கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர்

Page 1
  

Page 2

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர்
(இரண்டாம் பதிப்பு)
ஆசிரியரி: திரு. ந. சி. கந்தையா பிள்ளை
இது புரொகிரெசிவ் அச்சகத்தில்
அழுத்தப்பட்டது பதிப்புரிமை) 1948 alakò (5. 2

Page 3
இஃது
உயர்திரு மறைமலை அடிகள் பத்து ஆண்டுகளின் முன் இந்நூலாசிரியரைக் குறித்து வெளியிட்டுள்ள கருத்துரை
உயர்திரு மறைமலை அடிகள்
SWAM VEDACHALAM Pal la varaт,
h− 14th Feb., 1938.
I know Mr. N. S. Kandiah Pillai of Jaffna for more than ten years as a Tamil scholar devoting his time and energy to a careful and critical study of ancient Tamil classics. His prose renderings of Pattuppattu, Pathitruppathu, etc., and his historical compilation about the ancient Tamil land bear ample testimony to his intimate knowledge of old Tamil classics and his comprehensive grasp of important historical matters performing to the ancient civilization of the Tamils. A study of his works will, I am sure, not only improve the Tamil knowledge of students but will also lead them to a correct understanding of the civilisations of the Tamilian and Aryan races.
 

முன்னுரை
இந்நூலின் முதலாம் பதிப்பு ஒற்றும்ை கிலையத் தலைவராகிய திரு. எம். ஈ. வீரபாகு பிள்ளை பி.ஏ., எல்.டி. அவர்களால் வெளியிடப்பட்டது. கருத்து ரை யின் பொருட்டு இந்நூல் சில செய்தித்தாள் நிலையங்களுக்கும், வானெலி நிலையங்களுக்கும் விடுவிக்கப்பட்டது. எம்.ஏ. பட்டதாரி ஒருவர் எழுதிய கருத்துரை “இந்து' என்னும் செய்தித்தாளில் வெளிவந்தது. அதில் திராவிடர் மேற்கு ஆசிய நாடுகளில் சென்று குடியேறினர்கள், ஆதியில் உலகில் தாயாட்சி இருந்தது, சிவன் என்னும் பெயர் ஆதியில் ஞாயிற்றைக் குறிப்பதாயிருந்தது, தமிழ் என்னும் சொல்லின் தொடக்கம் எல் சம்பந்தமானது என்னும் கருத்துக்கள் குறிப்பாக மறுக்கப்பட்டிருந்தன. சென்னை வானெலி கிலையும் இந்நூலைப் பற்றிய கருத்து ரையை நல்லமுறையில் ஒலிபரப்பிற்று. திருச்சி வானெவி கிலையத்தார் இந்நூலுக்குக் கருத்துரை கொடுக்க முடி யாதென எவ்வகைக் காரணமும் கூருது பதிப்பாளருக்கு அறிவித்துவிட்டனர். (காரணம் இந்நூல் திராவிடர் - நாகரிகத்தைமட்டும் கூறுவதாயிருப்பதாகலாம்.)
இந்நூல் வெளிவந்த காலத்தில் இதன் பதிப்பாளர் ஓர் உயர்நிலைப்பள்ளியில் ஆசியராக விருந்தார். அக்கல்வி நிலையத்தோடு தொடர்பு பெற்றிருந்த எம். ஒ. எல். பட் டம் பெற்ற பன்மொழிப் புலவரொருவர், இந்நூலாசிரியர் கற்பனை எழுதுவதில் வல்லவர்', எனத் தம்மிடம் கூறினர் எனவும், சர்வ கலாசாலைப் பரீட்சைகள் ஒன்றுக்கு பாட மாக்குதற்கு இந் நூற் பெயர் குறிப்பிடப்பட்டபோது மேற் படி ஆசிரியர் குறுக்கிட்டு ‘தமிழர் *மேற்கு ஆசியா, எகிப்து முதலிய நாடுகளிற் சென்று குடியேறினர்கள் * சென்னைப் பல்கலைக் கழக வரலாற்று ஆராய்ச்சித் துறைத் தலைவர் திரு. வி. ஆர். இராமசந்திர தீட்சிதர் அவர்கள் தென்னிங் திய புக்களே கிரேத்தா எகிப்து முதலிய நாடுகளிற் சென்று குடி, யேறினர்கள் எனக் கடறியுள்ளார்.

Page 4
iv
என்பது போன்ற கற்பனையைக் கூறும் நூல் பாடப்புத்தக மாக வருதல் கூடாது’ எனத் தடை எழுப்பினர் எனவும் இந்நூற் பதிப்பாசிரியர் நம்மிடம் கூறினர்.
பிராமண வகுப்பினராகிய பேராசிரியர் ஒருவர் இக் நூலுக்கு எழுதியனுப்பிய கருத்துரையொன்றையும் அவர் நமக்குக் காட்டினர். அதில் இவ்வகையான நூல் எழுதுவதற்கு ஆசிரியருக்கு “டெக்கிக் (technic) பற் முது என்று குறிக்கப்பட்டிருந்தது. உயர்திரு மறைமலை அடிகள், இது தமிழரின் நாகரிகத்தை விளக்கும் ஒரு சிறந்த நூல் என்று எழுத்துமூலம் தமது கருத்தை நமக்குத் தெரிவித்ததோடு நாம் அவரை நேரில் பார்க்க நேர்ந்தபோதும் அதே கருத்தினைத் தெரிவித்து மகிழ்ந் தார். யாம் இவைகளை இங்கு எடுத்துக்கூற வேண்டிய தற்குக் காரணம் தமிழர் நாகரிகத்தின் உண்மை உயர் இயல்புகளை எடுத்துக் கூறுமிடத்து அதற்கு ஒரளவு எதிர்ப்புத் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது என்பதை உணர்த்து தற்கேயாகும். ( இதற்கு ஒர் எடுத்துக்காட்டும் தருகின்ருேம்,
இராம வர்மா ஆராய்ச்சி நிலைய வெளியீடு ஒன்றில் திராவிடர் நாகரிகப் பண்புகளை உள்ள வாறு விளக்கும் சிறந்த கட்டுரை ஒன்று வெளிவந்தது. அது மேனன் என் னும் அறிஞரால் எழுதப்பட்டது. அதில், (1) தென்னிந்தி யாவே மக்களின் தொட்டில், (2) இற்றைக்கு இருபதினயி ரம் ஆண்டுகளின்முன் இந்தியாவிற் பேசப்பட்ட மொழி இன்றைய தமிழுக்கு முற்பட்ட பழந்தமிழ், (3) சுமேரியர் திராவிடரின் ஒரு கிளையினர், (4) மொகஞ்சதரோ நாக ரிகம் ஐயத்துக்கு இடமின்றித் திராவிடருடையது, (5) இந்திய நாகரிகத்தின் அடையாளங்கள் பிலிப்பைன் தீவு களிற் காணப்படுகின்றன, (6) சுமத்திரா, யாவாத்தீவு அளின் நாகரிகத்தில் இந்தியப் பண்பாடுகள் ஊறியுள்ளன, (T) மத்திய அமெரிக்காவில் வாழும் மாயா மக்களின் நாகரிகத்தில் திராவிட சம்பந்தமுண்டு, (8) இந்திய சமr)
1. Bulletin of Ramavarma Research Institute

ν
மென்பது திராவிடர் சமயமே, என்னும் கருத்துக்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.2
மேனன் எழுதிய இக்கட்டுரைக்குக் கருத்துரை வழங்கிய அவ்வெளியிட்டின் ஆசிரியர் கூறியிருப்பது வருமாறு. “இவ்வாசிரியர் தமது கருத்துக்களைத் தக்க ஆதாரங்கள்கொண்டு வலியுறுத்தியிருக்கின்றர். நாம் ரியர் நாகரிகம்தான் மேலானது என்று நீண்டகாலமாக னைத்துப் பழகிவிட்டோம். இப் பிற்போக்கான மாய்கை யால் மக்கள் மறைக்கப்பட்டிருப்பதால் மேனன் அவர்கள் வலிய சான்றுகள் கொண்டு நாட்டியுள்ள உண்மைகளை ாம்புவதற்கு ஒருவன் இன்று பின்னடைவான்.’ 8
இவ்விரண்டாம் பதிப்பில் ஐயத்துக்கிடமான பல வற்றைத் தக்க மேற்கோள்களால் கிலைநாட்டியுள்ளோம்.
சென்னை - ) 朝 1-11-48 動 H. 5.
2. இக்கட்டுரையின் சுருக்கம் திராவிடர் நாகரிகம் என்னும் 5மது நூலில் வெளிவந்துள்ளது.
3. Mr. Menon presents on behalf of the despised Dravidian, a few of them may be quoted here, (I) South India. was the cradle of the human race, (2) The languages spoken in India. 20,000 years ago were all dialects of protoTamil, (3) The Sumerians were a branch of Indian Dravidian, (4) The language of Mohenjo-daro is distinctly Dravi. dian, (5) Traces of Indian culture have been found in the the Philipines, (6) The civilization of Java, and Sumatsa, is saturated with it (7) The Maya civilization of Central America shows Dravidian influence, (8) What is Indian religion, but Dravidian religion. His vision into the “corridor of time' undoubtedly yield kaleidoscopic views of fascinating hues, most of such statements found in the booklet are backed by competent authorities, but the spirit of conservism is so strong in us, and the glory of Aryan civilization has been dinned into us so long that even while admitting the weight of Mr. Menon's argumeats, one is inclined to don the mantle of disbelief-S. T. K. Kr'ıshna Menon-Sri Rama Varma Research Bulletin No. 3

Page 5
Rao Bahadur ANNAMALAIN AGAR C. S. SRINIVASACHARI, M.A.,
PROFESSOR OF STORY AND POLITICS
ANNAMALAl UNIVERSITY Dated, Il-8-1943.
Tamilar Charitram by Mr. N. S. Kandiah Pillai, deals with the various theories put forward as to the probable original habitat of the Tamils on the assumption that they were immigrants into India and not autochthones, and then with the Indus Walley, culture, the identity of the Sumerians and the ancient Dravidians, the afinities of the Tamil tongue, the indigenous of the race and their association with the Aryans. Then it deals with the physical divisions, the ethnic and social gradations, the ideas, religious and cultural of the early Tamils and their civilisation as depicted in the works of the Sangham Age. The book displays a high degree of clarified learning and clear presentation of difficut and abstruse theories. and ideas and is efficiently documented, being always accurate and secure in data. It is a creditable indication of historical and ethnological scholarship.
“ Tamilagam ” by the same writer deals with a variety of topics connected with ancient Tamil civilization............. --
Both these should be on the shelves of every careful student of the Tamils.

முதற்பதிப்பின் முன்னுரை
இக் கண்ணகன் ஞாலத்தே பற்பல மொழிகளை வழங்கும் மட்கட் கூட்டத்தினர் பலர் ஆங்காங்கு வதிகின் றனர். இஞ்ஞான்று அம்மக்கட் கூட்டத்தினர் ஒருவரோடு ஒருவர் தொடர்பிலர் எனத் தோன்றினும், அன்னுேர்க்குத் தொடக்கம் ஒரு மத்திய மனுக்குலமே எனப் புலணு கின்றது. அம்மக்கட் பெருங்குலத்தினர் கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறத்தினராகத் திகழ்ந்தனர். அத் தொல் குலத்தினர் சுமேரியர் அல்லரேல் தமிழராவ ரென்பது வரலாற்று வீரர் முடிபு. ஆராய்ச்சியில், சுமே சியர், தமிழரினின்றும் அகன்று சென்று பாரசீகத்தின் மேற்கே குடியேறிய சிறுகூட்டத்தின ரொருவராகக் காணப்படுகின்றனர். அன்னேர், எல் அல்லது எல்லம் என்றும் பிற்காலத்து ஈழம் 2, இலங்கை என்றும் அறியப் பட்ட சிங்கள (சிங்க + எல் + அ) தீவினின்றும் சென்ருரர்கள் எனத் துகினிதற்கேற்ற ஏதுக்கள் சில உள. அவையிற்றை நூலகத்துக் கூறினும், பண்டிதர் சவரி l. The more ancient races of men were all dusky, or black, and fairness is new...... brunet peoples as to speak. the basic peoples of our modern world-O.L.O.E.-H.G. Wells.
ஈழம் என்பது எல் என்னும் சொல்லின் திரிபு; எல், இல் எனத் திரியும். (arói, எல்+அம் - எல்லம் = இல்லம் = ஈலம்- ஈளம் = ஈழம்.) சிங்கவழிச அரசருக்குப்பின் (சிங்கவாகுவின் புதல்வனுகிய விசயனுக்குப்பின்) எல்லர் எனப்பட்ட ஈழத்து மக்கள் (சிங்க+ எல்லர்) சிங்களர் எனப்பட்டனர். (சிங்க + எல்லர் = சிங்கலர் = சிங்களர்) இவ்வாறே அவர் மொழியாகிய எல் (சிங்க--எல்அம் - சிங்கலம்=) சிங்களம் என்ருயிற்று. சிங்களம் என்ரு வதற்கு முன் இலங்கைப் பழைய மக்களின் மொழி எலு எனப் பட்டது.
மாகறல் கார்த்திகேய முதலியார் தாமம் என்னும் சொல்லி னின்று தமிழ் பிறந்ததெனக் கூறியுள்ளார்! வித்துவான் சா. இராகவ ஐயங்காரவர்கள் மேற்கு ஆசியாவில் ஞாயிற்றுக் 'கடவுளின் பெயராய் வழங்கிய தாமுஸ் என்னும் பெயர் தமிழ் உற்பத்தியோடு சம்பந்தம் பெற்றிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்,
Ꮉ '

Page 6
viii
ராயன் எல்லமே தமிழரின் ஆதி இருப்பிடம் எனத்துணிக் தமையும் கருத்திற் கொள்ளத் தக்கது. ஒரு மத்திய வழிபாட்டினின்றே உலகமக்களின் வழிபாடுகள் எழுந்தன. அவ்வழிபாடு ஞாயிற்று வழிபாடு அல்லது சிவன் வழிபாடாகும். சிவன் வழிபாடே உலகில்மிகப் பழமையுடையது.*
காலவெளியின் ஓர் மண்டலத்தே கின்று நோக்கு மிடத்து உலகமக்கள் ஒன்று, நாகரிகம் ஒன்று, மொழி
தாமம் என்னுஞ் சொல், ஞாயிற்றையும் ஒளியையும் உணர்த்தும். ஞாயிற்று ஒளி மலையின் முக்கியத்தால், எல்லம், தாமம்+எல்லம் என வழங்கியிருத்தல் கூடும், தாமம் என்பது தாம் என மருவித் (தாம்--எல்லம்) தாமெல்லம் என வழங்குதல் கடும். எல்லம் ஈழமானமை முன்னர் காட்டப்பட்டுள்ளது. தாம்--ஈழம் (தாம்--ஈழம் = தாமீழம் = தமிழம்=) தமிழ் என மருவிற்று. ஞாயிற்றுக்கு ஆதிப்பெயர் சிவன் என்பது நூல்கத்துக் காட்டப் பட்டுள்ளது. ஆகவே தமிழ் என்பதற்குச் சிவன் ஒளி என்பது பொருள். மேற்கு ஆசியமக்களும் பகற்கடவுளே தங்கள் மொழியையும் ஞாயப்பிரம்ாணங்களையும் அருளிச்செய்தார் என நம்பினர்கள். கமுரபி என்னும் பாபிலோனிய அரசனுக்குச் சூரியக்கடவுள் ஞாயப் பிரமாணங்களை அருளிச்செய்யும் பாவனையில் செதுக்கப்பட்ட சிலை ஒன்று அங்குஇன்றும் காணப் படுகின்றது. கமுரபி என்பதில் கம், கமலம் என்பதின் சுருக்க மென்றும் கமலம் சூரியனைக் குறிக்கும் அடையாளமன்றும் வடல் (Waddel) என்னும் ஆசிரியர் கடறுவர்.
எகிப்தியரின் அமன் கிரேக்கரது சியஸ், அப்பாலோ, ரோமரது யூபிதர், மேற்கு ஆசியமக்களது எல், இல், பகல், வேல், அசுர் என்னும் கடவுளர் வணக்கங்கள் இச் சிவ வழிபாட்டினின்றும் எழுந்தனவே. இப்பெயர்கள் எல்லாம் சிவன் அல்லது ஞாயிறு என்னும் கடவுளையே குறிக்கின்றன.
3. Among the many revelations that MohenjoDaro and Harappa have had in store for us, none perhaps is more remarkable than that this discovery that Saivaism has a history going back to the Chalcolithic Age or perhaps even further still, and it thus takes its place as the most ancient living faith in the world'-Sir John Marshall it his preface to Mehenjo-Daro and the Indus civilization' * Vol. I. p. VIII.

ix
ஒன்று, வழிபாடு ஒன்று எனத் தெள்ளிதிற்றேன்றும். இவ்வுண்மைகளையே பல முகத்தான் இந்நூல் அகலக் கூறுகின்றது. இந்நூல், எமது ‘தமிழர் சரித்திரத்திற்கு முன்னுரை போன்றது. -
தமிழ் என்னுஞ் சொல்லின் உற்பத்தியைக் குறித்துப் பலர் பலவாறு கூறியுளர். தமிழ் என்னும் சொல், இடப்பெயர் மக்களுக்காதல் மக்கட்பெயர் மொழிக்காதல் என்னும் ஒர் இயற்கை விதியைப் பின்பற்றித் தோன்றி யிருத்தல் வேண்டுமேயன்றி வேறு எம்முறையிலும், தோன்றியிருக்க முடியாதென்பது எமது துணிபு.
கோதை நீக்கிப் பருப்பையேகொள்வர் பயன் தெரிவார். அவ்வியல்பினராகிய சான்றேர் இந்நூலிற் காணும் குற்றம் நீக்கிக் குணமே கொள்வரெனத் தெளியு
மென்னுள்ளம்.
சென்னை 20ー11ー43 ந. சி. க.

Page 7
பொருளடக்கம்
u TLD பக்கம்
தோற்றுவாய் u 1
இயல்-1
மனிதரின் ஆரம்ப காலம் 3 தோற்றம் 8 கற்காலம் 4. உலோக காலம் 5 வேடன், இடையன், உழவன் 5 மக்கட் குலங்கள் 6 மக்கட் குலங்கள் எழுதக்குரிய காரணங்கள் 6 மக்கள் தனித் தனிக் கூட்டத்தினராகப்
பிரிந்து வாழ்வதற்குரிய காரணம் . . . 7
மேல்நாட்டு ஆசிரியரின் பழைய தாதிப்பிரிப்புக்கள் மக்களின் தொட்டில் அல்லது. ஆதி இருப்பிடம் . 8
இயல்-2
தமிழரின் கிளையினர் . . . 12 சுமேரியர் . . . . 13 சுமேரியரின் போர் முறை முதலியன ... 20 எகிப்தியர் ... 22 பாபிலோனியர் ... s. 36 கிாேத்தா மக்கள் ... 41 மினுேவர் பழக்க வழக்கங்கள் சில a 0 43 பழைய பிரித்தன் மக்கள் 45 பினிசியர் 47 அசீரியர் . . . 49 எபிரேயர் 5 l அராபியர் P 8. 51 சின்ன ஆசிய மக்கள் a a 52 பாாத பூமி அல்லது தமிழ் இந்தியா s 55 திாண்ட பொருள் to O s 63

Χ και
இயல்-3
வழிபாடு 8 66 சிவன் 67 ஞாயிற்றுத்தாண் வழிபாடு 72 முருக வழிபாடு a 74. தாய்க் கடவுள் வழிபாடு ... 76 திங்கள் வழிபாடு 77 அங்கி வழிபாடு Ο Κ και 78 இலிங்க வழிபாடு 79 இடப வழிபாடு 8 80 நாக வழிபாடு 8. மால் வழிபாடு 影 ● 粤 94. வேந்தன் வழிபாடு Ο Κ. Ο 95 வருணன் வழிபாடு 97 பல வணக்கங்கள் ஒன்று படுதல் 8 98
இயல்-4
மொழி s e. 101 தமிழ்ப் பெயர்க் காரணம் ... 113 திாண்ட பொருள் ... 19
இயல்-5
தமிழர் நாகரிகம் ... 120 பழைய கற்காலம் 海 够 编 120 புதிய கற்காலம் ... 122 வெண்கலக் காலம் ... 128
மொகஞ்சதரோ நாகரிகம் w s 129 இரும்புக் காலம் . ... 185 இந்நூலாாாய்ச்சியிற் பயன்றரும் சில குறிப்புகள் . 189
முடிவுரை ... 144

Page 8
BIBLIOGRAPHY
Dravidian Elements in Indian culture-G. Slater. Makers of civilization in Race and History
L. A. Waddell.
Indo-Sumerian seals Deciphered-L. A. Waddell. Introduction to natural History of Language.
T. G. Tucker. Historian’s History of the world. Encyclopaedia Britannica. Rigvedic India–Abinnas Chandra. Das. Valmiki Ramayana-Translation by Griffith. Outline of History-H. G. Wells. Man's Place in Nature and Other Essays-Huxley. Pre-Aryan and Pre. Dravidian. Stone Age in India-P. T. Srinivasa Iyengar. Pre-Aryan Tamil culture. Dravidian India-T. R. Sesha Iyengar. Tamilian Antiquary. Pre-Historic Indus Valley Civilization-K. N. Dikshit. A Brief History of civilizatign-J. H. Hoyland. An ancient History o the near east-R. H. Hall. Pre-Historic India-Mitra. - A First Book of World History-Hearnshaw. Egyptian myth and Legend-Mackenzie. Herodotus-Eng. Translation. Sun and the Serpent-Oldham. Scripture History. Descent of man-Darwin. Bible-Old Testament. -Dr. O. Sehrader. Pre-historic antiquities of Aryan people. New Review-1936. செங்கோன் தரைச் செலவு. மொழி நூல்-மாகறல் கார்த்திகேய முதலியார். Hindu Civilization-Mookerji. W Sri Rama varma research Bulletin No. 3. The quarterly journal of the mythic society Vols. Bulletin of Deccan college research institute Vol I. Bharatia Vidya Vol IIİ.
(பிறநூல்களை Guj65Tಷಿ அடிக்குறிப்புகளிற் காண்க.)

-
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட
பழந் தமிழர்
தோற்றுவாய்
* சது மறை ஆரியம் வருமுன் சக முழுது நினதாயின்
முதுமொழி தீயனுதி யென மொழிகுவதும் வியப்பாமே.” எனப் பேராசிரியர் சுந்கரம்பிள்ளை அவர்கள் ஐம்பது ஆண்டுகளின் முன் நவின்றதை அக்கால உலகம் ஏற் றிலது. அக்காலம் தமிழரின் பழைய வரலாறு ஆர் இருள் மூடிக்கிடந்தது. நில நூலார், படக்களின நூலார், மொழி நூலார்களுடையவும், பழம்பொருள் ஆராய்ச்சி ஆளர்களுடையவும் தொடர்ந்த பேருழைப்பினல் உலக மக்களின் வரலாறுகள் பூரண வெளிச்ச மடைந்துள்ளன. அவ்வரலாறுகளை யெல்லாம் நோக்குமிடத்துத் திராவிடர்’ எனப்படும் தமிழ்ப் பெருங்கூட்டத்தினரே உலக வர லாற்றில் பழமைபெற்று விளங்குதலைக் காணலாகும். இதனைக்காணும் ஒவ்வொரு தமிழ் மகனும் உவகையும் இறும்பூதும் எய்துவான் என்பதில் ஐயமென்ன !
ஏட்டிலடங்காத பழமைதொட்டு இவ்வுலகில் சீருஞ. சிறப்பு மெய்தி நாகரிகத்தின் உன்னத நிலையை அடைந்து விளங்கினுேர் எகிப்தியர், சுமேரியர் என்னும் இரு மக்கட்
1. ஆனல் அவர் கூறிய உண்மை இப்பொழுது அறிந்து போற்றப்படுகின்றது.

Page 9
2 பழந்தமிழர்
கூட்டத்தினரென்பது உலக வரலாற்முசிரியர்களின் முடி பாயிருந்தது. அவர்கள் அவ்வகை முடிவுக்கு வருதற்கு அம்மக்களின் புராதன நாகரிக சின்னங்கள் ஆதாரமளித் தன. தமிழரின் பழைய நாகரிகத்தைப் புலப்படுத்தும் சின்னங்கள் அண்மை வரையில் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தமையின் அவர்களின் தொன்மை வரலாறு மறை வாகவே இருந்தது. ஆகவே தமிழருடையவும் தமிழதும் ஆராய்ச்சியில் இறங்குவோர், தமிழர் இன்னெரு நாட்டி லிருந்து வந்து இந்தியாவிற் குடியேறினர்களென் ருே, தமிழ், வேறு மொழிகளினின்று உதித்ததென்றே கூறு வது இயல்பாக இருந்தது. சில்லாண்டு களின் முன் (1922) மொகஞ்சதரோ, அரப்பா என்னும் சிந்துநதிப் பள்ளத்தாக்கின் புதிையுண்ட புராதன நகரங்கள் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டு. அவைகளிற் கிடைத்த பழம்பொருள்கள் ஆராயிப்பட்ட பின்னர் தமிழரையும் தமிழ்மொழியையும் பற்றிய ஆராய்ச்சி வேறு வகையில் திரும்புவதாயிற்று. தமிழ்மக்க ளுடையன என்று முடி வாகத் துணியப்படும் சிந்துவெளி நகரங்களின் சிங்தைக்கு எட்டாத பழமையைக் கண்ட மேல்நாட்டு ஆராய்ச்சி விற்பன்னர் மலைத்து மூக்கின் மீது விரல்வைத்து நீண்ட சிந்தைய சாயினர். சிந்து வெளி நாகரிகத்தை விளக்கும் நூல்கள் பல ஆங்கில மொழியிலும், சில தமிழி லும் வெளிவந்துள்ளன.
தமிழ் மக்களின் ஆதி இருப்பிடம், ஒரு மத்திய கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று வெவ்வேறு நாடு களிற் குடியேறி நாடு நகரங்களை அமைத்து இராச்சியங் களைக் கோலிப் பழந் தமிழர் நாகரிகத்தை உலகிற் பரப்பி வெவ்வேறு சாதியினர் எனப் பெயர் பெற்றுப் பண்டைக் காலத்தே விளங்கிய குழுவினரின் வரலாறு முதலிய

மனிதனின் ஆரம்பகாலம் 3
வற்றை எளிதில் எவரும் உணருமாறு நுவலும் நூல் களோ அரியன. ஆகவே இவ்விரு பொருள்களையும் தெள்ளிதில் விளக்கும் கருத்தினைக் குறிக்கொண்டு இந்நூல் அமைவதாயிற்று. y
இயல்-1 மனிதரின் ஆரம்பகாலம் தோற்றம்
1 நாம் வாழும் இப்பூமி ஆதியில் உயிர்த்தோற்ற மில்லாத அனற் பிழம்பாக விருந்தது. அது வான வெளியில் எண்ணில்லாத காலஞ் சுழன்றுகொண் டிருந்தது. அப்பொழுது அதன் மேலோடு ஆறத் தொடங்கிற்று ; ஓரளவு ஆறியபின் சிறிய நீர்வாழ் உயிர் களும் தாவரங்களும் தோன்றின. காலத்துக்குக் காலம் பூமி அடைந்திருந்த பல்வகை வெப்பதட்ப நிலைகளுக் கேற்ப வாழக்கூடிய எத்தனையோ வகை உயிரினங்கள் காலந்தோறும் தோன்றி வாழ்ந்து மறைந்தன. அவ்வகை உயிர்களின் என்புக் கூடுகள் இப்பூமியின் ஆழத்திற் கண்டு எடுக்கப்பட்டன. ஆதியிற் முேன்றிய நீர்வாழ் உயிர்களே படிப்படியாக வளர்ந்து தரைவ்ாழ் உயிர்க ளாகிப் பின் மனிதன் வரையில் வளர்ச்சியடைந்தன என்பர் * உயிர்த் தோற்ற வளர்ச்சி நூலார்’ (Evolutionists). அற்றன்று ; ஒவ்வொரு படைப்பும் அச்சு மாரு மல் இறைவனல் படைக்கப்பட்ட தென்பர் பிறர். இற்றைஞான்றை நிலநூல் மக்கள் நூல் வல்லோர்' .1 حة கூறுவதின் சுருக்கம்,

Page 10
4 பழந்தமிழர்
எவ்வாறயினும் மனிதப்படைப்பே இறுதியானதென்பது எல்லோரது கொள்கையுமாகும்.
மனிதன் இப்பூமியில் வாழ ஆரம்பித்துப் பத்து அல்லது இருபது இலட்சம் ஆண்டுகளாகின்றன எனபர் இக்ககால ஆராய்ச்சியாளர். ஆதிகால மனிதன். இக்கால மனிதனை விடத் தோற்றத்திற் சிறிது மாறு பட்டவனு யிருந்து காலத்தில் சிறிது சிறிதாக மாற்ற மடைந்து இற்றைக்கு 50,000 வருடங்கள் வரையில் இக்கால மனிதனின் தோற்றத்தை அடைந்தான் எனக்கூறி, மிகப் பழங்காலத்தே வாழ்ந்த மக்களின் மண்டை ஒடுகளை ஆதாரமாகக் காட்டுவர் மக்கள் நூல் ஆராய்ச்சிவல்லார்.4
கற்காலம்"
வரலாற்றுக்காரர், மனிதன் ஆயுதங்கள் செய்யப் பயன்படுத்திய பொருள்களைக்கொண்டு காலங்களைக் குறிப் பிடுகின்றனர். மனிதன் கற்களால் முரடான ஆயுதங்கள் செய்து பயன்படுத்திய காலம் பழைய கற்காலம் எனப் படும். இக்கல்லாயுதங்கள் காலத்திற்குக் காலம் பல படிகளிற் செய்யப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு படி யான கல்லாயுதங்கள் செய்யப்பட்ட காலமும் பழைய கற்காலத்தின் பகுதிக்காலங்களாகும். முரடான கல்லாயு தங்களைச் செய்து பயன்படுத்திய மக்கள் ஆயுதஞ் செய்வதில் திறமை அடைந்து அழுத்தமான கல்லாயுதங் களைச் செய்யப் பழகினர்கள். இது இற்றைக்கு 15,000 ஆண்டுகளின் முன் இருக்கலாம் என்பர் பழம் பொருள் ஆராய்ச்சியாளர். Հ
* இக்கருத்துக்களின் விரிவை " ஆதி மனிதன்' *மனிதன் எப்படித் தோன்றினுன்' என்னும் எமது நூல்களிற் காண்க,

மனிதனின் ஆரம்பகாலம் 5
GS) 53556)
அடுத்தபடியாக மனிதன் செம்பைக் கண்டு பிடித் தான். செம்பினல் ஆயுதங்கள் செய்யப்பட்டகாலம் செம்புக்காலம் எனப்படும். பின்பு தகரம் கண்டுபிடிக் கப்பட்டது. தகரத்தையும் செம்பையும் கலக்க வெண் கலம் என்னும் உறுதியான உலோகம் உண்டாவதை மனிதன் அறிந்து அதனல் ஆயுதங்களைச் செய்யலானன். வெண்கலத்தினல் ஆயுதங்கள் செய்யப்பட்ட காலம் வெண்கல காலம் எனப்படும். பின்பு கரும்பொன் எனப்பட்ட இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின் கல்லாயுதங்கள் கைவிடப் பட்டன.
வேடன், இடைன், உழவன்.
மனிதனின் முன்னேற்றம், ஆயுதங்கள் செய்யப் பழகிய முறையில் வளர்ச்சி உ ற் ற து போலவே, வாழ்க்கை முறையிலும் உயர்வடைந்தது. ஆரம்ப கால் மனிதன் உணவின் பொருட்டு இடங்கள் தோறும் அலைந்துதிரியும் வேடனக விருந்தான்; பின்பு காட்டில் வாழ்ந்த ஆடு மாடு பன்றி முதலியவைகளைப் பழக்கி வளர்த்து அவை கொடுக்கும் பயன்களை உண்டு வாழும் இடையனக விருந்தான் ; அடுத்த படியில் ஒரிடத்தில் தங்கிப் பயிரிட்டுத் தானியங்களை விளைவித்து அவை யிற்றை உண்டு வாழும் உழவனனன். பின்பு நாடு நகரங்களும் இராச்சியங்களும் ஏற்பட்டன. பயிர்ச் செய்கைக்கேற்ற ஆற்றே ரங்களிலேயே அதிகால இராச் சியங்கள் எல்லாம் அமைந்த வரலாற்றினை வரலாறு களிற் படிக்கின்றுேம்.

Page 11
6 பழந்தமிழர்
மக்கட் குலங்கள்
மக்கள் பழைய கற்காலத்தின் ஆரம்பத்திலேயே உலகின் பல பாகங்களிற் சென்று வாழ ஆரம்பித்தனர். உலகின் பல பாகங்களிற் காணப்பட்ட அக்கால மக்க ளின் மண்டை ஓடுகளும், பிற சின்னங்களும் ஒரே வகை யாகக் காணப்படுகின்றன. இதனுல் கிறம், மண்டை ஒடு, மயிர், கண்களின் நிறம், மொழி ஆதிய வற்ருல் கூறுபடுத்தி அறியக்கூடிய மக்கட்குலங்கள் அக்காலத்திற் முேன்றவில்லை எனத்தெரிகின்றது.2 புதிய கற்கால மக்களின் மண்டை ஒடுகள் வெவ்வேறு வகையாகக் காணப்படுதலின் அக்காலத்தில் கிறம் முதலியவற்ருல் வேறு படுத்தி அறியக்கூடிய மக்கட் கூட்டங்கள் தோன்றி யிருந்தனவென்று தெரிகின்றது.
மக்கட் குலங்கள் எழுதற்குரிய காரணங்கள்.
*இப்பூமியின் பல பாகங்கள் பல்வேறு வெப்ப கிலைகளையுடையன. வெப்ப தட்ப நிலைகளால் மக்க ளுடைய மேனியின் நிறம் மாறுபடுகின்றது. மேனியின் நிறம் போலவே கண், மயிர் ஆதியவற்றின் நிறமும் மாறுதல் அடைகின்றது. உண்ணும் உணவு, புரியும் தொழில்களுக்கேற்ப உடம்பின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி ஆதியன வேறுபடுகின்றன. இம்மாறுபாடுகள் சந்ததி சந்ததியாக வந்து ஒரு கூட்டம் மக்கள் இன்னெரு கூட்டம் மக்களினின்றும் நிறம், உயரம், மண் டை, தோற்றம் முதலியவற்ருல் பிரித்தறியக் கூடியவர்கள் ஆகின்ருரர்கள்.
l. Outline of History-H. G. Wells p. 74.
2. A Brief History of Civilization-J. S. Hoyland p. 26.
3. Descent of man-Darwin - Thinkers Library Edition p. 224.

மனிதனின் ஆரம்பகாலம் 7
மக்கள் தனித்தனிக் கூட்டத்தினராகப் பிரிந்து வாழ்தற்குரிய காரணம்
இப்பூமி காலத் துக் குக் காலம் பலமாற்றங்கள் அடைந்து வருகின்றது. மலை கடலாகவும் கடல் மலை யாகவும் காடு வனுந்தரமாகவும், வனந்தரம் கட்லாகவும் பன்முறை மாறியதுண்டு. இப்பொழுது அத்லாந்திக் கடல் கிடக்கும் இடத்தில் பன்னிரண்டு அத்லாந்திக் கண்டங்கள் தோன்றி மறைந்திருக்கலாம் என்றும் இப் பொழுது கிழக்குத் தீவுகள் எனப்படுவன அக்காலம் இந்து மாக்கடலினூடிே ஆசியாக்கண்டம் போன்று கிடந்து மறைந்து போன பெரிய கண்டம் ஒன்றின் மலை களாகலாம் என்றும் கூறுவர் ஹ க் ஸ் லி எ ன்னும் ஆசிரியர். இவ்வகைக் குழப்பங்களால் ஒரு கூட்டத்தி னரிலிருந்து ஒரு கூட்டத்தினர் தனித்து வாழ நேரும். இவ்வாறு நீண்ட காலம் வாழ்தலால் மொழி கொள்கை, கலை ஆதியன வேறுபட்டு, அவர் தனிச்சாதியினராகப் பரிணமிப்பர். ஒரு கூட்டத்தினர் கிறம் முதலிய வற்றல் மாறுபட்ட இன்னெரு கூட்டத்தினராக மாறுதற்கு 300 தலை முறைகளுக்கு மேலாகு மென்பர் இடார்வின் என்னும் ஆசிரியர்.
மேல்நாட்டு ஆசிரியரின் பழைய சாதிப்பிரிப்புக்கள்
விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடு, நோவாவுக்கு (எபிரேயரின் மனு) சாம், காம், யபெத்து என்னும் மூன்று புதல்வர்கள் இருந்தார்களென்றும் அவர்கள் முறையே ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா என்னும் நாடு களிற் குடியேறி மக்கட் சந்ததியைப்பெருக்கினர்கள்
1. Man's Place in Nature and Other Essays p. 25. -Thomas Huxley. 1.

Page 12
8 பழந்தமிழர்
என்றும் 'கூறுகின்றது. இக்கூற்றினைக் கடைப்பிடித்த மேல்நாட்டாசிரியர்கள், பழைய ஆபிரிக்க மக்களை க் கமத்தியரென்றும், ஆசிய மக்களைச் செமித்திய ரென்றும், ஐரோப்பிய மக்களை ஆரிய ரென்றும் வரலாற்று நூல்களிற் குறிப்பிடுவர். இற்றைஞான்றை மக்கட்குல ஆராய்ச்சி யாளர் கிறம் உடற்கூறு முதலியவைகளை நோக்கி, கறுப்பு மக்களை கிகிரோவர் என்றும், வெண்மக்களை ஆரிய ரென்றும், மஞ்சள்கிற மக்களை மங்கோலிய ரென்றும் பிரிப்பர். ஆரியமக்கள் காக்கேசியர் எனவும்படுவர். காக்கேசியர், வடகாக்கேசியர் தென் காக்கேசியர் என இரண்டாகப் பிரிக்கப்படுவர். மத்தியதரைச் சாதியினர் திராவிடர், பொலிநீசிய சாதியினர் ஆதியோர் தென் காக்கேசிய இனத்தில் அடங்குவர்.%
மக்களின் தொட்டில் அல்லது ஆதி இருப்பிட்ம்
இவ்வாராய்ச்சியில் மேல்நாட்டாசிரியர்கள் மிக முயன்றிருக்கிருரர்கள். விவிலிய வேதத்தின் பழைய ஏற் பாட்டில் மக்கட் படைப்பு எங்கு உற்றதெனக் கூறப்பட வில்லையாயினும் அது சின்ன ஆசியாவை அடுத்த இடங்க ளாகலாமெனச் சிலர் யூகித்துக் கூறுவர். ஆராய்ச்சியாள ரின் முடிவுகளை எல்லாம் ஒருங்குவைத் தாராய்ந்த எச். ஜி. வெல்ஸ் என்னும் பேராசிரியர், கிழக்காபிரிக்கா மத்தியதரைக் கடல் கிழக்குத் தீவுகள் இந்தியா முதலிய * நோர்டிக், அல்பைன், மத்தியதரை மக்கள் என மக்களை மூன்று பெரிய குலங்களாகவும் குல நூலார் பிரிப்பர். கோடிக் சாதியார் வடங்கே உள்ளவர். இப்பிரிப்பும் முற்றுப் பெறுமா
றில்லை.

மனிதனின் ஆரம்பகாலம் 9
வைகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு ஒன்று இந்தியப்பெருங் கடலுள் மூழ்கிப்போயிற்றென்றும், அங்குதான் மக்கட் குலங்கள் தோன்றுதற்கு அடிப்படையான மக்கட் பெருங்குழுவினர் தோன்றி யிருந்தார்களென்றும், அவர் கள் கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறமுள்ளவர்களா யிருந்தார்கள் என்றும் கூறுவர். இந்தியாவின் தொடர் பாகத் தெற்கே விரிந்து கிடந்த பெரு நிலப்பரப்புக் கட லால் விழுங்கப்பட்ட தென்னும் பழைய வரலாறு பண் டைத் தமிழ் இலக்கியங்களாலும், பழைய இலங்கைப் பெளத்தர் நூல்களாலும், புராணங்களாலும் காப்பாற்றப் பட்டு வந்திருக்கின்றது. நிலநூலாரும் இதற்குச் சான்று பகர்கின்றனர்.
நடுக்கோட்டை அடுத்த நடுகளில் வாழும் மக்கள் கறுப்பு அல்லது மங்கிய கறுப்புமுதல் மங்கிய சிவப்பு நிறமுள்ளவர்களாகக் காணப்பிடுகின்றனர். ஆதிமக்கள் கறுப்பு அல்லது மங்கிய கறுப்புகிற முள்ளவர்கள் எனப் படவே அவர்கள் நடுக்கோட்டை அடுத்த யாதோ ஒர் இடத்தில் தோன்றிப் பெருகினர்கள் என்பது தானே பெறப்படும்.
பழ்ம் பொருள் ஆராய்ச்சியாளர் இவ்வுலகம் முழு மையிலும் கிடைத்த மக்களால் பயன்படுத்தப் பட்ட பொருள்களை எல்லாம் ஒருங்கு வைத்து ஒப்புநோக்கி மக் களின் பழமையை ஆராய்ச்சி செய்வர். இவ்வகை ஆராய்ச்சிப் புலமையிற் றலைகின்ருர் பலர், இந்திய நாடே மக்கட் குலத்தின் தொட்டிலாகும் என்னும் முடிவுக்கு வந்துளர். அன்னேர் முடிபுகிள் பல எமது முன்னைய நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டன?.
outline of History-H. G. Wells, pp. 14 and 76. * தமிழகம் ப. 33-35; தமிழர் சரித்திரம் ப. 172-175.

Page 13
10 பழந்தமிழர்
பின் வருவன சிறந்த ஆராய்ச்சி வல்லார் பலரின் கருத்துக்களாகும்:
** தென்னிந்தியாவின் பகுதியாகிய தக்கணத்தில் புதிய கற்கால சின்னங்கள் மாத்திரமல்ல, மிகப்புராதன பழங்கற்கால சின்னங்களும் பல காணப்படுதலே தென் னிந்தியா ஆதிமக்களின் தொட்டில் என்னும் தீர்மா னத்தை உறுத்து தற்கு ஏதுவாகின்றது.'
சென்னை மாகாணம் மக்கட்குலத்தின் தொட்டில்
* 2 சேர்யோன் இவான்சு என் பார், தொறன்ரோ என்னு மிடத்திற் கூடிய பிருத்தானிய மக்கள் பேரவுை யில், தென்னிந்தியா ஆதிமக்களின் தொட்டிலாகு மெனத் தனது தலைமைப் பேருறையில் குறிப்பிட்டுள்ளார். அதில் இப் பூஉலக மக்கள் செய்து (பயன்படுத்திய எல்லாப் பழங்கால ஆயுதங்களின் வடிவங்களெல்லாம் காட்டப் பட்டு ஆராயப்பட்டிருக்கின்றன.”*
* நருமதைப் பள்ளத்தாக்கின் பருக்கைக் கற்களுக் கிடையில் அடி அழிந்துபோன சில விலங்குகளின் எலும்புகளோடு ஒரு பழங்கற்கால ஆயுதங் கண்டெடுக்கப் பட்டது. இதே வகையான இன்னென்று கோதாவரிப் பள்ளத்தாக்கிற் கண்டெடுக்கப்பட்டது. இப் பருக்கைக் கற்கள் திரள ஆரம்பித்து 400,000 ஆண்டுகளாகின்றன வென்று சொல்லப்படுகிறது.??
* Indian Science congress Hand-book-A Short sketch of the ancient history of South India-Rao Sahib S. Krishnaswami Aiyengar, M.A. Ph.D. * Sir John Evans.
James Foote-quoted in Siddhanta Depika Vol. 1,
No. 4.

மனிதனின் ஆரம்பகாலம் 1.
பழைய கற்காலத்தின் நீண்ட பழமையைப்பற்றி Foote) என்னும் ஆசிரியர் அறிக்கை செய்திருப்பது( ساليه வருமாறு : “ பருக்கைக் கற் படைகளின் கீழ் வெள்ளம் வாரடித்துக்கொண்டு சென்று விட்ட சரியான பழைய கற் கால ஆயுதங்கள் (கூர்ச்சரத்தில்) கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு மேல் சரமதி ஆற்றினல் வாசடித்துக்கொண்டு வந்தமணல் ஐம்பதடி உயரம் ஏறுண்டிருக்கிறது. அதன் மேல் கம்பேக்குடா, குற்சிலுள்ள இரான் பக்கங்களால் வரும் மேல்காற்று இருநூறடி உயரத்துக்கு மணலை ஏறிடச் செய்திருக்கின்றது.’
இவையேயன்றித் தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கிவரும் புராண, கன்ன பரம்பரை வரலாறுகளும் ஆதி மக்கள் தமிழ் நாட்டில் வீாழ்ந்து பெருகியவர்கள் என்பனவாகும். இதனை கி. பி. 12-ம் நாற்ருண்டின் முற்பகுதியில் கலிங்கத்துப்பரணி பாடியசயங்கொண்டார் என்னும் புலவர் தமிழ் வேந்தரின் அரச பரம்பரையைக் கூறுமிடத்து,
* ஆதி மாலமல காபிக் கமலத்தனுதித்
தவன் மரீசியெனு மண்ணலை யளித்த பரிசும் காதல் கூர்தரு மரீசி மகனுகி வருமகன்
காசிபன் கதிரருக்கனே யளித்த பரிசும் அவ் வருக்கன் மகனகி மனு மேதினி புரந்
தரிய காதலனை யாவினது கன்று நிகரென் றெஷ்வருக்கமும் வியப்ப முறைசெய்த பரிசும்." எனக் கூறியிருத்தல் கொண்டு அறிக.
இந்திய நாட்டில் பழமைக்குப் பழமையாய் வாழ்ந்து வரும் மக்கள் இந்துமாக்கடலுள் மூழ்சிப்போன கிலப் பரப்பிலும் அதன் தொடர்பாக விளங்கிய இந்தியாவிலும்
T. C. Brown-quoted in Stone age in India,

Page 14
2 பழந்தமிழர்
தொன்மையே வாழ்ந்த மக்களென்பதுவே உண்மை. மொகஞ்சதரோ எழுத்துக்களையும் மொழியையும் ஒத் தவை ஈஸ்டர்த் தீவுகளின் மக்களிடையே காணப்பட்ட மையே இதற்குப் போதிய சான்று. கடல்கோட் காலத்து அம் மக்கள் அத்தீவுகளில் தனித்து விடப்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்நூலிற் கூறப்படும் பொருள்கள் இக் கொள்கையினை மேலும் மேலும் வலியுறுத்துவன
தமிழரின் கிளையினர் வரலாற்ருசிரியர் எல்லாரையும் வியக்கச் செய்த பழைய் நாகரிகமுடைய நாடுகள் சுமேரியா, எகிப்து என்
* இத்தீவுக் கூட்டடங்கள் தென்னமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு அண்மையிலுள்ளவை; ஈஸ்டர் பெருநாளில் கண்டு பிடிக்கப்பட்டமையின் அவை ஈஸ்டர் தீவுகள் எனப்பட்டன.
 

தமிழரின் கிளையினர் 13.
பன, சுமேரியரின் நாகரிகம் முந்திய தென்று சிலரும், எகிப்தியரின் நாகரிகம் முந்திய தென வேறு சிலரும் கூறு வர். ஒரே காலத்தில் (கி. மு. 4000) இவ் விரு சாதியின ரும் நாகரிகத்தின் உச்ச நிலையில் இருந்தமை அறியப்படு கின்றது. இவ்விருசாதியினரும் இந்திய நாட்டினின்றும் சென்று சுமேரியா, எகிப்து என்னும் நாடுகளிற் குடி யேறிய மக்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் நிறையக் கிடைக்கின்றன.
சுமேரியர்
உடற் கூற்ருனும் மொழியாலும் நாகரிகத் தானும் சுமேரியர் பண்டைத் தமிழ் மக்களை ஒத்தவர்கள் என்று மேல் நாட்டு வரலாற் ற ராய்ச்சி வல்லார் நன்கு நிறுவி யிருக்கின்றனர்.
கோவன் என்னும் ஆசிரியர் கூறியிருப்பது வருமாறு: திராவிடர் யூபிராதஸ் தைகிரசு பள்ளத்தாகுகளில் வாழ்ந்த சுமேரியருக்கு நாகரிகமுறையிலாவது ஒத்தவர் களா யிருந்தார்களென்பது இருக்கக்கூடியது. இதற்கு ஆதாரம் சிந்துததிப் பள்ளத்தாக்குகளிலுள்ள அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங்களில் அண்மையில் கிடைத்த புதைபொருள்கள். இவைகளால் மலையாளக் கரைக்கும், பாரசீக வளைகுடாவைச் சுற்றியிருந்த மக்க ளுக்கு மிடையே மும்முரமாக வாணிகம் நடந்ததெனத் தெரிகின்றது. இது கிரேக்கர் காலம்வரையில் நடைபெற். றது. திராவிடர் அக்காலத்தில் நாகரிகத்தின் உச்சநிலையை எய்தியிருந்தனர். அவர்கள் இஞ்ஞான்று தமிழர் எனப் படுவர். இப்பொழுது பஞ்சாப்பில் நடத்திய புதைபொருள்
1. A History of Indian Literature. pp. 30 and 38Herbert H. Gowen D.D.

Page 15
14 பழந்தமிழர்
ஆராய்சியில் கிடைத்தவை, வண்ணம் பூசிய மட்பாண் டங்கள், நாணயங்கள், உலகமுழுமையிலும் கிடைத்த வற்றுள் பழமையுடைய சொக்கட்டான் காய்கள், சொக்கட்டான் ஆடும் பலகைகள், எழுத்துப்பொறித்த முத்திரைகள் முதலியன. இவ்வெழுத்துக்கள் வாசிக்கப் படாவிட்டாலும் அவை சுமேரிய முத்திரைகளை ஒத் 6ơ5 đ:6ìaảrg) Gör. (3 fon) (Sayce) tọ. Lori ở Gör (De-morgan) என்போர் சூசா (சுமெரிய தலைநகர்) என்னுமிடத்தில் கண்டெடுத்த பொருள்களோடு இவைகளை ஒப்பிட்டு, இரண்டும் ஒரே வகையினவாயிருத்தலைக் காண்பித்தனர். இது கிஷ் (Kish) குசா என்னும் இரண்டு இடங்களுக்கும் இத்தியாவுக்குமிடையில் நெருங்சிய தொடர்பிருந்ததென் பதை வலியுறுத்தும். ஒருபோது சூசா சுமருக்கும் இந்தியாவுக்கும் வாணிக மத்திய இடமாயிருந்திருக் கலாம். எல்லா நிகழ்ச்சிகளும் ஒருவரிடமிருந்து ஒருவர் நாகரிகத்துறைக் குரியவற்றை இரவல் வாங்கினர்கள் என்பதைத் தெளிவாக்குகின்றன. இது கி. மு. 3000 வரையில் செல்கின்றது. இரு சாதியார்களுக்கு முள்ள தொடர்பு, அராபியக் குடாநாட்டைச் சுற்றிப் பார சீகக் குடாக்கடல் வழியாகக் கடல்வழியாகவும், அப்கானஸ்துக் கூடாகத் தரைவழியாகவும் இருந்திருத் தல் கூடும். இதுவுமன்றி இந்திய பெயராகிய சிந்து (லினன் ஆடை) மேல்நாட்டாருடைய மொழியில் மிக்க பழங்காலத்திலேயே காணப்படுகின்றது. கி. மு. 400-ல் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட சாசனமொன்றில் இது காணப்படலாயிற்று ’
ஹண்டர் என்னும் ஆசிரியர் கூறுவது வருமாறு :
1. Riddles of Mohenjo Daro-R. G. Hunter New Review-p. 314-1936.

தமிழரின் கிளையினர் 15
* சிந்துவெளி நாகரிகம் கிஷ், ஊர் என் லூம் இடங்க ளோடு சம்பந்தப்பட்டது. இது ஆபிரகாம் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் முந்தியது. இங்கு கிடைத்த ஆயிரத் துக்கு மேற்பட்ட முத்திரைகளில் பாதிக்கு மேற் பட்டவை சர் யான் மார்சல் என்பவரால் வெளியிடப் பட்டுள்ளன. கிரேத்தா சுமேரியா, எகிப்து, மொகஞ்ச தரோ, ஈஸ்டர் தீவுகளின் எழுத்துக்கள் ஒரேவகையாகக் காணப்படுகின்றன. மொகஞ்சதரோ எழுத்துக் கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் ஹைதரபாத்து முதல் சென்னை வரையிலுள்ள வரலாற்றுக் காலத்திற்கு முற் பட்ட கற் சமாதிகளுட் காணப்பட்டன.”
சுமேரியரும் தமிழரும் ஐயமற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என ஹரல் என்னும் ஆசிரியர் துணிந்து கூறியிருக்கின்றர். வாசிக்பப் படாதிருந்த மொகஞ்ச தரோ எழுத்துக்கள் சில %ஹெ9ாஸ் பாதிரியாரால் வாசிக் கப்பட்டன. இவ் வெழுத்துக்களை வாசிப்பதற்கு உதவியா யிருந்தவை சுமேரிய எழுத்துக்களே. ஹெராஸ் பாதிரி யாரால் வாசிக்கப்பட்ட சொற்கள் இன்றும் தமிழ்நாட் டில் வழங்கும் தமிழ்ச் சொற்களாகவே காணப் படுகின்றன. சுமேரிய மொழியும் தமிழ்போன்ற ஒட்டுச் சொற்களுடயது என்று மொழியாராய்சியாளர் கூறியுள் ளார்கள். ம்ொழியாலும் உடற்கூற்ருலும், நாகரிகக்தா லும் தமிழரும் சுமேரியரும் ஒத்தவர்களாகக் காணப் படின் தழிழரே சுமேரியர், சுமேரியரே தமிழர் எனக் கூறுவதில் இழுக்குண்டோ?
சுமேரியர் கிழக்கில் இருந்து சென்று யூபிராதஸ், தைகிரஸ் ஆற்றே ரங்களில் குடியேறியவர்கள் எனப்
1. Ancient History of The Near East-R. H. Hallр. 17І. *Far. Heras.

Page 16
16 பழந்தமிழர்
படுகின்றனர். செமித்தியம் அல்லாத மொழியை வழங் கிய சுமேரியரை ஒத்த மக்கள் இந்தியாவிலன்றி வேறெங்கு மிலர். ஆகவே சுமேரியர் இந்தியாவினின்றும் சென்ற வர்கள் என்பது ஐயம் அறப் புலப்படுகின்றது. இவர் கள் இந்தியாவின் எப்பகுதினின்றும் சென்ருரர்கள் என்பது ஆராயத்தக்கது.
எல்லம்
எல்லம் என்பது தைகிரஸ் யூபி ராதஸ் ஆறுகளின் கீழ்ப்பாகத்தின் கிழக்குக்கரையில் உள்ள பழைய நாட் டின் பெயர்.
எல் என்பது ஞாயிற்றையும் இலங்குதலையும் குறிப்ப தோர் தமிழ்ச் சொல். எல்லே இலக்கம்' என்பது தொல் காப்பியச் சூத்திரம், அராபியா பாபிலோனியா, சின்ன ஆசியா முதலிய இடங்களிலே எல் சம்பந்தமான இடப் பெயர்களை நூற்றுக் கணக்கிற் காணலாம். அந்நாடுகளின் பழைய அரசரும் மக்களும் தம் பெயர்களோடு எல் அல்லது எல்லின் திரிபாகிய பகல் (Baal) வேல் (Bel) முதலியவைகளைச் சேர்த்து வழங்குவது வழக்காருக விருந் தது. இவ்வகைப் பெயர்கள் பலவற்றை விவிலிய நூலிற் காணலாகும்.
எல்லம் என்னும் பெயர் ஞாயிற்று வழிபாடு காரண மாகத் தோன்றிய பெயர். இப் பெயர் புதிதாக இப் பாரசீக நாட்டில் வந்து குடியேறிய மக்களால் தமது
1. கிளிமென்ட் ஸ்கோனர் என்னும் சர்மனியர் சுமேரிய மொழியில் பல திராவிடச் சொற்கள் உள்ளன என்றும், ஆரிய மொழி பரவமுன் மத்திய ஐரோப்பாவின் இடப் பெயர்கள் ஆற்றுப் பெயர்கள் திராவிடப் பெயர்களாகவிருந்தன என்றும் காட்டியுள்ளார்.

தமிழரின் கிளையினர் 17
நாட்டுக்கு இடப்பட்டது. புதிதாக வந்த மக்கள் ஞாயிற்று வழிபாட்டிற்குரிய ஒரு நாட்டிலிருந்து வந்தா ராதல்வேண்டும். ஒரு நாட்டினின்றும் வெளியேறிப் புதிய ஒரு இடத்திற் றங்கி வாழும் மக்கள் தம் தாய் நாட்டின் இடப்பெயர்கள் சிலவற்றைத் தாம் உறையும் புதிய நாட்டிலுள்ள இடங்கள் சிலவற்றுக்கும் இட்டு வழங்குதல் இயல்பு. இத்தன்மை பற்றியே எல்லம் என்னும் பெயர் எழுந்தது எனக் கருத இடமுண்டு.
அப்படியாயின் இம்மக்கள் எங்கு கின்றும் வெளி யேறினர்கள் ? இம் மக்களோடு நெருங்கிய தொடர் புடைய மக்கள் யாவர்? என்பன ஆராயத்தக்கன
கிழக்கிலே இந்தியாவின் தென் கோடியில் இலங்கை1 என்னும் தீவுள்ளது. இது மிகப் புராதன வரலாற்றுப்
1. இலங்கை என்னும் சொல்லின் அடி எல். இலங்கைக்கு ஈழம் என்பது மற்ருெரு பெயர். ஈழம் என்பதன் அடியும் எல்.
Ceylon in Puranic account was called 'Ilam and we find Elam as a great kingdom on the frontier of Babylonia with purely Sumerian civilization...... It is: clear from the traditions recorded in the Ramayana, and the Mahawansa that for the larger part of Ceylon (about ths) had gone under the sea. Is it not then probable that Sathiyavaratha or Manu, king of Dravida, who reached Malaya (in Malabar) after the deluge escaped from one of the submerged portons of Ceylon 2 This theory explains the Indian tradition that Indians came from Ela Vritam. This eacplains the Sumercan tradition that they went froт Elam. This explains the Babylonean and Indian story of deluge-Our place in the civilization of the ancient worldHon. K. Balasingam.

Page 17
8 பழந் தமிழர்
பெரும்ை வாய்ந்தது. இங்கு பெரிய வெள்ளப்பெருக் குக்கு முன், காசிபரின் புதல்வர்களாகிய சூரன், தாரகன் என்னும் அசுரர் ஆட்சி புரிந்தார்களெனக் கந்த புராணங் கூறும். அதன் பின் குபேரன், மாலியவான் முதலிய பலர் இலங்கையை ஆண்டனர். பின்பு இராமாயணத்தில் சொல்லப்படும் இராக்கதர் தலைவன் அத்தீவை ஆண்டான். வான்மீகர் இத்தீவின் வளத்தைப்பற்றி மிகப் புகழ்ந்தி ருக்கின்ருர், மொகஞ்சதரோவில் காணப்பட்டவை போன்ற சில எழுத்துகள் இலங்கையிலே கேகாலையி லுள்ள மலை ஒன்றில் பொறிக்கப்பட்டிருப்பதை ஹெராஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். இத்தீவிலே ஞாயிற்றின் ஒளி காலுகின்ற ஒரு மலை உண்டு அதனைக் காண்பதற்கு உலகின் பல பாகங்களிலிருந்து யாத்திரிகர்கள் வருவது வழக்கம், மார்க்கப்போலோ என்னும் இத்தாலியனும் இம்மலையைத் தரிசித்துச் சென்டுன், இம்மலை தத்தம் சமயக் கடவுளருக்குரியதென ஒவ்வொரு மதத்தினரும் கூறுவர். சீனர் அது தமது வோ என்னும் கடவுளுக்கு உரியதெனக் கூறுவர். முகமதியர் அது ஆதாம் ஏவாள் என்னும் ஆதித்தாய் தந்தையர் உறைந்தவிட மென்பர். சிவமதத்தினர் அது தம் தெய்வத்துக் குரியதென்பர். புத்தமதத்தினர் அது புத்த பகவானின் பாதச் சுவடுடைய புனித மலை என்பர். அராபியர் அதற்கு ஆதம்மலை எனப் பெயரிட்டனர். ஆதிமக்கள் இங்கேதான் தோன்றியிருத் தல் வேண்டுமென்பது அவர்கள் கொள்கை, சாவகதேசத் தில் காண்ப்பட்ட பழைய நூல், ஒன்றில் இலங்கையில் ஆதிமக்கள் தோன்றி சாவகம் முதலிய நாடுகளிற் குடி பேறிப் பெருகினர்கள் எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வரலாற்றுப் பெருமைவாய்ந்த இலங்கைத் தீவு ஈழம் எனவும் வழங்கும். ஈழம் என்னும் பெயர்

தமிழரின் கிளையினர் 19
எல் என்பதன் திரிபு, எல் என்று பொருள் கொடுக்கும் பெயரே இலங்கை என்பதாகும். எல், எல்லமாய்ப் பின் எல்லம் ஈழமாகத்திரிந்தது. ஒரு நாட்டின் பெயரினல் மக்கட் பெயரும், மக்கட்பெயரினல் மொழிப்பெயரும் அறியப்படுதல் மரபு. இலங்கை மக்களின் பழைய மொழி எலு என இன்றும் அறியப்படுகின்றது. எல் நாட்டின் மொழியாதலின் அதற்கு எலு என்னும் பெயர் உண் டாயிற்று என்று எளிதில் அறியலாகும்.
மேற்கில் ஒர் எல்லம் இருப்பது போலவே கிழக் கிலும் ஓர் எல்லம் இருப்பதை அறிகின்ருேம். புராணக் கதைகளாலும் இதிகாசங்களாலும் அது மிகப் புராதன மான தீவு என்றும் அறிகின்றுேம். பாரசீக எல்லத்திற் குடியேறிய மக்கள் சூழல்களில் காணப்பட்ட செமித்திய ஹமித்திய சாதியினரல்லாத ஒரு தனிவகுப்பினராகக் காணப்பட்டன ரென்றும் அம்மக்களின் மண்டையோடு மொழி ஆதியன திராவிடமக்களுடையன போல விருக் கின்றன என்றும் வரலாற்றுக்காரர் புகல்கின்றனர்*. அவ்வாருயின் இவர்கள் கிழக்கிலுள்ள எல்லத்தினின்றும் சென்றவர்களே யாவர். கிழக்கிலுள்ள எல்லத்தில் வாழ்ந்த மக்கள் ஞாயிற்றை வழிபடுவோராயு மிருந்தனர். பழைய இலங்கைச் சிற்பங்களில் காணப்படும் இலங்கை அரசர்
*சுமேரியர் எல்லம் நாட்டுக்கு மேற்கே வாழ்ந்த மக்களாவர். சுமேரியம் என்றும் பெயர் துருண்டுக்குமுன் அப்பேட் என்பவரால் இடப்பட்டபெயர். அக்காட்டின் பழைய பெயர் யாது எனத் தெரியமுடியவில்லை, சுமேரியரும் எல்லம் மக்களும் பிற்காலத்தில் கலந்து ஒன்றுபட்டனர். இருசாதியாரின் நாக ரிகங்களும் ஒரேவகையின. எல்லம் மக்களின் பழைய வரலாறுகள் அதிகம் அறியப்படவில்லை. எல்லம் மொழி, எழுத்துக்கள் மொகஞ்சதரோ எழுத்துக்கள் போன்றவை. −

Page 18
20 பழங் தமிழர்
முகத்தை மழித்துச் சுமேரிய அரசரைப்போலத் தலையில் குடுமி வைத்தவர்களாகக்காட்சி அளிக்கின்றனர்.
பல்லாற்றன் ஆராயுமிடத்துச் சுமேரியர் பழைய இலங்கை மக்களின் ஒரு பிரிவினராகவே காணப்படு கின்றனர்.
சுமேரியரின் போர் முறை முதலியன
சுமேரிய மக்களின் சில பழக்க வழக்கங்களைப் பற்றிக் கிட்டிய கிழக்குத் தேசங்களின் பழைய வரலாறு என்னும் நூல் கூறுவது வருமாறு :
* ஒவியங்களிற் காணுகிறபடி, சுமேரியரின் கழுதை பூட்டப்பட்ட தேர்கள் படையின் முன்னணியிற் சென் றன. வீரர் இறந்தவர்களின் உடலை மிதித்துக்கொண்டு முன்னேறிச் சென்றனர் வீரர் அரையைச் சுற்றித் தோல் உடையை உடுத்திருந்தனர்; உலோகத்தினற் செய்த தலைக்கவசம் பூண்டிருந்தனர். வீரர் முகத்தை மழித்திருந்தார்கள். அவர்களின் கொண்டை மயிர் தலைக்கவசத்துக்கு வெளியே தெரிகின்றது. போரில் வில்லும் அம்பும் பயன்படுத்தப் பட்டமையை அறிய முடியவில்லை. போர் என்பது இரு படைகளும் ஒன்றை ஒன்று முட்டித் தள்ளிப் பொருதுவதாயிருந்தது. அதிகம் Liao Llaolill பக்கத்துக்கு அல்லது முன்னேறும் கட்சிக்கு வெற்றி உரியதாயிருந்தது. உடம்பை நன்முகக் காக்கும் கவசம் அணித்த வீரர் கிரைக்கு அறுவராய் கின்று முன்னணியில் பொருதினர்கள். அவர்கள் நீண்ட சதுரமான கேடகங்களையும் கண்ட கோடரிகளையும் தாங்கி கின்றனர். கேடகங்கள் அவர்கள் காலை மறைக்கக்கூடிய
1. A. H. O. T. N. East pp. 180, 181-R. H. Hall.

தமிழரின் கிளையினர் 21
அளவுக்கு நீண்டிருந்தன. இவை பின்னணியில் நிற்பவர் களைச் சுவர் காப்பதுபோலக் காக்கின்றன. மற்றவர் களிடத்திற் பரிசைகள் இல்லை. ஆனல் அவர்கள் தங்கள் ஈட்டிகளைப் பயன்படுத்தத் தக்கதாக விருந்தது. ஒரு முன்னணிப்படை மற்றப் படையைத்தாக்கிப் பின்னிடச் செய்ய முயன்றது. வென்றவர்கள் தம் கேடகங்களை எறிந்துவிட்டுத் தோற்றவர்களைத் துரத்திச் சென்றர்கள். சுமேரிய குருமார் கோயிற்கிரியைகளை நிர்வாணமாக நின்று புரிந்தார்கள். 2அவர்கள் அட்டணைக்கால் இட்டுக்கொண்டிருந்து உண்டார்கள். வீடுகள் இரண்டு அல்லது மூன்று மாடிகளும் பல அறைகளும் கூடங் களும் தலை வாயில்களும் உடையனவாய் செங்கல்லாற் கட்டப்பட்டிருந்தன. மண் தகளியில் எண்ணெயூற்றித் திரியிட்டு எரிக்கும் வீளக்குகள் பயன்படுத்தப்பட்டன. கித்திரை செய்வதற்கு.அழகிய மரக்கட்டில்கள் இருந்தன. உணவருந்த மண் கட்டுகள் வறியவர்களால் பயன்படுத்தப் பட்டன; செல்வர், செம்பு, வெள்ளி, பொன் தட்டுகளைப் பயன்படுத்தினர். மட்கலன் என்னும் சுமேரிய அரசன் கள்வர் ஒட்டிச் சென்ற பசுக்களை மீட்டுப் பகைவரைப் புறங்கண்டான். அவனுக்குக் கல் நாட்டப்பட்டிருப்பதைக் காட்டும் முத்திரைகள் சுமேரியாவிலும் சிந்து நதிப் பள்ளத் தாக்கிலும் கிடைத்தன. கல்நாட்டும் வழக்கு
1. The representation of Sumerians usually show them with shaven heads. Are the shaven people really all priests 2 The great men were often priests and so would be represented with shaven beards. The priests represented performing religious rites stark-naked according to Sumerian customs which the Semitics did not follow.- T.A.H.O.T.N.E. p. 172—R. H. Hall.
2. Quest and Conquest.-Malcolm Burr.

Page 19
22 பழந் தமிழர்
பழந்தமிழருடையதென்பது கொல்காப்பியத்திற் கண் டது.
எகிப்தியர்
எகிப்தியரின் நாகரிகம் சுமேரியரின் நாகரிகத்தைப் பொல மிகப் பேர்போனது. எகிப்தியர் ‘பண்டு’ (Punt) நாட்டினின்றும் செங்கடல் வழியாக வந்து நீலாற்றங் கரையிற் குடியேறியவர்கள்?. மக்கட் குலங்களை வேறு படுத்தி அறியும் சாத்திரப்புலமை மிக்க ஹக்ஸ்லி என்னும் ஆசிரியர் திராவிடமக்களும் எகிப்தியரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியிருக்கின்ருர் 8,
1. The Makers of Civilization-pp. 109, 164. L. A. Waddell. . c
2. Historians History of the world, Vol. I, p. 71. There was among the Egyptians a, vague ancient tradition
that they originally came from the land of Punt, and that
it had been their home before they invaded and conquered the lower valley of Nile--The ancient history of the Near East-P. 92, R. H. Hall.
3. * Wilfred Scawen Blunt says that Huxley had longly suspected a common origin of Egyptians and the Dravidians of India, perhaps a long belt of brown skinned men from India to Spain in very early days.-' Outline of History P. 79-H. G. Wells.
“ One of the most interesting problems at present iš the relation of the Pre-Semitic population of Babylon to the Dravidians, on one hand, and the old Egyptian on the other. Only one point appears to me to be quite clear if the statues of Tell-loh represent these people.-Man's Place in Nature and other Essays-p. 233-Thomas' Huxley.

தமிழரின் கிளையினர் 23
மோசே காலம் (கி. மு. 1500) தொட்டு மேற்குத் தேசத் கவர்கள் ஒபிர் (Ophir) என்னும் துறைமுகப் பட்டின னத்தைப்பற்றி அறிந்திருந்தார்கள். ஒபிர் என்னும் இடம் பண்டு நாட்டில் உள்ளதெனக் கருதப்பட்து.
இருக்கு வேத இந்தியா எழுதிய அபினஸ் சந்திர தாஸ் தெல் தோ’விலுள்ள சிற்பங்களின் முக இரேகை தமிழர்களது போலவே அமைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்இருக்குவேத இந்தியா-பக். 207.
I. “Punt has always been remarked and it has often been assumed that Ophir was Punt, and it is therefore to be sought on the African Somali coast. Among the products of Ophir however there are certain things mentioned, such as the apes and the peacocks, for instance, which are certainly Indian ; so that it is quite probable that Ophir is really the Konkan on cochin Coast, and that Solomon's, Phoenecian sailors reached India.--A.H.O.T.N.E.-P. 424.
தெர் எல் பஃறியிலுள்ள ஹஸ்தப் இராணியின் சமாதிச் சுவர் களில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பண்டு என்பது இந்தியாவென்று நமக்கு நன்கு புலப்படுகின்றது. எகிப்தியர் மீண்டகாலம் தமது பிறப்பிடமாகிய பண்டு நாட்டோடு வாணிகம் செய்து அங்காட்டு அரசர், பறவை விலங்குகள், மரஞ் செடிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள அரிய மரங்களைக்கொண்டு அவர்களின் நாகரிகம் இந்தியாவினின்றும் சென்றதெனத் துணிதலிற் சிறிதும் ஐயம் Castair passi &D-SGuit Figadl -188l (Theosophist March 1881.)
“The voyage to Ophir, we are told occupied three years thither and homeward, and the cargo consisted of gold, ivory, apes peacock and almug wood (1 Kings IX26 ಟ್ಜnd XII). The following lead to conclusions that Ophir was the Malabar coast of India. In the Hebrew the words for apes is koph (without any Etymology in Semitic

Page 20
24 பழந் தமிழர்
மேல் நாட்டு வரலாற்ருசியர்கள் ஒபிர், பண்டு, என்னும் இடங்கள் ஆபிரிக்கக் கரையிலுள்ள இடங்கள் எனக் கருதினர்கள். வரலாற்று அறிவு விரிவடைந்துள்ள இக்கால வரலாற்று வீரர் ஒபிர், பண்டு என்னும் இடங் கள் இந்தியாவிலே மலையாளக் கரையில் உள்ள இடங்கள் எனக் காரணங் காட்டி நிறுவியிருக்கின்றனர். என் சைகிளோபீடியா பிரித்தானிக்கா ? என்னும் கலைப் பேரகராதியில் பூமி சாத்திரம் என்னும் தலைப்பின் கீழ் கூறப்பட்டிருப்பதன் சுருக்கம் வருமாறு : “ஒபிர் என்னும் இடம் மலையாளக் கரையில் உள்ளது. இங்கிருந்து மேல்நாடுகளுக்குச் சென்ற பொருள்கள் இந்தியாவில் கிடைப்பனவாயிருக்கின்றன. அப்பொருள்களைக் குறிக்க வழங்கும் பெயர்கள் எபிரேய மொழியிற் காணப் படு கின்றன. அப்பெயர்கள் இன்றும் இந்தியாவில் வழங்கு கின்றன. எபிரேய மொழியில் அச்சொற்களுக்குச் சொல் மூலங்கள் கிடையா. ஆகவே ஒயிர் மலையாளக் கரை யிலுள்ள இடமேயாகும்.'
அபினஸ் சந்திர தாஸ் என்பார் இருக்கு வேத இந்தியா என்னும் தமது நூலில் பண்டு என்பது மலையாளக் கரையேயாம் என்று பலவாறு ஆராய்ந்து முடிவு செய் திருக்கின்றர். பண்டிதர் சவரி ராயன் அவர்கள் தமிழர் புராதன கலைஞன் என்னும் நூலிற் கூறியுள்ளது வருமாறு.
tongues; in Sanskrit Kafi, Ivory in Hebrew is shenhabbim; in Sanskrit ibba is an elephant. Peacocks in Hebrew tokki from togei the word still used in Malabar Coasti—Geography-—Encyclopaedia, Britannica.ʼ 9th edition.
ஒயிர் என்பது இந்தியாவிலுள்ள ஓர் இடமென மாக்ஸ் epo Golb (5p3tigl (6airoit Ti-Science of language,

தமிழரின் கிளையினர் 25.
' இராணியால் ஆளப்பட்ட பண்டு என்னும் நாட் டோடு தொடக்கத்தில் வாணிகத் தொடர்பு வைத்தவள் கத்தாசு என்னும் எகிப்திய அரசி. இப்பண்டு நாடாகிய புனித பூமியினின்றும் அவள் அமன் (Amon) anja02r ĉiš கத்தைப்பெற்ருள் என்று சொல்லப்படுகின்றது. இந் நாட்டைப்பற்றி விவரிக்கு மிடத்துத் தெங்கின் ஒலைகள் குடிசைகளை மறைத்துத் தொங்கும் எனக் கூறப்பட் டுள்ளது. பண்டு, தெற்கு அராபியா எனக் குறிப்பிடப் படுகின்றது. கத்தாசுவின் சாசன எழுத்துகளிற் காணப் பட்ட பண்டங்களிற் பல அராபியாவிற் கிடைக்காதவை. தென்னஞ்சோலை செறிந்த நாடென்றது தீர்மானமாகத் தென்னிந்தியாவையே. அக்காலத்தில் எகிப்து, பாபி லோனியா, அராபியா, சின்ன ஆசியா முதலிய நாடுகளோடு இந்தியா மூச்சான வான்கம் நடத்திக்கொண்டிருந்தது. ஆதலின் பண்டு என்பது ஆபிரிக்காவின் ஒரு இடமா யிருத்தல் முடியாது. அது தென்னிந்தியா என்பது உறுதி. மெளரிய சந்திரகுப்தன் காலத்தில் பாடலிபுரத்தி லிருந்த மெகஸ்தினஸ் என்னும் கிரேக்கர் இந்தியாவைப் பற்றிக் கூறுமிடத்து, 'அடுத்தது பெண்களால் மாத்திரம் ஆளப்படும் பாண்டிய சாதி. ஹெர்குலிசு என்பவருக்கு ஒாே பெண் மகவு இருந்தமையாலும் அதனிடம் அவர் அளவிறந்த அன்பு வைத்தமையாலும் அவர் அதற்கு ஒரு நல்ல இராச்சியத்தைக் கொடுத்தார்.”
மலையாள அரசுரிமை இன்றைக்கும் பெண்வழி யையே சாருகின்றது. அரசிக்குப் பதில் அவள் உடன் பிறந்தான் ஆட்சி நடத்துகிருரன். அரசி ஆவாள் அரச னின் உடன்பிறந்தாளே. மருமக்கள் தாயம் என்னும் வுழக்கும் அங்குதானுண்டு. மருமக்கட்டாய முடை
1. Tamilian Antiquary No. I., p. 35,

Page 21
26 பழந் தமிழர்
யோர் தங்கள் அம்மான் பெயரைத் தந்தை பெயருக்குப் பதில் இட்டு வழங்குவர். மலையாளம் பெண்கள் அதி காரத்துக் குட்பட்டிருந்தமையால் அதற்கு நாரி சேரம் என்பதும் மற்ருெரு பெயர். குமரிநாடு எனத் தமிழ் நாட்டுக்குப் பெயர் வந்ததும் இக் காரணம் பற்றிப் போலும்.
எகிப்திலும் பெண்களுக்கே ஆடவரிலும் மிக்க அதிகாரம் இருந்தது. கணவன் ஆடவன்’ என்றும் மனைவி இல்லாள் ? என்றும் வழங்கப்படுவர். ஆடவர் தம் வழிமுறையைத் தாய் வழியிலிருந்து குறிப் பிடுவர்." 1
2 எகிப்தியர் மலையாளக் கரையிலிருந்து சென் றனர் என்று கூறப்படுவதற்கு இது நல்ல சான்றதல்
53 5s.
கி. மு. 4000 வரையில் எகிப்தியர் மிகத் திருந்திய சாதியின ராகக் காணப்படுகின்றனர். அதற்கு முன் தமது தெய்வங்களுடன் நீலாற்றங்கரையிற் (Nile) சென்று குடியேறத் தகுந்த மக்கள் அராபியக் கர்ை யிலோ ஆபிரிக்காக் கறையிலோ இருந்தார்கள் என்று கூறுதற்கில்லை. ズ
l. In the ancient Sumreian laws quoted above it will be noticed that the man is more important than woman, the father than the mother, the husband than the wife. This is a striking contrast to Egypt, where the “lady of the house was usually more an important personage than the mere male as the husband was called and where men often preferably traced their descent in the female line-T. A. H. O. T. N. East-p. 205-Hall.
2. Rigvedie Indiap. 250 Abinas Chandra Das.

தமிழரின் கிளையினர் 27
எகிப்துக்கும் பண்டுநாட்டுக்கு மிடையில் நோவா காலம் வரையில் (கி. மு. 2400) இருந்து கப்பற் பயணங் கள் நடைபெற்ற வரலாறுகள் எகிப்திய ஓவிய எழுத்துக் களில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. “ போக்குவரத்தின் அதிசயம்’ என்றும் நூலில் இதைப் பற்றிய வரலாறு மொழிபெயர்த்துக் காட்டப்பட்டிருக்கின்றது. அது வருமாறு: நோவா பேழைகட்டும் காலத்தில் உலகில் முதற்கப்பற் பயணம் நடந்த வரலாறு காணப்படுகின்றது. இது எகிப்திலிருந்து பண்டு நாட்டுக்குச் செய்யப்பட்ட தாகும். இதைப்பற்றிய விபரம் கென்றி புறுக்சு என்ப வரால் ஒவிய எழுத்துக்களிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இப்பிரயாணம் எகிப்திய பரோவா வுக்கு மணப் பொருள்கள் கொண்டு வருதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. இன்ைெரு முறை கி. மு. 1600 வரையில் பண்டு நாட்டுக்கு எகிப்தினின்றும் கப் பல்கள் சென்றன. அப்பொழுது இசிரவேலர் (Isralites) எகிப்தில் மறியற் படுத்தப்பட்டிருந்தார்கள். அப்பிரயா ணத்தைப் பற்றிய முழு விபரமுங் கிடைத்திருக்கின்றது. அது வருமாறு : கப்பலில் பண்டு தேசத்திலுள்ள வியப்பு விளைக்கும் பொருள்கள் எல்லாம் ஏற்றப்பட்டன. தெய்வத்தன்மை பொருந்திய அந்நாட்டிலிருந்து எற்றப் பட்ட வாசனைப் பிசின்கள், புதிய வாசனை யுடைய மரங் கள், அமு (Amu) என்னுப் நாட்டார் தந்ததில் பொன்னழுத்திச் செய்த (தந்தப்) பொருள்கள், * கேசித்து மரம், அகிற் கட்டைகள் பரிசுத்த சாம்பிராணி கண்ணுக்குத் தீட்டும் மை, நாய்த்தலைக் குரங்கு, நீண்ட வாற் குரங்கு, வேட்டை நாய்கள், புலித்தோல், அந்நாட்டு மக்களும் குழந்தைகளும் 1 என்பன.
1. Wonders of Trasport pp. 61-62.

Page 22
28 பழந் தமிழா
LJUTA GOT 35 AuЈТ (Indian Antiquary) GT sir Spith நூல் கூறுவது : 'தென் இந்தியாவோடு எகிப்து மிகப் பழங்காலங் தொட்டு வாணிகம் நடத்தி வந்ததென்பது மேன்மேலும் வலியுறுகின்றது. தென்னிந்திய காட்டுச் சாதியினர் முன்னுளில் ஒலிபனம் (Olibanam) என்று அறியப்பட்ட வாசனைப் பிசினை முதன்மையாகச் சேகரிக் கிருர்கள்.’ 2
கெ ரதோதசு (Herodotus) என்பார் கி. மு. 480 வரையிலிருந்த கிரேக்க ஆசிரியர். இவர் அக்காலங்களில் எகிப்து பாபிலோனியா முதலிய நாடுகளுக்குப் பயணஞ் செய்து தான் நேரிற்கண்டவற்றையும் கேட்டவற்றையும் திரட்டி வரலாறு எழுதியிருக்கின்றர். இவர் வர லாற்றுப் பிதா எனப்பிடுவர். இவர் கூறியவற்றில் கற் பனைகள் பல உண்டு என வரலாற்றுக்காரர் கூறுகின் றனர். அவர் கூறியண்வகளில் ஒரளவு கழிவு வைத்து உண்மைகளை ஊகித்தறிதல் கூடும். ஆகவே அவர் எகிப் தியரைப் பற்றிக் கூறியிருப்பதன் சுருக்கத்தை ஈண்டு தரு கின்ருேம்,
* மற்ற நாடுகளில் காணப்படாத புதுமைகள் இங்கு உண்டு. ஆடவர் இருந்து கொண்டும் பெண்கள் கின்று கொண்டும் சிறுநீர் கழிப்பர். பெண்கள் வெளியே சென்று வாணிகம் புரிய ஆடவர் வீட்டிலிருந்து நெசவு செய்வர். ஆடவர் சுமையைத் தலையில் வைத்தும் பெண்கள் தோளில் வைத்தும் செல்கின்றனர். ஒரு பெண்ணுவது தெய்வத்துக்குப் பணிவிடை செய்தல் கூடாது. புதல் வன், தான் விரும்பினல் பெற்ருேரரை ஆதரிக்கலாம்.
அவன் அவர்களை ஆதரிக்கக் கடமைப் பட்டவனல்லன் ;
2. Indian antiquary VII p. 278 quoted in Prehistóric India.

தமிழரின் கிளையினர் 29
புதல்வி, தான் விரும்பினுல் என்ன விரும்பாவிடில் என்ன அவர்களை ஆதரிக்கக் கடமைப்பட்டவள். மற்ற நாடு களில் குருமார் தலைமயிரை நீள வளரவிடுவர். எகிப்திய குருமார் மயிரை களைந்து விடுவர். கிட்டிய உறவினர் மரணமடைந்தால் ஆடவர் தலையைச் சிரைத்துக் கொள்வர்; முகத்தில் மயிரை வளர விடுவர். ஒவ்வொரு மனிதனும் இரண்டு உடைகளை அணிகிறன். பெண் ஒரு உடையை மாத்திரம் அணிகிருள். கிரேக்கர் இடப்பக்க மிருந்து வலப்பக்கம் எழுதுவர். எகிப்தியர் வலமிருந்து இடம் எழுதுவர். அவர்கள் இரண்டு வகையான எழுத்துகளை வழங்குவர். ஒன்று பொதுவானது; மற்றது பரிசுத்த மானது. எல்லாச் சாதியாரையும் விட இவர்கள் கடவுள் வணக்கத்தில் கருத்துள்ளவர்கள். இவர்கள் தாம் நீர் பருகும் கிண்ணங்களைத் தினம், சுத்தஞ் செய்கிறர்கள். இதைச் சிலர் செய்தும் சிலர் செய்யாமலும் விடமாட்டார் கள். எல்லோருஞ் சுத்தஞ் செய்வர். அவர்கள் தோய்த் துலர்ந்த சணலாடையை உடுப்பர். இதில் அவர்கள் முக்கிய கவனஞ் செலுத்துகின்றனர். தாம் சுத்தமாக இருக்கும் பொருட்டு அவர்கள் விருத்த சேதனஞ்செய்து கொள்ளுகிருர்கள். பேன் முதலிய அழுக்குகள் இராத படி ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு மூன்றும் நாளும் உடம்பு முழுவதையும் மழித்துக் கொள்வர். இவர்கள் சணல் ஆடையை உடுக்கின்றனர் : பைபிலஸ் (Byblus) மிரிதடியைத் தரிக்கின்றனர். இவர்கள் வேறு வகை யான ஆடையும் மிரிதடியும் தரிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், இவர்கள் பகலில் இரு முறையும் இரவில் இருமுறையும் நீராடுகின்றனர். சுருங்கக்கூறில் இவர்கள் பல் கிரியைகளைச் செய்கிறர்கள். இவர்கள் தம் சொந்தப்" பொருளைச் செலவு செய்வதில்லை. இவர்களுக்காகப்

Page 23
புனித உணவு சமைக்கப் படுகின்றது; இவர்கள் மீனே உண்பதில்லை. வாத்து, மாட்டுமாமிசங்களும் திராட்சை இரசமும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. குரு மார் பலர் கடவுளுக்குத் தொண்டு புரிகின்றனர். ஒருவர் தலைமைக் குருவாக இருப்பார். ஒரு குரு மரணமானல் அவர் புதல்வன் அவரது இடத்தை ஏற்பான். எபாபஸ் என்னும் தெய்வத்துக்கு பரிசுத்தமான வெள்ளை எருது பலியிடப்படுகிறது. விரதமிருந்த பின்பே அவர்கள் பலியிடுகிறர்கள். பலியிட்ட விலங்கின் கால்களை வெட்டி விடுகிறர்கள். பின்பு குடலை வெளியே எடுத்து விட்டு வயிற்றினுள் அப்பம் தேன் பழவற்றல் அத்திப்பழம், வாசனைத்திரவியம் முதலியவற்றை நிரப்பித் தீயில் எண்ணெயூற்றி எரிப்பார்கள் ; வெந்த இறைச்சியை எல்லோரும் உண்பார்கள். ப்சுக்கன்றுகளை அவர்கள் பலியிடமாட்டார்கள்.
பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன் அம்மாசிசு (Amasis) 37 6ör SD) við மன்னனின் ஆட்சியில் முன் எட்டா யிருந்த தெய்வங்கள் பன்னிரண்டாக்கப்பட்டன. அப் பொழுது அதிகரிக்கப்பட்ட தெய்வங்களுள் 2கெக்குலிஸ் ஒருவராவர். இதைப்பற்றி அறிவதற்கு யர்ன் பினிசி யாவுக்குச் சென்றேன். கெக்குலிஸ் ஆலயத்தில் இரண்டு தூண்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பொன்ன
1. மொகஞ்சதரோவில் ஆரம்பத்தில் எட்டு மாதங்கள் இருங் தன என்றும் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு தெய்வம் உரிய தாக்கப்பட்டிருந்ததென்றும் அறிகிருேம். அப்படியே எகிப்திலும் ஒரு காலத்தில் எட்டுத் தெய்வங்கள் இருந்தன எனப்படுதலின் அக்காலத்தில் எட்டு மாதங்களே இருந்தனவாகலாம். இது மொகஞ்சதரோ ஆராய்ச்சியில் ஹெராஸ் பாதிரியார் கூறியதோடு ஒத்து நிற்கின்றது.
2. Hercules.

தமிழரின் கிளையினர் 31
லும் மற்றது மரகதத்தினலும் செய்யப்பட்டிருந்தன. 1தையர்ப்பட்டினங் கட்டப்பட்டபோது அவ்வாலயங் கட்டப்பட்டதென்றும், தையர்பட்டினம் இரண்டாயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதென்றும் அங்குள்ளோர் கூறினர்கள். எகிப்தியர் பன்றியை மிக அழுக்குடைய விலங்காகக் கருதுகிருரர்கள். அது ஒருவ இனுடைய உடையில் முட்டிலுைம் அவன் ஆற்றில்விழுந்து முழுகுகிருரன். பன்றிவளர்ப்போர் ஆலயத்துள்நுழைய விடப்படுவதில்லை.
கிரேக்கரைப் போலவே எகிப்தியர் இலிங்க விழாக் கொண்டாடுகின்றனர்; ஆனல் இலிங்கத்துக்குப் பதில் ஒரு முழ உயரமான உருவங்களைச் செய்து வைத்திருக் தனர். உருவத்தைப் பெண்கள் கிராமங்களுக்குத் தூக்கிச் செல்கிறர்கள்; அவர்களுக்குப் பின்னல் குழல்கள் ஊதப் படுகின்றன. இத் தெய்வத்துக்கு பக்கஸ் (Baccus) என்று பெயர். மெலாம்பஸ் என்பவர் பக்கஸ் அல்லது இலிங்க வழிபாட்டை கிரேக்கநாட்டில் ஆரம்பித்துவைத்தார்.
Qasogli, gudi (Hesod and Homer) at air Guti எனது காலத்துக்கு 400 ஆண்டுகள் முன் இருந்தார்கள்.
ஆண்டில் ஒரு ருறிக்கப்பட்ட் நாளில் அவர்கள் வீட் டைச் சுற்றி வெளியே பல விளக்குகளைக் கொளுத்து
கிருர்கள். தட்டையான சிறு சட்டிகளில் உப்பைக்
l. Tyre.
2. At Sais in Egypt there was an annual religious festival called the burning of lamps and lamps were frequently employed as symbols upon coins by the Greeks, whib also kept them burning in the tombs-Symbolical language of ancient art and mythology. P. 26 A. P. Knight

Page 24
32 பழந் தமிழர்
கொட்டி எண்ணெய் ஊற்றித் திரிகள் கொளுத்தப் பட்டனவே அவ் விளக்குகளாகும். விளக்குகள் இரவு முழுதும் எரியும். அத்திருவிழா தீபங்கொளுத்தும் திருவிழா எனப்படும். இவ்விழா எகிப்து முழுமையிலும் கொண்டாடப் படுகின்றது. கோவிலுக்கு நேர்த்தி செய்பவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆலயத்துக்கு கொண்டு சென்று அவர்களின் தலைமயிரைக் களைகிறர்கள்; மயிரைத் தராசிலிட்டு நிறுத்து அதற்குச் சமமான வெள்ளிக் சாசைக் கோவில் விலங்குகளைப் பராமரிப்பவர்களிடம் கொடுக்கிருர்கள். பூனை இறந்துவிட்டால் அவர்கள் துக்கங்கொண்டாடுகிருரர்கள். ஆர்மேனியர் முதலையைப் பல்லி என்று கருதி அதற்குக் கொரக்கடைல், எனப் பெயரிட்டனர். በ
போனிச்சு (Phoenix) எனப் பரிசுத்தமான பறவை ஒன்று உண்டு. இதனை நான் படத்தில் பார்த்திருக் கிறேன். அது ஐஞ்நூறு ஆண்டுகளுக் கொருமுறை தான் அங்கு வருகின்றதென்று % கெலியோபொலி' என்னுமிடத்திலுள்ளவர்கள் கூறினர்கள். அதன் தந்தை யின் மரண காலத்தில் அது அங்கு வருகின்றதெனச்
Thus it is remarkable fact that certain cultural elements which saw the inception of proto-Egyptian civilization and passed away with the mighty civilization of the Nile still survive in the Deccan. Elliot smith thus has been drawing attention to these remarkable identities of customs and beliefs found in Dravidian India and East Africa showing the fundamental unity and community of origin of the Earliest cultures of South Asiatic and North. East African littorals.-Prehestoric India, p. 34. Panchanan. Mitra M. A.
* Eeliopolis.

தமிழரின் கிளையினர் 38
சொன்னர்கள். அதன் இறகுகளின், ஒரு பகுதி பொன் னிறமும் ஒரு பகுதி சிவப்பு வண்ணமும் உடையன. அதன் வடிவம் கழுகுபோன்றது. அது அராபியாவி லிருந்து தன் தந்தையின் உடலைச் சூரியன் கோயிலுக்குக் கொண்டுவருகின்றதென்று சொல்லப்படுகின்றது. அது வெள்ளைப் போளத்துக்குள் அவ்வுடலை வைத்து வாயில் கெள விக்கொண்டு வருகின்றது.
தீப்சு நகரின் அயலிலே புனிதமான பாம்புகள் இருக்கின்றன. அவை மனிதரைத் தீண்டுவதில்லை. அவை குறுகியனவாய் தலையில் இரண்டு கொம்புகள் உடை யனவாயிருக்கும். இப்பாம்புகள் யூபிதர் தெய்வத் துக்குப் பரிசுத்தமானவை. செட்டைமுளைத்த பாம்பு களைப் பற்றிக் கேள்விப்பட்டு, நான் அவைகளைப் பார்க்க அராபியாவுக்குச் சென்றேன். அங்கு பாம்புகளும் அவைகளின் என்புகளும் கானப்பட்டன. இலை துளிர் காலத்தில் செட்டைமுளைத்த பாம்புகள் அராபியாவி லிருந்து எகிப்துக்குப் பறந்து செல்கின்றன. ஒருவகைப் பறவை அவைகளை இடைவழியில் எதிர்ப்டட்டுக் கொன்று விடுகிறது. இதற்காக இபீஸ் என்னும் பறவை எகிப்தியரால் அதிகம் மரியாநை செய்யப்படுகிறது. இப்பறவை இருண்ட கறுப்பு- நிறமும், நாரையினதுபோன்ற காலும் வளைந்த அலகுமுடையது. பாம்பின் சிறகுகள் இறகுகள் இல் லாத செட்டைகள் போன்றன.
எகிப்தியர் மாதத்தில் மூன்று நாட்கள் அடுத்துப் பேதி மருந்து உட்கொள்கிறர்கள். உண்ணும் உணவினல் நோய் உண்டாகின்றதென அவர்கள் நினைக்கிறர்கள். விருந்து களின் முடிவில் இரண்டுமுழ நீளமுள்ள சவப்பெட்டியை
g 1. மொகஞ்ச தரோ முத்திரைகளில் கொம்பு முளைத்த
பாம்புகள் காணப்படுகின்றன.

Page 25
34 பழந் தமிழர்
அல்லது ஒரு சிறிய சவத்தின் உருவத்தை ஒருவன் எதிரே கொண்டுவந்து எல்லோருக்கும் காட்டுகிறன். அவன் "இதைப் பார்த்துவிட்டு உண்டு குடித்துக்கொண்டாடுங் கள்; இறந்த பின்பு நீங்கள் இதைப்போல இருப்பீர்கள்? என்று கூறுகிரு?ன். இது பெரும்பாலும் குடிக்கும் களி பாட்டங்களிற் செய்யப்படுகின்றது. அவர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கொண்டாடுகிருரர்கள் ; புதியவற் றைக் கொள்வதில்லை.
வாலிபர் வயதின் மூத்தவர்களுக்கு விலகி வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள். அவர்கள் கிட்ட வரும்போது இருக்கும் ஆசனத்தைவிட்டு எழுந்து நிற்பார்கள்; ஒரு வரை ஒருவர் வழியில் சந்திக்க நேர்ந்தால் கைகளை முழங் கால் வரையிலும் தொங்கவிட்டு மரியாதை செய்கிருரர்கள். ஒவ்வொரு மாதமும் நாஞ்ம் ஒவ்வொரு தெய்வத் திற்குப் புனிதமானவை. ஒருவன் பிறந்த நாளின் படி அவனுடைய வாழ்நாளில் என்ன நிகழுமென அவர்கள் அறிகிருர்கள். அவன் எப்போது இறப்பானென்பதும் எவ்வகையாயிருப்பானென்பதும் கூறப்படுகின்றன.
எகிப்தை ஆண்ட முதல் அரசன் மெம்பிசு. இவ் லுக்குப் பின் 330 அரசர் ஆண்டனர். இவர்களின் பெய ரையும் குருமாரின் பெயரையும் குருமார் புத்தகத்தில் எழுதிவைத்திருக்கிருரர்கள். சூரிய கிழலிலிருந்து நாழி கையை அளத்தல், பகலைப் பன்னிரண்டாகப் பிரித்தல் முதலியவற்றைக் கிரேக்கர் பாபிலோனியரிடமிருந்து கற்ருர்கள். ஒரு அரசன் தனது வெற்றிப் புகழ்களை ஊர்கள் தோறும் கற்றாண்கள் நிறுத்தி எழுதிவைத்தான். இன்னெரு அரசன் ஞாயிற்றுக் கோயிலில் 100 அடி உயரமுள்ள தனிக்கல்லாலான இரண்டு தூண்களை நிறுத்தி வைத்தான்.

தமிழரின் கிளையினர் 85.
எகிப்திய முதல் அரசன் முதல் ஒவ்வொரு அரசனது உருவமும், ஒவ்வொரு அரசன் காலத்திற் குருவின் உருவமும் மரத்தினற்செய்யப்பட்டிருக்கின்றன. இவை அகலமான ஒரு கட்டடத்தில் இருத்தலைக் குருமார் எனக்குக் காட்டினர்கள். 300 தலை முறைகளும் பக்தாயி ாம் ஆண்டுகளுக்குச் சரி.
இக்காலத்தில் ஒரே தொகையான அரசரும் தலை மைக் குருமாரும் இருந்தனர். இவ்வரசர்களுள் மூன்று சந்ததியினர் நூறு நூறு ஆண்டுகளும் 41 சங்கதியினர் ஒவ்வொருவரும் 340 ஆண்டுகளும் வாழ்ந்தனர். இக் காலத்தில் நான்குமுறை ஞாயிறு வழக்கமான திசையி லெழாது மாருக உதித்தது; ஒருமுறை படுகின்ற திசையி னின்று உதித்தது ; ஒரு முறை அது உதயமாகும் திசை யில் பட்டது.
எகிப்திய் குருமார் புலித்தோலைப் போர்த்துக் கொண்டு கிரியை செய்வனவும், நடனமாதர் கிர்வாண மாக நின்று நடனம் புரிவனவுமாகிய ஓவியங்களும் காணப்படுகின்றன. இப்பொழுது கருடபுராணம் என வழங்கும் நூலிற் கூறப்படுவன போன்றனவே அக்கால எகிப்திய மக்களின் இறந்தவர்களைப் பற்றிய கொள்கை களுமாகும்.
l, The ideas contained in the Hindu Garuda Purana, seem to be at least 7000 years old, Egyptians history begins in 4977 B. C. and even at that early date they have a book of the dead. It must be noted that the Egyptian Kings have the vulture emblem, and bear accordingly to the hieroglyphic inscriptions, the title of lord of the vultures having a book of the dead which treats of the descriptions -of the voyage after death into the other world. The vulture isọur Garuda and the book of the dead is our Garuda Rurana-South Indian Research Sept. 1918.

Page 26
36 பழந் தமிழர்
பாபிலோனியர்
aná5673. gy9g T5ár (Tigris and Eupharates) ஆற்று ஒரங்களின் வடக்கே இருந்தவர்கள் அக்கேடியர் எனப்பட்டனர். அவர் செமித்தியர். சுமேரியர், அவர்களை வென்று அடிப்படுத்தித் தமது நாகரிகத்தையும் கலைகளை யும் அவர்களிடையே பரப்பினர். சுமேரியாவும் அக்கேடி யாவும் சேர்ந்த நாடு பாபிலோனியா எனப்பட்டது. பாபிலோனின் முதல் அரசன் கமுரபி (கி. மு. 20031961), பாபிலோனியரின் நாகரிகம் சுமேரியரின் காக ரிகமே. பாபிலோன் முதல் பாரசீகம் இந்தியாவரையில் தொடர்பாகத் தமிழ் மக்களே வாழ்ந்தார்களென்பது வரலாற்று ராசிரியர்கள் கூற்று. ஹால் (Hall) ஆசிரியர் கூறுவது வருமாறு : 'பலுச்சிஸ்தானத்தில் பிராகூயர் என்னும் திராவிட சாதியினர் காணப்படுகின்றனர்; தெற்குப் பாரசீகத்திலும் இவ்வகை மக்கள் வாழ்கின்ற னர். ஆகவே பாரசீகத்தில் முன் உறைந்த ஆரியரல்லாத மக்கள் இந்திய மக்களையும் பாபிலோனியரையும் இணைத் துக்கொண்டிருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை? ?? இவர் களைப் பற்றிக் கெரதோதசு (Herodotus) ஆசிரியர் கூறி யிருப்பது வருமாறு :
ஆசியாவில் பல பெரிய பட்டினங்கள் உண்டு. நிநேவாவின் அழிவுக்குப்பின் கட்டப்பட்டது பாபிலோன் என்னும் தலைநகரம். . இது மிகவும் புகழ் பெற்றது. பட்டினம் விசாலமான வெளியிற் கட்டப்பட்டிருக்
2, A. H. O. T. N. E. R.-H. Hall.
As matter stands they (Mesapotamians) are just as likely to have been a group of the same as the Egyptians or Dravidians as anything else.--M., P.I.N. A. O. Essays: --Huxley.

தமிழரின் கிளையினர் 37
கின்றது. பட்டினம் நாற்சதுரமானது. ஒவ்வொரு பக் கமும் நூற்றிருபது இஸ்ரீடியா நீளமுள்ளது. நான் கண்ட எந்தப் ப்ட்டினத்திலும் பார்க்க இது அலங்கரிக் கப் பட்டிருக்கின்றது. பட்டினத்தைச் சுற்றி அகலமும் ஆழமும் நீர் நிறைவுமுள்ள ஓர் அகழி செல்கின்றது. அதனை அடுத்து ஐம்பது அரசினர் முழம் அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருக்கிறது. பொதுவான முழத்திலும் அரசினர் முழம் மூன்று அங்குலம் அதிகம். அதன் உயரம் இருநூறு முழம், அகழியிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைக்கொண்டு அரியப்பட்ட கற்களைச் சூளையிலிட்டு அவைகளினல் மதிற்சவர்கள் கட்டப்பட்டன.
பதிக்கப்படும் செங்கற்களினிடையே நாணற் புற் களைத் தொங்க விட்டு அதழியின் கரைகள் கட்டப்பட் டிருக்கின்றன. மதிலின் உச்சியில், ஒன்றை ஒன்று பார்க் கும்படியாக ஒரு மாடியுள்ள வீடுகள் அமைக்கப்பட்டுள் ளன. வீடுகளுக்கு நடுவில் வெளியிருக்கிறது. இவ்வெளி ஒரு தேர் திரும்பக்கூடிய அகலமுடையது. மதிலைச் சுற்றி நூறு வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயி
லுக்கும் வெண்கலக் கதவிடப்பட்டிருக்கிறது. t அரண்மனை அகலமான மதிலினல் குழப்பட்டிருக் கின்றது. மதிற்கதவு வெண்கலத்தாலானது. யூபிதர் பெலஸ் என்னும் தெய்வத்தின் கோவில் இரண்டு இஸ்ரீடியா சதுரமுடையது. இதன் மத்தியில் ஒரு இஸ்ரீடியா சதுர முள்ள ஒரு கோபுரம் (Babel) கட்டப்பட்டிருக்கிறது. இக்கோபுரத்தின் மீது இன்னென்று கட்டப்பட்டிருக் கிறது. இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்முக எட்டுக் கோபு ரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவைகளுக்குச் செல் அம் பாதை எல்லாக் கோபுரங்களையுஞ் சுற்றிச் சங்குப் புரிபோல் கட்டப்பட்டிருக்கின்றது. இருந்து களைப்பாறிச்

Page 27
38 பழந் தமிசர்
செல்வதற்குரிய இடம் பாதி வழியில் இருக்கின்றது. அங்கு, இருப்பதற்கு பீடங்கள் இடப்பட்டிருக்கின்றன. மேலேயுள்ள கடைசிக் கோபுரத்தில் அகன்ற ஆலய மொன்று காணப்படுகின்றது. அவ்வாலயத்தில் அழகிய கட்டிலொன்றும் பொன் மேசையும் வைக்கப்பட்டிருக் கின்றன. அதனுள் உருவங்கள் இல்லை. அங்கு இராக் காலத்தில் ஒரு பிராணியும் த்ங்குதல்கூடாது; தெய் வத்தால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் மாத்திமம் தங்குதல்கூடும். இவ்வாறு அங்கிருந்த சாலதிய குருமார் கூறினர்கள்.
அவர்கள் கால் வரையும் நீண்ட அங்கிகளை அணி கிமுர்கள். அதன் மேல் கம்பளி அங்கியும் அதன்மேல் வெண்ணிற அங்கியும் அணிகிற்ர்கள்; அந்நாட்டுக்கேற்ற ஒருவகை மிதியடியும் கரிக்கிருரர்கள். அவர்கள் தலை மயிரை வளர விடுகின்றனர்: தலைப்பாகை வைத்துக்கொள் கின்றனர்; மேல்முழுவதும் வாசம் பூசுகின்றனர்; ஒவ் வொரு மனிதனும் கடையப்பட்ட கைத்தடியும் முத்திரை யும் வைத்திருப்பான். ஒவ்வொரு தடியிலும் உரோசாப் பூ, அல்லி, கழுகு அல்லது இவைபோன்ற ஏதும் ஒன்று வெட்டப்பட்டிருக்கும்.
பின்வரும் வகையான பழக்க வழக்கங்கள் பாபி
லோனியரிடத்திற் காணப்படுகின்றன. இவ்வகை வழக்
கங்கள் இல்லீரியா (Illyria) விலுள்ள வெனிசியரிடமும் காணப்படுகின்றன. பின்வரும் நிகழ்ச்சி ஆண்டில் ஒரு முறை கையாளப்பட்டு வருகின்றது.
திருமணம் செய்யும் பருவமடைந்த பெண்கள் ஒரிடத் தில் கூட்டமாகச் சேர்க்கப் படுகின்றனர். அவர்களைச் சுற்றி ஆடவர் கூட்டமாக நிற்பர். பின்பு ஒருவன் அவர் களை ஒவ்வொருவராக எழுந்து வரும்படி செய்து, அதிகம்

தமிழரின் கிளையினர் 39
அழகான வளில் ஆரம்பித்து விற்பனை செய்வான்: ஒருத். தியை விற்றவுடன் அடுத்த அழகானவளை விற்பான். வாங்குவோர் அவர்களை மணஞ் செய்து கொள்ளுதல் வேண்டுமென்னும் நிபந்தனைப்படியே அவர்கள் விற்கப்படு கிருரர்கள். மணஞ் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு பாபிலோனிய தனவந்தனும் ஒருவனுக் கெதிராக ஒருவன் போட்டி யிட்டு விலை கேட்பான். மணஞ் செய்துகொள்ள விரும்பிய கீழ்த்தரத்தினர் அழகில்லாத பெண்களை ஒரு தொகை பணத்துடன் பெற்றுக்கொள்ள விரும்புவார்கள். அழகான பெண்களே விற்று முடிந்தபின், கூறுவோன், மிகவும் அழகில்லாத அல்லது முடமான பெண்களை எழுந்து நிற்கச்செய்து, அவர்களைக் குறைந்த பணத்தோடு ஏற்க விரும்பும் ஆடவருக்குக் கொடுப்பான் இப்பணம் அழகான பெண்களை விற்ற பணத்திலிருந்து கொடுக்கப் படுகின்றது. தங்தை தனது புத்ல்வியைத் தான் விரும்பிய வனுக்குக் கொடுத்தல் முடியாது. விலை கொடுத்து வாங் கிக்கொண்டு போவதின் முன் அவளை மணப்பதாகத் தக்க பிணை அளியாமல் அவளைக்கொண்டு போதலும் ஒருவ னுக்கு முடியாது. அயற் கிராமங்களிலுள்ளவர்கள் வந்து பெண்களை வாங்குவதும் சட்ட சம்மதமாயிருந்தது. அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குக் கொண்டு சென்ற வுடன் அவர்களைத் தாழ்வாகவும் கொடுமையாகவும் நடத் தாதபடி சட்டங்கள் இருந்தன. இவ்வழக்கம் இப் பொழுது நடைமுறையில் இல்லை.%
அவர்கள் நோயாளரைச் சந்தை கூடும் இடத்துக்குக் கொண்டு வருவார்கள். சந்தைக்குச் செல்வோர் அவர்க ளுடன் வார்த்தை ஆடுவார்கள். அவ்வகையான நோயடைந்து குணம் அடைந்தவர்கள் தாம் கையாண்ட
* அலக்சாந்தர் காலத்தில் இவ்வகை வழக்கு வடஇந்தியாவில் இருந்ததாக ஸ்ராபோ கூறியுள்ளார்.

Page 28
40 பழந்தமிழர்
மருந்தை அவர்களுக்குச் சொல்வார்கள். அவர்கள் இறந்தவர்களைத் தேனிலிட்டு வைக்கிருரர்கள். அவர்கள் எகிப்தியரைப்போல இறந்தவர்களுக்காக அழுகிறர்கள்.
பாபிலோனில் கன்னிமாடங்கள் இருந்தன. கன்னிப் பெண்கள் வாழும் மாடங்களைப் பற் றித் தமிழ் நூல் களில் அறிகின் முேம், இவ்வகை கன்னிப் பெண்கள் அல்லாத தேவதா சிகள் என ஒரு பிரிவினரும் இருந் தனர். இவர்களின் ஒழுக்கம் இக்கா லத் தேவதாசிய ரின் ஒழு க் கம்
போன் ற தே? மனிதமுக இடபம். இவ்வகைச் சிலைகள் தெய்வ உலகத்து
சுமேரியா, பாபிலோனியா, அசீரியா மாடு எ ன் று முதலிய நாடுகளில் இருந்தன. சொல்லப் படும்
l. “We find remarkable class of honoured women,
ivotaresses, who in some ways resembled the Roman vestals and possessed usual rights and privileges. These are not to be confused with the religious prostitutes, mentioned by Herodotus, who were certainly a prominent feature in Babylonian religion. They were women who took vows of celibacy though usually dwelling together in special con-vents, could nevertheless live in this world and were often normally married. If married (and to possess votaress wife
 

தமிழரின் கிளையினர் 4.
மனித முகமுள்ள இடபச் சிலைகள் பாபிலோனில் காணப்படுகின்றன.? அவர்கள் ஆலயங்கள், ஞாயிறு காலிக்கும் திசையை நோக்கிக் கட்டப்பட்டன. அவர்கள் ஆலய அமைப்பும் பிறபூசை முறைகளும் இன்று தென் னிந்திய ஆலயங்களிற் காணப்படுவன போன்றனவே. இந்திய மக்களைப்போலவே அவர்களும் ஆலயங்களில்
கடவுளைக் கைகூப்பி வணங்கினர்.
* கிரேத்த மக்கள்
கிரேத்தா மக்களின் நாகரிகம் எகிப்திய சுமேரிய நாகரிகங்களைப் போலவே மிகப் புராதனமானது. அந் நாட்டு மக்கள்* மீனவர் என்று அழைக்கப்பட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் தமிழர். கெரகோதசு என்னும் கிரேக்க வரலாற்முசிரியர் கிரேத்தாவிலும் இலைசியா விலும் வாழ்ந்த மக்கள் தமிழரே எனப் புகல்கின்றர். கொதோதசு ஆசிரியர் கூறியிருப்பது வருமாறு. * 8 கிரேத்தா என்னும் தீவில் வாழ்ந்தோர் தெமிலியர்.
was probably regarded as distinction) a concubine was provided to bear children to husbands, but had no legal wifely rights which belongs to the votaress.--Ancient History of the Near East-R. H. Hall.
2. People of Quilon worship another idol which is half man and half ox-Friar Odoric (A. D. 1321)-Foreign notices of South India.--K. A. N. Sastri.
* Crete. Minos. ,
3. The Lycians were originally sprung from Crete. For in ancient time Crete was entirely in the possession of oarbarians...so long as sarpedon reigned over them they went by the name of Termilae which they brought with

Page 29
42 பழந்தமிழர்
அரசுரிமைப் போராட்டத்தால் துரத்தப்பட்ட சபிடோன் என்பவனுடன் வந்து மீனியஸ் நாட்டில் தங் யமக்கள் தெமிலி என்று அழைக்கப்பட்டனர். இப்பெயர் அவர் களுச்கு இங்கு வரு முன்னரே உள்ளது. சபிடோனைப் போலவே அரசுரிமைப் பேரர்ட்டாத்தில் அதேன்சில் நின்றும் துரத்தப்பட்ட ՀՀ, பாண்டியனின் மகனுகிய இ2லசியசின் பின் மீனியஸ் நாடு இ2லசியா என்னும் பெயர் பெற்றது. இவர்களுக்கிடையே புதுமாதிரியான பழக்க வழக்கங்கள் உண்டு. இதனுல் அவர்கள் மற்று எல்லாச் சாதியினரிலிருந்தும் வேறுபடுவர். ? இவர்கள் தங்கள் வமிசத்தைத் தாய் வழியியின்றும் எடுத்துக் கூறுவர். ஒரு
them, and the Lycians are still called by that name by their neighbours. But Lycius fon of Pandion who was. likewise driven out by his brother Algeus, Came out from Athens. The Termilae under Sarpedon, in course of time got to be called Lycians after him. Their customs are partly Cretan and partly Carian; but they have one peculiar to themselves, in which they differ form all other nations; but they take their name from their mothers and not from their fathers; so that if any one ask another who he is, he will describe himself by his mothers, side, and reckon his maternal ancestry in female line, and if a free woman marry a slave the children are counted of pure birth: but if a man who is a citizen, even though of high rank marry a foreigner or cohabit with a concubine the children are infamous-Herodotus. 1-73.
2. ‘மேற்குக் கரையிலுள்ள மலையாளிகளுள் சொத்துரிமை பெண்களுக்காதலும், பரம்பரையைப் பெண்வழியினின்று கடறுதலுமாகிய வழக்கங்கள் காணப்படுகின்றன. இவ்வழக்கம் நயார், தீய ச், புன்தர், (Bants), சீரிய கிறித்தவர்களுக்கிடையிே gairou (pairaraoT.-The Dravidian Elements in Indian Culture P. 26-G. Slater.

தமிழரின் கிளையினர் 43
குலமகள், அடிமை ஒருவனை மணஞ் செய்யின் அவர் களின் பிள்ளை உயர் குலத்ததாக எண்ணப்படும். குல மகன் ஒருவன் தாழ்ந்த பெண்ணை மணக்கின் பிள்ளைகள் தாழ்ந்த குலத்தனவாகும். - தந்தை பாண்டியன் எனப்படுதலும், மக்கள் மீனவர்
’ இலைசியசு என்பவனுடைய
(மீனேசு) எனப்படுதலும், ஆராயத்தக்கன. கிரேக்காவின் நாகரிகமே கீரிசு சைப்பிரசு மற்றும் ஐசியன் தீவுகளிலும் பரவியிருந்தது, இலைசியா சின்ன ஆசியாவிலுள்ளது.
மினுேவர் பழக்க வழக்கங்கள் சில
மீனேவ அரண்மனைக் கருமகாரர் (officials) முகத்தை மழித்துத் தலைமயிரை நீள வளர விட்டு அதனை அலங்கரிப்பர். ஆடவரும் மகளிரும் காற்றுக்கு அசையும் படி கூந்தலை நீள வளர விட்டிருந்தார்கள் இருபாலரும்: மாட்டுச் சண்டைகளை இன்பமாகக் கொண்டாடினர்கள். கோயிற் கருமங்கள் மாத்திரமல்ல அரசியற் கருமங்களும் பெண்களின் அதிகாரத்துக்குட்பட்டிருந்தன. அவர்கள் மற் றெந்தச் சாதி நாகரிக மகளிரைப் போலும் அல்லாமல் ஆடவரைப்போலச் சம உரிமைபெற்று வாழ்ந்தார்கள். பெண்கள் ஒடுங்கிய இடை யுடையவர்களாகவும் கழுத்தி லும் மார்பிலும் தங்க, வெள்ளிமாலைகளை அணிந்தவர்க ளாகவும், அரைக்குக் கீழ் அலங்காரமாக மடிப்புவிழும் உடை அணிந்தவர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் தங்கள் கூந்தலுக்குமேல் பொய் மயிரைப் பயன்படுத்தி னர். ஆடவரின் உடை மிகவும் அற்பமானது. அவர்கள் அரையில் ஒரு துண்டுகட்டி அதன் மீது கச்சைகட்டி யிருந்தார்கள். எகிப்தியர் வெள்ளை ஆடைகளை உடுப்பர். கிரேத்தியர் புள்ளியிட்ட அல்லது நிறமுள்ள ஆடை களே உடுத்தனர். வாலிபரும், வாலிபப் பெண்களும்

Page 30
44 பழந்தமிழர்
பின்னலுள்ள கூந்தலைக் குடுமியாகக் கன்னத்தில் முடிந் திருந்தனர். மீதித்தலை சிரைக்கப்பட்டிருந்தது. வாலிபப் பெண்களும் வாலிபரும் மேற்கொண்ட ஏறுதழுவும் விளை பாட்டு மிகவும் கொடியதாகக் காணப்படுகின்றது.
மினேவர் தேரையும் குதிரைகளையும் பயன்படுத்தி னர். ஒவ்வொருவரும் வீடுகளில் கடவுட் படிவங்களை வைத்து வணங்கினர். எல்லாத்தெய்வங்களுக்கும் மேலாகத் தாய்த் தெய்வம் ஒன்று வழிபடப்பட்டது. பாம்புத் தெய்வங்களும் இருந்தன. பாம்பைக் கையிற். பிடித்து நிற்கும் பெண் தெய்வச்சிலைகள் கர்ணப்படுகின்றன. பிணங்கள் மண்தாழிகளில் வைத்துப் புதைக்கப்பட்டன. இலிங்க வணக்கமும் காணப்பட்டது'!
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சமாதிகளுள் குருமார் நெற்றியிற் கட்டும் பொன் கயிறுகள் காணப்பட்டன. இவை கிரேத்தாவிற் காணப்பட்டவைகளோடு ஒத்திருக்கின்றன. இவையும் ஹைதரபாத்துச் சமாதிகளில் காணப்பட்ட மட்பாண்டங்களிற் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் இந்திய மக்களுக்கும் கிரேத்தா மக்களுக்கு முள்ள தொடர்பைக் காட்டுகின்றன. பினீசிய குருமாரும் இவ் வகைப் பொன் நாண்களைப் பயன்படுத்தினர்கள.
திராவிடரின் கலைகளும் கிரேத்தாமக்களின் கலை களும் நேரான அல்லது வேறுவழியாக வந்ததொடர்பைப் பெற்றிருந்தன. சிவனை அல்லது காளியைப்போன்ற
1. படிவம் அல்லது படிமம் பிரதிமா என்னும் வடசொல்லி னின்றும் வந்ததெனச் சிலர் கடறுவர். படிஎன்பதினின்றே படிவம், அல்லது படிமம் என்னும் சொல்லுத் தோன்றிற்று. படி என்பதி னின்றே பிரதி, பிரதிமா என்னும் சொற்கள் தோன்றின.
l. A. H. O. T. N. E. P. P. 48-49-50 Hall

தமிழரின் கிளையினர் 45
தெய்வங்கள் மிக ஒடுங்கிய இடையுடையனவாக அமைக் கப் பட்டிருக்கின்றன. மினேவரின் ஒவியங்களால் ஆடவ ரும் மகளிரும் இளமை தொடக்கம் ஒருபோதும் கழற்றப் *படாத ஒட்டியாணங்களை அரையில் அணிந்திருந்தார் கள் எனத் தெரிகிறது. இடையைச் சிறுக்கச்செய்யும் வழக்கம் இந்தியாவிற் பரவவில்லையாயினும், அவ்வழக் கைப்பற்றிய ஓவியங்கள் வரையப்பட்டன வென்று தெரிகிறது.1
பழைய பிரித்தன் மக்கள்
பழைய பிரித்தன் மக்கள் மத்தியதரை மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களெனச் சரித்திரகாரர் கூறுவர். வடல் என்னும் ஆசிரியர் பினிசியரின் முன்னுேர் சுமேரிய ரென்றும் பினிசியரினின்று தோன்றியவர்கள் L16ðÞ(L பிரித்தன் மக்கள் என்றும் கூறுவர்; பினீசியர் பரதர் எனப் பட்டார்களென்றும் " பாதர் என்னும் பெயரி னின்று பிரித்தன் என்னும் பெயர் தோன்றிற்றெனவும் அவர் சாதிப்பர்.2 சுமேரியர் பினீசியர்களுக்கிடையில் இருந்த கடவுள் வழிபாடு நாகரிகம் முதலியனவே பழைய
l. The Dravidian Elements in Indian Culture pp. 78-79.
2. “The land of the Barats (Barat-Varsha) a name synonymous with “Barat-ana' or land of the Barats,' “which I have proved to be the original name of Britain.'-The Indo-Sumerian seals deciphered. p, 10Waddell. *1 For further information regarding The Hindu colonization of Great Britain see Godfrey Higgin's Celtic Druids where in it has been proved that the Druids were the priests of the Hindu colonists who emigrated from India and settled in Britain-Hindu superiority, p. 178. --Har Balas Sarda B.A. F.R.S.L.

Page 31
墨6 பழந்தமிழர்
பிரித்தன் மக்களுக் கிடையிலும் காணப்பட்டன வென் பதை அவர் தமது நூல்களில் பலவாறு ஆராய்ந்து விளக்கி யுள்ளார்.
* கல்லியா (Gallia) எனும் பிராஞ்சி (France)லும், பிரித்தானியா (Britania) எனும் இங்கிலாந்திலும் முற் காலம் இருந்த துரூயிதர் (Druids) எனும் சாதியார் பிந்திவந்த பிராஞ்சிய ஆங்கில சாதிகளின் வேருனவர்கள் என்பது சரித்திர சம்மதம். இந்த துரூயிதரை கயெலிக் எனும் ஆதி ஐரிஷ் மொழியில் திறஒஇட் (Draoidh) என்பர். இவர்கள் பிற்காலம் சமய % ஆசாரியர்களாக ab DT(u வித்தைக்காரராகவும் கணிக்கப்பட்ட போதி லும், எல்லோரும் அத்தொழில் பூண்டவர்களல்லர். ஆதிக்குடிகளான பொது மக்கள் ஆல்லோருமே துரூயிதர் எனப்பட்டனர். இவர்களுள் சமய ஆசாரியத் தொழிலை நிகழ்த்தியவர்களைப் பற்றியவரலாறுகள் மட்டும் உரோ மைச் சரித்திராசிரியர்களால் அக்காலம் வரைந்து வைக்கப் பட்டன. இச்சரித்திராசிரியர்களிலிருந்து நாம் அறிகின்ற துரூயிதர் கல்லியாவிலும் பிரித்தானியாவிலும் பின் வந்து குடியேறியோர்கள் அறியாத தத்துவ சாத்திரக் கொள் கைகள் உள்ளவர்கள் ; வான சாத்திர உணர்ச்சியில் மேம் பட்டவர்கள் ; மறுபிறப்பு உண்டென்றவர்கள் ; தங்கள் சீடருக்கு உவமைகளால் போதித்தவர்கள்; மத்தியதரைக்
* They (Druids) are taught to repeat a great number of verses by heart and often spent twenty years upon the institution; for it was deemed unlawfull to commit their statutes to writing. It was one of their principal maxims that the soul never dies, but after death passes from one body to another-Popular History of priest craft in all the nations p. 23 William Howitt:

தமிழரின் கிளேயினர் 47
கடலை அடுத்த பழைய இருண்ட நிறமுள்ள சனங்களின் தெய்வங்களையே தொழு கவர்கள் ; மரக்தோப்புக்களில் தங்கள் சமயக் கிரியைகளை நடத்தி வந்தவர்கள் ; மர வழி பாடும் உள்ளவர்கள். இவ் விபரங்களாலும் திறஒஇட் எனும் அவர்கள் ஆதிப் பெயராலும் இவர்கள் திராவிடர் எனும் தெர்மிலர் வகுப்பைச் சேர்ந்தவர்களே எனத் தோன்றுகின்றது. இவர்கள் பெயர் திரசிடர் (Drasidae), தசிடர் (Dacidae) as 2. ஒர்பால் மருவிவந்தது என்வும், இஸ்பானியா தேசத்து திரகனர் (Draganes) என்பவர் களும் இவர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்களே எனவும் பாதர் ஹிறஸ் கூறுவர். 1
மத்தியதரைச் சாதியினர் முதல் பிரித்தன் மக்கள் வரையிலும் உள்ளவர்கள் ஒரீே இனத்தை சேர்ந்தவர் கள் என சேகி எனும் இத்தாலியரால் தர்க்க முறையாக
ஆராய்ந்து காட்டப்பட்டது. * "
பினீசியர் மத்திய தரைக் கடலின் கிழக்கு ஒரமாக உள்ள நீண்ட நிலப்பரப்பு பினீசியா என்று அறியப்பட்டது. பனை (ஈந்து) அதிகம் உள்ளமையின் அங்காட்டுக்குப் பினிசியா எனப் பெயர் வந்ததென ச் வரலாற்ருசிரியர் -56 si p. 685 si J si I pj. (Historians” history of the
1. சுவாமி ஞானப்பிரகாசர்.
2. “The conception of Mediterranean race to which the typical brunet peoples of the Mediterranean basin (and out side it as far as Britain) belonged and belong, was crystallized in logical form by an Italian Sergi. To this view based on the study of craniology and ethnic
chromatology '...... is a compliment.
A. H. O. T. N-East p. 115-Hall.

Page 32
48 பழந்தமிழர்
world) என்னும் நூல் கூறுகின்றது. இருக்குவேத காலத்தில் * பாணியர் ' என்னும் ஒரு கூட்டத்தினரைப் பற்றி ஆரியர் அறிந்திருந்தனர். இவர்கள் பெரிய கடல் ஒடிகளாயிருந்தனர். பாணியர் என்பது வணிகர் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், வணிகர் என்பதைத் திருத்தமாக உச்சரிக்க அறியாத ஆரியர் அதனைப் பாணியர் எனப் பிறழ உச்சரித்தனர் என்றும் கூறுவர் பி. தி. சீனிவாச ஐயங்காரவர்கள். இவர்கள் தென்னுட்டினர்; சுமேரிய மக்களுக்கு இனமானவர் : ஞாயிற்றுக் கடவுளை வழிபட்டவர். இவர்கள் பரதர் எனவும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்தனர். மொகஞ் சதரோ காலத்திலேயே இந்திய நாட்டுமக்கள் பரதர் எனப் பெயர் பெற்றிருந்தார்கள் என்றும் அதனல் இந்தியநாடு பரதநாடு எனப்பட்டதெனவும் தெரிகின்றது. வாணிகத்தின் பொருட்டுக் கம்போதியா, சுமத்திரா முத லிய நாடுகளிற் சென்று குடியேறிய இந்திய மக்கள் அவ் விடங்களில் இராச்சியங்களை நாட்டித் தங்கள் நாகரிகத் தையும் கலைகளையும் அவ்விடங்களிற் பரவச் செய்வாரா யினர். அது போலவே கடலோடிகளான தமிழ் மக்க ளில் ஒரு கூட்டத்தினர் மத்திய தரையின் கிழக்குக் கரை யில் குடியேறிப் பினீசிய இராச்சியத்தை உண்டு பண்ணி னர் ஆகலாம்.
பினீசியருக் கிடையில் தென்னிந்திய மக்களிடையே காணப்படுவன போன்று சமாதிகளில் கல்நடுதல், பகல், வேல், இலிங்கவணக்கம் முதலியன காணப்பட்டன. இவர்கள் கோயில்களில் இடபம் (நந்தி) வைக்கப்பட்டிருந் தது. அவ்வகை இடம் ஒன்றை எச். ஜி. வெல்சு (H. G. Wells) GTai Luti, a 1677 ppésir வெளிக்காட்சி என்னும் நூலில் காட்டியுள்ளார். சுமேரியர், பினீசியர்

தமிழரின் கிளையினர் 49
பிரித்தானியர், கொதியர் என்போர் ஒரு தொடக்கத்தைச் சேர்ந்தோர் எனக் கூறுவர் வடல் (Waddell) என்னும் ஆசிரியர். இவர்களின் எழுத்துக்கும் மொகஞ்சதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்படு கின்றது. அகவே பினீசியர் தென்னிந்திய மக்களின் ஒரு பிரிவினரே என்று துணியலாம்.
அசீரியர்
அசீரியர், இந்திய-ஆரிய மக்களாலும், புராண இதி காசங்களாலும் அசுரர் எனப்பட்ட மக்கட் கூட்டத்தின
ரின் ஒரு பிரிவினர் %. இவர்கள் ஞாயிற்றை அசுர், வேல்
* பாபிலோனியா, சாலதியா அசீரியா முதலிய நாடுகளில் ஆரியருக்கு முற்பட்ட துரgனிய நசீகரிகம் நிலவியது. அங்காக ரிகத்துக்குரியனவே இந்தியாவிலும் அசீரியாவிலும் கட்டிடச் சிற்பங்களிற் கர்ணப்படும் சில அடையாளங்களாகும். இந்தியா வும் அசீரியாவும் நேராக வாணிகம் நடத்துவதற்கு முன் இத் தொடர்பு பொதுவான துரானிய அடிப்படை மூலம் உண்டா யிருத்தல் வேண்டும். இன்று இந்திய பழைய கட்டிடங்களிற் காணப்படும் சிற்பங்களுட் சில அசீரிய கோயில்களிலும் அரண் மனைகளிலும் உள்ளவற்றைப் பார்த்துச் செய்யப்பட்டவை என்று at of 56 fit 5dd56 it up.-Industries and Arts of India, p. 330. அசுரா என்பது ஞாயிற்றுக் கடவுளின் பெயர். இதுவும் இந்திய பழங்கதைகளில் வரும் அசுரரும் ஒன்று என்று கருதப் படுகின்றன. பாரசீகரின் மதத் தொடர்பாக வழங்கும் அகுரா என்பது ஞாயிற்றையே குறிக்கின்றது எனச் சமக்கிருத பண்டி தர்கள் துணிந்துள்ளார்கள். பிற்காலத்தில் சாதி, சமயச் சண்டைகள் காரணமாக இது கடவுள் என்ற பெயரை இழந்தது; பூதம், இராக்கதன் என்னும் பொருளில் பிராமணரால் வழங்கப் Lill-al-Makers of civilization p. 417.
Assyrians (Asuras) --Arian Rule in India, p. 7-Havel I. தொடக்கத்தில் அசுரா என்பது மேலான கடவுளேக் குறிக்க வழங்கிற்று. பிற்காலத்தில் அது தேவருக்குப் பகைகளான இய:

Page 33
50 பழந்தமிழர்
முதலிப் பெயர்களால் வழிபட்டனர். விளிம்பில் வேலைப் பாடுள்ள ஆடைகளை உடுத்து அரையில் கச்சுக் கட்டுதல், வேற் கடவுளுக்கு ஆட்டுக்குட்டியைப் பலியிடுதல், மாற்ருர் ஊர்களைக் கொளுத்துதல், அவர்களிடத்தில் சிறிதும் இரக்கங்காட்டாதிருத்தல், போர்முறை, கோட்டை கொத்தளங்களமைப்பு, இறந்தவரை அடக்கம் பண்ணுதல் முதலியவைகளால் அவர் தமிழரையே ஒத்தி ருந்தனர். பதிற்றுப் பத்து புறநானூறு முதலிய நூல் களில் காணப்படும் தமிழர் போரொழுக்கங்களுக்கும் ஆசிரியர் போரொழுக்கங்களுக்கும் வேற்றுமை கிடையா. இன்று தென்னிந்திய ஆலயங்களிற் காணப்படும் குதிரை வாகனங்களை ஒப்ப அலங்கரிக்கப்பட்ட குதிரைக்ளே அசீரிய அரசர், தேர்ளிெற்பூட்டப்பட்டன. சூரியன் என்னும் சொல்லே அசுர் என்ற கி அசுரை வழிபடுவோர் (அசுரர்) அசீரியராயினர். இவர்கள் செமித்திய மக்களைப் போல் மயிரை நீள வளர்த்துத் தாடி விட்டிருந்தனர். மயிர் முதுகில் நீளத் தொங்கும்படி விடப்படாமல் தோளுக்குக் கீழ் கத்தரிக்கப்பட்டது. தலையைச் சுற்றி
ஆவிகளை அல்லது பூதங்களேக் குறிக்க வழங்கிற்று. இருக்கு வேதத்தில் இது வருணனைக் குறிக்க வழங்கிற்று.-Dictionary of Superstitons and mythology.-Biren Bonnerjea. - அசுரா என்பது சமக்கிருதத்தில் வலிமை, பிரபுத்தன்மை முதலியவைகளைக் குறிக்க வழங்கிற்று. இச்சொல்லின் உற் பத்தி நன்கு அறியப்படவில்லை. இது ஒருபோது அசுர் என்னும் கடவுட்பெயரினின்று தோன்றியிருக்கலாம். ஆரியர் தாம் எதிர்க்க நேர்ந்த பகைவரைப் பூதங்கள் எனத் தமது பழங் கதை களிற் கடறினர். முற்கால அசுரர் அசுரின் பிள்ளைகள் (அசுர் வழிபாட்டினர்) ஆகலாம். பிற்கால அசுரர் அசீரியராவர். இந் தியாவுக்குப் புதிதாக வந்த ஆரியர், தைத்தியர், தானவர், தாசர். இராக்கதர் முதலிய பெயர்களால் இவர்களைக் குறிப்பிட்டனர். '
-Cylopaedia of India-E. Balfour.

தமிழரின் கிளையினர் 5.
இாடாக் கட்டப்பட்டது. இவ்வகை நாடாக்களை அரசர் அணிந்தனர். கிரேத்தாவிலும் இந்தியாவிலும் பொன் நாண் அணியப்பட்டது. குருமாரும் இவ்வகை நாண் கட்டுவது வழக்கம், அதனைப் பின்பற்றியதே தமிழ்க் குருமார் தலையைச் சுற்றி உருத்திராக்கமணி அணிவது போலும்.
GI (8 Juli இவர்களைப்பற்றி விவிலிய (Bible) வேதத்தின் பழைய ஏற்பாட்டில் 'அதிகம் அறியக் கூடியதாயிருக் கிறது. இவர்கள் பழைய கிரேத்தா மக்களுக்கு இனமான வர்கள் எனக் கருதப்படுகின்றனர். இவர்களுக்கிடையே ஆன்கன்று (இடபம்), பகல் (Bဒ္ဓal), வேல் (Bel), இலிங்க, மர வணக்கங்கள், கானப்பட்ட்ன. இறந்தவர்களுக்காக முப்பது நாள் துக்கங் கொண்டாடுதல், வெற்றிபெற்ற அரசன் தோற்ற அரச குடும்பங்களில் ஆண் சந்ததிகளை அழித்து விடுதல், இறந்தவர்களுக்காக பெண்கள் கூடி அழுதல் இவை போன்ற பல வழக்கங்கள் இவருள் இருந்தன. சாலமன் கட்டிய ஆலயத்தின் வருணனையும் வழிபாட்டு முறையும் தென்னிந்திய ஆலயங்களையும் வழி பாட்டு முறைகளையும் மிக ஒத்தனவே,
அராபியர் செமித்திய குலத்தினர் அராபியாவிலிருந்தே மெசபெத்தேமியா சின்ன ஆசியா முதலிய நாடுகளிற் l. The curious resemblances of the tree and pillar worship of the early Cretians for instance to the Palastian veneration of Ashereth and Massebah point to a racial connection between the Mediterraneans and the Palastians which most antedate the coming up the Semites. She tree and pillar worship of Palastine will have been
retained by , the Semitized Canaanites from other older beliefs.-P. ls4-T. A. H. O. T. N. E.-H. R. Hall.

Page 34
52 பழந் தமிழர்
சென்று குடியேறினர்களென்பது வரலாற்ருசிரியர் களின் கருத்து. மற்றச் செமித்திய குழுவினரிடையே, காணப்பட்டது போலவே இவர்களிடம் சந்திர, சூரிய, விக்கிரக வணக்கங்கள் காணப்பட்டன. இன்று தென் னிந்திய மக்கட் குழுவினர்களிடையே காணப்படுதல் போல (கடவுட்) கற்களை பாலாலும், நீராலும் முழுக் காட்டிப் பொங்கிப் படைத்து இரத்தப் பலியிட்டு வழி படுதல் அவர்கள் வழக்காக விருந்தது. இன்றும் மெக்கா வில் இலிங்க வடிவமான கல், வழிபாட்டிற் குரியதாயிருக் கின்றது. அக்காலத்தில் அராபிய வணிகர் இலங்கை இந்தியா முதலிய இடங்களிலிருந்து மணச் சாக்குகளை அராபியாவுக்குக் கொண்டு சென்று, பின் அவைகளைப் பிறநாட்டு வணிகருக்கு அதிக இலாபத்திற்கு விற்றர்கள். அக்காலத்தில் அவ் வணிகர் அச் சரக்குகள் கிடைக்கும் வகையை ஆச்சரியமான முறையில் கூறினர்கள். இன் றும் முகமது மதத்தினர் பிறையையும், உடுக்களையும் சமயக் குறிகளாகக் கொள்வர்.
சின்ன ஆசிய மக்கள்
சின்ன ஆசியாவில் கித்தைதி, காசி, மித்தினி எனப் பெயரிய சிறு இராச்சியங்கள் இருந்தன. இந்நாடுகளில்
... Dravidian place names are sometimes traced to Mesopotamea, and Iran, while an ancient language spoken ... in Mittani reveals striking similarities to modern Dravidian of India-Hindu civilzation.p. 38 R. K. Mookerji. i, கறுவாபட்டை பக்கஸ் தெய்வம் வளர்ந்த இடத்தில் உண்டா கின்றது. மனிதர் வழங்காத மலை உச்சிகளிற் கூடு கட்டியிருக்கும் பறவைகள் கறுவாப்பட்டைச் சுருள்களேக் களிமண்ணினல் கட்டப் ப்ட்ட தங்கள் கூடுகளுக்குக் கொண்டு வருகின்றன. அராபியர் பெரிய ஆட்டுத் தொடை மாட்டுத் தொடைகளைக் கடுகளுக்குச்

தமிழரின் கிளையினர் 53
வாழ்ந்தோர் ஆரியரல்லாதோர், பிற்காலங்களில் ஆரிய மக்கள் அவ்வாரியரல்லாத மக்களோடு கலந்தனர். அம் மக்களின் நாகரிகம் தமிழ் நாட்டு நாகரிகம் போன்றதே. அம்மக்கள் வழிபட்ட தெய்வங்களுட் சில இந்திரன், வருணன், மித்திரன் முதலியன. சூரியனை அவர் சூரியன் என்னும் பெயராலேயே வழங்கினர். இடப வழிபாடும் இம்மக்கட் குரியது. கித்தைதி நாட்டுப் பழைய நாணய மொன்றில் சிங்க வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தாய்த் தெய்வம் காணப்படுகின்றது. இவ்வகைத் தெய்வம் எகிப்திலும் காணப்பட்டது. காசி அரசருள் ஒருவன் துஷ் ரதன் (Dushrata கி. மு. 2000). இவனே இராம ரின் தந்தையெனச் சில வரலாற்றுக்காரர் கூறுவர். வடல் என்னும் ஆசிரியர் காசி மக்களே வட இந்தியாவிற் குடியேறிச் சத்திரியர்? எனப்பட்டனர் எனவும் அக் கேடிய வேந்தனன சார்கன் (கி. மு. 2872) என்பவனே புராணங்களிற் கூறப்படும் சகரன் எனவும் புகல்வர். சகரரின் குதிரையைப் பிடித்துக்கட்டி அவர் 60,000 புதல்வரை (வீரரை) அழித்த கபிலர், கபிலநாகன் எனப் பட்ட தமிழ்வேந்தனெனக் காட்டுவர் ஆல்ட்காம் என்னும் ஆசிரியர்.8
சமீபத்தில் போடுகின்றர்கள். பட்சிகள் இவைகளே எடுத்துக் கூடு களுக்குக் கொண்டு போனதும் கூடுகள் பாரந்தாக்கமாட்டாமல் உடைந்து விழுகின்றன. கட்டுகளோடு விழும் கறுவாச் சுருள்கள் எடுக்கப்படுகின்றன.
l. “The humped Indiän Bull (Bos Indicus) all of , which are freely figured in Sumerian Hitto, Phonaecian and
Kassi seals as sacred animal of the East-Indo Sumerian seals deciphered. P, 20.L.A.-Waddell.'
2. Makers of civilization P. 476. 3. The Sun and the Serpent. P. 56.

Page 35
54 பழந் தமிழர்
சித்திய (Scythians) மக்களிடையே அகத்திரிசிகள் என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தனர் எனக் கெரதோதசு ஆசிரியர் கூறியுள்ளார். அதனை ஈண்டு குறிப்பிடு கின்ருேம். அது அகத்திய முனிவரோடு தொடர்பு பெறுமோ வென்பது ஆராயத் தக்கது.
* பாதி பாம்பும் பாதி பெண் வடிவமுள்ள (நாக) கன்னியிடம் கெக்குலிசு (Hercules) என்பவருக்கு மூன்று மகவுகள் தோன்றின. முதல் உதித்த மைந்தன் * அகத்திரிஷிஸ் ? (Agathyrishis) எனப்பட்டார். இவ ரின் சந்ததியினர் அகத்திரிஷியர் எனப்படுவர். இக் கூட்டத்தினர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை UGಠಾL-L! வர்; பொன்னபரணங்களை அணிவர்; ஒருவரோடு ஒருவர் பகையின்றி உடன் பிறந்தவர்களைப்போல் வாழ்ந்து பலர் ஒரே மனைவியை உடைய ராயிருப்பர்.”
குறிப்பு:-கி. பி. மூன்றம் நூற்றண்டில் எழுதப்பட்ட பெதுருங் கேரியர் அட்டவணையில் (Peutingerian Tables) தமிழர் சித்திய தமிறிசி: (Scythia Dyminice) எனப்படுகின்றனர். இதல்ை சித்தியர் கி. பி. மூன்ரும் நூற்ருண்டின் முன்னரேயே வந்து கடர்ச் சரம் முதலிய நாடுகளிற் குடியேறித் தமிழர்களோடு கலந்துள்ளார் களென விளங்குகிறது. ஆகவே அகத்தி இருஷி எனப்பட்டவர் வீரமாமுனிவர், டாக்டர் போப்பு (Dr. Pope) டாக்டர் கால்ட்வெல் போன்ற ஒருவராகலாமோ என்பது ஆராய்த்தக்கது. அகத்தியர் ஆதியிற் குடகு மலையில் இருந்தமையின் குட(கு) முனியாகிக் கும்ப முனி, குறுமுனி ஆயினுர் எனப் பண்டிதர் சவரிராயனவர்கள் கருதினர்கள்.
1. Agathirishis are a luxurious people and wear profusion of gold. They have promisecous intercourse with women, to the end that they may be brotheren one of another and being all of one family may not entertain hatred towards each other-Herodotus-4, 9, 10.

தமிழரின் கிளையினர் 55
பாரத பூமி அல்லது தமிழ் இந்தியா
பண்டிதர் சவரிராயன் அவர்கள் தமிழர் புராதன கலைஞன் என்னும் பொத்தகத்தில் தமிழரின் ஆதி இருப் பிடத்தைக் குறித்து எழுதியுள்ள பொருளுரையின் பகுதி ஒன்றை ஈண்டு தமிழிற் றிருப்பித் தருகின்ருேம், அவ், வுரையில் தமிழர் பாபிலோனிய நாட்னின்றும் வந்தார்கள் எனக் கூறப்படினும் பல ஆராய்ச்சி நட்பங்கள் காணப் படுகின்றன. இக்கட்டுரை எழுதுங்காலத்தில் சிந்து வெளி நகரங்கள் போன்ற பழந் தமிழர் நாகரிக சின் னங்கள் கண்டுபிடிக்கப்படாமலிருந்தமையின் மேற்படி ஆசிரியர் தமிழரின் ஆதி இரும்பிடம் பாபிலோனியா எனக் கருதினர்கள். இங்கு நழும் அக்கருத்தினைக் கொள் ளாது விடுத்துள்ளோம்.
இந்திய நாட்டிலே ஆரியர் வருகைக்கு முன் வாழ்ந்த மக்கள் பரதர் எனப்பட்டனர். ஆகவே இந்தியநாடு பரத கண்டம் எனப் பெயர் பெற்றது. பரதர் ஆண்மை யும் வீரமும் செறிந்த பெருமக்கள். இஞ்ஞான்று மறைந்துபோன கல்தேய-எல்லம் மக்கட் குழுவினர் அவர்களின் ஒரு பிரிவினர்; அவர்கள் இந்திய நாட்டினின் அறும் சென்று அக்கேடிய-கல்தேய நாட்டை அடைங் தோர். அக்கேடிய-கல்தேயாவே மேற்கு ஆசிய நாகரிகத் துக்கு இருப்பிடம். அம்மக்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய காலம் மனுவின் பெரிய வெள்ளப் பெருக்கை அடுத்தது.
பண்டு என்று முற்காலத்தில் அறியப்பட்ட இந் நாவலந்தீவு இன்று காணப்படுவது போலல்லாது தெற்கே பேருந்தொலைவு நீண்டு விரிந்து கிடந்தது. அதன் பெரும் பகுதி இஞ்ஞான்று கடல்வாய்ப்பட்டது. இங்கிகழ்ச்சி

Page 36
56 பழந் தமிழர்
யைப் பழந் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன. கில நூலார் ஆராய்ச்சியும் இதனை வலியுறுத்துகின்றது. தமிழகத்தின் தொடர்பாக இந்து மாக்கடலுள் அகன்
கிடந்த நிலப்பரப்பைக் கடல் விழுங்கிய வரலாறு மக்க ளால் மறந்து விடப்படவில்லை. மறைந்துபோன கிலம் பஃறுளி ஆதி குமரிமலை என்பவைகளை எல்லையாக உடையதாயும் எழுநூறு காதம் பரப்புடையதாயும் மக்கள் நெருங்கி வாழப்பெற்றதாயும், (மனுவின்) வெள்ளப் பெருக்குக்கு முற்பட்ட நாகரிக வளமுடையதாயும் திகழ்ந்தது. கிலதூல், தொல்லுயிர்நூல் ஆராய்ச்சிகள் தலை எடுப்பதற்கு நெடுநாள் முன்னரே இவ்வரலாறுகள் தமிழ் நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. கி. பி. இரண்டாம் நூற்றண்டில் வரையப்பட்ட சிலப்பதிகாரத் தில் இவ்வரலாறு ? பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத் . . . ’ எனக் குறிக் கப்பட்டுள்ளது. இவ்வரலாற்றினை நக்கீரனரும் இறையனர கப் பொருளுரையில் புகன்றுள்ளார்; இளம்பூரணர் நச்சி
ஞர்க்கினியர் என்னும் இரு பெரும் உரையாசிரியர்களும்
துக்குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள
அதனைத் தொல்காப்பிய உரையகத்தே நவின்றுள்ளனர். *நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்’ என்னும் சிலப்பதிகார அடி உரையில் அடியார்க்கு நல்லா ரும் இதனைக் குறிப்பிட்டனர். -
வெள்ளப்பெருக்குக்குமுன் மேற்குத் தொடர்ச்சி மலை வடமலை எனப்பட்டது. இப்பெயர் தெற்கில்
1. குமரிநாட்டின் வடக்கெல்லை குமரிக்கோடாயின் இலங்கை பிலுள்ள சிவன் ஒளி (எல்லம்) மலேயே வடமல்ே எனப்பட்டது எனல் மிகப் பொருத்தமானது. சிவன் ஒளி மலையே குமரிநாட் டுக்கு மலையத்திலும் அண்மையிலுள்ள மலேயாதல் காண்சு இலங்கை மேருவின் சிகரம் எனப் புராணங்கள் கூறுகின்றன. மனு

தமிழரின் கிளையினர் 57
இருந்து மூழ்கிப்போன தென் கண்டம் தொடர்பானது. சதபதப் பிராமணம் என்னும் வடமொழி நூல் மனுவின் பேழை வடமலையில் தங்கியதெனச் சொல்லுகின்றது. மனு பொதியமலையில் தங்கித் தவம் புரிந்த தமிழ் வேந்த னெனப் புராணங்கள் கூறுகின்றன. பாகவத புராணம், மனு, திராவிடவேந்தனெனப் புகலும், மாபாரதமும் புராணங்களும் இப்புதிய நாட்டிற் சென்று குடியேறிய வேறு ஏழு இருடிகளைப்பற்றியும் கூறுகின்றன.
இவ்விருடிகளிலொருவர் புலத்தியர். இவர் வழியில் அகத்தியரும், இராவணனென்னும் தென்னிலங்கை வேந்த னும் தோன்றினர்கள். மனுவின் வரலாற்றினை முதன் முதற் கூறும் சதடதப் பிராமணம் வடமலையின் பெயரைக் குறிப்பிடவில்லை. வடமலை என்ப்து மேற்குத் தொடர்ச்சி மலை என்பதற்கும், பேழை தங்கிய இடம் மலையம் என்ப தற்கும் போதிய ஆதாரங்கள் புராணங்களிற் காணப்படு கின்றன. சூரிய குமாரன் மலையத்திலே தவஞ்செய்து கொண்டிருக்கும்போது கிருதமாலை (வையை) ஆற்றில் தெய்வீகமீன் தோற்றிற்று என்று மச்ச புராணங் கூறும், திராவிட வேந்தனன மனு கிருதமாலை யாற்றில் பலி செலுத்தினுனெனப் பாகவத புராணங் கூறு கின்றது. கிருதமாலை யாற்றே ரத்திலிருந்து மனு தவஞ் செய்தாரென்பதை அக்கினிபுராணம் வலியுறுத்துகின்றது. மாபாரதத்தின் வனபர்வம் இவ்வரலாற்றைச் சிறிது வேறுபடுத்தி, மனு, சீரினி அல்லது பாலாற்றங்கரையில் தவஞ்செய்தாரெனக் கூறுகின்றது. பாலாறு ஒரு காலத் தில் பாண்டிய நாட்டின் எல்லையாக இருந்தது. இந்நூல்,
வெள்ளப் பெருக்கின்போது ஒதுக்கிய இளாவிருதம்மேருவிலுள்ள
தெனப்படுகின்றது. ஆகவே இளாவிருதமென்றபது எல்லம் என
W
முன் வழங்கிய இலங்கையன்றிப் பிறிது ஒன்று அன்று.

Page 37
58 பழந்தமிழர் -
மனு, அநேக ஆண்டுகளின் பின் வேறு ஏழு இருடிகளு டன் இமயமலை உச்சியினின்றும் கென்பால் வந்தார் எனக் கூறும்
எல்லாப் பழைய ஆதாரங்களும் மனு தமிழ் உலகில் தவஞ்செய்து கொண்டிருந்தார் என்பதை வலியுறுத்து கின்றன. மனு, தெற்கிலிருந்து வடக்கே சென்ருரென மாபாரதங் கூறுவது வலியுடையதன்று. பழைய புராணங்கள் எதுவும் இதை வலியுறுத்தவில்லை. மா பாரதத்திலே இவ்வரலாற்றினை எழுதியவர் சதபதப் பிராமணத்தில் வடமலை எனக் கூறப்பட்டதை இமயமலை எனப் பிழைபட மயங்கி அதனை இமயம் எனப் புகல்வர் ராயிஞர். மனுவுக்கும் இமயத்துக்கும் யாதும் தொடர் பில்லை; தொடர்புபடுத்திக் கூறுவதற்குக் காரணமும் கிடையாது. ஆரியரல்லாத மக்களின் இவ்வரலாற்றை வேறுவழிகளால் அறிந்தெழுதிய சதபதப் பிராமணகாரர் கூற்றின்னயே மாபாரதகாரர் திருப்பிக் கூறியிருக்கின்றர் என்னும் காரணம் மாத்திரம் கூறுதல் அமையும். வேத கால இந்தியா என்னும் நூலுடையார், 'ஆரியர் கதைக ளில் இது இல்லை. அவர்கள் கதைகளில் இது தனியே நிற் கின்றது. இது அசீரியர் இதிகாசத்தினின்றும் எடுக்கப் பட்டதாகலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.%
* முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன் எவராவது இந்தியா வைப் பழைய பாபிலோனியாவோடு இணைக்க எண்ணியிருக்க ԼD Tււ-Ti. இக்கால மொழி ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, மண்டை ஒடு சம்பந்தமான உடற்கடற்று ஆராய்ச்சி, முதலியவை களால் கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன் பழைய சாலதியருக்கும் திராவிடருக்கு மிடையில் வாணிக உறவும் இன உறவும் இருந்தன ’ என்று ரெகோசின் ஆசிரியர் கூறியுள்ளார். மொழி தொட்டர்பான் உறவுக்கு எடுத்துக்காட்டு பொன் நிறை யைக்குறிக்கும் மணு(ணு) என்பது. இப்பெயர் திராவிடர், வேத

தமிழரின் கிளேயினர் 59.
மனு தமிழ் உலகத்தில் தோன்றியிருந்தவர்ாதலா அம் சூரியகுமாரனன அம்மனு மலையமலையில் தவஞ் செய்தமையாலும், சத்திய விரதன் என்னும் அவர் கிருத
ஆரியர், பாபிலோனியர், கிரேக்கர், இலாத்தினியர் என்பவர்களால் வழங்கப்பட்டதாகும். மசிலினைக்குறிக்க பாபிலோனியர் வழங்கிய பெயர் சிந்து. இது சிந்து என்னும் சிந்து ஆற்றின் பெயரினின்றும் உண்டானது. இது சிந்து ஆற்றை அடுத்த இடங்களில் செய்யப் பட்டுத் திராவிடவணிகரால் பாபிலோனிய சந்தைகளுக்குக் கொண்டு செல்லப் பட்டது.
சந்தனக்கட்டை, தந்தம், குரங்கு, மயில் முதலிய இந்தியப் பொருள்களைக் குறிக்க எபிரேய மொழியில் வழங்கிய பெயர்கள் தமிழுக்குரியன வென்று கால்ட்வேல் காட்டியுள்ளார். திராவிட மொழிகளும் சுமேரியமொழியும் ஒட்டுச் சொற்களுடையன. தெல்லோ என்னும் பழைய நகரில் காணப்பட்ட சிற்ப மனித வடிவங்கள் தென்னிந்திய திராவிட மக்களின் வடிவை மிக ஒத்துள்ளன. எச். ஆர். ஹால், சுமேரியமக்களின் தோற்றம் தென்னிந்திய திராவிடமக்களைப்போல இருந்ததெனக் கூறி யுள்ளார். பாபிலோனியாவில் நாகரிகத்தைப் பரப்பியவர்கள் சுமேரியரா? பாபிலோனியரா என்று வரலாற்ருசிரியர்கள் பல வாறு ஆராய்ச்சி செய்வர். சாலதியர் இந்திய நாட்டினின்றும் சென்றவர்கள் என்பதை இக்கால ஆராய்சசியாளர் முடிவு செய்கின்றனர். அவர்கள் செமித்திய உற்பத்தியினர் என்னும் பழைய கோட்பாடு இன்று ஒத்துக்கொள்ளப்பட வில்லை. அபினஸ் சந்திரதாஸ், சாலதியர் தென்னிந்தியாவினின்றும் சென்றவர்கள் எனக் கூறியுள்ளார். பெரிய வெள்ளப் பெருக் கைப்பற்றிய கதை தென்னிந்தியாவினின்றும் மேற்கு ஆசியா வுக்குச் சென்ற தென்பது எல்லாவகையிலும் ஒத்திருக்கின்றது. -The flood legends of the the East-Pof. A. S. Vaidyanatha Ayyer. M. A. L. T.-Journal of the Bombay Historical Society-Vol ii.
குறிப்பு : வைத்தியநாத ஐயர் சதபதப் பிராமணத்திலுள்ள விெள்ளப்பெருக்கைப்பற்றிய வரலாறே தென்னிந்தியாவுக்கு வந்து பின்பு அவ்வரலாறு தென்னிந்தியாவினின்றும் மேற்கு

Page 38
a 60 V பழந் தமிழர்
மாலை என்னும் வையை ஆற்றில் பலியிட்டமையாலும், பாண்டிய அரசரின் இலச்சினையாக்கப்பட்ட தெய்வீக மீன், பாண்டியரின் தலைநகராக வந்த மதுரையிலே தமிழ்ச் சாதியினரின் முன்னுேராகிய மனுவின்முன் தோன்றின மையாலும், மனுவும் அவர் வழி வந்தோரும் தமிழரே
falsT. −
இந்திய மக்களின் பழைய நாகரிகத்தை அறியத் தொடங்குவோர், அதனைச் சமக்கிருத நூல்கள் மூலமாக ஆராய்வது மிகவும் மோசமானமுறை; அறிவுமுறையில் ஆராயப்புகும் ஒவ்வொருவரும் கிருட்டிண கோதாவரி வையை ஆற்று வெளிகளைப்பற்றி ஆராய்தல் வேண்டும். இதை விடுத்துக் கங்கைச் சமவெளிகளில் ஆரம்பித்து ஆராய்வதே நீண்டகால்க் கொள்கையாகி விட்டது.
இந்தியாவின் வடக்கேயுள்ள பிராகூய் (Brahu) மலைத்தொடர் பாரசீக வளைகுடாவிலுள்ள மொன்சு) முனைவரையும் நீண்டிருந்தது. இது பாரதபூமி அல்லது தமிழகத்தின் மேற்கு ஒரமாகும். மேற்கு ஒரத்திலுள்ள பிராகூயர், பலுச்சியர் போன்றவர் இவ்விரு பிரிவினரும் பரத அல்லது தமிழ் வமிசத்தைச் சேர்ந்தவர்களே. பிராகூய் மொழி இந்து ஐரோப்பியமொழிகளில் இரானிய
ஆசியாவுக்குச் சென்றதென டிை கட்டுரையில் குறிப்பிட்டிருக் கின்றர். ஆரியர் இந்திய நாட்டுக்கு வந்தது கி. மு. 2000 என்று சிலரும் கி. மு. 1300 என்று வேறு சலரும் கூறுவர். சதபதப் பிராமணம் கி.மு. 1000 வரையில் எழுதப்பட்ட தெனப்படுகின்றது. வெள்ளப் பெருக்கைப்பற்றிய வரலாறு எழுதப்பட்ட களிமண் ஏடு சுமேரியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. அது கி. மு. 2300-க்கு முற்பட்டதெனப்படுகின்றது. அவ்வாறயின் சதபதப் பிராமணத் தில் இருந்து தென்னிந்திய மக்கள் வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாற்றைப் பெற்றர்கள் என்பது பொருந்த தென்ேக.
l. Cape Monze.

தமிழரின் கிளையினர் 61
கூட்டத்தைச் சேர்ந்த தென்று முன் கருதப்பட்டது. பேராசிரியர் கால்டுவெல் அது தமிழுக்கே இனமாதலை
ஆராந்து காட்டியுள்ளார்.
இதுபோலவே, வேறும் எல்லம் பிரிவினர் மேற்கே சென்று ஐரோப்பாவின் பல பாகங்களிற்றங்கினர். இப் பிரிவினர் கங்கேரியர், பின்னியர், உரோமையின் பழைய ஏற்றுஸ்கானியர் என்போர் ஆவர்.
கால்டு வெல், மாச்ஸ் மூலர் முதலிய பழைய கொள் கையாளர், இந்தியாவின் வடமேற்கு எல்லைவழியாக, மத்திய ஆசியாவினின்றும் புகுந்த ஆரியரால் தமிழரின் மூதாதையினர். துரத்தப்பட்டனர் என்று கூறியுள்ள கொள்கை ஆதாரமற்றது. பேராசிரியர் மக்லீன் 2 தமிழர் இந்தியாவின் வெளியினின்றும் வந்தவர்களானல்அவர் கள் தெற்கில் அல்லது கிழக்கிலிருத்து வந்தவர்க ளாகலாம் எனக்கூறுகின்றர். இது மக்கள் இனத்தின் ஆதி இருப்பிடம், நீருள் மூழ்கிப்போன லெமூரியாக் கண்டம் என்று கூறும் பேராசிரியர் ஹெக்கலின் கொள்கையோடு ஒத்திருக்கின்றது. தமிழரின் இருப்பிடம் எதுவென்று நாம் முற்முக அறியமுடியாமல் இருக்க: வில்லை. இன்று தமிழ் மக்கள் தமது ஆதியிருப்பிடம் எதுவென்று ஞாபகத்தில் வைத்திருக்கிருரர்கள். எல்லாச் சாதியாரின் கன்னபரம்பரைக்கதைகளும் ஒரு மத்திய இடத்தை மக்களின் சுவர்க்கமாகக் கொள்ளுகின்றன. பிராகூயர் தமது ஆதி இருப்பிடம் கெலாப்மலை எனக் கூறுகின்றனர். பின்னியர் தமது ஆதி இருப்பிடம் சுமீர் எனக்கூறுகின்றனர். பாபிலோனியாவிலுள்ள அக்கேடியர்
l. Archaic Etruscans. 2. Dr. Macleane. صبر 3. Mount Helab (Aleppo) in Syria.

Page 39
62 பழந் தமிழர்
தங்கள் இடம் எல்லம்மலை என்றனர். இது இக்கால எல்வொன்ட்? மலையாகும். இது கிழக்குக் கல்தேயாவின் கிழக்குச்சமவெளியில் எழும் ஒருமலை. இந்திய மக்களின் கன்ன பரம்பரைக் கதைகளிலும் புராணங்களிலும் எல் லம் அவர்களின் ஆதி இருப்பிடமெனக் காணப்படுகின் றது. புராணங்களின் படி இளா விருதம் (எல்ல--விருதம்) 1. இது மேல் கல்தேயத்திலுள்ள வோரிடம் Elwond. 2, Present Elwond was believed to be the spot on which the ark had rested, and the cradle of mankindEncyclopaedia Britannica. “LDggy G? Gör GLU6Top GT 6d6dLib மலையில் தங்கியதாயின் மனு, மலைய மலையில் தவஞ்செய்து கொண்டிருந்தாரென்பது பொருந்தாது. சமக்கிருத நூல்கள் கூறும் எல்லம் இலங்கை என்பதே பொருத்தமாகின்றது. சூரிய குமாரனுண மனுவின்பேழை சூரிடின் மலையாகிய சிவன் ஒளி மலையிலே தங்கிய தென்பது மிகப் பொருத்தமானதே. எல்மலை எது என்று விளங்கமாட்டாத வட நூலார் அது மேருவில் உள்ள தென்றனர். இலங்கை மேருவின் சிகரங்களுள் ஒன்று எனப்படுகின்றது. ஆகவே மேருவடக்கே உள்ளதன்று ; தெற்கி லுள்ளதே. இலங்கையிலேயே மனுக்குலம் பெருகிய தென் னும் ஐதீகம் அராபியர், யாவா தேசமக்கள் முதலாயி னேருக்கிடை யில் காணப்பட்டமை ஆராயத் தக்கது. புராணங்களின்படி சூரன் தாரகன் முதலியோர் சலப்பிரளயத்துக்கு முந்தியவர்கள். இராவணன் முதலியோர் இக்குவாகு மரபினர். இராவணன் தமிழ் வேந்தன்.
“The origin of man in Ceylon according to the old tradition is illustrated by the names Adam's peak and Adam's Bridge. The Koran which places the paradise in the seventh heaven says that, “after the fall Aam descended to Ceylon and propagated the human race. It may also be noted that according to some old Javanese manuscripts recently published (Clarendon press) Brahma a descendant of Adam went from Ceylon and colonised Java - ha ' Aryans-A Lecture by the Hon. Mr. K. Balasingam.

தமிழரின் கிளையினர் 63
மேருவில் உள்ளது. விருதம் என்பது சமக்கிருதத்தில் நாட்டை உணர்த்தும், இங்கு பதினெண் கணங்கள் வசித்தினர் என்பது புராண ஐதீகம், பதினெண் கணங்கள் தென்னிந்தியத் தமிழரின் பதினெண் பிரிவுகளாகலாம். இக்கதைகளும் குறிப்புகளும் தமிழரின் ஆதி இருப்பிடம் மத்திய ஆசியாவென்று காட்டவில்லை. மனுவின் பேழை தங்கிய இடம் திருவிதாங்கூர் இராச்சியத்தை அடுத்த மலைய மலை அல்லது வேறன்று.
ஆரம்பத்தில் இமயமுதல் குமரிவரை ஒரே மொழி வழங்கிற்று. ஆரியருக்கு முற்பட்ட தமிழர் பேசிய மொழி அக்கேடிய கல்தேய மொழிகளுக்கு இனமானது. இம்மொழியின் திருத்தமே வடக்கே பாலியாகவும் தெற்கே தமிழாகவும் மாறினவ்ென்று தேயிலர் என்னும் ஆசிரியர் கூறுவர். அநேக கல்தேய சொற்களையும் பொது வழக்கினுள்ள பழைய பாலிச்சொற்கள் பலவற்றை யும் எற்றுக்கொண்டு சமக்கிருதம் உருப்பெற்ற தென்பது அவர் கருத்து.
கால அடைவில் பாலி புதிய ஆரியத்தோடு கலந்து வடஇந்திய மொழிகளைத் தோற்றுவித்தது. தென்னிந்திய மொழி இன்றுவரையும் சுத்தமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தெற்கிலுள்ளோர் தமது மொழியோடு ஆரியச் சொற்களைக் கலப்பது பாவம் என நினைந்து தமது மொழியைத் தூயதாகக் காப்பாற்றி வந்தார்கள்: சமக் கிருதக் கலப்பில்லாத தமிழ் நடையை இன்னும் உலகம் மதிக்கின்றது.
திரண்டபொருள்
இவ்வியலிற் சாட்டப்பட்டுள்ள பல ஆதாரங்களால்,
இந்தியக் குடாநாடு கடலுள் மறைந்துபோன கிலப்பரப்

Page 40
64 பழக் தமிழர்
பின் ஒருபகுதி என்பதும், இங்கு நின்றும் சென்ற மக்களே மெசபெத்தேமியா சின்ன ஆசியா எகிப்து முதலிய நாடுகளில் இராச்சியங்களைக் கோலி நாகரிக வெளிச்சத்தை மேற்குத் தேசங்களிற் பரவச் செய்தார் கள் என்பதும் அங்கை நெல்லிக்கனிபோல் எளிதில் விளங்கக் கிடப்பனவாகும். இன்னும் இக்கூற்றினை வலி யுறுத்தும் பொருட்டுத் 'திராவிட இந்தியா’ என்னும் நூலிற் கூறப்பட்டுள்ள சிலவற்றை ஈண்டு மொழிபெயர்த் துத் தருகின்றேம்.
* துணிவுள்ள தமிழர் பண்டைநாளில் சாவகம் கடாரம் (பர்மா) முதலிய நாடுகளோடு வாணிபம் புரிந்து அவ்விடங்களிற் குடியேறினர். இதுபோலவே கம்பீர மான கடலோடிகள் சிலர் மத்தியதரைக் கடற்கரை நாடு களில் குடியேறி யிருத்தல் கூடுமானதே. சர் யான் மார்சல் என்பார், மொகஞ்சதரோ மக்களின் உயர்ந்த நாகரிகத்தைப்பற்றிக் கூறியபின் துணிந்ததுபோலச் சுமேரியர் மெசபெதேமியாவுக்குப் புதிதாய் வந்தவர்களா யிருப்பின் அவர்களின் நாகரிகத்துக்கு ஆரம்பம் இந்திய நாடாகும், பாபிலோனிய அசீரிய மேற்கு ஆசிய நாடு களின் நாகரிகங்களுக்கு மூலகாரணர் சுமேரிய மக்களே. பி. தி. சீனிவாச ஐயங்கார், இந்தியாவின் புதிய கற்கால நாகரிகம் கடல் வழியாகப் பழைய அசீரியா வரையும் சென்று சுமேரிய நாகரிகமாக மாறினதென்றும், இக்கா லத் தமிழரதும் அக்காலச் சுமேரியாதும் முகவெட்டு ஒற்றுமை தற்செயலாய் ஏற்பட்டதன்று என்றும் புகல் கின்றர். ஹால் என்னும் ஆசிரியர், நாகரிகம் ஆதியில் இந்தியாவில் தோன்றி பாபிலோனியருடையவும் மற்றைப் பழைய சாதியினருடையவும் நாகரிகங்கள் ஆரம்பிப்
பதற்கு மெசபெதேமியாவுக்குச் சென்றிருக்கலாம் எனக்

தமிழரின் கிளையினர் 6S
கருதினர். மனித நூல் ஆராய்ச்சியாளர் ஒருவர் உலகச் திலே முதற்றேன் றிய சாதியினருக்கு இடம் இந்து மாக் கடலுள் மறைந்துபோன தரை எனக் குறிப்பிட்டார். சேர்வால்டர் இரலி என் பார் பெரிய் வெள்ளப் பெருக் குக்குப்பின் மக்கள் பெருகிய இடம் இந்தியா என நவின் முர், சர் யான் இவான்ஸ் என் பார் தென்னிந்தியா மனுக்குலத்தின் தொட்டில் என விளம்பினர். மக்கட் குலங்களைப் பற்றிய ஆராய்ச்சியால் வடக்கிலுள்ளோரும், மத்தியதரைச் சாதியினரும் தென்னிந்தியாவினின்றும் சென்றவர்கள் என நாட்டுதல் வில்லங்கமானதன்று. வரலாறுகளால் அளக்கமுடியாத பழங்காலத்து மனித சின்னங்கள் இக்குடாநாட்டின் மேற்குக் கரைகளிற் கண்டு பிடிக்கப்பட்டன. இங்கு பல் உகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தமது விவேகத்தின் பண்பை மாத்திரமல்லாமல் உடற்கூறின் தன்மைகளையும் உலகிற் பரப்பினர்கள். ஆதலினல் வெள்ளப் பெருக்குக்குப் பிழைத்தவர்களுக்குத் தென்னிந்தியா ஒதுக்களித்த தெனக் கூறுதல் தவரு காது; வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்களுக்குத் தென்னிந்தியாவே தொட்டி லாகும்.”*
* மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள்
ஆன்ற பாண்டிய ரனைவருங் தமிழர், தெற்கட் பஃறுளி யாறு சீர்சால் நற் புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை உரை தமிழ் நாடா வயங்கிய முற்கால் திருவிட மெனும் போதற்குச் சிறந்தது?
-தமிழர் தொன்மை அகவல்-வி. சி.
" Dravidian India, pp.57-61.

Page 41
66 பழந் தமிழர்
*-கிலைபெற் ருேங்குங் தமிழகத்
தாறறிவுடைமைப் பேறு அறு மக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்’.
- வி. சிவஞானயோகிகள்-கருணுமிச்த சாகரம்
இயல் 3 வழிபாடு
மக்களின் அறிவுவளர்ச்சித் தரங்களுக் கேற்ப உலகில் பலவகை வழிபாடுகள் தோன்றலாயின. மக்கள் உயர்ந்த அறிவை அடைந்துள்ள காலத்தும் அவ்வழிபாடுகள் ஆங் காங்கு ஒவ்வோர் இடங்களிற் காணப்படுகின்றன. இறந்தவர்கள், பேய், பாம்பு, விலங்கு, பறவை மரம் போன்ற வணக்கங்கள் இன்றும் பிற்போக்குடைய மக் களிடையே காணப்படுகின்றன. மக்கள் எல்லோரும் மத்திய இடம் ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது எல்லாவழிபாடுகளுக்கும் மேலான ஞாயிற்று வழிபாடு
* உலக மக்கள் எல்லோரிடையும் இவ்வணக்கம் உண்டு. தமிழர் இவர்களைத் தென்புலத்தார் என வழிபடுவர். பழைய ஐதீ கங்கள் விளங்காமல் கெடுகத்தொடர்ந்து வருதலுமுண்டு. இறந்தவர் களுக்கு மேளமடித்தல் கிரியைகளில் மணிகிலுக்குதல் முதலியன பூதபைசாசங்களை ஒட்டுவதற்கு எனத்தெரிகிறது. முந்திய கோக் கங்கள் இன்று மறக்கப்பட்டனவாயினும் பழைய வழக்கங்கள் கிகழ்ந்து வருகின்றன.

வழி பாடு 67
தோன்றி வலிமைபெற்றிருந்தது. மக்கள், மத்திய கூட்டத்தினின்றும் பிரிந்துசென்ற ஞான்று இவ்வழி பாட்டைப் பலவேறு வகைகளில் கைக்கொண்டார்க
ளெனத் தெரிகிறது.
சிவன் சிவன் என்பது சிவந்தவன் என்னும் பொருள் தருவ தோர் தனித் தமிழ்ச்சொல், பண்டையோர் இப்பெயரை ஆதியில் ஞாயிற்றுக்கிட்டு வழங்கினர். ஆகவே ஞாயிற்று வழிபாடே சிவவழிபாடு என்பது இனிது புலனுகும். பரிதியஞ் செல்வற்கு மேற்கு நாட்டு மக்கள் எல், பகல் (Baal) வேல் (Bel) என்னும் பெயர்கள் கொடுத்து மாபெருங்கோயில்கள் அமைத்து வழிபட்டனர். சுயஸ், யூபிதர், கெக்குலிஸ் வணக்கங்கள் இவ்வழி பாட்டினின் றும் எழுங்
தனவே.
எபிரேயரின் பழைய பஞ்சாங் கத்தில் வைகாசித் திங்கள், சிவன் recesse அ என்னும் பெயர் பெற்றிருந்தது. சிரியாநாட்டு மக்களின் எபிரேய மொழியில் எழுதப் ''' பட்ட விவிலிய வேதத்தில் முதலிய நாடுகளிலும் மொசே (கி. மு. 1500) சிவன் வழிபடப்பட்டார். மாதத்தின் ஆரும்நாள் இறைவ னருளிய பத்துக்கட்டளைகளைச் சினய் மலையினின்று பூக் களுக்கு வெளிப்படுத்தினரென்று காணப்படுகின்றது. மொசே காலத்தில் சிவன் என்னும் சொல் மிகப் பழமை
பெற்றிருந்தமை அறியக்கிடக்கின்றது. சின்ன ஆசியா

Page 42
68 பழந்தமிழர்
மெசபெத்தேமியா எகிப்து முதலிய நாடுகளில் சிவன் என்னும் இடப் பெயர்கள் பல காணப்படுகின்றன. எல் சம்பந்தமாக நூற்றுக் கணக்கான பெயர்கள் மேற்குத் தேசங்களில் எப்படிக் காணப்படுகின்றனவோ அப்படியே அங்கு சிவன் சம்பந்தமான பெயருள்ள இடங்கள் முன் இருந்தனவாகலாம்.
எகிப்திலே சிவன் என்னும் பெயருடைய பாலை நிலப் பசுங் தரை ஒன்றுண்டு. இவ்விடம் அமன் யூபிதர் arar னும் தெய்வத்தின் வழிபாட்டுக் குரியது என்று சொல்லப் படு கின்றது. அமன் என்பது எகிப் கியரது பகற்கடவுள். இப்பகற் கடவுள் பிற்காலத்தில் யூபிதர் கடவுளாக மாறியுள்ளது. இத னல் ஆரம்பத்தில் இப்பசுந்தரை யிலே பகல், சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்டதென் அறும், அதனல் அவ்விடம் சிவன் எனப் பெயர் பெற்ற தென்றும் கருத இடமுண்டு.
மெசபெத்தேமியாவில் மத்தானி . யர் என்னும் பழைய பாபி லோன் ம்க்களின் மரபினர் காணப்படுகின்றனர். இவர் கள் வணங்குங் தெய்வங்களுள் ஹபில் சிவா, றபு சிவா என்னும் இருதெய்வங்கள் உண்டு. சிவா என்னும் சொல்
கிதைதி (சின்ன ஆசிய) மக்களின் தந்தைக் கடவுள்
லுக்குப் பொருள் ஒளி எனப்படுகின்றது. சிவன் என்பது “ஞாயிற்றைக் குறிக்கும் என்பது இதனுலும் வலியுறும்.
1. Mandains-Habil ZIVA, Rabbu ZIVA-Encyclopaedia Britannica. 9th.edition.
 

வழிபாடு 69
அமெரிக்காவிலே கொலரடோ ஆற்று முகத்து வாரத்திலுள்ள பீடபூமியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டமையால் அதற்கு முன் னிருந்தே சிவன் என்னும் பெயர் அங்காட்டில் வழங்கிவருதல் அறியப் படுகின்றது. அச் சிவனலயமென்பது உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள { தட்டையான இடமே. இதனல் அம்மலைமுகட்டில் சிவனெனப்பெயர்
பெற்ற பகற் கடவுள் வழிபடப்பட்ட
தெனத் தெரிகின்றது. பகலை உயர்ந்த ଦ୪fମି
பிலே மக்க மலே முகடுகளில் வழிபடுதல்ே ᎧT ᎧᎧ லாப் பண்டை மக்களின் வழக்கமு மாகும். மலையில்லாத இடங்களில் செய் குன்றுகள் மீது ஞாயிற்றின் இலச்சினை வைத்து வழிபடப்பட்டது. *அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கனுவான் அரனுருவல்லனுே’ (திருநா. தேவாரம்) என்னும் தேவார அடிகளும் அருக்கன் வழிபாடும் சிவன் வழிபாடும் ஒன்றே என்பதை வலியுறுத்தும். A. இலங்கையிலே ஞாயிற்றின் ஒளி காலுகின்ற மலைக்கு சிவன் ஒளி மலை என்று பெயர். இப்பெயர் மிகப் பழை யது. மேற்கிலுள்ளவர்கள், பகல், வேல் என்னும் பெயர் களைத் தம் பெயரின் முன்னே பின்னே நடுவோ இட்டு
வழங்கியது போலவே இலங்கை அரசர் பலரும் தம்
1. The focal point was Siva's Grand Temple a half
uare mile of solid rock plateau isolated from the main
land by 9,000 ft. Canyons eroded by rivers some 200,000 years ago.--News Riview-London-Sept, 23-1937.

Page 43
70 பழந் தமிழர்
பெயருடன் சிவன் என்னும் பெயரை இட்டு வழங்கினர். சிவன் ஒளி என்பதில் சிவன் என்பது பகலையே குறித்
தல் காண்க.
ஞாயிறு, உலக மக்கள் எல்லோராலும் வழிபடப்பட்டது.
உலகமக்கள் எல்லோரும் ஞாயிற்றைப் பல பெயர்கள் கொடுத்து வழிபட்டனர். செமித்திய மக்கள் ஞாயிற்றை எல்லென்றும் பெயர்கொடுத்து வணங்கினர். எல் சிவன், பகல், வேல், கெக்குலிஸ்? சுயஸ், யூபிதர் முதலியன ஞாயிற்றுக் கடவுளின் மறுபெயர்கள். எகிப்தியர் அமன், ரா என்னும் பெயர்களால் பரிதியஞ் செல்வனை வழிபட்ட னர். ஆரிய மக்கள் எல்லோரும் ஒளியுடையவன் என் னும் பொருள்தரும் தேவின் 8 என்னும் சொல்லைக் கடவு ளுக்குப் பெயராகக் கொண்டனர். மெக்சிக்கோ, பேரு பிரித்தன் முதல் யப்பான் தேசம் வரையும் ஞாயிற்று வழிபடப்பட்டது. யப்பானிய அரசபரம்பரை ஞாயிற்றி லிருந்து தோன்றியதென்பது ஐதீகம். அவ்வைதீகத்தின் படி யப்பானிய அரசன் வெள்ளைக் குதிரையில் சவாரி செய்கிருன்.
1. All members of the Semitic family of languages have the word ' El or some modification of it-TheismE. Britannica.
2. Zeus had two eyes, placed naturally, and the third upon the forehead. They say that Priam had this bust of Zeus from his ancestor Laomedon...... The third eye of this ancient statue was in the forehead; and it seems that the Hindus have a symbolical figure of the same kind.-S. L. O. A, A and mythology. p., 72-Richard Payne Knight. -
3. Sans—Devas : Lat Deus ; Lith-Diewas ; Old Irish-a. Dia ; Old Norse-— Tivar ; Iran-—Daeva—Prehistoric antiquities of Aryan Peoples-p. 45-Dr. O. Schrader.

வழிபாடு 711
பாபிலோனில் கிப்பூர் என்னும் பட்டினத்தில் பெரிய ஞாயிற்றுக் கோயில் ஒன்று இருந்தது. சின்ன ஆசி யாவிலுள்ள காசியர் சூரியன் என் லும் பெயராலேயே ஞாயிற்றை வழி பட்டனர். அசீரியர், எற்கடவுகளைக் குறிக்க அசுர், பகல் வேல் முதலிய பெயர்களை வழங்கினர். சூரியன் என் னும் சொல்லினின்றும் அசுர், ஆசீ ரியர், முதலிய பெயர்கள் தோன்றின என்பர் வடல் என்னும் ஆசிரியர். எபிரேய மக்களிடையே இவ்வழி ܡܚܝܢܝ -- -- - -- - ܝ கிதைதி (சின்ன ஆசிய) பாடு மிகப் பழமை பெற்றிருந்தது. 1ಕೆ... பகல், வேல், இடப, வழிபாடுகளுக்
.கும் யேகேர்வா வழிபாட்டுக்கும் ܗܝ இடையில் போராட்டங்கள் நிகழ்ந்தமை விவிலிய வேதத்,
தின் பழைய ஏற்பாட்டிற் பல்லிடங்களிற் காணப்படு
கின்றது 2. எபிரேயர் எற் கடவுளை முதிய பகல் என்றும் gait if us do 67 airplli (Old Baal and Young Baal) இருவகையினராக வழிபட்டனர். முதிய பகல், தாடி யுடைய மக்கள் வடிவினராக வழிபடப்பட்டார். பாபி லோனியா எகிப்து சின்ன ஆசியா முதலிய நாடுகளி லெல்லாம், ஞாயிறு நேர் உச்சிக்கு வருங் காலங்களில் ஞாயிறு உதிக்கும் திசையை நோக்கி ஆலயங்கள் கட்டப் பட்டன. சாலமன் கட்டிய ஆலயமும் அவ்வகையினதே. கடவுளைக் குறிக்க முகமதியர் வழங்கும் அல்லா என்னும் கடவுட்பெயரும் எல் சம்பந்தமானதே. எல் என்பது
1. Kassites--A.B.O., T.N.E. p. 20.-R. H. Hall 2. They forsook the Lord and served Baal and Ashtoreth-King I.

Page 44
72 பழந் தமிழர்
அராபி மொழியில் அல் எனத் திரிந்து வழங்கும். எபிரேய மக்கள் தங்கடவுளைக் குறிக்க வழங்கிய யேகோவா என் னும் பெயரும் எல் சம்பந்தமானதே?. இஸ்ர-எல்லர் என்பதில் எல் என்பது எற்கடவுளையே குறிக்கும். இஸ்ர-எல் என்பதற்கு எற் கடவுள் போர் செய்கின் ரு, ரென்பது பொருள்.
ஞாயிற்றுத் தூண் வழிபாடு
மக்கள் பகற்கடவுளின் வடிவாகக் கற்றாண்களை உயர்ந்த இடங்களில் நிறுத்தி வழிபட்டார்கள். இவ்வகை வழிபாடு புதிய உலகம் பழைய உலகம் அடங்கலும் பரவியிருந்தது. எகிப்திய அரசர் பெரும்பாலும் கதிரவன் கோயில்களைக் கட்டி அவைகளில் ஞாயிற் அத் தம்பங்களை நாட்டி வைத்தார்கள். எகிப்திலே, அபுகறப் (Abu Gurab) என்னும் இடத்தில் இவ்வகை ஆலயமொன்று இன்னும் சிதையாமல் காணப்படுகின்றது. பொன்னுலும் மரக கத்தாலும் செய்யப்பட்ட இரண்டு ஞாயிற்றுத் தூண்கள் பினீசியரின் தையர்ப் பட்டினத்தி லுள்ள கெக்குலிஸ் ஆலயத்திற் காணப்பட்டன என்று கொதோதசு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பினீசியர் தாம் சென்று குடியேறிய நாடுகளிலும் இவ்வழிபாட் டைப் பரப்பினர். அவர்கள் சிபிரால்டர் என்னும் இடத்
தில் ஞாயிற்றுத் கம்பம் ஒன்றை நாட்டியிருந்தனர்.
2. No essential distinction was felt to exist between Jehovah and El, any more than between Assur and El; Jehovah was only a special name of El which had become current within a powerful circle and which on the account was all the more fitted to become the designation of national {God-Jehovah-E. B.
1. The word Israel means El does battle.-IsraelEncyclopaedia Britannica. -

வழி பாடு 73
ஆகவே அவ்விடம் இன்றும் *கெக்குலிசின் தூண்கள்’ என்று வழங்குகின்றது. ‘என் சைகிளோ பீடியா பிரித்தானிக்கா’ என்னும் கலைப்பேரகராதியில் இவ்வழி பாட்டைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு: 'ப கற்கடவு ளின் குறியாகத் தூண்கள் உயர்ந்த இடங்களில் கிறுத்தப் பட்டன. தொடக்கத்தில் இத்தம்பங்கள் மரத்தோடு தொடர்பு பட்டிருந்தன. வழிபடுவோன் கடவுளைக்கண்ட புனித இடத்தை உணர்த்துவதாக மரம் இருந்தது.’ தென் னிந்திய ஆலயம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மரம் ‘தல விருட்சம்’ எனச் சிறப்புப் பெற்றிருத்தல் காண லாம். ஆபிரிக்காவிலும் அமெரிக்காவிலும் எகிப்திய சமாதிகள் போன்று எழுப்பப்பட்ட பெரியசெய் குன்று கள்மீது சூரிய சந்திரக் கடவுளேர் வழிபடப்பட்டனர். அவ்வகைச்செய் குன்றுகள் பல இன்றும் காணப்படுகின் றன. பேபெல் (Tower of Babel) கோபுரமென்ப்தும் இவ்வகையினதே. பிற்காலத்தில் 'மாருட்டம் கொடுத்த கோபுரம்' என்னும் பெயர் அதற்கு வழங்கப்பட்டது.
கிறித்துவ மக்கள் ஞாயிற்று நாளைத் தூய நாளாகக் கொள்ளும் வழக்கம் பகல் வழிபாடு காரணம் பற்றியதே. பழைய எபிர்ேய மக்கள் பூரணை அமாவ்ாசிக் காலங்களிற் போலவே ஞாயிற்றுக் கிழமையிலும் ஆலயங்களிற் பலி செலுத்தி வந்தார்களாதலின் ஞாயிற்றுக் கிழமை யின் முதன்மை சூரிய வழிபாடு காரணம்பற்றியது.?
l. At Tyre as among the Hebrews, Baal had his symbolical pillars, one of gold and smaragdus, which transported to the further west and still familier to us as the pillars of Hercules.--Baal-E. Britannica.
2. Sabath might have come from Sun worship---- Sabath-Encyclopaedia Britannica.

Page 45
74. பழங் தமிழர்
சிலுவைக்குறி, சுவாத்திகக் குறிகள் என்பன ஞாயிற் றைக் குறிக்கும் அடையாளங்களாகும். இவை கிறித்து வுக்கு முற்பட்ட காலக்தொட்டு ஞாயிற்றின் குறியாக மேற்கு நாடுகளிலும் கிழக்கு நாடுகளிலும் வழங்கின. சுவாத்திகம் என்பது சிலுவைக் குறியின் வளைவே. மொகஞ்சதரோ முத்திரைகளில் சுவாத்திகக் குறிகள் காணப்படுகின்றன.
முருக வழிபாடு
எபிரேய மக்கள் பகற்கடவுளை முதிய பகல், இளைய பகல் என்னும் இரண்டு வடிவினராக வழிபட்டனரென்று முன் கூறியுள்ளோம். முருகன் என்பதற்கு இளையவன் என் பது பொருள். இளஞாயிறே முருகன் எனப்பட்டதென் பது தமிழ்நாட்டில் வழங்கும் ஐதீகம், திரு. வி. கலியாண சுந்தர முதலியாரின் முருகன் என்னும் நூலில் காலையில் ஆதவ்ன் கடலிற்றேன்றுங் காட்சியே மயில்மீதெழுந்தரு ளும் முருகனக வருணிக்கப்பட்டிருக்கின்றதெனக் கூறப் பட்டிருத்தல் ஈண்டு கருத்தில் வைக்கத்தக்கது. இவ்வழி பாடு கிரேக்க நாட்டில் LDTřsi)” (Mars) வழிபாடாக மாறிற்று. இவ்விளங்கடவுள் போர்க் கடவுளாகிக் கையில் வேல் பிடித்தமையின் வேலன் எனவும் பெயர் பெற்றிருக் கலாம். மோசஞ்சதரோவில் ஞாயிற்றுக் கடவுள் ஆற
1. The sacred symbols of the Hittites also, iucluding the true cross or the Sun-cross or the Red-cross of St. George of Cappadocia and England and St. Andrews cross are identical with the Sun-cross of Sumerians, Trojans and ancient Britons as displayed in my comparative plates of these crosses-–and their grave amulets bear the sacred cup mark skript with invocations to the same devinities as the Sumerians, Trojans and the earliest Britons.--The makers of civilization-p. 16-Waddell.

வழி பாடு 75。
கதிர்களைப் பரப்புகின்றதாகவும் ஒவ்வொரு கதிருக்கு நேரிலும் ஒவ்வொரு தலை இருப்பதாகவும் உள்ள தாயத்து ஒன்று காணப்பட்டது. இதிலிருந்தே முருகக்கடவுள் ஆறு தலையுடைய ஆறுமுகக் கடவுளாகத் தோற்ற மளித்தார் எனக் கருத இடமுண்டு. சிவ வழி பாட்டைத் தலைக்கொண்ட சூரன் முதலிய அசுரருக்கும் ஆறுமுகக் கடவுளுக்கும் நேர்ந்த போர் என்பது முருக வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாத அசுரருக்கும், முருகவணக்கத்தை யுடைய இன்னுெரு கூட்டத்தினருக்கும் நேர்ந்தபோர் Ց56ff IT கலாம். இறுதியில் வேலாற் பிளவுண்ட சூரனது யாக்கை மயிலும் சேவலுமாகி ஆறுமுகக் கடவுளைத் தாங்கியும், அவர் வெற்றியிணைப்புகன்றும் நின்றதெனப் புராணங் கூறுதல் ஆராயத்தக்கது. பகல் வணக்கம் யேகோவா வணக்கங்களுக்கிடையில் இவ்வகைப் போர் நிகழ்ந்த துண்டு.
முருகக்கடவுள் வள்ளியம்மை என்னும் வேட்டுவ மாதை மணந்துகொண்ட வரலாறும் ஆராயத்தக்கது. தொல்காப்பியத்தில் ‘கொடிநிலைகந்தழி வள்ளியென்ற - வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்-கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே” எனவரும் குத்திரத்திற் சொல்லப்படும். வள்ளி என்பது திங்களைக் குறிக்கு மென்ப, அவ்வாறயின் சந்திரவணக்கத்தையே ஒரு காலத்திற் கைக்கொண்டிருந்த குறவர், முருக வணக் கத்தை ஏற்றுக்கொண்ட வரலாறே இவ்வாறு உருவகப் படுத்திக் கூறப்பட்டிருத்தலுமாகலாம், இது ஆராயத் 1. சிந்து வெளிநாகரிகம்-பக், 216. கடவுளுக்கு ஆறுமுக முண்மையின் அறுவகைச் சமயங்கள் தோன்றி யிருக்கலாம்.” இது சூரியன் எட்டு வீடுகளிற் றங்கிய காலத்தில் வணங்கப்பட்ட எட்டு வடிவங்களே பின் அட்ட மூர்த்தங்களாயின எனக் கருதட் படல் போன்றதாகும்.

Page 46
76 பழந்தமிழர்
தக்கது. குறப்பெண்கள் ஆடும் ஒருவகைக் கூத்தும் வள்ளிக்கூத்தெனப்படும்,
தாய்க்கடவுள் வழிபாடு
உலகில் ஆதியில் தோன்றிய வழிபாடு தாய்க்கடவுள் வழிபாடென்பது மக்கள் வரலாற்று நூலார் முடிவு. ஒரு காலத்தில் மக்களுக்கிடையில் நிலையான திருமணங் கள் இல்லாமல் இருந்தன. அக்காலத்துத் தாய் பெறுகின்ற குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமா. யிருந்தன. தந்தைக்குப் பிள்ளைகளிடத்தில் உரிமை இல்லை. ஆகவே தாயிடத்திலே எல்லா வகையான அதிகாரமும் இருந்தது. பிள்ளைகள் தாயைச் சூழ்ந்து இருந்தார்கள். அவர்கள் தாயைப் போன்ற எல்லா வல்லமையும் அதிகாரமு முடைய வடிவில் கடவுளை வைத்து வணங்கினர்கள். தாய்த் தெய்வத்திற்கு விலங்குகளுக்கு அரசனுகிய சிங்கம் 1. இவ்வகை வழக்கம் ஓர் திருந்தாத சில மக்களிடை இன்றும் காணப்படுகின்றது. இவ்வகை வழக்கம் இன்றும் மலே யாள தேசத்தில் இருக்கின்றது. **இந்திய நாகரிக வளர்ச்சியில் திராவிடரின் பகுதி” என்னும் நூலில் சிலாற்றர் என்னும் ஆசிரியர் கூறியிருப்பதை இங்கு மொழிபெயர்த்துத் தருகின்ருேம். 'மலையா ளத்திலுள்ள 57யர் சாதியினருக்கிடையில் காணப்படும் திருமணத் தொடர்பு சம்பந்தம் எனப்படும். பெண், தான் விரும்பிய எந்த5ேரமும் இத்தொடர்பை வெட்டிவிடலாம்; பின்பு அவள் இன் ைெருவனேடு சம்பந்தத்தொடர்பு வைத்திருக்கலாம். அவனுக்கு ஒருவகையான கட்டுப்பாடும் கிடைாது. மலேயாளத்தில் பெண், தனது த7ர்வாட்டில் இருக்கிருள். அவள் இருக்கும் இடத்துக்கு காதலன் செல்கிறன். சில சமயம் காதலன் அவ்விடம் செல்ல 7 மலே கழுவிவிடுகிருன்; அல்லது அவள் அவனே அங்கு வருதல் கடாதென அறிவித்தல் கொடுக்கிறுகள். இவ்வாறு சம்பந்தம் குலேந்துபோகிறது. பிள்?ளகள் தாய்க்குச் சொந்தமானவை. தந்தைக்கு அவர்களைப் பாரமரிக்க வேண்டிய கடமை இல்லை. அவனுக்குத் தனது குடும்பத்திலுள்ள சாகோதரிகளின் பிள்rை களேப் பராமரிப்பதே கடமை." (இவ்வகை வழக்கம் சிங்கள் மக்களிடையும் காணப்பட்டதென அறிகிருேம்.)

வழி பாடு - 77
வாகனமாக்கப்பட்டது. அக் காலம் வழங்கிய ஆயுதங்களில் சிறந்த சூலம் தண்டு வாள் முதலியன அவளுக்கு ஆயுதங்க ளாக்கப்பட்டன. தாய்த் தெய்வமே போர்த் தெய்வமாக வும் விளங்கினுள். சின்ன ஆசியா எகிப்து கிரேத்தா முதலிய நாடுகளில் இவ்வகைத் தாய்த்தெய்வ வழிபாடே எல்லா வழிபாடுகளுக்கும் மேலாக விளங்கிற்று. கிதைதி தேசத்தில் சிங்க வாகனியாகிய தாய்த்தெய்வ வடிமம் பொறித்த பழைய நாணயங்கள் காணப்
பட்டன.
திங்கள் வழிபாடு
பகல் வழிபாடு தோன்றியபின் திங்கள் வழிபாடு மக்களிடையே தோன்றிப் பர்விற்று, பகலைத் தம்ப வடிவில் வழிபட்ட மக்கள் திங்களை மரங்கள் வாயிலாக வழிபட்டனர். ஞாயிற்று, திங்கள் வணக்கங்கள் யூத மக்களிடையே பகல் (Baa1) அஸ்ரொரெத் (Ashtoreth). வணக்கங்களாக வழங்கின. காலத்தில் பகல், ஆண்தெய்வ மாகவும் திங்கள் பெண் தெய்வம்ாகவும் கொள்ளப்பட்டுத் திங்கட் கடவுள் சூரியக் கடவுளின்-பாரி ஆக்கப்பட்டது, பின்பு, இயற்கையிற் காணப்படும் ஆண்தன்மை பெண் தன்மைகளின் சின்னங்களாகச் சூரிய சந்திரர் கருதப்பட லாயினர். மரத்தின் கீழ் ஞாயிற்றுத் தம்பங்களை வைத்து வணங்கும் முறை அம்மை அப்பர் வணக்கமாக அமைதல் காண்க. இவ்வழிபாடுகள் காரணமாக பழைய அரச பரம்பரைகள் சந்திர வமிசம் சூரிய வமிசம் என்னுப் பாகு, பாடு பெற்றிருந்தன. சாலமன் கட்டிய ஆலயத்திற்கு முன் இரு பெரிய துண்கள் கிறுத்தப் பட்டிருந்தன.
ܫܘ
1 Baal the male principle was associated with Ashera, the female principle in nature-Baal. E. B.

Page 47
78 பழந் தமிழர்
அவை திங்கள் ஞாயிற்று வழிபாட்டிற்குரிய சின்னங்களா கும் என ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அங்கி வழிபாடு
திங்கள், ஞாயிற்று வழிபாடுகளைப் போலவே தீ வழி பாடும் உலகில் புகழ்பெற்று விளங்கிற்று. சுமேரியா எகிப்து, சின்ன ஆசியா முதலிய இடங்களில் தீக் கடவு *ளுக்கு ஆலயங்கள் இருந்தன. நோவாவின் காலாம் சந்ததி யில் வந்த கிம்ரொட் என்பவனல் அங்கி வழிபாடு ஆரம்பிக் க்கப்பட்டதென விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடு கூறு கின்றது. ? இவ்வழிபாடு பாரசீகத்தில் சொராஸ்ரர் என்ப வரால் (கி.மு. 700?) நாட்டப்பட்டது. அங்கி வழிபாட் டூக்குரிய அரசர் தாம் அக்கினி வமிசத்தினர் என்றனர். இந்திய நாட்டில் இவ்வழிபாடு தொன் மையே உள்ளது. ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளியுடைப் பொருள்களால் மக்கள் இறைவனை வழிபட்டார்கள். இவைகளின் வடிவில் அமைத்த (வட்டம், பிறை, முக் கோணம்) குண்டங்களில் தீ வளர்த்து இறைவனை வழி படுதல் பண்டையோர் வழக்கு. வேதங்களுக்கு மாறு பட்டனவும், தமிழர்களின் பழைய கடவுட் கொள்கை, ஆலய அமைப்பு, வழிபாட்டு முறைகளை விளக்குவனவு மாகிய ஆக மக்கிரியைகளோடு இம்முத்தீ வழிபாடு தொடர்பு பெற்று கிற்றல் கருத்தில் ஊன்றிப் பார்க்கத் தக்கது. - -
2 * This was the fouth generation after the flood, for Nimrod was the son of Cush the son of Ham, the son of Noah. Nimrod is supposed to have introduced the worship of fire and heavenly bodies. He is known as ಸ್ಟ್ರೀa (the Sun, Orion, Attorus.)-Scripture History
• 2ة ه0

வழிபாடு 79
இலிங்க வழிபாடு
இறைவனிடத்தில் ஆண் தன்மை பெண் தன்மை என்னும் இரு இயல்புகள் இருத்தலை அறிந்த மக்கள் அவரை அம்மை அப்பர் வடிவில் வழிபடலாயினர். அம் மையை உணர்த்தப் பெண் வடிவுச்சிலைகளும், அப்பரை உணர்த்த ஆண் வடிவுச் சிலைகளும், அமைக்கப்பட்டன. இவ்வழக்கு, ஆண்வடிவை உணர்த்த ஆண் குறியும், பெண் வடிவை உணர்த்தப் பெண் குறியும், சமச்கும் வழக் காசு மாறிற்று. (அக்காலத்தவர்கள் இவ்வாறு செய் வதை இடக்கராகக் கருதிற்றிலர். இக்காலம் பெண்கள் மார்பை மூடிக் கொள்ளாதிருப்பது நாகரிகமன்றெனக் கருதப்படுமானுலும் இக்காலத்தும் திருத்த மிக்க பாலித் தீவு, மலையாளத்தின் சில பகுதிகளில் மகளிர் மார்பை மறைப்பதில்லை. இது மக்கள் மன நிலையைப் பொறுத் தது. இன்றும் மேல் நாடுகளில் ஆடையின் றியிருப்பதே சிறந்த முறை எனக்கொண்டு கிர்வாண சங்கங்கள் கிறுவி மக்கள் கிர்வாணமாக வாழ்ந்து வருதலைப்பற்றிக் கேள்வி யுறுகின்ருேம்.) இவ்வகைச் சின்னங்கள் மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களிற் காணப்பட்டன. இறை வன் ஆண் தன்மை பெண் தன்மை என்னும் இரு இயல்பு களும் ஒருங்கு அமையப் பெற்றவர் என்பதை உணர்த்த இறைவனைப் பாதி பெண் வடிவாகவும் பாதி ஆண் வடிவா கவும் வைத்து வழிபடுதலின் சுருக்கமாக (முன் கூறப் பட்ட) ஆண்குறி பெண்குறி இலச்சினைகள் இணைக்கப் பட்டன. இது சத்திசிவ வணக்கம் அல்லது இலிங்க வணக்கம் எனப்படும். இவ்வழிபாட்டிற்கு ஆரம்பம் ஞாயிற்று, திங்கள் வணக்கங்களே. . இவ்வழிபாடு உலகம்
1. Baal-as the Sun-God is conceived as the male principle of life and reproduction in nature. Baal.

Page 48
80 பழந் தமிழர்
முழுமையிலும் ஒரு காலத்திற் காணப்பட்டது. மேற் குத் தேசங்களிலும் கிழக்குத் தேசங்களிலும் நீண்ட கற் கள் சமாதிகளின் மீது நிறுத்தப்பட்டன. இவை இலிங் கங்களாகவே கருதப்பட்டன. இக்கற்கள் தீமைகளைப் போக்கும் மகிமையுடையன என்று மக்கள் நம்பினர்கள். இலிதியா தேசத்தில் அலியா தீஸ் என்பவரின் சமாதியின் மீது ஒன்பதடிக் குறுக்களவுள்ள இலிங்கக்கல் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கின்றது. சமாதிகளின் மீது இலிங் கக்கல் நடுவது பெரும்பாலும் உலக முழுமையிலும்
காணப்பட்ட வழக்கு.
இடப வழிபாடு
வழிபாடு இந்தியாவில் ஆரம்பித்துக் لLL (ي கிரேத்தா சின்ன ஆசியா பபிலோனியா முதலிய நாடுகளி
Himself was represented on the high places not by an image but by obelisks or pillars. There is reason to believe that the symbols in their earlier form of the sacred tree and the sared stone, were nothing specially appropriated to Baal worship, but where the mark of sanctuary memorial of places were the worshipper had found god, while the stone pillars also was a premitive altar. However they came to be looked upon as phallic symbols, appropriate only to sensual nature worship and as such were attacked by prophets.-Baal. E. B.
1. Phallic emblems for averting evil were plentiful; even the summit of the Tomb of the Alyattesis crowned with enormous one of stone about 9 feet in diamaterLydia—E. Britannica.
The method of erection of these monoliths is very important as it throws some light on the erection of prehistoric monoliths in other parts of the world where the practice of erecting rough stones still continues. The origin of the above cult is uncertain, but it appears that it is mainly important to this Mon.Khamar intrusien in the East in his opinion (Dr. J. H. Hutton) the erection. of these Monoliths takes the form of Lingam and Yoni '-'. Pre-Aryan and Pre-Dravidian-p. XVII.

வழிபாடு 8.
லெல்லாம் வியாபக மடைந்தது. மொசே, இஸ்ர எல்லர் வணங்கிய பொன் இடபத்தை உடைத்தெறிந்த வரலாறு விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின் றது. எகிப்தியர் ‘அப்பிஸ் ' எனப்பட்ட தூய வெள்ளை இடபத்தை வணங்கினர்கள். மேற்கு நாடுகளிலுள்ள இடபங்களுக்கு இமில் இல்லை. இமிலுள்ள இந்திய இட பம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் சின்ன ஆசியா பாபி லோன் முதலிய இடங்களிற் கானப்பட்டமையின் இடப வழிபாடு இந்தியாவிலிருந்தே மேற்கு நாடுகளுக்குச் சென்றதெனத் தெரிகிறது. -
நாக வழிபாடு நாக வழிபாடு பகல்வழிபாடு போலவே உலகம் முழு
மையிலும் வியாபகம் பெற்றிருந்தது. இவ்வழிபாட்டின் தொடக்கம் எவ்வகையினது என்று துணிதல் கூடவில்லை.
l. The mystic Baccus, or generative power was represented under this (bull) form not only upon the coins but also in the temples of Greeks; sometimes simply as a bull; at others with a human face; and at others entirely human. except the horns or ears. The age too is varied; the bull being in some instances quite old and in others quite young and the humanised head being sometimes bearded and sometimes not. The Chinese have still a temple. called the palace of the horned bull, and the same symbol is venerated in Japan and all over Hindustan. In the extrimity of the west it was also once treated with equal honour; the Cimbrians having carried brazan bull with. them, as the image of their god when they overrun Spain and Gaul, and the name of the God Thor, the Jupiter of the ancient Scandinavians signifying in their language a bull as it does like wise, in Phoenician and Chaldean. Their neighbourers the Arabs appear to have worshipped their God under the same (bull) image-Symbolical L. O. A. and
mythology-pages 18, 19, 20.

Page 49
82 பழந் தமிழர்
உலகின் பல பாகங்களில் கூட்டங்களாக வாழ்ந்த மக்கள் - விலங்கு பறவை முதலியவைகளில் யாதோ ஒன்றைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இதனை ஆங்கில மொழியில் தேர்தெம்’ (Totem) என வழங்குவர். மயூரர், நாகர், லம்புக் கர்ணர், கருடர், முதலிய பெயர் கள் இதற்கு உதாரணமாகும். இக்குலங்களுக்குரிய விலங்குகளும், பறவைகளும் அவ்வம் மக்கட் கூட்டத்தின ரால் புனிதமுடையனவாகக் கருதப்பட்டன; அவை களின் உருவங்கள் கொடிகளிலும் தீட்டப்பட்டன. ஆகவே ஒவ்வொரு கூட்டத்தினரும் ஒவ்வொரு கொடி யுடையவர்களாயிருந்தனர். ஆதிமக்கள், மொழியை ஒவியமுறையாக எழுதினர். கட்புலனகும் பருப்பொருள் களை விளக்க அவ்வப் ப்ொருள்களின் வடிவங்கள் எழுதப் பட்டன. கட்புலனுகாத வீரம், கோபம், தந்திரம், அறிவு முதலியன போன்ற மனத்தோற்ற மளவிலுள்ள பொருள்களை விளக்க அவ்வக் குணங்களமைந்த உயிர் களின் வடிவங்கள் எழுதப்பட்டன. விவேகமின் மைக்கு ஈயின் உருவமும், விடாமுயர்ச்சிக்குத் தேனீயின் உருவ மும், வெற்றிக்குக் கருடனும் இன்னும் மற்றைக் குணு திசயங்களுக்கு மற்றை உயிர்களின் உருவங்களும் அறி குறிகளாக வழங்கி வந்தன. இன்னும் அக்காலத்தவர் குணுதிசயங்களை உணர்த்தும் இரண்டு அல்லது பல வற்றின் உறுப்புக்களை ஒன்றுகக் கலந்து ஓர் உருவ ப மைத்து அதை ஒரு பொருளுக்கு அறிகுறியாகவும் ஒழங்கி வந்தார்கள். எடுத்துக்காட்டாகக் கருடனின் பாம்பின் உடலையும் ஒன்முகச் சேர்த்து ஒரு و فt+لاللا (oتنامهٔ تر 32. Kuba), L.Dırâ95 எழுதி அதைக் கடவுளுக்கும் அவரோடு கலக்
' - 2. லம்பு என்பது ஆடு. இலங்கை மக்களின் ஒரு பிரிவினர் லம்புகர்ணர் எனப்பட்டனர். W

y
வழி பாடு 83
துள்ள இவ்வுலகத்துக்கும் அறிகுறியாக வழங்கி வந்தார் கள். இவ்வகைக் கருத்தமைப்பு ஒவியங்களிலிருந்தே பண்டை மக்களின் பழைய தெய்வங்களும், இருடியரும் விலங்குகள், பாம்புகளின் உறுப்புக்களுடையவர்களாகச் சித்திரிக்கப் படுகின்றனர் எனக் கருதலாகும்.
*.
பண்டை மக்கட் கூட்டத்தினர் ஒவ்வொருவரும் தம்மிடத்திற் காணப்பட்ட முக்கிய சன்மை ஒன்றை விளக்க ஒவ்வோர் அடையாளமாகிய ஓவியத்தை வழக்கி யிருக்கலாம். அவை பிற்காலத்தில் அம்மக்களால் வழி பாட்டுக்குரியனவும் ஆயின என்று கூறுதல் ஏற்றதாகத் தெரிகிறது. பாம்பு வணக்கத்தின் ஆரம்பமும் இதுவா யிருக்கலாம். இது ஆராயத்தக்கது. W
2மொசேயாற் செய்யப்பட்ட வெண்கலப் பாம்பு யேகோவாக் கடவுளின் சின்னமாக வழிபடப்பட்டது. 8ஒல்ட்ஹாம் என்னும் ஆசிரியர் நாக வணக்கத்தையும் ஞாயிற்று வணக்கத்தையும் ஆார்ய்ந்து சிறந்த நூல் ஒன்று வெளியிட்டுள்ளார். அது நாக வணக்கத்தைப் பற்றி மாத்திரமன்று தமிழ் மக்களைப் பற்றிய அரும்பெரும் கருத்துக்கள் சிலவற்றையும் விளக்குகின்றது. நமது,
1. எகிப்தியரால் வணங்கப்பட்ட விலங்குத் தல்ைகள் உள்ள தெய்வங்கள் அம்மக்கட் கூட்டத்தினரின் குலக்குறிகள் (Totem) என ஒல்ட்காம் என்னும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது மிகப் பொருத்தம "கத் தெரிகிறது. --
2. Mosses himself is said to have made a brazen serpent which down to Hezakil's time continued to be worshiped at Jerusalame as an image of JehovahIsrael—E. Britannica.
3. The sun and the serpent-chapter X-XI-C. F. Oldham.

Page 50
84. பழந் தமிழர்
ஆராய்ச்சிக்கு இன்றியமையாத அதன் சில பகுதிகளை ஈண்டு தருகின்றேம்,
* இந்திய நாட்டில் படமுள்ள நாகம் பகல் வணக்கத் தோடு தொடர்பு பெற்று வருகின்றது. அது ஞாயிற்றி னின்று தோன்றியவர்களெனச் சொல்லிக்கொள்ளும் மக்கட் கூட்டத்தினரின் குல இலச்சினையாகும். நாக குலத் தலைவர் மரணத்துக்குப்பின் பகற் கடவுளர்கவோ, பிற தெய்வங்களாகவோ வணங்கப்படுகின்றனர். அவர் கள் உருவச்சிலைகளைப் பாம்புகளின் விரித்த படங்கள் கவிந்து காத்து கிற்கின்றன. சூரியகுல அரசர், ஞாயிற்றுக் கடவுளாகவே வாழ்க்கைக் காலத்தில் மக்களால் வழிபடப் பட்டனர். எங்கெங்கு பகல் வணக்கங் காணப்பட்டதோ அங்கெல்லாம் படமுடைய பாம்பு புனிதமுடையதாகக் கருதப்பட்டது. இந்தியாவிற் காணப்படுதல் போலவே ஞாயிற்றை வழிபடும் நாடுகளிலெல்லாம் நாகம் வழிபடப் பட்டது. சீன, பேரு, ஆபிரிக்கா முதலிய நாடுகள், ஒன்றிலிருந்து ஒன்று மிகவும் தொலைவில் இருக்கின்றன. இந்நாடுகளின் இவ்வழிபாடுகள் மற்றைநாடுகளின் சம்பந்த மில்லாது தனித்துத்தோன்றின என்று கூறுதல் முடி யாது. இவ்வணக்கமுறை இந்நாடுகள் ஒன்றிற் காணப் படுவது போலவே மற்றை நாடுகளிலும் காணப்படு இன்றது. ஆகவே, ஞாயிற்றுக் குலத்தவர் என்று சொல்லிக் கொண்ட ஒரு குலத்தவர்களுடைய மத்தியிலிருந்தே இவ் வழிபாடுகள் பரந்து நானுதிசைகளிலும் சென்றிருத்தல் வேண்டும். உலகம் முழுமையிலும் நாகம் புனித முடைய தாகக் கொள்ளப்பட்டது. ஆமையும் இவ்வாறே கருதப் .Jلاقے سے نکالL
வரலாற்றுக்கால ஆரம்பத்தில் 1ாம்பு பகல் வழிபாடு கள் நன்முக வளர்ச்சி யடைந்திருந்தன. மிகப் பழங்,

வழி பாடு 85
காலத்தில் யூபிராதசுக்கும் சிந்துநதிக்கு மிடையில் இவ் வழிபாடுகள் ஒங்கியிருந்தன. அகிக்கும் ஆரியருக்கு மிடையில் போர் நடந்ததென வேதங்களிற் சொல்லப் படும் வரலாறு நாகசாதியினருக்கும் பாரசீகருக்கு மிடை யில் நேர்ந்த போர்களே. பழைய மீதியாவிலுள்ள எசிதி யர் (Yezidis) இன்றும் உதயகால ஞாயிற்றை வணங்கு கின்றனர்; ஆலயங்கள்மீது பாம்பு வடிவங்களை அமைக் கின்றனர். பாபிலோனியாவிலும் அதனை அடுத்த நாடு களிலும் பண்டை நாட்களில் ஞாயிற்று, பாம்பு வழிபாடு களே இருந்தன. பாபிலோன் மக்களின் ஆதித்தெய்வங்க ளுள் ஒன்று ஈஆ (Ea); இது ஏழு தலை நாக வடிவுடையது. சாலகிய மக்கள் கிஆ அல்லது ஈஆ (Hea or Ea) வையும் அவரது புதல்வன் மார்டுக்கையும் (Marduk) காத்தற் கடவுளராக வழிபட்டனர். சாலதியரின் மனுவுக்குப் பெரிய வெள்ளப்பெருக்கைப்பற்றி எச்சரிக்கை கொடுத் தவர், ஈஆக்கடவுளே. ஈஆ இதனைத் தன் அமைச்சனுக் குக் கூற அவன் அதனைச் சூரிபாக் என்னும் சாலதிய மனுவுக்கு நவின்றன். ஈ.ஆ என்னும் தெய்வவணக்கம் மிக விரிவடைந்திருந்தது. மித்தனி மன்னன் துஷ்ரதன் மூன் ரும் அமனுேபிசு என்னும் எகிப்திய அரசலுக்கு விடுத்த திருமுகத்தில் பல தெய்வங்களுக்குத் துதி கூறியிருக்கி முன். அத்துதியில் ஈஆ எல்லா மக்களதும் கடவுள் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பாம்பு செமித்திய மக்களின் குலக்குறியாகப் புலப்படவில்லை. அக்கேடிய சுமேரிய வணக்கங்களோடு அவர்கள் இதனையும் பெற்ருர்களெனத் தெரிகிறது. நபுசட்நேசர் என்னும் பாபிலோனிய வேந்தன் மார்டுக் என்னும் பகற்கடவுளின் கோயில்வாயில்களில் தான் நச்சுப்பாம்புகளின் சிலைகளை வைத்தமையைப்பற்றிக் கூறுகின்றன். காஸ்பியன் கடலுக்குத் தெற்கிலும்

Page 51
86 • பழக் தமிழர்
மேற்கிலுமுள்ள நாடுகளிலும் துரானிய மக்களிடையும் பாம்பு, ஆதவ வழிபாடுகள் காணப்பட்டன. காசியர் (Kassite) என்னும் சின்ன ஆசிய மக்களின் ஆதவக் கடவுளுக்குச் சூரியாஷ் என்று பெயர். இது சூரியன் என்னும் சொல்லோடு ஒற்றுமையுடையது. அசீரிய பட்டையங்களில் சூரியா என்னும் ஒரு தெய்வத்தின் பெயரும் காணப்படுகின்றது. சாலதியப் பாடல்களில் சொல்லப்படும் தலயாத்திரைகள், சோலைகளில் அமைக் கப்பட்ட ஆலயங்கள், வேட்டையாடிய விலங்குக் கொம்பு களால் ஆலயங்களை அலங்கரித்தல் முதலியவை போன் றவை, இமயமலையிலுள்ள ஞாயிற்று, பரம்பு வழிபாட்டின ராகிய மக்களிடையே இன்றும் காணப்படுகின்றன.
இந்திய சூரிய குலத்தையும் காஸ்பியனுக்குத் தெற் கேயுள்ள மக்களையும் இணைப்பதில் வெள்ளப் பெருக்கு வரலாறும் ஒன்ருகும். இவ்வரலாறு அசுரரால் பாதலத்தி லிருந்து கொண்டுவரப்பட்டது. சலப் பிரளயம் கிகழ விருக்கும் செய்தி இக்குவாகு வமிசத்தவரும் சூரியனின் புதல்வருமாகிய மனுவுக்கு அறிவிக்கப்பட்டது. மனு வுக்கு வெள்ளப் பெருக்கைக் குறித்து எச்சரிக்கை செய் தலில் மீன் சம்பந்தப்பட்டிருத்தல், மீன் பேழையைக் கட்டும்படி அறிவித்தல் போன்றவை, சாலதியர் ஈ.ஆ என்னும் தெய்வத்தைச் சம்பந்தப்படுத்திக் கூறும் வெள் ளப் பெருக்கு வரலாற்றை ஒத்திருக்கின்றன. *ஆ என்னும் தெய்வம் மீன் வடிவிலும் பாம்பு வடிவிலும் வணங்கப்பட்டது. சதபதப் பிராமணத்தில் சலப்பிரள
l. “Ishvaku, too from whom many solar dynasties claim descent was a Rajah of Patala. As Sakya Baddhah was of solar-race and a descendant of Ishvaku Buddhists were much intrested in these dynasties - Sun and the Serpent-p. 56-Oldham.

够
வழி t_JT (b) - 87
யத்தைப்பற்றிக் கூறுமிடத்து இடங் குறிக்கப்படவில்லை. மனு தனது காலை வழிபாட்டைச் செய்துகொண்டிருக் கும்போது ஒரு மீன் அவரது கையில் வந்தது. அம் மீன் “என்னைக் காப்பாற்று நான் உன்னைக் காப்பேன்; ஒரு வெள்ளப் பெருக்கு எல்லா உயிர்களையும் அழித்துவிடும்” என்றது. மனு, மீனை ஒரு முட்டியுள் விட்டார். அது பெரிதாக வளர்ந்தபோது, அவர் அதை ஒரு குளத்தில் விட்டார். அது பின்னும் பெரிதானபோது அவர் அதைக் கடலில் விட்டார். பின்பு மீன் அவரை ஒரு தோணி செய்யும்படி சொல்லிற் று. மனு அப்படியே செய்தார். சலப்பிரளயம் வந்தது. தலையில் ஒற்றைக் கொம்புடன் மீன் வந்தது. மனு அதன் கொம்பில் ஒரு கயிற்றைக் கட்டினர். மீன் அவரை வடமலைக்குக் கொண்டு போய்விட்டது. மீன், யான் உன்னைக் காப்பாற்றி விட் டேன். தோணியை மரத்தில் கட்டு’ என்று மனுவிடம் கூறிற்று.
மாபாரதத்தில் இவ்வரலாறு வேறு வகையில் கூறப் படுகின்றது. வை வசுவதமனு வைசால் வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மீன் ஆற் றங்கரையில் வந்து மற்ற மீன்களைப் பார்த்துத் தன்னக் காக்கும்படி கேட்டது. மனு அம்மீனை எடுத்துச் சாடியில் விட்டார். (மேல் முன்கூறிய வரலாறு கூறப்படுகிறது). மனு ஏழு இருடிகளுடனும் பலவகையான விதைகளுட னும் தோணியில் ஏறினர். மீன் தோணியை இமயமலைக் குக் கொண்டுபோயிற்று. அத்தோணி ஒரு மரத்திற் கட் டப்பட்டது. பின்பு அம்மீன் இருடிகளை நோக்கி யானே
, 1. தக்கசீலம் தக்சக என்றும் தக்ச என்றும் வைசாலி என்றும் வழங்கும். மகாபாரதத்தில் தக்சகன் பெரிய நாக அரசன் 6tairo), Q-Tit 66-til 1650; 63r-The Sun and the Serpent. p. 106 --Mahabharata adi Baushya p. iii.

Page 52
S8 பழந் தமிழர்
பிரமா; யான் மீன் வடிவெடுத்து உங்கள் “எல்லோரையும்
எனக் கூறிற் று.
பாகவத புராணத்தில் இவ்விடம் தென்னிந்தியா வென்று கூறப்பட்டுள்ளது. அதில் மனு அல்லது சத்திய விரதன் திராவிடவேந்தன் எனக் கூறப்படுகின்றன். அங்கு மனு, மலையமலையிலிருந்து ஊற்றெடுத்து வருகின்ற கிருதமாலை (வையையில்) பலி செத்தும்போது மீன் அவ ருடைய கையில் வருகின்றது. சா லதிய, இந்திய வெள் ளப் பெருக்கு வரலாறுகள் ஒரே சம்பவத்தையே குறிக் கின்றன. சீனர்களுடைய வெள்ளப் பெருக்கு வரலாறும் இதையே குறிக்கலாம். சில இந்திய வரலாறுகள் மனு வைக் காத்த மீன் விட்டுணுவின் அவதாரம் என்கின்றன.
காத்தேன்’
பாபிலோனிய ஈ ஆ வும் விட்டுனுவும் கடலோடு சம்பந்தப் பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.%
சூரியனும் நாகமும் பினீசியரால் வணங்கப்பட்டன. அவர்கள் இவ்வணக்கங்களைப் பாபிலோனியரிடமிருந்து பெற்று மற்றைய இடங்களுக்குக் கொண்டுபோயிருக்க லாம். இவ்விரு வணக்கங்களும் சிரியாவிலும் மேற்கு ஆசியாவின் பல பாகங்களிலும் காணப்பட்டன.
1 கிரேக்கர் ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினர்கள்.
* Egyptian name. Nu for the “god of the deep ” Thus the name Wish-nu is Seen to be the equivalent of Sumerian Vishnu and to mean “The reclining great Fish (God) of the waters and it will doubt-less be found in that full from of Sumerian when searched for and it would seem that this early, “Fish epithet of Vishnu for his “Fish incarnation continued to be applied by the Indian Brahmans to that sun God even in his later incarnations is the striding in heavens-The Sumerian seals deciphered-p. 14-Waddell.
1. சாலமிஸ் (Salamis) என்னும் இடம் கிரீசில் பாம்பு வழி பாட்டுக்குப் பேர் போனது.

வழி பாடு 89
சீகுருெப்ஸ் (Cecrops) என்னும் அதேனிய முதல் அரசன் எகிப்திலிருந்து வந்தானென்பதும் அவன் பாதி பாம்பும் பாதி மனிதனுமாயிருந்தானென்பதும் பழைய ஐதீகங்கள். வரலாற்றுக் காலத்தில் கிரேக்கரின் ஞாயிற்று பாம்பு வழிபாடுகள் வேறு வழிபாடுகளுடன் கலந்திருந் தன. கெரகோதசு காலத்தில் அதேனின் சுற்றுடல்களைக் காக்கும் கடவுள் ஒரு பெரிய பாம்பாக விளங்கிற்று. ஐரோப்பா வின் எல்லா இடங்களிலும் ஞாயிற்று பாம்பு வழிபாடுகள் இருந்தமைக்கு அடையாளங்கள் காணப்படு
கின்றன.
எகிப்தில் ஆதிகாலம் முதல் பகலும் படமுள்ள பாம்பும் வணங்கப்பட்டு வந்தன. எகிப்திய அரசர் ஞாயிற்றிலிருந்து தமது பரம்பரையைக் கூறினர். அரசன் ஞாயிற்றின் பிறப்பென்று கருதப்பட்டான். அவனுக் குக் கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் செய்யப்பட்டன. மாணத்துக்குப் பின் ஒவ்வொரு அரசனும் ஞாயிருக வழிபடப் பட்டான். அவனது முடியின் முன்புறத்தில் படமெடுத்த பாம்பின் வடிவம் வைக்கப்பட்டிருந்தது. எகிப்தியரின் சமூகவழங்கங்களும் கிரியை முறைகளும் மற்றைய ஞாயிற்று வணக்க நாடுகளிற்
காணப்படுவன போலவே இருந்தன.
எகிப்திலே வணங்கப்பட்ட விலங்குகள் பறவைகள் குலக் குறிகளாகவிருந்தன (Totem) எதியோப்பியர் கிறித்
1. The lotus and hooded snake were in Egypt, which make it probable that the religious symbols of both the countries originally came from the is indus.............., upon the very ancient Egyptian temple near Girjeh, figures have been observed exactly resembling those of the lindian deities Jaggenat, Ganesa and Visnu-The symbolic language of ancient art and mythology. pp. 109, 178.

Page 53
90. பழந் தமிழர்
துவ மதத்தைத் தழுவமுன் ஞாயிற்றையும் பாம்புகளையும் வணங்கினர்கள். எதியோப்பிய அரசன் 'கெலியோ பொலிஸ்’ எனப்படும் ஞாயிற்று நகருக்குச் சென்று ஞாயிற்று ஆலயத்தில் குருவாகச் சேவித்தான். எகிப்திய மன்னரைப்போலவே எதியோப்பிய அரசனும் கடவுளுக் குரிய சங்கைகளைப் பெற்ருன். எதியோப்பியரே சின்ன ஆசியாவில் குடியேறி காசியர் (Kassites) எனப்பட்டார் கள். இவர்கள் எல்லம்மக்களுக்கு இனமானவர்கள் என்று கருதப்படுவர். நகுஸ் என்னும் எதியோப்பிய அரசரின் பட்டப்பெயர், இமயமலைப் பக்கங்களில் பாம்புகளை வணங் கும் மக்களின் தலைவர்களுக்கு வழங்கும் Q15 AG (Negi) என்னும் பெயரோடு ஒத்திருக்கின்றது. பண்டுநாடு (Punt) பாம்புகளுக்கு உறைவிடம் என்று எகிப்தியரால் சொல்லப்பட்டது. பைப்பிரஸ் புத்தகங்களிலுள்ள சில பகுதிகள் பண்டுகாட்டு அரசன் பெரிய பாம்பு என்று கூறுகின்றன. கப்பலுடைந்து தட்டுக்கெட்டு கின்ற ஒருவனுக்குப் பெரிய பாம்பு ஒன்று வெளிப்பட்டு நாலு மாதத்துள் ஒரு தோணி அங்கு வருமென்றும், இரண்டு மாதப் பயணத்தில் அவன் தனது இடத்தைச் சேருவா னென்றும் சொல்லிற்றெனக் கூறப்பட்டுள்ளது. ஆபிரிக் காவின் மேற்கு மத்திய பாகங்களிலும் பாம்பு ஞாயிற்று வழிபாடுகள் இருந்தன. இந்நாட்டு மக்களின் தெய்வ மேறி ஆடும் கூத்து முதலியன அவ்வணக்கத்துக் குரியனவே.
மெக்சிக்கோவில் அவ்வழிபாடுகளில் நரபலிகளும்
கொடுக்கப்பட்டன. சூரியகுல அரசரால் பாம்பும்
1. அரபியக்கரையிலிருந்து எகிப்துக்குச் செல்ல இரண்டு மாதமாக து. ஆகவே பண்டு என்பது தொலைவிலுள்ள பிறிதொரு இடமென நன்கு அறியலாம். அதுவே மலையாளக்கரை, சேப5ாடு 5ாகநாடெனவும் படும்.

வழி பாடு 91
ஆமையும் தெய்வத்தன்மையுடையனவாக மதிக்கப் பட்டன. அவர்கள் பாம்புக்குப் பலியிட்டபின்பே எக் கருமக்தையும் தொடங்குவர். அவர்கள் மந்திர வித்தை சம்பந்தமாகப் பயன்படுத்தும் இயந்திரங்கள் இந்தியாவி லும் மற்றும் ஞாயிற்று வணக்கமுடைய நாடுகளிலும் காணப்படுவன போலவே இருக்கின்றன. இந்நாடுகளில் எப்படி இவ்வணக்கங்கள் வந்தன வென்பது அறிய முடிய வில்லை. அறிய முடியாத பழையகாலம் கொட்டே சீனவி லும் அதன் அயல் நாடுகளிலும் ஞாயிற்று பாம்பு வணக்கங்கள் இருந்து வந்தன. இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் காணப்படுதல் போலவே அவை தெய்வ மாக்கப்பட்ட முன்னேர் வழிபாட்டோடு சம்பந்தப் படுத்தப் பட்டிருக்கின்றன. சீன அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான். அவன் உயிரொடு இருக்கும் போது கடவுளுக்குரிய சங்கைகளைப் பெற்றன். சீன ருக்கு ஆமையும் புனிதமானது. சீன தளபதி பாம்பும் ஆமையும் பொறித்த கொடியால் அறியப்பட்டான். சீனரின் ஐதீகத்தின் படி பழைய அரசரிற் சிலர் பாதி பாம்புவடிவும் பாதி மனிதவுடிமுடையர். சீனரின் நாகரிகம் காஸ்பியனுக்கும் பாரசீக வளைகுடாவுக்கு மிடையிலிருந்து வந்திருக்க வேண்டுமென லக்கோ பேரி (M. Terrien de Lacouperie) aTair Laui Ea5.g167i.
மஞ்சூரிய மக்கள் சூரியவமிசத்தினர். அவர்களின் பாம்புத்தெய்வங்கள் இன்றும் ஆறுகளுக்கும் மழைக்கும் அதிபதிகள். கொரியா தேசத்தில் அரசர் சூரிய பரம்பரை யினர். அவர்களைப் பாம்புக்கடவுள் காக்கின்றது. மக்கள் பாம்புகளைக் குலதெய்வங்களாக வணங்குகின்றனர். யப்பானில் சூரியக்கடவுள் பெண்தெய்வமாக வழிபடப்
1. Early Hist, of Chinese civilization pp-26, 27.

Page 54
-92 பழந் தமிழர்
படுகிறது. யப்பானிய அரசர் ஞாயிற்றுத்தெய்வத்தின் புகல்வர்களாகக் கூறப்படுகின்றனர். யப்பானியர் ஐதீகத் தின் படி மலைத் தெய்வங்கள் பாம்புவடிவங்களை எடுத் துள்ளன. இந்நாடுகளில் ஞாயிற்று பாம்பு வழிபாட்டு முறைகள் இந்தியாவிற் காணப்படுவன போன்றன.
மேலும் இவ்வாசிரியர் குறிப்பிட்டிருப்பன, “ பாரதத் தில் சொல்லப்படும் கத்துருவின் புதல்வர்களாகிய நாகர் மலையாளக் கரையிற் சென்று குடியேறினர். இங்கு இலவனன் என்னும் நாகன் ஆட்சி புரிந்தான் சேர நாடு நாகர் நாடு) எனப்படும். சாரை என்பதே சேர என வந்தது. இன்றும் ஒவ்வொரு நாயர் சாதியினரின் கொல்லையிலும் நாக தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இராணவன் இராக்கதன் எனப்பட்டாலும் அவன் அசுர வகுப்பின னவன், இக்குவாகு என்னும் ஞாயிற்றுக்குலத் தலைவர் அசுரர் எனப்பட்ட திராவிடவகுப்பைச் சேர்ந்தவர். இராவணனும் அவ்வகுப்பிற் முேன்றியவன் ’
என்பன. இன்னும் பல வரலாற்று உண்மைகள் நூல்
1. * உத்தர குருவிற் சென்று போகந் துய்ப்பல் ' * நாகருலகிற் சென்று போகத் துய்ப்பல்” எனத் தமிழ் நூல்களிற் கடறப்படுமிடம் சேர நாடாகிய மலை நாடாதல் கடடும். அந்நாட்டு வழக்கு இதற்குச் சான்று பகரும். திரிகடட இராசப்ப கவிராயர் குற்றலத் தலபுராணத்திலே தரும சாமிச் சருக்கத்திற் கடறியிருக் கும் குறிப்புக்களும் அதற்கு ஆதாரங்களாகும். சூளாமணி என் னும் காப்பியத்தில் நாகர் உலக மகளிரைப்பற்றி வருணிக்கப் பட்டிருக்கும் பகுதி நோக்கத்தக்கது. சிந்தாமணி காரரும் அவ் வாறே வருணித்துள்ளார். முன்னுள்ளோர் கருதிய நாகருலகாகிய போக பூமி என்பது, மைந்தர் கட்டழகு வாய்ந்த தங்கப்பதுமைகள் போன்ற இள மகளிரின் சுகத்தைப் பருகித் திளைத்துச் செம்மாங் திருக்கும் இடமாகும். இந்திரபோகம் முதலியனவும் இவ்வாறே வருணிக்கப்பட்டுள்ளன.

வழி பாடு 9
ஆதாரங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளன. சித்தார்த்தரும் இக்குவா மரபிற் பிறந்த திராவிடமரபின ராவர்.
கிறித்துவ ஆண்டின் முற்பகுதிகளில் சீன யாத்திரிகர் கள் இந்தியாவுக்குச் செல்லும் வழியில் பாம்புத் தெய்வங் கள் எல்லா ஆறுகளை பும் குளங்களையும் ஆள்வதைக் கண்டனர். திபெத்தில் இன்றும் குளங்களும் நீரூற்றுக் களும் பாம்புத் தெய்வங்களாலாளப்படுகின்றன. ஸ்பானி யர் அமெரிக்காவுக்குச் சென்றபோது எங்கும் ஞாயிற்று, பாம்பு வணக்கங்களே காணப்பட்டன. அமெரிக்காவில் படமுள்ள பாம்புகள் காணப்படாமையில் சலசலக்கும் பாம்புகள் (Rattle Snakes) அவைகளுக்குப் பதில் வணங்கப்பட்டன. பேருவில் கசமார்க்கா என்னுமிடத் தில் பாம்பு ஆலயத்தில் பாம்புவடிவக் கல் இருந்தது. ஆமையும் அமெரிக்க ரால் தெய்வத்தன்மையுள்ளதாகக் கருதப்பட்டது. ஆமையும் பாம்பும் மனிதத் தலையுடையன வாகச் சிலைகளிற் காணப்படுகின்றன. இங்கும் அவை தம் முன்னேராகவும் தம்மைக் காப்போ ராகவும் கருதப் பட்டன. வேதங்களிற் சொல்லப்படும் காயத்திரி அல்லது சாவித்திரி செபம் ஞாயிற்றைத் துதிப்பதே. பாம்பு வழி பாடு இந்தியாவில் ஆரம்பித்ததென ஆராய்ச்சியாளர் துணிவர்.2
l. In Pathala reigned the Royal Rishi Kapila. Vasudeva or Kapila Naga, who destroyed the sons of Sagara-(Mahabhara Uthiogo Bavathiano P. C. VIII).
This Yadu the son of Hariaswa, who was a son of Ishvaku was, carried off by the Naga Royal Dhumavarna, whose kingdom was called Ratna Dwipa. (the land of gems) and the people there had trade, and fished for pearis.-- Harivansa 399, 40l.
2. The mythical serpent of the Hindus too is generally represented with five heads to signify perhaps the five

Page 55
94 பழங் தமிழர்
மால் வழிபாடு
மக்கள் வேடன் இடையன் உழவன் என வெவ்வேறு வகை வாழ்க்கை முறைகளைக் கையாண்டு வருகின்றனர். ஆடு மாடுகள் மேய்தற்கேற்ற காடு சார்ந்த கிலங்களில் ஆயர் தங்கி வாழ்ந்தனர். ஆதிகாலத்தில் ஒவ்வொரு கூட்டம் மக்களும் ஒவ்வோர் தெய்வத்தைத் தம் குல தெய்வம் எனக்கொண்டு வழிபட்டனர். இத்தெய்வங்கள் பெரும்பாலும் அவ்வக் கூட்டங்களுக்குத் தலைவராயிருந்த மக்களே எனத் தெரிகின்றது. இற்றை ஞான்றை மக்கள், குலதெய்வங்களாகக் கொண்டு வணங்கி வரும் தெய்வங் களைப் பற்றி ஆராயுமிடத்து அவர்கள் ஒவ்வோர் கூட்டம் மக்களுக்குத் தலைமை தாங்கி அவர் தம்மைக் காத்த வலிய தலைவர்களாகவே காணப்படுகின்றனர். முல்லை நிலத்துக் குத் தெய்வம் மாயோன் அல்லது மால், மாயோன் என்ப தற்குக் கரியவன் என்பது பொருள். ஆயர், தம் கூட்டத்துக்குத் தலைவனய் கின்று தம்மைப் பகைவரி னின்றும் காத்த வலியோனே மாயோன் என்னும் பெயரால் வழிபட்டனர். பழைய செய்யுட்களில் பெண் னின் அழகை வியக்குமிடத்து மாயோள்’ என்னும் சொல் வழங்கப்பட்டிருத்தல் காண்க. மாயோள் என்பது கரியவள் என்னும் பொருள் தரும். அக் காலத்து அக்கூட்டத்தார் கறுப்பை அழகாகக் கருதி
senses, but still it is the hooded snake, which we believe to be a native of India, and consequently to have been originally employed as a religious symbol in the country, from whence the Egyptians and Phoenicians probably borrowed it and transmitted it to the Greeks and Romans upon whose bracelets and other symbolic ornaments we frequently find it-Symbolical language of ancient art and mythology, P. l6.

வழிபாடு V 95
யிருக்கலாம். இவ்வழிபாடு பாரதகாலத்திற்குப் பின் திருமால் வழிபாடக மாயிற்று.
விட்டுணு வணக்கம் ஞாயிற்று வணக்கமாகும். ஞாயிறு உதயத்திலும், மத்தியானத்திலும், அத்தமனத்தி லும் செல்லும் செலவு ஞாயிற்றின் மூவடிகள் எனப் படுதலே இதற்குச் சான்று. விட்டுணுவின் ன் ககளில் இருப்பனவாகிய சக்கரமும் சங்கும் ஞாயிற்றைக் குறிக் கும் என்ப. பாரத காலத்திற்கு முன்னரே ஆரியரை எதிர்த்த கிருட்டிணர்கள் இருந்தார்கள். பிற்காலத்தில், கிருட்டி ண, விட்டுணு, திருமால் வழிபாடுகள் இணைந்து ஒன்ரு யின.
வேந்தன் வழிபாடு
பயிர்ச்செய்கைக்குரிய நாடுகளிலிருந்த மக்கள் ஆதிகாலத்தில் பயிர்ச் செய்கைக்கேற்ற குளங்கள் தொட்டும், கால்வாய்கள் வெட்டியும் நாட்டை வளப்படுத் தி தம் முதல் அரசனைத் தெய்வமாக வழிபட்டனர். அவனும் அவன் வழி வந்தோரும் பயிர்ச்செய்கைக்குரிய காலத்தில் முதன் முதல் ஏர் பிடித்து உழுதல் மரபாயிருந்தது. இவ் வழக்கு இலங்கை அரசரிடத்தும் இருந்து வந்தது. இலங்கையிலும் இவ்வாறே பெரிய குளங்கள் தொட்டுப் பயிர்ச் செய்கையை வளம்படுத்திய மன்னர் வழிபடப் பட்டனர். சுமேரிய அரசனும் இவ்வாறே வழிபடிப் பட்டான். இவ்வாறே தமிழ் நாட்டிலும் வேந்தன்
ய மன்னரைத் தெய்வமாக வணங்கினர்கள். எகிப்தியர்
1. We know that according to Sumerian beliefs a king was the vice-gerent of god upon earth - tenant - farmer they called him - and god was the real ruler of the land. The god then being the king, his court exactly reproduced that of his human representative attached to the principal

Page 56
96 பழங் தமிழர்
வணக்கம் வயலும் வயல் குழந்தனவுமாகிய நிலங்களில் வாழ்ந்த மக்களிடையே இருந்ததெனத் தொல்காப்பியம் கூறுகின்றது. இவ்வேந்தன் வணக்கம் இத்திரன் வணக்க மாக இலக்கியங்களில் கூறப்படுகின்றது. இவ்விந்திரனும் ஆரியர் கடவுளாகிய இந்திரனும் ஒருவராவரோ வென்பது ஆராயத்தக்கது. வடநாட்டார் இந்திரனை வேள்விகள் வாயிலாக வழிபடுவர்; கென்னட்டிலோ விழாக்கொண் டாடி வழி படுவர். வடநாட்டாரது இந்திரன் தெய்வ உலகத்திற்கு அரசன் எனப் புராணங்கள் கூறுதலின் தென்னட்டார் தம் வேந்தனுக்கு, தேவர் உலக அரசன் என்னும் பொருளில் இந்திரனெனப் பெயரிட்டுத் தம்மரபுப்படியே பழைய வழிபாட்டை நடத்தி வந்திருத்த லும் கூடும். 〜
சுமேரிய மக்கள் இந்திரு என்னும் ஒரு தெய்வத்தை வழிபட்டனர். அவ் இந்திரு ஞாயிற்றைக் குறிப்பதா யிருந்தது. * வச்சி ரத் தண்டத்திறைவோன் ’ என இந்திரன் இலக்கியங்களிற் கூறப்படுவன், ஆராயுமிடத்து வேந்தன் வழிபாடே இந்திரன் வழி பாடல்லது வேறன்று. வேந்தன் வழிபாட்டிலிருந்தே ஆலய வழிபாடு ஆரம்பித்
temple there would be ministers of war and justice, of communications, of agriculture, of finance, of the harem and so on; and as with the personal, so it was with the house in which the visible statue of him was lodged. In his sanctuary he received the adoration of those who might approach him, but he also had his bed chamber, his place of dining, and necessarily, too, rooms and offices in which the business of his temple and estates could be carried out. It is most probable that in the details of its arrangements a great temple, which was the house of god, afforded a close parallel to the palace which was the house of the king-Ur Mamu's building is so like a temple-Ur of the Chaldees-P. 145, C. Leonard Wooly. .

வழி பாடு 97
திருக்கலாம். பழையி கால அரசனெருவனுக்குச் செய்யப் படும் ஆசார உபசாரங்களே கோயிற் கிரியைகள்
திருவிழாக்கள் என்பன.
வருணன் வழிபாடு
தமிழ் நாட்டில் வாழ்ந்த கடற்கரை மக்கள் வருணனைக் குலதெய்வமாக வழிபட்டனர். சின்ன ஆசியாவிலுள்ள மித்தானி (Mittant). மக்களிடையே இந்திர வருண வழிபாடுகள் காணப்பட்டன. இந்திய ஆரியரிடையே காணப்பட்ட வருணன் வழிபாடும் தமிழ் நாட்டிற் காணப்பட்ட வருணன் வழிபாடும் வெவ்வேறு இயல்பின. இந்து ஆரியருக்கும் தமிழருக்கும் பொதுவிற் சாணப்படும் ஒவ்வொன்றையும், தமிழர் இந்து ஆரிய ரிடமிருந்து பெற்றனர் என்று கூறுவது ஆராய்ச்சி யாளர்க்கு இயல்பாயிருந்தது. ஆரியக் கூட்டத்தினரின் ஒரு பிரிவினராகிய இந்து ஆரியருக்கிடையில் மாத்திரம் காணப்படுவனவும் மற்றைய ஆரியக்குழுவினருக் கிடையிற் காணப்படாதனவுமாகிய எல்லாம் அவர் குடியேறிய நாட்டில் தொன்மையே நாடு நகரங்களையும் கோட்டை கொத்தளங்களையும் அமைத்துச் செவ்வனே வாழ்ந்த திராவிட மக்களிட , மிருந்து ஆரியர் பெற்றனவாம் என்பது இற்றை ஞான்றை ஆராச்சியாளர் துணி
LJ TGud."
l. The progress of researches to the various phases of Indian antiquities is helping to pile up evidences to demonstrate the fact that the texture of Indian culture is made of the work of non-Aryan and pre-Aryan threads. crossed into the woof of Aryan or Hindustic character. In the light of those evidences the conviction has been gaining ground that the great process, popularly known as. Hinduism, is nothing but a synthesis and a harmonization.
7

Page 57
98 பழந் தமிழர்
பல வணக்கங்கள் ஒன்று படுதல் உலகில் ஞாயிற்று வணக்கமே எல்லா வணக்கங்களி லும் மேலாக விரிவு அடைந்திருந்தது. அதனுள் மற்றைய வணக்கங்கள் எல்லாம் அடங்கி இருந்தன. அவ்வணக்கங் களை எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டதே சிவமதமாகும்;
of complex elements of Aryan, pre-Aryan, non-Aryan and aboriginal culture. A good deal of which must have been autochthonous and indigenous, that is to say, was born on, or sprang from the soil of the Indian continent. It has become impossible to contradict the fact that aboriginal and pre-Aryan cultures have greatly contributed to the development of what has come to be known during historical times as characteristically Indian civilization. Sometimes the elements and types of aboriginal culture have been transformed sand modified so as to fit into the ideals and systems of Aryan thought and culture. Sometimes the aboriginal elements have been bodily annexed sand appropriated into the Indian system by removing the property-mark of earlier aboriginal ownership and
origins.
-annals of the Bhandarkar Oriental Research Institute Иol. XIX-тот-Aryат сотtribиtiот to Iтdiат ти8icO. C. Gangoly.
சிலாற்றக் கடறுவது வருமாறு : இன்று கோயிற் பிரா மணர் சமக்கிருதத்திலும் பார்க்க ஆங்கிலத்தில் புலமை யுடையவுர்களாகக் காணப்படுகின்றனர்; வேதங்களை விட ஷேக்ஸ்பியர் நூல்களை அவர்கள் நன்கு அறிவார்கள். சாதாரண தமிழ்ப் பிராமணன் தமிழிலும் பார்க்க ஆங்கிலத்தை நன்ருய் எழுதவும் படிக்கவும் அறிவான்; ஆங்கிலத்தை அவன் தனது சொந்தப் பாஷைபோலப் பழகிக் கொண்டான். ஆகவே அரசாங்க உத்தியோகங்களும் பிற உத்தியோகங்களும், பத்திரிகை நடத்தும் தொழிலும் அவன் கையிலேயே இருக்கின்றன. ஆரியர் தமது அதிகாரத்தைப் பஞ்சாப் வெளிகளில் 5ாட்டியபோது, இதே நோக்கத்துடன் தமிழ்ப் பிராமணர் சமக்கிருதத்தைப் பயின்ருர் கள். அவர்கள் அம்மொழியில் மந்திரவித்தை முதலிய மகத்துவம் இருப்பதாகவும், அது பரிசுத்தமான ஒரு சாதியாருக்கு மாத்திரம் உரிய தெனவும் கூறிக் கொண்டார்கள். இது அதிகாரத்தையும் வலிமையையும் தேடிக்கேள்வதற்குரிய உபாயமாகும். பிராமணர்

வழி பாடு 99
அஞ்ஞான்ற மைக்கப்பட்ட திருவுருவம் இஞ்ஞான்று காணப்படும் சிவவடிவேயாம். மக்கள் எங்கும் நிறைந்த கடவுளை அழகிய மனிதவடிவில் வைத்து வழிபடத் தொடங்கினர். சிவன் வடிவம் தாடியில்லாதும் சடா முடியுடனும் காணப்படுகின்றது. இதனல் முகத்தை மழித்துச் சடையை உச்சியில் முடியும் வழக்கமுடைய மக்களாலே இவ்வடிவம் அமைக்கப்பட்டதென்பது புல னகின்றது. தென்னிந்திய கோயிற் சிற்பங்களிலும் கிறித்துவுக்கு முற்பட்ட இலங்கைச் சிலைகளிலும், அரசரும், பிறரும் தாடியில்லாதவர்களாகவும் சடை யுடையவர்களாகவும் வடிவம் அமைக்கப் பட்டிருக்கின்ற னர். சுமேரிய, எகிப்திய, கிரேத்தா அரசரும் உயர்ந்தோ ரும் முகத்தை மழித்திருந்தார்க்ள். சிவன் புலித்தோல் உடையினரும் யானைத்தோற் போர்வையினருமா யிருத்த லின் மக்கள் தோல்களையே உடையாகக் கொண்ட காலத்
தில் இவ்வழிபாடு ஆரம்பித்ததாதல் வேண்டும்.
அக்காலத்தில் மக்கள் என்பையும் சங்குமணிகளையும் மாலையாக அணிந்தனர் ; காட்டுப் பூக்களைச் சூடினர். ஆகவே அவர்கள் தங்கடவுளுக்கு என்பை மாலேயாக அணிந் தனர்; சங்கைக் குழையாக அலங்கரித்தனர்; (நாட்டி உண்டாக்காத) எருக்கு, ஊமத்தை, கொன்றை முதலிய வைகள்ன், மலர்களைச் சூட்டினர்; அழகிய மான்மறியைக் கையிற் கொடுத்தனர். இவ் வழிபாட்டோடு தனித்தனியே
இவ்வாறு சிறிது சிறிதாகத் தமிழில் சமக்கிருதத்தைப் புகுத்த லானர்கள். ஆணுல் திராவிட சமூகம் அதை அவாவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஆரம்பத்தில் சென்னை மாகாணத்தில் ஆங்கிலத்தைப் பரப்பியது போலாகும். தமிழர் இவ்வாறு மொழி யளவில் ஆரியமாக்கப்பட்டு வருகையில் ஆரியர் சீர்திருத்த முறையில் தமிழர்ஆக்கப்பட்டார்கள்.-Dravidian Elements in Indian culture-P. 64.

Page 58
100 பழங் தமிழர்
இருந்த ஞாயிற்று, திங்கள், அங்கிவழிபாடுகள் இணைக்கப் பட்டபோது அவை அக்கடவுளுக்குக் கண்களாயின. ஆங்காங்கு மக்களிடையே காணப்பட்ட பேய் வணக்கம் இதனேடு இணைக்கப்பட்டபோது பேய்கள் சிவனுக்குக் கணங்களாயின. இப்படியே பாம்பு, இடபம் முதலிய வணக்கங்கள் இணைக்கப்பட்டபோது பாம்பு சிவனுக்கு ஆபரணமும், இடபம் வாகனமும் ஆயின. தாய்க்கடவுள் சிவனின் மனைவியாக்கப்பட்டது. மற்றைத் தெய்வங்களும் சிவனின் உறவின்முறையின ராக்கப்பட்டன. நடராச வடிவில் தூக்கிய பாதத்தா லருளலென்பது, அக்கால அரசர், தமது ஆணைக்குட்பட்டவர்கள் காலில் விழுந்து பணியுமிடத்துக் காலைத்துக்கி அவர் தலையில் வைத்தல் மரபு. இதுவே சமய சம்பிரதாயத்தில் திருவடி தீக்கை எனப்படுவதுமாகும். இது கிழக்கு நாடுகள் எங்குமுள்ள வழக்கு இவ்வாறு சிவமகம் எல்லா மதங்களையும் உள். ளடக்கி நிற்றல் காண்க. மொகஞ்சதரோ நாகரிக காலத் திலே 1 சிவன் பசு பதியென்றும், அவருக்கு மூன்று கண்கள் உண்டென்றும் கொள்ளும் கொள்கைகள் வேரூன்றி யிருந்தன.
* எந்நாட் டவர்க்கு மிறைவா போற்றி’ * தோற்றந் துடியதனிற் ருேயுந் திதியமைப்பிற் சாற்றிடு மங்கியிலே சங்காரம்-ஊற்றமா(ய்) ஊன்றுமலர்ப் பதத்தே உற்ற துரோத முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு’ (உண்மை விளக்கம்) 1. உருத்திரன் என்பது சிவந்தவன் என்னும் பொருள் தருவது. இது சிவன் என்பதின் வடமொழி ஆக்கம். தென்னுட்டு ஆலயப் பெயர்களும் புராணங்களில் வரும் தமிழ் அரசர் பெயர் களும் வடமொழி ஆக்கப் பெயர்கள் பெற்று வழங்கும். இது வடமொழி மோகம் தென்னுட்டார் தலைக்கேறி யிருந்த கால நிகழ்ச்சி. அக்காலத்திலேயே தமிழ்க் கடவுளருக்குச் சமக்கிருத த்திற் றுதிபாடும் வழக்கு நுழைந்தது.

இயல் 4
மொழி
ஆதிசால மக்கள் எவ்வாறு பேசக் கற்றுக் கொண் டார்கள் என்பதை நாம் ஊகித்தறிதல் கூடும். தொடக்கத் தில் மக்கள் ஊமரும் செவிடரும் ப்ேசுதல் போலச் சைகைகளாற் பேசினர்; பின், சூழ இருக்கும் விலங்குகள், பறவைகள், இயற்கைப் பொருள்களின் ஒலிகளைக்கேட்டுக் கருத்திலமைத்து அவ்வொலிகளையே அவ்விலங்குகள் பறவைகள் இயற்கைப் பொருள்களுக்குப் பெயர்களாகக் கொண்டனர். இது காகா எனக்கரையும்பறவைையக் காகம் என்றும், கூகூ எனக்கூவும் குருவியைக் குயிலென் றும் பெயரிட்டு வழங்குதல் போல்வன. பின்பு அவர்கள் தம்மால் அறியப்பட்ட எல்லாப் பொருள்களையும் செயல் களையும் பொருள்களின் பண்புகளையும் குறிக்க ஒலிக் குறிகளை அமைத்து மொழியை ஆக்கிக்கொண்டனர். அவ்வொலிக் குறிகளின் அமைப்புக்குரிய ஆதிக்காரணங் கள் பெரும்பாலும் இன்று நம்மால் அறிய முடியாதி ருக்கின்றன. ஆகவே அச் சொற்கள் இடுகுறிச் சொற்க ளெனப் படுகின்றன. முன்னேர், பொருள்களையும் செயல் களையும் குறிக்க அமைத்த ஒலிக்குறிகளைத்திருத்தமுற உச்சரிக்க அறிந்து கொள்வதே திருந்தியமொழிப் பயிற்சி. தலைமுறை தலைமுறையாக வரும் பழைய சொற்களோடு புதிதாக அறியப்படும் , பொருள்களையும் செயல்களையும் குறிக்கும் சொற்களும் பிற்காலங்களில் வந்து சேரும். இவ்வாறு - காலப்போக்கில் மொழி வளர்ச்சியுறும். பழைய சொற்களினிடத்தைப் புதிய சொற்கள் ஏற்றுக் கொள்ளப் பழைய சொற்கள் சில

Page 59
102. பழந் தமிழர்
வழக்கொழியும். இவ்வாறு மொழி, என்றும் ஒரு படித்தாயிராது காலந்தோறும் பல மாற்றங்களுக் குட் பட்டு வரும்.
பேச்சினல் அண்மையிலுள்ளவர்களுக்கே கருத்தினை உணர்த்துதல் கூடும் : சேய்மையிலுள்ளவர்களுக்கு உணர்துதல் இயலாது. மக்கள் தம் எண்ணங்களைத் தொலைவிலுள்ளவர்களுக்கு உணர்த்த விரும்பினர்கள். ஆகவே அவர்கள் ஒவ்வொரு பொருளையும் செயலையும் ஒவியங்களால் விளக்கி எழுதும் முறையைக் கையாண்டார் கள். இவ்வாறு எழுதப்பட்ட எழுத்துகள் ஒவிய எழுத்துகள் எனப்பட்டன . சுருக்கியும் விரைந்தும் எழுதும் முறையில் இவ்வோவியங்கள் கீறுகளாக வமைந்தன. ஆரம்பகால மக்கள் எல்லோரும் இவ்வகை
ஒவிய எழுத்துக்களையே வழங்கினர்
ஒவிய எழுத்து:ஒலிமுறையில் சொற்களை உணர்த்த
மாட்டாதனவாயின. ஆகவே அவர்கள் பொருள்களின் வடிவங்களை எழுதி அவை குறிக்கும் பொருட்பெயர்களின் முதலசைகளைச் சேர்த்து வாசிக்க எண்ணிய சொற்களின் உச்சரிப்பு வரக்கூடிய முறையில் எழுதினர். பின்பு ஒவ்வொரு சொல்லைக் குறிக்கவும் ஒவ்வொரு குறியீடு அமைக்கப்ப்ட்டது. இக்குறியீடுகளும் ஒவிய எழுத்தைப் பின் பற்றியனவே. இவ்வகை எழுத்துமுறை இவ்வுலக மக்கள் எல்லோரிடையும் காணப்பட்டது. இம்முறை
யிலன்றிக் கயிற்றில் முடிச்சிட்டும் வாசிக்கக்கூடிய முறை
1. " காணப் பட்ட வுருவ மெல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி வழுவி லோவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும்'
-(யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள்)

மொழி 108
யைப் பேரு (Peru) மக்கள் அறிந்திருந்தனர். இன்னும் சிலர் மரத்தில் வெட்டிடுதலால் மொழியை வாசிக்க அறிந் திருந்தனர். ஆதிகால மனிதனின் விவேகம் ஆச்சரியப் படத் தக்கமுறையில் வேலை செய்திருக்கின்றது. மொழி ஆராய்ச்சியாளர் ஆதிகாலமக்களின் விவேகத்தைப் புகழாமல் இல்லை. மொழியில் எத்தனே ஒலிக்குறிகள் இருக்கின்றன என அறிந்து ஒவ்வொரு ஒலியையும் குறிக்க ஒவ்வோர் குறியை அமைத்து, எழுத்து களைச் சேர்த்தெழுதிச் சொற்களை உண்டாக்கி, அவைகளை அடுக்கி வசனங்களை எழுதும் முறை பிற்காலத்துத் தோன்றியது.
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளின் முன் இந்தியா, சுமேரியா, பாபிலேன், சீனு, ஈஸ்டர் தீவுகள், எகிப்து, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் வழங்கிய எழுத்துமுறை ஒன்றென்பதைப் பழைய எழுத்து ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் கிடைத்த முத்திரை களிற் காணப்பட்ட எழுத்துகளோடு உலகின் பல பாகங் களில் வழங்கிய எழுத்துகளையும் ஒப்பு நோக்கிய ஹெரஸ் பாதிரியார் கூறியிருப்பது வருமாறு:
*மொகஞ்சதரோ எழுத்துகளைப் போன்றன இலிபிய வனந்தரத்தை அடுத்த செலிமா என்னு மிடத்திற் காணப்
1. அமெரிக்காவிற் காணப்படும்புராதன சித்திர மொன்றில் கலைப்பாகை அணிந்த மாவுத்தன் யானையை ஒட்டுவது காணப் படுதலின் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் முற்காலத் திற்போக்கு வரத்திருந்த தெனக் கருதப்படுகிறது. யானை, அமெரிக்காவிற் காணப்படாத விலங்கு. இன்னும் அங்கு மாயா என்னும் இடத்திற் காணப்படும் சிற்பங்கள் இந்திய சிற்பங்களே saigojdi 333rpaOT. The art of Maya Civilization was well developed. The nearest resemblances can be found in South Indian Carvings-O. L.O. H.-E. G. Wells.

Page 60
04. பழந் தமிழர்
U大対>ぐ0°司ff町時
வேல், ஆள், கடவுள்,கண்டு,ஊர், காய், அது,ஆண்டு, தடு மொகஞ்சதரோ எழுத்துகள் சிலவும், அவற்றின் வாசிப்பும்.
(ஹெரஸ் பாதிரியார்)
படுகின்றன. இதனைப் பேராசிரியர் இலாங்டன் என்பாரும் குறிப்பிட்டுள்ளார். −
* மொகஞ்சதரோ எழுத்துக் குறிகள் போன்ற ஐபீரிய (ஸ்பானிய) எழுத்துக் குறிகளையும் அவை போன்ற உச்சரிப்பு ஒலிகளையும் ஐபீரிய மொழியிற் காணலாம். (இம்மொழி பாஸ்க்கு" எனவும் வழங்கும்.)
எதிருஸ்கிய (பழைய இத்தாலிய) மொழி எழுத்து கள் இலிபிய மொழி இனத்தைச் சார்ந்தன. இம்மொழி யில் மொகஞ்சதரோ எழுத்துக் குறியீடுகளையும் காண்பது வில்லங்கமன்று.
*பிந்திய இலிபிய மொழி எழுத்துக்களும் நூமிதியபே GL fuЈ (Numidic and Berberic) arap igla o h (pair குறிப்பிட்ட இயல்பினவே.
* மினேவ எழுத்துகள் மிகப் பழையன. இவை மொகஞ்சதரோ எழுத்துகளோடு கிட்டிய ஒற்றுமை
l. The Basques may in language and blood be distant relatives of the earliest races of India. They may have come from the early neolithic race which worked out a language before the ancient Egyptians and their Hamitic races set up their own kind of speech. Their language may be connected with our American Indian tongues, another question mark group of languages.--Out Line of
Knowledge BookI- p. 75.

மொழி 105
உடையன. சைப்பிரஸ் எழுத்து, மினேவ எழுத்தின் ஒரு பிரிவினதே.
*சிலமொழிகள் எழுத்துகள் இல்லாமல் இருந்தன. அம்மொழிகளுக்குரியோர் திராவிடரோடு ஊடாடிய பின் மொகஞ்சதரோ எழுத்துகளைக் கையாண்டனர். பின்பு அவர்கள் அவ்வெழுத்துகளைத் தாமே விருத்தி செய்தனர்.
* சுமேரிய மொழிக்கும் மொகஞ்சதரோ மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. இக்கொள்கையைப் பேராசிரியர் இலாங்டன் என்பார் தமது விரிவுரைகளில் நன்கு வலி யுறுத்தியுள்ளார்.
* ஆப்பெழுத்துகள் சுமேரிய எழுத்துகளினின்றும்
பிற் காலங்க னில் வளர்ச்சி 1
多 令 யடைந்தவை. 杰 8 8
* பழைய எல்லம் மொழி எழுத்துகள் இன்னும் வாசிக் 太 烈 (COK கப்படாமல் இருக்கின்றன. 谷
* பழைய சீனனழுத்துக் 次 窝 ) கும் மொகஞ்சதரோ எழுத்துக் 《ベ ܗܝ கும் நெருங்கிய தொடர்புண்டு. இது இவ்வளவு காலமும் ஒரு 人 & ( () வரின் கருத்திலும் படவில்லை. மொகஞ்சதரோ எழுத்துகளும் 太 鶯 y 数 பழைய சீன் எழுத்துகளும் ஒரு தாய்வயிற்றிற்பிறந்த இரண்டு 9. 8 8 总
பிள்ளைகள் என்று கூறலாம்.
1. மொகஞ்சதரோ Garui,(Hoang 6. (p. 2500) எழுத்துகள் (2) ஈஸ்டர்தீவு கூற்ருல் இது வலியுறுகினறது. எழுத்துகள்.

Page 61
106 பழந்தமிழர்
* சாபிய அல்லது தென் அராபிய எழுத்துகள் இன்றும் மொஞ்சதரோ எழுத்துக்குறிகள் சிலவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன. ஈஸ்டர் தீவுகளின் எழுத்துகள் பெரும்பாலும் மொகஞ்சதரோ எழுத்து களைப் போலவே இருக்கின்றன; சில ஒன்முகவே காணப் படுகின்றன.%?
சி. ஆர். ஹன்டர் என்னும் ஆசிரியர் கூறியிருப்பது வருமாறு :
1* தளையிட்ட பழைய இந்திய நாணயங்களிற் காணப்படும் அடையாளங்களும் மொஞ்சதரோ எழுத்து களைப் பின்பற்றியனவே. மொகஞ்சதரோ எழுத்துகளி
|。黑】次 】|
1,。字。。°,4 ,5 。引 முன், மீன், பேர், கடவுள், அது, முன், 7. 8 9 e 11 ... i.e. முன், ஆறு, கடவுள, ஆறு, கார்முகில், முன். மோகஞ்சதரோ தொடர் எழுத்தின் வாசிப்பு-இட மிருந்து வலம், (ஹெரஸ்பாதிரியார்) லிருந்து பிராமி எழுத்து மாத்திரமன்று தென் அராபிய மினேவ எழுத்துகளும் பிறந்தன. மொகஞ்சதரோ எழுத்து. * Light of the Mohenjo-Daro-Fr. Heras-New Review-1936. s
l. Riddles of Mohenjo-daro.-G. R. Hunter-New Review Vol. 3-p. 314.
 

மொழி 107
கள் தெற்கு ஆசியாவழியாக வந்து பினீசிய கிரேக்க, உரோமை எழுத்துகளைப் பிறப்பித்திருக்கின்றன. பிராமி யையும் அதன் வழிவந்த மொழிகளையும் தனியே விடுதும்.’ м
ஆஸ்திரேலிய கிழக்கிந்திய மொழிச் சொற்கள் ஒன்ருகவே காணப்படுகின்றனவென்று அம்மொழிகளை நன்கு ஆராய்ந்தோர் நுவல்கின்றனர். ஆரியருக்கும் தமிழருக்கும் முற்பட்ட இந்திய மக்கள் என்னும் நூலிற் கூறப்படுவது வருமாறு:
*ஆஸ்திரேலிய, ஆசிய மொழிச் சொற்கள் பலவும் சுமேரியச் சொற்கள் பலவும் ஒன்ருகக் காணப்படுதலை பிரிசிலுஸ்கி என்பார் ஆராய்ந்து காட்டியிருக்கின்ருர், ரெவெட் என்பார், ஆசேனியா, ஐரோப்பா, ஆபிரிக்கா முதலிய நாடுகளுக்கு நாகரிகத்தைப் பரப்பியவர்கள் சுமேரியராய் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.’? சுமேரியமும் தமிழும் ஒர் இன மொழிகளென்பது முன் ப்லவிடங்களில் விளக்கப்பட்டது.
* சுமேரியம் எல்லம் முதலிய மொழிகள் திராவிட மொழிகளோடு ஒலி முறையில் ஒற்றுமையுடையன. ஆகவே டாக்டர் சத்தேசி என்பார் கிரேத்தா, இலேசிய சுமேரிய, எல்லம் மொழிகள் ஒரே தொடர்புடையன என்றும், ஐசியன் தீவுகள் சின்ன ஆசியா மெசபெத்தே மியா முதலிய நாடுகள் ஒரே நாகரிக இணைப்பு உடைய
2. Prof. Przy Lwski has compared a series of Austro Asiatic words with Sumerian and has discovered important analogies. Rivet also in his article already referred to suggests that the Sumerian had probably played an important role as agents of transmission of culture. elements between Oceania and Europe and Africa-PreAryan and Pre-Dravidian in India-p. X.

Page 62
108 பழந் தமிழர்
னவா யிருந்தனவென்றும் கூறுவர்’ (திராவிட இந்தியாபக். 41-42)
மக்கள் இன ஆராய்ச்சியாளர் இந்தியா முதல் ஸ்பா னியா வரையில் ஒரே இன மக்கள் வாழ்ந்தார்கள் எனக் கூறுவர். இந்திய நாகரிகத்தில் திராவிடரின் பகுதி என்னும் நூலில் புளூர் (Fleure) என்னும் ஆசிரியர், மத்தியதரை மக்களுடையவும் திராவிட மக்களுடைய வும் உடற்கூறுகாைஒப்பு நோக்கி இருகூட்டத்தினரும் ஒரே உற்பத்யைச் சார்ந்தவர்கள் என நிறுவியிருக்கின் முர்2.
எப்படி மத்தியதரை மக்களும் திராவிட மக்களும் ஒரு இனத்தவர்களாகக் காணப்படுகிறர்களோ அப்படியே அவர்களது மொழிகளும் ஒரே உற்பத்தியைச் சார்ந்தன என இக்கால மொழி நூலார் ஆராய்ந்து கூறியிருக்கின்ற னர். மொழிநூலார் கூறிய முடிவுகளை எல்லாம் ஒருங்கு வைத்து ஒப்புநோக்கிய வெல்சு என்னும் ஆசிரியர் மத்திய தரை நாடுகளில் ஆதியில் வழங்கிய ஆரியமல்லாததும் செமித்தியம் அல்லாததுமாகிய மொழி பாஸ்க்கு (Basque) எனப்படும்என்றும், அது திராவிட மொழிக்கு நெருங்கிய உறவுள்ளதென்றும் குறிப்பிட்டிருக்கின்றர். அவர் கூறியிருப்பதின் சுருக்கம் வருமாறு :
* பாஸ்க்கு மொழி, காக்கேசிய மலைப்பங்கங்களிற் பேசப்படும் மொழிக்கு இனமானது; ஒரு காலத்தில் அது மிகவும் விரிவடைந்திருந்தது; முந்திய கமத்திய மொழிக் கூட்டங்களாக வியாபகமடைந்து மத்தியதரை மக்களாற் பேசப்பட்டது; தெற்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் வழங்கியது; இந்தியாவிலுள்ள திராவிட மொழிக்கு நெருங்கிய தொடர்புடையது. 1. Outline of Eistory p. 79-H. G. wells. : 2. The Dravidian Elements in lindian culture-p. 37

மொழி 109
**மேற்கு, தெற்கு ஐரோப்பாவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மொழிக்கூட்டங்கள் தோன்றி யிருந்தன. ஆரிய மொழி வருதலும் அவை மறைந்தன. பழைய மொழியைச் சார்ந்தவை 1 கிரேத்தா, இலைகிய மொழிகள். இவை 2 பாஸ்கு மொழியைச் சேர்ந்தவை ஆகலாம்.
*மங்கோலியம், பாஸ்க்கு காக்கேசியம் முதலிய மொழிகளை இணைக்கும் மொழி சுமேரியமாக இருக்க லாம். இது உண்மையாக விருந்தால் பாஸ்கு, காக்கேசி யம் திராவிடம் மங்கோலியம் முதலிய மொழிகள் இன்னும் மிகப் பழைய மொழிகளாகும். ஆரியம் செமித்தியம் கமித்தியம் முதலியூ மொழிகளைத் தொடுக் கும் மொழி ஒன்று கண்டுபிடிக்கப்படாம லிருக்கலாம். குட்டியினும் விலங்குகள் எப்படி பல்லி முன்னதுகளி லிருந்து வளர்ச்சி அடைந்து பல்லிக்கு இனமாயிருக்கின் றனவோ, அதுபோன்ற இனமே அம்மொழிக்கும் இம்மொழிக்கும் இருக்கலாம்?’
1. Cretan 2. காக்கேசியம், திராவிடம், சுமேரியம் எல்லம் மொழிக் குலங்கள்.
3. Outine of History p. 59-H. G. Wells.
They (philologists) find Basque more akin to certain similarly stranded vestiges of speech found in Caucusian mountains and they are disposed to regard it as a last surviving member, much checked and specialized, of a race very widely extended group of pre-Hamitic languages, otherwise extinct, spoken chiefly by peoples of that brunet Mediterranean race which once occupied most of western and southern Europe and western Asia. They think it may have been closely related to the Dravidian of India, and the languages of the peoples of the heliolithic culture who spread eastward through East Indies to Polynesia and beyond.-O.L.'O. H. P. 83.

Page 63
110 பழந் தமிழர்
கிழக்கிந்தியத்தீவு, மொகஞ்சதரோ எழுத்துகளைப் போன்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டதும் நாற்பது *தொன்’ நிறையுள்ளதுமாகிய பெரிய கல் ஒன்று பசிபிக் கடற் றிவுகளுள் ஒன்றுகிய பியூசித் தீவுக்கு அருகாமை யில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பல சுவாத்திக அடையாளங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. இக்கல்லில் எழுதப்பட்ட எழுத்துகள் முன் இங்கு இருந்து கடலுள் மறைந்துபோன கிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் நாகரிக சின்னமா யிருத்தல் வேண்டு மென்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும். இதன் விபரம் வருமாறு:
‘நாற்பது ‘தொன் நிறையுள்ளதும் நாலு அங்குல ஆழத்தில் பெரிய சுவாத்திக அடையாளங்கள் வெட்டப் பட்டுள்ளதுமாகிய பெரிய கல், பசிபிக்கடலில் ஒருபெரிய நிலப்பரப்பு : கடலுள் மூழ்கிப்போனதற்கு அடையாள மாகக் கிடைத்துள்ளது. இக்கல் கியூயாக்கு வாசிக ளான புறாஸ் சேர்டியன், பாகன் ஸ் டொக் என்னும் இரு சகோதரரால் கண்டுபிடிக்கப்பட்டது. பியுசிக்கு அயலி லுள்ள ‘வித்திலேவு (Viti Lewu) என்னும் தீவு மக்களி டையே, பியூசி, பிதிலேவு என்னும் இரு தீவுகளும் 3C5 காலத்தில் ஒன்ருரக இருந்தனவென்றும், ஒரு காலத்தில் நேர்ந்த இயற்கைக் குழப்பத்தினல் அவை இரண்டாக்கப் பட்டனவென்றும்,வித்திலேவிலுள்ளவர்கள் தங்கள் எழுத் துச் சாதனங்களைப் பெரிய கல் ஒன்றில் பொறித்து அடுத்த தீவுக்குக் கொண்டுசெல்ல முயன்றபோது அது - கட்டலுள் ஆழ்ந்து போயிற்றென்றும் கூறும் பழங்கதை ஒன்று இருந்தது. இதை ஆதாரமாகக் கொண்டு தேடிய போது அவ் விபரமுள்ள் கல் கிடைத்தது. இக்கல் ஆதி யில் ஒரு மலை அடிவாரத்தில் இருந்திருத்தல்வேண்டும். சில காலத்தில் அது சரிந்து விழுந்து பல துண்டுகளாக

மொழி 111
நொறுங்கிப்போயிற்று. அதில் ஒரு துண்டின் கிறை நாற்பது "தொன்’. அதில் வெட்டப்பட்ட எழுத்துகள் சீன எழுத்துகள் போலக் காணப்பட்டன. அவ்வெழுத் துகளை நிழற்படம் பிடித்துச் சீனுவுக்கு அனுப்பிய போது சீன ஆராய்ச்சியாளர் அவை சீன எழுத்துகளல்ல எனக் கூறினர்.
"இவ்வெழுத்துகள் ஈஸ்டர் தீவு எழுத்துகளை இணைப் பன வாயிருக்கலாமா ? என்பது ஆலோகிக்கப்படுகின்றது. பசிபிக் கடலின் பாதி, மலாயக் குடாநாடு, பனமாக் கால் வாய் முதலியவைகள் வரையில் பரந்திருந்து கடலுள் மறைந்த மு (Mu) என்னும் கண்டத்தின் 1ழைய நாக ரிகத்தை அறிவிக்கும் சின்னமாக இது இருக்கலாம். இக் கல்லிற் காணப்படும் உருவங்கள்"ஈஸ்டர் தீவுகளில் பரும் படியாக வெட்டப்பட்ட மனிதச்சிலைகள் போலக் காணப்
படுகின்றன.**
இது சிந்துவெளி நகரங்ளேயும் ஈஸ்டர் தீவுகளையும் காட்டும் படம். கிரேத்தா முதல் மேற்கு ஆசியா இந்தியா ஈஸ்டர் தீவுகள் வரையில் ஒரே வகை எழுத்துக்கள் வழங்கின என்று தெரிகிறது.*
1. The Times of Ceylon Sunday Illustrated.

Page 64
112 பழங் தமிழர்
கெல்பேட் என்னும் ஆசிரியர் கோரிய மொழி இலச் கணம் திராவிட மொழிகளின் இலக்கணங்களோடு ஒத்து
நிற்பதை ஆராய்ந்து காட்டியுள்ளார்.1
* In the year 1933 the Hungarian Savant Mons. G. de Hevesy gave a lecture, in which he compared the scripts of the Easter Island and of Mohenjo Daro after comparing l30 signs of both writings. The lecture
concluded that both scripts are of the same family of
scripts viz.: that of Mohenjo Daro and that of Easter Island belonged to the same family of scripts. The wooden tablets of the Easter Island which were called rongo-rongo on which characters appear seem to be very old. Some of the signs were still in vogue in 1771 when some representatives of the islands signed an official document. It is true that the tablets were imported into the island. From where 2 Hotu-matua, the leader of the expedition that brought them, seems to have come from the island of Celebes nine hundred years ago. In point of fact some of the ancient writings of those wooden tablets......... the pieces of wood introduced in the Easter Island may well have come from South India. For at least one of these wooden tablets was a piece a Podocarpus either Podocarpus Latifolia, or Podocarpus Ferruginea. Now the former grows both in Malaya and in India. In India it is called Narumbili or Karnutumpi in Tamil, Karuntupi in Kannada and Malayalam. In English it is usually called South Indian pine.
Annals of the Bhandarkar Oriental Research Institute, Vol. XIX— Rev. H. Heras V
Professor S. Langdon of Oxford in the introduction of G. R. Hunter's, “The Script of Harappa and Mohenjo. Daro and its connection with other scripts writes: There. can be no doubt concerning the identity of the Indus and Easter Island script. Whether we are thus confronted by an astonishing historical accident or whether this ancient Indian script has mysteriqusly travelled in the remote Islands of the Pacific none can say. The age of the: Easter Island tablets made of wood is totally unknown, and all knowledge of their writing has been lost. This

மொழி 113
தமிழ்ப் பெயர்க் காரணம்
தமிழ் என்னுஞ் சொல் தமிழ் மக்கள் வழங்கும் மொழிக்குப் பெயர் மாத்திரமல்லாமல் இ னி  ைம நீர்மை என்னும் பொருள்களையும் உணர்த்து மென் பது, ' இனிமையு நீர் மையுந் தமிழெனலாகும் ” என்னும் பிங்கலச் சூத்திரத்தாலறியலாகும். இ லக் கியங்களில் ** தேனுறை தமிழ் 84 தமிழ் தழிஇய சாயல் எனத் தமிழ் என்னுஞ் சொல் இனிமையை உணர்த்த ஆளப்பட்டிருத்தல் காண்க. இச்சொல் இனிமையை உணர்த்தற்குரிய காரணம், அதன் மூலம் ஆதியன அறிய முடியாதன.
சிவன், ஞாயிறு, முருகன் முதலிய கடவுளர் களோடும், தமிழர் சமயத்தோடும் தமிழ் தொடர்புடைய தென்பது தமிழ் நாட்டில் தொன்றுதொட்டுள்ள ஐதீகம். இவ்வைதீகம் பற்றியே * தென்மொழியை உலகமெலாக் தொழுதேத்தும் - குடமுனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப்பாகர் ’ * செந்தமிழ்ப் பரமாசாரியனுகிய 'முருகக் கடவுள்’ அகத்தியருக்குத் தமிழ் அறிவுறுத்தினர்,
என்பன போன்ற வாக்கியங்கள் எழுந்தன.
*சந்தன மும்புழுகுந் தண்பனி நீருடனே கொந்தலர் சண்பகமுங் கொண்டு வணங்கினேன்
same script has been found on seals in precisely similar to the Indian seals in various parts of ancient Sumer, at Susa, and the border land east of the Tigris.
—Bhandarkar Oriental Research Institute, Vol. XX l. H. B. Halbert has issued a Comparative grammar of Korian and certain of Dravidian languages of India to demonstrate the close affinity he finds between thenOutline of History.-p. 45-H. G. Wells.
3. கல்லாடம். 4. சிந்தாமணி.
8

Page 65
114 பழந் தமிழர்
வந்திடும் வல்வினைநோய் மாற்றுவ துன்பதமே செந்தமிழாகரனே சிவசிவ சூரியனே’ (பழைய பாடல்)
* அசலே சுரர் பத் திரனே குணதிக்
கருணுேதயமுத் தமிழோனே' - கிருப்புகழ்,
*சுள்ளென் றெரிக்குஞ் சுடரோன் பால் தோன்றியுயிர் உள்ள ந் துலக்கி யுலா வலின் - தெள்ளு புகழ்ப் பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ் ஒண்டமி ழென் மனுர் போந்து. ”
உண்மையான தமிழ்நாடு குமரிமுனைக்குக் தெற் கிலேயே இருந்தது. பஃறுளியாற்றிற்கும் குமரிமலைக்கும் இடையே கிடந்த நாற்பத்தொன்பது கண்டமிழ் நாடுக ளோடு பாண்டியரின் தலைநகராகிய தென் மதுரையையும், கடல்கொண்டது எனப்படுமாற்றலும், கடல் கொள்ளப் பட்ட பெருவள நாட்டின் அரசனும் செங்கோ தமிழறிவு சான்ற பெருமக்கள் பேரவைகூட்டித் தமிழை வளர்த்தா னெப்படுகின்றமையானும் இது எளிதிற் புலனுகும். * செங்கோ - நேராற்றும் பேரவையில் நூற்பெருமக்கள் சூழ்ந்தேத்தப் - பாரரசு செய்த தமிழ்ப் பைங்தேவி.” என வரும் தமிழ் விடு தூதும் இத%ன வலியுறுத்தும்.
5. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழி நூலில் எடுத் தாண்ட பழைய செய்யுள்,
... 1. இதுவும் மொழி நூலிற் கண்டது. புதிய செய்யுளாகத் தெரிகிறது. டிை நூலார் தாமம் என்னும் ஞாயிற்றைக் குறிக்கும் சொல்லில் கின்றும் தமிழ் தோன்றிற்றென்பர்.
ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்று-மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனேயது தன்னே ரிலாத தமிழ். •ܗܝܝ
தண்டி அலங்கார மேற்கோள்) இது ஞாயிற்றுக்கும் தமிழுக்கும் சிலேடை.

மொழி 115
இஞ்ஞான்று இலங்கை எனப்படும் தீவு கடல் வாய்ப் பட்ட குமரிகண்டத்தின் ஒர் பகுதியாகும், இலங்கை ஏழ்தெங்க நாடு எனப்பட்டதின் ஒர் பகுதியெனக் கருதப் படுகின்றது. செங்கோன் கரைச் செலவில் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் பாடல் என ஒன்று காணப் படுகின்றது. எப்படிப் பிற்காலத்தில் பாண்டியரின் தலை நகராகிய மதுரை தமிழ் வழக்கிற்கு மத்திய இடமாக வயங்கிற்றே அவ்வாறே இலங்கையும் கடல் கோட்குமுன் தமிழுக்கு நடுவிடமாகத் திகழ்ந்த தெனலாம்.
' தமிழ் நாட்டின் அழிவுக்குப் பின்பும் இலங்கை, சுமத்திரா, சாவகம் கிழக்கிந்தியத்தீவுகளை உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பாக விளங்கிற்து. பாஸ்கராச்சாரியர் (கி. பி. 1150) எழுதிய வானநூற்குறிப்பில் பூமத்திய இரேகை பழைய இலங்கைக் கூடாகச் செல்கின்றதெனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் புத்த நூல்கள் கூறு The Dravidian race did not come to India from the North but entered India from the South. It probably occupied the Island continent of which Ceylon formed but a small part. Ancient Ceylon was frequently described in the epics and puranas as the stronghold of the Great Dravidian tribes who were a terror to the “three worlds'. The Dravidians spread out all over India and went even as far as Baluchistan, where a Dravidian dialect (Brahui) is still spoken. Dravidian dialects are still spoken in many parts of Northern India by small tribes. Probably both by sea and by land the Dravidian migrated to Babylonia, Assyriya and Elam in Western Asia......If the Dravidian races migrated from the Southern Island continent to India, the civilization of Ceylon may be even older. It is probable that at least settlements of Dravidians went over from the Island continent to India and thus strengthened the Dravidian element which was there even before the Deluge-Our place in the civilization of the ancient world pp. 23, 24

Page 66
116 பழந் தமிழர்
கின்றபடி இப்பொழுது உள்ள இலங்கை முன்னைய இலக் கையின் ஒரு சிறு பகுதியாகும்.
செங்கோன் என்னுமரசன், கந்தபுராணத்திற் கூறப் படும் சூரன் ஆவன் என்பது சிலர் கருத்து. இராவணனது ஆணை தண்டகாரணியம் வரையிற் சென்றது.
மேற்கு ஆசியா எகிப்து முதலிய நாடுகளிற் காணப் படுவன போன்ற தமிழ் மக்களின் புராதன கட்டிட இடி பாடுகள் இந்தியாவிற் காணப்படாமைக்குக் காரணம் அவை கடலுள் மறைந்து போயினமையே%
1. இராசாவளி என்னும் நூல், *துவாபர உகத்திலே இராவணனின் துட்டத்தனத்தின் பயனக அவன் கோட்டையை யும் 25 மாளிகைகளையும் புன்னுருக்கும் தூத்துக்குடிக்கும் இடைப் பட்ட 400,000 வீதிகளையும் கடல் கொண்டது. இப்பொழுது கழனிதிசனின் துட்ட நடக்கை காரணமாக 100,000 துறைமுகப் பட்டினங்களும் 970 மீன் பிடிகாரர் குப்பங்களும், முத்துக் குளிப் போரின் 470 சேரிகளுமாக இலங்கையின் பன்னிரண்டில் பதினெரு பாகம் பெருங்கடலுள் ஆழ்ந்தது. மன்னர் அவ்வழிக் குத் தப்பிக்கொண்டது" எனக்கடறும். -
இராவணன் எடுத்த் மலை என்பது திருகோண். மலையே என்பது ஐதீகம், அம்மலையில் இராவணன் வெட்டு என ஒரு பகுதி உண்டு. இம்மலையின் ஒரு பகுதியை இராவணன் எடுத்துத் தனது இராசதானியில் வைக்கச் செய்த முயற்சி பலியாமையே இராவணன் மலையெடுத்த வரலாருக மாறியிருத்தல்கடடும். இரா வணன் மலையை எடுக்க திபெத்திலுள்ள கைலாசத்துக்குச் சென்றனென்பது பொருத்தமாகவில்லை. கோணேசர், முன்னிசு வரர், திருக்கேசுவரர் ஆலயங்கள் இராவணன் காலத்திற்கு முற் பட்டவை என்பது ஐதீகம்.
* ஆற்றேரங்களிலேயே பழைய நாகரிகங்கள் எல்லாம் தோன்றியிருந்தன: தமிழரின் நாகரிகமும் மிகப் பழமையுடைய தெனப் படுதலால் அதுவும் ஓர் பெரிய ஆற்றேரத்தில் தோன்றி யிருந்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ் மூவேந்தர் நாடுகளுக்கு அப்பால் தண்டகம் என்னும் இருண்ட காடு இருந்ததென இராமாயணத்தாலறிகின்ருேம். தெற்கே மிகப் பெரிய ஆறுகள் காணப்படவில்லை, பஃறுளி குமரி என்னுமாறு

மொழி 117
இலங்கையின் பழைய பெயராகிய எல் என்னும் சொல்லினின்றே தமிழ் என்னும் பெயர் பிறந்ததெனத் தெரிகின்றது. அதனை ஆராய்வாம்.
ஒரு நாட்டின் பெயர் மக்களுக்காய் மக்களின் பெயர் மொழிக்காதல், இயல்பு. தமிழ் என்னும் பெயரும் இவ்வாறு தோன்றியிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். இலங்கையின் பழைய பெயர் எல். இது இலங்கை மக்களின் பழைய மொழி எலு வாதலின் அறியலாகும். எல், அம் இறுதி கிலை பெற்று எல்லமாய்ப் பின் ஈழம் எனத் திரிந்தது. இலங்கையினின்றும் இந்திய நாடு போந்து வாழ்ந்த மக்கள் இன்றும் ஈழுவர் எனப்படுகின் றனர். எல் என்னுஞ் சொல் وفة إليه இல் என மேற்கு ஆசிய நாடுகளில் திரிந்து வழங்கிற்று. S.
மாகறல் கார்த்திகேய முதலியார் ஞாயிற்றை உணர்த்தும் தாமம் என்னும் சொல்லினின்றும் தமிழ் பிறந்த தெனக் கூறியுள்ளார். சுமேரிய மக்களின் (குரிய குமார , னன) மனு, தாமுஸ் அல்லது தாம்சி (Tamzi or Tammuz) எனப் பட்டார். இதனலும் சூரியனுக்கும் தாமத்துக்கும் யாதோ தொடர் பிருத்தல் தெரிகிறது. வித்துவான் திரு. ரா. இராகவ ஐயங்காரவர்களும் தாமுஸ் என்பதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இருக்கலாமெனக்
குறிப்பிட்டுள்ளார்கள்.
களுக்கிடையில் பல நாடுகளிருந்தன வென்று சிலப்பதிகார உரை யிற் காண்கின்ருேம். குமரி பஃறுளி என்னும் ஆறுகளையும். அவை களுக்கிடைப்பட்ட நாடுகளையும் கடல் கொண்ட வரலாறு சிலப் பதிகாரத்திற காணப்படுகின்றது. பஃறுளி அல்லது குமரி ஆற்றை அடுத்த இடங்களிலேயே பழைய தமிழரின் 5ாகரிகம் தோன்றி வளர்ந்து பின் வடக்குநோக்கிப் பரந்திருத்தல் வேண்டும். இக கருத்தைப் பல வரலாற்ருசிரியர்கள் ஆதரித்துள்ளார்கள்.
1. இதன் விரிவை முன்னுரையிற் காண்க,

Page 67
118 பழந் தமிழர்
ஒளிமலை எனப்படுகின்றது. அது ஒருபோது % தாமம்எல் எனவும் வழங்கியிருத்தல் கூடும். தாமம் எல் என்ப தற்கு நேர் பொருள் சிவன் ஒளி என்பதே. எல்லம் எனப்பட்ட நாடு சிவன் ஒளி மலையுள்ள சிறப்பினல் தாமம் எல்லம் எனப் பட்டிருக்கலாம். பின் தாமம் என்பது தாம் என மருவித் தாமெல்லம் என்ரு ய், எல்லம் ஈழமா னது போது அது தாமீழமாய்ப் பின் தமிழாயிற்று எனக் கோடல் பொருத்தமாக்த் தெரிகின்றது. தமிழ் என்பது இரு சொற்கள் சேர்ந்த சொல்லென நன்கு புலப்படு கின்றது. இவ்வாறு கொள்ளுமிடத்துத் தமிழ் ஞாயிற்றி னின்றும் பிறந்தது; தமிழுக்கும் சிவ பெருமான், முருகன் என்னும் கடவுளர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டுச்
இலங்கையில் ஞாயிற்றின் ஒளி விளங்கும் மலை சிவன்
தமிழும் தமிழரின் சிவம்தமும் பிரிக்கக்கூடாதன, எனத் தொன்றுதொட்டு வரும் ஐதீகங்கள் விளக்க முறுகின் றன வாதல் காண்க. தமிழ் என்பதற்குச் சிவன் ஒளி என்பது பொருள்.
இவ்வடிப்படையான ஐதீகத்தைக் கொண்டே முருகக் கடவுள் செந்தமிழ்ப் பரமாசாரியன்; சிவ பெருமான் அகத்தியருக்கு இலக்கண மருளினர் என்பன
போன்ற வரலாறுகள் எழுந்தன.
எல்லம் என்பது பொதியம், மலையம், இமயம் என்பன போலத் தமிழ் மயமான உச்சரிப்புடைய பெயராயிருக் கின்றது. தமிழ் என்னும் சொல் இரு சொற்கள் ஒட்டி னல் தோன்றிப்பின் ஒட்டுத்தெரியாதவாறு மருவிவிட்ட
* ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய எல், கடவுளைக் குறிக்கும் பெயராக மாறியபோது ஞாயிற்றுக் கடவுள் என்பதைப் புலப்படுத்த தாமம் எல் என்னும் பெயர் வழங்கிற்று எனக் கடறலாம.

மொழி 119.
தெனத் தெரிகிறது. தமிழைக் குறிக்கப் பிறமொழியாளர் வழங்கிய சொற்களைக் கொண்டும் இதனை அறியலாகும்.
திரண்டப்ொருள். தொடக்கத்தில் ஒரு கூட்டத்தினராக வாழ்ந்த மக்கள் எழுத்தெழுதும் முறைகளை ஒரே வகையாகத் தொடங்கி ஒரே வகையான முறையில் வளர்ச்சி செய்து மோகஞ்சதரோ எழுத்துக்கள் போன்ற எழுத்தெழுதும் முறை வரையில் சென்றனர். பின்பு எழுத்துக்களும் மொழிகளும் பல கூட்டங்களாகப் பிரிந்து பெருகின. இவை எல்லாம் அவ்வாறு கிளேத்துப் பெருகுதற்கு அடிமரம் போன்றுள்ளது, கடலாற் கொள்ளப்பட்ட நாட்டில் வழங்கியதும், அதன் தொடர்பான இந்தியக் குடா நாட்டில் அன்று (华西成。 இன்று வரை வழங்கி வருவதுமாகிய தமிழ் என்பது குன்றின் மேலிட்ட விளக்குப்போல் விளங்குகின்றது. தமிழ் என்றுமுள தென்னும் ஐதீகம் பிழையன்று. இவ்வைதீகம் பற்றியே *என்றுமுள தமிழ்’ என்னும் திருவாக்கெழுந்தது.
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினு மோர்
எல்லையறு பரம் பொருள் முன்னிருந்தபடியிருப்பதுபோல் கன்னடமும் களித்ெலுங்கும் கவின் மலேயாளமும் துளுவும் உன்னுதரத் திதுத்தெழுந்தே யொன்று பல வாயிடினும்
ஆரியம் போலுலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத்திறம் வியந்து செயல் மறந்து போற்றுதுமே.”*
l According to Heradotus was Termilae (as it is written by Hecataes) Tremilae and it is confirmed by native inscriptions in which the name is writtea Thiramilae-Lycia.—E. Britannica
பெரியபுளுஸ்: (கி. பி. 2ம் நூற்ருண்டு) தமிராய் (Tamirai) தமிழ்நாடு லிமுரிகே " (Limyrike): பாளிமொயில்: "தமிள (Damila.)

Page 68
120 பழக் தமிழர்
என்னும் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கூற்றின் உண்மை அறிந்து மகிழத்தக்கது.
* முன்னிருந்த பாலிமொழியுங் கீர்வாண் மும்
துன்னுங்கருப்பையிலே தோய்வதற்கு-முன்னரே பண்டைக் காலத்தே பரவை கொண்ட முன்னூழி மண்டலத்திலே பேர்வள நாட்டின்-மண்டு நீர்ப் பேராற்றருகில் பிறங்கு மணிமலையில் சீராற்றுஞ் செங்கோற்றிறற்செங்கோ-நேராற்றும் பேரவையிலே நூற்பெருமக்கள் சூழ்ந்தேத் தப் பூாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி.’ (தமிழ் விடுதூது)
இயல் 5
தமிழர் நாகரிகம்
பழைய கற்காலம் கற்கால மக்களின் வரலாறு ஏட்டில் எழுதப் படாதது. அவர்கள் வரலாற்றின் அவர்கள் கையினுற் செய்து பயன்படுத்திய பொருள்கள் கூறுகின்றன. $ பழங்காலங் தொட்டு நாவலந்தீவு எனப்பட்ட இந்திய நாடு மக்களுக்கு உறைவிடமாயிருந்து வருகின்றது. அக் கால மக்கள் தீக்கடை கோல்களால் தீ உண்டாக்க அறிந் திருந்தனர். அவர்களின் என் புகளோடும் ஆயுதங்க
ளோடும் மட்பாண்டங்கள் காணப்படாமையின் அக்
* இப்பாடல் தமிழ் விடுதூது என்னும் நூலிலுள்ள தென மாகறல் கார்த்திகேய முதலியாரால் தனது மொழி நூலில் எடுத் துக் காட்டப்பட்டது; அரிய பொருள் பொதிந்தது. அவர் கடறிய தமிழ் விடுதூது இதுைைரயில் அச்சில் வந்ததாகத் தெரியவில்லை. இது பொதிந்த பொருள் செங்கோன் தரைச் செலவு, அதன் உரை சிலப்பதிகார உரைகளில் காணப்படுகின்றன.
$ டெயிலர் என்னும் ஆராய்ச்சியாளர் இந்திய கற்கால,

தமிழர் நாகரிகம் 121
காலத்து அவர்கள் மட்பாண்டங்கள் செய்யவில்லை எனத் தெரிகிறது. மட்பாண்டங்கள் புதிய கற்கால மக்களால் செய்யப்பட்டனவாகலாம். இறந்தவர்களை  ைவ த் து அடக்கஞ் செய்தற்கும், அவர்களுக்கு உணவு முதலியன வைப்பதற்குமாகவே அவைகள் தொடக்கத்திற் செய்யப் படலாயின. இறந்தவர்களின் உடலைப் பறவைகளும் விலங்குகளும் உண்ணும்படி எறிந்து விடுதலே அக்கால வழக்கு. அவர்கள் ஆடை உடுக்கவில்லை. பரதகண்டத் தின் வெப்ப நிலைக்கு ஆடையுடுக்கவேண்டிய கட் டாயம் ஏற்படவில்லை. இன்றும் சில இடங்களில் கிர்வா ணம் பரிசுத்தத்துக்கு அடையாள மெனக் கருதப்படுகின் றது. அவர்கள் வேட்டையாடிக்கொன்ற விலங்கு களின் தோல்களைக் காயவிட்டு முதுகின்மேல் போர்த்தார் கள் ; இன்றும் சில காட்டுச் சாதியினர் செய்வதுபோல இலைகளை மாலையாகத் தொடுத்துக் கழுத்தில் அணிந்தார்
கள். மர உரியும் உடையாகப் பயன்படுத்தப்பட்டது.
தோல் மரவுரி முதலியன நிர்வாணத்திற்கு அடுத்த படியில் புனிதமுடையனவாக இன்றும் கருதப்படுகின் றன. (மக்கள் நிர்வாண மல்லாமல் இருக்கும் காலத்தில்) சிவன் புலித்தோலை அணியலானர். யோகப்பயிற்சி செய் வோர் புலித்தோல் மான்தோல் ஆசனங்களைப் பயன்படுத்
உலோககால நாகரிகங்களின் கால எல்லைகளைப்பற்றிக் குறிப்பிட் டிருப்பது வருமாறு:
. 8. (1p. 8. (լք. assids Tooth (mesolithic) 40,000-24000 சிங்கன்பூர் மிர்சாப்பூர் ஓவியங்கள் 24,000-6000 சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்கம் 10,000 இரும்புக்காலம் t 4,000 சிந்துவெளி நாகரிகம் 2,500-1900
-Prehistoric India, p. 228

Page 69
122 பழக் தமிழர்
துகின்றனர். அக்கால மனிதன் குலதெய்வங்களுக்குப் பலி செலுத்தியிருக்கலாம். கிராமங்களில் காணப்படும் கீழ்தர வழிப்ாடுகளில் கிராம தேவதைகளுக்கு இரத்தப் பலிகள் இடப்படுகின்றன. அத்தெய்வங் — களிற் பல பெண்பாலன. அவை ஆதிகால மனிதன் பயன்படுத்திய தண்டாயுதங்க ளைப் பிடித்திருக்கின்றன. அத்தெய்வ வழி பாடுகள் ஆதிகாலத்திலிருந்தே வருகின்
றன. கோயிற் கோபுரங்களிலும் சிலைகளி
லும் காணப்படும் சில மக்கள், கடவுளர்
கிரேத்தா நாட் உருவங்களுக்குக் கோரப்பற்கள் வளர்ந்து டுத் தாய்க்கட
காணப்படுகின்றன. ஆதிகால மனிதனுக்கு "
கோரப்பற்கள் வளர்ந்திருந்தனவென்று உயிர் நூற் புலவ ராகிய தா வின் கூறுவர். ஆகவே அக்காலந்தொட்டே மக்கள் ஒவியங்கள் எழுதவும், உருவங்கள் வெட்டவும் அறிந்திருந்தார்கள் எனக் கூறலாம். அக்காலத் தெய் வங்கள் பெரும்பாலன பெண்பாலினவா யிருத்தலின் அக் காலம் பெண்களுக்கே சொத்துரிமையும் அதிகாரமும் இருந்தன என்று தெரிகிறது. ஆகமக் கொள்கைகள் பர வியபோது பெண்தெய்வம் காளியாகவும் மற்றைத் தெய் வங்கள் அத%ன ச் சேவிப்பன வாகவும் ஆக்கப்பட்டன. நரபலி கொடுப்பது அக்காலத்தில் அறியப்படாததன்று. மயிர் நகம்போன்றவற்றை இன்றும் மக்கள் தெய்வங்கட்
குப் பலியிடுவது பழைய நரபலியின் ஞாபகமே.
புதிய கற்காலம் புதிய கற்காலத்தில் மக்கள் விலங்குகளை வளர்க்கத் தொடங்கினர்கள். முதல் வளர்க்கப்பட்ட விலங்கு நாய் ஆகலாம். வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருது, எருமை
 

- Ra
தமிழர் நாகரிகம் 123
என்பன அடுத்தபடியில் பழக்கி வளர்க்கப்பட்டன. ஆடு களும் மாடுகளும் மேய்ச்சலளவில் மனிதனின் உதவியை வேண்டாதன. ஆனல் அவை மேய்வதற்கேற்ற நல்ல புற் றரைகள் வேண்டும். ஆகவே அக்கால மக்கள் அலைந்து திரிவதும், ஒரிடத்திற் றங்குவதுமாகிய இருவகை வாழ்க் கையை மேற்கொண்டனர். இவ்வகை வாழ்க்கையில் பல குடும் பங்கள் ஒன்றுசேர்ந்து வாழ்ந்தன. பல குடும்பங் களுக்கு ஒருவன் தலைவனனன். அவன் கோன் எனப் பட்டான். இவ்வகைப் பல குடும்பங்களுக் கிடையில் பெரிய கோன் ஒருவன் ஏற்பட்டான். இம்முறையில் குடித்தலைவர்களும் அரசர்களும் ஏற்பட்டனர். கோன் என்னுஞ் சொல் அரசனைக் குறிக்கும். அரசனது மன மண்மதிலால் அரண் செய்யப்பட்டது. ஆகவே அது கோட்டை அல்லது அரண்மனிை எனப்பட்டது.
மனிதன் தன் உணவுக்கு வேண்டிய பயிர்களை உண் டாக்கப் பிற்காலத்தே அறிந்தான். கற்காலத்தில் இடப் பட்ட பயிர், நெல், சாமை, அவரை, துவரை, வாழை, மா முதலியன. பயிரிடப்பட்ட முறையிலிருந்து நிலம் நன் செய், புன்செய் என இரண்டாகப் பிரிக்கப் பட்டது. நெல் விளையும் நிலம் நன்செய் என் அம், மற்றவை விளையும் நிலம் புன்செய் என்றும் வழங்கின. கடற்கரை மக்கள் மரக் கலங்கள் செய்து கடலிற் சென்றனர். ஆற் ருே ரங்களில் வாழ்ந்தோர் நிலத்தைப் பண் படுத்தித் தானியங்களை விளைவித்தனர்.
இவர்கள் வேளாளர், காராளர் எனப்பட்ட னர். மலைகளில் வாழ்ந்தோர் குறவர் என கிதைதி காட்டுத் வும், மணல் வெளிகளில் அலைந்து வேட்டை தாய்க் கடவுள் யாடி வாழ்ந்தோர் எயினர், மறவர் எனவும் பட்டனர்.

Page 70
124 பழச் தமிழர்
புதிய கற்கால ஆயுதங்கள் பழைய கற்கால ஆயுதங் களைவிடப் பல புதிய கற்கால வீடுகள் தடிகளாற் கட்டப்பட்டுப் புல்லால் வேயப்பட்டன. மரம் இலகு வில் கறையான் முதலிய எறும்புகளாலும், நிலத்தினுலும் உண்டு அழிந்துபோகத் தக்கனவாதலின் கற்கால இல் லங்கள் ஒன்றேனும் காணப்படவில்லை. இக்காலமக்கள் பலவகை மட்பாண்டங்களைச் செய்து பயன்படுத்தினர். பஞ்சினல் ஆடைகள் செய்யப்பட்டன. ஆடைகள் செய் தற்குப் பயன்படும் எல்லாவகையான கற்காலக் கருவி
· § களும் கண்டெடுக்கப்ப்ட்டுள்ளன. ஆயுதங்கள் மட்பாண்டங்கள் மர வேலைகள் போன்ற தொழில்கள் புரி யும் சாதிப்பிரிவுகள் அக்காலத்திற் ருேன்றியிருக்கலாம். அரையில் ஒரு துண்டு உடுத்துத் தலையில் ஒரு துண்
ኃ 刁一、/、 டைக்கட்டுவதே அக்கால உடை தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் ܥܬ ܠ ܐܐܐ&
எகிப்திய நாட்டுத் நீலம் மஞ்சள் சிவப்பு முதலிய சாயங்
தாய்க் கடவுள்
கள் ஆடைகளுக்கு ஊட்டப்பட்டன. மணிகள், எலும்புகளாற் செய்த மாலைகளும் சங்கினுற் செய்த வளைகளும் அணியப்பட்டன. சீப்புகளினல் கூந்தல் வாரி முடியப்பட்டது.
அக்காலத்தவர் இறந்தவர்களை மண் தாழிகளில் வைத்துப் புதைத்தார்கள். தாழிகளின் முன்பு அரிசி முதலியனவும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டன. அரிசியும் ஆயுதங்களும் இறந்தவர் களுக்கு அடுத்த உலகிற் பயன்படும் என்று அவர்கள் கருதினர்கள். இறந்தபின் உயிர்கள் நிலைபெறுவதை அக் காலத்தவர் நம்பினர்கள். சில சமாதிகளில் பெரிய
 

தமிழர் நாகரிகம் 125
கற்கள் நிறுத்தப்பட்டன. சில சமாதிகளில் இறந்தவரை வைத்துப் புதைத்த நான்கு கால்களுள்ள தாழிகள் காணப் பட்டன. தக்கண இந்தியாவிற் காண்ப்படுவன போன்ற கல் நாட்டப்பட்ட சமாதிகள், பிரித்தன், பிரான்ஸ், மத்திய சர்மனி, ஸ்காந்தினேவியா, சாடினியா, சிரியா, காக்கேசஸ் முதலிய இடங்களிற் காணப்பட்டன. கோப்பை அடையாளங்களுள்ள கற்களும் இந்திய சமாதி களிற் காணப்படுகின்றன. இந்திய சமாதிகளுட் காணப் பட்ட பல மட்பாண்டங்கள் திராய் (Troy) is 3, it அழி பாடுகளிற் காணப்பட்டவற்றை ஒத்திருக்கின்றன. மைசூரி லுள்ள பிரான்சிய பாறைக்குச் சமீபத்தில் சிலுவைக் குறியுள்ள சட்டி உடைவு ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. இது சுவாத்திக அடையாளம் என்பதிற் சந்தேகமில்லை, இவை திராசிய (Trojan) சுவாத்திக அடையாளங்களை ஒத்துள்ளன. கற்காலத்தில் இந்தியா மற்ற ஆசிய ஆபிரிக்க ஐரோப்பிய நாடுகளோடு தொடர்பு வைத்திருந்ததென இதனல் விளங்குகிறது. இந்தியா முழுமையிலும் ஒரே மொழி பேசப்பட்டது. பஞ்சாப் முதல் ஒரிசா வரையில் இப்பொழுது வழங்கும் மொழிகளின் இலக்கண அமைப் புத் தமிழை ஒத்துள்ளது. சொற்களை மாத்திர மன்று, மொழிகளின் அமைப்பை நோக்குவதாலும் மொழி களின் உற்பத்தியை அறியலாகும். பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய உலோகங்கள் கற்கால முடிவிற் கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம். இவைக்கு இடப்பட் டிருக்கும் பெயர்கள் தனித் தமிழ்ப்பெயர்களாகவே காணப்படுகின்றன. பழைய கற்கால சின்னங்களுட் சிவலிங்கங்கள் காணப்பட்டன. கற்காலம் கி. மு. 20,000 முதல் கி. மு. 5,000 வரையில் இருந்ததெனக் கூறுதல் பிழையாகாது. வீடுகளுக்கு மூங்கில் வேலியிடுதல், கவனில்

Page 71
126 பழந் தமிழர்
கல்வைத் தெறிதல், அம்மி, குழவி, சிரிகை உரல் முதலிய வைகளை கல்லினல் செய்து பயன்படுத்துதல் முதலியன கற்கால வழக்கங்களே. இன்றும் ஆலயங்களிலுள்ள முக்கிய உருவங்கள் கல்லினலேயே செய்யப்படுகின்றன.
* பழைய கற்கால சின்னங்கள் இந்தியாவில் அதிகம் காணப்படவில்லை. சென்னைக்கு அண்மையிலும் குண்டூர் பகுதியிலுள்ள ஒன் கோலி என்னுமிடத்திலும் சுடப்பாவி லும் பழைய கற்கால சின்னங்கள் கிடைத்துள்ளன. பெல்லாரியில் புதிய கற்காலப் பொருள்கள் கிடைத்தன. இவ்ையல்லாத பிற சில இடங்களிலும் கற்காலக் பொருள் கள் கிடைத்துள்ளன. ஒருவகை வெள்ளைக் கல்லில் (quartzite) முட்டைவடிவாக வெட்டப்பட்ட கல்லாயுத மொன்று நருமதை ஆற்றுப் பள்ளத்தாக்கில் கிடைத்தது. இது கிடந்த பருக்கைக் கற்களிடையே இன்று காணப் படாத நீர்யானை (Hippopotamas) பின் எலும்புகள் காணப்பட்டன. மிர்சாப்பூரில் புதிய கற்கால ஆயுதங்கள்
கிடைத்துள்ளன.
* இன்று காணப்பாடத ஒரு வகைக் காண்டா மிருகத்தை ஈட்டிகள் கொண்டு வேடர் வேட்டையாடுவ தைக் காட்டும் ஒவியம் விந்தியமலையில் தீட்டப்பட்டுள்ளது. கோசங்கபாட் (Hosangabad) மாகாணத்தில் ஒட்டைச் சிவிங்கி ஒவியங்கள் காணப்படுகின்றன. கய்மூர் மலைகளில் (Kaimur his) மான் வேட்டையாடும் ஒவியங்களும் சிங்கன்பூரில் (Singanpur) கங்காரு, குதிரை, மான் முதலிய ஓவியங்களும் காணப்படுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இவ்வோவியங்கள் காணப்பட்ட இடத்தில் புதிய கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. பழைய கற்கால மக்கள் இறந்தவர்களைக் காட்டில் தனியே

தமிழர் நாகரிகம் 127
சிங்கன்பூருக் குகையில் தீடப்பட்ட கற்கால ஓவியம்; காலம் கி. மு. 24000-க்கும் கி. மு. 16000-க்குமிடையில்
விட்டுச் சென்ருரர்கள். புதிய கற்கால மக்கள் அவர்களை ஒன்ரு கஅடக்கஞ் செய்தார்கள். மிர்சாப்பூரிலே புதிய கற்காலிச் சமாதி ஒன்றில் எலும்புகளோடு மிலு மினுக் பான மட்பாண்டங்களும் கண்ணுடி என மும் காணப் பட்டன. பல்லாவரத்தில் இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் ஈமத்தாழிகள் காணப்பட்டன. செங்கற்பட்டு, நெல்லூர், ஆர்க்காடு முதலிய இடங்களிலும் இவ்வகைத் தாழிகள் காணப்பட்டன. சிலதாழிகளுள் இரும்பு ஆயுதங்கள் இருந்தன. கற்பாறைகளால் மூடப்பட்ட கற்சா மதிகள் மைசூர், சென்னை, கைதராபாத்து முலிதய பல இடங்களிற் காணப்பட்டன. இவைகளுள்ளும்

Page 72
128 பழங் தமிழர்
கல்லாயுதங்கள் காணப்படுதலால் இவைகள் கற் காலத்தின் பிற்பகுதியிலுள்ளவையாகும். அக்காலத்தில் இறந்தவரை சுடும் வழக்கம் இருந்தது. புதிய கற்காலத்தில் தாழிகளில் வைத்து உடலைப் புதைக்கும் வழக்கமும் இருந்தது. தாழிகளில் சாம்பல் காணப்படவில்லை. தாழியில் அடக்குவதற்காக உடலின் பாகங்கள் வெட்டி வைக்கப்பட்டன. ஆதிச்ச நல்லூரில் 114 ஏக்கர் விசால முள்ள இடுகாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஏக்கரில் 1000 தாழிகள் வரையில் புதைக்கப்பட்டுள்ளன. இவைகளுட் பல புதிய கற்காலத்தன. இவைகளுள் கல்லாயுதங்கள் காணப்பட்டன. சிலவற்றுள் இரும்பு ஆயுதங்களும், வெண்கல பொன் அணிகலன்களும் காணப்பட்டன. தாழியில் பிணங்களை இட்டுப் புதைக் கும் வழக்கம் சிந்து விலுள்ள பிரமன் பாட்டிலும் காணப்பட்டது.”*
வெண்கலக் காலம்
மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களில் செம்பு, வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்யப் பட்ட பொருள்கள் காணப்பட்டன. இரும்புப் பொருள் சுள் ஒன்றேனும் கண்டெடுக்கப்படவில்லை. இதனல் அங் நகர்களின் நாகரிகம் வெண்கலக் காலத்தது என்று நன்கு தெளிவாகின்றது. கற்கால நாகரிகத்தைவிட உலோககால நாகரிகமே முன்னேற்றமானது. ت. “
* கற்காலத்துக்குப்பின் தென்னிந்தியாவில் இரும்புக்
காலமும்வட இந்தியாவில் செம்புக்காலமும் தோன்றின. சிந்துவைத்தவிர மற்றிடங்களில் இரும்புக் காலத்திற்குமுன் வெண்கலக்காலம் இருக்கவில்லை. ஒன்பது பங்கு செம்பும் 飞杯 இந்து நாகரிகம்-இராத குமுத முக்கர்சி

தமிழர் நாகரிகம் 129
ஒரு பங்கு தகரமும் கலந்து வெண்கலம் செய்யப்பட்டது. ད་བ་ས་ན་། ༣ மத்திய இந்தியாவிலுள்ள குன் கேரியா வில் செப்புப் பொருள்கள் கண்டு. பிடிக்கப்பட்டன. அங்கு 424 செம்பு ஆயுதங்கள் கிடைத்தன. இவை கி.மு. 2,000 வரையில் ஐரிஸ்மக்கள் பயன் படுத்திய உளிகளைப் பெரிதும் ஒதத்வை. அங்கு 102 வெள்ளித் தகடுகளும் இ காணப்பட்டன. அவைகளில் வட்ட வடிவங்களும் கொம்புள்ள மாட்டுத்தலை சளும் எழுதப்பட்டுள்ளன. வெள்ளி பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்
பட்டிருக்கலாம். கோன்பூர், வாதிகார்
கங்காரு கற்கால-ஒவியம்.
சிங்கன்பூர் காலம் (Fatehgarh), மணிப்பூர் முதலிய இடங்
கி.மு. 24,000-க்கும் கி.மு. 16,000-க்கும்
இடையில் எறிஈடிகள், வாள்கள், ஈட்டிமுனைகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?’%
களில் நன்ரு கச் செய்யப்பட்ட உளிகள்,
மொகஞ்சதரோ நாகரிகம்
இக்கால வீடுகள் செங்கற்களாற் கட்டப்பட்டன. வீடுகளுக்கு மாடிகளும், படிக்கட்டுகளும் இருந்தன. கூரைகள் தட்டையானவை. உத்திரங்கள் மீது தடித்த பாயை விரித்து அதன் மீது களிமண் பரப்பிக் கூரைகள் செய்யப்பட்டன. மாடிகளிலிருந்து கழிவுநீர் கீழே செல் வதற்குச் சூளையிட்ட மண்குழாய்கள் பொருத்தி வைக்கப் பட்டன. பெரிய விதி முப்பத்துமூன்று அடி அகலம் வரையில் உள்ளது. அப்பெரிய வீதியைப் பல சிறிய வீதிகள் குறுக்கே கடந்து சென்றன. வீதிகளின் இரு
* இராத குமுத் முக்கர்சி-இந்து நாகரிகம்

Page 73
180 பழந் தமிழர்
மருங்கும் இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ் வொரு வீட்டிற்கும் கிணறு உண்டு. கிணற்றை அடுத்துக் குளிக்குமறைகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டின் கழிவுநீரும் செங்கற்பதித்தவோ, சூளையிலிட்ட குழாய்கள் அமைத்தவோ வாய்க்கால் வழியே சென்று விதியிலுள்ள வாய்க்காலில் விழுந்தது. சிறிய வீதிகள் வழியே செல்லும் நீர் பெரிய வீதியிலுள்ள பெரிய வாய்க்காலில் விழுந்தது. எல்லா வாய்க்கால்களும் செங்கற் பதிக் கப்பட்டவை. ஒவ்வொரு வீட்டிற்கும், பள்ளியறை, குளிக்குமறை, அந்தப்புரம், சமையலறை, தலைவாயில் முதலியன விருந்தன. வீடுகள், நாற்புறமும் அறைகளும் நடுவே முற்றமுமுள்ள ாற்சார் வீடுகளாகக் கட்டப்
பட்டன.
படிக்கட்டுகளுள்ள நீராடுந்துறைகளும் பொதுச் சாவடிகளும், பூம்பொழில்களும், மக்கள் தங்கிச் செல்லும்
மடங்களும் காணப்பட்டன.
குயவர் தண்டு சக்கரங்கள் கொண்டு அழகிய மட்பாண்டங்கள் வனைந்தார்கள். அவை அக்காலத்து எகிப்து பாபிலோனியா நாடுகளில் காணப்பட்டன போலவே இருந்தன. சில பானை சட்டிகள் வண்ணம் பூசப்பட்டும் சில மினு மினுப்பாயிருக்கும் பொருட்டு மெருகிடுங் கருவியால் அழுத்தஞ் செய்யப்பட்டு மிருந்தன. சில பாண்டங்கள் மீது அழகிய பறவைகள், விலங்குகள், மரங்கள், இலைகள் பூக்கள் எழுதப்பட்டுள்ளன. இப் பாண்டங்களுட் சில, நீரருந்தும் கிண்ணங்கள், தட்டுகள், மூக்குடைய பாத்திரங்கள், தாம்பாளங்கள், பெரிய தாழிகள், நீர்த்தொட்டிகள், பல வகை மூடிகள், மணைகள், பூசைத்தட்டுகள், அனற்சட்டிகள், அடி ஒடுங்கித் தலை

தமிழர் நாகரிகம் . 131 -
பெருத்த தாழிகள், கைபிடியுடைய சட்டிகள் இருபுறமுங் கைபிடியுடைய கலயங்கள், மைக்கூடுகள் என்பன.
மண்ணுற்செய்து சூளையிலிட்ட எலிப்பொறிகள், அம்மி, குழவி, திரிகை, உரல், பலவகைக் கைவிளக்குகள், மெழுகு வர்த்திவைக்கும் தட்டுகள், கல் ஊசி, எலும்பு ஊசி, கற்கோடரி, செம்பு அரிவாள், மறக்கட்டில், நாணற்பாய், கோரைப்பாய், மேசை, நாற்காலி, முக்காலி முதலியன வீடுகளிற் காணப்பட்ட பொருள்களாகும்.
அக்காலச் சிறுவர் ஒவ்வொருவரும் பல விளை யாட்டுப் பொருள்களை வைத்து விளையாடினர்கள். அவை மண்ணினலும் மரத்தினுலும் செய்யப்பட்ட பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, ஆண் பெண் பதுமைகள், சிறு செப்புகள் முதலியன. அவை மண்ணினுற் செய்யப்பட்டு வெளிப்புறம் மினுமினுப்பாயிருக்கும்படி அழுத்தஞ் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ச்ங்கு, தந்தம், சிப்பி, ஓடுகள், எலும்புகளால் செய்யப்பட்ட பல பொருள்கள், மண்பந்து, கிலுகிலுப்பை, வாற்புறம் துளையுடைய கோழி, குருவி போன்ற ஊதுகுழல், தலை அசைக்கும் எருது, வண்டிகள், சொக்கட்டான் காய்கள், தாயக் கட்டைகள் முதலியவும் பிறவும் காணப்பட்டன.
பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், வெள்ளியம், காரீயம், தந்தம், ஒடு, களிமண், சங்கு முதலியவைகளாற் செய்த அணிகலங்களையும் அக் காலமக்கள் பூண்டனர்.
வெண்கலத்தாற் செய்யப்பட்ட கத்தி, வாள், ஈட்டி, அம்பு, பல பருமையுடைய கோப்பைகள், நீர்ச்சாடிகள், தட்டுகள், தாழிகள், அவைகளின் மூடிகள், உடைவாள், இடைவாள், வேல், அம்புமுனை, பல்லுள்ள கூன் வாள்,
உளி, தோல்சீவும் உளி, கோடரி, வாய்ச்சி, மயிர்மழிக்

Page 74
132 பழங் தமிழர்
கும் கத்தி, தூண்டில்முள், ஆடைதைக்கும் ஊசி, கொழு, முதலியன பயன் படுத்தப்பட்டன. இன்னும் கொண்டை ஊசிகள், தெறிகள், முகம்பார்க்கும் கண்ணுடிகள், கண்ணுக்கு மைதீட்டும் குச்சிகள், பதுமைகள், மணிகள், பண்டங்கள் முதலியன செம்பினலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டன. பொன், வெள்ளி, வெண்கலம், உயர்ந்த கற்கள் என்பவைகளால் செய்யப்பட்ட அணிகலன் களையும் தையலார் அணிந்தனர். அக்கால நங்கையர் அணிந்த ஆபரணங்களிற் சில, பொன்மணி, வெள்ளிமணி, பச்சைக்கற்கள், பளிங்குமணிகள் கோத்துச் செய்யப் L-- கழுத்து மாலைகள், மணி வடங்களால் ஆனالا அரைப்பட்டிகள், தங்கமணிகள் கோத்துச் செய்யப் பட்ட கையணிகள், தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பளிங்கு கறுப்புக்கல், சங்கு, சிப்பி, களிமண் முதலிய வற்றற் செய்யப்பட்ட கைவளைகள், கால்வளைகள், நெற்றிச் சுட்டிகள், தங்கக் காதோலைகள், மூக்குத்திகள், பலவகை மோதிரங்கள், பலவகைத் தெறிகள், நாடாக்கள், கொண்டை ஊசிகள், கற்கள் பதித்த மோதிரங்கள், ஒவியம் அழுத்திய மணிகள், தாயத்துகள், தங்கக் கவச மிட்ட மணிகன் முதலியன.
அக்கால மக்களின் உணவு: ஆடு, மாடு, பன்றி, ஆமை, முதலை பலவகைப் பறவைகளின் இறைச்சிகள், காய்கறி கள், பால், வெண்ணெய், தயிர், மோர், நெய், பலவகைப் பழங்கள், கோதுமை, நெல், வாளி, பட்டாணி, எள், பேரீச்சம்பழம், தானியங்களை அரைத்துச் செய்யப்படும் பலவகைத் தீன் பண்டங்கள் என்பன.
அக்காலமக்கள் அரையில் ஒன்றும் தலையில் ஒன்று மாக இரண்டு உடைகளைத் தரித்தனர். பெண்கள் கோயிற்

தமிழர் நாகரிகம் 133
சிற்பங்களிற் காணப்படுதல்போல. அரையிற் மாத்திரம் உடை அணிந்தனர். செல்வர் வேலைப்பாடுடைய
நாட்டியப் பெண்கள் பெரும்பாலும் கிர்வாணமாகவே காணப்பட்டனர். எகிப்திய ஓவியங்களிலும் நாட்டியப் பெண்கள் இவ்வாறே காணப்படு
கின்றனர்.
தந்தம், மாட்டுக்கொம்பு, எலும்பு, செல்வரின் மேலமரம் முதலியவைகளாற் செய்யப் இவ்வாறு மேலாடை பட்ட சீப்புகள் பயன்படுத்தத் பட் : டன. சில சிப்புகள் தலையிற் செரு கொள்ளப்பட்டன. இன்னும் இலங்கைச் சிங்களவர் சீப்பைத்தலையில் செருகுவர். பர்மியப் பெண்கள் கூந்தலில் சீப்பைச் செருகுகின்றனர். மினுக்கஞ்செய்த உலோகத் தகடுகள் முகம்பார்க்கும் கண்ணுடிகளாகப் பயன்படுத்தப்பட்டன. t
பெண்கள் கூந்தலைப் பலவாறு கோதியும் பின்னியும் முடிந்தனர். சிலர் பின்னலை நாடாக்கொண்டு பூக்கள் போல முடிந்து பொன் வெள்ளி தந்த ஊசிகளைக் குத்தினர். ஆடவர் தலை மயிரை நீள வளர விட்டுச் சுருட்டிப் பின்புறம் முடிந்தனர். சிலர் உச்சிக் கொண்டை கட்டினர். சிலர் கூந்தலைக் குறுக வெட்டியும், வரிவரியாகத் தூங்கும்படி சுருட்டியும் விட்டிருந்தனர்.
ஆடவரும் மகளிரும் குச்சிகளால் கண்ணுக்கு மை எழுதிச் செங்காவிப் பொட்டிட்டனர். பொட்டிடும் பொடிகளை முத்துச்சிப்பி ஓடுகளில் வைத்திருந்தனர்; முகத்திற்கு நறுமணங்கலந்த வெண்பொடியைத் தடவி அழகு செய்தனர். S.
ஆடையை மேலேயும் போர்த்தனர்.

Page 75
184 பழந் தமிழர்
ኣ சிறுவர் கோலி பந்து முதலியவை ஆடிப் பொழுது போக்கினர். பெரியோர் சதுரங்கம், சொக்கட்டான், தாயம் முதலியன விளையாடினர். வில்லும் அம்புங் கொண்டு விலங்குகளை வேட்டையாடுவதும் கெள தாரி களைப் போர் செய்ய விடுவதும் அக்கால மக்கள் பொழுது போக்குகளாக விருந்தன.
அக்காலத்தில் பலவகைத் தொழிற் பிரிவினர் இருந்தனர். அவர் கொத்தர், குயவர், கற்றச்சர், கன்னர், பொற்கொல்லர், இரத்தினப் பரீட்சை செய் வோர், சிற்பர், ஓவியர், மருத்துவர், தோட்டிகள், மயிர் வினைஞர், பயிரிடும் வேளாண்மக்கள், நெசவுகாமர், கப்பல் செய்வோர், தையற்காரர், பாய்முடைவோர், வணிகர், பாடுவோர், ஆடுவோர், கணிதவல்லோர், எழுத் தறிபுலவர் எனப் பலராவர்.
அக்காலத்தவர் சிலர் இறந்தவர்களைப் புகைத்தனர்; சிலர் சுட்டுச் சாம்பரை முட்டிகளில் இட்டு நிலத்திற் புதைத்து வைத்தனர்.
சுமைகளை எடுத்து செல்ல வண்டிகளும் எருது களும், கழுதைகளும் பயன்படுத்தப்பட்டன.
அக்காலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்கள், சிவ இலிங்கம், கொம்புள்ள தெய்வங்கள், நாற்கைத் தெய் வங்கள், இடபங்கள், ஒற்றைக் கொம்பு எருது, ஞாயிறு, நாகம், புரு, கருடன் மரம், மரதேவதைகள், ஆறு முதலியன. சிவன், மூன்று கண்ணுடைய தெய்வ மாகவும் பசுபதியாகவும் வழிபடப்பட்டார். அக்கால எழுத்தையும் மொழியையும் குறித்து முன்கூறியுள்
ளோம்.

தமிழர் நாகரிகம் 135
வெடிமருந்து, நீராவி, மின் ஆற்றல், பெற்றேல்' எண்ணெய் முதலியவைகளின் பயன்கள் இக்காலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைகளின் பயன்களை நீக்கிப் பார்க்கின் அக்கால மக்கள் இக் கால மக்களை விட முன் னேற்றமடைந்திருந்தார்கள் என விளங்கும். முற்காலத் தவர்கள் எழுப்பிய பெரிய கட்டடங்கள் இக்கால ம்க் களை மலைக்கச் செய்கின்றன. எகிப்திய சமாதிகள், தென் னிந்திய புராதன ஆலயங்கள், இலங்கைச் சிகிரியா மலைக் கோட்டை முதலியன உண்மையில் இக்கால மக்களுக்கு வியப்பு விளைப்பனவே. முற்காலத்தவர்கள் எழுதிய நூல்களையே இன்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குப் urlமாக மாணவர் பயிலுகின்றனர்.
c இரும்புக் காலம்
தென்னிந்தியாவிலே ஆதி ச் சூ ல் லூ ர், புதுக் கோட்டை முதலிய இடங்களில் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சமாதிகள் தோண்டி ஆராயப்பட்டன. அவை களுள் அக்கால மட்பாண்டங்களோடு இரும்பு ஆயுதங் களும் காணப்பட்டன. ஆகவே அக்கால நாகரிகம் இரும்புக் காலத்தது என விளங்குகின்றது.
கி. மு. 1200-க்கு முன் ஆரிய மக்கள் இந்தியாவில் இல்லை என வரலாற்ருசிரியர்கள் கூறுகின்றனர். ஆரி யர் இந்தியாவை அடைந்தபோது அங்கு வாழ்ந்த மக்கள் பெரிய கோட்டை கொத்தளங்களும்,செல்வவளமும், நாசு ரிக உயர்வும், போராண்மையும் உடையவர்களாயிருக் தார்கள் என்பன அவர்கள் வேதவாக்குகளிலிருந்தே l. The Vedic Aryan was not in India before 1200 B.C. -G. R. Hunter-New Review VOL. 3.-P. 314.

Page 76
186 பழந் தமிழர்
அறியக் கிடக்கின்றன. வேதங்களில் திராவிட மக்கள் தாசர், அசுரர் தானவர் தைத்தியர் எனக் கூறப்படுவர்.
w G. வேதபாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் தாசுக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். அந் நகரங்களில் வாழ்ந்த அரசர் பலரின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. அச் செல்வம் பசு, குதிரை, கேர் முதலியன. இவை நூறு கதவுகளுள்ள கோட்டைகளுள் வைத்துக் காப்பாற்றப் பட்டன. தாசுக்கள் மைதானங்களிலும் மலைகளிலும் சொத்துக்களை வைத்திருந்த செல்வப் பெருமக்கள். அவர்கள் பொன்னபரணங்களை அணிந்தார்கள். காசுக் கள் வெள்ளி இரும்புக் கோட்டைகளில் வாழ்ந்தார்சள், இந்திரன் பல தடவைகளில் தன்னை வணங்கும் தேவோ தாசர்களுக்காக நூறு கற்கோட்டைகளில் இருந்த தா சர் களை வெற்றி கொண்டான் 1’ என்பன வேத பாடல்களிற் காணப்படுகின்றன. ஆரிய மக்கள் வடக்கிலிருந்து தெற்கே சிறிது சிறிதாகப் பரந்து வந்தபோது, முன்னரே அங்கு வாழ்ந்த மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தனவாயினும் பிற்காலங்களில். அவர் களுக்கிடையில் கலப்பு மணங்கள் நடந்து இருவரும் ஒன்று பட்டனர். பதிதாய் வந்த ஆரியர் பூர்வ குடிக ளின் சீர்திருத்த முறைகளையே கையாள லாயினர். திரா விடரின் கலப்பால், அவர்கள் மொழி, உச்சரிப்பு முறை யிலும் வேறு வகைகளிலும் பெரும் மாறுதல்க ளடைந்தது.2 பழைய இந்து ஐரோப்பிய மொழிக்கும்
l. Pre-aryan Tamil Culture-p, ll-P. T. Srinivasa Ayengar. ,
2. 'ஆரியரென்போர் இந்திய நாட்டிற்குப் புதிதாக வந்தவர் களல்லர், தீ வாயிலாகக் கடவுளை வழிபடுதல் தீயின்றிக் கடவுளை வழிபடுதல் என்னும் வேறுபாட்டிஞலேயே இந்திய மக்கள் ஆரியர்

தமிழர் நாகரிகம் 137
இன்றைய சமக்கிருதத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டு.
திராவிடரென வெவ்வேறு பெயர்கள் பெறுவர்." என் பி. தி. சீனி வாச ஐயங்காரவர்கள் தமது நூல்களில் எழுதியுள்ளார். இக் கொள்கையை வரலாற்ருசிரியர்கள் எவரேனும் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆரிய மக்களின் சந்ததியினர் என்று தம்மைக் கடறிக் கொள்ளும் ஒரு கட்டத்தினர், தாம் இந்தியாவுக்கு அயலினின்று வந்தவர்களாய், கிரேக்கர், சேர்மனியர், பாரசீகர் முதலிய பிற சாதி மக்களுக்கு இனமுடையவர்கள் என்று கூறுதற்கு உள்ளம் இசையாமையினுலேயே இவ்வாறு கடறுவரென்க. அவ்வாறு கொள்ளுதற்கு ஆதாரங்கிடையாது. திலகர், ஆரியரின் பழ மையை ஆராய்ந்து அவர்களின் இருக்குவேத பாடல்கள் சில அவர்கள் வடதுருவ நாடுகளில் வாழும்போது பாடப்பட்டன வென்றும், தேவர்களுக்கு இரவு ஆறு திங்கள், பகல் ஆறு திங்கள் என்றது வடதுருவ நாடுகளில் இரவும் பகலும் இக்கால எல்லே களே உடையன வாதலினென்றும் நன்கு காட்டியுள்ளார்.
ஆரியர் பிறநாடுகளினின்றும் வந்தார்களென்பதற்கு அவர் களின் நிறமும் மொழியுமே சான்று ‘பகரும். பிற சான்றுகள் வேண்டா.
ஆரியரென்போர் முன் கடலாலழிவுண்ட தமிழகத்தினின்றும் சென்ற மத்தியதரை மக்களின் ஒரு பிரிவினராய் காக்கேசிய மலையை அடுத்த நாடுகளில் மீண்டகாலம் வாழ்ந்து நிறம் மொழி முதலிய மாற்றங்கள் உடைவர்களாய் ஐரோப்பிய நாடுகளில் முன்வாழ்ந்துகொண்டிருக்க கபிலநில (பொதுநிற) மக்களோடும், பாரசீக வட இந்திய மக்களோடும் கலந்து ஒன்றுபட்டோராவர். இந்திய ஆரியரிடையே வருண பேதம் உண்டானபோது அவருள் பிராமணர், சத்திரியர், வைசியர் என் போர் தம்மை மற்றவர்களி லிருந்து பிரித்தறியும் பொருட்டுக் குலக் குறிகளாகிய (Badge) நூலணிந்தனர். வேறு நாடுகளில் வதியும் ஆரிய மக்களெவரே னும் நூல் அணியாமையின், இது ஆரியர் இந்திய நாட்டுக்கு வந்த பின் புதிதாகக் கைக்கொண்ட வழக்கம் எனத் தெரிகிறது. வேத கால ஆரியர் தம்மிடையே சாதிகளைக் குறிக்க வெவ்வேறு கிறி உடைகள் வழங்கினர். 1 பிராமணர் வெண்மையும், சத்திரியர் சிவப்பும், வைசியர் மஞ்சளும், சூத்திரர் கறுப்புமாகிய நிறங்க
l. The social distinction of vedic times were those of occupation and of colour (varna) which implied race, marked also by a difference of dress-white for Brahmins, red for Kshatrias, yellow for Vaisyas and black for Sudras.
Short History of India P. 26.-E. B. Havell.

Page 77
188 பழந் தமிழர்
ளுடைய உடைகளே அணிந்தனர். மொகஞ்சதரோ மண்பாவை களில் ஆண் வடிவங்கள் இடத்தோளின் மேலாகவந்து வலப்பச் தால் செல்லும்படி மேலாடை அணிந்திருக்கின்றன. இவ்வாறு சிந்துவெளியில் வாழ்ந்த திராவிட மக்கள் மேலாடை அணிந்த வழக்கைப் பின்பற்றிய நிழலே ஆரியரின் பூனூல் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்?. தென்னுட்டில் நெசவு தொழி லைக் கைக்கொண்ட் வெட்டியாரும் பிறரும் நூல் அணிந்தார்களெ னத் தெரிகிறது ‘பூனூல் தரித்துக்கொள்வோம்’ ‘(ஞானவெட்டி) இன்று கூர்ச்சரத்தினின்றும் கென்னடு போந்த செளராட்டிரர் என்னும் நெசவு செய்வோரும் நூலணிவதைக் காண்கிருேம். நூலே காகம் முக்கோல் மனேயே. a ஆயுங்காலே அந்தணர்க்குரிய' என்னும் தொல்கப்பியத்திற் கடறிய நூல் சுவடி யாதல் வேண்டும். துறவோர் சுவடி யைக்கொாண்டு செல்லுதலே இன்றை யவும் பண்டையவும் வழக்கு, கலித் தொகையிலே முக்கோற்பகவரைக் குறித்துவரும் பாடலில் பூனூல் குறிக் கப்படாதிருத்தல் நோக்கத் தக்கது. (கலி-9) அந்தணர், பிராமணர், பார்ப் பார் புரோகிதர் என்பன ஆதியில் வெவ்வேறு கடட்டத்தினரைக் குறித் தனவேனும் பிற்காலத்தில் அவை ஒரே குலத்தினரைக் குறிக்க வழங்கின. அந்தண ரென்போர் துறவோர் கட் டத்தினர். பார்ப்பான் என்பதற்கு பழைய நாள் எகிப்திய நன்றும் தீதும் ஆராய்ந்துரைப்போன் குரு பூணு லணிந்தான் எனப்பேராசிரியர் உரை கடறியுள் அாார். அகப் பொருட்டுறையில் வரும் பார்ப்பான் பிராமணன் என்று சொல்ல முடியவில்லை. பிராமணரென்போர் வட நாட்டி னின்றும் பிராமணம் எனப்பட்ட தமது நூல்களோடு தென்னுடு போந்தோர். இவர்கள் தென்னுட்டில் கலப்பு மணங்கள் செய் தனர். அவர் தொடர்பிலுள்ளவர்களே இன்று பிராமணர் எனப் படுவோர். அறிவர் கணிகள் எனத்தமிழ்நாட்டில் சிலர் இருந் தனர். இவர்கள் சோதிட வல்லுநர் எனத் தெரிகிறது. இவர் கள் நற்கருமங்களுக்கு நல்ல நாள் ஆராய்ந்து கூறுவர். அறிவர் என்பதற்கு மூவகைக்காலமும் நெறியின் அறிந்து கூறுவோர்
2. The statues represent male figures draped with a shawl like cloth worn over the left shoulder and under the right arm so as to leave the right arm free which re
 

தமிழர் நாகரிகம் 189
என்று உரையாசிரியர்கள் பொருள் கடறியுள்ளனர். ஆரியர் தமிழர் கலப்பினலே தமிழில் மணிப்பிரவாள நடை முதலியன தோன்றி அதன் தூய்மையைக் கெடுத்தன.
இந்நூ லாராய்ச்சியிற் பயன் றரும் சில குறிப்புகள் * கிழக்காப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் கிடைத்த கல்லாயு தங்கள் சில ஒரே வடிவம், ஒரே நிறை. ஒரே பருமை உடையன வாகக் காணப்பட்டமையின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாகக் கிழக்காபிரிக்கா வரையில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததெனக் கருதப்படுகிறது". சரித்திரகாலத்திற்கு முற்பட்ட இந்தியா (Prehistoric India)
*றிச்சாட் என்பார் பழைய இத்தாலிய (Etruscan) நாகரிகத் துக்கும் திராவிடர் நாகரிகத்துக்கும் தொடர்பிருக்கக்கடடுமென்ப தைக் காட்டியுள்ளார். யசாடனி (Yazadani) என்பார் தக்கண இந்தியாவிற் காணப்பட்ட கல்லிற் செய்யப்பட்ட பாண்டங்களும் அவைகளில் எழுதப்பட்ட சொந்தக்காரரின் அடையாளங்களும் எகிப்திய அரச பரம்பரைக்காலத்தும் அதற்கு முன்னும் உள்ள அவ்வகைப் பாண்டங்களையும் அவைகளிற் பொறிக்கப்பட்ட எழுத்துகளையும் ஒத்திருக்கின்றன என்று காட்டியுள்ளார். டிை ப. 326.
“ u u T É SIF (Yang She) (5 T sıfa5 காலத்து (சீனரது) மட்பாண் டங்கள் இந்திய மட்பாண்டங்களை ஒத்திருக்கின்றமையை அன் டேர்சன் என்பார் எடுத்துக் காட்டியுள்ளார் டிை-ப, 455,
* பரிசுத்த யோவான் உயர்த்திச் சென்ற சிலுவை உண்மை யான சூரியக் குறியாகும். உண்மையான சிலுவைக்குறி (கிறித்து காதர்) சிலுவையி லறையப்பட்ட குறியன்று. சூரிய இலச்சினை Gu'.-Makers of Civilization p. 504.
திராவிட இந்தியாவிலும் எகிப்திலும் காணப்படும் மக்களின் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் முதலியன தெற்கு ஆசிய
calls the upavita mode peculiar to India discovered during the later vedic age. Dr. Ayengar states that this is the style in which the upper cloth is worn by the Brahmins and high class Hindus generally in south India-Bharatia Vidya Vol. III Part I-P. 145. It is interesting to note in this connection that yagnopavedita orginally represented a 醬 of cloth-Cultural Heritage of India-CalcuattaVol. III. - -

Page 78
140 பழந் தமிழர் s
மக்களுக்கும் எகிப்தியருக்கும் அடிப்படை ஒரே நாகரிகம் என் பதை விளக்குகின்றன-மனிதன்-எலியட் சிமித்-Man-Elliot Smith-1918-p. 13.
இலிபியர் (Libians) எகிப்தியரைப்போலவே பசு ஊன் புசிக்க மாட்டார். இவர்களுக்கு அயலேயுள்ள சவிசியரின் (Zaveces) பெண்கள் போரில் தேரோட்டுகின்றனர். (இது தசரதனுக்குக் கைகேயி தேரோட்டியதையை நினைவூட்டுகிறது). பினீசியர் கிரீசு நாட்டில் தங்கியபோது கிரேக்கர் அவர்களிடமிருந்து பயனுள்ள செயல்கள் பலவற்றைக் கற்றனர். எழுத்தெழுதும் முறை அவற் றுள் முக்கியமானது. அதற்குமுன் அவர்கள் எழுத்தெழுதும் முறையே அறிந்திருக்கவில்லை--கெரதேசதசு.
சூரிய சந்திர வமிசத்தினர் அசுர உற்பத்தியைச் சேர்ந் தோர். அசுரர் தமது உற்பத்தியைச் சூரியனினின்றும் கூறினர், சூரியனிலிருந்தே சந்திரன தோன்றிற்று.-சூரியனும் பாம்பும்ஆல்ட்காம்-L. 71.
* கன்ன பரம்பரைக் கதைகள் எகிப்தியரின் ஹதர் (Hathor) என்னும் பசுவடிவான சூரியக் கடவுள் பண்டு தேசத்தி னின்றும் வந்தார் எனக் கூறுகின்றன"-கிட்டிய கிழக்குத் தேசங் களின் வரலாறு--ஹோல்-பக. 91.
சட்லெஜ் (Sutlej) ஆற்றைக் கடக்க முன் உள்ள சமயக் கொள்கைகளில் இந்திய பூர்வ குடிகளுக்கு ஆரியர் கடமைப் படவில்லை என்பது உண்மையே. சட்லெஜ் ஆற்டைக் கடந்தபின் எழுதப்பட்ட சம்கிதைகளையும் பிராமணங்களையும் பற்றி அவ் வாறு கூறுதல் இயலாது-சி. ஆர். ஹன்ரர்.-New Review1936.
கைலை இலங்கையிலுள்ள தென்பது :- 'கதமுதிர்ந்த மலர்த் தென் கயிலையிற் கடமிழிந்திதனையின் றடி பெயர்ப்பனென்றெப்தி நிருத்ன்' 'வானெடுத்த வரையைக் கரம் வளைந்து கழுவித்தானெடுத்தலும்' தக்கண கைலாய புரா ணம்-சிங்கைச் செகராச சேகரன். தக்கன கயிலாயம்திரிகோணமலை,
இலங்கையும் மேரு எனப்படும் என்பது -
‘மேரு மீதில் விளங்கிய சென்னியொன்
ருரமாருதங் கொண்டிங்கன மைத்ததே' *அமைத்த பொன்மலை யாதலினப் பெயர்
சமைத்த வீழ மென்றுதழி இயதால்"
டிை புராணம்.

தமிழர் நாகரிகம் 141
இளாவிருதம்மேருவில் உண்டென்பதும், மேருவின் கொடு முடி ஒன்று இலங்கை எனப்பட்டதென்பதும் யாதோ ஒரு பழைய ஐதீகத்தின் நிழல் எனத் தெரிகிறது. W
*நடு ஆபிரிக்காவில் நீலகதி உற்பத்தியைப் பற்றிப் புராணங் களில் எழுதியிருக்கிறது. அதைப் படித்துத்தான் இக்காலத்தில் அந்நதியின் உற்பத்தித் தானத்தைக் கண்டு பிடித்திருக்கிருரர்கள்". இந்தியர் சரித்திரம்-பி, தி. சீனிவாச ஐயங்கார். எம். ஏ. எல். டி.
*பவேரு (ஆங்கிலத்தில் பாபிலோனியா) நகரத்தில் மு. ர. சு. என்ற விலாசமுள்ள தமிழர் கட்ை, கி. மு. ஆருந் நூற்றண்டி லிருந்தது. அந்தக் கடைக் கணக்குகள் அவ்வூர் வழக்கப்பிரகாரம் களிமண்ணிலெழுதி வெய்யிலில் உலர்த்தப்பட்டன. அவ்வகை யான கணக்குகள் இப்பொழுது அகப்பட்டிருக்கின்றன".
டிை-பக்-41.
LDb5IT Gofu Jf5ốr (Mandains) (5GU5aj 355 6iv 35 lbs/T (Sh-kanda) arGörgu (ou to : * — E. Britannica. :-
“ஆர்மீனிய நாட்டில் கிருஷ்ணன் கோயில் ஒன்று கட்டிப் பலநாள் வரையிலும் கிருஷ்ணன் பூச நடந்தது'-இந்தியர் சரித்திரம் பக்-65.
'இராமர் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாயிருந் தன வென்று சொல்லியிருக்கிறது. அவ்வாறு ஐந்து கிரகங்கள் கி. மு. 2000 ஆண்டில் உச்சமாயிருந்தன. ஆதலால்தான் இராமர் காலம் கி.மு. 2000 என்று மேலே எழுதியிருக்கிறது. இராமர் காலத்துக்கும் பாரத யுத்த காலத்துக்கும் நடுவில் அயோத்தியில் முப்பது அரசர் ஆண்டார்கள். பாரத யுத்த காலம் கி. மு. 1500 என்று நிச்சயிக்க அநேக ஆதாரங்களுண்டு.-டிை பக்-24.
யுகத்தின் அளவையும் கலியுகம் 5000 வருடங்களுக்கு முன் உண்டாயிற்று என்ற கணக்கும் வெகு பிற்காலத்தில் உண்டா யின. அது சரித்திரங்களுக்கு ஒத்துவராது. அந்தக் கணக்குச் சோதிடத்திற்காக ஏற்பட்டது; சரித்திரத்திற்கு ஏற்பட்டதன்று. புராணக் கணக்கிற்கே இக்கணக்கு ஒத்து வருவதாயில்லைடிை-பக்.28.
இந்தியாவிலிருந்து மிக மிகத் தொலைவிலுள்ள ஈஸ்டர் தீவு களில் மொகஞ்சதரோ எழுத்துக்கள் காணப்படுதல் ஆராய்ச்சி யாளருக்கு மிக வியப்பு அளிக்கின்றது. ஒரு காலத்தில் ஆசியா ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்கள் ஒரே இணைப்புடையனவா யிருந்தனவென்றும், நெருப்பு வெள்ளத்தின் மீது மிதந்துகொண்டிருக்கும் இக்கண்டங்களின் அடிப்பாகத்தில் ஒருபோது வெடிப்புண்டாகியதால் ஆபிரிக்கா, அமெரிக்கா முத லிய கண்டங்கள் அர்க்கிச் சென்றுகொண்டிருக்கின்றனவென்றும்

Page 79
142 பழந் தமிழர்
வெஜினர் என்னும் சர்மன் விஞ்ஞானி ஒருவர் சில காலத்தின் முன் கூறுவாராயினர். அவர் கடறியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்க தாகின்றதென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆபிரிக்கா, அமெரிக்சா, இந்தியா முதலிய நாடுகளில் ஒரே வகையான பழைய நாகரிக சின்னங்கள் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் அக்கண்டங்கள் ஒன்று சேர்ந்தமையாகலாம்.
... Alfred Wegener, a German meteorologist who noticed an extraordinary thing"about the map of the world. If you take North and South America and push them bodily eastward, they fit very neatly against the coast line of Europe and Africa. The eastern bulge of Africa fits the great indentation between the West Indies and Atlantic coast of the United States. Nova scotia pokes into the Bay of Biscay. The Wegener Hypothesis was so original and fantastic' that it nearly paralyzed the geologists when it was first announced. The flat-foted conservatives denounced it in measured tones. The radicals with leanings toward the picturesque thought it almost too good to be true-Science Digest-June 1942.
The Sumerio - Dravidian and the Hittite - Aryan origins.--T. V. J. O. T. M. Society Vol. XIX P 230.
CD fusi எகிப்து தமிழ்
1. ஆறு, வெள் அ அர், ஆர் Հbմն/
2. தந்தை, தலை அப், அப்பா அப், பப்பா அப்பன்,
வன், பாது த கப்பன் காப்பவன் 3. ஆடு, மாடு, அப் அபு
எருது, பசு 4. நெருப்பு, எரி அக், அங் ஆக், ஆக்கு ஆக்கு
வறு - 5. வெள்ளி, விளங் அலக் ஆர் அர் குர் வெள்ளி, எல்
குவது 6. தாய் அமா, எமி அம்மா
7. கலப்பை ஆர் ஆர் ஏர்

தமிழர் நாகரிகம் 143
8. பிரபு, கடவுள் ஆஸ் ஆசா (அர்) அரசன்
பாதுகாப்பவன்
9. பாதை, திற பாட், பாத் பாத் பாதை
10. குரு பார், பாரு பார்ஆ பார்ப்பான்
11. ஆறு, சிற்ருறு பூர் G3Lu ITtf வாரி
12. பூமி, நிலம் தர் - ~ தரை
13. பிடி, கொள்ளே தாக் தாக்கு தாக்கு
யிடு, அழி
14. வெளியே போ எக்கி ஏகு
15. ஆடை, உடை, தர, தரி தர் தறி
நெசவுசெய் ܀
16. எழுத்து, உளவு தப் துப்பு
அத்தா, அன்னை முதலிய தமிழ்ச் சொற்கள் கிதைதி மொழியிற் காணப்படுவதையும், அக்கை, அக்காள் முதலிய சொற்கள் பின் னிய உக்கிரிய (Finno.ugrian) மொழியிற் காணப்படுதலையும் C. R. Fiš 5 uraốr 6,r6ởr Lu T if 5 T Lltņu yait GITT Ii—Bulletin of Deccan College research Institute-Vol. 1. (1939-1940).
Dravidian place names are sometimes traced to Mesopotamia and Iran, while an ancient language spoken in Mittani reveals striking similarities to modern Dravidian of India-Hindu Civilization--P. 38, R. K. Mookerji.
Recent excavations of Dr. Krishna have resulted in the discovery of layers upon layers of a civilization going back, it is said to the fourth or the fifth millennium B.C., a discovery which opens up possibilities of the existence of a civilization at least as old as that of Mohenjo Daro, Harappa, the Indus valley or Sumeria. These discoveries have been made in the valley between Chitaldrug and Ankle Mutt (in Mysore)- The quarterly Journal of the Mythic Society-Vol. XXIII. p. 132.
A statue carved in red sandstone was found (at Harappa), of a boy of such exquisite workmanship, and such complete competence that at first sight might be mistaken for good Greek work of the fourth century B. C. Yet from the context in which it was found it seems

Page 80
144. பழந் தமிழர்
that it must certainly belonged to the 3rd mellennium. Here is an artistic majesty of the first order which can only be explained by further discovery. Finds of this nature show that the progress of art is not comparable to the progress of history. Indians may prove to have been the earliest naturalistic sculptors in the world-Progress of archaeology p. 35-Stanley Casson.
முடிவுரை
இந்நூலகத்துக் கூறப்பட்ட பொருள்கள் .هست (1) மக்கள் ஒரு மத்திய இடத்திற்றேன்றி உலகின் பலபாகங்களிற்சென்று ஒாழ்கின்றனர் (2) மக்கள் மத்திய இடத்தைவிட்டுப் பிரிந்த பல குலங்களாகப் பெருகுவதற் குரிய காரணங்கள் (3) பண்டை மக்களின் ஐதீகங்களும் நாகரிகப்பாங்கும் ஒரே வகையின (4) உலக மொழிகள் எல்லாம் ஒரு ஆதிமொழியினின்றும் பிரிந்த சிலமொழி களினின்றும் (ஒரு தண்டிற் பூத்த பூங்கொத்துகள் போன்று) கிளைத்த கூட்டங் கூட்டமாகிய மொழிகள் (5) உலக மக்கட் குலங்கள் தோன்று தற்கு அடிப்படையிலுள் ளோர் தமிழர் (6) உலக மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழி தமிழ் (7) இந்திய நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்க ளின் பழைய கற்கால புதிய கற்கால, வெண்கலக் கால நாகரிகங்கள் (10) ஆரியர் இந்தியாவுள் நுழைந்த காலக் துத் தமிழரின் நாகரிகம் என்பனவாகும்.
முற்றும்,


Page 81