கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமாவளவன்

Page 1
)* s. 《辽
 


Page 2

சோழர் குல தீபம் -- சுடர் 3
திருமாவளவன்
சோழர் குலக் கொழுந்து
தமிழ்ப்பண்டிதர், இலங்தையடிக் கவுணிய இரா. சிவ. சாம்பசிவ சர்மா
எழுதியது
மூன்கும் பதிப்பு
341 85
சுன்னகம்
த ன ல க்கு மி புத் த க சா லே
i u Bů fanol 1948 (சதம் 75

Page 3
பதிப் புரை
சென்னை - சரஸ்வதி பிரசுரா லயத்தாரால் வெளியிடப்பட்ட * திருமாவளவன் ’ என்னும் இக் நூலின் பதிப்புரிமை, " மேற்படி பிர்சுராலயச் சொந்தக்கிாரர் திரு. T. M. முனிசாமிநாயகர் அவர்க ளிடமிருந்து 12-5.88ல் எம்மால் கிரயத்துக்குப் மெற்றுக் கொள் ளப்பட்டது. இந்நூல், 1989-ம் ஆண்டுக் கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்புக்கு இலக் கிய பாடமாக இலங்கை வித்தியா பகுதியா ரா ல் நியமிக்கப்பட்டுள் ளது. முன் பதிப்பித்த பிரதிப் படியே இப் பதிப்பும் பதிப்பிக்கப் பட்டுள்ளது.
சுன் குசும், }
20-6-38- f5f. பொன்னை யா

முதற் பதிப்பின் முன்னுரை
நன்னலம் மிக்க தமிழ்மொழியதனைப் பயிலுறும் மாணவர், இதிகாச, புராண, சுற்பணு கிேக்கதைகளைப் படித்துணர்வகோடு சரிக்கிர வாராய்ச்சிக்கு ஒத்த கதை களையும் பயிறல் பெருநலமளிக்கும். அதனை நான் என் அனுபவத்தால் கண்டுணர்ந்தேன். ஆதலால் சரித்திாக் கதைகளைச் சுவைபடச் செந்தமிழ் மொழியில் எழுதிட
எனப் பெயர்
முன்வந்தேன். சோழர் குல தீபம் புனைந்து வரிசையாகச் சில நூற்களை எழுதலானேன். அக்குல தீபத்தின் மூன்றுவது சுடராக விளங்கும் இச் சிறு நூல் சுவைபட வரையப்பட்டுள்ளது. மதுர மிக்க ஒசையுடைய நடையும், சொற்ருெடர் நலனும், செஞ்சொலாழமும் செறிந்து விளங்க இந்நூல் எழுதப் பட்டுள்ளது. ஆதலின் இச்சிறு நூல் மாணவர்கட்குப் பெருநலம் அளிக்கும் என்பது கிண்ணம். பிழைகாணிற் Guttaplašas.
பொதுமை ங்ஙனம்
சென்னவ" ribaĝo. சா. சர்மன்

Page 4
10.
1.
12.
பொருளடக்கம்
மைந்தன் பிறப்பு இளைஞன் இடுக்கண் சிறை வெளிப்பாடு களிறு கொணர்ந்த காவலன் திருமாவளவன் பூம்புகார் சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி திருமாவளவன் வெற்றி மேம்பாடு ஆதிமந்தியார் is அரசியல் தமிழ்ப்பற்று கிருமாவளவன் காலம், மதம்,
குணதிசயங்கள் அரும்பக அகராதி
பக்கம்
1
2 ()
26
36
42
52
64
9
93
98
...,104
... 108

திரு மா வள வன்
1. மைந்தன் பிறப்பு
மங்கலத் தமிழ்மொழி வழங்கும் 15ாடுகளுள் மிகச் சிறந்தனவென்று சான்ருேராற் கொண் டாடப்பட்டவை சேர சோழ பாண்டிய 15ாடுகள் என்பனவாம். அவற்றுள் நடு5ாயகமாய் நிற்கும் சீர்மை பெற்றது தீம்புனல் காடு. சோழர் குலக் கொடியாம் பொன்னிகதி பொய்யா தளித்தலால் செழுமை பெற்றதும் அக்காடே. குடகுமலையில் உற்பத்தியாகிச் சோழ 15ன்னுட்டிற் பல் கீால் களாய்ப் பரந்து பாய்ந்து பொன்கொழிக்கும் தீம் புனல் மிகுந்த காவிரியாறு பாவலர் பல்லோராற் புகழ்ந்துரைக்கப்படும் மேன்மை பெற்றது. அதன் கிளை6திகள் அங்காட்டின் சமவெளிப் பிரதேசங் தளிற் பரந்து பாய்க்து வளப்பத்தை மிகுதிப் படுத்துகின்றன. ' கங்கையிற் புனிதமாகிய காவிரி ! என மாலின் தொண்டர் ஒருவர் மகிழ்ந்து கூறும் மாண்பு பெற்ற அக் காவிரிகதி, அங்காட்டின் மேன்மைக்கும் பொருளாதார நிலைமைக்கும் காரணமா யிருக்கின்றது மற்றும் தன் இருகரை மருங்கினும் சிவத்தலங்களும் விட்டுணுத் தலங்க ளும் நிறைந்திருக்கும் பெருமை பெற்றது.
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்க உதித்துச் சோழ 15ன் ஞரட்டினே கெடுங்காலமாக ஆட்சி புரிந்து வந்தோர் சோழர்கள் எனப்படுவார்.

Page 5
2 - திருமாவளவன்
அன்னர், 'அன்புடையார் என்பும் பிறர்க்குரியர்' என்னும் பொய்யில்புலவன் பொருளுரைக் கேற்ப நல்லுடல் அரிங் து அளித்து ஒரு புருவின் உயிரைக் காத்த மாட்சியைப்பெற்ற சிபி என்னும் சக்கர வர்த்தியின் மரபினில் உதித்தவராவர். சோழர்கள் இயல்பிலேயே அறநெறியும், அரசியல்நெறியும் வழுவாத வேந்தர்கள். கன்று இறக்க ஆ படு துயர் கண்டு ஆற்ருது தேர்க்காலில் தன்னெரு மகனைக் கிடத்தி அவன் மார்புமீது தேரூர்ந்த ம்ன்னனும் இக் கன்னட்டவனே.
மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து' என்று நரைமூதாட்டி 5வின்ற நல்லுரை (5ானிலங் தன்னில் உணராதார் யாரே! இயல்பாக மிக்க வளம்பெற்ற அங் நன்னுட்டை ஈகையின் பிறப் பிடம் என்னலாம். வரையாது அளிக்கும் வள்ளல் கள் பலரும் அக்காட்டில் மல்கி உறைந்தனர். அங் 15ாடு வளமைபெற்ற தாதலின் அங்காட்டர சற்கும் வளவன்' என்னும் சீர்பெறும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. மிகப் பழைய அக் கன்காட்டிற் சோழர்கள். எக்காலமுதல் குடியேறி ஆண்டுவந்த னர் என்பது சரித்திர ஆராய்ச்சிக்காரர்களாலும் எடுத்தியம்பும் திறத்ததன்று. எனினும் 5ெடுங் காலமாகச் சோழர்கள் அங்காட்டை ஆண்டுவந்த னர் என்பதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்ளுகின்றனர். அத்தகைய சோழர்கள் சரித் திரங்களேச் செவ்வையாக உணரத்தகுந்த நூல் களின் சாதனங்கள் இல்லை யென்ருலும் இக்காலத் திற் கிடைத்துள்ள சிலாசாசன ஆராய்ச்சியாலும்,

மைந்தன் பிறப்பு 3
சில நூல்களின் துணையாலும் ஒருவாறு உணர லாகும். பாரத காலத்திற்கு எத்துணையோ ஆயிரக் கணக்கான வருடங்கட்கு முக்தியது இராமாயண காலம். அவ்விராமாயணத்திற் சுக்கிரீவன் வானரச் சேனைகளை நோக்கித் தென் தேசத்திற் சோழ பாண்டிய கேரள தேசங்களிற் சென்று சீதா பிராட்டியாரைத் தேடும்படி கட்டளேயிட்டிருப் பது குறிப்பிடத்தக்கது. ஆதலின் சோழர்கள் இராமாயண காலத்திற்கு முன்னமேயே சோழ காட்டை ஆண்டுவந்தனர் என்பதும் உணரற் பாலதாம்.
இக்காலத்திற் காணப்படும் இலக்கியங்களில் மிகப் பழைய சோழவரசர்களாகப் போற்றிக் கூறப்படுவோர் பெருநற்கிள்ளி, கரிகாலன், கோச் செங்கணுன் என்போராவர். இவர்கள் சிபியின் வமிசத்தவர்கள். ஆதலால் செம்பியர்கள் என் றழைக்கப்பட்டனர். இம் மூவருள் சோழன் கரி தாலன் சீர்மிகப்படைத்த செங்கோல் மன்னனுய்த் தோன்றினன்.
சோழ 5ன் காட்டிற்குத் தலைநகரங்கள் பல இருந்தன. அவை, கருவூர், உறையூர், திருவாரூர், தஞ்சை, காவிரிப்பூம்பட்டினம் என்பனவாம். இவற்றுள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உறையூரைத் தலை5கரமாகக்கொண்டு சோழ 5ன் காட்டை இராஜ சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்னும் அரசன் அரசாண்டுவந்தான். அவ னுக்குச் சேட்சென்னி என்றும், இளஞ்சேட்சென்னி என்றும் இரு மைந்தர்கள் இருந்தனர். இரு அரச

Page 6
4 திருமாவளவன்
குமாரர்களும் கலைகள் பல கற்று அரசாளுரிமை பெறும் பருவத்தை யடைந்தனர். பெருகற்கிள்ளி (LD glööo LD அடைந்ததை அறிந்து தன் மைந்தரில் மூத்தோனுக்கு அரசாளுரிமையை அளித்து, முடி கவித்துச் சின்னள் வாழ்ந்திருந்து விண்ணவருக்கு விருந்தானன். மூத்தோணுகிய சேட்சென்னி தன் குலத்திற்கேற்ப உருவில் திருவினையொத்த பெண் ஒருத்தியை மணந்துகொண்டு சோழகன் காட்டைக் கோனெறி கோடாது அரசாண்டு வந்தனன். இளஞ்சேட்சென்னி மூத்தோனுக்கு உற்ற துணை யாக இருந்து உதவிகள் பல புரிந்து வந்தான்.
இளையோணுகிய இளஞ்சேட்சென்னி வில், வாள், வேல் பயிற்சியிலும், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவற்றிலும் மிகச் சிறந்து விளங்கினன். அவன் போர்த்தொழிலை கன்கு கற் றிருந்தான். மற்றும் போர்வீரர்களுக்கு ஊக்கத்தை ஊட்டி, ஆக்கத்தைக் காட்டி மறப்பண்பை மிகு வித்து அஞ்சா 5ெஞ்சோடு அமர்புரியச் செய்வதில் அவன் வெகு சமர்த்தன். அக்காலத்தில் இளஞ் சேட்சென் னியின் பெயரைக் கேட்டோர் எல்லோ ரும் மெய்க் கடுங்குவர் என்ருல், அவன் வலிமை யின் சிறப்பை விளம்பவும் வேண்டுமோ ? இளஞ் சேட்சென்னி படையெடுத்துச் சென்று பல்வேறு அரசர்களுடன போர்புரிந்து அவர்கள் நாடுகளைக் கைப்பற்றி மிக்க புகழுடன் விளங்கினன். அவ் னுக்கு உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என் னும் சிறப்புப் பெயரும் உண்டாயிற்று. பெருகற் கிள்ளியின் காலத்தைக் காட்டிலும் சேட்சென்னி

மைந்தன் பிறப்பு 5
யின் காலத்திற் சோழநாடு விசாலப்பட்டது. ஆதற்குக் காரணம் இளஞ்சேட்சென்னியின் தோள் வலியே என்பதைக் கூறவும் வேண்டுமோ! சேட் சென்னி தன் தம்பியின் ஆற்றலையும் அறிவையும் அறிந்து அகமிக மகிழ்ந்தான். அரசுரிமையை ஏற்று காட்டை ஆளும் நலமும் அவனுக்குண்டு என்பதை உணர்ந்து அவனே அரசாளும்படி விடுத் தான். முன்னுேருரைத்த மொழிக்கிணங்கி இளஞ் சேட்சென்னி சோழ5ாட்டை ஆண்டுவந்தான்.
ஆற்றல் மிகப்படைத்த இளஞ்சேட்சென்னி கொண்டல் நிகர்க்கும் வண்மையுடையோன். அவன் ஏழைகட்கு எவ்வாற்றலும் இன்னல் அடைந்திடா வகையுறிக் து உதவிபுரிந்து வங்தனன். பயிர்த்தொழில் குன்றிடா வகையறிந்து வேளாண் மாந்தருக்கு உதவிகள் பல புரிந்து வந்தான். சிற் றரசர்களிடத்தும் குடிமக்களிடத்தும் காலங் தவ முது தான் அடையவேண்டிய பகுதிப்பணத்தை யும் வரிப்பணத்தையும் வசூலித்து வந்தான். தன் காட்டிற் பலவேறு தேசத்தினின்றும் போக்து வாணிபம் பேணும் வணிக மக்களுக்கு உதவிகள் பலவும் புரிக் துவங்தனன். சுருங்கக் கூறுமிடத்து இளஞ்சேட்சென்னி குடிமக்களின் கன்மையை 15ாடி அவர்க்ட்கு உதவி புரிதலேயே குறிக்கோ ளாகக்கொண்டு உழைத்து வந்தனன். அவன் காட்டிற் கல்வியும் மேம்பாடுற்றது
தொல்பெருங் குலமாய வேளாளர் குலத்தோர் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கினர். வேளாண் மாந்தர் என்போர் உப

Page 7
6 திருமாவளவன்
காரம் செய்தலையே தம் முதற் கடமையாகக் கொண்டு ஒழுகுபவர்கள். அன்னர் பழங்குடித் தமிழ் மக்கள். அன்னரை, அகத்தியமியற்றி அருங் தமிழ் பெருக்கிய குறுமுனிவர் வடகாட்டினின்றும் கொணர்ந்தார் என்று கூறுவாருமுண்டு. அது ஒருவாற்ருனும் பொருந்தாதாகும். அகத்தியர் தென் திசைக்குப் போந்த காலத்திற்கு எத் துணையோ காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் வேளாண் குலத்தினர் இருந்தனர். ஆதலின் வேளாளர் தொல்குடித் தமிழ்மக்களே என்பது விளங்கும். அத்தகைய வேளாளர்கள் அரசர்க ளால் 15ன்கு மதிக்கப்பட்டுச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கினர். தமிழரசர்கள் வேளாளர் குலத்தில் பெண் கொடுப்பதும் பெண் கொள்வதும் உண்டு. சோழ5ாட்டில் அழுந்தூர் என்னும் ஊரில் இரும் பிடர்த்தலையார் என்னும் பைந்தமிழ்ப் பாவலர் ஒருவர் இருந்தார். அவர் உழுவித்து உண்ணும் வேளாண் வகுப்பைச் சேர்ந்தவர்; தமிழ் மொழி யில் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்றவர்; ஒழுக்கத்திற் சிறந்தவர். அத்தகைய இரும் பிடர்த் தலையாருக்கு அழகிற்கு உரு என்று சொல்லும்படி யாக உருவில் திருவினை ஒத்த உடன்பிறந்தாள் ஒருத்தி இருந்தனள். அந் நங்கையின் நல்லறிவை யும் நல்லெழிலையும் கண்டுகேட்டு இளஞ்சேட் சென்னி அவளை மணக்க விழைந்தான். அவன் பெரியார்கள் சிலரை, அங்கங்கையை மணம்பேசி வருமாறு தூதனுப்பினன். அவ்வாறே பெரியோர் கள் சிலர் இரும்பிடர்த்தலையாரை யடைந்து மன் னன் விழைந்ததை மகிழ்வொடு கூறினர். இரும்

மைந்தன் பிறப்பு 7
பிடர்த்தலையார் தம் தங்கையை இளஞ்சேட் சென்னிக்கு மணஞ் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டார். கன்னளும் குறிக்கப்பட்டது. உறை யூர் எழில்பெறு இந்திரன் நகரமோ என ஐயுறும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டது. அக் கன்னுள் 15ணுகுதலும் இளஞ்சேட்சென்னி இரும்பிடர்த் தலையாரின் தங்கையை மணந்துகொண்டான். அன் ஞளும் இளஞ்சேட்சென்னியின் குண நலன்களை நன்குணர்ந்து அவனுக்கொப்ப ஒழுகி இல்லறம்
கடத்திவந்தாள். ஆண்டுகள் சில கடந்தன. * .
பெறுதற்கரிய பேறுகளுள் மிகச் சிறந்தது மக்கட்பேறு. அதனை அடையாதார் இல்லற வாழ்க் கையின் பயனை அடையாதாரே. ஆதலின் இளஞ் சேட்சென்னி தன் குலத்திற்கொத்த அறிவு, ஆற் றல், ஒழுக்கம் முதலியவை சிறந்து விளங்கத்தக்க ஒரு மைந்தனைத் தந்தருளுமாறு 15ாளும் இறைவனே வழிபட்டு வந்தான். அவன் விரும்பியவாறே கட *வுள் அருளும் கைகூடியதால் அவன் மனைவி கருக் கொண்டாள். தன் மனைவி வயிறு வாய்த்திருத் தலைக் கேட்டு இளஞ்சேட்சென்னி மனமிக மகிழ்க் தான். அதேகாலத்தில் சேட்சென்னியின் மனைவி யும் கருப்பமுற்றிருந்தாள். மாதங்கள் கடந்தன. ஒருநாள் நிமித்திகன் ஒருவன் அரண்மனையை அடைந்தான். அவனைச் சேட்சென் னியும் இளஞ் சேட்சென்னியும் அன்புடன் வரவேற்று'உபசரித் தனர். நிமித் திகன் அவர்களை கோக்கி, மன்னவர் களே ! நீவிர் எங்காளும் இன்பமே எய்தி வாழ்வி ராகுக. உம் குலமும், குலத்துட் பிறந்தார் செயல்

Page 8
8 திருமாவளவன்
களும், அச்செயல்களின் அருமை பெருமையும் அறைந்திடற் கரியதாகும். அன்னர் புகழே நில உலகெங்கும் பரந்துள்ளது. அன்னர் குடிவழிவந்த நும் பெருமையும் அத்தகையதே. அன்னர் கோயில்கள் பல கட்டினர் குளங்கள் பல வெட் டினர் ; சோலைகள் பல வைத்தனர்; சாலைகள் பல உண்டாக்கினர் , தமிழ்ப் பயிரைத் தழைக்க வளர்த்தனர்; தமிழ்ப் புலவர்கட்குத் தகுதியறிந்து பொருள்வழங்கினர். அத்தகைய பெருமைவாய்ந்த முடிசூடா மன்னர் மரபில்வந்த நும் பெருமையை மிக்க மேன்மை யுடையதென்று மீக் கூறுதல் மிகையேயாம். ஆதலின், வேந்தர்களே ! கோல் 5ெறி கோடாது ஆட்சி புரிந்து மாட்சியுற்று மேன்மை எய்துவீராக ' எனப்போற்றி நின்றனன்.
தங்கள் குலப் பெருமையை விளக்கிக் கூறிய நிமித்திகனே 5ோக்கி, 'ஐயா 1 வழிவழியாகத் தொல்புகழ் கொண்ட பழங்குடியான சோழர் குடியை மிக்க புகழுடன் விளங்கவைக்கும் மைக் தர்கள் எங்கட்குப் பிறப்பார்களா?' என்று அரசர் இருவரும் கேட்டனர். அவர்க்கு நிமித்திகன், * மன்னர்களே, உங்கள் இருவருக்கும் ஆண்குழந் தைகளே பிறக்கும். ஆயினும் 15மது இராசமா தேவியின் திருவயிற்றினுள்ள குழந்தை சிறிது காலக் தாழ்த்துப் பிறக்கின் இத்தரணி முழுதும் ஆளும் தரணிபனவன் ' என்று கூறினன். அங் நிலையில் சேட்சென்னியும் இளஞ்சேட்சென்னியும் தம்முள் யாருக்கு அத்தகைய மகன் வாய்ப்பானே எனப் பலவிதத் தோற்றங்களை மனதிற் கொண்ட

மைந்தன் பிறப்பு 9
வர்களாய் அமர்ந்திருந்தனர். அந்நிலையில் ஏவலா வான் ஒருவன் ஓடிவந்து சேட்சென்னியின் மனைவி காமரு குழவி யொன் lன்றுள் எனக்க றி கின்ற னன். சேட்சென்னியோ மனமுடைந்தவனுய், ' என்னே! இன்னும் சற்றுக் காலக் தாழ்த்துப் பிறக்கினன் ருே 15ம் தனயன் தரணி யாளுவன் ? இளையோன் மைந்தனன்ருே இனித் தரணியாளுபவ ஞய்ப் பிறப்பன் ? காமொன்று நினைக்கத் தெய்வ மொன்று நினைக்கின்றதே ? ஆவது ஆகுங்காலத் தாவதும், அழிக் த சிந்திப்போவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம். இதற்கு (காம் வருக்திப் பயன் என் ? கடப்பது நடந்தே தீரும்' என மனமுட்ைந்தான். இளஞ்சேட்சென்னியின்" தேவியோ வயவுநோய் பொறுக்கலாற்ருளாயினும் தனக்குப் பிறக்கும் மைந்தன் தரணி முழுவதும் ஆளும் தகைமை எய்தல் வேண்டுமென மனத்தில் உன்னி ஆற்றி இருந்தனள். 15ாழிகை செல்லச் செல்ல, வயவுநோய் மிகத் திரிபுவனப் பெருந்தேவி தாங்கி நின்ருள். 15ல் ஒரையும் 15ணுகிற்று. பாற் கடலில் வெண்மதியம் தோன்றிற்ருல் அன்ன காமரு மகவு ஒன்றைத் திரிபுவனப் பெருக்தேவி பெற்றெடுத்தாள். இளஞ்சேட்சென்னி அடைந்த இன் பத்திற்கோ அளவில்லை. அன்னையும் தந்தையும் தம் அருமைத் திருமகனைக் கண்ணும் மணியு மெனக் காத்துவருவாராயினர். குழந்தை இளம் பிறை ஒப்பவும், சான்றேர் 15ட்பு வளர்வு
போலவும் வளர்ந்து வந்தது;ழுசேட்சிென்னிய்ேர் துயர்க்கடலில் ஆழ்ந்திருந்தான். அவன் மனைவி தன் மைந்தன் கன் முகூர்த்தத்திற் பிறக்கவில்லையே

Page 9
10 திருமாவளவன்
என்று பெரிதும் வருந்தினுள். சேட்சென்னி அடைந்த துன்பம் அவன் மனத்தில் எழுந்த பொரு மைக்குக் காரணமாயிற்று. 15ாளடைவில் அப் பொருமை வறண்ட புல்லிற் பற்றிய தீப்போற் கடிது வளர்ந்து பகைமையைத் தோற்றுவித்தது. பகைமை முதிர்ச்சியை யடைந்ததால் சேட் சென்னி, இளஞ்சேட்சென்னியையும் அவன் மைந்தனையும் வெறுத்தான். பிறர் ஆக்கங் கண்டு வெறுத்தலும், பகைகொள்ளலும், அழுக்காறு எய்துதலும் இவ்வுலகில் குணநலன் இல்லாற்கு இயல்பேயன் ருே ?

2. இளைஞன் இடுக்கண்
இளஞ்சேட்சென்னி, தன் மைந்தன் 15ாளும் மேலோங்கி வளர்ந்து வருதல் கண்டு உள்ளங் களிகொண்டான். அவன் நாளும் பொலிவுற்று வளர்ந்து வருதல் தாய் தங்தையர்கட்கு அக மகிழ்ச்சியை அளித்தது. மைக்தன் கல்வி கற்கும் பருவத்தை எய்துதலும் இளஞ்சேட்சென்னி, மைந்தன் தக்க பருவத்தை அடைந்திருத்தலை அறிந்து தக்க ஆசிரியரிடம் ஒப்புவித்தான். அரச குமாரன் அரசர்க்குரிய பல கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்றனன். மற்றும் யானையேற்றம, குதிரையேற்றம் முதலியவற்றிலும் வில், வாள், வேல் பயிற்சியிலும் முற்றக் கற்றுத் தேர்ச்சி பெற்றனன் அவன் சுந்தர மேனியும் உரம் பெற்று விளங்கிற்று. கண்டாரனை வரும் வியப்புக் கொளும்படி அரசிளங்குமரன் அரியேறன்னவாக வளர்ந்து வந்தனன். தாயும் தங்தையும் மைந்தன் திருமேனிப் பொலிவுகண்டு மகிழ்பூத்தனர். சேட் சென்னியோ நாளும் பொருமைப் பேயால் கவரப்பட்டு மனக்களிப்பின்றி முகப் பொலி குன்றி விளங்கினன்.
யானைப் பிடரிமிசை அமர்ந்து பவனிவரும் அரசர்களேயாயினும் தமக்குள்ள வாழ்காள குறைந்தால் இத்தரணிமிசை வீழ்வர் அன்ருே ? நல்லனென்றும் கருதாது செல்வனென்றும் ஏழை என்றும் நோக்காது 15டு கிலேமை உடையவனுய்க் காலங் கருதியிருந்து 5ாளும் வர 15ணுகி ஒருவ

Page 10
12 திருமாவளவன்
ரும் அறியா நிலையில் உயிர் கவ்ர்ந்து செல்லும் கூற்றுவன் இளஞ்சேட்சென்னியின் உயிரைக் கவர்ந்துகொண்டனன். தாயும் தனயனும் பட்ட துன்பத்தை அளவிட யாரே வல்லார். சோழ 15ாட்டுக் குடி களனே வரும் ஆற்ருெணுத் துயரத் திற் காளாயினர். அக்காட்டில் இளஞ்சேட்சென் னியின் பிரிவை எண்ணி வருந்தாதார் இல்லை. அந்தோ ! இளஞ்சேட்சென்னி இறந்த து அரசி
ளங்குமரன் இன்னலுறும் காலம் போக்தமைக்கு அறிகுறியேயோ !
சேட்சென்னி ஒருவனே அப்பெருகாட்டில் இளஞ்சேட்சென்னிக்காக வருந்தாதவன். இளஞ் சேட்சென்னி இறந்தது சேட்சென்னிக்குப் பெரு நலமளித்தது. அவன் இளஞ்சேட்சென்னியின் புதல்வனே முற்றிலும் வெறுத்தான். சேட்சென் னிக்கு மைந்தர்கள் ஒன்பதின்மர் பிறந்தனர். பிள்ளைப்பேறின்றி வருந்திய வரசன் ஒன்பதின் மரைப் பெற்றதும் மன மாறுதலை யடைந்தான். தன் மைந்தருக்கு எவ்விதத்திலேனும் அரசாட்சி உரிமையை எய்து விக்கவேண்டும் என்னும் பேரவா அவனேப் பிடர்பிடித்துங்தியது. என்னே இவ்வுலகின் கொடுமை ! தன் தம்பியின் புதல்வன் தனக்கும் புதல்வனே என்பதையும் ஓராது இளஞ் சேட்சென்னியின் புதல்வனேக் கொல்லவும் அவன் கருதியிருந்தனன். ஆயினும் அவன் காலமும் இடனும் கருதியிருக்தான். அவனுக்குப் பகைமை பாராட்டுதலினல் தன் கருமம் நிறைவுருதென்று கருத்திற் ருேன்றிற்று. ஆதலின் கரவுடை

இகளஞன் இடுக்கண் B
மனத்தினனுய் மிக்க அன்பும் அருளும் காட்டு வான்போல் இளஞ்சேட்சென்னியின் மைந்தனிடம் ஒழுகிவரலாயினன், வெள்ளைக்குக் கள்ளச்சிங்தை இல்லையன் ருே 1 ஆதலின் இளஞ்சேட்சென்னியின் புதல்வன் தங்தையிடம் முற்றும் 15ம்பிக்கை வைத் துச் சொற்படி அவன் 15டந்து வந்தனன், காட்கள் செல்லச் செல்லச் சேட்சென்னி தம்பி புதல்வனேக் கொல்லத்தக்க சூழ்ச்சிகளை ஆராய்ந்து செய்து வந்தான்.
இளஞ்சேட்சென்னி இறக்கவும் அரசனுய் வருதற்கு அவன் புதல்வனே உரிமை உடையான் எனினும், இளைஞனுயிருந்தமையின் சேட்சென் னியே ஆண்டு வந்தனன், இளஞ்சேட்சென்னி யின் மைத் துனரும், அரசிளங் குமரனின் தாய் மாமனுமான இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் 4 தன் தங்கையின் செல்வப் புதல்வனைச் சேட்சென்னி கொல்ல நினைந்து சூழ்ச்சிகள் பல செய்துகொண்டிருந்தான் என்பதை எவ்வாருே அறிந்துகொண்டார். அவர் தாம் தங்கையோ டிருத்தலே தகுதியென்று கருதித் தங்கை வீட்டை யடைந்து அவ்விடத்தே வதிந்து வருவாராயினர். சேட்சென்னி தன் கொடிய தோழர்களோடு ஆலோசித்துப் பிறர் அறியொன நிலையில் அரசி ளங்குமரனைக் கொன்றுவிடுவதெனத் தீர்மானித் திருந்தனன். அங்தோ! அவன் கொண்ட கருத்து எளிதில் கிறைவுருதபடி இரும்பிடர்த்தலையா ரன்ருே அக் குமாரனைக் காவல் செய்து வருகின் ருர் 1 இரும்பிடர்த்தலையார் அங்கிருப்பது சேட் சென்னிக்கு இடையூருயிருந்தது. தன் குழ்ச்சிக்

Page 11
14 திருமாவளவன்
குத் தடையாய் நிற்பவர் அவர் எனத் தெரிந்த அவன் அவரிடத்தும் பகைமை பாராட்டினன். அதனையுணர்ந்த இரும்பிடர்த்தலையார் அவனுக் குப் பன்முறையும் கன்மொழியைச் செவியறி வுறுத்தியும் அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கேயாயின.
ஒருநாள் இரும்பிடர்த்தலையார் வெளியே போயிருந்தார். சேட்சென்னி அதனை நன்குணர்க் தான். அவர் சென்ற சிறிது 5ேரத்திற்கெல்லாம் தன் கொடிய நண்பர்களை யழைத்துத் தம்பியின் புதல்வனைக் கொல்லத் தக்க சூழ்ச்சி யாதென வினவினன், அக்கொடியோர்கள் அவனிருக்கு மாளிகையில் தீயிடுதலே தகுதி யென்றனர். அவனும் அக் கயவர் மொழிக் கிணங்கினன். அத்தோ! அக்கொடியோன் 15ண்பர் அனைவரும் குழுமி, கருணை சற்றின்றி இரும்பிடர்த்தலையாரின் மருகனும் தங்கையும் இருந்த மாளிகையில் தீயிட்டனர். தீயும் 5ாற்புறமும் சுற்றிப் பரந் தெரியலாயிற்ற். இளஞ்சேட்சென் னியின் மனைவி செய்வது இன்னதென்றறியாது திகைத்து அங்கு மிங்குமோடி அலமந்து எங்கும் உய்வழிகாணுது ஏங்கித் தரையில் வீழ்ந்து மூர்ச்சையுற்றனள், கொடிய தீ அவளைச் சூழ்ந்து பற்றி எரித்தது. மைந்தனே அங்குமிங்கும் ஓடி அலம்ந்து தீயின் வெப்பம் தாக்குரு விடங்களை அடைந்து மெய் விதிர்த்துக் கண்ணிர் பெருக்கித் திகைப்புற்று நின்றனன். மாளிகையைத் தீயும் இலங்கை நகரை எரித்ததுபோலவும், காண்டவ வனத்தை

இளைஞன் இடுக்கண் 5
எரித்தது போலவும் கடுகி வளர்ந்து எரிக்கலா யிற்று. திக்கற்றவர்கட்குத் தெய்வமே துணை
யன்ருே ? அங்கிலையில் வெளியே சென்றிருந்த இரும்பிடர்த்தலையார் அங்கு வந்தனர். மாளிகை
தீப்பற்றி இருத்தலைக்கண்டு மருள் கொண்டனர்;
தங்கை என்னுயினளோ, மருகன் என்னுயினனே
என்று மயங்கி நின்றனர்; பரபரப்புடன் மாளி
கையில் பல்வேறிடங்களிலும் புகுந்து பார்த்தனர்;
ஓரிடத்தே தன் மருகன் உய்வகை காணுது ஏங்
கித் திகைத்து கிற்றலைக் கண்டார்; அவனது
மதி முகம் வாடிய முளரிபோல் வதங்கியிருப்ப
தைக் கண்டு துக்கமேலிட்டால் ஓ’ வென்று
அலறினர்; முன் னின்ற தீ விரைந்து தழல் விட்
டெரிதலையும் 5ோக்காது, தம் ஆருயிரையும் கரு
தாது தீக்குளிப்பார்போல எரியுங் தழலுட் புகுக்
தார். விரைந்து தழலுட் புகுந்த இரும்பிடர்த்
தலையார் இமைக்குமுன் மருகனே யடைந்து, ஆக
முறத் தழுவி யணைத்தெடுத்துக்கொண்டு வேக முற வெளிப்பட்டு வந்தார். வருங்கால் மருகனின்
கால்களில் தழல்பட்டுப் புண்ணுயிற்று. இரும் பிடர்த்தலையார் சிறுபுண்ணே ஆற்றிக்கொள்ள லாம் என்னும் பெருக் துணிவால் உயிர் காப்ப தொன்றையே ஒரு பெருங் கருத்தாகக்கொண்டு மருகனைத் தூக்கி மார்போடணைத்துக்கொண்டு தழலிடைப் புகுந்து வெளியே வந்தார்.
காலம் கொடியது. தீவினை விளையும் காலம் வரின் துன்பங்கள் ஒன்றின் மேல் ஒன்ருகத் தொடர்ந்து வருவது உண்மையே யன்ருே ? மற்

Page 12
16 திருமாவளவன்
நூறும் ஊழ்வினையினல் உறும் தீங்கை யாவரே தடுக்க வல்லார் ? அதனை அறிவார்தாம் யார்? விதியினுல் விளையும் விளைவை யார் அறிவார்? என்றும், விலக்கரிதாய விதியினல் விளையும் விளைவை யார் அறிவார்?’ என்றும், செயற்கை வெவ்வேறு ஆய காள் அவ்விதியை வெல்லும் வகையை யார் வல்லாரே " என்றும், ஊழ்விக்ன உறுத்து வந்தூட்டும்’ என்பதும் உலகில் உண ராதார் யாரே ? சேட்சென்னியின் பகைவர்கள் மாளிகையின் மதிற்புறத்தே யாரேனும் தப்பிப் பிழைத்து வருவரோ வருவாராயின் கொல்லு வேம்’ எனக் கருதி மறைந்து ஒளித்திருந்தனர். அவர்கள் அவ்வாறு மறைந்திருத்தலே இரும் பிடர்த்தலையார் எங்ங்னம் அறிவர் 1 அக்தோ ! தீக்குத் தப்பிப் பிழைத்தோமென்று அகமிக மகிழ்ந்து அரும்பெறல் மருகனே அணேத்துக் கொண்டு விரைக்தோடிச் செல்லும் இரும்பிடர்த் தலையாரை வெறுந்தடியர் தடுத்தும் பிடித்துக் கொண்டனர். அவர்கள் அம்மைந்தனைப் பெறு தற் பொருட்டு அவரோடு பெரிதும் மலைந்தனர். இரும்பிடர்த்தலையார் தம்மால் இயன்றமட்டும் நல்லுரை பகர்ந்து உடல்வலிகொண்டு தடுத்தும் மருகனைக் காக்க முயன்றனர். என் செய்யினும் என்னே 1 கல்லாதவரிடத்து இவர் கல்லுரை என் பயன் தரும் ! இவரோ ஒருவர் பகை வரோ பலர். கள்ளத்தன்மை பொருந்திய பகை வரிடத்து இவர் மனக்கனிவு காண்பது எவ்வாறு ?
டர்களான அவர்கள் இவரோடு மலைந்து மைக் தனைப் பறித்து ஈர்த்துக்கொண்டு மறைந்து

இளைஞன் இடுக்கண் 17
சென்றனர். இரும்பிடர்த்தலையார் ஏக்கங்கொண்டு கன்று பிரி காராவின் துயரனைய ' துயரினைத் தாங்கி, மணியிழந்த நாகம்போல் மனமொடிந்து செயலழிந்து கண்களில் நீர்வாரக் கவலையுற்றிருக் தனர். இப்பால், பகைவர் இளஞ் சிறு மைந்த ஞன இளஞ்சேட்சென்னியின் புதல்வனைக் கண்டு புதல்வனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் சென்று சேட்சென்னியின் முன் விட்டனர். கதியற்றுத் தன் முன்னிற்கும் தம்பியின் புதல்வனைக் கண்டு சிறிதும் இரக்கங் கொள்ளாணுய்ச் சேட்சென்னி அவனைச் சிறையிலிடுமாறு ஏவலாளர்கட்குக் கட்டளை யிட்டனன். தன் சூழ்ச்சியை முற்று வித்துக் கொடுத்த 5ண்பர்களுக்குச் சேட்சென்னி பொன்னும் மணியும் துகிலும் பட்டும் வேண்டிய அளவு வரையாது கொடுத்து விருந்தும் இட்டான். இளஞ்சேட்சென்னியின் புதல்வன் சிறையிடப் பட்ட பின்னரே சேட்சென்னியின் மனம் சாந்த மடைந்தது.
சிறையிலிடப்பட்ட சிறுவனே தனக்கு 5ேர்ந்த இன்னலை கினைந்து நினைந்து வருந்தினன். தன் தாய் தீக்கிரையானதை யுன் னி ஏங்கிப் புலம்பினன். தன்மீது பொய்யன்பு காட்டிப் பெருங் துன்பத்திற் புகுத்திய சேட்சென்னியின் கொடிய செயலை யுன்னி 1ை5ந்தான். தம்முயிர்க் குறுதி எண்ணுது தழலிற் புகுந்து தன்னைத் தப்புவித்த தாயின் தமையனுரான இரும்பிடர்த்தலையாரை எண்ணி ஏங்கினன். சிறைப்பட்ட தான் எவ்வாறு தப்புவது என்பதை அறிந்துகொள்ள வியலாது அறிவு

Page 13
18 திருமாவளவன்
மயங்கி ஏங்கிக் கலங்கினன். தீயினுற்பட்ட புண் னின் வருத்தத்தைத் தாங்கின்ை. 5ாட்கள் சில சென்றன. உண்ண உணவும், பருகத் தண்ணிரும், படுக்கப் பாயும், உடுக்க உடையும் அவ்வரசிளங் குமரனுக்குத் தகுந்த முறையில் அகப்படவிலலை. சாளரத்தின் வழியே கோக்குங்காலத்துத் தன்னே யொத்த இளஞ் சிருர்கள் தெருவில் விளையாடு தலைக் கண்டு அழுங்குவான். ஒவ்வொரு சமயங் களில் அவன் தனக்குற்ற பொல்லாங்கையெல்லாம் எண்ணி எண்ணி அழுவான். இவ்வாறு சிறைச் சா?லயில் அவன் பட்ட கஷ்டங்கள் பல. சிறைக் காவலருட் சிலர் அவனிடத்தே அனுதாபம் காட் டினர். சிலர் ஆதரவும் அளித்தனர். விதி வலியா லல்லலுற் றழுங்கிச் சோரும் அரசிளங் குமரனுக்கு அன்னர் அன்பும் அனுதாபமும் காட்டியது புத் துயிர் அளித்ததெனலாம். அலைகடலிடையே கல முடைந்து ரிேல் மூழ்கி அலமந்து திகைக்கும் ஒருவனுக்கு ஒரு பற்றுக்கோடு வாய்த்தாற்போல அரசிளங்குமரன் அவர்கள் காட்டிய அனுதாபத் தால் தான் ஒருவாறு தனக்குற்ற இடுக்கண்களி னின்றும் தப்பிப் பிழைக்கலாமென எண்ணங் கொண்டனன். அக்காவலாளர்கள் 15ாட்கள் செல் லச் செல்ல அவனிடத்து அன்புமிக்குடையோர்க ளாகி உணவுப் பொருள்களும் கொடுத்து அவ னேடு அளவளாவுவாராயினர். அரசிளங் குமரன் அவ்வவ்வமயங்களில் அவர்களோடு ஏற்றமுறை யில் உரையாடி இரும்பைக் காந்தம் இழுக்கு மாப்போல அவர்கள் மனத்தைத் தன் பால் இழுத் துக் கொண்டான். சின்னஞ்சிறு சிறுவன் சிறை

இளேஞன் இடுக்கண் 19
யாக்கப்பட்டு வருந்துதலை யாவரே கண்டு இன் புற்றிருப்பர்! காவலாளிகள் அவனிடம் மிக்க அன்புடையராய் இருந்தாரேனும் அவர்கள் அவ ணேச் சிறைவிடுத்தனுப்ப வல்லராவரோ? அர சிளங்குமரன் அவர்கள் மனநிலையறிந்து பொருங் தப் பழகி அவர்களைத் தன் வசப்படுத்திக்கொண் டான் ஒருவற்கு இன்பமும் துன்பமும் இவ் வுலகில் நெடுநாள் நிலைத்திராதனவன் ருே ? கல்வி யறிவில்லா மூடரே இன்பம் வந்துற்றகால பெரி தும் களித்தும், அல்லல் வந்துற்றகாலை அழுங்கி யும் கெஞ்சு புண்ணுவர். மதிநலமிக்குடைய மன் னன் மகன் அறிவுடையார் செயல்போல இடுக் கணினின்றும் நீங்கி வெளியேறுதற்கு அற்றம் கோக்கியிருந்தனன் ,

Page 14
3. சிறை வெளிப்பாடு
சிறையகப்பட்ட செல்வனைக் கண்டு தேற் றியும் அவன் சிறைமீட்சிக்குரிய துறைகளை நாடி அறிந்துழைத்தும் நன்மை புரிதற் கெண்ணிய 15ற்றமிழ் காவலராகிய இரும்பிடர்த்தலையார் சேட் சென் னியிடத்திற்குச் சென்று 16யத்திலும் பயத் திலும் 15ல்லுரை புகன்றனர். சேட்சென்னி இரும் பிடர்த்தலையாரின் மொழிகளைச் சிறிதும் செவி சாய்த்துக் கேட்டிலன். அதனையறிந்த புலவர் பெரிதும் வருக்தி அம்முயற்சி வீணுனதென்று விடுத்தனர். பின்னர் ஒரு5ாள் அவர் தம் மருக னைச் சிறைச்சாலையில் ஒருவருங் காணு நிலையிற் சென்று காண விழைந்தனர். அவ்வாறே ஒரு 15ாள் மாலைப்பொழுது ஒருவருங் காணு வகையிற் சிறைச்சாலைக்குட் சென்ற மருகனைக் கண்டனர். அறிவும், ஆற்றலும், அழகும், அஞ்சாங்லேயும் பொருந்தப்பெற்ற அவ்விளங்குமரன் இன்னல் வந்துற்றதே என்று ஏக்கமுரு து, ஊக்கமும் உழைப்புங் கொண்டு தீடள்ளத்துணர்ச்சியை முகத் திற் காட்டி ஒப்பற்ற ஆண்சிங்கத்தைப்போல் நிற்பதை இரும்பிடர்த்தலையார் கண்டனர். அப் பொழுதே அவர் மனம் களிப்படைந்தது ; மரு கன இறுகத் தழுவிக்கொண்டார் ; இன் சொல் பல இயம்பினர்; அவனுக்குப் புத்துயிர் அளிக் கும் பொன்வார்த்தைகளைப் புகன் ருர்; அவனல் அச் சிறைக் காவலாளிகள் அவனிடம் ஒழுகும் நிலையை அறிந்துகொண்டார். அன்றுமுதல் அவர்

சிறை வெளிப்பாடு 21
தினக்தோறும் சிறைக்கூடத்திற்குச் சென்று தன் மருகனைக் கண்டார். அரசிளங் குமரனுக்குச் சிறைக்கூடமே பல கலை கற்கும் பள்ளிக்கூட மாய்த் துலங்கிற்று. இரும்பிடர்த்தலையார் அவ னுக்குப் பல கலைகளையும் அச் சிறைக்கூடத்தி லேயே போதித்தார். வாள் பயிற்சி, வில் பயிற்சி முதலியவைகளும் அங்கேயே அவன் கறருன். சிங்கக் குருளையைப்போல் விளங்கிய அச்சிறுவன் 15ாட்கள் செல்லச் செல்ல அறிவும் ஆற்றலும் மிக்குடையோனகி உரமும் பெற்று அஞ்சா கெஞ் சும் துணிவும் அகத்திற் கொண்டான். சேட் சென்னி இழைத்த இன்னல்களை எண்ணுங்தோ றும் அக் கொடியோனிடம் அருவருப்பும் அடங் காச் சினமும் கொண்டான். அன்னை தீக்கிரை யானதை நினைக்குங்தோறும் நினைக்குங்தோறும் அழலிடை யிட்ட மெழுகென அகங்குழைந்தனன். அரிய மாதுலரான இரும்பிடர்த்தலையார் அழலி னின்றும் காப்பாற்றிய திறத்தை நினைந்து நினேந்து உருகினன். காவலாளிகள் தன் பால் வைத்த கரு ணையை எண்ணி எண்ணிப் போற்றினன். தனக் கும் ஒரு கன்னுள் உண்டு என்பதையும் விளைவன யாவும் கன் மைக்கே என்பதையும் ஒப்புயர்வற்ற அவன் மனம் உணராதிருக்கவில்லை. அவ்விளஞ் சிங்கம் அச் சிறைச்சாலேயினின்றும் தப்புதற்கு அற்றம் நோக்கி அமைதியுட னிருந்தனன்.
சீரிளங்குமரன் சிறைச்சாலையிலும் செம்மை யுற்றத் திகழ்வதைச் சேட்சென்னி வெறுத்தான். அவ்விள்ங் குமரன் உயிரோடிருக்கும்வரை தனக்

Page 15
22 திருமாவளவன்
கும் தன் மைந்தர்களுக்கும் அரசு நிலைத்திடா தென்பதையும் இன்னலும் பழியும் எய்துமென் பதையும் அவன் உணர்ந்தான். ஆதலால் எவ் வகையிலேனும் அவ்விளங்குமரனைக் கொன்று விடுதலே தக்கதென்று அவன் கருதினன். ஆணுல் அவனைக் கொன்றிட்டால் காட்டோர் வெறுப்பரே என்னும் 5டுக்கம் அவனைப் பற்றியது. 15ாட்டோர் தன் னே இகழ்ந்துரையா வகையில் தன் கருத்தை முற்றுவித்துக் கொள்ளக் கண்ணுங் கருத்துமா யிருந்தான். அவன் தன் கொடிய தோழர்களோடு தீர ஆலோசித்து அவ்விளங் குமரனைக் கொன்று விடுதலே தகுதி என்னும் ஒரு முடிபுக்கு வந்தான். அதனை எவ்வாருே அறிந்து கொண்ட இளஞ்சேட் சென்னியின் புதல்வன் மனத்தை ஒருநிலைப் படுத்தி உறுதிசெய்துகொண்டு அற்றை5ாள் மாலைப்பொழுதிற் சிறைச்சாலைக் கதவங்களைப் புடைத்துத் திறந்துகொண்டு இளஞ்சிங்கம் கூட்டி னின்றும் புறப்பட்டாற்போல வெளிக் கிளம்பி ஞன். அப்பொழுது அங்குக் காவல்செய்துகொண் டிருந்த காவலாளர் நீண்ட கூரிய கைவாளுடனே எதிர்த்துவரச் சிங்கக் குருளை அன்னன் சீறி எழுந்து, அவர்கள் வாளேக் கையாற் பற்றிப் பிடுங்கிக்கொண்டு அவர்கள் தலைகளை வெட்டி உருட்டித் தப்பித்துக்கொண்டு விரைந்தோடினன், ஆண்டிருந்த சிறைக் காவலர் சில்லோர் அவ் விளஞ் சீயத்தின் வீராவேசத்தைக் கண்டு மதி மயங்கி, அறிவழிந்து, உணர்வற்றுச் செயலற்று நின்றனர். அரண்மனையெங்கும் பரபரப்புண்டா யிற்று. காவலாளர் சில்லோர் விரைந்து சென்று

சிறை வெளிப்பாடு 23
அரண்மனையுட் புகுந்து சேட்சென் னியை அணு கிப் பணிந்து கடந்தவை கவின்று மெய் நடுக் குற்று நின்றனர். சேட்சென்னி, தம்பியின் புதல் வன் சிறையினின்றும் தப்பினன் எனக் கேட்ட லும் பெருந்துயருற்ருன், தான் எண்ணிய எண் ணம் வீணுகிக் கழிந்ததை உன்னி உன் னி வருக் தினன். யாது விளையுமோ என்று ஏங்கினன் ; அச்சம் அவன் மனதிற் குடிகொண்டது; முறை தவிர் கொடுங்கோல் மன்னனும் சேட் சென்னி பலப்பல எண்ணினன். தப்பிச்சென்ற சிறுவன் தனக்கும் தன் மைந்தர்கட்கும் எத்தகைய தீங்கை விளைவிப்பாணுே என்று ஏக்கங்கொண்டு மனஞ் சாம்பினன். அச்சிறுவன் மாதுலனுலேயே விடு பட்டிருத்தல் வேண்டுமெனத் தோற்றியது. என் செய்வான் ? காவலர்மீது, எரிக் து வீழ்ந்தான்.
அந்தோ ! அங்கிலையில் அவன் மனம் பட்ட பாட்டை ஏட்டில் எழுத இயலுமோ. அவன் ஏவலாளர்களைக் கூவி, ! 5ாட்டில் எவ்விடத்தில்
அச்சிறுவன் இருப்பினும் அன்னனைப் பிடித்து வருக எனக் கட்டளையிட்டனன். கணக்கிலடங் காக் காவலாளர் பல்லோர் காவலன் கட்டளை யைக் கடிது மேற்கொண்டு காடும் மலையும் கடந்து சென்று தேடினர். சிற்றுார்களிலும் பேரூர்களிலும் புகுந்து தேடினர். வீடுகள்தோ றும் நுழைந்து பார்த்தனர். எங்குக் தேடியும் அச்சிறுவனக் கண்டாரில்லை. அரசன் கோபத் திற்கஞ்சிய அவர்கள் பல்வேறு இடங்களிலும் பரந்து சென்று தேடியும் பார்த்திபன் புதல்வ னைப் பார்த்தாரில்லை. முடிவில் அவர்கள் அரசனை

Page 16
24 திருமாவளவன்
யடைந்து, மன்னவ, பல் வேறிடங்களில் காங்கள் பல நாட்களாய்த் தேடிப் பார்த்தோம். அச் சி வன் எங்கும் காணப்படவில்லை, எங்கள் கட்புல னுக் கிலக்காகுவானெனில் அவனைக் கொன்று கொணர்ந்திருப்போம் அல்லேமோ ? அவன் என்ன மாயம் செய்து எங்குச் சென்று ஒளித்தனனே அறியேம். இனி அவனைக் கண்டேமாயின் அவனே எங்கள் வாட்கு இரையாக்காது விடேம். அவனும் ஆருயிர் தாங்கி நிற்றல் அருமையினும் அருமை. என்ன ! சீயம் போற் சீறி எழுந்து” கட்புலம் கதுவாது விட்புலம் போய விஞ்சையனே அவன்! காவல, எங்காளிலேனும் அவன் எங்கள் கண்க ளில் காணுதிரான் ; காணுவேமாயின் அவன் உயிரை உண்ணுதிரேம்' எனக் குளறிக் கூறி நின்றனர். அரசன் மனமிகவுடைந்து செயலற்று அரியணையிற் சாய்ந்தான். அவன் மனத்திற் பலப் பல எண்ணங்கள் தோன்றின. இரும்பிடர்த்தலை யாரே தம் மதிவன்மையால் அவனைச் சிறைமீட்டு காட்டைக் கடத்திக்கொண்டு சென்றிருக்கவேண்டு மென்று சேட்சென்னி நினைத்தான். சில ஆண்டு கட்குப் பின் வருதலும் கூடுமென்றும், வந்தால் தன்னையும் தன் குலத்தையும் கருவேரறத்திடுவா னென்றும் அவன் கருதினன். அப்பொழுது அவனுடைய மனம் பட்டபாடு என்னவென் றியம்புவது! அச்சம் அவனிடத்திற் குடிகொண் டது. அவன் 5ெஞ்சு 15டுக்குற்றது. அவன் நிலை குலைந்தான். எண்ணுது எண்ணி ஏங்கினன். அவன் மனமும் மதியுங் கலங்கின. அறிவிழந்து பலவாறு பிதற்றிக்கொண்டு தன் உள்ளக் கருத்தை

சிறை வெளிப்பாடு 25
முகத்திற் றேக்கி வெருண்டு நின்ற வேந்தன் நிலை ய்ைக் கண்ட காவலாளர் விரைந்து அகன்றனர்.
இரும்பிடர்த்தலையார் அன்றே மருகன் சிறைச் சாலையினின்றும் தப்பியோடினன் என்று கேள் விப்பட்டு மன மகிழ்ந்தனர். அற்றைத்தினமே அவர் அவ்வூரை விடுத்து அழுந்தூரடைந்தார். அடைந்தாரேனும் அவர் மருகன் யாண்டுறை கின்றனனே என்று அறிய ஆவலுற்றவராய் அம்முயற்சியிற் கண்ணுங் கருத்துமா யிருந்தார். மருகனுக்கு 5ற்காலம் பிறந்துள்ளதை யறிந்து நகை கொண்டார். அறிவாற்றலாற் சிறந்தோன் ஆதலின் மருகன் சேட்சென்னிக்கு இனி அகப் படான் என நினைந்து அகம் மகிழ்ந்தார்.

Page 17
4. களிறு கொணர்ந்த காவலன்
இளஞ்சேட்சென்னியின் அரும் புதல்வன் தன் சிறு தகப்பனம் பல்வகைத் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுச் சிறைப்பட்டானென்றும, அவன் தாய் எரிமூட்டப்பட்ட மாளிகையிலிருந்து தீக்கிரையானுள் என்றும், சிறைப்பட்ட சிறுவன் தப்பியோ டினுனென்றும் அவனைக் கொல்லுதற் குச் சேட்சென்னி பல்வகையிலும் முயன்று வந்தானென்றும் 15கர மக்கள் கன்குணர்ந்தனர். இச்செய்தி சில நாட்களில் 5ாடெங்கும் பரவிற்று. காட்டில் எங்கும் மக்கள் குழுமிக் குழுமி இத னைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். சேட் சென் னியின் மனநிலை மாறுதலடையாது நாளும் 15ாளும் வலிமைபெற்று வருதலை உணர்ந்த தகர மக்கள் அவன் பால் வெறுப்புக்கொண்டனர். சேட் சென் னியைப்பற்றித் தூற்றிக் கூருதார் அங்காட் "டில் ஒருவருமில்லை. இளஞ்சேட்சென்னியின் புதல்வனுக்கள் க அங்காட்டில் வருந்தாதாருமில்லை. சேட்சென்னியோ பல்லாற்ருனும் முயன்று பார்த் தும் தன் எண்ணம் நிறைவேருது ஒழிந்தமை யைக் குறித்துச் சால வருந்தினன். அவன் மனம் கவலை என்னும் கேர்யாற் பீடிக்கப்பட்டு அல்ல லுற்று அழுங்கியது. அக்தோ! கவலைக்குட்பட்ட மன்னன் நாளடைவில் மன5ோய் மிகுந்து வருக் தினன். மன்னனுக்குற்ற மனநோய் நாளடைவில் முதிர்ந்து அவன் மரணத்திற்குக் காரணமாயிற்று. சேட்சென்னி சின்னுளில் மாண்டொழிந்தான்.

களிறு கெர்ணர்ர்த காவலன் 27
அங்காட்டு மக்களனைவரும் அவன் ஒழிக்தது குறித்துக் களித்தாரேயன்றி வருந்தினரில்லை. அங்தோ! 'தாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்' என்னும் முதுமொழிக் கிணங்க மன் னன் தன் எண்ணம் நிறைவுருது மனநோய் கொண்டு மண்ணுலகை நீத்துப் பொன்னுலகு புக்கான், உலகில் தீமை கருதுவோர் எங்காளும் இன்பமுருர் என்பது அவனிடத்து நன்கு விளங் குவதாயிற்று.
சேட்சென்னியின் புதல்வர் ஒன்பதின் மரும் தம்முள் தாம் பகைத்தெழுந்து அரசாட்சியைப் பெறுவதற்காகப் போர் புரிவாராயினர் அம் மைந்தர்கள் ஒருவரிடத்திலேனும் சீர்பெறு செக் தமிழ்ச் சோழகன்னட்டை அரசுபுரியும் ஆறறல் அமைந்திலது. அத்தகைமையைக் குடிமக்களும் குன்குணர்ந்திருந்தனர். ஆதலின் அவர்கள் எவ் வாற்ருனும் அம்மைக்தர்கள் அரசெய்யாதிருத்தலை விழைந்தனர். சோழ 15ன்னுட்டுப் பெரியோர் பலரும் பல் நல்லுரைகளை எடுத்துப் புகன்றும் அம் மைந்தர் கேட்டாரல்லர். ஆதலின் நாட்டிற் குழப்பம் தோன்றிற்று. உள்நாட்டுக் கலகங்களும் பல எழுந்தன. அவற்றை யடக்கி 15ாட்டை கன் னிலைப்படுத்தும்பொருட்டு விழைந்த பெரியோர் பலரும் அரசன் ஒருவனே த் தேர்ந்தெடுத்தல் அவ சியம் என்னும் முடிவுக்கு வந்தனர். சேட்சென்னி யின் புதல்வர் ஒன பதின்மரும் தம்முள் தாம் சச்சரவிட்டுக்கொண்டிருந்ததால் ஒருவரும் அர செய்தும் தகைமை பெற்றிலர். ஆதலால் அக்

Page 18
28 திருமாவளவன்
காலத்து வழக்கமேபோலப் பட்டத்து யானையை விடுத்து அரசுரிமை எய்தும் திருவுடையாரை அவ் யானை தூக்கிக் கொண்டுவர ஏற்றுக் கொள்வ தெனும் முடிவுக்கு வந்தனர். பின அனைவரும் ஒருங்கு கூடிக் கழுமலம் என்னும் சீர்காழிப் பதியின் கண்ணே பிணித்து நின்ற களிற்றினே க் கட்டவிழ்த்துப் பிடித்துவந்து, அதனை ரோட்டி அழகுபடுத்தி மலர்த்தொடையல் ஒன்றை அதன் கையிற் கொடுத்து அரசனேத் தேர்ந்தெடுத்து வருமாறு கன்னுளிற் கடவுளேத் தொழுது விடுத் தனர். இது நிற்க,
அழுந்தூரில் அமர்ந்திருந்த இரும்பிடர்த்தலே யார் சோழகன்னட்டிற் குழப்பங்களும், உட்கல கங்களும் மலிந்திருப்பதை யறிந்து மகிழ்ந்தார். சேட்சென் னியின் புதல்வர் ஒன்பதின் மரும் தம் முட் டாம் பகைத்தெழுவதை யறிந்து அவ் வொன்பதின்மரும் அரசெய்துதற்கு உரியாரல்ல ரென்று புலவர் மனத்தில் உறுதிகொண்டார். சோழநாட்டில் கன் முதுமக்கள் கானிலம் போற் றும் குலம்பெறு மன்னனே 5ாடியறிவதில் கழுவார் என்னும் உறுதியும் புலவர்கொண்டனர். ஆதலின், தன் மருகன் எந்நிலையினும் சோழ5ன்னுட்டு அரசுரிமையை எய்துவான் என்னும் திண்ணிய எண்ணம் புலவர் மனத்தில் தோன்றியது அன் ஞன் யாண்டுளன் என்பதை அறிந்து கொள்ள விழைந்த புலவர்பெருந்தகை , தம் கண்பர் பல ரையும் உசாவி, மருகன் கரூவூர்த் தொல்பதிக்கண் சென்றுளான் என்று அறிக் துகொண்டனர்.

களிறு கொணர்ந்த காவலன் 29
சிறையினின்றும் தப்பிப்பிழைத்த செம்மல், சோழகன்னுட்டு உறையூரினும் பிற ஊர்களினும் தன்னை ஒருவரும் அறிந்துகொள்ளாவகை உருக் க்ரந்து சுற்றித் திரிந்தனன். தான் அங்காட்டில் உள்ளவரை தனக்கேதம் ஏற்படும் என உணர்ந்து சீருடைச் செம்மல் சோழகன்னட்டைக் கடந்து சேரநாட்டின் தலைநகராய கருவூர்த் தொல்பதியை யடைந்தான். அங்குச் சின்னுள் வரை தன் னே ஒருவரும் அறிந்துகொள்ளா வகையில் உருமாறித் திரிக் து வந்தனன். அரசகுடும்பத்திற் பிறந்தும் இளமைப் பருவத்தில் தாங்குதற்கரிய பேரின் னல்க ளேப் பொறுத்துத் தாங்கித் தன்னை இன்னன் இனியன் என வெளிப்படுத்தாது கரந்துறையும் கள்ள வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகிய இளஞ்சேட்சென்னியின் அரும் புதல்வன் நிலையை, நினைக்குந்தோறும் நினைக்குக்தோறும் உலகில் மக்கட்கு எங்கிலையினும் துன்பமுண்டாக்கித் தாழ் நிலையுறச் செய்யும் தகைமை பெற்றது ஊழ்வினை என்பது உணர்தற்பாற்றன்ருே ? கருவூரின்கண் தன் மருகன் உளளான் என்பதையறிந்த இரும் பிடர்த்தலையார், கருவூர்த் தொல்பதிக்கண் தமக் கினியராய்ப் பொருந்தி வாழும் பெரியார் பலர்க்கு ஒலைகள் போக்கி, அம் மைந்தனை ஒருவரும் அறியாவகையிற் பாதுகாத்து வருமாறு வேண் டிக்கொண்டனர். இரும்பிடர்த்தலையாரின் ஒலை கண்ட கருவூர்ப் பழம்பதிக்கண் உறையும் பெரி யார் பலரும் தத்தம் இல்லங்கட்கு இளஞ்சேட் சென்னியின் புதல்வனை அழைத்துக்கொண்டு சென்று ஊண் உடை உவக்க அளித்துப் போற்றி

Page 19
3C திருமாவளவன்
வருவாராயினர். இரும்பிடர்த்தலையார் தன் மருக னுக்கு எங்கிலையாயினும் சோழகன் ஞட்டின் அரசை அளித்திட எண்ணிப் பல்வேறு உபா யங்களையும் 15ாடுவாரா ஞர். புலவர் சோழகாட்டில் நிகழ்வுற்ற செய்திகள் யாவற்றையும் கன்குணர்ந்து கொண்டு மருகனுக்கு அரசாட்சியை அடைவிக் குங் காலம் அதுவே என உணர்ந்து அதற்குரிய முயற்சியிற் குன் ருது பாண்டிய5ாடு கோக்கிப் பிரயாணமானுர்.
தேனினும் இனிய தமிழ்மொழி வளர்ந்த செங் தமிழ்ப் பாண்டிகன் ஞட்டில் அங்காள் தீது தீர் மதுரையைத் தலை5கராகக்கொண்டு அரசாட்சி புரிந்த சீர்பெறு பாண்டியன் சினங்கெழு கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதி. அன்னன் ஆற்றலும் அறிவும் ஏற்றமும் பொருந்தப் பெற்றவன், படை வலி மிகுத் துப் பகைவரைக் கெடுத்துப் பண்புடை 5ெறியிற் பாண்டி கன்னுட்டைப் பாங்குறவாண்ட பாண்டியர் பல்லோருள் ஓங்கிய சிறப்புடைப் பெரும் பெயர் வழுதியும் ஒருவனவன். அன்னுன் வாளேந்திய கையினை யுடையணுய் யானே எருத் தத் தமர்ந்து, 5ாகம்போற் சீறிப், புலிபோற் பாய்ந்து, போர்க்களம் குறுகிப், பகைவரைத் தாக்குவனேல் அன்னன் வாட்கு இரையாகாத பகைவரும் உளராவரோ? அன்னன் வீரப்பொலி வுடைத் தோற்றமே பகைவரை மலங்கச்செய்து புறங்காட்டி யோடும்படி செய்யுமெனின், அவன் அமர்க்களம் புகுந்து போர் புரிதலும் வேண்டுமோ? அன்னேன் மிகு வலி படைத்திருக்தான் எனி

களிறு கொணர்ந்த காவலன் 31
னும் அற1ெ5றியிற் சிறிதும் வழுவுற்றிலன் . தன் னுயிர்போல் மன்னுயிரைப் பாவிக்கும் தகைமை வாய்ந்த பேரருளாளன் அவன். அவன் குடி யோம்பிக் கொள்ளுமா கொண்டு, கோனெறி கோடாது அரசாட்சி புரிந்து வந்தனன்.
இரும்பிடர்த்தலையார் பாண்டியன் சிறப்பைப் பாங்குற உணர்ந்திருந்தார். அன்னர் அவனது தமிழ்ப் பற்றையும், தமிழ்ப்புல்வரிடத்து வைத் திருந்த அன்பின் பெருமையையும், வள்ளன்மை யையும், சொன்னசொல் தவருமையையும், உறு திப்பாட்டையும் 15ன்குணர்ந்திருந்தார். ஆதலின் அவர் அப்பாண்டியனிடத்து நெடுங்காலமாக கட்புக்கிழமை பூண்டொழுகினர். பாண்டியன் அழுந்தூர்ப் புலவரான இரும்பிடர்த்தலையாரை அடிக்கடி கண்டு அளவளாவி இன்புற்றிருப்பான். அவரைக் காணுவிடிற் பாண்டியன் ஏங்குவான். இரும்பிடர்த்தலையாரோ பாண்டியனைப் பன் முறையும் சென்று கண்டு கல்லறிவுறுத்தி வரு வார். இரும்பிடர்த்தலையாரிடத்துப் பாண்டியன் அச்சமும் பெருமதிப்பும் அகத்தேகொண்டிருந்த னன். ஆதலால் இரும்பிடர்த்தலையார் பாண்டியன் தனக்குப் பல்லாற்ருலும் உதவுவான் என்னும் கம்பிக்கை கொண்டிருந்தார்.
சோழநாட்டுக் குழப்பங்களே யுணர்ந்த இரும் பிடர்த்தலையார் பாண்டிகாடு 5ோக்கிப் பயண மானரென்று கூறினேமன் ருே ? அப்பெருந்தகை யார் கன்னித் தண்டமிழ் காட்டுத் தொல்பதி யாம் மதுரைமாநகரமடைந்து அரண்மனைக்குச்

Page 20
32 திருமாவளவன்
சென்று பாண்டியனைக் கண்டனர். பாண்டியன் அவரைத் தீங்தைபோல் தழுவி அன்புடன் வர வேற்றனன். காவலனும் பாவலரும் சிறிது தேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். பின்னர் பாண் டியன் அவர் வந்த காரணம் என்னென்று கேட் டான். புலவர்பெருமான் பாண்டியனை நோக்கி, 'மதிவழி வந்த தொல்குல வேங்தே ! யான் இங்கு வந்திருக்கும் நிலையை நீ ஒருவாறு ஊகித் தறிந்திருத்தலும் கூடும். என் மருகன், சோழன் சேட்சென் னியால் அடைந்த இன்னல்களுக் கள வில்லை. அச்சிறுவன் தாங்கரும் இன்ன லேத் தாங் கிக்கொண்டு கருவூர்ப் பெரும்பதிக்கண் புகுந்து கரந்துறைந்து வருகின்றன். சோழ5ாட்டிற் சேட் சென்னி இறந்தானுக அவன் மைந்தர் ஒன்ப தின் மரும் தம்முள் தாம் மலைந்து அரசெய்துதற் குரியரல்லராய் நிற்கின்ருர், சோழ5ாட்டு மூதறி ஞர் பல்லோரும் சேட்சென்னியின் புதல்வர்க்கு எடுத்துரைத்த கல்லுரைகள் யாவும் பயனில வாயின. ஆதலால் அப்பெரியோர்கள் அனைவரும் ஒருங்குகூடி அரசெய்ததற்குரியாரைத் தேர்ங் தெடுத்தல் இன்றியமையாத தென்னும் முடிபிற்கு வந்தனர். பாண்டியனே! எங்கள் காட்டில் நெடுங்காலமாக அனுட்டித்து வரும் பழக்கமொன் றுண்டு; உரைக்கிறேன், கேள். கழுமலம் என் னும் சீர்காழப்பதியில் அரசர் பட்டத்தியான் பிணிக்கப்பட்டு நின்றுள்ளது. அரசெய்து தற்குரி யார் இலராகின் யாரைத் தேர்க்தெடுத்தல் முறை என்று அறியாது அங்காட்டுப் பெரியோர்கள் இகைப்புறுங் காலத்தில் அக்களிற்றை அவிழ்த்து

களிறு கொணர்ந்த காவலன் 33
ரோட்டி அழகுபடுத்தி அதன் புழைக்கையில் பூமாலை ஒன்று கொடுத்துக் கடவுளைத் தொழுது கட்டவிழ்த்து விடுவர். அப்பேரானே 15ாடெங்குஞ் சுற்றித் திரிக் து அரசாட்சி எய்து தற்குத் தகுதி யுடைய 15ல்லூழ் உடையானே காடி யறிந்து, அவன் கழுத்திற் பூமாலையைச் சாத்தி அவனைப் பிடரிமிசைச் சுமந்துகொண்டு விரைந்தோடிவரும். அத்தகையோனே 5ாங்கள் அரியாசனத்தமர்த்தி முடி சூட்டி அரசளுக்குவோம். இத்தகைய வழக் கம் சோழ 15ன்னுட்டிற் பண்டைக்காலத்திலும் இக்காலத்திலும் கடந்து வருவது. பெரும்பெயர் வழுதி! அவ்யானை கூரிய அறிவுடையது. எங் கள் குலத்தாரையன்றி வேறெவரையும் மாலை குட்டி எருத்தத் தேற்றிக்கொண்டு வாராது. அதன் நுண்ணறிவை நீ அறிவையழயின் பெரிய தோர் வியப்புக் கொள் வாய். மன்னவ, இப் பொழுது சோழநாட்டில் அரசெய்து தற்கு உரியார் இலராயினரன்ருே ! அன்னுட்டு முதுமக்கள் சேட்சென்னியின் புதல்வர்களுக்கு அறிவுறுத்திய பொன் மொழிகள் யாவும் அவலமாயின. அப் பெரியோர்கள் கழுமலத்தை யாத்த களிற்றினைக் கட்டவிழ்த்துக் கையிற் பூமாலை கொடுத்து அர சுரிமை எய்துதற்குரியாரை அதன் மூலமாக அறிந்துகொள்ள விரும்பியுள்ளனர். புரவல ! பண்டொருகால் எனக்குவேண்டும் உதவி புரிவ தாக வாக்களித்துள்ளாயன் ருே ? உன் உதவியை 15ாடி அடைதிற்கு எனக்கு 5ற்காலமும் வாய்த்தது. என் மருகன்ை 15ான் என் மைந்தனெனவே போற் றிக் கொள்கிறேன். சோழ காட்டுக் குடிகள்
3

Page 21
34 திருமாவளவன்
விடுக்கும் யான உறுதியாக என் மருகனையே மாலை குட்டி எருத்தத்தேற்றி வரும் என்னும் திண்ணெண்ணம் என் மனத்திற் குடிகொண்டுள் ளது. ஈசன் திருவருளும் வாய்க்குமென்றே கம்பு கின்றேன். ஆதலின் மாறனே, என்னுடன் உறை யூர்ப் பெரும்பதிக் கெழுந்தருளி அவ்விங்தையைக் கண்டு களிப்பாயாக ' என வேண்டிகின்ருர், பாண்டியன் ஒள்வாட்கைப் பெரும்பெயர்வழுதி யும் அதற்கிசைந்தனன். பின் புலவரும் புரவல னும் புறப்பட்டு உறையூரடைந்தனர்.
சோழ5ாட்டுக் குடிமக்கள் கழுமலத்து யாத்த முழுகளிற்றைக் கட்டவிழ்த்து ரோட்டிக் கையில் வேந்தர் குடும் தொடையல் ஒன்றையும் கொடுத் துக் கடவுளை வாழ்த்தி அர செய்துதற்குரியாரை அறிந்து எடுத்து வருமாறு கூறிவிடுத்தனர். அக் களிறு சோழ 15ாடெங்குஞ் சுற்றித் திரிக்த பின் சேரநாட்டுத் தலை5கரான கருவூர்ப் பெரும்பதிக் கண் புகுந்தது. புக்க களிறு அங்ககர்ப் பெரும் வீதியில் பன்முறை கையில் மர்லே தாங்கிக் கம் பீரமாகச் சுற்றிவந்து, ஓரிடத்துக் களைத்து உய் வகை 15ாடி உள்ளத்தாற் பலப்பல சிந்தித்துக் கொண்டிருக்கும் இளஞ்சேட்சென்னியின் புதல் வன யடைந்து நின்றது. அவ் யானையைக் கண்ட இளமைந்தன் துணுக்குற்ருன்; எனினும் அஞ் சினனல்லன். யானே ஒருமுறை அவனே உற்று நோக்கியது. அதன் கையிலிருந்த விழுப்பம் புொருந்திய வேந்தர் குடத் தகுந்த மாஅலயை அவன் கழுத்திற் சூட்டித் தன் புழைநெடுங்கரத்

களிறு கொணர்ந்த காவலன் 35
தாற் பற்றித் தன் எருத்தத்தின் மீது பொற்புற வுமைத்துக்கொண்டு உறையூர் நோக்கிக் கடுகி 15டந்தது. கருவூர்ப் பெருமக்கள் அனைவோரும் அவ்யானையின் பேராற்றலையும் கூரிய அறிவை யும் கண்டு வியந்து நின்றனர். யானை உறை யூர்த் திருககரின் பெரு வீதிகளில் இரும்பிடர்த் தலையாரின் ஒரு பெருமருகனைத் தம் எருத்தத்திற் ருங்கிக்கொண்டு வலம் வந்து அரண்மனையின் பெரு முற்றத்தில் அவனே இறக்கியது. அங்கிலை யைப் பாண்டியனும் இரும்பிடர்த்தலையாரும் கண்டு களிப்பெனுங் கடலுட் படிந்து திளைத்து அவ் யானையின் கூரிய அறிவுடைமையை வியந்து போற்றிக் கடவுளின் திருவருட் செயலை நினைந்து ம்கிழ்ந்தனர். உறையூர்த் தொல்பதி வாழ் மூதறி ஞர்களும் குடிகளும் பெருமகிழ்வுற்றுக் களிறு கொணர்ந்த காவலனை நன்னளில் கன்முகூர்த்தத் தில் அரியணை மீ தமர்த்திப் பெருமுடி கவித்து அரசனுக்கினர். அக்காலையில், தீயினின்றும் தப்பி வந்தபொழுது கெருப்புப் புண்பட்டுக் கரிந்து போகிய காலை அனைவருங் கண்டு அவனைக் கரிகாலன் என அழைப்பாராயினர். சில வட மொழி நூற்கள் அவனே க் கல்மாஷபாதன் என்று கூறுகின்றன. இரும்பிடர்த்தலையார் தம் எண் ணம் கைவரப்பெற்றது கண்டு இன்பக் கடலுள் மூழ்கினர். பல்லோரும் போற்றக் கரிகாலன் களிற்ருற் கொணரப்பட்டுக் கவின் பெறு சோழ கன்னுட்டுக் / காவலனனன். பாண்டியன் மது ரையை அடைந்தான்.

Page 22
5. திருமாவளவன்
இளமைப் பருவத்துப் பிறராற் சுடப்பட்டு உயிர் உய்ந்து போகிய கரிகாலன் மீண்டும் கல்வினை 15லத்தாற் சோழ கன்னுட்டின் பேரரசாட்சியைப் பெற்று இனிது அரசுபுரிந்து வந்தனன். கரிகாலன் ஆண்டில் இளையணுயினும் அறிவில் முதிர்ந்து விளங்கினன். கல்வி அறிவும், நிறைந்த பொறு மையும் அவனிடத்திற் குடிகொண்டிருந்தன. அவன் கல்லோர் பலரையும் தன்னவையிற் கூட்டி அவர்கள் கூறும் கன்மொழிகளைப் பொன்னே போற் போற்றிக் கடைப்பிடித்து ஒழுகி வந்தனன். இரும்பிடர்த்தலையார் எக்காலத்தும் கரிகாலனை . விட்டுச் சிறிதும் பிரிந்திடாது அவனுடனிருந்து ஏற்ற அமயங்களில் கன்னெறிகளைப் போதித்து வந்தனர். அவர் கரிகாற் சோழனே அடுத்திருந்தது அவன் ஆக்கத்திற்கும் பெருமைக்கும் காரணமா யிருந்தது. சேட்சென்னியின் புதல்வர்களோ முன்னிலும் மிகப் பகைமை பாராட்டி வந்தனர். அவர்களுக்கு மனத்தில் அச்சம் தோன்றியது. தந்தை இழைத்த தீங்குகளேயும் தாம் பகைத்து நிற்கும் தகைமையையும் அறிந்துள்ள கரிகாலன் தங்கட்கு என்ன தீங்கிழைப்பானே என்று அஞ்சினர். அதனுல் அவர்கட்கு மனவமைதி உற்றிலது. மற்றும், கரிகாலன் புகழ் 15ாளும் பரவு தலை கோக்கி அமுக்காறு கொண்ட அவர்களுடைய மனம் கரிகாலன் வீழ்ச்சிக்கு உரிய க்ருமங்களை நாடி அறிதலிலேயே முனைந்து நின்றது.

திருமாவளவன் 37
கரிகாலன் இரும்பிடர்த்தலையாரின் பெருங் துணையால் காட்டிற் பல சீர்திருத்தங்களைச் செய் தனன். வழக்கொடு வருவோர் வாய்மொழி கேட்டு நெறியிற் றிறம்பா நேர்மையோடு, அவன் நீதி கூறிவந்தான். குடிமக்கள் அவனுட்சியில் அச்ச மின்றி வாழ்க் து வந்தனர். அவன் செங்கோல் மாட்சியும் கல்லறிவாண்மையும் கானிலமெல்லாம் போற்றுக் தன்மை பெற்றிருந்தன. நீதியிற் றிறம் பல் செல்லாக் கரிகாலன் வழக்குக் கேட்டு உரை முடிபு கூறும் தகுதியினை அங்காட்டுக் குடிமக்க ளனைவரும் நன்கறிந்து மகிழ்ந்திருந்தனர். சுருங் கச் சொல்லின் ஆண்டின் இளையணுய் அறிவில் முதிர்ந்திருந்த கரிகால்வளவன் சோழ நன்னட் டைச் சிறப்புடைவகையால் குடிகட்கு ஐவகை யச்சமும் தோன்ருதபடி நடுவுநிலைமையோடு பரிபாலித்து வந்தான். அவன் 15ாட்டிற் செல்வம் பெருகிற்று. குடி மக்கள் இன் புற்று வாழ்ந்து வந்தனர். அவன் புகழ் எங்கும் பரவியது. அவன் பெருமையைக் கற்ருேரும் மற்ருேரும் புகழ்ந்து பாராட்டினர். மீன் குட்டிக்கு நீச்சம் பழக்குவ தில்லையன்ருே ? குலவித்தை கல்லாமலே வரு மாதலின் சோழன் கரிகாலன் கூரறிவுடைமை யோடு இனிது ஆண்டுவந்தனன். சோழ கன்னடு பொன்னுலகோ எனப் போற்றும் தகைமை பெற்றது. அவனே அனே வரும் திருமாவளவன் எனப் போற்றிக் கூறினர்.
ஒருநாள் நல்லறிவுடைய முதியோர் இருவர் தம்முட் பகைத்தெழுந்த காரணத்தால் வழக் கொடு கரிகாலன் பேரவை நண்ணினர். இருவ

Page 23
38 திருமாவளவன்
ரும் அரியணை மீதமர்ந்திருந்த கரிகாலனைக் கண்டு, * தம் வழக்கைத் தீர்த்து முடிவு கூறுவதற்குரிய அறிவு அவனிடத்தில் இல்லையே, ஆண்டில் இளேயோணுயிற்றே, நாம் கூறும் வழக்கினே ஆய்ந்து காணும் 15ல்லறிவினே அவன் எங்ங்ணம் பெற்றிருப்பான் ' என எண்ணி வருந்தினர். அவர் கள் கருத்தை யறிந்த கரிகாலன் அரியணையினின் றும் இழிந்து விரைந்து அரண்மனைக்குட் புகுந்து சிறிது கேரத்திற்கெல்லாம் 15ரைமுடியும் வெண் மையான தாடியும் ஊன்று கோலுங் கொண்டு கிழ உருப்பட்டு வந்து அரியணை மீதமர்ந்தான். அவனேக் கரிகாலனென வறியாத அவ்விரு முதி யோரும் தம் வழக்கினே கலம்பட உரைத்து வாதாடி நின்றனர். கரிகாலன் இருவர் சொல்லை யும் ஏழுதரம். கேட்டு அவர்கள் சொற்கொண்டே இருவர்களும் ஒப்ப உரைமுடிபு கூறினன. அன் ஞர் அவன் சொல் வன்மையையும், தெளிந்த அறிவின் திறத்தையும், நீதி பாலிக்கும் பெருங் தகைமையையும், கண்டு மகிழ்ந்தனர். திருமா வளவன், , நரைமுதுமக்கள் தன் உரைமுடிபை உவப்புடன் ஏற்றுக்கொண்ட அக்கணமே, நர்ை முடியையும் வெண்தாடியையும் ஊன்றுகோலினே யும் நீக்கி, அரியேறு என்ன அரியாசனத்துப் புன்முறுவல் பூத்து அமர்ந்திருந்தனன். அத்தகை யோனை அரியாசனத்திற் கண்ட அவ்விரு 15ரை முதுமக்களும் கரிகாலனே கரை முது வேடக் தரித்து உரைமுடிபு கூறினன் என வுணர்ந்து தாம் காணுட்கொண்டாராய் ' உருவு கண்டு எள் ளார் அறிவு.ைபோரி' என்றும் முதுமொழிலை

திரு மாவளவன் 39
மறக்து அவமானம் அடைக்தோமே, நம் கருத்த நிந்து முதுமை பூண்டு உரை முடிபு கூறிய உர வோன் திருமாவளவனின் பெருமையை என் னென்று கூறுவது என நைந்தார். அவ்விருவரும் கரிகாலனை நோக்கி, ' சுடர்வழி வந்த பீடுடைத் தோன்றல் ! நின் குலப் பெருமையை என்னென் றியம்புவது 1 மீன்குட்டிக்கு ச்ேசும் புலிக்குட் டிக்குப் பாய்வும் கற்பிப்பார் உலகில் உளரோ ! குலவித்தை கல்லாமற் பாகம்படும் ' என்னும் சான்ருேர் மொழி சாலச் சிறந்ததே ; காவிரி புரக் கும் காடு கிழவோய் ! கின் கொற்றம் கெடுங் காலம் வாழ்வதாகுக. நீ இளைஞனுயினும் நீதி செலுத்தும் வன்மையில் ஒப்புயர்வற்று விளங்கு கின்றன. உன் குலப் புகழனைத்தும் உன் புகழ்க்கு ஈடாமோ ? வளவர் சிகாமணியே எம் அறியா மையை நீக்கி அகந்தையை ஒழித்தாய். நீதி செலுத்தும் திறமை இயற்கையாகவே சோழர் குடியிற் பிறந்தார்க்கு உண்டு என்பதை யறி "வோம். அதனை யாம் அங்கை கெல்லிக்கனி எனக் கண்டனம். சோழர் குலதிலகமே! நின் னைப் போன்ற அரசன் எமக்கு முன்னும் இருந்த தில்லை ; பின்னும் வரப்போவதில்லை. செம்பியர் சியமே 1 அறியாமையால் முன்னம் நின் பெரு மையை யறியாது அவமதித்த எங்களே மன்னிப் பாயாக ' என்று அவனடி வீழ்க் து பணிந்து விடைகொண்டு சென்றனர்.
அரசவையிலிருந்தோரும், இரும்பிடர்த்தலை யாரும், கரிகால்வளவனது கூரிய அறிவு கண்டு aguia Garair strati, ay avair Ly sa ugay

Page 24
40 திருமாவளவன்
தற்கு அஃது ஒரு காரணமாயிற்று. அன்றே அரண்மனையில் கடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அவ் வூரிலுள்ளார்க்கும், அங்காட்டோர்க்கும் தெரிய லாயின. அவன் கூரிய அறிவினைக் கேட்டு அனை வரும் வியந்து புகழ்ந்தனர். சோழர் குடிப் பெருமை அவனுல் நிறுவப்படும் என்று உரைத் தனர் சில்லோர், சோழ 5ாடு செய்த தவப்பேற் ருல் இத்தகைய கல்லரசனைப் பெற்றது இக் 15ன்னடு , இனி கன்னிலை எய்தும் என்று கவின் றனர் சில்லோர். சோழர் தொல்குலம் விளங்க வந்த கரிகாலன் இமசேது பரியந்தம் கைக் கொண்டு ஒரு குடைக்கீழ்த் தனியாளும் அரசன வான் என்றனர் சில்லோர். இவ்வாறு அவன் புகழை நாடெங்கும் மக்கள் புகழ்ந்து கொண் டாடினா.
சோழர்குலத்து வந்தோர், சோழவள நாட்டி லுள்ள பிடவூர், அழுந்தூர், வல்லம், காங்கூர், 5ாகூர், ஆலஞ்சேரி, கிழார், பெருஞ்சிக்கல் என் னும் ஊர்களில் வாழ்ந்து வந்த வேளிர் குலத்து வந்தவரான வேள், அரசு, காவிதி எனும் பட் டங்களைப் பெற்று விளங்கிய வேளாளர் குலத்தில் பெண் கொடுப்பதும் பெண் கொள்வதும் வழக் கம், வேளாளர் உழுது உண்போர், உழுவித்து உண்போர் என இருவகையினர். அவருள் சீர் காழியைச் சார்ந்த காங்கூரிடத்தே உழுவித்துண் ணும் வேள் என்னும் பட்டம் எய்திய வேளாள ரிடத்துத் திருமாவளவன் பெண் கொண்டனன். இவ்ன் தந்தை அழுந்தூர் வேளிடத்துப் பெண்

திருமாவளவன் 4.
கொண்டா னன்ருே ? திருமாவளவன் இக் காங்கூர் வுேள் மகள் அன்றி வேறு பல மகளிரையும் மணம் புரிந்து இன் புற்றிருந்தான். அவன் ஆண்டு கள் சில கடக்கச் சேட்சென் னி கலங்கிள்ளி, 5ெடுங்கிள்ளி, மாவளத்தான், என்னும் மூன்று ஆண் மக்களையும், ஆதிமந்தியார் என்னும் பெண் மகளையும் பெற்றெடுத்தான். கெடுஞ்சேரலாதனை மணந்து சேரன் செங்குட்டுவனே ஈன்றெடுத்த 15ற்சோணை என்பவளும், சோழன் வேற்பஃ றடக்கை பெருவிரற்கிள்ளி என்பவனும், இராஜ சூயம் வேட்ட பெருகற்கிள்ளி என்பவனும், கரிகாலனது புதல்வியும் புதல்வர்களும் ஆவ ரென்று கூறுவாரும் உண்டு, திருமாவளவன் 15ல்லெழிலும் அருங்குணமும் வாய்ந்த தம் மனே வியர் பலரொடும் மக்களோடும் இன்புற்று இனிது வாழ்ந்திருந்தனன். அவன் சோழர்கட் குரிய ஆத்திமாலையையும், புலிக்கொடியையும உடையவனுய் ஆன்ருேராற் சிறப்பித்துக் கறும் உறையூரின்கண் அமர்ந்து இன்ப அரசு 15டத்தி வந்தான். அவன் புகழ் உலகெங்கணும் பரவியது. சேட்சென் னியின் மக்கள் ஒன்பதின்மரும் அவன் புகழ் கேட்டுப் புழுங்கிய உள்ளத்தராய்த் தீ5ெறி பற்றி ஒழுகுவராயினர். திருமாவளவன் இன்னு செய்தார்க்கும் 15ன்னயம் செய்யும் இயல்பினன் ஆதலின், அவர்களுக்கு யாதொரு இடையூறும் செய்திலன், திருமாவளவன் ஆன்ருேர், புகழ்ச் சோழ5ாட்டை இனிது பரிபாலித்து வந்தனன் .

Page 25
6. பூம்புகார்
ஒரு 15ாட்டின் சிறப்பெல்லாம் அங்காட்டின் செல்வநிலை, கைத்தொழில், வேளாண்மை, வாணி பம், கல்வி முதலியவற்ருலேயே கணித்தறியப்படு கின்றது. "சோழ நன்னடு சோறுடைத்து ' என ஒளவையாராற் போற்றிப் புகழப்பட்டது என் பதும் யாவரும் உணர்ந்ததே. உலகிற் கல்வியறி வால் உய்வழி கண்ட மக்கள் தம் காட்டை எவ் வாற்ருனும் சீரும் சிறப்பும் பெற்றுப் பொலியு மாறு செய்கின்றனர். அன்னர் பல்வேறு நாடு களிலும் விளங்கிடும் செல்வ கலங்களையெல்லாம் தாமும் தம் காட்டிற் பெற்று அனுபவிக்கப் பாடு படுகின்றனர். அரசனுயிருப்பவன் நாட்டின் முன் னேற்றத்தை 15ாடியவனுய் காட்டிற் கல்வி, வாணி பம், வேளாண்மை முதலிய கைத்தொழில்கள் செம்மையாய் நடைபெறுதற்குரிய துறைகளில் ஊக்கமும் முயற்சியும் கொண்டு பாடுபடத் தக்கவ னவன். திருமாவளவன் தன்னட்டை மேம படுத்த எண்ணினன். கரிகாலன் நாங்கூர் வேள் மகளை மணம் புரிந்துகொண்டதும் பெரும் கன் மையேயாயிற்று. காங்கூர் வேளிர் அனைவரும் அழுந்தூர் வேளிர்களுக்கு உறவின் முறை ஆன வர்களே. இக்கிலேயில் காங்கூர் வேளிர்களும் அழுந்தூர் வேளிர்களும் கரிகாலனுக்கு உறவின gmru 56oTii. இரும்பிடர்த்தலையார் தன் மருகன் எவ்வாற்ருனும் துணைவலி பெற்றுச் சீரும் சிறப் பும் எய்தி வாழ்தல் வேண்டுமென்று விழைவு கொண்டனர், நாங்கூர் வேண்மாளேக் கரிகாலன்

பூம்புகார் 43
மணந்து கொண்டது இரும்பிடர்த்தலையாரின் விழைவை நிறைவேற்றியது. கரிகாலன் வேண் மரளோடும் மற்றை மனைவியரோடும் அருளும் அன்பும் தாங்கி அறவோர்க் களித்தல், அந்தண ரோம்பல், சுற்றம் தழுவல், விருந்தினர்ப் பேணல், இரவலர்க்களித்தல் முதலியனவாகிய இல்லறத் தானுக் குரிய 15ல்லறத்தைச் செவ்வனே ஆற்றி இனிது வாழ்ந்திருந்தனன்.
கரிகாலன் தன்னுட்டை மேம்படுத்தும் எண் ணத்தை இரும்பிடர்த்தலையார் முதலாய பெரியோ ரனே வரிடத்தும் கூறிச் செயத்தகுவது யாதெனக் கேட்டனன். திருமாவளவனின் பெருகோக்கத்தை நன்கு அறிந்துகொண்ட பெரியோர்கள் அவனே டும் கலந்து உசாவி அதற்கேற்றவாறு செய்யத் துணிந்தனர். ஒரு காட்டின் முன்னேற்றம் அதன் செல்வ நிலையாலேயே நிலை5ாட்டற்பாலதாதலால் அச் செல்வ நிலையை மேம்படுத்தும் முறையைக் கீரிகால் வளவன் ஆராய்ந்து பார்த்தான். ஒரு 15ாட்டின் செல்வநிலை அங்காட்டின் வாணிபத்திா லேயே பேணிக்கொளற்பால தென்பதையும், வேளாண்மையை விருத்திசெய்தல் வேண்டுமென் பதையும், கரிகாலன் நன்குணர்ந்திருந்தான். அஆல கடல் நடுவிற் பலகலம் போக்கி வாணிபம் பேணிப் பொருளிட்டுவது சிறப்புடைய கெறி என அவன் உணர்ந்தான். வாணிபத் துறையை மேம்படுத்தும் வழியை ஆராய்கின்றபோது உறையூர், கடற் கரைக்கு இது ஆதரித்" அர்நகர் வெளிாட்டு வாணின் முறைக்குச் சிறந்த

Page 26
44 திருமாவளவன்
தா காதென மனத்திலெண்ணிக் கடற்கரையை யடுத்ததும் இயற்கையான துறைமுகத்தையுடை யதும், வெளிநாட்டு வர்த்தகத்திற்கு உதவிபுரியக் கூடியதுமான காவிரிப்பூம் பட்டினமே சிறந்த தென எண்ணி, உறையூரினின்றும் காவிரிப்பூம் பட்டினத்திற்குத் தலைநகரை மாற்ற எண்ணினன். தான் எண்ணியதை அரசன் அறவோர் அனைவ ருக்கும் எடுத்துக் கூறினன். அவர்களும் அவன் கருத்திற் கிசைந்தனர். உடனே மன்னன் உறை யூரை விடுத்துக் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலை நகரமாகக் கொண்டான் காவிரி 6தி கடலோடு கலக்கும் இடத்திற் சங்கமுகம் என்னும் துறையி னேயுடைய காவிரிப்பூம்பட்டினம் சோழ5ாட்டிற்கு இராஜதானியாயிற்று. சோழர் குடியில் வந்த அரசர்கள் காவிரிப்பூம்பட்டினம், உறையூர் முத லான நகர்களே மாறிடமாறி இராஜதானியாகக் கொண்டு, ஆட்சி புரிவது உண்டு. இரு நகர்களை யும் ஒரே அரசன் காலத்தில் இரு தலைநகர்களா கக் கொள்ளுதலும் பண்டும் பின்னும் இருந்து விந்த வழக்கமாம். காவிரிப்பூம்பட்டினம் இயற் கையாகத் துறைமுகத்தைப் பெற்றிருந்ததினுல் மேல்நாட்டாரோடு கப்பல் வியாபாரம் புரிந்திட வசதியாயிருந்தது. மற்றும் அப் பட்டினம் தமி ழரசர்களது தலை5கரங்கள்ான மதுரை, வஞ்சி, தொண்டி, கொற்கை முதலிய பட்டினங்களுள் தலை சிறந்து விளங்கியது. அப்பட்டினம் பண் டையில் பெரு5கராகப் பெருமையுற்றிருந்ததென் பதை இளங்கோவடிகளும் பிறரும் எடுத்துரைக் கின்றவாற்றல் 16ன்கு உணரலாம்.

பூம்புகார் 45
காவிரிப்பூம்பட்டினம் தொன் மை மேன்மை யில் மிக்கது. இந்திரன் முதலிய இமையவரும் அங்கேரின் பொலிவைக் கண்டு போந்திருந்தன ரென்று தொன்னூல்களால் அறியக்கிடக்கின்றது. மற்றும், காந்தமன் என்னும் அரசன் அங்ககரி னைத் தலைநகராகக்கொண்டு அரசாண்டு வந்தா னென இற்றைக்கு ஆயிரத்து எண்ணுாறு வருடங் கட்கு முன்பு இருந்த கூல வாணிகச் சாத்தனர் என்னும் புலவரால் எழுதப்பிட்ட மணிமேகலையி ஞல் அறியக்கிடக்கின்றது. அக் காந்தமன் சோழர் குடியிற் பிறந்தவனென்றம், ஜமதக்கினியின் புதல்வரான பரசுராமர் கூடித்திரிய குலத்தை வேரறத்திடுவதாக உறுதிகொண்டு கொல்லத் துணிந்த காலத்தில் அக் காந்தமன் காவிரிப்பூம் பட்டினத்தில் அரசாட்சி செய்துகொண்டிருந்தா னென்றும் பழைய நூலால் அறியக்கிடக்கின்றது. ஆகவே அங்ககர் இராமாயணகாலத்திற் சிறந்து விளங்கிய , 15கரமென்று கூறுவதில் யாதெரிரு ஐயப்பாடுமில்லை. அக்ககருக்குப் பூம்புகார், புகார், காகந்தி, சம்பாபதி, காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர்கள் வழங்கி வந்தன. பெரிப்ளஸ், டாலமி என்ற பிற5ாட்டுத் தேச சஞ்சாரம் செய்யவந்த வர்கள் காமாரம், கபேரிஸ் என்று பெயர்களிட் டழைத்தனரெனச் சரித்திர நூல்கள் கூறுகின்றன. காவிரிப்பூம்பட்டினம், பல்லவனீச்சரம் என்னும் பனிமதிகுடும் சடைமுடிப் பெருமான் தலத்திற்கு அடுத்து விளங்குவதாகும்.
கரிகாலன் அதனைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியதும் அங்ககரினைப்

Page 27
46 திருமாவளவன்
பொன்னுலகோர் போற்றும் அமராவதியோ என்று கூறத்தக்கங்கிலயில் அழகுபடுத்தினன். அக்ககரம் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என இரு பிரிவினேயுடையதாயிருந்தது. பட்டினப்பாக் கம் அரசவீதி, விழாவீதி, அரண்மனைகள், புரோ 'கிதர் அந்தணர், மந்திரிகள், மருத்துவர், சேஞ பதிகள் முதலியோர் வசிக்கும் மாளிகைகளும், நியாயஸ்தலங்களும் விளக்கமுற்றிருக்க அழகுறப் பொலிவதாகும்; ஆவண விதிகளும், வணிகர் வீதிகளும், வேளாளர், இடையர் இசைக்கருவியாளர், சூதர் prai, ஜோதிடர் வாழும் மாளிகைகளும் நிரம்பப்பெற்றது. அகன்ற விசாலமான அப்பாக்கத்தின் தெருக்களில் யானை, குதிரை,தேர் என்பன போய்க்கொண்டும் வந்து , கொண்டுமிருக்கும். இடையிலுள்ள பொதுவிட்டங் பிகளோேளங்காடி என்று வழங்குவர். அதில் பகற்பொழுதே கடைகள் கூடும். அங்குப் பண் டங்களே விற்போர் வாங்குவோர்களின் ஓசை நிறைந்திருக்கும். அப் பட்டினப் பாக்கத்தில் பல வகை மன்றங்களும் மண்டபங்களும் உண்டு. எங்கும் மலர்கரு மரங்களும் கனிதரு மரங்களும் நிறைந்திருக்கும். மற்றும் திருமால் கோயில், பல தேவன் கோயில், குமரகோட்டம், வாசவன் கோயில், சிவன் கோயில், வச்சிரக்கோட்டம், அருகன்கோயில், புத்த விகாரம் முதலிய தேவா லயங்கள் சிறுசிறு குன்றுகள்போற் செறிந்து விளங்கும்."எங்கும் உதயமண்டபமும் பொழுது போக்கிடங்களும் நிறைந்துக்ாணப்படும்.
 
 
 
 

பூம்புகார் 4.
மருவூர்ப்பாக்கமோ சிலாமுற்றங்களும் மாடர் களும் உடைய சோலேகளுக்கிடையே விளங்கும். கூல வீதிகளில் நெல் முதலிய தானியங்களும், கடைவீதியில் முத்து, பவழம் முதலிய இரத்தி னங்களும், பட்டாடை முதலியவைகளும் குவித் தும் தொகுத்தும் வைக்கப்பட்டிருக்கும். பூ, முக வாசம், செந்தனம், அகில் முதலிய வாசகனத்
திரவியங்ககள் விற்போர் விதிகளிற் சுற்றித்திரிவரி
பட்டு, மயிர் பருத்தியினுற் செய்யப்பட்ட கம்பளங் கள் எங்கும் நிறைந்து விற்கப்படும். கெய்வோரும், கொல்லரும், தச்சரும், கன்னுரும், பிறருமான பல்துறைத் தொழிலுட்ை மக்கள் அங்கு வசித்து வந்தனர். வியாபாரத்தின் பொருட்டுக் காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கப்பலோடு வந்த யவனர் கள் செல்வத்தாற் சிறந்த அங்ககளின் ஓரிடத்தே வசித்து வந்தனர். சுங்கச் சால்களும் (ustoம் House), is is of agitias (plb (Light House) மருவூர்ப்பாக்கத்தேதான் அமைந்திருந்தன. அங் நகரிற் காவிரிச் சங்கமுகத் தீர்த்தமே அல்லாமல், சோமகுண்டம், குரியகுண்டம் என்னும் புண்ணிய
தீர்த்தங்களும் இருந்தன: மற்றும், பல்வகைத்
தெய்வங்களுக்கும் கோயில்கள் கட்டப்பட்டு
விளங்கினN *、
காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகர *ஆக் கொண்டு முசுகுந்தன் என்னும் சக்கரவர்த்தி
ஆண்டுவந்தான். அவன் இந்திரனுக்குற்ற துன்'
பத்தையறிந்து விண்ணுடு சென்று அசுரர்களோடு ' கடும்போர்புரிந்து அவர்களேக் கொன்று இந்தி ரன் துன்பத்தைத் துடைத்தான். அவன் செய்த

Page 28
48 திருமாவளவன்
பேருதவிக்காக இந்திரன் கைம்மாரு கப் பூதம் ஒன்றைக் கொடுத்தான். அப்பூதம் நாளங்காடி யில் வந்து தங்கியது. அப்பூதத்திற்கு மறக்குடி மகளிரும் தாழ்குடிப் பெண்களும் பலியிட்டுக் கொண்டாடுவர். அவர்கள் குரவை முதலிய கூத்துக்களையும் ஆடுவர். அக்க கரிற் சிறந்து விளங்கிய மன்றங்களுள் பட்டி மண்டபம் என்ப தும் ஒன்று. அது மகதகாட்டு மன்னனல் கொடுக்கப்புட்டதாகும். அது மயன் என்னும் தெய்வத் தச்சனுற் செய்யப்பட்டுப் பொன்னும் மணியும் பொருந்திட விளங்கும். அங்கு அமைச் சரும் அரசரும் அருங் கவி வாணரும் நிறைக் திருப்பர்) அடுத்ததாகிய வெள்ளிடை மன்றம் வெளியான ஓரிடத்திலிருப்பதாகும் அங்குப் பண்டப்பொதிகளை அடுக்கிவைத்திருப்பர், அங்கு வைத்த பொதிகளை எவரும் கவராட நினையார். அவற்றைக் கவராட நினைப்பாராயின் அம் மன் றத்திலுள்ள பூதம் அவர்களைத் துன்புறுத்தும். அடுத்ததாகிய இலஞ்சி மன்றம் என்பது நீர் நிறைந்த அழகியதோர் குளிர்ந்த பொய்கை. அதிற் படிந்தோர் எத்தகைய கோயுடையராயி னும், கோய் நீங்கப்பெற்று வலியும் வனப்பும் ஒருங்கெய்தப் பெறுவர். அப்பொய்கையில் தினக் தோறும் எண்ணிலடங்காட் பற்பல தேயத்து மக்கள் வந்து குளித்து நீராடி கோய் நீங்கப் பெற்றுச் செல்வர். கல் மன்றம் எனப்படுவது கண்ணுடிக்கல்லால் செய்த பெரிய துரணுென்று நடுவண் விளங்குவதாய்ப் பரந்த இடத்தை யுடை யதாகும். அத்துரண் மிக்க ஒளி வீசும். அதனை

பூம்புகார் 49
வணங்கி நிற்பார் தம் வடிவை அதிற் காண்பார். மருந்துசட்டப்பட்டாரும், பித்தேறியவரும், பாம் பினற் கடியுண்டவரும். அத்தூணை வணங்கி நிற் பாராயின் யாவும் நீங்கப்பெறுவர். பாவைமன்றம் என்பது ஒரு பெருவீதியின் நடுவண் பிரதிமை ஒன்று நிலை காட்டப்பட்டுள்ள இடம். அரசன் திேமுறையினின்று வழுவினணுயினும் அறம் கூறும் அவையத்தோர் நடுவு நிலையினின்று வழுவின ராயினும் அப் பாவை அழும். அதனல் முறை யல் லன செய்தார் நீதிநெறி பற்றி ஒழுகிச் செய்த குற்றத்திற்கு மன்னிப்புப் பெறுவர் பூதசதுக்கம் என்னும் தெய்வத்தன்மை பொருந்திய மன்றம் ஒன்று அங்ககளில் இருக்தது. அது காற்சந்தியின் 15டுவண் அமையப்பெற்றது. அம்மன்றத்தின் நடு வில் ஓர் பூதம் நிலைநாட்டப்பட்டிருந்தது. அத னைச் சதுக்கபூதம் என்பர். அதுபேசுங் தன்மை யுடையது. அது குரல் கொடுத்து விளித்தால் 15ான்கு காவத தூரம் கேட்கும். தீத்தொழில் புரிவோர்களையும், வஞ்சித்துத் திரிவோரையும், கற்பிற்றவறும் பெண்டிரையும், பிறன் மனை விரும் பும் பேதையையும், பொய்க்கரிபோகும் மானிட ரையும், புறங் கூறுவோர்களையும், அரசரை வஞ் சிக்கும் அமைச்சர்களையும் தம் கைப் பாசத்தினுல் கட்டி நிலத்தில் ஓங்கியடித்துக் கொன்று தின்று களிக்கும் பட்டி மண்டபம் முதலாகப் பல்வேறு மன்றங்களுக்கும் பூத சதுக்கத்துக்கும் மக்கள் பொங்கலிட்டுப் பூசித்துத் திருவிழாக் கொண் டாடுவார்கள்.
4.

Page 29
50 திருமாவளவன்
சூரியகுண்டம், சோமகுண்டம் எனும் இரு பொய்கைகளும் காவிரி நதி கடலோடு கலக்கு மிடத்தில் உள்ளன. அவற்றிற்கருகில் காமன் கோயில் ஒன்றுண்டு. கெய்தல் மலர்களின் இதழ் கள் நிறைந்த கறுமணம் வீசும் சோலையின் 15டுவே அது விளங்கும். அக் நீர்நிலைகளில் நீராடிக் காமன் கோயிலுக்குச் சென்று அத்தேவரை வழிபடுவா ராயின் பிரிந்த கணவரை இம்மையிற் கூடி இன் புற்று, மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறப்பர் என்று கூறுவர் புலவர்,
முன்னெருகாலத்தில் தேவேந்திரன் அசுரர்க ளால் மிகத் துன்புற்ருன். அக்காலத்தில் திருமா வளவனுடைய முன்னேர்கள் அவ்வசுரர்களைக் கொன்று இந்திரனே அத்துன்பத்தினின்றும் நீக்கி னர்கள். அதனல் மகிழ்வுற்ற இந்திரனல் முன் னர்க் கூறப்பட்ட மன்றங்களும் குன்றங்களும் கொடுக்கப்பட்டனவாம். அவைகள் அக் காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சிறப்பையும் மேன்மையை யும் அளித்தன. 'அக்காலத்தில் அப்பட்டினத் திற்கு ஒப்பானதும் மிக்கானதுமான பிறிதொரு பட்டினம் இல்லை. கரிகாலனுடைய முன்னேர்க ளிற் சிலர் அப் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருந்தார்கள். சிலர் அதனே விடுத்து உறையூர் முதலானவற்றையும் கொண் டனர்.
பூம்புகார் என்னும் அங்ககளில் ஆண்டுகள் தோறும் இந்திரன் விழா தடைபெற்றுவந்தது. அப் பூம்புகாரைத் தலை5கராகக்கொண்டு பண்

பூம்புகார் 51
டொருகால் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் கெம்பியன் என்னும் அரசன் ஆட்சி புரிந்துவங் தான். அவன் காலத்தில் மழை பொய்த்ததனல் 5ாடு வறுமையுற்றது. மக்கள் பெரிதும் வருந்தி னர். அதனையறிந்த சோழன் அகத்திய முனிவரை) யடைந்து என்செய்வதென்று கேட்டனன். அவர் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா நடத்தி வரு வாராயின் பொய்யாது மழை பொழியும் என்றும், அதனுல் 15ாட்டில் வறுமை குன்றுமென்றும், நாடு செழிக்குமென்றும் கூறினர். தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் இந்திரனுக்கு விழா நடத்தினன். காட்டில் மழைபொழிந்தது. நாடு வற்கடத்தினின்றும் விடுபட்டது. ர்ேவளம் மீக்கூர நாட்டில் வளப்பமும் செல்வமும் மிக் கோங்கின. அதுமுதல் சோழவரசர்கள் ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா கடத்தி வந்தனர். இந்திர விழாவை ஒரு5ாளும் கடத்து தற்கு மறக் திடார். அங்காட்டோர் அவ்விழாவை கட்த்து திற்கு மறந்திடுவராயின் காளங்காடிப் பூதம் துன் புறுத்துமென்பதையும், தீநெறிபற்றி ஒழுகுவோர் களைப் பாசத்தாற் பிணித்துக் கொல்லும் தகைமை வாய்ந்த சதுக்கபூதம் அங்காட்டைவிட்டகலுமென் பதையும் அறிந்திருந்தனர். ஆதலின் இந்திர விழா சோழர்களாற் சிறப்பாகக் கொண்டாடப் பட்ட விழாக்களில் ஒன்ரும். திருமாவளவனும் தன் முன்னேர்போல அதனே வழுவாது கடத்தி வந்தனன்.

Page 30
7. சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி
குடகுமலையில் உற்பத்தியாகி, மலையின் வளங் களைக் கவர்ந்துகொண்டு, கீழ்த்திசை கோக்கி ஓடிச்சென்று, சோழநாட்டிற் பரந்து பாய்ந்து, அவ்வளப்பத்தை அக்காட்டில் தங்கவைத்துச். செல்வ நிலையை யுயர்த்தி, பொய்யாது அளிக்கும் பொன்னி என்னும் காவிரி ஆற்றினைச் சோழர் குலக்கொடி என்று கூறுவர் பெரியோர். சோழ காடு சமநிலப்பிரதேச மாதலால் அங்காட்டிற் பல விடங்களிலும் அப்பேராற்றின் கால்வாய்களும் கிளைகதிகளும் பரந்து பாய்ந்து 15ாட்டிற்கு வளப் பத்தை யுண்டாக்குகின்றன. வேளாண் மாந்த ரனே வரும் அங்காட்டில் விரும்பிக் குடியேறி வேளாண்மையைச் சிறப்பாக 15டத்தி வந்தனர். கழனிகளும் தோட்டங்களும் அங்காட்டில் எங்கும் காணப்படும். கழனிகளில், விதைவிதைத்தலும், களைகட்டலும், எருவிடலும், பரம்படித்தலும், விளையுள்கொளலும் எக்காலத்தும் இடைவிடாது காணப்படும் நிகழ்ச்சிகளாம். வாழை, கரும்பு, மஞ்சன், முதலிய கன்செய் புன்செய்ப் பயிர்கள் எக்காலத்தும் காணலாம். எங்கும் கெற்குவியல் கள் மலைக்ள்போல் குவிந்திருக்கும். இத்தகைய காட்டிற் குறிஞ்சி, முல்லை, மருதம், கெய்தல் என்னும் கானிலனும் சிறந்து மிளிருமன்ருே' மருதநிலத்து உழவர் ஒதை எழுகடல் ஓதையை யும் அடக்கும். கழனிகளில் தாமரை, அல்லி,
a

சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி 53
நீலோற்பலம் முதலிய மலர்கள் மலர்ந்து காணப் படும். சுருங்கச் சொல்லின் சோணுடு புண்ணிய 16தியாம் பொன்னியாற்ருல் பெருமை பெற்று விளங்குவதாகும்,
திருமாவளவன் தன்னுட்டை, மேன்மேலும் சிறப்புப்படுத்த எண்ணி ஒவ்வொரு 15களிலும் நியாயத்தலங்களை அமைத்தான் , அறச்சாலைகளை யும் கல்விச்சாலைகளையும் ஏற்படுத்தினன். திரு மர் வளவன் காவிரிகதிப் பெருக்கால் தீமை விளை யாதபடி அங்கதி பாயும் ஊர்களிலெல்லாம் இரு கரைகளிலும் கரைகட்டும்படி தன் சிற்றரசர்க ளுக்கு ஆணேதந்தான். அவ்வாறு ஆணே பெற்ருருள் பிரதாபருத்திரனும் ஒருவனவன். கரைக்ள் கட்டிய பின் கரிகாலன் பற்பல கால்வாய்களையும் வடி மதகுகளையும் கட்டினன். அதனுல் வேளாண் வாழ்க்கை பெருகிற்று. விதைத்த ஒன்று ஆயிர மாக விளைந்திட நாடு வளம்பெற்றது. குடிகளனை வரும் பொன்னிக்கரைகண்ட பூபதி என்றும், தக்க பொன்னி ஆறு கரைகண்ட தரணிபன் என்றும், சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளை யுட்டாகக் காவிரி புரக்கும் நாடு கிழவோன் என்றும், கரிகால் பெருவளத்தான் திருமாவளவன் என்றும் அவனை வாயாரப் புகழ்ந்து கூறுவாராயினர். புண் ணய நதியாம் பொன்னி நதிக்குக் கரிகால்வளவன் திரிசிரபுரத்திற் கடுத்தாற்போல் ‘விளங்கிடும் பேரணையைக் கட்டிஞனென்றும் கூறுவர். ஆனல், சிலர் அவ்வணையைக் கட்டியவன் இராஜகேசரி
வர்மனன வீர இராஜேந்திரன் என்று கூறுவர். திரு

Page 31
王曇L量』
54 திருமாவளவன்
மாவளவன் தன்னுட்டில் ஊர்கள் தோறும், ஏரிகள் குளங்கள் முதலியவற்றையும் வெட்டுவித்தான். மற்றும், சிலங்களே அளந்து கொடுத்துக் குடிக ளிடம் சிறிதளவைக் கடமையாகக் . (A), T ண்டு பல்லாற்ருனும் அக்குடிகளுக்கு நன்மைகளையே புரிதலில் முயற்சியுடையவனுய் 卤出 ஒம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குச் செ
வெள்ளத்தின் மேலும் பலவாகவன்ருே பெருகும்?
ஆேதலின் திருமாவளவன் செல்வத்தால் நிறைந்
விளங்கிஞன். எங்காட்டவரும் முன்னுட்டிக் கூறும் சிறப்பினே யுடையதாகத் துலங்கியது சோழி கன்னடு. =F
'ஏரியும் ஏற்றத்தி னுலும் பிறநாட்டு 。 வாரி சுரக்கும் வனனெல்லாந்-தேரின்' அரிகாவின் கீழுதடிஉம் அத்தெல்கேரி சாலுங் கரிகாலன் காவிரிசூழ் நாடு",
என்று புலவர்கள் புனேந்து கூறுவாராயினர்.
முல்லயும் மருதமும் எங்கும் பரந்திருத்தலின்
காடுகளும் வயல்களும் சிறைந்திருந்தன. காடு
களிலுள்ள மிருகங்கள் கழனிகளிலுள்ள பயிர்களே மேய்ந்து இன்புற்றிருந்தன. திருமாவளவன் சி 应
சில காலங்களில் மனமகிழ்ச்சிக்காக மாவேட்டை
புரிதலுமுண்டு:'அவன், மாவேட்டைக் கேகுங்
கால் வேபர்கள் பலர் அவனேப் பின் தொடர்ந்து
செல்வர் வேட்டுவர்கள் வேட்டையாடும் தொழி லினே யுட்ையவர்கள். அவர்கள் குறிஞ்சி நிலத் தும் முல்ரீல நிலத்தும் சென்று வேட்டையாடு வார்க்ள்/அவர்கள் வாழ்க்கையை நோக்குமிடத்து நரம் வருந்த வேண்டியதாயிருக்கும். சிற்றிலும்
34.185
。
 
 
 
 
 
 
 

சட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி மரங்களடர்ந்த மலேச்சாரல்களில் அவர்கள் வீடு கள் குடிசைகளாக அமைந்திருக்கும். அம்மரங்க வில் வலேகளும் யானேக் கொம்புகளும், புலித் தோல்களும் தொங்கவிடப்பட்டிருக்கும்.'முட். பன்றி, புவி, கரடி முதலிய காட்டு மிருகங்கள் எங்கும் திரிந்துகொண்டிருக்குமிடத்தில் அவர் கள் அச்சமின்றி வாழ்வர். புவிக்குட்டிகளோடும்தி யாக்னக் கன்றுகளோடும், மான் குட்டிகளோடும்' அவர்கள் சிருர்கள் விளேயாடிக்கொண்டிருப்பார் கள். எளிய வாழ்க்கையை யுடைய வேடர்கள் திருமாவளவனுேடு வேட்டைக்குச் சென்று விலங்குகளேக் கலைத்து அவனேடு வேட்டையாடி உதவி புரிவார்கள்.
、 'ஒரு சமயம்,திருமாவளவன் வேட்டையாடச் சென்ருன் மறவர்கள், வேடுவர்கள்,'இருளர்கள் முதலியோர் வல்கள், குறுந்தடிகள், வேல்கள், கோல்கள், வில்கள், அம்புக்ள், ஈட்டிகள் முதலி யன கையிற்கொண்டு, காய்கள் பின் தொடர்ந்து வரப்பறை' தடாரி முதலிய வாத்தியங்கள் ந் ஒலிக்க, அவனுடன் வேட்டையாடச் சென்றனர்.' காட்டிற் பல விடங்களிலும் வல்களே விரித்துக்" கட்டிப்புதர்கள் தோறும் பதுங்கியிருந்த மிருகங் களேக் கலைத்தார்கள் காய்கள் ஓடும் மிருகங்கள்ே வ3ளத்து வளத்துத்தப்பியோடிப் பதுங்குவதற்கு வழியின்றித் தடுத்து நின்றன. திருமாவளவன்' மனமகிழ்ச்சியோடுவேட்டையாட்டத்தில் விருப்தி புக் கொண்டவனுய்க்கான கமெங்கும் அலேந்து
திரிந்து வேட்டையாடுவாஞஞன். இதுநிற்க:
*
55
| ၇န္ထ

Page 32
56 திருமாவளவன்
சேட்சென்னியின் புதல்வர்கள் ஒன்பதின்ம ரும் கரிகாலனுக்கு உண்டாகும் புகழையும் செல்வ மேம்பாட்டையும் கண்டு பொருமை கொண்ட னர். அவர்கள் பல் வகையிலும் அவனுக்கு இடை யூறு விளேக்க முயன்று வந்தனர். ஆயினும் அவன் அரசனுக விருந்தாணுதலின் அவர்கள் யாதும் செய்யக்கூடவில்லை. வேட்டைக்குச் சென்ற அச்சமயத்திலும் அவர்களால் இடையூறு இயற்ற முடியவில்?ல. ஆனல் அவனுக்குப் பெரியதோர் மானக் கேட்டை விளைக்க நினைத்தனர். திருமா வளவன் சீரிய குலத்தில் வங்தோணுதலின் தனக்கு மானம் அழிந்து போகும் நிலை எய்தின் 'மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே' என்னும் கருத் திற்கிணங்கி உயிர் துறந்து விடுவானென எண் ணினர். அவர்கள் நினைத்த சூழ்ச்சியைச் சிறப் புடைத்தெனச் செப்பினர் சில கயவர். திருமா வளவன் சென்ற காட்டிற்கருகிலிருந்த இடையன் ஒருவன் வீட்டிற்குச் சென்ருர்கள். அவ்விடை யன் வீட்டில் அழகிய மாது ஒருத்தி இருந்தாள். அவள் அழகில் சிறிது மேம்பட்டவளென்றே கூறவேண்டும். அவளைக்கொண்டே தங்கள் காரி யத்தை முடித்துக்கொள்ள எண்ணிய அவர்கள், அவள் வீட்டிற்குச் சென்ருர்கள். சேட்சென்னி யின் புதல்வர்கள் இடையன் வீட்டை யடைந்து அப்பெண்ணை கோக்கி ஒருவன், ' கங்காய் நின் எழிலினைக் கானுக் தோறும் மீ தெய்வ மடமங் கையோ என ஐயுறுகின்றனம். மகிதலம் புகழும் மன்னர் குலத்துதிக்கும் மாண்புடைய நீ இடை யர்குலத் துதித்தது என்னே ? கின்னேக் காணின்

சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி 57
எவரே நின்னே மணக்க விரும்பாதார். பொற் கொடி போல்வாய் ! நான் நின் னே அரசியாக்க விரும்புகின்றனன். ஆதலின் நங்காய் ! யான் கூறும் வழியில் நிற்பையேல் எளிதில அரசி ஆக லாம். நின்னைக்கண்ட எனக்கு நின்னை அரசி யாக்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றி, அவ் அவா நின்னிடம் என்னைச் சேர்த்தது. திருவனை யாய் ! யான் கினக்கு ஒரு தகுதி உரைக்கின் றேன் ; கேள். அவ்வாறு ஒழுகுவாயாயின் நீ பல்லோர் போற்றும் பேர் அர்சி ஆகிவிடலாம்." எனக் கூறிக் கண்கவர் வனப்புடை ஆடைகள் பலவும், அணிகலன்களும், பொன்னும் அளித்த னன். குல முறையிற் கண்டறியாத உயர்தரு ஆடையணிகளையும் பொன்னையும் கண்டு மகிழ் பூத்த நங்கை, பொருள் மயக்குற்று அவர்கள் வேண்டுகோட்கு இசைந்ததாகக் குறிப்புக்கள் காட்டிநின்றள் சேட்சென்னியின் புதல்வன் அதுவே தக்க தருணமெனக் கொண்டு ' சுடர்த் தொடி 15ங்காய் ! இதுபோது சோழ கன் காட்டை ஆளும் மன்னன் மா வேட்ட மாட உன்னி இப் பெருவனத்திடை வந்துள்ளான். அன்னன் விரை வில் இப்பக்கம் வருவான். அக்காலை நீ பட்டுடை உடுத்தி (5ல்லணி அணிந்து சொல்லியல்பெரு நல்லியல் வாய்ந்து மெல்லிய மேனியை ஒல்கிடப் பூங்கொடிபோலப் பொள்ளெனக் காட்டி மெள்ள மறைவாயாயின் அன்னன் நின் வடிவழகில் திளேத்து மலர்முகம் கொண்டு நின் பாலடைந்து வேட்கை வயத்தனய் மணம்புரிந்துகொள்ளுமாறு நின்னை வேண்டிக் குறையிரக்து நிற்பன்." என்று

Page 33
尔8 திருமாவளவன்
கூறினன். அவளும் அவன் கூற்றுக் கிசைந்தனள், சேட்சென்னியின புதல்வர்கள் தம் சூழ்ச்சிகள் பலித்ததென்றெண்ணி அகம் மிக மகிழ்ந்து அவ் விடம் விட்டகன்றனர்.
திருமாவளவன் மாவேட்டையாடிப் பல்வேறு குழல்புக்கு அலைந்து திரிக்த ஒரு பெரும் சோலையை கண்ணினன். அச் சோலை வானுறவோங்கி வளர்ந்த மரங்கள் நிறைந்தது. பல்வேறு மலர்தரு செடிகள் அங்கு நிறைந்திருந்தன. அதனை அடுத்து ஒரு 15ன்னீர் ஓடை ஓடிக்கொண்டிருந்தது. மரங்களும், செடிகளும், தளிர்த்துத் தழைத்துப் பூத்து விளங்கின. ஒடையில் நீர் தண்ணென்று தெளி வாக ஒடிக்கொண்டிருந்தது. அச்சோலையில் புள் ஒலி எங்கும் (1றந்து கேட்டது. இளங் தென்றல் * சில்' என்று வீசிக்கொண்டு இருந்தது. வசந்த காலத்தைச் சேர்ந்த அத்தினத்தில் மா வேட்டம ஆடப் போன மன்னன் திருமாவளவன், தன்னக் தனியணுய் அச்சோலையுட் புகுந்து ஓடையின் அருகில் காணப்பட்ட கற்பாறையின் மீது அமர்க் தான். இயற்கை வளத்தை உற்று கோக்கிக் கொண்டிருந்த மன்னன் கண்களுக்கு விருந்தான ஒரு மாது மின்னற்கொடிபோன்று தோன்றி மறைந்தாள். அவள் பின் கன்று காலிகள் இளங் தளிர்களை மேய்க்து கொண்டிருந்தன? அவள் அங்கும், இங்கும் அலைந்து மன்னன் கண்களுக்கு மின்னற் கொடிபோன்று தோன்றித் தோன்றி மறைந்தாள், திருமாவளவன் அம் மடக்கொடி மங்கையின் வடிவழகில் ஆழ்ந்து மது உண்டு

'சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி 59
மயங்கும் மதுகரம் ஒப்ப மயக்குற்றுச் செயலற்று வைத்த கண் வாங்காது உற்று நோக்கிக்கொண் டிருந்தான். பொங்கெழில் விளங்கும் 5ங்கையைக் கண்ட மன்னன் பலப்பல எண்ணிப் பின் ஒரு வாறு துணிந்து அவள்பால் அணுகினன்.
மன்னன் தன்பால் அணுகி வருதலைக் கண்டு அம்மட கல்லாள் நாணி ஒதுங்கி நின்றனள். மன்னன் அவள் முன்னின்று, " பொற்பின் செல்வி இப்பெரும் காட்டிடையுள்ள இச்சோலையில் நீ தன்னக் தனியாய்த் திரிந்து கொண்டிருப்பது ஏன் ? வன விலங்குகள் திரியும் இக்காட்டிடத்தே நீ தனிமை யுற்றிருத்தல் தகுமோ ? பெண்ணே ! நின் வடிவழகைக் காணுங்தோறும் என்மனம் கின்னிடத்தே விரைந்து 15ாடாகிற்கும். ஆதலின், நின் வரலாற்றை அறிய விரும்புகின்றனன். கிளி நிகர்மொழியாய் ! நீ யாவள் ? கின் பெயர் யாது? நின் தாய் தக்தையர் யாவர்? இவற்றை எனக்கு *விளங்கக் கூறுதி. இப்புவி புகழும் ஒப்பிலா நங்காய் 1, 5ாண் என்பது மாதர்க்கு 15ல்லணி கலனே. எனினும் நீ செம்பவள வாய்திறந்து நின் வரலாற்றைக் கூறுவாய். நின் அமுதனேய மொழிகளை விருப்புடன் கேட்கும் பெரு விருப் புடையேன் என்பதை நீ அறிதல் வேண்டும், என்று கனிந்து பரிவுடன் வினவிஞன்,
இடையர் குலத்து உதித்த அப்பெண் சேட் சென்னியின் புதல்வர்கள் செய்த சூழ்ச்சியின் வயமாகி நின்றனள். ஆதலின், காணினள்போன்று

Page 34
60 திருமாவளவன்
பாவனைகாட்டி ஒருபுறத்துக் கடைக்கண்ணுல் நோக்கி, 'மன்னவ ! யான் இளமைப்பருவ முற் றிருக்த காலத்தில் பகைவர்களால் துரத்தப்பட்ட என் தங்தையும் தாயும், என்னேடு இக் காட்டில் வதிந்தனர். என் தந்தை கொடுவாய்ப்புலிக் கோட்பட்டு இறப்ப, என் தாயும் என்னை இக் காட்டிடை வதியும் இடையன் ஒருவ னகத்தே விடுத்து அகன்ருள். இற்றை காள் அளவும் யான் என் தாயின் செல்லிடம் அறியேன். யான் ஓர் அரசன் மகளே,” என்று கறிஞள்.
அவ்வணிதை மன்னன் மகள் எனக் கூறக் கேட்ட திருமாவளவன் உளமிக மகிழ்ந்தான். பின் அவன் தன் விருப்பத்தை வெளிப்படையாக அவளுக்கு எடுத்துக் கூறினன். கங்கை அவனை நோக்கி, "மன்னவ ! உயர் குலத்துதித்த நீர் இழிகுலத்து வாழ்ந்துவரும் 15ங்கையை மணக்க விரும்புவது 15ன்றன்று. மற்றும், அடியேன் நின்னை மணக்கப் பெறுவேனேல் யான் கற்பேறு பெற்றேணுயினும் நின் கோயிலினுள்ளாரும், சுற் றத்தாரும், என்னையும், நின்னையும், இகழ்ந் 'துரையாடுவர். ஆதலின் நீர் யாவரினும் மேலாக என்னைப் பெருமைப்பட வைத்துக்கொள்வீர் ஆயின் யான் நும் கருத்திற்கு இசைதல் கூடும்,' என்றனள். மன்னன் அவள் விருப்பத்திற்கு இணங்கினன். பின், அவன், அவளை யானையின் எருத்தத்தேற்றி அழைத்துக்கொண்டு சென்று அணி நகர்க்குள் புகுந்து அரண்மனை அடைக் தான். பின் அவளை, அவன் விதிமுறை கடவா

சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி 61
நெறியில் மணந்து இன் புற்றிருந்தான். ஆண்டு கள் சில கடந்தன.
சேட்சென்னியின் புதல்வர்கள் அவள்பால் பெண்கள் பலரை விடுத்துப் பல்வேறு வகையில் அவள் குணத்தைக் கெடுத்து அரண்மனையில் உள்ளாரோடு பகை கொள்ளுமாறு செய்தனர். அம்மடங்தை அவர்கள் சொல்வழிப்பட்டு ஆய்க் தோய்ந்து பாராது அரண்மனையிலுள்ளாரோடு பகை கொண்டனள். அரண்மனேயிலுள்ளார் அனைவரும் அவளிடத்தே வெறுப்புற்றுப் பழித் துக் கூறுவாராயினர். அம்மொழிகள் மன்னன் செவிகளுக் கெட்டின. அவளிடத்தே தாழ்ந்த சொற்களும், இழிகடத்தைகளும், உண்டெனக் கேட்டறிந்த மன்னன் அவளுடைய குணஞ் செயல்களை நாடி அறிந்திட விரும்பினன். அவன் பல்வேறு வழியினும் 5ெடு5ாள வரை அவளுடைய நடத்தைகளையும், சொற்களேயும், மறைந்து காத் திருந்தறிந்தனன். குலத்தளவே ஆகும் குணம் என் பதும், பெல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் என்ப தும், மணலுள் மூழ்கி மறைந்து கிடக்கும் துணலும் தன் வாயால் கெடும் என்பதும் ஆன்ருேர் மொழி கள் அன்ருே ? குணஞ் செயல்களால் அவனது மாறுபாட்டை அறிந்த மன்னன் தன்னே வஞ் சித்து நின்ற தகைமையை எண்ணி அடங்காச் சினங்கொண்டு உடைவாளைக் கையில் ஏந்தி வய ஞய் அவள் முன் வந்து, ' கள்ளி! நீ கொடி யள்-ஓ-15ஞ்சினும் கொடியள், நின் பசப்பு

Page 35
62 திருமாவளவன்
மொழிகளால் என்ன ஏமாற்றின. நீ யார்? எக்குலத்தினள்? வஞ்சித் தொழுகும மதியிலி ! இனியும் வஞ்சித் தொழுகல் இயலாது. உண் மையைக் கூறு; இல்லையேல் நின் னை இவ் வாளுக்கு இரையாக்குவேன்' என்று உரப்பிக் கூறினன். ,"
மன்னன் சினங் கண்டு மெய்ங்குடுக்குற்ற மங்கை வாய்குழறத் தன் வரலாற்றை விளங்க எடுத்துக் கூறினள். சேட்சென்னியின் புதல்வர் களால் தூண்டப்பட்டு ஆட் டுவிப்போன் தன்மை யில் ஆடும் பாவைகிகர் மங்கையின் மதியின் மையை அறிந்து வருந்தித் தான் கொண்ட சினம் தணிந்து அவளைத் தனிமாளிகை ஒன்றில் இருத்தி அவளுக்கு ஏற்ப ஒழுகிவரலாயினன். சேட்சென் ன்ரியின் புதல்வர்களின் சூழ்ச்சியும், திருமாவளவ னின் அறிவுடைச் செயலும், அக்காட்டில் எல் லோருக்கும் தெரியலாயின. அக் காட்டவர் சேட் சென் னியின் புதல்வர்களிடத்து வெறுப்பும் திருமாவளவனிடத்தில், அவன் அறிவு கண்டு புகழ்ந்து, அன்புகொண்டும் ஒழுகினர். சேட்சென் /னரியின் புதல்வர்களோ தங்கள் சூழ்ச்சி பலவும் பயனற்றவையானமை கண்டு வருந்திச் செய்வ தறியாது திகைத்தனர். மற்றும், 15ாட்டவர் பழிப் புரை காளும் பெருகுதல் கண்டு 15லிவுற்றனர். அந்நிலையினும் அவர்கள் திருமாவளவனிடத்தே, பொருமை யுற்றிருந்தனர் என்ருல் அவர்கள் அறிவின்மையை என் என்று கூறுவது ? அத் தகைய கொடுமனம் கொண்ட சேட்சென்னியின்

சேட்சென்னி மைந்தரின் சூழ்ச்சி 63
புதல்வர்களிடத்துத் திருமாவளவன் சிறிதும் கொடுமை பாராட்டிலன். அன்னன் அவர்கள் அறியாமைக்கு மிகவும் வருந்தினன். அவர்களை நல்வழிப்படுத்தலும் இயலாததாம் என்பதை உணர்ந்த திருமாவளவன் தன்னைத்தானே காத் துக்கொண்டு அவர்களைச் செல்லு 5ெறியில் விட்டு விட்டான்.

Page 36
8. திருமாவளவன்
வெற்றிமேம்பாடு
திருமாவளவன் காட்டிற்கு கலம் பல புரிந்து அரசாண்டு வந்தான். திருமாவளவனின் மாட்சி ஓங்க ஓங்கச் சேட்சென்னியின் புதல்வர்களின் உள்ளம் புழுங்கின. உலகிற் பொருமை என்னும் குணம் மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளு மாயின் அன்னர் செய்வினை அறியும் திறன் படையாது, கல்வினை குன்றத் தீவின்னயால் கலிக் து அல்லன செய்தற்கு ஒருப்பட்டு அல்லல் கூறுவர். அக்காலே, அவர்களைப் பேய்க்கோட்பட்டா ரென்றே கூறிவிடலாம். எத்துணைப் பெரியார்கள் வந்து விழுமிய 15ல்லுரைகள் கூறினும் யாவும் செவிடன் காதில் ஊதும் சங்கே யாகும். அன்னர் செய்யப்புகும் கருமங்கள் யாவை என்பதையும், எத்தகைய விளைவுண்டாகும் என்பதையும் சிறிதும் சிந்தித்துணரார்கள். அங்தோ ! பொருமை என் னும் பேய்க்கோட்பட்டார் அல்லலுற்று கலமிலா வாழ்கையில் நாளும் மனக்களிப்பின்றி வாழ் நாளைக் கழிப்பர். பொருமையே கோபம், கொலை முதலிய தீக்கருமங்களுக்குக் காரணமாகும். பொருமையே பகைமையைத் தோற்றுவித்து அழியாப் பழியையும் துன்ப முடிவையும் உண் டாக்கும்.
சேட்சென்னியின் புதல்வர்கள் பொருமை மிகுதியாலும், பகைமையாலும் எவ்வாருயினும்

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 65
திருமாவளவனுக்குக் கேடு குழ நினைத்தனர். அவர்கள் நெடுநாட்களாகச் சிந்தித்துக் காலமும் இடனும் கருதி இருந்தனர். உலகில் ஒத்த நிலை மையை உடைய அரசர்களுள் ஒர் அரசன் பேரும், புகழும் படைத்துச் சீரும் சிறப்பும் எய்துவானேல் அத்தகைமை பிறவரசர்கட்குப் பொருமையையும், பகைமையையும் உண்டாக்கும் அன் ருே 1 உலகில் மன்னர்களுக்குள் போர் நிகழ் தலின் காரணத்தை ஒருவன் சற்றுச் சிந்தித்துக் காண்பானுயின் மண் காரணமாகவன் ருே நிகழ் வது என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கா நிற்கும். w
அக்காலத்தில் சேரகாட்டைச் சேரன்பெருஞ் சேரலாதன் என்பான் ஆண்டுவந்தான். அவன், அறிவு ஆற்றலாலும், வள்ளன்மையாலும் சிறக் தவன்; எதற்கும் அஞ்சா கெஞ்சு படைத்தவன் ; பகைவர்களைப் டோர்முனேயிற் கலக்கி வலியழித்து வெற்றிகொள்ளும் விறலோன். அவன் முன்னிய பகையை முடித்துப் பகைவரை வெங்கிட்டோடச் செய்வதில் ஒப்புயர்வற்று விளங்கினன். மற்றும், அவன் அழகும் ஆண்மையும் பொருந்தியவன்.
சேரன் பெருஞ்சேரலாதன், சோழனுக்கு உண் டாகிய சிறப்பும் புகழும் கேட்டு மனம் புழுங்கி னன். மும் மன்னர்கள் என்று கூறப்படும் அர சர்களுள் தன் னே ப்போல் சோழனும் ஓர் அரசனே யன் முே ? அங்கனமாக, அவன் தங்களிலும் மேம் பட்டு விளங்குதல் சேரன் பெருஞ்சேரலாதனுக் குப் பெருந் துன்பத்தை விளேத்தது. ஆதலின்

Page 37
66 திருமாவளவன்
அவன் மனத்தைப் பொருமை என்னும் பேய் கொள்ளே கொண்டது. அவன் சோழனுக்கு உண்டாயிருந்த வலியையும் புகழையும் ஒடுக்க விரும்பினன். அவன் மனநிலையை எவ்வாருே சேட்சென்னியின் புதல்வர்கள் அறிந்தனர். அவர் கள் அவன் பாலடைந்து ஆவன கூறி அவனிடம் தோன்றிய பகைமையை மிகுவித்தன்ர். எரி 5ெருப்பில் நெய் ஊற்றினற்போல் சேரன் பெருஞ் சேரலாதனுக்குச் சோழனிடம் பகைமை மூண்டு வளர்வதாயிற்று. சேரலாதன் செவிகளில், சேட் சென்னியின் புதல்வர்கள் கூறிய விஷவார்த்தை கள் அமுதமெனப் புகுந்தன. ஆதலின் தன்னைப் போல் சோழனிடம் பகைமை பூண்டுள்ளார் துணையை காடுவாஞஞன்.
மூவேந்தருள் ஒருவனன பாண்டியன் சோழ னிடம் பகைமையும் பொருமையும் பூண்டவன். அந்தோ! உலகில் பிறர் ஆக்கம் கண்டு பொருமை கொள்ளல் சாதாரண மனிதர்கட்கு இயல்பு. அத்தன்மை அரசர்களிடமும் உள்ளது என்ருல், அதன் வலிமை என்னென்று கறுவது ! பாண் டியன் சோழன் வலியை அடக்கும் வகையை 5ாடிக்கொண்டிருந்தான். அங்கிலையில் சேரன் பெருஞ்சேரலாதன் சோழனிடம் பகை பூண்டுள் ளான் என்னும் செய்தி பாண்டியனுக்கு எட் டிற்று. அது அவனுக்கு மகிழ்ச்சியையும் ஊக் கத்தையும் அளித்தது. தன் ஒற்றர்களில் ஒரு வன அழைத்து அவன் பால் போகவிட்டுத் தன் கருத்தை அறிவித்தான். சேரலாதனும் தன்
A.

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 67
கருத்தை விளக்கிப் பாண்டியன் துணையை 15ாடி னன். ஆகவே, சேரனும பாண்டியனும் சோழனே வலியடக்க ஒருங்கு சேர்ந்துகொண்டு செய்யத் தகுவன யாவை எனச் சிந்திப்பாராயினர். அவர்க ளிருவரும் சோழனேடு மாறுபட்டு எழுவது கண்டு சேட்சென்னியின் புதல்வர்கள் களிப் பென்னுங் கடலுள் ஆழ்ந்தனர்.
சேட்சென்னியின் புதல்வர்கள தம் சூழ்ச்சி யின் வலியால் அழுந்தூர் காங்கூர் என்னும் இரு ஊர்களினிடத்துள்ள வேளிர் தவிர மற்றப் பதி னெரு வேளிர் குலக் குறுநில மன்னர்களையும் கலைத்துத் திருமாவளவனுடன் பகைமை பாராட்டு மாறு செய்தனர். அவர்கள் சூழ்ச்சி வலையில் சிக்குண்ட குறுநில மன்னர்களும் நாடோறும் உள்ளத்தே பகைமையும் பொருமையும் மிக்கு வளர வளர காட்டில் பல வேறு இடங்களிலும் குழப்பத்தை யுண்டாக்கினர். திருமாவளவன் அவ்வப்போது எழும் குழப்பங்களைச் செவ்வனே அடக்குவானயினன். அதனல் குழப்பங்களை யுண் டாக்குதலினல் மட்டும் திருமாவளவனுடைய பெருவலியை ஒழித்தல் இயலாதென்பதை யுணர்ந்த வேளிர் ஒருவாறடங்கி வேறு வகையில் அவனை எதிர்ப்பது எனச் சிந்தித்துக்கொண்டிருந் தனர். அங்கிலையில், சேரனும் பாண்டியனும் சோழனே டு பகைத்து எழுதலேக் கண்டு அவர் களுடன் சேர்ந்த கொள்ள வேளிர் பதினுெரு வரும் விரும்பினர் அவர்கள் சேரன் பெருஞ் சேரலாதனை யடைந்து தம் கருத்தை வெளியிட்

Page 38
68 திருமாவளவன்
டனர். சேரன் கொண்ட களிப்பிற்கும், பெரு மிதத்திற்கும் அளவே இல்லை. சோழன் வலியை அடக்குவது எளிதே என அவன் மனத்தில் தோன்றிற்று. பின், அனைவரும் ஒருங்கு கூடி எக்காலை படையெடுத்துச் செல்வதென ஆலோ சித்து ஒருவகை முடிவிற்கு வந்தனர். பாண்டி யன், சேரன், வேளிர் ஆய எல்லோரும் படைவலி கொண்டு தாங்கிச் சோழன் வலியழித்து வெற்றி கொண்டு தம் புகழ் பெருக்க எண்ணிப் போருக்கு வேண்டுவனவற்றை ஆயத்தப்படுத்தினர். சேட் சென் னியின் புதல்வர்களோ, தம் கருத்து முற் றுப்பெறுங்காலம் நெருங்கியது கண்டு அளவிலா உவகை கொண்டனர்.
சேர பாண்டியர்களின் சூழ்ச்சியை முருகற் சீற்றத்து உருகெழு குரிசிலான திருமாவளவன் உணர்ந்தான். இரு பெரு வேந்தரும் பதினுெரு வேளிரொடு ஒருகளத்தவியப் பொருவதற்குத் தானே கள பலவும் தகுமுறையில் சித்தப்படுத்திக் கொண்டான். அவனுடைய தானேத் தலைவர் களோ அவனை யணுகி வணங்கி, * மன்னவ, Aநெடுகாட்களாகப் போரில்லாமையால் சேனையில் உள்ள வீரர்கள் வாளா உண்டு வாழ்கின்றனர். அவர்கள் போரை விரும்பி எதிர்நோக்கிக்கொண் டிருக்கின்றனர். அன்னர் ஆயுதங்களோ துருப் பிடித்துள்ளன. எங்கள் பூரித்த புஜங்களோ கசை பெரிதுடையவாயின. களி இயல் யானைக் கரி கால்வளவ! அச் சேர பாண்டியர் இக்காஆல போர்தொடுத்து வருவாராயின் அவர்களுக்கு

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 69
காங்கள் நன்றியறித லுடையராவேம். -கின் கொற்றம் வாழ்வதாக, " என்று கூறி நின்றனர். சோழன் கரிகாலன், சேர பாண்டியர் எக்காலைத் தோன்றி எதிர்ப்பினும் அக்காலை எதிர் ஊன்றி அவர்களோடு பொருது வெற்றிகொள்ளச் சித்த மாயிருந்தனன்.
சேர பாண்டியரும் வேளிரும் படைகளைத் திரட்டிக்கொண்டு சோழநாட்டின்மீது படை எடுத்துவக்த தாக்கினர். திருமாவளவன் தன் சேனவீரர்களைத் திரட்டிக்கொண்டு மறப்பண்பு மிகப் போரினை விரும்பி அவர்களை வெண்ணிப் பறந்தலையில் எதிர்சென்று தாக்கித் தேக்கி நின்ற னன். இரு பெருவேந்தரும் பதினெரு வேளிரும் கொணர்ந்த பெருஞ் சேனேயினும் பன்மடங்கு அதிகமான சோழன் சேனைகள் கடுவரை கீரில் கடுத்து வ்ரக்கண்டு அவர்கள் அஞ்சினர். மாற்ற லர் கூற்றுார் மேவச் செகுத்திடும் திறல்வாய்ந்த சோழன் சேனவீரர்கள் ஆரவாரித்து எதிர்த்துத் தேக்கித் தடுத்துகின்ற தகைமை கண்ட சேர பாண்டிய வேளிர் சேனவீரர்கள் நெஞ்சுடைந்து நிலை அழிந்தனர் என்பது பொய்யன்று. போரும் தொடங்கிற்று. இருதிறத்தார் சேனைகளும் காய் கெழு சினம் மிகப் பொரலாயின. ஆயினும் என்னே 1 அக் கன்னிப் போரிலேயே சோழன்திருமாவளவன் தன் ஆற்றல் தோன்றப் பொரு தனன். ஒவ்வொரு கணமும் சேர பாண்டியர் கட்குத் தோல்வியைத் தரும் என்று தோற்றி நின்றது. சோழன் தானே போர்க்களம் குறு கிப் பகைவர்களை எதிர்த்துப் போர் புரிந்தனன்

Page 39
ገ0 திருமாவளவன்
ஒரமயம் திருமாவளவன் ஓர் அம்பு தொடுத்து விடுத்தனன். அவ்வம்பு சேரலாதனது மார்பிடம் துளைத்து ஊடுருவி முதுகின் வழியாக வெளிப் பட்டு அப்பாற்சென்று பிறர்மேலும் தைத்தது. முதுகிற்பட்ட புண்ணுல் மனமுட்கிப் போர்முனே நீங்கிச் சேரன் பெருஞ்சேரலாதன், கையில் தாங் கிய வாளுடன் வடக்கிருந்து பட்டினிகிடந்து உயிர் துறந்தனன். பாண்டியன் பட்டபாடு எத் தகையது என்று " கூறவேண்டுமோ? பாண்டிய னும் பதினெரு வேளிரும் போர்க்களத்தே உயி ரிழந்தனர் அவர்கள் சேனைகளோவெனின் போரிற் பட்டொழிந்தனபோக எஞ்சிய உய்வகை நாடி அஞ்சி யோடின. காய்ச்சினமொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்வளவன் வெண்ணிப்பறந்தலையில் பகைவர்களை எதிர்த்து வெற்றிகொண்டதர்ல்மட் டும் சினங் தணிந்திடப் பெருதவனுய் அவர்கள் 15ாட்டு ஊர்களேயும், மதில்களையும் அழித்து மீண் டனன்.
பகைவர்களைப் போரிற் கலக்கி, அடங்காச் சினத்தோடு நின்ற கடகளிறனைய கரிகால்வளவன் முன் ஒன்பது மன்னர் தத்தம் சேனைகளை அணி வகுத்துநின்று வாகை என்னும் இடத்தில் எதிர்த்து நின்றனர். சோழன் தனித்துள்ளான் என்று கருதியே அவர்கள் அங்ங்னம் ஒருங்கே சேர்ந்து படை எடுத்துத் தடுத்து நின்றனர். சோழன் கரிகாலஞே சிறிதும் கெஞ்சுடையாது அவர்களை எதிர்த்து நின்று பொருதனன். அப் போரில் அவ் வொன்பதின் மரும் பீடழிந்து தத்தம் வெண்

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 71
கொற்றக் குடைகளையும் இழந்தவர்களாய், அந்தோ! ஓடி ஒழித்தனர். அவர்கள் குடைகளே யும், ஆயுதங்களையும், ஆனை, குதிரைகளையும் விடுத்துவிட்டோடினர். திருமாவளவன் அவை களைக் கைப்பற்றிக்கொண்டு வந்தனன்.
வரும் வழியில் இருந்தது அருவா நாடு. அதற்கு மாவிலங்கை என்று மற்ருெரு பெயரும் உண்டு. அது அருவாவடதலை நாடு என்றும், அருவா நாடு என்றும் இருபெருங் கூறினையுடையது. அதன் தலை5கர் கச்சிப் பெரும்பதி. அப்பெருநாடு சோழ 15ாட்டின் வடபாலமைந்ததாகும். அங்காட்டின் கண் குறும்பர் என்னும் ஒருவகைக் கொடிய ஜாதியார் வசித்து வந்தனர். அங்காட்டில் வாழ்ந்த மக்கள் அக் குறும்பர் என்னும் கொடிய ஜாதி யோரால் அளவிடற்கரிய இன்னலுற்று வந்தனர். குறும்பர், 15ாட்டில் புகுந்து மக்களுக்குப் பல் வகையிலும் இன்னல் இழைத்துப் பொருள்களை யும் கொள்ளை கொண்டு சென்றனர். அதனல், அக்காட்டில் வாழ்ந்த மக்கள் அக் கொடியோர்கட் கஞ்சிப் பிற காடுகளிலும் சென்று வதிவாராயினர். அக்காட்டிலுள்ளார் படுக் துயரைக் கேள்வியுற்ற திருமாவளவன் அங்காட்டைச் சீர்ப்படுத்த எண் னினன். ஆதலின் அவன் அங்காட்டிற்குட் சென்று அக் குறும்பர்களேயும் பிடித்துத் தண் டித்து அவர்கள் வலி அடக்கினன். நாடும் ஒழுங்கு பெற அமைவதாயிற்று. பின், திருமாவளவன் அங்காட்டை இருபத்துதான்கு கோட்டங்களாகப் பகுத்தான். அவைகளுக்குத் திருமாவளவன் த&ம

Page 40
72 திருமாவளவன்
வர்களே நியமித்தான் ; மற்றும் ஆவன காடிப் புரிந்தனன்.
அக் கோட்டங்களைக் கொண்ட 15ா டு கள் ஆவன - ஆமூர், இளங்காடு, ஈக்காடு, ஈத்தூர், ஊற்றுக்காடு, எயில், கடிகை, கலியூர்தகளத்தூர், குன்றபத்திரம், சிறுகரை, செங்காடு, செங் திருக்கை, செம்பூர், தாமல் படுவூர், பல்குன்றம், புலால் புலியூர், பேயூர், மன் வூர், வெண்குன்றம், வேங்டம், வேலூர் என்பனவாம். மேற்கூறப் பட்ட இருபத்து5ான்கு கோட்டங்களிலும திரு மாவ6ரவன் வேளாளர்களைக் குடியேற்றிச் சீர் திருத்தினன். அதனுல் 15ாடும் செழிப்புற்றுச் சிறப்படைக்தது. v
பின்னர்த் திருமாவளவன் சச்சிப் பெரும் பதியின் கண் சிறப்புற்று விளங்கா நின்ற காமக் கோட்டத்தின் திருப்பணியை மேற்கொண்டு அப் பணியைச் செவ்வனே செய்து வழிபட்டனன். அக்காலை, வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை என்னும் இருவிடங்களில் வெற்றி கொண்ட விறலோனும் காமக்கன்னியின் திருக்கோயிலைச் செப்பனிட்டு வழிபட்டோனுமாகிய திருமாவள வன் முன், அக்கோயிலின் காவல் தெய்வமாகிய சாத்தஞர் தோன்றி அம்மன்னன்து சிறந்த தெய்வ பக்தியை மேம்பட எடுத்துப் புகழ்ந்து பேசித் தம் கையிலிருந்த செண்டு என்னும் ஆயுதத்தை யும் தக்தருளினர். அக்காலை அத்தெய்வம் அம். மன்னனிடம், 'மன்னவ, இச்செண்டால் அடிக் ஆப்படும் எப்பொருளும் நின் ஆணையில் அடிங்

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 73
கும், கின் கொற்றம் ஓங்குவதாக, ' என்று கூறி வாழ்த்தியது. அச் செண்டே திருமாவளவன் இமயவெற்பைத் திரித்தகாலையில் கைக்கொண்ட தாகும் என்பர் பெரியோர்.
தமிழ்நாட்டின் வடக்கேயுள்ளது வடுகநாடு. தமிழகத்தின் வடபேர் எல்லையாய் விளங்கிடும் திருவேங்கடம் வடுக காட்டில் உள்ளதாகும். வடுக 15ாட்டில் வாழ்ந்தோர் வடுகர். அவர்கள் பேசிய மொழி வடுகு எனப்படும். இவ் வடுகு பின் தெலுங்கு எனும் பெயர் பெறுவதாயிற்று. மன் னன் திருமாவளவன் அக் காட்டையும் தன்னடிப் படுத்திக்கொள்ள விரும்பிப் படை எடுத்துச் சென்ருன். வடுக நாட்டில் பல சிற்றரசர்களிருந் தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பெருஞ் சேனையுடன் வந்து திருமாவளவனே எதிர்த்தனர். திருமாவளவனே அச்சேனை கண்டு அஞ்சுபவன் ? அவன் வடுகர்களைக் கொல்களிற் றுக் குழாத்திடை புகும் அரியேறு என்னப் ப்ாய்ந்து அவர்களை முறியடித்து அவர்கள் பின் னிடைக் து ஓடுமாறு செய்து வாகை மிலேந்து ஒகையோடு நின்றனன். வடு கவரசர் வண்டமிழ் மன்னன் வலிகண்டு அஞ்சி வாய்பொத்தி ஏவலில் நின்றனர்.
பின்னர்த் திருமாவளவன் தொண்டை நன் னுட்டை யாண்ட தொண்டைமான் இளக்திரையன யும் போரில் கலக்கி வெற்றிகொண்டு மல்யமா நாட்டை 5ோக்கிச் சென்றனன். அங்காட்டினை வளப்படுத்துவது பெண்ணையாறு. அப்போற்றுக்

Page 41
74 திருமாவளவன்
கரைக்கண் அமைந்துள்ளது திருக்கோவலூர். அத்திருநகர் மலேயமாகாட்டிற்குத் தலைநகராக விளங்கிற்று. மலையமா காட்டாணுகிய மல்யமான் சோழநாட்டரசர்களின் ஆணைக்குட்பட்டு நடக் கும் சிற்றரசன். அவன், திருமாவளவனின் வருகை கேட்டுவந்து 15ல் வரவேற்றுக் கப்பப் பணமும், தன் நாட்டில் கிடைக்கும் நற்பொருள்களையும் அளித்து கட்புக் கொண்டனன். ஆதலால், திரு மாமளவன் அக்காட்டை விடுத்துப் பன்றிகாட்டை நோக்கிச் சென் முன்.
பன்றிநாடு, பாண்டி 15ாட்டிற்கு வடக்கே இருக் கும் ஒரு சிறு5ாடு. அதன் தலைநகர் நாகைப்பட் டினம். அங்காட்டின் கண் வாழ்ந்தோர் எயினர் என் றழைக்கப்படுவோர் ஆவர். அவர்களுள் நாகர், ஒளியர் என இருவகையினர் உண்டு. ஒளியர் என் பார் 15ாகருள் ஒருவகையினரே. ஒளிநாகர் அரசு பட்டம் எய்து தற்கு உரியராவ்ர். அவர்கள் வலி மிகப் படைத்தவர்கள். அவர்களால் குறுநில மன்னர்கள் பெரிதும் துன்புற்றனர். அதனை அறிந்த திருமாவளவன் அவர்கள் மீது போர் /தொடுத்துச் சென்று, வலியழித்து அடக்கினன். பின், திருமாவளவன் பாண்டிநாடு கோக்கிச் சென்ருன்.
பாண்டிநாடு, தென்பாண்டிநாடு, பாண்டிநாடு எனும் இருபிரிவினையுடையது. தென்பாண்டி நாடு என்பது தற்காலம் திருநெல்வேலி ஜில்லாவே யாகும். பாண்டி 15ாடு என்பது மதுரை ஜில்லா வாகும். திருமாவளவன் பாண்டி/5ாட்டின் மீது

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 75
படையெடுத்துச் சென்றதும், பாண்டியன் வெள்ளி யம்பலம் துஞ்சிய பெருவழுதி பெருஞ் சேனையுடன் வந்து எதிர்த்தனன். பாண்டியனையும் போரில் கலக்கி முறியடித்து வெற்றிகொண்டு திருமாவள வன் சேரநாடு 5ோக்கிச் சென்ருன் சேரநாடு. பூமிநாடு, குடநாடு, குட்டநாடு, வேநாடு, கற்காநாடு எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. இவ்வைந்து சிறுநாடுகளையும தன் பாற் கொண்ட சேரநாட் டிற்கு இராஜதானி 15கரமாக விளங்கியது திரு வஞ்சைக்களம். இங்ககரை வஞ்சி என்றும் கூறு வர். வஞ்சி என்பது கருவூர் என்று கருதுவாரு முண்டு. ஆணுல் திருவஞ்சைக்களமே சேர காட் டிற்குத் தலைநகராயிருந்தது என்பதும் கொள்ளத் தக்கதே.
'திருமாவளவன் குடவர் என்றழைக்கப்பட்ட சேரமன்னவரை வென்று பொதுவர் என்று வழங் கிய இடைக்குலத் தரசர்களையும் வென்று வேளி ரையும் வலியழிக்கவெண்ணி ஐம்பெருவேளிரை ய்ம் சென்று தாக்கி வலியழித்து வெற்றிகொண் டான். இருங்கோவேள் முதலிய வேளிர் ஐவரும் திருமாவளவனுக்குக் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் தன்னடிப் படுத்திக்கொண்ட மன்னன் திருமாவளவன் வட நாடு நோக்கிச் சென்றனன். செல்லுங்கால் பல ஆரிய மன்னர்களும் அவன் வலிமை கேட்டு அஞ்சி அவனேடு கட்புக்கொண்டு கப்பங் கட்ட ஒப்புக்கொண்டனர். மற்றும் அவர்கள் அளித்த

Page 42
76 திருமாவளவன்
திறைப்பொருள்களோ அளவில. யாவற்றையும் பெற்றுக்கொண்டு, இருநிலமருங்கிற் பொருநரைப் பெருதுசெல்லும் திருமாவளவனுக்குப் பணிதூங்கு சிகரத்து இமயப்பெருங்கிரி குறுக்கிட்டது. சோழன், கச்சியம்பதியில் சாத்தனுல் அளிக்கப்பட்ட செண் டால் அதனை அடிக்கவே அது அச்செண்டிற்கு நெகிழ்ந்து அகன்று நின்று வழிவிட்டது. அக் காலை மன்னன் இமையவர் உறையும் பனிதாங்கு சிகரத்து இமயமலையை யடித்ததை எண்ணி வருங்திப் பின் அதன் சிகரத்தின் மீது தன் கொடி யின் இலச்சினையான புலியைப் பொறித்து வைத்து விட்டு மீண்டனன்.
மீண்ட திருமாவளவன் வச்சிரகாட்டை யடைந்தான்.வச்சிரநாடு, சோணைநதியின் பெருக்கால் வளம் பெற்று விளங்குவதாகும். சோணே15தி பண்டல் கண்டு ( Bun liekhand ) 15க்ரை அடுத்து உற்பத்தியாகிப் பாடலிபுரத்தருகில் ( Patna) கங் கையோடு கலக்கும் ஒர் உபடுதி. வச்சிர நாட்டு வேந்தன், பொன்னி 15ாட்டுப் புரவலனுடன் பகை வனும் அல்லன் ; 15ட்பினனும் அல்லன் அய லானே எனினும் அவ்வேந்தன் காவிரிகாட்டுக் காவலன் புகழையும், வலியையும் கேள்விப்பட்டு மிக்க மரியாதையுடன் தன் 15ாட்டிற்கு அழைத்து வந்து அரண்மனையிலிருத்தி விருந்துகள் கடத் தினன், பின், அம்மன்னன் திருமாவளவனுக்கு முத்துக்களினல் ஆக்கப்பட்ட முத்துப்பந்தரை அளித்தான், வச்சிரகாட்டு மன்னனிடம் விடை கொண்டு அவன் கொடுத்த முத்துப்பந்தருடன்

திருமாவளவன் வெற்றி மேம்பாடு 77
திருமாவளவன் மகத்நாடு அடைந்தான். மகத 15ாட்டரசனே திருமாவளவனேடு பகைமை பூண்டு போருக்கு எழுந்தனன். போரினை விரும்பி வடக்கே போந்தும் போரின்மையால் வருந்திய திருமாவள வன் மனக்களிப்புற்றுக் கடும்போர் புரிந்தனன். பொன்னி காட்டுப் புரவலன் படைமுன் மகத 15ாட்டு மன்னன் படைகள் கலங்கி மலங்கி வெருண்டு இரிந்து ஓடின, மகத 15ாட்டு மன்னன் சோழன் வலியைச் செவ்வனே யுணர்ந்து சமா தானத்திற்கு வந்து சோழனெடு கட்புப்பூண்டது மன்றிப் பட்டிமண்டபம் என்பதையும் கொடுத்த னன். அதனைப் பெற்றுக்கொண்ட திருமாவள வன் அம்மன்னனேயும் தனக்குக் கப்பங் கட்டும் மன்னருள் ஒருவனக ஏற்றுக்கொண்டு அவந்திநாடு நோக்கிச் சென் முன், அவந்திகாட்டரசன் சோழ னுக்கு கண்பினன். அதனல் அம்மன்னன் திரு மாவளவனைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று விருந்துகள் 15டத்தினுன், மற்றும், அம் மன்னன், உவகை மிகுதியால் தன் 15ண்பனுகிய புனல் காடனுக்கு 15வரத்தினங்களால் இழைத்த வாயிற்ருேரணத்தை யளித்தனன்.
மாநீர்வேலி வச்சிரநாட்டுக் கோன் அளித்த முத்துப் பந்தரையும், மகத 15ன்னுட்டு வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபத்தை யும், அவந்தி வேந்தன் உவந்து கொடுத்த தோரண வாயிலேயும் பெற்ற திருமாவளவன் ஆரியமன்னர் பலரிடம் திறை கொண்டு மீண்டனன். மீண்ட அன்னேன் கடன் மீதிலும் ஆணை செலுத்தும்

Page 43
留出 திருமாவளவன்
கருத்து டையோயிைனனகவே இலங்கை மீது படை எடுத்துச் சென்றனன். அக்காலத்தில் முதற் கயவாகுவிற்கு முன் ஒரு சிங்கள ராஜன் அரசாண்டு வந்தனன். அச் சிங்கள ராஜன், சோழன் படையெடுத்து வருதலையறிந்து (Fಓr கஃளத் திரட்டிக்கொண்டு எதிர்த்து நின்று சோழ னேடு போர்புரிந்தான். எங்கும் வெற்றியின் மேல் வெற்றியாக வாகை சூடிவரும் திருமாவள வன் அவனையும் போரிற் கலக்கி வெற்றிகொண்டு, அவனல் அளிக்கப்பட்ட- திறைப் பொருள்களை யும் பிறவற்றையும் எடுத்துக்கொண்டு சோழ கன்னட்டையடைந்து காவிரிப்பூம்பட்டினத்தில் புக்கனன். அங்ககர் அன்று தேவலோகம்போல் சிங்காரிக்கப்பட்டிருந்தது. புகார் நகரில் தேவேந் திரனைப்போல் புகுந்த மன்னன் கொலுமண்டபத் தமர்ந்து இமயம் முதல் சேதுபரியக்தம் ஒரு கோலோச்சுவானுயினன். 15ாவலந்தீவை ஒரு குடைக்கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்மன்னன் ஓங் குயர் விழுச்சீர் பெற்ற திருமாவளவனே யன்ருே !

9. ஆதிமந்தியார்
மன்னன் திருமாவளவன், காங்கூர் வேண் மான் என்னும் பொற்புடை மனேவியோடு இனிது வாழ்ந்து வரும் 15ாட்களில் மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்ணும் தோன்றினர் என்று படித்தோம் அன்ருே ? மன்னன், அப் பெண்மகவுக்கு ஆதி மந்தியார் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனன். ஆதிமந்தி என்னும் அப்பெண் இளம் பருவத்திலேயே உருவிலும் திருவிலும் ஒப்புயர் வற்று விளங்கினுள். அவளது கவின் பெறு வனப் பைக் கண்டு இன்புற்றி திருமாவளவனும வேண் மாளும் அப் பெண்ணமுதை இரும்பிடர்த்தலை யாரிடம் விடுத்துக் கல்வி கற்பிக்குமாறு செய் தனர். இரும்பிடர்த்தலையார் ஆதிமந்திக்குத் தமிழ்க் கல்வியை யூட்டிவந்தனர். அங்கங்கை உரு விலும், திருவிலும் ஒப்ப வளர்ந்ததொப்பக் கல்வி யிலும் மேம்பட்டு விளங்கினுள். இசையிலும் அவள் சிறந்து விளங்சினுள். யாழ், குழல், முதலியனவற்றிலும் அவள் சிறந்த பயிற்சி பெற் றிருந்தாள். அம்மட்டோ ! அவள் குணத்தாலும், நலத்தாலும் ஒப்புயர்வற்று விளங்கினள். தம் மகள் பல்லாற்றலும் சிறந்து விளங்குவதைக் கண்ட திருமாவளவனும் வேண்மாளும் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. பொறையிற் புவிமகஅள யும், உருவில் திருமகளையும், கல்வியில் நாமகஅள யும் ஒப்ப விளங்கிய ஆதிமந்தி நாளும் குணனும், நலனும் ஒருங்கு வளர வளர்ந்து மணப்பருவம் எய்தினள்.

Page 44
8O திருமாவளவன்
மகள் மணப்பருவம் எய்தி இருத்தலை அறிந்த மன்னன் அவளுக்கு மணம் செய்து காண விழைங் தனன். அவளது குண15லங்களுக்கு ஏற்றவாறு தக்கதோர் மணுளனேத் தேடி மணஞ்செய்து வைக்கவேண்டியது அவனுடைய கடமையே யன்றே ! உலகில் 15ன்மணுளனைத் கேடித் தம் புத்திரிகளுக்கு மணம் செய்து வைப்பதில் தாய் தங்தையர் அடையும் துன் பங்கள் எண்ணிறந்தன வன்ருே ! கருத்தொருமித்த காதலனும், காதலி 'யும் இவ்வுலகில் காணக்கிடைத்தல் அரிதே ! ஆத லினுல் திருமாவளவனும் இரும்பிடர்த்தலையாரும் ஆதிமந்திக்கு இசைந்ததோர் மணளனை காடி மணம் புரிவிப்பதில் பெருமுயற்சி கொண்டிருக் தனர். அவர்கள் பலதேய அரசகுமாரர்களின் எழில், குணம், கல்வி முதலியனவற்றைப் பற்றி ஆராய்வாராயினர். முடிவில் மாமனும் மருமகனும் ஓர் அரசிளங்குமாரனேத் தேர்ந்தெடுத் தனர். அவன் ஆதிமந்தியின் எழில், குணம், கல்வி முதலியனவற்றிற்கு சிஇசைக்த மணுளனே. அவன் பெயர் அத்தி என்பதாகும். அவனே ஆட்டன் அத்தி எனறும கூறுவா,
ஆட்டன் அத்தி ஒரு சேரகாட்டரசன். அவன் வில், வேல், வாள் பயிற்சியிலும், குதிரையேற் றத்திலும், யானேயேற்றத்திலும் சிறந்தவன். மற் றும், போரில் பகைவர்களே வெங்கிட்டோடும்படி துரத்திப் போர் மலேந்து வாகை குடும் விறலோன். அவனது உருவமும், ஆடவர் அவாவும் தன் மைத்து. முருகனே, மதனனே என மருளும்

ஆதிமந்தியார் 8.
தகைமை வாய்ந்த வடிவழகைப் பெற்ற ஆட்டன் அத்தி சங்கீதப் பயிற்சியும், கலைத்தமிழ்ப் பயிற்சி யும் பெற்றவன், அவன் இசையில் பெருவிருப் புடையணுயிருந்தது மன்றிப் பரத 15ாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றவன். அவன் பண்டைப் பரத காட்டிய நூல்களைச் செவ்வனே பயின்று காட் டிய இலக்கணங்களை நன்கு உணர்ந்திருந்தான். ஆதலின் அவன் அடிக்கடி கீதங்கள் பாடி மகிழ் வதோடு அக் கீதங்களுக்கிசையச் சதியிட்டு காட் டியமும் புரிந்து மகிழ்வான். ஆதலின் அன்றே அவன் ஆட்டன் அத்தி என்று பெயர் பெற்றன் ! அவன் அரசியலைச் செவ்வனே 15டத்தி வந்தான். ஆட்டன் அத்தி, ஆதிமந்தியின் வடிவழகையும், குண நலங்களையும், கல்விச்சிறப்பையும் கேள்வி யுற்று அவளே மணந்துகொள்ள விரும்பினன். ஆதலின் இரும்பிடர்த்தலையாரும், திருமாவள வனும் அவனே அணுகி, ஆதிமந்தியை மணந்து கொள்ளும்படி கேட்டது அவனுக்குப் பழம் நழு விப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று. அவனும் ஆதிமந்தியை மணந்துகொள்ள இகைந்தனன்.
திருமாவளவன் தன் அவைக்களத்திலுள்ள நிமித்திகர்களைக் கூவிப் பெரியோர்கள் துணை கொண்டு கன்னுள் ஒன்றைக் குறித்தனன். அங் கன்னளில் ஆதிமந்தியை ஆட்டன் அத்திக்கு வாழ்க் கைத் துணையாக மணம் வுரிவிப்பதெனக் குறித் துப் பல்வேறு தேயத்தர சர்களுக்கும், செல்வர் களுக்கும் ஒலைதள் போக்கினன். காவிரிப்பூம்பட் டினம் பொன்னுட்டு அமராவதியினும் பொலிவு
6

Page 45
82 திருமாவளவன்
பெற்று விளங்கும்படி சிங்காரிக்கப்பட்டது. ஆட் டன் அத்தியும், சுற்றத்தாரும், பெரியோர்களும் கால்வகைப் படைகளும் புடைசூழச் சோழ கன் னட்டுப் பூம்புகார் 15கர் வந்தடைந்தனர். அக் நகரில் எங்கும் பல்வேறு தேசத்து மன்னரும், மக்களும் வந்து நிறைந்திருந்தனர். திருமாவள வன் அவரவர்களுக்கு ஏற்றவாறு இருப்பிடங் களும், பிறவும் அளித்து உபசரித்தனன். சேர காட்டினின்றும் போந்த மக்களும் பிறரும் செவ் வகையாக உபசரிக்கப்பட்டனர். ஆட்டன் அத்தி யையும், அவன் சுற்றத்தாரையும் புதியதோர் அரண்மனையில் இருத்தினன். திருமண நாள் 5ெருங்கியது. திருமணத்திற்குரிய 15ாளன்று ஆட் டன் அத்தியையும், ஆதிமந்தியையும் கங்கை முத லிய புண்ணிய நீர் கொண்டு நீராட்டுவித்து, ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து அழகிய திருமண மண்டபத்தில் அரத5பீடமிசை அமர் வித்தனர். கன் முகூர்த்தவேளை கணுகியது. வேதி யர் வேதம் ஒத, மங்கையர் பல்லாண்டு பாட பல்லியங்கள் இயம்ப ஆட்டன் அத்தி மங்கல ாகாண மகிழ்வோடு ஆதிமந்தியின் கழுத்தில் புனேக் தனன். எல்லோரும் மணவினை கண்டு மகிழ்க் தனர். திருமாவளவன் தன் பண்டாரத்தைத் திறந்து யாவர்க்கும் வேண்டுவனவற்றை வேண் டியவரை அளித்தான். பல்வேறு தேசத்தரசர் களும் ஆதிமந்திக்கு அரும்பொருள்களை அளித்து ஆசி கூறினர். திருமாவளவன் தன் மகளுக்கு ஒப்பற்ற உயர்வு பொருந்திய பொருள் சீதனமா கக் கொடுத்தான் ; பெரு விருந்துகள் 5டத்தி

ஆதிமந்தியார் 83
னன். சுருங்கச்சொல்லின் காவிரிப்பூம்பட்டினத் தில் ஒரு மாதம் வரை ஆதிமந்தியின் திருமண வைபவம் நடந்துகொண்டே இருந்தது. பின் அனே வரும் தத்தம் 15ாடுகளுக்குச் சென்றனர்.
திருமாவளவனும், இரும்பிடர்த்தலையாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர்கள் பலகாலும் ஆட்டன் அத்தியைச் சோழ5ாட்டிற்கு வரவழைத்துத் தம்மிடையில் அவனே வைத்துக் கொண்டு உரையாடி மகிழ்வர். ஆதிமந்தி, தான் செய்த புன்ணியப் பேறே தனக்கு நன் மணுள னைத் தந்தது என மகிழ்ந்து கணவன் கருத்திற்கு இசைக்து பெண் என்னும் பெருமையோடு இல் லறம் கடத்தி வந்தாள். கருத்தொருமித்த காத லனும், காதலியுமான ஆதிமந்தியும் ஆட்டன் அத்தி யும் அறவோர்க்களித்தல், அந்தண்ர் ஓம்பல், விருந்தினர்ப் பேணல் முதலிய கல்லறங்களை இன் பத்தோடு புரிந்து வந்தனர். இல்லற மல்லது நல் லறிம் அன்று என்பது 15ரை மூதாட்டியின் நல் லுரையன் ருே ! , அவர்கள் இருவரும் உடல் வேறுடையவராயினும் உயிர் வேறுபடாதவரே ! காதல் மனயாளும் காதலனும் கருத்தொருமித்துத், தீதில் ஒரு கருமம் செய்பவே என்னும் பொன் மொழியை அவர்கள் உளத்தில் கொண்டு ஒழுகி வந்தனர். அவர்கள் உண்மையில், "காகத் திரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு, இருவர் ஆகத் திலும் ஒருயிர் கண்டனம் ' எனக் கண்டோர் கூறு மாறு இல்லறம் புரிந்து வந்தனர். சோழன் வேண் டும்பொழுதெல்லாம் ஆட்டன் அத்தியும், ஆதிமந்தி

Page 46
84 திருமாவளவன்
யும் சோழநாட்டிற்குப் போந்து திருமாவளவ னேடு சிலகாலம் இருந்து பின் தம் நாட்டிற்குச் செல்வர். இவ்வாறு சில ஆண்டுகள் கடந்தன.
என்றும் வற்ரு இயல்பு வாய்ந்து, சோழ |கன்னட்டிற்குப் பீடும் பொருளும் அளிக்கும் பொன்னி என்னும் காவிரி நதியில் ஆடி மாதத் தில் நீர் பெருக்கெடுத்தோடும். அப் புதுநீர்ப் பெருக்கின் பொழுது அங் 15ாட்டினுள்ள மக்கள் அனைவரும் அக்ரிேல் மூழ்கி விளையாடி விழாக் கொண்டாடுதல் வழக்கம். அவர்கள் திரள் திர ளாகப் பல்வேறு துறைகளுக்கும் சென்று நீர் விளையாடி மகிழ்வார்கள். அவர்கள் அக்காலை, * பொன்னளிக்கும்புதுப்புனல் காவிரி பொங்குக ' என்று வாழ்த்தும் ஓசை எழுகடல் ஓசையை யடக்கும். சிலர், காவிரி கதியைப் பூசிப்பார்கள். நீர் விளையாடிய பின், ஆங்காங்குள்ள வெண்மணல் எக்கரிலும் சோலைகளிலும், மண்டபங்களிலும், புத்தம் புத்தாடைகளும், அணிகளும் அணிந்து அமர்ந்து சுற்றத்தா ருடனும், மனைவி மக்களுட னும், இன்சுவை மிகுந்த நெய்யால் தாளித்த பல் வேறுவகைச் சோற்றுடன், பல பணியாரங்களை யும் உண்டு, மகிழ்ச்சியோடு கடுகி ஓடும் காவிரி யின் நிறைந்த புனலை நோக்கி இன் புற்றிருப்பார் கள். இத்தகைய திருவிழாவைச் சோழன் திரு மாவளவன் கடத்துங் காலத்தெல்லாம் ஆட்டன் அத்தியும் ஆதிமந்தியும் சோழநாட்டிற்கு வங்து திருமாவளவனேடு இருப்பது வழக்கம், அக்காலங் களில் திருமாவளவன் காவிரிப்பூம்பட்டினத்திற்

ஆதிமந்தியார் 85
கும், மாயூரத்திற்கும் இடையிலுள்ள கழார் என் னும் ஊரின் காவிரித் துறையை யடைந்து எல் லாருடனும் காவிரிப் புதுப்புனல் திருவிழாக் கொண்டாடி மகிழ்வான்.
ஒரு வருடம் காவிரியின் புதுப்புனல் திரு விழாக் காலம் வந்தது. ஆட்டன் அத்தியும் ஆதி மந்தியும் திருமாவளவன் அழைத்ததற் கிசைந்து சோழ5ாட்டிற்கு வந்தனர். திருவிழா 15ாளன்று மன்னன் திருமாவளவன் எல்லாரோடும் கழார் என்னும் ஊரின் காவிரித்துறையை அடைந்த னன். அங்கு, யாவரும் புதுர்ேப் பெருக்கில் மகிழ்ச்சியோடு மூழ்கி விளையாடிக்கொண்டிருக் தனர். ஆட்டன் அத்தியும் நீரில் மூழ்கி விளையா டிக்கொண்டிருந்தான். ஆற்றின் நீரில் நீந்தி விளை யாடுதலை ஆட்டன் அத்தி மிகவும் விரும்பினன். அவனுக்கு ந்ேதவும் நன்ருகத் தெரியும். எனி னும், பெருவெள்ளப் பெருக்கில் புணையின்றி நீங் துதல் இன்னுதே யன்றே ! " நீர் விளையாடேல்; நெடு நீர்ப் புனையின்றி நீந்துதல் இன்னு” என்பன ஆன்ருேரின் அமுத மொழிகளன் ருே ! பலவிடத் தும் மூழ்கி மூழ்கித் தோன்றித் தோன்றி மகிழ் வோடு நீர் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டன் அத்தி தவறிக் கடுகி வந்த ர்ேச்சுழியில் அகப்பட் டுக்கொண்டான். அவன் பல்வகையிலும் அத னின்றும் தப்பித்து வர முயன்றும் அம் முயற்சி பயன்படாமற் போயிற்று. ஆகவே அவன் மூழ் கிய நிலையில் வெள்ளத்தால் அடித்துக்கொண்டு போகப்பட்டான். கரையில் இருந்தவர்கள் நீரில்

Page 47
86 திருமாவளவன்
மூழ்கி விளையாடுகின்றன் என முதலில் நினைத்த னர். 5ெடிது காலம் அவனைக் காணுதிருக்கவே அவர்கள் ஐயுற்றனர். எங்கும் பரபரப்பு உண் டாயிற்று. திருமாவளவன் திகைப்படைந்தான். ஆதிமந்தி கெஞ்சம் திடுக்கிட்டுச் சித்திரப் பாவை யைப்போலச் செயலற்று இருந்தாள். நீத்தம் வல் லார் பலர் ஆற்றில் இறங்கிப் பல்வேறிடங்களிலும் தேடித்தேடிப் பார்த்தனர். எங்கும் அத்தியைக் காணுது வருந்தி வருக்தி அரசனுக்கு அறிவித்த னர். ஆதிமந்தியோ நீர்வழி கண்களை யுடைய வளாய்ப் பித்துக் கொண்டாற்போல், 'ஐயகோ ! என்னுயிரே ! நீ யாண்டுள்ளாய்! நீரில் மூழ்கிக் கரந்து சென்ற மாயம்தான் என்னே ! என்னை இங்குவிட்டுளங்குச்சென்ருய் என் கண்ணே! யான் தனியாளாய்த் தவித்தல் தகுமோ ! ' என்று பல வாறு வாய்விட்டரற்றிக்கொண்டு அங்கும் இங்கும் ஒடி அலைந்தாள். அவளைத் தேற்றத் திருமாவள வன் பலவாறு முயன்றன் ; ஒன்றும் பயன்பட வில்லை. ஆதிமந்தி ஒருவர் சொல்?லயும் கேட்காது, * மரமே ! என் இன்னுயிரைக் கண்டாயோ ? புல்லே, கண்டாயோ ! மான்ே, கண்டாயோ ! மயிலே, கண்டாயோ !” என்று கேட்டுக்கொண்டே வழியிடைப்பட்டவர்களையும் கேட்டுக்கொண்டு அழுத கண்ணும், சிக்திய மூக்கும், சிதைந்த ஆடையும், அவிழ்ந்த கூந்தலும், தளர்ந்த மேனி யும் தாங்கிக்கொண்டு காவிரிக்கரையூடு கணவனை நாடிச் சென்ருள். மன்னன் திருமாவளவன்
அவளேத் தடுத்தற்கு இயலாதவனுய், மற்றவருடன் அளவிலாத் துயரத்துடன் அரண்மனையை யடைந்

ஆதிமந்திய்ார் 87
தான். 15ாங்கூர் வேண்மாளும், இரும்பிடர்த் தலையாரும், திருமாவளவனும் எத்தகைய துன்ப முற்றிருந்தனர் என்பதை யாவரே எடுத்தியம்பும் திறத்தினர் ? ஒருவாறு கூறுவோமாயின் அவர் கள் உயிரில்லா உடம்புபோல் இருந்தனர் என்ன
6) TLD
மக்கள் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து வருதல் இயல்பு. இன்னல் வந்துற்ற காலை அழுங்கியும், இன்பம் வந்துற்றகாலை மகிழ்க் தும் வாழ்தாளேக் கழிப்பது சாதாரண மானிடர் களுக்கு இயல்பு. ஆனல் பெரியோர்கள் இன் பத்தையும் துன்பத்தையும் ஒப்ப கோக்கும் தன்மை யுடையவராய் வாழ்வர். ஏனெனில், -1 ஆவது ஆகுங்காலத் தாவதும், அழிந்து சிந்திப் போவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் ” என்பதை அவர்கள் 15ன்குணர்வர். விதி வலிது. அதனைத் தடுப்பார் யார் ? அரசனும் பரிவாரங் களும் அடைந்திருந்த மகிழ்ச்சி ஒரு கணத்தில் ம்ாறிற்றன்ருே !
கண்டார் 5டுக்குறுங் கோலத்தோடு சென்ற ஆதிமந்தியோ காவிரியின் நெடுங்கரை வழியே பிரலாபித்துக்கொண்டு சென்று கடற்கரையை யடைந்தாள். இடைவழியில் அவள் கண்டவர் களை எல்லாம், ' என் ஆருயிரைக் கண்டீரோ ? என் காதலனைக் கண்டீரோ ? என் ஆடல் அழக இனக் கண்டீரோ ? என்று கேட்டுக் கேட்டு வாய் கொந்தாள், அவளேக் கண்ட மைந்தரும் மங்கைய
ரும், மெய்த்துணுக்குற்றுக் கற்பின் தெய்வமோ !

Page 48
88 திருமாவளவன்
விண்ணுலகத்தில் இடருற்றுப் பொன்னுலகு நீத்து மண்ணுலகுற்ற மங்கையோ I அணங்கோ ! என ஐயுற்றனர். ஆதிமந்தி ஊணும் உறக்கமும் இன்றி கிற்றலும் கிடத்தலும் அகற்றிச் சின்னுளில் கடற் கரையை அடைந்து ஆங்கு அலைந்து திரிந்து வரு. வாரையும் போவாரையும் பலவாறு கேட்டு அரற் றிக்கொண்டிருந்தனள். யாரே அவளுக்குப் பதில் கூறுவார் 1 அங்தோ பாவம் ! கற்பின் கொழுக் தும் பொற்பின் செல்வியும் ஆய ஆதிமந்தியை அனேவரும் பேய்க்கோட்பட்டவள் என்றும், பித் தேறியவளென்றும் கருதினர். இது நிற்க.
காவிரி கொண்டொளித்த அத்தி நீர்ச்சுழலில் சிக்குண்டு தன்னல் இயன்றவரை முயன்றும் பயனின்றி நீரோடு செல்வானனன். ஆனல் அவன் ந்ேதுதற்கு முயன்றுகொண்டே வந்தனன். அவன் பலகாலும் வெளியே தோன்றுவதும் மூழ்குவதுமாக இருந்தான். நீர் கடுவிசைகொண்டு மண்டி) ஓடிக்கொண்டிருந்ததால் அவன் நீர்ப் பெருக்கில் அடித்துக்கொண்டு செல்லப்பட்டான். 15ட்டாற்றில் நீர்ச்சுழியில் சிக்குண்ட அவன் /அச் சுழியலினின்றும் தப்பித்துக்கொண்டுவர, அவன் அங் நீர்ப்பெருக்கோடு இரண்டு மூன்று மைல் தூரம் சென் முன். பின், அவன் நீர்ச்சுழி யலினின்றும் விடுபட்டான். அப்பொழுதுதான் அவனுக்கு அபாயம் ங்ேகியது. ந்ேதிக் கரையேறு தலும் கூடும் என்ற கம்பிக்கையும் அவனுக்கு உண்டாயிற்று. ஆனல், நீர்ச்சுழியலில் அகப்பட் டுக்கொண்டிருந்தபொழுது பலகீாலும் தண்ணிச்

ஆதிமந்தியார் 89
குடித்ததினுல் உடல் பருத்துவிட்டதுமன்றி அவய வங்களும் சலித்திருந்தன. அச்சமயம் அவன் நீந்துதற்கு உரிய நிலையில் இல்லை. ஆகவே அவன் இயன்றளவு கரையை யணுகும் முறையில் நீர்ப் பெருக்கோடு அடித்துக்கொண்டு வரப்பட்டான். அங்கிலையில் அவன் பெரிய அலைகளால் மோதப் பட்டுக் கடற்கரையை அடுத்துள்ள ஓர் ஊரின் ஆற்றங்கரையோரத்தில் ஒதுக்கப்பட்டான். அவன் கரையிலேறி அங்கு மணலில் சலிப்பால் விழுந்து கிடந்தனன்.
கடற்கரையை அடுத்ததாகிய சிற்று ர் ஒன் றில் மருதி என்பாள் ஒருத்தி வசித்து வந்தனள், அவள் தினந்தோறும் அக்கடற்கரைக்குச் செல்வ துண்டு. ஆட்டன் அத்தி, ஆற்றுப்பெருக்கால் அடித்துக்கொண்டு வரப்பட்டு அலைகடலோரத் தில் மணற்றிட்டில் வீழ்ந்து கிடந்த அந்தத் தினத் திலும் அவள் அங்கு வந்தாள். அங்கு அவள் ஆட்டன் அத்தி விழுக்து கிடப்பதைக் கண்டாள். அவன் நிலைமையை அவள் 15ன்கு யூகித்து அறிந்து கொண்டாள். ஆட்டன் அத்தியோ மூடிய கண் திறவாதவனய்ச் சோர்வுற்றுக் கிடந்தான். அவன் மேனி சிறிதும் அசையவில்லை. கெடிது 5ேரம் உற்றுப்பார்த்து மருதி அவன் வடிவெழி லால் அவன் ஒரு சிறந்தோனக இருக்கவேண்டு மென்று 5ன் கறிந்துகொண்டாள். அவன் நிலையை அறிந்த அவள், அவனை மெதுவாகப் புரட்டிப் பார்த்து அவன் தன் னேயும் மறந்த மயக்க நிலை யில் குற்றுயிருடன் களேத்துக் கிடக்கின்முன்

Page 49
9 O திருமாவளவன்
என்பதை அறிந்துகொண்டாள். அவள் மனம் உருகியது. மருதி, அங்குச் சற்று 5ேரம் இருந்து பலவகைகளிலும் அவனுக்குக் களைப்பு நீங்கு மாறு செய்தாள். அவள் உதவியால் ஆட்டன் அத்தி களைப்பு நீங்கிக் கண் திறந்தான். அப் பொழுதுதான் கைகால்களே அசைக்கக்கூடிய நிலையை அவன் அடைந்தான். பின்னர், மருதி செய்த உதவிகளால் ஒருவாறு தேறித் தள்ளாடி 15டக்கும் நிலைமை எய்தினன். மருதி அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ருள். அங்கு அவள் அவனுக்குப் பல்வகையிலும் உண்டாகிய 5ோயைக் குணப்படுத்த முயற்சி எடுத்துக்கொண்டாள். அவள் (5ல்லுணவு அட்டு அவனுக்கு அளித்தாள. ஆட்டன் அத்தியின் நிலே ஒருவாறு குணப்பட்டு வந்தது. சில 15ாட்கள் கழிந்தன.
ஆட்டன் அத்தி குணம் அடைந்து எழிலும் திறனும் அடைந்தான். அவன் பழமையேபோல ஆடலிலும் பாடலிலும் காலத்தை இன் புறக் கழிப்பதானன். மருதி என்பாள் ஒரு பாடினி, அவள், ஆட்டன் அத்தியின் ஆடல் பாடல்களி லும், வடிவழகிலும் ஈடுபட்டு மகிழ்ந்தாள். அவள் அவனை அன்புடன் நேசித்தாள். ஆட்டன் அத்தி அவளைக் கந்தருவ மணத்தைத் தழுவி மணந்து கொண்டான். ஆட்டன் அத்தியும் மருதியும் அன் புற்று இன் புற்று வாழ்ந்து வந்தனர். ஆட்டன். அத்தி காட்டையும், ஆதிமந்தியையும் அறவே மறந்திருந்தான்.

ஆதிமந்தியார் 9
ஆதிமந்தி, கண்ணிற்கினிய கணவன் காவிரிப் பெருக்கால் இழுப்புண்டு போயினனே என்று கீலங்கிய நிலையில் கண்களில் நீர் சோர, தலைவிரி கூந்தலோடு அரற்றிக்கொண்டு காவிரிக் கரையூடு வந்து எங்கும் தேடித்திரிந்தனள். கணவனேக் காணுது கலுமும் ஆதிமந்தி, மருதியின் வீட்டிற் குப் பக்கத்தில் தற்செயலாய்ப் போந்து அரற்றி அழுதுகொண்டிருக்கையில், மருதி வெளியே வந்து அவளது துன்புற்ற நிலையைக் கண்டு மனங் கசிந்துருகி, அவளுக்குற்ற விடுக்கண் யாதென வினவி இல்லத்திற்கு அழைத்துச் சென்றனள். மருதிக்கு ஆதிமந்தி யாவற்றையும் கூறிக் கொண்டே சென்றனள். இல்லத்தை யடைந்த தும் ஆதிமந்தி ஆங்கு ஆட்டன் அத்தியைக் கண் டனள். இறந்தவர் தோன்றினற்போல் பெரு மகிழ்ச்சி எய்திய ஆதிமந்தி, ஆட்டன் அத்தியை இறுகத் தழுவிக் கொண்டனள். ஆட்டன் அத்தி வாய் பேசவியலாதவனுய்க் கண்களில் நீர் வடிய ஆதிமந்தியைத் தழுவிக்கொண்டான். ' பிரிந்தவர் கூடினுற் பேசவேண்டுமோ??? கெடிது நேரம் கழிந்தபின் இருவரும் தத்தமக்குற்ற இடுக்கண் களேக் கூறிக்கொண்டு தமக்குள் தாம் தேறுதல் அடைந்தனர்.
இருவர் நிலையையும் அறிந்த மருதி, ஆதி மந்தியின் எழிலைக் கண்ணுற்று ‘இனி ஆட்டன் அத்தி அவளை விட்டுப் பிரியான்' என்று கருதி வெளிப்போந்து கடலே குறுகினள். அவள் மனத்தில் தோற்றிய எண்ணங்கள் யாவோ ?

Page 50
92 திருமாவளவன்
அறியோம். அவள் கடலில் பாய்ந்து உயிர் துறக் தாள். அச்செய்தி பின் தெரியவந்தது. அதற்காக அவன் பெரிதும் வருந்தினன். அவன், செய்ங் 15ன்றி மறவாமல், ஆவன செய்து பின் ஆதிமந்தி யோடு காவிரிப்பூம்பட்டினம் சென்றடைந்தான்.
திருமாவளவன், தன் பெண்ணையும் மருக னேயும் கண்டு அளவிலா உவகை பூத்தனன். சில காலம் ஆட்டன் அத்தி மாமனர் இல்லத் திருந்துவிட்டுப் பின் தன் காட்டிற்குச் சென்ற னன். அரசனை இழந்தோமே என்றிரங்கிக் கொண்டிருந்த அக் கன்னடு அவனைக் கண்டதும் களிப்பென்னும் கடலுள் மூழ்கியது. ஆட்டன் அத்தி அரியணை யமர்ந்து இன்ப வரசு கடத்தி வந்தான்.

10. அரசியல்
ஒரு காட்டின் சீரும் சிறப்பும், மன்னன் பெருமையும் அவனுடைய ஆட்சிக்கு ஏற்பவே அமைவன ஆகும். மன்னன் மாசறக் கற்ருே னும், பகைப்புலன் ஒடுக்கும் விறலோனும்; அமைச்சர் கூறும் 15ல்வழிக்கண் நிற்போனும், தன் னுயிர்போல் மன்னுயிர்களைப் பாவிக்கும் தகுதி யுடையோனும், 15டுநிலை தவருதோனுமாயின் அத்தகைய மன்னனல் புரக்கப்படும் 15ன்னுடு மேம்பட்டு விளங்கும் என்பதில் ஐயமென்னை ? திருமாவளவனேவெனில் மன்னன் ஒருவனுக்குப் பொருந்திடத் தகுந்த மாண்புடைக் குணங்கள் யாவும் ஒருங்கே பொருந்திடப் பெற்ருேன். மற் றும், 5ாட்டின் 15லத்தையும், குடிகளின் 5லத்தை யும் காடிச் செய்வன செய்தலின் கண் ஒரு சிறி தும் குறைவுபாடு உடையோன் அல்லன். அம் * மட்டோ / நீரும் உயிர் அன்றே , நெல்லும் உயிரன்றே ; மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம் ” என்னும் பொன்னுரையை நன்குணர்ந்தவன். அவன் ஆற்றலும், விகோத சாதுரிய புத்தியும், பேரறிவும், 15டுவு நிலைமை தவருமையும் அமை யப் பெற்றிருந்தமையை 5ோக்குமிடத்து காவலக் தீவை ஒரு குடைக்கீழ் ஆளும் தகுதியுடைய மன் னன் அவனே . என்பது விளங்காது இராது. 15ரை முது மக்கள் உவப்ப, இளமை காணி, மறைத்து, முதுமை வேடம் தரித்துக் காட்டி உரை முடிவு கண்ட உரவோன் அன்ருே மகி

Page 51
94 திருமாவளவன்
தலம் போற்றும் மன்னன் திருமாவளவன் 1 அச் செய்கையை நுணுகி ஆராயுமிடத்து அவனது கூரியமதிவலியும், விநோதமும், வியக்கத்தக்கனவே யன் ருே !
திருமாவளவன் அவையில் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் இருந்தன. 15ாட்டுமக்களால் “தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனப்பிரதிநிதிகளடங்கிய சபையும் இருந்தது. பார்ப்பார் - குருமார்களாக அவன் அவைக்களத்தில் சிறப்புற்றுப் பொலிந்து விளங்கினர். அவன் 15ாட்டுக் குடிகள் நோய் கொடிகளின்றி வா ழும்பொருட்டு ஆங்காங்கு வைத்தியசாலைகள் அமைத்து மருத்துவர்களையும் நியமித்திருந்தான். நிமித்திகர்கள் பலர் அவன் அவைக்களத்தில் சிறந்து விளங்கினர். அரசனை யடுத்து அனுபவத்தாலும் கல்வியாலும் சிறந்து விளங்கிய அமைச்சர்கள் அமர்ந்து அரசனே கல் வழிப்படுத்தி வந்தனர். திருமாவளவன் தனிமைப் பட யாவும் செய்தற்குரிய ஒப்பற்ற அரசனுக விளங்கினுன் எனினும், அமைச்சர்களேயும் ஆன் மூேர்களையும் உசாவி அவர்கள் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டே யாவற்றையும் செய்து வந்தான்.
திருமாவளவன் காலத்தில் தமிழ் வளம் நிரம் பிய சோழ நன்னூட்டில் கைத்தொழில், சிற்பம், சங்கீதம் முதலியன சிறந்து விளங்கின. வேளாண்மை சிறப்புற்ருேங்கியது. அவன் வியா பாரத்திற்குரிய பல வசதிகளையும் செய்வித்தனன், கடற்றுறைமுகங்களும், அவ்வவ்விடங்களில் கலங் கரை விளக்கங்களும் சிறந்து விளங்கின. வியா

அரசியல் 95
பாரம் செழித்தோங்குவதாயிற்று. மொழி பல வெருகிய பழிதீர் தேயத்துப் புலம்பெயர் மக்கள் கலந்தினிதுறையும் முட்டாத சிறப்பினை யுடை யது காவிரிப்பூம்பட்டினம் என்று எல்லோரும் போற்றிக் கூறுவர். சோனகர், சீனர், சாவகர், ரோமர் முதலிய பல காட்டோரும் காவிரிப்பூம் பட்டினத்தையடைந்து வாணிபம் பேணி வந்தனர். அதனலும் 15ாட்டில் செல்வம் பெருகிற்று.
w திருமாவளவன் கல்வியைக் கண்ணென மதித்து வந்தனன். அவனுக்குப் பெருந்துணை யாகவும் ஆசிரியராகவும் இருந்து வந்தவர் இரும் பிடர்த்தலையார் என்னும் புலவர் அன் ருே ? கல் வியைப் பெருக்கித் தன் காட்டுக் குடிகளின் s身芭石 விருளை யேர்ட்டி மேன்மைப்படுத்த வேண்டியது தன் கடனே என்பதை அவன் உணர்ந்திருந்தான். அதனுல் அவன் தன் காட்டில் எங்கும் கல்விக் கழகங்களை நிறுவி மக்களுக்குக் கல்வி புகட்டி வந்தனன். அவன் காலத்தில் புத்தக நிலையங்கள் பல கிறைந்து விளங்கின. ஆங்காங்குத் தமிழ்ச் சங்கங்களை சிறுவிப் புலவர்களே அவைகளில் சேர்த்துத் தமிழ்க் கல்வியைப் பரவச் செய்தான். அதனுலும் தமிழ்க் கல்வி பரவலாயிற்று. அவன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தான். அவன் காலத்தில் பல்வேறு சமயத்தவர்களும் இன்புற்று வாழ்ந்து வந்தனர்.
திருமாவளவன், குடிகள்டத்தில்"ஜீ.சீஜ்குடி
பகுதியையே அரசுக்குரிய கடமையாகக் கொண்
டான். அவ்வாறு கொண்கிரசில்லுலுத்தயும்

Page 52
96 திருமாவளவன்
குடிகளின் கன்மையைக் கருதியே செலவிட்டு வந்தான். காவிரிப் பேராற்றில் அணைகட்டிக் கால்வாய்கள் வெட்டி நீர்ப்பாய்ச்சன வசதிகளைச் செய்து வேளாண் மக்களுக்குப் பேருதவியைப் புரிந்து வந்தான். கல்வியைப் பெருக்கும் முறை யிலும் திரண்ட செல்வத்தைச் செலவு செய்து வந்தான் அவன் /ஆட்சியில் குடிகளுக்குக் கள் வர், பகைவர், வேற்றுப்புலவேந்தா, விலங்கு முதலியனவற்ருல் ஒருவித அச்சமும் ஏற்பட வில்லை. காட்டில் ஒற்றுமை நிலைத்திருந்தது. குடி கள் ஒருவருக்கொருவர் அன்பும், 15ட்பும், பரோப காரமும் உடையவர்களாய் இன் புற்று வாழ்ந்து வந்தனர்.
திருமாவளவன் மக்களின் ஒழுக்க நெறியைக் காக்க என்ணி விப்பிரர்களைத் தருவித்து கன்மார்க் கங்களை எடுத்து இயம்புமாறு பணிந்தான். மற் றும், சைவசமயத்தைப் பேராதரவுடன் போற்றி வந்தான். ஆங்காங்குக் கோயில்களும், மடங்களும் கட்டுவித்து வேத பாடசாலைகளையும், தேவாரப் பாடசாலைகளேயும் ஏற்படுத்தினுன்-கோயில்களில் நித்திய 5ைமித்திக விழாக்கள் செவ்வனே தடை பெற்று வந்தன. மன்னன் சைவசமயத்தைப் பற்றி ஒழுகினனேனும் பிறமதத்தையும் அன் போடு ப்ோற்றிவந்தான், சமண பெளத்த மதங் களும், வைணவமதமும் அவன் ஆட்சியில் யாதொரு இடையூறுமின்றித் தழைத்தோங்கி வளர்வனவாயின. சுருங்கச் சொல்லுமிடத்து மன்னன் திருமாவளவன் காலத்தை இராம ராச்

அரசியல் 97
சியம் என்றே சிறப்பித்துக் கூறிவிடலாம். அங் நிலையை எய்து தற்கு அவன் தாயொடு தங்தை யாய்க் குடிகளாற் போற்றப்பட்டதே காரணம் ஆகும். யாவற்றிற்கும் காரணம் இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் அவனுேடிருந்து வக் ததே என்னலாம்.

Page 53
11. தமிழ்ப்பற்று
ஒரு காட்டின் மேன் மையும் அதன் உயரிய காகரிகமும், மக்களின் ஒழுக்கமும், கைத்தொழி லும், செல்வமும் பிறவும் அங்காட்டு மக்கள் அடைந்துள்ள கல்வியைக்கொண்டே கூறவேண்டி யிருக்கின்றது. காட்டிற் கல்வி விருத்தியடை வதற்கு ஏற்ப அங்5ாட்டின் செல்வமும், வளனும், உயர்வும் மேம்படுகின்றன. 15ம் பாரத காட்டோர் பண்டைக்காலமுதல் கல்வி, 5ாகரீகம், செல்வம், கைத்தொழில் முதலியனவற்ருல் மேம்பாடுற்று விளங்கினர். தமிழ்காட்டு மக்கள் அடைந்த நாக்ரி கமே, உலகில் முதன்முதல் மக்கள் அடைந்த நாகரிகம் என்று கருதப்படுகிறது. தமிழ்மக்க ளின் பழஞ்சரிதையை நுணுகி ஆராயப் புகுங் தால் அன்னர் பெற்றிருந்த மேனிலை வியக்கத் தக்கதாக விருக்கின்றது.
மன்னன் திருமாவளவன் காலத்தில் தமிழ் மொழியின் நிலையைச் சிறிது ஆராய்ந்து பார்க்கு மிடத்துத் தமிழ்மொழி தலைசிறந்து விளங்கியது என்பது 15ன்கு புலப்படும். மன்னன் திருமாவள வன், தன் மாமன் இரும்பிடர்த்தலையாரிடம் கல்வி கற்றுத் தமிழ்மொழியின் அரும்ை பெருமைகளை இளமையிலே அறிந்திருந்தான், மற்றும், கரிய அறிவு படைத்த அவன் காட்டுமொழியின் வளர்ச் சியே காட்டையும் காட்டுமக்களையும் உயர்தர நிலைக் குக் கொண்டுவரும் தகைமை பெற்றது என்று 16ன்கறிந்திருந்தான். ஆதலின், அவன் தமிழ்மொழி

தமிழ்ப்பற்று 99
யிடத்து அளவிலா அன்பும் ஆர்வமுங்கொண்டு போற்றிவந்தனன். தமிழ் மணம் தமிழ்காடெங் கும் கமழவும், தமிழ்த்தாய் களிக்கூத்தாடவும் மன்னன் வேண்டும் முறையில் உதவி வந்தனன், தமிழ்க்கலை பரவுமாறு ஆங்காங்குக் கலைக்கழகங் களும், நூல் நிலையங்களும் அமைத்துத் தமிழ்க் கலை யூட்டிவந்தனன். தமிழ்ப் புலவர் பலரைத் தன் தோழர்களாகக் கொண்டு தமிழ்க்கலைப் பயிற்சியையே தனக்குப் பொழுதுபோக்காகக் கொண்டு மன்னன் காலங்கழித்து வந்தான்.
தமிழ்ப்புலவர்கள் பலரும் அவனையடைந்து அவனுடைய புகழ், வீரம், தமிழ்ப்பற்று முதலிய அரும் பெருங் குணங்களைப் பாடிப் புகழ்வர். மன்னன் திருமாவளவன் இனிய கன் முகங்காட்டி, இன்சொல்லியம்பி, கல்வரவு கூறி அரண்மனைக் குள் அவர்களை அழைத்து வந்து, நெடுகாள் வரை தன்னிடத்தே வைத்துக்கொண்டு தமிழ்மொழி யின் அருமை பெருமைகளே அவர்களிடம் உசாவி அறிந்துகொண்டு, பின், அவர்களுக்கு ஆடை, ஆபரணம், செல்வம், யானே முதலியன வெறுப்ப அளித்துத் தேரேற்றி, அவரவர் ஊர்களுக்கு அனுப்புவான் என்ருல் அம் மன்னன், தமிழ்மொழி யிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் கொண் டிருந்த பற்றின் மிகுதியை என்னென்று இயம்பு வது அம்மட்டோ! தமிழ்ப்புலவர்கள் அவனிடம் விடைபெற்றுச் செல்லுங்கால் அவர்கள் பின் அவன் காலால் ஏழடி கடந்து சென்று வழி விடுத்தனுப்புவன் எனின் அவன் கொண்டிருந்த

Page 54
100 திருமாவளவன்
தமிழ்ப்பற்று இத்தகையதென்று இயம்பும் திறத்த தன்று. அவன் காலத்தில் நக்கீரர், பரணர், மாமூலர், உருத்திரங்கண்ணனுர், முடத்தாமக்கண்ணியார், கருங் குழல் ஆதனுர், கழாத்தலேயார் முதலிய புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அனைவரும் மன்னன் திருமாவளவனேப் புகழ்ந்து பாடியுள்ள னர். முடத்தாமக்கண்ணியார் என்பார் முத்துப் போன்ற பத்துப் பாட்டில் ஒன்றன பொருநராற்றுப் படை என்னும் நூல் ஒன்றைப் பாடியுள்ளார். அதில் அவர், மன்னன் திருமாவளவனுடைய குணம், செயல், அரசதிே, வீரம், தமிழ்ப்பற்று முதலியனவற்றைச் சிறக்க விரித்துக் கூறிப் பெற லரும் பரிசில் பெற்று மகிழ்ந்தார். உருத்திரங் கண்ணனர் என்னும் புல்வர், திருமாவளவனின், குணம், செயல், கொடை, வீரம், நாட்டுவளம் முதலிய பலவற்றை விதந்து கூறிப் பாடியுள்ள பட்டினப்பாலே என்னும் நூலே அவன் முன் கூறி அவனைக் கேட்பித்து அவனற் பதினறு நூருயி ரம் பொன் பரிசாகப் பெற்ருர், பண்டு; போஸன் என்னும் அரசன் காளிதாஸன் என்னும் புலவ /ருக்கு அக்ஷரலக்ஷம் பொன் கொடுத்தான் என்று கேள்வியுண்டு. தமிழ் அரசனகிய திருமாவளவ னும் அத்தகையனய் விளங்கியது தமிழகம் செய்த தவப் பயனே அன்ருே
அவன் காலத்திற் கடைஎழு வள்ளல்களும் தமிழகத்திற் சிறந்து விளங்கினர்கள். அவர்கள், பாசி, ஒசி, காரி, பேகன், ஆஅய், அதிகமான், நள்ளி என்போராவர். அவர்கள் தமிழ் மொழியையும்

தமிழ்ப்பற்று O
தமிழ்ப் புலவர்களையும் பெரிதும் மதித்துப் பேணி வந்தனர். அதனலும் சீர் பெற்று விளங்கியது தமிழ்மொழி. மற்றும், மன்னன் திருமாவளவன் காலத்திற் கபிலர், பரணர், நக்கீரர், இடைக்காட னர், மாமூலர் முதலாய பொய்யடிமை யல்லாத புலவர்கள் வீற்றிருந்து தமிழ் மொழியைப் போற் றிய மூன்ரும் சங்கம் சிறந்து விளங்கியது. அக் காலத்தில் அச் சங்கத்தில் நல்லிசைப் புலமை வாய்ந்த கற்றமிழ் வல்லோர் 15ானூற்றிற்கு மேற் பட்டிருந்தனர். மற்றும், அக்காலத்தில் விளங்கிய புலவர்களால் இயற்றப்பட்ட, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பரிபாடல், பதினெண்கீழ்க் கணக்கு, சிற்றிசை, பேரிசை, முத்தொள்ளா யிரம் முதலான நூல்களும், கூத்தும், வரியும் ஆய பல நூல்கள் மிளிர்ந்து விளங்கின.
மன்னன் திருமாவளவன் இயற்றமிழ், இசைத்தமிழ், 15ாடகத்தமிழ் என்னும் மூன்றை யும் 15ன்கு பயின்றிருந்தான். ஆதலின் மன்னன் திருமாவளவன் தன் 15ாட்டில் எங்கும் ஆடரங்கு களும், நாடகசாலைகளும், கலேக்கழகங்களும், பட்டி மண்டபங்களும் அமைத்திருந்தான். அவன் காலத் தில் இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சபா ரதீயம், பஞ்சமரபு, பெருங்குருகு பெரு5ாரை முதலிய இசைத்தமிழ் நூற்களையும், குணநூல், கூத்தநூல், சயந்தம், முறுவல், செயிற்றியம், பரத சேனபதீயம், பரதம், மதிவாணனர் காடகத்தமிழ் நூல் முதலான பல் 15ாடகத்தமிழ் நூற்களையும், செவ்வனே பயின்றிருந்த தமிழ்ப் புலவர்கள் பல்

Page 55
O2 திருமாவளவன்
லோர் தமிழகத்தில் தலைசிறந்து விளங்கினர். பாவலர்களின் உடன் பிறப்பும், கல்விக்குப் பகையு மாகிய வறுமை என்னும் 5ோயை; வறுமைக்கு வறுமை வந்தது' என்னுமாறு ஒட்டித் தமிழ்ப் புலவர்களேக் காத்த பெருந்தகையும் தமிழகத்துப் பேரரசனுமான மன்னன் திருமாவளவனின் ஆட் சிக் காலத்தில் தமிழ்மொழி சீரும் சிறப்பும்
பெற்று மிளிர்ந்தது.
திருமாவளவன் காலத்திற் பெண்களும் தமிழ்க் கல்வியிற் சிறந்து விளங்கினர். பெண் கல்வியைத் திருமாவளவனும் போற்றி வந்தான். அவன் காலத்தில், அரசன் மகள் ஆதிமந்தியும், வெள்ளிவீதியாரும், வெண்ணிக்குயத்தியாரும், குற மகள் இளவெயினியும், குறமகள் குறியெயினியும், காவற் பெண்டும், காக்கைப்பாடினியார் நச்செள்ளையாரும், ஒக்கூர் மாசாத்தியாரும், குன்றியாளும், கழார்க்கீரன் எயிற்றியாரும், நக்கண்ணேயாரும், நன்னகையாரும், காமக்கண்ணிப்பசலையாரும், பூங்கண்ணுத்திரையாரும், பொன்மணியரும், பாரிமகளிரும், ஒளவையாரும் சிறந்து விளங்கினர். இதனுலேயே பண்டைக் காலத்தில் தமிழகத்துப் பெண்மணிகள் எத்து ணைப் பெருஞ் சிறப்புடைக் கல்வியைப் பெற்றி ருந்தனர் என்பது விளங்கும். மற்றும், இக்காலத் திற் பெண் கல்வியைப் பேணுதல் கடமை என்று கூறுவார்க்கு அது தமிழகத்திற்குப் புதுமை யன்று என்பது 15ன்கு விளங்கும். தமிழ் மொழிக் கும். தமிழகத்திற்கும் வாய்ந்த பொற்காலம் என்று கூறத் தகுந்தது கடைஎழு வள்ளல் எழு

தமிழ்ப்பற்று 108
வரும் சிறக்க வாழ்ந்ததும், மன்னன் திருமாவளி வன் சோழ நன்னட்டிற்கு அரசனுக விருந்து ஆண்டதுமான 15ற்காலமே ஆகும்.
கல்வி, கேள்விகளிற் சிறந்த திருமாவளவன் 15ாட்டிற்குப் பல 5ன்மைகளைப் புரிந்தான் என் பது ஒருதலை. அவன் இவ்வுலகில் அடைந்து துய்க்கக்கூடிய இன்பங்கள் அனைத்தையும் அறி வால் 15ாடி யறிக் து அனுபவித்தான். பின், அவன் மறுமை இன்பத்தையும் மறவாது துய்க்கவெண் ணினன். அவனுக்கு மனைவியர் பலர். அவர்க ளுடன் அவன் இல்லற 5ெறி கடவாது ஒழுகி வந்தான். யாகங்கள் பலவற்றையும் அருமறுை யுணர்ந்த அந்தணர் துணைகொண்டு செய்து மகிழ்ந்தான். அவன் வாழ்காளில் கொடுத்த தானங்கள் மிகப் பல. அவன் வாழ்5ாள் முழுவ தும் கன்னெறியில் ஒழுகி இன்புற்றிருந்தான்.
காலன் மிகக் கொடியன். அரியணை யமர்ந்து ஆணை 15டாத்தி அவனியாளும் அரசரேனும் அமைந்த நாள் உலக்தால் இறப்பது திண்ண மன் ருே? தமிழ் மொழிப் புலவோர் கண்ணீர் பெருக்கவும், தமிழகம் வருந்தவும், மன்னன் திரு மாவளவன் அந்தகன் கையகப்பட்டான். அவன் இறந்தது குறித்து வருக்திக் கருங்குழலாதனர் என்னும் புலவர் புலம்பிப் பாடியுள்ளார். தமிழ கம் அம்மன்னன் பிரிஒாற்ரு மைக்கு வருந்தியது, அவனுக்குப் பின், அவன் மகன் சோழன் நலங் கிள்ளி சோழ 15ாட்டிற்கு அரசனஞன்,
serverweergaweyan

Page 56
2. திருமாவளவன் காலம்,
மதம், குணதிசயங்கள்
காலம் - சோழர்தம் மரபில் மிகப் பழமை யானவனும், கீர்த்தி பெற்றவனும், சோழர் குலக் கொழுந்து என்று போற்றத் தக்கவனுமான மன் னன் திருமாவளவன் காலத்தை அறுதியிட்டுச் சொல்வது மிகவும் எளிதன்று. தேச சரித்திரத் தையும், புலவர்கள் சரிதங்களையும் வரன் முறை யாகக் காலத்தோடு ஒழுங்குபட எழுதி வைக்கும் முற்ை பண்டைத் தமிழ் மக்களிடத்து இல்லை என்றே கூறலாம். எனினும் இக்காலத்தில் சிலா சாஸனப் பரிசோதகர்களின் துணையைக் கொண் டும், பழந்தமிழ் நூற்களிற் காணப்படும் அரும் பெருங் குறிப்புகளைக் கொண்டும் சற்றேறக்குறை யத் தமிழ் மன்னர்களின் காலமும், தமிழ்ப் புல வர் பெருமக்களின் காலமும் ஒருவாறு எழுதப் பட்டு வருகின்றன.
கரிகாலன் என்னும் திருமாவளவன், முதற் கரிகாலனுவான். கரிகாலன் என்னும் பெயரால் பலர் பின்னர் இருந்தனர். ஆதலின் இவனை முதற்கரிகாலன் என்றழைத்தனர். இவன் கா. லத்தை ஆராய்வோம். அரசகுடும்பத்தில் தோன்றி அருந்தவ ஒழுக்கம் பூண்டு மாசிலா மனத்துடன் தமிழகம் போற்றும் தகுதி வாய்ந்த பெரியார் இளங்கோவடிகள், அவர், தமிழகத்தில் நிகழ்ந்த உண்மைச் சரிதை ஒன்றை எழுதியுள்ளார். அது

திருமாவளவன். குணுதிசயங்கள் 105
'சிலப்பதிகாரம்' எனப்படும் சிறந்த காப்பியமாகும். அதனில் உண்மைநிகழ்ச்சிகளே கூறப்பட்டுள்ளன. அந்நூற்கு உரை எழுதியவர், கரிகாற்பெருவளத் தாற்கு அவன் அவை அரங்கேறிக் காட்டலை விரும்பி’ எனக் குறித்துள்ளதால், சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த காலத்தக் கரிகாலன் இருந்திருக்க வேண்டும். இளங்கோவடிகளும் சேரன் செங் குட்டுவனும் 5ெடுஞ்சேரலாதன் மக்கள். கெடுஞ் சேரலாதன் மனைவி கற்சோணை. நற்சோணை கரி காலன் மகள் ஆதலின் கரிகாலனது பெண் வயிற் றுப் பேரன் செங்குட்டுவன் செங்குட்டுவனும், இலங்கை முதலாம் கயவாகுவும் ஒரு காலத்தவர் கள். கயவாகு முதலாவான் காலம் கி. பி. 113 முதல் 125 வரை ஆகும். ஆதலின் சேரலாதன் காலம் கி.பி. 75 ஆகும். ஆதலின் கி. பி. முதலாம் நூற்ருண்டினன் திருமாவளவன் என்பார் சிலர். சிலர், திருமாவளவன் காலம் கி. மு. முதல் நூற் முண்டினன் என்பர். ஒரு தமிழ்நூல் ஆராய்ச்சி யாளர் கி. பி. 30-60 வரை என்பர். நுணுகி ஆராயுமிடத்துக் கடைச்சங்க காலத்தில் திருமா வளவன் இருந்திருத்தலிஞலும் பட்டினப்பாலை என்னும் நூலே உருத்திரங்கண்ணனர் என்னும் புலவர் அவன் மீது பாடிப் பரிசில் பெற்றுள்ள தாலும், அவன் காலத்திலிருந்த தமிழ்ப் புலவர் களின் காலத்தை நுணுகி ஆராயுமிடத்தும் மன் னன் திருமாவளவன் கி. மு. முதல் நூற்றண்டி னன் என்பதே பொருத்த முடையதாகும்.

Page 57
O6 திருமாவளவன்
மதம்:-மன்னன் திருமாவளவன் காலத்திற் குச் சற்றேறக்குறைய இருநூருண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜைன, பெளத்த மதங்கள் பரவியிருந்தன. எனினும் தமிழகத்தில் சைவ மதம் சீர்பெற்றுத் துலங்கிற்று. வைணவமும் சைவத் தோடு தழைத்தோங்கியது. ஆரியர்களது வைதீக மதமும் சிறந்து விளங்கிற்று. அக்காலத்தில் தமி ழகத்தில் மக்களும் மன்னர்களும் யாகங்கள் இயற் றுதலைக் கைக்கொண்டு ஒழுகி வந்தனர் என்பது ஒரு தலை. ஆரியமும் தமிழும் தமிழகத்திற் சிறக்து விளங்கின. எனினும் தமிழ் மக்களிற் பெரும் பகுதியோர் சைவரெனவே துணிந்து கூறிவிட லாம். மன்னன் திருமாவளவன் எல்லாச் சமயத் தோரையும் ஒப்ப கடத்தி வந்தான். அவனிடத்தில் மதத் துவேஷமும், சாதித் துவேஷமும் சிறிதும் காணப்படவில்லை. அந்தணர்களைக்கொண்டு யாகங் கள் பலவற்றை அவன் செய்துள்ளான். அவன் வைதீக மதத்தையும் அந்தணர்களையும் ஆதரித்து வந்தான். ஜைனப் பள்ளிகளுக்கும், பெளத்த விகாரங்களுக்கும், வைணவாலயங்களுக்கும், சிவன் கோயில்களுக்கும், அந்தணர்களுக்கும் அவன் செய் துள்ள கன் மைகள மிகப் பல. மன்னன் திருமா வளவன் காஞ்சியில் திருப்பணியியற்றியதையும் ஏகம்பவாணரை வழிபட்டமையையும் ஒரு பாசு ரம் விதந்து கூறுகின்றது. ஆதலின் மதத்துவேஷ மற்ற மன்னன் திருமாவளவன் சைவ மதத்தைக் கடைபிடித் தொழுகி வந்தனன் என்பது பலர் கொள்கை.

திருமாவளவன.குணதிசயங்கள் 107
குணு திசயங்கள் :- மன்னன் திருமாவளவன் ஊக்கமுடையவன் ; கல்வியில் பெருவிருப்புடைய வன் ; பகைவரை யடக்கியாளும் விறலோன்,
தமிழ் மொழியையும் தமிழ்ப் புலவர்களையும் ஆத - ரிக்கும் பெருங்குணம் அவனிடத்தில் இயல்பாகப் பொருந்தியிருந்தது. அவன் காட்டிற்கும், மக்களுக் கும் 15ன் மை புரிதலிலேயே கண்ணும் கருத்து முடையோன். பெண் கல்வியைப் போற்றும் பெருந்தகைமை வாய்ந்தவன். நுண்ணிய பொருள் வளங் கண்டு மகிழும் தன்மையையும், கவிதை களின் சிறப்பையும், புலவர்களின் பெருமையை யும் உணரும் பெற்றி வாய்ந்தவன் திருமாவளவன். தாள்ாண்மையிற் சி ற க் த வேளாண்மையைப் பேணி வளர்க்கும் பெருந்தகை அவனே திரை கடல்மீது பல கலம் செலுத்தி வாணிபம் பேணும் எண்ணமும், ஊக்கமும், உழைப்பும் உடையவன் திருமாவளவன். சிற்பம், ஓவியம், சங்கீதம், நாடகம் என்னும் அருங்கலைகளைப் போற்றி வளர்த்த புண்ணியன். தமிழை வளர்த்த கண்ணி யன். பெருவளம் பெருக்கிய திருமாவளத்தான். ஒழுக்கமும், கல்வியும், தன்னுயிர்போல் மன்னுயி ரைப் பாவிக்கும் தகைமையும் கொண்டு திகழ்ந்த ஒப்பற்ற சோழர்குலக் கொழுந்து.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

Page 58
அரும்பத அகராதி
s அகம் - உன் மனம் அகச்தை - இது மாப்பு அல்கை உள்ளங்கை அட்டு - சமைத்து அணங்கு - தெய்வப் பெண் அத்தகையது - அவ்வியல்
புடைய தி அமயம் - சமயம் அமர் . போர் அமராவதி . தேவநகரம் அாதக பீடம் . பொன்மயமான
ஆசனம
அாற்றல் - அமுதல் அரியனை 'சிலகாசனம் அரியேறு - ஆண்சிங்கம் அல்லல் - துன்பம் அலமந்து - சுழன்று அவலம் - தன்பம்
அவை - சபை அழுக்காது - பொருமை அழுக்கி'- துன்பப்பட்டு அளவளாவல் - கலச்துபேசில் அளித்தல் - கொடுத்தல் W அற்றம் - சமயம் அறநெறி தருமவழி அறியொன * அறியமுடியாத அறைதல் - சொல்லல் அனுட்டித்து - கைக்கொண்டு அக்ஷரம் - எழுத்து
es
ஆ - பசு - ஆக்கம் - செல்வம்
ஆதரவு - உதவி ஆணை - கட்டளை ஆவணவீதி - கடைவீதி ஆற்ருது - எதிர்கிற்கமுடியாது
இ
இடுக்கண் - தன்பம் இடையூடி s & இமையவர் - தேவர் இரிங் த - பின்னிட்டு இன்னல் - துன்பம்
F。
ஈகை - கொடை ஈடு - ஒப்பு ஈர்த்து - இழுத்து
உசாவி - ஆராய்ந்து உதித்து - தோன்றி உந்தியது - தள்ளியது உய்வழி - தப்பும்வழி உரம் - வலி உரு உருவம் உன்னி - கினைந்து
5.
ஊக்கம் - முயற்சி
ஊழ்வினை - விதி
எக்கர் - மேடு எத்துணையோ - எவ்வளவோ

அரும்பத அகராதி
னருத்தம் - பிடர் எள்ளல் இகழ்தல் 6) eա վ ա of 6)ւtւլ
e ஏரி - வாவி ஏவலாளன் . சேவகன் ஏற்றம் - துலா
ஐயம் - சக்தேகம்
ஒ ஒல்கி - தளர்ந்து
ஒம்பல் - பாதுகாத்தல் ஒதை - சத்தம்
ஒடை - கால்வாய்
ஒகை - வெற்றிச்சத்தம்
கடிது - விரைவாய் கடுகி - விரைந்து கணித்தல் - கணித்து அறிதல் கதவம கதவு கஅவசதி - அகப்படாத சுயவர் - கீழோர் காவு - வஞ்சனை கார்து - மறைச்து களி - யானை கருணை - இாக்கம் கலம் - கப்பல் கலுமும் - அழும் கலே - கலேஞானம்
}
109
கல்மாஷபாதன் - கரிந்த காலே
உடையவன்
கவசப்பட்டு - பற்றப்பட்டு
கவின் - அழகு
கழனி - வயல்
களித்து - சந்தோஷித்து
களிறு - யானை
காமர் - அழகு காாா = பசு கால் - காற்று காவதம் - கூப்பீடுதொலை
கானகம் - காடு
G
கிழமை - உரிமை
色
குடகு - மேற்கு குருளை - குட்டி குழுமி - கூ-டி குன்றிடாவகை - குறையா விதம்
t
கூலம் - தானியம் கூற்றூர் - யமனூர்
கே
கோளம் - மலையாளம்
கைவச - த்ெதியாக

Page 59
O
கொ
கொண்டல் - மேகம்
Ggr
கோட்டம் - கோயில் கோல்கோடாமை - செம்
கோன்மை
சதி தானம்
Fi
சாதனம் - உறுதி சாம்புதல் - தளர்தல் சால . மிக சாலை . தெரு சான்ருேர் . பெரியோர்
சிலாசாசனம் - கல்வெட்டு சிமுர் - குழந்தைகள்
g
சீயம் - சிங்கம்
சந்தரம் - அழகு
GF
செக்கதிர்ச்செல்வன் . குரியன்
செண்டு. ஒர் ஆயுதம்
செவியறிவுறுத்தல் - அறிவு
கூறல்
திருமாவளவன்
தாணி "பூமி தசணிபன் - அரசன் தலம் - பூமி தழல் - செருப்பு தழுவி - அணைத்து
"தி
திக்கற்றவர் - அகாதை
திரு - செல்வம்
நிறம் - தன்மை திறம்பல் - மாறுதல்
அணுக்குறுதல் - நடுக்குதுதல்
அரு - கறை
திலக்குதல் - விளங்குதல்
தூற்றி - பாப்பி
تعق) தேக்கி - ஏப்பம் விட்டு
Gaisar
தொடையல் - மாலை தொன்மை - பழமை
கங்கை - பெண் கசை - விருப்பம்
சுடுகாயகம் - நடுவில்த?லமை
(முதன்மை) கணுகி - கிட்டி கணுகுதல் - கிட்டுதல் ஈவில்தல் - சொல்லுதல் சன் மொழி - சல்வார்த்தை

அரும்பத
5f
கான் - காணம் நாளங்காடி - பகற்கரலக்கடை
நானிலம் - பூமி
நி
கித்தியம் - தினப்பூசை கிமித்திகன் - சோதிடன்
A மீச்சம் . சீத்துதல் நீத்தம் - தண்ணீர்
ஆ
நுனல் - தவளை
€ತ5
6ைதல் - வருக்குதல் கைந்தனர் - வருந்தினர் கைமித்திகம் - திருவிழா
பண்டு - முன்னே பண்டாரம் - பொக்கிஷம்
பஃறே - பலதேர் (பல்+தேர்)
பாகம்படும் - கிட்டும் பாங்குற - ான்மையான பாசிம் - அன்பு பார்த்திபன் - அரசன் Lu Tawawi - Gvavř
அகராதி
பிணித்தல் - கட்டுதல் பிரதிமை - உகுவம்
பீடு - பெருமை
էl புணை - தெப்பம் புதர் - புற்று புரோகிதர் . புரோகிதம் செய் பவர் புலன் - அறிவு புவி - பூமி புழைக்கை - யானை (துவாாம் பொருந்திய தை) புனல் - சீர் புனிதம் . சத்தம்
பைக் தமிழ் - பசியதமிழ்
- Gur பொய்யாத - பொய்படாது பொய்கை - வாவி பொருநர் சண்டையிடுவோர்; கோலம்புனைவோர் பொல்லாங்கு - தீமை
GBuir
போற்றினும் புகழினும்
மசிதலம் - பூமி
மங்கலம் - சிறப்பு

Page 60
12
மதனன் - மன்மதன் மதியம் - சந்திரன் மது - கள் மத காம் - வண்டு மரபு = முறை மருதுகு - பககம மருத்துவர் - பரிகாரி மல்கி - பெருகி மலங்க - கலக்க ம?லதல் - சண்டையிடல் மறம் = வலிமை மன்றம் - சபை
மா - விலங்கு மாட்சி - சிறப்பு மாண்பு - சிறப்பு மாதுலன் - மாமன் மாற்றலர் - பகைவர்
ÁS மிகை அதிகம்
மீக்கூறல் - புகழ்தல்
Cup
முதுமை - பழமை ; கிழம்
முதுமொழி - பழமொழி முனரி - தாமரை முறுவல் - சிரிப்பு
ep மூதறிஞர் - பழைய அறிவாளி
கன் மூதாட்டி - முதுமைவாய்ச்த
வள்
திருமாவளவன்
Сие மேதக்க - சிறந்த
மைந்தர் - புத்திார்
@uዕ[r ,
மொய்ம்பு - வலி
வகுலித்து - திரட்டி வண்மை. கெர்டை வணிகமக்கள் - வியாபாரிகள்
வதிதல் - தங்குதல்
வயவுநோய் - கர்ப்பநோய் வயிறு வாய்த்திருத்தல் - கர்ப்ப
வதியாதல்
aAy 60p(TuJ fT.A9 - „A 6ft 6|uL—JT.ga வள்ளல் - கொடையாளி வனப்பம் - செழிப்பு வளவர் - சோழர் வற்கடம் - வறுமை வனிதை - பெண் வாய்மொழி - உண்மை
al
விஞ்சையர் - தேவர்களுள் ஒரு வகையினர் (வித்தியாதார்) விண்ணவர் விருச்அ- இறத்தல் விதிர்த்து - சடுக்கி விப்பிரர் - பிராமணர் விழைவு - விருப்பம் விறல் - வலி
வெ
வெச் . முசகு
வெற்பு - மலை


Page 61