கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை வரலாறு - பாகம் 2

Page 1
Hipswapuisspay. S jouă
©|U|No] !!!!!$ ]│@ @ @
“圆
 

கை வரலாறு
=ـيمي سيج($
曙 T ரியர் செ. கிருஷ்ணராஜ

Page 2


Page 3

இலங்கை வரலாறு
mabile 2
கி.பி.1505 - கி.பி. 1796 வரை
பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கான கைநூல்
செ. கிருஷ்ணராசா வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் திருநெல்வேலி
2OO5

Page 4
AsesorāNaxos enprepomp : lume5ub 2 (8.S. 1505 - 8. S. 1796)
சமூக, பொருளாதார நோக்கில் இலங்கையின் வரலாற்று வளர்ச்சி (பாடநூல்)
செல்லையா கிருஷ்ணராசா M.A., இனைப் பேராசிரியர்,
வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
கலட்டி 2ஆம் ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.
பிறைநிலா வெளியீடு
பதிப்பு இரண்டாம் பதிப்பு -2005 முதற் பதிப்பு - 2002
பதிப்புரிமை ஆசிரியருக்கே
ISBN 955-1037-03-0
2

DEDICATION
THISTEXT BOOK IS DEDICATED TO THE HISTORIC MEMORY OF PEACE MAKERS WHO SACRIFICED THEIR LIFE, EFFORTS, AND TIME TO RETURN PEACE AND SOCIAL HARMONEY IN OUR MOTHER LAND.

Page 5

நன்றியுரை
இலங்கை வரலாறு பாகம் п என்ற இந்நூலானது நவீன இலங்கை வரலாற்றை அறிய விரும்பும் அறிவு ஜீவிகளுக்காகவும், அதனை ஒரு பாடவிதானமாக கற்கும், கற்பிக்கும் மாணவ, ஆசிரியப் பெருந்தகை களுக்காகவுமே எழுதப்பட்டது. இந்நூலின்கண் கி.பி. 1505 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1796 ஆம் ஆண்டு வரைக்கும் உள்ள 296 வருட காலப் பரப்பில் நிகழ்ந்த வரலாற்று மரபின் வளர்ச்சியையும், தொடர்ச்சியையும் சமூக - பொருண்மிய நோக்கு நிலையினின்று விபரிப்பதற்கு முயற்சியை எடுத்துள்ளேன். இவ்விளக்கத்தின் அதீத விரிவு காரணமாக இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் மேலாதிக்க முகாமைத்துவத் துடன் உள்ளூரில் பிராந்திய அடிப்படையில் இணைந்திருந்தும், எதிரெதிராக இருந்ததுமான அரசுகளின் சமூக - பண்பாட்டுத் தளங்களை விரித்துரைக்கமுடியாதவொரு சூழலுக்கு உள் ளாக்கப்பட்டுள்ளேன். இருந்தும் போர்த்துக் கேயர், ஒல்லாந்தர் கால இலங்கையில் இருந்திருக்கக்கூடிய உள்ளூர் அரசுகளின் நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகளும்,

Page 6
நூல்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளமை இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும். ஆகையினாலேயே இந்நூலில் அவ்வுள்ளூர் அரசுகள் பற்றி, குறிப்பாக, தமிழ் - சிங்கள வன்னிமைகள் பற்றி எவ்விதமான விபரங்களும் எடுத்துக்கூறப்படாது. தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நூலின் இன்னொரு பதிப்பில் அவசியப்படும்போது அக்குறிப்பிட்ட விடயங்களையும் இணைத்துக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன். இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வரலாற்றுக்கரு, சம்பவங்கள் ஆகியவற்றுக்கான விளக்கங்கள் 1960களுடன் (சர்வதேச ரீதியாக) ஏற்பட்டிருந்த விளைவுகளின் அடிப்படையில் வரலாற்றினை நோக்குகின்ற (Objective View) முறைமையைத் தழுவி கொடுக்கப்பட்டுள்ளன. இடையிடையே இன்னுமொரு படி முன்னேறிய வகையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருந்த அறிவியல் அணுகுமுறைக்கேற்ப (Post modernism - பின்நவீனத்துவசிந்தனைகளுக்கேற்ப) வரலாற்று விளைவுகளுக்கான விளக்கங்களை புவிசார் அரசியல் கூறுகளுடன் தொடர்புபடுத்தி விளக்குவதற்கும் முயற்சி எடுத்துள்ளேன். ஆனால் அந்நோக்கு எந்தளவிற்கு இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வாசகர்களே துணிந்து கூறவேண்டும்.
பாடவிதான நோக்கின் அடிப்படையிலான இந்நூலை எழுதி 2000ஆம் ஆண்டு முடிவு எய்துவதற்குள்ளேயே வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஓர் அவா என் மனதில் மிகவும் ஆழமாகக் குடிகொண்டிருந்தது. அந்நோக்கிலேயே இந்நூலுக்கான முன் அட்டையை கொழும்பில் உள்ள ஓர் ஒவ்செற் பதிப்பக நிறுவனத்தின் உதவியுடன் பதிப்பித்தும், எடுத்துக்கொண்டிருந்தேன். முதல் மூன்று அத்தியாயங்களும் டிசெம்பர், 2000ஆம் ஆண்டிற்குள் எழுதி முடிக்கப்பட்டு, அச்சேற்றப்பட்டு விடப்பட்டிருந்தது. மண்ணின் வாசனையுடன், வாழ்வின் போக்கில் ஏற்பட்ட தளம்பல்களின் மத்தியிலும் எனது சிந்தனையை சிதறவிடாது எனது கடின உழைப்பினுடே இந்நூலின் நோக்கத் தையும், மிகுதி அத்தியாயங்களையும் நிறைவு செய்தேன். அதுவரையில் எனது உயிர்ப்பினை எனக்குரிய கடமைகளுடன் பாதுகாத்துத் தந்தமைக்காக எனது குல தெய்வங்களுக்கும், அந்தப் பரம்பொருளுக்கும் முதலில் நன்றி கூறுகின்றேன். அந்தத் தெய்வத்தின் அணுக்கிரஹம் என்மீது பட்டமையினா லேயே இன்று உங்கள் கரங்களுக்கு இந்த நூலைத் தர முடிந்தது. ஆகவே அந்த மேலான பரம்பொருளுக்கு மீண்டும் நன்றி செலுத்துகின்றேன்.
இந்நூல் எழுதப்பட்டபோது அதன் முதலாவது வரிவடிவ அமைப்புடனேயே (First Draft) அச்சுவாகனம் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலைப் பதிப்பித்த சுன்னாகம் திருமகள் அழுத்தக நண்பர்கள் எனது கையெழுத்து மாதிரியை நன்கு தெளிவாக வாசிக்க முடிந்திருந்தமையாலும், அவர்கள் எல்லோருமே எனது இந்நூல் சிறப்பான கட்டுக் கோப்புடனும், தெளிவான வசன அமைப்புடனும் வெளியாக வேண்டும் எனத் தமது சேவையுள்ளத்தை விரிவுபடுத்தியமையாலுமே இந்நூல் "இந்தளவிற்காவது உங்களது கரங்களில் தவழ வாய்ப்பு ஏற்பட்டது. அதன்

பொருட்டு சுன்னாகம் திருமகள் அச்சக முகாமையாளருக்கும், அங்கு சேவையாற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இறுதியாக இந்நூலுக்கான வாழ்த்துரையை வழங்கி இந்நூலைக் கெளரவித்த எனது மானசீக ஆசானான பேராசிரியர் வி. சிவசாமி B. A. (Hons), M.A. அவர் களுக்கும், இந்நூலின் ஆசிரியர் பற்றிய தனது எண்ணங்களை பின்னட்டையில் விதைத்திருந்த வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ச. சத்தியசீலன் அவர்களுக் கும் எனது உள்ளத்து மானசீக அன்பையும், நன்றியறிதல்களையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவனாகின்றேன். மேலும் எனது பல்கலைக்கழக நண்பர்கள் பலரும் இந்நூலாக்கத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கியமையின் பின்னணியில் அவர்கள் எல்லோருமே எனது நன்றிக்குரியவராகின்றார்கள்.
முடிவாக, பிறைநிலா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட இந்நூலினை உருவாக்கி, வடிவமைத்து, அதனை ஒரு பாடநூலாக வெளிக்கொண்டு வரும் வரைக்கும் எனது மனைவி, எனது மகள், எனது தந்தை ஆகியோர் தமது பொறுமையைப் பொறுப்புடன் கடைப்பிடித்தமைக்காகவும் எனது நன்றியறிதல்களை அவர்களுக்கும் செலுத்தக் கடமைப்பட்டவனாகின்றேன். இனி நூலிற்குள் நீங்கள் நுழையலாம். உங்களது ஆக்க பூர்வமான சிந்தனை, கருத்துக்கள் என்றுமே இந்நூலின் அடுத்த பதிப்பிற்கு வளம் சேர்க்கட்டும்.
இந்நூலின் திருத்திய 2ஆம் பதிப்பினையும் அதன் சந்தைப்படுத்தலையும் பொறுப்பேற்றுக்கொண்ட கொழும்பு 12இல் அமைந்த லங்கா புத்தகசாலை உரிமையாளருக்கும் அதன் முகாமையாளர் க. சதீஷ் மற்றும் திறம்பட அச்சேற்றிய கிறிப்ஸ் அச்சக உரிமையாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன், செ. கிருஷ்ணராசா
ஆசிரியர் கலட்டி ஒழுங்கை,
கோண்டாவில் மேற்கு,
23 - O6 - 2005

Page 7
அணிந்துரை
இலங்கையிலே தாய்மொழி மூலம் உயர்கல்வி குறிப்பாகச் சமூகவிஞ்ஞானம் மனிதப் பண்பியல் பாடங்கள் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாகக் கற்பிக்கப்பட்டு வரினும், இப்பாடங்களுக்கான தரமுள்ள நூல்கள் ஒரு சிலவே தமிழில் வெளிவந் துள்ளன. வரலாற்றுக் கற்கை நெறியைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய வரலாறு, இந்திய வரலாறு பற்றிய சில முக்கியமான நூல்கள் தமிழ் நாட்டிலே வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலுள்ள சில முக்கியமான நூல்கள் இலங்கையிலும் தமிழிலே மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. ஆனால் இலங்கை வரலாற்றைப் பொறுத்தமட்டில், தரமான நூல்கள் தமிழிலே மிகக் குறைவாகவே உள்ளன. இந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையைச் சேர்ந்த முதலாம் தர முதுநிலை விரிவுரையாளரும், சுமார் இரண்டு தசாப்தகாலக் கற்பித்தல், ஆய்வு செய்தலில் அனுபவமுள்ளவருமான திரு. செ. கிருஷ்ண JITEgri B.A. Hons. (Jaffna), M.A. (Mysore) ஏற்கனவே எழுதியுள்ள இலங்கை வரலாறு பாகம் 1 ஆம் தற்பொழுது வெளிவரும் இலங்கை வரலாறு பாகழ் 11 ஆம் நன்கு

குறிப்பிடத்தக்கவை. முன்னையது போர்த்துக்கீசருக்கு முற்பட்ட கால வரலாற்றையும், பின்னையது போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் கால வரலாற்றையும் எடுத்துக்கூறுகின்றன. தமிழிலும், ஆங்கிலத்திலும் இன்று இங்கு கிடைக்கக்கூடிய வரலாற்று மூலங் களையும், ஆய்வுகளையும் நன்கு பயன்படுத்தி புதிய கோணத்திலே நூலாசிரியர் இந்நூல்களை எழுதியுள்ளார். இப்பொழுது வெளிவரும் இரண்டாம் பகுதியிலே போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்கால சிங்கள, தமிழரசுகள், வன்னியர்கள் பற்றிச் சற்றுக் கூடுதலாக தகவல்கள் இடம்பெற்றிருந்தல் இந்நூல் மேலும் சிறப்புள்ளதாக விளங்கும் என்பது என் கருத்தாகும். மறுபதிப்பில் நூலாசிரியர் இவற்றிலும் கவனம் செலுத்துவார் என நினைக்கின்றேன்.
எனது அன்புக்குரிய முன்னாள் வரலாற்று மாணவரும், சக ஆசிரியரும் நண்பரு மாகிய திரு. செ. கிருஷ்ணராஜாவின் இம்முயற்சிகள் நன்கு பாராட்டற்குரியவை. இந்நூல் குறிப்பிட்ட கால இலங்கை வரலாற்றினைக் கற்கும் பாடசாலை, பல்கலைக் கழக மாணவர்களுக்கும் வரலாற்றினை அறிய விரும்பும் அனைவருக்கும் நன்கு பயனுள்ள ஆக்கம் என நான் கருதுகிறேன். நூலாசிரியர் தொடர்ந்தும் இலங்கை வரலாறு பற்றி இதுவரை விரிவாக எழுதப்படாத ஆராயப்படாத விடயங்கள் குறித்து மேலும் பல நூல்களை எழுதி வரலாற்றுக்கும் தமிழுக்கும் சிறந்த பணிகள் செய்வாராக இப்பணிகளை இவர் செவ்வனே செய்ய எல்லாம்வல்ல இறையருள்
இவருக்குக் கிட்டுவதாக!
பேராசிரியர் வி. சிவசாமி BA Hons(Cey), MA, PhD (Jaffna) 268/1, பலாலி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
28 - 11 - 2CO2

Page 8

፥፰'ሮዬ
பொருளடக்கம்
நன்றியுரை 5
அணிந்துரை 8
பொருளடக்கம் 11
அத்தியாயம் ஒன்று
இந்துசமுத்திரத்தின் மீதான கடலாதிக்க வரலாறும் போர்த்துக் கேயரது சமுத்திரவியல் அடிப்படையிலான வாணிபத் தேட்டமும் 13
அத்தியாயம் இரண்டு
இலங்கையின் கடல் முகப்புத்தள இராச்சியங்களின் பொருளியல், சமூக வள நிலையும் போர்த்துக்கேயர்களது தொடர்புகளும் 34
அத்தியாயம் மூன்று
கண்டி இராச்சியத்தின் இறையாண்மை, சமூகம் மற்றும் பொருளியல் கட்டமைவும் போர்த்துக்கேயரின் தொடர்புகளும் 89
அத்தியாயம் நான்கு
இலங்கையில் போர்த்துக்கேய இறையாண்மையின் விளைவுகள் 135
அத்தியாயம் ஐந்து
ஒல்லாந்தரின் அரசியல் ஆதிக்கப் படர்ச்சியும் அதன்
முக்ாமைத்துவமும் - - - 178
1

Page 9
அத்தியாயம் ஆறு
ஒல்லாந்தரின் அரசியல் ஆதிக்கப் படர்ச்சியும் அதன் முகாமைத்துவமும் 208
அத்தியாயம் ஏழு
ஒல்லாந்தரின் முகாமைத்துவத்தின் கீழ் இலங்கைப் பண்பாடு 240
அத்தியாயம் எட்டு
ஒல்லாந்தரின் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பும், உள்நாட்டுக்
கொள்கைகளும் 269

அத்தியnயக் ஒன்று
இந்துசமுத்திரத்தின் மீதான கடலாதிக்க வரலாறும் போர்த்துக்கேயரது சமுத்திரவியல் e}Hgiule)LîsoTss s'assîlui à C355|le Luphie
"நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களின் ஆதிக்கக் கொடிகள் எமது இந்துசமுத்திரப் பிராந்தியத்திற் பறக்கத் தொடங்கின. ஆனால் உண்மையில் இன்றும் அந்தக் கொடிகள் இறக்கப்படாமல் பறந்து கொண்டேயிருக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் ஒரு 6/126/Lossus காலனித்துவம் உதயமாகிறது. ஒரு இராச்சியத்திற்கெதிராக இன்னொரு இராச்சியத்தைத் தூண்டிவிட்டு இப்பிராந்திய அரசுகளில் ஒர் அரசிற்கு எதிராக இன்னொரு அரசிற்கு ஆயுதங்களை வழங்கி, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைத் தூண்டப் பிராந்தியத்திற்குள்ளேயே பகைமைகளை உருவாக்கி, அந்தப் பகைமைத் தீயிலே மேலைத்தேசம் இன்னும் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது."
- மு. திருநாவுக்கரசு, 1987 P 113
13

Page 10
கிறிஸ்தவ சகாப்தத்திற்குப் பிற்பட்ட 15ஆம் நூற்றாண்டானது உலக வரலாற்றில் ஒரு புதிய யுகத்தினைக் (New Era) குறித்துநின்றது. "மத்திய கால இருண்டயுகம்" என்றழைக்கப்பட்ட கி.பி. 13ஆம் நூற்றாண் டினைத் தொடர்ந்து தழுவி வந்த பஞ்சமும், வறுமையும், கொடுமைகளும் தாண்டவமாடிய ஐரோப்பிய வாழ்க்கைமுறை ஒன்று முடிபுபெற்ற யுகத்தினை கி.பி. 15ஆம் நூற்றாண்டானது குறித்து நின்றது. அத்தோடு மறுமலர்ச்சிக் காலம் (Renaissance) எனக்குறிக்கப்பட்ட புதிய மீள்கட்டு மானச் சிந்தனையுடன் மலர்ச்சி பெற்ற செழிப்பான வாழ்க்கை முறை ஒன்றினது தொடக்க காலமாகவும் அந்த யுகம் அமைந்து கொண்டது. அறிவியற்துறையில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி காரணமாக இந்நூற்றாண் டின் தொடக்கத்திலிருந்தே கடலோடு தொடர்பான நீண்ட கடற் பிரயாணங்களும், கடற்காற்று, வளிமண்டலச் சுற்றோட்டம், பருவகால நீரோட்டங்களின் மாறுதல்கள் போன்ற சிந்தனை - ஆய்வு முறையியல் நன்கு வளர்ச்சி பெறுவதற்குரிய நிகழ்வுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. snöGg (Dante : 1265 - 1321), GLuppstä (Petrag : 1304 - 1374) ஆகியோரின் சிந்தனைச் சிதறல்களுக்குமப்பால் கோப்பணிக்கஸ் (Copernicues : d. 1543) 55 GSGÓGuurt (Galileo : d. 1642) flygbp Går ஆகியோரின் மேனோக்கிய (வானியல்) ஆய்வுத் தகவல்களினூ டாக ஜோன் கபற் (John Cabot - 1497), வாஸ்கொடகாமா (Vasco - da Gama) ஆகியோரின் கடற்பரப்பினை நோக்கிய பிரயாணத் தொடர் களை உள்ளடக்கிய ஒரு காலப் பகுதியாகவும் இப்புதிய நூற்றாண்டு அமைந்து கொண்டது. ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில், இழந்த பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் வகையில் அமைந்த பாடவிதானப் பரப்பினுள் பெரும் சமுத்திரங்களினூடாக நீண்ட கடற் பிரயாணங்களை நிகழ்த்துகின்ற முறைகள், தொழினுட்பங்கள், கப்பல் கட்டுதல், சமுத்திரப் பரப்பில் நீரோட்டங்கள், துறைமுகங்கள் என்றவாறான பாடப் போதனைகள் உருவாக்கப்பட்டு, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இவ்வாறான ஒரு புறச் சூழலிலேயே இந்து சமுத்திரமானது ஒரு முக்கியமான கேந்திர காலகட்டத்தினை அதாவது ஒரு நிலைமாறு காலத்தினை அதன் வரலாற்றில் எதிர்நோக்கிக் காத்திருந்தது.
இந்து சமுத்திரத்தின் அமைவிடம், அதன் பரப்பு, சீதோஷ்ணநிலைமை ஆகியன அதன் வரலாற்றினைப் பாதித்திருந்த அம்சங்களாக அமைந்தன. காலந்தோறும் இந்து சமுத்திரப் பரப்பில் ஏற்பட்டுக்கொண்ட நிகழ்வுகளே அச்சமுத்திரப் பரப்பின் கரையோரநாடுகளின் மீதான சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு வரலாற்றினைப் பெரிதும் பாதித்திருந்த காரணி களாகவும் அமைந்தன. இந்துசமுத்திர - நீர்ப்பரப்பின் இயல்பும், அமைவிடமும், அச்சமுத்திரம் கொண்டிருந்த காலநிலை இயல்புகளுமே
14

கீழைத்தேய - மேலைத்தேய பரஸ்பர உறவுகளுக்கெல்லாம் அடிப் படையாக அமைந்தன. இச்சமுத்திரத்தினூடாக நிகழ்ந்த அராபிய - முஸ்லீம்களது வாணிப நடவடிக்கைகளுக்கு முன்னரேயே இந்து சமுத்திரக் கரையோர நாடுகள் பரஸ்பரம் வியாபாரத் தொடர்புகளையும், பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்த வரலாற்றை அண்மைக் கால தொல்லியல் ஆய்வின் பெறுபேறுகள் எமக்கு எடுத்துக் காட்டு கின்றன.
மிகவும் அண்மைய காலங்களில் தமிழ்ப்பிராமி வரிவடிவங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டச் சாசனங்கள் பலவற்றை எகிப்திலுள்ள கெய்ரோவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. மாலைதீவுகளின் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது கி.மு. 4000 ஆண்டுகட்கு முற்பட்டதான கட்டிட எச்சங்களை கோன்டிக்கி அகழ்வாய்வுக் குழுவினர்க்கு (KonTick Expedition - 1947) தலைமைதாங்கிய தோர் கெயர்தால் என்பவர் (Mr. Thor Heyerdahl) வெளிப்படுத்தியுள்ளமையானது மாலைதீவுகளுக்கும் சிந்துப் பள்ளத்தாக்கிற்குமிடையே இருந்திருக்கக்கூடிய இந்து சமுத்திரத்தி னுாடான பண்பாட்டுத் தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது. சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் பல மத்தியாசியாவில் உள்ள சுமேரியப் பள்ளத்தாக்கிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடிந்தது என்றால், அது இந்துசமுத்திரத்தினுடைய புராதன மரக்கல வாணிபத் தினையே காட்டி நிற்கின்றது எனலாம். லோதால்துறைமுகப்பட்டினத் தினூடான சின்னாசியா நோக்கிய வாணிப நடவடிக்கைகளில் இந்து சமுத்திரமும் பெரும் பங்கினை வகித்திருந்தமை இதனால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே இந்துசமுத்திரத்தின் வரலாறானது கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரைக்கும் பெருமளவுக்கு இராணுவ அடிப்படையிலானதாக அல்லாமல், வாணிபக் கூட்டுக்களின் மரக்கலப்பாய்ச்சலுக்குரிய நீர்ப் பரப்பாகவே இருந்து வந்துள்ளமையைக் காணலாம்.
இந்துசமுத்திரத்தின் அமைவிடம்:
கி.பி. 10ஆம் 13ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலங்களில் இந்துசமுத்திரத்தின் தென்கிழக்குப் பிராந்தியம் தென்னிந்தியாவில் எழுச்சி பெற்றிருந்த சோழவம்சத்தினராலும், வடமேற்குப் பிராந்தியம் டெல்கியை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த சுல்தானிய ஆட்சியாளராலுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்தமையைக் காண்கின்றோம்.
ஈரான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், ஆகிய நாடுகளுக்கு தெற்கிலுள்ள நீர்ப்பரப்பிற்கும், அராபியக் குடாநாடு, ஆபிரிக்கா ஆகிய வற்றிற்கு கிழக்கிலுள்ள நீர்ப்பரப்பிற்கும், மலாயாக் குடாநாடு,
15

Page 11
இந்தோனேசியா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு மேற்கிலுமுள்ள நீர்ப் பரப்பிற்கும் மத்தியில் காணப்படுவதே இந்துசமுத்திரப்பரப்பாகும். அண்ணளவாக 28,000,000 சதுர மைல்கள் பரப்பளவினைக் கொண்டுள்ள இந்துசமுத்திரம் ஆசிய, ஆபிரிக்க, தென்கிழக்காசிய நாடுகளின் அரசியல் பண்பாட்டு வரலாற்றில் பாரியதாக்கத்தினைக் காலந்தோறும் ஏற்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில வரலாற்றாசிரியர்கள் இந்துமகா சமுத்திரத்தின் பரப்பானது அந்தாட்டிக்கா வரையும் பரந்துள்ளதோடு அந்தாட்டிக் கடற் பரப்பினை யும் இந்துமகா சமுத்திரம் தன்னுள் அடக்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள மையையும் காணமுடிகிறது. ஆகவே அந்தாட்டிக் கடற் பரப்பினையும் சேர்த்து, மொத்த நீர்ப்பரப்பாக இந்து சமுத்திரமானது 28,000,000 சதுர மைல்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம். சில புவியியலாளர் இக்கருத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. பொதுவாக இந்து சமுத்திரப் பரப்பின் தென்திசை நோக்கிய எல்லையையும், கிழக்குத் திசை நோக்கிய தென்னரைக்கோள அகலக்கோட்டுக்கு 35பாகை வரைக்குமுள்ள இந்து சமுத்திரத்தின் பரப்பானது 16,362,742 சதுர மைல்கள் எனக் கொள்வதே தற்போதைய நிலைமையாக உள்ளது.
எவ்வாறெனினும், வரலாற்றுநோக்கில், தற்காலம் வரைக்கும் மத்திய கோட்டுக்கு வடபாகத்திலுள்ளநீர்ப்பரப்பினை மட்டுமே இந்து சமுத்திரம் என்ற பெயரால் நாம் குறிப்பிட்டு வருகின்றோம். இந்நீர்ப்பரப்பிற் குள்ளேயே கடற்பிரயாணங்களும், வாணிப - சமூகக்கட்டமைவின் நடவடிக்கைகளும் வரலாற்றுக் கடல் நாடுகளுக்குமிடையே இடம்பெற்று வந்துள்ளமையைக் காண்கின்றோம். மத்திய கோட்டுக்கு வடக்கிலுள்ள இந்துசமுத்திரமானது வரலாற்றுக்காலம் முதல் இருமுக்கியமான நீர்ப்பரப்புக்களாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. மேற்குக்கடல், கிழக்குக்கடல் என்பனவே அவையாகும். மிகவும் புராதன காலம் முதற் கொண்டே இவ்விரு கடற்பரப்புக்களிலும் கடல் வாணிப நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது. எகிப்தியர், சுமேரியர், சிந்துவெளியினர், பினிசியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் ஆகியோர் வரலாற்றுக்காலங்களினூடாக மேற்குச் சமுத்திரக்கடற்பரப்பிலும், பின்னர் பேசியர்கள், அராபியர், குஜராத்தியர், தமிழர், வங்காளிகள், மலேசியர்கள், சீனர் ஆகியோர்முழு இந்து சமுத்திரப் பரப்பிலும் கி.பி. 15ஆம்நூற்றாண்டு வரைக்கும் தத்தமது வாணிப நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் களாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளனர்.
இந்துசமுத்திரம் நோக்கிய சிந்தனை விரிவாக்கம் :
கி.பி. 15ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுள் போர்த்துக்கல் கப்பல்கட்டும் தொழிலிலும் கப்பலோட்டும் கலையிலும்
16

முதலில் தேர்ச்சிபெற்ற நாடாக மிளிர்வதற்கு சமகால ஐரோப்பியச்சூழலின் (அகக்) காரணிகளினதும், இந்துசமுத்திரக்கரையோர - தூரகிழக்காசிய நாடுகளில் காணப்பட்ட வாணிப வளத்திற்குமான (புறக்) காரணிகளதும் உந்துதல்களே அடிப்படையாயிற்று. சிறப்பாக போர்த்துக்கல் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட சமுத்திரக்கப்பற் பயணிகளில் அதீத நாட்டம் கொள்வதற்கு தனித்துவமான பல காரணிகளும் உந்து சக்தியாக அமைந்தன.
கி.பி. 1453இல் கொன்ஸ்தான்திநோப்பிள்துருக்கியரால் கைப்பற்றப் பட்டமையும், அதன்னத் தொடர்ந்து செங்கடல் மார்க்கமாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வந்ததுரகிழக்காசியஐரோப்பிய வாணிப - வர்த்தக மார்க்கங்களில் ஏற்பட்ட பெருந்தடைகளும், இடையூறுகளினும் காரண மாகவே ஐரோப்பியர் ஆசியாவிற்கான கடல் மார்க்கங்களை தேடிக் கண்டு கொள்ளும் நிலைக்குள்ளாக்கப்பட்டனர். இதற்கும் அப்பால் சில சமூக - பொருளியற் காரணிகளும் சமுத்திரங்கள் மீதான கப்பற்பயணங்களின் இன்றியமையாமையை ஏற்படுத்தியிருந்தன. அவற்றுள் மிகவும் முக்கிய மானது ஐரோப்பாவில் ஏற்பட்ட நூற்றாண்டுப் போரும் அதன் விளைவாக பிற்பட்ட மத்தியகால ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட Black Death எனப்படும் கடும்பஞ்சமும் மக்களின் இறப்புமாகும்.
பிற்பட்ட மத்தியகால ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் பஞ்சமானது ஏராளமான உயிர்களைக் காவு கொண்டது என்பதற்கு அக்காலத்தில் தீட்டப்பட்ட ஒவியங்கள் சான்றாதாரங்கள் ஆகின்றன. இச்சமூகப் பின்னணியில் ஏற்பட்டுக்கொண்ட வியத்தகு தொழிநுட்பமுறையியலும், சமுத்திரபரப்பின் மீதான கப்பற் பயணங்களின்துணிவையும், தேவையை யும் விரைவுபடுத்தியிருந்தன. குறிப்பாக கி.பி. 10ஆம் 11ஆம்நூற்றாண்டு களில் ஆசியாவிலிருந்து அராபியரால் கொள்முதல் செய்து கொண்டுவரப் பட்ட வெடிமருந்தும், திசையறிகருவியும் ஐரோப்பியர்ை, குறிப்பாக போர்த்துக்கீசரை ஒரு புதிய யுகத்திற்குள் இட்டுச்சென்றது என்பதில் வியப்பேதும் இருக்கமுடியாது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வந்த புதிய கருவிகளின் உபயோகமும், நேரத்தினைத்துல்லியமாகக் காட்டக்கூடிய கடிகார முறையுமே சமுத்திரப் பரப்பின் மீதான மாதக்கணக்கிலமைந்த நீண்ட கடற்பயணங்களுக்கு நம்பிக்கையூட்டின. வெடிமருந்தினை உபயோகித்து உருவாக்கப்பட்ட பீரங்கிக் கருவிகளின் அதீத உபயோக மானது நாடுகளின் வலுவில் ஒரு புதிய தோற்றப் பாட்டினை, அதாவது சமவலுவின்மையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மிக நீண்டதூர கப்பற் பயணங்களுக்கான நிரந்தர - வலு நிறைந்த பாதுகாப்பினை வழங்கிய இராணுவத் தளபாடமாகவும் இப்பீரங்கி பயன்படுத்தப்பட்டது. இக்கருவிப் பாவனையே ஐரோப்பிய நாடுகளில்
17

Page 12
முதலில் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கான ஆரம்பக் கட்டமைப் பினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்கட்டமைப்பே பின்னர் "குடியேற்றவாதம்” என்ற சமூக - அரசியல் கூர்ப்புக்கு வழி வகுத்ததோடு, சமயத்தின் மீதான இறுக்கமான கொள்கைகளை உடையவர் களாக ஐரோப்பிய மக்களை மாற்றுவதற்கும் அக்கருவிப் பாவனையே வழிவகுத்துக் கொடுத்தது. ஆதலால் வாணிப முதன்மை நிலையைக் காரணம் காட்டித் தொடங்கப்பட்ட கடற்பயணங்கள் பின்னர் படையணி களாக மாற்றப்பட்டு, அங்கியுடனும், கொடியுடனும் (இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில்) தரையிறக்கப்பட்ட வரலாறாக அமைந்து கொண்டமையை கண்டுகொள்ளமுடிந்தது. இந்துசமுத்திரக் கரையோர நாடுகளிலும், பசுபிக் கரையோர நாடுகளிலுமே இச்செயல்முறை கி.பி. 15ஆம்நூற்றாண்டுக்குப் பின்னர் நிகழ்ந்ததோடல்லாது, இப் பிராந்தியங் களின் சமூகபொருளியல் வாழ்விலும் சிந்தனையிலும் ஐரோப்பியச் செல்வாக்குகள் ஏற்படக் காரணமாக அமைந்து கொண்டமையையும் காணலாம்.
இந்துசமுத்திர, பசுபிக் கரையோர நாடுகளின் மீதான தரைவழிவந்த வியாபார மார்க்கங்களினூடாக ஏற்கனவே ஐரோப்பிய மக்கள் அறிந்து கொண்டிருந்த வளங்கள் பற்றிய ஐதீகங்கள் கீழைத்தேயச்சுவர்க்கமாக ஆசியாவை ஐரோப்பியருடைய கண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. "வாழ்ந்தவன் வடக்கேபோ, கெட்டவன் கிழக்கேபோ" என்ற ஒரு மரபுத்தொடருக்கேற்ப, மத்தியகால ஐரோப்பியருடைய கீழைத்தேய வருகையும் இங்கு காணப்பட்டிருக்கக்கூடிய செல்வ - வள நிலைமையை யொட்டித்தான் நிகழ்த்தப்பட்டது போலும். கிறிஸ்தவ சகாப்தத்திற்குச் சற்றுமுற்பட்ட, பிற்பட்ட காலங்களில் தூரகிழக்காசிய நாடுகளிலிருந்து ஈட்டிவந்து, தென்னாசிய நாடுகளில் வைத்திருக்கப்பட்ட தேடிய தேட்ட மானது பிற்பட்ட மத்தியகாலப்பகுதியில் மத்தியாசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து இந்துசமுத்திர கரையோர நாடுகளுக்கு திட்ட மிட்டு, வருகை தந்த மேலைத்தேயத்தவர்களால் வாணிப நோக்கிலும், குடியேற்ற முகாமைத்துவ அடிப்படையிலும் "அபகரித்துச்செல்லப்பட்ட முறையியலாகவே” கி.பி. 15ஆம்நூற்றாண்டுக்குப்பிற்பட்ட கீழைத்தேய வரலாறு ஆரம்பிப்பதனைக் காண்கின்றோம். மத்தியாசியாவிலிருந்து ஏற்பட்டுக் கொண்ட அராபியரின் ஆதிக்கப்படர்ச்சியின் விளைவுகள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குமிடையே இந்தியாவிற்கும் மத்தியாசியாவுக்குமிடையே பொருளாதாரத்துறை நோக்கிய ஒரு தாக்கத்தணிப்பு வலையத்தினையும் (Butter Economical Zone) பின்னர் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து கி.பி. 17ஆம் நூற்றாண்டின் முடிவு வரைக்கும் கீழைத்தேய இஸ்லாமிய
18

Guntoj6Tnging au60ajuuLDntsab (Eastern Islamic Economical Zone) மாற்றமடைந்திருந்த தன்மையை இந்து சமுத்திரத்தின் மேற்கு - கிழக்கு வலயங்களின் வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவ்விரு வகையான இருநிலைப் பட்ட இந்து சமுத்திரத்தின் மீதான மேலாதிக்க முறைமை ஒன்றினூடாக இந்துக்களின் (சைவர்களின்) சைபரும் (Zero) சீனரின் "சீனவெடிமருந்தும் மேற்கைரோப்பாவை சென்றடைந்த மார்க்கங்களில் குடியேற்றவாதம்" என்ற எண்ணக்கருவும் விதைக்கப் பட்டுக் கொண்டு செல்லப்பட்டமையை, அடுத்துவந்தநூற்றாண்டுகளில் ஏற்பட்டுக் கொண்ட கடலோடும் யுகம் ஒன்றின் வரவு துல்லியமாக எடுத்துக்காட்டியது. இவ்வாறான சமூக, பொருளாதார நிலைமைகளின் பின்னணியிலேயே இந்து சமுத்திரத்தில் "வாஸ்கொடகாமாவின் யுகம்" என்றவொரு காலப்பரப்பினை வரலாற்றாசிரியர்கள் அடையாளம்
கண்டுள்ளனர்.
வாஸ்கொடகாமாவின் வருகைக்கு முற்பட்ட இந்துசமுத்திரத்தின் பிந்திய நிலைமை :
மிகவும் புராதன காலத்திலிருந்து கடல் வாணிப மார்க்கமானது செங்கடல் கடற்கரையோரத்திலிருந்து, இந்தியாவின் தென்முனையூடாக இலங்கையின் சமுத்திரப் பரப்பில் ஒருபுறமாகவும், மலாக்காத் தொடு கடலிலிருந்து இந்தியாவின் கிழக்குச் சமுத்திரக் கரையோரமாக மறுவள மாகவும் அமைந்து காணப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து இந்துசமுத்திரம் மீதாக அமைந்த வாணிப மார்க்கங்கள் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டதன் அடிப்படையில், மிக முக்கியமான ஒரு வணிக மார்க்கம் குஜராத்திலிருந்து மலாக்காத் தீவுகளினூடாக அமைந்து கொண்டது. மலபாரிலிருந்து செங்கடலுக்குச் செல்லும் ஒரு பாதையும், குஜராத்திலிருந்து மலபாருக்குச் செல்லும் ஒரு பாதையும் என அவ்விரு வணிக மார்க்கங்களுமாக அமைந்திருந்தன. இதே நேரத்தில் மேற்குச் சமுத்திரப்பரப்பில் அமைந்த ஏடன்துறைமுகத்திலிருந்து குர்மஸ் (Hurmuz) என்ற துறைக்கும், கிழக்காபிரிக்காவிலிருந்து குஜராத்திற்கும். பின்பு குஜராத்திலிருந்து குர்மஸ்துறைக்குமிடையேயுள்ள வணிக மார்க்கங்களில் உள்ளதுறைமுகங்களை இணைக்கின்ற வணிகக் கடற்பாதைகள் அமைந் திருந்தன. இவற்றுக்குள்ளே காணப்பட்ட பல்வேறு உப பாதைகள் இலங்கை, வங்காளம், சீயம், சோழ மண்டலக் கடற்கரை மலாக்கா, கலிக்கட், காம்பே ஆகிய இந்து சமுத்திரப் பிராந்தியங்களை இணைத் திருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்காசியப் பரப்பிலிருந்து பேர்சியர்கள், அராபியர்கள் ஆகியோரும், தென்னாசியாவிலிருந்து வங்காளிகள், தமிழர், குஜராத்திகள் ஆகியோரும் தென்கிழக்காசியாவில்
19

Page 13
இருந்து மலேசியர்களும் இந்து சமுத்திரத்தினூடாக வாணிப நெறிமுறை களில் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இக்காலப் பகுதியில் மேற்கூறப்பட்ட நாட்டு மக்களில் எவரேனும் இந்துசமுத்திரத்தின் மீதான மேலாதிக்கத்தினை தமது கைகளுக்கு எடுத்துக்கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்தியாசியாவில் நிகழ்ந்த இஸ்லாம் மதத்தின் தோற்றத்துடன் இந்து சமுத்திரத்தின் மீதான ஒரு புதிய ஆதிக்க சக்தியின் வரலாறு ஆரம்பிப் பதனை கி.பி. 7ஆம்நூற்றாண்டிலிருந்து காண்கின்றோம். பேர்சியாவை வெற்றி கொண்ட அராபியர்கள் பேர்சியன்குடாவை தமது வாணிபக் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தது முதல் இந்து சமுத்திரப் பரப்பின் மீதான ஒரு புதிய கண்ணோக்கம் அராபியரிடையே ஏற்பட்டுக்கொள்வதனைக் காண்கின்றோம். அப்பாசித்து கலீபாக்களின் ஆட்சிக் காலமே அங்கு இஸ்லாமிய கடல்வாணிபம் மிகவும் உச்சநிலையில் வளர்ச்சியடைவதற்கு ஏதுவாக அமைந்தது. கி.பி. 10ஆம்நூற்றாண்டுகளில் அப்பாசித்துக்களின் வீழ்ச்சியுடன் இஸ்லாமிய கடல் ஆதிக்கமையமானது பேர்சியன் குடாவிலிருந்து செங்கடல் மார்க்கமாக உள்ள ஒரு பிராந்தியத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டது. அப்பின்னணியிலேயே இந்துசமுத்திரக் கரையோர நாடுகளான கிழக்காபிரிக்கா, குஜராத், மலபார் ஆகிய பிரதேசங்கள் முஸ்லிம்களின் குடியேற்ற வலயங்களாக மாற்றம் பெற்றுக் கொண்டதோடு இந்துசமுத்திர வாணிபத்துறை நோக்கிய ஒரு புதிய அபிவிருத்தியையும் பெற்று மிளிர்ந்தமையைக் காணலாம்.
சமகாலத்தில், மிகவும் பலம்வாய்ந்த இந்து வணிக கணங்கள் பல (Hindu Merchent Guids) இந்தியாவின் கிழக்குச் சமுத்திரப் பரப்பிலே வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையையும் கண்டுகொள்ள முடிந்தது. இந்த வணிக கணங்கள் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு - மேற்குக் கடற்கரையோரப்பரப்பில் தத்தமக்குரிய வாணிபக்கிடங்குகளையும், துறைகளையும், சந்தைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தன. இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளிலும் அவ்வணிககணங்கள் தத்தமது வாணிப வளாகங்களை அமைத்துக்கொண்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. பிற்பட்ட காலங்களில் இவை மேற்காசியப் பிரதேசங்களிலும், சீனாவிலும் தத்தமது வாணிபக் குடியிருப்புக்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தமைக் கான தொல்லியற் சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்து சமுத்திரப் பிராந்தியக் கரையோர நாடுகளுள் தென்னிந்தியாவில் கேரளத்திலும், இலங்கையிலும் பேர்சியர்களதும், அராபியர்களினதும் வாணிபம் நட்புரீதியான முறையில் இடம்பெற்றிருந்தமைக்கான தொல்லியற் சான்றுகளும் கிடைத்துள்ளன. கி.பி. 14ஆம் நூற்றாண்டி லிருந்து தென்னிந்தியாவில் கேரளத்திலும், இலங்கையில் அனுராதபுரம்,
20

கந்தரோடை ஆகிய மையங்களிலும், பேர்சியர்களது வாணிப நடவடிக்கை ஊடாக நெஸ்ரோரிய கிறிஸ்தவ வணிகக்கூட்டுக்கள் தமது வியாபார வளாகங்களை அமைத்திருந்தமைக்கான தொல்லியற் சான்றுகளும் கிடைத் துள்ளன. நெஸ்ரோறிய கிறிஸ்தவ சிலைகள் இலங்கையில் அனுராத புரத்திலும், கந்தரோடையிற் கிடைத்த வெள்ளி நாணயமொன்றிலும் பொறித்திருக்கக் காணப்பட்டமையை இங்கு குறிப்பிடுதல் சாலவும் சிறந்ததாகின்றது. கி.பி. 4ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளில் அராபியர்கள் தீபகற்ப இந்தியப் பரப்பை மையமாகக் கொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது கடல் வாணிபப் படைக்கடலங் களைப் பெருக்கி, குடியேற்றங்களையும் ஸ்தாபித்திருந்தனர். கி.பி. 7ஆம் 8ஆம்நூற்றாண்டுகளில் தென்னாசியாவில் இந்தியா, இலங்கை, மாலை தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பெரும்பான்மையான வாணிக நடவடிக்கைகளின் ஏகபோகத்தினை அராபியர்கள் கைப்பற்றி இருந்தனர். இவற்றுக்கெல்லாம் தீபகற்ப இந்தியாவின் அமைவிடமே மையமாக விளங்கியதோடு, இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தின் மீதான வாணிகப் பாதீட்டுக்கு அராபியர்களே பொறுப் பாகவும் விளங்கியிருந்தனர் என்பதனைத் தொல்லியல் சான்றுகள் எமக்கு எடுத்துணர்த்துகின்றன.
கி.பி. 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைத் தீவினதும், தீபகற்ப இந்தியப் பரப்பினதும் மேற்குக் கரையோரங்களில் முஸ்லீம்களது குடியிருப்புக்கள் 'வாணிபக் களஞ்சியங்களாகவே தோற்றம் பெற்றிருந் தன. மாதோட்டம் உட்பட்ட நிலையில் இலங்கையில் புத்தளத்தில் குதிரைமலைமுனை, அரிப்பு, பூநகரி ஆகிய கடற்கரையோர மையங்கள் முஸ்லீம்களது முதற்தரமான வாணிபக் கிடங்குகளை உள்ளடக்கியதான குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றிருந்தன. பாலதூரி என்ற (Baladhuri) அராபிய வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, மலபார் கடற்கரையோர முட்பட, சிந்துவின் வடக்குக் கரையோரம் வரையுள்ள நகரங்களில் முஸ்லீம்களது குடியிருப்புக்கள் வளர்ச்சி பெற்றுவிட்டிருந்தன என்பதனை உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது. இச் சூழ்நிலையில் இந்துசமுத்திரப் பரப்பானது இஸ்லாமிய மதத்தின் பின்னணியில் வாணிப நடவடிக்கை களுக்குட்பட்ட ஒரு கடற்போக்குவரத்து வலைப் பின்னலமைப்பினைக் கொண்டு விளங்கியது என்பதும் புலனாகும்.
முஸ்லிம்களும் இந்து சமுத்திர வர்த்தகமும் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டாரம்பமானது இந்துசமுத்திர வாணிபப்
பரப்பில் இஸ்லாம் மதத்தினைத் தழுவியவர்களின் மேலாதிக்கநிலை ஏற்பட்டிருந்த ஒரு காலமாக விளங்கியது. இம்மேலாதிக்க நிலையின்
21

Page 14
தன்மையினையும், செயற்பாடுகளையும் அதன் வீழ்ச்சி நிலையினையும் அறிந்துகொள்வதற்குப் பெரும்பாலும் போர்த்துக்கீச ஆவணங்களே எமக்குப் பயன்படுகின்றன. முஸ்லீம்களது இந்து சமுத்திரத்தின் மீதான "ஆதிக்கம்" என்ற பதம் தரும் கருத்தினையும் இங்கு நோக்குவது பயனுடையதாகும். இந்து சமுத்திரத்தில் இஸ்லாமிய ஆதிக்கம்" என்ற தொடர்தரும் பொருளானது தனித்துவமானதும், வறுமையாக நாம் கொள்ளும் பொருளிலிருந்து வேறுபட்டதுமாகும். அதாவது இந்து சமுத்திரத்தின் மீதான முஸ்லிம்களது வர்த்தக ஆதிக்கமானது தனியாள்" என்ற அலகினுாடாகவே ஏற்பட்டதொன்றாகும். இவர்கள் "வணிக கணங்களாக ஒருபோதும் செயற்பட்டது கிடையாது. இவ்வணிகர்கள் ஒரு பொதுமையான மத (இஸ்லாத்தின்) கூட்டிணைப்பிற்குள் தமது வாழ்வினை முன்னெடுத்துச் சென்றிருப்பினும் அவர்களது பொருளியல் ஈட்டமான வாணிப நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் அவ் வாணிபத்தின் சிறப்பு ஈட்டத்திற்காக தனித்தனியாகவே போட்டி அடிப்படையில் தொழிற்பட்டிருந்தமையைக் காண்கின்றோம். இதனாலேதான் வரலாற்றாசிரியர்கள் இந்து சமுத்திரத்தின் மீதானமுஸ்லிம் களது வாணிபப் பாரம்பரியம் தனித்துவமானதும், தனிரகமானதும் என குறிப்பிட்டனர். சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே முஸ்லீம்கள் ஒரு கூட்டு முயற்சிக்குட்பட்ட வியாபாரத் தொடர்பூடகங்களின் வலைப் பின்னல் அமைப்பினுாடாக வாணிபத் தொடர்புகளையும், முதலீட்டு நடைமுறைக்குரிய பரிமாணத்தினையும் இந்து சமுத்திர வாணிபப் பாரம்பரியத்தில் கடைப்பிடித்திருந்தனர். ஆனால் ஒருபோதுமே தமது வியாபாரத்தேர்ச்சியின் பொருட்டு அவர்கள் தமக்கிடையே பலப் பிரயோகங்களில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் இதற்கெதிர்மாறாக முஸ்லீம் ஆட்சியாளர்களை எடுத்துக்கொண்டால் (சுல்தான்கள்) அவர்கள் தமக்கிடையே ஒருவர்க்கொருவர் வர்த்தகம், மற்றும் ஆள்புல விஸ்தரிப்புக் காரணங்களுக்காக படை நடாத்தி, மோதி பல வெற்றி - தோல்விகளை அடைந்திருந்த முறைமையையும் காண்கின்றோம். ஆதலால் இந்து சமுத்திரத்தின் மீதான நடைமுறையிலிருந்து முற்றிலுமாக விலகி மாறுபட்டிருந்த ஒரு தன்மையினைக் கொண்டிருந்தது எனலாம்.
இந்து சமுத்திர வர்த்தக நிலைமையின் கிழக்குப் பிராந்தியத்தினை நோக்கும்போது முஸ்லீம்களின் இம் மேலாதிக்கத்தின் தனித்துவமான தன்மையை இனங்கண்டுகொள்ள முடிகிறது. கி.பி.16ஆம்நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்காசியாவின் வர்த்தக மையமானது மலாக் காவைக் கொண்டிருந்தது. மலாக்கா நீரிணையில் அமைந்து காணப்படும் இம்மையமானது சுல்தான் ஒருவராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. Duarte
22

Barbosa என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடும்போது, மலாக்கா நகரமானது மிகவும் செல்வம்மிக்கதுறைமுகப்பட்டினமாக விளங்கியதோடு, ஏராள மான கப்பல்கள் தரித்து நின்ற ஒரு சிறந்த துறைமுகநகர் என்பதும், மொத்தவியாபாரம் என்ற நடைமுறையைக் கையாளும் ஒரு நகரமாகவும் விளங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார். மலாக்காத் துறைமுக நகரில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றில்லாமல், சீன, ஜப்பானிய வர்த்தகர்களும் அவ்வர்த்தகத்தில் போட்டியிட்டுக் கொண்டு வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முறைமையை போர்த்துக்கேய ஆவணங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஜப்பானிய வர்த்தகர்களை கொரெஸ் (Gores) எனப் போர்த்துக்கேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஜப்பானிய வர்த்தகர்கள் செம்பு, பட்டு, வாள், ஈட்டி, மிளகு Cloves, Bulon போன்றவற்றைக் கொணர்ந்து மலாக்கா சர்வதேச சந்தையில் வைத்து விற்பனை செய்திருந்தனர்.
தீபகற்ப இந்தியாவின் கிழக்குக்கரையான சோழமண்டலக் கடற்கரை யிலிருந்து மலாக்காவுக்கு வருகை தந்திருந்த இந்துச் செட்டிமார்களைப் பற்றிய குறிப்புக்களையும் போர்த்துக்கீச ஆவணங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. "கிலிங்கர் எனக் குறிப்பிடப்பட்ட (Kings) இந்தச் செட்டிமார் பெரும் எண்ணிக்கையில் மலாக்காவிற்குச் சென்று வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் போலவே தென் பர்மாவிலுள்ளPegu என்ற மையத்திலிருந்து பெளத்த, ஜெயின வாணிபக் குழுக்களும் மலாக்காவிற்குச் சென்று வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையைக் காணலாம். இவ்வாறு பல்வேறு இன-மதத்தவர் களும் மலாக்கா சர்வதேச வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், முஸ்லீம்களே பெரும் எண்ணிக்கையில் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மையைக் கண்டுகொள்ளமுடிந்தது. இப்பெருமளவிலான அங்கத்தவர் களைக் கொண்ட முஸ்லிம்கள் தமது மத-இன-அடிப்படையிலேயே இச்சர்வதேச வாணிப - முதலீட்டு நடைமுறைகளில் ஈடுபட்டு வந்திருந்த
மையைக் காணலாம்.
மலாக்காவின் சர்வதேச வாணிப - முதலீட்டு நடைமுறைகளில் குஜராத்திய முஸ்லிம்களும் பங்கெடுத்துக் கொண்டிருந்தமையானது ஒரு தனித்துவமான அம்சமாக அமைந்தது. மலாக்காதீபகற்பத்தில் வியாபாரத் தில் ஈடுபட்டிருந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களுள் ஒராயிரம் பேராவது குஜராத்திய முஸ்லிம்களாவர் எனTheme Pires என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுவதனைக் காண்கின்றோம். காலிக்கோ, மஸ்லின் துணிவகைகள் உட்பட Patolas போன்றவற்றை இவர்கள் வியாபாரத்தின் பொருட்டு மலாக்காத் தீவுக்கு கப்பல்களில் கொண்டு
2

Page 15
சென்றனர் எனவும் அறிகின்றோம். மலாக்காவிலிருந்து மேற்காசியாவிற்கு இவர்கள் மிளகு, கறுவா, ஏலம், சந்தனக்கட்டைகள், மயிலிறகு போன்ற வற்றை வாணிபத்தின் பொருட்டு எடுத்துச்சென்று பெரும்லாபமீட்டினர் எனக் கண்டுகொள்ளமுடிகிறது. அதே நேரத்தில் மேற்காசியாவிலிருந்து கடற்பவளம், Quicksilver,VermillionNails, கண்ணாடிப் பாத்திரங்கள், செம்பு, அபின், கம்பளித்துணி போன்றவற்றை மலாக்கா சந்தைக்கு குஜராத்திய முஸ்லிம் வர்த்தகர்கள் எடுத்துவந்து விற்பனை செய்தனர். ஏறத்தாழ குஜராத்திய கப்பல்கள் செங்கடலுக்கும் மலாக்காவிற்கும் இடையே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக போர்த்துக்கீச வரலாற்று ஆசிரியரான Vitorino Magathaes Codinho என்பவர் குறிப்பிடுகின்றார். மேலும் மலாக்காவின் சர்வதேச வாணிப தந்தைக்கு அரிசி, சீனி, போன்ற பொருட்களை பேர்சிய வணிகர்களுடன் வங்காளிகளும் இணைந்த முஸ்லிம்களே பெருமளவுக்கு கொணர்ந்தனர் எனக் குறிப்பிடப்படு கின்றது.
இந்துசமுத்திரத்தின் மீதான முஸ்லிம்களின் வாணிபக்கொள்கைத் திட்டமிடல் நடைமுறைகளில் இன்னொரு சிறப்பான அம்சம் என்ன வென்றால் பேர்சிய-அராபியக் கரையோரத்துறைமுகங்களுக்கும் இந்திய மேற்குக் கரையோரத்துறைமுகங்களுக்குமிடையே கொண்டிருந்திருக்கக் கூடிய தனித்துவமான வாணிப ஈட்டங்களாகும். அதாவது பருவக் காற்று வீச்சிலேயே அவ்வாணிப ஈட்டங்கள் தங்கியிருந்தது என்பதாகும். மேலே குறிப்பிடப்பட்ட இரு பிராந்தியங்களுக்குமிடைப்பட்ட வாணிபத்தின் செழிப்பானது குஜராத் - மலபார் கடற்கரையோரத்தின் விசாலமான சந்தையமைப்பினாலோ அல்லது அப்பரந்த சந்தையமைப்பினுள் காணப்பட்ட விலையுயர்ந்த பண்டங்களினாலோ முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கவில்லை. அதன் முக்கியத்துவமானது ஒருவருடகால எல்லையினுள் அராபியா, பேர்சியாத் துறைமுகங்களிலிருந்து குஜராத், மலபார்துறைமுகங்களுக்கு விரைந்து வந்து வாணிப நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்துகொண்டு மீண்டும் பருவக் காற்றொன்றின் நிலைமாற்றத் துடன் மீண்டும் அராபியா, பேர்சியாத்துறைகளைச் சென்றடையக்கூடிய காலநிலை, தரைத்தோற்ற இயல் (சமுத்திர நீரோட்டம் முதலானவை) காணப்பட்டவையே அத் தனித்துவமான இயல்புகளாக அமைந்தன. வியாபாரத்துறையில் அதிவேகமான கடற்பயணங்களை அனுபவிக்கக் கூடிய சமுத்திரப்பரப்பே மிகவும் நெருக்கமான போக்குவரத்து - வலைப் பின்னல் மார்க்கங்களைக் கொண்டு விளங்கும் என்பது வெளிப்படை விலை நிர்ணயம், குறிப்பிட்ட கால எல்லைக்குள் கணக்கு - வழக்குகளைத் தீர்த்தல், குறிப்பிட்டகால எல்லைக்குள் வணிகப் பொருட்களை குறிப்பிட்டதுறைமுகங்களுக்குக் கொண்டுசென்று சேர்ப்பித்தல் போன்ற
24,

நடைமுறைகளே கடல்வாணிப நடவடிக்கைகளின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அந்த வகையில் இந்து சமுத்திரத்தின் வடமேற்குப் பிராந்தியமானது மிகவும் சாதகமான ஒரு நிலையை வருடம் முழுவதும் கொண்டிருப்பதும், வடமேல், தென்கீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றின் தனித்துவமான வீசுகையுமே இப்பிராந்தியத்தின் வாணிப வளர்ச்சிக்கு அடிப்படையாகின. இந்நிலையானது முஸ்லிம்கள், போர்த்துக்கீசர் கால இந்துசமுத்திரத்தின் மீதான கடல்வாணிபப் போக்குவரத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு சூழ்நிலையைப் பெற்றுக்கொடுத்திருந்தது என்றால் அது மிகையாகாது. அடுத்த இன்னொரு சிறப்பு நிலையானது இந்து சமுத்திரத் தினைப் பொறுத்தவரையில் அது மிக நீண்டதொரு கடற்பயணமாக அமைந்தபோதும், இரண்டாம் வணிகக் குழுவினர் மேற்கிந்தியத் துறைமுகங்களிலிருந்து வாணிபப் பொருட்களுடன் புறப்பட்டு, வங்காளம் தென்கிழக்காசிய நாடுகளுக்கும், பின்னர்தூரகிழக்காசிய நாடுகளுக்கும் குறிப்பாக சீனத்துறைமுக நகரங்களுக்குமாக வாணிபச்சரக்குகளை எடுத்துச் சென்று பட்டுவாடா செய்துகொள்வதற்கேற்ற போக்குவரத்து முறைமை யும் காணப்பட்டமை ஆகும். இந்த இரண்டாம் குழுவினர் மத்தியாசிய வாணிகப் பொருட்களையும், மேற்கிந்திய வணிகப் பொருட்களையும், தென்கிழக்காசிய, தூரகிழக்காசிய நாடுகளுக்கு எடுத்துச்சென்று பட்டுவாடா செய்வதற்கேற்ற நிலைமையை இந்து சமுத்திரம் கொண்டிருந் தமை அதன் சிறப்பியல்பாக அமைந்தது. இதுவே போர்த்துக்கீசரின் குடியேற்றவாதக் கொள்கையினுள் கீழைத்தேயத்தில் முதலில் தென்கிழக் காசிய நாடுகள் உட்பட்டுக்கொண்டமைக்குரிய அடிப்படைக் காரண
மாயிற்று.
போர்த்துக்கேயரின் வருகையினால் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் :
போர்த்துக்கேயரின் இந்துசமுத்திரப் பிரவேசமானது, நடைமுறையில் இருந்து கொண்டிருந்த முஸ்லீம்களது இந்து சமுத்திரத்தினூடான வாணிப நடவடிக்கைகளினதும், அதன் பின்னர் இந்து சமுத்திரக் கரையோர நாடுகளின் மீதும் ஏற்படுத்திய விளைவுகள் தொடர்பாகவும் அண்மைக் காலங்களில் வரலாற்றாசிரியர் பலர் பல கருத்துக்களை முன்வைத்து உள்ளனர். சிலர் அரசியல், பொருளாதார அடிப்படையிலான பல புதிய தோற்றப்பாடுகள் இந்துசமுத்திரக் கரையோர நாடுகளில் உருவாவதற்குப் போர்த்துகீசரின் இந்து சமுத்திரப் பிரவேசம் வழிகோலியது என வாதிடு கின்றனர். ஆர்னல்ட் ரொயின்பீ என்பவர் "உலகத்தின் இயக்க மைய மானது திடீரென மத்தியாசியப் புல்வெளிகளையுள்ளடக்கிய துறை முகப் பின்னணியிலிருந்து அத்திலாந்திக் சமுத்திரப் பரப்பின்
25

Page 16
பின்னணியைக் கொண்ட துறைமுகங்களுக்கு மாற்றம் பெற்றுச் சென்றது" எனக் குறிப்பிட்டுள்ளார். WE.D. Allen என்பவரும் ஏறக்குறைய இதே கருத்தினையே வெளியிட்டிருப்பதனைக் காணலாம்.
கி.பி. 1521ஆம் ஆண்டில் ஒட்டோமன் பேரரசு தனித்துவமான வகையில் "சமுத்திரவியல் புரட்சி" ஒன்றை நிகழ்த்தியிருந்தமையைக் காணலாம். அதாவது முதலாம் செலிம் (Selim ) என்ற மன்னனுடைய முடிசூட்டு வைபவத்துடன் ஒட்டோமன் பேரரசில் பல புரட்சிகரமான மாறுதல்கள் நிகழ்ந்தேறின. சுலைமானின் அரசியல் வருகையுடன் ஒட்டோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள் தாமாகவே உலகியல் ரீதியான அரசியல் முரண்பாடுகளுக்குள் உட்பட்டுச் செல்லவேண்டியிருந்த சூழ்நிலை தோற்றம் பெற்றது. மத்திய - மேற்கு ஐரோப்பாவில் lboro-Germanic அரசியல் அதிகாரம் தனித்துவமான அரசியல் மேலாண்மையை நிலைநாட்டி உதவியபோது ஒட்டோமப் பேரரசில் வாழ்ந்த மக்கள் முதன்முதலாக சமுத்திரங்களின் குறுக்கான வாணிபமார்க்கங்களின் பிரதான மேலாதிக்கத்தையும், வாணிபத்தையும் உள்ளடக்கிய மூலவள உபயோகத் தினை அனுபவிக்கும் நிலையைக் கண்டறிந்து கொண்டனர். போர்த்துக் கேய வரலாற்றாசிரியரானjose Maria Braga என்பவர் குறிப்பிடும் பொழுது போர்த்துக்கேயர் தவிர்க்கமுடியாதபடியான ஒரு பின்னணியில் தமது நிதியீட்டலுக்கான நிலையை விஸ்தரிக்கவும், பரஸ்பர கொடுக்கல் - வாங்கல்களை தென், தென்கிழக்காசியக் (கொம்பனிகளுடனோ) கணங் களுடனோ செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். இக்காலகட்டமானது கடல் வாணிகம், கடல் பயணங்களுக்கான ஒருவகை யான உத்தரவாதம் நடைமுறையில் காணப்பட்ட காலமாகும். அதே நேரத்தில் போர்த்துக்கேயரின் (Bills of Lading) கையெழுத்திடப்பட்ட உறுதிப்பத்திரங்கள் (Instruments ofCredit) கடன்பத்திரங்கள் (Respondencia bond), உத்தரவாதமுறி மற்றும் வாணிபச் சட்டதிட்டங்கள் பலவும் இந்துசமுத்திரப் பரப்பின்மீதான வாணிப வழக்காற்றினுள் புகுந்து கொண்டன. வாணிப நடைமுறைகள், நடைமுறையமுலாக் கல் கொள்கைகள் என்பனவும் இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன. வாணிபப் பொருட்களின் நிறை, அளவு தொடர்பான விதிமுறைகளும் அமுலுக்கு வந்தன, அவை பதியப்பட்டன அல்லது பிரசித்தப்படுத்தப் பட்டன. போர்த்துக்கேயரது பரந்துபட்ட வாணிப நடவடிக்கைகளினால் வாணிப நடைமுறையுடன் தொடர்புபட்ட சொற்பதங்கள் பல மிகப்பரந்த முறையில் இந்து சமுத்திரக்கரையோர நாடுகளில் உள்ள மொழிவழக்காறுகளில் பொதுமைச் சொற்களாக அமைந்து கொண்டன. போர்த்துக்கீசத் தொடர்களும் உருது மொழிச் சொற்களும் ஒன்றில் ஒன்று
26

கலந்த நிலையில் இப்பிராந்தியத்து சொல்லாடலில் பொதுமையான பிரயோகங்களாகவும் மாற்றமடைந்து கொண்டன.
போர்த்துக்கீச வணிக அணியினர் இப்பொழுது ஒரளவிற்கேனும் கீழைத்தேய வாணிப நடவடிக்கைகளில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருப்பினும், இன்னும் அவ்வாணிபம் அவர்களை இந்து சமுத்திரத்தின் மீதான வாணிப நெறிமுறைகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற ஊக்கத்தினை ஊட்டுவதாகத் தொழிற்படவில்லை. இதன் பின்னர் இரண்டாம் வணிக அணியினராக வந்த போர்த்துக்கீச குடியேற்றவாத அணியினரே இப்பிராந்தியத்தின் மீதான வாணிப முற்றுரிமையை நிர்ணயித்தவர்களாகத் தொழிற்பட்டிருந்தனர். இருந்தும் இந்து சமுத்திரத் தின் மீதான புதிய வாணிப நடைமுறைகள் எவற்றையும் தென்னாசியா வில் அறிமுகப்படுத்தி வைத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. Malyn Newitt என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடும் பொழுது, 'தூரகிழக் கிலோ பேர்சியன் குடாக்கரையோர நாடு களிலோ, இந்தோனேசி யாவிலோ அல்லது கிழக்காபிரிக்காவிலோ போர்த்துக்கீசர் ஒரு போதும் நேரடியான வாணிப முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமைக் கான சான்றுகள் இல்லை. இவர்கள் இலகுவில் வளைந்து கொடுக்கக் கூடிய ஒரு நிலையில், குறைந்தளவினதான வன்மம் கொண்டவர் களாக முஸ்லீம்களுடன் இணைந்து இடைத் தரகர் (Middlemen) முறையிலேயே இந்து சமுத்திரப் பரப்பில் வாணிப நடைமுறைகளில் ஈடுபட்டிருந்தனர்" எனக் குறிப்பிடுவதும் இங்கு நோக்கத்தக்கது.
வேறுசில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும்போது, நன்னம்பிக்கை முனையைச் சுற்றி கடற்பாதையொன்றை அமைத்தபோது அது இந்து சமுத்திரம் மீதான வாணிப நோக்கினை அடிப்படையாகக் கொண்ட மைந்தது என மிகைப்பட எண்ணிவிடக் கூடாது எனவும், அது சில கால இடைவெளிக்குப் பின்னர் பழைய வாணிப மார்க்கத்துடன் இணைக்கப் பட்டதன் பின்னர் ஏற்பட்ட வாணிபச் செழிப்புடன் காணப்பட்ட நிலையிலிருந்து முற்றிலுமே வேறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தது எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். Andrew C.HeSS என்பவர் குறிப்பிடும் போது, ஐபீரிய மக்களோ அல்லது ஒட்டோம நாட்டு மக்களோ தொடர்ச்சியாக இக்கடற்பிரதேசத்தை நன்நம்பிக்கை முனைவரையிலான கடல்மார்க்கங்களை உள்ளடக்கியதுறைமுகநகரங்களைத் தமது கட்டுப் பாட்டுக்குள் கொணர்ந்தவர் அல்லர் எனவும், முதன்முதலாக செங்கடல் மார்க்கத்திலே உள்ள கடற்பரப்பின் மீதே கடற்பயணம் தொடங்கப் பட்டது எனவும், அது இந்நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே பேர்சியக் குடாப்பரப்பில் இடம்பெற்றது எனவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
27

Page 17
இச்சூழ்நிலையின் பின்னணியில் புராதன இந்து சமுத்திரத்தின் மீதான வர்த்தக நடைமுறைகள் யாவும் போரஸ் ஊடாகப் போர்த்துக்கீசரைச் சென்றடைந்தது என்று கொள்வதே மிகப் பொருத்தமாகும். இது நிகழ்ந்தது அராபியக் குடாநாட்டுக் கடற்பரப்பிலேயே ஆகும். முதன் முதலாக போர்த்துக்கீசர் கடற்பரப்பில் வாணிப நடவடிக்கைகளைத் தொடங்கிய மையமும் இதுவேயாகும். Fernand Braudel என்பவர் கீழைத்தேய வாணிப நடவடிக்கைகளை மத்தியதரைக்கடல் பகுதியில் வைத்து மிகவும் பலாத்காரமாக நிறுத்தப்பட்ட அந்த நிகழ்வுகளே போர்த்துக்கீசரது கடல் வாணிபத்தின் தொடக்க நிகழ்வாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். போர்த்துக்கீசர் இவ்வாறான பலாத்காரமான வாணிபத் தடைகளை பல தடவைகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதும் இவ்வாறான நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட காலநிரலினுள் நிகழ்ந்தமையினால், எஞ்சிய காலகட்டங்களில் கீழைத்தேய வர்த்தக மானது மத்தியதரைக் கடற்பரப்பில் வழமைபோலவே இடம்பெற்றுக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. Irfan Habib என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது போன்று இந்துசமுத்திரக் கரையோர |b(TG) 56fairgija)p(p5 b5uild.6fai) bills of exchange, banking and credit arrangement என்பன போன்ற வாணிப நடவடிக்கைகள் யாவும் போர்த்துக்கீசர் கீழைத்தேயத்திற்கு வருவதற்கு பலதசாப்தங்கள் முன்னரேயே தோற்றுவிக் கப்பட்டிருந்தன என்று ஆணித்தரமாக எடுத்துச் சொல்லி உள்ளார்.
இந்துசமுத்திரப் பரப்பின் மீதான போர்த்துக்கேயரின் அடிப்படைக் கொள்கைகள் :
போர்த்துக்கேயர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினுள் தமது வணிகக் கலங்களைக் கொண்டு செலுத்திய தொட்க்க காலத்தில் பின்பற்றியிருந்த வாணிப நடைமுறைகளின் இயல்பினையும், தன்மையையும் அறிவது வரலாற்று மாணவருக்கு நன்மை பயக்கக்கூடியதாகும். அதாவது நன்னம்பிக்கை முனைக்கு அப்பாலே அராபியக்குடாச் சமுத்திரக் கரையோரத்தில் சமுத்திர வாணிபத்தின் பிரதான தளம் அமைந்திருந்த பொழுது போர்த்துக்கேயர் கொண்டிருந்த நோக்கத்தை வெளிப்படுத்துவது இங்கு பொருத்தமாகும். இந்தியாவின் முதல் போர்த்துக்கீச ஆள்பதியான பிரான் சிஸ்கோ - டீ - அல்மெய்டா (05 March 1505) என்பவனுடைய கூற்று அந்நோக்கத்தினை நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.
அத்தளபதி குறிப்பிட்டதாவது:
"துருக்கிஸ்தானத்து சுல்தான்களுடைய ஒற்றரால் எவ்வகையி லேனும் ஊடுருவமுடியாத வகையிலான நல்ல பாதுகாப்பரண்
28

ஒன்று எமக்கு செங்கடலின் முகத்துவாரப்பரப்பின் உட்பக்கத்திலோ அல்லது வெளிப்பக்கத்திலோ எமக்கு அமையக்கிடைக்குமாயின் அதைவிட மேலான ஒன்று எமது சேவைக்காக யாது வேண்டும்? அத்தோடு (அக்கோட்டையின் உதவியோடு) இந்தியாவினுடைய எல்லா மக்களையும் அவர்கள் முன்பு எவருடனும் செய்திருந்திருக்க முடியாத வகையிலான வியாபாரத்தினை எம்முடன் செய்ய வைப்போம்"
டீ அல்மெய்டாமுஸ்லீம் வியாபாரிகளுடனும் கூட ஒர் ஒப்பந்தத்தைச் செய்வித்ததோடு மட்டுமல்லாது அவர்கள் செங்கடல் மார்க்கத்தில் அமைந்த கடல் வர்த்தகத்தைக் கூட முற்றுப்பெற வைப்பதில் வெற்றி கண்டான் எனலாம். எவ்வாறெனினும் போர்த்துக்கேயர் அதிவிரை வாகவே "இந்நிலை மாத்திரம் போதியதாக இல்லை" என்பதனை அதாவது இந்து சமுத்திரப் பரப்பின் மீதான வணிக நடவடிக்கை மாத்திரம் போதுமானதல்ல என்பதனை விரைவில் உணர்ந்து கொண்டனர்.
இந்துசமுத்திரத்தின் ஊடான கீழைத்தேயப் பரப்பிற்கான இராணுவக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் அத்தொடக்க வியாபாரக் கட்டமைப்புக்குள் தொழிற்பட்டிருந்த நிலையிலே போர்த்துக்கீசருக்கு மிகவும் அதிக பிரயாசைக்கும், செலவிற்குமுரிய அம்சமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. கீழைத்தேயத்திலுள்ள மிகவும் உயர் வர்க்கத்தினருக் குரிய வாசனைத் திரவியங்களையோ அல்லது அற்பமான வருமானத்தை ஈட்டித்தரும் இந்து சமுத்திர வாணிப நடவடிக்கைகளை மட்டும் பேணிக் கொண்டு ஒர் இராணுவக் கட்டமைப்பிற்குரிய செலவீடுகளைப் பராமரிக்க முடியாது என்பதனையும் அவர்கள் தெரிந்து கொண்டிருந்தனர். இதனாலே தான் அடுத்து வருகின்ற ஒரு தசாப்த காலத்திற்குள் (Fromon 15th Mirach, 1505) இந்து சமுத்திர வர்த்தக ஏகபோகத்தினூடாக ஏந்தளவுக்கு பொருளிட்டம் செய்ய முடியுமோ அந்தளவிற்கு லாபத்தை வாணிகத்தின் ஊடாக அடைவதற்கு அவர்கள் முயற்சி செய்தனர். ஒருவேளை போர்த்துக்கீச வாணிபக்கட்டமைப்பின்தலைமைப்பீடம் லிஸ்பனிலிருந்து பிறப்பித்திருந்த கட்டளைக்கேற்ப அவர்கள் அவ்வாறுதூண்டப்பட்டிருந் , 5)(5ö35óón Glub 9/GijGajó)JT? Affonso - de - Albuquerque 6TaöTL16)16öT 560Ig அரசனுக்கு எழுதியனுப்பிய கடிதம் ஒன்று அக்கருத்தினையே புலப் uG35)ğñğ5/6)ug5ITö#5 g) l6íT6/Tg5I (1st December 1513).
சமகால இந்து சமுத்திரவர்த்தக வலையமைப்பின் பங்கு கொண்டிருந்த முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்களவில் இராணுவ நடைமுறையடிப் படையைக் கையாண்டே தமது வாணிப நடவடிக்கைகளை முன்னெடுத் தனர் எனலாம். ஒரு சிறிய எகிப்திய பாதுகாப்பு அணி முஸ்லீம்களுக்காக
29

Page 18
துருக்கிஸ்தானத்தின் உதவியுடன் 1506இல் போர்த்துக்கீசரின் இந்திய வருகையை எதிர்த்து நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. Francisco - de - Almeida வினால் வெற்றிகொள்ளப்படுவதற்கு முன், அப்பாதுகாப்பு அணி ஒரு குறிப்பிடத்தக்களவிலான வெற்றியையும் போர்த்துக்கீசருக்கெதிராக இந்து சமுத்திரப்பரப்பில் அடைந்திருந்தது. 1516ஆம் ஆண்டில் எகிப்திய அட்மிரல் Salman Reis என்பவன் ஜெட்டா (Jaddah) மீதான போர்த்துக் கீசரின் வாணிபக் கட்டமைப்பினைத்தாக்கி, சீர்குலைத்தது மாத்திரமன்றி, சிறிதுகாலம் செங்கடல் முகத்துவாரத்தின் பரப்பின் மீதான வாணிப மேலாதிக்கத்தினையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான். துருக்கிஸ்தானத்தின் பேரரசவிஸ்தரிப்பு நடவடிக்கையானது சமகாலத்தில் செங்கடலுடனும், பேர்சியன் குடாச் சமுத்திரப் பரப்புடனும் இணைவு பெற்றமையால் இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான கடற்போராட்டம் போர்த்துக்கீசருக்கும்துருக்கிஸ்தானத்திற்குமிடையே ஆரம்பித்து வைக்கப் படக் காரணமாக அமைந்தது. 1538ஆம் ஆண்டில்துருக்கிஸ்தானத்து கடற் படை ஒன்று Diu என்ற துறைமுகத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது. 1552இல் துருக்கிஸ் தானத்து அட்மிரலான Piri Reis என்பவன் மஸ்கெட்டில் அமைந்திருந்த போர்த்துக் கேயருடைய அரணை அழித்தொழித்தானெனினும், ஒர்மஸ் (Ormuz) துறையை கைப்பற்றுவதற்கு தவறவிட்டிருந்தான். இறுதியாக 1585இல் Mir Ali Reg என்பவனுடைய போர்த்துக்கீசர் மீதான திடீர் அதிரடித்தாக்குத லானது கிழக்காபிரிக்கக் கரையில் அமைந்திருந்த மொம்பஸா(Mombasa) கோட்டையின் ஸ்திரமானநிலையினால் முறியடிக்கப்பட்டது.
இந்துசமுத்திரத்தின் மீதான போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டை முறியடிப்பதற்கு துருக்கிஸ்தானத்துச் சுல்தான்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளும் பலவீனமுற்றுப் போனமைக்கான காரணம் கடற்சமரில் அவர்கள் பின்பற்றிய காலத்திற்கொவ்வாத யுத்தநுட்பங்களேயாகும். மிகநீண்ட, தட்டையான, ஒரடுக்குடைய போர்ப்படகுகளை இவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியமையாலேயே போர்த்துக்கீசகப்பல் களை வெற்றிகொள்ள முடியாமல் இருந்தது. ஒரு வேளை துருக்கிஸ் தானத்து வீரர்களால் செங்கடல் மார்க்கத்திலும், பேர்சியன் குடாக் கடலிலும் இத்தகைய போர்ப்படகுகள் எதிரிகளுக்கெதிரான போரில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிக் கொடுத்திருப்பினும், அது போர்த்துக் கீசருடனான சமுத்திரப்பரப்பில் அமைந்த போர் நடைமுறைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாதிருந்தது. இருந்தும் துருக்கிஸ்தானத்து கடற் சமர் முற்றிலும் தோல்வியில் முடிவடைந்தது என்று கூறுவதற்குமில்லை. ஏனெனில் 1530களின் பிற்பட்ட காலத்திலிருந்து பேர்சியன் குடாவின்
30

மேற்பகுதி தொடர்ந்தும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளமையும், செங்கடலினுடாக துருக்கிஸ்தானத்திற்கு ஒரு சிறிய அளவில் பொருட்களின் பாதீடு இடம்பெற்று வந்தது என்பதும் துருக்கிஸ்தானத்தின் ஊடாக அவை ஐரோப்பாவைச் சென்றடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கீசருடனான இரண்டாம் கட்ட நேரடிச்சமுத்திரப் பரப்பின் மீதான மோதலில் கலிகட்டினது மஹாராஜா சாமோரின் என்பவனது கடற்படைகள் சமுத்திரப் பிரதேசத்தில் மோதலில் ஈடுபட்டன. சாமோரினினது கடற்கப்பல்கள் மிகவும் சிறியவையாகவும், போர்முறை களில் பலவீனமானவையாகவும் காணப்பட்ட காரணத்தினால், போர்த்துக்கேயரே அச்சமரில் மீண்டும் தமது வலுவைக் காட்டக் கூடிய சந்தர்ப்பமேற்பட்டது. எவ்வாறெனினும், மலபார் முஸ்லீம்களது s மிகச்சிறிய கடற்கலங்களானவை மிகக் குறைந்த ஆழத்தில், அதாவது கடற்கரையை மிகவும் அண்மித்த வகையில் விரைவாகச் செல்லுந்திறனைக் கொண்டிருந்தமையால், போர்த்துக்கேயரின் பீரங்கித் தாக்குதல்களி னின்றும் தப்பித்துக் கொள்வதற்கேற்றவாறு அவை கடற்பரப்பினின்றும் மறைந்து உண்ணாட்டு நீர்ப்பரப்பிற்குள் செல்லும் திறனைப் பெற்றிருந்தன. விசேடமாக சாமோரினினது சிறிய கடற்கலங்களானவை போர்த்துக்கீசக் கப்பலின் பாதுகாப்பில் செல்லக் கூடிய வணிகர்களுடைய கடற்கலங்களை வேகமாகத் தாக்கிவிட்டு மறையக்கூடிய சக்தியைப் பெற்றிருந்தன. இதனால் 1550களில் போர்த்துக்கீசர் தமது வாணிபக் கடற்கலங்கைப் பாதுகாப்பதற்காக பெரிய ஒரு பாதுகாப்பு அணியைப் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையும் தோற்றுவிக்கப்பட்டது.
மலாக்காவைச் சுற்றியுள்ள பரப்புக்களில் கூட போர்த்துக்கீசரது கடற்படையின் வலு மிகக்குறைந்த நிலையிலேயே காணப்பட்டது. காரணம் மலாக்காவை அண்மித்த தீவுகளில் இஸ்லாமிய அரசுகளே தொடர்ச்சியாக ஆட்சியைச் செலுத்தி வந்தமையால் அப்பிராந்தியத்தில் போர்த்துக்கீச வணிக கடற்கலங்களுக்கு பெரும் ஆபத்தே நேரிட்டது. 1550ஆம் ஆண்டில் ஜாவானியர்கள் மலாக்கா மீது தாக்குதல்களை நடாத்தியபோதும், குறிப்பிடக்கூடிய சண்டைக்குப் பின் ஜாவானியர் பின்வாங்கிக் கொண்டனர். 1568, 1571, 1573, 1582ஆம் ஆண்டுகளில் Ajehnese படைகள் மலாக்காவைத் தாக்கின. 1540களில் செங்கடல் மார்க்கத்தில் உள்ள பிராந்தியங்களில் முஸ்லீம்களது கடல்வாணிபம் மீண்டுமொருமுறை மலர்ச்சியடைந்தது. 1560களில் Ajehnese வணிகர்கள் மிளகினை செங்கடல் ஊடாக ஏற்றுமதி செய்ததோடு, மேலதிகமான மிளகினைநன்னம்பிக்கைமுனை ஊடாக போர்த்துக்கீசர் ஐரோப்பாவிற்கு
எடுத்துச் சென்றிருந்தனர்.
3 :

Page 19
கடற்படை அணியின் பணி தனித்து வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப் பினை வழங்குவதாகமட்டும் இருக்கவில்லை. சில இடங்களில் முஸ்லீம் ஆட்சியாளரும், வியாபாரிகளும் போர்த்துக்கீசருடைய பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டிருந்தமையைக் கண்டுகொள்ள முடிந்தது. மைக்கல் பியர்சன் (Michad Pearson) என்பவர் குறிப்பிடும் பொழுது குஜராத்தினை நிர்வகித்த ஆட்சியாளர்கள் தமது நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தினைக் கட்டுப்படுத்துவதில் எவ்விதமான ஆர்வத்தினையும் தாமாகக் காட்டாததினால் போர்த்துக்கீசரே அதனையும் கட்டுப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாகத் தொழிற்பட்டிருந்தனர். முஸ்லிம் வியாபாரிகளும் ஒருக்கால் போர்த்துக்கீசர்தமது வாணிப நடைமுறைகளை அப்பிராந்தியத்தில் அமுல்படுத்தியே ஆவர் என்ற காரணத்தினாலோ என்னவோ அவர்கள் போர்த்துக்கீசரது பீரங்கி, மற்றும் வெடிகருவிகளைத் தாங்கிய படையணிகளை எதிர்க்காமலேயே விட்டுவிட்டனர். இவ் வியாபாரிகள் போர்த்துக்கீசருடன் இலகுவாக விரைந்து இணைந்து கொண்டதோடு, தமது உண்மையான வியாபார நடைமுறைக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தனர். 1590ல் லிஸ்பனிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட அரசனின் ஆணையானது ஒர்மஸ் (Ormuz) என்ற இடத்தில் உள்ளடங்கிய ஏனைய பரப்பில் காணப்படும் கோயில்கள், மசூதிகள் போன்றவை யாவற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கும் படி கோரிவந்தபோது, போர்த்துக்கீச ஆள்பதி பின்வருமாறு அதற்கான பதிலை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது "தங்களது ஆணையை என்னால் நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் உள்ளேன், ஏனெனில் அவ்வாறு செய்தால் எமது அணியை விட்டு எல்லோருமே நீங்கிச் சென்றுவிடுவார்கள், அதன் பின்னர் எம்மால் இங்கு வாணிபத்தினை யாருடனும் மேற்கொள்ள முடியாது போய் விடும்" என அந்த வாசகம் அமைந்திருந்தது.
எனவே முஸ்லீம் வியாபாரிகள் இந்துசமுத்திர வாணிகத்தில் போர்த்துக்கீசரை எதிர்க்காமல் - பகைமையுறவிற்குள்ளாக்காமல் தமது வாணிப நடைமுறைகளை பெருமளவிற்கு கொண்டு நடாத்தி வந்தனர். அதாவது இந்துசமுத்திரத்தின் மீதான போர்த்துக்கீசரது அதிகார நடைமுறையை மீறியதுபோல் காட்டிக்கொள்ளாமல், தமது சவாலை வெளிப்படுத்தாத வகையில் முஸ்லீம்கள் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தனர். எங்கெங்கு போர்த்துக்கீசரது இராணுவ, கடற்படையமைப்பு அணிகள் மிகக் குறைவாகவும் பலவீனமாகவும் காணப்பட்டனவோ அங்கெல்லாம் முஸ்லிம்கள் செறிவாக கடல் வாணிபத்தில் ஈடுபட்டனர். வங்காள விரிகுடாக்கடலிலும், கிழக்காபிரிக்கக் கரையோரத்திலுமாக இத்தகைய
32

சூழ்நிலை காணப்பட்டதனால் இப்பிராந்தியங்களில் முஸ்லிம்களது கடல் வாணிபம் மிகக்கூடிக் காணப்பட்டது. இந்நிலையானது இந்து சமுத்திரத் தின் பரப்பில் அதிக நாள் நீடித்திருக்கவில்லை. போர்த்துக்கீசர் இந்து சமுத்திரத்தின் மீதான தமது வாணிபத் தனியாண்மையை விரைவிலேயே நிலைநிறுத்திக் கொண்டனர். முஸ்லீம் வணிகர்களது சமுத்திரத்தின் மீதான மரக்கலப் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டது. இந்துசமுத் திரத்தில் எங்கெங்கு மிகவும் அதிகமான லாபம், வருவாய் தரக்கூடிய வணிகமார்க்கங்கள் காணப்பட்டனவோ அவையாவும் போர்த்துக்கீசரால் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டன. எனவே இந்துசமுத்திரத் தின் மீதான, வணிகக் கட்டுப்பாட்டுடனான ஒரு மேலைத்தேயச்சக்தியாக இப்போது போர்த்துக்கீசர் தனித்துவமான வகையில் மாற்றம் பெற்றனர். C. R. Boxer என்பவர் குறிப்பிடுவது போன்று, “போர்த்துக்கீசரின் மேலாதிக்கத்திற்குட்பட்ட சமுத்திரவியல் சார்ந்த கடல் வாணிப மானது இன்னும் முற்றுமுழுதான தாக்கத்தை இந்து சமுத்திரத்தில் ஏற்படுத்தாது இருந்தபொழுதிலும், அவர்களது வாணிபத்தின் இறுக்கமான கட்டுப்பாடானது மொசாம்பிக் ஒர்மஸ், Diu, கோவா, மலாக்கா ஆகிய மையங்களின் கடல்வாணிப தகட்டோட்டமான பாதைகளையும், ஒழுங்குகளையும் குறிப்பிடக்கூடிய அளவிற்கு பதினாறாம் நூற்றாண்டு முழுவதிலுமே அவர்களது தனியுரிமை யாகக் கொள்ளவைத்தது" அவ்வழியே இந்துசமுத்திரத்தின் மிதிக் கல்லாக விளங்கிய இலங்கைத் தீவினது கடற்கரையோர மாகாணங் களிலும் போர்த்துக்கீசரது வாணிப நடவடிக்கைகளுக்கான சூழ்நிலைகளை இத்தீவின் கடல் முகப்புத்தள இராச்சியங்கள் கொண்டு காணப் பட்டிருந்தன. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இலங்கையில் காணப் பட்டிருந்த கடல் முகப்புத்தள இராச்சியங்களான கோட்டை, யாழ்ப்பாணம் ஆகியன போர்த்துக்கேயரது கவனத்தினை ஒருங்கே ஈர்த்ததில் ஆச்சரியம் ஏதும் ஏற்படுவதற்கில்லை.
33

Page 20
அத்தியnயக் இறண்டு
இலங்கையின் கடல் முகப்புத்தள Gãássald6hIQUsuês, சமூக வள நிலையும்
போர்த்துக்கேயர்களது தொடர்புகளரும்
“ 15ஆம் நூற்றாண்டின் பின்பு அமெரிக்காவிற் குடியேறிய ஐரோப்பியர் களுக்கு அமெரிக்கா தாயகமென்றால், அவ்வாறே 76ஆம் 77ஆம் நூற்றாண்டுகளின் பின்னர் கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிற் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு அந்த நாடுகள் தாயகமாக முடியுமென்றால், மத்திய காலத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தாயகமாக முடியுமென்றால், குறைந்தபட்சம் கி.பி. 73ஆம் நூற்றாண்டில் தமக்கெனத் தனியான அரசுடன் வாழ்ந்தவர்கள் என்ற தெளிவான ஆதாரத்தைக் கொண்ட தமிழர், ஐரோப்பியர் வருகையின்போது வடக்குக்கிழக்கில் வாழ்ந்தவர் எனப்படும் தமிழர் ஏன் தமது பிரதேசத்தை தாயகம் என்று கூறமுடியாது.”
-மு. திருநாவுக்கரசு
34

இலங்கைத் தீவினைப் பொறுத்த வரையில் கி.பி. 14ஆம்நூற்றாண்டுத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பிறிதொரு வரலாற்று மரபின் வளர்ச்சியானது மிகவும் தனித்துவமான வகையில் அமைந்து கொண்ட மையைக் காணமுடிகிறது. அதாவது மரபுவழி வந்த இந்திய உப கண்டத் திலிருந்து இதுவரையில் நாம் பெற்றிருந்த வரலாற்று மரபுகளைப் பேணும் முறைமையானது படிப்படியாக கைவிடப்பட்டு, சமுத்திரப் பரப்பினுாடே நேரடியாகப் பெற்றிருந்த வரலாற்று மரபுகள் இன, மொழி, பண்பாட்டு - வாழ்வுப்புலம் என்றவோரடிப்படையில் சமகாலத்தில் பேணப்படுவதற் குரிய சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது என்பதாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்துடன் உலகப் பொதுநோக்கில் அவ்வப் பிராந்திய மொழிகளின் தளங்களிலிருந்து பல்கிப் பெருகி இலக்கிய மரபினைத் தோற்றுவித்திருந்த ஒரம்சத்தினையும் அவதானிக்க முடிகிறது. இந்நூற்றாண்டுத் தொடக்கத்தி லிருந்து சமுத்திரவியல் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட அறிவியல் தேட்டம் காரணமாக சமுத்திரப் பரப்பின் வழிவந்த பண்பாட்டு அலைகள் கீழைத்தேயத்தில் சிறப்பாக தென் ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளைப் பாதித்திருந்தன. தீபகற்ப இந்தியாவிலிருந்து 2ஆம் பாண்டியப் பேரரசின் செல்வாக்கு, தொடர்ந்து விஜய நகரப் பேரரசின் செல்வாக்கு ஆகியன இலங்கைத் தீவின் வரலாற்று மரபு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டுச் சென்றாலும், அவை சமுத்திரப் பண்பாட்டையே அடித்தளமாகக் கொண்டிருந்ததன் அடிப்படையில் இலங்கையில் புதியதோர் வரலாற்று மரபின் வளர்ச்சியை இந் நூற்றாண்டிலிருந்து தனித்துவமான வகையில் அடையாளம் காணமுடிந்துள்ளது. கூடவே நேரடியான கடற் தொடர்பு களின் ஊடாக தென்கிழக்காசிய நாடுகளினதும், மேற்காசிய - மத்திய கிழக்கு நாடுகளினதும் வாணிபத் தளத்தினூடாகப் பரிணாமம் பெற்ற வரலாற்று மரபு இலங்கையின் நவீனகால வரலாற்று வளர்ச்சியின் முன்னுரையாகவும், தொடக்கமாகவும் அமைந்தது எனலாம். இதனாலே தான் தீபகற்ப இந்தியப் பரப்பிலிருந்து பெற்றுக்கொண்டவற்றை விட, மத்தியாசிய, மேற்காசிய, தென்கிழக்காசிய வரலாற்று இழையங்களை சமுத்திரப் பரப்பினுாடான இணையங்கள் வாயிலாக இலங்கை பெற்று, அரசியல், பொருளாதார, சமூகப் பெறுமானங்களை - நிறுவனங்களாக வளர்த்தெடுத்துச்சென்றிருப்பதனைக் காணலாம். இரண்டாம் பாண்டியப் பேரரசின் படையெடுப்புக்களின் பின்னர் முஸ்லீம்களின் (டெல்கி சுல்தான்களின்) தென்னிந்தியா மீதான ஆதிபத்தியக் கொள்கை காரணமாக அவர்களுடன் இணைந்து மேலாணையை ஏற்றுக் கொண்ட நிலையில்) தமது நிர்வாகச் செயற்பாடுகளுடன் அவர்களையும் இணைத்துக் கொண்டதன் வாயிலாக "ஆரியச்சக்கரவர்த்தி" என்ற (முஸ்லீம்?) பிரதானியை வட இலங்கையிலுள்ள யாழ்ப்பாண ஆயன்பட்டினத்திற்கு பாண்டியப் பேரரசன் அனுப்பி வைத்திருந்த வகையை நாம் சந்திக்க
35

Page 21
நேர்ந்தது. இந் நிகழ்வே யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட கடல் முகப்புத்தள இராச்சியம் ஒன்றை வன்மை பெற்று வளர்ச்சியடைவதற்கும் ஏதுவாக அமைந்த காரணி என்றும் கூறப்படுகிறது. இப்பின்னணியில் தோற்றம் பெற்ற இக்கடல் முகப்புத்தள இராச்சியத்தின் பரிணாம வளர்ச்சியில் கி.பி. 14ஆம்நூற்றாண்டு மிகவும் தனித்துவமான ஒரு காலகட்டமாக விளங்கியது. அதாவது முதன்முதலாக ஏராளமான தமிழ் வரலாற்று இலக்கியங்களும் மரபுகளும் தோற்றுவிக்கப்பட்டிருந்த முறைமையைக் கண்டுகொள்ள முடிந்தது. இம்மரபானது இலங்கையில் தனித்துவமான வரலாற்றுமரபு ஒன்றினது வெளிப்பாட்டையும், கடல் முகப்புத்தளப் பண்பாட்டுப் பரிணாமம் ஒன்றினையும் இனங்காட்டிய தோடல்லாது, கடல்முகப்புத்தள இராச்சியம் ஒன்றிற்கான பொருளாதாரக் கட்டமைப்பில் கடல்முத்து உட்பட கடல் வாணிப ஈட்டத்தின் செழிப் பிணையும் வெளிப்படுத்தியுள்ளது. விலைமதிக்க ஒண்ணாத கற்பகதருவான பனைவளத்தின் பின்னணியிலே (கோட்டை இராச்சியத்தின் பின்னணியில் அமைந்த கறுவா வளத்துடன் ஒப்பிடுக.) நல்லூரை மையமாகக் கொண்ட கடல்முகப்புத்தள இராச்சியம் கடல்வாணிப ஈட்டத்தில் செழிப்படைந் திருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கோட்டை இராசதானியின் பொருளியல்வளம் :
"ஒரு கடல்முகப்புத்தள இராச்சியம்" என்ற வகையில் ஜயவர்த்தனபுர கோட்டே இராசதானியின் அமைவிடமும், சமகால இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நிறுவனங்களின் உருவாக் கத்தில் அதன் பங்கும் - பணியும் பற்றிய ஆய்வானது சமுத்திரவியல் வழிநிலைப்பட்ட வரலாற்று மரபின் வளர்ச்சியில் பிரதான ஒரு பருவமாக அமைந்துள்ளது. இலங்கைத்தீவின் மேற்கு கரையோரமாக, இந்து சமுத்திரத்தினை எதிர்நோக்கியபடி அமைந்துள்ள ஜயவர்த்தனபுர - கோட்டேயின் அமைவிடமானது மிகப் பரந்த இந்து சமுத்திரப் பரப்பினுரடாக வீசும் தென்மேற்குப்பருவப் பெயர்ச்சிக்காற்றின் மிகுந்த செல்வாக்கிற்குட்பட்ட ஒரு மையமாகவும் காணப்படுகின்றது. இயல் பாகவே கடல்வள இராச்சியமொன்றிற்குரிய அடிப்படையான கட்டுமான அமைப்பினையும், கடற்கரையோரமாக அமைந்த உண்ணாட்டு நீர்வழி களையும், களப்புக்களையும், படகுத்துறைகளையும் ஒருங்கே கொண்டிருந் தமையானது அடுத்துவருகின்ற தொடர்நூற்றாண்டுகளில் ஜயவர்த்தனபுர -கோட்டே வகிக்க இருந்த குடியேற்ற நாட்டு வளநிலையத்திற்குரிய பிரதான மையமாக மிளிரச் செய்தது எனலாம்.
காலத்திற்குக் காலம் தனது பேரரசின் எல்லைகளை மாற்றி வந்த ஜயவர்த்தனபுர - கோட்டே அரசானது ஸ்திரமான தனது பேரரசின்
36

பரப்பாக கலாஒயாவிலிருந்து தெற்கே வளவைகங்கை வரைக்கும், கிழக்கே மலைத்தொடர் விளிம்போரத்திலிருந்து மேற்கே இந்து சமுத்திரம் வரைக்கும் அமைந்து காணப்பட்டது. யாழ்ப்பாணக் கடல்முகப்புத்தள இராச்சியத்தினை விட மிகவும் செல்வவளமுடைய ஜயவர்த்தனபுர கோட்டே அரசானது கடல் வளத்தின் பின்னணியிலும், செழிப்பான பணப்பயிர்ச்செய்கை வளப்பின்னணியிலும் (பாக்கு, கறுவா) பேரரச அரசமைப்புக்கட்டுமானத்திற்குரிய எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அரணால் சூழப்பெற்ற வெற்றித்திருநகர் என்ற கருத்துப்படத் துலங்கும் ஜயவர்த்தனபுர - கோட்டேயானது புராதன இலங்கையரசின் தொடர்ச்சியான முடியுரிமையை பிரதிநிதித்துவப் படுத்திய கடல்முகப்புத்தள இராச்சியமாகவே சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டது. ஓரளவிற்கேனும் தற்கால இலங்கையரசின் அரசியல், மையவாக்கநிலைகளின் தொடக்கவளர்ச்சிக்கான அடிப்படைகளை அதன் அடித்தளமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றதாகவே ஜயவர்த்தனபுரி -கோட்டையரசு விளங்கியது. அந்தவோரடிப்படையிலேயே இலங் கையின் ஏனைய பிராந்தியங்கள் மீதான பேரரச ஆதிபத்தியத்திற்கான உரிமையையும் ஜயவர்த்தனபுர அரசு (கோட்டையரசு) கொள்கையளவில் அல்லது கோட்பாட்டடிப்படையில் நிலைநிறுத்தி வந்தது எனலாம். இக்காரணத்தினால் கோட்டை இராசதானியின் மன்னனை சக்கரவர்த்தி" என்று குறிப்பிடும் மரபு அங்கு வளர்ச்சிபெற்று வந்துள்ளமையை வரலாற்று மூலங்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
K. M. de, சில்வா என்ற வரலாற்றாசிரியர் இக்கோட்டையரசினைப் பற்றிக் குறிப்பிடும்போது அவ்வரசின் எல்லையானது வடக்கில் மல்வத்து ஒயாவிலிருந்து தெற்கே வளவகங்கை வரைக்கும் பரந்து - நீண்டிருந்தது எனக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அடிக்கடி அதன் எல்லைகளை மாற்றியமைத்து வந்த கோட்டையரசு கி.பி. 16ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் இருந்த அரசுகளுக்குள் மிகவும் பலம் வாய்ந்ததாகவும், அரசியல்துறையில் ஒரு புத்தாக்க - விரிவாக்க நிலையில் காணப்பட்ட தாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இலங்கைத் தீவிலிருந்து குடிசனத்தொகையில் பெருமளவிலான எண்ணிக்கையை இக்கோட்டையரசு உள்ளடக்கியிருந்தது எனவும், அதன் பின்னணியில் பெருங்கடல் வாணிபமும், உள்நாட்டுப் பணப்பயிர்ச்செய்கையின் செழிப்பும் காணப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது. கறுவா, பாக்கு இவை இரண்டுமே கோட்டையரசனுக்கு நியாயமான வருமான ஈட்டத்தினைப் பெற்றுத்தந்த பணப்பயிர்களாக
விளங்கின.
37

Page 22
கோட்டையரசின் பிரதான வருவாயாகக் காணப்பட்ட வருவாய் ஈட்டம் நிலவரியே ஆகும் என K. M. de சில்வா குறிப்பிடுவதும் இங்கு நோக்கத்தக்கது. பெரும்பாலான இலங்கை வரலாற்றாசிரியர்கள் கோட்டையரசின் பிரதான வருமான ஈட்டமானது கடல்-வளவாணிபத்தி லேயே தங்கியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளவேளையில் K. M. de சில்வா அவ்வரசின் பிரதான வருமான ஈட்டமாக நிலவரியைக் கொள்வது எந்தளவிற்குப் பொருந்தும் என்பதும் நோக்கத்தக்கது. கி.பி. 16ஆம் நூற்றாண்டளவில் இலங்கைத்தீவில் காணப்பட்ட அரசுக்குள் கோட்டை அரசே மிகவும் செல்வாக்கான நிலையில் காணப்பட்டது என்பதனை எவருமே மறுக்கமுடியாது. கோட்டை அரசர்கள் மிகப் பெருமளவிலான நிலத்தின் சொந்தக்காரர்களாக விளங்கினர். கபடாகம் (Gabadagam) என்றழைக்கப்பட்டமன்னனுக்குச் சொந்தமான கிராமங்கள் யாவும் மிகவும் வளமுற்றவையாகவும், செல்வம் நிறைந்தவையாகவும் காணப்பட்டன. ஒவ்வொரு கபடாகத்தினதும் வருடாந்த வருமானம் மூன்றுமில்லியன் Fanams க்கும் அதிகமாகும். கோட்டை இராசதானியில் மன்னனுக்கு வருடாந்த வருமான ஈட்டமாகக் கிடைத்தது நான்கு மில்லியன் Fannms ஆகும். கோட்டையரசில் வருடாந்தச் சுங்கத் தீர்வை இறையாகக் கிடைத்தது ஒரு கபடாகத்தின் வருட வருமானத்தில் 1/10 பங்கு ஆகும். அதாவது 10 லட்சம் Fanams ஆகும்.
கோட்டையரசின் பொருளியல் நிலையில் அதன் பிரதான பரிமாற்ற ஊடகமாக விளங்கியது பாட்டர் (Barter) முறையாகும். ஆனால் இன்னும் மன்னனுக்கு கபடாகத்திலிருந்து வருடாந்தம் 600,000 Panams மொத்தமாக வழங்கிவந்த முறையும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கோட்டை இராசதானியின்பொருளியல்வளத்தில் அதன் பணப்பரிமாற்ற ஊடகத்தின் வரலாறானது கி.பி. 18ஆம், 19ஆம் நூற்றாண்டுக்குரிய ஒர் அம்சமாக அல்லாது, அது கி.பி. 15ஆம்நூற்றாண்டிலிருந்தே ஆரம்பித்து விட்டிருந்த ஓர் அம்சமாக K. M. de சில்வாவினால் குறிப்பிடப்படுவதும் இங்கு நோக்கத்தக்கது.
கோட்டையரசில் விவசாயிகளது பிரதான பணப்பயிராகக் காணப்பட்ட வையாக பாக்கும், கறுவாவும் அமைந்தன. ஒவ்வொரு கபடாகத்திலும் (கிராமத்திலும்) கமுகமரம் பயிரிடப்பட்ட அதேவேளையில், கோட்டை யரசிற்குக் கிழக்கெல்லையில் காணப்பட்ட உடரட்ட பகுதியிலிருந்தும் அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பாக்கு கோட்டையரசிற்கு கொண்டு வரப் பட்டது. எனவே கோட்டை இராசதானியின் பாக்கு வியாபாரத்தில் கண்டியரசிலிருந்து டெடரட்ட) கொண்டுவரப்பட்ட பாக்கும் சிறப்பிடத் தினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றினூடாகக்
38

கிடைத்த வெளிநாட்டு வருமான ஈட்டமானது கோட்டையரசின் திறைசேரியில் காணப்பட்ட பொருளியல் ஈட்டத்துடன் சமத்துவமாக ஒப்பிடக்கூடிய நிலையில் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெங்குப்பொருட்களின் உற்பத்திகூட கோட்டையரசின் பிரதான பணவருவாய் மூலமாக விளங்கி வந்தமையைக் காணலாம். ஆனால் தெங்குப் பொருட்களானவை பாட்டர்முறையில் அமைந்த பொருளியல் ஊடகமாகவோ அல்லது பாக்கு வியாபாரத்திற்குச்சமாந்தரமான வருமான ஈட்டத்திற்கு எதிராகவோ தெங்கு உற்பத்திப் பொருட்களின் வர்த்தகம் பெருகிக்காணப்படவில்லை. (கறுவா வியாபாரம் கூட இன்னும் கோட்டையரசின் வாணிபத்தில் பிரதான இடத்தினைப் பெற்றிருக் கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.) பிற்காலத்தில் கோட்டையரசின் திறைசேரிக்கு அதிக நிதியீட்டத்தைப் பெற்றுக்கொடுத்த கறுவா உற்பத்தி யானது இன்னும் முக்கியத்துவம் பெறாதவொரு நிலையிலேயே கோட்டையரசில் இருந்து கொண்டிருந்தமையைக் காண்கின்றோம். இங்கு கறுவா உற்பத்தியானது இரண்டு பிரதான கட்டுப்பாடுகளைக் கொண்டு விளங்கியது. ஒன்று சலாகம (Salagamas) சாதியினர் மட்டும் தான் கறுவாப் பட்டை உற்பத்தியிலும், உரித்தெடுத்தலிலும் ஈடுபடுபவர்களாகவும், அதே பொருளை கோட்டையரசின்துறைமுக நகரத்திற்கு எடுத்துச்சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்களாகவும் காணப்பட்டனர் என்பது, மற்றையது கபடாகம் என்ற மன்னனுக்குரிய கிராம நிலங்களிலேயே இச்சலாகம சாதியினர் வாழ்ந்து வந்தமையால், இச்சலாகம சாதியினர் தாம் கொண்டிருந்த நிலங்களுக்குரிய நிலவரியாக கோட்டை மன்னனுக்கு வழங்கியபின், மிஞ்சும் மேலதிகக் கறுவாப்பட்டைகளையே தம் வாணிபத் திற்காக உபயோகித்திருந்தனர் என்பதாகும். வெளிச்சந்தைகளில் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட கறுவாப்பட்டை மூலம் கிடைத்த வருவாயானது ஒரு குறிப்பிட்டளவாக விளங்கிய போதும் அவை சலாகம சாதியினரின் வருமான ஈட்டமாகவே அமைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்க
தாகும.
C.R. de சில்வா என்ற வரலாற்றாசிரியர் (இலங்கை பற்றிய ஆய்வுத் Gog/TLtigal): 10 g)6) Some Comments on the political and Economic Conditions on the Kingdom of Kotte in the Early Sixteenth Century' 6Tairp) ஆய்வுக்கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கோட்டை இராசதானியின் பொருளியல் வளம் தெடர்பாகக் கொடுத்திருப்பது இங்கு நோக்கத்தக்க தாக உள்ளது. ۔۔۔ ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔
"பொதுவாக இதுவரை காலமும் கோட்டையரசின் பொருளியல் நிலைமை தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வுகள் திருப்திகரமானதாக
39

Page 23
அமையவில்லை. எப்படியிருப்பினும், இக்குறிப்பிட்ட விடயம் தொடர்பாகக் கிடைத்திருக்கக்கூடிய ஆவணங்கள் கூட மிக மிகக் குறைவே என்று குறிப்பிடவேண்டும். கிடைத்திருக்கக்கூடிய சிங்கள மொழிமூலமான ஆவணங்கள் கூட பெரிதும் அரசியல், சமயம் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்தினை தருகின்றனவே தவிர, கோட்டை இராசதானியின் பொருளியல் நிலைதொடர்பாக அவை சான்றுகளைத் தரவில்லை எனலாம். வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் கூட எவ்வேளையிலும் போதியளவிற்கு பொருளியல்நிலமை தொடர்பான செய்திகளைத் தருபவையாக அமையவில்லை. ஆக கி.பி. 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகட் குரிய போர்த்துக்கீச ஆவணங்களிலேயே கோட்டை இராசதானியின் உற்பத்திமுறை, விலைகள் தொடர்பான குறிப்புக்கள் இடம்பெற்றுள்ள மையைக் காணலாம். அவைகூட போர்த்துக்கீச அரசாங்கத்தினது வருமான வரிமுறை தொடர்பாகவும், போர்த்துக்கீச ஆவணங்களில் அவை பதியப் பட்ட வகையிலேயும் தான் கோட்டையரசின் பொருளியல் வளம் பற்றிய செய்திகள் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. ஆகவே அவர் களது ஆவணக்குறிப்பில் கறுவா, பாக்கு, முத்து என்பனவும், மிகவும் அருமையாகவே அரிசி பற்றி குறிப்புக்களும் இடம் பெற்றுள்ளமையைக் காணலாம். கோட்டைப் பேரரசில் வாழ்ந்த மக்களுள் பெரும்பாலானோர் நெல் அரிசியினையே பிரதான உணவுப்பொருளாக பயன்படுத்தினர் எனவும் அவர்களது குறிப்பில் இடம்பெற்றுள்ளது. மிக அண்மைக்காலம் வரைக்கும் வரலாற்றாசிரியர்க்கு அதிபின்னோக்கிய பொருளியல் தகவல்களைக் கொண்ட ஆவணங்களாகக் கிடைத்திருப்பவை கி.பி. 17ஆம் நூற்றாண்டிற்குரிய இலங்கை பற்றிய தகவல்களாகவே இருப்பதினால் அவற்றின் அடிப்படையிலிருந்து நாம் எவ்வாறு கி.பி. 16ஆம்நூற்றாண்டுத் தொடக்கத்திற்குரிய கோட்டையின் ப்ொருளியல் நிலை பற்றிய தகவல் களைப் பெற்றுக் கொள்வது?"
எவ்வாறெனினும் கோட்டை இராசதானி பற்றிய, சிறப்பாக அதன் பொருளியல் வளம் தொடர்பான தகவல்களை 9ஆம் திகதிNovember, 1599 ஆம் ஆண்டு முத்திரை பொறிக்கப்பட்ட நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட போர்த்துக்கீச ஆட்சியாளரின் வருமானப் பதிவு அறிக்கை" தொடர்பான ஒர் ஆவணம் எமக்கு வரப்பிரசாதமாக அமைந் துள்ளது. கோட்டை அரசில் போர்த்துக்கீசர் அறிமுகப்படுத்திய பொருளி யல் சீர்திருத்தங்கள் மாத்திரமன்றி அதற்கும் முன்னரேயே அக்கோட்டை யரசில் சிங்கள மன்னர் மேற்கொண்டிருந்த வருமானவரி முறைகளையும் எமக்கு எடுத்துக்காட்டுவதாக அவ்வருமானப் பதிவு அறிக்கை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கி. பி. 16ஆம் நூற்றாண்டின்
40

நடுப்பகுதியில் சிங்கள மக்கள் பின்பற்றியிருந்த வரி - வருமானமுறைகளைத் தழுவியே இவ்வருமானப் பதிவு அறிக்கை உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கீசர் காலத்திற்கு முன்னும், பின்னும் கோட்டையரசில் நிலவியிருந்திருக்கக் கூடிய பொருளியல்வளம், வருமானம், குடித்தொகை கிராமங்களின் எண்ணிக்கை, பிரதான பயிர்ச் செய்கை போன்றவற்றை இவ்வருமானப் பதிவு அறிக்கை வாயிலாகவே இங்கு பின்வருமாறு கொடுக்கப்படுகிறது.
அட்டவணை: 1 கிராமங்களினதும் குடியிருப்புக்களதும் பரவல்
(மூலம் : கோட்டை தோம்பு - 1599 ஆம் ஆண்டு)
கோறளை கிராமங்களின் கோறளை கிராமங்களின் (பெயர்) எண்ணிக்கை (பெயர்) எண்ணிக்கை
சல்பிட்டி l, 86 நவதுன் 200 றைகம் 300 அட்டகலன் 120 பஸ்தூன் 300 குறுவித்தை 74 வல்லல்லா விட்டி 60 அலுத்தமை 32 குக்குலு 45 பனவால் 42 மொறவாக்க 120 ஹன்டபன்குன்னு 60 சியனே 300 பெலிகால் 300 கேவாகம் 100 தேடுகம்பொளை 60 அலுற்குறு 100 உடப்பொல 80 பிற்றிகல் 60 ஹலு 360 ஹபிற்றிகம் 60 ஏழு கோறளைகள் கட்டுகம்பொளை 360 குருநாகல் 100 மஹ"ல் 360 தேவமேதி 185 தொலஸ்தாஸ் ஹிரியால 100 (வல்லவாய் . மதுரை 90 llls TGN) உடுகொடை 40 LT66) அஸ்கிரிய . 30 ஊவா) 500 வில்லை 110 ஐந்து கோறளைகள்: நான்கு கோறளைகள்: தேனவாக்கை 42 கினிகொடை 120 ஏற்றவா 45 கல்பொத்தை 130 மேற்றவா 54 L10 [5ĩT(950! 50 உக்கல்கல்தோட்டம் 32 மாயாதுறு 30
கொலன்னாவை 45
47

Page 24
qi-Tupnoj ĝi 199ụ19orgiou-Trio
ocoșuriolog spilasorg g'alh qiou-īrio
ollasorĝiĝajh qow-ırış
6 I9 6g000 88 I000 £8 I1,991909ajugogyff? 00 I 89009 Z000 9qTourtsog) 9Ç I 68°000 8I000 ĢI1ņodoo---Tho 099 € I000 ĢI000 ZI1ņos@vegi | 382 933000 0/3000 08 Iayou@ayodeuolo) į 003 008000 923·000 Þ8Iqg , aīĒJI 080 #89000 g3000 031909 url(c)quo@-To g0I 0g000 0I000 8quos@jąjūTaĚ 0ỹ9 68000 ÇI000 3. Iqoaes@jąjį57 98/, 83. I000 03000 03IŪŌąjī£ĒRĢ> 893 89I000 Q3000 Ģ3109@rmo 03ç ÇZ000 £I· 000 0Iospurtoaju.Jalg) 988 6 jo000 8000 9േ £8 I off000 Z000 9《 tr니M3T83 06g II?000 g/000 0/1,9±1,909ajuogođī)ro †† I 9†000 8I000 ĢI-ba-Tso uQoqoqoqofte 00A. Zjo000 8I000 ĢIqıs@ụørı 68.g 68000 go000 03quormaĵoro (@giogn oog)?-s) sueue I(2691 - 1891) sueue H(g@rią fɔ loạiff=91) qi-Tign@gi asulo içoorạngắềuntősueue) qi-T-Ismoŝigi1.9cc9aÌuosog)
(soudoorĝiĝaïH Jio@ash) quœuqis)re @-Tugių9-a 19930nm-Two-Lugg) II : logogoro-1-algo
* �

jo 69 go0 £
0ÇI 9ỳ 92 jo gI ZIŤ 603 083 63 Þ#3 oso 0ỷg £ † 23, 9 I 0ỹZ Z83
000 £03 I
000 £ 000 £3 000 91 000 g. 3 000 ĢI 000 ZI 000 8I 0000ぬ
00Ç Þ96
000 £
000 03 000 g I 00g 3
000 o I 000 0I 000 ĢI 000 gjo
deurl(o)--æ 1909rīqī£ĻĒĢto) q9oĢ909/TC) I@@ışørT-uşoaīē qpfølgøura qofsētāąją= gĒwo@lsef@@ 1,9±1909ajugog) @ışøugi
43

Page 25
009 20ț¢ 000 g. I&ά Lif(91091.js"; 000 09000 09ά1@gifte@lo) 000 09000 03’000 09quaeqofte 000 0Ꭽ00092000 ĢI(golo 000 g Iό000 g I--Two-Ziljoog)gồ? 000 £I000 9 ー 〜ー〜ー〜000 Zqī£đì)No 000 9άċ1909f9@rīg) 000 goάč1119.911€gƆƐUT άčaiges@@@ (000 03άčGjeos@ju.goura 000 0 ÞĉάFiqiñDuolo) 000 09άάHqīđìDuo@ygį 000 38003 Z.000 goaoqiqizo 000 gjoά&qırıljao 5 (sueue})ưirts oặuqis)(sureưeJ),yrtodos(sueues) y roofDa’wers/orgioque@grgı/ aswor? (sueue)) qi-T-IĘnggi
KK0LLLL0LLLL0LLLLLL0SMLLLLLL 00LLSLLLLLS00 LLL00SLLLSL0L KKH LLLLLLLL YSLLLLLSKY
* *

- - -|-og/000 £91909 uri(c)qī£(?)-iso UOJLJO IŢeq Ogg I | -9760 [00£ 8qi&tī£TaĚ 3unuu go-●- UOJI 0003 || –-#ZI00g gjoqøobĩUT so3uỊd 9I
soầuļd ggIĘjoĒģ) 000 00ỹ | 0g I88003006 93a3% IĘ1@g) 000 £9 | -#ZIߘ? Ioựgourmae - - -– ZţI009 0 [spurteaÌLTIG) >- - -8IᏮᎭ00 I 3IỆ@puo(o) IĘjoĒģ) 000 0ɛ | g9I6I00I099 g-HT니T여789 SheUu 6 I | –-3I800/ 8I1,9±1,909@usog) đī)ro - - -ZI32008 03-67-TŲermudellerte - | 00808I0ỹ300/ Ç1ņølsẽayeri ~ | 663Ģ99ÇI00Þ 83qī£īnajoo Sneu pəI 09 | 009 I02996.g090 #31,9±1,909@susog) @ışøugi
Suureure rocooająĵon©usya*2(seses) kouskoqogio)"1909ajuosog) -/ quosvgi@rts
qúrase rms@@rī
LLLLLS0LT LLLLLLLJL KSKLLTL S LLLLLL00SLL SLLLLLLLL00 TTLLLLLLS0LL L LLLLLSY
45

Page 26
Q909@@r@@) 000 0ț¢
Á 1333e['00g
199œurn og
o@rșjoto) 000I @Ęjošo) 000 0g I əəų3 000 I UOJI OĦŻg səņoulueuu OIz SƏXe 09 I
əəų30062 |(109@@ 00g 109009 urn 09
69 † 3.
08° GOI
foo? 2
8ሯ፩ 99 I go 32
6;
3GI
£6
I8
gjo0 9
8II 38? IZQ, IZ9 88
39
30I
68’I 993
89 88° 3ZZ
0/4
093 Z89
000 6 jo 099 o 008, 3 006 6 008 3 008 g 009 003 ff
00ė 61 00Z Z 000 0/, I
006 9 006I 000 go
000 £3
答复
qīqī£@abhi nourilo)-T-æ qøura(c)quasētos@to) о94ед9по) I@@ışør-T-uşoaīĒ qørtølgora qnaīē@TÊho qĒ09@lsef@@
1,9±1909ajuogo Nossão quouro@ēg) fČíēcīē
1ņodes?--Ziko 1ços@toqİ ayou@ayoudoto) 11@to)
gേ7
46

கோட்டை இராசதானியின் வருமான ஈட்டம் அல்லது நிதியின் அளவு Fanamias என்ற போர்த்துக்கேய பணப்பெறுமதியில் கொடுக்கப்பட்டுள்ள மையால் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களின் அளவுப் பெறுமதிய்ை Fanams இல் கணிப்பதற்காக பின்வரும் வாய்பாட்டினை C.R. de சில்வா பின்வருமாறு கொடுத்துள்ளார்.
1 Xerafin / Pardao = 3 Larins
1 Larin = 6 Frnams
கி.பி. 17ஆம் நூற்றாண்டிலிருந்து Fanam த்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டமையால் பின்வரும் அளவீடு கைக்கொள்ளப்பட்டது.
1 Larin = 20 Fanams
1 Elephant = 500 Xerafins
வருடாந்த வருமானம் இரத்தினக்கல் ஊடாகப் பெற்றுக்கொள்ளப் Lu'L GOpanu = 3000 Fanam
1 Yala GB56iv = 20 Xerafins
1 Amuna Luntijg5 = 4Xerafins
1 Measure LEast (5 = 1 Fanam
15 தேங்காய்கள் = 1 Fanam
அமுனம் என்ற அளவீட்டு வழக்கு இன்றும் தமிழர் மரபில் இருந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பாக நெல் தானியத்தை அளவீடு செய்வதற்காக இம்முறை கைக்கொள்ளப்படுவதனைக் காணலாம்.
1 அமுனம் = 6 புசல்கள்
10 புசல்கள் = 60 கொத்து
கபடாகம் என அழைக்கப்படும் ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக எவ்வளவு மக்கள் வாழ்ந்திருப்பர் என்ற விடயமானது இன்னும் ஆய்வாளர் களுக்கு புலப்படாத அம்சமாகவே உள்ளது. ஒவ்வொரு கிராமத்தின் அளவு, விஸ்தீரணம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது கோட்டை இராச்சியத்திலிருக்கக்கூடிய கிராமங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையே மிகப் பெரிய வேறுபாட்டினை விஸ்தீரணத்தின் அடிப் படையில் கொண்டிருந்த முறையினைக் கண்டு கொள்ள முடிந்தது. 1599 ஆம் ஆண்டுப்பதிவில் மஹாபெற்றிகாமம் என்ற கிராமமும் தோரண கொடை என்ற கிராமமும் தலா அறுபது வீடுகளை மாத்திரம் கொண்டிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நேரம் நுகாமம் என்ற
47

Page 27
கிராமத்தில் 15 இல்லங்கள் மாத்திரம் காணப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. விநனுகோறளையில் உள்ள கினிதும என்ற கிராமத்தில் இருபது தொடக்கம் முப்பது குடும்பங்கள் காணப்பட்டன. ஐந்து கோறளையில் உள்ள பிட்டவால, கலுப்பெத்தில்ல, வஹரக் கொடை ஆகிய கிராமங்களில் ஒவ்வொன்றிலும் ஐந்து குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்திருந்தன. ஆனால் இதே நேரத்தில் கப்பிட்டிகம் கோறளையில் உள்ள பொக்கலகாம என்ற கிராமத்தில் 300க்கு மேற்பட்ட வீடுகள் காணப்பட்டன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் மத்தியகாலப்பரப்பிலிருந்து 17ஆம் நூற்றாண்டின் மத்தியகாலப்பகுதி வரைக்கும் உள்ள காலப்பகுதியில் கோட்டேயிலிருந்து உடரட்டவரையிலுமான பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் ஒருவகையான அசைவியக்கத்தினைக் கொண்டிருந்தனர். இவர்களுள் சிலர் சீதாவாக்கையின் இடைப்பட்ட பிரதேசத்தில் சென்று வாழ்ந்து வந்தனர். ஆனால் போர்த்துக்கீசர் கோட்டையரசின் மீதான தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியவுடன் அம்மக்கள் கண்டியரசனுடைய ஆதிக்கப்பரப்பினுள் சென்று வாழத் தொடங்கிவிட்டிருந்தனர். ஆதலால் கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குரிய காலப்பகுதிக் கோட்டையரசின் சனத்தொகையை கணிக்கும்போது அங்கு அண்ணளவான பெறுமானம் காணப்பட்டமையை அவதானிக்கலாம். எது எவ்வாறெனினும் கோட்டை இராச்சியத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகையானது கி.பி. 1500 அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 70 தொடக்கம் 80 பேர் வரையாவது இருந்திருக்க முடியும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கீட்டின்படிக்கு கோட்டை இராசதானியில் மொத்தமாக 400,000 இருந்து 450,000 மக்கள் எண்ணிக்கை இருந்திருக்க வேண்டும் என அனுமானிக்க முடிகிறது. கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்த காலத்தில் கோட்டை இராசதானியில் இருந்த சனத்தொகை எண்ணிக்கையில் பெருவீழ்ச்சி கண்டிருந்த நிலைமையை, அங்கிருந்து கைவிடப்பட்டுச் சென்ற நெல்வயற்பரப்பினைக் காணும்போது தெளிவாகின்றது. அதாவது போர்த்துக்கீசர் கோட்டை மீதான தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தியவுடன் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் நெற்பயிர்ச் செய்கைக்குரிய வயற்பரப்புக்களை கைவிட்டு கண்டி இராச்சியத்தின் எல்லைக்குள் சென்றுவிட்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இக்காலகட்டத்தில் கோட்டை இராசதானியில் 250,000 இலிருந்து 300,000 எண்ணிக்கையைக் கொண்ட மக்களே வாழ்ந்திருப்பர் எனவும் கொள்ளப்படுகிறது. போர்த்துக்கேயரின் இறுதிக்காலக் கோட்டை இராச்சியத்தில் கத்தோலிக்க மதத்தை தழுவி
48

வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையானது மேற்குறிப்பிட்ட கருத்தினைநன்கு உறுதிப்படுத்தி நிற்கின்றது எனலாம்.
கோட்டை இராச்சியத்தில் வாழ்ந்த மக்களுள் பெரும்பாலானவர்கள் பயிர்ச்செய்கையைத் தமது ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டிருந் தமையைக் காணலாம். இதனாலேதான் அச்சமூகத்தின் பெரும்பாலான மக்கட்தொகையினரை கொயிகம சாதியினராக (Caltivaters) கோட்டை இராசதானியில் காணமுடிந்தது. இவர்களைவிட ரஜகயோ (Washermen), G5ITL6üGa) (Herdsmen), GlLupa Gum (Tom - Tom beaters), LL –56Um Gurt (Potters), pital airg56irGaoTIT (Smiths), alpa (Cinnamon Peelers) -95u சாதியினரும் அங்கு வாழ்ந்தனர். இச்சாதியினர் கோட்டை இராசதானியி லுள்ள சிறுச்சிறு கிராமங்களில் தத்தமது மரபுவழித் தொடர்ச்சியான ஜீவனோபாயத்திற்கான தொழில்முறைகளை பயிர்ச்செய்கையைச்சாராது செய்து வந்த மக்கள் கூட்டத்தினைச் சேர்ந்தவராவர்.
கோட்டை இராச்சியத்தில் வாழ்ந்த மக்களின் மிகப் பிரதான பயிராக விளங்கியது அம்மக்களின் நிலையான உணவுத்தானியமாக விளங்கிய நெல் ஆகும். கோட்டை இராசதானிக்குட்பட்ட பிரதேசங்களில் நெல் உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் இடத்திற்கிடம் மாறுபட்டிருந்தது. காலிக்கும் நீர்கொழும்பிற்கும் இடைப்பட்ட பிராந்தியத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்து வந்தமையைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் அதிக நெல் விளைச்சல் கிடைத்து வந்தது. ஆனால் இக்குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு தெற்கிலும், வடக்கிலும் உள்ள பிரதேசங்களில் மழை வீழ்ச்சிக் காலங்களிலும் பெறப்படும் மழைநீரைச் சேகரித்து வைத்து நீர்ப்பாசனம் மூலமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரப்பட்டது. கோட்டை இராசதானியின் தென்பிரதேசத்தில் சிறுச் சிறு நீர்ப்பாசனக் குளங்களின் உதவியுடனேயே நெற்செய்கை மேற்கொள்ளப்ப்ட்டிருக்க, போர்த்துக்கீசஆவணங்கள் அவற்றை இராச்சியத்தின் மத்திய பகுதிக்குரிய தாகவும் மேல் மத்திய பிரதேசத்திற்குரியதாகவும் எடுத்துக்காட்டுவதோடு, கி.பி. 16ஆம்நூற்றாண்டிற்குரிய பெரிய நீர்ப்பாசனநிறுவனங்களை சிங்கள மக்கள் அங்கு அமைத்திருந்தனர் எனவும் குறிப்பிடுவதனைக் காணலாம்.
கோட்டை இராசதானியின் பலபகுதிகளிலும் வருடாந்தம் ஒரு முறை மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்க, தோம்புகளில் அந்நிகழ்வு (1599) வருடத்தில் இருமுறை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது. போர்த்துக்கீச ஆவணங் களில் கிராம விவசாயிகளால் எருமைகளையும், மந்தைகளையும் விவசாயத் திற்கு பயன்படுத்தப்பட்ட முறை எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஆனால்
49

Page 28
இங்கு நெல்லின் விளைச்சல் பொதுவாக உடரட்ட போன்ற மலைச் சாரல் நிலங்களினூடான உற்பத்தியுடன் ஒப்பிடும் பொழுது மிகமிகக் குறைவு என்பதனைக் காணமுடிந்தது.
கோட்டை இராசதானியின் உற்பத்தி வருமானமானது இடத்துக் கிடம், கிராமத்திற்கு கிராமம் பெரிதும் மாறுபட்டிருந்தது. இவ்வருமான ஈட்டத்தின் விகிதாசாரமானது பயிர்ச்செய்கைக்குட்படுத்தப்பட்ட பயிர்களின் எண்ணிக்கையிலேயே தங்கியிருந்தது. அது மட்டுமன்றி எவ்வகையான நிலப்பரப்பில் அப்பயிர்கள் செய்கைபண்ணப்பட்டன என்பதனைப் பொறுத்துமே வருமான ஈட்டத்தின் அதிகரிப்பு வேறுபாடு காணப்பட்டது. கோட்டை இராசதானியில் வாழ்ந்த ஒரு விவசாயியின் வருமானத் தேறலானது அவனது பயிர்ச்செய்கைக்குரிய நிலத்தின் மூன்று பிரதான வகையைச் சேர்ந்தே காணப்பட்டது. அவையாவன: 1. இராஜகாரியத்திற்கென வழங்கப்பட்ட நிலம், 2. ஒற்று(Otu), 3. அண்டே(Ande) என்பவையே அவையாகும். சேவைக்கென வழங்கப்பட்ட நிலத்திலிருந்து பெறப்பட்ட வருமானத் தேறலானது கோட்டையரசனின் திறைசேரியைச் சென்றடைந்தது. இராசகாரியத்திற்காக வழங்கப்பட்ட நிலங்களுடான உற்பத்தி நடவடிக் கைகளானவை உடனுக்குடன் அந்நிலத்தை கையாண்ட விவசாயி யிடமிருந்து அறவீடு செய்யப்பட்டது. இத்தகைய நிலங்களில் வாழ்ந்த விவசாயிகள் வருடம் முழுவதிலும் தாம் உற்பத்தி செய்தபொருள் ஈட்டத் தினை கோட்டையரசின் திறைசேரிக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. அந்நிலத்தை எவ்வளவு காலத்திற்கு தமது ஜீவனோபாயத் திற்காகப் பயன்படுத்த முடியுமோ அக்காலப்பகுதி வரையும் அவ்விவசாயி அந்நிலத்தினூடான வருமான ஈட்டத்தினை முழுமையாக அரசனுக்கோ அல்லது கிராம நிலதாரிக்கோ கையளிக்கவேண்டியிருந்த ஒரு நிர்ப்பந்த நிலை காணப்பட்டது.
ஏனைய இருவகையான நிலஉற்பத்தி உறவுமுறைகளானவை ஒரு விவசாயிக்கு மிகக் குறைந்தளவிலான வருமான ஈட்டத்தினை வழங்கக் கூடியவையாகக் காணப்பட்டன. ஒற்று" என்றழைக்கப்பட்ட நில உறவு நிலையானது 16ஆம் நூற்றாண்டுக் கோட்டை இராச்சியத்தில் இருந்த கிராம நிலதாரிக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டியிருந்த தானியத் தின் அளவினைக் குறிப்பிட்டு நின்றது. வயற்பரப்பில் விதைக்கப்பட்ட நெல்மணிகளின் அதேயளவினை, விளைச்சலின் பின் அறுவடையான வுடனே அக்கிராம நிலதாரிக்கு அக்குடியானவனால் வழங்க வேண்டி யிருந்தது. (ஒற்றி என அழைக்கப்பட்ட அழைக்கப்படும் ஒருவகை நில
50

உரிமமானது யாழ்ப்பாணத்திலும் இற்றைவரைக்கும் நிலவிவருவதனைக் காணமுடிகிறது. இதன்படி நிலச்சொந்தக்காரனிடமிருந்து ஒற்றியாகக் கொடுக்கப்பட்ட நிலத்திலிருந்துவரும் விளைச்சலின், முழுமையான பாகம் இல்லாதுவிடினும், ஒரு குறிப்பிட்ட பங்கு அந்நிலச் சொந்தக்காரனுக்கு உற்பத்தியாளனினால் 'வாரமாக" வழங்கவேண்டியிருந்த முறையைக் குறிப்பிடுவதாக நிலவி வருவதனைக் காணலாம்.)
அன்டே என்ற முறைமையிலமைந்த நிலத்தின் மீதான உற்பத்தியுறவு நிலையானது ஒரு விவசாயிக்கு மிகக்கடினமான வருமான ஈட்டத் தினையே பெற்றுக்கொடுப்பதாகக் காணப்பட்டது. இதன் படி அறுவடைக் காலத்தின்போது தானியங்களைச் சேகரிக்கும் முறையில் ஒரு சிறிய பங்கு மட்டும் அந்நிலத்திற்குரிய காவற்கொட்டகைக்கு அருகில் அறுவடை செய்யப்படாமல் விடப்படுவது அப்பயிரை உற்பத்தி செய்த ஏழைக்குடியானவனுக்குரியதாகக் கருதப்பட்டது. மிகுதி யாகக் காணப்பட்ட உற்பத்தியிலிருந்து விதைமுதல்" (அஸ்வத்தும்மா) எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய பாகம் சமமாக கிராம நிலதாரிக்கும், நிலத்தின் உற்பத்தியாளனுக்குமிடையே பங்கிடப்பட்டது.
கோட்டையில் நெல் உற்பத்தியுடன் பாசிப்பயறு, இஞ்சி, குரக்கன் ஆகிய வரஸ்வலயத் தானியங்களும் பயிரிடப்பட்டன. இவ்வகையான வரள்நிலத் தானியங்கள் சேனைப் பயிர்ச்செய்கை முறையில் கோட்டை யரசின் வடக்கு, தெற்குப் பிராந்தியங்களிலேயே மேற்கொள்ளப்பட்டிருந் தன. பிட்டிகல் கோறளையில் காணப்பட்ட 16 கிராமங்களுள் மூன்று கிராமங்கள் சேனைப் பயிர்ச்செய்கைமுறையில் விளைவிக்கப்பட்டபயறு, குரக்கன் போன்ற தானியங்கள் வருடத்திற்கு 43 அமுனங்களாக அமைந்த தன்மையை போர்த்துக்கீசஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன. கோட்டையர சில் விளங்கியதாகக் கூறப்படும் மூன்று கிராமங்களான் மெட்டி கொட்டுவ பலஹல, ஜகியன்ன ஆகியவை அன்டு (undu), மங்(mung), தல(tala) உற்பத்தியில் காணப்பட்டிருந்த தன்மையை ஹ"ரசந்தேசய என்னும் நூல் குறிப்பிடுகின்றது.
கோட்டை இராசதானியில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய பிரதான உணவுடன் கித்துள், பலா (ஈரப்பலா) போன்ற தாவரங்களிலிருந்து பெறப் படும் காய், பழங்களையும், (மதுபானங்களையும்) பயன்படுத்தியிருந்தனர் என அறியமுடிகிறது. ஈரப்பலா கோட்டை மக்களின் உணவு முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பங்கினைப் பெற்றிருந்தது. மிகவும் மலிவானதும் அதிகளவிலானதுமான உணவைத் தயாரிக்க ஈரப்பலா உதவியது. கி.பி. 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கீசர் தமது

Page 29
கப்பல்கட்டும் தொழிலுக்கும், மரத்தளபாடக் கைத்தொழிலுக்குமாக பலாமரங்களை அதிகளவில் வெட்ட முற்பட்ட சமயங்களில் எல்லாம் கோட்டை மக்களின் பாரிய எதிர்ப்பினையும் சந்திக்க வேண்டி நேரிட்டது. கித்துள் மரத்தின் உபயோகமானது இரு மார்க்கங்களில் கோட்டையரசில் அமைந்து காணப்பட்டது. ஒன்று போதையைத் தருகின்ற மதுபானத்தை வழங்கும் வேளையில் இரண்டாவதான அது இனிப்புக் கட்டியை (பனங்கட்டியை ஒத்த வகையில்) வெல்ல உற்பத்திக்கும் பெருமளவிற்கு உதவியது. பனவால் கோறளையிலுள்ள தெரணியாகலக் கிராமத்தில் ஏராளமாக கித்துள் வெல்லக்கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வருடத்திலும் 500 Balls கறுத்தவெல்லக்கட்டியை இக்கபடாகக் கிராமமான தெரணியாகலக் கிராமம் அரசாங்கத் திறைசேரிக்கு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டையரசில் பல்வேறு வகைப்பட்ட காய்கறி, பழவகையுற்பத்தி யிலும் மக்கள் ஈடுபட்டிருந்தனர். போர்த்துக்கீச வரலாற்றாசிரியரான கஸ்தன்கெடா (Castanheda) என்பவர்தான் மிகவும் இனிமையான தோடம் பழங்களைச் சுவைத்துச் சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மாம்பழம், எலுமிச்சை, பைன் அப்பிள் போன்றனவும் கோட்டை இராசதானியில் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்தமையை போர்த்துக்கீச வரலாற்றாசிரியர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக இப்பழமரச் செய்கையின் விரிவான பின்னணியை கோட்டை ராஜதானி பொறுத்து அறிய முடியாதுள்ளது. பெலிகல் கோறளையில் உள்ள தெமட்டபிட்டிய என்ற கிராமத்து மக்கள் வீட்டுத்தோட்ட முறையில் காய்கறிச் செய்கையில் ஈடுபட்டிருந்த தகவலை போர்த்துக்கீச ஆவணம் குறிப்பிட்டுள்ளது. இக்கிராமத்திலுள்ள 16 குடும்பங்கள் 1614ஆம் ஆண்டில் இரண்டு அமுனம் காய்கறிகளை (4 லறின்ஸ் பெறுமதியானவை) அக்கிராமத்து நிலதாரிக்கு வழங்கி யிருந்தனர்.
கோட்டையரசின் பொருளியல் வளத்தில் இன்னொரு சிறப்பு தொழிலாக விளங்கிய அம்சமாகக் காணப்பட்டது பாற்பண்ணைத் தொழிலாகும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கோட்டையரசில் மந்தை வளர்ப்புத்தொழில் தனித்துவமானதாக விளங்கியிருந்தது. பால் உற்பத்திக் காகவும், வயற்பரப்புத் தொழிலுக்காகவும் வண்டியிழுப்பதற்காகவுமே மாடுகளையும், எருமைகளையும் மக்கள் வளர்த்தனர். போர்த்துக்கீச ஆவணங்களில் இவ்வாறான செய்திக் குறிப்புக்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்காவிட்டாலும், சிங்கள மொழிமூலமான இலக்கியங்களிலும்,
52

சந்தேசய நூல்களிலுமே அவை சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சாதாரண விவசாயி ஒருவன் சொந்தமாக மந்தைகளைக் கொண்டிருந்ததற் கான சான்றுகள் மிக அரிதாகவே உள்ளன. அதே நேரத்தில் எருதுகளை கொள்வனவு செய்வதற்கான சக்தியும் அவ்விவசாயியினது உழைப்புத் திறனுக்கு அப்பாற்பட்டதாகவே காணப்பட்டது. ஆனால் கோட்டை யரசில் ஒர் எருது 4 லறைன்ஸ் பெறுமதி மிக்கதாகக் கணிக்கப்பட்டிருந்த மையை போர்த்துக்கீச ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எவ்வாறெனினும் கோட்டையரசில் மந்தை மேய்த்தல் - மந்தை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த தனித்துவமான குழுமத்தினை கோபல்லோ (Gopalo) என அழைக்கப்பட்டிருந்த தன்மையினைக் காண்கின்றோம். கோபல்லோ என்றழைக்கப்பட்ட இச்சாதியினர் மன்னனுக்கு எருத்துமாடுகளை வழங்குவதற்கும், கோட்டையரசில் உணவு வகைகளை இடத்திற்கிடம் ஏற்றிச் சென்று கையளிப்பதற்கும் கடமைப்பட்ட வர்களாகக் காணப்பட்டனர். கோட்டையரசில் கினிகொடகோறளை யில் உள்ள மண்டலகாம என்ற கிராமத்து கோபல்லோ மக்கள் அரசனுடைய சேவைக்காக 400 எருதுகளை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபல்லோ சாதியினர் மன்னனால் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட புற்சமவெளிகளிலேயே மந்தைகளுடன் வாழ்ந்தனர். கிரிபட்டி (Kiri-Patti) என்றழைக்கப்பட்ட மந்தைகளின் ஒரு தொகுதி மன்னனுடைய பாற்தேவைகளை நிறைவு செய்வதற்காக தனித்துவமான வகையில் வளர்க்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டது. கோட்டையரசில் உள்ள அட்டகலன் கோறளையில் ஆறு கிரி-பட்டி மந்தைகள் பராமரிக்கப் பட்டு, நாளாந்தம் 750 அளவு கொண்ட பால் அக்கிராமத்துகபடாகத்திற்கு வழங்கப்பட்டு வந்தமையைக் கண்டு கொள்ள முடிந்தது.
கி.பி. 16ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கோட்டையரசில் காணப்பட்ட மற்றொரு பிரதானமான பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை வரம்பிற்குள் காணப்பட்ட பொருளாதார வளமாக தெங்கு உற்பத்தி காணப்பட்டது. கலாநிதி T. அபயசிங்கா தனது நூலில் கோட்டையரசில் கி.பி. 17ஆம்நூற்றாண்டாரம்பத்தில் காணப்பட்டிருந்த பொருளாதார வளம்பற்றிக் குறிப்பிடும் போது கடற்கரையோரமாக மாதம்பையிலிருந்து வெலிகாம வரையுள்ள பரப்பில் தெங்கு உற்பத்தியே முதற்தர பொருளியல் ஈட்டத்திற்குரிய பயிராகக் காணப்பட்டது எனவும் குறிப்பிடுகின்றார். இதே நிலைதான் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்திலும் காணப்பட்டிருந்தது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோட்டையரசர்கள் மிகவும்
53

Page 30
பரந்தடிப்படையில் தென்னந் தோட்டங்களைத் தமது உடமையாகக் கொண்டிருந்தனர். சீதாவாக்கை மன்னனான இராஜசிங்கன் (1581 - 1592) மூன்று மிகப்பெரிய தென்னந்தோட்ட வளாகத்தினைக் கொண்டிருந் தான் என்றும், ஒன்று பனவால் கோறளையிலும் மிகுதி இரண்டும் பாணந்துறைத் தென்பகுதியில் கடற்கரையோரமாகவும் அமைந்து காணப்பட்டது, 1599இல் பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம் இங்கு மொத்தமாக 90,000 தென்னைகள் காணப்பட்டிருந்தன என்பதும், இம் மூன்று தென்னந்தோட்ட வளாகமும் சேர்ந்து 220 ஸெராவைன்ஸ் (Xeratins) பரப்பினைக் கொண்டும் காணப்பட்டது என்பது தெளிவாகிறது. இதற்கும் மேலாக கோட்டையரசானது தனிப்பட்டோரிடமிருந்தும் தெங்கு உற்பத்திப் பொருட்களை வருடாவருடம் வருமான ஈட்டமாகப் பெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கோட்டை இராசதானியில் பொல் அய என்றழைக்கப்பட்ட வரிமுறை இருந்து வந்தமையை T அபயசிங்கா எடுத்துக்காட்டுகின்றார், ஒவ்வொரு 10 தென்ன மரங்களுக்கும் வருடாந்தம் ஒரு பணம் (Panam பணம்?) வரியாகச் செலுத்தப்பட்டது. இது விதிவிலக்காக அமைந்த வரிமுறையாகும். ஆனால் மன்னனால் தென்னை மரங்களுடனான நிலத்தானம் வழங்கப் பட்டிருப்பின் அங்கிருந்து சேகரிக்கப்பட்ட வரிமுறை இருமடங்காகக் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கோட்டையரசில் உள்ள மாதம்பையில் ஒவ்வொரு மூன்று தேங்காய்களிலும் ஒரு தேங்காய் அக்கிராமத் தலைவனுக்கு எண்ணெய் வடிப்பதற்காக வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு நியதிக்கு மேலாக, அரசுக்கு மூன்றிலொரு பங்கு விளைச்சலினை வரியாக வழங்கப்பட்டு வந்த முறையையும் காண்கின் றோம். கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டுடனேயே கோட்டையரசில் எங்கும் ஒரே சீரான தெங்குப் பொருட்கள் மீதான வரிமுறை அமுல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு குடியானவன் தனது வாழ்க்ன்கக்கு அடிப்படையாகத் தேவைப் பட்ட வருமானத்தினையும் விடச் சற்று மேலதிகமான தொகையையே பொல் அய என்ற வரியாகச் செலுத்தியிருந்தான் என்பதனைச் சான்றுகள் காட்டுகின்றன. பாக்கு பெற்றிருந்த இடத்தினைப் போன்று தேங்காயானது பண்டமாற்று ஊடகமாகவோ அல்லது பிரதான, வாழ்க்கைக்குரிய வருமான ஈட்டமாகவோ விளங்கியிருக்கவில்லை. மறுவளமாக, தென்னைமரத்திலிருந்து உருவாக்கப்படும் உற்பத்திகள் விவசாயிகளது வாழ்விலும் பல்துறை பங்களிப்புக்களை வழங்கின. ஒருபுறமாக வீடு கட்டுவதற்கான சாதனங்களை தென்னை வழங்கியதோடு, உணவு,
S4

குடிபானம் போன்றவற்றையும் பெற்றுக் கொடுத்தது. அத்தோடு தென்னம் நாரிலிருந்து பின்னப்படும் கயிற்றிலிருந்து மீன்பிடி வலைகள், தூண்டில், நூல்கள், பாய்மரக் கட்டுக்களுக்கான பாரக்கயிறுகள் போன்றவற்றையும் உருவாக்குவதற்கு உதவின. அதாவது கடற்கரையோரம் நெடுகிலும் காணப்பட்ட மீன்பிடிக் கிராமங்களில் தென்னை அதிமுக்கிய மூலவள மாகக் கருதப்பட்ட ஒரு காலமாக இக்கோட்டை இராசதானிக் காலம் விளங்கியது. ஒட்டுமொத்தத்தில் கோட்டை இராசதானியில் ஆட்சி புரிந்தோர் தொடக்கம் கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாயிகள் வரைக்கும் தெங்கு வருமானம் தரும் ஒரு மூலமாக மாற்றம் பெற்றிருந்தது எனலாம். ஏற்றுமதி வியாபாரத்தில் கூட தேங்காய் ஒரு குறிப்பிட்டளவான பங்கினை வகித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டை இராச்சியத்தின் கடற்கரையோரப் பாகங்களில் தென்னைச் செய்கை முக்கிய இடம்பெற்ற அதேநேரத்தில் கோட்டை இராச்சியத்தின் உட்பாகங்களில் பாக்கு உற்பத்தியானது தனித்துவமான பொருளாதார மூலமாகவும் விளங்கியிருந்தது. இக்காலத்தில் பாக்கினை உட்கொள் கின்றவர்கள் மிகக் குறைவாக இங்கு காணப்பட்ட நிலையிலுமே பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் ஊடகமாக அது விளங்கக் காரணமாயிற்று. கோட்டை இராசதானியின் துறைமுகத்தினூடாகவே மேலதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட பாக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது. கோட்டை இராசதானியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாக்கின் அளவு தொடர்பாக சரியான குறிப்புக்கள் கிடைக்காவிடினும், 1599ஆம் ஆண்டில் குறிக்கப்பட்ட பதியப்பட்ட ஒரு தோம்புக்கணக்கின் பிரகாரம் காலித்துறையிலிருந்து 1600 அமுணம் பாக்கும், வெலிகமத்துறையிலிருந்து 1500 அமுணம் பாக்கும் ஏற்றுமதி யானது என்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது. இவ்வாறு மேலே குறிக்கப்பட்ட பாக்கு ஏற்றுமதியான தொகை குறித்த கால அளவுகளை இங்கு தரமுடியாவிட்டாலும், கண்டி நாட்டில் உற்பத்தியான பாக்கினது தொகையும் சேர்க்கப்பட்டே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் காணலாம். ஏனெனில் கண்டியரசில் உற்பத்தியான பாக்கு தென்மேற்கு நோக்கிய கோட்டையரசின் துறைமுகங்களினூடாகவே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த ஒரு வழமை கடைப்பிடிக்கப்பட்டு வந்தமையினாலாகும்.
பைராட் (Pyrard) என்ற போர்த்துக்கீசஆசிரியர் குறிப்பிடுவது போன்று
இக்காலத்தில் இலங்கை உட்பட இந்தியா முழுவதிலுமே பாக்கு உற்பத்தி பல்கிப்பெருகிக் காணப்பட்டது என்பதும், எல்லாத்துறைகளிலுமுள்ள வாணிபக்கலங்களில் பாக்கே பிரதான இடத்தினை நிறைத்திருந்தன
55

Page 31
என்பதும், பாக்கு வாணிபம் இக்காலத்தில் மிகவும் ஒழுங்குபடுத்தப்
பட்டிருந்த வியாபாரமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவாகின்றது.
ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகமாக இடத்துக்கிடம் அலைந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கோட்டையில் உப்பு,
சேலை, கருவாடு போன்றவற்றைக் கொடுத்துவிட்டு பாக்கினை கொள்வனவு செய்து கொண்டு சென்ற முறையைக்கூட இக்கட்டத்தில் காண முடிந்தது. இந்நிலையில் பாக்கு வியாபாரத்தின் மீதான சுங்கவரி இருவழிகளில் அமுல் நடத்தப்பட்டமையைக் காணலாம். ஒன்று:
துறைமுகத்தை நோக்கி வந்த பாக்கு வியாபாரிகள் தமது தொகுதியிலிருந்து 10 பங்கினை மன்னனுக்கு சுங்கவரியாக வழங்கவேண்டியிருந்தது.
இரண்டு: பாக்கினை ஏற்றுமதிக்காக துறைமுகங்களுக்கு கொண்டு
வந்தவர்கள் பாக்கின் ஒவ்வொரு அமுணத்திற்கும் நான்கு பணம் (Fanams) மேலதிகமாகச் செலுத்த வேண்டியிருந்தது. (கோட்டையரசின் துறைமுகங்கள் எல்லாவற்றிலுமே 07 பணம் = 01 லறின்ஸ் (Larins) என்ற முறையில் பணப் பரிமாற்றப் பெறுமதி ஒரேசீராக கையாளப்
பட்டிருந்தமையை போர்த்துக்கீச ஆவணங்களினூடாகக் கண்டு கொள்ள முடிகிறது. கோட்டையரசிற்கு இன்னொரு மார்க்கமாக பாக்கு வியாபார மானது மூலதன ஈட்டத்தினைப் பெற்றுக் கொடுத்திருந்தது. அதாவது
கொடிகபட்ட (Kotikabadda) என்று குறிப்பிடப்படும் நிதிக்குவையானது
கபாடக என்ற கிராமச் சேகரிப்பு வாயிலாக கிடைத்த வருமான ஈட்டத்
தினையே கொண்டிருந்தது. கோட்டையின் ஆதிக்கம் போர்த்துக்கீசர் கைக்கு கிடைத்த பின்னர் இம்முறையான வருமான ஈட்டம் முக்கியத்துவ
மற்றதாகத் தேய்ந்து சென்று மறைந்து விட்டது. ஆனால் அபேயசிங்கா குறிப்பிடுவது போன்று அம்முறையானது கோட்டையரசு உச்சநிலையில்
காணப்பட்டிருந்தபோது மிகவும் நன்றான வகையில் கோட்டையரசுக்கு
வருமான ஈட்டத்தினைப் பெற்றுக் கொடுத்திருந்தது. 1599ஆம் ஆண்டிற்
கூட இம்முறைமூலம் கோட்டையரசு 2234 அமுணம் பாக்கு விற்பனை மூலம் வருமானத்தை ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட அட்டவணைiv ஐப் பார்க்குக.)
கோட்டையரசு உச்ச நிலையில் செங்கோலோச்சிக் கொண்டிருந்த காலப்பரப்பில் தெங்கு, பாக்கு ஆகிய உற்பத்திகளைவிட கறுவா உற்பத்தியே மிகவும் பிரபல்யம் பெற்றதாகவும், செல்வாக்கு நிறைந்ததாகவும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டையை போர்த்துக்கீசர் வெற்றிகொள்வதற்கு முன்னரும் பின்னரும் கறுவா உற்பத்தி தொடர்பாக குறிப்பாக கறுவாப் பட்டையுரித்தல், கறுவா உற்பத்தியைச் சேகரித்தல், ஏற்றுமதி செய்தல், ஈட்டிய வருமானமும்,
56

அத்தொழிலுடன் தொடர்புபட்ட சாதியமைப்பு - ஒழுங்கு முறைபோன்ற விடயங்கள் தொடர்பாக மேலதிகமான தகவல்களைத் தற்போது பெற்றக்கொள்ள முடிந்துள்ளது. கோட்டையரசுகால கறுவா வியாபாரம், அதன் உற்பத்தி, அவ்வுற்பத்தியின் பின்னணியில் காணப்பட்ட சமூக உறவு நிலை போன்ற விடயங்கள் தொடர்பான வினாக்கள் பலவற்றிற்கு இன்னும் முழுமையான விடை கிடைக்காத ஒரு நிலை காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கி.பி. 16ஆம்நூற்றாண்டுக்கும் முன்னரிலிருந்து கறுவா வணிகம் அரசின் ஏகபோகவுரிமையாகக் காணப்பட்டதா? எவ்வாறு, எப்பொழுதிலிருந்து சாலகம சாதியினரின் சாதித்தொழிலாக கறுவாப்பட்டையுரித்தல் தொழில் உருவாகி வளர்ச்சி பெற்றது? சாலகமச் சாதியினர் அல்லாதவர்கள் இக்கறுவா வணிகம் ஊடாக கோட்டையரசில் எத்தகைய ஆதாயத்தை, ஊதியத்தை, நன்மைகளைப் பெற்றுக் கொண்டனர் என்பன போன்ற பல வினாக்கள் கோட்டையரசின் கறுவா உற்பத்தி தொடர்பாக எழுவதைக் காணலாம். இத்தகைய கேள்விகள் சிலவற்றிற்கு மிகச்சுருக்கமாக பதில் அளிப்பது மிகவும் கஷ்டமானதாகும். கோட்டையரசு காலக் கறுவா ஏற்றுமதி வியாபாரம் தொடர்பாகப் போதியளவு ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேலே எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பது கடினமே.
அருட்திரு குவெய்ரோஸ் அடிகளாரினதும், டூர்தே பர்போசா வினதும் குறிப்புக்களிலுள்ள விபரணங்களிலிருந்து பார்க்கும் போது கோட்டையரசின் தோற்ற காலத்திலிருந்தே கறுவாப்பட்டையுரித்தல் தொழிலும், அதன் மீதான வர்த்தகமும் அரசின் ஏகபோக உரிமையாகத் திகழ்ந்து வந்தமையை உணரலாம். பார்போசா தனது குறிப்பில் பின்வருமாறு தரும் தகவல் கோட்டையரசின் ஏகபோக உரிமையை கறுவா வியாபாரம் தொடர்பாக உறுதிப்படுத்துவதனைக் காணலாம்.
"ஒவ்வொரு வருடத்திலுமுள்ள குறிப்பிட்ட சில மாதங்களில் மன்னன் (கோட்டையரசன்) கறுவாப்பட்டையினை தாய்மரத்தி லிருந்து உரித்து எடுப்பதற்கும், உரித்து எடுத்தவற்றைத் தண்டு களாக வெட்டிக் கட்டுவதற்கும் ஆணைபிறப்பிக்கின்றான். பின்னர் மன்னனைத் தேடி, நாடிவரும் வியாபாரிகளுக்கே அவற்றை அவன் விற்றுவிடுகின்றான், அங்கு (கோட்டையரசில்) மன்னனைத் தவிர வேறு எவருமே கறுவா வியாபாரத்தினை மேற்கொள்ள (plg. Lungsl. • • • • • . ” Y−−•−−
குவேய்ரோஸினுடைய குறிப்புக்கள் யாவும் கோட்டையரசு
முற்றுப்பெற்று, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் வரையப் பட்டவையாகக் காணப்படுவதும் இங்கு நோக்கத்தக்கது போர்த்துக்கீச
57

Page 32
வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான வேர்ணாவ் லொப்ஸ் - டீ - கஸ்தென் கெடா என்பவர் (Fernao Lopes-deastenheda) குறிப்பிடுவதாவது தாழ் நிலத்திலுள்ள மக்கள் கறுவாப்பட்டையினை தாமாகவேயுரித்து, காயவைத்து, மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றார்கள் என்பதாகும். இவருடைய குறிப்பினை நோக்கும்போது அங்கு அரசின் ஏகபோகவுரிமை கறுவா வாணிகத்தில் இருந்திருக்கும் என்று கருதுவதற்கு இடமில்லாமல் போகின்றது. மற்றைய போர்த்துக்கீச ஆசிரியரான கஸ்பர் கொறியா (Gaspar Correa) என்பவர் குறிப்பிடும் போது கறுவா உற்பத்தியிலும், அதன் வாணிபத்திலும் மன்னன் பங்கு கொண்டிருந்த போதிலும், அங்கு மன்னனுடைய தனியுரிமை பேணப்பட்டிருக்கவில்லை எனவும், பொது மக்களும் அவ்வாணிபத்தில் பங்கு கொண்டிருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். மேற்கூறப்பட்ட வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களிலிருந்து பின்வரும் உண்மை நிலை கறுவா வாணிபம் தொடர்பாக எமக்குத் தெளிவாகின்றது.
அதாவது கறுவாப்பட்டை யுரித்தலிலும், அவற்றைக் காயவைத்து சேகரித்து ஒவ்வொரு குறிப்பிட்ட அளவுடைய சுருள் பந்தராகக் கட்டுவதிலும் ஈடுபட்டிருந்த ஏழைத்தொழிலாள மக்கள் தத்தமது வாழ்வுப் புலங்களையமைக்க உதவிய நிலச்சுவாந்தகாரர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையையுடைய கறுவாச் சுருள் பந்தர்களைக் கொடுக்க வேண்டியிருந்த ராஜகாரிய முறைக்குள் வாழ்ந்து கொண்டி ருந்தனர் என்பதும், பின்னர் மன்னனுடைய சார்பில் எழுதுவினைஞர்கள் நிலச்சுவாந்தர்களின் கடமையைச் சரியாகக் கணக்கிட்டு ஒவ்வொரு 100 கறுவாச் சுருள் பந்தர்களுக்கும் உரிய கொடுப்பனவுகளை வழங்கி, வருடாந்த கொடுப்பனவுகளைப் பதிவுசெய்து, நிறைவு செய்வதும், பிரத்தியேகமான முறையில் மன்னன் மேலதிக கறுவாச்சுருள் பந்தர்களைக் கொடுக்கும் போது அவற்றை நிலச்சுவாந்தர்களிடமிருந்து பெற்று, மன்னனின் தேவையை நிறைவு செய்வதுமான தொழிற்பாட்டினை இங்கு கண்டு கொள்ளமுடிகிறது. இவையாவும் கொழும்பில் உள்ளதுறைமுக நகரின் மிகப்பெரிய சேகரிப்பு மையத்தில் மன்னனுடைய நேரடி மேற்பார்வையில் சேகரித்து வைக்கப்பெற்று, பின்னர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதே உண்மையான தகவலாகும். எனவே கோட்டை மன்னனின் மாபெரும் ஏகபோக உரிமை கறுவா வாணிபம் தொடர்பாக இருந்தமையை நாம் தெளிவாகக் கண்டுகொள்ள முடிகிறது.
கி.பி. 1505 இல் ஒருபஹார் (Bahar) கறுவாவின் விலையானது ஒரு க்றுஸட்டோ (Cruzado) ஆகக் காணப்பட்டது. 1593இன் இறுதிப்பகுதியில் ஒரு பஹார் கறுவாவின் விலை இரண்டு ஸெராபின்கள் (Xeratins) ஆகக்
58

காணப்பட்டது. இந்த விலை நிர்ணயமானது கறுவா வணிகம் பொறுத்து உலக சந்தையில் ஏற்பட்ட பெரும் கிராக்கியை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இப்பின்னணியில் போர்த்துக்கீசர் காலக் கறுவா உற்பத்தி யாளர்களுக்கு கணிசமான வகையில் பணவருமானத்தையும் அத்தொழில் ஈட்டித் தந்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏற்படமுடியாது. கறுவாப்பட்டை உற்பத்தித் தொழில் காரணமாக கோட்டையரசில் வேறும் பல உப நிலைக்குட்பட்ட கைத்தொழில் நடவடிக்கைகள் வளர்ச்சி பெற்றுள்ள மையைக் காணமுடிந்தது. அதாவது காய்ந்த, உலர்ந்த கறுவாப் பட்டைகளைச் சிறுச்சிறு தண்டுகளாக இணைத்து ஒவ்வொரு சுருள் பந்தர்களாக ஆக்குவதற்கு நிறையவே கயிறும், பாய்களும் தேவைப் பட்டிருந்தன. இதனால் கோட்டையரசின் கடற்கரையோரப் பிராந்தியங்களில் காணப்பட்ட தென்னைச் செய்கையூடாக தென்னோலை யினால் இழைக்கப்படும் பாய்க் கைத்தொழில் மரபும், தென்னந் தும்பிலிருந்து பெறப்பட்ட கயிற்றுக் கைத்தொழில் மரபும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே கறுவாப் பட்டை வாணிப முயற்சியினால் அதனோடு தொடர்பான சிறுகைத்தொழில் முயற்சிகளும் கோட்டையரசில் உருவாகி வளர்ச்சியடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எப்பொழுதிருந்து சலாகம சாதியினர் கறுவாப்பட்டையுரித்தற் றொழிலைத் தமது சாதித்தொழிலாகக் கொள்ளத் தலைப்பட்டனர் என்ற வினாவிற்கு விடையிறுப்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகும். போர்த்துக்கீச ஆவணங்களில் குறிக்கப்பட்டதன் பிரகாரம் கோட்டை இராசதானிக் காலத்திலிருந்தே கறுவாப்பட்டை உரித்தற்றொழிலும், கறுவாப்பட்டையுரித்தற்தொழிலாளர்களும் செவ்வனே ஒழுங்குபடுத்தப் பட்ட நிலையில் காணப்பட்டிருந்தன என்பதனை நன்கு உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இக்குறிப்பிட்ட சலாகமச் சாதியினர் நெய்தற் தொழிலைப் பின்னணியாகக் கொண்ட ஒரு குழுமமாக கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்து, களுத்துறை, காலி, மட்டக்களப்பு ஆகிய கடற்கரையோரப் பிராந்தியங் களில் குடியமர்ந்தவர்களாவர். அவ்வாறு குடியமர்ந்த அச்சாதியினருக்கு மன்னன் நிலங்களை வழங்கி, அவர்களுடைய ஜீவனோபாயத்திற்கான நலச்சேவைகளை ஆற்றியதற்காக, அக்குறிப்பிட்ட மக்களின் சேவைகளை அரசுக்குரிய இராசகாரியமாக ஆக்கிக்கொண்டான். இதனால் அம்மக்கள் வருடத்தில் குறிப்பிட்டளவான தொகையை கறுவாப் பட்டையாக வழங்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டனர். போர்த்துக்கீச ருடைய 1599ஆம் ஆண்டுக்குரிய ஆவணமொன்றில் மாதம்பையில்
59

Page 33
வாழ்ந்த சலாகமச் சாதியினரே முதன் முதலாக மன்னனுக்கு கறுவாப் பட்டையுரித்துக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். மாதம்பையில் வாழ்ந்த அம்மக்கள் சுலுபட்ட (ர்?) எனக் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மூத்தோர்களாக மஹாபட்ட (ர்?) என்போரும் குறிக்கப் பட்டுள்ளனர். "பட்ட"(Badda) என்றழைக்கப்படும் சாதியினருக்கும் சலாகம சாதியினருக்கும் நேரடியாக சமூக அடிப்படையில் எவ்விதமான தொடர்புகளும் காணப்படாதுவிடினும் கறுவாப்பட்டையுரித்தற் தொழிலின் அடிப்படையில் இவ்விரு சமூகத்தவர்களும் கோட்டையரசில் பிணைக்கப்பட்டிருந்தனர். ஆகவே எவ்வாறு, எப்பொழுதிருந்து இச் சலாகமச் சாதியினர் தோற்றம் பெற்றிருந்தனர் என்றவினாவிற்கு நேரடியாகப் பதில் வழங்க முடியாவிடினும், அக்காலச் சூழலும் சந்தர்ப்பமுமே ஜீவனோபாயத் தொழிலின் அடிப்படையில் சலாகமச் சாதியினரைத் தோற்றுவித்திருந்தது எனலாம்.
கோட்டையரசின் மற்றொரு பிரதான தொழில் முயற்சியாகக் காணப்பட்ட அம்சமானது கப்பல், படகுகட்டுதல், கடல்சார் பண்டக சாலைகளை நிறுவுதல் என்பவை ஆகும். இலங்கைக்குப் போர்த்துக்கீசர் வருவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னதாகவே இவ்விரு தொழில் நடவடிக்கைகளில் ஏனைய கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களும் படகுகட்டுதல், கடல்வளம் தொடர்பான சேகரிப்புக்களுக்கான பண்டகசாலைகளை நிறுவுதல் போன்ற தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தமையைக் காணலாம். கோட்டையிலுள்ள துறைமுகங்களைப் பொறுத்த வரையில் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னர் அராபியரும் இந்தியருமே கப்பல் ஒட்டும் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையைக் கண்டுகொள்ளமுடிந்தது. ஆகவே கோட்டையின் துறைமுக நகரிலுள்ள பண்டகசாலைகளில் அராபியரினதும் இந்தியரதும் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டிருக்கும் என்பதும் தெளிவு. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு லெளறென்கோ - அல்மெய்டா என்பவன் வந்திறங்கியபோது, பாய்மரக் கப்பல்களுக்குப் பயன்படுத்தும் நீண்ட நேரிய தண்டுகள் (mast) அவற்றை நிலை நிறுத்தக் கூடிய மிகவும் உறுதியான கயிறுகள், பாய்மரத்திற்குப் பயன்படுத்தப்படும் விசேடமான படங்குகள் (yards and planks) போன்றன கப்பல்களில் ஏற்றப்பட்டதாகவும், அவை Ormug என்ற துறைமுகநகருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கஸ்பர் கொரியா என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரலாற்றாசிரியரது குறிப்புக்களின் படி கொழும்புத்துறைமுகம் கோட்டையரசு காலத்திலிருந்தே
60

கப்பல்களைப் பழுதுபார்த்து, திருத்தியமைக்கும் பிரதான துறை யாகவும் விளங்கி வந்துள்ளமையைக் கண்டுகொள்ள முடிகிறது.
கொழும்புத் துறைமுகத்திற்கு போர்த்துக்கீசர் வருகையின் பின்னர் கப்பல்கட்டும் தொழில் மேலும் அதிகரித்திருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொழும்புத்துறைமுகத்தில் தங்கியிருந்த போர்த்துக் கேயரில் பலர் கப்பல் கட்டி விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். தென்கிழக்கு இலங்கையில் காணப்பட்ட இயற்கைத் தாவரமான பலாமரம் இக்கப்பல் கட்டும் கைத்தொழிலுக் குரிய பிரதான மூலப்பொருளாக அமைந்திருந்தது. ஆனால் சிங்கள மக்கள் பலாமரங்களை போர்த்துக்கீசர் நிர்ணயித்திருந்த விலைக்கே அம்மரங்களை அம்மக்கள் போர்த்துக்கீசருக்கு வழங்கினர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்காக வேண்டி, கோட்டையரசனான புவனேகபாகு 1540இல் போர்த்துக்கலில் உள்ள அரசனுக்கு உத்தியோக பூர்வமற்ற முறையில் வெட்டப்படும் பலாமரங்களைப் பாதுகாப்பதற்காக கடிதம் ஒன்று வரையவேண்டி நேரிட்டது.
கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து கரையோரத்தில் போக்குவரவு செய்யக்கூடிய சிறியரக கடற்கலங்களை உருவாக்கியபோதே, போர்த்துக்கீசரும் இங்கு மிகப் பெரியளவிலான, சமுத்திரத்தில் பயணிக்கக் கூடிய கப்பல்களை கட்டத் தொடங்கியிருந்தனர். 1550ஆம் ஆண்டில் மிகவும் அழகானதும் பெரியதுமான கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தில் எரிந்து அழிந்தமை தொடர்பாக Vidiye என்பவர் குறிப்பிட்டுள்ளார். டொம் அன்ரொனியோ டீ நொரொன்கா என்ற வரலாற்றாசிரியர் 1551 ஜனவரி 16ஆம் திகதி போர்த்துக்கலில் உள்ள மன்னனுக்கு பின்வருமாறு கடிதம் ஒன்று எழுதியிருப்பது இங்கு நோக்கத்
தககது.
"இங்கு (இலங்கையில்) எல்லாவகையான மரங்களும் மிகத் தாராளமாக உள்ளமையால் கட்டிடங்களுக்கும், கப்பல்கள் கட்டு வதற்கும், நீங்கள் விரும்புகின்ற அளவுகளில் விதம் விதமான படகு களுக்கு வேண்டிய பாய்மரக் கம்பங்களுக்குரிய மரங்கள், மற்றும் படங்குத்துணிகளுக்கு வேண்டிய உறுதியான கயிறுகள், போன்ற வற்றையும் இங்கிருந்து இலகுவில் பெற்றுக்கொள்ளலாம். மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால் இலங்கைக்கு மிகவும் அண்மையில் மாலை தீவுகளும் அமைந்துள்ளமையால் அங்கிருந்தும் ஏராளமான." எனக் குறிப்பிட்டிருப்பது கோட்டை இராச்சியத்தில் கப்பல்கட்டும் தொழில் சிறப்புற்றிருந்தமைக்கு ஆதாரமாக அமைகின்றது எனலாம்.
s

Page 34
கோட்டையில் இரும்பு உலோகம் அபரிமிதமாகக் கிடைத்தது தொடர்பாக டீ நொரொன்கா குறிப்பிடுவது மேலும் நோக்கத்தக்கது. கோட்டை இராசதானியின் பல மையங்களிலிருந்து இரும்புச் சுரங்கத் தொழில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை தொடர்பாகவும், குறிப்பாக பிற்றிகல், அட்டகலன் கோறளைகளிலேயே இரும்புச் சுரங்கத் தொழில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு காரணங்களின் கட்டுப்பாடு காரணமாக இரும்புருக்குத் தொழில் இங்கு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 17ஆம் நூற்றாண்டிற்குரிய பதிவேடு ஒன்றின்படி ஏழு கோறளைகளில் உள்ள இன்டிக்கல, அக்கரஹம ஆகிய மையங்களிலும், சப்பிரகமுவவில் ஒபநாயகே என்றமையத்திலும், குருவித்தைக் கோறளையில் கொஸ்கொட, நுகதன்ட ஆகிய மையங் களிலும் அத்துல்கம் கோறளையில் உள்ள அத்துளுகம என்ற மையத்திலும் இரும்புருக்குத் தொழிற்பாடு நிகழ்ந்ததாக அறியமுடிகிறது. மேலும் அதேபதிவேட்டின்படி இரும்புருக்குத் தொழில்முறைகள் மேற்கொள்ளப் படும் மையங்கள் யாவும் கோட்டையரசின் நேரடி நிர்வாகத்தில் அமைந்த "பட்ட (Badda) என்ற திணைக்களத்தினரின் ஒழுங்கமைக்கப்பட்ட கண்காணிப்பில் நிர்வகிக்கப்பட்டமையைக் காணலாம். இப் 'பட்ட" (Badda) என்ற திணைக்கள அதிகாரிகள் கோட்டையரசன் காலத்தில் நேரடியாக அரசாங்கத்தின் திறைசேரியுடன் தொடர்பு கொண்டிருந்தவர் களாகக் காணப்பட்டிருந்தனர். ஆனால் போர்த்துக்கீசரின் கீழ் கோட்டையரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் அதாவது 17ஆம்நூற்றாண்டின் முற்பகுதிகளில் (1615) இரும்புத் தொழில் புரிகின்ற கொல்லர் (Smiths) பிராந்திய நிர்வாகக் கட்டமைப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த முறையை தோம்புப் பதிவுகளிலிருந்து காணக்கூடிய தாகவுள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கிராமங்களில் இரும்புத் தொழில் உற்பத்தியை தலைமை தாங்கி நடாத்திய இரும்புக் கொல்லர்களை போர்த்துக்கீசர் காலத்தில் அவ்வுற்பத்தி முறை தடைசெய்யப்பட்ட பின்னர், அவ்வக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய அதிகாரிகளாக மாற்றம் செய்யப் பெற்றிருந்த முறையையே மேற்கூறப்பட்ட பதிவுகள் எமக்குக் காட்டுகின்றன என நம்பலாம்.
போர்த்துக்கீசருடைய வருகையானது கோட்டை இராச்சியத்தின் இரும்புத்தொழிலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. அவர் களுடைய வருகையைத் தொடர்ந்த ஒரிருதசாப்தகாலத்திற் கோட்டையில் வாழ்ந்த இரும்புக் கொல்லர் புதிய பல தொழினுட்பங்களைக் கண்டறிந்து கொண்டனர், உருக்கினாலான போர்க்கவசங்கள், முகமூடிகள் பற்றிய
62

பாவனை போர்த்துக்கீசரின் வருகைக்கு முன் இலங்கையர் அறிந்து கொண்டிருந்தபோதும் இலங்கையில் அதுவரையில் அவை உற்பத்தி செய்யப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் எவையும் இல்லை. 1530ஆம் ஆண்டில் சீதாவக்கையில் படைகள் உருக்குக் கவசங்களையும், பீரங்கி களையும் தாராளமாக உபயோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங் கையில் சிங்கள மக்கள் மிகவும் விரைவாக அவற்றை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை போர்த்துக்கீசரிடமிருந்து கண்டறிந்து கொண்டனர் என்பதே உண்மையாகும்.
யாழ்ப்பாண அரசும் அதன் சமூக, பொருளியல் வள நிலைமை களும் எல்லை :
கலிங்கமாகனுடைய படையெடுப்பின் பின்னர் தான் யாழ்ப்பாண அரசு என்ற பெயரில் ஒரு சுதந்திரமான அரசு தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்ற கருத்து தற்போது பலமிழந்த நிலையில் கைவிடப்படுவதனைக் காணலாம். யாழ்ப்பாண அரசின் தோற்ற காலத்தினை கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்தே முதல்தர தொல்லியல் ஆவணங்களுடன் நிறுவுவதற்குரிய சூழ்நிலை தற்போது தோன்றியுள்ளது. யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய சூழ்நிலையும், பின்னணியும் தொடர்பாக பல ஐதீகங்கள் முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்விராச்சியம் திடீரெனத் தோற்றம் பெற்றதாக அல்லாமல், புராதன நாகதீப மணிபல்லவ இராச்சியத்தின் தொடர்ச்சியாகவே ஊர்ந்து வளர்ந்து வந்து, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் அதன் உச்சமான அரசியல், பண்பாட்டுக் கட்டமைப்பினை ஈட்டிக் கொண்டதெனலாம். ஒரு சிறிய குறிப்பிட்ட காலகட்டத்திற்கு இலங்கை முழுவதனையும் அது தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்திருந்தது என்றவோரடிப்படையில் ஆரியச் சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண அரசு தனித்துவமான அரசியல், பண்பாட்டுப் பகைப்புலத்தினைக் கொண்டு விளங்கியிருந்தது என்பதனை தமிழ், சிங்கள வரலாற்றாசிரியர்கள் எல்லோருமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அக்கட்டத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் தென்னி லங்கையில் ஆட்சி செய்த சிங்கள மன்னர்களிடமிருந்து திறையை வரியைப் பெற்றுக் கொண்டிருந்தளவிற்கு மிகவும் அரசியல் ஆளுமையுடைய வர்களாக, நல்லூரின் மேலாதிக்கத்தினை ஒரு முறையாவது இலங்கை முழுவதிலும் நிலை நாட்டியவர்களாக காணப்பட்டனர் என்பது தெளிவாகின்றது. -
சில சிங்கள வரலாற்றாசிரியர்கள் இவ்விராச்சியத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, "மிகச்சிறிய இராச்சியமான யாழ்ப்பாணம் சிங்களவர்
6

Page 35
மீதான கட்டுப்பாட்டை எவ்வாறு நீண்ட காலத்திற்குக் கொண்டிருக்க முடியாதது போல் காணப்பட்டதோ அதே போன்று யாழ்ப்பாண அரசு தனது அரசியல் ஆதிக்கத்தினை மிக நீண்ட காலத்திற்குத் தாங்கி - தக்க வைத்திருக்க முடியாத நிலையிலும் காணப்பட்டது. அளகேஸ்வரனுடைய அரசியல் ஆதிபத்தியத்தியத்தினுடைய தாக்கத்தினை யாழ்ப்பாண மன்னரால் மீகமுக (நீர்கொழும்பு), மாத்தளை ஆகிய இடங்களில் எதிர் கொள்ள முடியாது இருந்தமை, அளகக்கோனாரின் அரசியல் ஆள்புலம் மீண்டும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பரப்பிற்குள்ளேயே உள்ளடங்க வேண்டி நேரிட்ட நிலைமை, கி.பி. 14ஆம்நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் விஜயநகரப் பேரரசர்க்குத் திறை செலுத்தும் நிலையில் காணப்பட்டமை ஆகியன அவ்விராச்சியம் தொடர்பாக ஒரு தனித்துவமான இனத்துவ ரீதியிலான அரசியல் பண்பாட்டுப் பெறுமானத்தைக் குறைத்துப் புலப்படுத்துவனவாக எண்ண வைத்துள்ளன" என்று அதன் அடையாளத்தைச் சிதைக்கத்தக்க வகையில் விமர்சித்துள்ளனர். அவ்வரசிறையின் எல்லைகளைக் கூட தவறாகத் திரித்தும், குறைவாக மதிப்பீடு செய்தும் குறிப்பிட்டுள்ளமையானது அவ்விராச்சியத்தைப் பற்றிய ஒரு மனப்பதிவினைக்கூட அகற்றிவிடும் முறையாகக் காணப்படுகிறது.
G. V. P சோமரத்தின என்ற வரலாற்றாசிரியர் கோட்டையின் அரசியல் வரலாறு என்ற தனது நூலில் பின்வருமாறு யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும். சபுமால் குமரையன் (செண்பகப் பெருமாள்) யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து வந்த போது யாழ்ப்பாண அரசின் எல்லைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றி சமகால இலக்கியங்களில் குறிப்புக்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆதலால் மறைமுகமாகக் கொடுக் கப்பட்டுள்ள குறிப்புக்களிலிருந்தே இவ்வரசிருக்கையின் ஆதிபத்திய எல்லைகளை கண்டு கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். குவேய்றோசின் குறிப்புக்களின்படி (Queyroz) 'யவ்னாபட்டம்" இக்குடாநாட்டு எல்லைக்குள் மட்டும் பரந்திருக்காமல், அதற்கப்பாலும் பரந்திருந்தது என்பதனைக் கண்டுகொள்ள முடிந்தது. போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவதற்கு முன்னர் குவேய்ரோஸின் குறிப்புக்களின் படி, மேற்கே மன்னார்க்குடாவிலிருந்து, கிழக்கே திருகோணமலை வரைக்கும் யாழ்ப்பாண இராச்சியம் வியாபித்திருந்தது என்பதனை அறிய முடிகிறது. மேலும் குவேய்ரோஸ் குறிப்பிடும் பொழுது, யாழ்ப்பாண இராச்சியத்தினுள் வன்னியர் என அழைக்கப்பட்ட சிறுச்சிறு ஆட்சித் தலைவர்கள குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்து கொண்டிருந் தனர் என்பதனையும் அறியமுடிகிறது. ஆறாம் பராக்கிரம பாகு இராணுவ
64

அடிப்படையில் யாழ்ப்பாண இராச்சியத்தினைவென்று, தனது கட்டுப் பாட்டினுள் கொணரமுன், மேலே குறிப்பிடப்பட்ட 18 வன்னிச்சிற்றரசு களையும் வென்றடிமைப்படுத்தினான். கோகில - சந்தேசய இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, 6ஆம் பராக்கிரம பாகுவினால் 18 ரட்டை (Ratas=Vanni) களையும் நிர்வகிப்பதற்கென இளவரசன் சப்புமால் குமரையன் நியமனம் செய்யப்பட்டான் என்பதனை அறியும் போது யாழ்ப்பாண அரசின் மீதான வெற்றிக்கு முன்னர் வன்னிச் சிற்றரசர்கள் வெல்லப்பட்டுவிட்டனர் என்பது உறுதியாகின்றது. இளவரசன் சப்புமால் குமரையன் பின்பு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த படியே மேற்கூறப்பட்ட 18 வன்னிச்சிற்றரசுகளையும் நிர்வகித்தான் எனவும் அந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசன் தென்னிந்தியாவிற்குப் புகலிடம் தேடி குடும்பத்தினரோடு ஒடுவதற்கு முன்னர் இப் 18 இராச்சியங்களையும் நிர்வகித்திருப்பானாயின் இராசரட்டையின் பெரும்பகுதி யாழ்ப்பாண இராச்சியத்திற்குள்ளேயே இருந்திருக்க வேண்டும் என்பதும் புலனா கின்றது. "கடயிம் பொத்தாஸ்" என்ற சமகாலச் சிங்கள நூல் ஒன்றின் பிரகாரம் யாழ்ப்பாண இராச்சியம் 42 ரட்டாக்களை உள்ளடக்கியிருந்தது என்பதனையும் அறியமுடியும். இதற்கு மேலாகவும், யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆள்புலப்பரப்புடன் அதனோடு இணைந்த தீவுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூர் இராசதானியின் எல்லைகளாக பின்வருமாறு யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூலில் 182ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு நோக்கத்தக்கது. "பொதுவாகவே நல்லூர் தலைநகர் பகுதியின் எல்லைகளாக வடக்கே கோப்பாய் வடக்குப் பகுதியும், கிழக்கே சாவாங்கோட்டை - நாவற்குழியும் தெற்கே பண்ணை ஆறும், மேற்கே பண்ணை ஆறு, கொக்குவில், கோண்டாவில் ஆகியனவும் காணப்பட்டன. இதனை உள்ளடக்கிய பகுதியிற்றான் அரசன், நிருவாகிகள், ஊழியர் ஆகியோரின் வதிவிடங்கள், சேனைப் பிரிவுகள், அரசவழிபாட்டிடங்கள், அந்தணர் - வாஸஸ்தலங்கள் ஆகியன காணப்பட்டன எனலாம்.
சமூகமும், பொருளியலும் :
யாழ்ப்பாண அரசும், அதன் சமூக, பொருளியல் வளநிலைகளும் தொடர்பாக பேராசிரியர் சி. பத்மநாதன் (1971ஆம் ஆண்டில்) பின்வரு மாறு எழுதியுள்ளமையும் இங்கு மாணவர்களின் நன்மைகருதித் தரப்படுகிறது. அது பின்வருமாறு:
“விவசாயம் : ஆரியச் சக்கரவர்த்திகள் விவசாயமும் கைத்தொழிலும் வளர்ச்சியடைவதற்கு ஆதரவாக இருந்தனர். விவசாயமே பெரும்பாலான
65

Page 36
மக்களின்தொழிலாக இருந்தது. குறிப்பிடத் தக்களவிலே நாட்டு மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உற்பத்தியாயின. நெல், வரகு, கொள்ளு, குரக்கன் முதலிய தானியங்களும் எள்ளு, பயறு, வாழை, கமுகு, செங்கழுநீர், கொழுந்து, கரும்பு, வழுதிலை, பருத்தி முதலியனவும் நாட்டில் உற்பத்தியாகின. விளை நிலங்களிலே பெரும்பாலானவை மக்களின் தனி உடமையாகவே இருந்தன. விளைபொருள்களுள் 10/1 வீதமே அரசனது பங்காகக்கருதப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தானியவரி இலங்கையின் ஏனைய பாகங்களோடு ஒப்பிடுமிடத்து மிகக் குறைந்ததாகவே காணப்படுகிறது. நீர்ப்பாசன வசதிகளின்மையாலும், விவசாயிகள் பல இடர்பாடுகளை எதிர்நோக்கியிருந்ததாலுமே தானியவரி இவ்வாறு குறையாக இருந்திருத்தல் வேண்டும். நாட்டில் போதியளவு நெல் காணப்படாதவிடத்து தஞ்சாவூர், மதுரை முதலிய இடங்களிலிருந்து நெல்லை இறக்குமதி செய்தார்கள்.
கைத்தொழில் : வன்னிநாட்டிலே விளைந்த பருத்தி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் நூலாக நெய்யப்பெற்று, பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டது. அத்துடன் நெசவுத் தொழிலும், சாயத்தொழிலும் குறிப்பிடத் தக்களவில் வளர்ச்சியடைந்திருந்தன. (மாதோட்டம் போன்ற இடங்களில் தமிழரசு ஏற்படுவதற்கு முற்பட்ட காலத்திலே நெசவுத் தொழில் இடம் பெற்றிருந்தது. முதலாம் இராசேந்திர சோழனது மாதோட்டக் கல்வெட்டு அங்குள்ள நெசவாளர் பற்றியும், அங்கு நெய்யப் பெற்ற ஆடைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. யாழ்ப்பாணத்தில் நெய்யப் பெற்ற பருத்தித் துணிகள் நெடுங்காலம் உபயோகிக்கக்கூடியனவாக இருந்தன. ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் நெசவுத்தொழில் மேலும் விருத்தியடைந்தது. ஒல்லாந்தர் தென்னிந்தியாவிலிருந்து மேலும் நெசவாளர்களை வரவழைத்து, யாழ்ப்பாணத்தில் குடியேற்றி, நெசவுத்தொழில் விருத்தி யடைய பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இங்கு நெய்யப் பெற்ற ஆடைகள் யாவா முதலிய இடங்களுக்கும், ஐரோப்பாவிற்கும் ஒல்லாந்தரால் கொண்டு செல்லப்பட்டன.) ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலே சாயமிடுதல் ஒரு தொழிலாக இடம்பெற்றிருந்தது. சாயவேரினை வண்ணமளிக்கும் பொருட்களோடு சேர்த்துக் காய்ச்சிச் சாயம் தயாரித்தனர். பின்துணிகளுக்கு ஏற்ற வண்ணம் பல்வேறு நிறங் களைக் கொண்ட சாயம் இடப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் மேலும் இத்தொழில் விருத்தியடைந்தது. பிற பல கைத்தொழில்களும் குறிப்பிடத்தக்களவில் வளர்ச்சியடைந்திருந்தன.
கொல்லர், பொற்கொல்லர், கன்னார், குயவர் தச்சர் போன்றோரையும் கைக்கோளர், சாயக்காரர், போன்றோரையும் ஆரியச் சக்கரவர்த்திகள்
66

காலத்திற்குக் காலம் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வந்தனர் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. குணவீர சிங்கையாரியன் என்ற மன்னன் காஞ்சிபுரத்திலிருந்தும், ஆந்திரதேசத்திலிருந்தும் கைக்கோளரை அழைத்து வந்தான் என்ற சொல்லப்படுகின்றது. சிறுச்சிறு கைத்தொழில்களைச் செய்தவர்கள் சிறுச்சிறு கூட்டங்களாகச் சேர்ந்தே இவற்றில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தலைமுறை தலைமுறையாகக் குறிப்பிட்ட ஒரு தொழிலைப் பயின்றுவந்த மக்களிடையே அவ்வத் தொழிலும் அவர்களின் தனிஉரிமையாக இருந்து வந்தன. பொது மக்கள் பெரிதும் மட்பாண்டங் களையே பயன்படுத்தியதால் பாண்டங்களை வனைதலும் ஒரு முக்கியமான கைத்தொழிலாக இருந்தது. எனினும் அதிலீடுபடுவோர் தொகையும் குறைவாக இருந்ததென்பதை 1654இல் போர்த்துக்கேயர் தயாரித்த வருமான அறிக்கை மூலம் அறியலாம். உலோகத் தொழிலும், ஆபரண வேலைப்பாடுகளும் தென்னிந்தியாவிலே உன்னத வளர்ச்சி யடைந்திருந்தன. அங்கிருந்து வட இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் அங்குள்ள தொழில் முறைகளையும் வேலைப்பாட்டு முறைகளையும் இங்கும் பின்பற்றினர். வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாகிய பாத்திரங்கள் தேவாலயங்களிலும், செல்வந்தர் வீடுகளிலும் புழக்கத்தி லிருந்தன. இவற்றின் உபயோகத்தினாலும் உலோகத்தொழில்கள் சிறப்புற் றிருந்தன.
ஆரியச்சக்கரவர்த்திகளின் சேது நாணயங்களின் வனப்பும், எழில் பொருந்திய தோற்றமும் அரசர்களது அக்காலங்களில் தொழில் புரிந்த தொழில் வினைஞர்களின் நுணுக்கமான வேலைப்பாட்டிற்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றன. யாழ்ப்பாணத்து மக்கள் பிற்காலங்களைப் போல் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலும் தங்க நகைகளைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். அதனால் நகைகளைச் செய்யும் தட்டாரத்தொழில் சிறப்புற்றிருந்தது. தங்களை அழகுபடுத்து வதற்கும் நகைகளை பெண்கள் விரும்பினார்கள். மேலும் சமுதாய நிலையினதும் செல்வத்தினதும சின்னமாக ஆபரணங்கள் விளங்கின.
வாணிபம் : யாழ்ப்பாணப்பட்டின அரசு நிலைத்த காலத்திலும், பறங்கியரும் ஒல்லாந்தரும் வட இலங்கையை ஆண்ட காலங்களிலும் யாழ்ப்பாணமும், தென்னிந்தியாவும் வர்த்தக அடிப்படையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. மலையாளம், சோழ மண்டலக்கரை ஆகியவற்றோடு நடந்த வாணிபமானது யாழ்ப்பாணத்துப் பொருளா தாரத்தின் உயர்நாடியாகவிருந்தது. அரிசி முதலிய உணவுப் பொருட்களும் தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியாகின. இவ்வாறாகப் பேரளவிலே தென்னிந்தியாவிலிருந்து ஈழநாட்டிற்குப் பொருட்கள் இறக்குமதி யானதால் ஈழம் விஜயநகரப் பேரரசிற்கு திறைசெலுத்தியதாக வர்த்தெமா
67

Page 37
கருதினார். ஆரியச் சக்கரவர்த்தி விஜயநகர அரசர்க்குத் திறை செலுத்தி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மென்மையான புடவைகளும் தென்னிந்தியாவிலிருந்தே வட இலங்கைக்கு வந்தன. பொன், வெள்ளி, வெங்கலம், செம்பு, இரும்பு முதலிய உலோகங்களையும் அங்கிருந்தே பெறவேண்டியிருந்தது. அத்தோடு யாழ்ப்பாணத்து மக்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்பட்ட பல பொருட்கள் மலையாளத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் பெறப்பட்டன. காலி முதலிய துறைகளில் சீனப் படகுகள் விற்ற சில பொருட்களும் வட இலங்கையை அடைந்திருத்தல் கூடும். வட இலங்கையிலிருந்து யானை, முத்து, சங்கு முதலிய பொருட் களை எடுத்துச் சென்று தென்னிந்தியாவில் விற்றனர். விஜயநகர அரசிலும், பாமினி அரசிலும் ஈழத்து யானைகள் தேவைப்பட்டன. விஜயநகர அரசர்கள் மட்டுமே 8,000 யானைகளை வைத்திருந்தனர். 16ஆம் நூற்றாண்டு சிறிநாதர் என்ற புகழ்மிக்க தெலுங்குப்புலவர் எழுதிய "ஹாரி விலாசம்" என்ற நூல் நெல்லூர்ப்பட்டினத்திலிருந்த அவசி திப்பையர் செட்டி பற்றிக் கூறுகின்றது. இப்பெருவணிகர் விஜயநகரராயர், பாமினி அரசர் கொண்ட வீட்டுச் செட்டி ஆகியோரின் அரண்மனைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுப்பதற்கு உரிமை பெற்றிருந்தார். ஈழத்திலிருந்து யானைகளையும், முத்துக்களையும் இவ்வணிகர் பெற்றார் என்று நூல் சொல்கிறது.
13ஆம்நூற்றாண்டின் முடிவில் காயல்பட்டினமே தென்னிந்தியாவின் தலைசிறந்த பட்டினமாக இருந்தது. மேலும் மன்னார்க் கடலில் பெறப் பட்ட முத்துக்கள் காயலிலே விற்கப்பட்டன. அங்கிருந்து அம்முத்துக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றதாக மார்க்கோ போலோ என்ற வெனிசிய நாட்டறிஞர் கூறுகின்றார். 14ஆம்நூற்றாண்டில் மலையாளக் கரையில் 'யூர் பட்டினம் என்ற துறைமுகம் முதன்மை அடைந்திருந்தது. மன்னாரிலிருந்தும், வேறு இடங்களிலிருந்தும் வணிகர்கள் முத்துக்களைச் சேகரித்துக் கொண்டு அத்துறைமுகத்திலே விற்றார்கள். முத்துக்குளிப்பு ஒரு குறிப்பிட்ட கால்த்திலே அதாவது சித்திரை, வைகாசி மாதங்களிலே மட்டுமே நடத்த முடியும். ஆகையால் ஏனைய மாதங்களில் பரவர் சங்கு குளிப்பார்கள். அக்காலத்தில் குறிப்பிடத்தக்களவில் சங்குகள் ஏற்றுமதி யாகின. வடஇந்தியாவில் குறிப்பாக வங்காளத்தில் இவை பெரிதும் தேவைப்பட்டன. தேவாலயங்களிலே சமய விழாக்களுக்கு சங்குகள் பயன்படுத்தப்பட்டன. பல்வகைப்பட்ட ஆபரணங்களும் அழகான சிறுபாத்திரங்களும் சங்கிலே செய்யப்பட்டன.
யாழ்ப்பாணத்திலே உற்பத்தியான வேறு சில பொருட்கள் தென்னிந்தியப் பிரதேசத்தில் விற்கப்பட்டன. பனையும் அதன்
68

பொருட்களும் மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்ததோடு பல சிறு கைத்தொழில்களின் வளர்ச்சிக்கும் மூலமாயமைந்தன. பனங்கட்டி, கற்காரம், பனாட்டு, ஒடியல் என்பன உணவுப் பொருட்களாகப் பயன்பட்டன. வெல்லம், சக்கரை ஆகியனவற்றிற்குப் பதிலாகப் பனங் கட்டியும், கற்காரமும் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் தேவைக்கு மேலாக இவை உற்பத்தியாகின. இவையாவும் சோழமண்டலத்திலும், தொண்டை மண்டலத்திலும் விற்கப்பட்டன. மேலும் வீட்டுத் தேவைகட்கும், விவசாயத்தேவைகளுக்கும் பனைஒலையால் இழைக்கப் பெற்ற பாய், கடகம் என்பன உதவின. இவற்றையும் யாழ்ப்பாணத்து மக்கள் தென்னிந்தியாவில் விற்க முடிந்தது. அத்தோடு பனைமரமும் பல்வேறு தேவைகளுக்காகச் சோழ மண்டலத்திற்கும், தொண்டை நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் வேப்பெண்ணெய், இலுப் பெண்ணெய் ஆகியனவும் தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய்த் தும்பிலிருந்து திரிக்கப்பட்ட கயிறு, போன்றனவும் தென்னிந்தியாவிலும், கிழக்கிலங்கையிலும் விற்கப்பட்டன. இவ்விதமான சிறுகைத்தொழில் களினாலே மக்களுக்குக் குறிப்பிடத்தக்களவு ஊதியம் கிடைத்தது. இவற்றை வெளிநாட்டிலே விற்பதினாலே, உற்பத்தி செய்தமக்கள் தமக்கின்றியமையாத பொருட்களான சில உணவுப் பொருட்களையும், உடைகளையும் வாங்குவதற்குத் தேவையான பணத்தைப் பெறமுடிந்தது.
ஆரியச் சக்கரவர்த்திகள் பல முற்றிருந்த காலத்திலே வர்த்தகத்திலும் பங்கு கொண்டிருந்தனர். 14ஆம் நூற்றாண்டில் தென்னிலங்கையில் ஆரியச்சக்கரவர்த்திகள் தம் மேலாதிக்கத்தை ஏற்படுத்திய காலத்தில் கறுவா, முத்து போன்றவற்றின் வர்த்தகம் அரசனின் ஏகபோக உரிமையாக விருந்தது. மலையாளத்திலும், சோழ மண்டலத்திலும் துணி முதலிய பொருட்களை அங்கிருந்து கொணர்ந்து அரசனுக்கு அளித்துவிட்டு, கறுவா முதலிய வாசனைப்பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்தனர்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் பொருளியல் வளம், படைபல வளம் போன்றன தொடர்பாக இபன் பட்டுட்டா (Iban-Battuta) உபயோகமான பல குறிப்புக்களைத் தந்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது. யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூலில் 48, 49ஆம் பக்கங்களில் அவ்விடயம் தொடர்பாகப் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. * "இபன் பற்றுாற்றாகரையிறங்கிய பொழுது ஆரியச்சக்கரவர்த்தி முத்துச் சலாபத்திற்கு அண்மையிலே, 'பட்டாள' என்னும் நகரிலே, மரத்தினால் உருவாக்கப்பட்ட மாளிகையிலே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த மாளிகைக்குச் சமீபத்திலே கடலிலிருந்து எடுக்கப்பெற்ற முத்துக்கள்
69

Page 38
குவிக்கப்பெற்றிருந்தன. மன்னனின் அதிகாரிகள் தரத்திற்கேற்ப அவற்றை வகைப்படுத்துவதிலே ஈடுபட்டிருந்தார்கள். உலகின் பல்வேறு பாகங்களி லுள்ள முத்துக்களைப்பற்றிக் கேட்டறிந்த அரசன் தன்வசமுள்ளனவற்றைப் போன்ற தரத்தால் உயர்ந்த முத்துக்கள் வேறெங்குமே காணப்படவில்லை என்பதைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் என்று கூறுகின்றார். இபன் பட்டுட்டா "ஆரியச் சக்கரவர்த்தி தன்வசம் உள்ளங்கையினளவு விட்டங் கொண்ட இரத்தினக்கற்களை வைத்திருந்தான், அவற்றுள் ஒன்றினாலே தனது தாடியைத் தடவும் வழக்கமுடையவனாகக் காணப் பட்டான், மற்றையது வெற்றிலையைத் துப்புவதற்கான துப்படியாக அவனாலே பயன்படுத்தப்பட்டது. என்றும் கூறியுள்ளார்."
“ஆரியச்சக்கரவர்த்தியின் கடற்படை வலிமைபற்றி இபன் பட்டுட்டா கூறுவன மிக முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புக்களாகும். மதுரையிலிருந்து புறப்பட்டுக் கடல் வழியாக வரும் பொழுது ஆரியச்சக்கரவர்த்தியின் 100 கப்பல்களைக் கண்டதாக கூறுகின்றார். அக்கப்பல்கள் மதுரைச் சுல்தானுடைய கப்பல்களைச் சுற்றி வளைத்துப்பிடிக்க முயன்றபோது அவை மிக வேகமாக ஒடித்தப்பித்துக் கொண்டன என்றும் அவர் கூறுகின் றார். பின்னர் அந்த 100 கப்பல்களும் அராபியாவிலுள்ள யெமென் மார்க்கமாகப் புறப்பட்டுச்சென்றதனை அவராலே அவதானிக்கமுடிந்தது”
"ஆரியச் சக்கரவர்த்தி அயல் நாட்டு வாணிபத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாகவும், அதிலே குறிப்பிடத்தக்க பங்கு கொண்டிருந்த வனாகவும் விளங்கினான். பட்டாள நகரின் கரையோரமெங்கும் கறுவா மரத்தின்துண்டங்கள் கட்டுக்கட்டாகக் குவிக்கப்பெற்று, மலைபோலக் காட்சியளித்தமையினை இபன் பட்டுட்டாவினாலே கண்டுகொள்ள முடிந்தது. மலையாள வணிகரும், தமிழக வணிகரும் புடவைகள் முதலான பொருட்களை அரசனிடம் கொடுத்துவிட்டுக் கறுவாவினை அவனிட மிருந்து வாங்கிக் கொண்டு, அதனைக் கப்பல்களில் ஏற்றிச் சென்றார்கள். ஒரு சர்வதேச வர்த்தகப் பொருள் என்ற வகையிலே கறுவா பெற்றிருந்த முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்த முதலாவது இலங்கை மன்னன் ஆரியச் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது."
கடல் முகப்புத்தள இராச்சியங்களுடனான போர்த்துக்கீசரின் முதற்றொடர்புகள் :
முற்றிலுமே எதிர்பாராத விதமாக இலங்கையின் தென்மேற்குக் கரையோரத்தினை வந்தடைந்த போர்த்துக்கீசத் தளபதியான லொறன்ஸோ டீ அல்மெய்டா தான் வந்தடைந்த துறைமுகம் காலித் துறைமுகம் என்பதனை அறிந்து கொண்டதும் மிகுந்த சந்தோஷமடைந்து
70

கொண்டான். இலங்கைத் தீவுடனான கறுவா வியாபாரத்தினைத் தம்வசப்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் வேட்கையுடனிருந்த போர்த்துக்கீசருக்கு இந்நிகழ்வு எதிர்பாராததும், மிக இலகுவாகவும் கைகூடியமையை எண்ணி மிகுந்த ஆச்சரியமும், சுறுசுறுப்பும் கொடுத் திருக்கும் என்பது திண்ணம். மலையாளக் கடற்துறைமுகப்பட்டினங்களில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களது வணிகக் கப்பல்துறை அங்கிருந்தது பாரசீகக் குடாக்கடலை நோக்கி விரட்டிச் செல்லும் வழியிலேயே லொறன்ஸோ டீ அல்மெய்டா வின் கப்பல் பெரும்புயலில் சிக்கி, 1505 இல் இலங்கையின் மேற்குத்துறையிலுள்ள காலிமுகத்திடலில் கரையொதுக்கப்பட்டான். இக்கடற்பெரும் புயலினால் இலங்கைக் கடற்கரையில் கரையொதுக்கப் பட்ட லொறன்ஸோ டீ அல்மெய்டா காலித்துறைமுகப் பரப்பிலிருந்து வடக்கு நோக்கிப் பயணமாகி கொழும்புத் துறைமுகத்தை சென்றடைந்து கொண்டான். இச்சம்பவமே முதலில் கோட்டை இராசதானியின் வரலாற்றிலும், பின்னர் யாழ்ப்பாண (நல்லூர்) இராசதானியின் வரலாற்றிலும் மாபெரும் மாற்றங்கையும், விளைவுகளையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாயிற்று.
கொழும்புத் துறைமுகத்தினைப் போர்த்துக்கேயர் சென்றடைந்து கொண்டதும், அவர்களை சிங்கள மக்களோ அல்லது கோட்டை இராசதானியின் அலுவலர்களோ எவரும் வரவேற்க முன்வரவில்லை. இப்புதிய சாதியினரைக் கண்ட சிங்களவர் பெரிதும் வியப்புற்றனர். வெள்ளைத்தோலுள்ள மனிதரை அவர்கள் முன்னொருபோதும் பார்த்ததே யில்லை. இரும்புச்சட்டையும், தொப்பியும் அணிந்த போர்வீரர்கள் அரை நிர்வாணமாக நின்றே போர் புரிந்தனர். இப்புதியவர்கள் வெள்ளி நாணயங்களையும் தங்க நாணயங்ளையும் தாராளமாகக் கொடுத்துப் பண்டங்களை வாங்குகிறார்களே என்று அவர்கள் ஆச்சரியமடைந்தனர். இலங்கையில் அந்நாட்களில் உலோக நாணயங்கள் அதிகம் உபயோகிக்கப் படவில்லை. பண்டங்களையே சனங்கள் வரியாகக் கொடுத்தார்கள். முஸ்லீம் வியாபாரிகளுக்கு அவர்கள் நாணயங்களுக்குப் பதிலாக பாக்கு முதலிய பொருட்களைக் கொடுத்தே சீலை முதலியவற்றை வாங்கினர். வெடிமருந்தையாவதுதுப்பாக்கியையாவது முன் கண்டறியாத இவர்கள் இடிமுழக்கம் போல் வெடித்துக் கொண்டு வெகுதூரம் செல்லும் குண்டு களையுடைய பீரங்கிகளைக் கண்டு அச்சமுற்றனர்."
போர்த்துக்கேயர் இலங்கையில் தமது முதற்தொடர்பினை கோட்டை இராசதானியில் வைத்தே ஆரம்பித்திருந்தனர். அப்பொழுது அவர் களுடைய சிந்தனை முழுவதும் இலங்கையின் கறுவாப்பட்டை வியாபாரத்தின் மீதே கவிந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
7

Page 39
எவ்விதமான அரசியல் நோக்கமும் அவர்களது வருகையின்போது ஏற்பட்டிருக்கவில்லை. 1505ஆம் ஆண்டில் இலங்கை வந்தடைந்த லொறென் சோடி அல்மெய்டா அப்பொழுது கோட்டை இராச்சியத்திற்கு அரசனாயிருந்த தர்மபராக்கிரமபாகுவுடன் வியாபார உடன்படிக்கை யொன்றினைச் செய்து கொண்டான். அரசனுடைய உத்தரவினைப் பெற்று, கொழும்பில் ஒரு பண்டகசாலையையும் ஸ்தாபித்துக் கொண்டான். அப்பொழுது இலங்கைத் துறைமுகங்களின் வாணிப நடவடிக்கைகளில் மேலோங்கிய நிலையில் விளங்கிய இஸ்லாமியரின் வாணிபம் பாதிப்படையக் கூடிய ஒரு நிலையை உணர்ந்த இஸ்லாமியர் சிங்கள மக்களைத்தூண்டிவிட்டு போர்த்துக்கேயரின் பண்டகசாலையை அழிக்க எத்தனித்தனர். ஆனால் போர்த்துக்கேயர், சிங்கள மக்களின் தாக்குதலை மிகச் சுலபமாகச் சமாளித்துவிட்டு, தாமாகவே தாம் கட்டிய பண்டகசாலையை அழித்தும் விட்டனர்.
இலங்கைக்குப் போர்த்துக்கேயரின் வருகையானது முஸ்லீம்களது வாணிப நடவடிக்கைகளுக்கு ஒரு சாவுமனியாக அமைந்ததென்பதில் ஐயம் எழமுடியாது. தமது தொடர்ச்சியான வாணிப நடவடிக்கைகள் இலங்கையின்துறைமுகங்களில் நிலையாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக, சிங்கள மன்னனுடன் போர்த்துக்கேயர் உறவு கொண்டிருக்காதவகையில், பல விரோதச் செயல்களில் முஸ்லீம் வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் 9ஆம் தர்ம பராக்கிரமபாகு தன்னால் போர்த்துக்கீசரை எதிர்த்து முன் நடக்க முடியாது என்பதனை உயர்ந்து, போர்த்துக்கீசரை நன்கு அனுசரித்தும், அரவணைத்தும் போவது எனத் தீர்மானம் இயற்றியிருந்தான். போர்த்துக்கீசர் இலங்கையில் கறுவாப்பட்டை மீது மோகம் வைத்திருப்பதனை உணர்ந்த 9ஆம் தர்ம பராக்கிரமபாகு வருடாவருடம் அவர்களுக்கு கறுவாப்பட்டையைத் (திறையாக?) தருவதாகவும் ஒப்புக் கொண்டிருந்தான். அதுமாத்திரமன்றி, போர்த்துக்கீச அரசனை தனது தலைவனாகவும் ஏற்றுக் கொள்வ தாக வாக்குறுதியளித்திருந்தான். மன்னனுடைய இத்தகைய ஒரு போக்கிற்குக் கைமாறாக லோறன்ஸோ டீ அல்மெய்டா கோட்டை அரசையும், அதன் துறைமுகங்களையும் அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துத் தருவதாக உறுதியளித்திருந்தான். லோறன்ஸோ டீ அல்மெய்டா இலங்கையில் தான் சேகரித்த வாணிகப் பொருட்களுடன் போர்த்துக்கல் நாட்டுக்குத் திரும்பு முன்னர், அவர்களது நாட்டுச் சமய வழக்கப்படி இறையாராதனை இயற்றுவதற்கென ஒரு சிறிய தேவாலயமும், அவர்களது நாட்டு "தேசவழக்கப்படி" போர்த்துக்கீச வீரமுத்திரைக் கற்பொறிப்பும் கொழும்புத்துறைமுகப் பரப்பிலே உள்ள ஒரு பிரதான பாதையில் முறையே கட்டுவித்தும், செதுக்குவித்தும்
72

சென்றான். இதன் பின்னர் போர்த்துக்கேயர் இலங்கைக்கு அடிக்கடி வந்து கோட்டை மன்னுடன் வாணிபத்தொடர்பு பூண்டு சென்றனர். இவர்கள் எங்கெல்லாம் வாணிபத் தொடர்புகளை ஏற்படுத்திச் சென்றார் களோ அங்கெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையும் பரப்பி விட்டுச் சென்றனர். இவ்வாறு இலங்கையில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாணிப நோக்குடன் வருகை தந்த போர்த்துக்கீசர் பின்பு கடல்முகப்புத்தள இராச்சியமான கோட்டையரசின் உள்ளக பிரச்சினைகளில் தலையீடு செய்து, அங்கு நிகழ்ந்த அரசியல் சம்பவங்கள் எல்லாவற்றையும் தமக்குச் சாதகமாகக் கொண்டு, நாளடைவில் அவ்விராச்சியத்திற்குரிய அதிபதிகளாகவே தம்மை மாற்றிக் கொண்டமையைக் காணலாம்.
போர்த்துக்கீசருடைய ஆதிக்கம் இலங்கையில் வேரூன்றியமைக்கு இலங்கையரே முதற்காரணமாக அமைந்தனர். கோட்டை இராசதானியில் அரசவாரிசுரிமை, அரச அதிகாரம் தொடர்பாக அரச குடும்பத்திற்குள் நிலவியிருந்த முரண்பாடுகளும், சச்சரவுகளும் "கோட்டையின் நண்பர் களாக இருந்த போர்த்துக்கேயரை கோட்டையின் பாதுகாப்பாளர் களாக மாற்றி வைத்தது. கோட்டை இராச்சிய அரசர்களுக்கிடையே இயல்பாக வளர்ந்த பகைமையுறவினை அடிப்படையாகக் கொண்டு, அவ்விராச்சியத்தின் உள்ளக - அரசியல் கட்டுமானத்துறைகளுக்குள் போர்த்துக்கீசரால் மிகவும் இலகுவாகத் தலையிடமுடிந்தது. போர்த்துக் கேயர் கோட்டையை அடைந்த காலத்தில் தர்ம பராக்கிரமபாகு, விஜயபாகு ஆகிய இரு சகோதரர்களும் தமக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் போர்த்துக் கேயருக்கு தமது முதற்பலவீனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர் எனலாம். கோட்டை மன்னன் விஜயபாகுவுக்கும் அவனது மூன்று மைந்தர் களுக்குமிடையில் மூண்ட கலகத்தின் விளைவால் கோட்ட்ை இராச்சிய மானது மூன்று வருடங்களின் பின் மூன்று ஆட்சிப் பிரதேசங்களாக வகுக்கப்படக் காரணமாயிற்று. இம்மூன்று மைந்தர்களினாலும் விஜயபாகு கொலைசெய்யப்பட்ட பின் அவ்விராஜ்ஜியம் மூன்றாகப் பங்கிட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வகையில் மூத்த புதல்வனான புவனேகபாகு கோட்டையின் பெரும்பகுதியைத் தலைநகரிலிருந்து ஆண்டு வந்தான். மற்றைய இரு சகோதரரான ரைகம் பண்டாவும், மாயாதுன்னையும் முறையே ரைய்கம, சீதாவாக்கை ஆகிய பிரதேசங்களை அங்கிருந்தபடியே ஆட்சி செய்துவந்தனர். இம்மூன்று அரசகுமாரர்களிடையே ஏற்பட்ட இவ்விராச்சியப் பிரிவினையானது மிகவும் இலகுவாகவும் நிதானமாகவும் போர்த்துக்கீசரை உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் ஈடுபட வைத்தது எனலாம்.
73

Page 40
சமுத்திரவியல் முகப்புத் தளச் சூழலும் கோட்டை மன்னர்களின் பலவீனமும் :
கி.பி. 15ஆம்நூற்றாண்டிலிருந்து புதிதாக உருவாகி வளர்ச்சி பெற்று வந்த தரைவழியல்லாத, சமுத்திர மார்க்கத்தினூடு கடல் முகப்புத் தளங்களை வலிமைப்படுத்தும் கடற்புவிசார் அரசியல் கேந்திர உருவாக்க முறைமையானது இலங்கைத் தீவின் அரசியல் ஆதிபத்திய வரலாற்றையும் பாதிக்கத் தவறவில்லை. இவ்வாறான, புதிதாக உருவாகி, வளர்ச்சி பெற்றுவந்த அரசியல் மையவாக்க முறைமையை அறிந்திருக்க முடியாத இலங்கையின் சமகால மன்னர்கள் புதிதாக உருவாகிவந்த அச்சக்தியின் தாக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாது நிலைகுலைந்து போன தன்மையையே 15ஆம் நூற்றாண்டு கோட்டை இராசதானியின் வரலாறு எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. "பெரும் பேராசையினால் உந்தப் பெற்றமாயாதுன்னை, தனது புஜபலத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளவனாக, மாறிவந்த தரை-கடல் முகப்புத்தள அரசியல் சமநிலைகளை விளங்கிக்கொள்ள முடியாதவனாக தொழிற்பட்டுக் கொண்டமையால், கோட்டையரசின் தொடர்ச்சியான தளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார நிறுவனங்களின் பராதீனப்படுத்தப்பட்ட தொழிற் பாட்டு மாற்றங்களுக்கும் காரணகர்த்தாவாக அமைந்து கொண்டான்."
எப்படியாவது தனது சகோதரன் புவனேகபாகுவிடமிருந்து கோட்டைப் பரப்பினைக் கைப்பற்றி, அதைத்தொடர்ந்து இலங்கைத் தீவு முழுவதற்குமே அரசனாக வேண்டும் என மாயாதுன்னை ஆசை கொண்ட காரணத்தினால் தனது அரசியல் மேலாதிக்கத்தினை ஈட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலானான். ஆனால் தனது சகோதரனுக்கு போர்த்துக்கேயரின் உதவி கிடைக்குமென்பதனையும், கோவையிலிருந்து போர்த்துக்கேயருக்கு வேண்டிய படைகள் வந்து சேருமென்பதனையும் மாயாதுன்னை அறிந்திருந்தான் என்பதனை அவனுடைய அடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் எமக்கு எடுத்துணர்த்தியுள்ளன. அதாவது போர்த்துக்கேயரின் பகைவனான கள்ளிக்கோட்டை அரசன் சமோரினுடைய படையுதவிகளை மாயாதுன்னை பெற்றுக்கொண்டமையானது போர்த்துக்கேயரின் ஆபத்தான நிலையை அவன் உணர்ந்திருந்தமையையே எமக்குக் காட்டுகின்றது.
1527ஆம் ஆண்டு மாயாதுன்னைக்குச் சார்பாக சமோரினுடைய படைகளும், புவனேகபாகுவிற்குச் சார்பாக போர்த்துக்கீசப் படைகளும் கோட்டையரசின் மீதான உரிமப் போராட்டத்தில் பங்கு கொள்ளத் தலைப்பட்டன. இந்நிலையானது 1539ஆம் ஆண்டு வரைக்கும் நீடித்துச்
74

சென்றிருந்த தன்மையைப் பார்க்கும் போது அக்கடல்முகப்புத்தள இராச்சியமானது சமூக, பொருளியல் வளநிலைகளின் பல முனைகளிலும்
மிகுந்த பாதிப்பினை அடைந்திருக்கும் என்பது தெளிவாகின்றது. ஒரு போர்க்கள முனைப்பு" என்ற வகையில் இரு வெவ்வேறு பண்பாட்டுப்
பகைப்புலத்தினைச் சேர்ந்த படைகளும் கோட்டையரசின் அரசியல்,
பண்பாட்டு, சமூக வளர்ச்சியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி நின்றன.
நவீன போர்க்கருவிகளைத் தாங்கிய போர்த்துக்கேயருடைய படைகளை எதிர்த்து வெல்வது என்பது மாயாதுன்னைக்கு இயலாத காரியமாகத்
தென்பட்டது. இதனால் போர்த்துக்கேயக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை விட்டுச் செல்லும் வரை பொறுத்திருந்துவிட்டு, அவை அகன்று சென்றபின், புவனேகபாகுவின் கோட்டை மீது தாக்குதலைத்
தொடுக்கும் வழக்கத்தை மாயாதுன்னை பின்பற்றினான். ஆனால் போர்த்துக்கீசர்களது கப்பல்கள் இலங்கையில், கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்ததும் மாயாதுன்னை தனது இராச்சியத்திற்கு பின்வாங்கிச் செல்வதுமாகக் காணப்பட்டான். இத்தகையதொரு தொடர்ச்சியான போர்முறையால் புவனேகபாகுவும், போர்த்துக்கீசரும் மிகவும் சலிப்புற்ற நிலையில், 1539ஆம் ஆண்டு போர்த்துக்கீசப் படைகள் மாயாதுன்னையை அவனது சீதாவாக்கை இராச்சியத்தின் எல்லைவரைக்கும் துரத்திச் சென்றன. தப்புவதற்கு வேறு வழியின்றி மாயாதுன்னை போர்த்துக் கீசருடன் ஒருவாறு சமாதானம் செய்து கொண்டதோடு, சமோரினது படைகளை போர்த்துக்கீசரின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்திலிருந்தும் மீளுவதற்காக, சமோரினது படைவீரர் சிலரது தலைகளைக் கொய்து அவற்றைப் போர்த்துக்கேயருக்கு மாயா துன்னை அனுப்பிவைத்தான். இந்நிலையில் புவனேகவாகு தான் தொடர்ந்து 25 வருடகாலமாக கோவாவிலிருந்து வந்த போர்த்துக்கேயரின் படையணியினாலேயே தொடர்ந்து காப்பற்றப்பட்டு வந்த்மையினை உணர்ந்து கொண்டவனாக தனது பலவீனத்தை ஈடுசெய்வதற்காக மேற்கொண்டு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டான். அதாவது தனது சொந்த இராச்சியத்திலே போர்த்துக்கேயருக்குரிய உரிமங்கள் சிலவற்றை வரையறை செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினான். ஆனால் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாகவே அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு அவன் ஆணை வழங்கியிருந்தான்.
ஆனால் புதிதாக கிறிஸ்தவ மதத்தைத் தழுவியோருக்கும், இவர்கள் தொடர்பாக போர்த்துக்கல் மன்னனுடைய ஆணைகளுக்குமிடையே கோட்டையரசன் புவனேகபாகுவினது நடைமுறைகள் போர்த்துக் கேயருக்கு மிகுந்த நிர்வாக - நடைமுறைச்சிக்கல்களை உருவாக்கியதன் பயனாக, போர்த்துக்கேயர் அம்மன்னனை இறுதியில் கொன்றதோடு
75

Page 41
மட்டுமல்லாது, அவனது மருமகனான விதிய பண்டாரனையும் நாட்டை விட்டுத்துரத்தினர். 1551ஆம் ஆண்டில் நிகழ்ந்த புவனேகபாகுவின் இம் மரணத்தின் பின்னர், அவனது பேரனான தர்மபாலனை போர்த்துக்கீசர் கோட்டையரசனாக நியமித்திருந்தனர். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு ஞானஸ்னானம் செய்யப்பட்ட பின்னரே தர்மபாலன் கோட்டை யரசனாகப் போர்த்துக்கீசரால் பிரகடனப்படுத்தப்பட்டான் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது. போர்த்துக்கீசருடன் தொடர்புபட்ட வகையில் இணைக்கப்பட்ட கடல்முகப்புத் தள இராச்சியமான கோட்டையரசின் வரலாற்றில் இது முதற்கட்ட முடிவினை எமக்கு உணர்த்தி நிற்கின்ற தெனலாம். இத்தீவிற்கு வெளியிலேயிருந்து, அதுவும் மேற்கைரோப்பிய நாடொன்றிலிருந்து ஆட்சியுரிமை மதத்தின் பேரால் ஆசீர்வதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட முதலாவது நிகழ் வினை தர்மபாலனுடைய தங்கத்தாலான உருவச்சிலை போர்த்துக் கல்லுக்கு அனுப்பியெடுக்கப்பட்ட முறைமை எமக்கு உணர்த்து கின்றது. கடல் முகப்புத்தள அரசு ஒன்று நீர்ப்பரப்பினூடு அதன் இருக்கையை, நிலைபேறினை இணைத்திருந்த தன்மையையே தங்கத்தாலான தர்மபாலனது சிலை போர்த்துக்கலுக்கு அனுப்பி, எடுக்கப்பட்ட வரலாறு எமக்கு உணர்த்துகிறது.
கோட்டை இராசதானியும் தர்மபாலனும் :
இலங்கைத்தீவின் நவீன வரலாற்றியலில் தர்மபாலனின் காலம் மிகவும் தனித்துவமானதாக அமைந்தது எனலாம். மிகவும் விசித்திரமான குணாதிசயங்களையும் கொண்டிருந்த இம்மன்னன் போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாகவே தனது ஆட்சி முறைகளை நடாத்தி வந்திருந் தான். கோட்டையரசில் ஆட்சிபுரிந்த சிங்கள மன்னருடைய முடியுரிமை யானது மூத்தசகோதரனிடமிருந்து அடுத்த சகோதரனுக்கே கைமாற்றம் பெற்றுச் சென்றமையைக் காணமுடிந்தது. ஆனால் இங்கு தர்மபாலனது கோட்டையரசிற்கான முடியுரிமமானது அப்பாரம்பரிய முறை மையை முற்றாக மாற்றியமைத்து விட்டது. அவ்வாறான அரசியல் உரிமமாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் போர்த்துக்கீசர் களேயாவர். வழமையான அரசியல் உரிமப்பிரகாரம் புவனேகபாகு விற்குப் பின் மாயாதுன்னைக்கே கோட்டை இராச்சியம் சென்றிருக்க வேண்டும். ஆனால் புவனேகபாகு உயிரோடு இருந்த காலத்தில், றைகம்பண்டாரன் மரணித்து விட்டமையால், புவனேகபாகு தனது பேரனாகிய தர்மபாலனை கோட்டையரசிற்கு வாரிசாக நியமிப்பதற்கு எண்ணியிருந்தான் எனக் கூறப்படுகிறது. ஆனால் போர்த்துக்கேயரும் அவ்விருப்பத்திற்கு செவிசாய்த்திருந்தனர். ஏனெனில் மாயாதுன்னை
76

கோட்டையரசு முழுவதற்கும் அரசனாகில் தமது வியாபாரச் சிறப்புரிமைகள் யாவும் சிதறடிக்கப்பட்டுவிடும் என்பதனை அவர்கள் நன்கறிந்தே இருந்ததனாலாகும். ஆகவே தர்மபாலனின் முடியுரிமத்தை கோட்டையரசில் நிலைநாட்டியதோடு மட்டுமல்லாது, கோட்டையை தமது பாதுகாப்பரசாகவும் ஏற்றுக்கொண்டு போர்த்துக்கீசர் தொழிற் பட்டிருந்த தன்மையை கோட்டை இராசதானியில் அவர்கள் மேற்கொண்ட இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
1551ஆம் ஆண்டில் புவனேகபாகு கொல்லப்பட்டு இறந்ததும், தர்மபாலனின் தந்தையான விதிய பண்டாரன் பதிலரசனாக நியமனம் செய்யப்பட்டான். காரணம் தர்மபாலன் வயதில் மிகவும் சிறியவனாக காணப்பட்டமையே ஆகும். விதிய பண்டாரன் ஏற்கனவே போர்த்துக்கீயர் மீது அதிவெறுப்புக் கொண்டவனாகக் காணப்பட்டிருந்த காரணத்தினால் கோட்டை இராச்சியத்துடனான கறுவா வியாபாரத்தில் போர்த்துக் கீசருக்குரிய இடத்தினையும், பங்கினையும் கொடுப்பதற்கு மறுத்து விட்டிருந்தான். இவ்வாறான ஒரு பின்னணியில் போர்த்துக்கீசர் விதிய பண்டாரனுடன் நேரடிச் சமர் செய்வதைத் தவிர, மாற்றுவழிகள் எவற்றையும் கண்டிலர் விதியபண்டாரனை எதிர்த்து நடாத்தப்பட்ட சமரில் போர்த்துக்கீசருடன் மாயாதுன்னையும் சேர்ந்து கொண்டான். போர்முடிவில் விதியபண்டாரன் கைதியாக்கப்பட்ட நிலையில், கோட்டை இராச்சியத்தின் மன்னனாகத் தர்மபாலன் நியமனமானான். போர்த்துக்கேயருடைய நீண்டநாள் விருப்பப்படி, தர்மபாலன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியதோடு, டொன் - ஜ"வான்-தர்மபாலன் எனத் தனது நாமாவழியையும் மாற்றியமைத்துக் கொண்டிருந்தான். டொன்-ஜுவான்-தர்மபாலனின் பரிவான அரவணைப்பின் கீழ் போர்த்துக்கேயர் கோட்டையில் எல்லாவிதமான வியாபாரச் சலுகைகளையும், குடியுரிமையையும் அனுபவித்ததோடு மட்டுமல்லாது கடல் முகப்புத்தளப் பண்பாட்டின் முதற்தர வாரிசுகளாகிய போர்த்துக்கீசரை கோட்டையரசின் இராச்சிய பரிபாலனத்துறைகளைக் கவனிப்பதற்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட்டன. "எங்கிருந்தோ வருகைதந்த அந்நியராகிய போர்த்துக்கீசருக்கு இருக்க இடம் கொடுத்து, வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கி, மதத்தைப் பரப்புவதற்கு உரிமம் வழங்கியதோடு, முடிவில் நாட்டையாட்சி புரியவும், தமது குடியேற்ற நாட்டு பரிபாலனத்தை இங்கு மேற்கொள்ளவும் கோட்டையரசர்கள் சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டிருந்தனர். தர்மபாலனுடனான போர்த்துக்கீசர்களின் தொடர்பும்
77

Page 42
உறவு நிலையும் கோட்டையரசில் ஒரு புதிய அரசியல் யுகத்தினையே தோற்றுவித்து விட்டிருந்தது.
சீதாவாக்கையின் வரலாறும் யாழ்ப்பாண இராச்சியத்துடனான தொடர்பும் :
கோட்டை இராசதானியின் வரலாற்றில் சீதாவாக்கை தனித்துவமான வரலாற்றுப்பரப்பிற்குரிய ஒர் அங்கமாக அமைவதனைக் காணமுடியும். காரணம் கடற்தளச் செல்வாக்குக் கொண்ட அந்நியரான போர்த்துக்கீசரின் மதப்பரம்பலுக்கெதிராகவும், அவர்களது வியாபார ஏகபோகத்திற் கெதிராகவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவற்றை உருவாக்கிக் கொடுத்த களமாக அது காணப்பட்டமையினாலாகும். சிங்கள இனத்தினதும், பெளத்த சமயத்தினதும் காவலன் என்ற நிலையில் அந்நியரான போர்த்துக்கீசரையும் அவர்களது கிறிஸ்தவ மதப்பற்றையும் எதிர்த்து நின்ற இலங்கையின் முதல் மன்னனாக விளங்கியவன் மாயாதுன்னை என்றால் அது மிகையாகாகது. கொல்லப்பட்ட புவனேகபாகுவிற்குப் பின் கோட்டையரசிற்குரிய உண்மையான வாரிசு என்றவோரடிப்படையிலும் பெரும்பாலான சிங்கள இனத்தினதும் பெயரால் ஒன்றுபடச் செய்து, சீதாவாக்கை இராச்சியத்தினைக் கட்டியெழுப்பி, இலங்கையின் கடல்முகப்புத்தள இராச்சியங்களுள் சிறந்த நிலையினைப் பெற்றுக் கொடுத்தவனாக மாயாதுன்னை காணப்பட்டான். போர்த்துக்கீசருக்கு எதிராக முதன்முதலாக அயல் இராச்சியங்களுடன் ராஜரீக, ராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்தியதோடு, தனித்துவமான பண்பாட்டு மலர்ச்சிக்கும் வித்திட்டு நின்றவனாக மாயாதுன்னை விளங்கியிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1521ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியமானது மூன்றாகப் பிரிவினை செய்யப்பட்ட பொழுது, மாயாதுன்னை சீதாவக்கையைப் பெற்றிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. றைய்கம, கோட்டை ஆகிய இரு ஆட்சிப் புலங்களுக்கிடையே சீதாவாக்கை இராச்சியம் அமைந்து காணப்பட்டது. பாரம்பரிய உணர்வும், வீரமும், தேசாபிமானமும் ஒருங்கே கொண்டிருந்த மாயாதுன்னையும் அவனது மகனான முதலாம் இராஜசிங்கனும் சீதாவக்கை இராச்சியத்தினை பலவழிகளிலும் பலமடையச் செய்து, தனித்துவமான ஒரு பண்பாட்டு நிலைக்களனாக உருவாக்கியிருந்தமை இலங்கை வரலாற்றில் அது பதிவு செய்யப்படுவதற்குக் காரணமாயிற்று. றைகம பண்டாரன் மரணமடைந்தது றைய்கம இராச்சியத்தையும் சீதாவாக்கையுடன் இணைந்து, விஸ்தரித்ததோடு, இவ்விரு இராச்சியங் களுக்குமான நிலையான பாதுகாப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக
7

முதலில் யாழ்ப்பாண அரசுடனும், பின்னர் தென்னிந்திய அரசுகளுடனும் தொடர்புகொண்டு, போர்த்துக்கீசரின் தாக்குத் தணிப்பிலிருந்து சீதாவாக்கையை மீட்டெடுப்பதற்கு முனைந்திருந்தான். முதலாம் இராஜசிங்கன் அக்கொள்கையில் ஒரளவிற்கு வெற்றியும் அடைந்திருந்தான் எனக் குறிப்பிடலாம்.
கோட்டை இராச்சியத்தினையும், டொன்ஜ"வான் தர்மபாலனையும் பாதுகாத்து, நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு போர்த்துக்கீசருக்கு ஏற்பட்டுக் கொண்டமை காரணமாக சீதாவாக்கை இராச்சியத்தின் இறைமையில் போர்த்துக்கீசர் கவனம் செலுத்த முடியாமற்போனது. அதே நேரத்தில் இந்தியாவிலுள்ள போர்த்துக்கீசரின் வர்த்தக மையங்களிலும் பண்டக சாலைக் குடியேற்றங்களிலும் போர்த்துக்கீசருக்கெதிரான கலகங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இந்நிலையில் கொழும்புத்துறைமுகத்தினையும் கோட்டை இராச்சியத்தினையும் ஏககாலத்தில் பாதுகாப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதனையுணர்ந்த போர்த்துக்கீசர் 1565ஆம் ஆண்டு கோட்டையரசினின்றும் தர்மபாலனுடன் நீங்கி வந்து, கொழும்புத் துறைமுகப் பரப்பில் தமது வாணிபக்கிடங்குடன் அண்டி வாசம்செய்யத் தலைப்பட்டனர். இவ்வரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட மாயாதுன்னை கோட்டையையும், அதன் நீண்ட கரையோரப் பரப்பினையும் கைப்பற்றித் தனது சீதாவாக்கை இராச்சியத் துடன் இணைத்துக் கொண்டான். இவ்விணைப்பின் பின்னர் போர்த்துக் கீசரைக் கொழும்புத்துறைமுகப்பரப்பினின்றும் வெளியேற்றுவதற்காக அவன் பல முறைகள் முயன்றும் அது கைகொடுக்க முடியாத காரியமாயிற்று.
'சிங்கள இனத்தினதும், பெளத்த சமயத்தினதும் காவலன்' எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட மாயாதுன்னையினதும், முதலாம் இராஜசிங்கனதும் "தேசாபிமானம் மிக்க நடவடிக்கைகளினால் சீதாவக்கை இராச்சியம் தனித்துவம் மிக்க ஒர் அரசாக வளர்ச்சி பெற்றுக் கொண்டது. கி.பி. 1550ஆம் ஆண்டிலிருந்து 1590ஆம் ஆண்டு வரைக்கும் சீதாவாக்கை போர்த்துக்கீசரைப் புறம் தள்ளிய நிலையில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 1550இல் இருந்து எழுச்சிபெற்ற சீதாவாக்கை இராச்சியத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளே போர்த்துக்கீசரை கோட்டை இராச்சியத்தினின்றும் புறந்தள்ளி வைத்ததோடு டொன் - ஜுவான் - தர்மபாலனின் பெயரால் போர்த்துக்கீசரின் பாதுகாப்பினைப் பெற்று வாழ்ந்திருந்த அரச குடும்பத்தினரும் ஒரு சிறிது காலம் கோட்டையை விட்டு நீங்கி, கொழும்புத் துறைமுகத்திற்குள் மட்டும் உள்ளடங்கி வாழவேண்டிய
79

Page 43
சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அதாவது தர்மபாலனின் பெயரால் அதிகாரம் செலுத்திவந்த போர்த்துக்கேயரை ஒரு சிறிது காலம் கொழும்பின் சுற்றுப் புறத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்திருக்குமளவிற்கு சீதாவாக்கை இராச்சியத்தின் கட்டமைப்பு, பொருளியல் வளம், சமூகக் கட்டுமானம் என்பன நன்னிலை பெற்றிருந்தன. பிரான்சிஸ்கன் மதபோதகர்களுடைய நடவடிக்கைகள் யாவும் இக்காலகட்டத்தில் கொழும்புத்துறைமுக எல்லைப் பரப்பிற்குள்ளேயே வரையறை செய்யப்பட்டிருந்தன என்பதும் இங்கு நோக்கத்தக்கது. 1590 வரையும் சீதாவாக்கை அரசு மிகப்பலம் வாய்ந்திருந்த வகையில், போர்த்துக்கேயரால் மீண்டும் கோட்டையர சினைப் பலப்படுத்தவோ அல்லது கண்டி, யாழ்ப்பாண அரசுகள் மீது கவனம் செலுத்துவதற்கேற்ற வாய்ப்பும், சூழலும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை. யாழ்ப்பாண அரசில் சீதாவாக்கைக்குச் சமகாலத்து மன்னர்களாக ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்கள் போர்த்துக்கீசருக்கெதிரான தீவிர போக்குடையவர்களாகவே தொழிற்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வடிப்படையில் சீதாவாக்கையின் ஆட்சியாளர்களுக்கும நல்லூர் ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களுக்குமிடையே ராஜ்ய அடிப்படையிலான சிநேகயூர்வ உறவு இயல்பாகவே பேணப்பட்டி ருந்தமையையும் கண்டு கொள்ள முடிகிறது. இவ்வாறான உறவு முறைகளைப் பேணியவர்களுள் சங்கிலி மன்னன் முக்கியமானவன் ஆவான். இவனால் போர்த்துக்கேயருக்கும், கத்தோலிக்க மதத்திற்கும் எதிராக மிகத்தீவிரக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்கரையோர மீன்பிடிக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த மதத்தைக் கைவிட்டு கத்தோலிக்க மதத்தைத் தழுவி வந்த பேராபத்தினை உணர்ந்த சங்கிலிமன்னன் போர்த்துக்கேயருக் கெதிரானதீவிர போக்குடைய மன்னனான மாயாதுன்னையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு போர்த்துக்கேயருடைய மதவாதிக்கப் பரப்பல் நடவடிக்கைகளை கடற்கரையோரக் கிராமங்களில் வெற்றிகரமாக முறியடிப்பதற்குரிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருந்தான். அதற்காக வேண்டி ராஜிய தூதுவர்களையும் இவ்விருவரும் பரஸ்பரம் பரிமாற்றியும் கொண்டனர்.
மாயாதுன்னையின் மரணத்தின் பின்னர் அவனது மகனான முதலாம் இராஜசிங்கன் சீதாவாக்கை இராச்சியத்தின் வளர்ச்சிக்கு வேண்டிய படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். மீண்டும் மீண்டும் கோட்டை இராச்சியத்தின் ஆள்பதியான தர்மபாலன் மீதான போர்த்துக்கீசரின் உதவிக்கரத்தினை முறியடிப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டான். இருந்தபோதிலும் கொழும்பிலும், அதனைச்சூழவுள்ள
80

சுற்றாடற் பரப்பினின்றும் போர்த்துக்கேயரை விரட்டுவது என்பது முதலாம் இராஜசிங்கனுக்கு இயலாத காரியமாகிவிட்டது. இந்நிலையில் கண்டி இராச்சியத்தின் மீது இராஜசிங்கன் தனது படையெடுப்பு நடவடிக்கை களை முடுக்கிவிட்டான். 1582ஆம் ஆண்டு கண்டியில் ஆட்சி செய்து கொண்டிருந்த கலியரட்ட பண்டாரனைத் தோற்கடித்ததோடு, கண்டி இராச்சியத்தினைத் தனது சீதாவாக்கை இராச்சியத்துடனும் இணைத்துக் கொண்டான். இந்நிகழ்வானது சீதாவாக்கை இராச்சியத்தின் வளர்ச்சியில் அதன் உச்சநிலையைக் குறித்து நின்றது.
இராஜசிங்கன் கண்டியைக் கைப்பற்றியதும், கண்டியரசனாகிய கலியரட்ட பண்டாரன் தனது மகள், மருமகன் ஆகியோருடன் தப்பிச் சென்று கொழும்பிலுள்ள போர்த்துக்கேயரிடம் தஞ்சம் புகுந்து கொண்டான். கலியரட்ட பண்டாரன் கொழும்பில் காலமானதன் பின்னர், அம்மன்னனது மகளும், மருமகனும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதோடு, தமது பெயரையும் முறையே டோனா கதறினா டொன் பிலிப் எனவும் மாற்றிக் கொண்டனர்.
முதலாம் இராஜசிங்கன் ஆட்சிக் காலம் தொடர்பாக வரலாற்றாசிரி யர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கை முழுவதற்கும் தன்னை ஆள்பதியாக்க வேண்டும் என்ற அடிப் படையில் முயற்சிகளை மேற்கொண்டுவந்த இராஜசிங்கனுக்கு அந்நோக்கம் நிறைவேறாமையால் மனமுடைந்தவனாகக் காணப் பட்டான் என்றும், அதனால் மக்களையும், பெளத்தபிக்கு, துறவி களையும் மிகவும் துன்புறுத்தினான் என்றும் பலவாறாக அவனைப் பற்றிக் குறிப்பிடுவதனைக் காணலாம். கண்டியிலும், சீதாவாக்கை யிலும் ஏக காலத்தில் முதலாம் இராஜசிங்கனுக்கெதிராக மக்களாலும் பெளத்த சமயத்துறவிகளாலும் பல எதிர்ப்பியக்கங்கள் நடாத்தப்பட்டன. சீதாவாக்கை இராச்சியத்துடன் கண்டியரசு இணைக்கப்பட்ட வகையை எதிர்த்து கண்டியப் பிரதானிகளும், கண்டிய மக்களும் ஆர்ப்பாட்டம் புரிந்தனர். இதனால் கண்டி சீதாவாக்கையினின்றும் தனது இணைப்பை நீக்கிக் கொண்டது. 1592இல் முதலாம் இராஜசிங்கன் இறந்ததும் சீதாவாக்கை இராச்சியத்தின் ஸ்திரம் மேலும் பலவீனமடைந்ததுடன் கொழும்புத்துறைமுகச்சுற்றாடல் பரப்பிற்குள் மட்டும் கட்டுப்பட்டிருந்த போர்த்துக்கேயர் மீண்டும் பரந்து சென்று கோட்டையுடன் சீதாவாக் கையும் இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை நாடி நின்றனர். அவ்வழியே கண்டி, யாழ்ப்பாண இராச்சியங்களுடனான தொடர்பு களை ஏற்படுத்துவதற்குரிய அரசியலடிப்படையிலான சந்தர்ப்பங்
களையும் எதிர்நோக்கி நின்றனர்.
87

Page 44
யாழ்ப்பாண அரசும் அதன் கடல் முகப்புத்தளமான மன்னாரும்: கி.பி. 15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் காணப்பட்டிருந்த மூன்று இராச்சியப் பிரிவுகளுள் மூன்றாவதாக விளங்கிய யாழ்ப்பாண அரசு வழமை போன்று அரண்மனைக்குள்ளே காணப்பட்ட அதிகாரப் போட்டியின் சூழ்ச்சி நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டி ருந்தது. யாழ்ப்பான இராச்சியத்தின் வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலை அந்த ஸ்திரமற்ற நிலையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதனைக் காணலாம். போர்த்துக்கேயர் இலங்கையை வந்தடைந்த போதுநல்லூரைத்தலைநகராகக் கொண்டு நிர்வகிக்கப்பெற்ற யாழ்ப்பாண இராச்சியத்தில் பரராசசேகர மஹாராஜா என்பவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். 1519ஆம் ஆண்டு சங்கிலி என்பவன் பரராசசேகரனைச் சிம்மாசனத்தினின்றும் இறக்கித்துரத்திவிட்டு, யாழ்ப்பாண இராச்சியத் தினைக் கைப்பற்றிக் கொண்டான். இந்நிலையில் அரசபதவியிலிருந்து இறக்கப்பட்ட பரராசசேகரன் போர்த்துக்கேயரை நாடிச் சென்று, மன்னாரில் அவர்களைச் சந்தித்ததோடு, தனது அரச பதவியை சங்கிலி மன்னனிடமிருந்து மீட்டெடுத்துத்தரும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மதத்தைப் பரப்பவும், வியாபார சலுகைகளைப் பெறவும்தான் உத்தரவாதமளிப்பதாக ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டான். அதன் விளைவாக போர்த்துக்கேயப் படையொன்று யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்டது. படைவந்து கொண்டிருக்கும் செய்தியை அறிந்து கொண்ட சங்கிலி மன்னன், பரராசசேகரன் தருவதாக செய்து கொண்ட அதே சலுகைகளையும், உரிமங்களையும் தான் தருவதாக ஒப்புக் கொண்டதன் பேரில் போர்த்துக்கேயர் சங்கிலி மன்னனையே யாழ்ப்பாணத்தில் அரசுபுரிய அனுமதித்துச் சென்றனர். இச்சம்பவமானது யாழ்ப்பாண அரசினது கடல்முகப்புத்தளமாக விளங்கிய மன்னாருக் கும் யாழ்ப்பாண அரசிருக்கைக்கும் இடையே காணப் பட்டிருக்கக் கூடிய நெருங்கிய புவிசார் அரசியற் தொடர்பினை வெளிப் படுத்துவதாக உள்ளது. யாழ்ப்பாண அரசுடனான போர்த்துக்கேயரின் இம்முதற் தொடர்பு மீண்டும் மீண்டும் அவ்வரசின் உள்ளக அரச வாரிசுரிமைப் போராட்டத்தில் அவர்களைப் பங்குகொள்ள வைத்ததோடு, இறுதியில் அக்கடல் முகப்புத்தள இராச்சியத்தினையே அவர்கள் வசம் ஒப்புவிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியமையையும் காணலாம்.
போர்த்துக்கேயருக்கு திறை கொடுத்தலிலிருந்து தன் இராச்சிய உரிமையையும் அதன் தொடர்ச்சியையும் பாதுகாத்த சங்கிலி மன்னனுக்கு யாழ்ப்பாண இராச்சியத்தினுள் கத்தோலிக்கமதப் பரப்பலின் அதிதீவிர வளர்ச்சியைத் தடுக்க முடியாதிருந்தது. கத்தோலிக்க குருமார்கள்
82

மன்னார்த்தீவிலிருந்து தொடங்கி பூநகரியூடாக அளவெட்டி, பாஷையூர் கடற்கரை, பருத்தித்துறைக் கடற்கரை, கிளாலிக் கடற்கரை போன்ற கரையோரக் கிராமங்களூடாக குடா நாட்டின் உட்பகுதிகளை நோக்கி தமது தீவிர மதப்பிரசார, மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். கத்தோலிக்க சமயம் விரைவாகவும், முழுமையாகவும் யாழ்ப்பாண இராச்சியத்திற்குட்பட்ட மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதைக் கண்ட சங்கிலிமன்னனுக்கு தனது இராச்சியத்தினைப் பற்றிய பெரும் திகில் ஏற்படத்தான் செய்தது. மதமாற்றத்திற்குட்பட்ட கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமேயானால், அது இறுதியில் இவ்வரசினை போர்த்துக்கேயர் வசம் ஒப்புவித்துவிடும் என அவன் எண்ணினான். இறுதியில் அம்மதத்தை வேகமாகப் பரவவிடாது தடுப்பதற்கான சில வேலைத்திட்டங்களிலும் அவன் நேரடியாக இறங்கிச் செயற்படுத்தினான். அதில் ஒன்றாகத்தான் 600 பேரை மன்னார்த் தீவில் வைத்து படுகொலை புரிவித்த சம்பவமும் அமைந்தது என்று கூறப்படுகிறது. மன்னார்ப் படுகொலை பற்றிக் கேள்வியுற்ற போர்த்துக் கேயர்தம் பெரும் படையொன்றை யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பினர். ஆனால் சங்கிலிமன்னன் நல்லூரிலிருந்து பருத்தித்துறையிலுள்ளதும்பளை நகருக்குத்தப்பிச் சென்று பின் அங்கிருந்து தென்னிந்தியாவுக்குச் சென்று மறைந்து வாழத் தொடங்கினான். கி.பி. 1560இல் நல்லூரை வந்தடைந்த போர்த்துக்கீசப் படைகள் அங்கு அவன் இல்லாதது கண்டு பெரும் ஏமாற்றத்திற்குட்பட்ட போதும், விரைவிலேயே அம்மன்னன் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றிருப்பதைத் தெரிந்துகொண்டு, அங்கு இந்தியாவில் வைத்து அம் மன்னனைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கை களை மேற்கொண்டனர். சங்கிலி மன்னன் கைது செய்யப்பட்டதோடு, பல நிபந்தனைகட்குட்பட்ட வகையில் மீண்டும் நல்லூரில் தனது அரசபொறுப்புக்களை வகிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டான். அம்மன்னனது அரச-பரிபாலன விடயங்களைக் கண்காணிப்பதற்காக போர்த்துக் கேயரது ஒரு சிறிய சிறப்புப்படை அங்கு கண்காணிப்புக் கடமையிலிடு பட்டது.
சங்கிலிமன்னன் மன்னார்த்தீவில் புரிவித்த அரசப்படுகொலையானது கத்தோலிக்க மக்கள் மத்தியில் பெரும் அச்சஉணர்வையே தோற்றுவித் திருந்தது. இக்காரணத்தினால் 1560ஆம் ஆண்டில் கொன்ஸ்தாந்தைன்-டீ - பிறகன்ஸா (Constantine - De - Braganza) என்ற போர்த்துக்கேய இராசப்பிரதிநிதியினால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு ஒருவிதத்தில் மன்னார்த்தீவினை போர்த்துக்கேயர் வசமாக்க உதவியிருந்தது எனலாம். யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய
83

Page 45
கடல்முகப்புத்தளமாக விளங்கிய மன்னார்த்தீவு போர்த்துக்கேயருக் குரிய நடவடிக்கைத் தளமாகக் கிடைத்தமையானது படிப்படியாக யாழ்ப்பாண இராச்சியம் மீதான தமது கண்காணிப்பினையும், கட்டுப்பாடுகளையும் செயற்படுத்துவதற்கு உகந்த ஒரு புறச் சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது எனலாம். 1560ஆம் ஆண்டு நிகழ்ந்த இச் செயலால் மன்னார்த்தீவினை கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாறிச்சென்ற மக்கள் தமது பாதுகாப்புக்கான ஒரு மையமாகக் கொண்டு அங்கு சென்று குடியேறி வாழ்வதற்கும் ஆரம்பத்திருந்தனர். பிரமாண்டமான ஒரு கோட்டையை போர்த்துக்கீசர் அங்கு அமைத்து தமது நிர்வாக நடவடிக்கைகளை அப்பிரதேசத்தில் வாழும் கத்தோலிக்க மக்கள் சார்பாக ஆரம்பித்து வைத்திருந்தனர். மீன்பிடிக் கரையோரக் கிராமங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் மன்னார்த் தீவிற்குச் சென்று குடியேறத் தொடங்கினர். எனவே போர்த்துக்கேயரை எதிர்க்கும் யாழ்ப்பாண இராசதானிக்குரிய மன்னர்களது நடவடிக்கைகளை முறியடிக்க மேற்கொள்ளும் ஆரம்ப நடவடிக்கைத் தளமாகவும் இம் மன்னார்த் தீவு அமைவுற்றது.
இக்கட்டத்திலேயே மீண்டும் இரண்டாம் முறையாக யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதான போர்த்துக்கேயப் படைகள் தலையிட வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது. ஏற்கனவே சங்கிலிமன்னனின் ராஜரீக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நல்லூரில் விடப்பட்டிருந்த அச்சிறிய போர்த்துக்கேயப் படைகள் நாளடைவில் நல்லூரைச் சுற்றிலும், அதன் அயற் பிரதேசங்களிலும் வாழ்ந்த மக்களது குடியிருப்புக்களுக்குள் சென்று மக்களைத்துன்புறுத்தியதோடு, பொருட்களைச் சூறையாடியும், பெண்களது கற்பிற்குப் பங்கம் ஏற்படுத்தியும் மக்கள் வாழ்வில் பெரும் கலவரங்களை ஏற்படுத்திவிட்டிருந்தனர். இதனால் கோபாவேசத்துடன் பொங்கி எழுந்த மக்கள் அப்படைகளை நல்லூரிலிருந்து விரட்டியடித்து யாழ்ப்பாணத்திலுள்ள பொம்மைவெளிக்கு அப்பால் கொண்டு சென்று விட்டிருந்தனர். அதேகையோடு சங்கிலியனுடைய ஆட்சியிலும் வெறுப்புற்றிருந்தமையால், மக்கள் அம்மன்னனையும் ஆட்சியதிகாரத்தி னின்றும் நீக்கி, காசிநயினார் என்பனுக்கு அவ்வதிகாரத்தை வழங்கியிருந் தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்தபடி காசி நயினாரும் சிறந்த மன்னனாகவோ - நிர்வாகியாகவோ காணப்படவில்லை, பதிலாக சங்கிலியை விட கொடுங்கோலனாகவே அவன் காணப்பட்டான். இதனால் காசிநயினாரையும் அதிகாரத்திலிருந்து நீக்கியுதவும்படி மக்கள் போர்த்துக்கேயரை கேட்டுக்கொண்டமையின் பிரகாரம் அவர்களது இரண்டாவது படையெடுப்பு யாழ்ப்பாணம் மீது மேற்கொள்ளப் பட்டது. இப்படையெடுப்பின் விளைவாக "பெரியபிள்ளை' என்பவன்
84

மன்னனாக்கப்பட்டான். இக்கட்டத்திலிருந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிடும் உரிமத்தையும் போர்த்துக்கேயர் பெற்றிருந்தனர்.
கடல்முகப்புத்தள இராச்சியங்கள் போர்த்துக்கேயர் வசமாதல்: இலங்கையின் கடல்முகப்புத்தள இராச்சியங்கள் போர்த்துக்கேயரின் நேரடியான நிர்வாகக் கட்டமைப்பிற்குள் உட்படுவதனை எந்தவொரு சக்தியினாலும் தடுக்க முடியாதிருந்தது. கி.பி. 15ஆம் நூற்றாண்டினைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் சமுத்திர - கடற்கரையோர வியாபார மார்க்கங்களும், துறைமுகங்களும், நகரங்களும் கடற்படை வலுவின் அடிப்படையிலான புவிசார் அரசியல் வலுவாக்கத்தினைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கின. இவ்வாறான இராணுவ, பொருளாதார நிறுவனக் கட்டமைப்புக்கள் சமுத்திரவியல் தொடர்பூடகங்களின் வாயிலாக நேரடியாகவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைத் தீவின் கடல்முகப்புத்தள இராச்சியங்களும், அவற்றின் செல்வாக்கிற்குள் அகப்பட்டுக்கொள்வது தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டது. அதே காலப்பகுதியில் இலங்கைக் கடல்முகப்புத்தள இராச்சியங்களாக விளங்கிய கோட்டை, நல்லூர் ஆகிய இராசதானிகள் கடல் வாணிபத்திற்குரிய துறைமுக தொழிலாளர் நிறுவன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருந் தனவே தவிர, அந்நிய கடற்படையொன்றினால் ஏற்படக்கூடிய தாக்கத்தினைத் தணிப்பதற்கேற்ற கடற்சமவலுவுடைய படை முகாமைத்துவத்தினைக் கொண்டிருக்கவில்லை. இதனால் உண்ணாட்டரசியல் நிலையில் ஸ்திரமின்மை ஏற்பட்ட காலங்களில் இவ்விராச்சியங்களில் போர்த்துக்கேயரது உதவி பலமுறை கோரப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதுவே இலங்கையின் கரையோர மாகாணங்களைப் போர்த்துக்கேயர் மிக விரைவாகக் கைப்பற்றிக் கொள்வதற்கு அடிப்படையாக விளங்கிய காரணியாகும்.
இலங்கையின் கரையோர மாகாணங்களில் குறிப்பாக கோட்டை, நல்லூர் இராசதானிகளில் சமகாலங்களில் நிலவிய சீரழிந்த அரசியல் முகாமைத்துவம், அடுத்துவர இருக்கும் வாரிசுரிமை தொடர்பான பிணக்குகள், அந்தந்த இராச்சியங்களில் அதிகாரத்தில் இருந்த அரண்மனைக் குழாமிற்கு கடல்சார் வலு தொடர்பான புதிய அரசியலாதிக்கவாதம் பற்றிய பிரக்ஞையின்மை போன்ற காரணிகளினால் அவ்வரசுகள் தத்தமது இறைமை)யாண்மையை அந்நியரான போர்த்துக் கேயரிடம் கையளித்துவிட்டு, ஆட்சிமுகாமைத்துவத்திலிருந்து ஒதுங்க வேண்டியிருந்தது. வெறும் வியாபாரிகளாக மட்டும் இலங்கையை வந்தடைந்த போர்த்துக்கேயர், கோட்டை இராச்சிய மன்னர்களிடையே
85

Page 46
நிலவிய ஒற்றுமையின்மையால் தொடர்ந்தும் அங்கேயே நிலைத்திருந்து தமது எதிர்கால நடவடிக்கைகளுக்குகந்த கருத்தமைவுகளை உருவாக்க வேண்டிய காலஅவகாசம் வழங்கப்படக் காரணமாயிற்று. மாயாதுன்னைக் கெதிராகப் புவனேகபாகுவுக்கு உதவி செய்யும் நிலைமை ஏற்பட்டதன் பின்னர் கோட்டை இராச்சியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாளர் என்ற பதவியையும் போர்த்துக்கேயர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாய்ப்பின் அடிப்படையில் கோட்டையில் வியாபார சலுகைகளை எல்லாம் அனுபவிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு உடன் ஏற்பட்டது.
டொன்ஜ"வான் தர்மபாலனின் தலைமையில் கோட்டை இராச்சியம் நிர்வகிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து சீதாவாக்கையில் முதலாம் இராஜசிங்கன் இறந்த காலகட்டம் வரைக்குமுள்ள காலப்பகுதி வரைக்கும் சற்று ஒடுங்கி, கொழும்புத்துறைமுக நகரப் பகுதிக்குள் மட்டும் கட்டுப் பட்டிருந்த போர்த்துக்கீசர், கண்டி (படையெடுப்பிலிருந்து) யிலிருந்து பின்வாங்கி வந்துகொண்டிருந்த முதலாம் இராஜசிங்கனின் திடீர் மரணத்துடன் மீண்டும் கோட்டை இராச்சியம் முழுவதிலும் தமது அதிகார வலுவை ஏற்படுத்தத் தொடங்கி விட்டிருந்தனர். சீதாவாக்கையில் இராஜசிங்கன் 1592இல் இறந்ததும், அடுத்து அதிகாரத்திற்கு வரவேண்டிய வாரிசு இன்மையால், மீண்டும் அங்கு அரசியலாதிக்கவுரிமைக்கான போராட்டம் ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்ட போர்த்துக்கேயர், அங்கு படையுடன் விரைந்து சென்று, சீதாவாக்கை இராச்சியத்தினைக் கோட்டையரசுடன் இணைத்துக் கொண்டனர். இவ்வாறு சீதாவாக்கை இராச்சியமும், றைய்கம இராச்சியமும் ஒன்றிணைக்கப்பட்ட வகையில் தர்மபாலனது பரிபாலனத் திற்குள் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் கோட்டையில் போர்த்துக்கேயரது ஆதிக்கம் மிகச் சுலபமாகவும், அதிகரித்த நிலையிலும் ஸ்தாபிக்கப்பட்டது. சீதாவாக்கை இராச்சியம் கைப்பற்றப்பட்டதும் போர்த்துக்கேயரின் ஆட்சியின் பரப்பானது இலங்கையின் தெற்கு, தென்மேற்குப் பிராந்தியங்களை நோக்கி விரிவடைந்தமை குறிப்பிடத்
தககது.
இந்நிலையில் 1597ஆம் ஆண்டில் டொன்ஜ"வான் தர்மபாலன் தனக்குப் பின் வாரிசு எதுவுமின்றி இறக்க நேரிட்டது. அவன் உயிரோடு வாழ்ந்த காலத்தில் ஜீவனத்துக்காக போர்த்துக்கேயரின் மீது தங்கி வாழ்ந்திருந்தமையினாலும், பிற்காலச் சந்ததிகள் எவையுமின்றிக் காணப்பட்டதனாலும் கோட்டையின் அரசுரிமையை தர்மபாலன் மரணசாசனம் ஒன்றின் மூலமாக போர்த்துக்கல் மன்னனுக்கே ஒப்படைத்திருந்தான். டொன்ஜ"வான் தர்மபாலன் வரைந்த இறுதி

மரணசாசனத்தின் பிரகாரம், அவன் இறந்த பின்னர் போர்த்துக்கல் அரசனான முதலாம் பிலிப் என்பவனைச் சென்றடைந்தது. கடல் முகப்புத்தள இராச்சியமொன்றின் மீதான ஆதிபத்திய உரிமமானது மேற்கைரோப்பாவிலுள்ள சமுத்திரவியற் பேரரசொன்றைச் சென்றடைந்து கொண்ட முதலாவது சம்பவத்தினை தர்மபாலனது மரணசாசனம் நிகழ்த்தி வைத்தது. கீழைத்தேய வரலாற்றிலும், இலங்கையின் நவீன கால வரலாற்றிலும் தர்மபாலனது மரணசாசனம் பாரதூரமான விளைவுகளை அரசியல், பண்பாட்டு ஆதிபத்தியம் தொடர் பாக நிகழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. போர்த்துக்கேயப் பிரதிநிதிகள் கோட்டை இராசதானி மக்களையும் பிரதானிகளையும் மல்வானை என்ற ஒரிடத்திற்கழைத்து போர்த்துக்கல் நாட்டுச் சட்ட திட்டங்களின் படியும், இந்நாட்டு வழமைப்படியும் தாம் இந்நாட்டை ஆட்சிசெய்வதற்கு தகுதியும், உரிமமும் பெற்றுவிட்ட தாக அறிவித்துக் கொண்டார்கள். பலாத்காரமாக மக்களை மதமாற்றத்திற்கு உட்படுத்துவதில்லை எனவும், தாமாகவே கத்தோலிக்க மதத்தைத் தழுவுவோரைத் தடுப்பதில்லை எனவும், அவ்வாறு இரண்டு மதப்பிரிவுகளைச் சேர்ந்தோரையும் போர்த்துக்கீசநிர்வாகிகளோ அல்லது சுதேசிகளோ எவ்வகையிலும் துன்புறத்தக் கூடாது எனவும் 1597ஆம் ஆண்டு மல்வானையில் வைத்து இவ்விரு பகுதியாரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அசிவிடோ என்றழைக்கப்பட்ட போர்த்துக்கீசத் தளபதியின் தலைமையிலேயே மல்வான ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீதாவாக்கை, கோட்டை இராச்சியங்களில் நிகழ்ந்த சம்பவங்களை யொத்தே யாழ்ப்பாண இராச்சியத்திலும் போர்த்துக்கேயர் அரசியலடிப் படையிலான செல்வாக்கினை நிலைநாட்டுவதற்குரிய அரிய சந்தர்ப்பத் தினை யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கேயருக்கு வழங்கினர். சங்கிலிக்கும் பரராசசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையைப் பயன்படுத்திய வகையில் யாழ்ப்பாண அரசில் தலையிட்ட போர்த்துக் கேயர், கி.பி. 1621ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசினைத் தம் குழு ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்குரிய சூழ்நிலைகளையும் தம் கைவரப் பெற்றிருந்தனர். சங்கிலி மன்னனது தான்தோன்றித் தனமான ஆட்சியதிகாரவரம்பு, மற்றும் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றப் பட்டோரை கொடூரமாக நடாத்திய விதமுமே போர்த்துக்கேயரை யாழ்ப்பாண ஆட்சியாளன் மீது பழிவாங்கத்தூண்டியது. முதலாம் தடவை யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துச் சென்ற போர்த்துக்கேயர் தப்பிச் சென்ற சங்கிலியை மீண்டும் கொணர்ந்து இங்கு அரசனாக்கினர்.
87

Page 47
இம்முறையும் அம்மன்னன் போர்த்துக்கேயருக்கெதிரான பல நடவடிக்கை களில் ஈடுபட்டதோடு, கத்தோலிக்க மக்களின் தீவிர வெறுப்புக்குள்ளும் ஆளாக்கப்பட்டான். இதனால் இரண்டாம்முறை படையெடுத்துவந்த போர்த்துக்கேயர் படையானது சங்கிலியை தந்திரமாக கைதுசெய்து, கொலை செய்தது.
சங்கிலி மன்னனின் மரணத்தின் பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தில் பலவீனமான மன்னர்களே ஆட்சிபுரிந்தனர். அம்மன்னர்கள் திறமை யற்றவர்களாகவும், ஒருவர் மீது மற்றவர் பொறாமையுடையவர்களாகவும், மிகுந்த அதிகார வேட்கையுடையவர்களாகவும் காணப்பட்ட தன்மையினால் சங்கிலிக்குப் பின்னர் நாட்டை நிர்வகித்தவர்கள் மக்களது நலனில் அக்கறை செலுத்த வாய்ப்பில்லாது போயிற்று. இதனால் மூன்றாம் முறையாகவும் யாழ்ப்பாணத்தின் மீது போர்த்துக்கேயரால் படையெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. காசிநயினார் என்பவனது கொடூரமான ஆட்சியிலிருந்து மக்களை விடுவித்ததோடு, பெரியபிள்ளை என்பவனிடம் இந்நாட்டின் அரச நிர்வாகப் பொறுப்பினைப் போர்த்துக்கேயர் ஒப்படைத்திருந்தனர். இதன் பிற்பாடு நான்காம் முறையாகவும் மதப்பிரசார வேலைகள் தடுக்கப் பட்டதற்கு பழிவாங்கும் நோக்கோடு யாழ்ப்பாணத்தின் மீது படை யெடுத்து வந்து அப்போது ஆட்சியிலிருந்த புவிராஜ பண்டாரம் என்பவனைக் கொன்று, நல்லூரில் மாநாடு ஒன்றினைப் போர்த்துக்கீசர் கூட்டினர். இம்மாநாட்டில் மேற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி எதிர்மன்னசிங்கன் என்பவனை யாழ்ப்பாண இராச்சியத்திற்கு அதிபதியாக்கினர், இம்மன்னனுக்குப் பின்னரும் இவ்விராச்சியத்தில் குழப்ப நிலைகள் நீடித்திருந்தமையால் மீண்டும் படையெடுத்து வந்து சங்கிலிகுமாரனை மன்னனாக்கினர். இம்மன்னனும் போர்த்துக்கேயருக்கு கப்பம் திறை செலுத்த மறுத்தமையால் 1618ஆம் ஆண்டில் பிலிப்-டி-ஒலிவேறா என்ற போர்த்துக்கேயத் தளபதியின் தலைமையில் வந்த பெரும்படை சங்கிலி குமாரனைக் கைதுசெய்து கோவாவிற்கு அனுப்பி வைத்ததோடு, யாழ்ப்பாண இராச்சியத்தின் பரிபாலனத்தை தமது நேரடியான கட்டுப்பாட்டிற்குள் கையகப்படுத்தியும் விட்டனர். இந்நிகழ்வோடு இலங்கையின் கடல் முகப்புத்தள இராச்சியங்கள் யாவும் போர்த்துக்கேயரின் நேரடியான பரிபாலனத்திற்குள் கொண்டுவரப்பட்டு
விட்டது.
88

அத்தியnயர் மூன்று
கண்டி இராச்சியத்தின் இறையாண்மை,
சமூகம் மற்றும் பொருளியல் கடீடமைவும்
போர்த்துக்கேயரின் தொடர்புகளும்
“ இலங்கையின் இறுதிக்கால மன்னர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், இது படையெடுப்பால் நடந்ததல்ல. கண்டிப் பிரதானி களின் முடிவொன்றினால் ஏற்பட்டது. சிங்களவர்களின் கடைசி மன்னனான பூரீ விக்கிரம ராஜசிங்கனை ஒரு தமிழன் என்று தவறாக அழைத்தபோதிலும், அவர் கண்டிப் பிரதானியான பிலிமத்தலாவுக்கும், ஆந்திராவிலிருந்து வந்த ஒர் இளவரசிக்கும் பிறந்த மகன் ஆவார் அவருடைய அரசவை மொழி தமிழாகும். 1815 கண்டி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட கண்டிப் பிரபுக்கள் அனைவரும் கெப்பெட்டிப் பொல தவிர தமிழில் கைச்சாத்திட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பூரீமாவோ பண்டாரநாயக்காவின் மூதாதையரான ரத்வத்த திசாவவும் தமிழில் கைச்சாத்திட்டார்." - -
-நா. சண்முகதாசன், 1972 P 14
89

Page 48
"கண்ட உடரட்ட" என்றழைக்கப்பட்ட பிராந்தியமானது பின்னர் "கண்டிப் பேரரசு” என வரலாற்றில் நாம் காண்கின்ற இலங்கையின் இறுதியரசாக வளர்ச்சி பெற்றிருந்த ஆட்சிப் பிரதேசத்தினை குறித்து நின்றது. உடரட்ட' என்ற மத்திய உயர்மலை நாட்டுப் பிராந்தியத்தினை உள்ளடக்கிய வகையில் தோற்றம்பெற்று உருவாகிய நிர்வாக முகாமைத்துவ மையமொன்றின் முதல் வடிவத்தினை விஜயபாகு Gasnigiratu' 6Tairp (Assassination of Vijayabahu in 1521) is payLait L6-55 தெளிவாக சிங்கள இலக்கியங்களினூடாக கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் விஜயபாகு கொள்ளய என்ற நிகழ்வுக்கு முன்னரேயே அதுவும் குறிப்பாக ஆறாம் பராக்கிரமபாகுவின் வீழ்ச்சிக்குப் பிறகு (1411 - 1466) உடரட்டப் பிராந்தியத்திற்கெனத் தனித்துவமானதொரு நிர்வாக முகாமைத்துவ முறையொன்று உருவாக்கி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது அம்மையத்தில் எவ்விதமான அரச ஆள்புல விஸ்தரிப்பு நடவடிக்கைகளோ அல்லது இலங்கைத் தீவினை ஒரு குடைக்குட்பட்ட நிர்வாக முகாமைக்குள் கொண்டு வருவதற்கான எண்ணக்கருக்களோ (Concept ofEkarad) அரசியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. K. M. de சில்வா இதற்கான காரணத்தினை விளக்கும்போது, கோட்டை யரசில் ஆறாம் பராக்கிரமபாகுவின் நிர்வாக முகாமைத்துவத்தின் கீழ் உடரட்ட பரப்பானது ஒர் அரைச் சுதந்திர நிர்வாக நடவடிக்கை களை (Semi-independent government) அனுபவிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையிலோ அல்லது ஒர் எஜமானனின் கீழ் விசுவாசமான ஆள்பதிவி னுடைய நிர்வாக முகாமையில் உடரட்ட நிர்வகிக்கப்பட அனுமதிக்கப் பட்ட வகையிலோ அமைந்த ஒர் ஆட்சியலகாகவோ அல்லது ஆள்புலப்பரப்பாகவோ வரலாற்றில் அடையாளம் காணப்பட்டது என விளக்கியுள்ளார். இவ்வாறு ஆட்சி முகாமைக்குரிய அதிகாரங்களைப் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலே உடரட்ட அரசு (பின்பு கண்டியரசு) நிலமானிய பொருளாதாரக் கட்டமைப்புக்களின் நிறுவன ரீதியான அலகுகளை உள்வாங்கியதன் அடிப்படையில் வளர்ச்சியடைவதற்கும் ஏதுவாயிற்று. ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையரசில் இறந்தவுடன், சபுமால் குமரையன் ஆறாம் புவனேகபாகு என்ற பெயருடன் அதன் சிம்மாசனத்தைப் கைப்பற்றிக் கொண்டான், இந்நிகழ்வானது முதலில் யாழ்ப்பாண அரசுக்கும், பின்னர் உடரட்ட அரசிற்கும் அவ்வவற்றின் வலுவான கட்டமைவுடான வளர்ச்சிக்கு வேண்டிய கால அவகாசத்தினை வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது. அந்த வகையில் உடரட்ட என்ற கண்டியரசு இக்கால கட்டத்தில் மிகமிகத் தனித்துவமானதாகவும், சுதந்திரமானதும் பிரத்தியேகமானதுமான அரசியல், நிர்வாக முகாமைத்துவத்தினை வளர்த்தெடுப்பதற்குரிய புவியியல் அமைவிடத்
90

தினையும் பொருள்வளவாய்ப்பினையும் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே கண்டியரசினுடைய ஸ்தாபித்ததினை 15ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் அடையாளம் காணமுடிகிறது. எனK.M. de, சில்வா இங்கு குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. அவர் மேலும் குறிப்பிடும்போது, ஆறாம் பராக்கிரமபாகுவினுடைய கோட்டையரசுடன் கண்டியப் பிரதேசம் இணைக்கப்பட்ட நிகழ்வானது கண்டி மக்கள் மத்தியில் அவர்கள் தம்மை ஒரு தனித்துவமான குழுமம் என்பதனை உணர வைக்கவில்லை. மறுவளமாக கண்டி மக்கள் மத்தியிலிருந்து (இலங்கைத்?) தேசியத்தின் மிகத் தொடக்க நிலையை குறிக்கும் உணர்வை (Proto Nationalism) உருவாக்கிவிட்டிருந்தது என விபரித் துள்ளமை நோக்கத்தக்கது. ஆறாம் பராக்கிரமபாகுவின் மறை வினைத் தொடர்ந்து படிப்படியாக சரிந்து சென்ற கோட்டையரசின் அரசியல் நிலை காரணமாக, கண்டியரசு தன்னை வலுவான ஒர் அடிப்படையில் நிலை நிறுத்துவதற்குரிய கால அவகாசத்தினையும் பெற்றிருந்தது. 1477இல் 6ஆம் புவனேகபாகுவின் மறைவுடன் கோட்டை இராச்சியத்தின் தென்மேற்கு, வடமேற்கு எல்லைப் பிராந்தியங்கள் குறுகி வந்தவுடன், அவ்வரசின் மேலாதிக்க நிலையை திரும்பவும் மீட்டெடுக்க முடியாத சூழலும் உருவாகியது. இதுவே கண்டியரசு இலங்கையின் வரலாற்றில் இறுதி வரைக்கும் ஸ்திரமுடைய ஒர் அரசாக வளர்ச்சிபெறுவதற்கும், தனித்துவமான பண்பாட்டுப் பங்களிப்புக்களை நல்குவதற்கும் ஏற்ற சந்தர்ப்பத்தினைப் பெற்றுக்கொள்வதற்குரிய பிரதான அரசியல் நிலைக்களமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
கோட்டையரசினுள் காணப்பட்ட இவ்வாறான ஒர் அரசியற் பின்னணியை முதன்முதலாக உடரட்டவில் அதன் வளர்ச்சிக்காகப் பயன் படுத்திய மன்னனாக சேனாசம்மத்தா விக்கிரமபாகு (Senasammata Vikramabahu - 1469 - 1511) என்பவன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளான். இவனையடுத்து அவனது மகனான ஜெயவீரன் (1511 - 1552) என்பவன் உடரட்டவின் வளர்ச்சிக்கு பங்காற்றியவனாகவும், அதற்காக கோட்டை இராசதானியிலுள்ள மூன்று இளவரசர்களது உதவிகளையும் பெற்றிருந்தான் எனவும் கூறப்படுகிறது (1521) கோட்டை இராச்சியம் மூன்று ஆட்சிப் புலங்களாகப் பிளவுபட்ட பின்னர், சீதாவாக்கை இராச்சியம் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து சென்று கண்டி அரசின் பெரும்பாலான ஆட்சிப் புலங்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டது. பின்னர் இவ்விணைப்பானது முதலாம் இராசசிங்கனது மரணத்துடன் (1593இல்) முழுவதுமாக கைவிடப்பட்டு மீண்டும் கண்டியரசு தனித்துவமானமுறையில் வளர்ச்சியடைவதற்கேற்ற சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டது.
97

Page 49
குவேய்ரோஸ் தனது நூலில் கண்டி இராச்சியத்தின் சமூக, பொருளாதார நிலைமைகளைப் பற்றி மிகவும் விரிவாக கொடுத்திருப்பது எமக்குப் பெரும் பயனுடையதாகின்றது. கண்டி நகரின் பெயரானது (g5G36 uul'u G3 TITGmớ76ởT UITGólaiv Gande, Camde Quande, Camdia GT6ðTp6Jng) குறிக்கப்பட்டிருப்பதும் அவதானத்திற்குரியதாகும். கண்டி இராச்சிய மானது நான்கு பிரதான மாகாணங்களாக வகுக்கப்பட்டு நிர்வகிக்கப் பட்டது. அவையாவன : (1) காய்ச்சிய - பத்துவ (Harciya-Pattuwa), (2) LuG56FuLu Luigiau (Panciya-pattuwa), (3) pGiap (Udunuwara) (4) யட்டிநுவர (Yatinuwara) என்பனவாகும். இப்பிரதான நான்கு மாகாணப் பிரிவுகளுக்குட்பட்ட நிலப்பரப்புடன், கண்டி ஆட்சியாளனின் மேலாண்மையை ஏற்றுள்ள வகையில் உள்ளூர் ஆட்சியாளர்களால் நிர்வகிக்குமாறு அனுவதிக்கப்பட்ட பிரதேசங்களான ஊவாப்பிராந்தியம், மட்டக்களப்பு வன்னிமைகள், திருகோணமலை, பாணமை, கொட்டியாரம், யால மற்றும் வேடர்கள் வாழ்ந்துவரும் பிந்தனை விந்தனை வெல்லஸ், மாத்துறட்ட ஆகிய எல்லைக்குட்பட்ட காட்டுப் பரப்புக்களுமாக கண்டி இராச்சியம் தனது பரந்த ஆள்புலத்தினைக் கொண்டு விளங்கியது. இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பிராந்தியமான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மிகச் சிறிய வன்னிமைகளில் வாழ்ந்தோர் தமிழ்மொழியைப் பேசிய தமிழர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடர்த்தியான மராமரங்களாலும் பசுமையான பள்ளத்தாக்கு வெளிகளினாலும் சூழப் பெற்றிருந்த கம்பொளை இராசதானியே பின்னர் செங்கடகால நகருக்கு (Sengadagala) சேனாசம்மத்த விக்கிரமபாகு வினால் மாற்றப்பட்டது. இத் தலைநகரமாற்றத்தை அடுத்து கண்டி இராசதானியின் வளர்ச்சியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. இது நிகழ்ந்தது 16ஆம் நூற்றாண்டின் முதற் தசாப்தகாலத்திலாகும், செங்கட என்ற ஒரு பிராமணியத் துறவியொருவருடைய வாழ்விடத் துடன் தொடர்புபடுத்தப்பட்டதன் அடிப்படையிலேயே செங்கடகல நகரி உருவாக்கப்பட்டது என கண்டியப் பிராந்தியத்தில் நிலவும் ஐதீகமொன்றினால் அறியமுடிகிறது. மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கின் அருகில் அமைந்து காணப்படும் நகரான செங்கடகல நிலமானிய சமூக-உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியினது ஆரம்பத்தில் ஒரு சிறு நகராகக் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள அரசமாளிகை அமைந்துள்ள மையம் பூரீவர்த்தன என அழைக்கப்பட்டது. இங்கு அரண்மனையுடன் தொடர்புடைய நிர்வாகிகள், அரச குடும்பத்தின ருடைய உறவினர்கள், அவர்களுடைய திருமணத் தொடர்பாளர்கள்,
92

கண்டியரசின் பிரதான ஆள்பதிகளான முதலியார்கள், ஆராய்ச்சிமார் இவர்களுடைய குடும்பத்தவர்கள், மற்றும் சில வர்த்தக சமூகத்தினருள் இந்தியத் தமிழ் வர்த்தகர்கள், முஸ்லீம் வர்த்தகர்கள், சிங்கள வர்த்தகர்கள் போன்றோரும் தத்தம் அரசியல் நிர்வாக, வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கேயரது ஆவணங்களில் Candeotas என சிறப்பாகக் குறிப்பிடப்பட்ட கண்டி வாழ் மக்கள் இரக்க சுபாவம் மிகுந்தோராகவும், எப்பொழுதும் உற்சாக மிகுதியுடையோராகவும் சுறுசுறுப்பும் மிக்க கட்டுப் பாட்டுடனான போர்க்கலைப் பயிற்சியை பெற்றுக் கொண்டோராகவும் விளங்கினர். கண்டிய மக்களுள் பெரும்பாலானோர் போர்க்காலப் பொருளாதார வாழ்க்கை முறைக்குள் வாழ்வதற்கு நன்றாகப் பழக்கப் பட்டவர்களாவர். உப்பு, மீன், இவை இரண்டினையும் தவிர, கண்டியில் எல்லா வகையான உணவுப் பொருட்களும் இயற்கையின் கொடையால் அபரிமிதமாகக் கிடைத்தது. கண்டியப் பிரதேசத்தின் பிரதான உற்பத்திப் பயிர்களாக நெல், வரகு, குரக்கன், இஞ்சி, மிளகு, கறுவா, பாக்கு ஆகியன விளங்கின. காடுபடு திரவியங்களான மலைத்தேன், தேன்மெழுகு, முள்ளம்பன்றி, மயிலிறகு, யானைத்தந்தம் ஆகியனவும், இரத்தினக்கல், மாணிக்கக்கல், சந்திரகாந்தக்கல், போன்றனவும் இயற்கையாகப் பெருமளவில் கிடைக்கின்ற வாணிபப் பொருட்களாகத் திகழ்ந்தன. நிலமானிய அமைப்பு ரீதியான அடிப்படையைக் கொண்ட கண்டிய சமூகத்தில் பயிர்ச்செய்கையானது ஒருபோதும் அரசதிறைசேரிக்கு வளம் சேர்த்திருந்தது என்று கூறமுடியாது. பதிலாக யானைத்தந்தங்களும் இரத்தின - மாணிக்கக்கற்களுமே அரசவைத்திறைசேரியின் பிரதான பொருளியல் ஈட்டமாகக் காணப்பட்டது.
ஆன்ட்ரே - டீ - செளய்ஸா என்ற போர்த்துக்கேய பிரதானி யொருவன் தான்நேரில் கண்டியரசினைச் சுற்றிப் பார்வையிட்டதன் பேரில் எழுதிவைத்த குறிப்புக்களில் இருந்து கண்டியரசின் சமூக, பொருளியல் வள நிலைமைகளை நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது. "ஸிலோ (Celiao) என்ற இத்தீவின் மையப்பரப்பில் அமைந்துள்ள கண்டி மிகக்கிட்டிய கடற்கரையிலிருந்து 30 லீக்ஸ் தூரத்தில் காணப்படுகிறது. கண்டி இராச்சியமானது மிகவும் செழிப்பானதும், எல்லாவகையான உணவுப்பண்டங்களினாலும் நிறைக்கப்பட்டதாகவும், உப்பு, மீன் ஆகிய இருபண்டங்களற்றதாகவும், போர் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டவுடன், கண்டியமக்கள் எல்லாவகையான பொருட்களாலும் தன்னிறைவு பெற்ற ஒரு சமூகமாக மாறிவிடும் தன்மை கொண்டவர்களாகவும் விளங்கி யமையைக் காணலாம். கண்டிய அரசின் வாணிபப் பொருட்களாக
93

Page 50
யானை, தேன்மெழுகு, பாக்கு மற்றும் இரத்தினக்கற்கள் விளங்கின. இப்பொருட்கள் யாவும் வணிகர்களால் கண்டியரசில் வைத்து மிகக் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்துகொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. “கண்டியரசனுக்கு எல்லாமாக 12 இரத்தினக்கற் சுரங்க வயற் பரப்புக்கள் காணப்பட்டன. இவற்றிலிருந்து நீலக்கல்(Sapphires), பச்சை மரகதம் (Emeralds), சிவப்புக்கல் (Rubies), மற்றும் சந்திரகாந்தக்கல் (Cat's eyes) முதலானவை பெற்றுக் கொள்ளப்பட்டு, பட்டைதீட்டியதன் பின்னர் வணிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. கண்டியரசானது பரப்பளவில் மிகவும் பெரியதாகவும், சனத்தொகையில் அதிகமானதாகவும் காணப்பட்டது. போரிடும் வீரர்களுள் 20,000 பேர் அம்பு (வேற்படை) எய்யும் போர்க்கலையைக் கற்றவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் வேறு போராயுதங்களை தம்முடன் எடுத்துச் செல்வதில்லை. மக்கள் போக்குவரவு செய்யக்கூடிய பாதைகள் கண்டி நகரை அண்மிக்கும் நிலைகளில் பிரமாண்டமான மலைச் சிகரங்கள் பாதுகாப்புத் தடுப்பாக அமைந்துள்ளன. அங்கு காணப்படும் கணவாய்கள் ஊடாக எதிரிப் படைகள் கண்டி நகரின் உட்பகுதிக்கு பிரவேசிக்கும் சமயத்தில் மிகச்சிறிய படைகளின்துணைக்கொண்டே அவற்றை அழித்துவிடுவர். இக்காரணத் தினாலே இலங்கையரசனை எதிரிகளால் தோற்கடிக்க முடியாதுள்ளது. (ஆனால்) அந்நாட்டுக்குட் பரப்பில் நிலமானது சமதரையாகவே காணப் படுவதும் குறிப்பிடத்தக்கது” வ்றையர் சைமோ - டீ - கொய்ம்பிரா (FiarSymaro-de-Coimbra) என்ற போர்த்துக்கேய ஆய்வாளன் ஒருவன் தனது கண்டி இராச்சியத்தின் மீதான பயணக் குறிப்பில் பின்வருமாறு கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. "மிகவும் பாதுகாப்பான ஒருமையம், துருக்கியினது முழு அதிகாரவலுவைக் கொண்டிருக்கும் ஒருவர்கூட கண்டியை வெற்றிகொள்ளமுடியாது. ஏனெனில் மிகவும் அடர்ந்த காடு களாலும், போருக்கு பயன்படுத்தத் தேவையான அத்தனை போர்த்தளபாட ஆளணிகளும் அங்கு கிடைப்பதனாலாகும். அங்கு உணவுப்பொருட்கள், இறைச்சி, கோழி முதலியன ஏராளம், ஒரு பசுவின்விலை ஒரு தங்காவுக்கு மேற்படாத வகையில் உள்ளது, ஒரு கோழியின் விலை ஐந்து றிஸஸ் (Reis) ஆகும். மிகுந்த அளவில் மிளகு, இஞ்சி அத்தோடு காட்டுத்தாவரங்கள் போன்று கறுவாவும் உற்பத்தியாகின்றன. கரும்பும் கோதுமையும் அங்கு பயிராகின்றன. நான் பயனற்றவையாகக் காணப்படுவனவற்றை இங்கு குறிப்பிடவில்லை."
கண்டி இராசதானியில் மன்னனுடைய விருந்தினராகத் தங்கியிருந்த முதல் ஐரோப்பியரான போர்த்துக்கேயரில், சொய்ஸா (Souza) என்பவன் இந்தியாவிலுள்ள கோவா ஆள்பதிக்கு எழுதிய கடிதமொன்றில்,
94

கண்டியின் உணவு, நீர் மற்றும் வாழ்க்கை முறைபற்றி அறிவதற்குதவும் பல செய்திகளைக் கொடுத்துள்ளான். சொய்ஸா அக்கடிதத்தில், "இங்கு பாணும் இல்லை. வைனுமில்லை. ஆனால் நிறைய வேலைவாய்ப்புண்டு. எனினும் மிகவும் தரமற்ற உணவும், குடிப்பதற்கு உதவாத நீரும் சிலவேளையில் அக்குடிநீரை அருந்துவதால் இறப்பதற்குரிய சந்தர்ப்பமுமே உண்டு” எனக்குறிப்பிட்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது. இக்கடிதத்தினூடாக கண்டியில் காணப்படும் குடிநீர்ப்பிரச்சினையானது வரலாற்றுப் பழமைமிக்கது என்பதும், பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு நீரினால் ஏற்படும் நோய்கள் அச்சமூட்டியிருந்தன என்பதும் தெளிவாகின்றது.
கண்டி இராசதானியானது நாலுயுறத்திலும் உயர்ந்த மலைக்குன்றங் களினால் சூழப்பட்டுள்ளது. வெளியாரினது இடையீடுகள் எவையு மின்றி கண்டி இராசதானியைப் பாதுகாத்து வந்த அம்சமானது அம் மலையரண்களே ஆகும். ஆனாலும், அப்பாதுகாப்பு நிலைக்கு முரண் பட்ட வகையில், கோட்டை, சீதாவாக்கையரசர்கள் கண்டி இராசதானி மீதாக தத்தம் ஆதிக்க விஸ்தரிப்பினை மேற்கொள்ள முயன்றபோது, அப்பாதுகாப்புக் கவசம் உடைக்கப்பட்டு, கண்டியரசினுடனான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. கண்டி இராச்சியத்தினை அணுகு வதற்கு பல மார்க்கங்கள் உருவாக்கப்பட்டன. மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், யால, நீர்கொழும்பு, கோட்டை, கொழும்பு ஆகிய நகரங்களூடாகக் கண்டியைச் சென்றடையக்கூடிய மார்க்கங்கள் திறக்கப்பட்டிருந்தன். இவற்றுள் மிகவும் பிரசித்தம் பெற்றதும், மிகப் பெரியதுமான மார்க்கம் சீதாவாக்கை இராச்சியத்தி லிருந்து கண்டியரசினைச் சென்றடையும் மார்க்கம் அமைந்திருந்தது. கி.பி. 17ஆம், 18ஆம், 19ஆம்நூற்றாண்டுகளில் இலங்கையில் அமைக்கப்பட்ட பெருந்தெருக்களை ஒத்தவகையில் சீதாவாக்கையூடாகக் கண்டிக்குச் சென்ற மார்க்கம் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்டியரசர்கள் எப்போதுமே தமது சிம்மாசன உரிமைக் கெதிரான கிளர்ச்சிகளையோ, அல்லது கிளர்ச்சியாளர்களின் இராணுவ எதிர்ப் பினையோ பிரத்தியேகமாகச் சந்தித்ததில்லை. 1511இல் கண்டிமீது எதிரிப் படைகள் சூழ்ந்து கொண்டு நின்ற நிகழ்வானது அப்போது சிம்மாசன உரிமைக்கு வருகைதந்த ஜெயவீரன் என்பவன் கோட்டையரசுக்குத் திறை செலுத்த 'மறுத்தமை யினால் ஏற்பட்டதாகும். இன்னொரு நிகழ்வு அம்மன்னனுக்கு எதிராக கோட்டை இராச்சியத்திலிருந்து மேற்கொண்ட மற்றொரு கிளர்ச்சியாகும். இவ்விரு கிளர்ச்சி நடவடிக்கை களும் கண்டிய மன்னனைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கிலும்,
95

Page 51
திறையை எப்படியாகிலும் பெற்றவிடவேண்டும் என்ற வோரடிப்படை யிலுமே நிகழ்த்தப்பட்டவையாகும். இம் முதலாவது படையெடுப்பின் விளைவு ஜெயவீரனால் கோட்டையரசிற்கு 300000 பணமும் (Panam) இரண்டு யானைகளும், அப்படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிவந்த தளபதிக்கு தனது மகளை மனைவியாக்கியதுமாகவே அமைந்தது. அப்படைத்தளபதியின் பெயர் கிரவெல றளகமி (Kirawela Ralhami) என்பதாகும். இரண்டாவது படையெடுப்பு நிகழ்வினால் கோட்டையரசன் தர்மபராக்கிரமபாகுவினுடைய இளைய தம்பியாகிய சகலகலா - வல்ல (SakalakalaWala) என்பவனுக்கு ஒரு முத்துக் குடை, ஒரு வெண்சங்கு, ஒரு பாதுகாப்புக்கேடயம், மற்றும் ஒரு கழுத்துப் பதக்கம் ஆகியவை கண்டியரசனின் கீழ்ப்படிவுச்சின்னமாக" வழங்க வேண்டியேற்பட்டது.
இலங்கையில் போர்த்துக்கேயர் (தமது ஆதிக்கத்தில்) இருந்தபோது, ஏறத்தாழ 40 வருடகாலத்திற்கு மட்டுமே மலை நாட்டு அரசில், அதன் அரசியல் கவனமெடுக்கவேண்டி நேரிட்டது. ஆனால் அந்நிலை அடுத்த ஒரிரு வருடங்களில் மாற்றத்திற்குள்ளாகியது. கோட்டையரசனான புவனேகபாகு தனது புதிய நண்பர்களை போர்த்துக்கேயரின்துணையுடன் தனது அரசியல் லாபம் நோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடலானான். தனது மூதாதையர்கள் வழிவந்த புதிய அதிகாரபலத்தினையும், சிம்மாசனவிருதினையும் ஈட்டிக்கொள்ள வேண்டும் என்ற பெருவிருப்பில், புவனேகபாகு தனது "புதிய நண்பர்களின் உதவியை நாடியிருந்தான். அதற்காக, போர்த்துக்கல் அரசனின் உடன்பிறந்த சகோதரரான டொம் லூயிஸ் (Dom Luis) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் புராதன, பழம் பெருமை படைத்த கோட்டையரசின் கீர்த்தியை யாழ்ப்பாணம், கண்டி யரசுகள் மீதும் ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கு உதவியளிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தான். அச்சமயத்தில் ஜெயவீர பண்டார என்றழைக்கப்பட்ட விக்கிரமபாகுவே கண்டியரசில் அதிகாரத்தில் அமர்ந்திருந்தான். 1521இல் கோட்டையரசில் விஜயபாகுவினை ஆட்சி யிலிருந்து கவிழ்ப்பதற்காக அவனது மகனான மாயாதுன்னை கண்டியரச னான விக்கிரமபாகுவிடம் படையுதவிகோரி வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இம் மன்னனுடைய ஆட்சியின்போது கண்டி இராச்சியம் மிகவும் சிறப்புற்று விளங்கியமையால் அந்நியரான போர்த்துக்கேயரது தலையீடு அங்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லாதிருந்தது. கோட்டை இராச்சிய மன்னர்கள் போர்த்துக்கேயருடைய படையுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கேற்பட்ட சந்தர்ப்பங்களை ஒத்து, கண்டிமன்னனான விக்கிரமபாகுவிற்கு அவ்வாறான சந்தர்ப்பங்கள் அதுவரையில் ஏற்படவில்லை.
96

ஆனால் 1542, யூலை மாதத்துடன் கண்டியரசுடனான வெளித் தொடர்புகளில் ஒரு புத்தூக்கத்தினையும், தொடர்புகளில் ஒரு விரைவான போக்கினையும் காணமுடிந்தது. அதாவது கண்டியரசனான விக்கிரம பாகுவுடன் ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த பெரேய்ரா (Pereira) என்ற போர்த்துக்கீச பிரபு ஒருவன் 1542, யூலையில் கண்டி-உட-ரட்டப் பிரதேசத்திற்குள் நுழைந்து, செங்கடகல நகரை சென்றடைந்தமையுடன் கண்டி போர்த்துக்கேயத் தொடர்புகளில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது எனலாம்.
பெரேய்ராவின் கண்டிய வருகையுடன் கண்டி இராசதானிய நிகழ்வு களில் வேகமும், மாற்றமும் ஏற்பட்டது. இதுவரை காலமும் கண்டியரசிற்கென உரிமமானதுறைமுகம் காணப்பட்டிருக்கவில்லை. இது கண்டியரசுக்கு அங்கயீனமான ஒரு நிலைக்குரிய உணர்வினையே இதுவரை காலமும் ஏற்படுத்தி வந்திருந்தது. ஆனால் பெரேய்ராவின் வருகையுடன், போர்த்துக்கேயர் திருகோணமலைத் துறைமுகக் குடாப் பரப்பினை புதுக்கியும், திருத்தியும் தமது கடற்படைக்குரிய துறைமுக நகராக்கியமையிலிருந்து கண்டியரசிற்குரிய கடற்கரையோரத்துறைமுக நகர் ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டமையைக் காணலாம். அதே யாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலுள்ள கோவா ஆள்பதி மார்ட்டின் அவ்வொன்சோ - டீ - செளய்ஸாவிடம் போர்த்துக்கல்நாட்டுத்துதுவர்கள் உடன்வரதங்கத்தகடுகளுடனும், சந்திர காந்தக்கற்களுடனும் இணைக்கப் பட்ட மோதிரத் தொகுதியுடனும் சென்று, அவற்றை கெளரவ அன்பளிப் பாக வழங்கிய பின்னர் திருகோணமலையில் வாணிப நோக்கத்தின் பொருட்டு தொழிற்சாலை ஒன்று அமைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரப் பட்டது. கண்டிய மன்னனின் இக்கோரிக்கையை போர்த்துக்கேய ஆள்பதி உடனே ஏற்றுக் கொண்டு அதனைச் செயற்படுத்துவதற்கும் வேண்டிய ஆணைகளை அத்தூதுவர்கள் ஊடாக கண்டிய மன்னனுக்கு வழங்கி யிருந்தான். ஆனால் திருகோணமலையில் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியானது அவ்வாண்டிலேயே தோல்வியில் முடிவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டி இராசதானியில் வாழ்ந்த உள்ளூர்வாசிகளின் சதித்திட்டங்களினாலும்துன்பங்களை விளைவிக்கின்ற அவர்களது விசேட தன்மைகளினாலுமே இத்திட்டம் நிறைவேறாமற் போனது. பெரேய்ரா விற்கு கண்டிய மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 2000 பொதி சுமைகள் அரிசியும், 300 மாட்டு வண்டில்கள் நிறைந்த நெல்லும் கூட கண்டியிலிருந்து திருகோணமலைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியாதிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெரேய்ரா தனது ஆட்களுடன் இந்தியாவிலுள்ள கோவாவிற்கு திரும்பிச் செல்ல நேரிட்டது. இதன் பிற்பாடு தொடர்ச்சியாக பல தடவைகளில்
97

Page 52
கண்டியரசன் விக்கிரமபாகுவின் பரிசில்களுடன் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு கோவாவின் ஆள்பதிபதிலை அனுப்பியிருந்தாலும் கூட, அக்கோவா ஆள்பதிக்கு திருகோணமலையூடாக அனுப்பப் பெற்ற அன்பளிப்புப் பொருட்களுள் பெரும்பாலனவற்றை யாழ்ப்பாண இராச்சிய மன்னனான சங்கிலி அபகரித்து வந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. 1544, நவம்பர் மாதத்தில் திருகோணமலைத் துறைமுகமூடாக கண்டி மன்னனால் கோவாவில் உள்ள பெரேய்ரா (Ferreira) விற்கு அனுப்பப்பெற்ற 10,000 பணமும் (Chacrams) இரண்டு மிகப்பெரிய இரத்தினக்கற்களும் யாழ்ப்பாண மன்னனான சங்கிலியினால் அபகரித்துச் செல்லப்பட்டது. இதனால் திருகோணமலைத்துறைமுகத்தில் தொழிற் சாலை ஒன்று அமைப்பதற்காக கண்டி மன்னனான விக்கிரமபாகுவின் முயற்சிகளை கோவா ஆள்பதி 1545 வரைக்கும் பெருமளவிற்குத் தட்டிக் கழித்து வந்தமையே காணமுடிந்தது அதே நேரத்தில் விக்கிரமபாகுவின் அரண்மனைப் பிரபுக்கள் பலரும் போர்த்துக்கேய ஆள்பதியுடனான கண்டி மன்னனின் தொடர்புகளை பெருமளவிற்கு விரும்பாமல் இருந்து வந்தமை யும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1545ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துட னேயே கண்டிய இராசதானியுடனான போர்த்துக்கேயரது தொடர்புகள் திட்டவட்டமான வகையில் ஒரு புதிய வடிவம் பெற வாரம்பித்தன.
கோட்டை, சீதாவாக்கை மன்னர்களான புவனேகபாகு, மாயாதுன்னை ஆகியோர் கண்டியரசுக் கெதிராகத் தொடங்கிய புதிய உள்நாட்டு மேலாதிக்க விஸ்தரிப்பு (Coldwar) நடவடிக்கைகளை எதிர்நோக்கியிருந்த கண்டிய மன்னன் விக்கிரமபாகு போர்த்துக்கேயரது படையுதவியை 1545இல் அவசரமாகக் கோரி நின்றான். இதனால் கோட்டையில் (கொழும்பில்) இருந்து போர்த்துக்கேயப் பிரதிநிதியான ஒவிடோர் பிரான்ஸிஸ்கோ ஆள்வார்ஸ் (Francisco Alvares) என்பவன் கோவா ஆள்பதியின் கட்டளையை ஏற்று, செங்கடகலவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கண்டிய அரண்மனைப் பிரபுக்கள் மத்தியில் கோட்டையரசன் புவனேகபாகுவின் செல்வாக்கு கூடிக் காணப்பட்டதன் பின்னணியில், போர்த்துக்கேயருக் கெதிரான எதிர்ப்புணர்வு கண்டியில் வளர்த்தெடுப் பதற்கு வாய்ப்புக்கள் காணப்பட்டிருந்தும் கூட கண்டியரசனின் போர்த்துக் கேயருடனான நெருக்கமான நட்புறவானது மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுச் சென்றது. இந்நிலையிலேயே புவனேபாகுவும், மாயாதுன்னையும் கண்டிமீது படை நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தனர். ஆனால் மாயாதுன்னையோ புவனேகவாகுவின் கண்ணுக்குள் மண்ணைத் தூவிவிட்டு, தானே கண்டிய இராச்சியத்தை விக்கிரமபாகுவிடமிருந்து
98

கைப்பற்றுவதன் மூலம் முழு இலங்கைக்கும் தான் ஆட்சியாளனாக மாற வேண்டும் என்ற ஒரு இராசதந்திர நோக்கில் கண்டி இராச்சியத்தின் மீதான படைநடவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்தான்.
மாயாதுன்னையும் கண்டி இராச்சியமும் :
கோட்டை, சீதாவாக்கை இராச்சியங்களிடையே ஏற்பட்ட பரஸ்பர மேலாதிக்கவாதம் தொடர்பான பகைமையுறவு வளர்ச்சியடைந்து வந்தமையின் பின்னணியில், கோட்டையரசனுக்கு போர்த்துக்கேயர் பாதுகாப்பு வழங்குபவர்களாகக் காணப்பட்டிருந்தபோதும், சீதாவாக்கை இராச்சியத்தின் எழுச்சியுடன் உடரட்ட மீதான ஆள்புலப் படர்ச்சியில் இவ்விரு இராச்சியங்களைச் சேர்ந்த மன்னர்களும் இணைந்தே செயற்பட்டிருந்தமையைக் காண்கின்றோம். 1540களின் தொடக்கத்தில் இவ்விரு இராச்சியமன்னர்களும் பரஸ்பரம் தமது பகைமையை மறந்து கண்டிய இராச்சியம் மீதான தமது மேலாதிக்கத்தை பரப்பமுயன்றனர். இவர்களுள் மாயாதுன்னையே உடரட்டவுக்கெதிரான ஆதிக்கவிஸ்தரிப்பு நடவடிக்கையின் கர்த்தாவாக விளங்கியமையைக் காணலாம். கண்டி மன்னனான விக்கிரபாகுவின் போர்த்துக்கேயருடனான மிக நெருங்கிய நட்புறவுத் தொடர்புகள் சீதாவாக்கை இராச்சியத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்றவோரடிப்படையில் கண்டி மன்னனுக்கெதிராக மாயாதுன்னை தனது படை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தான். அதாவது சீதாவாக்கை இராச்சியத்தின் மேற்கிலும் கிழக்கிலுமுள்ள எல்லைப் பிரதேசங்களில் போர்த்துக்கேயரது நடமாட்டமும் செல்வாக்கும் அதிகரித்து வருவதனை மயாதுன்னை விரும்பாததனால் முதலில் கண்டி மீது போர்த்துக்கேயருக்கு இருக்கக்கூடிய நட்புறவு ரீதியான தொடர்பு களை அழித்துவிட முயற்சித்தான். இக்காரணத்தினால் கோட்டையரச னோடு இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகவே 1545இல் உடரட்டமீது மாயாதுன்னை படையெடுத்துச் சென்றான். போர்த்துக்கேயருடைய உதவி கண்டி மன்னனான விக்கிரமபாகுவிற்கு எட்டமுன்னரே, மாயாதுன்னை யின் படைகள் உடரட்டவைச் சென்றடைந்து, கண்டிய மன்னனை அடிபணியச் செய்துவிட்டிருந்தன. விக்கிரமபாகு மாயாதுன்னையுடன் சமாதானம் செய்யவேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் போர்த்துக் கேயருடைய முதலாவது கண்டியத் தொடர்பானது முற்றிலுமே தோல்வியைத் தழுவிக் கொண்டது. இப்பின்னணியில் மாயாதுன்னை கண்டி இராச்சியத்தின் மீதான முதலாவது தனது மேலாணையை நிலைநிறுத்திக் கொள்வது எளிதாயிற்று.
மாயாதுன்னை கண்டி இராச்சியத்தின்மீது மேற்கொண்ட படை யெடுப்பின் விளைவாக, விக்கிரமபாகு 25,000 Pardaos (கண்டியப் பணம்)
99

Page 53
மாயாதுன்னைக்கு வழங்கிச்சமாதானம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதோடு, மாயாதுன்னையின் பலவந்தமான கோரிக்கையின் பேரில் விக்கிரமபாகு தனது மகனை (இளவரசனை) மாயாதுன்னையின் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. கண்டியரசனுடைய உதவிக்காக சிறு படைகளுடன் வந்த போர்த்துக்கேயப் பிரதிநிதியான செளஸா (Souza) திருகோணமலையூடாக கண்டி நகருக்குள் பிரவேசிக்கமுடியாத நிலையில், யாலவரை வந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை மறுவளத்தில் ஏற்பட்டது. இதனால் செளஸாவிற்கு அநேகமான பண நஷ்டமேற்பட்டுக் கொண்டது எனலாம். காலித் துறைமுகத்திலிருந்து திருகோணமலைத்துறைமுகம் வரை கப்பல்களின் பிரயாணம் செய்துவந்த 80 போர்த்துக்கேய வீரர்கள், பணியாட்கள், கத்தோலிக்க மதச்சபையைச் சேர்ந்த மதகுருக்கள், இந்தியர் சிலர் ஆகியோர் யால வரைவந்து திரும்பவும் திருகோணமலைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்த நிலைமைக்கு மாயாதுன்னையே அடிப்படைக் காரணமாக இருந்தான். பிரான்ஸிஸ்கன் மதச்சபையைச் சேர்ந்த இரு மதகுருமார்கள் கண்டியே நோக்கி வந்த அக்குழுவில் அங்கம் வகித்திருந்தனர். திருகோண மலைக்குத் திரும்பிச் சென்றிருந்த அக்குழு ஒருவாறு மீண்டும் மிகவும் கஷ்டப்பட்டு, அபாயகரமான பாதைகளினூடாக 22 ஏப்ரல் 1546இல் கண்டியை வந்தடைந்து கொண்டது. ஆன்ட்ரே - டீ - செளஸாவின் செங்கடகலவுக்கான வருகையானது மிகவும் தோல்வியுற்ற அப்படை யெடுப்பினாலும், துன்பதுயரங்களினாலும் இழப்புக்களினாலும் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு நஷ்ட ஈடுகோருவதாக அமையாது, சொச்சின என்ற இடத்தில் வைத்துக்கிடைத்த போர்த்துக்கேய ஆள்பதியினுடைய சாதகமான தகவல்களை விக்கிரமபாகுவிற்கு கையளிப்பதற்காகவே அமைந்துகொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாயாதுன்னையின் கண்டிமீதான மேலாதிக்கவுரிமை அம்மன்னன் எதிர்பார்த்தபடி இலகுவான முறையில் நீடித்திருக்கவில்லை. காரணம் சொய்ஸாவின் தலைமையில் சென்ற் அக்குழுவில் அங்கம் வகித்திருந்த இரண்டு பிரான்ஸிஸ்கன் கத்தோலிக்க மதகுருக்களும் செங்கடகல அரண்மனையில் கண்டிய பிரபுக்களை மதமாற்றத்திற்குட்படுத்த வாரம்பித்திருந்தமை மாயாதுன்னையின் கண்டி மீதான பிடியில் தளர்ச்சியை ஏற்படுத்தத் தூண்டியது. செளஸாவின் மிஷன் கண்டியை அடைவதற்கு முன்னமே விக்கிரமபாகு இத்தாலியைச் சேர்ந்த பிரான்ஸிஸ்கன் கத்தோலிக்க மதகுருவான பிரான்ஸிஸ்கோ - டீ -
• GIL DfT6öTrift"Il ĵJL —6āT (Framcisco - de - Montrepradone) 6 TaäTL 16).JJITáñy இரகசிய ஞானாஸ்நானம் (Baptizism) செய்யப்பட்டு டொம் மானுவெல் (DomManoe)
100

என்ற பெயரில் தன்னை கிறிஸ்தவ மத உலகுடன் இணைத்துக் கொண்டிருந்தான். இம்மத வைபவத்தில் தெய்வத் தந்தையாகவும் (God Fathers Interpreter) மொழிபெயர்ப்பாளராகவும் பங்காற்றியவரே பெரேய்ராவினது பணியாளாக விளங்கிய டீ - மொன்ரீப்பிரடன் என்ற இத்தாலியைச் சேர்ந்த பிரான்ஸிஸ்கன் மதகுருவாகும். இவ்வைபவம் கண்டியரண்மனையில் நிகழ்ந்தபோது, போர்த்துக்கேய படையெடுப் பாளர்கள் விக்கிரமபாகுவிடமிருந்து தமது படையெடுப்பு நடவடிக்கை யினால் ஏற்பட்ட செலவினை ஈடுசெய்யுமுகமாக பொருளிட்டத்தினைக் கோரி கண்டிய அரண்மனையில் ஒரு பெருங் களேபரத்தினை உருவாக்கியிருந்தனர். இக்களேபரத்தின் விளைவாக சொய்ஸாவிற்கும், விறையர் - அன்ரோனியோ - பத்திரம் என்பவனுக்குமிடையே முரண்பாடு களும் கருத்துவேற்றுமையும் கூட ஏற்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்நிகழ்வுகள் கண்டியப் பிரதானிகள் மத்தியில் கிறிஸ்தவமதத்துக் கெதிரான காழ்ப்புணர்ச்சியையே ஏற்படுத்திவிட்டது எனலாம். இக்காழ்ப்புணர்ச்சியானது ஐந்து பிரதானிகளது கிறிஸ்தவ மதமாற்றத் துடன் கலவரமாகவே உருவெடுத்துவிட்டது. விக்கிரமபாகுவின் மருமகனான (Nephew) முதலியார் தாரா (போர்த்துக்கேயக் கிறிஸ்தவப் பெயர் - டொம் - ஜோவா - டி - காஸ்ரோ), முதலியார் கனகா (மார்ட்டின் அபூன்கோ), மற்றும் எஞ்சிய மூன்று முதலியார்களும் முறையே நுனோ ஆள்வாரெஸ், பேரோவாஸ், ஆண்டேரே-டீ - செளஸ்ஸா என அவர்களது ஞானாஸ்நானத்துடனான பெயர் மாற்றங்களுடன் பிரான்ஸிஸ்கன் கத்தோலிக்க மதத்தை தழுவிய கையோடு கண்டி அரண்மனையில் ஒரு கலவரமே உருவெடுத்திருந்தது.
கண்டியரண்மனையில் ஏற்பட்ட இம்மதமாற்றமானது வெறுமனே அரசியல் நோக்கை மட்டும் கொண்டது என்பது தெளிவாகும். கண்டிய மன்னன் விக்கிரமபாகுவிற்கு கோட்டையிலிருந்தும், சீதாவாக்கையி லிருந்தும் உருவான பகைமையை வெற்றிகொள்ளும் நோக்குடனேயே போர்த்துக்கேயரின் ஆதரவினை அரசியல் அடிப்படையில் ஈட்டுவதற்கு இந் ஞானஸ்நானமுறையைக் கையாண்டான் எனலாம். டீ செளஸாவும், கிறிஸ்தவ சமயத்துறைவிகளும் இந்நிலையை நன்கு உணர்ந்தே இருந்தார் கள். ஆனாலும் டீ செளய்ஸாவும், கிறிஸ்தவ மதத்துறவிகளும் எதிர்பார்த்தது என்னவென்றால் அரண்மனையில் ஏற்படுத்தப்பட்ட மதமாற்றமானது உடனடியாக (கீழ்நோக்கி) மக்கள் மட்டத்தைச் சென்றடையும் என்பதேயாகும். ஆனாலும் இவர்கள் எதிர்பார்த்ததுபோல் கண்டியில் கத்தோலிக்கமதம் அக்கட்டத்தில் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறத்தவறிவிட்டது. பதிலாக சூளவம்சத்தில் குறிப்பிட்டுள் ளமை போல் விக்கிரமபாகு காலத்தில் தான் பெளத்தமதம் கண்டியில்
101.

Page 54
நன்னிலையைப் பெற்று வளர்ச்சியடைந்திருந்தமையைக் காணமுடிகிறது. ஆகவே முழுவதாக நோக்கும்போது மாயாதுன்னையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலிருந்து கண்டியைப் பாதுகாப்பதற்காகவே விக்கிரமபாகு போர்த்துக்கேயரை கண்டியில் அரவணைத்திருந்தான் என்பது நன்கு தெளிவாகின்றது.
கண்டி மீதான தமது முதற்றொடர்பு அரசியல் அடிப்படையிலும், சமய நோக்கின் அடிப்படையிலும் போர்த்துக்கேயருக்கு எதிர்பார்த்தது கைகூடும் என்று எண்ணப்பட்டிருந்த விளைவுகளை ஏற்படுத்தத் தவறிய தால் மீண்டும் ஒருமுறை கோட்டையரசன் "புவனேகபாகுவின் மேலாண்மையை நிலை நாட்டுவது" என்ற போர்வையில் கண்டி இராச்சியத்தின்மீது போர்த்துக்கேயர் படையெடுப்பு நடவடிக்கை யொன்றை முடுக்கிவிட்டிருந்தனர். இப்படையெடுப்பின் முக்கிய இன்னொரு நோக்கமானது மாயாதுன்னையையும் சீதாவாக்கை இராச்சியத் தினையும் கோட்டை இராசதானியின் உறவிலிருந்து தனிமைப்படுத்து வதும், பிரித்து விடுவதுமாக அமைந்திருந்தது. 1546, நவம்பர் மாதமளவில் ujifilo GLT (Antonio Monig Barreto) GT6ãTu660556.pGugoLDulau Gort Gol யரசன் போர்த்துக்கேயப் படைவீரர்களுடன் கண்டியரசு நோக்கிய படை யெடுப்பினை மேற்கொண்டான். இப்படையெடுப்பின் அவசியத் தேவையை கண்டியிலிருந்து அதாவது விக்கிரமபாகுவினுடைய அரண் மனையைவிட்டு விரக்தியுடன் கொழும்பினை வந்தடைந்த போர்த்துக்கேய பிரான்ஸிஸ்கன் மதகுருக்களான அன்ரோனியோ (Antonio) அன்ரே - டீ - செளய்ஸா (Andre de Souza) ஆகியோருடன் விக்கிரமபாகுவின் ஒரு மகனும், கண்டி அரசவைப் பிரதானியோருவருமே கொழும்பிலுள்ள போர்த்துக்கல் மன்னனின் ஆள்பதிக்கு எடுத்துக்காட்டியிருந்தனர். கூடவே கண்டி மன்னன் விக்கிரமபாகுவினால் எழுதி அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றும் கொழும்பு பிரான்ஸிஸ்கன் மதகுருத் தலைவருக்கும் ஆள்பதிக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் விக்கிரமபாகு “தனது அரண்மனையையும் தன்னையும் விட்டு மதகுரு அன்ரானியோ விலகிச் சென்றதுபோல் தாங்களும் விலகிச் செல்லாமல் கண்டிக்கு மீண்டும் வருமாறு"குறிப்பிடப் பட்டிருந்தது. இக்கோரிக்கையை நன்கு பயன்படுத்தி, டிசெம்பர் 1546இல் கண்டி மீது மீண்டும் படை நடாத்திச் செல்வது என போர்த்துக்கீச தளபதியினால் தீர்மானிக்கப்பட்டு, 100 பேர் கொண்ட போர்த்துக்கேய வீரர் மட்டக்களப்பினை மே, 1347இல் சென்றடைந்தனர். இப்படை நடவடிக்கைக்கு அன்ரோனியோமொனிஸ் பரேடோ என்பவன் தலைமை தாங்கியமை மீண்டும் குறிப்பிடத்தக்கது. இக்கட்டத்தில் மாயாதுன்னை யுடைய படைகள் ஏழுகோறளைக்கு ஆட்சிப்பொறுப்பாளனாக விளங்கிய
02

இளவரசனுடன் (தலைமையில்?) கண்டிநகர் நோக்கி வருவதனைத் தடுக்கும் நோக்குடன் 2000 சிவிகை காவிகளை போர்த்துக்கேய வீரர் களை விரைந்து கண்டிக்கு இட்டுக்கொண்டு வருவதற்காக விக்கிரமபாகு விரைந்து அனுப்பியிருக்கும் செய்தியினை போர்த்துக்கேயத் தளபதிக்குத் தெரியப்படுத்தியிருந்தான். இருந்தும் பரேடோவினையும் அவனது ஆட்களையும் கண்டி நகருக்குள் கண்டிய முறைப்படி விக்கிரமபாகு வரவேற்றபோதும் தனது முன்னைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அம்மன்னன் மீண்டும் தயக்கம் காட்டினான். அதாவது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வரை வெற்றி கொண்டு தம்மை இலங்கை முழுவதற்குமான ஆட்சியாளர்களாக்கும் வரைக்கும் "தன்னை ஒரு கிறிஸ்தவனாகப் பிரகடனம் செய்யப்போவதில்லை” என்கிற பிடிவாதநிலையை போர்த்துக் கேயருக்கு மீண்டும் உணர்த்தினான். இப்பிடிவாத நிலையின் பின்னணியில் விக்கிரமபாகு 2000 எண்ணிக்கையை உடைய முகமூடியணிந்து கூர்மை யான ஆயுதங்களைத் தரித்திருந்த கண்டியப் போர்வீரர்களைக் கொண்டிருந்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இச்சூழ்நிலையே கண்டிமீது மாயாதுன்னைக்கிருந்த இறுக்கமான பிடிதளரக் காரண மாகியது. இந்நிலை அடுத்து வந்த இருவருடங்களுக்கு நீடித்திருந்தது எனலாம். இப்பின்னணியில் போர்த்துக்கேயரின் இரண்டாம் முறையான கண்டியபடைநடவடிக்கையும் பெருந்தோல்வியில் முடிவடைந்தமையை யிட்டு மாயாதுன்னைக்கும் ஒரளவிற்கு மனநிம்மதி கிடைத்தது என்றே கொள்ளவேண்டும்.
முதலாம் இராஜசிங்கனும் கண்டி அரசும் :
கண்டியரசின் வரலாற்றில் இரண்டாம் கட்ட அரசியல் நெருக்கடி யானது சீதாவாக்கை இராச்சியத்தின் அரசியல் ஆதிக்க வாதப்படர்ச்சியுடன் தோற்றுவிக்கப்பட்டமையைக் காணமுடியும். கண்டியில் விக்கிரமபாகு வின் ஆட்சியின் பின் அரசியல் உரிமம் தொடர்பான வாரிசுரிமைப் பிரச்சினை தோற்றம் பெற்றது. விக்கிரமபாகு இருமுறை திருமணம் புரிந்தமையினாலேயே பின்னர் அப்பிரச்சனை கண்டியரசில் உருவாகக் காரணமாகியது. அம்மன்னனது முதல் மனைவியான சந்தணதேவிக்கு களுலியட்ட பண்டாரன் என்ற மகனும், இரண்டாவது மனைவியான கம்பொளதேவிக்கு ஜெயவீர பண்டாரனும் என இரு புத்திரர்கள் பிறந்திருந்தனர். கண்டி மன்னன் விக்கிரமபாகு தனக்குப் பின்னர் ஜெயவீர பண்டாரனையே கண்டி மன்னனாக வேண்டும் என்ற பெருவிருப்புடன் அவ்விளவரசனை அரசவை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, பயிற்சியளித்து வந்திருந்தான், ஆனால் களுலியட்ட பண்டாரன் அரண்மனைப் பிரதானிகளது பேராதரவுடன் கண்டியரசனாகியதன் பின்னர்,
103

Page 55
ஜெயவீரபண்டாரனை கண்டியரசினின்றும் அதன் எல்லைக்கு வெளியே விரட்டி விட்டிருந்தான். இதனால் ஜெயவீர பண்டாரன் சீதாவாக்கை இராச்சிய மன்னனிடம் சென்று அடைக்கலம் பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தான், இந்நிகழ்வு மாயாதுன்னையின் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டிருந்தது. மாயாதுன்னை ஜெயவீரபண்டாரனுக்கு சீதாவாக்கை யிலுள்ள சில கிராமங்களை வழங்கி, அவற்றின் பராமரிப்புக்கு அவ்விளவரசனையே பொறுப்பாகவும் நியமித்திருந்தான். கண்டியில் களுலியட்ட பண்டாரன் தனது இன்னொரு சகோதரன்முறையான (StepBrother) இளவரசன் ஒருவனையும் கொலை செய்த கையோடு கோட்டை இராச்சியத்திலிருந்து போர்த்துக்கேயருடைய உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். பெரோ - டீ - சில்வா என்பவனது தலைமையில் 300 பேர் அடங்கிய போர்த்துக்கேயப் படை அணி மூன்று ஆன்ட்ரே டீ சொய்ஸா என்ற மதகுருவையும் இணைத்துக்கொண்டு கண்டி சென்றடைந்தது. களுலியட்ட பண்டாரன் கண்டியில் வைத்து மதமாற்றத் திற்குட்படுத்தப்பட்டான். இம்மன்னனுடன் இணைத்து கண்டியரண் மனையைச் சேர்ந்த சில பிரதானிகளும் மதமாற்றத்திற்குட்படுத்தப் பட்டனர். களுலியட்ட பண்டாரனுக்கு ஞானஸ்நானப் பெயராக டொம் ஜோவ் (Dom Joao) என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்விற்குரிய சமகாலகட்டத்தில் சீதாவாக்கை இராச்சியத்தில் மாயாதுன்னை மிகவும் வயோதிபம் அடைந்த காரணத்தினால் அம்மன்னனது புத்திரனான முதலாம் இராஜசிங்கன் 1578 மே, மாதத்தில் இருந்து அவ்வரசின் நடவடிக்கைகள் யாவற்றிற்கும் தன்னைப் பொறுப்பாளியாக்கிக் கொண்ட தோடு, போர்த்துக்கேயர் காலத்து கடல் முகப்புத்தள இராச்சியமொன் றினது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தினையே ஆரம்பித்து வைத்தான் அவ்வாறான ஒரு புதிய எழுச்சியின் பின்னணியிலேயே 1582ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தின் மீதான தனது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, களுலியட்ட பண்டாரனைத் தண்டிப் பதற்கு ஆயத்தமானான்.
சீதாவாக்கையிலிருந்து பட்ைகள் பலான கணவாய் ஊடாக கண்டி முதலியாரான வீரசுந்தரவுடன் புறப்பட்டுச் சென்றன. (வீர சுந்தரப் பெருமாள் விமலதர்ம சூரியனுடைய தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.) கண்டியில் ஏற்கனவே தங்கியிருந்து போர்த்துக்கேயப் படைகளுடன் சீதாவாக்கை வீரர்கள் அதிதீரமாகப் போர் செய்து, போர்த்துக்கேயரைத் தோற்கடித்ததோடு, கண்டி இராசதானியையும், கைப்பற்றிக் கொண்டனர். உடுநுவர யட்டிநுவர மாத்தளை, தும்பனே ஆகிய பிரதேசங்கள் முதலில் இராஜசிங்கனால் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து முழுக் கண்டியப் பிரதேசமும் இராஜசிங்கனது
104

கட்டுப்பாட்டிற்குள் மிகச் சுலபமாக இணைக்கப்பட்டது. களுலியட்ட பண்டாரனும், அவனது குடும்பத்தினரும் அங்கிருந்த எஞ்சிய போர்த்துக் கேயருடன் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் வழியில் வன்னிச் சிற்றரசர்களை ஒன்றிணைத்து இராஜசிங்கனுடன் போர் செய்ய எத்தனித்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிவடைந்தன. மேலும் கண்டியிலிருந்து திருகோணமலைக்குத்தப்பிச் செல்லும் மார்க்கத் தில்களுலியட்ட பண்டாரனும், அவனது பட்டத்துராணியும் சின்னம்மை நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கண்டியில் களுலியட்ட பண்டாரனின் மருமகன் யமசிங்க பண்டார னும் மகள் குசுமாதேவியும் கண்டி இராச்சிய நிர்வாக முறைகளுக்குப் பொறுப்பாக ஆரம்பத்திலிருந்தே மன்னனால் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் களுலியட்ட பண்டாரன் திருகோணமலைக்குச் சென்றதும், கண்டியிலிருந்து அவர்கள் இருவரும் மன்னாருக்கு சென்றடைந்து அங்கு வைத்து ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு முறையே டொம்பிலிப், டோன கதறினா என்ற பெயர்களுடன் கிறிஸ்தவ மதத்திற்கு மத மாற்றத் திற்குட்பட்டனர். சில வரலாற்றாசிரியர் யமசிங்கபண்டாரன் கோவா விற்கு வரவழைக்கப்பட்டே அங்கு வைத்து ஞானஸ்நானம் செய்விக்கப் பட்டான் எனவும் குறிப்பிடுகின்றனர்.
கண்டி இராச்சியத்தினை வெற்றிகொண்டு சீதாவாக்கையுடன் இணைத்துக்கொண்ட இராஜசிங்கனின் பெரும்பணி அம்மன்னனுக்கு எவ்விதத்திலும் மன நிறைவையீட்டிக் கொடுக்கவில்லை. இதற்கான காரணம் இலங்கை முழுவதற்குமே தான் பேரரசனாக ஆட்சி செலுத்த வேண்டும் என்ற ஒரவா ஆகும். இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தினைக் கைப்பற்றி, சீதாவாக்கை இராச்சியத்துடன் இணைத்த கையோடு முழுச் சிங்கள இராச்சியத்துக்குமே அதிபதியாக விளங்கினான் என்பதே யதார்த்தம். இவனது தந்தையாராகிய மாயாதுன்னையின் காலத்து சீதாவாக் கையின் ஆள்புலப்பரப்பிலிருந்து இப்பொழுது கண்டி வெற்றிகொள்ளப் பட்ட நிலையில் அதன் ஆள்புலப்பரப்பு பன்மடங்கு அதிகமாகியது. ஆகவே கண்டிய உயர் நிலப்பிரதேசமும் சீதாவாக்கையின் தாழ் நிலப்பிரதேசமும் ஒரே முடியரசனின் ஆணைக்குக் கீழ் இணைக்கப்பட்ட நடைமுறையானது இலங்கைவரலாற்றில் அதன் சமூக, பொருளியல், பண்பாட்டு வரலாற்றில் பல விளைவுகளை ஏற்படுத்தக் காரணமாகியது. கண்டியரசு மிகவும் அண்மித்த தூரத்தின் அடிப்படையில் கடற்கரையோரத்தினையும், துறைமுக நகர்களையும் பயன்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு சிறந்த கால கட்டமாக முதலாம் இராஜசிங்கன் காலம் அமைந்தது.
705

Page 56
எனினும் புதிதாகக் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்ட கண்டி இராச்சியத்திலிருந்து எழுந்த பல பிரச்சினைகளுக்கும் முதலாம் இராஜசிங்கன்முகம்கொடுக்க வேண்டியவனானான். இராஜசிங்கனுடைய மிக நெருங்கிய ஆதரவாளனான முதலியார் வீரசுந்தர (பெருமாள்) கண்டியில் தனது சொந்த அதிகாரபலத்தை அதிகரிப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையிலிருந்தே அப்புதிய பிரச்சினைகளை இராஜசிங்கன் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாக முதலியார் வீரசுந்தர (பெருமாள்) இராஜசிங்கனால் கொல்லப்பட வேண்டிய நிலைக்குள்ளானான். வீரசுந்தரவினுடைய ஆக்ரோஷம் வாய்ந்த மகனான கோணப்பு பண்டாரன் என்பவன் சாலப்பு என்பவனுடன் கொழும்புக்கு விரைந்து, அங்கு தர்மபாலனுடைய பாதுகாப்பில் வாழத்தொடங்கினான். அங்கு தமித்த - ராள என்பவனுடைய மகள் ஒருத்திக்கு கோணப்பு பண்டாரனை தர்மபாலன் திருமணம் செய்வித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் கோட்டையரசு கொழும்புத்துறைமுகத்தை மையமாகக்கொண்டு ஒரு சதுரமைல் பரப்பளவையே கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இராஜசிங்கன் கோட்டையரசினையும் கொழும்புத்துறைமுகத்தையும் கைப்பற்றுவதற்கான படைஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்தே அவனால் புதிதாகக் கைப்பற்றப்பட்ட கண்டிய இராசதானியில் இராஜசிங்கனுக்கெதிராக குழப்பங்கள் உருவாகத் தொடங்கின. கோட்டையரசினை சீதாவாக்கையுடன் இணைப்பதற்கு மேற்கொண்ட பல நடவடிக்கைகள் இராஜசிங்கனுக்குத் தொடர்ந்து படுதோல்விகளைத் தந்துகொண்டிருந்த அந்நேரத்தில் கண்டியில் ஏற்பட்ட பிரச்சினைகளும் அவனுக்கு பெருவிரக்தியை ஏற்படுத்தத் தவறவில்லை. 1590இல் ஊவாவில் கம்பொலதேவியினுடைய பேரப்பிள்ளையான டொம் பிரான்ஸிஸ்கோ செய்யா (Dom Francisco Cejaya) என்பவன் தனது குருவுடன் இணைந்து இராஜசிங்கனுக்கு எதிராக மக்களுடைய கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். பொதுமக்களால் ஏற்படுத்தப்பட்ட இக்கிளர்ச்சியின் விளைவாக கண்டியரசனாக டொம் பிரான்ஸிஸ்கோ செய்யா என்பவன் சிம்மாசனமேறிக் கொண்டான். தற்காலிகமான சுதந்திர இராச்சியமாக்கப்பட்ட கண்டியரசின் இந்நிலை அடுத்துவந்த ஆறுமாதங்களுக்குமேல் நீடித்திருக்கவில்லை. போர்த்துக்கீசர் முன்னர் யமசிங்கபண்டாரன் என்ற பெயரிலிருந்து டொம் பிலிப்பு என ஞானாஸ்நானம் செய்திருந்த, விக்கிரமபாகுவினுடைய மருமகனை கண்டிக்கு அழைத்துவந்து கண்டியரசனாக்கிக் கொண்டனர். டொம்
106

பிலிப்பினை கண்டிய மக்களும் தமது அரசனாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். இம்மாற்றமானது முதலாம் இராஜசிங்கனது அரசியல் ஆள்புல விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத் தவும் தவறவில்லை.
கண்டியரசனாக்கப்பட்ட டொம் பிலிப் (1590) உடனடியாகத் தனது பதவியினுடைய உரிமத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், அதற்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும் போர்த்துக்கல் அரசனுக்கு இராணுவ உதவியைக் கோரி கடிதமொன்றை அனுப்பியிருந்தான். ஆனால் போர்த்துக்கல் மன்னனோ டொம் பிலிப்பினுடைய இக்கோரிக் கைக்கு எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்காது, அதனை அசமந்தப் போக்கிலேயே விட்டிருந்தான், இறுதியாக அக்கோரிக்கை யானது கொச்சின் பேராயரின் விருப்பப்படி டொம் பிலிப்பினுடைய கோரிக் கைக்கு போர்த்துக்கேயர் சம்மதம் தெரிவித்ததோடு, கண்டிய மக்களின் ஒப்புதலின் பேரில் கொச்சின் பேராயரை கண்டிக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டது. (டொம்பிலிப் மன்னாரில் போர்த்துக்கேயரின் பாதுகாப் பில் நீண்ட காலம் இருந்தபோது ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை போர்த்துக்கேய மன்னார்த் தளபதியிடமிருந்து ஓய்வூதியமாகப் பெற்றிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.) கண்டியப் பிரதானிகள் டொம் பிலிப்பினை மிகவும் மனப்பூர்வமாக கண்டியரசனாக ஏற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கன்னொறுவ என்ற இடத்தில் வைத்தே டொம் பிலிப் கண்டி மன்னனாக கண்டியப் பிரதானிகளால் பிரகடனப்படுத்தப் பட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப் பிரகடனத்திற்கு ஏதுவாக முதலாம் இராஜசிங்கனுடைய தீரம்மிக்க படையணிகளை கன்னதென (Gannetena) என்ற இடத்தில் வைத்து போர்த்துக்கேயருடய மன்னார்த் தளபதியான ஜோவ்டீ - மெலோடீசம்பயோ (Joao de Mello de Sampaya) என்பவன் சிதறடித்து, கண்டிமீதான இராஜசிங்கனின் ம்ேலாதிக்கத் தினை 1593இல் நீக்கியிருந்தான்.
சீதாவாக்கை இராச்சியத்தின் வீழ்ச்சியுடனேயே கண்டி மீதான தொடர்பு களில் போர்த்துக்கேயர் கூடுதலான அக்கறை செலுத்தத் தொடங்கி இருந்தனர். 1593இல் கண்டி இராச்சியத்தினை தனது கட்டுப்பாட்டி லிருந்து இழந்த முதலாம் இராஜசிங்கன் சீதாவாக்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் வழியில் இறங்கவேண்டி நேரிட்டது. முதலாம் இராஜசிங்கனின் இறப்பு சீதாவாக்கை இராச்சியத்தினை முற்றுப்பெற வைத்ததோடு, அதனைக் கோட்டையரசுடனும் இணைத்துவைக்க ஏதுவாயிற்று, இராஜசிங்கனின் மரணத்தின் பின்னர் சீதாவாக்கையில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக மன்னப்பெருமா மொகத்தல என்ற
107

Page 57
தளபதியின் மேற்பார்வையிலிருந்து விலகிய சிங்களப் போர்வீரர் பலர் போர்த்துக்கேயருடன் இணைந்து கொண்டமையால், போர்த்துக்கேயர் மிகவும் இலகுவாக சீதாவாக்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இலகுவாயிற்று. இதன் பின்னர் போர்த்துக்கேயர் கண்டி இராசதானி விடயத்தில் சற்று அக்கறையுடன் செயற்படத் தொடங்கினர். இதற்குக் காரணம் 1593 இலிருந்து கண்டியரசவம்சத்தில் போர்த்துக் கேயருக்கெதிரான உணர்வுடன் ஆட்சியாளர்கள் செயற்படத் தொடங்கி யிருந்தமையினாலும், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் போர்த்துக்கேயருக்கெதிரான அரசியல், இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வந்ததன்நிலைமையை கண்டிய மக்கள் நன்கு அறிந்திருந்தமை யினாலுமாகும். எனவே கண்டியரசு - போர்த்துக்கேயருடைய தொடர்பு களில் ஒரு புதிய அத்தியாயம் கன்னொறுவா போர்க்களத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது எனக் கொள்ளவேண்டும்.
கண்டி அரசின் அறைகூவலும் போர்த்துக்கேயரின் பின்னடைவும்
இலங்கையின் கடல் முகப்புத்தள இராச்சியங்களில் போர்த்துக் கேயருக்குக் கிடைத்த அரசியல், இராணுவ அடிப்படையிலான வெற்றி களைப் போன்று கண்டியரசில் அவ்வெற்றியை ஈட்டமுடியாது போனமைக்கு சமகால இந்தியச் சூழ்நிலையே அடிப்படையாக அமைந்திருந்தது. கண்டியில் ஆட்சிசெய்த டொம் பிலிப் ஒரிரு சில வருடங்களின் பின்னர் மர்மமான முறையில் இறக்க நேரிட்ட சம்பவத் தினைத் தொடர்ந்து கண்டியின் அரசியல் நிலவரம் அதிவேகமாகப் போர்த்துக்கேயருக்கெதிராக மாற்றம்பெறத் தொடங்கியது. டொம் பிலிப்பினது மறைவுடன் அவனது மகனாம் டொம் ஜோவ் (Dom Joao) கண்டிய மன்னனாகப் பிரகடனப்படுத்தப்பட்டான். ஆனால் அம்மன்னனுக்கு போர்த்துக்கேயரது ஸ்திரமான ஆதரவு நேரடியாகக் கிடைக்காதிருந்தமையினாலே பலத்த எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டான். குவெய்ரோஸினுடைய கருத்தின் பிரகாரம் டொம் ஜோவ் ஒரு சாதாரண கிறிஸ்தவ பிரஜையாக இருந்தமையினால் போர்த்துக்கேயரது பிரத்தியேகமான ஆதரவுக்குட்பட்ட வகையில் அவர்களால் கணிப்பிடப் பட்டிருக்கவில்லை என்பதனை அறியமுடிகிறது. ஆனால் ரினிடாட் " (Trinidade) என்ற வரலாற்றாசிரியர் குவெய்ரோஸ் தருவதிலிருந்து மாறுபட்ட கருத்தினைத் தருவதனைக் காணமுடிகிறது. எவ்வாறெனினும் கண்டி இராசதானியில் டொம் ஜோவ்வுக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது பேர்த்தியாருடன் (grand mother) கண்டி இராசதானியைவிட்டு விலகிச் செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது என்பதே உண்மையாகும். டொம்ஜோவ் ஏழு
708

கோறளையூடாக பிரான்ஸிஸ்கன் மதகுருவான பிரான்சிஸ்கோ - டு - ஓரின்ரே என்பவருடைய பாதுகாப்புடன் மன்னாரைச் சென்றடைந்தான். இம்மன்னனுடைய பதவித்துறப்பிற்கு அடிப்படையாக அமைந்த கலகத்தைக் கண்டியில் உருவாக்கியவன் கோனப்புபண்டாரன் என்பவ னாகும். இவன் கண்டியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த பெளத்தத் துறவியான தெவநகல தெருனான்சே என்பவருடைய பேராதரவுட னேயே இக்கலகத்தை ஏற்படுத்தி, டொம்ஜோவ்வை சிம்மாசனமிழக்கச் செய்தான். பின்னர் விமலதர்மசூரியன் என்ற பெயருடன் கண்டிய சிம்மாசனத்தை அவன் தனதாக்கிக் கொண்டான். கோணப்பு பண்டாரன் கண்டிய மக்களை அழைத்து, போர்த்துக்கேயரின் கண்டி மீதான உள்நோக்கத்தை விளக்கி, கண்டியிலிருந்து போர்த்துக்கேயரை கலைத்து, துரத்திவிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர்களைக் கோரினான்.
'விமலதர்மசூரியன்' என்ற பெயரில் கண்டியரசின் ஆட்சியாளனான கோணப்பு பண்டாரனை கண்டிய மக்கள் பெருமளவிற்கு ஆதரிக்கவில்லை. காரணம் கண்டி இராச்சியத்திற்குரிய உரிமத்தை அவன் கொண்டிருக் காதமையாகும். மக்கள் மத்தியில் காணப்பட்ட கோணப்பு பண்டாரன் மீதான இந்த அதிருப்தியை நன்கு பயன்படுத்திக் கொண்ட போர்த்துக் கேயர் மன்னாரிலிருந்து கறலியட்ட பண்டாரனின் மகளான டோனா கதறினாவை கண்டிக்கு அழைத்துச்சென்று பட்டத்து அரசியாக சிம்மாசனத்தில் அமர்த்தினர். இந்நிகழ்வு 1594இல் லேசப்ஸ் - டீ - சூசா என்ற போர்த்துக்கேயத்தளபதியின் தலைமையில் ஒப்பேறியது. இவன் 600பேர் கொண்ட போர்த்துக்கேய வீரர்களுடன் கண்டிக்குப் புறப்பட்டுச் சென்று டோனா கதறினாவை கண்டிய சிம்மாசனத்தில் இருத்தினான். டீ - சூசாவினால் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பு மிகவும் , இலகுவாக வெற்றியளித்தமைக்கு பல காரணங்கள் அடிப்படையாக, விளங்கின. ஏற்கனவே கன்னொறுவ என்னுமிடத்தில் போர்த்துக்கேயரது சிறிய பாதுகாப்புப்படைகள் பலவீனமடைந்த நிலையிலும், நிலை கொண்டிருந்தன. எனவே டீ - சூஸாவின் படையணி அவற்றுடன் இணைந்த சந்தர்ப்பமானது மீண்டும் போர்த்துக்கேயரால் கண்டியை முற்றுகையிடக்கூடிய வலிமையை அதிகரிப்பதற்கு வாய்ப்பளித்தது. இந்நிலையில் டீ - சூஸா கண்டியை முற்றுகையிட்டு, கறலியட்ட பண்ணாவை சிம்மாசனத்திலிருத்தினான். இம்முயற்சியில் முன்னாள் சீதாவாக்கையின் படைத் தளபதியாகச் சேவையாற்றியிருந்த ஜெயவீர பண்டாவும், மற்றும் தமது அரச குடும்பத்தின் பிரதிநிதியொருவரைத் திரும்பவும் சிம்மாசனத்தில் அமர்த்துவதனை விரும்பிய கண்டியப்
109.

Page 58
பிரதானிகளும் டீ - சூஸாவிற்கு பக்கபலமாகவிருந்து, டோனா கத்தரீனாவை அரசியாக்க உதவினர்.
இதனால் விமலதர்ம சூரியன் சிறிது காலம் கண்டியை விட்டுச் சென்று, மறைந்து வாழவேண்டிய ஒரு சூழல் அங்கு உருவாக்கப்பட்டது. கண்டி இராச்சியத்திற்கு அரசியாக்கப்பட்ட டோனா கதறினாவிற்கு ஜெயவீரபண்டாரனை (பெளத்தன்) திருமணம் முடித்து வைப்பதற்காக கண்டியப் பிரதிநிதிகளால் எடுத்த முயற்சி முற்றிலும் கைகூடாமற் போயிற்று. காரணம் இத்திருமண உறவின் மூலம் தமக்கும் கண்டிக்கு மிடையிலான நெருக்கியிருந்த உறவு முற்றிலுமே அற்றுப் போய்விடும் என போர்த்துக்கேயர் கருதியமையினால், ஜெயவீரபண்டாவை இரகசியமாகக் கொலை செய்வித்து, புதைத்தும் விட்டிருந்தனர். ஜெயவீர பண்டாரன் கண்டியில் போர்த்துக்கேயரால் கொலை செய்யப்பட்ட நிகழ் வானது காட்டுத் தீ போல் எங்கும் பரவி, மக்கள் மத்தியில் போர்த்துக் கேயருக்கெதிராக ஒரு பெருங்கலவரத்தையே உருவாக்கிவிட்டிருந்தது. இதனை நன்கு அவதானித்துக் கொண்டிருந்த விமலதர்ம சூரியன் கண்டி நகருட் பிரவேசித்து மக்களுடைய ஆதரவுடன் போர்த்துக்கேயரை அங்கிருந்து விரட்டியதோடல்லாது, டோனா கதறினாவை தனது பட்டத்து இராணியாக்கிக்கொண்டு, கண்டியின் வேந்தனாக முறைப்படி பிரகடனப்படுத்திக் கொண்டான். இந்நிகழ்வுடன் போர்த்துக்கேயருடைய கண்டியத் தொடர்பானது இராணுவ - படைநடவடிக்கைகளினால் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிலைக்குத் தள்ளப்படலாயிற்று. ஒல்லாந்தரால் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து விரட்டப்படும் வரைக்கும் போர்த்துக்கேயர் கண்டி மன்னர்களுடன் போர் புரிந்தவாறே கரையோர மாகாணங்களில் தமது அரசியல் மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கு முயன்றிருப்பதனைக் காணமுடிந்தது. விமலதர்ம சூரியனுடைய ஆட்சியுடனேயே கண்டி இராச்சியம் போர்த்துக்கீசர் மீதாக புதிய அரசியற் கொள்கைகளை வகுத்து அதனூடாக அந்நியருக்கெதிராக நிலையான எதிர்ப்பு நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்கு கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்தது.
விமலதர்மசூரியன் வகுத்த புதிய கொள்கைகள் :
தனந்துறையில் (Danture) 1594ஆம் ஆண்டு நடைபெற்ற போரே கண்டி மீது போர்த்துக்கேயர் கொண்டிருந்த கொள்கைகளை மாற்றி யமைக்கக் காரணமாகியது. நவீன இலங்கையின் வரலாற்றில் சிறப்பாக கண்டி இராசதானியின் வரலாற்றில் இப்போர் மகத்தான மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தக்காரணமாகியது. கண்டி இராச்சியம் அடுத்துவந்த
110

இருநூற்றாண்டு காலத்திற்கு (1565 - 1815) தனித்துவமான ஒரு பேரரசாக திகழக்கூடிய வாய்ப்பினையும், சூழ்நிலையும் தனந்துறைப் போர் ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. சிங்கள பெளத்த கலாசார விழுமியங்கள் கண்டியரசனாக வருகைதந்த தென்னிந்தியநாயக்க வம்சத் தொடர்புடைய ஆட்சியாளரின் பாதுகாப்பிலும், அரவணைப் பிலும் கண்டியில் புத்துயிர்ப்பு பெற்றுக்கொண்டதற்கு இத்தனந்துறைப் போர் வழிவகுத்து விட்டிருந்தது. போர்த்துக்கேயருக்கெதிராக விமலதர்ம சூரியன் தனந்துறையில் ஈட்டிய வெற்றியின் பயனே இந்நிலையில் கி.பி. 1815 வரைக்கும் கண்டி அரசினையும், மக்களையும் சுதந்திர நிலையில் இட்டு வைக்கக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
கோட்டை இராச்சியமும், யாழ்ப்பாண இராச்சியமும் போர்த்துக்கீசரின் நேரடியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கண்டி இராச்சியம் மட்டுமே இலங்கையில் ஒரு சுதந்திர அரசாக விளங்கி வந்தமையைக் காண்கின்றோம். கண்டி இராச்சியத்தின் எழுச்சியினாலேயே போர்த்துக்கேயரின் ஆட்சி இலங்கைத்தீவு முழுவதும் பரவாது தடுக்கப் பட்டது. 1594ஆம் ஆண்டிலிருந்து தமது மிகுதிக் காலப்பகுதியைப் போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்துடன் போர் புரிவதிலேயே கழித்தமையால் போர்த்துக்கேயரின் பொருளாதார வலுவினையும், மனித வலுவினையும் விரையம் செய்யவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு போர்த்துக்கேயர் உள்ளாக்கப்பட்டனர். போர்த்துக்கேயருடனும் பின்வந்த ஐரோப்பியருடனும் மேற்கொள்ளப்பட்ட இந்நீண்ட போரினாலேயே கண்டி மக்கள் சிங்கள - பெளத்த தேசீயத்தின் உணர்வினை தம்மிடையே சிறைப்படுத்தி, அவ்வுணர்வின் பின்னணியில் தத்தமது வாழ்வு, கலைப்பணி, பொருளியல் மேம்பாடு போன்றதுறைகளில் விருத்தி பெறத் தூண்டப்பட்டனர். சீதாவாக்கை மன்னனாக விளங்கிய மாயாதுன்னையிடமிருந்த சிங்கள - பெளத்த உணர்வு கண்டி இராச தானிக்கு கைம்மாற்றமடைவதற்கு இத்தனந்துறைப்போர் வழிவகுத்துவிட்டிருந்தது என்றும் குறிப்பிடலாம்.
தனந்துறையில் விமலதர்மசூரியன் போர்த்துக்கேயப் படைகளுக்கு விளைவித்திருந்த கடுமையான அழிவுகளினால் விமலதர்மசூரியனுக் கெதிரான புதிய கொள்கைகளை போர்த்துக்கேயர் பிரகடனம் செய்ய வேண்டியிருந்த நிலைக்குள்ளாக்கப்பட்டனர். போர்த்துக்கேயப் படையணியின் புதிய தளபதியாக டீ - அசவிடோ நியமிக்கப்பெற்ற வகையை நோக்கும்போது போர்த்துக்கேயர் விமலதர்மசூரியனுக்கு எதிரான புதிய இராணுவக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட தன்மையை உணரமுடிகிறது. அசவிடோ என்பவன்
1 11

Page 59
தனித்துவமான சிங்தனையுடைய, முன்யோசனை பெரிதும் மிக்க ஒர் இராணுவத் தளபதியாவான். கண்டி இராச்சியத்தினை மீட்டெடுக்கும் பெரும் பணியினையே தனது ஒரே பணியாகக் கொண்டு புனித மீட்பாளர் (Messianic Zeal) என்ற தோரணையில் விமலதர்ம சூரியனுக் கெதிரான யுத்த வியூகத்தை வகுத்து தொடர்ச்சியான ஒரு யுத்தத் தினைக் கண்டி இராச்சியத்துடன் மேற்கொண்ட ஒரு கொடிய போர்வீரனாக டீ - அசவிடோ தொழிற்பட்டிருந்த முறையைக் காணமுடிந்தது. கண்டிய மக்களால் டீ - அசவிடோ ஒரு பூதத்தின் வாரிசு" என வர்ணிக்கப்படுமளவிற்கு அவனது மிகக்கடுமையான போர் நடவடிக்கைகள் கண்டியைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப் பட்டிருந்தன. இவ்வேளையில் தனந்துறைப் போரின்போது கைதுசெய்யப் பட்டுக் கண்டியச் சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போர்த்துக்கேயக் கைதிகளின் மீதான நாளாந்தத் தண்டனைகள், அங்கக் குறைப்பு போன்றன தொடர்ந்தும் சிங்கள மக்களால் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே டீ - அசவிடோவின் வருகையுடன் போர்த்துக்கேயருடைய ஆள்புல விஸ்தரிப்புக் கொள்கை இலங்கைத்தீவில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டி ருந்தன என்பது தெளிவாகின்றது. 1593இல் ஏற்கனவே சீதாவாக்கை இராச்சியத்தினை போர்த்துக்கேயர் தமது கோட்டை இராச்சியத்துடன் இணைத்திருந்தாலும் கூட அங்கு கைப்பொம்மையாக தமக்குச் சார்பான இலங்கை மன்னனொருவனை நியமனம் செய்வித்தமையிலிருந்து அங்கு ஆள்புல விஸ்தரிப்பு நடவடிக்கைகள் கரையோரமக்களின் ஆதரவுடன் நிகழ்த்தப்படுவது போல் காட்டிக்கொள்ளப்பட்டது. ஆனால் கண்டியைப் பொறுத்தவரையில் டீ - அசவிடோ தனது நேரடியான இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கொள்கை வகுப்புத் திட்டத்தினையே காணமுடிந்தது.
ஆனால் விமலதர்மசூரியனது வெளிநாட்டுத் தொடர்புகள் குறிப்பாக கண்டிக்கும் தென்னிந்தியாவிற்குமிடையே பேணப் பட்டிருந்த உறவுநிலைகள் காரணமாக போர்த்துக்கேயருக்குப் பெரிதும் சாதகமற்ற ஒரு சூழ்நிலையே உருவாக்கப்பட்டிருந்தது. கண்டி மன்னன் கிழக்கிந்தியக் கரையோரமாகக் காணப்பட்ட இரு பேரரசுகளிடமிருந்து தனக்குத் தேவையான வடுகைப் போர்வீரர்களை (Vadugai) பெற்றுக் கொண்டமை ஒருபுறமிருக்க, மொஹலாயப் பேரரசின் தக்கணம் மீதான ஆதிக்கப்படர்ச்சியும் இந்து சமுத்திரத்தில் போர்த்துக்கேயரின் கடற்படை வன்மைக்கு ஒரு சவாலாக அமைந்திருந்தது. தக்கணத்தில் ஆட்சிசெய்த சுல்தான்கள் மொஹலாயப் பேரரசருக்கெதிராக போர்த்துக்கேயருடன்
172

இணைந்து படைநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தன்மையை அறிந்து கொண்ட பின்னரேயே நேரடியாகப் போர்த்துக்கேயருக்கெதிரான இராணுவநடவடிக்கைகளில் மொஹலாயப் பேரரசர் ஈடுபடத் தொடங்கி யிருந்தார். அக்பர் ப்ரோச்சிலுள்ள (Broach) தனது ஆள்பதிக்கு டியூ (Diu) வைத்தாக்குமாறு கட்டளையிட்டதன் பின்னணியும் அதுவேயாகும். மொஹலாயப் பேரரசின் வீழ்ச்சி வரைக்கும் (1707) இந்தியாவில் போர்த்துக் கேயர் தாம் முதலில் கைப்பற்றியிருந்த குடியேற்றங்களை கைநழுவ விடவேண்டியேற்பட்டது. அவற்றை மீண்டும் போர்த்துக்கேயர் மீளக் கைப்பற்றவேண்டுமெனில் இந்து சமுத்திரத்திலுள்ள இலங்கைத்தீவு முழுவதனையும் தமது ஆதிக்கத்தினுள் கொண்டு வரவேண்டும் எனப் போர்த்துக்கல் மன்னன் இலங்கையிலுள்ள தனது ஆள்பதிக்கு எழுதி யனுப்பிய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளான். அதனாலேதான் டீ அசவிடோ கண்டியைக் கைப்பற்றுவதற்காக விசேடமாக நியமனம் செய்யப்பட்ட ஒரு படைத்தளபதியாகத் தொழிற்பட்டிருந்தான்.
விமலதர்மசூரியன் ஏற்படுத்திக் கொண்ட இரண்டாவது முக்கிய வெளிநாட்டுத் தொடர்பு ஆசியாவிற்கு வருகை தந்திருந்த டச்சுக்காரர் களுடன் ஏற்படுத்திக் கொண்ட புதிய உறவாகும். 1595இன் பின்னர் லிஸ்பனில் மேற்கொள்ளப்பட்ட வாணிபத்திலிருந்து ஒல்லாந்தர் விலக்கி வைக்கப்பட்டதன் பின்னணியில் டச்சுக்காரர் தனித்துவமான வகையில் அமையப்போகும் தமது கடல் வாணிபத்திற்கான சரியான நேரத்தினையும், சந்தர்ப்பத்தினையும் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். 1595இன் இறுதிப்பகுதியில் கோர்னலிஸ் கெளட்மான் (Cornelis Hoatman) என்ற டச்சு வாணிபன் ஒருவன் போர்த்துக்கேயருடன் இணைந்து வந்து யாவா வரைக்கும் சென்றிருந்தான். இதன் பின்னர் ஒரு சில வருடங்களுக் குள் 40 டச்சுக்கப்பல்கள் இந்துசமுத்திர வாணிப மார்க்கத்தில் வாணிபத் தில் ஈடுபட்டிருந்தன. 1602இல் டச்சுகீழைத்தேய வாணிகக் கம்பனி (Dutch - East India Company) யாவாவில் நிறுவப்பட்டது. கண்டிய மன்னனான விமலதர்மசூரியன் 1602இல் ஸ்பில்பேர்கன் (Spilbergenjoris) என்ற டச்சு கடற்படைத் தளபதியை கண்டியரசிற்கு அழைத்து, தனது முதற் தொடர் பினை ஏற்படுத்திக் கொண்டான். கண்டி இராச்சியத்திற்கு டச்சுக்காரரின் வருகை தமக்கு பாரிய விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடும் எனப் பயந்த டீ - அசவிடோ டச்சுக்காரர் இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கண்டியைக் கைப்பற்ற வேண்டும் எனத்துரிதமாக செயற்படத் தொடங்கினான்.
ஸ்பில்பேர்கன் கண்டியில் வெளிநாட்டு விருந்தாளியாகக் கெளரவிக்கப் பட்டதுடன் டோனா கதறினா, உட்பட அரசவை அங்கத்தினர்களுக்கும், அரசகுடும்பத்தினர்க்கும் அரசவைப் பிரதானிகளுக்கும் அறிமுகம் செய்து
13

Page 60
வைக்கப்பட்டான். ஸ்பில் பேர்கன் கண்டியை விட்டுச் செல்லும்போது ஐரோப்பிய இசைக்கருவி ஒன்றும், ஹொலன்ட் இளவரசனின் வரைபடம் ஒன்றுமாக விமலதர்மசூரியனுக்கு பரிசில்களாகக் கொடுத்துவிட்டுச் சென்றான். ஹொலன்ட் இளவரசன் மெளரைஸின் (Maurice) பெரிய வரைபடம் விமலதர்மசூரியனின் அறையை அலங்கரித்த வண்ணம் தொங்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஸ்பில்பேர்கன் கண்டியை விட்டுச் செல்லுமுன் போர்த்துக்கேயருக் கெதிராகவும் கண்டியரசனுக்குச் சார்பாகவும் பல உதவிகளை செய்து கொடுத்தது மல்லாது, கண்டியரண்மனையில் ஹோலன்டைச் சேர்ந்த இரு இசையமைப்பாளர்களை இசைவாத்தியக்காரர்களை?) விட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கதாகும். அவர்களில் ஒருவரை ஹான்ஸ் ரெம்பெல் (Hans Rempell) GTGOTGilb, LDfbp3).JGOJ gTITGil Dah) LDITib6f GL15i (Erasmus Matsberger) எனவும் அழைக்கப்பட்டனர். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர் கண்டி அரச குடும்பத்தினருக்கு பிரதான செயலாளராகத் தொழிற்பட்டி ருந்ததோடு, டச்சு மொழியை கற்பிக்கின்ற ஆசிரியராகவும் கடமையாற்றி யிருந்தார் என்பதனையும் அறிய முடிகிறது.
ஸ்பில் பேர்கன் கண்டியிலிருந்து மட்டக்களப்பினை 1602 ஆம் வருடம் யூலைமாதத்தில் சென்றடைந்தான். பின்னர் அங்கிருந்து போர்த்துக்கேயருடையதும், கண்டியரசனுடையதுமான கடிதங்களையும் சேகரித்துக் கொண்டு ஐரோப்பாவிற்கு 1602, செப்டெம்பர் மாதத்தில் பயணமானான். கண்டியரசன் ஸ்பில்பேர்கனூடாக டச்சுதேச இளவரசனுக்கு கடிதமொன்றையும் கொடுத்து போர்த்துக்கேயருக்கெதிராக உதவி கோரி அனுப்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த பின் அதேயாண்டு நவம்பர் மாதமளவில் இரண்டாவது டச்சுக் கடற்படைக்கப்பலொன்று இலங்கையின் கிழக்குக் கரையோரத்தினை வந்தடைந்தது இக்கடற்படைக் கப்பலின் கட்டளைத் தளபதியாக விளங்கியவன் ஸிபோல்ட் - டீ - வீற் (Vice-admiral Seebald-de-Weert) 6765TLu6)/60TITousTGöt. 6)îLDGygJjLDé5/flu657 Le - வீற்றிற்கு மிகவும் பெறுமதிவாய்ந்த பரிசில்களை வழங்கிக் கெளரவித்தான். தங்கமணி மலை ஒன்று, தங்கத்திலான வட்டகை (Bowl) தங்கத்தாலான வாள் என்பன. டீ - வீற்றினால் போர்த்துக்கேயர் வசமுள்ள கொழும்பினையும், துறைமுகத்தையும் கைப்பற்றிக் கொடுத்தால் 2000 குயின்ரல்ஸ் (Guintals) கறுவா வழங்கப்படும் என விமலதர்மசூரியனால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், கொழும்புத்துறைமுகத்தை பாதுகாப்பு வலயமாக்கவும் கோவாவிலிருந்து போர்த்துக்கேயருக்கு உணவுப் பொருட்கள் வருவதனைத் தடுக்கவும், 20000 போர்வீரர்களைப்
14

பொறுப்பேற்றுச் சென்று போர்த்துக்கேயருடையதுறைமுக நகரங்களை டச்சுக்காரரிடம் சரணடையச் செய்யவும், அத்துறைமுக நகரங்களை டச்சுக் காரர் தமது வாணிப நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்றவகையில் ஒல்லாந்து அரசு கண்டியரசுக்கு உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. டீ - வீற்றும் விமலதர்மசூரியனுடைய கோரிக்கைகளை மனதிற்கொண்டு, ஜனவரி, 1603இல் கண்டியிலிருந்து புறப்பட்டுச் சென்றான். விமலதர்மசூரியன் டச்சுக்காரருடைய உதவி தனக்குக் கிடைக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்தான். இவ்வேளையில் அசவிடோ கண்டியரசினை அடக்குவதற்காக ஜனவரி, 1603இல் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அசவிடோவும் கண்டி மீதான போர் நடவடிக்கைகளும் :
டீ - அசவிடோவின் ஒன்றுதிரண்ட படைகள் அத்தனகல, டொரவக மலைத்தொடர், மெனிக்கடவர, அத்தப்பிட்டிய ஆகிய பிரதேசங்களு டாகச் சென்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட வகையில் கனதென்னே (Ganetenne) என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரும் பாசறையைத் (தலைமைக் காரியாலத்தினைச்) சென்றடைந்து கொண்டன. இங்கேயே அசலிடோவின் படைகளுடன் ஸிமோவ், பிங்கோவ் மற்றும் ஸமரக்கோன் ஆகியோருடைய லஸ்கரின் படைப்பிரிவுகளும் சென்று இணைந்து கொண்டிருந்தன. அசவிடோவின் அடுத்த நகர்வு பலான நோக்கி படைகளை நடாத்திச் செல்வதாக அமைந்தது. பலானவில் அமைந்துள்ள கொத்தளமே கண்டியின் தலைநகரான செங்கடகலவின் முதலாவது நுழைவாயிற்புறமாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து மூன்று நாட்களாக பலான கொத்தளத்தின் மீது பீரங்கிக் குண்டுகளால் அதிரடி நடாத்தியிருந்ததும் எவ்விதபயனேதும் கிட்டவில்லை. ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின்னரே பலான ஊடாக பாதை ஒன்று அதிகளவு இரத்தக் களரியின் பேரில் அவிப்பாகம் கொடுக்கப் பட்டுத் திறக்கப்பட்டது. பலான கொத்தளத்தின் பிற்புறமாக நின்று பின்கோவ் மிகவும் வியப்புத் தரும் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தினான். அவனுடைய அத்தாக்குதலானது யானைகளின் தந்தத்தினால் மிகவும் வலிமையானவகையில் பாதுகாப்பானதாக்கப்பட்டிருந்த கண்டியரசனின் பாதுகாப்புக் கிடங்கின் மீதே நடாத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு உதவியாக கோவாவிலிருந்து உடனேயே கொழும்பிற்கு வந்துசேர்ந்த 100 போர்த்துக்கேயப் படைப்பிரிவினர். கண்டி மீது நிகழ்த்தப்படும் சண்டையின் முன்னரண்களுக்கு வரவழைக்கப்பட்டனர். இம்முன்னரணில் நிகழ்ந்த போரில் இருசாராரிலுமிருந்து அதிகளவு உயிர்கள் பலியாகின.
15

Page 61
பெருமளவு போர்வீரர்கள் காயமடைந்தனர். கண்டியரசனின் படைப்பிரிவு களில் கடமையேற்றிருந்த முஸ்லீம், வட்டகரு (Waddaikaru) போர் வீரர்கள் சிலரது தலைகள் போர்த்துக்கேய வீரர்களால் சீவியெடுக்கப்பட்டிருந்தன. எதிரிகளின் படை தன்னை நெருங்கிவருவதனைக் கண்ட விமலதர்ம சூரியன் அடத்தியான காட்டு வழியினூடே சென்று மறைந்து விட்டிருந் தான். பின்கோவ்வினால் விமலதர்மசூரியனை சிறைப்படுத்த முடியாதிருந் தமை இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வாக அமைந்தது.
பலான கோட்டையை போர்த்துக்கேயப்படைகள் 2ஆம் திகதி பெப்ரவரி, 1603இல் கைப்பற்றிவிட்டன. அன்றைய தினம் போர்த்துக் கேயப் படைகள், தளபதிகள் உட்படயாபேரும் தமது பாரம்பரியப் பாணியில் வெற்றிக்களிப்பினை அங்கு கொண்டாடினர். ஆனால் அசவிடோசற்றும் சளைக்காது கண்டியரசன் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஆளணியுடன் வருமுன்னர் கண்டியைச் சென்றடைந்து விடவேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். எனினும் பலானக்கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய ஒருமாத காலத்தில் போர்த்துக்கேயப் படைவீரர் களுக்கு மலைநாட்டின் அதிகூடிய குளிர்த்தன்மை காரணமாக சளிச்சுரம் பீடித்திருந்தமையால் அடுத்த படைநகர்தலை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்பதனை உணர்ந்து கொண்ட டீ - அசவிடோ மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டான். பலான கோட்டையைக் கைவிட்டுச் சென்ற கண்டியர்கள், திரும்பிச் செல்லும்போது தமது இராணுவ வாழ்விடங்கள் எல்லாவற்றிற்கும் தீயிட்டுக் கொழுத்தி விட்டுச் சென்றனர். கண்டிக்குச் சென்ற விமலதர்மசூரியன் மிகவும் இராசதந்திரமாக கண்டிய மக்களுக்கு மிகமுக்கியமான செய்தியொன்றை முரசறைவித்திருந்தான். அதாவது அந்நியரான போர்த்துக்கேயர் கண்டிநகரைக் கைப்பற்றி தமது ஆதிக்கத்தை இங்கு நிலை நிறுத்துவாராயின் கண்டிய மக்கள் யாவரும் கைதிகளாகி போர்த்துக் கேயருடைய சித்திரவதைக்குள்ளாக நேரிடும் என்றே முரசறைவித் திருந்தான். கண்டி மன்னனுடைய இந்த இராசதந்திர நடவடிக்கை யானது கைமேல் பல்னை வழங்கியது என்றால் அது மிகையாகாது.
பலானவை வெற்றி கொண்ட போர்த்துக்கேயருடைய சிந்தனையானது கண்டியைக் கைப்பற்றுவதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதற்கும் தமது மேலாதிக்கத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கில் அமைந்திருக்க, பலானவை இழந்த கண்டியரது சிந்தனையானது இலங்கைத் தீவிலிருந்து அந்நியரை வெளியேற்றியே தீருவது என்றும், கண்டியினுடைய சுதந்திர மேலாதிக்கத்தைத் தமது உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும் எனவும் அமைந்திருந்தது. அசவிடோ தங்கியிருந்த கூடாராத் தினுள் திடீரென அவர்களைக் கிலிகொள்ள வைக்கும் செய்தி ஒன்று
16

பரப்பப்பட்டது. அதாவது செங்கடகலவுக்குச் செல்லும் மார்க்கத்தினூடே பெரும்படையொன்று பெருங்கூச்சலிட்ட வண்ணம் போர்முரசுகளுடன் போர்த்துக்கேயப் படையணியைத் தாக்குவதற்காகத் திரண்டு வந்து கொண்டிருக்கின்றது என்பதாகும். உடனே பலானவில் தங்கியிருந்த லஸ்கரின் படைகளுக்குச் செய்தி அறிவிக்கபட்டு, போருக்குத் தயாராகு மாறு அசவிடோ ஆணை பிறப்பித்தான். அதே நேரத்தில் கோட்டை இராச்சியத்தினுள் இருந்த ஹப்பிரிகம் கோறறையின் படுவா லஸ்கரின்களை உடனடியாக தத்தமது குடும்பத்தினரை விட்டு நீங்கி கங்கரா ஆராய்ச்சியினுடைய தலைமையில் கண்டி மீது குறுக்காக ஊடுருவல் செய்யுமாறு அசவிடோவினால் ஆணையும் பிறப்பிக்கப் பட்டது. அதற்கிடையில் கண்டியப் போர் வீரர்கள் பெரும் எண்ணிக் கையில் போர் முரசுகளுடனும், போர்க் கருவிகளுடனும் பலானவை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தனர். டீ - அசவிடோ தனது எல்லா வகையான போர்த் தளபாடங்களுடன்ஹனதென்னாவுக்குப்பின்வாங்கிச் செல்ல ஆயத்தமானான். டீ - அசவிடோ தனது எல்லாவகையான போர்த் தளபாடங்களுடன் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வதற்கு ஆயத்தமா குகையில் திடீரெனக் கண்டியப் போர்வீரர்கள் போர்த்துக்கேயரைச்சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இந்நிலையில் பலானவில் டீ - அசவிடோவில் இணைந்திருந்த முதலியார்களும், ஆராய்ச்சிமார்களும் கண்டிய மன்னனுக்கெதிரான போர் நடவடிக்கை தொடர்பான கோரிக்கையை அடியோடு நிராகரித்து விட்டிருந்தனர் இதனால் மேலதிக உதவிப் படைகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் கண்டிப் போர் வீரர்களுடன் அசவிடோ நேரடியாக மோத வேண்டிய சூழலுக்காளானான். கண்டிய வீரர்கள் கெரில்லாப் போர்முறையைக் கையாண்டு 15 போர்த்துக்கேய வீரர்களை தமது கூரிய ஆயுதங்களால் மிகக் கடுமையான காயங்களுக்குள்ளாக்கினர். சமரக்கோன் என்ற தளபதி அசவிடோவை உடனடியாக பலானவிலிருந்து பின்வாங்கி வருமாறு கோரிக்கை விடுத்தான். அவ்வாறு பின்வாங்கி வராதுவிடில் கோட்டை இராச்சியத்திலுள்ள கங்கார ஆராய்ச்சி கண்டி மன்னனுடன் இணைந்து கூட்டுச் சதியில் போர்த்துக்கேயருக்கெதிராக பெரும் புரட்சி யொன்றில் ஈடுபடும் ஆபத்து வந்துவிடப் போகின்றது எனவும் எச்சரித்தான். அவ்வாறிருந்தும் ஸ்மரக்கோனின் லஸ்கரின்கள் கண்டிய மன்னனுக் கெதிரான போரில் தாம் பங்கு கொள்ளமுடியாது எனவும் அதற்காகத் தாம் மடியவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.ஆனால் சமரக்கோன் தனது முதலியார்களையும், ஆராய்ச்சிமார்களையும் ஓரிடத்தில் கூட்டி, அவர்களது ராஜவிசுவாசத்திற்கு நன்றி தெரிவித்த தோடு, தமது படைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை எடுத்துக்காட்டி தமது படைகளுக்கு வேண்டியிருந்த உணவு நிலையையும் விளக்கி,
7

Page 62
திரும்பிச் செல்வதே, பின்னர் வந்து கண்டியை வெற்றிகொள்ள இருக் கின்ற நிலைக்கு புத்திசாலித்தனமாக அமையும் என எடுத்துக் கூறிய கையோடு போர்த்துக்கீசர் ஹெனதென்னாவுக்குப் பின்வாங்கிச் சென்றனர். காயமடைந்த போர்த்துக்கேய வீரர்களுக்கு ஹெனதென்னவில் வைத்து மருந்தும், ஆகாரமும் வழங்கப்பட்டன. அங்கிருந்து அலுத்துவர தேவாலயத்திற்குப் போர்த்துக்கேயர் பயணமாகிப், பின்னர் அங்கிருந்து அத்தப்பிட்டியவிற்குப் பின்வாங்கிச் சென்றனர். அத்தப்பிட்டியவில் வைத்து கண்டிய வீரர்களால் சூழப்பட்ட நிலையில் போர்த்துக்கேய வீரர்கள் பலர் கண்டிய வீரர்களின் அம்புகளுக்கிரையாக்கப்பட்டனர். இங்கு போர்த்துக்கேயப் படைகளை மிகச் சாதுரியமாகப் போராடிப் பாதுகாத்த பெருமை டீ - அசவிடோவின் அணியைச் சேர்ந்த அன்ரோனியோ பிறிற்றோ என்றழைக்கப்பட்ட கரவா லஸ்கரி னையே சாரும். பின்னர் இங்கிருந்து தலப்பிட்டிய என்ற மையத்திற்குப் பின்வாங்கிச் சென்று அங்கு மூன்று நாட்களாக அசவிடோ தனது படையணிகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தான். இப்பாதுகாப்பிற்கு மிகவும் திறமை வாய்ந்த மூன்று கோட்டைப் பாதுகாப்புப் படை யணிகள் செயற்பட்டிருந்தன. இதன் பின்னர் நான்கு கோறளையூடாக கோட்டை இராச்சிய எல்லைக்குள்நுழைந்து செல்ல வேண்டிய நேரம் டீ - அசவிடோவைக் காத்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில் விமலதர்மசூரியன் தனது கண்டியப் படையணிகளை மூன்று பிரதான பிரிவுகளாக வகுத்து அவற்றுள் இரண்டு பிரிவில் ஒன்றைத் தெரிவுசெய்து, அதனை ஊவா இளவரசனது தலைமையில் கண்டி அரசின் எல்லைகளில் காணப்படும் கணவாய்கள் அனைத்தினையும் கட்டுப்படுத்துவதற்கும், மற்றைய பிரிவினை காடுகளிலிருந்து வெளியேறும் டீ - அசவிடோவின் படைகளை பின் சென்று தாக்குவதற்குமாகப் பணிக்கப்பட்டது. மூன்றாவது படையணியானது முதலிரு படையணிகளுக்கும் வேண்டிய தேவைப் பட்ட வழங்கல்களையும், ம்ருத்துவ உதவிகளையும் பதில் இராணுவ கடமைக்கு ஆட்களை வழங்குவதையும் மேற்பார்வை செய்வதற்காகப் பணிக்கப்பட்டது.
அசவிடோ தொடர்ச்சியான வகையில் தனது போர்வீரர்களது இழப்புக் களினதும், உணவுப்பற்றாக்குறைநிலையிலும், போர்த் தந்திரோபாயங்கள் பெருந்தோல்வியுற்ற நிலையிலும் நதிப் பள்ளத்தாக்குகளைக் கடந்து, மெனிக்கடவர என்ற மையத்தைச் சென்றடைந்தான். இங்கு உணவு எவையும் இன்றி நான்கு நாட்களைக் கழிக்க வேண்டியேற்பட்டது. இருந்தும் இரண்டு நாட்களுக்குப் போதுமான நெல்தானியத்தையே மெனிக்கடவர என்ற இடத்தில் போர்த்துக்கேய வீரர்களால் சேகரிக்க முடிந்திருந்தது. அத்தப்பிட்டியவுக்குச் செல்லும் பிரதான மார்க்கத்தில்

மெனிக்கடவர அமைந்திருப்பது அதனுடைய இராணுவ கேந்திர மையத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இங்கிருந்து
பின்வாங்கிச் சென்ற போர்த்துக்கேயப் படைகள் ரூவான் வெலவுக்குச் சென்று பின் அங்கிருந்து சீதாவாக்கையைச் சென்றடைந்து கொண்டன.
இங்கு வைத்து டீ - அசவிடோ தாம் அப்படைகளுடன் கண்டிய
இராச்சியத்திற்கு சென்றடைவதற்குரிய மிகக் குறுகிய மலைப்பாதை களைக் காட்டுவதற்காகக் கூட்டிச் சென்ற கண்டியர்களால் பின்னோக்கிய நிலையில் வைத்துத் தாக்கப்பட்ட நிலையைச் சந்திக்க நேர்ந்தது. பின்னர் அத்தனகல்லவைச் சென்றடையும் பாதைகூட எதிரிகளால் சூழப்பட்ட நிலையில், போர்த்துக்கேயப்படைகள் கனம்பெல்ல என்ற இடத்திற்குச் சென்று தங்கி, ஒய்வெடுத்துக் கொண்டன. களனிகங்கையைப் போர்த்துக் கேயப்படைகள் கடக்கும் வரைக்கும் கண்டியர் பின் தொடர்ந்து சென்று தாக்குதல்களை மேற்கொண்டவண்ணம் இருந்தனர். அதன் பின்னர் கண்டிய மன்னன் விமலதர்மசூரியன் தனது படையணிகளை திருப்பி யழைத்துக் கொண்டான். டீ - அசவிடோ கண்டியிலிருந்து பின்வாங்கி,
திரும்பிவரும் வழியில் மட்டும் தனது 300 போர் வீரர்களை இழந்து
கொண்டான். டீ - அசவிடோ குறுபேலிய (ஹன்கவல்ல) என்ற இடத்தினூ டாகவே தமது தலைமைச் செயலகமான மல்வானையைச் சென்றடைந்து
கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
அசவிடோ பலானவிலிருந்து மல்வானைக்கு தனது எஞ்சிய படை களுடன் திரும்பிச் சென்ற கையோடு விமலதர்மசூரியன் தனது படையணி களை விரைந்து புதுமெருகேற்றியதோடு, ஊவாப்பிரதேசத்து இளவரசன், மாத்தளைப்பிரதேசத்து இளவரசன் மற்றும் வன்னியர்கள் (மட்டக்களப்புப் பிரதேசம்) ஆகியவர்களிடமிருந்து தனது படைக்கு வேண்டிய புதிய ஆளணிகளையும் பெற்றுக்கொண்டிருந்தான். ஓரளவிற்கு கண்டியரசன் தனக்கு தேவைப்பட்டிருந்த படைபலத்தினை இலங்கைத் தீவு அடங்கலிலு மிருந்தே பெற்றிருந்தான் எனக்குறிப்பிடலாம். போர்த்துக்கேயரின் படையெடுப்புக்கள் மேலும் கண்டிமீது மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பிரதான சாலைகளின் வளைவுகளிலும், பாதுகாப்பரண்களிலும் போர் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடாத்துவதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டான்.
டீ - அசாவிடோவின் இராண்டாம் படையெடுப்பு :
கண்டி மீதான போர்த்துக்கேயரின் முதலாவது போர் நடவடிக்கை யானது படுதோல்வியைத் தழுவிக் கொண்டமையைத் தொடர்ந்து இலங்கையின் கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேயருக்கெதிரான
119

Page 63
மக்கள் கிளர்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்துச் சென்றமையைக் காண முடிந்தது. இந்நிலமையானது இலங்கையில் போர்த்துக்கேயரின் இறைமைக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது. போர்த்துக்கேயரின் படையணிகள் (லஸ்கரின் உட்பட) இன்னும் முழுமையானவையாகவே பராமரிப்புநிலையில் இருந்து கொண்டுள்ளநிலையில், சமரக்கோனுடைய ராஜவிசுவாசம் டீ - அசாவிடோவின் படைக்கூட்டாண்மையையும், படை முகாமையையும் நன்கு பாதுகாப்பதற்குப் போதியதாக இருக்கவில்லை என்பதனை டீ - அசவிடோ தன்னளவில் நன்குணர்ந்திருந்தான். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒல்லாந்தக் கடற்படையின் கட்டளை யதிகாரியான ஸிபோல்ட் - டீ - வீற் என்பவன் 25ஆம் திகதி ஏப்ரல் 1603இல் மட்டக்களப்புத் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சினான். இம்முறை விபோல்ட் - டீ - விற் கண்டிய மன்னன் விமலதர்மசூரிய னுக்கு தேவையான உதவிகளை மிகவும் பயன்தரத்தக்கவகையில் வழங்குவதற்கு ஆயத்தமாக வந்திருந்தான். ஆனால் போர்த்துக்கேயரது நிலையில் ஒல்லாந்தரை தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தக ஊடகங் களிலிருந்து வெளியேற்றவேண்டுமென்று "கடவுளால் (தேவனால்) பணிக்கப்பட்டு அனுப்பப்பட்ட அச்சந்தர்ப்பமானது மிகமிக மருவிய நிலையில் விளிம்பிற்கு வந்துவிட்டதாகவே” கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது போர்த்துக்கேயர் இலங்கைத்தீவு முழுவதற்கு மான தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான இறுதிச்சந்தர்ப்பமாக கண்டிமீது போர் தொடுத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஒல்லாந்த கடற்படைக் கட்டளையதிகாரியான ஸிபோல்ட் - டீ - விற் தனது கடற்படைக்கப்பலை மட்டக்களப்புத் துறைமுகத்தில் கொண்டுவந்து நிறுத்தி நங்கூரம் பாய்ச்சி வைத்திருப்பது பெரும் ஆபத்தாக முடியப் போகின்றது என்பதாகவே போர்த்துக்கேயர் உணர்ந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் மெனிக்கடவர என்ற பகுதியின் ஆட்சியாளனான தாளம்பிட்டிய என்பவனது மறைவுடன், விமலதர்மசூரியன் விரைந்து சென்று மெனிக்கடவர பிரதேசத்தை தனது மேலாணைக்குள் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். ஒல்லாந்துக் கட்டளையதிகாரியை கடல்மார்க்கமாகச் சென்று காலித்துறைமுகத்தினை போர்த்துக்கேயரிடமிருந்து தாக்கிக் கைப்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தான். காலித்துறையை போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டால் ஒல்லாந்தருக்கு தான் வருடாவருடம் 1000 குயின்ரல்ஸ் கறுவாவும் 1000 குயின்ரல்ஸ் மிளகும் வழங்குவதாக விமலதர்ம சூரியன் வாக்குக் கொடுத்திருந்தான். விமலதர்ம சூரியனது கைகளில் மெனிக்கடவரப் பிரதேசம் வீழ்ச்சியடைந்ததுடன் மட்டக்களப்பி னுாடான கண்டியத் தொடர்பினை கிழக்கில் எந்தவிதமான இடையூறு
120

எவையுமின்றி விமலதர்மசூரியன் ஏற்படுத்திக் கொண்டான்.
இவ்வெற்றியே கண்டியரசானது ஒல்லாந்தருடனான தொடர்புகளையும் நன்னிலையில் விருத்திசெய்வதற்கும் உதவியது. இருந்தும் விமலதர்ம சூரியனுக்கு ஒல்லாந்தக் கடற்படைக் கட்டளையதிகாரியின் நடவடிக்கை கள் அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் அளிப்பதாக அமைந்: திருந்தது. ஏனெனில் காலித்துறைமுகத்தில் போர்த்துக்கேய வீரர்களை சரணடையச் செய்யாது, விடுவித்துவிட்ட நிகழ்வினாலேயே விமலதர்ம சூரியனுக்கு அச்சந்தேகம் எழக்காரணமாயிற்று. இதற்கும் மேலாக கண்டியரசனுக்கு கடற்படைக்கட்டளையதிகாரி அனுப்பியிருந்த கப்பல் விருந்திற்கான அழைப்பிதழை சந்தேகக் கண்ணுடன் நோக்கிய விமலதர்மசூரியன் அதனை உதாசீனம் செய்துவிட்டிருந்தான்.
இவ்வாறான நிலைமையே ஒல்லாந்தரின் கண்டியுடனான இரண்டாவது முறையான தொடர்புகள் தோல்வியில் முடியக்காரணமாயிற்று.
மட்டக்களப்புத்துறைமுகக் கரையோரத்திலிருந்த டீ - வீற்றினது 50 வீரர்கள் கண்டிமீதான கொள்கைகளில் அவர்களை மீண்டும் தலையிட
வைத்ததோடு 1604இல் விமலதர்மசூரியன் இயற்கையெய்தியமையைத்
தொடர்ந்து கண்டியில் உருவான புதிய அரசியற் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவும் போர்த்துக்கேயரைத்தூண்டியது. கோட்டை
யரசன் தர்மபாலனது மரணசாதனத்தினூடாகவும், கண்டியரசன் டொன்பிலிப் இன்னும் அவனது மகனான டொன்யொவ்வினூடாகவும்,
கண்டிய அரசவம்சபட்டத்திளவரசியான டோனாகதறினாவை போர்த்துக்
கேயர்தமது வாரிசாக அடைந்து கொண்டது ரீதியாகவும் போர்த்துக்கேயர் இலங்கையை தமது போர்த்துக்கல் அரசனுக்குரிய உரிமமான குடியேற்ற நாடாகக்கொள்ள வைத்திருந்த நிலையில், கண்டியரசனான விமலதர்ம சூரியனுடைய நடவடிக்கைகள் யாவும் ஒரு வன்மமான, அடாவடித்தன மான கொள்கையுடையதாகவே அவர்களுக்குத் தோற்றமீளித்தது.
இந்நிலையில் மீண்டும் விமலதர்மசூரியன் கோவாவுடன் தொடர்பு
கொண்டு தனது சமீாதான புரிந்துணர்வினை ஏற்றுக் கொள்ளுமாறும்,
கோவா ஆட்சியாளனின் கீழ்தான் ஒருதிறையரசனாக இருப்பதாகவும்
செய்தியனுப்பியிருந்தான். ஆனால் போர்த்துக்கீச ஆள்பதி அதனை முற்றுமுழுதாகவே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பின்னணி யில் அசாவிடோ மீண்டும் கண்டி மீதாக தனது படைநகர்த்தலை மேற்கொள்ள ஆயத்தமானான். இம்முறை கிழக்கிலங்கையின் வளமான பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் தனது படைநகர்த்தலை அசாவிடோ மேற்கொள்வதற்காயத்தமானான். ஒல்லாந்தரின் கிழக்கிலங்கை மீதான நிலைகொள் தளவமைப்பே போர்த்துக்கேயரை அப்பிராந்தியத்தின் மீது கவனயீர்ப்பினை ஏற்படுத்த வைத்தது.
121

Page 64
அசாவிடோவின் படை நடவடிக்கையானது இம்முறை கொன்ஸ்தாந்தைன்-டீசா என்பவனது தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. அசாவிடோவின் கரையோர மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகளில் மிகவும் விசுவாசமான பரப்பினுாடாகவே இம்முறை படை நகர்த்தல் மேற்கொள்ளப்பட்டது. 1605இல் பிங்கோவ் சப்பிரகமுவப் பிரதேசத்தின்திசாவையாக மறுபடியும் அசாவிடோவினால் மீள்நியமனம் வழங்கப்பட்டமையை அடுத்து கண்டி மீதான படை நகர்த்தல் ஆரம்பிக்கப்பட்டது. அசாவிடோ படைநகர்த்தலை நடைமுறைப்படுத்து வதற்கு முன் தனது திசாவைகளின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதேசங்களுக் கெல்லாம் ஒரு சுற்றுச் சுற்றி வந்ததன் பிரகாரம் போர்த்துக்கேயப் படைகளின் தங்குமிட வசதி, உணவு, மருந்துப் பொருட்கள், வழிகாட்டிகள் எனப் பல வகைப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை இப்போது தயார் செய்து கொண்டான். இப்பொழுது பிங்கோவ்வின தும், டொன் கொன்ஸ்ரான்ரைன் நவரட்னே (மாத்தறை திசாவை) என்பவர்களது கூட்டுப்படை 300 அங்கத்தவர்களைக் கொண்டிருந்த ஒரு பிரிவுடன் சுமார் 4000 சிங்களப் போர்வீரர்களுடான படையணியை அசாவிடோ உருவாக்கியிருந்தான். இரண்டு கோறளையூடாக படை நகர்த்தல் ஆரம்பிக்கப்பட்டது. சிமோவ் பிங்கோவ்வினது தலைமையிலான 200 போர்த்துக்கேய வீரர்களும் எவ்விதமான எதிர்ப்புமின்றி இரண்டு கோறளையூடாக கரையோரத்தைக் கடந்து மலை நாட்டை நோக்கி முன்னேறிச் சென்றன. இதே நேரத்தில் கொன்ஸ்ரான்ரைன் ஊவாப் பரப்பினூடாக பிந்தனைக்கு முன்னேறிச் சென்றிருந்தான் இங்கு ஏற்பட்ட ஒரு சிறிய எதிர்ப்பினையும் வெற்றிகொண்ட வண்ணம் பின்தனே, வெல்லஸ், பானெம, மட்டக்களப்பு, ஊவா என கிழக்கிலங்கையின் (கண்டியரசனின் செல்வாக்கிற்குட்பட்டவை) பல பிரதான மையங்களில் மூன்று மாத காலம் பாசறையமைத்துக் தங்கியிருந்து 16 போர் - யானை களையும், 13000 கைதிகளையும் உடன் கொண்டு மல்வானைக்குத் திரும்பினான். இலங்கையிலுள்ள போர்த்துக்கேயரது இராணுவ நடவடிக் கையின் வரலாற்றில் இதுவே முதற்றடவையாக இடம்பெற்றிருந்த வெற்றிநடவடிக்கையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ்பில் பேர்கனும், டீ வீற்றும் கிழக்குக் கரையில் காலூன்றிய போது கிழக்குக் கரையோரத்துறைப் பிராந்தியம் முழுவதுமே போர்த்துக்கேயரது மேலாதிக்கத்தினை (Tributory) ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.)
ஏப்ரல், 1609இல் அசாவிடோ ஊவாப் பிரதேசத்தினை நோக்கி 50 போர் வீரர்களுடன் முன்னேறிச் சென்றான். அப்போது ஊவாவில் அன்ரோனியோ பாரேட்டோ என்பவனே புதிய திசாவையாக நிர்வகித்து வந்திருந்தான். பிப்ரவரி 1610இல் டொம் பிரான்ஸிஸ்கோ
122

- டீ - மெனெஸ், ஸிமோவ் கொர்ரியா ஆகிய இருவருடைய தலைமை யில் கண்டிய ஆள்புலம் நோக்கிய படையெடுப்பு நிகழ்ந்தது. மாத்தளை, ரக்கஹவத்தை, ஏழுகோறளை ஆகிய பிராந்தியங்களினூடாகவே டீ - மெனெஸ், ஸிமோவ் கொர்ரியா ஆகியோரது படையணிகள் கொண்டு செல்லப்பட்டன. செனரத்தினுடைய இராணுவ உதவிகளையும் பெற்றுக் கொள்ளுமுகமாகவே மாத்தளையூடாக அப்படையெடுப்பு நடாத்தப் பட்டது. இம்முறை கண்டிய ஆள்புலத்தினூடான பிரவேசமானது போர்த்துக்கேயப் படைகளுக்கு மிகவும் இலகுவாக அமைந்தது. ஆனால் அப்பிரவேசமானது முன்னர் போன்று பலானவூடாக அமையவில்லை. ஆகஸ்ட், 1611இல் 700 போர்த்துக்கேய வீரர்களுடனும், லஸ்கரின் களுடனும் வெற்றிகரமான படைநடாத்தலொன்று கண்டிய ஆள்புலத்திற் குள் மேற்கொள்ளப்பட்டது. இக் கூட்டுப்படை நடாத்தலில் பங்கு கொண்டோராக மாத்தறை திசாவை, ஏழு கோறளைத் திசாவை, சப்பிரகமுவதிசாவை, டொமிங்கோஸ் - காவயோ - கம், லூயிஸ் கோமெஸ் பின்ரோ, லூயிஸ் கப்ரால் டீ-ப்ரியா ஆகியோர் காணப்பட்டிருந்தனர். பலான மீண்டும் கைப்பற்றப்பட்டு, மிகவும், பலம் வாய்ந்த அரணாக மாற்றப்பட்டது. கண்டியரசன் செனரத் மகாவலி கங்கையை கடக்கும் எல்லையில், அதாவது பேராதனையில் நின்று கொண்டு பெரும் போரொன்றைத் தொடுத்திருந்தான். இருந்தும் செனரத்தின் முயற்சி
தோல்வியிலேயே முடிவடைந்தது எதிரிகளிடம் அகப்படாத வகையில் செனரத் காட்டிற்குள்தப்பியோடிவிட அரண்மனை, மற்றம் கோயில்கள் எல்லாவற்றையும் வெற்றியாளர்கள் தீக்கிரையாக்கிவிட்டு, பலானவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். குவெய்ரோய்ஸ் இச்சம்பவத்தினைப் பற்றி மிகவும் விரிவாக வர்ணித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பேராதனையிலும், அதற்கண்மித்திருந்த கிராமங்களையும் அழித்து விட்டு வெற்றியாளர்கள் மீண்டும் பின்வாங்கி வந்து பலானவை சென்றடைந்து கொண்டார்கள். பலானவில் டொமிங்கோஸ் கர்வலோகம் என்பவனைத் தளபதியாக நியமனம் செய்து விட்டு, அவனுக்குதவியாக 250 போர்த்துக்கேய வீரர்களையும், 1000 லஸ்கரின்களையும் அங்கு நிறுத்திவிட்டு அசாவிடோ கொழும்பிற்கு விரைந்து திரும்பினான். ஆனால் செனரத் எதிர்பாராத வகையில் போர்த்துக்கேயப் படைகள் தங்கியிருந்த நிலைகள் நான்கு புறத்திலும் தனது கண்டிய வீரர்களால் சூழப்பட்ட வகையில், பாதைகள் தடைப்படுத் தப்பட்டு, போர்த்துக்கேய வீரர்கள் வெளியேறாத வகையில் முழுமை யாகவே மடக்கப்பட்ட நிலமையை உருவாக்கினான். ஆனால் இந் நிலையைச் சற்றேனும் சமாளிக்க முடியாத வகையில் திக்குமுக்காடிக்
23

Page 65
கொண்டிருந்த வேளையில், பலானவின் தளபதிகம் மிகப் பலம் வாய்ந்த தாக்குதல் நடவடிக்கையை கண்டியர் வகுத்த வியூகத்திற்கு உள்ளே நின்று செய்ததன் பயனாக கண்டிய வீரர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் திரும்ப வேண்டியதாயிற்று.
கொழும்பிலிருந்தவாறு இந்நிலையை நன்கு அவதானித்த அசாவிடோ தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன என்பதனையும், கடந்த நான்கு வருடங்களாக லிஸ்பனிலிருந்து எவ்வித மான படையணிகளுக்கான வழங்கல்களும் (Supplies) இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பதனையும், தனக்கு தேவைப்பட்ட படைவீரர்களது எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்குரிய அனுமதி கோவாவிலிருந்து கிடைக்கவில்லை என்பதனையும் எண்ணி, 1609இல் ஏற்கனவே தான் எழுதியனுப்பிய கடிதத்திற்கு போர்த்துக்கல் மன்னிடமிருந்து இன்னும் பதில் கிடைக்காததையிட்டுக் சிந்திக்க நிலையில் இலங்கையை விட்டு லிஸ்பனுக்குச் செல்வதற்கு முடிவெடுத்திருந்தான்.
அதே நேரத்தில் ஒல்லாந்த கடற்படைக்கப்பல்கள் சோழமண்டலக் கடற்கரைப் பிராந்தியத்தில் தமது வாணிபத்திற்கு உகந்த, சிறப்பு வாய்ந்த மையங்களைத் தெரிந்து எடுத்து, அங்கு தமது பட்டுவாடா நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டிருந்தன. செனரத்திற்குக் கூட ஒல்லாந்தரது உதவிகள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்டது. இந்தோ - சீனக் குடாப்பரப்பு நாடுகளில் ஒல்லாந்தரது நிலையாண்மை உறுதிப்பட்டிருந்த நிலையில் போர்த்துக்கேயரது சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளுக்கு தென்கிழக்காசியாவில் பேரசுறுத்தல் தோற்றுவிக் கப்பட்டிருந்தது. 1610இல் லிஸ்பனிலிருந்து கோவா ஆள்பதிக்கு எழுதிய கடிதத்தில், போர்த்துக்கேய மன்னரால் வாணிப அனுமதிப் பத்திரம் எவையுமின்றி இந்தோ- சீன நாடுகளில் ஒல்லாந்த வணிகர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதனைத் தடுக்குமாறும், ஒல்லாந்தருடைய வாணிப நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் சுதேச மன்னர் மீதும், ஆட்சியாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடப்பட்டிருந்தது. கண்டிய மன்னன் செனரத்திற்கு இந்நிலை மிகவும் சாதகமானதாகவே அமைந்தது. மார்ச் 1610இல் மட்டக்களப்புத் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற டச்சுப் போர்க்கப்பல் தலைவனான வில்லியம் ஜான்சன் என்பவனிடம் செனரத் தனக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் ஆர்வத்தினைத் தெரிவித் தான். ஆனால் திடீரென கண்டியரசனின் இக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்த ஜான்சன் செங்கடகலவிற்கு தனது ஒரு பிரதிநிதியை அனுப்புவ தாகவும், கண்டியரசனிடம் தாம் வாணிப உடன்படிக்கையொன்றை
124

செய்யவிரும்புவதாகவும் கூறி, அப் பிரதிநிதியை கண்டிக்கு அனுப்பி வைத்தான். அவ்வுடன்படிக்கை ஏப்ரல், 1610இல் செங்கடகலவில் நிறைவேற்றப்பட்டது. இருந்தும் தெனிசிப்பட்டத்திலிருந்து (சோழ மண்டலக் கடற்கரையிலுள்ள டச்சுக்காரர்களின் பிரதான மையம்) கண்டிக்குத் திரும்பிவந்த கண்டியரசனின்தூதுவனிடம் அவ்வுதவி பற்றிய தகவல் எதிர்மறையாகவே கொடுத்தனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். ஆனாலும் செனரத் தனது கோரிக்கையை கைவிட்டு விடவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
மீண்டும் கண்டியமன்னன் செனரத்துக்கும், போர்த்துக்கீசருக்கு மிடையே அமைதிக்கான உடன்பாடு காண்பதில் இருபகுதியினருக்கு மிடையே கருத்து வேறுபாடு நிலவவில்லை. அசாவிடோ பிரான்ஸிஸ்கன் சபையைச் சேர்ந்த மதகுருவான கஸ்பர் - டீ - மடனெஸா என்பவரை செங்கடகலவிற்கு இரு தடவைகள் அனுப்பி செனரத்தினை போர்த்துக் கேயருக்குக் கீழே திறைசெலுத்தும் ஆள்பதியாக இருப்பதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடப்பட்டது. 1617இல் செனரத்திற்கும், போர்த்துக்கேயத் தலைமைத் தளபதியான நுனோ - ஆள்வர்ஸ் பெரெய்ரா (Nuno Alvares Pereera) வுக்குமிடையே ஒர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக குவெய்ரோஸ் விரித்துரைப்பதனைக் காணலாம். குவேய்ரோஸ் மேலும் குறிப்பிடுகையில் “செனரத்தினுடைய அமைதிக்கான ஒப்பந்தமானது டிசெம்பர் 1612இல் இலங்கையிலிருந்து அசாவிடோ லிஸ்பனுக்கு திரும்பியது வரைக்குமே நிலைத்திருந்தது” என எடுத்துக்காட்டியிருப்பதும் இங்கு அவதானிக்கத் தக்கதாகும். டிசெம்பர், 1612இல் அசாவிடோ இலங்கையிலிருந்து திரும்புவதற்கு முன்னரே திருகோணமலையில் கொட்டியார் என்னு மிடத்தில் சிமோவ் கெரியா என்பவனது தலைமையில் சென்ற போர்த்துக்கேயரது சிறுபடை ஒல்லாந்த கடற்படைத்த்ளபதியான பொஸ்கோவருடைய ஆட்களை கொலைசெய்ததோடு, அவர்களுடைய சொத்துக்களை எல்லாம் அபகரித்துக் கொண்டு வெளியேறியிருந்தன. இதுவே கிழக்கிலங்கையில் ஒல்லாந்தருக்கும் போர்த்துக்கேயருக்கு மிடையே நடைபெற்ற முதலாவது (அழிவினை ஈட்டிக் கொடுத்த) மோதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்த கடற்படை அதிகாரிகள் மீது போர்த்துக்கேயர் மேற்கொண்ட இப்பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டிய மன்னன் செனரத் பதிலடி கொடுக்கு முகமாக ஏழு கோறளையில் வைத்து போர்த்துக்கேய வீரர்களைக் கைதுசெய்தும் அவர்களுக்கு பலபாதிப்புக்களை ஏற்படுத்தியும், ஒல்லாந்தர் மீது தான் வைத்திருந்த நம்பிக்கைக்கு உத்தரவாதத்தினை வெளிப்படுத்தியிருந்தான்.
25

Page 66
மட்டக்களப்புப் பிராந்தியத்தில் போர்த்துக்கேயர் மீது விசுவாசமாகத் தொழிற்பட்டிருந்த வன்னியர்களை மீண்டும் தனது மேலாணையை ஏற்கச் செய்ததில் செனரத் வெற்றி கொண்டான்.
அசாவிடோ இலங்கையை விட்டுச் செல்லமுன் கோமெம் (Homem) என்பவனிடம் வருடத்தில் வரண்டகாலப் பகுதியை மையப்படுத்தி இரண்டு தடவைகளாக கண்டிக்குப் படையெடுத்துச் செல்லுமாறும், கண்டிய ஆள்புலத்திற்குள் இருக்கும் கிராமங்களை அழிப்பதன் மூலம் கண்டியரசின் பொருளாதாரத்தை சீர்குலைக்கின்ற அதே நேரத்தில், கண்டிய இராசதானிக்குள் வாழ்கின்ற மக்களை இடம்பெயரவைக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தான். அதன்படி போர்த்துக் கேயரால் ஏப்ரல், மே, யூன் மாதங்களில் ஒரு தடவையும், பின்னர் ஆகஸ்ட், செம்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களில் இன்னொரு தடவையுமாக கண்டிமீது படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கண்டிமீதான படையெடுப்பு - மூன்றாந்தடவை :
Longpago LDGiv5GJ68796) GostGILDub (Monoel mascarenhas Homem) அசாவிடோவினுடைய ஆலோசனையைப் பின்பற்றி டிசெம்பர் 1614இல் 14 போர்த்துக்கேய கொம்பனிகளுடனும், மிகப் பெரிய லஸ்கரின்படை யுடனும், நான்கு திசாவையின் தலைமையில் கண்டியை நோக்கி வழமை யான ஆக்கிரமிப்பு நோக்கில் முன்னேறிச் சென்றான். இப்படையெடுப் பானது கண்டிமீது எவ்விதமானதாக்கத்திைைனயும் ஏற்படுத்தாவிடினும், போர்த்துக்கேயர் தமது வலுவை வெளிப்படுத்த முயன்ற முயற்சியாக வெளிக்காட்டப்பட்டது. கம்பொளைக்கண்மையில் கண்டிவீரன் ஒருவனின் கூர்மையான அம்பின்தாக்கத்திற்கு மட்டும் ஒரு போர்த்துக்கேய வீரன் உள்ளாக்கப்பட்டான். இப்படையெடுப்பின் போது கம்பொளையில் கடும்மழை பெய்து கொண்டிருந்தமையாலும், மேலும் அட்டைக்கடியின் தாக்கத்தினாலும் போர்த்துக்கேய வீரர்கள் நிலை தடுமாறிப் போனார்கள். நதியில் மழை வெள்ளம் பிரவாகித்துக் கொண்டிருந்தமையால் போர்த்துக்கேய வீரர்களுக்கு நதியைக் கடப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், மூங்கில் தடிகளை இணைத்து செய்யப்பட்ட மிதவையூடாக இவர்கள் நதியைக்கடப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருந் தனர். கண்டியர் போர்த்துக்கேய வீரர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க எம்முயற்சியையும் இதுவரையில் செய்யவில்லை. இருந்தபோதிலும், வின்சன்றொட்றிகோ என்ற போர்த்துக்கேய முன்னாள் தளபதி (பலான) கண்டியவிரரின் அம்புபட்டு அன்ரோனியோ - டீ - சில்வா என்ற படைத்தளபதியுடன் உயிர்துறக்க நேர்ந்தது. பல கிராமங்களை எரியூட்டிய
126

வண்ணம் ஊவாவின் தலைநகரான பதுளையை போர்த்துக்கேயப்படை சென்றடைந்தது. அங்கு வைத்து 3000 கண்டிய வீரர்களின் கடுமையான தாக்கத்திற்கு முகம் கொடுக்க முடியாத போர்த்துக்கேயப்படைகள், தமது தரப்பில் 40 பேரை இழந்த நிலையில், மேலும் கிராமங்களுக்குள் ஊடுருவிக் கொள்ளையிட முடியாத வகையில் தமது நோக்கத்தை கைவிட்டுத் திரும்பத் தொடங்கின. மூன்றுமாத காலம் எடுத்த இப்படையெடுப்பினால் எவ்வித பயனும் போர்த்துக்கேயருக்கு ஏற்படவில்லை. மார்ச் 1615இல் சபரகமூவ ஊடாக மல்வானவை அப்படைகள் சென்றடைந்து கொண்டன. இப்படையெடுப்புத் தொடர்பாக பொக்காரோ (Bocarro) என்பவர் குறிப்பிடுகையில், 'மிச்சம் மீதி எவையும் விட்டுவைக்காத முறையில் (கண்டியில்) கிராமங்களும், பயிர்ச்செய்கை நிலங்களும் எரியூட்டப்பட்டு விட்டன" என எடுத்துக் காட்டியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
மீண்டும் ஆகஸ்ட், 1615இல் தளபதி பீரோ-பீக்ஸ்டோ - டீ சில்வா (Pero-Peixoto-de-Silva) என்பவனது தலைமையில் தும்பனே நோக்கி படையெடுப்பு ஒன்று மேற்கொள்ளபட்டது. பலானவுக்கு வடக்குப் புறமாக தும்பனே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஹரசியப்பற்று ஊடாகவே இப்படையெடுப்பு நிகழ்ந்தது. மீண்டும் கிராமங்கள் பலவற்றிற்கு தீ வைக்கப்படும் அழிக்கப்பட்டன. வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் கொல்லப்பட்டனர். பின்னர் மாத்தளையூடாக படைகள் திரும்பி தமது படை நகர்த்தலை முடித்துக் கொண்டு மல்வானவுக்குத் திரும்பின. இப்படையெடுப்பின் நோக்கம் அவர்களுக்கு ஒரளவிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது எனலாம். 25 கிராமக் குடியிருப்பு மையங்களிலிருந்து கண்டியக் குடியானவர்களை போர்த்துக்கேயவிரர் வெளியேற்றியோ அல்லது இடப்பெயர்ச்சிக்கோ உள்ளாக்கிவிட்டிருந்தனர். இருந்தும் மாத்தளையில் வைத்து 70 போர்த்துக் கேயப் படைவீரர்களின் தலைகளை கண்டிய வீரர்கள் கொய்தெடுத்து விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மிகுதிப்படைகள் பின்வாங்கி வந்து மெனிக்கடவரவில் வைத்து போர்த்துக்கேயப் படைகளுடன் மீண்டும் ஒன்று கூடிய போது அவர்களிடம் 500 கைதிகளும், 2000 எருமைகளும் இருக்கக் காணப்பட்டன. சில யானைகளைக் கூட போர்த்துக்கேய வீரர்
கொணர்ந்திருந்தனர்.
மீண்டும் சில மாதங்களுக்குள் பிலிப் - டீ - ஒலிவீராவின் தலைமையில் 3000 லஸ்கரின்களுடனும் 10 போர்த்துக்கேய கொம்பனி களுடனும் ஒரு படைநகர்த்தல் மேற்கொள்ளப்பட்டது. பிலிப் - டீ - ஒலிவீரா ஏழுகோறளைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட திசாவை ஆவான்
127

Page 67
என்பதும் குறிப்பிடத்தக்கது. 70 அல்லது 80 கிராமங்களிலிருந்து இப்படை யெடுப்பின் விளைவாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். 1615இல் கிறிஸ்மஸ் தினத்தன்று ஒலிவீரா கொழும்பிற்குத் திரும்பியிருந்தான். 300 கைதிகள், 1500 எருமைகள் என்பன மீண்டும் போர்த்துக்கேயப் படைகள் வசமாயிருந்தன. சூளவம்சத்தில் இப்படையெடுப்பின் விளைவுகள் எடுத்துக் காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. “பறங்கிகள் பரம்பரைப் பிசாசுகள், கொடிய நயவஞ்சகர்கள், வளம்மிக்க மாகாணங்களில் பறங்கிகள் பரந்திருக்கின்றார்கள், கழிவு நிலங்களிலும், தோட்டங்களிலும் அவர்கள் நிலைபெற்றுவிட்டார்கள். கிராமங்கள் பலவற்றை எரியூட்டியும், அரச குடும்பங்களைக் கொலைசெய்தும், சிதைத்தும் சீர்குலைத்து விட்டார்கள், நகரத்தை உடைத்து, தந்ததாதுக் கோவில்கள், விகாரைகள், போதிகர, ஆசனகரக் கோவில்களையெல்லாம் அழித்து பெளத்தமத போதனைகளை இல்லாமல் செய்ததோடு, பலகோட்டை, கொத்தளங்களை அவ்விடங் களில் ஏற்படுத்தியும் விட்டிருந்தனர்.” இவ்வாறு போர்த்துக்கேயருடைய மூன்றாங்கட்ட படைநடவடிக்கைகள் கண்டி மன்னனுடன் நேரடியாக மோதாது, கண்டிய ஆள்புலத்திற்குள் இருக்கும் வளமான கிராமங்களை தீயிட்டு அழித்தொழித்து, கிராம மக்களை இடம்பெயர்ந்து செல்லச் செய்வதை பிரதான நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டமையைக் காணமுடிந்தது.
கொன்ஸ்ரான்ரைன் - டீ - ஸாவும் கண்டியரும் :
ஹொமம் என்பவனுடைய ஆள்பதிக்காலத்தைத் தொடர்ந்து டொம்நுன்ோ ஆள்வார்ஸ் பெரெய்ராவும் அதன் பின்னர் கொன்ஸ்ரான்ரைன் டீ - ஸாவும் அப்பொறுப்பினை வகித்திருந்த காலங்களில் கண்டி நோக்கிய போர்த்துக்கேயரின் கொள்கைகளில் பல மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 1618இல் டீ - ஸா இலங்கைக்கு ஆள்பதியாக வருகை தந்த கையோடு புதிய கொள்கைகள் நிர்வாகம் தொடர்பாகவும், கண்டிய மக்கள் தொடர்பாகவும் பின்பற்றப்பட்டன. டீ - அசாவிடோ விற்கு நேரெதிரான கொள்கைகளை டீ - ஸா பின்பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கொன்ஸ்ரான் - டீ - ஸாவின் காலமானது போர்த்துக்கேயர் கால இலங்கை வரலாற்றில் மக்கள்ை தம்பக்கமீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலமாக அமைந்தது. போர்த்துக்கீசர் கால இலங்கை வரலாற்றில கொன்ஸ்ரன்ரைக் - டீ - ஸாவின் பெயர் நிலைத்திருக்கக் கூடிய வகையில் அவனது நடவடிக்கைகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு வருமுன் நன்நம்பிக்கை முனைப்பிராந்தியத்தில் படைத்தளபதியாகக் கடமையாற்றியிருந்த அனுபவமும் அவனுக்கு இருந்தது.
128

டீ ஸா, செனரத்துடன் அரசியல் அடிப்படையிலான நல்லுறவினை ஏற்படுத்துவதற்காகத் தனது தூதுவர்களை பரிசில் பொருட்களுடன் கண்டிக்கு அனுப்பி வைத்தான். இதே போன்று செனரத்தும் பரஸ்பரம் தனது தூதுவர்களை கொழும்பிற்கனுப்பி வைத்திருந்தான். கண்டி இராச்சியத் தூதுவன் மெனிக்கடவர வரைக்கும் சென்று திரும்புவதும், மல்வானவிலிருந்து தூதுவன் செங்கடகல வரைக்கும் சென்று திரும்புவதுமாகக் காணப்பட்டது. இருந்தும் டீ - ஸாதனது இராணுவத் தளபாடங்களுடன் சபரகமுவவில் தங்கியிருந்தான். அவனுக்குத் துணையாக ஒருசில லஸ்கரின் வீரர்களும், போர்த்துக்கேய கொம்பனி சிலவும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தேவையேற்படும் பட்சத்தில் நான்கு கோறளையிலிருந்து 1000 லஸ்கரின் வீரர்களுடன் லூயிஸ் கப்ரால் பெரய்ய (Luis Cabral Faria) சப்ரகமுவ செல்வதற்குரிய ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் கண்டிய மன்னன் செனரத்தின் 1617ஆம் ஆண்டு செய்யப்பட்ட அனுமதி உடன்படிக்கை யானது போர்த்துக்கேயரை யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதும், இலங்கையின் கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேயருக் கெதிராக கிளப்பப்பட்ட கலவரங்கள் மீதும் கவனத்தைச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியது எனலாம். இச்சூழ்நிலையில் மார்ச் மாதம், 1618இல் டென்மார்க்கிலிருந்து வாணிகக்கப்பலொன்று திருகோண மலையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற கையோடு, கண்டியரசனுக்கு அந்நாட்டுத்தூதன் ஒருவனும் கப்பலிலிருந்து அனுப்பப்பட்டான். அதன் விளைவாக கண்டியரசனுடன் டென்மார்க் நாட்டு அரசன் சார்பாக பொஸ்கோவர் (Boschouwer) (செனரத்துடன்) செய்து கொண்ட வாணிப உடன்படிக்கையில், செனரத்தினுடைய எதிரிகளான போர்த்துக்கேயர் களிடமிருந்து கண்டியைக் காப்பதற்காக ஐந்து கப்பற்படையணிகளையும், அவற்றுக்கான வெடிமருந்துப் பொருட்களையும், கூடவே 300 தரைப் படை வீரர்களையும் டென்மார்க் தந்துதவ வேண்டும் என்று கோரிக்கை முன்மொழியப்பட்டு, கைச்சாத்திடப்பட்டது. ஆனால் ஐரோப்பிய தேசத்தவரான போர்த்துக்கீசருக்கெதிராக டென்மார்க் வீரர்கள் போரிடவோ அல்லது, வாணிப நடவடிக்கைகளில் ஈடுபடவோதயாராக இல்லாத நிலையில், அவ்வாணிப உடன்படிக்கையானது பயனற்றுப் போனது, ஆனால் அதேயளவான உதவிகள் டச்சு வாணிகர் ஊடாக தஞ்சாவூர் மஹாராஜாவின் அனுசரணையுடன் கண்டிய மன்னனுக்கு கிடைப்பதற்குத் தயாராக இருந்த வேளையில், போர்த்துக்கேயர்அதனை முற்றாகவே முறியடித்து விட்டிருந்தனர். பொஸ்கோவரும் 1620இல் இயற்கை மரணம் எய்தியதோடு டென்மார்க்கினுடனான கண்டிய இராசதந்திரத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
9

Page 68
இந்நிலையில் செனரத்தினால் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கண்டியப் போர் 1628இல் டீ - சாவினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கண்டியைச் சுற்றியுள்ள எல்லைப்புறத்திலுள்ள பலமுனைகளிலும் போர்முனைகள் முனைப்புப் பெற்றன. மட்டக்களப்பில் டீ - ஸா கோட்டையமைத்துக் கொண்டிருக்கின்ற முயற்சியை முறியடிப்பதற்காக செனரத் தனது உறவினனான விஜயக் கோன்பண்டார என்பவனை சேனைகளுடன் அனுப்பிவைத்தான். 130 போர்த்துக்கேய வீரர்களுடனும், 800 லஸ்கரின்களுடனும் இணைந்த வகையில் டீ - ஸா விஜயக்கோன் பண்டாரவை எதிர்கொண்டிருந்தான். ஊவாவின் நிர்வாகியான, செனரத்தின் மகனான இளவரசன் குமாரசிங்காவும் விஜயக்கோன் பண்டாரவுடன் மட்டக்களப்பிற்குச் சென்றிருந்தான். ஆனால் சபரகமுவ, மாத்தறையை நிர்வகித்த திசாவைகளினால் விஜயக்கோன் பண்டாரவும், குமாரசிங்கவும் தோற்கடிக்கப்பட்டனர். 1629இல் புளியன் தீவில் (மட்டக்களப்பில்) போர்த்துக்கேயரால் கோட்டை கட்டி முடிக்கப் பட்டது. 1629ஆம் ஆண்டில் இருதடவைகளில் கண்டி மீது டீ - ஸா படையெடுத்துச் சென்று, செங்கடகலவைத் தாக்கி, கட்டிடங்களை இடித்தழித்தார்கள். அம்பாதென்ன என்ற இடத்தில் இருசாராருக்கு மிடையே கடும் சண்டை நிகழ்ந்தது. மறுவளத்தில் மட்டக்களப்புக் கோட்டையை செனரத் தாக்கிக் கைப்பற்றிய நிலையில், டீ - ஸா மட்டக்களப்பு நோக்கி தனது படைகளை நகர்த்தவேண்டிய சூழ்நிலையும் உருவாயிற்று, அதே நேரத்தில் யாழ்ப்பாணம் நோக்கியும் செனரத் தனது படைகளை அனுப்பி அதனையும் தாக்கினான். அத்தப்பத்து என்பவ னுடைய தலைமையில் வந்த கண்டிய வீரர்களே யாழ்ப்பாணத்தினைத் தாக்கினர். ஆனால் போர்த்துக்கீசரால் அத்தப்பத்து கைப்பற்றப்பட்டு, அங்கேயே கொலை செய்யப்பட்டான்.
அதே நேரத்தில் மலைநாட்டின் மீது படையெடுத்துச் சென்று பாசறையமைத்திருந்த டீ - ஸாவினது போர் வீரர்களுக்குத் திடீரென கொடியநோய் ஒன்று பரவ ஆரம்பித்துவிட்டிருந்தது. படைவீரர்கள் பலர் இறக்கும் நிலைக்குள்ளாக்கப்பட்டனர். இருந்தும் செனரத்துக்கெதிரான போர் நடவடிக்கையைக் கைவிட்டுவிட முடியாத நிலையில் டீ-ஸா காணப்பட்டான். ஏனெனில் போர்த்துக்கல் மன்னனது கட்டளைப்படி கண்டி இராச்சியத்தினைக் கைப்பற்றாவிட்டால், சோழமண்டலக் கடற்கரையிலுள்ள துறைமுகப்பரப்புக்களில் டோனியரும் (Danish) டச்சுக்காரரும் தத்தமது நிலையான வாணிபக் கிடங்குகளையும், குடியிருப்புக்களையும், அமைத்துவிடுவார்கள் என்பதும், அதனால் தென் - கிழக்காசிய வர்த்தகத்தில் போர்த்துக்கேயருக்கிருந்த சுயாதிபத்தியம் பறிபோய்விடும் என்பதும் தெளிவாகிவிட்டிருந்த நிலையில், டீ- ஸாதனது
O

போர் நடவடிக்கைகளை கைவிடமுடியாதிருந்த கட்டாய நிலை தோற்றம் பெற்றிருந்தது. எனவே டீ - ஸா கண்டி மீது தாக்குவது பின்னர் பின்வாங்குவதுமாக இருக்க, கண்டியமன்னனுக்கு எதிர்தாக்குதலை நடத்துவதும், கிழக்குக்கரையோரப் பிராந்தியங்களில் போர்த்துக்கேயருக்கு இருக்கக் கூடிய சொத்துக்களையும், ஆள்புலங்களையும் முறையே கைப்பற்றுவதும், அழிப்பதுமாகவும் இருசாராருக்குமிடையே போர் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. இந்நிலையில் சேனரத் தனது கண்டிய ஆள்புலத்தினை மூன்று பிரதான மாகாண ஆள்புலங்களாகப் பிரித்து அவற்றில் ஊவாப்பிரிவிற்கு குமாரசிங்கவையும், செங்கடகலவிற்கு இராசசிங்கனையும், மாத்தளைப்பரிவிற்கு விஜயபாலாவையும் நியமனம் செய்வித்து, தனக்குப்பின் கண்டியரசின் வாரிசாக, குமாரசிங்கனையும் தீர்மானம் செய்து வைத்திருந்தான். இராசசிங்கனும், விஜயபாலவும் வயதில் பராயமடையாதவர்களாக இருந்தமையாலேயே குமாரசிங்கன் முக்கியமான அரசியல், நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
டீ - ஸா மீண்டும் கண்டி மீது வலுவான ஒரு தாக்குதலை நிகழ்த்து வதற்காக 5000 லஸ்கரின்களுடனும், 450 போர்த்துக்கேய வீரர்களுடனும் தனது படை நகர்த்தலை மேற்கொண்டான். லொம்பா என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடும் போது, 3000 லஸ்கரின்களையே அவன் படையெடுப்பில் இணைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கின்றார். 2nd ஆகஸ்ட், 1630இல் டீ-ஸாவும் திறன்மிக்க படையணிகளும் மெனிக்கடவர விலிருந்து ஆரம்பமாகி, ஊவாவின் தலைநகரான பதுளையை நோக்கி முன்னேறிச் சென்றன. குறித்த மையத்தினைச் சென்றடைவதற்கு ஏறத்தாழ 18 நாட்கள் டீ-ஸாவிற்கு எடுத்திருந்தன. 20 ஆகஸ்ட் 1630இல் செனரத் அவனுடைய மூன்று ஆண்மக்க்ளுமாகச் சேர்ந்து டீ-ஸாவின் படையணியின் முன்னேற்றத்தை ஊடறுத்து முறியடிக்க முயன்றனர். இப்போரில் 40,000 கண்டியப் போர் வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர் என அறியமுடிகிறது. வழமைபோலப் போர்த்துக்கீசப் படைகள் பதுளை நகரத்தினையும், கதிர்காமக் கோயிலையும் தீயிட்டுக் கொழுத்தி, பாரியதாக்கத்தினை விளைவித்தனர். முதியங்கண/மதியங்கண விகாரைடீ-ஸாவினது தலைமைக்காரியாலமாக மாறியது. இங்கிருந்து கொண்டு படைகள் பெலிகல் ஓயாவைக் கடக்க முற்படும் சமயம் பார்த்துக் கண்டியப் படைகள் மீண்டும் போர்த்துக்கேயப் படைகளைச் சுற்றி வளைத்து, படை நகர முடியாதபடி தாக்குதலை ஆரம்பித்திருந்தன. போர்த்துக்கேய இராணுவ உத்தியோகத்தர் படைக் கட்டமைப்பினை மூன்று பிரிவுகளாக வகுத்து கண்டிய வீரர்களை
13

Page 69
முறியடிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். மிகக் கடுமையான யுத்தம் இங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிநாட் போரின்போது 350 போர்த்துக்கேய வீரரும், 80 லஸ்கரின் களும் இறந்துபட்டனர், 1000 போர்த்துக்கேய வீரர்கள் கண்டியரால் கைதிகளாக்கப்பட்டனர். 120 லஸ்கரின்களின் நிலை என்னவென்று தெரியாமல் மறைந்துவிட்டது. குவெய்ரோஸ் ஜொர்னடா (Jornada) குறிப் பிடும் மேற்கூறப்பட்ட தகவலைச் சற்றுக் குறைத்து எடுத்துக்கூறியுள்ளார். இப்போரில், ஜொர்னடாவின் குறிப்பின்படி, 3800 கண்டியர் கொல்லப் பட்டனர் என அறியமுடிகிறது. இக்கூற்று சிலவேளைகளில் அதிமிகைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது எனலாம். ஏனெனில் இப்போரின் போது போர்த்துக்கேயரது பீரங்கிக்கான மருந்து வகைகளை கடும் மழை பெய்து நனைத்துவிட்டிருந்தமையால் கண்டிய வீரர்களுக்குப் பீரங்கியினால் பெரும் சேதம் விழைந்தது என்று கூறுவதற்கு முடியாது. கண்டியருக்கு ரன்டெனிவலவில் கிடைத்த வெற்றியானது போர்த்துக் கேயரது நிலையைச் சின்னாபின்னப்படுத்தி விட்டிருந்தது. இதன் பின்னர் போர்த்துக்கேயரது முழுக்கவனமும் மீண்டும் கொழும்பினை நோக்கித் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏனெனில் கண்டியப் படைகளின் ஒரு பிரிவு திடீரென கொழும்பில் வெளிப்பட்டிருந்ததால் டீ-ஸா கண்டி மீதான தனது போர்ப்படைநடவடிக்கையை உடன்நிறுத்தி, கொழும்பிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.
இப்போரின் போது கண்டியரசன் பக்கத்தில் போரிட்ட வீரர்களின் எண்ணிக்கை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மாறுபட்ட செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ளனர். குவெய்ரோஸ் ஜொனார்டா ஆகிய இருவரும் கண்டிய வீரர்களை 60,000 என்று பதிவு செய்திருக்க, லொம்பா மட்டும் 20,000 எனக் கொடுத்திருப்பது நோக்கத்தக்கது. மேலும் லொம்பா 10,000 பேர் பொதிசுமப்போராகவும், 12 போர் - யானை எண்ணிக்கை யாகவும் கொடுத்திருப்பது நோக்கத்தக்கது. செனரத்தின் படைப்பிரிவில் ஒன்று கொழும்பினை நோக்கி முன்னேறிச் சென்று திரும்பிவந்த போது ஏராளமான அபகரிப்புப் பொருட்களுடன் கண்டியை வந்தடைந்தமையும் குறிப்பிடப்பட்டள்ளது. கண்டியில் 28,000 பேர் நிலமானிய பிரபுதாரர் களும், ஊவாவில் 12,000 பேரும் காணப்பட்டதாக குவெய்ரோஸ் குறித்திருப்பதும் நோக்கத்தக்கது. செனரத்தினுடைய மெய்க்காப்பாளர்கள் மட்டும் 400 பேர் ஆகும். இந்த மெய்க்காப்பாளர் அனைவருமே தென்னிந்தியாவில் ஆந்திர தேசத்திலிருந்து வந்த வடுகர் இனத்தைச் சேர்ந்தவராவர். செனரத்தினுடைய படைகளுள் பெரும்பாலான அணியினர் கோட்டை இராச்சியத்தினைச் சேர்ந்தவர்களாவர். கண்டிய பாரம்பரிய ஈட்டி அம்பு - வில் படைப்பிரிவில் 16,000 தொடக்கம் 18,000
32

போர் வீரர் வரை சேவையாற்றினர். முதலியார்களும், ஆராய்ச்சிமாருமே வாள், குத்துக்கத்தி (Swords and Daggers) போன்றவற்றை சண்டை நிகழும்போது பிரயோகித்தவர்களாவர். குறிபார்த்து சுடுபடைக்கலங் களைப் பிரயோகிக்கும் வீரர்களும் கண்டியபடைப் பிரிவில் அங்கம் வகித்திருந்தனர்.
கொழும்பிற்கு படையெடுத்து வந்திருந்த கண்டிய வீரர்கள் ஏழு கோறளை, நான்கு கோறளை காலி போன்ற மையங்களில் காணப்பட்ட போர்த்துக்கேயருடைய பாதுகாப்பு அரண்களுக்கும், சொத்துக்களுக்கும் பாரிய சேதத்தினை விளைவித்ததுடன் ஏறக்குறைய கண்டியரசனின் கட்டுப்பாட்டின் கீழ் அப்பிராந்தியங்களைக் கொண்டு வந்திருந்தமை போலவும் காட்டிக் கொண்டனர் மல்வான, களுத்துறை ஆகிய கோட்டை காவலரண்களுக்குப் பொறுப்பாக விளங்கிய போர்த்துக்கேய வீரர் எல்லோரும் கொழும்பிற்குப் பின்வாங்கிச் சென்றுவிட்டிருந்தனர். மெனிக்கடவரவில் கைவிட்டுவந்த நோயுற்ற 70 போர்த்துக்கேய வீரர்களையும் கண்டி வீரர்கள் கைதுசெய்து கொண்டு, கண்டியிலுள்ள சிறையில் அடைத்து வைத்தனர். ரன் டெனிவலவில் டீ-ஸா கண்டிய வீரர்களால் கொல்லப்பட்டான். அதன் பின்னர் கண்டிய வீரர்கள் முதலியார்களது வழிகாட்டலில் கொழும்பினைச் சூழ உள்ள பிராந்தியங் களில் கத்தோலிக்க மதக் கோயில்களையும், மாதா சிற்பங்களையும், கிறிஸ்தவ சிலுவைச் சின்னங்களையும் பெருமளவுக்கு சேதத்துக்குள்ளாக் கினர். இந்நிலையில் கொழும்பு நகரப் பகுதியானது பெருமளவுக்கு வீடு - வாசல் - அலுவலகம் போன்றவற்றை இழந்த மக்களது பாதுகாப்புத்தளமாக நெருக்கடிக்குள்ளானது. அடிமை நிலையில் வாழ்ந்த சிங்கள மக்களும் அந்நகருக்குள் இதே காலகட்டத்திற்குள் வாழ்ந்திருந்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது. டீ-ஸா கொல்லப்பட்ட செய்தியானது தென்னிந்தியாவி லுள்ள கொச்சின், கோவா மற்றும் சோழமண்டலக் கடற்கரை முழுவது மாக பரப்பப்பட்டு விட்டது. கொழும்பும் கண்டியரால் கைப்பற்றப்படும் பட்சத்தில் இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரது ஆட்சி நிறைவு பெற்று விடும் என்ற ஒரு நிலை தோற்றம் பெற்றிருந்த சமயத்தில், டிசெம்பர், 1630இல் இராணுவத் தளபதியாக டொம் - பிலிப் - மஸ்கரென்ஹஸ் என்பவனை தேவைப்பட்ட இராணுவத் தளபாடங்களுடன் கொச்சினி லிருந்து கொழும்பிற்கு போர்த்துக்கேயத் தலைமைப் பீடம் அனுப்பி வைத்தது. கொழும்பு நகரின் பிரதான வாயில் மூடப்பட்டு, கண்டிய வீரர்கள் புகுந்துவிடாதபடி பாதுகாக்கப்பட்ட நிலையில், செனரத்தின்
இரண்டாவது மகனான இராசசிங்கன்சுகயினம் காரணமாக அவசரமாக
133

Page 70
கண்டிக்குத் திரும்ப வேண்டி நேர்ந்தது. கண்டி செல்லும் வழியில் மெனிக் கடவரவில் எஞ்சிக் காணப்பட்ட போர்த்துக்கேயக் கோட்டைக் காவலர் களையும் சரணாகதியடையச் செய்து, தன்னுடன் அவர்களையும் கண்டிக்கும் கொண்டு சென்றிருந்தான். ஆனால் செனரத் தனது முயற்சி யில் இருந்தும் சிறிதும் தளராது கொழும்பினுள் ஊடுருவுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டிருந்த பொழுது, இன்னொரு படைத் தளபதியாக அல்மெய்டா என்பவனை டொம் - பிலிப் - மஸ்கரென்ஹஸ் என்பவனுடைய இடத்திற்கு மாற்றீடாக நியமனம் செய்த கையோடு (1632) போர்த்துக்கேயருடைய இராணுவக் கட்டமைப்பில் பாரியமாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு, கொழும்பிலிருந்து பின்நோக்கி கண்டிய வீரர்களைப் பின்வாங்கச் செய்யும் நடைமுறை போர்த்துக்கேயருக்கு வெற்றியளித்தது. அல்மெய்டா இராணுவத் தளபதிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னரே கண்டிய மன்னன் செனரத்திற்கு கரையோர மாகாணங்களில் மறைமுகமாக உதவிபுரிந்திருந்த முதலியார்மார்களும் ஆராய்ச்சிமார்களும் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு செனரத்தினை புறத்தள்ளி வைக்கப் படுவதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் செனரத் கொழும்பைவிட்டு தனது படைகளுடன் கண்டிக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று. முன்கண்டி இராச்சியத்தின் வரலாற்றில் ஏற்பட்ட மற்றுமொரு ஆனால் இறுதியான போர்த்துக்கேயப் படையெடுப்பொன்றுடன் ஒரு யுகம் முற்றுப் பெற்றுவிட்டது என்றே குறிப்பிடலாம். அந் நிகழ்வானது அல்மெய்டாவின் இடத்திற்கு 1633இல் சோழமண்டலக் கடற்கரைப் பிராந்தியத்தில் சேவை புரிந்திருந்த டையோகோ - டீ - மெல்லோ - டீ - காஸ்ட்ரோ என்பவனைத் தளபதியாக போர்த்துக்கேயத் தலைமைப்பீடம் அனுப்பி வைத்ததுடன் ஏற்பட்டது. கண்டி மீது படையெடுத்துச் சென்ற போர்த்துக்கேய இறுதித் தளபதியும் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.
டீ மெல்லோவும் இரண்டாம் இராசசிங்கனும் :
கண்டி மீதான முற்றுக்கைக்கு ஆபிரிக்க வீரர்களையும் இணைத்துடீ - மெல்லோ பெரிய படைக்கட்டுமானம் ஒன்றினை உருவாக்கியிருந்தான். செனரத்தின் ஹனதென்ன கோட்டைக்காவலரணை நிர்மூலமாக்கு வதற்காக ஆபிரிக்க வீரர்களுக்கு நன்கு பயிற்சியும் வழங்கினான்.
34

அத்தியரியக் றரின்கு
இலங்கையில் போர்த்துக்கேய
இறையாண்மையின் விளைவுகள்
“ எமது சமூகத்தினால் விரும்பப்படாத, ஏற்கப்படாத விடயங்களுள் முக்கியமானது "விமர்சனம்" என்பதாகும். . . எமது முழுச் சமூகமுமே இன்று விமர்சனம் என்பது தொடர்பாகப் பிழையான கருத் தினையும், அணுகுதலையும் கொண்டுள்ளது. இதன் விளைவு அறிவு, கல்வி என்பவைகளில் மாத்திரமல்லாது, தொழில், நிர்வாகம், சாதாரண வாழ்க்கை என்பவை தொடர்பாகவும் எமது சமூகத்தில் விமர்சனம்" என்பதற்கு இடமில்லாது போனது. தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது நிராகரிக்கப்பட்ட நிலையில் "சுயவிமர்சனங்கள்" இல்லாத நிலையில், ஒவ்வொரு செயற்பாட்டிலும் தவறுகள் அறியப்படாது, திருத்தங்கள் ஏற்படுத்தப்படாது அவை தொடர்ந்தன. இன்று எமது சமூகம் அதனது தவறுகளின் முழுப்பாரத்தினாலும் மீளமுடியாதபடி படுகுழிக்குள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இக்கூற்றைத் தவறானது எனச்சிலர் கூக்குரலிடலாம். ஆனால் இதுதான் உண்மைநிலை. இது ஒரு வரலாற்று உண்மை"
- A. S. d guigiDIT5 1994, PXLI
13S

Page 71
“எமது கொழும்புத்துறைமுகத்தில் சிவந்த, அழகான தோலுடைய ஒர் இன மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இரும்புச் சட்டைகளையும் இரும்புத் தொப்பிகளையும் அணிந்திருக்கிறார்கள், அவர்கள் ஒர் இடத்தில் ஒரு நிமிடந்தானும் தங்கி நிற்பதில்லை. அவர்கள் அங்கும் இங்கும் நடக்கின்றார்கள். ஒரு மீனுக்கு அல்லது ஒர் எலுமிச்சம்பழத்திற்கு அவர்கள் இரண்டு, மூன்று பவுண்துண்டுகளை அல்லது வெள்ளித்துண்டுகளைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பீரங்கி வெடிமுழக்கம் யுகாந்திரா மலையில் வெடித்து எதிரொலிக்கும் போது சத்தம் இடிமுழக்கத்திலும் பார்க்கக் கூடுதலாக இருக்கிறது. அவர்களுடைய பீரங்கிக் குண்டுகள் பலகாததுரம் பறந்து சென்று கருங்கற்கோட்டைகளை அதிரச்செய்கின்றன”
1505ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி போர்த்துக்கேயர் கொழும்புக்கு அண்மையில் வந்திறங்கியபோது. கோட்டை மன்னனான 8ஆம் வீரபராக்கிரமபாகுவுக்கு மேலே கூறப்பட்டவாறு தெரிவிக்கப் பட்டதாக பூஜாவலிய என்ற நூல் குறிப்பிடுகின்றது. இலங்கை மக்கள் இதுவரையில் பார்த்திருக்காததும், கண்டிருக்காததும், கேட்டிருக்காதது மான முறையே கருவி, இனம், மொழி ஆகிய மூன்றும் பூஜாவலிய என்ற இலங்கை வரலாற்று நூலில் பதிவு செய்யப்படுவதற்குக் காரணமான இந்நிகழ்வானது இலங்கையின் அரசியல், சமூக, பொருண்மிய வரலாற்றில் ஏற்படப்போகும் நிலைமாறு காலத்தினைக் குறிப்பிட்டு நின்றதென லாம். கருவிப்பாவனையில் ஏற்படும் மாற்றமானது மனித சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தினையே குறிப்பிட்டது போன்று, புதியதோர் இனத்தின் வருகையும், அதனோடு இணைந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கருவிப் பாவனையின் தொடக்கமும் இலங்கையின் பண்பாட்டு வரலாற்றில் புதியதோர் யுகத்தினைத் தோற்றுவிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது. புதிய கருவியின் தொழிற்பாட்டின் விளைவாக இலங்கையில் பல எதிர்விளைவுகளும் உருவாகின. சுதேச - விதேச உணர்வு நிலைப் பாட்டின் விளைவாக புதிய சிந்தனை மரபுகள் இலங்கையில் உருவாகின. பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கருவியினூடாக (பீரங்கிக் குழல் களிலிருந்து) பெற்றுக்கொள்ளப்பட்ட சக்தியின் அரவணைப்பின் உதவியுடன் முன்னேறிச் சென்ற கிறிஸ்தவமதம் இலங்கையின் அரச குடும்பங்களிலும், வணிக நடைமுறைகளிலும், சாதாரண மக்களது வாழ்வியற் கோலங்களிலும் பாரிய - நிலையான மாற்றங்களை ஏற்படுத்தியதோடல்லாது, புராதன சமுத்திரவியல் பண்பாட்டினைப் புதுமெருகுடன் கடல்முகப்புத்தள இராச்சியங்களுடன் இணைத்து வைத்த வாழ்வியல் ஊடகமாகவும் மாற்றம் பெற்றிருந்தது. சுதேச மக்களை "பாரம்பரியம்' பற்றிச் சிந்திக்க வைத்தும், நவீனத்துவம் அல்லது
136

மேலைத்தேயப்பண்பாடு' பற்றி சிந்திக்க வைத்ததுமான சம்பவங்களின் அடிப்படையை இக்கிறிஸ்தவ மதம் ஈட்டிக் கொடுத்திருந்தது என்றால் அது மிகையாகாது. எனவே போர்த்துக்கேயரின் வருகையும், இலங்கையில் அவர்களது அரசியல் இறையாண்மை நடவடிக்கைகளும் இத்தீவின் மக்கள் வாழ்வில் பல விளைவுகளை ஏற்படுத்தத் தவறவில்லை.
இலங்கையில் போர்த்துக்கேயரின் செல்வாக்கு தீவு அடங்கலாகவும் ஏற்படுவதற்கு பல காரணிகள் அவர்களுக்கு உதவியிருந்தன. போர்த்துக் கேயரின் கப்பல் தற்செயலாக இலங்கையின் தென்மேற்குக் கரையோரத் தில் தரைதட்டியிருந்த போது, கலாசார, மொழி வேறுபாடுகளைக் கொண்ட பல் இன மக்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருந்தமையினாலேயே புதிதாக வந்த அந்நியரினால் படிப்படியாக தமது அரசியல், பொருளாதார, பண்பாட்டு விழுமியங்களை இத்தீவில் புகுத்த முடிந்தது. இலங்கையின் மத்திய, தென்பகுதிகளில் காணப்பட்ட பெளத்த மதத்தை தழுவிய சிங்கள மக்களின் பண்பாடும் வடக்குக் கிழக்குப் பகுதியிலும் இந்துமதத்தைப் பின்னணியாகக் கொண்ட தமிழரின் பண்பாடும் போர்த்துக்கேயரை மிகவும் இலகுவாக உள்ளீர்த்துக் கொள்வதற்குரிய சாதகமான நிலமை களாகக் காணப்பட்டிருந்தன. கலாசார, மொழியடிப்படையில் இலங்கை வேற்றுமையுள் வேற்றுமையையே கொண்டு திகழ்ந்தமையானது போர்த்துக்கேயருடைய இறையாண்மை வாதத்தினை முதலில் கடற்கரையோர மகாணங்களிலும் பின்னர் ஒரளவிற்கு மத்திய மலை நாட்டுப் பிராந்தியத்திலும் நிலைகொள்ளச் செய்வதற்கு வாய்ப்பாயிற்று.
தென்னிந்தியாவிற்கு மிக அண்மையில் இலங்கை அமைந்திருந் தமையாலும் போர்த்துக்கேயரின் செல்வாக்கு இலங்கையில் தாக்கம் செலுத்துவதற்கு அடிப்படைக் காரணமாயிற்று. பல விதத்திலும் போர்த்துக்கேயருக்கு இலங்கையின் அமைவிடம் சாதகமாகவே விளங்கியது. தென்னிந்தியாவில் இரு கரையோரங்களிலுமுள்ளதுறைமுக நகர்களும், அங்கு வாழ்ந்த மக்களும் போர்த்துக்கேயரது வணிகச் செல்வாக் கிற்கும், கிறிஸ்தவ மதத் தழுவல்களுக்கும் உட்பட்டிருந் தமையால், இலகுவில் இலங்கையிலும் அவர்களது செல்வாக்கினை பரப்பிக் கொள்ள முடிந்தது. இலங்கையில் போர்த்துக்கேயருக்குத் தேவைப்பட்ட
போதெல்லாம் கோவாவிலிருந்தும், கொச்சித் துறைமுகப் பரப்பி லிருந்தும் படையுதவிகளை காலத்திற்குக் காலம் பெற்றுக்கொள்ள v முடிந்திருந்தமையையும் அப்புவியியல் அமைவிடத்தின் செல்வாக்கினா லேயாகும். அதேபோன்று தென்னிந்தியப் பிரதேசங்களிலிருந்து அடிக்கடி ரோமன் கத்தோலிக்க மதபோதகர்களைக் குறிப்பாக கோவாவி லிருந்தும், கேரளமாநிலத்திலிருந்தும்,தூத்துக்குடியிலிருந்தும் இலங்கைக்கு
137

Page 72
வரவழைப்பதும் புவியியல் அடிப்படையில் இலகுவாக இருந்தது. கோட்டை இராச்சியத்தில் மல்வான என்ற மையம் போர்த்துக்கேயருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக கேந்திர, நிலையமாக விளங்கியமை போன்றே, வடபகுதியில் மன்னார் மிகப் பிரசித்தபெற்ற ஒரு கேந்திர நிலையமாக விளங்குவதற்கு தென்னிந்தியாவின் அண்மித்த நிலையே அவர்களுக்கு உதவியது. இலங்கையில் போர்த்துக்கேயர் கண்டி மீது மேற்கொண்ட படையெடுப்புகளுக்கெல்லாம் மன்னார் என்ற மையமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகச் செயற்பட்டிருந்தமையைக் காணமுடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்,
எனவே இலங்கையில் போர்த்துக்கேயரின் இறையாண்மையினால் ஏற்பட்டிருந்த விளைவுகளை ஆராயும் போது அவற்றை நான்கு பிரதான அலகுகளின் அடிப்படையில் நோக்கிக் கொள்வது இங்கு பொருத்தமா கின்றது. அவையாவன:
1. கோன்மைக் கோட்பாடு, நிர்வாகக் கட்டமைப்பு படையதிகாரம்
2. பொருளியல் நிறுவனங்கள், நிலமும் உற்பத்தியுறவும், கிராமியப் பொருளாதார அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மற்றும் மக்களுடைய வாழ்க்கைத்தரத்தின் தன்மைகள்.
3. சமூக நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், தொழில்விருத்தி - தொழிற்பகுப்பு, கல்விநிலை, தென்னிந்தியச் சமூகத்துடன் ஏற்படுத் தப்பட்ட உறவின் தன்மைகள் மொழிவழக்கில் ஏற்பட்ட மாற்றங்கள்.
4. சமயம், பண்பாடு, கோயில், நாட்டார் வழக்காறுகளில் ஏற்பட்ட
மாற்றங்கள் ஆகியனவாகும்.
கோன்மைக் கோட்பாடு, நிர்வாகக்கட்டமைப்பு, படையதிகாரம், கடற்கரை முகாமைத்துவ நிறுவனங்கள் : -
இலங்கையில் போர்த்துக்கேயர் அறிமுகப்படுத்தி வைத்த அரச முறைமை தொடர்பாக இதுவரையில் தெளிவான கருத்துக்கள் எவையும் இங்கு முன்வைக்கப்படாத நிலையில் எத்தகையவொரு ஆள்புலக் கொள்கையினை போர்த்துக்கேயர் இலங்கையில் பின்பற்றியிருப்பர் என நோக்குவது முக்கியமானதாகின்றது. போர்த்துக்கேயரது இலங்கை மீதான நேரடியாட்சியானது கோட்டையைப் பொறுத்த வரையில் 60 வருடங் களாகவும், யாழ்ப்பாண இராச்சியத்தினைப் பொறுத்தவரையில் 39 வருடங்களாகவும் காணப்பட்ட நிலையில் அவர்கள் பின்பற்றியிருந் திருக்கக் கூடிய கோன்மையின் தன்மை எவ்வாறிருந்திருக்கும் என ஆராய்வது அவசியமாகின்றது.
138

கோட்டையிலும், யாழ்ப்பாணத்திலும் போர்த்துக்கேயர் முதலில் சுதேச ஆட்சியாளர்களிடமிருந்து தமக்கு ஆதரவைத் திரட்டுவதற்காகவும், தம்மை அவர்களது செயற்பாடுகளில் பிணைத்து விடுவதற்கேற்ற உபாயங்களை உருவாக்குவதற்காகவுமே ஏற்ற தந்திரோபாயத் தொடர்பு களில் ஈடுபட்டிருந்தனர். பிராந்திய ரீதியில் இலங்கைத் தீவின் ஆள்புலங் களை தமது நேரடியான அரசியல் இறையதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்கு பதிலாக, பிராந்திய ஆட்சியாளர்களின் தேவைகளை நல் - எண்ணம் கொண்ட நட்புறவுகளை முதலில் களத்தில் நிற்கும் தம்முடனும், பின்னர் தமக்கு எல்லாம் தலமைக்காரியாலயமாக விளங்கும் கோவா ஆள்பதியுடனும் அதன் பின்னரே நேரடியாக போர்த்துக்கல் அரசனுட னும் ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு நடைமுறையைக் கையாண்டனர். இந்நடைமுறைகளினூடாக தாம் தமது நேரடியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இருக்கும் பிராந்திய அரசர்களை தவிர்க்க முடியாதபடி ரோமன் கத்தோலிக்க மதச் செல்வாக்கிற்குள்ளும், மதமாற்றத்திற் குள்ளும் அகப்படுத்துவதன் மூலமே போர்த்துக்கல் அரசனின் குடியேற்ற நாட்டந்தஸ்த்திற்குள் இலங்கையை உட்படுத்த முயற்சித் திருந்தனர். இத் தொழிற்பாட்டின் இரண்டாவது கட்டமாகவே திறையரசர் (Vassal Kings) என்ற அந்தஸ்த்திற்குள் இலங்கையின் கடல் முகப்புத்தள ஆட்சியாளர்களை அகப்படுத்துவதாக அவர்களது முயற்சி அமைந்தது. குடியேற்ற நாடுகளில் ஞானஸ்நானம் செய்து கொண்டவர் களையே திறையரசர்களாக அனுமதிக்கும் ஒரு வழிமுறையை கோவா ஆள்பதியின் கருமபீடமும் லிஸ்பனில் உள்ள மன்னனது கருமபீடமும் வற்புறுத்தி நடைமுறைப்படுத்தி வந்தது. இந் நடைமுறைப்படுத்தல் களானவை ஒப்பந்தம் மூலம் (Treaty) கைச்சாத்திடப்பட்டு, கீழைத்தேய வழமைகளும் மேலைத்தேய வழமைகளும் அரசியல் மேலாதிக்கத்தின் போது பின்பற்றப்படுவதற்கேற்ற வகையிலான நிர்வாக முறைமைகளை உருவாக்கித்தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் சுதேச மன்னர்களதும், மக்களதும் ஒருமித்த உடன்பாட்டை பெற விழைந்தமை யினை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் இதற்கான உதாரணங்கள் பல உள.
போர்த்துக்கேயர் இலங்கையில் தமது இறைமையை நிலைநாட்டு வதற்கு பாரம்பரிய சிங்கள கோனாட்சி முறையின் சில விதிகளையும் பயன்படுத்துவதற்கு தவறவில்லை எனலாம். அதாவது கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று பிரதான அரசஆள்புலங்களைச் சேர்ந்த அரச வம்சங்களூடான நெருங்கிய தொடர்புகளை ஈட்டுவதற்கான ராஜதந்திர வழிமுறைகளில் ஈடுபட்டதோடு, இலங்கை முழுவதனையும் ஒரே வீச்சில்
139

Page 73
பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பிராந்திய அரசொன்றோடு தமது மதத் தொடர்புகளை மிகவும் நெருக்கமாக ஏற்படுத்தியிருந்தனர். கோட்டை யரசில் டொன் ஜுவான் தர்மபாலனுடன் கொண்டிருந்த மத அடிப்படையிலான தொடர்புகளும், வாரிசு அற்ற நிலையில் அரசியல் உரிமம் தர்மபாலனிடமிருந்து (ஒரு கடல்முகப்புத்தள ஆட்சியாளனிட மிருந்து மற்றொரு கடல் முகப்புத்தள ஆட்சியாளனது கையிற்குக் கிடைக்கக் கூடியவகையில்) போர்த்துக்கல் மன்னனது கையிற்குச் சென்றடையக்கூடிய முறையிலுமே போர்த்துக்கேயருடைய முகாமைத்துவ நோக்கு அமைந்து கொண்டிருந்தது. பூரீ ஜயவர்த்தன புரக் கோட்டே தான் இங்கு காணப்பட்ட இறைமையுடைய மூன்று பிராந்திய அரசுகளும் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய நிலையிலிருந்தமையை போர்த்துக்கேயர் நன்குணர்ந்திருந்தனர். கண்டியரசு மீதும், யாழ்ப்பாண அரசுமீதும் படையெடுத்துச் சென்று, இலங்கை மீதான தனது முழு ஆதிபத்திய உரிமத்தினை கோட்டையரசே நிரூபித்திருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே கோட்டை இராச்சியத்தின் மீதான தமது உரிமத்தை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் தமது இறையாண்மையை இலகுவாக நிலைநிறுத்தி விடலாம் எனப் போர்த்துக்கேயர் எண்ணியதில் வியப்பேதுமிருக்க முடியாது.
இலங்கையில் போர்த்துக்கேயருடைய கோனாட்சி முறைமையானது ஒரு வகையான நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் பின்னணியி லேயே நிர்வகிக்கப்பட்டது என்பதும் இங்கு நினைவு கூரப்பட வேண்டிதாகும். கோட்டை இராச்சியத்தின் பின்னணியிலும் சரி நிலமே சமூகத்தில் உறவுகளையும், சமூகப் பாகுபாட்டினையும் தீர்மானித்த அலகாக விளங்கியது என்பது வெளிப்படை போர்த்துக்கேய நிர்வாக இயந்திரத்தின் உள்வாரியான அலகுகள் யாவும் சுதேசிய சமூக நிறுவனங்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருந்தமை காரணமாக கோட்டை, யாழ்ப்பாணப் பிரதேசங்களில் போர்த்துக்கேயருடைய கோனாட்சியின் கீழ் நிலமானிய முறை அலகுகள் நிர்வாக வலைப் பின்னலில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. போர்த்துக்கேயர் ஆட்சிக்குப் பிறகு (ஒல்லாந்தர்காலத்தில்) தொகுக்கப்பட்ட தேசவழமைத் தொகுப்பு அவ்வகையான நிலமானிய முறை அலகுகளின் தொழிற்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளமை நோக்கத்தக்கது. பொருட்களின் உற்பத்தியுடன் பிணைக்கப்பட்ட வகையிலான சாதிப் பெயர்கள், சமூகப் பிரிவுகள், சேவைத் தொழிலுடன் பிணைக்கப்பட்ட வகையிலான குழுமப் பிரிவுகள், இறையதிகார வகுப்பு, அடிமைகள், குடிமைகள் எனப் போர்த்துக்கேயர் காலக் கோனாட்சி முறையின் பின்னணியில், அவர்களது நிர்வாக
140

இயந்திரம் செயற்படுவதற்கு உதவிய சமுதாய நிறுவனங்களாகக் காணப் பட்டிருந்தன.
நிர்வாகக் கட்டமைப்பு அடிப்படையில் போர்த்துக்கேயர் காலமானது மிகவும் தனித்துவமான ஒரு கட்டத்தினை இலங்கை வரலாற்றில் குறித்து நிற்பதைக் காணலாம். மல்வான உடன்படிக்கையின் பின்னர், தர்ம பாலனின் மறைவுடன், கோட்டையரசானது போர்த்துக்கல் மன்னனின் நேரடியான குடியேற்ற நாடாக மாற்றப்பட்டுவிட்டது. போர்த்துக்கேயரது நாட்டு வழமை, சட்டதிட்டங்களின்படியே சிங்கள மக்கள் பரிபாலிக்கப் படுவார்கள் என்ற ஒர் உடன்பாடு மல்வான உடன்படிக்கையினூடாக எட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மல்வான என்ற இடத்தில் கூட்டப்பட்ட மாநாட்டுப் பேரவையின் தீர்மானத்தின்படி, சிங்களமன்னர்கள் தாம்தாம் செலுத்த வேண்டிய வரித்தொகையை நேரடியாக போர்த்துக்கல்லிலுள்ள பேரரசனுக்கே செலுத்த வேண்டும் என்றும், இலங்கை மன்னர்களும், அமைச்சர்களும், தளபதிகளும் போர்த்துக்கேயநாட்டு சட்டவழக்காறுகள், உரிமைகள், மரபுகள் ஆகியன வற்றைத் தொடர்ந்து பேணுவோம் எனவும் சத்திய வாக்கு (Oath)ப் பண்ண வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. போர்த்துக் கேயருடைய மேலாணைக்குட்பட்ட ஒவ்வொரு கோறளைக்கும் இவ்விருப்க்க ஒப்பந்தத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டன. எனவேதான் போர்த்துக்கேயர் கால நிர்வாக முறையில் இலங்கைக்குரியதும், போர்த்துக்கல் நாட்டிற்குரியதுமான சட்டங்கள், மரபுகள் ஆகியன ஒன்றிணைக்கப்பட்ட வகையில் அரசியல், நிர்வாக, நிதி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சிக்கால வரலாற்றை எழுதிய அபேயசிங்க என்பவர் "மல்வான உடன்படிக்கை'யை உண்மையற்ற ஒரு சம்பவமாகவே (Mythical one) கருதுகின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் ஏன் அவ்வாறு கருதுகின்றார் என்பதற்குத் தரும் விளக்க மானது குவேய்ரோஸினுடைய குறிப்புக்களிலிருந்தே பெறப்படுவ தாகவே உள்ளது. அதாவது குவேய்றோஸ் மல்வான உடன்படிக்கை பற்றிய விளக்கத்தையும், அதன் பிரதான அலகுகள் பற்றிய விபரணத்தையும் கோட்டையில் தர்மபாலன் மறைந்த கையோடு காலவரையறையடிப் படையில் கொடுக்கத்தவறியிருந்தமையின் அடிப்படையிலேயே மல்வான உடன்படிக்கை என்பது வெறும் கற்பனைவாதம் என அபேயசிங்க வாதிடுவதனைக் காண்கின்றோம். மேலும் அபேயசிங்க குறிப்பிடும் போது, குவேய்ரோஸ் தனது 6ஆவது புத்தகத்திலேயே முதன் முறையாக மல்வான உடன்படிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்
74.1

Page 74
என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றார். போர்த்துக்கேயத் தளபதியான டொம் டியோகோ - டீ - மேலோ - டீ - காஸ்ரோ என்பவனுக்கு சிங்கள மக்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பாக மனுச்செய்த போதே (Petition) குவேய்ரோஸ் மல்வான உடன்படிக்கையைப் பற்றி குறிப்பிட்டுள்ள பின்னணியை அபேயசிங்க இங்கு எடுத்துக் காட்டியிருப்பது வரலாற்று முக்கியத்துவமாகின்றது.
அபேயசிங்கா கருதுவதுபோல் மல்வான உடன்படிக்கை யானது தர்மபாலனுடைய மரணத்தைத் தொடர்ந்து உடனடியாக ஆட்சி யாளரும், மக்களும், ஆளுவோரும், ஆளப்படுவோரும் சந்தித்து ஒன்றாகக் குழுமிநின்று உருவாக்கப்பட்ட ஒர் உடன்படிக்கையாக அமையவில்லை என்பதே உண்மையாகும். அசாவிடோ முதன்முறையாக மல்வானையை போர்த்துக்கீசரது பிரதானமான நிர்வாக-அரசியல் நடவடிக்கைத் தளமாக ஆக்கியபோதே மக்களுடனான 'மல்வானைச் சந்திப்புத் தொடர்பாக ஆவணங்களில் பொறித்து வைக்க வேண்டியிருந்த ஒரு சூழல் தோற்றம் பெற்றிருந்தது. போர்த்துக்கேயரது மரபில் அடிப்படையில் அமைந்த அரசியல், நிர்வாக முறையொன்றின் புதிய அமுலாக்கமானது அசாவிடோ காலத்திலேயே நடைமுறைப்படுத்தப் பட்டதன் பின்னணி யில் "மல்வான உடன்படிக்கை" என்ற வரைபுக்குள் கோட்டையரசு நிர்வகிக்கப்படவேண்டியிருந்த முறைமைகள் வடிவமைக்கப்பட்டன. அதுவே வரலாற்றில் நாம் காணும் மல்வான உடன்படிக்கை என்ற ஐதீகமாகும். எது எவ்வாறிருப்பினும், நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில் போர்த்துக்கேயர் வடிவமைத்துத் தந்த நிர்வாக முகாமைத்து வத்தின் வடிவமாக "மல்வான உடன்படிக்கை" இலங்கை வரலாற்றில் பொறிக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. "ஒலையிலும் பட்டுத் துணிகளிலும் நாட்டின் சட்டதிட்டங்கள் வரையப்பட்டு நிர்வகிக்கப் பட்ட ஒரு காலகட்டம் மறைந்து, மேலைத்தேய கடதாசிகளில் அதே மேலைத்தேய மை, பேனை முதலியவை கொண்டு வரையப் பட்ட சட்டவரைபுகளையும், கணக்கு வரவு - செலவு விடயங்களை யும், உள்ளடக்கப்பட்ட வகையில், முதன் முறையாக மேலைத்தேய அரசியல், நிர்வாக, முகாமைத்துவ செயன்முறையின் வெளிப் பாட்டினை இம் "மல்வான உடன்படிக்கை" குறித்து நின்றது என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமெனலாம்.
இலங்கையில் போர்த்துக்கேயரது நிர்வாகக் கட்டமைப்பு:
G. C. GOALDGöTLq|Giv Our Heritage of Ceylon 6 TGöp 5ÍTGólav GunTrigglej:G335 uuugi
நிர்வாகம் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுவது இங்கு நோக்கத் தக்கதாகும்.
142

"டொன்ஜ"வான் தர்மபாலன் இறந்ததும் தாழ்பூமிப் பிரதேசங்களைப் போர்த்துக்கேயர் ஆண்டார்கள். அரசியல் நிர்வாகத்தில் அவர்கள் முக்கியமான எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. தமது தேசத்தை அவர்கள் திசாவணி எனக்கூறப்படும் நான்கு பிரிவுகளாக பாகுபடுத்தினர், இவை மாத்தறை, சப்பிரகமுவா, நான்கு கோறளை, சப்தகோறளை (ஏழு கோறளை) என்பனவாகும். இவற்றின் எல்லைகள் எல்லாம் கொழும்பில் இருந்தே பிரியக் கூடியனவாயும் எல்லைப்படுத்தப்பட்டன. மாத்தறை திசாவனி தற்போதுள்ள கீழ் மாகாணத்தையும், கொலன்னாக் கோறளையை யும், களுத்துறைப் பகுதியையும், சல்பதிக் கோறளையையும் கொண்ட தாயிருந்தது. நான்கு கோறளை என்ற பிரிவு கேகாலைப் பகுதியின் வடபாகத்தையும், சியானா, ஹபிதிகம கோறளைகளையும் உள்ளடக்கி யிருந்தது. சபத்கோறளை என்ற திசாவணி வடமேல் மாகாணத்தின் பெரும்பகுதியையும் உள்ளடக்கியிருந்தது. சப்பிரகமுவாதிசாவணி மூன்று கோறளைகளையும் கேகாலைப்பகுதியிலுள்ள புலத்கமவையும், ஹேவகம கோறளையையும், இரத்தினபுரிப்பகுதியில் கொலன்னா கோறளைதவிர்ந்த ஏனைய பாகங்களையும் உள்ளடக்கியிருந்தது.
ஒவ்வொரு திசாவணியையும் ஒரு திசாவை ஆண்டுவந்தான். கோறளையை ஒரு கோறளை ஆட்சி செய்தான். கோறளையின் பிரிவுகளை அத்துக்கோறளைகள் ஆண்டு வந்தனர். கிராமங்களை மயேரல்லர் அல்லது காரியகரணர் என்போர் ஆண்டு வந்தனர். கொழும்பு ஒரு நகரசபையின் பரிபாலனத்திலிருந்தது. கறுவா வியாபாரத்தில் போர்த்துக்கீசர் மிகவும் சிரத்தையுற்றிருந்த படியால், கறுவா உரிக்கும் தொழிலாளர் இருக்கின்ற கிராமங்களை மேற்பார்வை செய்வதற்காக ஒர் உத்தியோகத்தரை நியமித்தார்கள். இவரை மஹபட்டதளபதி என்று கூறுவர்.
அரசனுக்குப் பதிலாகத் தளபதியதிகாரி என ஓர் உயர்ந்த உத்தியோகத்தர் மல்வானையில் இருந்தார். கோவையிலுள்ளவரும். போர்த்துக்கல் மன்னரின் ஆணையைச் செலுத்துபவருமான இராசப் பிரதிநிதியின் மேற்பார்வையில் இவர் இருந்து வந்தார். இவர்களை விட வருமான உத்தியோகத்தர் என்ற முறையில் வெண்டர்டா பஸெண்டா என்றழைக்கப்படும்ஒர் உத்தியோகத்தரும் ஒவிடோர் என்றழைக்கப்படும் நீதிபதியும் அரசியல் உத்தியோகத்தராக இருந்தனர்.
வருமானங்களை வசூல்செய்யும் விஷயத்தில் போர்த்துக்கீசர் சிங்கள முறையை மாற்றவில்லை. கோட்டை இராச்சியம் போர்த்துக்கீசர் கைப்பட்ட பொழுது, அவர்களுக்குக் கிடைத்த திறையிலும் பார்க்க அதிகமான திறையைப் பெறக்கூடியதாக இருந்ததும், தேசத்தில் ஏற்பட்ட
143

Page 75
போரின் பயனாக எங்கும் குழப்பங்குடி கொண்டிருந்தபடியால் அவ்வாறு பெற முடியாததை அறிந்தனர். பின்னர் சேனரதனுடைய ஆட்சியில் நாட்டில் சமாதானம் ஏற்பட்டதும், நிலங்களையும், அவை என்ன சேவைக் காக வழங்கப்பட்டன என்பதையும், அவைகளால் அரசாங்கத்துக்குச் செல்ல வேண்டிய தொகைகளையும் பதிவு செய்தனர். இவ்வேலையை ஒரு போர்த்துக்கேய உத்தியோகத்தர் நான்கு சிங்களக் காரியதரிசிகளின் உதவியோடு செய்து வந்தார். வருமானக் கணக்குகள் பதிவு செய்த முறை யிலேயே இவையும் பதிவுசெய்யப்பட்டன. போர்த்துக்கேயர் இவற்றைத் தமது பாஷையில் தோம்புகள் என வழங்கினர்.
ஏனைய நிர்வாக விஷயங்களிலும் சனங்களின் புராதன வழக்கங் களையே அவர்கள் அநேகமாய் பின்பற்றி வந்தார்கள். சாதிக் கட்டுப் பாடுகள் அநேகமாய் கவனிக்கப்பட்டு வந்தன. அறியாமையாலும், சிலவேளைகளில் தமக்கேற்படும் வசதியை முன்னிட்டும் இச்சாதியாசாரங் கள் அவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்ததுமுண்டு.
சேனை சம்பந்தமான விஷயங்களில் தளபதியே பிரதானமான உத்தியோகத்தராயிருந்தார். இவர் மெணிக்கடவர என்ற இடத்தில் தமது தலைமைக் காரியாலயத்தினை நிறுவியிருந்தார். போர்த்துக்கீசத் துருப்புக்களில் கல்யாணமான சிப்பாய்களும், பிரமச்சாரிகளுமாக இருதிறத்தவரிருந்தனர். முன்னையோர் அவதியான (நெருக்கடிநிலையின் போது) காலகட்டத்தின் போது போர் செய்வார்கள். மற்றவர்களே நிரந்தரமான சேனையைச் சேர்ந்தவர்கள். சமாதான காலங்களில் இவர்கள் ஊரில் திரிந்து சனங்களைக் கொள்ளையடிப்பர். படையில் சேர்ந்த இலங்கைச் சிப்பாய்கள் லஸ்கரின் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கண்டியரசனின் போர்வீரரையே ஒத்திருந்தனர். இவர்களது தலைவர்கள் இக்காலத்தில் விக்கிரமசிங்கர் என அழைக்கப்பட்டனர்.
அசிவிடோவின் நிர்வாக முறைமையின் இயல்புகள் :
போர்த்துக்கீசர்கால் இலங்கையின் நிர்வாக முறைமையின் வரலாற்றில் அசிவிடோவின் காலம் மிகவும் தனித்துவமானதாக எடுத்துக்காட்டப் படுகின்றது. இந்து சமுத்திரக் கடல் முகப்புத்தள இராச்சியமொன்றில் ஏற்கனவே அசிவிடோ சேவையாற்றியபோது, போர்த்துக்கல் மன்னனால் இலங்கையில் கடமையாற்றுவதற்கென தெரிவு செய்யப்பட்டு, கிழக்காபிரிக்க நாடொன்றிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வானது இராணுவ நிர்வாக முகாமையில் அவன் கொண்டிருந்த தனித்துவம் தெரிய வருகிறது. அசிவிடோவினது கண்டி மீதான படையெடுப்புக்களின்தன்மை களிலிருந்து அவனது இராணுவக்கட்டமைப்பு இயலின் நிர்வாக அணுகு முறை தெளிவாயிற்று.
144

1597இல் தர்மபாலன் இறந்தமையைத் தொடர்ந்து அசிவிடோ போர்த்துக்கல் நாட்டு மன்னன் சார்பாக, கோட்டையிலுள்ள சிங்கள மக்களை பரிபாலிக்கும் மிகக் கடினமான பொறுப்பினை தானே ஏற்றிருந் தான். அந்நிய இனத்தினர் சிங்கள மக்களை பரிபாலிப்பது என்பது ஹேர்கூலியன் எரிமலையைப் போன்றது எனினும், நிர்வாக முறையைச் சீர்செய்யும் காரணிகள் கோட்டை இராசதானிக்குள்ளே செயற்பட்டுக் கொண்டிருந்தமை காரணமாக போர்த்துக்கேயரால், குறிப்பாக அசிவிடோவினால் நிர்வாக இயந்திரத்தை இலகுவாக இயக்க முடிந்தது. எனினும் சிங்கள இனத்தின் சாதிமுறை மிகவும் சிக்கலாக விளங்கியமை யால், போர்த்துக்கேயரால் அதனை நன்கு விளங்கிக்கொண்ட முறையில் நிர்வாக முகாமைத்துவத்தினை முன்னெடுத்துச் செல்ல முடியாதிருந்தது. ஆனால் அசிவிடோ மிகவும் தனித்துவமான அரசியல், நிர்வாக முகாமைத்துவத்திறனைக் கொண்டு காணப்பட்டமையின் அடிப் படையில் அசிவிடோவின் காலமானது போர்த்துக்கேயர் கால இலங்கை வரலாற்றில் மிகவும் சிறப்புப் பெறுகின்றது.
அசிவிடோ தானே நிர்வாக இயந்திரத்தின் முழுமையான பொறுப்புக் களையும் கையிலெடுத்த வண்ணம் சிங்கள மக்களை ஒட்டுமொத்தமாக போர்த்துக்கேயரின் மேலாதிக்கத்துக்குள் அகப்படுத்துவதற்குரிய நடைமுறையை மேற்கொண்டான் (Lock Stock andbarrel) இலங்கையில் 14 வருடகாலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட தளபதி ஸ்தானத்தினை வகித்த அசிவிடோ (Cல வரலாற்றாசிரியர் அசிவிடோவின் சேவைக்காலம் 18 வருடங்கள் எனவும் கொள்கின்றனர்.) தனித்துவமான தனது நடவடிக்கைகளினால் போர்த்துக்கீசர்கால இலங்கையின் கரையோர மாகாணங்களில் இராணுவ நிர்வாக முறையினை மேற்கொண்டிருந்தான். இப்பின்னணியில் "மிகவும் திகில் சம்பவங்கள் நிறைந்த ஒரு காலப் பகுதியாக” போர்த்துக்கேயர் கால இலங்கையை ஆக்கிய பெருமை 9136GLT660607Gu JITOjib. (a momentous period of much Conseqvenee both to the Portuguese and to the Sinhalese) Go _ITGöTuy6JGöT 6 TGöTLIG GofaðT DU GOOlgägJLGöm, இலங்கை மீதான ஆதிபத்திய உரிமையை ஈட்டிக் கொண்டிருந்த போர்த்துக்கல் மன்னன், அசிவிடோவிடம் அதன் வரம்பற்ற பிரதிநிதித்துவ அதிகாரத்தை வழங்கியிருந்தான். இதுவே அசிவிடோவிற்கு அவன் இலங்கையில் இருந்து கடமையாற்றிய 14 வருடகால வரம்பற்ற இராணுவ ஆட்சிமுறைமை அமுல்படுத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தினை வழங்கிய காரணி எனலாம். இதற்கும் மேலாக, அசவிடோ தனக்கு இராணுவ பலம் தேவைப்பட்ட போதெல்லாம் தென்னிந்தியாவிடம் உதவி கோரிய நிலையில் அசவிடோவிற்கு உரிய நேரத்திற்கு உரிய முறையில் படை உதவி கிடைத்திருக்கவில்லை. இதனால் அசிவிடோ தனது பதவிக்
145

Page 76
காலத்தில் சிவில் நிர்வாக பரிபாலனத்திற்குப் பதிலாக இலங்கையில் இராணுவ கட்டமைப்புக் கொண்ட நிர்வாக முகாமைத்துவ முறையையே நடைமுறைப்படுத்த வேண்டி நேரிட்டது. போதியளவு படைத்தளம் கிட்டும் வரைக்கும் இலங்கையை மிகவும் பயமுறுத் தலுக்கு உட்படுத்திய நிலையில் தான் ஆட்சி செய்த திறமை அசிவிடோவையே சாரும்.
போர்த்துக்கேயர் காலத்து இலங்கையில் சேவையில் அமர்த்தப்பட்ட தளபதிகளுள் அசிவிடோ சந்தேக்மற்ற முறையில் சிறந்த ஒருவனாக விளங்கினான். பலானவில் நடைபெற்ற போர் நடவடிக்கையின் போது லஸ்கரின்ஸ் என்றழைக்கப்பட்ட சிங்களப் படைகள் அசிவிடோவை தனியாக விட்டுவிட்டு சிங்கள மன்னன் பக்கம் எதிர்பாரா வகையில் இணைந்திருந்த நேரத்தில், அவன் தனது படையணியுடன் எந்தவொரு படைத்தளபதியும் சாதிக்காத சாதனையை நிகழ்த்திய வண்ணம் பின்னகர்ந்து மல்வானையைச் சென்றடைந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அசிவிடோ தனது இராணுவ - நிர்வாக அதிகாரி களின் நடவடிக்கை மீது மிகவும் கண்டிப்பாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டமையினால் பலர் அவனது சேவையின் கீழ் இருந்து விலகிச் சென்றமையையும் காணமுடிந்தது. பல சந்தர்ப்பங்களில் அசிவிடோவிற்கு எதிராக எதிர்ப்பியக்கங்களும் போர்த்துக்கேய நிர்வாகிகளுக்குள் இருந்து வெளிவந்ததும் உண்டு. V
அசிவிடோ தனக்கு எதிராக ஏற்பட்ட எல்லா வகையான எதிர்ப்பு களையும் முறியடித்த வண்ணம் தனது இராணுவ படையாட்சித் திறனை வெளிப்படுத்தி இருந்தான். இராணுவத்தின் நகர்தலுக்காக இலங்கையில் முதல் முறையாக இராணுவ வீதிகளையும் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக கொத்தளங்களையும் (அரண்) பரவலாக இராணுவ மையங் களையும் அசிவிடோ அமைத்தான். கரையோர மாகாணங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் கடற்பாதைகளும் தரைப்பாதைகளும் ஒன்றாக வந்து சங்மமாகும் மையங்களில் கடற்கோட்டைகள், தரைக் கோட்டைகள், காவலரண்கள் ஆகியன அமைக்கப்பட்டன. இதனால் கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேயரது ஆட்சிக்கெதிராகத் தோற்றம் பெற்ற கலவரங்கள் காலவிரயமின்றி அடக்கப்படுவதற்குரிய வாய்ப்பினை அசிவிடோ உருவாக்கிக் கொடுத்திருந்தான். ஆனால் தனது ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டிருந்த மக்களை, அவர்களது வாழ்வு நலனை துச்சமும் மதிக்காது, சிவில், நிர்வாக முறையைப் பேணாது, பயமுறுத்தி, வருத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்த முறைமையொன்றை அசிவிடோ உருவாக்கியிருந்தான். அசிவிடோ வகுத்தளித்த நிர்வாகக் கொள்கைகளின்
146

பயனாகப் பொதுவாக இலங்கை மக்கள் அசிவிடோவிற்கு எதிராகவும்: சிறப்பாக போர்த்துக்கேயராட்சியை இலங்கையில் வெறுத்தவர்களாகவும் மாறுவதற்கு வழிவகுக்கப்பட்டது என்பதே வரலாற்றுண்மையாகும். ஆனால் அசிவிடோ ஒருவன் மட்டுமே இலங்கையின் பூகோள நிலமை முழுவதனையும், இலங்கை மக்களது தேவை என்ன என்பதனையும் கண்டறிந்த முதல் வெளிநாட்டுத் தளபதியாகும். எனினும் அசிவிடோவி னால் நீண்ட காலத்திற்கு இங்கு அப்பதவியில் இருக்க முடியவில்லை. ஏனெனில் போர்த்துக்கேய மன்னனால் இந்தியப் பரப்பிற்குரிய ஆள்பதியாக நியமிக்கப்பட்டதனையடுத்து 1612இல் அசிவிடோ இந்தியா விற்குச் செல்லவேண்டி நேரிட்டது. ஆனால் இறுதியில் லிஸ்பனுக்கு அழைக்கப்பட்டு அங்கு அவன் சிறையிடப்பட்டு பின்னர் சிறையிலேயே வாடி - வதங்கி இறக்க நேரிட்ட சம்பவத்தை வரலாறு பதிந்து வைத்துக் கொண்டுள்ளது.
படையதிகாரம் - படைப்பகுப்பு முறை :
இலங்கையில் போர்த்துக்கீசரது படையாட்சி, அதிகாரம் என்பன வற்றைத் தாங்கிக் கொண்டிருந்த மிக முக்கியமான நிறுவனம் அவர்களது இராணுவ அமைப்பாகும். இலங்கையில் போர்த்துக்கீசர் தமது படையாட்சியலகினை வலுப்படுத்துவதற்குக் கூட சிங்கள முடியரச அமைப்பு முறையினூடாகப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த போர்க்கள அலகுகளையும் நுட்பங்களையும் நன்கு பயன்படுத்தியுள்ளனர். இதனால் போர்த்துக்கீசர் கால இலங்கையில் இரண்டு தளத்தில் படை நிறுவனம் உருவாக்கி, வலுவூட்டப்பட்டிருந்தமையைக் காணலாம். அவையாவன : ஒன்று போர்த்துக்கீச ஆளணியை உள்ளடக்கிய படையமைப்பு, இரண்டு சிங்கள ஆளணியை உள்ளடக்கிய படையமைப்பு என்பனவாகும். இதில் ஐரோப்பியப் படையின் ஆளணியில் பெருமளவி லான அங்கத்தினர்கள் திருமணமாகாதவர்களாகவே கடமையாற்றினர். லிஸ்பனில் இருந்து கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பெற்ற ஆண்கள் திருமணமாகாதவர்களாகவே காணப்பட்டனர். கீழைத்தேயங்களில் தேவை ஏற்படும் போது படைநடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே அவ்வாறான ஆண் பிரஜைகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது நோக்கமாக அமைந்தது. இவ்வாறு கீழைத்தேயங்களுக்கு அனுப்பப் பெற்றவர்களை சொல்டதோஸ் (Solidados) எனப் போர்த்துக்கேயப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டமையைக் காணலாம்.
இலங்கையில் போர்த்துக்கீசருடைய படை நிர்வாகம் தனித்துவமான வகையில் அமைந்து கொண்டது. படைகள் அணித்தலைவர்களின் கீழ்
147

Page 77
ஒவ்வொரு கொம்பனியாக (Company) வகுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கொம்பனியிலும் 30 முதல் 36 அல்லது 38 எண்ணிக்கை வரையிலான வீரர்கள் பணியாற்றினர். இவ்வீரர்கள் தாம் பணியாற்றும் ஒவ்வொரு கொம்பனியிலும் 6 மாதங்கள் வரை பணிபுரிந்தால் போதுமானது எனக் கருதப்பட்டது. ஒவ்வொரு கொம்பனியினதும் அணித்தலைவர்களினால் நாளுக்கு மூன்று வேளை உணவு வீதம், போர்த்துக்கேயப்படைகளுக்கான உணவுத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஒவ்வொரு கொம்பனியினதும் உணவுத்தேவையை நிறைவு செய்வதற்காக இவ்விரண்டு கிராமங்கள் அணித்தலைவர்களின் பொறுப்பின் கீழ் விடப்பட்டது. இக்கிராமங்களில் உள்ள சூல்லெஸ் (Cules) என்றழைக்கப்பட்ட ஆண்களே ஒரே முறையில் 15 நாட்களுக்குத் தேவையான படைகளுக்குரிய உணவினைத் தயாரித்து விடுவர். மாட்டிறைச்சி, கோழியிறைச்சி, வெண்ணெய், தயிர், கறுவா - ஏலம் போன்ற வாசனைத்திரவியங்களினாலான உணவு வகைகள், காய்கறி - பழவகைகள் என்பன உட்பட அவ்வாறு தயார் செய்யப்பெற்றனவற்றுள் உள்ளடங்கும். றிபைரோவின் குறிப்பின்படி ஒரு கொம்பனியைச் சேர்ந்த போர்வீரன் ஒவ்வொரு மாதமும் ஒரு பர்டோவ் பணத்தினை மானியமாகப் பெற்றிருந்தான் என அறிகின்றோம். ஆனால் குவெய்ரோசின் குறிப்பின்படி மாதமொன்றிற்கு 20 செராவைன்ஸ் பணத்தினை அப்போர் வீரன் உணவுக்காகப் பெற்றிருந்தான் எனவும் அறியலாம்.
கொம்பனி என்ற படையணியின் இரண்டாம் நிலைத்தலைவராக கப்ரின் - மேஜர் என்பவர் தொழிற்பட்டிருந்தார். இவர் எப்போதும் மெனிக்கடவர என்ற தளத்திலேயே வீற்றிருந்தார். கண்டியப் பிரதேசத்தி லிருந்து வருகைதரும் இராணுவ அணிகளின் பிரச்சினைகளை எதிர் கொள்ளவும், போர்த்துக்கேய நிர்வாகத்தின் தலைமைக் காரியாலயத்தி லிருந்து வரும் அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்வதற்குமாகவே கப்ரின் - மேஜர் மெனிக்கடவர என்ற மையத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிர்வாக மையத்தில் பதவிப்பொறுப்பேற்றிருந்தார். மெனிக்கடவரவில் தங்கியிருந்த பேஈர்த்துக்கேய இராணுவமே பிரதான இராணுவப் பிரிவாகக் கொள்ளப்பட்டது. இங்கு அமைந்து காணப்பட்ட கோட்டை வருடத்திற்கு வருடம் புதுப்பிக்கப்பட்டும், பாதுகாப்பு மெருகூட்டப்பட்டும் பேணப்பட்டது. இங்கு 12 கொம்பனிகளை உள்ளடக்கிய வகையில் 350க்கு மேற்பட்ட இராணுவ வீரர் சேவை யாற்றினர். இவர்களை அர்ரயல் (Arraya) எனப் பதிவுகள் சுட்டுகின்றன.
போர்த்துக்கேயரது ஆரம்பகால இராணுவ நடவடிக்கைகளின் போது இலங்கையில் அவர்கள் ஐரோப்பிய முறையை or பாணியைத் தழுவிய உடுப்புக்களையே அணிந்து கொண்டிருந்தனர். கோட்டையில்
48

மாயாதுன்னைக்கெதிராக புவனேகபாகு சார்பாக படையுதவிகளை வழங்கியபோது, ஐரோப்பிய முறையில் அமைந்த போர்த்துக்கீச உடைகளையே போர் வீரர் அணிந்திருந்தனர். தடித்த தோலினாலான குறுந்தோற்சட்டை மார்புக்கவசம் (உருக்கு) தலைக்கவசம் ஆகியன ஐரோப்பியப் போர்வீரன் ஒருவனுடைய சாதாரண போர்க்கள உடுப்புக் களாகும். ஆனால் இலங்கைத்தீவின் சுவாத்தியமானது இடைவெப்ப வலயக் காலநிலையைக் கொண்டிருந்தமை காரணமாக விரைவிலேயே மேலே குறிக்கப்பட்ட போர்க்கள உடுப்புக்கள் கைவிடப்பட்டு மிகவும் லேசான, பாரங்குறைந்த உடுப்புக்கள் தயாரிக்கப்பட்டு, போர்க்கள நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.
போர்த்துக்கீசர் கால இராணுவ முகாம்களில் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கோட்டை - கொத்தளங்களுக் குள்ளும் சரி, சிறிய இராணுவ அரண்களுள்ளும் சரி வீரர் ஒருவரோ டொருவர் முரண்படுவது, சண்டைசெய்வது என்பது முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. குற்றமிழைத்த போர்த்துக்கேயராணுவ வீரர்களுக்கு குறிப்பிட்டளவான, வரையறுக்கப்பட்ட தண்டனைகள் வழங்கப் பட்டிருந்தன. மிகக் கடுமையானதண்டனையாக மரக்கிளையில் கயிற்றில் கட்டி தொங்கவிடப்படுவதன் மூலம் மரண தண்டனையும் வழங்கப் பட்டது. போர்த்துக்கேய ராணுவ வீரர் தமக்கிடையே ஒருவர்க்கொருவர் சண்டை பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் அந்நிகழ்வினை அவர்கள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து வெகுதொலைவிற்குச் சென்றே நிகழ்த்தும்படி கோரப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் மீண்டும் தத்தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக முகாம்களுக்குள் செல்வதற்கு குறைந்தது 8 நாட்களாவது காத்திருக்க வேண்டிய நிலையும் காணப் பட்டிருந்தது. காரணம் அம்முகாமுக்குப் பொறுப்பான இராணுவ உத்தியோகத்தர் அக்குறிப்பிட்ட குழுக்களிடையே ஏற்பட்டிருந்த பகைமை நிலையைப் போக்கி, நன்னடத்தையை உறுதிப்படுத்தி, அவர்களை மீண்டும் முன்னைய பழைய நிலைகளுக்கு அனுமதிக்க அத்தகைய கால அவகாசம் தேவைப்பட்டிருந்தது. போர்த்துக்கேய இராணுவ வீரர்களுடைய ஆட்சேர்ப்பிலே ஆபிரிக்காவிலிருந்தும், கப்பல் கைதிகளாகப் பிடிபட்டவர்களுக்குள்ளிலிருந்தும், ப்ோர்த்துக்கலை நோக்கி இராணுவ சேவையாற்றுவதற்கெனச் சென்று, பின்னர் அங்கிருந்து கீழைத்தேயம் நோக்கி போர்த்துக்கீசராணுவ வீரர்களாக வந்தவர்களுக்குள்ளிருந்துமே இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட இராணுவக் குழுவினர் அமைந்து கொண்டிருந்தனர். இதனால் இவர்களிடையே குழும இயல் அடிப் படையிலான வேறுபாடுகள் நிறைந்து காணப்பட்டிருந்தன என்பதும் தெளிவாகின்றது. குவெய்ரோஸின் குறிப்பின்படி, 1599இல் வைஸ்ரோய்
149

Page 78
பிரான் லிஸ்கோ - ட - காமாவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, லிஸ்பனில் இருந்து வந்த மாற்றுப் பிரதியீட்டுப்படையில் காணப்பட்ட வீரர்கள் யாபெரும் தண்டனையை எதிர்நோக்கிக் காத்துநின்ற சிறைக் கைதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கேயரின் படைக்கட்டுமான அமைப்பில்லஸ்கரின்கள் என அழைக்கப்பட்ட இராணுவ வீரர்களின் பிரிவு ஒன்றும் தொழிற் பட்டிருந்தது. பேர்சிய மொழிச் சொல்லடியிலிருந்து உருவாக்கப்பட்ட அச்சொல்'Lashhar என்பதன் நேரடிப் பொருளில் Army அல்லது Camp எனக் கொள்ளப்பட்டது. சில வரலாற்றாசிரியரின் கருத்துப்படி உருது மொழியிலிருந்தே பேர்சிய மொழிக்கு அப்பிரயோகம் சென்றிருக்க வேண்டும் என்றும் கொள்ளப்படுகிறது. மேலும் இந்தியக் கடலோடி களின் மொழிப் பரிவர்த்தனையில் லஸ்கரின் அல்லது லஸ்கொரின் என்ற பதப்பிரயோகம் இற்றை வரைக்கும் இருந்து கொண்டிருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங்களில் லஸ்கரின்கள் என்ற விசேடமான சிங்களப் படைப்பிரிவு தொழிற்பட்டிருந்தமை நோக்கத்தக்கது. கீழைத்தேயங்களில் போர்த்துக்கேயர் தமது குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த காலத் தொடக்கத்திலிருந்தே லஸ்கரின்கள் என்ற படைப்பிரிவினை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். பீரோ பெர்னான்டெசு என்பவர் 1545இல் போர்த்துக்கல் மன்னனுக்கு அனுப்பி வைத்த கடிதக் குறிப்பு ஒன்றில் "லஸ்கரின்கள்" பற்றிய நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அக்கடிதத்தின் படி நோக்கும் போது கீழைத்தேயத்தில் போர்த்துக்கேய ஆள்பதிகளுக்கு ஆரம்பத்தில் பாதுகாப்பளித்த ஐரோப்பிய இராணுவத்தினருக்கே அப்பெய்ர் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும், பின்னர் போர்த்துக்கேய நிர்வாக முகாமைத்துவத்தில் பங்கெடுத்திருந்த கீழைத்தேய இராணுவத் தினருக்கே அச்சிறப்புப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பதனையும் காணமுடிந்தது. கொழும்பில் உள்ள லஸ்கரின் வீதி (Lascareen Street) போர்த்துக்கேயர் கால சிங்களப் படைவீரர்களின் பெயராலேயே ஏற்பட்டுக் கொண்டது என்பதும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
‘லஸ்கரீன்கள்" என அழைக்கப்பட்ட சுதேசப் படையமைப்பின் நடவடிக்கைகள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். போர்த்துக்கேயர் கால இராணுவ சேவையில் அமர்த்தப்பட்ட சிங்கள லஸ்கரின்கள் பெருமளவுக்கு பயிர்ச்செய்கை மூலதனத்தை பிரதான
150.

வருவாயாகக் கொண்ட குடும்பங்களில் இருந்தே நாட்டின் பாதுகாப்புச் சேவைக்கு (martialServices) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது சேவைக் காக பயிர்செய்கை பண்ணக் கூடிய நிலங்கள் ஏற்கனவே சிங்கள மன்னர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நாட்டில் போர் என்று தொடங்கிவிட்டால் தொடர்ச்சியாக 15 நாட்கள் நீடித்து நின்று, எதிரி களுடன் போர் செய்வதற்கு வேண்டிய போர்க்கருவிகள், உணவு முதலிய வற்றையும் லஸ்கரின்கள் என்ற அந்த வீரர்கள் எடுத்துச் செல்ல வேண்டி யிருந்தது. அம்பும், வில்லும் போர்க்கவசமுமே அவ்வீரர்களின் பிரதான போர்த்தளபாடங்களாகும். போர்த்துக்கேயர் நிர்வாகத்தில் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே லஸ்கரின்கள்துப்பாக்கியை தமது போர் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். எனினும் பெரிய அளவில் சிங்கள லஸ்கரின் போர் வீரர் துப்பாக்கியை தமது போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதனை அறிகின்றோம். சாதாரண விவசாயி ஒருவனதும், பொது மனிதன் ஒருவனதும் உடை எவ்வாறு அமைந்திருந்ததோ அவையிரண்டும் கலந்த வகையிலான உடுப்பினையே லஸ்கரின்கள் என்ற போர்வீரர் அணிந்து கொண்டனர். லஸ்கரின்களது கொமாண்டர் என்ற நிலை பரம்பரையாக வந்த ஒரு தொடர்ச்சியான வம்சப் பிரதிநிதிக்கே வழங்கப்பட்டது. அவர்கள் முதலியார் (mudaiyars) எனவும் ஆராய்ச்சி (Aratchies) எனவும் குறிப்பிடப்பட்டனர். ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக 17ஆம் நூற்றாண்டில், சமூகத்தில், சற்றுக் கீழ்நிலையில் காணப்பட்டிருந்த வம்சத் தாருக்கும் அப்பதவிகள் வழங்கப்பட்ட தன்மையைக் காண்கின்றோம்.
திசாவை’ என அழைக்கப்பட்ட மாகாண மட்டத்தில் வைத்திருந்த வண்ணமே லஸ்கரின்கள் பராமரிக்கப்பட்டனர். ஒவ்வொரு திசாவை யினதும் ஆள்பதிகள் லஸ்கரின்களின் தலைவர்களாகத் தொழிற்பட்டிருந் தனர். எல்லா வகையான இராணுவப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையிலான நாலு திசைகளினதும் தலைவர்களை "விக்கிரமசிங்க' எனக் குறிப்பிட்டனர். குவெய்ரோலஸினது குறிப்பின் பிரகாரம் நான்கு திசாவைகளிலுமிருந்து 4000 பேர் லஸ்கரின்களாக இராணுவ சேவைக்கு வழங்கப்பட்டிருந்தனர் என அறிகின்றோம். ஆனால் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் அவ்வெண்ணிக்கையானது மேலும் சற்றுத் தளர்வடைந்தது. போர்த்துக்கேய இராணுவத்தில் கடமையாற்றியிருந்தறிபைரோ (Ribeiro) என்பவன் குறிப்பிடும் போது, 50,000 எண்ணிக்கையுடைய லஸ்கரின்கள் கடமையாற்றியிருந்தமையைக் கண்டு கொள்கின்றோம். சில வேளையில் இவ்வெண்ணிக்கையானது வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்ட தாகவும் இருக்கலாம். குவெய்ரோசின் குறிப்பின் பிரகாரம் மாத்தறை
151

Page 79
திசாவையில் மட்டும் முதலியார் சமரக்கோன் தலைமையில் 12,000 எண்ணிக்கையுடைய லஸ்கரின்கள் போர்த்துக்கேயர் காலப்படையணி யில் இணைக்கப்பட்டனர் என அறிகின்றோம். நான்கு கோறளையைச் சேர்ந்த லஸ்கரின்கள் பெருமளவிற்கு போர்த்துக்கேயருக்கு எதிரான உணர்வினையும் சிங்கள மன்னர்களுக்கான தமது ஆதரவினையும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் திடீரென வெளிப்படுத்தி விடுவார்கள். மாத்தறை திசாவணியைச் சேர்ந்த லஸ்கரின்கள் சண்டையிடுதலில் அபாரத் துணிச்சல் நிறைந்தவர்கள் என்றும், அதே நேரத்தில் கடற்கரையோரத்திசாவனிகளிலிருந்து லஸ்கரின் களாகப் படையில் இணைந்தோர் போர்த்துக்கேயருக்கு மிகவும் ஆதரவாகவே நடந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
போர்த்துக்கேயப் படையமைப்பில் துணைப்படை அல்லது உடனுதவும் படைப்பிரிவு (auxiliary forces) ஒன்றும் செயற்பட்டதற்கான குறிப்புக்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை முன்னணிப்படை நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1636 இல் கப்ரின் - ஜெனரல் டீ - மெல்லோ என்பனுக்கு முறையிடப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு, அத்தளபதி விளக்க மளித்த போது அத்துணைப் படை வீரர்களது கடமைகள் பற்றி விரித்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதான படைகள் நகரும் மார்க்கங்களில் பாதுகாப்புக்குழிகள் வெட்டுவது, தற்காலிக தங்குமரண்களை நிறுவுவது, வெடி - பொருட்களை சுமந்து செல்வது (முன்பு சாலியர் (Chaleas) எனப்பட்டோர் சுமந்து செல்லும் வழக்கம் இருந்தது) போன்றவை அத்துணைப்படை வீரர்களுடைய கடமையாகக் காணப்பட்டது. உணவு, பாவனைக்குரிய தளபாடங்கள் யாவும் கூலிகளே சுமந்து சென்றனர். கொம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தலைமைத்துவத் தின் கீழ் அக்கூலிகள் போர்க்கள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப் பட்டனர். றிபைரோவினது குறிப்பில் அக்கூலிகள் பங்குகாரர்கள் எனவும் விவசாயிகள் எனவும் குறிக்கப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. மிக நீண்டதூரத்திற்கு அதாவது மல்வானவிலிருந்து கண்டி இராச்சியத் திற்குள் படை நடாத்திச் செல்லும்போது கிராமங்களினூடாகவே தங்கித்தங்கி, உணவுபெற்றுச்செல்வது கடைப்பிடிக்கப்பட்டது. அவ்வாறு செல்லும் போது பிரதான வீதிகளோ, அல்லது பாதைகளோ இல்லாததால், சிங்கள இராணுவவீரர்கள் காடுகளினூடாக மரங்களைத் தறித்து, வீழ்த்தி போர்த்துக்கீசப்படைக்கு பாதையமைத்துக் கொடுப்பதும் மரபாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
152

பொருளியல் நிறுவனங்கள் :
போர்த்துக்கேயர் கால இலங்கையின் கரையோர மாகாணங்களில் காணப்பட்ட கிராமங்களே அக்கால மக்களதும் ஆட்சியாளரதும் பொருளி யல் வளத்தின் பிரதான அலகு ஆகக் கணிக்கப்பெற்றது. ஏனெனில் போக்குவரத்துப் பாதைகள் அமையப்பெறாத அக்கால மக்கள் வாழ்வில் கிராமங்களே மக்கள் வாழிடங்களை இணைத்து வைக்கின்ற தொகுதியாக - ஊடகமாக விளங்கின. அவ்வாறே அக்கிராமங்கள் போர்த்துக்கேயர்கால பொருளியல் வாழ்வின் தேட்டத்திற்குரிய களங்களாகவும் விளங்கின என்றால் அது மிகையில்லை. படையெடுப்புக் காலங்களில் கிராமவாசி களே படை நடாத்தலுக்கு வேண்டிய உணவு, குடிநீர், ஆட்பலம், போக்குவரத்துக்கான உபகரணங்களை ஆக்கி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தமையின் அடிப்படையிலும், ஒவ்வொரு கிராமமும் பயிர்ச்செய்மை உற்பத்தியில் தனித்துவமான தேர்ச்சியைக் கொண்டிருந்ததன் அடிப்படையிலும், அக்கால பொருளியல் வாழ்வின் சிறப்புத்தேர்ச்சி மையங்களாக கிராமங்கள் விளங்கின. எனவே போர்த்துக்கேயர்கால இலங்கையில் பொருளியல் பெருக்கத்தின் மையஸ்தானங்களாக கரையோரமாகாணங்களில் அமைந்து காணப்பட்ட கிராமங்கள் தொழிற்பட்டிருந்தன.
அரசறிர்வாக முகாமைத்துவத்தில் சேவையாற்றியிருந்த உத்தியோகத்தர் களுக்கென மானியமாக வழங்கப்பட்ட நிலக்கொடைகள் தனித்துவமான வகையில் தொழிலையடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவிற்கும், சாதிமுறையின் தோற்றத்திற்கும் வழிவகுத்துவிட்டிருந்தது. கோட்டை இராச்சியத்தில் காணப்படும் மூன்று வகையான கிராமங்கள் போர்த்துக்கீசர் கால நிலக்கொள்கையில் பிரதான இடத்தினைப் பெற்றிருந்தன. அரச குலத்துடன் தொடர்புடைய கபடாகம், சேவைக்காக வழங்கப்பட்ட நிந்தகம் பெளத்த - இந்துக் கோவில்களுக்கு வழங்கப்பட்ட விஹாரகம், தேவாலஹம் ஆகியனவே அக்கிராமங்களாகும். 1597இல் கோட்டை இராச்சியத்தினை போர்த்துக்கேயர் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கோயில் நிலங்களைத் தவிர ஏனையவற்றை போர்த்துக்கேயர் தமது பொருளியல் நடவடிக்கைகளுக்கான கோட்பாட்டு நடைமுறைக்குள் உட்படுத்தியமையைக் காண்கின்றோம். பிரான்சிஸ்கன் மதபீடமே இக் கோட்டை இராச்சியத்தில் இருந்த கோவில் நிலங்களை தமக்குள் சுவீகரித்துக் கொண்ட மத நிறுவனமாகும்.
முத்தட்டுக் கிராமம்" என்ற பெயரில் அழைக்கப்பட்டவை ஒன்றில் மன்னனுக்குரிய பங்குக்கிராமத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அக்கிராமத்தின் தலைவனுக்குரிய கூறாகவோ காணப்பட்டன. மிகுதிக்
153

Page 80
கிராமம் பங்கு எனக் குறிப்பிடப்பட்ட உரிமையாளர்களால் பங்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்குக்காரர்கள் அல்லது நிலக்காரர் என்போரும் அத்தகைய கிராமங்களின் பங்காளிகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்பதங்களாகும். அக்கிராமத் தலைவன் ஹம்லட்ட எனக் குறிப்பிடப்பட்டான். முத்தட்டுவினுடைய அதிபதி (Lord) யுடன் பங்குகாரர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு சூழல் காணப்பட்டிருந்தது, ஆனால் பங்குகாரர்கள் நேரடியாக மன்னனுக்கும், அவனது இன்ப - துன்ப நிகழ்வினூடாகவும் கொண்ட நேரடித் தொடர்பின் நிமித்தம் பணியாற்ற வேண்டியவர்களாகவும் காணப்பட்டனர். இதுவே ஐரோப்பிய மானிய முறையமைப்பில் காணப்பட்ட உறவினின்றும் பிரித்து வேறுபடுத்திய கீழைத்தேய மானிய அம்சமாகும். ஐரோப்பாவில் மன்னனுடன் நேரடியான உறவுகள் எவையும் குடியானவனுக்கு இருக்கவில்லை, பதிலாக நிலப்பிரபுடன் மட்டுமே அவனுக்கு உறவு நிலை ஏற்பட்டிருந்தது. கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட முத்தட்டுக் (கிராமங்களின்) களில் விஸ்தீரணம் கிராமத்துக்குக் கிராமம் வேறுபட்டுக் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. (யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் "முத்தட்டு ஒழுங்கை என்றவொரு குறிச்சியிறை கோண்டாவில் - மேற்கின் வட எல்லையில் இன்றும் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது - போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் உப்புமடப்பிள்ளையார் ஆலயமும் இம் முத்தட்டுக்கு அண்மையில் அமைந்துள்ளமையும் நோக்கத்தக்கது.)
கோட்டை இராச்சியத்தில் அரசியல் அடிப்படையில் போர்த்துக்கீசர் தமது ஆதிக்கப்பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு (1597) முன்னரே போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த பலர் (1541ல்) அங்கு குடியேறிவிட்டிருந் தனர். போர்த்துக்கேய கசடோஸ் (Casados) என அழைக்கப்பட்ட திருமணமான ஆண்கள் 30 பேர் அவ்வாறு குடியேறியிருந்தமைக்கான பதிவுகள் கிடைத்துள்ளன. இவர்களுடன் இணைந்து திருமணமாகாத சோல்ரியரொஸ் (Solteiros) என்போரும் கோட்டை இராச்சியத்தில் நிலங் களைக் கொள்வனவு செய்து அதில் வாழத் தொடங்கி விட்டிருந்தனர். 1547இல் 40க்கு மேற்பட்ட போர்த்துக்கீசக் குடியிருப்பாளர்கள் தத்தமது நிலங்களில் பெருந்தோட்ட முறையிலான (Plantations) பயிர்ச்செய்கை முறையுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். இக்காலத்தில் கோட்டை மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருந்த புவனேகபாகு போர்த்துக்கல் நாட்டு மன்னனுக்கு அனுப்பியிருந்த மனு ஒன்றில் எந்தவொரு போர்த்துக்கல் நாட்டுப் பிரஜையும் தனது முன் அனுமதியும், உத்தரவுப் பத்திரமுமின்றி கோட்டை இராச்சியத்திற்குள் நிலத்தினைக் கொள்வனவு
154

செய்யமுடியாது எனத்தெரிவித்திருந்தான். தர்மபாலனுடைய ஆட்சிக் கான வருகையுடன் போர்த்துக்கல் நாட்டுப் பிரஜைகளுக்கு நிறைய நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை 1603, மாசி 13ஆம் திகதி முத்திரையிடப்பட்ட கோவா உயர்நீதிமன்றத்தின் பதிவு ஒன்று எடுத்துக் காட்டுகின்றது. கோவா அதிமேற்றிராணியார் கூட கோட்டை இராச்சியத் திற்கு புலம்பெயர்ந்து சென்று குடியேறிய கஸ்டோஸ்களுக்கு கஸ்டோஸ் நிலத்தினை வழங்கி, தானக்கொடையை உறுதிப்படுத்தியிருந்தார். ஆள்பதியான ரவொரா (Tavora), அசவிடோ ஆகியோர் நிலத்தினை மானியமாக தானம் என்ற நிலையில் போர்த்துக்கேயபிரஜைகளுக்கு வழங்கிய முறைகளைக் காண முடிந்தது. பிரதம படைத்தளபதி (Commradr in - Chief) நிலங்களை மானியமாக வழங்கிய முறையைக் காண்கின்றோம். 1603ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சட்டப்பிரேரணையின் அடிப்படையில் எல்லாவகையான நிலத்தானங்களும் செல்லுபடியற்ற தாக்கப்பட்டது. பின்னர் 1611இல் போர்த்துக்கீச மன்னன் இலங்கையின் ஆள்பதியினூடாக அசவிடோவினால் மேற்கொள்ளப்பட்ட கிராம நிலத்தானங்கள் அத்தனையையும் செல்லுபடியற்றதாகச் செய்வித்தான். வெடோர் டீ - வFசென்டா Fவிறையர் என்பவனே அதிகார பூர்வமான விசாரணையை முன்னெடுத்து அசவிடோவின் அதிகாரத்தின் பெயரால் வழங்கப்பட்ட மானிய நிலக்கொடைகள் அத்தனையையும் செல்லுபடி அற்றதாக்கினான்.
Fரையருடைய விதப்புரைகளினூடாக போர்த்துக்கீச அரசாங்கத்தின் ராஜீயப் பிரகடனங்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டிருந்தன என்பது தெளிவு. அதன்படி வெற்றியை ஈட்டிக்கொடுத்த ஒவ்வொரு போர் வீரனுக்கும் நிலத்தானம் வழங்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் பட்டு விட்டது. இங்கு "வெற்றியை ஈட்டிக்கொடுத்த' என்ற பதமானது போர்த்துக்கேயர் கடைப்பிடித்த சண்டை பற்றிய நிலைப் பாட்டில் கண்டி இராச்சியத்திற்கெதிரான கொள்கையையே வெளிப் படுத்தி நின்றது. இதேபோன்று பெற்றோரை உற்றோரை இழந்த அநாதைப் பெண்களைத் திருமணம் முடித்த போர்த்துக்கேயப் போர் வீரர்களையும் 'அவ்வெற்றியை ஈட்டிக்கொடுத்த' என்ற தொடர் குறிப்பிட்டு நின்றமையும் நோக்கத்தக்கது. இதனூடாக சிங்களக் கிறிஸ்தவர் என்றோர் வகுப்பினர் உருவாக போர்த்துக்கேயர் காரணமாக இருந்தனர். இத்தகைய எல்லா வகுப்பினரும் இத்தீவிற்குள் ஒன்றாக வாழ்க்கை நடாத்துவதற்கு பணிக்கப்பட்டிருந்தனர் அல்லது பணித்திருந்தனர் என்பதே போர்த்துக்கேயரின் யதார்த்தமாக இருந்தது.
போர்த்துக்கேயர்கால இலங்கையில் அதன் நிருவாக நடைமுறைகளுள் பல மாற்றங்ளைப் Fவிரையர் புகுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
155

Page 81
அவற்றுள் நிலவரிக் கொள்கை தொடர்பான முக்கியமான ஒரு அலுவலக முகாமையை அவர் புகுத்தியிருந்தார். "வெடோர் - டா - வஸெடா" என்றழைக்கப்பட்ட நிலவரி முறைமை தொடர்பான அலுவலர் பதவி ஒன்றினையே போர்த்துக்கேயர் கால இலங்கையில் விரையர் ஏற்படுத் தினார். வெடோர் என்ற அலுவலர் நிலங்களைப் பதிந்து எல்லாக் கோறளைகளிலும் கிராமங்களிலும் உள்ள தோம்பு மரபுகளுக்கேற்ப கோட்டை இராசதானியின் வழமையான நிலவரிக் கொடுப்பனவுகள் பற்றிய அறிக்கையை அரசாங்கத்திற்கு வருடா வருடம் வழங்கி வரவேண்டும் எனப் பணிக்கப்பட்டார். நிலத்தினுடைய சொந்தக்காரர் பெயர், அந்நிலத்தின் பெயரால் வழங்கப்பட வேண்டியிருந்த வரியின் அளவு ஆகியன பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டன. இதே போன்று போர்த்துக்கேயர் காலத் தொடக்கத்திலிருந்து ஆள்பதிகள், படைத் தளபதிகள், அரசப் பிரதிநிதி ஆகியோரால் வழங்கப்பட்ட நிலக் கொடைகள், கிராமக் கொடைகள் பற்றிய விபரங்களும் தோம்பில் பதியப் பட்டன. இவ்வாறான பதிவு பற்றிய விபரங்களுள் அவ்வவ் உத்தியோகத்தர் களது விருதுப் பெயர்களும் (Titles) உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் உச்சவிளைச்சலை வழங்கும் ராஜ கிராமங்களும் கோவில் நிலங்களும் தெஸ்பென்ஸ் (Despenas) எனக் குறிக்கப்பட்டன. சாலிய என்ற கறுவாப்பட்டை உரிக்கும் வர்க்கத்தினர் வாழ்ந்த பெலித் தொட்ட(ம்) (வெலித்தறை) கொஸ்கெர (கொஸ்கொட) ஆகிய கிராமங்கள் வேறு எந்தவிதமான பரவல் பற்றிய குறிப்புக்களிலும் உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. முன்னைய சிங்கள அரசர் பாரம்பரியத் தில் தொழிற்பட்டிருந்தமை போன்றதொரு நிலைக்குள் எல்லா வகையான ராஜகிராமங்களையும் போர்த்துக்கீசர் காலக் கோட்டை இராசதானியில் போர்த்துக்கேய முகாமை உபயோகித்திருக்கவில்லை என்பதும் புலனா கின்றது. இலங்கை வெற்றி கொள்வதற்காக மட்டுமே அவ்வாறான சில கிராமங்களை சிங்கள மன்னரின் வழமைப் பிரகாரம் பரிபாலித்திருந் தனர், அல்லது மரபுமுறைப்படியான முக்கியத்துவத்தினைக் கொடுத்திருந் தனர் எனலாம். சிறுசிறு அளவான கிராமங்களை போர்த்துக்கேயர் தமது படையணியில் இணைந்திருந்த சிங்கள வீரர்களுக்கே மானியமாக வழங் கினர். குறிப்பாக சிங்கள முதலியார்கள், ஆராய்ச்சிமார் லஸ்கரின்கள் ஆகியோருக்கே அவ்வகையான கிராமங்கள் மானியமாக வழங்கப் பட்டிருந்தன. ஆனால் இலங்கை மானியத்தாரகர்கள் முன்பு சிங்கள மன்னர்களுக்கு பாரம்பரியமாக வழங்கி வந்த விசேட கொடுப்பனவுகளைத் தொடர்ந்தும் போர்த்துக்கேய அரசுக்கும் அக்கிராமங்கள் தொடர்பாக
156.

வழங்கி வந்தமையைக் காணமுடிந்தது. இவர்கள் எல்லோரும் தத்தமது குடும்ப அங்கத்தினர்களுடன் கோட்டையரணுக்குள்ளேயே வாழ வேண்டிப் பணிக்கப்பட்டனர். சிங்கள பங்குகாரய அல்லது பயிர்ச் செய்கையிலிடுபடுவோர் எவ்விதத்திலும் அவர்களுடைய வாழ்க்கைப் போக்கில் இடையீடு செய்யப்பட்டிருக்கவில்லை, விதிவிலக்காக அத்தகையோருக்கு பயிர்ச்செய்கை நிலம் போதாமல் இருந்த காலத்தில் அவர்களது வாழ்க்கைப் போக்கில் சில இடையீடுகள் ஏற்பட்டிருக்கத்தான் நேர்ந்தது. சிங்களக் கிறிஸ்தவர்களும் மானியத்தாரர்களாக விளங்கினர், இவர்களும் பாரம்பரிய வரிக்கொடுப்பனவைப் போர்த்துக்கீச அரசுக்குச் செலுத்த வேண்டியிருந்தது.
போர்த்துக்கேய அரச முகாமையின் கீழ் மானியங்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டோர் யாபேருமே உரிமப்பணம் (quit-rents) செலுத்த வேண்டிய நிலையில் காணப்பட்டனர். அத்துடன் எஸ்பிங்காடர்ஸ் (espingardes) என்றழைக்கப்பட்ட சிறப்புப் படைக்கான போர்வீரர்களையும் பராமரிக்க வேண்டியிருந்தது. நிலத்தினை மானியமாகப் பெற்றவர்கள் தமது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக அவற்றை அனுபவிக்க முடியும் என ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் மானியமான அந்நிலவுரிமமானது பெண்வழியாகவே நீடித்துச் செல்லப்பட்டமையைக் காணமுடிந்தது. காரணம் அப்பெண்வழி வந்தவர்கள் திருமணம் முடிக்கும் கால எல்லை வரைக்கும் வாடகைக்கு போர்வீரர்களை அமர்த்தி, அரசுக்கான தமது கடமையுணர்வை நிறைவேற்றுபவர் களாக விளங்கி வந்தமையினாலாகும். கிறிஸ்தவ நிறுவனங்களுள், சிங்கள நிலதாரிகளும் போர்த்துக்கேய அரசின் நன்நம்பிக்கை - மகிழ்வு நிலப்பாட்டின் பின்னணியில் அளிக்கப்பட்ட மானிய உரிமத்தை அனுபவித்தனர். இவ்வாறான உரிமத்தினுடைய பராதீனப்படுத்தலுக்காக ஒவ்வொரு வருடமும் போர்த்துக்கல் மன்னனிடமிருந்து மேலரணையை இலங்கையின் போர்த்துக்கேய அரசப்பிரதிநிதி பெற்றுவந்துள்ள முறைமையையும் காணலாம். நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் நிலமானியம் தொடர்பான கொடையளிப்புக்கள் அந்நிலம் தொடர் பான தோம்பு மற்றும், உரிமவரி வரம்பு விதிப்பின்றி நடைமுறைப் படுத்தியதைக் காணமுடிந்திருக்கவில்லை.
போர்த்துக்கேயர் கால நிலக்கொள்கை தொடர்பாக போர்த்துக்கேய நிர்வாக முகாமைத்துவத்தில் யுன்ந்தா (Junta) என்றொரு மூன்று அங்கத்தினர்களை உள்ளடக்கிய அவை Fவிரையருக்கு ஆலோசனையை வழங்கியிருந்தது. அதில் இலங்கையின் போர்த்துக்கேயப் படைத்தளபதி, வெடோர், மற்றும் கொச்சின் பேராயர் ஆகியோர் அங்கம் வகித்திருந் தனர். இவர்கள் மூவருமே இணைந்து அரசவேலைக்கு விசுவாசமாக
157

Page 82
ஏற்கனவே விதந்துரைக்கப்பட்ட தத்தமது கடமைகளுக்கு வரமறுத்தவர் களையும், சமூகமளிக்காதவர்களையும் இனங்கண்டு நிலத்தை மானியவடிப்படையில் பகிர்ந்து கொடுக்கின்ற வரன்முறை வரம்பினைத் தீர்மானித்தனர். அந்த வகையில் இலங்கையின் நிலக்கொள்கை மீதாகக் கொச்சின் பேராயர் முடிவு எடுத்துக்கொள்கின்ற அதிகாரத்தினைப் பெற்றிருந்தமையையும் போர்த்துக்கேயர் கால இலங்கையில் காணமுடிந்தமை குறிப்பிடத்தக்கது. (அவ்வழியே சமகால கேரள மாநிலத்து பண்பாட்டு விழுமியங்களும் போர்த்துக்கேயர் கால இலங்கையின் சமூக, பண்பாட்டியலில் தாக்கம் செலுத்தத் தவறவில்லை.)
Fவிறையர் தனது பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக இரு செயலர் களை நியமித்திருந்தார். அவர்களுள் முதலாமவர் பெயர் பெளலோ கர்வலோ மற்றவர் பால்தஸர் மரின்கோ ஆவார். தோம்பு தயாரிக்கும் பணியில் இவ்விரு செயலர்களுக்கும் அத்தியாவசியமாகத் தேவைப் பட்டிருந்த அம்சமானது பாரம்பரிய வழக்காறுகள், நிலத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பாகக் கொண்டிருக்கக்கூடிய அறிவுசால் சிங்கள குறுநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத் தர்களான கணக்கப்பிள்ளை (Kanakapules & Mohotallas) மற்றும் முகாந்திரங்கள் ஆகியோர் ஆவர். இவர்களை போர்த்துக்கேய மன்னன் லெற்றடோஸ் (Learned Men) எஸ்கிறைவாஸ் (Recorders) எனத் தனது கடிதப்பரிமாற்ற ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தமையைக் காணலாம். றிபைறோவின் குறிப்பின் பிரகாரம் அசிவிடோ கோட்டையில் 1597இல் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின்னர், உடனடியாகச் செய்த 35(Trifuulub GavesLibLógS) (Lekam miti - Land Rollis) 6 TGö7p60opj:35L'illu". Gg57Tb மீதி மற்றும் சேவைகளைக் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை உள்ளடக்கிய அருஞ்சேகரிப்புக் களஞ்சியமொன்றை (Arehives) உருவாக்கியமை யாகும். இக்களஞ்சியமானது ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள கிருகஸ்பதி யினால் செலுத்த வேண்டியிருந்த நிலவரி தொடர்பான விபரங்களை உள்ளடக்கியிருந்த அதே வேளையில், அவற்றைப் போர்த்துக்கேய மொழிக்கும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு, அவ்வாறான மொழிமூல ஆவணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கியது.
கி.பி. 1612ஆம் ஆண்டு (டிசெம்பர் மாதம்) வரைக்கும் இலங்கையின் ஆள்பதியாக விளங்கிய அசவிடோ தயவாகவும், அதே நேரத்தில் பயமுறுத்தலின் அடிப்படையிலும் எஸ்கிரிவாஸிடம் (Recorders) இருந்திருக்கக்கூடிய பதிவு ஆவணங்களைக் காட்டுமாறு வற்புறுத்தினான். போர்த்துக்கல் அரசனுக்கு அவனால் எழுதப்பெற்ற கடிதம் ஒன்றில் தன்னிடமிருந்த எல்லா வகையான எழுத்தாவணங்களும் வெடோரிடம்
158

கையளிக்கப்பட்டு விட்டன எனவும், அவையாவும் வெடோரிடம் பத்திரமாக இருந்தன எனவும், ஆனால் சில போர் நடவடிக்கைகளின் போது அவற்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமையை அறியமுடிகிறது. தோம்புப்பதிவு களினூடாக இன்னொரு நிலையில் வேறு சில பிரச்சினைகளும் எழாமலில்லை. அதாவது கோவாவிலிருந்து வந்த ஜேசு சபையானது இத்தோம்புப் பதிவுகள் ஊடாக நகரபிதாக்களிடமிருந்தும், அள்வராவிட மிருந்தும் (City Fathers & Alvara) தண்டமாக வருமான ஈட்டத்தினை குறிப்பாக கிராமங்களினது வருமானங்களை தம்வசப்படுத்துவதற்கேற்ற வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது. இக்கால கட்டத்தில் 62 கிராமங்களும், அவற்றினூடாகப் பெறப்பட்ட 500 பறடோஸ் வருமான ஈட்டமும், பெரியதும் சிறியதுமான 16 முடிக்குரிய கிராமங்களையும் கோட்டை யரசில் ஜேசு சபை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோம்புப் பதிவுக் காப்பகங்களுடன் தொடர்புபட்ட வகையில் கணக்கப்பு (பி) ஸ்ளே (ளை) என்றவொரு உத்தியோகத்தரும் மிகவும் நெருங்கிய வகையில் தொழிற்பட்டிருந்தார் என அறிகின்றோம்.
கணக்கப்பிள்ளை என்று அழைக்கப்படுபவரே ஒவ்வொரு கிராமத் திற்குரிய - ஒவ்வொரு கிராமத்திலுமுள்ளே தோம்பு ஆவணங்களுக்குரிய பாரம்பரிய முறைவழி வந்த பாதுகாப்பாளராகும். நீர் கொழும்புத் துறைமுகப் பரப்பிற்குப் பொறுப்பான சிங்கள மன்னனது கணக்குப் பிள்ளை இறந்துவிட்டமை காரணமாக அத்துறைமுகப் பிரதேசம் தொடர்பான தோம்புப் பதிவுகள் நிர்வாக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட முடியாதிருந்தது. டொம்டியோகோ என்ற கணக்குப் பிள்ளையை கொலை செய்விக்கப்பட்டமை காரணமாக களுத்துறைப் பிரதேசத்தின் பழைய, புதிய தோம்புப் பதிவுகள் திடீரென மறைக்கப் பட்டுவிட்டிருந்த சம்பவத்தையும் வரலாற்றில் காண்கின்றோம். முனிஸ்வரத்திற்குப் பொறுப்பாக விளங்கிய கணக்கப்பிள்ளையான டொம் ஜெரோனிமோ என்பவர் பாதுகாக்து வைத்திருந்த தோம்புப் பதிவுகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே 100 வருடங்கள் பழமை வாய்ந்தனவாக நகரின் (Port) விபரங்களை உள்ளடக்கிய தோம்புப் பதிவுகளுக்குப் பொறுப்பாக விளங்கிய கணக்கப்பிள்ளை மழவர் மரபில் (தமிழர் மரபில்) வந்த ஒருவராக எடுத்துக் காட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சிலாபத்துறை தொடர்பான பல ஒலை ஆவணங்கள் கங்கார ஆராய்ச்சி யின் புரட்சி - கலவரங்களின் போது அழிக்கப்பட்டு விட்டிருந்த செய்தியையும் மனங்கொள்ளலாம். w
1.59

Page 83
யாழ்ப்பாணத்தில் தோம்பும் பதிவுகளும், நிலவருமான வகையீடும்:
யாழ்ப்பாணத்தின் மீது போர்த்துக்கேயர் அமுல் செய்த நிலவரிக் கொள்கையானது மிகவும் விசாலமானதாகவும், வருமானம் தரும் பிரதான ஊடகமாகவும் அமைந்திருந்தது. கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட நிலங்கள் தொடர்பாக அவர்கள் கடைப்பிடித்த வரிக்கொள்கையிலிருந்து யாழ்ப்பாண நிலவரிக்கொள்கை மாறுபட்டே அமைந்தமை குறிப்பிடத் தக்கது. காரணம் கோட்டை இராச்சியத்து நிலப்பரப்பானது இலங்கையில் போர்த்துக்கேயரது ஆதிக்க நிலையை தக்கவைத்துக் கொண்டிருந்த ஒர் அலகாகக் காணப்பட்டிருந்தது என்பதனாலாகும். யாழ்ப்பாணத்து நிலப் பரப்பு அவர்களுக்கு அவ்வாறான ஒரு நிலையை (Anchoring Portuguese Power) ஏற்படுத்தவேண்டிய தேவையை ஈட்டிக்கொடுக்கவில்லை. ஆதலினாலேயே கோட்டை இராச்சியத்தின் மீதாக போர்த்துக்கேயர் கடைப்பிடித்த நிலவரிக்கொள்கை முறையிலிருந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதான அவர்களது நிலவரிக் கொள்கை வேறுபட்டு அமையக் காரணமாகியது.
1619இல் பிலிப் - டீ - ஒலிவீரா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியவுடன் முதலில் செய்த பணி யாழ்ப்பாணத்து இராச்சி யத்தைச் சேர்ந்த முதலியார்மார்களை எல்லாம் அழைப்பித்து இந்த இராச்சியத்திற்குரிய வருமான மூலங்கள், அளவு, செலவு பற்றிய விடயங் களடங்கிய அறிக்கையொன்றை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டமையாகும். அக்கோரிக்கைக்கேற்ப முதலியார்மாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விபரம் பின்வருமாறு அமைந்தது.
“யாழ்ப்பாணப்பட்டினத்து இராச்சியத்தின் முதலியார்களாகிய நாம் உறுதிப்படுத்துவதாவது இப்பேரரசிலுள்ள நிலப்பரப்பிலிருந்து ஒவ்வொரு வருடா வருடமும் 9,400 பட்டோஸ் (Pardaos) பணம் பெறுமதியான வருமானத்தை மழைவீழ்ச்சிகூடிய காலங்களில் சேகரித்துப் பெற்றுமுடிக்கு வழங்கப்படுவது வழமைப்பிரகாரமாகும். இத்தொகையில் 2800 பர்டோஸ் பெறுமதியான பன்ம் முதலியார்களுக்கும் ஆலயங்கள் மற்றும் பிரமுகர் களுக்கும் வழங்கப்படுவதுடன், 1200 பர்டோஸ் பணம் உபகாரச் சம்பள LDT356/ub (Tribute payment for pareas) 4500 uj6LTGń) LIGOOTLb GUGńsffsörö6ir மற்றும் உள்ளூர் போர் வீரர்களுக்கும் சம்பளமாக வழங்கப்படுவதும் வழமை என இத்தால் உறுதி செய்கின்றோம். மேலும், தஞ்சூர் நாயக்க மன்னனால் யாழ்ப்பாணப் பேரரசனுக்கு வழங்கப்பட்ட "மதல கொட்ட" (madala Cotta) என்றொரு கிராமத்திலிருந்து வருடாந்தம் 1500 'பர்டோஸ்" பணம் வருமானமாக ஈட்டப்பட்டது. கடற்கரைத் துறைமுகங்களில்
160

இருந்தும், படகுப் போக்குவரத்துச் சேவையிலிருந்தும் வருடம் தோறும் கிட்டத்தட்ட 200 பர்டோஸ் வருமானம் கிடைக்கப்பெற்றது. இத்தோடு இப்பேரரசின் அடித்தளமாக விளங்கும் வேறு சில துறைகளிலிருந்தும் வருடாந்தம் அண்ணளவாக 500 பர்டோஸ் பணம் கிடைத்து வருகின்றது, யானைகளை காட்டில் இருந்து பிடித்து ஏற்றுமதி செய்வதன் மூலமும் வருமானம் கிடைத்து வருகின்றது. ஆனால் அவ்வருமான ஈட்டம் நிச்சய மற்றதாக உள்ளது. ஏனெனில் யானையைப் பிடிப்பதும் நிச்சயமற்றதாக இருப்பதனாலாகும். இப் பேரரசில் பிங்கோஸ் (Pingos) மூலம் வருடாந்தம் அண்ணளவாக 100 பரடோஸ் பண வருமானம் கிடைத்து வருகின்றது.
எம்மால் மேலே சொல்லப்பட்ட யாவும் உண்மையானவை எனப் பிரகடனப்படுத்துகின்ற அதேவேளை இத்தீவின் தலைமைத் தளபதியான பிலிப் டீ ஒலிவீரா அவர்களுக்கு இவ்வறிக்கையை அனுப்பி வைக்கின் றோம். எம்மால் கையெழுத்து இடப்பட்டதும், மன்னார்க் கோட்டையின் நீதி - நிர்வாக செயலரான கெளரவ உத்தியோகத்தர் அவர்களால் உருவாக்கப்பட்டதுமான இவ்வறிக்கை மானாதுங்கே முதலியார், பூநர்க்க முதலியார் 1619ஆம் ஆண்டு யூன் மாதம், 7ஆம் நாள் மானுவல் - டீ - அத்தாடே கவலகோன் முதலியார், எஸ்தே வாஸ் டீ சுங்கா ஆகியோர் களால் வாசித்து விளங்கப்படுத்தப்பட்டது.”
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கு நிலவியிருந்த நிலம் - உற்பத்தி - வருமான ஈட்டம் என்பவை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமுகமாகவே டீ - ஒலிவீராவினால் தோம்புபற்றிய விபரங்கள் கோரப்பட்டது. கிடைக்கப்பெற்ற தோம்புகள் அன்றைய யாழ்ப்பாணத்தின் வருமான ஈட்டத்திற்கும் ஆட்சியாளருக்கும் இடையே இருந்திருக்கக்கூடிய தொடர்புகளை எடுத்துக்காட்டின. அவற்றின் படி யாழ்ப்பாண இராச்சியத்தில் நிலவிய நிலமானிய மூறைமை யானது சமகாலத்தில் கோட்டை இராச்சியத்தில் நிலவிய நிலமானிய முறையின் தன்மைகளைவிட மிகவும் குறைந்தளவிலேயே காணப் பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் யாழ்ப்பாண அரசினைப் பாதுகாத்த அரச பாதுகாப்புப்படைகளுக்கான கொடுப் பனவுகள் நிலம் போன்ற கொடைகளால் வ்ழங்கப்பட்டிருக்காத தேயாகும். பெருமளவிற்கு மாதவேதனமாக பணம்பட்டுவாடா மேற்கொள்ளப் பட்டிருந்தது. யாழ்ப்பாண அரசுப் பரப்பிற்குள் காணப்பட்ட இந்துக் கோயில்களுக்குக் கூட பெரியளவில் நிலச் சொத்துடமை வழங்கப் பட்டிருக்கவில்லை. ஒட்டு மொத்தமாக அரசு இயந்திரம் முதற்கொண்டு சகல நிர்வாக, சேவை ஊழியர்களுக்கான ஊதியம் பணமாகவே வழங்கப்பட்டு வந்த மரபினை காணமுடிந்தது.
167

Page 84
யாழ்ப்பாணம் மீதாக போர்த்துக்கேயர் கொண்டிருந்த வருமான வரிவிதிப்பு தொடர்பான கொள்கையில் இரண்டு பிரதான கட்டங்கள் காணப்பட்டிருந்தன. ஒன்று, யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட காலத் தில் இருந்து 1624 வரைக்கும் லிஸ்பனும், கோவாவும் இவ்விராச்சியத்து நிர்வாகம், மற்றும் அதிகாரிகள் தொடர்பாகக் கொண்டிருந்த நிருவாக வரிக்கொள்கை முறையாகும், இரண்டு 1624இலிருந்து ஒல்லாந்தரது ஆட்சி தொடங்கும் வரைக்குமுள்ள காலகட்டத்தை, உள்ளடக்கிய தோம்புப் பதிவுக்காலத்து வருமானவரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்ட காலகட்டமாகும். முதலாவது கட்டத்தின்போது, யாழ்ப்பாண இராச்சியத்து நிர்வாகிகள், மற்றும் ஆலய அதிகாரிகள் யாவரும் கோவாவிலிருந்தும், லிஸ்பனிலிருந்தும் வரும் ஆணைகளுக்கு பணிந்து, ஒழுக வேண்டியிருந்தது. மிகவும் கட்டுமட்டான ஓர் வரையறைக்குள் உட்பட்ட வகையில் இவ்வதிகாரவரம்பு செயற்படுத்தப்பட்டது. 1619இல் கோவாவில் கூடிய வருமானச் சபையானது (Revenue Council) யாழ்ப்பாணத்திலிருந்து சேகரிக்கப்பட வேண்டியிருந்த வரிகள் தொடர்பான விதிமுறைகளைத் தயாரித்திருந்தது. சுதேச அரசமரபிலிருந்து எந்தவிதமானவொரு வரிசேகரிப்புச் சம்பந்தமான சட்டதிட்ட வரையறைகள் எவையும் கோவாவிற்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. போர்த்துக்கேய ஆள்பதியினால் வரிசேகரிக்கின்ற பணியில் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தும் வரைக்கும் சுதேச மன்னர் பாணியிலேயே யாழ்ப்பாண இராச்சியப்பரப்பில் வரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன. 1622 இலிருந்து லிஸ்பன் மேலிடம் ஆணையிட்ட அடிப்படையில் யாழ்ப் பாணத்தில் சேகரிக்கப்பட்ட வரிகள் அளவு உயர்த்தப்பட்டது என்பது தெளிவாகின்றது. உயர்த்தப்பட்ட வரியின் அளவு ஒருவேளை போர்த்துக் கேயர் காலத்தேவையை, சுதேச மன்னரைப் போன்று, ஈடுசெய்திருக்கக் கூடியவகையில் மதிப்பீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டது எனலாம். குடியேற்ற நாட்டு நிர்வாக முறையில் செலவீனங்களை விதிக்கப் படும் வரிமுறையின் அளவே ஈடுசெய்ய வேண்டும் என போர்த்துக்கேயர் கருதியிருந்தனர் போலும், யாழ்ப்பாண இராச்சியத்து இராணுவப் பாதுகாப்புச் செலவீனம் மட்டுமல்ல நிர்வாக வருமானவரி இலாகாக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தருக்கான மாதவேதனம், இந்து சமயத்தி லிருந்து கத்தோலிக்க மதத்திற்கு மாற்றம் பெற்றுக் கொண்டவர்களுக்கு மான செலவீனம் போன்றவற்றை ஈடுசெய்யுமுகமாக இம்முதலாவது கட்ட வருமானவரிச் சேகரிப்புக்கள் அமைந்தன. கோட்டையரசில் நடைமுறைப் படுத்தப்பட்ட வண்ணம், யாழ்ப்பாண அரசிலும் கோயில் நிலங் களிலிருந்து பெறப்பட்ட நிலவருமானம் கத்தோலிக்க தேவாலய சமய நிர்வாக நடவடிக்கைகளுக்காகச் செலவீடு செய்யப்பட்டது. மிகுதியான
162

நில - பரப்பிலிருந்து வருடந்தோறும் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமான மானது அரச பாதுகாப்பு - இராணுவ நடவடிக்கைகளுக்கும், நிர்வாக உத்தியயோகத்தருக்கும் வேதனமாக வழங்குவதற்குப் போதியதாக அமைந்தது.
இரண்டாம் கட்ட நிதிக்கொள்கை சம்பந்தமாக நோக்கும் போது, யாழ்ப்பாணத்தில் சேகரிக்கப்பட்ட வரிகள் யாழ்ப்பாண இராச்சியத்தின் நிலப்பரப்பிற்கும் வெளியே உள்ள தேவைகளை நிறைவு செய்வதற் காக சேகரிக்கப்பட்டவற்றைக் காண்கின்றோம். இக்காலகட்டத்தில் அம்பிரோசியோ டீ விரைய்ராஸ் டா கமரா என்பவனே இக்காலத்தில் வகுக்கப்பட்ட புதிய வரிவிதிப்புக் கொள்கையின் மூல காரணர் ஆவர். இவரால் தொடக்கி வைக்கப்பட்ட அக்கொள்கை, பின்னர் இவரைத் தொடர்ந்து வந்த நிதி நிர்வாகிகளான அமரோ ஹொட்ரிகோஸ், டொம் - பிலிப் - மஸ்கரென்கஸ் ஆகியோரால் முன்னெடுத்து வளர்த்துச் செல்லப்பட்டது.
முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தோம்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தராகத் தொழிற்பட்டிருந்தவர் அம்பிரோசியோ - டீ - விரைய்ராஸ் - டா - கமரா என்பவரேயாவர். 1623 ஜனவரியில் அவரது முதலாவது வருகையாக யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்தபோது தோம்பு தயாரிக்கும் ஆரம்பகட்ட வேலைகள் யாவற்றையும் நிறைவு செய்திருந்தார். பின்னர் அவரது இரண்டாவது வருகையின் போது (1626 - 27) வருமானவரி இலாகா ஒன்றை உருவாக்கியதோடு, முதலியார் என்ற உத்தியோக முறையை நிறுத்திய கையோடு அதிகார் என்ற பதவிக்கு நிகரான போர்த்துக்கீச அதிகாரியாக "றெசெபெடோர்" என்ற உத்தியோகத்தருடைய பணியாக வரிசேகரிக்கும் பணியாளருடைய பதவியை அவ்வருமான வரி இலாகாவுடன் இணைத்து வைத்தார்.
அம்பிரோசியோ - டீ - வ்ரைராஸ் ட - கமராவின் பணிகள் :
யாழ்ப்பாண இராச்சியத்திற்கான இவரது முதலாவது வருகை ஏப்ரல், 1623இல் ஆரம்பமானது, அவரது தோம்பு தயாரிக்கும் முதலாவது முயற்சியுடன் யாழ்ப்பாணத்தில் வருமானவரியின் அளவும் உயர்த்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வ்ரைராஸ் தன்னளவில் குறிப்பிடும் போது 12,000 ஸெரவின்ஸ் பணத்தினை மேலதிக வரியாக ஈட்டிக் கொண்ட முறையாகக் காட்டுகின்றார். ஆனால் வேறொரு தனித்துவம் வாய்ந்த மூலாதாரம் வாயிலாக அறிய முடிவது ஏப்ரல், 1624இல் இருந்து ஏப்ரல்,1625 வரைக்குமுள்ள காலகட்டத்தில் 13,830 பாடோஸ் பணம் வருமான வரியாகப் பெற்றுக் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிடுவதனைக்
63

Page 85
காணலாம். இருந்தும் ஏப்ரல் 1624க்கும் முற்பட்ட மூன்று வருட காலப் பகுதிக்குரிய வரிச்சேகரிப்பாக கிடைத்தது 9800 பரடோஸ் ஆகும். ஆகவே வருடாந்தம் 4000 பரடோஸ் மேலதிக வருவாயாக கிடைக்கப்பெற்ற செய்தி இங்கு உறுதிப்படுத்தப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தின் வருடாந்த வரி ஈட்டத்தின் 40 சதவீதமாகும். அதிகரித்து வந்த வரி ஈட்டத் தில் 35 சதவீதமானது முதலியார்களது சம்பளமாக வழங்கப்பட்டுவிடும். (இதில் மடலகொட்டா கிராமத்திலிருந்து ஈட்டப்பெறும் 1500 பரடோஸ் வருமானமானது பிரத்தியேகமானதாக, முதலியார்களது சம்பளக் கொடுப்பனவிற்குள் அடக்கப்படாததாக குறிக்கப்பட்டமையைக் காணலாம்.)
வ்ரைராஸினுடைய யாழ்ப்பாணத்திற்கான இரண்டாம் கட்ட வருகையின் போது (1626-27) யாழ்ப்பாண இராச்சிய நிலப்பரப்பினூடாக மேலதிக வருமான ஈட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை வடிவமைத்திருந்தார். அத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட வருமானவரி இலாகா என்ற அரச நிர்வாக அலகொன்றின் வாயிலாக வரிசேகரிப்பு முறையைத் தொடங்கி வைத்தார். மற்றைய இரு திட்டங் களுள் ஒன்று யாழ்ப்பாணத்திலுள்ள பனை வளத்தினை அடிப்படை வருமான ஈட்டத்திற்குரிய மூலமாகக் கொண்டு அவற்றிலிருந்து வரியை அறவிடுவது, மற்றையது அரசாங்க செலவு விரயத்தினைத் திட்டமிட்டுக் குறைத்து விடுவது ஆகும். ஒவ்வொரு குடியானவனுக்குமுரிய குறிப்பிட்ட எண்ணிக்கையை உடைய பனைமரங்களைத் தவிர்த்தி, அதிகரித்து வரும் மிகுதிப் பனைமரம் ஒவ்வொன்றுக்கும் குடியானவனிடமிருந்து வரியைப் பெற்றுக் கொள்வது என்ற முடிவு போர்த்துக்கேய அரசிற்குரிய வருமான ஈட்டத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பினைக் கொடுத்தது. இதே போன்று யாழ்ப்பாணத்து இராச்சிய வெற்றியின் பின்னர் மன்னார்ப் பிரதேசத்திலிருந்த போர்த்துக்கேயரது அலுவலகம் மேலதிக செலவீனத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற தோரணையில் சிந்தித்ததன் காரணத்தினால் வ்விரைராஸ் அந்த அலுவலகத்தினை மூடிவிடும்படி போர்த்துக்கேய நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார். வ்விரைராஸி னுடைய பொருளியல் வள அதிகரிப்புக்கான விதப்புரைகள் 1626 - 27 ஆம் வருடங்களில் இருந்து அடுத்த 7 வருடங்களுக்கு ஒரு சிறியளவிற்கு மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தன. அன்ரோனியோ பொக்காறோ என்பவர் 1634இல் இந்தியாவில் தனது பிரதிநிதித்துவத்தின் பதவிக் காலத்தை முடிக்கும்தறுவாயில் யாழ்ப்பாணத்தின்வரியீட்டமானது 14,750 பர்டோஸ் ஆகக் காணப்பட்டது. 1624 - 25இல் 13,830 பர்டோஸ் ஆக இருந்த வரியீட்டமானது 9 வருடங்களின் பின்னர் 1000 பர்டோஸ்ஸுக்குக்
64

குறையாத படி உயர்ந்து சென்றது. இது யாழ்ப்பாண இராச்சியத்தின் மொத்த வரியீட்டத்தில் 6 சதவீதமாகும்.
யாழ்ப்பாணத்தின் வருமான ஈட்டத்தினைப் பெருக்கிக் கொள்வதற்காக வ்விரைராஸ் விதந்துரைத்த மாற்றங்களானவை வெறுமனே அலங்காரத்துக் காக அமையவில்லை. அதனை 1622இல் லிஸ்பனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உத்தரவானது உறுதிப்படுத்தியது. அதாவது யாழ்ப்பாண இராச்சியப் பரப்பிற்குள்ளே அதன் நிர்வாக செலவீனங்களை ஈடுசெய்வதற் கேற்ற வகையில் போதியளவுக்கு உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதாவது எதிர்மறையாக எழுத்தில் குறிப்பிடப் படாத செய்தியாக நிர்வாக செலவீனங்களை சமாளிக்கும் விகிதாசாரத் திற்கும் மேற்பட்ட நிலையில், வருமான ஈட்டத்திற்கான உற்பத்தி அவசியமற்றது என்பதே அதுவாகும். யாழ்ப்பாணத்தின் வருமான ஈட்டம் அதிகரிக்கப்பட்ட நிலையில் 1624இல் வ்விரைராஸ் கோவா ஆள்பதிக்கு விதந்துரைத்ததாவது திருகோணமலையில் தம்மால் கட்டப்பட்ட கோட்டையின் பராமரிப்பு மற்றும் உருவாக்கத்திற்கு நேர்ந்த செலவீனங் களை யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் மேலதிக வருமான ஈட்டத் தினைக் கொண்டு நிறைவு செய்வதற்கான கோரிக்கையாக அமைந்தது. இக் கோரிக்கையானது கோவா ஆள்பதியினால் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னணியில் திருகோணமலைக் கோட்டையினது அமைவு, மற்றும் பராமரிப்புச் செலவீனங்களைத் தாங்குவதற்கான நிலையான கொழுகொம்பாக யாழ்ப்பாணத்தின் மேலதிக வருமான ஈட்டம் அமையப் பெற்றது. எனவே போர்த்துக்கேயர் கால யாழ்ப்பாண இராச்சியத்தின் நிலப்பரப்பிலிருந்து மேலதிக வருமான விளைச்சலை மேம்படுத்துவதற்கான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றி யிருந்தனர் என்பது தெளிவாகின்றது.
அமெளரோ ரோய்ஸ் :
வ்ரைராஸ்ஸினைத் தொடர்ந்து1630களின் பிற்பகுதியில் அமெளரோ ரோய்ஸ் என்பவனே வெடோர் டீ Eவஸன்டாவாக (தோம்புதோர் அதிகாரியாக) பொறுப்பேற்றிருந்த நிர்வாகப் பின்னணியில் மீண்டும் யாழ்ப்பாணப்பரப்பில் வருமானநிதியீட்டத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப் பட்டது. கோவாவிலுள்ள புராதனப் பதிவேட்டு பாதுகாப்பு மையத்திலுள்ள போர்த்துக்கேய - யாழ்ப்பாணத்து ஆவணங்கள் இவ்வருமான அதிகரிப்பு பற்றிய தகவல்களைத் தருவதனைக் காண்கின் றோம். 1640இல் யாழ்ப்பாணத்து வருமான அதிகரிப்பானது 20,000 - 22,000 பர்டோஸ் ஆகக் காணப்பட்ட முறைமையை அந்த ஆவணங்கள்
1.65

Page 86
சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அமெளரோ ரோய்ஸ் என்ற அதிகாரி எதிர்பார்த்திருந்த அதிகரிப்பானது வருடாந்தம் 18,000 பர்டோஸ் ஆகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிடைத்த 20,000 பர்டோஸ் வருமானமானது யானைகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை உள்ளடக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 1636 அளவில் மேலும் இரண்டு வகையான பொருட்களுக்கு வரிவிதிக்கப்பட்டு மேலதிக வருமானம் ஈட்டப்பட்டது. புகையிலைக்கும், மதுபானத்திற்கு மான வரிமுறையே அவ்வாண்டில் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. விசேடமாக புகையிலைப் பயிர்ச்செய்கைக்கு விதிக்கப்பட்ட வரியின் அளவே போர்த்துக்கேயமுகாமைத்துவத்தின் நிதியீட்டத்தினை அதிகரிக்கச் செய்திருந்தது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தோம்புப்பதிவுகள் 1645-46 இல் டொம் - Fபிலிப்- மஸ்கரென்காஸ் என்ற ஆள்பதியின் ஆட்சிக் காலத்தில் பூரணப் படுத்தப்பட்டிருந்தன. கொழும்பிலிருந்து கோவாவிற்கு உத்தியோக பூர்வமாகச் சென்றிருந்த சமயம் டொம் - Fபிலிப் - மஸ்கரென்காஸ் மேலுமொரு படிநிலை வளர்ச்சிக்கான யாழ்ப்பாணத்தின் வருமான ஈட்டத்திற்கான கொள்கைப் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டிருந்தான். அதன்படி வருடாந்தம் 28,000 யாழ்ப்பாண பர்டோஸ் வருமான உயர்வு கிடைத்திருந்தது. இது யானை வர்த்தகத்திலிருந்தும், மன்னார், வன்னிப் பிராந்தியங்களிலிருந்தும் கிடைத்த வருமான ஈட்டத்தினை உட்படுத்தாத வகையில் அமைந்த எண்ணிக்கையாகும். எனவே யாழ்ப்பாணத்தில் 1640இல் 40 சதவீத வருமான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தமை எடுத்துக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வருமான அதிகரிப்பினை நிலத்திற்குரிய வாடகை அடிப்படையிலேயே போர்த்துக்கீச நிர்வாகம் ஈட்டிக்கொண்டது. முதலியார்கள் சமர்ப்பித்த மனுவில் அதிகரிக்கப் பட்டிருந்த நிலவாடகை வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தமனுவில் 1619இல் ஈட்டியிருந்த வருமானம் 10,000 பர்டோஸ் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்துவந்த 25 வருட காலத்தில் இந்த வருமானம் 55 சதவீதம் ஆக அதிகரித்துக் காணப்பட்டது. இவ்வதிகரிப் பினை உழுது பயிரிடும் உற்பத்தி நடவடிக்கை மூலமே போர்த்துக்கேய நிர்வாகம் ஈட்டிக் கொண்டது. பயிர்ச்செய்கைக்குட்படுத்தப்பட்ட நிலம் யாவற்றிலிருந்தும் மிகவும் உயர்வான வாடகை வரி அறவீடு செய்யப் பட்டது. ஆகவே போர்த்துக்கேயர் கால வருமான ஈட்டம் அதிகரித்துச் சென்ற அதேவேளையில், யாழ்ப்பாணத்தில் பிரஜை ஒருவரின் தலா வருமானம் மிகவும் கீழ்நிலையை நோக்கியே சரிந்து சென்றமையைக் காண முடிந்தது. இது யாழ்ப்பாண இராச்சியத்து பிரஜை ஒவ்வொருவரும்
166

போர்த்துக்கேய நிர்வாக இயந்திரத்திற்காக அதிகளவு வரி செலுத்த வேண்டியிருந்த கட்டாய நிலை இருந்தது என்பதனை உறுதிப் படுத்துகின்றது. மறுவளமாகக் கோட்டை இராச்சியத்தைப் பார்க்கும் போது அங்கு விதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு நிலவருமான ஈட்டத்தைக்கூட ஒழுங்கான வகையில் போர்த்துக்கேயரால் சேகரிக்க முடியாதிருந்தது. காரணம் கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட போர்த்துக்கேயருக்கெதிரான தொடர்ச்சியான கிளர்ச்சிகளேயாகும். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் இங்கு வாழ்ந்த மக்கள் போர்த்துக்கேயரது வரிசேகரிப்புச் சதுரங்கத்தின் பிடிகாய் களாக ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கேயர் கால யாழ்ப்பாணத்தில் வருமான அதிகரிப்பிற்காக நோக்கப்பட்ட மற்றொரு வருமானம் தரும் ஊடகமாக சுங்கத்துறை முகங்கள் விளங்கின. சுங்கத்தீர்வைகள் மூலமாகக் குறிப்பிடக்கூடியள விற்கு வருமான ஈட்டத்தை போர்த்துக்கேய நிர்வாகிகள் பெற்றிருந்தனர். 1619இல் சுங்கத்தீர்வைகள் ஊடாக 200 பர்டோஸ் வருமானம் ஈட்டப்பட்டது. 1634இல் அவ்வருமானம் 600 பர்டோஸ் ஆகவும், 1645ல் 1200 பர்டோஸ் ஆகவும் அமைந்தது. ஆனால் இதே நேரத்தில் யாழ்ப்பாணத்துடனான வெளிநாட்டு வர்த்தகம் போர்த்துக்கேயர் காலத்தில் மிகவும் மந்தமான ஒரு நிலையிலேயே காணப்பட்டது. சுங்கத்தீர்வை மிகவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. துணிவகைகள் மீதான ஏற்றுமதி - இறக்குமதி தீர்வைக்கான முத்திரை மீதான வரி (Chapa) கடுமையாக்கப்பட்டிருந்தது. தரேஹா (taroga) என்ற வரிமுறை சுங்கத்தில் நடைமுறைப்பட்டிருந்த போதும் எத்தகைய பொருட்களுக்கான தீர்வை என்பது இன்னும் தெளிவாகவில்லை. 1634க்கும் 1645க்கும் இடைப்பட்ட காலங்களில் சபா தரேஹா என்ற சுங்கத்தீர்வை மூலம் 400 பர்டோஸ் இலிருந்து 700 பர்டோஸ் வரை வருமான ஈட்டம் கிடைத்தது. மேலும் சாயவேர் (Dye-roots) புகையிலை ஏற்றுமதியூடாகவும் ஏராளமான சுங்கத்தீர்வை போர்த்துக்கேய நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்றது. யாழ்ப்பாணத்தில் 1636இல் புகையிலைப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் ஏற்றுமதி அதிகரித்துச் சென்று, 1645இல் ஒர் உயர்ந்த நிலையில் 5,000 பர்டோஸ் வருமான ஈட்டம் சுங்கத் தீர்வையாகக் கிடைத்தது. இது மொத்த யாழ்ப்பாண வருமான ஈட்டத்தில் 20 சதவீதமாகக் காணப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
1640களில் யாழ்ப்பாணத்தின் வருமான ஈட்டமானது மிகவும் அதிகரித்துச் சென்றமை காரணமாக ஒரு புதிய நிர்வாக அலுவலகம்
167

Page 87
யாழ்ப்பாணத்திற்கெனத் திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே கொழும்பில் வெடோர் - டா - Fவசென்டா என்ற வருமானவரி இலாகா தனித்துவ மாக நிறுவப்பட்டவையையொத்து, யாழ்ப்பாணத்திலும் அவ்வருமானவரி இலாகா நிறுவப்பட்டது. 1619இல் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரால் வெல்லப்பட்ட பொழுது, கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த வெடோர் - டா - Fவசென்டா அலுவலகமே யாழ்ப்பாணத்தின் மீதான வருமானச் சேகரிப்பிற்கும் பொறுப்பாக விளங்கியது. 1646இல் யாழ்ப்பாணத்திற் கெனத் தனித்துவமான அலுவலகம் தேவை என சிபார்சு செய்யப்பட்டதன் பின்னணியில் கோவா ஆள்பதியின் ஒப்புதலுடன் 1646இல் யாழ்ப்பாணத் தில் அவ்வலுவலகம் நிறுவப்பட்டது.
I சமூக நிறுவனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :
இலங்கையில் 16ஆம் நூற்றாண்டிற்கு முன் தோற்றமளித்த ஓர் ஐரோப்பிய இனத்தினரின் புதிய வருகையானது அந்நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இலங்கைச் சமூக, மொழி, சமய பண்பாட்டுத் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாகியது. இருந்தும் நெஸ்ரோறிய கிறிஸ்தவ வணிக கணங்களின் செயற்பாட்டு நடவடிக் கைகள் தொடர்பாக அனுராதபுரத்திலும், யாழ்ப்பாணத்தில் கந்தரோடையிலும் தொல்லியல் எச்சங்கள் கிடைத்துள்ளன. அவை கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குரியனவாக காணப்படுவதிலிருந்து கிறிஸ்தவ வாணிபக் குழுவினரது நடவடிக்கைகள் கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது என்பதனை திட்டவட்டமாக உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இருப்பினும் கி.பி. 16ஆம் நூற்றாண்டிற்கு பின்பே கத்தோலிக்க கிறிஸ்தவ மத வருகையுடனும், அதன் பரவலுடனும் இலங்கைச் சமூகத்தில் நிறுவன ரீதியான மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்பட்டுக் கொள்வதனைக் காண்கின்றோம்.
“போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது, இந்து, பெளத்த மதங்கள் பற்றி அறியாதவர்களாகவே இருந்தனர். இவ்விரு சமயங்களின் வழிபாட்டு முறைகளையும் இழிவாக போர்த்துக்கேயர் இலங்கையரை அஞ்ஞானிகள் என அழைத்ததுடன் அம் மதத்தவரை தம் மதத்திற்குச் சேர்த்துக் கொள்வது தமது முக்கிய கடமை என்றும் கூறிக் கொண்டனர். இதன் மூலமாகத் தமக்கு அரசியல் இலாபமும் கிடைக்கும் என எண்ணினர். ஏனெனில் போர்த்துக்கேயர் அரசியலையும், சமயத்தையும் மிக நெருங்கிய தொடர்புடனேயே கணித்தனர். இங்கு அவர்களது சமயத்தைப் பரப்பு வதற்காக வந்த பிரான்சிஸ்கன் சபை, இயேசு சபை, டொமினிக்கன் சபை, ஒகாஸ்ரீனியன் சபை என்பன கத்தோலிக்க மதத்தினை இலங்கையில் நிலை நிறுத்தும் அடிப்படை நோக்கத்திலேயே இயங்கின."
168

சமயம் பரப்புவதில் போர்த்துக்கேயர் பெரும் இடையூறுகளைச்சந்திக்க வேண்டியிருந்தமையால் தமது திட்டங்களைச் சரியான முறையில் தொகுக்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. அதனால் கிழக்குப் பகுதிக்கான போர்த்துக்கேயரின் சமய நடவடிக்கைகளின் தலைமைப் பீடமான கோவாவில் 1567இல் ஒரு சபை கூட்டப்பட்டு, அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. மதம் மாறுதலின் போது பலாத்காரத்தைப் பிரயோகிப்பதில்லை எனவும், ஆனால் பிறசமயங்களின் பால் சகிப்புக் கொள்ளமுடியாது எனவும் தீர்மானித்தனர். பிற சமயங்களை வழிபடுபவர் களுக்கு எதிராக பலாத்காரத்தைப் பிரயோகிக்கலாம். அத்தகைய மதத்தலங்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் எனவும், அதில் ஆலோசிக் கப்பட்டது. அது மட்டுமல்லாது கிறிஸ்தவ மதமல்லாத பிரதேசங்களில் இந்து, பெளத்த குருமார்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அம்மதம் சார்ந்த நூல்கள் அழிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
"போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தவேளை அமைந்து காணப்பட்ட மூன்று இராச்சியங்களிலும் கோட்டை இராச்சியமே ஏனையவற்றிலும் பார்க்க மேலாண்மை பெற்று விளங்கியது. ஆரம்பத்தில் இவ்விராச்சியத் தின் சமயமாற்ற நடவடிக்கைகள் பிரான்சிஸ்கன் சபையின் தனியுரிமை யாகவும், பின்னர் இயேசு சபையினர், டொமினிக்கன் சபையினர், ஒக்ஸ்ரீன் சபையினர் போன்றவையும் தீவிரமாகச் செயற்பட்டதன் விளைவாக கத்தோலிக்க மதத்தை அரச மதமாக்க முடிந்தது.”
"1621 இல் பிரான்ஸிஸ்கன் சபையினர் மாத்தறைப் பகுதியில் 45 தேவாலயங்களைக் கட்டினர். 7ஆண்டுகளின் பின்னர் இது 54ஆக அதிகரித்தது. கோட்டை இராச்சியத்தின் மதத்துறையின் தலைமையாக "புனித அந்தோனியர்" தேவாலயம் விளங்கிற்று. 1628ஆம் ஆண்டில் 60,000 பேர் அங்கு மதம் மாற்றப்பட்டனர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கோட்டையில் டொமினிக்கன் சபையும், ஒகஸ்ரீன் சபையும் தொழிற்படவாரம்பித்திருந்தன, வென்தொட்ட அத்னகல, கொறன, றம்புகனை ஆகிய இடங்களில் தேவாலயங்களை நிறுவினர். 1630ஆம் ஆண்டில் இச்சபை 12 தேவாலயங்களைக் கட்டியது. 1628 இச் சபையில் 12 பேர் மட்டுமே சேவையாற்றி 650 பேரை மதமாற்றத்திற்கு உட்படுத்தியிருந்தனர். மொத்தத்தில் 1638இல் கோட்டையில் கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் ஒரு லட்சம் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கோட்டையில் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தளவிற்கு வெற்றி பெறுவதற்கு தர்மபாலன் மதம் மாறியமையும் அதனைத் தொடர்ந்து கத்தோலிக்கம் அரச ஆதரவு பெற்றமையும், அதனால் அங்கு வாழ்ந்த மக்களும்
169

Page 88
கிறிஸ்தவத்தில் இணைந்து கொண்டமையும் காரணங்களாக அமைந்து கொண்டன.
“யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேய மிஷனறிகளின் நடவடிக்கைகளை நோக்கின் 1579ஆம் ஆண்டு தொடக்கம் 1561ஆம் ஆண்டு வரையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களாக விளங்கிய சங்கிலி மன்னன் தொடக்கம் பிற்பட்ட மன்னர்கள் யாவரும் இந்துமதம் நிலைத்திருக்க யாழ்ப்பாணத்தில் இன்னோர் அந்நிய மதம் பரவுவதை விரும்பவில்லை. தென்னிந்தியாவில் பிரான்சிஸ்கன் சவேரியர் என்னும் மத குருவினால் ஏராளமானோர் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டிருந்தனர். இதனைக் கண்ட தென்னிந்தியத் தொடர்புடைய மன்னார் வாசிகளும் சவேரியரை வருமாறு அழைத்ததன் பேரில் சவேரியரின் சிஸ்யன் மன்னாருக்கு அனுப்பப்பட்டார். அவர் மன்னாரில் மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான இந்துக்களை கிறிஸ்தவ மதத்தின் பால் ஈர்த்தார். இதனையறிந்த சங்கிலி மன்னன் மன்னாருக்கு ஒரு படையை அனுப்பி வயது, பால், வேறுபாடின்றி மதம் மாறிய 600 பேரைக் கொலை செய்வித்தான். கிறிஸ்தவ மதம் பரவுவதை சங்கிலி மன்னன் மிகத் தீவிர மாகத் தடுத்த போதும் 1591இல் எதிர்மன்னசிங்ககுமாரன், பரராசசேகரன் ஆகியோர் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து பிரான்ஸிஸ்கன் சபையைச் சார்ந்த குருமார் யாழ்ப்பாண இராச்சியத்தினுள் நுழையத் தொடங்கினர். அங்கு தலையாழி, முதலியார் போன்ற உயர் வகுப்பு உத்தியோகத்தரை மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்மூலம் மதமாற்ற நடவடிக்கைகளில் போர்த்துக்கேயர் குறிப்பிடத் தக்க வெற்றிகளையும் அடைந்தனர். இவ்வெற்றியே யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழ் இணைக்கப்படக் காரணமாயிற்று. 1619இன் பின்னர் இங்கு மிசனறிகளின் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கத் தொடங்கின. 1622இல் இயேசு சபைக் குருமாரும் இங்கு ஒரு கல்லூரியை நிறுவி அதனையே யாழ்ப்பாண இராச்சியத்தின் சமய நடவடிக்கைகளின் தலைமையகமாகப் பயன்படுத்தினர்.
"யாழ்ப்பாணத்தில் மதம் மாற்று விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள போர்த்துக்கேய ஆவணங்களில், பல்லாயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவித்திருப்பது மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாயினும், குறிப்பிடத்தக்களவில் மக்கள் கத்தோலிக்க மதத்தில் இணைந்து கொண்டிருந்தமையையே அவை உறுதிப்படுத்து கின்றன எனலாம். 1624 - 1626ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரான்ஸிஸ்கன் சபையின் கீழ் 52,000 பேர் சமயம் மாறியதாகக் கூறப்படு கின்றது. மற்றுமோர் வரலாற்றக் குறிப்பின்படி, 1934இல் 70,000 பேர் 170

கிறிஸ்தவத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள் என அறிய முடிகின் றது. எவ்வாறாயினும், குவைறோஸ் சுவாமிகள் யாழ்ப்பாணத்தை கிறிஸ்தவ நாடு என வர்ணிக்குமளவிற்கு மக்கள் மதம் மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இராச்சியமானது வேறு பிற மதக்கலப் பற்ற நிலையில், இந்துமதத்தினையே அரச மதமாகக் கொண்டிருந் தாலும், 161 9இல் அவ்விராச்சியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்துக் களுக்கு உதவக்கூடிய நிலையில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் நாயக்கமன்னரது யாழ்ப்பாண இராச்சியத்து (இந்து)த் தொடர்புகள் முற்றாகவே துண்டிக்கப்பட்டிருந்தன. யாழ்ப் பாணத்து இராச்சியத்து இந்துமத குருமார்கள் எந்நிலையிலும் தமது எதிப்பினைக் காட்ட முடியாத நிலையில் கத்தோலிக்க மதத்திற்குச் சார்பாகவேனும் ஒழுகிக் கொண்டு தத்தமது உயிர் காக்கவேண்டிய நிர்ப்பந்தம் அங்கு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி இராச்சியத்தின் மீது போர்த்துக்கேயரால் இறுதிவரை அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிந்திருக்காத நிலையில், கிறிஸ்தவ சமயத் தையும் ஏனைய இராச்சியங்களில் பரப்பியது போன்று அங்கும் பரப்புவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. போர்த்துக்கேயர் கண்டி மன்னருடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தமையால் அவ்வாறான ஒரு நிலை தோற்றம் பெற்றிருந்தது. இருப்பினும், குசுமானதேவியும், அவரது பிள்ளைகளும் கத்தோலிக்கப் பாதிரிமாரை மறைமுகமாக ஆதரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிசனறி அமைப்புக்கள் மூலமாவது கண்டியில் சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பெருமளவிற்குச் சாத்தியப்படாத ஒன்றாகவே காணப்பட்டது. 1521 - 1551ஆம் ஆண்டுகட் கிடைப்பட்ட காலப்பரப்பில் கண்டியில் ஆட்சிசெய்த 2ஆம் ஜெயவீரன் சீதாவாக்கையரசனான மாயாதுன்னைக்கெதிராகப் போர்தொடுப்பதற்காக போர்த்துக்கேயரின் உதவியை நாடிய சமயத்தில் மட்டும் கிறிஸ்தவ சந்நியாசிகளை கண்டி இராச்சியத்திற்குள்நுழையவிட்டதுடன், அங்கு ஒரு தேவாலயத்தை அமைப்பதற்கும் அனுமதித்திருந்தான். எவ்வாறெனினும், முதலாம் இராஜசிங்கன், புவனேகபாகு போன்ற கண்டி மன்னர்களின் அரசியல், சமயக் கொள்கைகள் காரணமாக கண்டி இராச்சியத்தின் மீதான போர்த்துக்கேயரது எதிர்பார்ப்புக்கள் கைகூடாமல் அமைந்துவிட்டது. ஆகவே கண்டியைப் பொறுத்தவரையில் அரசியலில் மட்டுமல்ல சமயத் துறையிற்கூட போர்த்துக்கேயருக்கு ஒர் எட்டாக்கனி என்ற நிலைப்பாடே காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
171

Page 89
சுதேச மக்கள் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியமைக்கான காரணங்கள் :
'பிறமதத்தவரின் வழிபாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிராகரித்த போர்த்துக்கேயர், கிறிஸ்தவ சமயத்திற்கு மாறியவர்களுக்குச் சலுகையும், கெளரவங்களையும் வழங்கினர். இதனால் 1620 - 1630களில் போர்த்துக்கேயரின் கத்தோலிக்க மதம் இலங்கையில் மிகக் கூடுதலாக வளர்ச்சிபெற்றிருந்தது. போர்த்துக்கேயர் தமது நீதிமன்றுகளில் தீர்ப்பு வழங்கும்போது கிறிஸ்தவ சமயத்தை குற்றவாளி தழுவியிருந்தால் தண்டனையின் தாக்கத்தைக் குறைத்தும், கிறிஸ்தவசமயத்தைத் தழுவாதவர்களுக்கு கொடுந்தண்டனையும் வழங்கி, மக்களை கிறிஸ்தவ சமயத்தின் பால் இணையத்தக்கவகையில் நடந்து கொண்டனர்.
"பொருளாதாரத்துறையில் கத்தோலிக்க மதமே முன்னேற்றகரமான வளத்தினைப் பெற்றிருந்தமையால் மக்கள் பெரிதும் அம்மதத்தினைத் தழுவுவதற்கு முன்வந்தனர். மதம் மாற்றப்பட்டவர்களுக்கு வரி விதிப்பு விலக்கு வழங்கப்பட்டது. போர்த்துக்கேயரது அதிகார வரம்பிற்குள் வாழ்ந்த ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய சொத்துக்கள் யாவும் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் மறலா(marala) வரியானது கத்தோலிக்க மதத்தவராயின் அச்சொத்து அரசுக்குச் செலுத்தாது நேரடியாகவே அவரது வாரிசுகளுக்கு ஒப்படைப்பதற்கான உரிமம் தொடர்பான சலுகை வழங்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கையில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானோர் மரணப்படுக்கையில் மதம்மாறி யோராகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மரணப்படுக்கையில் மதம்மாறும் சம்பவங்கள் போர்த்துக்கேயர்கால இலங்கையில் சர்வசாதாரணமாகவே காணப்பட்டிருந்தது. இதே போல் மதம் மாறியவர்களுக்கு நீதிவிசாரணையின் போது வழங்கப்பட்ட தண்டனை குறைத்து வழங்கப்படும் நிலை காணப்படுவது பொதுவழக்கான காரணத்தினால், கொலைகாரரும், கொள்ளைக்காரரும் தமக்கு விதிக்கப் படும் கடுமையான தண்டனையிலிருந்து விடுபடும் பொருட்டு உடனடியாக கத்தோலிக்க மதத்திற்கு மாறிக் கொண்டனர்.1618இல் கிறிஸ்தவ சிறைக்கைதிகள் எவரையும் மரணதண்டனைக்கு உட்படுத்தக் கூடாது எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் அரச உத்தியோகங் களிலும் கத்தோலிக்கருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பொறுப்புள்ள உத்தியோகங்களில் அமர்வதற்கான சிபார்சு (அப்பகுதிக் கோயிற்பற்றுப்) பாதிரிமாரிடையேயிருந்து பெற வேண்டியிருந்தது. இத்தகைய சலுகைகள் மதம்மாறுவோருக்கு வழங்கப்பட்டமையும், பிறமதத்தினை நசுக்கி, அம்மதத்தினர் அவர்களுக்குரிய ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது
17Ꭸ

எனத்தடுக்கப்பட்டும் அவர்கள் தத்தம் மதத் தலைவர்களைச் சந்திக்கக் கூடாது எனத் துன்புறுத்தப்பட்டும் மதரீதியாகப் பாகுபாடு காட்டப் பட்டமையால் மக்கள் தமது நாளாந்த இயல்பு வாழ்க்கையில் பாதுகாப்பின் தேவையைக் கருதி, கத்தோலிக்க மதத்தினைத் தழுவ வேண்டிய தேவை ஏற்பட்டது.'
இவற்றுடன் மேலும் பல காரணிகள் போர்த்துக்கேயரது சமயம் இலங்கையில் வளர்க்கப்படுவதற்குக் காரணமாகியது. புராதன இலங்கையில் பெளத்தமதம் அரசமதமாக இருந்தது. பெளத்த சங்கம் அரசியலில் ஒர் அங்கமாக அமைந்து காலப்போக்கில் இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து வளரத் தொடங்கியிருந்தது. ஆனால் கோட்டையில் தர்மபாலன் மதம் மாறியமையைத் தொடர்ந்து கத்தோலிக்க மதம் அரச மதமாகியது. கிறிஸ்தவ தேவாலயங்கள் அரசாங் கத்தின் ஆதரவினையும், பொருளாதாரச்சலுகைகளையும் பெற்றன. இந்த நிலையால் பெளத்த சமயத்திற்கு புதிதாக வந்த கிறிஸ்தவ சமயத்துடன் எதிர்நீச்சல் போடமுடியாதநிலை ஏற்பட்டது. போர்த்துக்கேய மதகுருமாரின் சமயப் பிரசங்கத்தின் போது சுதேச மக்களின் பழக்க - வழக்கங்கனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டமையாலும் போர்த்துக் கேயர்தம்முயற்சிகளில் வெற்றிபெறக் காரணமாகியது. குறிப்பாக பெளத்த - இந்துமதக் கருத்துக்களை, வழிபாட்டு முறைகளைக் கத்தோலிக்க மதத்திலே புகுத்தியதன்மூலம் சாதாரண ஏழைக் குடியானவர்களும் மதம்மாறத் துணிந்தனர் எனலாம். சமயம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த மிசனறிகள் மக்களின் கல்வித்துறையில் அதிக ஈடுபாடும் கொண்டிருந் தனர். நாடகம், இசை, மொழி ஆகிய துறைகளில் கூடிய கவனம் செலுத்தினர். அத்துடன் கத்தோலிக்க மதகுருவே கல்வி கற்பிக்கும் ஆசிரிய ராகவும் விளங்கியமையால், மக்களை சமயமாற்ற நடவடிக்கை களுக்குட்படுத்துவதில் வெற்றி காண்பதற்கு அடிப்படையாயிற்று.
"போர்த்துக்கேயரின் அரசியல், பொருளாதார மற்றும் மத மாற்ற நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மதமானது வேகமாக இலங்கையில் பரவிக்கொண்டாலும், ஒப்பீட்டளவில் இலங்கையின் கரையோர மாகாணங்கிலேயே அம்மதம் மிகப் பெருஞ் செல்வாக்கினைச் செலுத்திய தெனலாம். கத்தோலிக்க மத நிறுவனங்கள் மதம் மாறியவர்களின் தொகையை அதிகப்படுத்திக் கூறினாலும், அவ்வாறு அதிகப்படியான எண்ணிக்கையையுடைய மதம்மாறிய மக்கள் கரையோரப்பகுதியில் வாழ்ந்த மீனவ மக்களாகவே காணப்பட்டனர். இதற்கான காரணங்களும் நிமித்தங்களும் கரையோரத்தில் வாழ்ந்த மீனவமக்களிடையே காணப் பட்டன. வரலாற்றாசிரியரான சேர் எமர்சன் ரெனன்ற் என்பவர்
173

Page 90
இதற்கான பல நியாயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆழ்கடலில் தொழில் புரிந்த மீனவர்களின் ஆழமான இறையுணர்விற்கான அடிப் படையை பெளத்தமோ அல்லது இந்துமதமோ ஈட்டிக்கொடுத்திருக்காத ஒரு நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினை தமது தொழிலுக்கேற்ற வாழ்வியக்கத்திற்குரிய வடிகாலாகக் கொண்டதில் வியப்பேதும் இருக்க முடியாது. மேலும் பல்வேறு சமூக அந்தஸ்தும் கொண்ட சாதிப்பிரிவுகள் காணப்பட்டிருந்த இலங்கையின் கரையோர மாகாணங்களில் வாழ்ந்த மீனவக்குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதன் மூலம் தமக்குரிய சமசாதி அந்தஸ்த்தினை ஏற்கனவே அம்மதத்திற்கு மாற்றத்திற்குள்ளான உயர்சாதி அங்கத்தவர் மத்தியில் பெற்றுக்கொள்வது மிகவும் எளிதாகக் காணப்பட்டமையும் ஒரு காரணியாக அமைந்தது. மீனவர்களே கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தின் முதல் அப்போஸ்தவர்கள் என ரெனன்ற் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
இலங்கைக் கரையோரப்பகுதி மீனவர்கள் தென்னிந்தியப் பிரதேசத்து மீனவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர். ஏற்கனவே தென்னிந்தியக் கரையோரப் பிரதேசத்து மீனவர்கள் பிரான்ஸிஸ்கன் சபையினரால் மதமாற்றத்திற்குட்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகையதொரு பின்னணியில் இலங்கைக் கரையோரத்தில் வாழ்ந்த மீனவர்கள் தமது தொழிலின் நிமித்தம் தென்னிந்திய மீனவர்களைக் கடற்பரப்பில் பரஸ்பரம் சந்தித்துக்கொள்வது தவிர்க்க முடியாததாயிற்று. கடலோடும், கடற்கரையோடும் இரண்டறக் கலந்திருந்த மீனவர்களது வாழ்வில், கடலில் ஆதிக்கம் பெற்றிருந்த போர்த்துக்கேயரது தொடர்புகள் தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டிருந்தது. போர்த்துக்கேயரது கோட்டைகள், காவலரண்கள் போன்றவை கடற்கரையோரங்களிலும், முக்கியதுறைமுகங்களிலேயும் அமைக்கப்பட் டிருந்தன. இதனால் கடற்கரையோர மக்கள் தமது வாழ்விற்கும், தொழிலுக்கும் நிரந்தர பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக தத்தோலிக்க மதத்தினைத் தழுவிக் கொள்வது அவசியம் என்பதனை நன்குணர்ந்து கொண்டிருந்தனர்.
"மற்றுமொரு காரணம் என்னவென்றால் பெரும்பாலும் கடற் றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தினமும் தம் உழைப்பிற்காகப் பல உயிர் களைக் கொல்ல வேண்டியிருக்கிறது. பாரம்பரிய மதங்களான இந்து மதமும், பெளத்தமும் கொல்லாமை, புலால் உண்ணாமை, துன்புறுத்திப் பொருளீட்டாமை, வாழ்வின் நித்தியமின்மை (அநித்தியம்) போன்ற அடிப்படை வாதங்களை வலியுறுத்துவதனால், தம் நாளாந்த கடற்றொழில் வாழ்விற்கு அம்மதங்களின் இறுக்கமான, உடன்
174

பாடில்லாத கொள்கைகளைத் தொடர்ந்தும் தழுவிக் கொண்டிக்க விரும்பாத நிலையில், மிகவும் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கொள்வது அம் மக்களால் சிறந்தது என உணரப்பட்டது. இப்பின்னணியில் மாதா சொரூப வழிபாடும் கடற்கரையோர மக்கள் வாழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையானது "கடல் மாதா (கடலில் பாதுகாக்கும் தெய்வம்) வழிபாடாக தென்னிந்திய - இலங்கை கடற்கரையோரங்களில் பரிணமிப்பதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. இப் பின்னணியிலேயே கத்தோலிக்க கிறிஸ்தவமதமானது போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் சமூக நிறுவனங்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டது.
மதப் பிரசாரத்தால் ஏற்படுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் : ஏனைய மதங்களிலும் பார்க்க தம்மதமே மேலானது என ஒவ்வொரு இனத்தினரும் எண்ணுவது போன்று, போர்த்துக்கேயரும் தமது மதம், தமது பண்பாடு, தமது கல்வி என்பன தம்மால் ஆளப்படுபவர்கள் மத்தியில் காணப்படுவனவற்றைவிடச் சிறந்தவை எனக் கருதினர். இலங்கை மக்களைவிடதாம் மிகவும் மேற்பட்டவர்கள் என்ற உணர்ச்சி போர்த்துக் கேயர் மத்தியில் விரவிக் காணப்பட்டது. கத்தோலிக்க மதகுருமாரின் உளநிலையும் இவ்வாறே காணப்பட்டது. கிறிஸ்தவ மதம் தன்னிக ரில்லாத் தனிமதம் என அவர்கள் அதீதமாக நம்பியதன் அடிப்படையில் தமது மேலாதிக்கக் குடியேற்ற நாடுகளில் வசித்த மக்களை அம்மதத்திற்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டதோடு, அந்தந்தக் குடியேற்ற நாடுகளின் அடிப்படைப் பண்பாட்டு அலகுகளையும் தம்மதத்துடன் இணைத்து வைக்கத்தவறவில்லை. இதனாலேதான் அந்தந்த நாடுகளின் பாரம்பரிய கல்வி நிறுவனங்களுடன் கத்தோலிக்கமதக் கருத்துக்களையும் இணைத்து சுதேச மொழிவழக்கில் கல்வி நடவடிக்கைகளை வடிவமைத் தனர்.” È
தொடக்கத்தில் இங்கு வந்த மிசனறிமார்கள் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் சமய போதனையை நடாத்தினர். இது மிகவும் திருப்தியற்ற முறை என்பதனை அவர்கள் விரைவில் உணர்ந்து கொண்டனர். இதனால் சுதேச மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையும் காணப் பட்டது. கிறிஸ்தவ மதத்தினை உள்ளூர் - சுதேச மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற ஆர்வமே அவர்களை இந்நாட்டு மொழிகளைக் கற்கத் தூண்டியது எனலாம். இவ்வாறு சுதேச மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையும் காணப்பட்டது. இவ்வாறு சுதேச மொழிகளைக் கற்ற வெளிநாட்டவர்களுள் மிசனறிமார் முதலிடம் பெறுகின்றனர்.
175

Page 91
எனவே போர்த்துக்கேய காலத்து இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் யாவும் மிசனறிமார்களிடமே கொடுக்கப்பட்டிருந்தது.'
‘போர்த்துக்கேயர் காலத்தில் இருந்த மிசனறிமாரின் கல்வி முயற்சியில் முக்கியமானது மதபோதனையாகும். வயது வந்தவர்களுக்கும் பிள்ளை களுக்கும் தேசியமொழியிலேயே மதபோதனை நிகழ்ந்தது. சமயக் கல்வியை போதிப்பதனையே முக்கிய நோக்கமாகக் கொண்ட மதகுருமார் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், ஆலயங்களுக்கும் அருகில் அமைக்கப் பட்டிருந்த பாடசாலைகளிலேயே கல்வி நடவடிக்கைகளை மேற்கொண் டனர். மல்வானை என்ற இடத்தில் போர்த்துக்கேயப் பிள்ளைகளுக்கு அவர்களுடைய தாய்மொழியிலேயே கல்விப்போதனை நிகழ்த்தப் பட்டது. மிசனரிமார் இளவரசர்களுக்கான கல்விப்போதனையிலும், செயற்பாட்டிலும் ஈடுபட்டனர் அத்துடன் இலங்கையில் குழந்தைகளுக் கெனப் பாடசாலைகளையும் கலாசாலைகளையும் நடாத்தினர். பிரான்ஸிஸ்கன் சபையினர் கொழும்பில் அந்தோனியார் கல்லூரியையும், யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியையும், நவகமுனாவில் ஒரு கல்லூரியை யும் முகத்துவாரத்தில் அநாதைப்பிள்ளைகளுக்கான கல்லூரியையும் நிறுவினர். மற்றும் கோயிற்பற்றுக்களிலும், மிசனறிமார் தங்குமிடங் களிலும் பாடசாலைகளை நடாத்திவந்தனர். யாழ்ப்பாணத்தில் இத்தகைய 25 பாடசாலைகள் காணப்பட்டிருந்தன."
இவ்வாறாகச் சமயச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒவ்வொரு சபையினரும் கல்லூரிகளையும், கோயிற் பற்றுக்களையும் நிறுவி, மதக் கல்வியை முன்னெடுத்தனர். இவ்வாறான முயற்சிகளில் இயேசு சபையினரின் கல்விச் செயற்பாடே அதிகமாகவும், மிகச் சிறப்பாகவும் காணப்பட்டது. கொழும்பில் இயேசு சபையார் நடாத்தியிருந்த கல்லூரி ஒன்று போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்து இலங்கையில் மிகச்சிறந்த கல்வி நிலையமாகத் தொழிற்பட்டிருந்தது. இவ்வாறாக அமைக்கப்பட்ட போர்த்துக்கேயப் பாடசாலைகளில் சமயபாடமே முக்கிய பாடமாக போதிக்கப்பட்டது. இப்பாடத்தினை மனனம் செய்து ஒப்பிக்கும் முறைமையை போர்த்துக்கேய மிசனறிமார் ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனைவிட இவர்களுடைய கல்வி முறையில் நடித்தல் தொழிற் பாட்டினை முதன்முதலாகப் புகுத்தினர். நாடக வடிவம் ஊடாக கிறிஸ்தவ மதச் சிந்தனைகள் மக்கள் மத்தியில் இலகுவழியாய் புகுத்தப் பட்டன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் கிராமிய நாடகங்கள் ஊடாகவே கிறிஸ்தவ மதச் சிந்தனைகள் பரப்பப்பட்டன. மேடைகள் அமைத்து நாடக உருக்களை செய்து காண்பித்தமைக்கான
176

சான்றுகள் எவையும் பரவலாகக் கிடைக்காவிடினும், இயேசு சபையினர் தெல்லிப்பழையில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் அமைக்கப் பட்ட மேடையில் நாடகங்களை மேடையேற்றி, மக்களை தமது சமயத்தின்கண் ஈர்த்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
177

Page 92
அத்தியரியர் ஐந்து
ஒல்லாந்தரின் அரசியல் ஆதிக்கப்
படர்ச்சியும் அதன் முகாமைத்துவமும்
(முதற்கட்டம் - இரண்டாம் இராஜசிங்கன் காலம் வரைக்கும்)
"பனை மரங்களின் ஆட்சி ஆருக்குடையதென்பது” (. . காணி ஒருவனுக்குடையதாயிருக்க, அதில் நிற்கும் முதுபனைகள் வேறொரு வனுக்கு உடையதுகளாயிருந்தாலும் கீழ்ப்பட்ட வடலிகள் நிலக்காரனுக் கேயன்றி அம்முதுபனைக்காரனுக்காக மாட்டாது. இதுகாரியத்திற்கு அராலி யென்கிற குறிச்சிமாத்திரம் புறநீங்கல், அவ்விடத்திலே ஒரு பழைய வழமை நடந்து வருகின்றது. அதென்னவென்றால், அந்த முதுபனைக்குட்ையவர்களாயிருக்கின்றவர்கள், அவைகளின் கீழ்ப்பட்ட வடலிகளையும் பிடித்து ஆண்டுவருவார்கள். அந்த ஊரிலே வடலி வெகுத்த மில்லாததற்கு நியாயமிதுவே. ஏனென்றால் விழுபனங்காய் எடாமல் விட்டிருந்த விடங்களிலே முளைத்து வடலியுண்டான காலத் திலும் அந்தக் காணிக்குடையவன் காணி செய்கையிடுகிற போகத்திற்கு வந்து நிலத்தையுழுது, புரட்டி அந்த முளைகளைப் பாழாக்கி விடுவான். அதெனென்றால் தன்னுடைய நிலத்திலே மறுபேருடைய LJeapar eastvu Arasas Lugdžeš srair. . .”
- தேசவழமைத் தொகுப்பு: அதிகாரம் 1862ங், பக். உக.
778

ஐரோப்பாவில், ஆதிக்க சக்திவாய்ந்த அரசு ஒன்றின் மேலாதிக்கத்துக் குள்ளிருந்து விடுபட்டு, புதிதாக சுதந்திரம் பெற்றிருந்த நாடு என்ற வகையில் நெதர்லாந்து புத்துணர்வுமிக்க நாடாக எழுச்சியடைந்து கொண்டிருந்த பின்னணியில், இலங்கைத்தீவிற்கு ஒல்லாந்தரது வருகை பல நிலைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. நெதர்லாந்தின் புதிய அரசியல் - பொருளாதாரச் சூழலின் அனுபவங்களுடன், அதன் கடற்கரையோர புவியியல் செல்வாக்கினால் ஏற்பட்ட அனுபவங்களும் இணைந்து பின்னர் இலங்கைக்கு ஒல்லாந்தர் வருகையின் போதும், அவர்களது ஆட்சிக்காலத்தின் போதும் பெரும் செல்வாக்கினையும், அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தத் தவறவில்லை. கடல் முகப்புத் தளப் பண்பாட்டுச் செல்வாக்கினால் ஏற்கனவே உந்தப்பெற்றிருந்த ஒல்லாந்தர் இலங்கைத் தீவிற்கு முதன் முதலில் வருகை தந்திருந்த காலத்தில் கிழக்குக் கரையோரவளங்களையே தமது ஆரம்ப பொருளாதார முகாமைத்துவ விருத்திக்குப் பயன்படுத்தியிருந்தனர் என்பது இங்கு விதந்து குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தீவில் முதன் முதலாக அந்நிய நாடொன்றின் கடல் வளத் தொழில்நுட்பம், நீர்ப்போக்குவரத்துத் தொழில்நுட்பம், நீர் - நிலத்தை (தரை) பிரதான தளமாகக் கொண்ட படைக் கட்டுமானத்தையும், விசாலமான-சுரங்கப்பாதையமைப்புடனான கோட்டையரண்களுடனும் கூடிய பாதுகாப்புத் தொழில்நுட்பம், சுதேச மூலவளங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கைத்தொழில்நுட்பம் ஆகியன உருவாக்கப்பட்ட காலமாக ஒல்லாந்தராட்சிக் காலப் பரப்பு அமைந்தது என்றால் மிகையாகாது. இவற்றுக்கும் மேலாக நிறுவனமயப் படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் என்ற சேவைத் தொழில் கூட ஆரம்பித்து வைக்கப் பட்ட ஒரு காலப் பகுதியாக ஒல்லாந்தர் காலம் அமைந்தது, இவற்றுக் கெல்லாம் திறவுகோலாக கிழக்கிலங்கையிலுள்ள மட்டக்களப்பு பிராந்தியமே முதன் முதலில் ஒல்லாந்தரை உள்ளீர்த்த தளநிலையாக அமைந்தது. அவ்வாறு ஒல்லாந்தர் கிழக்கிலங்கையூடாகவே இலங்கைத் தீவிற்குள் ஊடுருவ வேண்டியிருந்தமைக்குரிய காரணிகள் இருவகைப் பட்டனவாக அமைந்தன. அவையாவன : ஒன்று: யாவாவிலுள்ள பட்டேவியாவிலிருந்து நேரே சமுத்திரப் பரப்பினுாடாக கிழக்கிழங்கையை வந்தடைவது ஒல்லாந்தருக்கு மிகவும் இலகுவாக இருந்தமை, இரண்டாவது : கண்டியரசுடனான முதற் தொடர்பே ஒல்லாந்தரை மட்டக்களப்புத் துறைமுகத்தினூடாக மலைநாட்டைச் சென்றடைய வைத்தமை. இரண்டாம் இராஜசிங்கனுடனான இராசதந் திரத் தொடர்புகள் யாவற்றிற்கும் கிழக்கிலங்கையூடான பெளதீகத் தள நிலைகளே வழி சமைத்திருந்தன. அப்பணியில் கண்டியரசுடனான தரைவழி மார்க்கங்களை கட்டுப்படுத்தி உதவியிருந்தமையின்
179

Page 93
அடிப்படையில் ஒல்லாந்தரது இலங்கை மீதானமுதற் தொடர்புகள் யாவும் கிழக்கிலங்கையூடாக அமையக் காரணமாயிற்று.
அரசியலடிப்படையிலான முதற்தொடர்பு :
போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒல்லாந்தரின் உதவியைக் கண்டியரசர்கள் நெடுங்காலமாக எதிர் பார்த்திருந்த பொழுதிலும், (1602இல்) ஒல்லாந்தர் அப்பொழுது கண்டியரசன் எதிர்பார்த்திருந்த படையுதவியை வழங்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை என்பதே யதார்த்தம். இந்து சமுத்திரத்தில் தமக்குரிய இடத்தினைப் பெற்றுக் கொண்ட பிறகே, போர்த்துக்கேயரைத் தாக்குவது புத்திசாலித்தனமாகும் என்பதனை ஒல்லாந்தர் நன்குணர்ந்திருந்தனர். அதன் படி 1638ஆம் ஆண்டு வெஸ்ரவொல்ட என்ற ஒல்லாந்துத் தளபதி மட்டக்களப்பினைத் தாக்கிக் கைப்பற்றியதன் பின்னர் கண்டியரசன் 2ஆம் இராஜசிங்கனுடன் ஒர் உடன்படிக்கையைச் செய்து கொண்டான். அவ்வுடன் படிக்கையின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு:
1. ஒல்லாந்தர் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதில்
அரசனுக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். 2. இதற்குப் பிரதியுபகாரமாக போரில் ஏற்படும் சகல செலவுத் தொகை களையும் அரசன் ஒல்லாந்தருக்கு கொடுப்பதுமன்றி அவர்களுக்கு வசதியான ஒருதுறைமுகத்தையும் கொடுக்க வேண்டும். 3. கறுவாப்பட்டை வியாபாரத்தில் ஏகபோக உரிமையை ஒல்லாந்தருக்கே அரசன் அளிக்க வேண்டும். கறுவாப்பட்டை, மிளகு, யானைத்தந்தம், ஏலம் முதலியவற்றை அரசனோ, பிரஜைகளோ வேறொருவருக்கும் விற்கக்கூடாது. 4. போர்த்துக்கேயர் இனிமேலும் இலங்கைக்குப் படையெடுக்காமற் பாதுகாப்பதற்காக அவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் கோட்டை களில் அரசன் விரும்பினால் மட்டும் ஒல்லாந்து வீரர்கள் அதற்குள்ளி லிருந்து அக்கோட்டைகளைக் காக்கவேண்டும். இவ்வுடன்படிக்கையில் நான்காவதாக வரும் நிபந்தனையிலுள்ள 'அரசன் விரும்பினால் மட்டும்" என்ற தொடரே பின்னர் ஒல்லாந் தருக்கும் கண்டியரசனுக்குமிடையே பெரும் பிணக்கை ஏற்படுத்தக் காரண மாகியது. அரசனுக்குத் தெரிந்த போர்த்துக்கேய மொழியில் எழுதி கைச்சாத்திடப்பட்ட பிரதியில் மட்டும் அப்பிரச்சினைக்குரிய தொடர் பொறிக்கப்பட்டதே தவிர, ஒல்லாந்தருக்குரிய டச்சு மொழியில் பொறிக்கப்பட்ட பிரதியில் அவ்வாக்கியம் காணப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
O

பொறில் நல்லுறவுக் குழுவும் கண்டியரசனும் :
பட்டேவியாவிலிருந்து ஜனவரி மாதம் 1643ஆம் ஆண்டில் கண்டியரச னுடைய இருதூதுவர்களுடனும் மட்டக்களப்பினை வந்தடைந்த பொறில் (Boree) என்பவனே ஒல்லாந்தரது இலங்கை மீதான புதிய, அரசியலடிப் படையிலான ஆதிபத்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற் குரிய முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டவனாவான். போர்த்துக்கேய கப்ரின் மேஜரான அன்ரோனியோ - டா - மோட்டா - டா - ஹல்வாஸ் என்பனுக்கு பொறில் அனுப்பிவைத்த போர்நிறுத்த உடன்பாடு பற்றிய மனுவில், காலி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் காணப்பட்டிருந்த மாத்தறை, சபரஹமுவதிசாவைகளிலிருந்து போர்த்துக் கேயர் தம்மை விலக்கிக் கொள்ளுமாறும் கோரப்பட்ட மனுவும் முற்றாகவே நிராகரிக்கப்பட்டுவிட்டிருந்தன. டீ - மோட்டா, தர்மபால னுடைய மரணசாசனத்தினூடாக போர்த்துக்கேயருக்கு உரிமையாகிப் போன இலங்கைத்தீவினைக் கைவிடுவதற்கு எள்ளளவிலும் விரும்பாததே அதற்குக் காரணமாகும். பொறிலினுடைய இரண்டாவது நடவடிக்கை கொழும்பிலுள்ள போர்த்துக்கேய கப்ரின் - ஜெனரலிடம் மார்ட்டின் வின்க் என்பவனையனுப்பி, மாத்தறை, சபிரஹமுவ திசாவைகளை ஒல்லாந்தரின் முகாமைத்துவத்திற்குள் கொணர்வதற்குரிய சாத்தியப் பாட்டை அறிவதற்குரிய முயற்சியாக அமைந்தது. ஆனால் வின்க் அங்கு போர்த்துக்கேயருக்கெதிரான இராஜசிங்கனது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமலேயே பெப்ரவரி, 1643இல் கோவா நோக்கிப் பயணமானான். அங்குள்ள கோவா ஆள்பதியிடமிருந்தும் இலங்கையில் ஏற்கனவே கிடைத்திருந்த அதே பதிலையே வின்க் எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது. இந்நிலையில் ஐரோப்பாவில் போர்த்துக்கலுக்கும் நெதர்லாந்துக்குமிடையே ஏற்கனவே கைச்சாத்தான சமாதான உடன்படிக்கைப்படி, கீழைத்தேயத்தில் பிராந்திய நிலப்பரப்புக்களை ஒப்பந்த அலகு இலக்கம் 12ப்படி போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தர் பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை பொறிலினுடைய கோரிக்கை சுட்டிக்காட்டுமாற்றை வின்க் அங்கு எடுத்துரைத்தான். அதன்படி கண்டியரசன் இராஜசிங்கனுக்கு உரிமமான அவ்விரண்டு திசாவைகளின் நிலப்பரப்பினை ப்ோர்த்துக்கேயர் தமது அதிகார வரம்பிற்குள் கொண்டிருப்பது நியாயமற்றது எனவும், கண்டியரசனுடன் தாம் கொண்டிருந்த தொடர்புகளின்நிமித்தமாக டச்சுக் கொம்பனிக்கேற் பட்ட செலவுகளை ஈடுசெய்வதற்காக, தமக்கே அந்த இரண்டு திசாவை களினது உரிமம் கிடைக்க வேண்டும் என்றும், அவற்றைச் சமாதான நிலையில் தாம் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் எடுத்துக் கூறப் பட்டது. ஆனாலும் நிலப்பங்கீடு செய்வதற்கு கோவா ஆள்பதி செயலகம்
18

Page 94
மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக அந்நிலங்களிலிருந்து ஈட்டும் வருமானத்தை ஒல்லாந்தருடன் பங்கீடு செய்வதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது. ஏப்ரல், 1648இல் பொறில் கோவாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பியவுடன் மட்டக்களப்பில் வைத்து போர்த்துக்கேயருக்கெதிரான அரசபோர் (Statewar) ஒன்றை முன்னெடுக்க விருப்பதனைப் பிரகடனப் படுத்தி விட்டிருந்தான். அதே நேரத்தில் கண்டி மன்னனுடன் தொடர்பு கொண்டு கொம்பனிக்கேற்பட்டுள்ள அதிகூடிய செலவீனங்களைக் கருத்திற்கொண்டு கறுவாவின் விலைமட்டத்தினைக் குறைக்குமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வந்தான். ஆனால் கண்டி மன்னனோ அக்கோரிக்கைக்குச் செவிசாய்ப்பதாக இல்லை. ஏனெனில் டச்சுக் கொம்பனி கண்டியரசனுக்கு அதிகரித்துச் சென்ற செலவீனம் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கணக்கொன்றைக் காட்டுவதன் மூலம் இராஜசிங்கனைக் கடனாளியாக்கி"அவ்வடிப்படையில் கிழக்குக் கரையோரமாக கோட்டையரண்களை அமைப்பதற்குரிய அனுமதியை யும், கறுவா உற்பத்தி மீதான கட்டுப்பாட்டையும் வலிந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையே இது என்பது கண்டியரசனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
1635இற்குப் பின்னர் ஒல்லாந்தர் கோவா மீதான எதிர் நடவடிக்கை களை வருடாவருடம் அதிகரித்து வந்திருந்தனர். இப்பின்னணியில் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டிலிருந்து மட்டக்களப்பில் அமைக்கப் பட்ட கோட்டையரனும், மலாக்காவில் காணப்பட்ட அரணும் கைவிடப் பட்டுச் சென்றமையானது ஆசியாவில் போர்த்துக்கேயரின் செல்வாக்கு, படைபலம் என்பன குறைவடைந்து சென்றதைச் சுட்டி நின்றது. மார்க் 1641இல் போர்த்துக்கல் அரசன் ஐரோப்பாவில் தம்மால் மேற்கொள்ளப் பட்டு, எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கை குறித்து கீழைத்தேயத்தி லுள்ள ஆள்பதிக்கு அறிவித்திருந்தான். இதனால் டச்சுக் கொம்பனிதாரர் களுடன் சமாதான வழியில் பொருந்திச் செல்லுமாறும் ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் ஒல்லாந்தரோ காலியில் அமைந்துள்ள கோட்டையைக் கைப்பற்றுவதற்கான போர்த்தளபாடங்களைத் தயாரித்து, அதனைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இக்கட்டத்தில் காலியிலிருந்த போர்த்துக்கேய வீரர்கள் பெரி - பெரி என்னும் நோயினாலும், கால் அழுகல் என்னும் நோயினாலும் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தனர். காரணம் சுதேசிகளிடமிருந்து அன்றாடம் தேவைப்பட்ட உயிரோட்டம் உள்ள காய் - கறி வகைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் எதிரிகளால் சூழப் பெற்றிருந்தமையாகும். மே, 1643இல் வெலிகம ஊடாக ஊடுருவி, அக்குரஸ் என்ற இடத்தில்
182

ஏற்பட்ட மோதலில் டச்சுக்காரர் போர்த்துக்கேயரை அடிபணிய வைத்ததோடு, காலித்துறைமுகமும், கோட்டையரணும் டச்சுக்காரரால் கையகப்படுத்தப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. ஒல்லாந்தரின் காலிமீதான வெற்றி இலங்கையில் அவர்களது அதிகாரவரம்பின்முதலாவது கட்டமாக அமைந்தது. இந்நிகழ்வானது கண்டியரசின் மேலாதிக்கத்திற்கு கிடைத்த வெற்றியும், ஆணையுமாக அமைந்தது என்பதனை கோடிட்டுக் காட்டியது. மறுவளமாக, ஒல்லாந்தருடைய கடல்முகப்புத் தளமொன்றின் மீதான அதாவது காலித்துறைமுகம் மீதான கையகப்படுத்தலானது கடல் வல்லாதிக்க அரசொன்றிற்கும், நிலமானியவுடமைச்சமூக அமைப்புடைய அரசொன்றிற்குமிடையே இலங்கையில் நிகழப் போகின்ற அரசியல் ஆதிபத்தியத்திற்கான போராட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்தது எனலாம். ஏனெனில் அடுத்துவருகின்ற 18 தசாப்த கால இலங்கைத் தீவின் வரலாற்றுப் போக்கின் சுக்கானைக் கையாண்ட பிரமாண்ட மான சக்தியாக கண்டி இராச்சியமே விளங்கப் போகின்றது என்பதனை 2ஆம் இராசசிங்கனுக்குப் பின்னர் நிகழ்ந்த நடவடிக்கை கள் எடுத்துகாட்டின. கி.பி. 1815 வரைக்குமுள்ள இலங்கைத் தீவின் வரலாற்றுச் சம்பவங்கள் யாவும் கண்டியரசிற்கும், ஒல்லாந்தருக்கும் பின்னர் ஆங்கிலேயருக்குமிடையே நிலவிய நல்லுறவு - பகைமை யுறவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இராண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தர் மீது வகுத்துக் கொண்டிருந்த கொள்கைகள் :
52 வருட காலமாக கண்டி இராசதானியை ஆட்சி செய்த இரண்டாம் இராஜசிங்கன் தலைசிறந்த ஒரு மன்னனாகக் கருதப்படுதற்குரிய காரணங்கள் பல. இம்மன்னன் தனது தந்தையான செனரத்திற்குப்பின்னர், 1635இல் ஆட்சிப் பீடமேறி 1689 வரைக்கும் தனித்துவமான இராசதந்திரப் பூட்கைகளை வகுத்து, இலங்கையில் அந்நியராட்சிக் கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தான். இலங்கையில் ஒல்லாந்தரோடு முதலில் சிநேக உறவுக் கொள்கையை வகுத்தும், பின்னர் கண்டிய்ரின் தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் பேணியும், ஒல்லாந்தருக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டும் இரண்டாம் இராஜசிங்கன் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தடத்தினைப் பதித்துள்ளான்.
G. C. மென்டிஸ் நம்முன்னோரளித்த அருஞ்செல்வம் என்ற நூலில் இரண்டாம் இராஜசிங்கனைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
183

Page 95
'இராசசிங்கனுடைய ஓயாத போர் முறைகளையும் கொடுங் கோன்மையையும் பிரஜைகள் வெறுத்தனர்! அவன் கரைநாடுகளைத் தன் ஆணையின் கீழ் கொண்டுவரத்தவறியதுமல்லாமல், போர்த்துக்கீசர் கைப்பற்றியிருந்த நாடுகளை ஒல்லாந்தர் பிடிப்பதற்கு உதவியாயு மிருந்தான். அதனால் அவனது செல்வாக்கு மிகவும் குறைந்தது. குடிகள் இதனை 'மிளகாயைக் கொடுத்து இஞ்சியைப் பெற்றுக் கொண்ட மாதிரி” (மிரிஸ்தீலா இங்குறுகத்தவாகே) எனக் கூறினர். அவனைக் கொல்வதற்குக் கூடச் சதி செய்தனர். அதனால் அவன் கண்டியைவிட்டு நீங்கித் தெற்கே கலகஹாபாதையில் 15ஆம் மைலுக்கண்மையில் உள்ள நிலம்பே என்னுமிடத்தில் அடைக்கலம் தேடினான். 1664இல் அவன் அங்கேயே தங்கியிருந்த நேரத்தில் பின்னுமோர் முறை அவனைக்கொன்று, அவன் மகனைச் சிம்மாசனத்தேற்றவும் சனங்கள் சதி செய்தனர். இம்முறை அவன் அங்குறாங்கட்டைக்குக் கிழக்கேயிருந்த கலாதா என்றவோர் உயர்ந்த மலையிலோடி ஒழிந்தான். கலகம் அடங்கியபோது அங்குராங் கட்டையைத் தனது இராசதானியாக்கி, அங்கேயே 1687வரை மரணபரியந்தம் தங்கியிருந்தான்."
ஒல்லாந்தர் காலிதுறைமுகத்தினைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்தமையைத் தொடர்ந்து. பிரான்ஸிஸ் கர்ரோன் என்ற (Francis Carron) தளபதியின் தலைமையில் 1,700 போர் வீரர்கள், 13 கப்பல்கள் உள்ளிட்ட போர்த் தளபாடங்களை இலங்கையில் ஒல்லாந்தர் கொண்டிருந்தமையின் பின்னணியில் போர்த்துக்கேயருக்கெதிர்ான ராணுவ நடவடிக்கைகள் கரையோர மாகாணங்களில் ஆரம்பமாகின. முதலில் அக்மீமன என்ற இடத்தில் அமைந்திருந்த போர்த்துக்கேயரின் மிகப் பலம்வாய்ந்த இராணுவ மையம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப் பட்டு, கொழும்பு, நீர்கொழும்புத் துறைமுகக் கோட்டையரண்களைக் கைப்பற்றுவதற்கான வழிகள் திறக்கப்பட்டன. இக்கட்டத்தில் ஒல்லாந்தரால் கண்டியரசனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமொன்றில் காலித்துறைமுகத்தினை கண்டியரசன் சார்பாக தாம் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய செலவீடாகநூறு லட்சம் செராவைன்ஸ் செலவாகியிருந்தது எனவும், அச்செலவுத் தெகையை கண்டியரசன் கையளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப் பட்டிருந்தது. அதே நேரத்தில் கண்டியரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்றாத பட்சத்தில் அல்லது தவறும் பட்சத்தில் போர்த்துக்கேயருக் கெதிராக, கண்டியரசன் சார்பாக தமது பாதுகாப்பு உதவிகள் அனைத் தையும் நிறுத்தி வைக்க எண்ணியிருப்பதாகவும் ஒல்லாந்தர் பயமுறுத்தி யிருந்தனர். இந்நிலையில் ஒல்லாந்தருடன் 2ஆம் இராஜசிங்கன்
14

அரசியலடிப்படையிலான ஒர் ஒப்பந்தத்தினைச் செய்வதனைத் தவிர, தனது ராசதந்திர ரீதியான அரசியற் பூட்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வேறு மார்க்கங்களில்லை என்பதனை அம் மன்னன் நன்கு அறிந்து வைத்திருந்தான். அவ்வாறான ஒர் ஒப்பந்தத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டியிருந்த சூழ்நிலையை ஒல்லாந்தரது கொழும்பு ரீதியான இராணுவ வெற்றியும், போர்த்துக்கேயப் படைகளின் பின்வாங்கலும் விரைவுபடுத்தியிருந்தன.
வெற்றி கொள்ளப்பட்ட காலித்துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக கரோனின் (Carron) தலைமையில் படையணியொன்று கொழும்புத் துறைமுகப்பரப்பிற்கு அண்மையில் அமைந்துள்ள பாணந்துறையில் தரையிறங்குவதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுதிலும், அம்முயற்சி சாத்தியமாகாது போகவே, நீர்கொழும்பில் வெற்றிகரமாக அப்படைகள் தரையிறக்கப்பட்டு கொழும்பினை நோக்கி நகர்த்தப்பட்டன. ஒல்லாந்தரது இப்படை நகர்த்தலை எதிர்கொண்டு முறியடிப்பதற்காக போர்த்துக்கேயர் தரப்பில் கர்பின் ஜெனரல் டொம் அன்ரோனியோ மஸ்கரன் காஸ் என்பவனும், மிகவும் வயதால் முதிர்ந்த கப்ரின் - மேஜர் டா - மோடா என்பவனும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். 1644இல் கொழும்பில் ஒல்லாந்தரும் போர்த்துக்கேயரும் போர்க்களத்தில் சந்தித்தனர். கண்டியவிரர்களுடன் இணைந்து வந்திருந்த ஒல்லாந்தரது படையணியொன்று களனிகங்கை முகத்துவாரத்தினூடாக நுழைந்து கொழும்புத்துறைமுகப் பரப்பினை ஊடறுத்து அந்நகரின் பாதுகாப்பு ஒழுங்குகளை எல்லாம் சிதறடித்து விட்டிருந்தது. இருந்தும் போர்த்துக் கேயரது கோட்டையைக் கைப்பற்றுவது என்பது மிகவும் கடினமான ஒரு நடவடிக்கையே என்பதனை நன்குணர்ந்து கொண்டிருந்த கரோன், நீர்கொழும்பிற்கு தனது படையணிகளுடன் திரும்பிச் சென்று, தனது படையணிகளுக்கான வலுவை மேலும் கூட்ட விரும்பினான். இந்நேரத் தில் கண்டியரசன் ஒல்லாந்தர் மீது வைத்திருந்த நம்பிக்கையை சிறிது இழந்த நிழையில், கொழும்பிலுள்ள போர்த்துக்கேயர் மீது தனது ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தான். கண்டியரசனது இந்நிலையை நன்கு அவதானித்த ஒல்லாந்தர் தமது படையணிகளை கண்டிமீதும் ஏவுவதற் குரிய முறையில் ஆளணி வளத்தினைப் பெருக்கிக் கொண்டனர். நீர் கொழும்பிலுள்ள கோட்டையரண் மீண்டும் பலப்படுத்தப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் 10 நவம்பர் 1644இல் போர்த்துக்கேயரது 9ஆவது கடற்படைத்தொகுதி ஒன்று ஜான்மீற்சுயிக்கர் (Jan meetsuicker) என்ற கடற்படைத்தளபதியின் தலைமையில் கோவாவை வந்தடைந்தது.
இத்தளபதி போர்த்துக்கீச ஆள்பதியின் பிரதிநிதியிடமிருந்து ஒரு
85

Page 96
செய்தியை ஒல்லாந்தருக்காக கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது. அதாவது பேச்சுவார்த்தை அல்லது சமாதான முறையில் நீர்கொழும்பை ஒல்லாந்தரிடமிருந்து பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ள அனுமதி கோருவது என்பதே அச்செய்தியாகும். அதன் அடிப்படையில் மீற்சுயிக்கர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அச்சமா தான உடன்படிக்கையின் வரைவினைத்தயார் செய்யுமாறு ஆணை யிடப்பட்டான். போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட இந்த முதல் உடன்படிக்கையின் படி கொழும்புக்கும் நீர்கொழும்பிற்கும் இடைப்பட்ட பிரதேசம் ஒல்லாந்தருக்கெனவும் கொழும்பிற்குத் தெற்குப்பகுதி பாணந்துறை வரைக்கும் உள்ள பரப்பு போர்த்துக்கேயருக்கு முரியதென இருபகுதி யினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 10ஆம் திகதி ஜனவரி மாதம் 1645ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் இருபகுதியினராலும் கைச்சாத்திடப் பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்தருடன் செய்து கொள்ளப்பட்ட இந்த முதல் உடன்படிக்கையின் வரலாற்று முக்கியத்துவம் என்ன வெனில் ஒல்லாந்தரை இலங்கையின் கடல்முகப்புத் தளப் பிரதேச மொன்றினது ஆட்சி உரித்திற்குரிய வராக ஆக்கப்பட்டமையாகும்.
1645 கையெழுத்தான இவ்வொப்பந்தத்தின் விளைவாக இலங்கைத் தீவில் ஒல்லாந்தரது ஆட்சியுரிமத்துக்குரிய அடித்தளம் மிகவும் வலுவான முறையில் இடப்பட்டது. இலங்கை மக்கள் மீதான அரசியல் அதிகார மேலாண்மைக்கும், அவர்களிடமிருந்து திறையைப் பெற்றுக்கொள்வதற் கும், அம்மக்களூடாக ராஜகாரிய முறையை அமுல் நடத்துவதற்குரிய முகாமைத்துவவுரிமத்தை ஒல்லாந்தர் இவ்வொப்பந்தத்தினுாடாக அடைந்து கொண்டிருந்தனர். இத்தகையதோர் மாற்றமானது மறுவளமாக கண்டியரசினது ஆதிபத்தியத்திற்குரிய ஒரு பெரும் சவாலாக அமைந்ததோடு கண்டியரசிற்குத் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒரு புதிய அரசியல் - ராணுவ சக்தியாக ஒல்லாந்தரது அணி விளங்குவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இக்காரணத்தினால் இரண்டாம் ராஜசிங்கனுக்கு போர்த்துக்கேயர் ஒல்லாந்தருக்கிடையே ஏற்பட்ட இவ்வொப்பந்த நடைமுறையானது மேலும் மேலும் ஆத்திரமூட்டக்கூடிய வகையாகவே காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு போர்த்துக்கேயருக்கும், டச்சுக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட சமாதானம், இராஜசிங்கனோடு டச்சுக்காரருக்கிருந்த தொடர்பை எவ்வகையிலும் மாற்றவில்லை. இராஜசிங்கனின் நோக்கு டச்சுக்காரருக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் போர்த்துக்கேயருக் கெதிராகச்சண்டை செய்த பொழுது அவன் அவர்கட்கு (டச்சுக்காரருக்கு)
1865

போதிய துணை செய்யவுமில்லை, வாக்களித்த பிரகாரம் கொடுக்க வேண்டிய செலவுகளையாவது அவர்கட்கு கொடுக்கவுமில்லை. சேனைக்குத் தேவையான உணவுகளையும் மற்றும் தேவைகளையும் அவன் கொடுப்பதாக கூறியிருந்த போதிலும் அவ்வாறு செய்யவில்லை. இராஜசிங்கனுக்கும் டச்சுக்காரர் மீது மனம் கசத்தது. போர்த்துக்கேயரை எதிர்ப்பதற்காக கோட்டைகளில் தமது சேனையை நிறுத்தி, இராஜசிங்கனின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் நடந்து கொண்டனர். ஆனால் இப்போது போர்த்துக்கேயருக்கும், அவர்களுக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்டபடியால் டச்சுக்காரர் அக்கோட்டைகளைக் கைப்பற்ற உரிமையில்லை என்றும், தானும் அவர்களுக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தமில்லை என்றும் இராஜசிங்கன் எண்ணினான்."
இரண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தர் மீதாக வகுத்த கொள்கைகள் இப்பொழுது மிகவும் இறுக்கமாக நிலையை அடைந்தது. காரணம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், கண்டியர் என்ற மூன்று அரசியல் சக்திகளின் சமத்துவமற்ற அரசியல் முகாமைத்துவத்தின் முரண்பாடுகள் இறுதிக்கட்டத்தினை சென்று அடைந்திருந்தமையினாலாகும். போர்த்துக் கேயரைப் பொறுத்த வரையில் கீழைத்தேய வாணிப நிறுவனங்களினூ டான அரசியலாதிபத்தினை முன்னெடுத்துச் செல்கின்ற இறுதிநிலை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தோற்றம் பெற்று விட்டிருந்தது. ஒல்லாந்தர் இலங்கையில் போர்த்துக்கேயருடன் ஏற்படுத்திக் கொண்ட (தற்காலிக மான) சமாதான இணைப்பினைப் பயன்படுத்திய வண்ணம் கண்டியரசு மீதாக தமது போர்ப்பிரகடனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 1645ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் ஒல்லாந்தர் பக்கமிருந்து தைசென் (Thyssen) 2ஆம் இராஜசிங்கனுக் கெதிராகப் போர்ப்பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினான். இச்சூழ்நிலையானது கண்டியரசனின் கரையோரப் பிரதேச ஆட்சியாளர் மீதாக இதுவரைக்கும் கடைப்பிடித்து வந்த அணுகுமுறைகளில் இருந்து பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திவைக்கக் காரணமாகியது. ஒல்லாந்தரின் புதிய கப்ரின் ஜெனரலாகப் பதவியேற்றிருந்த மானுவெல் மஸ்கரென்ஹஸ் கொமாம் (Homem) என்பவன் தைஸெபனுக்கு படை நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு ஆணையிட்டான். இதன் விளைவாக ஹக்மனவிலிருந்து கண்டியை நோக்கிய ஒல்லாந்தரின் படை நகர்த்தல் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இச்சூழலில் டென்மார்க்கியருடைய (Danes) படையுதவியை 2ஆம் இராஜசிங்கன் தனது இராச்சியத்தின் பாதுகாப்புநிலையைக் கருத்திற் கொண்டு கோரியிருந்தான். கண்டியரசன் சார்பாக இந்துசமுத்திரத்திற்குட் பிரவேசித்திருந்த டென்மார்க் போர்க்கப்பல் திருகோணமலையில் உள்ள
187

Page 97
கொட்டியாரத்தினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற் காக முயன்றிருந்தவேளை, ஒல்லாந்தரது கப்பற்படையணியொன்று விரைந்து சென்று திருகோணமலைத் துறைமுகத்தைப் பாதுகாத்துக் கொண்டது. இந்நிலையில் கண்டியரசன் போர்த்துக்கேயருக்காக தனது கட்டுப்பாட்டிலுள்ள ஆட்சிப் பிரதேசங்கள் சிலவற்றை விட்டுக்கொடுப் பதற்கும் தவிர்க்க முடியாதபடி அவர்களுடன் பொருளாதார, அடிப்படை யிலான பேரம் பேசுவதற்கும் விருப்பம் தெரிவித்து, அவர்களுடைய தூதுவர் மூலம் செய்தியொன்றை அனுப்பி வைத்தான். இம்மாறிவரும் சூழ்நிலையானது மேலும் ஒல்லாந்தரை எச்சரிக்கையடையச் செய்ததில் வியப்பேதும் இருக்க முடியாது. ஒல்லாந்தர் இரண்டாம் இராஜசிங்கன் மீது பிரகடனப்படுத்திய போர் நடவடிக்கைக்கு பதிலளிக்கு முகமாக கண்டி மன்னர் தனது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போர்த்துக்கேய தூதுவனான டா - கன்னா (Da-Cunha) வை விடுதலை செய்வது என்றும், போர்த்துக்கேயருக்கு கரையோரத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பினை வழங்குவது என்றும் முடிவெடுத்து, செய்தியனுப்பியிருந்தான். இச் சந்தர்ப்பத்தில் தைஸெனின் படைகள் கொலன்னா கோறளையிலும், ஏழு கோறளைகளிலும் வெளிப்பட்டிருந்த கண்டியப்படைகளுடன் மோத வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. கண்டியப்படைகளுக்கு இப்போரில் அதிக ஆட்சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏழு கோறளை தைஸெனால் கைப்பற்றப்பட்டு அதனுடைய நிர்வாகத்திற்காக ஒரு திசாவையும் நியமிக்கப்பட்டமை ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது. ஏழு கோறளையில் ஒல்லாந்தரின் படை வீரர்கள் தங்குவதற்கென பெரியவொரு இராணுவமுகாமும் அமைக்கப்பட்டது.
இலங்கையில் கண்டியரசன் மீதாக ஒல்லாந்தர் திடீர்ப் போர்ப் பிரகடனம் செய்ததில் மிகவும் அதிருப்தியுற்றிருந்த பட்டோவிய அரசாங்கம் மாற்ஸ"ய்கர் (maatsuicker) என்பவனை இலங்கைக்கு அனுப்பி, தைஸெனின் இடத்திற்கு அவனைத் தளபதியாக நியமனம் பின்னர் தைஸெனை இலங்கையிலிருந்து திருப்பியழைத்துக் கொண்டது. ஜோன் மாற்ஸ"ய்கர் கல்வியிலும் அரசியல் சாணக்கியத்திலும் சிறந்து விளங்கிய காரணத்தால் கண்டியரசன் பற்றிய கொள்கையில் மென்மையான போக்கினையே கடைப்பிடிக்க முயன்றான். 'மாற்ஸ"ய்கர் (கண்டியரசனுட னான) சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் சப்தகோறளைகளிலுள்ள கறுவாநிலங்களைச்சூறையாடியதுடன் 1646ஆம் ஆண்டு, மே மாதத்தில் டச்சுப் படையொன்றையும் இராஜசிங்கன் தோற்கடித்திருந்தான். டச்சுக்காரரின் கஷ்டமான நிலையையறிந்த போர்த்துக்கீசர், நீர்கொழும்பை திருப்பிக் கொடுத்துவிடுமாறு
188

கேட்டார்கள். ஐரோப்பாவில் தங்களுக்கும், டச்சுக்காரருக்குமிடையில் ஒழுங்கு செய்யப்பட்ட உடன்படிக்கை கீழைத்தேயத்திலும் அமுலுக்கு வந்த பிற்பாடே நீர்கொழும்பை டச்சுக்காரர் பிடித்திருந்தபடியால் அதைத் திருப்பித்தங்களிடம் கொடுத்து விடுவதே முறையெனப் போர்த்துக்கேயர் வாதாடினர்.
அதிர்ஸ்டவசமாக ஒல்லாந்தருக்கும் சார்பானது, போர்த்துக்கேயருக்குப் பாதகமானதுமான நிகழ்வு ஒன்று ஐரோப்பாவில் ஏற்பட்டது. பிரேஸிலில் இவ்விரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்டிருந்த குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில் போர்த்துக்கேயரின் கோரிக்கையை மாற்ஸ"ய்கர் முற்றாகவே மறுதலித்துவிட்டிருந்தான். இலங்கையில் போர்த்துக்கேயருடன் மறுபடியும் யுத்தஞ் செய்யவேண்டிய நிலமையிருந்தபடியால் இராஜசிங்கனைத் தாமதமின்றி சமாதானப்படுத்த வேண்டிய அவசியமுண்டாயிற்று. இராஜசிங்கனோடு போர்த்துக்கேயர் சமாதானஞ் செய்து தனது திட்டங்களைச் சிதறடித்து விடாமற் பாதுகாப்பதற்காக, முன்னரேயே மாற்ஸ7ய்கர் (இராஜசிங்கனுடன்) சமாதானஞ் செய்தான். ஆனால், 1638ஆம் வருடத்து நிபந்தனைகளைப் போல் (இவ்வொப்பந்தம்), டச்சுக்காரருக்கு வாய்ப்புடையனவாயிருக்க வில்லை.
இலங்கை மீதான ஒல்லாந்தருடைய அரசியல் பொருளாதாரப்பூட்கை களின் முதலிரு கட்டங்களும் இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சிக்காலம் முழுவதனையுமே தத்தெடுத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகையாகாது. 1638க்கும் 1658க்குமிடைப்பட்ட கால எல்லையில் கண்டி யுடன் இராணுவ இணைய உறவின் அடிப்படையிலான தொடர்பு களையும், 1658க்கும் 1687க்கும் இடைப்பட்ட கால எல்லையில் கண்யுடனான இராணுவ மோதலையடிப்படையாகக் கொண்டதொடர்பு களையும் ஒல்லாந்தர் கொண்டிருந்தமையைக் காண முடியும். இக்கால கட்டத்தில் கண்டியரசனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே காணப் பட்டிருந்த உறவுமுறையின் தன்மைகள் யாவும் சமகால வெளியுலகச் சம்பவங்களின் தாக்கத்தினதும், உள்ளூரினுள் நிகழ்ந்த சமூக பொருளாதார மாற்றங்களின் விளைவுகளினாலுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இராஜசிங்கனும் மாற்ஸ"யிக்கரும் :
மாற்ஸ"யிக்கர் அடிப்படையில் உள்ளூர் அரசுகளின் நடவடிக்கை
56fai 56pGuLné Gostaira), (Non - intervention in local states)
என்பதனைக் கடைப்பிடித்து ஒழுகிய ஒர் டச்சுத் தளபதி நாயகம் என்ற
189

Page 98
நிலையில், கண்டியரசுடன் சினேகபூர்வமாக ஒரு கொள்கை வகுப்புத் திட்ட முறையொன்றினையே முன்னெடுத்துச் செல்வதற்குப் பெருமள விற்கு முயன்றான். ஆனால் தென்கிழக்காசியாவில் போர்த்துக்கேயரது இறுதிக்கட்ட நடவடிக்கைகள் ஒல்லாந்தரை ராணுவப்படை நடாத்தலையடிப்படையாகக் கொண்ட பிரதேச ஆதிபத்தியத்திற்கு வழிவகுத்திருந்தது. இப் பின்னணியில் ஒல்லாந்துத் தளபதிகள் ஒரு தாய்க் கோழியின் இறகுக்குள் அதிகமான குஞ்சுகள் பாதுகாப்பினைத் தேட முடியாது" என்ற கொள்கையை போர்த்துக்கேயர் தொடர்பாகக் கடைப்பிடிக்கவாரம்பித்திருந்தமையைத் தென்கிழக்காசியாவில் காண முடிந்தது. இக்கொள்கையையே மாற்ஸ"யிக்கரும் இலங்கையிலுள்ள போர்த்துக்கேயரது நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடைப்பிடித் திருந்தான். கண்டியரசனுக்கும், போர்த்துக்கேயருக்குமிடையிலான தொடர்புகளின் தன்மையைப் பொறுத்தே கண்டியரசனுக்கும், ஒல்லாந்தத் தளபதிகளுக்குமிடையிலான அரசியல் உறவு மாற்ஸ"யிக்கர் காலத்திலிருந்து நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இராஜசிங்கன் தான் மாற்ஸ"யிக்கருடன் சமாதானப் போக்கினைக் கடைப்பிடிப்பதாயின் ஒல்லாந்தர் வசமுள்ள நீர்கொழும்புப் பிரதேசத்தினை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தான். ஒல்லாந்தர் நீர்கொழும்பினை வைத்திருப்பதற்குப் பதிலாக, காலித்துறைமுகத்தினை அவர்கள் வசம் ஒப்படைப்பதற்கு தான் ஆவலாக உள்ளதாகவும் இரண்டாம் இராஜசிங்கன் அறிவித்திருந்தான். இவ்வறிவிப்புக்குப் பதிலாக மாற்ஸ"யிக்கர் தாம் இன்னும் ஆறுமாத காலத்திற்காவது நீர்கொழும்பினையும், அதனைச் சூழவுள்ள பிரதேசத் தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என அறிவித்தான் எனவே கண்டியரசனுக்கும் ஒல்லாந்துத் தளபதிக்குமிடையே சுமூக உறவு காணப்பட்டது என்று குறிப்பிடமுடியாது. மாத்தறை மாவட்டத்தில் கண்டிப்போர் வீரர்கள் தமது அரண்களையமைத்து ஒல்லாந்தருக்கு எதிராக வியூகம் வகுக்கத்தக்க வகையில் தயாராக இருந்தார்கள். மாற்ஸ"யிக்கரோ தனது பெயரினால் அல்லாமல் ஒல்லாந்து நாட்டு அரச தளபதியின் பெயரால் போர்த்துக்கேயர்மீது போர் வியூகம் வகுப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். இச்சந்தர்ப்பத் தில் கண்டி மன்னனான இரண்டாம் இராஜசிங்கனுக்கு போர்த்துக்கேயர் மீதான அச்சம் முழுவதுமாக நீங்கி, ஒல்லாந்தர் மீதாகவே மிகவும் விழிப்புணர்வு பெற்ற அச்சநிலை காணப்பட்டது. இராஜசிங்கனும் போர்த்துக்கேயரும் மீண்டும் ஒர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அளவிற்கு பரஸ்பரம் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் இங்கு அவதானிக்கத் தக்கது. ஆனால் மொலூகாஸ் (moluccas) தீவில் டச்சுக் காரருக்கும்
190

போர்த்துக்கேயருக்குமிடையே ஏற்பட்ட சம்பவ மொன்றினால் போர்த்துக்கேயரது வீழ்ச்சி அங்கு ஆரம்பமானது. 1666இல் ஒல்லாந்தரது வர்த்தக சங்கத்தின் கீழ் அத்தீவின் முழுமையான வாணிப ஏகபோக உரிமம் பெற்றுக் கொள்ளப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கையிலும் போர்த்துக்கேயருக்கெதிராக ஒல்லாந்தரது இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
போர்த்துக்கேயருக்கெதிராகக் கூட்டுப்படை நடவடிக்கைகள் : போர்த்துக்கேயருக்கெதிராகக் கண்டியரசனும், ஒல்லாந்தரும் தத்தமது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய சந்தர்ப்ம் இப்பொழுது இலங்கையில் கைகூடியிருந்த வேளையில், இவ்விருகட்சியினருக்கு மிடையே பரஸ்பரம் நம்பிக்கையினமே வளர்ந்திருந்தமையைக் கண்டு கொள்ளமுடிந்தது. போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றும் படைநடவடிக்கைகளில் ஒல்லாந்தர் தமது படையணிகளுடன் கண்டிய அரசனின் படையணிகள் இணைந்து கொள்வதனைப் பெரிதாக விரும்பி யிருக்கவில்லை ஆயினும் ஒல்லாந்தர் தமக்கு முன்பு கண்டியரசனால் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்களை மனதிற்கொண்டு, போர்த்துக்கேயருக் கெதிராக படை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற அதே நேரத்தில், தேவை ஏற்படின் கண்டியரசனுக்கெதிராகவும் படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தயாராயிருந்தனர். இந்நிலையில் கண்டியரசனோடு கூட்டுச்சேர்ந்து ஒல்லாந்தர் தமது கீழைத்தேய எதிரிகளான போர்த்துக்கேயருக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சமயங்களில், தம்மைப்பற்றி கண்டியரசனுரடாகப் போர்த்துக்கேயருக்குச் சென்று அடையக்கூடிய இராணுவ ரகசியங்கள் பொறுத்தும் ஒல்லாந்தர் மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்றினர்.
போர்த்துக்கேயருக்கெதிரான நேரடி இராணுவமோதல்களை ஒல்லாந்தர் இலங்கைத்தீவிற்கு வெளியே தான் ஆரம்பித்துவைத்தனர். ஆசியாவிலிருந்து பிறேசில் நாடு வரைக்கும் போர்த்துக்கேயருக்கெதிரான இராணுவநடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்ட காலம் இதுவாகும். இந்தியாவிலுள்ள காயல்பட்டினத்திலிருந்து-ஒல்லாந்தரை மதுரைநாயக்கர் மூலம் வெளியேற்றுவதற்கு கோவா ஆள்பதி மேற்கொண்டிருந்த முயற்சியை மாற்ஜுயிக்கர் முறியடித்ததோடு 1649இல் தூத்துக்குடித் துறைமுகப் பரப்பில் வைத்து போர்த்துக்கேயருக்கு ஆகக்கூடிய சேதத்தினையும் இராணுவ இழப்புக்களையும் ஏற்படுத்திவிட்டிருந்தான். இப்பின்னணியில் இலங்கையிலும் 1652இல் உத்தியோக பூர்வமாக போர்த்துக்கேயருக்கெதிரான, அவர்களை வெளியேற்றுவதற்கான படைநடவடிக்கைகளை ஒல்லாந்தர் ஆரம்பித்து வைத்தனர்.
19

Page 99
பஸ்துன்கோறளையிலிருந்து போர்த்துக்கேயருக்கெதிராக அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தன. அழுத்கம கோறளையின் முதலியாரது பொறுப்பில் உள்ள லஸ்கரின்களதும், கறுவாப்பட்டையுரிக்கும் சலாகமத் தொழிலாளர் களுமாக இணைந்து போர்த்துக்கேயரது படையொழுங்கமைப்பினைச் சீர்குலைத்து விட்டிருந்தனர். இதே நேரத்தில் சபிரஹமுவ திசாவை யூடாகவும் ஏழுகோறளையூடாகவும் போர்த்துக்கேயரது ஆதிபத்தியப் பரப்பிற்குள் கண்டியமன்னன் படைகளுடன் ஊடுருவி போர்த்துக்கேயரது இராணுவமையங்களைச் சிதறடித்துவிட்டான். தென்திசையில் களுத்துறை, அங்குறுவதொட்ட ஆகிய கடற்கரை நகரங்களினூடாக ஒல்லாந்தரது படைவீரர்கள் போர்த்துக்கேயரது இராணுவமையங்களைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஏறக்குறைய பாணந்துறை வரைக்கும் டச்சுப் போர் வீரர்கள் சூழ்ந்து நின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு கொமாண்டரியின் தளபதிமீது மக்கள் கலகம் செய்து, தமது பாதுகாப் பினை உறுதிசெய்யுமாறு ஒன்றுதிரண்டு, குழப்பநிலை யொன்றையும் உருவாக்கியிருந்தார்கள். கொழும்பு ஏறக்குறைய ஒல்லாந்தரது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நிலைக்குள்ளாகியது. போர்த்துக்கேயத் தளபதிகளுக்குள் நிலவிய முரண்பாடுகளும், கொலையில் முடிவுற்ற சம்பவங்களும் இணைந்து கொழும்பில் இருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்குரிய காரணிகளாயின.
இரண்டாம் இராஜசிங்கனது கண்டிப் போர்வீரர்கள் அணியின் மேலுமொரு பிரிவு கொழும்பிற்கு அண்மித்ததாகவுள்ள ஹல்றுபேவில என்ற ஹன்வெல்ல நகரில் பிரசன்னமாயிருந்தது. மன்னன் இராஜசிங்கனே இப்படையணிக்குத் தளபதியாக தலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்த போர்த்துக்கேயப் படையணியை இராஜசிங்கனது படையணி பின்நோக்கி நகரச் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இராஜசிங்கன் கொழும்பிற்கு வியூகம் அமைத்து வந்திருந்த தன்மையானது ஒல்லாந்துத் தளபதிய்ைக் கலக்கமடையச் செய்திருந்தது. ஏனெனில் கொழும்புத் துறைமுகத்தையும், நகரையும் கைப்பற்றும் பொறுப்பு ஒல்லாந்துப் படையணிக்கேயுரியது என முன்னர் சமரசங் கண்டு, பரஸ்பரம் கண்டி மன்னனிடமிருந்து சம்மதம் பெற்றிருந்தமை யினாலாகும். இதனால் கண்டி மன்னனுக்கு கொழும்பினைக் கைப்பற்றும் உரிமம் கிடையாது என ஒல்லாந்துத் தரப்பினர் முறுகிக் கொண்டனர். இருந்தும் கண்டி மன்னனின் மனதை மாற்றி, அவனை கொழும்பு நகருக்குள் வருவதனைத் தவிர்த்துவிட்டிருந்தனர். கொழும்புக்குப் பதிலாக கல்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற நகரங்களைத் தாக்கி,
192

அவற்றைப் போர்த்துக்கேயரிடமிருந்து மீட்டெடுக்குமாறும் பதிலறிவுரை ஊட்டப்பட்டது.
1653, ஜனவரியில் கார்ல் ரீனேர்ஸ் (Carl Reiners) என்ற ஆள்பதி நாயகம் இங்குள்ள ஒல்லாந்த ஆள்பதிக்கு அனுப்பி வைத்த கடிதமொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது. "இராஜசிங்கனது மிகத் தந்திரமான நடவடிக்கைகளையும், மிகவும் இரகசியமான முறையில் எமது எதிரிகளுக்கு உணவு, போர்க்கருவிகள் முதலாவனவற்றை வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். கொழும்பு நகரம் எப்போது எமது கைகளுக்கு அகப்படுகின்றதோ அப்போதிலிருந்து கொழும்பு நகரின் மீதான தனது பங்கினையும் இராஜசிங்கன் கேட்பதற்குத் தவறமாட்டான். நாம் அதற்கு உடன்படவில்லையாயின் அவன் திட்ட வட்டமாக எம்முடன் முரண்பாட்டு, எதிரியாக மாறிவிடுவான். ஆதலால் அவனது படைவீரர்களை எமது படைவீரர்களின் பயிற்சிப் பாசறையிலோ அல்லது போர்முனையிலோ இணைக்காமல் வைத்திருப்பது எமது குறிக் கோளுக்கு மிகவும் உகந்ததாகும். இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இயல்பாகவே தமது சொந்த ராஜாக்களையே பெரிதும் விரும்பு கின்ற தன்மை காரணமாக அவர்கள் எம்மை பெரிதும் வெறுப்பார்களே தவிர, ஆதரவு தரமாட்டார்கள். சிலவேளை போர்த்துக்கேய ஆட்சியாளருக்குக் கூட அவர்கள் ஆதரவாக இருக்கக்கூடும். எமது ஆளுநருக்கும் கண்டி அரசனுக்குமிடையே இன்னும் நல்ல நட்புறவு இருந்து கொண்டிருக்கின்றது, காலிக்கு ஒவ்வொரு நாளும் (கண்டியிலிருந்து) புதிய புதிய செய்தியாளரும் (messengers) துதுவர்களும் வந்து கொண்டிருப்பது மிக நல்ல சகுனமாகும். இராசசிங்க மன்னனது நட்புறவானது எமக்கு எந்தளவிற்கு நிலைத்திருக்கும் என்பதும் எமக்குத் தெரியும். போர்த்துக்கேயரை இத் தீவினின்றும் துரத்தியடித்த பின்னர், இலங்கையில் அவர்கள் பின்பற்றியிருந்த முறைகளையும், பழக்க வழக்கங் களையும் நாமும் பின்பற்ற வேண்டும். போர்த்துக்கேயர் இங்கு இருந்த நீண்ட காலப்பகுதியில் எவ்வாறு அரசர்களை மிகவும் அச்சமடையச் செய்து வைத்திருந்தனரோ அவ்வாறே நாமும் அவர்களைக் கையாள வேண்டும். எமது கொம்பனியினுடைய வரலாற்றில் இலங்கையை வெற்றி கொள்வது என்பது மிக முக்கிய ஒரு சம்பவமாக அமையும் (ஆகவே) நாங்கள் உமக்காக எம்மாலான அத்தனை உதவிகளையும், எமது படையணிகளின் பலம் போதாமல் இருக்கின்ற இந்நிலையிலும் செய்யக் காத்திருக் கின்றோம். அடுத்த கடிதத்தில் கொழும்பினைக் கைப்பற்றும் செய்தியை நாம் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்." வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கடிதத்தில் இரண்டாம்
193

Page 100
இராஜசிங்கனைப் பற்றிய இயல்புகள், ஒல்லாந்த ஆட்சியாளரின் நோக்கங் களும் மிகத்தெளிவாக வரையப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
போர்த்துக்கேயராட்சியின் பின்னடைவின் இறுதிக் கட்டம் :
1653ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீச ஆளுநரான Fவிரான்சிஸ்கோ - டீ - மெல்லோ டீ காஸ்ரோ என்பவனை கப்ரின் - மேஜராக டொம் ஆள்வாரோ என்பவனுக்குத் துணையாக போர்த்துக்கீச ஸ்பானிய அரசு நியமனம் செய்திருந்தது. மெல்லோ - டீ - காஸ்ரோவின் வருகையுடன் தளம்பல் நிலையிலிருந்து கொண்டிருக்கும் இலங்கையின் போர்த்துக்கேய அரசியல் - ராணுவ நிர்வாக முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. குற்றமிழைத்த போர்த்துக்கேய ராணுவ உத்தியோகத்தர்களுக்கும், சிவிலியன்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு தெம்பு ஊட்டப்பட்டது. ஆனாலும் புதிதாக வருகை தந்த கப்ரின் - ஜெனரல் தமது இராணுவக் கட்டமைப்பில் செய்யப்பட்ட புதிய நியமன விடயங்களிலோ அல்லது இடமாற்ற விடயங்களிலோ எவ்விதத்திலும் தலையீடு செய்யாமல் இருந்தமை மிகவும் புத்திசாலித்தனமான ஒரு விடயமாக அமைந்தது.
கொழும்புக்கோட்டையிலிருந்து போர்த்துக்கேயரின் பிரதான விநியோகப் பாதையில் அவர்களது நடவடிக்கைகள் இப்பொழுது கண்டியரசனின் படையணியொன்றினால் முற்றாக ஸ்தம்பிதமடையச் செய்யப்பட்டது. ரூவான்வல - கரவானெலப் பிரதேசத்தில் தங்கியிருந்த கண்டியப்படையணியை அவ்விநியோகப் பாதையை முற்றாக ஸ்தம்பிதமடையச் செய்தது. இதன்ால் உடனடியாக சபரஹமுவ - மாத்தறைத் திசாவைகளை அவ்விடத்திற்குச் செல்லுமாறு போர்த்துக்கேயப் படைத்தளபதியினால் பணிக்கப்பட்டமையைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது. இந்நேரத்தில் இராஜசிங்கன் தனது நட்பிற்குரிய ஒல்லாந்தரது படையணியின் வருகையையும். தாக்குதல் நடாத்த வேண்டியிருந்த சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால் கொழும்புத்துறைமுகத்தில் ஒல்லாந்தக் கடற்படையணிக்கு நேர்ந்த இழப்புக்காரணமாக இராஜசிங்கனது எதிர்பார்ப்பு நிறைவேற முடியாத சந்தர்ப்பம் நேரிட்டது. இதனால் இராஜசிங்கன் தனது படையணிகளுடன் பின்வாங்கி, கண்டிக்குத் திரும்பவேண்டியதாயிற்று. மல்வானைக்குப் பின்வாங்கியிருந்த போர்த்துக்கேயர் மீண்டும் கொழும்புத்துறைமுகத்திற்கு முன்னேறிச்சென்று, நான்கு, ஏழு கோறளைகளைத் தமது கட்டுப் பாட்டிற்குள் கொணர்ந்தனர். இப்பொழுது போர்த்துக்கேயருக்கு புதிதாக சில முன்னரண்நிலைகள் கிடைத்திருந்தன. அவையாவன: அலெளவா,
194

அருண்டர, ஹன்வெல (கறுபேவில), கனதோட்ட, அத்தப்பிட்டிய, கொடுவேகொட, பிட்டிகலதெனியா என்பனவாகும். மக்கோனாவில் இருந்து ஒல்லாந்தரின் பிடியைத் தளர்த்தி, பஸ்துன்கோறளையையும் போர்த்துக்கேயர் இப்பொழுது கட்டுப்படுத்தியிருந்தனர். பஸ்துன்கோறளையிலிருந்து பழவகைகளும், மந்தைகளும் போர்த்துக்கீசரால் சேகரிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் ஐந்து ஸ்பானிய நாட்டுப் போர்க் கப்பல்கள் வீரர்களுடன் கொழும்புத்துறைமுகத்தினை வந்தடைந்துவிட்ட செய்தியைக் கேள்வியுற்ற ஒல்லாந்தர் தமது படையணிகளுடன் பின்வாங்கி களுத்துறையைச் சென்றடைந்து விட்டனர். இருந்தும் ஒரிரு வாரங்களுள் கொழும்பினை வந்தடைந்த 11 டச்சுப் போர்க் கப்பல்களில் வந்த வீரர்கள் கொழும்புத்துறைமுகத்தின் வரலாற்றையே மாற்றியமைத்து விட்டிருந்தார்கள். கொழும்புத் துறைமுகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஐந்து ஸ்பானிய நாட்டு போர்க்கப்பல்களையும் டச்சுப் போர்க்கப்பல்கள் சிதறடித்துவிட்டிருந்தன. இலங்கையில் போர்த்துக்கீசரது ஆதிபத்தியத்திற்குச் சாவுமனியடித்த நிகழ்வாகவும் இது அமைந்தது. கண்டியப் படையணிகளின் முன்னணியிற் கூட போர்த்துக்கேயப் படைகளுக்குப் பின்னடைவே ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏழு கோறளைகள், றைகம்கோறளை ஆகிய பரப்புக் களிலேயே போர்த்துக்கேயப் படையணிகள் இப்பொழுது கண்டிய படையணிகளின் தாக்கத்தினால் பின்னடைவைச் சந்தித்தன. இதன் பயனாக போர்த்துக்கேயர் 1654, யூலை மாதத்தில் இராஜசிங்கனுடன் சமாதான உடன்படிக்கையொன்று செய்வதற்கு விழைந்தார்கள். ஆனால் போர்த்துக்கீசத் தரப்பில் இருந்த சில தலைவர்கள் உள்ளகமுரண்பாடு காரணமாகக் கொலைசெய்யப்பட்டமை காரணமாக, போர்த்துக்கேயர் தொடர்ந்து பின்வாங்கிச் சென்று பிட்டிகல்தெனியாவில் தமது படைமுகாமை அமைத்துக் கொண்டிருந்தனர். அதேயாண்டு, டிசெம்பர் மாதமளவில் கண்டியதிசாவையொருவனின் படையணிகளினால் மேலும் பின்வாங்கச் செய்யப்பட்டு, போர்த்துக்கேயருடைய நிலையை ஏழு கோறளை, நான்கு கோறளைகளுக்கு இட்டுச் சென்றனர். கண்டிய வீரர் களால் போர்த்துக்கேயர் சார்பான பல சிங்களவர் கைதிகளாகக்
போர்த்துக்கேய முன்னணி வீரர்களைச் சுற்றிவளைத்துக் கைதுசெய்ய முயன்றபொழுதிலும் அது சாத்தியப்படாதுபோகவே, கொழும்பிற்கு அப்படையணி சென்று சேர்வதற்கு வாய்ப்பாகவிருந்த பாதைகள் அனைத்தையும் தடுத்து விட்டிருந்தான். போர்த்துக்கேயப் படையணி களுக்குரிய உணவு - சுடுபடைக்கலங்கள் ஆகியனவற்றின் வழங்கல் நிலை மல்வானவிலிருந்து முற்றாகவே தடுக்கப்பட்டிருந்தது.
95

Page 101
இந்த இடரிலிருந்து போர்த்துக்கேய படையணியைப் பாதுகாப்பதற் காக கப்ரின் - மேஜராக ஹஸ்பர் Fவிக்கெய்ரா என்பவனை ஜனவரி, 1655இல் போர்த்துக்கேய அரசாங்கம் நியமித்தது. கண்டியரசு மீதாக மேலதிப் படையணிகளுடன் ஹஸ்பர் தலைமை வகித்துச்சென்றான். கண்டியத்திசாவையான பணிக்கரை வைத்துக்கொண்டு, மீண்டும் நான்கு கோறளை, ஏழு கோறளை ஆகிய பிரதேசங்கள் போர்த்துக்கேயரது ஆதிக்கத்திற்குள் கொணரப்பட்டன. இராஜசிங்கன் மிகவும் கோபமுற்ற வனாய் கஸ்பருடன் போர் தொடுப்பதற்காக முன்னேறினான். கொட்டிகாப்பொல என்ற மையத்தில் பாசறையமைத்து, போர்த்துக் கேயப் படையணி மீது தாக்குதல் தொடுத்தான். உக்கிரமான தாக்குதல் இருபக்கங்களிலுமிருந்து நிகழ்ந்தன. 200ற்கும் மேற்பட்ட கண்டியப் போர்வீரர் கொல்லப்பட்டனர். 100 வீரர்கள் மட்டில் சிறைபிடிக்கப் பட்டனர். இராஜசிங்கன் பின்வாங்க வேண்டியிருந்தது. கினிக்கொட கோறளையில் உள்ள மொட்டைப்புளி என்ற கிராமத்தில் போர்த்துக் கேயப் படைதங்கியிருந்தது. இந்நிலையில் இராஜசிங்கன் போர்த்துக்கேயர் பக்கமாக சமாதான உணர்வினை வெளிப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுக் கொண்டது. குவொய்ரோஸ் இச்செய்தியை விரிவாகத் தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Fவிக்கெஸ்ராவுடன் கண்டியரசன் இணைந்து ஒல்லாந்தர் வசமுள்ள நீர்கொழும்புக் கோட்டையைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தமொன்றைச் செய்து அதன் பொருட்டு, Fவிக்கெய்ராவிற்கு கண்டியரசன் யானை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தான் எனவும் குவெய்ரோஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரஸ்பரம் இரண்டிரண்டு முதலியார்மார்களையும் பரிமாற்றிக் கொண்டிருந்தனர் எனவும் குவெய்ரோஸ் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது. போர்த்துக்கேயருடைய தாக்குதலினால் இரண்டாம் இராஜசிங்கன் தோல்வியினைத் தழுவிக்கொண்டிருந்தான் என்ற செய்தியை ஒல்லாந்த ஆள்பதிநாயகம் வான் - டீர் - மெய்டெனுக்கு, Fவிக்கைரா என்பவன் எழுதியிருந்த கடிதமொன்றினாலும் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. அக்கடிதம் பின்வருமாறு உள்ளது : (1655) “மிகவும் ஆக்ரோசத்துடன் தொடங்கப்பட்ட (கண்டி) அரசனின் படையெடுப்பின் வியூகத்தை இரகசியமாகக் கண்டறிந்து கொண்ட போர்த்துக்கேயர் (கண்டிப்) படையணிகளுக்கு மிகவும் பலத்த இழப்புக்களுடன் பின்னடையை ஏற்படுத்திவிட்டதிலிருந்து இராஜசிங்கனின் போர்வெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர் என நாம் கேள்விப்படுகின்றோம். (கண்டி) மன்னன் எங்கள் பக்கம் சார்ந்து விடாதபடி சிறிது காலம் இருப்பதற்கான இந்நடவடிக்கையையிட்டு நாம் சிறிதும் அஞ்சத் தேவையில்லை."
796

Fவிக்கெய்ரா இக்கடிதத்தில் குறிப்பிட்டதனைப் போன்றே, வான்கோயன் தென்னிந்திய கரையோரத்துறைமுக நகர்களிலும், இந்து சமுத்திரத்திலும் போர்த்துக்கேயருக்கெதிராக தனத கடற்படை வலுவைப் பிரயோகித்து ஈட்டிய வெற்றிகள் இலங்கையிலும் போர்த்துக்கேயரது ஆதிபத்தியத்தை முற்றுவிப்பதற்குத்தூண்டியது எனலாம். இலங்கையின் தென்மேற்குக் கரையோரப் பரப்பிலிருந்து போர்த்துக்கேயரை விரட்டும் பணியை ஒல்லாந்தர் இப்பொழுது தொடக்கியிருந்தனர். செப்ரெம்பர் 1655இல் 14 போர்க்கப்பல்களை உள்ளடக்கியதாக டச்சுக்கடற்படை தொடர் ஒன்று 2000 இராணுவத்தினருடனும், சுடுபடைக்கலங்களுடனும் தென்னிந்திய தென் - மேற்குக் கரையோரத்தினை வந்தடைந்தது. இலங் கையின் பிரதான துறைமுகப்பட்டினமான கொழும்பினைக் கைப்பற்றுவதையே இந்த இராணுவ அணி முக்கியநோக்கமாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரிக்கண்மையில் கூடிய ஒரு பாதுகாப்புச்சபைக் கூட்டத்திலேயே வான் - டீர் - மெய்டன் உட்பட ஒல்லாந்தத்தளபதிகள் கூடியிருந்து இம்முடிவினை மிகவும் ரகசியமாக எடுத்திருந்தனர். இருந்தும் கடும்மழை காரணமாக பீரங்கி சுடுகலன் களுக்குப் பயன்படுத்தப்பட இருந்த மருந்தினை உபயோகிக்கமுடியாத நிலை உருவானது. இதனால் கொழும்புத்துறைமுகத்தினைக் கைப்பற்று கின்ற முயற்சி மேலுமொரு மாதத்தினால் பின்தள்ளி வைக்கப்பட ஏதுவானது. ஒல்லாந்தரது இரு இராணுவப்படைப் பிரிவுகள் Fவிகெய்ரா வினது தலைமையிலும், வான் - டீர் - மெய்டனின் தலைமையிலும் இருபாதையூடாக கொழும்பினை நோக்கி முன்னேறின. 16ஆம் திகதி ஒக்ரோபர் மாதம் 1655ஆம் ஆண்டு Fவிகெய்ராவினது படையணிகள் பம்பலப்பிட்டி வரைக்கும் சென்று போர்த்துக்கேயரது முகாமனைத் தினையும் துவம்சம் செய்தன. மெய்டனது படையணிகள் பீரங்கிக் குண்டுகளை முழக்கிய வண்ணம் களுத்துறைக் கோட்டையி லிருந்து முத்துவால், சான் செபஸ்தியன் வரைக்கும் போர்த்துக்கீச அரண்களை யெல்லாம் தகர்த்துக் கொண்டு சென்றடைந்தது, கொழும்பு நகரிலிருந்து போர்த்துக்கேயரது ஆட்லரி பீரங்கிக் குண்டுகள் ஒல்லாந்தர் மீது வீழ்ந்து வெடித்தன. 15நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற உக்கிரமோதலின் பின் போர்த்துக்கேயர் வலுவிழந்து போர்புரிய முடியாத நிலையை எய்தினர். இருந்தும் போர்த்துக்கேயத் தளபதியை சரணாகதியடையுமாறு கேட்டுக்கொண்ட பின்னரும் அவன் அவ்வாறு செய்ய மறுத்திருந்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஒல்லாந்தரது போர்க்கப்பல்கள் நேரடியாக இப்பொழுது கொழும்புத்துறைமுகத்திற்குள் பிரவேசித்தன.
197

Page 102
றிபைரோவின் குறிப்பின் பிரகாரம் இப்பொழுது கொழும்புத் துறைமுகத்திற்குள் 800 வெள்ளையர்களும், 20 -25 வயதிற்கிடைப்பட்ட மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவ வீரர்களும், 150 ஆட்லரி குண்டுகளும் (மிகவும் சக்தி வாய்ந்தவை), ஒரு கப்பல் நிறைந்த சாதாரண ஆட்லரிக் குண்டுகளும் காணப்பட்டிருந்தன என்பதனை அறியமுடிகிறது. 24ஆம் திகதி நவம்பர் மாதம், 1655ஆம் ஆண்டு கொழும்பில் முகாமிட்டிருந்த ஒல்லாந்த இராணுவத்தளபதி கல்ப்ட் என்பவன் (Hulf) பட்டேவியாவிலுள்ள தலைமையத்திற்கு எழுதிய கடிதமொன்றில் "எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னராவது எமக்கு மேலதிகப் படையணியை நேரடியாக காலித்துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கு மாறும், அடுத்த பருவக்காற்றுத் தொடங்கியதும் போர்த்துக்கேயர் மன்னாரிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் படையுதவியைப் பெற்றுவிடுவர் எனவும், ஆதலால் கொழும்பு நகரினதும், துறைமுகத் தினதும் கைப்பற்றுதலிலிருந்து எமக்கு ஏமாற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது மேன்மைமிக்க தங்களது கட்டுப்பாடுமாகும் எனவும்” கேட்டுக் கொண்டிருந்த வகையைக் காண்கின்றோம். கல்ப்ட்டுக்கு உள்ள மிகப்பெரிய அச்சமென்னவென்றால், இராஜசிங்கனுக்கும், போர்த்துக்கேயருக்குமிடையே ஏதாவது உடன்பாடு அல்லது ஒத்திசைவு ஏற்பட்டுவிட்டால் கொழும்புத்துறைமுகம், நீர்கொழும்புப் பிரதேசம் போர்த்துக்கேயரால் கண்டியரசனிடம் கையளிக்கப்பட்டு விடக்கூடும் என்பதாகும். ஆனால் இறுதியாக கொழும்புத் துறைமுகமும் அதனைச் சூழ்ந்த பிரதேசமும் 12ஆம் திகதி மே மாதம், 1656ஆம் ஆண்டில் ஒல்லாந்தரின் கையிற் சிக்கி, வீழ்ச்சியடைந்தது. ஏழுமாதகால முற்று கையின் பின்னரே கொழும்பு ஒல்லாந்தருக்குரியதாயிற்று.
கண்டியரசன் இராஜசிங்கன் நோக்கில் அவன் மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நோக்கமொன்று ஒல்லாந்தரூடாக நிறை வேறுவது குறித்து மகிழ்ச்சிகரமானநிலையையே உருவாக்கியது. இருந்தும் கண்டியரசனுக்குள்ள மிகப்பெரிய ஒரு கவலை என்னவெனில் கொழும்பும், நீர்கொழும்பும் தன்னிடம் ஒல்லாந்தரால் ஒப்படைக்கப் படுமா என்பதேயாகும். கொழும்பினைக் கைப்பற்றும் முயற்சியில் ஒல்லாந்தர் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் (ஏழு மாத காலப் பரப்பிற்கு) ஒல்லாந்தருக்கு வேண்டிய உணவுத் தேவையை கண்டியரசன் பூர்த்தி செய்திருந்தான். ஒல்லாந்தரது விருப்பமான உணவுக்காக காட்டு எருமைகளை ஏராளமாக கண்டியரசன் அனுப்பியிருந்தான். இக் காரணத்தில் ஒல்லாந்தர் கொழும்பினைக் கைப்பற்றிய பின்னர், கொழும்பினைச் சுற்றியிருந்த போர்த்துக்கீசருக்கிருந்த மாகாணங் களை கண்டியரசனின் நீதி - நிர்வாக எல்லைக்குரிமமாகக் கையளித்து
198

விட்டிருந்தனர். ஆனால் கொழும்புத் துறைமுகமும், நகரும் கண்டி யரசனின் பெயரால் ஒல்லாந்தக் கம்பனிக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது என்பதனை ஒல்லாந்தர் கண்டியரசனுக்கு அறிவித்து விட்டிருந்தனர். வான் மெய்டன் கண்டியரசனை கொழும்புக்கு வருமாறு விடுத்த கோரிக்கையைக் கூட இராஜசிங்கன் நிராகரித்தான். ஒல்லாந்தர் ஏற்கனவே மட்டக் களப்பில் வைத்து கண்டியரசனுடன் செய்திருந்த வரலாற்று ஒப்பந்தத்தை உள்ளடக்கிய சரத்துக்களை மெய்டன் இராஜசிங்க மன்னனுக்கு எடுத்துக்காட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இராஜசிங்கனுக்கு எதிராக நிறையவே ஒல்லாந்தர் பல குற்றச்சாட்டுக்களையும், முறையீடுகளையும் அனுப்பி வந்தனர். அவற்றில் கண்டியைச் சென்றடையும் மலைக் கணவாய்களே அவனது திசாவை களால் மூடப்பட்டது பற்றியும், பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களையும், சேவை செய்பவர்களையும் கொழும்பிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டமை பற்றியும், விசேடமாக ஒல்லாந் தருடைய நிர்வாக முகாமைத்துவத்தை உள்ளடக்கிய காலி, மாத்தறை, பஸ்துன் கோறளை, வெள்ளைவத்த, நான்கு கோறளை, ஏழு கோறளை ஆகிய பிரதேசங்களிலிருந்து வியாபாரிகளும், தொழிலாளர்களும் கொழும்புத் துறைமுகம் செல்வதிலிருந்து முற்றாகத் தடுக்கப்பட்டது பற்றியுமாக அக் குற்றச்சாட்டுகள் அமைந்திருந்தன. மேலும் மாத்தளை மாவட்டத்திலிருந்து சட்டப்பெட்டி (Cattepetti) அப்புகாமி என்பவன் பிரகடனப்படுத்தி வைத்த செய்தியொன்றினால் மாத்தளை மாவட்டத்தி லிருந்து ஒல்லாந்தருக்கு எவ்விதமான வழங்கல் களையும் மேற்கொள்ள கூடாது எனவும், ஏனெனில் அம்மாவட்டம் முற்றுமுழுதாக கண்டியர சனுக்கேயுரித்தானதாகும் எனவும் அப்பிரதேச மக்கள் கோரப்பட்டிருந் தனர். ஒல்லாந்தர் அனுப்பியிருந்த குற்றச் சாட்டுக்கள் எவற்றிற்குமே கண்டி மன்னன் பதிலளிக்காமல், மிக நீண்ட மெளனம் சாதித்தான். இதனால் ஒல்லாந்தர் இராஜசிங்கனையிட்டு மீண்டும் அச்சம் கொள்ளத் தொடங்கினர். இந்நிலையில் ஒல்லாந்தரின் கிழக்கிந்திய வர்த்தக சங்கத் திற்கு இரண்டாம் இராஜசிங்கன் செலுத்த வேண்டியிருந்த் நிலுவைத் தொகை இன்னும் செலுத்தப்படாது இருப்பது சுட்டிக் காட்டப்பட்டு, கொழும்பினைச் சூழவுள்ள பிரதேசங்களின் மீதான உரிமத்தை ஒல்லாந்தர் தமக்குரியதாக்கினர்.
ஒல்லாந்தரின் உச்சக்கட்டப்படை நடவடிக்கைகள் யாவும் கண்டி மன்னன் போர்த்துக்கேயருக்கு, குறிப்பாக மன்னார்த்தளபதிக்கு 23ஆம் திகதி ஒக்ரோபர் மாதம் 1656இல் எழுதியனுப்பிய ஒரு கடிதத்திலிருந்தே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கடிதத்தில் ஒல்லாந்தரால் நேரக்கூடிய
199

Page 103
ஆபத்துக்கள் பற்றியும், அண்மையில் போர்த்துக்கேயப் படைநடவடிக்கை யொன்றால் கண்டி மன்னனுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக தெரிவிக்கப் பட்ட மனவருத்தங்களுக்காக நன்றி தெரிவித்து எழுதப்பட்ட கடிதமொன் றிலிருந்தே ஒல்லாந்தர் தமது இறுதி நடவடிக்கைகளை அதாவது போர்த்துக்கேயரிடமிருந்து இலங்கையை மீட்பது என்ற இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டனர். வான் - டீர் - மெய்டன் எழுதியனுப்பி யிருந்த நீண்டவொரு கடிதத்தில் இருந்து ஒல்லாந்தரது இறுதி நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மெய்டன் உடனடியாகவே படைநடவடிக்கைகளில் ஈடுபட்டு கண்டி உட்பட, கரையோர மாகாணங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு வேண்டிய பணிகளை மேற்பார்வை செய்தான். இராஜசிங்க மன்னனின் படைத்தளமொன்று அமைந்திருந்தரூவான்வெல நோக்கி 950க்கும் மேற்பட்ட எண்ணிக்கையுடைய ஒல்லாந்தர் படையொன்று அணிவகுத்துச் சென்றது. ஹன்வெல்ல நோக்கி 250 பேர் கொண்ட இராணுவ அணியொன்றையும் அனுப்பி வைத்த பிறகு மென்டன் மல்வானவுக்குத் திரும்பி, கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். கண்டி மன்னனின் பொருளாதார - வர்த்தகச் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மையங்களான திருகோணமலை, மட்டக்களப்புத்துறைமுகங்களையும், அதன் பின்னர், தூத்துக்குடி - நாகபட்டினத்துடன் நேரடி வர்த்தகத் தொடர்புடைய மன்னார்த்துறைமுகத்தையும் கைப்பற்றுவது மெய்டனின் நோக்கமாக அமைந்தது. இந்நிலையில் செப்ரெம்பர் 1657இல் வான் கோயன்ஸ்க்கு 7 போர்க் கப்பல்கள் நிறைந்த 700 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவற்றின் துணையுடன் ஒல்லாந்தர் கரையோர மாகாணங்களில் இருந்து போர்த்துக்கேயரை விரட்ட முடிந்தது. யாழ்ப்பாணப்பிரதேசம் 24 பெப்ரவரி 1658இல் கைப்பற்றப்பட்டது. இந் நிகழ்விற்கு முன்னரேயே யாழ்ப்பாணத்துக்குரிய போர்த்துக்கீச ஆள்பதி கொழும்பிற்கு வந்து கொண்டிருந்தபோது கைப்பற்றப்பட்டான். யாழ்ப் பாணத்தில் போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் கடும் யுத்தம் நிகழ்ந்தது. இறுதியாக யாழ்ப்பாணக் கோட்டைக்குள்ளிருந்த போர்த்துக் கேயர் 23ஆம் திகதி யூன் மாதம் 1658இல் ஒல்லாந்தரிடம் சரணடைந்தனர்.
“கண்டியரசனாகிய இரண்டாம் இராஜசிங்கனுடைய பிற்கால வாழ்வில் அரசியலில் ஏற்பட்ட ஒரு புதுமாற்றம் என்னவெனில், கண்டிப் பிரபுக்கள் தங்களாதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டியதேயாகும். ஒல்லாந்தரை நாட்டினின்றும் வெளியேற்றும் முயற்சியிற் தனது சிந்தனையெல்லாம் பறிகொடுத்த இராஜசிங்கன் உள்நாட்டில் வளர்ந்து
200

வரும் பிரபுக்களின் அதிகாரத்தை மடக்கத் தவறி விட்டான். அவர்கள் அரசனது பலயினத்தைக் கண்டு, தங்கள் ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். அரசன் உள்நாட்டுக் குழப்பத்தை தடுத்து நிறுத்த டச்சுக்காரர் உதவியைத் தேடியதும், அவனது கொடுங்கோலாட்சியும், குடிசனங் களுடைய அபிமானத்தை அவன் இழந்ததும், பிரபுக்கள் தங்கள் செல்வாக்கைப் பலப்படுத்த ஏதுவாயிருந்தன. பிற்காலங்களில் அரசன் குடிப்பழக்கத்தையும் கைக் கொண்டான். அவனுக்கும் டச்சுக்காரருக்கு மிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் கூடப் பிரபுக்கள் மூலமாகவே நடைபெற்று வந்தன. அவனைக் கொல்வதற்குக் கூட சதிகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் சதியினின்றும் தப்பிப் பிழைத்தான். அன்றியும் அந்நியராகிய போர்த்துக்கேயரை இந்நாட்டினின்றும் விரட்டுவதற்கு மற்றொரு அந்நியராகிய டச்சுக்காரரை அழைத்தது மிகவும் மதியீனமான காரியம் என்பதனைத் தன் இறுதிக் காலத்தில் இராசசிங்கன் உணர்ந்தான். அவன் மிகவும் மனமுடைந்தவனாய் 1687ஆம் ஆண்டு இறந்தான்."
இரண்டாம் இராஜசிங்கன் ஒரு மதிப்பீடு :
சிங்கள மன்னரின் முடியாட்சிமுறைமையின் வளர்ச்சியின் தொடர்ச்சி யாகவே கண்டியில் ஆட்சி செய்த இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சிக் காலத்தினை வரலாற்றாசிரியர்கள் கொள்கின்றனர். இலங்கையின் முடிமன்னர் வரிசையில் 180ஆவது மன்னனாக 1635இல் சிம்மாசன உரிமையை இராஜசிங்கன் பெற்றிருந்தான். இம் மன்னனது 52 வருடகால ஆட்சியின் போது இலங்கையில் துன்சிங்களப் பரப்பிலிருந்து போர்த்துக்கேயரது ஆட்சிமுற்றுப் பெற்றதோடு, ஒல்லாந்தரோடும் மாறி மாறி நட்பு பகைமையுறவுகளை ஏற்படுத்தி, கண்டிய இராச்சியத்தின் தனித்துவத்தினைப் பாதுகாப்பதற்கு முயற்சி செய்யப்பட்ட ஒருகாலப்பரப் பாகவும் அமைந்தது. இரண்டாம் இராஜசிங்கனது முதற் பதினெட்டு வருடகால ஆட்சியின் போது போர்த்துக்கேயர் என்ற வடிவில் அமைந்து, தேசத்தைக் கெளவிக் கொண்டிருந்த இருளினாலுமே கண்டி இராச்சி யத்தின் வரலாற்று நிகழ்வுகள் பதியப்பட்டிருந்தன. முதலாம்.விமலதர்ம சூரியன் காலத்தில் கண்டி இராஜதானியில் விதையிடப்பட்ட ப்ெளத்த -- பண்பாட்டு மூலங்கள் இரண்டாம் இராஜசிங்கனது காலத்தில் வளர்ச்சி யடையாது போனமைக்கு மேற்குறித்த நிலைமையே காரணமாக அமைந்தது. இரண்டாம் இராஜசிங்கனது எதிர்மறையான பங்களிப்பு என்ன வென்றால் சிங்கள மக்களது அரசியல் வரலாற்றிற்கு ஏதேச்சாதிகார - வன்முறை அரசியல் ஆதிபத்திய முறையை நான்கு அடிப்படைகளில் கண்டி இராச்சியத்தில் காண முடிந்தமையாகும். அவையாவன : (1) பெளத்த சங்கத்திற்கும் - அரசிற்குமிடையிலான
201

Page 104
தொடர்புகள் ரீதியாக பொதுமக்களையும், அவ்விரு நிறுவனங்களின் பாதுகாப்பாளர்களையும் திணறடிக்கத்தக்கதான நெருக்கடி நிலையை ஏற்படுத்தி வைத்தமை. (2) இச் செயல்களினூடாக சுதேச தலையாரி முறையான நிர்வாக அமைப்பு மாற்றப்பட்டு, நிலச்சுவாந்தர்களின் மேலாதிக்க முறைமைக்கு வழிகோலி வைத்தமை. (3) பாரம்பரிய வாயிலாக அடையாளம் காணப்பட்ட கிராமங்கள் மீதான அதீதமான வரிவிதிப்பும், இராசகாரிய முறையை நிறைவேற்றுவதில் கிராம மக்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நடைமுறைகளும், புதிய நிலமானியதாரர்களால் திணிக்கப்பட்ட நெருக்குதல்களும் (4) போர்த்துக்கேய நிர்வாகப் பாணியை கண்டிய இராச்சியத்திற்குள் உள்ளீர்த்துக் கொண்டிருந்த முறைமை (இதற்குக் காரணம் டோனா கதறினாவிடமிருந்து கற்றுக் கொண்டிருந்த போர்த்துக்கேய மொழிச் செல்வாக்குமாகும்.) இந்த நான்கு காரணிகளின் அடிப்படையிலேயே கண்டி இராச்சியத்தின் ஏதேச்சாதிகார அரசியல் முறைமை ஒன்றினை இரண்டாம் இராஜசிங்கன் கட்டமைத்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராஜசிங்கன் இறக்கும் வரைக்கும் கண்டி இராஜதானியில் அந்நிலமையே தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இரு வேறுபட்ட வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பிசாசுகளுக்கிடைப்பட்ட வரலாற்றில் இரண்டாம் இராஜசிங்கனது ஆட்சிக்காலமானது ஒரு நிலைமாறு காலமாக அமைந்தது.” கிழக்கிந்திய வர்த்தகக் கொம்பனியின் சேவகர்களாக ஒல்லாந்தர் இலங்கையை வந்தடைந்த காலப்பகுதியும் இம் மன்னனுடைய ஆட்சிக்காலமேயாகும். "இலங்கையில் தமது காலடியைப் பதிப்பது" என்ற நோக்கத்துடன் மட்டும் வந்து, பின்பு நிலையாகவே தங்கிவிட்ட ஒல்லாந்தரை, போர்த்துக்கேயரது அரசியல் - வர்த்தக மேலாதிக்கத்தினை இத்தீவினின்றும் அப்புறப்படுத்துவதற்காக ஒரு கூலிப்படையாகவே இரண்டாம் இராஜசிங்கன் பயன்படுத்தியிருந்த வரலாறாக கண்டி இராச்சியத்தில் அவனது ஆட்சிக்காலம் அமைந்து முடிவுற்றது. டி.
இரண்டாம் இராஜசிங்கனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களுள் ஒன்றாக அமைந்தது றொபேட் நொக்ஸ் (Robert Knox) என்ற ஆங்கிலேயப் பயணி ஒருவனைச் சிறைப்பிடித்து, ஏறக்குறைய 20 வருடகாலமாக கண்டியில் வைத்திருந்தமையாகும். பின்னர் இந்தப் பயணி சிறையிலிருந்து தப்பிச் சென்று, தனது தாய் நாட்டை அடைந்ததன் பிற்பாடு கண்டி இராச்சியத்தினைப் பற்றிய நூல் ஒன்றினை வெளியிட்டிருந்தான். அந்நூலில் இரண்டாம் இராஜசிங்கனைப் பற்றிய எல்லாவிதமான குணவியல்புகள் பற்றியும், சாதனைகள் பற்றியும் மிக விரிவாக எழுதியிருப்பதனைக் காணலாம். இலங்கைச் சரித்திரம் என்ற
202

அந்நூலில் இம் மன்னன் காலத்தில் கண்டியில் நிலவிய ஆட்சி நிர்வாக - பரிபாலன முறைகள், மக்களின் சமுதாய பழக்கவழக்கங்கள் போன்ற விடயங்கள் மிக விரிவான நோக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் இராசசிங்கனது தோற்றப் பொலிவு தொடர்பாகவும் ஓரிடத்தில் விபரணம் கொடுக்கப்பட்டுள்ளமையைக் காண முடியும். அவ்விபரம் பின்வருமாறு உள்ளது. “அவனுடைய ஆடைகள் மிகவும் நூதனமானவை, அவனது நாட்டினரின் உடைமுறைகளைப் பின்பற்றியதல்ல, அவன் நலமாகக் கண்டுபிடித்த ஒரு முறையைப் பின்பற்றித் தயார் செய்யப்பட்டது. தலையிலவன் நாலுமூலைப் பட்டமுடைய ஒரு தொப்பி அணிந்து கொள்கிறான். அது யேசுசபைச் சன்னாசிகளுடைய தொப்பியைப் போல் இருந்தாலும் அதிலும் பார்க்க மூன்று நிரை உயரமுடையது. தொப்பியின் முற்பக்கத்தில் சிறகுகள் அலங்காரமாகச் செதுக்கப்பட்டிருக்கும். பந்தியில் முன்னும் நிற்கும் குதிரையின் தலையில் செதுக்கப்பட்டிருக்கும் சிறகு களைப் போல் (அது) அழகு செய்யும். போர்த்துக்கீசர் அணிந்திருப்பது போல் முதுகிலிருந்து ஒரு நீண்ட கச்சை பின்னால் தொங்கவிடப் பட்டிருக்கும். கழுத்திலிருந்து இடைவரை அணியப்பட்டிருக்கும் சட்டை நூதனமாக அமைந்திருக்கிறது. அதை என்னால் சரியாக வருணிக்க முடியாது. மத்திய பாகம் ஒரு வருணத்திலும், கைகள் இன்னொரு வருணத் திலும், அமைந்திருக்கும். கணுக்கால் வரை நீண்ட காற்சட்டையும், கால்மேசும், சப்பாத்தும் அணிந்திருப்பான். எப்பொழுதும் ஒரே பாவனையில் அவன் உடுப்பணிந்து கொள்வதில்லை. மனம்போன போக்கில் அடிக்கடி மாற்றிக் கொள்வான். தோளிலிருந்து வரியப்பட்ட ஒரு கச்சில் அவனது வாள் பக்கத்தே தொங்கிக் கொண்டிருக்கும். அரசனைத் தவிர்ந்த ஏனைய பிரஜைகள் அம்மாதிரி வாள் தரித்திருக்கக் கூடாது. வெள்ளைக்காரர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டனர். வாளின் பிடியும், உறையும் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன; கையில் சாதாரணமாக ஒரு பிரம்புதாங்கியிருந்தான். அது பல வர்ணமுட்ையதாய் நுனியில் அவனிடத்திலுள்ள மனதிற்குகந்த பல இரத்தினக்கற்கள், பதித்ததாய், பொன்னினாலாய பூணுடையதாயிருக்கும்.”
இரண்டாம் இராஜசிங்கனின் ஆளுமையானது இலங்கையின் கரையோர மாகாணங்களின் ஆட்சிப்பொறுப்பிற்கு பட்டேவியாவி லிருந்து வருகைதந்த ஒல்லாந்தத் தேசாதிபதிகளை எதிர் - முரண்பகை கொண்டு சமாளித்துச் சென்ற விதத்திலும் வெளிப்பட்டது எனலாம். ஒல்லாந்தத் தேசாதிபதிகள் கண்டியரசன் மீது கடைப்பிடித்த கொள்கைகள் கூட ஒரே சீரானதாக இருக்கவில்லை. றை கிளொவ் வான்கோயன்ஸ் (Ry clofVan Goens) என்ற தேசாதிபதியின் காலத்தில் கண்டி இராச்சியத் திற்குள் தொடர்ச்சியான வகையில் உள்நாட்டு கலவரங்கள் உருவாக்கி
203

Page 105
விடப்பட்டிருந்தன. கண்டியரசனின் பெரும் முயற்சி அக்கலவரங்களை அடக்குவதாகவே அமைந்தது. மக்களின் எதிர்ப்பு இராஜசிங்கனுக்கெதிராக மிகப்பலம் வாய்ந்திருந்த காலங்களில் ஒல்லாந்தரின் உதவியை அவன் நாட வேண்டியிருந்தது. இச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு கண்டியரசிற்குரிய எல்லைப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதில் ஒல்லாந்துத் தேசாதிபதிகள் ஈடுபட்டு, வெற்றியுமடைந்திருந்தனர். குறிப்பாக வான்கோயன்ஸ் கண்டியில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங் களைப் பயன்படுத்திக் கொண்டு, கண்டியைச் சேர்ந்த 15கோறளைகளைக் கைப்பற்றி கரையோர மாகாண நிர்வாக வலைப்பின்னலுடன்
காரணம் கண்டிய மக்கள் கொதித்தெழுந்து, கோபாவேசமடைந்த நிலையில், தமது கண்டிய மன்னனுடன் இணைந்து ஒல்லாந்தருக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட்டமையாகும். ஒல்லாந்தரும் எதிர்தாக்குதல்களில் ஈடுபட்டபோதும் பட்டேவியாவிலிருந்து வந்த ஆணைகளின் பிரகாரம் வான்கோயனால் இறுதியாகக் கைப்பற்றப்பட்ட 15 கோறளைகளையும் கண்டியரசனிடம் திருப்பி ஒப்படைத்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. கண்டி இராச்சியத்திற்கும், ஒல்லாந்த நிர்வாகிகளுக்கு மிடையே கலகங்கள் மூண்டுவிட்டிருந்ததனையறிந்த பட்டேவிய நிர்வாக மையம், இலங்கையில் தமது அமைதியான வியாபார வளர்ச்சி தடைப்பட்டு விடுமெயென அஞ்சிய நிலையில், கண்டியரிடமிருந்து கைப்பற்றிய நிலங்களையெல்லாம் அவர்களிடமே திருப்பி ஒப்படைத்து விடுமாறு உத்தரவிட்டிருந்தனர். மேலும் கண்டி இராச்சியத்துடனான தமது நல்லுறவை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதற்காக புதிய ஒல்லாந்துத் தேசாதிபதி லோறன்ஸ் பில் என்பவனை பட்டேவிய அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
1679இல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த லோறன்ஸ்பில் இடம் கண்டியரசன் இராஜசிங்கனுடன் பகைமையை ஒழித்து சமாதான வழியில் நட்பாக நடந்து கொள்ளவேண்டும் என்று பட்டேவிய அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டிருந்தமையிலிருந்து இரண்டாம் இராஜசிங்கனின் ஆளுமையும், தனித்துவமும் ஒல்லாந்தரை பாதித்திருந்த வகை தெளிவாகின்றது. இரண்டாம் இராஜசிங்கனுடன் பில் நல்லிணக்க தூதுக்குழு ஒன்றின் மூலமாக இணைப்பினை ஏற்படுத்தி, மன்னனின் விருப்பத்திற்கேற்ப வெகுமதிகளுடன் சென்று ஒல்லாந்தருடனான நல்லுறவினை வளர்க்க முற்பட்டான். கண்டியரசனைக் கெளரவித்து, அம்மன்னனுடன் மிகவும் மரியாதையான முறையில் கடிதத் தொடர்பு களையும் ஏற்படுத்திக் கொண்டு, அவனது விருப்பு - வெறுப்புக்களை யெல்லாம் ஊகித்தறிந்து கொண்டு, அதற்கேற்ப ஒழுகி, கண்டி
204

இராச்சியத்துடனான மிக நெருங்கிய தொடர்பினை பில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். பில் என்பவனைத் தொடர்ந்து இலங்கையின் தேசாதிபதிகளாக வந்த வான்றீ - கெறிற் ஹ"ர், ஹென்றி பேக்கர் போன்றோர் இரண்டாம் இராஜசிங்கனுக்குப் பின்னர் கண்டிய மன்னனாகிய இரண்டாம் விமல தர்மசூரியனுடனும் அதன் பின் கண்டிய அரசுரிமைக்கு வந்தோரிடமும் சமாதான வழியிலான தொடர்புகளையே ஏற்படுத்திச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கண்டிய இராச்சியத்துடனான ஒல்லாந்தரின் உறவும், தொடர்பும் இரண்டாம் இராஜசிங்கனுக்குப் பின்னர் பெருமளவிற்கு நட்பு ரீதியானதாக அமைந்து கொண்டமைக்கு இராஜசிங்கனின் ராஜதந்திரமே அடிப்படைக் காரணமாகியது.
இலங்கைத் தீவிற்குள் ஒல்லாந்தர் வைத்த கால் நிலையானதாக மாற்றம் பெற்றதற்கு இரண்டாம் இராஜசிங்கனே காரணமாக விருந்தான். அந்த வகையில் கண்டியரசின் வரலாற்றில் மாத்திர மல்லாது, இலங்கையின் நவீனகால வரலாற்றிலும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவனாக இரண்டாம் இராஜசிங்கன் விளங்கினான். இராஜசிங்கனுக்காகவென ஒல்லாந்தர் இலங்கைக்குள் காலடி வைத்திருந்தாலென்ன, வைக்காவிட்டிருந்தாலென்ன, இராஜசிங்கன் ஆட்சியிலிருந்திருக்காவிடில் ஒல்லாந்தருடைய மேலாதிக்கத்தினால் இலங்கையின் தலைவிதி மாற்றி எழுதப்பட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் என்பதும் ஒரு சாராரின் கருத்தோட்டமாக உள்ளது. போர்த்துக்கேயர் காலத்து கோட்டையரசில் எவ்வாறு புவனேகபாகு நடந்து கொண்டிருந்தானோ அவ்வாறே கண்டி இராசதானியில் ஒல்லாந்தரது மேலாதிக்கம் பரவாமல் தடுப்பதற்கான முயற்சியிலும், அதே நேரம் போர்த்துக்கேயரை உள்ளீர்த்து விடாதபடி தடுக்கவும் கூடிய நடவடிக்கைகளில் இரண்டாம் இராஜசிங்கன் செயற்பட்டிருந்தான். புவனேகபாகு போர்த்துக்கேயரை இத்தீவின் அரசியல் முகாமைத் துவத்திற்குள் உள்ளிர்த்துக் கொண்டிருந்தபோதிலும் இரண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தரை இத்தீவின் அரசியல் பங்காளிகளாக மாற்றுவதற்கு விரும்பியிருக்கவில்லை. ஆனால் இருவருமே மேலைநாட்டு ஆதிக்கசக்தியின் தலையீட்டை இலங்கைத்தீவில் விரும்பி ஏற்றிருந்தமை யின் அடிப்படையில் இரண்டாம் இராஜசிங்களது ஆளுமையை புவனேகபாகுவின் ஆளுமையுடன் சிறிதளவு ஒப்பிடக் கூடியதாகவுள்ளது. இராஜசிங்கன் ஒல்லாந்தரை தனது அரசியல் முகாமைத்துவத்திற்கு - நிர்வாகக் கட்டமைப்பிற்கு உதவக்கூடிய இராணுவ சக்தியாக மட்டுமே இறக்கும் வரைக்கும் பயன்படுத்தியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2Os

Page 106
எனவே தான் இரண்டாம் இராஜசிங்கனின் ஆளுமையும் அரசியற் பொலிவும் அவன் ஒல்லாந்தருக்கெதிராகக் கடைப்பிடித்த நம்பிக்கையின மான பூட்கைகளிலிருந்தே பரிணாமம் பெற்றது என்பதனை நாம் மறந்துவிடலாகாது. இதே நேரத்தில் புவனேகபாகு போர்த்துக்கேயர் தொடர்பாக மிகவும் நம்பிக்கை கொண்ட நிலையில் இலங்கையில் கோட்டை அரசில் அவர்களது பாதுகாப்பினையும், அரசியற் தலையீட்டினையும் பெற்றிருந்தமையை வரலாறு பதிவுசெய்துள்ளது.
இரண்டாம் இராஜசிங்கன் கடைப்பிடித்த ஒல்லாந்தர் மீதான கொள்கைகள் முற்றிலுமே பலவீனமடைந்திருந்தன அல்லது தோல்வியில் முடிவடைந்திருந்தன என்பதனை அவன் இறந்த பின்னர் கண்டியரசில் ஏற்பட்ட மாற்றங்கள் எடுத்துக்காட்டின. போர்த்துக்கேயரை இலங்கை யிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான செயற்பாடு என்பதற்காக தனது பக்கத்திற்கு ஒல்லாந்தரை வரவழைத்த இராஜசிங்கனின் எதிர்பார்ப்பு ஒரு புறத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது அவன் எதிர்பார்த்தது போலன்றி கடும் ஏமாற்றத்தின் மத்தியிலேயே நிகழ்ந்தமை குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வானது அவனது தற்பெருமைக்கும், தன்னம்பிக்கைக்கும் சாவுமனியடித்தது போன்று அமைந்ததினால் இரண்டாம் இராஜசிங் கனின் வெளித் தோற்றத்தில் அவனது ஆளுமையை மக்கள் மத்தியில் முரண்பாடாக வெளிக்காட்டியது. இதனாலேயே இறுதிக் காலகட்டத் தில் கண்டி இராஜதானியில் மக்கள் மத்தியில் பெருவெறுப்பிற்குரிய ஒருவனாக இரண்டாம் இராஜசிங்கன் எண்ணப்பட்டான். இதனால் மன்னன் தன்னை குற்றமுள்ள ஒருவனாகவோ அல்லது அரசியல் முகாமைத்துவத்திற்குப் பொருத்தமற்ற ஒருவனாகவோ தன்னை எண்ணிக் கொள்ளவும் தலைப்பட்டான். இந்நிலையானது கண்டிய மக்கள் மீதான அவனது எதிர்பார்ப்பின் விளைவாகவே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகியல் ரீதியான ஞானமும், சமயோசித புத்திக் கூர்மையுமுடைய இராஜசிங்கன் வெறுமையிலிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தானேயொழிய, அதனை நடைமுறையில் அடைந்துகொள்ள முடிந்திருக்கவில்லை.
இரண்டாம் இராஜசிங்கனின் பூட்கைகள் பெருந்தோல்வியில் முடிவடைந்தமைக்கு இன்னொரு அடிப்படையான காரணி மாறிவரும் இந்து சமுத்திரத்தின் மீதான மேலாதிக்கக் கொள்கையில் போர்த்துக் கேயருக்குரிய பிடி தளர்வடைந்து, ஒல்லாந்தருக்குரிய ஆதிக்கம் வலுவடைந்து கொண்டு வந்த நிலைமையை கண்டிய மன்னன் உணராதிருந்தமையாகும். உலகியல் ரீதியான ஞானம் அம்மன்னனுக் கிருந்திருப்பினும், மாறிவந்த சமுத்திரவியல் சூழ்நிலைகளை
206

அவதானிக்கும் திறன் இரண்டாம் இராஜசிங்கனுக்கிருந்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே. இந்நிலைமையை சாதகமாக்கக்கூடிய வகையிலேயே கண்டி இராசதானியின் தலைநகரும் அமைந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரவியல் பண்பாட்டு மாற்றங்களை இலகுவில் உள்ளீர்க்காத வகையிலேயே கண்டி இராசதானியின் அமைவிடம் காணப்பட்டது. மட்டக்களப்புத்துறைமுகம் கூட காலம் தோறும் ஒரே சீராக கண்டியின்துறைமுக நகராகச் செயற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவேதான் ஒல்லாந்தருக்கெதிராகக் கண்டி மன்னன் கடைப்பிடித்த பூட்கைகள் பெருந்தோல்வியில் முடிவுறக் காரண மாகியது.
இராஜசிங்கன் தனது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்த முறையில் ஒர் அங்கக் குறைபாடுடைய ஒருவனாகவே எடுத்துக்காட்டப்படு கின்றான். தென்னிந்திய நாயக்க வம்சத்துடன் கொண்டிருந்த திருமணத் தொடர்புகளின் விளைவுகள் அம்மன்னனை அவன் வகுத்த வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் ஒர் அங்கக் குறைபாடுடைய நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தது. அதாவது கண்டியில் நாயக்க வம்சத்தின் ஆட்சியின் தோற்றத்துடன் இராஜசிங்கன் தொடக்கி வைத்திருந்த 'ஒல்லாந்தருக்கெதிரான கொள்கைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்ட மையைக் காணமுடிந்தமையினாலாகும். நாயக்க வம்ச மன்னர்களின் ஆட்சியில் ஒல்லாந்தருடன் சிநேகயூர்வத் தொடர்புகளே நீடித்திருந்த போதிலும், பின்னர் வளர்ச்சிபெற்று வந்திருந்த கண்டிப்பிரதானிகளின் செல்வாக்கினால் மட்டுமே ஒல்லாந்தருக்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. இவை யாவும் இரண்டாம் இராஜசிங்கனின் மறைவைத் தொடர்ந்து கண்டி இராச்சியத்தில் ஏற்பட்ட மாற்றங்களாகும். இராஜசிங்கனின் முதல் மனைவி தென்னிந்தியாவிலுள்ள மதுரைநாயக்க வம்சத்து இளவரசியாவாள். இவளுடைய புதல்வன் இரண்டாம் விமல தர்மசூரியனின் கண்டிய சிம்மாசன உரிமமானது கண்டியரசின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை ஏற்படுத்தி நின்றதெனலாம். இரண்டாம் விமலதர்மசூரியனால் தொடக்கி வைக்கப்பட்ட நாயக்கவம்சஆட்சிமுறை தொடர்ந்து ஒல்லாந்தருக்குப் பின் ஆங்கிலேயரால் கண்டி கைப்பற்றபடும் வரைக்கும் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2O7

Page 107
அத்தியnயக் ஆறு
ஒல்லாந்தரின் அரசியல் ஆதிக்கப்
படர்ச்சியும் அதன் முகாமைத்துவமும்
(இரண்டாம் கட்டம் - கீர்த்தி பூரி இராஜசிங்கன் காலம்
வரைக்கும்)
"மீட்பு என்பது வரலாற்றையும் இவ்வுலக வாழ்க்கையையும் தவிர்த்த நிலையில் ஆன்மீகத்தின் அந்தரங்கத்தில் ஆண்டவனின் அருளை அனுபவிக்கும் ஒரு வழிபாட்டுச் சாதனமல்ல, அது இவ்வுலக வாழ்வினூடாக படைத்தவரும், படைப்புக்களும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு புதிய உறவு . . ஒரு பேருண்மை."
— A. J. V. 8Fjibğög85Ijbğ56öT
பக், 48, 1995
208

இரண்டாம் இராஜசிங்கனின் மரணத்துடன் இலங்கையின் வரலாற்றுப் போக்கில், சிறப்பாக ஒல்லாந்தருக்கும் கண்டி இராசதானிக்கும் இடைப்பட்ட வரலாற்றில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது எனலாம். ஒரு புறத்தில் பட்டேவிய நிர்வாக மையத்தின் தூண்டுதலின் பேரில், இலங்கையிலுள்ள ஒல்லாந்துத் தேசாதிபதி கண்டி இராச்சியத்துடன் நிபந்தனையற்ற சமாதான - நல்லிணக்க உறவினை நிலை நாட்டுவதன் மூலமாக இத்தீவில் தமது வர்த்தக நடவடிக்கைகள் குழப்பமடையாதி ருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டி ருந்தான். மறுவளத்தில் இரண்டாம் இராஜசிங்கனுக்குப் பின்வந்த கண்டி ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த அரசியற் கொள்கைகள் ஒல்லாந்தருடன் முரண்பாடுகளை அதிகம் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருந்தன. இப்பின்னணியில் இரண்டாம் இராஜசிங்கனுக்கு பின்னர் இலங்கைத் தீவில் ஒல்லாந்தரது முகாமைத்துவக் கொள்கையானது "இணைந்த ஆட்சி முறையாக” (Policy of Coexistence) வடிவமைக்கப்பட்டிருந் தமையைக் காணமுடிந்தது. "இணைந்த ஆட்சி முறையின் பின்னணியில் முன்பு செய்யப்பட்ட கண்டியர் - ஒல்லாந்தர் ஒப்பந்தங்கள் யாவும் நடைமுறையிலிருந்து கைவிடப்பெற்று, இரண்டாம் இராஜசிங் கனின் மறைவிற்குப் பின்னர் அவனது மகனான இரண்டாம் விமலதர்ம
சூரியன் காலத்தில் புதிய ஒப்பந்தமாகச் செய்யப்பட்டது. இப்புதிய ஒப்பந்தமானது கண்டியரசிற்கும் ஒல்லாந்தருக்குமிடையே நிலவிய அரசியல் உறவின் புதிய நிலையை எடுத்து வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாது. இலங்கையின் கரையோர மாகாணங்களில் ஒல்லாந்தரது அரசியல் மேலாதிக்கமானது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்பதனையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. இரண்டாம் விமலதர்ம சூரியனுடன் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து அடுத்து வருகின்ற 40 வருட கால எல்லை வரைக்கும் கண்டியரசர்தீவின் கடற்கரையோரமாநிலங்களின் மீதாகத் தமது கவனயீர்ப்பைக் குறைத்து விட்டிருந்தளவிற்கு ஒல்லாந் தருக்கும் கண்டியரசனுக்குமிடையே அரசியல், நல்லுறவு நிலையிலிருந் தமையைக் காணமுடிந்தது. இக்காலகட்டத்திலேயே ஒல்லாந்த்ரது நிர்வாக முகாமைத்துவம் கடற்கரையோரப் பிராந்தியங்களில் மிகவும் இறுக்கமான நிலையைப் பெற்றிருந்தது. இன்னொருவகையில் குறிப்பிடுவதாயின் கண்டியரசனால் கடற்கரையோர மாநிலங்கள் மீதான அவர்களது அரசியல் உரிமம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காலப்பகுதி எனலாம். இருந்தும் அவ்வாறான ஒரு ஏற்பாட்டை போர்த்துக்கேயருக் குரியதான அரசியல் உரிமத்தினூடாக ஒல்லாந்தர் பெற்றிருந்தனர் எனக் குறிப்பிடுவதனை கண்டியர் ஒரு போதுமே விரும்பியதில்லை.
209

Page 108
இரண்டாம் விமலதர்ம சூரியனும் ஒல்லாந்தரும் :
இரண்டாம் விமலதர்ம சூரியன் ஆட்சிக்கு வருகை தந்த கால கட்டத்திலிருந்து கண்டியரசனுடைய வெளிநாட்டு வியாபாரத்தை ஊக்குவிப்பதற்காக மேற்கிலங்கையிலுள்ள பலதுறைமுக வாய்ப்புக்களை ஒல்லாந்தரிடமிருந்து கோரியிருந்தான். அத்துறைமுகங்களிலிருந்து அரச வருமான ஈட்டமாகக் கிடைத்த கறுவாக் கட்டுக்களை மன்னன் சார்பாக ஒல்லாந்தரே ஏற்றுமதி விற்பனை செய்து வருவாயை ஈட்டித்தர வேண்டும் என்றும் கோரியிருந்தான். குறிப்பாக புத்தளம் துறைமுகத்தினூடாகவே கண்டியரசன் தனது கறுவா ஏற்றுமதியை ஈட்டுவதற்கு விருப்புக் கொண்டிருந்தான். ஆனால் ஒல்லாந்து ஆள்பதியோ இரண்டாம் விமலதர்ம சூரியனுடைய கோரிக்கையை ஏற்கப் பயந்து ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்து கைச்சாத்து இடுவதற்குத் தயாரானான். ஒல்லாந்தர் தரப்பில் கிளாஸ் Syl Gavnraiv (Class Abelos) GTGÖTLUGIJGOTITổiv பிரேரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் சரத்துக்கள் ஒல்லாந்தருக்கான நிலவுரிமை, வர்த்தக உரிமம் மற்றும் பிரத்தியேக சலுகைகள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. அச்சரத்துக்கள் கண்டியரசனுக்காக வாங்கக்கூடிய ஒரு சில சலுகைகளை மட்டும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் கண்டிய மன்னனோ இவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டிருந்தான். அத்தோடு ஒல்லாந்தரை பயமுறுத்தும் நோக்கில் அவனுடைய தோற்றமும், நிலையும் காணப்பட்டது. இதனால் பரஸ்பர நல்லுறவுக்கான சூழ்நிலை கெட்டுவிடும்போல் தோற்றமளித்ததினால் லோறன்ஸ் பைல் (Pyl) என்ற ஒல்லாந்த உயர் தேசாதிபதி கல்பிட்டி, கொட்டியாரம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய துறைமுகங்களை கண்டியரசனுடன் நட்புறவு கொள்ளுமுகமாக, கண்டியரசனுக்கே வழங்கினான். இக்காரணத்தினால் ஒல்லாந்தரது வர்த்தக ஏகபோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பினும், அவர்கள் அடுத்த சந்தர்ப்பத் திற்காக காத்துக்கிடந்தனர். அக்காத்திருப்பானது இரண்டாம் விமலதர்ம சூரியனையடுத்து ஆட்சிக்கு வந்த நரேந்திரசிங்கனுடைய ஆட்சிக் காலத்திலேயே கைகூடியது. லோறன்ஸ் பைல் 1688இல் மூன்று கோறளை, சப்த கோறளையின் ஒரு பகுதி, மட்டக்களப்பிற்குத் தெற்கே பனாமா என்றழைக்கப்பட்ட செழிப்புமிக்க ஒரு பகுதியையும் இரண்டாம் விமலதர்ம சூரியனுக்கே உத்தியோகபூர்வமாக வழங்கினான். தற்போதைய வடமாகாணத்தையும் மகாஒயா தொடக்கம் வளவை கங்கை வரையுமுள்ள கரையோரப் பரப்பினையும், கற்பிட்டி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மையங்களிலிருந்த கோட்டைகளையும் ஒல்லாந்தர் தம்வசம் கையப்படுத்தி வைத்திருந்தனர்.
210

புதிய அரசன் பக்தி நிறைந்த ஒரு பெளத்த மதானுசாரியாய் இருந்ததினால், புத்த தந்தத்தைச் சேமித்து வைப்பதற்கென்று மூன்றடுக்கு மாளிகை ஒன்றைக் கட்டுவித்தான். இம் மன்னன் பெளத்த குருமாரின் யோசனைப்படி ஒழுகி வந்தான். (ஏற்கனவே) இராஜசிங்கன் கிறிஸ்தவர்களுக்குப் பெரிதும் ஆதரவு காட்டியபடியால் அவனுடைய காலத்தில் பெளத்த சமயம் கீழ் நிலையடைந்தது. பரிசுத்த வாழ்க்கையை நடாத்திய ஐந்து பெளத்த குருமாரைத்தானும் அக்காலத்தில் காணக்கிடைக்கவில்லை. ஆகவே விமலதர்மன் ஒல்லாந்தரிடமிருந்து இருமரக்கலங்களைப் பெற்று தூதுவரை அக்கரைக்கு அனுப்பி பெளத்த குருக்களை வரவழைத்துக் குருத்துவ சடங்குகளை இலங்கையிற் செய்வதற்கு ஒழுங்குகள் செய்தான். இவ்வாறு இரண்டாம் விமலதர்ம சூரியன் காலக் கண்டி இராசதானியின் வரலாறு பெளத்த சமயப் புத்தெழுச்சியுடனும், வெளிநாட்டு வர்த்தக வருவாயீட்டத்துடனும், ஒல்லாந்தர்களின் அமைதியான, சுதந்திரமான கறுவா வாணிபத்துடன் கூடிய கரையோரப் பிராந்திய முகாமைத்துவத்துடனும் அமைந்து காணப்பட்டது.
இரண்டாம் விமலதர்ம சூரியன் காலக் கண்டி இராச்சியத்தில் அரசியல் முகாமைத்துவம் பிரதானிகளின் கைகளைச் சென்றடைந்தி ருந்தமையைக் காணலாம். தொடக்கத்தில் கண்டி மன்னனாக விளங்கிய சேனரதனைப் போலவே இரண்டாம் விமலதர்ம சூரியனும் இளமையி லிருந்து சமயவாழ்வில் மிகவும் அக்கறை காண்பித்து வந்திருந்தமையால், மிகவும் சிக்கல் வாய்ந்த கண்டியரசியலில் மதிநுட்பமாகப் பங்கு கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தினை அம்மன்னன் பெற்றிருக்கவில்லை. இதனால் அரசியல் முகாமைத்துவ இயந்திரப் பொறியை இயக்குபவர் களாகக் கண்டியப் பிரதானிகள் மாறிவிட்டிருந்தனர். உள்நாட்டு - வெளிநாட்டு கொள்கைப் பிரகடனங்கள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பும் பிரதானிகளுக்குரியதாகவே மாறியிருந்தமை குறிப்பிடத் தக்கது. 1688இல் கிளாஸ் அபிலோஸ் என்ற ஒல்லாந்தத் தூதுவன் கண்டியரசனுடன் ஒர் ஒப்பந்தத்தைச் செய்யச் சென்ற போதுகட, மன்னன் அப்பொறுப்பினைக் கவனிக்காது கண்டியப் பிரதானிகளிடமே அதனை ஒப்படைத்தமை இங்கு நோக்கத்தக்கது. மிக மிக அந்தரங்கமான அரசியல் விடயங்ளைக் கூட கண்டியப் பிரதானிகளே கவனித்து வந்தனர். இவ்வாறாகக் கண்டியரசின் வரலாற்றில் விமலதர்மசூரியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குப் பதிலாக பிரதானிகளின் அதிகாரமும், செல்வாக்கும் ஓங்கியிருந்தமையைக் காண முடிந்தது. இந் நிலையானது ஒல்லாந்தரது அமைதியான வர்த்தக முகாமைத்துவத்திற்கும் சவாலாகப் பின்னர் அமைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
2

Page 109
வீர நரேந்திர சிங்கனும் கண்டி மீதான ஒல்லாந்தரின் உறவும் :
இரண்டாம் விமலதர்ம சூரியன் 1706ஆம் ஆண்டு, ஆனி மாதம் இறந்தமையைத் தொடர்ந்து, அவனது மகனான வீர நரேந்திரசிங்கன் கண்டி இராச்சியத்தின் அதிபதியானான். இவனுடைய ஆட்சி 1739 வரை நீடித்திருந்தது. மூர்க்க குணமுடையவனாக இம் மன்னன் விளங்கிய போதும், ஒல்லாந்தருடன் எவ்விதமான முரண்பாட்டினையும் வளர்த்துக் கொள்ள விரும்பாதவனாகக் காணப்பட்டான். ஆனால் கண்டிய பிரதானிகள் தமது செல்வாக்கினால் ஒல்லாந்தருக்கும் கண்டியருக்கு மிடையே நடைபெற்று வந்த வாணிபத்தை தடுப்பதற்காகப் பல தடவைகள் முயற்சி செய்து வந்திருந்தமையைக் காணமுடிந்தது. வீரநரேந்திர சிங்கனின் ஆட்சிக் காலமே ஒல்லாந்தருக்கு கண்டியுடனான வாணிபம் தொடர்பாக புதிய அணுகுமுறையை ஈட்டுவதற்கு வாய்ப்பினைக் கொடுத்தது. பதினேழு வயதுடைய வீரநரேந்திர சிங்கன் கண்டிய சிம்மாசனத்தை அலங்கரிக்கத் தொடங்கிய காலத்தில் அவனைப் பதவியிலிருந்து நீக்குவதற்காகப் பல பிரதானிகள் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் இதனால் கண்டி இராச்சியத்தில் அரசியலில் ஸ்திரமற்ற நிலை தோற்றம் பெற்றிருந்தது. இச்சந்தர்ப்பத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஒல்லாந்தர், முன்பு கண்டியரசனின் நல்லிணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி, அவர்களுடைய வாணிபத்திற்காகத் திறந்து விட்டிருந்ததுறைமுகங்களினால் ஏற்பட்ட பொருளிழப்பினை ஈடுசெய்வ தற்காக, அத்துறைமுகங்கள் எல்லாவற்றையுமே கண்டியருடைய வாணிபத்திலிருந்து மூடிவிட்டனர். ஜோன் சைமன் (1703 - 1707) என்ற ஒல்லாந்துத் தேசாதிபதியே இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தான். இந்நடவடிக்கை காரணமாக கண்டியர் இப்பொழுது ஒல்லாந்த வர்த்தக சங்கத்துடன் மட்டுமே கொடுக்கல் - வாங்கல்களைச் செய்ய வேண்டிய
சந்தர்ப்பம் நேரிட்டது.
வீர நரேந்திரசிங்கனுடைய காலம் கண்டி இராச்சியத்தைப் பொறுத்த வரையில் இரு எதிரெதிர் முனைப்பட்ட வாணிபக் கயிறு இழுத்தல் நிகழ்ந்த காலமாகக் கொள்ளலாம். அதாவது கண்டி இராச்சியத்திற்குரிய துறைமுகங்கள் யாவும் மூடப்பட்டு, கண்டியரின் நேரடி வெளிநாட்டு வர்த்தகம் ஒல்லாந்தரால் தடை செய்யப்பட்டதன்பின்னணியில் உருவான ஒரு கொந்தளிப்பான காலம் எனலாம். வர்த்தகக் கொம்பனிக்கும் கண்டிய மன்னனது வர்த்தக அமைப்பிற்குமிடையே ஏற்பட்ட வாணிப விருத்திக் குரிய போராட்ட காலமாக வீர நரேந்திரனுடைய காலம் அமைந்து கொண்டது. கரையோரத்துறைமுகங்களைப் பொறுத்தவரையில் இலங்கைச் சுதேசிகளுடனல்லாது இந்திய வர்த்தகர்களுக்கும், வர்த்தக
22

சங்கத்திற்குமிடையே நிகழ்ந்த வாணிபச் செயலமர்வுகளையே பெருமளவில் காணமுடிந்தது. இவற்றுக்கிடையே வழமையான வாணிபத் தூதுக்குழுக்கள் கண்டியரசுடன் வாணிபப் பரிமாற்றங்களுக்காகச் சென்று வந்தமையையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு கண்டி இராச தானிக்கும் ஒல்லாந்தருக்குமிடையே காணப்பட்ட உறவினை மேலெழுந்தவாரியாக நோக்கியபோது அது சாதாரண - அமைதியான தாகக் காணப்பட்டிருப்பினும், உள்ளகத்தில் அது ஒரு கயிறு இழுத்தல் போட்டியாகவே தொழிற்பட்டுக் கொண்டிருந்தமையைக் காண முடிந்தது. அதாவது வாணிப ஏகபோகத்திற்காக ஒல்லாந்தரும், கண்டியரும் தத்தமக்குள் நடாத்திய ஒரு வகையான பனிப் போர் (Cold
War) எனலாம்.
இப்பணிப் போரில் கண்டியப் பிரதானிகளின் பங்கு மிகவும் உச்சமான நிலையில் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்த வர்த்தகக் கொம்பனிக்கெதிராக கண்டியப் பிரதானிகள் மக்களையும், மன்னனையும் மிகவும் ரகசியமான முறையில்துரண்டி, கண்டி இராச்சியத் தில் ஒருவிதமான குழப்பநிலையைத் தோற்றுவித்திருந்தனர். கண்டிய ருடைய வழமைப் பிரகாரம், மிகவும் இக்கட்டான காலகட்டங்களில்
தொழிற்படும் மரபு அங்கு காணப்பட்டது. அவ்வாறான ஒரு நிலை வீர நரேந்திரசிங்கன் காலக் கண்டியரசில் பிரதானிகளால் உருவாக்கப் பட்டிருந்தது. கறுவாப்பட்டையுரிக்கும் தொழிலாளர்களும், கறுவாப் பட்டை சேகரிப்பாளர்களும் ஒல்லாந்த வர்த்தக கம்பனிக்கெதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் ஒல்லாந்தரது ஆணைக்கு உட்பட்ட கறுவாத் தோட்டங்களிலிருந்தும் விலகி, கண்டிய மன்னனுடைய ஆணைக்குட்பட்ட பிரதேசங்களைச் சென்றடைந்து கொண்டிருந்தனர். சியான் கோறளை, மாத்தறை திசவாணிகளில் இருந்து அவ்வாறான தொழிலாளர் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட்டு, ஏனைய இடங்களுக்கும் பரவிக் கொண்டமையை காண முடிந்தது. இக் கிளர்ச்சிகளை அடக்குவதற்காக பட்டேவியாவிலிருந்து படைகள் கொண்டு வரப்பட்டு மல்வான, அத்தனகலப் பிரதேசங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனாலும் கலகக் காரர்கள் கட்டு மீறிய நிலையில் நான்கு கோறளை, ஏழு கோறளைத் திசாவைகளில் தலைமையில் ஒல்லாந்தர் படைகளுடன் மோதிக் கொண்டு கொழும்பு நகரை நோக்கி கொழும்பினை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் 1736ஆம் ஆண்டு ஒல்லாந்துத் தேசாதிபதியாக வருகை தந்த இம்மோவ் என்பவன் பிரகடனப்படுத்தியிருந்த
23

Page 110
தன்பாட்டில் அடங்கிப் போனது எனலாம். கண்டி மன்னனையும் கறுவாத் தொழிலாளர்களையும் இம்மோவ் தம்வயப்படுத்திய நிலையில் மீண்டும் வர்த்தகக் கொம்பனிக்கும் கண்டியருக்குமிடையே இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில் 1739ஆம் ஆண்டில் வீரநரேந்திர சிங்கன் காலமானான். இவனது மறைவுடன் கண்டி இராசதானியில் ஒரு யுகம் முற்றுப் பெற்றுக் கொண்டது. அதாவது பாரம்பரிய சிங்கள - பெளத்த அரச மரபின் இறுதி மன்னனாக அவன் ஆட்சி புரிந்து, மறைந்த காலயுகத்தை அவ்வாண்டு குறிப்பிட்டு நின்றது என்பதாகும்.
கண்டியில் நாயக்க அரச மரபின் தோற்றமும் ஒல்லாந்தருடனான உறவும் :
ஒல்லாந்தர்கால இலங்கையின் அரசியல் முகாமைத்துவம், வாணிகச் செல்நெறி, வெளிநாட்டுத் தொடர்புகளின் வரலாற்றில் ஒரு பிரதான திருப்புமுனையை கண்டியரசியலில் நாயக்கவம்சத்தின் பிரவேசம் குறித்து நின்றது. இதுவரை காலமும் அதாவது நரேந்திரசிங்கன் இறக்கும் வரைக்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த அரசியற் தொடர்புகளினூடே ஒல்லாந்தர் இலங்கைத் தீவிற்குள்ளேயே கண்டியரசியல் தொடர்பாக நடவடிக்கைத் தளத்தினை விஸ்தரித்திருந்தனர். ஆனால் நரேந்திரசிங்கனின் இறப்பின் பின்னர் ஒல்லாந்தர் கண்டியரசில் தொடர்பான நடவடிக்கைத் தளத்தினை தென்னிந்தியாவிலுள்ள மதுரை நாயக்க வம்ச ஆள்புலம் வரைக்கும் விஸ்தரிக்க வேண்டியிருந்தது. இதனால் இலங்கையில் ஒல்லாந்தரின் வாணிப நடவடிக்கைகளோடு தென்னிந்திய பிராந்திய அரசியல் - வாணிபத் தொடர்புகளும் ஏற்பட்டுக்கொள்வது தவிர்க்க முடியாததாயிற்று, எனவே இலங்கையில் கண்டி நாயக்க வம்சம் ஒல்லாந்தர் மீதாகவும், இவர்களைத் தொடர்ந்து இலங்கையின் ஆதிபத்தியத்தினைக் கவர்ந்த ஆங்கிலேயர்கள் மீதாகவும் பேரரசு எதிர்ப்பு நடவடிக்கைகளை சமகாலத் தென்னிந்தியச்சூழலுக்கேற்ப மேற்கொள்ள வேண்டிய கட்டாய தேவை காணப்பட்டது.
இலங்கையின் இறுதிச் சிங்கள இராச்சியத்தின் அரசபதத்தினை (King ship) கண்டி இராச்சியத்தில் அலங்கரித்த ஒரு வம்சமாக நாயக்கர் வம்சம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாயக்கர் வம்சம் விட்டுச் சென்ற அரசியல், பண்பாட்டு மேற்கட்டுமானத்தின் தோற்றப்பாட்டுடன் கண்டி நகரம் இற்றைவரைக்கும் காட்சியளிப்பது ஈழத்தவருக்குரிய தனித்துவத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது. தொடர்ச்சியான வகையில் கண்டி மன்னர்கள் தென்னிந்திய நாயக்க வம்சத்துடன் மேற் கொண்டிருந்த திருமணத் தொடர்புகளின் விளைவாக நாயக்கருடைய
24

Godsirouaofurtg; Golf (a Colony of Nayakkar relative of the king) 56 iTuq B5g(pub, பிற்பட்ட கண்டிய இராச்சியமும் விளங்கியது என்பதும், அவர்களுக்காக மிகவும் விசேடமான முறையில் அமைக்கப்பட்ட குடியிருப்புத் தொகுதியை இணைத்து வைத்த வீதிக்கு குமாரப்பே வீதியே (Kumaruppe Vidya) எனப் பெயரிடப்பட்டிருந்தமையையும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவ்வீதி மலபார் தெரு (Malabaar Street) எனவும் அழைக்கப்பட்ட வகையையும் காணமுடிந்தது.
கண்டி இராசதானியில் ஆட்சி செய்த நாயக்க வம்சத்தின் தோற்றம் தொடர்பாக மிகவும் விரிவான வகையில் திருமதி L. S. தேவராசா தனது கலாநிதிப்பட்ட ஆய்விற்காக சிறப்பான ஆய்வொன்றினை நிகழ்த்தி யுள்ளார். கி.பி. 1707க்கும் 1760க்கு மிடைப்பட்ட காலத்தைய அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி மிகவும் பயனுள்ள தகவல்களை அவருடைய கண்டிப் பேரரசு என்ற (The Kandyan Kingdom) நூலில் காண முடிவது குறிப்பிடத்தக்கது. பூரீ விஜய நகரப் பேரரசின் கீழ், கிருஷ்ணதேவராஜருடைய (1509-1530) நம்பிக்கைக்குரிய சேவகனாக மதுரையில் ஆட்சிபுரிந்த விஸ்வநாத நாயக்கருடன் (1529 - 1564) தொடர்புபட்டதாக இலங்கையில் நாயக்க வம்சத்தினர் வாழ்ந்து வந்திருந்த வரலாற்றை திருமதி. தேவராசா தனது நூலில் எடுத்துக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஜயநகரப் பேரரசின் தென் மாவட்டங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட விஸ்வநாத நாயக்கருடைய காலத்தில பாண்டி மண்டலம், சோழ மண்டலம் உள்ளிட்ட பரப்புக்களில் நாகரிக வளர்ச்சியும், பொருளியல் மேம்பாடும் ஒருங்கே ஏற்பட்டிருந்தமையின் பின்னணியில் இந்நிலமையானது இலங்கையையும் பாதிக்கத் தவறவில்லை. மதுரையை மையமாகக் கொண்டு திறையரசமைப்பாகத் தோற்றுவிக்கப்பட்ட நாயக்கவம்சம் விரைவிலேயே விஜயநகரப் பேரரசின் பிடியிலிருந்து விடுவித்த வண்ணம், தம்மை சுதந்திர ஆட்சியமைப்பாக மாற்றிக் கொண்டது. இந்நிலையில் தஞ்சாவூர் நாயக்க வம்சம் அரசமைப்பு இயலில் மேலோங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் மதுரையின் முகாமைத்துவ மையத்திலிருந்து பிரிந்து, தனித்துவமானவோர் அரசமைப்பு மையமாக தஞ்சாவூர் ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீடித்திருந்தமையையும் காணமுடிந்தது. இப் பின்னணியிலேயே கண்டியரசனான இரண்டாம் இராஜசிங்கனால் போர்த்துக்கேயருக்கும், பின்னர் ஒல்லாந்தருக்குமிடையே போரை நடாத்திக் கொண்டிருந்த போதே, மதுரை நாயக்க வம்சத்துடனான திருமண உறவுகளை அம்மன்னன் ஏற்படுத்திக் கொண்டிருந்தான் என அறிகின்றோம். சூளவம்சத்தின் மூன்றாம் பாகத்தில் இரண்டாம்
215

Page 111
இராஜசிங்கன் மதுரை நாயக்க வம்சத்துடன் கொண்டிருந்த திருமணத் தொடர்புகள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்டிக்கு நாயக்கர் வம்சத் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்வில் ஒல்லாந்தருக்கும் சிறிதளவு பங்கு உண்டு எனத் திருமதி. தேவராசா கருதுகின்றார். அதாவது மதுரையில் வாழ்ந்த பிட்டிநாயக்கர் குடும்பத்திற்கும் ஒல்லாந்தருக்கும் இடையே ஏற்பட்டிருந்த உறவின் அடிப்படையில் பார்க்கும் போதே கண்டிக்கு நாயக்க இளவரசிகளை கொண்டு வந்திருந்த நிகழ்ச்சிக்கு ஒல்லாந்தர் பொறுப்பேற்றிருக்க வேண்டும் போல் தோன்றுகின்றது. இருந்த போதும் பிட்டி நாயக்கன் என்றவொரு பெயரை நாயக்க அரசியலிலும், வம்சாவழிப்பட்டியலிலும் கண்டி கைப்பற்றப்பட்ட காலம் வரைக்கும் காணமுடியாதிருப்பதனை அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் மருமக்கள் தாயம் என்றவொரு அரசியல் வாரிசு உரிமை முறைமை கண்டியில் நிலைத்திருந்த முறைமையைக் கொண்டே நாயக்கர் வம்சாவழியில் பிட்டி நாயக்கன் தொடர்பு இணைந்து கண்டியின் நாயக்க வம்ச அரசியல் முகாமைத்துவத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்த வகையைக் காண முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.
கண்டியரசின் முதலாவது நாயக்க வம்சாவழி மன்னனாக ஆட்சிபீடம் ஏறியவன் பூரீ விஜயராச சிங்கனாவான். அந்நியனாகிய இம் மன்னன் தான் வேற்று நாட்டினன் என்பதனை மறைப்பதற்கும், மக்களைத் திருப்திப்படுத்தி, தனது ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ளச் செய்வதற் குமாக பெளத்த சமய புனருத்தாரண வேலைகளில் ஈடுபட்டான். இம்மன்னனது ஆட்சிமுறையில் மீண்டும் ஒல்லாந்தருக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இவனுக்கு முன்பு ஆட்சி செய்த நரேந்திர சிங்கனுக்கு எவ்வித புத்திர சந்தானமும் இல்லா திருந்தமையினால் அவன் இறந்த பின் அவனது முதல் பட்டத்து இராணியின் சகோதரனான மதுரை நாயக்க வம்சத்து பூரீவிஜயராசசிங்கன் கண்டியரசிற்கு தலைமைத்துவம் ஏற்கவேண்டி நேரிட்டது. இந்நிலை யானது கண்டியரசு தனது சுதந்திர இறைமையை மதுரை நாயக்க வம்ச அரசியல் முகாமைத்துவத்துடன் இணைத்துக் கொண்டிருந்த வகையையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
பூரீ விஜய இராஜசிங்கன் அரசுக்கு வந்ததும் இலங்கையின் நிலை பெரிதும் மாறுதலடைந்தது. இவனுக்கு முன்னிருந்த அரசர்களைப் போல இவன் சமாதான முறையில் ஒல்லாந்தருடன் நடந்து கொள்ளவில்லை.
216

முன்னிருந்த அரசர்கள் ஒல்லாந்தர் மீது தங்களுக்கிருந்த வெறுப்பை எல்லைப்புற வாயில்களை அடைப்பதினாலும், வியாபாரத்தை நிறுத்துவதினாலும், காண்பித்தனர். இம்மன்னனோவெனில், ஒல்லாந்தருக்குரிய ஆட்சிப் பரப்பிற்குள் பிரவேசித்து பயிர்களை அழித்ததுமன்றி, கறுவா உரித்தற்றொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையும் திருப்பிக் கூப்பிட்டுக் கொண்டான். அன்றியும் கறுவா, மிளகு, பாக்கு, தேங்காய் முதலிய பொருட்களில் புத்தளத்திலிருந்த சோனகருடைய துணையோடு, இந்தியக் கரையேர வியாபாரிகளுடன் வர்த்தகமும் நடாத்தினான். கிழக்கிந்திய வர்த்தக சமூகத்தினர் இக்கள்ளத்தனமான வியாபாரத்தினை முறியடிப்பதற்கு முயன்றும் அது பலன்தராத வகையில் முடிவுற்றது. 1743இல் சீயன்கோறளையைச் சேர்ந்த ஒன்பது கிராமங்களைத் தன்னரசுடன் (இம்மன்னன்) இணைத்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட ஒல்லாந்தர், கண்டியரசின் அச்செயலைக் கண்டித்தார்களேயன்றி, திருப்பி அக்கிராமங்களைப் பெற்றுக்கொள்வதற்காக எம்முயற்சியையும் செய்யவில்லை.
பூரீவிஜய இராஜசிங்கன் கண்டியில் சிம்மாசனத்திற்கு வருகைதந்திருந்த பொழுது, அதிகார் அகலப்பொல (Adigar Ahalapola) என்பவனே மிகவும் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தையும் தனது கையிற்குள் வைத்திருந்த பிரபுவாக (noble) விளங்கினான். முன்னைய மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் உடபலட்டவின் திசாவையாகவும், மகாதேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே (basnayake mileme) ஆகவும் நியமனம் செய்யப் பட்டிருந்த நிலையில் அதிகார் அகலப்பொல கண்டிய மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குடைய பிரபுவாக விளங்கினான் என்பதும் குறிப்பிடத் தக்கது. நாயக்கவம்சத்தினுடைய கண்டியரசன் மீதான அரசியல் பிரவேசத் திற்கும், அதிகார் மீதான அதீத நம்பிக்கை, விசுவாசம், ப்ொறுப்பு ஆகியவற்றை நாயக்க ஆட்சியாளர் வைத்திருப்பதற்கும் பின்னணியாக விளங்கியவன் இந்த அதிகார் அகலப்பொல ஆகும், மதுரை நாயக்கரின் சத்திரிய மரபிலிருந்து கண்டிய சிம்மாசன உரித்தாளருக்கு இளவரசிகளை பட்டத்து இராணிகளைத் தெரிவு செய்து கொடுக்கின்ற பொறுப்பினிையும் இந்த அதிகார் செய்து வந்தார். அரசவையில் நிகழ்ந்த திருமண வைபவங்கள் யாவற்றிற்குமே அதிகார்தான் பொறுப்பு வகித்திருந்தார். இக்காரணத்தினால் பூரீவிஜய ராஜசிங்கன் அதிகார் அகலப்பொலவிற்கு மிக முக்கியமான பிரதேசங்களுக்கான ஆள்பதிப் பதவியினையும் வழங்கியிருந்தான். அவ்வகையில் மட்டக்களப்பு, பாணவ, நுகரகலாவிய, தம்பலகமுவ, ஏழு கோறளைகள் ஆகிய பிரதேசங்களை அதிகார் அகலப்பொல நிர்வகித்து வந்தமையைக் காணமுடிந்தது. மட்டக்களப்பும்,
27

Page 112
தம்பலகாமமும் கண்டி இராச்சியத்தின் இரு பிரதானதுறைமுக நகரங்களாக விளங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு கோறளையின் தலைநகரான புத்தளத்திலிருந்து தென்னிந்தியக் கரையோரமாகவுள்ள வணிகத்துறைகளுக்கு பாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்துறைமுகம் கண்டியரசனின் பிரதான ஏற்றுமதிக்குரிய துறையாகும். இதேபோன்று தம்பலகமுவத்துறைமுகமும் திருகோணமலை கொட்டியாரக் குடாப்பரப்பின் மத்தியில் அமைந்துள்ளதொன்றாகும். தம்பலகமுவத் துறைமுகப்பரப்பிலிருந்து மட்டக்களப்புத்துறைமுகப் பரப்பு வரையுள்ள பெருவயற் பரப்பிலிருந்து உற்பத்தியாகும் நெல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இத்துறைமுகங்களினூடாக வருகை தந்த முஸ்லீம் வியாபாரிகள் கண்டியக் கிராமங்களுக்குள் ஊடுருவி துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு அதிகார் அகலப் பொலவின் நிர்வாகத்தின் கீழ் கண்டியரசனுக்கு ஏராளமான வருமான ஈட்டம் கிடைக்கப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்டியரசன் அதிகார் அகலப்பொலவிற்கு ஏராளமான நெல்வயல் நிலப்பரப் புக்களை மானியமாக வழங்கியிருந்தமை பற்றியும் அறிகின்றோம். இதனால் கண்டிய அரண்மனைக்குள்ளும், புறமுகமாக அதிகார் அகலப்பொலவின் செல்வாக்கு மிகவும் கூடிக் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது அதிகார் ஆக பிலிமத்தலாவே என்பவன் நரேந்திர சிங்கன் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட நிலையில் கண்டிய அரண்மனையில் நிர்வாக முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தமையையும் காணலாம். பிலிமலத்தலாவே இப்பொழுது முன்னைய மன்னனுடைய மனைவி (தாரமிழந்தவள்) ஒருத்தியை விவாகம் பண்ணியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில் முதலாவது அதிகார் அகலப்பொலாவிற்கும் இரண்டாவது அதிகார் பிலிமத்தலாவுக்குமிடையே திருமண அடிப் படையில் நெருங்கிய தொடர்புகள் எற்பட்டிருந்தமை ஒரு சிறப்பு அம்சமாகும். இவ்வடிப்படையில் கண்டிய சிம்மாசனத்தின் பாதுகாப்பு அதன் நிலைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக இவ்விரு அதிகாரி களுக்குமிடையே ஏற்றத்தாழ்வான கருத்துருவங்கள் தோற்றம் பெற்று விட்டிருந்தன. பூரீவிஜய இராஜசிங்கனுடைய ஆட்சிக்கான வருகையுடன் பிலிமத்தலாவே தனது இரண்டாவது அதிகார் என்ற பதவியை சமணக் கொட்டி (Samanakkodi) என்பவனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிகார் சமணக்கொட்டி அதிகார் அகலப்பொலவின் பரமவிரோதி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி. 1742 அளவில் சமணக்கொட்டி தனது அதிகார் பதவியை கண்டிய அரண்மனையில் நிலை நிறுத்திவிட்டிருந்தமையை ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
21

ஒல்லாந்தரோடு மிகவும் சிநேக பூர்வமான உறவினை வளர்த்து வந்திருந்த அதிகார் சமணக் கொட்டிக்கு டிசெம்பர், 15ஆம் திகதி, 1746ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் தளபதியான வான் கொலின்ஸ் நட்புணர்வுடன் கடிதம் எழுதத் தொடங்கியிருந்த முறைமையிலிருந்தே பூரீ விஜய இராஜசிங்கன் காலத்து ஒல்லாந்தரது கண்டியுடனான அரசியற் தொடர்புகள் முன்னகர்த்தப்பட்டன. ஒல்லாந்தத் தளபதிகளுக்கும், பூg விஜய இராஜசிங்கனுடைய இரண்டாம் அதிகார் சமணக் கொட்டிக்கும் இடையேயான பரஸ்பர நல்லிணக்கத் தொடர்புகளினூடாக ஒல்லாந்தர் கண்டியரண்மனையின் நாளாந்த நிலைவரங்களையும், மாற்றங்களையும், சலுகைகளையும் முறையே அறிந்தும், பெற்றும் வந்திருந்தனர். 1747இல் பூரீ விஜய இராஜசிங்கன் இறக்கும் வரைக்கும் அதிகார் சமணக் கொட்டிக்கும், மன்னனுக்குமிடையே மிகவும் இறுக்கமான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. அத்தகைய இறுக்கமான தொடர்புகளைப் பயன்படுத்தி ஒல்லாந்தர்கண்டியுடனான தமது நல்லுறவுகளையும் வளர்க்க முற்பட்டமையை இக்காலகட்டத்தில் காண்கின்றோம். ஒல்லாந்த ஆள்பதி கண்டி அரண்மனைக்கு விஜயம் செய்து, இரண்டாம் அதிகாருக்கு 306 பகோடாக்கள் பணம் கொடுத்து விட்டுத் திரும்பியிருந்த செய்தியையும் ஒல்லாந்த ஆவணங்களில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது. உண்மையில் இப்பெருந்தொகைப் பணத்தை இரண்டாம் அதிகார் சமணக் கொட்டிக்கு ஒல்லாந்தர் ஒரு கையூட்டாகவே வழங்கினர் எனச்சொல்ல வேண்டும். கண்டிய மன்னனுடைய சலுகை களைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காகவே ஒல்லாந்தர் இரண்டாம் அதிகார் சமணக் கொட்டியுடனான இறுக்கமான தொடர்பினை ஏற்படுத்தியிருந்தனர் எனலாம். கண்டி மன்னன் தனது இரண்டாம் பட்ட மகிஷியைத் திருமணம் செய்தபோதும் ஒல்லாந்தர் தமது விசேடதூதுவர் மூலம் வாழ்த்துச் செய்தியைக்கூட அனுப்பியிருந்தமை குறிப்பிட்த்தக்கது.
1739ஆம் ஆண்டிலிருந்து கண்டிய அரண்மனையில் ஏற்பட்ட வம்ச மாற்றத்தை சாதகமாகக் கொண்டு, ஒல்லாந்தர் கண்டிய அரசவையில் பிளவு ஒன்றினை உருவாக்குவதற்கு எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஒல்லாந்த ஆள்பதி வான் இவ்மோவ் (1736 - 40) என்பவனுக்கு கண்டி யில் ஏற்பட்ட வம்ச மாற்றத்துடன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த மன்னன் மீது பெருமளவிற்கு சந்தேகம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கண்டியின் முடியாட்சி முறையின் இறைமையை அம் மன்னனால் கட்டிக்காக்க முடியாது தத்தளித்துக் கொண்டிருந்த நிலையே அவ்வாறு அந்த ஆள்பதிக்கு சந்தேகம் கொள்ள வைத்தது. ஜான் ஸ்க்றுாடர் என்ற ஒல்லாந்த ஆள்பதி (1757 - 62) கூட கண்டிய
29

Page 113
அரண்மனைக்குள்ளே பிளவு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இயங்கி வந்தமையைக் காண்கின்றோம். அதாவது நாயக்க வம்ச ஆதிக்க காலப் பரப்பில் ஒல்லாந்தர் கண்டியுடன் கொண்டிருந்த அரசியற் தொடர்புகளானவை முன்பு போர்த்துக்கேயர் எவ்வாறு கோட்டை இராச்சியத்துடன் உட்பூசல்களைத் தோற்றுவிப்பதனையே நோக்கமாகக் கொண்டு தொழிற்பட்டிருந்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஜான் ஸ்குறுாடர் கொண்டிருந்த இன்னொரு கொள்கையானது கண்டியரசின் எல்லைப் புறங்களில் காணப்பட்ட திறையரசுகளை சுதந்திர இராச்சியங்களாக பிரகடனப்படுத்தத் தூண்டுவதாகும். அதற்காக வேண்டி அத்தகைய சிறு ஆட்சியாள குறுநிலத் தலைவர்களுக்கு கையூட்டு வழங்கவும் ஜான் ஸ்குறுாடர் என்ற ஒல்லாந்த ஆள்பதி தயாராகவிருந்தமை குறிப்பிடத்தக்கது. பட்டேவியாவிலிருந்த ஒல்லாந்து நிர்வாகம் மையம் தற்போது கண்டி இராச்சியம் தொடர்பாகக் கடைப்பிடித்த கொள்கைகள் குட்டையைக் குழப்பிவிட்டு குழம்புக்கு மீனைப் பிடிக்கின்ற போக்கில் அமைந்து காணப்பட்டன. தென்னிந்திய ஆட்சியாளருக்கும் கண்டிய அரசர் - மற்றும் பிரதானிகளுக்கும் இடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்திவிட்டு, அதன் அடிப்படையில் கண்டிய மன்னனுடனான ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு ஒல்லாந்தர் கால நேரத்தைக் கணித்து நின்றனர். இருந்தும் கண்டிய மன்னனுக்கு எவ்விதமான ஆபத்துக்களும் நேராவண்ணம் கண்டியப் பிரதானிகள் நடந்து கொண்ட முறையினால் ஒல்லாந்தரது திட்டங்கள் சாத்தியப்படாது போய்விட்டன.
கண்டியில் நாயக்கர் வம்ச பிரவேசத்துடன் ஒல்லாந்தர் தமக்குள் தாமே சில கொள்கை நோக்குகளை மாற்றி, மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய சூழலும், ஏற்பட்டுக்கொண்டது. இதுவரை காலமும் இலங்கையில் ஒல்லாந்தர் முகமன்கூறி, தற்புகழ்ச்சி பாராட்டி, மிகவும் கனிவான வகையில் தமது வாணிப நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். கண்டிய மன்னனளவில் அவனுக்கு மிகவும் கெளரவமான விருதுகளை எல்லாம் சூடி, ஒல்லாந்தர் தமக்குரிய சாதகமான செயற்பாடு களையெல்லாம் பெற்றிருந்தனர். ஆனால் நாயக்க வம்ச வருகையுடன் இந்நிலைமை முற்றிலுமே மாற்றமடைந்து கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. நாயக்க வம்சத்தவர் தென்னிந்தியாவில் மிகவும் பரந்தடிப்படையில் அனுபவங்களை அரசியல் முறையில் பெற்றிருந்தமையின் பின்னணியில், ஒல்லாந்தரால் அவர்களிடம் தற்புகழ்ச்சி கூறி, லாபம் ஈட்டும் நோக்கு நிறைவேறுவதற்கு சாத்தியமற்று போய்விட்டது. இதனால் நாயக்க வம்ச ஆட்சியை ஒல்லாந்தர் அடியோடு வெறுத்தனர். தென்னிந்திய வாணிபத் துறையில் மிகவும் துறைபோகிகளாக காணப்பட்ட நாயக்கர்,
220

ஒல்லாந்தரது "இனிமையான வாணிப" முயற்சிகளுக்கெல்லாம் சாவுமனி அடிப்போராகவே காணப்பட்டனர். இதனால் ஒல்லாந்தர் கண்டி இராசதானியில் நாயக்கர் வம்ச ஆட்சியை அடியோடு வெறுத்தனர். கண்டியின் அரசியல் முறைமை தற்போது கண்டிக்குள் மட்டும் மட்டுப் படுத்தப்பட்டதாக அல்லாது, தென்னிந்திய அரசியல் வானுடன் இணைக்கப்பட்டிருந்தமையினால் ஒல்லாந்தருக்கு கண்டியில் குழப்ப நிலையை ஏற்படுத்துவது மிகவும் சுலபமாயிற்று.
இராமநாதபுரத்து தேவர் குடும்பத்துடன் கண்டிய நாயக்கர் வம்சம் மிகவும் அந்நியோன்யமான தொடர்புகளை வைத்திருந்தமையை ஒல்லாந்தர்தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவாரம்பித்தனர். ஒல்லாந்தரது இந்துசமுத்திர வாணிப நடவடிக்கைகளுக்கு தேவர் குடும்பம் பெருந்தீங்கிழைத்து வந்தமையின் அடிப்படையில், ஒல்லாந்தரது விரோதிகளாக அவர்கள் மாறியிருந்தனர். பளையகாட்டில் ஒல்லாந்தர் தமது வாணிப மையத்தை ஸ்தாபித்த காலத்திலிருந்து தென்னிந்திய அரசுகள் எவையேனும் தம்முடன் மட்டுமே வாணிப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்தமும் செய்து, நிபந்தனையும் விதித்திருந்தமை தற்போது நினைவுகூறத்தக்கது. இப்பின்னணியில் தேவர் குடும்பம் கண்டியரசனின் அரண்மணையில் பெருஞ் செல்வாக்குப் பெற்று, கண்டியின் வாணிப நடவடிக்கைகளை தென்னிந்திய துறைமுகங்கள் வரைக்கும் எடுத்துச் செல்வதனை ஒல்லாந்தர் முற்றாகவே வெறுத்தனர். 1743ஆம் ஆண்டில் பூரீவிஜய இராஜசிங்கனின் தந்தையுடன் கண்டிய அரண்மனையில் தேவர் குடும்பத்து அங்கத்தவர்கள் இணைந்திருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒல்லாந்தர் சந்தேகக் கண் கொண்டு நோக்கினர். அது மட்டுமல்லாது தேவர் குடும்பம் கண்டி யுடன் தொடர்புகொள்வதனை ஒல்லாந்தர் தடைசெய்து மிருந்தனர். 1744ஆம் ஆண்டில் கண்டிய மன்னனுடைய மாமனாரான நாரெனப்ப நாயக்கர் என்பவர் மிகவும் பலவந்தமாக கல்பிட்டியிலிருந்து தனது வரிசெலுத்தும் இறையாண்மையை நீக்கிக் கொள்ளுமாறு ஒல்லாந் தருக்கு நெருக்குதல் கொடுத்திருந்தார். இந்நிலையை முன்னேற்றத்தை ஒல்லாந்தர் ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை, அனுமதிக்கவுமில்லை, இதனால் மிகவும் ஆத்திரமுற்ற நாரெனப்ப நாயக்கர் ஒல்லாந்தரது கொம்பனி வர்த்தக நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் எங்கெலாமோ தீங்கும், இழப்பும் விளைவிக்க முடியுமோ அங்கெல்லாம் அதனைச் செய்வித்தார், செய்யத்தூண்டினார். இந்நிலைமை மேலும் ஒல்லாந்தர் - கண்டியத் தொடர்புகளைக் கொந்தளிக்கச் செய்தது. ஜான் ஸ்க்றுாடர் என்ற ஒல்லாந்துத் தளபதியைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர்கள் எழுதிய
22

Page 114
கடிதங்களினூடாக கண்டியில் தென்னிந்திய வம்சத்தவர்களின் செல்வாக்கு, குறிப்பாக முஸ்லீம்கள் (கீழைக்கரை முஸ்லீம்கள்), செட்டிமார்கள், நாயக்கர்கள், பணிக்கர்கள், தேவர்கள் என்றெல்லாம் பலதரப்பட்ட வம்சத்தவர்களும் தென்னிந்தியாவிலிருந்து கண்டிக்குப் போவதும், வருவதுமாக இருந்தமையை கண்டு கொள்ள முடிந்தது. எனவே கண்டியுடனான தொடர்புகளைச் சீராக வைத்துக் கொள்வதில் ஒல்லாந்த அரசு பெருமளவிற்குச் சிரமப்பட்டது என்றே கூற வேண்டும்.
கண்டியில் நாயக்க வம்சத்தவர் அரசியலாதிக்கத்தினைப் பெற்றுக் கொண்டதன் பிற்பாடு, கண்டிய அரண்மனையிலிருந்து வியாபாரச் சுதந்திரம், துறைமுகங்களைத் திறத்தல் என்பன பற்றிய கோரிக்கைகள் ஒல்லாந்தரை நோக்கி வந்த வண்ணமிருந்தன. கண்டி இராச்சியத்திலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அக்கோரிக்கைகள் தோற்றம் பெறாதவொரு சூழ்நிலையில், கண்டி அரண்மனையிலுள்ள தென்னிந்திய வர்த்தக சமூகத்திடமிருந்தே ஒல்லாந்தரை நோக்கி அக்கோரிக்கைகள் எழுந்தன. இதனை முற்றுமுழுவதுமாக ஒல்லாந்தர் வெறுத்தனர். கண்டிய அரசியற் குரிய வாணிபக் கப்பல்கள் கண்டிய துறைமுகங்களினூடாக வருகை தந்திருந்த பொழுதிலும், ஒல்லாந்தர் அப்பொருட்களுக்கு மேலதிக சுங்க வரிகளை விதித்து, சில கட்டுப்பாடுகளை மேலதிகமாகத் திணித்தும் வந்தனர். காரணம் கண்டியரசனுக்குரிய தேட்டம் என்ற பெயரில் முஸ்லிம்கள், செட்டிமார், தேவர்குலம் ஆகியோருோ இவ்வாணிபத்தி னுாடாக அதிக ஆதாயத்தை ஈட்டுபவர் என்பதனாலாகும்.
பூரீ விஜய இராஜசிங்கன் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் ஒல்லாந்த் அரசாங்கம் மிகவும் நெருக்கடி மிக்க சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள வேண்டி நேரிட்டது. கண்டியரண்மனையிலிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்க ளாகவேயே ஒல்லாந்து அரசாங்கம் அந்நெருக்கமான நிலைகளுக்கு எதிர்முகம் கொடுக்க முடியாமல் தத்தளித்தது. பட்டேவியாவிலிருந்து அடிக்கடி இலங்கையின் ஆள்பதிக்குவரும் செய்தியானது கண்டி அரசனுடன் எவ்விலை கொடுத்தேனும் அமைதியையும் நட்புறவையும் மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். காட்டுப் பயிராக விளையும் கறுவாப்பட்டையை தொடர்ந்து மானியமாகப் பெற்றுக் கொள்வதற்கும், பிடித்த யானைகளை கண்டி மன்னனுக்குரிய ஆள்புலமான புத்தளப் பரப்பினுாடாக யாழ்ப்பாணப்பட்டினத்திற்குக் கொண்டு செல்வதற்கும் கண்டியரசனுடனான சிநேகயூர்வ உறவுநிலை தொடர்ந்தும் ஒல்லாந் தருக்குத் தேவைப்பட்ட காரணத்தினாலேயே பட்டேவிய அரசு இலங்கையில் ஒல்லாந்த நிர்வாகத்திற்கு அவ்வாறு ஆணைகளை
222

அனுப்பிய வண்ணம் இருந்தது. ஆனால் புதிதாகக் கண்டியில் வருகை தந்து நாயக்க வம்சம் அச்சூழ்நிலையை முழுவதுமாகவே சீர்குலைத்து விட்டிருந்தது.
1741ஆம் ஆண்டிலிருந்து கண்டிய அரசவையிலிருந்து மேலுமொரு புதிய கோரிக்கை ஒல்லாந்தருக்கு விடப்பட்டிருந்தது. அதாவது இத்தீவிற்கு வேண்டிய பெளத்த குருமார்களை (தாய்லாந்து போன்ற) பிறநாடுகளிலிருந்து கப்பலில் பாதுகாப்பாக ஏற்றிக் கொண்டுவர வேண்டும் என்பதாகும். கண்டி நாயக்கர் பெளத்த புனருத்தாரண நடவடிக்கைகளில் பெருமளவிற்கு ஈடுபாடு கொண்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒல்லாந்தருடைய உதவிகளையும் நாடினர். 1698இல் வலிவித்தவில் பிறந்த சரணம்கர தேரர் மிகவும் இளமையான வயதிலேயே பாளிமொழி, மற்றும் பெளத்தமதக் கோட்பாடுகளில் தலைசிறந்த நிபுணத்துவம் பெற்று தத்துவ ஆசிரியராக விளங்கினர். பூரீ விஜய இராஜசிங்கனுடன் சரணம்கர தேரர் கொண்டிருந்த தொடர்பு களின் நிமித்தம், தென் கிழக்காசிய நாடுகளிலிருந்து தலைசிறந்த பெளத்த தத்துவப் பண்டிதர்களை ஏற்றிக்கொண்டுவர வேண்டி யிருந்தது. இப்பின்னணியிலேயே கண்டிய அரண்மனையிலிருந்து ஒல்லாந்த ஆள்பதிக்கு அக்கோரிக்கை விடப்பட்டது. அக்கோரிக்கையை உடனடியாகவே ஒல்லாந்தர் ஏற்றுக்கொண்டு, உதவி புரிய முற்பட்டனர். காரணம் அரசியல், மற்றும் பொருளாதார அடிப்படையில் கண்டி மன்னனைக் கட்டுப்படுத்துவதற்கு இக்கோரிக்கை சிறந்தவொரு கருவி என்பதனாலாகும். ஒருவேளை கண்டியரின் இக்கோரிக்கை முற்று முழுவதுமாக ஒல்லாந்தரால் நிராகரிக்கப்பட்டிருக்கக் கூடுமாயின், திட்டவட்டமாக மற்றாஸிலுள்ள ஆங்கிலேயரிடம் இருந்தோ அல்லது பாண்டிச்சேரியிலுள்ள பிரஞ்சுக்காரரிடம் இருந்தோ கண்டி மன்னன் அக்கோரிக்கையை நிறைவு செய்திருப்பான், அவ்வாறான ஒரு சம்பவம் நிகழுமாயின் இலங்கையில் ஒல்லாந்தருடைய இறைமைக்கு ஆபத்து நேரிடும் என்பதனை பட்டேவிய அரசாங்கம் நன்குணர்ந்திருந்தது. 1741இல் கண்டி மன்னன் ஒல்லாந்தரிடமிருந்து அவ்வுதவியைப் பெற்றுக் கொண்டிருந்தான். தோரணகம றால என்பவனும், மாதொட்ட றால என்பவனுமே தலைமை தாங்கி பெகு (Pegu) நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். அந்நாட்டிற்குச் சென்றதன்
ஆவணங்களும் இலங்கையில் கிடைக்காமையாலும், மேலும் பெளத்த சங்கத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு வேண்டிய பிக்குமார்கள் தேவைப்பட்டமையாலும் ஒல்லாந்தருடைய உதவியுடன் கண்டியரசன்
223

Page 115
இப்புனித பயணத்துக்கு ஒழுங்குகள் செய்திருந்தான். ஆனால் ஒல்லாந்தருடைய உல்லாசப் பயணக்கப்பலான கொன்ஸ்ரான்ரினா பெருநாட்டின் கடற்கரையை அண்மித்திருந்த போதும், அதில் பயணம் செய்தவர்களுள் ஒருவர் மட்டுமே எஞ்சியிருந்தார். டொறனாகம றாலா மட்டுமே உயிருடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பிவந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
1745ஆம் ஆண்டில் மீண்டும் பட்டேவிய அரசாங்கத்தினால் இலங்கையில் ஒல்லாந்த ஆள்பதிக்கு எவ்வகையிலேனும், என்ன விலைகொடுத்தேனும் கண்டி மன்னனுடனான அமைதியான - சிநேக பூர்வமான உறவினை பராமரிக்க வேண்டும் என கண்டிப்பான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நாயக்க வம்ச அரசியலில் கண்டிய மக்கள் தமக்கு சுதந்திரமானதும், ஏதேச்சாதிகாரமானதுமான தமது வாணிப நடவடிக்கைகளை கடற்கரையோரத் துறைமுகங்கள் ஊடாக மேற்கொள்ளும் வரைக்கும் ஒல்லாந்தருடனான சமாதான உறவுநிலைக்குத் தயாரில்லை என்பதனை வெளிக்காட்டி விட்டனர். இதன் பிற்பாடு பட்டேவிய ஆள்பதி - நாயகத்திற்கு இலங்கைத்தீவின் ஆள்பதிக்கும் இடையே நிறைய கடிதப் பரிமாற்றங்கள் இக்கண்டியரசு தொடர்பாகவே பரிமாறப்பட்டன. இலங்கையின் ஆள்பதியான வான் கொல்லின்ஸ் கண்டியரசன் விடுத்த எல்லாக் கோரிக்கைகளையும் செவிமடுத்தான். ஆனால் பெளத்த குருமாரை இலங்கைக்கு ஏற்றிக்கொண்டு வரும் விடயத்தில் கண்டி மன்னனது கோரிக்கையை ஏற்பதற்கு மறுத்து விட்டான். ஆனால் கண்டிய மக்கள் இக்கட்டத்தில் ஒல்லாந்தர் மீது நெருக்குதல் கொடுப்பதற்கு இதுவே ஏற்ற தருணமும் கருவியும், விடயமுமாகும் எனக்கருதி, பெளத்தகுருமாரை தென்கிழக்காசிய நாடுகளில் இருந்தும் ஏற்றிக்கொண்டு வருவதற்கான கோரிக்கையை அடிக்கடி முன்வைத்தனர். இந்நிலையில் பெகு நாட்டிற்கும் அரக்கன் நாட்டிற்குமிடையே தென்கிழக்காசியாவில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தமையைக் காரணம் காட்டி போர் ஒய்ந்ததும் கண்டியரின் கோரிக்கைக்குச் சாதகமான முடிவு எடுக்கப்படும் எனஒல்லாந்து நிர்வாகம் பதில் கொடுத்திருந்தது. கி.பி. 1747இல் அச்சாதகமான முடிவிற்குரிய நடவடிக்கையை ஒல்லாந்தர் மேற்கொண்டனர். காலித் துறைமுகத்தில் இருந்து பட்டேவியா நோக்கிய கப்பற்பயணம் ஆரம்பித்தது. முன்பு பெகுநாட்டிற்குச் சென்று திரும்பிய டொறனாகம றால என்பவனுடன் மீதெனியறால, வில்பாகெடரறால ஆகியோர் இணைந்து அப்புனிதப் பயணத்தை ஒல்லாந்தரின் தலைமைக் காரியாலயமான பட்டேவியா ஊடாக மேற்கொண்டனர். 18ஆம் திகதி செப்ரம்பர் மாதம் 1747ஆம் ஆண்டு அக்குழு பட்டேவியாவைச் சென்றடைந்துவிட்டிருந்தமையை
224

பட்டேவிய நிர்வாக மையத்தின் தளபதிநாயகம் இலங்கைக்கு அறிவித் திருந்தார். பட்டேவியாவில் கண்டியர் குழுமிகுந்த கெளரவத்துடன் விருந்தினராக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து எட்டுநாட்களின் பின் சீயம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் டொறனகம றாலா கடும் சுகவீனமுற்ற நிலையில் பட்டேவியாவில் இறக்கநேரிட்டது. சீயத்தைச் சென்றடைந்த மிகுதி அங்கத்தவர்கள் சீய மன்னனுக்கு கண்டி மன்னனின் செய்தியையும், கோரிக்கையையும் தெரிவித்திருந்தபோதிலும், சீய மன்னன் 11ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1747ஆம் ஆண்டு திடீரென இறந்துவிட்டான். அடுத்துவந்த புதிய மன்னன் சீயத்திலிருந்து பெளத்த குருமாரைக் கண்டிக்குக் கொண்டு செல்வதற்கு அனுமதி கொடுக்கவில்லை, காரணம் அச்சமயத்தில் கண்டியில் ஆட்சிசெய்த மன்னன் பிறப்பால் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவனல்லன் என்பதனை சீயத்து மன்னன் நன்கு தெரிந்து வைத்திருந்தமையினாலாகும். இதனால் காலியிலிருந்து புறப்பட்டுச் சென்ற அப்புனித யாத்திரைக்குழுவின் நோக்கம் தோல்வியில் முடிவடைந்திருந்த போதும், எதிர்காலத்தில் இதே போன்ற இன்னொரு புனிதப்பயணத்தை மேற்கொள்ளும் நோக்குடன் அச்சமயத்துதுக்குழு கண்டியை வந்தடைந்தது. பூரீவிஜய இராஜசிங்கனுக்கு சீயம் மன்னனின் வாழ்த்துக்களையும் நல்லெண்ணக் கருத்துக்களையும் ஒல்லாந்தர் சார்பில் வில்பாதேத்திரா என்பவன் தெரிவித்திருந்தான். இதன்பின்னர் மிகவும் கருணையுடன் இப்புனிதப் பயணத்திற்கு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கியதன் காரணத்தினால் ஒல்லாந்தருக்குக் கண்டி மன்னன் கறுவாப் பட்டையுரிக்கவும், புத்தளத்தினூடாக யாழ்ப்பாணப்பட்டினத்திற்கு யானைகளைக் கொண்டு செல்லவும் வேண்டிய சலுகைகளை வழங்கினான். கண்டி மன்னனுக்குரிய 13 கிராமங்களை (வன்னியர் அத்துமீறிக் குடியேறியிருந்த கிராமங்களை) ஒல்லாந்தர் தமது ஆதிபத்தியத்திற்குள் மீண்டும் கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் அப்புனிதப்பயண ஏற்பாடுகளின் விளைவாகக் கிட்டியது. இக்காலகட்டங்களில் ஒல்லாந்தரால் கறுவாப் பட்டையுரிப்பதற்காக யாவா, மலே போன்ற நாடுகளிலிருந்து அடிமை களாகப் பிடித்துவரப்பட்ட தொழிலாளர்கள் ஒல்லாந்தரது கறுவாப் பட்டையுரிக்கும் புலங்களிலிருந்து இடம்பெயர்ந்து கண்டியரசனின் ஆட்சிப்புலங்களுக்குள் சென்று ஊடுருவியதனால், கண்டி மன்னன் அவர்களைப் பிடித்து சிறைகளில் அடைத்து வைத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உருவாகின. இந்நிலையானது கண்டியின் சமூகவியல் வரலாற்றில் மேலும் பல மாற்றங்களைக் கொணர்ந்தது.
கீர்த்தி பூரீ இராஜசிங்கனும் ஒல்லாந்தரும் (1747 - 1782) :
பூரீ விஜய இராஜசிங்கனின் இறப்புடன் அவனது பட்டத்து இராணியின் சகோதரன் கீர்த்தி பூரீ இராஜசிங்கன் என்ற பெயருடன் 225

Page 116
ஆகஸ்ட் மாதம் 1747இல் கண்டிய சிம்மாசனமேறினான். அப்போது மன்னனுக்கு வயது 14 ஆகும். அதனால் ஜனவரி மாதம், 31ஆம் நாள், 1750 ஆண்டு வரைக்கும் கண்டிய மன்னனுக்குரிய உடைவாளை அவன் தரித்திருக்க அனுமதிக்கப்படவில்லை. ஒரு பொம்மை அரசனாகவே அக்காலம் வரைக்கும் அவன் சிம்மாசனத்தில் இருக்க வேண்டியதாயிற்று. எவ்வாறெனினும், குழந்தைப்பருவத்திலிருந்து கண்டியரண்மனைச் சூழலில் வளர்ந்தமையால், கீர்த்தி பூgஇராஜசிங்கன் தனது இளமைக்காலக் கல்வியை ஒரு பெளத்த பிக்குவிடம் கற்கக்கூடிய வாய்ப்பும், சூழலும் ஏற்பட்டது. அச்சூழல் பெளத்தமரபின் செழிப்பினை அவனுக்கு ஊட்டியது. கண்டிநாயக்கர் வம்ச வரலாற்றில் கீர்த்தி பூணூரீஇராஜசிங்கனுக் குரிய மக்கள் ஆதரவும், சிறப்பும் கிடைத்தற்குரிய சூழலை அவன் பெற்ற பெளத்தக் கல்வி மரபே அவனுக்கு வழங்கியது என்றால் அது மிகையாகாது.
தொடக்ககால கண்டிய ஆட்சியப் பொறுப்புத் தொடர்பாக எமக்குச் சமகால கத்தோலிக்க மத ஆவணங்கள் சுவையான பல தகவல்களைத் தந்துள்ளன. இம்மன்னன் மிகவும் வயதில் சிறியவனாக இருந்தமையால் அவனுடைய தந்தையான நாரேனப்ப நாயக்கர் கண்டியரசில் ஆட்சிப் பாரத்தினைத் தாங்கி, மிகவும் திறம்பட அரசியல் முகாமைத்துவத்தினை முன்னெடுத்துச் சென்ற வரலாற்றை கத்தோலிக்க மத ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கண்டி அரண் மனையில் பிரபுக்களாதிக்கம் மிகக்கூடிக் காணப்பட்டதன் பின்னணியில் கீர்த்தி பூரீ க்கு உதவியாக விளங்கிய நாரேனப்ப நாயக்கர் மேலுமொரு தமது உறவினராக நாயக்கர் ஒருவருடைய துணையையும் பெற்றே பிரபுக்களது ஆதிக்கத்தை தமது அரசியல் முகாமைத்துவத்தில் இருந்து ஒதுக்கமுடிந்தது. கீர்த்தி பூgஇராஜசிங்கனுக்கு இவ்விருவரும் தொடக்க கால ஆட்சியியலில் உதவியிருக்காவிடில் கண்டி இராச்சியத்தில் அவன் பல நெருக்கடிகளை தனது இளமைக்காலத்தில் எதிர்நோக்க வேண்டி நேரிட்டிருக்கும்.’
கீர்த்தி பூரீ இராஜசிங்கன் ஆட்சிக்கு வரும் வரைக்கும் கத்தோலிக்க மிஷனறிமார் கண்டி இராச்சியத்திற்குள் தமது மதப்பரப்பலை செய்ய முடியாது தடுக்கப்பட்டிருந்தன்ர். இதனால் அவர்கள் வன்னிப்பரப்பிற்கு வந்து சிறிது காலம் தங்கியிருந்தவாறு தமது பணியைத் தொடர்ந்தனர். மீண்டும் 1747க்குப் பின்னரே அவர்களால் கண்டிக்குச் சென்று தமது பணியைத் தொடரமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பூரீ யினுடைய தந்தையாருடனும், பெரிய பேரனாருடனும் மிகவும் நெருக்கமாக மிஷனரிமார்கள் தொடர்புகளை வைத்திருந்தமையும் இங்கு
226

குறிப்பிடத்தக்கது. 1747க்கும் 1748 ஏப்ரல் மாதம் வரைக்கும் கண்டி இராசதானியில் அதன் எல்லையோரமாக மிஷனரிமாரின் நடவடிக்கை களை மன்னன் அனுமதித்திருந்தான். ஆனால் அதன் பின்னர் Frமத்தயாஸ் ரொட்றிகோஸ், Fr. அலெக்ஸாண்டர் மானுவல் ஆகியோருடைய கண்டிய வருகையுடன் நாரேனப்பநாயக்கருடைய ஆளுமையும், செல்வாக்கும் கிறிஸ்தவ உலகிற்கு வெளிப்படலாயிற்று. ஏனெனில் கிறிஸ்தவ மிஷனறியின் பரிசில் பொருட்களிலும் கையூட்டுக் களிலும் ஆர்வம் மீதுரப் பெற்ற நிலையில் நாரேனப்பநாயக்கரும் மற்றும் அரசமுகாமைத்துவ நிர்வாகிகளும் கத்தோலிக்க மிஷனறி மாரை கண்டி நகருக்குள் அனுமதிப்பதற்கு ஆதரவினை வழங்கி யமையாலாகும். இப்பின்னணியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று நகரினுள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி பூனி இராஜசிங்கன் அரசெய்திய காலத்தில் கண்டியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த பிரதானிகளுள் முதலாம் அதிகார் ஆக விளங்கிய அஹலப் பொல, இரண்டாம் அதிகார் ஆக விளங்கிய சமணக்கொடி மற்றும் மாம்பிட்டிய ஆகிய மூவரும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மக்கள் மத்தியில் விளக்கியிருந்தனர். சபரஹமுவதிசாவையாக விளங்கிய மாம்பிட்டிய கண்டியின் முடியாட்சி முறையில் பங்கெடுத்திருந்த நீண்ட அனுபவம் மிக்க ஒர் அதிகாரி ஆவான். நாரேனப்பநாயக்கரும் அவரது உதவியாளரும் இணைந்து மாம்பிட்டியவின் அரசியல் வலுவையும், மக்கள் மீதிருந்த செல்வாக்கையும் வெகுவாகக் குறைத்துவிட்டிருந்தனர். கீர்த்தி பூரீ இராஜசிங்கன் மாம்பிட்டியவை சபரஹமுவ திசாவைப் பதவியினின்றும் நீக்கிவிட்டிருந்தான். அஹலப்பொல இரண்டாவது அதிகார் ஆக விளங்கிய சமணக்கொடிக்கு பரமவிரோதியாவான் எவ்வாறெனினும் இவ்விரு அதிகார்களுக்குமிடையே அதிகாரப் போட்டியும், அரசியல் முகாமையைதம் கையகப்படுத்தும் நோக்கும் எதிர் பார்ப்பாக இருந்தமையால் நாரேனப்பநாயக்கர் அவ்விருவருடைய அதிகாரத்தையும் செல்வாக்கையும் 1749ஆம் ஆண்டில் புதுவருடப் பிறப்பன்று பறித்தெடுத்துவிட்டிருந்தார். அஹலப்பொல, நாரேனப்ப நாயக்கரின் அடக்குமுறைக்கெதிராக புதுவருடப் பிறப்பு விழாவின் போது ஏனைய திசாவைகளின் தலைமைத்துவப் பின்னணியில் ஒரு பெருங் கிளர்ச்சியையே அரண்மனைக்குள் உருவாக்கி விட்டிருந்தான். அரண்மனைக்குள்ளே நிகழ்ந்த இக்கிளர்ச்சியை மன்னனும் நாரேனப்ப நாயக்கரும் மிகவும் சாதுரியமாக கையாண்டு அஹலப்பொலவின் அதிகாரங்கள், உடமைகள், பதவிகள் யாவற்றையும் பறித்தெடுத்து
22ア

Page 117
விட்டிருந்தனர். அக்கிளர்ச்சியும் அதிகாரப்பலம் கொண்டு அடக்கப் பட்டது. கீர்த்தி பூரீ இராஜசிங்கனது தொடக்ககால அரசியல் வாழ்வில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவம் இதுவாகும்.
மறுவளத்தில் கண்டியில் நாயக்கரது அரசியல் செல்வாக்கினை உடைப் பதற்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒல்லாந்தருக்கு மாம்பிட்டியவின் துணை கிடைத்தமை ஒரு பெரும் வாய்ப்பினை கண்டியினுள் பிரவேசிப்பதற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் ஒல்லாந்தர் கண்டியப் பிரதானிகள் பலருக்கு கையூட்டுக் கொடுத்து தமது பக்கம் அவர்களை கவர்ந்திருந்த பொழுதிலும், அவர்கள் தமது அரசனுக்கெதிரான நடவடிக்கைகளை ஒல்லாந்தரோடு பகிர்வதற்குத் தயாராக இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது மாம்பிட்டியவின் பதவிப்பறிப்புடன் ஒல்லாந்தர் எதிர்பார்த்த அச்சந்தர்ப்பம் கைகூடிவந்தது எனலாம்.
சப்பிரஹமுவவில் மாம்பிட்டியவின் அரசபதவி மீண்டும் ஒல்லாந்தரால் மீட்டெடுத்துக் கொடுக்கப்பட்டபோதும், கண்டி மன்னன் மீது ஒல்லாந்தர் எவ்விதமான அழுத்தங்களையும் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் கண்டிமீது ஒல்லாந்தருக்கான ஆதரவுடன் ஊடுருவக்கூடிய சூழ்நிலை இருந்தும் ஒல்லாந்தர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு விரும்ப வில்லை. ஆனால் தாம் நாயக்க வம்சத்தினை எதிர்ப்பதனை கண்டிய சிங்கள மக்களும், சிங்களப் பிரதானிகளும் ஆட்சேபிக்காமல் இருப்பதற் காக அவர்களுக்குப் போதியளவிற்கு கையூட்டுக்களையும், பரிசில்களையும் வழங்கி வந்தனர்.
"கீர்த்தி பூரீஇராஜசிங்கன் தனது தந்தை ஒல்லாந்தருடன் எவ்வித உறவு பூண்டிருந்தானோ அவ்விதமே தானும் நடந்து கொண்டான். தன் முன்னோர் காலத்தில் ஒல்லாந்தர் காட்டிய நேச பாவத்தை அவர்களது பலவீனமென விளங்கிக் கொண்டான்.” இருந்தும் பொருத்தமான சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில், ஒல்லாந்தருக்கெதிரான சக்தியுடைய தரப்பினருடன் தொடர்பினை ஏற்படுத்தி இலங்கையினின்றும் அவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் திடம் கொண்டிருந்தான். இந்நிலையில் 1751ம் ஆண்டு கொழும்பிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது லியூக் (Leuke) என்ற திசாவை இறந்தான். இவனது கருமகாலத்தில் (1740 - 1751) ஒல்லாந்த வர்த்தக சங்கத்தினருடனான நல்லுறவு பேணப்பட்டிருந்த வரலாற்றுச் செய்தியை சிங்கள, டச்சு ஆவணங்கள் மிகத்தெளிவாகத் தருகின்றன போல் E. பீரிஸ், E. ரெய்மேர்ஸ் போன்ற வரலாற்றாசிரியர்கள் லியூக்கினை ஒல்லாந்தரது ஆதரவாளன் என்றே விபரிப்பதனைக்
228

காண்கின்றோம். ஆனால் ஒல்லாந்தர் கண்டியரனுடனான சிநேகயூர்வ மனப்பான்மையை தொடர்ந்து வைத்திருப்பதற்கு லியூக்கினையே தொடர்பூடகமாகப் பயன்படுத்தியிருந்தனர் என்பதே உண்மை யாகும்.
லியூக்கினது மறைவிற்குப் பின் ஒல்லாந்தர் மூன்று கோறளை, நான்கு கோறளை ஆகியனவற்றின் திசாவையானதும்பற றால ஹாமியையும் (அவனது படைவீரர்களையும்) கண்டியுடனான தொடர்பூடகமாகப் பயன்படுத்தியிருந்தனர். நரேந்திர சிங்கன் காலத்திலிருந்து தும்பற றாலஹாமி மிகவும் பிரசித்தம் வாய்ந்தவனாக விளங்கி வந்துள்ளான். 1721இல் நுவரகாலியப் பகுதிக்கும் 1732இல் நான்கு கோறளைக்கும் திசாவைப் பொறுப்பினை அவன் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பூரீ இராஜசிங்கனது ஆட்சிக்காலத்தில் மீண்டும் திசாவையாக நியமனம் செய்யப்பட்ட பின்னர் மறைந்த லியூக் ஆற்றிய பணியை வெகுகச்சிதமாக இவனும் ஆற்றியிருந்தான். கண்டி மன்னனுடனான வர்த்தக சங்கத்தின் கடிதப் பரிமாற்றம் தவிர்ந்த ஏனைய தொடர்புகள் எல்லாவற்றிற்கும்தும்பற பொறுப்பு வகித்திருந்தான். ஒல்லாந்தருடைய வர்த்தகக் கொம்பனிக்கும் கீர்த்தி பூரீ இராஜசிங்கனுக்குமிடையிலான கடிதத் தொடர்புகளை கொழும்புத் திசாவையாகப் பணியாற்றியிருந்த டச்சு அதிகாரி தனது மகாமுதலியார் ஊடாகவே மேற்கொண்டி ருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கி.பி 1760ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஒல்லாந்தரின் முகாமைத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் எழ ஆரம்பித்திருந்தன. நவீன கால இலங்கையின் வரலாற்றில் கி.பி. 1760ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழத்தொடங்கிய ஒரு காலப்பகுதியாக அமைந்தது எனலாம். கீர்த்திபூரீஇராஜசிங்கனின் முகாமைத்துவத்தின் கீழ் கண்டிச்சிங்களமக்கள் நாயக்க வம்சத்துடன் இணைந்து ஒல்லாந்தருக்கெதிரான நடவடிக்கை களில் நேரிடையாக ஈடுபட்டமையைக் காண்கின்றோம். இதே போன்று கடற்கரையோர ஆள்புலங்களிலிருந்தும் (ஒட்டு மொத்தமாக) ஒல்லாந்தரை வெளியேற்றிவிடக் கூடிய கிளர்ச்சிகளும் ஆரம்பித்திருந்தன. இவையாவுமே இலங்கைக்கு வெளியேயிருந்து வந்து இல்ங்கைக்குள் ஊடுருவியிருந்த புதிய சக்தியின் வெளிப்பாடாக அமைந்தது என்பதே வெள்ளிடைமலை, பிரித்தானிய சாம்ராச்சியத்தின் கீழைத்தேயம் மீதான குடியேற்றவாதக் கொள்கைகளின் விளைவாக ஏற்கனவே மற்றாஸில் அவர்களது பிரதான அலுவலகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது என்பதனை ஏற்கனவே பார்த்தோம். அதன் விளைவுகளை இலங்கைத்தீவு கி.பி. 1760க்குப் பின்னர் சிறிது சிறிதாக வெளிக்காட்டவாரம்பித்திருந்த
229

Page 118
காலப்பகுதியும் இதுவேயாகும். இத்தகைய தொடர்ச்சியான சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகள் இலங்கையில் இருந்து ஒல்லாந்தரை வெளியேற்றி வைப்பதற்கான முனைப்பினை வேகம் கொள்ளச் செய்தன என்பதில் வியப்பேதும் இருக்கமுடியாது. இத்தகைய ஒரு சூழல் நாயக்கவம்சத்தினர் இதுவரையில் தமது கொள்கை காரணமாக ஒல்லாந்தருடன் நேருக்கு நேர் போர் நடவடிக்கைகளில் தம்மை இணைக்காது ஒதுங்கியிருந்து வந்த சூழ்நிலையை மாற்றி அமைக்கவும் தூண்டியது. அத்தோடு ஒல்லாந்தர் இதுவரையில் இடை நிலைப்பட்ட ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்து வந்த அடம்பிடித்து அடாத்தாகவும், கெஞ்சி - மன்றாட்டமாக, சுயகெளரவம் அற்ற முறையிலும் கண்டியரோடு கொண்டிருந்த உறவுநிலையை நாயக்க வம்சம் ஒரு புதிய சூழ்நிலையின் (ஆங்கிலேயரின்) வருகையுடன் உதாசீனம் செய்து விட்டிருந்தனர். இந்நிலை டச்சு ஆள்பதியான இமோவ்வை பெரிதும் ஆத்திரமூட்டச் செய்தது. இதனால் இமோவ் ஏற்கனவே ஸ்குரூடரினால் உருவாக்கப்பட்டிருந்தநிலக்கொள்கையை கண்டிப்பாக அமுல் நடாத்தத்தலைப்பட்டான். என்ன நிலவரி என்று பெயரிடப்படாத ஒன்றுக்காக ஒல்லாந்தரின் ஆள்புலத்திற்குள் அகப்பட்ட, பயிர்ச் செய்கைக்குட்பட்ட நிலங்களிலிருந்து (வரி செலுத்தப்படாத) ஒரு பெரும் தொகையை விவசாயிகளிடமிருந்து அறவிடுவதற்குரிய ஆணையை இமோவ் பிறப்பித்தான். அதன் விளைவு ஒல்லாந்தரின் நிலக்கொள்கை, வரிக்கொள்கை ஆகியனவற்றுக்கெதிரான கிளர்ச்சிகள் பல திசாவாணி களிலிருந்தும் கிளம்பலாயின. 1.டச்சுக்காரரின் காணி சம்பந்தப்பட்ட கொள்கைகள் தலைவர்களுக்கும் பொதுசனங்களுக்கும் அதிருப்தியை உண்டாக்கின. அது காரணமாகவே அக்கிளர்ச்சிகள் ஏற்பட்டன. சுமார் 1740ஆம் ஆண்டளவில் டச்சுக்காரர் கொழும்பு, காலி, மாத்தறைப் பிரிவு களிலுள்ள வயல், தோட்டங்கள் முதலியவற்றின் தோம்பு (உறுதி)களை எழுதினார்கள். அவைகளை எழுதிமுடித்த பின்னர் வரியைக் கிராம அதிகாரிகள் மூலம் பெறாமல் தாமே நேரடியாகச் சனங்களிடமிருந்து திரட்டினார்கள். சிங்கள, போர்த்துக்கீச அர்சாட்சிக்காலங்களில் வரிவசூல் செய்வது தலைமைக்காரர் மூலமே நடந்துவந்தது. இவ்விதமாறுபாட்டால் கிளர்ச்சியேற்பட்டது.
1760ஆம் ஆண்டு சிங்கள விவசாயிகளின் கலகத்திற்கு மேலும் பல காரணிகள்தூண்டுதலளித்திருந்தன. ஒல்லாந்தர் பொறுமையை இழந்த நிலையில் கண்டியரசனுடனான தொடர்புகளில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்திய கையோடு, "வேறு பல வழிகளாலும் அவர்கள் அரசிறை வருமானத்தைப் பெருக்க முயற்சித்தனர். செய்த சேவைக்காக நிலங்களைப்
20

பெற்றவர்களிடம் பூரணமாக வேலை வாங்கத் தெண்டித்தனர். உரித்தாளரில்லாத போது வர்த்தக சங்கத்திற்கு (கொம்பனிக்கு) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய காணிகட்கெல்லாம் படிப்பணம் கேட்டனர். ஒருவருக்கும் ஒதுக்கப்படாத பாகங்களை எல்லாம் அவர்கள் சங்கத்துக்குச் சேர்த்துக் கொண்டனர். உரித்தின்றி ஒருவரும் நிலங்களில் குடியிராத படிக்கு கவனித்தும் வந்தனர். தென்னைவரி போன்ற வழக்கிறந்த பல வரிகளையும் விதித்தனர். அரசனிடமிருந்து பெறும் கறுவாவை எப்போதும் காத்திராபடிக்கு, தாமே கறுவாவைப் பயிரிட எண்ணினர். இவ்வெண்ணங் காரணமாய் (வர்த்தக) சங்கத்தின் அனுமதியின்றி (சிங்கள விவசாயிகள்) சேனைக் காடுகளை எரித்தலையும், புதிய தோட்டங்களை உண்டாக்கு
வதனையும் தடுத்தனர்.
“இவ்வித திட்டங்களே ஒல்லாந்தர் மேல் பொதுசன வெறுப்பை உண்டாக்கின. மாத்தளைப் பகுதியிலே ஒரு கிராமத்தில் சுதேசப் போர் வீரரிடையே ஆரம்பித்த குழப்பமானது, ஒரு பெரிய கலகத்துக்கிடமாகி, விரைவில் எங்கும் பரவி, வர்த்தக சங்கத்திற்கு (கொம்பனிக்கு) பேரழிவினைக் கொண்டு வந்தது. உதாரணமாக, காலிப்பகுதியில் கலகம் தொடங்கிய இரண்டு மாதங்களில் ஒரு சிங்கள வேலைக்காரனாவது (கொம்பனிக்குள்) வேலையிலிருக்கவில்லை. மத்திய மலைப் பிரதேசங் களிலும், கரையோரப் பரப்புக்களிலும் நாடளாவிய ரீதியில் அழிவுகள் தொடர்ந்தன. கலகக்காரர்கள், பாடசாலைகள், அரசாங்கக் கட்டிடங்கள் என்றும் பாராது எல்லாச் சொத்துக்களுக்குமே தீயிட்டனர். காலியில் அமைந்திருந்த லான்ட்றாட் என்றழைக்கப்பட்ட தோம்புதோர் அலுவலகத்திற்கும் தீயிட்டனர். கறுவாப்பட்டையுரிக்கும் காடுகளுக்குத் தீயிட்டனர். கண்டி மன்னன் வெளிப்பட்டு இக்கலகக்காரக்கும்பல்களின் முன்னே தன்னை பிரதிநிதித்துவப்படுத்தியதனைத் தொடர்ந்து கண்டியப் போர்வீரர்கள் கலகக்காரர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர். கண்டியரசின் இராணுவப் பிரிவு ஒன்றிற்கு பிலிக்குப்பண றால என்பவனின் தலைமைத்துவமும், மற்றொன்றிற்கு தும்ஹ றாலாவின் தலைமைத்துவமும் கிடைத்தது. இவ்விரு படைகளும் இருவேறுட பாதைகளுடாகச் சென்று ஹன்வல என்ற ஒல்லாந்தருடைய இராணுவத் தளத்தைக் கைப்பற்றின. அவ்வாறே தொடர்ந்து சென்று ஹக்மன விற்கும், பின்னர் அங்கிருந்து தங்காலைக்கும் அப்படைகள் முன்னேறிச் சென்றன. தங்காலையிலிருந்து ஒல்லாந்தரது இராணுவம் மாத்தறைக்குப் பின்வாங்கிச் சென்றன. தங்காலைக்கும் மாத்தறைக்கு மிடையில் மிகக் கொடிய போர் நடைபெற்றது. இதனால் இரு பக்கங்களிலும் பாரிய இழப்புக்களும், உயிரழிவுகளும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
231

Page 119
மாத்தறையிலிருந்த ஒல்லாந்துத் திசாவை வீம்புறுாகென் கைது செய்யப்பட்டு, அவனுடைய ஆட்களுடன் கொண்டு செல்லப்பட்டான். இதன் பின்னர் கண்டியப் படைகள் கடுவான் என்ற மையத்தைக் கைப்பற்றின. ஒல்லாந்துத் தளபதி சாம்லன்ட் (Samlant) சரணடையுமாறு கோரப்பட்டு, அவனுக்குப் பின்னர் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இப்பொழுது மாத்தறை முழுமையாக கண்டியரசின் கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்டமை ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. கண்டியரசன் அந்த இரு படைப்பிரிவுகளுக்கும் தலைமை தாங்கிய தளபதிகளை பாராட்டி, உபசரித்து, அவர்களுக்கு பல மானியக் கொடைகளையும் வழங்கினான்.
இப்பின்னணியில் கண்டியின் அரச இராணுவத்திற்கு இவ்வெற்றி யானது ஒர் உந்துசக்தியை ஈட்டிக் கொடுத்தாலும், அது ஒரு மாபெரும் முயற்சியின் விளைவாகவே ஈட்டப்பட்டது என்பதனை கண்டி மன்னன் உணரத் தவறவில்லை. இந்நிலையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியிடம் தமக்கு வேண்டிய படையுதவியைப் பெற்றுக் கொள்வது எனக் கண்டியரசன் தீர்மானம் எடுத்திருந்தான். இதன் விளைவாக 1762ஆம் ஆண்டில் கண்டிக்கு பைபஸ் குழு (Pybus misrion) அனுப்பிவைக்கப்பட்டது, ஆனால் அக்குழுவினரின் பயணம் தோல்வியில் முடிவடைந்தது. தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தன. ஆனால் கண்டிய மன்னனைப் பொறுத்தவரையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தினூடாக இலங்கையினின்றும் ஒல்லாந்தரை வெளியேற்றி விடுவது என்பதாகும். அதற்காக, பைபஸ் குழுவினருக்கு கண்டியரசன் தயாராய் இருந்தான். ஆனால் பைபஸ் குழுவினர் மன்னனது கோரிக்கையை நடைமுறைப் படுத்துவதற்கு பின்னடித்ததன் காரணமாக கண்டிமன்னனது முயற்சி தோல்வியில் முடிவுற்றது. இதனைப் பயன்படுத்தி ஒல்லாந்தப் படைத் தளபதியும், ஆள்பதியும் கண்டியரசனைப் பழிவாங்குவதற்கு ஆயத்தமாகினர். 1765ஆம் ஆண்டு வான் எக் ஒரு பெரும் படையை கண்டி இராச்சியம் நோக்கி அனுப்பி வைப்பதுடன் ஒல்லாந்தரது இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1765ஆம் ஆண்டு பரோன் வான் எக் (Baran Van Eck) கண்டியை நோக்கித் தனது படை நடத்தலை மேற்கொண்டான். "வான் எக் கண்டிக்குள் வந்தான், கண்டியைப் பார்த்தான், கண்டியை வெற்றி கொண்டான் அதன்பின் மரணித்தான்” என சிங்கள மக்கள் மத்தியில் ஒரு சுலோகம் உண்டு. தொடக்கத்தில் ஒல்லாந்தரது கண்டி மீதான வெற்றி யினால் பட்டேவிய அரசாங்கமும் மிகுந்த வெற்றிக்களிப்பெய்தி இருந்தது. கண்டி மன்னன் வெற்றி கொள்ளப்பட்டவன் போல் தோற்றமளித்தான்.
232

கண்டி நகரை ஒல்லாந்தரின் அழிவிலிருந்து காப்பாற்றுவதன் பொருட்டு ஒர் உடன்பாட்டுக்கு வருவதற்கு தயாராய் கண்டி மன்னன் காணப் பட்டான். அதன் பொருட்டு மூன்று கோறளை, நான்கு கோறளை, ஏழு கோறளை, சபிரஹமூவ மற்றும் கடற்கரையோர நிலம் முழுவதளையும் ஒல்லாந்தருக்கு கையளித்துவிடுவதாகவும் வாக்களித்தான். ஆனால் ஒல்லாந்தர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. பதிலாக மன்னனையே கைதியாக்கிக் கொண்டு, கொழும்பு திரும்புவதற்கு பிரயத்தனம் செய்தனர், அல்லது முற்று முழுவதுமாக கண்டி மன்னன் ஒல்லாந்தரின் மேலாணையை ஏற்ற வண்ணம் ஒரு திறையரசனாக ஆட்சி செய்ய வேண்டும் எனப் பணித்தனர். இச்சந்தர்ப்பத்தில் பட்டேவிய அரசாங்கம், கடந்த கால கண்டி இராச்சியத்தின் துன்புறுத்தல்கள் ஒல்லாந்தர் மீது திணிக்கப்பட்டமைக்காக, இராணுவ அடிப்படையிலான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு ஆள்பதிக்குப் பணித்தது. அதே நேரத்தில் கண்டியரசனோ ஒல்லாந்தருடன் எவ்விதமான உடன்பாட்டிற்கோ அல்லது அடி பணியவோ முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டிருந்தான். ஒல்லாந்தர் கண்டி மீது தமது பழிவாங்கல் நடவடிக்கையை ஆரம்பித்து விட்டிருந்தனர். அதே நேரத்தில் ஒல்லாந்தர் படையணிகள் கரையோரத்திலிருந்து வந்த தொடர்புகள், உதவிகள், உணவுத் தொடர்கள், செய்தித் தொடர்புகள் யாவற்றையும் இழந்து திணறிக் கொண்டிருந்த நிலையில் கண்டியிலிருந்து பின்வாங்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். பரோன் வான் எக் தனது படைகளுடன் கொழும்பு திரும்பியவுடன், காட்டுச் சுரம் பிடித்ததால்
உடனே மரணமடைந்தான்.
கண்டி மன்னன் ஒல்லாந்தருக்கேற்பட்ட இப்பின்னடைவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சி செய்யவில்லை. காரணம் கண்டி இராசதானியில் நீண்டகாலமாக ஒல்லாந்தருக்கும் கண்டியருக்குமிடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தமையால் பெரிய பஞ்ச நிலை அங்கு தோற்றம் பெற்றிருந்தமையாகும். இதற்கும் மேலாக ஒல்லாந்தரது கண்டி மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளால் கண்டி நகரின் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்கும் மேலாக ஒல்லாந்தரின் கைகளிலேயே கடற்கரையோர வளங்கள் யாவும் தங்கியிருந்தது. கண்டியரசன் தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாயின் அது ஒல்லாந்தரின் கருணை நடவடிக்கைகளிலேயே தங்கியிருந்தது. இதனால் கண்டி இராச்சியத்தில் பஞ்சநிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய பின்னணியில் 1766ஆம் ஆண்டு ஒல்லாந்தருடன் ஒர் ஒப்பந்தத்தினைச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டான். இவ்வொப்பந்தப்படி கண்டி மன்னன்
233

Page 120
கொம்பனியாரின் ஆட்சியதிகாரயுரித்துக்களைப் பின்வரும் திசவாணிகளில் ஏற்றிருந்தான். அவையாவன மாத்தறை, காலி, கொழும்பு, யாழ்ப்பாணம், கல்பிட்டி, மன்னர், திருகோணமலை, மட்டக்களப்பு என்பவையாகும். இவ்வாறு ஒல்லாந்தர் இலங்கையின் கடற்கரையோர மாவட்டங்களை ஒன்றிணைத்த வகையில் இலங்கை மீதான ஆட்சியுரிமையை அனுபவிக்கத்தக்கவர் என மீண்டும் ஒருமுறை இவ்வொப்பந்தத்தினால் உறுதிப்படுத்தப்பட்டனர். இவற்றுக்கும் மேலாக கண்டி மன்னன் ஒல்லாந்தருக்குரிய கறுவா வியாபாரத்துக்கான கறுவா உரித்தற் தொழிலை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் அனுமதித்தான். இவை எல்லாவற்றிற்கும் பிரதியுபகாரமாக கண்டியின் முடியாட்சி முறையின் இறைமையை ஒல்லாந்தர் ஏற்றுக்கொள்வதோடு, கண்டியரசு உப்பினைப் பெற்றுக் கொள்வதற்குரிய கடற்கரை உப்பள உரிமத்தையும் வழங்கினர். இவ்வாறு கண்டியரசின் மீதான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் யாவற்றிற்கும் அப்பால், அரசியலடிப்படையிலான துன்பம் தரவல்ல ஒர் ஒப்பந்தமாகவே கண்டியருக்கு இது அமைந்து விட்டது. வேறு எவ்விதமான ஆதரவுமற்ற நிலையில் ஒல்லாந்தர் மீது மட்டுமே தங்கியிருக்க வேண்டிய நிலைக்குள் கண்டியரை இவ்வொப்பந்தம் ஆக்கிவைத்து விட்டது.
1766ஆம் ஆண்டில் செய்யப்பட்ட இவ்வொப்பந்தமானது வான் எக் என்பவனுக்குப் பின்னர் இலங்கையில் ஒல்லாந்து ஆள்பதியாகக் கடமையேற்ற இமான் விலெம்பால்க் (1765 - 1785) என்பவனது ஏற்பாட்டின் கீழேயே மேற்கொள்ளப்பட்டது. இமான் விலெம்பால்க் கண்டியரசனுடன் கண்டிப்புடனும், உறுதியாகவும், நேர்மையாகவும் நடந்து வந்தான். இந்த ஆள்பதி தனது பொறுப்பினை கையேற்றவுடனேயே கண்டியுடனான மேலுமொரு போருக்கு ஆயத்தம் செய்தான். இதனால் கண்டியருடைய பொருளியல் வளத்தை மேலும் பலவீனமடையச் செய்து, ஏற்கனவே உருவாகியுள்ள பஞ்சநிலையை மேலும் இரட்டிப்பாக்கும் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே 1766ஆம் ஆண்டு ஒப்பந்தம் கண்டியருக்கும், ஒல்லாந்துத் தளபதிக்குமிடையே கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தப்படி பின்வரும் விடயம் ஒல்லாந்தரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
"அரசனுடைய எல்லைக்குள் அவனது ஆணை நடைபெறலாம் என்றும், வெளியேயிருந்து வந்து அவனைத் தாக்காமல் தாங்கள் பாதுகாத்துக் கொள்ளுவதாகவும் டச்சுக்காரர்அவனுக்கு வாக்களித்தார்கள். உப்பளங்களுக்குப் போவதற்கு கண்டியருக்கு அனுமதியளிப்பதாகவும்
234

கூறினர். அரசனுக்கு இவை அவ்வளவு இலாபகரமானவையல்ல. ஆனால் டச்சுக்காரர்தாம் விரும்பிய கோரிக்கைகளை எல்லாம் அரசனிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். யுத்தத்திற்கு முன்னர் டச்சுக்காரர் கைப்பற்றி யிருந்த பிரதேசங்களிளெல்லாம் அவர்களாணை செல்லுமென அரசன் உடன்பட்டதோடு, தீவின் கரையோரங்களில் நான்கு மைல் அகலத்திற்கு கரைநிலங்களை டச்சுக்காரருக்கு கொடுத்தான். தன்னுரர்களில் கறுவாப் பட்டை உரிப்பதற்கும் அவர்களுக்கு அனுமதியளித்தான். ஐரோப்பிய சாதியாரோடாவது இந்திய இராசாக்களோடாவது எவ்வித உடன்படிக்
கையும் செய்வதில்லையென்றும் மன்னன் உடன்பட்டான்.”
1766ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து முடித்ததின் பின்னர் ஒல்லாந்தர் களது நடவடிக்கைகளில் பல மாறுதல்கள் காணப்பட்டன. புதிதாகக் கிடைத்த பிரதேசங்களின் நிர்வாக முகாமைத்துவத்திற்காக ஆள்பதியினால் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மாகம்பத்து, கொட்டியாரம், தம்பலகாமம், சிலாபம், புத்தளம், ஆகிய திசவாணிகளுக்குகே அவ்வாறு புதிய உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டனர். கண்டியருக்குரிய மிளகு பயிரிடும் பெருந்தோட்டம் இப்பொழுது ஒல்லாந்த நிர்வாகிகளால் மிகவும் அவதானமாகப் பரிபாலிக்கப்பட்டு, செய்கை பண்ணப்பட்டது. குறிப்பாக கட்டுப்பிட்டி (ய), மாதம்பை ஆகிய பெருந்தோட்டங்களில் சிறப்பான மிளகு செய்யப்பட்டது. நீர்ப்பாசன வாய்க்கால்களும், அலகுகளும் ஒல்லாந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் மேற்கொள்ளப் பட்டன அல்லது மறுசீரமைப்புச் செய்யப்பட்டன. இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும், மேற்கிலும் உப்பளக் கைத்தொழில் விருத்தி செய்யப் பட்டது. கண்டியரசனுக்குரிய உப்பு ஒப்பந்தப்படி ஒழுங்காக ஒல்லாந்தரால் அனுப்பி வைக்கப்பெற்றது. நீர்கொழும்பிற்கு அணித்தாயமைந்துள்ள முத்துராஜவல என்ற சதுப்பு நிலத்தினை மீட்டெடுத்து நன்செய் நிலமாக மாற்றினார்கள். அணைகள், கால்வாய்கள், சுரங்கப்பாறை, போன்றன இங்கு அமைக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மன்னார் கொமாண்டரிகளில் முத்துக்குளித்தல் தொழில் யாழ்ப்பாண அரசு காலத்திலிருந்து நடைபெற்று வந்திருந்தாலும் கூட 1766க்கும் 1767க்கு மிடைப்பட்ட காலத்தில் ஒல்லாந்தரால் முத்துக் குளித்தல் தொழில் அதன் உச்சவரம்பில் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 1768ஆம் ஆண்டில் மன்னாரில் ஒல்லாந்தரால் முத்துக் குளித்தல் மேற்கொள்ளப்படுவதனை கர்நாடக நவாப் தடுத்துவிட்டிருந்தமையும், இம்முத்துக்குளித்தல் தொழில் தொடர்பாக கர்நாடக நவாப்பிற்கும் கண்டியரசனுக்குமிடையே நீண்ட கருத்து வேற்றுமைகள் நிலவிவந்தமையும் வரலாற்று ஆவணங்கள் மூலம்
235

Page 121
கண்டுகொள்ளமுடிகிறது. இறுதியில் முத்துக்குளித்தல் தொடர்பான இம் முத்தரப்புப் பிரச்சினைகளில் ஆங்கிலேயர் தலையிடுவதனையும் காண்கின்றோம். நாற்பது வருடகாலங்களாக முத்துக்குளித்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒல்லாந்தர் அத்தொழில் மூலம் 1 1/2 மில்லியன் டொலர் பெறுமான வருமான ஈட்டத்தைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தககது.
ஒல்லாந்தர் ஆட்சியின் வீழ்ச்சியும் மறைவும் :
இலங்கை மீதான ஒல்லாந்தரின் வாணிப முகாமைத்துவ அரசியல் ஆதிபத்தியம் தளர்வடைந்து, வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியமான காரணி சர்வதேச உலகில் ஏற்பட்ட சமுத்திரம் மீதான ஆதிபத்தியப் போட்டியும், புதிய கடற்தள வன்மைமிக்க பிரித்தானிய சாம்ராச்சியத்தின் எழுச்சியுமேயாகும். ஒல்லாந்தருடைய மேலாதிக்கம் கண்டியின் வாயிலைத் தட்டிக்கொண்டிருந்த பொழுது பைபஸ் என்ற ஆங்கிலேயத் தூதுவன் கண்டி இராச்சியத்திற்குள் வரவழைக்கப்பட்டு, கண்டி இராச்சியத்தின் பாதுகாப்பிற்கான மேலதிக இராணுவ உதவி பற்றிக் கோரப்பட்ட பின்னர், அத்தொடர்புகள் யாவும் கண்டியரசினைக் கைவிட்டுச் சென்றமை பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். ஒல்லாந்தருக்கு எதிராகக் கண்டியரசனுக்கு இராணுவ உதவியை அளிக்க முடியாத நிலையில் ஆங்கிலேயர் அப்போதிருந்தமையால், பைபஸ் கண்டியரச னுடன் எவ்விதமான உடன்படிக்கையும் செய்து கொள்ள இயலவில்லை ஆனால் பின்னர் இலங்கைத்தீவிற்குள் ஆங்கிலேயர், முன்னைய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலல்லாது இத்தீவினுள் அதிகாரத்திலிருந்த எந்தவொரு அரசினது உதவியோ எதிர்பார்ப்போ எதுவுமின்றி, ஒல்லாந்தரது துறைமுக நகரங்களைத் தாக்கி, கைப்பற்றி, தமது கால்களை ஊன்றிக் கொண்டிருந்தனர். சமகால இந்திய உபகண்டச் சூழ்நிலையே ஆங்கிலேயரை இலங்கை மீது அவ்வாறான ஒரு கொள்கையை வகுக்கச் செய்தது எனலாம்.
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இந்திய் உபகண்டத்தில் மொஹலாய வம்சத்தின் ஆதிக்கம் வலுவிழந்ததும், ஆங்கிலேயரும், பிரேஞ்சுக்காரரும் இந்தியாவைக் கைப்பற்றி தத்தமது குடியேற்றப் பிரதேசங்களை உருவாக்கினர். இந்து சமுத்திரத்தின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மையங்களை தமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயன்ற ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரருக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இலங்கையின் அமைவிடம், அதிலும் இயற்கைத் துறைமுகமான திருகோணமலையின் தளநிலை தமக்கு மிகவும் சாதகமாக இருப்பது கண்டு, அதனை ஒல்லாந்தரிடமிருந்து மீட்பதற்குரிய
236

நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆகவேதான் 1762ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் தளநிலையை கூர்மையாக ஆராய்ந்து, அதன் புவிசார் அரசியல் அமைவு நிலையை மாறிவரும் சமுத்திர மேலாண்மைக்குப் பயன்படுத்துவதற்கு ஆங்கிலேயர்முயற்சிகள் எடுத்த வண்ணம் இருந்தனர். இப்பின்னணியே இலங்கையினின்றும் ஒல்லாந்தரது ஆட்சி மங்கி மறைவதற்குரிய அடிப்படையாயிற்று.
1780ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த அமெரிக்கப் போர் இலங்கைத் தீவின் அரசியல் மேலாதிக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. பிரித்தானிய வர்த்தக கிழக்கிந்திய சங்கம் ஸ்தாபிக்கப் பட்டதன் பின்னர் இந்தியாவில் வங்காளப் பிரதேசம் பெரும் போராட்டத்தின் பின்னர் ஆங்கிலேயர் வசமானது. அதனைத் தொடர்ந்து கொறமாண்டல் பிரதேசங்களில் ஒல்லாந்தருக்கான வர்த்தக சந்தைகள் ஆங்கிலேயருடை கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் வாணிப முகாமைத்து வத்துடன் முட்டி மோதவேண்டியிருந்தது. இந்நிலையில் அமெரிக்கச் சுதந்திரப் போரானது கீழைத்தேயத்தில் ஆங்கிலேயரை ஒல்லாந்தருக் கெதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்குரிய வாய்ப்பை அளித்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, 1702ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் வசமிருந்த திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்கி ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டனர். இருந்தபோதிலும் கைப்பற்றப்பட்ட திருகோணமலையை பிரான்சியர் மீளக் கைப்பற்றி, அதனை மீண்டும் ஒல்லாந்தரிடமே கையளித்தும் விட்டிருந்தனர்.
திருகோணமலைத் துறைமுகம் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட அம்முயற்சி கைவிடப்பட்ட காலகட்டத்திலிருந்து அடுத்த 12 வருட காலங்கள் வரைக்கும் ஆங்கிலேயர் இலங்கைத் தீவு தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. ஐரோப்பாவில் பிரான்சியப் புரட்சியின் விளைவாக ஆங்கிலேயரும், பிரான்சிய புரட்சியில் ஈடுபட்ட வீரர்களும் மோதிக் கொள்ள வேண்டியிருந்தது. அச் சூழ்நிலையிலேயே ஆங்கிலேயர்க ளுடைய கவனயீர்ப்பு இலங்கை நோக்கித் திரும்பியிருந்தது. 1795ஆம் ஆண்டிற்குப் பின் ஆங்கிலேயர் இலங்கையின் ஆதிபத்தியத்தை தமது மேலாதிக்கப் பரப்பினுள் தமது கடல்வலுவைப் பயன்படுத்திக் கட்டுப் படுத்துவதற்கு ஆரம்பித்திருந்தனர். அடுத்த ஆண்டிலேயே இலங்கை (1796இல்) ஆங்கிலேயர் வசமானது.
கண்டிய இராசதானிக்குள் இப்பொழுது நிலமை முற்றிலுமே மாற்றமடைந்திருந்தது. கண்டியப் பிரதானிகள் எல்லோருமே கூடி ஆட்சியிலிருக்கும் மன்னனை பதவியிலிருந்து விலக்குவதெனவும்,
237

Page 122
அதற்காக வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் துணையைப் பெற்றுக் கொள்வதென்றும் தீர்மானித்தனர். கண்டியப் பிரதானிகளின் இலக்கு இரண்டு வகைப்பட்டதாகக் காணப்பட்டது. அவற்றில் ஒன்று தமக்குள் யாரேனும் ஒருவரை சிம்மாசனத்தில் இருத்துவது, மற்றையது மன்னனை வெளியேற்றுவதுடன் முழு நாட்டினது ஆதிக்க சக்தியை தமது கரங்களில் எடுத்துக்கொள்வது ஆகும். இந்த இரு நோக்கங்களையும் ஈட்டித் தருவதற்காக முதலில் ஒல்லாந்தரையும், பின்பு ஆங்கிலேயரையும் பயன்படுத்துவதற்கு முயன்றனர். இச்சூழ்நிலையிலேயே பிரான்ஸ் நாடு ஒல்லாந்து நாடு மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்பினை நடாத்தியதோடு, பிரான்சுக்கு ஆதரவான ஒல்லாந்து நிர்வாகிகள் உதவியுடன் பட்டேவியாவில் பட்டேவியக் குடியரசினை ஸ்தாபித்தனர். இதனால் மிகவும் ஆத்திரமுற்றிருந்த ஒல்லாந்து நாட்டு நிர்வாகம் இங்கிலாந்தின் உதவியுடன் பட்டேவியக் குடியரசு ஸ்தாபிக்கப்படுவதை தடை செய்ய முயன்றது. இதனால் ஒல்லாந்தருக்கு பிரித்தானிய இராணுவம் உதவ வேண்டிய சூழ்நிலையும் தோற்றம் பெற்றது. இப்பின்னணியில் ஒல்லாந்து நாட்டு நிர்வாகம் இலங்கையிலுள்ள ஒல்லாந்து ஆள்பதிக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதி தமது கட்டுப்பாட்டிலுள்ள நகரங்கள் யாவற்றிற்கும் ஆங்கிலேயர் சென்றுவர அனுமதிக்குமாறும் கேட்டிருந்தது. இதன் மூலம் பிரான்ஸிய குடியேற்றவாத நடவடிக்கைகளை இலங்கையில் மாத்திரமல்ல, தென் - தென் கிழக்காசிய நாடுகளில் இருந்து முற்றாகத் தடுத்துவிட முடியும் என ஒல்லாந்து நம்பியது. ஆனால் இங்கிலாந்து ஒல்லாந்தை ஏமாற்றியது.
ஆங்கிலேயருடைய நோக்கில் திருகோணமலைத்துறைமுகம் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையை வழங்கியது. வங்காளப் பிரதேசத்தின் மீதான ஆதிபத்தியத்தையும், இந்து சமுத்திரம் மீதான கட்டுப் பாட்டையும் தமது கைகளில் எடுத்துக்கொள்வதற்கு திருகோணமலைத் துறைமுகம் சிறந்த வாய்ப்பு - வசதிகளை வழங்கும் என ஆங்கிலேயர் திடமாக நம்பினர். பிரித்தானியருடைய கீழைத்தேய வர்த்தக சங்கமானது திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு - தாக்கத்தணிப்புப் பின்னணி நிலவசதி, நன்னீர் வசதி போன்ற சிறப்பான குணாதிசயங்கள் பற்றி ஆங்கில அரசிற்கு எடுத்துக்காட்டியிருந்தது. ஆதலால் மற்றாஸிலிருந்து ஆங்கிலேயத் தேசாதிபதி, தனது தூதுவன் ஒருவன் மூலமாக கண்டியரசன் இராஜாதி இராஜசிங்கனிடம் அனுப்பி, ஆங்கிலேயர் இலங்கையில் காலூன்றுவதற்கு ஏற்ற உதவிகளை புரியவேண்டும் என்பதனைத் தெரிவித்திருந்தான். ஆனால் ஒல்லாந்தரோ கண்டியரசின் மீதான பாதுகாப்பிற்காக பிரித்தானிய இராணுவம் திருகோணமலைத்

துறைமுகத்திற்கு வந்து நங்கூரம் பாய்ச்சி நிற்பதனை விரும்பவில்லை. இதனால் ஒல்லாந்தில் பிரஞ்சுக்காரருடைய பட்றேவியக் குடியரசினை ஏற்கொள்வது என்றும், பிரித்தானியருடைய படைத்துணை தமக்குத் தேவையற்றது என்றும் முடிவெடுத்தனர். இதனையறிந்து கொண்ட ஆங்கிலேயர் 1795ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாளன்று திருகோண மலைத் துறைமுகத்தைக் கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்து நகர்ந்து ஒக்ரோபர் மாதம் 05ஆம் நாளன்று மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றினர். மன்னார் வரையுமுள்ள துறைமுக நகரங்கள் யாவும் ஆங்கிலேயரது கட்டுப்பாட்டுக்குள் கொணரப்பட்டன. 1796ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 15ஆம் நாள் கொழும்பும், யாழ்ப்பாணமும் ஆங்கிலேயருடைய கட்டுப்பாட்டிற்குள் கொணரப்பட்டது. இவ்வாறு ஒல்லாந்தருடைய 150 வருட கால இலங்கை மீதான வாணிப முகாமைத்துவ முறையிலமைந்த அரசியல் ஆங்கிலேய வர்த்தக சங்கத்தின்
கைகளிற்கு மாற்றமடைந்தது.
239

Page 123
அத்திலnயக் ஒழு
ஒல்லாந்தரின் முகாமைத்துவத்தின்
கீழ் இலங்கைப் பண்பாடு
"அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அறிஞர்களும், ஆராய்வாளர்களும், பேராசிரியர்களும், அரசியல் தலைவர்களும், தமது அரசியல், பொருளாதார, சமூக இலாபங்கள் கருதி, தமது நலன்களைக் கருதி, மெளனம் சாதிக்கலாம். ஆனால் அதன்மூலம் அவர்கள் அறிவியலை முற்றாக நிராகரிப்பவர்கள் ஆகின்றனர் இவர்களது தலைமைத்துவத்தில், வழிகாட்டலில் சமூகங்கள் முன்னேற முடியுமா? அமைதியான, இன்பமான வாழ்க்கையை நடாத்த முடியுமா? இல்லை!"
-A.S. உதயகுமார்
பக்.21, 2002

இலங்கைதீவில் \போர்த்துக்கேயரின் கரையோர மாகாணங்களை அவர்களின் மேலாதிக்கத்திலிருந்து ஒல்லாந்தர் தமது கைகளுக்குள்ளகப் படுத்திக் கொண்ட காலத்திலிருந்து, பின்னர் ஆங்கிலேயரிடம் அதனை கைமாற்றம் செய்தது வரையுள்ள 157 வருடகால வாணிப நெறிவகுக்கப் பட்ட முகாமைத்துவ முறையின் கீழ், இலங்கையின் சமூக, பொருளாதார, சமயவாழ்விலும், அவற்றோடு இணைந்த பண்பாட்டு நிறுவனங்களிலும் பாரியமாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. இப்பண்பாட்டு மாற்றத்தினையும், உள்வாங்கல்களையும், பண்பாட்டு ஒருங்கிணைவு களையும் (Cultural Fusion) ஆராய்வதற்கு எமக்கு கத்தோலிக்க, புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவ மதகுருமாரின்நூல்களும், ஆவணங்களும், சுதேச மொழியில் எழுச்சியடைந்த சமகால இலக்கியங்களும் உதவுவ தனைக் காண்கின்றோம்.
ஒல்லாந்தரது கைகளில் இலங்கையின் ஆட்சியுரிமம் சென்றடைந்த போது, இங்கு கத்தோலிக்கமதம், இந்துமதம், இஸ்லாம் மதம் போன்றவை மக்களால் பின்பற்றப்பட்ட நிலையில் ஒரு பன்மதச் சமூகப்பண்பாடு புதுவடிவம் பெற்றிருந்தது. இவற்றுள் கத்தோலிக்க மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் போர்த்துக்கேயர் காலத்திலிருந்து நலிவுறத் தொடங்கியிருந்த நிலையில், ஒல்லாந்தர் காலப் பரப்பினையும் அவை கடந்து செல்ல வேண்டிய இக்கட்டானநிலை தோற்றம் பெற்றிருந்தது. போர்த்துக்கேயரது காலத்து இலங்கைத் தீவில் கத்தோலிக்க மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் கொடுமையான அடக்குமுறைப் பிரயோகிப்பினால் மிகமிக நலிவடைந்த நிலையில், மீண்டும் ஒல்லாந்தராட்சியை அவை சந்தித்தன. கத்தோலிக்க மதம் மாத்திரமே மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில், சிறந்த மத நிர்வாகத்தையுடைய திருச்சபைகளுடன் கிறிஸ்தவப் பண்பாட்டினை வளர்த்தெடுத்திருந்தது. கடற்கரையோர நகரங்கள் யாவும் மாதா வழிபாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்ட வகையில், மக்களது வாழ்வுடன் ஒன்றித்திருந்தமையை ஒல்லாந்தர் அவதானித்தனர். மீண்டும் இலங்கையின் கடற்கரையோரப் பிராந்தியங்களில் தமது வாணிபச் செல்நெறிக்குட்பட்ட அரசியல் முகாமையை ஏற்படுத்துவதற்கு கத்தோலிக்க மதம் பெருந்தடையாக இருப்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டவகையில், அம்மதத்தை இலங்கையிலிருந்து அழித்துவிட முடிவு செய்தனர். இதனால் இலங்கையின் கத்தோலிக்க மதப் பண்பாட்டின் வடிவங்களையும், வழிபாட்டு மையங்களையும் அழிப்பதில் ஒல்லாந்தர் தீவிரமாக செயற்பட்டனர். ܚ
"போர்த்துக்கேயரது அதிகாரத்தையும், செல்வாக்கினையும், முற்றாக ஒழிக்க வேண்டுமெனில் அவர்களது கடல்வலிமையினையும், வர்த்தக
24f

Page 124
செல்வாக்கினையும் மாத்திரம் ஒழித்தால் போதாது, கத்தோலிக்கத் தையும் ஒழிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் கீழைத்தேயங்களில், குறிப்பாக இலங்கையில், வர்த்தகமும் கத்தோலிக்கமுமே போர்த்துக் கேயருக்கு பெரும் வலுவினைக் கொடுக்கும் சக்திகளாக விளங்கின. வர்த்தகத்தை மாத்திரம் கைப்பற்றி, கத்தோலிக்கத்தை ஒழிக்காவிட்டால், கத்தோலிக்கரது அனுதாபத்தைக் கொண்டு போர்த்துக்கேயர் தம்மை மறுபடியும் தாக்கலாம் என்ற பயமிருந்தது. அதுமாத்திரமன்றி, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களனைவரும் கத்தோலிக்கராக விளங்கியமையும், அவர்களது ஆதரவு எந்நேரத்திலும் போர்த்துக்கேயருக்கே கிடைக்கும் என்பதும், இவர்களிடையே பயத்தை மேலுத் அதிகரிக்கச் செய்திருந்தது. இத்தகைய அடிப்படையான மத நிலவரம் ஒல்லாந்தரின் மதக் கொள்கைகளை தீவிரப்போக்குடையதாக மாற்றியது. ஒல்லாந்தரது சிந்தனையில் பெளத்தம், இஸ்லாம், இந்து மதங்கள் போன்றே கத்தோலிக்கமும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழமைவாத சமய இயக்கம் என நம்பப்பட்டது. இக்காரணத்தினால் கிறிஸ்தவத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்ட புரட்டஸ்தாந்து மதத்தை இலங்கையில் பரப்புவதற்கும், அதனையே வேரூன்றச் செய்வதற்கும் ஒல்லாந்தர் பல வகைகளிலும் முயன்றனர்.
"தவறான மார்க்கம்” ஆன கத்தோலிக்க மதத்திலிருந்து உண்மை யான மார்க்கம்" எனத் தாம் கருதிய புரட்டஸ்தாந்துச் சீர்திருத்த சமயத்திற்கு இலங்கை மக்களை மதம் மாற்றுவதற்கு ஒல்லாந்தர் முயற்சி செய்தமைக்கான அடிப்படைக் காரணம் வர்த்தக சங்கத்தின் முகாமைத்து வத்திற்குட்பட்ட முதலாளித்துவ பொருளாதார அலகுவயப்பட்ட வாழ்க்கை முறையைக் கட்டி எழுப்புவதேயாகும். போர்த்துக்கேயரது வர்த்தக முகாமையில் புனித கிறிஸ்தவம், புனித ஆவி, பரலோகம் என்ற அடிப்படையில் துறவு நிலையும், தூய்மையானதுறவிகளின் ஒழுக்கமும் வற்புறுத்தப்பட்டமையால் பொருளிட்டத்திற்கான அலகுகளின் விரிவாக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இது கீழைத்தேய குடியேற்ற வாதக் கொள்கையைப் பயன்படுத்த உதவாததாகையால், ஒல்லாந்தர் அம்மதத்தைத் "தவறான மார்க்கம்” எனக் கற்பித்ததோடு, தமது சீர்திருத்தப்பட்ட அதாவது குடும்ப அலகோடு பொருளிட்டத்தினையும், கிறிஸ்தவ மதத்துறவிகளோடு வாழ்வினையும் இணைத்து புதிய பொருளாதார முறையொன்றின் தோற்றத்திற்கு அடிப்படையிட்டிருந் தனர். அவ்வாறு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையாக உருவாவதற்கு புரட்டஸ்தாந்து மதம் அடிப்படையாக விளங்கியமையால் குடியேற்ற நாட்டுக் கொள்கைகள் கீழைத்தேயத்தில் இந்நூற்றாண்டுகளில்
242

தீவிர வளர்ச்சி கண்டன. அவ்வளர்ச்சியைத் தொடக்கியவர்களாக ஒல்லாந்தர் காணப்பட்டனர். இலங்கையிலும் ஒல்லாந்தரது குடியேற்ற வாதக் கொள்கைகள் கத்தோலிக்க மதத்தை முறியடித்த வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
'தவறான வழிகாட்டும்" கத்தோலிக்க சமயத்திலிருந்து விலக்கி உண்மையான சமயம் என்ற புரட்டஸ்தாந்துச் சீர்திருத்தச் சமயத்திற்கு இலங்கை மக்களை மதம் மாற்றுவிப்பதற்கு ஒல்லாந்தர் எத்தனித்தமைக்கு இன்னொரு காரணம், போர்த்துக்கேயர்ஆட்சியின் முடிவில் கத்தோலிக்க மதத்தைத் தழுவியோர் மீண்டும் பழைய சுதேசியச் சமயங்களான இந்துமதம், பெளத்தம், இஸ்லாம் போன்றவற்றிற்கு மதம்மாற எத்தனித் தமையாகும். முதலில் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டோர் இடையில் அதன் அங்கத்துவத்தினை இழந்துவிடாதபடிக்கு (அதாவது மீண்டும் இருளில் வீழ்ந்து விடாது) இருப்பதற்காகவே புரட்டஸ்தாந்து மதத்திற்கு அம்மக்களை பலவந்தமான முறையில் இணைத்துக் கொண்டனர். ‘மூடநம்பிக்கைகள் மலிந்த" கீழைத்தேய உலகில் கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் விமோசனப் பாதையில் தமது முதலாவது காற்தடங்களைப் பதித்தவர்கள், இடையில் மீண்டும் இருளில் வீழ்ந்து விடாதபடிக்கு தடுப்பதற்காகவே, தமது புரட்டஸ்தாந்துத் திருச்சபையில் இணைப்பதன் மூலம் அவர்களது இரண்டாவது தடத்தினை தம்மை நோக்கியதாக ஆக்கலாம் என ஒல்லாந்த மத குருமார் ஆணித்தரமாக நம்பினர். இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்ததும், பழைய மதங்களைப் பின்பற்றுவதற்கு அனுமதி கோரிய கத்தோலிக்கரை அவதானித்த புரட்டஸ்தாந்துக் குருமார், அக்கத்தோலிக்கர் பொருட்டு ஒல்லாந்த நிர்வாகம் மிகவும் கடும் நடவடிக்கைகள் எடுத்து, சட்டமூலமாக அம்மக்களை புரட்டஸ்தாந்துத் திருச்சபையில் இணைத்துவிட வேண்டும் என்றும் கோரிநின்றனர்.
மேற்காணும் காரணங்களைத் தவிர ஐரோப்பிய காரணிகளும் ஒல்லாந்தரது சமயக் கொள்கையைப் பாதித்திருந்தது. ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முடிவடைந்த (கிறிஸ்தவ) சமயக் கொந்தளிப்பின் முடிவில் போர்த்துக் கேயர் கத்தோலிக்க சமயத்தின் (திருச்சபையின்) பக்கமும், ஒல்லாந்து புரட்டஸ்தாந்து திருச்சபையைச் சேர்ந்த கல்வினின் பக்கமும் பிரிந்து நின்றனர். இருபகுதியினரும் தத்தம் சமயப் பிரிவுகளைப் பரப்பும் அவாவுடையவர்களாகக் காணப்பட்டனர். இத்துடன் அரசியல் காரணி ஒன்றும் சேர்ந்து கொண்டது. கத்தோலிக்க நாடான ஸ்பானியாவினது ஆட்சியில் இருந்து அண்மையிற்றான் ஒல்லாந்து விடுதலை
24

Page 125
பெற்றிருந்தது. ஸ்பானியாவின் ஆதிக்கத்தை அரசியல் ஆதிக்கமாக மாத்திரமன்றி கத்தோலிக்க அரசொன்றின் ஆதிக்கமாகவும் ஒல்லாந்தர் கருதினர். ஒல்லாந்தர் கீழைத் தேயங்களுக்கு வந்த காலத்தில் விடுதலைப் பேருணர்ச்சி இன்னும் தணியாதிருந்தது. அது மாத்திரமன்றி ஸ்பானியாவிற்கும், போர்த்துக்கேயருக்குமிடையே இருந்த நெருங்கிய தொடர்பும் ஒல்லாந்தரது கொள்கைகளை (இலங்கையில்) பெருமளவிற்குப் பாதித்தது.
மேற்கூறப்பட்ட காரணங்களினால், ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றியவுடனேயே கத்தோலிக்க சமயத்தை தடைசெய்யும் பல சட்டங்களை இயற்றினர். 1658 - 59 இல் இயற்றப்பட்ட பிரகடனங்கள் மூலம் கத்தோலிக்க சமயம் அனுஸ்டிக்கப்படுவதற்கு தடைவிதிக்கப் பட்டது. கத்தோலிக்க குருமார்களை மறைத்து வைத்திருப்பவர்களுக்கும், புகலிடம் கொடுப்பவர்களுக்கும், மரணதண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
"கிறிஸ்தவ விவாகங்கள், ஞானஸ்நானம் பெறுதல் போன்றவை ஒல்லாந்த (புரட்டஸ்தாந்த) திருச்சபையினிலேயே நடைபெற வேண்டும், மரித்தவர்களை கத்தோலிக்க இடுகாடுகளில் அடக்கம் செய்யும்போது அதிகவரி அறவிடப்பட வேண்டும், ஒல்லாந்த (புரட்டஸ்தாந்த) திருச்சபையைச் சேர்ந்த (மரித்தவர்களுக்கு) மரணவரி நீக்கப்படுதல் வேண்டும் (எனப்பலவாறாக இலங்கைக் கத்தோலிக்க சமூகத்தினருக்கு எதிராக சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டன.)
இலங்கையில் தொண்டாற்றி வந்த குருமார்கள் அனைவரும் போர்த்துக்கேயரான படியால் அவர்களும் போர்த்துக்கேயப் படையின ருடன் வெளியேற்றப்பட்டு விட்டனர். இரகசியமாகத் தங்கியிருந்த ஒரு சில குருமார்களைக்கூட தேடிப்பிடித்து, தூக்கில் போட்டு கொன்றனர். சில குருமார் கண்டி இராச்சியத்தில் புகலிடம் தேடிக்கொண்டனர். "அந்நிய குருமார் இலங்கைக்குள் பிரவேசிக்கக்கூடாது, (அவர்களை) இரகசியமாகப் பாதுகாப்பவர் மரணதண்டனைக்குள்ளாவார்கள்’ எனச் சட்டங்கள் விதிக்கப்பட்டமையால், கத்தோலிக்க தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. அல்லது அவை பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றிலே காணப்பட்ட வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப் பட்டன. கத்தோலிக்கப் பாடசாலைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, புரட்டஸ்தாந்து மதப் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. இந்தப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும்படிக்கு பெற்றோர்கள்
244

கட்டாயப்படுத்தப்பட்டனர். கல்வினின் மதப்பிரிவுக்குரிய ஆலயங்களில் நடைபெற்ற தேவ வழிபாட்டிற்கு சமூகம் அளிக்கும்படி அவர்கள் பல வந்தப்படுத்தப்பட்டனர்.
"கத்தோலிக்க மக்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ ஒன்றாகக்கூடி, ஆராதனை முயற்சியில் பங்குபற்றுவது தடைசெய்யப் பட்டது. இச்சட்டத்தை முதன்முறையாகவும், இரண்டாம் முறையாகவும் மீறுபவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அச்சுறுத்தப் பட்டது. கல்வினின் மதப்பிரிவுப்படி முறைப்படி நிறைவேற்றப்பட்ட ஞானஸ்நானங்களும் மெய்விவாகங்களும் மாத்திரமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டன. பிரேத அடக்கம் கூட கல்வினின் மதவிதிப்படி செய்ய வேண்டுமெனக் கட்டளை விதிக்கப்பட்டது.
கல்வினின் மதத்தைத் தழுவ மனமில்லாத சுதேசிகளுக்கு அரசாங்கப் பதவிகள் மறுக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது அவர்கள் தண்டனை களுக்கும், வேறு நெருக்குதல்களுக்கு விசேடசலுகையும், (மற்றவர்களிட மிருந்து தனித்துவமான வகையில்) பாரபட்சமும் காட்டப்பட்டது. இலங்கையில் குடியேறியிருந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் அதிகம் துன்புறுத்தப்பட்டனர். அவர்களுடைய மொழி தடைசெய்யப்பட்டது. அவர்களுடைய நடவடிக்கைகள் வேவுக்காரரால் (அவதானிக்கப்பட்டு) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அவர்கள் மீது பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு, பலவிதமாகத்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டனர்.”
ஆனால் அவர்கள் இலங்கையிற்குடியேறிய போர்த்துக்கேயர்) தங்கள் (கத்தோலிக்க மதம் மீதான) விசுவாசத்தைத் தளரவிடாமல் அதில் உறுதியாய் நின்று, (தம் வாழ்விற்காக) சிறுகைத்தொழில்களைச் செய்து வறுமையாக சீவித்து வந்தார்கள். சுதேசிகளான கத்தோலிக்கரிலும் அநேகம்பேர் உறுதியாய் நின்று தம் விசுவாசத்தைக் காப்பாற்றி, கத்தோலிக்க அனுசாரத்தைக் கடைப்பிடித்து வந்தனர். இரவில் வீடுகளில் இரகசியமாகக் கூடி ஜெபங்களைச் சொல்லி வந்தார்கள். ஒல்லாந்தரிட மிருந்து பாதுகாத்த விக்கிரஹங்களை இரகசியமாக வைத்து வணங்கி வந்தனர். தலைமைக்காரர் பிள்ளைகளுக்கு கத்தோலிக்க முறைப்படி திருமுழுக்கு கொடுத்து வந்தனர். இவ்வாறு கரையோரப் பகுதிகளிலிருந்த கத்தோலிக்க மக்கள் (தமது மதத்தின் மீதிருந்த) விசுவாசத்தை பல இன்னல்கள் மத்தியிலும் பிரமாணிக்கமாய் பாதுகாத்து வந்தனர். ஆனால் பலர் பதவி மோகத்தால் தூண்டப்பட்டு முதலியார், அதிகார் என்னும் பதவிகளைப் பெறும் பொருட்டும் கல்வினின் மதக்கொள்கைகளைக்
245

Page 126
கடைப்பிடித்தனர். புதிதாக கத்தோலிக்க மதத்திற்கு சேர்ந்தவர்கள் துன்பங்களுக்கு அஞ்சி, கத்தோலிக்க மதத்தைக் கைவிட்டு, பெளத்த சமயத்தை அல்லது இந்துசமயத்தை மீண்டும் தழுவிக் கொண்டனர். இவ்வாறு கத்தோலிக்கருக்கு எதிராக ஒல்லாந்தரது நடவடிக்கைகள் மிகவும் கடுமையானதாகக் காணப்பட்டன.
ஒல்லாந்தர் கால இலங்கிையின் கல்வி நிலை :
ஒல்லாந்த ஆட்சியாளர் தமது மதப்பிரசார நடவடிக்கைகளையும் புரட்டஸ்தாந்து மதத்தின் குறிக்கோள்களையும் இலங்கை மக்கள் மத்தியில் பெரிதும் வலுப்படுத்திக் கொள்வதற்கு உபயோகித்த பிரதான கருவி கல்வி யாகும். இலங்கை நாட்டில் ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வியமைப்பை உருவாக்குவதற்கு முயன்றவர்கள் என்ற வகையில், இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒல்லாந்தர் காலம் முக்கியமானதாக உள்ளது. கல்வியே சமயத்தின் கைப்பாவையாகியதால், இவர்களால் கல்வியில் செலுத்தப் பட்ட கவனம், தம் மதத்தையும், ஆதிக்கத்தையும் பரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகவே அமைந்தன. இலங்கை மக்களின் வாழ்க்கை, மற்றும் அவர்களது சமூக நலன்கள் ஆகியவற்றில் ஒல்லாந்தர் மிகக்கூடிய அக்கறை கொண்டிருந்தமையால் ஒல்லாந்தர் காலக்கல்வி முறையும், கல்வி முயற்சிகளும், அவற்றோடு இணைந்த நிறுவனங்களும், மக்களின் வாழ்க்கை நலன்களும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்ததாகவிருந்தமை தவிர்க்க முடியாததாயிற்று.
‘சிங்கள அரசர்களின் காலத்தில் பிரிவேணப் பாடசாலைகளும் பெளத்தக் கோயில்களும் மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தமையைப் போன்றே, தேவாலயமும் பாடசாலையும் வேறல்ல எனக் கூறத்தக்க வகையில், மிகவும் நெருக்கமாக இணைந்திருந்தமை ஒல்லாந்தர்கால நிர்வாகத்தின் ஒரு முக்கிய அம்சமாக அமைந்திருந்தது. அநேகமாக ஒவ்வொரு பாடசாலையும் ஒல்லாந்தைச் சேர்ந்த மதகுரு ஒருவரின் நேரடியான மேற்பார்வையில் இயங்கியது.
இலங்கைத்தீவிலுள்ள எல்லாப்பாடசாலைகளும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. திட்டவட்டமான தவணைகளோ, நீண்ட விடுமுறைகளோ இருக்கவில்லை. நத்தார்தினம், புத்தாண்டுதினம், சுவர்க்க ஆரோகணத் திருநாள், பிரார்த்தனை செய்வதற்கும், நன்றிக்கடன் செலுத்துவதற்கும் என விசேடமாக ஒதுக்கப்படும் நாட்கள் ஆகிய இவை மட்டுமே விடுமுறை நாட்களாக அனுஷ்டிக்கப்பட்டன. ஞாயிற்றுக் கிழமை தவிர்ந்த மற்ற எல்லாநாட்களும் பாடசாலை நாட்களாயிருந்தன. புதன் கிழமைகளும், சனிக்கிழமைகளும் அரைநாட்களாக இருந்தன.
246

ஒல்லாந்தர் இலங்கையில் தமது ஆட்சியை நிலை 1650ஆம் ஆண்டளவில் அவர்களின் பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துவிட்டிருந்தன. மதபோதகர் நியமிக்கப்பட்டு விட்டனர், அம் மதபோதகர்கள் நகரமக்களுக்கு மட்டுமல்லாது சிங்கள இனத்தையும், மலபார் (தமிழர்கள்) இனத்தையும் சேர்ந்த வயதுவந்தோருக்கும் மொழிபெயர்ப்பாளர் மூலம் கோவிற்பற்றுப் பாடசாலைகளில் கல்வி போதித்தனர்.
யாழ்ப்பாண செமினரியில் கல்வி :
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது 20 உரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தமையும், அவற்றுள் சில சிறந்த கட்டிடங்களை உடையனவாய் இருந்ததையுங் கண்டு அவற்றைத் தமது உடைமையாக்கிக் கொண்டனர், ஒல்லாந்த, போர்த்துக்கேயத் தேவாலயங் களை விட 34 இந்துக்கோயில்களும் அங்கே இருந்தன. வலிகாமம் (பெலிகமோ) மாகாணத்திலுள்ள தெல்லிப்பளைத் தேவாலயத்தில் 1658ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வணக்கத்துக்குரிய பிலிப் போல்டயஸ் மேற்கொண்ட ஆரம்பகால முயற்சிகளின் பயனாக சீர்திருந்திய கிறிஸ்தவ மதப் பரப்பலிலும், கல்வியிலும் இம் மாகாணம் பெரு முன்னேற்றத்தைக் கண்டது. கி.பி. 1736ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் 35963 கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி கற்றனர்."
'கிழக்கிந்தியத் தீவுகளில் "செமினரி ஒன்றை அமைப்பது பற்றி கி.பி. 1638ஆம் ஆண்டிலிருந்தே தேவாலயச் சபை திட்டமிட்டு வந்தது. எனினும் இலங்கையில் ஒல்லாந்தர் தமதாட்சியை நிலை நிறுத்திக் கொள்ளும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கி.பி 1687ஆம் ஆண்டிற் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுனர்களுக்குமீண்டும் வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது. கொழும்பிலும், யாழ்ப்பாணத் திலுமாக இரு செமினரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இச்சபை முடிவு செய்தது. ஆனால் உடனடியாக எந்தவித முடிவும் எடுக்கப்பட வில்லை. கி.பி. 1690ஆம் ஆண்டில்தான் முதலாவது செமினரி யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரில் 24 மாணவர்களுடன் ஆரம்பிக்கப் பட்டது. மதகுருக்களாகவும், உபதேசியர்களாகவும், எழுதுவினைஞர் களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் தமிழ் இளைஞர்களைப் பயிற்றுவதே இச்செமினரியின் நோக்கமாகவிருந்தது. இச்செமினரிக்கு அதிபர் அல்லது முதல்வர் ஒருவர் பொறுப்பாகவிருந்தார் ஒர் ஒல்லாந்தரும், தமிழிற் கல்வி புகட்டக்கூடிய உள்ளூர்வாசிகள் இருவரும் அவருக்கு உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். மதகுருமார்,
247

Page 127
"ஸ்கொலார்ச் சென்' அதிபர் ஆகியோரின் முன்னிலையில் மாணவர்கள் ஆண்டிற்கு இருதடவை பரீட்சிக்கப்பட்டனர்."
இச் செமினரி பற்றி ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் திருப்திகரமாகவிருந்தன. மாணவர்களின் முன்னேற்றம் மெச்சத்தக்கதா யிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வபிருத்தி தொடர்ந்து நீடிக்கவில்லை. இச் செமினரி மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாயிற்று. அதிபர் பதவியை நிரப்புவதற்குத் தகுதியான ஒருவர் கிடைக்காமையினால் இச் செமினரியின் அதிபர் பதவி நீண்ட காலத்திற்கு காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. செமினரியில் வசித்த ஒல்லாந்த ஆசிரியரிடமே அதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக அதன் கல்வித்தரமும், ஒழுங்கும் சீர்குலைய ஆரம்பித்தன. மாணவரில் பெரும்பாலானோர் தமது இதயத்தில் புறச்சமயப் பற்றுள்ளவர்களாகவே இருந்தனர். அச்செமினரியின் தரத்தை உயர்த்துவதற்கும், பாடசாலைக்கு புத்துயிர் அளிப்பதற்கும் மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் தோல்வியுற்றதும், கி.பி. 1723ஆம் ஆண்டில் அது மூடப் பட்டது. அதில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஆறு மாணவர்களும் கொழும்பிலுள்ள செமினரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணச் செமினரி மிகக் குறுகிய வாழ்க்கையைக் கொண்டிருந்த பொழுதிலும், அது யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும் மக்களின் வாழ்க்கையிலும் பெரும் செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. தேசாதிபதி அந்தோணி மூயாட்டைப் போன்ற, புகழ்பூத்த பெருமக்கள் அச்செமினரியிலேயே தமது பூரண கல்விப் பயிற்சியையும் பெற்றார்கள் என்றால், அது அச் செமினரி தனது ஆரம்பகாலத்தில் எவ்வளவு திறமையுடன் செயற்பட்டது என்பதற்குச் சான்றாக அமைகின்றது.
“பாடசாலைக் கல்வியமைப்பு முறையின் திறனும், வெற்றியும், ஆசிரியர்களின் பணியிலே பெருமளவு தங்கியிருந்தன. ஒல்லாந்தரின் நிர்வாகத்தில் கோவில் பற்றுக்களில் உள்ள சுய மொழிப் பாடசாலை களில் கற்பித்த ஆசிரியர்கள் பெருமதிப்பைப் பெற்று வந்தனர். பரிசோதகரின் விதப்புரையின் பேரில் தேசாதிபதியால் அல்லது மாகாணத் துணை முதல்வரால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கோயிற் பற்றுப் பாடசாலையின் தலைமையாசிரியர், பாடசாலைத் தோம்புகள் அல்லது வட்டாரப் பதிவுப் புத்தகங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். பாடசாலைத் தோம்புகள் கோயிற் பற்றுக்களிலுள்ள கிறிஸ்தவர்கள் பற்றிய தகவல்கள், அவர்களின் பெயர்கள், வயது, ஞானஸ்நானம் பெற்ற திகதி, பாடசாலையில் செர்ந்த திகதி, பாடசாலையை விட்டு விலகிய திகதி முதலியவற்றைக் கொண்டிருந்தன."
248

"கோவிற்பற்றுப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளங்களில் எந்தவிதமான ஒழுங்குமுறையையும் காணமுடியவில்லை. பாடசாலைக்குப் பாடசாலை சம்பள வேறுபாடு காணப்பட்டிருந்தது. கோவிற்பற்றுப் பாடசாலைகளில் கல்வி நிருவாகத்தை மேற்கொண்டிருந்த தலைமையாசிரியர்களின் நிலை அதே பாடசாலையிலுள்ள உதவி ஆசிரியர்களின் நிலையை விடச் சற்றுக்கீழ்ப்பட்டதாகவேயிருந்தது." யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்பட்ட கோயிற்பற்றுப் பாடசாலை களுள் கட்டைவேலி கோயிற்பற்றுப் பாடசாலைகளும் ஒல்லாந்தர்கால கல்வி முகாமைத்துவத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தம்பசிட்டி - "புலோலி எல்லைக் கிராமங்களின் மத்தியில் மாயக்கை (மாயக்குகை)யில் அமைந்திருந்த துலுக்கன் கோட்டை (தெலுக்கன் - மொழிபெயர்ப்பாளன்) ஒல்லாந்தர் கால கல்வி முகாமைத்துவத்தின் ஒரு கேந்திர நிலையமாகத் தொழிற் பட்டிருந்தது என்பதை அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தொல்லியல் எச்சங்களால் அறிந்துகொள்ள முடிகிறது.
கொழும்பு கொமாண்டரியில் கல்வி :
ஒல்லாந்தர் காலத்தில் கொழும்பு ஆணைப்புலத்திலுள்ள பாடசாலை களின் தொகை ஆண்டுதோறும் ஒழுங்காக அதிகரித்துக் கொண்டு சென்றது. சில காலங்களில் மட்டும் அரசியல் சூழ்நிலை காரணமாக (கல்விக்கு) சில தடைகள் ஏற்பட்டன. அங்கு மாணவர்களிடையே மட்டுமன்றி, கற்பித்த ஆசிரியர்கள் இடையேயும், பாடசாலைகளுக் கிடையே காணப்பட்ட தரத்திற்கிடையேயும் வேறுபாடுகள் அதிகம் காணப்பட்டன. அவ்வாறு பாடசாலைகளிடையே தரவேறுபாடு காணப்பட்டமைக்கும் திறமையற்ற வகையில் கல்வித்தரம் காணப் பட்டமைக்கும் ஆசிரியர்களின் அசிரத்தையே காரணம் என ஸ்கொலார்ச் சென்னின் அறிக்கை தெரிவிக்கின்றது.
"யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட செமினரி தனது ஆரம்ப காலத்திற் பெருவெற்றியடைந்தமையினால் அதே முறையில் கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய இடங்களிலும் செமினரிகளை நிறுவ ஆட்சிச்சபை முடிபு செய்தது. 1690ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதியன்று நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய கொழும்பு செமினரி நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் வணக்கத்திற்குரிய சைமன் கட் என்பவர் அதன்
முதல்வராகக் கடமையாற்றினார்."
பாடவிதானம் தோற்றத்திலும் நோக்கத்திலும் மேனாட்டுக் கல்விமுறையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனவே அது 249

Page 128
உள்ளூர் மக்களுக்கு ஏற்றதாக அமையவில்லை என்பது வெளிப்படை எதிர்பார்க்கப்பட்ட உன்னததிலையை அது அடையாததற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கலாம். செமினரியில் போதிக்கப்பட்ட கல்விநெறி உயர்தரம், குறைந்த தரம் என இரு தரங்களாகப் பகுக்கப் பட்டிருந்தது. உயர்தரக் கல்வி ஒல்லாந்து மொழியில் போதிக்கப்பட்டது. இக்காரணத்திற்காக உயர்தரத்தில் ஒல்லாந்தமொழியின் இலக்கணமும், எழுத்துப் பயிற்சியும், உள்ளூர் மொழியிலிருந்து ஒல்லாந்த மொழிக்கு மொழிபெயர்த்தெழுதும் முறையும் விசேட கவனம் பெற்றன. உயர்தரத்தின் மேல்வகுப்புக்களில் கிரேக்க மொழியும், எபிரேய மொழியும் கற்றுக் கொடுக்கப்பட்டின. மிக உயர்ந்த வகுப்பில், கி.பி 1738ஆம் ஆண்டில் இலத்தீன் போதனை மொழியாக்கப்பட்டது. கிறிஸ்தவ ஷேவியலிலும் தருக்கவியலிலும் மாணவர்கள் பரீட்சிக்கப்பட்டனர். உள்ளூர் மக்களுடன் வாதிட்டுப் புறச்சமயத் தத்துவங்கள் தவறானவை என்று நிரூபிப்பதற்கு மாணவர்களைப் பயிற்றுவதே அவர்கட்கு அளிக்கப்பட்டபோதனையின் இயல்பாகவிருந்தது. சில மாணவர்கள் 9500 ஒல்லாந்த மொழிப் பதங்களை மனனம் செய்து வைத்திருந்தனர் என ஒர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதிலிருந்து, எப்படியான கல்விமுறை பின்பற்றப்பட்டது என்பதனை ஒரளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.
"கி.பி. 1737ஆம் ஆண்டில்கொழும்பில் ஒல்லாந்த அச்சகம் ஒன்று நிறுவப்பட்டதன் பின்பு சிங்கள மொழியில் அசாதாரண அறிவு பெற்றிருந்த வண. ஜே. பி. வெட்செலியூஸ் என்பவரின் மதநூல்கள் பல பாடநூல்களாக வெளியிடப்பட்டன. இதே காலத்தில் ஐரோப்பிய வம்சாவழியினரான மாணவர்களையும் செமினரியில் சேர்த்திருந்தார்கள். கி.பி. 1744ஆம் ஆண்டிற் சிறந்த மாணவர்களில் இருவரான ஏபிரகாம்ஸ் என்னும் ஒரு சிங்களவரும், ஜோக்கிம் பிபிராண்ட்ஸ் என்னும் ஒர் ஐரோப்பியரும் லைய்டனிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கச்
செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காலி ஆணைப்புலத்லுள்ள கோவிற்பற்றுப் பாடசாலை :
"கொழும்பு, யாழ்ப்பாண கொமாண்டரிகளை விட காலி, மாத்தறைக் கொமாண்டரிகளில் தொகையிலும், திறமையிலும் குறைந்த பாடசாலைகளே இருந்தன. காலியும், மாத்தறையும் பெளத்த மதத்தின் கோட்டைகளாக திகழ்ந்தமையால் தொல்லை கொடுக்கும் பிரதேசங் களாகக் கருதப்பட்டன. அப்பகுதிப் பாடசாலைகளைப் பற்றிய ஸ்கொலார்ச்சென்னின் அறிக்கைகள் குற்றப் பத்திரிகைகள் போல் காட்சியளித்தன. மக்களின் எதிர்ப்புக் காரணமாக பரிசோதகர்கள் சில
250

சமயங்களில் பாடசாலைக்குச் சென்று பார்வையிடமுடியாதிருந்தது. கி.பி. 1731ஆம் ஆண்டில் ஒரு முறை வருடாந்தப் பரிசோதனை வைபவத்தில் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. (பரிசோதகர் ஸ்கொலார்ச் சென் தடிகளினால் தாக்கப்பட்டனர்.) ஆசிரியர்கள் தமது பணியைச் செய்வதற்கு கிராமவாசிகள் இடையூறாகவிருந்தனர். பல கோயிற் பற்றுப் பாடசாலைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை."
இவ்வாணைப்புலத்திலுள்ள பாடசாலை மேற்பார்வை செய்யும் பணியை பிரதேசப் பாடசாலைச்சபை செய்து வந்தது. மற்ற ஆணைப் புலங்களில் நடைபெற்றவாறே இங்கேயும் வருடாந்தப் பரிசோதனைகள் நடைபெற்றன. சில பாடசாலைகள் ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் முழுவதும் இயங்கவில்லை. முதலிலே திறக்கப்பட்டவை சிலகாலம் மூடப் பட்டிருந்து, மறுபடியும் திறக்கப்பட்டன. கோட்டைக்குள்ளிருந்த மாத்தறை உயர்பாடசாலைகள் நாணயக்கார அல்லது அப்புஹாமிகளின் பாடசாலைகள் என வழங்கப்பட்டன. சிங்களக் கனவான்களின் அல்லது கொம்பனி உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்காக அப்பாடசாலை நிறுவப்பட்டது. அப்பாடசாலை தனது ஆரம்ப நிலையை வெகுவிரைவில் இழந்துவிட்டது என்பதனை கி.பி. 1760ஆம் ஆண்டில் ஸ்கொலார்ச்சென் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அப்புஹாமி களின் பாடசாலை என வழங்கப்பட்ட போதிலும் உள்ளூர்க் கனவான் களின் பிள்ளைகள் அங்கு காணப்படவில்லை என்றும். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளே பெரும்பாலும் கல்வி கற்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. குறைந்த சாதிப்பிள்ளைகளுக்கென கோட்டைக்கு வெளியேயும் பாடசாலையொன்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒல்லாந்தர் காலத்து இலக்கிய வளர்ச்சி :
ஒல்லாந்தர் இலங்கைத்தீவின் மீது தமது அரசியல், இராணுவ அடிப்படையிலான மேலாதிக்கத்தினை நிலைநிறுத்திய போது வகுத்த உள்நாட்டுக் கொள்கைகளே இங்கு சுதேச மொழிகளையடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் தோற்றம் பெற்றமைக்கு ஏதுவாயின. சுதேச மொழிகளின் உபயோகத்தின் பின்னணியில் சுதேச மூலவளங்களைப் பயன்படுத்தியவாறு ஒல்லாந்தர்தமது பொருளாதாரமுகாமைத்துவத்தினை முன்னெடுத்துச் சென்றிருந்தனர். அதன் விளைவாக சிங்கள, தமிழ் மொழிகளில் இலக்கிய ஆக்கங்கள் பல எழுவதற்குரிய சூழ்நிலைகள் தோற்றமுற்றன. யாழ்ப்பாணம், வன்னிக் கொமாண்டரிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மொழியிலும், கண்டியப் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் சிங்கள மொழியிலும் இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்ற
251

Page 129
காலமாக இக்காலப்பரப்பு அமைந்தது. கி.பி.1687 ஆம் ஆண்டின் பின்பாக 2ஆம் விமலதர்மசூரியனுடைய வருகையுடன் கண்டி இராசதானியில் இலக்கியங்கள் எழுந்தன. கண்டித்தலதா மாளிகாவ என்னும் பெளத்தக் கோயில் இம்மன்னனுடைய காலத்திலேயே கட்டப்பெற்றது. சீயத்திலிருந்து பெளத்த குருமார்களை வரவழைத்து உபசம்பதச் சடங்குகள் பலவற்றை இம்மன்னன் நடாத்துவித்தான். இவனது காலத்திலேயே வண ஜோசப்வாஸ் என்றழைக்கப்படட் கத்தோலிக்க பாதிரியார் கண்டியில் தங்கியிருந்து அருஞ்சேவையாற்றி வந்தார். 2ஆம் விமலதர்மசூரியனைத் தொடர்ந்து அவனது மகன் நரேந்திரசிங்கனும், அதன்பின் கீர்த்தி பூரீ இராஜசிங்கனும் கண்டிய சிம்மாசனத்தை அலங்கரித்திருந்தனர். கீர்த்தி பூரீ இராஜசிங்கன் காலத்தில் வாழ்ந்த சரணங்கரதேரர் என்ற பெளத்தமத தத்துவஞானி பல நூல்களுக்குரிய கர்த்தாவாக விளங்கினார்.
சரணங்கரரின் இலக்கியப் படைப்புக்களில் பின்வரும் மொழி பெயர்ப்புக்கள் காணப்படுகின்றன. வைத்திய நூலான பேசஜ்ஜமஞ்சூசா - சன்னய போதிவம்ச - சன்னய பிரித் - சன்னய இவை தவிர, அவர் சாரார்த்தசங்கிரய என்னும் நூலையும், புத்தரைப் புகழும் முனிகுணாலங்காரய, கெளதமபத்தர் துறவி சமேதரராகப் பிரிந்தது முதல், ஞானஒளிபெற்ற சித்தார்த்தராகப் பிறந்தது வரையில் அவரது பழம் பிறப்பு வரலாறு கூறும் அபிசம்போதியலங்கார என்னும் இருபாளி நூல்களையும் எழுதியுள்ளார்கள். பாளிமொழியில் வேற்றுமை விகற்பம் பற்றிக்கூறும், ரூபமாலா என்னும் நூலை இவரே எழுதியுள்ளார். சரணங்கரரின் சீடர்கள் பலரும் நூல்கள் எழுதியுள்ளார்கள். அவர்களுள் அயித்தாலியத்தே லேகம என்பவர் சங்கராஜரின் புனித வாழ்க்கையைப் பற்றி சங்கராஜ பூரீ சாதுசரியாவ என்னும் நூலையும் அந்நூலின் செய்யுளமைப்பான சங்கராஜவத என்னும் நூலையும் எழுதினார். சாசனாவ தீர்னய என்னும் மற்றொரு நூல் சரணங்கரரின் தலைமையில் இருந்த பிக்குகளும் பிரதானிகளும் எவ்வாறு மன்னைக் கொன்று, சீயத்திலிருந்து ஒர் இளவரசனை அரசுகட்டில் ஏறுவதற்கு முயற்சி செய்தார்கள் என்னும் கதையைக் கூறுகிறது. கினிகத்பிட்டியே சங்கரகித என்பவர் தெருவன் மாலா (மும்மணி மாலை) என்ற நூலையும், சாலியலே மணிரதன என்பவர் பிராதிகாரியசதகய (அற்புதங்கள் பற்றிய 100 செய்யுட்கள்) என்னும் நூலையும், கம்முல்லே ரத்னபால என்பவர் விமானவத்து (தெய்வமாளிகையின் கதைகள்) என்ற நூலையும் எழுதினர். விமானவத்து என்ற நூலில் இரண்டாம் இராஜசிங்கன் ஆட்சிக்காலம் வரையில் இலங்கையில் பெளத்த மதம் எதிர்நோக்கியிருந்த
252

இன்னல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கண்டியர் காலத்து சாதாரண உரைநடையில் சங்கதச்சொல்லும் பாளிமொழிச் சொற்களும் கலந்து எழுதப்பட்ட ஒரு நூல் சர்வஞ்ஞ குணாலங்காரய என்பதாகும். இந்நூலில் புத்தசரண, பூஜாவலிய, ரத்னாகரய ஆகிய நூல்களிலிருந்து பொருள் கொள்ளப்பட், மேற்கோள்களாகக் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு
சிறப்பியல்பாகும்.
இக்காலத்துச் சமய மறுமலர்ச்சியானது இலக்கிய மறுமலர்ச்சியையும் தோற்றுவித்தது. அரச அவையின் ஆதரவோடு பிக்குகளும், பொது மக்களும் இதில் ஈடுபட்டனர். இராஜாதி ராஜசிங்கனே ஆற்றல்மிக்க ஒரு பாவலனாவான். இவன் போதிசத்துவர் கதையொன்றை 598.அழகிய செய்யுட்கள் கொண்ட அசதிசதாகவ என்னும்நூலாக எழுதினான். பிரபுக் களிடையே பக்தியும், கல்வியறிவும் மிக்க ஆண்களும், பெண்களும் இலக்கியப்படைப்புக்களில் ஆர்வம் காட்டினர். சாலியலே மணிரத்ன தேரர் என்பவர் மாத்தறை அபயரத்ன ஏகநாத முகாந்திரத்தின் வேண்டுகோளுக்கிணங்கி அவர் மகன் நினைவாகவும், அவனுக்குப் புண்ணியம் சேருமாறும் பவ்ழுதுஹர (கலிமுத்தாரம்) என்னும் நூலை எழுதினார். இன்னும் கொடயிட்டிய குலதுங்க அப்புஹாமி நரேந்திர சிங்கனின் மந்திரியாகிய விஜயக்கோனுடைய மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க மணிசோர ஜாதகக்கதையை சிங்களக் கவிதையாக்கினார்."
இக்காலத்தில் எழுந்த தூது இலக்கியங்களுள் கஹகுருளு சந்தேசய (பெண்குருவி விடுதூது) நீலகொபோ சந்தேசய (நீலப்புறா விடுதூது) கட்டகிரிலி சந்தேசய (இருவாய்க்குருவி விடுதூது) என்பவை முக்கியமானவையாகும். கஹகுருளு சந்தேசய என்ற நூல் கலகம என்ற இடத்திலிருந்து கதிர்காமத்திற்கு அனுப்பப்பட்ட தூதுச் செய்தியைக் கொண்ட நீண்டபாடலாகும். கட்டதிரிலி சந்தேசய என்னும் நூல் பூரீ பாதத்தில் உறையும் சமண தெய்வம் இந்நாட்டைக் காக்குமாறு கதிர்காமத்து முருகனுக்குதூதனுப்பிய செய்தியை விபரிக்கின்றது. "17ஆம் நூற்றாண்டின் பின் எழுதப்பட்ட சந்தேசயப் பாடல்கள் இலக்கிய நலனற்றவையல்ல, இவை சிங்களப் பாவலரின் திறமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. மேலும் இவற்றிற் காணப்படும் வரலாற்றுக் குறிப்புக்கள் பல சிறந்த, உயர்தர இலக்கிய நூல்களில் உள்ளவற்றைக் காட்டிலும் கூடிய பெறுமதியுடையனவாக விளங்குகின்றன. இப்புலவர்களுட் பெரும்பாலானோர் தமது சொந்தக் கற்பனையிலிருந்தே கவிதையாத்தனர். பண்டையப் புலவர்களிடமிருந்து கவிதைப் பொருளை கடனெடுக்கும் வழக்கம் இவர்களிடம் பொதுவாக இல்லை என்றே
253

Page 130
சொல்லலாம். இவர்கள் விபரிக்கும் உள்ளூர்க் காட்சிகள் இயற்கையோடு ஒத்தவையாதலின் வாசகர்களுக்குச் சமகாலத்துச் சமூக வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டுகின்றன’ என்று கொடகம்புற என்பவர் விதந்துரைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாத்தறையை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற இலக்கிய நூல்கள் பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும. நவநாமாவலிய என்ற நூலை ரத்னதேரரும், ஹெவதில் அபிதானவத என்பதனைச் சரணபாலதேரரும் எழுதினர். இவ்விருநூல்களும் சிங்களமொழி நிகண்டு ஆகும். யாப்பிலக்கண விதிமுறைகள் பற்றியும் இந்நூல்கள் விபரிக்கின்றன. வள்ளிமாதா கதாவ, சின்னமுத்து கதாவ, வளலுகதாவ, காஞ்சிமாலே, ஹரிச்சந்திர கதாவ, கலம்பாவதி கதாவ ஆகிய நூல்கள் தமிழ்ச்செல்வாக்கினை எடுத்துக் காட்டும் சிங்களமொழி இலக்கியங் களாகும். கொஹெம்பாயக்கம என்ற சிங்கள செய்யுள் இலக்கியமானது பத்தினி தெய்வத்தின் பெருமையைக் கூறுகிறது. இக்காலத்தில் மாத்தறையில உருவாகிய பிரஸஸ்தி இலக்கியங்களில் (மெய்க்கீர்த்தி இலக்கியங்கள்) தமிழ்ச்செய்யுள் யாப்பு முறைகள் அதிகளவு பின்பற்றப் பட்டிருப்பதனைக் காணலாம். குறிப்பாக இரண்டாம் இராஜசிங்கன் மீது இயற்றப்பட்ட பிரஸஸ்தி இலக்கியத்தின் தன்மையை இங்கு குறிப்பிடலாம். ரனஸ்கல்லேதேரர் இயற்றிய லோகோபகாரய என்னும் நீதிப்பாடல்களில் அடங்கியுள்ள பல செய்யுட்கள் திருவள்ளுவரின் குறள் வெண்பாக்களை மொழிபெயர்த்தவையாகக் காணப்படுகின்றன. ரதிரத்னாலங்காரய, வியோகரத்னமாலய போன்ற காம உணர்வுடைய நூல்களும் தமிழில் காமச்சுவையுடைய இலக்கியங்களிலிருந்து பலதரப் பட்ட அணிகளைப் பெற்றிருந்தமை புலனாகின்றது.
ஒல்லாந்தர் காலத்தில் தமிழ் இலக்கியம் :
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான ஒரு காலகட்டமாக ஒல்லாந்தர் காலம் அமைந்துள்ளது. ஏனெனில் சுதேச மொழிகளின் பாவனையில் தமிழ்மொழி ஒல்லாந்தரது ஆவணங்களில் முக்கிய இடத்தினைப் பிடித்திருந்தமையே ஆகும். 1658ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி தமது அரசியல் மேலாதிக்கத் தினை புரட்டஸ்தாந்து மதத்தினூடாக நிலைநாட்டி இந்துக்களையும் கத்தோலிக்கரையும் அடக்கியொடுக்கி இருந்தாலும், காலப்போக்கில் ஒல்லாந்தரது ஆதிக்கத்தை தமிழ் மக்கள் ஏற்றிருந்தமையால், அவர்களது அடக்கும் கொள்கை கைவிடப்பட்டு, சுதேசிகளுடன் ஒன்றிணைய வாய்ப்பு ஏற்பட்டது. அதனால் தமிழ்மொழியில் இலக்கியப்புலமை மேலும் வளர்ச்சியடையத் தொடங்கியது.
254

"யாழ்ப்பாண மக்களது வரலாற்று மரபு முறைகளைக் கொண்டு எழுதப்பட்டதும், யாழ்ப்பாண மக்களிடையே “வரலாற்றுப் பிரமாண நூலாகக் கொள்ளப்படுவதுமான" யாழ்ப்பாண வைபவமாலை, பிரசித்தி பெற்ற ஒல்லாந்தத் தேசாதிபதி மக்கரா (ஜோன் மக்காரேயாயிருக்கலாம்) என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க, மயில் வாகனப் புலவரால், கைலய மாலையிலிருந்தும், இன்னும் பழைய நூல்களிலிருந்தும் திரட்டிய விபரங்களைக் கொண்டு எழுதப்பட்டது. மாகனின் படையெடுப்பிற்குப் பிற்பட்ட காலத்துச் சரித்திரத்தைகூறும் இந்நூல் 1736ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இக்காலத்திற்குரிய இன்னொரு குறிப்பிடத்தக்க நூல் தேசவழமை என்பதாகும். இது தமிழ்மக்களின் பழக்க வழக்கமுறைகளைச் சுருக்கமாகக் கூறும்நூலாகும். சட்டவல்லுநராகிய தேசாதிபதி சைமன்ஸ் (1702 - 1706) யாழ்ப்பாணத்திசாவையை, மக்கள் பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பதிவு செய்யுமாறு பணித்தார். இவ்வாறு பதிவு செய்யப்பட்டதும், அந்த நூல்பற்றிய அபிப்பிராயம் தெரிவிக்குமாறு 12 முதலியார்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதும் 1707ஆம் ஆண்டு ஒல்லாந்த அரசாங்கத்தால் அது பிரகடனப்படுத்தப்பட்டது. இப் பன்னிருவரில் வில்வராய முதலியாரும் ஒருவராவர்.
வில்லவராய முதலியாருடைய மகனாகிய சின்னத்தம்பிப் புலவர் கல்வளையந்தாதி என்னும் பிரபந்தத்தையும், மறைசையந்தாதி என்றவொரு நூலையும் எழுதினார். நல்லைவெண்பா, நல்லையந்தாதி என்னும் நூல்களை எழுதிய சேனாதிராயர் முதலியார், பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்க மிசனெரிமாரால் அச்சிடப்பெற்ற தமிழ் அகராதியை தொகுப்பதில் முக்கியபங்கு கொண்டிருந்தார். முத்துக்குமார கவிராயர், விஸ்வநாத சாஸ்திரியார், வடமொழிப் பண்டிதராகிய ஞானப்பிரகாச சுவாமி என்போரும் ஒல்லாந்தர் மேலாதிக்கத்தின் தமிழ் மறுமலர்ச்சிக்கால இலக்கிய கர்த்தாக்களாக பங்களித்திருந்தனர்.
ஒல்லாந்தர் காலத்து யாழ்ப்பாணத்தில் நாடக நூல்கள் பலவும் எழுதப்பட்டன. பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசக்கதைகளும், தேவசகாயம் போன்ற கிறிஸ்தவமதக் கதைகளும் நாடக வடிவம் பெற்றிருந்தன. இவை நாடகங்களாகவும், விசாலங்களாகவும் எழுதப்பட்டு, நடிக்கப்பட்டன. கணபதிஐயர் என்பவர் அலங்காரரூப நாடகம், அதிரூபவதி விசாலம், வாலயீகநாடகம் என்பனவற்றை எழுதினார். முத்துக்குமாரப் புலவர், சமய நம்பிக்கைக்காக தமது உயிரையே ஈந்த தென்னிந்தியக் கத்தோலிக்கரான தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கையைப் பொருளாக வைத்து தேவசகாயு நாடகத்தை எழுதினார்.
255

Page 131
தெற்கிற் போலவே வடக்கிலும் ஒல்லாந்த அரசாங்கம் கிறிஸ்தவ நூல்கள் எழுதப்படுவதை ஊக்குவித்தும், ஆதரித்தும் வந்தது. வேத வினாவிடைநூல்கள், ஒல்லாந்த திருத்திய திருச்சபையின் வழிபாட்டுமுறை நூல்கள், திருச்சபையின் வரலாறு, பரிசுத்த வேதாகமத்தின் மொழிபெயர்ப்பு என்பன அரசாங்கத்தின் முழு ஆதரவோடும் எழுதப் பட்டு, அச்சிடப்பெற்றது. அவர்களின் பிரதம தமிழ் அறிஞராக, கொழும்பிலே ஒரு தமிழ்க்குடியிற் பிறந்த வண. பிலிப் - டீ - மெல்லோ விளங்கினார். இவர் தமிழ்மொழியிலும், வேதநூல்களிலும், பெற்றிருந்த புலமையினால் தேசாதிபதி வில்வம் போல்க் என்பார் இவரைப் போதகர் - டீ - மேல்லோ" என்றழைத்தார். ஒல்லாந்த திருச்சபையின் சமயகுரு என்னும் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதற் 'சுதேசி" இவராவார். இவர் புதிய ஏற்பாடு முழுவதனையும், பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியையும் மொழிபெயர்த்தார் (அல்லது திருத்தியமைத்தார்) 1753ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இவர் எழுதிய நூலாகிய சக்தியத்தின் ஐயம் வெளியிடப்பட்டது. இவர் தமிழ்மொழி களிலுள்ள சிறந்த நிகண்டாகிய சூடாமணி நிகண்டைத் திருத்தியும் விரிவுபடுத்தியும் அமைத்தார்."
முதல் ஐரோப்பிய வடமொழிப்புலவரும், தமிழ் உரைநடையின் ஆரம்ப கர்த்தாக்களிலொருவருமான பிதா ரொபேர்ட் - டீ - நொபிலி எஸ். ஜே. அவர்களின் புலமை சான்ற தமிழ் உரைநடைநூல்களும் பிதா கொன்ஸ்டன்டைன் பெஸ்கி, எஸ். ஜே. அவர்களின் புகழ்மிக்க தமிழ்க் காவியமாகிய தேம்பாவணியும், 18ஆம்நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கத்தோலிக்க மக்கள் நன்கறிந்தவையாகும். சிங்களக் கத்தோலிக்க இலக்கியத்தைத் தோற்றுவித்த பிதா ஐகோமேகொன்சால்வெஸ் தமிழிலும் 15நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் மிகவும் சிறப்புடையவை வருமாறு : தேவஅருள், வேதபுராணம், வியாகுல பிரசங்கம் சுவிசேஷ விரித்துரை, சத்தியவிரோத சங்காரம், தேவப்பிரசையின் திருக்கதை ஆகியனவாகும்.
"மக்கள் நயக்கும் ஒருவகை இலக்கியமான அம்மானைகள் பல இக்காலத்துக் கத்தோலிக்கர்களால் இயற்றப்பட்டன. புனித நிக்கோலஸ் மீது கோவா மதகுரு பேதுரு சாந்தோ அவர்களின் காலத்தில் பெயர் அறியப்படாத ஒரு புலவரால் ஓர் அம்மானை பாடப்பட்டது. பிதா ஞானப்பிரகாசர் அவர்களால் காலம் குறிக்கப்படாத வகையில் 20 அம்மானைகள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. மாந்தோட்டையைச் சேர்ந்த யுவான் கொஸ்தானின் மகனாகிய டேவிட் என்பவரால்
256

ஒல்லாந்தர் காலத்திற்குரிய, துயராந்த வரலாற்று நிகழ்ச்சியொன்றை வைத்து எழுதப்பட்ட பூதத்தம்பி நாடகம் ஒரு கவர்ச்சிமிக்க
நாடகமாகும்.
சிங்கள மொழியில் கிறிஸ்தவ இலக்கியங்கள் :
ஒல்லாந்த அரசாங்க அறிஞர்கள் சிங்கள இலக்கியத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டு புதிய ஏற்பாடு முழுவதனையும், பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியையும் மொழி பெயர்த்தமையாகும். மொழி பெயர்க்கையில் மூல மொழிநடையில் கவனம் செலுத்தப்பட்டதால் தெளிவு, அழகு என்பவை பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ், போர்த்துக்கேயம், இலத்தீன் ஆகிய மொழிகளிலிருந்து கடன் வாங்கிய பல சொற்கள் காணப்படுகின்றன.
வண. கொன்சால்வெஸ் சிங்கள கிறிஸ்தவ இலக்கிய உலகிற்கு பெருந்தொண்டாற்றியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தீவின் பல பகுதி களுக்கும் சென்றுவந்த ஒர்அறிஞர் என்ற வகையில் சமூகத்தில் பலதரப்பட்ட அந்தஸ்துடன் விளங்கியவர்களின் தொடர்பு அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படக் காரணமாகியது. வண. கொன்சால்வெஸ் 42நூல்களை ஆக்கியிருந்தார் எனவும், இவற்றில் 22நூல்கள் சிங்கள மொழி யிலும், 15 நூல்கள் தமிழிலும், 4நூல்கள் போர்த்துக்கேய மொழியிலும், 1 நூல் ஒல்லாந்த மொழியிலும் ஆக்கப்பட்டிருந்தன எனப்பதிவு செய்துள்ளனர். ஆதாரபூர்வமான மரபு வழக்கின்படி இவர் சிங்களத்தில் மேலும் 4 நூல்களையும், தமிழில் மேலும் ஒன்றையும் எழுதியிருந்தார் எனத் தெரிய வருகின்றது. சிங்கள மொழியில் உடைநடையிலும், செய்யுளிலும் இவர் நூல்களையாத்தார். இவ்வாறே கத்தோலிக்க மத போதனைக்கும், மனப்பண்பாடுக்கும் பூரணமான இலக்கியம் கிடைக்க வழிசெய்தார். பரிசுத்த வேதாகமம், இறையியல், அருட்குரவர் வரலாறு, துறவறம், பக்திமார்க்கம், பாவமன்னிப்பு ஆகிய துறைகளில் உரைநடை நூல்களையாத்தார். இவருடைய சிறந்த உடைநடை நூல்களுள் தேவவேத புராணய, சுவிசேஷ விசாதனய, தவநிதி விசர்னய
என்பவை முக்கியமானவையாகும்.
வண. கொன்சால்வாஸ் 4 அகராதிகளைத் தொகுத்துள்ளார். இவற்றுள் ஒன்று 324 பக்கங்களைக் கொண்ட போர்த்துக்கேய சிங்கள - தமிழ் அகராதியாகும். இதில் ஒரு பக்கத்தில் சராசரியாக 32 போர்த்துக்கேயச் சொற்களும், அவையொவ்வொன்றிற்கும், 1 முதல் 8 வரையான தமிழ்ச் சொற்களும், 1 முதல் 15 வரையான சிங்களச் சொற்களும் காணப்படு கின்றன. இது இலக்கியச் சொற்களையும், பேச்சு வழக்குச் சொற்களையும், கிராமியச் சொற்களையும் கொண்ட ஒரு களஞ்சியமாகும்.
257

Page 132
வண. கொன்சால்வாஸ் இற்குப் பின்னர் 1708இல் சந்தியாகோ என்பவர் 266 செய்யுட்களைக் கொண்ட செய்யுள் இலக்கியம் ஒன்றை உருவாக் கினார். அதன் பின்னர் விஜய சுந்தர ஹெலேனா கதாவ என்ற நூல் கர்ணபரம்பரைக் கதைகளையும், வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும் உள்ளடக்கியுள்ளமை அவதானிக்கத்தக்கது. 1176 செய்யுட்களைக் கொண்ட பாலசந்த கதாவ என்ற இலக்கியத்தின் ஆசிரியர் பெயர் தெரியாவிடினும், போர்த்துக்கேய புனைகதை ஒன்றை தழுவி எழுதப் பட்டமையின் பின்னணியில் இவ்விலக்கியம் சிங்கள இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதனைக் காண்கின்றோம்.
சிங்கள மொழியில் எழுந்த நாடக இலக்கியங்களைக் குறிப்பிடுவதும் அவசியமாகும். 18ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில், கத்தோலிக்கர் தமிழ் நாடகத்திலிருந்து பெற்ற ஊக்கத்தினாற் போலும், தமது கவனத்தைச் சிங்கள நாடகங்களிலுே திருப்பினர். இவற்றுள் இன்று எமக்குக் கிடைக்கும் மிகப் பழைய உதாரணமாக மாகையின் கதையாகிய ராஜ - துன் - கட்டுவ என்பதாகும். இதனை ஆக்கியவர் சிலாபத்தைச் சேர்ந்த எம். கபிரியல் பெர்னாண்டோ ஆவார். . மேலும் கபிரியல் பெர்னாண்டோ உயிர்த்தியாகியாகிய புனித மாகிரட்டின் வாழ்க்கையை மகிரிதா நாடகம் எனும் நூலாகவும் எழுதினார். அந்நூற்றாண்டின் இறுதியில் கொழும்பைச் சேர்ந்த கத்தோலிக்கரான பிலிப் சிஞ்சோ என்பவர் சமயச் சார்பானவையும், உலகியற் சார்பான வையும் ஆன பல நாடகங்களை எழுதினார். . இவருடைய தெனக் கூறப்படும் நாடகங்களுள் சிம்ஹவல்லி நாடகம், சுலம்பாவதி நாடகம், சூசெயு நாடகம், யெசோபத் நாடகம், ரஜதுங் கட்டுவ என்பன சிலவாகும்.
ஒல்லாந்தா காலக் கோட்டைகள் :
ஒல்லாந்தர் கட்டிடக் கலையில் மிகச் சிறந்த விற்பன்னர்களாய் இருந்தனர். இதற்குக் காரணம் அவர்களது தாய் நாட்டில் நிலத்தின் பெரும்பகுதி சதுப்பு நிலமாகவும், கடலாகவும் இருந்த சூழ்நிலையில், சதுப்புநிலங்களையும், கடல் நிலங்களையும் மீட்டு பாரிய கட்டிடங்களை அமைக்கக் கற்றுக் கொண்டமையாகும். இலங்கைத் தீவில் அவர்கள் சிங்களவர்களுடைய எதிர்ப்பை மாத்திரமன்றி, போர்த்துக்கேயர், பிரஞ்சுக்காரர், பிரித்தானியர் ஆகியோரின் எதிர்ப்பையும், தாக்கத்தையும் தணிப்பதற்காக பலம் வாய்ந்த கோட்டைகளைக் கட்ட வேண்டியிருந்தது. ஏற்கனவே போர்த்துக்கேயரால் கட்டப்பட்டிருந்த கோட்டைகளைத் திருப்பியமைத்து, மீள் புனர்நிர்மாணம் செய்யும் பொழுது ஐரோப்பாவில்
258

17ஆம்நூற்றாண்டில் புதிய முறையில் விசாலமான கொத்தளங்களோடு, பீரங்கிகளைச் சுலபமாக வைத்து வெடிக்கக்கூடிய மாதிரிக் கோட்டையின் முடக்குகளில் முனைப்புக்களையும் அமைத்துக்கட்டப்பட்ட கோட்டை களைப் பின்பற்றினார்கள். கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஒல்லாந்தர் தமது பெரிய கோட்டைகளைக் கட்டினார்கள். மாத்தறையில் உள்ள கோட்டையை வான் எக் என்ற தேசாதிபதி கட்டுவித்திருந்தான். புத்தளத்தில் நடைபெற்ற ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரத்தை மேற்பார்வை செய்வதற்காக கற்பிட்டியில் ஒரு கோட்டை கட்டப்பெற்றதும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வாணிபத்தினை முகாமைத்துவப்படுத்துவதன் பொருட்டு ஊர்காவற்றுறையில் கோட்டை யொன்று அமைக்கப்பட்டது. நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், களுத்துறை ஆகிய இடங்களிலும் கோட்டைகள் அமைக்கப்பட்டன. கண்டியருடைய படை அணிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக உள்ளூரிலும் கோட்டைகள் அமைக்கப்பட்டன. வெடியரசன் கோட்டை (நெடுந்தீவு), துலுக்கன் கோட்டை (மாயக்கை - தம்பசிட்டி), இயற்றாலைக் கோட்டை (வரணி) ஆகியன யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர்களது உள்ளூர்க் கோட்டைகளாக விளங்கின்.
ஒல்லாந்தர் கால வீட்டுக் கட்டிடக் கலை மரபுகள் மிகவும் தனித்துவ மானவையாகவும, இலங்கையின் வதிவிடக் கட்டிடக் கலை மரபில் பாரிய மாற்றங்களைப் புகுத்திய கட்டிடப் பொறிமுறையாகவும் வளர்ச்சி கண்டது. அகண்ட விறாந்தைகள், உயர்ந்த முகடுகள், தனித்துவமான வளைவுகள் (Arch) தனித்துவமான கொரிந்தியின் தூண்கள், முகப்பின் இருமருங்கிலும் இலச்சினைகள் என ஒல்லாந்தர் காலத்து வதிவிடங்கள் புதுப்பொலிவு பெற்றுக் காணப்பட்டன. இலங்கை மக்களின் வதிவிடக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒல்லாந்த கட்டிடக் கலைஞர்களது கைவண்ணம் உள்ளூர் மூலப்பொருள்வளப் பிரயோகத்தில் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அதாவது கடற்கரையோரப் பிரதேசங்களில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட கடற்பவளக் கற்களால் (Coral Stones) வீடுகளையும் கோட்டை - கொத்தளங்களையும் அமைக்கும் முறையை இலங்கை மக்களுக்கு மீளறிமுகம் செய்து வைத்தவர்கள் ஒல்லாந்தரேயாவர். (முதன் முதலாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட சகாப்த காலங்களில் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களிடம் கடற் பவளக் கற்களை உபயோகித்து கட்டிடங் களை அமைக்கும் முறை காணப்பட்டது.) முருகைக்கல் அல்லது கடற் பவளக் கற்களை மிகவும் இலகுவான தொழில்நுட்பத்தின் மூலம் அரிந்து, அந்து - சந்து நீக்கி, கட்டமைப்பான பல்வேறு அளவுகளையுடைய
259

Page 133
கற்தளங்களாக்க முடியும் என்பதனாலேயே ஒல்லாந்தர் இலங்கையில் தமது கட்டிடப் பொருளாக முருகைக்கற்களைப் பாவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்த வரையில் கட்டிட மூலப் பொருட்களுக்கானதட்டுப்பாடு இருந்தமையால், ஒல்லாந்தர் இங்கு தமது கட்டிட நிர்மாணத் தேவைகளுக்காக கடலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட முருகைக்கற்களையே பாவித்தனர். இலங்கையின் ஏனைய பிராந்தியங் களில் கட்டிட மூலப்பொருட்களின் தன்மை வேறுபட்டிருந்தமையைக் காணலாம். வீடுகளின் தளங்களுக்கு நெதர்லாந்து, ஹொலன்ட் பட்டேவியாஇடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாபிள் கற்களை பதிட்டம் செய்யும் வழக்கம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விதிகள் - டச்சு றோட்டு :
ஒல்லாந்தர் கால இலங்கைப் பண்பாட்டியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக அமைந்தது விதிகளாகும். வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கையில் வீதிகள், வண்டிற் பாதைகள், நெடுஞ்சாலைகள் என்பன அமைக்கப்பட்டிருப்பதும், ஒல்லாந்தர்காலத்திலேயே அவை காத்திரமான தோற்றத்தையும், பங்களிப்பினையும் பெற்று மக்கள் வாழ்வில் பிரதானமான தொடர்பு ஊடகமாகத் திகழ்ந்தன என்பதும் கரையோர மாகாணங்களிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட வீதிகள் மக்களது மனைகளையும், சந்தைகளையும், சவ அடக்க மையங்களையும், தேவாலயங்களையும் இணைத்திருந்ததோடு கடற்கரையோரத்துறைமுகப்பட்டினங்களையும் அவை கொடுத்திருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு இடச் வீதி அமைக்கப்பட்டிருந்தது. இவ்வீதி பூநகரியூடாக மன்னாரைச் சென்றடைந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவு ஊடாக பழைய முறுகண்டிக்கு ஒரு இடச்சு வீதி அமைக்கப்பட்டிருந்தது. அவ்வீதி பழைய வட்டக்கச்சியூடாக இராமநாதபுரத்தை இணைத்த வண்ணம் காட்டு மார்க்கமாக பழைய முறுகண்டி நோக்கிச் செல்கின்றது. இடச்சு வீதியின் இன்னொருமார்க்கம் கனகராயன் குளத்திலிருந்து மன்னாரை நோக்கி காட்டுமார்க்கமாகச் செல்கிறது. இற்றைவரைக்கும் இப்பாதையினூடாக மாடுகளை, எருது களை கால்நடையாகக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்ற வண்ணமேயுள்ளன. வடமராட்சியிலுள்ள டச் வீதி இப்பொழுது நாச்சிமார் வீதி என நாமமிடப்பட்டுள்ளது. இவ்வீதி ஒல்லாந்தர் காலத்தில் பொலிகண்டித்துறைமுக நகரத்தையும் வல்லை உப்புக் கழியையும் எள்ளக்குளம் (எல்லாளன்குளம்) என்ற கிராமத்தினூடாக இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறை வெளிச்ச வீட்டுப் பரப்பிலிருந்து ஆரம்பிக்கும் கரையோரப் பாதை சுண்டிக்குளம் ஊடாகச்
260

சென்று, பின்னர் கரைச்சி, முல்லைத்தீவு, பின்னர் அங்கிருந்து கதிர்காமம் வரைக்கும் உள்ள முக்கியமானதுறைமுக நகர்களையும், கிராமங்களையும் இணைத்திருப்பது ஒல்லாந்தா காலத்திற்கு முன் நிகழ்ந்த வாணிப - பண்பாட்டு நடவடிக்கைகளின் விளைவினால் ஏற்பட்டது எனக் குறிப்பிடப்பட்டாலும், ஒல்லாந்தர் காலத்தில் அவை மீண்டும் புதுப் பொலிவு பெற்று விளங்கின என்றால் அது தவறாகாது.
தேசவழமை - சட்டத் தொகுப்பு :
கி.மு 3500 ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோனிய நாகரிகத்தில்ஹமுரபி என்ற மன்னன் முதன்முதலாக மக்களுடைய இலகுவான வாழ்க்கை முறையை கருத்தில்கொண்டு சட்டக்கோவை ஒன்றினை உருவாக்கியமை போன்று ஒல்லாந்தர் ஆட்சிக்கால இலங்கையிலும் மக்களுடைய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்க வரன்முறைகள் போன்றவற்றை அடிப் படையாகக் கொண்டு சட்டக்கோவை (Code of Law) ஆக்கப்பட்டது. அச்சட்டக்கோவைகள் யாழ்ப்பாண வழக்கில் தேச வழமை எனவும், மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் எனவும், மலை நாட்டில் கண்டியர் சட்டம் எனவும், இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மத்தியில் முகமதியார் சட்டம் எனவும் வழங்கப் பெறுவதனைக் காண்கின்றோம்.
இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூலில் வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன் ஒல்லாந்தர் காலத்தில் தொகுக்கப்பட்ட அச்சட்டத் தொகுப்புக்கள் பற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார். அந்நூலில் எல்லாமாக ஆறுபகுதிகள் உள்ளன. அவையாவன தேசவழமைச் சட்டம், புத்தளம், கற்பிட்டி ஆகியனவற்றின் தேச வழமையும் சாதிவழமைகளும், திருகோணமலைத் தமிழரின் வழமைகள், முக்குவர் சட்டம், இஸ்லாமியரின் சட்டம், பரதவர் சாதிவழமை என்பனவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தேசவழமை வட இலங்கையில் வாழும் தமிழருக்குரிய சட்டநெறியாகும். அது இன்றும் நடைமுறையில் உள்ளது. தேச வழமை யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டது. போர்த்துக்கேயரின் ஆட்சியிலும், பின்பு ஒல்லாந்தக்காரரின் ஆட்சியிலும் அமைக்கப் பட்டிருந்த நீதிமன்றங்கள் தேச வழமையின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கி வந்தன. அது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்திலே திசாவைப் பதவியைப் பெற்றிருநத் கிளாசு ஈசாக்கு (Class Isaacs) என்பவர் அங்குள்ள முதலியார்களின்
261

Page 134
உதவியுடன் அந்தப் பணியை நிறைவேற்றினார். தேச வழமை குறித்து அவர் மேல்வருமாறு எழுதியுள்ளார்.”
"இலங்கைத் தீவிலுள்ள யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில் நடந்து வருகின்ற வழமைகள், இவைகள் உலாந்தாக் கொம்பனியார் காலத்துத் தேசவழமைகளுங் கட்டளைகளுமெனப்படும். இந்தத் தேசத்தாருடைய சென்ம சுபாவமான வழமைகளின் படி நியாயத் தலங்களில் நீதி செலுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. அவ்வழமைகளாவன முதுசொம், மஞ்சணிர், நன்கொடை, கொள்வனவு, விற்பனவு, காணிகள், தோட்டங்களை ஒற்றி வைத்தல், மீழுதல், அறுதிவிற்றல் முதலானவைகளாம். இவைகள் எல்லாவற்றையும் கொழும்பில் உத்தம மகத்துவம் பொருந்திய எங்கள் தேசாதிபதியாகிய கொருநீலியு சுவாம் சீமோன் அவர்களும் அவ்விடத்திலுள்ள ஆலோசனைத் தலைவர்களும் இவ்விடத்திற்கு எழுதியனுப்பி வைத்த காகிதத்திலடங்கிய கட்டளைப் பிரகாரம் நான் இவ்விடத்தில் முப்பத்தைந்து வருஷ காலமளவாக இத்தேசத்தாருடனே ஊடாடி சீரித்துப் பழகி, அறிந்து கொண்டபடிக்குத் திரட்டி எழுதிக் - கோவைப்படுத்தினேன்.”
“இது தேசவழமையைக் கோவைப்படுத்தி ஆவணமாகப் பதிவு செய்த அதிகாரியான கிளாசு ஈசாக்கு அதற்கு முன்னுரையாக எழுதிய குறிப்பு. தேசவழமை யாழ்ப்பாண இராச்சியத்திலே நெடுங்காலமாக நிலவிவந்த வழமைகளின் தொகுப்பு, அந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டே உலாந்தக்காரரின் காலத்திலே நீதித்தலங்களில், நிலம், சொத்துரிமை முதலானவை சம்பந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டன எனுங் கருத்துக்கள் அக்குறிப்பினுள் அடங்கியுள்ளன. மேலும் தேசவழமை நிலம், பயிர்ச்செய்கை, சொத்துரிமைகள், சொத்துடமைகள், கொடுக்கல் - வாங்கல், கொள்வனவு - விற்பனவு முதலான மக்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகின்ற பொதுவான விடயங்கள் பற்றியவை, என்பதும் அவருடைய குறிப்பிலே வலியுறுத்தப்படுகின்றது.
“தேச வழமை 1707ஆம் வருடத்திலே சட்டமாக அரசாங்கத்திலே பிரகடனப்படுத்தி, வெளியிடப்பட்டது. அக்காலம் முதலாக அது வழக்கிலுள்ளது. இலங்கையில் வழக்கிலுள்ள சட்டநெறிகளுள் அதுவே மிகப் பழமையானது என்பதுங் கவனத்திற்குரியது. தேச வழமையின் பிரதிகள் 1797ஆம் வருஷத்தில் பிரித்தானிய அதிகாரிகளினாலே வெளியிடப் பெற்றன. தேசவழமை என்னும் தலைப்புடன் ஹென் பூரீ பிரான்ஸிஸ் முத்துக்கிஸ்ன என்னும் வழக்கறிஞர் 1862இல் ஆங்கிலத்தில் ஒரு நூலைத் தொகுத்து வெளியிட்டார். அதிலே தேசவழமை, அதன்
262

ஆங்கில வாசகம், உலாந்தாக்கார அதிகாரிகள், 1707இல் யாழ்ப்பாண இராச்சியம் குறித்து வெளியிட்ட 72 கட்டளைகள், அரசாங்கத்தின் வேறு சிலகட்டளைப் பத்திரங்கள், 1801 -1860 ஆகிய காலப்பகுதியிலே தேச வழமையின் அடிப்படையில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களின் சாராம்சங்கள் என்பன அடங்கியுள்ளன, அந்த அரிய நூல் இப்போது கிடைத்தற்கரியதாய்விட்டது.”
"தேசவழமையிலே காணப்படும் மொழிவழக்கும் சொல்லாட்சியும் தனித்துவமானவை. இலக்கிய மரபிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடைப்பட்ட ஒரு வழக்கினை அது பிரதிபலிக்கின்றது. சமஸ்கிருத மொழிச்சொற்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. கடுமையான இலக்கண விதிகளுக்கமையவும் அது எழுதப்படவில்லை. சொற்களின் வடிவத்திலும், சொல்லாட்சியிலும் பிரதேச வழக்கினை அது பிரதிபலிக் கின்றது. தமிழ்மொழியை நன்கு கற்ற உலாந்தாக்காரரின் மேற்பார்வையில் அது தொடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டமையால் ஐரோப்பிய மொழிச் செல்வாக்கும் அதன் சொல்லாட்சியில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்."
'சமூக வழமைகளின் தொகுப்பாகவும் மொழிவழக்கினைப் பிரதிபலிக்கும் சாதனமாகவும் விளங்கும் தேசவழமையானது ஒரு வரலாற்று ஆவணம் என்ற வகையிலும், மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது, அதிற் பலவிடங்களிலே முற்காலத்து வழக்கு, நடவடிக்கைகள் என்பன பற்றிய குறிப்புக்கள் இடையிடையே வருகின்றன. தேசவழமையிலே விளக்கப்படும் முதுசொம், சீதனம், தேட்டம் என்றஆதன வகைகளைப் பற்றிய கோட்பாடுகள், புத்தளம், கற்பிட்டி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழரிடையிலுங் காணப் பட்டன. ஆனால் உரிமைகள் பற்றிய விபரங்களில் பல வேறுபாடுகள்
காணப்பட்டன.”
இவ்வாறு வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்ற நூலின் அறிமுகத்தில் தேசவழமையின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அதனை இலங்கைத் தமிழ் மக்களின் இருப்பிற்கான மூல ஆவணமாகக் கொள்ள வேண்டியுள்ள தேவையையும் வற்புறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்திய சேவைகள் :
இலங்கைத் தீவில் அனுராதபுர காலகட்டத்திற்குப் பின்னர்
வைத்தியத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்த காலப் பகுதி ஒல்லாந்தர்
ஆட்சிக்காலம் எனலாம். இக்கால கட்டத்தில் தீவு அடங்கலாகவும்
263

Page 135
மருத்துவ மூலிகைகள் பற்றிய ஆய்விலும், மூலிகைத் தோட்டங்களை அமைப்பதிலும் ஒல்லாந்து நிர்வாகம் மிகவும் ஆர்வம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வருடா வருடம் இலங்கையிலிருந்து மருத்துவ மூலிகைகளின் பெயர்ப்பட்டியல் அவ்வவற்றிற்குரிய மாதிரிகளுடன் (Spedmens) ஒல்லாந்து நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த முறைமையைக் காணும் பொழுது, ஒல்லாந்தர் இலங்கையில் மருத்துவ, வைத்திய சேவைத் துறைகளில் அக்கறை கொண்டிருந்தமை புலனாகிறது. ஹொலன்டிலுள்ள மிகப் பெரிய பரிசோதனைக் கூடமானது கீழை நாடுகளிலிருந்து வருடா வருடம் பெற்றுக்கொள்ளப்படும் மருத்துவச் செடிகள், இரசாயனப் பதார்த்தங்கள், வர்ணக்கூட்டுக்குரிய பிசின் வகைகள், சாந்து வகைகள், பறவைகள், மிருகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கொழுப்பு - எண்ணெய் வகைகள் போன்றவற்றை அடிப்படை மூலப் பொருட்களாகக் கொண்டு எண்ணற்ற மருத்துவ, கட்டிட, வர்ணப் பூச்சுக்குரிய பொருட்களை உற்பத்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட்கள் சுவடி நிலையத்தில் இலக்கம் 3416 என்ற அட்டவணையில் இலங்கையிலிருந்த லெய்டனுக்குக் கொண்டு செல்லப் பட்ட 169 வகையான மருத்துவச் செடிகளின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருப்பதனைக் காணலாம். இப்பெயர்கள் லற்றின், சிங்களம், தமிழ், டச்சு மொழி ஆகியவற்றில் பொறிக்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒல்லாந்தர்கால இலங்கையிலிருந்து தாவரவியற்துறையில் உயர் கல்வி கற்பதற்காக ஹொலன்ட்டுக்கு மாணவர்களை அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போல் ஹேர்மன் (Paul Hermann) என்பவரே இலங்கையிலிருந்து இத்துறையில் தேர்ச்சி பெற்ற முதலாவது தொடர் மாணவராவர். இம்மாணவரை ஒல்லாந்து கல்விப் புலமை யாளர்கள் மிகவும் பாராட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. போல் ஹேர்மன் 30 - ஜூன், 1640ஆம் ஆண்டு காலியில் (Hale Saxpny) பிறந்தார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தை 1670இல் பாடுவா (Padua) பல்கலைக்கழகத்தில் தாவரவியல்துறையில் பெற்றுக்கொண்டார். இவர் 1672க்கும் 1679க்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் இலங்கைக் கிளையில் பிரதான மருத்துவ உத்தியோகத்தராக பதவி வகித்திருந்தார். அவரது 33ஆவது வயதில் லைடனின் உள்ள தாவரவியல் பேராசான் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் 1695ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 28ஆம் திகதி அமரத்துவம் அடைந்தார். இவர் தனது வாழ்க்கைக் காலத்தில் இரு நூல்களை வெளியிட்டார். அவையாவன: 1. The Flowers of Leyden Flora (லெய்டன் தாவரங்களின்
264

giggit.)2. A Register of the Garden of the Leyden Acadamy Galotill air 563 Trfs தோட்டத்தின் பதிவேடு) என்பனவாகும். இவை இரண்டும் முறையே 1686, 1687ஆம் ஆண்டுகளில் லெய்டனில் வெளியிடப்பட்டவையாகும்.
இதே போன்று ஒல்லாந்தர் கால இலங்கையிலும் வைத்திய முறைகள் பற்றிய எழுத்தியல் சிங்கள மொழியில் எழுதப்பட்டு, பின்னர் டச்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டமையையும் காணலாம். BhesajaNidane என்ற 400 ஒலைச் சுவடிகள் கொண்ட வைத்திய நூல் மாத்தறை முதலியாரான டொன் சைமன் திலகெரட்ண என்பவரால் 1760இல் தொகுக்கப்பட்டது. சமஸ்கிருத மொழியைத் தழுவிக் கூட இக்காலத்தில் வைத்திய நூல் ஒன்று தொகுக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஸாரர்த்த ஸங்ரக என்ற வடமொழி நூலைத் தளமாகக் கொண்டு வரயோக சராய என்ற சிங்கள மொழியில் வைத்திய நூல் எழுதி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் வியருவிஷ உற்பத்திய, வியரு - லகுண, யோகமாலய, யோக சதக எனச் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வைத்திய நூல்களும் குறிப்பிடத்தக்கன. வியருவிஷ உற்பத்திய, வியரு - லகுண ஆகிய நூல்கள் மனநோய் தொடர்பான நோய்களுக்குரிய வைத்திய முறைகளை எடுத்துக் கூறுகின்றன.
ஒல்லாந்தர் காலத்து யாழ்ப்பாணத்திலும் வைத்தியசாலைகளும், வைத்திய முறைகளும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தமையைக் காண்கின் றோம். யாழ்ப்பாண இராச்சிய காலத்திலிருந்து வைத்திய சேவை பெற்றிருந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாகவே ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணத்திலும் வைத்திய முறைகள் வளர்ச்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேச வைத்திய முறைகளில் போர்த்துக்கேயரது செல்வாக்கு கூடிக் காணப்பட்டிருப்பினும், நாயன்மார்கட்டு வைத்திய பாரம்பரியம் யாழ்ப்பாணத்தரசர் காலத்திற்குப்பின், ஒல்லாந்தர் காலத்திலேயே மீண்டும் புத்துயிர்ப்பு அடைந்தது என்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.
வைத்தியசாலைகள் :
இலங்கைத் தீவின் கரையோர மாகாணங்களில் ஒல்லாந்தர் வைத்திய சாலைகளை நிறுவி, தமது வைத்திய சேவையை விஸ்தரித்தார்கள். கொழும்பிலுள்ள வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி, - மயிலிட்டி காச வைத்தியசாலை ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்கன வாகும். கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த ஒல்லாந்தருடைய வைத்திய சாலையானது 2.47 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தது, அதாவது 10,000 சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இவ்வைத்தியசாலையின்
265

Page 136
முகப்புத் தோற்றம் 1771ஆம் ஆண்டில் நீர்வண்ணத்தில் பெயர் குறிப்பிடப்படாத ஒவியர் ஒருவரால் வரையப்பட்டது. அவ்வரைபடம் இப்பொழுது லெய்டன் நூதன சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலை ஐந்து பிரதான கட்டிடத் தொகுதிகளால் (Fivewings) ஆனது. மத்தியில் விசாலமான முற்ற வெளியினைக் கொண்டுள்ள வகையில் நான்கு பக்கமும் நான்கு கட்டிடத் தொகுதிகள் இணைந்து அக்கட்டிடத் தொகுதியினை ஒரு செவ்வகமாக்கிக் கொண்டது. ஐந்தாவது கட்டிடத் தொகுதியானது விசாலமான அந்த மத்திய முற்ற வெளியினை நோக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட கட்டிடம் மட்டுமே மிகவும் ஒடுங்கிய வகையிலான மேல்மாடியைக் கொண்டு காணப்படுகிறது. மேல்மாடியின்தளம் மரத்தினால் அமைக்கப் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மிகவும் பொருத்தமான வடிவமாகத் திகழும் இந்த ஆஸ்பத்திரிக் கட்டிடமே கொழும்பில் ஒல்லாந்தர் கட்டிடக்கலைப் பாணியை மிகத் தெளிவாக பிரதிபலிப்பதோடு, கொழும்புத் துறைமுக விருத்தியோடு, தொடர்புபட்ட நிலை ஏற்றுமதி இறக்குமதி மேற்கொள்ளும் வர்த்தகர் களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அவ்வைத்தியசாலை தொழிற்பட்டிருந்தமை நோக்கத்தக்கது. இதற்கும் மேலாக ஒல்லாந்துப் போர்வீரர்களுக்கு சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாகவும் கொழும்பு ஆஸ்பத்திரி தொழிற்பட்டிருந்தது. உயர் வைத்திய சுப்பிரின்டன் ஒருவனுடைய மேற்பார்வையில் இயங்கிய இவ்வைத்திய சாலையில் வைத்திய நிபுணர்கள் பலர் கடமையாற்றினர். 1672 - 79ஆண்டுக் காலப்பகுதியில் இவ்வைத்தியசாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற வைத்திய நிபுணரான போல் ஹேர்மன் (Paul Herman) என்பவர் கடமையாற்றியிருந்தார். இலங்கையின் தாவரவியலின் தந்தை எனவும் அவர் போற்றப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஓர் அப்போதிக்கரியுட்பட, ஒரு சமையலாள், ஒரு வண்ணக்கர், பல்வேறு எண்ணிக்கையுடைய அடிமைகள் என அவ் வைத்திய சாலையில் கடமையாற்றினர். ஆனால் வைத்தியத் தாதிமார் இங்கு கடமையாற்றியிருக்கவில்லை என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது.
கொழும்பிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலுள்ள கெந்தல (Hendala) என்ற மையத்தில் ஒல்லாந்தர் ஒரு குஷ்டரோக வைத்திய சாலையை நிறுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வைத்திய சாலையை ஹெந்தலவில் அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றியிருந்த பிரதான வைத்திய
266

நிபுணர் ஆவார். தொழுநோய் (Leprosy) பரவிக் கொண்டிருந்த அக்கால கட்டத்தில், அவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழு நோயாளரால், குழந்தை நோயாளர், பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்த ஒல்லாந்து உயர் உத்தியோகத்தர்களது மனைவிமார் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் பட்டேவிய அரசாங்கத்தின் அனுமதியுடன் ஹெந்தலவில் காசநோய் வைத்தியசாலை கட்டப் பட்டது. சைமனது காலத்திலேயே இவ்வைத்தியசாலை அமைக்கப்படத் தொடங்கப்பட்டது. அவரையடுத்து ஆள்பதிப் பொறுப்பினைப் பெற்றிருந்த ஹென்ட்டிறிக் பீக்கர் (Hendrfck Becker) என்பவரே அவ்வைத்தியசாலையைக் கட்டி முடித்தவராவர். இவ்வைத்தியசாலையே இலங்கையில் மேலைத்தேயப் பாணியில் நிறுவப்பட்ட முதலாவது வைத்தியசாலையுமாகும்.
அச்சக சேவையும் முகாமையும் :
ஒல்லாந்தருடைய பொருண்மிய முகாமைத்துவ முறைகளுக்குமப்பால் சமயப் பிரச்சார ஊடகமாக இலங்கைக்கு அச்சிடும் கலையையும் அறிமுகம் செய்து வைத்திருந்தனர். 1737ஆம் ஆண்டில் வான் இம்மோவ் தனது நிர்வாக நடவடிக்கைகளின் ஒர் அங்கமாக கொழும்பில் அச்சிடும் நிலையம் ஒன்றினை ஆரம்பித்து வைத்திருந்தான். புரட்டஸ்தாந்து மத இலக்கியங் களை சுதேச மொழிகளில் பிரசுரிக்கும் நோக்கிலேயே ஒல்லாந்தரின் அச்சகப்பணி ஆரம்பிக்கப்பட்டது. முதலில் சுவரொட்டி முறைமூலம் ஒல்லாந்தர் தமது சட்டதிட்டங்களை அச்சிட்டு, பொதுமக்கள் கூடும் மையங்களில் ஒட்டி வந்தனர். நாடளாவிய ரீதியில் உள்ள கச்சேரிகளில் இருந்து VO C பொறிக்கப்பட்ட சுவரொட்டி வடிவிலான சட்டக் கோட்பாடுகளைச் சேகரித்து கொழும்பிலுள்ள அரும்பொருட் சுவடி கூடத்தில் பாதுகாத்து வைத்திருப்பதிலிருந்து முதல் அச்சு.முறையைக் காண முடிந்தது. முதன்முதலாக புத்தக வடிவிலானநூல் ஒன்று அச்சிடப் பட்ட காலம் மே, 1737ஆம் ஆண்டாகும். Singaleesch Gebeede-Bock என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பிலும், அதன் மூலத்திலும் அச்சிடப்பட்டவை ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. ஏப்ரல் 5ஆம் நாள் 1737ஆம் ஆண்டு என்ற திகதியிடப்பட்ட இன்னொரு நூல் டச்சு, சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நூல் தென்னிலங் கையில் மிளகுச் செய்கை பற்றி எடுத்துக் கூறுவது குறிப்பிடத்தக்கது. இதனுடைய தமிழ் மொழி பெயர்ப்பு நூலானது 1741ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
1771 - 96 ஆண்டுக் காலப்பகுதியில் மதச்சார்புடைய நூல்கள் தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு
267

Page 137
அச்சிடப்பட்டமையைக் காண்கின்றோம். பாடசாலைகள், தேவாலயங்கள், மற்றும் நிறுவனங்களின் தேவை கருதி, புரட்டஸ்தாந்து மத சிந்தனைகள் டச்சு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு தமிழ், சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்டன. வான் கொலன்ஸ் என்ற ஆள்பதியின் காலத்தில் புதிய ஏற்பாடு (New Testament) தமிழ்மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கப்பட்டது, பின்பு அது ஸ்குறுாடருடைய ஆட்சிக்காலத்திலேயே பூரணப்படுத்தப்பட்டு அச்சிடப்பட்டது. இருந்தும் அந்நூலின் அறிமுகத்தில் டச்சு மொழியில் எழுதப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
268

அத்தியnயலேடீரு
ஒல்லாந்தரின் அரசியல் நிர்வாகக்
கடீடமைப்பும், உள்நாடீடுக்
கொள்கைகளஞம்
"போர்களும் கலகங்களும் ஒரு நாட்டின் அரசியற் சுதந்திரத்தையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் அழித்து விடலாம். ஆனால் அந்த மக்களுக்கு வாழ வேண்டும் என்ற உள்ளம் இருக்கும் வுரைக்கும் egyaujz56í7air L/6öáru/76) egygóllög5/629– LD/ILL(egy.”
- Dr. அதிவண. எட்மண்ட்பீரிஸ்
269

Page 138
இலங்கையின் வரலாற்றில் கி.பி. 1505 - 1766 வரையான காலப் பகுதியானது அரசியல் பொருளாதார அடிப்படைகளில் புதிய கட்டுமானத் திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு காலப் பரப்பாக அமைந்து கொண்டமையைக் காண்கின்றோம். இதற்கான உந்துசக்தி கிறீஸ்தவ மதத்தின் இருபெரும் பிரிவுகளின் அறிமுகத்துடன் தொடக்கி வைக்கப் பட்டது. கிறிஸ்தவ மதம் அதன் இருபெரும் பிரிவுகளான கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைகளை இலங்கையில் வேரூன்ற வைத்த நிகழ்வுடன் இப்பிராந்தியத்தின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிறுவனங்களின் நடைமுறைகளில் பாரிய திருப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. அரசியல் சிந்தனைகள், வாரிசுரிமை முறை, அரசின் எல்லைகள், பாரம்பரிய நிர்வாக - சேவை முறைகள், குழு நில மக்களது வாழ்வுமுறைகள் போன்றவற்றிலெல்லாம் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்ட ஒரு காலப்பகுதியாகவும் அமைந்து கொண்டது. அவ்வாறான மாற்றங்களெல்லாம் இலங்கையில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டதன் விளைவுகளும், அம்மதம் பரப்பப்பட்ட விதமுமே அடிப்படையாக அமைந்து கொண்டது. போர்த்துக்கேயரதும் ஒல்லாந்தரதும் சமயக் கொள்கைகளுக்கேற்ப, அவர்களால் வகுக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் இத்தீவில் வாழ்ந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன. அச்சமயக் கல்வி நடைமுறைகளின் விளைவுகளே இந்நாட்டின் அரசியற் சென்நெறியினை இக்காலப்பரப்பில் தீர்மானித்திருந்தது. நடைமுறைப் படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளும் அச்சமயக் கொள்கையின் பாற்பட்டவை
யாகவே அமைந்தன.
கீழைத்தேய வாசனைப் பொருட்களை வாணிபத்திற்குரிய மூலதன மாகக் கொண்டு ஆசியாவை நாடிவந்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இங்கு அமைத்திருந்த ஆதிக்கமானது முறையே கிறிஸ்தவ மதக் குடியேற்றங்களைக் கொண்ட புனித சாம்ராச்சியமாகவும், வாணிப சாம்ராச்சியமாகவும் திகழ்ந்தமையைக் கண்டோம். போர்த்துக்கேயரது கிறிஸ்தவ மதக்கோட்பாட்டுப் பிரகாரம், மீட்பர் ஜேசுவின் திருநாமத்தால் அவரது உண்மையான போதனைகளைப் போதிக்கும் திருச்சபையே கீழைத்தேயத்தில் நிறைந்த செல்வத்தினை (ஆன்மீக நிறைவினை, மன நிம்மதியினை, மனித விடுதலையை)ப் பெற்றுக் கொடுக்கும் என்பதாகும். ஒல்லாந்தரது நோக்கில் சமூக ஒடுக்குமுறைத் தழைகளிலிருந்து மானிடன் கட்டறுத்து, விடுதலை பெறுவதற்கும், வாழ்வில் ஒளிமயமான - பிரகாச மான அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் மூலதனப் பொருளிய லிட்டத்துடனான போதகரது பொதுவாழ்வுப் பிணைப்பு (கல்வினிஸ்ட்) இன்றியமையாதது எனக் கற்பிக்கப்பட்டது. இக்காரணத்தினாலேயே
270

கிழக்கிந்திய வர்த்தக கொம்பனி தனது தோராயமான இணைப்பினைக் கிறிஸ்தவத்துடன் கொண்டிருந்தமையைக் காணமுடிந்தது. இதனால் ஒல்லாந்தர், போர்த்துக்கேயரைப் போன்று அரசியல் ஆதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களாக இருக்கவில்லை. இதனால் இலங்கைத் தீவில் வாழ்ந்த மக்கள் போர்த்துக்கேயராட்சியைத் தவிர்த்து இவர்களது ஆட்சியை சகிக்க முடியாதெனக் கருதவில்லை. ஒல்லாந்தராட்சிக் கால யாழ்ப்பாணக் கொமாண்டரியில் சுதேச ஆட்சியாளர் எவருமே ஒல்லாந் தருடைய நிர்வாகத்துக் கெதிராக கிளர்ச்சி செய்ய முன்வந்திருக்க வில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒல்லாந்தர் தமது கொமாண்டரிக்குள் வாழ்ந்த மக்களின் விருப்பங்களிற்கும் உள்ளுணர்வு களுக்கும் தவறாது மதிப்புக் கொடுத்து வந்திருந்தமையால், மக்களும் அவர்களது ஆதிபத்தியத்தை ஏற்றுக்கொண்டிருந்த வகையில், இக்கால தமிழ், சிங்கள, சமூக அமைப்பில் உள்ளூர் புறமுகமாக மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கப்பட்டன. விரைவான அம்மாற்றங் களை நாட்டு மக்கள் மத்தியில் விஸ்தரிப்பதற்கு ஏதுவாக ஒல்லாந்தரது முகாமைத்துவத்திறன் அடித்தளமிட்டிருந்தமை இங்கு சிறப்பாக அவதானிக்கத் தக்கதாகும்.
V.O.C. (of . S.)
Vereenigde Oostindische Compagnie என டச்சு மொழியில் குறிப்பிடப்படும் கீழைத்தேய வர்த்தக சங்கமானது இந்தியாவிலுள்ள பளையகார்ட் என்னு மிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். கிழக்கிந்தியாவில் முதற் கோட்டை யையும், தொழிற்சாலையையும், நிறுவிய காலப்பரப்பிலிருந்து, ஒரு தசாப்த காலத்திற்குள், 1609இல், டச்சுத் தேசாதிபதியின் அலுவலகமே கிழக்கிந்திய வர்த்தக கொம்பனியின் எல்லாச் சொத்துக்களுக்கும், நடவடிக்கைகளுக்குமான அதியுயர்ந்த உயர்கரும பீடமாகும் ଗtବf அதன் மேற்பார்வையாளர்கள் தீர்மானித்ததோடு, 1619ஆம் ஆண்டு பின்னர் பட்டேவியா என அழைக்கப்பட்ட ஜகார்த்தாவே டச்சுத் தேசாதிபதியின் தலைமைப் பீடமாகவும் மாற்றப்பட்டது. பீற்றர் போத் (Pietor Both) என்றழைக்கப்பட்ட இக்கொம்பனியின்முதல் நிர்வாகிக்கு அக்கொம்பனி யின் சகலவிதமான நடவடிக்கைகளுக்குமான ஒரு தல்ைமை அதிகாரிக் குரிய சட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தனர். பீற்றர் போத் ஒர் இணைப்பாளராகவும், கட்டுப்பாட்டதிகாரியாகவும், அரசியல் - வாணிகவில் - நிதியியல் கடற்படையியல் ஆகிய துறைகளை நிர்வகிக்கும் முகாமையாளராகவும் தொழிற்பட்டிருந்தமையைக் காண்கின்றோம். ஜான் பீற்றேர்ஸ்கோயன் (Jan Pietersz Coen) காலத்திலேயே டச்சுக் கிழக்கிந்திய கம்பனியில் ஆள்பதி நாயகத்தின் மத்தியமயப்பட்ட நிர்வாக
27

Page 139
ஆட்சிமுறை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தென்கிழக்காசியா, தென்னாசியா, கிழக்காசிய நாடுகளில் ஒல்லாந்தரது ஆள்புலமும், வாணிப நடவடிக்கைகளும் விஸ்தரிக்கப்பட்டமைக்கேற்ப, பட்டேவியாவிலிருந்து நிர்வாகரீதியானதும் மேற்பார்வை ரீதியானதுமான பங்களிப்பு இன்றியமையாததாக மாறியது. பட்டேவியாவிலிருந்து எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான முடிபுகள் டச்சு குடியேற்றவாத நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் விரைந்து எடுக்கப்படுவதற்கு மிகவும் சாதகமாக விருந்தது. College.ofDirectors என்றழைக்கப்பட்ட ஒர் உயர்மட்ட மன்றே குடியேற்ற நாட்டுப் பிரச்சினைகளுள் அதிமுக்கியமானவற்றை தெரிந்து, விரைவான முடிபுகளை எடுத்துதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்மன்றினுடைய நிர்வாக அதிகாரங்கள் பெருமளவிற்கு வாணிப முகாமைத்துவம் தொடர்பானவையாகவே காணப்பட்டன. அத்தோடு பட்டேவியாவில் எடுக்கப்பட்ட நிர்வாக ரீதியான முடிபுகளை உடனுக்குடன் அமஸ்ரடாமுக்கு தெரிவிப்பதில் ஏற்படும் காலதாமதத் தினை நிவர்த்தி செய்ய முடியாதிருந்தமை காரணமாக பட்டேவியாவின் தனித்துவமான சுதந்திரத்திற்கும், சுதந்திரமான நடைமுறைகளுக்கும் வழிவகுக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருட கால எல்லையை பதிலுக்காகப் பட்டேவியாவிலிருந்து அமஸ்ரடாமை நோக்கி காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டமையினாலேயே பட்டேவியா ஒல்லாந்தரது தனித்துவமான தலைமைப் பீடமாக வளர்ச்சி பெற்றிருந்தது.
பட்டேவிய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் டச்சு அரசியல், நிர்வாக இயந்திரத்தினதும், கடல்சார்வாணிப நடவடிக்கை களின் தளம் என்றவடிப்படையிலே பல உப நிர்வாக அலகுகளினதும் முகாமைத்துவம் இணைக்கப்பட்டிருந்தமையைக் காணமுடிகிறது. இவை தனித்துவமான அரசாங்க முகாமைத்துவ மையங்களாக குறிப்பிடப்பட்ட பிராந்தியங்களை மிகவும் நம்பிக்கையுடன் நிர்வகித்து வந்தன. ஓர் ஆள்பதியின் பொறுப்பில் அல்லது ஒரு நிர்வாகியின் பொறுப்பில் அவை சிரேஷ்ட நிர்வாகிகளைக் கொண்ட ஒரு சபையின் உதவியைக் கொண்டு பெறப்பட்டன. எவ்வாறு அமஸ்ரடாமிலிருந்து பட்டேவியா வெகுதூரத் தில் இருந்தமையால் பட்டேவிய அரசாங்கம் சுதந்திரமாக இயங்க வாய்ப்புக் கிடைத்ததோ அதே போன்றே பட்டேவியாவின் கீழிருந்த அரசுகளும் ஏறக்குறைய சுதந்திரமான இராச்சிய அலகுகளாகவே இயங்க வாய்ப்புக் கிடைத்தது. ஆகவே இலங்கை, மலபார், வங்காளம், சோழ மண்டலக் கடற்கரை ஆகியனவற்றின் நிர்வாக முறைமையானது பெருமள விற்கு அரசியல் அடிப்படையில் மிகச் சுதந்திரமானதாகவும், ஆசியாவிற் குள் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில்
272

ஒரளவிற்குக் குறைந்தளவிலான சுதந்திரத்தையும் அவை அநுபவித்தன. மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கும், அவை போன்ற மற்றைய இடங் களிலுள்ள அரசுகளுக்கும், வெளித்தள நாடுகளுக்கும் (Butten Amptoiren) தீபகற்பக் குறையிலுள்ள பட்டேவியாவிலிருந்தே நிர்வாக முகாமை ஆற்றப் பட்டது. வெளித்தள நாடுகளில் இலங்கையானது பெரியதும், முக்கியத் துவம் வாய்ந்ததுமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. இங்கு வாழ்ந்த மக்களை ஒல்லாந்தர் தமது நேரடியான ஆட்சிமுறைக்குள் இட்டுச் சென்ற வகையில் இலங்கையில் ஒல்லாந்தரது அரசியல் முகாமைத்துவம் மிகவும் தனித்துவமானதாக அமைந்து கொண்டது.
பட்டேவியாவுடன் தொடர்பு கொண்டிருந்த வகையிலும், ஒல்லாந் தரின் ஆட்சிக்குள் அகப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையிலும் இலங்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக விளங்கியது. இலங்கையின் ஆள்பதியானவர் மிகவும் செல்வாக்குமிக்க கிழக்கிந்திய வர்த்தக கொம்பனியின் சிரேஷ்ட அங்கத்தவராகவும் காணப்பட்டார். இன்னொரு புறத்தில் ஒல்லாந்துக் குடியேற்ற நாடுகளுக்குள் இலங்கையானது ஹொலன்டுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையிலும் காணப்பட்டது. சுதேச மக்களையும், சுதேச அரசுகளையும் பரிபாலிக்கின்ற முறையில் காணப்படுகின்றதுாரமே பட்டேவியாவிலிருந்து இலங்கையை யும் தனித்துவமானதொரு ஒல்லாந்துக் குடியேற்ற நாடாகக் கொள்ள வைத்தது. அதாவது இலங்கையிலுள்ள ஒல்லாந்து நிர்வாகிகள் எப்பொழுதுமே கொள்கை வகுப்பு-திட்டமிடலில் தொடக்கிவைப்பாளர் களாக இருந்து வந்துள்ளனர்.
இலங்கை ஆள்பதிகளின் தனித்துவமானதும், தனிப்பட்ட ரீதியானது மான சில காரணிகளே கொள்கை வகுப்புத் திட்டமிடல் தொடக்க முறையை ஏற்படுத்திக்கொடுக்க வாய்ப்பளித்தது. இலங்கையின்ஆள்பதி களாக விளங்கிய வான் கோயன்ஸ் (1658 - 1663, 1665 - 1675) லெளரன்ஸ் பைல் (1680 - 1692), பாரோன் வான் இமோவ் (1736 - 1740), ஜான் ஸ்க்றுாடர் (1757 - 1763) ஆகியோர் தத்தமது தனிப்பட்ட ஆளுமையின் அடிப்படையில் எடுத்த முடிபுகளினாலேயே இலங்க்ையின் தனித்துவமான நிலையை ஒல்லாந்த நிர்வாகத்தில் பேண்னர். இதனால் பட்டேவிய அரசாங்கத்தின் சார்பாக இலங்கை அதிகாரிகள் கொள்கைத் திட்டமிடல் விடயங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தியமை தொடர் பாக அமஸ்ரடாமிலுள்ள அந்தத்துறையைச் சேர்ந்த நிர்வகிப்பாளருக்கு முறைப்பாட்டு மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கது. எவ்வாறெனினும் பொதுவாக பட்டேவியாவிலிருந்து வெளியிடப் பட்ட பொதுமையான வழிகாட்டலின் கீழ் உள்ள ஒரு சட்டத்திற்கு
273

Page 140
அமைவாகவே, இலங்கை நிர்வாகிகளை அணுகி, ஆலோசனை செய்ததன் பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரமே நிர்வாக முறைமைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அவ்வகையில் இலங்கையிலுள்ள ஒல்லாந்து நிர்வாகிகள் தமது நாளாந்த நிர்வாக நடவடிக்கைகளில் மிகவும் சுதந்திரமாகச் செயற்பட்டு வந்திருந்தமையைக் கண்டு கொள்ளமுடிந்தது.
கிழக்கிந்திய வர்த்தகக் கொம்பனியின் தொழில் வெற்றிடத்திற்கான எண்ணிக்கை பலதரப்பட்டனவாகும். வாணிப நடைமுறைக்குரிய உத்தியோகத்தர்களுக்குரிய வெற்றிடமானது அதன் உயர்மட்ட நிலையிலிருந்து பலதரப்பட்டவையாக வகுக்கப்பட்டிருந்தன. மிகவும் கனிஷ்ட நிலையிலுள்ள எழுதுவினைஞர் ஒருவரை வாணிபக் கட்டமைப் பினைக் கவனிக்கும் உதவியாளருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் 35á3ig. géG35st-d' (Boekhouder), 676ööTLj Gösstu'll D657 (Onder Koopman), கோப்மன் (Koopman), ஒப்பர் கோப்மன் (Opper Koopman), ஆகியன அத்தனை படிமுறைகளில் அமைந்த பதவிகளாகும். அவை எழுது வினைஞர், கனிஷ்ட வர்த்தகர், வர்த்தகர், சிரேஷ்ட வர்த்தகர் என்ற நிலையில் ஆங்கிலேயர் கால கிழக்கந்திய வர்த்தகக் கொம்பனியில் இருந்த பதவிகளை முறையே குறிப்பிட்டு நின்றமையைக் காணலாம். வாணிப நெறிமுறையின் அடிப்படையிலான வரிசைக்கிரமமான இப்பதவி நிலைகள் இலங்கையில் ஒல்லாந்தர்கால அரசியல், நிர்வாக நடைமுறை களுக்காக பிரயோகிக்கப்பட்டிருந்தமையைக் காணமுடிந்தது. பிற்பட்ட காலத்தில் இராணுவ, கடல் (நேவி) நிர்வாக முகாமைத்துவ சேவைகளுக் காகவும் உயர்மட்டத்தில் பிரத்தியேகமான பதவிநிலைகள் வகுக்கப்பட்டி ருந்தன. இலங்கையின் பல்வேறு பிரிவுகளிலும் இவர்கள் ஆயுத வீரர் களாகக் கடமை புரிந்த அதேநேரத்தில், ஆணைக்குழு அலுவலர்க ளாகவும் (Commissioned Officers) நியமனம் செய்யப்பட்ட வகையைக் காண்கின்றோம். இவை யாவும் தொழிற்தகைமையை சிறப்புத் தேர்ச்சி யாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட பதவி நிலைகளாகக் காணப்பட்டன. இவற்றைவிட, இவையாவற்றுக்கும் மேலதிகமாக, இரு அடிப்படையி GROTT வகுப்புக்களைக் கொண்ட உத்தியோகத்தரது நியமன முறையும் காணப்பட்டது. அவற்றுள் சில பின்வருமாறு: வைத்தியர்கள், ரணசிகிச்சை நிபுணர், அப்போதிக்கரி, ஆடையலங்காரம் செய்வோன், சட்டவல்லுனர், பிரதம மரவேலையாளர், இரும்பு ஒட்டுபவர்கள், படகுகட்டுவோர், கல்லுடைப்போர், பாண் வெதுப்புவோர், சமையலாளர், இன்னும் டச்சுச் சமூகத்திற்குத் தேவையான ஏனைய உதவியாளர் என பெரும் எண்ணிக் கையில் நியமிக்கப்பட்ட பதவி நிலைகளைக் காண முடிந்தது. இப்பதவி நிலைகளுடன் புரட்டஸ்தாந்து மதக் கருத்துக்களை உபதேசிப்பதற்கும்
274

(Predicants) பிரசங்கம் செய்வதற்கும் (Catechist) ஆக இருவகையான உத்தியோகத்திற்குரிய பதவி நிலைகளும் காணப்பட்டன. இலங்கையில் மொத்தமாக டச்சுச் சமூகத்தின் மத்தியில் காணப்பட்ட பதவிநிலைகள் ஏறத்தாழ 3000 ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் முகாமையின் சிறப்பியல்புகள் :
1640ஆம் ஆண்டிலிருந்து 1656 வரையுள்ள காலகட்டத்தில் இலங்கையின் ஒல்லாந்த நிர்வாக மையமாக காலி விளங்கியது. கி.பி. 1656ஆம் ஆண்டு வரைக்கும் ஒல்லாந்தர் தென்னிலங்கையின் நிர்வாக முகாமைத்துவ முறைகளிளேயே அதிக கவனம் எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலித்துறைமுகப் பட்டினமே முதன்முதலாக இலங்கையில் ஒல்லாந்தரின் கையிற் கிடைத்த நகரமாகும். 1658இல் கொழும்புத்துறைமுக நகரம் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னரே ஒல்லாந்தர் தமது தலைமைக் காரியாலயத்தினைக் கொழும்பிற்கு மாற்றினர். ஒல்லாந்தரது அரசாங்கம் இலங்கையிலிருந்து நீங்கும் வரைக்கும் கொழும்பே தலைநகராக விளங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பிலுள்ள கோட்டையில் கவர்ணர் மிகவும் கவர்ச்சிகரமான மாளிகை ஒன்றில் வசித்தார். கவர்னர் வசித்த மையத்திற் கெதிரில் பிரதான கரியாதிகாரியின் அலுவலகமும் அமைந்திருந்தது. இவர் இலங்கையில் ஒல்லாந்து நிர்வாக, கொள்கை வகுப்புத் திட்டங்களுக்கும், தீவினது சூழ்நிலையைப் பேணுவதற்கும் உரிய பிரதான பொறுப்பினைக் கொண்டு விளங்கினார். இவருடைய நிர்வாக அலகின் நிலப்பரப்பானது இலங்கை முழுவதிலுமுள்ள துறைமுகங்களையும் உள்ளடக்கிய பரப்பினையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நிதி நிர்வாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட மிகத் தொடக்க காலகட்டத் திலிருந்தே இப்பிராந்தியம் இலங்கையின் ஆள்பதியின்முகாமைத்துவத்தின் கீழ் இணைக்கப்பட்டு விட்டது. குமாரிமுனை தொடங்கி நாகப்பட்டினம் வரைக்குமான கரையோரக் கடற்கரை மாவட்டங்கள் 1680 வரைக்கும் இலங்கையின் நிர்வாக அலகுகளாகவே கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1680ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாகபட்டினம் சோழமண்டலக் கடற்கரையோர நிர்வாக அலகுகளுடன் இணைக்கப் பட்டு, இலங்கையின் நிர்வாக இணைப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
ராட்-வான்-செய்லோன் என்றழைக்கப்பட்ட நிர்வாக மன்றம் ஒன்றின் துணையுடன் ஒல்லாந்து கவர்ணர் இலங்கையை நிர்வகித் திருந்தார். இந்த நிர்வாக மன்றமானது கி.பி. 18ஆம் நூற்றாண்டில் பொலிற்றிக் றாட் (Politiek Raad) என்றும் அழைக்கப்பட்டது. இப்
275

Page 141
பேரவையில் ஆளுனரைவிட எட்டு அங்கத்தவர் பங்கு கொண்டிருந்தனர். சில வேளைகளில் அந்த எண்ணிக்கை குறைந்தும் காணப்பட்டது. இப்பேரவையில் பிரதான நிர்வாகி (கூவ்தத்மினிஸ்றேரிட்டர் Hoofdadministrateur), கொழும்புத் திசாவை, பக்குஷ்மேஸ்ரர் எனப் பட்ட பண்டகசாலைப் பாதுகாவலர் நிகோட்டி பீக்கவுடர் (Negote Boekhouder) எனப்பட்ட வாணிப கணக்காளர் நாயகம் பிரதான செயலாளர், சோல்டிழ் பீக்கவுடர் (Soldi Boekhouder) எனப்பட்ட பணம் வழங்கும் கணக்காளர் நாயகம் மற்றும் இராணுவ படைப் பிரிவை வழிநடத்தும் தளபதி என அதியுச்ச அதிகாரங்களுடன் விளங்கிய நிர்வாகிகள் பங்குகொண்டிருந்தனர். யாழ்ப்பாணம், காலி, ஆகிய கொமாண்டரிகளின் படைத்தளபதிகளும் அப்பேரவையின் அங்கத்தவர்களாக விளங்கினார்கள். ஆனால் இவ்விரு படைத் தளபதி களும் கொழும்பிற்குச் சென்றிருந்த சமயங்களிலேயே அப் பேரவையின் கூட்டங்களில் பங்கு கொண்டிருந்தனர். இலங்கையின் ஒல்லாந்த ஆள்பதிக்கு அடுத்த நிலையிலே இவ்விருவரும் தமது அங்கத்துவ பதவிகளை வகித்தனர்.
பேரவையில் ஆளுனருக்கும் அங்கத்தவர்களுக்கும் இடையே ஏற்படக் கூடிய தீர்வுச்சிக்கல்கள், உடன்படா நிலை போன்றவை தொடர்பாக எந்தவொரு சட்டவரைபுகளும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பிரதான உறுப்பினரான ஆள்பதிக்கும் (கவர்ணர்) பேரவைக்கும் இடையே இருந்திருக்கக்கூடியதும், பேரவையினது ஆகக்கூடிய அதிகாரப் பரப்புப் பற்றியதுமான சட்டத்தொகுப்பு ரீதியான வரையறைகளை, அதுவும் குறிப்பாக, ஆள்பதிக்கும் பேரவைக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயங்களில் அவ்விரு நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகள் எவ்வாறு அமையும் என எந்தவொரு வரையறையும் சட்ட ரீதியாக எவற்றைப் பிரேரிக்க வேண்டும் என்றோ அல்லது ஆளுனர் திட்டவட்டமாக எந்தவடிப்படையில் தனது நிர்வாகத்தினையும் முடிபு களையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றோ தெளிவுபடுத்தப் பட்டிருக்கவில்லை என்பதனை இமோவ் என்ற ஒல்லாந்த ஆளுனர் அவதானித்துள்ளார். 1651ஆம் ஆண்டில் பட்டேவியாவிலிருந்து வெளியிட்டு வைக்கப்பெற்ற ஆணையொன்றின் அடிப்படையில், பேரவையினது அமைதியும், விருப்புமின்றி எந்தவிதமான முக்கியமான நடவடிக்கைகளையும், ஆளுநர் செய்யமுடியாது என்று எடுத்துக்காட்டப் பட்டது. தொடக்கத்தில் கவுன்ஸிலிற்குரிய அங்கத்தவர்களை ஆளுநரே நியமனம் செய்திருந்தாலும், பிற்பட்ட காலங்களில் பட்டேவியா விலிருந்தே அந்நியமனங்கள் செய்யப்பட்டன. பேரவையில் ஏற்படும்
276

வெற்றிடங்களை தொழிற்சிறப்புத் தேர்ச்சி அடிப்படையில் நிரப்பும் உரிமை ஆளுனருக்கு இருந்தபோதிலும், அது பட்டேவிய அரச நிர்வாகத் துடனான விருப்பத்துடன் செய்யவேண்டி இருந்தது. பேரவையில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மை வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டே முடிபுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டன, ஆளுநரும் தவிர்க்க முடியாதபடி அம்முடிபுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியவராக காணப் பட்டார். பேரவையினருடைய பெரும்பான்மையான ஆதரவின் அடிப் படையில், மேற்கொள்ளப்பட்ட முடிபுகளை ஆளுநர் சிலவேளைகளில் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களின் அடிப்படையில் நிராகரிக்க முற்பட்டிருந்தாலும், அது பட்டேவிய அரசாங்கத்தினால் நிராகரிக்கப் பட்டது. இலங்கைத் தீவிற்குள்வரும் உத்தியோகபூர்வ கடிதங்கள் Lן(6חנLb பேரவையின்முன் வாசிக்கப்பட்டன. இதே போன்று இங்கிருந்து வெளியே அனுப்பி வைக்கப்படுகின்ற கடிதங்களுக்கு பேரவை அங்கத்தவர்கள் யாபேரும் கையெழுத்திட வேண்டிய தேவையும் காணப்பட்டது.
ஆளுநருக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பேரவைக்கு வலுவையும், அதிகாரத்தையும் அளிப்பதில் அக்காலத்தில் ஒழுங்குவிதிகள் அடங்கிய சட்டக்கோவை எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியத்தைக் கொண்டு விளங்கியது என்பது ஒரு கேள்விக்குறியே! ஆளுநர் தனது மிக வலுவான செல்வாக்கு நிலை காரணமாகவும், நிருவாக அலகுகளைப் பராமரிக்கும் பாதுகாவலன் என்ற வகையிலும் கொண்டிருந்த அதிகாரமே தனக்குக் கீழுள்ள சிறு ஆட்சியாளர்களின் மீதான கட்டுப்பாட்டினைக் கொண்டிருப்பதற்குப் போதியதாக இருந்தது. ஆனால் பிற்காலங்களில் ஆளுநரின் அதிகாரத்தினைப் பரிசோதிக்குமளவிற்கு பேரவை ஒரு போதும் நடந்து கொள்ளவில்லை என்பதனை ஆதாரங்கள் உணர்த்துகின்றன. பொதுவாகவே பட்டேவிய அரசின் பேராதரவுடன் ஆளுநீர் மிகவும் அனுபவம் வாய்ந்த பேரவை உறுப்பினர்களின் விருப்பினையும் ஆதர வினையும் பெற்றுக்கொண்டு தமக்கிடையே நிர்வாக ரீதியான பரஸ்பர உறவுகளுக்கு வலுவூட்டியிருந்தார்.
கொழும்பு கொமாண்டரி :
ஒல்லாந்தர்கால நிர்வாகமுகாமையில் கொழும்புக்கொமாண்டரி மிகப் பிரதானமான இடத்தினைக் கொண்டிருந்தது. கொழும்புக் கொமாண்டரியைப் பொறுத்தவரையில் ஆளுநருக்கு அடுத்த நிலையில் தலைமை நிர்வாகியே முக்கியத்துவம் பெறுவதனைக் காண்கின்றோம். கொழும்புப் பிரிவைப் பொறுத்தமட்டில் அதன் நீதி, நிதி, நிர்வாக விடயங்கள் தொடர்பாக தலைமை நிர்வாகியே பொறுப்பு வாய்ந்த
277

Page 142
உத்தியோகத்தர் நிலையில் நின்று தொழிற்பட்டிருந்தார். தீவு முழுமைக்கு மான வாணிக கணக்கு வரவு அறிக்கை பதிவு செய்தல், வாணிப நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையப் பொறுப்பாளராகத் தொழிற்படல் போன்றவற்றையும் பிரதம நிர்வாகியே ஆற்றி வந்தார். இவரே இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட பொருட்களினதும், இலங்கையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பொருட்களினதும் தொகை விபரப்பதிவுக்கும் பொறுப்பானவராகத் தொழிற்பட்டிருந்தார். பண்டகசாலையிலுள்ள பொருட்களுக்கு தனித்துவமான ஒரு நிர்வாகப் பதவி இவருடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே காணப்பட்ட பொழுதிலும், இவரிடமே இலங்கை முழுவதிலுமுள்ள பண்டப் பொருட் களுக்குரிய இருப்பினை கணக்கில் வைப்பிடுகின்ற பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருந்தது பண்டகசாலைக் காப்பாளரின் வேலையாக இது தோற்றமளித்தாலும், அவர் மீது இப்பிரதான அதிகாரிக்கு எவ்விதி அதிகாரமோ, கட்டுப்படுத்தும் வழிகளோ காணப்பட்டிருக்கவில்லை. ஆளுநருடைய பிரதான அலுவலகத்தை அண்மித்த வகையிலான இன்னொரு அலுவலகத்திலேயே வியாபார நடவடிக்கைகளுக்குரிய கணக்கியலாளரும் அவரது உத்தியோகத்தர்களும், எழுது வினைஞரும் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்புக் கொமாண்டரியில் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலகமானது தனித்துவமான வகையில், புறம்பாக அமைந்திருந்தது. ஏனெனில் இந்த அலுவலகத்தைப் பொறுத்த வரையில் நிறையவே துஷ்பிரயோகம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருந்தமையினா லாகும். இதனால் இச்சம்பளம் வழங்கும் நிதித்துறையானது மிகவும் கவன மாகவும், ஒழுங்காகவும் மேற்பார்வையிடப்பட்டு வந்தது. இந்நிறுவன மானது ஒவ்வொரு மாதமும் உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டி யிருந்த சம்பளப் பணத்தையும், கணக்குவழக்கு விபரங்களையும் கொண்டிருந்தது. ஒல்லாந்து அரசாங்கத்தில் பணிபுரிந்த உத்தியோகத் தர்களது ஊதியமட்டம், அவர்களது சொந்த அசையும் - அசையாச்சொத்து விபரங்கள், கொம்பனி சேவையிலிருந்து விலகியவர்கள், இறந்த ஊழியர் களின் விபரம் போன்றவற்றை இந்நிறுவனம் பாதுகாத்து வைத்திருந்தது.
பிசுக்கால் (Fiscal) உத்தியோகத்தர் எனப்படுபவர் பேரவையில் நீதிநிர்வாகத்துறையின் பிரதிநிதியாகத் தொழிற்பட்டிருந்தார். 1687ஆம் ஆண்டிலிருந்து பிசுக்கால் உத்தியோகத்தரைபட்டேவிய நிர்வாகமே நேரடியாக நியமனம் செய்தது. ஏனெனில் அரசாங்கத்தினதும், ஏனைய நிர்வாகிகளதும் செல்வாக்கிற்கு உட்படாத வகையில் நீதிநிர்வாகத்தைச் சுதந்திரமாக இயங்க வைப்பதற்கான ஒரு செயலாக இது அமைந்தது.
278

ஒல்லாந்து அரசாங்கத்தின் செயலாளர் பேரவையின் எல்லாவகையான நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான முடிபுகளையும் பதிவு செய்து, ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அரசின் செயலர் என்ற அடிப்படையில் அவர் அக்கவுன்ஸிலின் பிரதானமான ஓர் அங்கத்தவர் என்பதும், பேரவை யில் முக்கியமானதீர்மானங்களை வாக்கு அடிப்படையில் எடுக்கும் சமயங் களில் எல்லாம் இவர் தனது வாக்கினையளித்து பேரவையின் முடிபுகளுக்கு அனுசரணையாக விருந்து, நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றிருந்தார். ஆனால் 1713இல் பட்டேவியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒர் ஆணையின்படி பிரதான செயலர் பேரவையின் ஒர் உறுப்பினர் அல்லர் என்பது வெளிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது பிரதான செயலரது அலுவலகமானது மிகவும் விசாலமான ஒன்று என்பதும், அங்கு பல்வேறுதுறைகளைச் சார்ந்த எழுதுவினைஞர்கள் கடமை புரிந்து வந்தமையையும், எல்லாவகையான அரசாங்கக் கடிதங்களும், பத்திரிகை களும் மிகத் தெளிவாகப் பிரதிசெய்ய வேண்டியிருந்த நிலையையும் கண்டுகொள்ள முடிந்தது.
பிரதான நிர்வாக அலகுகள் :
நிர்வாக நோக்கிற்காக இத்தீவானது மூன்று பிரதான பிரிவுகளாக வகுக்கப்பட்டது. அவற்றை மூன்று கொமாண்டரிகள் எனக் குறிப்பிடுவர். கொழும்பு கொமாண்டரி, யாழ்ப்பாணக் கொமாண்டரி, காலிக் கொமாண்டரி என்பனவே அப்பிரிவுகளாகும். யாழ்ப்பாணக் கொமாண்டரியும், காலிக் கொமாண்டரியும் ஒல்லாந்து ஆள்பதிக்கடுத்த நிலைக்குரிய அதிகார வரம்பிற்குள் வைத்து எண்ணப்பட்டன. ஒல்லாந்தர் கால இலங்கையின் முழு நிர்வாகத்திற்கும் மையமான ஆள்பதியும், மைய ஆட்சிப்புலமாக கொழும்பும் விளங்கியிருந்த போதும், யாழ்ப்பாணம், காலிக் கொமாண்டரிகளின் நீதிநிர்வாக அதிகாரவரம்பானது கொழும்பினைவிடவும் அதிகரித்தே காணப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கொமாண்டரியும் உயர் உத்தியோகத்தரை உள்ளடக்கிய ஒரு பேரவையினால் பரிபாலிக்கப்பட்டது. இப்பேரவையில் அதிகாரம்மிக்கவராகக் காணப்பட்டவர் திசாவை என அழைக்கப் பட்டார். இவர் கொமாண்டரிக்கு அடுத்து இரண்டாம் நிலையில் அதிகாரம் உடையவராகத் தொழிற்பட்டிருந்தார். கொமாண்டரி தனது நிர்வாகச் சுற்றுலாவை மேற்கொள்ளும் போதும், அலுவலகத்திற்கு வெளியே உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு அதிகநாட்கள் வெளிக்களக் கடமைகளைக் கவனிக்கும் போதும் திசாவை அவருடைய பணிகளை அலுவலகத்தில் ஆற்றிவந்தார். ஒவ்வொரு கொமாண்டரியிலு முள்ள பேரவையானது, ஆள்பதிக்கு அரசியல் பேரவை உதவுவது போன்று கொமாண்டரிக்கும் உதவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
279

Page 143
யாழ்ப்பாண நீதிநிர்வாகக் கொமாண்டரியின் பரப்பானது புத்தளத்தின் வடக்கிலிருந்து, வடமேற்காக வளைந்து சென்று, வடகிழக்கு இலங்கை யின் கடற்கரைப்பரப்புக்களையுமுள்ளடக்கிய வண்ணம் சென்று மட்டக் களப்புக் கோட்டையின் தெற்குவரை அதன் பரப்பு விரிவடைந்திருந்தது. 1671ஆம் ஆண்டில் கிழக்குக்கடற்கரையை உள்ளடக்கிய வகையில் ஒரு தனித்துவமான கொமாண்டரி திருகோணமலையை உள்ளடக்கியவகையில், மட்டக்களப்பினைத் தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்ட போதும், அடுத்த சில வருடங்களின் பின் அந்நிர்வாக நடைமுறை கைவிடப்பட்டது. அதன் பின்னர் அக்கொமாண்டரியின் பரப்பு மீண்டும் யாழ்ப்பாணக் கொமாண்டரியுடன் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காலிக்கொமாண்டரியானது தென்னிலங்கைக் கடற்கரையோரமாக பெந்தோட்டை நதியிலிருந்து அகன்று சென்று, ஹம்பாந்தோட்டை வரைக்கும் விரிவடைந்து, பின், 1766ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுவீகரிப்பின் அடிப்படையில் மட்டக்களப்பின் தெற்குப் பக்கம் வரை விரிவாக்கப்பட்டது. ஏனைய மிகுதிப்பரப்பானது கொழும்பு கொமாண்டரியினாலே நிர்வகிக்கப்பட்டது.
கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய நிர்வாக நகரங்களின் தொலை வான அமைவிடங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வாணிப நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தின் பின்னணியில் ஒவ்வொரு நகரத் திற்கும் ஒப்பர்கூவ்ட் (Oppehooted) என்றழைக்கப்பட்ட நிர்வாகியை அவ்வவ் நகரங்களின் திசாவைக்கு அடுத்த நிலையில் உள்ள உத்தியோகத்தராக நியமித்திருந்தனர். ஒப்பர்கூவ்ட் என்ற உத்தியோகத்தர் ஒப்பீட்டடிப்படையில் தனது சேவைக்காலத்தால் மூப்புடையவராகவும், ஒரு சிறிய சபையின் உதவியோடு தனது நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பவராகவும் காணப்பட்டார். கல்பிட்டி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்கள் ஒப்பர்கூவ்ட் என்ற நிர்வாகியாலேயே நிர்வகிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கொமாண்டரிக்கும், கல்பிட்டி நகரத்திற்குமான நிர்வாக முறைகளுக்காக அப்பேரவைகள் ஆள்பதி நாயகத்திடமிருந்து தனித்துவமான அறிவுறுத்தல்களைப் பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி நகரத்தின் நிர்வாகம்கூட ஒப்பர்கூவ்ட் என்பவரது மேற்பார்வையிலேயே நடை பெற்றிருந்தது என்பதும் சிறப்பாக நோக்கத்தக்கது. மதுரையை மையமாகக் கொண்டு இயங்கிய நிர்வாகப் பேரவைக்குமுட்பட கடற்கரையோரப் பரப்பின் நிர்வாகம் தொடர்பாக ஆள்பதியே
பொறுப்பாக விளங்கினார்.
280

திசாவையும் உள்ளூர் நிர்வாகமுறையும் :
திசாவை என்ற அலுவலகமே பல வழிகளிலும் உள்ளூர் நிர்வாகத்தின் திறவுகோலாக விளங்கியது. இந்நாட்டு மக்களுடனான பல்வகைப்பட்ட தொடர்புகளை ஆட்சியாளர் ஏற்படுத்திக்கொள்வதற்கு உரிய ஒர் ஊடகமாக - நிறுவனமாக திசாவை என்ற அலுவலகமே பாதை வகுத்துக் கொடுத்திருந்தது. சிங்களப் பிராந்தியங்களில் நிலவிய புராதன நிர்வாக முறையான திசாவை என்ற அலகினை போர்த்துக்கேயர் தமது காலத்தி லிருந்து நிர்வாக முறையில் இணைத்துக் கொண்டிருந்ததோடு, அவர்களே அம்முறையை ஒல்லாந்தருக்கும் கையளித்தவர்களாகக் காணப்பட்டனர். இலங்கையில் ஆரம்பத்தில் மூன்று திசாவைகளே காணப்பட்டன. கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை என்பனவே அவையாகும். திசாவை என்ற நிலை எப்பொழுதுமே தன்னுடன் இராணுவ, பொருளாதார, வரி, நீதி நிர்வாக அலகுகளை பரிபாலிக்கும் பொறுப்புக்களைக் கொண்டிருந் தது. எல்லாவகையான இராணுவப் பதவிகளின் நியமனம், போன்றவற்றை அந்தந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளுபவர்களாகவும் திசாவை அதிகாரிகள் விளங்கினர். ஒல்லாந்தரது பாவனையில் காணப்பட்ட எல்லா வகையான சட்டங்களதும், நடைமுறைகளதும், சுதேச இராணுவக் கட்டமைப்பினதும் உருவாக்கத்திற்கு திசாவையே முழுப்பொறுப்புமாக விளங்கினான். விசேடமாக திசாவை லஸ்கரின்கள் என்ற ஆயுதப் படையைப் பராமரிப்பதற்கும், அதனைப் பலமுடையதாகவும், ஒர் ஒழுங்கிலும் வைத்திருப்பதற்கான பொறுப்பினைக் கொண்டிருந்தான்.
விவசாய அபிவிருத்தி, வேளாண்மை விருத்தி மற்றும் பெருந்தோட்ட விருத்தி போன்ற நடவடிக்கைகளுக்கு திசாவையே மூலகர்த்தாவாக அமர்ந்து செயற்பட்டிருந்தார். 18ஆம் நூற்றாண்டின் இலங்கையில் திசாவைகளே நெல் உற்பத்தியின் விரிவாக்கத்திற்கும், புதிய புதிய பயிர்வகைகளின் அறிமுகத்திற்கும், குறிப்பாக கோப்பி, கறுவா போன்றன வற்றின் அபிவிருத்திக்கும் திசாவையே முழுப்பொறுப்பாக விளங்கினான். திசாவையே சுதேசிய மக்களுடனான தொடர்பினைக் கொண்டிருப்பவ னாகவும் காணப்பட்டார். இவரே லான்ட்றாட் டினுடைய (Landraad) தலைவராகவும், மற்றைய உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில் வழக்குகளை பின்தள்ளி வைத்தவராகவும் தொழிற்பட்டிருந்தார்.
இலங்கையிலுள்ள திசாவாணிகளில் உள்ள தேவாலயங்களின் கட்டுப் பாட்டிலுள்ள பாடசாலைகளின் மனேஜராகக் கூட திசாவை தொழிற் பட்டிருந்தார். திசாவை ஒவ்வொருவரும் தத்தமது ஆளுமைக்கேற்ப பாடசாலைகளின் தலைமைத்தவத்தை நடாத்தி வந்தனர். இவ்வாறு பலவழிகளிலும் அவர் பங்காற்றி, தொழிற்பட வேண்டியிருந்ததினால்
287

Page 144
மக்கள் மத்தியில் திசாவையை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தனிநபராகவோ அல்லது உத்தியோகத்தராகவோ மதிக்கப்பட வேண்டிய நிலையும் உருவாகியது. தத்தமது எல்லாப் பிரிவுகளுக்கும் திசாவையும், அவரது உதவியாட்களும் அடிக்கடி சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு, நிர்வாகச் சீர்கேடுகளை மேம்பாடடையச்செய்து வந்துள்ளனர். இந்நாட்டு மக்களுடைய பண்பாட்டினையும், வாழ்க்கை முறைகளையும் விளங்கிக் கொள்வதற்கும், பழகிக் கொள்வதற்கும் ஏற்ற புத்திசாதுரியம், தரம் இவை இரண்டையுமுடைய நிர்வாகிகளை திசாவையின் அலுவலகமே உருவாக்கித்தந்தது. அந்தந்தப் பிரதேசத்து மொழிவழக்கினை, மொழி யறிவினை விசேடமாகக் கற்றுக் கொள்ளுவதில் திசாவையின் அலுவலகமே மிகவும் ஆர்வம் காட்டியிருந்தது. ஒவ்வொரு உத்தியோகத்தரையும் கடமைக்காக நியமிக்கும் பொழுது மேற்கூறப்பட்ட தகைமைகள் பெரிதும் கருத்திற்கெடுக்கப்பட்டன. 18ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதியில் திசாவை மிகக் கூடுதலான நிர்வாக நடவடிக்கைகளிலும், பொறுப்புக்களிலும் ஈடுபட்டதோடு, சிலவகையான நீதி, நிர்வாகக் கடமைகயை தன்னிட மிருந்து அப்புறப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற் கொண்டமையைக் காணலாம்.
பாரம்பரிய நிர்வாக அலகான ஒவ்வொரு திசவாணியும் கோறளை, பற்று, கிராமம் என வகுக்கப்பட்டு அவை முறையே முதலியார், கோறளை, அத்துக்கோறளை ஆகிய பிரதான நிர்வாகிகளின் பெயரால் நிர்வகிக்கப்பட்டு வந்த முறையையும் காணலாம். ஒவ்வொரு கிராமத் திலும் விதானை என்ற அதிகாரியே அக்கிராமங்களின் நாளாந்த நிர்வாக நடவடிக்கைகளைப் பரிபாலித்து வந்தமையைக் காணலாம். ஒவ்வொரு கிராமத்திலுமிருந்து சேரவேண்டியிருந்த வருமான மீதியைச் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைப்பதும் விதானையினது பொறுப்பாக விடப் பட்டது. ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள தனிப்பட்டவர்களாலும், இலவச அடிப்படையில் அரசுக்கு வழங்க வேண்டியிருந்த சேவைகள் கடமைகள், மானியங்கள் போன்றவற்றை கவனிக்கவேண்டியிருந்த பொறுப்பும் இவ்வுள்ளூர் விதானைக்குரியதாக இருந்தது. இவர்கள் தமக்குக் கிட்டிய திசாவையினது மேற்பார்வையிலேயே அக்கடமைகளை ஆற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட கிராமத்திலுமுள்ள மக்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட வகைப் பயிரை உற்பத்திப்படுத்த வேண்டிய நிலை காணப்பட்டால், அது பற்றிய தொடர்ச்சியான சங்கிலித் தொடர் போன்ற ஆணையை திசாவையிலிருந்து முதலியாருக்கும், பின்னர் முதலியாரிலிருந்து கோறளைக்கும், பின்னர் விதானைக்குமாக அவ்வாணை வந்து சேரும். இதே போன்று கட்டிட நிர்மாண
282

வேலைகளுக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அதே போன்ற ஆணை கிராமத்தினை நோக்கி விதானையே வந்தடையும் அங்கிருந்து அவர் தேவைப்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் நடைமுறையைக் கையாள்வார். முதலியார் என்ற பதவிக்குரியவர் லான்ட்றாட் என்ற அலுவலகத்தில் ஏனைய ஒல்லாந்த அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தே கிராமத்தினதும், பிரதேசத்தினதும், நாட்டினதும் மரபுகளையும், நிலச்சட்ட - திட்டங்களையும் பற்றி விளங்கிக் கொண்டிருப்பது மரபாக இருந்தது.
ஒல்லாந்து உயர்நிர்வாக அமைப்பு முறையில் சுதேசத் தலைவர்களது வழிகாட்டலும், உதவியும் இன்றியமையாதது என உணரப்பட்டது. ஆகையால் இலங்கையின் கடற்கரையோரத் தாழ்நிலப் பரப்பில் ஆளுநர்கள் மிகத் தொடக்க காலத்திலிருந்தே உள்ளூர்த் தலைவர்களின் நட்பைப் பெற்று, அவர்களது வழிகாட்டுதல்களை அரச நிர்வாகத்திற்காகப் பெற்று வந்திருந்தனர். மகாமுதலியார்களது அலுவலகமானது ஆளுநர் களது அலுவலகத்தில் அவர்களது உதவியாளர் நிலையின் கணிக்கப்பட்டு, எந்நேரமும் கண்டிய மக்களது கொள்கைகள், நிலப்பகுப்பு முறைகள், ! பிரச்சினைகள், உள்ளூர் நிர்வாகிகளை நியமனம் செய்யும் முறைமை போன்ற விடயங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிலையில் பரிபாலிக்கப்பட்டிருந்தமையைக் காண்கின்றோம். இவ்வாறு பொதுவாக ஒல்லாந்த ஆள்பதிக்கு சிங்களக் கிறிஸ்தவர்களே ஆலோசனைகளை வழங்கி, உதவி வந்துள்ளனர். வடக்கில் முதலியார் முகாந்திரம் போன்ற பதவிகளுக்கு செல்வாக்குள்ள கிறிஸ்தவத் தமிழதிகாரிகளிடமிருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
சுதேச நிர்வாக அலுவலர்களுடனான ஒல்லாந்து அரசின் பரஸ்பரத் தொடர்புகள் மிகவும் இக்கட்டான ஒரு நிலையிலேயே தொடர்ந்து வந்துள்ளது. ஒல்லாந்து நிர்வாக அதிகாரிகள் எப்பொழுதுமே சுதேசிய நிர்வாகிகள் மீது அவநம்பிக்கையுடையவர்களாக இருந்து வந்துள்ளனர், அதே நேரத்தில் தமது சொந்த உடல் - உடமைப் பாதுகாப்பு முறையை உறுதிப்படுத்திய வகையிலேயே தொடர்ந்தும் கடமையாற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வுள்ளூர் சுதேசிய உத்தியோகத்தர்கள் மிதமிஞ்சிய செல்வாக்கினையும், அதிகாரத்தையும் தம்முடன் கொண்டிருந்ததன் அடிப்படையே ஒல்லாந்து அரசாங்கத்துக்கு கவலை யளித்த விடயமானது. ஒல்லாந்து ஆள்பதிக்கு ஒவ்வொருவருமே தமக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய உதவியாளிடம் எப்போதுமே உள்ளூர் உத்தியோகத்தர்களின் மிதமிஞ்சிய செல்வாக்கு நிலைகளை கட்டுப் படுத்துமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். நிலவருவாயைச்
283

Page 145
சேகரிக்கும் நடைமுறையிலும், நீதி வழங்கும் நிர்வாக நடைமுறையிலும் பலம் வாய்ந்தவர்களாக விளங்கிய இந்த உள்ளூர் தலைவர்கள் மக்களை நேரடியாக எதிர்ப்பதிலும், ஊழல் புரிவதிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் 1740ஆம் ஆண்டில் இம்மோவ் என்ற ஆள்பதி திசாவை அதிகாரி களை வரவழைத்து காலத்துக்குக் காலம் உள்ளூர்த் தலைவர்களை அடிக்கடி மேற்பார்வையிட வேண்டும் எனவும், அந்தந்தப் பிரதேசத்து மக்கள் உள்ளூர்த் தலைவர்களுக்கெதிராக எழுப்பியுள்ள புகார்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களுடைய பிரச்சினைகளைக் கவனிக்கு மாறும் உத்தரவு இட்டிருந்தார். 1762ஆம் ஆண்டில் ஸ்க்றுாடர் என்ற ஆள்பதி விதானைமாரின் அடாவடித்தனத்தையும், சட்டரீதியற்ற வகையில் வறுமையான மக்கள் மத்தியிலிருந்து சேகரிக்கப்படும் வருமான முறையையும் கண்டித்ததோடு, அவ்வாறான சம்பவங்களைக் கண்டு பிடித்து, ஒழிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தமையைக் காண் கின்றோம்.
கண்டி இராச்சியத்துடனான உறவுநிலை சீரழிந்து போயிருந்த காலங் களில் ஒல்லாந்தர் மீது உள்ளூர்த் தலைவர்கள் வைத்திருந்த விசுவாசத்தில் சந்தேக நிலைகள் கூடத்தோற்றம் பெற்றிருந்தன. வான் கேயன்ஸ் இந்நிலையை மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். அதாவது இரண்டாம் இராஜசிங்கனுடன் கடுமையான யுத்தம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் உள்ளூர்த் தலைவர்கள் ஒல்லாந்து அரசு மீது காட்டியிருந்த விசுவாசத்தின் தன்மையை வான் கேயன்ஸ் பரீட்சித்துப் பார்த்திருந்தார். கண்டியரசுடனான போர் நடைபெற்ற நாட்களில் உள்ளூர் நிர்வாக முகாமைத்துவம் அப்படியே ஸ்தம்பித்து விட்டிருந்த சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. சுதேசிய நிர்வாகிகளால் அவ்வாறான காலகட்டங் களில் உள்ளூர் நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்ளாது கைவிட்டு விடுகின்ற ஒரு போக்கினை ஒல்லாந்தர் காலத்தில் காண முடிந்தது. ஸ்க்றுாடர் வான் எக் ஆகியோர் ஆள்பதிகளாக விளங்கிய காலங்களிலும் (1750 - 1760) அத்தகைய போக்கே நிலவியது. இன்னும் உள்ளூர் நிர்வாகி களது தயவிலேயே உள்நாட்டு நிர்வாக முறைகளை நடைமுறைப்படுத்து வதில் ஒல்லாந்து அரசாங்கம் தங்கியிருந்தது. இவ்வுள்ளூர் நிர்வாகிகளது தேவை நிலவருமான நிதியீட்டம், தொடர்பான அறிவு, பாரம்பரிய விவசாய விளைநிலங்களின் தகவுத்திறன், நிலப்பங்கீட்டு வழமை போன்ற விடயங்களில் மிகவும் அவசியமாகக் காணப்பட்டது. ஆகவே இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் முழுவதிலுமாக அரசுக்கும் உள்ளூர் ஆட்சியாளர்களுக்குமிடையே சற்று சிக்கலான உறவு தொடர்ந்து இருந்து வந்தமையைக் காண்கின்றோம்.
284

மகாபட்டீ - மகாபட்டே (Mahabadde) என்றழைக்கப்பட்ட ஒரு நிர்வாக அலுவலகமே கறுவா தொடர்பான நடவடிக்கைகளைக் கவனித்து வந்தது. அவ்வலுவலகமே ஒல்லாந்தர் காலத்து நிர்வாகக் கொள்கைகளை வடிவமைத்துத் தந்ததுறையாக விளங்கியது. இதற்கும் மேலாக உள்ளூர் நிர்வாக அலுவலகங்கள் யாவற்றினும் மீதான மேற்பார்வையினையும் மகாபட்டே என்ற அலுவலகமே கவனித்து வந்தது. இக்குறிப்பிட்ட நிர்வாகமையத்திற்கு மேலும் இரு பிரதான பணிகள் வழங்கப்பட்டிருந்தன. ஒன்று ஐரோப்பாவிற்கும் பட்டேவியாவிற்கும் கறுவாவை ஏற்றுமதி செய்வதன் பொருட்டு, கறுவாப்பட்டைகளை உரித்தல், இரண்டு அவற்றைத்துறைமுக நகரங்களுக்குக் கொண்டு சென்று வழங்குதல். இந்த இரண்டு காரியங்களையும் இவ்வலுவலகமே முன்னெடுத்துச் சென்றிருந் தது. முன்பு போர்த்துக்கீசர் காலத்தில் மகாபட்டேயின் அலுவலக நிர்வாக முகாமை தொடர்பாக சிறியளவு மாற்றங்களே செய்யப் பட்டிருந்தன. பின்வந்த ஒல்லாந்தர்காலத்தில் அதனை அவ்வாறே ஏற்றுக் கொண்டு, மிகப்பெரிய முகாமைத்துவ நடவடிக்கைகளுடன் அவர்கள் அதனை நிர்வகித்தனர். கறுவாத்திணைக்களத்தின் தலைவராக ஒல்லாந்து நிர்வாகியே காணப்பட்டார். அவருக்குக்கீழ் நான்கு விதானைகள் தொழிற்பட்டிருந்தனர். சினமன்காட்டுக் கிராமங்களது நிர்வாகம், கறுவாப்பட்டையுரித்தல் போன்ற பொறுப்புக்களை அவ்விதானைமார் அச்சாலியர் கிராமத்து புவியியல் தட்ப - வெப்பநிலைக் கேற்ப நிர்வகித்து வந்தனர்.
விதானை என்ற பதவியானது பரம்பரை வழக்கத்துக்குரியதாக சாலியர் குடும்பத்துத் தலைமகனுக்கே வழங்கப்பட்டு வந்தது. இவர்களுக்குக்கீழ் துரையர்கள் (மகாதுரையர், உபதுரையர்) நியமிக்கப்பட்டார்கள். இத்திணைக்களத்தின் பிரதானபணி கறுவாத் தொழில் சம்பந்தமான சகல வேலைகளுக்கும் ஆளணியை நிர்வகித்து, அவற்றை ஒழுங்குபடுத்திக் கொடுப்பதாகும். அதாவது கறுவாப்பட்டையை உரிப்பித்து, பதப்படுத்தி, காயவைத்து, ஏற்றுமதி செய்யப்படும் வரைக்கும் தேவைப்பட்ட ஆளணியை வழங்கிக் கொண்டிருப்பதே அத்திணைக்களத்தின் பிரதான கடமையாக விளங்கியது. ஒல்லாந்தர் காலம் முழுவதிலும் கறுவா ஏற்றமதிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தமையின் அடிப்படையில், ஆட்களின் எண்ணிக்கை அக்கறுவாத் தொழிலை மேற்கொண்டு நடத்து வதற்கும் போதாமல் இருந்தது. எனவே வரையறுக்கப்பட்ட காலப் பகுதிக்குள் ஒப்புக்கொடுத்தபடி சாலியகுடும்ப அங்கத்தினர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தி, கறுவாப்பயிர்செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலே அத்திணைக்களம் இயங்கியது. இத்திணைக்களத்தைச்
285

Page 146
சேர்ந்த சிங்கள, ஒல்லாந்து உத்தியோகத்தர்கள் சாலிய கூலியாட்களை மிகவும் உச்சநிலை வரம்பிற்குள் பிரயோசனப்படுத்துவதற்காக அச்சாதியைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையை வரையறுத்து திட்ட மிட்டு, தொழிற்பட்டுக் கொண்டிருந்தனர். தொழிலுக்கு வருகை தராத சாலிய அங்கத்தவர்கள் பெரிதும் தண்டிக்கப்பட்டார்கள். வயோதிபத் தன்மை அடைந்தவர்கள், இறந்தவர்கள், பிறந்தவர்கள் போன்ற பெயர் களுடன் சாலியகுலத்துப் பட்டியல் ஒன்று தயாராக்கப்பட்டு, மிகவும் அவதானமாக அவர்களது தொழிலுக்கான வரவு பரீட்சிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தமையைக் காணமுடிகிறது.
கறுவாத் திணைக்களத்தினைப் பரிபாலிக்கும் தலைவருடைய முக்கியமான ஒரு பணி என்னவெனில் பிளக்காட்ஸ் (Plakaats) என்றழைக் கப்படும் உத்தியோகத்தர்களைக் கண்காணிப்பதாகும். இவர்களது தொழில் நோக்கமானது கறுவாத் தொழிலை ஒல்லாந்த அரசாங்கத்தின் ஏகபோகத் தொழிலாக மட்டும் வைத்திருப்பதாகும். கறுவா மரங்களை அழித்தல், உத்தியோக பூர்வமற்ற கறுவாப் பட்டையுரிக்கும் தொழில், தனியாரிடம் செல்லும் வர்த்தகம் இவை யாவும் பிரதான குற்றங்களாகக் கருதப்பட்டு, மரணதண்டனைக்குரியவையாக்கப்பட்டன. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக கறுவா மரங்கள், கறுவாத் தோட்டங்கள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தன. அத்தேவைக்காக அங்கு சாலிய லஸ்கரின்ஸ் படையமைப்பு ஒன்று அத்திணைக்களத் தலைவரின் பொறுப்பில் காணப்பட்டது. சிறுச்சிறு தவறுகளையும், குற்றங் களையும் நிர்வகிப்பதற்கும், கவனிப்பதற்குமாக ஒரளவிற்கு அத்திணைக் களத் தலைவருக்கு சாலியர் சமூகம் மீதான நீதி நிர்வாக பராமரிப் பிற்கான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. பிரதான வழக்குகள் வழமையான சட்டதிட்டப் பிரகாரம் கோட்டிற்கு எடுத்துச் செல்லப் பட்டன. இத்திணைக்களத் தலைவருக்கு சாலியக் கிராமங்களிலிருந்து வரிகளை அறவீடு செய்வதற்கும், உரிமை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யானை வேட்டைத் தொழில் தொடர்பாகவும் மேற்கூறப்பட்ட கோட்பாடுகளே கைக்கொள்ளப்பட்டன. இக்குறிப்பிட்ட முயற்சி தொடர் பான விதிமுறைகளில் ஒல்லாந்து அரசு சற்றுத் தளர்வான போக்கினைக் கைக் கொண்டிருந்தமையைக் காணலாம். காரணம் யானை பிடித்தல் என்பது தனித்துவமான, விசேட பயிற்சிக்குரியவர்களுடையதாகவும், ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் நிகழும் தொழிலாகவும் விளங்கி யமை ஆகும். இதற்காக கஜநாயக்கே (Gajanayake) என்றழைக்கப்பட்ட சிங்கள முதலியார் ஒருவர் இத்தொழில் நடவடிக்கைக்குப் பொறுப்பாக
286

நியமிக்கப்பட்டார். யானைத் திணைக்களம் ஒன்று உருவாக்கப்பட்டு, யானை பிடிப்பதற்காக ஏதென்டெனெறால (Ethandenerale) எனப்படும் சிறப்பான உத்தியோகத்தர் நியமனம் செய்யப்பட்டார். இவர் மிகவும் விசேடமான பாண்டியத்தினை யானை பிடித்தலின் போது நடைமுறைப் படுத்துவார். இவரே யானை பிடித்தல் தொழிலுக்கான முழுப்பொறுப் பினையும் வகிப்பவராகவும் விளங்கினார். பிடிக்கப்பட்ட யானைகளைப் பழக்கி எடுப்பதற்கும், அவற்றை யானைப் பந்திகளில் சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை கஜநாயக்கே மேற்கொண்டார். எனவே இவ்விரு உத்தியோகத்தர்களுமே யானை பிடிக்கும் பிரதேசத்திலுள்ள நிலத்திற்கும், அங்கு வாழும் பொதுமக்கள் மீதான நிர்வாக நடைமுறைகளுக்கும் பொறுப்பாக விளங்கியமையைக் காணலாம். யானைகளைப் பிடித்துப் பழக்கும் நிலப் பிராந்தியங்களிலே வாழும் மக்கள் நிலத்திற்காக தமது சேவைகளை ஒல்லாந்து அரசாங்கத்திற்கு வழங்கினர். திசாவையே இதற்கான மேற்பார்வையை, சட்ட திட்டங்களை வகுத்து, நடைமுறைப் படுத்தும் அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார்.
சுதேச லஸ்கரைன்ஸ் :
சுதேசலஸ்கரைன்ஸ் படைகளின் முகாமைத்துவமானது ஒல்லாந்தரசின் மேற்பார்வையுள் சுதேசிய உத்தியோகத்தர்களால் ஒரளவிற்கு உயர்மட்டத் திலுள்ள சுதேசிய உத்தியோகத்தர்களால் உருவாக்கி, நிர்வகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வருமான ஈட்டத்தை வழங்கக்கூடிய நிலங் களில் வாழ்ந்த செல்வந்த குடும்பங்களிலிருந்தே லஸ்கரைன்ஸ் என்ற படையமைப்பிற்கு, திடகாத்திரம் வாய்ந்த அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். முதலியார், ஆராய்ச்சி, அப்புஹாமி விதானே ஆகிய கீழிருந்து மேனோக்கிய பதவிமுறை வகுப்பின் அடிப்படையில் இந்த லஸ்கரைன்ஸ் படைக்கப்பட்டு முகாமைத்துவம் நிர்வகிக்கப் பட்டது. ஒவ்வொரு விதானையுமே தத்தமது மேற்பார்வையிலும், கட்டுப் பாட்டிலுமுள்ள லஸ்கரைன்ஸ் படையமைப்பின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்கினர், மிகக் கவனமாகவும், அவதானமாகவும் லஸ்கரைன்ஸ் படைநடவடிக்கைகளின் சேவைக்காக ஒவ்வொரு அங்கத்தவரதும் நடவடிக்கைகள் பரிசீலிக்கப் பட்டு, மேற்பார்வை செய்யப்பட்டது. இதற்கும் மேலாக திசாவை ஒவ்வொருவருமே லஸ்கரைன்ஸ் படை நிர்வாகக் கட்டமைப்பைப் பரிசீலனை செய்கிறது மேற்பார்வையாளர்களாகத் தொழிற்பட்டிருந்தனர். முழு இலங்கையிலுமுள்ள இப்படைக் கட்டுமானத்தின் படைநியமனம், விளக்கம், நிர்வாகம் போன்றவற்றிற்காக ஒர் உயர் அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இப்படைகள் தமது நடவடிக்கைகளை கண்டியரசு
287

Page 147
மீதும், இலங்கைக்கு வெளியே மதுரை, தஞ்சாவூர், மலபார் கடற்கரைப் பகுதி ஆகிய பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டமையைக் காணலாம். இதே படைகளின் சேவைகளை கறுவாப் பட்டையுரிக்கும் காலங்களில் அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கையைப் பலப்படுத்தவும் உபயோகிக்கப்பட்டமையைக் காணலாம். இப்படைகளின் சேவையை அதாவது அவர்களுக்குரிய பணிகள் தேவைப்படாத காலகட்டங்களில் அவற்றைக் கொண்டு செய்திகளை அனுப்பவும், மொழிவழி விளக்கம் பெறவும், கடிதங்களைக் காவும் நிலையிலும் பயன்படுத்தப்பட்டமையைக் காணலாம். இவ்வாறு ஒல்லாந்தர் கால இலங்கையின் நிர்வாக முறையில் பல்நோக்கு நிர்வாக - சேவைத் திட்டங்களின் கீழ் அப்படை பயன்படுத்தப்பட்டமையைக் காண்கின்றோம். அதற்காக அப்படை நிர்வாகத்திற்கும், அங்கத்தவர்களுக்கும் விசேட சலுகைகள் வழங்கப் பட்டன. எனினும், ஒல்லாந்தரது அனுபவ நோக்கில், சண்டை என்று வரும்போது "லஸ்கரைன்ஸ் வீரர்களுடைய போர் நடவடிக்கைகள் பெரிதும் பயனற்றது" என்ற நிலைப்பாடே இருந்து கொண்டிருந்த மையை காணமுடிந்தது. கண்டியரசன் மீதான ஒல்லாந்தரின் படை நடவடிக்கைகளின் போது இப்படைகள் ஒல்லாந்தர் பக்கத்திலிருந்து நீங்கிச் சென்றும், செயற்படாதிருந்தும், ஒல்லாந்தருக்கெதிராகச் செயற்பட்டும் இருந்த சம்பவங்களைப் பார்க்கும் போது அவர்களுடைய ஒல்லாந்தர் மீதான விசுவாசம் தெளிவாகப் புலப்பட்டது.
சமய நடவடிக்கைக் குழுவும் சபையும் :
ஒல்லாந்தர் கால சமய விவகாரங்களுக்கும், பொதுநலச் சேவைகளுக் கெனவும் ஒரு சிறிய அமைப்பு சேபை?) ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இச்சிறிய நிறுவனமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டு தீவடங்கிலும் உள்ள சமய, பொதுநல விவகாரங்களுக்கான நடவடிக்கைக் குழுவாக இயங்கியமையைக் காணலாம். கொழும்பு, யாழ்ப்பாணம், காலி என்ற மூன்று மையங்களிலுமே அந்நடவடிக்கைக் குழுவினர் பிரிந்து இயங்கினர். கொழும்பில் இயங்கிய திருச்சபை பெருமன்றமே (Church Assemble) ஏனைய மையங்களில் தொழிற்பட்டிருந்த சமய, பொதுநல விவகாரங் களுக்கான நடவடிக்கைக் குழுவினரை மேற்பார்வை செய்தது. திருச்சபை பெருமன்றத்தின் பிரதான நிர்வாகியே அதன் தலைவராகவும் தொழிற் பட்டிருந்தார். நாடு பூராகவும் பரந்திருந்த இவ்வாறான திருச்சபைகளுக்கு ஒல்லாந்த (புரட்டஸ்தாந்த) மதகுருவானவர் திருச்சபை பெருமன்ற மொன்றின் தலைமையதிகாரியின் அல்லது திருச்சபை பெருமன்ற மொன்றின் பிரிவுக்குத் தலைவராக இருப்பவரின் மேற்பார்வையின் கீழ் தொழிற்பட்டிருந்தமையைக் காண்கின்றோம். கொழும்பிலுள்ள
28

தலைமைக் காரியாலயத்தில் தொழிற்பட்டிருந்த புலமையாளர் பேரவை ஒன்றே ஒல்லாந்தரது பாடசாலைகளின் நிர்வாகத்திற்கும் திருமணம், பிறப்பு, இறப்புத் தொடர்பான விபரங்களின் பதிவுக்கும் அந்த ஆவணங்களைப் பேணுவதற்குமான பொறுப்பினை வகித்திருந்தது, திசாவையின் தலைமையில் இப்புலமையாளர் பேரவை இயங்கியது. இப்புலமையாளர் பேரவையானது ஒர் எழுதுவினைஞருடைய உதவியுடன் தொழிற்பட்டிருந்தது. ஒரு தலைமைக்குருவுடன் இணைந்த சில அங்கத்தவர்களைக் கொண்ட குழுவினது பொறுப்பில் அப்பாடசாலை களின் நிர்வாகம் மீதான மேற்பார்வை அமைந்திருந்தது. திருச்சபை மணியகாரர் என்றவொரு சபையானது புரட்டஸ்தாந்து திருச்சபையில் உருவாக்கப்பட்டு, நாடுபூராகவும் அமைக்கப்பட்டிருந்த புரட்டஸ்தாந்துத் திருச்சபைகளின் நிர்வாக முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட்டது. திருச்சபை அமர்வு பெற்ற (திருநிலைப்படுத்தப்பட்ட) திருக்கோயிற்குரு, மற்றும் திருச்சபை தொடர்பான மூத்தோர்களும் இணைந்திருந்த அவைக்கு திருச்சபை மணியகாரர் எனப் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நிதி இத்திருச்சபை மணியகாரர் என்ற அவையினுரடாகவே சமய நடவடிக்கைகளுக்கானதும், சமய நலன்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் திருச்சபையைச் சென்றடைந்தது. வேஸ்கமர் (Weeskamer) என்றழைக்கப்பட்ட நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட அவையானது திருச்சபையோடு தொடர்புடைய நாதியிழந்தவர் களுடையதும், இறந்து அழிந்து போனவர்களதும் சொத்துக்களைப் பரிபாலித்து வந்தது. வேஸ்கமர் என்ற இந்த நிர்வாக அலகானது இலங்கைக்கு ஒல்லாந்தராலேயே ஒல்லாந்தர்களுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் சிங்கள, தமிழ் புரட்டஸ்தாந்து மதத்தவர்கள் மத்தியிலும் பரவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஒல்லாந்தர் காலத்தில் காணப்பட்ட மதநிர்வாகம் தொடர் பாகக் காணப்பட்ட நிர்வாக அலகுகளானவை அரசசார்பு உடையன வாகவும், சார்பற்றவையாகவும் (Semi Officials) உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுடைய (Non Officials) இணைவைக் கொண்டவையாகவும் தொழிற்பட்டிருந்தமையைக் காண்கின்றோம்.
கொடுப்பனவுகளும் சம்பள விபரமும் :
ஒல்லாந்தர் கால நிர்வாகத்தில், ஐரோப்பிய உத்தியோகத்தருக்கான சம்பள - நிலுவை விபரங்கள் மிகவும் தெளிவாக வரையறுக்கப் பட்டிருந்தன. சம்பள வேறுபாடு நாடுபூராகவும் கடமையாற்றியிருந்த ஒல்லாந்த உத்தியோகத்தர் மத்தியில் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது. நிலையான மாதச் சம்பளத் தொகையை ஐரோப்பிய உத்தியோகத்தர்கள்
289

Page 148
பெற்றுக்கொண்டிருந்த பொழுதிலும், அவர்கள் மத்தியில் மாதச் சம்பளத் தொகையானது 09 கில்டேர்ஸ் இலிருந்து 2000 கில்டேர்ஸ் ஆக வேறுபாடு காணப்பட்டிருந்தது. ஒரு சாதாரண ஐரோப்பிய போர் வீரனுக்கும், நாட்டின் ஆள்பதிக்கும் இடையே இச்சம்பள வேறுபாடு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கடமையாற்றிய ஐரோப்பிய உத்தியோகத்தர்கள் பெருமளவுக்கு ஐரோப்பாவிலேயே தத்தமது சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. ஒல்லாந்து அரசாங்கம் கீழைத்தேயத்திலுள்ள தமது குடியேற்ற நாடுகளுக்கு எடுத்துவரும் மாதாந்தவேதனப் பணத்தை எந்தளவிற்கு குறைத்து எடுத்துவர முடியுமோ அந்தளவிற்கே எடுத்து வந்திருந்தார்கள். ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தகக் கொம்பனி சம்பளத்திற்கும் மேலாக, விசேட படிகளையும், பங்கீட்டுக்கு உணவுப்பொருட்களையும் தமது உத்தியோகத்தர்களுக்கு வழங்கியது. பங்கீட்டுக்கான உணவுப் பொருட் களாக அரிசி, இறைச்சி, திராட்சைப்பழம், சாராயம் என்பன வழங்கப் பட்டன. மிகக் குறைந்த மட்டத்தில் மாதச்சம்பளம் பெறும் உத்தியோகத் தர்களுக்கு சிறியளவிலான ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டது. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கடமையாற்றியிருந்த ஐரோப்பிய உத்தியோகத்தன் ஒருவன் அண்ணளவாக 500,000 கில்டேர்ஸ் பணத்தை சம்பளமாகப் பெற்றிருந்தான். இத்தோடு பங்கீட்டு முறையில் வருடத்தில் அவ்வுத்தியோகத்தனுக்கு ஏறத்தாழ 200,000 கில்டேர்ஸ் பெறுமதி வாய்ந்த உணவுப் பொருட்கள் கிடைத்திருந்தன. இத்தீவின் வருடாந்த வருமானத்தின் மூன்றில் இரண்டு பங்கு வருடாந்த வேதனமாக ஒல்லாந்தர் காலத்தில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 18ஆம்நூற்றாண் டிலங்கையில் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை வேறுபாடு இருந்திருக் கக் கூடியதான எண்ணிக்கையில் அரச சார்பற்ற ஐரோப்பியர்கள் இருந் திருக்க வேண்டுமெனவும், கீழைத்தேயத்துடனான அவர்களது தனிப்பட்ட வாணிப நடவடிக்கைகள் விலக்கப்பட்டிருந்தது எனவும் அறியமுடிகிறது.
சுதேசிய அலுவலர்களுக்கான வருடாந்த வேதனத் தொகை 50,000 கில்டேர்ஸ்க்கும் அதிகமாக இருந்தது. இவர்கள் பாரம்பரிய வழிமுறையில் தமது சேவை வழங்கலுக்காக நிலத்தினையும் (ஊதியத்திற்குப் பதிலாகப்) பெற்று வந்தமையினால் அவர்களது வருடாந்த வேதனவருமானம் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஒல்லாந்த நிர்வாக முகாமையில் சுதேசிய உத்தியோகத்தர்கள் பெருமளவிற்கு கிராமங்களின் நில உற்பத்தியிலிருந்து (அரசாங்கத்திற்குரிய) வரிசேகரிப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருந்தனர். இத்தகைய இறைவரிக்குரிய நிலங்கள் அக்கொமொதேஸ்ஸன் (accomdessan) எனக்குறிப்பிடப்பட்டன.
290

போர்த்துக்கேயர்கால இலங்கையில் மிகப்பரவலாக உபயோகிக்கப்பட்ட முறைமையில், அத்தகைய நிலங்கள் பரம்பரை அலகு வாய்ந்ததாக கருதப் பட்டதற்கோ அல்லது அந்நிலத்தினைப் பெற்றிருந்தவர்அதனை விற்பனை செய்வதற்கோ அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வகையான நிலங்கள் இறைவரித் திணைக்களத்திற்கு உரியவையாக மட்டுமே காணப் பட்டன. குறிப்பிட்டட சேவைக்கான உத்தியோகத்தர் சேவையில் நீடிக்கும் வரைக்கும் அத்தகைய நிலவுடமையை அனுபவிப்பதற்கு தகுதியுடைய வராக இருந்தும், பின்னர் சேவையை விட்டு விலகும்போது அந்நிலத்தினை அக்குறிப்பிட்ட திணைக்களத்திடமே ஒப்படைத்து விட்டும் சென்ற முறைமையைக் காணமுடிந்தது. இவ்வழமையே பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் தேசவழமையாகியும் விட்டிருந்தது. ஆனால் ஒல்லாந்தர் தமது காலத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகுதியான, விசுவாசமான அரச உத்தியோகத்தருக்கு நிரந்தரமாகவே அந்நிலத்தினை வழங்கி விட்டிருந் தமையையும் காணமுடிந்தது.
இவ்வகையான நிர்வாக அலகுகள் தீவு அடங்கலிலும் பாரதீனப்படுத்தப் பட்டிருந்தமை காரணமாக நிலவுரிமம் தொடர்கான முகாமைத்துவம அலகுகளில் ஊழல்களும், சுரண்டல்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாத தாயிற்று. நிர்வாக முகாமையில் மேலதிகாரவரம்பில் சக்தி வாய்ந்த வர்களாக விளங்கிய பலர் நிலவரி சேகரிப்பிலும், சம்பள மானிய வழங்கல்களிலும் சுரண்டல்களை மேற்கொண்டிருந்தனர். பிரபுக்கள் அந்தஸ்த்திலிருந்த நிர்வாகிகள் பலரும் வருமானவரிச் சுரண்டல்களில் ஈடுபட்டிருந்தனர். அக்கமடேசன்ஸ் (accomadessans) என்ற நிலவரி சேகரிப்பு அலகானது தனது தொழிற்பாட்டில் மேற்கூறப்பட்ட நிலமை களை எதிர்நோக்கியது. 1707க்கும் 1716க்குமிடைப்பட்ட காலத்தில் இலங்கையின் ஆள்பதியாக விளங்கிய பீக்கெர் (Becker) என்பவன் முதலியார்மார் பொறுப்பில் இருந்த அக்கமடேசன்ஸ் அலகுகள் பலவற்றை நீக்கி, அரசின் நேரடிப் பொறுப்பிற்கு உள்வாங்கிக் கொண்டமை காரணமாக ஒல்லாந்து அரசாங்கத்திற்கு அக்கால கட்டத்தில் பெருமளவிலான நிலவருமானம் கிடைத்தமை குறிப்பிடத் தக்கதாகும். வான் இமோவ் கூட அக்கமொடேசன்ஸ் பலவற்றின் மீதான சுதேசிகளின் பரவலான ஊழல்நிறைந்த ஆட்சிப்படுத்தலினை அவதானித்திருந்தமையை ஆள்பதியின் குறிப்புக்களிலிருந்து கண்டு கொள்ளமுடிந்தது. இதனால் அவ்வூழல் நடவடிக்கைகளை களைவதற்காக அக்குறிப்பிட்ட நிர்வாக அலகுடன் பிணைக்கப்பட்டிருந்த சரியான நிலப்பரப்பினை அளவீடு செய்து, அதிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்த வருமான வரித்தொகையை முன்னரேயே பதிவேட்டில்
29

Page 149
இடுவித்தான். ஸ்குறுாடர் கூட இக்குறிப்பிட்ட காணிப்பதிவு மன்றில் வருமான - நிலவரியைச் செலுத்த வேண்டியிருந்தவர்களின் பெயர்களும், தொகையும் கொண்ட ஒரு பெயர்ப்பட்டியலைத் தொங்கவிடச் செய்திருந்தான். இப்பெயர்ப்பட்டியல் இலங்கையில் தயாரிக்கப்பட்டுப் பின், பட்டேவிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் பிரகாரம் சுதேசிய உயர் பதவியாளரான மகா முதலியார் 20 அமுணம் நிலத் தினையும், முதலியார் ஒருவருக்கு 14 அமுணமும், ஒரு கஜநாயக்கவுக்கு 12 அமுணமும் ஒரு கோறளைக்கு 10 அமுணமும், ஒரு விதானைக்கு 4 அமுணமும் என நிலச்சொத்து உடமை வரையறை செய்யப் பட்டிருந்தது. இதே போன்று, இச்செய்கைக்குச் சமாந்தரமாக உத்தியோகத் தர்களின் ஆட்குறைப்பும் நிறைவேற்றப்பட்டது. வான் கொலின்ஸ் (1743 - 51) தனது (ஆள்பதி) நிருவாக காலத்தில் அக்குறிப்பிட்ட நிர்வாக அலுவலகத்தில் மேலதிகமாகவிருந்த உத்தியோகத்தர்களை பதவியி லிருந்து நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஒல்லாந்தரின் சீர்திருந்த நிருவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பும், அந்நிறுவனம் தொடர்ந்து தனது வழமையான, சுதேசியர்களின் குழுச் செல்வாக்குடன் ஊழல் நிறைந்த அலுவலகமாகவே இயங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1799ஆம் ஆண்டிற்குரிய பிரித்தானியப் பதிவேடு ஒன்று அந்நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
சுதேசிய மூலவளப்பிரயோகம் மீதான முகாமைத்துவம் :
'உணவுப் பொருள் விருத்தியே இன்றியமையாதென உணர்ந்த ஒல்லாந்தர், விவசாய அபிவிருத்தியில் மிக்க கவனம், செலுத்துபவர்களாகி பயிர்த்தொழில் வளர்ச்சிக்கு நெல் வேளாண்மையை செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தியும், கொம்பனிக்குரிய விஸ்தாரமான வயல்களில் அரசினர் பொறுப்பில் நெற்பயிர் விளைவிக்கும் முயற்சிகள் வரையும் ஈடுபட்டனர். 1784இல் பேர்ணண்ட் (Burnand) என்பவர் நெற்செய்கையை ஊக்கப் படுத்தும் முகமாக கால்வாய்கள் அமைத்தார். இதனால் நெற்செய்கை நான்கு மடங்காகியது. இதன் நிமித்தம் நெல்லை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நிலைமையும் தோற்றம்பெற்றது. சில ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நெல்லை அனுப்பக் கூடாதென கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தமையால், கொழும்பு காலி முதலிய இடங்களுக்கு ஏற்றுவிக்கப்பட்டது. ஒல்லாந்தருக்குரிய வயல்களில் வேலையில் ஈடுபட்டு வேதனமாகக் கிடைத்த நெல்லை அரசினர்க்கே விற்று விடுவதற்கு சுதேசிய கமக்காரர்களுக்கு உத்தரவு வழங்கப் பட்டிருந்தது. தாமாகவே வேளாண்மை செய்ய விரும்பாதோர் அரசினர்
292

பொறுப்பில் தமக்குக் குறிக்கப்பட்ட நாள்வீதம், ஊழியம் செய்து, வேளாண்மையில் ஈடுபட வேண்டியவராயிருந்தனர்.
விவசாய வளர்ச்சிக்கு ஒல்லாந்தர் ஆற்றியிருந்த பணிகளுள் முதலாவதாக இடம்பெற்றது அடிமைக் குடியேற்றம் ஆகும். இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் வருவிக்கப்பட்டு, அதன் பின்னர் கொம்பனிக் குறியிடப்பட்டு வயல்களில் வேலைக்கமர்த்தப் பட்டனர். இராஜகாரிய முறையையும் பயன்படுத்தி, குடிகளையும் கொண்டு வேலை செய்வித்து திட்டமிட்ட பயிர்த் தொழில் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஒல்லாந்தர் மேற்கொண்டனர். இவ்வாறு கோடிக் கரையிலிருந்து வசூலிக்கப்பட்ட அடிமைகளில் 100 பேர் கட்டுக்கரைக் குளத்தில் வேலைக்காக அமர்த்தப்பட்டனர். மிகுதிப்பேர் மட்டக் களப்பின் கரையோரப் பிரதேசங்களில் குடியேறும்படி ஒல்லாந்தரால் தூண்டப்பட்டனர். கிராமங்களில் நிலவுடமையைக் கொண்டிருந்த குடிகள் அவற்றுக்கான வரியைக் கொடுப்பதற்குப்பதிலாக கொம்பனியார் காட்டும் நிலத்தில் கூட்டாகச் சென்று, உழவுத் தொழில் செய்ய வேண்டியவராயினர். முன்னாட்களில் தங்கள் கிராமங்களுக்கண்மையில் இராஜகாரியம் செய்தவர்கள், தூர இடங்களுக்குச் சென்று, வேலைகளில் அமரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
ஒல்லாந்தரது பொருண்மிய முகாமைத்துவ நோக்கில் மட்டக்களப்புப் பிராந்தியமே அவர்களது முதன்மையான இலக்காக அமைந்ததில் வியப்பேதுமில்லை. "மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வகையிலும் விவசாயத்திற்குகந்த காணிகள் விஸ்தரிக்கப்பட்டன. மட்டக்களப்புப் பிரதேசம் V O, C யின் கடைசிப் பத்தாண்டு காலத்தின் ஆட்சியில் பல்வேறு முன்னேற்றங்களையடைந்தது. கால்வாய்களை அமைப்பதன் மூலம் நெல் உற்பத்தி பெருமளவிற்கு மேற்கொள்ளப்படச் சாத்திய மாயிற்று. அந்நிலை சுதேசிகளுக்கு கொம்பனி விதிக்கும் வரிக்கான வருவாயை ஈட்டித்தரவழி செய்தது. பயனற்றும், வளமற்றும் காணப்பட்ட அரசிற்குரிய நிலங்களை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரைக்கும் கொம்பனி ஏலத்தில் விற்பனை செய்தது. கூடுதலான மக்கள் இந்நிலங் களை பயிர்ச்செய்கையின் பொருட்டோ அல்லது குடியிருப்புக்களை ஏற்படுத்துவதன் பொருட்டோ பணம் கொடுத்து வாங்கினார்கள். காலநிலைக்கும், மண்வளத்திற்கும் ஏற்றவாறு விவசாய நடவடிக்கைகளை இப்பகுதிகளில மக்கள் மேற்கொண்டனர். மாரி காலத்தில் நெற்செய் கையும், வரட்சியான காலத்தில்தானியச் செய்கையும் இப்பிராந்தியத்தில்
மேற்கொள்ளப்பட்டன.
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்திலிருந்து பனை மரங்களை கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்திருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள
293

Page 150
பருத்தித்துறைத் துறைமுகத்தினூடாகவே இப்பனைமரங்கள் ஏற்றுமதியாகின. அதே நேரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் பனை மரங்கள் மிகவும் அடர்த்தியாகவுள்ள பிரதேசங்களில் காணப்பட்ட பனைமரங்களிலிருந்து பதநீர் சேகரிக்கப்பட்டு பனைவெல்லம் தயாரிக்கப்பட்டது. வடமராட்சியில் ஒல்லாந்தர்காலத்தில் தொடங்கப் பட்ட பனைவெல்லக்கட்டித் தொழிற்சாலை ஆங்கிலேயர்ஆட்சிக்காலம் முடியும் வரைக்கும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த முறைமையைக் காணமுடிந்தது. கேரளவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஈழவர்கள் மூலமாகவே பனையிலிருந்து பதநீரைச் சேகரித்து, அப்பனை வெல்லத் தெழிற்சாலையை அவர்கள் இயக்கியிருந்தனர். இற்றை வரைக்கும் அத் தொழிற்சாலையின் அழிபாடுகளும், நிலத்திற்குக் கீழ் பதநீரைத் தொழிற்சாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்காகப் புதைக்கப்பட்ட சுடுமண் வளையங்களினால் ஆன நீண்ட குழாய்த் தொடர்களும் காணப் படுவதிலிருந்து ஒல்லாந்தர் கால பனங்கைத்தொழில் நடவடிக்கைகளை அறிய முடிகிறது. முறைக்கருப்பதீர் என்றவொரு சொற்பிரயோகம் இற்றை வரைக்கும் வடமராட்சிப் பிரதேசத்தில் வழக்கிலிருப்பதனைக் காண்கின்றோம். அதன் பொருள் ஒன்றுவிட்ட ஒருநாளில் பனங்காணிச் சொந்தக்காரனும், அப்பதநீர் வடிக்கும் தொழிலைச்செய்பவனும் பெற்றுக் கொள்ளும் பதநீரையே முறைக்கருப்பநீர் எனக் குறிப்பிடுவர். இதற்காக கடற்கரைகளில் சுண்ணாம்புச் சூளை வைத்து. சுண்ணாம்புப் பொடி தயாரிக்கும் தொழிற் திறனைக்கூட ஒல்லாந்தர் எம்மவருக்கு வழங்கி யிருந்தார்கள். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முதலியார் தரத்தில் வாழ்ந்த குடும்பங்கள் யாவும் சுண்ணாம்பினால் பெரிய, ஆடம்பரமான இல்லங்ளை அமைத்துக் கொண்டமையைக்கூட காணமுடிந்தது.
மட்டக்களப்பிற்கூட மரங்கள் ஏராளமாக இருந்தன. இக்காலத்தில் வெட்டப்பட்ட மரங்களை வைத்து மரவியாபாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அடிமைகளைக் கொண்டும், இராஜகாரியம் என்னும் சம்பளமில்லாத ஊழியத்தாலும், மிகவும் குறைந்த செலவில் காட்டு மரங்களை தறிப்பித்து, ஒல்லாந்தர் வீடுகளுக்கும், கட்டிடங்களுக்குமாக உபயோகித்ததோடு, பிறதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்தனர். மரங்களைத் தறிக்கும் ஊழியம் ஒரு திசாவையின் கீழ் நடாத்தப்பட்டது. கொம்பனி அடிமைகள் இதற்காக ஒதுக்கப்பட்டு வேலைவாங்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ஒரு புசல் அரிசியும், சில எண்ணிக்கையான கருவாடுகளும் வழங்கப்பட்டன. மரங்களைக் கோடை காலத்தில் தறித்து, மாரிகாலத்தில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்துடன் அவை கடற்கரைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும். யானைகளையும் இத்தொழிலுக்காக நன்கு பழக்கி எடுத்திருந்தனர்.
2.94

நெசவுத் தொழில் முகாமைத்துவம் :
இலங்கைத்தீவில் வளர்ச்சி பெற்றிருந்த முக்கியமான ஒரு கைத்தொழிலான நெசவு ஒல்லாந்தர்களது சுதேசப் பொருளாதாரக் கொள்கைகளுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக் கொமாண்டரியிலுள்ள பல மையங் களிலும், மட்டக்களப்பிலும் நெசவுத் தொழில் வளர்த்தெடுக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கரையிலுள்ள பளையகார்ட் என்ற மையத்தின் முக்கியத் துவம் இன்று எந்தளவிற்கு நெசவிற்குப் பிரபல்யம் பெற்றிருந்ததோ அந்தளவிற்கு மட்டக்களப்பும் ஒல்லாந்தரது நடவடிக்கைகளினால் முக்கியத்துவம் பெற்றது. நெசவுத் தொழிலுக்காக பருத்திப் பயிர்ச் செய்கை பரவலாக மேற்கொள்ளப்பட்டு, நூல் நூற்கப்பட்டு, ஆடைநெய்யும் கைத்தொழில் விருத்தி செய்யப்பட்டது. இக்குறிப்பிட்ட தொழிலுக்காக கேஷியர், கைக்கோளர் தென்னிந்தியாவினின்றும் வரவழைத்து, அவர்களது பொறுப்பிலே ஆடைநெய்யும் தொழில் முயற்சியை ஒல்லாந்தர் ஒப்படைத்திருந்தனர். யாழ்ப்பாணக்குடா நாட்டினுள் பருத்தித்துறைத் துறைமுகத்தினை பருத்தியை ஏற்றியிறக்கும் தொழில் முயற்சிக்காகவும் ஒல்லாந்தர் பயன்படுத்தியிருந்தமையையும் அறிகின் றோம். பருத்திநூல் தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரிலிருநத ஆடைநெய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அப்பகுதி நூல்களுக்கான சாயம் இடும் கைத்தொழில் முயற்சி கூட யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், மட்டக் களப்பிலும் மும்முரமாக நடை பெற்றது. சாயவேர்ச் செடி யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் போதியளவிற்கு இயற்கைத் தாவரமாகக் காணப்பட்டமையின் பின்னணியில் சாயம் காச்சும் தொழில் ஒரு குறிப்பிட்டவர்க்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பருத்தி நூலுக்கு சாயமிடும் தொழில் முயற்சியானது நாளடைவில் பனையோலைக் குருத்துக்களுக்கும் (சார்வு ஒலை) சாயமிடும் தொழில் முயற்சியாக யாழ்ப்பாணக் குட்ாநாட்டில் உருவாகியது, அமஸ்ரடாம் தேசிய நூதனசாலையில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் தொல் பொருட்களில் யாழ்ப்பாணத்து பனை ஒலைப் பொருட்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது இங்கு விதந்து குறிப்பிடத் தககது.
மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் சாயம் போடப் பட்ட பருத்திநூல்களைக் கொண்டு நெசவு செய்யும் வேலைப்பழுவைப் பெருமளவிற்கு ஆதித்திராவிடர் பிரிவினரே ஆரம்பத்தில் ஏற்றிருந்தனர். முழவு இசை வல்லாளர்களானஇவர்களை ஒல்லாந்தர் அப்பாரம்பரியத் தொழிலினின்றும் விலக்கி, நெசவு வேலையில் ஈடுபடுத்தியிருந்தமையை மட்டக்களப்பில் காணமுடிந்தது. சாம்பான், சேணியர் போன்ற
295

Page 151
வகுப்பினரும் அங்கு நெசவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வகுப்பினராவர். இவ்வாறு சாயவேர் காச்சுவோர், நூல்நூற்போர், சேலை நெய்வோர் போன்ற தொழிலில் ஈடுபடுவோரை ஒன்டர் கூப்மன் என்ற உத்தியோகத்தன் மேற்பார்வை செய்ய, பிராமணிய வகுப்பைச் சேர்ந்த ஒருவரே கங்காணியாக இருந்து தொழில்நுட்பதிறனுடன் தொழிற் பட்டிருந்த முறைமையையும் காண்கின்றோம்.
'பரம்பரையான தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, கொம்பனியைச் சேர்ந்த அங்கத்தினர் சிலரும் நெசவு வேலை, சாயவேலை போன்றவற்றில் ஈடுபட்டு, பயிற்சி பெற்றிருந்தனர். ஒல்லாந்தராட்சியில் ஆடை நெய்யும் தொழிலும், அத்தொழில் முயற்சியோடு தொடர்புடைய ஏனைய பிரிவு களும் கொம்பனியின் ஏகபோகவுரிமத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டிருந்தமை காரணமாக இக்கைத்தொழிற் துறையின் ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை மிகவும் கவனமாக கொள்கை வகுப்பினடிப் படையில் நடைமுறைப்படுத்தப்பட்டமையைக் காணமுடிந்தது. இக்கால கட்டத்தில் இலங்கைக்கு வெளியேயிருந்து ஆடை - துணிவகைகள் இறக்குமதியாகாமலும் தனிப்பட்டவர்களால் அவை இங்கிருந்து ஏற்றுமதியாகாமலும் ஒல்லாந்துக் கொம்பனி நிர்வாகம் பார்த்துக் கொண்டது. இராஜமுத்திரை பொறிக்கப்பட்ட ஆடை-துணிவகைகளே (முத்திரைச் சந்தைகளில் விற்பனை செய்ய வேண்டும் என ஒல்லாந்தர் கடுமையான சட்டமியற்றியிருந்தனர். முத்திரையில்லாத ஆடைகள் உடுத்தலாகாதென்றும், முன்னரேயிருந்த புடவைகளெல்லாம், குத்தகைக்காரரிடம் கொடுத்து, முத்திரை குத்துவிக்கப்பட வேண்டும் என்றும், நெசவுக்காரருக்கும், சாயக்காரரெவருக்கும் கடன் கொடுக்கப் படாதென்றும், மட்டக்களப்பில் வாழ்ந்த சுதேசிகள், அவ்வூர் வாசிகள் சாயப்புடவை எவற்றையும் உடுத்தலாகாதென்றும் கொம்பனி நிர்வாகம் மிகவும் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியது.
'சீலைக்கு குத்தப்படும் முத்திரைப்பொறி வரியிலிருந்தும், ஏற்றுமதி - இறக்குமதி வரியிலிருந்தும் கொம்பனி நிர்வாகம் பெருமளவு வருமானத்தை ஈட்டிக் கொண்டது. சாயச்சோலைகள் பெரும்பாலும் தென்னிந்தியாவிலுள்ள கோடிக்கரைக்கும், இடையிடையே பட்டேவியா விற்கும், ஐரோப்பா போன்ற பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. மட்டக்களப்பில் கையிருப்பில் இருந்த சேலைகளுக்கு சாயமிடுவதற்கு, மூலப்பொருளாக விளங்கிய சாயவேர் வரட்சி காரணமாக கிடைக்கா திருந்த காலங்களில் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக மதுரையிலிருந்து சாயவேர் இறக்குமதி செய்யப்பட்டு அத்தொழில் முயற்சி முன்னெடுத்துச் செல்லப்பட்டது. சாயச்சேலையால் தம் வருமானததை விருத்தி செய்யும் பொருட்டு கொம்பனி நிர்வாகம் மிகக்கூடிய அக்கறையை
296

எடுத்துக்கொண்டது. சிலசாயக்காரர் அரசினர் வழங்கிய சாயவேரைக் கொண்டு, சேலைகளுக்குச் சாயம் காய்ச்சி, சுதேசிகளுக்கு சட்ட பூர்வமற்ற வகையில், களவாக விற்று வந்தமையால் ஒல்லாந்தர் மட்டக்களப்பினைச் சேர்ந்த எவரும் சாயச்சேலை அணியக்கூடாது எனக் கட்டளைச் சட்டம் பிறப்பித்தனர். யாழ்ப்பாணத்தில் காரைநகர்ப் பிராந்தியத்திலிருந்தே அதிகளவிலான சாயவேர்ச்செடிகளை ஒல்லாந்தர் பெற்றிருந்தனர். நல்லூர், நாயன்மார் கட்டுப் பிராந்தியத்தினை மையமாக வைத்தே சாயம் இடும் தொழில்முனைப்பாக நடைபெற்றதற் கான சான்றுகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சங்கிலியன் தோப்பும் அங்கு அமைந்து காணப்படும் கிறிஸ்தவ ஆலயமுமே அவற்றுக் கான பிரதான நிர்வாக நடவடிக்கைத் தளமாக நல்லூரின்கண் விளங்கிய தனை தமிழர் வரலாற்று ஆவணங்களும், ஒல்லாந்தர்களது பதிவேடுகளும் எமக்கு எடுத்துணர்த்துகின்றன. அருகிலுள்ள முத்திரைச்சந்தி(தை) மாம்பழம் சந்தை போன்ற மையங்களும் ஒல்லாந்தரது வாணிப முகாமைத்துவத்துடன் தொடர்புபட்டவையாகவே காணப்பட்டன. ஒல்லாந்தர் காலத்தில் யமுனாரி என்று அழைக்கப்படும் வரலாற்றுப் புகழ்பூத்த பகரவடிவான நீர்த்தடாகமானது சுண்ணாம்புச்சூளைகள் நிறுவுவதற்கும், சாந்துதயாரிப்புக்குமான நீர்த்தேவையை நிறைவு செய்யப் பயன்படுத்தப்பட்டது.
ஒல்லாந்தர் காலத்தில் விருத்தி செய்யப்பட்ட பொருண்மிய முகாமை யில் மட்பாண்டக் கைத்தொழிலும் உள்ளடக்கப் பட்டமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஒல்லாந்தருடையVO.C. பொறிக்கப்பட்ட உயர்தர மட்பாண்டப் பாத்திரங்கள் ஏராளமாக எமக்குக் கிடைத்துள்ள வகையில் அத்தொழிலின் விருத்தியினை நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. யாழ்ப்பாணக்குடா நாட்டில் வடமராட்சி கிழக்குப் பிராந்தியத்திலுள்ள புரட்டஸ்தாந்து மத (அழிவடைந்த) தேவாலயங்கள் மத்தியில் இம்மட்பாண்டச் சிதறல்கள் பெருமளவுக்குக் காணப் படுகின்றன. ஒல்லாந்தர்காலத்து சோழமண்டலக் கடற்கரை வாணிபத்தில் மட்பாண்டப் பொருட்கள் எந்தளவிற்கு பங்கெடுத்திருந்தன என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் பெரிதாக எங்கும் குறிப்பிடாவிட்டாலும் கூட, மட்பாண்ட உற்பத்திகளில் அவர்கள் ஈடுபட்டிருந்த முறைமையை யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த தொல்லியல் சான்றுகளிலிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. நிலத்துக்கடியில் நீர்ப்பாசனத் திற்காகவும், பனையிலிருந்து பெற்றுக் கொண்ட பதநீரை தொழிற் சாலைக்கு அனுப்புவதற்காகவும் சுடுமண் குழாய்களை அவர்கள் செய்வித்திருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள வடமராட்சிப் பிரதேசத்தில் அவை தாராளமாகக் கிடைத்துள்ளன.
297

Page 152
இந்நூலாதிக்கத்திற்குப் பயன்பட்ட உசாத்துணை நூல்கள்
"... Abeyasinghe, Tikiri
2. Arasaratnam, S.
3. Arasaratnam, S.
4. Arasaratnam, S.
5. Boxer, C. R.
6. Cosme Silva, O. M. da.
7. Cosme Silva, O. M. da.
8. Dewaraja, L. S. (Mrs)
9. Goonewardena, K.W.
10. Knox, Robert.
1 1. Mendis, V. L. B.
12. பத்மநாதன், சி.
13. பத்மநாதன். சி.
14. Pathmanathan. S.
298
Jaffna Under the Portugeses, Lake House Investment Ltd. Colombo, 1986.
Duch Power in Ceylon: 1658 - 1687, Navarang, New Delhi, 1988.
(Ed.), Selections from the Dutch Records of the Government of Sri Lanka, Dept. of National Archives, Sri Lanka, 197.
Merchants Companies and Commerce on the Coromandel Coast-1650-1740, Oxford University Press, Delhi, 1986.
The Portuguese Sea Borne Empire 1415 - 1825, General editor: Plumb, J. H.; Hutchinson of London, 1969.
Fidalgos In the Kingdom of Kotte 1505 - 1656, Colombo, 1990.
Fidalgos In the Kingdom of Jaffna, Colombo, 1992.
The Kandyan Kingdom 1707-1760, Lake House Ltd., Colombo, 1972.
The Foundation of Dutch Power In Ceylon 16381658, Netherlands Institute, Netherlands, 1958.
An Historical Relation of Ceylon The Ceylon Historical Journal, Vol. VI, Ceylon, 1958.
Foreign Relations of Sri Lanka Upto 1965, Tisara Prakasakayo Ltd., Sri Lanka, 1983.
இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2001
“யாழ்ப்பாண இராச்சியம் - ஆட்சிமுறை,” யாழ்ப்பாண இராச்சியம் பதிப்பாசிரியர் சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வெளியீடு, திருநெல்வேலி, 1992.
Kingom of Jaffna. Part - I Colombo, Arul M. Rajendran, 1978.

15.
16.
17.
18.
19.
20.
21.
Perniola, V.
Perera, Fr. S. G.
Pieris, Paul. E.
Rambukwelle, P. B.
Silva, K. M. de.
Silva, R. K. de.
Silva, C. R. de. & Kiribamune, S.
The Catholic Church in Sri Lanka (The Portuguese Period), Vols. I, II & III., The Ceylon Historical Journal Monographs Series, Vol. 12., Sri Lanka, 1989.
A History of Ceylon (The Portuguese and the Dutch Period 1505 - 1796) Colombo, 1943.
Ceylon the Portuguese Era, Vol, I & II., The Ceylon Historical Journal Monographs Series, Vol.I. Sri Lanka. 1983.
The Period of Eight Kings - Portuguese Wars. Sridevi Printers, Sri Lanka, 1996.
A History of Sri Lanka, Oxford University, Press, Delhi, 1981.
Beumer, W.G. M. Illustrations and Views of Dutch Ceylon 1602-1796, Serendip. pub., London, 1988.
K. W. Goonewardena Felicitation Volume, Modern Sri Lanka Studies, Vol, II., Peradeniya, 1989.
299

Page 153


Page 154
கூடை இனத்த தையல்வெலையும்
மள்ளுர்
LJ T por L 1 6YYY ŭo
r .فة مجد ، ج. ه 参考
f
W
s 爆
அனுராதபுரம்
அதுராதபுரம் தச்சு Gaulau
膏、
۹ -به عه
魏
w
^~r y.
ான - t s - - -
a 1
*ܫܗܝܢ
**
敏
, O
Lorra குருநாகல்
- 5. A es ܠܐ ܢ" " . 啤
鲇 • .” தாசிகழAது 2
... c. 等 க்லரே
敏
ヘ Φ
۶- ح و حک
"ఈ ് "
t th . as 0
a
*
 
 
 
 
 

ல்ெ நிலையங்கள்
தையல் வேலை சேலையும் நெசவு வேலையும் மட்பாண்ட வேலை கூடை, பாய் இனக்கும் வேலை தும்பு வேலை
KUTI
yang und anskG5rriduzalr Guuadalawardo gsikatú uü6árata
في "مح* سي
س را
۱ م. "
பொலன்ன்றுவை AV
பொலன்னறுவை
Y

Page 155
缘 -*. YA
---rr షి, ఛ; ** 4
مسمہ، تھی۔سمہ . مممممۂ ؟ ? * : به را به به مانند **थ्.
u'Gr
s
; -ኣ mፓሣቓሣ፣o
*४४४ ’४’ ९:: *४छ्ः़%. 多爹。
纥学莓多
مثنویA
w8x8 ്ൾ f &
 
 
 
 
 
 

லங்கை
இயற்கை வளங்களைக் காட்டும் படம்
gossos
المهمة في هيموجيهية 4, 1 išsis
FH kos oJaws:
务
K. Á hai ért k xắf: , **t:#erki kse ata alar tua &k ...& - - & S is £32******** 鲁兹
u Kaif:
633a 纜攀 : செந்நிற இரத்தினக்கற்கன் శఒపిణ భిః 錢 *S**ణిశ3 ఓపోః 3utties its ... : 2 kxia raża sakehs
、森嫁签酸
f سميت مككم g ? ۔۔۔۔۔مبر ۔ if x* 4. *** I ***
ܘܶ ܬܬܪܶܝ ܕܙܕܘ: ܬ݁2ܝ ܕ̄
" برای 3 به نام 4 محم? ... سمیہ~م
jškår h*S::Aðsť f : دیه iš kiYY y Asif -
#
3. *స్థ

Page 156

லங்கை
traab
A~ AhFAJf8f/2 . , . . , ... — - . .... - - - - - - A»1• 441 8- 1AA AWA fels - . . . . . . . . . . - 6 ve Jar he at alafisa . . . . . . . . . . aska au atavaru - - - - - - - - - - - - - - - as
ada, that age, . . . . . . . . . . . a. s.
aha. A»sT JAali A4PaJab - - ... - - - - - - - — - - - *-**
glas -ܗܿܝ - ܡܣ ܡ ܝܵܗ - ض - - - - - - - ۔ صعسکھ اسمه صحم
4or sa 69 a rialaalatars - - - - - - - - - aa saile''' son a 4tate - - ܫܘܫ* - ܝ - - ܀ - ܚܼ - -- ܗ dur atë disa - 。、。。。。。。。媛产 halta apar... . . . . ..... em aka கேசவ கம். . . .
soadedam vado abane de Sidr ...-......... g that 6) .................. عسس معه عهد مع مصنعمحس( sh توs-۔ ۔ ۔ ۔ ممخر سسق .................................... )(
Ko "--"e essass-asa---
a
esses - -
us : tew ash-lab
„abqM av 24 Az.loa7ast85 9pes 4w tlb-eS4Ava
is gy as 4 م ܡܐ o مه عمدته مماض ا

Page 157


Page 158
செல்லையா கிருஷ்ணர இவர் யாழ். பல்கலைக் விரிவுரையாளராக இரு; வடமராட்சியில் உள்ள தனது கல்வியை யாழ்/ெ யாழ்/நெல்லியடி மத்தி யாழ். வளாகத்தில் முதல் கா. இந்திரபாலா, வி. சி. கைலாசபதி ஆகியோரின் கொள்ளும் வாய்ப்பினை பாடநெறியில் சிறப்புக் அதே பல்கலைக்கழகத்தி இணைக்கப்பட்டார். பி. பல்கலைக்கழகத்தில் 198 நிறைவு செய்தார். இக்கா விளங்கிய ஹம்பியில் இ கொள்ளும் வாய்ப்பினை பல்கலைக்கழக வரலாற் ஆனைக்கோட்டை அகழ் நினைவுகூரத்தக்கது. 1987 விஸ்வபாரதி பல்கலைக் முயற்சிகளைப் பேராசிரி மேற்கொண்ட போதிலு. இன்னும் முற்றுப் பெறா
இவ்வாசிரியர் ஏராளமான ஆவணங்களையும் தனது நங்கையரின் அணிகலன் பண்பாட்டுத் தொன்மை ஆசிரியருமாவார். பல ஆ தொல்லியல்-பண்பாட்டு செய்து நடாத்தியுள்ளார். கண்டுபிடிப்புக்களின் மு. ஆ. திேவராசா, பேராசிரி இவர் பெற்றுக்கொண்ட
பேராசிரியர் சமாதிலிங்க வரலாற்றுத்துறை, யாழ். பல்க:
விலை : ரூபா 400.00
 
 

வரலாறு
P முக வரலாற்றுத்துறைமுதுநிலை சாப்தங்களாகக் கடமையாற்றுகின்றார். விண்டில் கிராமத்தில் 10.10.1953இல் பிறந்த இவர் மதடிஸ்தமிஷன்கலவன் பாடசாலையிலும்
மகாவித்தியாலயத்திலும் பெற்றார். 1975இல் தொடர்பு மாணவர் வரிசையில் பேராசிரியர்கள் பசாமிச சத்தியசீலன், சீலன் கதிர்காமர், !
வழிகாட்டலின்கீழ் ஒருவராக இணைந்து ப்பெற்றுக்கொண்டார். 1979இல் வரலாற்றுப் லைமாணிப்பட்டத்தினைப் பெற்று, தொடர்ந்து ல் வரலாற்றுத்துறை உதவி விரிவுரையாளராக *னர்.இந்தியாவிலுள்ள மைசூர் 1-8 காலகட்டத்தில் பட்டப்பின் படிப்பினை லத்தில் விஜயநகரப் பேரரசின் தலைநகராக டம்பெற்ற அகழ்வாய்வுப் பணிகளிலும் பங்கு ப் பெற்றார். அத்துடன் 1980/81களில் யாழ். றுத்துறையினால் மேற்கொள்ளப்பட்ட வாய்வுகளின்போது இவர் பங்காற்றியமையும் இல் இவர் மேற்கு வங்கம் சாந்தி நிகேதனிலுள்ள கழகத்தில் தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வு யர் MCGhosh இன் வழிகாட்டலின் கீழ் ம் நாட்டுநிலைமை காரணமாக அவ்வாய்வு தநிலையில் உள்ளது.
எதொல்லியல் எச்சச்சான்றுகளையும்
சேகரிப்பில் கொண்டுள்ளார். யாழ்ப்பாண கள், தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பும், இலங்கை வரலாறு பாகம் ஆகிய நூல்களின் ய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் ப்பொருட்காட்சிகள் பலவற்றையும் ஒழுங்கு இவரது கந்தரோனட் மீதான தொல்லியல் டிபுகள் தொடர்பாக சேர்ஐராவதம் மகாதேவன், பர். பத்மநாதன் ஆகியோரது பாராட்டுதல்களை ரென்பதும் குறிப்பிடத்தக்கது.
ம்சத்தியசீலன் PhD 1லக்கழகம் யாழ்ப்பாண்ம்
ISBN 955-1037-03-0
|||||||JY 4 9551 78 أو
Pirania Publicar