கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாணாக்கரின் காந்தி
Page 1
$mኽላዲቖ። ##
క్ష్
... |L "خلاقي ==#### F. 盔 T"="HL"#"_"+T_iي
Ar* - F = == #|
* *
لو لم تم ܕ ܩ+ ܕ ܧܼܲܨ: 51 +1ܧܐ ܛ
■* TتTE"rr = ""; 斑盔蕊 ü *
: F.it リ" التماL+" ;3.5=*ھETE
- ཟ ཟི་ O
క్ష్
... AWARA
■
=====ق#######"=="آلا"LETق
* .
*
li, ilEFTER'' f.
*_* ALLLiiSSAASS SS SS
WENE * 琶、画 旱-單 彗亨 *
-Ti == ;۹EFEFEFFEFتيځEEEEEE
* శస్త్రీ*
* エリ
kl.
Page 2
Page 3
மானுக்கரின் காந்தி
Page 4
மானுக்கரின் காந்தி
அரசு வெளியீடு: 22
அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-3 (இலங்கை),
தொகுப்பாசிரியர்:
ஆர். பாலகிருஷ்ணன்
ரி. எல். எம். புகாரி
வெளியீட்டாளர்:
எம். ஏ. ரஹ்மான்
Page 5
First Edition: aேnd Centenary (1969)
■
Price: Vro !
Maanaakkarin Gandhi
Compiled & Edited by:
R.Balakrishnan
T.L.M. Buhari
Published
under the auspices of
la mpirai
by
M. A. Rahman A RASU PUBLICATIONs Wolfendhal street Colombo-3 (Ceylon)
தேடிஸ்த பத்திய கல்லூரி TFITTELU If
ெேபான், அநுராவின் (வியது பத்து) களிஷ்ட பிரி
எப் பேச்சு
அரசடி பகிர வித்தியாவது மாணவி த. விவமணி
■」古 (வயது பத்து) கனிஷ்ட பிரிவுப் பேச்3
ஆ3ாப்பந்தி பெண்கின் ஆங்கிலப் | гш у танта, "பாதாவி பொன், மேகலாவின் (வயது பதிஜேஸ்'
கரிைஷ்ட பிரிவுப் பேச்சு
卫岳
சிவானந்த வித்தியாயே Lorârâ# நா. கனகசுந்தரத்தின் (வயது பதிஜென்று கிளிப்ட பிரிவுப் பேச்சு
புனித மிக்கேல் கல்லூரி மாணவர் ஆர். ரோம # சுந்தரத்தின் (வயது பன்னிரண்டு) கனிஷ்ட பிரிவுக்
" கட்டுரை
Page 6
மெதடிஸ்த 'க்தியூ கல்லுரரி LTచEFF 5. சதானந்தனின் (வயது பள்ளிோண்டு) கனிஷ்ட *ரிபுக் கட்டுரை
வின்சன்ட் மகளிர் நபர் | '''l-F73: Lotari ஸ். தம்பிராஜாவின் (ಸು.೪y பன்னிரண்டு) கிளிஷ்ட விஷ்க் கட்டுரை
| sofer மிக்கேல் கல்லூரி offârâu# ஸ். சாந்தராஜாவின் (வயது பன்னிரண்டு) கனிஷ்ட ரிவிக் கட்டுரை
)
கோட்டைமுனே Lń** Tačiauriniu LTTE ஜெயயோரியின் (வயது பதின்மூன்று) மத்திய
ஆஃனப்பந்தி பெண்கள் ஆங்கிலப் பாடசாஃபி மானவி தி. காஞ்சணுவின் (வயது பதின்மூன்று) மத்திய பிரிவுக் கட்டுரை
B
ந்ேதாறுமுபே பத்திய மகா வித்தியாலய மாணவி கே, சஞ்சீவரத்தினத்தின் (வயது பநிஜன்கு) மக்திய பிரிடிக் கட்டுரை
品盟
: கோட்டைமுஇன மகர வித்தியாலய மாணவி :பி. விஜயருமாரியின் (வியது பதினுன்கு) மத்திய
பிரிவுப் பேச்சு
望盟
மெதடிஸ்த மத்திய கல்லூரி tgrâräf வி. யோாராஜாவின் (வயது பதினேந்து) கத்திய L ናiffsዛL ̈ Ü, Jዻዻና
卓置
புனித மிக்கேல் கல்லுரரி மாணவர் எம். துரை இராஜசிங்கத்தின் (rயது பதினேழு) சிரேஷ்ட 勘 ມ ຂຶງ Ĉ& &&w
岛直
பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவர் எஸ். மொஹிதீன் பாவாயின் (வயது பதினெட்டு) சிரேஷ்ட |பிரிபுப் பேச்சு
岳岳
Page 7
TuTuLu LYJS S LLLLLLO OtTT SYSK AC S LMLSYT tT S EGGL eLT TT இ. தாமோதரம்பிள்ளேயின் (வயது பத்தொன்பது) சிரேஷ்ட பிரிவுப் பேச்சு
ஆஃனப்பந்தி பெண்கள் ஆங்கி பாடசாஃ) மாணவி எம். விமாவதியின் (வயது பத்தொன்பது) சிரேஷ்ட ié alint
台叠
ஒரு குறிப்பு
இதன் தொகுப்பாசிரியர்களாக ஆர். பாலகிருஷ் னன், ரி. எல். எம். புகாரி ஆகிய இருவரும் இத் தொகுப்புப்பணியினே மிகவும் நிதானத்துடன் செய் துள்ளார்கள். புனரியல் நீங்கலாக, இலக்கண வழுக் கஃனத் திருத்திக் கையெழுத்துப் பிரதி எடுத்தல் சிரமசாத்தியமான பணி. அத்துடன் எத்தனையோ வரலாற்று வழுக்களும், கருத்துப் பிழைகளும் விரவிக் கிடந்ததைப் பார்வையிட்டு, மிக மிக அவசியமான வழுக்களே மட்டுபே கஃளந்தார்கள். சில வழுக்களே நீக்காது அச்சிலே தரவேண்டிய அவசியமும் அவர் களுக்கு ஏற்பட்டது. காரணம் அவற்றையும் நீக்கி விட்டால், தொகுப்பாசிரியர்களே மானுக்கரின் விட பங்களேப் புதிதாக எழுதிச் சேர்த்திருக்கும் அவதியும் ஏற்பட்டிருக்கும்.
எனவே, இங்குள்ள கருத்துக்கள் அஃனத்தும் ஆதார பூர்வமானவை எனக் கொள்ள வேண்டா மெனச் சிறுவர்களேக் கேட்டுக் கொள்ளுகின்றேன். சிறுவர் இலக்கியமாக நான் எழுதியுள்ள "காந்தி போதஃன" என்ற நூலில் அதிகார பூர்வமான தகவல் கஃனப் பெற்றுக் கொள்ளலாம்.
எம். ஏ. ரஹ்மான்
பதிப்புரை
காந்தி நூற்ருண்டு நினைவாக ஐந்து நூல் களே வெளியிடுவதிற் பேருவ ைசுபன டகின் றேன். தமது பிரார்த்தனேகளிலே அல்லாஹ் வின் திருவசனத்தையும் உச்சரித்து பாரத நாட்டிலுள்ள ஆறு கோடி முஸ்லிம்களு நீ தஃவ நிமிர்ந்து வாழத் தன்னம்பிக்கை யூட்டும் பணி யிலே தமது உயிரையே பலியிட்ட அந்த இனி யவரின் நினேவாக ஐந்து நூல்களே இரக காலத் திவ் வெளியிடுவதால் உவகை இரட்டிப் பாகின்றது.
ஐந்து நூல்களுள் இதுவும் ஒன்று. ஈழத்து இலக்கிய அன்பர்களும், தமிழ் நூல் வெளியீட் டாளரும் இதனை ஒரு சாதன என்றே கருது வர். இப்பெருமையை எனக்குரியதாக எடுத் துக் கொள்ளாது, உலகிலே அன்பினுற் சாத &னகள் பல புரிந்த அந்த மஹாத்மாவுக்கே இச்சாதனேயையும் பயனே யும் அர்ப்பணமாக்கு கின்றேன்"
இலக்கியப் பEரியில் நான் கட்டித்த கொள்கை புடையவன். இலக்கியப் படைப்பு சுய வித்துவ சாதன யாக மட்டுமல்லாது, சுவைஞனின் நெஞ்சக் களிப்புக்குஞ் செழிப்புக்கும் உதவுதல் வேண்டும் என்பது என் ஆசை. சுவைஞரின் வகையும், சுவைப்பு முறையும் பள் வகைத் து ஆணுல், அன்றும்-இன்றும்- என்றும் என் சிந்தையில் முத லிடம் பெறுஞ் சுவைஞர்கள் சிறு ர்களே. அவர்களே மிகவும் நேசிக்கின்றே ன் அவர்களுடைய சுவைப்பினே ப்
Page 8
பெரிதும் மதிக்கின்றேன். அவை பழுது படாதன. செழுமை பெற வல்லன. அவர்களுடைய சுவைப்பிற்கா கவே, "இளமைப் பருவத்திலே’ என்ற என் முதல் நூலை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வெளியிட்டேன்.
சிறுவர் இலக்கியத்திற்கு அப்பாற்படவும் எழுத நேர்ந்தது. நிர்ப்பந்தம் வனைந்த தளத்தில் அதுவுஞ் சரியே. ஆணுல், சிறுவர் இலக்கியத்திற்கு வனப்பூட்டும் நூல்கள் படைத்தல் வேண்டும், வெளியிடுதல் வேண்டும என்ற ஆர்வம் மட்டும் என்றுமே தணிந்ததில்லை. அத் துடன், சிறு வருடைய இலக்கிய ஆர்வத்திற்குப் பண்ணை அமைத்தல் வேண்டு மென்ற சித்த முந் தளரவில்லை." இவ்வேதுக்கள் தொற்றியே என் நிர்வாகப் பொறுப்பில் வெளிவரும் "இளம் பிறை மாசிகையில் “வளரும் பயிர் *கல்லூரி மன்றம்’ ஆகிய பகுதிகளை ஆரம்பித்து, சிறு வரின் கன்னிப் படைப்புகளைப் பிரசுரித்து வருகின்றேன். ஐந்து நூல்களுள் ஒன்ரு ன இதனைச் சிறரின் இலக்கிய ஆக்கத்திற்குப் பங்கிட்டுக் கொடுத்த மைக்கு அவர் களுடைய இலக்கிய ஆர்வம் வளர்க்கப்படல் வேண்டும் என்பதில் நான் கொண்டிருக்கும் அக்கறையே காரணம். இதில் இடம் பெற்றுள்ள சிரு ரின் ஆக்கங்களுக்குப் பின் ஞல், பெரியவர்களுடைய நிழல்கள் நெடிதுயர்ந்து நிற் பதை அவதானிக்க முடிகின்றது. கால ஓட்டத்தில், சிறுவருடைய இலக்கிய வளாச்சி என்னும் ஒளியில், இந்த நிழல்கள் மறைந்துவிடும் என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் விதை மிகவும் மானசீகமானது. சிறுவர் களுடைய படைப்புகளைத் தாங்கிச் சஞ்சிகைகள் பல வெளிவந்தன-வருகின்றன ஆனல், அவர்களுடைய படைப் புக்களை மட்டுமே தாங்கி ஈழத்தில் வெளிவரும் முதலாவது நூல் இதுவே. இந்த நூல் சிறுவர்களுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்து, அவர்கள் மத்தியில் புதிய இலக் கியகாரர் மலர் வார்களேனுல், அதைப் பார்க்கிலும் நான டையக்கூடிய மகிழ்ச்சி பிறிதில்லை. இன்னும் ஒன்று. இது சிறுவர்கள், எழுதியி நூலே தவிர, சிறுவர்
6
‘இலக்கிய நூலன்று என்பது கவனத்திற்குரியது. இரண்
டிற்கும் பாரிய வேறுபாடு உண்டு.
அகில இலங்கையிலும், மாணுக்கருக்காக நடை பெற்ற காந்தி நினைவுப் போட்டிகளிற் பரிசு பெற்ற நாற்பது கட்டுரைகளையும் பேச்சுகளையும் இத் தொகு தியிலே திரட்டல் வேண்டுமென்பது என் நோக்கமாக இருந்தது. யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே இப் போட்டிகள் முற்றுப் பெறவில்லை. எனவே, கிழக்குப் பிராந்தியத்தில் வெற்றி பெற்ற பதினேழு விடயங்களை மட்டுமே இந்நூலிற் சேர்க்க முடிந்தது. இவற்றை வெளி யிட இன் முகத்துடன் அனுமதி வழங்கிய காந்தி நூற் ருண்டு விழாக்குழு (மட்டக் களப்பு மாவட்டம்) வினருக்கு --குறிப்பாக அதன் தலைவரும் அரசாங்க அதிபருமான தே. கேசையா அவர்களுக்கும், செயலாளரும் மத்திய கல்லூரி அதிபருமான பி. ரி. சின்னையா அவர்களுக்கும்என் நன்றிகள். மிகக் குறுகிய காலத்தில், இவற்றைத் தொகுத்து விபரங்கள் தருவித்து, புகைப்படங்கள் சேர்த்துப் பல பட உழைத்த தொகுப்பாசிரியர்களான ஆர். பாலகிருஷ்ணன், ரி. எல். எம் புகாரி ஆகிய இலக் கிய ஆபிமானிகளான இரு ஆசிரியர்களுக்கும் என் நன்றி கள். காந்திஜியைக் கண்ட மாணு க்கருக்கும், அவர்கள் தம் இலக்கியத்தைச் சுவைப்போருக்கும் என் அன்பு.
காலமோ குறுகியது; பணியோ நெடிது. எனவே, சக அச்சக அன்பர்களுடைய ஒத்துழைப்பை நாட நேர்ந்தது. இந் நூலின் பெரும் பகுதி சுதந்திரன் அச் சகத்தில் அச்சிடப்பட்டது. இப்பணியில் சுதந்திரன் அச் சக ஊழியர்கள்-குறிப்பாக அதன் முகாமையாள் திரு க. உமாபதிசிவம் அவர்கள்-தந்த இனிய ஒத்துழைப்பு என்றும் என் நினைவை விட்டலகாது.
எம். ஏ. ரஹ்மான்
Page 9
நன்றியுரை
இந்நூலிலுள்ள விடயங்களை எப்படி வரிசைப்படுத்து வது என்பது தான் முதலிலே தோன்றிய பிரச்சினை. கட்டுரைகளை ஒரு பிரிவாகவும், பேச்சுக்களை மறு பிரிவாக, வும் வகுத் திருக்கலாமா? மாணவர் - மாணவிகள் என்று வகுத் திருக்கலாமா? பரிசு பெற்ற வரிசையிலே தொகுத் திருக்கலாமா? பின்னது புத்தி பூர்வமான காரியமாகவே தோன்றியது. ஆனல், அப்படி வகுத் திருந்தால், சில இடங்களிலே நீதியின் தராசு சரியாகக் கையாளப்பட வில்லை என்ற உண்மையையும் விளக்கிய "பழி' நம்மீது சுமத்தப்பட்டுவிடுமோ என அஞ்சினுேம். எனவே, கீழ்ப் பிரிவு மாணுக்கருக்கு முக்கியத் துவங் கொடுத்து, பிறந்ததேதிகளை வைத்து, கீழிருந்து மேலாக வரிசைப்படுத்து: தல் சிறப்புடைத்து எனக் கருதி அவ்வாறே செய்? தோம். வழுக்கள் களையும் வேலையில், இறுக்கமான புணரியலைப் புகுத் தவில்லை. அது மட்டுமாவது இவை மானுக்கரின் சுய சிருட்டிகள் எனத் தோற்றந்தர உதவலாமல்லவா?
இத் தொகுப்பு வேலையில் உதவிய அதிபர்கள் பி. ரி. சின்னையா, திருமதி க. திருநாவுக்கரசு, கே. அருணுசலம் ஆகியோருக்கும், ஆசிரியர்கள் அன்றியஸ், வி. சிவசுப்பிர மணியம், கே. அமரசிங்கம், மா. சிவநேச ராசா , கே. குமாரகுலரத்தினம், நண்பர் தாமோதரம்பிள்ளை ஆகி யோருக்கும் நமது நன்றிகள். இவற்றைத் தொகுக்க அனுமதி வழங்கிய மாவட்ட காந்தி நூற்றண்டு விழாத் தலைவர்-அரசாங்க அதிபர் டி. நேசையா அவர்களுக்கும் செயலாளர் பி. ரி. சின்னையா அவர்களுக்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். உரிய காலத்தில் புகைப்படங்கள் தந்துதவிய மாணுக்கரின் அன்புக்கும்: நன்றி.
ஆர். பாலகிருஷ்ணன் ரி, எல். எம். புகாரி
ஏருவூர் 2-10-69
குறுநடை ஒன்று
பொன், அநுரா
அன்பும் பண்பும் கெழுமிய தலைவர் அவர்களே! அறிவு சார்ந்த அவையோரே! நியாயம் வழங்கும் பெற் றியரான நடுவர்களே! என் அன்பு வணக்கம். போர்பந் தர் என்னும் ஊரிலே, கரம்சந் காந்திக்கும் புத்தாளி பாய்க்கும் மகனுக. 1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங் கள் இரண்டாம் நாள் மோகன தாஸ் காந்தி பிறந்தார் எனத் தொடங்கி, 1948-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30-ஆம் நாளன்று ஒர் இந்து வெறியனின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானர் என்பது வரையிலும், தேதிகள் சிலவற்றைக் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்புவிப்பதினல் நாம் காந்தியின் உண்மையான சொரூபத்தைத் தரிசித்தல்
சாலாது.
உண்மையான காந்தியைத் தரிசிப்பதற்கு முன்னர் இரண்டு காட்சிகளை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். ஒரு காட்சி, வாளும் வாளும், வேலும்
9
Page 10
வேலும், ஈட்டியும் ஈட்டியும், குதிரையும் குதிரையும், யானே யும் யானையும், ரதமும் ரத மும், மல் லனும் மல்ல னும் பொருதுகின்ற சமர்க்க ளத்திலே, ஈட்டிமுனைகண்டு இமை கொட்டியவன் கோழை, அதைத் தனது இதய கீத மாக்கிக் கொண்டவன் தமிழன்’ என வீறுகொண்டு எழுத கின்ருன் ஒருவன். அவனை "மறத் தமிழன்’ என பாராட்ட முந்துகின் ருர்கள் சங்ககாலப் புலவர்கள். பிறிதொரு காட்சி முப்படையும் துணைக்கு நிற்கும். வல்லபத்துடன், நவீன விஞ்ஞானப் போர்க்கருவிகள்" தாங்கி, பாரத அன்னையை நிலத்திலே வீழ்த்தித் துன்? புறுத்துவதில் இன்பங் காணுகிரு ர்கள் ஆங்கிலேய வீரர் கள். "அன்னையின் மானம் காப்பேன்" எனக் குரல்" கொடுத்து, கோலூன்றி, மெலிந்த ஒல்லியான உருவம் ஒன்று அவ்விடம் வருகின்றது. 'கிழவா, விலகி நில்!! மது டடை பலத்தை நீ அறிவாய்?’ என ஆங்கிலேய்ர் கள் உறுமுகி ருர்கள். 'உங்கள் படை பலத்தை நான் அறி: வேன். அதிலும் பார்க்க ஆயிரம் மடங்கு சக்தி மிக்கது நான் அன்பு என்ற உலைக் களத்தில் வடித்து எடுத்துள்ளன அகிம்சை என்னும் ஆயுதம் என்பதை அறிந்து கொள் ளுங்கள்’ என்கிருர் அக் கிழவர்."நீர் அரை நிர்வாணப் பக் இரி, போர்க்களம் வந்திருக்கிறீர்! உம்மைப் பாதுகாத் துக்கொள்ள உம்மிடம் எந்தக் கேடயமும் கிடையாது" என வீரர்கள் ஏளனஞ் செய்கிருர்கள். “உண்மை என்ற கவசத்தை நான் தாங்கி நிற்பதை நீங்கள் அறிய வில்லையா? உங்களுடைய பாவங்களுக்காகவும் என்" உடலை வருத்திக் கொள்ளும் துணிவு என் د لuسsgo] 60) L னிடம் இருக்கிறது" எனக் கூறும் அக்கிழவர் உறுதி பாக முன்னேறுகிருர், அந்த ஒடிந்த உடலிலே குடி கொண்டிருக்கும் நெடிய உறுதியைக் கண்டு படைவீரர்" கள் நாணுகிருர்கள். மாபெரும் சாம்ராச்சியத்திற்கு, எதிராக அக்கிழவர் தொடுத்த அகிம்சை யுத்தத்தில் அக்கிழவரே வெற்றி வாகை சூடுகின்ருர் . அந்தக்,
0
கிழவரே மகாத்மா காந்தி என்பதை நான் சொல் லாமலே நீங்கள் அறிவீர்கள்.
சத்தியம் அகிம்சை என்ற இரண்டு முகங்களைக் கொண்ட தர்ம நாணயத்தை உருவாக்கினர். காலதேச வர்த்தமானங்களைக் கடந்து செல்லும் மதிப்பு அதற்கு உண்டு. உலகிலே கீர்த்தி பெற்ற அநேகர் ஏதேனும் ஒரு துறையில் மட்டுமே மேன்மை பெற்று விளங்கினர்கள். து வரலாறு பகரும் உண்மை. ஆனல், காந்தி மகா னின் அன்புப் பார்வை பட்டுப் புனிதமடையாத வாழ்க் கெயின் எந்தத் துறையுமே இல்லை என்பதைத் துணிந்து கூறலாம். இராஜதந்திரி, அரசியல்வாதி, சீர்திருத்தச் செம்மல், சமூகத் தொண்டர், சத்தியாக்கிரகி, விடுத லைப் போராளி, தீண்டாமையின் வைரி, மதுவின் எதிரி, மாதர் விடுதலை இயக்கத்தின் தலைமகன், குரு போதகர், மனிதாபிமானி, சர்வதேச மித்திரன், சத்திய பரிசோத கர், ஞானி, புனிதர், மகான், மகாத்மா எனப் பலபட அவர் காட்சியளிக்கின் ருர், ஒல்லியான மெல்லிய உட லமைப்புக் கொண்ட இந்தக் குறுமுனி சாதித்தவற் றைப் போன்று இந்த இருபதாம் நூற்ருண்டின் வரலாற் றில் வேறெந்தத் தனி மனிதனுஞ் சாதிக்கவில்லை.
KYM இதனலன்ருே, "கங்கை நீரிலும் புனிதமானவர்; இமயத்திலும் பார்க்க உயர்ந்து நிற்பவர்’ என உயிர் வாழ்ந்த காலத்திலேயே கோடானு கோடி மக்களாற் டோற்றப்பட்டார். காலத்தால் அழியாது, வெந்தழ லால் வேகாது அவர் புகழ். வாழ்க அவர் நாமம்.
பொன் அநுரா மெதடிஸ்த மத்திய கல்லூரி
1-I I-59
பேச்சு
Page 11
குறுநடை இரண்டு
த. சிவமணி
சிவைத் தலைவர் அவர்களே! முதற்கண் உங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் உண்மைதன்னை நம்பும் யாரும் சேருவீர்” என்று, காந்தியின் சத்திய யுகத்திற்கு அறை கூவப் பாடி ஞன் நமது தமிழ்க் கவிஞன் ஒருவன். ஆம் , கத்தியின்றி ரத் தமின்றி காந்தி வெள்ளையருடன் நடத்திய போர் தான் இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது. இந்தியாவில் ஒரு சாதாரண கிராமமான போர்பந்த ரிலே பிறந்த மோகன தாஸ் காந்தி இந்தியாவின் ஒப் பற்ற தலைவராகி, மகாத்மாவாகக் காரணம் யாது? அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டமையே அவரைத் தனிப்பெருந் தலைவராக்கியது. அவரின் அரும் பெரும் சேவைகளே அவரை மகாத்மா வாக்கியது.
12
ஆங்கிலேயரின் ஆட்யின் கீழ் அடிமைப்பட்டு, அல்ல லூற்ற இந்தியாவை தாழ்வுற்று, வறுமை மிஞ்கி, விடு தலே தவறிக் கெட்டுப் பாழ்பட்டுப்போன பாரததேசந் தன்னை; வெள்ளையரின் பிடியில் அகப்பட்டுத் தனது சாதன தர்மத்தையே இழந்திருந்த பழம்பெரும் புண் னிய பூமியை; சுதந்திர பாரதமாய் மாற்றத் தன் உடல், பொருள், ஆவி, அத்தனையையும் ஆகுதியாக்கினர். இதனலன் ருே இன்னுங்கூட வெளிநாட்டுச் சிறர்கள் இந்தியா என்ருல் அதை காந்தியின் நாடு என்கிருர்கள்.
பரம்பரை பரம்பரையாக மரபு மரபாக அந்நியர்கள் வாளெடுத்து இந்தியாமீது போர் தொடுத்த போதெல் லாம்; இந்தியர் பதிலுக்கு வாளெடுத்து அந்நியரைக் கலைத்தார்கள் என்று தான் வரலாறு காட்டுகிறது. இந்த உண்மையையும், இந்தியாவின் ஆயுத பலத்தையும் கண்ட பிரித்தானிய அரசு புதியதொரு சட்ட த்தை உரு வாக்கியது. அரசாங்கத்தின் அனுமதியின்றி எவரும் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதே அது. இதனல் இந்தியா தன் விடுதலைக்கான ஆயுதத்தையே இழந்தது. விடிவுக்கு வழியின்றி விழித்து நின்றது. இந்த நேரத்திலே தான் அரசியல் வானிலே காந்தி ஓர் துருவ நட்சத்திர மாகத் தோன்றினர். ஆயுதம் இழந்த இந்தியாவுக்குப் புதியதோர் போர்த் தந்திரத்தைக் கற்பித்தார். அதுவே அறப்போர். ஆயுத மின்றி ஆத்மீக அடிப்படையில் வெள் ளையனுக் கெதிராக நடத்திய சத்தியுத்தம். ஒத்துழை யாமை, சட்டமறுப்பு என்பன மூலம் ஆட்சியை தம்பிக்க வைத்தல். இப் புதிய போர் பாரெங்கும் கட்டியாண்ட வெள்ளையரை விழிக்க வைத்தது. விடுதலை கொடுப்பதை விட வேறு வழி இல்லை என்ற முடிவுக்கும் வர வைத்தது
அரசியல் விடுதலை மாத்திரம் பெற்றுக் கொடுப்பது அடிகளின் நோக்க மன்று. ஆன்மீக விடுதலையே அவரின் முக்கிய குறிக்கோளாகும். இந்தியா மதங்களாகவும்
Page 12
சாதிகளாகவும் பிரிந்து கிடந்தது. அக்காலத்தில் இந் தியா ஏழ்மையின் கோரப்பிடியில் சிக்கித் தத்தளித்தது. எனவே இந்தியாவிற்கு விடுதலை வேறு துறைகளிலும் வேண்டியிருந்தது. அத்துறைகளில் அவர் ஆற்றிய சேவை கள் தாம் அவரை மகாத்மாவாக உயர்த்தியது
இந்தியாவின் ஏழ்மைச் சொரூபத்தினைக் காந்தியடி களின் தோற்றத்திலேயே கண்டு கொள்ளலாம். அரை நிர்வானப் பக்கிரி என்று அந்நியர் பழிக்கும் நிலைக்கு அவர் கோலம் இருந்தது. என்ருலும் நாற்பது கோடி மக்களும் அணியும் அதே உடையைத் 1தான் நான் அணி வேன் என்று கூறி மக்களைப் போலவே வாழ்ந்த மகாத்மா போன்ற ஒப்பற்ற தலைவர் எவருமே இலர். அவருடைய அந்நியத் துணி பகிஷ்கரிப்பு இயக்கமும், கத ராடை இயக்கமும் ஏழை மக்களின் இனிய வாழ்விற்காக ஆக்கப்பட்டதல்லவா?
இது மட்டுமா? இந்தியாவிலே தாழ்த்தப்பட்டவர் கள் என்று கூறி, ஒரு சாராரை ஒடுக்கி வைத்தார்கள். அவர்களை ஹரிஜனங்கள் என்று அழைத்து, ஹரியின் மக்களாக்கி, தீண்டாமைக்கு எதிராகப் போராடினுர் காந்தி. இன்று இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு ள்ளதென்ரு ல், இந்தியாவில் இன்று தாழ்த்தப்பட்ட மக்களும் அரியணையில் அமர்ந்துள்ளார்கள் என்றல், அதற்குக் காரணர் காந்தியே.
"அவருடைய ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற வணக்கப் பாடலிலே சர்வ மதத்தின் சமரசத்தையும் நாம் காணுகின்ருேம். இவ்வண்ணம் இந்தியாவுக்கான அரசியல் விடுதலையும், சமுதாய விடுதலையும், ஆன்மீக விடுதலையும் வாங்கித் தந்தவர் மகாத்மா காந்தி. இத ஞலேதான் ‘காந்தியின் இந்தியா' என்ற வார்த்தை கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் இன்று பொறிக்கப்பட்டுள்ளன.
த. சிவமணி. அரசடி ம. வி. 24-4-59 பேச்சு
குறுநடை மூன்று
பொன். மேகலா
சத்தியத்தின் ஒப்புயர்வற்ற திருவுருமாக வாழ்ந்து, பாரதத்தின் புகழை ஓங்கச் செய்த, அண்ணல் காத்திக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் இங்கு கூடியிருக்கி *ருேம், புனிதர், புண்ணியர், புங்கவர், தூயர், துல்லியர் என்றெந்த அடைமொழிகளிலும் அடக்க இயலாத ஒர் *அவதார புருடரே மகாத்மா காந்தி. அவர் தம் அஞ்சலி டியாக நடைபெறும் இவ்விழாவிலே பேசக் கிடைத்தமை
என்பாக்கியமே.
பரத கண்டத்திலே உள்ள குஜராத்தி மொழி பேசும் போர்பந்தர் என்னும் ஊரிலே ஆசாரசீலமும், ஆராத 'இறை பக்தியும் உள்ள வைஷ் வண வைசியர் குலத்திலே இற்றைக்கு ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், கரம் சந் காந்தி தம்பதிகளுக்குச் சற்புத் திரணுக மோகன் கரம் சத் காந்தி அவர்கள் அவதரித்தார்கள். தம் இளவயதிலேயே இறைபக்தியுள்ளவராகவும் கல்வி கேள்விகளில் விருப்
15
Page 13
புடையவராகவுஞ் சிறந்து விளங்கினர். பின்னர் இங்கி? லாந்து சென்று சட்டப்படிப்பிலே தேர்ச்சி பெற அவா" வினர். அங்கு வாழும் வெள்ளையர் மது அருந்தியும் மாமி சம் உண்டும் களிக்கிரு ர்கள்; இது பாவமானது; நமது ஆசாரத்துக்கு ஒவ்வாதது; அங்கு சென்ருல் மகனும் அந் நிய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவாான்' எனத்தாயார் கவன்முர். அப்பொழுது அவற்றைத் தீண்ட மாட் டேனெக் காந்தி சத்திய வாக்குக் கொடுத்தார். அந்த வாக்குறுதியிலிருந்து அவர் ஒரு தடவை தானுந் தவறிய* தில்லை.
இங்கிலாந்திற் கல்வி பயின்ற காந்தி, விடுதலைப் போராட்டக் சலை பயின்றது தென்னபிரிக்காவில்! அங்கு. வாழும் இந்தியர்கள் அடிமைகளாக மிடிமை வாழ்க்கை. நடத்தும் கொடுமைகளைக் கண்டு செந்நீர் சொரிந்தார். அவர்களுடைய மனிதகுல உரிமைகளைப் பெற்றுத் தரு, வதற்கு எத்தனையோ சாத்வீகப் போராட்டங்களை நடத். திஞர்.
*விலங்கிடப்பட்டு, பூவும் பொட்டும் இழந்த கோலத்திலே அவதியுறும் பாரத அன்னையின் அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து, அவள் புன்னகை பூக்கும் பொலிவை என் வாழ்நாளிற் காண்பேன்" என்ற உறுதி" யுடன் தாய்நாடு திரும்பினுர், முஸ்லிம்-இந்து ஒற்று மையை வலியுறுத்தினர். தீண்டாமையை ஒழிக்கப்பாடு பட்டார். மொழி பலவுடைய பாரத அன்னே யைச் சிந்தை ஒன்றுடையவளாக மாற்றினர். வெளிநாட்டுத். து Eப்பகிஷ்காரம், கதர் இயக்கம், உண்ணுவிரதம், உப்புச் சத்தியாக்கிரகம், சாத்வீக மறியல் ஆகிய பல வழிவகைகளால் இந்திய நாட்டின் விடுதலையைத் துரி தப்படுத்தினர். இதன் விளைவாகவே, "சூரியன் அஸ்த மிப்பதேயில்லை" என்று பெருமை பேசிப் பறந்த யூனி யன் ஜாக்கொடி இறக்கப்பட்டு, புதிய பாரதத்தின் சதந் திர மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கலாயிற்து
qደ 6
காந்தி ஓர் இராச தந்திரியாகவும், சமயத் தொண்ட ஞகவும், சேனைத் தலைவனுகவும், அரசியல்வாதியாகவும் ஏககாலத்தில் வாழ்ந்தார். "அரை நிர்வாணப் பக்கிரி* என இழிந்துரைக்கப்பட்ட போதிலும் எளிமை பூண்டு, தூய்மை தாங்கி, ‘கைராட்டையே ஆயுதம் கதரா டையே சோபிதமாக வாழ்ந்த மனிதருள் மாணிக் கம் அவர் .
காந்திஜி ஒர் இந்து வெறியனின் துப்பாக்கிக்குப் பலியான மை சரித்திரத்தின் பயங்கர சித்திர விசித்திர மாகும். ஆனலும் நச்சுக்கோப்பையிலே சாவினை: அணைத்த சோக்கிறட்டீஸ், சிலுவையிலே மரித்த ஏசு, பெருமான் போன்ற மகான்களின் வரிசையிலே மகாத்மா காந்தியும் நித்திய மகாத்மாவானுர்.
பொன் மேகலா ஆனைப்பந்தி பெண்கள் ஆங்கிலப் பாடசாலை? 24-4-58
பேச்சு
Page 14
குறுநடை நான்கு
கா, கனகசுந்தரம்
சிறப்போரின் ஆற்றலை அகில உலகுக்கும் அறியக் கொடுத்தவர் அண்ணலார் என்று அவனி போற்றும் காந்திஜி அவர்களே. “சத்தியமும் அன்பும் சாகும் வரை மேன்மை தரும்” என்ற சற்போதனையைத் தலைமேற் கொண்டவர் தாரணியேத்தும் காந்தியடிகளே. அன்பும் அகிம்சையும் அ ைவர்க்கும் அவசியம் என்பதை அநுப வத்தில் காட்டியவர் பாரதத் தாயின் விடுதலைப்புருஷரே. “என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற குறிக்கோளை ஏற்று நடத்தியவர் எம்மிடைத் தோன்றிய பாபுஜி அவர் களே. ^
பாரத நாட்டின் மேற்குக் கரையிலே பரந்து கிடப் பது கத்தியவார். கத்தியவாரின் மத்தியிலே கண்ணியம் மிக்க குடும்பத்திலே காந்திஜி பிறந்தார். இற்றைக்கு ஒரு நூறு வருடங்களுக்கு முன்னே எழில்நிறை போர் பந்தரில் அண்ணலார் அவதரித்தார். இராசகோட்டை
函 &
இராசனின் இருளகற்றும் அமைச்சராக "இலங்கினர் இவரது தந்தை காபா காந்தி. வாய்மையும் நேர்மையும் வாய்க்கப் பெற்ற இவரது தந்தைக்கு வாழ்க்கைத் துணைவியானள் புத்தளிபாய். புத்தளிபாயின் போதனைத் திறனல் புத்துணர்வடைந்தார் புதல்வர் காந்தி. அன்னை யின் கட்டளையை அநுசரித்து அதன்படி நடக்கத் தொடங் கினர். மேல்நாடு சென்று கற்க விழைந்தார். ஆங்கில நாடு சென்று அங்குள்ள கலைகளை அறியவேண்டு மென்று ஆசைப்பட்டார். அன்னை புத்தளிபாயிடம் அவரது விருப் பத்தை அறிய வைத்தார். தாயாரின் தணிவிருப்பை வேண்டி நின் ருர் காந்தி ஜி. பெற்ற பிள்ளையைப் பிறதேச மனுப்ப எந்தத் தாய் தான் விரும்புவாள்? புதல்வரின் ஆசையைப் புந்தியிற் கொண்ட புத்தளிபாயும் புத்திகள் பல புகன் ருள். மது அருந்துதல், மாமிசம் புசித்தல் ஆதி யனவற்றை மறுத்து விடும் படி மன்ரு டினுள். ஆங்கில நாட்டை அமைவுற அடைந்து, சட்டக் கலையினைச் சரிவ ரப் பயிலென விடுத்தாளன்னை. நிறத்திலும் பெயரிலும் நீளறிவு தங்கவில்லை என்பதை எடுத்துக்காட்டினர் ஆங் கில நாட்டுக்கு. சட்டக் கல்லூரியிற் சேர்ந்தார், சட்டக் கலையைச் சரிவரப் பயின்ருர். புத்தக அறிவையும் புது நண்பர் உறவையும் மெத் தெனக் கொண்டார் மேலை நாட்டினில். ஆங்கில நாட்டில் ஆண்டு பல கழித்த பின் மீண்டார் தம்தாய்நாட்டிற்கு. இராசகோட்டை இராச் *சியத்தில் சட்டவல்லுநராகத் திகழ்ந்தார். நீதிக்காக வாதிட்டு நியாயத்தை நிலைநாட்ட விழைந்தார். பின் னர் சேவையின் தேவையே காரணமாகச் சென்ருர் தென்ன பிரிக்கா. அங்கு தாய்நாட்டு மக்கள் தன்மானம் இழந்து தயங்கித் திரிவதை ஊனக்கண்ணுல் உற்றுநோக் கிஞர். கூலியென்னும் பெயரால் அவர்கள் கூவப்படு வதை கூர்மையுடன் கேட்டார். கறுத்தவன் என்ற குற் றத்திற்காக கழிக்கப்படும் நிலையினைக் கண்ணுரக் கண் டார். ஆட்சியாளரின் அட்டூழியங்களை அநுபவத்திற் கண்டார். ஈட்டி, வாள், அம்பினுல் இவர்களை எதிர்க்க
19
Page 15
இயலாது என்பதை இலகுவில் அறிந்தார். துப்பாக்கி கொண்டு தொலைத்தல் பாவம் என்பதையுணர்ந்தார். அகில உலகையும் அடக்கவல்ல ஆயுதத்தை ஏந்தினர்அகிம்சை என்னும் ஆயுதம் கொண்டு அனைவரையும் பணிய வைக்கலாம் என்பதை அகிலத்துக்குக் காட்டி னர். சென்ற வேலையைத் திறம்பட முடித்தபின் திரும்பி னர் தாய்நாட்டுக்கு. தாய்நாட்டின் தரித்திர நிலையைத் தரை பட்டமாக்க எண்ணினர். தீண்டாமைக்குச் சாவு மணியடிக்கத் திட்டமிட்டார். “சாதிகள் இல்லையடி பாப்பா" என்னும் பொன்னன வசனத்தில் கருத்தைச் செலுத்தினர். "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப் பொவ்வா செய் தொழில் வேற்றுமையால் என்ற செந். நாப் போதகரின் செந்தமிழ் வாக்கை செயற்படுத்த விழைந்தார். "எல்லாரும் ஒர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்னும் ஒப்பற்ற போத னை ைய ஊர்கள் தோறும் ஊன்றச் செய்தார். நாற்பது: கோடிமக்களைக் கொண்ட நாம் நாலு பத்து வெள்ளை யரை நாடலாமா? நாட்டின் நலன் கருதி நல்லன செய்ய வேண்டாமா?அந்நியராம் வெள்ளையரின் ஆதிக்கத்தை அகற்றி விட வேண்டாமா? என்பன போன்ற சுலோகங் களை எங்கும் பரப்பினர். எல்லார்க்கும் புகட்டினர். *சொல்லுதல் யார்க்கும் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’’ என்ற வள்ளுவர் வாக்கை செயல்படுத்த விரும் பினுர் . அவுரியின் அநீதியை எதிர்க்க சாம்பரான் சென் ருர். 1917ம் ஆண்டு தீன் காடியாவில் வெற்றியடைந் தார். தொழிலாளி வர்க்கத்தாரின் தொல்லைகளைத் தொலைக்கச் சென்ருர் ஆமதாபாத். சத்தியாக்கிரகத்தின் தன்மைகளை எடுத்தியம் பினர். தொழிலாளர் சமரசத் துக்காக உண்ணுவிரதம் இருந்தார். உண்ணு நோன் பின்" மூன்ரும் நாள் சமரசத்துடன் தவிர்ந்ததுதொழிலாளர் தொல்லைகள். பயிர்வரியை முன்னிட்டு வரிகொடா இயக்கத்தை ஆரம்பித்தார். கேதா சத்தியாக்கிரகத்தை தொடங்கினர். ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு அஞ். சாது அறிஞர்களையும் பெரியார்களையும் அவர் பக்கம்
20
சேர்த்தார். அறப்போரின் மேன்மையை "ஆங்கிலேய ருக்குக் காட்டினர். அதிலே வெற்றியும் பெற்றர். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். பம்பாயில் உப்புவரியை உறுதியுடன் எதிர்த்தார். புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இல்லாமற் செய்யப் பாடுபட் டார். கதர் உடையே காலத்துக் கேற்றது என்ற குறிக் கோளைக் கொண்டு கைராட்டினத்தைக் கையாளத் தொடங்கினர். அதற்காக அளவற்ற இன்னல்களை அநுப வித்தார். அவர் விரும்பியிருந்தால் கணக்கற்ற செல் வத்தை அடைந்திருக்கலாம். அரசர் போல் வாழ்ந்திருக் கலாம். ஆனல் தன்னலமற்ற அவர் அயலார் ஆட்சியிலி ருந்து தம் நாட்டுக்கு விடுதலை பெறும் வேலையில் முனைந் தார். பாரத நாட்டின் விடுதலைக்காக பகர் தற்கரிய அல் லல்களை அநுபவித்தார். அல்லல்கள் அத்தனையும் அடி மைத்தளையை அகற்ற அருந்துணை புரிந்தன. அது காரண மாக 1947ம் ஆண்டு ஆவணித் திங்கள் 15ம் திகதி அடிமை ஆட்சி நீங்கிச் சுதந்திர ஆட்சி மிளிர்ந்தது. சுதத் திரபூமியில் சுதந்திரமாக வாழ வழி வகுத்த அண்ணலை நாதுராம் வினயக கோட்சே நமனுலகுக்கு அனுப்பி விட் டான். நாட்டின் விடுதலைக்காகத் தம் உடல்பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்த அகிம் சா மூர்த்தியாம் அண்ணல் காந்தியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவனி யில் நடக்க அவனருள் வேண்டி என் பேச்சினை முடித்துக் கொள்கிறேன்.
கா. கனகசுந்தரம் சிவானந்தா ம. வி. 2-1-58
பேச்சு
Page 16
குறுநடை ஐந்து
용, f: சோமசுந்தரம்
2- Geog, நல்வழிப்படுத்தப் பிறந்தார். இந்தியாவிலே, போர்பந்தர் சமஸ்தானத்தில் வரிைகர் குலத்தில் கா. காந்தி என்பவருக்கும் புத்ளிபாப் என்பவருக்கும் d5 60) சிப்பிள்ளையாகப் பிறந்தார். மோகன தாஸ் கரம் காந்தி 1869ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2த் திகதி @gTré剑 மாகாணத்தில் போர்பந்தர் என்னும் கிராமத்தில் பிறந்,
ஆரம்பக் கல்வியைத்தாய் டு ாழியிலே கற்றுத் தேறி ஆங்கிலப் புலமை பெற இங்கிலாந்து சென்ற காந்தி சட்ட மேதையாகப் பாரதம் திரும்பினர் காந்தி என் மூலே ஒரி, சுடர், தீபம், கதிர் என்று பொருள்படும். காந்தி பெயருக்கேற்ற சீலனுகத் திகழ்ந்தார். பக்குவம்
காணுத சிறு வயதிலேயே கஸ்தூரிபாய் என்னும் சிறு மியை மோகன தாஸ் காந்தி என்ற சிறுவனுகப் பாலியத் திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவிலே ஆங்கிலெயரின் அடிமை ஆட்சி கொடி கட்டிப் பறந்து மக்கள் அல்லற்பட்டதைக் கண்ட காந்தி மனம் வருந்தினர். வேதனை மலிந்து கிடக்கும் பாரத நாட்டிற்கு விடுதலை கிடையாதா என்று ஏங்கி ஞர். உடல் உரம் பெற்று, சுதந்திர தாகங் கொண்டு விடு: தலை பெறப்பாடுபட்டார். வழக்கறிஞர் தொழில் நடத்த தென்ன பிரிக்கா சென்ற காந்தி அங்கு இந்தியர் அடிமைப்பட்டு கஷ்டப்படும் நிலையைக் கண்டார். அங்கு நாயிலும் கேடாக இந்தியர் மதிக்கப் படுவதைக் கண்டு கொதித்தெழுந்தார். வெள்ளையர் ஆதிக்கமோ தனது பீரங்கிக் கண்களை காந்திக்கு நேராகத் திருப்பின. காந் தியோ பின் வாங்கவில்லை. தளராது போராடி பல்லுடை பட்டு சாச்கடையில் விழுந்து மரணத்தோடு விளையாடி ஞர்டு அங்கு இந்தியர்களின் அடிமை விலங்கை யகற்றி விடுவித்தார்.
காந்தி அன்பையும், கருனையையும், அருளையும் கொண்டு அகிம்சை வழியில் கத்தியின்றி இரத்த மின்றி போர் செய்தார். காந்தி தனது வாழ்க்கையை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார். ஆங்கிலேயர் 'அரை நிர் வாணப் பக்கிரி" என்று கூறி அவமதித்தனர்.
காந்தியின் ஆத்ம பலன் ஆங்கிலேயரின் பீரங்கியை விட பலம் வாய்ந்ததாக இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெற்ருர், ஆண்டு பல கடப் பினும் அன்னரின் நாமம், என்றும் இவ்வுலகு உள்ளளவும்: வாழும். மகாத்துமா வாழ்க.
ஆர். சோமசுந்தரம் புனித மிக்கேல் கல்லூரி 1 I-957
கட்டுரை
Page 17
*குறுநடை ஆறு
த. சதானந்தன்
பரத கண்டத்திலேயுள்ள குஜராத்தி மொழி பேசும் போர்ப்பந்தர் என்னும் ஊரிலே வைஷ்ணவ வைஷியர் குலத்திலே கரம் காந்தி தம்பதிகளுக்குச் சற் புத்திரனுக 1869 ஐப்பசி 2ம் நாள் இவர் பிறந்தார். இவர் இளவயதிலே இரக்கமிக்கவராகவும், சமயப்பற் றுடையவராகவும், விவேகியாகவும், கணப்பொழுதில் நூல்கள் பல கற்க வல்லவராகவும், ஆண்மையுள்ள அஞ்சா நெஞ்சம் படைத்தவராகவும் திகழ்ந்தார். எவ் வித கஷ்டங்களையும் தாங்கும் மணுேசக்தியும், நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைக்கும் ஆற்றலும் மிக்க வராகத் திகழ்ந்தார். இவர் கஸ்தூரிபாய் என்னும் பெண்ணை மணந்து இல் வாழ்க்கையை இனிது நடாத் தினர். இவர் பார்பான் ஒருவனின் தூண்டுதலால் இங்கிலாந்து சென்று சட்டப்படிப்புப் படித்துத் தேர்ச்சி பெற அவாவினர். அந்நாட்டு வெள்ளையர் மதுவருந்தி
24
ஐயும், மாமிசமுண்டு காலம் கழித்தனர். இதையறிந்த அன்னே யார் தனது மகனும் இதற்கு அடிமையாகி விடாது சத்தியத் தின் மத்தியில் நல்லன போதித் தார். இவ்வாக்குறுதியிலிருந்து என்றுமே தவமுது தன் னைக் காத்துக் கொண்டார். “அன்னையும் பிதாவும் முன் னறி தெய்வம்’ என்னும் பொய்ய மொழிக்கேற்பத் தனது வாழ்க்கையை வாழ்ந்து காட்டினர். சுதந்திர தாகங் கொண்ட அன்னர் இங்கிலாந்தில் வெள்ளையர் மத்தியில் இந்திய மக்களின் ஏகப் பிரதி நிதியாகச் சென்ற போது அரை நிர்வாணப் பக்கிரி என்று பழித்துரைக்கப் பட்டார். இருப்பினும் தமக்கே உரிய இனிய சுபாவத் தாலும், அன்புப் பேச்சாலும் பல குழந்தைகளுடைய உள்ளங்களையும் , நல்லோருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
(
மனித சமுதாயத்தின் மறுமலர்ச்சித் துறைகளுக் காக வாழ்ந்து புது வழிகள் காண்பித்தார். மனித தர்மத்தை மையமாகக் கொண்டு, சத்தியம், அகிம்சை, சமூகநீதி, சமத்துவம் என்பவைகளை அணிகலனுகக் கொண்டு வாழ்ந்து காட்டினர். அவர் சொல் முறை மூலம் மட்டுமன்றிச் செயல் முறை மூலமும் நடந்து காட் டிர்ை. இந்திய சுதந்திரத்திற்கு அகிம்சைப் போர் தொடுக்கப்பட்டது. இதன் பயனுக அந்நியரின் பிடி பிலிருந்து 1947 ஆவணி 15இல் யூனியன் கொடி இறக் கப் பட்டு, புதிய பாரதத்தின் சுதந்திர மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.
காந்தீய தத்துவத்தைப் பல பிரிவுகளாகக் கூறலாம். அவற்றுள் கதர் ஆடையும், தீண்டாமையுமே மதிப் பற்ற ஆயுதமாகக் கொண்டார். தீண்டாமை இந்து சமூகத்தின் பெரிய சாபக்கேடு. அவற்றை ஒழிப்பதற் காக 'மகாத்மா' வாழ்க்கை பூராகவும் பாடுட்டார்.
25
Page 18
அன்பின் திருவுருவாக வாழ்ந்த அண்ணல் அவர்கள் இரத்த வெறி கொண்ட இந்து ஒருவனுல் 1948 தை 30 ல்யூ அவனுடைய துப்பாக்கிக்குப் பலியான மை சரித்திரத்தில், முக்கிய இடம் பெற்ற நிகழ்ச்சியாகும். அவரின் சூக்கும? உடம்பு அழிந்தாலும் அன்னரின் புகழுடம்பு உலகு உள். ளவும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை
த. சதானந்தன்
மெதடிஸ்த மத்திய கல்லூரி? 29 - 9 - 57
கட்டுரை
குறுநடை ஏழு
எஸ். தம்பிராஜா
இந்த நானிலத்திலே எத்தனையோ காந்திகள் இரு இழுர்கள். இவர்களெல்லாம் பெயரளவில் மாத்திரமே காந்திகள். ஆனல் மகாத்மா என்ற பெரிய அடை மொழி சேர்க்கப்பட்ட மகாத்மா காந்தி ஒருவரே இம் மாநிலத்தில் வாழ்ந்தார். அவரை இன்று நாம் *கொண்டாடிவரும் இவ்வருடத்தில் உலகின் பல பாகங் ளிலும் உள்ள மக்களின் மனத்தில் என்றும் நிலை பெற்று வருபவரும் தமது பூத உடம்பைத் துறந்து புகழுடம்போடு நிலவுபவருமாகிய அமரர் மகாத்மா என் ருல் மிகையாகாது. கீதையிலே பகவான் கண்ணபரமாத் மா கூறிய துட்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்னும் கூற்றை இப்போது நான் உங்களுக்கு ஞாபகமூட்டிக் கொள்கிறேன். "தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கு கின்ற காலத்திலே அதர்மத்தை வோரோடு களைந்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகந் தோறும் அவதாரஞ்
名7
Page 19
செய்வேன்” என்று கூறிய அண்ணலின் கூற்றை நாம் உற்று நோக்கின் அன்று அந்நியராட்சியில் அல்லலுற்றுக் கிடந்தாள் எமது பாரத அன்னை தனியாட்சி புரிந்த எமது பாரத அன்னை தன் வயமிழந்தாள், தவமிழந் தாள், தானமிழந்தாள், எடுப்பார் கைப்பிள்ளை யானுள். அவள் இன்னல் துடைக்க எவருமே முன்வரவில்லை. காலங்கள் உருண்டோடின. பாரத அன்னையின் பரிதா பக் குரல் பரமேஸ்வரன் செவிப்புகுந்தது. இதன் பய னகப் பாரத அன்னை இன்புற பம்பாய் மாகாணத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் 1869-ஆம் ஆண்டு ஒர் இளஞ்சூரியன் அவதாரஞ் செய்தான். இக்குமாரன்தான் நாம் இன்று கொண்டாடுகின்ற காந்தி மகான். இம் மகானின் இளமைப்பருவத்திலே நற்குணங்கள் காணப் பட்டன. முக்கியமாக உண்மை பேசுவதினின்றும் ஒரு போதும் தவறியதில்லை. தமது குமரப் பருவத்திலே கற் பின் சிகரமெனப்போற்றும் கஸ்தூரிபாய் என்னும் பெண் ணைத் தமது வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். நியாயவாதி பரீட்சைக்குப் படிக்க இங்கிலாத்து சென் ரு ர். இங்கிலாந்திலே தமது தாயாருக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி மது பானத்தையாவது, மாமிசத்தை யாவது அருந்தினரல்லர். நியாயவாதியாக இந்தியா வுக்கு மீண்ட காந்தி தென்னு பிரிக்காவுக்கு வந்தார். தென்னுபிரிக்காவிலே இந்தியப் பெருங்குடி மக்கள் மிருகங்களைக் காட்டிலும் கேவலமான முறையில் அவ மதிக்கப்படுவதைக் கண்டு மனம் நெக்குருகினர். பாரத நாட்டில் மக்கள் எல்லோரும் சமத்துவம் உடையர்கள் எனவும் இதற்குப் போராடலே தக்கது எனவும் எண்ணி னர். அடிமை விலங்கறுத்த ஆபிரகாம் லிங்கனைப் போல வும்; அரண்மனை வாசம், அளவற்ற செல்வம், நற்பண்பு மிக்க மனைவி குலத்துக்கோர் மைந்தன் என்பவற்றை யெல்லாம் விட்டு விட்டு அன்பு மார்க்கமே கடவுள் தன்மை யெனக் கொண்ட புத்த பகவான் போலவும்; *ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றக் கன்னத்தையும்
28
திருப்பிக் கொடு’ என்று கூறிய தேவகுமாரன் யேசு நாதரைப் போலவும்; அவர் தம்மை மாற்றியமைத்துக் கொண்டார். வான் புகழ் கொண்ட வள்ளுவப் பெரு ந் தகை இவருக்கு உற்ற குருவாகவே அமைந்தார் என்றே கூறவேண்டும். இவ்விருபதாம் நூற்ருண்டிலே வள்ளு வருடைய அறத்தை நிலைபெறச் செய்தமை மகாத்மா காந்தி அடிகளுக்கே உண்டு. அகிம்சையும் சத்தியமும் அவரிது வாழ்க்கையின் இருகால்கள்.சத்தியத்துக்கு மேற் பட்ட தெய்வம் வேறில்லை என்று காந்திம கான் தமது சரித்திரத்திற்கு சத்தியசோதனையென்றே பெயர் வைத் துள்ளார். பாரத அன்னையின் அடிமை தளையறுக்க பாரதமக்களிடையே தேசப்பற்று, மொழிப்ப்ற்று, சுதந் திர வேட்கை , அந்நிய நாட்டாரோடு ஒத்துழையாமை தீண்டாமை, கதர், தாய்மொழிமூலம் கல்வி என்னும் அரிய சாதனங்களை அள்ளிப் புகட்டினர். இதன் பய9 கப் பாரத அன்னை கத்தியின்றி இரத்தமின்றி யுத்த மின்றி அடிமை விலங்கு களையப்பட்டாள். 1947-ம் ஆண்டு ஆவணி மாதம் 15-ம் திகதி ஒரு சுதந்திர புருடனே அரவ3ணத்துக் கொண்டாள். சுருங்கக் கூறின் 1969-ம் ஆண்டு உலக மக்கள் கவனத்தைக் கவர்ந்துகொண்டஒர் ஆண்டு. ஏனெனில் உலக மக்களுக்காக நூல் செய்த வள்ளுவப் பெருமான் தோன்றி 2000-ம் ஆண்டு எல் லையை அடைகின்ற வருடம் இதுவே ஆகும். அகிம் சையை உணர்த்திய மாகாத்மா காந்தியடிகள் இவ்வுலகில் தோன்றி 100-வது ஆண்டு இவ்வாண்டிலே முடிவடைகி றது. எமக்கெல்லாம் ஒரு பெருமை யுண்டென்ருல் அது காந்தியுகத்திலே வாழக்கூடிய பெருமை தான்.
எஸ். தம்பிராஜா வின்சட் மகளிர்-உயர் பாடசாலை 24 - 8 - 57
பேச்சு
Page 20
குறுநடை எட்டு
வி. எஸ். சாந்தராஜா
பாரதம் பெற்ற தவப் புதல்வர்களுள் உத்தம உயர் மகனுக 1869 ஒக்டோபர் இரண்டாம் திகதி காந்தி பிறந்தார். இளமையிலே கூச்சமும், பலவீனமுமுள்ளவரா கக் காணப்பட்டார். இவர் இளம் வயதிலேயே கட்டா யத் திருமணத்திற்கு ஆளானர். இவரின் ஈரெட்டு வயதி லேயே தந்தையாகிய கரம் சந் என்பவரை இழந்தார். சட்டப் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற அண்ணலார், அங்கு இருக்கும் போதே அன்னையையு மிழந்தார். இங்கி லாந்தில் சட்டவல்லுநராகப் பட்டம் பெற்றுத் தாய கந் திரும்பினர். முதல் வழக்கில் தோல்வி கண்ட காந்தி தான் கற்ற அறிவை மக்களின் நல் வாழ்வுக்காகச் செலவு செய்யச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியவாறு காத்திருந்தார்,
தென்னபிரிக்காவில் பாரத மக்களின் பரிதாப நிலை கண்டு மனம் உருகினர். கண்ணிர் சிந்தினர். நேர்மை
30
யுடன் தொழில் புரியும் இவர்களுக்கா இக் கதி என ஏ ங் கிேய அப்பெருந்த கை உரிய இலக்கையடைய அறப்போ ரில் இறங்கினர். சட்டமறுப்புக் குற்றத்திற்காக கடுமை யாகத் தண்டிக்கப்பட்டார். தொடர்ந்து தனது போராட் டத்தை நடத்தியதால் ஒரு வாறு வெற்றி பெற்றர். இதன் பின் தனது நாற்பத்தேழாம் வயதில் இந்தியா வந்தார். அங்கு காங்கிரஸ் கட்சி நிறுவப் பட்டிருப்பதைக் கண் டார். அங்கு அக்கட்சியின் தலைவராக அவரே தேர்ந் தெடுக்கப்பட்டார். அவர் இந்திய மக்களை அறப்போரில் இறக்கினர். அகிம்சையையும், சத்தியத்தையும் ஆயுத மாகக் கொண்டார். இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட காந்தி பல முறை சிறை வைக்கப்பட்டார். சிறையில் அவர் அடைக்கப்பட்டாலும், அவரின் இயக்கங் கள் யாவும் செயல் பட்டுக் கொண்டே இருந்தன.
ஆங்கிலேயரால் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாட் டில் அண்ணல் காந்திஜி பங்கு கொண்டு இந்திய மக் களின் சுதந்திரத்திற்காகச் சொற்பொழிவுகள் பல நடத் தினர். இந்தியா திரும்பிய அண்ணல் காந்தி தனது சாத் வீகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். தனது உடல் பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணஞ் செய்தார். ஈற்றில் காந்தியின் தத்துவக் கொள்கைப்படி நடந்த இந்திய மக்களுக்குச் சுதந்திரம் கொடுக்க ஆங்கி *லேயர் முன் வந்தனர். இந்தியாவின் ஏக தந்தையாக காந்தி கருதப்பட்டார் - மதிக்கப்பட்டார். அரும்பாடு பட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அண்ணல் இரத்த வெறி கொண்ட மூர்க்கனெரு வனல் 1948-ம் ஆண்டு தை முப்பதாம் திகதி இவ்வுலகை விட்டும் :மறைந்தார்.
டபிள்யூ. எஸ். சாந்தராஜா புனித மிக்கேல் கல்லூரி 8 - 9 - 57 கட்டுரை
Page 21
குறுநடை ஒன்பது
த. ஜெயவே ணி
வணக்கம்.உலகில் எத்தனையோ மக்கள் பிறக்கின்றனர் பிறந்து வாழ்ந்த அனைவரையும் உலகம் நினைத்துப் பார்ப் பது இல்லை. எங்கோ சிலரைச் சில காலம் எண்ணுவர். ஆனல் எல்லோராலும் எக்காலத்திலும் போற்றப்படு பவர் மிக மிகச் சிலரே. அவ்வாறு காலத்தை வென்று கருத்தை வென்று வாழும் அறத் தலைவர்களுள்ளே தலை சிறந்தவர் அண்ணல் காந்தி.
பாரத நாட்டு மக்கள் பார் இழந்து - படை இழந்து . படைத்த நிதி இழந்து, ஏன், தமக்குள்ள கதியெல்லாமே. இழந்து அடிமையானர்கள். பிறப்பால் உயர்வு- தாழ்வும் பெண் அடிமையும் கற்பிக்கட்பட்டன. அகமும், புறமும் அடிமை இருள் சூழ்ந்தது. அநாதைகளானர்கள். சமு தாயமே சீர்குலைந்து கிடந்தது. இந்நிலை இருநூறு வருடங்? களாக நீடித்தது.
32
இந்த இருண்ட வேளையில் பாரத சமுதாயத்திற்கு, ஒரு உதய சூரியன் தோன்றிற்று. கதிரவன் என சுற்றி சுற்றி திரிந்தது. கதிரவனுக்கு சுடும் ஒளி மட்டுமே உண்டு. தண்ணிலவு கிடையாது. இந்த ஞாயிறுக்கு சுடும் கதிர் ஒளியும் இருந்தது; தண்ணிலவும் இருந்தது.
நூறு வருடங்களுக்கு முன், காபா காந்திக்கும் புத்த ளிபாயக்கும் மகனுஞர். அன்ஃன மொழியை திண்ணைப் பள்ளியில் பயின் ருர், பதிமூன்ரும் வயதில் கஸ்தூரி பாய் அம்மை யாரை மணந்தார். பின்னர் மது மாமிசம் உண் ணுது, தாய் சொற்கடவாது, இங்கிலாந்து தேசத்திலே சட்டக்கல்வி பயின்ருர்,
தாயகம் மீண்டார்.தமது தொழிலில் நீதியையும் நேர் மையையும் மேற்கொண்டார். தொழிலுக்காகத் தமது: முப்பதாவது வயதில் தென்னுபிரிக்கா சென்ருர், அங்கே நிறவெறி தலைவிரித்து ஆடுவதைக் கண்டார். இந்தியர் வெள்ளையராற் “கூலிகள்’ என அழைக்கப்பட்டனர். விலங்குகள் போன்று நடாத்தப்பட்டனர். இக்கோரக் காட்சிகளைக் கண்டார். கொதித்தது அவர் மனம். இந்திய மக்களின் இன்னல் துடைக்க வீறுகொண்டு எழுந்தார். வெள்ளையனின் நிறத்திமிரை, "நான். எனது" என்னும் மமதையை, அறப் போரிட்டு மாய்த்தார். இவருடைய சொல்லை செயலை சண்ணுற்ற வணக்கத்திற்குரிய
(eg. ஜே. டோக் அவர்கள்,
"'டால்ஸ்டா யை நினைக்கும் போது ரஸ்க்கினின் எண்ணம் வருகிறது. நெப்போலியன நினைக்கும் போது லெனினின் எண்ணம் வருகிறது. ஆனல் யேசுவை நினைக் கும்போது காந்தியின் எண்ணந்தான் வருகிறது. யேசு தாதரைச் போலவே வாழ்கிறர். அவர் பேசியதைப் போலவே பேசுகிருர், பூலோகத்தில் பரலோகம் ஏற் படுத்துவதற்காகவே அரும்பாடுபடுகிருர், என்ற வது ஒரு நாள் தம் உயிரையே கொடுத்தாலும் கொடுப்பார்' என: அழகாகவும் தீர்க்கதரிசனமாகவும் கூறினுர்,
h
33.
Page 22
வெற்றிமாலை சூடி தாயகம் மீண்டார். தியாகத்தின் சின்னமாக இம்முறை காட்சி தந்தார். சுதந்திரம் பெறு வதற்கு உரியவர்களாக மக்களைத் தயார் செய்தார். அவருடைய லட்சிய முழக்கம் "சுதந்திரம் பெற்றே தீரு வோம்’ என்பது அல்ல, ‘சுதந்திரம் அடைந்தே தீரு வோம்’ என்பதேயாம். செய் அல்லது செத்து மடி என அறப்போர் தொடுத்தார். இப்பாதையில் அவர் அடைந்த இன்னல்கள் எண்ணில் அடங்கா. அடிபட்டார்; உதை பட்டார்; பல் உடைபட்டார்; சிறைச் சாலையில் தள்ளப் 4. Il- l IT IT .
ஒரு வேளை உணவு கிடையா விட்டால் நடுக்கம் காண் கிறது நமது உடல் பசி வந்திட பத்தும் பறக்கிறது. ஆனல் இருபத்தொரு நாட்கள் உணவு இல்லை என்ருல் இதை மனைவி கண்டும் கேட்டும் இருந்தால் உள்ளம் உடலம் என்ன துடி துடிக்கும் எண்ணிப்பாருங்கள். உணன்வ ஒறுத்து, உடையை ஒறுத்து, ஊருக்கு உழைத்தார். உள் {ளும் புறமும் ஒளிபெற்றர், ஒளியின் முன் தாக்குப்பிடிக்க மாட்டாது அடிமை கொண்ட இருள் அகன்றது . வெள்ளையன் ஆட்சி வீழ்ந்தது. மணிக்கொடி பறந்தது,
பக்கீர், பத்தாம்பசலி, வாழத்தெரியாதவன் என்று அன்று தூ ற் ற ப் பட்ட இவர் வரலாறே கண்டிராத சாதனையை நிலைநாட்டினர்.
அரசியல் வானில் இருளை அகற்றிய ஒளி சமுதாய வாழ்விலும் இருளை அகற்ற த்து டியா ய் துடித்தது. கைராட்டினம் தந்தார். கதர் அடை தந்தார். வள்ளு வன் வழி வாழ்ந்தார்.
ராமநாம் பஜனைக்கு வந்தார். அடியார் மத்தியில் கரங் குவித்து நின்ருர்! ஹே ராமா! என அபயக் குரல்கொடுக்க, பறித்தார்கள் அந்த உத்தமரின் உயிரை.
கருத்தில் அகிம்சையும் கையில் தடியும் ஊன்றி நடந்த எழில் உருவாகக் காட்சி தந்தார் கோடானு கோடி மக்கள் இதயக் கோயில்களில் குடிகொண்டர்
o
3
வெளி அதிகாரத்தால் ஆதரவு எதுவும் இன்றி மக்க ளுக்குத் தலைவராக வந்தார். சூதுவாதுகளும் தந்திரங் களும் இன்றி தம்முடைய சொந்த சக்தியையே துணை யாகக் கொண்டு அரசியலில் வெற்றி கண்டர். பலாத் காரத்தை புறக்கணித்த வீரன். விவேகமும் தன்னடக்க மும் மிக்கவர். மக்களின் நலனுக்காக தம் சக்தி முழு வதையும் அர்ப்பணம் செய்தார்.
அன்பே தகழியாகவும், அகிம்சையே நெய்யாகவும், என்பு உருகு தியாகமே இடு தீயாகவும் கொண்ட அழி யாத சத்திய விளக்கினை ஏற்றிச் சென்ருர். இந்த ஒளி யிலே வேறுபாடற்ற, ஒற்றுமை பூக்கும் அன்பு தழுவிய ஒர் உலகு சமைப்போம வாரீர்.சத்தியமே ஜெயம்,
த. ஜெயவேணி கோட்டமுன ம. வி. 26-2-56
GL44
Page 23
குறுநடை பத்து
தி. காஞ்சஞ
மகாத்மா காந்தி ஒரு பெரிய அரசியல் சீர்திருத்த வாதி. அவர் உலகத் தலைவர்களுட் பெருந்தலைவர். இந் திய விடுதலை இயக்கச் சிற்பி. உண்மையே சத்தியம் சத்
தியத்தின் வழியே சமதர்மம் என்னும் உயர்ந்த கொள்
கையுடன், தாயிடம் கொடுத்த சத்தியத்தை தனது இங்
கிலாந்து வாழ்க்கையில் இம்மியேனும் பிசகாமல் காத்த
உத்தமன். உண்மைக்கு உயர்விடம் அளிக்க உறுதியுடன் தனது வாழ்க்கையை எவ்வாறு நடாத்திச் சென்ருர்
என்பதற்கோர் உதாரணம். சிறு பையனுக இருக்கும்
போது, வகுப்பறையில் மேலதிகாரி ஒருவரால் நடாத் தப்பட்ட பரீட்சையில், தான் விட்ட பிழையை வகுப்பாசி யர் சுட்டிக்காட்டியும், பக்கத்திலுள்ள சக மாணவனின் கொப்பி பார்த்து எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதிலும் இது சத்தியத்திற்கு மாற்றமான தென்ற உறு
தியுடன் தன் வழி சிறந்ததென சும்மாயிருந்து விட்டார்.
፰ 6
தன்வழி தர்ம வழி என்று செயல்பட்ட காந்திக்கும் பல சந்தர்ப்பங்களில் தர்மசங்கடமான நிகழ்வுகள் காத் திருந் தன. இவர் உயர்நிலைப்பள்ளி யொன்றில் கல்வி கற்கும் போது நேரம் பிந்திச் சென்ற மைக்காக, அவர் உண் மையே கூறினலும், ஒரு அணு தண்டம் கட்ட வேண்டிய நிலைக்கு ஆளானர். இதை நினைத்து அவர் மிக வருத்தப் பட்டார். அன்று முதல் உண்மை பேசும் ஒருவன் எப்போ தும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்ற முடி வுக்கு வந்தார்.
இங்கிலாந்திலே அன்னர் வழிதவற வேண்டிய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும், அன்னையிடம் கொடுத்த சத்தியம் அனைத்திலிருந்தும் காத்தது. தான் அனுபவிக்க வேண்டிய இச்சைகள் அனைத்தும் மனத்திலி ருந்ததே தவிர செயலில் இருக்கவில்லை. இது அவரது வாழ்க்கை பூராவும் ஒளி மயமாகக் காட்சி கொடுத்தது. ஆபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் 'கூலிகள் தலைப் பாகை கட்டக்கூடாது ' என்று வெள்ளையர் இட்ட கட்டளைகளை மதியாது அவர்களின் அடி, உதை அனைத் தையும் பொருட்படுத் தாது, 'தலைப் பாகையே வேற்று நாட்டிலிருக்கும் ஓர் இந்தியனின் சின்னம்’ என்று அஞ்சாமல் கூறிய பெருமையும் அன்னரையே சாரும். இந்தியர்கள் யாரும் பாதையில் நடப்பதைக் கண் டால், அவர்களைப் பிடித்து உரிய தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதையறியாத காந்தி வழிபாதையில் நடந்து செல்லும்போது பொலிஸ் காரர் ஒருவரால் நையப் புடைக்கப்பட்டார். இதை யறிந்த ஆங்கிலேய நண்பன் வழக்குத் தொடருமாறு கூறினர். அதற்கு மகாத்மா ‘நான் மன்னித்துவிட்டேன்’ எனக் கூறினர். இதைக்கேட்ட அப்பொலிஸ் காரன் வெட் கம்பட்டது மட்டுமன்றி மன்னிப்பும் கேட்டான்.
7
Page 24
அகிம்சாமுறையில் அவர் நடாத்திச் சென்ற சமதர்ம முறையை உலகமே புகழ்கின்றது. அன்னர் தனக்காக மட்டும் வாழாது உலக மக்களுக்காக, குறிப்பாக இந்திய மக்களின் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். அன்னர் காட்டிய பாதையிலே நாமும் நடந்து அவரது வாழ்க் கையைப்போன்று நமது வாழ்க்கையும் பெருமை தரக், கூடியதாக அமைக்க முயல்வோமாக.
தி. காஞ்சனு ஆனைப்பந்தி பெண்கள் ஆங்கில பாடசாலை l 6 - I - 56
கட்டுரை
குறுநடை பதினுென்று
கே. சஞ்சீவரத்தினம்
உலகிலே தோன்றிய உத்தம மகா புருஷர்களுள் மகாத்மா முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தவர். இவர் இந்தியாவிலுள்ள பம்பாய் மாகானத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் 1869ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி அவதரித்தார். இவரது அன்புத்தந்தையார் கபாகாத்தி அவர்களாவர். அவரது அன்னையார் புத்தளி பாய் எனும் மாதர சி. இவரது இளமைப் பெயர் மோகன தா ஸ்காந்தி. இவரைச் சிறு வயதில் யாவரும் மோனியா என அன்பு ததும்ப அழைப்பர். இவர் சிறு வயதிலேயே பொய் பேசுதல், பிறருக்குத் துன்பம் செய்தல், போன்ற கெட்ட செயல்களை வெறுத்தார். அதற்கு உதாரணம்: ஒரு நாள் அவர் தனது தமையனருடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தமையனுர் காந்தியை அடித்து விட்டார். அவர் அழுது கொண்டு தனது தாயாரிட ம்: சென்று முறையிட்டார் அவரது அன்னையார் 'திரும்பித்
39°
Page 25
த மையனை ஏன் அடிக்கவில்லை" எனக் கேட்டார். அதற்கு அவர் ‘அடித்தவரை திருப்பியடிக்க என்னல் முடியாது? எனக் கூறிவிட்டார். சிறுவயதிலிருந்தே மிகுந்த புத்தி கூர்மையுடையவர். யாருடனும் அதிகமாய்ச் சிநேகிதம் கொள்ளமாட்டார். ஆனல் யாருடனும் பகைத்துக் கொண்டதும் கிடையாது. எல்லோரிடமும் சமமாகப் பழகுவார். உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேத மின்றி பழகுவதில் இவருக்குத் தனி இன்பம். இவர் பொய் களவு செய்வதில்லை. ஆயினும் சந்தர்ப்ப வசத்தால் அவ்வாறு செய்ய நேரிட்டால் அவரது தவறை யுணர்த்து அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ள இவர் என்றும் பின் வாங்கியதோ, தவறியதோ கிடையாது. அதற்கு உதாரணம் ஒரு தடவைதான் நிகழ்ந்தது. அவர் தான் அணிந்திருந்த தங்கக் காப்பில் ஒரு துண்டை நறுக்கி விற்று விட்டார். வேறு வழியின்றியே அவ்வாறு செய் தார். ஆனல் இந்தத் தவறு அவருடைய மனத்தை உறுத் தியது. அதற்குத் தன் தந்தையாரிடம் மன்னிப்புக் கேட் கத் தீர்மானித்தார். ஆனல் டயம் பீடித்துக் கொண்டது
என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தபோது ஒரு முடிவைக் கண்டறிந்தார். அதாவது தன்னுடைய தவறுகளை யெல்லாம் ஒரு துண்டில் எழுதி தனது தந்தை யாரிடம் கொடுத்துவிட்டு நடுங்கிக் கொண்டு மூலையில் நின்றர். ஆனல் அவரது தந்தையார் அவரை அடிக்க வில்லை. பதிலுக்கு காந்தியாரின் தந்தையார் கண்ணிர் வடித்தார். அப்போது காந்தி ஆருத்துயரில் மூழ்கினர். இவருக்கு இளவயதிலேயே திருமணமாகிவிட்டது. இவ ரது மனைவி கஸ்தூரிபாய் என்னும் பெண். இவர் வளர்ந் ததும் பரீஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து சென்ருர். அப்போதும் அவர் தனது தாய்க்கு கொடுத்த சத்திய வாக்கின்படி மதுவையோ, மாமிசத்தையோ ஒரு நாளே னும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. எப்போதும் ஒரே 40
(
மாதிரியாகவே சத்தியப் பாதையினின்றும் தவருது வாழ்ந்தார். மனிதன் தெய்வமாகலாம் என்பதை நிரூ பித்துக் காட்டிய மகாமேதை. இவர் இருந்திருக்கா விட் டால் இந்தியப் பிரஜைகள் இன்று வாழ்க்கை என்ற வானில் சுதந்திரப் பறவைகளாகச் சிறகடித்துப் பறக்க முடியாமல் போயிருக்கும்; அவரது அரிய ஒப்பற்ற சேவையே இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தது.
பிரித்தானியரிடம் அடிமைகளாய்க் கிடந்த இந்தி யர்களைக் காண இவரது இரத்தம் கொதித்தது. பாரத மாதாவின் அருந்தவப் புதல் வணு ன மகாத்மா தன் சகோ தரர்கள் அடிமைத் தளைகளில் சிக்கித் தவிப்பதை இவரால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆகையினுல் சுதந்திரம் என்னும் அரு மருந்தைத் தேடியலேந்தார். அது இலகுவில் கிடைக்கக் கூடியதா? இதற்காக இவரும் இவரது மனைவி யும் பல முறை சிறை என்னும் நரகத்துக்குப் போக நேர்ந்தது. ஆயினும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இவர் பாரத சுதந்திரத்திற்குப் பட்ட துன்பங்கள் எழுத்திலடங்கா.
தீண்டா தாரிடம் இவருக்கிருந்த அன்பு எல்லை அற்றது. இவர் ஓர் கருணைக்கடல், அன்புப்பிழம்பு, இரக்கமே உரு வான ஒர் அன்புருவம். இவரது குறிக்கோள்கள் எப் போதும் நல்வழிகளிலே தான் தங்கியிருந்தன. கடைசி யில் முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார் எ*பதற் கிணங்க சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் .
கே. சஞ்சீவரத்தினம் வந்தாறுமூலை ம. ம. வி 3 - 10 - 55
கட்டுரை
Page 26
குறுநடை பன்னிரண்டு
த. விஜயகுமாரி
தலைவர் அவர்களே! மதிப்புக்குரிய நடுநிலைமையா? ளர்களே! மற்றும் பெரியோர்களே! மாணவ மான விகளே உங்கள் அனைவருக்கும், எனது அன்பு கனிந்த வணக்கம் உரித்தாகுக. நான் உங்கள் முன்னிலையிற் பேச எடுத்துக் கொண்ட விடயம் காந்தீய தத்துவத்தின் மூன்று அம்சங்கள்.
இன்று நாம் காந்தியுகத்தில் வாழ்கின்ருேம் என்று கூறினல், அக்கூற்று மிகையாகாது. 1969ஆம் ஆண்டு உலக மக்களைக் கவர்ந்துள்ளதோர் ஆண்டு. ஏனெனில்,உலக மக், களுக்காக நூல் செய்த வள்ளுவன் தோன்றி இரண்டா பிரமாண்டு எல்லை அடைகின்ற வருடமும் இவ் வருடமே யாம். அன்றியும் பாரத அன்னைக்குக் கத்தியின்றி இரத் தமின்றி யுத்தமின்றி சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத் ததன் மூலம் உலகிற்கு அகிம்சையை உணர்த்திய மகான்"
42
காந்தியடிகள் இப்பூவுலகிலே தோன்றி நூருவது ஆண்டு எல்லை அடைகின்ற வருடமும் இவ் வருடமேயாகும். இத ஞலே இதனைக் காந்தியுகம் எனக் கூறலாம். காந்தீய தத்துவங்கள் இவ்வுலகிற்குப் புதுமையானது. இதுவரை யுந் தோன்ரு தது. புராணங்களிலாவது இதிகாசங்களி லாவது காணமுடியாதது.
அன்று அரக்கர் சேஃனயை அடியோடு அழிக்க இராம பிரான் தோன்றினர். "துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபால னம் செய்யவே கண்ணபிரான் அவதாரம் செய்தார். முருகப் பெருமான் அவதாரமும் சூரசங்காரமே. ஆனல் மகான் காந்தியடிகளின் அவதாரமோ மிகப் புதுமையா னது. பகைவர்களை அழிப்பதன்று. பகைவர்கட்கு இரங் குவது. அருளுவது. இன்ன செய்தார்க்கு இனியதே செய் வது. இதனலே தான் காந்தீய தத்துவங்கள் மிகப் புது மையானதும் மிக உயர்ந்ததென்றும் நாம் கருதுகின் ருேம். சோதனை, போதனை, சாதனை ஆகிய முப்படிக ளிலும் தம்மையுருவாக்கிய காந்தி மகான் மன்னர்களை மதிக்கவில்லை. பணக்காரர்களைத் துதிக்கவில்லை. ஏழை எளியவர்களைப் பற்றியே சிந்தித்தார். இதற்காகப் பாரத மக்களிடையே தேசப்பற்று, மொழிப் பற்று, சுதந் திர வேட்கை, அஞ்சாமை, அகிம்சை, ஒத்துழையாமை, கதர், கல்வி, தீண்டாமை என்று இன்னேர ன்ன தத்து வங்களைப் போதனையிலும் சாதனையிலும் நிலையுறுத்தி ஞர்.
இவற்றிலே நான் எடுத்துக் கொண்ட அம்சங்கள் ஒன்று மொழிப்பற்று; இரண்டு கதர்; மூன்று தீண் டாமை. ஆங்கில ஆட்சியை அடியோடு களைய வேண்டும் என்று விரும்பிய காந்தி மகான் ஆங்கில மொழியின் முக் கியத்துவத்தைக் குறைக்க வேண்டுமென விரும் பினர். ஆங்கிலக் கல்வி காரணமாக நாம் பேடிகள் ஆகிவிட் டோம். நமது அறிவு குன்றி விட்டது. இந்தியாவைப்
43
Page 27
பாதிக்கின்ற மூட நம்பிக்கைகள் அநேகம், சுதந்திர உணர்ச்சியை ஊட்டுவதற்கும், கூர்மையான அறிவை அபிவிருத்தி செய்வதற்கும் ஆங்கிலக் கல்வி அவசியமென நாம் எண்ணிக் கொண்டிருக்கிருேமே அதுதான் யாவற் றையும் விடப்பெரிய மூடநம்பிக்கை. அந்நிய ஆட்சியா ளர் நமது இளைஞர்களை இழிந்த நிலை அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் ஆங்கிலக் கல்வி படிக்கச் செய்கின்ருர்கள். ஆங்கில மோகம் இருக்கும் வரையும் நாம் அடிமைகளாகவே வாழ நேரிடும். வடக்கே சிறி நகரிலிருந்து கிழக்கே திக்கு கால் வரையும் பரந்துள்ள இந்தியாவை ஒன்றுசேர்க்க சிறிது நேரம் மனத்தால் சிந்' தித்துப் பாருங்கள். அப்படிச் சிந்திக்கும்போது பெரும் பான்மை இந்தியரின் தாய் மொழியான இந்தி மொழி எவ்வளவு அவசிய மென நீங்கள் உணர்ந்து கொள்வீர் கள், என்று இன்னுேரன்ன பலவிதமான போதனைகளால் பாரத மக்களிடையே மொழிப் பற்றையும் தேசப்பற் றையும் தட்டியெழுப்பிய பெருமை மகான் காந்தியடி களையே சாரும்.
காந்தியடிகள் கையாண்ட பொருளாதாரச் சித்தாந் தமே கதர். பொருளாதாரப் புலிகள் கதரைக் கண்டு எள்ளி நகையாடலாம். ஆனல், ஒரு வேளை உணவிற்கு வழியற்றுத் தவிக்கும் மக்களுக்கு உணவளிப்பதுதான் கதர். ஒரு முழக் கதர் வாங்கியதன் மூலம் ஒரு குடும்பத் திற்கு உணவளித்த பெருமை காந்தியடிகளையே சாரும். இந்தியாவில், வந்திறங்கும் அந்நிய துணி ஒவ்வொரு யாரும் என்ன செய்கின்றது? பாவம் பசியால் மெலிந்து வாழும் ஏழை மக்களின் உணவின் ஒரு கவளத்தைப் பறித்துக் கொண்டுபோய் விடுகிறது. எனவே எமது தாய் நாட்டிலே காணப்படுகின்ற வறுமையை ஒட்டி யொழித்து, பசியால் மெலிந்து வாழும் மக்கள் ஆனந் தத்தோடும் உற்சாகத்தோடும் உணவைப் பெறும் வழியை நிலைநாட்ட நூல் நூற்பதையும் கதர் ஆடை
44
அணிவதையும் தவிர வேறு சிறந்த வழி எனக்குத் தெரி யவில்லை, எனப் போதனையில் கூறியது மட்டு மல்லாமல் அதனைச் சாதனையிலும் நிலைநிறுத்திய பெருமை காந்திய டிகளையே சாரும்.
அடுத்த அம்சம் தீண்டாமை. தீண்டாதவர்கள் நாயிலும் கடையராகத் தள்ளி ஒதுக்கப்பட்ட காலம்* இக் கேவலமான நிலையைக் கண்ட காந்தியடிகள் இதனை ஒழித்துக் கட்டுவதற்குக் கையாண்ட கைங்கரியங்களோ எண்ணிறைந்தன. தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்க வேண்டுமென்பது நவீன பைசாச அரசாங்கத் தின் சிருட்டி எனக் கூறிய மகான், தீண்டாமை என்பது நுட்பமான பல ரூபங்களிலே இந்திய மக்களைப் பிரித்து வைத்திருப்பதாகவும்,இதனுலேஅவர்ளுடைய வாழ்க்கை இன்பமற்றதாக இருந்து வருகின்றது, என்று கூறியது மட்டுமல்லாம் அந்த மாசினைத் துடைக்க அரும்பாடு பட்டுழைத்தார்.
* மாணவர்களே, அரிசனங்களை உங்களுடன் பிறந்த சகோதரர்களாக நடத்துதல் வேண்டும். அவர்களு டன்அன் போடு பேச வேண்டும். விடுமுறைகாலங்களை நல்ல முறையில் செலவிட விரும்பினல் மாணவராகிய நீங்கள் அநேக காரியங்களைச் செய்யலாம். நல்லதொரு பாடத் திட்டம் போட்டு விடுமுறை கழியும் வரையும் இர வும் பகலும் சிறிது நேரமாவது அரிசனங்களுக்குப் ப்ாடம் சொல்லிக் கொடுங்கள். அரிசனங்கள் வசிக்கும் இல்லங்க ளைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொடுங்கள். அரிசனங் கள் சுத்தம் செய்ய விரும்பினுல் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசனப் பிள்ளைகளின் உடம்பிலே காணும் அழுக்குகளைப் போக்க அவர்களைக் குளிப்பாட் டுங்கள். வயது வந்தவர்களுக்கும் சிறு வ ர் க ஞ க்கு ம் சுகாதார சம்பந்தமான பாடங்களைச் சொல்லிக் கொடுங்
"கள்.
45
Page 28
நோய்வாய்ப் பட்டிருக்கும் அரிசனங்களுக்கு உதவி செய்யுங்கள். அல்லாமலும் தீண்டாமை விலக்கு சம்பந் தமான செய்தியை உயர்ந்தசாதி இந்துக்களிடையே பரப்புங்கள்’ என்று இன்னுேரன்ன புத்திமதிகளைக் கூறி யதோடு மட்டுமல்லாமல், அவர்தானும் இவ ற்றைப் போதனையிலும் சாதனையிலும் செய்து முடித்து, தீண் டாமை என்னும் நோய்க்கு ஒரளவு சாவு மணியடித்த பெருமை மகான் காந்தியடிகளையே சாரும். இவ்வாறு காந்தீயத் தத்துவங்கள் அனைத்தையும் நாம் ஆராய்ந்து பார்க்கு மிடத்து அவர் ஒர் அவதார புருடர் என்பது நன்கு புலப்படும்.
எனவே மக்களாகிய நாம் பேரின்பம் பெறும் பய னைப் பெற வேண்டுமானல், காந்திஜி அவர்களை எமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
ரி. விஜயகுமாரி கோட்டமுன ம. வி. 24 - 4 - 55
பேச்சு
குறுநடை பதின்மூன்று
வி. யோகராசாப
இன்று ஆண்டுகள் நூருகிவிட்டன. அன்று குரு தேவர் ரவீந்திரர் கண்டு சொன்ன அந்த மகாத்மா மண் னரிலே தோன்றி வருடங்கள் நூருகிவிட்டன! எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு ஒருவராகத் தோன்றும் உலகப் பெரியார்களுள் புத்தருக்குப்பின் தோன்றிய புனிதரா கக் கருதப்படும் உத்தமன் காந்தி அடிகளை உலகம் என் ஆறுமே மறந்து வாழவும் முடியாது வாழவும் மாட்டாது.
காந்தியடிகளின் படத்தைப் பார்த்தாலும் நமக் கொரு வித புத்துணர்ச்சி உண்டாகிறது. அவருடைய "கண்கள் வாழ்க்கையின் அந்தகாரத்திலுள்ள இரகசி யங்களைத் தேடுவனபோல் இருக்கின்றன. அவருடைய அகன்ற காதுகள் அவரிடத்திலிருக்கும் இனிய சுபாவத் தைத் தெரிவிக்கின்றன. நம்முடைய காலத்தில் வேறெந்த மகானும் காந்தியடிகளைப் போல அன்பினு டைய சக்தியை விளக்கிக் காட்டவில்லை. அவர் உபதே
47
Page 29
சிக்கின்ற அன்பு கீழ்த்தரமான அன் பல்ல. கிறிஸ்தவ” ஞானிகளும் இந்து ஞானிச ஞம் உபதேசித்துச் சென்றல் அன்பு. காந்தி மகானுடைய அறிவு அடிக்கடி மோட்ச லோகத்தைத் திருப்பிப் பார்க்கின்றதேயாயினும், அவ" ருடைய இருதயம் எப்பொழுதுமேநிதானமானதாகவும், கருணை நிறைந்ததாகவும், கெளரவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றது. சாந்தியவர்கள் தமது சுயகாரியத்திலே ஆத்மா தெளிவடையத் தாம் வெகு பிரயத்தனப்பட்டி ருப்பதாகக் கூறுகிறர். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர் வாழ்ந்தார். 'தாய்க்குக் கொடுத்த சத்தியத் தைக் கடைப் பிடிப்பதா?’ என்ற பிரச்சனைகளுக்கிடையே அவர் இங்கிலாந்தில் அல்லற்பட்டார். இறுதியில் எத்த கைய துன்பம் வந்தாலும் சத்தியத்தைப் பாதுகாப்பது: என்ற முடிவுக்கு வந்தார். சத்தியத்தில் அவர் கொண் டிருந்த அசையாத நம்பிக்கையை ‘சத்தியமே கடவுள்' என்று அடிக்கடி அவர் சொல்லுவதிலிருந்து அறிய லாம். தென் ஞ பிரிக்காவில் அவர் வாழ்ந்த மையே அவரை மகாத்மா வாக்கியது. தென்ன பிரிக்காவில் அவர் வாழ்ந்த காலத்தில் துன்புறுத்தப்பட்டார். அச்சு றுத்தப் டட்டார். ஆனலும் இவற்றிற்காக அவர் மனக் கசப்புக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அகிம்சை: வழியில் உறுதியுடன் சென்று கொண்டிருந்தார். அவர் உலகத்தின் புகழ்ச்சிகளையும் இகழ்ச்சிகளையும் பொருட் படுத்தவில்லை. சொந்த உறவினர் போல தீண்டா" தாரை மதித்து அவர்களுக்கு சேவை செய்து கொண்டி ருந்தார். மேல்நாட்டு அறிஞர்களிடத்தில் காணப்படும் கர்வம் அவரிடமில்லை. உண்மை என்று அவருக்குப்படும் பட் சத்தில் அந்த அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள அவர் பின் நிற்கமாட்டார். அவர் இலட்சியவாதியாக இருந்தாலும் உலக ஞானம் நிரம்ப உடையவர். இந்த அனுபவ ஞானமும் சுயநலப் பற்றின் மையம் சேர்ந்து: அவருக்கு எதனையும் சி மாளிக்கக் கூடிய ஆற்றலை அளித் திருக்கிறது. அவர் எங்கு சென்ருலும் அவருக்கு எல்ப்
48
லாம் கட்டுப்பட்டு விடுகின்றன. தென்னபிரிக்காவில் பிளேக் நோய் பரவியிருத்த காலத்தில் காந்தியடிகள் ஒப்பற்ற சேவை செய்தார். இந்தப் பிரபஞ்ச சாம்ராச் சியத்தின்மீது எனக்கு இச்சையில்லை. மோட்ச சாம்ராச்
சியத்திற்காகவே நான் முயற்சி செய்து கொண்டி டூக்கிறேன். அப்படி முயலுவதானது ஆத்மாத்தமான விடுதலை பெறுவதாகும். என்னைப் பொறுத்தமட்டில் முத் திச்கு வழி எங்கிருக்கின்ற தென்ருல், எனது தேசத்துக் காகவும், மானிட ஜாதிக்காகவும் ஓயாமல் தொண்டு செய்து கொண்டிருப்பதிலேதான். கீதையிலே கூறப்பட்டிருக்கின்ற மாதிரி சிநேகிதனுடனும், சத்துருவுடனும் நான் சமாதானமாக வாழ விரும்புகின்றேன்" என்று காந்தியடிகள் கூறியிருக்கின் ருர்கள். மகாத்மா மதத். தையும், அரசியலையும் ஒன்ரு க இணைத்த கர்மயோகி. மதம் என்கின்ற அத்திவாரத்தில் கட்டுப்படாத எந்த அரசியல் கட்டிடமும் நிலைக்காது. மதமில்லாத அரசி யல் மரணப் பொறிதான் என்று மதமில்லாத அரசிய யலை ஆணித் தரமாகக் கண்டிக்கின்ரு ர். காந்தி மகான் மக்கள் அனைவரும் சுய மதிப்புணர்ச்சியோடு வாழ வேண்டு பென்று விரும்பினர். இதற்காக அவர் நடத்திய, போராட்டங்கள் அனைத்தும் சத்தியத்தையும் அன்பை யும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. அன்னியர் களைத் தொலைக்க வழி சாத்வீக எதிர்ப்புத் தான் என்று கூறினர். பின்னும் அவர் சாத்வீக எதிர்ப்பு என்பது ஒரு தரும ஆயுதம் என்கிருர். இந்த சாத்வீக எதிர்ப்பால் உலகத்திற் சிறந்த வல்லரசாகிய பிரித்தானிய சாம்ராச் சியத்தை முறியடித்து வெற்றி கண்டார். பழைய இலக் கியங்களில் எதைக் காண்கின் ருேம்? நல்லவர்கள் வாழ் வார்கள் தீயவர்கள் அழிவார்கள் என்றல்லவா காண் கின் ருேம், இராவணனை அழிக்க இராமரின் அவதாரம். சூரனை அழிக்க முருகனின் அவதாரம். பாரத யுத்தத் தில் எதிரிகள் படா தபாடுபட்டனர். அவர்கள் தலைகள் உருண்டோடின. இரத்த வெள்ளம் கரைகாணுத வெள்
49
Page 30
ளம். தருமர் பொறுமையின் சிகரம், சத்தியத்தின் ஆணி வேர். அவரும் போர்க்கருவிகள் தாங்கிப் போர் புரிந் தார். ஆனல் காத்தியடிகளின் சித்தாந்தம் இதுவல்ல. எதிரிகளை அழிப்பதற்கு பதிலாக, எதிரிகளின் மனத்தை மாற்றி அவர்களைத் தூய்மை செய்வது, தின்னவரும் புவி யைத் திருத்தும் புரட்சிகரமான சித்தாந்தத்தை இந்த அணுகுண்டு யுகத்திலே அண்ணல் போதித்தார். இந்த சித்தாந்தத்தை இந்த விஞ்ஞான யுகம் ஏற்குமானல் நாட்டில் அமைதி நிலவும், அகங்காரம் அழியும். யுத்தக்
கருவிகளை ஆக்குவதை விட்டு உலக நாடுகள் பஞ்சம்,
பிணி முதலியவற்றை நீக்க வழிவகைகளை மேற்கொள்ள &லாம். வாழ்க காந்தி தீபம் வளர்க அவர் இலட்சியம்!
வி. யோகராஜா மெதடிஸ்த மத்திய கல்லூரி 1 5 - I - 54
பேச்சு.
குறுநடை பதினுன்கு
எம். துரைராஜசிங்கம்
பிறந்த பொன்னடு இருக்கும் வரையில் தமது பெயர்களும் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கும் பாக்கியம் பெற்ற அரசியற்றலைவர்கள் உலக சரித்திரத்திலே மிக மிகச் சிலரே! அதிலும், அறத்தினல், மக்கள் வைத்தி ருந்த பேரன்பினல், உலகம் முழுவதும் பரவிய புகழினல் சிரஞ்சீவித்துவம் பெற்ற ராஜியவாதிகள் எண்ணிக் கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.
பரதன் என்ற அன்பும், பண்பும், ஆணவமும் மிக்க பேரரசனினுல் இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் இன்றைக்கும் நிலைத்திருக்கின்றது. விக்கிரமாதித்தன், சாணக்கியன் முதலியவர்களையடுத்துப் புதிய சகாப்தங் களே தோற்றின. இந்த அரசியல் மகாமேதைகள் என் றென்றும் மக்கள் மனதை விட்டு அகலாமல் சாசுவதமாக இருந்து வருகிறர்கள். இம்மாபெரும் மேதைகளின் வரி சையில் வந்தவர் மகாத்மா காந்தி. அவர் நம்மை விட்டுப்
51
Page 31
பிரிந்து சென்று இருபது ஆண்டுகள் முடிவடைந்து விட் டன. அவரது இந்த நூற்றண்டு விழாவை அனுஷ்டிக் கும் பொழுது இன்று அவர் நம்மிடையில் இல்லையென் பதை நம்ப முடியவில்லை. எங்கும், எப்பொழுதும் அவர் நம்மிடையில் இருப்பதைப் போன்ற உணர்ச்சிதான் ஏற்படுகின்றது.
இந்தியாவுக்குக் காந்தி மகான் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்பதற்காக அவரை நாம் கொண்டாடு" கின்ருே மா? அப்படியும் சொல்லிவிட முடியாது. காந்தி பிறப்பதற்கு முன்பே, 1857ஆம் ஆண்டில், மெகலாயப் பேரரசின் கடைசி மன்னனன பகர்தூர் ஷாவின் தலைமை யில் "சிப்பாய்க் கலகம்" என்றழைக்கப்படும் முதலாவது இந்திய சுதந்திரப் போர் ஆரம்பமாகிவிட்டது. ஜான்ஸிகிராணி, வீரபாண்டியக் கட்ட பொம்மன், பக வத்சிங் போன்று தமது உயிரையே அர்ப்பணித்த வீரர் கள் பலரும் சுதந்திர வீரர்களே. அத்துடன் லோக மான்ய பாலகங்காதர திலகர், மதன்மோகன் மாள வியா, சுபாஷ் போஸ், பாரதியார்,சத்தியமூர்த்தி, சிறிநி வாச ஐயங்கார், கோகலே, அன்னி பெசண்ட் அம்மை யார், நேரு போன்ற அநேகருடைய பெயர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற் பிணைந்து நிற்கின்றன . ஆணுல், இவர்கள் அனைவருக்குமில்லாத மகத்துவம் மகாத்மா காந்திக்கு மட்டுமிருக்கக் காரணம் என்ன? அந்த இரகசியம் என்ன? 'அறம்' என்ற மூன்றே எழுத் துக்களின் அந்த இரகசியத்தைச் சுருக்கிக் கூறிவிடலாம். அறத்தின் அவதார புருடராக வாழ்ந்தார். அறப்பாதை யிலே அரசியல் போராட்டத்திற்கு ஒரு புதிய உத்வேக மும் சக்தியும் ஊட்டினர். அணுகுண்டைப் பார்க்கிலும் அறம் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என்பதை அகி லம் உணரச் செய்தார். ' எங்கள் ஏகாதிபத்தியத்தில் சூரியன் அஸ்தமிப்பதே யில்லை' என்று பெருமை பேசிய ஆங்கிலேய ஆட்சியின் அத்தி வாரத்தையே அன்பு என் னும் ஆயுதத்தால் அசைத்து ஆட்டினர். கத்தி இன்றி
52
ரத்தமின்றிச் சக்தி மிக்கதொரு ஏகாதிபத்தியத்திட மிருந்து நாட்டை விடுவிக்க அறத்தை மட்டுமே ஆயுத மாகக் கைக்கொண்ட வீரபுருடரை உலக வரலாற்றில் இதற்கு முன்னர் கண்டது மில்லை; கேட்டதுமில்லை. நல்ல றம் மனித உருவில் நம்மிடையிற் சிறிது காலம் நடமாடி யது என்ற மகிழ்ச்சியோடு ஆண்டு தோறும் அந்த மகா னின் நினைவைக் கொண்டாடுகின்ருேம். உலகம் உள்ளள வும் அவருடைய நாமம் நிலைத்து நிற்கும் என்பது நிச்ச யத்திலும் நிச்சயம்.
*கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம். ஆனல், தருமம் ஒரு காலும் தோல்வியடை யாது' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண் டிருந்தார் காந்தியடிகள். ஆங்கிலேய ஆட்சிதான் நமது எதிரியன்றி ஆங்கிலேயர் அல்ல என்பதை அவர் ஒவ் விொரு உரையிலும் வலியுறுத்தி வந்தார்.
பிரமாண்டமான இராணுவப் படை களை யும், பொலிஸ் படைகளையும், பீரங்கிகளையும் துப்பாக்கிகளை யும் பக்க பலமாகக் கொண்டு அடக்குமுறை ஆட்சி நடாத்திய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் காந்தி மகான் தலைமையில் நடைபெற்ற ஆயுத மற்ற அறப் போராட் டத்தைத் தாக்கிப் பிடிக்க இயலாது சரிந்து விழுந்தது. அன்பு, அறம் ஆகியன முன் பலாத்காரம் உலக சரித் திரம் அறிந்திராத படி படுதோல்வி யடைந்தது! இதில் ஒரு விந்தை என்னவெனில் தோற்றவர்கள் ஆங்கிலே யர்களோ இந்தியர்களோ அல்ல. பதிலாக ஆங்கில ஏகாதிபத்தியம் தோற்றது. ஆனல், ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் மாபெரும் வெற்றி பெற்ருர்கள். எல்லா யுத் தங்களிலும் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறும், மற்ருெரு தரப்பு தோற்கும். ஆனல் காந்திம கான் நடாத் திய அறப்போரிலோ இருதரப்பினருமே வெற்றி பெற் ழுர்கள். அவர்களுக்கிடையில் நிலவிய மனக்கசப்பிற்குக் காரணமாக விளங்கிய ஒரு ஆட்சிமுறை தலைகுப்புறக் கவிழ்ந்தது.
53
Page 32
**இந்தியா என்ருெரு நாடுண்டு; அங்கே ஏலம் கராம்பு பெறுவதுண்டு; பொன்னும் பொருளும் மிக உண்டு' என்ற அளவிலேதான் பதினரும் நூற்ருண் டில் இந்தியாவை உலகம் அறிந்திருந்தது. பின்னர், படிப்படியாக இந்தியா ஆங்கிலேயர் பிடியிலே சிக். குண்டது. அப்பொழுது, "இந்தியா என்ருெரு நாடுண்டு, அது ஆங்கிலேயக்கு நல்ல வேட்டைக் காடு' என்ற அவல நிலை ஏற்பட்டது. காத்தி மகான் இந்திய சுதந்திர விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பிறகுதான், **இந்தியா என்ற நாடுண்டு; அங்கு அறமும் அன்பும் மிக உண்டு; சுதந்திர வேட்கையும் தாகமும் இதற்கு. உண்டு’ என்பதை உலகம் அறியலாயிற்று. அத்துடன் சுதந்திர இயக்கத்தை மக்களின் உள்ளத்திற்கு அருகே கொண்டு வந்தார். தீண்டாமை போன்ற தீய சக்திக ளைத் தரை மட்டமாக்கினர். பிளவு பட்ட மக்களை ஒன்று' படுத்தினுர். பெண்ணினத்தின் விடுதலைக்குப் பாடுபட்டு அவர்களையும் விடுதலை இயக்கத்திற்குள் கொண்டு வந் தார். இந்தச் சக்திகள் அனைத்தையும் அன்பினுற் கட்டி, அறத்தினுல் வழி நடத்தி மாய வித்தை புரிந்து பாரத அன்னையின் அடிமை விலங்கொடித்தார். அந்த ஒப் * பற்ற அண்ணல் காந்தியின் நாமம் என்றும் வாழ்க என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.
எம். துரைராஜசிங்கம் புனித மிக்கேல் கல்லூரி 26 - 2 - 52
பேச்சு
குறுநடை பதினைந்து
ள்ஸ். மொஹிதீன் பாவா
மாண்புடனே வாழ்ந்துவிட்டு, மேன்மை மிக அடைந்துவிட்ட, சத்தியத்தின் இருப்பிடமாம், மாந்த ருக்குள் மாணிக்கமாம் அண்ணல் காந்தி மகான், உல கோர்க்கு எடுத்துக்காட்டாக, மக்கள் மக்களாக வாழ வழிகாட்டி விளக்கந் தந்த ஓர் உத்தமன். இவர், ஒரு சமூகச் சீர்திருத்தவாதி; அரசியல் தலைவன்; அகிம்சா வீரன்; அன்பின் திருவுரு; இந்தியாவின் விடுதலைவீரன்; கல்வித் தத்துவஞானி;- இவ்வாறு வையகமே வாழ்த்து ரைக்கும் அண்ணல் இவ்விருபதாம் நூற்றண்டிலேயே வாழ்ந்து மறைந்த ஆசியஜோதியாவர்.
இவர் தனக்கென வாழாப் பிறர்க்குரியவராகச் சிறுவயதில்ே விளங்கிய காரணத்தால், இந்திய நாட்டு மக்கள் அன்னியர் ஆட்சியின் அடிமைகளாக அவர்தம் அடிச்சுவடு பற்றிக் குற்றேவல் புரிந்து குன்றிக்கிடப் பதைக் கண்டு கண்ணிர் வடித்தார். கரை காணுத் துன்
55
Page 33
:பக் கடலில் மூழ்கினர். செய்வ தென்ன வென்று தெரி
யாது திகைத் தார். பலவாறு சிந்தித்தார். செயலில் இறங்கினர். அறப்போர் என்னும் ஆயுதத்தை கரத்தில் -ஏந்திய வண்ணம், "இந்திய தேசிய காங்கிரஸ்” என்னும்
மகாசபையின் துணைகொண்டு அன்னியர் ஆட்சியை எதிர்த்து, அரசியல் தலைவனக முன் நின்று, இந்தியா வின் அரசியல் அடிமைத் தளையை பூண்டோடு அறுத் தெறிந்து இந்தியாவிற்குச் சுதந்திரம் பெ ற் று க் கொடுத்த ஓர் உத்தமன்.
இவ்வாறு ,இவர் ஓர் அரசியல்வாதியாக இருந்தது மட்டுமன்றி, அவரது வாழ்க்கையில் பெரும் பகுதியை சமூகச் சீர்திருத்தத்திற்காகவே செலவிட்டார். இவர் மக்களுக்கு எதைச் சொன்னலும் அதைச் சோதனை செய்து, போதனைக்குப் பின் சாதனை செய்துகாட்டினர். இவர் இந்திய ஏழை மக்கள் படும் அவல நிலையைக் கண்டு மனம் வெதும் பினர். ஏழை மக்களுக்குத் தொண்டு செய் வதே தன் குறிக்கோளாகக் கொண்டு அவர்களுக்கு என்ன என்ன, எப்போது தேவை என அறிந்து அதற்கு ஆவன செய்தவர்.
மேலும், தீண்டாமை என்னும் விதண்டாவாதத்தை' அகற்றி ஒழித்து விட அயராது உழைத்தார். ஒருவன் செய்யும் தொழிலைக் கொண்டு, அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று ஒதுக்கி வைத்து வாழும் மக்களை இவர் அடியோடு வெறுத்தார். எங்கு தாழ்த்தப் பட்ட மக்கள் எனக் கருதப்படுபவர்கள் செல்ல முடி யாதோ, அங்கே அவரும் செல்லமாட்டார். அரிசனர் கள் செல்லமுடியாத கோயில்களுக்குள் அவரும் நுழைய டிமாட்டார். அவர்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் தமக் கும் வேண்டியதில்லை என வெறுத்தார். "மண்ணு பி ரெல்லாம் கடவுளின் திருவுருவம்' என்னும் கொள்கை யுடையவராக வாழ்ந்தார் .
56
இவர் "யாகாவராயினும் நாகாக்க" என்னும் வரம் பிற்குட்பட, மறந்தும் தீய சொல் சொல்லாது, பிறர் உள்ளத்தைப் புண்படுத்தாது, நகைச் சுவையுடைய வராக, வாரத்திற்கு ஒரு நாள் மெளன நோன்பு நோற்று செயல் முறையில் தம் நாவைப் பழக்கினர். அது மட்டு மன்றி, மற்றவர்களிடமும் பொய் சொல்லாது, உண்மையுடன் வாழ்க்கை நடத்த அயராது உழைத் - 35 π. π.
இவர் மதுவினுல் ஏற்படக்கூடிய தீங்கையும், அதன் கெட்ட குணங்களையும், மக்களுக்கு எடுத்தியம்பி, மது ஒழிப்பு இயக்கம், என்ற ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் மதுவ ைகளை ஒழிக்க அயராது உழைத் தார். வீடடிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்களின் பெருமையை உணர்த்தி ‘பெண்கள் கல்வி இயக்கத்தை ஏற்படுத்தினர். பெண் கன் விடுதலையுடன் வாழவேண் டும் என உணர்ந்த அண்ணலார் "பெண்கள் விடுதலை இயக்கம்' என்ற ஓர் இயக்கத்தையும் ஆரம்பித்து அதற்கு முன்னின்று உழைத்தார்.
வங்காளத்தில் நவகாளிப் பகுதியில், ‘இந்து முஸ்லீம்" இனக் கலவரம் ஏற்பட்டபோது அதைச் சமாதானப்ப டுத்தி இவ்விரு சமூகத்தினருக்கு மிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த இரவு பகலெனப் பாராது, கொடுமைகள் பல நிறைந்த கிராமங்களின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் தமது ஊன்றுகோலைத் துணையாகக் கொண்டு அம் மக்களின் துயர் துடைக்க தமது வயோதிபப் பருவத்தி லும் அயராது உழைத்தார். -
இவர் பகைவர்களைப் பகைக்காது, அவர்களுக்கு அருள் கூர்ந்து மனமிரங்கி தன்னுயிர் போல் மன்னுயிரை யும் நேசிக்கும் மனுேபாவங் கொண்டவர். தனது பல் ஒடியுமாறு உதைத் தவரையும் சினங் கொள்ளாது, இன் முகம் கொண்டு நோக்கியவர்.
57
Page 34
இவ்வுத்த மன் செய்த சமூகச் சீர் திருத்தம் எந்த ஒரு சமூகத்தினருக்கோ, அல்லது சமயத்தினருக்கோ உரித் தானதாக இல்லாமல், அகில உலக மக்கள் யாவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அண்ணலார் இறை பக்தனக வாழ்ந்து எம்மை விட்டுச் சென்ருலும் அவர் காட்டிய அகிம்சா வழி உலகுள்ளளவும் இறவாப் புகழு டன் நிலைத்து நிற்கும் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. அன்பு வழிகாட்டிய அவ்வுத் தமனின் வாழ்க்கையின் வழி முறைகளைப் பின்பற்றி நாமும் நடந்தால் அதுவே நாம்: அண்ணலுக்குச் செய்யும் கைம்மாரு கும்.
எஸ். மொஹிதீன் பாவா பட்டிருப்பு ம . வி. 25 - 1 0 - 15 கட்டுரை
சிறுநடை பதினுறு
இ. தாமோதரம்பிள்ளை
“உத்தமராம் காந்தியை உவந்து பேச
கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை
கற்பனைக் கங்கில்லை அந்தக் காளிதாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் தியாகரில்லை
தேசிய பாரதியின் பின் திறமுமில்லை."
இவ்வாறு செந்தமிழ் பண்ணிசைத்தான் நாம மிகு நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை. உடல், பொருள், ஆவி மூன்றையும் பண்புடை பாரதத் தாயின் திருப்பாதங்க ளிலே தாரை வார்த்துக் கொடுத்த தன்னலமற்ற தனிப் பெருந்தலைவர் காந்திமகான். நாற்பது கோடி மக்களின் கண்கள் சுரந்த கண்ணீரையே தனது பெரு நாடியின் செந்நீராகக் கொண்டு மாபெரும் வெற்றிக்கும் வழி வகுத்தார் காந்திம கான். இதற்குக் காரணம் அவர் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்த சீரிய சிறப்பு மிகு கொள்கைகள் என்ருல் மிகையாகாது. அவைதான் காந்
59
Page 35
தீயம் என்னும் எதிரொலியாகக் காந்தியின் அருள் ஒளி' போல் எம்ச்ெவியிலே ஒலிப்பன. காந்தீய தத்துவம் இவ் வுலகிற்கு புதுமையானது. புராண இதிகாசங்களிலும் கூடத் தேடியும் கிடைக்காதது. புராணங்கள் என்ன கூறு கின்றன? நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்க வும் பகவான் அவதரித்தார் என்பதே.
இராமாயணத்திலே 'நீடிய அரக்கர் சேனை நீறு பட். டொழிய வாகை சூடிய’ என்று இராமனின் பெருமை" கூறப்படுகின்றது. நம் கண்ணன் பிறந்ததும் துஷ்ட நிக்கர க, சிஷ்ட பரிபாலனஞ் செய்வதற்காகவே. முரு கப் பெருமானுடைய திரு அவதாரமும் இப்புவியில் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவின் சித்தாந்தம் பகைவர் களையழிப்பதன்று. பகைவர்களுக்கு இரங்குவது. இன்ன ? செய்தார்க்கும் இனியவை செய்யத் தூண்டுவது. ஆகவே தான் காந்தீய தத்துவம் உலகிற்குப் புதுமையானது. தன் ணுயிர் போல், தனக்கு அழிவெனினும் பிறவுயிர் தன்னை யும் காத்தல்! மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் ? என்ற கொள்கைகளை போர், கொலை, தண்டம் என்பன நிகழும், அரசியலிலும் பின்னியுள்ளார். காந்தி தன் வாழ்க்கையில் பல சோதனை செய்து பார்த்தார். அவற் றை செயலிலும் சாதனை செய்யும்படி வற்புறுத்தினர். இப்படியாக சோதனை, சாதனை, போதனை என்னும் முடி புகளிலும் தன்னை உருவாக்கிக் கொண்ட மகாத்மா மன் னர்களை மதிக்கவில்லை. பணக்காரர்களைத் துதிக்கவில்லை. மாருக ஏழைகளைப் பற்றியே சிந்தித்தார். பணக்காரர் களின் பங்காளியாக வாழ்வதைவிடப் பாட்டாளிகளின் கூட்டாளியாக வாழத் தலைப்பட்டார். கொண்டவளை விலை பேசி விற்கினும் விற்பேன், உண்மையிற்றவறேன்" என வாழ்ந்த அரிச்சந்திரனுக்குந் பெருமை கொடுத்த வாய்மையைப் பாரதச் செல்வர்கள் யாவரும் தாரக. மந்திரமாக ஏற்ற வேண்டும் என வற்புறுத்தினர். தர்மs வழிவந்த சத்தியசீலராக வாழ்ந்து காட்டினர். பெற்ற வளிடம் கொடுத்த சத்தியத்தை இம்மியும் பிசகாது"
60
காத்தார். ஆயிரம் மைல்களுக்கப்பால் இருப்பினும் அவ ருடலை மதுவோ, மாமிசமோ, மங்கையோ கனவிற் கூடத் தீண்ட முடியவில்லை. உல்லாச சல்லாபங்களை உற்று நோக்குகின்ற போதெல்லாம் உதைபட்டு மிதிபடும் இந்தியர்களின் கண்ணிர் சிந்தும் வதனம் அவர் கண்முன்னே காட்சியளித்தது. மதுக்கிண்ணமும் மாமிச மும் அலைமோதும் நேரமெல்லாம் விரித்த தலை சீவி முடிக் காமல் கலங்கும் பாரதத் தாயின் அவல நிலைதான் சிந் தையில் காட்சிகொடுத்து அசத்தியம் காத்திட வேண்டும் என்று இந்திய மக்களிடம் இரு சரம் நீட்டி வேண்டினர் அண்ணல் காந்தி.
"சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ளபடி
என்று பாடிய ஒளவைப் பிராட்டியின் தத்துவத்தை மறந்து தீண்டாமை தலைவிரித் தாடிய காலம் காந்தி வாழ்ந்த காலம். தீண்டக்கூடாது என்ற இப்பயங்கர நோய் பாரத மக்களின் அறிவுக் கண்ணையே மறைத் து நின்றது. தீண்டப்படாது எனக் கூறுவதே தீமை என்று அதைப் பூண்டோடு ஒழிக்க விரதம் பூண்டார் அண்ணல் காந்தி. தொழுநோயாளர்களைத் தொட்டுப் பராமரித் தார். தாழ்ந்தவனிடம் தந்தையைப் போன்று பழகி ஞர். சேரி என்ற நரக உலகத்திலே கேட்பாரற்ற அவ லச் சூழ்நிலையிலே பாப்பாரற்ற அனதைகளாய் உழலும் ஏழை மக்களிடம், தீண்டாச்சாதி என்று சமுதாயம் தள்ளி வைத்தவர்களிடம், அன்புடன் பழகி ஆசிரமத் திற்கு அழைத்து வந்தார்,பரம்பரை பரம்பரையாக குரு தியோடு இரண்டறக் கலந்த தீண்டாமை என்னும் பயங் கரப் பிணியைப் போக்குவதற்காக! அந்நியரை வெற்றி பெற வேண்டுமானல் எம்மிடையே சகோதரத்துவம், புத்தொளிர்வு பெறவேண்டு மெனப் பறைசாற்றினுர்
6.
Page 36
"பழிக்குப் பழிவாங்கும் பயங்கரம் பாரத சமுதாயத்தி டம் இருந்து விலகி ஓட வேண்டும்; ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு”என்ற யேசு பெருமானின் திருவாக்கினைப்போல் இம்மை செய்ப வரையும் மன்னிக்கும் இதயமே வெற்றிக்கு வழிகோலும் எனப் பகன்ருர். இதற்காக அடிபட்டும், சிறைபட்டும் வாழ்ந்தார். அடித்தவர்களை "அன்பே' என்ருர் உதைத்து மிதித்தவர்களை "உத்தமனே" என்று போற் நிஞர்!
காந்தி காட்டிய காந்தீயம் ஒரு சாத்வீகப் போராட் டம். அங்கு குருதியாறு பெருக்கெடுத்து ஓடவில்லை" மாரு கத் தர்மப் பேரருள் பெருக்கெடுத்தது. அன்பு, அகிம்சை, சத்தியம், என்னும் ஆயுதங்களை ஆதாரமா கக் கொண்டு அந்நியரின் சக்திமிக்க போராயுதங்கள் யாவும் காந்தியின் சாத்வீக ஆயுதங்களின் முன் தூள் தூளாகின. கொடிய விலங்குத் தன்மை எளிய மனிதத் தன்மையின் முன் மண்டியிட்டது. அவரது ஆத்மீகத் தன்மை அந்நிய நாட்டாரின் ஆட்சியின் ஆணிவேரையே பிடுங்கி விட்டதென்ருல் மிகையாகாது.
பலாத்காரத்தினுல் அந்நிய ஏகாதிபத்திய வாதிக ளிடமிருந்து வெற்றியை எதிர்பார்க்க முடியாது. பொறி யடக்கமே உயர் நிலைப்படுத்தும், சிற்றின்ப ஆசைகளை அடக்குதலே வெற்றிப் பாதையின் திறவு கோலாகும். இதற்காகவே சத்தியாக்கிரகம் என்னும் உண்மைக் கொள்கையை ஆரம்பித்தார்.
A
எங்கு மனிதாபமான முறையில் அன்பால் ஆட்சி நடை பெறுகின்றதோ அங்கு காந்தீயம் மிளிரும். எங்கு அகிம்சை முரசொலி எழும்புகின்றதோ அங்கு காந்தீ யம் ஒளிரும். எங்கு சத்தியம் வெற்றி பெறுகின்றதோ அங்கே காந்தீயம் தளிர்க்கும். அன்பே சத்தியம்; சத் தியமே அன்பு. காந்தீயம் கடைப்பிடிக்கப்படும் இடங்
62
களில் எல்லாம் காந்தியின் பொக்கை வாய்ப் புன்சிரிப்பு, புத்தொளிர்வு ஊட்டிக் கொண்டே இருக்கும். கருணை அன்பு, சகோதரத்துவம் இம்மூன்றும் ஒருங்கே சேர்ந்
ததே காந்தீயம்.
"சத்தியம் வென்றது சாந்தம் பலித்தது
தர்மம் பிழைத்ததடா கத்தியும் ரத்தமும் இன்றியே பாரதக்
கைத்தளை வீழ்ந்ததடா சத்திய சக்கரம் தாயின் மணிக்கரம்
தன்னில் சுழன்றதடா சாந்த சொரூபனின் காந்தியில் மூழ்கியே
ஞாலமும் நின்றதடா
இ. தாமோதரம்பிள்ளை வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலை
1 - 10 - 50
பேச்சு
Page 37
மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பலரும் பல கோணத்திலிருந்து ஆராய்வர். அ ன் ஞ ரி ன்" வாழ்க்கை முறை உயர்ந்த குறிக்கோளை யுடையதர்க வும், உலகோர்க்கு ஒளி பரப்பக் கூடியதாகவும் மிளிர் கிறது. உலகை உய்விக்க வந்த புத்த பிரான், ஏசுமகா னைப் போன்றே இவரை மக்கள் போற்றிப் புகழ்கின்ற னர். அவருடைய கருத்துக்களெல்லாம் பெரும் சீர் திருத்தங்களை மையமாக வைத்தே கூறப்பட்டன. அவர் அரசியற்துறை மட்டுமன்றி, பொருளாதார, சமுதாயத் துறைகளையும் மாற்றியமைக்க முற்பட்டார்.
காந்தி நூற்ருண்டு விழாக் கொண்டாடும் இவ் வேளையில், அக்கால இந்தியாவின் நிலையை சிந்தித்துப் பார்த்தல் பொருத்தமானதாகும். அரசியல் துறையில் அந்நியர் ஆதிக்கம்; ஆங்கிலேயரின் அடி வருடிகளுக்கு அரசபோகம்; சுதந்திர வாஞ்சை கொண்ட சுதேசி
64
களுக்குக் கசையடி, சிறைத் தண்டனை! இதனல் அரசி யற் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பல பயங்கர இயக்கங்கள் தோன்றலாயின. எங்கும் பயங்கர நிலை; நாட்டில் அமைதியின்மை. பசிக்கொடுமையினலும், வறு மையினுலும் மக்கள் அல்லற்பட்டனர். எது புண்ணி யம்? எது பாவம் என்னும் வித்தியாச மறியாது துயர் உற்றனர்.இச்சந்தர்ப்பத்தில் இந்தியப் பருத்தி சீமைக்குக் கப்பலேறி, மதிப்புயர்ந்த லங்காஷயர் துணியாக வந்து குவிந்தது. இவற்றின் தரத்தை எவ்வளவுக்கு உயர் த்தி, கூடிய விலைக்கு விற்க முடியுமோ, அவ்வளவுக்கு சுதேச மக்களிடமிருந்து கொள்ளை லாபமடித்தனர். கட. ஞளிகளாகவுமாக்கினர். பணம் படைத்தவககள் சுக போக வாழ்க்கையில் சுகிக்க, வறியவர்கள் வறுமை யால் வாடித் துன்பப்பட்டனர். இந்நிலையில் இந்தியா வின் பொருளாதார நிலை குட்டிச் சுவராகவே காணப் ill-l-gil.
இன்றைய நிலையில் அன்றைய இந்தியாவை கற். பனை செய்வதே கடினமாக உள்ளது. இந்தியா எங் கும் ஆயிரம் பிரிவினை! இந்து முஸ்லீம் பிரச்சினை: தாழ்ந்தோன் உயர்ந்தோன் என்ற சாதிப் பாகுபாடு இங்கிலாந்தில் தெருக் கூட்டிய வெள்ளையனே டு பந்தி போசன மிடுவது பெரும் கெளரவமாக நினைத்த உயர் சாதி இந்தியனுக்கு, கீழ் நிலையிலிருந்து வந்த சுதேச அதிகாரிகளோடு வாழ்தல் இழுக்காகவும், அருவருப் பாகவும் இருந்தது.
இந்நிலையில் பல கோடி இந்தியரைச் சில ஆயிரம் ஆங்கிலேயர் வெகு காலமாக அடிமைப்படுத்தி வைக் கக் கூடியதாக இருந்தது.
பெண்களைத் தொழுவத்தில் வசக்கிக் கட்டும் மிரு கங்ளாக மதித்தனர். இன் ருே நிலை தலைகீழாகி விட் 4-து. இந்தியாவின் தலைமைப் பதவியே ஒரு பெண்ணின் கையிலே தான் உள்ளது. உலகின் பொதுச் சடிைம்ரன.
65
Page 38
ஐ. நா விற்கூட ஒரு பெண் தலைமைப் பதவி வகித்த தென்முல், அது இந்தய மண்ணிலே பிறந்த பெண் னெனின் ெ பருமை எனில் மிகையாகா. இவர்கள் யாவரும் காந்திஜி வாரிசுகள். காந்திஜியின் சீர்திருத்தங்களில் மிக உயர்வானதும், சத்வீகமானதும், ஆங்கிலேயரை வெற்றி கொள்ளப் பயன் படுத்திய ஆயுதமாகவும் சத்தியாக் கிரகம் விளங்குகின்றது. கடற்படையில் தங்களுக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை என்ற மமதை கொண்டு உலகின் பல பகுதிக%ளயும் தங்களின் கொடுமையான ஆட்சிக்குட்படுத்தி, சகல வல்லமை பேசிய ஆங்கிலே யரை, மகாத்மா எளிய முறையில், ஒரு துளி இரத் தஞ் சிந்தாமல், சாத்வீகத்தையும் அகிம்சை ைய யு ம் ஆயுதமாகக் கொண்டு புதியதோர் சகாப்தத்தை உலகோர்க்கு அறிமுகப்படுத்தனர்.
அவர் அறிமுகப்படுத்திய ' சத்தியம், அகிம்சை' என்னும் மந்திரங்கள் ஆரம்பத்தில் வெறும் கேலிக் கூற் ரு கவே இருந்தன. நாளடைவில் செயலுருவம் பெறத் தொடங்கியதும் ஆங்கிலேயரை நடு நடுங்கச் செய்திது. அகிம்சா வழியில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தால் பாரதம் தனது உரிமையில் வெற்றி பெற்றது. இதற்காசி காந்திஜி பட்ட துன்பங்களோ கணக்கிலடங்கா. அவர் எம்மை விட்டு மறைந்திருப்பினும் அவரால் போதிக்கப் பட்ட சாத்வீக இயக்கம் இந்த உலகம் உள்ளளவும் குன் றில் ஏற்றிய தீபம் போல் பிரகாசிக்கும் என்பது உறுதி
அரசியல் தர்மத்தைப் போதித்த அம்மகான் பொரு ளாதாரத்தில் தன்னிறைவை பெறும் வழி முறையினையும் எடுத்தோதியுள்ளார். ஏழைகளின் வாழ்க்கைக்கும் ஏகா திபத்திய வாதிகளின் சுரண்டலைத் தடுப்பதற்கும் தானே முன் மாதிரியாக ராட்டையில் அமர்ந்து நூல் நூற்றும் காட்டினர். சுதேசப் பொருட்களின் மீது மக்கள் மதிப்பு வைக்க வேண்டும், பிற நாடுகளுக்கு நம்பணஞ் செல்லக் கூடாது என்ற முழுத்துவ நோக்கை ஈடு செய்யும் வகை” யில் கைத்தறித் துணியைத் தானே கட்டி மற்றவர்
66
களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கினர். மகாத்மாவின்" இச்செயல் அடிமை நாடுகளின் பொருளாதார வளர்ச் சிக்கு கலங்கரை விளக்கம் போலிருந்தது.
கலப்பு மணத்தை ஆதரித்த காந்தி, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற முறையில் தாழ்த்தப்பட்ட வர்களுடன் தானும் ஒருவன க வாழ்ந்து காட்டினர். அரிசனங்களின் மத வழிபாட்டிற்காக அடைக்கப்பட்டி ருந்த கோவில் கதவுகளைத் திறந்து, சமூகத்தின் குறைபா டுகளைப் போக்கி, இந்து மதத்திலே மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தார்.
எம். விமலாவதி ஆனைப்பந்தி பெண்கள் ஆங்கில பாடசாலை
29 - 1 - 50
Page 39
Page 40
Page 41
பொன் அநுரா
ஆர்.சோமசுந்தாம் 岳、 விசாந்தாாஜ் ரி.ஜெயவேரி
ரி.விஜயகுமாரி G. GELLIT,
எஸ் மொஹிதீன் பாவா 岛、
3||
ཅ། ν ́ ή
KKARIN GANDH|| T. ”
GLITit. GIE, GT 品s。莒吕 8 שער சதானந்தம் எஸ் தம்பிராஜா " திகாஞ்சகு கே. சஞ்சீவாத்தினம் IT எம். துாைாஜசிங்கம் மோதரம்பிள்ளே Tւն են լքույրոնք
"Irst published in ceylon under the auspices of lampirai is a by m.a. rahman of arasu publications on the occasion F gandhi centenary (1969)
岛 printed in Ceylon by rainbow printers Wolfendhal street Colombo 13