கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தனி ஈஸ்வரம் (நினைவு மலர்)

Page 1


Page 2

அறிவிப்புக் கலைவேந்தனர், கலைஞனி, மனிதநேயணி
Հայ ճն) (Ա: க. வை. தனேஸ்வரன்
பிறப்பு சுனாமி அழிப்பு O4-12-1932 26-12-2004

Page 3

2D
சிவமயம்
வீரகத்தி விநாயகன் துணை ஒt
விநாயகள் துதி
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் - செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலினால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலினால் கூப்புவர் தம்கை
ه) هلوچ ها و نقل s
- الله بالمه 鼬
. (3.35
ph குனி ஈஸ்வரம்)2 sobo Apq ر کیS5 Qs, welowałec), 4S60*>

Page 4
எங்கள் ஒளியாய், வழியாய்
நிழலாய், வளமாய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட
கவைதனேஸ்வரன் அவர்களை வணங்கி அமரர் தம் திருப்பாதங்களில்
இக்குறு நினைவு மலரை
பணிவன்பாக சமர்ப்பிக்கின்றோம்!
蟲
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் குடும்பத்தினர்.
(தனி ஈஸ்வரம்)-ழ் Gid
 

னி
ஈஸ்
6)
JID
|பிராகாரம் தனேஸ்வரன் பற்றிய ஆக்கங்கள் தனேஸ்வரன் வாழ்க்கை வரலாறு உடன் பிறப்புக்களின் உள்ளக் குமுறல் 01. கவிதாஞ்சலி
02. இவனும் ஒரு எட்டயபுரத்தான் 03. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுதாபச் செய்தி 04. இறந்தனன் என நினைக்க இரும்பினால் நெஞ்சம் வேண்டும் 05. வடபுல வரலாறு உன்னை வணங்கி நிற்கும் 06. வசன கவிபாமாலை
07. K.V.Thaneswaran
08. From My Memory
09. Аррараһ
10. Our Dear Good Friend a Thanes 11. Appreciation - Thanni
12. என் தந்தையே 13. கடல் வந்து முத்தெடுத்த கதை 14. அறிவிப்புக்கலை உலகில் அரைநூற்றாண்டு 15. நீங்கா நினைவலைகள் 16. கண்களை முடித் தேடுகிறோம் 17. ஆத்மா அழிவதில்லை 18. காற்றுடன் கலந்த கலங்கரை விளக்கு 19. நிமிர்ந்த நெஞ்சுடையார்
20. நெஞ்சக் கோவில் 21. திரு.கவை. தனேஸ்வரன் 22. Kandiah Walthilingam Thaneswaran 23. என் நினைவலைகளில் தனேஸ்வரன் மாஸ்டர் 24. நினைவுகளில் நிலைத்து நிற்கும் க.வை.த. 23. உடந்தனன் உடைகின்றேன் என்தாய் 26. நெஞ்சில் நிறைந்த அந்த இனிய நாட்கள் 27. நினைவிலிருந்து ஓர் குறிப்பு 28. கலைத்துறை நாயகன் 29. மாந்தருக்குள் மாசற்ற மாணிக்கமே 30. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் அனுதாபச் செய்தி 31. 2 usaab Obdobus 2-bside 32 ஒளியாக நிற்கும் என் குரு 33, 9rts 9gu
34. எங்கள் குடும்ப நண்பர்
(தனி ஈஸ்வரம் ) @

Page 5
தனேஸ்வரின் ஆக்கங்கள்
பிராகாரம் பக்கம்
01. ஊரெழு அழகிய சிற்றுார் 38 02. பேச்சுக்கலையின் விந்தை 67
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளியங்கள்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
உலகநீதி
/ இறந்து போனவர்களைச் சைவர்கள் சிவபதவி அடைந்தான் ༄༽ என்கிறார்கள். அந்தப் பதவி இந்தப் பதவி என்று அலை கின்ற மனிதன் கடைசியாக அடைகின்ற பதவியே சிவபதி. உச்சமான பதவி அது. உன்னதமான பதவி அது. எல்லா ருக்கும் கிடைக்கக்கூடிய பதவியது. சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று பலரும் விரும்பாத பதவியது. நீங்கள் விரும் பினாலும் விரும்பாவிட்டாலும் தப்ப முடியாத பதவியது. எவரும் போட்டி போட விரும்பாத பதவியது. அந்தப் பதவி தவிர்க்க முடியாதது.
கவியரசு கண்ணதாசன்
(தனி ஈஸ்வரம் ) -Civ)

அமரத்துவம் அடைந்த திரு.க.வை. தனேஸ்வரன்
அவர்களின் வாழ்க்கை வரலாறு
யாழ் நகரின் வடபால் மத்தியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சிக்குலாவும் தொட்டிலும் ஏழு ஊர்களினை தன்னருகே கொண்ட ஊரெழுவினை தாய்வழிப்பிறப்பிடமாகவும் சோலைகள் நிறைந்த இயற்கை வனப்பு தவழ்ந்து மகிழும் கோண்டாவிலினை வாழ்விடமாகவும் கொண்டவர் அமரர் திரு.க.வை.தனேஸ்வரன்.
இவர் பெற்றோரின் சிரேஷ்ட இளவலாகி, புஸ்பராணி, பரமநாதன், சண்முகநாதன், பகவதி, கணேஷமூர்த்தி, சூரியகுமாரி, கனகேஸ்வரன், காலம் சென்ற உதயகுமாரி ஆகியோரின் சகோதரர்.
இளமைக் கல்வியினை ஊரெழு கணேஷ வித்தியாசாலையிலும், உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் கற்று பெற்றோரின் விருப்பப்படி ஆசிரியர் கல்வியை இந்தியா லக்னவ் (Lucknow) பல்கலைக்கழகத்தில் 29-5-1955 ஆண்டு பயின்று பட்டதாரி பட்டமீட்டி பயிற்றப்பட்ட ஆசிரி யரானார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளினையும் கசடறக் கற்று பாண்டித்தியம் பெற்றவர். படித்த பாடசாலையாகிய உரும்பிராய் இந்துக் கல்லூரியிலே ஆசிரியராக கடமை ஆற்றியதுடன் தொடந்து இடைக்காடு மத்திய மகா வித்தியாலயம், நீர்வேலி அத்தியர் இந்துக்கல்லூரி, கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி ஆகிய பாடசாலைகளிலே ஆசிரியராக சேவை யாற்றினார்.
இவர் அன்புக்கினிய அன்னம்மாவினை 1955 ஆம் ஆண்டு கரம்பற்றி இல்லற வாழ்விலே இனிதே இணைந்து மகிழ்ந்தவர். விழுப்பம் தரும் ஒழுக்கம் நெறிப் பயிற்சியுடன் கூடிய கல்வியினை நல்கி பாடசாலை சமூகத்தினரின் இதயத்தில் குடியிருந்தவர்.
1/1/1975ம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையில் உடற் பயிற்சிக் கல்வியுடன் உளவியல் கல்வியும் பயின்று பட்டம் ஈட்டி பயிற்றப்
(தனி ஈஸ்வரம் ) 莒 GVD

Page 6
பட்ட ஆசிரியராகி மூதூர் மத்திய வித்தியாலயத்தில் உடற்பயிற்சி ஆசானாக கடமை ஆற்றினார். அநுராதபுர சகிரா கல்லூரியில் உப அதிபராகவும் இறுதியில் கனகரததினம் மத்திய மகா வித்தியாலயத்தில் உப அதிபராகவும் கடமை ஆற்றினார். கற்பிக்க ஆசிரியர்களினை தனது நெஞ்சிலிருத்தி மகிழ்ந்த அன்னார் 1992 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.
பிள்ளைக் கனி அமுதம் - ஆண்கள் இருவர், பெண்கள் இருவர், செந்தாமரை, அன்பழகன், நக்கீரன், பூங்கோதை பிள்ளைகளின் மண வாழ்வு பூரித்து பதினொரு முத்துக்களான பேரமக்கள், சாரங்கன், மாதங்கி, ஆதவன், இராகவன், அமிர்தா, சாலோத, யூவகிம், தக்ஷாயினி, கிருபாலினி, மதுரன் அனைவரினையும் ஏற்று மனம் நிறைந்தவர். வாய்த்த மருமக்களை வாழ்த்தியவர்.
1999 இல் தனது இதயம் கனிந்த இல்லாளின் இழப்பினை தனது மனத்திரையில் நின்றேற்று பின் பல்தேசம் சென்று புகழினை நிலைநாட்டி ஓய்வு பெற்ற பின்பும் கூட சேவைகளிலே மனம் சலிக்காது சகல துறைகளிலும் ஈடுபட்டு நெஞ்சத் திருப்தி எய்தினார்.
2004 ஆம் ஆண்டு இதயம் வாழ்க்கைப்பயணத்தினை முடித்துக் கொள்ளும் என்ற உள்ளுணர்வினைப் பெற்று அதற்காக வாழ்ந்து திளைத்து சற்றுமெதிர்பாராது இறைபதம் எய்தினார்.
“வார்த்தை பதினாயிரத்திலொருவர்” என்ற ஒளவையாரின் கூற்றுக்
கிணங்க தனது சிம்மக்குரல் வளத்தினால் அனைவரின் நெஞ்சங் களினையும் நெகிழ வைத்து கொள்ளும் இயல்பு எப்போதும் ஒரு கூட்டத்தின் நாப்பண் இவரை வைத்திருக்கும். வசீகரிக்கும் நாவாற்றல் மிக்க பேச்சாளனாகவும், சிறந்த எழுத்தானாவும் சகல துறைகளினையும் நன்கறிந்த கல்லாசானாகவும், உற்ற நண்பனாகவும், உயிர் சகோதர னாகவும், பண்பறிந்த பிதாவாகவும் பாசமித பேரனாகவும் திகழ்ந்தது தனக்கென தனியுகம் பகிர்ந்து அனைவர் மத்தியிலும் நன்மதிப்பு பெற்று நின்றுதித்த உப அதிபர் க.வை.தனேஸ்வரன் இவ்வையகத்திலே என்றுமொரு “தனி ஈஸ்வரன்” .
தொகுப்பு
குடும்பத்தார்.
(தனி ஈஸ்வரம் ) 些 Cvi)

உடன் பிறப்புக்களின் உள்ளக் குமுறல்கள் உயிர் உள்ளவரையும் எங்களுக்கு அண்ணாவே
வையத்துள்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (குறள்)
எங்கள் அண்ணாவே, எமக்கரும் துணையே! மன்னே, பொறுமை வாய்ந்திடு தருமனே மின்னாதிடித்த விதம்போல் விதி, அலைவடிவில் உருவெடுத்தது ஏனோ அண்ணா! கண்ணா! மரணம் சம்பவிக்கும் தருணத்திலும் உடன்பிறப்புக்களையே கூவியளைத்திருப்பீர்கள் அண்ணா! நவரத்தினங்களாய் நானிலத்தில் நாம் வந்துதித்தோம் எங்கள் இரத்தினமே உன்னை இழந்து அண்ணா தவிக்கின்றோம் உண்ணும் பொழுதிலும் எமக்கிருக்கும் கவலை வைத்து நீ மன்னவா சென்றதும் மாண்போ வித்தகனே, எங்கள் வேதனை இருளை தீர்ப்பாய் “ஈஸ்வரா” எங்கள் தனேஸ்வரா ஏன்பிரிந்தீர் இன்னமுதே எக்களிப்பில் சூழ்வோம் இனி அண்ணா! உங்கள் சுகத்தை என்றோ நாம் காண்போமினி கலையும் கல்வியும் தொண்டும் விளையாட்டும் உங்களை இளமை குன்றாத தோற்றுப் பொலிவுடன் திகழ வைத்தது அண்ண மெதுமையும் பொறுமையும் சாந்த உணர்வும் யாரிடம் நயமாக நடந்துகொள்ளும் மனவளமும் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள் தாய்தந்தையை இழந்து நாம் நின்றபொழுதில் நீங்கள் எமக்குத் தாயாகவும் தந்தையாகவும் நின்று அன்பால் அரவணைத்தீர்கள் இராஜாக்கள் மாளிகையில் காணாத சொந்தம் எங்கள் சொந்தமண்ணா!
கனடாவில் வாழுகின்ற உடன்பிறப்புக்களைக் காணவேண்டும் என்ற பேரவலால் இங்கு வந்து சிலகாலம் எம்முடன் வாழ்ந்து எமக்கு
>今
(தனி ஈஸ்வரம் ) * W

Page 7
ஏற்ற ஆலோசனைகள் அறிவுரைகள் கூறி வழிநடத்தினிர்கள். தாயகத்தைச் சேர்ந்த பல உற்றார் உறவினர்க் நண்பர்களுடன் கூடித் குலாவி ஆனந்த மடைந்தீர்கள். பல கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உங்கள் அமுதக் குரலாலும் ஆளுமைத் திறத்தாலும், அறிவாற்றலாலும் பலரது பாராட்டு களையும் பெற்று உயர்ந்தீர்கள், எங்களையும் மகிழவைத்தீர்கள்.
மரணத்தின் பிடியில் நீங்கள் முந்திக்கொண்டாலும்
பின்னால் நாங்கள் வருவோமண்ணா.
மார்கழித் திங்கள் இருபத்தி ஆறாம்நாள் சிவனுக்கு ஆருத்துரா தரிசனத்தன்று இறைவனே வந்து உங்களை ஆட்கொண்டுள்ளார் அண்ணா!
“போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிருக்குந் தோற்றுமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்குழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முனலுங் காணணாத புண்டரீகம்
போற்றியாம் உய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்
“பொய்கெட்டு மெய்யானார் ஈஸ்வரன்’
தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கும்,
- சகோதர சகோதரிகள்
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
(தனி ஈஸ்வரம்) 基 СуіiіO

கவிஞர் வி. கந்தவனம் அவர்களின் கவிதாஞ்சலி
விளையாட்டுத்துறையின் தனி ஈசுவரா!
தனேஸ்வரா! விளையாட்டுத் துறையின் தனி ஈசுவரா - உன்னுடனா விளையாடத் துணிந்தான் காலன்?
உன்னை அவன் சரியாகப் பார்க்கவில்லை - பார்த்திருந்தால் உன் அழகில் மயங்கியிருப்பான் - உயிரை எடுக்கத் தயங்கியிருப்பான்!
சிரிப்பில் தன்னை மறந்திருப்பான் பொறுப்பை மறந்து பறந்திருப்பான்!
நீ அவனுடன் பேசவுமில்லை - பேசியிருந்தால் பாசக் கயிற்றை வீசியிருக்கவேமாட்டான்!
உன் சக்தியைப் படித்துத்தான் நடுக்கமில்லாத உன் வாழ்வை புவிநடுங்கக் கடல் அலையைக் கொண்டு எடுப்பித்தான்!
அந்தவிதமாக எந்தவித அறிவிப்புமின்றி நொடிப் பொழுதுக்குள் முடிவுற்றதா உன் வாழ்வு?
காலனின் விளையாட்டா அல்லது காலாதி காலமாகத்

Page 8
தமிழ் இனத்தோடு விளையாடிவரும் விதியின் சதியாட்டா?
அறிவாயா நண்பனே! நீமட்டும் பட்டுவிடவில்லை - உன்போன்ற மைந்தர்கள் பல்லாயிரவரை இழந்து கண்ணிரைக் கொட்டிக்கொண்டிருக்கிறாள் தமிழீழத்தாய்!
அன்பனே பட்டிமன்றங்களிலே போர் தொடுத்தோம்! நாடகங்களிலே சேர்ந்து நடித்தோம்!
நீ அறிவிப்பாளராக
நான் நடுவராக எத்தனை விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தோம்?
அந்த அநுபவங்களையெல்லாம் கடந்த ஆண்டு கனடாவுக்கும் வந்து கலகலக்கப் பேசி நினைவுபடுத்திச் சென்றாய்!
நினைக்க நினைக்க நெஞ்சம் பொருமுகின்றது! கண்ணிர் பெருகுகின்றது!
பிறந்தாய் - குணங்களிலே நிறைந்தாய் - இல்லறத்திற் சிறந்தாய்!
அரிய ஆசிரியத் தொழிலால் அறிவறிந்த மாணவர்களை உருவாக்கி பிறந்த பயனைத் திருவாக்கி
(தனி ஈஸ்வரம் ) 基

நடந்தாய்!
இன்று இயற்கையில் மயங்கி நடந்தாய் இயற்கை உன்னில் மயங்க மடிந்தாய்! இன்ப துன்பங்களைக் கடந்தாய்! எல்லாம் வல்ல சிவபுரத்தரசின் திருவடி நீழலை அடைந்தாய்! அதற்கில்லை ஈடு! உனக்கில்லைக் கேடு!
வாழ்க! வணக்கம்
வி.கந்தவனம்
༄༽
கதிரமலையாளின்
'கனவுங் கலைந்தது; காலையும் புலர்ந்தது; எனும் நூலிருந்து சிலவளிகள்.
O «O -O O A QO க.வை. தனேஸ்வரன் எழுதவும், சிறு கவிதைகள் புனையவும் வல்லவர். சில தமிழ் நாடகங்களை ஆக்கி யுள்ளார். திறம்பட நடிக்கத்தக்கவர். யாழ்ப்பாணத் தேவன் என்ற எழுத்தாளனும் நடிகனுமான மகாதேவனுடன் சேர்ந்து சில நாடகங்கள் நடித்துள்ளார். அருமையான ஒலி பெருக்கி அறிப்பாளரும் விளையாட்டுத்துறை ஆசிரியருமாவார். மேடை யில் அழகாகப் பேசுவார்.
(தனி ஈஸ்வரம்) 些 ○

Page 9
இவனும் ஒரு எட்டயபுரத்தான்
அறிவை அறிந்த ஆசிரியர் மத்தியில் மாணாக்கர் மனதையறிந்த மாமேதை நீ
தனேஸ்வரா உன் பெயருள் அடங்கும் அறமும் பொருளும்
உடலுக்கு பயிற்சியும் உளத்துக்கு எழுச்சியும் உவந்தாய் - உன்நிலை உயர்ந்தாய் கடலுக்குத் தெரியுமா தான் கொண்டது - ஓர் தமிழ் கடலென்று
உணவுக்கு சேர்க்கும் உப்பாய் - எம் தமிழ் கூடும் அவைக்கு இந்த
5.606
உள்ளத்தால் இவர் விடலை - அலை கவர்ந்ததோ தளர்ந்த வெறும் உடலை - இன்று களையிழந்து நிற்குது
6606)
உன்னால் உயர்ந்தவர் ஆயிரம் இருக்க இன்றும் இருந்தாய் ஏணியாய்
(தனி ஈஸ்வரம் )

மண் குதிர் ஏறிய மன்னார் அகதியாய் மாணவர்க்கு என்றும் இருந்தாய் தோணியாய்
படிய இழுத்து
வாரிய தலைமுடியை சரி பார்த்துக் கொள்கையில் பல பதினாறுகள் உனைப் பார்த்ததறிவாயா? -
முட்டி மடியாது உனது எட்டிய நடையில் உனை எட்டயபுரத்தான் என்பதா? இல்லை ஈழத்து சிவாஜி என்பதா? கட்டியம் கூறுவோம் நீ விட்டு சென்ற கால்தடம் பற்றியேனும் உன் கலைப்பணி தொடர்வோம்
- பாலதுரை இராகவன்
560TLT
இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்; தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்
- பாரதி
(தனி ஈஸ்வரம் )

Page 10
கொழும்புத் தம்ழ்ச்சங்கம் சாப்ய்ல் சங்க பொதுச் செயலாளப் ஆ.கந்தசாமி வழங்கிய கண்ணி அஞ்சலி
க.வை.தனேஸ்வரன் ஒரு பண்பாளன்
அமரர் க.வை.தனேஸ்வரன் ஊரெழுவில் உதித்து ஊரெல்லாம் புகழும் வண்ணம் வாழ்ந்தார். இன்முகத்துடன் அனைவரையும் கவரும் வல்லமை மிக்கவர். நகைச்சுவையாகப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் தன்மை வாய்ந்தவர். நாடறிந்த கலைஞர் ; நடிகர்; சிறந்த பேச்சாளர். விளையாட்டு அரங்கு, கலை இலக்கிய அரங்குகளில் நேர்முக வர்ணனை செய்து புகழ் பரப்பியவர். இலங்கையில் முதல் தர விளை யாட்டு உத்தியோகத்தராகப் பாராட்டுப் பெற்றவர். கொழும்புத் தமிழ்ச் சங்க நிகழ்வு களில் கலந்து கொண்டு சபையைச் சிறப்பித்தவர். அண்மை யில் கொழும்புத் தமிழ்ச் சங்க அங்கத்தவராக இணைந்து கொண்டார். பல்வேறு பாடசாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றில் பணிகளைச் செய்து பாராட்டு பெற்ற அன்னார் கொழும்புத் தமிழ்த் சங்கத்தில் பணி செய்ய நாம் கொடுத்து வைக்கவில்லை. அவரின் பிரிவால் துயர் உற்று இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் கொழும்புத் தமிழ்ச்
சங்கம் தனது ஆழ்ந்த அநுதாபத்தை தெரிவிக்கின்றது.
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
பொதுச்செயலாளர் கொழும்பு தமிழ்ச் சங்கம்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலைமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்
- பாரதி
(தனி ஈஸ்வரம் ) 当 C6)

இலங்கை மக்கள் பொதுப்பணிமன்றம் சார்பில்
மன்றச் செயலாளர் நாயகம் கவிஞர் க.பொ. நடனசிகாமணி வழங்கிய கவிமாலை
இறந்தன் என நினைக்க இரும்பினால் நெஞ்சம் வேண்டும்
தன்னலம் கருதாச் சேவை
தாய் மொழிப்பற்றுப்பாசம் சொன்னசொல் மாறாநேர்மை
சோர்விலாப்பணிகட் கெல்லாம் முன்னுதாரணமாய் வாழ்ந்த
முழுமதி தனேஸ்வரன் போல் இன்னொரு நண்பனை நாம்
இனி எங்கே காண்போம் ஐயோ!
ஊரெழுவூர் என்றாலே
உன்பேரே முன்னே நிற்கும் தார்மீகப்பண்பென்றாலே
தனேஸ்வரன் நினைவே தோன்றும் பேர்புகழ் விரும்பா நின்ற
பெருமையால் பெருமை பெற்று யாரொடு பகைகொள்ளாதுன்
யாழினை நன்றாய் மீட்டாய்!
கண்டவர் களிக்கும் தோற்றம்
கனிவொடு பேசும் ஆற்றல் கண்ணொளி காட்டி நிற்கும்
கருணையின் உரு நீ என்று மண்ணினை மதித்து வாழ்ந்த
மனித நேயனே! நீ கண்மூடி முழிப்பதற்குள்
கனலொடு கலந்தாய் ஐயோ!
(தனி ஈஸ்வரம் )
C7)

Page 11
அன்பொடு அறிவு ஆற்றல்
ஆளுமை அடக்கம் என்ற பண்புகள் அனைத்தும் கொண்ட
பகலவன் நீதான் ஐயா! உன்குரல் கேட்டாலே என்
உள்ளத்தில் உவகைபொங்கும் கண்கெட்ட காலனேனோ
கடலலை உருவில் வந்தான்
கடவுளை மறந்தாலும் நீ
கடமையை மறக்கமாட்டாப் உடமைகள் அழிந்தாலும் நீ
உண்மையை மறுக்கமட்டாய்! நடனம்' என்றழைத்தாபென்றால்
நான் புதுப்பிறப்பெடுப்பேன் திடமுடை தீர நெஞ்சம்
தியிலே தீய்ந்ததையோ!
கல்வியின் வளர்ச்சிக்கென்றும்
கலைவிளையாட்டுக்கென்றும் பள்ளிகள் கட்ட வென்றும்
பசிப்பிணி நீக்கவென்றும் நல்லன எல்லாம் செய்து
நாடெல்லாம் போற்ற வாழ்ந்து அள்ளியே அளித்தகைகள்
அனலொடு அழிந்ததையோ!
பிறந்தவரெல்லாம் ஓர்நாள்
இறப்பது உலக உண்மை இறந்தவரெவரும் எம்மை
இப்படி வதைத்தாரில்லை! சிறந்த நற்பண்புக்கெல்லாம்
சிகரமாய் திகழ்ந்த உன்னை இறந்தனன் எனநினைக்க
இரும்பினால் நெஞ்சம் வேண்டும்!
(தனி ஈஸ்வரம் )


Page 12

கொழும்பு தமிழ்ச் சங்க மாசிகை ‘ஓலை’ ஆசிரியர் கவிஞர் செங்கதிரோன் வழங்கிய கவிமாலை வடபுல வரலாறுன்னை வடித்திடும்! வணங்கி நிற்கும்!!
நிரலை நித்தம் கொஞ்சும்
நிலமடந் தையாழில் ஊரெழு ஊரில் வந்து
உதித்தத னேஸ்வரனே! பேரலை "சுனாமி" வாயில்
பிரிந்தனை உலகையென்ற பேரதிர்ச் செய்தி காதில்
பேரிடி ஆயிற்றாமே!
:! 3: H+
பலாலியில் உடற்பயிற்சி
பயின்றுநல் ஆசானாகி உலாவரும் உனது தோற்றம்
உறுதியை எமக்கு ஊட்டும்! இலாததோ இதயம் இந்த
இராட்சத அலையில் வீழ்ந்தாய்! இலாததால் நீயோ இன்று
ஏங்கிநாம் தவிக்கிறோமே!
|k H
யாழ்ப்பாணத் தேவன் பின்னர்
யாழ்க்குடா நாடு எங்கும் பார்க்கின்ற அரங்கில் நீயே
படித்தவர் குழாத்தின் முன்னே கோர்க்கின்ற சொற்கள் உந்தன்
குரல்வளத் தோடு சேர்ந்து கேட்கின்ற போது எம்மை(க்)
கிறங்கிடச் செய்யுமாமே!
:::::
கடமையில் சூரன் நல்ல
கரப்பந் தாட்ட வீரன் ; இடமது அறிந்து பேசும்
இயல்பினன் ; இலக்கியத்தை விடவில்லை அதிலும் உந்தன்
விஞ்சிய திறமை கண்டோம்! வடபுல வரலாறுன்னை
வடித்திடும் வணங்கிநிற்கும்!

Page 13
கனடா வாழ் நண்பன் V. M. சர்மா வழங்கிய வசன கவி பாமாலை
கலை பல கற்றுத் தேர்ந்து உடற்கல்வி தன்னொடு கவின் கலையுஞ் சேர்த்து ஆய்திறன் அனைத்துங் காட்டி அறிவினால் அயர்ச்சி ஒச்சி வாய்வன எல்லாம் மேற்று வழிப்படி யாற்றி யாற்றும் நூலறிவாளர் பலர் வாழும் வனமிகு ஊரெழு தன்னில் எங்கும் வாழையும் கமுகும் மாவும் வளரினத் தெங்கும் காவும் சூழ்ந்திடும் நன் மண்ணின் முத்தாய் மணியாய் முது கெலும்பாய் ஊரெல்லாம் போற்றும் பண்பின் உருவாய் திருவாய் திகழ்ந்த நல்லாசிரியனாய் வல்ல வழிகாட்டியாய் உதித்த தனி ஈஸ்வரனே தனேஸ்வரனே
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்துரெண்டு தொட்டு நான்கு வரை பலாலி ஆசிரியக் கலாசாலை தன்னில் விசேட உடற்கல்வி பயிற்சி நெறி தேர்ந்து சர்மா என்னுடன் உடன் கற்றதனால் உற்றவனானேன் இரட்டையரோ இணைபிரியாச் சோதரரோ எனப் பிறர் ஐயறும் வண்ணம் இரண்டு வருட காலந்தன்னில் எண்ணரிய செயல்கள் பல ஆற்றி ஆசிரிய கலாசாலை தன்னில் சுடரொளியாய் சுவடழியாத நிலைபெற்றோம் ஆற்றலின் மேலீட்டினால் முத்தமிழ் விழாவெடுத்த அமைப்பின் செயலரான எனக்கு என்றும் இணைகரமாய் ஆக்கமும் ஊக்கமும் அயராது செய்து நின்ற தனக்கு எனக்கு என்றும் பாராமல் நின்றுழைத்த தனிநாயகன் தனேஸ்வரனே’
குரல் வளமும், சொல்வளமும் சொல்லாண்மையும் மிக்க செல்வன் யாழ்ப்பாண வலையக் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் சிம்மக் குரலோன் தனேஸ்வரன் செல்வாக்கும் சொல்வாக்கும் தனியாகும் புத்தொளி நிலவோ? என்ன புதியதோர் வரலாறு படைத்திடத் தோன்றி இத்தரை மீது வந்து இவர்ந்தனன் மாணவன் மேன்மை பெற்றிட எண்ணிய சிறக்கப் பணிவும், கனிவான சொல்லும் கண்டிப்பும் கறாறும் சேர்ந்தே காணப்பெறும் அவன் தன் கருமத்தில் என்றுமே கண்ணயரான் காலத்தின் கட்டாயத்தால் தாய் மண்ணை விட்ட கன்ற பாவிகளில்
நானொருவன் கனேடிய மண்ணில் பதித்து பதின்மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னர் எனது முன்பிறந்தோன் முதுபெரும் ஒவியனவன் இறுதிச்சடங்கிற்கு வந்த காலை என் வரவறிந்து தனேஸ்வரன் அவர் தன்னுடன் பந்துவிற்கு நிகரான முன்னாள் அதிபர் லோகதாசன் சகிதம் எனது
(தனி ஈஸ்வரம் ) 莒 C 10 D

இருப்பிடம் வந்து கண்டு களித்து குசலங்கள் உசாவிச் சென்ற இருவரும் இரு வாரங் கழித்து வடநாடு சென்று மீண்ட எனக்கு செய்தி நின்றது இடி யோசை கேட்ட நாகமதை நிகர்த்தேன் பாசமிகு பார்த்திபன் அவன் தான் தனேஸ்வரன் சுனாமிக்குப் பலிகொண்டான் பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்றாற் போல் மூத்தவனை இழந்த எனக்கு வடு ஆறுமுன்னரே வடிவழகன் தொண்டன் சமூக சேவையாளன் உற்ற நண்பன் துணைவன் இன்னுயிர் நீத்தான் இறைவனடி சேர்ந்து வானவர் சேவைக்கு வித்தானான் வித்தகன் அவன் ஆத்ம சாந்திக்கு உறுதுணை யாவேன்.
மக்கள் மருமக்கள், உற்றார் உறவினருடன் அவரின் ஆத்ம சாந்தியை நாடும்
“ஈஸ்வர முத்துக்குமாரசாமிக் குருக்கள் (Vm. சர்மா)
74. DANDELION ROAD, BRAMPTON, L6R 1Y3, CANADA.
ஓடி விளையாடு பாப்பா! - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தை வையாதே பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு , மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
- பாரதி -
fi (; , ;
னி ஈஸ்வரம் ) 莲 C11)

Page 14
K.V.THANESWARAN
I was thoroughly shaken on hearing the sudden demise of my friend K.T. Thaneswaran, under tragic circumstances. Least did we expect that such an untimely end and would befall him. He had been a victim of nature under the guise of tsunami which snatched him, along with thousands of other lives.
My association with Thaneswaran was rather brief. It was the drama Thalakkavadi directed by the late "Kalaiperarasu' A.T. Ponnuthurai that brother us together on stage. He spoke the language as it should be spoken; perfect in diction, pronunciation and inimitable rendering. Besides being an actor he, himself was a producer and director, using the modern mimic technique.
Thaneswaran had carved a niche for himself in the art of announcing. It was a feast to the ear to hear his golden voice in athletic meets and other sporting events. He has also been a compare in stage programmers,
It was only a few weeks back did I see him and hear him speak at the Tamil Sangam auditorium, Wellawatte when he addressed a large gathering at the function to honour the famed reformist bard, Mahakavi Subramaniya Bharathi, organized by the acejournalist K.P. Nadanasikamani. That was the last I saw him.
Thaneswaran is no more, but his multi-dimensional personality, his charismatic smile, his 'golden' voice and his pleasing manners will ever remain etched in my memory,
"Oh! for the touch of his vanished hands and the sound of his voice that is stilled, his life was gentle and the elements so mixed in him that nature might stand up and so to the would, This was a man “.
- William Shakespeare.
C. Kamalaharam
(தனி ஈஸ்வரம் ) 当 C12O

From My Memory
My grandfather (Mr.Thaneswaran) was a well known and respected person in the Tamil Society of SriLanka and Canada.
He took part in many Public services like announcing at important functions such as events with the involvement of fine arts, anniversary functions of newspapers etc. He was a referee at volleyball and football matches. Any function which took place would never be complete without the presence of my grandfather.
At various Schools he was working as an instructor of physical education. Afterwards he was promoted to the position of a Vice-principal, Canagaratnam M.M.V. Jaffna.
Besides, he was also a loving father, grandfather, husband and friend throughout his life.
My first acquaintance with my grandfather was when I was 7 years old. Even though it was the first time I met him I knew his personality. He seemed like a very honest, king of knowledge able and gentle person and as time gradually passed on I got to know him better, I proved myself to be correct.
My grandfather had taught me many things while he, himself did not know he was teaching me. I remember one occasion when he had asked me to company him while he went to pick up my cousin from School. This happened very early during my 3 week, stay in Sri Lanka. I didn't expect Sri Lanka could possibly be in any way better that Canada. After picking up my cousin from School the three of us went to the beach to look at the sea. I saw palm and coconut trees. I smelled the fresh air and felt the sand of the beach. I was the waves rushing back and forth from the sea to the beach
(தனி ஈஸ்வரம் ) C13D

Page 15
that was the first time I had experienced such things and realized that there is more to a country than it's facilities. Sri Lanka is a country filled with great beauty which cannot be compared to any other country in the world.
The day on which I had heard the dreaded news of my grandfather's death is unforgettable. He had died along with thousands of others in Sri Lanka. ATsunamai had hit the Shore and thousands of people were crushed and killed due to the pressure of the water. Innocently my grandfather had gone to the beach to do his daily exercise and there this great man's life ended tragically.
The memory of my grandfather as a kind gentle and loving person is ingrained in the hearts of thousand millions of people who knew him including myself.
Mathangi Grand daughter
விளையாட்டு நெறிதனை விரல்நுனியில் மேவச் சளையா நெஞ்சுடைத் தனேஸ்! - விளையும் விளையாட்டில் “சுனாமி’ வீம்பாய்ச் சுழியோடி விளையாட விட்டதோவுன் விறல்
- ஏக்க ஆக்கம்:
அநு.வை. நா.
(தனி ສອງມີ ) G14)

Аррараһ
You were a guiltless soul on this earth destined to accomplish the Worthy. Indeed they've been accomplished in the duration of your existence, You're presence has fulfilled the meaning of an elder brother, a friend, a father and grandfather. Aliving role model you were to those who looked up to, even towards those elder to you, as Children, family, friends, and those who admire you peered at your feet. An impact everyone is on this planet we share in their own diverse way and Appapah, undoubtedly SO
were you.
I looked up to you. Commonly because of your considerate personality, your Successful career, engagement with your community, and your participation in physical activities. You have a voice that is not hesitant to expose, a voice that I'd strive to have The bold behavior and the fearless attitude as well are truly impressive which were pursued in your certainly fulfilled life.
An unexpected turn has fallen amongst those who's hearts are toward the faithless and hopeless human beings. Whose lives have been taken away due to that rare catastrophe in Southern Asia Walking along the beach on a weekend morning has been the cause of death to thousands. That day was his time to go and no one could do anything about it No one could battle that natural disaster
Tears will solve nothing, gathering together with those you love and praying, also hoping for the best will also salve nothing. What has happened has happened now it's the opportunity to look back on this victorious man's life and move on Now looking ahead to fulfill you and love one's futures until the day your life has been amiably taken away awaits you.
(தனி ஈஸ்வரம் ) 基 C 15 D

Page 16
This news was revealed to me on the 26 of December, Information I dreamt of never hearing. But as thouse sombre words filled my head I began to grasp that it's the time to face reality There is a birth for every soul and there is death And death being the most excruciating I tried to hold my placid tears but it rolled solemnly as time flew by in the day and it got to me that an innocent Soul has left us But time is the best medicine to heal one's death And so it did, although the truth stabs me in my heart I am standing strong in honor of my grandfather
Mr.Thaneswaran Vaithilingam is my grandfather and I'm proud being has grandson Not because of his triumphant work nor failures, Only because of the fact that he is my grandfather He'll be truly missed from his family, his friends, and those individuals who knew him dearly. Now he's in a place of peace. As difficult it is to face the truth the best I can do is wish him.
Rest in peace
Sathasivam Kanapathipillai Arumugham Kandiah Vaithilingam Thaneswaran Ampalagan Athavan
T.A.Athavan
(தனி ஈஸ்வரம் ) 些 C16)

Our Dear & Good Friend-Thanes
It is with deep sorrow I read in the Thunakural of......... the passing away of Dear friend and gentleman - the tidal wave of the 26 December taking a heavy tall of lives in our motherland including my good friend, Thanes. He shared the gloom of several families. I wish chalk a few lines of appreciation of a friend whom I hold very dear. Or friendship started at J.C.C grounds at District School sports meet, many many years ago, he was in charge of Physical Education Teacher at Attiar Hindu College at that time. It was a privilege that I had the good fortune of meeting him a five months ago at Mattakulya exchanged past memories. It was both settlemental and emotional. He spoke of the demise of his wife too. I had been to his house in Jaffna on Several occasions and the land between Thanes, his wife and family was both loving and Caring.
Thanes, the Popular sports official and Announcer was sought after by both the department of Education, schools and colleges. I remember very vividly when a problem arose while officiating in the event Highjump, Thanes, in no time, referred the A.A.A rules and solved the problem then and there. In another Athletic meet, at J.C.C grounds, under the part mage of the late Director of Education, W.B.C Malatantila, high encomium was laid his announcing, infect, he said in the course of his address, "the announcer is the winner of the meet
It is customary for officials of the meet to have a fellowship in the evening and Thanes was entrusted with the security and safety of the participants. well disciplined, he called a spade a spade - it is no hyperbole if I call him a year among person. yes, shares is no more but the impact he had left on all, who know him well, will last long.
(தனி ஈஸ்வரம்) 当 -G17)

Page 17
My closed relationship was when he was vice Principal Lawnaganathan M.M.V As one who taught earlier in the same institution, I was proud to see my good friend and I was at his Services whenever situation arose.
As Vice Principal, he did perform his duties to his utmost ability and won the hearts of the staff, students and the members of the Parents Teacher ASSociation.
Well, life is given by god and the same god takes us backgoodbye Thanes. your first innings is over the earth and the second innings commences with your creator - let us hope that you have Sowed on earth and seek. eternal Happiness in the beautiful share called paradise.
A.I.Lazarus Gunanayagam
Emaritus Principal
STCharleS MV
Jaffna.
எழுமின் விழிமின்! கருதிய கருமம் கைகூடும்வரை அயராது உழைமின்!
- விவேகாநந்நர்
(தனி ஈஸ்வரம் ) 基 -C18)

APPRECHATION - THANNI
The cruel hands of Tsunami had snatched away from our midst a very sincere personality, late Mr. K.V.Thaneswaran. It is indeed with feelings of profound shock that my wife and I heard of the Sorrowful death. The call was sudden, Swift and unexpected. It is difficult to resonate oneself to the fact that he is no more.
He joined Attiaar Hindu College, Neervely as an assistant teacher. His dedication and perseverance raised him to the position of Deputy Principal of Cannagaratnam M. Vidiyalayam, Jaffna.
He was always concerned about the education of the Students, their health, discipline and extra-curricular activities, especially Sports and games. He was a man of many parts. He knew the dictum, "The School is a miniature society' and he took pains to know about the community and he was a good social worker.
He had an admirable aesthetic sense and helped his school to organize cultural festivals. He himself had participated in dramas. He had a resounding voice and had been a popular announcer at important athletic meets and literary functions. He had also participated in debates and could speak extemporously. He had rendered yeoman services to the Department of Education at Circuit, District and Cluster Levels in organizing athletic meets and tournaments. He was an active member of the Valigam East Teachers' Association and held various posts, and he was also an active member of the teacher's trade union.
He had been a conscientious Prefect of Games and took great effort to inculcate good values in the minds of the younger generations. It would not be out of place if I quote the words of Nelson, Duke of Wellington who spoke high of the characteristics
(தனி ஈஸ்வரம் ) C19)

Page 18
of sports and games. He said, "I defeated Napoleon Bournaparte not in the Battle of Waterloo but in the playing fields of Eton And Harrow.” It should be admitted that the playing fields have produced many great men.
It is not what he had but what he did was his kingdom. He had played his innings with courage and determination. It is a matter of great regret to note that Some teachers and principals who had worked during the turbulent periods in the war torn areas have to leave the world unwept, un honored and unsung.
During my tenure of office as principal of Attiaar Hindu College and Kopay Christian College he had been of great assistance to me. He had been an inspiring presence among us.
Despite his official duties in his professional career he did not neglect his responsibilities as father, husband and social worker. His wife predeceased him. He had stretched his love to his extended family.
When I met him a week before he demise there was no indication that the ebb tide of his life would catch him in it currents. the following week it carried him away. It is said that executioner has no ears to hear and eyes to see. His second Son Nakeeran told me that his father had some premonitions as he had told his daughter about his encroaching last days.
During the aftermath of Tsunami many had paid their last respects and many had sent messages of condolence and floral tributes from here and abroad and all these bear eloquent testimony to the highestesteem in which he was held. Many loved his in life and let us not forgot him in death.
(தனி ஈஸ்வரம் ) 当 G20.)

On behalf of the staff of Attiaar Hindu College and on my behalf I extent the deepest sympathies to his sons, daughters, grand children and the other members of his family.
May his Aathma attain eternal bliss at the holy feet of Lord
Shiva.
. Shanthi! Shanthi!! Shanthi !!!
36A/237th Lane P.K. Rajaratnam Wellawatta Principal Emeritus A.H.C and K.C.C
Former Secretary, Northern Province
Principal's Association
డిసిటిడిసి
சேவை செய், அன்பாயிரு, தானம் செய், மனந் தூய்மையுடனனிரு, தியானம் செய், வாழ்க்கை உன்னை எல்லையற்ற ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும்,
. சுவாமி சிவானந்தர்.
(தனி ஈஸ்வரம் ) 莒 -C21 D

Page 19
என் தந்தையே!
பிறப்பில் தலைமகனாகி பெற்றார் விருப்பங்கள், கடமைகள், வேண்டுதல்களைத் தன் உணர்வுகளை அடக்கிப் பூர்த்தியாக்கிய ஓர் பூரணத் தம்பம். சரிந்ததே!
உடன் பிறந்தே கொல்லும் வியாதிகட்கும் தான் மருந்தாகி, இரத்த பந்தம், திருமண பந்தங்கட்கும் எவ்விடத்திலும் வழி காட்டிய கலங்கரை விளக்கு. அணைந்ததே! அன்பு, அடக்கம், பண்பு, விவேகத் துடன் கரம் பற்றிய மனையாள் அன்னலட்சுமி ராஜலட்சுமி அன்னம்மா வுடன் இல்லற வாழ்வில் ஓர் அன்றில் பறவை. இவ்வுலகை நீத்துப் பறந்து விட்டதே!
தன் நான்கு பிள்ளைக்கனி அமுது கட்கும் இல்லை என்பதில்லாது வாழ்வளித்த என் தந்தை “தனஈஸ்வரன்’ மறைந்தாரே! யாழ்குடாநாடு தான் வளர்த்த இயல், இசை, நாடகத்தின் முடிசூடா மன்னனை இழந்து விட்டதே! விளையாட்டரங்கங்களில் ஒலித்த சிங்கக்குரல் அடங்கி விட்டதே!
கால் பந்தாட்டமா, வலைப்பந்தாட்டமா பத்திரிகைகளின் விழாவா, போட்டிகளா அங்கெல்லாம் தனி இடம் பெற்றிருந்த நடு நாயகம் நிலை குலைந்து விட்டதே! நட்பிற்கு உதாரண புருசரான குகன் நிலையை எம்மிடையே வாழ வைத்த ஆன்மா பிரிந்ததே! (ஆன்மா) எதிலும் தன் வெல்லப் பாவித்த ஆயுதமாகிய சிரிப்பொலி நின்று விட்டதே! பலன் கருதாக் கொடை உள்ளம் சிவத்துடன் கலந்து கொண்டதே!
தந்தையின் ஆறு கட்டளைகள்
(1) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர்
பிறர்க்கு. (2) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று (3) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று (4) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு (5) சிந்திய பாலிற்கு சிந்தனை செய்யாதே (6) கொடுத்தனுக்குக் குறையில்லை
தலைமகள்
(தனி ஈஸ்வரம் ) -C 22)

கடல்வந்து முத்தெடுத்த கதை இது
யாழ் தேவன் மாஸ்டரின் குரல் யாழ்ப்பாணத்தில் ஓய்ந்ததும் அந்த வெற்றிடத்தை நிரப்பியது தனேஸ்வரன் மாஸ்டருடைய குரல். இன்று அந்தக் குரலும் இல்லை. சுனாமி அலையோசையோடு அந்தக் குரலோசையும் இணைந்து விட்டது. தனேஸ்வரன் மாஸ்டரின் அதே மிடுக்கு கடைசியாக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடந்த பாரதி விழா அறிவிப்பில் பார்த்தேன். சந்தித்து பேச விரும்பினேன். அலை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
யாழ் - ஊரெழு கிராமத்திற்கு புகழ் பூத்த வரலாறு உண்டு. புகழ் பூத்தவர்கள் வாழ்ந்த - வாழும் மண் அது. கிராமத்தினால் க.வை தனேஸ்வரன் புகழ் பெற்றாரா? அவரால் கிராமம் புகழ் பெற்றதா? இரண்டுமே காரணம் தான்.
உடற்பயிற்சியை அவர் போதித்தார். அவரும் பயின்றார். போதித்தபடி நடப்பது தானே நல்லாசிரியனின் பண்பு. உடற்பயிற்சியின் போது கடற்கரையில் காலன் அவரைக் கண்டு கொண்டான்.
நீங்கள் நல்லவரென்பது பலபேரின் முடிவு. நாடகமும் இலக் கியமும் உங்களை இன்னும் நல்லவராக்கியது என்பது எனது முடிவு. உங்களுடைய குரல் வளம் உங்களை மனிதரில் முத்தாக்கியது. கடலில் தான் முத்தெடுப்பதை நான் அறிவேன். கடலே வந்து முத்தெடுத்ததை இப்போது அறிகிறேன்.
மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது சுனாமி எனக்கு ஒரு நல்ல பாடம் சொல்லித் தந்த தந்திருக்கிறது. மிஞ்சக்கூடியது மனிதனு டைய செயற்பாடுகளே அந்தப் பாடத்தை பயின்ற மாணவரில் நீங்கள் முதலாமவர்.
கலைஞன்
சோக்கெல்லோ சண்முகம் -
(தனி ஈஸ்வரம் ) 当 C 23 D

Page 20
அறிவிப்புக்கலை உலகில் அரைநூற்றாண்டு
கோலோச்சிய கோமகன்
வேல் அமுதன்
எழுத்தாளர், மகவம் நிர்வாக இயக்குநர், திருமண ஆலோசகர்
இலக்கிய ஐம்பவான் யாழ்ப்பாணம் தேவன் அவர்களின் அடிச் சுவடைத் தொடர்ந்து பாடசாலை விளையாட்டு, கலை இலக்கிய அரங்க அறிவிப்புக்கலை உலகில் சுமார் அரை நூற்றாண்டு காலம் கோலோச்சிய கோமகன் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞன், யாழ். ஸ்ரான்லிக் கல்லூரிப் பிரதி அதிபர் உயர்திரு கந்தையைா வைத்திலிங்கம் தனேஸ்வரன் (க.வை.தனேஸ்வரன்) அவர்கள்.
நல்ல ஞாபகம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னொருநாள். ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணி, குரும்பசிட்டி அமரர் கலைஞானி அ. செல்வரத்தினம் அவர்களின் வீட்டிற்கு நேர் முன்பாக கலைஞானி யாருக்கே சொந்தமான விளையாட்டு மைதானத்தில் Setup Game கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி நிகழ்வு ஒன்று சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மோதிய குழுக்கள் ஊரெழு கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகமும், குரும்பசிட்டி விளையாட்டுக் கழகமும், ஊரெழு விளையாட்டும்; அழகாகவும் (Style) விளையாடியதோடு அவர் கரப்பந்தாட்ட விதிமுறை களை அனுசரித்துமல்லாமல் தன் குழுவினரையும் தன் சிம்மக் குரலால் ஊக்குவித்தும், தட்டிக் கொடுத்தும் காணப்பட்டார்.
அந்த துடிதுடிப்பான (smart) விளையாட்டு வீரர் வேறுயாருமல்ல; எமது உயர் மதிப்புக்குரிய திரு.க.வை.தனேஸ்வரன் அவர்களேதான்!
தனேஸ்வரனின் ராஜ கம்பீரத்தாலும், செளந்தரியத்தாலும் நான் கவரப்பட்டு, விளையாட்டுப் போட்டி முடிவில், அவரை அணுகி, "அண்ணை நல்லாக விளையாடினீர்கள்.” என்றேன்; "நன்றி தம்பி”, என்றார் அவர்.
அன்று துளிர்விட்டது எமது நட்பின் தொடக்கம்.
(தனி ஈஸ்வரம் ) C24)

நான் குரும்பசிட்டி, மாயெழுவை விட்துமீர்க்ேகிகுதினுேவ கொடுர நடவடிக்கையால் 1984 ஆம் ஆண்டு குடும்பத் தோடு இடம் பெயர்ந்தேன். ஊரெழு வீரகத்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்த வெற்று வீடொன்றில் குடியமர்ந்தேன்.
அக்காலத்தில் எம் நட்பு வளர்ந்தது; வலுப் பெற்றது.
ஊரெழுவில் எமது மகவம் - கலைவட்டம் நடத்திய மாதாந்த தொடர் ‘சந்திப்புக்களில் தனேஸ்வரன் பங்குபற்றியதுமல்லாமல், சரவணமுத்துப் புலவர், மயில்வாகனப் புலவர், கலாநிதி க.கையிலாசபதி, யாழ்ப்பாணம் தேவன், போன்ற ஊரெழு அறிஞரின் பெயரில் அரங்கம் அமைத்து, கலை, இலக்கியச் சந்திப்புக்களை நடத்திய வேளைகளில் அவற்றை ஆதரித்தும்; அத்தகைய நிகழ்வுகளை நடத்த ஊக்குவித்தும் இருந்தார்.
தனேஸ்வரன் ஒரு மாமனிதன்.
இவர் வட இந்தியா Lucknowவிலும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் கல்வி கற்று உடற் பயிற்சி பெற்ற ஆசிரியராவர்; விளையாட்டு வீரருக்கே உரிய அரும் பண்புகளில் (SportSmanship) ஊறித் திளைத்தவர். உடற் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் உயர் பதவியான பிரதி அதிபர் பதவிக்கு உயர்த்தப்பட்டது இதற்கு முன்பும் பின்பும் (இன்றுவரை) கிடையாது என நான் நினைக்கின்றேன்.
பதவி உயர்வு தனேஸ்வரின் ஆற்றல், ஆளுமைக்கு கிடைத்த பரிசு என்பேன்.
இவர் பாடசாலை விளையாட்டு இல்லப் போட்டி சிறந்த அறிவிப்பாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமஉயர்தரத்தில் அறிவிக்கும் ஆற்றல் உடையவர். இவரிடம் இயல்பாகவே காணப் பட்ட குரல்வளம், சொல்வளம், சொல்லாண்மை, முகச்செந்தளிப்பு, உடல்வாகு, பிரச்சினை களைத் தீர்க்கும் திறமை முதலியன இவரை அறிவிப்பாளராகத் துலங்கக் கைகொடுத்தன.
ஊரெழு கணேசா, உரும்பிராய் இந்து, வயாவிளான் மத்திய கல்லூரி, யாழ். இந்து, ஸ்ரான்லி, யாழ் மத்திய கல்லூரி, கொக்கு
(தனி ஈஸ்வரம் ) 一蔓 -C25)

Page 21
வில் இந்து, நீர்வேலி அத்தியார், கோப்பாய் கிறிஸ்ரியன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை போன்ற பல்வேறு பாடசாலைகளில் இவரின் சிம்மக்குரல் ஒலித்தது. சுருங்கச் சொன்னால், யாழ்ப்பாணப் பாடசாலைகள் அதிகமானவற்றில் ஒரே ஒரு ஒலித்த சிம்மக் குரல் தனேஸ்வரனுடையது மாத்திரமே!
தனேஸ்வரன் ஒரு அரும்பெரும் கலைஞன்.
இவர் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றதையும் நாடகம் எழுதியதையும்; நாடகங்களில் நடித்ததையும், நாடகங் களைத் தயாரித்து அவற்றை மேடையேற்றியதையும் நான் அறிவேன். கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையின் நிறைகுடம்’ நாடகத்தில் அரசவேடம் தரித்து நடித்ததும் ; ‘தாளக்காவடியில் வெள்ளைக்காரன் வேடம் போட்டதும் நான் நன்கறிவேன். உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் நடித்த வட்டாரப் போட்டிக்குத் தயாரான வேல் அமுதனின் ‘வாழும் வழி சமூக நாடகத்தை மெருகேற்ற உதவியவர் களுள் இவரும் ஒருவர்.
தனேஸ்வரன் ஒரு சிறந்த எழுந்தமானப் பேச்சாளர்.
அறிஞர் C.N. அண்ணாத்துரை ஒரு தடவை “சும்மா பேசுங்கோ அண்ணா.” என்ற போது, ‘சும்மா’ என்ற மகுடத்தில் மணித்தியாலக் கணக்காக உரை நிகழ்தியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எனது துரதிர்ஷ்டம் அண்ணாவை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த தில்லை! ஆனால், எத்தனையோ தடவை தனேஸ்வரன் எழுந்தமான பேச்சுக்களை எழுப்பமாகப் பேசி மக்களை கப்சிப் எனக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததை நான் நேரில் கண்டு பிரமிப்பு அடைந்திருக்கிறேன்.
தனேஸ்வரன் தமிழ்த் தேசியத்தின் அனுதாபி.
இவர் தமிழரசுக் கட்சியின் பிரசார மேடைகளை அழகுபடுத்தியவர். “தமிழரசுக் கட்சியின் பிரசாரப் பீரங்கி’ என எமது மூத்த எழுத்தாளர் வரதன் அவர்களால் வியந்துரைக்கப்பட்டவர்.
யாழ். அரசியல் நெருக்கடி ஏற்படுத்திய ‘1995 வெளியேற்றம்’ (Exodus) தனேஸ்வரனையும், என்னையும் கொழும்புக்கு இடம் பெயர வைத்தது.
(தனி ஈஸ்வரம் ) 莒 ܐ -C26)

தனேஸ்ரவன் முகத்துவாரத்திலும், நான் வெள்ளவத்தை யிலும் விடப்பட்டோம்.கொழும்பில் எமது செளஜன்னிய உறவு மிக நெருக்கமானது.
தனேஸ்வரனின் அறிவிப்புத் தொண்டு தங்கு தடையின்றித் மேன்மகாணத்திலும் தொடர்ந்தது. பம்பலப்பிட்டி மகளிர், பம்பலப்பிட்டி இந்து, வெள்ளவத்தை மகளிர், தெகிவளை பாடசாலை, இரத்மலானை இந்து எனப் பல்வேறு பாடசாலைகளில் இவரின் குரல் தொடர்ந்து ஒலித்தது.
கலை, இலக்கிய அரங்கங்களின் அறிவிப்பாளராகவும் ; சில விழாக்களுக்குத் தலைமை தாங்கியும் தனேஸ்வரன் தொண்டாற்றியமை குறிப்பிட வேண்டியன. 2002 ஆம் ஆண்டு கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் நடந்த வேல் அமுதனின் ‘ஓர்மம்' சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு இவரே தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 2003 ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இனிது நடந்த சட்டத்தரணி K.V மகாதேவனின் மணிவிழாவுக்கும் இவரே தலைமை தாங்கினார். இலங்கை மக்கள் பொதுபணிப் மன்ற பாரதி விழாக்களில் அறிவிப்பாளராகவும் (இவர் கடைசியாக பங்கு பற்றிய பொதுநிகழ்வும் இலங்கை மக்கள் பொதுப்பணி மன்ற பாரதி விழாவே, கொழும்பு கம்பன் கழக விழாக்களில் பேச்சாளராகவும் பங்குபற்றிச் சிறப்பித்தார்.
கடந்த மார்கழி. 26 ஆம் திகதி. அதிகாலை நேரம். வழமை போல் தனேஸ்வரன் முகத்துவாரம் கடற்கரையில் தேகப்பியாசம் எடுத்துக் கொண்டிருந்தவேளை முன்னறிகுறி ஏதும் இன்றிச் சீற்றமுற்று சீறிப் பாய்ந்த வீரியம் மிகு சுனாமி இராட்சத அலைகள் இவரைப் பலி எடுத்தன!
அடி சுனாமி அரக்கியே! நீ கோமகன் தனேஸ்வரனின் உயிரைப் பறித்தது ஏதோ உண்மைதான்! ஆனால், உன்னால் மட்டுமல்ல, எந்தக் கொடிய சக்தியாலும் தனேஸ்வரனின் நினைவுகளையோ, அவர் எம் மனங்களில் எழுப்பிய நல்லுணர்வுகளையோ தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதும் உண்மை!
Vel Amuthan, Director, Makavam - Arts circle, 8/3/3 Metro Apt. Col -06, Tel: 2360488
(தனி ஈஸ்வரம் ) 莲 C 27 D

Page 22
இலக்கிய வித்தகர் சைவப் புலவர் முத்த எழுத்தாளர்
கல்வியாளர் அரு.வை. நாகராஜன் அவர்கள் வழங்கிய
நீங்கா நினைவலைகள்
கி.பி 2004 திசம்பர் 26ம் நாள். தென் கிழக்காசியாவில் ஒரு கரிநாள் (Black Day) அன்றைய தினம், அதிகாலை வேளையில் இந்து மாசமுத்திர வட எல்லையை அண்டிய அந்தமான், நிக்கோபார் . சுமத்ரா தீவுக் கூட்டங்களுக்கு, கடலடியில் முகிழ்த்த நில நடுக்கத்தால் கடல் கொந்தளித்து எழுந்தது. அதன் இராட்சத நீரலைகள் கிழக்கு மேற்காகக் கிளர்ந்தெழுந்து விரிந்து - தாய்லாந்து. இந்தோனேசியா போன்ற நாடுகளின் மேற்குக் கடற்கரைகளையும்’ இந்தியா - இலங்கை போன்ற நாடுகளின் கிழக்குக் கடற்கரை ஓரங்களையும் பெரிதுந் தாக்கின.
இவ்வனர்த்தப் பேரலைகள் “சுனாமி துறைமுக அலை என்ற பெயர் கொண்டு உலக வலாற்றில், பேரழிவுகளை உண்டாக்கி வலுவான பாதிப்புகளைப் பதித்து என்றும் நீங்காக் கறையை - வடுவைப் பதித்துள்ளது. இ.தோர் இயற்கை அனர்த்தம் என்று ஆறுவர்.
இதுபோன்ற அனர்த்தங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன எனப் புவியியலாளர் கூறுவர். மயோசின் சுண்ணப் பாறைத் தோற்ற யுகத்தில் கடற்கோள் ஏற்பட்டதாக மண்ணியல், புவிச் சரிதவியலாளர் பல சான்றுகளுடன் கூறுவர். அது போழ்து, உலகப் பிரளயம் உண்டாகி, ஆசியாக் கண்டத்து வடக் கெல்லையில் இருந்த கடலைக் காவு கொண்டு, அதற்கு மேலாக இமயமலைத் தொடரின் நிலப் பரப்பைத் தோற்றுவித்தது என்றும் , அதேவேளையில் தென் பகுதியில் இருந்த அகன்ற - விரிந்த நிலப் பரப்பை அழித்துச் சிதைத்தது என்றுங் கூறுவர். அப்பொழுதிருந்த தென் திசைக் கண்டமான இலமூரியா கண்டச் சிதைவின் எச்சத் துண்டங்களின் படிவுகளே இன்றைய தென் கிழக்காசியாவாம். அப் பாரிய கடற்கோளின் எச்சங்களாகத் தோன்றிய தீவுக் கூட்டங்களும் நாடுகளுமே இன்றைய தென் கிழக்காசியாவில் அடங்குகின்றன.
(தனி ஈஸ்வரம்) 当 C28)

இலமூரியாக் கண்டம் பற்றியும் அதன் அழிவால் ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றியும் எமது தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் பல உள்ளன. முதற் சங்ககாலத்தில் இலமூரியாக் கண்டம் குமரிக் கண்டம் எனப் பெயர் கொண்டது. அந்நாளில் ஏற்பட்ட கடற் கோளில் பல் வளத்தோடு விளங்கிய தமிழகத்து எல்லைகள் சுருங்கின. காவிரிம்பூம் பட்டினம். திருக்கோணேஸ்வரம் போன்ற நன்னகர்கள் அழிந்தன. அவ் வனர்த்த அழிவில் எமது பண்டைய பண்பாட்டுடன் பண்டைய கலைஇலக்கியப் பனுவல்கள் பலவும் மக்கள் செல்வத்துடன் அழிந்தன. இதற் கான அக - புறச் சான்றாதாரங்கள் பல உள்ளன.
இப்பாரிய பிரளயத்துக்குப் பின்வரும் காலத்துக்குக் காலம் பல பிரளங்களும் அழிவுகளும் நிகழ்ந்துள்ளன. ஆயினும், இன்று நாம் வாழும் காலத்தில் “சுனாமி’ என்ற பிரளயம் புரிந்த அழிவுகள் - அனர்த் தங்கள் எம் கண் முன்னாலேயே நிகழ்ந்து எம்மை உலுக்கி நடுங்க வைத்துள்ளன.
குறிப்பாக -
தமிழீழத்துக் கடற் கரையில் அமைந்துள்ள முல்லை நகர் - திருமலை நகர் - மட்டு நகர் - திருக்கோவில் வரை நீண்டு அதற்கப்பாலும் தென்கரையில் ஒடி மேற்கில் களனிக் கழிமுகம் (முகத்துவாரம்) வரை சென்ற அக்கோரப் பேரலை ஒரு சில மணித்தியாலத்துக்குள் அக்கரை யோரங்களை நிர்மூலமாக்கி விட்டது. இக் கோரக் கடற்கோள், பல்லாயிரக் கணக்கான மனிதவுயிர் உட்பட பல்லுயிர்களையும் பல்கோடி பெறுமதி யான பொருட்செல்வங்களையுங் காவு கொண்டு விட்டது. இ.தோர் ஊழித் தாண்டவப் பேரழிவு
இவ்வனர்த்தத்தன்று அதிகாலையில் -
களனி கங்கைக் கழிமுகத்துக்கு அருகாமையில் உள்ள மட்டக் குழியில் வாழ்ந்த என்னினிய நண்பர். தனேஸ்வரன், வழக்கம் போல் தனது நடைப்பயிற்சிக்குக் கடற்கரைக்குச் சென்றிருந்தார். அத்தருணம், கூற்றுவனாக வந்த சுனாமி என்ற கடற் பேரலை, புயலெனப் பொங்கி எழுந்து வந்து எமது நண்பரையும் காவிச் சென்று கடலுள் சங்கமமாக்கிக் கொண்டது.
இக் கோரச் செய்தியை அடுத்த நாள் நண்பகலுக்கு மேல், என் அன்புக்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் தொலைபேசியில், பலதும் பத்தும் பேசியபின், என் உடல்நலக் குறைவு காரணமாக என்னிடங்
(தனி ஈஸ்வரம் ) 当 C 29D

Page 23
கூறாது, எனது துணைவியாரிடம் மிகவும் நாசுக்காகக் கூறினார். அவர் உறுதி செய்யாத செய்தியாகக் கூறியதால், அதனை தனேஸின் உறவினர் (கல்கிசையில் வாழ்பவர்) ஒருவருடன் தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்பே யான் திடுக்குற்றுக் கலங்கினேன். முதிர்ந்த வயதில், நோயுடன் போராடும் எனக்கு அச்செய்தி ஆற்றொணாத் துயரைத் தந்தது. அத்துயரில் இருந்து யான் இன்னும் விடுபடாது கலங்குகிறேன்.
திரு. தனேஸ்வரன் எனது உறவினர் அல்ல - ஒரு சாலை மாணவ நண்பரும் அல்ல. கடந்த 35 ஆண்டுக்குள் ஏற்பட்ட நட்பே எம்மிருவரையும் இணைத்து நெகிழா அன்பினிற் திளைக்க வைத்துள்ளது. இருவரும் ஒரே வயதினர். ஓரிரு மாதங்களில் யான் மூத்தவன். அவ்வளவே! ஆயினும் எமது உறவு மிகவும் நெருக்கமானது - அன்னியோன்யமானது. அவருடன் யான் சந்தித்த முதற் சந்திப்பே மிகவும் ஆழமாக என் வாழ்விற் பதிவாகியுள்ளது. அப்பொழுது (1971 ல்) யான் அநுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு இடமாற்றம் பெற்றிருந்தேன். அதே காலத்தில், தனேஸ்வரனும் அநுராதபுரம் ஸாகிரா மகா வித்தியாலயத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றலாகி வந்திருந்தார். என்னைப் பற்றி விவேகானந்த மகா வித்தியாலத்தில் யான் முன்னர் கடமையாற்றிபோது இருந்த உயர் வகுப்பு மாணவர் மூலமும் அப்போதைய ஆசிரியர்கள் மூலமும் அறிந்த தனேஸ் என்னைச் சந்திக்க ஆவல் கொண்டிருந்தார். யான் அநுராதபுரத்துக்கு, எனது இல்லத்துக்குச் சென்ற பொழுது, ஒரு நாள் மாலைப் பொழுதில் எனது பழைய மாணவர் ஒருவருடன் என்னைத் தேடி வந்தார் தனேஸ். வந்தவர் தன்னை அறிமுகப்படுத்தியதோடு அநுராதபுரத்தில் யான் ஈடுபட்ட கலை இலக்கியப் பணிகளையும், விளையாட்டுத் துறை, சமூகத்துறை போன்ற வற்றில் யான் பதித்த பதிவுகளையும் நினைவு கூர்ந்து அவை காரணமாக என்னைச் சந்திக்க ஆவல் கொண்டிருப்பதாகவும், கள்ளங் கபடமற்ற குழந்தை போல் கூறினார். அந்த முதற் சந்திப்பே என்னை அவருடன் ஈர்த்துக் கொண்டது. அந்நெருக்கம் பல சந்தர்ப்பங்களில் மெருகூட்டிக் கொண்டது. அவர் அறிமுகத்தில் இழையோடிய அவரது ஆழமான ஆளுமையை உள்வாங்கி நெகிலா நட்புறவையும் கெழுதகைமையையும் பேணிக் கொண்டேன். இது தான், ‘பண்டறியா நட்பாங்கிளமை தரும்’ என்ற இலக்கிய மனங் கொண்ட பண்பென வியந்து மகிழ்கிறேன்.
திரு.தனேஸ்வரன் ஒரு சிறந்த உடற் பயிற்சி ஆசான். அத்துடன், கண்ணியமான காற்பந்து விளையாட்டு வீரர். காற்பந்துப் போட்டி நடுவருங் கூட. அவர் அநுராதபுரத்தில் வாழ்ந்த காலத்தில் எங்கெல்லாம்
(தனி ஈஸ்வரம் ) 粤 C30)

விளையாட்டுப் போட்டிகள், காற்பந்துப் போட்டிகள் நிகழ்ந்தனவோ அங்கெல்லாம் விளையாட்டு நடுவராக - வெண்ணிறக் கட்டைக் காற்சட்டை உடையில், நடுவர் ஊதுகுழல் சகிதம் பளிச்செனக் காட்சி தந்து நிற்பார். அவரது எடுப்பான தோற்றப் பொலிவு எப்பொழுதும் அவருடைய ஆளுமையை எடுத்தியம்பும். அத்துடன், அவரது கம்பீரமான குரல் ஒலியும் அவரை இனங் காட்டும். அந்நாளில், அநுராதபுரத்தில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் அவரின்றி எந்தவொரு பாடசாலை விளையாட்டுப் போட்டியோ காற்பந்துப் போட்டியோ நிகழ்ந்ததில்லை என்பேன். அவற்றில் அவர் ஓர் அறிவிப்பாளராக அல்லது நடுவராக நிற்பார்.
90 களில் யான் தாவடி தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய பொழுது, அவ் வித்தியாலயத்தில் பெளதிக வளமோ ஆசிரிய வளமோ மிகவும் குறைவு. குறிப்பாக - விளையாட்டுத் துறை மிகவும் ஈனமடைந்து இருந்தது. அத்துறைக்குச் சிறிது வளஞ் சேர்த்து விளையாட்டுத் துறையை மீட்க இல்ல விளையாட்டு போட்டிகளை நடத்த முயன்றபோது, எனக்குப் பக்க பலமாக நின்று, சகல வழிகளிலும் துணை நின்ற தனேஸை யான் என்றென்றும் மறக்கிலேன். இதில், அவருடைய தனித்துவமான சமூகப் பிரக்ஞையைக் கண்டு வியந்தேன்.
அத்துணை ஆளுமைகளுக்கும் அப்பால் அவர் தனித்துவமான கலை-இலக்கிய ஆர்வலராகவும், பங்காளியாகவும் விளங்கினார். அதுவே என்னை மிகவும் கவர்ந்தது. தெல்லிப்பழை கலை இலக்கியக் களம், யாழ் இலக்கிய வட்டம் போன்ற அமைப்புகளில் பார்வையாளனாக மட்டுமன்றிப் பங்காளராகவும் எம்முடன் இணைந்து பல முயற்சிகளில் முன்னின்றார். கொழும்பில் இடம் பெயர்ந்து வாழ்ந்த போதும், கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளின் ஒன்றுகூடல், விழாக்கள் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டு முன்வரிசையில் அமர்ந்து, தனது சுவையுணர்வையும், சமூக பிரக்ஞையையும் வெளிக் காட்டி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார்.
இவ்விதம் பல்லாளுமைகளும், திறமைகளும் கொண்ட திரு.தனேஸ்வரனை - நல்லியதங் கொண்டவரை சுனாமி அலை, மின்னாமல் முழங்காமல் அன்றைய காலைப் பொழுதில் வந்து காவு கொண்டது. அவருடன் வாழ்ந்து அநுபவித்த அவர் நட்பையுந் திறன்மிகு ஆளுமைகளையும் என்றும் நீங்காப் பேரலையென என்னகத்தில்
(தனி ஈஸ்வரம்) 莒 C31)

Page 24
என்றென்றும் மோதிக் கொண்டே நிற்கும். எனக்கு மட்டுமன்றி, அவரோடு பழகிய அத்தனை பேருக்கும் அவர் உறவலை நீங்கா அலையே!.
இத்தருணத்தில், அவர் பிரிவை நினைந்துருகும் அவர்
பிள்ளைகள், உற்றார், உறவினர் அனைவருடனும் யானும் வள்ளுவன் குறளை நினைந்து ஆறிக் கொள்கிறேன்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.
ம் சாந்தி சாந்தி சாந்தி! 9
- அநு.வை.நா
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
அழுதாலும் தொழுதாலும் அதில்
ஒரெழுத்தும் மாறாதே!
(தனி ஈஸ்வரம் ) 32

கண்களை மூடித் தேடுகிறோம்
தீராத சோகமதில் நீங்காத கவலைக்கு ஆளாக்கி விட்டு இனத் தையே விட்டுபிரிந்த எங்கள் அன்பின் uncle என்ன கொடுமை நிகழ்ந்தது? எம்மையும், அன்பு மக்களையும் உடன்பிறந்தாரையும், அருமை நண்பர் களையும் மின்னாமல், விழுங்கிய அலையை (சுனாமி) எண்ணி எண்ணிக் கலங்கின்றோம். நேற்றிருந்த எங்கள் uncle இன்று எம்முடன் இல்லை. யாது செய்வோம் என கலங்குகின்றோம். உடல் மெலிந்து, நடை தளர்ந்து, ஊன்றுகோல் கொண்டு தடுமாறும் நிலை வேண்டாமென்று எண்ணித்தானோ, இவ்வுலக வாழ்வை விட்டுச் சென்றீர்கள். Uncle என்றவுடனே தங்களது நகைச்சுவையான உரையாடலும் கம்பீரமான சொற் பொலிவும் தான் எம் கண்முன் நிழலாடுகிறது.
ஆங்கில நாகரிக ஆடை அலங்காரமாயினும், செந்தாமிழர் தேசிய நடை, உடை பாவனைகளிலாயினும் தங்களைக் காணும்போது ஆளுமை சிறப்புக்கண்டு எமதுள்ளம் பூரிக்கும்.
தெய்வத்தோடு கலந்துவிட்ட தங்களது அருட்பார்வை எங்கள் எல்லோரையும் காப்பாற்றி வழிநடத்தும். பிறக்கும் போதே இறப்பதற்காக திகதி நிச்சயமாகி விடுகின்றது என்ற உண்மையை இன்று உணர்ந்து ஆறுதலிடைகிறோம். ஆனால் நீங்கள் விட்டுச் சென்ற அந்த நினைவுகள் எங்கள் முன் நிழலாடுகிறது. தாங்கள் தடம் பதிந்த இடங்கள் உயர்ந்த வாழ்வினையும், உறவுகளையும் புடமிட்டுக் காட்டுகின்றன.
அமரத்துவம் அடைந்த எங்கள் uncle இன் இனிய சுபாவமும், அடுத்தவர்களுடன் கூடி மகிழும், நாடி உதவும் உத்தம குணமும் என்றும் நினைவில் இருக்கும். நீதிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நீங்கள் நீதிதேவனின் பாசவிலங்குக்குப் பாத்திரமானது யாழ் முனிவர் யோகர் சுவாமியின் கூற்றுப்படி "எல்லாம் எப்பவோ முடிந்துவிட்ட காரியம்’. நேற்றிருந்தார் இன்றில்லை என்ற பெருமையை இவ்வுலக்குத்துத் தந்து அமரத்துவம் எய்திய தங்களை நெஞ்சில் இருத்தி வணங்குகிறோம்.
(தனி ஈஸ்வரம் ) C33D

Page 25
நல்லவர்கள் நெடுங்காலம் நாட்டில் வாழ்ந்ததில்லை
மாண்டவர்கள் சிலபேரை மறப்பதற்கு முடிவதில்லை நீங்கள் சொரிந்த பரிவும் பாசமும் இன்னும் மறையவில்லை
உங்கள் குடும்பத்தாரை எவ்விதத்திலும் தேற்றவும்
- முடியவில்லை முடியாதனவெல்லாம் முழுமுதற் கடவுளுக்கே சமர்ப்பணம்
சிவத்தோடு கலந்து விட்ட தங்களது ஆத்மா பரசுகம்
- காணட்டும்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி
உள்ளம் உருகும் Siva and 6dš6ģ
Our uncle late Mr. K.V. Thaneshwaran had lived a dignified life. His sudden death is a great loss to us, as well as to all Our kith and kin, which cannot be consoled by any other means.
I have known him since 1996, not only as uncle but also as an amicable friend. I still remember those past days; which he spent with me guiding me in my studies and encouraging me to do well in life. He has always treated me very kindly and helped me in need, as he was well known for doing so by his own neighbours and relatives.
Even he is not in existence with us today, the memories he left with us will be there forever in our mind, unearned. We are still unable to come over the grievance by his in credible loss. We
convey our heart full condolence to his family.
May his soul rest in peace.
S.Luxshi.
(தனி ஈஸ்வரம் ) 些 -G34)

ஆத்மா அழிவதில்லை
"ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும் நெருப் பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்” என்று சொல்கிறது கீதை. எமது தனேஸ்வரன் அங்கிளின் உடல் கொடிய அலைகளால் அடிக்கப் பட்டு அழிக்கப்பட்டாலும் அவருடைய தூய ஆத்மா அழிக்கப்படவில்லை. அழிக்கப்படவும் முடியாது. அவரது பண்பான செயல்களும், அன்பான பொருள் நிறைந்த பேச்சும், சுறுசுறுப்பான திடமான உருவமும், பலனை எதிர்பாராது எவருக்கும் உதவி செய்யும் மனப்பக்குவமும் அவரோடு பழகிய எல்லோரது மனதிலும் ஆழப் பதிந்திருக்கும்.
அவரோடு பழகும் பேறு பெற்றவர்களுள் நானும் ஒருத்தி என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் சிறுமியாக இருந்த போது எமது ஊரில் (குடும்பசிட்டியில்) அவர் நடித்த நாடகங்கள் பார்த்து வியந்திருக் கிறேன். பின்னர் அவரோடு பழகக் கிடைத்த போது அவருடைய குணா தியங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவரின் இருந்து படிக்க பல விடயங்கள் இருக்கின்றன என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
இப்போதும் பொதுக்கூட்டங்களில் தலைமை தாங்கினாலும் சரி, முக்கிய பேச்சாளராக இருந்தாலும் சரி மற்றவர்களை சலிக்கப் பண்ணாமல் அளவாக, அழகாக தமது கருத்தை சுருங்கச் சொல்லி மனதில் பதிய வைக்கும் பாணி அவருக்கே உரியது. அவரின் முகத்தில் புன்னகை இல்லாமல் இருந்ததை நான் பார்த்தது இல்லை. அதைப் போல மற்றவர்களும் சந்தோஷமாகப் இருக்க வேண்டும் என்று உற்சாக மாக பேசுவார். தனது பழைய அனுபவங்களுடனும் உதாரணங்களுடனும் அவர் பேசும் போது மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும்.
எத்தனையோ நாட்கள் கடற்கரையில் நான் பார்த்திருக்கிறேன். தினமும் அவர் உலாவ வந்து அழகை அனுபவித்த அந்தக் கடலலைகள். இவை எங்களிடமிருந்து அவரை பிரித்து விட்டன. சுனாமி வடிவில் அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு முக்கியமாக மகள் பூங்கோதை, மருமகன் சிவராஜா, பேரப்பிள்ளைகள் தக்யாயினி, கிருபா, மருராள் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாதது. ஆனாலும் அவருடைய ஆத்மா உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தும்!
வாணி சிவராஜன்
(தனி ஈஸ்வரம் ) 基 C35)

Page 26
காற்றுடன் கலந்த கலங்கரை விளக்கு கவை. தனேஸ்வரன்
யாழ்பாடி புகழ் ஈட்டிய யாழ்ப்பாணம் என்றாலே நாவில் தேன்சுவை ஊறும். ஆங்கே வடபால் மத்தியிலே குடிகொண்டுள்ள சிற்றுார் ஊரெழு. இக்கிராமத்தின் சிறப்புக்களைப் பற்றி எடுத்துரைக்க பலகோடி ஆண்டு கள் ஆகும் என எனது அம்மப்பா கூறுவது இன்று என் நினைவுகளை வருடிச் செல்கின்றது. இத்தகைய கிராமத்திலே இல்லறத்தினால் எழில் பொங்கச் செய்த வைத்தியலிங்கம் தங்கம்மாவிற்கு மூத்த இளவலாக வந்துதித்தவர் அமரர் க.வை.தனேஸ்வரன் அவர்கள்.
தன்னைத் தானே தலைவனாக்கி தனக்குள் தானாக வளர்ந்து எம்முடன் 72 வருடங்கள் தலைமகனாக வாழ்ந்தவர் அன்னார். மனதை விட்டு என்றும் அகலாத எழில் தோற்றமும் பேச்சுக்கிடையே கலகலப்புடன் கூடிய சிரிப்பும் சுறுசுறுப்புடன் கூடிய விடாமுயற்சியும் கோபம் கொள்ளாத குணவியல்பும் அனைவரை இன்முகத்துடன் வரவேற்கும் பண்பும் நிமிர்ந்த நடை, நேரிட்ட பார்வை இவை அன்னாரை அழகுபடுத்தும் அம்சங்கள். அனைத்து துறைகளை துறைபோகப் பயின்று ஆசிரியராகவும் அதிபராகவும் பேச்சாளராகவும் சிறந்த எழுத்தாளனாகவும் திகழ்ந்தவர். தனி வாழ்க்கைச் சிறப்புடன் இல்லற வாழ்க்கையில் அன்னம்மாவுடன் இணைந்து அன்றில் பறவைகளை போன்று வாழ்ந்தவர். அன்பிலே விளைந்த வாழ்வு அறிவிலே சிறந்த நான்கு மக்கட் பேற்றினை நல்கிற்கு. வாழ்க்கைக் களத்திலே ஏன் நினைந்து பெற்றெடுத்த மக்களின் வாழ்விற்கு வழிசமைத்து பேரப்பிள்ளைகள் பதினொருவரை எடுத்தேந்தி பல்தேசம் சென்று மகிழ்ந்த அந்நாட்களை மனத்திரையில் இருந்து அகற்றுவது கவச குண்டலங்களினை களைவதினை ஒத்தது. இளைப்பாறிய பின்னரும் சேவைகள் ஓயாது பாடசாலை விளையாட்டு விழாக்கள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்வுகள், நிகழ்ச்சி அரங்குகள் என பல நிகழ்வுகளில் தனது நாவாற்றலால் அனைவரினையும் தன்வசமாக்கினார்.
“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ இந்த மாநிலத்தே’ என்ற அடிதனை அம்மப்பா தனது சம்பாஷனைகளிலே சொல்லத் தவறுவதில்லை. எந்த யமனை ஒரு கால் சவால் சம்பாஷனை களிலே சொல்லத் தவறுவதில்லை. எந்த யமனை ஒரு கால் சவால்
(தனி ஈஸ்வரம் ) 当 -C 36 D

விட்டு வாழ்ந்தாரோ அந்த யமனுக்கே இன்று இரையாகிய சோக முடிவு உறவாடிய நெஞ்சங்களை நெருடிக் கொள்ளும். கடலலைகள் கரையை கடந்து சென்ற பின்னரும் கூட அவ் நுரைகள் கரைக்கே சொந்த மாவதினைப் போன்று எனது அம்மப்பா என்னை விட்டு தற்காலிக மாக விலகிச் சென்றாலும் கூட அவருடன் கூடி மகிழ்ந்து இனிமையாக கழித்த அந்த வேளைகள் என்றும் என் மனத்திரையினை விட்டு அகலாது. இலைகள் காற்றிலே மறைந்து கொண்டு செல்லப்பட்ட வேளைகளிலும் கூட அவற்றின் கிளைகளிலே தழும்புகள் என்றுமே மறைவது இல்லை.
சிறு வயது முதல் இன்று வரை அனைத்து விடயங்களிலும் எனக்கு தகுந்த அறிவுரைகளை நல்கியதுடன் மட்டுமல்லாது எனக்கு அம்மப்பாவாகவும், அம்மாவாகவும், அப்பாவாகவும் உற்ற நண்பனாகவும் இவை அனைத்தையும் விட அனைத்தினையும் ஆளும் இறைவனாகவும் திகழ்ந்து எனது வாழ்வின் உயிர் நாடியாக திகழ்ந்த எனது அம்மப்பாவின் இழப்பு என்னை ஆயிரம் பிறவிகள் எடுப்பினும் ஆற்றொணா துயரிலே ஆழ்ந்தும். வையத்தார் அனைவரும் என் அருகிலே இருப்பினும் எனது அம்மப்பா என் அருகிலே இருந்த அவ் இனிய மகிழ்ச்சி எனக்கு நிச்சய மாகக் கிட்டாது.
பிறந்தவர் இம்மண் மீது என்றோ ஒரு நாள் இறப்பது உறுதி. படைத்தவனே தன்னுடன் சேர்க்கும் வேளை யாம் என்ன செய்ய இயலும், எனவே அன்னார் மறைந்தாலும் அவரின் சேவைகள் உலகளவிய ரீதியில் எதிரொலிக்கும். அம்மப்பாவின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.
"குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு”
திருக்குறள்.
ஓம் சாந்தி ந.சி. தக்ஷாயினி (பேரமகள்)
கொழும்பு - 15
(தனி ஈஸ்வரம்) 当 ー○

Page 27
ஊரெழு அழகிய சிற்றூர் ஆக்கம். க.வை. தனேஸ்வரன்
வலிகாமம் கிழக்கில் மேற்கோர் மத்தியில் அமைந்துள்ளது ஊரெழு என்னும் அழகிய கிராமம். யாழ் நகரிலிருந்து 6 கி.மீ தொலை வில் பலாலி வீதி ஊடறுத்துச் செல்லும் செழுமைமிக்க செம்மண் பிரதேசம் இது. வடக்கெல்லையில் சாவகச்சேரி - சங்கானை வீதி ஒடு கிறது. இராஜ வீதியையும் சுன்னாகத்தையும் இணைக்கும் இன்னும் ஒரு வீதி கிழக்கு மேற்காக ஊரெழுவின் மத்தியில் போடப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 4 சதுர மமைல் நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசம் இயற்கை வளம் மிக்கது. 1980களில் சுமார் 1020 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆக்கிரமிப்புப்படை நகர்வு தெற்கிலிருந்து வடக்காக இடம்பெற்றபோது ஊரெழு மேற்கின் மத்திய பகுதி தரைமட்டமாக்கப் பட்டது. வானுயர வளர்ந்தோங்கிய மரங்களும் வாழ்விடங்களும் ஏன் கிணறுகளும் கூட இல்லாமல் ஆகிவிட்டன. பச்சைப்பசேலாகக் காட்சி யளித்த பிரதேசம் மண்மேடாக்கப்பட்டிருக்கிறது 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பாலர் கல்வியை வழங்கிக் கொண்டிருந்த சி.சி.த.க பாடசாலை யின் அடையாளமே இல்லை என்பதைக் கண்டு கலங்காத நெஞ்சங்களே இல்லையெனலாம். இன்று தனியார் பாலர் பாடசாலைகளும் ஊரெழு கணேச வித்தியாசாலையுமே முழுக்கிராமத்தவருக்கும் கல்விச் செயற் பாட்டினை மேற்கொண்டுள்ளன.
புவியியல் அமைவினைக் கணக்கில் எடுக்கையில் ஏழு பெரிய பரப்பளவைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமங்கள் ஊரெழுவைச் சுற்றி அமைந்திருக்கக் காணலாம். கிழக்கில் நீர்வேலி, தென்பகுதியில் உரும்பிராய், மருதனார்மடம், மேற்கோரமாகச் சுன்னாகம் நீண்டு கிடக் கிறது. வடபால் ஏழாலையும் புன்னாலைக் கட்டுவனும் கைகோர்த்துக் காவல் அரண்களாகக் காணப்படுகின்றன. வட கிழக்கில் ஊரெழுவுடன் முட்டிக் கிடப்பது அச்செழுக் கிராமமாகும். ஏழு கிராமங்கள் சூழ இருப் பதால் 'ஊரெழு’ என்றாகிற்று என்போரும் உளர். ‘ஏழு என்ற விகுதிச் சிறப்புமிக்க வேறு கிராமங்களும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. மாயெழு, அச்செழு என்பன ஊரெழுவுக் கணித்தாகவுள்ளன. மானிடத் துக்கான பிரச்சனைகள் எவ்வடிவத்தில் தோன்றிடினும் ஊராக எழுந்து நின்று தீர்வுகாணும் பெற்றியைப் பெற்றழமி ஊரெழு என்ற எழுச்சிக் கருத்தும் ஊரின் பெயரோடு இணைந்திருப்பதாக உரைப்போரும் உளர்.
(தனி ஈஸ்வரம் ) 当 -Ꮳ8Ꭷ

1930 களில் கண்ட இயற்கைத் தாவரச் செறிவு இன்று முற்றிலும் மாற்றம் பெற்றிருக்கிறது. ஊரெழுவின் கிழக்கு மேற்கெல்லையில் முயல் வேட்டைக்குரிய பற்றைக் காடுகளும் செம்மண்ணில் மறைந்த கற்பாறைத் தொடர்களும் சேர்ந்திருந்தன. கற்பக தருவான பனைமரத் தோப்புகள் ஆங்காங்கு பிரதேச எல்லையைக் காட்டிநின்றன. இன்று தோட்ட வெளி களையே காணமுடிகிறது.
ஊரெழு மேற்கில் அமைந்துள்ள வற்றாத ஊற்று பொக்கணை நீர்ச்சுரங்கம். இது இயற்கையின் பரிசு. இராமாயணத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது. கற்பாறைகளில் காணப்படும் அடிச்சுவடுகள் இராமபிரானின் பாதமென்றும் வில்லூன்றிய இடமே வற்றாத நீரூற்று என்றும் செவி வழிக் கதைகள் உண்டு. ‘யாமா’ என்ற பெயருடனான நீரூற்று இயற்கை யாக அமைந்துவிட்ட வடிகால் இயற்கைத் தாவரங்கள் மனிதனால் மாறுதலடைவற்குமுன் மாரி மும்மழை பொழிந்தது. காட்டாற்று வெள்ளம் போல் கிராம வீதிகளை நிறைத்துப் பாய்ந்துவரும் மழை நீரைத்தேக்கி வைத்திருப்பது பொக்கணைப் பிரதேசமாகும். மாரிகாலத்தில் இப்பகுதி பாரியதோர் குளம்போன்று காட்சி தரும். இளைஞர்கள் கட்டுமரம் கட்டி ஒட்டி மகிழவம் நீரில் குதித்து நீச்சலடிப்பதும் வழக்கம். மேலாக ‘யாமா’ என்ற வற்றாத பொக்கணைக் குன்று மடைதிரண்டோடிவரும் நீரைத் தான் உண்டு வெள்ளப் பெருக்கால் கிராமம் அழியாது பாதுகாக்கும். இயற்கைதந்த ஓர் உன்னத வடிகால் இது. யாமாக் குன்றினுள் பேரிரைச் சலோடு வீழும் நீரின் ஓசை சூழவுள்ள குடியிருப்புகளுக்கெல்லாம் கேட்கும். இப்பிரதேசத்தில் தேங்கி நிற்கும் நீர் நிலத்தின் கீழ் கற்பாறைக் குழிகளைச் சென்றடைந்து குடியிருப்புக்களில் உள்ள கிணறுகளில் சுவை மிகுந்த குடிநீரைச் சேர்த்துவிடுகிறது.
நவக்கிரியிலுள்ள நிலாவரைக் குன்றின் நிலத்துக்கீழ் நீரோட்டச் சுற்றோடு ஊரெழு பொக்கணைக் குன்றும் இணைந்திருப்பதாகக் கருதப்படு கிறது. பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமான் அமரர் வன்னிய சிங்கத்தின் பெரும் முயற்சியால் இலங்கையின் முதலாவது பிரதமர் மாண்புமிகு டீ.எஸ். சேனநாயக்கா அவர்கள் பொக்கணைக் குன்றினைப் பார்வையிட்டனர். நீர்ப்பாசன இலாகா பாரிய நீரிறைக்கும் யந்திரங்களால் வற்ற நீரிறைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. இதன் பயனாக நீரிறைக்கும் காற்றாடி இயந்திரம் நிறுவியதோடு மேட்டு நிலத்தில் நீர்த் தேக்கம் ஒன்றும் கட்டப்பட்டது. குடியிருப்பும் மேட்டுப் பகுதியில் தோன்றியது. வேறு விருத்திக்கு வித்திடவில்லை.
(தனி ஈஸ்வரம் ) 当 C39)

Page 28
இப்பிரதேசத்துக்கு மேற்கில் வயலும் வயல்சார்ந்த கருமண்ணும் உண்டு. மந்தைகள் மேய்வதற்கேற்ற புற்றரைகளும் நீருண்டு காலாற ஆவுரோஞ்சிக் கற்களுடன்கூடிய கட்டுக் கேணியும் ஆங்குண்டு. இது போன்று ஊரெழு கிழக்கில் கட்டுக்கேணிகள் இரண்டுண்டு. மந்தைகள் தாமாக இறங்கி தாகம் தணிக்க வழிசமைத்து கமத்தொழில் விருத்தியில் கரிசனை கொண்ட மூதாதையர் பட்டை கட்டித் துலா மிதித்து நீர் பாய்ச்சித் தென்னந் தோப்புக்களை வளர்த்தெடுத்தவர்கள். சூத்திரக் கிணறுகளை நிறுவி எருது பூட்டி நீர்பாய்ச்சியதும் உண்டு. 1960களில் கூட்டுறவுச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டதும் நீரிறைக்கும் யந்திரங்கள் பாவனைக்கு வந்தன. விவசாயத்துறையில் பெருமளவில் மாறுதல்கள் ஏற்பட்டன. இளைஞர் விவசாயக்கழகம் விஞ்ஞான வழிமுறைகளைப் பயன்படுத்தி மண்ணின் உச்சப்யனை மக்கள் அனுபவிக்கப் பெரிதும் உதவியது.
"தென்னைக் கிடுகினில் வேலிகட்டிச் சின்னஞ்சிறு வீட்டில் வாழ்ந்துக்கிட்டு எண்ணம் மலைபோல் எண்ணுகிறார் - அவர்
இதயம் அன்பினில் உருகுதெடி”
என்ற பாடலுக்கான ஒரு வாழ்க்கை வசந்தத்தை பெற்றது ஊரெழு. வாழும் இடங்களில் வான்பயிர்களும் கனிதரு சோலைகளும் காணப்படும். தென்னங்கிளிகள் கீச்சிடக் கேட்கும். மாற்றுப்பயிர்ச் செய்கையில் ஆர்வம் மிக்கவர்கள் கிராம விவசாயிகள். கல்வி, கைத் தொழில், வர்த்தகம் போன்ற துறையினரும் விவசாயத்தில் ஈடுபடத் தவறுவதில்லை. ஒருகால் வாழை, புகையிலை, தானியங்களோடு மட்டும் இணைந்திருந்த விவசாயிகள் மத்தியில் ஏற்றுமதி உற்பத்திகள் உருளைக் கிழங்கு, வெங்காயம், மிளகாய் என்பவற்றோடு முந்திரிகைச் செய்கையும் விரிவாக்கம் பெற்றது. சுன்னாகம், திருநெல்வேலி, சாவகச்சேரிச் சந்தை நாட்களில் எமது கிராமத்து லொறிகளில் விவசாயம் பெருமக்கள் விளை பொருட்களைச் சந்தைப்படுத்தக் காணலாம். போர்க் காலத்துக்கு முன்னர் கொழும்புச் சந்தையில் போட்டி போட்டு விற்பனை நடைபெற்றதுண்டு.
விவசாயத்துறையுடன் கைத்தொழிலும் பிறவும் இடம் பெறுகின்றன. அரிசி, ஆலை, கல்லுடைக்கும் ஆலை, சுருட்டுக் கொட்டகை என்பன தனியார்வசம் இருக்கின்றன. பீடிப் புகையிலை செப்பனிடும் மையம் வீட்டுத் தளபாட உற்பத்தித் தொழிலகம் என்பவற்றுடன் குடிசைக்
(தனி ஈஸ்வரம் ) -G10)

கைத்தொழில்களான நெசவும் மனைப்பொருளியல் பணிகளும் மாதரின் பிரிய விருத்திச் செயற்பாடுகளாகும். சீவல் தொழில் விருத்தியடைந்து தவறணைகள் மூலம் விற்பனை நடைபெற்றகாலம் போர்ச் சூழலால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. பெருமளவு பனை, தென்னை, மரங் களைப் போர் விழுங்கிவிட்டது. இன்று தொலைத் தொடர்புச் சாதனமும் போக்குவரத்துச் சேவையும் இடம்பெற்றுள்ளன.
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதற்கேற்ப மக்கள் வாழ்விடங்களின் மத்தியில் கோயில்கள் எழுந்து நிற்கின்றன. போரின் கொடுமை மக்களின் மனங்களில் கோவில்களை கொலுவேற்றி யிருக்கிறது. ஆலயங்களைத் தேடிச் சென்று புனரமைத்து வழிபடும் செம்மை புனிதத்திற்கு அறிகுறி. கிராமத்தின் வடமேற்கில் முருகன் கோவில், கண்ணகி அம்மன், காளி கோயில் என்பன அமைந்துள்ளன. கண்ணகி அம்மன் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிராமனோத்தமர்கள் இவ்வாலயத்தில் தீக்குளிப்பர். தீராத பிணி தீர்க்கும் தாய்த்தெய்வம் என்று பக்தி வைராக்கியம் வழிபடுவோர் நெஞ்சில் குடிகொண்டிருக்கிறது. எழுத்தாளர் கனகசூரியர் வானொலியிலும் பத்திரிகைகளிலும் தல வர லாற்றுச் சிறப்பினை எடுத்துக் காட்டியவர். கவிஞர்கள் முருக. வே.பரமநாதனும் கதிரமலையானும் பக்திச் சுவை நனிசொட்ட எழுதியும் பாடியும பரவினர். ஆலயப் புனரமைப்புப் பணியில் சிறப்பாகக் காளி கோயில், முருகன் கோயில்களில் து.ஜெகதீஸ்வரன், நக்கீரன் உள்ளிட்ட இளைஞர் அணியொன்று ஈடுபட்டு வந்தது.
கிராமத்தின் மத்தியில் பலாலி வீதிக்கு இருமருங்கிலும் பர்வத பத்தினி அம்மன் கோயிலும் அரசடி விநாயகர் கோயிலும் கிராமத்தின் கண்களென மிளிர்கின்றன. சிறந்த பரிபாலன சபையினர் நிர்வகிக்கும் இவ்விரு ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் தெய்வ தரிசனம் பெற தேசத்தின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் வாழ்நாளில் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்த மண்ணை நேசிக்கும் அடியார்கள் தவறு வதில்லை. மற்றும் கேணியடி வைரவர் கோவில், பொக்கணைக் கந்தசாமி கோவில் என்பவற்றோடு குலதெய்வங்களுக்குக் கோவிலமைத்தும் பொங்கல் மடை பொலியப் படைத்து வழிபடும் மரபும் தொன்று தொட்டு வருகிறது. பூசை வேளைகளில் ஆலயமணியோசை கிராமத்தின் அட்ட திக்குகளிலும் ஒலிக்கும். திருவெம்பாவைக் காலத்தில் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை" பாடிவரும் அடியார் கூட்டம் எழுப்பும் சங்கொலியும் சேமக்கலமும் நினைக்கும் போதெல்லாம் ஆனந்தம்
(தனி ஈஸ்வரம் ) {41D

Page 29
பொங்கும். ஆலய நிர்வாகிகள் பலர். அனைவரும் அறங்காவலர்கள். வல்லிபுரம் திரு.இராசா முதல் திரு.சண்முகம் ஈறாக மிகச் சுத்தமான தொண்டுள்ளம் படைத்தவர்கள். கோயில் நிர்வாகப் பணியாற்றி நிறைவு கண்டனர்; காண்கின்றனர். அமரர்கள் சிவக்கொழுந்து, குலசேகரம்பிள்ளை போன்றோர் தொடக்கிவைத்த அம்மன் கோவில் பணிகளை இளைய தலையமுறையினர் செல்வனே செய்து வருகின்றனர். சரியைத் தொண்டி னைப் பலரும் முன்வந்து செய்து வருகின்றனர்.
செம்பொன்குன்று பொன்னுத்துரை என்போரின் ஆலயத்தொண்டு பலரையும் இவர்கள் வழியில் தொடர வழிவகுத்துள்ளது. ஆசிரியர் அணியொன்று அமரத்துவம் எய்திய திருமதி பொன்னம்மா கிருஷ்ண பிள்ளை தலைமையில் கோவில்களில் புராணபடனம் படிக்க உதவியது. குளோத்துங்க முதலியார் கணேசு உபாத்தியாயர், ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, திருமதி புஸ்பரத்தினம், சேனாதிராஜா போன்றோர் சிலராவர். பூரீலறி சோமசுந்தரக் குருக்கள், பாலசுந்தரக் குருக்களின் வாரிசுகள் வேத ஆகம விதிப்படி கோவில் கிரியைகளைச் செய்து வரு கின்றனர்.
ஆலயங்களில் மக்கள் காட்டும் கரிசனை சமூக உயிர்கள் அனைத்திலும் செறிந்திருப்பதைக் காணலாம். சமூகவிருத்திக்கு வித்தாகும் மக்கள் சந்திப்புக்கள் ஸ்தாபன ரீதியாக அமையப்பெற்றுள்ளன. சமூக இசைவாக்கத்துக்கு உயிர்நாடி கல்வி. ஊரெழு மக்களின் கல்வி முன்னேற் றத்துக்கு ஆதாரமாக விளங்கிய பாடசாலைகள் பல. ஊரெழு சி.சி.த.க. பாடசாலை பாலர் கல்வியை வழங்கிய மூத்த கல்வி நிலையம் இன்று இல்லை. இதன் அதிபராகக் கடமையாற்றிய கு. குலசிங்கம் ஊரெழு கணேச வித்தியாசாலைக்குத் தலைமை தாங்குகின்றார். அமரர் சிவப்பிரகாசத்தையும் இராமும்பிள்ளை உபாத்தியாயரையும் இன்றும் சி.சி. பாடசாலையினர் நினைவுபடுத்துகின்றனர்.
ஊரெழு கணேச வித்தியாசாலை இன்று மகாவித்தியாலய அந்தஸ்துடன் ஓங்கி வளர்கிறது. போரலைகள் அலைக்கழித்துவிட்டன. பெளதிகத் தேவைகளை நாடி நிற்கிறது. புலம் பெயர்ந்த இளைஞர்களில் நெஞ்சில் நிறைந்து விளங்குவது தாம் கல்வி பயின்ற இவ்வித்தியாலயமே. அதன் ஆக்கப்பணிகளுக்குக் கைகொடுக்கக் கனடாவாழ் ஊரெழு மக்கள் ஒன்றியம் முனைப்புக் கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் இதுபற்றி முன்மொழிந்த திரு.ப. பரமநாதன் ஒன்றிய
(தனி ஈஸ்வரம் ) 些 (142)

நிர்வாகத்துடன் இணைந்து உதவ முன்வந்துள்ளார். பூவிமலேந்திரன் தலைமையில் இயங்கும் சக்தி மிகுந்த ஒன்றியம் வித்தியாலயத்தின் தேவைகளைக் கருத்தில் எடுத்திருக்கிறது. தக்க அதிபர்களையும் ஆசிரியர் களையும் பெற்ற இக்கல்வி நிலையம் ஸ்தாபக முனைவர் அமரர் தம்பையாவையும் அற்றைநாள் தலைமை ஆசிரியர் குப்பிளான் கந்தையா அவர்களையும் இன்றும் கதைக்கொண்டே இருக்கிறார்கள். மற்றும் அமரர் கள் திருமதி த.இராணிநாயகம், ந.துரைராசா, திரு.பாலசுப்பிரமணியம், அமரர் பவளம் மயில்வாகனம், சதாசிவம் ஆசிரியர்களும் பாராட்டப்படு கின்றனர். பதவியயர்வினால் கடமையணர்வுமிக்க அமரர் முதலித்தம்பி ஆசிரியர் போன்றோர் விலகிச் சென்றமை நினைவிருக்கிறது.
கல்லூரிகளான உரும்பிராய் இந்துக்கல்லூரி, ஸ்கந்தவரோதாயாக் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, வயாவிளான் ம.ம. வித்தியாலயம் என்பன மேற்படிப்புக்கு உதவின. புலமைபரிசில் பெற்ற மாணவர்களை நகரப்பாடசாலைகள் ஈர்த்துக்கொண்டன. உரும்பிராய் இந்துக்கல்லூரி கனடாக் கிளையும் ஆதரவு நல்கும் திட்டங்களை வகுத் துள்ளது.
சிறந்த கல்லூரிகளில் கற்றுத்தேறிய மாணவர்கள் தனி வாழ்க்கைச் சிறப்புடன் பொதுவாழ்விலும் முனைப்புடன் பங்களிப்புச் செய்கின்றனர். மூத்த பரம்பரை 'திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பதற்கேற்ப மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் நாடிச் சென்று வந்து ஊரை வளப்படுத்தினர். ஏனைய ஆற்றல் மிக்கவர்கள் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்’ என சொந்த மண்ணில் சுகம் கண்டு வாழ்ந் தனர். பாடசாலைகளின் தேவைகளை இனங்கண்டு உதவப் பெற்றார் பழைய மாணவ சங்கங்களில் பதவியேற்று உழைத்தனர் சிலர். இவர் களின் கைவண்ணமாக உருப்பெற்ற ஸ்தாபனங்கள் பல. அவையாவன:
கிராம அபிவிருத்துச் சங்கம், தனக்கென ஒரு மண்டபத்தையும் திறந்த வெளியரங்கையும் மாதர் சங்கத்துக்கென ஓர் மண்டபத்தையும் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ளது. சேவையர் பேரம்பலம், கிளாக்கர் பொன்னுத்துரை, சோதிடர் வைத்திலிங்கம், தபாலதிபர் நடராசா, ஆசிரியர்கள் நா.இராசையா, கிருஷ்ணபிள்ளை, கு. பரமராஜா ஆகியோர் தொடக்கி வைத்த பணிகள் தொடர்கின்றன. தபாலகம், சங்கவீதி வாரமிரு நாள் வைத்திய சேவை கிடைத்தது.
(தனி ஈஸ்வரம் ) C43D

Page 30
இளைஞர்கள் கழகம்: வித்துவான் க.ந. வேலன் தொடக்கிவைத்த அமைப்பு ஒரு சேவைமிக்க இளைஞர் அணியினைத் தோற்றம் பெறச் செய்தது. இவர்கள் கிராமத்து அனைத்துச் சங்கங்களிலும் பங்கேற்றுப் பாங்குற உழைத்தனர். இதில் புடமிடப்பட்ட சீ. பத்மநாதன், சி.அருட் பிரகாசம், ச. வடிவேலு, சி.கணேஷ், இராஜரத்தினம், கி.சுவேந்திரராஜா போன்றோர் சிலராவர்.
சனசமூக நிலையம், நூல் நிலையம், வாசிகசாலை என்பவற்றுடன் கரபந்தாட்டம், உதைபந்தாட்டம் போன்ற நிகழ்ச்சிகளையும் ஆண்டாண் டாக புதுப்பொலிவுடன் நடாத்தி வந்தனர். ச.சண்முகநாதன், அரியரத்தினம், வை.பஞ்சலிங்கம், அமரர் வி.செல்வரத்தினம், செ.நடராசா, இராமச்சந்திரன் போன்றோர் முன்னின்று செயற்பட்டோராவர். அ.வைரமுத்து உதைப் பந்தாட்டத்தை வளர்த்தவர்.
கலாமன்றம்: நாடகங்களை எழுதித் தயாரித்து மேடை யேற்றிய தோடு பேச்சு, எழுத்து, இசைப் போட்டிகளையும் நடாத்தியது. ஆண்டு விழாக்களில் நாடறிந்த பேச்சாளர்களையும் கலைஞர்களையும் தருவித்து கலைப்பசிக்குத் தீனிபோட்டது. திரு.சி.அருட்பிரகாசம், திரு.ம.மகேந்திரன், திரு. ம. பூரணச்சந்திரன், திரு.சபா மகேஸ்வரன், திரு. சி.சிவம் ஆகியோர் கலாமன்றத்தின் உறுப்பினர்களில் சிலர். திரு.தேவன் யாழ்ப்பாணம், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை என்போர் நடிப்புப்பயிற்சி அளித்தனர்.
மாதர் சங்கம்; இது கிராமமுன்னேற்றச் சங்கத்தின் அங்கம், ஆனால் அதன் செயற்பாடுகள் தனியானவை. முற்றிலும் மாதர் சம்பந்தப் பட்டவை. நெசவாலை, நூல் நிலையம், தையல் வகுப்புக்கள் நடாத்தப் பட்டன. 'விடியலை நோக்கி’ என்ற நாடகத்தில் முழுவதும் பெண்பிள்ளை களே பாத்திரமேற்று நடித்தனர். இது யாழ்ப்பாணத்தில் பல மேடைகளில் அரங்கேறியது. திருமதி முருகையா, திருமதி ச. புவனேஸ்வரி, திருமதி சு.தேவி, திருமதி புஸ்பராணி என்போர் மூத்த உறுப்பினர்கள்.
கூட்டுறவுச் சங்கம்; ஊரெழு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. பகவதி கூட்டுறவுச் சங்கம் ஊரெழு மேற்கில் இயங்குகிறது. இக்கிராமம் சிறந்த கூட்டுறவாளர் களை உருவாக்கி இருக்கிறது. கூட்டுறவாளர்கள் பொ.சரவணமுத்து, கு.பரமராசா, மு.வீரசிங்கம் என்போர் விவசாயக் கழக வளர்ச்சிக்கு உதவியோராவர். பன்முகப்பட்ட சேவையை கூட்டுறவு அமைப்பு நல்கியது.
(தனி ஈஸ்வரம் ) 当 C44)

கிராம சேவையாளர் முத்து சிவஞானம் அரிய சேவை செய்தவர். இவரைப் பின்பற்றி அமரர் சின்னத்துரை, திரு.கிருஷ்ணராசா ஆகியோர் சமூக மேம்பாட்டுக்குப் பணிபுரிந்தனர்.
பொலிஸ் பொது மக்கள் நட்புறவுச் சங்கம்: நாட்டின் போர்ச் சூழல் உக்கிரமடைய மக்கள் பொலிஸ் நிலையம் அணுக அஞ்சினர். மக்களின் சமூக வாழ்வு சிதைந்தது. சமூக விரோதச் செயல்கள் தலை தூக்கின. பிரச்சனைகளை இனங்கண்டு பொலிஸ் தலையீடின்றிச் சமரசத் தீர்வு காணவும் ஏற்படும் சிக்கலைத் தீர்க்கவும் இச்சங்கம் வழி கோலியது. பொலிஸ் நிலையம் செல்லாது முறைபாடுகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கு இச்சங்கம் பெரிதும் உதவியது. மக்கள் தக்க ஆதரவு நல்கினர். திரு.க.வை. தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மன்றில் திருவாளர் கள், மு.சபாரத்தினம், முத்துக்குமாரசாமி, சிவசுப்பிரமணியம், சொ.நரேஷ், அ.வைரமுத்து, அச்சுவேலி கணேஷ் போன்றோர் அங்கம் வகித்தனர். விடுதலைப் புலிகள் கிராம நீதிமன்றங்களைத் தோற்றுவிக்கும் வரை இது செவ்வனே செயற்பட்டது. பொலிஸ் நிலைய அதிகாரி பொன் சுகுணேந்திரன் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. முதியோர் இல்லம், பகவான் ரீ சத்தியசாயிபாபா இல்லம் என்பன விரைவில் வளரும்.
ஊரெழு கம்பன் கழகம்: பல்கலைக்கழக விரைவுரையாளர்கள் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலாசாலை விரிவுரையாளர் எழுத்தாளர் களைக் கொண்ட அமைப்பாக இது விளங்கியது.
1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஊரெழு மக்கள் ஐம்பதுக்கு ஐம்பது கோட்பாட்டினை ஆதரிக்கத் தலைப்பட்டனர். தந்தை செல்வா சமஷ்டி ஆட்சி முறையை அறிமுகம் செய்ததும் மக்களும் அவ்வழி செல்லத் தொடங்கினர். இயக்க அரசியல் தோற்றம் பெறும் வரை சமஷ்டி ஆட்சியியலை மக்கள் நாடி நின்றனர். தந்தை செல்வாவின் அரசியல் உறுதிப்பாடு சமதர்மக் கோட்பாடுகளை ஆய்ந்தறிந்த இளைய பரம்பரையினரையும் ஆகார்ஸித்துக் கொண்டது எனலாம். கிராம சபை, பட்டினசபை அரசியலிலும் இதன் தாக்கம் தென்பட்டது. கிராமத்து வீதிகள், பட்டிதொட்டிகளுக்கெல்லாம் மின்சார வசதிகள் கிடைத்தன. தோட்டங்களில் மின்னியக்க நீரிறைக்கும் வசதிகளும் தனியார் கைத்தொழில் மையங் களும் உருவாகின. கொடி முந்திரிகைச் செய்கை, பண்டமாற்று வர்த்தகம் முதலியவற்றிலும் முன்னேற்றம் கண்டது.
(தனி ஈஸ்வரம் ) G15)

Page 31
அமைதியான சமூக நீரோட்டம் அடக்குமுறை ஆட்சியால் சீரழிந்தது. அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க மக்கள் எடுத்த அறவழிப் போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. கட்சி அரசியல், இயக்க அரசியலாக மாறியது. போரட்டங்கள் வலுப்பெற்றதும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைந்தது. இடப்பெயர்வுகள் வலுக்கட்டாய மாகியது. கிராமத்தின் ஆன்மா தவித்தது அழிவினாலும் இடப்பெயர் வினாலும்மல்ல, திலீபனின் மறைவினாலுமாகும். நீராகாரம்கூட அருந்தாது அறப்போரில் உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் மறைவுக்கு ஊரே அழுதது. ஊரெழு உள்ளவரை திலீபன் நாமம் நிலைத்திருக்கும். ஊரெழு வில் பூத்தகொடி வேரிழந்து போன செய்தி மக்கள் மனதில் சிலையில் எழுத்தாகும்.
உயிர்கொடுத்த ஊரென்று பெயரெடுத்த ஊரெழுவின் கீர்த்தி பாரெங்கும் பரவி நிற்கின்றது. தமிழ்போல முத்தான மூன்று எழுத்துக் களால் 'ஊரெழு’ புகழ் பூத்து பொலிவுற்று விளங்குகின்றது.
நன்றி. உதயன் கனடா
வயிற்குக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதர்க் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்!
- பாரதி
(தனி ஈஸ்வரம் ) 基 G16)

நிமிர்ந்த நெஞ்சுடையார்
- சோ. தேவராஜா
எல்லாருக்கும் வாய்க்கப் பெறாத தோற்றம். சிவந்த மேனி உயர்ந்த உருவம். நிமிர்ந்த நெஞ்சு. நேரிய நடை. கனிந்த பார்வை. கண்டோரை ஈர்க்கும் மென்முறுவல் வசீகரச் சொல்வீச்சு. பேசுந் தமிழில் உணர்வைப் பாச்சும் உச்சரிப்புத் தொனி. அத்தனையும் கணப்பொழுதில் அள்ளிச் சுருட்டி அணைத்துக் கொண்டது ஆழிப்பேரலை. காலமாய் ஆனார் ஆசிரியர் க. வை. தனேஸ்வரன் அவர்கள்.
மற்றோர் அழகும் கம்பீரமும் பார்ப்போருக்குப் பொறாமை யூட்டுமென அறிந்தாலும் பொறுமைப் பூமாதேவியின் நில வெடிப்பும் நீரலையின் கொதிப்பும் எமக்குப் புரியாது போனதேன்! மனிதர் மீது பொறாமைப்பட்ட பூமித்தாய்க்கு இனியும் பொறுமைப்பட்டம் சூட்டுதல் தகுமா?
கெட்ட குடிக்கொரு கேடானதோ! எத்தனை தசாப்பதங்கள் கெட்டுநொந்தோம்! போர்த்துக்கேயன் போனான். ஒல்லாந்தன் வந்தான். வெள்ளையர் வந்தார். வெளியேறினர். ஐந்நூறு வருடங்கள் கழித்து, சுதந்திரம் வந்ததென்று சும்மா கிடைத்ததால் சோம்பி இருந்தோம். ஐம்பது வருஷம் சுதந்திரத்தின் வயதெனப் பூரித்து நிற்க இயலாமல் யுத்தச் சகதியில் புதையுண்டு கிடந்தோம். ஆமி எங்களை ஆண்டது. மனிதர் கொலையே தன் தேசத்தின் வீரம் எனச் சபதம் பூண்டது. வாழ்வெல்லாம் தொலைத்தோம். ஆமி போகச் சுனாமி வந்தது. சொல்லாமல் கொள்ளாமல் வந்தது. மீண்டும் மனிதர் எல்லோரும் ஒன்றாய் கொலைக்களத்தில் பலியோனோம். சிங்களர், தமிழர், முஸ்லீம் என்று மூவினத்தார் மட்டு மன்றிச் சுற்றுலா வந்த பல்தேசத்தாரையும் கடல் கொண்டு தன் களைப்பை ஆற்றியது.
யாரொடு நோவோம் யார்க் கெடுத்துரைப்போம. சுனாமி போன தென்று சுகம் பெறமுடியவில்லை. மனிதாபிமானம் எனத் தன் நாமம் பூண்டு நிவாரணம் என்பார். நிர்மாணம் என்பார். புனர்ஜென்மம் கொண்ட மக்கள் பூரித்தே போயினர். வெள்ளையர் பல்நிறங்களில் கடலில் கப்பலில் வந்தார். வான் வெளியில் விமானத்தில் வந்துதித்தார். ஆஹா என்று
(தனி ஈஸ்வரம் ) ○

Page 32
வரவேற்க நம்மண்ணில் மக்கள் இல்லை. ஆயினும் ஆராரோவெலாம் ‘ஆரோகரா’ பாடுகின்றார். சுனாமி இப்பேர் வழிகளுக்கெல்லாம் சுவீப் ஆனதென்று பத்திரிகையொன்று சொல்கிறது.
இறந்தவர் பற்றி கணக்கெழுதலாம். அழித்த கட்டிடங்கள் பற்றிப் புள்ளிவிபரம் செய்யலாம். உடைந்த உள்ளங்களின் மனவடுக்கள் பற்றி யார் கணக்கெடுப்பார்? இறந்தவர் பற்றிய ஏக்கத்தில் - சிதைந்த குடும்பங்கள் பற்றிய தாக்கத்தில் - அள்ளுண்டு போன கிராமங்கள் பற்றிய விரக்தியில் நடைப்பிணங்களாக உலவிடும் மீதமுள்ள மானுடர் பற்றிய மனச்சேதம் பற்றி எவ்வாறு கணக்கிடுவது?
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்’ என்ற ஆன்றோர் வாக்கு ஆறுதல்படுத்த உதவலாம். மீண்டும் தொடங்கும் மிடுக்கோடு உயிர் எஞ்சியோர் வாழத்துணிவது எப்போது?
பாவம் பெருகிவிட்டது. படைத்தவனே பறித்துக் கொண்டார். கர்மவினை, பூர்வ புண்ணியப்பலன். இவ்வாறாக சமயப் பிரசங்கிகள் தம்மைச் சமாதானப் படுத்துகின்றனர். இரண்டாயிரம் ஆண்டில் உலகப் பிரளயம். அதன் ஆரம்பம் தொடங்கிவிட்டது என அச்சுறுத்தும் இன்னொரு சமயக் கூடாரம். இவ்வாறெல்லாம் அமளிப்படுவோரின் அனர்த்தங்கள் அதிகம். இவர்களின் வியாக்கியானப்படி இறந்தவர்கள் பாவ ஆத்மாக்கள். எஞ்சியோர் புண்ணியாத்மாக்கள். ஆனால் எஞ்சியோரே இன்று இழப்பை எண்ணி எண்ணி ஏங்கி வதங்கி அன்றாடம் இயமலோகச் சஞ்சாரிகளாகி உள்ளனரே விஞ்ஞான விளக்கமற்ற மெஞ்ஞானத் திறனற்ற விளம்பர ஊடக வணிகர்களின் வாய்ச்சவடாலில் வாந்தியெடுக்கும் பொய்யுரைகள் யாவும் எம் வீடுகள் தோறும் இரவும் பகலும் ஒவ்வொரு கணப் பொழுதும் எம்மையெல்லாம் விழுங்கி ஏப்பமிடுகின்றனவே! இது யார் செய்த சதி எண்பதாம் ஆண்டுகளின் பின் வரத் தொடங்கிய தொண்ணுாறுகளின் பின் வாழ்வின் பகுதியாகி விட்ட எம் எல்லோரினதும் தலைவிதி! தொல்லைக்காட்சி, தொல்லைப்பேசி யாவும் மானுட வாழ்வின் விழுமியங் களை அள்ளிச் செல்லும் சுனாமியாகிய கொடுமையை நாம் யாரிடம் சொல்லியழுவது?
தொல்லைக்காட்சியில் முகங்காட்டும் சூரர்களே எம்மை இரட்சிப்பர். மக்களுக்காக வருந்துவர். மானுடர்கள் கண்ணிர் சிந்துவர். உலகத்து நிவாரணங்களும் நிர்மாணப்பணிகளும் இப்பெட்டியுனுள்ளேயே
(தனி ஈஸ்வரம் ) 当 -G18)

இனியதாய் நடக்கும். மிஞ்சிய மனிசருக்கு சோறும் மீனும் கொடுத்து முகத்தைக் கமறாமுன் காட்டி தொல்லைக்காட்சிப் பெட்டியிலிருந்து காவாந்து பண்ணுவர். எல்லாம் இச் சவப்பெட்டியினுள் அடக்கம். சோறும் மீனும் கையேந்தும் அவலத்தில் நாம். சோறு விளைக்கும் நிலத்தில் நாம் விவசாயிகளாய் நிமிர்வது எப்போது? மீன்களை அள்ளித்தரும் கடல் அன்னையின் இயற்கையில் மீன்களைப்பிடித்து சிறப்போடு சீவிப்பது எப்போது? எமது தீவக தேசம் விவசாய வாழ்வையும் வளத்தையும் மீளப்பெறுவது எப்போது? கணினி யுகத்தில் இக்கணினிகளால் மீனுஞ் சோறும் உற்பத்தியாகுமா? கண்களால் காண்பதை வாய் ருசிக்கத்தான் முடியுமா? சுனாமிக்கு முன்னும் பின்னும் சூரர்கள் பெருகிய தேசமாய் எமது தேசம் மாறிவிட்டது. சிரித்த முகத்துடன் சூரர்கள் உலவுகின்றனர். எமக்காக அவர்கள் அழுகின்றார். புராணகால அசுரர்கள் போல் அச்சுறுத்தும் முக அகோரம் கிடையாது. பெரிய மீசை இல்லை. முழிசிய கண்கள் இல்லை. வெளித் தெரியும் நீண்ட பற்கள் தெரியாது. கூடுவிட்டுக் கூடுபாய்ந்து தெய்வீகமாய் தெரிகிறவர்கள். வில்லன் வேசத்தில் அவர்கள் இப்போது உலவுவதில்லை. கதாநாயகர்கள் வேசத்தைத் தம் வசப்படுத்தி விட்டார்கள். உதவிக்கரத்தின் பின் உபத்திரவம் - நிவாரத்தின் நிழலில் நீசத்தனம் எம் தேசத்தைக் கபஸ்ரீகரம் செய்யத் தொடங்கியுள்ளது.
சுனாமிக்குப்பின் அரங்கத் திரைச்சிலை மாற்றப்பட்டுவிட்டது. காட்சி
மாறிவிட்டது. கதாமாந்தர்களின் வேடப் புனைவுகளின் அர்த்தங்கள் விளக்கங்கள் மாறிவிட்டன. இந்தச் தேசத்தின் மண்ணின் மைந்தர்கள் வில்லன்கள் போல் பற்கள் வெளித்தெரிய - மீசைதாடி கண்டபடி வளர - உழைப்பின் பலனை இழந்த உபத்திரவந் தொடர - முகஞ்சுருங்க - உடற் வற்ற பிசாசுகள் போல் - அறிவற்றவர்கள் என ஆங்கிலேயர் பழிக்க - நிலத்தில் கால்பட அனுமதியின்றி பேய்களாய் அலைகின்ற காட்சி மாற்றங்களை நாம் அவதானித்தால் எதிர்வரும் நாட்களின் நாடகக் காட்சிகளின் அரங்க அனுபவத்தைப் பகிரச் சுலபமாக இருக்கும்.
இவ்வளவு தான் இப்போதைக்குச் சொல்லக் கூடியது. இக் கணத்தில் தான் ஆசிரியர் தனேஸ்வரன் அவர்களின் தோற்றப் பொலிவின் சிறப்பு எம்மை ஆட்கொள்கிறது. பாரதி பாடிய மனிதர். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத் துணிவும் கொண்ட மனிதர். இவரின் எளிமை - இனிய சுபாபம் மக்களை மதிக்கும் மாண்பு - எதிரியை மிதிக்கும் துணிவு.
(தனி ஈஸ்வரம் ) 喜 ○

Page 33
“இராணுவப்பிடியினில் வதைபடும் இளைஞன்
பிராணனே துறக்கினும் பயமில்லை முகத்தில்
எச்சில் உமிழ்ந்து கொடியோர் முகத்தில்
துச்சமாய் எறிந்தான் துன்பத்துள் வீரமாய்” என மாவைக்கவிஞன் பாடிய பாரதியின் ஓர்மம் தனேஸ்வரத்தில் கண்ட காட்சி ஓர் காவியமாகிறது.
சிலமாதங்கள் முன்னர் ‘புதுக்குடியிருப்பு சென்றுவந்தது பற்றி சிலமணிநேரம் எம்வீட்டில் வந்து அமர்ந்து நிமிர்ந்து மிகப் புளுகத்துடன் பேசிக் கொண்ட குதூகலிப்பு நெஞ்சில் படிந்து விட்டது. விவசாயப் பிரதேசம் பற்றிய பெருமிதம் - உழைப்பை பற்றிய வீரியம் அவரது உரத்த தொனியில் தெறித்தன. வெளிநாடு சென்றுவந்த வீரப்பிரதாபம் பற்றி அவர் ஏனோ எதுவும் வாய் திறக்கவேயில்லை. விவசாய மண் அவரின் வாய்க்கு அவலாய் அவ்வளவுக்கு இனித்ததைக் கண்டேன்.
“காலையடி மறுமலர்ச்சி மன்றம்’ பற்றி தாயகம்' சஞ்சிகையில் வந்தது காணாது என்று குறைப்பட்டார். அம்மன்றம் என்பது ஓர் எழுச்சி - அதன் வளர்ச்சி பற்றிய அக்கால அதிர்வு அக்கட்டுரையில் இல்லையென நேருக்கு நேர் விமர்சித்தார். ஒளிவு மறைவு இல்லை.
கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரையின் நாடகக் கலைஞன். ‘ஆடல் பாடல் ஆயகலைகளில் வல்லார்/ பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்’ என்பதற்கு இலக்கணமானவர்.
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அறிவிப்பாளராக ஒலி வாங்கியின் முன் அமர்ந்து தெளிந்த குரலில் நயனங்கலந்த தொனியின் இவர் பேசும் தமிழ் கேட்பது நல்லதொரு அனுபவம். எழுத்தாளர் யாழ்ப்பாணம் - தேவன் அவர்களின் இடைவெளியை நிரப்பி - அவருக்கீடாக யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை கேட்ட அறிவிப்புத் தமிழ் இன்பம் விளைப்பது.
மிக நெருக்கடியான யுத்த காலத்தில் தாசீசியஸ் அவர்களால் ஐ.பி.சி எனும் உலக வானொலி ஆரம்பிக்கப்பட்ட பொழுது 1997 இல் அதன் இலங்கைப் பொறுப்பை நாம் ஏற்றுச் செயற்பட்டோம். அப்போது நிமல்ராஜன், ஜி.நடேசன் போன்ற பத்திரிகையாளர்கள் இணைந்து
(தனி ஈஸ்வரம் ) 莒 G50)

பணியாற்றினர் அப்போதெல்லாம் அதன் அரசியல் யுத்த செய்திகளை கேட்டதும் உடனுக்குடன் அதனைப்பற்றிய விமசர்சனங்களைத் தருவார். எனது செய்தி வாசிப்பையும் பற்றி மகிழ்வோடு பாராட்டுவார். பிறரைப் பாராட்டும் வழக்கம் பெரியோருக்கே கைகூடும். தற்போதெல்லாம் பிறரைப் பாராட்டும் விமர்சிக்கும் மனப்பாங்கும் அருகி வருகிறது. நல்ல கலைஞர்கள் அவரிடம் பயிலவேண்டிய பாடமிது.
அவருடன் பேச விரும்பினேன். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே அவருடைய வீட்டுக்கு மூன்று தடவை வேறோர் விடயமாகச் சென்றேன். அவரோடு அளவளாவ வேண்டுமென்று அவாவுற்றேன். ஆனால் ஒரு தடவை தொலைபேசியிலும் இன்னொரு தடவை நேரிலும் பேசினேன். நேரில் நீண்டநேரம் பேச விரும்பினேன். அவரோ மெதுவாகச் சொல்கிறார். பேத்தியாருக்கு டிசம்பர் ஓ.எல். பரீட்சை, படிக்கிறா. பிறகு பேசுவோம் என்கிறார். நான் திரும்பி விடுகிறேன்.
டிசம்பர் 12ம் திகதி கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் பாரதி விழாவின் தொகுப்பாளர் அவர். நான் கவியரங்கில் பங்குபற்றினேன். கூட்டம் முடியப் பேசநினைத்தேன். விழா நேரம் எல்லை மீறிச் சென்றதால் அவர் கவியரங்குக்கு நிற்காமல் அரங்கிலிருந்து வெளிவீதிக்குச் சென்றார். அப்போது நான் அவருடன் பேச விரைந்தேன். அவர் சங்கத்தின் வெளி வீதிக்கு சென்றுவிட்டார். அவசரம் போலும் என்று அவர் போனதையே பார்த்தேன்.
அன்று பார்த்தது பார்த்தது தான். போனவர் போனவர்தான். இன்னும் பேச நினைக்கிறேன்.
நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க நல்லர் சொற் கேட்பதும் நன்றே! நல்லார் குணங்கள் உரைப்பதும் நன்றே!
(தனி ஈஸ்வரம் ) -G5ID

Page 34
ஆழிப் பேரலை அனர்த்தம் புரிந்து ஊழித் தாண்டம் ஆடிய நாளில் ஆற்றும் கடமைகள் அனைத்தும் மறந்து கூற்றுக்கான நம்தேசம் நினைந்து காட்சிப் பெட்டியில் கண்விட்டிருந்தோம் வீழ்ச்சிக்கானது மனதும் சரிந்ததோ! மாலையாகியும் போசனம் மறந்து ஏலும் வகையினில் உறவினர்க்கு அழைத்தோம் - தொலை பேசிச் சேவை தடைகளுள் தொடர வீசிக் செவிக்குள் செய்தியும் விழுந்தது! மட்டக்குளியில் மாநதி களனி தொட்டுக்கடலில் சங்கமம் ஆகும் கரையினில் காலை உலவிடச் சென்ற அடித்துச் சென்றது தனேஸ்வரன் என்னும் நெடுத்த புகழுடை மனிதனை என்றே! உண்மையோ பொய்யோ ஊரில் வதந்தியோ எண்ணியே பார்க்கவும் நெஞ்சம் கூசிடும்! உடலே கிடைத்தது உயிர் பிரிந்தானது கடலே செய்ததிக் கொடுமையும் என்று நொந்துமே சலித்தோம் கண்ணில் நீர்வர வெந்துமே மனத்தால் ஆழியை வைதோம்! பேரெழு செந்தமிழ் பேச்சினில் வல்லான் ஊரெழு தந்ததோர் உன்னதக் கலைஞன்! மகவம் என்னும் கலைஞர் வட்டம் உவகை கொள்ளும் உயர்குழு உறுப்பினன் எண்பத் தேழின்பின் அமைதிப் படையெம் மண்பற்றி யாண்டுமே பாதகம் செயும்நாளில் பாரதி விழாவை மகவம் நடத்த பேருரை ஒன்றைத் தனேஸ்வரன் செய்தார்! "இராணுவப் பிடியினில் வதைபடும் இளைஞன் பிராணனே துறக்கினும் பயமிலை எனவே எச்சில் உமிழ்ந்து கொடியோர் முகத்தில்
(தனி ஈஸ்வரம் )

துச்சமாய் எறிந்தான் துன்பத்துள் வீரமாய்!” பாரதி பாப்பாப் பாட்டினிற் சொன்ன போர்முறை ஈதென பாடலும் சொல்லி ‘பாதகம் செய்வோர் தமைப்பயந்திடாது மோதியே மிதித்தலும் முகத்தில் உமிழ்தலும் நெஞ்சத்து நேர்மையின் தர்ம ஆவேசமாம் செஞ்சொல்லின் கோர்வையாய் சொன்னவை இன்னமும் என்னுள்ளக் காவிலே அக்கினிக் குஞ்சென மின்னும்பொற் கோவிலே தனேஸ்வரமாம்!
- கவிஞர் மாவை வரோதயன் -
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே
எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
"இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாரம்சமாகும்”
- பகவான் முறி கிருஷ்ணர்
(தனி ஈஸ்வரம் ) 莒 ー○

Page 35
திரு. க.வைதனேஸ்வரன்
இன்று இல்லை. தனேஸ்வரன ஆனால், அவர் என் உணர்வில் இப்போதும் உணர்கின்றேன். எப்போதும் இருக்கிறார் என்பதை நான் உணர்கின்றேன். ஒவ்வொரு நாளும் மோதர வீதியில் ஒரு குடையுடனும் கண்ணாடி அணிந்து எவர் றோட்டில் தெரிந்தாலும் நான் தனேஸ்வரன் மாஸ்ற்றர் வருகிறார் என என் மனதில் ஓர் எண்ணத் துடிப்புண்டு. இவரை நான் என்றும் மறக்க முடியாது. ஏன் என்பதும் தெரியாது காரணம் எவ்வளவோ கஸ்ட்டங்கள் மத்தியில் அவர் தன்னையும் தனது கஷட்ட நஷ்டங்களையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வந்தார். தனது சில துக்கங்களை என்னுடன் கூறி உபதேசம் கேட்பார். என்னை அவர் ஒரு பெரிய மனிதராக மதித்து நடப்பவர். க.வை.தனேஸ்வரன் என்னை ஐயா என்று அழைப்பதைச் சிலநேரம் நான் விரும்புவது இல்லை, ஐயா என்று என்னை சொல்லாதீர்கள் என்றால் அவர் நீங்கள் எனக்கு ஐயா தான் உங்கள் அறிவு என்னிடம் இல்லை என்று நல்ல பண்பாகக் கூறுவார். இவர் தனது கஷ்டங்களை பெரிதுபடுத்தாமல் இவர் மூத்தவர் என்ற எண்ணத்தோடு தனது சகோதரரோடு ஒன்றுபட்டு தனது வாழ்க்கை யை நலம்பெற நடாத்தி வந்ததை நான் அறிவேன். இவர் கொழும்பில் தமிழ் விழாக்கள் எங்கு நடைபெறுகிறதோ அங்கு ஒரு அறிப்பாளராகவோ ஒழுங்குபடுத்துவர் ஆகவோ இயங்குவார். இதையும் விட இவர் பேரப் பிள்ளைகளைப் படிப்பு பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் ஒரு ஆசானாக செயற்பட்டார்.
இவர் மருமகன் சிவராசாவுக்கு அவர் பிள்ளைகளின் தொல்லை களோ எல்லா வேலைகளையும் தன்னோடு சேர்த்து முடித்துக்காட்டியவர் க.வை. தனேஸ்வரன் இவர் பிள்ளைகளும் மருமக்களும் பேரப்பிள்ளை களும் படும் அவஸ்த்தை பெரியது. இவர் இத்துயர் மிக்க சாவிலும் இலங்கையில் இறந்தோரில் எல்லாவகையிலும் முதல் தரத்தை தட்டியவர். அதாவது இறந்த உடன் இலங்கை காவல் துறையினரால் முதலாவதாக இவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இறந்த பின், முறையாக இவர் பிரேதத்தை வீடு கொண்டு வந்து பிள்ளைகள் வருகைக்காக வைத்திருந்து கோலாகலமாக மரணயாத்திரை செய்த முதல்வர் என்பதும் உண்மை. அமரரின் ஆத்ம சாந்திக்காக வாழ்த்துகிறோம்.
சிதங்கராசா குடும்பம்
(தனி ஈஸ்வரம் ) 当 G54)

Kandiah Vaithilingam Thaneswaran
Retired Deputy Principal cum Social worker
Unsuspectful of any untoward events that the angered mother nature would unfold in a matter of minutes this robust and kicking septua generian look to his much adored daily morning chorus of physical exercise - and that too - on the beautiful sandy beech of Mutual Colombo North on that fateful day - 26th day of December 2004.
Destiny decreed otherwise the monstrous Tsunami tidal waves which had swallowed by that time, precious life of both young and old on the eastern and South eastern coasts of the Island were spreading its insatiable tentacles to the southern and western coasts as well. Thaneswaran was an inevitable fodder
The untimely demise of Thaneswaran is grieved by several of his relatives, colleagues, friends, well wishers and admirers here and abroad.
This versatile personality born on the 4th day of December, 1932 to orthodox Hindu parents of Urelu, Jaffna had his ancestral home situated in the precints of the old and famous Urelu Pillayar temple. There is no gainsaying that these factors had moulded him into a thoroughly disciplined God fearing youngster with plenty of fruits to harvest for his future.
Young Thaneswaran grew up with all his inborn traits and talents finding expression by gods grace. He started "life' as a Physical training instructor which is attributed to his unfailing health up to the last. But his life was much more than that.
(தனி ஈஸ்வரம் ) G55)

Page 36
Late Mr.Thaneswaran was a man of impeccable capacity. He always found time, amidst his usual duties as a teacher which he performed meticulously - to devote for his cherished social activities which were extraneous to his billet. In his profession too he was crowned with success rising by dint of hardwork to the position of Deputy Principal, Stanley College, Jaffna from where he retired.
He led a spectacular life involving himself in a variety of activities. He was a dramatist and an actor par excellence. The drama "NIRAIKUDAM" produced and directed by KALAIPERARASU, A.T. Ponnuthurai of Kurumbasiddy remains to date as a "Hallmark' in theatrical performance of the Sri Lankan Tamil Diaspora.
Besides he was an eloquent speaker, compare and announcer. There was hardly any school sports meet in the North without late Mr. Thaneswaran occupying the dais as the announcer. He was a much sought after person in this respect.
It is said that leaders are born. An addendum is that leadership is trusted on certain people and there are self declared leaders. Late Mr.Thaneswaran is undoubtly belonged to the first
type.
There were many who found solace in his company. He was a man of courteous words and a believer of altruism.
This "great Samaritan" would unreservedly shun all formalities when it came to helping another person. Often he would avail himself physically at the door step of the needy, This sterling quality of him would ever remain green in the memories of one and all.
(தனி ஈஸ்வரம் ) -C56)

In fact the appreciation of these qualities was aptly demonstrated at an event held at Toranto, Canada to felicitate him, where unprecedented gathering were present which included not only those who directly studied under him but also several others who studied at various schools in Jaffna. At this ceremony he was awarded with a memento in rememberance of his yeoman service rendered to the Society.
His sudden demise no doubt"Shook' all of us. It is sad that this towering personality should breath his last in this manner. It is most appropriate that we allocate this day to engage ourselves in earnest prayers that his soul rest at the Golden feet of the almighty.
Kurumbasiddy K.W.Mahathewan, Attorney at law. & Notary Public,
25.01.2005.
7- N
Thaneswaran's glowing tribute to a close associate
on MR.K.P.N. 68 Birthday"
o a a K.PNadanasigamany had his preliminary education in the reputed Village School, Kuppilan Vigneswara M.V and later proceeded to Chunnakam Skanda Varodaya College for his higher education. He was very popular with the students and staff and evinced great interest in educational and Co-curricular activities......
(தனி ஈஸ்வரம் ) 当 C57)

Page 37
பொங்கி வந்த கடலலையே - நீ எங்கு கொண்டு சென்றாயோ
என் நினைவலைகளில் தனேஸ்வரன் மாஸ்டர்
“சிறு நண்டு மணல்மீது படமொன்று கீறும் கடல் வந்து சில வேளை அதைக் கொண்டு போகும்’
என்ற ஈழத்தின் பிரபல கவிஞர் காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி (மஹாகவி) அவர்களின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
மின்னாமல் முழங்காமல் மழைபொழியும் என்பது போல நடந்து முடிந்து விட்டது கடந்த டிசெம்பர் மாதத்தின் 26ம் நாள் கடல்கோள் சோக நிகழ்வு. அன்றைய தினம் கரைதாண்டி நாட்டுக்குள் பொங்கி வந்த பயங்கரக் கடல் அலையின் கோரப்பிடியில் சிக்கி உயிர் நீத்த பல்லாயிரக் கணக்கானவர்களுள் ஒருவராகிவிட்டார் எங்கள் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஊரெழு க.வை. தனனேஸ்வரன் மாஸ்டர். நான் ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவன் என்பது மட்டுமல்ல அவரது குடும்ப நண்பன் என்ற வகையிலும் அவரைப்பற்றி நன்கு அறிந்தவன்.
தன்னலம் கருதாது பொதுநல சேவைகளில் தன்னை முற்று முழுதாக ஈடுப்படுத்திக் கொண்டவர் அவர், உடற்பயிற்சி ஆசிரியராக இணைந்து, தன் திறமையால் உயர்ந்து, பிரதி அதிபராகவிருந்து ஓய்வு பெற்றவர். ஊரெழு கிராமத்தின் சமய, சமூகநல நிறுவனங்களில் பொறுப் பான பதவிகளை வகித்து கிராமத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர் என்பதை சிறப்பாகச் சொல்லலாம். ஊரெழு கிராமத்தின் இளைஞர்களை மட்டுல்ல, தான் கற்பித்த பாடசாலைகளின் மாணவர் களையும் கலை இலக்கிய நாடகத் துறைகளில் ஈடுபடச் செய்து, அவர்களை சிறந்த நாடக நடிகர்களாக உருவாக்கி வைத்த பெருமைக் குரியவர். கிராமத்தில் பல சிறந்த நாடங்கள் மேடையேறுவதற்கு பின்னணி யிலிருந்து பெரிதும் உதவியவர்.
நல்ல குரல்வளம் படைத்தவர், சிறந்த அறிவிப்பாளர், நல்தொரு பேச்சாளர், அரசியல் கூட்டங்களிலும் மற்றும் பொது நிகழ்வுகளிலும் அவரது குரல் ஒலித்துக் கொண்டிருந்த அன்றைய இனிய நாட்களை நினைத்தப் பார்க்கிறேன். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல பாடசாலை
(தனி ஈஸ்வரம் ) 些 G58)

களில் நடைப்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் போது மைதான அறிவிப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்து வந்துள்ளார். அவருக் கென்றே மாணவர்கள் மத்தியில் ஒரு ரசிகள் கூட்டம் இருந்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
கலைஞர் வேல் அமுதன் அவர்களை அமைப்பாளராகக்கொண்டு இயங்கும் “மகவம் “ என்ற இலக்கிய அமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினர். இவர் “மகவம்’ ஊரெழு கிராமத்தில் இயங்கிய காலத்தில் இவரது சிறப்பான பங்களிப்பு தீவிரமாக அமைந்திருந்தது. மாதாந்தத் தொடர் சந்திப்புகளில் இவர் தவறாது கலந்து கொள்வதுடன், அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிவந்தவர். இப்பொழுது கொழும்பு நகரில் இயங்கிவரும் “மகவம்” இலக்கிய அமைப்புடனான உறவை பின் தொடர்ந்தும் பேணிவந்த தனேஸ்வரன் மாஸ்டர் தனது பங்களிப்புகளால் அதன் வளர்ச்சிக்கான ஆரோக்கியமான ஆலோசனைகளையும் வழங்கத் தவறவில்லை.
மனிதநேயமுள்ளவர், பழகுவதற்கு இனியவர், சந்திக்கும் அனை வருடனும் அன்புடன் பேசி சுகநலம் விசாரிக்கத் தவறமாட்டார்.
எனது தொழில்சார் நிறுவனமான அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இணை உறுப்பினர்களும் ஒருவர். அழைப்பிதழை ஏற்று மாமன்றத்தின் சகல வைபவங்களிலும் தவறாது கலந்து கொள்ளும் பிரமுகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர்.
தனேஸ்வரன் மாஸ்டர் கடந்த ஆண்டு கனடா சென்றிருந்த போது அங்கு வெளியாகும் "உதயன்’ பத்திரிகையில் ஊரெழு கிராமத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரையொன்றை எழுதியிருந்ததன் மூலம் தான் பிறந்த கிராமத்தைப் மறக்காத வகையில் - அதன் மீதான பற்றுணர்வை வெளிப்படுத்தியிருந்தார் என்பதையே காட்டுகிறது.
“வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற வள்ளுவர் வாக்கை நினைவில் கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஹெந்தல
வத்தளை SSqqqSSSS SSSS
அ. கனகசூரியர்.
(தனி ஈஸ்வரம் ) C59)

Page 38
நினைவுகளில் நிலைத்த நிற்கும் க.வை.த
செம்மண் புழுதியில்
செழிந்த கிராமத்தின் சிம்மக்குரல் ஒன்று
ஓய்ந்த போனது இல்ல விளையாட்டுப்போட்டி
இலக்கியக் கூட்டம் கருத்தரங்கு கலைவிழா என
ஊரெழு மண்ணில் ஓங்கி ஒலித்தகுரல்
ஓய்ந்து போனது தனித்தவமான தலைமை - அத
தனேஸ்வரனுக்குத் தான் முடியும் நாடகம் நயம்காணல்
நாட்டு நடப்பு நகைச்சுவை பேச்சு என்றால்
க.வை தான் அதில் நிச்சயம் சுவை இருக்கும்
கம்பீரமான தோற்றம் அதற்கேற்ப
கணிர் என்ற குரல் ஆங்கிலம் அழகுத்தமிழ் அனைத்திலும்
அதற்கேற்ற உச்சரிப்பு அறிப்பாளர்களுக்கு வழிகாட்டி
அறிவாளர்களின் கஉட்டாளி ஊரெழுவில் உதித்துத்
தமிழ் உலகெங்கும் ஒலித்தகுரல் ஓய்ந்து போனது
ஊரவன் எனத உள்ளம் அழுகிறத பதினாறு ஆண்டுகுளுக்கு முன்
கலைவாணி சனசமூக நிலை
(தனி ஈஸ்வரம் )

இலக்கிய முயற்சிகளில்
இணைந்து நின்றத
இன்னமும் என் நினைவுகளில்.
கொழும்பு - 13
இனிய சுபாவம் இளமை மனம்
முதமையைக் கணக்கெடுக்காத முயற்சி கோண்டாவிலில் இருந்தபோதும்
கோணாத முகத்தோடு அழைப்புகளுக்கெல்லாம்
அவ்வப்போது வரும் பொறுப்புணர்ச்சி இவைதான் தனேஸ்வரன் அவர்களின்
தனித்துவம் - தகமை செம்மணர் கிராமத்தின்
இலக்கியச் செழுமைக்குப் பேச்சாற்றலால் பெருமை சேர்த்தவர்
தேசியத்திற்காக் குரல் கொடுத்தவர் தேடல் நிறைந்த இலக்கியவாதி
இப்போது புரிகிறது மக்கள் மனங்களை மயக்கியவரை
பேச்சாற்றலால் தேசம் கவர்ந்தவரை சுமாத்திரா தீவருகில் தோன்றிய அதிர்வில்
நிலை குலைந்த இந்ததுமா கடலலைகள் தங்களுக்காகவும் குரல் கொடுத்தான் தனேஸ்வரன் அவர்களையும் அழைத்திருக்கவேண்டும் - ஆனால்
அடங்கிய அலைகளுக்கு இப்போது தெரிந்திருக்கும்
எங்கள் நினைவுகளில் வாழும் அந்த மனிதனை
என்றுமே அழிக்க முடியாதென்று
-செ. சக்திதரன் -
(தனி ஈஸ்வரம் )

Page 39
உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்
நிழல் தரும் ஒரு விருட்சம் சுனாமியால் சரிந்துவிட்டது. குடும்பத் தினர் உறவினர் நண்பர்கள் மாணவர்கள் யாவராலும் நேசிக்கப்பட்ட தனேஷ் அகாலமரணத்தால் எல்லோரும் அலமந்து போனார்கள். சகலரின் அன்புக்கும் பாத்திரமான இவரின் மறைவு தாங்கொணாத்துயரத்தை தருகிறது. அமரர் வாழ்ந்த கடைசி நேரம் வரை தனது காரியங்களையும் பிறரின் தேவைகளையும் இனங் கண்டு உதவிய மாமமனிதர். இவரிடம் காணப்பட்ட அவை அடக்கமும் அதிர்ந்து பேசாத தன்னியல்பும் என்றும் முகமலர்ச்சியுடன் கூடிய தோற்றமும் எல்லோரையும் அவர்பால் ஈர்ந்தது.
இவர் ஸ்ரான்லி கல்லூாயில் சேவை ஆற்றிய காலத்தில் ஒழுக்கமும் துடிப்பும் உள்ள மாணவ சமுதாயத்தை தனது மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையால் உருவாக்கினார் என்பதை கல்லூரி சமூகம் சிலாகித்து பேசுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இப்பெரு மகனை இழந்து நொந்து துவழும் குடும்பத்தினர் நண்பர்கள் சோர்ந்து விடாது, அவரின் நல்வழி காட்டுதல்களும், அவரது தூய உள்ளமும் என்றும் துணையாக நிற்கும்.
படைத்தவனே பறித்துவிட்டால் யாது செய்வோம் என்று சொல்ல முடியாதவாறு இவரின் குரல் என்றும் எங்களுக்கு கேட்பது போல் சபலத்தை உண்டாக்குகிறது.
கற்றவர் உள்ளதே கரும்பினில் இனிக்கும் கண்ணுதல்
கடவுளே என்னை பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய
பழக்கமிக் குடையோர் மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்
அப்பிரிவை உற்று நான் நினைக்கும் தோறும் உள்நடுங்கி உடைந்தனன்
உடைகின்றேன் எந்தாய் (- திருவருட்பா)
என்றும் தனேஸ்வரனின் நட்பை நினைவு கூறும்
லோகதாசன் குடும்பத்தினர்
(தனி ஈஸ்வரம் ) 当 G62)

நெஞ்சில் நிறைந்த அந்த இனிய நாட்கள்
கல்விப்புலத்தில் நான் கற்பித்த கல்லூரிகளிலெல்லாம் ஆளுமை மிக்க ஆசானாகவும் சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்து விளையாட்டுத் துறை பற்றிய நிறைந்த அறிவினாலும், சொல் வளத்தாலும், குரல் வளத்தாலும், பேசும் திறனாலும் தமிழ் ஆங்கில மொழிப் பலமையினாலும் ஆசான் என்ற பெயருக்கப்பால் சம காலத்தில் ஒரு சிறந்த அறிவிப்பாளர் என்ற பரிமாணத்தோடு பிரகாசித்தவர் அமரர் தனேஸ்வரன் ஐயா அவர்கள்.
14 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மற்றும் திணைக்கள மட்ட விளையாட்டுப் போட்டிகளிலெல்லாம் அவர் குரல் ஒலித்த காலத்தில், ஒரு “கத்துக்குட்டி’ அறிபிப்பாளனாக முதன் முதலில் அவருடன் நான் அறிமுகமான அந்த இனிய நாள் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாகவே இருக்கிறது.
கல்லூரி மைதானங்களிலும், கலையரங்குகளிலும் அவரோடு நான் இணைந்து அறிவிப்பாளனாக பணியாற்றிய காலங்களில் அவர் சொல்லித் தந்த பாடங்கள் இத்துறையில் என் போன்றவர்கள் படித்துப் பயன் பெற வேண்டிய இனிய புத்தகங்களே. வகுப்பறை ஆசானாக மட்டுமன்றி அறிவிப்புத்துறையிலும் எமக்கு ஆசானாக விளங்கிய அவர் ஒரு கலங்கரை விளக்கு.
போட்டிகளை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்துவதில் அவருக்கு இருந்த அபிரிமிதமான ஆற்றல்கள் பற்றியெல்லாம் அப்போது பலரும் பேசியது இப்போதும் நினைவுக்கு வருகிறது.
95 இடப்பெயர்வின் பின் அவர் கொழும்பில் வசித்தபோதும் தொலைபேசித் தொடர் எம்மைத் தொடர்ந்தும் இணைத்தது. தொலைபேசி உரையாடல் எப்போதும் விளையாட்டுத் துறை பற்றிய ஓர் அலசலோடும் அவரின் ஆக்கபூர்வமான அறிவுரைகளோடும் நிறைவு பெற்ற அந்த இனிய நாட்களை நெஞ்சம் மறக்குமா?
“சுனாமி’ என்னும் ஆழிப்பேரலை. மனிதநேயம்மிக்க அந்த மனிதனைக் காவுகொண்டு ஒய்ந்திருக்கலாம். ஆனால் “தனேஸ்வரன்’
(தனி ஈஸ்வரம் ) 越 C63D

Page 40
என்ற அந்த அற்புதமான அறிவிப்பாளரின் மதுரமான குரலின் அலை என்றும் யாழ் மண்ணில் ஒயப்போவதில்லை.
அன்னாரின் பிரிவுச் செய்தி வேதனை மிக்கது. துன்பகரமானது. இத் துன்பத்தினால் துவண்டு போயிருக்கும் அன்னாரின் குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி. ஓம் சாந்தி!
க. தெய்வகுலரத்தினம் (குலம்) மாநகரசபை, யாழ்ப்பாணம்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று
முதுரை
(தனி ஈஸ்வரம் ) 些 64

திரு.க.வை.தனேஸ்வரன் - நினைவிலிருந்து ஓர் குறிப்பு
யாழ்ப்பாணத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த 1985ம் ஆண்டுப் காலப்பகுதி பிரதேசம் எங்கும் இனம் தெரியாத நபர் களின் கொள்கைகள் அதிகரித்திருந்த நேரம். குடா நாடு எங்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்தெழுந்து ஆர்ப் பாட்டங்களும், மறியல் போராட்டங்களும் நடத்திய காலம்.
இவ்வாறான ஓர் மறியல் போராட்டம் பலாலி வீதியை இடைமறித்து ஊரெழு கிராமத்தின் காலை முதல் மாலை நடைபெற்றது. மாலை 4.30 மணி இருக்கும் ஊரெழு பர்வதபத்தினி அம்மன் கோயில் பின் புறமாக போராட்டம் முடிந்து கூட்டம் ஆரம்பமாக வேண்டிய நேரம் நெருங்குகிறது.
கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பதவி நிலை உறுப்பினர்களும் கூட்டத்தை தொடங்குமாறும் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரைக் பார்த்து கேட்டுக்கொள்கின்றனர். நேரம் கரைந்தது. சிறுவர் களின் இரைச்கலும், பொது மக்களின் நீண்ட பொறுமையும், பொது அமைப்புக்களுக்கு எதிராகவே திரும்பி விடுமோ என நான் அஞ்சிக் கொண்டிருந்த நேரம் அது.
அப்போது தான் வீதித்தடைகளினுடே வழமையான சிரிப்புபோடு துவிச்சக்கர வண்டியில் வந்து இறங்கினர் கலைவாணி சனகமூக நிலைய தலைவர் தி.க.வை.தனேஸ்வரன் அவர்கள். இவரின் வருகையால் என் மனதில் நிம்மதி பிறந்தது. ஒரு வழியாக பிரச்சினை ஒழிந்தது என நினைத்துக் கொண்டேன்.
அடுத்து நிலைமையை அவருக்கு விளங்கப்படுத்த உடனடி யாகவே அவர் கிரகித்துக்கொள்கிறார். கூட்டம் தொடங்குகிறது. சிறுவர் களை அமைதிப்படுத்த கணிர் என்ற குரலில் பாடல் வருகிறது.
(தனி ஈஸ்வரம் ) --- 65

Page 41
டிங்கினாரே டிங்கினாரே டிங்கினாரே டிங்கினாரே மரத்தை பிடுங்கினாரே வீமமகாராசா மரத்தை பிடுங்கினாரே.
சிறுவர் முதல் பெரியோர் வரை கப்சிப். தொடர்ந்து கலைவாணி சனகமூக நிலையத்தின் சார்பில் அவரது கண்டன உரை செவ்வனே நிறைவடைகிறது.
எந்த சந்தர்ப்பத்திலும் சூழலை விரைவாக கிரகித்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் செயற்படுவதில் திரு.தனேஸ்வரன் அவர்கள் நிகரற்றவர். பெரியவர்களோடு பெரியவராகவும் இளைஞர்களோடு இளைஞனாகவும் சிறுவர்களோடு சிறுவனாகவும் செயல் ஆற்றக்கூடியவர். இத்தனித்துவத்தன்மையை கலைவாணி சனசமூகநிலையத்தில் அவர் தலைவராகவும் பின் போசகர் ஆகவும் செயற்பட்ட காலத்தில் நிறுவன செயற்பாடுகளை செவ்வனே நிவர்த்தி செய்திருந்தது. அங்கத்தவர் மத்தியில் சிறந்த தொண்டனாக, ஆசானாக, வழிகாட்டியாக, கலைஞனாக, விளையாட்டு வீரனாக பல்வேறு பரிமாணங்களில் அவர் மிளிர்ந்தார்.
இத்தகைய ஒருவரை இயற்கை எம்மிடம் இருந்து பிரித்து விட்டது பேரிழப்புத்தான். இவரது பிரிவினால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நட்புகளுக்கும் எனது அநுதாபங்கள்.
சொ. நரேந்திரன்
கலைவாணி சனசமூகநிலைய முன்னாள் செயலாளர்
முதலில் கீழ்ப்பழவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளை இரும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும்!
- விவேகாநந்தர்
(தனி ஈஸ்வரம் )- 基 C 66 D

பேச்சுக்கலையின் விங்தை
ஒரு மனிதனுக்குப் பலவகைச் செல்வங்கள் சேரலாம். அறிவுச் செல்வம், மழலைச் செல்வம், பதவிச் செல்வம், பொருட் செல்வம் என்று விதம் விதமான செல்வங்கள் இருக்கலாம். இவை பட்டியலிட்டுக் கூறக்கூடியவை. ஆனால் 'சொல்லாற்றல் என்ற செல்வம் ஏனைய செல்வங் களில் அடங்காது. சொல்வளம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதற்கு ஈடு இணை கிடையாது. நாவினால் ஏற்படும் செல்வத்தை திருவள்ளுவர் நாநலம் என்று பாராட்டுகின்றார். கம்பர் சொல்லின் செல்வம்’ என்று நாநலத்தின் விளைவுகளைச் சிறப்பிக்கின்றார்.
சொல்லின் செல்வர்களை இன்றைய உலகம் பெரிதும் மதிக் கின்றது. பேரறிஞர் அண்ணாத்துரை, பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், தலைவர் அமிர்தலிங்கம், எழுத்தாளர் சொக்கன், அமைச்சர் செ.இராஜ துரை, வித்துவான் க.ந.வேலன், கம்பவாருதி, இ.ஜெயராஜ் முதலியோரின் பேச்சுக்களைக் கேட்டார் அறிவர் நாநலத்தின் பெருமை. வெற்றிகரமான இப்பேச்சாளர்களின் உத்திமுறைகளை நோக்கின் விரியும்.
எடுத்தவிடையத்தைத் தொடுத்து உணர்ச்சியோடு எடுப்பாகச் சொல்லுதல் முதற்படி, நகைச்சுவை இழையோடச் சுவையான் கதை களைச் சொல்லிக் கேட்போர் இதயத்துக்குக் களிப்பூட்டுதல், நாட்டுப்பற்றை, மொழிப்பற்றை, மதத்தை, ஆணவத்தைக் கிளறிவிட்டு மக்களைத் தம் வசப்படுத்துதல், ஆட்சிமன்றில் அல்லது நீதிமன்றில் உரை நிகழ்த்து வோர் அடைமழைபோலக் குற்றங்களை மாற்றார்மேல் பொழிந்து திக்கு முக்காட வைப்பர். இவர்கள் எடுத்தாளும் சொற்றொடர்கள் சவுக்கடிபோலச் சுளிரென்று மாற்றுக்கருத்துடையோரைத் தாக்கும். பேச்சுக் கலையின் விந்தை இது. அரசியலாளர்கள் களிமண்ணைக் கொண்டு பானை வணைவது போல் ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களை தமது விருப்புக்கேற்ப வசப்படுத்தி ஆட்சி அதிகாரத்தைத் தமதாக்கப் பேச்சுக் கலையை ஆயுதமாகக் கொள்வர்.
வித்துவான் வேந்தனார் பேசும்போது தனித்தமிழ் மூச்சையும், ஆவேசத்தையும், உணர்ச்சியின் சூறாவளியையும், இலக்கிய நயத்தையும் அனுபவிக்கலாம். தேவன் யாழ்ப்பாணம் வழக்காடு மன்றங்களில் தொகுப் புரை வழங்குகையில் கையாளும் வார்த்தையாலம் மிகநேர்த்தியாக
(தனி ஈஸ்வரம் ) G67)

Page 42
அமையும். அவரின் தீர்ப்பு ‘தேவனின் தீர்ப்பு' என்று ஊடகங்கள் விதந் துரைக்கும். கம்பவாரிதியின் உரையிலே உண்மை, தர்க்கம், ஆர்வம், அமைதி, நகைச்சுவை, கதை, மறைமுகமான நிந்தனை என்பன மிதந்துவரும். குரல்வளை நர்த்தனம் புரிகின்றது. குரலைத் தேவைக்கேற்ப ஏற்றியும், தாழ்த்தியும் கருத்தை வெளிப்படுத்துவது வித்துவான் வேலனின் பாணி. கவிதைக் காட்சிகள் இனிக்கப் பாடப்பட்டு இதயங்கள் திருடப்படும். பேச்சு மனத்திரையில் படக்பாட்சியாகி விடுகின்றது - இவர்களது உரையரங்கில்.
பேச்சாற்றலால் கிடைக்கும் புகழ் இமயம் போன்றது. மதிப்பிட முடியாதது. எனவேதான் திருக்குறள் இவ்வாறு பேசுகின்றது.
நாநலம் என்னும் நலனுடமை அந்நலம் யாநலத் துள்ளதும் அன்று
2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் பெருமான் பேச்சாற்றாலை நாநலம் என்று சூட்டியமை மனங்கொள்ளத்தக்கது.
நல்ல பேச்சாளர் பேச வேண்டாத நேரத்தில் நாவடக்கத் தெரிந் தவர்கள். மேடையைக் கண்டுவிட்டால் கால அளவு தெரியாமல் உளறு பவன் அசடு. மாசற்ற சிலசொல் பேசுவது நாவடக்கம். நாவடக்கத்தைச் சுலபமாகப் பெற்றுவிட முடியாது. நாவினால் பேசப் பழகுவதற்கு ஒரு குழந்தைக்கு ஆண்டுகள் இரண்டு போதும். ஆனால் நாவை அடக்கிப் பழக அறுபது ஆண்டுகள் போதவில்லை என்கின்றார் ரூசிய அறிஞர் ஒருவர். நாவடக்கத்துக்கு மிகுந்த பயிற்சி வேண்டும். சபையின் நாடியறிந்து பேசுவார் பாராட்டுப்பெறுவர் என்பதில் ஐயமில்லை.
மாசற்ற காட்சியுடையவர்களே இலக்கிய இன்பத்தை அவைக்கு அளிக்கும் வல்லமை பெற்று விளங்குவர். சொல்லின் செல்வர் இரா. சேதுப்பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, இரசிகமணி கனக.செந்திநாதன் போன்றோரின் உரை கேட்டார் பிணிக்கும் தகையது. கேளாரும் வேட்ப அமைந்துவிடும். சபை படித்தவர்களை மட்டும் கொண்டிருப்பதில்லை. பாமரரும் சேர்ந்திருப்பர். ஆடவர், மாதர், பிள்ளை கள் என்று பலதரப்பட்டவர்கள் மண்டபத்தில் நிறைந்திருப்பர். இவர்களின் மனங்களை ஈர்த்து கேட்போரைப் பரவசப்படுத்தி ‘இன்னும் பேசமாட்டாரா இவர்’ என்ற உணர்வு மேலிடப் பேச்சை நிறைவு செய்ய வல்லவர்கள் சொல்வளம் நிறைந்த சொற்பொழிவாளர்கள்.
(தனி ஈஸ்வரம் ) 当 G68)

சொல்லாற்றல் மிக்கவர்கள் புதிய சொற்களைச் சேர்த்துக் கொள்வதோடு பழைய சொற்களுக்கு புதுமையும், புத்தாற்றலும் கொடுக் கின்றார்கள். மேடைப் பேச்சாளர்கள் சொல்லை மிகுந்த கவனத்தோடு பயின்றவர்கள். சொல்லோடு நெருங்கிப் பழகுதல், மற்றவர் மனதைக் கவர சொல்லினால் தவம் செய்தல், பலகற்றுத் தெளிதல் என்பன பேச்சாளர்களை மேம்படுத்துகின்றன.
செவிவழியாக வரும் கருத்துக்கள் நமது உள்ளத்தைச் சுண்டி யிழுக்க உரையாற்றுவோர் சொல்லுக்குள்ளே போதையூட்ட வல்லவர்கள். எடுத்தாளும் செய்தியின் பொருள் உணர்ந்து அதற்கொரு சொற்கோலம் கொடுக்கும் சக்திபெற்ற சொல்லேருழவரின் சிந்தனைக் குவியல்கள் கேட்போர் உள்ளத்திலே பாய்ந்து உணர்ச்சியைப் பக்குவப்படுத்துகின்றது.
‘வாழ்க்கை - ஒழுங்கை ‘அடிப்படையாகக் கொண்டது; நியதிக்குக் கட்டுப்பட்டது; பொருள் பொதிந்தது; அர்த்தமுள்ளது என்ற உயர்ந்த தத்துவத்தை தமது ஆத்மீகச் சொற்பொழிவால் நிறுவியர் திருமுருக கிருபானாந்தவாரியார் அவர்கள். நல்லூர் பூரீலழரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரசங்கங்களும் சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ சொற்பொழிவுகளும் துர்க்காதுரந்திரி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் அருளுரைகளும் அவை மார்க்கத்தின் பூரணத்துவத்தின் வடிவங்கள். தேன் சிந்தும் கவிக்காட்சி விருந்துகளைப் பன்மொழிப் புலவர். பண்டிதர்.க.சச்சிதானந்தன் படைக்கும்போது படித்தோர் நெஞ்சம் புழகாங்கி தமடையும்.
அரிய கருத்துக்களை ஒழுங்குபடுத்தி இனிமையாகச் சொல்ல வல்லாரை உலகம் என்றும் ஏற்றிப் போற்றும்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் திருவள்ளுவர்
க.வை. தனேஸ்வரன்
(தனி ஈஸ்வரம் ) 莒 C69)

Page 43
கலைத்துறை நாயகன் க.வை. தனேஸ்வரனுக்கு கண்ணின் அஞ்சலி
ஊரெழுவில் பிறந்து கோண்டாவிலில் மணந்து கொழும்பில் சுனாமியின் கொடுரத்தால் இறைவனுடன் இரண்டறக் கலந்த அமரர் க.வை.தனேஸ்வரன் ஆசிரியர் அகாலமரணமடைந்த செய்தி கேட்டு மன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான உயிர்களை நொடிப்பொழுதில் கொன்று குவித்த இயற்கையின் கொடுரப்பிடியில் அகப்பட்டு மரணித்த மாமனிதர் க.வை.தனேஸ்வரனை எப்படி மறப்பது? எப்போது காண்பது?
எமது அறநெறிப்பாடசாலைக்கு இடமில்லாது திண்டாடித் திகைத்த வேளை தமது மகளின் இல்லத்தை தந்து எங்கள் சேவையை மேலோங்க வைத்த பெருமை க.வை.தனேஸ்வரன் அவர்களையே சாரும். தன்ன மில்லாது பிறர் நலம் கருதி வாழ்ந்து காட்டிய காந்தி போன்ற மகான்கள் வரிசையில் க.வை.தனேஸ்வரன் திகழ்ந்தார் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. கம்பீகரமான தோற்றம். இனிமையான வார்த்தை, அறிவு, ஆற்றல் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றது. கலகம் பிறக்கும் இடத்தில் கதிரவன் போல சென்று சமாதானப்படுத்தி வைக்கும் பேராற்றல் படைத்தனர்.
க.வை.த.யின் குரல் ஒலி ஒலிக்காத பாடசாலையும் இல்லை. ஆலயம், சமூகசேவை நிலையங்களும் இல்லை. ஆங்கிலத்திலும், செந்தமிழிலும் சபையறிந்து சுவையுடன் பேசும் பேரறிஞரான திகழ்ந்தார். அவரை எந்நேரமும் எவ்விடத்திலும் பேசுமாறு கூறினால் மறுக்காமல் பேசும் நற்பண்பு உடையவர். அந்தந்த நிகழ்வுகளுக்கேற்ப பேசுவதில் இவருக்கு நிகரானவர்கள் யாருமே இன்று இல்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கும் எமது மண்ணில் பெருமைகளை எடுத் துரைத்து அங்குவாழ் எமது ஊர் மக்களுக்கு பிறந்த மண்ணை நேசிக்கும் வகையில் நல்ல உரைகளை ஆற்றியுள்ளார். கோபம் என்று ஒருநாள் பார்த்து அவர் முகத்தில் யாரும் கண்டதில்லை. புன்னகை மன்னனாக திகழ்ந்தார்.
(தனி ஈஸ்வரம்) 70

எமது மன்றம் எடுக்கும் விழாக்களில் அவருக்குத் தனியிடம் உண்டு. அவர் மறைவதற்காகத்தானோ எங்களின் மன்றத்திற்கு ஒரு அழகிய மண்டபத்தினை தனது சகோதரர்களுடன் பேசி தனது தந்தையின் பெயரால் மண்டபத்தினை கட்டுவித்து தருகின்றேன் என்று கூறிவிட்டு எங்களைவிட்டு பிரிந்துவிட்டார். அவர் கனவு என்றோ ஒருநாள் நனவாகும். அவர் காட்டிய வழியில் எமது மன்ற சேவை தொடரும். அவரின் உருவப்படம் விழாவில் எமது நிலையத்தில் நிறுவப்படும். இதுவே அவருக்கு நாம் செய்யும் சிறு பிரதி உபகாரமாகும்.
அவர்மறைவால் ஏங்கி தவிக்கும் அன்பு பிள்ளைகள், குறிப்பாக திருமதி பூங்கோதை, பேரப்பிள்ளைகள், மருமக்கள், உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எங்களது மன்றம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்தூக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
து.ஜெகதீஸ்வரன் த.சிவதரன் சிவபூரணி முத்தமிழ் மன்ற அதிபர் மன்ற செயலாளர்
Real freedom is not something to be acquired, it is the outcome of intelligence. These cannot be intelligence when there is fear, or when the mind is conditioned.
- J. Krishnamurthi
(தனி ஈஸ்வரம்)-

Page 44
மாந்தருக்குள் மாசற்ற மாணிக்கமே! மறைந்து விட்டீரா?
எனது அன்பிற்கும் பண்பிற்கும் பாத்திரமான அம்மையாரின் மறைவால் அலமந்து கயலைக் கடலில் மூழ்கி இருக்கும் வேளையில், மின்னாமல் முளங்காமல் பேரிடி வீழ்ந்ததுபோல், என் உயிருக்கு உயிரான அருமைநண்பன் அவர்களின் நம்பமுடியாத அகால மரணச் செய்தியை வானொலி மூலம் கேட்டதும் இதயம் பதை பதைத்தது. கண்களில் நீர் வழிந்தோடக் கவலையில் மிதந்தேன். அன்று இரவு 9.30 மணி உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மகனோடும் மருமகனோடும் உரையாடி மரணம் நிகழ்ந்த செய்தியை அறிய முயற்சித்தேன். கவலை நெஞ்சை அடைக்க, கண்ணிர் கருத்துக்களைக் கழுவிச் செல்ல வார்த்தை கள் வெளிவர மறுத்தன. வாழ வழியின்றி, வகை தெரியாத நோய்களால் வாடி வதங்கி அவதியுற்று அல்லல்படும் ஆயிரக்கணக்கான வயோதிபர் களை வாழவிட்டு, ஊரார்மெச்சும் உத்தமனும், உலகம் போற்றும் பேரறி வாளனும், சகலகலா வல்லவனுமான என் ஆருயிர் நண்பனின் இன் னுயிரை ஏன் பறித்தெடுத்தாய் என்று இரக்கமில்லா இதயம் படைத்த இறைவனைத் திட்டினேன்.
எம் இருவருக்கும் இடையிலுள்ள நட்பின் ஆழத்தையும், பாசத்தின் நெருக்கத்தையும் எவராலும் அளவிட்டு அறியமுடியாது. ஈருடலும் ஒருயிருமாய் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இதய சுத்தியோடு இணைபிரியா நண்பர்களாய்ப் பழகினோம். நாம் பழகிய நண்முதல் இன்று வரை கிளைகளைத் தாங்கும் விழுதுகள் போல், கண்ணை இமை காப்பது போல் ஒருவரை ஒருவர் காத்து வந்தோம்.
சிறந்த மண்ணின் எல்லா மூலைமுடுக்குகளிலும் இருவரும் காதற் பறவைகள் போல் சோடியாகவே கூடிக்குலாவி உலாவி வருவோம். ஆங்காங்கு காணுகின்ற இயற்கைச் செயற்கைக் காட்சிகளை இருவரும் நன்றாக இரசிப்பதோடு, கனகச் சுவையோடு கலங்க விமர்சனமும் வியாக் கியானமும் கூறக் தவறமாட்டோம். பதவியிலிருந்த போதே இப்படி யென்றால், ஒய்வு பெற்ற பின்பு எமது பொழுது போக்குகளைக் கூறவும் வேண்டுமா? இயற்கை அன்னையை ஆரத்தழுவி அரவணைத்து இரசிப் பதில் இருவரும் ஒருவரோடு ஒருவர் வென்று விடுவோம்.
(தனி ஈஸ்வரம் ) -C72)

அருமை நண்பா!
தங்களின் கழங்கமில்லாத உத்தமமான உயர்ந்த உள்ளத்தை என்னைவிட மற்றொருவர்களாலும் இலகுவில் அறியமுடியாது.
தம்பி! என்று புன்னகையோடு அன்பொழுக அழைக்கும் அந்த இனிய வார்த்தையை இனி எங்கே, எவரிடம் எப்போ கேட்கப்போகின்றேன். பிறந்த மண்ணில் சோடிழவா அன்றினைப்போல் உலவி வந்த எங்களுக்குப் பின்பு தலைநகராம் கொழும்பிலும் சோடியாக உலாவர வாய்ப்பும் வசதியும் கிடைத்து எமது பொழுது கவலையின்றிக் கலக்கமின்றிக் களிப்புடன் கழிந்த அந்தப் பசுமை நாட்களை என்றும் மறப்பதற்கில்லை.
நான் கனடாவிற்குப் பயணமாகும் தேதியை எண்ணிக் கண் கலங்கினோர் பிரிய முடியமால் பிரிந்து சென்றேன். கனடாவில் வசிக்கும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், மருமக்களைச் சகோதரனைப் பார்ப்பதற் காகக் கனடாவிற்கும் வந்தார். அங்கும் ஆறு மாதங்கள் இருவரும் இணைபிரியாது சுற்றித் திரிந்து முக்கிய இடங்களை எல்லாம் பார்வை யிட்டு இணைபிரியாது சுற்றித் திரிந்து முக்கிய இடங்களை எல்லாம் பார்வையிட்டு மகிழ்ந்தோம். தொலைபேசியில் நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் உரையாடுவோம். அந்த அன்பின் திருவுருவாய் இன்று எம்மை விட்டு மறைந்து விட்டது. காலமெல்லாம் கண்ணிர் விட்டாலும் என் கவலை மாறப்போவதில்லை.
என்மீது கொண்ட அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு வெளிநாடுகளில் வசிக்கும் என்னுடைய பழைய மாணவர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள், அனைவருடனும் தொடர்பு கொண்டு, இராப் பகலாக முயற்சி செய்து தானே தலைமை தாங்கி எனக்கு ஒரு மணி விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து, எழுவது பக்கங்களைக் கொண்ட மணிவிழா மலர் ஒன்றையும் அச்சிட்டு வெளிப்படுத்தி எனக்கும் பேரும் புகழும் பெருமையும் சேர்த்தவர்.
தான் பங்கு பற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்னையும் அழைத்துச் சென்று பங்கு கொள்ளச் செய்து பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் காணும் நண்பனின் உயரிய பண்பை நினைக்கும் போது என் இதயம் வேதனையால் வெந்து வெடிக்கின்றது. கண்ணிர் விடாத நாளே இல்லை. வயதால் கூடிய என்னைக் கழங்கமில்லா உள்ள
(தனி ஈஸ்வரம் ) 粤 C 73D

Page 45
உவகையோடு தம்பி! என்று செல்லமாக அழைத்து உரையாடுவதை என்ால் ஒருவிநாடியும் மறக்க முடியவில்லை.
'பாடின்றிப் பட்டம் இல்லை’ என்ற பழமொழிக்கு ஒப்ப நண்பன் அவர்களின் அயரார புனிதப் பணிகளுக்குப் பரிசில் கிடைத்தது போல் பதில் அதிபர் பதவி அவர்களைத் தேடி வந்தது. தான் கற்பித்த எல்லாப் பாடசாலைகளிலும் நடைபெறும். நிகழ்ச்சிகள் அனைத்திலும் பார்வை யாளனாக அல்ல பங்காளனாக நின்று தம் பொருள், உடல், பொழுது யாவையும் அர்ப்பணித்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர். பழைய மாணவர் அனைவரினதும் உள்ளங்களில் நிரந்தரமான ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டவர். அவர்களின் பணி விளையாட்டுத் துறையோடு மட்டும் நின்று விடவில்லை. கலைத்துறைகளில் மாணவர் களை ஈடுபடுத்தி நாடகங்கள், நாட்டியங்கள், வில்லுப்பாட்டு, பட்டி மன்றங்கள் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பங்குபெறச் செய்து பரிசளிப்பு விழாக்கள், கலை விழாக்களைத் திறம்பட நடத்திய பெருமைக்கும் பெருமதிப்பிற்கும் உரியவர்.
ஓர் ஆசிரியருக்குரிய அத்தனை இலக்கணங்களையும், நற்பண்பு களையும் தமதாக்கிக் கொண்ட இலட்சண புருஷன். தமது திறமையாலும், ஒழுக்கத்தாலும், அறிவாற்றலாலும், ஆளுமையாலும், ஆசிரியர்கள் மத்தியில் ஓர் உயர்ந்த மனிதனாக விளங்கினார்.
இன்று அந்த மாந்தருக்குள் மாசுற்ற மாணிக்கம் எம்மத்தியில் இல்லை. துயரத்தால் துடிக்கின்றோம்.
அன்பும், பற்றும் பாசமும் நிறைந்த தாய் தந்தையரை இழந்து
ஏங்கித் தவிக்கும் பிள்ளைகள், பிள்ளைகள், மருக்கள், பேரப்பிள்ளை
களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்
களையும் நீங்காத துயரத்தையும் தெரிவிப்பதோடு அமரரின் ஆத்மா
சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவன் இன்னருள் புரிய வேண்டு கின்றோம்.
ஓம் சாந்தி!
சுன்னாகம் கிழக்கு அ.தம்பித்துரை சுன்னாகம் ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்
(தனி ஈஸ்வரம் ) 些 G74)

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ் அவர்களின் அனுதாபச் செய்தி
யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இந்த அனுதாபச் செய்தியை வழங்குகின்றேன்.
எனது கல்லூரியின் பிரதி அதிபராக இருந்த திரு. K.V தனேஸ்வரன் அவர்களை நான் நன்கு அறிவேன். அவருக்கும் எனக்கும் மிக நெருக்கமான நட்பு இருந்து வந்தது. பிரதி அதிபராக இருந்து அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அதிபர் திரு. மு. இராமலிங்கம் அவர்களுடன் இணைந்து கல்லூரியின் பெருவளர்ச்சிக்கு உதவியவர். விளையாட்டுத்துறையை வளர்ப்பதிலும், நிர்வாக கட்டமைப்பபை வலுவவுடையதாக்கி கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் இணைபாடவிதான செயல்பாடுகள் மேம்படுவதற்கும் உழைத்த பெருமகனானார். இதனால் ஊர்மக்கள் பல விழாக்களுக்கு பிரதம விருந்தினராக அவரை அழைத்து கெளரவித்த சம்பவங்களை நினைவு கூர்கின்றேன்.
அமரர் தனேஸ்வரன் அவர்கள் எமது பாடசாலையில் சம்பளத்துக் காக மட்டும் வேலை செய்கின்ற ஒரு அரசாங்க ஊழியராக கணிக்கப்பட வில்லை. அவ்வாறாக அவர் ஒரு போதும் நடத்தப்படவுமில்லை. அதற்கு மேலாக பாடசாலையின் ஒரு வழிகாட்டியாக ஆலோசகராக, ஊர்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக நண்பனாக அன்பாக போற்றப்பட்டார்.
பாடசாலை வளர்ச்சிக்காக கடமையாக உழைத்து எல்லோருடைய மதிப்பையும் கெளரவத்தையும் உரிமையையும் பெற்றுக் கொண்டார். இதனால் பொது வைபவங்கள் மட்டுமல்ல தமது தனிப்பட்ட வைபவங்களுக்கும் அவரை அழைக்கும் தன்மை அவர் ஆசிரிய சேவை யில் இருந்து இளைப்பாறிய பின்பும் தொடந்திருந்தது. அமரர் அவர்கள் மிகவும் கண்ணியமானவர். போலித்தன்மை அவரின் வாழ்க்கையில் இருக்க வில்லை. தனது உள்ளததின் உண்மையான பிரதிபலிப்பை தனது முகக் குறிப்பிலும் நடத்தையிலும் துல்லியமான வெளிக்காட்டும் தூய்மையான பண்புடையவர். மேலும் நல்ல நண்பர்களைக் கொண்டிருந்த இவர் துஷடர்
(தனி ஈஸ்வரம் ) 当 ○

Page 46
களைக் கண்டால் தூர விலகிச் செல்லும் தன்மையுடையவராக விளங்கிய பெருந்தகையாவார்.
சிறந்த ஒழுக்கசீலராகவும், பண்பாளராகவும் வாழ்ந்த எமது இனிய நண்பன் சுனாமி அனர்த்தத்தில்உயிர் இழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் ; வருந்துகின்றோம் ; அவரை நினைக்கின்றோம் ; நன்றி கூறுகின்றோம்.
அவரை இழந்து நிற்கும் அவரின் பிள்ளைகட்கும் சுற்றத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிவபதம் அடைந்த அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
துணைவேந்தர் பேராசரியர் சு. மோகனதாஸ்
யாழ் பல்கலைக்கழகம்
மெனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம் தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி யல்லையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேரல் வேண்டாம் வனந்தேடுங் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
உலக நிதி ノ - ܢܠ
(தனி ஈஸ்வரம் ) Ο 76 Ο

உலகை நேசித்த உத்தமன்
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சம் திமிர்ந்த ஞானசெருக்கு
மேற்சொன்ன பாரதியின் கவிதை வரிகளுக்கு வரையப்பட்ட ஓவியமாய் வாழ்ந்தவர் மதிப்பிற்குரிய தனேஸ்வரன் ஐயா அவர்கள். கல்வியாளர்களிடம் ஆளுமை குன்றிவிட்ட இன்றைய நிலையில் ஆளுமையும், அறிவும் ஒன்றுசேர்ந்த வடிவமாய் திகழ்ந்தவர் அவர். யாழ்பாணத்தில் ஸ்ரான்லிக் கல்லூரியில் அவர் உபஅதிபராய் இருந்தகாலம், அக்கல்லூரியின் பொற்காலம். தான் சார்ந்திருந்த ஆசிரியத் தொழிலை செம்மையாகச் செய்ததோடு, அறிவுலகப் பிரதிநிதியாய்ப் பொறுப்புணர்ந்து, சமூக செயற்பாடுகள் அனைத்திலும் தன்மை இணைத்துக் கொண்டவர், அவ்விணைப்பு கம்பன்கழகத்தோடு அவரை உறவாக்கியது. யாழ்பாணத்திலும் பின் கொழும்பிலும், எங்கள் கம்பன்கழக முயற்சிகள் அனைத்திலும் தொடர்பு கொண்டு, தன் அறிவுசார் ஆலோசனைகளால் எம்மை நெறிப்படுத்தியவர். அவர் மனத்திலும், நடையிலும் இருந்த கம்பீரம், அவர் வாக்கிலும் பொருந்தியிருந்தது. மேடைகளில் அவர் தலைமை வகிக்கும் நிகழ்ச்சிகள் எப்பொழுதும்
செம்மையுறும். எங்கள் கழகமேடைகளிலும் தன் கம்பீரத்தமிழால் முழங்கியவர். எங்களையும், எங்கள் முயற்சிகளையும் உண்மையாக நேசித்த பேராசான், இன்று இவர் இல்லை எனும்செய்தி நெஞ்சை வருத்துகிறது. அந்த கம்பீரவடிவத்தை கடலலை காவுகொண்டுவிட்டது. பேரழிப்பு. ஒரு நல்லாசானை இழந்த அறிவுலகம் தனித்தது.
(தனி ஈஸ்வரம்) 莒 ○

Page 47
ஒரு தக்கோனை இழந்த சமூகம் தனித்தது. ஒரு சான்றோனை இழந்த தமிழுலகம் தனித்தது. தொடர்புடையார் அனைவரும் கவல்வர். குடும்பத்தார் மனநிலையைக் கேட்கவும் வேண்டுமோ? அவர்தம் அக அமைதிக்காகவும், ஆசாவழின் ஆத்ம அமைதிக்காகவும் என்னை வாழ்விக்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார் பாடிப்பரவும், பரம்பொருள் திருவடியை வேண்டிப் பணிகிறேன். “இன்பம் எந்நாளும் துன்பமில்லை”
வேல் அமுதனின் மணிவிழாவின் போது கலைஞன் தனேஸ்வரன் எழுதியது:
முகத்துவாரம், 29-11-1998.
கனம் வேலமுதன்,
o 60 வயது இளைஞர்கள் முதிர்ச்சியின் தலைவாயலில் அடியெடுத்து வைக்கும் கால் அவர்கள் பார்த்தும் - படித்தும் - அனுபவித்த இலக்கியச் செண்டுகள் புதிய ஆக்கங்களை வெளிக் கொணரும். இது நிதர்சனம்.
நிலைத்து நிற்கும் இலக்கிய வடிவங்கள் வெளிவர இந்நாளில் வாழ்த்தி நிற்கின்றேன். நன்றி.
அன்புள்ள க.வை.தனேஸ்வரன்
தனேஸ்வரன் கலைஞர்களைத் தூங்கவிடமாட்டார்;அவர்களைத்
தட்டியெழுப்பி, செயற்படச் செய்வது தனேஸ்வரனின் இயல்பு. மேற் தடப்பட்டது தனேஸ்வரனின் இயல்புக்கோர் எடுத்துக்காட்டு.
الم ܢܠ
(தனி ஈஸ்வரம் ) 当 Za ○

ஒளியாக நிற்கும் என் குரு
நற்பணிகள் செய்வதையே தன் வாழ்வின் இலட்சியமாக் கொண்ட அமரர். உயர்திரு . கே. வி தனேஸ்வரன் அவர்கள் எனக்கு குருவாக கிடைத்தமையே கீர்த்தி பெறச் தவப்பயனாகும். பல நிலைகளில் மக்களின் பின் நின்று அவர்களை கீர்த்தி பெறச் செய்வதில் வல்லார். மக்களின் துன்பவாழ்வில் பங்கு கொண்டு அவர்கள் துயர்நீக்கும் கருணை உள்ளங் கொண்டவர்.
ஒரு மனிதன் தான் வாழும் பிரதேசத்தையும், மக்களையும் நேசிப்பதன் மூலமே முழுமையான மனிதனாக முடியும். என்ற சிறந்த தத்துவத்துடன் வாழ்ந்து காட்டியவர். உயர்திரு. இராமலிங்கம் அதிபர் காலத்தில் கணகரட்ணம் ம.ம வித்தியாலயம் விளையாட்டுத்துறையில் உச்ச நிலையில் இருந்ததற்கு அடித்தளமான இருந்தவர் எனது குருவே
96) ITT.
விளையாட்டு வீரர்களை மட்டுமன்றி பல பயிற்றுணர்களை மேலாக நற்பிரஜைகளையும் உருவாக்கியதில் அமரின் பங்கு அளப் பரியது. என்னுடன் ஒரு குருவாக,நல்ல நண்பனாக, குடும்ப உறவினராக பழகிய பெருந்தகை அவர்களின் வழிநடத்தலினாலே நான் கணகரட்ணம் , ம.ம.வி , யாழ். மத்தியகல்லூரி, யாழ் பல்கலைக்கழகம், யாழ். மாவட்டம் என்ற பல நிலைகளில் நல்ல பயிற்றுனராக சேவை செய்ய முடிந்தது. எமது இரு குடும்பமும் மிகவும் நெருங்கிய உறவுடன் பழகி வந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னார் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் எனது வருத்தத்திற்கு தொலைபேசியில் ஆறுதலும், அறிவுரைகளும் வழங்கி எனது மகனின் திருமணத்திற்கு ஒரு கிழமைக்கு முன்னதாகவே பொங்கல் தினத்தில் என் வீட்டில் வந்து நிற்பதாக சொன்னார். இயற்கை அன்னையின் அரவணைப்பில் அகலாமரணமான செய்தி என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையே வேதனையடையச் செய்தது. அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல; அது தமிழீழ மக்கள் யாவருக்கும் பேரிழப்பே. என் குரு எனக்கு ஒளியாக நின்றுவழிகாட்ட அவரின் பாதையில் நடப்பதே என்பணி அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனைப் பணிந்து பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!!
VK சன்முகலிங்கம்
யாழ் .மாவட்ட கிரிக்கெட் பயற்றுனர்.
(தனி ஈஸ்வரம் ) 莒 C 79)

Page 48
அரசாங்க அதிபர் சிந்தனையிலிருந்து
ஆம் எண்ணிப்பார்க்கிறேன் கடந்த பல தசாப்தங்களாக யாழ்/ கனகரட்னம் மத்திய மகாவித்தியாலத்தை ஏன் அரியாலை கிராமத்தின் வருடாந்த விளையாட்டு விழாக்களில், பாடசாலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்ச்சிகள் முன்நின்று ஒழுங்குபடுத்துவர் செயற்படுத்து வார். அமரர். ஆசிரியர் தனேஸ்வரன் அவர்கள்.
குறிப்பாக, யாழ்/ கனகரட்ணம் மகாவித்தியாலயத்தின் மெய் வல்லுனர்களையும், எறிபந்தாட்ட வீரர்களையும் உருவாக்குவதில் முன்நின்றவர் அவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறி முறைகளைக் கடைப்பிடித்து மைதானத்தில் அவர் நிகழ்வுகளை நடத்து வது மனக்கண் முன்னே நிழலாடுகின்றது.
அவரால் உருவாக்கப்பட்ட பல இளைஞர்களும் யுவதிகளும் இன்று மாவட்டம் முழுவதும் அவரது ஞாபகார்த்தமாக நடமாடி வருவதை நாம் அவதானிக்ககூடியதாக உள்ளது.
அவர் விளையாட்டுத் துறையின் அபிவிருத்திக்காக செய்த செயற்பாடுகள் பல சுவர் இன்று எம்மிலும் இல்லை ஆனால் அவரது வழிநின்றவர்கள் அவரது வெற்றிடத்தை நிரப்பி வருகிறார்கள்.
அவரை இழந்த நண்பர்கள், விளையாட்டு பிரியர்கள், அவரது குடும்பத்தவர்கள் அனைவருடன் நான் அவரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன.
செ. பத்மநாதன் அரசாங்க அதிபர் யாழ்பாணம்
(தனி ஈஸ்வரம் ) 基 G80)

எங்கள் குரும்ப நண்பர்
இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அனர்த்தத்தினால் பெருமளவு அழிவுகளும், உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருப்பதாக அறிந்து வருத்தமடைந்த வேளையில் கிடைத்த இன்னொரு தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தந்தது. எங்கள் ஊரைச் சேர்ந்த - எங்கள் குடும்பநண்பரான க. வைதனேஸ்வரன்அவர்களும்அந்தஆழிப்பேரலை அனர்த்தத்தில்சிக்கிஉயிரிழந்து விட்டார் என்பதே அந்த அதிரச்சித் தகவலாகும் உடற்பயிற்சிக்காக கடற்கரைப் பக்கம்சென்றவருக்கு இத்தகையஒரு அனர்த்தத்தினால்உயிரை இழக்கவேண்டிய துரதிர்ஸ்டவசமானநிலை ஏற்பட்டு விட்டது என்பது வேதனைக்குரியது.
அமர் க. வை. தனேஸ்வரன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, காலஞ்சென்றளனது கணவரின்நெருங்கியநண்பருமாவர். இருவரும்ஆசிரியர்கள் என்பதால் தொழில் ரீதியாக நெருங்கிய உறவைக் கொண்டருந்தர்கள். ஊரெழு கதிரமலையான்என்றபெயரில்எனது கணவரால்எழுதப்பட்டுவெளிவந்த "கனவும் கலைந்தது காலையும்புலர்ந்தது” என்ற நூலில் ஊரெழு கிராமத்தின்பிரமுகர்கள், கலைஞர்கள்வரிசையில்தனேஸ்வரன்அவர்களைப்பற்றியும்ஒரிடத்தில்சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளர்.
அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஊரெழு
கிராமத்திற்கும்பேரிழப்பாகும் அவரது குடும்பத்தினருக்கு எனது குடும்பத்தினரின் சாரிபில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
லண்டன் -திருமதி. மகேஸ்வரி கதிரவேலு
O. O. 92OO5
(தனி ஈஸ்வரம் ) 些 G8D

Page 49
( நெஞ்சம் நிறைந்த நன்றிகள் )
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நல்லறத்து வழி நின்று நம்மை நாளும் ஆளாக்கிய அன்புத் தெய்வம், பாச விளக்கு திரு.க.வை. தனேஸ்வரன் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு உடன் உதவியோருக்கும், வாழ்ந்தவேளை வாழ்த்திய நெஞ்சங்களுக்கும், வரலாறாகியவேளை வருந்திய உள்ளங்களுக்கும், நேரில் கலந்து கொண்டோருக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், தந்தி, கடிதம், தொலைநகல், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் அளித்தோருக்கும், பத்திரிகை வாயிலாகக் கண்ணிர் அஞ்சலி செலுத்தியோருக்கும், முகத்துவாரம் புனித தீர்த்தத்தில் நடைபெற்ற அந்தியேட்டிக் கிரியைகளிலும் எமது இல்லத்தில் இடம் பெற்ற வீட்டுக் கிருத்திய வைபவத்திலும் கொட்டாஞ்சேனை கமலா மோடி மண்டபத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள், மதிய போசனம் என்பவற்றிலும் பங்குபற்றிச் சிறப்பித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், இம்மலரினைத் தொகுத்து வழங்கிய மகவம் - கலை வட்டத்தினருக்கும், குறிப்பாக திரு.சி.வேல்அமுதன், திரு.S.லோகதாசன் அவர்களுக்கும் அழகாக type Setting செய்து தந்த SDS நிறுவனத்திற்கும் இம் மலரினை அச்சிட்டு தந்த Lanka Pulishing House bo660Tg55gb(5b, ELD6OT (8LDITL LD60iiLuis605 தந்து உதவிய நிர்வாகத்தினருக்கும்,
எம் நெஞ்சார்ந்த நன்றிகளை நவில்கின்றோம்
AsiaisogoOTib மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள். தொலை பேசி: 2526996
(தனி ஈஸ்வரம் ) C82)
 


Page 50


Page 51