கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாகரிகங்களுக்கு ஓர் அறிமுகம் - 1

Page 1
நாகரிகங்
ஓர் அறிமு
சமாதிலிங்கம்
 


Page 2

நாகரிகங்களுக்கு ஒர் அறிமுகம் - 1
சமாதிலிங்கம் சத்தியசீலன் B. A. Hons. Cey. (History) M. A. Jaffna (History)
சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1
வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அகிலம் வெளியீடு யாழ்ப்பாணம் 1994.

Page 3
நூல்: நாகரிகங்களுக்கு ஓர் அறிமுகம் -1
An Introduction, to Civilization
9ut. சமாதிலிங்கம் சத்தியசீலன்
Qpagali: வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பதிப்பு: முதலாவது 1994
பதிப்புரிமை: ஆசிரியருக்கு வெளியீடு: அகிலம் வெளியீடு, யாழ்ப்பாணம். அச்சுப் பதிப்பு: மாறன் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
Genow: e05ur. 100/=

என் அன்புச் சகோதரர்களின் நினைவுகளுக்கு

Page 4
பொருளடக்கம்
அறிமுக உரை
அணிந்துரை
ஆசிரியருரை
I. கிரேக்க நாகரிகம்
II. உரோம நாகரிகம்
III. கிறிஸ்தவ திருச்சபையும்
ஐரோப்பிய நாகரிகமும்
IV. அராபிய நாகரிகம்
V. ஐரோப்பிய மானிய முறைமிை,
VI. பைசாந்திய நாகரிகம்
VII. ஐரோப்பாவில் இஸ்லாமியப்
படர்ச்சியும், விளைவுகளும்
VIII. d'gy60auU Gua fagit
IX. இடைக்கால ஐரோப்பியப்
பல்கலைக்கழகங்கள்
உசாத்துணை நூல்கள்,
V
Ꮴ1
VII
! - 15
l6-28
29-49
50-74
75-87.
88 - 106
107-116
7 - 25
|26-136

அறிமுக உரை
மனித இனத்தின் வளர்ச்சியின் பாதையையும் அது அடைந்த, தாண்டிவந்த, பல்வேறு கட்டங்களையும் காட்டு வது வரலாறு. இந்த வகையில், வரலாற்றுப் பாடமானது மாணவப் பருவத்தில் முக்கியத்துவம் பெறும், பெறவேண்டிய, பாடமென்றால் மிகையாகாது. எமது நாட்டில், இடையிட்ட காலப்பகுதியில், தன் சிறப்புக்குன்றியிருந்த வரலாற்றுப் பாடம் மீண்டும் தனக்குரிய இடத்தைப் பள்ளிக்கூடம், பல் கலைக் கழகம் ஆகிய இரு மட்டங்களிலும் பெற்றுள்ள காலம் இது. இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒன்றாக நண்பர் சத்தியசீலனின் நாகரிகங்களுக்கு ஓர் அறிமுகம் என்னும் இந்நூல் பொருந்தியுள்ளது.
இலங்கையில் தமிழ்மொழி கல்விமொழிகளுள் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டுவந்தாலும், உயர்கல்விக்கான பாடநூல்கள் அதில் போதியளவு இல்லை என்ற குறை சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. குறையைச் சுட்டியவர்கள் அதனை நிறைவு செய்ய முன்வராமை விசனத்துக்குரியது. இந் நிலையில், திரு. சத்தியசீலனின் இந் நூல் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
ஒன்பது இயல்களை உள்ளடக்கிய நூல் ஐரோப்பிய வர லாற்றைச் செவ்வனே விளங்கிக் கொள்வதற்குச் சிறந்த அடிப் படையாக அமைவதாகும். பல்கலைக் கழகத்தில் வரலாற் றையும், கிறிஸ்தவ நாகரிகத்தையும் பாடங்களாகப் பயிலும் மாணவருக்கு இது பெரிதும் உதவுமென நம்பலாம்.
இத் நூலாசிரியர் எமது பல்கலைக் கழகத்தின் வரலாற் றுத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்று கின்றார். பல்கலைக் கழகச் சேவையில் இரு தசாப்தங்களை நிறைவு செய்துள்ள ஒருவரி, வரலாற்றில் ஆழ்ந்த புலமையும் ஆய்வு அனுபவமும் கொண்டவர். எனவே, இத்தகைய நூலைப் படைப்பதற்குச் சகல தகுதிகளும் அவருக்குண்டு என்பது வெளிப்படை.
எமது மாணவ சமுதாயம் கல்வியில் மேலும் செழித்து நிரந்தர பயன்பெறுவதற்கு இவரைப் போல ஏனையோரும் நூல்கள் படைக்க முன்வரவேண்டும். திரு. சத்தியசீலனின் இம் முயற்சியைப் பாராட்டுவதுடன், அவர் பணி எதிா காலத்தில் பல்கிப் பெருக மனமுவந்து வாழ்த்துகிறேன்.
பேராசிரியர், வ. ஆறுமுகம் கல்வியியற் துறை, யாழ். பல்கலைக் கழகம்,
யாழ்ப்பாணம்,
27. 06, 1994

Page 5
அணிந்துரை
திரு. சத்தியசீலனின் நாகரிகங்களுக்கு ஓர் அறிமுகம் என்ற நூல் வெளிவருவதனையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ்மொழி மூலம் வரலாற்று நூல்கள் இல்லாத சூழ்நிலை யில் இந்நூல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்க ளுக்குப் பெரிதும் பயன்படக்கூடியதாகும். நமது பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டில் வரலாற்றை ஒரு பாடமாக எடுக் கும் மாணவர்களுக்கு இந்நூல் ஒரு பாடப்புத்தகமாகவே அமைந்துள்ளது எனலாம். முதலாமாண்டில் "நாகரிகங்களின் வரலாறு" என்ற பாடவிதானத்தில் ஒரு பகுதியை நிறைவு செய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளதுடன் இரண்டாம் வருடத்தில் 'இடைக்கால ஐரோப்பா 300 - 1300 காலப் பகுதி யைக் கற்கும் மாணவர்களுக்கு ஏற்ற வகையிலும் அமைந் துள்ளது.
ஐரோப்பிய வரலாற்றைக் கற்க விரும்பும் மாணவர் களுக்கு அடிப்படையான வரலாற்று அறிவினை இந்நூல் எளிமையான முறையில் அளிக்கின்றது. ஆசிரியர் கடந்த இரு பது வருடங்களாக இத்துறையில் விரிவுரையாளராகப் பெற்ற அனுபவம் இந்நூலின் சிறப்பிற்குப் பெருமளவில் உதவியுள் ளது. வரலாற்று மாணவர்களின் நலன் கருதித் தமது சொத் தச் செலவில் இந்நூலை வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.
பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது வரலாற்றில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினரும் இந்நூலைப் பெற்று பயன்பெற வேண்டியது அவசியமானதாகும். ஆசிரியரின் நூல் வெளியீட்டுப் பணி மேலும் சிறப்புற எனது மனமார்ந்த ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, கலைப் பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம், 27。6。1994。
V

ஆசிரியருரை
பல்கலைக்கழகத்தில் வரலாற்றுக் கற்கை நெறிக்கு அதிக மானவர்கள் இல்லாத நிலையில், மாணவர்களுக்கு வரலாற்றுக் கான ஒர் அறிமுகத்தை வழங்க வேண்டுமென்ற நோக்குடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுப் பாடத்தை உயர் தர வகுப்புக்களில் படிக்காது பல்கலைக்கழகம் புகுந்தாலும் கஷ்டமின்றிக் கற்கும் நோக்குடன் எமது பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு வரலாறு கற்கை நெறிப் பாடவிதானம் " நாக ரிகங்களின் வரலாறு " என்ற தலைப்பில் ஆக்கப்பட்டுள்ளது. அக்கற்கைநெறியின் பகுதி 11 இன் தேவைகளை நிறைவு செய் யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
குறிப்பாக இந்நூல் ஐரோப்பிய வரலாற்றைக் கற்க விரும் பும் ஒரு மாணவனுக்கு அடிப்படையான அறிவினை வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டதாகும். அத்துடன் தமிழ் மொழியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் இப்பாடநெறி தொடர்பான நூல்கள் இல்லாத குறையையும் ஓரளவிற்கு இந் நூல் போக்கும் என நம்புகின்றேன். மேலும் இரண்டாம் ஆண் டில் " இடைக்கால ஐரோப்பா " என்ற பாட நெறிக்குத் தேவைப்பட்ட விடயங்களையும் இது கொண்டுள்ளது. வர லாற்றைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுக்கும் மாண வர்களுக்கு இந்நூல் குறிப்பிடத்தக்களவு பயன்படும் என்று எண் ணுகின்றேன். இந்நூலில் நாகரிக அம்சங்களுக்கு முதன்மை கொடுக்கப்பட்டும், வரலாற்று நிகழ்வுகள் சுருக்கமான வகை யிலும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது வருடங்களாக இத்துறையில் விரிவுரை
களை மாணவர்களுக்கு மேற்கொண்டிருந்தமை இந்நூலின் உருவாக்கத்திற்குக் காரணமாகியது என்பதனை இங்கு குறிப்
VIII

Page 6
பிடுதல் பொருத்தமானதாகும். மேலும் இப் பல்கலைக்கழகத் தில் வரலாற்றை மட்டுமல்ல கிறிஸ்தவ நாகரிகத்தை ஒரு பாடமாக முதலாண்டில் எடுக்கும் மாணவர்களுக்கும் அடிப் படையான வரலாற்று அறிவை இந்நூல் வழங்கக்கூடியது.
இந்நூலுக்கு அறிமுக உரை ஒன்றினை வழங்குமாறு பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் வ. ஆறுமுகம் அவர்களிடம் வேண்டியபோது மனமுவந்து அதனை அளித்திருந்தார்கள். பேராசிரியர் ஆறுமுகம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழ கத்தில் 1970 களின் ஆரம்பத்தில் நான் மாணவனாகப் படித்த காலத்திருந்தே எனது அன்புக்குரியவராயிருந்தார். அத்தகைய வரிடமிருந்து அறிமுக உரையை பெற்றமைக்காக எனது நன்றி களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பெருமதிப்புக்குரிய பேராசிரியரும் கலைப்பீடாதிபதியுமாகிய பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்களிடம் இந்நூலுக்கு ஓர் அணிந்துரை வழங் குமாறு கேட்டிருந்தேன். மன நிறைவோடு எனக்கு அதனை வழங்கியிருந்தார். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூலை வெளிக்கொணர் வதில் எனது ஆசிரிய நண்பன் திரு. இ. இரத்தினம் அவர்கள் பல வழிகளில் எனக்கு உதவியிருந்தார். நண்பன் இரத்தினத் திற்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இதனைச் சிறப் புற நூல் வடிவில் அச்சிட்டுத்தந்த மாறன் பதிப்பக ஊழியர் களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பல்கலைக்கழக மாணவர்களும், வரலாற்றில் ஈடுபாடு
கொண்ட அனைத்து தரப்பினரும் நாகரிகங்களுக்கு ஓர் அறி
முகம் - 1 என்ற நூலைப்பெற்றுப் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
ச. சத்தியசீலன்
வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,
30. 06. 1994
v1п

1. கிரேக்க நாகரிகம்
ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள மூன்று தீபகற்பங்களும் ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சியில் பெரும் தொண்டாற்றியுள்ளன. அவ்வகையில் இக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரேக்கத் தீபகற்பத்தில் வளர்ச்சியடைந்த கிரேக்க நாகரிகம் காலத்தால் முந்திய வகை யில் ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படை அம்சங்கள் பலவற் றிற்கு அத்திவாரம் இட்டுக் கொடுத்தது. கிரேக்கர் தம் வாழ்க் கையில் பின்பற்றிய பழக்கவழக்கங்கள். அவர்கள் அறிவுத் துறை யிலும், கலை, கட்டிடத்துறையிலும் ஈட்டிய சாதனைகள் மேலைத்தேய கலாசாரத்தின் பிரிக்கமுடியாத அம்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாகவே கிரேக்க இலக்கிய வடிவங்களும், அவர்களது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக் களும், எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பகுத்தறிவுக்கு முதன்மை கொடுத்து ஆராயும் மனப்பாங்கும் மேற்கு நாகரிகத்தின் மீது கிரேக்க அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கிரேக்சத் தீபகற்பத்திற்கு கிரேக்கரின் முன்னோர்களாகக் கொள்ளப்படும் இந்தோ-ஐரோப்பிய மக்கள் கி.மு . 1300 - 1100 ஆண்டளவில் பால்க்கன் பிரதேசம் ஊடாக வந்து குடியேறினர். சில காலத்தின் பின்னர் இவர்கள் ஈஜியன் தீவுகளையும் “கிறிற்” சின்னாசியாவின் கரையோரப் பிரதேசங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். இவ்வாறு பழைய கிரேக்க உலகமானது ஈஜியன் கடற் பிரதேசங்களைச் சுற்றிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இப் பிரதேசத்தில் காணப்பட்ட சிறந்த துறைமுக வசதிகள், மலைப்பிரதேசங்கள், பள்ளத்தாக்குகள் போன்ற புவி யியல் நிலைமைகள் தரைவழிப் போக்குவரத்துக்கு அன்றிக் கடல் வழிப் போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றவையாகக் காணப்பட்டன. இத்தன்மை கிரேக்க மக்களைச் சிறந்த கடலோடிகளாக விளங்க வைத்தது.
கிரேக்க நாகரிகம் சடுதியாகவோ “தொடர்பின்றியோ" தனித்து வளர்ச்சி பெற்ற நாகரிகமல்ல. பழைய அண்மைக் கிழக்குப் பிர தேசங்களில் வளர்ச்சி பெற்ற மெசப்பட்டேமிய, எகிப்திய, பினிசிய, கிரிட்டானிய நாகரிக. அம்சங்களின் அடிப்படைகளில்

Page 7
இருந்தே இக் கிரேக்க நாகரிகம் வளர்ச்சி பெற்றது. பிரதான மாக ஆரம்ப காலக் கிரேக்கர் கிரிட்டானிய நாகரிக அம்சங்க ளால் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இந்நாகரிகம் மேற்காசி யாவின் பிரதான நிலப்பகுதியில் வளர்ச்சி பெற்றிருந்த பழைய நாகரிகத்திற்கும், ஈஜியன் கடல், மத்தியதரைக்கடல் பிரதேசத் தில் வளர்ச்சியடைந்துவந்த புதிய உலகிற்கும் இடைத்தொடர்பு நிலையமாக அமைந்திருந்தது. இவர்கள் தென் SGura கத்தில் மட்டுமல்ல சின்னாசியாவிலும் தங்கள் குடியேற்றங் களை அமைத்திருந்தனர். கிரேக்கர் இப் பகுதிகளைக் கைப் பற்றிக் கொண்டதைத் தொடர்ந்து கிரிட்டானிய நாகரிகம் தளர்வுற்றுப் புதிதாக உருவாகிய கிரேக்க நாகரிகத்துடன் ஒன்று கலக்கலாயிற்று.
கிரேக்க வரலாற்றை உருவாக்கிய முக்கிய புவியியற் கூறு பாடுகள் அதன் மலைகளும், நதிகளும், சம வெளிகளும், கால நிலையும், மண்வளமும், கடலும், கடற்கரையும், சுற்றியுள்ள தீவுகளுமே. துண்டிக்கப்பட்ட சிறு சிறு சமவெளிகள் ஒன்றுக் கொன்று தொடர்பும் ஒற்றுமையும் இன்றித் தனித்தனி உணர்வு மிக்க நகர அரசுகளாக மாற்றம் பெற்றன. கிரேக்கத்தின் பண்டைய வரலாறு இந்நகர அரசுகளின் வரலாறாகவே காணப் படுகின்றது. இச் சமவெளிசளில் விவசாயமே மக்களின் பிரதான வாழ்க்கைத் தொழிலாக இருந்தபோதும் அப் பிரதேசத்தின் புவியியல் அடிப்படையிலே கடல்வழி வர்த்தகத்தின் மூலமும் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
விவசாயிகளாக இப்பிரதேசத்தில் வந்து குடியேறிய இந்தோ. ஐரோப்பிய மக்கள் போதியளவு இருப்பிட, நீர் வசதிகள் காணாமற் போனமையினால் படிப்படியாக கிறிட், சைப்பிரஸ் போன்ற அருகாமையில் உள்ள தீவுகளிலும், சின்னாசியப் பகுதி களிலும், வட ஆபிரிக்கக் கரையோரங்களிலும் போய்க் குடி யேறலாயினர் ஆகையினால் கிரேக்க நா ரிகத்தின் புவியியல் பிரதேசமென்று கூறுகையில் தனிப்படக் கிரேக்கத் தீபகற்பத்தை மாத்திரமன்றி ஈஜியன்கடல் தழுவும் பகுதிகள், மத்திய தரைக் கடல் பிரதேசங்கள், இதற்குத் தெற்கே காணப்படும் நிலப் பகுதிகள், கருங்கடல் பகுதி என்பனவற்றையும் கொள்ளல் வேண்டும். இப்பிரதேசம் முழுவதையும் கிரேக்க மக்களின் செல் வாக்குப் பிரதேசங்கள் என்று கூறலாம். கி. மு. 8 ஆம் நூற் றாண்டிலிருந்து கிரேக்கத் தீபகற்பத்திலிருந்த நகர அரசுகள்
2

அரசியல் வர்த்தக நோக்கங்களுச்காக முன்னர் குறிப்பிட்ட
கிரேக்க செல்வாக்குப் பிரதேசங்களில் பல குடியேற்றங்களை
அமைக்கலாயின, இக் கிரேக்க குடியேற்றங்கள் தாய் நாட்டு டன் நல்லுறவைப் பேணி வந்ததுடன் ஆச்சரியப்படத்தக்க அள
விற்குக் கிரேக்கப் பண்புகளையும் கொண்டிருந்தன. கட்டிடத்
துறை, கலைத்துறை சார்ந்த அம்சங்களை மட்டுமல்ல, அரசியல்
மத நிறுவன அமைப்புக்களையும், கிரேக்க மொழியையும் இக்
குடியேற்றங்கள் பின்பற்றி அந் நாகரிகத்தை இப் பகுதிகளில்
வளர்ச்சிப்படுத்தின.
பண்டைய கிரேக்க உலகம் வேறுபட்ட தனித்துவமான நகர அரசுகளையும், சுதந்திரமான குடியேற்றங்களையும் கொண் டிருந்த அதேசமயம் கிரேக்க மக்கள் அனைவருக்கும் பொதுவான கலாசார தேசிய அடையாளத்தை வளர்த்தும் வந்தது. வேறு பட்ட பேச்சுவழக்குகள் காணப்பட்டபோதும் கிரேக்க மொழி பண்டைய கிரேக்க உலகில் வாழ்ந்த அனைவராலும் விளங்கிக் கொள்ளப்பட்ட மொழியாக இருந்தது. கிரேக்க இலக்கியமும் மத நம்பிக்கைகளும் அவர்தம் கடவுளரும் பொதுவான மரபு களை வலிமைப்படுத்தின. அவர்களாலே கொண்டாடப்பட்ட புகழ்பெற்ற ஒலிம்பியா திருவிழாக்கள், டெல்பியில் அமைந் துள்ள அப்போலோ தேவாலயம், கிரேக்க மக்கள் அனைவரி னதும் கவனத்தைக் கவரலாயின. இவ்வகையில் கலாசார அடிப் படையில் தங்களை மற்றவர்களிலும் வேறானவர்கள் என்ற உணர்வினை இவர்கள் வளர்த்துக் கொண்டனர். தங்கள் மூதாதையராக கெலன் என்பவரையும், அதன் காரணமாகத் தங்களைக் கெலனியர் என்றும் அடையாளம் காட்டிக் கொண் டனர். கெலனியர் என்பது ஒரு கலாசார அடையாளத்தைக் குறிக்கப்பயன்பட்டதே அன்றி ஒரு தேசிய மக்கள் கூட்டத் தைக் குறிக்கவில்லை என்பது இங்கு கவனத்திற் கொள்ளப்படத் தக்கதாகும்.
இக் காலத்தில் கிரேக்க தேசியம் என்பது உருவாகாத தன்மையினால் கிரேக்கரது அரசியல் பற்றி அறிந்து கொள் வதற்கு அவர்களிடையே சிறப்பிடம் பெற்று நகர அரசுகள், அவற்றின் செயற்பாடுகள் என்பன முக்கியம் பெறுகின்றன. பல்வேறுபட்ட அரசியல் வடிவங்களைக் கிரேக்கர் உருவாக்கிய போதும் அரசியல் முதிர்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சமான தேசிய ஒற்றுமையை அவர்களால் அடைய முடியாது போயிற்று. இருந்தாலும் தற்போது அரசாங்க செயற்பாடுகளைக் குறிக்கும்
3

Page 8
பதங்களான முடியாட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி அரசியல் என்பனவற்றின் மூலங்களாகக் கிரேக்கசொற்கள் விளங்குகினறன. அவர்களது நகர அரசுகள் பற்றிய கோட் பாடானது உரோமர் காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட நிலைத்திருந்தது. இப்பதமானது ஒரு நகர அரசின் எல்லைக்குள் அமைந்து காணப்படும் இறைமையும், சுதந்திரமும் கொண்ட அரசினைக் குறிப்பிடுகிறது. அந்த நகர அரசு பல சிறிய சமூகப் பிரிவினரை உள்ளடக்கியதாகவும் காணப்படலாம்.
அரசியல் வேறுபாட்டினைக் கொண்ட கிரேக்க நகர அரசுகளின் செயற்பாட்டில் பொதுமைப்பட்ட அபிவிருத்திகள் ஏற்பட்டன. ஆரம்பகாலங்களில் இந் நகர அரசுகளில் குறுநில மன்னர் ஆட்சி முறை வழக்கில் காணப்பட்டது. கி. மு. 8 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற கிரேக்க ஆதிக்கப் படர்ச்சியைத் தொடர்ந்து உயர் குடியாட்சி என்பது முதன்மை பெற்ற ஆட்சி முறையாகியது; மன்னராட்சி முறை அகற்றப்பட்டது. சில காலங்களில் சர்வாதிகார ஆட்சிமுறை தோன்றியது. அவற்றுள் சில மக்கள் நலன்பேணும் சர்வாதிகார ஆட்சிமுறையாகக் காணப்பட்டன. சில அடக்கப்பட்ட கீழ் வகுப்பு மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் தன்மை கொண்டிருந்தன. கி.மு. ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் பிரதான கிரேக்க நகர அரசுகள் பொதுவான அரசாங்க முறையொன்றினை ஏற்படுத்தலாயின அவற்றுள் முக்கியத்துவம் பெற்ற ஸ்பார்டா, ஏதென்ஸ் ஆகிய இரு நகர அரசுகளின் தன்மைகளை இங்கு பார்க்கலாம்.
ஸ்பார்டா நகர அரசின் செயற்பாடுகளில் இராணுவக் கலாசாரம் மேலோங்கியிருந்தது. அதன் காரணமாகவே தென் கிரேக்கத்தில் அவர்கள் ஆதிக்கம் வலுப்பெற்றது. இந்த நகர அரசு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாகக் காணப் பட்டது. அதன் குடிமக்கள் கடுமையான இராணுவ பயிற்சியி னைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாக இருந்தது. கூடியளவு நேரத்தை உடற்பயிற்சியிலும், இராணுவப் பயிற் சியிலும் செலவிட்டதனால் கலைத்துறை சார்ந்த பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. வர்த்தகத்தைப் பிரதான நடவடிக்கையாகக் கொண்ட ஏதென்ஸ் நகர அரசில் குடியாட்சி நிறுவனங்கள் கி. மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் இருந்தே புகழ் பெற்றிருந்தன. கிரேக்க வரலாற்றில் புகழ்பூத்த காலப்பகுதியாக இக்காலம் அமைகின்றது. பாரசீக அரசின்
4

பைைடயெடுப்புக்களில் இருந்து இராச்சியத்தைக் காப்பாற்றுவதில் ஏதென்ஸ் நகர அரசு பிரதான பங்கினை வகித்துக் கொள்கின் றது. உயர்குடி முதியோர் அவை கைவிடப்பட்டு ஐநூறுவர் கொண்ட ஆட்சிச் சபை ஒன்று உருவாக்கப்பட்டு நகர அரசின் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒழுங்கு செய்யப்பட்டது. இச் சபை பல சிறு பிரிவுகளாகப் பிரிந்து அரசின் அனேக கடமைகளை ஆற்றலாயின.
நிர்வாகப் பதவிகளை தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கும் முறை யும், குறிப்பிட்டளவு சொத்துரிமை உடையோர் தேர்தலில் நின்று வெற்றிபெறல் மூலம் நிர்வாகப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை குடி யாட்சிப்பண்பு கொண்டதாக இருந்தபோதும் இராணுவத் தள பதிகள் தெரிவு முறையிலும் பின்பற்றப்பட்டமை திறமைக்கு முதன்மை அளிப்பதனைத் தடைசெய்தது இக் குடியாட்சி முறைமை ஏதென்சில் வாழ்ந்த மக்களிடையே குடியுரிமை தொடர் பான கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியிருந்தது. நகர அரசில் தங்கி யிருந்த, வெளிநாட்டவருக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. குடி யாட்சி முறைமையில் நாங்கள் தற்போது பார்க்கும் பல அம்சங் கள் ஏதென்ஸ் நகர அரசின் செயற்பாடுகளில் காணப்பட்டமை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகும்.
தற்காலக் கண்ணோட்டத்துடன் இப் பண்டைய கிரேக்க நாகரிகத்தை மதிப்பிடுமிடத்து வியந்து போற்றக்கூடிய மிக முன் னேற்றமான அம்சங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அண்மைக்கிழக்கில் காணப்பட்ட நாகரிகத்திலும் பார்க்கச் சடு தியாக இந்தக் கிரேக்கர் எப்படியாகத் தற்காலத் தன்மை கொண்ட அம்சங்களையுடைய நாகரிகத்தைப் படைக்க முடிந் தது? என்பது இன்று தன்னுமே மக்கள் மனதில் எழுகின்றது, முன்னைய நாகரிகங்கள் பெருமளவு சர்வாதிகாரத் தன்மை கொண்ட மன்னராட்சி முறையையும், மத அடிப்படையிலும். இயற்கைச் சகதிகளுக்குப் பயப்படும் தன்மையையும், தனி மனித ஆற்றலில் அதிக நம்பிக்கையற்ற மனப்பான்மையையும் கொண்ட வையாகவே வளர்ந்து வந்திருக்கின்றன. இப்படியாகக் காணப் பட்ட நாகரிகத்திலிருந்து தனிமனித ஆற்றல், பகுத்தறிவுக்கு முதன்மையளிக்கும் தற்காலத் தன்மை கொண்ட நாகரிகத்தை கிரேக்கப் பிரதேசத்து மக்கள் பண்டைக் காலம் என வர்ணிக் கப்படும் வரலாற்றுக் காலத்தில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்தனர். எப்படியாக இந் நாகரிகத்தைத் தோற்றுவித்தனர்
5。

Page 9
என்ற கேள்விக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் புவியியல் அமைப்பு அதன் விளைவாக அவர்கள் மேற்கொண்ட பொரு ளாதார வாழ்கைமுறை, அவர்கள் மேற்கொண்ட அரசியல் ஒழுங்குபாடுகள் அவற்றுடன் இப்பிரதேசத்திற்கு வந்த இந்தோ- ஐரோப்பிய மக்களிடம் காணப்பட்ட சில மனித சுபா வங்களும் பெருமளவிற்கு ஒன்றிணை நது இப் புரட்சிகரமான முன்னேற்ற நிலையை அம் மக்கள் பெற்றுக் கொள்ளக் காரண மாயிற்று.
இரேக்க நாகரிகம் இத்தகைய முன்னேற்ற நிலையை அடை வதற்கு ஒரே நேரத்தில் இப்பிரதேசத்தின் எல்லா மக்களும் தொண்டாற்றினர் என்று கூறமுடியாது. உண்மையில் இக்கிரேக்க நாகரிக அம்சங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் ஒரு கிரேக்க நாடோ, அரசோ இருந்ததென்று கூறமுடியாது. பல சிறு சிறு அரசுகளாகவே இம் மக்கள் அரசியலடிப்படையில் பிளவுற்றுக் காணப்பட்டனர். ஒன்றோடொன்று தொடர்பற்ற பல நகர அரசுகளிடையே அரசியல் ஒற்றுமை இல்லாதிருந்ததுடன் அடிக் கடி தீவிரமான போட்டிகளும் காணப்பட்டன. வெவ்வேறு அரசு களின் ஆட்சி முறையும், வெவ்வேறாகக் காணப்பட்டன. ஆனால் இந்த அரசுகள் எல்லாவற்றிற்கும் இடையில் காணப்பட்ட ஒரு மைப்பாடு என்னவெனில் இவ்வரசுகளில் வாழ்ந்த மக்கள் தொகை மிகச் சிறியதாக இருந்தமையாகும். இதனால் இன்று தன்னுமே காணமுடியாத அளவிற்கு நேரடியாகவே எல்லா அர சியல் தீர்ப்புக்களிலும் மக்கள் பங்குபற்றச்சுடிய வாய்ப்புக் காணப் பட்டது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் இம் மக்களிடையே எவற்றையேனும் தீர ஆராய்ந்து விவாதித்து முடிவு காணும் நோக்கம் வேரூன்றலாயிற்று.
பரம்பரையான ஒரு வழிமுறை அல்லது புகழ்பெற்ற ஒருவர் கூறிய கூற்றையோ, தீர்ப்பையோ சரியானதென்று ஏற்றுக்கொள் ளாது தாங்கள் அதனைக் கேள்விக்கிடமாக்கி ஆராய்ந்து தம் தனிப்பட்ட அறிவின் அடிப்படையில் முடிவைக்காண முற்பட் டனர். பழைய நாகரிகங்களில் காணப்பட்டது போல் அல்லாது கிரேக்கத் தீபகற்பத்தில் குடியேறிய மக்கள் இயற்கைச் சக்தி களுக்கு அஞ்சியோ, இயற்கைச் சம்பவங்களைத் தங்களால் விளங்க முடியாத தெய்வீகக் காரணங்களால் ஏற்பட்டன என்றோ எண்ணாது எவற்றையேனும் பகுத்தறிவின் அடிப் படையில் விளங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையைக் கொண் டிருந்தனர்.
6

இம் மக்களிடையே ஆசிய நாகரிகங்களில் காணப்பட்டதைப் போலவே பல தெய்வ வழிபாடு காணப்பட்டது. போர். காதல், விவசாயம், கடல் பிரயாணம் போன்ற வேறு வேறு அம்சங் களுக்கு வேறு வேறு தெய்வங்களை இவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இத் தெய்வங்கள் இயற்கை மனித உருவத்திற்கு அப் பாற்பட்டோ, மக்களிடையே அச்சத்தை விளைவிக்கக்கூடிய தெய்வங்களாகவோ அமைக்கப்படவில்லை. அவர்களுடைய கடவுள் சாதாரண இயற்கை மனிதனுடைய உருவத்திலேயே காணப்பட்டனர். மனிதரைப் போலவே ஆசையும், உணர்ச்சி யும் கொண்டு விளங்கிய இத் தெய்வங்கள் அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும் மனிதரிலும் பார்க்கச் சிறந்து விளங்கினர். அவர்களது வழிபாட்டு முறைகள் கூட கடவுளுக்கு அஞ்சி அடிபணியும் தன்மை கொள்ளாது சமத்துவமானவர் இடையே நடைபெறும் உரையாடல்களாகவே காணப்பட்டன.
கிரேக்கர் தனிமனித ஆற்றல் அடிப்படையில் இளம் பிராயத்திலிருந்தே உடற்பயிற்சியில் ஈடுபட்டுச் சிறந்த சுகா தாரத்தைப் பெற்றிருந்தனர். உடல்வலிமை மட்டுமல்ல மன வலிமைக்கும் முக்கியம் இடம்கொடுத்தனர். ஆகையால் இவர் சளது நாளாந்த வாழ்க்கையில் உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள் சிறப்பிடம் பெற்றன. இவற்றில் மிகச் சிறந்த ஆற்றல் பெற்றவரைக் கெளரவிக்கும் வழக்கமும் காணப்பட்டது தற்போது நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை நடாத்தப் படும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் இக்கிரேக்க மக்களி னாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டன. இன்றுகூட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக நடாத்தப்படும் விளக்கீட்டுச் சடங்கிற்காக கிரேக்க நாட்டிலி ருந்துதான் தீப்பொறி எடுத்துச் செல்லப்படுகின்றது.
கிரேக்கர் பிற்கால உலகிற்கு வழங்கிய நன்கொடைகள் பல துறை சார்ந்தவை. அரசியல் துறையிலே பகுத்தறிவுக்கு முதன்மை கொடுத்து சிந்திக்க முற்பட்டமை அவைகளில் ஒன் றாகும். தத்துவஞானம் என்ற சொல்லே கிரேக்க மொழி மூலத்தையும், அறிவில் காதல் என்ற கருத்தையும் கொண்டது. கிரேக்க தத்துவஞானிகள் அனைத்து அறிவுத் துறைகளிலும் தங்கள் ஈடுபாட்டைக் காட்டினர். அவர்களது கருத்தில் தத்துவ ஞானம் ஆனது வெறுமனே தத்துவம், தர்க்கம், தர்மசாத்திரம் என்பனவற்றை மட்டும் கருதாது பெளதிகம், வானியல், நுண் கணிதம் போன்ற இயற்கை விஞ்ஞானங்களையும் உள்ளடக்கிய
7

Page 10
தாக இருந்தது. இவர்கள் எவற்றையேனும் கேள்விக்கிடமாக்கி ஆய்வுத்திறனின் மூலம், பகுத்தறிவின் அடிப்படையில் இயற்கை யின் வாழ்க்கையை விளக்க முற்பட்டனர். இதனால் இக் கிரேக்க அறிஞர்களே தத்துவஞானம் என்றழைக்கப்படும் அறிவியல் துறை யில் முன்னோடிகளாக விளங்கலாயினர்.
தற்கால விஞ்ஞானரீதியான முறையில் இவ்வுலகின் அமைப்பையும், மனித வாழ்க்கையையும் விளக்க முற்பட்டதன் அடிப்படையில் இக் கிரேக்க அறிஞர் தத்துவஞானம் எனப் படும் அறிவியலைத் தோற்றுவித்தனர். இயற்கைச் சம்பவங் களை அவதானித்துப் பகுத்தறிவின் அடிப்படையில் அவற்றை விளங்கிக் கொள்ள முற்பட்டனர். இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட தேவீஸ் தத்துவ ஞானத்தின் தந்தையாகக் கருதப் படுகின்றார். கி. மு. 585 இல் பபிலோனிய கணக்கீட்டு முறை களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சூரியகிரகணம் ஒன்று இடம்பெறும் என்பதனை முன்கூட்டியே தேவீஸ் அறிவித்திருந் தார். இயற்கைச் சட்டங்கள் மீது மனித சக்திக்கு அப்பாற் பட்ட சக்திகள் தீர்மானங்களை மேற்கொள்கின்றன என்று இதுவரை இருந்த நம்பிக்கையைப் பலவீனமாக்கியதாக இக் கண்டுபிடிப்பு அமைந்தது பாடசாலை மாணவர்களால் நன் கறியப்பட்ட பைதகோரஸ் ( கி.மு . 500 ) கேத்திரகணிதத் தேற்றம் ஒன்றினை நிறுவி கல்விக் கோட்பாட்டாளராகச் செயற்பட்டார். தேவீஸின் பின்பாக இன்னும் பல கிரேக்க ஞானிகள் இத் துறையில் தங்கள் கவனத்தைச் செலுத்தி யிருந்தனர். இவர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் இறுதி உண்மையைக் கண்டுபிடித்தனர் என்ற அடிப்படையில் தத்துவ ஞானவரலாற்றில் சிறப்பிடம் பெற வில்லை. ஆனால் இவர்கள் இத் தத்துவஞானப் பிரச்சினை களை ஆராய முற்பட்ட முறை, இவ்உலகில் நடக்கும் சம்பவங் களுக்குக் கொடுக்க முற்பட்ட விளக்கங்கள், தற்கால விஞ்ஞான ரீதியாகப் பகுத்தறிவு அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்ட முறை, இவையே இந்த அறிஞர்களுக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவர்களுள் மிக்ககூடிய சிறப்பைப் பெற்ற அறிஞர்களாக சோக்கிரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ் ரோட்டல் என் போர் காணப்படுகின்றனர், சோக்கிரட்டீஸ் கொண்ட கொள்கைக்காகத் தன்னுயிரையே இழக்க வேண்டி யதாயிற்று. இவரது தர்க்சரீதியான "சம்பாஷனைகள்’ எனும் நூல் பிளாட்டோவால் பிற்கால உலகிற்கு அளிக்கப்பட்டது.
s

தற்கால அரசியல் தத்துவ ஞானிகளினால் இன்றியமை யாத முக்கியத்துவம் வாய்ந்த மூலாதாரங்களாகக் கருதப்படும் நூல்களான குடியரசு, சட்டங்கள், அரசியல்ஞானி என்பனவற்றை பிளாட்டோ எழுதினார். இவற்றில் உலக வரலாற்றில் முதன் முதலாக விஞ்ஞான ரீதியாக அரசியல் வாழ்க்கை, அரசியல் ஒழுங்கு முறை, அரசியல்வாதிகளுடைய பிரச்சினைகள் போன்ற அம்சங்களை அக்கால அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்து சில பொதுப்பட்ட உண்மைகளை அளிக்க முற்பட்டார்.
இவர்கள் இருவரிலும் பார்க்க இன்னும் கூடியளவு சிறப்பைப் பெற்ற கிரேக்க அறிஞராக அரிஸ்ரோட்டல் விளங்குகின்றார். இத்தகைய முதன்மை நிலையைப் பெறுவதற்குக் காரணம் அவர் ஒரு தனிப்பட்ட அறிவியல் துறையில் மாத்திரமல்லாது வேறுபட்ட பல அறிவியல் துறைகளிலும் சிறப்புற்று விளங்கிய மையே. தத்துவஞானம், அரசியல் தத்துவம், வானசாத்திரம், தர்க்கம், உடற் கூற்றியல், விலங்கியல், தாவரவியல், உளவியல், பெளதிகம் போன்ற துறைகள் பலவற்றிலும் மிகச் சிறந்த நூல்களை எழுதிச் சிறப்புப் பெற்றவராகக் காணப்படுகின்றார். இவர் மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் இன்று தன்னுமே உலகின் பல பல்கலைக் கழகங்களில் அடிப்படை நூல்களாக விளங்கி வருகின்றன.
பிளாட்டோவினது அரசியல் தத்துவஞான நூல்களிலும் பார்க்கக் கூடியளவு முன்னேற்றமான கருத்துக்களைத் தனது அரசியல் என்ற நூலில் வெளியிட்டார். இதே நூலில்தான் மனித வாழ்க்கையில் உளவியல் ரீதியான முறையில் அரசி யல் இயங்கும் முறையை விளக்க முற்பட்டார். இதே நூலில்தான் * மனிதன் ஒரு சமூக விலங்கு ' என்ற புகழ் பெற்ற கூற்றையும் விளக்கினார். அத்துடன் அரசியல் இயங் கும் முறையில் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையும் விளக்க முற்பட்டார். பல துறைகளிலும் அவர் கொண்டி ருந்த அறிவின் அடிப்படையில் ஒரு பரந்த மனப்பான்மை யுடன் ஒவ்வொரு துறைகளையும் நோக்கியதன் அடிப்படை யில் சிறப்புப் பெற்றுள்ளார். ஒரு தனிமனிதன் கலைக்களஞ் சியத் தன்மை கொண்ட அறிவினைப் பெற்றிருந்ததோடு எத்தனையோ தட்டிக்கழிக்க முடியாத உண்மைகளையும் பிற்கால உலகிற்கு வழங்கினார்.
விஞ்ஞானத்துறையிலும் கிரேக்கர் மகத்தான சாதனை களைப் புரிந்துள்ளனர். உலகின் அமைப்பு, தன்மை பற்றிப் பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கம் காண முற்பட்டமையே விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு வழி கோலியது எனலாம். தற்காலத்தில் விஞ்ஞான முறையாகக் கருதப்படும் அவதானிப்பு
9

Page 11
பரிசோதனை ஆகிய முறைகளைக் கையாண்டு பகுத்தறிவின் அடிப்படையில் இயற்கை நிசழ்வுகள், உலகின் போக்கு, அமைப்பு போன்ற பிரச்சினைகளை எல்லாம் கிரேக்க ஞானிகள் விளக்க முற்பட்டனர். , ...و கணித சாத்திரத்திலும், தத்துவஞானத் துறையிலும் பைதகோரஸ் சிறப்புற்று விளங்கினார். பைதகோரஸ் தேற்றம் என்று பலராலும் அறியப்பட்ட தேற்றத்தை முதலில் கண்டு பிடித்தவர் இவரே. புவியியல் துறையிலும் கிரேக்க அறிஞர்களே விஞ்ஞான முறையில் புவியின் அமைப்பு, இயங்கும் முறை இயற்கைச் சம்பவங்களை விளக்க முற்பட்டனர். கி.மு ஆறாம். நூற்றாண்டில் வாழ்ந்த கெக்கடயஸ் புவியியலின் தந்தையாகக் கருதப்படுகின்றார். இவரே மத்திய தரைக் கடலின் புறவுருவப் படத்கை ஆக்கி வைத்தவர். அவருக்குப் பின்பாக கி.மு. 65 இல் ஸ்ராபோ என்பவர் புவியியல் பற்றிய பல நூல்களை எழுதினார். தற்காலத்தில் காணப்படும் பெளதீக, பண்பாட்டு, காலநிலை அம்சங்கள் பற்றி ஸ்ராபோ முதன்முதலாக எழுதினார். தொடர்ந்து இன்னோர் கிரேக்க அறிஞரான தொலமி என்பவர் வானசாத்திர அறிவினை முன்னேற்றப் படுத்தியதுடன் உலகின் புறவுருவப் படத்தை ஆக்கி வைக்கவும் முற்பட்டார். உலகின் அமைபபுப் பற்றி போதிய அறிவினைப் பெற்றிராத தொலமி தற்கால உலகப் புறவுருவப்படத்திலிருந்து பெருமளவு குறைபா டுள்ள உலகப்படத்தை வரைந்திருந்தாலும், தொலமியின் முயற்சியே முதன்முதலாக எடுக்கப்பட்டது என்பதன் அடிப் படையில் சிறப்பைப் பெறுகின்றது.
பெளதிகத் துறையில் ஆர்க்கிமிடிஸ் என்பவரும், தியோ பரஸ்ரஸ், அனக்கிமாண்டர் ஆகியோர் தாவரவியல் துறையிலும் சிறப்பிடம் பெறுகின்றனர். பாடசாலை மாணவர் ஆர்க்கிமிடி ஸின் நெம்புபோல் தத்துவத்தை அறிந்திருப்பார்கள். கி.மு 372 - 287 இல் வாழ்ந்த தியோபரஸ்ரஸ் தாவரவியல் வரலாற்று நூல், தாவரங்களின் தோற்றம் பற்றிய நூல் என இரண்டினை எழுதியுள்ளார். தத்துவஞானத் துறையில் பிரசித்தி பெற்று விளங்கும் அரிஸ்ரோட்டல் தாவரவியல், விலங்கியல் என்பனவற் றின் தந்தையாக விளங்குகின்றார். மருத்துவத் துறையின் தந் தையாக கருதப்படுபவர் கிப்போகிரட்டிஸ் ஆவர். இதற்கு முன் பான காலத்தில் எல்லா நோய்களையும் மூட நம்பிக்கையின் அடிப்படையில் தெய்வம் அல்லது இயற்கையின் செயல் என்றும், அவற்றை மனித ஆற்றலின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ள
10

முடியாது என்றும் நம்பி வந்தனர். இந் நிலையில் கிரேக்க ஞானிகள் விஞ்ஞான ரீதியான முறையில் மனித ஆற்றலின் அடிப்படையில் இந் நோய்களைச் சுகப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். உடலின் அமைப்புமுறை இயங்குமுறை போன்ற பல துறைகளிலும் முதன்முதலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பெருமளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களை இந்த நாகரிகம் கொண்டிருந்தது. தாவரவிய லில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தாவரங்களின் தன்மை, சக்தி களை உணர்ந்து நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. அத்துடன் வைத்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய நன்நெறிக் கோட்பாட் டினைக்கூட கிப்போகிரட்டிஸ் பிற்கால உலகிற்கு அளித்துள் ளார். இன்று தன்னுமே வைத்திய மாணவர் தங்கள் படிப்பு முடிந்து வைத்தியராகக் கடமை ஆரம்பிக்குமுன்பு பாரபட்சம் , அற்ற வசையில் கடமையைச் செய்வேன் எனக்கூறும் கிப்போ கிரட்டிஸ் விசுவாசப் பிரமாணத்தை எடுக்கும் வழக்கம் காணப் படுகின்றது.
இலக்கியத்துறையிலும் கிரேக்க எழுத்தாளர்கள் பிற்கால உலகிற்கு மிகச் சிறந்த இலக்கியப் படைப்புக்களை அளித்துள் ளனர். இந்திய இலக்கிய வரலாற்றில் சிறப்புப் பெற்று விளங் கும் இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களைப் போலவே கிரேக்க வரலாற்றில் இலியட், ஒடிசி என்னும் மாகாவியங்கள் ஹோமர் எனும் கவிஞரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இக் காவியங்களில் இருந்து கி. மு. 12 - 8 நூற்றாண்டு கால கிரேக்க சமுதாயத்தைப்பற்றி அறிய முடி கின்றது. தொல்பொருள் ஆய்வுகளுடன் இவ்விரு காப்பியங்களும் கிரேக்க வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் உதவும் மூலாதாரங் களாக விளங்குகின்றன. ஆல்சியஸ், பின்டர், சப்போ போன் றவர்கள் கிரேக்க கவிதைகளைப் படைப்பதில் மிகச் சிறப்பி னைப் பெற்றிருந்தனர். சப்போ என்ற பெண் புலவர் காதலின் அழகினையும், வசந்த காலத்தின் இன்பத்தையும், கோடைக் கால இரவின் வனப்பினையும் வருணித்து உணர்ச்சிப் பாடல் களைப் பாடியுள்ளார்.
நாடகத் துறையிலும் பிற்கால எழுத்தாளர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நாடகங்களைக் கிரேக்க நாடகா
சிரியர் எழுதினார். ஈஸ்கைலஸ், யூரிபிடிஸ், சோபோகிளிஸ், அரிஸ்டோ பேன்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பான நாடகாசிரியர்
f

Page 12
கனாக விளங்கினர். முன்னவர் இருவரும் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்ட கோட்பாட்டைப் பரப்பத் துன்பியல் நாடகங்களைப் பயன்படுத்தினர். அரிஸ்டோபேன்ஸ் 'பெண்க Oன் பாராளுமன்றம்" என்ற நகைச்சுவை நாடகத்தை எழு தினார். ஆங்கில இலக்கியத்தில் மிகச் சிறப்பிடம் பெற்று விளங் கும் மகாகவி சேக்ஸ்பியருடைய நாடகங்களைப் போலவே இக் கிரேக்க நாடகப் படைப்புக்களும் அக்காலத்திற்கும், அச் சமூ கத்திற்கும் மாத்திரமன்றி முழு உலகிற்கும் கால, தேச எல்லை யின்றியே மக்களினால் கிரகிக்கக்கூடிய தன்மை கொண்ட அழியா இலக்கியங்களாக அமைந்தன. நாடகக்கலை, நாடக அமைப்பு முறை, நாடக அரங்கமைப்பு போன்ற பல துறைகளிலும் கிரேக்கர் சிறந்து விளங்கினர்.
இலக்கியத் துறையின் ஒரு அம்சமாக அப்போது கருதப் பட்ட வரலாற்றுத் துறையிலும் கிரேக்கர் சிறந்து விளங்கினர். கிரேக்க நாகரிகம் சிறப்புறுவதற்கு முன்பான காலப் பகுதியில் வரலாற்றுப் படைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அப் படைப்புக்கள் பெருமளவிற்குக் கட்டுக் கதைகளையும் நம்பத்தக்க தன்மையற்ற பொருளடக்கத்தையும் கொண்டு காணப்படுகின்றன. மேலும் சில பெருமளவிற்குத் தனிப்பட்ட சில மனிதர்களின் விபரங்களாகவும், மத வரலாற்று நூல்களாகவுமே விளங்கின. தற்கால முறையில் அரசியல், பொருளாதார, சமூக அம்சங்கள் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் நூல்களாகவோ நடந்த சம்பவங்களுக்கு விளக்கம் கொடுக்கும் நூல்களாகவோ அமையவில்லை. இச்சூழலில் முதன்முதலாக விஞ்ஞான ரீதியில் வரலாற்று நூல்களைப் படைத்த பெருமை கிரேக்க அறிஞர்க ளுடையதாகக் காணப்படுகின்றது. இத் துறையில் வரலாற்றின் தந்தையாகக் கருதப்படும் கெரேடோற்றஸ் (கி. மு. 425 ), தூசிடைடிஸ் ( கி. மு. 400 ), ஸ்னோபன் ( கி. மு. 355) ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்கள். கெரேடோற்றஸ் பாரசீக யுத்தங் கள் பற்றியும், தூசிடைடிஸ் கிரேக்கத்தின் பொற்கால வரலாறு பற்றியும் எழுதியுள்ளனர்.
கி. மு. 490 இல் பாரசீகருக்கு எதிராகக் கிரேக்கர் மாரதன் போர்க்களத்தில் பெற்ற பெரு வெற்றிக்கும் கி. மு 338 இல் மாஸிடோனியரிடம் அவர்கள் அடைந்த படுதோல்விக்கும் இடைப்பட்ட ஒன்றரை நூற்றாண்டு காலமே அவர்களது பொற் காலமாகக் கருதப்படுகின்றது. பாரசீக வெற்றியைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்ற பெரிக்கிளிஸ் ஆட்சிக்காலம்
12

கலைத்துறையில் ஈடில்லாச் சிறப்புப் பெற்ற காலமாகும். அவர் களின் கலைப்படைப்புக்கள் உள்ளதை உள்ளபடி காட்டுவதிலும், மனித உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டுவதிலும் சிறப்புப் பெற்றிருந்தன. அவர்களது கலைப் படைப்புக்களுக்குச் சிறந்த உதாரணங்களாக அக்றோபோலீஸ் மலையுச்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், பார்த்தினன் கட்டிடம், அதீனா கோயில், ஆட்டி மிஸ் கோயில், டயானா, அப்போலோ கோயில்கள், ஜியூஸ் தெய்வச்சிலை என்பனவற்றைக் குறிப்பிடலாம். கிரேக்கக் கட் டிடக் கலை டோரிய, கொரிந்திய, அயோனிய என்ற மூன்று கட்டிடக்கலை மரபுகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளது. பிறை வடிவ நாடகமேடை 30, 000 பேர் பார்க்கும் வசதிகளைக் கொண்டதாக அக் காலத்தில் அமைக்கப்பட்டது. இவர்களது கலை, கட்டிடப் படைப்புக்களில் சமயச் சார்புத் தன்மை ஆரம் பத்தில் காணப்பட்டாலும், பின்னர் மனிதரின் நல்வாழ்வு கலைப் பொருளாகியது. இவர்களது படைப்புக்கள் தத்ரூப மானவையாகவும், இயற்கைத் தன்மை கொண்டனவாகவும் விளங்குகின்றன. தெய்வங்களைப் போலவே மனித உருவத்தின் வடிவையும், அழகையும் தங்கள் படைப்புக்களில் சித்திரிக்க முற்பட்டுப் பெரு வெற்றி கண்டனர். சிற்பம், ஒவியம், இசைத் துறை போன்றவற்றிலும் கிரேக்கர் சிறப்புப் பெற்றிருந்தனர். ஜியூஸ், அதீனா அப்போலோ சிலைகள் இன்றுவரை மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மையின. அறிவுக்கு அப் பாற்பட்ட விடயங்கள், மறு உலகு சம்பந்தமான காட்சிகள் அவர்கள் ஒவியங்கள், சிற்பங்களில் காணமுடியாது. பிரசித்தி பெற்ற கிரேக்க சிற்பிகளாக மிரான், பிடியாஸ் (ஜீயூஸ், அதீனா சிலைகளை வடித்தவர் ) என்போரைக் குறிப்பிடலாம்.
ஒவியம்பற்றி அதிகம் அறிய முடியவில்லை. மட்பாண்டங் களிலும் சுவர்களிலும் இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டி ருத்தல் வேண்டும். இலக்கியங்களில் வரும் வருணனைகளில் இருந்துதான் ஓவியர் சிறப்புப்பற்றி அறிய முடிகின்றது. இசைத் துறையில் யாழ் போன்ற நரம்புக் கருவிகளும், துளைக் கரு விகளும் பயன்பட்டதை அறிய முடிகின்றது.
திருவிழாக்களில் இசைப் போட்டிகள் இடம் பெற்றதாகவும் இலியட், ஒடிசி போன்ற காப்பியங்கள் கவிதைகளில் பாடி நடிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம். இவ்வாறு மிக உயர்ந்த நாகரிகத் தன்மையினைக் கலைத்துறையிலும் கிரேக்கர் அடைந் திருந்தனர்.
13

Page 13
கிரேக்க நகர அரசுகளிடையே காணப்பட்டஅரசியல் ஒற்றும்ை யின்மை அயலில் இருந்த மஸிடோனிய மன்னன் இரண்டாம் பிலிப்பினால் நன்கு பயன்படுத்தப்பட்டு அவனது ஆதிக்கத்தின் கீழ் கிரேக்கத் தீபகற்பம் கி. மு. 338 இல் வரலாயிற்று. அவனது மகன் மகா அலெக்சாந்தர் தான் அமைத்துக் கொண்ட பரந்த பேரரசில் கிரேக்க நாகரிகத்தையும் பரப்பிச் சென்றான். மேற் கிந்தியா வரை மேற்கொண்ட வெற்றிகரமான படையெடுப்புக் களினால் அங்கெல்லாம் கிரேக்க நாகரிக அம்சங்கள் பரப்பப் பட்டன. அத்துடன் கடற்கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்து வர்த்தகம் நடாத்திய கிரேக்கர் மூலம் பல மைல்களுக்கு அப் பால் உள்ள பிரதேசங்களிலும் கிரேக்க நாகரிகம் பரப்பப்பட் டது. இவ் வகையில் மத்தியதரைக் கடல் பகுதிக்குள் அடங் கிக்கிடந்த கெலனிய நாகரிகத்தை அதற்கு வெளியே எடுத்துச் சென்று கெலனிஸ்ரிக் நாகரிகமாக மாற்றிய பெருமை மகா அலெக்சாந்தரையே சாரும்.
கிரேக்க நாகரிகத்தின் வியத்தகு சாதனையாக அறிவியல் துறையிலும், கலை, கட்டிடத் துறையிலும் அவர்கள் ஏற்படுத் திய கண்டுபிடிப்புக்கள் அமைகின்றன. கருத்துத் துறையில் இவர்கள் சித்தி பெற்றவர்களாக விளங்கினும் அதனைப் பயன் படுத்தி அரசியல் அமைப்பு முறை, அரசியல் நடவடிக்கைகள் மூலம் இம் மக்கள் பெரு வெற்றி கண்டிருத்தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் அதாவது நேரடியான வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர்சள் திறனற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களிடையே ஒற்றுமையின்மையால், அடிக்கடி தகராறுகளில் ஈடுபட்டு அதன் விளைவாக அன்னியப் படையெடுப்புக்களுக்கு இலக்காகிப் பிற்கால உலகிற்கு ஒரு பரந்த, நிலைத்து நிற்கச்சுடிய பேரரசினை அளிக்க முடியாத திறமை யற்றவர்களாகவே காணப்பட்டனர். ஒரு காலப் பகுதியில் மவி டோனியாவின் மகா அலெக்சாந்தரின் கைப்பற்றல்கள் காரண மாக ஒரு பரந்த இராச்சியத்தைக் கிரேக்க ஆதிக்கத்திற்கு உட் படுத்தியிருந்தபோதும் அலெக்சாந்தரின் மரணத்தின் பின்பாக அவ்விராச்சியம் பிரிவினைக்குட்பட்டுச் சீர்குலைந்தது. இவ் வகையில் அரசியற் செயற்றிறன் அற்றவர்களாகவே இக் கிரேக்க மக்கள் காணப்பட்டனர்.
ஆனால் பிற்கால உலகிற்கு இக் கிரேக்க மக்கள் ஆற்றிய மிகச் சிறப்பான பணி என்னவெனில் மனித சுதந்திரத்தின் அடிப்படையில் எவற்றையேனும் கேள்விக்கிடமாக்கிப் பகுத்தறி
14

வின் முதன்மைக்கு முக்கியத்துவம் அளித்துப் பிற்கால உலகு அடைந்திருக்கும் விஞ்ஞானத் துறை சார்ந்த வெற்றிகள் ஏற்பட வழிவகுத்தமையே. ஆகையால் அரசியல் பேரரசொன்றைப் பிற்கால உலகிற்கு அளிக்காவிடினும் இன்னும் கூடியளவு முக்கி யத்துவம் வாய்ந்த அறிவுப் பேரரசு ஒன்றை ஒரு தனிப்பட்ட இனத்தவருக்கு மாத்திரமின்றி முழு உலகிற்குமே அளித்துள்ள னர். ஆனால் ஒரே இனக் குடும்பத்திலிருந்து உதித்து இத்தாலி யத் தீபகற்பத்தின் ரைபர் நதியோரமாகத் தோன்றி வளர்ச்சி யுற்ற உரோம நாகரிகத்தவர் கிரேக்கர் பெற்றிருந்த அறிவுத் திறன், ஆக்கத்திறனைப் பெற்றிருக்சவில்லை. ஆனால் கிரேக்க நாகரிகத்தின் குறைபாடாகக் கருதப்பட்ட செயற்றிறனை உரோமர் பெருமளவு பெற்றிருந்தனர். இச் செயற்றி றன் அடிப்படையில் தான் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய வரலாற்றை நிர்ணயித்த ஒரு பரநத உரோமப் பேரரசினை ஒரு சிறு பிரதேசம் ஆக்கிவைக்கக் கூடியதாக இருந்தது.
15

Page 14
l உரோம நாகரிகம்
த்தியதரைக்கடலின் நடுவில் அமைந்திருக்கும் இத்தாலி யத் தீபகற்பத்தின் மத்தியில் ரைபர் நதியோரமாக உரோம் அமைந்துள்ளது. கிரேக்க நகர அரசுகளைப் போன்றே ஆரம்பத் தில் உரோமும் ஒரு நகர அரசாகவே வளரத் தொடங்கியது. கி. மு. 2000 ஆண்டளவில் இந்தோ - ஐரோப்பிய மக்கள் இத் தீபகற்பத்தின் மீது படையெடுத்து போ நதிச் சமவெளியில் தங் கள் குடியிருப்புக்களை ஏற்படுத்தியதாக அறிகிறோம். இவர் கள் விவசாயத்தையும், வெண்கல உபயோகத்தையும், குதிரை களின் பயன்பாட்டையும் அறிந்தவர்களாக விளங்கினர். அடுக்து கி. மு. 1000 - 800 காலப்பகுதியில் டன்யூப் நதிப் பிரதேசத்திலிருந்து மற்றோர் பிரிவினர் இரும்பின் உபயோ கத்தை அறிந்தவர்களாக இப் பகுதியில் வந்து குடியேறலாயி னர். லற்றியம் சமவெளியில் பலரைன் குன்றிலும் அதைச் சுற் றியுள்ள குன்றுகளிலிருந்த ஏழு குடியேற்றங்கள் கி. மு. 753 இல் ஒன்றாக இணைந்து உரோம நகர் நிறுவப்பட்டதாக அறிகி றோம். காலப்போக்கில் இந்த நகர அரசு கிழக்கே மத்திய கிழக்கு வரையும் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரம் வரையும் வடக்கே பால்டிக் கடலுக்கு அண்மை வரையும் தெற்கே ஆபிரிக்கா வரையுமான ஒரு பரந்த பேரரசை அமைத்துக் கொண்டது.
ஐரோப்பிய நாகரிகத்தின் வளர்ச்சியில் கால அடிப்படை யில் கிரேக்க, உரோம, கிறிஸ்தவமாகிய மூன்று பிரதான அம் சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கிரேக்க நாகரிகத்தவர் இந் நாகரிகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஒத்த வகையில் உரோம் நகரை மையமாகக் கொண்டு, வளர்ச்சியடைந்த உரோம நாகரிகமும் ஆற்றியது அத்துடன் இந்த உரோம நாகரிகமே நீண்ட காலத்திற்கு ஐரோப்பா முழுவதும் செல்வாக்குச் செலுத் தியதுடன், கிரேக்க மக்களால் ஆக்கப்பட்ட நாகரிகத்தினை நிரந்தரப்படுத்தியும், பரப்பியும் வந்தது அதே நேரத்தில் ஐரோப்பிய நாகரிகத்தின் இன்னோர் சிறப்பு அம்சமாக விளங் கிய கிறிஸ்தவ மதத்தினையும் உரோமர் தழுவி தமது பரந்த பேரரசு பூராவும் பரப்ப உதவினர். அவ்வகையில் ஐரோப்பிய நாகரிகத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த கிரேக்க, உரோம, கிறிஸ் தவ அம்சங்களை நிலைநாட்டி வைத்த பெருமையை இந்த உரோம நாகரிகத்தவர் வரலாற்றல் பெற்றுக் கொள்கின்றனர்.

லத்தீன் என அழைக்கப்பட்ட ஜனக்குழுவினர் தாம் வாழ்ந்த ரைபர் நதியோரமாக அமைத்துக்கொண்ட நகரத் தின் பெயரையே தங்கள் நாகரிகத்தின் பெயராகவும் பெற் றுக் கொண்டனர். இந் நகரம் சிறு நகரமாகக் காணப்பட்
டமையால் எல்லைகள் தோறிலும் கோட்டைகள் பாது காப்பிற்காக அமைக்கப்பட்டிருந்தன. தங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்பட்ட உணவுப் பொருட்களை நகருக்கு அப்டாலி
ருந்த பள்ளத்தாக்குகளில் விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக்கொண்டனர். ஒரு நகரச் சூழலில் லத்தீன் ஜனக் குழுக்கள் வாழ்ந்த போதும் பொருளாதார அடிப்ப டையில் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களாக அல்லாது பெரும் பான்மையான லததின் மக்கள் விவசாயிகளாகவே விளங்கி னர். இந்த லத்தீன் ஜனக் குழுவினரைவிட இத்தாலியக் குடாநாட்டின் மற்றைய பகுதிகளில் இன்னும் பல இத்தாலிய ஜனக் குழுக்கள் காணப்பட்டன. இவர்கள் அனைவருமே மிகுதி ஐரோப்பா முழுவதிலும் பரவிக் காணப்பட்ட இந்தோ ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்களுள் போ நதியின் பள்ளத்தாக்கில் கோல் மக்களும், அப்பினைன்ஸ் மலைத் தொடரின் இரு புறத்தில் வடக்கில் சபைன்களும் தெற்கில் சம்னைற்சுகளும் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வினத்தவர் அனைவருள்ளும் உரோமரும், லத்தீன் இனத் தவருமே கூடியளவு முன்னேற்றமடைந்திருத்தனர்.
இந்த ஜனக் குழுக்களிடையே விவசாயத்திற்குத் தேவைப் பட்ட வளம் பொருந்திய நிலங்களைப் பெற்றுக் கொள்வதற் காக அடிக்கடி போர்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக இம் மக்கள் வாழ்க்கையில் விவசாயிகளாக விளங்கியபோதிலும் தற் பாதுகாப்பிற்காக போர் வீரர்களாகவும் பயிற்சி பெற வேண்டி யவர்களாக் காணப்பட்டனர். இதனால் மாபெரும் Gupg சொன்றினை ஆக்கி வைத்த லத்தீன் ஜனக் குழுவினர் சிறந்த விவசாயிகளாக மாத்திரமன்றிச் சிறந்த போர் வீரர்களாகவும் விளங்கினர். உரோம நகரம் பரந்த பேரரசாக மாறியமைக்குக் காரணமாக இம் மக்களிடையே இயற்கையாகக் காணப்பட்ட ஆதிக்க விஸ்தரிப்புத் தன்மையும் அமைந்தது. அடிக்கடி அயற் பிரதேசத்தில் வாழ்ந்த ஜனக்குழுக்கள் மேற்கொண்ட படை யெடுப்புக்களை எதிர்க்க முற்பட்டு, அதில் கண்ட வெற்றிகள் காரணமாகக் கைப்பற்றப்பட்ட புதிய பிரதேசங்கள் காலத்திற் குக் காலம் அதிகரித்து பிரதேச விஸ்தரிப்புக் கூடியது. இந்தப் படிப்படியான விஸ்தரிப்பு பேராசையை ஏற்படுத்தி, உரோம
17

Page 15
வரலாற்றில் குடியரசு முறையை மேற்கொண்ட காலத்தில் இது வரை காலமும் கண்டிராத ஒரு பரந்த பேரரசை அவர்கள். அமைத்துக் கொள்ள வழிவகுத்தது. இதற்கு முன்பான காலத் தில் அசீரியர், பாரசீகர், மஸிடோனியர் ஆகிய மக்கள் பரந்த பேரரசுகளை அமைக்க முற்பட்டு ஒரளவு வெற்றியும் கண்டிருந்த போதும் அப் பேரரசுகள் நீடித்து நிலவவில்லை. ஆனால் இந்த லத்தீன் மக்கள் கி. மு. 510 - 27 காலம்வரை அத்திலாந்திக் சமுத்திரம் தொட்டு யூப்பிரட்டீஸ் நதி ஒரம்வரை வடக்கில் றைன் டன்யூப் நதி தொட்டு தெற்கில் சகாராப் பாலைவனம் வரையுள்ள பரந்த ஒரு பேரரசைத் தம் போர்வீரத்தின் அடிப் படையில் அமைத்துக் கொண்டனர். கி. மு. ஐந்தாம் நூற் றாண்டில் ஆரம்பிதத இந்தப் பரந்த பேரரசு கி. பி. நான் காம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிலேச்சப் படையெடுப்பின் காரணமாக வீழ்ச்சி கண்ட போதும் எட்டு, ஒன்பது நூற்றாண்டு காலமாக நீடித்து நிலவியது. இந்தப் பரந்த உரோமப் பேரரசு அக் காலப் பகுதியில் முழு ஐரோப்பாவுக்குமே மத அடிப்படை யிலும், அரசியலடிப்படையிலும், நாகரிக அடிப்படையிலும் ஒரு ஒற்றுமையை அளித்தது. அதன் பின்பாகப் பல்வேறுபட்ட மிலேச்ச ஜனக் குழுக்களால் வெவ்வேறுபட்ட மானிய அரசுகள் அமைக்கப்பட்டு, அரசியல் ஒற்றுமை நீக்கப்பட்ட போதிலும் மத, நாகரிகத்தின் அடிப்படையில் இன்னும் பல நூற்றாண்டு காலமாக ஒரு சமூகத்தினர் என்ற ஒற்றுமையை ஏற்படுத்தியி ருந்தது.
சிறிய நகரமாக ஆரம்பித்த லத்தீன் ஜனக்குழு மக்கள் ஒரு பரந்த பேரரசைத் தாபித்து, மிலேச்ச ஜனக்குழுவினரின் படையெடுப்புக்களினால் சீர்குலைவு அடையும் வரையுள்ள உரோம வரலாற்றை மூன்று கட்டங்களில் காணலாம். பழைய மரபுகளின்படி கி. மு. 753இல் ஸ்தாபிக்கப்பட்டு கி. மு. 510இல் மன்னராட்சிக் காலம் என்றழைக்கப்படும் முதற்காலப் பகுதி முடிவடைகின்றது. கி. மு. 510இல் ஆரம்பித்து கி. மு. 27இல் குடியரசுக் காலம் என்று வர்ணிக்கப்படும இரண்டாம் கட்டம் முடிவடைகின்றது. அடுத்த கட்டமாகிய பேரரசுக் காலம் கி. மு. 27இல் ஆரம்பித்து கி. பி. 193 வரை உச்ச நிலை அடைந்து கி.பி. நான்காம் நூற்றாண்டின் பின்னராகத் தளர்வுற்றது. இரண்டாம் காலப்பகுதியாகிய கடியரசுக் காலப் பகுதியில் தான் உரோமர் தமது செயற்றிறனை, நிர்வாக முறையைச் சிறப்புறச் செயற்படுத்திய காலமாகும். இக் காலத்தில் முக்கியத் துவம் பெற்ற சம்பவமாக ஐரோபபிய வரலாற்றில் பிரதேச விஸ்தரிப்புக் காணப்பட்டது.
i8

மிலேச்சப் படையெடுப்புக் காரணமாக உரோமப் பேரரசு தனது பழைய எல்லைகளை இழந்த போதும் முற்றாகவே அழிந்து விடவில்லை. இப்படையெடுப்புக்களினால் சீர்குலைவும்" சமாதானமின்மையும் ஒரு நூற்றாண்டு காலமாக ஏற்பட்டது. உரோமப் பேரரசு மிலேச்சப் படையெடுப்புக்குப் பலியாகிய பின்வாக கொன்ஸ்தாந்திநோபிள் எனுமிடத்தைப் புதிய தலை நகரமாகக் கொண்ட கிழக்கு உரோமப்பேரரசு கொன்ஸ் ரான்ரைன் என்ற பேரரசினால் கி. பி. 330 இல் ஸ்தாபிக்கப்பட் டது. இதுவே கிழக்கு உரோமப் பேரரசு அல்லது பைசாந்தி யம் என்று அழைக்கப்பட்டது. இது உரோமிலும் பார்க்க மிகக் கூடியளவிற்கு ஆசியப் பேரரசிற்கு அருகாமையில் இருந் தமையால் ஆசியாவுடனும், மத்திய தரைப் பிரதேசத்துடனும் கூடியளவு வர்த்தகத் தொடர்புகளை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. இதனால் கிழக்கு உரோமப் பேரரசு சிறந்த பொருளாதார வளம் பொருந்திய பேரரசாக விளங்கிய துடன், கிரேக்க நாகரிக அம்சங்களை மிலேச்சப் படையெடுப் புக்களில் இருந்து அழியாமல் காப்பாற்றியும் வைத்தது.
இலத்தீன் குழு மக்கள் அடிப்படையில் கிரேக்க மக்களைப் போலவே இந்தோ - ஐரோப்பிய குடும்பத்தைச் சேந்தவர்களாக இருந்தபோதும், வாழ்க்கையில் அவர்கள் பெற்ற ஆற்றல் அடிப் படையில் வேறுபட்ட தன்மை கொண்டவர்களாக காணப்படு கின்றனர். கிரேக்க மக்கள் அறிவுத்திறன், ஆக்கத்திறமை பெற் றிருந்தபோதும் அரசியல் துறையில் சித்தியடைந்தவர்களாகக் காணப்படவில்லை. ஆனால் லத்தீன் மக்களோ கிரேக்கரைப் போல அறிவுத் துறையில் பெரும் கண்டுபிடிப்புக்களையோ, ஆற்றலையோ பெற்றிருக்காவிடினும் சிறந்த அரசியல் நிர்வாகி களாகவும், சிறந்த இராணுவத் தளபதிகள், போர் வீரர்களா கவும் திறமை பெற்றிருந்தனர். சுருங்கக்கூறின் கிரேக்க நகர அரசுகள் அரசியல் துறையில் ஒற்றுமையின்றி, அடிக்கடி சச்சர வுகளில் ஈடுபட்டிருந்தமையினால் அரசியலதிகாரத்தை ஒரு பரந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்திற்காவது நிலைநாட்ட முடியாதவைகளாகக் காணப்பட்டன. ஆனால் அறிவுத்துறை யிலும், நாகரிகத்துறையிலும் இக் காலத்தவரால் தன்னும் வியந்து போற்றப்படுமளவிற்குச் சாதனைகளைப் புரிந்துள்ள னர். ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த உரோமர் மற்றைய நாகரிக மக்களது அறிவினை மேற்கொண்டனரே யொழிய அறி வுத் துறை வளர்ச்சிக்கான புதிய ஆக்க வளர்ச்சிகளை ஏற்படுத் தவில்லை. உரோமர்களிடையேயும் சிறந்த கலைஞர்களும்,
19

Page 16
தத்துவஞானிகளும், கவிஞர்களும் தோன்றினர் எனினும் இவர்க ளது சாதனைகள் முன்னர் கிரேக்கர் அத் துறைகளில் ஆக்கி யவற்றின் தழுவல்களாகவே அமைந்தன. இவை பெறுமதி மிக்க வையாக விளங்கினாலும் இவற்றிற்கான மூல சிருஷ்டிகள் இவர்களுடையவை அல்ல என்பதனை மனதிற் கொள்ள வேண் டும். ஆனால் அவர்கள் பெற்றிருந்த செயற்றிறன் அவர்களது வெற்றிகரமான படையெடுப்புக்களிலும், அவர்கள் அமைத்த அரசியல் முறையிலும், சட்டத்துறையிலும், பொது வேலைத் துறைகளிலும் காணப்படுகின்றது.
ஐரோப்பிய அறிவுத்துறைக்குக் கிரேக்கர் அடிக்கல்லிட்டது போன்று உரோமரும் ஐரோப்பிய அரசியல், சமூக அமைப்புக் குத் திடமான அத்திவாரம் இட்டனர். அறிவுத் துறையில் அவர்கள் புதிய கண்டுபிடிப்புக்களைக் கிரேக்கர்போல படைக் காவிடினும் ஏற்கெனவே பழைய நாகரிகத்தினர் படைத்திருந்த ஆக்கத்திறனை மக்கள் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் பயன் படுத்திக் கொள்வதில் திறமை வாய்ந்தவர்களாக விளங்கினர். உரோமர் அரசியல் அமைப்பு முறையிலும் சட்டத்துறையிலும், கட்டிடக்கலை, பொறியியல் துறை ஆகிய துறைகளிலெல்லாம் மகத்தான சாதனைகள் புரிந்துள்ளனர். இவர்கள் தங்கள் வர லாற்றின் ஆரம்பத்தில் பெற்றிருந்த மன்னர் ஆட்சி முறையின் பின்பாக பெருமளவிற்குத் தற்கால ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒப்பிடக்கூடிய குடியரசு முறையை அமைத்துக் கொண்டனர். 18 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரக் குடிமக்கள் அனைவரும் கொன்சல் என்ற இரு ஆட்சியதிகாரிகளைத் தெரிவு செய்வதன் மூலம் மக்களது முழு இறைமையையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த இருவரும் சமமான அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். இதன் மூலமாகச் சர்வாதிகார ஆட்சிமுறை யைத் தடைசெய்ய முடிந்தது அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கொன்சல்களுக்கும் ஆலோசனை, புத்திமதி வழங்கும் நோக்குடன் செனற் என்றழைக்கப்பட்ட ஒரு கழகம் இக்குடி யரசு முறையில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அவ்வாறே குடியரசில் காலத்திற்கு காலம் நிர்வாகப் பிரச்சினைகள் வளர்ச்சி பெற ஆரம்பித்ததற்குப் பின்பாக அவற்றையும் மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் வழக்கம் ஏற்படலாயிற்று. சட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு வகை அலுவலரிடமும், குடி மக்கள் குடித்தொகைக் கணிப் பீடு, பொதுக் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்ய இன் னோர் வகை அலுவலர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
20

அவ்வாறே நிதி சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கவும், உள் நாட்டில் பாதுகாப்பு அமைதியை ஏற்படுத்தவும் அலுவலர் காணப்பட்டனர். இவ்வாறு வேறுபட்ட கடமைகளைக்கொண்டு நடத்த வேறுபட்ட அதிகாரிகளைக் கொண்ட அலுவலர் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதே இக் குடியரசு முறை யில் முக்கியமானதாகும். இந்த உரோமர்களே முதன்முதலாக ஜனநாயகத் தன்மை கொண்ட குடியரசு முறையை அமைத்த வர்களாவர்,
சமூக அடிப்படையிலே உரோமர் இரு பெரும் பிரிவுகளாக பிரிவுற்றிருந்தனர். பற்றீசியன்ஸ் என்பவர்கள் பெரிய நில வுடைமையாளர்சளாசவும், ஆட்சியில் கூடியளவு பங்கு வகித்த வர்களாகவும் காணப்பட்டனர். ஏறத்தாழ 90 சதவீதமான உரோமர் பிளிபியன்ஸ் என்ற வர்க்கத்தில் அடங்கியிருந்தனர். இவர்கள் சிறு வர்த்தகர், சிறு விவசாயிகள், சிறு கைத்தொழில் புரிபவர்களாகவும், சிறிய நிலத் துண்டுகளைக் கொண்டவர்களா கவும் காணப்பட்டனர். இவர்களுள் பற்றீசியன்ஸ் கூடிய செல் வாக்கைப் பெற்றவர்களாகக் காணப்பட்டாலும் அதிக செல் வாக்கற்றிருந்த பிளிபியன்சுகளுக்குக் குடியரசுக் காலத்தில் நாட் டின் அரசியலில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு செஞ்சூரியேற் அசெம்பிளி எனும் கழகத்தைத் தெரிவு செய்யும் உரிமை அளிக்கப்பட்டதுடன் இம் மக்களை ஒரு சமூகம் என்ற முறையில் பாதிக்கக்கூடிய சட்டங்களை நிறை வேற்றப்படாது தடைசெய்யும் அதிகாரத்தையும் இக் கழகப் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு உரோமக் குடி யரசில் சமூகப் பிணக்குகள் ஏற்பட்டு அதனால் குடியரசு பாதிக் கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படாது தடை செய்யப்பட்டன. இச் செயலானது அவர்களின் பகுத்தறிவையும் அரசியல் துறையில் அவர்கள் ஈட்டிய வெற்றியையும் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த அரசியல் முறை காலப் போக்கில் உரோமர்களால், கைவிடப்பட்டது. அதற்குக் காரணம் இவ்வரசியல் முறையில் அக்கால மக்கள் கொண்ட அதிருப்தி அல்ல, உரோமர் அயற் பிர தேசங்களுடன் நடத்திய போர்களின் விளைவாக ஒரு பரந்த பிரதேசக் கைப்பற்றல் நடைபெற்று, ஒரு புதிய மத்தியமயமான பேரரசுமுறையை அவர்கள் மேற்கொள்ளவேண்டியதன் அவசியத் தைத் தவிர்க்க முடியாததாக்கியது. மிகப் பரந்த பிரதேசத் தின் மீது உரோம நாகரிகத்தினை நிலைநாட்டிச் சமாதானம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குக்கூடியளவு மத்தியமயமான ஆட்சி
21

Page 17
யதிகாரங்களைப் பெற்ற ஒரு ஆட்சி முறையே அத்தியாவசிய மாகத் தேவைப்பட்டது. இதன் காரணமாகக் குடியரசு முறை கைவிடப்பட்டு, பெருமளவிற்குக் கட்டுப்பாடற்ற, சர்வதிகார அதிகாரங்களைக் கொண்ட பேரரசு முறை ஒன்று மேற்கொள் ளப்பட்டது. பேரரசர் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற் றிருந்த போதிலும் அவர்கள் பிற்கால உலகிற்கும், ஏகாதிபத் திய வல்லரசுகளுக்கும் ஒரு போதனையாக விளங்கக்கூடிய வகை யில் அரசியல் இராஜ தந்திரத்தையும், பகுத்தறிவையும் கையாண் டனர். அதாவது, கைப்பற்றல் காரணமாகத் தங்கள் ஆதிக்கத் திற்கு உட்பட்ட பல்வேறுபட்ட ஜனக்குழுக்களை எல்லாம் காலப் போக்கில் உரோம ஆட்சியினை விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலே மிகவும் நிதானமாக இந்த ஏகாதிபத்திய அதிகாரம் மேற்கொள்ளப்பட்டது.
உரோமப் பேரரசுக் காலத்தில் மானிட வர்க்கத்தால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிதானமான சட்டமுறைகளே மேற் கொள்ளப்பட்டன. அதாவது இத்தாலியக் குடாநாட்டில் வாழ்ந்த லத்தீன் மக்களது சட்ட முறைகளைக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் இயங்கு சட்டமாக அமுல் செய்யாது, இப் பல்வேறுபட்ட ஜனக் குழுக்களுடைய வழக்குகள், பாவனைக ளுக்கு ஏற்ப வேறுவேறு சட்ட முறைகள் கையாளப்பட்டன. அத்துடன் கைப்பற்றப்பட்ட பிரதேச மக்கள் அடிமைகளாகவோ அல்லது இரண்டாம் தரக் குடிமக்களாகவோ கருதப்படாது பரந்த உரோமப் பேரரசின் வெவ்வேறு பாகங்களிலும் வாழ்ந்த திறமைமிக்க மக்கள் அவ்வப் பகுதிகளின் நிர்வாகத்தில் சேர்த் துக்கொள்ளப்பட்டனர். அத்துடன் நிதானமான நிர்வாக முறை மூலம் உரோம ஆதிக்கம் அம் மக்களிடையே எதிர்ப்பின்றி ஏற் றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது. இந்த நிதானமான இராஜதந்திர ஏகாதிபத்தியக் கொள்கை இப் பரந்த பேரரசில் காணப்பட்ட வெவ்வேறு ஜனக் குழுக்களி டையே தங்களையும் உரோமக் குடிமக்களாக வெளிப்படை யாக எடுத்துக் கூறுவதில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இக்காலம் வரை பேரரசுகளை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கைகள் ஒரு சிறு காலத்திலேயே தோல்வி கண்டவிடத்து இப் பரந்த உரோமப் பேரரசோ நீடித்து நான்கு நூற்றாண்டு களுக்கு மேலாக நிலவியது. அத்துடன் இப்பேரரசின் இறுதிச் சீர்குலைவு இப் பேரரசின் மக்கள் எதிர்ப்பினாலன்றி எல்லை களுக்கப்பால் இருந்து வந்த மிலேசசப் படையெடுப்புக்களின் காரணமாகவே ஏற்பட்டது. V
22

பிற்கால ஐரோப்பிய நாகரிகத்திற்கு இந்த உரோம மக்கள் இன்னோர் வகையிலும் பெரும் சேவையாற்றினர். பழைய கிரேக்க நாகரிக அம்சங்களையும், புதிதாக எழுச்சி பெற்ற கிறிஸ்தவ மதத்தையும் இந்தப் பரந்த உரோமப் பேரரசு பூராவும் பரப்பி வைத்தமையே அதுவாகும். அத்துடன் இப் பரந்த பிரதேசம் முழுவதும் லத்தீன் மொழிச் செல்வாக்கை ஏற்படுத்தி, பிற்கால ஐரோப்பிய மொழிகளின் ஊற்றாக விளங் கவும் வைத்தனர். ஐரோப்பாவில் காணப்படும் பல்வேறு தேசிய மொழிகள் எல்லாம் லத்தீன் மொழியிலிருந்தே தங்களது மொழிச் சொற்களில் பெரும்பகுதியைப் பெற்றுக் கொண்டன. அதேசமயம் இப்பரந்த பேரரசில் கிரேக்கரின் அறிவுத்துறை ஆக்கங்கள் உரோமரால் பரப்பி வைக்கப்பட்டன. இதனால் ஐரோப்பிய தேசிய மொழிகளில், முக்கியமாக விஞ்ஞானத்துறை களில் கிரேக்க சொற்களே காணப்படுகின்றன. அவர்கள் பெற் றிருந்த செயற்திறமையே இப் பரந்த பேரரசில் மத்தியமயமான நிர்வாக முறையினை அக்காலச் சூழலில் ஏற்படுத்தப் பெரிதும் உதவியது எனலாம்.
பழைய விஞ்ஞான அறிவினைப் பயன்படுத்தி ஐரோப்பா முழுவதிலுமே சிறந்த, தற்கால பொறியியல் நிபுணர்களே வியக்கும் வகையில் பொதுப்பாதைகள், பாலங்கள், அணைகள் துறைமுகங்கள், களியாட்டரங்குகள், நீர்த்தேக்கங்கள் என் பனவற்றை அமைத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் கிரேக்கரது கட்டிடக்கலை மரபைப் பின்பற்றினாலும் காலப்போக்கில் அதில் புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டனர். அப்பியன் பாதை, பிளமினியன் பாதை என்பன அவர்கள் அமைத்த பெருந்தெருக்களுக்குத் தக்க சான்றுகள், டெவில் என்ற அவர் களது பாலம், உரோமரது பாலம் அமைக்கும் திறமைக்குச் சிறந்த உதாரணமாகும். பேரரசுபூராவும் அமைக்கப்பட்டிருந்த பாதைகள். இராணுவத் தேவைகளுக்காகவும், நிர்வாகத் தேவை களுக்காகவும் அமைக்கப்பட்டன. அவற்றின் மூலம் பேரரசு பூராவும் இறுக்கமான வகையிலே பிணைக்கப்பட்டிருந்தது. உரோமரது கட்டிடக்கலை பொறுத்து "பசிலிக்கா" என்ற பொதுக்கட்டிடமும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு தேவைகளுக் காக பயன்படும்வகையில் அமைக்கப்பட்டிருத்தது. பேரரசு முழுவதிலும் சிறப்பாக நகர்களில் தம் பொறியியல் திறமையை நன்கு வெளிப்படுத்தும் வகையில் பாரிய கட்டிடங்கள், நாடக அரங்குகள், விளையாட்டரங்குகள், கோயில்கள், நீராடும் மண்ட பங்கள், வெற்றி வளைவுகள் போன்றவை அமைக்கப்பட்டி
23

Page 18
ருந்தன. இவை அம்மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும், கலைத்திறமையையும், செல்வச் செழிப்பையும் எடுத்துக் காட்டு வனவாக அமைந்தன, உலகின் கட்டிடக்கலைத்துறை வரலாற் றிலே உரோமர் பங்கு தனிச்சிறப்பானதாகும். ஒவியத்துறை யிலும், சிறபத்துறையிலும் கிரேக்கரது கலைவடிவங்களைக் கொண்டு இன்னும் முன்னேற்றமான வகையிலே சாதனைகளை ஈட்டினர்.
இப் பரந்த பேரரசினை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற தன்மூலமாக உலகின் பல பாகங்களிலும் செல்வாக்குப் பெற் றிருக்கும் உரோம சட்ட முறைமையை இவர்களால் ஆக்க முடிந்தது. தற்காலத்தில் தன்னும் எந்த நாட்டுடைய சட்டங் களை ஆராய்ந்தாலும் அவற்றில் உரோம நீதி நிபுணர்களால் ஆக்கப்பட்ட சட்டங்களின் பிரதிபலிப்பைக் காணலாம்.உரோமர் பிற்கால உலகிற்கு அளித்த சட்ட முறைமை உரோம நகர்களில் படிப்படியாக வளர்ச்சி பெற்றவையாகும. உரோம் சிறு நகர் அரசாக இருந்த காலத்தில் மத குருமாரே நீதிபதிகளாக இருந் தனர். அவர்களது தீர்ப்புக்கள் எழுத்தில் இடப்படாது சட்டங் களாக விளங்கின. கி.மு. 450 இல் தான் முதன்முதலாக இத் தீர்ப்புக்களின் அடிப்படையில் வெளிவந்த சட்டங்கள் தொகுக் கப்பட்டு எழுத்தில் இடப்பட்டன. கைப்பற்றல்கள் காரணமாகப் பேரரசுக்குட்பட்ட பல்வேறு ஜனக் குழுக்களது வழமைகள், முறைமைகளுக்கு ஏற்பத் தொகுக்கப்பட்ட புதிய சட்டமுறை களும் உரோம சட்டங்களாக வளர்ச்சி அடைந்தன. பரந்த பேரரசு அமைக்கப்பட்டதன் பின்பாகப் பொருளாதாரத் துறையில் மாற்றம் ஏற்பட்டு, வெளிநாட்டு வர்த்தகம் முக்கியத் துவம் பெற்றதனைத் தொடர்ந்து சட்டத்துறை புதிய தேவை களை வேண்டிநின்றது. இப் புதிய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்காக சட்ட நிரூபண சபை யால் பிரகடனம் செய்யப்பட்ட புதிய சட்டங்கள், நீதிபகளில் தீர்ப்புக்கள் மூலமாக சட்ட முறைமை உரோமப் பேரரசில் வளர்ச்சி பெறலாயிற்று. முதன்முதலாகப் பேரரசு காலத்தில் காலத்திற்குக் காலம் வளர்ச்சி பெற்றுச் சென்ற சட்ட முறை மைகளைத் தொகுக்க முற்பட்ட மன்னன் இரண்டாம் தியோடோ ஸியஸ் ஆவார். அத்துடன் கல்லூரிகளிலும், நீதிமன்றங்களிலும் காலத்திற்குக் காலம் இச் சட்டங்கள் விவாதங்களின் மூலம் முன்னேற்றமான முறையிற் திருத்தி அமைக்கப்பட்டன. தற்காலச் சட்டக் கல்லூரிகளில் கூட இந்த உரோம சட்டத் தொகுப் புக்கள் பாடபோதனைகளில் இடம்பெற்றுள்ளன. உரோமப்
24

பேரரசு சீர்குலையத் தொடங்கியதன் பின்பாக கீழைப் பேரரசின் ஜஸ்ரினியின் மீண்டும் ஒரு முறையாக நீதிநிபுணர் களின் உதவி கொண்டு கி. பி. 529-33 இடையில் ஜஸ்ரினியன் சட்டத்தொகுப்பு ஒன்றினை ஆக்கிக் கொண்டதன் மூலம் அவற் றைப் பிற்கால உலகிற்கு அளித்தான்.
கிரேக்கரைப் போன்று உரோமர் எழுத்துத் துறையில் அதிக சித்திகளைப் பெற்றிருக்காவிடினும் குறிப்பிடத்தக்களவு தொண்டினை ஆற்றியுள்ளனர். லூகிறிரியஸ் ( கி , மு 99 - 55 ) ஒவிட், வேர்ஜில் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். ஹோரஸ் ( கி.மு 658 ) என்ற இலத்தீன் கவிஞர் நீண்ட கவிதைகளுக் காகப் புகழ் பெறுகின்றார். ஒவிட் (கி மு. 93 - கி , பி. 17) என்பவர் காதலைப் பொருளாகக் கொண்டு இலக்கியம் படைத் துள்ளார். வேர்ஜில் என்ற கவிஞர் அனேகமாக எல்லா உரோ மக் கவிஞர்களிலும் பார்க்கப் புகழ்பெற்றவராக விளங்குகின் றார். அவரது ஈனைட் என்ற காவியம் தேசிய காவியமாகப் பெருமைமிக்க யூலியன் குடும்பச் சக்கரவர்த்திகளின் வாழ்க் கையைப் பொருளாகக் கொண்டது. புரூட்டஸின் நாடகங்களி லிருந்து கி.மு . மூன்றாம் நூற்றாண்டில் உரோமர்களது பழக்க வழக்கங்கள் நடைமுறைகள் பற்றி அறியமுடிகின்றது. இவரது செல்வாக்கிற்கு ஐயத்திற்கிடமின்றி ஆங்கில மகாகவி சேக்ஸ்பிய ரும், 17 ஆம் நூற்றாண்டின் புகழ்வாய்ந்த நாடகாசிரியர் மொலியரும் உட்பட்டுள்ளனர். சிசறோ ( கி. மு. 106 - 43) என்பவர் லத்தீன் மொழியில் வசனநடை பொறுத்துச் சிறப்புற் றுக் காணப்படுகின்றார். இவர் வேறு எந்த எழுத்தாளர்களிலும் பார்க்க கூடியளவிற்குக் கிரேக்க சிந்தனைகளை உரோமிற்குக் கொண்டு வந்தவர். இவரது நூல்கள் உரையாடல், இலக்கிய விமர்சனம், அரசியல் கோட்பாடுகள், தத்துவஞானம் போன்ற பல்துறைகளைப் பற்றிப் பேசுகின்றது.
உரோம வரலாற்று ஆசிரியர்களுள் ரசிற்றஸ் ( கி. பி. 55 - 133) சிறப்பிடம் பெறுகின்றார். இவரது "ஆண்டுத் தொகுப் புக்கள்" உரோம வரலாற்றில் ஒகஸ்டஸின் இறப்பிலிருந்து நீரோ வின் இறப்பு வரையிலான காலப்பகுதிபற்றிப் பேசுகின்றன. இவரைப் பொறுத்தளவில் வரலாறு என்பது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான ஒரு படிப்பினையாகவே கருதப்பட்டது, உரோம நாகரிகத்தைப்பற்றி எழுதிய மிகச் சிறந்த கிரேக்க ஆசிரியர் புளுட்டாக் ( கி. பி. 46 - 120) ஆவார். அவரது வாழ்க்கை என்ற வரலாற்று நூல் 46 பிரசித்தி பெற்ற கிரேக்கர்,
25

Page 19
உரோமர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது உரோமப் பேரரசினைப்பற்றிப் படிக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கு அரிய தகவல்களை அளிக்கும் சுரங்கமாகவும், பெரியதோர் இலக்கியப் படைப்பாகவும் விளங்குகின்றது. இன்னோர் பிரசிததிபெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் பொலிபியஸ் ( 204 - 122 ) உரோமப் பேரரசின் படர்ச்சியைப் பற்றி எழுதியுள்ளார். இவர் எழுதிய 40 புத்தகங்கள் இன்று முழுமையாக ஐந்து மட்டுமேகிடைத்துள்ளன.
விஞ்ஞான தத்துவஞானத் துறைகளில் கிரேக்கருடன் ஒப்பிடக்கூடியனவாக உரோமர் சித்தி பெற்றிருக்கவில்லை. உரோமர் அடிப்படையானதும், மூலமானதுமான தத்துவ ஞானக் கண்டுபிடிப்புக்களைச் செய்யவில்லை. என்றாலும் கிரேக்க சிந்தனைகளை ஏற்றுத் தங்களுடைய சொந்தத் தேவைகளுக்கேற்ப வேறுவடிவம் கொடுத்தனர். செனிகா (கி.மு. 4 - கி.பி. 65) என்பவர் ஒரு முக்கியமான உரோமத் தத்துவஞானி ஆவார் அதே சமயம் இலக்கியத்தில் துன்பியல் துறையில் சிறப்பைப் பெறுகின்றார். இவர் ஐரோப்பாவில் ஒழுக்கக் கோட்பாட்டு அபிவிருத்தியில் முக்கியமானதோர் இடத்தைப் பெறுகின்றார்.
உரோமர்களிடையே தொலமியோடு ஒப்பிடக்கூடிய வான வியலாளரோ, ஆர்க்கிமிடிசைப் போன்ற கண்டுபிடிப்பாளரோ, கிப்போகிரடிசைப் போன்ற மருத்துவ அறிஞர்களோ, டீமோ கிறிற்ரஸை ஒத்த விஞ்ஞானரீதியான சிந்தனையாளர்களோ காணப்படவில்லை. தத்துவஞான, கலைத்துறைகளில் கெலனிஸ் ரிக் விஞ்ஞானத்திடமிருந்து கடன்பெற்று அவற்றைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுடன் ஒப்பிட்டு அதன் மூலம் சாதனைபடைத்தனர். அதாவது உரோமர் வைத்தியத்துறையிலும், பொதுச் சுகாதாரத்துறையிலும், பொறி யியல் துறையிலும், படம் வரை துறையிலும் கிரேக்கரிடமிருந்து பெற்ற அறிவைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புக்களைசி செய் தனர்.
உரோமரே முதலில் தற்காலப் பண்புகளைக் கொண்ட வைத்தியசாலைகளையும் வைத்தியக் கல்லூரிகளைத் தாபித்த வர்களாக விளங்குகின்றனர். அத்துடன் முதன்முறையாகப் பேரரசின் பலபாகங்களிலும், வைத்திய வசதிகளைப் பரவலாக ஏற்படுத்தியிருந்தனர். ஆரம்ப கால உரோமப் பேரரசர் பொது
26

வைத்திய சேவையை ஆரம்பித்து வைத்ததுடன் அதில் பெரு மளவிலான வைத்தியர் கடமையுமாற்றினர். வறியோருக்கு இல வச வைத்திய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அக்கால உரோ மிற்கு நாளாந்தம் 300 லட்சம் கலன் சுத்தமான நீர் தேவைப் பட்டது. நல்ல காற்றோட்ட வசதியுள்ள வீடுகள், ஆச்சரியப் படத்தக்க வடிகாலமைப்பு முறை இங்கு காணப்பட்டன. இக் காலத்தின் பிரசித்தி பெற்ற மருத்துவ அறிஞனாகச் சின்னாசி யாவில் பிறந்த கலென் ( கி. பி. 130 - 200 ) விளங்குகின்றான். இன்னோர் பிரசித்தி பெற்ற உரோம அறிஞர் பிளினி ஆவார். கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் எழுதிய கலைக் களஞ்சியம் உண்மையும், பொய்யும் ஆச்சரியமான முறையில் கலந்ததொன்றாகும் 37 பாகங்களைக் கொண்ட அவரது கலைக் களஞ்சியம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு தொகுப்பாகும். விஞ்ஞானம், கலை, புவியியல் போன்ற பல்துறைகள் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார்.
உரோமர் பிற்கால உலகிற்கு அளித்த நன்கொடைகளுள் ஒன்று லத்தீன் மொழியாகும், பேரரசுக் காலத்தில் இது ஒரு சர்வதேச மொழியாக விளங்கியது, திருச்சபையிலும், சட்டத் துறையிலும், மருத்துவம், இலக்கியம், கல்வி போன்ற பல துறை களிலும் இம் மொழி பிரதான இடத்தைப் பெற்றது. 1000 வரு டங்களுக்கு மேலாக இது ஒரு இலக்கிய மொழியாக விளங்கிய துடன் 18ஆம் நூற்றாண்டுவரை அறிஞர்களால் கையாளப்பட்ட மொழியாகவும் காணப்பட்டது. ஐரோப்பிய மொழிகளான இத் தாலிய, ஸ்பானிய, போர்த்துக்கேய, பிரான்சிய, ரூமேனிய மொழிகளில் லத்தீன் மொழிச் சொற்கள் பெருமளவு காணப்படு கின்றன. ஆங்கில மொழியில் அரைவாசிக்கும் மேற்பட்ட சொற்கள் லத்தீன் மொழியிலிருந்தே தோற்றம் பெற்றவையாகும். syu Sugiy Fubuisld Tar Garitibasarror Fiscal, Senate, Consul Plebicite, Citizen. Municipal, Census 6T68itu637 Guā58air Guontigo) u? லிருந்து பெறப்பட்டவைகளாகும்.
உரோம நாகரிகத்தவர் கிரேக்க நாகரிகத்தவர் போன்று அறிவியல் துறையில் மகத்தான சாதனைகளைப் புரியாதபோதி லும் அச் சாதனைகளைப் பயன்படுத்தி நடைமுறையில் பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டனர். பரந்த பேரரசு ஒன்றினை அமைத்து அரசியல், நிர்வாகத் துறைகளிலும், பொறியியல், கட்டிடத் துறைகளிலும் மக்கள் நலன் பேணும் பொதுவேலைத் துறைகளிலும், சட்டத்துறையிலும் அளப்பரிய தொண்டினை
27

Page 20
ஆற்றிப் பிற்கால உலகத்தவர் அவற்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் வளர்த்து வைத்தனர். ஐரோப்பிய நாகரிகத்தின் மூன்று முக்கிய பண்புகளான கிரேக்க நாகரிக அம்சங்களையும், உரோம அம்சங்களையும், கிறிஸ்தவ அம்சங்களையும் ஒன்றி ணைத்து நிரந்தரத்துவப்படுத்திப் பிற்கால உலகிற்கு அளித்த பெருமை உரோம நாகரிகத்தையே சார்ந்ததாகும். அவ்வகையில் பரந்த பேரரசில் சமாதானத்தையும், செழிப்பையும் ஏற்படுத்திப் பல நூற்றாண்டுகளாக அவை நிலவி வருவதற்கான ஏற்பாடு களையும் அவர்கள் செய்திருந்தனர். நடைமுறைப் பிரச்சினை களை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் அவர்கள் பெற்றிருந்த செயற்றிறமையை எடுத்துக் காட்டுகின்றது.
28

III கிறிஸ்தவ திருச்சபையும் ஐரோப்பிய
நாகரிகமும் (கி. பி. பத்தாம் நூற்றாண்டுவரை)
ஐரோப்பிய நாகரீகத்தின் பிரதான மூலங்களில் கிறிஸ்தவ மதமும் அதனுடன் இணைந்து செயற்பட்ட நிறுவன அமைப்புக் களும் முக்கியமானவையாக விளங்குகின்றன. உரோமப் பேரர சின் காலத்தில் அடக்குமுறைக்கும், துன்பங்களுக்கும் உள்ளான கிறிஸ்தவர்கள் கி. பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப காலங் ளில் சுதந்திரமாகச் செயற்படும் வாய்ப்பைப் பெற்றுக்கொண் டனர். அக்காலத்திலிருந்து இன்றுவரை ஐரோப்பிய நாகரிகத்தின் அனைத்துத் துறைகளிலும் கிறிஸ்தவமதமும், அதனைச் சார்ந்த அமைப்புக்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிறப்பாக இடைக் கால ஐரோப்பிய வரலாற்றில் அதன் பாதிப்பு, தாக்கம் பெருமள வினதாகும். இக்கால ஐரோப்பாவின் அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் அதன் பங்களிப்பு மகத்தானதாகும். ஐரோப் பாவில் கிரேக்க, உரோம, கிறிஸ்தவ, ஜேர்மனியப் பண்புகள் எல்லாம் கலந்க ஒரு நாகரிகத்தை வளர்ச்சிப்படுத்தி நிரந்தரப் படுத்தியதில் கிறிஸ்தவ மதத்தின் பங்கு அளவிடற்கரியது.
உலகின் மிகப் பெரும்பான்மையோரினால் பின்பற்றப்படும் கிறிஸ்தவ மதத்தின் தாபகர் யூதேயா நாட்டில் உள்ள பெத்தல கேம் என்ற சிறு நகரில் பிறந்த நசரேத்தின் யேசு (Jesus of Nazareth ) என்னும் அவதார புருஷர் ஆவர். இவரது பிறப்பு கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப வருடங்களில் இடம்பெற்றிருக் கலாம் என்று நம்பப்படுகின்றது ( சரியாக கி , பி , முதலாம் ஆண்டு என்பது சந்தேகத்திற்கிட மானது). கிறிஸ்துநாதரின் பிறப்பு மிக எளிமையான சூழ்நிலையில் இடம்பெற்றதாகவும்: அவரது வாழ்நாள் முழுவதும் உரோம நாகரிகத்தின் எல்லைப் பரப்புக்குள் இடம்பெற்றதாகவு அறிகிறோம். அப்போது இந்த யூதேயா நாடு உரோமப் பேரரசின் கிழக்கு மாகாணத்தில் உள் ளடங்கி இருந்தது. அதனாலே உரோம நாகரிகத்தின் மீதான கிறிஸ்தவ செல்வாக்கும், கிறிஸ்தவம் மீதான உரோம நாகரிகத் தின் செல்வாக்கும் பரஸ்பர வலிமை கொண்டதாகக் காணப்படு கின்றது. யூதேய நாட்டில் வழக்கில் இருந்த ஹீப்ரூ மதப் பாரம்பரியங்களும், உரோம அரசாங்கமரபுகளும் கிறிஸ்தவத்தின்

Page 21
அபிவிருத்தியில் ஆரம்ப செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தன. யூதேயா நாட்டு மக்கள் ஏக தெய்வக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவராகவும், கடவுளின் ஆவியான ஜெகோவாவை ( Jahveh) உலகத்தின் படைப்பாளியாக, அகிலத்தின் ஆட்சி யாளனாகக் கருதியும்வந்தனர்.
கிறிஸ்துநாதர் பிறந்த காலம் மத உணர்வுகள் தீவிரமடைந்த காலமாகவும், அரசியல் கொந்தளிப்புக்கள் நிரம்பிய ஒரு கால மாகவும் விளங்கியது, யூதமதநம்பிக்கையின்படி உரோமஆதிக்கத்தி லிருந்து தங்களை மீட்பதற்காக ஒரு மீட்பர் வருவார் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. வேறு சிலரோ ஆயுத வலிமை காரணமாக உரோம ஆட்சியை அகற்ற விருப்பம் கொண் டிருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்துநாதரின் போதனை கள் இவர்களுக்கு அனுகூலமானவையாக அமைந்திருந்தன. இப் போதனைகள் ஹீப்ரூ மரபுகளிலிருந்து லிலகிச்செல்லும் தன்மை கொண்டிருந்தன.
கிறிஸ்துநாதரின் ஆரம்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பாக தகவல் எதனையும் பெறமுடியாதவர்களாகவே நாம் உள்ளோம். ஏறத்தாள அவரது முப்பது வயதளவில் அவர் தெய்வீக அனுப வங்களைப் பெற்றதாகவும், பல அற்புதச் செயல்களை மேற்கொண் -தாகவும் அறிகிறோம். புதிய ஏற்பாட்டின்படி வருத்த முள்ளோரைக் குணப்படுத்தியதாகவும், பேய்பிடித்தோரிடமிருந்து பேய்களை விரட்டியதாகவும், பார்வையற்றோருக்கு பார்வை அளித்ததாகவும், இறந்தோரை உயிர்ப்பித்ததாகவும் பல தகவல் களைப் பெறுகின்றோம். எப்படியிருந்தபோதிலும் கிறிஸ்துநா தரின் போதனைகள் அன்பு, இரக்கம், கருணை, தன்னலமின்மை, மன்னிப்பு, மனிதாபிமானம், உதவிசெய்யும் மனப்பாங்கு போன்ற பல அரிய நற்பண்புகளைக் கொண்டிருந்ததாக அறியட்படு கின்றது. அவரது போதனைகளும், ஏனைய நடவடிக்கை களும் பழமைக்குள் மூழ்கிக்கிடந்த யூதமகத்தின் பிரதான தலைவர் களுடன் முரண்பாட்டினை ஏற்படுத்துவதாக அமைந்தது. மதச் சடங்குகள், ஆடம்பர நடவடிக்கைகள் பொறுத்துக் கிறிஸ்துநாத ரின் மறுப்புக்கள் இவர்களை அச்சமுறவைத்தன. மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும், பிழைகளில் இருந்தும் மீட்பதாகப் போதித் ததும் இவர்களுக்குப் பிடிக்கா திருந்தது. அரசியல் சிந்தனை அடிப்படையிலும் உரோமப் பேரரசுத் தத்துவத்திற்கு முரணா னதாக இவரின் போதனைகள் காணப்பட்டன. இதுவரை பேரரசன் இலெளகீகம், ஆன்மீகம் ஆகிய இரண்டு துறைக
3O

ளுக்கும் தலைவராக இருந்தார். கிறிஸ்துநாதரின் போதனைக ளோ ஆன்மீகத்துறையில் பேரரசனுக்கு இதுவரை இருந்த ஆதிக்கத்தை அகற்றும் தன்மை கொண்டதாக இருந்தது. இதனால் அமைதிக்கும், மதநம்பிக்கைகளுக்கும் பங்கம் விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டி, ஜெருசலேமில் உயர்நீதி மன்றில் விசாரிக்கப்பட்டு, யூதர்களின் மன்னனாகத் தன்னை ஆக்குவதற்கு முயற்சித்ததாகக் கருதி, உரோம தேசாதிபதியாகிய பொன்ரியஸ் பிலேத்தினால் (Pontius Pilate) மரணதண்ட னைக்கு உள்ளாக்கப்படுகின்றார். ஜெரூசலேமின்வெளிப்புறத்தில் இருந்த கொல்கொதா (oெlgotha) (மண்டை ஒடுகள்) மலைச் சரிவில் இரண்டு திருடர்கள் இடையில் சிலுவையில் அறையப் பட்டுப் பல மணித்தியால கடும் வேதனையின் பின்னர் அவர் இறந்ததாக அறிகிறோம். மனிதகுலத்தின் பாவ விமோசனத் திற்காகத்தன்னை இத்தகைய ஒரு நிலைக்கு ஆளாக்கியதாகக் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் இருந்து அறியமுடிகின்றது.
கிறிஸ்தவமத வரலாற்றில் கிறிஸ்துநாதர் சிலுவையில் அறையப்பட்ட சம்பவமானது மிகுந்த முக்கியத்துவம் பெற் றுள்ளது. ஆனால் அவர் மரித்து எழுந்ததும், அவரது நம்பிக் கைக்குரிய சீடர்கள் நேரில் கண்டதாகக் கூறிய சம்பவங்களும் , அற்புதச் செயல்களும் அவரது ஆதரவாளர்களுக்குப் புத்துரக் கத்தை அளித்து அவரது வழியில் தொண்டாற்ற ஊக்கமளித்தது. இச்சம்பவங்கள் அவரைத் தெய்வாம்சம் பொருந்தியவராகத், தேவதுfதனாக மாற்றிவிட்டன. இந்த நம்பிக்கையின் அடிப்ப டையில் அவரது ஆதரவாளர் சிறு குழுவினராகக் சேர்ந்து யேசுக்கிறிஸ்துநாதர் பெயரில் அவர் போதனைகளைச் செயற் படுத்த முற்பட்டனர். இந்த முயற்சி காலப்போக்கில் உரோமப் பேரரசு முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச மதமாகக் கிறிஸ்தவம் அந்தஸ்துப் பெற்றுக்கொள்ளக் காலாயிற்று.
யேசுக்கிறிஸ்துநாதரின் உண்மையான, போதனைகள் இவை தான் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாத அளவிற்குக் கிறிஸ்தவர்கள் இடையே அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இருந்தாலும் அவரது நான்கு சீடர்களின் எழுத்துக்கள் கிறிஸ் துவின் அடுத்த தலைமுறைக் காலத்தில் எழுதப்பட்டவையாக, நம்பத்தகுந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவரை நம்பும் பழைமைவாத ஆதரவாளர்கள் கிறிஸ்துநாதரைத் ‘' தேவ குமாரனாக * (கடவுளின் மைந்தன்) மனிதகுலத்தின் பாவங்களை நீக்கவும், வேதனைகளை அனுபவிக்கவும் பூமிக்கு
31

Page 22
அனுப்பப்பட்டவராக நம்புகின்றனர். அவர்கள் கிறிஸ்து நாதரை மூன்று நாட்கள் கல்லறையில் கிடந்த பின்னர் மரித்து எழுந்தவராகவும், சொர்க்கத்திற்குச் சென்ற பின்பு மீண்டும் உலகிற்கு வருவார் என்றும் நம்புகின்றனர். அவருடைய அடிப் படைப் போதனைகளை கடவுளின் தந்தைப்பண்பு, மனித சகோதரத்துவம், நல்லாட்சி, மன்னிப்பு அளித்தல், பகைவனுக் கும் அன்புகாட்டல், தீமைக்கும் நன்மைசெய்தல், தன்னலமற்ற பண்பு, சுய ஒறுப்பு, ஆடம்பரவாழ்விற்கு எதிர்ப்பு, சடங்கு கிரியைகளை மதத்தின் சாரமாக நடத்துவதற்கு எதிர்ப்பு, சொர்க்க இராச்சியம் என்பன காணப்படுகின்றன.
கிறிஸ்தவமதத்தின் இறையியல் வளர்ச்சிக்கு அவரது ஆதர வாளர் சிலர் ஒழுங்கான வடிவத்தை அளித்தனர். அவர்களுள் சின்னாசியாவைச் சேர்ந்த புனிதர் போல் (St. Paul- 102-67A D) முக்கியமானவராவார். ஒரு யூதராக இருந்து பின்னர் கிறிஸ்து மார்க்கத்திற்கு மாறித்தூர கிழக்கு முழுவதிலும் இம்மதத்தைப் பரப்புவதில் அளப்பரிய சேவை செய்தவராக விளங்குகின்றார். கிறிஸ்துநாதரை வெறுமனே, யூதர்களை மீட்க வந்தவர் என்ற எல்லைக்குள் வைக்காது, ஒரு சர்வதேச மதமாக அதனை மாற்றிய பெருமை இவரைச் சார்ந்தது. கிறிஸ்தவ திருச்சபைஅமைப்பை ஏற்படுத்தி, அதனைக் கிறிஸ்தவமதத்தின் மத்திய நிறுவனமாகப் பின்னாளில் வளர வித்திட்ட பெருமை இவரைச் சார்ந்ததாகும். கிறிஸ்தவ மரபுகளைக் கிரேக்க, ஹீப்ரு மரபுகளுடன் இணைத்து உரோம உலகம் முழுவதும் பரப்ப முயற்சி எடுத்தவராக இவர் காணப்படுகின்றார். சிறப்பாகக் குறிப்பிட்டால் கிரேக்க தத்துவார்த்த மரபுகளினால் கவரப்பட்ட கல்வி கற்ற உள்ளங் கள் இடையில் கிறிஸ்தவ இறையியலை வெற்றிகரமாக விளக்கிச் செல்வாக்குப் படுத்தியவர் புனிதர் போல் ஆவார்.
கிறிஸ்து சகாப்தத்தின் முதலிரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதமானது மெதுவாக, ஆனால் உறுதியான முறையில் வளர்ச்சி கண்டது. ஆரம்பகாலத்தில் பேரரசர் தத்துவத்தை (God . Emperor Concept) அது கேள்விக்கிடமாக்கியதால் உரோமப் பேரரசர் அதற்கெதிராகப் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். அவற்றுக்கிடையிலும் அதன் அமைப்புமுறை காரணமாக இரகசியமான முறையிலே வளர்ச்சி கண்டது. ஆனால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளினால் இவ்வுலக வாழ்வு பற்றிப் பல கேள்விகள் தத்துவவாதிகளால் கிளப்பப்பட்டன. தீவிர அரசியல்
32

குழப்பங்சளும்,பொருளாதாரக் கஷ்டங்களும் இவ்வுலக வாழ்க்கை மீதான ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சூழ்நிலை கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்கும். அதன் கோட்பாடுகள் செல்வாக்குப் பெறுவதற்கும், ஆன்மா, மறு வுலகம், செர்க்கம் பற்றிய நம்பிக்கைகள் பலமடைவதற்கும் வழிவகுத்தன.
உரோமப் பேரரசின் ஆரம்பத்தில் கிறிஸ்தவமதம் மித்ரே u Fib ( Mithraism ) Ljav60LD6Numish ( Gnosticisum - 60GBTšs - கீழைத்தேய தத்துவம் கலந்த வழிபாட்டுமுறை, நம்பிக்கை யிலும் பார்க்க அறிவைத் தெய்வமாகக் கொள்வது. கிறிஸ்த வத்திற்கும் - பாகன் Paganism பண்பாட்டிற்கும் இடைப் பட்டது. கி. பி. 1 - 6 நூற்றாண்டு காலப்பகுதி.) மற்றும் கிரேக்க, உரோம வழிபாட்டு முறைகள், பேகன் பண்பாடும் இவற்றுடன் ஒன்றாகவே கருதப்பட்டுவந்தது ஆனால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் மற்றைய மத வழிபாட்டு முறைகளிலும் பார்க்கக் கிறிஸ்தவம் செல்வாக்குப் பெற்றமைக்குப் பல காரணங்கள் வழி வகுத் தன. பழைய மதங்களான யூதேயம், சொறாஸ்திரியம் (Zorastriam) புலமைவாதம் போன்றவற்றிலிருந்து மூலங்களைக் கிறிஸ்தவமதம் பெற்றுக் கொண்டாலும், புதிய உத்வேகம் இங்கே இடம் பெற்றிருந்தது. அத்துடன் கிறிஸ்தவத்தின் விடு தலை, தீமை பற்றிய இறையியல் தத்துவம், அதன் சமூகப் பரிமாணம், பேரரசு அமைப்பு முறையினை ஒத்த நிறுவன ஒழுங்கமைப்பு என்பன கிறிஸ்தவமதம் பரவுவதற்கு வழிகோலின, மற்றைய போட்டி மதங்கள் மறுவுலகு பற்றிப் பேசினாலும். கிறிஸ்தவம் பொறுத்து இது தொடர்பான கோட்பாடு மிகச் சிறப்பானதாக, மக்களைக் கவரக்கூடியதாகக் காணப்பட்டது. அத்துடன் அதன் ஆரம்பம் முதலே கிறிஸ்தவ மதம் சமூகத் தின் கீழ் வகுப்பு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது. உதாரணமாக மரவேலைசெய்வோர், மீனவர், கூடாரம் செய் என்பவர்களுடன் நெருங்கியவகையிலே தொடர்பு "ח ח$6u) கொண்டதாகக் கிறிஸ்துநாதரின் வாழ்க்கை காணப்பட்டது. ஒரு சில மேல்வகுப்பு மக்களை இது கவர்ந்தபோதும், அத னுடைய பலம் சமூகத்தின் கீழ், மத்திய வகுப்பு மக்களிடையே தான் தங்கியிருந்தது. இவர்களே உரோமப் பேரரசில் பெரும் தொகையினராகக் காணப்பட்டனர். மேலும் கிறிஸ்தவமதம் பெண்கள் குருமார்களாக வருவதற்கோ, மத, தத்துவ நம்பிக் கைகளை விவாதிப்பதற்கோ ģ56– விதித்திருந்தாலும்,
33

Page 23
வழிபாட்டுரிமைகளை வழங்கியதுடன், ஆண்களைப்போலவே பெண்களுக்கும் பாவம், இறப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கான சம வாய்ப்பையும் வழங்கியிருந்தது. சிறப்பாக மித்ரேயிசம் பெண் களைப் பூரணமாக ஒதுக்கியே வைத்திருந்தது. அத்துடன் மற்றைய மதங்களிலும் பார்க்க கி. பி. மூன்றாம் நூற்றாண் டளவில் ஒரு வளர்சசியுற்ற நிறுவன அமைப்பைக் கிறிஸ்தவம் பெற்றிருந்தது. குருமார்களைப் படிமுறையாகக் கொண்ட ஒழுங் கமைப்பு (பாப்பாண்டவர், பேராயர், ஆயர், குருமார்) பேரரசு நிர்வாக முறையைப் பின்பற்றியதாக அமைக்கப்பட்டிருந்தது.
தங்களது தன்னலமற்ற சேவைகள் மூலமாகச் சமூகத்தை இறுக்கமான வகையிலே இணைத்துக்கொண்ட அமைப்பாக அது மாறியிருந்தது.
கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஆட்சியாளர்களின் கொள்கை எப்படியிருந்தபோதி லும்,கிறிஸ்தவமதத்தைப்பின்பற்றுவோர்களின்எண்ணிக்கைபேரர சில் அதிகரித்திருந்தமையால் ஏதோ ஒரு வடிவிலான அங்கீகாரம் வழங்கப்பட்டாகவேண்டுமென்பது தவிர்க்க முடியாததாகியது. இப்பின்னணியில்தான் பேரரசர் கொன்ஸ்ரான்ரைன் (Constan tine) காலத்தில் கி பி. 313 மிலான் கட்டளையின்படி கிறிஸ்த வம் மற்றைய மதங்களுடன் ஒத்த சம உரிமையையும், சட்ட ரீதியாகப் பேரரசில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டது. ஆனால் இப்பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த யூலியன் (Julian) மன்னனின் காலத்தில் (361 - 63) திரும் பவும் இம்மதத்திற்கு எதிராகப் பேகன் பண்பாடு தலை தூக்க முயற்சித்தபோதும் அது வெற்றிபெறவில்லை. இறுதியில் பேரரசன் தியோடோசியஸ் (Theodosius) ஆட்சியில் கி. பி. 395 இல் பேரரசின் உத்தியோகபூர்வ மதமாகக் கிறிஸ்தவம் அங்கீ கரிக்கப்பட்டு, ஏனைய மத நம்பிக்கைகள் தடைசெய்யப்பட்டன. இவ்வாறு உரோமப் பேரரசின் உத்தியோகபூர்வ மதமாகக் கிறிஸ்தவம் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது.
உரோமப் பேரரசு சிதைந்து போவதற்கு முன்பாகவே வலிமைமிக்க தத்துவமாகக் கிறிஸ்தவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனைத் தொடர்ந்து சிந்தனைத்துறையிலும், அமைப்பு முறை யிலும், நடத் ைதமுறையிலும், பிரதான அபிவிருத்திகள் ஏற் படலாயின. இவற்றால் டியோகிளிசன்ஸ், கலிறியஸ் (Diocietian, aேlerius) மன்னர் காலத்தில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்ட கிறிஸ்தவத்திலும் பார்க்க மிகவும் வித்தியாசமான கிறிஸ்
84

தவமாக நான்காம் நூற்றாண்டின் இறுதியில் விளங்கியது கிறிஸ் தவமதமும் திருச்சபை அமைப்பும் வளர்ச்சியடைந்த காலத்தில் அவற்றை முக்கியமான இறையியல் பிரச்சினைகள் பாதிக்கலாயின. அநேகமான இப்பிரச்சினைகள் கிறிஸ்தவத்தின் திரித்துவக் கோட் unG, (Father- Son, Holy Ghost - 5.5it, 3, 5637, Lutfairis-6) தெய்வீகத்தன்மை தொடர்பாகவே ஏற்பட்டன. இதனால் இரு பெரும் பிரிவுகள் - அரியன்ஸ் (Arius) அத்தனாசியஸ் (Athanasius) ஏற்பட்டுப் பிரச்சினை வலுவடைந்த போது இதனைத் தீர்க்கும் நோக்குடன் பேரரசன் கொன்ஸ்ரான்ரைன் ஆதரவில் அவர் தலைமையில் கி.பி. 325 இல் நிசேயா (Nicaea) என்ற இடத்தில் கிறிஸ்தவ உலகின் பேராயர், ஆயர், மடாலயத் தலைவர் கொண்ட முதலாவது மகாநாடு கூட்டப்பட்டுத் திரித்துவக் கோட்பாட்டின் பழமைவாதக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட துடன், அரியனிசம் கண்டனத்திற்கு உள்ளாயிற்று. இருந்தாலும் அரியனிசம் தொடர்ந்தும் சில காலமாக ஜேர்மனியப் பிரதேசங் களில் செல்வாக்குப் பெற்று விளங்கியது. கோட்பாட்டடிப்படை யிலான பிரச்சினைகள் பிராந்தியப் பகைமையினையும், திருச் சபையின் விவகாரங்களில் இலெகீகத் தலையீடுகள் ஏற்படுவத னையும் தூண்டிவிட்டன. இம்முரண்பாடுகள் கிழக்கு, மேற்குப் பேரரசுப் பிராந்தியங்களில் பொருளாதார, நிர்வாக, அரசியற் காரணங்களை முன்னிட்டு மேலும் வலிமை பெறலாயின.
நிசேயா மகாநாடு கூட்டப்பட்டதனைத் தொடர்ந்து கிழக்கு உரோமப் பேரரசில் கிறிஸ்தவமத இறையியல் விவகாரங்களில் பேரரசனின் முதன்மை வலுவடையலாயிற்று. மேற்கிலும் பார்க் கக் கிழக்கில் மதரீதியான பிரச்சினைகள் அதிகமாகக் காணப் பட்டதுடன், முரண்படும் பிரிவினர் பேரரசனைத் தமக்குச் சார்பாக இருக்குமாறு வேண்டிக்கொண்டனர். கி. பி. 476 இல் உரோமப் பேரரசு மேற்கில் முற்றாக வீழ்ச்சியுற்றுப்போகக் கிழக்கில் தொடர்ந்து பேரரசு வலிமையான ஒரு நிலையில் இருந்தது. இக்காரணங்களினால் கிழக்கு உரோமப் பேரரசன் கிறிஸ்தவமதம் தொடர்பான அதிகாரத்தையும் கட்டுப்பாட்டை யும் வலுவாகவே பெற்றிருந்தான். ஆனால் மேற்கில் அத்தகைய ஒரு வலுவான நிலை இன்மையால் அரசு - திருச்சபை உறவு கள் பலமானவையாக அமையமுடியாமற்போயிற்று.
கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்து அதன் இருச்சபை அமைப்பு முறை மிகப் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அரசியல் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்பட்டபோதும், திருச்சபை
35

Page 24
அமைப்புமுறையில் உள்ளூர் நிர்வாக அமைப்பு படிப்படியாக வலுப்பெற்று வந்துள்ளது. இந்த அமைப்பின் வளர்ச்சியில் உரோம அரச நிறுவனங்களின் பண்பினைக் காணலாம். புனிதர் போலின் பின்பாகக் கிறிஸ்தவ குருமாருக்கும், கிறிஸ்தவ மக்க ளுக்கும் (Clergy Laity ) இடையிலான தெளிவான வேறுபாடு ஏற்படுத்தப்பட்டுவிடடது. அதனைத் தொடர்ந்து குருவாயத்
தில் படிமுறைத் தன்மை கொண்ட அதிகார அமைப்பு
ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்தப்படிமுறை அதிகார அமைப் பிலே ( Hierarchial Organization) பேராயர்களின் மேலாதிக்கம் (Bishop ) குருமார் ( Priest ) பொறுத்து ஏற்படுத்தபபட்டது. இக்கிறிஸ்தவ அமைப்பு முறைமை முக்கியமான நகரங்களில் பேராயர்களை அதிகாரத்துவ தலைவர்களாக மாற்றியது. பேராயர், ஆயர் இடையேகூடப் பதவிவழியான தரவேறுபாடு கள் ஏற்படுத்தப்பட்டன. பிஷப்பாண்டவரின் அதிகார எல்லைப் பரப்புக்கள் உரோம நிர்வாக அலகை ஒத்தனவாக ஏற்படுத்தப் பட்டு, மிகவும் மத்தியமயமான நிர்வாக அமைப்பு ஒன்று உரு வாக்கப்பட்டது. இவ்வகையில் ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் உரோம், எருசலேம், கொன்ஸ்தாந்திநோபிள், அன்ரியொச், அலெக்சாந்திரியா போன்ற பெரு நகரங்களில்
பேராயர்கள் அதிகாரம் செலுத்தலாயினர்.
இந்த வளர்ச்சியின் உச்சநிலையாக அமைவது பாப்பரச முறையின் தோற்றமாகும். பாப்பரசமுறைமை எனபதே உரோம் நகரில் உள்ள பேராயரின் தனிமுதன்மை வளர்ச்சிப்படுத்தப்பட் டமையாகும். திருச்சபையின் ஏனைய நிர்வாக அலகுகளிலும் பார்க்க உரோமில் உள்ள பேராயர் பல காரணங்களினால் தனி முதன்மை மிக்கவராக விளங்கினார். கிறிஸ்தவ மரபுகளின்படி இந்நகரம் புனிதர் பீற்றர், புனிதர் போல் ஆகியோரின கிறிஸ் தவமத நடவடிக்கைகள் இடம்பெற்ற தலமாகப் புனிதம் பெற் றது. கிறிஸ்தவ மரபுகள், புனிதர் பீற்றராலே உரோமப் பேரா யர் ஆளுகைப் பிரதேசம் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகின் றன. அவரின் பின் பதவி பெற்ற அனைத்துப் பேராயர்களும் அவரின் வாரிசாகப் பெருமையைப் பெற்றுக்கொண்டனர். அத் துடன் கிறிஸ்துநாதராலே பூமியில் தனது உயர் அதிகார பீட மாக உரோம் தெரியப்பட்டு, மக்களின் பாவங்களுக்குத் தண் டனை வழங்சவும், கழுவவும் அதிகாரம் கொண்ட சொர்க்க இராச்சியத்தின் திறப்புக்கள் புனிதர் பீற்றரிடம் கொடுக்கப்
பட்டதாகவும் மரபுகள் குறிப்பிடுகின்றன. ( Doctrine of the -
Petrine Succession) இக்கோட்பாடு உரோமாபுரியின் பேராயர்
36

ஏனைய திருச்சபை மீதான மேலாதிக்கத்தைப் பெற்றுக்கொள் வதற்கு அடிப்படையாக அமைந்தது. அத்துடன் பேரரசின் தலைநகர் உரோமிலிருந்து கொன்ஸ்தாந்திநோப்பிளுக்கு மாற் றப்பட்டமை பேரரசனின் இறைமையை மேற்கில் வலுவாகப் பேணமுடியாதுபோகவழிவகுத்தது. இதனால் உரோமின்பேராயர் தம் தனித்துவத்தைப் பேணி, அந்த அமைப்பை உள்ளூர் ஜேர்மானிய ஆட்சியாளரின் உதவிகொண்டு வலுப்படுத்த வாய்ப் பைக் கொடுத்தது.
கிறிஸ்தவ அமைப்பு முறையில் ஏற்பட்ட இந்த அபிவிருத் திகள் நான்காம் நூற்றாண்டில் இந்த அமைப்பு உரோம உல கையே வெல்வதற்கு உதவிசெய்தன. இதே காலத்தில்தான் எல் லைப் புறங்களில் வாழ்ந்து பல்வேறு அளவுகளில் உரோம மய மாக்கப்பட்ட, ஜேர்மானிய இனக்குழுவினர் ஆயிரக்கணக்கில் சமாதான முறையிலே பேரரசுக்குள் ஊடுருவுகின்றனர். மிக விரைவிலேயே இவர்கள் பேரரசின் பலவீனத்தையும், பொருளா தார வீழ்ச்சியையும் நன்கு பயன்படுத்திக்கொண்டு மேற்கைரோப் பாவின் பல்வேறு பகுதிகளில் தங்கள் அரசியல் இருக்கைகளைத் தாபித்துக்கொண்டனர். நாகரிகத்தில் பின்தங்கியிருந்த, ஒழுங் கான மதம் இல்லாதிருந்த, நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கிவாழும் வழக்கம் இல்லாத இம்மக்களை நாகரிகப்படுத்தி, ஒழுங்கான மதத்தைப் போதித்து, அரசியல் அமைப்புமுறை, ஆட்சிநிர் வாகத்தை சொல்லிக்கொடுத்தவர்களாக வளர்ச்சியடைந்திருந்த கிறிஸ்தவ அமைப்பனர் செல்வாக்குப் பெற்றனர். மேற்கில் அர சியல் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டு இருந்தமையை நன்கு பயன் படுத்திக்கொண்டு, இப்புதிய ஆட்சியாளர்களைத் தமக்குப் பாது காவலனாக மாற்றித் தம் அதிகாரஎல்லையை மேலும் வளர்த் துக்கொண்டனர். கி பி. ஐந்தாம் நூற்றாண்டில் உரோமப் பேர ரசு மேற்கில் வீழ்ச்சியுற்றதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அர சியல் வெற்றிடத்தை, ஏற்கெனவே உரோம நிர்வாக அமைப் பைப் பின்பற்றி வளர்ச்சியடைந்திருந்த கிறிஸ்தவமத அமைப் புக்கள் நிரப்பிக்கொண்டன. ஒவ்வொரு பிரதான நகரங்களிலும் வளர்ச்சியுற்றிருந்த இந்த அமைப்புக்கள் ஜேர்மனியப் படையெடுப் புக்களினால் ஏற்பட்ட குழப்ப நிலையிலும் அரசின் பல பணி களைச் செய்து மக்களுக்குச் சிறந்த சேவையாற்றின. இப்புதிய சூழ்நிலையில் கிறிஸ்துநாதரினதும், அவர் சீடர்களினதும் கருத் துக்கள், நம்பிக்கைகளில் இருந்து விலகும் தன்மை கொண்ட, கூடியளவு உலகியல் அம்சங்களுடன் தொடர்புடைய நடவடிக்கை களைத் தவிர்க்கமுடியாதவகையில் எடுக்கவேண்டியதாயிற்று.
ვ7

Page 25
இத்தகைய வெளிப்பாட்டின் விளைவாகத்தான் ஐரோப் பாவில் மடாலயமுறைமை தோற்றம் பெற்றது. கிறிஸ்து சகாப்த ஆரம்ப நூற்றாண்டுகளில் மதகுருமார் கீழைத்தேச மதங்களின் செல்வாக்கின் விளைவாகக் கடுமையான துறவற வாழ்க்கை முறையை மேற்கொண்டதுடன், சமுகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்து இறைவழிபாட்டிலும், கடுமையான நோன்பு நோற்றலிலும் ஈடுபட்டிருந்தனர். உடலை இவ்வாறு வருத் துவதன்மூலம் மேலான நிலையை அடையலாம் என்ற நம் பிக்கையும் இவர்களிடையே வேரூன்றியிருந்தது. இத்தகைய ஒரு மனப்பாங்கு கி. பி. நான்காம் நூற்றாண்டில் வேறொரு வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. முன்னர் போலச் சமூகத் திலிருந்து ஒதுங்கி வாழாமல், சமூகத்திற்கு நன்மைகள் செய் யும் நோக்குக் கொண்டதாகத் துறவறமுறைமை மடாலய முறைமையாக மாற்றம் கண்டது. கி. பி. நான்காம் நூற் றாண்டில் இருந்து இன்றுவரை கிறிஸ்தவ மதத்தின் சிறப் பிற்கு முக்கியமான ஒரு அம்சமாக இந்த மடாலய முறைமை விளங்கிவருகின்றது. கிறிஸ்தவ மடாலய முறைமையின் தந் தையாகத் தீபஸின் புனித அந்தோனி (200 A.D.) என்பவர் விளங்குகின்றார். இம்முறையின் அடிப்படைப் பிரமாணங்களாக எளிமை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன காணப்பட்டன.
மடாலய முறைமை ஆரம்பத்தில் கிழக்குப் பேரரசில்தான் தோற்றம் பெற்றது. இத்தகைய அமைப்பு முறையொன்றை வெற்றிகரமாக உருவாக்கியவர்களுள் புனிதர் பசில் (St Basil -330 - 379 A.D) என்பவர் சிறப்பிடம் பெறுகின்றார். துறவி கள் ஒன்றாக வாழ்ந்து கடுமையான நோன்பு நோற்பதிலும் பார்க்கத் தங்கள் உழைப்பைச் சமூகத்திற்குப் பயன்படுத்தும் படி உபயோகப்படுத்துவதில் அக்கறை கொண்டவராக இவர் விளங்கினார். இம்மடாலய முறைமைக்கான கோட்பாடுகள், சட்டதிட்டங்களை உருவாக்கியவராகவும் இவர் காணப்பட் டார். ஒழுக்கமும், கட்டுப்பாடும், எளிய வாழ்வும், கிறிஸ்தவ வாழ்வில் சிறப்பிடம் பெறப் பாடுபட்டவராகவும் விளங்கினார். மேற்கில் துறவற முறைமை ஆரம்பத்தில் அதிக செல்வாக் கைப் பெறாத காரணத்தால் மடாலய முறைமை காலந்தாழ்த் தியே இங்கு வளர்ச்சியுறலாயிற்று. இவ்வகையில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் பெனடிக்ற் (St. Benedict - 480 - 547 A.D) மேற்கில் இம்மடாலய முறைமையை வளர்ச் சிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். புனிதர் பசிலைப்
88

போலவே மேற்கில் இம்முறைமையின் சட்டதிட்டங் களை வகுத்தவராக இவர் விளங்கினார். பசிலிக்கன் முறைமை யிலும் பார்க்கக் கடுமை குறைந்திதாக, நெகிழ்வுத்தன்மையும், மிதமான பண்பு கொண்டதாக பெனடிக்ரைன் மடாலய முறைமை காணப்பட்டது. இதனால் மேற்கில் பெனடிக்ரைன் மடாலயங்கள் ஆழமான மத உணர்வை வளம்படுத்தும் மையங்களாக வளர்ச்சிகண்டன.
மேலைத்தேச நாகரிகத்தின் வளர்ச்சிக்கு பெனடிக்ரைன் மடாலயத் துறவிகள் பெருமளவு தொண்டினை ஆற்றியுள்ளனர். இத்துறவிகளின் தன்னலமற்ற சேவைகளினாலே இங்கிலாந்தும், ஜேர்மனியின் பெரும்பகுதியும் கிறிஸ்தவமதத்திற்கு மாற்றப்பட் டன. இச்சேவைகள் இப்பகுதிகளில் கிறிஸ்தவ நம்பிக்கையை பரப்பியதுடன் நில்லாது மேற்கு ஐரோப்பாவில் கலாசார, ஒற். றுமையுணர்வை வலுப்படுத்தவும் உதவிபுரிந்தன. பெனடிக்ரைன் துறவிகளின் மற்றுமோர் சாதனை வேலை (Work ) பொறுத்து அவர்கள் கொண்டிருந்த மனப்பாங்கு ஆகும். புனிதர் பென டிக்ற் "ஆத்மாவின் பகைவனைச் சோம்பலைக் கருதித் தனது துற விகள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வழிமுறை களை உருவாக்கியிருந்தார். அதனால் துறவிகள் குறிப்பிட்ட நேரகாலம் சரீர உழைப்பில் ஈடுபடவேண்டுமென்று கட்டுப் பாட்டை ஏற்படுத்தியிருந்தார். அதன் பின்னணியில் இத்துற விகள் கடுமையான உடல் உழைப்பை மேற்கொண்டதுடன், வேலையின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டி யிருந்தனர். இன்று இந்த எண்ணக்கரு மேலைத்தேய கலாசாரத் தின் ஒரு முக்கிய பண்பாக வளர்ச்சி அடைந்துள்ளமையை அவ தானிக்கலாம். இத்துறவிகள் மந்தைமேய்த்தல், பால்கறத்தல், தேனிவளர்த்தல், அறுவடைசெய்தல், உழுதல், சூடடித்தல், பட் டறைகளில் வேலைசெய்தல், கம்பளி நெசவுசெய்தல் வைன் தயாரித்தல் போன்ற தொழில்களைச் செய்து தம் மடாலயங் களின் செல்வச் செழிப்பிற்கு உதவியதுடன், மற்றையோருக்கு நல்ல உதாரண புருடர்களாகவும் திகழ்ந்தனர். பெனடிக்ரைன் மடாலயத்தினர் ஐரோப்பாவில் விவசாய நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டதுடன், மாற்றுப் பயிர்ச்செய்கை போன்ற புதிய தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியவர்களாக விளங்கினர் அத்துடன் பிற்பட்ட காலத்தில் பெருந்தோட்ட முகாமைத்துவத்திலும் சிறப்புப் பெற்றவர்களாக விளங்கினர்.
"இருண்டகாலம்" என்று வர்ணிக்கப்படுகின்ற இக்காலப் பகுதியில அறிவுத்துறையையும் இலக்கியத்தையும் பேணிப் பாது காத்தவர்களாக இம்மடாலயத்தவரே விளங்கினர். நாட்டில் ஏற்
h
" 89

Page 26
பட்ட குழப்பநிலை காரணமாக இலெளகீக உலகு இவற்றை மறந்திருந்தநேரத்தில் இம்மடாலயங்கள் இவற்றைப் பேணிவந் தன. புனிதர் பெனடிக்ற் பண்டைய இலக்கியங்கள் பொறுத்து ஆர்வலராக இல்லாதபோதும், துறவிகள் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வதற்கு நன்கு படித்திருக்கவேண்டும் என்பதில் அக் கறை கொண்டவராக இருந்தார். அததுடன் இளமையிலே துறவு வாழ்க்கை மேற்கொள்பவர்கள் சிறிய அளவிலாவது மடா லயங்களில் கல்வி கற்கவேண்டியது அவசியமாயிருந்தது. அத னால் எழுத்து, வாசிப்பு என்பன அவசியமாக இவர்களுக்குத் தேவைப்பட்டது இப்பின்னணியில் இத்துறவிகளில் சிலர் பண்டைய இலக்கியங்களில் ஈடுபாடுகாட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறு சிறப்புப் பெற்ற மடாலய சிந்தனையாளராக கஸியோ டோரஸ் (Cassiodorus-477?-570?-A, !) விளங்குகின்றார்.புனிதர் ஒகஸ்ரினால் ( St. கிugustine) கவரப்பட்டவரான இவர் கிறிஸ்தவ வேதாகமமான பைபிளை ஒழுங்காக விளங்கிக் கொள்வதற்கு ஒரளவு அடிப்படையாகப் பண்டைய இலக்கிய அறிவு அவசியம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவ்வகையில் துறவி களுக்குப் பண்டைய இலக்கியம் கற்பிக்கவேண்டியது நியாயப்படுத் தப் பட்டது. மேலும் களிலியோடோரஸ் துறவிகள் கடுமையான வேலைகளை வயல்களில் செய்வதிலும் பார்க்கப், பண்டைய இலக்கியங்கள், பழைய ஏட்டுச்சுவடிகளைப் பிரதிபண்ணுத்ல் பொருத்தமான சரீர உழைப்பாகத் துறவிசளுக்கு அமையும் என்று தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து பெனடிக்ரைன் மடாலயங்கள் பல நூற்றாண்டுகளாக போட்டியாளர்களே இல்லாத அறிவுத்துறை மையங்களாகப், பிரதிபண்ணும் நிலையங்களாக விளங்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டன. பிற்காலத்தில் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் தோறறத்திற்கும், நூல்நிலையங்களின் செயற்பாட்டிற்கும் இவ்வ கையில வழிவகுத்தவர்களாகப் பெனடிக்ரைன் மடாலயத் துறவி கள் விளங்கினர்.
பெண்கள் பொறுத்துக் கிறிஸ்தவ மனப்பாங்கு கி. பி நான்காம் நூற்றாண்டளவில் மாற்றம் பெறுகின்றதெனலாம். மற்றைய மதங்களுடன் ஒப்பிடுகையில் கிறிஸ்தவமானது பெண் கள் பொறுத்துச் சாதகமான கருத்துக் கொண்டதாகவே விளங் குகின்றது. அம்மதம் கடவுளின் பார்வையில் பெண் ஆத்மாக்க ளும், ஆண் ஆத்மாக்களும் சமமாகவே கணிக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகின்றது. ஆரம்ப காலக் கிறிஸ்தவர்கள் ஏனைய
4()

பழைய மதங்களைப் போலவே பெண்களைத் தலைமைத்துவத் திலிருந்தும், கொள்கை வகுப்பதிலிருந்தும் விலக்கியே வைத்தி ருந்தனர். கி. பி. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளில் துற வற இயக்கம் வளர்ச்சி பெற்றபோது பெண்கள் நிலைமை மேலும் மோசமாகியது. ஆரம்ப காலத் துறவிகள் பெண்களிட மிருந்து விலகி இருக்கும் நோக்குடன்தான் காடுகளுக்கும், வனாந்தரங்களுக்கும் துறவறம் மேற்கொண்டு சென்றதாக அறி கின்றோம். பொதுப்படக் கிறிஸ்தவமானது பூமியில் பெண்ணின் பிரதான நோக்கம் தாயாக விளங்குவதே என்ற பழைய கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
உரோமப் பேரரசுக்குள் இருந்து கிறிஸ்தவம் அப்பேரரசை வெற்றிகொண்டிருந்த அதேசமயம் பேரரசின் வெளியில் இருந்து இன்னொரு சக்தியான ஜேர்மானிய இனக்குழுக்கள் பேரரசை அச்சுறுத்திக்கொண்டிருந்தன. இதே காலப்பகுதியில்தான் மேலைத்தேச கிறிஸ்தவ சிந்தனையாளர்கள் கடவுள், உலகு பற்றிய சிந்தனைப் போக்கை உருவாக்கிக்கொண்டிருந்தனர். இது அடுத்துவருகின்ற 800 ஆண்டுகளில் மேலைத்தேச கிறிஸ் தவ சிந்தனைக்கு வழிகாட்டியாக அமைந்ததெனலாம். மேற் கில் அரசியல் தளர்வு நிலைமை இறையியல் சிந்தனை வளர்ச்சி ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. ஏறத்தாழ சமகாலப்பகுதியில் வாழ்ந்த முப்பெரும் சிந்தனையாளர்கள் இப்பணியினைச் செய் தனர். எனலாம். அவர்கள் புனிதர் ஜெரோம், (St. Jerome - 340? - 420 A.D.) Laoigti gyuhl Gspitei), (St. Ambrose 340? - 397 A.D ) Ligongsi 656,offair (St. Augustine 354 - 430 A.D.) ஆவர். இவர்கள் மேலைத்தேச லத்தீன் திருச்சடையின் நாற் பெரும் குருமாருள் மூவராவர். மற்றவர் புனிதர் மகா கிரெகறி ஆவர்.
புனிதர் ஜெரோமின் பெரிய அளவிலான பங்களிப்பு ஹீப்ரு, கிரேக்க மொழிகளில் இருந்த பைபிளை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தமையாகும். இது இடைக்காலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட லத்தீன் பைபிளாக வழக்கத்தில் இருந்தது. சிறிய திருத்தங்களுடன் இது உரோம கத்தோலிக்க திருச்சபையினால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின் றது. இக்காலப் பகுதியின் மிகச் சிறந்த எழுத்தாளராக விளங் கும் இவரின் படைப்பில் அடிக்கடி பேச்சுவழக்கிலான உரை நடையும், இடைக்கிடை மிகச் சிறந்த இலக்கியநடையும் கலந்து காணப்படுகின்றது. இவர் கிறிஸ்தவ "நோக்கங்களை மீறாத
4

Page 27
வகையில், பண்டைய இலக்கியங்களைக் கையாளலாம் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். அத்துடன் தீவிர துறவற அமைப்பை ஆதரித்தவராகவும் விளங்கினர்.
புனிதர் அம்புறோஸ் மிலான் நகரில் பேராயராகக் கடமை யாற்றியவர். பாப்பாண்டவரிலும் பார்க்க மேற்கில் மிகச் செல் வாக்குப்பெற்ற திருச்சபை அதிகாரியாக விளங்கியவர். அவர் GT(pg|Quu iš au stavnr63r “ “ On The Duties Of Ministers ”” என்பது மரபுவழியான கிரேக்க, உரோம சிந்தனைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது. புனிதர் அம்புறோசின் நடவடிக்கையில் அரசியல் முக்கியத்துவமுடையது பேரரசன் தியோடோசியஸ் மேற்கொண்ட பெரிய அளவிலான அப்பாவி மக்களின் படு கொலைகளைக் கண்டித்து முரண்பட்ட செயலாகும். பேரரசன் தெய்வீகக் கட்டளைகளை மீறிவிட்டார் என்றும், அதனால் திருச்சபையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு உடன்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் இறைமையுள்ள பேரரசன் அக்கோரிக்கைக்குச் சம்மதித்துத் தண்டனையை ஏற் றுக்கொண்டார். இது முதல் தடவையாகத் திருச்சபையின் ஒழுக்க விடயம் தொடர்பாக உரோமப் பேரரசின் இலெளகீக அதிகாரத்தைக் கண்டித்து, மேலாண்மை பெற்றதனைக் காட்டி யது. இவ்வசையில் மேற்கில் திருச்சபை தன்னாதிக்கத்தையும், ஒழுக்க மேலாண்மையையும் பெற்று வளரக், கிழக்கின் திருச்சபை அவ்வாறு செயற்படமுடியாத நிலை காணப்பட்டது.
புனிதர் அம்புறோசின் மாணவரான புனிதர் ஒசஸ்ரின் அனைத்து லத்தீன் குருமார்களிலும் பார்க்கச் சிறப்புடையவ ராக, இதுவரை வாழ்ந்த மிகவும் வல்லமை கொண்ட கிறிஸ் தவ புத்திஜீவிகளுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இடைக் காலத் திருச்சபை மீதான புனிதர் ஒகஸ்ரினின் செல்வாக்கு கணிப்பிட முடியாததாகும். இடைக்காலத்தின் பின்னரும்கூட அவரது இறையியல் கருத்துக்கள் புரட்ட ஸ்தாந்த மதத்தின் அபிவிருத்தியில் கணிசமான செல்வாக்கினைச் செலுத்தி உள் ளன. இருபதாம் நூற்றாண்டிலே பல பிரபல்யம் பெற்றுள்ள கிறிஸ்தவ சிந்தனையாளர் தங்களை நியோ . ஒகஸ்ரினியன்ஸ் (Neo Augustinians) என்று அழைத்துக் கொள்வதிலிருந்து அவரது முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். இப்புலமை மிக்க கிறிஸ்தவ தத்துவஞானி தனது தத்துவங்களின் பெரும் பகுதியை நியோ - பிளாட்டோனிசத்திலிருந்து ( Neo Platonism) பெற்றவராகக் குறிப்பிடப்படுகின்றார். இவரது இறையியல் கருத்
42

துக்கள் இறைவனின் வரம்பில்லா அதிகாரத்தையும், மனித குலத்தின் பாவச்செயல்களையும் சுற்றியே காணப்படுகின்றன. " Leafsii. 6 signifir soors. On The City of God stairso Sparror நூலில் இறையியல் பண்பு கொண்ட வரலாற்றுக்கான வரை விலக்கணத்தைக் கொடுக்க முற்பட்டுள்ளார். இந்நூலில் முழு மனிதகுலமும் அதன் படைப்பிலிருந்து இறுதித் தீர்ப்பு வழங்கப் படும் நாள்வரை புவிநகரத்தவர் (City of Earth) கடவுள் நக ரத்தவர் ( City of God) என இரு சண்டையிடும் சமூகங்க ளாகச் செயற்படுகின்றனர் என்றும், இறுதித் தீர்ப்பு வழங்கும் நாளன்று முன்னவர் தண்டிக்கப்படப், பின்னவர் அழியாநிலை பெறுவர் என்றும் குறிப்பிடுகின்றார் இக்கருத்து இடைக்காலம் முழுவதும் கேள்விக்கிடமாக்கப்படாத நம்பிக்கையாகக் கிறிஸ் தவ இறையியலில் இருந்து வந்தது.
கிறிஸ்தவ இறையியலில் புதிய அம்சங்களை முதன் முத லாகப் புகுத்தியவாராக புனிதர் ஒகஸ்ரின் விளங்குகின்றார். பைபிளில் தான் கண்ட உண்மைகளை ஒன்றினைத்துக் கொடுத் தவராக அவர் விளங்குகின்றார். பைபிளில் அனைத்து ஞானமும் இருப்பதாகவும், அவற்றை விளங்கிக்கொள்வதற்குக் குறிப்பிடத் தக்களவு கல்வி அறிவு அவசியமென்றும், அந்த நோக்குடன் பண்டைய கிரேக்க, உரோம அறிவுத்துறை பற்றிக் கற்கவேண்டு மென்றும் குறிப்பிட்டார். பண்டைய உலகம் தாராளக் கலைகள் (Liberal arts) என்ற ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்கியிருந் தது. அது உலகியல் வாழ்வில் வெற்றியையும், பகுத்தறிவு வளர்ச்சியையும் சுதந்திர மனிதன் பெறும் வகையில் அமைந் திருந்தது. இக்கல்வியின் அடிப்படைப் பண்புகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் பைபிளை நன்கு விளங்கிக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு, இதுவரை புறக்கணிக்கப்பட்டுவந்து பண்டைய கிரேக்க, உரோம கலாசாரத்திற்கு புத்துயிர் அளிக்க வழி கோலினார், தாராளக் கலைகள் என்ற கல்வித் திட்டம் அவர் காலத்தில் மதச் சார்பற்ற பாடசாலைகளிலேதான் போதிக்கப் பட்டுவந்தது. இவற்றில் கிறிஸ்தவ புத்ற்ஜீவிகளையும் கற்க ஒகஸ் ரின் அனுமதித்திருந்தார். இப்பாடசாலைகள் ஐரோப்பாவில் ஏற் பட்ட அரசியல் குழப்ப நிலைமைகளினால் அழிந்துபோன ஒரு கட்டத்தில் அப்பணியை மடாலயங்களும், கதீட்ரல்களும் மேற் கொண்டு கல்விச் செயற்பாட்டில் ஒரு தொடர்ச்சியைப் பேணு வதற்கு ஒகஸ்ரின் கொண்டிருந்த கொள்கை வழிவகுத்தது. இத னால்தான் அழியாதிருந்த பல பண்டைய கிரேக்க, உரோம அறிவுத்துறைப் படைப்புகள், மடாலயங்கள் கதீட்ரல்களில்
48

Page 28
ப்ேணிப்பாதுகாக்கப்பட்டுப் பிற்கால உலகிற்குக் கிடைப்பதற்கு வழிவகுக்கப்பட்டது. இவ்வகையில் ஒக்ஸ்ரினின் நடவடிக்கைகள் ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட பண்டைய அறிவு கிறிஸ்தவ நிறுவனங்களாலே பாதுகாக்கப்பட்டுப் பிற்கால உலகிற்கு வழங் கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், வந்த அறிவை மேலும் வளர்ச்சிப்படுத்தவும் உதவியது.
புனிதர் ஒகஸ்ரினைப் பின்பற்றியவர்களுள் மிகவும் செல் வாக்குப் பெற்றவர் கி.பி. 480-524 வரை வாழ்ந்த உரோம உயர்குடியினரான போதியஸ்(Boethius) ஆவார்.இவர் பண்டைய தத்து வஞானத்தில் அளவிலாத ஈடுபாடு கொண்டவராகவும் கிறிஸ்தவ நோக்கங்களுக்காகப் பணடைய அறிவு பயன்பட வேணடும் என்பதில் ஒகஸ்ரினைப் போலவே நம்பிக்கை கொண்ட வராகவும் விளங்குகின்றார்.ஒகஸ்ரின் வாழ்ந்த காலத்திலும் பார்க்க ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னர் போதியஸ் வாழ்ந்தமை யினால் பண்டைய உலகு ஒரு முடிவுக்கு வருவதனைத் தெளிவாகக் கண்டவராக விளங்கினார். பண்டைய கிரேக்க, உரோம உலகின் அறிவுத்துறைச் சாதனைகளை நன்கு விளங்கிக்கொண்ட போதி யஸ் தனது முதற் கடமை அவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்வது எனக் கருதி அம்முயற்சியில் ஈடுபட்டார். அதனால் இவை தொடர்பான கைநூல்கள், மொழிபெயர்ப்புக்கள், உரை கள் போன்ற பல வடிவங்களில் இவற்றை எழுதிப் பிற்பட்ட உலக்கிற்கு வழங்கியுள்ளார். அக்காலத்தில் வழக்கில் இருந்3 இலக்கணம், அணியிலக்கணம், தர்க்கம், எண்கணிதம், கேத்திர கணிதம், வானியல். சங்கீதம் ஆகிய தாராளக் கலைக்கல்வி அமைப்பை ஏற்றுக்கொண்டு எண்கணிதம், சங்கீதம் ஆகியவற்றில் கைநூல்களை எழுதியுள்ளார். அவர் தியோடொறிக் (The0doric மன்னனால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படாதிருந்தால், மற்றைய பாடங்களிலும் கைநூல்களை எழுதியிருப்பார். இச் சுருக்க நூல்களின் நோக்கம் கிறிஸ்தவர்களுக்குத் தேவைப்பட்ட அனைத்துப் பாடங்களின் அடிப்படை இயல்புகளை எடுத்துக் காட்டுவதாகும். அவரது ஈடுபாடு அதிகம் தர்க்கம் பொறுத்து இருந்தமையினால் மிகக் சிறப்புப்பெற்ற அரிஸ்டோட்டலின் சில தர்க்கக் கோட்பாடுகளைக் கிரேக்க மொழியிலிருந்து லத்தீன் மொழிபெயர்த்துள்ளார். அத்துடன் போர்பெறீ (Porphry) என்ற பாேடைய தத்துஞானியின் தர்க்கம் பற்றிய அறிமுக நூலையும் மொழிபெயர்த்துள்ளார். போதியசின் சாதனைகள் கிரேக்க உலகிற்கும் இடைக்காலத்திற்குமான ஒரு இணைப்பை ஏற்படுத்து
44

வதாகக் கொள்ளப்படுன்கிறது. மேலும் லற்றீன் மொழியில் தர்க்க சொல்லகராதியைத் த்ொகுக்க உதவியவராகவும் விளங் கினார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் மேற்கில் தர்க்கவியல் மீளத் தழைத்தபோது போதியசின் அடிப்படையில் இருந்தே வளர்ச்சிப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போதியஸின் தனிச்சிறப்புப்பெற்ற கிறிஸ்தவ இறையியல் DiTai The consolation of philosophy 6Teitusstgth. gp5a5 15/16 அவரின் இறுதிக் காலத்தில் இராஜத்துரோகம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட காலையில் எழுதியதனால் அவர் இந்நூலில் ஒரு இறையியல் வாதியிலும் பார்கக ஒரு தத்துவ ஞானியாகவே தரிசனம் தருகின்றார். இந்நூல் இடைக்காலத் தில் எழுதப்பட்ட மிகப் பிரபல்யமான நூல்களுள் ஒன்றாக வைத்து எண்ணத்தக்கது. மிகவும் நன்முறையில் எழுதப்பட்டது டன், சில பண்டைய நாகரிகக் கருத்துக்கள் கிறிஸ்தவக் கருத் துக்களுடன் இசைவான வகையில் மிகப் பொருத்தப்பாட்டுடன் இணைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. நாம்இதுவரைபார்த்த கிறிஸ்தவ சிந்னையாளர் எந்தளவிற்குப் பண்டைய கிரேக்க, உரோம மரபுகளுடனான தொடர்ச்சியைக் கிறிஸ்தவ மரபுகளு டன் ஏற்படுத்த ஏற்றுக்கொள்ள முயன்றனர் என்பதைப் பார்த் திருந்தோம். அவர்களுள் புனிதர் ஒகஸ்ரினிலும் பார்க்க ஒருபடி முன்னேறியவராகப் போதியஸ் சிறப்புப்பெறுகின்றார் எனலாம்.
உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின்பாக ஏற்படுத்தப்பட்ட ஜேர்மனிய இனக்குழு அரசுகளில் நிலைத்துநின்றதும், அதிகா ரம் மிக்கதுமான அரசு பிராங்கியர்களினால் (frank) ஏற்படுத் தப்பட்ட அரசாகும். பேரரசன் ஜஸ்ரினியன் (Justinian) ஆட் சிக்காலத்தில் இத்தாலியில் ஏற்பட்டிருந்த ஒஸ்ரோகொத்தின் (Ostro Gothic) அரசும், வட ஆபிரிக்காவில் ஏற்பட்டிருந்த வாண் டல் (Vandal) அரசும் அழிக்கப்பட்டன. இதற்குச் சிறிது பின் பாக (711) ஸ்பெயினில் ஏற்படுத்தப்பட்டு இருந்த விஸிகொதிக் (Vissigothic) அரசும் அராபியரினால் இல்லாதொழிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் நிலைத்திருத்த ஜேர்மானிய இனக்குழுவின் பிரதான அரசாகக் கோலில் (Gaul) அமைந்திருந்த பிராங்கியரின் அரசே காணப்பட்டது. இதற்கு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் குளோவிஸ் (oேvis) என்ற தலைவனாலே பிராங்கிய அரசு உருவாக்கப்பட்டுத் தற் போதைய பிரான்ஸ், பெல்ஜியம் கைப்பற்றப்பட்டு கி. பி. 500 அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு வெற்றிகரமாக அங்கு வாழ்ந்த மக்கள் மாற்றப்பட்டிருந்தனர். குளோவிஸ் தனது முன்னோரின் பெயரான மொரேவெச் (Merovech) என்
45

Page 29
பதனை வைத்துத் தனது வம்சத்திற்கு மெரோவிங்கியன் வம் சம் என்று பெயரிட்டிருந்தான். ஆனால் அடுத்த இரண்டு நூற் றாண்டுகளில் அவர்களுடைய புதல்வர்களுக்கு இராச்சியத்தைப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்தமையினால், அரசியல் அதிகாரத்துக்கான போட்டிகள் இடம்பெற்று, பிரதேசக் கைப் பற்றல்களுக்கு இலக்காகிப் பலவீனமுற்று, அவர்களின் பிரதம அமைச்சர்களாக இருந்த அரண்மனை ஆட்சியாளர்களிடம் (Mayors of Palace) இறுதியில் அதிகாரம் சென்றது. இக்காலப் பகுதி முழுவதும் ஐரோப்பாவின் வரலாற்றில் "இருண்ட காலம்’ என்று வர்ணிக்கப்படுகின்றது. வர்த்தகம் வீழ்ச்சியடைந்து, நகங் கள் தளர்வுற்று, கல்வியறிவு பெருமளவுக்கு மறக்கப்பட்ட ஒரு காலமாக இப்பகுதி விளங்குகின்றது.
இக்காலப்பகுதியில்தான் கிறிஸ்தவ திருச்சபை நிலைமைக ளைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு வலுவான ஒரு அமைப் பாக மேலும் வளர்ச்சியடைந்தது. ஏற்கெனவே இருந்த உரோ மப் பாப்பரகமுறைமையையும், பெனடிக்ரைன் மடாலயமுறை மையையும் ஒன்றிணைத்துப் புதிய மேற்சைரோப்பிய மதக் கொள்கை ஒன்று பாப்பரசர் முதலாம் கிரெகறி (Gregory The Great 590 - 604) என்பவரால் உருவாக்சப்பட்டது. இதுவரை காலமும் கொன ஸ்தாந்திநோப்பிளில் இருந்த பேரரசர்சளுக்கும் கீழ்ப்பட்டவராகவே பாப்பரசர் விளங்கிவந்தார். இச்சூழலில் தான் மகா கிரெகறி மேற்கத்தையலத்தீன் திருச்சபையைக் கூடி யளவு தன்னாதிக்கமுடைய அமைப்பாக மாற்ற நடவடிக்கை களை மேற்கொண்டார். திருச்சபைக் குருமாரில் (Latin Fathers of the Church) நான்காவது குரவராகக் கொள்ளப்படும் மகா கிரெகறி தன முன்னோர்களான ஜெரோம், அம்புறோஸ், குறிப்பாக ஒகஸ்ரின் ஆகியோரின் வேலைகளைத் தொடர்ந்து கிறிஸ்தவ இறையியலின் தனித்துவமான பண்பினை உருவாக்கி னார் அவர்புகுத்திய பண்புகள் கீழைக் கிறிஸ்தவ திருச்சபைக் கும், மேலைக் கிறிஸ்தவ திருச்சடைக்கும் இடையிலான இறை பியல் வேறுபாட்டினை தெளிவாக வேறுபடுத்திக் காட்டுவதாக sy 60) udfö35g - (The idea of penance and the Conceptof purgatory) இறையியல் சம்பந்தமான வேலைகளைவிட அககாலப் பேச்சு வழக்கினைக் கொண்ட, எளிதாக விளங்கக்கூடிய வற்றின் உரை தடை வழிபாட்டு முறைகளை, கிரியைகளை (Cregorial chant) எழுதியவர்களுள் ஆரம்ப கர்த்தாவாக இவர் விளங்குகின்றார். இதன் பின்னரே உரோம கத்தோலிக்கக் கிரியைகளின் மத்திய பகுதி அபிவிருத்தி அடைந்தது. இப்புது நடவடிக்கைகள் மத அடிப்படையிலும், கலாசார அடிப்படையிலும் கிரேக்க வைதிக திருச்சபையிலும் பார்க்கக் கூடியளவு சுதந்திரமான ஒரு அமைப் பாக மேற்கின் லத்தீன் கிறிஸ்தவ திருச்சபையை வளர்ச் சிப்படுத்தின.
46

மகா கிரெகறி இறையியல் துறையில் சிறப்புப் பெற்ற தனைப் போலவே சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார். அவருடைய காலத்தில் இத்தாலியில் பாப்பரச முறைமைக்கு அச்சுறுத்தலாக வடக்கில் இருந்த லொம்பாடிய அரசு (Arian Heretics) காணப்பட்டது. இந்த அச்சுறுத்தலைச் சமாளித்துப் பாப்பரசமுறைமையை மேலும் பல பிரதேசங்களில் வளர்ச்சிப் படுத்தியவராகவும் கிரெகறி காணப்பட்டார். சாக்ஸன் இங்கி லாந்தில் கிறிஸ்தவம் பரவவும். இங்கிலாந்துத் திருச்சபை உரோ மத் திருச்சபையுடன் பூரணமாக இணைந்து செயற்படவும் அத்திவாரம் இட்டவராக அவர் உள்ளார். பெனடிக்ரைன் மடாலய முறைமையில் கொண்ட ஈடுபாட்டினாலும், அதற் களித்த ஆதரவினாலும் மேற்கில் பல நூற்றாண்டுகளாகச் சிறப்புப்பெற்ற மடாலய முறையாக அது விளங்கி வந்துள்ளது. பிராங்கிய அரசுக்கும், பாப்பரச முறைமைக்கும் இடையிலான நல்லுறவு, இணைப்பு ஏற்படுவதற்கு அத்திவாரம் இட்டவரா கவும் மகா கிரெகறி விளங்கியதுடன், லத்தின் கிறிஸ்வத திருச்சபை மேலாதிக்கம், தனித்துவம் கொண்ட நிறுவனமாக மாற்றுவதற்குப் பெரிதும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார். அத்துடன் பிராங்கியர் வரலாற்றைக் கூறும் History of Franks என்ற வரலாற்று நூலை எழுதியவராகவும் சிறப்புப் பெறுகின்றார்
முற்பட்ட இடைக்காலத்தில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலையில் கிறிஸ்தவ அமைப்புக்களே அறிவுத்துறையை அணையாது பேணிப் பாதுகாத்தன எனலாம். இக்கால அறிவுத் துறைச் சாதனைகள் முன்னர் போலப் புதியனவாக இல்லா விடினும் அத்துறைசார்ந்த அபிவிருத்திகளை ஈட்டியவர்களாகத் திருச்சபைக் குருமாரே விளங்குகின்றனர். கிறிஸ்தவக் கோட் பாடுகளுக்கு முரணாகாதவகையில் அப்பணியை இவர்கள் திறம் படஆற்றியுள்ளனர். போதியஸ், கஸியோடொறாஸ், ஒசுஸ்ரின், udsnr 60Gures pól (Ecelesiastical history of the English People) என்ற நூலை எழுதிய பீடி (Bede - 735) ஸ்பெயினில் வாழ்ந்த Etymologies எழுதிய பிஷப் இஸிதோர் (Isdore - 636) அனை வரும் திருச்சபையைச் சார்ந்த குருமாரே. இவ்வகையில் இக் காலத்தில் அறிவுச்சுடரை அணையாது பாதுகாத்துப் பிற்பட்ட உலகிற்கு வழங்கியவர்களாகக் கிறிஸ்தவக் குருமார் சிறப்பைப் பெறுகின்றனர்.
பிராங்கிய அரசுக்கும் கிறிஸ்தவ திருச்சபைக்கும் இடை
யிலான தொடர்புகள் பிராங்கிய அரசு வலுப்பெற்றதனைத்
தொடர்ந்து மேலும் இறுக்கமாயின. கி.பி. 687 இல் அரண்மனை
4.

Page 30
ஆட்கியாளனான பெப்பின் (Pepin) தற்போகைய றைன் நதிப் பிரதேசம், பெல்ஜியத்தில் வலுவான ஆட்சியை நிலைநாட்டி ஈபிருந்தான். அவனது மகனானசார்ள்ஸ் மாட்டெல் (Charles Martel) ஸ்பெயினிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமியப் படை யெடுப்பை 732 இல் Politiers போர்க்களத்தில் முறியடித்து, ஐரோப்பாவில் இஸ்லாமிய ஆதிக்கம் பரவாமல் தடுத்து நிறுத் தினான். தனதாட்சியின் இறுதியில் கிறிஸ்தவ திருச்சபையுடனான உறவினை வலுப்படுத்தி, ஜேர்மானியப் பிரதேசத்திலும் கிறிஸ் தவ மதத்தையும். தனது ஆதிக்கத்தையும் பரப்பிக்கொண்டார். முக்கியமாகப் புனிதர் பொனிபேசும் t St. Boniface) அவர் சார்ந் திருந்த பெனடிக்ரைன்கோட்பாடுகளும் சார்ள்சின் ஆட்சிப்பரப்பில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தின. சாள்ஸ் மாட்டெலின் மக னான சிறிய பெப்பின் (Pepin the Short) அரச அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காகத் திருச்சபையின் ஆதரவை வேண்டியிருந்தார். இவ்வேண்டுகோளைப் புனிதர் பொனிபேஸ் தந்தையாரின் கொள்கை ஜேர்மானியப் பிரதேசத்தில் தொடர்ந் தும் பின்பற்றப்படுவதற்காக ஏற்றுககொண்டார். பொனிபேஸ் உரோமிலிருந்த பாப்பரச முறைமையுடன் சாக்ஸன் இங்கிலாந் தில் மேற்கொண்ட மிஷனரிப் பணிகளினால் மிக நல்ல உறவி னைக் கொண்டிருந்தார். இதே காலப்பகுதியில் பாப்பரசருக்கும். பைசாந்தியப் பேரரசருக்கும் இடையில் விக்கிரக வழிபாடு பொறுத்துத் தீவிர கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் லொம்பாடிய எதிர்ப்பைச் சமாளிககவும், பைசாந்திய மேலாதிக்கத்திலிருந்து விடுபடவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கிறிஸ்தவ திருச்சபை முற்பட்டது. இவற்றின் விளை வாக கி. பி. 75 இல் பாப்பரசரின் பிரதிநிதியாகப் புனிதர் பொனிபேஸ் சிறிய பெப்பினுக்குத் தெய்வீக வழியுரிமை அந் தஸ்தை அளித்ததுடன், கிறிஸ்தவ திருச்சபையின் ஆதமிக ஆதரவும் வழங்கப்பட்டது. இது நடைபெற்றுச் சிறிது காலத்தில் பெப்பின் லொம்பாடியர்களை வென்று பாப்பரசருக்குத் தனது நன்றிக் கடனைத் தெரிவித்துக்கொண்டார். இப்போது மேற்குலகு பிராங்கிய அரசு, லத்தீன் திருச்சபை அடிப்படையில் தனது சொந்த ஒற்றுமையை அடைந்துகொண்டது.
இந்த ஒற்றுமையின் உச்சக்கட்டம் பெப்பின் மகனான ( Carolus magnus ) Fnrif GyfGuo6äv (Charlemagne 768 - 814) கரோலிங்கிய (Carolingian) வம்சத்தைத் தாபித்ததிலிருந்து இடம் பெறுகின்றது. சார்ளிமேன் இடைக்கால உலகில் ஆட்சிபுரிந்த மிகப்பிரபல்யமான ஆட்சியாளன் என்பதில் எவ்வித ஐயமும்
V8

இல்லை. உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின்பாக ஐரோப்பா வில் பரந்ததொரு இராச்சியத்தை ஏற்படுத்தியவராக அவர் விளங்குகின்றார். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கிய அவர் காலத்தில் "கரோலிங்கிய மறுமலர்ச்சி" என்று குறிப்பிடும் அளவிற்கு அறிவுத்துறையில் புத்துயிர்ப்பு ஏற்பட்டது. இவற் றைவிடக் கிஸ்தவ மதத்தையும், திருச்சபையையும் பொறுத்து மிக முக்கியமான நிகழ்ச்சி சார்ளிமேனின் ஆட்சியில் இடம் பெற்றது. அந்த நிகழ்வுதான் கி , பி 800ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் g660Tš56örgy unrůLurFiř up6övprTh 6óBuurt (Leo III) aurráão sFtrri ளிமேன் உரோமப் பேரரசனாக முடிசூட்டப்பட்டமையாகும். இச்சம்பவம் மதரீதியாகவும், அடையாள ரீதியாகவும் முக்கியத் துவம் பெற்றுள்ளதுடன், பின்னாளில் "பரிசுத்த உரோமப் பேரரசு" என்பதன் ஆரம்பத்தைக் குறிப்பதற்காகவும் பயன் படுத்தப்பட்டது. அத்துடன் முடி சூட்டுவைபவம் நிகழ்ந்த ஆண்டு வரை கொன்ஸ்தாந்திநோப்பிளில் இருந்து ஆட்சிபுரிந்த போர சனே உரோமப் பேரரசின் வாரிசாக (Augustus) மேற்கில் அதிகா ரம் எதுவும் இல்லாதபோதும் கருதப்பட்டுவந்தான். மேற்கில் எவரையாவது பேரரசன் என்று அழைப்பதற்குக்கூட இவர்கள் எதிர்த்திருந்தனர். ஆனால் இச்சம்பவம் மேலை உலகின் சுதந் திரத்தையும், சுய உறுதிப்பாட்டையும் பிரகடனம் செய்வதாக அமைந்தது. சார்ளிமேனின் பரந்த விவசாயச் செழிப்பு பெற்ற ஆட்சிப் பரப்பையும், மேலைக் கிறிஸ்தவத்தையும், லத்தீன் மொழி மரபுகளையும் அடிப்படையாகக் கொண்ட தனித்து வதமான கலாசாரத்தையும் கொண்டதாக இப்பேரரசு பெரும ளவுக்கு நியாயப்படுத்தப்பட்டது.
சார்ளிமேனின் மரணத்தின் பின்பாகச் கரோலிங்கியப் பேரரசு விரைவிலேயே வீழ்ச்சி கண்டது. சார்ளிமேனின் பின் syaw6ör LD5607 st6or Luis ĝuDin Gör GİTuff (Loius of pious ) 356 wg p6ör gp புதல்வர்களுக்கிடையில் இராச்சியத்தைப் பிரித்துக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டுப்போர் ஆரம்பமாகிக் குடும்பச் சண்டைகளாக மாறிப் பேரரசு பலவீனப்பட்டநிலையில் மீண்டும் ஒருமுறையாக ஐரோப்பாவில் அந்நியர் படையெடுப் புக்கள் பல திசைகளில் இருந்து ஏற்பட்டன. வடக்கிலிருந்து விக்கிங்குகளும் (Vikings) கிழக்கிலிருந்து மகியர்களும் (Magyars) தெற்கிலிருந்து கடல் வழியாக முஸ்லீம்களும் படையெடுப்புக் களை மேற்கொண்டு மேற்கைரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட புகழ்பெற்ற அரசு சிதறிப்போகக் காலாயினர். இதனைத் தொடர்ந்து பத்தாம் நூற்றாண்டில் புதிய ஐரோப்பாவிற்கான அரசியல் புறவுருவப் படம் உருவாகலாயிற்று.
49

Page 31
அராபிய நாகரிகம்
அராபிய நாகரிகமானது மேற்காசியாவில் உலகின் மிகப் பெரிய தீபகற்பமாகக் காணப்படும் ஒரு வனாந்தரப் பிரதேசமாகிய அரேபியாவில் இருந்து பல்வேறுதிசைகளில் ஒரு குறுகிய காலப் பகுதியில் பரவி நிரந்தரமான சில பண்புகளை ஏற்படுத்திய ஒன்றாகும். அதனுடைய ஆரம்பம் கி. பி ஆறாம் நூற்றாண்டிலி நடுப்பகுதி அளவில் ஏற்பட்டதாகும். இதைத் தோற்றுவித்த பிர தேசமாகிய அராபியத் தீபகற்பம் பிற உலக நாகரிகங்களைத் தோற்றுவித்த பிரதேசங்களில் இருந்து புவியியல் அமைப்பைப் பொறுத்த மட்டில் பெரிதும் வேறுபட்டுள்ளது. பொதுவாக உலக நாகரிகங்கள் வளம் பொருந்திய அல்லது வளம் படுத்தக் கூடிய பிரதேசத்தில் சிறப்பாகப் பெரு நதிகள் பாய்கின்ற பிர தேசங்களில் ஏற்பட்டவையாகவே காணப்படுகின்றன. ஆனால் புவியியல் அமைப்பும், இயற்கையும் மனித சமுதாயத்துக்கு விடுத்த சவாலை ஏற்று வெற்றி கொண்டு வியக்கத்தக்க நாகரி கமாக அராபிய நாகரிகம் உருவாகி இருப்பதனைக் காணலாம்"
இந்நாகரிகம் தோன்றிய தீபகற்பமானது கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரை அதிக முன்னேற்றமடையாத ஜனக்குழுக்களைக் கொண்ட ஒரு பகுதியாக, வளமில்லாத வனாந்தரப் பிரதேச மாகவே பெருமளவிற்குக் காணப்பட்டது. இத் தீபகற்பத்தின் வடக்கிலே இருபெரும் பேரரசுகளாகிய பைசாந்திய, பாரசீகப் பேரரசுகளின் பண்பாட்டுச் செல்வாக்கு ஓரளவிற்காவது பரவி யிருந்தது என்பது உண்மைதான். இதனால் அராபியப் பிரதேசத் தின் வடஎல்லைப் பிரதேசத்தில் வாழ்ந்த அராபிய ஜனக்குழுக் கள் ஓரளவிற்குப் பிறநாகரிகங்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட வராக இருந்த போதும் எந்த வகையிலாவது உயர்ந்த நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தார்கள் எனக் கூறுவதற்கில்லை. இதே போன்றே அராபியத் தீபகற்பத்தின் தென் எல்லையிலும், மேற்கு எல்லையிலும் அதாவது அராபியக் கடலையும், செங்கடலையும் சார்ந்த கரையோரப் பிரதேசங்களில் பிற நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டவர்களாக அராபிய இனத்தவர் சிலர் வாழ்ந்து வந்தாலும் எதுவிதத்திலும் இவர்கள் நாகரிக வளர்ச் சியை அடைந்திருந்தனர் என்று ஆறாம் நூற்றாண்டுவரை கூற முடியாது. இவ்வாறு தீபகற்பத்தின் எல்லைப் புறங்களில் பிற நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டவர்களாக வாழ்ந்த

அராபியருடைய தொகை மிகச் சிறியதாகவே இருந்தது. பெரும் பாலான அராபியர் ஏறத்தாள மொத்தக்குடித் தொகையில் 5/6 பங்கு அராபியர் பெடுயின் (Bedouin) அராபியர் எனப் பெயர் பெற்றவர்களாக நாடோடி வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆறாம் நூற்றாண்டு வரை அராபியர் என்ற பெயரால் அழை கப்படக்கூடிய ஒரு தனிநாடோ அல்லது அராபியர்களைக் கொண்ட அரசுகளோ தோற்றம் பெற்றிருக்கவில்லை என்றே கூறலாம்.
அராபியா முழுவதிலும் காணப்பட்ட அரசியல் முறை கூடச் சிறுசிறு ஜனக் குழுக்களுடைய அரசியல் இயங்கு முறைக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. இப்படியான நாடோடி ஜனக்குழுக்கள் மிகவும் இலகுவான அதிக முன் னேற்றமடையாத அமைப்பொன்றை உடையனவாக இயங் கின. பல குடும்பம் கொண்ட ஒவ்வொரு ஜனக்குழுவிற்கும் தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். அவரை " ஸய்யித் அல்லது வீக் " என்றழைப்பர். இத்தலைவர் தானாகவே அதிகாரத்தைச் செலுத்தாது ஜனக்குழுவில் அடங்கிய குடும் பங்களின் தலைவர்களுடைய ஆலோசனைப்படி நடந்து கொண்ட நடுவராகவே காணப்பட்டார். அப்படியான குடும்பத்தலை வர் கொண்ட மஜ்லிஸ் " என்ற சபை அவருக்கு ஆலோ சனை அளிப்பதாக அமைந்தது. ஆகவே ஆறாம் நூற்றாண் டில் அரசியல் வளர்ச்சி பொறுத்தமட்டில் மிகவும் குறைந்த ஒரு நிலையிலே அராபிய மக்களுடைய இந்த ஜனக் குழு முறை காணப்பட்டது. அவ்வாறே அவர்களது வாழ்க்கை முறையும், வேறு அம்சங்களும் அதிக சிக்கல் இல்லாத முன் னேற்றமடையாத முறையிலேயே காணப்பட்டன. பொருளா தார அமைப்பும் மிக இலகுவான அமைப்பாகக் காணப்பட் டது. முடியுமானவரை ஓரளவு தானியமும், பயிர்வகைகளும் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலும் பழவகைகளே அவர்களு டைய முக்கிய பயிராக இருந்தது. அவற்றில் குறிப்பாக தற் போது அங்கு பிரபல்யம் பெற்றுள்ள பேரீச்சை இம்மக்களு டைய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றி ருந்தது. பெரும்பாலும் நாடோடி வாழ்க்கையில் ஈடுபட்ட காரணத்தால் மந்தை மேய்ப்பு இவர்களுடைய பொருளாதா ரத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. மந்தைகளை விடத் தரம்மிக்க குதிரைகளும் ஓரளவிற்கு வளர்க் கப்பட்டிருந்தாலும் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த அராபிய மக்களுக்கு முக்கிய மிருகமாக மந்தையோ குதிரையோ பயன்
5t

Page 32
படவில்லை. ஒட்டகமே அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றது. அராபிய வனாந்தரத்தின் தனிப்பட்ட சூழ்நிலையை இம்மிருகம் சமாளித்துக் கொண்டது. போக்கு வரத்திற்குக் குதிரையைப் போல் விரைவாகச் செல்லாமல் மணிக்கு எட்டு மைல் மட்டுமே செல்லக் கூடியதாக ஒட்டகம் காணப்பட்டாலும் குதிரையைப் போலல்லாது வனாந்தரச் சூழ்நிலையில் வாழக்கூடிய மிருகமாகக் காணப்பட்டது.
நாடோடிகளாக வாழ்ந்த பெரும்பாலான அராபியரு டன் ஒரு சிறுபாலான அராபியர் நிரந்தரமாகவே இத்தீப கற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்ட சிறு நகரங்களில் வர்த்த கத்தில் ஈடுபட்டவராக வாழ்க்கை நடத்தினர். அப்டபடியான சிறுநகரங்கள் அராபியத் தீபசற்பத்தின் தென்கரையோரத் துறைகளிலும், செங்கடலுக்கு அருகாமையில் தெற்கிலிருந்து வட அராபியா வரை காணப்பட்ட நீண்ட வர்த்தக மார்க் கங்களிலும் அமைந்திருந்தன. இப்படியான நகரத்தில் வாழ்ந்த அராபியரின் வாழ்க்கை முறை ஓரளவிற்கு நாடோடி வாழ்க் கையிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் ஓரளவிற்கு முன் னேற்றம் அடைந்தது என்று சொல்வதற்கில்லை. அவர்களுடய அரசியல், சமுக அமைப்பு பெரும்பாலும் ஏனைய அராபியப் பிரதேசங்களில் காணப்பட்ட அமைப்புக்களைப் போன்றே இருந்தன. பொருளாதார அமைப்பு மட்டும் வேறுபட்டுக் காணப்பட்டது. இப்படியாக வர்த்தக மார்க்கத்தில் இடையி டையே வர்த்தகர்கள் தங்கிச் செல்ல அமைக்கப்பட்டிருந்த சிறு நகரங்களுள் இரண்டாக மக்காவும், மதீனாவும் பெயர் பெற்றிருந்தன. ズ
மக்காநகரம் ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரா பிய ஜனக் குழுக்களுள் ஒன்றாகிய குறாஷ்" அல்லது குறைஷ் " என்று அழைக்கப்படும் குழுவின் ஆதிக்கத்திற்ெ உட்பட்டதாகக் காணப்பட்டது. இந்த ஜனக்குழு வர்த்தகத்தில் ஈடுபட்ட சில செல்வந்தக் குடும்பங்களின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. ஆறாம் நூற்றாண்டில் இக்குழு பிளவுபட்டு இரண்டு பெரும் பிரிவுகளாகக் காட்சியளித்தது.
1. " ஹஷீம் " என்பது ஒரு பிரிவு. இது ஹஷீக் என்ற வர்த்தகப் பிரபுவினுடைய தலைமையில் காணப்பட்டமை பால் அதற்குக் ஹஷீம் என்று கூறப்பட்டது. மற்றைய பிரிவு 11. இவருடைய இனத்தவனாகிய " உமய்யா " வுடைய தைை மையில் காணப்பட்டது. அதனை உமய்யாப்பிரிவு என அழைக்
52

கலாம். இந்த இருபிரிவுகளுக்கும் இடையில் தோன்றிய பூசல் களும் போட்டிகளும் இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றின் போக்கினைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிர்ணயித்த சம்ப வங்களாக அமைகின்றன. ஹவும் பிரிவில் ஹஷீக் தலைவ ருச்குப் பின்பாக அப்த் - அல் - முத்தலிப் என்ற தலைவர் அதிகாரம் பெற்றார். அவரது புத்திரனான அப்துல்லாவிற்கும் அமீனா என்ற பெண்ணிற்கும் புத்திராக ஆறாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் ( கி. பி. 569 ) பிறந்தவரே முகமது நபி ஆவார். பிறக்கும் முன்பே தந்தையை இழந்து, பிறந்து ஆறாவது வருடத்தில் தாயாரை இழந்து காணப்பட்ட முகம்மது நபி, முதலில் பாட்டனாராலும் பின்னர் மாமனாராலும் வளர்க்கப்பட்டார். இடைக்கால வரலாற்றில் மிக முக்கியமா னதாகக் கருதப்படும் இவரது வருகை அராபியாவில் இதுவரை காணப்பட்ட அரசியல், பொருளாதார சமூக, சமய நிலை மைகளை முற்றிலும் மாற்றியமைத்த ஒன்றாக அமைகின்றது. முகமதுநபி சாதாரண அராபியரைப் போன்று ஆரம்பகட்டத் தில் வாழ்க்கை நடாத்தி 25 வயதையடைந்த காலத்தில் ஒரு செல்வம் படைத்த வணிக விதவையை மணந்ததிலிருந்து வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. மணம் முடித்திருந்த காலத்தில் தனது நகரான மக்காவை விட்டு அடிக்கடி வெளி நாடுகளுக்குக் குறிப்பாக மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் பிறநகரங்களில் தாம் கொண்ட தொடர்புகளினால் மதம் சம்பந்தமான சீர்திருத்தங்கள் அவர் மனதில் எழுந்தி ருந்தன. வர்த்தக முக்கியத்துவம் பெற்ற நகரமாகிய மதீனா வில் அராபியரோடு வேறு இனத்தவர் குறிப்பாக யூதேயரும் கிறிஸ்தவரும் அடிக்ககு கூடிற்கொள்வது வழக்கமாயிருந்தது. அதனால் மதீனாவில் அராபியர் கடைப்பிடித்த பல தெய்வ வழிபாட்டுடன் தனித்தெய்வ வழிபாட்டு மதங்களாகிய யூதேய மும், கிறிஸ்தவமும் பக்கம் பக்கமாக ஓரளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருந்தன. இப்படியான தனித்த மதங்களுடைய செல்வாக்கு அதை அனுட்டித்தவரிடையே காணப்பட்டது. இவர்கள் மத்தியில் காணப்பட்ட சமுக ஒழுங்குகளும் முகமது நபியின் சிந்தனையை வளர்க்க உதவிய காரணிகள் என்று பொதுவாகக் கருதப் பட்டது.
அராபியரால் கடைப்பிடிக்கப்பட்ட கல்வழிபாட்டு முறையும், பல தெய்வவழிபாட்டு முறையும் யூதேய, கிறிஸ்தவ மதத்து டன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியதாகவே காணப்பட்டன. அத்துடன் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும்
58

Page 33
அராபியரிடை யேகாணப்பட்ட ஒற்றுமையின்மை பின்தங்கிய பழக்கவழக்கங்கள் ஆகியவை பிற இனத்தவருடைய சமூக ஒழுங்கு பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நிச்சயமாக நாக ரிகமடையாத ஒரு நிலையையே எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஆகவே இப்படியான பிற செல்வாக்கு ஏற்படத் தொடங்கிய காலகட்டத்தில் அராபியர் மத்தியில் ஒரு சீர்திருத்த வாதி தோன்ற வேண்டியது அவசியமாயிற்று. ' அத்துடன் சிறப்பாக யூதேயர் மத்தியில் காணப்பட்ட ஒரு சமய நம்பிக்கை அராபி யர் மத்தியிலும் ஓரளவிற்கு இடம் பெறத் தொடங்கியமையா லும் ஒரு சீர்திருத்தவாதியின் வருகையை வரவேற்கத்தக்கதாக ஒரு சில அராபியராவது காணப்பட்டனர்.
முகமது நபி தனது 40 வது வயதை அடையத் தொடங்கி யதும் முன்னரிலும் கூடுதலாக சமயத்தில் பற்றுக்கொண்டவ ராக மாறுவதைக் காணலாம். அப்படியாக மாறுகையில் தான் அவர் அடிக்கடி பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டார் என அறிகிறோம். மரபு வழி வநத வரலாற்றில் கி. பி. 610 இல் முதலாவது காட்சி தென்பட்டது என அறிகிறோம். இத்தரிச னங்களின் போது தனி ஒரு தெய்வமாக அல்லது தேவதூ தரே இவர் என்று அறிவிக்கட்பட்டது. அதன் விளைவாக முகமதுநபி வெளிப்படையாகவே " அல்லா "வின் தேவ தூத னாகத் தன்னை வெளிப்படுத்தி, அராபிய மக்களை ஒரு புதிய வழியில் நடத்திச் செல்லும் ஒரு பேறு பெற்றவராக இருப்பத னைக் காண்கிறோம். இப்புதிய வழிபாடு ஒரு தரப்பில் ஒரு சமய வழியாகவும் அதாவது தனித் தெய்வ வழிபாட்டு வழியா கவும், மறுதரப்பில் ஒரு சமூக வழியாகவும் அதாவது புதிய ஒழுக்க முறையைக் கடைப்பிடிக்கும் வழியாகவும் காணப்பட் டது. இப்படியாக அராபியர் மத்தியில் காணப்பட்ட பின்தங் கிய சமயக் கருத்துக்களை மட்டுமன்றி அவர்கள் மத்தியில் காணப்பட்ட சமூக ஒழுக்க முறையை மாற்றியமைக்க உருவாக் கப்பட்ட சமய முறை இயக்கம் எழுச்சியுற்ற போது இயல்பா கவே அதற்கெதிராகப் பல கஷ்டங்கள் காணப்பட்டன. மக்கா வில் முகமது நபி ஒரு வர்த்தக சமூகத்திலே அதுவும் குறிப் பாக பிறநாட்டு வர்த்தகர் பெருவருவாய் பெறும் வழிபாட்டுத் தலங்களை நடாத்திய வர்த்தகக் குடும்பங்களின் மத்தியில் விக்கிரக வழிபாட்டைக் கண்டனம் செய்து எல்லா ஜனக் குழுக்களுக்கும் பொதுவான ஒரு தெய்வ வழிபாட்டு முறைமை முன் வைத்த போது அதற்கெதிராகப் பல எதிர்ப்புக்கள் தோன்றின. அவருடைய ஜனக்குழுவான குறாஷ் இனத்தினரே
54

இந்த எதிர்ப்பின் முன்னணியில் நின்றனர். ஒவ்வொரு ஜனக் குழுவிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருந்தன. சமூகத்துறையில் ஏற்றத் தாழ்வை நீக்கித் தனது இல்லத்தில் ஏழைகளுக்கும் செல்வந்தருக்கும், அடிமைகளுக்கும், பிறருக்கும், கிறிஸ்தவர் களுக்கும்,அராபியர்களுக்கும் ஒரே முறையான வரவேற்பை சமத் வத்தைமுகமதுநபிகொடுத்து இநத சமூக வேறுபாட்டிற் 5 கதிரான இயக்கத்தை ஆரம்பித்த போது அதை வெறுத்த மக்கா அரா பியக் குடும்பங்கள் பல அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன.
இந்தக் கட்டத்தில் குறாஷ் ஜனக்குழுவில் ஏற்பட்ட பிளவு குறிப்பாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஹஷீம் பிரிவினர் முக மது நபிக்குச் சார்பாகவும் உமய்யா, ஷியா பிரிவினர் எதிரா கவும் செயற்பட்டனர். இரு பிரிவினரிடையேயும் ஏற்பட்ட கடும் போராட்டத்தின் விளைவாக உமய்யாப் பிரிவினர் வெற்றி பெற்று மக்காவில் ஆதிக்கம் செலுத்தினர். அதனால் மக்கா விலிருந்து முகமது நபியும் அவரது சகாக்களும் மதீனா விற்குச் சென்று அங்கு தமது ஆதிக்கத்தைத் தாபிக்க வேண் டியதாயிற்று. அங்குதான் இஸ்லாத்தின் முதலாவது பள்ளி வாசல் அமைக்கப்பட்டது. இவ்வாறு மதீனாவில் உறுதியாக இடம் பெற்ற இஸ்லாம் படிப்படியாக ஏனைய அராபியப் பிர தேசங்களிலே பரவத் தொடங்கியது. அப்படி இவ்வியக்கம் பர விய காலத்தில் சமயத்துக்கும், சமயப்பற்றற்ற விவகாரங்களுக் குமிடையில் வேறுபாடு காட்டப்படாது இருந்தது. எல்லாத் துறைகளும் இந்த இயக்கத்துள் அடக்கப்பட்டு அவை என்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிவகைகளே முகமதுநபி காட்டி வந்தார். அதில் ஜனக் குழுக்கள் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள், போர் போன்றன முக்கிய இடம் பெற்றன. இவ் வாறு இஸ்லாம் தோற்றம் பெற்ற பொழுது மதம் சம்பந்தமான தனிப்பட்ட இயக்கமாக அன்றி சமுக, அரசியல் விவகாரங் களைச் சேர்க்கும் பொதுமதமாக முகமது நபி தலைமையிலே பரவத் தொடங்கியது.
மதீனாவில் சமயசம்பந்தமற்ற நடைமுறை விவகாரங்கள் பலவற்றைக் குறிப்பாக - சமூக அமைப்பு. அன்றாடம் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள், அராபிய ஜனக்குழுக்களி டையே இருக்க வேண்டிய இராஜதந்திரத் தொடர்புகள் - ஆகிய வற்றில் முகமது நபி கவனம் செலுத்தி இஸ்லாமியர் கடைப் பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் வெளிப்படுத்தினர். உண்மை யில் இக்காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் இவரே முன்
55

Page 34
னணியில் நின்று படைத்தலைவராகிப் போராடி வருவதைக் காண்கின்றோம். மதீனாவில் தங்கிய 10 ஆண்டுக்காலத்தில் 65 போரில் 27 போரைத் தானே முன்னின்று நடத்தினார் என்பதை அறிகிறோம். இவ்வாறு வெறும் போதனையுடன் மட்டும் நில்லாது போராட்டங்களில் தானே முன்னின்று பங்கு பற்றி இந்த இயக்கத்தைத் துரிதமாக அராபியா முழுவதும் பரப்பப்பாடுபட்டார். கி. பி. 630 இல் மக்கா கைப்பற்றப்பட்டு இஸ்லாத்தின் முக்கிய நகரமாயிற்று. பல காலம் வழிபாட்டில் பிரசித்தி பெற்ற விக்கிரக வழிபாடு ஒழிக்கப்பட்டது. அதன் பின் மிக விரைவில் கி. பி. 630 - 32 இல் முழு அராபியாவும் இப்புதிய இயக்கத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்தப்பட்டது.
இவற்றை எல்லாம் மிகச் சுருக்கமாகக் கூறினால் மிகவும் பின் தங்கிய சமூக ஒழுங்கு நிலையில் காணப்பட்டவர்களாய்" தம்மிடையே ஒருவித ஒற்றுமையுமில்லாது சிறுசிறு குழுக்களா கப் பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் அழிப்பதில் ஈடுபட்ட வராய்க் காணப்பட்ட ஒரு இனத்தவருக்கு உயர்ந்த சமயதத்து வம் ஒழுக்கமுறையைக் கொடுத்ததோடு நில்லாது ஓர் ஒற்று மைப்பட்ட நாட்டை அராபியாவில் உருவாக்கி அராபியரை முதன்முதலில் ஒற்றுமையுடைய இனமாக மாற்றியது முகமது நபியின் ஒப்பற்ற சாதனையாகும். ஏற்செனவே "செமிற்றிக்" இன மக்கள் மத்தியில் நிலவிய மதங்களாகிய யூதேய, கிறிஸ்தவ மதங்களின் கருத்துக்களையும், பாரசீகர் மத்தியில் நிலவிய ஸொறாஸ்திரிய மதக்கருத்துக்களையும அடிப்படையாகப் பெற் றுத், தெளிவான புதிய மதம் ஒன்றைக் கட்டி எழுப்பினார். அத்துடன் வீரத்திற்கு மதிப்புக் கொடுக்கும் முறை, இனப்பெரு மையை ஏற்படுத்தியமை இவற்றை ஆயுதங்களாகக் கொண்டு ஒரு நூற்றாண்டு காலத்தில் பெரும் பேரரசையும், சிறந்த நாக ரிகத்தையும் அமைக்க உதவியதுடன் உலகின் குறிப்பிடத்தக்க பாகத்தில் இன்று வரை வலிமைபொருந்திய சக்தியாக இஸ்லாம் நிலைக்க ஆற்றிய முகமதின் தொண்டு இடைக்கால வரலாற் நில் பிற சாதனைகளுடன் ஒப்பிட முடியாத ஒன்றாக அமைந் துள்ளது.
இவர்களது போதனைகள் அடங்கிய நூலான "திருக்குர்ஆன்" பிற மத நூல்களைப் போலன்றிப் பெரும் பாலும் தனி மனித சிருஷ்டியாக அமைகின்றது. அதில் போதிக்கப்பட்டுள்ள மதம் தனித்தெய்வ வழிபாட்டையும் விக்கிரக வழிபாட்டு எதிர்ப் பையும் பிரதான அம்சங்களாகக் கொண்டு வேறு மதங்களுடன்
56

ஒப்பிடக் கூடியதாக இருந்தாலும், அதிலிடம் பெறுபவவை வேறு மதங்களில் காணப்படாத திவ்விய முறைகளாகக் காணப்படுகின் றன. மிக எளிதான மதமாக அமைந்ததால் பின் தங்கியிருந்த அரா பியர் இலகுவில் அம்மதத்தைப் பின்பற்றவும் தங்கள் பழைய மூட நம்பிக்கை பலவற்றை அகற்றி, அடிமை முறைச் சமுதா யத்திலிருந்து பெருமளவு விடுக்கப்பட்டவர்களாக ஒரு புதிய சமு தாயத்தை அமைக்கவும் இப் போதனைகள் உதவின. குர்ஆன் அமைப்பைப் பொறுத்தமட்டில் யூதேயர்களது நூலான 'தல்முத் உடன் ஒத்துள்ளது. அமைப்பில் மட்டுமன்றி உட்பொருளிலும் இரண்டிடையேயும் பெரும் ஒற்றுமையைக் காணலாம். குர்ஆன் போதிக்கும் அடிப்படைத்தத்துவங்களான தனித் தெய்வ நம் பிக்கை, இறுதிநாள் தீர்ப்பு, சுவர்க்கம், நரகம் பற்றிய கோட் பாடுகள் யூதேய மதத்திலும் காணப்படும் கோட்பாடுகளாகவே விளங்குகின்றன.
முகமது நபி இறந்த ஒருசில ஆண்டுகளுள் அராபியர் படைகள் பல திசைகளிலும் வெற்றிகளை ஈட்டிச் சென்றன. கி. பி. ஏழாம் நூற்றாண்டு முடிவடைய முன்னர் அவர்கள் பெற்ற அதிசயிக்கத்தக்க வெற்றிகளினால் இடைக்கால வர லாற்றில் மிகப் பெரிய பேரரசு தாபிக்கப் பட்டிருந்தது. முக மது இறந்த பின்னர் மதீனாவில் அவரது வாரிசாக அவர் ஆர பித்த நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ள அபூபக்கர் நியமனம் பெற்றார். இவரை உதவி அதிகாரி எனப் பொருள் படும் கலிபா" எனும் பெயரால் அழைத்தனர். இது பின்னர் நிரந்தரமாக அராபியப் பேரரசின் ஆட்சியாளர்களது பட்ட மாக இடம் பெற்றது. அபூபக்கர் செய்த ஆட்சியின் ஆரம் பக்கட்டத்தில் அராபிய இனங்கள் சில மதீனாவின் ஆதிக் கத்தினின்று விலகிச் சென்ற காரணத்தால் முதலில் அவ்வினங் களை மீண்டும் அடிப்படுத்தி அராபிய ஒற்றுமையை ஏற் படுத்திக்கொள்ளப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவை நடைபெற்ற காலங்களில் அராபியாவிற்கு அயலில் இருந்த பிரதேசங்களையும் கைப்பற்றுவதற்கான படையெடுப்புக்கள் கலீபாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டன. இதன் விளைவாக முத வில் எகிப்து, சிரியா, ஈராக் பிரதேசங்கள் கைப்பற்றப்பட் டன. இவ்வாறாக ஆரம்பித்த ஆதிக்கப்படர்ச்சியே இச் செழிப் புப் பிரதேசங்களுக்கப்பால் அராபிய ஆதிக்கத்தைப் பரப்ப உதவியது. ஆரம்பக்கட்டத்தில் இவ்வாதிக்க வளர்ச்சி சமயசம் பந்தமான வளர்ச்சியாகவன்றி ஓர் இனத்தின் அரசியல் ஆதிக்க வளர்ச்சியாகக் காணப்பட்டதெனல் வேண்டும். அக்
ତି?

Page 35
கட்டத்தில் சமயம் வகித்த முக்கியத்துவம் அராபிய இனத்தை ஒற்றுமைப்படுத்தவும் ஒரு தனி ஆணையின் கீழ் ஒழுங்கான படைகளாக அராபியப் படைகள் தாக்குதலை நடத்தவும் முக்கிய கருவியாகப் பங்கு கொண்டமையே ஆகும். அயற் பிரதேசங்களைக் கைப்பற்ற முற்பட்ட அராபியர் அடைந்த வெற்றிகள் அப்பிரதேசங்களுக்கு அப்பாலும் தம் படையெடுப் புக்களை நடத்த ஒரு தூண்டு கோலாக அமைந்தது. இதனால் ஐரோப்பியப் பிரதேசங்களையும் தாண்டி மேற்கே அத்திலாந் திக் சமுத்திரம் வரை அராபியப்படைகள் முன்னேறின. எட் டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பிரதேசத்தில் அரா பியப்படைகளினால் பெரு வெற்றிகள் ஈட்டப்பட்டன. கி. பி. 715 இல் ஸ்பானியா கைப்பற்றப்பட்டது. எட்டாம் நூற்றாண் டின் நடுவில் அராபியரது ஆதிக்கம் கிழக்கே இந்தியாவின் சிந்து மாகாணம் முதல் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரக் கரை வரை பரந்து காணப்பட்டது.
அராபியப் படைகளது கைப்பற்றல்கள் அனைத்தும் வெறு மனே அரசியல் ஆதிக்க சம்பவங்களாக அமையவில்லை ஏனெனில் அவற்றுடன் அராபியர் இடப் பெயர்ச்சியும் இஸ் லாத்தின் பரப்பல் போன்றனவும் கலந்திருந்தன. கி. பி. 661750 வரை இப்பிரதேசங்களே ஆட்சிபுரிந்த கலிபா அரசு உமய் பத் கலிபா அரசு என்றும் அதன் பின் கி. பி. 750-1058 வரை ஆட்சி புரிந்த கலிபா அரசு அப்பாஸித் கலிபா அரசு என் றும் பெயர் பெறுகின்றன. வேறு நாகரீகங்களின் செல்வாக் கிற்கு உட்பட்டிருந்த பல பிரதேசங்களை உள்ளடக்கிய இப் பேரரசில் அடுத்து வரும் ஐந்து நூற்றாண்டுகளாகப் பொதுப் பண்புகள் சில கொண்ட ஒரு புதிய நாகரிகம் தோன்றி வளர்ந் திது. அந்நாகரிகத்தைத் தான் பொதுப்பட இஸ்லாமிய நாகரிகம் என்றும் சில சந்தர்ப்பங்களில் அராபிய நாகரிகம் என்று அழைக்கின்றோம். அராபிய நாகரிகம் என்பது கூறிச் செல்வதே பொருத்தமானதாகும். இஸ்லாமிய நாகரிகம் எனும் போது கி. பி. 7-12 ஆம் நூற்றாண்டிற்கிடையில் இந்த அரா பியர் பேரரசில் வளர்ச்சி பெற்ற நாகரிகத்தை மட்டுமன்றி பிற்பட்ட காலத்தில் வேறு பிரதேசங்களிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியின் விளைவாக வளர்ந்த நாகரிகங்களயுைம் கருது கின்றோம்.
இக்காலப்பகுதியில் எழுச்சிபெற்ற புதிய வலிமை வாய்ந்த அராபிய நாகரிகம் தனிப்பட அராபியரின் சொந்தப்படைப் பெனக் கூறிவிட முடியாது. அராபியத்தீபகற்பத்திலிருந்து இஸ்
58
心铃“三链>

லாம் எவ்வெத்திசைகளில் பரவிக் கொண்டதோ அத்திசைகளில் எல்லாம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு செழிப்புற்றிருந்த நாக ரிகங்களின் முக்கிய பண்புகள் அராபியப் பண்பாட்டு அம்சங்களு டன் கலந்து இப்புதிய நாகரிகத்தைத் தோற்றுவிக்க உதவியிருந் தன. அவ்வாறாகப் பல்வகை நாகரிகப் பண்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட நாகரிகமாக அராபிய நாகரிகத்தைக் கொண் டாலும் ஒரு முக்கிய விடயம் கவனித்தற்குரியதாகும் அதாவது முற்பட்ட நாகரிகங்களின் பண்புகளை அப்படியே பெற்று, அவையனைத்தையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் அராபிய நாகரி கத்தினைத் தோற்றுவித்தனர் எனக் கொண்டால் அது பிழையான தாகும். அங்குதான் அராபிய நாகரிகத்தின் உண்மையான தனித்தன்மையைக் காண்கின்றோம். பழைய நாகரிகப்பண்பு களும், அராபிய நாகரிக அம்சங்களும் ஒன்று கலக்கப்பட்ட போது அவை ஒரு புதிய வகையில் மாற்றப்பட்டு முற்பட்ட நாகரிகங்களின் தன்மைகளில் இருந்து வேறுபடும் தன்மைகளு டன் ஒருநாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. அப்படித் தோற்று விக்கப்பட்ட நாகரிகம் அராபியருக்கே சொந்தமான இரண்டு அம்சங்களினால் அரபு மொழியினாலும் இஸ்லாம் மதத்தினா லும் ஒன்றிணைக்கப்பட்டுப் பிற நாகரிகங்களிலிருந்து வேறாக் கப்பட்டன.
மேற்காசியசவில் பாரசீகம் தவிர்ந்த இடங்களில் பேசப்படும் முக்கிய மொழிகளைப் போலவே அரபுமொழியும் "ஸெமிற்றிக்" மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் ஸெமிற்றிக் மொழி களுள் எல்லாம் செழிப்பு வாய்ந்த மொழியாக அரபு கருதப்படு கின்றது. அத்தகைய செழிப்பு அல்லது மொழிச்சிறப்பு இஸ் லாத்தின் எழுச்சிக்கு முன்பே பின்தங்கிய அரபு மரபைப் பொறுத் தவரை காணப்பட்டது. அத்தகைய செழிப்பு வாய்ந்த மொழி ஏழாம் நூற்றாண்டின் பின்னர் தோன்றிய புதிய சூழ்நிலையில் அராபிய நாகரீக எழுச்சியில் மிக முக்கியமான இடத்தைப் பெறு கின்றது. அம்முக்கியத்துவம் இரு வகையானது. 1. அது பேரரசு மொழியாக ஒரு பரந்த பிரதேசத்தில் எழுச்சி பெற்றது. அதற்கேற்ப வளர்ச்சி திடீரென்று ஏற்பட்ட்து. 1. இதே காலப் பகுதியில் ஒரு பண்பாட்டு மொழியாகக் குறிப்பாக"இஸ்லாமிய இலக்கியம், விஞ்ஞானம், தத்துவ்ம் ஆகியவற்றை எழுதிக் கொள் ளவும், கற்றுக் கொள்ளவும் அராபியா மட்டுமன்றிப் பேரரசு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பண்பாட்டு மொழியாக தனி அந்தஸ்தைப் பெறுகிறது. இவ்விருவகைகளில் பெற்ற முக்கியத்து வம் ஐந்து நூற்றாண்டு காலத்தில் அதன் வளர்ச்சிக்கும் பேரரசில் ஒா ஒற்றுமைப்பண்பை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவியது.
59

Page 36
அராபியப்படையெடுப்புக்கள் மூலம் கைப்பற்றப்பட்டபிர ܢ தேசங்களில் எல்லாம் முதலில் அரபுமொழி ஆட்சி மொழியா கப் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து அப் பகுதிகளில் எல் லாம் கல்வி மொழியாக அல்லது பண்பாட்டு மொழியாகப் பயன் படத் தொடங்கியது. இவ்வாறு புதிய தேவைகளுக் கேற்ப அரபு மொழியைப் பயன்படுத்தியபோது அது ஒரு புது வழி பில் அபிவிருத்தி அடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வபிவிருத்தி இரண்டு வழிகளில் ஏற்பட்டது. 1. பிறமுன்னேற்றமடைந்த மொழிகளில் இருந்து சொற்கள்,
சொற்றொடர்களைப் பெறுவதன் மூலமும். 11. பழைய அரபுச் சொற்களின் அடியிலிருந்து புதிய சொற்
களை ஆக்கிக் கொள்வதன் மூலமும்
இரண்டு வழிகளிலும் மொழியில் அபிவிருத்தியை ஏற் படுத்திய போது அராபியர் காட்டிய தனித்தன்மை மொழிக் குத் தனிச்சிறப்பைப் பெற்றுக் கொடுத்தது. பல புதிய துறை களில் அரபைத் திடீரெனப் பயன்படுத்தத் தொடங்கியதும் அத்துறைகளில் முன்னர் பயன்படுத்தத் தொடங்கிய முன் னேற்றமடைந்த மொழிகளது சொற்கள் அரபில் இடம் பெற்றன. நிர்வாகத்துறையில் பாரசீகச் சொற்கள் பைசாந்தியர் பயன்படுத் திய கிரேக்க நிர்வாகக் கலைச் சொற்கள் அரபு மொழியில் இடம் பெற்றன. தத்துவத்துறையில் கிரேக்கச் சொற்களுடன் ஹீப்ரு மொழிச்சொற்களும் இடம் பெற்றன. விஞ்ஞானத்துறை பில் விஞ்ஞானிகளால் ஆக்கப்பட்ட கலைச் சொற்கள் அரபில் ஏற்கப்பட்டன. இவ்வாறாக ஒவ்வொரு துறையிலும் தேவைப்பட்ட சொற்கள் கடன் வாங்கப்பட்டாலும், அவற்றை அப்படியே ஏற்று அரபு மொழிப்பண்புகளையே மாற்றாது அரபுமொழிப் பண்பு களுக்கு ஏற்ப அச்சொற்களை மாற்றியமை அராபியரது சிறப் பினைக் காட்டும் அம்சமாகும். இவ்வாறே முன்னர் குறுகிய சில தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட அரபுச் சொற்கள் இப் பேரரசுக்காலத்தில் பரந்த கருத்துடைய சொற்களாக மாற் றப்பட்டு அவற்றின் அடிகளிலிருந்து புதிய அரபுச் சொற்கள் உரு வாக்கப்பட்டு அரபின் சொல்வளம் பெருக்கப்பட்ட போது அராபி யர் காட்டிய தனித்தன்மை மீண்டும் சிறப்பை பெறுகின்றது.
இவ்வாறு வளர்ந்த அரபு மொழி கைப்பற்றப்பட்ட பிரதேசங் களில் பயன்படுத்தப்பட்டபோது அரசியல் ஒற்றுமை ஏற்படுத்தும் மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும் செயற்பட்டது. அராபியப் பேரரசு வீழ்ச்சி பெற்ற பின்பும் கூட நீண்ட காலமாக
6O

இப்பிரதேசங்களில்அரபுமொழிஒருபண்பாட்டுமொழியாகவிளங்கி வந்தது. அரபுமொழியை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த ஒரு கருவியாக அராபியர் பயன்படுத்தியதிலும் அவர்களது தனித்தன் மையைக் சாணலாம். வரலாற்றில் கைப்பற்றுவோர் கைப்பற்றப் பட்டவரிடையே நிரந்தரமான, திட்டவட்டமான வேறுபாடுகள் ஒற்றுமைக்குத்தடையாகச் செயற்படுவதனை நாம் காணலாம்" இங்கு கைப்பற்றுவோராகிய அராபியரால் கைப்பற்றிய பிரதே' சங்களில் கைப்பற்றப்பட்டோராக வாழ்ந்த மக்கள் அராபிய மயமாக்கப்படுவதனைக்காண்கின்றோம் அதற்கு இஸ்லாம் மட்டும் ஒரு கருவியாக இருக்கவில்லை. அரபுமொழியும் சம உதவி கொண்ட காரணியாகவே இருந்தது. கைப்பற்றப்பட்டோர் தம் நாளாந்த வாழ்க்கையில் அரபு மொழியைப் பயன்படுத்துவோராக மாறவும், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் கல்வி நிலையங்கள் யாவற்றிலும் பண்பாட்டு மொழியாக அரபு ஏற்கப்படுவதற்கும் மொழி பயன்படுத்தப்பட்டது. இதனால் பழைய பண்பாட்டு மொழிகளான கிரேக்கம், லத்தீன், சிரிய மொழி, கொப்திக், அரமைக் ஆகிய மொழிகள் செல்வாக்குப் பெற்றிருந்த இடங்களில் எல்லாம் அரபு மொழி பயன்படுத்தப்பட்டது. இஸ்லாத்தை ஏற்று, அரபைப் பேசுவோராகக் கைப்பற்றப்பட்டோர் மாறிய தும் அவர்களுக்கும் கைப்பற்றியோருக்கும் இடையிலிருந்த வேறு பாடுகள் மறைந்தன. கைப்பற்றியோர், கைப்பற்றப்பட்டோர் ஒருபொது இனத்தைச் சேர்ந்தவர்களாயினர். அரபு மொழியின் இத்தகைய வளர்ச்சியினால் பிற இஸ்லாமிய மொழிகள் அரபி லிருந்து பெருந்தொகையான சொற்களைப் பெற்று அதன் செல்' வாக்கிற்கு உட்பட்டதாகப் பேரரசுக் காலத்திலும் பின்னரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. அவ்வாறு வளர்ச்சி பெற்ற மொழிகளுள் இஸ்லாமியர் கால பாரசீகம், இஸ்லாமியர் காலத் துருககி மொழி, உருது மொழி இப்பேரரசு காலத்திற்கு பின்பு தோன்றிய ஸ்வாஹ"லி, மலாய் மொழி, 9 U L- எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகளாக வளர்ச்சி அடைந்தன. பொதுப்பட நிரந்தர விளைவுகளைப் பிற மொழிகளில் ஏற்படுத்தக்கூடியளவு அரபுமொழி செல்வாக்கினைப் பெற்றிருந்தது. .
மொழி சம்பந்தமாக இலக்கியத்துறையில் அராபியர் ஈட்டிய சாதனைகளுள் மிகச் சிறந்ததாகச் செய்யுள் துறை அமைகின்றது. எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் அப்பாஸித் வம்ச ஆட்சிக் காலத்தில் பெருந்தொகையான அரபுக் கவிஞர் தோன்றி அரபுச் செய்யுள் இலக்கியத்தை வளர்ப்பதில் பெரும்
6鱼

Page 37
பங்காற்றினர். வேறெந்தப் பேரரசிலும் இது போன்ற குறுகிய காலத்துள் செய்யுள் வளர்ச்சி ஏற்பட்டதெனல் முடியாது. செய் யுள் இலக்கியத்துறையில் மட்டுமே இஸ்லாத்தின் காலததிற்கு முற்பட்ட அரபுமொழி மரபுகள் தனியிடம் பெற்றுள்ளன.
ஏழாம் நூற்றாண்டின் பிற்பாகத்திலும் எட்டாம் நூற்றாண் டின் முற்பாதியிலும் சிந்து மாகாணம் தொட்டு ஸ்பானியா வரை அராபிய ஆதிக்க வளர்ச்சி ஏற்பட்டபொழுது அராபிய மக்கள் இயல்பாகவே வேறு நாகரிகமடைந்த இனத்தவரைச் சந்தித்தது மட்டுமன்றி அவர்களுடன் கூடி வாழும் சந்தர்ப்பங் களையும் பெற்றனர். பொதுவாக நாகரிக முன்னேற்றமடைந்த இனம் ஒன்று வேறிடங்களைக் கைப்பற்றி அங்கு தம் அரசிய லில் ஆதிக்கத்தைப் பரப்பும்போது, கைப்பற்றல் நடாத்துகின்ற இனத்தினுடைய பண்பாட்டு அம்சங்கள் கைப்பற்றப்பட்டோர் மத்தியில் பரவுவதனைக் காணலாம். அவ்வாறில்லாது கைப் பற்றலை நடாத்துகின்ற இனமானது நாகரிகத் துறையில் பின் தங்கிய இனமாக இருந்தபோதும் கைப்பற்றப்பட்ட இனங்களு டைய பண்பாட்டு அம்சங்களை கைப்பற்றியோர் மேற்கொள் வதை இங்கு காணலாம். அப்படியான சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே வரலாற்றில் இடம் பெறுகின்றது.
அராபியரால் கைப்பற்றப்பட்டிருந்த இரு பெரும் பேரரசு களான பைசாந்திய, பாரசீகப் பேரரசுகளும் விஞ்ஞானத்துறை யில் அராபியரைவிட ஏற்கெனவே முன்னேற்றமடைந்திருந்தன. சிறப்பாக பைசாந்தியப் பேரரசு கிரேக்க, உரோமர்களால் வளர்க்கப்பட்ட விஞ்ஞானத்துறையின் வாரிசாக இடம் பெற் றது. அதனால் பைசாந்தியப் பேரரசின் பிற்பட்ட காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்காவிட்டாலும், ஏற்கெனவே கிரேக்கரால் வளர்க்கப்பட்ட விஞ்ஞானத்தைக் குறிப்பாகக் கிரேக்க உரோமரால் வளர்க்கப்பட்ட விஞ்ஞான நூல்களை இப் பேரரசு பேணிப் பாதுகாத்தது. அதே போலத்தான் பார சீகப் பேரரசின் நகரங்களிலும் பழைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் பேணப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஆகவே ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அராபியர் தம் நாட்டிற்கு / வெளியே படையெடுப்புக்களை நடாத்தியபோது கிரேக்க விஞ் ஞான நூல்களும் அவற்றின் சிரிய மொழிபெயர்ப்புக்களும் அச் கால பிரசித்திபெற்ற நகர நூல்நிலையங்களில் பெருந்தொகை யாகப் பேணப்பட்டிருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை
62.

எகிப்திய நகரமான அலெக்சாந்திரியா, அந்தியொக், பெய்ரூட், பைசாற்தியப் பேரரசின் தலைநகரமான கொன்ஸ்தாந்தி நோப்பிள் ஆகியன. இவற்றில் இருந்த கிறிஸ்தவ. பாரசீக, சேர்பிய கல்லூரிகளால் இந்நூல்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதிர்ஷ்டவசமாகப் படையெடுப்புக்கள் நடாத்தப்பட்ட காலங் களில் இந்தக் கல்லூரிகளோ, நூல்நிலையங்களோ அராபிய ரால் அழிக்கப்படாது விடப்பட்டது மட்டுமன்றி அவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டுப் புதிய அராபிய இஸ்லாமியப் பேரரசின் வளர்ச்சிக்கு அவை பயன்படுத்தப்பட்டன. இதனால் அராபியப்படையெடுப்புக்கள் நடைபெற்றபோது கைப்பற்றப் பட்ட இடங்களில் இருந்த நூலகங்கள், கலைக்கழகங்கள் அரா பியர், இஸ்லாமியர் அல்லாத மக்களுடைய நிறுவனமாக இருந் தாலும் அவற்றை ஆதரிப்பதற்கு இஸ்லாமியக் கலிபாக்கள் முன் வருவதைக் காண்கின்றோம், ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய உமய்யத் கலிபாக்களின் ஆதரவுடன் அராபிய அறி ஞர் பலர் இந்த நிறுவனங்களிலே பேணப்பட்டிருந்த கிரேக்க சிரிய மொழி நூல்களைக் கற்றுக்கொள்வதறகு முயற்சிப்பதைக் காண்கின்றோம். முதலில் அராபிய அறிஞர் கிரேக்க மொழி பையும், சிரிய மொழியையும் கற்றுத் தாமே இந்நூல்களின் பொருளை விளங்கிக்கொள்ள முயற்சித்தனர். அப்பொழுது அவற்றில் அடங்கியிருந்த விஞ்ஞான, தத்துவக் கருத்துக்களால்
கவரப்பட்டவர்களாய் அவற்றை அரபு மொழிக்குப் பெயர்ப்
பதற்கு முயற்சிகளை ஆரம்பித்தனர். இதனால் விரைவில் கிரேக்க, சிரிய நூல்களை அரபு மொழிக்குப் பெயர்க்கப்படு வதற்கான இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக் கத்தை வெற்றிகரமாக நடாத்துவதற்கு, அராபிய அறிஞர் மட்டுமன்றி உண்மையில் கூடுதலாக அராபியரல்லாத இஸ்லாமி யரல்லாத கிறிஸ்தவ அறிஞர்களும், யூதேய அறிஞர்களும் உதவு வதைக் காணலாம். ஆரம்பத்தில் உமய்யத் வம்சத்தவர்களும், பின்வந்த அப்பாளித் வம்சத்தவர்களும் இவ்வாறு பிறமொழி களிலிருந்து அரபு மொழிக்குக் கிரேக்கருடைய விஞ்ஞான, தத்துவ நூல்களை மொழி பெயர்க்கப் பெரிதும் முக்கியத்துவம் , கொடுத்தனர். குறிப்பாக மருத்துவ, கணிதத்துறைகளில் இயற்றப்பட்டிருந்த நூல்களை அராபிய மொழிக்கு பெயர்ப் பதற்கு தனிப்பட்ட ஆதரவு நல்கி வந்தனர். கி. பி. 830 இல் பக்தாத் நகரில் அல் - மமுன் என்ற கலிபா ஒரு கலைக்களஞ் சியத்தை நிறுவி இத்தகைய முயற்சிகள் நடைபெற உதவினார். பய்த் - அல் - ஹிக்மாஹ் என்பதே அக்கலைக்களஞ்சியமாகும்.
63.

Page 38
(அறிவு இல்லம்) அத்துடன் அதனை விஞ்ஞான ஆராய்ச்சி நிலையமாக, அவதான நிலையமாக, பொதுநூலகமாக இயங்கு வதற்கு உதவி புரிந்தார். அந்த நிறுவனத்திலே மொழி பெயர்ப்பு வேலையை நடாத்துவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர் குழு ஒன்று அல் - மமூனால் நியமிக்கப்பட்டு அரசாங்க திறை சேரியிலிருந்து அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டது. இப் படியாக ஆட்சியாளரே இத்தகைய முயற்சிக்குப் பேருதவி புரிந்து கைப்பற்றப்பட்டவர்களுடைய அறிவைத் தடையின்றித் தாம் பெற்றுக் கொள்வதற்காக இயக்கம் ஒன்றை நாடாத் தியதன் விளைவாக அராபியர் மததியில் விஞ்ஞானம், கலை ஆகிய துறைகளில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு "மலர்ச் சிக் காலம்" என்ற ஒரு காலம் ஆரம்பமாகியது.
ஏறக்குறைய இரண்டு நூற்றண்டு சளாக (700 - 900) இத் தகைய மொழிபெயர்ப்புக்களிலே கவனம் செலுத்தப்பட்டது. இந்நடவடிக்கை அரபு மொழிக்கும் பெரும் வளத்தைக் கொடுத் தன. இக்காலப்பகுதியில் மொழி பெயர்ப்பு இயக்கத்தில் ஈடுபட் 1.வர்களுள் இரு அறிஞர்கள் கட்டாயமாகக் குறிப் படத்தக்கவர் 5ளாவர். அவர்கள் அல் - மமூனால் ( 813 - 853 ) பக்தாத்தில் தாபிக்கப்பட்ட நிறுவனத்தில் பணி புரிந்தனர். ஒருவர் ஹ"னைன். இப்ன் - இஷாக் இவரின் மகன் இஉஷாக் - இப்ன் -ஹ"னைன், (கி.பி . 806 - 877 நெஸ்டோரியக் கிறிஸ்தவர் ) மற்றவர் இவ்விருவரும் பெளதீகம், மருத்துவம், அரசியல் போன்ற பல் வகைப்பட்ட துறைகளில் கிரேக்க மொழியில எழுதப்பட்டிருந்த நூல்களைத் தாமே மொழிபெயர்த்தும், தமக்குக் கீழ் பணி புரிந்த பிற மொழி பெயர்ப்பாளர்கள் மொழி பெயர்க்க வும் உதவினர். இவ்வாறு நடாத்தப்பட்ட மொழிபெயர்ப்பு இயக்கத்தின் விளைவாக கி.பி. 850 இல் கிரேக்க மொழியிலே பிரசித்தி பெற்ற படைப்புக்களான கணிதம், வானியல், மருத்து வம் ஆகிய துறைகளில் பெரும்பாலான கிரேக்க நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இம்மொழி பெயர்ப்புக்களுக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இவை அராபிய விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவியதுமட்டுமல்லாது பிற்பட்ட காலத்தில் குறிப் பாக மறுமலர்ச்சி, மதச்சீர்திருத்தக் காலத்தில் கிரேக்க மூல நூல்கள் பல அழிந்துபோன நிலையில் அவற்றை அரபு மொழி பிலாவது பெறுவதற்கும், இம் மொழி பெயர்ப்புக்கள், உதவின. இவ்வாறாக கிரேக்க மொழியிலிருந்து அரபு மொழிக்கு நூல் கள் மொழிபெயர்க்கப்பட்டதும் சிறப்பாக எகிப்தில் கிரேக்க
64、

மொழியில் வளர்ந்த கல்வி அரபு மொழியில் தொடர்ந்தும் வளர்க்கப்பட்டது. பைசாந்திய நகரங்களிலும் மேற்கே ஸ்பானி யாவிலும் (கோடோவா ) அரபுமொழி மூலம் தொடர்ந்தும் பழைய கல்வி வளர்க்கப்பட்டது. இவ்வாறு பெருமளவில் அரர் பியர் பெற்றுக்கொண்ட விஞ்ஞான அறிவு மேற்கில் கிரேக்கர் வளர்த்த அறிவுத்துறையாக இருந்தாலும் ஓரளவிற்குக் கிழக் கில் இந்தியர்கள் வளர்த்திருந்த விஞ்ஞான் அறிவிலும் ஒரு முக்கியமான பாகம் எடுக்கப்பட்டது எட்டாம் நூற்றாண்டில் அதாவது கிரேக்க மொழிபெயர்ப்பு துரிதமாக நடைபெற்ற காலத்தில் இந்திய சமஸ்கிருத நூல்களை அரபு மொழிக்கு மொழிபெயர்க்கும் இயக்கமும் நடாத்தப்பட்டது. கி.பி.733 இல் அல் - மன்ஸுர் என்ற இன்னோரு கலீபா சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த "சித்தாந்தம்’ எனப்பட்ட வானசாத்திர நூல்களை அரபு மொழியில் பெயர்க்க ஊக்குவித்தார். இந்த வானியல் சார்ந்த சமஸ்கிருத நூல்களுடன் குறிப்பிடத்தக் களவு கணிதவியல் சார்ந்த அறிவும் இந்தியரிடமிருந்து அராபி யரால் பெறப்பட்டது.
மேற்காசியாவை நடுநிலையமாக வைத்து இத்தகைய விஞ் ஞான மொழி பெயர்ப்புக்களை அராபியர் நடாத்தியதன் விளை வாக ஒரு தரப்பில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் விஞ் ஞானத்திலும் மறுதரப்பில் ஐரோப்பாவில் அதே துறையில் ஏற்பட்டிருந்த அபிவிருத்திகளையும் தொடர்புபடுத்தி விஞ்ஞான உலகிற்கு ஒர் ஒற்றுமையை அளிப்பதில் அராபியர் முனைந்த னர். இத்தகைய முயற்சிகளின் விளைவாக கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே முதன் முதலாக அரபு மொழி யில் கணிதவியல் நூல்கள் எழுத்தன. அவ்வாறாக கி. மு. 825 இல் இந்திய எண்முறை பற்றி ஒரு அரபு நூல் எழுதப்பட்டது. இப்படியாகப் பிற நாகரிகங்களில் இருந்து கணிதத்துறையிலே அராபியர் பெற்றுக்கொண்ட அறிவினை அடுத்து வரும் நூற் றாண்டுகளிலே திட்டவட்டமான முறையிலே வளர்த்துத் தற் கால கணிதவியலின் வளர்ச்சிக்கு வழிவகுத்தனர். தற்கால கணி. தத்துறையில் முக்கிய பிரிவாக இடம் பெறும் அட்சரகணிதம் (Algebra) அராபியராலே பெரிதும் அபிவிருத்தி செய்யப்பட்ட 9ወj துறையாகும். இத்துறையிலே மிக விரிவாக எட் டாம், ஒன்பதாம் நூற்றாண்டில் அராபிய கணிதவியலாளர் ஆராய்ச்சி நடத்தினர். இத்தகைய அறிஞர்களுள் தலைசிறந்தவ ராக முகம்மத் - இப்ன் மூஸா விளங்குகின்றார் (கி. பி. 780 -859)
65

Page 39
இவர் மத்திய காலத்தில் கணிதவியல் துறையில் மேதைகளாகக் கருதப்பட்டவர்களுள் மிகச் சிறந்தவராக வரலாற்றில் இடம் பெறுகின்றார். இவர்எழுதிய இந்திய எண்முறைவானியல் துறை யில் புதிய கண்டுபிடிப்புக்கள், திரிகோணகணிதவாய்ப்பாடு தொடர்பான நூல், புவியியல் துறையில் 69 அறிஞருடன் சேர்ந்து புவியியல் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியமை, தொகையியல் சமன்பாடுகணிப்பு, என்பனவற்றிற்காகப் புகழ் பெறுகின்றார். அட்சர கணிதத் துறையிலே இவர் எழுதிய *தொகையியல் சமன்பாடு கணிப்பு" என்றநூலின் மொழி பெயர்ப்பு பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பியப் பல் கலைக்கழகங்களிலே பிரதான பாடநூல்களில் ஒன்றாகப் பயன் படுத்தப்பட்டு வந்தது. இப்படியான கண்டுபிடிப்புக்களின் விளை வாக அட்சர கணிதம் "அல்ஜிபிரா (A. eேbra) அதன் பேராசிரியர் அல் -ஜபர் (A Labar) என்பவர் பெயரால் ஐரோப் டாவிற்கு அளிக்கப்பட்டது.
ஒன்பதாம் நூற்றாண்டில் கேத்திரகணிதக்துறையில் குறிப் பிடத்தக்க அபிவிருத்திகள் அராபிய அறிஞரால் ஏற்படுத்தப் பட்டன. மிகப் பிரசித்தி பெற்ற கேத்திர கணித அறிஞராக துபித் - இப்ன் - குர்ரா (கி. பி. 826 - 901 ) விளங்குகின்றார். இது போல அபிவிருத்தி ஏற்படுத்தப்பட்ட இன்னோர் துறை பாக வானியல் காணப்படுகின்றது. இத்துறையில் அராபிய கலிபாக்கள் ஒரு தனி அக்கறை காட்டி அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருப்பதனைக் காணலாம். அல் - மமூன் என்ற கலிபா பல வானியலாளரை நியமித்து, வானியல் ரீதியாக அவதானிப்புக்களை நடாத்தி அவற்றைப் பதிவு செய்து வைகக வேண்டிய வசதிகளையும் செய்தார். குறிப்பாகச் சூரி சனில் காணப்பட்ட புள்ளிகளைக் கண்டுபிடிக்க இந்தக் கலிபா பெரிதும் உதவியிருந்தார். வானியில் அவதானிப்பின் மூலமும், அனுபவத்தின் மூலமும் நிரூபிக்கப்படாத எதையும் உண்மை யென ஏற்றுக்கொள்ள அராபிய வானியலாளர் மறுத்தனர் இத்துறையில் அராபியர் ஏற்படுத்திய அபிவிருத்திகளுக்கு இந்திய
விஞ்ஞானிகளும், வானியல் நூல்களும் குறிப்பிடத் தக்களவில் உதவியுள்ளன. விஞ்ஞானரீதியான அவதானிப்புக்கள் மூலம் அவர்கள் வானியல் சம்பந்தமாகக் கண்டுபிடித்த அம்சங்கள் பல தற்காலம்வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்களாக இருப் பது அவர்களின் அவதானிப்பின் சிறப்பினை எடுத்துக்காட்டு வதாகும். வானியல் அவதானிப்புகளுக்குத் தேவைப்பட்ட நுட்ப
66

மான சில உபகரணங்களைக் கூடப் பெருஞ்செலவில் லிபாக் கள் ஆக்கி விஞ்ஞானிகளுக்குக் கொடுத்தனர். இவர்களால் உருவாக்கப்பட்ட உபகரணங்களுள் Astrolobe என்பதும் ஒன்றாகும். அது பத தாம் நூற்றாண்டின் பின்னராக ஐரோப் பிய வானியல் விஞ்ஞானிகளால் பயன்படுத்தத் தொடங்கி பதினேழாம் நூற்றாண்டுவரை வானியல் அவதானிப்புக்களுக்கு முக்கிய உபகரணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறே புவியியல் துறையின் ஒரு பிரிவாகிய படவரை வியல் துறையில் ஏற்பட்ட அபிவிருத்திகள் குறிப்பிடத்தக்கன. ஒன்பதாம் நுாற்றாண்டில் உலகில் சில அறியப்பட்ட பாகங் களில் பட்ங்களே வரைந்து கொள்வதற்கும் அராபியப் புவியி யலாளர் காட்டிய சிறப்புக்கள் கவனிக்கத் தக்கவை. ஏற்கெ னவே கிரேக்கரால் இத்துறையில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத் தியை அடிப்படையாக வைத்து மேலும் அத்துறையின் வளர்ச் சிக்கு அராபியர் உதவினர். இத்துறையின் வளர்ச்சியின் விளை வாக இதனுடன் சம்பந்தப்பட்ட இேைனார் சிறுதுறை இக் காலத்தில் வளர்ச்சியுறுவதைக் காணலாம். அதுவே பிரயாண வர்ணனை எனப்படும். இக்காலப்பகுதியில் மேற்காசியாவுக்கு அப்பால் தென்னாசியாவையும் வேறு பல பாகங்களையும் அரா பியப் பிரயாணிகள் வர்ணித்து பிரயாண வர்ணனைகள் எழுதி பிருந்தமை புவியியல் வளர்ச்சிக்கு மேலும் உதவியது. அத் தகைய நுால்களுள் கிழக்கில் சீனா சென்று வந்த சுலைமானின் பிரயாணம் பற்றி எடுத்துக் கூறும் நுால் முக்கியமானது. இதே போல மற்றோர் அராபிய அறிஞர் இத்துறையிலும் பிற துறை களிலும் சிறப்புப் பெற்றுக் காணப்பட்டார். அல் - பிரூணி ( 973 - 1037) என்பவரே அவர் ஆவார். இவர் புவியியல், தத்துவசாத்திரம், வரலாறு, பிரயாணம், வானியல், பெளதீகம், இலக்கியம், மொழியியல், கணிதவியல் ஆகிய துறைகளில் முக் கியமான பெரும் நூால்களையும் மூல நூால்களையும் எழுதிச் சிறப்பைப் பெற்றுள்ளார். அவருடைய பெரு நூல்களுள் ஒன்று கி. பி. 1030 இல் அவர் எழுதிய "இந்திய வரலாறு" எனப் பொருள்படும் "தரிக் - அல் - ஹிறிந்த்” ஆகும். 60 அத்தியாயங் களைக் கொண்ட இந்த நீண்ட நூலில் 42 அத்தியாயங்கள் இந்திய வானியலைப் பற்றியும் 11 இந்திய மதங்களைப் பற்றி யும் மிகுதி இந்திய வரலாறு பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இவருடைய சாதனைகள் வியக்கத்தக்க ஒன்றாக இருப்பது சமஸ்கிருத நூல்களை அரபுமொழியில் மொழி பெயர்த்தமையும்
67

Page 40
பிற மொழி நூல்களைக் குறிப்பாக லத்தீன், கிரேக்க நூல் களைச் சமஸ்கிருதத்திற்கும் மொழிபெயர்த்தமையே. தொலமி புடைய நூலையும் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார். கேத்திர கணிதத்தில் அவரது தேற்றங்கள் உண்டு. வானியல் சம்பந்தமாகவும் கலை களஞ்சியங்களை ஆக்கினார்.
தூய விஞ்ஞானத்துறைகள் சிலவற்றில் அராபிய விஞ்ஞானி களுடைய தொண்டுகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் ஒன்று இரசாயனவியல் ஆகும். Chemistry என்ற ஆங்கிலச் சொல் Al-Chemy என்ற அரபுச் சொலலில் இருந்து பெறப்பட்ட சொல் லாகும். இரசாயனவியல் ஐரோப்பிய விஞ்ஞான வரலாற்றில் அராபியரால் வளர்க்கப்பட்டு ஐரோப்பியருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு துறை எனலாம். கிரேக்கர் இத்துறை சம்பந்தமான சில கருத்துக்களைத் தெரிந்திருந்தாலும் அவை திட்டவட்டமான கருத்தாக, விஞ்ஞான அடிப்படையில் வளர்ச்சி பெறாத ஒன் நாக அராபியர் காலம் வரை காணப்பட்டது. ஆனால் கிரேக் கரை விட வேறோர் இனத்தவர் இத்துறையில் சில குறிப்பிடத் தக்க அபிவிருத்திகளைக் கண்டிருந்தனர். அவர்களே எகிப்தியர் ஆவார். இவர்கள் இரச வாதம் என்னும் துறையை ஒரளவுக்கு வளர்த்திருந்தனர். இவர்களிடமிருந்து ஓரளவு அறிவைப் பெற்று அராபியர் தம் காலத்தில் மேலும்வளர்த்துப் பிற்பட்ட காலத் தில் தனித்துறையாக இரசாயனவியல் வளர்வதற்கு உதவினர். இவ்வாறாக இரசவாதத்தில் நடாத்தப்பட்ட பரிசோதனைகள் தற்செயலாகப் பல கண்டுபிடிப்புக்களுக்கு வழிவகுத்துத் திறம்பட்ட விஞ்ஞானமுறைகளுக்கு அடிகோலியது. எட்டாம்நூற்றாண்டில் வாழ்ந்த ஜபீர் - இப்ன் - ஹய்யான் இரசாயனவியல் தொடர் பான பல நூல்களை எழுதினர். இவை லத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டு ஐரோப்பிய விஞ்ஞானிகளால் பல காலம் பயன் படுத்தப்பட்டது. பொளதீகத்துறை பொறுத்து அல்-ஹசன் என்ற அரபு விஞ்ஞானி சிறப்பிடம் பெறுகின்றார். ( கி. பி . 965 - 1039)
அராபிய நாகரிகத்திலே மருத்துவத்துறை தனியான முக் கியத்துவத்தைப் பெற்றது. ' கிழக்கைரோப்பாவில் கிறிஸ்தவம் பரவியதன் விளைவாக மருத்துவக்கல்வி பெருமளவு பாதிப்புக் குள்ளாகியது. பைசாந்தியப் பேரரசு எகிப்து போன்ற இடங்க ளிெலும் பழமை போற்றும் கிறிஸ்தவப் பிரிவுகள் ஆதிக்கம் செலுத் தியமையால் கிரேக்க மருத்துவம் அவர்களால் ஆதரிக்கப்படாது புறக்கணிக்கப்பட்டது. இருந்தும் குறிப்பிடத்தக்களவு கிரேக்க
68,

மருத்துவ நூல்கள் பைசாந்திய பேரரசிலும் எகிப்திலுமுள்ள பெரு நூலகங்களில் பேணப்பட்டிருந்தமையால் திரும்பவும் அந்த் அறிவு புத்துயிர் பெறுவதற்கு வாய்ப்புக்கள் காணப்பட்டன. அராபியருக்கு முன்பாக இம்மருத்துவ அறிவினை வளர்க்கின்ற முயற்சி ஐந்தாம் நூற்றாண்டில் புதிதாகத் தோற்றம் பெற்ற நெஸ்டோரிய கிறிஸ்தவ அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டது. இவர்களைப் பைசாந்தியப் பேரரசின் வைதீகக் கிறிஸ்தவர்கள், வெறுத்தமையால் கி. பி. ஆறாம் நூற்றாண்டுகளில் அங்கிருந்து வெளியேறி பாரசீகப் பேரரசு சென்று அவர்களால் ஆதரிக்கப் பட்டுத் இத்துறையினை மேலும் வளர்க்கலாயினர். இப்படி வந்து சேர்ந்த மருத்துவ அறிஞர் பலர் அராபியரின் எழுச்சிக்கு, முன்பாகப் பாரசீகத்தில் ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவ நிலை யத்தை ஜ"த்தேஷாட்பூரில் ஆரம்பித்து வளர்த்தனர். பாரசீகப் பேரரசின் முழு ஆகரவின் கீழ் இம் மருத்தவ நிலையத்தில் கிரேக்க மருத்துவ நூல்கள் பேணப்பட்டு, மொழிபெயர்க்கப் பட்டு, அத்துடன் நில்லாது கிழக்கே இந்தியாவிற்கும் அறிஞர் அனுப்பப்பட்டு சமஸ்கிருத மருத்துவ நூல்கள் தருவிக்கப்பட்டு, அவையும் மொழி பெயர்க்கப்பட்டு, இரு தரப்பட்ட அறிவும் கலந்த மருத்துவம் இங்கு வளர ஆரம்பித்கது. ஒரளவிற்கு சீனத் தொடர்பும் இங்கு வளர்ந்த மருத்துவத்தை வளமுடைய தாக்கியதெனலாம். இவ்வாறு மருத்துவ அறிவு வளரத் தொடங் கிய கட்டத்திலே அராபியப்படையெடுப்புக்களின் விளைவாக இம் மருத்துவ நிலையங்கள் அராபிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அராபியப்படையெடுப்புக்களின் போது இந்நிலையங்கள் அழிக்கப்படாது மேலும் பாதுகாக்கப்பட்டன: ஆகவே நெஸ்டோரியக் கிறிஸ்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகள் அராபியரால் மேலும் வளர்க்கப்பட்டு எட்டாம் : பதினோராம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் குறிப் பிடத்தக்க வளர்ச்சி மருத்துவத்தின் பல் வேறு துறைகளிலும் ஏற்படுவதைக் காண்கின்றோம்.
அராபியரால் சில சமயக் காரணங்களுக்காக வைத்தியத் துறையில் மருத்துவம் மட்டுமே சத்திரசிகிச்சையை விடக் கூடு தலாக வளர்க்கப்பட்டது. பொதுப்பட நோக்கினால் அராபிய ஆதிக்கத்தின் கீழ் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்து, புதிய மருத்துவ நூல்களை எழுதுவதோடு மட்டும் இத்துறையின் அபிவிருத்தி நின்றுவிடவில்லை. நடைமுறையில் சமூகத்தின் பல் வேறு துறைகளும் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்வி பயன்படுத்தப்பட்டது. அவ் வகையில் பிற்பட்ட காலத்தில்
69

Page 41
ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்ட மருத்துவ சாலைகள், மருத்துவக்கடைகள் முதலியவை முதன்முதலாக இஸ்லாமிய உலகத்தில தான் பரவலாக அமைக்கப்பட்டன என்று கூறலாம். அத்துடன் இப்படியான நிறுவனங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டு இயங்க வேண்டும் என்பதைப் பற்றியும் நூல்கள் பல எழுதப் பட்டன. பொதுப்பட இக்காலப் பகுதயில் பேரரசின் பல்வேறு இடங்களிலும் பிரசித்தி பெற்ற 34 மருத்துவசாலைகள் அமைக் கப்பட்டன. அவற்றில் பிரசித்தி பெற்றது கி. பி. 706 இல் டமஸ்கஸில் காணப்பட்டது. பொதுப்பட வைத்தியராகக் கட மையாற்ற விரும்புவோர் சட்டப்படியாக நடாத்தப்பட்ட மருத் துவப் பரீட்சை ஒன்றை எடுத்து அதிலே தேர்ச்சி பெற்று அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பட்டம் பெற்ற பின்னரே வைத் தியராகக் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டனர். இப்படியான நடைமுறை சம்பந்தமான பழக்கங்கள் பிற்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் மேலும் சீர் பெற்றுத் தற்காலத்தில் ஏற்கப் பட்டதாக இருப்பதனைக் காணலாம். மருத்துவத்துறையில் சிறப்புத்துறைகள் யேலும் அபிவிருத்தி அடையச் செய்து அவை ஒவ்வொன்று பற்றியும் சில தராதர நூல்களையும் அராபிய மருத்துவர் எழுதிவைத்தனர். பிற்காலத்தில் இவை எல்லாம் லற்றின் மொழியிலே பெயர்க்கப்பட்டு ஐரோப்பியரால் பயன் படுத்தப்பட்டன.
கிரேக்க மொழி பெயர்ப்புக்கள் செய்யப்பட்ட ஆரம்பகட் டத்தில் அரபு மொழியில் மருத்துவ நூல்களை எழுதியவர்களுள் பிரசித்தி பெற்ற அறிஞராக முன்னர் குறிப்பிடப்பட்ட ஹ"னைன். இப்ன் - இஷாக் விளங்குகின்றார். இவர் எழுதிய பிரசித்தி பெற்ற மருத்துவ நூல் ‘கண்பற்றிய 10 ஆராய்ச்சி நூல்கள் என்பதாகும். விழியியலில் மிகப் பழைய turtlist6)rts இது கருதப்படுகின்றது. விழியியல் தொடர்பாக இவருக்குப் பின் வந்த அறிஞர் பலர் மேலும் ஆராய்ச்சி நூல் களை எழுதியுள்ளனர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அலி " இப்ன் - இஸா ஆவார். இவர் எழுதிய விழியியல் சம்பந்தமான கைநூலொன்று ஐரோப்பிய மருத்துவ விஞ்ஞானிகளால் பதி னைந்தாம் நூற்றாண்டு வரை ஒருபாடநூலாகப் பயன்படுத்தப் பட்டது. இப்படியாகத் தொண்டாற்றிய இஸ்லாமிய மருத்துவ அறிஞருள் இருவர் பொதுப்பட ஐரோப்பிய மருத்துவ வர வாற்றில் பெரிய இடத்தைப் பெற்றிருந்தனர். இவர்களில் ஒரு வர் முகமத் - அல் - ராஸி ( கி. பி. 844 - 924) என்பவர். இவர் மொத்தமாக 131 நூல்களை எழுதியதுடன் அதில்
70,

அரைப்பங்கிற்கு அதிகமானவை மருத்துவம் சம்பந்தமானவை யாகும். இவற்றுள் எல்லாம் மிகப் பிரசித்தி பெற்றது எனக் கூறக்கூடியது விரிவான நூல் என்று பொருள்படும். "கிதாப்அல் - ஹாவி " ஆகும். இருபது பாகங்களைக் கொண்ட இந் நூலிலே அக்காலம வரை கிரேக்க, பாரசீக, இந்திய மருத்து வத்துறைகளிலே ஏற்பட்டிருந்த அபிவிருத்திகளைப் பற்றிய அறி வும், புதிதாக அராபியரால் சேர்த்துக் கொள்ளப்பட்ட மருத் துவ அறிவும் அடங்கியுள்ளது. இது பின்னர் லத்தீனுக்குப் பெயர்க்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய மருத்துவ நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அடிக்கடி பயன்படுத் தப்பட்ட பாடநூலாகவும் ஏனையவற்றை விட மதிக்கப்பட்ட மருத்துவ நூலாகவும், விளங்கியது. இதனை விட அம்மை நோய் சம்பந்தமான ஆராய்ச்சி இரசாயனத்துறையில் அவரால் எழுதப்பட்ட இரகசியங்கள் அடங்கிய நூல் - கிதாப் - அல் - அஸ்ரார் என்பன சிறப்பை பெற்றன. பின்னையது லத்தீனில் பெயர்க்கப்பட்டு பதினான்காம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய இரசாயன விஞ்ஞானிகளின் பிரதான மூலாதார நூலாகப் பயன்படுத்தப்பட்டது.
அல் - ராஸியின் பின்னர் அவிஸென்னா ( 980 - 1036) என்பவர் மருத்துவ விஞ்ஞானத்தில் சிறப்புப் பெற்று விளங் கின்றார். பல்துறையிலும் தேர்ச்சி உடையவராக விளங்கி னாலும் அவிஸென்னா இயற்றிய நூல்களுள் மிகப் பிரசித்தி பெற்ற நூல்களாகக் குறிப்பிடத்தக்கவை.
. நோய் மாற்றவியல் சம்பந்தமான நூல், கிதாப் - அல்
ஹிவா l, மருந்து பற்றிய தொகைநூல் கனன் - வில் - திப். இந்
நூலின் லத்தீன் மொழி பெயர்ப்பு பதினேழாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய மருத்துவக் கழகங்களில் பிரதான பாட நூலாகப் பயன்படுத்தப்பட்டது. இது பதினெட்டாம் நூற் றாண்டில் 30 ஆணடுகளில் 15 பதிப்புப் பெற்று எபிரேய மொழியிலும் பெயர்க்கப்பட்டது. இப்படியாக ஏழாம் - பதி னோராம் நூற்றாண்டுகளுக்கு இடையில் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடாத்தி அரபு மொழியில் பல நூல்களைஇயற்றியிருந்தனர். அவைகளுள் சில அராபிய நூலாக மட்டுமல்லாது பொதுப்பட மத்திய கால வரலாற்றில் சில துறைகளைப் பொறுத்த மட்டில் தனிசசிறப்பைப் பெறுபவை களாகவும் காணப்பட்டன. மருந்தியல் துறையில் அவிஸென்னா
7 :

Page 42
வும், நோய் மாற்றல் துறையில் அல் - ராஸியும், புவியியல் துறையில் அல் - பிரூணியும். கண்நோய் சம்பந்தமான துறை, யில் அல்- ஹைதாப்பும், இரசாயனத்துறையில் அல் - ஜபகரும் தலை சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
தினோராம் நூற்றாண்டின் பின்னர் அராபியப் பேரர சின் வரலாற்றிலே சமய, அரசியல் துறை எளிலே ஏற்பட்ட சில மாற்றங்கள் அராபியர் வளர்த்த விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும் ஐரோப்பிய நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ப் பதற்கு உதவின. சமயத்துறையில் தோன்றிய சில குறுகிய மனப்போக்குகள் குறிப்பாகச் சகிப்பின்மையை வளர்த்து மறை முகமாகப் பரந்த அறிவுத்துறைகளாகிய விஞ்ஞான, மருத்து வத்துறைகளின் வளர்ச்சியைத் தடை பண்ணியது. அதே நேரததில் அரசியல் துறையில் அராபியப் பேரரசின் ஐரோப் பியப் பிரதேசங்களான ஸ்பெயின், இத்தாலி, சிசிலி என்பன இழக்கப்பட்டு மீண்டும் ஐரோப்பியர் ஆட்சிக்குட்பட்டன. இத்தகைய மாற்றங்களினால் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்பாகப் பல்வேறு துறைகளிலும் நாம் கண்ட துரிதமான வளர்ச்சி இல்லாமல் போகின்றது. இது சிறப்பாக விஞ்ஞா னத்துறைகளிலே காணக்கூடிய ஒரு போக்காகும். கலை, இலக் கியத்துறைகளைப் பொறுத்த மட்டில் அவ்வாறு தளர்ச்சி ஏற்பட்டதென்று கூறுவதற்கில்லை. இழக்கப்பட்ட ஐரோப்பியப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த தலை சிறந்த கல்விக்கழ ாங்களில் சில பதினோராம் நூற்றாண்டின் பின்பாக ஐரோப் பிய ஆதிக்கத்திற்கு உட்பட்டன. இவற்றுள் சிறப்பாக கொன்ஸ்தாந்திதோபிள், ரொலிடோ, கார்டோவா போன்ற இடங்களில் அமைந்திருந்த கழகங்கள் கிறிஸ்தவர் ஆதிக்கத் திற்கு உட்பட்டன. அதிஷ்டவசமாக இந்நிறுவனங்கள் அழிக் கப்படாது அவையும் அவற்றில் கடமையாற்றிய கிறிஸ்தவ ரல்லாத ஐரோப்பிய அதிகாரிகளும், கிறிஸ்தவ அதிகாரிக ளால் ஆதரிக்கப்பட்டு அங்கு அரபு மொழியில் காணப்பட்ட பெருக்தொகையான விஞ்ஞான, மருத்துவ நூல்கள் ஐரோப்பிய அறிஞர்களுக்கு பயன் படக்கூடிய முறையிலே லத்தீன் மொழிக்கும் பெயர்க்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் வாறு கிறிஸ்தவ உலகிற்குத் திரும்பவும் இந்த விஞ்ஞான அறிவு கொடுக்கப்பட்டதும் அராபியருடைய முக்கியமான பங்கு பெரு மளவிற்கு முற்றுப் பெற்றதெனலாம்.
அராபிய நாகரிகத்தின் கலைகளைப் பற்றிக் குறிப்பிடும்
போது மேற்கூறிய துறைகளில் பெற்ற சித்திகளைப் போன்று பெறவில்லை என்றே கூறல் வேண்டும். பொதுவாக அராபிய
72

நாகரிகத்தைப் பற்றி ஆராய்பவர்கள் கொண்டுள்ள ஒருத்ப் பபிப்பிராயம் அராபியர் கிரேக்க, உரோமரால் வளர்க்கப்பட்ட' அழகியல் அம்சங்களைப் புறக்கணித்தனர் என்பதாகும். ஆனிால் அதனைப் பூரணமாக ஏற்றுக்கொள்வதற்கில்லை. கலை 'விர் லாற்றை நோக்குகையில் கலைத்துறையில் அராபியர், கிர்ேக் கர், உரோமரி வளர்த்த சில மரபுகளைத் தொடர்ந்து வளர்த்' திருந்தனர் என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றுள் சில கலைமரபுகள் வளம் பொருந்திய கலைமரபுகளாக அரா பியரால் மாற்றப்பட்டிருந்தன. ஆனால் கலைவள்ர்ச்சியை பொறுத்தமட்டில் இஸ்லாத்தின் சமயக் கருத்துக்களினால் ஏற் படுத்தப்பட்ட சில முக்கியமான கட்டுப்பாடுகளுக்குள் அடங் கியவர்களாகக் கலைஞர்கள் செயலாற்ற வேண்டியிருந்தது அதாவது மனிதர்களையும், மிருகங்களையும் ஒவியமாக்வோ சிற்பமாகவோ சித்திரிப்பது சம்பந்தமாக விதிக்கப்பட்டிருந்த தடையாகும். இதனால் பொதுப்படப் பார்க்கும் இடத்து இந்தியக்கலைத்துறையிலோ அல்லது கிரேக்க, உரோம்: பைசாந்திங்க் கலைத்துறையிலோ காணப்படுகின்ற வெளிப் படையான கலை அம்சங்கள் சில அராபியர் கலைகளிலே இடம் பெற்ற பல மரபுகளை உள்ளடக்கியவையாகத் தோற் றம் பெற்றுப் பின்னர் ஒரு தனிப்பட்ட போக்கையுடைய கலைகளாக வளர்க்கப்பட்டன. அவ்வாறு பல்வேறு பிரதேசங் களிலிருந்து கலைஞர்கள் வருவிக்கப்பட்டு இக்கலை மரபுகள் வளர்க்கப்பட்டன. இப்படியாகப் பிற பிரதேசங்களிலிருந்து மரபுகள் பெறப்பட்டன என்று கூறினாலும் அராபியர் பிறர் வளர்த்தகலைகளை அப்படியே பின்பற்றினர் என்று கூறு வதற்கில்லை. பிறர் வாயிலாகப் பெறப்பட்ட புதிய மரபுகள் Hதிய வகையிலே வளர்க்கப்பட்டு, இஸ்லாமிய உலகம் முழு வதும் அமைக்கப்பட்ட பள்ளி வாசல்களை ஆராய்ந்தால் படிப்படியாக எவ்வாறு இக்கலைகள் வளர்ச்சியடைந்து பரந்த பிரதேசத்தில் படையெடுப்புக் காலங்களில் பரப்பப்பட்டது என்பதனை உணரலாம்.
இவ்வகையில் இஸ்லாமிய மதக் Gasr unrG ஒன்று விதித்த தடை காரணமாகப் பிற பிரதேசங்களில் வளர்ந்தது போன்று கட்டிடக்கலையோ, சிற்பக்கலையோ, ஓவியக்கலையோ இஸ்லாமியப் பிரதேசங்களில் வளர முடியாது போயிற்று எனினும் இஸ்லாமியக்கலைகள் தமக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாட்டிற்குள் அடங்கித் தம்மால் காட்டக்கூடிய திறமையை
78

Page 43
அரபு எழுத்துக் கோலங்கள் மூலம் கவர்ச்சிகரமான முறை பில் காட்டியிருப்பதனைக் காணலாம் பொதுப்படக் கட்டிடக் கலை மட்டுமே சிறப்புப் பெறத்தக்க வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இவர்கள் அமைத்த கட்டிடங்களில் உட்புற அலங்காரங்களில் அதிக கவனம் பலகணி அமைப்பு முறை, அடித்தள அமைப்பு முறை ஆகியவற்றிலே பல வகைப்பட்ட வர்ணங்கள் சித்திரங்கள் சேர்க்கப்பட்டுக் கலைகளின் திறமை வெளிப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட முறையிலே ஒவியக்கலை வளர்ச்சி பெறாது தடைப்பட்டிருந்தது.இதே போலத்தான் இசைத் துறையும் பிறநாகரிகங்களில் வளர்ச்சியடைந்திருந்தது போன்று அராபிய நாகரிகத்தில் வளர்ச்சி அடையாதிருந்தது. உருவங் களைச் சித்திரிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை போன்று இசைக்கு விதிக்கப்படாதிருந்தாலும் பொதுப்பட இஸ்லாமியத் தலைவர் கள் இசைத்துறையில் ஈடுபடுபவர்களைக் கண்டிப்பவர்களாக இருந்ததால் பல நூற்றாண்டுகளாக இத்துறை அதிகம் அபிவி ருத்தி அடையாதிருந்தது. ロ
ን”4

V ஐரோப்பிய நிலமானிய முறைமை
"னிய முறை அல்லது மானியமுறைச் சமுதாயம் என் பது மேற்கு ஐரோப்பாவிலே கரோவிங்கியப் பேரரசின் தளர்ச், சியுடன் உருவாகிய ஒரு அரசியல், சமூக அமைப்பாகும். இது, ஒன்பதாம் நூற்றாண்டளவிலே தோன்றி, பத்தாம், பதினொ, ராம், பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளிலே உச்ச நிலைய்ை அடைந்து பதின்மூன்றாம் நூற்றாண்டிலே முடியரசுகளின் எழுச் சியோடு சீர்குலைந்தது. எனினும் தற்காலம் வரை இந்த அமைப்பில் சில அம்சங்கள் தொடர்ந்து சமுதாயத்தில் இருந்து வந்துள்ளன. புவியியல் ரீதியாக நோக்கும் போது, மானிய முறை கரோலிங்கியப் பேரரசின் இடத்திலே தோன்றிய அரசுகளிலே காணப்பட்டது. அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, தென் இத்தாலி, சிசிலி ஆகிய இடங்களிலும், சிலுவை யுத்தத்தில் ஈடுபட்டவர் களால் சிரியாவிலும் பரப்பப்பட்டுக் காணப்பட்டது. அரசியல் ரீதியாக நோக்கினால் மானிய முறை என்பதில் அரசு ஒன்றின் அதிகாரங்களைப் பிரித்து நிலப்பிரபுக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத் தமையைக் காணலாம். சமூக ரீதியாக நோக்கினால் நிலப் பிர புக்களிலே குடியானவர் தங்கி நிற்கும் ஓர் அமைப்பையும் இரா ணுவ சேவைக்காகவும், பிற சேவைகளுக்காகவும் நிலச் சொத் துக்களை வழங்கும் முறையையும் காணலாம்.
சமுதாயம் என்று கூறும் போது பொதுவாகப் பெருமளவிற் குத் தனித்தியங்கும் அல்லது பொருளாதாரத்தில் தன்னிறை வுள்ள ஒரு மக்கட் கூட்டத்தினரைக் கருதுகின்றது. அம்மக்கட் கூட்டத்தினர் ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்பட்டவராகத் தமக்கென பண்பாடு, பிரதேசத்தை உடையவராக இருக்கும் போதுதான் தனிச் சமுதாயமாகின்றனர். அப்படியான சமுதா யம் பல தனி மனிதர்களைக் கொண்டதாயிருந்தாலும் தனி மனிதர்களின் குறுகிய காலத்தைவிட நீண்டகாலப் பகுதியில் தொடர்ந்து இயங்கும். அச்சமுதாயம் பல மனிதர்களிடையே ஏற்படுகின்ற பொருளாதாரத் தொடர்புகளின் அடிப்படையிலே அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பல மனிதர் தமக்கு ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒன்று கூடி ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபடும்போது, ஏற்படுகின்ற

Page 44
தொடர்புகள் இச் சமுதாயத்தின் அடிப்படையாக அமைகின்றன. Feudalism என்று ஆங்கிலத்திலே வழங்கப்படும் மானிய முறை Feudum என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். அம்மொழியில் அங்கீகரிக்கப்பட்ட நிலச் சொந்தக்காரனிட மிருந்து இராணுவ சேவைக்காகப் பெறப்பட்ட நிலத்தை வைத் திருப்பவனை இது குறிப்பிடும். மானிய முறைச் சமுதாயம் சிறப்பாக வரலாற்றிலே அடிமை முறைச் சமுதாயத்திற்குப் பின்பும் முதலாளித்துவ சமுதாயத்திற்கு முன்பும் இடம் பெற்ற ஒரு சமுதாயத்தையே குறிப்பிடுகின்றது. இத்தகைய சமுதாய 0ானது பூரணத்துவமுடைய ஒரு சமுதாயமாக ஐரோப்பாவிலே இயங்கியது. உயர் வர்க்க ஆட்சியில் பிற விடங்களில் இதிலி ருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டதாக இதையொத்த சமுதாய அமைப்பு காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய மானிய முறைச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் அதன் அடிப்படை அம்சங்களாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.
1. நிலப்பிரபுக்களுக்கும் விவசாய குடிமக்களுக்கும் இடை
யில் ஏற்பட்ட சில குறிப்பிடத்தக்க தொடர்புகள். அவை வேறு சமுதாயத்தில் காணப்படவில்லை. இதற் குப் பிரத்தியேகமானவை. ii. மன்னனுடைய அல்லது மத்திய அரசினுடைய நேரடி நிர்வாகத்திற்குப் பதிலாக அந்தந்த நிலப்பிரபுவின் பிரதேசத்தில் வழக்கிலிருந்த தனிநபர் நிர்வாக முறை அல்லது ஆட்சி முறை அதாவது, ப்ொது மக் களாகக் காணப்பட்டவர் நேராக மன்னரால் ஆளப் படாது அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுவினால் ஆளப்பட்டது. இது வும் பிறசமுதாயங்களிலே காணப்படவில்லை. iர். இச்சமுதாயத்திலே காணப்பட்ட நிலமானிய முறை குறிப்பிட்ட சில சேவைகளுக்காக அந்தச் சேவைகள் iv. கொடுக்கப்படும் காலம் வரை நிலங்களை மானிய மாக வழங்கும் முறை. இச்சேவைகளில் முக்கியமாக இராணுவ சேவை காணப்பட்டது. மானிய முறை அமைப்பிலே நிலப்பிரபுக்கள் தமக் செனப் பிரத்தியேகப் படைகளை உடையவராக விளங்கினர். இதன் அடிப்படையில் இதன் அமைப்பில் முக்கிய இடம் பெறுகின்ற, விவசாயக் குடியானவர் மீது நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
76

ஐரோப்பிய மானிய முறையின் தன்மைகளை விளங்கிக் கொள்வதற்கு முற்பட்ட ஐரோப்பிய வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமானதாகும். உரோமப் பேரரசுக் காலத்தில் மத்தியமயமான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சிறந்த பொதுப் பாதைகள் மூலம் பேரரசு இறுக்கமாக இணைக்கப்பட் டிருந்தது. உள்நாட்டு, வெளிநாட்டு, வர்த்தகம் செழிப்புற்றி ருந்தது. விவசாய உற்பத்திப் பொருட்கள் வர்த்தகத்தில் சிறப் பிடம் பெற்றன. அதனுடன் தொடர்பாக நகரங்கள் எழுச்சி பெற்றன. இப்பரந்த பேரரசின் பல பாகங்களிடையே வர்த்தகம், பண்டமாற்று மேற்கொள்ளப்படுவதற்கான சூழ்நிலை, போக்கு வரத்து வசதிகள் காணப்பட்டன. இப்படியாக ஐரோப்பா ஒரு சிறந்த சமூகப் பொருளாதார, நிர்வாக வாழ்க்கை முறை யைப் பெற்றிருந்த போது கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுக ளில் வடக்கிளிருந்து மேற்கொள்ளப்பட்ட மிலேச்சப்படையெடுப் புக்கள் முக்கியமாக மேற்கைரோப்பாவில் அன்று வரை நிலவி வந்த வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளிவைத்து, சமாதான மற்ற சூழ்நிலையை ஏற்படுத்தின. பேரரசின் பொருளாதாரத் தில் நீடித்துச் சீரான நிலை நிலவமுடியாது போயிற்று: இன் னும் முக்கியமாக ஒருமைப்பட்ட பழைய உரோமப் பேரரசின் இடத்தில் ஒரு ஒருமைப்பட்ட மிலேச்ச அரசன்றி பல சிறு சிறு அரசுகள் தோற்றம் பெற்றன. இந்நிலைமை பேரரசில் காணப் பட்ட அரசியல், பொருளாதார நிலைமை நீடித்து நிலவ முடி யாத சூழ்நிலையை ஏற்படுத்தியது. இச்சூழ்நிலை மாற்றம் அரசியல் பொருளாதாரத் துறைகளில் புதிய தேவைகளை வேண்டி நின்றது. இப்புதிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும், புதிய சூழ்நிலையைச் சமாளிக்கவும் காலப்போக்கில் ஏற்படுத் தப்பட்ட சமூக, அரசியல், பொருளாதார அமைப்பே நில மானிய முறை என வர்ணிக்கப்படுகின்றது. சில ஆசிரியர் இதனைப் பண்ணை முறைமை Manorialism என்கின்றனர். அதாவது விவ சாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப் புறவாழ்க்கை ஒவ்வொரு கிராமத்து மக்களும் தங்கள் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து, தனித்தியங்கி வாழும் வாழ்க்கை முறையே மானிய முறை என வர்ணிக்கப்பட்டுள்ளது.
வலிமை மிக்க உரோமப் பேரரசு “ அழிந்த பின்பாக அந்த இடத்தை நிரப்புவதற்கு தகுதியுள்ள அரசோ, அல்லது ஒரு ஒழுங்கு முறையோ காணப்படவில்லை. ஆனால் அப் பேரரசு இருந்த இடத்திலே வலிமை மிக்க அரசை ஏற்படுத்த சிவ
7ኾ, ̇

Page 45
முயற்சிகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக மெரோவிங்கிய, கரோலிங்கிய வம்சங்களைச் சேர்ந்த மன்னர் சிலர் மேற்கை ரோப்பாவை ஒன்றுபடுத்த முயன்றர்ை. குளோவிஸ், சார்ளி மேன் போன்ற மன்னர் தங்கள் முயற்சியில் ஓரளவு சித்தியும் கண்டிருந்தனர். ஆனால் அவர்கள் கண்ட சித்தியானது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. எனவே பொதுப்பட இத்த நீண்ட காலத்தைப் பார்க்கும் போது ஐரோப்பாவில் ஓர் உறுதி பற்ற நிலையைத் தான் காணலாம். இக்கால கட்டத்தில் தான் ஐரோப்பாவில் இரண்டாவது முறையாக மேற்கைரோப்பா நோதிமன், கங்கேரியன் போன்ற மிலேச்ச மக்களின் படை யெடுப்புக்களுக்கு இலக்கானது. இத்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாதமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்தச் சூழ்நிலையில் சமுதாயத்தை சிதைவுறாமல்காத்து அதில் ஒன்று பட்ட தொடர்புகளை ஒழுங்குபடுத்திய பெருமை நிலமானிய முறையையே சாரும்; நிலவுரிமை (and Tenure) அடிப்ப டையில் ஏற்பட்ட இந்த நிலமானிய முறையே புகழ்வாய்ந்த கிரேக்க. உரோமானிய காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடையே ஓர் இணைப்பாக அமைந்துள்ளது.
அடிக்கடி நடாத்தப்பட்ட மிலேச்சப் படையெடுப்புகளால் சமாதானமற்ற சூழ்நிலை தோன்ற அரசியல் துறையில் ஒரு வெற்றிடம் காணப்பட்டது. ஒவ்வொரு பிரதேச ஜனக்குழுவும் பயந்து பாதுகாப்பை நாடின. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஆற் றலும், வலிமையும் பெற்ற சிலர் அங்கு வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பை அளிக்க முன் வந்தனர். அதற்குப் பதிலுபகாரமா கத் தங்கள் சேவையினை அவர்களுக்கு வழங்கினர். காலவரை வில் இப்படியான ஓர் ஒழுங்கு முறை மானிய முறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. மானிய அமைப்பின் பலதரத்த வர் பற்றிய கடமைகள், உரிமைகள், ஒழுங்குபாடுகள் வழக்கிள் அடிப்படைபில் நிலைப்படுத்தப்பட்டன.
ஐரோப்பிய மானிய முறையின் தோற்றத்தை அறிவதற்கு உரோமானிய, ஜேர்மானிய வழக்காறுகளை விளங்கிக் கொள் கால் அவசியமானதாகும். உரோமரிடையே ஏற்றுக்கொள்ளப் பட்ட சேவைகளைப் பெறுவதற்காகத் தந்காலிகமாக குத்தகைக்கு நிலத்தை ஒருவருக்கு வழங்கும் முறை வழக்கத்திலிருந்து. இது Precarium என அழைக்கப்பட்டது. இது பின்னர் Fief என்று அழைக்கப்பட்டது. உரோம மன்னர் இராணுவ சேவையைப்
28

பெற்றுக்கொள்வதற்கும் நிலமானியம் வழங்குவது நடைமுறை பில் இருந்தது அவ்வாறே ஜேர்மானிய ஜனக்குழுக்களிடையே முக்கியமாகப் பிராங்கிய ஜனக்குழுக்களிடையே Comitatus என்ற ஒழுங்கு பாடு காணப்பட்டது. இது உணவு, ஆயுதம், வெற்றி , கொள்ளப்பட்ட பொருட்களில் பங்கு என்பனவற் றைப் பெறுவதற்காக ஒரு தலைவனின் கீழ இயங்கும் போர் வீரர் கூட்டத்தைக் குறிப்பதாக அமைந்தது. இந்த உரோ மானிய, ஜேர்மானிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து பிராங் கிய மக்களிடையே நிலக்குத்தகை முறை (Fief Holding System) யாக வளர்ச்சி அடைந்தது. ஆட்சிச் சீர்குலைவு ஏற் பட்ட நிலையில் சிறு நிலப் பிரப்புக்கள், போர் வீரர்கள் வலி மை மிக்க பிரபுவிடம் தங்களுக்குப் பாதுகாப்புத் தரும்படி வேண்டினர். அதற்குப் பதிலாக தங்கள் சேவைகளை வலிமை மிக்க பிரபுவுக்கு அளிக்க உடன் பாடு கண்டனர். சார்ளி மேனின் மரணத்தின் பின் மானிய முறையானது பிராங்கிய பேரரசில் பரவியது பிற்பட்ட கரோலிங்கிய ஆட்சியாளர் வலிமை மிக்க மத்தியமான ஆட்சியை ஏற்படுத்த முடியாது போனார்கள். நிலச் சொந்தக்காரர், பிரபுக்கள் தங்களுக்கிடை யேயும், படையெடுப்பாளர்கள் இடையேயும் பாதுகாப்பு வேண் டினர். மத்திய அரசாங்கம் பாதுகாப்புக் கொடுக்க முடியாத நிலையில் வலிமையுள்ள பிரபுக்கள் தங்கள் அருகிலிருந்த பிர தேசங்களை கைப்பற்றிக் கொண்டதுடன் மன்னரின் அதிகாரங் களையும் பறித்துக் கொண்டனர். இந்த நிலையில் பலமற்ற வர் பலமுற்றோரைப் பாதுகாப்புக்காக நாடவேண்டி ஏற்பட் டது. இதன் விளைவாக ஒப்பந்த முறையிலான அமைப்பாக மானிய முறை தோற்றம் பெற்றது.
இத்தகைய ஒரு சமுதாய முறை மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவலாகக் காணப்பட்டபோதும் எல்லா நாடுகளி லும் ஒரே காலப்பகுதியில், ஒரே தன்மையான அம்சங்கள் கொண்டதாக விளங்கவில்லை நாட்டிற்கு நாடு. காலத்திற்குக் காலம் அதன் தன்மைகள் பொறுத்து வேறுபாடுகள் காணப் பட்டன. பொதுவாக மேற்கைரோப்பாவில் நிலத்தை அடிப் படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்த அடிப் படையிலான ஒழுங்கு முறையாக மானிய முறை காணப்பட் டது. பிற்பட்ட காலத்தில் இம் முறையுடன் ஒத்த சமுதாய ஒழுங்குபாடு பிற சமுதாயங்களில் காணப்பட்டதால் அவையும் மானிய முறைச் சமுதாயம் என்று அழைக்கப்பட்டன. இல் லாமியப் பிரதேசங்களில் ஸ்ரஸென். ஒட்டோமன் பேரரசுகளில்
79

Page 46
இதை யொத்த ஒரு முறை இயங்கியது. கிழக்காசியாவில் ஜப்பானிலும் ஐரோப்பிய மானிய முறையின் நெருங்கிய இயல்புகளை ஒத்த மானிய முறை இயங்கி வந்துள்ளது. சீனா வில் ஐரோப்பிய மானிய முறை தோன்றுவதற்கு முன்பு நீண்ட காலமாக இயங்கி வந்தது. இம் முறையில் மன்னனுக்கும், பிரதான இடம் இருந்தது தென்னாசியாவின் ஃபல்வேறு இடங் களிலும் பற்பல இராச்சியங்களிலும் மானிய முறையின் பண் புகள் சிலவற்றைக் கொண்ட பொருளாதார முறை இயங்கி வந்தது. இது ஐரோப்பிய முறைகளில் இருந்து சில அடிப் படைகளில் கூட வேறுபட்டது. −
பிராங்கிய மானியமுறை 1066 இல் நோர்மன் கைப்பற்ற லின் விளைவாகப் பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்குப் பரவியது. அங்கு அதுவளர்ச்சி அடைந்து ஸ்கொத்லாந்து வேல்ஸ். அயர் லாந்திற்குப் பரவியது. பிரான்சியப் படையெடுப்பாளர்களினா, லும் தீரச்செயல் புரிபவர்களினாலும். மானிய நிறுவன அமைப்பு முறை ஸ்டெயின், இத்தாலி, சிசிலிக்குப் பரவின. ஜேர்மானிய மானிய முறை - 100 அளவில் வலுப்பெற்று ஸ்கந்தினேவிய விலும் பரிசுத்த உரோமப் பேரரசின் கிழக்கு எல்லைப் புறங்க விலும் பரவியது. பிரான்சில் புரட்சிக்காலம் வரையிலும் ஜேர்மனியில் 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் அது நீடித்தது. இவ்வாறு நிலமானிய முறையானது 1000 ஆண்டுகள் ஐரோப் பிய வாழ்க்கையின் சிறப்புக்கூறாய் அமைந்திருந்தது.
மானிய முறை அமைப்பிலே விவசாயம் தான் முக்கியத்து வம் வாய்ந்த தொழிலாக அமைந்தது. அவ்வப் பிரதேசத்திற் குத் தேவைப்பட்ட உணவை அவர்களே உற்பத்தி செய்தனர். சுயதேவையைப் பூர்த்தி செய்யும் கிராமங்களே மானிய அமைப் பில் முக்கியம் பெற்றன. வர்த்தகம் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை. நிலச்சொத்துக்கள் தான் இந்த அமைப்பில் முக்கியத்துவம் பெற்றன. சமூகத்தில் ஒருவனில் அந்தஸ்து நிலச் சொத்தை அடிப்படையாகக் கொண்டு தீர் மாணிக்கப்பட்டது. கோதுமை, பார்லி, ஒட்ஸ் என்பன பயிரிடப் பட்டன. தேனீ வளர்ப்பு முக்கிய இடம் பெற்றது வர்த்தகம் வளர்வதற்கான. வாய்ப்பு இன்மையால் சுயதேவையைப் பூர்த்தி செய்யும் பொருளாதார நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றன. மிகச் சிறிய அளவில் வர்த்தகம் இடம்பெற்றது. குடியானவன் பிரபுவின் நிலத்தைப் பயன்படுத்தி உற்பத்தி, செய்த ஒரு பகுதியைத் தான் எடுத்து மிகுதியைப் பிரபுவிற்குக்
89.

கொடுத்தான். இராணுவ சேவையை ஆற்ற வேண்டியிருப்பதால் நிலத்தில் கட்டுண்டவன் ஒரே நேரத்தில் விவசாயியாகவும். போர் வீரனாகவும் பயிற்சி பெற்றான்.
நில உரிமை முறையை அடிப்படையாகக் கொண்ட ஒன் றித்த ஒப்பந்தங்களினால் சீரமைக்கப்பட்ட சமுதாயமாக நில மானியச் சமுதாயம் காணப்படுகின்றது இந்த சமுதாயத்தில் மன்னன் முதல் குடியானவன் வரை அனைவரும் ஒருவருக் கொருவர் ஒப்பந்தங்களினாலே பிணைக்கப்பட்டனர். இந்த ஒப் பந்தங்களின் படி ஒவ்வொரு நிலப்பெருமகனும் தனக்குக் கீழுள்ள கீழாட்களுக்குப் (Vassals) பாதுகாப்பு அளிப்பதாக உறுதி வழங்குகின்றார். பதிலாகக் கீழாட்கள் நில உரிமையாளருக்குச் சில பணிகள் புரிவதாக வாக்களிக்கின்றார் ஒரு மனிதனுக்கு நிலத்துடன் இருந்த தொடர்புதான் அவனு டைய சமூக, அரசியல் தொடர்புகளையும் நிர்ணயித்தது. அர சியல் குழப்பத்தினால் உந்தப்பட்ட ஒன்றுபட்ட ஒப்பந்தங்கள் நில உரிமை முறையை அடிப்படையாகப் பெற்று நிரந்தரமாக் கப்பட்ட போது நிலமானிய முறை பிறந்ததெனலாம்.
இவ்வாறு தோற்றம் பெற்ற நிலமானிய முறை நாளடை வில் ஓர் அரசியல் முறையாகவும் மாறியது. நிலப் பிரபுக்கள் தங்கள் கீழிருந்தவர் மீது நிலம் சம்பந்தமான அதிகாரங்க ளுடன் அரசியல் அதிகாரங்களையும் செலுத்தலாயினர். இவ் வழக்கம் வேரூன்ற அரசன் - குடிமக்கள் இடையே நேரடி யான தொடர்பு இல்லாமல் போயிற்று. நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய நிலமானியப் பிரபுவே அரசியல் அதிகாரியுமாக இருந்தான். அவ்வகையில் மானிய முறைஎன்பது மத்தியமயமான அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துப் பிரபுக்களுக்கு வழங்கியதைக் குறிக்கின்றது. அதன் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கபபட்டுப் பல்வேறு சமுதாயப் படி களில் உள்ளவர்களிடம் விடப்பட்டது. அவ்வாறு அரசியல அதிகாரங்களைச் செலுத்துபவர் தம் மேலிருக்கும் மன்னனுக் கும் சில கடமைகளைச் செய்தல் வேண்டும். அதேபோல் கீழி ருப்பவர் இவருக்கு சில சேவைகளைச் செய்ய வேண்டியிருந் தது. இவற்றுடன் இணைந்த வகையில் சிக்கலான தன்மை கொண்ட நீதிபரிபாலன முறையும் வளர்ச்சி அடைந்தது. ஆட் சியறவு ஏற்படவிருந்த அபாயகரமான சூழ்நிலையிலே நிலை யான ஆட்சியை நிறுவ வேண்டிய அத்தியாவசியம் காரண மாகவே நிலமானிய ஆட்சி தோன்றியது. நிலப்பிரபுவின்
в 1

Page 47
ஆதிக்கம் குடியானவர் மீது பூரணமாகப்பரவி இருந்தது. படை யுதவி, திறை அளித்ததுடன் அமையாது குடியானவர் அவர்களிடமிருந்தே நீதியையும் பெற்றனர். பொதுவில் நிலப் பிரபுவே அவர்களுக்கு பாவுமாக விளங்கினான். இந்த நிலப் பிரபு அவரிலும் உயர்ந்த மன்னனுக்கோ பேரரசனுக்கோ கீழ்ப்பட்டு வாழவேண்டியிருந்தமை பற்றி இக்குடியானவருக்கு ஒன்றுமே தெரியாது. தூரத்தேயிருந்த மன்னனோ, சக்கர வர்த்தியோ கேள்விப்பட்ட பெயராகவே இருந்தனர். இத் தகைய சமுதாய முறை கடந்தகாலக் கர்ப்பத்துள் கிடந்ததே யெனினும் ஒன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாகரிகத் திற்கு ஏற்பட்ட அழிவபாயம் காரணமாகத் திட்டவட்டமான உருபெற்று வளர்ந்தது.
ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின் மூன்றாம் நூற் றாண்டுவரை ஐரோப்பாவில் நிலவிய பொருளாதார, சமுதாய அரசியல் நிலைமைக்கும் உறவுத் தொடர்புகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட பெயரே நிலமானிய சமுதாய அமைப்பாகும். நிலத்தை மன்னர் ஆண்டவனிடமிருந்து பெற்றார். மன்னன் தாம் பெற்ற நிலத்தில் தமக்குப் போக எஞ்சியதை நிலமானிய முறையில் பகிர்ந்து பிரபுக்களுக்கு மானியங்களாகக் கொடுத் தார். பிரபு நிலத்தைப் பயன்படுத்தினாலும் அது அவருடை யதல்ல. பிரபு தங்கள் நிலங்களின் பெரும் பகுதியை மற்ற வர்களுக்குப் பிரித்து வழங்கினார். இவர்களிடம் நிலம் பெற்ற வரிகள் கீழாட்களாவர். இவர்கள் மேலும் நிலத்தை உட் குடிகளுக்கு வழங்கினர் நிலத்தில் உழைத்தவர் அடிமை ஊழி usi 6762rldul Garit. (King, Lord, Vassals, Serfs) aasiassir நிலத்தை விட்டு விலக முடியாது. நிலம் கைமாறினால் அவர் களும் அதனுடன் மாறல் வேண்டும். இந்த அமைப்பு முறை யில் அடிமட்டத்தில் இருந்த அடிமை ஊழியர் ஒரு முக்கிய பெரும்பிரிவினர் ஆவர். இவர்களுடைய நிலை இடத்துக்கிடம் காலத்திற்குக் காலம் வேறுபட்டிருந்தது, அவர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட இருவழிகள் இருந்தன. ஒன்று மத குருமாராகி விட்டால் உரிமையுடன் வாழ முடிந்தது. மற்றது தன் கிழாருக்குப் பொருள். பணம் கொடுத்து அவர் இசைவுடன் பண்ணையிலிருந்து விடுபட முடிந்தது.
நிலமானிய முறையின் விளைவாக ஐரோப்பாவில் எல்லா அரசுகளும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இத் தப் பிரிவுகள் ஒவ்வொன்றும் மானியப் பிரிவுகளின் கீழே
82

ஒரளவு சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. மத்திய மயமான அரசாங்கமோ வலிமை பொருந்திய ஒரு அரசோ உருவாக முடியாத நிலைமை காணப்பட்டது. நாடு முழுவதும் ஒரு ச்ட் டமோ அந்தச் சட்டத்திற்கு அடிபணிதலோ இல்லாதிருந்தது. பேரளவில் ஒரு மத்திய அரசாங்கம் இருந்தபோதும் தனி மனிதனுக்கும் அவ்வரசாங்கத்திற்குமிடையில் நேரான தொடர்பு ஒன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு தனிமனிதனும் தன் நிலப்பிரபுவிடம் பற்றுக்கொண்டு அவன் அரசியலதிகாரத்திற்கு அடிபணிந்து வாழ்ந்த வழக்கமே சமு தாயத்தை ஒன்றுகூட்டி நிலைபெறச் செய்தது. கரோலிங்கி பப் பேரரசு சிதைந்த பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்டிருந்த சீர்குலைவைத் தடுத்து நிறுத்திப் பிற்காலத்தில் தேசிய அடிப் படையில் ஐரோப்பிய சமுதாயம் வளர நிலமானிய முறை தான் காரணமாக இருந்ததெனலாம். ஒருவகையில் மத்திய மயமான ஆட்சிமுறை உருவாகாமல் தடை செய்தபோதும் மன்னன் கொடுங்கோலனாக மாறாது காக்கவும் நிலமானிய முறையால் முடிந்தது எனலாம். அரசனின் அதிகாரங்கள் ஒரு வரம்பிற்குட்பட்டதாக இருக்கச் செய்த பெருமை இந்த நிலமாணிப் பிரபுக்களையே சாரும். சிறந்த உதாரணமாக ஆங்கில மன்னன் ஜோன் என்பவனிடமிருந்து ம்காபட்டயம் ( Magna Carta ) வழியாக நிலப் பிரபுக்கள் தங்கள் உரிமை களை நிலைநாட்டிக் கொண்டதைக் குறிப்பிடலாம், நிலமா னிய அமைப்பில் அரசனுக்கு அறிவுரை கூறவும் Aygyr Får சார்பில் நீதி வழங்கும் பொருட்டு பிரபுக்களும் கீழாட்களும் அரசவைக்குச் சென்று வந்த வழக்கமே நாளடைவில் பிரதி நிதிகள் அடங்கிய பாராளுமன்றம் தோன்றக் 95mrtressow Lontés அமைந்தது. முதலில் மன்னனின் ஆணையின்படி கூடி வந்த நிலமானிய மன்றம் ( Reudal Assembly) இடைக்கால நகரங் களின் எழுச்சிக்குப் பிறகு பாராளுமன்றமாக மாறி நாட்டின் அரசாங்கத்திற்கு இன்றியமையாததாகியது.
ஐரோப்பிய மானிய முறை அமைப்பிலே திருச்சபை யானது முக்கிய பங்கை வகித்தது. பக்திமிக்க பிரபுக்கள் தங்கள் மூதாதையரின் ஆத்மாவும், தங்கள் ஆத்மாவும் மறு உலகில் நன்மை அடைவதற்காக நிலங்களைத் திருச்சபைக்குத் தானமாக அளித்து வந்தனர். இத்தகைய மரணசாசனம் மூலம் காலப்போக்கில் திருச்சபைக்கு ஏராளமான நிலங்கள் சேர்ந்தன. இப்படி வழங்கப்பட்ட தாளங்கள் உள்ளூர் குரு மார்களாலும் மற்றைய திருச்சபை ஊழியராலும் பராமரிக்
88

Page 48
கப்பட்டன. இப்படியாகத் திருச்சபைக்கு அதிகமான நிலத் தானங்கள் கிடைக்க அவற்றைப் பராமரிக்க திருச்சபை ஊழி யர் தாங்கள் திருச்சபை மீதும், பாப்பாண்டவர்மீதும் வைத் திருக்க வேண்டிய நம்பிக்கையை, இழக்கலாயினர். அந்த கூடி யளவு பொருளாதார வசதிகளை இவர்சள் அனுபவித்ததனால் திருச்சபையின் ஒழுங்கு முறைகளுக்கு மாறாக பெளதீகத்துறை யில் கூடியளவு ஈடுபாடு கொண்டவர்களாக மாறத் தொடங் கினர். இதனால் இந்த நிலங்களை பாவித்து வந்த திருச் சபை அதிகாரிகளுக்கம் திருச்சபைக்குமிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. திருச்சபை கூடியளவு நிலங்களைப் பெற்று மன்னனுடனே மோதுகின்ற அதிகாரம் பொறுத்துப் போட்டி போடுகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. திருச்சபையும் மானிய நிறுவனமாக மாறிக் கொண்டது. இதனால் மானிய முறை அமைப்பில் பாப்பாண்டவருக்கும் மன்னருக்குமிடையே மோதல்கள் ஏற்படுவதனைக் காண முடிகின்றது.
மானிய முறை அமைப்பிலே செல்வம் தரும் மூலமாக நிலம் மட்டுமே விளங்கியது. பொருளாதார பலத்தை அதி கரிப்பதற்கு நிலம் தேவைப்பட்டது. அது பட்டுமல்ல நில வினியோகமானது கட்டுப் படுத்தப்பட்டிருந்தது. அதாவது மன்னனே நிலங்களைப் பிரபுக்கு மானியமாக வழங்கி இருந் தான். இந்த மானியங்கள் பெருகுவதற்கு இருவழிகள் இருந் தன. ஒன்று போர் மூலம் மற்றைய மானியங்களைக் கைப் ாற்றல் இரண்டாவது விவாக உறவு மூலம் பெறல். விவாக உறவு பொறுத்து பிரபுவானவன் ஏற்கனவே மணம் புரிந்திருந்தான். ஆகவே போர்முலம் நிலம கைப்பற்றும் வழிதான் சாத்தியமாக இருந்தது. இதனால் இக்காலத்தில் அடிக்கடி போர்கள் இடம்பெற்றன. காலப் போக்கில் அதிக நிலங்களைப் பலச்தின் அடிப்படையில் பெற்ற பிரபு மன்ன லுடனேயே போரிடும் சந்தர்ப்பங்களை இக்காலப் பகுதியில் *ாணலாம். பிரான்ஸ் பொறுத்து இத்தகைய போராட்டங்கள் நடைபெற்று வலிமை மிக்க மானியப் பிரபு ஒருவனே பலத்தின் அடிப்படையில் முடியாட்சி முறையை அந்நாட்டுக்கு அளிப்ப தைக் காணலாம். அரசனே நாட்டின் முதன்மையான நிலப் பிரபு என்று கருதப்பட்டதனால் அவனது கடமைகளும், உரிமைகளும் இதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன. சூழ்நிலைகளினால் அரசன் என்ற முறையில் அவன் மக்களுக்குச் செய்யவேண்டிய பணிகளும் அவனுடைய உரிமைகளும் மறைந்து போயின. இந்த உரிமைகள் யாவும் நிலப்பிரபுக்களின் மரபு
84

வழிவரும் குடும்பச் சொத்தாக மாறிவிட்டன. அவ்வாறே அவர்களது பொதுப்பணிகளையும் இப் பிரபுக்களே தங்கள் விருப்பப்படி செய்து வந்தனர். இதனால் நிலப் பிரபுக்களின் மேலாண்மையானது இறைமையாக மாற ஏதுவாயிற்று. இதனால் மன்னனால் நிலப்பிரபுக்களை அடக்கியாள முடியாதிருந்தது. வலிமையே பலத்தின் gyuq Lu6ool -uurras விளங்கியமையால் அடிக்கடி போர் நடவடிக்கைகள் பிரச்சனைகள் பரவலாக இடம் பெற்றன.
ஐரோப்பிய நிலமானிய முறையானது பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்பாக வீழ்ச்சியைக் கண்டது. இதன் வீழ்ச் சிக்கான அரசியல் சார்ந்த காரணங்களுள் தேசிய அரசுகளின் எழுச்சி மிக முக்கியமானதாகும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலே தேசிய அரசுகள் எழுச்சி பெற்று வலிமை மிக்க முடிமன்னர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். ( இத்தாலி, ஜேர்மனியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மானிய அம்சங்கள் வலுப் பெற்றிருந்தன.) நிலமானிய முறைக்கு என்றுமே எதிரான அரசபதவி வலுப்பெற்றபோது மானிய முறையானது சிதைவு கண்டது. மத்திய மயமான நிர்வாகம் வலுப்படுத்தப்பட்டு நிலப்பிரபுக்கள் அதிகாரம் அடக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில் தேசிய முடியரசுகளின் எழுச்சிக்குப் பல காரணி கள் உதவியிருந்தன. அவற்றுள் முக்கியமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வர்த்தகப் புத்துயிர்ப்பும் வர்த்தக வகுப்பினரின் எழுச்சியும் ஆகும். ஐரோப்பாவில் காணப்பட்ட அரசியல். பொருளாதார, சமூதாயத் துறையில் ஏற்பட்ட மாற் றங்களில் வர்த்தகம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டு அரசாங்கங்கள் எழுச்சி பெறலாயின இப் புதிய வர்த்தக வகுப்பினரின் எழுச்சி, அரசியல், பொருளாதார சமுதாயத்துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாயிற்று, tugபடியாக நிலம் இதுவரை பெற்று வந்த முக்கியத்துவத்தைப் பணம் பெற்றுக்கொண்டது. இதனால் வர்த்தக வகுப்பினர் செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினராக மாறத் தொடங்கினர்.
நகரங்களில் வாழ்ந்த மக்கள் நிலத்தை நம்பி வாழ
வில்லை. அவர்கள் வணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டி ருந்தனர். ஆகவே நிலமானியப் பிணைப்புக்களுக்கு உட்படாமல் உரிமையுடன் வாழ்ந்தனர். நகரங்கள் மன்னனிடமிருந்து ஆவணம் பெற்றுச் சுதந்திரத்துடன் இயங்கின. நாளடைவில் மன்னன் நிலப்
85

Page 49
பிரபுக்களுக்கிடையிலான போராட்டங்களில் இப் புதிய வர்த் தக வகுப்பினர் மன்னன் பக்கம் சேர்ந்து கொண்டனர். மன்ன னுக்குப் பணவுதவி செய்வதன் மூலம் பிரபுக்களை அடக்க உத வியதோடு சமுக அந்தஸ்துப் பொறுத்து தங்கள் நிலையை யும் உயர்த்திக் கொண்டனர். வர்த்தக வகுப்பினர் பெற்றிருந்த பண வலிமை, மன்னன் அதிகாரம் வலுப் பெறுவதற்குப் பெரி தும் துணையாக அமைந்தது.
பொருளாதார நடவடிக்கைகளிலே பணம் முக்கியத்துவம் பெற்றதைத் தொடர்ந்து மானிய அமைப்பிலே முறிவுகள் ஏற் படலாயின. குடியானவர் பிரபுவுக்குக் குறிப்பிட்ட பணம் செலுத்தி விடுதலை அடைய முடிந்தது. கைத்தொழிலும், வர்த் தகமும் புதிய வேலை வாய்ப்புக்களைக் குடியானவருக்கு வழங்கி யது, குடியானவர் நகரங்களுக்கு செல்ல வாய்ப்புக்கள் காணப் பட்டன. அத்துடன் இக்காலப் பகுதியில் விவசாயப் பொருட்க ளின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய நிலங்கள் தேவைப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டு, சதுப்பு நிலங்களை மீட்பித்தும் புது விளைநிலங்கள் பெறப்பட்டன, இந்த முயற் சிகளில் குடியானவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புக் கிடைத் தது, தாங்களே காடுகளை அழித்து விவசாயம் செய்யவும் முற் பட்டனர். பழைய நிலமானிய கட்டுக்கோப்பு முறிவடைந்து சென்ற பொழுது இது இலகுவாக அமைந்தது, 14ஆம்நூற்றாண் டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கொள்ளைநோய் பெருமளவிலான மக்களைக் கொள்ளை கொண்டு தொழிலார் பற்றாக் குறையை ஏற்படுத்தியது. அதனால் நிலமானியமுறை நடைமுறையில் சாத் திய மற்றதாகக் காணப்பட்டது.
நிலையான இராணுவம் புதிய போர் முறைகளின் அறிமுகம், வெடி மருந்தின் கண்டுபிடிப்பு, சிலுவைப் போர்களில் நிலப் பிரபுக்களின் பங்கு இவைகள் எல்லாம் மானிய முறையின் வீழ்ச் சிக்கு மேலும் வழி வகுத்தன. ஆட்பல எண்ணிக்கையிலும் பார்க்க ஆயுத பல மேலாதிக்கம் மானிய முறையின் வீழ்ச் சிக்கும், பிரபுக்களின் அதிகார ஒழிப்புக்கும் வலிமைமிக்க தேசிய முடியரசுகளின் எழுச்சிக்கும் வழிவகுத்தன.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்பாக மீண்டும் வர்த்தகம் விருத்தியடைந்து நகரங்களில் பணப்பரிமாற்றம் முக்கியத்துவம டைய நிலமானிய முறை சீர்குலையத் தொடங்கியது. நிலம் முக்கியமில்லாத போது நிலக்குத்தகையின் அடிப்படையில்
86

அமைந்த அரசியல் பொருளாதார அமைப்பு முறையான மானிய முறையும் சீர்குலைந்தது. வர்த்தக முக்கியத்துவம் பெற முதலா ளித்துவ சமுதாயம் வளரத் தொடங்கியது. இது வரை நிலத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரம் செலுத்தி வந்த ஒரு வர்த்தகத்தின் தனி முதன்மை நிலை வேறு ஒரு வர்த்த கத்திடம் கைமாறத் தொடங்குகின்றது . பணப்புழக்கம் அதிக ரிக்க அதனை நட்டஈடாகக் கொடுத்து நிலப்பிரபுவின் ஆதிக் கத்திலிருந்து தன்னை விடுவித்தும் சுதந்திரக் குடியானவனாக மாறும் வாய்ப்பும் ஏற்பட்டது. இப்படியாக தேசிய முடியரசு களின் எழுச்சி, வர்த்தகப் புத்துயிர்ப்பு பணப்பரிமாற்றம். புதிய ஆயுதங்களின் வருகை, சிலுவைப்போர் போன்ற காரணிகளால் மானியமுறை அமைப்பு சீர்குலைந்தது. நிலம் இதுவரை பெற்ற முக்கியத்துவத்தை இழக்க முதல் " அந்த இடத்தைப் பிடித் துக்கொண்டது.
87

Page 50
VI பைசாந்திய நாகரிகம்
ஐரோப்பிய வரலாற்றில் உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின்பாக ஆயிரமாண்டுகளுக்கு மேலாக நிலைத்திருந்த நாகரிக மாகப் பைசாந்திய நாகரிகம் விளங்குகின்றது. பலதரப்பட்ட படையெடுப்புகளுக்கு மத்தியிலும் உரோம நாகரிகத்தின் பண் பிணையும், உரோமப் பேரரசின் தொடர்ச்சியையும் பேணிப் பாதுகாத்த பேரரசாகப் பைசாந்திப் பேரரசு காணப்பட்டது. ஐரோப்பிய வரலாற்றில் கிழக்குப் பேரரசு என்று வர்ணிக்கப் படும் இந்த அரசு பழைய கிரேக்க குடியேற்றமான Byzantium என்ற பெயரின் அடியில் இருந்து தனது பெயரைப் பெற்று ஐரோப்பிய நாகரிகத்தின் ஒரு நீண்ட தொடர்ச்சியைப் பேணி வத்தது. அதனுடைய ஆரம்பம் பொறுத்து வரலாற்று ஆசிரியரி டையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் கி. பி. 610இல் ஹெரகிளியஸ் ( Heraclius - 610 - 641 AD ) புதிய கிழக்கத்தைய வம்ச ஆட்சி ஒன்றை ஆரம்பிப்பதிலிருந்து தொடங்குவதாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இப்பேரரசு கிரேக்க சிந்தனை, மரபுகளைப் பேணிப் பாதுகாத்ததன் அடிப்படை யிலும், கலைத்துறையில் மிகச் சிறப்பான சாதனைகளை ஈட்டிய தன் அடிப்படையிலும், பாகன் பண்பாட்டு அம்சங்களைக் (Slavs ) கிறிஸ்தவ கலாசாரத்துக்குள் கொண்டுவந்ததன் அடிப் படையிலும் சிறப்பைப் பெற்றுள்ளது.
இடைக்கால ஐரோப்பிய வரலாறு வேறு இரண்டு நாகரி கங்களுடன் தொடர்பு கொண்டு விளங்குகின்றது அந்த இரண்டு நாகரிகங்களாகப் பைசாந்திய நாகரிகமும், சரசெனிக் நாகரிகமும் விளங்குகின்றன. (Saracemic) சரஸென் என்பது ஆரம்பத்தில் நாடோடி அராபியனைக் குறித்துப் பின்னர் இஸ்லாமிய நாகரி கத்தைக் குறித்தது. இந்த இரண்டு நாகரிகங்களும் ஐரோப்பாக் கண்டத்தில் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இந்த நாகரிகத்தின் பெரும்பகுதி ஆபிரிக்க, ஆசியாக் கண்டங் களிலேயே அமைந்திருந்தன. அதன் விளைவாக இவ்விரண்டு பேரரசுகளிலும் ஒரு தனித்தன்மையைக் காணமுடிகின்றது. அத்தனித்தன்மை இந்த இரு நாகரிகங்களும் கூடியளவிற்குக் கீழைத்தேசப் பண்புகளைக் கொண்டு விளங்கியமையேயாகும். சரஸென் நாகரிகத்தவர் முஸ்லிம்களாகவும், பைசாந்திய மக்கள் கிறிஸ்தவர்களாகவும் காணப்பட்டனர். இவ்விரு மக்களுடைய

வாழ்க்கையிலும் மதம் திக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. இவ்விரு அரசுகளிலும் மத நிறுவனங்கள் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தன. இவ்விரு பிரதேசத் தவர்களும் பகுத்தறிவிலும் பார்க்க ஆத்மீகத்துறையில் கூடிய ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆத்மீக நோக்கு இருந்தபோதும் சரஸென் சிறப்பாகத் தத்துவஞானத் துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் வியக்கத்தக்க சாதனைகளை ஈட்டியது. பைசாந்தி யமோ அதன் கலைப்படைப்புக்களுக்காகவும், அளவற்ற கிரேக்க உரோம அறிவுத்துறைக் கண்டுபிடிப்புக்களைப் பேணிப் பாது காத்துக் கொடுத்தமைக்காகவும் சிறப்பைப் பெறுகின்றது.
கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் ( 330 ) பேரரசர் கொன்ஸ்ரான்ரைன் ( 312 - 337 ) மேற்கு ஐரோப்பா வில் ஏற்பட்ட அரசியற் கொந்தளிப்புக்களினால் உரோமப் பேரர சிற்குப் புதிய தலைநகrமாகப் பழைய கிரேக்க குடியேற்றமான இயற்கையான பாதுகாப்பு அரண்களைக்கொண்ட பைசாந்தியத் தில் ஒரு தலைநகரை உருவாக்கினான். இந்த நிகழ்வு உரோமப் பேரரசின் வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவமாக அமைந்ததுடன் அடுத்து வரப்போகும் ஆயிரமாண்டுகளுக்கு மேலாகக் கிழக்கு உரோமப் பேரரசு என்ற அரசியல் இருக்கை தொடர்ந்து செயற்படுவதற்கும் வழிவகுத்தது. மேற்கு உரோமப் பேரரசு வீழ்ச்சியடைய இப் பைசாந்தியம் கிட்டிய கிழக்குப் பிரதேசங் களை உள்ளடக்கிய வலிமைமிக்க அரசாக மாற்றம் பெற்றது. காலப்போக்கிலே இது பைசாந்தியப் பேரரசு என்ற பெயரைப் பெற்றுக்கொண்டது.
பைசாந்திய வரலாறு எப்போது ஆரம்பமாகிறது என்று வரையறை செய்வது கஷ்டமான ஒன்றாகும். ஏனென்றால் உரோமப் பேரரசின் தடங்கலற்ற தொடர்ச்சியாகவே இது காணப்படுகின்றது. இதனால்தான் வரலாற்று ஆசிரியரிடையே காலக்கணிப்பில் சிக்கல் ஏற்படுகின்றது. சில வரலாற்றாசிரியர் பேரரசன் டியோகிளிசன் உரோம வரலாற்றில் கீழைப் பண்பு களைக் கொண்ட கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததி லிருந்தே பைசாந்தியப் பண்புகள் தோற்றம்பெற ஆரம்பித்து விட்டன எனக் கருதுகின்றனர். வேறு சிலரோ பேரரசன் கொன்ஸ்ரான்ரைன் உரோமிலிருந்த தலைநகரைக் கொன்ஸ் தாந்திநோப்பிளுக்கு மாற்றியதனைத் தொடர்ந்தே இப்போக்கு ஆரம்பித்தது என்கின்றனர். பேரரசர் டியோகிளிசனும், கொன்ஸ் ரான்ரைனும் ஒன்றுபட்ட உரோமப் பேரரசை ஆட்சிசெய்து
8例

Page 51
வந்தனர். ஆனால் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பின்பாக பேரரசின் மேற்குப் பாகம் ஜேர்மனிய இனக் குழுவினரிடம் இழக்கப்பட்ட பின்னர் கிழக்கத்தைய உரோமப் பேரரசன் ஜஸ் ரினியனால் ( Justinian) இழந்த மேற்குப் பகுதியைத் திரும்பக் கைப்பற்ற முடியாதிருந்தது. இக்காலப் பகுதி பைசாந்திய நாக ரிகம் உருவான பாதையில் ஒரு திருப்பு முனையாக விளங்கு கின்றது. ஜஸ்ரினியன் ஆட்சிக்காலத்தில்தான் புதிய சிந்தனை வடிவங்களும். கலைப்போக்கும் "உரோமன்" என்று சொல்லு வதிலும் பார்க்க பைசாந்தியப்பண்பு என்று சொல்லுவதற்குப் பொருத்தமாக வளர்ச்சிப்பட்ட காலமாகும். ஆனால் இதிலும் சில சந்தேகங்கள் இருக்கத்தான்செய்கின்றன. ஏனெனில் ஜஸ்ரி னியன் லத்தீன் மொழியைப் பேசியதுடன் அல்லாமல் தொடர்ந்தும் பழைய உரோமை மீளப் பெறுவதிலும் கனவுகொண்டிருந்தான். ஆனால் கி. பி. 610 இன் பின்னரே கிழக்கிலிருந்து தோற்றம் பெற்ற ஒரு புதிய வம்சமும், கிரேக்க மொழியைப் பேசிய பூரணத்துவமான கிழக்கத்தைய பாணியைப் - பைசாந்தியப் பாணியைக் கொண்ட பேரரசன் ஹெரகிளியஸ் அதிகாரம் பெறுவ திலிருந்து பைசாந்திய வரலாறு ஆரம்பமாகின்றது என்று கொள்ளலாம்.
பைசாந்தியப் பேரரசின் வரலாறு இடைக்காலம் முழுவதுமே வியாபித்துள்ளது. ( கி. பி. 600 - 1500 ) . உரோமிலிருந்து இடம்பெயர்ந்து இருந்தாலும் அதனுடைய கலாசாரம் மேற்கை ரோப்பாவின் கலாசாரத்தினின்றும் வேறுபட்டதாகும். பைசாந் திய நாகரிகம் கூடியளவுக்குக் கீழைத்தேய, ஆசியப் பண்புக ளைக் கொண்டதாகும். இது கொன்ஸ்தாந்திநோபிள் கீழைப் பிரதேசங்களை நோக்கி இருப்பதனால் மட்டுமல்ல அதனுடைய பெரும்பாலான நிலங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே இருந்த மையினாலும் ஏற்பட்ட செல்வாக்கின் விளைவே. இவற்றுள் மிக முக்கியத்துவம் பெற்ற பிரதேசங்கள் சிரியா. சின்னாசியா, பாலஸ்தீனம், எகிப்து என்பன. மேற்கைரோப்பிய கலாசாரத் தைக் காட்டிலும் பைசாந்தியக் கலாசாரத்தில் கிரேக்க, கெலனிய அம்சங்கள் கூடுதலாக உள்ளன. கிரேக்கத் தீபகற்பத்திற்கு அண்மையில் இருந்தமையினால் கிரேக்கப் பண்புகள் இங்கு கூடியளவு செல்வாக்குப் பெற்றுக்கொண்டன. இந்தப் பிரதேசங் களில் கிரேக்க மொழியே முதன்மை பெறற மொழியாக உள்ள துடன், இலக்கியத்திலும், கலை, விஞ்ஞானத்துறைகளிலும் பெரு மளவிற்குக் கிரேக்க, கெலனியப் பண்புகளே காணப்படுகின்றன.
9Ꮕ .

கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே வேறுபாடு காணப்பட்டது. கிழக்கே கிரேக்க வைதீகத் திருச்சபையும், மேற்கே லற்றின் கிறிஸ்தவ திருச்சபையும் சிறப்புப்பெற்றன. கிழக்கில் பேரரசனின் அதிகாரத்திற்கு உட் பட்டதாகத் திருச்சபை காணப்பட, மேற்கில் குழ்நிலையின் விளைவாகச் சுதந்திரமான திருச்சபை அமைப்பு வளர்ச்சி அடையலாயிற்று.
பைசாந்தியப் பேரரசில் வாழ்ந்த மக்கள் பல தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டனர். பெரும்பான் மையான பிரஜைகள் கிரேக்கரும். கெலனிய மயமாக்கப்பட்ட கீழை மக்களுமாவர். இவர்களுள் சிரியர், யூதர், ஆர்மீனியர், எகிப்தியர், பாரசீகர் அடங்குவர். அத்துடன் ஐரோப்பாவில் உள்ள பைசாநி தியப் பேரரசின் பகுதிகளில் பல்வேறு மிலேச்ச இனக் குழுமக் கள் - சிலாவியர், பல்கேரியர், அவார்ஸ், சேர்பியர், ஜேர்ம னியர், மொங்கோலியர் என்போரும் காணப்பட்டனர்.
பைசாந்திய அரசின் ஆரம்பகால அரசியல் வரலாற்றில் ஜேர்மனிய இனக் குழுக்களின் படையெடுப்புக்களே முக்கியம் பெறுகின்றன. இப் போராட்டங்களில் பேரரசர் ஜஸ்ரினியன் காலத்தில் ( 527 - 565 ) இத்தாலி, வட ஆபிரிக்கா திரும்பக்" கைப்பற்றப்படுகின்றன. ஆனால் இத்தாலியின் பெரும்பகுதி விரைவில் லொம்பாடியர்களின் கைப்பற்றலுக்கு உள்ளாகியது. வட ஆபிரிக்காவில் படிப்படியாக இஸ்லாமியர் ஆதிக்கம் இஸ் லாமியப் படர்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்டது. ஏழாம் நூற் றாண்டின் ஆரம்ப்த்தில் அதாவது ஹெரகிளியஸ் பதவியேற்ற போது பாரசீகர் பைசாந்தியப் பேரரசின் இருப்பிற்கே அச்சுறுத் தலாக இருந்தனர். அவர்கள் பைசாந்தியப் பேரரசின் ஆசியப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன் எருசலேமிலிருந்து புனித சிலுவையின் ஒரு பகுதியையும் தமது வெற்றியின் அடையாள மாக கி. பி. 614 இல் எடுத்துச்சென்றனர். ஹெரகிளியஸின் கடும் முயற்சியின் பின்னர் 627 இல் பாரசீகர் தோற்கடிக்கப்பட்டு புனித சிலுவையின் ஒருபகுதி மீட்கப்பட்டது. பேரரசன் ஹெரகி ளியஸின் இறப்புவரை (641) பைசாந்தியப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசாகவே பாரசீகம் விளங்கியது. இவரது கடைசிக் காலத்தில் அராபியாவில் தோற்றம்பெற்ற இஸ்லாமிய அரசுப் படைகள் பேரரசின் கிழக்குப் பகுதிகளின் மேல் படையெடுப்புக்களை மேற்கொண்டன. பாரசீகத்துடன் போராடிக் களைத்திருந்த ஒரு கட்டத்தில் புதிய இஸ்லாமியப் படையினர் பேரரசின் பல
9

Page 52
பகுதிகளை விரைவிலேயே கைப்பற்றிக்கொண்டதுடன் பாரசீக அரசையும் தமதாக்கிக் கொண்டன. கி. பி. 677 இல் கொன்ஸ் தாந்திநோப்பிள் மீதான படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிவடைந்தது. கி. பி. 717 இல் மீண்டு மொரு முறையாகக் கடல்வழியாகவும், தரைவழியாகவும் அதனைக் கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிவுற்றது.
ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற பிரசித்திபெற்ற போர்களுள் இப்போரும் ஒன்றாகும். இதில் பைசாந்தியப் படை யினர் தோல்வி அடைந்திருந்தால் கிறிஸ்தவ நாகரிகத்தின் தலைவிதியே மாறியிருக்கும். ஆனால் அடுத்த சில தசாப் தங்களில் சின்னாசியா முழுவதையுப் கைப்பற்றியதுடன் கிரேக்கப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் பைசாந்தியப் பேர ரசின் பிரதான பகுதிகளாக அடுத்துவரும் மூன்று நூற்றாண் டுகளிலும் விளங்கின. பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இஸ்லாமிய அரசு பலவீனப்பட்ட நிலையில் பைசாந்தியப் பேரரசின் உச்சநிலையில் சிரியாவின் பெரும்பகுதி கைப்பற் றப்படுகின்றது. ஆனால் இந்த வெற்றிகளை கி. பி. 11ஆம் நூற்றாண்டில் வேறுபட்ட இஸ்லாமிய இனத்தவரான செல்யுக் துருக்கியரின் ( Seljuks Turks) படையெடுப்புக்கள் இல்லாமற் செய்தன. கி. பி. 1071 இல் சின்னாசியாவில் மன்ஸிகேட் ( Manzikert ) போர்க்களத்தில் ஒரு இலட்சம் பைசாந்தியப் படை யினர் அழிக்கப்பட்டு செல்யுக் துருக்கியர் பெற்ற மகத்தான வெற்றி பைசாந்தியத்தை எஞ்சியிருந்த தமது கிழக்கு மாகா ணங்களுடன் திருப்தியடையவேண்டிய நிலைக்குத் தள்ளலா யிற்று. துருக்கியரின் மன்னனான பெரிய சுல்தான் மாலிக்ஷா ( Malik Shah ) கி. பி. 1092 இல் இறந்தபோது செல்யுக் பேரரசு சீர்குலையத் தொடங்கியது. இந்நிலையில் பைசாத் தியப் பேரரசன் அலெக்ஸியஸ் கொம்னினஸ் (Alexcius Comnenus ) தாம் இழந்த பிரதேசங்களைக் கைப்பற்ற மேற்கு லகிற்கு அழைப்புவிடுத்திருந்தான். அதனை நன்கு பயன்படுத் திய பாப்பரசர் இரண்டாம் ஏபன் முயற்சிகளைத் தொடர்ந்து கிறிஸ்தவ புனித தலங்களை மீட்பதற்கான படையெடுப்பு ஒன்று ஏற்பட்டது. இதுவே வரலாற்றில் சிலுவைப் போர்கள் ( Crusades) என்று அழைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் கிறிஸ்தவ மத உணர்வு அடிப்படையில் இஸ்லாமியர்களை எதிர்க்க வந்த இப்படையினர் ஈற்றில் பைசாந்தியப் பிரதேசங்களைத் தாக் கிக் கொள்ளையடித்தவில் ஈடுபட்டனர். கி. பி. 1204 இல்
92.

சிலுவைப் போர் வீரர்கள் கொன்ஸ்தாந்திநோப்பிளைக் கைபி பற்றி மிலேச்சத் தலைவன் அலரிக் (Alaric) உரோமபுரியை 800 வருடங்களுக்கு முன்பாகக் கைப்பற்றி 'அழித்தமையிலும் பார்க்க மோசமான முறையில் அழித்துக்கொண்டனர். ஆனால் கி.பி. 13ஆம் நூற்றாண்டிலும், 14ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்திலும் பைசாந்தியப் பேரரசு தன் பழைய வலிமையையும், செழிப்பையும் பெற்றுக்கொண்டது அதனுடைய நீண்ட வரலாறு இறுதியில் கி. பி. 1453 இல் ஒட்டோமன் துருக்கியர் கொன்ஸ் தாந்திநோப்பிளைக் கைப்பற்றியதுடன் முடிவுற்றது.
பைசாந்தியப் பேரரசு நீண்டகாலமாக ஏறக்குறைய 1000 வருடங்களுக்கு நிலைத்திருந்தது. ஆனால் இப்பேரரசு அடிக் கடி வெளிநாட்டுப் படையெடுப்புக்களுக்கும், உள்நாட்டில் அரண் மனைச் சதி, இராணுவக் குழப்பங்களுக்கும் ஆளானது. இவ் வாறு நிகழ்ந்தபோதிலும் நீண்டகாலமாக இது நிலவியதற் குக் காரணம் அங்கு காணப்பட்ட கீழைத்தேய முறைமையி லான ஆட்சியேயாகும். அதன் விளைவாகச் சமுதாய மாற் றங்கள் விரைவாக நிகழாததுடன், பழமை போற்றும் பண்பு டையவர்களாக இவர்கள் விளங்கினர். அவர்களது கலாசா ரத்தில் காணப்பட்ட பழமைபோற்றும் பண்பு, அந்த இனத் தவரைத் துரிதமான வீழ்ச்சிக்குத் தள்ளாமல் காப்பாற்ற உதவியது. அத்துடன் பொருளியல், புவியியல் சார்ந்த கார ணங்களும் அதன் நீண்ட ஆயுட்காலத்திற்கு உதவியிருந்தன. கொன்ஸ் தாந்திநோப்பிளின் அமைவிடம் எளிதில் பகைவர்கள் தாக்கி வெல்ல முடியாத இயற்கை அரண்களைக் கொண்ட தாக இருந்தது. மூன்று பக்கங்களிலும் நீரினாலும், நான் காம் பக்கத்தில் உயர்ந்த மதிலினாலும் அது சூழப்பட்டுப் பாதுகாப்பானதாக இருந்தது. அத்துடன் அதன் அண்மை யில் காணப்பட்ட கிட்டிய கிழக்குப் பிரதேசங்களில் மேற்கில் ஏற்பட்டதைப்போன்ற கைத்தொழில் வீழ்ச்சியோ, பொருளா தார, வர்த்தக வீழ்ச்சியோ ஏற்படவில்லை. அதாவது இத் தாலியிலும் மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இருண் காலப்பகுதியின் ஆரம்பத்தில் ஏற்பட்டதைப்போன்ற சூழ்நிலுை ஒன்று இப்பகுதிகளில் ஏற்படவில்லை. எல்லாவற்றிலும் மேலாக, பைசாந்திய அரசு வர்த்தகத்தின் மூலமாக மிகச் செல்வச் செழிப்புடன் விளங்க அதன் பாதுகாப்பும் சிறப்பாக மேற். கொள்ளப்பட்டது. அதனுடைய வருடாந்த வருழஜ்மே 100
* :
மில்லியன் டொலராக 7 1957 பெறுமானம் ) இருந்தத்ர்க் கணிப்பிடப்பட்டுள்ளது.
98

Page 53
பைசாந்தியப் பேரரசின் அரசாங்கமானது வலிமை பொருந் திய முடியாட்சியைத் தலைமையாகக் கொண்டிருந்தது. பேரர சன் டியோகிளிசன் ஆட்சியை ஒத்ததாக அத1வது ஏதேச்சா திகாரம், சமயச்சார்பு கொண்டதாகக் காணப்பட்டது. பேரர சன் முழு இறைமை படைத்தவராகவும் தேசிய வாழ்வின் பல்
துறைகள்மீதும் வரம்பில்லா அதிகாரம் உடையவராகவும் விளங்கினார். அவரது குடிமக்கள் அவர் முன்பாக வீழ்ந்து வணங்குதல், குடிமக்கள் மன்னனது கருணையைப் பெறத்
தம்மை அடிமைகளாகக் கருதிக் கொண்டனர். பேரரசன் ஆத் மீக, இலெளகீகத் துறைகளின் தலைவனாக விளங்கினார். அவர் நிலவுலகில் கடவுளின் பிரதிநிதியாகவும், சமய அதிகா ரங்கள் பெற்றவராகவும் காணப்பட்டார். அதாவது பேரரசன் அப்போஸ்தலர்சளுக்கும் ( Apostles ) சமமாக மதிக்கப்பட்டான். சில பேரரசர் சிறந்த நிர்வாகிகளைக் கொண்டு உயர்குடி யாட்சியை நடத்தினர். அதிகாரவர்க்க ஆட்சி, பெரிய இரா ணுவம், எழுதுவினைஞர், பரிசோதகர், உளவாளிகள் இந்த ஆட்சியிலே முக்கிய பங்கைப்பெற்றிருந்தனர்.
பைசாந்தியப் பேரரசு நீண்டகாலமாக நிலைத்துநின்ற மைக்குப் பிரதான காரணங்களுள் ஒன்று மிகத் திறமைமிக்க அரசாங்க அதிகாரவர்க்க அமைப்பாகும். இந்த அதிகார அமைப்பிற்கு போதியளவு மனித வளத்தை வழங்குவதில் அரசு அக்கறை கொண்டிருந்தது. அதனால் பொதுமக்களுக் கான கல்வி வாய்ப்புக்களை வழங்குவதில் அது அக்கறையு டன் செயற்பட்டது. லத்தீன் மேற்கிற்கும். பைசாந்தியக் கிழக்கிற்கும் இடையில் காணப்பட்ட மிகப் பெரிய வேறுபாடு இதுவாகும். கி. பி. 8 - 12 நூற்றாண்டு காலப்பகுதியில் மேற் கத்தைய கிறிஸ்தவ உலகில் நடைமுறையில் பொதுமக்கள் சார் பான கல்வி என்பது இல்லாதிருந்தது. ஆனால் பைசாந்தியக் கிழக்கிலோ பொதுமக்களுக்கான கல்வி என்பது (மதச்சார்பற்ற கல்வி ) அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. பைசாந்திய அலுவலர்கள் வாழ்வின் பல அம் சங்களையும் நாம் தற்காலத்தில் சிந்திப்பதிலும் பார்க்கத் திறம் பட்டவகையில் ஒழுங்குபடுத்தி வழிபடுத்தினர். இந்த அதிகார வகுப்பினர் கல்வி, மதம் என்பனவற்றை மேற்பார்வை செய்ய உதவியதுடன், சகல வடிவிலான பொருள்கள் முயற்சிகளுக்கும் தலைமைத்துவம் வழங்கினர். உதாரணமாக கொன்ஸ்தாந்தி
94

நோப்பிளிலிருந்த நகர அலுவலர் பொருட்களின் விலைகளை, சம்பளங்களைத் தீர்மானித்ததுடன், அனுமதி வழங்கும் முறை, ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தல் போன்ற பல விடயங்களிலும் ஈடுபட்டனர். இவ்வகையில் மிகத் திறம்பட்ட நிர்வாக இயந் திர அமைப்பொன்று பைசாந்தியப் பேரரசில் இயங்கிவந்தது.
அரசே பொருளாதார முறைமையைப் பூரணமாகக் கட் டுப்படுத்தி வந்தது. அரசே பொருளாதார நடவடிக்கைகளில் தனி உரிமை பெற்றிருந்தது. ஒவ்வொரு பொருளாதார நட வடிக்கைகளையும் அரசே பரிசீலித்தது. ஒவ்வொரு மனிதரதும் சம்பளமும் ஒவ்வொரு உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அரச கட்டளைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டன. பிற்பட்ட உரோமப் பேரரசின் காலத்தில் தாபிக்கப்பட்டிருந்த வணிக தளங்கள் ( Guid ) வர்த்தகத்திலே முக்கியத்துவம் பெற்றன. ஒவ்வொரு தொழிலாளரும், ஒவ்வொரு வணிக தளத்தின தும் அங்கத்தவர் பதவியைப் பரம்பரையாகப் பெற்றனர். உற் பத்தியாளர் கூடியளவு சுதந்திரத்தை அனுபவித்தனர். உற்பதி தியாளர் எவ்வளவு உற்பத்தி செய்யவேண்டுமென்றோ, அப் பொருட்களை எந்தச் சூழ்நிலையில் விற்கவேண்டுமென்றோ கட்டுப்பாடு இருக்கவில்லை. இந்த முடிவுகள் எல்லாம் வர்த் தகச் சங்கங்களாலே முடிவுசெய்யப்பட்டன. ஆனால் இவை அரசாங்கத்தால் மேற்பார்வை செய்யப்பட்டன. பைசாந்தியப் பேரரசர் உற்பத்தியாளர், வர்த்தகர்கள் இடையே போட்டி மனப்பான்மையை வளர்த்தனர். அரசே ஒரு பெரிய அளவி லான கைத்தொழில் முயற்சிகளை நடாத்தியது. இவற்றுள் பிரதானமானவையாகச் சுரங்க வேலைகள், பட்டு உற்பத்தி, நெசவு உற்பத்தி, ஆயுத உற்பத்தி, நாணய உற்பத்தி காணப் பட்டன. ஒரு சமயத்தில் பட்டு உற்பத்தியில் தனியுரிமையை நிலைநாட்ட முயன்றாலும் அரச தொழிற்சாலைகள் தேைைவக் கேற்ப நிரம்பலைச் செய்யமுடியாமல் போனதால் தனிப்பட்ட உற்பத்தியாளர்களுக்கும் பட்டு உற்பத்திசெய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. w
பைசாந்தியப் பேரரசின் வலிமைக்குப் பிரதான அடித் தளமாக இருந்தது, அது மேற்கொண்டிருந்த வர்த்தகமே. பல நூற்றாண்டுகளாக மேற்கில் நீண்ட தூரவர்த்தகமும், நகர வாழ்வும் மறைந்துபோகக் கிழக்கில் பைசாந்தியத்தில் வர்த்த கமும் நகரங்களும் மிகச் செழிப்புப் பெற்றுவந்தன. இவ்வர்த் தகத்தின் மூலம் பெறப்பட்ட பெரு இல்ாபமே அப்பேரரசின்
95

Page 54
வலிமைக்கும் பாதுகாப்பிற்கும், அதன் சேவைகளுக்கும் ஈடு கொடுத்திருந்தது. கி. பி. 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் துார கிழக்கில் ஆடம்பரப் பொருட்களுக்கும், மேற்குலகின் மூலப் பொதட்களுக்குமான வர்த்தகப் பரிவர்த்தனை நிலைய மாகக் கொன்ஸ்தாந்திநோப்பிள் விளங்கியது.
வரலாற்றாசிரியர் பைசாந்தியப் பேரரசின் வலிமைக் கும், சிறப்பிற்கும் வர்த்தகமும் கைத்தொழிலும் காரணமாக இருந்தன என்று குறிப்பிட்டாலும் அதன் பொருளாதாரத் தில் முக்கியமான பங்கை விவசாய நடவடிக்கைகளும் பெற் றிருந்தன. பிற்பட்ட உரோமப் பேரரசின் காலத்தில் வளர்ச்சி யடைந்திருந்த விவசாய முறை பைசாந்தியப் பிரதேசங்க ளிலே வழக்கத்திலிருந்து வளர்ச்சி அடைந்தது. பைசாந்திய விவசாய வரலாறே சிறு விவசாயிகளுக்கும் பெருநிலம்படைத்த செல்வந்த உயர்குடியினர் மடாலயங்களுக்கும் இடையி லான ஒரு போராட்டமாகவே காணப்படுகின்றது. கி. பி. 11 ஆம் நூற்றாண்டுவரை அரச சட்டவாக்கங்களின்மூலம் சிறு விவசாயிகள் ஒரளவு தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆனால் கி பி. 1025 இன் பின்பாக உயர்குடியினர் அரசாங்க அதிகாரத்தைப் பெற்று இந்த சிறு விவசாயிகளை ஏழைக் குத் தகையாளர்களாக மாற்றிவிட்டனர். பெரும்பாலான நிலங்கள் பெரிய தோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவை இத் தாலியில் காணப்பட்ட LATIFUNDIA" என்னும் தோட்டங் களை ஒத்திருந்தன. செழிப்பான விவசாய நிலங்களில் காணப் பட்ட குடித்தொகையில் பெரும்பாலானவர்களாக குத்தகை விவசாயிகளும் அடிமைகளுமாக இருந்தன. திருச்சபை, மடால யங்கள் பெரிய அளவிலான நிலங்களில் முன்னேற்றமான விவ சாய நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் நாட்டின் வரு வாய் தரக்கூடிய சொத்துக்களைப் பெற்றிருந்தன. காலாகாலம் கிறிஸ்தவ நம்பிக்கைகொண்ட மக்கள் அளித்த நிலத்தானங்க ளினாலும், பிற கொடைகளினாலும் பெரும் சொத்துப் பெற்ற நிறுவனங்களாக இவை விளங்கின. இந்நிலங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் துறவிகளோ, குருமார்களோ அல்லர், அடிமைகளும், பண்ணையாட்களும் இங்கு வேலை களில் ஈடுபட்டிருந்தனர். கி , பி. 7ஆம், 8ஆம் நூற்றாண்டு களில் அடிமைகளாக வேலைசெய்தவர்கள் சுதந்திரம் பெற்று நிலச் சொந்தக்காரர்களாக மாறி விவசாய முயற்சிகளில் திரும்பவும் தோற்றம் பெற்று சுதந்திர விவசாயக் குடிகள் தங் கள் உரிமைகளை இழக்கின்றனர். -
96

பைசாந்தியப் பேரரசில் மக்களிடையே மதம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. இதனால் மதக் கோட்பாடுகள் பொறுத்து அதிக ஈடுபாடு காட்டப்பட்டதுடன் தீவிர கருத்து மோதல்களும் இடம்பெற்றது. தீவிர தத்துவார்த்தப் பிரச்சினை கள் காரணமாகப் பேரரசுகள் இவற்றில் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அநேகமாக இக்கருத்து வேறுபாடுகள் கிறிஸ்தவ திரித்துவக் கேட்பாடு சம்பந்தமாகவும், விக்கிரக வழிபாடு சம்பந்தமாகவும் ஏற்பட்டன. சிறப்பாக இரு வகையான மதப்பிரிவுகளுக்கு இடையே இந்தப் போட்டி காணப்பட்டது. l) 56 dai, 6th Ludu guaidstb - Mono Physite movement 2) திருவுருவகலை ஒழிப்பு இயக்கம் - Iconoclastic
InOVCIOient
முதலாவது கிறிஸ்துநாதரை இயற்கையுடன் அடையாளங் கண்டு அதனைத் தெய்வீகமாகக் கருதுவது. இது நியோ பிளாட்டானியத் தத்துவத்தின் பிரதிபலிப்பாகும். கி , பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பேரரசன் ஜஸ்ரினியஸ் ஆட்சி யிலே (527 - 565) இது உச்ச நிலை அடைந்து சிரியா, எகிப்து பிரதேசங்களிலே கூடியளவு செல்வாக்குப் பெற்றிருந்தது. ஜஸ்ரினியன் ஆட்சிக்காலத்தில் மதத்துறையில் இவ்விரு இயக்கங் களும் இயங்கிவந்தன. கி.பி 7ஆம் நூற்றாண்டில் Monophysite பிரிவு கீழைத்திருச்சபையில்இருந்து லிலகிக்கொண்டது. இப்பிரிவு தற்போது எகிப்து, சிரியா ஆர்மீனிய பிரதேசங்களில் முக்கியத்துவம் பெற்று கிறிஸ்தவப் பிரிவாக விளங்குகிறது.
திருவுருவக்கலை ஒழிப்பு இயக்கமானது கி. பி. 725இல் பேர ரசர் மூன்றாம் லியோ ( Leo I ) ஆல் தேவாலயங்களில் உள்ள திருவுருவங்களை ஒழிக்கும் கட்டளையுடன் ஆரம்பமா னது. கீழைத்திருச்சபையில் கடவுளின் உருவங்கள், கிறிஸ்து நாதர், மற்றும் பிற துறவிகளின் உருவங்கள் திருவுருவங்கள் ( Icon ) எனப்பட்டன. இத்திருவுருவ வழிபாட்டை எதிர்ப்ப Guri 66it Iconoclasts sdi ogji Image - Breakers ( 5a56joj6u உடைப்பாளர் ) எனப்பட்டனர். திருவுருவக்கலை ஒழிப்பு இயக் கத்தவர் பாகனிஸ்த்தையும் (Paganism ) உலகப்பற்றுள்ள திருச்சபையினரையும் எதிர்த்தார்கள். அடிப்படையில் பேரர சின் தனி முதன்மைக்கு மாறுபாடு கொண்டதாக இக்காலக் கிழக்கத்தைய திருச்சபையின் நடவடிக்கைகள் அமைந்தன. மடாலயங்கள் பேரரசின் தேசியசெல்வத்தின் பெரும் பகுதியை
Ձ7

Page 55
உறுஞ்சிக்கொண்டன. இராணுவத்திலிருந்த மக்களையும், வேறு நல்ல தொழில்களில் இருந்த கிறிஸ்தவர்களையும் ஆசைகாட்டி திருச்சபை இழுத்துப் பேரரசின் பொருளாதார உறுதிக்கே பள்ளம் தோண்டியது. திருச்சபைத் துறவிகள் திருவுருவ உற் பத்தியிலும், விற்பனையிலும் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியைப் பெற்றுக்கொண்டனர். பேரரசர்களின் திருவுருவ வழிபாட்டு எதிர்ப்பு இயக்கம் இயற்கையாகவே பக்தியுள்ள கிறிஸ்தவர்களைத் திருச்சபைக்கு ஆதரவாளர்களாக ஆக்கியது. எப்படி இருந்தபோதும் திருவுருவ வழிபாட்டிற்கு எதிரான இயக்கம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து நடாத்தப்பட்டது.
பைசாந்தியப் பேரரசர்களின் திருவுருவ வழிபாட்டு எதிர்ப்பு இயக்கத்திற்கு பேரரசினுள் காணப்பட்ட நிலைமைகளை விடப் பேரரசுக்கு வெளியே புதிய மதமான இஸ்லாமிய மத மும், கிறிஸ்தவம் பற்றி அது தெரிவித்த விமர்சனங்களும் ஒருவகையில் காரணமாகின. திருவுருவங்களை திருக் குர்ஆன் * சாத்தானின் வேலையாகவே' விமர்சித்தது. மொத்தத்தில் திருச்சபைமீதும், மடாலயங்கள்மீதும் பேரரசனின் கட்டுப்பாட் டையும் அதிகாரத்தையும் செலுத்தும் ஒரு நடவடிக்கையாக திருவுருவ வழிபாட்டு எதிர்ப்பு இயக்கம் விளங்கியதெனலாம்.
திருவுருவ வழிபாட்டு எதிர்ப்பு இயக்கம் பொறுத்து ஒன்ப தாம் நூற்றாண்டில் ஒருவகையிலான தீர்வு காணப்பட்டபோதும் அதன் விளைவுகள் பாரதூரமானவையாக அமைந்தன. மிகவும் கவலையான விடயம் என்னவெனில் பைசாந்தியக் கலைவடிவங் கள் பேரரசரின் கட்டளையைத் தொடர்ந்து தேடி அழிக்கப்பட் டன. இவ்வகையில் கலைப்படைப்புக்களுக்குப் பெரும் புகழ் பெற்ற பைசாந்தியக் கலைவடிவங்கள் பெருமளவில் அழிக்கப் பட்டன.இன்று நமக்குக் கிடைக்கும் பைசாந்தியக் கலைவடிவங்கள் அப்பிராந்தியத்தில் அல்லாது பேரரசர் கைக்கு எட்டாதிருந்த இத்தாலி, பாலஸ்தீனம் போன்ற பகுதிகளில் கிடைக்கும் சில கலைப்படைப்புக்களாகவே உள்ளன. அடுத்த விளைவு கிழக்கிற் கும் மேற்கிற்கும் இடையில் மத அடிப்படையிலான பாரதூர மான முரண்பாடு ஏற்பட்டதாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை பாப்பாண்டவர்கள் பைசாந்தியத்துடன் நெருங்கிய வகை யிலே இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து இருந்தனர்.” ஆனால் திருவுருவ வழிபாட்டு எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் களால் பைசாந்தியப் பேரரசுடன் ஒத்துப்போக முடியாதிருந்
98

தது. முக்கியமாக மேற்கில் வழக்கிலிருந்த புனித பீற்றர் உட் பட்ட புனித துறவிகளின் வணக்க முறைமைக்கு எதிராக திரு வுருவ வழிபாட்டு எதிர்ப்பு இயக்கம் இருந்தமையினாலாகும் இப்பின்னணியில்தான் எட்டாம் நூற்றாண்டில் பாப்பாண்ட வர் பைசாந்திய எதிர்ப்பைச் சமாளிக்கப் பிராங்கிய மன்னர் களின் ஆதரவில் தங்கவேண்டியதாயிற்று. இப்போக்கு மேற்கை ரோப்பிய வரலாற்றில் கிழக்கு - மேற்கு உறவினைப் பொறுத்து மிக மோசமான கட்டத்தைக் குறித்தது. இதனைத் தொடர்ந்தே பைசாந்திய வரலாற்றில் உரோம மரபுகளுக்கும் கீழைத்தேய மரபுகளுக்கும் இடையிலான தகராறு, போட்டி பெரியதொரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. பொதுவாக வணக்கமுறை களில் திருவுருவ வழிபாடு, சடங்குகள் என்பன மதங்களைப் பொறுத்தளவில் மிக இன்றியமையாதனவாக உள்ளன. இந்த திருவுருவ வழிபாட்டு எதிர்ப்பியக்கத்தின் கொள்கைகள் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்டஸ்தாந்த சீர்திருத்தங்களைப் பெருமளவில் ஒத்திருந்தன. இறுதியாக இந்த எதிர்ப்பு கிறிஸ் தவ திருச்சபையில் கி பி. 1054 இல் இரு பிரிவுகளை அதாவது கிரேக்க வைதீகத் திருச்சபை, உரோமத் திருச்சபை என்பனவற்றை ஏற்படுத்தியது இதுவே கிழக்கத்தைய, மேற்கத்தைய பிரிவுகள் என அழைக்கப்பட்டன. இந்த நிலையில் இருந்து இவ்விரு பிரிவுக ளுக்கிடையிலும் வேறுபாடுகள் அதிகரிக்கலாயின.
பைசாந்தியப் பேரரசில் காணப்பட்ட சமுதாய நிலை முற்பட்ட இடைக்காலத்தில் மேற்கைரோப்பாவில் நிலவியதிலி ருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டுள்ளது. அந்தச் சூழ்நிலை யில் இத்தாலியின் பெரும்பாகம், பிரான்சின் தென்பாகம் ஆகியன நாட்டுப்புற வாழ்க்கையின் ஆரம்பநிலையில் காணப் பட்டன. பைசாந்திய சமுதாயமானது நகர்சார்ந்த தன்மை யையும், ஆடம்பரத் தன்மையையும் கொண்டதாகக் காணப் பட்டது. கி. பி. 11 ஆம் நூற்றாண்டில் கொன்ஸ்தாந்திநோப் பிளில் மட்டும் ஏறக்குறைய 1 மில்லியன் மக்கள் வாழ்ந்ததாக அறிகிறோம். அவ்வாறே நகர மையங்களாக விளங்கிய ரார்சஸ் (Tarsus), நிசேயா (Nicaea),எடிசா (EdeSSa) தெசலோனிக்கா (TheSSalonica) என்பனவற்றிலும் பெருமளவு மக்கள் வாழ்ந் தனர். சமுதாயத்தில் பெருவர்த்தகர், வங்கியாளர், உற்பத்தி யாளர் ஆகியோர் பெருநிலம்படைத்த பிரபுக்களுடன் ஒரே நிலையில் வைத்துக் கருதப்பட்டனர். இவர்கள் உயர்குடியாட்சி யின் அங்கத்தவர்களாக விளங்கினர். இவர்களது வருமானம் முக்கியமாகக் கைத்தொழில், வர்த்தகம் மூலமே பெறப்பட்டது.
99

Page 56
செல்வச் செழிப்புக் காணப்பட்டதால் இவர்கள் நுண்கலை களைப் போற்றி வளர்த்தனர். பைசாந்திய மக்களின் பெருமள விலான கைத்தொழில் முயற்சிகள் மூலம் பெறப்பட்ட வருமானம் ஆடம்பரப் பெருட்களின் நுகர்வினால் உறிஞ்சப்பட்டது. அதா வது மக்களின் செல்வத்தின் பெரும்பகுதி இடாம்பீக வாழ்க்கை யில் செலவழிக்கப்பட்டது. இந்த ஆடம்பரப் பொருட்களுக்குச் செல்வந்த வகுப்பினரிடையே நிறைந்த கேள்வி இருந்தது. கம் பளியினால் செய்யப்பட்ட சிறப்பான ஆடைவகைகள், பட்டு ஆடைகள், பொன், வெள்ளி இழைகளினால் அலங்கரிக்கப்பட் டிருந்தன. பல்வேறு அழகும், கவர்ச்சியுமான நிறங்களைக் கொண்ட ஆடைகள் , சித்திரத் தொங்கு சீலைகள், ஜரிகை, சித்திர வேலைப்பாடுள்ள பட்டாடைகள், பூவேலைப்பாடுகளி லான சணல் துணிகள், கண்கவரும் கண்ணாடி, பீங்கான், பாண்டங்கள், அருமையான விலையுர்ந்த கற்கள் பதித்த ஆப ரணங்கள் பைசாந்தியப் பேரரசின் செல்வச் செழிப்பிற்குச் சான்று பகர்கின்றன ஆனால் இவை மிகச் சிறிய பகுதியினராலே உற்பத்தியாக்கப்பட்டதுடன் மேல்வகுப்பு மக்களாலே பயன்படுத் தப்பட்டும் வந்தன.
கீழ் வகுப்பு மக்களுடைய வாழ்க்கை மிகவும் வறியதாக அமைந்திருந்தது. ஆனால் பைசாந்தியக் குடிமகன் ஒருவன் அக்காலக் கிறிஸ்தவ உலகில் வசித்த மக்களிலும் பார்க்கச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உடையவனாக இருந்தான். பெரிய அளவிலான கைத்தொழில் வர்த்தக அபிவிருத்திகள் உயர்ந்த பொருளாதார உறுதியை அளிக்க, அந்த நிலைமை ஆயிரக்கணக் கான நகரத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியது. இஸ்லா மியப் படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்களைத் தவிர்ந்த காலங்களில் இச்சிறப்புக் காணப்பட்டது. ஆனால் படையெடுப்புக் காலங்களில் கொன்ஸ்தாந்திநோப்பிளில் அகதி கள் தொகை அதிகரித்து அதனை அங்கு காணப்பட்ட பொரு ளாதார நிலைமையினால் சமாளிக்க முடியாதுபோயிற்று. பெரு நிலம் படைத்தவர்களின் தோட்டங்களில் ஏராளமான அடிமை கள் காணப்பட்டனர். இந்நிலப்பிரபுக்கள் மேற்கைரோப்பாவில் இருந்த நிலப்பிரபுக்களிலும் பார்க்க உயர்ந்த நிலையில் காணப் பட்டனர். அரச கட்டளைகள் மூலம் பெருநிலப் பிரப்புக்களின் சுரண்டல் தடைசெய்யப்படும்வரை இவர்கள் உயர்ந்த நிலையில் காணப்பட்டனர். பைசாந்திய சமூகமானது குறிப்பிடத்தக்க ளவு வீதமான அடிமைகளைக் கொண்டிருந்தது, விவசாய உற்
fOO

பத்தி முயற்சிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அடிமையின் மகன் அடிமையாகும் பரம்பரை வழக்கம் வழக்கில் இருந்தது* இவர்களுள் குறிப்பிடத்தக்க பங்கினர் வீட்டுவேலைகளில் ஈடு பட்டிருந்தனர்.
பைசாந்திய வாழ்க்கை முறைமையில் மதம் பிரதான இடத்தை வகித்திருந்தபோதும் இலெளகீகத்துறை சார்ந்த அம் சங்கள் நிலைபெற்றிருப்பதனை அறிந்துகொள்ளலாம். அவற்றுள் பிரதானமானது பண்டைய கிரேக்க உரோம இலக்கியத்தையும், அறிவுத்துறையையும் பேணிப் பாதுகாத்தமையாகும். பைசாந் தியப் பாடசாலைகளில் கிரேக்க இலக்கியப் படைப்புக்கள் போதிக்கப்பட்டதுடன், கற்றோர் வகுப்பினர் அடிக்கடி மகாகவி ஹோமரின் மேற்கோள்களைக் குறிப்பிடும் வழக்கம் இருந்த தாக அறிகிறோம். பைசாந்திய அறிஞர் பிளாட்டோ, அரிஸ் டோட்டல் என்போரின் தத்துவங்களை விரும்பிப் படித்த துடன் தூாஸிடைடிஸின் ( Thucydides ) உரை நடைப்பாணியில் GT@@ வும் முற்பட்டனர். அறிவுத்துறை பொறுத்துப் பைசாந்திய மக்கள் சிறிதளவான சொந்தப் படைப்புக்களையே ஆக்கியுள் ளனர். ஆனால் இதனிலும் கூடியதாகப் பண்டைய கிரேக்க, உரோம அறிவுத்துறைக் கண்டுபிடிப்புக்களைப் பேணிப்பாதுகாத் தமைதான் இவர்கள் செய்த மிகப் பெரிய அறிவுத்துறைத் தொண்டு எனலாம். நாங்கள் இன்று பெற்றுள்ள பெருமளவிலான கிரேக்க இலக்கியப் படைப்புக்கள் பைசாந்திய எழுத்தில் பிரதி பண்ணப்பட்டு எமக்குக் கிடைத்தவை ஆகும்.
பண்டைய கிரேக்க, உரோம அறிவுத்துறைகளில் பைசாந் தியர் காட்டிய ஈடுபாடு அங்கு சிறந்த கல்வி முறைமை ஒன்று உருவாகுவதற்கு வழிவகுத்தது. இது மதத்துறை சாராதவர்க ளுக்கான ஒரு கல்வியாகக் காணப்பட்டது. ( Laity) அத்துடன் பெண்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. ஆனால் உயர்குடியைச் சேர்ந்த, செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தனிப் பட்ட போதனாசிரியர்களைக் கொண்டு கல்வி புகட்டப்பட்டது. பெண் அறிஞர்களுக்குச் சிறந்த உதாரணமாக இளவரசி அனா God, Ittiaohao traoali (Sfiti L- Gunth. ( Princess Anna Comnena ) மேற்குலகில் கி. பி. 600 - 1200 காலப்பகுதியில் மதத்துறை சாராதவர்கள் ( Laity ) பொதுமக்கள் கல்வி பெற்ற சூழ்நிலை காணப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பைசாந்தியப் பேரரசில் சிறப்பு வாய்ந்த நிர்வாக அமைப்பு
Of

Page 57
ஒன்று வளர்ச்சிப்படுவதற்கும், அப்பேரரசைத் தொடர்ந்து நிலை பெறச்செய்யும் வகையில் அது இயங்கியதற்கும் இச்சிறப்பு வாய்ந்த கல்வி முறைமையே காரணமாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பைசாந்திய அறிஞர் ஆற்றிய தொண்டுகளில் குறிப்பிடத் தக்க இன்னொன்று உரோமச் சட்டங்களைத் திருத்தி, ஒன்று சேர்த்துப் பிற்பட்ட உலகிற்கு அளித்தமையாகும். கி. பி. 2 ஆம் 3 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்பான காலத்தில் படைப்பாற்றல் கொண்ட உரோம சட்ட அறிஞர்கள் மறைந்த பின்பாகத் தத்துவ அல்லது சட்ட, விஞ்ஞானத் துறைகளில் புதிதாக ஒன்றும் சோக்கப்படவில்லை. இயல்பான முறையிலே இச்சட்டங்கள் வளர்ச்சி அடைந்தன. கி. பி. 6ஆம் நூற் றாண்டில் உரோமச் சட்டங்கள் பல்வேறுபட்ட முரண்பாடுக ளையும். வழக்கில் இல்லாத சட்டமுறைகளையும் கொண்ட தாக மாறியிருந்தன. காலப்போக்கில் சமுதாய நிலைமைகள் மாற்றமடைய, இயல்பாகவே பழைய சட்டக் கோட்பாடுகள் புதிய சமுதாய நிலையுடன் ஒத்துவராதிருந்தன. சிறப்பாக இரண்டு அம்சங்கள்:
(i) கீழைத்தேய சர்வாதிகார ஆட்சி தாபிக்கப்பட்டமை (i) அரசாங்க மதமாகக் கிறிஸ்துவத்தை ஏறறுக்கொண்
டமை.
பழைய சட்டமுறைமைகள் ஒத்துவராததற்குப் பிரதான காரணமாயின கி. பி. 527 இல் பேரரசன் ஜஸ்ரினியன் ஆட் சிக்கு வந்ததும் உடனடியாகவே இச்சட்டமுறைகளை திருத்தியும் ஒன்றுசேர்க்கவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தான். அவ ரது முயற்சியானது புதிய சூழ்நிலைக்கேற்ப, தன் ஆட்சியதிகா ரப் படர்ச்சிக்கு ஏற்ப சட்டமுறைகளை வகுத்து அமைப்பதாக இருந்தது இதனை நடைமுறைப்படுத்துவதற்குச் சட்ட அறிஞர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுத் தனது அமைச்சர் றிபோனியன் ( Tribonian ) மேற்பார்வையின் கீழ் இயங்க ஏற் பாடு செய்தான். இருவருடங்களில் இக்குழு உறட்றியன் ( Hadrian) ஆட்சி தொட்டு ஜஸ்ரினியன் ஆட்சி வரையிலான காலப்பகுதியில் நிலவிய சட்டமுறைகள், தீர்ப்புக்கள் எல்லா வற்றையும் சீரானமுறையிலே வகுத்து வெளியிட்டது. கி. பி. 532 இல் இக்குழு எல்லாப் பிரசித்திப்பெற்ற யூரிமார்களின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு சுருக்கமாக (The Digest )வெளி
102

u L-s. GOD GAu 6T6ãiv6avnruid Gövsala) 600T gös Corpus Juris Civilis ஜஸ்ரினியன் சட்டத்தொகுப்பாக அழைக்கப்படுகின்றது.
ஜஸ்ரினியன் கால சட்ட அறிஞர்கள் பேரரசரின் தனிமுதன் மையை ஏற்றதுடன் அனைத்திற்கும் நிர்வாகி பேரரசனே என்றும், மக்கள் அனைவரும் அவர் அதிகாரத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் என்பதனையும் ஏற்று இருந்தனர். மறுவார்த் தையில் கூறுவதாயின், பண்டைய உரோம சட்டமானது கட வுளின் சட்டத்துக்கு (Law of God) மட்டும் அடங்கி நடக் கும் தன்மை கொண்டிருந்தது. அது தற்போது இறைமை யுள்ள, கீழைப் பண்புள்ள முடியாட்சியின் தேவைகளுக்கேற்பத் திருத்தியமைக்கப்பட்டது. ஜஸ்ரினியனின் சட்டத்தொகுப்பு சட்ட அரசாங்க வரலாற்றில் தனிமுதன்மை வாய்ந்த செல் வாக்கை ஏற்படுத்தியுள்ளதுடன், 11 ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்கைரோப்பிய அரசுகளின் அனைத்துச் சட்ட முறைகளுக் கும், சட்ட ஆதிக்கத்திற்கும் அடிப்படையாக விளங்கியது. அத்துடன் 19 ஆம் நூற்றாண்டில் நெப்போலியன் சட்டத் தொகுப்பிற்கு அடிப்படையாக இருந்ததுடன், தற்போது பெரும் பாலான உலகநாடுகளின் சட்டமுறைமையில் குறிப்பிடத்தக்க ளவு செல்வாக்கை ஏற்படுத்தியதாகவும் விளங்குகின்றது.
பைசாந்தியப் பேரரசில் வாழ்ந்த தத்துவஞானிகள் பண் டைய கிரேக்க தத்துவஞானிகளைப்போலச் சிறப்புப் பெறா தவர்களாக இருந்தபோதிலும் புலமைவாதம் ( Scholasticism ) என்ற கோட்பாட்டின் அபிவிருத்திக்குத் தொண்டாற்றியுள்ள னர். இத்தத்துவக் கோட்டாடு பிற்பட்ட இடைக்காலத்தில் அதிக பிரசித்திபெற்ற தத்துவக் கோட்பாடாக விளங்கியது. இவர்கள் அரிஸ்டோட்டலின் போதனைகளுடன் கிறிஸ்தவ வேதா கமத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முரணற்றவகையிலே இணைத்துக் காட்ட முற்பட்டனர். பைசாந்திய இலக்கியத்தின் பெரும் பகுதியானது தொகுப்புக்களாகவும், மதநூல்களாகவும் சிறப்பாகச் கலைக்களஞ்சியங்கள், உரைநடைகள், துறவிகளின் சுயசரிதைசுள், துதிப்பாடல்களைக் கொண்டவையாக விளங்கு கின்றன. அத்துடன் வரலாற்றுக் கதைகளைக் கொண்ட காவி யப் பாடல்களையும் ( Epic Poetry ) உணர்ச்சிப் பாடல்களை uyth ( Lyric poetry) Qasitatio Gaira ar. இக்காலப்பகுதியில் வாழ்ந்த பிரசித்திபெற்ற வரலாற்றாசிரியர் ஐஸ்ரினியனின் சமகாலத்தவரான பிறொகொப்பியஸ் ( Procopius ) ஆவார்.
O3

Page 58
இவர் எழுதிய Secret History எனும் நூல் அக்காலத்தில் நடை பெற்ற சம்பவங்களைப் பற்றிப் பெறுமதிமிக்க தகவல்களைத் தருகின்றது.
பைசாந்தியப் பேரரசின் ஆரம்பகால விஞ்ஞானமானது கெலனி
( கிரேக்க ) விஞ்ஞானத் துறைகளைப் பேணிக்காப்பதையே கொண்டிருந்தது. இத்துறையில் ஒரு நீண்டகாலத் தேக்கநிலை காணப்பட்டது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டின் பின்பாக இஸ் லாமியச் செல்வாக்கைத் தொடர்ந்து ஏழாவது கொன்ஸ்ரான்ரைன் மன்னர் காலத்தில் வளர்ச்சி கண்டது ஆரம்பகால விஞ்ஞானி sG6ir yps56ör Gud Glu siðpauriřssoir John the Gramme rian Frið pólu6iv ( Aetius ) ( Alexander of Tralles ) J-8EAGuLuíTUTTGAurf, Gypsir னவர் பெளதீகம், இலக்கணத்துறையில் சிறப்புப் பெற்றுவிளங்க பின்னைய இருவரும் மருத்துவத்துறையில் சிறப்புப் பெறுகின் றனர். ( கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் ) ஜோன் அசைவு, ஈர்ப்பு பற்றிய மரபுவழிக் கோட்பாட்டினை முதற்தடவையாகக் கேள் விக்கிடமாக்கியவராகவும், ஜடத்துவக் கோட்பாட்டை உருவாக் கியவராகவும் விளங்குகின்றார். ஈற்றியஸ் தொண்டை, கரப் பான் நோய் பற்றிய முதல் விபரிப்பைச் செய்தவராகவும், கண் நோய்கள் பற்றித் திறம்பட்ட குறிப்புக்களை அளித்தவ ராகவும் சிறப்பைப் பெறுகின்றார். பிற்பட்ட காலத்தில் சிறப் புப் பெற்ற விஞ்ஞானியும் மருத்துவரும் சிமியேன் சேத் (Symeon Seth ) ஆவர். இவர் மருத்துவச் சொல் அகராதி ஒன்றை ஆக்கியுள்ளார். இந்த அகராதி பல்வேறுபட்ட மருந்து வகைகளை முக்கியமாக இந்து இஸ்லாமிய மருந்து வகை களையும் விபரிக்கின்றது.
பைசாந்திய மக்கள் ஆடம்பரத்திலும். அழகிலும் கொண் டிருந்த விருப்பத்தை அவர்களுடைய கலைவடிவங்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. பைசாந்திய நாகரிகமானது உரோமப் பண் புகளையும், கிழக்கத்தைய மூலகங்களையும் கொண்டிருந்தமை யால் அதற்கேற்றவாறே பைசாந்தியக் கலையும் இரு தன்மைக ளையும் கொண்டதாக வளர்ச்சிபெற்றது. துறவுநிலை வளர்ச்சி பெற்றமையும், மதத்தத்துவ வேறுபாடுகள் ஏற்பட்டமையும் கலைத்துறை உன்னதறிலையை அடையமுடியாமல் தடுத்தன எனக் கூறலாம். கி. பி 6 ஆம் நூற்றாண்டில் ஜஸ்ரினியன் ஆட்சியில் பைசாந்தியக் கலாசாரத்தின் பெரு மலர்ச்சியின்போது கலை. கட்டிடக்கலை என்பன உச்ச நிலையை அடைந்தன. அழகின் பெருமை, பொறியியல் திறமை உரோமப் பண்பினைக் காட்ட,
1 O4

பகட்டான நிறங்களும், கண்ணாடி, கோல வேலைப்பாடுகளும் கீழைப்பண்பைக் காட்டுகின்றன. பைசாந்தியக் கலை வரலாற் றில் மிக உயர்த்த இடத்தை வகிப்பது Santa Sophia ( Holy Wisdom ) என்ற தேவாலயமாகும், பேரரசன் ஜஸ்ரினி யனால் பெரும் செலவில் கொன்ஸ்தாந்திநோப்பிளில் கட்டப் பட்ட இத்தேவாலயம் கட்டடக்கலை வரலாற்றில் தனிச்சிறப் பைப் பெற்று விளங்கியதுடன் அதன் அமைப்பு. வடிவம் பொறுத்தும் புதிய அம்சங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப் பட்டதாக முக்கியத்துவம் பெறுகின்றது.
பிற பைசாந்தியக் கலைகளில் சிறப்பிடம் பெறுபவை தந்த வேலைப்பாடுகள், கண்ணாடித்தொழில், அலங்கரிக்கப்பட்ட ஆடை வகைகள், சுவடிகளுக்கு விளக்கம் எழுதுதல், பொன், மணி ஆபரணவேலைகள் குறிப்பிடத்தக்களவு சித்திர வேலை கள் ஆகியனவாகும். பல நிறங்களைக் கொண்ட கண்ணா டித் துண்டுகள், மங்காத ஒளிவீசும் நிறக் கற்களைக்கொண்டு கேத்திர கணித அமைப்புக்களில் வடிவங்களை உருவாக்கி அழகுபடுத்துவது ( Mosaics ) இவர்களது கலைப்பாணியாகும். இவை தாவர, மிருக வடிவங்களிலும் அமைக்கப்படும். இவர்
களது ஓவிய வேலைப்பாடுகள் சிக்கலானவையாகவும், தனி முதன்மை பெற்றனவாகவும் காணப்படுகின்றன. தேவாலயங் களின் உட்பகுதிகளில் இந்த வேலைப்பாடுகளைக் 5 TOT லாம். சாந்தா சோபியா தேவாலயத்திலும், ராவென்னா வில் அமைக்கப்பட்டுள்ள தேவாலயங்களிலும் இவற்றைப் பார்க்கலாம்.
பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கு கிழக்கைரோப்பாவி லும், மேற்கைரோப்பாவிலும் நன்கு பரவியுள்ளன. கிழக்கே றஸ்யாவில் கூடியளவு இதன் செல்வாக்குக் காணப்படுகின்றது. றஸ்யத் திருச்சபை கிரேக்க வைதீக அல்லது கீழைத்திருச் சபை என்றே அழைக்கப்படுகின்றது. கி. பி. 1054 இல் உரோ மிலிருந்து முற்றாகப் பிரிந்தபோது பைசாந்தியப் பேரரசனைப் பின்பற்றி றஸ்ய மன்னரும் றஸ்யத் திருச்சபையின் தலை வராக மாறிக்கொண்டார். றஸ்ய கட்டிடக்கலை, அவர்கள் கலண்டர் முறை, அவர்கள் எழுத்துமுறையில்பெரும்பகுதி எல்லாவற்றிலும் பைசாந்திய மூலத்தைக் காணலாம். றஸ்யா வில் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி முறைமைகூட பைசாந் தியப் பேரரசின் செல்வாக்கின் விளைவேயாகும். கிரேக்க, உரோம நாகரிக அம்சங்கள், அறிவுத்துறைச் சித்திகளைப்
105

Page 59
பேணிக்காத்துப் பிற்பட்ட உலகிற்குக் கொடுத்ததும் பைசாந் தியப் பேரரசேயாகும். இத்தாலிய மறுமலர்ச்சியில் பைசாந் திய அறிஞர் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலிய நக ரங்களில் வெனிஸ், ஜெனோவா - கொன்ஸ்தாந்திநோப்பிள் இடையிலான நெருக்கமான வர்த்தகம் கிழக்கு - மேற்கு உல கிடையிலான கலாசாரத் தொடர்புக்கு வழிவகுத்தது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாகப் பிரசித்திபெற்ற பைசாந்திய அறி ஞர் இத்தலிக்கு வந்து பண்டைய கிரேக்க அம்சங்களை மறுமலர்ச்சி செய்தனர். அவ்வாறே பைசாந்தியக் கலையும் மேற்கு ஐரோப்பாவில் பரவிற்று. நிறக்கண்ணாடிகளால் அழ குபடுத்தல், ஜன்னல்கள் அமைப்பு - பல பிரசித்திபெற்ற இத் தாலியத் தேவாலயங்கள் பைசாந்தியப் பாணியில் கட்டப்பட் டன. வெனிஸில் கட்டப்பட்ட புனித மார்க் ( St. Mark ) தேவாலயம் இதற்கும் சிறந்த உதாரணமாகும். மறுமலர்ச்சிக்கால ஒவியங்கள் கூட பைசாந்திய ஓவியச் செல்வாக்கிற்கு உட்பட்டி QUjögsGr. I ST35mt6sTLDmt6v Venetion School gáë GaFri jöss ( Elgreco ) எல்கிறிகோவை சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். இவ் வசையில் பலவழிகளில் பைசாந்திய நாகரிகம் ஐரோப்பாவைப் பாதித்திருந்தது.
f O6

VI ஐரோப்பாவில் இஸ்லாமியப்
படர்ச்சியும் விளைவுகளும்
அராபியர் இஸ்லாத்தின் எழுச்சிச்கு முற்பட்ட காலத்தில் கடலுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி இருக்க வில்லை. இஸ்லாத்தின் எழுச்சிக்குச் சிறிது முற்பட்ட காலத் தில் தென் அராபியாவில் வாழ்ந்த மக்கள் கப்பல் கட்டி, செங் கடல், இந்து சமுத்திரப் பிரதேசங்களின் முக்கிய கரையோர மார்க்கங்களில் நடமாடினர். ஆனால் வட அராபியர் (Hiz - Syria, raq எல்லைப் புறங்களில் வாழ்ந்தவர்கள் கண்டம் சார்ந் தவர்களாகவும், கடல், கப்பலோட்டம் பற்றிச் சிறிய அறிவை உடையவர்களாகவும் விளங்கினர். இஸ்லாமியக் கைப்பற்றல்களின் பின்பாக இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் தாமாகவே கப்பலோட் டம் பற்றி ஆர்வம் கொண்டு அவற்றில் ஈடுபட்டனர்.சிரியா, எகிப்தியக் கரையோரங்களைக் கைப்பற்றிய சில வருடங்களுக் குள்ளேயே அராபிய வனாந்தரங்களில் வாழ்ந்தவர்களால் வலி மையும், அனுபவமும் மிக்க பைசாந்தியக் கடற்படையை எதிர்த்து வெற்றி பெறக்கூடிய பெரிய யுத்தக் கப்பல்களைக் கட்டமுடிந்தது. அத்துடன் அல்லாது கலிபா " ( Caliphate ) அரசுக்குப் பாதுகாப்பையும், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையை யும் அளிப்பதாக அராபியக் கடற்படை மாற்றம் பெற்றது. இறுதியில் மத்திய தரைக் கடலில் அது தன் கடலாதிக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது.
சிரியா, எகிப்தியக் கைப்பற்றல்கள் மத்தியதரைக் கடலோ ரத்தின் நீண்ட பரந்த பகுதியையும், அநேக துறைமுகங்களை யும், கடல் முயற்சியுடைய மக்களையும் இவர்களுக்கு அளித்தது. இதனால் நீண்ட மத்தியதரைக் கடலோரம் முழுவதும் அராபி யரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. அராபியர் பைசாந்தியத் தரைப் படையை மட்டுமல்லாது கடற்படையை யும் எதிர்த்து வெற்றிபெறும் பலம் வாய்ந்தவர்களாக மாறினர். இவ்வகையில் கி. பி. 665 இல் முதற் பெரிய கடற்போர் இடம் பெறுகின்றது. இதில் 200 யுத்தக் கப்பல்களைக் கொண்ட முஸ்லிம் கடற்படை பெரிய அளவான பைசாந்தியக் கடற் Hடையை அனற்றோலியாக் கரையில் படுதோல்வி அடையச் செய்தது. அப்பாசைத் ( Abbasids) வம்சத்தவர்களால் தலை

Page 60
நகரம் பாக்தாத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து எகிப்து, வட ஆபிரிக்காவில் எழுந்த சுதந்திர முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்கள் கடல் வலிமையைப் பெருக்கிக்கொண்டனர். இதனால் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் வர்த்தகர்கள் மத்திய தரைக் கடலில இருந்த முஸ்லிம் கரையோரத் துறைகளுக்கும், வடக்கேயிருந்த கிறிஸ்தவத் துறைகளுக்கும் இணைப்பை ஏற் படுத்தி வந்தனர்.
புதிதாக அமைக்கப்பட்ட முஸ்லிம் கடற்படையால் முதலா வதாக எடுக்கப்பட்ட முயற்சி கிழக்கு மத்தியதரைக் கடலில் பைசாந்தியக் கடற்படையின் மூன்று முக்கிய தளங்களான சைப்பிரஸ், கிறீட், றோட்ஸ் என்பவற்ைறைக் கைப்பற்றுவ தற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். கி. பி. 649 இல் மேற் கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையால் இம்மூன்று தீவுகளும் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்தக் கைப்பற்றல்களைத் தொடர்ந்தும் வைத்திருக்கமுடியவில்லை. ஆனால் கூடிய முக்கி யத்துவமுடைய கைப்பற்றல்கள் ஸ்பானியா மீதும், சிசிலிமீதும் மேற்கொள்ளப்பட்டவைகளாகும். இந்த இரு பிரதேசங்களின் மூலமாகத் தான் ஐரோப்பிய நாகரிகம் பல விளைவுகளை அடைந்துகொண்டது. இந்த இரு பகுதிகளிலும் நீண்டகாலம் இஸ்லாமியர் ஆட்சி நிலவியமையினால் அந்நாகரிகத்தின் பல சிறப்பம்சங்களை ஐரோப்பிய நாகரிகம் இப்பகுதிகளில இருந்து பெற்றுக்கொண்டது.
மற்றைய ஐரோப்பியப் பிரதேசங்களிலும் பார்க்க கூடியள வான விளைவுகளை இஸ்லாமிய ஆட்சியில் ஸ்பானியப் பிர தேசம் பெற்றுக்கொண்டது. ஐரோப்பாவில் அராபிய ஆதிக்க வரலாற்றிலே இப்பிரதேசமானது கூடியளவு பங்கின்ைப் பெறு கின்றது. தொடர்ந்து எட்டு நூற்றாண்டுகளாக ( கி. பி. 712 - 1492 ) இஸ்லாமியர் ஆட்சியில் இத்தீபகற்பம் இருந்தமையினால் பலதரப்பட்ட அனுபவங்களை அது பெற்றுக்கொண்டது. வட மேற்கு ஆபிரிக்காவின் தேசாதிபதியாக இருந்த முஸா - இப்ன் - நுசைர் (Musa - Ibn - Nusair) கி. பி. 711 இல் பெரியதொரு படையெடுப்பை மேற்கொண்டு ஸ்பானியாவில் விஸிகொத் படை யைத் தோற்கடித்துக் கோர்டோவா, ரொலிடோ ஆகிய பகுதி களை கைப்பற்றினான். அடுத்த வருடம் முஸா இன்னொரு வலிமை பொருந்திய அரபுப் படையொன்றுடன் சென்று சிசிலி ( Seville ), மெறிடா ( Merida ) ஆகிய குடியிருப்புக் களைக் கைப் பற்றினான். மிக விரைவாக முன்னேறி கி. பி. 718 இல் ஐபீரியத்
1. OS

தீபகற்பத்தின் பெரும்பாகத்தை அராபியர் கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் பிரணிஸ் மலையைக் கடந்து தென் பிரான்சில் தாக்குதல்களை மேற்கொண்டபோது பிரான்சிய மன்னனான சார்ள்ஸ் மாட்டெல் தலைமையில் கி. பி. 732 இல் G3iřGħv (Tours ) GB um riš55 GMTšGáiv ( Battle of Poitiers ) g6ňGavmr மியப் படை தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போரானது ஐரோப் பிய வரலாறு பொறுத்து மிக முக்கியத்துவமுடையதாக விளங் குகின்றது. அரபுப் படர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதுடன் மட்டு மல்லாது கிறிஸ்தவ மதத்தை அழியாமல் பாதுகாத்துக் கொடுத்ததும் இப்போரேயாகும். இதன் விளைவாக இஸ்லாமியர் ஆதிக்கம் ஸ்பானியாவுடன் நின்று கொள்ளவேண்டியதாயிற்று. கி. பி. 712 இல் ஆரம்பித்த இஸ்லாமிய ஆதிக்கம் கி. பி. 1492 இல் முற்றாக அழிக்கப்படும் வரை ஏறத்தாள எட்டு நூற் றாண்டுகள் அங்கே நிலைத்திருந்தது.
இந்த நீண்டகால இஸ்லாமியர் ஆட்சியின் விளைவாக ஸ்பானியாவின் விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங் கள் ஏற்பட்டன. இப்பண்பு மற்றைய ஐரோப்பியப் பிரதேசங் களில் நாம் காணமுடியாத ஒன்றாகும். ஏனைய ஐரோப்பியப் பகுதிகளில் நிலமானியமுறை முக்கியத்துவம் பெற்றிருக்க இங்கு அதனின்றும் வேறுபட்ட ஒரு அமைப்பு வழக்கிலே இருந்தது. அதாவது இங்கு சிறு நிலம் படைத்த விவசாய வர்க்கம் - ( Latifundia) இஸ்லாமியர் ஆட்சியின் விளைவாகத் தோற்றம் பெற்றது. பழைய ஆட்சியில் அதிகாரத்திலிருந்த பிரபுக்கள். குருமார்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுப் பகிர்ந்து சிறு விவசாயி களுக்கு வழங்கப்பட்டன. இச்சிறு நிலச் சொந்தக்காரர்களே ஸ்பானியாவில் முஸ்லிம் ஆட்சியில் விவசாயச் செழிப்பிற்குக் காரணர்களாக இருந்தவர்கள். ஸ்பானியாவிலே இஸ்லாமியர் விஞ்ஞான முறையில் அமைத்த நீர்ப்பாசன முறையையும், பல புதிய பயிர்களையும் அறிமுகஞ்செய்தனர். புதிய பயிர்களுள் பருத்தி, கரும்பு, அரிசி, மல்பரி என்பன குறிப்பிடத்தக்கன. இஸ்லாமிய ஆட்சியில் ஸ்பானிய அரசின் விவசாயமானது அவர் கள் கையாண்ட நீதியான நிலக்குத்தகை முறையால் செழிப் புற்றது. இன்றும் கூட ஸ்பானியாவிலும், சிசிலியிலும் இவர்க ளால் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன அமைப்புக்களைப் பார்க்க லாம். வனாந்தரப் பகுதிகளில் இருந்து வந்த தன்மையினால் நீரைச் சிக்கனமாக உபயோகிக்கும் பண்பு இவர்கள் அமைத்த நீர்பாசன அமைப்புக்களில் சிறப்பிடம் பெற்றது.
109

Page 61
இஸ்லாமியர் ஆட்சியில் பலதரப்பட்ட கைத்தொழில்கள் ஸ்பானியாவில் வளர்ச்சி அடைந்தன. சிறப்பாக நெசவுத் தொழில், மட்பாண்டத்தொழில், கடதாசி, பட்டு, கம்பளி உற் பத்தி, கரும்பாலைகள் என்பன முக்கிய இடம் பெற்றன. தங்கச் சுரங்கங்கள் வெட்டுதல், வெள்ளி, தங்கம் பிற உலோகத் தொழில் கள் சிறப்புப் பெற்றிருந்தன. இவ்வுற்பத்திகளுக்குப் புகழ்பெற்ற பல நகரங்கள் ஸ்பானியாவில் காணப்பட்டன. கோர்டோவா கம்பளி, பட்டு உற்பத்திகளில் சிறந்து விளங்கியது. மலாக்கா? ( Malaga ) , gau6u6875paum ( Vallancia ) , g65)GuDufount (Almeria ) , மட்பாண்டத் தொழிலுக்கும், கோர்டோவா ( Cordova ) , ரொலிடோ ( Toledo ) , யுத்தக் கருவிகளுக்கும், கோர்டோவா வீசா (Beza ) , கல்சினா (Calcena ) , தோற்பொருட்கள் கம்பளி விரிப்புக்களுக்கும் பெயர்பெற்று விளங்கின. தூரகிழக் கிலிருந்து பேப்பர் தொழில்நுட்பம் பெறப்பட்டு யற்றிவா, ( JATIVA) வலன்சியா போன்ற நகரங்களில் உற்பத்திசெய்யப் பட்டன. இஸ்லாம் பரவிய இடங்களில் நெசவுத் தொழில் பிர தான தொழிலாக விளங்கியது. கோர்டோவாவில் மட்டும் பத்தாம் நூற்றாண்டளவில் 13 , 000 நெசவாளர்கள் இருந்த தாக அறிகின்றோம். இவ்வாறு பலதரப்பட்ட கைத்தொழில் முயற்சிகளை இஸ்லாமியர் ஸ்பானியாவில் அறிமுகம் செய்து வளர்ச்சிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம் ஸ்பானியா நெருக்கமான வர்த்தகத்தைக் கிழக்கு வெளிநாடுகளுடன் மேற்கொண்டது. உரோமப் பேரரசின் வீழ்ச் சியின் பின்பாக வெளிநாட்டு வர்த்தகம் என்பது சீர்குலைவுற்றி ருந்தது மீண்டும் இவர்கள் ஆட்சியில்தான் அது சிறப்பைப் பெற ஆரம்பித்தது. மத்தியதரைக் கரையோரங்கள் இவர்கள் ஆதிக்கத்தில் இருந்தமையால் இப்பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் காணப் பட்டன. மத்தியதரைக் கடலின் வடக்கே இருந்த கிறிஸ்தவ அரசுகளுடன் தொடர்புகொண்டு வர்த்தகம் சிறப்புற நடத்தப் பட்டது. அவர்களது பலம்பெற்ற கடற்படை இவ்வர்த்தக முயற் சிகளுக்குப் பாதுகாப்பை அளித்திருந்தது. ஸ்பானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மத்தியதரைக் கடற் பிரதேசங்களில் விற்கப்பட்டன. இவர்களின் பிரதான சந்தையாக வட ஆபிரிக்கா, சிறப்பாக எகிப்து காணப்பட்டது கொன்ஸ்தாந்தி நோப்பிளில்பைசாந்திய வணிகர், ஸ்பானிய உற்பத்திப் பொருட்
களை வாங்கி இந்தியா, மத்திய ஆசியப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர்.
1 O

பல நூற்றாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர் ஆதிக்கம் நிலைத்து இருந்தமையால் ஸ்பானிய மொழியில் பல அரபுச் சொற்கள் காணப்படுகின்றன. பிரதானமாக விவசாய கைத் தொழில் துறைகளில் இச்சொற்கள் காணப்படுகின்றன. அரசியல் வாழ்க்கையிலும்கூட அநேக அரபுச் சொற்றொடர்கள் ஸ்பானிய உள்ளூர் நிர்வாகத்திலும், நீர்ப்பாசன அமைப்புக்கள் தொடர் பாகவும், இராணுவ சம்பந்தமானதாகவும் காணப்படுகின்றன. இன்று வரை இதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது அராபிய அல்லது பாரசீக மூலத்தைக் கொண்ட சொற்களாக Traffic, Tariff. Magazine, Aleahol, Muslin, Orange, Lemon, Alfalfa. Saffron, Sugar. Syrup, Mask Groizuo geup fig, உதாரணங்களாகும். அவ்வாறே அறிவுத்துறை சார்ந்தும் பல சொற்கள் ஸ்பானிய மொழியில் கலந்துள்ளன. Algebra, Cipher, Zero, Nadir, Amalgam, Alembic, Alchemy, Soda, Aimanac, என்பனவும், வானியலில் அவர்களுக்கு இருந்த புலமையை வெளிப்படுத்தும் வகையில் நட்சத்திரங்களின் பெயர்களாக Aldebaren, Batelgeuse 6Tairusy smal2TLuGSairspar.
ஐரோப்பிய நாகரிகத்திற்கு ஸ்பானியாவில் அதிகாரம் செலுத்திய அரபுக்கள் மிக முக்கிய தொண்டாற்றியுள்ளனர். அதாவது பண்டைய கிரேக்க, உரோம அறிவுத்துறை நூல்களைப் பேணிப் பாதுகாத்து - அரபுமொழியில் மொழிபெயர்த்து, அத்த மூல நூல்கள் பிற்காலத்தில் கிடைக்காதபோது திரும்ப வும் ஐரோப்பாவிற்கு அரபு மொழியிலாவது கிடைக்க வழி செய்த பெருமை இவர்களுடையதாகும். கிரேக்க, உரோம அறி வுத்துறை மிலேச்சப் படையெடுப்புக்களால் அழிந்துபோயிருந்த சூழ்நிலையில் இவை பைசாந்திய - அராபியர் மூலமாக மீண்டும் மேற்கைரோப்பாவிற்கு அளிக்கப்படுகின்றன. இம்முயற் சியில் ஸ்பானியாவில் இருந்த ஸ்பானிய அராபிய அறிஞரின் பங்களிப்பு சிறப்பானதாகும். கிரேக்க அறிவுத்துறைப் பாரம்பரி யங்கள்கூட ஸ்பானிய அராபியர்களால் கிழக்கேயிருந்து மொழி பெயர்ப்பு மூலம் பெறப்பட்டது. சிறப்பாக இரண்டாவது அக்த் - அப்த், அர். ரஹ்மான் ஆட்சியில் இம்முயற்சிகள் சிறப்பாக நடை பெற்றன.
ஸ்பானிய அராபியர் கிழக்கே இருந்த முஸ்லிம்கள் அறிந் திராத புதிய இலக்கிய வடிவங்களை ஆக்கிக்கொண்டனர். இவ் வடிவம் உணர்ச்சிப் பாடல்கள் என்று அழைக்கப்பட்டது. இப் புதிய வடிவமானது குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை முற்பட்ட

Page 62
ஸ்பானியக் கிறிஸ்தவப் பாடல்கள் பொறுத்து ஏற்படுத்தியுள் ளது அதேபோன்று மேற்கைரோப்பாவின் மற்றைய இலக்கி யங்கள் பொறுத்தும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பானியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் விளைவுகளில் தனிச் சிறப்பான உருவாக்கம் அதன் கலை, கட்டிடத்துறைகள்பொறுத்து ஏற்பட்ட மாற்றங்களாகும். இந்த அமைப்பு முறையானது அடிப் படையில் அரபு - கிட்டிய கிழக்கில் காணப்பட்ட பைசாந்திய மாதிரிகளைக் கொண்டுள்ளதாயிருந்தாலும், சில புதிய தனிப் பட்ட உள்ளூர் செல்வாக்கையும் கொண்டு வளர்ச்சியடைந்தது. கோர்டோவாவில் இருக்கும் புகழ்பெற்ற பள்ளிவாசலானது இப்புதிய கிஸ்பானே - மோரிஸ் மாதிரியின் (New Hispano - Moorish Style ) ஆரம்ப நிலையைக் குறித்து நிற்கின்றது. இப் புதிய பாணியின் வளர்ச்சி நிலையை - பிற்பட்ட காலத்தில் ஒசிலியில் உள்ள கிரோல்டா கோபுரம், ( Giralda Tower ) அல்கஸர் கட்டிடம் என்பனவற்றில் பார்க்கலாம். இஸ்லாமிய ஆதிக்கத்தினால் ஸ்பானியாவில் பல பெருமைமிக்க நகரங்கள் கட்டப்பட்டன. இவற்றிற்கு மிகச் சிறந்த உதாரணங்களாக ( Cordova, Toledo, Valencia, Granada) GastriG-rount. GJtinta? டோ, வலன்சியா, கிரனடா என்பனவற்றைக் குறிப்பிடலாம் இவ்வகையில் ஸ்பானியாவில் நகரத்தன்மை கொண்ட குடியிருப் புக்களை ஏற்படுத்தியவர்களாக இஸ்லாமியர் விளங்குகின்றனர்.
அரபுச்களின் செல்வாக்கு அறிவுத்துறை பொறுத்தளவில் முழு மேற்கு ஐரோப்பாவையுமே பாதித்துள்ளது. இவை ஸ்பானி யாவில் இஸ்லாமியர் ஆட்சியின்போது அவர்களால் நிறுவப் பட்டு வளர்க்கப்பட்ட கல்வி நிலையங்கள் ஊடாகப் பரவின. பல்வேறு நாடுகளில் இருந்து கிறிஸ்தவர்கள் ஸ்பானியாவுக்கு வந்து அங்குள்ள மக்களுடன் சேர்ந்து அரபுமொழி பேசும் முஸ் லிம்கள், யூத ஆசிரியர்களிடம் கல்வி கற்றனர். இங்கு அரபு மொழியிலிருந்த பல நூல்கள் லற்றின் மொழிக்கு மொழிபெயர்க் கப்பட்டன. பண்டைய கிரேக்கர்களின் பெருமளவிலான நூல்கள் முதன்முதலாக மேற்கிற்கு ஸ்பானியக் கல்வி நிலையங்களில் காணப்பட்ட அரபு மொழிபெயர்ப்பு நூல்கள் மூலமே கிடைத் தன. இவ்வகையில் ஐரோப்பிய நாகரிகத்திற்கும் கிழக்கு நாகரி கத்திற்கும் இணைப்பாகத் தம் நாகரிக அம்சங்களையும் சேர்த்து அரிய பணியினை இவர்கள் ஆற்றினர்.
மேற்கில் இஸ்லாமிய கலாசாரப் பரிமாற்றம் கிறிஸ்தவர் பொறுத்து ஏற்பட உதவிய ஒரு பெரும் மத்திய நிலையம் ரொலிடோ ஆகும். இது தெற்கிலிருந்து அகதிகளாக வந்த யூத
112

ஆசிரியர்களால் பலப்படுத்தப்பட்டது. கி. பி. 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக அல்பொன்சோ (Alfonso) ஆட்சியில் sigh)rfai (Castile), 65GSunrair (Leon), GurraíGLnr (Teledo) epair றிலுமிருந்த ஆசிரியர்கள் பெரிய அளவிலான மொழிபெயர்ப்புக் களைச் செய்தனர். அரிஸ்டோட்டல், யூகிளிட், தொலமி, கலன், கிப் போகிரட்டிஸ் போன்றோரின் நூல்கள் இங்கு மொழி பெயர்க்கப் பட்டன ஸ்பானியா எட்டு நூற்றாண்டுகளாக அரபுகள் ஆட்சியில் இருந்தமையால் அனைத்துத் துறைகளிலும் கூடியளவு செல் வாக்கு, பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சிலுவைப்போர்கள் வரை யுள்ள காலத்தில் ( 1096) அரபுச் சிற்தனைகளும், கிரேக்க நூல் களின் அரபு மொழிபெயர்ப்புக்களும் ஸ்பானியா, சிசிலி, ஊடா கவே மேற்கைரோப்பாவிற்குச் சென்றன. பைசாந்திய வழி அர புக்களுக்கு மூடப்பட்டது கருண் - அல் ராஸித் (Harun - Al (Rashid ) காலத்தில் சிசிலி, ஸ்பானியா ஊடாகத் தொடர்புகள் ஏற்பட்டன.
இஸ்லாமியர் ஆட்சியில் ஸ்பானியாவில் தாபிக்கப்பட்ட இரு பெரும் பல்கலைக்கழகங்கள் ரொலிடோ, கோர்டோவா என்ப வையாகும். இங்கு ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு பாகங் களில் இருந்து அறிஞர்கள் வந்து கிரேக்க தத்துவம் விஞ்ஞா னம் என்பனவற்றை அரபுமொழியில் கற்றனர். அத்துடன் முக்கி யத்துவமான அபிவிருத்திகளைக் கணித, வைத்தியத்துறைகளில் மேற்கொண்டனர். அத்துடன் அரபு அறிஞர்களின் சிந்தனைப் படைப்புக்களையும் கற்றனர். இவ்வாறு இங்கு வந்து கல்வி கற், றுச்சென்ற குறிப்பிடத்தக்க அறிஞர்களுள் இத்தாலியைச் சேர்ந்த Gerard of Cremona இங்கிலாந்தைச் சேர்ந்த றொபேட், ஸ்கொத்லாந்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
ஏழாம் அல்பென்ஸோ ஆட்சிக்காலத்தில் ரொலிடோ கல்விக் கழகத்தில் அரபுமொழியிலான கல்வியானது உயர்நிலையடைந் தது. இந்த மன்னன் கூடியளவு தாராள மனப்பாங்கு உடைய வனாக விளங்கியதனால் தன்னை King of the twoFaiths இரண்டு நம்பிக்கைகளின் அரசன்" என்று அழைத்துக்கொண்டான். அந் தளவிற்கு கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் சமரசத் தன்மைமை ஏற்றிருந்தான். இவனது ஆட்சியில் முஸ்லீம், அரபு ஆசிரியர், அறிஞர் கிறிஸ்தவ மாணவர்கள் முன்பில்லாத அளவிற்கு பிர ணிஸ் மலையைக் கடந்தும், கிழக்கிலிருந்தும் ரொலிடோவில் கல்வியறிவைப் பெறுவதற்கு வந்து கூடினர். அரபுக்கள் ஐரோப்
113

Page 63
பாவிற்குக் கொண்டுவந்தவற்றுள் அரபு எண்முறைமையும், அரிஸ் டோட்டல் படைப்புக்களும் அதிமுக்கியத்துவம் பெறுகின்றன’ அவர்கள் அறிமுகம் செய்த பேப்பரின் வருகை நூற்பிரதிகளை ஆக்குவதிலும், அறிவைப் பரப்புவதிலும், பேணுவதிலும் பிர தான பங்கைப் பெறுகின்றது.
ஸ்பானியா இஸ்லாமியரின் ஆதிக்கத்தில் பல நூற்றாண்டு கள் இருந்தமையால் அவர்களது கலாசாரத்திலும் இஸ்லாமியப் பண்புகள் கலந்திருப்பதனை அவதானிக்கலாம் அவர்களது ஆடைமுறைக்கம் அரபுக்களின் ஆடைமுறைக்கும் இடையில் ஒற் றுமை இருப்பதனைக் காணலாம். அத்துடன் ஸ்பானியத் தேசிய உணர்ச்சி வலுப்பட்ட ஒரு சக் யாக மத அடிப்படையில் மாறு வதற்கும் இஸ்லாமியர் ஆட்சியே வழிவகுத்தது. ஐரோப்பாக் கண்டத்தில் தீவிர மதப்பற்றுக்கொண்டவர்களாக ஸ்பானியர் விளங்குவதற்கு இந்த நெடிய அந்நியர் ஆட்சியே காரணமாகும்.
ஐரோப்பாவில் இஸ்லாமியப் படர்ச்சியில் ஸ்பானியாவைப் போலவே சிசிலியும் முக்கிய விளைவுகளைச் சந்திக்கலாயிற்று. சிசிலி முதலில் முஸ்லிம் ஆட்சியில் ரியூனிசியாவின் ஒரு மாகா ணமாகவே இருந்தது. அரசியல், நிர்வாக ரீதியில் அது வட ஆபிரிக்காவுடன் இணைக்கப்பட்டிருந்தது. கி. பி. 1040 அள வில் முஸ்லிம் ஆட்சி அங்கு உச்சநிலையை அடைந்தது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யாத்திரீகனான இப்ன் - கவ்குவால் (Ibn-Hawga ) சிசிலியின் பிரதான நகரான பலேமோவில் ( Palermo ) மட்டும் 300 பள்ளிவாசல்களைக் கண்டதாகக் குறிப்பிடுவதிலிருந்து எந்தளவுக்கு முஸ்லிம் ஆட்சி சிறப்புற்றிருந்தது என்பதனை விளங்கிக்கொள்ளலாம்.
கிழக்கில் கைப்பற்றிய பிரதேசங்க ஏற்படுத்திய அரதி சாங்கக் கொள்கைகயையே சிசிலியிலும்ளில்இஸ்லாமியர் புகுத் னர். நில விநியோகம், வருமானம் போன்ற விடயங்களில் மாற்றங்களை மேற்கொண்டனர். இங்கே பல அரபு இடப் பெயர்கள் காணப்படுவதிலிருந்து நெருக்கமான வகையிலே அர புக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததை அறியமுடிகின் றது. அத்துடன் அநேக அரபுச் சொற்கள் சிசிலி மக்களு டைய உரையாடல்களில் காணப்படுகின்றன. இத்தன்மை விவ சாயத்துறையில் அதிகமாகும். அராபியர் சிசிலிக்குத் திராட்சை, மல்பரி, இரும்பு, பேரீட்சை, பருத்தி என்பனவற்றை அறிமுகப் படுத்தினர் ஸ்பானியாவைப் போலவே முன்னேற்றமான நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கையை விருத்தி
1, 14

செய்தனர். சிசிலியில் சிறப்பாகப் பலேமாவில் இதனை இன் றும் அவதானிக்கலாம். அவற்றை அரபுப் பெயர்களில் அடை யாளம் காணலாம். தற்போது சிசிலியில் அரபு ஆட்சியின் ஞாபகச் சின்னங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன என்றே கூறலாம். புகழ்வாய்ந்த சிசிலிய அரபுக் கவிஞன் இப்ன் - apriņ6i ( Ibn-Homdis ) (1132) gap 6irafu, gfu மொழிபெயர்ப்புக்கள் மூலமே இப்போது அறியப்படுகின்றர்.
சிசிலியை நோர்மன் (Normans) கைப்பற்றினாலும், அங்கு பரவியிருந்த இஸ்லாமிய கலாசாரத்தை ஏற்றுக்கொண்டனர். சிசிவி மன்னன் இரண்டாம் ரோகர் ( Roger 11 1130 - 1154 ) அராபியத் துருப்புக்கள், கட்டிடக் கலைஞர் உதவி யுடன் கட்டிடங்களை அமைத்தான். இப்பாணி சரஸெனிக்நோர்மன் பாணி என்று அழைக்கப்படுகின்றது. இவரது அரசு சபையில் புகழ்பெற்ற அரபுப் புவியியலாளன் இதிரிஸி (Idrist) (Kitab Rujar - The Book of Roger ) stairp di apa 6Toup6. யதாக அறிகிறோம். கி. பி. 1185 இல் இங்கு விஜயஞ்செய்த ஸ்பானிய முஸ்லிம் யாத்திரிகன் இப்ன் - ஜபைர் (Ibn Jabair ) சிசிலி மன்னன் இரண்டாம் வில்லியம் ( கி பி. 1164 - 1189) அரபுமொழியை எழுத, வாசிக்க அறிந்திருந்தான் என்கி றார். இஸ்லாமிய ஆட்சியில் அரபுமொழி ஆட்சிமொழியாக இருந்ததன் விளைவாக இது இருக்கலாம். இவர் பலேமோவில் உள்ள கிறிஸ்தவர்கள்கூட முஸ்லிம்களைப் போலவே ஆடை யணிந்து அரபுமொழியைப் பேசினர் என்கிறார். நோர்மன் மன்னர்கள் நாணயங்களில் அரபு எழுத்துக்களையும், (Hira) திகதியையும் குறித்தனர். அரசவையில் அநேகமான பதிவுகள் அரபு மொழியிலே பதியப்பட்டன.
நோர்மன்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சுவாபியன் (Swabian) வம்ச ஆட்சியில் அரபுமொழியின் இடத்தை லற்றின் பிடித்துக்கொண்டது. ஆனாலும் அரபுக் கலாசாரம் தப்பி யிருந்து, கி. பி. 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மறை யலாயிற்று. ஒப்பீட்டடிப்படையில் முஸ்லிம் கலாசாரமானது ஐரோப்பாவிற்குப் பரவியவகையிலே சிசிலி பெறும் முக்கியத்து வம் குணறவானது ஆகும். முக்கியமான நடவடிக்கை இரண் டாம் பிரடெறிக் மன்னன் காலத்தில் இடம்பெற்றது. கிறிஸ் தவர் யூதர்களைக் கொண்ட ஒரு தொகை மொழிபெயர்ப்பா ளர்கள் ஒரு தொகையான அரபு நூல்களை லற்றின். மொழியில் மொழிபெயர்த்தனர். இவர்களுள் தியோடோர் (Theodore)
1 15

Page 64
முக்கியமானவர். இன்ன்ோர் சிசிலிய மொழிபெயர்ப்பாளரான பராஜ் -இப்ன் - சாலிம் (Fora ibn Salim) அல் - ராஸியின் மருததுவ நூல்களை லற்றின் மொழிக்கு மொழிபெயர்த்திருந் தார்.
ஐரோப்பாவில் இஸ்லாமியப் படர்ச்சி என்று கூறும்பொழுது பிரதானமாக ஐபீரிய தீபகற்பத்தில் எட்டு நூற்றாண்டுகளாக நிலைத்துநின்ற அரபு ஆட்சியைத்தான் கருதவேண்டும். அந்த ஆட்சி படிப்படியாக வலிமை பெற்றுப் பலதரப்பட்ட மாற் றங்களை, விளைவுகளை ஐரோப்பிய நாகரிகத்திற்கு வழங்கி யது. கி , பி. 1200 வரை அவர்கள் ஸ்பானியாவில் வலிமை யுடன் இருந்தனர். அதன் பின்னர் படிப்படியாகப் பலவீன முற்று 1492 இல் கிறிஸ்தவ மத அடிப்படையிலான ஒற்றுமை யின் விளைவாக அங்கிருந்த கிராண்டா முஸ்லிம் அரசு வீழ்ச்சியடைந்தது. இந்த நீண்டகாலத்தில் அவர்களுடைய ஆட் சியின் விளைவாகப் பல தரத்திலான விளைவுகள் ஏற்பட்டிருந் தன. அரபுக்கள் கிறிஸ்தவ ஐரோப்பாவின் கலாசாரம் பொறுத்துக் கூடியளவு தொண்டை ஆற்றியுள்ளனர். பண்டைய கிரேக்க அறிஞரது நூல்களை அரபுமொழியில் பெயர்த்துப் பேணிப்பாதுகாத்து ஐரோப்பாவுக்கு அளித்தமை, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை ஸ்பானியாவில் நிறுவி வைத்திய, கணி தத்துறைகளில் முக்கிய அபிவிருத்திகளை மேற்கொண்டமை" தற்போது கையாளும் அரபு எண் முறைமையை ஐரோப்பா விற்கு அளித்தமை, திறமைமிக்க விவசாய, நீர்ப்பாசன முறை மையும், நிலக்குத்தகை முறையையும், விவசாயப் பயிர்கள், பேப்பர் போன்றவற்றை அறிமுகப்படுத்தியமை, புதிய கைத் தொழில் முறைகளைப் புகுத்தியமை, கட்டிடக்கலை மரபில் புதிய பாணிகளை ஏற்படுத்தியமை, புதிய இலக்கிய வடிவங் களை அறிமுகம் செய்தமை, ஸ்டானிய தேசிய உணர்வு உருவாக வழிவகுத்தமை போன்ற பலதரப்பிலான விளைவு கள் ஏற்பட அவர்களது நீண்டகால ஆட்சி வழிவகுத்துள்
GT5 O
1 6

VI சிலுவைப் போர்கள்
சிலுவைப் போர்கள் என்ற பதமானது (Crusades) கிறிஸ்து நாதரின் ஆரம்பகால வாழ்க்கையோடு தொடர்பான புனித தலங்களான எருசலேமையும், அதனைச் சுற்றியுள்ள நகரங்களை யும் முஸ்லீம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு எடுப்பதற்கு மேற் குலகக் கிறிஸ்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகனைக் குறிக்கின்றது. இந்த இராணுவ நடவடிக் கையில் பங்கு பற்றியோர் சிலுவைக் கொடியின்கீழ் அணி திரண்டு சென்றமையால் அது சிலுவைப் போர்கள் என அழைக்கப்படலாயிற்று. முதற் சிலுவைப்போர் ஆரம்பித்த 1096 இற்கும் இறுதியில் 1291 இல் லத்தீன் கிறிஸ்தவர் இறுதியாக சிரியாவில் உள்ள தங்கள் நிலைகளில் இருந்து துரத்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் எட்டுப் பிரதான படையெடுப்புக்கள் இடம்பெற்றதாக வரலாற்றாசிரியர் கொள்வர். சிலுவைப்போர் இயக்கத்தின் தோற்றமும், வீழ்ச்சியும் நெருங்கிய வகையிலே இடைக்கால பாப்பரச முறைமையுடன் (Papal - Monarch) தொடர்புள்ளதாக அமைகின்றது. முதலாவது சிலுவைப் போர் பாப்பரச முறைமையினால் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்ப வெற்றியை அடைந்தபோதும், சிலுவைப்போர் இயக்கத் தின் இறுதித் தோல்வி பாப்பரசரின் இலெளகீக அதிகாரத்தைப் பெறுவதற்கான ஆசையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இவ்வகையில் சிலுவைப் போர்கள் பாப்பரச முறைமையினதும், மத வரலாற்றினதும் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது
சிலுவைப் போர் இயக்கம் ஆரம்பிப்பதற்கு அக்கால ஐரோப்பாவில் ஏற்பட்டுவந்த பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் பெரிதும் துணைபுரிந்தன. கி , பி. பதினோராம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார மறுமலர்ச்சி, மத்திய தரைக்கடல் வர்த்தகத்தில் முஸ்லீம்கள் பெற்றிருந்த தனி முதன்மை, இத்தாலிய வர்த்தக நகரங்களின் எழுச்சி , கப்பல் கட்டும் துறையில் ஏற்பட்டுவந்த அபிவிருத்தி, மதத்துறையில் குளுனிக் (Clunic) சீர்திருத்தங்கள், கிறிஸ்துநாதர் பிறந்த எருசலேம் புனிதத் தலத்தின் முக்கியத்துவம், கிறிஸ்தவ மத உணர்வில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி போன்ற பல காரணங் கள் சிலுவைப்போர் இயக்கம் வளர்ச்சி அடைவதற்குத் துணை

Page 65
புரிந்தன. அத்துடன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த செல்யூக் துருக்கியரின் ஆதிக்கப் படர்ச்சியினால் தீவிர முஸ்லீம் எதிர்ப்பு ணர்வு கிறிஸ்தவர்களிடையே ஏற்பட வழிவகுத்தது.
சிலுவைப் போர்கள் இடைக்கால ஏகாதிபத்தியத்தின் பிர தான வெளிப்பாடாக, அதன் முதலாவது அதிகாரமாக அமைந் துள்ளது சிலுவைப்போர்கள் தனிப்பட மதரீதியான காரணங் களினால் மட்டும் தோற்றம் பெறாதபோதும், அப்போரில் மதரீதியான அம்சங்கள் பெற்ற முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. சிலுவைப் போர்கள் இடம்பெற்ற நூற்றாண்டு மனித சிந்தனைகளில் மதம் மிகப் பிரதான இடத்தைப் பெற்றிருந்த காலமாகும். இடைக்காலக் கிறிஸ்தவன் "பாவம்" (Sin) பற்றிய நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டவனாக விளங் கினான். இதனால் பல்வேறு நோன்பு முறைகளைக் கையாண்டு மறு உலகில் பாவம் இல்லாதவனாகச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தான், பல நூற்றாண்டுகளாகவே பாவ மீட்புக் காகப் புனித தலங்களுக்கு யாத்திரை செய்வது வழமையாகக் காணப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற குளுனிக் மதசீர்திருத்தத்தினால் ஏற்பட்ட மதஉணர்வும், மத மறுமலர்ச்சி யும் கிட்டிய கிழக்கிற்கான வர்த்தகப் பாதைகளின் அறிமுகத் தைத் தொடர்ந்து வலுப்பெற்றுவந்தன. இதனால் பலஸ்தீனப் பிரதேசத்திற்குப் பக்தி மிக்க கிறிஸ்தவர்கள் நூற்றுக்கணக்கில் பல அணிகளாகப் புனித யாத்திரைகளை மேற்கொண்டுவந்தனர். மேற்கைரோப்பா, மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இருந்து பல நூறு மைல்களைத் தரைவழியாகவும், கடல் வழியாகவும் தாண்டி லெவான்ற் (Levant) பிரதேசங் களுக்குக் கிறிஸ்தவர்கள் சென்றுவந்தனர். கி பி , 1065இல் டம்பேர்க் என்ற பிஷப் (Bamberg) 7000 ஜேர்மனியர்களைக் கொண்ட பெரும் அணியுடன் எருசலேமிற்கும், அதனைச் சுற்றியுள்ள புனித தலங்களுக்கும் சென்றிருந்தார் - இதில் சென்றவர் அனைவரும் மதஆர்வத்தின் பாற்பட்டு இப்பிரயா ணங்களை மேற்கொண்டனர் என்று கூறாவிட்டாலும், பெரும் பான்மையினர் மத உணர்வினால் உந்தப்பட்டே இப்பயணங் களை மேற்கொண்டனர் என்று கொள்ளலாம்.
பதினோராம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி பாப்பரச மேலா திக்கம் மிகவும் மங்கிச்சென்ற காலமாகும். பாப்பரசர் ஏழாம் கிரெகரி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு அகதியாக 1085இல் மரணமடைய வேண்டியதாயிற்று. அவரின் பின் வந்த
1 f 8

வரும் தோல்விகள் நிறைந்த ஒரு வருடத்தில் இறக்கவேண்டி யதாயிற்று. இந்நிலையில் கருதினால்மார் 1088 இல் புதிய இளமைமிக்க இரண்டாம் ஏபன் (Urban II) என்பவரப்ை பாப்ப ரசராகத் தெரிவுசெய்தனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த இவர் குளுணிக் துறவியாக விளங்கினார். இளமை வேகம் கொண்ட இவரது தணியாதி ஆசையாகக் கிறிஸ்தவ உலகை ஒன்றுபடுத்துவது காணப்பட் டது. அதாவது கிரேக்க வைதீகத் திருச்சபைமீது ஆதிக்கம் செலுத்துவது இவரது இலட்சியமாகக் காணப்பட்டது. அத்துடன் தனது பெரும் எதிரியான ஜேர்மனியின் பேரரசனான நான் காம் ஹென்றிக்கு அவமானத்தை ஏற்படுத்தி அதன்மூலம் கிறிஸ்தவ உலகில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட விருப்பம் கொண்டிருந்தார். இரண்டாவது ஏபன் 1095இல் வலிமைமிக்க பேரரசன் நான்காம் ஹென்றியினால் இத்தாலியிலிருந்து பிரான் சிற்கு தப்பியோடவேண்டியதாயிற்று. இப்பின்னணியில் பாப்ப ரசர் இரண்டாவது ஏபன் மேற்குலகின் ஆன்மீகத் தலைவன் என்ற பெயரை ஏற்படுத்தும் நோக்குக் கொண்டவராகக் காணப்பட்டார். செல்யூக் துருக்கியரின் ஆதிக்கத்திலிருந்து புனிதத்தலங்களைப் பாதுகாப்பதில் மேற்கத்தைய கிறிஸ்தவர் கள் தங்களுக்கிடையில் இருந்த வித்தியாசங்களை மறந்தார்கள் பாப்பாண்டவர் ஏற்கெனவே மதத்திற்காகச் செய்யும் போரின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறியிருந்தார். இப்போரில் ஈடுப டுதல் கிறிஸ்தவ ஆத்மாவிற்கு மனஆறுதலை வழங்கும் என்றும் சிலுவைப்போரில் மடிந்தால் சுவர்க்கம், பாவமன்னிப்பு கிடைக்கும் என்றும், திருச்சபையின் நோன்பு, தண்டனை, வரிகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றும், கூறப்பட்டது. ஸ்பானி யாவில் முஸ்லீம்களை எதிர்த்துப் போராடியமை போன்ற சம்பவங்கள் மதரீதியில் ஒர் ஒற்றுமை உணர்வை மேற்கைரோப் பாவில் ஏற்படுத்தி இருந்தன.
ஐரோப்பாவில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே மதத்தலை வர்கள் மானியப் பிரபுக்களுக்கிடையே ஏற்பட்ட போர்களினால் குழப்பமடைந்து இருந்தனர். இவர்களிடையே நடைபெற்ற போர்கள், குழப்பங்கள் திருச்சபையின் பாதுகாப்பிற்கும் நலனுக் கும் ஆபத்து விள்ைவிப்பனவாகக் காணப்பட்டன இவற்றால் மதகுருமாரின் உரிமைகள், சலுகைகள் விவசாயிகள், பிற பிரிவி னரின் நலன்கள் பாதிக்கப்பட்டன. வர்த்தகர்கள் கொள்ளை யடிக்கப்பட்டனர். மதநிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு
9

Page 66
எரியூட்டப்பட்டன. அராஜகம் தலைவிரித்தாடியது. இச்சூழ் நிலையில் திருச்சபையைப் பாதுகாக்க இவர்களது நோக்கினை யும், போக்கினையும் வேறுவழியில் திருப்பவேண்டியதாயிருந்தது. எனவேதான் மானியப் பிரபுக்களிடையே காணப்பட்ட இராணுவ வெயைப் புனித தலங்களை மீட்கும் பணியில் திசைதிருப்ப வேண்டியத7யிற்று. இதனுடன் இணைந்த ஒரு காரணியாகவே цšu Gjojadili gudžasub ( New Clunic Movement ) +товати பட்டது. ஐரோப்பாவில் இருந்து பெரும் படை திரட்டி அனுப் பினால் நாட்டில் அமைதியை பேணலாம் என்று இவர்கள் நம்பினர் .
சிலுவைப் போருக்குச் சில பொருளாதாரக் காரணிகளும் வழிவகுத்தன. மிக முக்கியமானதாகப் பாப்பரசர் இரண்டாம் guair (Council of Clerment) 36f(old airfi guláš56) is L-is கூட்டத்தில் பிரான்சியப் பிரபுக்களை ஆயுதம் கொண்டு பலஸ்தீ னத்தைக் கைப்பற்றுமாறு தூண்டினார். அங்கு அவர் ஆற்றிய உரை வெறும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், கிறிஸ்தவர்களை ஆவேசப்படுத்துவதாகவும் காணப்பட்டது. இக்கூட்டத்தில் அவர் பேசியதன் சாராம்சமாக எஞ்சியிருக்கும் கிஸ்தவ உலகைப் பாதுகாப்பதற்காகப் பிரபுக்கள் போர் முயற்சியில் ஈடுபடல், பெரும் படை பலஸ்தீனம் செல்லத் தயாராகுதல் என்பன இருந்தன. மானியப் பிரபுக்களைப் போரில் ஈடுபடுத்தப் பலஸ்தீ னம் பற்றிப் பெருமளவு புகழ்ந்து பேசப்பட்டது. "பாலும் தேனும் ஒடும் பிரதேசமெனவும், மிகச் சிறப்பான விவசாய நிலங்கள் இருக்கின்றன" என்றும் எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன் யேசுக்கிறிஸ்துவின் புனித கல்லறையைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இதில் பங்குபற்றிய மானியப் பிரபுக்களைப் பொறுத்தவரையில் இப்போராட்டம் புதிதாக இருக்கவில்லை, ஆனால் கிறிஸ்தவ மத உணர்வு இவர்களிடையே காணப்பட்டதுதான் பொதுப்பண்பாகும். வளமான பிரதேசங்கள் என்றதன் அடிப்படையில் பல மானியப் பிரபுக்கள் கவரப்பட்ட னர். ஐரோப்பாவில் மானியமுறைமையின் கீழ் விவசாய நிலங் கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வளமற்றனவாக மாறிவிட் டன. இந்நிலையில் புதிய வளமான நிலங்களை நாடிச்செல்லும் விருப்பம் இவர்களிடம் காணப்பட்டது. மானிய அமைப்பு முறையில் இங்கிலாந்து, பிரான்சில் மூத்த மகனுக்கே தந்தையின் சொத்து சொல்லும் வழக்கம் காணப்பட்டது. (Primogeniture ) இதனால் மற்றைய மக்கள் நிலமில்லாது இருக்கும் சூழ்நிலை
2O

காணப்பட்டது. இக்காரணமும் இவர்களை இப்பிரதேசங்களுக் குச் செல்லத் தூண்டலாயிற்று. ஐரோப்பாவில் ஏற்பட்ட குடித்தொகைப் பெருக்கமும் வறியோரிடம்கிழக்கில் செல்வம் திரட் டலாம் என்று ஏற்பட்ட எண்ணமும், சிலரது தனிப்பட்ட வீரதீர செயல்களைச் செய்வதற்கான விருப்பும் பலஸ்தீனப் பிரதே சத்தை நோக்கிச் செல்ல வழிவகுத்தது.
சிலுவைப் போருக்கான உடனடிக் காரணம் கிட்டிய கிழக்கில் புதிய இஸ்லாமிய இனமான செல்யூக் துருக்கியரின் படர்ச்சியினால் பைசாந்தியப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்தான நிலைமையாகும். இவர்கள் 1050 அளவில் மேற்காசியாவைக் கைப்பற்றிக் கலிபா அரசைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சிரிய7, பலஸ்தீனம், எகிப்து கைப்பற்றப் பட்டன. கி. பி. 1071இல் மன்ஸிகேற் ( Manzikert ) போர்க் களத்தில் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட பைசாந்தியப் படை தோற்கடிக்கப்பட்டுப், பேரரசன் சிறைப்பிடிக்கப்பட்டுச் சின்னா சியா கைப்பற்றப்பட்டது. பைசாந்தியப் பேரரசின் தலைநக ரான கொன்ஸ்தாந்திநோப்பிளைக் கைப்பற்ற இன்னும் சில மைல் தாரந்தான் இருந்தது. இந்நிலையில் இவர்களின் மன்ன னான மாலிக் ஷா 1092இல் இறந்துபோகச் செல்யூக் பேரரசு சீர்குலையத் தொடங்கியது. இந்நிலையில்தான் பைசாந்திய பேரரசன் அலெக்ஸியஸ் கொம்னினஸால் தாம் இழந்த பிரதே சங்களைக் கைப்பற்ற உதவுமாறு மேற்கிற்கு கி. பி. 1095இல் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது, அதனைப் பாப்பரசர் இரண்டாம் ஏபன் நன்கு பயன்படுத்திக் கொண்டார். 1098 இல் முதலாவது சிலுவைப்போர் ஆரம்பமாகி 1099 வரை நடைபெற்றது. பாப்பரசர் இரண்டாம் ஏபனின் ஏற்பாட்டில் துறவி பீற்றர் தலைமையில் பிரான்ஸ், ஜேர்மனி யைச் சேர்ந்த பெருமளவிலான விவசாயிகள் இப்படையெடுப்பில் கலந்துகொண்டனர். முதலாவது சிலுவைப் போரின்போது அன்ரியொக், சிரியா கைப்பற்றப்பட்டு, 1099இல் எருசலேமும் கைப்பற்றப்படுகின்றது. சிலுவைப் போரில் பங்குபற்றியவர்கள் மிக மோசமான கொடூரச் செயல்களைப் புரிந்துள்ளார்கள். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் ஒருபோதும் உள்ளூர் மக்கள் தொகையுடன் இணையாதனவாக இருந்தன. கி. பி. 1187 இல் எகிப்திய சுல்தான் சலாடினால் (Saladin) எருசலேம் கைப்பற்றப்படுகின்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பாகக் கிட்டிய கிழக்கில் சிரியா, பலஸ்தீனக் கரையோரமாகக் கிறிஸ்தவர்களால் அமைக்கப்பட்டிருந்த சிறிய அரசுகள் அனைத்தும் இஸ்லாமியரால் கைப்பற்றப்பட்டுவிட்டன.
121

Page 67
சிலுவைப் போர்கள் இறுதியில் தோல்வியடைந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. ஒழுங்கற்ற மேற்பார்வை, தனித் துவமான தலைமையின்மை, அடிக்கடி தமக்குள்ளே ப்ோரிடல் என்பன பிரதான காரணங்களாக இருந்தன. நான்காம் சிலு வைப் போரில் கிறிஸ்தவ உலகைப் பாதுகாக்கச் சென்றவர் கள் கொன்ஸ்தாந்தி நோப்பிளையே கொள்ளையிட்டு அழித்த னர். மேற்கு ஐரோப்பாவில் இருந்து அதிக தூரத்தில் இருந் தமையால் கைப்பற்றிய பிரதேசங்களை அவர்களால் தொடர்ந்து வைத்திருக்கமுடியவில்லை. சிலுவைப் போரில் பங்கு பற்றியவர்களிடையே முரண்பட்ட நோக்கங்கள் காணப்பட் டன. பாப்பாண்டவர் ஏபனுக்கோ கிழக்கு மேற்குத் திருச் சபையை இணைக்கும் எண்ணம் காணப்பட்டது. பைசாந்தியப் பேரரசனுக்கோ கிழக்கில் கிறிஸ்தவ, திருச்சபையைப் பாதுகாப் பதைக் காரணம் காட்டினாலும் உண்மை நோக்கம் தாம் இழந்த மாகாணங்களை கைப்பற்றுவதாகவே இருந்தது. பங்கு பற்றிய மானியப் பிரபுக்கள் நோக்கம் பெருமளவிற்குப் பொருளாதார நலன்கள் சார்ந்ததாகவே இருந்தது. இவ்வாறு முரண்பட்ட நோக்கினை உடையவர்கள் ஒருமித்துச் செயற் படமுடியாத நிலையில் சிலுவைப் போர்கள் இறுதியில் தோல்வி கண்டன.
சிலுவைப் போர்கள் ஆரம்பித்த காலத்திற்கு முன்பாகவே வர்த்தக நலன்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இஸ்லாமியரிட மிருந்து மத்தியதரைக்கடல் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதும், பைசாந்தியப் பேரரசர் கிழக்கு மேற்கு வர்த்தகத்தின் மூலம் பெறும் பெரு இலாபத்தைத் தமதாக்கிக்கொள்ளும் நோக்கும் இத்தாலிய வர்த்தகர்களுக்கு இருந்தன. முக்கியமாக வெனிஸ், ஜெனோவா, பைசா போன்ற வர்த்தக நகரங்கள் இதனைச் சாட்டாகவைத்துத் தம்மை வளர்த்துக்கொள்ளவே முயன்றன. இப்பின்னணியில்தான் நான்காவது சிலுவைப் போரின்போது கொன்ஸ்தாந்திநோப்பிள் இவர்களால் கொள்ளை அடிக்கப் பட்டு அழிக்கப்பட்டது என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். இத்தாலிய வர்த்தகர்கள் தம் வர்த்தகப் பேரரசைக் கிழக்கு நோக்கி விஸ்தரிப்பதைத் தம் நோக்காகக் கொண்டிருந்தனர். இதனை அடையும் வகையில் தம் சொந்த நலன்களுக்காக கொன்ஸ்தாந்திநோபிளைக் கைப்பற்றவோ அல்லது அழிககவோ தயாராக இருந்தனர்.
இஸ்லாமிற்கு எதிராக நடைபெற்ற இச்சிலுவைப் போரி
னால் பல விளைவுகள் ஐரோப்பாவில் ஏற்பட்டன. மானிய அமைப்புமுறையின் வீழ்ச்சிக்கு ஏனைய காரணிகளுடன் சேர்ந்து
122

சிலுவைப் போரும் வழிவகுத்தது. வர்த்தகப் புத்துயிர்ப்பைத் தொடர்ந்து பணப்புழக்கம் செல்வாச்குப் பெறச் சாதாரண மக் கள் பிரபுவுக்கு நட்ட ஈடாகப் பணத்தைக் கொடுத்து மானிய முறையிலிருந்து விலகச் சந்தர்ப்பம் கிடைத்தது பட்டயங்கள் மூலம் நகரங்கள் தங்கள் தனிமுதன்மையை வளர்த்துக்கொண் டன. குடியானவர் தமது பிரபுக்கள் இல்லாத நிலையில் மானிய உறவுகளை முறித்துக்கொள்ள வழி ஏற்பட்டது. இவ்வசையில் மானிய முறைமையின் தளர்வுக்குச் சிலுவைப் போர்கள் வழி - வகுத்தன.
வர்த்தக வளர்ச்சி பெரியளவில் ஏற்படச் சூழ்நிலை உரு வாக்கப்பட்டது. கீழைத்தேசப் பிரதேசங்களுடனான தொடர்பு பல வழிகளில் ஐரோப்பாவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. கீழைத்தேய உற்பத்திப் பொருட்களின் தேவை மேற்குலகிற்கு இப்போது அவசியமாயிருந்தது. வாசனைப் பொருட்கள், ஆடம் பரப் பொருட்கள் பற்றிய அறிமுகம் இப்போது மேற்கிலும் பர வலாகச் செல்வாக்குப்பெற ஆரம்பித்தது. கிழக்கு மேற்கு வர்த் தகத்தில் இடைத்தரகராக இருந்து பெரு இலாபம் ஈட்டிய கொன்ஸ்தாந்திநோபிளின் முக்கியத்துவம் குறைக்சப்பட்டு வெனிஸ், ஜெனோவா, பைசா போன்ற இத்தாலியின் பெருநகரங் கள் பெரு இலாபம் ஈட்டும் நகரங்களாக மாறத் தொடங்கின்; இவை மத்தியதரைக்கடல் பிரதேச வர்த்தகத்தில் ஏகபோக உரிமை யைக் கொண்டன. வர்த்தகத்துடன் தொடர்புடைய வகையில் வங்கி அமைப்புமுறை, நாணயப்பாவனை, வரியமைப்புமுறை, கப்பல் கட்டும்தொழில், கப்பலோட்ட அறிவு, புதிய இடங்களுக் குப் பிரயாணம் செய்யும் விருப்பு வளர்ச்சியடைந்தது. பின்னர் இடம்பெற்ற கடல்மார்க்கப் பயணங்களுக்கும், நாடு கண்டுபிடிப் பதற்கும், குடியேற்றங்களைத் தாபிப்பதற்கும், பிரயாண இலக் கியங்கள் வளர்ச்சியடைவதற்கும், தேசியமொழிகளில் இவை எழு தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
தேசிய முடியரசுகளின் எழுச்சிக்கும் சிலுவைப் போர்கள் ஒரு வகையில் காரணமாயின. இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் சிலுவைப் போரில் பங்குபெறுவதற்காக அநேக பிர புக்கள் சென்றிருந்த சமயம் அவர்கள் பிரதேசங்களைக் கைப் பற்றி வலிமையான முடியாட்சி ஏற்படுத்துவற்கு வாய்ப்பு ஏற்பட் டது.பிரபுக்களை அடக்கித் தேசிய முடியாட்சி வலுப்பெறுவதற்கு உதவிய ஒரு நிகழ்வாகச் சிலுவைப் போர்களைக் குறிப்பிடலாம். மானியப் பிரபுக்களை அடக்கி வலிமைவாய்ந்த தேசிய முடி
123

Page 68
யாட்சி ஏற்பட்டபோது சமூகத்தில் மானியமுறை அடிப்படை யிலான செல்வாக்கைப் பெறாத புதிய வர்த்தகவகுப்பினர் மன் னருக்குப் பெரும் பண உதவி செய்து தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டனர். மானிய பிரபுக்கள் அடிக்கடி தமக்குள்ளே சண்டையிட்ட நிலைமை மாறி இப்போது அமைதியான காலப் பகுதி ஒன்று ஆரம்பமாகின்றது. புதிய ஆயுதங்களின் அறிமுகம், வெடிமருந்தின் உபயோகம், நிலையான இராணுவம், புதிய போர்முறைகள் போன்றவற்றினால் பலம் வாய்ந்த முடியரசுகள் ஐரோப்பாவில் நிலை பெறுவதற்கும் வழியேற்பட்டது.
புவியியல் அறிவின் விருத்திக்கும், கண்டுபிடிப்புக்கள், பிர யாணங்கள் என்பவற்றிற்கும் சிலுவைப் போர்கள் வழிவகுத் தன. இதுவரை ஐரோப்பாவுக்குள்ளே முடங்கிக்கிடந்த சமு தாயம் கிழக்கிற்குச் சென்றதன் காரணமாகப் பலதரப்பட்ட அறிவினையும், பல மக்கள் கூட்டங்கள் பற்றியும் அறிந்து கொண்டது. கிழக்காசிய நாடுகளுடனான தொடர்புகள் ஏற் பட வழிவகுத்தது.இத்துறையில் ஏற்பட்ட அபிவிருத்தி அடுத்து வரும் நூற்றாண்டுகளில் வர்த்தகத்திலும், குடியேற்றங்களை அமைப்பதிலும் வியக்கத்தக்க சாதனைகளை ஏற்படுத்தலா யிற்று. ஐரோப்பிய மக்களுடைய மனோபாவங்களிலும், எண் ணங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி நவீன காலம் என்று வர்ணிக்கப்படும் காலப்பகுதிக்குள் அவர்களை அழைத்துச் செல்ல வழிகோலியது.
சிலுவைப் போர்களின் முக்கியத்துவம் பற்றி வரலாற்றா சிரியர் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். சிலர் இவை மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன என்கின்றனர். பொது வாக நகரங்களின் எழுச்சி, மானிய முறையின் வீழ்ச்சி, லத்தீன் ஐரோப்பாவிற்கு முஸ்லீம் தத்துவஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அறிமுகப்படுத்தியது, பண்டைய கிரேக்க, உரோம அறிவுத்துறைகளை அராபிய மொழி மூலம் ஐரோப் பாவுக்குக் கொண்டுவந்தமை தொடர்பாக இக்கருத்து வேறு பாடுகள் அமைகின்றன. பொதுவாகவே மானியமுறை அமைப் பின் தளர்ச்சி சிலுவைப் போர்கள் ஏற்படுவதற்கு முன்பா கவே ஆரம்பமாகிவிட்டது. உண்மையில் இப்போக்கைத் துரி தப்படுத்துவதற்கே சிலுவைப் போர்கள் வழிவகுத்தன சிலு வைப் போர்களில் ஐரோப்பாவில் இருந்த கல்விகற்ற வகுப் பினர் பொதுவாகப் பங்குபற்றவில்லை. உண்மையில் இங்கு
24

இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட போர்வீரர்கள் அறி வுத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது ஏற்றுக்கொள் ளக்கூடிய ஒன்றல்ல. இத்தகைய அறிவுத்துறையில் ஈடுபாடு இல்லாதபோது முஸ்லீம் தத்துவஞானம், விஞ்ஞானம் பற்றி இவர்களுக்கு அக்கறை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அத்து டன் சிலுவைப் போரில் பங்குபற்றியவர்கள் உண்மையான முஸ்லீம் கல்வி நிலையங்களுக்கு - உதாரணமாக பக்தாத், டமஸ் கஸ் போன்றவற்றிற்குச் செல்லவில்லை. இதற்கு முன்பாகவே வர்த்தகக் கப்பல்களிலே பைசாந்திய, கிரேக்க அறிஞர்கள் மேற்குலகிற்குச் சென்று வந்தமைபற்றி ஆதாரங்கள் உண்டு. சிறப்பாக ஸ்பானியாவில் முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது இந்த இஸ்லாமிய அறிவும் பண்டைய கிரேக்க, உரோம அறிவும் மேற்குலகிற்கு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக் கது.
பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் வர்த்த கப் புத்துயிர்ப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே ஸ்பானியா சிசிலி இரு நாட்டு அறிஞர் மூலமாக மேற்கைரோப்பாவிற்கு இஸ் லாமிய அறிவுத்துறை, பண்டைய கிரேக்க உரோம அறிவுத் துறை பரவத்தொடங்கிவிட்டன. இத்துறையை மேலும் வளர்க்க இச்சிலுவைப் போர்கள் உதவியதேயொழிய முழுப் பங்கினையும் பெற்றுக்கொள்ளவில்லை எனலாம். இருந்தா லும் ஐரோப்பா நவீன யுகம் ஒன்றிற்கு மாறிச்செல்வதில் சிலு வைப் போர்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன என்பதனை மறுக்கமுடியாது. இதனால்தான் சிலுவைப் போர்கள் ஐரோப் பிய வரலாற்றில் ஒரு யுகம் முடிந்து பிறிதொரு யுகம் ஆரம் பிப்பதனைக் குறித்துநிற்கின்றது என்று வர்ணிக்கப்படுகின் றது. ஏகாதிபத்தியத்தின் கறைபடிந்த நீண்ட வரலாற்றில் புனித தலப்பிரதேசத்தில் (Holy Land) ஏற்படுத்தப்பட்ட ஆதிக்கம் மேலைத்தேய ஏகாதிபத்தியதின் ஆரம்பத்தைக் குறித்து நிற்கின்றது எனலாம்.
125

Page 69
X இடைக்கால ஐரோப்பியப்
பல்கலைக்கழகங்கள்
உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின்பாக ஐரோப்பிய அறிவுத்துறையானதுமிக மோசமான வகையிலே வீழ்ச்சிகண்டது* அதன் பின்னர் ஏற்பட்ட அரசியற் குழப்பங்களினாலும், படை யெடுப்புக்களினாலும் அமைதியற்ற ஒரு காலம் தோற்றம் பெற்றது. இப்பின்னணியில் அறிவுத்துறையில் ஈடுபாடு என்பது நடைமுறையில் காணப்படாதிருந்தது. ஆனால் கிறிஸ்தவ மதகுரு மார் தமக்கு வேண்டிய மதம் சம்பந்தப்பட்ட கல்வியை ஓரளவு மேற்கொண்டுவந்தனர். அதிலும் கிறிஸ்தவ மதக் கோட்பாடுக ளுக்கு முரணாகாத வகையில் இக்கல்வி அவர்களிடையே வளர்ச் கப்பட்டிருந்தது. ஏனைய நாகரிகங்களைப் போலவே இங்கும் மதகுருமார் கல்வித்துறையில் ஈடுபட்டவர்களாகக் காணப்பட் டனர். இக்காலப்பகுதியில் கிறிஸ்தவ அமைப்புக்களும், குருமாரும் ஜேர்மனிய இனக்குழு மக்களை நாகரிகப்படுத்தும் முயற்சியிலும் அவர்களுக்கு. ஆட்சியமைப்புமுறை, ஒழுங்கான மதத்தைப் போதிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பட்ட இடைக்காலத்தில் சிறப்பாகப் பதினோராம்நூற் றாண்டில் நிலைமைகள் மாற்றமடைவதைத் தொடர்ந்து சில முக்கிய அபிவிருத்திகள் ஏற்பட்டன. அவ்வகையில் எழுத்தறி வும், ஆரம்பக் கல்வியின் பரவலும், பல்கலைக்கழகங்களின் தோற்றமும், பரவலும், பண்டிைய கிரேக்க உரோம அறிவும், இஸ்லாமிய அறிவும் ஐரோப்பாவுக்குள் கொண்டுவரப்பட்டமை, மேலைத்தேய அறிஞர்களால் சிந்தனைத்துறையில் ஏற்படுத்திய முன்னேற்றம் என்பன குறிப்பிடத்தக்கன. இடைக்காலத்திற்குள் GarGu glui gaoláis rath (High Middle Ages 1050 - 1300) என்று அடையாளம் காட்டக்கூடியவகையில் காலவேறுபாடு வகுப்பதன் அடிப்படை அம்சங்கள் இவையேயாகும்.
கரோலிங்கிய மறுமலர்ச்சியின் விளைவாக மன்னர் சாளி மேனின் ஆணையின்படி கி. பி. 800 அளவில் ஆரம்பக் கல்வித் துறை பொறுத்து ஓர் அபிவிருத்தி ஏற்படுகின்றது. அவரது கட்டளைப்படி ஒவ்வொரு குருவாய, மடாலயப் பிரிவுகளுக்குள் ஆரம்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது

காணப்பட்டது. இவ்வகையில் மேற்கைரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளும், நூல்நிலையங்களும் பல்வேறு. மடாலயப் பிரிவுகளினால் அமைக்கப்பட்டன. ஆனால் வைகிங்கு களின் (Viking) படையெடுப்புக்களினால் ஆரம்பக்கல்வி பொறுத்து ஏற்பட்ட வளர்ச்சி பெருமளவு தடைப்பட்டது, இருந்தாலும் ஆரம்பக் கல்வியானது சில மடாலயங்களிலும் கதீட்ரல் நகரங்களிலும் ஓரளவு தழைத்தது. ஆனால் கி. 1050 வரை மேற்கைரோப்பாவில் ஆரம்பக்கல்வியின் தரமும், படர்ச்சியும் மிகக் குறைவாகவே காணப்பட்டது.ஆனால் பதினோ ராம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதச்சீர்திருத்த இயக்கத்தின் விளை வாக மடாலயங்கள் வெளியாருக்குக் கல்விவழங்கும் நடவடிக் கையைவிட்டு அதனைக் கதீட்ரல் பாடசாலைகளிடம் (Cathedral School) விட்டன. இந்த நிறுவனமானது காலப்போக்கில் தாராளக் கல்வி (Liberal Arts) என்று கூறப்படும் கல்விக்குத் தலைசிறந்த இருப்பிடமாகியது. இவை கன்ரபரி (Cantabury) சாட்றெஸ் (Chartes), பாரிஸ் (Paris) ஆகிய இடங்களில் அமைந் திருந்தன. இவ்வகையில் வளர்ச்சியடைந்துவந்த நகரங்களில் அமைந்திருந்த கதீட்ரல் பாடசாலைகள் ஐரோப்பியக் கல்வியின் தலைமைத்தானங்களாகின. இதற்கு பாப்பரசமுறைமையும் ஆதரவளித்ததுடன் ஏழைகளும், செல்வந்தரும் பணம் செலுத் தாமல் இக்கலவியைக் கற்க வாய்ப்பை அளித்தது. மாறிவந்த பொருளாதார, நிர்வாகத் தேவைகளுக்கேற்ப நன்கு பயிற்றப் பட்ட எழுதுவினைஞர்களையும்,நிர்வாகிகளையும் இக்கல்விமுறை வழங்கும் என்று பாப்பரச முறைமை சரியாகவே மதிப்பிட்டி ருந்தது.
ஆரம்பத்தில், கதீட்ரல் பாடசாலைகள் குருமார்களுக்கு வேண்டிய அடிப்படைப் பயிற்சியை வழங்கும் நோக்கத்துடனே ஆரம்பிக்கப்பட்டன. அதற்கேற்பவே திருச்சபை அலுவல்களை மேற்கொள்ளும்வகையில் பயிற்சியை அளிக்கும் ஒரு பாடத்திட் டமே இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கி. பி. 1100 இன் பின்பாக மதநிறுவனங்களிலும், உலகியல் அரசாங்கங் களிலும் ஏற்பட்ட அபிவிருத்தியின் விளைவாக இங்கு போதிக் கப்பட்ட பாடத்திட்டங்களில் விரிவு ஏற்பட்டது. முற்கூறப்பட்ட அபிவிருத்தியின் விளைவாக வெறுமனே சில பிரார்த்தனை நூல்' களை வாசிப்பதிலும் பாரிக்கக்கூடியளவு அறிவுகொண்ட பயிற் றப்பட்ட அலுவலர்களுக்கான தேவை அதிகரித்துக் காணப் பட்டது. ஆட்சிமுறை வலுப்பெறுவதற்குச் சட்டம் முக்கியமான
27

Page 70
இடத்தைப் பெற்றமையால் அதனை நன்கு படிப்பதற்குவேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் ஆரம்பக்கல்வியின் தரத்திலும் முன்னேற்றம் ஏற்படலாயிற்று. அத்துடன் லற்றின் மொழி அறிவும் இலக்கண அறிவும் சிசரோ (Cicero), வேர்ஜில் ( Vergil) போன்றோரின் உரோம இலக்கியங்களைப் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த அபிவிருத்தியின் விளைவாகத்தான் சில அறிஞர் "பன்னிரண்டாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி" என இக்காலப்பகுதியை வர்ணிப்பர்.
மேற்கைரோப்பாவில் இருந்த நகரப் பாடசாலைகள் கி. பி. 1200 வரை குருமார்களுக்குப் பயிற்சி வழங்கும் அமைப்புக்க ளாகவே விளங்கின. அதன் பின்னர் அனேக மாணவர்கள் இப் பாடசாலைகளில் சமூக அந்தஸ்து நோக்கில் கல்விகற்க ஆரம்பித் தனர். முக்கியமாகச் செல்வந்த வகுப்பினரின் பிள்ளைகள் இவ் வகையில் இப்பாடசாலைகளில் கல்விகற்கலாயினர். அத்துடன் வர்த்தக வகுப்பினர், அரசாங்கப் பத்திரங்களை எழுதுபவர், தத்தம் தொழில் முயற்சிகளில் முன்னேறும் நோக்கம் கொண் டோரும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டினர். காலப்போக்கில் மதத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிப் பூரண சுதந்தி ரத்துடன் புதிய தேவைகளை முதன்மைப்படுத்தும் வகையில் பாடசாலைகள் தோற்றம் பெற்றன. இப்புதிய பாடசாலைகளில் பிற்கூறப்பட்ட பிரிவினர் கல்வி கற்கலாயினர். இப்பாடசாலைக ளில் மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும், மதத்துறை சாரா தவர்களாக விளங்கினர். இங்கு லற்றீன்மொழியிலான போதனை குறைவடைந்து, அவ்வப் பிராந்திய மொழிகளிலான போதனை இடம்பெறலாயிற்று.
மேற்கைரோப்பிய வரலாற்றில் பொது மக்களுக்கான (Lay Education ) கல்வியின் தோற்றம் அதிமுக்கிய அபிவிருத்தியை இரண்டு விடயங்கள் பொறுத்து ஏற்படுத்தியது. முதலாவது, ஏறத்தாள ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வியில் திருச்சபை கொண்டி ருந்த தனியுரிமை முதல் தடவையாக இழக்கப்படுகின்றது. கல்வி யும், அதனால் ஏற்பட்ட மனப்பாங்கும் இப்போது கூடியளவிற்கு உலகியற் பண்புள்ளவையாக மாற்றப்பட்டன. பொதுமக்கள், குருமார்கள் பொறுத்துக் கொண்டிருந்த கருத்துக்களை விமர்ச னம் செய்ததுடன் மதிப்பிடவும் முடிந்தது. இவ்வகையில் கிறிஸ் தவ மதத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்பட்டிருந்த மேலைத் தேய்க் கலாசாரம் இப்பொழுது விடுதலை அடையலாயிற்று அத னால் சுதந்திரமான சிந்தனைப் போக்குகள் வளர்ச்சியடைய
128

வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டாவது, பொது மக்களுக்கான பாடசாலைகளின் தோற்றமும், பொதுமக்களுக்குக் கல்வி வழங் கிய திருச்சபைப் பாடசாலைகளின் செயற்பாடும் பொதுமக்கள் கல்வியைப் பெரிய அளவில் வளர்ச்சியடையச் செய்தன. கி. பி. 1340 இல் புளோரன்ஸ் நகரக் குடிமக்களுள் 40 வீதமானோர் வாசிக்கத் தெரிந்திருந்தனர் என்பதிலிருந்து இதன் வளர்ச்சியை ஒரளவுக்குத்தன்னும் விளங்கிக்கொள்ளலாம். அவ்வாறே 15 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இங்கிலாந்து நாட்டின் மொத்தக் குடித்தொகையில் ஏறத்தாள 40 வீதத்தினர் கல்வியறிவுள்ள வர்களாக விளங்கினர். கி. பி. 1050 அளவில் கல்வியறிவு என்பது அநேகமாக முழுவதுமாக குருவாயத்திற்குள்ளே அடங் கியிருந்தது. இது மேற்கைரோப்பியக் குடித்தொகையில் 1 வீதத் திற்கும் குறைவானதாகவே இருந்தது. இப்பின்னணியில் நாம் மேற்பார்த்த கல்வித்துறையில் ஏற்பட்ட அதிசயிக்கத்தக்க புரட்சி ஐரோப்பாவின் ஏனைய துறைகளிலான அபிவிருத்திக்கு வழி வகுத்தது.
ஐரோப்பிய வரலாற்றில் உயர் இடைக்காலத்தில் ஏற்பட்ட கல்வி அபிவிருத்தியின் ஒரு விளைவாகத்தான் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களின் தோற்றம் விளங்குகின்றது. ஆரம்பத்தில் சாதாரண கதீட்ரல் பாடசாலைகளினால் வழங்கமுடியாதிருந்த உயர்கல்வியில் சிறப்புப் போதனைகளை வழங்கும் நிறுவனங்க ளாகவே பல்கலைக்கழகங்கள் காணப்பட்டன. ஆங்கிலத்தில் University என்று நாம் அழைப்பது Universitas என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதன் கருத்தானது Corporation அல்லது Guid எனக் கூறப்படும் ஒரு சங்கம் அல் லது கூட்டுநிறுவனம் என்பதைக் குறிப்பதாகும். அநேகமான இடைக்காலப் பல்கலைக்கழகங்கள் தொழிற் சங்கங்களை ஒத்த னவாக, ஆசிரியர்களுக்குப் படிப்பித்தல் சம்பந்தமான பயிற்சியை அளிக்கும் நோக்குக் கொண்டவையாகக் காணப்பட்டன. பொதுப் பட இந்த நிறுவனங்கள் தாராளக் கலைகள் (A School of Liberal Arts ) என்பனவற்றைப் போதிப்பனவாக, ஒன்று அல் லது பல பீடங்களைக் கொண்டவையாகச் சிறப்பாகச் சட்டம், மருத்துவம், இறையியல் போன்ற பீடங்களைக் கொண்டவை யாக அமைக்கப்பட்டிருந்தன.
ஐரோப்பாவில் மிகப் பழமைவாய்ந்த கல்வி நிலையங்க ளாக இஸ்லாமியர் ஆட்சியில் ஸ்பானியாவில் ரொலிடோ, கோர்டோவா ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்ட நிறுவனங்கள்
f29

Page 71
விளங்கின. இத்தாலியில் மிகப் பழைய பல்கலைக்கழகங்கள் பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வடிவம் பெற்றன. இவ்வகையில் மருத்துவக் கல்விக்கு முதன்மை கொடுத்த சலேர்னோ (Salerno ) வும், சட்டக் கல்விக்கு முதன்மை கொடுத்த பொலஞ்ஞா (Bologna ) வும் சிறப்பைப் பெறுகின்றன. அல்ப்ஸ் மலைக்கு வடக்கே மிகப் பழைமைவாய்ந் ததும், மிக நீண்ட காலமாகத் தனிமுதன்மை பெற்ற பல்கலைக்கழகமாக விளங்குவது பரிஸ் ( Paris ) ஆகும். மற்றைய பல்கலைக்கழகங்கள் போலவே பரிஸ் பல்கலைக்கழகமும் ஆரம் பத்தில் ஒரு கதீட்ரல் பாடசாலையாகவே தோற்றம்பெற்றது, ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடஐரோப்பாவின் அறிவுத்துறை வாழ்வில் அங்கீகரிக்கப்பட்ட மையமாக மாறியி ருந்தது. இதற்கு அடிப்படையாக இக்காலப்பகுதியில் பிரான்சில் வலிமைபெற்ற முடியாட்சி ஏற்படுத்தப்பட்டு அமைதியும் செழிப்பும் நிலவியமையால் அறிஞர் பலர் அங்கு திரண்டனர். அத்துடன் இப்பிரதேசத்தில் உணவு தாராளமாகக் கிடைத்தது. அதன் விவசாய உற்பத்திப் பொருட்கள் அங்கு கெழிப்பை ஏற்படுத்தியிருந்தன. மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதற் பாதியிலேயே பாரிசில் இருந்த கதீட்ரல் பாடசாலை அங்கு கல்விகற்பித்த பிரபல்யமான, கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளான பீற்றர் அபிலாட் ( Peter Abellard 1079 - 1142) எனும் ஆசிரியரைக் கொண்டிருந்தமையாகும். அவரது அறிவுத் துறைச் சாதனைகள் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்த மாணவர்களைக் கவர்ந்திழுத்தன. அத்துடன் பல ஆசிரியர்க ளும் பரிசில் குழுமினர். கி. பி. 1200 அளவில் பரிஸ் தாராளக் கலைகளையும், இறையியலையும் தனிச்சிறப்பான துறைகளாகக் கொண்ட பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது. இறையியலி லும், தத்துவ ஆராய்ச்சியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கியது, பரிஸ் பல்கலைக்கழகமாகும். இறையி யலையும், தத்துவத்தைபும் எவ்வாறு முரண்பாடின்றி இணைக் கலாம் என்பதே இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. கிறிஸ்தவ இறையியலும், கிரேக்க, இஸ்லாமிய, தத்துவமும் இங்கு பயி லப்பட்ட காரணத்தாலும், இவற்றின் தொடர்பாலும் தத்துவ உலகில் மாபெரும் விளைவுகள் ஏற்பட்டன.
பல்கலைக்கழகம் என்ற நிறுவனம் இடைக்காலத்தின் கண்டு பிடிப்பாகும். உயர் கல்வி நிலையங்கள் பழைய நாகரிக உலகில்
காணப்பட்டிருந்தாலும் அவை திட்டமிடப்பட்ட பாட நெறிக
18O

ளையோ, ஒழுங்கமைக்கப்பட்ட பீடங்களையோ, பட்டங்களை வழங்கும் முறையையோ கொண்டிருக்கவில்லை. இடைக்காலப் பல்கலைக்கழகங்கள் ஒரு கூட்டு நிறுவனங்களாக, ஏனைய சங் கங்களைப் போலவே ஆசிரியர், அல்லது மாணவர்களால் ஒழுங் கமைக்கப்பட்டவையாகத், தங்கள் நலன்களையும், உரிமைகளை யும் பாதுகாக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டவையாகக் காணப் படுகின்றன. பரிஸ் பல்கலைக்கழகத்தைப்போலவே பதின்மூன் றாம் நூற்றாண்டில் ஒக்ஸ்போட் ( Oxford ), கேம்பிரிட்ஜ் ( Cambridge ), Gudmr6ör sib 966 uuri ( Montpellier ), FGMLDIšilassr ( Salamanca ) நேப்பிள்ஸ் ( Naples ) என்பன புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜேர்மனியில் காணப்பட்ட அமைதியற்ற நிலைமையின் காரணமாகப் பதின் நான்காம் நூற்றாண்டுவரை எந்த பல்கலைக்கழகமும் அங்கு உருவாகமுடியவில்லை. ஆனால் கி. பி. 1385 இல் அங்கு கைடல் பேர்க் ( Heidelberg) பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றதனைத் தொடர்ந்து விரைவாகவே பல பல்கலைக்கழகங்கள் தோன்
றின.
இடைக்கால ஐரோப்பாவில் காணப்பட்ட பல்கலைக்கழகங் கள் இரண்டு வேறுபட்ட அமைப்புகளை அல்லது மாதிரிக ளைக் கொண்டனவாக விளங்கின. இத்தாலி, 6ń)Llu'r Gorfflun unr, தென்பிரான்ஸ் பகுதிகளிற் காணப்பட்ட பல்கலைக்கழகங்கள் பொலஞ்ஞா பல்கலைக்கழகத்தின் அமைப்பைக் கொண்டி ருந்தன. இப்பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கூட்டுநிறுவன மாகச் செயற்பட்டனர். ஆசிரியர்களை வாடகைக்கு பிடித்துச் சம்பளமும் வழங்கியதுடன், ஒழுங்காகக் கடமைகளை ஆற் றாத ஆகிரியர்களுக்குத் தண்டனை வழங்கவும், பதவி நீக்க வும் அதிகாரங்களைப் பெற்றிருந்தனர். அநேகமாகத் தென் பகுதியிலிருந்த பல்கலைக்கழகங்கள் உலகியல் சார்ந்த பண்பு கொண்டவைகளாகச் சட்டம், மருத்துவம் போன்ற பீடங்களைக் கொண்டவைகளாக விளங்கின, பொலஞ்ஞாவிலுள்ள பல்க லைக்கழகம் சட்ட இயலிலும், ( உரோம, திருச்சபை சட்டங் கள் ) கிறிஸ்தவ மடத்து அலுவல்களிலும், சமுதாயத்திற் குரிய செயல்களிலும் ஈடுபட்டது. இறையியலிலும், தத்து வத்திலும் அது அதிக அக்கறை காட்டவில்லை என்பதனை அறிகின்றோம். வட ஐரோப்பாவிலிருந்து பல்கலைக்கழகங்கள் பரிஸ் பல்கலைக்கழக மாதிரியைப் பின்பற்றியிருந்தன. பரிஸ் பல்கலைக்கழகம் மாணவர்களுடைய சங்கமாக அல்லாது ஆசி ரியர்களுடைய சங்கமாகத் தான் விளங்கியது. இது கலை,
8

Page 72
இறையியல், சட்டம், மருத்துவம் ஆகிய நான்கு பீடங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. இப்பீடங்கள் ஒவ்வொன்றிற் கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பீடாதிபதி ( Dean ) தலைமை தாங்கினார். வடக்கிலிருந்த பல்கலைக்கழகங்களில் கூடியளவு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக கலை, இறையியல் என் பன காணப்பட்டன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதி யில் பரிஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பல்வேறு தனிப்பட்ட கல்லூரிகள் தாபிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இக் கல்லூரிகள் ஏழை மாணவர்களுக்குப் புகலிடம் வழங்கும் நோக் குடனே தாபிக்கப்பட்டன. இவை மாணவர்கள் தங்கிப் படிக் கும் இடங்களாகக் காணப்பட்டன. காலப்போக்கில் இக்கல் லூரிகள் தங்கிப் படிக்கும் இடங்களாக இருந்ததுடன் போத னைகள் வழங்கும் மையங்களாகவும் மாற்றம்பெற்றன. இதை யொத்த அமைப்புமுறை ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு பாகங்களுக்கும் பரவியது. தற்போது ஐரோப்பாக் கண்டத் திலிருந்து இம்முறை மறைந்துபோயிற்று. ஆனால் இன்றும் இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களான ஒக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் என்பன பரிஸ் பல்கலைக்கழகத்தின் மாதிரியைப் பின்பற்றி இயங்கி வருகின்றன. இவற்றுடன் இணைந்த கல்லூரிகள் அரைச் சுதந்திரமான நிறுவனங்களாக இயங்கி வருகின்றன.
நவீன பல்கலைக்கழக அமைப்பு முறைமையும், பல்கலைக் கழகங்களின் பட்டங்களும் இடைக்காலப் பல்கலைக்கழகங்களின் அமைப்பு முறையைப் பின்பற்றியவையாக அமைந்துள்ளன. ஆனால் கல்விப்போதனைமுறைகளும், பாடத்திட்டங்களும் பெருமளவில் மாறுபட்டுள்ளன. இடைக்காலப் பல்கலைக்கழக ங் களில் வரலாறு மற்றும் சமூக விஞ்ஞானம் சார்ந்த பாடத் திட்டங்கள் இருக்கவில்லை. இடைக்கால மாணவன் பல்கலைக் கழகத்திற்கு நுழைவதற்கு முன்பாகவே லத்தீன் இலக்கணத் தைப் படித்திருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டான். பல்கலைக்கழகத்தின் நுழைந்த பின்பாக நான்கு வருடங்கள் அடிப்படைத் தாராளக் கலைகளைக் கற்கவேண்டியிருந்தது. Trivium என்று அழைக்கப்பட்ட லத்தீன் இலக்கணம், அணி godds600Tib. 5 ridiósh s Grammer, Rhetoric, Logic) -gsu மூன்று பாடங்களைக் கற்கவேண்டியிருந்தது. இப்பரீட்சையில் சித்தியடைந்தால் கலைமாணிப் பட்டத்தின் ஆரம்ப நிலையை அடையமுடிந்தது. இப்பட்டம் எந்த விசேட தகைமையையும் பெற்றதல்ல. இதன் பின்னர் அவர் தனக்கு வேண்டிய தொழிற் பயிற்சியை வெளியே பெறமுடிந்தது. இதன் பின்பாக
182

மேலும் வருடங்களைச் செலவழித்துப் படித்து உயர்பட்டம் பெற முடிந்தது. இத்தகைய பட்டங்களாக முதுகலை LDrrosofi ( M. A. - Master of Arts, Doctor of Laws, Medicine, Theology ) asant p55 ( Ph. D ) என்பன காணப்பட்டன. முதுகலைமாணிப்பட்டம் பெறுவதற்குத் தூய கணிதம், இயற்கைவிஞ்ஞானம், தத்துவஞானம், போன்ற பாடங்களில் மூன்று அல்லது நான்கு வருடங்களைச் செலவிட வேண்டியிருந்தது. இவர்கள் Quadrivium எனப்படும் நான்கு பாடங்களைக் கற்கவேண்டியிருந்தது. அவையாக எண்கணிதம் கேத்திரகணிதம், வானியல், சங்கீதம் என்பன இருந்தன" இக்கற்கைநெறிகளில் தற்போது முக்கியத்துவம் பெற்றி ருக்கும் ஆய்வுகூடப் பரிசோதனை என்பது அறியப்படாத ஒன்றாக இருந்தது. இறையியலில் கலாநிதிப்பட்டம் பெறுவ தற்கு பரிஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டம் எட்டு வருடங்கள் படித்துப் பெற்ற பின்னர் பன்னிரண்டு அல் லது பதின்மூன்று வருடங்களைச் செலவழிக்க வேண்டியிருந் தது. இத்தகைய ஒரு பட்டத்தை 40 வயதுக்கு முன்பாகப் பெறுவது என்பது அரிதாக இருந்தது. மருத்துவம் உட்பட்ட இப்பட்டங்கள் அனைத்தும் கல்வி கற்பதற்கான உரிமையைக் Gasnroof Lafaunrigib. Doctor of Medicine J.L.- மருத்துவத் தைப் படிப்பவனைத்தான் குறித்தது. மருத்துவம் செய்ப வனைக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இடைக்காலப் பல்கலைக்கழகங்களில் மாணவரின் வாழ்க்கை முறை நாம் தற்போது பார்க்கும் பல்கலைக்கழக மாணவர் களது வாழ்க்கை முறையினின்றும் பலவழிகளில் பெரிதும் வேறுபட்டது. மாணவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கைய்ை மிக இளம் பருவத்தில் இருந்தே உ - ம் 12 - 15 வயதிலிருந்தே ஆரம்பித்ததால் குழப்பம் காணப்படுவது வழமையாக இருந்தது. அத்துடன் மாணவர்கள் தங்களைச் சுதந்திரமான, சலுகை பெற்ற ஒரு பிரிவினராகக் கருதிக்கொண்டனர். இதனால் உள் ளுர் நகரப்புற மக்களுடன் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டிருந் தன. ( Town and Gown ) பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒரே தன்மையானவர்களாக, ஒரே இயல்பினராக அல்லாது பல் வேறுபட்ட தேசிய இனங்களைக் கொண்ட குழுக்களாகவே விளங்கினர். ஒரு இளம் பிரெஞ்சுக்காரனோ, அல்லது ஜேர்ம னியனோ சட்டத்தைப் படிக்க விரும்பினால் பொலஞ்ஞா அல்லது பாதுவா (Padua) பல்கலைக்கழகத்திற்கு சென்றான். அதேபோல ஒரு இளம் இத்தாலியன் இறையியலைப் படிக்க
183

Page 73
ஆர்வம் கொண்டால் பரிஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென் றான். வழக்கமாக முழுப் பல்கலைக்கழகமும் ஒரு சுதந்திர மான சமூகமாக விளங்கியது. மன்னனால் அல்லது மானியப் பிரபுவினால், அல்லது நகர நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தனியுரிமைப் பட்டயங்களின் கீழ் இவை இயங்கியதனால் தன் ண்ாட்சியுரிமையைக் கொண்டிருந்தன. இதனால்தான் இடைக் காலத்துப் பல்கலைக்கழகங்களைச் சுதந்திரக் குடியரசுகள் என்று வர்ணித்திருந்தனர். மாணவர்களும் அரசியல் அதிகாரி களின் நியாயாதிக்க வரம்பிற்குக் கட்டுப்படாதவர்களாக விளங் கினர். இப்பழைய தனியுரிமையின் விளைவாக ஜேர்மனியப் பல்கலைக்கழகங்களில் சொந்த சிறைச்சாலைகள்கூடக் காணப் பட்டன.
மிகவும் குறைவான மாணவர்களிடமே நூல்கள் காணப்பட் டன. நூலகங்களில் இருந்து நூல்களைப் இரவலாகப் பெறுவது அருமையாக இருந்தது. அதன் விளைவாகக் கற்பித்தலில் பிரதி பண்ணும்முறை முக்கியத்துவம் பெற்றிருந்தது. விரிவுரையின் பின்பாக மாணவர்கள் அதைப்பற்றி விவாதித்து ஆராய்ந்தனர். இளைஞர்களின் கல்வியில் பரந்த வாசிப்பு, அல்லது ஆராய்ச்சி மூலம் பெறப்படுவதிலும் பார்க்க தர்க்கம், ஞாபகம் மூலம் பெறப்படுவது முதன்மை பெற்றது. மாணவர் தம் திறைைம யைத் தாமாகவே வளர்க்கவும், தனித்தியங்கவும் எதிர்பார்க்கப் பட்டது. இடைக்கால மாணவர்கள் கல்லூரிகளுக்கிடையே ஏற் படும் விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிந்திருக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் பல்வேறு அறிஞர்கள் தமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், வித்துவக் காய்ச்சல் காரணமாக வேறுபட்டுநின் றனர். தற்காலப் பல்கலைக்கழகங்களில் காணப்படுவதைப் போன்றே மாணவரிடையே தீவிரவாதம், மரியாதையின்மை அங்கும் நிலவியதாக அறியமுடிகின்றது. அநேகமாக இந்நிறுவ னங்கள் மத, தத்துவ கருத்து வேறுபாடுகளுக்கான மையநிலை யங்களாகக் காணப்பட்டன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பரிஸ் பல்கலைக்கழகம் சுமார் 7000 மாணவர்களைக் கொண்டதாக வும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சராசரி ஒவ்வொரு ஆண்டி லும் 2000 மாணவர்களைக் கொண்டதாகவும் விளங்கியது.
இறைவழிபாட்டின் பின்னரே பாடங்கள் போதிக்கப்பட்டன. ஏழைகள் செல்வம்படைத்தோர் என்ற வேற்றுமை பாராது மாணவர்கள் ஒன்றாகப் பழகினர். மாணவர்கள் எப்போதும் கல்வித்துறையில் ஆழ்ந்திருந்தார்கள் என்று கொள்வதற்கில்லை.
134

இளமையின் உணர்ச்சி வெள்ளம் பல துறைகளிலும் பரவியது. பால் உணர்வு, காதல், நாடகங்களை நடித்தல், இலக்கியங் களை இரசித்தல் போன்ற பண்புகள் காணப்பட்டன. மாண வர்கள் பொதுப்பட எல்லா உரிமைகளையும் பெற்றிருந்தனர். அவர்கள் குற்றம் புரிந்தால் மடத்தைச் சேர்ந்த நீதிமன்றுகள் தான் தீர்ப்பைக் கூறல்வேண்டும். சில பல்கலைக்கழகங்களில் மாணவர்களே பேராசிரியரைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் மாணவர்கள் விருப்பத்தை ஆசிரியர் நாடி நிற்கவேண்டிய தாயிற்று. பல்கலைக்கழக நிர்வாகத்தின் அதிகார சட்டதிட்டங் களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால் ஒத்துழையாமை இயக் கத்தை அவர்கள் மேற்கொள்ளலாம். இதுவே தற்போதைய மாணவர் பகிஷ்கரிப்பிற்கு முன்னோடியாக அமைந்துள்ளது எனலாம். அரசியல் விவகாரங்களிலும், அரசியல் சிந்தனை வளர்ச்சியிலும் பரிஸ் பல்கலைக்கழகம், ஜேர்மானிய பல்கலைக் கழகங்கள் ஈடுபாடு கொண்டிருந்தன.
உயர் இடைக்கால ஐரோப்பாவில் பல தரங்களிலும் கல்வி கற்றோர் எண்ணிக்கை விரைவாகவே அதிகரிக்கலாயிற்று. அவ் வாறே கல்வியின் தரமும் அதிகரித்தது. இந்த நிலைமை கிரேக்க அறிவைத் திரும்பவும் பெற்றுக்கொண்டமையினாலும், முஸ்லீம் களின் அறிவுத்துறை அபிவிருத்திகளை ஏற்றுக்கொண்டமையி னாலும் ஏற்பட்டதாகும். ஆரம்பத்தில் மேற்கைரோப்பியருக்கு கிரேக்க மொழியோ, அராபிய மொழியோ தெரிந்திருக்கவில்லை. இந்த மொழிகளில் இருந்த படைப்புக்கள் லற்றின் மொழி பெயர்ப்புக்கள் மூலமாகத்தான் அறியப்படவேண்டியிருந்தன. கி. பி. 1140 இற்கு முன்பாக இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் மிகச் சிலவாகவே இருந்தன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கு முன்பாக அரிஸ்டோட்டலின் பல படைப்புக் களில் மிகச் சில தர்க்கக் கோட்பாடுகளே லற்றின் மொழி பெயர்ப்பின் மூலம் மேற்கைரோப்பாவிற்குக் கிடைத்திருந்தன. ஆனால் திடீரென மொழிபெயர்ப்பு நடவடிக்கையில் பெரு வளர்ச்சியேற்பட்டுப் பண்டைக் கிரேக்க, அராபிய மொழியி லிருந்த விஞ்ஞான அறிவு மேற்கு ஐரோப்பியருக்குக் கிடைக்க வழியேற்பட்டது. இந்த நடவடிக்கை ஸ்பானியா, சிசிலியில் இருந்த கிறிஸ்தவ, அராபிய, யூத அறிஞர்களால் மேற்கொள் ளப்பட்டது. இவர்கள் பலமொழி அறிஞர் சங்கமித்த இடங் களில் வாழ்ந்தமையால் இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடிந்தது. ஆரம்பத்தில் கிரேக்கப் படைப்புக்கள் அரபுமொழி
135

Page 74
பெயர்ப்பில் இருந்தே லற்றின் மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அதன் பின்னர் கிரேக்க மொழியறிவு வளர்ச்சிப்பட்ட டதும், நேரடியாகவே கிரேக்க மொழியிலிருந்து லற்றின் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றின் விளைவாக 1280 அளவில் அநேகமாக எல்லா அரிஸ்டோட்டலின் தொகுப் புக்களும் லற்றின் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அவ்வாறே யூகிலிட், கலன், தொலமி போன்ற கிரேக்க அறி ஞர்களின் படைப்புக்களும் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் கிரேக்க இலக்கிய வடிவங்களில் முக்கியமானவையும், பிளேட் டோவின் படைப்புக்களும் இன்னும் மொழிபெயர்க்கப்படாதே இருந்தன. அவை அரபுமொழியில் கிடைக்காமல் இருந்ததுடன் கிடைக்கமுடியாதனவாகப் பைசாந்திய ஏட்டுச்சுவடிகளில் தான் இருந்தன. இவற்றுட் சில ஐரோப்பாவிற்குச் சிலுவைப் போரினால் ஏற்பட்ட தொடர்புகள் மூலமாகக் கிடைக்கப் பெற்றன. கிரேக்க சிந்தனைகளைவிட மேற்கத்தைய அறிஞர் தற்போது அவிஷென்னா, ( Avicenna ), அவெரோஸ் ( AverToes ) போன்ற பிரசித்தி பெற்ற இஸ்லாமிய தத்துவ ஞானிகளினதும், விஞ்ஞானிகளினதும் படைப்புக்களுடன் அறி முகமானார்கள். இந்த அனைத்து முயற்சிகளிலும் இடைக்காலப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிஞர் பலரின் தொண்டு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்திருந்தது.
இவ்வாறு கிரேக்க, அராபிய, விஞ்ஞான சிந்தனை மரபு களைப் பெற்றுக்கொண்ட மேற்குலகு இதனை அடிப்படையாக வைத்துத் தனது முன்னேற்றத்திற்கான அறிவுத்துறை ஒன்றைக் கட்டி எழுப்பலாயிற்று. இவ்வகையில் கிறிஸ்தவ கோட்பாடு களுடன் அதிகம் முரண்படாத வகையில் இயற்கை விஞ்ஞா னத்தில் சாதனைகள் படைக்கப்பட்டன. ஆனால் தத்துவ ஞானத்துறை பொறுத்துக் கிரேக்க, அராபிய தத்துவங்களை கிறிஸ்தவ நம்பிக்கைகளுடன் இணைப்பது தொடர்பாகப் பிரச் சினைகள் எழுந்து புலமைவாதம் ( Scholasticism ) என்ற தத் துவவாதம் வளர்ச்சிபெற்றது இக்காலப்பகுதியில் வாழ்ந்த பிரசித்திபெற்ற அறிஞர்களாக ஆங்கிலேயனான றொபேட் g@pGFL SFA ( Robert Grossteste 1168 - 1253 ), Gutfesör Lonrao Tauer Tor Gritsi Gusair ( Roger Beacon - Oxford 12 141294 ), y ffibsprř sy Glavnt " Peter AbeIard - Paris 11 21 ), gau ரின் மரவர fibpri Gavrre Lurr ( Peter Lomberd C. I 157Gafsriř (35 TLD6ñv egyéš60au Garov ( St. Thomas Aquinas - Paris 1225 - 1274 ) என்போர் விளங்குகின்றனர்.
36

உசாத்துணை நூல்கள்
с. Bailey, (ed.), The Legacy of Rome, Oxford, 1923
A. E. R. Boak, A History of Rome to 565 AD, Macmillan, 1965.
Robert Brentone, The Early Middle Ages 500 - 1000, New York, 1964.
Grane Brinton, John B. Christopher & Robert Lee wolff, A History of Civilization Vol. I, Prenticc Hall, Engle - wood Cliff, New Jersey, 1967.
E. M. Burns, R. E. Learner & Standish Meacham, Western Civilization, Their History and Their Culture, Norton & Co., New York, 1980.
The Cambridge Medieval History, Vol. II, Macmillan, 1913.
Norman, F., Cantor, The Medieval World 300 - 1300 AᎠ ; London, 1968.
David & Joan Oates, The Rise of Civilization, Oxford, 1976.
M. Grant, The World of Rome, World, 1960.
J. H. Hays & M. W. Baldwin, History of Europe Vol. I. Macmillan Company, New York, 1957.
Robert Edwin Herzstein, Western Civilization, Houghton, Mifflin Co., Boston, 1975.
George Holmes (ed.) The Oxford Illustrated History of Medieval Europe, New York, 1988.
J. Hussey, The Byzantine World, Hutchinsons University Library, 1957.
H. D. F. Kitto, The Greeks, Penguin, 1967.
A. G. Lehmann The European Heritage - An Outline of Western Culture, Oxford, 1984.
1.37

Page 75
Bernard, Lewis. The Arabs in History, Hutchinsoa. University Library, London, 1950.
Roger Ling, The Greek World, Elesevier - Phaidon, Oxford, 1976.
Sidney Painter, A History of the Middle Age 284 - 1500 AD, Knopf.-New York, 1967.
Michael Rogers, The Spread of Islam, Elesevier - Phaidon, Oxford, 1976.
Joseph, R. Strayer, Western Europe in the Middle Ages A Short History, Prentice Hall, New Jersey, 1974.
Roland, N., Stromberg, A History of Western Civilization Dorsey Press, Illinois, 1967.
138


Page 76
664, Gass
明 韓國 如|- 9岁 S.
|- |- )
 

.
. +
F
.1 ܩ