்;

Page 150
282 இதோ ஒரு வெளிச்சம்
மலர்ந்த முகத்துடன் வரவேற்பு கிடைக்கும். நிச்சயமாக நூறோ, இருநூறோ, ஐநூறோ, ஆயிரமோ கிடைக்கும்.
பைபிளில் மாத்யு சுவிசேஷத்தில் 19வது அதிகாரத்தில் ஒரு செய்தி வரும்.
"அப்போது பேதுரு அவரிடத்தில் வந்து ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந் தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழு தரம் மட் டுமோ என்று கேட்டான்.'
அதற்கு இயேசு: "ஏழுதரமாத்திரம் அல்ல; ஏழெழுபது தர மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.'
வாரம் இரண்டுமுறை தேவாலயத்துக்குச் செல்லும் தெய்வ நாயகம், ஆரவாரத்திற்காகவும், அடிப்படை லாபத்துக்காகவும் செல்லவில்லை; இயேசுவின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வும் செல்கிறார்’ என்பதை நம்மால் உணரமுடியும்.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!'
என்று பாடிய பாரதியின் கோட்பாடுகளைப் பாரதியைப் படித்து அவர் அறியவில்லை; வாழ்ந்தே நமக்குச் சொல்லித் தருகிறார்.
'என் தந்தைக்கு ஒருபோதும் கோபம் வந்ததில்லை; சினத்தோடு நாங்கள் அவரைக் கண்டதில்லை' என்று அவரு டைய இளைய மகன் முருகேஷ் குறிப்பிடுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. கொழும்பு புறக்கோட்டைப் பகுதிக்கு ஒரு புதிய பொலிஸ் அதிகாரி பொறுப்பேற்கிறார். எல்லோரையும் மிரட்டி, அதிகாரம் செய்து ஆட்டி வைப்பதில் பெருமை கண்டு மகிழும் குணம் கொண்ட அவருக்கு ஒரு தகவல் வருகிறது. வி.ரி.வி நிறுவனத் தில் விலைப்பட்டியல் இல்லை'.
உடனே அந்த அதிகாரி ஆர்ப்பாட்டம் செய்கிறார். கடைக்குத் தகவல் வருகிறது. பொறுப்பாளர்கள் பொலிஸ் நிலையம் செல்லுகிறார்கள். அதெல்லாம் முடியாது, உங்கள் முதலாளியை வரச் சொல்லுங்கள்!' என்று சீறுகிறார் பொறுப் பதிகாரி.

ஏழு தரம் மட்டுமோ? 283
அதுவரை பொலீஸ் நிலையத்திற்குள் தெய்வநாயகம் சென்றதில்லை. முதன்முறையாக உள்ளே நுழைந்தார்.
வியாபார வட்டாரத்திலேயே மிகப்பெரிய மனிதரை காவல் நிலையத்திற்குள் வரவழைத்து விட்ட பெருமை பொறுப் பதிகாரியின் மனத்தில் நிரம்பி, முகம் அதைப் பளிச்சென்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆணவமும், அதிகாரத் தோரணையும் நிரம்பிய கேள்வி கள் பொறுப்பதிகாரியிடமிருந்து கிளம்புகின்றன. மலர்ந்த முகத் துடன், அடக்கமும், பணிவும் நிரம்பித் ததும்பும் பதில்களை தெய்வநாயகம் அளிக்கிறார். அவர்களுடைய உரையாடல் தொடர்ந்து நடக்கும்போது, பொறுப்பதிகாரிக்குப் பளிச் செனப் பல உண்மைகள் புலப்பட ஆரம்பித்தன.
தன்முன்னால் நிற்கின்ற மனிதர் வியாபாரத்தில் மட்டும் பெரிய மனிதரல்ல; பண்பாட்டிலும், குணநலன்களிலும் கூடப் பெரிய மனிதர் என்பது புரிய ஆரம்பித்தது.
'நிறைகுடம் தளும்பாது!’ என்ற தமிழ்ப் பழமொழியின் பொருள் விளங்க ஆரம்பித்தது.
பகட்டும், படாடோபமும், எடுத்தெறிந்து பேசும் பேச்சுக் களும், ஒரு மனிதனை நீண்டதுாரம் எடுத்துச் செல்லாது; ஆனால் அடக்கமும், பணிவும், அன்புமே ஒரு மனிதனை இமயத்தின் உச்சியில் கொண்டுபோய் வைக்கும் என்பதைக் காவலதிகாரி புரிந்து கொண்டார்.

Page 151
284 இதோ ஒரு வெளிச்சம்
பெரிய மனிதரைக் காவல் நிலையத்தில் மிரட்டி விட்டால் பெரிய அதிகாரியாகி விடலாம் என்று எண்ணிய அந்த அதி காரி கொஞ்ச நேரத்தில் தான் எவ்வளவு சிறியமனிதன் என் பதையும் வந்தவர் எவ்வளவு மிகப் பெரிய மனிதர் என்பதையும் புரிந்து கொண்டார்.
அதிகாரி தெய்வநாயகத்தைக் காவல் நிலையத்திலிருந்து மிக்க மதிப்போடு வெளியே அனுப்பி வைத்தார். அதுமட்டு மன்று, அன்றிலிருந்து அவருடைய அதிகாரமான அணுகுமுறை யிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. தெய்வநாயகத்தின் அன்பிற்குரிய நண்பராகவும் மாறிவிட்டார்.
“கொடை மடம்' என்று தமிழ் இலக்கியத்தில் ஒரு சொல் உண்டு. அறிவுபூர்வமாக அல்லாமல் உணர்வு பூர்வமாகவும், ஏமாளித்தனமாகவும் செய்யும் கொடையையே கொடை மடம் என்று சொல்லுவார்கள்.
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும், மயிலுக்குப் போர் வையளித்த பேகனும் இந்தக் ‘கொடை மடம் கொண்டவர் பட்டியலில் இடம் பெறும் வள்ளல்கள்.
பலநேரங்களில் தெய்வநாயகமும் அந்தப் பட்டியலுக்கு உரியவராக நடப்பார்.
'ஐயா, கோயில் கட்டுகிறோம்; தங்கள் ஆதரவு தேவை!" 'ஐயா, என் மகளுக்குத் திருமணம்; தாங்கள்தான் உதவ வேண்டும்!"
'கோயிலிலே அம்மனுக்குச் சாத்தப் பட்டுப்புடவை ஒன்று தாருங்கள்!'
‘என் மகனுக்குப் பள்ளியில் படிப்புக் கட்டணம் தேவை.' 'ஐயா, நான் சொந்தமா கடை வைக்கிறேன். நீங்க ஏதா வது உதவி பண்ணுங்கய்யா!'
எத்தனையோ கோரிக்கைகள்!
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்து, சிக்கனமாக
இருந்து, வரவு செலவு கணக்கெழுதி பொருள் திரட்டும் தெய்வ நாயகத்தின் முன் இப்படி அன்றாடம் பல கோரிக்கைகள்.

ஏழு தரம் மட்டுமோ? 285
இதில் பல கோரிக்கைகள் முழுக்க முழுக்கப் பொய்யான வைகளாக இருக்கும். ‘கேட்டால் இவர் கொடுக்கிறார்’ என்ப தற்காகவே பொய்யாகக் கேட்பவர்கள் பலர். 'பொய்யாகக் கேட்கிறார்கள் என்பது தெரிந்தும்கூட அவர்களுக்கும் ஏதாவது கொடுத்த வண்ணமிருப்பார் தெய்வநாயகம்.
கிட்டத்தட்ட அவருடைய வலதுகரமாக விளங்கிய ஒரு மனேஜர் இருந்தார். பலகாலம் தெய்வநாயகத்திடம் பணி யாற்றிய அவர் ஒருநாள் ஒய்வுபெற்றுத் தூத்துக்குடிக்குத் திரும்பினார்.
‘பிடிப்புப் பணம்', 'சேமிப்புத்தொகை' இப்படி நிறுவனம் கொடுத்த தொகைக்கும் மேலாக ஒரு பெரிய தொகையை அன் பளிப்பாகக் கொடுத்து அவருக்குப் பிரியாவிடை கொடுத்துத் தாயகம் அனுப்பிவைத்தார் தெய்வநாயகம்.
அந்தத் தொகையை வைத்துக்கொண்டு அவர் ஒரு லாரி வாங்கினார்; வேறு தொழில்களில் முதலீடு செய்தார். அதோடு ஊதாரித்தனமாக, தவறான வழிகளிலும் செலவு செய்ய ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளில் ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிட்டார்.
உடன்ே இலங்கைக்குக் கடிதம் எழுதினார் "பணம் அனுப்புங்கள்!'
'உங்களுக்கு ஏற்கனவே நிறையப் பணம் கொடுத்திருக்கி றோம்; இனி தருவதற்கில்லை!' என்ற பதில் கிடைத்தது. தவறான வழியில் அவர் போய்க் கொண்டிருக்கிறார். எந்தப் பணமும் இனி நல்ல வழியில் செலவாகாது' என்பதை உணர்ந்து தெய்வநாயகம் பணம் அனுப்பவில்லை.
கடிதத்தைப் படித்த அவர் பெரும் சினம் கொண்டார். கொழும்பு வருமான வரித்துறை அலுவலர்களுக்கு ஒரு முறை யீட்டுக் கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டார்.
முறையீடு போய் சேர்ந்ததும் அதிகாரிகள் வி.ரி.வி. நிறு வனத்தை முற்றுகையிட்டனர். கணக்குப் புத்தகங்கள் சோதிக் கப்பட்டன! பெரும் குழப்பங்கள் தேவையற்ற கேள்விகள்; இரண்டு, மூன்று நாட்களாக நிர்வாகம் உறைந்து போய்விட் டது!

Page 152
286 இதோ ஒரு வெளிச்சம்
பின்னர் அதிகாரிகள் வந்த முறையீடு போலியானது; கெட்ட எண்ணத்தோடு மட்டுமே எழுதப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
சில நாட்கள் கழித்து, அந்தக் கடிதத்தை எழுதியவர் யார் என்று தெரிய வந்தபோது, அனைவரும் அதிர்ந்து போனார் கள். ஆம்! பல ஆண்டுகளாகப் பெரிய பொறுப்பு வகித்துப் பெருந் தொகையைப் பெற்றுச் சென்ற 'அவரேதான் இதை எழுதினார் என்று கண்கூடாகப் பார்த்த போது கூட நம்புவது கடினமாக இருந்தது!
சிலமாதங்கள் கழித்து தூத்துக்குடியின் ஒரு வீதி ஒரத்தில் அவரைத் தெய்வநாயகம் பார்த்தார். இரக்கத்தைத் தூண்டும் வகையில், பரிதாபமாக, நோயாளியாகத் தன்னுடைய மனேஜர் நின்றிருப்பதைப் பார்த்தவுடன் தெய்வநாயகம் காரை நிறுத்தி இறங்கி வந்து, அவரை ஏற்றிக் கொண்டு தன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். 'வருமான வரித்துறைக்கு அவர்தான் எழுதிப்போட்டார்’ என்பது தமக்குத் தெரிந்தது போலக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளவில்லை. அவரோ, தெய்வநாய கத்தின் காலைக் கட்டிக்கொண்டு கதறியழுதார். ஆறுதல் கூறிய தெய்வநாயகம் மீண்டும் அவருக்குப் பெரும் உதவியைச்செய்த நிகழ்ச்சியை இன்றைக்கும் அவருடைய பிள்ளைகளும், உறவினர் களும் நினைவு கூருகின்றனர்.
கொன்றன்ன இன்னா செயினும், அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் என்ற குறளை இன்றுவரையில் கடைப்பிடிக்கும் தெய்வநாயகம் வள்ளுவரை மட்டும் பின்பற்றவில்லை. அவர் மிகவும் போற்றும் மாபெரும் தலைவர் அண்ணல் காந்தியடிகளையும்தான்.
காந்தியடிகளை ஒருமுறை ஒரு வெள்ளையன் தன்னுடைய பூட்ஸ் காலால் முகத்தில் எட்டி உதைக்க, ஒருபல் கீழே விழுந்து வாயில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அவரோ, கீழே குனிந்து அவனுடைய காலுக்கு முத்தம் கொடுத்து, 'ஒருபல் கீழே விழு மளவிற்கு உதைத்திருந்தால் உங்கள் கால் எவ்வளவு வலித் திருக்கும்?' என்று கூறுகிறார். அண்ணல் காந்தியடிகளைப் பெரிதும் போற்றிய தெய்வநாயகத்திடம் இத்தகைய பண்புகளை நாம் பார்ப்பதில் வியப்பில்லையல்லவா!

ஏழு தரம் மட்டுமோ? 287
இதைவிடப் பெரிய சிக்கலைக் கணக்காளராக இருந்த ஒருவர் நிறுவனத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். அவரும் வருமான வரித்துறைக்கு ஒரு கடிதம் எழுதிப்போட நிறுவனம் சில நாட்கள் அல்லல்பட வேண்டிய தழ்நிலை ஏற் பட்டுவிட்டது. பெருத்த மன உளைச்சல்; வழக்கமாக நடைபெற வேண்டிய வேலைகள் அப்படியே தேங்கிப் போய் விடுகின்றன. இந்தக் குழப்பங்களால், தடைப்பட்ட பலவேலைகளால் நிறு வனத்துக்குப் ப்ல இலட்ச ரூபாய்கள் இழப்பு ஏற்பட, அவரை நிறுவனத்தை விட்டு விலக்குகிறார்கள்.
பல வருடங்களுக்குப்பின் ஒருநாள் அவருடைய மகன் தெய்வநாயகத்தின் பிள்ளைகளில் ஒருவர் முன்னால் வந்து நிற்கிறார். 'எனக்கு ஒரு பியூன் வேலையாவது போட்டுக் கொடுங்கள்!
இயல்பாக அனைவருக்கும் வரும் எரிச்சல் அவருக்கும் வருகிறது. இருப்பினும் தந்தைக்கு தொலைபேசியில் செய்தி போகிறது. 'முதலில் கேட்கின்ற வேலையைக் கொடுங்கள்’. சில நாட்களில் அவருக்கு மற்றொரு கட்டளை வருகிறது. “கொஞ்சம் பெரிய வேலையில் அமர்த்து.'
நிறுவனத்தில் பணத்தைக் கையாடிய ஒருவர், நிறுவனத்தை விட்டு விலகிப் புதியதாக ஒரு கடையைத் துவக்குகிறார். துவக்க விழாவிற்குச் சென்று தொடங்கிவைத்தவர் வேறு யாருமல்ல ‘தெய்வநாயகமே!’
'இது யாருக்குமே பிடிக்கவில்லை! என்னப்பா இது? நம்முடைய பணத்தையே ஏமாற்றி ஒருத்தர் ஒரு தொழிலைத் தொடங்கினால், அதை நீங்கள்தான் தொடங்கி வைக்க வேண் டுமா?’’
தெய்வநாயகத்தின் பதில் தெளிவாக வருகிறது. 'இந்த உலகில் நாம் மட்டும்தான் வாழவேண்டுமா? அந்த ஆளும் மனிதன்தானே? அவனுக்கும் வாழ வேண்டும்; சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காதா, இருக்கக் கூடாதா? பணத்தை எடுத்துக் கொண்டால் என்ன? அவனும் நன்றாக இருக்கட்டுமே!’
தெய்வநாயகத்தை நன்றாக அறிந்த பலரும் அவரைப் பாராட்டுகின்ற பல குணங்களுள் ஒன்று அவருடைய மன்னிக் கும் குணமே.

Page 153
388 OA இதோ ஒரு வெளிச்சம்
'தவறுவது மனித இயற்கை
மன்னிப்பது தெய்வீகத்தன்மை' என்று அலெக்ஸாண்டர் போப் என்ற ஆங்கில எழுத்தாளர் கூறியிருப்பதை இங்கே நினைவுகூரலாம்.
ஆனால் அவருடைய பண்போ ‘மன்னிப்பதோடு மட்டு மல்லாமல், தவறு செய்தவனுக்கும் உதவ முடியுமா என்று ஆராய்ந்து செயல்படும் வகையில் அமைந்திருப்பதைக் காணும் போது நெஞ்சை நெருடும் ஒரு குறள்.
'இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண
yo 9
நன்னயம் செய்து விடல்
 

ஏழு தரம் மட்டுமோ? 89

Page 154
30. 'மானுடம் வென்றதம்மா!'
ஒரு தொழில் நன்றாக, வெற்றிகரமாக நடைபெறும் போது மற்றவர்கள் பரவலாக அதைப் பற்றிச் சொல்லக் கூடிய கருத்துக்கள் என்ன தெரியுமா?
"கொடுத்து வைத்த மகராசன்! அவருக்கு நல்லநேரம்' 'மிகவும் அதிர்ஷ்டசாலி" 'குருட்டு அதிர்ஷ்டம்’
'கடவுளின் கருணை!’ 'கடவுளின் ஒரவஞ்சனை!"
'ஏதோ தில்லுமுல்லு, அதனால் ஒஹோ என்று வந்து விட்டார்கள்!’
இவையெல்லாம் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாத வர்களும், முயலாதவர்களும் வழக்கமாக முணுமுணுத்துக் கொள்ளும் சொற்கள்! -
தெய்வநாயகத்தைப் பொறுத்தவரையில் அவருக்கு இறை வனுடைய அருள் முழுக்க முழுக்க உள்ளது என்ப்தில் ஐய மில்லை. நேரத்தைப் பொறுத்த வரையில் அவருக்கு நல்ல நேரம் - கெட்ட நேரம் எல்லாமே கலந்துதான் அவர் வாழ்க் கையைப் பாதித்திருக்கின்றன.
அவர் கையிலே முத்தைப் பார்ப்பவர்கள், அதை எப்படி யெல்லாம் ஆழ்கடலிலே, மூச்சடக்கி, மூழ்கிச் சுறாக்களிடம் தப்பி எடுத்திருப்பார் என்பதை ஒரு கணம் மறந்து விடுகிறார் கள்.
‘எல்லா சாதனைகளின் பின்னாலும் எவ்வளவு வேதனை கள்; எத்தனை சோதனைகள் அடங்கியிருக்கின்றன?’ என்ற உண்மைகள் ஒரங்கட்டப்படுகின்றன.
 

மானுடம் வென்றதம்மா!' 9.
எந்த ஒரு தொழிலிலும் வெற்றி என்பது நமக்குக் கிடைக் கும் வாடிக்கையாளரைப் பொறுத்தே அமைகின்றது. வி.ரி.வி யின் ஒரு கோட்பாடு 'வாடிக்கையாளர்கள் எங்கள் லாபம்; மற்றவையனைத்தும் செலவுகள்.’ எந்த ஒரு பொருளையும் விற்பதற்கு ஒரு வழி உள்ளது. "வாங்குபவர்களுக்கு பொருளை யாவது பிடிக்க வேண்டும் அல்லது விற்பவரையாவது பிடிக்க வேண்டும் தெய்வநாயகத்தைப் பொறுத்தவரையில் அவருடைய பொருள்களை வாங்க அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவை தரமான பொருள்கள் என்பது மட்டுமல்ல, மிக நியாய மான விலையில், உரிய நேரத்தில் உரிய முறையில் கிடைக்கும். அத்துடன் அனைவருக்கும் அவரை பிடிக்கும். ஆகவே பொருட் களைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்.
கொழும்பில் பொதுவாகச் சிங்கள வியாபாரிகளிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒருவரை நம்பிவிட்டால் முழுவதுமாக நம்பி விடுவார்கள். உங்களிடம் பொருட்களை வாங்க ஆரம்பித்தால் உங்களிடம் மட்டுமே வாங்குவார்கள். குதிரைக்குப் பார்வை தடுப்புப் போட்டது போல, அவர்கள் பார்வை வேறு பக்கம் திரும்பாது.
தெய்வநாயகத்திடம் சரக்கு எடுக்க வரும் சில்லறை வியா பாரிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அவரிடம் சரக்கு எடுப்பவர்கள். தேவைப் பட்டியலைக் கொடுப்பார்கள். சரக்கு களை எடுத்து வைத்துவிட்டு, விலையை எழுதி மொத்தம் இவ் வளவு தர வேண்டும் என்று சொன்னால் கூட்டலைக் கூடச் சரிபார்க்காமல் பணத்தைக் கொடுத்து விட்டுப் போகும் மனி தர்கள் அவர்கள். இதே அரிசி பக்கத்துக் கடையில் என்ன விலை?’ என்று கேட்கமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை அத்தகையது
அதே நேரத்தில் அந்த நம்பிக்கை சற்றும் வீண் போகாத வகையில் தெய்வநாயகமும் நடந்து கொள்வார். 'அவர்கள் நம்புகிறார்கள், அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏமாற்றும் எண்ணம் வரக்கூடாது' என்று தம் தொழிலாளி களிடம் கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். அவருடைய வளர்ச் சிக்கு அந்த நேர்மை ஒரு முக்கிய காரணம்.
கொழும்பில் 1948ம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாளில் பிறந்த பிரமநாயகம் தெய்வநாயகத்தின் மூன்றாவது

Page 155
292 இதோ ஒரு வெளிச்சம்
மகன். பெரி என்றும் கதிரேசு என்றும் அன்பாக அழைக்கப் படும் அவருடைய மனைவி தெய்வநாயகி. அவர்களுடைய அன்புக் குழந்தைகள் ஜானு, கலா, ரேகா.
தந்தையோடே தொடர்ந்து உடனிருந்து கிட்டத்தட்ட பத் தாண்டுகள் பணியாற்றியவர் கதிரேசு. தெய்வநாயகத்துடன் மொத்த வியாபாரத்தில் கடையிலேயே இருந்ததால் தந்தையிட மிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்.
கதிரேசு ஒரு விளையாட்டு வீரர் பள்ளியிலும், கல்லூரி யிலும் பூப்பந்து விளையாட்டிலும், ரக்பியிலும் ஆற்றலை வெளிப்படுத்தியவர். நல்ல உயரம், கட்டான உடல் கொண்ட அவரிடம் ரக்பி விளையாட்டின்போது, பந்து கையில் கிடைத்து விட்டால், அவரைத் தடுப்பது மிகக் கடுமையான செயல், நிச்சயம் அந்த பந்து கோலுக்குத்தான் செல்லும். அவர் விளையாடிய நேர்த்தியை பத்திரிகைகள் அழகாக எழு தின. குடும்பமே அவரைப் பற்றிப் பெருமைப்பட்டது. வீடு நிறைய பரிசுக் கோப்பைகளும், கேடயங்களுமாகவே நிரப்பி வைத்திருக்கும் அவர், இன்றைக்கு விளையாட நேரமில்லாவிட் டாலும் விளையாட்டில் ஆர்வத்தை அப்படியே வைத்திருக் கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியினர் இலங்கை வரும்போது அவர்களுக்கு விருந்தளித்துப் பேசி மகிழும் வழக்கம் அவருக்கு உண்டு.
தந்தையிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் பல.
 

'மானுடம் வென்றதம்மா!' 29 .
ஒரு பொருளை விற்க வேண்டுமானால், பொருளையாவது பிடிக்க வேண்டும் அல்லது விற்பவரையாவது பிடிக்க வேண்டும் என்று பார்த்தோம்.
வி.ரி.வி.யின் பொருள்களை ஏன் வாடிக்கையாளர்கள் விரும்பினார்கள் என்று பார்த்தோம். பொருட்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் அனைவருமே தெய்வநாயகத்தை விரும்பினார்கள். அவரிடம் இருந்த அந்த ஈர்ப்புச் சக்திக்கு என்ன காரணம்?
கதிரேசு தன் தந்தையிடம் கண்ட முதல் பண்பு "வாடிக்கை யாளரைத் தெய்வநாயகம் எப்போதும் தன் குடும்ப உறுப்பின ராகவே எண்ணினார்; நடத்தினார்' என்பதே.
தம்மிடம் சரக்கு எடுக்கக் கடைக்கு வரும் எந்த வியாபாரி யைக் காணும்போதெல்லாம் அவருடைய நலன், குடும்ப உறுப் பினர்களுடைய நலன் எல்லாவற்றையும் அன்போடு விசாரித்து. விட்டு தேநீரோ, குளிர்பானமோ கொடுத்து விட்டுத்தான் வியாபாரத்தைப் பற்றிப் பேசுவது அவர் வழக்கம்.
பொதுவாக ஒரு வியாபாரி தன் வாடிக்கையாளரைப் பார்க்கும் போது, அவரை ஒரு பணம் காய்க்கும் மரமாகப் பார்ப்பது வழக்கம். இவர் மூலம் நமக்கு என்ன இலாபம்? என்று பெரும்பாலானவர்கள் பார்க்கும்போது இவர்களுக்கு எப்படியெல்லாம் உதவமுடியும்?' என்று பார்ப்பது தெய்வ நாயகத்தின் பார்வைக் கோணம்.
'வாடிக்கையாளருக்கு உடல் நிலை சரியில்லை' என்று தெரிந்தால் வாடிக்கையாளரைத் தம்முடைய மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்வது தெய்வநாயகத்தின் வழக்கம். இந்த உதவி அவருக்கும் மட்டுமல்ல, அவருடைய மனைவி குழந்தைகளுக்கும் கூட கிடைக்கும்.
ஒரு சிங்கள வியாபாரி தன் மகளுக்கு ‘நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையே' என்று தவித்துக் கொண்டிருந்தார். அதைத் தெரிந்து கொண்ட தெய்வநாயகம் தம்முடைய மற்றொரு சிங் கள வியாபாரியின் மகனுக்கு அப்பெண்ணை மணம் பேசித் தாமே முன்நின்று அந்தத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். 'வியாபாரம் செய்ய வருபவர்கள் வியாபாரத்தோடு போகட்

Page 156
2.94 இதோ ஒரு வெளிச்சம்
டும். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நமக்கும் எந் தத் தொடர்பும் இல்லை' என்று அவர் எப்போதும் எண்ணி யதே இல்லை.
பெரும்பாலான வியாபாரிகள் அவருடைய வீட்டிற்கு வந் திருக்கிறார்கள். மனைவி குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல விருந்தினை வீட்டில் அளித்திருக் கிறார். தம் கையால் பரிமாறி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்வார். வியாபாரிகளின் மனைவியருக்குப் பரிசுப் பொருள் கள் வழங்குவார். குழந்தைகளுக்கு இனிப்புக்கள் தருவார். மொத்தத்தில் அவருடைய நெருங்கிய உறவினராகவே வியா பாரிகளையும் குடும்பத்தினரையும் நடத்துவார்.
தந்தையிடமிருந்து கதிரேசு கற்றுக் கொண்ட பல நல்ல பண்புகளுள் இதுவும் ஒன்று. கதிரேசுவுடன் வியாபாரம் செய்ய இன்று பல நாட்டைச் சார்ந்தவர்கள் கொழும்பு வரும்போது நிச்சயமாக ஒரு விருந்தாவது இவர் வீட்டிலிருக்கும். ஆனால் இந்தப் பண்பு கதிரேசுக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தில் ஈஸ்வரன் முதல் முருகேசு வரை எல்லோருக்கும் உண்டு. பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய வீடுகளில் யாராவது ஒரு விருந்தினராவது குடும்பத்தோடு விருந்துண் பதைக் காணலாம். உணவு விடுதிகளில் அவர்களுக்கு விருந் தளிப்பதை விடத் தங்கள் வீட்டில் குழந்தைகளோடு விருந்தளிப் பதையே அவர்கள் விரும்புகிறார்கள். விருந்துண்ண வரும் வியா பாரிகள் மனதிலே ஒருவித பாசமும், மலர்ச்சியும், நெகிழ்ச்சி யும் அடைகிறார்கள். விருந்தோம்பும் பண்பாடு சின்னக் குழந் தைகள் மனதிலும் விதைக்கப்படுகின்றது.
தம் வாடிக்கையாளரைத் திருப்தி செய்ய எதையும் செய் வார்; சின்ன செய்திகளைக்கூட அக்கறையோடு கவனிப்பார்
என்று கூறும் கனேஷ் ஒரு செய்தியை நினைவு கூருகிறார்.
தெய்வநாயகத்தின் அலுவலகத்தில் ஒரு பகுதியில் பல வகையான சிகரெட் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரோடு பேச வருகின்ற வியர்பாரிகள் அவர்களுக்குப் பிடித்த சிகரெட் பெட்டிகளை எடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு சின்ன விஷயத்தில் கூட தன் வாடிக்கையாளரை நிறைவு செய்வதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

'மானுடம் வென்றதம்மா!' 295
'இன்று ரொக்கம்; நாளை கடன்'
என்று அச்சிடப்பட்ட அட்டை சில கடைகளில் தொங்க விடப் பட்டிருப்பதை இன்றும் நாம் காணலாம். நாட்டுப்புறங்களில் வேடிக்கையாக,
கையிலே காசு, வாயிலே தோசை' என்று சொல்லு வதையும் கேட்கலாம்.
‘ஒரு வியாபாரி கடன் கொடுத்து வியாபாரம் செய்ய லாமா?’ என்பது வியாபார நிறுவனங்களில் அதிகமாக விவா திக்கப்படுகின்ற ஒரு கேள்வி.
இன்றைக்குக் கடனுக்குப் பொருள்களைத் தருபவர்கள் முன்தேதியிட்ட காசோலைகளைக் கையில் வாங்கிக் கொள் கிறார்கள். அல்லது ஒரு வங்கியின் உத்தரவாதத்தைப் பெற்றுக் கடன் தருகிறார்கள்.
தெய்வநாயகம் தம் வியாபாரத்தை நடத்திய நாட்களில் அந்த அளவுக்கு வங்கிகள் கிடையாது. அவருடைய வியாபாரி களில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கும் கிடையாது. பெரும் பாலானோர் மிகவும் சாதாரண எளிய வியாபாரிகளே!
தெய்வநாயகத்தின் பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் அவர் தம்முடைய சிறு வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்தது.
'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்'
என்பது குறள்.
ஒரு வியாபாரி தமக்கு என்னென்ன வசதிகள் கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ, அதேபோன்ற ஆதாயங் களைத் தம்மிடம் வந்து பொருளைப் பெறுபவர்களுக்கும் செய்து தர வேண்டும் என்று வள்ளுவர் கூறுவார்.
பி.சி.சி நிறுவனம் தெய்வநாயகத்தின் நேர்மை, நாணயம், வியாபாரத் திறன் ஆகியவற்றை மனத்திற் கொண்டு நான்கு மிலியன் ரூபாய்கள் வரைக் கடனில் சரக்கெடுக்கும் வசதி தந் தது. தான் அடைந்த இதே வசதி, வாய்ப்பைத் தன் வியாபாரி களும் அடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். பெரும் பாலான, ஏனைய முதலாளிகள் ஒருகையில் பணம், மறுகையில்

Page 157
296 இதோ ஒரு வெளிச்சம்
சரக்கு என்று திட்டவட்டமாக வியாபாரம் செய்த போது தெய்வநாயகம் தம் சிறு வியாபாரிகளுக்குத் தாராளமாகக் கடன் கொடுத்தார்.
'உங்களுக்கு விற்க முடிந்த அளவுக்குச் சரக்கை எடுத்துக் கொள்ளுங்கள் வேகமாக விற்று முடியுங்கள் முடிந்த பிறகு கடனை அடைத்து விட்டு மறுபடியும் பொருள்களை எடுத்து விற்பனை செய்யுங்கள்’ என்று கூறிச்சிறு வணிகர்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார். இதனால் சிறு வணிகர்கள் உண்மையிலேயே மிகவும் மகிழ்ந்தனர். விற்க விற்க வருமானம் அதிகரிப்பதை உணர்ந்தார்கள். எந்த அளவுக்குப் பெரிய வியாபாரம் செய்தாலும் அந்த அளவுக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு வலு சேர்த்தது.
'கடன் கொடுக்கிறீர்களே, ஏமாற்றி விட்டால் என்ன செய்வது?"
தெய்வநாயகத்தின் பதில் இது தான்: ‘கடனைக் கொடுக்கத் தெரிந்த ஆளுக்கு, அதை வதலிக்கவும் தெரியவேண்டும்.'
அவருடைய நிறுவனத்தில் ஆங்காங்கே சென்று நிலு வையை வசூலிக்கவும் ஆட்கள் வேலைக்கு வைக்கப்பட்டிருந் தார்கள். ஆகவே கடன் வியாபாரத்தில் அவர் ஏமாறவில்லை என்றே சொல்லலாம்.
அதே நேரத்தில் தெய்வநாயகம் பழகுகின்ற விதம் அவரு டைய இனிய, உயரிய பண்புகளால் கவரப்பட்ட வணிகர்கள், எப்படியாவது அவருக்கு விரைவாகத் திருப்பித்தர எண்ணி னார்களேயொழிய, ஏமாற்ற எண்ணவில்லை.
1944 வரை வேறு ஒருவர் கடையில் வேலைசெய்து கொண்டிருந்தவர் காவத்தை வி.பீ.பீ. பழனியாண்டி தனியாகக் கடை வைக்க வேண்டுமென்று தெய்வநாயகத்தை அணுகிய போது ரூபாய் ஆயிரத்துக்கான சரக்கைக் கடனாகக் கொடுத்து கடைவைக்க உதவியவர் தெய்வநாயகம். அதை வைத்துக் கொண்டே அவர் பின்னர் சிறந்தவியாபாரியாக உருவாகியது இன்னொரு கதை
வாடிக்கையாளருக்கு எந்த அளவு வசதிகளைச் செய்து தர முடியுமோ அதைச் செய்து தருவது விற்பனையாளரின் பணி.

'மானுடம் வென்றதம்மா!' - 297
இதை தெய்வநாயகம் மிகவும் திறம்படச் செய்தார் என்கிறார் சோமு அண்ணாச்சி.
இலங்கைத் தோட்டப் பகுதிகளில் ஏராளமான தொழிற் சங்கங்கள் இருந்தன. ஆங்காங்கே இருந்த சங்கங்கள் தங்கள் பகுதியில் கூட்டுறவு சங்கங்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான மளிகைச் சாமான்களையும், ஏனைய பொருள் களையும் சங்கங்களின் மூலம் பெற்றுக் கொண்டனர். இப்படி பல சங்கங்களுக்குப் பொருள்களை விநியோகம் செய்யும் பெரிய வாய்ப்பு தெய்வநாயகத்திற்குக் கிடைத்தது. சொல்லப் போனால் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்திலிருந்து தென்கோடி கதிர்காமம் வரை எல்லா மாவட்டங்களிலுமுள்ள சங்கங்களுக்கும் பொருள்களை தெய்வநாயகம் அனுப்பிய காலம் உண்டு. தற்போதுள்ள அரசியல் போக்குவரத்து தழ் நின்லகளால் வடபகுதியில் வணிகம் செய்ய முடியாவிட்டா லும் அவ்வப்போது முல்லைத்தீவுப் பகுதிக்குப் பொருள்களை விற்கமுடிகின்றது.
சங்கங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கியவுடன், தெய்வநாயகத்தின் வியாபாரம் பலமடங்கு பெருக்கமடைந்தது. அதேநேரத்தில் அந்த வியாபாரம் நடந்த விதம் பாராட்டுக் குரியதாக இருந்தது. பொருட்களை லாரியில் ஏற்றுச் செல் லும் போது சிந்தியோ, உடைந்தோ போனால், நியாயமாக தெய்வநாயகம் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர் அவற்றிற்குப் பொறுப்பேற்று வேறு பொருட் களை மாற்றிக் கொடுப்பார். ‘சின்னச் சின்ன இழப்புக்கள் தனக்கு வரலாம், ஆனால் தன் வாடிக்கையாளருக்கு வரக் கூடாது' என்ற கொள்கையில் முனைப்பாக இருந்தார்.
வியாபாரம் செய்வது என்றால் என்ன?
'ஒருவரிடம் இல்லாத பொருளை, அவரிடம் கொடுத்து விட்டு அவரிடம் உள்ள பொருளை அதற்கு மாறாகப் பெற்றுக் கொள்வதே' என்று வியாபாரத்திற்கு விளக்கம் தருகிறார் ஈஸ்வரன். பொருளைத் தருபவருக்கும் ஆதாயம் வேண்டும், பொருளைப் பெற்றுக் கொள்பவருக்கும் ஆதாயம் வேண்டும். இருவருமே லாபம் அடையும் இந்த வழியை, வெற்றி-வெற்றி அணுகுமுறை என்பார்கள்.

Page 158
298 இதோ ஒரு வெளிச்சம்
தெய்வநாயகம் தன் வணிகத்தில் கையாண்ட இந்த அணுகு முறைதான் அவருக்கு இன்றுவரை பெரும் வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தகவல் தொடர்புகள் வலுப்பெறாத அந்நாட்களில் அவர் கையாண்ட முறையே தனியானது.
உருளைக்கிழங்கு ஒரு கிலோ நாற்பது ரூபாயாக இருக்கும் போது கப்பலில் மாலை நேரத்தில் உருளைக்கிழங்கு மிக மலி வாக வந்து இறங்குவதாக வைத்துக் கொள்ளலாம். இப்போது புதியதாக வந்த கிழங்கின் விலை கிலோ இருபத்தி ஐந்தாக இருக்கலாம். இரவோடு இரவாக லாரியில் உருளைக் கிழங்கு மூடைகளைக் கொண்டு போய் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள தம் வியாபாரிகளின் கடைகளில் இறக்கி விட்டு, வேகமாக விற்கச் சொல்லி விடுவார். உருளைக் கிழங்கு விலை 25 ரூபாய்க்கு இறங்கி விட்டது என்ற தகவல் வந்து சேர மூன்று, நான்கு நாட்கள் ஆகலாம். அதுவரையில் அவருடைய வியாபாரிகள் ரூ40/-க்கு விற்றுப் பணம் சேர்த்து விடுவார்கள்.
அதேபோல் பொருள்களின் விலை ஏறி விட்டால் உடனே தகவலனுப்பிவிடுவார்கள். கையிலிருக்கும் பொருட்களை மேலும் அதிகவிலைக்கு விற்று வியாபாரிகள் இலாபம் அடை
வார்கள்.
ஹமீத் இலங்கையில் சோப்புக்கள் வியாபாரத்தில் ஒரு பெரிய புரட்சியைச் செய்தவர்.
நான்காண்டுகளாக, ஒரு தொழிலாளியாக எங்கோ உழைத்துச் சேமித்த, இருநூற்று ஐம்பது ரூபாயை மூலதனமாக வைத்துத் தன் சோப் உற்பத்தியைத் தொடங்கியவர். வியா பாரத்தைத் தொடங்கு முன்னே உற்பத்தியான சிலபெட்டி சோப்புக்களை வேலையாட்களில் சிலர் திருடி வெளியே விற்றுவிட்டார்கள். கடைகளில் அடுக்கி வைத்த் சோப்புக்களை முதலில் யார் வாங்குவது?’ என்று தேர்ந்தெடுத்து விற்பனை யைத் தொடங்கவில்லை 'யார் வந்து கேட்டாலும் விற்பது என்றுதான் விற்றார். 'ஆரம்பநேரமே சரியில்லை' என்று நிறைய பேர் முணுமுணுத்தார்கள். ஆனால் ஹமீத் தன் கடுமையான உழைப்பை மட்டுமே நம்பினார். அவருக்கு

'மானுடம் வென்றதம்மா!' 299
அப்போதிருந்த முன்னோடி கடும் உழைப்பு மூலம் படிப்படி யாக முன்னேறி வந்து கொண்டிருந்த தெய்வநாயகம்.
இன்றைக்கு இலங்கையின் உன்னத சலவை சோப் ஹமீத் அவர்களின் ‘ஒன்டர்லைட் சோப்' என்றால் அது மிகையல்ல. இலங்கையில் மட்டுமல்லாமல் துபாய், பஹற்ரின் போன்ற அரபு நாடுகளிலும் அமோகமாக விற்பனையாகிறது ஒன்டர் லைட் சோப்.
நவீன எந்திரங்களை வைத்துக் கொண்டு, நானூறு பேருக்கு மேல் இரவு பகலாகப் பணியாற்ற, மிகச்சிறப்பான உற்பத்தி யில் ஈடுபட்டு ஒரு பெருந் தொழிலதிபராகத் திகழும் ஹமீதின் ஒரு சிறந்த வாடிக்கையாளர் தெய்வநாயகம்.
ஒவ்வொரு மாதமும் சுமார் ஆறு மிலியன் ரூபாய் சோப் புக்களை வி.ரி.வி நிறுவனம் இவரிடமிருந்து வாங்கி விற்கிறது. வெற்றி வெற்றி அணுகுமுறை இவர்களுடைய வியாபார ரகசியம்.
தெய்வநாயகத்தின் வியாபார வெற்றிக்கான காரணங் களைப் பற்றி ஹமீத் கூறுவது.
"தெய்வநாயகம் மிக்க தெய்வ பக்தி கொண்டவர்; ஆண் டவன் அருள் அவருக்கு முழுக்க முழுக்க உண்டு.
அடுத்து தெய்வநாயகம் அள்ளிக் கொடுப்பவர். அள்ளிக் கொடுக்கக் கொடுக்க ஆண்டவன் மேலும், மேலும் வருவாய் தருகிறான்.
மூன்றாவதும், முக்கியமானதுமான செய்தி, தொழிலில் அவருடைய நாணயம், வார்த்தை தவறாமை. "இத்தனையாவது த்ேதியில் இவ்வளவு ரூபாயைத் தருகிறேன்' என்று அவர் சொன்னால் நிச்சயமாக பணம் வந்துவிடும்; வாக்குத் தவறா தவர். அவர் ஒரு காசோலை கொடுத்தால் அது நிச்சயமாகத் திரும்பாது.
ஒவ்வொரு ஆண்டும் ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜையின் போது மாணவ, மாணவியருக்கு நடை பெறும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு நல்ல பரிசுகளை ஆலயத்தில் வழங்குகிறார் ஹமீத்!

Page 159
300 இதோ ஒரு வெளிச்சம்
'கடும் உழைப்பின் மூலம் வாழ்வில் உயரமுடியும்' என்ற கொள்கைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழும் ஹமீத் தெய்வநாயகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஒர் அழகான உவமையைக் கூறுகிறார்.
பாலை சுமார் 4 மணி நேரம் வரையில் கெடாமல் வைத்திருக்க முடியும். ஆனால் அதையே தயிராக மாற்றினால் ஒரு நாள் வரை கெடாமல் வைத்திருக்கலாம். அந்தத் தயிரையே கடைந்து வெண்ணெய் எடுத்தால் சிலநாட்கள் வைத்திருக்க முடியும். அதை உருக்கி நெய்யாக மாற்றினால் மாதக் கணக் கில் வைத்திருக்க முடியும். அடிப்படையில் எல்லாமே பால் தான். ஆனால் பக்குவமடைவதைப் பொறுத்து அதன் மதிப்பு உயருகிறது!
தெய்வநாயகம் எல்லோரையும் போன்ற சாதாரணமான மனிதராகத் தான் பிறந்தார்; ஆனால் வாழ்க்கையில் அவர் பெற்ற ஒவ்வொரு அனுபவமும், கடுமையான உழைப்பும் அவரைப் பக்குவப்படுத்திப் பண்பாளராகவும், வெற்றியாள ராகவும் உருவாக்கியுள்ளன.
அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட பொடி மாத்தையா என்ற சிங்களரும் அவருடைய மனைவியும் கடுவலை என்ற அழகிய ஊரில் ஒரு மிக அழகான வீட்டில் வாழ்கிறார்கள். அவர்களுடைய மளிகைக்கடை மிகச் சிறப்பாக நடக்கிறது.
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகத் தெய்வநாயகத்தோடு தொடர்பு உள்ளவர் பொடி மாத்தையா. மிகச்சரளமாகத் தமிழ் பேசும் அவர் தெய்வநாயகத்தைப் பற்றிப் பேசும் போது அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் 'அடேயப்பா!'. 'காலம் மாறிடிச்சு எங்க கால வியாபாரம் வேறு! இந்தக் கால வியாபாரம் வேறு' என்று சொல்லும் பொடி மாத்தையா தெய்வநாயகம் கடனுக்குச் சரக்குக் கொடுத்து உதவியதோடு, ‘எப்படி வியாபாரம் செய்வது? என்றும் சொல்லிக் கொடுத்ததை நினைவு கூருகிறார்.
‘எங்கள் இருவருக்கும் முதலாளி - வாடிக்கையாளர் என்ற உறவு நிலை இருந்ததேயில்லை; அவர் என்னுடைய நண்பர், குடும்பத்தில் ஒருவர் என்கின்ற நிலை இன்று வரை. முன்பெல்லாம் அடிக்கடி சந்திப்போம். இப்போது குறைந்து விட்டது. ஆனால் பாசம் மட்டும் மாறவேயில்லை."

'மானுடம் வென்றதம்மா!' 30
பொடி மாத்தையா இந்தியா சென்றிருக்கிறார். தெய்வ நாயகம் வீட்டு விழாக்களுக்காகவே சென்றிருக்கிறார். அவருக் கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்தவர் தெய்வநாயகம்.
'திடீரென்று இரவு 12.00 மணிக்கு சில நாட்களில் வீட் டின் முன் கார் வந்து நிற்கும். பார்த்தால் தெய்வநாயகம். 'பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் வந்துவிட்டேன்' என்று கூறி, இருப்பதை உண்டு விட்டு, அங்கேயே உறங்கி விட்டு விடிந்தவுடன் கிளம்பிய அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறார் பொடி மாத்தையா. சில சமயங்களில் பொடி மாத்தையாவிடம் காரைக் கொடுத்து ஒட்டச் சொல்லிவிட்டு பின்சீட்டில் உறங்கிய படி வந்த தெய்வநாயகத்தைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவர் மனத்தில் எழும் எண்ணம்' 'அடேயப்பா முதலாளிக்குத்தான் என் மீது எவ்வளவு அன்பு'
நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். ஒவ்வொரு அனுபவமும் கண்டி தாவர இயல் பூங்காவில் உள்ள கண்ணாடி அறைக்குள் சென்று மலர்ச் செடிகளைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு போல இனிமையான அனுபவம். இப்படியல்லவா மனித நேயம் கலந்த மானுட உணர்வுகள் திகழ வேண்டும்? 'மானுடம் வென் றதம்மா!' என்று கம்பன் வியந்து பாடினானே, அது இப்படிப் பட்ட மனித நேயத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தானா!
“சேவியர் பெர்னான்டஸ்' இரத்தினபுரியைச் சேர்ந்த ஒரு சிங்கள வியாபாரி. தெய்வநாயகத்தைப் பற்றி நினைக்கும்போது

Page 160
30 இதோ ஒரு வெளிச்சம்
அவர் உணர்ச்சி பொங்க வர்ணிக்கும் சொற்கள் "அவர் மனித உருவிலே நடமாடும் கடவுள். நாங்கள் தரும காசோலை யில் எவ்வளவு ரூபாய் எழுதியிருக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதேயில்லை. அவரைப் பொறுத்தவரையில் “பெரிய வியாபாரி, சின்ன வியாபாரி' என்ற வேறுபாடு என் றைக்கும் கிட்ையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான வர வேற்பு, அன்பு, மரியாதை, பணிவிடை. பெரும்பாலான மற்ற வியாபாரிகளுக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடு 'மனிதத் தன்மை தான். இவருடைய அதே குணங்கள், இன்று அவர் கடையில் பணியாற்றும் அத்தனை பேரிடமும் துலங்குவதைப் பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது.
‘எங்கள் வீட்டில் உள்ள சின்னக்குழந்தைக்குக் கூட முதலாளியைத் தெரியும். வியாபாரம் என்பது இரண்டு கடை களை மட்டும் பொறுத்த விஷயமன்று; இரு குடும்பங்களைப் பொறுத்த விஷயமாகவும் அமைந்து விட்டது.
'நான், என் குடும்பத்தோடு பலமுறை அவருடைய வீட் டிற்குச் சென்றிருக்கிறேன். என்னுடைய மனைவிக்கும், குழந் தைகளுக்கும் பரிசு கொடுத்து எங்களைச் சிறப்பித்திருக்கிறார்.’
சேவியர் பெர்னான்டஸ் உறுதியாகக் கூறும் மற்றொரு செய்தி. 'எங்களுடன், தெய்வநாயகத்திற்கு சற்றும் அறிமுக மில்லாத ஒரு நண்பரைத் துணிந்து அவரிடம் அழைத்துச் செல் லலாம். எங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அதே மரியாதை நிச்சயமாக எங்கள் நண்பர்களுக்கும் கிடைக்கும்.'
பெர்னான்டஸ் கேட்கும் ஒரு கேள்வி நம் சிந்தனைக் குரியது. ‘ஏராளமான முதலாளிகள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் யாரும் சரக்குத் தருவார்கள். ஆனால் மனிதாபி மானத்தையும், பாசத்தையும் வேறு யாரால் தரமுடியும்?"
பத்து வயதிலே, சிறுவனாக மளிகைத் தொழிலில் காலடி வைத்தவர் தங்கராஜா. இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தை ஊரைச் சேர்ந்த இவர் தன்னுடைய பத்தாம் வயதிலேயே சந் தித்த பெரிய முதலாளி தெய்வநாயகம் தான். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு அனுபவத்தில் தெய்வநாயகத்திடமிருந்து பார்த்துக் கற்றுக் கொண்ட செய்திகள் ஏராளம்.

மானுடம் வென்றதம்மா!' 30 Ꮽ
'கோடிக் கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கலாம். ஆனால் நல்ல மனத்தைப் பெற்றிருப்பது சாதாரண விஷய மல்ல பணமும் மனமும் ஒருங்கே இருப்பதுதான் இங்கே பெருமை!’
நீங்கள் போட்டிருக்கிற பில் தொகை அதிகம்; இவ்வளவு தரமுடியாது; குறைத்தாக வேண்டும்' என்று முகம் சிவக்கக் கூச்சலிடும் வியாபாரிகள் ஒருபுறம். 'இல்லைங்க, இன்றைய சந்தை நிலவரம் இதுதாங்க', 'விலையே இதுதாங்க' என்று வாதாடும் கடை ஊழியர்கள் ஒருபுறம். சில நேரங்களில் கடை யில் இப்படிப்பட்ட கூச்சலும், குழப்பமுமான நேரம் நிலவும். அப்போது மாடியில் தன் அறையிலிருந்து கீழே இறங்கியபடி வியாபாரிகளைப் பார்த்தபடி "முருகா! முருகா! வாங்க! வாங்க!' என்று வரவேற்றவுடனே இவ்வளவு நேரம் அவர் களுக்கிருந்த கோபம் எப்படி மறைந்தது என்ற் சுவடு கூடத் தெரியாமல் காணாமற்போய்விடும். பின்னர் அவர்களுடைய சிக்கலை அவர் அழகாகத் தீர்த்து விடுவார். ஒரு வியாபாரிக்குக் கூடுதலான ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும். அது இவரிடம் இருப்பதை தங்கராஜா நன்றாக உணர்ந்திருக்கிறார்.
நள்ளிரவு ஒன்றரை மணிக்குக் கிளம்பும் பேருந்தில் தன்னை சரக்குகளுடன் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் தெய்வநாயகத்தின் கடுமையான உழைப்பு தன்னை வியக்க வைத்தது மட்டுமல்ல, தன்னையும் ஒட்டிக் கொண்டது என்கிறார். தங்கராஜா.
‘‘1966 ல் ககாவத்தையில் நடந்த என் திருமணத்திற்கு முதலாளி தன் காரில் நீண்டதுாரம் பயணம் செய்து வந்தார். அவருடைய நிலைக்கு அவர் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை; ஆனால் அவர் வந்தார்.
அவர் ஒருவர் வந்தால், ஆயிரம் பேர் வருவதற்குச் சமம். அவர் என் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததை நான் மறக்கவே மாட்டேன்."
இன்றைக்கு ’கிருஷ்ணா ஸ்டோர்ஸ்' 'முருகன்ஸ்டோர்ஸ்’ என்று இரு கடைகளையும் மிகச் சிறப்பாக நடத்திவரும் வெற்றி வியாபாரி தங்கராஜா 1983 இனக்கலவரத்தில் எல்லாவற்றை யும் இழந்தவர். வேறு ஒருவருடைய கட்டிடத்தில் ஒடி ஒளிந்த போது அந்தக் கட்டிடத்தின் மீது ஒரு வெடிகுண்டு வீசப்பட்டு

Page 161
304 இதோ ஒரு வெளிச்சம்'
உடனிருந்த ஒருவர் அங்கேயே கொல்லப்பட்டார். ஒரு வழி யாகத் தப்பிக் கொழும்பு வந்து தெய்வநாயகத்தின் முன் நின்று 'எனக்குத் தங்க ஓர் இடம் வேண்டும்' என்று கேட்டவுடன், தன்னுடைய வீடுகளில் ஒன்றின் சாவியைக் கொடுத்து "இதோ, என் வீட்டில் தங்கிக்கொள்' என்று உதவியதை இன்று எண்ணும்போதும் தங்கராஜாவின் மனம் நெகிழ்கிறது!
 

31. கொட்டிக் கொடுப்பவருக்குக்
கட்டிக் கொடுப்பவர்
முத்து விநாயகர் ஆலயம், ஐயா அவர்களுடைய வாழ் வோடு பின்னிப் பிணைந்து விட்ட ஆலயம்.
எத்தனையோ முடிவுகளை அங்கே தெய்வநாயகம் எடுத் திருக்கிறார்.
மனம் கலங்கியிருக்கும் போதெல்லாம் முத்து விநாயகர் அளித்த ஆறுதலே அலாதி!
அளவற்ற அன்பு பாராட்டும் போது, அதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் நம்மைப் பார்க்கும் கோணமே வேறாகத் தானே இருக்கும்!
1977ம் ஆண்டு; நவராத்திரி விழா ஏழாம் நாள் உபய முறை தெய்வநாயகம் குடும்பத்திற்கு உரியது!
இரவு பூசை முடித்த பின்னர் இலை போட்டு, உணவு பரி மாற வேண்டிய நேரம்.
தெய்வநாயகத்தின் ஈடுபாடு, அவர் மேல் மற்றவர்கள் காட்டுகின்ற அன்பு, பாசம், பக்தி, மரியாதை இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத ஒருவர் “இலை போடக் கூடாது" என்று தடுத்தார்.
1932லிருந்து 77 வரை 45 வருடங்களாகக் கோவிலோடு ஒன்றிவிட்ட ஒரு பக்தர் வந்தவர்களை அன்போடு உபசரிக்க ஆர்வத்தோடு முயன்றபோது, காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு வரின் சொற்கள் நச்சு அம்புகளாக அவர் இதயத்தைத் தைத் தன!
"இவருக்கு மட்டும் ஏன் தனியான மரியாதை?’ என்று எண்ணிய அந்த நண்பருக்கு, 'இவருக்கு மட்டும் ஏன் விநாய கரின் மீது தனியான பக்தி?’ என்று சிந்திக்கத் தோன்ற வில்லை.

Page 162
306 இதோ ஒரு வெளிச்சம்
நாம் என்னதான் 'ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று ஒப்புக்குச் சொன்னாலும் ஆண்டவன் எல்லோரையும் ஒரே மாதிரியாகவா நடத்துகிறான்? r
காலமெல்லாம் பூசை செய்த சிவகோசாரியாருக்குக் காட்சி தராத ஈசன், காட்டுவேடன் கண்ணப்பனுக்கு முதலில் அரு ளைத் தரவில்லையா?
'விநாயகர் சன்னதியில் தனக்கேற்பட்ட மனக்குறையை யாரிடம் முறையிடுவது?’ என்று எண்ணிய அவருக்கு அதே விநாயகர் வழிகாட்டினார்.
1976ம் ஆண்டு ஜிந்துப்பிட்டி பூரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் அறங்காவலர் மறைந்தவுடன் பல சைவ பெரியோர்கள் அப்பணியை மேற்கொள்ளுமாறு தெய்வ நாயகத்திடம் கேட்டுக்கொண்டனர். விநாயகரிடம் முழு ஈடு பாடு வைத்திருந்த அவர் சற்றுத் தயங்கினார். ஆனால் கடவுளின் எண்ணம் வேறாக இருந்தது. அன்றைக்குத் திருச்செந்தூர் கடற் கரையில் விளையாடி மகிழ்ந்து ஆட்கொண்ட முருகன் இன்று தன் அண்ணன் முத்து விநாயகர் முன்னிலையில் இப்படி ஒரு நாடகம் நடத்தி ஜிந்துப்பிட்டிக்கு வரவழைக்கத் திட்டமிட்டிருக்க வேண்டும்.
முத்து விநாயகர் முன்னால் மீண்டும் பூக்கட்டி முடிவு கேட்டார் தெய்வநாயகம். 'நீ முருகன் பணிக்குப் போகலாம்' என்று விநாயகர் விடை கொடுத்து விட்டார். 1977ல் தர்ம கர்த்தவாக அவர் பொறுப்பேற்றார்.
ஜிந்துப்பிட்டி பூணூரீசிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் இலங் கையின் புராதன தொன்மை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங் களுள் ஒன்று.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பு திருநெல்வேலி சீமையைச் சேர்ந்த சைவ வேளாளர் கள் சமூகத்தினரிடம் இருந்தது. அவர்கள் தெட்சணத்து வேளா ளர் மகமை பரிபாலன சபை என்ற அமைப்பை உருவாக்கி அதன் ஆட்சியில் கோயிலை நிர்வகித்து வந்தார்கள்.
தொன்றுதொட்டே இக்கோவிலுக்குப் பல சிறப்புகள உண்டு. ஆகம விதிமுறைப்படி நித்திய நைமித்திய பூசைகளைத்

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 307
தவறாமல் நடத்தும் இக்கோவிலிற்குள் வந்திராத தலைவர் களில்லை; உரையாற்றாத இலக்கியவாதிகள் இல்லை; கலைஞர் களில்லை எனலாம்.
இக்கோவிலின் சிறப்பிற்குப் பல காரணங்கள் உள்ளன. "எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக வியாபார நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மட்டுமே இருக்க முடியும். நிறுவனங்களுக்கு இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டிருப் பதால், சாதாரண தனிமனிதர்கள் நிர்வாகத்தில் கலந்து கொள்ள முடியாது. எங்கள் சட்டதிட்டங்கள் அப்படி. அதனால் தேவையில்லாமல் வீண் சிக்கல்களை எழுப்புபவர்களைப் பார்க்க இயலாது. மேலும் எந்தக் கோவிலையும் நிர்வகிக்கப் பணம் வேண்டும். பொருள் வசதியும், மன வசதியும் கொண்ட வர்களின் தன்னலம் கருதாத தொண்டால் தான் இக்கோவில் சிறப்பாக செயல்படுகிறது' என்று கூறும் இறைபணிச் செம் மல் திரு. ஏ.எஸ்.எஸ். சோமசுந்தரம் பிள்ளை இக்கோயிலின் அறங்காவலர் குழுவின் துணைத் தலைவர்.
தெய்வநாயகத்திடம் அவர் கண்டு பாராட்டும் குணங்கள் பல. 'குறிப்பாக எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை முடிக்கும் வரை முழுக்க முழுக்க, அதிலேயே ஆழ்ந்து விடும் குணம் அவரிடம் உண்டு. சில நேரங்களில் மற்றவர்களிடம் கூட விடாமல் அவரே பக்கத்தில் நின்று சின்ன விஷயங்களில் கூட ஆழ்ந்த அக்கறை காட்டி எடுத்த செயலை முடிப்பதில் அவரே வல்லவர்.
கொழும்பில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மாலை 6.00 மணிக்கெல்லாம் மூடிவிடும். நிறையபேர் 6.00 மணிக்கு வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்திக் கொள்வார்கள். ஆனால் தெய்வநாயகத்தின் பணிகள் 6.00 மணிக்குமேல் தீவிர மடைகின்றன."
அறங்காவலர் குழுவின் செயலாளர் திரு. ஜி. எஸ். விஸ்வ நாத பிள்ளை அவர்கள்.
திருமுருக கிருபானந்த வாரியார் 1936ல் கோவிலுக்கு வருகை புரிந்திருக்கிறார். அன்றும் இன்றும் கோவில் சிறப் பாகவே நடந்து வருகிறது என்று கூறும் விஸ்வநாத பிள்ளை

Page 163
308 இதோ ஒரு வெளிச்சம்
பல மாற்றங்கள் கோவிலிலே காலத்திற்கு ஏற்றாற்போல் நடந்துள்ளன என்கிறார்.
தெய்வநாயகம் சென்று கோவிலுக்கு வேண்டும் என்று கேட்டால் யாரும் மறுப்பதில்லை; மறுக்க முடிவதில்லை. இது அவரிடம் உள்ள மகத்தான சக்தி என்று கூறும் அவர் மற்ற வர்கள் தெய்வநாயகத்திடம் எதையாவது கேட்டு இல்லை என்று திரும்பியதுமில்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்.
தெய்வநாயகத்திடம் கோவிலின் தர்மகர்த்தா பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டிய அவர் தன்
வியாபாரத்தில் கையாண்ட அதே நுணுக்கங்களை ஆலய அறங்
காவலராக இருக்கும் போதும் கையாண்டார் என்றால் மிகை யர்காது.
ஆலயத்தின் பொருளாளர் திரு. செளந்தரராஜன் அவர் களுடைய திறமை மிகவும் பாராட்டுக்குரியது. ‘ஒரு கை தட்டி னால் ஓசை கேட்காது' என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தன் குழுவை அரவணைத்துப் போனால்தான் நிர்வாகம் நன் றாக நடக்கும் என்பதை அவர் நன்கறிவார்.
ク
/
须
Z
1. 鬣 & ?”。 4.
ཏུ་ 27. །༽
(2.
1977ல் நடைபெற வேண்டிய இவ்வாலய கும்பாபி ஷேகம் சில காரணங்களால் தள்ளிப்போகிறது. தெய்வநாயகம், அறங்காவலர் குழுவைக் கூட்டுகிறார். விழா நடத்தப் பணம் தேவை என்கிறார்கள். ஒவ்வொருவராக அணுகி வதுல் செய்ய லாம் என்று ஒருவர் கருத்துத் தெரிவிக்கிறார்.
 
 
 
 
 
 
 

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 309
'நாம் 20 பேர் இங்கே இருக்கிறோம். ஒரு கம்பெனிக்கு
இவ்வளவு என்று தொகையை நிர்ணயிப்போம். எங்களுக்கு நான்கு நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் சார்பில் நாங்கள் பணம் தருகிறோம். உங்கள் பங்கை நீங்கள் தாருங்கள், விழா முடிந்து விடும்.'
கொஞ்ச நேரத்தில் கூட்டம் முடிந்தது; தொகையும் சேர்ந் தது. கும்பாபிஷேகமும் இனிதே முடிந்தது. வெற்றிக்குக் கார ணம் தெய்வநாயகம் மட்டுமல்ல; அடுத்த நிமிடத்தில் பணத்தை யும், ஆதரவையும் ஒருங்கே அளிக்க முன்வந்த அவருடைய ஆற்றல் மிகுந்த அறங்காவலர் குழுவும்தான்.
கோவில் என்பது என்ன?
மனிதனைப் புனிதனாக்கும் ஒர் இடம்.
அலைபாயும் மனங்களை அணைகட்டி நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான்; அடங்கி நட என்பதை வலியுறுத்தும் இடம்.
கல்லாத மனிதனுக்குக் கல்வியறிவு ஊட்டவும், கற்றவன் தன் அறிவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் பந்தல் போட் டுத் தரும் இடம் கோவில். ஆண்டவன் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்த கலை ஆற்றல்களை வெளிப்படுத்தும் கலைக்கூடம் கோவில். રૂં மனிதர்கள், மனிதர்களை மனிதர்களாக மமதையை மறந்து விட்டுப் பார்க்கும் கூடம் கோவில்.
ஆனால் இன்று சில கோவில்கள், தம் இலக்கை மறந்து விட்டு கோலாகலமான விழாக்களைக் கொண்டாடிக் காலத் தைக் கழிப்பதையும், பல கோவில்கள் திரிக்கு எண்ணெய் கூட இல்லாமல் வாடிப்போவதையும் நாம் அன்றாடம் கண்கூடாய்ப் பார்க்கின்றோம்.
தெய்வநாயகம் அறங்காவலராய்ப் பொறுப்பேற்றவுடன் அவர் சிந்தனையில் பதிந்த எண்ணங்கள் மூன்று: '
பணம்; பக்தி, பண்பாடு
பணமில்லாவிடில் ஏதும் நடைபெறாது; ஆகவே உள்ள வரிடமிருந்து பணத்தைப் பெற்று வருவாயைப் பெருக்க வேண்

Page 164
3.0 இதோ ஒரு வெளிச்சம்
கோவில் என்பது நிதி நிறுவனமன்று: நிதிதேவைப்பட் டாலும் அது பக்தியை வளர்க்கத்தானே ஒழிய பணத்தை வளர்க்க அன்று!
பக்தி ஒரு மனிதனின் பண்புகளை வளர்க்க வேண்டும். இந்து மதத்திற்கென்று ஒர் அழகு உள்ளது. கலைகளையும், கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் போற்றிக் காக்க வேண்டிய இடமாகத் திகழ வேண்டியது கோவில்.
இம்மூன்றையும் எப்படியெல்லாம் வளர்ப்பது என்று ஆழ்ந்து திட்டமிடலானார் தெய்வநாயகம்.
பண்டாரம் பிள்ளை அவர்கள், இன்று இந்தியாவில் ஆழ் வார் திருநகரியில் தம் மனைவியோடு வாழ்ந்து வரும் ஓய்வு பெற்ற மனிதர். கடந்த நாட்களின் இனிமையை அசைபோட்ட படி வாழ்பவர்.
முதலாளி' என்ற சொல்லைக் கேட்டவுடன் சற்று வளைந்த அவர் முதுகு நிமிர்ந்து கொள்ளும். நடுக்கத்துடன் பேசும் அவர் குரலில் கூட ஒரு மாற்றம். மங்கிய கண்களில் ஒரு புதிய ஒளி.
35 ஆண்டுகள் ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலில் முகாமை யாளராகப் பணியாற்றிய அவர்தம் பழைய நாட்களை நினைவு கூருகின்றார். w
1978ல் தெய்வநாயகம் தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்ற போது கோவிலின் வருவாய் குறைவு. செலவும் குறைவு.
அதிகமாகச் செலவு செய்தால்தான் கோவில் பணிகள் சிறப்புற அமையும்; அப்படியானால் வருவாயும் அதிகமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட தெய்வநாயகம் முதலில் அர்ச்சனை சீட்டுக்களை அறிமுகப்படுத்தினார். தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய ஒருரூபாய் சீட்டு என்று தொடங்கி இன்று அது இருபது ரூபாய் வரை வளர்ந்துள்ளது.
அர்ச்சனைக் கட்டணம் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி யதின் விளைவாகக் கோவிலின் வருவாய் படிப்படியாக உயர ஆரம்பித்தது.
கோவிலில் விருந்தின்ர்கள் தங்குவதற்காக அறைகள் கட்டி

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 31 1
வாடகைக்கு விடப்பட்டன. அன்று ஒரு மாத வாடகை ღეს. 5 0|- இன்று ரூ.600/- ஆக உயர்ந்துள்ளது.
முன்பு இருந்த சண்முக விலாஸ், கனகலிங்கம் மண்டபங் களுடன் மூன்றாவதாக வள்ளி தெய்வயானை திருமண மண்டப மும் கட்டப்பட்டுள்ளது. அந்த மண்டபங்களின் மூலம் கிடைக் கும் வருவாய் கோவிலின் சேமிப்பை மேலும் உயர்த்தியது.
வல்லநாட்டிலிருக்கும் தெய்வநாயகத்தின் தனிச் செயலர் குழந்தைவேலு ஒரு செய்தியை நினைவுகூருகிறார்.
‘தெய்வநாயகம் ஐயா, அவர்களின் மனத்தில் என்றோ நீக்கமற நிறைந்து விட்டவன் திருச்செந்தூர் முருகன். ஒவ் வொரு முறையும் திருச்செந்தூர் வரும் போதெல்லாம் இங்கு நடை பெறும் வழிபாட்டு முறைகள், பொருளிட்டும் முறைகள் இவற்றைக் கண்டு ஜிந்துப்பிட்டியிலும் செயல்படுத்துகிறவர் எங்கள் ஐயா. s
உண்மையில் திருச்செந்தூர் முருகனுக்கும், ஜிந்துப்பிட்டி முருகனுக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பார்கள். திருச் செந்தூர் ஆலயத்திற்காகச் செய்த முருகனின் சிலை வடிவத் தில் சிறியதாக இருந்த காரணத்தால், அதைக் கடலிலே தூக்கி எறிந்ததாகவும், அதைத் தேடிப் பிடித்துத் தோணியிலே கொண்டு வந்து ஜிந்துப்பிட்டியில் நிறுவியதாகவும் ஒரு ஐதீகம்.
திருச்செந்தூர் ஆகமவிதி முறைகள் இங்கு பயன்படுத்தப் படுகின்றன.
'கோவில் என்றால் மக்கள் வர வேண்டும். மக்கள் வர வேண்டுமென்றால் அவர்கள் மனம் குளிரும் வண்ணம் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும். இது ஒர் எளிய உண்மை. வழக்கமான உபயதாரர்கள் இருக்கும்போது மேலும் பல உபய தாரர்களை தெய்வநாயகம் தேடிக் கண்டுபிடித்தார். நீங்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்; அவர் அந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்பார்’ என்று நன்கொடை யாளர்களைத் தெய்வநாயகமும், அறங்காவல் உறுப்பினர்களும் தேடிப் பிடித்தனர். நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தியவர் கள் முதலில் தாங்கள் வந்தனர்; தம் உறவினர் நண்பர்களை வரவழைத்தனர், நிகழ்ச்சியின் பொலிவினை உணர்ந்து மக்கள் கலந்து கொண்டனர்.

Page 165
32 இதோ ஒரு வெளிச்சம்
ஜிந்துப்பிட்டி பூரீசிவசுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் கூட்டம் நிறைந்தது.
ஒரு நல்ல தொழில் நிர்வாகி, பணம் எங்கெல்லாம் விரய மாகிறது; எந்த இழப்பைச் சரிகட்டி இலாபத்தைக் கூட்டலாம் என்று தான் சிந்திப்பார்.
இலங்கையில் கோவில்களில் தேங்காய் உடைப்பதற் கென்று தனியாக ஒரு இடம் உண்டு. தடுப்புத் திரைகளைப் போட்டுள்ள அந்த இடத்தில் தேங்காயை உடைப்பவர்கள் அந்த சில்லுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் அந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போவார்கள். அந்த தேங்காய்ச் சிதறல்கள் எங்குபோகும்; யார் எடுத்துக் கொள்வார்கள் என்பதே தெரியாமல் காலியாகிக் கொண்டிருந்தன.
தெய்வநாயகம் பொறுப்பேற்றவுடன் செய்த முதல் வேலை களுள் ஒன்று அன்றாடம் சிதறிக் கிடக்கின்ற தேங்காய்த் துண்டு களைத் திரட்டி, வெயிலில் காயவைத்துக் கொப்பறையாக மாற்றி விற்பதே! இதன் மூலம் ஆண்டுக்குக் கிடைத்த வரு மானம், ரூபாய் ஒரு இலட்சம்.
கொழும்பில் மற்றொரு வழக்கம்; உற்சவர் ஊர்வலமாக வரும்போது ஒவ்வொரு கடையின் முன்னாலும் நேர்த்திக் கடனாகச் சிதறு தேங்காய்களை அடிப்பது. சிலர் ஐம்பத் தொரு தேங்காய் முதற்கொண்டு இரண்டாயிரத்தொரு தேங் காய்கள் வரை சிதற விடுவார்கள். அப்படிச் சிதற விடுகின்ற தேங்காய்ச் சில்லுகளைத் திரும்ப எடுக்கின்ற வழக்கம் இல்லை.
விழாக்காலங்களில் வி.ரி.வி. நிறுவனத்தின் லாரிகள் தேரைப் பின்தொடர வைத்தார் தெய்வநாயகம். அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்கள் தேங்காய்ச் சில்லுகளை அள்ளி லாரியில் போட்டுக் கொள்வார்கள். இப்படி ஊர்வல முடிவில் சேகரிக்கப்பட்ட தேங்காய்ச் சில்லுகளை உலர்த்திக் கொப்பறாவாக விற்றுவிடுவார்கள். இதுவும் கோவில் வரு மானத்தோடு சேர்ந்து விடும்.
கோவில் வருமானத்தைப் பெருக்கி விட்டால் மட்டும் போதுமா? அங்கே உழைக்கின்ற தொழிலாளிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் ஊதியமும் உயர வேண் டும் தானே!

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 313
பண்டாரம்பிள்ளை 1960 ஆண்டளவில் வேலையில் சேர்ந்த போது அவருடைய மாதச் சம்பளம் 250/- ரூபாய் களாக இருந்தது. 1993ம் ஆண்டு அவர் ஒய்வு பெற்று விலகும் போது அவர் வாங்கிய சம்ப்ளம் ரூ.7500/- போனஸ் வேறு. 40 ரூபாய் வாங்கிய வேலை ஆட்கள் ரூ.500/-ம், 50 ரூபாய் வாங்கிய அர்ச்சகர்கள் ரூ 1000/-மும் பெற்றனர்.
1978ல் குருக்கள் உட்பட பணியாளர் ஒன்பதின்மருக்கு வழங்கிய சம்பளம் ரூபாய் இரண்டாயிரம். 1995 ல் பத்துக் குருமார்கள் உட்பட இருபத்தேழு பேருக்கு சுமார் எழுபத் திரண்டாயிரம் ரூபாய் சம்பளம் என்பது குறிப்பிடத்தககது.
வருமானத்தைப் பெருக்கி, ஆலயத்துக்காக உழைப்பவர் களுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி செய்தவர் தெய்வ நாயகம். -
சிறந்த முறையில் வியாபாரம் செய்து லாபம் ஈட்டியவர் அதே அணுகுமுறையைக் கடைபிடித்ததால் ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தின் வருமானம் கூடிக்கொண்டே வந்தது; இப்போதும் சுட்டி வருகிறது.
‘கோவில் என்பது பணம் திரட்டும் நிறுவனமா?’ என்ற கேள்வி எழுந்தால் நிச்சயம் இல்லை; பணத்தைத் திரட்டி பக்தியை வளர்க்கும் பணியைச் செய்யும் புனித இடம்.
ஜிந்துப்பிட்டி முருகன் கோவில்படியில் காலை வைக்கும் போதே முருகனின் பக்திமயமான உணர்வுகள் நம்மை அர வண்ைத்துக் கொள்ளும். உள்ளே நுழைந்து இடது பக்கம் திரும் பியவுடன் ஆன்மீகத்தையும், மனிதவள மேம்பாட்டையும் வளர்க்கும் அற்புதமான தமிழ் நூல்கள். அலுவலகம் செல்லு முன் அருகில் கதிர்காம முருகனை நினைவுறுத்தும் முருகன், வள்ளி, தெய்வயானை மயிலாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற அழகிய ஓவியம் வரைந்த திரைச் சீலை. தூய்மையான கோயில்; ஆங்காங்கே கலசங்களில் அடுக்கப்பட்ட தேங்காய் கள். எல்லா இடங்களிலும் நேர்த்தி, எதிலும் திட்டமிட்ட செயல்களின் வெளிப்பாடுகள்.
மிகப் பொறுப்பான முறையில் முறைப்படி மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தும் குருக்கள்; உள்ளே நுழைந்ததும் முரு

Page 166
34 இதோ ஒரு வெளிச்சம்
கனின் அன்புக்கு அடிமையாகி, ஆரவாரமில்லாமல் ஒழுக்க நெறிமுறைகளை இறை வழிபாட்டில் ஈடுபடும் பெரியோர், இளையோர், குழந்தைகள் கூட்டம்.
இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் காணும் போது நம் உடல் சிலிர்க்கும். சிவசுப்பிரமணியனை வெவ்வேறு அலங்காரக் கோலங்களில் காணும்போது நெஞ்சம் பரவசமடையும். பல இடங்களில் பக்தி வியாபாரமாகி விட்ட நிலையில் இன்று இங்கு உண்மையான பக்தி நெறிகளைப் பார்க்கும் ப்ோது மனம் நிறைந்து விடுகிறது.
பல நூற்றாண்டுகட்கு முன்பு தமிழகத்தில் மன்னர்கள் மிகப் பெரும் கோவில்களைக் கட்டியபோது அவற்றை, இறை வழி பாட்டிற்காக மட்டும் கட்டவில்லை. அவைகள் கல்விக் கூடங் களாகவும், கலைக் கூடங்களாகவும் திகழ்ந்தன.
திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் கம்ப இராமாயணம் அரங்கேறிய மண்டபத்தைக் காணலாம்.
இன்று பெரும்பாலான கோவில்கள் சுற்றுலா மையமாக மாறிவிட்ட நிலையில் ஜிந்துப்பிட்டி முருகன் கோவிலில் நடை பெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது சங்க காலத்திற்கும், சங்கம் மருவிய காலத்திற்கும் சென்றுவிட்டோமா என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.
உண்மையான தமிழ்க் கலைகளும், பண்பாடும் இங்கேதான் சுடர்விட்டு ஜொலிக்கின்றன’ என்றால் அது மிகையல்ல.
கொழும்பில் வாழும் ஒரு சராசரி தமிழன் மனம் நொந் திருக்கிறான். அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் வடக் கில் ஒரு நிலை, மலைநாட்டில் ஒரு நிலை, இங்கே கொழும்பில் முற்றிலும் மாறுபட்ட நிலை. கொழும்புத் தமிழனின் இந்த வாடிய மனத்திற்கு ஒரு பெரும் ஆறுதல் தேவைப்படுகிறது. எங்காவது அவன் மனத்திற்கு அமைதி தேவை; வாடிய மனத் திற்கு ஆறுதலளிக்கும் அறவுரைகள் தேவை. சிதறிக்கிடக்கும் மனத்தை ஒருமுகப்படுத்த ஒரு இடம் தேவை. அவனுடைய அந்தரங்கத் தேவையை இறைபணியைச் சிறக்கச் செய்வதன் மூலம் பூர்த்தி செய்கிறார் தெய்வநாயகம்' என்று உறுதியாகக்

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 35
கூறுகிறார் இலங்கையின் சிறந்த பத்திரிகைகளில் ஒன்றான 'தினகரன்' ஆசிரியர் அருளானந்தம்.
ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் தான் எத்தனைவிதமான அறி ஞர்களின் குரல்கள் ஒலித்திருக்கின்றன! திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் முதற்கொண்டு, புலவர் கீரன், பேரா சிரியர் சத்தியசீலன், பேராசிரியர் பா. நமசிவாயம், சுகிசிவம், சுரதா, சாரதா நம்பி ஆரூரன், பேராசிரியர் சரசுவதி இராம நாதன், இளம்பிறை மணிமாறன், செல்வி. ருக்குமணி, புலவர் கோ. சாரங்கபாணி என்று பட்டியல் போட்டு மாள முடியாத அளவு எத்தனை அறிஞர்கள், ஆன்றோர்களின் சான்றாண்மை மிக்க சொற்பொழிவுகளை இந்த மண்டபம் கேட்டிருக்கிறது!
சென்னை வரும்போதெல்லாம் ஈஸ்வரன் தன் தொழிலை கவனிக்கிறாரோ, இல்லையோ எந்தப் பேச்சாளரைக் கொழும் புக்கு அழைக்கலாம் என்று வலை விரிக்கிறார். அப்படி இங்கே வரும் கலைஞர்கள் பேச்சாளர்கள், இவர்களுடைய இல்லங் களிலே தங்கி, விருந்துண்டு, இவர்களுடைய கார்களிலே பயணம் செய்து, எழில் மிக்க இலங்கையைச் சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வது, எப்போதும் நடக்கும் நிகழ்ச்சி. தமிழ்நாடு, வடாற்காடு அம்பேத்கார் மாவட்டம் திருப்பத்துராரில் கம்பன் விழா. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள ஈஸ்வரன், பேச்சாளராக வந்துள்ள முதுபெரும் பேரறிஞர், பேராசிரியர். அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் பாதத்தைத் தொட்டு வணங்கி நிற்கிறார். 27 முறை இலங்கை வந்து இலக் கியப் பணி ஆற்றிய அ.ச.ஞா. ஈஸ்வரனின் தோளைப் பற்றிய படி பாசத்தோடு கூறுகிறார், 'நான் உங்கப்பாவின் நண்பன்: அவர் நலமா?’
அன்றைக்கு சான்றாண்மை மிக்க மன்னர்களை புலவர்கள் போற்றி வாழ்ந்தார்கள். இன்று தெய்வநாயகம் குடும்பத் தினர் புலவர்களைப் போற்றி அவர்கட்கு புகழ் சேர்க்கின் றார்கள்.
'எந்த நூல் வெளியீட்டு விழாவிலும், அவரைப் பார்க்க லாம். ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்று அணுகினா லும், தட்டிக்கொடுத்து ஆர்வமூட்டி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வழக்கம் தெய்வநாயகத்திடம் உண்டு.

Page 167
31 6 இதோ ஒரு வெளிச்சம்
இங்கே எழுத்தாளர்களையும், இலக்கியத்தையும் வளர்க்கின்ற அரிய பணியை அற்புதமாகச் செய்து வருகிறார்’ என்று அவரை நெஞ்சம் நிறையப் பாராட்டுகின்றார் இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகை 'வீரகேசரி’யின் ஆசிரியர் ஆ. சிவ நேசச் செல்வன்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு பத்திரிகையாளன் என்ற முறையிலும், முருகபக்தன் என்ற முறையிலும் அவரை உற்று நோக்கி ஆராய்ந்துவரும் அவர் 'ஆலயத்தோடு தன் வாழ்க் கையை ஐக்கியமாக்கி கொண்டவர் தெய்வநாயகம்' என்று அவரை வர்ணிக்கிறார்.
அவருடைய வாழ்க்கையை ஒரு கோணத்தில் மட்டும் ஆராய்வதென்பது முடியாது.
‘சமயம், இலக்கியம், கலாச்சாரம்-சமூகம்’ என்று எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர் தெய்வநாயகம் என்பது சிவ நேசசெல்வனின் முடிவு.
பலருக்கு பக்தி பணத்திற்காக வரும்; அல்லது பணம் வந்த பின்பு வரும்; அல்லது பலர் மெச்ச வேண்டுமே என்று பகட் டுக்காக வரும்.
தம் பன்னிரண்டாம் வயதில் முத்தாரம்மன் கோவிலில் "தாயே, பராசக்தி நீயே கதி!' என்று தஞ்சம் புகுந்த நாளிலிருந்து இந்த நிமிடம் வரை பக்தி நெறியிலேயே உறுதியாக நிற்பவர்
96) is .
காலை 4.30 மணிக்கு துயில் கலைந்து எழுந்தால் 5.15க்கு அவர் ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்துக்குச் சென்று 5.30 முதல் பூஜையில் நிற்பதைக் காணலாம். காற்று, மழை, புயல், உடல் நலக்குறைவு எதுவும் அவரைத் தடுத்து நிறுத்தி வைக்க முடியாது! விடியற்காலை முதற் பூஜை, பிறகு அலுவலகம் செல்லும் முன்பு ஒருமுறை, மீண்டும் மாலை 7.00 மணிக்கு வந்து விட்டால் கணக்குகளைச் சரிபார்த்து விட்டு வீடு திரும்பும் போது நேரம் சொல்ல முடியாது!
ஒரு நாளைக்கு மூன்று முறை நிச்சயமாகவும், பலநாட் களில் அதைவிட அதிக முறையும் கோவிலுக்குத் தவறாமல் வரும் அதே மணிநேரங்களை வியாபாரத்தில் செலவிடலாம்.

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 31 7
அவரைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் அவருடைய முதல் குறிக்கோள், நாட்டம் இறைபணி ஒன்றே.
"மாஸ்டர்' என்று அன்பாக அழைக்கப்படுகின்ற நடராஜன் அவர்கள் பள்ளி முதல்வராகப் பணியாற்றி இப்போது கோவி லிலே இணைமுகாமையாளராகப் பணிபுரிகிறார். அன்றாடக் கணக்கு வழக்குகளை எழுதிவைக்கும் அவர் கோவிலின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார் எனலாம். இக்கோவில் ஒரு கூட்டுப்பொறுப்பில் பலருடைய நல்லாசியாலும், ஒத் துழைப்பாலும் இயங்குகிறது' என்று அனைத்து அறங்காவலர் களையும் மனமாரப் பாராட்டும் இவர் ‘தெய்வநாயகத்தைச் சிறந்த அடியார்களில் ஒருவராக வைத்துப் போற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
நடராஜனின் மனைவி உடல்நலம் குன்றியிருந்த போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற தெய்வநாயகமும் அவருடைய பிள்ளைகளும் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நடராஜன் நினைவு கூர்கிறார்.
கோவிலில் தெய்வநாயகம் குறுக்கும், நெடுக்குமாகச் சென்றபடி இருப்பார். ஆனால் அவருடைய ஒவ்வொரு அசை விலும் ஒரு பொருளிருப்பதைப் பார்க்கலாம்.
எங்கேனும் ஒரு சின்ன குப்பை, துண்டுக் காகிதத்தைப் பார்த்தாலும்கூட, தானே அப்புறப்படுத்திடுவார். தரையிலே விரித்திருக்கும் சாக்குத்துணி சரியில்லாமல் திரும்பியிருந்தாலும் தானே குனிந்து சரிப்படுத்தி விடுவார். பூஜை நடக்குமிடம் தூய்மையாக இருக்க வேண்டும். இதையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் ஆவுடையப்பன் அவரிடமிருந்து கற்றுக் கொண்ட மறக்க முடியாத பாடம் ஒன்று உண்டு.
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து திருமண மண்டபம் கட்டுவதற்காக நன்கொடை திரட்ட ஒரு குழு கொழும்பு வருகிறது. அவர்கள் காட்டிய ரசீது புத்தகத்தை ஆவுடையப்பன் புரட்டிப் பார்க்கிறார். மிகவும் வசதியானவர் கள் இந்திய ரூபாயில் 25,000 அளவுக்கு நன்கொடை கொடுத் திருக்கிறார்கள். தயங்காமல் ஆவுடையப்பன் இந்திய ரூபாயில் 50,000 அளவுக்கு நன்கொடை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்கிறார். அடுத்த சில நாட்களில் அவரைச் சந்தித்த தெய்வ

Page 168
3 18 இதோ ஒரு வெளிச்சம்
நாயகம் அவருக்குச் சொல்லுகிறார்: "ஒருமுறை நாம் நன் கொடை கொடுத்தால் அதே நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இன்று 50,000 கொடுத்துவிட்டு நாளை வேறு ஒருவருக்குக் குறைவாகக் கொடுத்தால் நீங்கள் வியா பாரத்தில் தாழ்ந்து விட்டதாகத்தான் மற்றவர்கள் எண்ணுவார் களே ஒழிய, விருப்பமில்லாமல் தொகையைக் குறைத்து விட்ட தாக யாரும் சொல்லமாட்டார்கள். ஆகவே, எப்போதும் ஒரு நிலையான நன்கொடையைத் தரும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.'
நன்கொடை தருவதில் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தரவேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொண்ட ஆவுடையப்பன் தன்னுடைய ஊரிலிருந்து 180 மைல் தள்ளியிருந்த சிறு கிராமத்தில் 1,68,000 ரூபாய் செலவு செய்து ஒரு கோவில் கட்டினார்.
'ஒரு கோவிலைக் கட்டுவதற்குமுன் பல செய்திகளை கவனிக்க வேண்டும். முதலில் கட்டுவதை முன்னால் நின்று கண்காணிக்க முடியுமா' என்று பார்க்க வேண்டும். கட்டி முடித்தபின் ஒழுங்காகப் பூஜை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதற்கான வாய்ப்புக்கள் சரியாக இல்லாத போது நாம் அன்றாடம் காணும் கோவில்களில் ஏதேனும் வசதியில் லாத ஏழைக்கோவிலைக் கட்டி, அதனை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும்.'
ஜிந்துப்பிட்டி முருகன் கோவிலை வைத்து ஆவுடையப் பன் போன்ற நண்பர்கள் இவர் மூலம் கற்றுக் கொண்ட பாடங் கள் பல.
இன்று இவர் தட்டிக் கொடுத்ததால் உருவாகியிருக்கின்ற இளைஞர் அணியினர் ஒரு புதிய நம்பிக்கை. "வாங்க மாப் பிள்ளை’ என்றும் “வாங்க தம்பி’ என்றும் “வாங்க பேரப் பிள்ளை' என்றும் தட்டிக் கொடுத்து பல இளைஞர்களைத் தொண்டில் இவர் ஈடுபடுத்தும் அழகே அலாதி.
மாலை நேரத்தில் கோயிலில் நின்று இருகரம் கூப்பி வரு கின்றவர்களை 'முருகா! வாங்க! வாங்க!' என்று இவர் அழைத்து அளவளாவி, சன்னதிக்கு அனுப்புவதும், அழைத்

கொட்டிக் கொடுப்பவருக்குக் கட்டிக் கொடுப்பவர் 39
துப் போவதும் மனநிறைவைத் தருகின்ற காட்சி.
கட்டுக்கோப்பான அறங்காவலர் குழு உறுப்பினர்களின் திறமையாலும், அவர்களை அன்பால் அரவணைத்துச் செல் லும் தலைவருடைய ஆற்றலாலும் ஜிந்துப்பிட்டி ஆலயம் பல் வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றது.
இலங்கை அரசின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதல் இன, மத வேறுபாடின்றி பலர் இக்கோவிலுக்கு வருகை புரிவது அக்கோவிலின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
கொழும்பில் கலவரம்; ஊரடங்குசட்டம் அமுலிலிருந்த ஒரு நாள்; இரவு 2.00 மணிக்கு மழை! ஏதோ பொசுங்கும் நெடியை உணர்ந்தபடி பண்டாரம்பிள்ளை எழுந்து உட்காரு கிறார். மின்இணைப்பு கொடுக்கப்பட்ட பெட்டியில் ஏதோ கோளாறு. தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. வெளியே போக வழியில்லை. தொலைபேசி மூலம் தெய்வநாயகத்தை அழைக்கிறார். சில நிமிடங்கள் படபடப்பாக நகருகின்றன. எரிகின்ற இடத்தை பயத்துடன் பார்த்தபடி பண்டாரம்பிள்ளை யும் உள்ளிருந்த சிலரும் நிற்கின்றனர்.
சற்று நேரத்தில் பொலீஸ் லாரி வந்து நிற்கின்றது. மின் சாரக் கோளாறை சரிப்படுத்தும் ஊழியரோடு, தெய்வநாயகம் இறங்குகிறார். சிலநொடிகளில் மின் கோளாறு சரிசெய்யப் படுகிறது. அதே வண்டியில் ஊழியரும், தெய்வநாயகமும் பொலிஸ் காவலர்களுடன் திரும்பப் போகிறார்கள். மழை தூறிக் கொண்டிருக்கிறது!
ஒரு சிக்கலை ஒரு வீரனுக்குரிய வேகத்தோடும், ஒர் அறி ஞனுக்குரிய விவேகத்துடனும் ஒரு நல்ல தலைவனுக்குரிய பொறுப்புடனும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட தெய்வ நாயகம் கோவில் வளர்ச்சியைப் பற்றி மற்றவர்கள் பெருமை யாகப் பேசும்போதெல்லாம் 'எல்லாம் முருகன் செயல்; எல்லாம் முருகன் அருள்' என்று கூறுகிறார். முருகனைப் பொறுத்தவரை அவர் அடிக்கடி கூறும் வரிகள் இவை.
'இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது,
இறைவன் மறுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.'

Page 169
320 இதோ (5 வெளிச்சம்
 

32. உத்தரவு தரவில்லை
சென்னையிலிருக்கும் தெய்வநாயகத்தின் மகள் சாரதா விற்குக் கடுமையான காதுவலி! துடிதுடித்துப் போகும் அள விற்குத் தொல்லை கொடுக்கும் அந்த வலியால் அவர் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல!
சென்னையின் மிகப்புகழ்பெற்ற காது-மூக்கு-தொண்டை மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்காகச் சென்றார்கள். “காதில் கண்டிப்பாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும்; இல்லாவிடில் கேட்கும் சக்தியை முழுமையாக இழக்க வேண்டும்' என்று கூறிவிட்டார். மேலும் புத்தி சுவா தீனத்தை இழக்கும் வாய்ப்பும் உண்டு என்று சொல்லிவிட்டார்.
காதில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை. உறவினர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. மருத்துவர் அறுவை சிகிச் சைக்கு நாளும் குறித்து விட்டார்.
சாரதாவிற்குக் கருகருவென நீண்ட அலை பாயும் கூந்தல். அந்த முடியை வெட்ட வேண்டும். சிகிச்சை முடிந்தபின்பு விளை வுகள் எப்படி இருக்கும் என்று முழுமையாகச் சொல்ல முடி யாது. அதே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுள் பல பேருக்குக் கேட்கும் சக்தி சற்று பாதிக்கப்பட்டிருக்கிறது; முடி விழ ஆரம்பித்திருக்கிறது. ஓரளவு நரம்புகள் பாதிப்பும் ஏற் பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை செய்து கொண்டால் உடல்நிலை நிச் சயம் பாதிக்கப்படும்; செய்து கொள்ளாவிட்டாலோ, முழுச் செவிடாகும் நிலை. எனவே, வேறு வழியின்றி அறுவை சிகிச் சைக்கு இணங்க வேண்டியதாயிற்று!
அறுவை சிகிச்சைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது சாரதாவிற்குச் சற்று உடல்நிலையும் சரியில்லை,

Page 170
322 இதோ ஒரு வெளிச்சம்
எனவே அறுவை சிகிச்சையைச் சிலநாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.
அறுவை சிகிச்சைக்காகக் குறிப்பிடப்பட்ட நாள் வந்தது. 'மருத்துவமனைக்குப் போகலாமா? இல்லை இரண்டு மூன்று நாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளச் சொல்லலாமா?’ என்று குழப்பத்தோடு இருந்த அந்தக் காலை நேரத்தில் கொழும்பி லிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
தெய்வநாயகம் தான் கூப்பிட்டார்.
'அறுவை சிகிச்சை முடிந்து விட்டதா? இல்லையா?”
'இன்னும் போகவில்லை' என்று கூறிக் குழப்பத்துக்கான காரணத்தைச் சொன்னார்கள்.
'மருத்துவமனைக்குப் போக வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம். ரத்து செய்யுங்கள்!"
9 9
ஏன்?
'முருகன் உத்தரவு தரவில்லை!" 'ஐயா, இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சாரதா விற்கு மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. அறுவை சிகிச்சை மிகவும் அவசியம்!”
'நான்தான் சொன்னேனே! முருகன் உத்தரவு தரவில்லை! வேண்டாம்'.
எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி!
தன் மகளின் வாழ்வை நிச்சயம் பாதிக்கக்கூடிய முடிவை ஒரு தந்தை எடுப்பாரா? அதுவும் மகள் சாரதாவின் வாழ்க்கை யில் ஒரு கொடிய விளைவை உண்டாக்க அவரே காரணமாக இருப்பாரா?
சாரதாவே பேசிப் பார்த்தார்; அவர் சம்மதிக்கவில்லை. முருகேசு தன் தந்தையிடம் வாதாடிப் பார்த்தார். அவர் அசை வதாகத் தெரியவில்லை. பொதுவாக மூத்த மகன் ஈஸ்வரன் சொன்னால் தெய்வநாயகம் கேட்டுக் கொள்வார் என்பது மற் றப் பிள்ளைகளுடைய நம்பிக்கை. அறுவை சிகிச்சையின் போது உடனிருப்பதற்காக வந்த ஈஸ்வரன் அப்பாவிடம் பேசினார்.

உத்தரவு தரவில்லை 323
முருகன் அனுமதி தரவில்லை! வேண்டாம்.'
கீறல் விழுந்த இசைத்தட்டாக ஒரே பதில்தான் வந்தது. ஈஸ்வரனிடம் அறுவை சிகிச்சையை விட்டுவிட்டு வேறு பல செய்திகளைப் பேச ஆரம்பித்து விட்டார். வியாபாரம், விலை நிலவரங்கள்!
சென்னையில் கும்பலாகக் கூடியிருந்த உறவினர்களிடம் குழப்பம்! திகில்!
என்ன செய்வது? இத்தனை வருடமாக அந்தப் பெரிய குடும்பத்தின் எந்த முக்கியமான முடிவையும் எடுப்பவர் தெய்வநாயகம் தான். அவரை மீறி எதுவும் நடந்ததில்லை.
இந்தச் சிக்கலான தழ்நிலையில் தெய்வநாயகம் ஒரு முடிவு எடுத்துவிட்டார்.
'ஒரு தந்தை இப்படிக்கூட முடிவெடுப்பாரா?' என்று மனதிற்குள் சிலர் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.
'அப்பா சொல்லிவிட்டார்! இதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி' என்று சாரதா முடிவை ஏற்றுக் கொள்ள 'கவலைப்படாதே! எந்த நிலையிலும் உன்னோடு நான் இருப் பேன்!' என்று அவருடைய கணவர் கே.சி. அருணாசலம் கூற ஒரு மேலோட்டமான அமைதி நிலவியது.
இதற்கிடையில் 'ஏன், மற்றுமொரு மருத்துவரிடம் சென்று கருத்துக் கேட்கக்கூடாது?’ என்ற எண்ணம் ஈஸ்வரனுக்குத் தோன்றியது.
வேறு மருத்துவரிடம் சாரதாவை அழைத்துச் சென்றனர். நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர் தெளிவாகவும், உறுதி யாகவும் கூறினார்.
"இதுமிகச் சிறிய பிரச்சினை. இதற்குக் காதில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இல்லை. மூக்கில் மிகச் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் அத்தனை சிக்கல்களும் தீர்ந்து விடும்!’ --
அங்கேயே, அடுத்தநாள் அரைமணி நேரத்தில் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. நடந்து முடிந்த கையோடு சாரதா

Page 171
3.24. இதோ ஒரு வெளிச்சம்
வீட்டுக்குத் திரும்பி விட்டார். சிகிச்சை முடிந்து, நான்கு ஆண்டு களாகின்றன. இன்றுவரை காது தொடர்பான எந்தச் சிக்கலு மின்றி முழுநலத்தோடு அவர் இருக்கிறார்.
முதல் அறுவை சிகிச்சை திட்டமிட்டபடி நடந்திருந்தால் இன்று சாரதா முடி கொட்டிய தலையுடனும், நரம்புத் தளர் வோடும் நடமாடிக் கொண்டிருந்திருக்கலாம். ஒருவேளை காது மாத்திரம் சுமாராகக் கேட்டிருந்திருக்கும்.
உரிய நேரத்தில் 'முருகன் உத்தரவு தரவில்லை' என்று தெய்வநாயகம் தடுத்திராவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும். அதே நேரத்தில் 'இரண்டாம் கருத்து' ஒன்று தேவை என்று ஈஸ்வரன் சொல்லாமலிருந்தால் என்னவாகியிருக்கும்?
இன்றைக்கும் தெய்வநாயகம் குடும்பத்தில் முடிவெடுக்கும் தழ்நிலை வரும்போது இந்த அனுபவம் மிகவும் உதவியதாக அமைந்திருக்கிறது.
'முடிவெடுக்கும்போது உள்ளுணர்வுக்கு ஒரு சிறப்பிடம் தரவேண்டும்’ என்று சொல்லுவார்கள்.
தெய்வநாயகத்தின் முடிவில் அவருடைய உள்ளுணர்வுக்கு ஒரு தனி இடம் இருக்கின்றது. ஆம், அவருடைய உள்ளம் முழுக்க முருகனே நிறைந்திருக்கிற காரணத்தால் அவருடைய முடிவுகளில் இறைவனின் அருளும் கலந்து வெளிவருவதை இந்த நிகழ்ச்சியில் நாம் காண்கின்றோம்!
 

33. இன்னும் ஏன்
உழைக்க வேண்டும்
'அவர் அன்று செய்த தியாகத்தால் இன்று நாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.'
'அன்று அவர் வியர்வை சிந்தியதால்தான் இன்று நாங் கள் வியர்க்க வைக்காத குளுகுளு அறைகளில் குடியிருக் கிறோம்.
'இன்றைக்கு இந்த ப்ரீஸ் நட்சத்திர ஹோட்டலின் செயல் பாட்டு இயக்குநராக நான் சென்னையிலும், இருபது கோடி ரூபாய் முதலீட்டில் கொழும்பில் செயல்படும் துணி ஆலையின் நிர்வாக இயக்குநராக இலங்கையிலும் மதிப்பான நிலையிலே இருக்கக் காரணம் அன்று எங்களுடைய தாத்தா தெய்வநாயகத்தின் ஒப்பற்ற தியாகமும், உழைப்பும், அறிவாற்ற லும் தான்' என்று உணர்ச்சி பொங்க, பெருமிதத்துடன் கூறும் கணேஷ், தெய்வநாயகத்தின் முதல் பேரன், ஈஸ்வர னின் முதல் மகன்.
கொழும்புக்கும், சென்னைக்கும் மாறிமாறிப் பறந்து பணியாற்றும் கணேஷ் ஓர் ஆற்றல் மிகுந்த இளைஞர். குடும் பத்திற்கே உரிய அடக்கம், எளிமை, பொறுமை, பொறுப் புணர்ச்சி ஆகிய அத்துணை நல்லியல்புகளையும் தன்னகத்தே கொண்ட கணேஷின் மனைவி மருதினி ஒரு மருத்துவர். கொழும்பு டிசொய்சா மகப்பேறு மருத்துவமனையில் சேவை யுணர்வோடு மகப்பேறு துறையில் சிறப்புப் பட்டம் பெறுவ தற்குப் பணியாற்றும் சிறந்த மருத்துவர். இவர்கட்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகள் அபிராமி, மீனா.
1983ம் வருடம்.
இலங்கை தன் வரலாற்றை இரத்தத்தால் எழுதிக் கொண்ட வருடம்!
எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் தாங்கள் கட்டிவைத்தக்

Page 172
326 இதோ ஒரு வெளிச்சம்
கோட்டைகள் கண்ணெதிரே தவிடு பொடியான காட்சியை நெஞ்சு வெடிக்கப் பார்த்து விட்டு சோகச்சின்னங்களாய்த் தமிழ் நாடு திரும்பிய ஆண்டு.
'70 வயதான தெய்வநாயகமும் தம் குடும்பத்தோடு எல்லாம் இழந்து வல்லநாடு வந்தவர்தான். அவர் முன்னால் இருந்தவை இரண்டு வழிகள்!
“வயதாகிவிட்டது! இருக்க வீடுகள் சென்னையிலும், வல்ல நாட்டிலும் இருக்கின்றன! விவசாய நிலம் இருக்கிறது. கொஞ் சம் பணமும் சேமிப்பில் இருக்கிறது. நான் வணங்கும் கோவில் கள் சுற்றியுள்ள ஊர்களிலே உள்ளன. பக்கத்திலேயே என்னை ஆட்கொண்ட திருச்செந்தூர் முருகன். ஏதாவது தொழிலைச் செய்து பிள்ளைகள் பிழைத்துக் கொள்வார்கள். 'முருகா! முருகா!' என்று கூறிக் கொண்டே மூச்சு உள்ளவரை வல்ல நாட்டிலே வாழ்ந்து விடலாம்!' இது முதல் வழி. தொண் ணுாற்று ஒன்பது சதவீத மக்களுக்கு இயல்பாக எண்ணத் தோன்றும் வழி!
இரண்டாவது வழி -
'இருப்பது ஒரு வாழ்க்கை! வேதனையில் தொடங்கிய அந்த வாழ்க்கை சாதனையை எட்டி இப்போது மீண்டும் வேதனைக்கு வந்திருக்கிறது. என் வாழ்க்கையை வேதனைப் பள்ளத்திலே புதைப்பதா அல்லது சாதனை மகுடத்திலே பதிப்பதா? என்பது தான் கேள்வி. ܝ -- --
சாதனையில் பதிப்பதென்றால் நான் இருக்க வேண்டிய இடம் இந்தியாவல்ல!
இலங்கை தான்!
விழுந்த இடத்தில்தான் எழவேண்டும்!
விதைத்த இடத்தில்தான் அறுக்க வேண்டும்!
இலங்கையில் வீடுகள் எரியல்ாம்! கட்டிடங்கள் தரை மட்டமாகலாம்! துப்பாக்கி குண்டுகள் வெடிக்கலாம், கத்திகளும் வீசப்படலாம்.
ஆனால் அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். வாழத் துடிக் கிறார்கள். வாழப்போகிறார்கள்.

இன்னும் ஏன் உழைக்க வேண்டும் 327
போகப்போகும் உயிர் எங்கு போனால் என்ன? எப்படிப் போனால் என்ன?
ஆனால் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியோடு போரா டிப் பார்த்துவிட்டால் எதை இழக்கப் போகிறோம்.
இனி இழப்பதற்கு என்ன தான் இருக்கிறது?
தன்னம்பிக்கையை இழக்காதவரை நாம் எதையுமே இழக்க வில்லையே!>
ஆகவே "இலங்கை செல்வது; இலக்கை எட்டுவது' என் பது இரண்டாவது வழி!
இரண்டாவது வழியை ஒரு சதவீதம் மக்களே தேர்ந்தெடுப் பார்கள்.
ஒரு மாறுபாடான மனிதராகவே வாழ்ந்துவிட்ட தெய்வ prTugsLib இரண்டாவது முடிவுக்கு வந்தார். 'நாம் எடுக்கும் முடிவு கள் தாம் நம் வாழ்க்கையை உருவாக்குகின்றன’ என்பது எவ் வளவு பெரிய உண்மை!
அன்றைக்குத் தம் 70ம் வயதில் தன்னம்பிக்கையோடு தெய்வநாயகம் இந்த முடிவையெடுக்காவிட்டால் இன்று இலங் கையிலும் கடல் கடந்த நாடுகளிலும் கொடிக்கட்டிப் பறக்கும் வி.ரி.வி. நிறுவனங்கள் என்னவாகியிருக்கும்? உலகம் முழுக்கப் பறந்து உயரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் அவருடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள் எங்கே இருந்திருக்கப் போகி றார்கள்! s
ஆகவேதான் கணேஷ் மனமுருகச் சொல்லுகிறார் எங்கள் தாத்தாவின் வியர்வைதான் இன்று எங்களுக்குப் பன்னீரைத் தெளித்துக் கொண்டிருக்கிறது!
'மூன்று மாதங்களுக்கு திட்டமிடுவதானால் கீரை வகை களை பயிர் செய்யுங்கள்;
ஒரு வருடத்திற்கு திட்டமிடுவதானால் தானியவகைகளைப் பயிரிடுங்கள்.
பத்து வருடத்திற்கு திட்டமிடுவதானால் பழமரங்களை உருவாக்குங்கள்.

Page 173
328 இதோ ஒரு வெளிச்சம்
நூறு ஆண்டுகளுக்குத் திட்டமிடுவதானால் நல்ல மனிதர் களை உருவாக்குங்கள்.'
என்பது ஒர் அற்புதமான சிந்தனை!
இந்தச் சிந்தனைக்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர் தெய்வநாயகம்.
தம்முடைய பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் அவர் வளர்த்த விதம், இன்றும் அவர்களோடு வாழ்ந்து வரு கின்ற விதம் நாம் அனைவரும் சிந்தித்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைக் கல்வியாகும்.
குழந்தைகளிடம் எவ்வளவு பாசம் உண்டோ அந்த அள வுக்குக் கண்டிப்பும் உண்டு சில செய்திகளில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க மாட்டார். குறிப்பாக விடுமுறை நாட்கள் வரும். குடும்பத்தில் யாராவது அடிக்கடி இந்தியா சென்றபடி இருப்பார்கள். எந்தக் குழந்தையும் இதைப் பயன்படுத்திக் கூடவே ஒட்டிக் கொண்டு பள்ளி விடுமுறையை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கழித்து விடமுடியாது. இரண்டு, மூன்று மாதங்கள் குழந்தைகள் வெளியிலே இருந்தால் திரைப் படங்கள் பார்த்தும், வெட்டிப் பேச்சுப் பேசியும், வீண் விளை யாட்டிலும் காலத்தைப் போக்கிவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு உண்டு, ஆகவே குழந்தைகள் நினைத்தபடி சுற்ற (UpL9-u 117gl.
ஆனால் அதே நேரத்தில் பேரக் குழந்தைகள் பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அந்த நாட்டியங்கள், நாட கங்களைப் பார்க்கத் தவறாது வந்துவிடுவார். குழந்தைகள் பேர்ட்டிகளில் வெற்றி பெற்று, விழாவில் அவர்கள் பரிசு பெறும் காட்சியைக் காண மிக்க ஆவலுடன் வந்து விடுவார். பேரக் குழந்தைகளுக்குத் தங்கள் நிகழ்ச்சியைக் காணத் தங்கள் தாத்தா வந்திருப்பது பெருமிதத்தை ஊட்டி பெரும் மகிழ்ச்சியை உணடாககும. میر
சின்னக் குழந்தையைக் கூட "வாங்க', என்று மரியாதை யாகவும், கனிவாகவும் அழைத்து அன்போடு பேசுவார். இந்த மரியாதையைத் தாத்தாவிடம் கற்றுக் கொண்ட குழந்தைகள், வளர்ந்த பின் மற்றவர்களை எப்படி நடத்துவார்கள்?

இன்னும் ஏன் உழைக்க வேண்டும் 329
கொழும்பு நகரத்தில், இறக்குமதி செய்யப்பட்ட ஜப் பானிய கார்களில் பள்ளிக்குச் செல்வதிலும், ஒரு நாட்டின் தலைநகருக்கே உரிய, பரபரப்பான வாழ்க்கையிலும் பழகி விட்ட குழந்தைகள், எப்போதாவது மிகச் சிறிய பொட்டல் கிராமமாகிய வல்லநாட்டிற்கு வந்து விட்டால் எப்படிப் பொழுதைக் கழிப்பார்கள்?
அப்போது மட்டும் தெய்வநாயகம் இருந்து விட்டால் அவர்களுக்குத் தனி மகிழ்ச்சிதான்! தமிழக மண்ணின், தன் சிறு பருவத்தைக் கடந்த மண்ணின் பெருமையைக் குழந்தைகளுக்குச் சொல்லி, கோவில்களுக்கு அழைத்துச் சென்று, கிராமப்புற மக்களோடு, பேச வைத்து, பழகவைத்து, வாழ்க்கை என்பது டயோட்டோ காரில் மட்டுமன்று, கட்டை வண்டியிலும் இருக் கிறது என்பதை அவர் உணர்த்துவதே ஓர் அழகுதான்!
கொழும்பு செட்டியார் தெருவிலே உட்கார்ந்து அவர் வியாபாரம் பேசும் அழகை, சீவலப்பேரி சந்தையிலே மாடு வாங்க பேரம் பேசுவதிலும் காணலாம்!
வல்லநாட்டை ஒட்டி ஒடுகின்ற தாமிரபரணி ஆற்றிலே தன் பேரக்குழந்தைகளைத் தம்கையாலே குளிப்பாட்டி, அவைகள் ஆற்று நீரில் விளையாடுவதைப் பார்க்கும் போது அவர் அடை கின்ற ஆனந்தத்தை அளவிடவே முடியாது.
அதனால்தான் அவருடைய பேத்தி பிரியா, எங்கள் தாத் தாவை எண்ணும் போது பெருமையாகவும் கொஞ்சம் வருத்த மாகவும் இருக்கிறது; காரணம் 'அவர் தமக்கென்று எதுவுமே வைத்துக் கொள்வதில்லை, அவருக்கு எதன் மீதும் நாட்டமில்லை; நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என் பது தான் அவருடைய ஆசை” என்று சொல்லுகிறார்.
'எங்கள் தாத்தா எப்போதுமே எங்களிடம் ஆசையாக இருப்பார்; அவருக்குக் கோபமே வருவதில்லை' இது முருகேஷ் வழிப் பேத்தி கலாவின் கூற்று.
பெரிய ஆலமரத்தின் ஆணிவேர் ஊற்று நீரை உறிஞ்சி புதிதாகத் துளிர்த்திருக்கும் இலைகளுக்கு அந்த நீரை அனுப்பி வைப்பது போல, பாசமே உருவான தெய்வநாயகம், மிகச் சின்ன வயதில் எந்தப் பாசத்திற்காக ஏங்கினாரோ, அதே

Page 174
330 இதோ ஒரு வெளிச்சம்
பாசத்தைத் தம் பேரக்குழந்தைகளின் மீது பொழிந்து, இனிய தழ்நிலைகளில் அவர்களைப் பாராட்டிப் போற்றி வளர்க் கிறார்.
1983-ஆம் வருடம்.
இனக் கலவரத்தையொட்டி தெய்வநாயகம் சில நாட்கள் சென்னையிலிருந்த நேரம். கணேஷ் சென்னையில் மாணவ ராகப் படித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் ஒர் உறவினர் தெய்வநாயகத்திடம் திருமணம் தொடர்பாகப் பேசுவதற்காக வந்திருக்கிறார். அதே அறையில் உட்கார்ந்திருந்த கணேஷ் அவர்கள் பேசுவதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். சில நிமிடங்கள் கடந்ததும் தெய்வ நாயகம் கணேஷைப் பார்த்து, 'கணேஷ் ஒரு பத்து நிமிடம் வெளியே இருக்கீங்களா, நாங்க கொஞ்சம் தனியா பேச வேண் டியிருக்கும்!’
அமைதியாக எழுந்து அறைக்கு வெளியே நின்ற இளம் கணேஷ"க்கு அவமானமாக இருந்தது! பெரியவர்களுக்கு இணையாகத் தன்னை எண்ணிக் கொண்டு அவர்கள் பேசும் போது உட்கார்ந்திருந்த தன் பெரிய மனித உணர்வுக்கு ஒரு சவுக்கடி விழுந்தாற் போன்ற வேதனை. இதயம் இலேசாக வலித்தது! தன் தாத்தா தன்னை ஏளனப்படுத்திவிட்டார் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை; மாறாக பெரியவர்கள் பேசும் போது அங்கே இருக்கக் கூடாது என்ற அடிப்படை இங்கிதம் கூடத் தனக்கு இல்லாமல் போய் விட்டதே' என்ற எண்ணம் தான் கணேஷை வாட்டியது!
வந்தவர் பேசி விட்டுப் போன பிறகு, தெய்வநாயகம் வெளியே வந்து இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்த கணேஷின் தோளின் மீது அன்பாகக் கையை வைத்து 'உங்களை ஏன் வெளியே போகச் சொன்னேன் தெரியுமா?’
கணேஷ"க்கு ஒன்றும் புரியவில்லை.
'வந்தவருக்குப் பொருளாதார வசதி சரியில்லை! திரு மணத்தின் போது தன் மகளுக்கு நகைபோடுவதில் கொஞ்சம் சிக்கல். தன் இயலாமையை என்னிடம் சொல்லி மணமகன் வீட்டினரோடு என்னைப் பேசிப் பார்க்கக் கேட்டுக் கொள்ள

இன்னும் ஏன் உழைக்க வேண்டும் 33
வந்தார். உங்களைப் பார்த்ததும், உங்கள் எதிரில் தன் இயலா மையைச் சொல்லக் கூச்சப்பட்டது போல எனக்குப் பட்டது. அதனால் தான் உங்களை வெளியே இருக்கச் சொன்னேன், உங்களுக்கு ஒன்னும் மன வருத்தமில்லையே!”
பதிமூன்று ஆண்டுகள் ஓடி விட்டன! ஆனால் இன்றைக் கும் தன் தாத்தாவை எண்ணும்போது இந்த நிகழ்ச்சி பசுமையாக மனத்தில் வந்து நிற்கும். எத்தனை பாடங்களை இதில் கணேஷ் கற்றுக் கொண்டார்? w
தன்னிடம் ஏன் தாத்தா விளக்கம் தரவேண்டும்? 'வெளியே போய் உட்கார்!’ என்று சொல்லி விட்டால் நான் எழுந்து வர வேண்டியவன் தானே! அதன்பிறகு அவர் என்னிடம் வந்து விளக்கம் கூறினால் பேரன் முகம் வாடிப் போயிருக்கிறது; அந்த வாட்டத்தைப் போக்க வேண்டும் என்ற பாச உணர்வு ஒரு பக் கம்! ஒரு நல்ல பண்பைப் பேரன் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற உணர்வு இன்னொரு பக்கம்.
தன்னிடம் பேச வருபவர் மனம் விட்டுப் பேசுவதற்கான
தழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, வந்தவர் கூறியதை முழு மையாகவும், பரிவாகவும் கேட்ட உயர்ந்த பண்பு மறு பக்கம்;
இறுதியாக நடந்த அனைத்தையும் கணேஷிடம் எடுத்துக் கூறி 'பேச வருபவர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள்; வருங்காலத்தில் நீ மற்றவர்களிடம் பேசும் போது, என்னைப் போல் அவர்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொடு’ என்ற நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்த அழகு ஒருபுறம்: 'பேசுவதைக் கேட்கத்தானே விரும்பினாய்; இதைத் தான் பேசினோம், இதில் நீ தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை, ஆனால் கற்றுக் கொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன’ என்று உணர்த்திய பாங்கு ஒரு புறம் என்று அன்று கணேஷ் அரைமணி நேரத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்!
திருநெல்வேலி நகரில் ஒர் இரவு!
சாலை குமாரசாமி கோயிலில் நாதசுவரக் கச்சேரி அற்புத மாக நடந்து கொண்டிருக்கிறது! வல்லநாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த தெய்வநாயகமும்,கணேஷ ம்ே காரைநிறுத்திவிட்டு இறங்கிக் கச்சேரியைக் கேட்க வருகிறார்கள், கச்சேரியின் இசை யில் மயங்கி, மக்கள் தலைகளை ஆட்டிச் சுவைத்துக் கொண்

Page 175
332 இதோ ஒரு வெளிச்சம்
டிருக்கிறார்கள். மேடையிலிருந்த இசைக் கலைஞர்களையே பார்த்துக் கொண்டிருந்த தெய்வநாயகத்தின் முகத்தில் திடீரென ஒரு மகிழ்ச்சி, பரபரப்பு. காரணம், தவில் வாசித்துக் கொண் டிருந்த இரு கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்; இவ ருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள், 'நமது ஊர்க் காரர்கள் இங்கே வந்திருக்கிறார்களே' என்ற மகிழ்ச்சியும், உடனே அவர்களுக்கு ஏதேனும் ஒரு வெகுமதியைத் தரவேண் டும் என்ற துடிப்பும் ஒருங்கே உருவாகி விட்டன. ‘அந்த இரு வருக்கும் எப்படிப் பரிசளிப்பது?’ என்று கொஞ்ச ந்ேரம் அவருக்குப் புரியவில்லை.
ஏற்பாடு செய்தவர்களிடம் தெரிவித்தால் கச்சேரியை நிறுத்துவார்கள்; ஒலி பெருக்கியில் விளம்பரம் செய்வார்கள்! தான் நன்கொடை வழங்கப்போவது எல்லோருக்கும் தெரியும்; இந்த விளம்பரம் அவருக்குப் பிடிக்கவில்லை; மேலும் மேடை யிலிருந்த அத்தனைக் கலைஞர்களில் இருவருக்கு மட்டுமே சிறப்புச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். விளம்பரப் படுத்திவிட்டுச் செய்தால் மற்றவர் மனம் புண்படும்;
மிகவும் குழம்பிப் போயிருந்தார் தெய்வநாயகம். "தாத்தா, நம் முகவரியை ஏற்பாடு செய்தவர்களிடம் கொடுத்து, அந்த இருகலைஞர்களையும் நாளைக்காலை நம் வல்லநாட்டுக்கு வரச் சொல்லி விட்டுப் போகலாம். நாளை நம் வீட்டில் அவர்களுக்கு விருந்து கொடுத்து விட்டுப் பரிசும் தரலாமே!’ என்று கணேஷ் ஒரு தீர்வு கொடுத்தார்.
'இதுவும் ஒரு நல்ல திட்டம் தான்' என்று கூறியபடி காரில் உட்கார்ந்த தெய்வநாயகத்தால் காரைக் கிளப்ப முடியவில்லை.
ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தால், அதை அப்போதே செய்தாக வேண்டும். ஒத்திப் போடுவது - பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வைப்பதெல்லாம் அவர் அகராதியில் கிடையாது. 'நாளை என்ன நடக்குமோ? கொடுக்க வேண்டுமென்றால், அதை அந்த உணர்வு உள்ள போதே கொடுத்து விடுவது நல்லது' என்று எண்ணும் தெய்வ நாயகம், இரு காகித உறைகளை எடுத்து அவற்றில் ரூபாய் களைப் போட்டு, உறைகளை நன்கு மடித்துக் கொண்டார்.

இன்னும் ஏன் உழைக்க வேண்டும் 333
இசைச் சுவைஞர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மெல்ல ஒரமாக நடந்து மேடைக்கருகில் வந்தார்.
நாதசுவரக்கலைஞர்கள் இசைக்கும் போது, தவில் கலை ஞர்கள் இளைப்பாறும் அந்தச் சிறு இடைவெளி நேரத்திற்காகக் காத்திருந்தார். அந்த இடைவெளியில் அருகே சென்று, கை கூப்பி, நலம் விசாரிப்பது போலக் கை குலுக்கினார். இரு வரின் கைகளையும் குலுக்கும்போது காகித உறைகள் இடம் மாறின! யாரோ தெரிந்தவர் கலைஞர்களைப் பாராட்டுகிறார் போல இருக்கிறது!’ என்று மற்றவர்கள் எண்ணிக் கொண் டிருக்கும்போதே, சுவடு தெரியாமல் தம் காருக்குத் திரும் பினார். பணம் கை மாறிய செய்தி மேடையிலிருந்த மற்ற கலைஞர்களுக்குக் கூடத் தெரியாத அளவுக்குப் பக்குவமாக நடந்தேறியது.
பணம் சம்பாதிப்பதில் காட்டும் வேகத்தை மற்றவர் களுக்குக் கொடுப்பதிலும் காட்டும் தம் தாத்தாவின் ஆற்றலைப் பார்த்து கணேஷ் பெருமிதத்தால் நிரம்பி நின்றார். அந்த இசைக் கலைஞர்களுக்குக் கொடுப்பதால் இவருக்கு என்ன லாபம்?. இவர்தான் கொடுத்தார் என்ற விளம்பரமோ, அதற்கான பாராட்டோ கூட இல்லாமல் அன்பளிப்புகளை வழங்கிய அந்த மாண்பு தெய்வநாயகத்திடம் கணேஷ் கற்றுக் கொண்ட மற்றுமொரு பாடம்.
வருடத்திற்கு இருமுறை ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தி லிருந்து தேர் நகரை வலம் வரும். மாலை 7.00 மணிக்கு தேர் வெளியே கிளம்பினால் விடியற்காலை 4.00 மணி கோயிலை வந்தடையும். மாலை தொடங்கி, இரவு முழுக்கவும், விடியற் காலை வரை தேரின் பின்னாலேயே செல்லும் வழக்கமுடை யவர் தெய்வநாயகம். எண்பத்து மூன்று வயதைத் தொட்டு விட்டாலும் 12மணி நேரம் இடைவிடாமல் தேரோடு செல்லு வது என்பது கடினமான செயலல்லவா! கார் சற்றுத் தள்ளிப் பின்னால் வரும். கால் வலித்தால் கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறட்டுமே என்று மடக்கு நாற்காலியோடு பணியாள் ஒருவர் உடன் வருவார். ஆனால் அந்தக் காருக்கும் வேலை யில்லை; நாற்காலிக்கும் வேலையில்லை; அவையும் ஊர்வலத் தில் இருக்கும்; அவ்வளவே!

Page 176
334 இதோ ஒரு வெளிச்சம்
'முருகன்' என்று வந்துவிட்டால் 'காலாவது; வலியாவது; தளர்வாவது; சோர்வாவது! ஒன்றுமே கிடையாது!’
அவர் இப்படித் தேருடன் செல்லும் போதெல்லாம் பிள்ளைகளுக்கு பதட்டமாக இருக்கும். யாராவது அவருடன் இருந்தாக வேண்டும் என்று தீர்மானிப்பார். எப்போதும் தேர் உலாவின் போது கணேஷ் உடன் செல்லுவார்.
ஊர்வலம் முடிந்து கோயிலை அடைந்தவுடன் ஒவ்வொரு வரும் பூசை முடித்துக் கொண்டு திரும்புவார்கள். ஆனால் சுமார் 20 பேர் மட்டும் அங்கேயே இருப்பார்கள். யானையை ஒட்டி வந்த பாகன், நாட்டியம் ஆடியவர்கள், பந்தம் ஏந்திய வர்கள், இசைக்கலைஞர்கள், மின்சார ஒலி, ஒளி அமைப் பாளர்கள் என்று அந்தத் தேர் நகரக் காரணமாக இருந்து, விழா பொலிவு பெறுவதற்காகப் பணியாற்றிய காவல் துறை யினர், கலைஞர்கள், ஊழியர்கள் ஆகியோர் இருப்பார்கள்.
தொடர்ந்து காலை ஏழுமணி வரை தெய்வநாயகம் பொறுமையாக உட்கார்ந்து அவர்களுக்குக் கொடுத்த முன் பணம், தருவதாக ஒப்புக் கொண்டதொகை, இனி தரவேண்டிய தொகை எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து ஒரு தாம்பாளத் தட்டில் பணம், வெற்றிலை, பழம் ஆகியவற்றை வைத்து மரியாதையுடன் முறையாக அவர்களை வாழ்த்தி வழங்குவார். பல ஆண்டுகளாக இதே கலைஞர்கள் தான் வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சன்மானத்தைப் பெற்றுச் செல்லுவார்கள்.
உடனிருப்பவர்களுக்கோ "இரவு முழுக்க கண் விழித்த களைப்பு இருக்கும்; கண்கள் சிவந்து போய், மிளகாய்ப் பொடி தூவியது போன்று எரிச்சலாக இருக்கும். பின்னாலேயே நடந்த தால் உடல் சோர்வு ஒரு புறம் வாட்டும். விட்டால் வீட்டிற்கு ஒடிப்போய்க் கொஞ்சநேரம் கண்ணயரலாம் என்றிருக்கும். அந்த நேரத்தில் தெய்வநாயகம் கணக்குப் பார்த்துக் கொண் டிருப்பார்! •
“ஊர்வலம் தான் முடிந்தாகிவிட்டதே! இனிமேல் எதற்கு வேலை? கோவில் மேலாளர் இருக்கிறார். கணக்குப் பார்த்துக் காசு கொடுத்து விட்டுக் கணக்கெழுதி வையுங்கள்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதானே! இவர்

இன்னும் ஏன் உழைக்க வேண்டும் 335
கிளம்பினால் நாமும் வீட்டுக்குப் போகலாம்!' என்ற எண்ணம் சுற்றியுள்ள ஒரு சிலரின் நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும்.
இரவு முழுக்க உடலுழைப்பு நல்கியவர்கள், அந்தத் தொழி லாளர்கள். அவர்கள் உழைக்காவிட்டால் தேர் வலமுமில்லை; ஊர்வலமுமில்லை, அவர்கள் பாடுபடாவிட்டால் கொழும்பே வாய்பிளந்து, விழி மிரளப் பார்க்கும் அழகான விழா இல்லை. பக்திக்கரகப் பின்னால் வருகிற பலருக்கிடையில் வாழ்க்கைத் தேர் ஒட உழைக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு இந்த ஊர்வலம் சில நாள் சோறு போடும் ஒரு நிகழ்ச்சி, அவர் களுக்கு இது தொழில் முருகனருள் முழுக்கப் பெற்ற அந்த உயர்ந்த ஆன்மாவின் திருக்கரங்களால் வெகுமதியை வாங்கிக்
கொள்ளும் போது அவர்கள் நெஞ்சில் ஒரு பெரிய நிறைவு!
வேலை முடிந்தவுடன் காணாமல் போய்விடாமல் கடைசி மனிதன் அகலும் வரை இருந்து கனிவுடன் வழியனுப்பும் தெய்வ நாயகத்தின் அந்தப் பண்பு தொழிலாளர்கள் மனத்தில் ஒரு பெரிய நிறைவை உண்டாக்குவதில் வியப்பில்லை. அந்த நிறைவை அளிப்பது பணம் மட்டுமல்ல; அதைவிட அதிக நிறைவை அளிக்கும் ஐயாவின் பாச உணர்வே!
எந்திர கதியில் இயங்கும் இன்றைய உலகில், அதுவும் எந்திரமாகவே மாறிவிட்ட அமெரிக்காவில் நியு ஹெம்ப்ஷயர் பல்கலைக்கழகம் தன் எம்.பி.ஏ. வகுப்புக்களில் சொல்லித்தராத பாடங்கள் பல. கணேஷ் தன் தாத்தா தெய்வநாயகத்திடம் இத்தகைய நிகழ்ச்சிகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்.
அந்தக் குடும்பத்தில் எப்போதும், யாராவது ஒருவர் எதற் காகவாவது வெளிநாடுகளுக்குப் பறந்து போவது அடிக்கடி நிகழும் செயலாகி விட்டது.
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், எங்கே பயணம் சென்றாலும் ஈஸ்வரன் முதல் கடைசிப் பேரக் குழந்தை வரை தெய்வநாயகத்தின் இல்லத்திற்குச் சென்று, அவருடைய வழி பாட்டு அறையில் இறைவனை வணங்கிவிட்டு, அவருடைய திருப்பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்று, நெற்றியில் அவர் கரங் களால் திருநீறு பூச, விடைபெற்றுக் கொண்டு செல்வது வழக் கம்!
சில பயணங்கள் விடியற்காலை விமானப் பயணங்களாக

Page 177
336 இதோ ஒரு வெளிச்சம்
அமைந்து விடுவது உண்டு. எடுத்துச் செல்ல வேண்டியவற்றைப் பெட்டிகளில் நிரப்பிவைத்து உறங்கப் போகுமுன் நினைப்பார் கள். 'விடியற்காலை 5.00 மணிக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும். அவரிடம் ஆசிபெற்று 5.30க்கு அங்கிருந்து விமான நிலையத்திற்குப் புறப்பட்டுப் போனால் சரியாக இருக்கும்.'
இவ்வாறு எண்ணும் போதே மனத்தில் ஒரு வலி தோன் றும். நாம் ஐந்து மணிக்குப் போவதென்றால், அப்பா காலை மூன்று மணிக்கே எழுந்து விடுவாரே; அவருடையத் தூக்கம் கெடுமே!
சில விஷயங்களில் தெய்வநாயகம் பிடிவாதம் பிடித்தால்
யாரும் மாற்ற இயலாது. அவற்றில் ஒன்று தான் இந்த வழி யனுப்பும் முறை.
விடியற்காலை மூன்று மணிக்கே எழுந்து, தன் கடமைகளை முடித்து, வழிபாட்டையும் முடித்துத் தம் பிள்ளைகளுக்காகக், குடும்பத்தினருக்காகப் பாசத்தோடு காத்திருப்பது அவர் வழக்கம்.
'நமக்கென்ன ஆகப்போகிறது? பெரியவரின் ஆசியும், முருகனின் அருளும் இருக்கும்போது நம் பயணம் நல்லபடி யாகத் தானே முடியப் போகிறது. நம்மை வழியனுப்ப இந்த வயதில் இவர் இவ்வளவு காலையில் எழுந்து தன் உடலை வருத்திக் கொள்ள வேண்டுமா?’
'தம் குழந்தைகள் மிகப் பாதுகாப்பாகச் செல்ல வேண் டும்; நல்ல உடல்நலத்தோடு திரும்பவேண்டும்; அவர்கள் எடுத்
 

இன்னும் ஏன் உழைக்க வேண்டும் 337
துக் கொண்ட வேலை சிறப்பாக முடிய வேண்டும்’ என்று எல்லா தெய்வங்களையும் அந்த ஆற்றல் மிகுந்த விடியற்காலை வேளையில் வேண்டி ஆசிகூறி, அன்பு நெக்குருக, நெற்றியில் முத்தமிட்டு அனுப்பும் அவருடைய பாச உணர்வை யாரால் நிறுத்த முடியும்? எதனால் தடுக்க முடியும்?
அப்பாவின் உறக்கம் கெடுகிறதே? உடல் நிலை பாதிக் கப்படுமே?’ என்ற பிள்ளைகளின் பதட்டமும் பிள்ளைகள் பாதுகாப்பாகச் சென்று வர வேண்டுமே!’ என்ற அப்பாவின் ஆதங்கமும்தான் அந்தக் குடும்பத்தின் பெருமைக்கு மெருகூட்டு கின்றன. மன்த இனம் போற்றிக் காக்க வேண்டிய 'குடும்பப் பாசம்’ இங்கே தான் மகுடம் தட்டிக் கொள்கிறது.
அடிக்கடி கணேஷ் தனக்குள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி.
f 'இன்னும் எதற்காக, யாருக்காக தாத்தா உழைக்க வேண் Guid?'''

Page 178
34. அழையா விருந்தாளி
'காட்ஸ் எலெக்ட்ரானிக் சென்டர்’ தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் பாளையங்
கோட்டையை நெருங்கிச் செல்லும்போது நெடுஞ்சாலையின் அருகில் உள்ள ஒரு கடை.
இந்தக் கடையில் பொதுத் தொலைபேசியை வைத்து, உள்நாடு அயல் நாடுகட்கு, தொலைபேசியில் பேச வசதி செய்து தரும் தொழிலை நடத்தும் இளைஞர் காட்ப்ரே'
வல்லநாட்டில் தொலைபேசி வசதி உண்டு. இருப்பினும் மின்னணுத் தொலைபேசிச் சாதனமாக அது இல்லாத காரணத் தால், அங்கிருந்து தொலைதூரத் தொடர்பு கொள்ளுதல் மிக வும் சிக்கலான செயல்.
தெய்வநாயகத்தால் தொலைபேசி இல்லாமல் இருக்கவே இயலாது. அருகில் செலுலர் தொலைபேசியோ, ஒயர்லெஸ் சாதனமோ எங்குச் சென்றாலும் உடனிருக்கும். பிள்ளைகளு டனும், தம்முடைய நிறுவனத்தோடும் தொடர்பு கொண்டு அன்றாடம் பேசிவிடுவார்.
வல்ல நாட்டில் இந்த வாய்ப்பில்லாததால் தம் காரில் தம் செயலர் குழந்தைவேலுவையும் ஏற்றிக் கொண்டு பாளை யங்கோட்டைக்கு வரும் போது, சாலையில் முதலில் தென்பட்ட தொலைபேசி மையம் காட்ப்ரேவின் காட்ஸ் எலெக்ட்ரானிக் சென்டர் தான். ஒரு சமயம் வல்ல நாட்டில் தங்கியிருந்த சில நாட்களில் மூன்று முறை அந்த நிலையத்திலிருந்து அவர் இலங்கையோடு தொலைபேசியில் பேசியிருப்பார். அதன்பின் இலங்கை வந்து விட்டார்.
சில நாட்கள் கழிந்தன.
தொலைபேசி நிலையம் நடத்துவது மட்டுமல்லாமல் பாது
 

அழையா விருந்தாளி 39
காப்பு விளக்குகளையும் விற்பனை செய்யும் காட்ப்ரே ஒரு முறை வியாபார நோக்கோடு கொழும்பு சென்றார்.
அந்த இளைஞருக்கு அதுதான் முதல் இலங்கைப் பயணம். விமானத்திலிருந்து இறங்கி, சுங்கப் பரிசோதனைகளையெல் லாம் முடித்துக் கொண்டு, வெளியே வருமுன் ஒரு தயக்கம்.
இலங்கையில் எங்கே தங்குவது? யாரைப் பார்ப்பது?
தன்னுடைய தொலைபேசி மையத்திலிருந்து மூன்று முறை கொழும்பிற்குப் பேசிய தெய்வநாயகத்தின் நினைப்பு வந்தது. "எதற்கும் உதவும்' என்று நினைப்போடு குறித்துக் கொண்டு வந்த அவருடைய தொலைபேசி எண்ணைச் சுழற்றினார்.
காட்பரே யார் என்று முதலில் தெய்வநாயகத்துக்குத் தெரியவில்லை. ஆனால் தொலைபேசி நிலையத்தைப் பற்றிச் சொன்னவுடன் அவருக்கு நினைவு வந்து விட்ட்து. ‘ஐயா, நான் இதுவரை இலங்கை வந்ததில்லை; எங்கே தங்குவது என்று தெரியவில்லை. கொஞ்சம் பாதுகாப்பாகவும் அதிக வாடகையாக இல்லாமலும் உள்ள ஒரு ஒட்டலாகப் பார்த்துச் சொல்லுங்களேன்!'
இலங்கையின் மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம்' என்று அவருக்குத் தெரிய நியாய மில்லை. காட்ப்ரேவைப் பொறுத்த வரையில் தெய்வநாயகம் தன் நிலையத்துக்கு வந்த வாடிக்கையாளர்.
சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு தெய்வநாயகம் அனுப்பிய கார் வந்தது. அதில் ஏறிக் கொண்ட காட்ப்ரே நேராகச் சென்றது தெய்வநாயகத்தின் இல்லத்திற்குத் தான். “முருகா, முருகா! வாங்க! வாங்க!' என்று இருகரம் கூப்பித் தன்னை தெய்வநாயகம் வரவேற்றபோது காட்ப்ரேவிற்குத் தன்னை நம்பவே முடியவில்லை.
"வேறெங்கும் தங்க வேண்டாம்; என் வீட்டிலேயே தங்குங் கள்’ என்றதும் காட்ப்ரேவால் அந்த அன்பு வேண்டுகோளை மறுக்க இயலவில்லை.
மூன்று நாட்களும் அங்கேயே உணவு.

Page 179
இதோ ஒரு வெளிச்சம்
"யார், யாரைப் பார்த்தால் தன்னுடைய பாதுகாப்பு விளக்கை விற்கமுடியும்' என்று ஒரு பட்டியலையே தெய்வ நாயகம் காட்ப்ரேவிற்குக் கொடுத்தார். "அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும்?' என்று கூட சொல்லிக் கொடுத்தார்.
அத்துடன் நிற்காமல் 'நீங்கள் கிறித்தவர், எங்கள் வீட்டில் சைவ உணவு மட்டும் தான் சாப்பிடுவோம், உங்களுக்கு அசைவ உணவு வேண்டுமென்றால் சொல்லுங்கள் நான் உங்களை வெளியே அழைத்துச் சென்று அசைவ உணவு வாங்கித் தரு கிறேன்' விக்கித்துப் போய் நின்றார் காட்ப்ரே.
‘விருந்தே புதுமை' என்று தொல்காப்பியம் சொல்லு கிறது. ஏற்கனவே அறிமுகமானவர்களை உபசரிப்பதில் பெரு மையும், வியப்புமில்லை. ஆனால் நமக்குத் தெரியாதவர்கள். நமக்கு வேறு எவ்வகையிலும் உதவியாக இருக்க முடியாதவர் களுக்கு அளிக்கும் உபசரிப்பே விருந்து என்ற பழந்தமிழ் மரபுப் படி வாழ்பவர் தெய்வநாயகம்.
தூத்துக்குடியிலிருந்து ஒர்நலா உயர்நிலைப்பள்ளி (தற் போது பி.எம். ஒ. லாசல் மேல்நிலைப் பள்ளி) ஆசிரியர்கள் ஐவர் இலங்கைக்கு ஒரு சுற்றுப் பயணம் செல்கிறார்கள். ஆசி ரியர் மட்டும் தெய்வநாயகத்திற்கு அறிமுகமானவர் - உறவினர். மற்ற நான்கு ஆசிரியர்களும் கிறித்தவர்கள். இலங்கை வந்த எட்டாம் நாள் காலை அவருடைய வீட்டிற்குள் நுழைகிறார் கள். சாம்பிராணி மணம் வீடு முழுக்க விரவிக் கிடக்கிறது. எல். ஆர். ஈஸ்வரியின் அம்மன் பாடல் ஒலிப்பதிவு நாடா விலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. பூஜை அறையிலிருந்து மார்பில் சந்தனமும் நெற்றியில் விபூதியும், குங்குமமுமாக தெய்வநாயகம் வெளியே வந்து அன்போடு வரவேற்றதைக் கண்டவுடன், ஆசிரியர்கள் மனம் குளிர்ந்து போய்விடுகிறது. ஏழு நாட்களாகத் தேநீரைக் குடித்துச் சலித்துப் போயிருந்தவர் களுக்குச் சூடான காபி வந்ததும் புத்துயிர் வந்த உணர்வு!
'ஒரு பெரிய கோடீசுவரரா இவர்: இவ்வளவு எளிமையாக, அன்போடு பழகுகிறாரே!' என்று வியந்தபடியே பேசிய ஆசிரி யர்கள் அவரோடு ஒன்றி விடுகிறார்கள். காலைச் சிற்றுண்டி யின் சுவையோ அற்புதம், மீண்டும் அவர் வரச் சொன்னதால் மாலையில் அவரை மீண்டும் நான்காம் குறுக்குத் தெருவில் உள்ள அவருடைய கடையிலே.சந்திக்கிறார்கள். தெய்வநாயகத்

இதோ ஒரு வெளிச்சம்
கொழும்பு கடற்கரையில் - காலை உலாவின் போது நலம் விசாரிக்கும் நண்பர்கள்
+تخلیق
వైన్స్త
T་ཁ་9 శొ=
கோயில் கணக்குகளைச் சரிபார்க்கிறார்
- உடன் நடராசா மாஸ்டர்

Page 180
ரு வெளிச்சம்
இதோ ஒ
ராஜதுரை.
இலங்கை ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க தேசபந்து விருதினை வழங்குகிறார்.
 
 
 
 

வி.ரி.வி. அறக்கட்டளையின் மாணவியருடன் கலைச்செல்வி
அறக்கட்டளைப் பரிசளிப்பு விழா

Page 181
f இதோ ஒரு வெளிச்சம்
அபிஷேகப் பொருள்கள் - ஊர்வலமாக வருகின்றன.
 
 
 
 
 

இதோ ஒரு வெளிச்சம்
- - 萎 பார்வையாளர் மேடையில் சிற்பி கணேசன்,
உவரி கிருபாநிதி - யோகராஜன்

Page 182
A al ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் சிவசங்கரம் பிள்ளை - பிரதமர் - பிரேமதாசா - வி.ரி.வி.- சோமசுந்தரம் பிள்ளை
* 晶
சதாபிஷேக விழா - திருச்செந்தூர் 1991
蜀
阜轟
 
 
 
 

嗣
'டி.
இதோ ஒரு வெளிச்சம்
தெய்வநாயகத்துடன் நூல் ஆசிரியர் தி.க. சந்திரசேகரன்.

Page 183
இதோ ஒரு வெளிச்சம்
ثم لأن
)¿ o ,
ம் முந்திக் கொண்டு
ா யாரைசு கனடாலு
ண்பாளர்.
四 உயரிய
கி
வணங்கு
இளையோர், முதியோ
ன்
 
 
 
 
 
 
 
 

அழையா விருந்தாளி
தின் விருந்தோம்பல் அவர்களை இந்தியா திரும்பிய பின்னும் சிந்திக்க வைக்கின்றது; பேசவைக்கின்றது.
கொழும்பு மண்ணில் காலை வைக்கும் இந்தியர்கள் இவர் கண்ணில் பட்டுவிட்டால், இவர் இல்லத்திற்கு வராமல், விருந் துண்ணாமல் போவதென்பது அனேகமாக இல்லாத ஒன்று.
எத்தனை அறிஞர்கள், பக்திமான்கள், கலைஞர்கள், சொற் பொழிவாளர்கள் இவருடைய விருந்தோம்பலில் திளைத்திருக் கிறார்கள்' என்று பட்டியலிட்டால், அந்தப் பட்டியலுக்கு முடிவே இருக்காது.
இலங்கையில் சிங்களர்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அரசை நடத்துகிறார்கள்; ஆனால் எந்தக் கட்சி அரசை நடத்தி னாலும் தெய்வநாயகம் தனியாக ஓர் அரசை இணையாக நடத்து கிறார். அந்த அரசு அன்பால் நடக்கும் அரசு. அதில் அனை வரும் அவருடைய அன்புக்கு அடிமைகள்' என்று மனம் நெகிழ்ந்து சொன்னவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ்.
'யார் என்று தெரியாமலேயே வருபவர்களுக்கெல்லாம் விருந்தளிக்கிறீர்களே, நீங்கள் இந்தியா போகும் போது யாரா வது உங்களை ஒரு மரியாதைக்காவது வந்து பார்க்கிறார் களா?' என்று அவரைக் கேட்டால் வருகின்ற பதில்: "மற்ற வர்கள் பதில் விருந்தளிக்க வேண்டும்; நன்றி பாராட்ட வேண் டும்" என்பதற்காக நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. நான் பிறப்பால் இந்தியன் தமிழன்; இந்த இலங்கை நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாடு விட்டு இங்கு வரும் என் இந்தியனை, தமிழனை ஒரு மூத்த சகோதரன் என்ற முறையில் நான் உபசரிக்க வேண்டியது என் கடமை என்று நினைக்கிறேன். முருகன் எனக்கு வேண்டிய அளவு கொடுத்திருக்கிறான். வருபவர்களுக்கு முருகன்தான் என் மூலம் கொடுக்கிறானே ஒழிய நான் எதுவும் செய்வதில்லை!
எண் சாண் உடம்பில் ஒரு சாண் இடத்தைப் பெற்றிருப்பது வயிறு. ஒரு மனிதன் ஓடாய் உழைப்பது இந்த வயிற்றுக்காகத் தான். ஒருவேளை, நூறு மனிதர்களில் பத்து பேருக்குக் கடவுள் வசதி, வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கலாம்; ஆனால் தொண் ணுாறுபேர் ஒரு வேளை சோற்றுக்கு நெற்றி வியர்வை நிலத்தில்
37

Page 184
350 . . . . இதோ ஒரு வெளிச்சம்
விழப் பாடுபடுவதை அன்றாடம் பார்க்கிறோம். 'எரியாத அடுப்பும் எரிகின்ற வயிறு'மாக வாழ்பவர்கள்தாம் எத்தனை பேர்! இன்றைக்குப் பல்லாயிரம் பேருக்கு அன்போடு உண வளிக்கும் வள்ளல் தெய்வநாயகம் ஒரு காலத்தில் ஒரு வேளை உணவுக்குப் பட்டபாடு சாதாரணமானதா என்ன? நாள் முழுக்க உழைக்கும் உழைப்பாளிகளின் பசியை நன்கு அறிந்த காரணத்தால், அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவளிப்பதையே பெருமையாக எண்ணுபவர் தெய்வநாயகம்.
ஆரம்ப நாட்களில் அவருடைய மளிகைக் கடையில் 25 ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் அவரோடு உழைத்த அனவரதம்பிள்ளை இப்போது பன்னம்பாறையில் இருக்கிறார். அந்த நாட்களை அவர் மனம் அசை போடுகிறது.
'கடையில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் ஒரே இடத்தில் ஒன்றாக சாப்பாடு தெய்வநாயகத்தின் இலையில் என்ன உணவு இருக்குமோ அதுதான் கடையில் - கடைநிலை யில் இருக்கும் வேலைக்காரன் இலையிலும் இருக்கும். முத லாளி என்பதால் ஒரு கூடுதலான பொரியலோ அல்லது சிறப் பான சாம்பாரோ அல்லது அதிகமாக பாலைச் சேர்த்து ஒரு காபியோ அவருக்குக் கிடையாது! எல்லோரும் என்ன சாப்பிடு கிறார்களோ அதுதான் தெய்வநாயகத்துக்கும்; அல்லது தெய்வ நாயகம் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் அனைவருக் கும்!"
ஆவுடையப்பன் கண்டு மனம் நெகிழ்ந்த ஓர் அனுபவம். கொழும்பிலிருந்து கதிர்காமம் செல்ல முடியாதவர்கள் தங்களு
 

அழையா விருந்தாளி 35
டைய வேண்டுதலைச் செலுத்துவதற்காகக் கூட்டமாக ஒரு புண்ணியத் தலத்துக்குச் செல்வது வழக்கம். அப்படிப்பட்ட கூட்டத்தில் ஏழை, பணக்காரர்கள் என்று அனைத்துதரப்பட்ட மக்களும் இருப்பார்கள். அவர்களுக்கு விருந்தளிக்கும் பொறுப் பினை மகிழ்வுடன் ஏற்பார் தெய்வநாயகம். வந்திருந்த அனை வரும் சாப்பிட்ட பின் கடைசியாகச் சாப்பிடும் மனிதர் அவ ராகத் தான் இருப்பார். பந்தி நடந்து கொண்டிருக்கும்போது, அவர் விசாரிப்பது ஏழை மக்களாகத்தானிருக்கும். 'விருந்து அளிக்கும் மனிதர் பெரிய மனிதர்களை மட்டுமே கவனித்துக் கொண்டார். நம்மைக் கண்டு கொள்ளவில்லை' என்ற தாழ்வு உணர்வும் குறைவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் களை அன்போடு கவனிப்பது அவர் வழக்கம். வல்லநாட்டில் நிலத்தில் நடவு நடும் காலங்களில் தெய்வநாயகம் இருந்து விட் டால் அந்தச் சிறப்பே அலாதிதான். தெய்வநாயகம் முருகனை வேண்டிக் கொண்டு முதல் நாற்றை நடுவார். பண்ணையாட் கள் குலவையிட்டு நடவு செய்வார்கள்.
தெய்வநாயகத்தின் தனிச் செயலர் குழந்தைவேலுவின் கண்காணிப்பில் அந்த நடவு நிகழ்ச்சி நடக்கும். பொதுவாக எந்த ஒரு வேலையும் முதலாளி அங்கிருந்தால் இயல்பாக நடக் காது! சிரிப்பும், மகிழ்ச்சியும் மறைந்து போய் முதலாளி நிற் கிறாரே என்ற உணர்வில் உழைப்பவரின் முகங்கள் இறுகிப் போயிருக்கும். ஆனால் தெய்வநாயகம் இருந்து விட்டால் வேலையாட்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அன் றைக்கு நண்பகல் அவர்களுக்குச் சுவையான விருந்து கிடைக் கும் என்பது மட்டுமன்று; அவர்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் கூலிக்கு மேல் பத்தோ, பதினைந்தோ அதிகமாகக் கிடைக்கும். கணக்குப் பிள்ளை என்கின்ற வகையில் குழந்தைவேலு முத லாளியிடம் 'இவ்வளவு அதிகம் செலவாகிறது' என்று குறிப் பிடுவது வழக்கம்.
'நம்முடைய நிலத்தில், நமக்காக இறங்கி வேலை செய் பவர்கள் அவர்கள். அவர்கள் வயிறு நிறைந்திருந்தால்தான் மனம் நிறைந்திருக்கும். அவர்கள் மனம் நிறைந்திருந்தால்தான் விளைச்சலும் நன்றாக இருக்கும். என்று குறிப்பிடும் தெய்வ நாயகம் அதிகமாகத்தரும் பத்துரூபாய்க்கு விளக்கமும் சொல்லு வார். 'நன்கு வயிறு நிரம்ப சாப்பிட்ட பின்பு வெற்றிலை

Page 185
352 இதோ ஒரு வெளிச்சம்
பாக்குப் போட வேண்டுமென்று சிலபேர் நினைப்பார்கள்’. அது போட்டால் தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.
ஒரு சிலருக்குப் புகைபிடித்தால் உற்சாகமாக இருக்கும். சிலருக்குச் சாராயம் குடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அதை யெல்லாம் நாம் தரமுடியாது! உழைத்து, வழக்கமாக வரும் வருமானத்தில் அதற்காகச் செலவு செய்வது அவர்களால் முடியாது. நாம் தனியாகக் கொடுக்கும் பத்தோ, பதினைந்து ரூபாயோ இதற்கு உதவட்டுமே!
கொழும்பில் சில நாட்களில் இரவு 11 மணியளவில் மூட்டைகளை ஏற்றி இறக்கி வேலை செய்யும் தொழிலாளர் களுக்கிடையில் தன் வயதான தந்தையைக் காண்பது தெய்வ நாயகத்தின் பிள்ளைகளுக்கு வழக்கமான அனுபவம்!
தன்னைப் போலத் தந்தையும் தொழிலாளர்களைக் கண் காணிக்கத் தான் வந்திருக்கிறார் என்று முதலில் முருகேஷ் எண்ணினார். பிறகு மற்ற தொழிலாளர்கள் சொல்லிய பிறகு தான் விஷயம் புரிந்தது.
வேலை செய்து கொண்டிருக்கும் தன் தொழிலாளர்களிடம் அன்போடு பேசி நலம் விசாரிக்கவே அந்த நள்ளிரவு நேரத்தில் அங்கு வருகிறார். அவர்களுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்து விட்டு, வீடு திரும்பும் முன் அங்கிருப்பவர்களுக்கு ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு வீட்டிற்குத் திரும்பும் தெய்வ நாயகம் தன் தொழிலாளர்களிடையே ஒரு மன நெகிழ்ச்சியை உண்டாக்காமல் திரும்புவதே கிடையாது!
கொழும்பில் உள்ள தன் செயலாளர் விக்ரமசிங்கவைத் தொலைபேசியில் தெய்வநாயகம் அழைப்பார். விக்ரமசிங்க அவர் வீட்டுக்குள் நுழையும்போதே அவருக்காக தடாக ஒரு கோப்பை தேநீர் காத்துக் கொண்டிருக்கும். அதையும் தெய்வ நாயகம் தம்கையாலேயே எடுத்துக் கொடுப்பார்.
தம் வீட்டில் யார் உணவருந்த வந்தாலும் தன் கையால் எடுத்துப் பரிமாறுவதில் அவருக்கு மகிழ்ச்சி அதிகம்.
முதலாளியின் வீட்டுக்கதவை எந்த நேரத்திலும் தட்ட லாம், கதவும் திறக்கும்; இதயமும் திறந்திருக்கும், பணப்பெட்டி

அழையா விருந்தாளி 353
யும் திறக்கும் என்ற உறுதி எல்லா தொழிலாளர்களுக்கும் உண்டு.
பணத்தைச் சேமித்து வைக்கும் இடம் இரும்புப் பெட்டி யல்ல; ஏழைகளின் வயிறு' என்பதைப் புரிந்துகொண்டு வாழ் பவர் இவராகத் தான்இருக்க முடியும்.
'மார்ட்டின் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. ஒரு நாள் இரவு அவன் கனவில் இறைவன் தோன்றி நாளை நான் உன்னைக் காண வருகிறேன்' என்கிறார். காலையிலிருந்து வாயிற் படியருகில் காலணிகளைத் தைத்தபடியே கடவுளுக் காகக் காத்திருக்கிறான் மார்ட்டின். தன் வீட்டு ஜன்னலிலும் சாலையிலும் இருந்த பனியைச் சுரண்டி எடுக்கும் வயதான ஒரு வேலையாளைப் பார்த்ததும் மனம் நெகிழ்கிறது. அவனை உள்ளே அழைத்துச் சூடான தேநீர் கொடுக்கிறான். சற்று நேரம் கழித்துத் தன் வீட்டருகில் குளிரில் நடுங்கியபடி தன் சின்னக் குழந்தையோடு நிற்கும் ஒரு பெண்ணை 'மகளே’ என்று அன்பாக அழைத்து அவளுக்கு உணவளித்துக் குழந் தைக்கு வெப்ப மூட்டும் ஆடைகளை அளிக்கிறான். பின்னர் கிழவியிடம் ஆப்பிள் திருடும் சிறுவனை அழைத்துக் கிழவிக்குப் பணம் கொடுத்து அவனைப் பொலீஸ் பிடிக்கா வண்ணம் தடுத்து இருவரையும் நண்பர்களாக்கி அனுப்புகிறான். ஆனாலும் கடைசி வரை இறைவன் வரவில்லை. இரவு தூங் கும் போது திடீரென குரல் கேட்கிறது. ‘என்னைத்தானே தேடினாய்? நான் தான் வந்திருந்தேனே' என்று கடவுள் கூற அவனுடைய அறையின் இருண்ட மூலையில் 'பனியை அகற் றிய வயதானவன்' 'இளம் பெண்ணும் அவள் குழந்தையும், 'கிழவியும்-பையனுமாகத் தோன்றி மறைகிறார்கள்.
லியோ டால்ஸ்டாய் என்கின்ற உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் எழுதிய ‘எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே கடவுள்' என்கின்ற மிக அற்புதமான சிறுகதை இது!
‘ஆலயத்தில் மட்டும் ஆண்டவனைத் தேடாதே, அவன் எங்கும் இருக்கிறான். குறிப்பாக, எளியவர் இதயங்களிலே ஆண்டவன் உறைகின்றான்' என்கின்ற அற்புதமான உண் மையை உணர்த்தும் சிதைதான் இந்தக் கதை!
'மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும்

Page 186
354 இதோ ஒரு வெளிச்சம்
சேவை' என்ற சுவாமி விவேகானந்தர் "பசியோடு இருப்ப வனுக்கு பகவத்கீதை சொல்லிப் பயனில்லை; உண்பதற்கு அவனுக்கு உணவு கொடு' என்றும் கூறியுள்ளார்.'
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று முழங்கியவர் பேரறிஞர் அண்ணா.
இவையனைத்தையும் தம் வாழ்க்கையில் செய்து காட்டி வருபவர் தெய்வநாயகம்.
தம்முடைய பிறந்த நாளில் கோயிலில் மிகவும் சுவையான விருந்தை நூற்றுக்கணக்கான பேருக்கு அளித்து அவர்கள் உண் பதைக் கண்டு மகிழ்பவர் அவர்.
தம்மைச் சுற்றி இருப்பவர்கள் வயிறார உண்ண வேண் டும்; மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்' என்பதே அவருடைய நோக்கம்; அதுவே அவர் வாழ்க்கை நெறி!
 

35. 'யான் பெறா இன்பம்
பெறுக இவ்வையகம்'
விசுவநாதனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி! எந்தப் பக்கம் திரும் பினாலும் நீலக்கடல். மேலே நீலவானம்!
வானமும் கடலும் சந்திக்கின்ற கொள்ளை அழகு கண் களுக்குக் களிப்பை ஊட்ட, தன் முதல் கடல் பயணத்தை அந்த எட்டாம் வகுப்புச் சிறுவன் ரசித்துக் கொண்டிருந்தான்!
தான் மட்டும் தனியாக இருந்திருந்தால் அந்த மகிழ்ச்சி அந்த அளவுக்கு இருந்திராது; தன்னுடன் தன் வகுப்பு மாணவர் களும், ஆசிரியர்களுமாக 80 பேர். அரட்டையும், வேடிக்கை யும், சிரிப்புமாக நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சாய்ந்து, சாய்ந்து ஆடியபடி சென்ற அந்தக் கப்பலில் நேராக, வேகமாக நடக்க முடியாமல், அந்தத் தடுமாற்றத்தையும், வேடிக்கையாக அனுபவித்தபடி அந்தச் சிறுவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி இருந் தார்கள். அவர்களுடைய கப்பல் இராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்குப் போய்க் கொண்டிருந்தது.
அந்த மகிழ்ச்சியையும் அவர்களால் முழுமையாக அனுப விக்க முடியவில்லை. திருநெல்வேலி செயின்ட் சேவியர் உயர் நிலைப்பள்ளியிலிருந்து அவர்கள் இன்பச் சுற்றுலாவுக்குக் கிளம் பியது போலவே, குஜராத்திலிருந்து அங்கே இருக்கின்ற செயின்ட் சேவியர் பள்ளி மாணவர்களின் ஒரு குழு, அதே கப் பலில் இவர்களோடு இலங்கைக்கு வந்து கொண்டிருந்தது.
குஜராத் மாணவர்கள் மிகவும் வசதியான, பணக்கார மாணவர்களாக இருந்தார்கள். இவர்கள் இரண்டு ரூபாய் செலவு செய்தால் அவர்கள் பத்து ரூபாய் செலவு செய்தார்கள். கப்பலில் அவர்கள் பேச்சும், ஆர்ப்பாட்டமும் இவர்களைவிட அதிகமாக இருந்ததால் திருநெல்வேலி மாணவர்கள் மனத்தில் கொஞ்சம் பொறாமை, ஏக்கம், தாழ்வு உணர்ச்சி ஆகியவை அதற்குள் குடியேறிவிட்டன!

Page 187
356 இதோ ஒரு வெளிச்சம்
கப்பல் தலைமன்னார் போய்ச் சேர்ந்தது! மாணவர்கூட்டம் சுங்கப் பரிசோதனைக்குப் பின் வெளியே வந்தது. புகையிரதத் தின் மூலம் பயணம் செய்து கொழும்பு புகையிரத நிலையத் தினை அடைந்தார்கள். வெளியே வரும் போது கூட குஜராத் மாணவர்களுடைய டாம்பீகம் அவர்களை உறுத்திக் கொண்டே இருந்தது.
புகையிரத நிலையத்திற்கு வெளியே வந்ததும் விசுவநாதன் கண்ணில் பட்டது, ஓர் அழகான இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுப் பேருந்து. அந்தப் பேருந்து திருநெல்வேலி மாண வர்களுக்காகவே காத்திருக்கிறது என்று அறிந்தவுடன் மாணவர் களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து ஒடிப்போய் அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள்.
குஜராத் மாணவர்கள் இலங்கை நகர்களில் வழக்கமாக ஒடும் பேருந்தில் ஏறிக்கொண்டபோது, நெல்லை மாணவர் களின் மனங்களில் இவ்வளவு நேரமாக அழுந்திக் கொண் டிருந்த சுமை மாயமாக மறைந்தது மட்டுமல்ல, மாறாக பெரு மிதம் அங்கே குடிபுகுந்து விட்டது.
ஒரு வாரம் வரை அந்த பஸ் இலங்கையெல்லாம் சுற்றி யது. கண்டி, நுவெரலியா, அனுராதபுரம், திரிகோணமலை, யாழ்ப்பாணம், கதிர்காமம் எல்லாம் சுற்றியது. மாணவர்கள் **குத் தங்கினாலும் அதற்கென ஏற்பாடுகள் துல்லியமாகச் செயயப்பட்டிருந்தன. பயணக்குழு கொழும்பில் இரண்டு நாட் கள் இருந்தபோது அனைவரும் ஜிந்துப்பிட்டி முருகன் கோயி லிலேயே தங்கினர்.
கொழும்பில் கால் வைத்ததிலிருந்து விஸ்வநாதன் காதில் விழுந்து கொண்டிருந்த ஒரே சொல் வி.ரி.வி. மாணவர்கள் பயணம் செல்ல, சொகுசான வெளிநாட்டுப் பேருந்தை ஏற்பாடு செய்து, இலவசமாகக் கொடுத்ததிலிருந்து, தங்குமிடம், உணவு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தவர் ஒரு மிகப்பெரிய மனிதர். அவர்தான் வி.ரி.வி. தெய்வநாயகம் என்று எல்லோ ரும் நன்றிப் பெருக்கோடு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர். விசுவநாதனின் காதுகளிலும் அவருடைய பெயர் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.

யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம் 357
'யார் இந்த தெய்வநாயகம்?" 'அவர் எப்படி இருப்பார்? 'அவரைப் பார்க்க முடியுமா?
என்று கிட்டத்தட்ட எல்லா மாணவர்களும் துடித்தது போல விசுவநாதனும் அந்த வாய்ப்புக்காக ஏங்கினான். அந்த வாய்ப் பும் வந்தது.
கொழும்பை விட்டுக் கிளம்புவதற்கு முந்தைய இரவு அத் தனை மாணவ-ஆசிரியர்களுக்கெல்லாம் தெய்வநாயகத்தின் வீட்டில் விருந்து.
அப்போதுதான் விசுவநாதன் தெய்வநாயகத்தைப் பார்த் தான். அவருடைய குடுமியும், கடுக்கன்களும், மேனியிலிருந்த தங்க நகைகளும் முதலில் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தன. கிட்டத்தட்ட 12 வயது என்பது குதூகலம் நிரம்பிய வேடிக்கை யான வயது. எதற்கெடுத்தாலும் சிரிக்கத் தோன்றும் வயது.
1969ம் ஆண்டிலேயே இந்தியா எவ்வளவோ மாறிப் போயிருந்தது. குடுமியும், கடுக்கனும் கிட்டத்தட்ட மாயமாகி மறைந்தே போயிருந்தன. அந்த நிலையில் அவருடைய தோற்றம் மாணவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், அந்த
உணர்வு ஒரு சில நொடிகளே நீடித்தது. 'முருகா! முருகா!' என்று கூறி கைகூப்பியவாறு வாங்க! வாங்க!' என்று அன் போடு அவர் வரவேற்றபோது அவர் குரலிலே தொனித்த பாச உணர்வு அப்படியே அனைவரையும் காந்தமென இழுத்தது.
ஒவ்வொரு மாணவனாக அவரிடம் சென்று, வணக்கம் செலுத்தி அறிமுகப்படுத்திக் கொண்டனர். விசுவநாதன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தெய்வநாயகம் தன்னுடைய தாத்தா உறவு முறை என்று அறிய வாய்ப்பில்லை.
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் பல விதமான ருசி யில் சாப்பிட்டு ஏங்கியிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக் கும் மிகவும் சுவையான திருநெல்வேலி விருந்து அவருடைய இல்லத்திலேயே அளிக்கப்பட்டது.
மாணவர்கள் விடைபெற வேண்டிய நேரம். வந்திருந்த அனைவருக்கும் பெரிய தேயிலைத்தூள் பாக்கெட் ஒன்றும்,

Page 188
358 இதோ ஒரு வெளிச்சம்
அழகிய நினைவுப் பொருள் ஒன்றும் தன் அன்பளிப்பாக தெய்வநாயகம் வழங்கினார். மாணவர்களின் பெருமிதத்தைச் சொல்லவும் வேண்டுமா?
பள்ளியின் சார்பிலே ஒரு மாணவன் நன்றி சொல்ல வேண்டியிருந்தது. அந்த ஒரு மாணவன்தான் விஸ்வநாதன்.
எட்டாம் வகுப்பு மாணவன் என்ன பேசமுடியுமோ, அதற்கும் பலபடிமேலே ஒர் அழகான சொற்பொழிவை விஸ்வ நாதன் நிகழ்த்தி அனைவருடைய நன்றி உணர்வுகளுக்கும் சொல் வடிவம் கொடுத்து முடித்தான்.
இன்பச் சுற்றுலா இனிதாக முடிந்து அனைவரும் கப்ப லேறி இந்தியா திரும்பினார்கள். திரும்பும் போதெல்லாம் விஸ்வநாதனின் மனக்கண் முன்னால் ஒரே ஒர் உருவும் திரும் பத் திரும்ப வந்து நின்றது. தெய்வநாயகம் பிள்ளையை அவ னால் நினைக்காமலிருக்க முடியவில்லை.
'அவர் ஏன் இந்த மாணவர்களுக்காக இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்?
இந்த எண்பது மாணவர்களும், ஆசிரியர்களும் எந்த வகை யிலாவது அவருக்கு திரும்ப உதவப் போகிறார்களா?
அவரோடு வியாபாரமாவது செய்யப் போகிறார்களா? யாரிடமாவது அவர் கடன்பட்டிருக்கிறாரா?
எந்த லாபம் கருதி அவர் இவ்வளவு ஏற்பாடுகளை யாரும் கேட்காமல் தானாகச் செய்ய வேண்டும்?' ஒரே ஒரு காரணம் தான் தெரிந்தது.
'திருநெல்வேலியிலிருந்து மாணவர்கள் வந்து விட்டார் கள். நமது ஊர்ப் பிள்ளைகள். நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம்!"
இந்தக் காரணத்தை எண்ணும்போது கூடவே மற்றொரு க்ேள்வியும் எழுந்தது!
இங்கே இவர் மட்டுமா திருநெல்வேலிக்காரர்? எவ் வளவோ பேர் இருக்க, தெய்வநாயகத்தைவிட பணக்காரர்கள்

'யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம் 359
இருக்க, இவர் மட்டும் ஏன் மாணவர்களுக்காக ‘உழைக்க வேண்டும்?
இவ்வாறெல்லாம் எண்ணிப்பார்த்த விசுவநாதனுக்கு, ஒரே உண்மைதான் நிலைத்தது. இலங்கை என்று சொன்ன வுடன் 'வி.ரி.வி.'தான் மனக்கண்முன்னால் நின்றார். இலங் கையில் ‘தெய்வநாயகம் மட்டுமே இருக்கிறார்’ என்ற உணர்வு தான் அவனுடைய இளம் மனத்தில் நிலைத்து நின்றது.
திருநெல்வேலி வந்ததும் தன்னுடைய அனுபவங்களை, தான் சந்தித்த பெரும் மனிதர் தெய்வநாயகத்தைப் பற்றி வீட்டில் சொன்ன போது தான் அவர் தனக்கு நெருங்கிய உறவினர் என்றும், தாத்தா என்றும் தெரிந்தது. விசுவநாதனுக்கு அது மேலும் பெருமிதத்தை ஊட்டியது.
மூன்று மாதங்கள் ஒடின! திருநெல்வேலியில் தங்களுடைய ஜவுளிக்கடையில் வியா பாரம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. தன்னுடைய கடைக்
குள் கம்பீரமாக நுழைந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் விசுவ நாதனால் நம்பவே முடியவில்லை.
இளம் வயதிலேயே தன் மனத்தில் ஒரு பெரிய பாதிப்பை உண்டு பண்ணிய, நாயகன் "தெய்வநாயகம் தான் கடைக்குள் வருகிறார்.
ஆர்வத்தோடு ஓடிவந்த சிறுவனை அணைத்து, உச்சி முகந்து, கடையிலிருந்தவர்கள் முன்னிலையில் விசுவநாதனின்

Page 189
360 இதோ ஒரு வெளிச்சம்
தந்தையிடம் 'உங்கள் பிள்ளை கொழும்பில் எவ்வளவு அழ காகப் பேசினான் தெரியுமா? ரொம்பக் கெட்டிக்காரப்பிள்ளை. இந்த வயதிலேயே நல்ல அறிவாளி' என்று தெய்வநாயகம் புகழ்ந்து பேசியபோது விசுவநாதனுக்குக் கூச்சமாகவும், பெருமையாகவும் இருந்தது.
அந்தச் சின்ன வயதில் அத்தனை பேர் மத்தியில் இவ்வளவு பெரிய மனிதரின் பாராட்டு விசுவநாதனுக்கு எவ்வளவு சிறந்த டானிக்.
இன்று விசுவநாதன் அழகான, கம்பீரமான இளைஞர். திருநெல்வேலி நகரில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க அறிந்த RMKV துணிக்கடையின் உரிமையாளர்களில் ஒருவர். ஒரு துணிக்கடை இப்படித்தானிருக்க வேண்டும்’ என்று திட்டமிட்டு கடையைத்தன் சகோதரரோடு நடத்திவரும் வெற்றியாளர்.
1994ம் ஆண்டு இந்தியன் ஜூனியர் சேம்பர் இயக்கம் பம்பாய் நகரில் அவரை 'இந்தியாவின் தலைசிறந்த பத்து இளம் இந்தியர்கள்’ விருதை அளித்து சிறப்பு செய்தது.
மிகப்பெரிய அந்தப் பாராட்டைப் பெற்ற விசுவநாதனின் மனத்தில் தான் , இளம் வயதில் பெற்ற அந்தப் பாராட்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.
“பாராட்டுக்கள் என்பவை உரங்கள் போன்றவை. உரங் களை இடும் போது தாவரங்கள் வளருகின்றன; உற்சாக மூட்டும் போது மனிதர்கள் வளருகின்றார்கள்.'
என்ற செய்திகள் எவ்வளவு உண்மையானவை இப்போது கூட தெய்வநாயகம் திருநெல்வேலி வரும்போதெல்லாம் மறக் காமல் செல்லும் நிறுவனம் RMKV
மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தெய்வநாயகத் தின் மனம் நெகிழும். திருநெல்வேலி மாணவர்கள் கொழும்பு வந்த போது அதுதான் நடந்தது. மாணவன் விசுவநாதன் அழ காகப் பேசிய போதும் அதுதான் நடந்தது. இளைஞர்கள், குறிப் பாக மாணவர்கள் அவருடைய மனத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தார்கள்.
மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பன்னம்பாறை

“யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம்' m 36
யிலிருந்து சாத்தாங்குளத்திற்குத் தம் அண்ணனுடன் பள்ளிக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வரும்.
இடுப்பிலே ஒரு சிறுதுண்டு, கையிலே பழையசாதம்
என்று பள்ளிக்குச் சென்ற நாட்கள் ஆதங்கமான நாட்கள்.
அன்றைக்குப் படிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை ஆனால் விதியின் கொடுமையால் தாயையும், தந்தையை யும் இழந்துவிட்ட காரணத்தால் படிப்புத் தடைப்பட்டு விட்டது. ‘தாம் படிக்கவில்லையே! என்ற ஏக்கம் இன்றளவும் தெய்வநாயகத்திடம் உண்டு!
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; தன் அடுத்த வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்' என்ற சிந்தனை பெரும்பாலும் நிலவிவரும் இன்றைய நாட்களில் தாம் படிக்கமுடியாவிட்டாலும் இளந்தளிர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்’ என்ற உயரிய எண்ணம் அவருக்கு உண்டு. அதோடு அந்த மாணவர் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்ற ஆர்வமும் அவருக்கு இருந்தது.
வி.ரி.வி அறக்கட்டளையின் சார்பாக மிக அற்புதமான ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும். தெய்வநாயகம் அவர் களுடைய பெயரைக் காலகாலமும் சொல்லக்கூடிய வகையில் அப்பள்ளி அமையவேண்டும். தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியை அப்பள்ளி வழங்க வேண்டுமென தெய்வநாயகத்தின் பிள்ளைகள் கனவு கண்டனர். அப் பள்ளியோ வல்லநாட்டில் இருக்க வேண்டுமென தெய்வ நாயகம் விரும்பினார்.
வல்லநாடு ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் பள்ளியில் அற்புதமான ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளியின் கட்டடங் கள் என்னவோ பரிதாபமான நிலையிலேயே இருந்தன. சுற்றுச்சுவர் இல்லை! கழிவறைகள் கிடையா! ஆய்வுக்கூடம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் 1982ல் அப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் தெய்வநாயகம். 1983ல் இலங்கையைத் தாக்கிய இனக் கலவரமும், அதைத் தொடர்ந்து வியாபாரத்தில் ஏற்பட்ட சுணக்கமும் பள்ளிக்கூட விவகாரத் தைக் கொஞ்சம் ஒத்திவைக்கச் செய்துவிட்டது. பள்ளியிலும்

Page 190
362 இதோ ஒரு வெளிச்சம்
தலைமை ஆசிரியர்கள் மாறினர். வல்லநாட்டு அரசினர் உயர்நிலைப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியாக மாறியது. திரு மதி ஜோஸபின் ரோஸ் தலைமை ஆசிரியையாகப் பொறுப் பேற்றார்.
வி.ரி.வி அறக்கட்டளை முன் இருந்த கேள்விகள் இரண்டு. மிகச்சிறப்பாக ஒரு தனியார் பள்ளியை நிறுவி நடத்துவதா
அல்லது தனித்துவத்தை இழந்துவிட்டு ஏற்கனவே நடக்கும் வல்ல நாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியை வலுப்படுத்துவதா?
தீவிரமான ஆலோசனைகள் நடந்தன! இந்த ஆலோசனை களில் தெய்வநாயகத்தின் பிள்ளைகளுடன் முழு ஈடுபாடோடு கலந்து கொண்டவர்களுள் ஒருவர் அப்போது தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணியாற்றித் - தற்போது பள்ளிக் கல்வித்துறையில், ஒர் இயக்குநராகப் பணியாற்றி வரும் திரு. பரமசிவம் அவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரும், கல்வியாளருமாகிய திரு. ஏ.பி.சி. சொக்க லிங்கம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
தனியார் பள்ளியாக வெளியே கட்டினால், பணக்காரர் களுக்காக, பணக்காரர்களால், பணத்துக்காக நடத்தப்படும் பள்ளியாக மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். கல்வியை வியா பார நோக்கில் அணுகும் தேவையோ, அப்படிப்பட்ட எண்ணமோ, தெய்வநாயகத்தின் குடும்பத்தில் யாருக்குமில்லை. இந்த நிலையில் வேறு ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்ற ஏ.பி.சி. சொக்கலிங்கத்தின் கருத்தும், வி.ரி.வி குடும்பத்தின் கருத்தும் ஒன்றாகவே இருந்ததால் அக் கருத்து முழுமையாக ஏற்கப்பட்டுவிட்டது! --
இதற்கிடையில் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரும், நேர்மையான அதிகாரி என்ற நற்பெயரைப் பெற்றவருமாகிய பரமசிவம் இந்த உணர்வை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.
‘எப்படியும் கல்வித் தொண்ட்ாற்றப் பெருந்தொகையை இக்குடும்பம் செலவழிக்கப் போகின்றது. அப்படிச் செலவழிக் கும் தொகையை அவர்கள் ஒர் அரசுப் பள்ளிக்கே செலவிட வேண்டும் என்று முனைப்போடு அவர் பாடுபட்டார்.

'யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம்' 363
தனியார் பள்ளிகளால் நன்கொடை வாங்க முடியும். ஏற் கனவே, பல பள்ளிக்கூடங்கள் மிகவும் வசதியாக நடைபெற்று வருகின்றன. அரசு பள்ளிக் கூடங்களில் பெரும்பாலும் ஏழை மாணவர்களே படிக்கின்றனர். எனவே, செய்யும் கல்வி அற மானது வறியவர்களுக்கே போய்ச்சேர வேண்டுமென்பது அவருடைய அவா!
எப்போதும் தெய்வநாயகத்தின் கண் வல்லநாட்டிலே இருந்தது. அங்கே இன்னும் வறுமையில் வாடும் பிள்ளைகள் ஏராளம். அறுவடைக் காலங்களில் படிப்பை நிறுத்துபவர் களும், செங்கல் துளையில் வேலை செய்யப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களும் அதிகம். வேலை தேடி பம்பாய் ஒடும் மாணவர்கள் கூட உண்டு. இந்தச் சூழ்நிலையில் வளமான கட்டிடங்களும், படிப்பதற்கான இனிய துழலும் இருந்தால் மாணவர்கள் ஆர்வத்தோடு கற்பார்கள். ஆகவே வல்லநாடு அரசினர் மேல்நிலைப்பள்ளியை வலுப்படுத்துவது என்ற முடிவுக்கு தெய்வநாயகம் வந்தார்.
1982லேயே உயர்நிலைப்பள்ளியாக இருந்த வல்ல நாட்டுப் பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக மாற்ற முயற்சிகள் நடந்து, கொள்கையளவில் அரசின் ஒப்புதலும் கிடைத்து விட்டது. ஆனால் கட்டடங்கள்...? -
1994ல் திருமதி. ஜோஸபின்ரோஸ் தலைமை ஆசிரியை யாகப் பொறுப்பேற்றபின் அவரும், ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர் - ஆசிரியர் சங்கமும் கடுமையாக முயன்றபின், திரு. பரமசிவம், திரு. ஏ.பி.சி. சொக்கலிங்கம் ஆகியோரின் ஒத்துழைப்பைப் பெற்று உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியானது. கட்டடத்திற்கு என்ன செய்ய? y.
தெய்வநாயகத்திற்குக் கல்வி அறப்பணி ஆற்ற மிகுந்த ஈடு பாடிருந்ததை அனைவரும் ஏற்கனவே உணர்ந்திருந்தனர். அரசுப் பள்ளிக்கு அவருடைய பெயரைச் சூட்ட ஆர்வத்தோடு அவர்கள் ஏற்கனவே முயற்சியைத் தொடங்கியிருந்தார்கள்.
இந்த நிலையில் திருமதி. ஜோஸபின் ரோஸ், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. இராமசாமித்தேவர், அதன் உறுப்பினர்கள் ஆகியோர் தெய்வ

Page 191
364 இதோ ஒரு வெளிச்சம்
நாயகம் வல்லநாடு வந்தபோது அவரில்லத்தில் சந்தித்து தங்கள்
கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1982ல் அடிக்கல் நாட்டிய நினைவு வந்தது. ஆனால்
இடையில் எத்தனை இடையூறுகள்?
அடுத்தநாள் பள்ளியில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது.
யாரும் எதிர்பாராத வகையில் அந்த விழாவில், பள்ளிக் காக நான்கு அறைகள் கட்டுவதற்காக ரூபாய் ஐந்து இலட்சத்தை நன்கொடையாக அளிப்பதாக தெய்வநாயகம், பலத்த கர ஒலி களுக்கிடையில் அறிவித்தார். கூடியிருந்தோர் நெஞ்சங்கள் மகிழ்ச்சியால் பூரித்துப் போயின!
இடையில் ஏ.பி.சி. சொக்கலிங்கம் அவர்களும், பரமசிவம் அவர்களும் தீவிரமாக முயன்று, பொதுமக்களின் ஆர்வத்தை அரசுக்கு உணர்த்தி "தேசபந்து VTV தெய்வநாயகம்பிள்ளை J.P அரசு மேல் நிலைப்பள்ளி' என்று பெயர் மாற்றம் செய் வதில் வெற்றி கண்டனர்.
17-2-95 வல்லநாட்டின் வரலாற்றில் மிகவும் நன்கு நினைவுகூரப்பட வேண்டிய நாள். அன்று சிதம்பரனார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. கண்ணப்பன் தலைமை தாங்க, ஏ.பி.சி. சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலை யில் தெய்வநாயகம் ஐந்து இலட்சம் ரூபாய்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் நன்கொடையாக அளித்தார்.
விழா முடிந்தவுடன் அனைவருக்கும் தெய்வநாயகம் வழக் கம் போல் அறுசுவை விருந்தளித்து மகிழ்ந்தார். 23.4.95 அன்று தெய்வநாயகத்தின் இளைய குமாரர் முருகேஷ் பள்ளிக் கட்டடத்திற்கு கால்கோள் செய்ய, கட்டடம் வளர்ந்து கொண் டிருக்கிறது.
750 மாணவ மாணவிகள் அன்றாடம் கல்வி பெற பள்ளிக்கு வருகிறார்கள்.
மிகவும் வசதியற்ற ஏழைக்குழந்தைகள் என்று ஆசிரியர்கள் தரும் பட்டியலை குழந்தைவேலுவிடம் கொடுத்தால், வல்ல நாட்டில் தெய்வநாயகத்தின் தனிச்செயலராக இருக்கும் குழந்தை

'யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம்" 365
வேலு, அத்தனை பேருக்கும் சீருடை வழங்க ஏற்பாடு செய்து விடுகிறார்.
பத்தாம் வகுப்பில் பள்ளியில் மிக அதிகமான மதிப்பெண் பெறும் மாணவனுக்குப் பரிசுகள், பத்தாம் வகுப்பில் தமிழில் மிக அதிக மதிப்பெண் பெறும் மாணவனுக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் பரிசு, இப்படி மாணவர்களை ஊக்கமூட்டும் முயற்சி கள் ஒரு பக்கம் நடக்கின்றன.
பதினோராம் வகுப்பு சற்று கால தாமதமாக தொடங்கிய தால் குறைந்த மாணவர்கள் மட்டுமே இப்போது படிக்கிறார் கள். இவர்களைச் சேர்க்க வீடுவீடாக அலைந்த ஆசிரியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். சூளையில் வேலை செய்து கொண்டிருந்தவர், விவசாயத்திலிருந்தவர்கள் இவர்களிடமெல் லாம் விவரம் சொல்லிப் பள்ளியில் சேர்த்தது சாதாரண செயலா?
ஆனால் அடுத்த ஆண்டு நிலைமை மாறும். வளமான கட்டடங்கள், வசதியான வகுப்புக்கள், நல்ல ஆசிரியர்கள், அவர்களின் சிறந்த கற்பித்தல், ஆர்வம் மிக்க பெற்றோர்-ஆசிரியர் சங்கம், புரவலர்கள் மற்றும் திறமையும் விடாமுயற்சியும் கொண்ட தலைமையாசிரியை, தெய்வநாயகத் தின் கனவுகளுக்கு, செயல்வடிவம் கொடுக்க குழந்தைவேலு, ஆகியோரின் முயற்சிகளால். “தேசபந்து VTV தெய்வநாய கம் பிள்ளை J.P அரசு மேனிலைப்பள்ளி, நிச்சயம் மேன்மை யடையும். பல்லாயிரம் நல்ல மாணவர்களை உருவாக்கும். கால காலமாக இன்னும் பல நூறு வருடங்கட்கு தெய்வநாயகம் பிள் ளையின் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கும். --
ஆனாலும் கல்வியாளர் ஏ.பி.சி. சொக்கலிங்கத்திற்குச் சில விஷயங் கள் புரியவேயில்லை.
'பள்ளிக் கூடத்திற்கு இன்னும் கழிவறைகள் கட்டவே யில்லை...'
'இல்லைங்க ஐயா, அது அரசாங்கத்தின் பொதுப் பணித் துறை கட்டித் தருங்க!'
'அதுவரையிலே நாம காத்திருக்கணுமா. ஏன் நாமே கட்டக் கூடாது?’

Page 192
366 w இதோ ஒரு வெளிச்சம்
இது தெய்வநாயகத்தின் அங்கலாய்ப்பு. அவருடைய மகன் முருகேஷ் சில வாரங்கள் கழித்து வந்து கட்டட வேலையைக் கண்காணிக்கிறார்.
'ஏன் கழிப்பறைகளைக் கட்டவில்லை?" 'ஐயா அது பி.டபுள்யூ.டி கட்டித்தருங்க! 'அவங்க எப்ப கட்டித் தர்றது? நாமே கட்டினா என்ன?" இது முருகேஷின் அங்கலாய்ப்பு! ஏ.பி.சி.சொக்கலிங்கத்துக்குப் புரியாத விஷயங்களில் இது வும் ஒன்று எப்படி அப்பாவும்-பிள்ளையும் ஒரே மாதிரி சிந்திக் கிறார்கள்?
அவருக்கு அடுத்துப் புரியாத ஒரு விஷயம், ‘தெய்வநாயகம் ஒரு வியாபாரியா? வியாபாரியாக இருந்தால் ஒவ்வொரு நிமிடமும் மேலும் மேலும் பணம் சேர்க்கும் வழிகளில் மட்டும்தானே தன் எண்ணத்தைச் செலுத்துவார்! ஆனால் இந்த மனிதர் ஏன் செலவு செய்யும் வேலையில் இறங்க வேண்டும்?'
வல்ல நாட்டில் பள்ளி கட்டினால் கொழும்பிலும், சென்னையிலும் நடக்கும் இவருடைய வியாபாரத்திற்கு ஏதே னும் ஒரு சின்ன லாபமாவது உண்டா? -
செய்வதெல்லாம் செய்யட்டும் - பள்ளிக்கூடத்திற்கு ஏன் செய்யவேண்டும்?
கொள்ளைக்குப் போகும் திருடன்கூட வழியில் வேண்டிக் கொண்ட சாமிக்கு, கொள்ளையடித்த பணத்தில் வேண்டியபடி, ஒரு தொகையை மறக்காமல் உண்டியலில் போட்டுவிடுகிறான்.
ஆனால் பல ஆண்டுகள் தங்கி, படித்து, கல்வி அறிவுபெற்று வெளி யேறி இன்று நல்ல நிலையில் இருக்கும' எத்தனையோ இலட்சம் மணவர்களில் எத்தனை பேர் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவு கிறார்கள்? உதவுவது இருக்கட்டும். திரும்பியாவது பார்க் திறார்களா?

'யான் பெறா இன்பம் பெறுக இவ்வையகம்" 367
இப்படிப்பட்டதழ்நிலையில் பள்ளியில் படிக்காத ஒருவர், செய்வதற்கு வேறு எவ்வளவோ வேலைகளை வைத்திருக்கும் ஒரு தொழிலதிபர், எப்போதோ வருடத்தில் பத்து நாள் தங்கிப் போகும் ஒரு சாதாரண கிராமத்தில் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்? \
வல்லநாடு ‘சிதம்பர பவனம்'இல்லத்திலிருந்து வயதான நிலையில் பள்ளிக்கு வந்து, கட்டட வேலைகள் நடப்பதை உன்னிப்பாக நின்று கவனிக்கும் தெய்வநாயகத்தைப் பார்க்கும் போது சொக்கலிங்கத்தின் மனத்தில் இந்த எண்ணங்கள்,அலை பாய்ந்ததில் வியப்பில்லை.
சொக்கலிங்கத்தின் மனத்தில் இத்தனைக் கேள்விக்குறிகள். ஆனால் ஒருவருக்கு மட்டும் மனத்தில் எந்தக் கேள்வியுமே வரவில்லை. காரணம் அவருக்கு முழு விடையும் முதலிலேயே தெரிந்துவிட்டது.
‘எப்போது பள்ளிக்கு ‘தெய்வநாயகம் அவர்களின் பெயரைச் சூட்டி விட்டோமோ, அப்போதே அப்பள்ளி சீர்பெற்று விட்டது. தன் பெயர்கொண்ட பள்ளி தாழ்ந்து போவதை தெய்வநாயகம் அனுமதிக்க மாட்டார். தங்கள் அப்பாவின் திரு நாமத்தால் திகழுகின்ற பள்ளி பேரும், புகழும் அடையும் வரை அவருடைய பிள்ளைகள் விடமாட்டார்கள். ஐந்து இலட்சம் கொடுப்பது' என்பது ஒரு அச்சாரமே ஒழிய அதுவே முதலும், முடிவுமல்ல! மொத்தத்தில் ஏழை மாணவர்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் ஒர் அரசுப் பள்ளிக்கும், அதன் மாணவர் களுக்கும் ஒரு புதிய விடியல் உதயமாகி விட்டது' என்று உறுதி யாக மகிழ்பவர் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் பரமசிவம் அவர்கள்.

Page 193
36. பாடத்துடிக்கும் பறவைகள்
துஷானி நர்மதா!
அழகான சிறுமி. கண்களில் கலக்கத்தைக் குடியேற்றி வைத்திருக்கும் இந்தச் சிறுமியின் இனிய குரலைக் கேட்டு மகிழ வேண்டிய தந்தை மறைந்து பல மாதங்கள் ஓடிவிட்டன. இடி யாப்பம் தயாரித்து விற்றுத் தன் மகளையும், ஒரு மகனையும் நர்மதாவின் தாய் காப்பாற்றி வருகிறாள். எதிர்காலத்தில் என்ன வாகப் போகிறோம் என்று நினைக்கக் கூடத் தெரியாத பெண் துஷானி நர்மதா!
கொழும்பின் சாலைகளில் துப்பாக்கிகளைச் சுமந்தபடி, சீருடை அணிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து விட்டு ‘நான் ஒரு ஆமிக்காரனாக வேண்டும்' என்று கனவு காணும் இளங் குமரன் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான். அப்பா இருப்பது ஹட்டன் நகரில். என்றைக்காவது ஒருநாள் வந்து பார்ப்பதோடு சரி அம்மாவின் கூலி வேலையால் குடும்பம் நகர்கிறது!
எட்டாம் வகுப்பில் படிக்கும் மனோரஞ்சனியின் வாழ்க்கை கொடுமையானது. உடன் பணியாற்றியவர்களே தன் தந்தையை அடித்துக் கொன்றுவிட 1984லிருந்து அவள் தந்தையற்ற பெண். அம்மா ஊதுவத்தி செய்தால் தான் அடுப்பை ஊதி வைத்துப் பற்ற வைக்க முடியும். ஒரு தம்பி, ஒரு தங்கையுடன் வாழும் மனோரஞ்சனியின் எண்ணமெல்லாம் எதிர்காலத்தில் ஓர் ஆசிரியையாவது தான்!
மிலாந்தி பெரோரா சிங்கள மாணவர்களுக்கான பள்ளி யில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவி. தாயும், தந்தையும் பிரிந்து வாழ, ஒரு தொழிற்சாலையில் உழைக்கும் தன் தாயோடு சேர்ந்து, பாட்டி வீட்டில் வசிக்கிறாள்.
குடித்தே செத்துப்போன அப்பா, தன் இரு பெண்களைப் பற்றிக் கவலைப்படாமல் வேறு ஓர் ஆளுடன் ஒடிப்போய் விட்ட
 

பாடத்துடிக்கும் பறவைகள் 369
அம்மா என்று துடிக்கும் பிரவீனாவின் கண்கள் வற்றாத நீர்க் குளம். அவளுக்கும், அவளுடைய தங்கைக்கும் ஒரே ஆதரவு அவளுடைய அத்தையும், மாமாவும். மாமாவுக்கு வேலை இல்லை; அத்தையின் சிறிய கடை அந்தக் குடும்பத்திற்கு ஒரு வேளைக் கஞ்சியையாவது தருகின்றது.
தந்தை இதய நோயாளி; சில வீடுகளில் தாய் கூலி வேலை செய்தால் தான் மொகமட் நலீம் வீட்டில் உள்ள தாய், தந்தை, நான்கு பிள்ளைகள் ஏதாவது ஒருவாய் சாப்பிட முடியும்!
இந்தப் பட்டியல் நீளமானது!
137 பேர்களைக் கொண்ட பட்டியலில், ஆறுதல் தேடி அலையும் அழகுக் குழந்தைகளில் ஆறுபேரின் குறிப்புக்கள் மட்டுமே இங்கு உள்ளன.
ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அலசும் போது
வேதனை மட்டுமே மிஞ்சும். வாழத் துடிக்கின்ற இந்தக் குழந்தை கள் கொழும்பு நகரில் உள்ள பல்வேறு பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள். S.
‘இனிய குரல் வளமும், இசை அறிவும் கொண்ட பறவை கள் மட்டுமே பாடவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தால் நம் காடுகள் என்றைக்கும் அமைதியாக இருக்கும்!" என்று ஒரு சிந்தனையாளன் கூறினான்.
கல்வி என்பது, காலங்காலமாக SOUB சில குடும்பங்களுக்கே தான் சொந்தமா? ۔
ஏழைக் குழந்தைகளின் ஏக்கத்தைப் போக்கி அக்குழந் தைகளின் அறிவுக் கண்களைத் திறக்க வேண்டாமோ?
பாட நூல்களைச் சுமக்க வேண்டிய குழந்தைகள் இதற்குள் வாழ்க்கை பளுவைச் சுமக்க வேண்டுமா?
இந்த ஏழைப் பறவைகள் என்றைக்கு வாழ்க்கைக் காட்டில் வாய்திறந்து பாடுவது?
மேடையில் அன்றாடம் கேட்கும் முழக்கங்கள் இவை!
இடியும், மின்னலும் வந்தால் மழைத் தூறலாவது வரும். ஆனால் இந்த மேடை முழக்கங்களுக்குப் பின் சோகையான கைத்தட்டல்கள் மட்டுமே வருவதுண்டு. ஏழைக்குழந்தைகளின்

Page 194
3 7 Ꭴ இதோ ஒரு வெளிச்சம்
ஏக்கங்கள் காயசண்டிகையின் கடும்பசியாகத் தொடர்கின்றன! அட்சய பாத்திரத்தை யார் சுமந்து செல்வது?
கலைச்செல்வி அழகான இளம்பெண் இனிய குரலில் பேசும் போது எது தமிழ், எது சிங்களம் என்று இனங் காண முடியாத மென்மை புன்னகை பூக்கும் போது துரியனைக் கண்டு தாமரைகள் மலர்வதைப் போல, எதிரே இருக்கும் கூம் பிய மனங்களும், முகங்களும் மலரும்.
விபுலானந்த மகாவித்யாலயத்தில் உள்ளே நுழைந்து முதல்வர் அறைக்குச் ச்ென்றால் முதல்வர் புன்னகையுடன் "ஐ லவ் யூ செல்வி' என்று பலர் முன்னிலையில் கூறுகிறார். இதில் ஒளிவு மறைவுக்குத் தேவையே இல்லை. காரணம் பள்ளி முதல்வரின் பெயர் திருமதி. மாலதி சிவகுமார்.
வி.ரி.வி. பவுண்டேஷன் மிகத் திறமையாகத் தேர்வு செய்து, வேலைக்கமர்த்தியுள்ள பலருள் ஒருவர் கலைச்செல்வி!
வி.ரி.வி பவுண்டேஷன் தன்னைத் தூய்மையான பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் புனிதமான அமைப்பு. தான் கற்க முடியாவிட்டாலும், கல்வி கற்கத் துடிக்கும் வாய்ப்பு வசதியற்ற குழந்தைகளுக்குக் கல்வியறிவை வழங்கவேண்டும் என்ற தெய்வ நாயகத்தின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும் அமைப்பு. ஈஸ்வரன் இந்த அமைப்பின் தலைவராக இருந்து தன் தந்தை யின் உணர்வுகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்.
கொழும்பு நகரில் உள்ள 28 பள்ளிகளைத் தெரிவு செய்து ஒவ்வொரு பள்ளியிலும் நான்கு முதல் ஐந்து மாணவ மாணவி யரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களுக்கான பள்ளித் தேவை கள் அனைத்தையும் நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. அவர் களுக்குத் தேவையான பாடநூல்கள், கொப்பிகள் (நோட்டுப் புத்தகங்கள்) அனைத்தையும் வழங்குவதோடு, அவர்களுக்கான சீருடைகள், காலணிகள், கழுத்துப் பட்டிகளையும் வி.ரி.வி. பவுண்டேஷன் உரிய நேரத்தில் இலவசமாக வழங்கி வருகிறது.
கலைச்செல்விக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி மாதம் ஒருமுறை இம்மாணவர்களைச் சென்று சந்திப்பதே! அவர் களோடு பேசி, அவர்களுட்ைய சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதே!

பாடத்துடிக்கும் பறவைகள் 97
இந்த மாணவ, மாணவியரைத் தேர்ந்தெடுப்பதற்கென சில விதிமுறைகள் உள்ளன. பெரும்பாலும் தந்தையையோ, தாயையோ அல்லது இருவரையுமோ இழந்த பிள்ளைகளையே இந்தக் கல்வி உதவி பெறும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள்.
தொடக்கப்பள்ளி வகுப்பில் தேர்ந்தெடுத்தால் பள்ளியிறு தியை முடித்துவிட்டு வரும் வரை தொடர்ந்து இவ்வுதவி அவர் களுக்குக் கிடைத்து வருகிறது. ஒரு பள்ளியில் உதவி பெறும் ஒருவர் கல்வியை முடித்து விட்டு, வெளியேறிய பிறகே, அவருக்கு பதிலாகத் தொடக்கப்பள்ளி வகுப்பில் வேறு ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 'தருகின்ற உதவி முழு மையாக இருக்கவேண்டும்; தொடர்ச்சியாக இருக்கவேண்டும்" என்பதில் பவுண்டேஷன் முனைப்பாக இருக்கிறது
செல்வியின் பணி இம்மாணவர்களுடன் பேசிப் பழகுவது. ஒவ்வொரு மாணவ, மாணவியரின் இதயத்திலும் ஒர் எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறது.
குடிப்பழக்கத்தால் அழிந்து கொண்டிருக்கும் குடும்பங்கள், கணவனும்-மனைவியும் பிரிந்து வாழ, நிலை தடுமாறி நிற்கும் குழந்தைகள், சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, பாட்டி வீடு களில் வாழும் குழந்தைகள் - இவர்கள் ஒவ்வொருவரின் மன நிலையும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
உண்மையான பாசம் கிடைக்காத பிள்ளைகள் ஏராளம். பலவந்தமாக திணிக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தைகளைப் பாது காக்க வேண்டியவர்களும் வசதியில்லாதவர்களே!
ஒருவேளை அரிசிச் சோற்றினைக் கூட ஆசைதீர உண்ணா தவர்கள்; ஒரு பென்சில் கூட வாங்க முடியாதவர்கள்; பள்ளி முடிந்தவுடன் ஏதேனும் ஒரு வேலை செய்தால் தான் குடும்பம் தாக்குப் பிடிக்கும் என்ற நிலையில் உள்ளவர்கள் என்று பெரிய துயரப் பட்டியல் போடலாம்.
பள்ளி முடிந்து வீட்டுக்குப் போனவுடன் கடைக்குப்
போவது, பாத்திரம் கழுவுவது, காய்கறி நறுக்குவது, சமைப்பது என்று எல்லா வேலையையும் செய்துவிட்டு, இரவு எல்லோரும்

Page 195
72 இதோ ஒரு வெளிச்சம்
உறங்கியபின் மண்ணெண்ணெய் விளக்கைக் கொளுத்தி வைத்துக் கொண்டு அதன் ஒளியில் படிக்கும் மாணவர்கள் இவருள் பல பேர்.
"பணம் வேண்டாம் பகட்டான ஆடை வேண்டாம், பவனி வர வாகனம் வேண்டாம், பல்சுவை உணவு கூட வேண்டாம்; பாசமுள்ள சொற்களையாவது கேட்க மாட்டோமா?’ என்று ஏங்கும் இந்தப் பிள்ளைகளுக்குச் செல்வியின் வரவு மாமருந் தாக அமைகின்றது.
பள்ளிக்குள் நுழைந்தவுடன் 'அக்கா’ என்று ஆர்வத் தோடும், அன்போடும் கூவியபடி ஓடிவரும் பிள்ளைகளுக்கு, செல்வியின் கனிவான சொற்கள் தென்றலின் குளுமையைத் தருகின்றன!
அவர்களுடைய உடல்நிலை, குடும்பநிலை, பள்ளித் தேர்வு களில் பெற்ற மதிப்பெண்கள், வகுப்பில் உள்ள தகுதி நிலை ஆகிய செய்திகளைக் கேட்டறிகிறார் செல்வி. அத்துடன் தேவைப்படும் கொப்பிகள், பென்சில்கள், நூல்கள் ஆகிய வற்றைக் குறித்துக் கொண்டு அவைகள் கிடைக்க ஏற்பாடு செய் கிறார். பவுண்டேஷன் ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இருக் கிறது; மாணவர்கள் கையில் பணமாக எப்போதும் தருவ தில்லை. பள்ளியில் கட்டவேண்டிய பணத்தை பவுண்டேஷன் நேரிடையாகக் கட்டுவதுடன், தேவைப்படும் பொருட்களை, பொருளாக வாங்கிக் கொடுத்து விடுகின்றது.
மாணவ, மாணவியரின் உடல் நலனைப் பேணிக் காப்ப திலும், பவுண்டேஷன் பொறுப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மருத்துவப் பரிசோதனைகள் அவ்வப்போது நடைபெறு வதுடன் வேண்டிய உதவிகளும் அளிக்கப்படுகின்றன. பார் வைக் குறைவைச் சரிசெய்யக் கண்ணாடிகள் வாங்கித் தரப்படு கின்றன. இளம்பிள்ளைவாதத்தால், பாதிக்கப்பட்ட மாணவர் கட்கு ஊன்று கட்டைகளும், போலியோ காலணிகளும் அளிக் கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மாணவர்கள் சரியாகப் படிக்க முடியா விட்டால் இவ்வளவு செய்வதும் பலனற்றுப் போய்விடுமல்

பாடத்துடிக்கும் பறவைகள் w 373
லவா?. ஆகவே, எந்த மாணவர் எந்தெந்தப் பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெறுகிறாரோ அவரை டுட்டோரி யல் கல்லூரியில் சேர்த்து அதற்கெனத் தனிப்பயிற்சிக் கட்டணத் தையும் மாதந்தோறும் பவுண்டேஷன் செலுத்தி விடுகிறது.
பவுண்டேஷன் தேர்ந்தெடுத்துள்ள 137 மாணவ மாணவி யருமே தங்கள் படிப்பில் முன்னேறி வருவதைப் பார்க்கும் போது தெய்வநாயகம் அடையும் மனமகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. a .. 3
திருமதி. மாலதி சிவகுமார், தெமட்ட கொடை விபு லானந்தா மகாவித்யாலயா பள்ளியின் முதல்வர். 1370 பிள்ளைகள் கல்வி பயிலும் தமிழ்ப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றும் அவர் முன்னால் எதிர் நோக்கியிருக்கும் பிரச் சினைகள் ஏராளம். அவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட தொண்ணுாறு சதவீதம் பேர் வறுமையான துழி நிலையில் வாடுபவரே!
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குப் படிப்புச் ச்ொல்லித் தருவது என்ற வழக்கமான கடமைக்கும் மேலாக அவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதே ஒரு பெரிய கடமையாக அமைந்து விட்டது.
ஒருமுறை அவருடைய பள்ளியின் கலை விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்தவர் தெய்வநாயகம். மாணவ மாணவியரின் அற்புதமான கலைத்திறன்களையும், அவர்களை இயக்கி வைத்த ஆசிரியப் பெருமக்களின் ஆற்றல்களையும் கண்டு பெரிதும் மகிழ்ந்த தெய்வநாயகம் "உங்கள் பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்' என்று கூறி ஐந்து மாணவர்களை பவுண்டேஷன் மூலம் தத்து எடுத்துக் கொண்டார். பின்னர் வேறு எந்தப் பள்ளிக்கும் இல் லாத சிறப்பாய் இன்னும் ஐந்து மாணவர்களை பவுண்டேஷன் சார்பில் கல்வித் தொகைக்காக ஏற்றுக் கொண்டார்!
ஒருவேளை இப்படிப்பட்ட கல்வித்தொகை கிடைக்காவிட் டால் இந்தப் பிள்ளைகளின் நிலை என்னவாகியிருக்கும்?
‘எங்கே சென்றுவிட்டார் தன் தந்தை?’ என்று தெரியாத நிலையில் தாய் இரப்பர் தொழிற்சாலையில் உழைக்க, கல்வித் தொகையின் மூலம் கல்வி பயிலும் சாந்தி நிஷானி கூறுகிறாள்:

Page 196
374 இதோ ஒரு வெளிச்சம்
“இப்படிப்பட்ட உதவி எனக்குக் கிடைத்திராவிட்டால், ஏதே னும் ஒரு கடலைக் கடையில், கடலையை பாலித்தின் பாக்கட்டு களில் அடைக்கும் வேலைக்கோ, கூலி வேலைக்கோ போயிருக்க வேண்டியது தான்.'
இந்த உதவிகள் மாணவ, மாணவியரிடம் ஒரு பெரிய மலர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன. கூம்பிப் போன இதயங் கள் கருணை ஒளிபட்டு மலர்ந்திருக்கின்றன. கல்வித் தொடர் பாக எதைக் கேட்டாலும் வி.ரி.வி. பவுண்டேஷன் நமக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கை அவர்களை நிமிர்த்தி உட்கார வைத்திருக்கிறது. "நாங்களிருக்கிறோம், நீங்கள் படியுங்கள்!" என்று கூறும் ஆறுதலான சொற்கள் வீர நடைபோட உறுதியை யும், உரத்தையும் கொடுத்திருக்கின்றன.
ஆறு ஆண்டுகளாக இந்த முயற்சி தொடர்கிறது. கல்வியை முடித்துவிட்டு வெளியே வந்த இரு பெண்களுக்கு, ஈஸ்வரன் பிரதர்ஸில் கண்ணியமான வேலைகளும் கிடைத்து விட்டன. மற்ற மாணவ, மாணவியருக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. படிக்கும் மாணவ மாணவியரின் படிப்பைப் பாதியில் முறித்து வேலைதர பவுண்டேஷன் விரும்பவில்லை. "படிக்கும் ஆற்ற லுள்ளவர்கள் எவ்வளவு படிக்கிறார்களோ அவ்வளவு படிக் கட்டும் நல்ல வேலை தரலாம்' என்று படிக்க வைக்கிறார்கள்.
பரத நாட்டியம் சிறப்பாக ஆடும் சாந்த அந்தோணிப் பள்ளி மாணவி தற்போது வணிகவியல் படித்துக் கொண்டிருக் கிறாள். கம்ப்யூட்டர் கல்வி பெற்று, கணக்காளராகச் செல்ல அவள் மனத்தில் ஒரு திட்டம் உருவெடுத்துள்ளது.
மருத்துவராகவும், வங்கி வேலை செய்யவும், ஆசிரியர் களாகச் செல்லவும் இளம் நெஞ்சங்கள் கனவு காணத் தொடங்கிவிட்டன.
28 பள்ளிகள் என்று சொல்லும்போது இந்து, முஸ்லிம், கிறித்துவ, புத்த பள்ளிக் கூடங்கள் என்று பரவலாக அமைந்து விட்டதால், நிதி உதவி பெறும் மாணவர்கள் பல மதத்தையும், பல இனத்தையும் சேர்ந்தவர்களாக அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பு.
வறுமைக்கு நிறமேது?

பாடத்துடிக்கும் பறவைகள் 375
கண்ணிர் எந்த நிறம்? பசிக்கு இன, மத, மொழி வேறுபாடு உண்டா?
வாடிய முகத்தில், ததும்புகின்ற கண்ணிரைத் துடைக்கக் கைகள் நீளும்போது, இதயம் இன ஆராய்ச்சி செய்வதில்லை!
கொட்டுகின்ற மழை, எந்த மண்ணிலும், யார் நிலத்திலும் பாகுபாடின்றிப் பொழிவது போல தெய்வநாயகத்தின் அன்பும் எந்தப் பாகுபாடுமின்றி அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்து கிறது.
இந்த 137 பிள்ளைகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாள் ஒன்று உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை இக்குழந்தைகள் ஓரிடத் தில் கூடுகின்றனர். அவர்களுடைய பள்ளியின் முதல்வர்கள், கொழும்பின் முக்கிய மனிதர்கள் எல்லோரும் ஒன்று திரளும் அந்த நன்னாளில் தெய்வநாயகமும், அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர மாணவரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
பரத நாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், பாடல்கள், நாடகம்' என்று பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறு கின்றன.
தங்களால் உருவாக்கப்படுகின்ற பிள்ளைகளின் பேராற் றல்கள் வெளிப்படும் நிகழ்ச்சியைப் பெருமித உணர்வோடு வி.ரி.வி குடும்பம் கண்டு மகிழ்கின்றது. அன்றைக்குப் பரிசு மழை பொழிகின்றது.
பள்ளிக்குத் தவறாமல் சென்ற 'வரவு' பரிசுகளிலிருந்து, போட்டிகளில் வென்ற மாணவர்கள், படிப்பில் சாதனை புரிந் தோர்கள் எனக் கிட்டத்தட்ட எல்லோருமே, ஏதாவது ஒரு பரிசைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு மாணவனும், மாணவி யும் இந்த நாளுக்காக ஏங்குவதைப் பார்க்கலாம். வாழ்க்கைக் காட்டில் இந்தப் பறவைகள் குரலெடுத்துப் பாட ஆரம்பித்து விட்டன. இனி கானகம் அழகாகத் திகழுமல்லவா?
யாரிந்த 137 மாணவர்கள்?

Page 197
376 இதோ ஒரு வெளிச்சம்
அவர்கள் தெய்வநாயகத்தோடு எந்த வகையில் தொடர்பு கொண்டவர்கள்?
அவர்களுடைய குடும்பத்திற்கு எந்த வகையில் கடன் பட்டவர்?
இவர்கள் படிக்கவேண்டுமென்று ஏன் தெய்வநாயகம் கவலைப்படவேண்டும்?
அவர்களுக்கு உதவுவதால் இவருக்கு எவ்வளவு ரூபாய் இலாபம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை உங்களுக்கே தெரி யும். தனக்குக் கிடைக்காத கல்வியறிவு, வறுமைத் தீயால் சுட்டுப் பொசுக்கப்பட்ட தன் படிப்பு, சில பிள்ளைகளுக்காவது கிடைக்கட்டுமே என்ற உணர்வின் விளைவே இந்த பவுண் டேஷன் இதன் பின் விளைவு மெச்சத் தகுந்தது என்பதில் ஐய மில்லை. தொடர்ந்து மேலும் மேலும் கல்வியறிவு பெற்ற குடும்பங்கள் உருவாகி புதியதோர் உலகைச் செய்வார்கள்!
'இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல் அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆலய யம்பதி னாயிர நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்" என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி அன்று பாடினான்.
"அன்னதானம் செய்தல் - ஆலயங்கட்டுதல் இவற்றை யெல்லாம் விட ஏழை ஒருவனுக்குக் கல்வியளித்தல் கோடிப் புண்ணியம்’ என்று பாடினான். ஒன்றை உயர்த்த இரண்டைத் தவிர்த்தான் மகாகவி. ஆனால் மூன்றையும் செய்யும் தெய்வ நாயகத்தை என்னென்பது? ஆம், தெய்வநாயகம், வருவோர்க்கு இல்லையெனாது விருந்தோம்பி நல்லறமும் செய்கின்றார்; கோயில் திருப்பணிகளையும் தன் தலையாயக் கடமையாய் கண்ணெனக் கருதிச் செயல்படுகிறார். ஓர் ஏழைக்கு மட்டு மின்றி நூற்றுக்கும் மேற்பட்டோருக்குக் கல்வியறிவும் கிடைக்க

பாடத்துர்க்கும் பறவைகள் 37 7
அல்லும் பகலும் பாடுபடுகின்றார். நினைத்துப் பாருங்கள்! பாரதி இன்று உயிரோடிருந்தால் தெய்வநாயகத்தைப் பார்த்து விட்டு என்ன பாடியிருப்பார்?

Page 198
37. பேதமில்லா அன்பு
auntil
பெயரைப் படித்ததும் உங்கள் மனம் கற்பனைக் குதிரையில் ஏறிச் சவாரி செய்தால், கொஞ்சம் குதிரையை நிறுத்தி இறங்கிக் கொள்ளுங்கள்.
ஷரீபா ஒரு நாயின் பெயர்.
அது உயர்ரக டாபர்மேன், அல்சேஷன், பமரோனியன் வகை நாயல்ல; சாதாரணத் தெருநாய்! யாரும் கொண்டு வராமல், தானாக அருணாசலம் வீட்டிற்கு வந்த நாய்! போட் டதைச் சாப்பிட்டு விட்டு உலாவும் நாய், அருகிலிருந்த தெய்வ நாயகம் வீட்டிலேயே தங்க ஆரம்பித்துவிட்டது. சென்னை வரும் போது தெய்வநாயகம் அந்த நாயைத் தம் வீட்டிலே பார்த் திருக்கிறார். வருடத்தில் 5 நாட்கள் சென்னையில் அவர் தங்கி னால் அதிகம். நாயோடு அவருக்குள்ள ஈடுபாடு, பாசம் எல் லாம் அந்தச் சில நாட்களில், வீட்டில் இருக்கும் சில மணிநேரங் கள் தான்.
ஒரு நாள் அருணாசலம் குடும்பத்தினர் நடுத்தெருவில் வeபாவைக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கண்டார்கள். சாலை யில் சென்ற கார் ஒன்று ஷரீபாவின் மீது ஏறி அதன் கால் பகுதியைக் கூழாக்கி விட்டு பறந்துவிட்டது. ஷரீபாவைப் பார்த்து அனைவரும் கண் கலங்கினர். கால்நடை மருத்துவரிடம் ஒடிப் போய்க் காட்டினர். அவர் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடி யாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
அந்த நேரம் பார்த்துக் கொழும்பிலிருந்து சென்னை வந்த தெய்வநாயகம் வீட்டிற்குள் நுழைந்ததும் வாலாட்டி நிற்கும் நாய் எழுந்து கூட நிற்க முடியாமல் ஈன உயிரோடு படுத்துக் கிடந் ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
மீண்டும் கால் நடை மருத்துவர்கள் வந்தனர். எக்ஸ்ரே
 

பேதமில்லா அன்பு 37 9
எடுக்கப்பட்டது. 'பின்னங்கால் எலும்பு நொறுங்கி விட்டது. நிச்சயமாக ஒன்றும் செய்ய முடியாது! வேறு உயர்ந்த ஜாதி நாயாகப் பார்த்து வாங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்'
தெய்வநாயகம் மருத்துவம் படிக்கவில்லை:மருத்துவரல்லர். சொல்லப் போனால் ஆரம்பக் கல்விக்குமேல் படிக்க இயலா மல் போனவர். ஆனாலும் எப்படியாவது நாயைக் காப்பாற்ற முடிவு செய்தார். பொதுவாக 'இது முடியாது!’ என்று மற்ற வர்கள் கூறிவிட்டால் 'முடியும்' என்று நிரூபித்துக் காட்டுவது அவர் வழக்கம்.
புத்துாருக்கு வேன் சென்றது. பச்சிலை அரைத்து எலும்பு முறிவுக்குக் கட்டுப் போடும் வைத்தியர்கள் வேனில் சென்னை வந்தார்கள். நாய்க்கு மருந்து வைத்துக் கட்டுப் போடப்பட்டது. 'ஒருநாள் முழுக்க நாய் அசையாமல் இருக்க வேண்டும்’ என்று கூறியதற்கிணங்க, வேகமாக, நாய் நிற்க மட்டும் போதுமான இடம் கொண்ட சின்ன அறை மூங்கிலால் கட்டப்பட்டு அதில் ஒருநாள் முழுக்க ஷரீபா நின்று கொண்டிருந்தது.
மறுபடியும் குறிப்பிட்ட நாளில் வேன். புத்துார் சென்று டாக்டர்களை சென்னை அழைத்து வந்தது. கட்டு பிரிக்கப்பட் டது. ஷிபாவால் காலை மெல்ல இழுத்தபடி நடக்க முடிந்தது. எமன் வாய்க்குள் ஏறக்குறைய முழுவதாகச் சென்று விட்ட ஷபா இலேசான ஊனத்துடன் தப்பிவிட்டது.
ஒரு சாதாரண நாய்க்காகப் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு; அதைவிடப் பல மணி நேர முயற்சிகள். இது நம்

Page 199
380 இதோ ஒரு வெளிச்சம்
வீட்டு நாய்; நம் வீட்டைக் காவல் காத்த நாய்; நம்மை நம்பி வந்த ஜீவனை நாம் எப்படிக் கைவிட முடியும்' என்று கூறி விட்டு முயற்சியில் இறங்கியவர் வெற்றி கண்டேவிட்டார்.
'முயற்சியில் வெற்றி" என்பது பணம் ஈட்டித் தரும் வியா பாரங்களில் மட்டும் என்று இல்லாமல், மனிதன் மனிதாபி மானியாக இருக்கும் முயற்சிகளிலும் வெற்றி பெற்றார்.
சென்னை வரும்போதெல்லாம் 'ஷரீபாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்,' நல்ல உணவு கொடுங்கள் என் றெல்லாம் வீட்டினருக்குச் சொல்லுவார்.
இன்றைக்கும் அண்ணாநகரில் உள்ள தெய்வநாயகம் வீட் டில் உலவி வரும் ஓர் உருவம் வரீபா என்கின்ற நாயல்ல - தெய்வநாயகத்தின் அன்பும், நம்பிக்கையும் விடாமுயற்சியுமே!
அதே போல் வல்ல நாட்டில் அவர்கள் வீட்டில் பல ஆண்டு காலம் வாழ்ந்த மாடு ஒன்று இறந்துவிட்டது! இயற்கையாகவே அனைத்து உயிர்களின் மீதும் அன்பு காட்டும் குணம் படைத்த தெய்வநாயகம் மிகவும் மனம் வாடிப் போனார்.
தம்முடைய செயலாளர் குழந்தைவேலுவிடம் திட்டவட்ட மாகக் கூறிவிட்டார். ‘நம்முடைய தோட்டத்தில் ஒரு பெரிய, பொருத்தமான குழி ஒன்றினை வெட்டி, அதிலே இந்த மாட்டை அடக்கம் செய்யவேண்டும்.” கேட்டவர்களுக்கு மிகவும் வியப் பாக இருந்தது. கேவலம் ஒரு மாடு, அது செத்துப் போனால் அதற்கு ஒரு குழிவெட்டி யாரேனும் புதைப்பார்களா?
முதலாளியிடம் இதைக் கேட்க யாருக்கும் துணிவில்லை. ஆனால் அவர்களுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்ட தெய்வநாயகம் கூறினார்.
'இந்த மாடு நம் வீட்டில் வளர்ந்தது. நமக்காக உழைத்தது. இந்த மாட்டை நுகத்தடியில் பூட்டி நாம் இந்த நிலத்திலே உழ வைத்திருக்கிறோம். இதன் சாணத்தை எருவாக நிலத்திலே போட்டிருக்கிறோம். நம்முடைய மகிழ்ச்சியில் ஒரு பங்கு நிச் சயம் இந்த மாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு பதிலாக நாம் அந்த மாட்டிற்கு என்ன உதவி செய்துவிட்டோம்? அதற்கு உணவு மட்டும் தானே கொடுத்தோம்!”
வேலை செய்யும் தொழிலாளியை நாம் பல வகைகளில்

பேதமில்லா அன்பு 38
மகிழ வைக்க முடியும். உணவு தரலாம்; உடை தரலாம்; ஊதி யத்திற்கு மேலும் பணம் கொடுக்கலாம், பரிசுப் பொருள்கள் தரலாம், மனம் குளிரும்படி நாலு நல்ல வார்த்தைகள் சொல் லலாம். ஆனால் மாட்டிற்குத் தீனி போடுவதற்கு மேல் எந்த வகையில் அதற்கு நம்மால் நன்றி பாராட்ட முடியும்?
மாடு இறந்து போன பின் நாம் அந்த நன்றியைக் காட்டி ன்ால் என்ன?
அந்த மாட்டை யாருக்காவது கொடுத்து விட்டால் தோலுக் காகவும், இறைச்சிக்காகவும் அதை வெட்டிக் கிழிப்பார்கள். நமக்காக எந்த மண்ணில் உழைத்ததோ, அதே மண்ணிலே அந்த மாடு ரத்தம் சிந்த வேண்டும்; அதை நாம் எப்படி அனுமதிப் பது?
'மாடு தானே, வெட்டினால் என்ன?’ என்று மறுபடியும் நீங்கள் எண்ணலாம். நம் உறவினர்களில் யாராவது இறந்து போனால், அவர்கள் உடலைச் சிதைக்க நாம் விரும்புவோமா?
அவர் விருப்பப்படியே அந்த மாடு ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
'உயிர்கள் என்று வரும்போது அவற்றில் என்ன பாகு பாடு? எல்லா உயிர்களும் சமம் தானே?’ என்று கேள்வி கேட் கும் தெய்வநாயகம், வேதங்களையும் உபநிடதங்களையும் படித்த தில்லை; ஆனால் இந்து மதத்தின் மிக உயரிய கொள்கையைத் தன்னுடைய வாழ்க்கையில் இன்றளவும் கடைப்பிடிப்பவர். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று, அன்பு பாராட்டுவதில் மிக உயரிய நிலையை எட்டி விட்ட வள்ளலாரின் அன்பு உள்ளம் தெய்வநாயகத்தை வாழ்த்தும் என்பதில் ஐயமில்லை. حساس سے

Page 200
38. வாழையடி வாழை
காலம் தான் எவ்வளவு வேகமான மாற்றங்களை உண் டாக்கி விட்டு வந்த சுவடு, தெரியாமல் மாயமாய் மறையும் தென்றல் போல ஒடுகின்றது?
எண்பது ஆண்டுகளுக்கு முன் இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு, தன் அண்ணன் சுடலைமுத்துவுடன் கட்டு சாதத்தைக் கையில் சுமந்தபடி பல மைல்கள் நடந்து ‘அண்ணாவி பாடசாலையில் படிக்கச் சென்றவர் தெய்வநாயகம்.
இன்றைக்கு அவருடைய பேரப்பிள்ளைகள் கொழும்பு சர்வதேசப் பள்ளிகளிலும் வெளிநாடுகளிலும் படித்து வரு கிறார்கள். அவர் அன்று நடந்து போனார்; இன்று பேரக் குழந்தைகள் பென்ஸ், டயோட்டா கார்களில் செல்லுகிறார் 956.
தம்முடைய நாட்களையும், தம் பேரக் குழந்தைகளின் நாட்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெய்வநாயகத்தின் கண்கள் மகிழ்ச்சியால் பனிக்கும். பள்ளியில் சேரும்போதும், தேர்வு எழுதப் போகும்போதும், மேல்நாடுகளுக்குச் செல்லும் போதும் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, நெற்றி யில் அவர் இடும் திருநீற்றைப் பெருமையுடன் அக்குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் போதெல்லாம் அவர் அடையும் பெருமித உணர்வுக்கு எல்லையே இல்லை. குழந்தைகளை அணைத்து உச்சந்தலையிலும், நெற்றியிலும் முத்தமிடும்போதெல்லாம்,
உச்சிதனை முகந்தால் - கருவம் ஓங்கி வளருதடி! سمبر மெச்சியுனையூரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி! கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
A
 

வாழையடி வாழை 383
என்ற பாரதியின் பாடல்கள் பார்ப்பவர்களுக்கு நினைவுக்கு வரும்.
தெய்வநாயகத்தின் முதல் மகன் ஈஸ்வரனுடைய மூத்த மகன் கணேஷ் அவருடைய மூன்றாம் தலைமுறையின் முதல் உறுப்பினராகத் திகழ்கிறார். அமெரிக்க நாட்டில் எம்.பி.ஏ பட்டம் பெற்று, கொழும்பில் ஒரு பெரிய துணியாலையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படும் அவர் சென்னை ப்ரீஸ்' ஓட்டலின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வருவதைக் கண்டோம். தெய்வநாயகத்தின் பிள்ளைகள் ஈஸ் வரனை தங்கள் வரிசையில் தந்தைக்கு அடுத்த தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பது போல, மூன்றாம் தலைமுறையில் உள்ள பேரப்பிள்ளைகள் கணேஷ சக்குத் தங்கள் வரிசையில் முதலிடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
குமார் வீரவாகுவின் மூத்தமகன். இவரை எல்லோரும் "தாத்தாச்சி பேரன்’ என்று கிண்டல் செய்த காலம் உண்டு. சிறு வயதில் அப்பா, அம்மாவோடு கழித்த நேரத்தைவிட தாத்தா வோடு கழித்த நேரம்தான் அதிகம். தாத்தாவோ கோவிலில் அதிகநேரம் இருந்தமையால் குமாரும் அதிகநேரம் கோவிலில் கழிக்க வேண்டியதாக இருந்தது.
பன்னிரண்டு வயது வரை குமாரைப் பார்த்தவர்கள் குமார் சாமியாராகப் போவது நிச்சயம்' என்று சொல்லிக் கொள்வார்கள். அந்த அளவுக்கு மிதமிஞ்சிய பக்தியில் குமார் ஆழ்ந்திருப்பார். இன்னும் சிலபேர் குமாரை 'வீட்டோடு பேரன்' என்று கிண்டல் செய்வார்கள். அவர்கள் தெய்வநாய கத்தைக் கூடக் குறை கூறி முணுமுணுப்பது உண்டு. "எதற்காக தெய்வநாயகம் இந்த சின்ன வயதில் குமாரை அளவுக்கு மிஞ்சிய பக்தியில் ஈடுபடுத்த வேண்டும்? பையன் எப்படிப் படிக்கப் போகிறான்?
குமாருக்கோ அந்த வயதில் உலகமே தாத்தா தான் என்று சொல்ல வேண்டும். தெய்வநாயகத்தின் கையைப்பிடித்துக் கொண்டு நடந்து செல்லும்போது தெய்வத்தின் கையைப் பிடித் துக் கொண்டு நடப்பது போல ஒரு பெருமை.
1983 இனக்கலவரத்தின் போது, கொழும்பை விட்டுத் தமிழகம் வந்தபின்னர் கொடைக்கானலில் கல்வி பயில ஆரம்

Page 201
384 இதோ ஒரு வெளிச்சம்
பித்த பின்தான் குமாருக்கு ஒரு புதிய உலகமே தென்பட்டது. அந்த உலகத்தைப் புரிந்துகொள்ள 'கடந்த வாழ்க்கை மிகவும் உதவியாக அமைந்தது' என்றால் மிகையாகாது!
தாத்தாவிடம் குமார் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம்! அதில் ஒன்று பேசும்போதும், பழகும் போதும் மற்றவர் களுக்குத் தரவேண்டிய மரியாதை சின்னக் குழந்தையைக் கூட தெய்வநாயகம் ‘வாங்க' என்று அழைப்பார்.
'அவர்' என்று சொல்வது கூட தவறு: 'அவங்க' என்று தான் சொல்லவேண்டும்’ என்று பேரப்பிள்ளைகளிடம் சொல்லித் தருவார்.
தாத்தாச்சிப் பேரனாக குமார் இருந்தாலும் தவறு என்று வரும் போது கண்டிப்பாக இருப்பது தெய்வநாயகத்தின் வழக் கம். அதே நேரத்தில் கண்டிக்கும் உரிமையைத் தன்னிடம் மட்டுமே வைத்திருப்பார். அப்பா, அம்மா அடிக்க வந்தால் தாத்தாவிடம் ஒடி அடைக்கலம் புகுந்துவிட்டால் சரியான பாதுகாப்பு உண்டு என்று குமாருக்கு நன்றாகத் தெரியும்.
‘எங்கள் குடும்பத்தில் மூன்று முதல்வர்கள் உண்டு’ என்று குமாரின் தாயார் சிவகாமி வேடிக்கையாகச் சொல்வது வழக் (95).
பத்து வயது வரை தாத்தா முதல்வர்; அந்தப் பள்ளி யிலிருந்து குழந்தைகள் வெளியே வந்தால் அவரவர்களுடைய அப்பா முதல்வர், கல்லூரி போகும் நிலை வந்துவிட்டால், மேல் படிப்பைத் தீர்மானித்து வழிநடத்த எல்லாப் பிள்ளைகளுக்கும் ஈஸ்வரன் முதல்வர்.
ஆக ஒவ்வொரு குழந்தையும் தாத்தா, தந்தை, பெரியப்பா வால் உருவாக்கப் படுவதால் மூவரின் சிறப்பியல்புகளில் வளர்கிறார்கள்.
ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் ‘சர்வதேசச் சந்தை' என்ற பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று வருகின்ற குமார், வருங்காலத்தில் அளவில் பெரும் வியா பாரத்துக்குத் தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். சர்வதேச வணிகத்தை ஆராய்ச்சி செய்து கற்று வரும் குமார், தன் தாத்தாவின் வணிகத்தை எப்படி ஆராய்ச்சி செய்திருக்கிறார்?

வாழையடி வாழை 385
'என் தாத்தா வணிகத்தைத் தொடங்கிய காலம் இன்றைய நாளைப் போல் விளம்பர உலகமல்ல! அது ஒரு திறந்த சந்தை! தகவல் தொடர்பு சாதனங்கள் தெரியாது! பெரிய தது, வாது கள் இல்லாத காலம். வியாபாரம் என்று சொல்லும்போது அன்றைக்கும் போட்டி இருந்தது. சிங்கள மொழி பேசும் மக் களின் நடுவில், பல நூற்றுக்கணக்கான சிங்கள வியாபாரி களுக்கு நடுவில் ஒரு தமிழர் ஆரம்ப நாட்களில் அதிக முதலு மின்றி வியாபாரத்தை நடத்த வேண்டுமென்றால் அவர் ஒரே ஒரு கருவியைத் தான் பயன்படுத்த முடியும். அது அவர் இயல் பாகவே கையாண்டு வந்த கருவி - அது தான் 'மனிதநேயம்’. அவருடைய ஒரே மூலதனம் 'மனிதநேயம்'தான். அவர் அனை வரையும் மனதார நேசித்தார்; உண்மையாக அன்பையும், அக் கறையையும் காட்டினார். அதுவே அன்றும், இன்றும் வணிகம் வளர அவருக்குப் பெருந் துணையாக அமைந்தது.
அமெரிக்க நாட்டில் படித்த கணேஷ், ஆஸ்திரேலியாவில் படித்துவரும் குமார் இருவருக்கும் அடிப்படையில் பல ஒருமித்த எண்ணங்கள் உண்டு; இதே எண்ணம் நிச்சயம் மற்ற பிள்ளை களுக்கும் இருக்கும் என உறுதியாக நம்பலாம்.
'குடும்பத்திற்கு என இருக்கின்ற கட்டுப்பாடு, ஒழுக்கம், பக்தி, கூட்டு வாழ்க்கை, அனுசரித்துப் போதல், ஒருவரை யொருவர் மதித்தல் இவையெல்லாம் இப்படியே நீடிக்குமா? அல்லது இளந்தலைமுறையினர் ஒரு புரட்சிகரமான, புதிய வழிமுறைகளைக் கொண்டு வருவார்களா?
'ஒரு அமைப்பு முறை வெற்றிகரமாக இயங்குகிறது. அன்று தாத்தா வழிவகுத்த பாதையில் நடந்து செல்லுகிறோம்; வெற்றி மேல் வெற்றி குவிகிறது; மனமும் மகிழ்ச்சியால் நிரம்புகிறது; சமுதாயம் எங்களைப் பாராட்டிப் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் இந்த அற்புதமான அமைப்பை மாற்றவோ, உடைக்கவோ தேவையில்லை. அப் படிச் செய்ய முயன்றால் அது பைத்தியக்காரத்தனம்' என்று கூறுகிறார் கணேஷ்.
'குடும்ப ஒற்றுமை, கட்டுப்பாடு, பாசம், பக்தி நெறி என் பவையெல்லாம் எங்கள் உடலிலும் உள்ளத்திலும் என்றோ ஊறிவிட்டவை; ஒன்றிவிட்டவை. இக்குடும்பத் தல்ைவர் தெய்வ நாயகத்திடம் தொடங்கி கடைசிப் பேரக் குழந்தை பாலாஜி

Page 202
386 இதோ ஒரு வெளிச்சம்
வரை அனைவரின் இரத்தத்திலும் ஊறிவிட்ட இந்த உணர்வி லிருந்து நாங்கள் விடுபடுவதென்பது எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று. மேலும் இந்த நெறிமுறைகளால் மிகுந்த நன்மை யையும், பெருமையையும் அடைந்திருக்கின்றோம். எந்தக் கல்லூரியில், எந்த நாட்டில் படித்தாலும் இந்த அடிப்படையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறுகிறார் குமாா.
சின்னப் பேரக்குழந்தைகளுக்கிடையில் தாத்தாவின் அன்பைப் பெறுவதில் பெரும் போட்டி, யாரைக் கேட்டாலும் "தாத்தாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும்' என்று நம்பிக் கையோடு உறுதியான குரலில் சொன்னாலும்கூட "தாத்தா வுக்கு எல்லோரையும் பிடிக்கும்’ என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிகின்றது.
வீரவாகுவின் இரண்டாம் பிள்ளை மான்செஸ்டரில் படித்து வருகிறார். மற்ற இரண்டு பிள்ளைகள் முருகன்-முரளி இருவரும் தங்கள் வீட்டில் இருக்கும் கணிப்பொறிகளை வைத் துக் கொண்டு "கொழும்பு நகரத் திரையரங்குகளில் நுழைவுச் சீட்டு முன்பதிவு செய்தல், விற்றல் ஆகியவற்றை எப்படி ஒழுங்கு முறைப்படுத்தலாம்' என்பதைத் திட்டபணியாக வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள்.
ஒய்வு நேரத்தில் வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவி களை இயக்கக் கற்றுக் கொள்ளுகிறார்கள். இதற்கென இசை ஆசிரியர் வீட்டிற்கு வந்து கற்றுத் தருகிறார்.
ஈஸ்வரனின் இரண்டாவது மகன் சுப்பிரமணியம் மிருதங்கம் வாசிக்கும் கலையில் நன்கு பயிற்சி பெற்றதோடு அவருடைய கச்சேரியை அரங்கேற்றி 'லயஞானச்செல்வன்' என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வருகிறார். --
ஈஸ்வரனின் முதல் மகள் லல்லி வரைந்த 'கண்ணன் குழலூதும் காட்சி துணித்திரையில் மிக நேர்த்தியாக வரையப் பட்டு, ஈஸ்வரனுடைய வீட்டு வரவேற்பறையை அலங்கரிக் கிறது. லல்லி இலண்டனில் தன் கணவர் சுதாகரனோடும், குழந்தைகளோடும் வாழ்ந்து வருகிறார்.

வாழையடி வாழை 387
ஈஸ்வரனின் கடைசிப்பெண் சண்முகப்ரியா மேடைப் பேச்சுக் கலையில் வல்லுநராகத் திகழ்கிறார்.
பிரமநாயகத்தின் மூத்த மகள் ஜானு வீணை வாசிப்பதில் மிக்க திறமைசாலி. அடுத்த இரு சிறுமிகள் கலா, ரேகா இருவரும் விரைவிலேயே கலைத்துறையில் தங்கள் ஆர்வத்தைக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அருணாசலத்தின் பிள்ளைகள் பிரசாத், வினோத், பாலாஜி ஆகியோர் டேபிள் டென்னிஸ், செஸ் விளையாட்டு களில் திறமையைக் காட்டுகிறார்கள். கொழும்பில் பயின்று வரும் பிரசாத்துக்குத் தன் தாத்தாவிடம் பிடித்த ஓர் அம்சம், எவ்வளவு பெரிய கும்பலிலும் யாரையாவது பார்த்து விட்டால் வலியச் சென்றுப் பேசி விட்டு வருவது.
'பெரியவர் என்னைக் கவனிக்கவில்லை' என்ற குறை வைக்காமல், அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் குணம் - என்னைக் கவர்ந்திருக்கிறது என்று கூறும் பிரசாத் என் தாத்தாவிடமிருந்து அந்த குணத்தை நான் பெற்றுக் கொள்வேன் என்று உறுதியாகக் கூறுகிறார்.
புத்தாண்டு விழா கொண்டாட யாரும் வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை; அதேபோல் பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாக்களின்போது தெய்வநாயகம் வீட்டில் எல் லோரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடும் நாட்கள் இனிமை
LIGT606.
முன்வரிசையில் தெய்வநாயகமும் சிதம்பரத்தம்மாளும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க குடும்ப உறுப்பினர்கள் அன்னவர் முன்னிலையிலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். குமார் நிகழ்ச் சியாளர், நகைச்சுவையாக ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்த பாடல்கள், நாட்டியம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்களைக் குழந்தைகள் அரங்கேற்றுவார்கள். சில நாட்களில் வெளியிலே யிருந்து வரவழைக்கப்பட்ட மந்திரவாதி ‘மாஜிக் ஷோ நடத்த அனைவரும் சிரித்து மகிழ்கின்றன்ர். இடையே ஒரு பட்டிமண் டபம். 'குடும்பத்தின் முன்னேற்றத்தில் பெரிதும் பங்கேற்பது தாயா? தந்தையா? *-
நடுவர் வள்ளி; பேரக் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு விவாதிக்கின்றன. சிறிய உருவங்களிடமிருந்து பெரிய

Page 203
388 இதோ ஒரு வெளிச்சம்
கருத்துக்களின் சிதறல்கள், இளம் உள்ளங்களிலிருந்து முதிர்ந்த சிந்தனைகள். இடையே அருணாசலத்தின் பிள்ளை பாலாஜி - தாத்தாவைப் போலவே, வேட்டி கட்டி, கண்ணாடியுடன் பேசிக்காட்ட, பலத்த கரஒலி.
குழந்தைகள் வெறும் புத்தகப் புழுக்களாக அங்கே உருவாக வில்லை. தமிழ்நாட்டின் இயல், இசை, நாடகக் கலைகளைப் பயின்று பண்பையும், கலாசாரத்தையும் பேணிக் காக்கும் பிள்ளைகளாக அவர்கள் உருவாவதைப் பார்க்கும் போது பெருமித உணர்வு நமக்கு மட்டும் தோன்றுவதில்லை; விருந் தினர்களாகக் கலந்துகொள்ளும் வெளிநாட்டு நண்பர்களும் கூட அதே உணர்வில் திளைக்கிறார்கள்.
தாத்தாவிற்கு நாம் என்ன தரமுடியும்? குமாருக்குக் குழப்பமான கேள்வி இது! நாம் கொடுத்து எதையும் வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை; இன்னும் உழைக்கிறார்; சம்பாதிக்கிறார்; நமக்கே தருகிறார்!
அவர்மீது அன்பு செலுத்தலாம்; ஆனால் மாறாக அவர் திரும்பக் காட்டுகின்ற அன்போ அளப்பரிதாக உள்ளது! ஆஸ் திரேலியாவிலிருந்து விடுமுறைக்காக வரும்போது குமார் விரும் பிச் செய்வது சில செயல்கள்தாம்.
கடற்கரைக்கு உடன் செல்வது; கையைப் பிடித்தபடி கோயிலுக்குள் அழைத்துச் செல்வது
உறங்குமுன் அவருடைய படுக்கையை சரி செய்வது,
 

வாழையடி வாழை 389
இப்படி சின்ன சின்ன செயல்களையாவது அவருக்குச் செய்ய முடிகிறதே என்று மகிழ்வதற்குமேல் குமாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
முருகேசின் மகள் கலாவுக்குத் தன் தாத்தாவை எண்ணும் போது ஒரு கவிதை ஊற்றெடுக்கிறது. தன் பிஞ்சுக்கரங்களால் எழுதிய ஆங்கிலக் கவிதை இதோ: ــــــــ
A mon SO kind ond thoughtful like my grond dod, ls C person with C greot personolity even OS o lod, He worked his woy upthrough life, And now is omon with o contended wife,
He is generous ond Sympothetic But never woS he pothetic, He rises ObOve US Cl, Like the Sun, which won't foll,
He taught us that none is too high to show gratitude And diso something else, never intrude, He is olwoys so busy with business tolking, Thot he would even go to office walking.
He's mode me hoppy ond glod And told me never be bold, Through the different phoses in his life, we could see the Confidence he Occupies.
| understond thee, And will moke you proud of me,
I do my best to follow thee Then I'm sure to be like o Queen Bee,
தன் பேத்தியின் மனத்தில் எவ்வளவு அழுத்தமான இடத்தைத் தெய்வநாயகம் பெற்றிருக்கிறார்?
இப்போது நான்காவது தலைமுறை தளிர் நடைபோட ஆரம்பித்து விட்டது. ஈஸ்வரனின் பேத்திகள், கொழும்பிலும், லண்டனிலும் மழலை பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு நாள் விடியற்காலை கணேசின் மூத்த மகள் அபிராமி

Page 204
390 இதோ ஒரு வெளிச்சம்
தன் தாத்தா ஈஸ்வரன் முன் கண்ணைக் கசக்கிய படி வந்து நிற் கிறாள். அந்த மூன்று வயதுக் குழந்தை தாத்தாவைக் கேட்கிறது.
"தாத்தா!' 'என்னங்க அபி'
‘என்னை சிங்கப்பூருக்கு அழைச்சிட்டுப் போகணும்'
'ஒ! நிச்சயமா!'
‘என்னை அமெரிக்காவுக்குக் கூட அழைச்சிட்டுப் போகணும்!”
'கண்டிப்பா!'
அண்டார்டிக்காவுக்கு. p 9
'ஒ! போகலாமே!’
'அண்டார்டிகாவில் பணிக்கட்டி நிறைய இருக்கும். பனிக் கட்டி 'சில்லென்று குளுமையாக இருக்கும். உங்களுக்குத் தெரியுமா?"
ஈஸ்வரன் விழித்தபடியே பக்கத்திலிருந்த நண்பரிடம் சொல்லுகிறார்.
'அடேங்கப்பா! நான் குழந்தையாக அந்த வயசில் இருந்த போது அண்டார்டிகாவும் தெரியாது; ஆப்பிரிக்காவும் தெரி யாது! என்னமா பேசுது இந்தக் குழந்தைகள்'
 

வாழையடி வாழை 39
நான்காம் தலைமுறையும் எழுச்சிப் பாதையில் வீறுநடை போடத் த்ொடங்கி விட்டது!

Page 205
39. வாரியார் தோற்றார்
அறுபத்து நான்காவது நாயனார் எனத் தமிழ் கூறும் நல்லு லகம் அனைத்தும் போற்றிப் புகழும் சிவனடியார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்!
வருடம் முந்நூற்று அறுபத்தைந்து நாளும் அவர் சொற் பொழிவாற்றுவார்.
அவர் குரல் ஒலிக்காத நாளில்லை; நகரில்லை; கேட்காத
தமிழனில்லை எனலாம். -
ஏற்கனவே இலங்கைக்கு வருகை புரிந்து ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தில் அருளுரையாற்றிய வாரியார் சுவாமிகளை மீண்டும் அழைக்க வேண்டுமென தெய்வநாயகம் தலைமை யிலிருந்த ஜிந்துப்பிட்டி ஆலயத்தின் அறங்காவலர் குழு முடி வெடுத்தது.
அன்பர்களின் வேண்டுகோளைத் தட்டாத வாரியார் சுவாமிகளும் 13.2.93 அன்று கொழும்பு நகருக்கு வருகை புரிந் தார்.
பழுத்த சிவப்பழமாக அவர் இலங்கை வந்திறங்கியவுடன் தமிழர்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டது. காலமெல் லாம் முருகப் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி, சைவத்தை வளர்த்த அந்தப் பெரியாரை மிகச்சிறப்பாக வரவேற்க அறங் காவலர்கள் விரும்பினார்கள். - -
ஒர் ஆன்மீகவாதிக்கு, ஒரு நல்ல தமிழறிஞருக்கு இலங்கை வரலாறு காணாத வரவேற்பை நல்குவது எனத் தீர்மானிக்கப் பட்டு அதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டன.
இதற்கெனப் புதிய லாரிச்சட்டம் வாங்கி அதில் தேர் வடிவமைத்து, இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட மலர் களால் அலங்கரித்தப் பெரிய இரதத்திலே வாரியார் சுவாமி
 

வாரியார் தோற்றார் 393
களை அமரச் செய்து பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலி ருந்து கிளம்பி அழகிய கொழும்பின் முக்கிய வீதிகளிலே ஊர் வலமாக அழைத்து வந்தனர்.
அது கட்டுக்கோப்பான ஊர்வலம் மட்டுமன்று; கலை நுணுக்கமும் தெய்வாம்சமும் நிறைந்த ஊர்வலமாகவும் இருந் தது.
அத்தனை தமிழ் மக்களும் எழுந்து கொழும்பின் சாலைக்கே வந்து விட்டது போல அவ்வளவு பெருங்கூட்டம்!
எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவோ, அத்தனையும் ஊர்வலத்தில் இருந்தன.
இந்து பண்பாடு இளைஞர் சங்கம் இந்து பொதுப்பணி மன்றம்
திருஞானசம்பந்தர் மன்றம் எனப் பல்வேறு சங்கத்தினர் தாங்கள் கொடிகளுடன் ஊர் வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்து மகளிர் கல்லூரி மாணவியர் சீருடை அணிந்து இசைக் கருவிகளை இசைத்தபடி மிடுக்காக அணிவகுத்துச் சென்று, ஊர்வலத்திற்கு அணி சேர்ந்தார்கள்.
கொழும்பு முகத்துவாரம் இந்து கல்லூரி மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து தமிழ்ப்பண்பாட்டை உணர்த்தும் வகையில் வீரநடை போட்டனர்.

Page 206
394 இதோ ஒரு வெளிச்சம்
மஞ்சள் நிறப்புடவை உடுத்திய மங்கையர் ஒர் அணியாக ஊர்வலத்தில் வந்தனர்.
எல்லாக் கல்லூரி, பள்ளி மாணவ மாணவியருமே ஊர் வலத்தில் தங்கள் சீருடைகளை அணிந்து வலம் வந்தனர்.
விவேகானந்தர் கல்லூரி மாணவரின் மிடுக்கான நடை ஊர்வலத்துக்கு மேலும் மெருகூட்டியது!
தமிழர்களுக்கே சொந்தமான நாதஸ்வர இசையை முழக்கிய வண்ணம் இசைக்குழு முன்னே நடந்து சென்றது!
ஊர்வலம் சென்ற ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வீட்டின் முன் தரையில் வரையப்பட்டிருந்த அழகான கோலங்களும், தெருவிலே கட்டியிருந்த தோரணங்களும், ஒர் ஆன்மீகப் பெரியவரை எப்படித் தமிழ் நெஞ்சங்கள் நேசித்துப் போற்றின என்பதனைப் பறைசாற்றின.
அப்படி வரையப்பட்ட கோலங்களுக்கிடையில் ஒரு வீட் டின் முன் தரையில் கோலப் பொடியால் எழுதப்பட்ட எழுத்து கள்: ‘வாழ்க தமிழ் வளர்க சைவம் உலகெங்கும்.
விதவிதமான நடனங்கள். கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் என்று தமிழர்கட்கே உரிய கலை நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் இடம் பெறவே மக்களின் உள்ளம் களிப்பில் மிதந்தது!
சிவசுப்பிரமணிய தேவஸ்தான உறுப்பினர்கள் மகிழ்ச்சி பொங்க ஊர்வலத்தில் பெருமிதமாக நடந்து வந்தனர்.
வாரியார் சுவாமிகளுக்கு மகத்தான வரவேற்பை நல்கிக் கொண்டிருக்கிற மனநிறைவில் தெய்வநாயகம் அத்தனை நீண்ட ஊர்வலத்திலும் நடந்தே வந்தார்!
அன்று ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணியர்ஆலயத்தில் எடுக் கப்பட்ட விழா நிச்சயம் இலங்கைத் தமிழர் வரலாற்றில் இடம் பெறவேண்டிய விழா (பெற்றுவிட்ட விழா!)
கொழும்பு இராமகிருஷ்ணா மடத்தின் சுவாமிகள் முன் னிலை வகிக்க, இலங்கை அரசின் தமிழ் அமைச்சர்கள் முன்

வாரியார் தோற்றார் 395
னாள் அமைச்சர் ராஜதுரை, செல்லசாமி தேவராசன் பங்கேற்க
விழா நடந்தது!
இந்த விழா வழக்கமாக வாரியார் சுவாமிகள் சொற்
பொழிவாற்ற வந்த விழா அல்ல!
அரும்பாடுபட்டு 5 தேடித் தொகுக்கப்பட்ட 8000 முருகனுடைய பாடல்களை 6 பெரிய நூல்களில் அடக்கி அந்த ஆறு தொகுப்புக்களையும் ஒரு பேழையில் வைத்து வெளியிடும் விழாவாக அமைந்ததுதான் அவ்விழாவின் சிறப்பு!
இலக்கியத்தைப் படைப்பது ஓர் அரிய செயல் என்றால் அதனைக் காப்பது அதைவிட அரிய, உயரிய செயலன்றோ?
தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதன் போன்றோர் ஒலைச் சுவடிகளைத் தேடிகண்டு பிடிக்காவிட்டால், எத்தனை சங்க நூல்கள் கறையான்களின் பசிக்கு உணவாகியிருக்கும்?
தமிழ்க் கடவுள் முருகன்! அந்த அழகன் குன்றிருக்குமிட ம்ெல்லாம் குடியிருப்பவன்!
அவனை எண்ணிப் பலரும் நெஞ்சுருகப் பாடிய பாடல் கள் ஏராளம்; ஆனால் அவையோ தனித்தனியாக வெவ்வேறு நூல்களாக தனித்தனிப் பாடல்களாகச் சிதறிக் கிடந்தன!
இவற்றை ஒன்று திரட்டி, பாதுகாக்காவிட்டால் பல பாடல்கள் கால வெள்ளத்தில் காணாமற் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகவும், பொறுப்புணர்ச்சியின் காரண மாகவும் அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஈஸ்வரனுக்கு உதிக்க, அவரை முழுமனதோடு ஊக்கப்படுத்தினார் தெய்வநாயகம்!
பாடல்களைத் தொகுப்பதும், பிழையின்றி அவற்றைச் சரி செய்வதும், புத்தகத்தைப் புரட்டியவுடன் அதனைப் படிக்கத் தூண்டும் அளவு ஈர்க்கக்கூடிய அழகில் அச்சிடவும் வேறு யாரால் முடியும்?
சென்னை காந்தளகத்தின் உரிமையாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஒருவரால் மட்டுமே முடியும்!
தமிழார்வம் மிக்கவரும், சிறந்த எழுத்தாளரும், ஈஸ்வரனு டைய மிக நெருங்கிய நண்பரும், கல்லூரித் தோழருமாகிய

Page 207
396 இதோ ஒரு வெளிச்சம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் அரும்பாடுபட்டு பாடல்களைத் தொகுத்து அழகான ஆறுநூல்களாக வடிவமைத்து வைத்திருந். தார்.
அந்த நூல்களை வெளியிடும் பொறுப்பும் வாரியாரிடம் வழங்கப்பட்டிருந்தது.
இத்தகைய பணிக்கு ஆகும் பெருஞ்செலவை யார் பொறுப் பேற்பது?
கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகப் பெருமான் ஆலயத்தின் அறங்காவலர் திரு. பாலசுந்தரம், லண்டன் வாழ் தமிழர் திரு. குகாநந்தன், கொழும்பின் புகழ்மிக்க வணிகர்கள் திரு. அசோகன், திரு. வெங்கடாசலம், இவர்களோடு தெய்வ நாயகம், அவருடைய மகன் அருணாசலம் ஆகிய அறுவர் இந்த ஆறு நூல்களையும் வெளியிட ஆகும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டமையால், நூல் அச்சிடும் பணி எளிதாயிற்று.
மொத்த தொகுப்புக்களையும் வாரியார் திருக்கரங்களி லிருந்து பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த நூற்றுக்கணக் கான தமிழ் நெஞ்சங்களின் ஆதரவால் நூல் வெளியிடுதல் வெற்றிகரமாக அமைந்தது.
வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர் அறங்காவல் குழுவினர்.
ஜிந்துப்பிட்டி ஆலயத்தில் பக்திமணமும், தமிழ் மணமும் நிரம்பி மக்கள் மெய்மறந்த நிலையில் இருந்தனர்.
anuntrifluuntñr சுவாமிகள் உரையாற்றியபோது, ஓர் உண்மையை மனம் திறந்து ஒப்புக் கொண்டார். எத்தனையோ நாடுகளில், நகரங்களில் வாரியார் சுவாமிகள் சொற்பொழி வாற்றியிருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் கிடைத்த மிக அற்புதமான வரவேற்பு கொழும்பிலே கிடைத்த வரவேற்பு தான்!
சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரளுவார்கள்; ஆனால் சொற்பொழிவாளரை வரவேற்கவும், பாராட்டவும் இவ்வளவு பேர் திரண்டதை வாரியார் கண்டதில்லை!
தெய்வநாயகத்தின் ஆழ்ந்த பக்தியையும், அருட்பணியை யும் நயந்து பாராட்டினார் வாரியார்.

வாரியார் தோற்றார் 397
பொதுவாக வாரியார் சுவாமிகள் ஒரு நகருக்குச் செல் வதும்; அங்குள்ள மக்களைக் காண்பதும், அவர்களுடைய நெஞ்சங்களைக் கொள்ளை கொள்வதும் தான் வழக்கம்.
ஆனால் கொழும்பு மக்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ள வந்த வாரியார் சுவாமிகளுடைய இதயத்தைக், கொழும்புத் தமிழர்கள் கொள்ளை கொண்டு விடவே தன் முயற்சியில் வாரியார் தோற்றுப்போனார் என்றே சொல்ல வேண்டும்.
விண்ணுலகில் உறையும் தெய்வங்களின் புகழை மண்ணு லகில் பரப்பிய அந்த மாமனிதர் விண்ணில் பறந்து வரும் போதே இறைவனடி சேர்ந்த செய்தியை நாம் அறிவோம்!
இந்த அற்புதமான விழாவை, பக்தியையும் இலக்கியத்தை யும் வளர்த்த விழாவை, தமிழ் நெஞ்சங்களின் துடிப்பைப் பறை சாற்றிய விழாவைத் தன் கண்களை மூடுமுன், கண் குளிரக் காண்பதற்கே அமைந்தாற்போல் விழாவை அமைத்த மாண்பை எண்ணும்போது, தெய்வநாயகத்தையும் அவர்தம் அறங்காவல் குழுவினரையும் வியந்து பாராட்டாத நெஞ்சங் கள் இல்லை எனலாம்.

Page 208
40. பரிசுக்குப் பரிசு
இன்றைக்குப் பட்டங்களையும், பாராட்டுக்களையும் பெறு வது என்பது தெய்வநாயகத்தின் குடும்பத்தினருக்கு மிகச் சாதாரண அனுபவமாகி விட்டது!
முருகேஷின் மகள் கலா தான் படிக்கும் 'கொழும்பு சர்வ தேச புள்ளியில் தொடர்ந்து முதல் நிலை பெறுவது மிகவும் பாராட்டுக்குரிய செய்தியாகும். அங்கே முதல்நிலை என்பது வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொடுப்பதில்லை. நடத்தை, திறமை, ஈடுபாடு, பொது அறிவு போன்ற எல்லா வற்றையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கிட்டே வழங்கப்படும் தகுதி நிலையாகும்.
ஈஸ்வரனின் மகள் பிரியா பேச்சுப் போட்டிகளில், விவாத அரங்குகளில் பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்று தன் தந்தையைப் போல் சொல்லாற்றலிலே வல்லவராகத் திகழு கிறார்.
இன்னொரு மகன் சுப்பிரமணியன் மிருதங்கம் வாசிக்கும் கலையில் வல்லமை பெற்று, கச்சேரி நடத்தி 'லய ஞானச் செல்வன்' என்ற பட்டத்தையும் பெற்றார்.
ஆண்டின் தலைசிறந்த முதலாளி - BOSS OF THE YEAR என்ற பட்டத்தை 1994ல்- இலங்கை அலுவலக செயலாளர் கள் சங்கம் கணேஷ"க்கு வழங்கிச் சிறப்பித்தது.
சென்னையில் அன்னை தெரசா சங்கத்தின் மகளிர் பிரி வினர் அருணாசலத்திற்கு 'தலை சிறந்த வணிகர்’ விருதை 1994ல் வழங்கினர்.
வீரவாகுவின் பிள்ளைகளும், பிரமநாயகத்தின் பெண் களும் மிருதங்கம், கடம், வயலின், வீணை ஆகிய இசைக் கருவி களை இசைக்கக் கற்று வருகிறீரர்கள். விரைவில் கலைத்துறை
 

பரிசுக்குப் பரிசு 399
யில் பாராட்டுப் பெறும் கலைஞர்களாகத் திகழுவார்கள் என் பது புகழுரையன்று; பொருளுரையே!
1982ல் இலங்கை அரசு சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக் கான விருது வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்த போது அந்த ஆண்டிலேயே அந்த விருதினைப் பெற்ற நிறுவனம் ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனம்.
இலங்கை-இந்திய சமுதாயப் பேரவையின் துணைத்தலைவ ராகப் பன்னியாற்றி வரும் ஈஸ்வரன் அவர்கள் ஆற்றி வரும் சேவைகள் ஏராளம்.
இலங்கை அரசு அவருடைய சேவையைப் பாராட்டி ‘சமா தான நீதிவான்' JUSTICE OF PEACE 6Tairdairp Lull 5605 வழங்கியுள்ளது. தந்தை பெற்ற இதே விருதை மகனும் பெற் றுள்ளது கவனித்தலுக்குரியது.
ஈஸ்வரனுடைய மணிமகுடத்தில் பதிக்கப்பெற்ற மற்று மொரு மரகதக்கல் 1994-ல் அவர் பெற்ற புதிய சிறப்பு. மொரிசியஸ் நாட்டின் இலங்கைக்கான கெளரவத் தூதராக செயல்படும் அரிய பொறுப்பை மொரிசியஸ் நாடு அவருக்கு வழங்கியுள்ளது.
இப்படித் தன் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பரிசு களையும், பாராட்டுக்களையும் பெறும் போது தெய்வநாயகம் உள்ளம் நெகிழ்ந்து போவார். பரிசளிப்பு நிகழ்ச்சிகள் பள்ளி யில் நடந்தால் அந்த விழாவிற்குச் சென்று முதல் வரிசையில் உட்கார்ந்து பெருமகிழ்வு அடைவார்.
அவருடைய பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பரிசு பெறுவதைவிட, தெய்வநாயகம் விழாவிற்கு வந்ததையே மிகப் பெரிய பரிசாக எண்ணுவார்கள். நாடே அவரை ஓர் அரும் பரிசாக எண்ணும்போது அவர் குடும்பத்தினர் அவரை எப்படி எண்ணுவார்கள்! "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனெனப் போற்றிப் புகழ வேண்டும்' என்ற திரைப்படப் பாடல்களின் வரிகள் தெய்வநாயகத்தின் வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமானவை. சான்றோர்கள் நிரம்பிய அவையில் அளிக்
கும் பட்டங்கள் மட்டுமா அவரை அடைந்தன?

Page 209
400 இதோ ஒரு வெளிச்சம்
ஆனால் அவற்றை விட இயல்பாகவே அவரை சந்திக்கும் மனிதர்கள், அவரைப்பற்றிக் கேட்டவர்கள் அவர்களை மறந்து, எந்த நோக்கமும் இல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வழங்கும் பட்டங்கள் ஏராளம்.
‘தெய்வப்பிறவி என்று புலவர் கீரன் அவர்களும், "தெய்வீகச் செம்மல்" என்று சாமி விஸ்வநாத குருக்களும் 'ஆன்மீக அருளாளர் என்று பத்திரிகையாளர் எஸ்.டி. சிவ நாயகம் அவர்களும் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.
காஞ்சிமுனிவர் பரமாச்சாரியர், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக் களையும் பெற்றவர் தெய்வநாயகம். தெட்சணத்து வேளாளர் மகமை பரிபாலன சங்கம், முக்குலத்தோர் சங்கத்தினர், விஸ்வ கர்மா சங்கத்தினர் என அனைவரும் இவரைப் பாராட்டிப் பெருமை கொண்டாடியவர்கள்.
இருப்பினும் முறையாக நடந்த சில பாராட்டு விழாக்களை இவண் குறிப்பிடுவது இன்றியமையாதது.
அகில உலக இந்துமாநாட்டினை இலங்கையிலே நடத்திக் காட்டிய பெருமை மாண்புமிகு அமைச்சர் செல்லையா ராஜ துரை அவர்கட்கு உண்டு.
அத்தகைய பெருந்தகை 24-9-88ம் ஆண்டு ‘அருட்செல் வர்' என்ற பட்டத்தைச் சான்றோர் நிரம்பிய அவையிலே வழங்கிய நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தெய்வநாயகம் வல்ல நாட்டிலிருந்து வரவில்லை - வள்ளல் நாட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும் என்றார் அமைச்சர் ராஜதுரை.
இலங்கை அரசின் இந்து சமயகலாசார அமைச்சர் மாண்பு மிகு. தேவராசன் அவர்கள் 'சிவநெறிச்செல்வர்' என்ற பட் டத்தை அளித்துச் சிறப்பித்துள்ளார்.
அண்மையில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் திருச் செந்தூர் முருகன் ஆலய அறங்காவலர் குழுத்தலைவர் உவரி கிருபாநிதி, 'திருப்பணி கண்ட செல்வர்' என்ற பட்டத்தை அளித்தார்.
இலங்கை அரசு ‘சமாதான நீதிவான்' ALL CEYLON

பரிசுக்குப் பரிசு 40
JUSTICE OF PEACE என்கின்ற பட்டத்தை வழங்கி அவரைச் சிறப்புச் செய்தது.
'விஷ்வபிரசாதினி" இலங்கை அரசின் வழக்கமான விருதல்ல.
இலங்கையின் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவின் எண்பதாம் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை அரசு புதியதாக அறிமுகப்படுத்திய விருதுதான் விஷ்வ பிரசாதினி. கொழும்பு சுகததாச உள்விளையாட்டரங்கில் 1996 ஏப்ரல் 20ம் நாள் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா ஒரு விந்தையான விழா. 33 வெவ்வேறு துறைகளில் (அரசியல், சட்டம், மருத்துவம், சமூகசேவை, விளையாட்டு, இலக்கியம், திரைப்படம் போன்ற) நாட்டிற்கு ஒப்பற்ற முறையில் சேவை செய்த 133 சாதனை யாளர்கட்கு அளிக்கப்பட்ட விருதுதான் விஷ்வபிரசாதினி.
வணிகத்துறையில் இலங்கை அரசிற்கு மாபெரும் வகையில் சேவை செய்தமைக்காக தெய்வநாயகத்தைத் தேடிவந்த அந்த விருதினை அவர் மிகுந்த அடக்கத்துடன் பெற்றுக் கொண்டு, விருதிற்குப் பெருமை சேர்த்தார்.
நாட்டின் தலைசிறந்த வணிகர் என்ற நிலையை அவர் எய்தி விட்ட மாண்பினை இந்த விருது பறைசாற்றியது.

Page 210
402 இதோ ஒரு வெளிச்சம்
1996ல் அண்மையில் தெய்வநாயகத்திற்குக் கிடைத்த இந்த விருதிற்கும் முன்பே அவருக்குக் கிடைத்த விருது தமிழினம் பெருமை கொள்ள வேண்டிய மாபெரும் விருது
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, இலங்கை அரசு தெய்வநாயகத்திற்கு வழங்கிய பரிசு தான் “தேசபந்து'
இந்த மிக உயரிய விருது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை.
எந்த ஒரு மனிதர் மனித சமுதாயத்திற்குப் பயன்படும் சமூகப் பணிகளிலோ, அறிவியல்துறையிலோ, பொருளாதார மேம்பாட்டிலோ, இவை போன்ற துறைகளிலோ அரும்பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறார்களோ அத்தகைய சான் றோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் “தேசபந்து'. இந்த விருதினை இலங்கை அரசு தெய்வநாயகத்திற்கு வழங்குவதாக அறிவித்ததும் தமிழ்ச் சமுதாயத்தினர் மிகவும் மகிழ்ந்தனர்.
சமுதாயத் தொண்டினைச் சீரிய முறையில் ஆற்றியமைக் காகவும், சமுதாயத்தின் மீது அவர் காட்டிய அன்புள்ளத்தையும் பாராட்டி அரசு அந்த விருதை வழங்குவதாக அறிவித்தது.
இன, மத, மொழிகளுக்கப்பால் மனிதனை மனிதனாக நேசித்த அந்த மாமனிதனுக்கு அந்த விருது!
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து வரும் நல்ல இதயத்திற்குப் பரிசு
தான் வாழும் சமூகத்திற்குப் பரிசாக வந்த வள்ளலுக்குப் பரிசு!
விருதளிக்கக் குறிக்கப்பட்ட விழா நாள் 22 மே 1993.
விருது வழங்கும் திருநாள் வந்த்து
பல இலட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன் நிகழ்ச்சிகளைச் சின்னத் திரையில் காண அமர்ந்திருந் தனர்!

பரிசுக்குப் பரிசு 403
தெய்வநாயகத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட பல்லா யிரக்கணக்கான தமிழர்களும், சிங்களவர்களும் துடிப்போடும், மகிழ்வோடும் காத்திருந்தனர்.
வாழவேண்டும் என்று வாழ்வைத் தேடி வறுமை துரத்தச் சிறுவனாக இலங்கை வந்தவர் தெய்வநாயகம். ஆனால் இன்றோ தாமும் வளமாக வாழ்ந்து, பலநூறு பேரை வாழ வைத்து, பல இலட்சம் மக்களின் வாழ்விற்காகப் பொதுப் பணியாற்றி வருகின்ற காரணத்தால் உயரிய விருதைப் பெறு கிறார்! என்ன விந்தை!
க்க வி அவருக்கு அளிக்கப்பட்ட விருதல்ல! அவ நத வருது ருககு ருத ருக்கே உரிய விருது!
திரு. வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை - ‘சமாதான நீதி வான்’ என்று அவருடைய பெயரை அறிவித்ததும் அவர் கம்பீர மாக எழுந்து நின்றார்.
வழக்கமான வெள்ளைச்சட்டை, வேட்டி, நெற்றி நிறைந்த திருநீறு, பெரிய குங்குமத்தோடு தமிழ்ப் பண்பும், கலாச்சாரமும் உருவெடுத்து நிற்பது போல் எழுந்து நின்றார்.
“முருகா!' என்ற சொல் அவர் நாவிலிருந்து கிளம்ப இருகரங்களையும் கூப்பி, கம்பீரமாக நடந்து மேடையை நோக் கிச் சென்றார்.
ஆழ்ந்த இறை பக்தியும், பணிவுமே அவரை வழி நடத்திச் செல்வது போலத் தோன்றியது!
இலங்கை ஜனாதிபதி அதி உத்தம டி.பி. விஜயதுங்க அவர்களின் திருக்கரங்களினால் ‘தேசபந்து விருதைப் பெற்று அவர் திரும்பிய போது மனித ஆற்றலும்- மனித நேயமும் மணிமகுடம் துடிக் கொண்டன!

Page 211
404
W 魏
战
ჯ
\ ܐܠܦܐ 煮
ჯ نتایییییییییییییییینیڈ
豪
 

41. இன்று நாம் என்ன செய்தோம்?
நம்முடைய வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும்! நாம் மேலும் மேலும் உயர வேண்டும்!
நமக்குப் பணமும், பெயரும், பதவியும், புகழும் கிடைக்க வேண்டும்!
இப்படி நாம் அன்றாடம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்; ஏங்குகிறோம்.
நாம் வேண்டுவதையெல்லாம் அடைவது எப்படி?
ஒன்று - ஆழ்ந்து சிந்தித்து, திட்டமிட்டு, கடுமையாக உழைத்து முன்னேறுவது, அல்லது வாழ்க்கையில் முன்னேறிய, சாதனை படைத்த மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவர்களுடைய வெற்றியின் இரகசியங்களின் அடிப்படையில் நம் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது; அப் படி நாம் ஆராய வேண்டிய வாழ்க்கைகளில் ஒன்று தான் நம் தெய்வநாயகம் அவர்களுடைய வாழ்க்கை.
அவரால் எப்படிப் பலவற்றைச் சாதிக்க முடிந்தது?
'எதை மனிதன் விரும்புகிறானோ, எதைக் குறித்து பிரார்த்திக்கிறானோ அதை அவன் அடைவதில்லை. எவற்றை அவன் இத்தனை காலமாக சம்பாதித்து வைத்திருக்கிறானோ, எந்த குணங்களின் மொத்த உருவாகத் தன்னை வளர்த்து வைத்திருந்தானோ அவற்றின் பலனை அடைகிறான். ஆசை களும், பிரார்த்தனைகளும், அன்றாட வாழ்வில் கொண்டிருக் கும் எண்ணங்களுடனும், செயல்பாடுகளுடனும் ஒன்றி இருக்க வேண்டும். அப்போதுதான் அத்தகைய பிரார்த்தனைகளும், ஆசைகளும் நிறைவேறும். வெறும் பிரார்த்தனைகளும், ஆசை களும் எதையும் செய்வதில்லை.”
புகழ் பெற்ற சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலனின் இந்தக்

Page 212
406 இதோ ஒரு வெளிச்சம்
கருத்தை டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் ‘நல் வாழ்க்கையை உருவாக்கும் எண்ணங்கள்’ என்ற நூலில் எடுத்துச் சொல்கிறார்.
ஜேம்ஸ் ஆலனின் இந்தக் கருத்து மிக ஆழமான கருத்து! ஒரு மனிதன் கோவிலுக்குப் போவதாலோ, கனவு காண் பதாலோ, ஆசைப்படுவதாலோ மட்டும் வாழ்க்கையில் வெற்றி காணமுடியாது! அதற்கேற்ப பாடுபட வேண்டும்.
தெய்வநாயகம் ஆழ்ந்த இறைபக்தியும், தொடர்ந்து முன் னேறிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண் டவர். ‘ஒரு மனிதரின் வெற்றிக்கு இவை தேவையா?’ என்றால் தேவை தான். ஆனால் இவை மட்டும் போதாது.
‘கடவுள் எல்லாப் பறவைகளுக்கும் உணவு வைத்திருக் கிறான். ஆனால் அதைக் கூட்டில் கொண்டு வந்து போடு வதில்லை' என்று சொல்லுவார்கள்.
நம்முடைய முயற்சியின் மூலமும், கடுமையான உழைப்பின் மூலமும் தான் அந்த வெற்றியை நாம் அடைய முடியும்.
'முருகா, முருகா!' என்று சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் முன்னேறி விட முடியாது! நாம் உழைக்க வேண்டும்; பாடுபடவேண்டும். அப்படி உழைப்பதற்கான சக்தியை முருகன் தருவான்; அந்த உழைப்பு வீணாகாமல், அதற்கான முழுப் பலனும் சிதறாமல் கிடைக்க முருகன் அருள்புரிவான்; ஆனால் எல்லாம் நம் உழைப்பில் தான் இருக்கிறது!’ என்று தெய்வ நாயகம் அடிக்கடி சொல்லுவார்.
தெய்வநாயகம் பெற்றுவரும் பெரும் வெற்றிகளுக்கான அடிப்படைகளைச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் 'மனிதநேயம்', 'ஆற்றல்', 'கடும்உழைப்பு', 'ஆழ்ந்த இறை பக்தி' என்ற நான்கு சொற்களில் அடக்கி விடலாம்.
இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் மனித நேயம் என்ற ஒரே சொல்லில் தெய்வநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை, சாதனைச் சரித்திரத்தை, வெற்றியின் ரகசியத்தை அடக்கி விடலாம்.
வெற்றிக்குத் தேவை "வெற்றியைப் பற்றிய நம்பிக்கை - அதைப் பற்றிய சிந்தனை - அதற்கான கடுமையான உழைப்பு'

இன்று நாம் என்ன செய்தோம்? 407.
சாதனையாளர் தெய்வநாயகத்தின் வாழ்க்கையை இந்தக் கோணத்திலும் ஆராய முடியும்.
சிறிய வயதில் நவதானியக் கடைகளில் வேலை செய்து கொண்டிருந்த போது - தன்னால் மிகப்பெரிய வணிகராக முடியும் என்ற நம்பிக்கை தெய்வநாயகத்திடம் பிறந்தது. அதற் கான திறமைகள் தமக்குள் அடங்கியிருந்ததையும் அவர் புரிந்து கொண்டார். தன்னம்பிக்கையோடு தளராமல் உழைத்தார்; வெற்றி அவரை அரவணைத்தது.
வெற்றியை மனத்தில் வைத்துக் கொண்டு அயராது உழைக்கத் தொடங்கும்போது அவர்கையாண்ட கருவிதான் மனித நேயம்
'வியாபாரம் என்பது மக்களைச் சந்திப்பது!’ 'வியாபாரம் என்பது மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பது!’
என்றெல்லாம் இன்று வியாபாரத்துக்கான இலக்கணத்தை வரையறுக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக இதே கொள்கைகளைத் தன் வியா பாரத்தில் புகுத்தியவர் தெய்வநாயகம் .
மக்களை அவர் விரும்பினார்! அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டுமென்று துடித்தார். மத, இன, மொழி வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு மனிதர்களை நேசித்
தார்.
டாக்டர். ஆன்டனிஸ் கொழும்பின் புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். அவர் ஒருமுறை பிரமநாயகத்தைப் பார்த்த போது, ‘போன வாரம், எனக்கு உடல் நிலை சரியில்லாத போது, அப்பா வந்து என்னைப் பார்த்து பழக்கூடைகளைக் கொடுத்துவிட்டு நலம் விசாரித்துச் சென்றார்' என்று கூறிய போது, பிரமநாயகத்துக்கு வியப்பாக இருந்தது. பல வருடங் களுக்கு முன் டாக்டர் ஆன்டனிஸ் தெய்வநாயகத்திற்கு ஓர் அறுவை சிகிச்சை செய்தவர். தற்செயலாக யாரோ டாக்டருக்கு உடல் நலம் சரியில்லை என்று பேச்சுவாக்கில் சொன்னதைக் கேட்ட வுடன் அவரைச் சென்று பார்த்துவிட்டு வந்தார் தெய்வ நாயகம்.
இப்படிப்பட்ட செய்திகளை சம்பந்தப்பட்டவர் நேரிடை

Page 213
408 இதோ ஒரு வெளிச்சம்
யாகச் சொல்லவேண்டுமென்பதில்லை; காதில் விழுந்தாலே சென்று பார்க்கும் குணம் உண்டு. யாராவது இறந்து போனால், இறந்த ஊர் எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்குச் சென்று அஞ்சலி செலுத்துவது அவருடைய பண்புகளில் ஒன்று. பொது வாக உடல் நலம் குன்றியவர்களைச் சந்திக்கப் பெரும்பாலோ னோர் விரும்புவதில்லை என்று மனத்தத்துவ நிபுணர்கள் கூறு கின்றனர். துன்பப்படுபவர்கள் அருகில் சென்று நிற்கும் மன வலிமை ஒரு சிலருக்கே உண்டு, அதில் தெய்வநாயகம் முதல் நிலையில் நிற்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கிறித்துமஸ் திருநாள் வரும் போது கிறித்தவ மதத்தைச்
சேர்ந்த அதிகாரிகள், நண்பர்கள், தன் அலுவலக மனேஜர்கள் பட்டியல் அவர் கையில் இருக்கும். தொலைபேசியில் அவர் களுடன் பேசி, நேரத்தை உறுதி செய்து கொண்டு அவர்களு டைய இல்லங்களுக்குச் சென்று, பரிசளித்து விட்டுத் திரும்புவது அவர் ஆண்டுதோறும் தவறாமல் செய்கின்ற செயல்களில் ஒன்று. அப்படிச் செல்லும் போதெல்லாம் பிரமநாயகத்தையும் உடன் அழைத்துச் செல்வதுண்டு.
வசதியுள்ள, பெரிய மட்டத்திலுள்ளவர்கள். அளவில்தான் நட்புப் பாராட்டுவது என்ற வரம்பிற்குள்ளும் அவர் சிக்கிக் கொள்வதில்லை. பலவிதமான மனிதர்கள் அவரைச் சுற்றி வலம் வருவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் சென்று பேசுவ தும், அவர்கள் கேட்கும் உதவிகளைச் செய்வதும், அவர்கள் வீட்டிலே யாரேனும் இறந்து போனால் சென்று துக்கம் விசாரிப் பதும் அவருடைய வழக்கம்.
 

இன்று நாம் என்ன செய்தோம்? 409
'பலர் எங்களைப் பார்த்தவுடன் முகம்சுளிப்பார்கள்; அரு வெறுப்பாகப் பார்ப்பார்கள் பேசக்கூட மாட்டார்கள். ஆனால் எங்களையும் மனிதர்களாக எண்ணி மதித்துப் பேசுபவர் தெய்வ நாயகம் முதலாளி தான்' என்று அத்தகைய மனிதர்கள் மன முருகப் பேசுவதைப் பார்க்கும் போது தமிழக ஆன்மிக சிந்தனை யாளர் பெருமாள்ராஜ" அவர்கள் கூறுவது நினைவுக்கு வரும்.
'ஆறு ஓடிக் கொண்டேயிருக்கிறது; அது யாருக்காகவும் ஒடுவதில்லை யார் வேண்டுமானாலும் அதில் நீரை எடுத்துக் கொள்ளலாம்; சூரிய ஒளியும், காற்றும் யாருக்காகவும் தனியாக இயங்குவதில்லை; ஆனால் யாரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உண்மையான அன்பு எந்த ஒரு தனி மனி தனுக்கோ, இனத்துக்கோ அல்ல; அது எல்லோருக்கும் பொது வானது. அந்த அன்பை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.'
பொதுவாக 'மனித நேயத்தின் எதிரி எது? மனிதர்கள் மேலே உயர்ந்து செல்லச் செல்ல, ஒரு காலத்தில் தனக்குச் சமமாக இருந்தவர்கள் தாழ்வது போலத் தோன்றும். உயர்ந்த மாடிக் கட்டடத்தின் மேலே இருந்து தரையில் இருப்பவர் களைப் பார்க்கும்போது அவர்கள் குள்ளமாகத் தெரிவதில் GonGUu unr?
பணமும், பதவியும், புகழும் வரும்போது ஒரு காலத்தில் உயிருக்கு உயிராகப் பழகி, அன்பைச் சொரிந்தவர்களை அடி யோடு மறந்து போகும் மனிதர்கள்தாம் எத்தனைபேர்! பழகும் போது சட்டைப் பையின் கனம் அதிகமாக இருந்தால் மதிப்பது, அது காலியாக இருந்தால் அடுத்த ஆளைத் தேடுவது என்ற இயல்பு கொண்டவர்கள் எத்தனை ஆயிரம் பேர் சட்டைப் பையைப் பார்க்கின்ற மனிதர்கள் அதற்குக் கீழே இதயம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை எண்ண ஏன் மறந்து விடுகிறார் கள்?
தெய்வநாயகத்தின் மிக மிக உயரிய பண்பு என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அது தம் முடைய பழைய காலத்து நண்பர்களை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதுதான்.
தமிழகத்திற்கு வந்தால் தம் பழைய நண்பர்கள், தம்மிடம்

Page 214
4 II 0 இதோ ஒரு வெளிச்சம்
வேலை செய்தவர்கள் யார் யார் என்று பட்டியல் போட்டு அவர்களைத் தவறாது சென்று பார்த்து நலம் விசாரித்து விட்டு வருவது அவருடைய குணம். அந்த மனிதர்களில் பலர் சாதாரண வாடகை வீடுகளில் வாழும் மிக எளிய மனிதர்கள் - அமைச்சர்களோ, அதிகாரிகளோ அல்லர்.
தூத்துக்குடியில் பூரீ சுயம்பு ஜுவல்லரி மார்ட்டின் உரிமை யாளர் பி.எல். எஸ். செந்திலாறுமுகம் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். 'மிக நீண்ட காலமாக வி.ரி.வி. அவர் கள் குடும்பத்துடன் எங்களுக்குத் தொடர்பு உண்டு. அவருடைய அண்ணனார் சுடலைமுத்து குடும்பத்திற்கும், வி.ரி.வி. குடும் பத்திற்கும் மிக முக்கிய நகைகளை நாங்கள் தான் செய்து கொடுக் கிறோம். பழைய நட்பை அவர் மிகவும் மதிப்பவர். அவர் நினைத்தால் கொழும்பிலும், சென்னையிலும் உள்ள மிகப் பெரிய நகைக்கடைகளிலேயே நகைகளை வாங்கிக் கொள்ள லாம். ஆனால் தரம், ராசி இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டும், பல ஆண்டுக் காலம் நட்புணர்வோடு பழகியதை மனதில் கொண்டும், அந்த நட்பு காலங்காலமாக நீடிக்க வேண் டும் என்ற உணர்வுகளோடும் எங்களிடம் முக்கியமான நகை களைச் செய்யக் கொடுப்பது எங்களுக்குப் பெருமையளிக்கிறது. எப்போது தூத்துக்குடி வந்தாலும் தவறாமல் என்னை வந்து சந்திப்பார்.’
ஒரு முறை தெய்வநாயகம் சென்னை வந்திருந்த போது ஒரே நாளில் 56 நிகழ்ச்சிகளை நினைவுச்சீட்டில் குறித்து வைத்து அத்தனையும் செய்து முடித்தார்’ என்று சீதா குறிப்பிடு கிறார். அதிலே பெரும்பாலானவை, நண்பர்கள், உறவினர் களைச் சந்திப்பதே!
'அன்பு என்று வரும் போது அவரிடம் பாகுபாடில்லை. அவர் மனம் முழுவதும் தார்மீகம் என்ற உணர்விலேயே ஆழ்ந்து கிடக்கின்றது. அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் யாரும் ஓர் அறிமுகக் கடிதம் இன்றிகூட சந்திக்கலாம். அதேபோல அவரி டம் ஒரு காந்த சக்தி இருக்கிறது. நீங்கள் வருகிறீர்கள்' ‘நீங்கள் இதைச் செய்கிறீர்கள்’ என்று அவர் சொல்லிவிட்டால் நாம் சென்றுதான் ஆக வேண்டும்; செய்துதான் ஆக வேண்டும் என்று குறிப்பிடுகிறார் தூத்துக்குடியின் மிகச்சிறந்த ஜவுளிக்

இன்று நாம் என்ன செய்தோம்? 4
கடை ‘டி.ஏ. டெக்ஸ்டைல்'சின் உரிமையாளர் தெய்வநாயகம் அவர்கள்.
சிலர் அன்பைப் பொழிவார்கள்; பணத்தைக்கூட அள்ளிக் கொடுப்பார்கள்; ஆனால் நல்வாழ்வு வாழ வழியை மட்டும் சொல்லித் தரமாட்டார்கள்.
வியாபார நுணுக்கங்களை யாருக்கும் சொல்லித்தர தெய்வ நாயகம் தயங்குவதேயில்லை. தம்மிடமிருந்து பிரிந்து போன வர்களுக்குக்கூட உதவி செய்து அவர்கள் தொழில் சிறப்பாக நடக்க வழிவகைகளைச் சொல்லித் தரும் உயரிய குணம் அவரிடம் உண்டு.
மனிதநேயம் என்ற அரியகுணம் அவரிடம் இருந்தாலும், அதை வைத்துக்கொண்டு அவர் தம்முடைய வருவாயைப் பெருக்கிக் கொண்டாரேயொழிய இழக்கவில்லை. வாரிக் கொடுத்த வள்ளல்கள் பலர் எல்லாவற்றையும் இழந்துவிட்டு வறுமையில் நடுத்தெருவில் நிற்கின்ற காட்சியை நாம் பார்த் திருக்கிறோம். பொருளை ஈட்டினால்தானே கொடுக்கமுடி யும்?
‘இந்த எண்பத்திஐந்து வயதிலும் அவர் ஏன் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும்? இருக்கும் சொத்தை இன்பமாக அனு பவிக்கலாமே? சாப்பிடும் உணவு ஒரு குழந்தையின் உணவு தான்; அவ்வளவு கொஞ்சம் தனிப்பட்ட தேவைகளோ மிகக் குறைவு. இருப்பினும் ஏன் உழைக்க வேண்டும்? ஒரு முக்கிய காரணம் - அப்படி உழைத்து வருவாயை ஈட்டினால் தான் பலருக்கும் உதவமுடியும்? அந்த ஒரு குறிக்கோள் தான் மேலும் மேலும் அவரை உழைக்க வைக்கின்றது. நாங்கள் பிள்ளைகள் அனைவரும் 'அப்பா, ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிப் பார்த்து ஒய்ந்து விட்டோம் என்கிறார் முருகேஷ்.
ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்ல தூதியம்இல்லை உயிர்க்கு.
என்ற வள்ளுவர் குறளோடு ஒத்துப்போகும் வாழ்க்கை தெய்வ நாயகத்தின் வாழ்க்கை;
சுருக்கமாகச் சொன்னால்

Page 215
41s இதோ ஒரு வெளிச்சம்
இவர் பொருட்களை மட்டும் எடைபோடவில்லை,
மனிதர்களையும் எடை போட்டார்.
இரும்புப் பெட்டியின் கதவை மட்டும் திறக்கவில்லை, இதயத்தின் கதவுகளையும் திறந்து வைத்தார். விலைவாசியின் ஏற்ற இறக்கங்களை மட்டும் ஆராயவில்லை, மனித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும் ஆராய்கிறார். மக்கள் தன் பின்னே ஓடிவர வேண்டும் என்ற மமதையில் இல்லை.
மக்களின் பின்னே ஓடிச் சென்று உதவுகிறார். ஆண்டவனை வைத்து வியாபாரம் செய்யவில்லை.
ஆண்டவனுக்காக வியாபாரம் செய்கிறார். வாரிக் கொட்டிக் கொள்வதற்காக வணிகம் செய்யவில்லை.
வாரி வழங்கவே வணிகம் செய்கிறார். அதனால் ஏற்பட்ட விளைவுகள் விந்தையானவை.
இவர் தொட்டதெல்லாம் துலங்கின; இவர் கரம் பட்டவையெல்லாம் பளபளப்பான தங்கமாயின!
மக்களின் இதயங்களில் குடிபுகுந்தார்- ஆண்டவனும் இவரை நாடி ஓடி வந்தான். இலங்கை வரலாறு இவரை வாரிசாகத் தத்து எடுத்துக் கொண்டது. வாழ்க்கை மூடிய புத்தகமாக அமைந்து விடாமல், தேடிப் படிக்க வேண்டிய சாதனை சரித்திரமாக மாறிவிட்டது.
இவரைப் பார்க்கும் போதும், இவருடன் பேசும் போதும், பழகும் போதும், இவரைப் பற்றி எண்ணும் போதும், பலரு டைய மனதில் எழுகின்ற கேள்வி இவர் அன்றாடம் இந்த அளவுக்கு உழைக்கிறாரே, ‘இன்று நாம் என்ன செய்தோம்?"
 

என்ன செய்தோம்?

Page 216
42. பாதங்களை நனைத்த
பன்னீர்த் துளிகள்
நூற்றுக்கணக்கான அழகிய கார்கள் நளினமாகப் பறந்து கொண்டிருந்தன. சாலையின் நடைபாதையில் மக்கள் பரபரப் பாக நடந்து கொண்டிருந்தார்கள். இலங்கையின் பிரதான அரசு அலுவலகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகள், வர்த்தக நிலையங்கள் அடங்கிய கோட்டைப் பகுதி வழக்கமான பொலிவோடு திகழ்ந்து கொண்டிருந்தது.
1996ம் ஆண்டு சனவரித் திங்கள் 31ம் திகதி, காலை I 0.51
ஒரு லாரி மத்திய வங்கிக்குள் புகுந்தது. அதைத் தடுத்து நிறுத்த முயலுமுன் வங்கியின் கீழ்த்தளத்தின் ஒரு சுவரின் மீது மோத அடுத்த கணம் லாரிக்குள் இருந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின.
கண் சிமிட்டும் நேரத்தில் நடந்த இந்த வெடி வைப்பின் போது கிளம்பிய ஒலி சுற்றுவட்டாரத்தை அதிரச் செய்தது. மத்திய வங்கியின் பல மாடிக் கட்டடம் தகர்ந்து சில தளங்கள் கீழே இறங்க, இடிபாடுகளுக்குள் சிக்கிய பலர் தங்கள் இன்னு யிரை இழக்க நேரிட்டது. சன்னல்களிலிருந்த கண்ணாடிகள் சிதறி வேகமாய்ப் பறந்து கண்களைத் தாக்கியதில் பார்வையிழந் தோர் பலர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கார்களுக் குப் பலத்த சேதம்.
இறந்து போனவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் காயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறைத் தாண்டிவிட்டது.
கோரமான விபத்தைக் கொழும்பு சந்தித்தது! மருத்துவ மனை முழுக்க உடல்கள்; சடலங்கள்; ஒலங்கள்!
கீழே சரிந்து விழுந்தவை கட்டடங்கள் மட்டுமில்லை; மனிதர்களின் தன்னம்பிக்கையும் கூட.
 

பாதங்களை நனைத்த பன்னீர்த் துளிகள் 45
'எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?’ என்ற கேள்விக்குப் பதிலாக, எந்தக் கட்டடத்தில் எத்தனை வெடி குண்டு இருக்குமோ? அது எப்போது வெடிக்குமோ?’ என்ற அச்சத்தைச் சுமந்தபடி கொழும்பு மக்கள் வெளியே தலை காட்டவும் அஞ்சினர்.
இலங்கையின் இதயப்பகுதியில் நடந்த இதயத்தைப் பிளக் கும் இச்செய்தியால் உலகமே ஒருகணம் உறைந்து போனது! மீண்டும் கொழும்பில் கடைகளின் கதவுகள் விரைந்து மூடப்பட்டன. சாலைகள் வெறிச்சோடிப் போயின. பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு விட்டன. வீடுகளே சிறைகளாகவும், பாதுகாப்புக் கூடங்களாகவும் மாறிவிட்டன!
ஜிந்துப்பிட்டி அறங்காவலர் குழு அதிர்ந்து போனது! 30-1-96 தொடங்கி 4-2-96 ஞாயிறு காலை வரை விழா நடத்தி, கடைசிநாள் காலையில் கும்பாபிஷேகம் என திட்டமிட் டிருந்தது அறங்காவலர் குழு.
30ம் தேதி திட்டமிட்டபடி விடியற்காலை விநாயகர் வழி பாட்டுடன் ஆறுநாள் விழா, ஆறுமுகனுக்காகத் தொடங்கியது. ஆனால், அடுத்த நாள் காலையிலே இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சி!
நான்கு மாதங்களாக தர்மகர்த்தா தெய்வநாயகமும் அறங் காவல் குழுவினரும் உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல!
محم
グ
2

Page 217
4 6 இதோ ஒரு வெளிச்சம்
கொழும்பு நகர் மட்டுமல்ல, சுற்றிலுமுள்ள பல நகரங் களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் முருகனின் அருளைப் பெறத் திரளுவார்கள், கும்பாபிஷேகம் கண்டு குதுாகலம் அடைவார்கள் என்று 24 மணிநேரமும் அதே கனவாக இருந்த அந்த ஆற்றல் மிகுந்த குழுவினர் அதிர்ச்சி யின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டார்கள்! இந்த துழநிலையிலும் முருகன்மேல் நம்பிக்கை வைத்து கும்பாபி ஷேகத்தை வெகுசிறப்பாக நடத்துவது என முடிவெடுத்தனர்.
இவ்வளவு துணிச்சலான அறங்காவல் குழுவினர் யாவர்?
அமைதியே உருவான, பணிவும் பக்தியும் மிக்க தலைவர் க.சி. சிவசங்கரம் பிள்ளை, உப தலைவர் இறைபணிச் செம்மல் ஏ.எஸ்.எஸ். சோமசுந்தரம் பிள்ளை, பொதுச்செயலாளர் வி.எஸ். விஸ்வநாதப் பிள்ளை, பொருளாளர் கா. செளந்தரராஜன்
இப்படிப்பட்ட வலுவான அறங்காவல் குழுவினை தர்ம கர்த்தாவாக இருந்து வழிநடத்தும் பெரும் பொறுப்பில் தெய்வ நாயகம்.
அந்தக் குழுவின் முன் 31ந்தேதி காலையில் நின்ற சிக்க லான கேள்வி கும்பாபிஷேகத்தை நடத்துவதா? ஒத்தி வைப் பதா?
இதுவரை நடந்த செயல்களைத் திரும்ப எண்ணிப்பார்த் தால் மலைப்பாக இருந்தது.
நான்கு மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்துவது எனத் தேதி குறிக்கப்பட்ட சில நாட்களிலேயே கொழும்பின் ஒரு பகுதி எரிய ஆரம்பித்தது.
இலங்கை அரசின் பெட்ரோல் கிடங்குகளின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டு, பெட்ரோல் கிடங்குகள் கரும்புகையைக் கக்கி எரிய ஆரம்பித்தன. அணைக்க முடியாத தீயை அணைக்க, இந்திய அரசு உதவிக்கு வரவேண்டிய நிலை.
ஆகவே பக்தர்களின் மனவலிமையைச் சோதிக்கும் செயலை இறைவன் அப்போதே தொடங்கி விட்டான். பல ஆண்டுகாலமாக இலங்கையில் நடந்துவரும் போராட்டத்

பாதங்களை நனைத்த பன்னீர்த் துளிகள் 4 7
தீயின் நாக்குகள் இப்போது கொழும்புப் பகுதியிலும் நீளத் தொடங்கியிருந்தன.
கும்பாபிஷேகத்தை நடத்துவது எனத் தீர்மானித்தவுடன் முதலில் அலசப்பட்ட விடயம் பொருளாதாரம்.
கோயிலின் வங்கிக் கணக்கில் கும்பாபிஷேகம் நடத்து வதற்குப் போதுமான அளவு நிதியிருந்தது உண்மைதான். ஆனால் அதையெல்லாம் விழாவுக்காகச் செலவு செய்துவிட்டு நட்டக் கணக்கு வைக்கத் தெய்வநாயகம் விரும்பவில்லை. ‘இது முருகனுக்காக எடுக்கும் விழா! இதற்காகும் செலவை பக்தர் களிடமிருந்தே பெற்று விழாவை நடத்துவதே சிறந்தது' என்று தெய்வநாயகம் முன்மொழிய, ஆர்வத்துடன் குழு ஏற்றுக் கொண்டது. w
கும்பாபிஷேகத்திற்காக ஆகும் செலவு என்று தீர்மானிக்கப் பட்ட தொகை ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய்கள்!
நன்கொடை வதுலிக்கும் வேலையில் அறங்காவல் உறுப் பினர்கள் இறங்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு உறுப்பினரும் இரவு, பகல் பாராமல் உழைத்தனர். பொதுவாக மற்றவர் களுடைய நிறுவனங்களுக்கு நேரில் செல்லாத தெய்வநாயகம் தாமே நேரில் சென்று நிதி கேட்டபோது நெகிழ்ந்து போய் நிறையக் கொடுத்தவர்கள் ஏராளம்.
வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களும் தாராளமாக மனமு வந்து நன்கொடை வழங்கினர்.
ஒரு நிலையில் இதற்கு மேல் யாரும், யாரிடமும் கேட்க வேண்டாம். தானாக முன்வந்து கொடுத்தால் வாங்கிக் கொள் வோம்! போதுமான அளவுக்குமேல் பொருள் சேர்ந்து விட் டது' என்று கூறும் அளவிற்கு நிர்வாகிகளின் திறமை சிறப் பாகப் பளிச்சிட்டது.
திருச்செந்தூரிலிருந்து சிற்பி கணேசன் தம்முடைய கலை ஞர்களோடு வந்தவர் பல வாரங்களாக அங்கேயே தங்கித் தம் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
ஆயிரக்கணக்கில் மிக அழகான அழைப்பிதழினை அச் சிட்டு நாடு முழுக்கவும், அயல் நாடுகளுக்கும் அனுப்பிவிட்
6.

Page 218
48 இதோ ஒரு வெளிச்சம்
இலங்கையின் பல பகுதிகள், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் பூசை நடத்தவும், கும்பாபிஷேகம் செய்யவும் குருமார்கள் வந்து விட்டனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் சுவாமி விக்கிரகங் களும், பட்டாடைகளும், மலர் மாலைகளும், பூசைப் பொருட் களுமாக வந்து குவிந்த வண்ணமிருந்தன.
இவ்வளவெல்லாம் நடந்த பின் வெடி விபத்து அறங் காவலர்கள் ஒரு தெளிவான முடிவிற்கு வந்தார்கள் 'எவ் வளவோ ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டோம். ஆறுநாள் விழாவில் முதல் நாளும் முடிந்துவிட்டு இரண்டாம் நாள் நிகழ்ச் சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன! இந்த நிலையில் கும்பா பிஷேகத்தை நிறுத்துவது சரியில்லை! என்ன நடந்தாலும் நடக் கட்டும்! முருகன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தொடர்ந்து செயலில் இறங்குவோம்! முருகனிருக்கும் போது வேறென்ன நடக்கும்? வேலிருக்கப் பயமேன்?’ உறுப்பினர்களுடைய துணி வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தெய்வநாயகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. விழா தொடர்ந்தது.
பிப்ரவரி முதல் திகதி - விழாவின் மூன்றாம் நாள் மெள்ள, மெள்ள மக்கள் திரள் ஆலயத்திற்குள் வர ஆரம்பித்தது. அன்று பிற்பகல் எண்ணெய் காப்பு வைபவம் தொடங்கியது. விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பல் மருத்துவர் டாக்டர் நந்தா நந்தினிக்குப் பல வகையில் வியப்புக்கள்.
எண்ணெய் காப்பு என்பது ஒர் அரிய அனுபவம். கிட்டத் தட்ட பதினான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக் கும் அனுபவம் அது. கோயிலில் உள்ள அத்தனை விக்கிரகங் களையும், பக்தர்கள் தங்கள் கரங்களால் எண்ணெய் ஊற்றிப் பூசுகின்ற நிகழ்ச்சிதான் எண்ணெய் காப்பு. மூலவரைக்கூட, கருவறை வரை சென்று எண்ணெய் காப்பு செய்யக் கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாத அனுபவம்.
'முதலில் நாங்கள் வீட்டிலிருந்தே எண்ணெய் கொண்டு வந்தோம். அது தூய்மையானதுதானா' என்று உறுதி செய்து கொண்ட பின்னரே அந்த எண்ணெயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்கள். அது மட்டுமல்ல, அங்கேயே தூய்மையான

பாதங்களை நனைத்த பன்னீர்த் துளிகள் 4 19
நல்லெண்ணெய் கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று கூறும் நந்தா நந்தினியைக் கவர்ந்த விடயங்கள் பல.
'எண்ணெய் காப்பு செய்ய வரும் பக்தர்கள் விக்கிரகங் களின் மீது காணிக்கையாக நாணயங்களை வைப்பார்கள். வரி சையில் நிற்கும் பக்தர்கள் சிலரிடம் ரூபாய் நோட்டுக்கள் மட் டுமே இருந்திருக்கும்; நாணயங்கள் இருந்திருக்காது. அவர்கள் வசதிக்காகப் பத்து ரூபாய் நாணயங்களைப் பாலித்தின் பைகளில் போட்டு ரூபாய்கட்கு பதிலாக அவற்றைச் சில தொண்டர்கள் வரிசையிலிருந்தவர்களுக்கு அங்கேயே வந்து அளித்தார்கள். இப்படி எந்த சின்ன விடயமாக இருந்தாலும், அதையும் முன்கூட்டியே எண்ணி திட்டமிட்டு செம்மையாக வும், நுணுக்கமாகவும் செய்த அழகு என்னை மெய் மறக்கச் செய்தது' என்று கூறுகிறார் டாக்டர். நந்தா நந்தினி.
ஒன்றாம் தேதி நண்பகல் தொடங்கிய எண்ணெய் காப்பு இரண்டாம் தேதி நள்ளிரவு வரை நீடித்தது.
ஆலயம் மிக மும்முரமான தொழிற்கூடம் போலக் காட்சி யளித்தது.
யாக அறைகளிலிருந்து மந்திர ஒலிகளும், புகையும் கலந்து வெளியே வந்தன.
கொழும்பின் மற்ற பகுதிகளில் நடமாட்டம் மிகவும் குறைந்து போய் மக்கள் எதையோ பறிகொடுத்தது போல் அஞ்சி யிருக்க, பெரும் அருட்செல்வத்தை அள்ளிச் செல்லப் போகி றோம் என்ற அருளுணர்வில் மக்கள் அலை மோதுவது தெரிய ஆரம்பித்தது.
நீண்ட வரிசை கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தது. செயலாளர் விஸ்வநாதம் பிள்ளை அனைவரையும் உள்ளன்போடு வரவேற்ற காட்சியைப் பார்க்க முடிந்தது. 'எல் லாம் ஒழுங்காக நடைபெறுகின்றனவா?’ என்று துணைத் தலைவர் சோமசுந்தரம் பிள்ளை கேட்டு விசாரித்துக் கொண்டு வந்தார். வாளி நிறைய நாணயங்களை அள்ளிச் சென்று கொட்டிச் சரி பார்க்கும் இடங்களிலும், ரசீது போடுகின்ற இடங்களிலும் பொருளாளர் செளந்தரராஜனின் நிர்வாகத் திறமையைக் காண முடிந்தது. ஆங்காங்கே நின்று நடப்பதை

Page 219
420 இதோ ஒரு வெளிச்சம்
யெல்லாம் பெருமிதத்துடன் தலைவர் சிவசங்கரன் பிள்ளை கவனித்துக் கொண்டிருந்தார்.
வியர்வையில் நன்றாகக் குளித்திருந்த ஆவுடையப்பன் ஆர்வத்தோடு ஒடியாடி வேலை செய்த காட்சி உள்ளத்தை ஈர்த்தது.
வி.ரி.வி நிறுவனத்தின் ஊழியர்களில் மிக முக்கியமான பலரை அங்கே காணமுடிந்தது.
வியாபாரத்தில் மட்டுமல்லாமல் தெய்வநாயகத்திற்கு, பக்தி நெறிகளிலும் உறுதுணையாக நின்ற சோமு அண்ணாச்சி, இந்தியாவிலிருந்து விழாவுக்காகவே வந்த சுப்பையா அத்தான், கோயிலையே வீடாக மாற்றிக் கொண்டு விட்ட மாஸ்டர் நடராஜன், ஒரு மாதம் முன்பே வல்ல நாட்டிலிருந்து வந்து விட்ட குழந்தைவேலு, வி.ரி.வியின் நிழலாகவே மாறி விட்ட விக்கிரம சிங்க, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த குமார், தெய்வநாயகத்தின் பிள்ளைகள், அறங்காவலர்கள் இராம சாமிப் பிள்ளை, நெல்லைநாயகம் பிள்ளை என்று ஈடுபாடும், ஆற்றலும் மிக்க ஒரு பெரிய அணியே பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தது.
நிறைய இளைஞர்கள், தொண்டர்களாக எல்லா அமைப்பு களையும் ஒழுங்குபடுத்தி சரி செய்து கொண்டிருந்தார்கள்.
வி.ரி.வி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர்களின் கரங் களிலிருந்த "வொயர் லெஸ்' கருவிகளின் மூலம் கண்காணிப்பு - கட்டுப்பாடு வேலைகள் திறம்பட நடந்து வந்தன.
தெய்வநாயகம் எல்லா இடங்களிலும் இருந்தார். ‘வாங்க! வாங்க!' என்று பலபேரை இருகரம் குவித்து, வரவேற்றுப் பேசிய வண்ணம் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றனவா என்று கண்காணித்தபடியே எல்லாப் பகுதிகளுக்கும் சென்றபடி இருந்தார்.
எல்லாம் திட்டமிட்டபடி செவ்வனே நடந்து வருவது குறித்து எழுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் முகத்தில் தெறித் தாலும், இனி எல்லாம் ஒழுங்காக நடந்தேற வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் அவர் முகத்தில் தெரிந்தது.

பாதங்களை நனைத்த பன்னிர்த் துளிகள் 42及
மூன்றாம் தேதி (ஐந்தாம் நாள்) வேத முழக்கங்களிலும், யாகசாலைப் பூசைகளிலும் கரைந்தது!
4ம் தேதி பொழுது புலர்ந்தது!
பல இரவுகளை எந்த ஒரு விடியலுக்காக விழித்துச் செல வழித்தார்களோ, அந்த விடியல் புலர்ந்தது!
'பயமா, பக்தியா?’ என்ற கேள்வியை, துழ்நிலை முன்னால் வைத்திருக்கு, அதற்கு விடையை இன்று காணப் போகின்றோம்" என்ற ஆர்வக் கனலை கண்களில் சுமந்தபடி ஆதவனும் தன் அன்புக் கரங்களால், நீலவானத்தைத் துழாவியபடி, கொழும்பு நகரின் மீது மெல்ல நீந்தி வந்தான்!
ஆலயத்தின் முன்னே ஒரு பெரிய மேடை. சிறப்பு விருந் தினர்களுக்காகப் போடப்பட்ட அந்த மேடையில் இலங்கை யின் முன்னாள் இந்து சமய அமைச்சர் தேவராசன், அவர் மனைவி, பாராளுமன்ற உறுப்பினர் யோகராசன், காங்கிரசு கட்சியின் பொறுப்பாளர் திவ்யராசன், கொட்டாஞ்சேனை வரதராஜ வினாயகப் பெருமாள், ஆலய அறங்காவலர் பால சுந்தரம், திருச்செந்தூர் ஆலய அறங்காவலர் குழுத்தலைவர் உவரி கிருபாநிதி, சிற்பி கணேசன், கனடா பாலா, டாக்டர் நந்தா நந்தினி, இவர்களையெல்லாம் வரவேற்க ஈஸ்வரன் மற்றும் சில விருந்தினர்கள் நிரம்பியிருந்தனர். அத்தனை கண் களும் கோயில் கோபுரத்தையே ஆவலுடன் உற்று கவனித்த வண்ணம் இருந்தன.
பிரம்மபூரீ சாமி விஸ்வநாத குருக்கள் தலைமையில் சுமார் 25 குருக்கள் கும்பாபிஷேகப் பணியில் தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்க, உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருந் 25l.
எங்கும் மனித வெள்ளம்; மனித வெள்ளம்; மனித வெள்ளம் தலைகளை மட்டுமே பார்க்க முடிந்தது.
வானொலி நிகழ்ச்சியாளர்கள் அழகுமிகு தமிழில் நிகழ்ச் சிகளை வர்ணனை செய்து தொகுத்து வழங்க அனைத்து இதயங் களும் விழாவுக்காக ஏங்கிக் கிடந்தன என்று கூறினால் அது மிகையாகாது.
நாதசுவர இசை முழங்க, கும்பாபிஷேகக் கலசங்களை

Page 220
422 இதோ ஒரு வெளிச்சம்
முறைப்படி ஆலயத்திலிருந்து உள்வலமாக எடுத்துக் கொண்டு ஆலயத்தின் இராஜகோபுரத்துக்கு வந்தபோது, மக்களின் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
2f2-ES
கோயிலின் முன் இலங்கைத் தீயணைப்பு நிலையத்திற்குச் சொந்தமான மிகப்பெரிய கிரேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனோடு இணைக்கப்பட்ட பெட்டியில் அனைத்துப் பொருட்களும் ஏற்றப்பட்டவுடன் குருமார்களும், உதவியாளர்களும் ஏறிக் கொள்ள, கிரேன் இயங்க ஆரம்பித் தது. பெட்டியை மெல்ல, மெல்ல உயர்த்தி, இராஜகோபுரத் தின் உச்சிக்கருகில் கொண்டுபோய் நிறுத்திய போது அத்தனை ஆயிரம் கண்களும், இமைக்க மறந்து மின்னும் கலசங்களையே உற்று நோக்கியபடி இருந்தன.
வேத முழக்கங்களில் தோய்ந்த, தூயநீரைச் செம்புகளிலே எடுத்துக் கலசங்களின் மீது பொழிந்தவுடன், மக்கள் கூப்பிய கரங்களுடன் 'அரோகரா', 'அரோகரா’ முருகா! முருகா! என்று உணர்ச்சி ததும்ப முழங்கிய போது, நிச்சயமாக அங்கே வள்ளி தெய்வயானையோடு, முருகப் பெருமானே இறங்கி வந்திருக்க வேண்டும்.
கோபுரத்தின் மீது பெரும் மாலைகளையும், ஆடைகளை யும் சாத்தி மலர் தூவிய போது, அந்தத் துணுக்குகளைப் பெற மக்கள் கூட்டம் அலைமோதியது.
பரவச நிலையில் பல பக்தர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் பெருக்கெடுத்தோடியது.
 

urgidhanav souris ultrafts affy 48
"என்னால் இப்போது சரியாகப் பேசக்கூட முடியவில்லை. மக்களெல்லாம் பக்திப் பரவசத்திலே மூழ்கிப் போயிருக்கிறார் கள். நானறிந்த வரையில் கொழும்பில் இப்படி ஒரு மக்கள் வெள்ளத்தைக் கண்டதில்லை' என்று பொ. பாலசுந்தரம் உணர்ச்சிப் பெருக்கோடு மொழிந்தார்.
தமிழகத்தில் ஆறுநூறுக்கும் மேற்பட்ட கும்பாபிஷேகங் களைக் கண்டு தரிசித்த சிற்பி கணேசன் கொழும்பில் ஒரு வேறுபாட்டைக் கண்டார். 'தமிழ் நாட்டில் எல்லாக் கோபுரங் களுக்கும் ஒரே நேரத்தில் குடமுழுக்குச் செய்வார்கள். ஆனால் இங்கோ முதலில் இராஜகோபுரம், முடிந்த பின்னர் மற்ற கோபுரங்கள். ஐதீகப்படி இராஜகோபுரம் என்பது கடவுளின் பாதங்களைக் குறிக்கும். எனவே குடமுழுக்கைப் பாதத்தி லிருந்து தொடங்குகிறார்கள்’.
"பொதுவாக இந்தியாவில் இத்தகைய விழாக்களில் பக்தர் களை விட காவலர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக் கும். ஆனால் இங்கோ காவல்துறையினரே இல்லை. மக்கள் அவ்வளவு ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள் கிறார்கள்’ என்று வியந்தார் உவரி ஆ. கிருபாநிதி.
உண்டிையில் இரண்டே பொலிஸ்க்ாரர்கள்தான் அந்த விழாவிற்கு வந்தவர்கள். அவர்கள் கூடத் தெருமுனையில் நின்று கொண்டு வாகனங்களைக் கட்டுப்படுத்தினார்களேயொழிய, கோயில் பக்கம் வரவேயில்லை. ஏன்?
'தமிழர்களின் இந்து அறநிலைய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, மிகவும் கட்டுக்கோப்புடன் நடக்கும். இங்கே விரும்பத் தகாத நிகழ்ச்சிகள் நடைபெறா என்று இலங்கை அரசுக்கு நன்றாகத் தெரியும். எனவே காவலர்களை அனுப்புவதில்லை. மேலும் தொண்டர்களே சீரிய முற்ையில் பாதுகாப்பு ஏற்பாடு களைச் செய்து கொள்வதால் பாதுகாப்பு தேவைப்படுவ தில்லை' என்று கூறுகிறார் இலங்கைப் பாராளுமன்ற உறுப் பினர் ஆர். யோகராஜன்.
‘இந்த விழா தமிழர்களின் பக்தி உணர்வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! வந்திருக்கும் கூட்டத்தைப் பாருங்கள்! பெரும் பகுதியினர் பெண்கள். குண்டு வெடித்தால் முதலில் வெளிவரத் தயங்குவது பெண்கள். அடுத்து தங்கள் கணவரை

Page 221
d4 இதோ ஒரு வெளிச்சம்
யும், பிள்ளைகளையும் வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து விடுவார்கள். ஆனால் இங்கே கூட்டம் அலை மோது கிறது. பக்தி என்று வரும்போது உயிர் கூட இரண்டாம் நிலைக் குத் தள்ளப்படுகிறது.’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார் திவ்யராஜன்.
மற்ற கோபுரங்களின் மீதும் குடமுழுக்கு நடந்த பின்னர் மூலவரைத் தரிசிக்கக் கூட்டம் அலைமோதியது!
அன்றாடம் தரிசிக்கும் சிவசுப்பிரமணியசுவாமிதான்; ஆனாலும் அன்று அவரைத் தரிசிக்க ஏன் அவ்வளவு கூட்டம்? எதற்கு அத்தனை ஆர்வம்?
அன்றாடம் பார்க்கின்ற மகன்தான்; ஆனால் அவனையே திருமணக் கோலத்தில் காணப் பெற்றோர்களும், உற்றோர் களும் எப்படித் துடிக்கிறார்கள்? அந்த நிலையைத் தான் அன்று காண முடிந்தது!
தம் மகனுக்குத் திருமணம் நடத்திப் பார்த்த பரவசத்தில் தெய்வநாயகம் இருந்தார். இலேசாக மயங்கிய நிலையில் அலுவலகத்தில் அவரை அமர்த்தியபோது அவருடைய பேத்தி டாக்டர் மருதினியிடம் கூட ஒரு பதட்டம் தெரிந்தது.
கொஞ்சமும் பதறாமலிருந்தவர் அவர் செயலர் குழந்தை வேலு தான். 'முருகனுடைய பணிகளில் இறங்கி ஆழ்ந்த பக்தி யோடு அவர் செயலாற்றும்போது, அதிக மகிழ்ச்சியாலும், பக்தி பரவசத்தாலும் அவர் இலேசாக மயங்குவது வழக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் பழைய மாதிரி இயல்பான நிலைக்கு வந்துவிடுவார்." அதேபோல பத்து நிமிடங்களில் எழுந்து நின்று இலங்கை வானொலியின் நேர்முக ஒலிபரப்புக்குப் பேட்டியளிக்க வெளியே சென்றார் தெய்வநாயகம்.
அலுவலக அறையில், ஒரு மூலையில் நாற்காலியின் மீது உட்கார்ந்தபடி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞர் கூறினார், “பெரியவர் ஓர் அபூர்வமான மனிதர். அவரால்தான் இப்படிப்பட்ட விழாக்களை நடத்த முடியும்.' கும்பாபிஷேக நாள்தான் இலங்கையின் சுதந்திர நாள். சுதந்திர நாள் விழாவில் கலந்துகொள்ள அந்த இளைஞர் கிளம்பினார். உடன் யாரும் துணைக்கு வராமல் தனியாக, எளிமையாக

பாதங்களை நனைத்த பன்னிர்த் துளிகள் A
வந்து, எளிமையாக வெளியேறிய அவர், இலங்கை அரசின் துணை அமைச்சர் பெ. சந்திரசேகரன்!
மக்கள் வெள்ளம் கோவிலுக்குள் ஊர்ந்து கொண்டிருந்தது. காணாமற் போனவர்களைக் காணாமல் விட்டவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். பலர் வியர்வைக் குளியலில் பளபளப் பாகத் தெரிந்தார்கள்.
நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். பொதுவாக 'இளை ஞர்களே - வருங்காலம் உங்கள் கையில்தான்' என்று கூறி எப் போதும் தற்காலத்தைத் தங்கள் கையிலேயே வைத்திருப்பவர் கள் முதியவர்கள் என்ற குற்றச்சாட்டு ஒன்று உண்டு.
ஆனால் இங்கோ முதியவர்கள் நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இளைஞர்களிடம் கொடுத்துவிட்டு நிற்க, இளை ஞர்கள் நிரம்பிய அவையாக, அந்த வயதான கோயில் நிரம் பியது.
கும்பாபிஷேகம் முடிந்த அன்றைய மாலைநேரம் - பக்தர் கள் தொடர்ந்து ஆராதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள். அலுவலகத்தில் ஓர் இளைஞரும் அவருடைய மனைவியும் கைக் குழந்தையுடன் தெய்வநாயகத்திடம் சில ஐயங் களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெய்வநாயகத்தின் குரல் கேட்கிறது.
'உங்களுடைய பூசைக்கு கூடிய மட்டும் நீங்கள் தான் வர வேண்டும். என்னுடைய பூசையை, என் மகனை அனுப்பிச் செய்யச் சொல்வதில் முழு விளவுை எப்படி கிடைக்கும்?
இந்தக் கோயிலுக்கு என்று ஒரு சக்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நேரில் வரமுடியாத சூழ்நிலையில் இருக்கும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா பக்தர்கள் கூடத் தவறாமல் பணம் அனுப்பி எங்கள் உபயங்களை விடாமல் நடத்தி விடுங்கள் என்று கடிதம் எழுதுவார்களா? தொலை பேசியில் பேசுவார்களா?
- நாட்டை விட்டே போயாகி விட்டது. இனி என்றைக்குத் திரும்புவோம் என்று அவர்களுக்கே தெரியாது. இருந்தாலும் கோயிலை விடமுடியவில்லையே, ஏன்? அதுதான் நம்ம முரு கனின் சிறப்பு, சக்தி, மகிமை, எல்லாம்!

Page 222
r. இதோ ஒரு வெனிச்சம்
எல்லாவற்றையும், நாங்கள் முறைப்படி ஒழுங்காக, Ճlւգவாகச் செய்து, பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கிறோம்!"
ஏதோ ஒர் உபய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய ஆர்வத் தோடு வந்த அந்த தம்பதியினர் மெய் மறந்து நிற்க, வெளியூரி லிருந்த வேறு இருவர், 'ஐயா, நாங்கள் ஏதாவது இந்த ஆலயத் திற்குச் செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? என்று கேட் பதற்காகக் காத்திருக்கின்றனர்.
இரவு சிற்பி கணேசனுக்கும், உடன் வந்த கலைஞர்களுக் கும் பாராட்டு விழா நடைபெறுகிறது. அறங்காவலர்கள் ஒவ் வொருவரும் கலைஞர்களுக்குப் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கிறார்கள். உவரி ஆ. கிருபாநிதி, தெய்வநாயகத்தைப் போற்றி 'திருப்பணி கண்ட செல்வர்' என்ற பட்டத்தை அளித்து கெளரவிக்கிறார்.
அடுத்து தலைவர் சிவசங்கரம் பிள்ளை முன்னிலை வகிக்க உபதலைவர் ஏ.எஸ். சோமசுந்தரம் பிள்ளை ஏற்பாட் டின்பேரில் இலங்கை வந்த கோவை இசையரசி திருமதி. கோவை சரளா, கே.பி. சுந்தராம்பாளை நினைவூட்டும் வகை யில் அதே குரலில் பாடி இன்னிசைக் கச்சேரி நடத்துகிறார்.
வெளியே சொல்வதற்குத் தயங்கினாலும், பலருடைய எண்ணங்கள் 1983 ஆடிவேல் விழாவிற்குச் சென்றன. அன்று திருமதி எம்.எல். வசந்தகுமாரியின் இன்னிசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்த போதுதான், கொழும்பில் இனக் கலவரம் வெடித்தது. இன்று பெரிய வெடிவிபத்துக்குப் பின் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. முருகப் பெருமானின் திருவருளால் எல்லாம் நல்லபடியே முடிந்து முருகன் அருளைச் சுமந்து மக்கள் இல்லம் திரும்பினர்.
இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. கொழும்பு மேயர் கெளரவ. கே. கணேசலிங்கம், தன்னுடைய துணைவியாருடன் பூசையை முடித்துவிட்டு மனநிறைவோடு சென்றார். அறங்காவல் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளை நோக்கிக் கிளம்பினர்.
எத்தனையோ உறங்காத இரவுகளின் உழைப்பு, அழகாக மலர்ந்ததைக் கண்ட பெருமிதம் அவர்கள் முகத்தில் ஒளிர்ந்தது.

பாதங்களை நனைத்த பன்னிர்த் துளிகள் 427
பல படிகள் ஏறியும், பல முறை சுற்றியும், ஆடியும், ஒடியும் உழைத்த உழைப்புக்கு உடலில் களைப்பு இருந்திருக்க வேண் டும். ஆனால் அவர்களிடம் களிப்பே தெரிந்தது.
பல்லாயிரம் பக்தர்களை ஒன்று திரட்டி, நாடே நடுங்கிக் கொண்டிருந்த வேளையில் கூட, எப்படி திட்டமிட்டிருந்தார் களோ, அதற்கும் ஒருபடி மேலேயே விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்த அறங்காவலர்களுடைய சாதனைக்கு இலங் கையின் பக்தி வரலாற்றில் நிச்சயம் ஓர் நிலையான இடம் உண்டு, என்று நாம் சொல்லவும் வேண்டுமோ?
'இன்றைக்கு நான் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும். என்று தெய்வநாயகம் கூறியபோது இரவு மணி பத்து. மூச்சுக்கு மூச்சு 'முருகா, முருகா' என்று அழைத்து வணங்கி மகிழ்ந்த முரு கனுக்கு ஒரு வழியாக மிகுந்த பக்தி சிரத்தையோடு கும்பாபி ஷேகம் நடத்திய பெருமிதத்தை அவருடைய தன்னடக்கம் மறைத்து வைத்திருந்தது. இரவும், பகலும் தம்முடன் நிழல் களாக மாறி ஒத்துழைத்த அத்தனை பேரையும், மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்க அவர் பார்த்தார். ஒவ்வொருவரையும் கையைப் பிடித்து, தட்டிக் கொடுத்துவிட்டு, அன்பாகப் பேசி விட்டு மெதுவாக நடந்து வந்தார்.
கடந்த சில நாட்களாகத் தன்னுடன் பம்பரமாகச் சுழன்ற ஆவுடையப்பனிடம் 'வருகிறேன்' என்று கூறிவிட்டு, மெள்ள ஆலயத்திற்கு வெளியே வந்து, மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட ஆலயத்தின் இராஜ கோபுரத்தையே சற்றுநேரம் உற்று நோக்கினார்.
'இராஜகோபுரம் - இறைவனின் பாதங்கள்' - அந்தப் பாதங்களைத் தான் காலையில் குடமுழுக்கின்போது, நன்னி ரால் நனைத்தார்கள்!
'முருகா, என் பிறவியின் பலனைக் கொடுத்துவிட்டாய்!" தெய்வநாயகம் முணுமுணுப்பது போலத் தோன்றியது.
'ஐயா, வீட்டுக்குத் தானுங்களே!' ஒட்டுநர் ஜோசப், தெய்வநாயகத்திடம் பணிவாகக் கேட்க, 'வீட்டுக்கு வேண்டாம். நம்ம சோமுவின் மருமகன் பண்டாரசிவம் இங்கிருந்து மாலை போகும் போது ஏதோ விபத்தில சிக்கிக் காலில் அடிபட்டு,

Page 223
428 இதோ ஒரு வெளிச்சம்
மருத்துவமனையில் இருப்பதாக செய்தி வந்தது. நேரா மருத்துவ மனைக்கு ஒட்டுங்க!' கார் நகர்ந்தது!
'அடுத்த நாள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அந்த இரவு நேரத்தில் கூடக் களைப்பையும் பொருட்படுத்தாமல், முருகனுக்காக உழைத்த தொண்டனைத் தேடி, தெய்வநாயகம் கிளம்பியதைப் பார்த்ததும், அன்பின் மிகுதியால், இராஜகோபுரத்திலிருந்து ஒரு பன்னீர்த்துளி திரண்டு கோயிலின் வாயிலில் விழுந்தது.
ஒரு மனிதன் நல்ல வெயிலில் சி ::::::: சோர்ந்து விட்டிருக்கிறான். அந்த நிை
அந்த மனிதன் தலையிலிருக்கின்ற சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, அவனுக்கு நன்றாகக் குளிர்க் காற்று வீசி, தாகத்தைத் தணிக்க ஏதாவது பானம் கொடுத்து இலேசாக ஓய்வு எடுத்துக் கொள்ளச் செய்தால் - மீண்டும் அந்த மனி தனின் அந்தச் சுமைகளை ஏற்றி அனுப்பினால் அவன் மேலும் உற்சாகத்தோடு மீண்டும் சுமைகளைச் சுமக்க ஆரம்பிப்
ごごーごーごこ
அந்த மாதிரி -
வாழ்க்கைப் பாதையில் சோர்ந்து, சலித்து வருகின்ற மனிதனது இன்ப துன்பங்களைச் சிறிதுநேரம் இறக்கி வைத்து, மனத்திற்குப் புதிய உற்சாகத்தினை ஏற்படுத்தி மீண்டும் வாழ்க் கைப் பாதையில் அனுப்புபவை இந்தக் கோயில்கள்
ஆகவே கோயில்கள் நம்முடைய வாழ்வின் சுமைதாங்கி களாகவே செயல்படுகின்றன.
ஆனால் கோயில்களுக்குச் செல்வதாலேயே நம்முடைய பாரங்கள் தீர்ந்து விடும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஆனால்: பாரத்தைத் தாங்கும் வலுவைக் கோயிலால் தர முடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

43. ஈர்ப்புச் சக்தி
ஆற்றல் மிகுந்த, நல்ல, உயரிய எண்ணங்கள் Girar ஒரு மனிதன் ஒரு கோயிலிலே ஒரு விக்கிரகத்தை நிறுவுவதாக வைத்துக் கொள்வோம். அவனுடைய எண்ண அலைகள் அந்த வட்டாரத்துக்குள் நிலையாக இருக்கிற அக்கோயிலுக்குப் பல பக்தர்கள் வரலாம். அப்படி வருபவர்களில் யாருக்கெல்லாம் நிறுவியவருக்கு ஒத்த மன அலைகள் இருக்கின்றனவோ அவர் கள் அந்தக் கோயிலுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் வேறு எங்கும் பெறாத மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அங்கே பெறுகிறார்கள். அதனாலேயே ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட கோயிலையே நாடிச் செல்வதைப் பார்க்கின்றோம்.
அப்படிப்பட்ட பக்தர்கள் தங்களுடைய மன அலைகளால், தங்களோடு உணர்வில் ஒன்றிவிட்ட பிற நண்பர்களையும், பக் தர்களையும் ஈர்க்க ஆரம்பிப்பார்கள். பிறகுதான் அக்கோயி லுக்கு நிறைய கூட்டம் வருவதும், அதில் நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் நிகழ்கின்றது.
ஆக ஒரு கோயில் செழிப்பாகத் திகழுவது என்பது ஒத்த மன அலைகள் கொண்ட மனிதர்கள் அங்கே காலடி எடுத்து வைத்து உள்ளே செல்வதிலிருந்து தொடங்குகிறது."
தமிழ்நாடு, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆன்மீக சிந்தனை யாளர் திரு. பெருமாள் ராஜூ அவர்களுடைய கருத்துக்கள்
இவை.
ஜிந்துப்பிட்டி முருகன் கோயில் வரலாற்றை ஆராய்பவர் களுக்கு இப்போது கோயில் வளமைக்கும், சிறப்புக்கும் காரணம் புரிந்திருக்கும்.
தெய்வநாயகம் பொறுப்பேற்ற பின், அவரும், அவருடைய அறங்காவலர்களும் தங்கள் மன அலைகளின் மூலம் பல்லா யிரக்கணக்கான மக்களை ஈர்க்க கோயில் எல்லா வலிவும் பெற்றுத் திகழ்வதை இன்று கண்கூடாகக் காண்கிறோம்.

Page 224
430 இதோ ஒரு வெளிச்சம்"
'கும்பாபிஷேகம் போன்ற விசேஷ நாட்களில் ஒத்த மன அலைகள் கொண்ட மக்கள் நிறைய பேர் கூடும்போது மனம் தூய்மை பெற்று, மன அதிர்வுகள் வலுப்பெறுகின்றன.
மேலும் கும்பாபிஷேகக் கலசங்கள் சில சாத்திர முறைகள் படி வடிவமைக்கப்பட்டவை. சாதாரண நீரைத்தான் பாத்திரங் களில் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் பல பக்தர்களின் பார்வை, எண்ணம் இரண்டும் கலசங்களின் மீதும், நீரின்மீதும் இருக்கின்றன. வேத ஒலிகளும், 'அரோகரா' 'முருகா' என்பது போன்ற ஒலிகளும் அப்போது இணைகின்றன. ஆகவே ஆயிரக் கணக்கான பக்தர்களின் எண்ணம், பார்வை, ஒலிகள் அனைத் தும் நீரின்மீது ஒருமுகப்படுத்தும்போது அபிஷேகநீர் வலிமை மிக்க நீராக மாறிக் கலசத்தின் மீது பட்டுத் தெறிக்கும் போது மிகமிக வலிமை பெறுகின்றது.
அதனால்தான் ‘ஒரு கும்பாபிஷேகம் பார்ப்பது ஆயிரம் கோயில்களைத் தரிசிப்பதற்கு இணையானது' என்கிறார்கள்! என்று பெருமாள் ராஜூ அவர்கள் கும்பாபிஷேகத்தின் பெரு மையை விவரிக்கிறார்.
'இதோ, இங்கு வந்திருக்கிற மக்களைப் பாருங்கள்! யாரு டைய முகத்திலேயாவது பயத்தின் சாயல் தென்படுகிறதா? திருவிழாவிற்கு வந்தவர்கள் போலக் களிப்பாகவும், திருமணத் திற்கு வந்தவர்கள் போல நட்பாகவும் இருக்கிறார்களே, இதல் லவா முருகனின் பெருமை' என்று ஈஸ்வரனின் நண்பர் கனடா பாலா கூறும்போது மேற்கண்ட கருத்துக்கள் எவ்வளவு சரியானவை என்று நம்மால் உணரமுடிகிறது.
சாதாரண இரும்புத்துண்டு, தொடர்ந்து காந்தத்தின் மீது உராயும்போதும், அதோடே இணைத்து வைக்கப்பட்டிருக்கும் போதும், அது காந்தமாகவே மாறிவிடுகிறது என்று அறிவியல் கூறுகிறது.
இளம் வயதிலேயே இறை உணர்வோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் தெய்வநாயகம். ஒவ்வொரு முறையும் சோதனைகள் அவரை உராய்ந்த போதும், அவருடைய சிந்தனை இறைவன் மயமாகவே இருந்தது. ஒவ்வொரு கொடிய அனு பவமும் அவரை மேலும், மேலும் புடம்போட்ட தங்கமாகவே மாற்றி வந்தது. நாளடைவில் இரும்பு, காந்தமாக மாறுவதைப்

ஈர்ப்புச் சக்தி 43
போல தெய்வநாயகமும் ஈர்ப்பு சக்தி மிக்க ஒரு காந்தமாகவே மாறிவிட்டதைப் பார்க்கின்றோம்.
அவரோடு பழகுகின்ற மனிதர்களில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவரிடம் ஈர்க்கப்படுகின்றார்.
காந்தமாவது, இரும்பை மட்டும் ஈர்க்கின்றது; ஆனால் இவரோ யாவரையும் ஈர்க்கின்றார். கடும் உழைப்பு, இறைபக்தி, கொடை, பணிவு, நிர்வாகத் திறன், பரந்த நெஞ்சம், மத நல் லிணக்கம் இப்படி ஏதேனும் ஒரு திறனிலாவது இவரிடம்
மயங்காதவர்கள் இல்லை எனலாம்.
காந்தத்தோடு ஒட்டிக்கொண்ட இரும்பு காந்தமாவது போல, இவரோடு பேசிப் பழகுபவர்களும், அப்படிப் பழக இயலாதவர்கள் அவருடைய வரலாற்றைப் படிப்பதன் மூலமும் அவரிடம் ஈர்க்கப்பட்டு, அவருடைய சிறந்த குணங்களுள் சில வற்றையாவது தம்மில் ஒட்டி எடுத்து அவர்களும் மற்றவர்களை ஈர்க்கும் காந்தமாக மாறலாமல்லவா!

Page 225
44. காலடிகள்
விடியற்காலை 4.30 மணி! கொழும்பு நகரம் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை!
தெய்வநாயகம் எழுந்து உட்காருகிறார். இது அவருக்கு எத்தனையோ ஆண்டுகளாகப் பழகிப்போன செயல்.
காலை 5.30 மணி!
ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தில் முதல் பூசைக்கு ஆயத்த மாக நின்று கொண்டிருக்கிறார்.
மழை, காற்று, புயல் ஊரடங்கு எதுவும் இந்த விடியற் காலைப் பூசையை தடுத்ததில்லை.
காலை 6.30 மணி! காலி முகத்திடலில் காலாற நடக்கிறார்! இயற்கை சதிசெய்யாவிட்டால் நிச்சயம் இந்த நடைப் பழக்கம் நடந்தே தீரும்!
கொழும்பின் கடற்கரை மணலில் எத்தனையோ இலட்சம் காலடித் தடயங்கள் பதிந்திருக்கின்றன!
ஒவ்வொரு ஜோடி தடயங்களும் மற்றவையிடமிருந்து மாறு பட்டுள்ளன என்பதில் ஐயமில்லை தான்.
ஆனால் இந்தக் காலடித் தடயங்களின் பின்னே ஒரு பெரிய வரலாறே பொதிந்திருக்கிறது!
பன்னிரெண்டு வயது சிறுவனாக இலங்கையில் காலடி வைத்த தெய்வநாயகம் இறங்கியது இந்தக் கொழும்பு கடற்கரை யில்தான்!
அன்று கடற்கரையில் பதியவைத்த கால்கள் இன்று வரை ஓயாமல் நடந்து கொண்டேயிருக்கின்றன.
 

காலடிகள் 433
பேருந்தில் பயணம் செய்யக்கூடக் காசில்லாமல்மினுவாங் கொடையிலிருந்து கொழும்பு வரை இந்தக் கால்கள் நடந்திருக் கின்றன!
வேலை தேடிக் கடை கடையாய் இந்தக் கால்கள் ஏறி இறங்கியிருக்கின்றன.
வேலை கிடைத்த பின்னும் வியாபாரத்துக்காக இந்தக் கால்கள் கடை கடையாய் ஏறியிருக்கின்றன!
சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்னும் உட்கார்ந்து தொழில் செய்யாமல் கால் கடுக்க வேலை செய்ய இந்தக் கால்கள் நின்றிருக்கின்றன.
பன்னிரெண்டு வயதில் காலூன்றிய போது அந்தக் காலடி கள் மிருதுவானவை, மிக இளமையானவை!
ஆனால் இன்றைய காலடிகளோ உறுதியானவை. அனு பவத்தில் முதிர்ந்தவை!
இந்தக் கால்கள் வாழ்க்கைப் பாதையில் கடந்து வந்த தூரம் மிக அதிகம்!
இந்தக் காலடிச் சுவடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் வி.ரி.வி நிறுவனங்களின் வரலாறு மறைந் திருக்கிறது!
இந்தக் காலடி பதிப்பில் பள்ளியில் பயிலும் நூற்றுக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிந்திருக் கிறது!
இந்தக் காலடித் தடயங்கள் பல இலட்சம் கால்களை ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தோடு வலம் வரச்செய்த வல்லமை பெற்றிருக்கிறது!
இந்தக் காலடித் தடயங்களை மதுதியில் காணலாம்! மாதா கோயிலிலும் காணலாம்; புத்த விகாரத்திலும் காணலாம்.
இந்தக் காலடித் தடயங்கள் மனித வல்லமையைப் பறை சாற்றுகின்றன!
இவை மனித நேயத்தை முழங்குகின்றன!

Page 226
434 இதோ ஒரு வெளிச்சம்
இந்தக் காலடித் தடயங்கள் எதையும் சாதிக்க முடியும் என்று சங்கநாதம் செய்கின்றன!
இந்தத் தடயங்கள் அன்பினை மிஞ்சிய ஆற்றல் உலகில் இல்லை என்று முரசு கொட்டுகின்றன!
அதனால்தான் இவருடைய கால்கள் வணங்குவதற்குரிய பாதங்களாக மாறிவிட்டன!
எந்தக் கோயிலில் இவர் நின்றாலும், இவர் பாதங்களில் வீழ்ந்து, வணங்கி இவர் கையினால் திருநீறு பூசிக் கொள்ள மக்கள் வரிசையிலே நிற்கின்ற காட்சியை இலங்கையில் மட்டு மல்ல; திருச்செந்தூரிலும் காணமுடிகின்றது.
வாழ்வதற்காக வந்திறங்கிய கால்கள் இன்று வணங்குவதற் குரிய கால்களாக மாறியிருப்பது என்ன விந்தை எத்தனை பெருமை!
இந்தக் கர்மயோகியின் கடற்கரைப் பயணம் காலை 7.30க்கு முடிகின்றது.
மீண்டும் 10.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி ஜிந்துப் பிட்டி சிவசுப்பிரமணியர் ஆலயத்துக்கு வந்து தம் அறங்காவலர் பணிகளைக் கவனிக்கின்றார்.
காலை 11.00 மணி.
தம் அலுவலகத்தில் தொலைபேசியும், கையுமாக அமர்ந்து விட்டால் 2.00 மணி வரை மிகவும் சுறுசுறுப்புடன் வியா பாரத்தைக் கவனிக்கிறார்.
நண்பகல் உணவு.
ஒரு மணி நேரம் இலேசான உறக்கம்.
Dfc)6) 5.00 மணிக்கு அலுவலகம்.
இரவு 8.00 வரை அலுவலகத்திலேயோ, அல்லது வேறு கிளை அலுவலகங்களுக்குச் செல்வதிலேயோ நேரம் செல் கிறது. A
பிறகு 8.00 மணிக்கு கோயிலுக்கு வந்தால் பூசை, வரு கின்ற பக்தர்களை வரவேற்பது, நலம் விசாரிப்பது, எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா’ என்று கண்காணிப்பது.

Att svag s6ir 435
கொஞ்சம் கூட்டம் குறைந்ததும்,
கோயில் அலுவலகத்திலே உட்கார்ந்து அன்றாட வரவு செலவுக் கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பிக்கின்றார்.
இவர் ஞானயோகியா, பக்தியோகியா, ராஜயோகியா, கர்மயோகியா? - யோகிகளுக்கே புரியாத புதிர்!
ஒரமாக நின்று அவரை அந்த இரவில் பார்க்கும்போது அவர் வெளிச்சமாகத் தெரிகிறார்! அந்த வெளிச்சம், பல இலட்சம் விண்மீன்களுக்கிடையில் வழிகாட்டுவதற்கென்றே பளிச்சிடும் வடதிசை, துருவ நட்சத்திரத்தின் வெளிச்சம்.
வணிகம் செய்யமுடியவில்லையே எனத் தடுமாறும் வணிகர்களுக்கு அவர் ஒரு வெளிச்சம்!
அன்பு செலுத்த ஆளில்லையே என ஏங்குவோர்க்கு அன்பு செலுத்துவது எப்படி எனக்காட்டும் வெளிச்சம்!
பிரிவு உணர்வுகளால் பிணக்குகளில் சிக்குண்டு பிணக் குவியல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இருண்ட நிலையில் உள்ள பலருக்கு இடையில் அன்புதான் பகைமை இருளைப் போக்கும் என்று உணர்த்துகின்ற வெளிச்சம்!
பிள்ளைகளைப் பெற்றால் எப்படி வளர்ப்பது என்று தடு மாறும் பெற்றோருக்கு அவர் வாழ்க்கை ஒரு வெளிச்சம்!
விளக்கின் வெளிச்சத்தில், அவரே ஓர் அகல் விளக்கின் எளிமையோடு அமர்ந்து ஆலயக் கணக்குகளை எழுதுகிறார். அப்போது அவர் முருகனிடம் முணுமுணுப்பது நம் காது களிலும் ஒலிக்கிறது.
'முருகா! உன்னுடைய கணக்கை நான் எழுதுகின்றேன்! என்னுடைய கணக்கை நீயே எழுதிக்கொள்!"
நூல் முற்றுப் பெறுகிறது! வி.ரி.வி.யின் வெற்றி வாழ்க்கை தொடர்கிறது.

Page 227


Page 228


Page 229