கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகப் பேரொளி உத்தமர் காந்தி

Page 1
(
配
閭
 

DAG ELIGTIGT
ாந்தியடிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள், புதுமைத்
கவல்கள்
ஒரு வரி இரண்டு வரிச் சய்திகளாக) காத்மா காந்தியடிகளின் கைச்சுவையான பதில்கள் காத்மா காந்தியடிகளின் பணிமொழிகள்
ானவர்கள் மேடையில் பேச
ட்டுரை எழுதி
முக்கியமான தகவல்கள்.
。 。
扈 கிறிஸ்தா

Page 2


Page 3


Page 4

உலகப் பேரொளி உத்தமர் காந்தி
காந்தியடிகளின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள், புதுமைத் தகவல்கள் (ஒரு வரி, இரண்டு வரிச் செய்திćѣ6птаъ) காந்தியடிகளின் இறுதிநேரம் நிகழ்ந்தது என்ன? காந்தியடிகளுக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?
மகாத்மா காந்தியடிகளின் நகைச்சுவையான பதில்கள், மணிமொழிகள்
மாணவர்கள் மேடையில் பேச, கட்டுரை எழுத முக்கிய
மான தகவலகள். காந்தியடிகளும் சுவாமி விவேகானந்தரும் காந்தியடிகளின் வாழ்க்கையுடன் இணைந்த குறள்கள் காந்தியடிகள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்தில் வரவேற்று உபசரித்த தமிழ் அறிஞர் பெருமக்கள் யார் யார்?
காந்தியடிகளுடன் இந்தியாவிலிருந்து வந்த பிரமுகர்கள் யார், யார்?
இ. சிறிஸ்கந்தர்if

Page 5
நுாற் பெயர்
ஆசிரியர் முகவரி
முதற் பதிப்பு
அச்சகம்
விலை
: உலகப் பேரொளி உத்தமர் காந்தி : இராமசாமி சிறிஸ் கந்தராசா (O
93, பீட்டர்ஸன் லேன்,
E 15, பீட்டர்ஸன் தொடர்மாடி, வெள்ளவத்தை. தொலைபேசி : 011-5-343073
: 02.10.2004
ரெக்னோ பிரிண்டர்ஸ் வெள்ளவத்தை. 077 - 730 1920
ரூபா.125.00

DHEGOUDT
உலகப் பேரொளி உத்தமர் காந்தி என்ற இந்நூலை வாசிக்க முன்னர் இந்நூலை ஏன் எழுதினேன் என்ற கேள்விக்கு பதிலை மனந்திறந்து கூற விரும்புகின்றேன்.
கங்கை நீரிலும் புனிதமானவர். இமயத்தைக் காட்டிலும் உயர்ந்து நிற்பவர் என உயிர் வாழ்ந்த காலத்திலேயே கோடான கோடி மக்களாற் போற்றப்பட்டவர் காந்தியடிகள். அவரது 135 வது பிறந்த தினமான 2ம் திகதி அக்டோபர் 2004ல் இந்நூலை எழுதி வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எந்தப் பிரச்சனையும் அகிம்ஷை மூலமாக தீர்த்து விடலாம் என்பதை தம் அனுபவத்தில் கண்டு காட்டியவர் மகாத்மா காந்தியடிகள். நாம் சொந்த வாழ்க்கையில் தோல்விகளையும் ஒழுக்க சீர்கேடுகளையும் உணர்ந்து வரும் ஒரு சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.
நமது நாட்டில் இன்று தெருவீதியில் வன்செயல், பலாத்காரம் குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி என்பன விளையாட்டுப் போட்டி போலநடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் பயம் பீதியுடன் வாழ்க்கை நடத்துவதை யாவரும் அறிவோம். மறுப்பதற்கில்லை.
இந்நிலைமாறி நமது இலங்கை ஒரு அமைதிப்பூங்காவாக மாற வேண்டும். ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும். நாட்டில் சாந்தி அமைதி சுபீட்சம் நிலவவேண்டும். அதற்கு சமாதானம் தேவை. அப்பொழுதுதான் அமைதிப் புறாக்கள் சிறகடித்து பறக்க
(ypL92ULALD.
3 இ. சிறிஸ்கந்தராசா

Page 6
இந்த நிலையில் தான் காந்தியடிகளின் கொள்கைகளை மறந்தவர்களுக்கு நினைவூட்டவும், அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவுமே இந்நூலை எழுதியுள்ளேன்.
பொன்னே உயர்ந்தது என்று பிதற்றும் உலகில் பொன்னை விட உயர்ந்தது உண்மை என்று கூறி தெய்வ அவதாரம் எடுத்தவர் காந்திஜி, உலகிற்கு ஒரு புதிய அரசியல் அத்தியாயத்திற்கு வழி வகுத்துதந்தவர். மனித நேயத்திற்கு உருவம் தந்தவர். அகிம்ஷையின் பிதா,
எனவே காந்தியடிகளுக்கு செலுத்தக்கூடிய நன்றி அவர் காட்டிய வழியில் நடப்பது. அவர் போதித்த உபதேசங்களை கடைப்பிடிப்பது. அவர் ஆரம்பித்து நடத்திய தொண்டுகளை தொடர்ந்து நடத்துவது ஆகும்.
ஒருவனை ஞானியாக்குவது அப்புறம் இருக்கட்டும் முதலில் அவனை மனிதனாக்க முயற்சி செய்வோமாக என்றார் பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் ரூசோ.
மேலும் அன்பு அன்பை வளர்க்கும். துவேஷம் துவேஷத்தை வளர்க்கும் என்பது காந்தி மகானுடைய கொள்கை. துவேஷத்தை துவேஷத்தால் வெல்ல முடியாது. துவேஷத்தை அன்பினால்தான் வெல்ல முடியும் என்பது அவரது சித்தாந்தம்.
இன்றைய மாணவர்கள் இளைஞர்கள்தான் நாளைய தலைவர்கள். அவர்களை நற்பிரஜைகளாக்குவதும் வாழ்க்கையில் உயர்த்துவதும் தான் இந்நூல் எழுதிய நோக்கமாகும்.
நான், சிறுவயதிலிருந்து காந்தியடிகளைப் பற்றி சேகரித்த தகவல்களுடன் பல நூல்களிலிருந்து கிடைத்த தகவல்களையும் சேகரித்தும் அவற்றை தொகுத்ததும் தான் எனது முயற்சியாகும்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பது போல காந்தியடிகளின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஆயிரமாயிரம் சமுதாயத்தில் மலர வேண்டும் என்பதே எனது அவாவும் இலட்சியமும் எதிர்பார்ப்புமாகும்.
கடலைக் கடுகினுள் புகுத்த இச்சிறுநூல் பேராசைப்படவில்லை. காந்தியடிகளின் சிந்தனைகள், அவர் நிகழ்த்திய சாதனைகள்,
காந்தி அடிகள் 4

அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் பலவற்றுள்ளும் சிலவற்றினை தொட்டுக் காட்டுவதையே முயற்சியாக கொண்டுள்ளேன்.
இது ஒருமுழு வரலாற்றுச்சுவடியல்ல. மஹாத்மாவின் பெருமைகளையெல்லாம் திரட்டிக் கூறும் களஞ்சியமல்ல ஒரு சிறு நினைவுக்
குறிப்பே.
மஹாத்மா என்ற பெரிய சமுத்திரத்தின் கரையில் நின்று வியந்து கொண்டிருந்த போது சில அமுதத் துளிகள் தெறித்தன. அந்த அமுதத் துளிகளை விரும்புகின்றவர்களுக்கு சுவைக்க ஈண்டு படைக்கிறேன். இந்நூல் எனது எழுத்துலகில் 8வது பிரசவம், எனது முதல் ஏழு நூல்களுக்கும் வாசகர்களாகிய நீங்கள் நல்கிய ஆதரவு ஒத்தழைப்புகட்கு இதயங்கனிந்த நன்றிகள். இந்நூல் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை எழுதுங்கள். என் வளர்ச்சிக்கு துணைநில்லுங்கள். உங்களின் ஆதரவினால்தான் தொடர்ந்துஎழு முடிகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
இந்நூலுக்கு அருங்கலமாக அணிந்துரைமகிழ்வோடு வழங்கிய பேராசிரியரும் அறிஞருமாகிய சோ.சந்திரசேகரம் அவர்கட்கும், மூலப் பிரதியுடன் அச்சுப்பிரதியை சரிபார்த்து திருத்தம் செய்து உதவிய செல்வி சுவேந்தி பரஞ்சோதி அவர்கட்கும், இந்நூலை தொகுப்பதற்கு உதவியதுணைவியார் பரமேஸ்வரிக்கும், இந்நூலை கற்பவர் கண்ணுக்கும் கருத்துக்கும் கவரும் வண்ணம் அழகுற அச்சு பதிவு செய்த ரெக்னோ பிரின்டர்ஸ் அதிபர் தியாகராசா கேசவன் அவர்கட்கும் நன்றிகள் பாராட்டுக்கள்.
இ.சிறிஸ்கந்தராசா
5 இ. சிறிஸ்கந்தராசா

Page 7
8തിg6]]
திருக்குறள் தொடர்பாகவும், நகைச்சுவை ததும்பும் தொகுப்பு நூல்களென ஏற்கனவே 8 நூல்களை மிகத் கதியில் தமிழ் கூறும் நல்லுலகுக்கென சமர்ப்பித்துப் பெருமை கண்ட இந்நூலாசிரியர் இ.சிறிஸ்கந்தராஜா நகைச்சுவை வேந்து' என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டவர் நூல் எழுதத் துணிவோர் முதலில் தமது அறிவுத்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள அயராது தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தையும் தாம் வாசித்துப் பெற்ற அறிவில் பயனுள்ளவற்றை தாம் எழுதக் கருதும் விடயங்களுக்கேற்ப ஆவணப்படுத்திக் கொள்ளுதல் அறிஞர் வழிவந்த மரபு பல்கலைக்கழகங்களில் பெயர் பெற்ற அறிஞர்கள் என மகுடமிடப்பட்டவர்கள் கையாண்ட வழி முறையும் இதுதான். இவ்வாறு தமது தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கத்தினுடாகவே பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆய்வாளர்களாகவும், பேராசிரியராகவும் பரிணமிக்கின்றார்கள். சிறிஸ்கந்தராஜா அவர்கள் தமது வாசிப்புப் பழக்கத்தால் காந்தியடிகள் பற்றி பல தசாப்தங்களாக சிறுவயது முதல் சேகரித்த தகவல்களை புதிய தலைமுறையினரின் அறிவுத் தேவை கருதி ஒரு அருமையான நூலை இப்போது தொகுத்துள்ளார்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து தமது சீரிய சிந்தனைகள், தன்னலங் கருதாத தலைமைத்துவம், இந்தியாவின் விடுதலைக்கான தார்மீக போராட்ட வழிமுறைகள் என்று பல பயனுள்ள செய்திகளை உலகுக்கு ஈந்து மகாகவி தாகூர் அவர்களால் 'மகாத்மா' என பட்டம் சூட்டப் பெற்றார். மகாத்மா காந்தி அவர்கள் இந்திய விடுதலைக்கும் அந்நாட்டின் சமூக பொருளாதார விடுதலைக்கும் கையாண்ட அறவழிகளும் சித்தாந்தங்களும் உலக நாடுகள் அனைத்தையும் கவர்ந்தன. அவர் கைக்கொண்ட அஹிம்சா தர்மம், சத்தியாக்கிரக போராட்ட வழிமுறை இன்றும் கூட ஒடுக்கப்பட்ட
காந்தி அடிகள் 6

மக்களால் மிக உயர்ந்த தத்துவங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இன்றும் கூட சுதந்திர இந்தியாவிலும், இலங்கையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார பீடத்திற்கு எதிராகப் போது தமது கோரிக்கைகளை வலியுறுத்த மகாத்மா காந்தி வழிவகுத்த போராட்ட முறைகளையே கையாளுகின்றனர். இவருடைய எளிமை, வழிமுறை, தர்மஆயுதம் சாதனை என்பவற்றால் கவரப்பட்ட பலநாடுகள் இவரை பாராட்டும் வகையில் முத்திரைகள் வெளியிட்டதை குறிப்பிட்டுக் கூற வேண்டும். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய காந்தியடிகளுக்கு முத்திரை வெளியிட்டு பெருமை கொண்ட நாடு இங்கிலாந்து. அமெரிக்கா"Time' சஞ்சிகை சிறந்த மனிதராக தெரிவு செய்த முதலாவது இந்தியர் காந்தியடிகளே. அவர் எழுதிய சத்திய சோதனை நூல் வழங்கும் வாழ்க்கைப் பாடங்கள் எத்தனை எத்தனையோ.
20ம் நூற்றாண்டில் புகழின் உச்சியை எட்டிய காந்தியடிகளின் தத்துவங்களும் அவர் பற்றிய நினைவுகளும் அவர் தொகுத்துத் தந்த வாழ்க்கை தத்துவங்களும் இன்றைய அவசர உலகில் இளந்தலைமுறையினை சரியாக சென்றடையவில்லை. இதனால் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அளப்பரியது. எமது இளைஞர்களின் அறிவாற்றல் தத்துவ சிந்தனை அஹிம்சை உணர்வு என்பன. வற்றின் மேம்பாடு கருத திரு. சிறிஸ்கந்தராஜா அவர்கள் காந்தியடிகள் பற்றிய ஏராளமான நிகழ்வுகளையும் அவருடைய மணிமொழி. களையும் அவருடைய வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளையும் மிக அருமையாக இலகு தமிழில் நூல் வடிவில் சமர்ப்பித்துள்ளமை அவர் தமிழர்களுக்கும் குறிப்பாக இளைஞர் சமூகத்துக்கும் செய்துள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நற்பணியும், சேவையுமாகும். தமிழ் மக்கள் அவருடைய இந்நூலுக்கு உரிய வரவேற்பையும் பாராட்டையும் வழங்கி அவரை கெளரவிப்பதை ஒரு பிரதான கடமையாக கொள்ளல் வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கல்விப் போதனாபீடம் கொழும்புப் பல்கலைக்கழகம் 29/08/2004
7 இ. சிறிஸ்கந்தராசா

Page 8
காந்தி அடிகள்

உலகப் பேரொளி உத்தமர் காந்தி
உலகின் மிகச்சிறந்த தலைவராக மகாத்மா காந்தியை தேர்ந்து எடுத்துள்ள நாடு எது? அமெரிக்கா
உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிகையின் கிண்டலுக்கு ஆளாகாத ஒரே நபர் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த காந்தி மட்டும் தான்.
மகாத்மா காந்தி (30.01.48) இறந்த அன்று வானொலி ஒலிபரப்பு சேவையை நிறுத்தி அஞ்சலி செலுத்திய ஒரே நாடு இலங்கை.
காந்தி இறந்த அன்று அவருக்கு அனுதாபம் தெரிவிக்காத நாடு ருஷியா. காரணம் காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை ஏற்றுக் *கொள்ளாத தலைவராக ஸ்டாலின் இருந்தார்.
தென்னாபிரிக்கா விடுதலைக்காக காந்திஜி பாடுபட்ட ஆண்டுகள் 21வருடங்கள் (1893 - 1914)
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியடிகள் இந்திய சுதந்திரமடைந்த பின் இந்திய மண்ணில் வாழ்ந்தது 167 நாட்கள் மட்டுமே.
காந்திஜியின் இறுதி ஊர்வலத்தை இந்திய வானொலி தொடர்ந்து 7 மணி நேரம் வர்ணனை செய்தது.
இ. சிறிஸ்கந்தராசா

Page 9
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
9.
20.
தீண்டாமை ஒழிப்பிற்காக இந்தியா முழுவதும் எவ்வளவு காலம் காந்திஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்? 10 மாதங்கள். தென்னாபிரிக்காவில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காந்திஜிக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது? ஒரு ஆண்டு. நான் இதழியலுக்காக இதழியலில் ஈடுபடவில்லை எனது வாழ்க்கையில் நான் மேற்கொண்ட பணிக்கு பயன்படும் கருவியாகத்தான் இதழ்களை கருதுகிறேன் என்று கூறியவர் யார்? காந்தி.
காந்தியின் எந்தப் பத்திரிகை 45000 பிரதிகள் விற்றன? நவஜிவன் பத்திரிகை. காந்திஜி தனது வாழ்நாளில் 249 நாட்கள் ஆபிரிக்க சிறையிலும் 2089 நாட்கள் இந்திய சிறையிலும் கழித்திருக்கிறார். பிரிட்டிஸ் பிரதமர் வின்சட் சர்ச்சிலால் அரை நிர்வாணப்பக்கிரி என்று கேலிசெய்யப்பட்ட அரசியல் தலைவர் மகாத்மா காந்தி.
காந்திஜி நடத்திய பத்திரிகைகள் ஹரிஜன், இந்தியன், நவஜீவன், யங்இந்தியா, இந்தியன், ஒபினியன்.
விமானத்தில் பயணம் செய்யாத ஒரே ஒரு தலைவர் காந்தியடிகள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா பயணங்கள் முழுவதும் கப்பலில்,
காந்தியடிகளை முதன் முதலில் மகாத்மா என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
கிாந்தியடிகள் எழுதிய சுயசரிதையின் பெயர் சத்தியசோதனை. காந்திஜி விரும்பிய இறைகீதம் எது?ராமநாமம். அரிஜன் பத்திரிகையை யாருடைய பொருளாதார உதவியுடன் நடத்தினார் காந்தி. ஜி.டி.பிர்லாவின் உதவியுடன். லண்டன் வட்ட மேஜை. மகாநாட்டிற்கு காங்கிரஸ் மகா சபையின் பிரதிநிதியாக சென்றவர் காந்தி,
AA
காந்தி அடிகள் 10

21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
33.
11
29 ஆகஸ்ட் 1931ல் ராஜபுதான என்ற கப்பலில் லண்டன் வட்டமேசை மாநாட்டிற்கு காந்தி புறப்பட்டார்.
சத்தியாக்கிரகப் போராட்டத்தை காந்திஜி முதன்முதலில் எந்த இடத்தில் தொடங்கினார்?"சம்பரன்" என்ற இடத்தில்.
காந்திக்கு திருமணம் நடந்த போது வயது 14.
காந்தியடிகளை தேசத் தந்தை என்று முதன்முதலில் குறிப்பிட்டவர் சுபாஸ் சந்திரபோஸ்.
காந்தியடிகள் பிறந்த குஜாராத்திலுள்ள போர் பந்தரில் (1869) அதே ஆண்டில் தான் கஸ்தூரிபாயும் சில மாதங்கள் முன்பு பிறந்துள்ளார்.
தபால் தலை வெளியிடுவதன் மூலம் காந்தியடிகளை முதன் முதல் கெளரவித்த நாடு அமெரிக்கா
மகாத்மா காந்தியின் இறுதிப் பிரார்த்தனை நடந்த இடம் பிர்லா மந்திர்.
மகாத்மா காந்தியைபுகழ்ந்து பாடப்பட்ட காவியம் தான் கீதாஞ்சலி,
அயல்நாட்டுத்துணியை எரித்த (1929) குற்றத்திற்காக கைது *செய்யப்பட்ட காந்திக்கு ஆங்கில கோர்ட் எவ்வளவு அபராதம்
விதித்தது?1 ரூபாய்.
காந்திஜி தனது வாழ்நாளில் எத்தனை நாட்களை சிறையில் கழித்துள்ளார்?2338 நாட்கள்.
காந்திஜி தானே நூற்றுத் தயாரித்த கதர் மேஜை விரிப்பை 1947ல் எலிசபெத் மகாராணிக்கு வழங்கினார்.
காந்தியடிகள் முதன்முதலாக எழுதிய நூல் இந்திய சுயராஜ்யம்,
தனது நாட்டின் தெருவொன்றுக்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டியுள்ள நாடு எது? ஜேர்மனி
இ. சிறிஸ்கந்தராசா

Page 10
34.
35.
36.
38.
39.
40.
41.
42.
43.
45.
இந்திய தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? காந்தி. காந்தியின் முழுப்பெயர் என்ன?மோகன்தாஸ்கரம்சந்த் காந்தி.
காந்தி மறைந்த தினம் எந்தப் பெயரில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது? தியாகிகள் தினம்.
காந்திக்கு பிளாஸ்டிகில் தபால் தலை வெளியிட்டு கெளரவப்படுத்திய நாடு எது? பூட்டான்.
காந்தியை ஆராதனைக்குரிய சிலை ஆக்காதீர்கள் என்று கூறியவர் யார்? சுமித்திரா காந்தி குல்கர்னி
சுமித்திரா காந்தி குல்கர்னி - காந்திக்கு என்ன உறவுமுறை, பேத்தி.
அறிவு நம்மைக் கைவிடும் போது நம்பிக்கையே உதவுகிறது என்று கூறியவர் யார்? காந்தி.
அண்ணல் காந்தியடிகளும் அன்னை கஸ்தூரி பாயும் இணைந்து இருக்கும் தபால்தலை 10.10.69இல் அன்று வெளியிடப்பட்டுள்ளது. தம்பதிகளாக தபால்தலை வெளியிடுவது இதுவே முதல் தடவை.
கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியவர் யார்? காந்தி.
A நோபல் பரிசுக்கு இணையாக சொல்லப்படும் இந்திய விருது எது? காந்தி சமாதான விருது. காந்தி சமாதான விருதின் மதிப்பு எவ்வளவு? கோடி ரூபா ரொக்கப்பணம். பதக்கம் மற்றும் தாமிரப்பட்டயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
1996ம் ஆண்டிற்கான காந்தி சமாதான விருதினை பெற்றவர் யார்? இலங்கையை சேர்ந்த ஆரிய ரத்தின.
காந்தி அடிகள் 12
 

46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
13
அஞ்சாமை மனிதன் பெறக்கூடிய எல்லாக் குணங்களிலும் மேலானது என்று கூறியவர் யார்? காந்தி.
செய் அல்லது செத்துமடி என்று கூறியவர் யார்? காந்தியடிகள்.
மலை அளவு சொல்லை விட கடுகு அளவு செயல் எவ்வளவு சிறந்தது என்று கூறியவர் காந்தி.
காந்தியை மிக்கி மவுஸ் என்று செல்லமாக அழைத்தவர் யார்? சரோஜினி நாயுடு.
இந்தியா மக்களால் தேசத்தந்தை என்று அன்புடன் அழைக்கப்படுபவர் காந்தியடிகள்.
காந்தியின் அரசியல் வாழ்க்கை எந்த நாட்டில் தொடங்கியது? தென்னாபிரிக்காவில்.
மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் யார்? கன்னியப்ப செட்டியார். காந்தி பெயரில் தமிழ் நாட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன? காந்தி கிராமப் பல்கலைக்கழகம்.
தென்னாபிரிக்காவில் காந்தியடிகளுக்கு ஆதரவு தந்து சிறை சென்ற பெண்மணி யார்?தில்லையாடி வள்ளியம்மை.
சபர் மதியிலிருந்து தண்டியை நோக்கி காந்தி அடிகள் மேற்கொண்ட யாத்திரையின் பெயர் என்ன? உப்புச் சத்தியாக்கிரகம்.
காந்தியின் சபர் மதி ஆசிரமத்திற்குத் தண்டி யாத்திரை இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு? 200 மைல்கள்.
காந்திஜியை சுட்டுக் கொன்ற கோட்ஸேயிற்கு எப்போது மரண தண்டனை ஊர்ஜிதமானது?21 ஜூன் 1949.
காந்திஜிக்கும் ஆங்கிலேய அரசுப்பிரதிநிதி இர்வின் பிரபுவிற்கும் இடையே காந்தி- இர்வின் ஒப்பந்தம் எங்கு கையெழுத்தானது?டெல்லியில்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 11
59.
60.
6.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
7.
72.
கிப்ஸ் அறிக்கையை காந்தி எதற்கு ஒப்பிட்டார்? பின் தேதியிடப்பட்ட காசோலைக்கு.
இந்தியாவின் முதல் அரசியல் கைதி மகாத்மா காந்தியடிகள் 10.3.22இல் கைது செய்யப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி வைத்த பெயர்? அரிஜன். காந்தியின் இர்வின் ஒப்பந்தம் எப்பொழுது ஏற்பட்டது?1931 இல், காந்தி பிறந்தது 1869 அக்டோபர் 02ல் . காந்தியின் சமாதி எந்த இடத்தில் உள்ளது?ராஜ்காட்.
காந்திஜி எந்த ஆற்றின் கரையில் தனது ஆசிரமத்தை அமைத்தார்?சபர்மதி ஆற்றின் கரையில் காந்தியின் சத்தியாகிரகம் எந்த ஆங்கிலச் சட்டத்தை எதிர்த்தது?"ரெளலட்" காந்திஜியும் பாரதியாரும் முதன் முதலில் எங்கு எப்பொழுது சந்தித்துக் கொண்டனர்? சென்னை ராஜாஜியின் இல்லத்தில் 1919ஆண்டு. உண்மையை தனது உயிராகக் கொள்ள காந்திஜிக்கு மனதை தொட்டது அரிச்சந்திர நாடகம்.
சிறந்த மனிதராக டைம் பத்திரிகையில் இடம் பெற்ற ஒரே இந்தியர் யார்? காந்தி
காந்தியின் குடும்பத்துடன் திருமண உறவு ஏற்படுத்திக் கொண்ட தமிழர் ராஜாஜி. நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக காந்தி எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்?5 நாட்கள்.
பொது வாழ்க்கைக்கு வரும் ஒவ்வொருவரும் தங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி விரும்பினார்? ஏழைய்ாக தியாகியாக,
காந்தி அடிகள் 14
 
 

73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
83.
84.
85.
15
காந்திஜி தென்னாபிரிக்கா சிறைகளில் இருந்த போது கற்றமொழி எது? தமிழ்.
காந்தியின் - இர்வின் ஒப்பந்தத்தின் வேறு பெயர் என்ன?டெல்லி ஒப்பந்தம்.
காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தியை விட எத்தனை வயது மூத்தவர்?6 மாதங்கள். நைல் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்த பாரதப் பிரதமர் யார்?ஐ.கே. குஜரால்.
ஆன்மீக வாழ்க்கையின் முதல் குணம் அஞ்சாமை என்று கூறியவர் யார்? காந்திஜி
தமிழகத்தில் நாகர் கோயிலில் காந்தி நினைவுத் துணை அமைத்தவர் யார்? கலைவாணர் N.S.கிருஷ்ணன்
காந்திஜி அறவே வெறுத்த உணவு எது?புலால் உணவு.
காந்தி குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால் ஏன் மேல் சட்டை அணியவில்லை? மதுரையில் மேல் சட்டை அணிய வசதியில்லாத ஏழைக்குழந்தைகளை கண்டபின்.
மகாத்மா காந்தி எக்காலத்திலும் தாமாக இறந்த மாடுகளின் தோலால் செய்த செருப்புகளையே அணிந்து வந்தார்.
தண்டி பேரணிக்கு சென்ற காந்திஜி ஆச்சிரமத்திற்கு திரும்பவில்லை காரணம் பிரிட்டிஷ் அரசு ஆச்சிரமத்தை கைப்பற்றிய
தால,
காந்திஜி இறந்த போது ரஷ்யாவின் அதிபராக இருந்தவர் யார்? ஜோசப் ஸ்டாலின். Y - -
தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்காக ஒரு ஆண்டு தண்டனை பெற்ற காந்திஜிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட கைதி எண் என்ன?1739.
தென்னாபிரிக்காவில் காந்திஜி நடத்திய போராட்டத்தின் பெயர் என்ன? தீண்டாமை ஒழிப்பு.
இ. சிறிஸ்கந்தராசா

Page 12
86.
87.
88.
89.
9.
92.
93.
94.
95.
96.
97.
காந்திஜியின் தாய் மொழி எது? குஜராத்தி.
காந்திஜிக்கு விருப்பமானது எந்த ஆட்டின் பால்?வெள்ளாட்டுப் LIT6i.
குஜராத்திய மொழியை இரண்டு கைகளாலும் எழுதும் திறன் உடையவர் காந்தி.
காந்தி ஆங்கிலப் பாடத்தின் இயக்குநர் யார்? சர்.ரிச்சர்ட் ஆட்டன்பரோ.
காந்தி ஆங்கிலப்படத்தில் காந்தியாக நடித்தவர் யார்? பென் கிங்ஸ்லி. காந்தி ஆங்கில படத்தில் கஸ்தூரி பாயாக நடித்த பெண்மணியின் பெயர் என்ன? ரோகினி ஹட்டங்காடி
காந்திஜியின் ஆசிரமப் பொறுப்பாளராக இருந்தவர் யார்? சுசேதா கிருபாளினி.
இந்தியர்களின் ஆங்கில எதிர்ப்பு உணர்வை ஒழுங்குபடுத்த காந்திஜி உருவாக்கிய இயக்கம் எது? ஒத்துழையாமை இயக்கம். ஒத்துழையாமை இயக்கத்தின் இன்னொரு பெயர் என்ன? அறப்போராட்டம்.
இந்தியாவில் எந்த இரண்டு ஊர்களில் காந்திஜி வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்? பம்பாய் மற்றும் ராஜ்கோர்ட்.
தண்டியாத்திரையின் போது காந்திஜி எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கராடி என்னும் இடத்தில்.
سمبر
ஜவஹர்லால் நேரு முதல் முதலாக காந்திஜியை எங்கு எப்பொழுது சந்தித் தார்? லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் 1916 ஆண்டு.
காந்தி அடிகள் 16
 
 
 

98. காந்திஜி தன் பெயரை குஜராத்தி ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு அடுத்து எந்த மொழியில் எழுதினார்? தமிழ் மொழியில்.
99. காந்திஜி இரண்டாவதுமுறையாக தென்னாபிரிக்காவிற்கு எந்த
ஆண்டு சென்றார்?1897
100. காந்திஜி வாரம் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்திக் கொண்டதுஏன் சத்தியம் தவறிவிட்டது என்பதற்காக,
101. காந்திஜியின் 100வது பிறந்த நாளின் போது வெளியிடப்பட்ட
காந்திஜியின் நூல் எது?புண்ணியவான் காந்தி,
102. மகாத்மா என்ற சொல் எதில் உள்ளதாக ரவீந்திரநாத் தாகூர்
குறிப்பிடுகிறார்? உபநிஷத்தில்,
103. காந்தியை கொன்ற கோட்சே ஆசிரியராக இருந்த பத்திரிகை
எது? இந்து ராஜியம்.
104. காந்தி கொலை வழக்கில் கோட்சேயோடு துரக்குத்தண்டனை
பெற்ற உயிர் நண்பன் யார்?நாராயணன் ஆய்தே.
105. இந்து சமயத்தில் ஏற்பட்ட மாசு என்றும் சாபம் என்றும் காந்திஜி
எதைக் குறிப்பிட்டார்?திண்டாமையை.
106. காந்திஜி மிகவும் உயர்ந்ததாக நினைத்தது எதை?
உண்மையை
107. காந்திஜியின் பேரன் பெயர் துஷார் காந்தி.
108. காந்திஜியின் மூத்த மகன் பெயர் ஹரிலால், இரண்டாவது மகன்
பெயர் மணிலால்,
109. காந்திஜியின் சகோதரி பெயர் என்ன? சோகிபென்.
110 காந்திஜியின் தாயார் புத்லிபாய் தந்தை கரம்சந்த்திற்கு
எத்தனையாவது மனைவி ? 4வது மனைவி.
11. புத்தருக்குப் பின் இந்தியாவில் தோன்றிய மாபெரும் தலைவர்
யார்? காந்திஜி.
17: இ. சிறிஸ்கந்தராசா

Page 13
12.
13.
14.
1 15.
16.
17.
18.
9.
120.
121.
22.
பானு ஆத்தையா என்னும் இந்தியப் பெண்மணி காந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் பரிசு பெற்றார்.
காந்திஜி 1893 - 1914 வரை தென்னாபிரிக்காவில் குஜராத் வியாபார நிறுவனம் ஒன்றின் சட்ட ஆலோசகராக கடமையாற்றினார்.
"என்னுடைய பிறந்த நாளை புனித நாளாகக் கருதி அரசு விடுமுறை அளித்திருப்பது சட்டப்படி குற்றம்" என்று தனது ஹரிஜன் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி.
"மகாத்மா காந்தியின் ஆன்மசக்தியும் சாந்திநிலையும்" என்ற நூலை எழுதியவர் யார்?கிருஷ்ணசாமி சர்மா.
காந்திஜியின் சுயசரிதையை சத்திய சோதனை என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? கல்கி.
மகாத்மாவின் காலடியில் என்ற ஆங்கில நூலை எழுதியவர் யார்? டாக்டர். ராஜேந்திர பிரசாத்.
உண்மை தியாகிகளின் ஒரு துளி சத்தம் ஓராயிரம் லட்சியவாதிகளை உருவாக்கும் என்று கூறியவர் யார்? காந்தி.
அறியாமை நீங்கி அனைவரும் ஒற்றுமையுடன் வறுமை இல்லா வாழ்வைப் பெறுவது என்றே உண்மையான சுதந்திரம் என்று கூறியவர் யார்? காந்தி.
இங்கிலாந்து ஆங்கிலேயர் இல்லாத ஒருவரை தபால் தலையில் வெளியிட்டுக் கெளரவித்தது காந்தியடிகளைத் தான்.
இந்திய தேசியக் கொடியில் ராட்டை சின்னத்தை அகற்றி அதில் அசோக சக்கரத்தை தேசிய சின்னமாக பொறிக்க ஆலோசனை கூறியவர் காந்தி.
சபர் மதிசாது என்பது யாரைக் குறிக்கும்? காந்தியடிகளை.
காந்தி அடிகள் இ 18
 

23.
124
125.
126.
27.
128.
129.
30.
131.
132.
33.
34.
19
காந்தி தன்னுடைய அரசியல்குரு என்று யாரைப் போற்றினார்? கோபால கிருஷ்ண கோகலே .
காந்திஜி எப்போது சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்? 2 LD/Tsfdjf 1930
ஆங்கிலேயரை எதிர்த்து காந்திஜி நடத்திய கடைசிப் போராட்டம் எது?ஆகஸ்ட் புரட்சி (வெள்ளையனே வெளியேறு)
தென்னாபிரிக்காவில் காந்தி வசித்த வசிப்பிடம்? டால்ஸ்டாய் பண்ணை.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் வெள்ளிக்கிழமை. சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தி இறந்ததும் வெள்ளிக்கிழமை. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை 24 நாட்கள் நடந்தது.
காந்திஜி உருது மொழியை ஏரவாடா சிறையிலிருந்த போது கற்றார்.
காந்திஜி எத்தனை வயதுவரை தான் வாழ விரும்புவதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்?125 வயது.
காந்திஜியை காந்தியடிகள் என்று குறிப்பிட்டு முதன் முதலில் குறிப்பிட்டவர் திரு.வி.க.
அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான். அன்பு எதையும் சாதிக்க வல்லது. மட்டுமல்ல அதிகாரத்தையும் அழிக்க வல்லது.
காந்திஜியை தன் தந்தையாக சுவீகாரம் எடுத்துக் கொண்ட இந்தியர் யார்?ஜயனாலால் பஜாஜ்
காந்திஜி என்ற பத்திரிகையை நடத்தியவர் டி.எஸ். சொக்கலிங்கம்
. காந்தியின் வாழ்க்கைச்சரித்திரத்தை முதன்முதலாக பிரெஞ்சு
மொழியில் எழுதியவர் ரோமா இராலாந்து என்ற பிரெஞ்சு மேதை.
இ. சிறிஸ்கந்தராசா

Page 14
36.
137.
38.
139.
140.
14.
42.
143.
144.
145.
46.
Heroes of the Hour (ஹீரோஸ் ஆய்த அவர்) என்ற காந்திஜியின் நூலுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் முன்னுரை எழுதியுள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் யுத்த முழக்கம் எது?வந்தே மாதரம்.
அந்தநாளில் பள்ளிச் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் படு உற்சாகமளித்த கோஷம் எது?வந்தே மாதரம்.
காந்திஜி முதன் முதல் பார்த்த திரைப்படம் மாஸ்கோவுக்கு துரது
இந்து முஸ்லிம் ஒற்றுமை கோரி காந்திஜி காலவரையற்ற உபவாசத்தை 13 ஜனவரி 1948இல் ஆரம்பித்தார்.
தென்னாபிரிக்கா மாநில தடைச்சட்டத்தை எதிர்த்து காந்திஜி நேடால் என்ற ஊரிலிருந்து டிரான்ஸ் வால் என்ற ஊருக்கு ஊர்வலமாக சென்றார்.
தென்னாபிரிக்கா மாநில தடைச் சட்டத்தை எதிர்த்து காந்தி. ஜிக்கு ஆதரவாக எத்தனை பேர் போராட்டம் நடத்தினர்? 50 ஆயிரம் பேர்
1942ல் காந்திஜி பிரிட்டிஸ் அரசை எதிர்த்து தொடங்கிய இயக்கத்தின் பெயர் என்ன? Quite India
1927 ஆம் ஆண்டு தென் மாநிலங்களில் தன் குடும்பத்தாருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்திஜிசெட்டிநாட்டுப்பகுதியில் வை.க.சண்முகநாதனாருக்கு சொந்தமான இன்பமாளிகையில் தங்கினார்.
தளபதி என்று காந்திஜியால் செல்லமாய் அழைக்கப்பட்ட தியாகி தளவாய் ராமா நாயுடு.
இந்தியா உலகிற்கு அளித்த பாடம் எது?அகிம்ஷை
காந்தி அடிகள் 20
 

47.
148.
49.
50.
15.
152.
153.
54.
155.
156.
57.
58.
21
ஆன்மீக வாழ்க்கையின் முதல் குணம் அஞ்சாமை என்று கூறியவர் காந்திஜி
தென்னாபிரிக்க மக்களுக்கு சேவை செய்தற்காக காந்திஜிக்கு ஆங்கில அரசு வழங்கிய கெய்சரி-ஹிந்த மெடல் தங்கத்தால் செய்யப்பட்டது. முட்டை வடிவம் கொண்டது.
கருத்து வேறுபாடு காரணமாக விலகிப் போய்க் கொண்டிருந்த நேருவையும் சர்தார் வல்லபாய் பட்டேலையும் இணைக்க காந்திஜி மவுன் போட்டன் பிரபுவின் உதவியை நாடினார்.
காந்திஜியின் வளர்ப்பு மகள் யார்? ஆசிரமத்தில் குடியிருந்த தாதா பாயின் மகள் லட்சுமி.
பொது சேவைக்காக கையேந்தி மக்களிடம் நிதி திரட்டிய காந்திஜியை மக்கள் எப்படி அழைத்தனர்? பிச்சைக்காரர்களின் சக்கரவர்த்தி.
காந்திஜி எவ்வளவு காலம் காலணி அணியாமல் இருந்தார்?ஒரு வருடம்.
விடுதலை போராட்டக் காலத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆங்கில அரவை எதிர்த்து காந்திஜி போராட்டம் நடத்தினார்? 10 ஆண்டுக்கு ஒரு முறை. அக்டோபர்-2 ஜனவரி-30 ஆகஸ்டு 15 ஆகிய மூன்றுதினங்களும் இந்தியாவில் "தேசிய நாள்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். வல்லபாய் பட்டேலுக்கு 'சர்தார் என்ற பட்டத்தை வழங்கியது யார்? காந்தியடிகள்.
இந்தியாவின் "வானம்பாடி' என்று சரோஜினி நாயுடுவை புகழந்தவர் யார்? காந்திஜி காந்திஜியின் அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்ட தமிழக தியாகி யார்? கோடை குப்புசாமி முதலியார். காந்தி மகான் சரித்தரம் என்ற புகழ்பெற்ற பாடலை இயற்றியவர் யார்? கொத்த மங்களம் சுப்பு.
இ. சிறிஸ்கந்தராசா

Page 15
2.
3.
JČieľ.
5.
| մյքի,
W.
|ዕነ8.
ዘዕቧ
|7}
காந்தியின் முதன்மை சீடர் நேரு.
காந்திஜியின் போராட்ட இயக்
காந்திஜி கனவு கண்ட கல்வி முறை? தேசிய கல்விமுறை
கத்தை தமிழகத்தில் தலைமை ஏற்று நடத்தியவர்?ராஜாஜி.
காந்தி பிறந்த தினத்தின் வேறு ஒரு பெயர் என்ன? காந்தி ஜெயந்தி.
காந்தி ஜெயந்தி எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? அக்டோபர் 2ல்
காந்தி பிறந்த அக்டோபர் 2ல் இறந்த தமிழகத் தலைவர் யார்? காமராஜர்.
மகாத்மாவின் மாப்பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?ஜெயய் பிரகாஷ் நாராயணன்.
காந்திஜியைசுட்டுக்கொன்ற கோட்சே அதற்கு முன் காந்தியின் எந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்தான்? ஒத்துழையாமை இயக்கத்தில் உப்பு சத்தியாக்கிரகத்தை ஒடுக்கிய ஆங்கில அரச காந்தி, நேரு ராஜாஜி உள்பட எத்தனை பேரைக் கைது செய்தது?90,000 தொண்டர்களை காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களான கதர்மது விலக்கு பசு பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தும் பாடல்களை எந்த வார இதழில் இடம்பெறச் செய்தார் பார திதாசன்'தேச சேவகன் வார இதழில்
காந்திஜி இறந்த நாளான ஜனவரி 30ல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தினம் எது?தொழுநோய் எதிர்ப்புத் தினம். விஷ பானம் என்று காந்திஜி எந்த பானத்தை குறிப்பிட்டார்?
LIgyüfiji}lö}!.
காந்தி அடிகள் 22
 

17. மகாத்மா காந்தியின் சீடராக இருந்த ஐரோப்பிய பெண்மணியின் பெயர் என்ன? காதரின் மேரி வரிலானியின் சரளா பென் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.
72. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டி பாத்திரை எந்தச்
சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்டது?உப்பு வரிச்சட்டம்
73. காந்தி அடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் எங்கு உள்ளது'குஜராத்
மாநிலத்திலுள்ளது.
174 மகாத்மா காந்தி இலங்கை விஜயம், நவம்பர் 1927ல், நேரு
1957இல், சுவாமி விவேகானந்தர் 1898 டிசம்பர் 28இல்
175 காந்திஜி வாழ்ந்த காலம் 79 ஆண்டு நேருஜி 75 வயது வரை பாரதியார் 39 வயது. சுவாமி விவேகானந்தர் 37 வயது வரை வாழ்ந்தார்கள்.
76. தென்னாபிரிக்கா மக்கள் காந்தியை கெளரவப்படுத்தும் வகையில் அங்குள்ள கடுகதி புகையிரதத்திற்கு மகாத்மா காந்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
177 மகாத்மா காந்தியின் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு முதலாவது காந்தி சமாதானப்பரிசு ஜூலியஸ் நியரே என்பவருக்கு வழங்கப்பட்டது.
78. யேசுவின் அதைாரம் என்று எந்தக் கண்டத்தனர் காந்திஜியை
குறிப்பிட்டனர்? ஐரோப்பா
1ήo. தன்னுடைய அரசியல் குரு என்று காந்திஜி யாரைப்
போற்றினார்? கோபா கிருஷ்ண கோகவே
18. மகாத்மா காந்தியின் ஊன்று கோல் என்று அழைக்கப்பட்டவர்
யார்? அபா காந்தி
81. மகாத்மா காந்தியின் உள்ளம் கவர்ந்த நூல் எது? ரஸ்கின்
எழுதிய முழுநாவல், UI this (181
82. காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய முதல் பாகிஸ்தானியப்
பிரதமர் முஷாரப் (14.7.2001)
23 இ. சிறிஸ்கந்தராசா

Page 16
183. உலகில் 100 நாடுகளுக்கு மேல் முத்-T”
திரை வெளியிட்டுக் கெளரவிக்கப்பட்ட ஒரே தலைவர் மகாத்மா காந்தி.
184. காந்திஜி தனது 45 வது வயதில் தான் அரசியல் அறப் போராட்டங்களில் இறங்கினார்.
185. தென்னாபிரிக்க விடுதலைக்காக (1893 - 1914) வரை 21 வருடங்களும், இந்திய விடுதலைக்காக (1915 - 1948) வரை 33 வருடங்களும், தனது வாழ்க்கை தியாகம் செய்து போராடினார்.
భx
癸
ప
姿
*ඤ
భ%
ჯX3×
:
భ8 జి X
186. அண்டார்டிக்காவில் சிலை இருக்கும் பெருமை பெற்ற தலைவர்
மகாத்மா காந்தி. 187. காந்திஜி - அப்பேத்கார் ஆகிய இரு தலைவர்களுக்கிடையே
நடந்த ஒப்பந்ததத்தின் பெயர் பூனா ஒப்பந்தம். 188. காந்தியின் 52வது வயதில்தான் (1921ல்) ரவீந்திராத்தாகூரினால்
மகாத்மா என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. 189. காந்தியடிகள் தனது தாய்மொழியான குஜாராத்தி மொழியிலேதான் நவஜீவன் பத்திரிகையை வெளியிட்டார். 190, காந்தியடிகள் தமது சுயசரிதையான சத்திய சோதனையை தனது தாய்மொழியில்நவஜீவனில் தொடராக எழுதினார். பின்பே ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. 191. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழும் மாநிலம் குஜராத் அங்குள்ள போர் பந்தர் என்னும் கிராமத்தில் தான் காந்தி பிறந்தார். 192. 1942 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது காந்தியடிகளும் கஸ்தூரிபாய் மனைவியும் கைது செய்யப்பட்டு இருவரும் பூனா சிறையில் வைக்கப்பட்டனர். 193. 1944 பிப்ரவரி 22ல் மாலை 7.30 மணியளவில் கஸ்துரிபாய் பூனா
ஆகான் சிறையில் உயிர் நீத்தார்.
காந்தி அடிகள் 24
 

194 காந்தியடிகள் ஜோனகன்ஸ்பார்க்கில் தில்லையாடி வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பியுள்ளார். 195 மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான திருக்குறள்
கற்க, கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்பதாகும். இக்குறளை அவர் தம் கை பட எழுதி போற்றி வந்தார்.
196. காந்தியின் அந்தரங்க செயலாளராக பணிபுரிந்தவர்ராம் பிரசாத்
வியாஸ்.
197 இந்திய பணமான 500 ரூபாய் நோட்டில் இடம் பெற்ற ஒரே
தேசத்தலைவர் மகாத்மா காந்தி மட்டும் தான்.
198. தீய விஷயங்களை உதாரணம் காட்டுவதற்காக காந்திஜி அறிமுகப்படுத்திய மூன்று குரங்கு பொம்மைகள் வலியுறுத்துவது எவற்றை? தீயதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே
199. மதுரை காந்தி மியூசியத்தில் காந்தியடிகள் கொல்லப்பட்ட அன்று உடுத்த கதராடை இரத்தக் கறையுடன் இன்னும் கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
200. தென்னாபிரிக்கா 7.6.1993ல் காந்தியின் உருவப்பட முத்திரை
வெளியிட்ட 46வது நாடாகும்.
201. காந்தியடிகள் ஹரித்துவார் சென்று கும்பமேளாவில் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்த்திலிருந்து சூரியன் மறைந்தபின் சாப்பிடுவதில்லை என விரதம் பூண்டிருந்தார்.
202. காந்தி மொத்தம் 11 மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்து
வைத்திருந்தார்.
25 இ. சிறிஸ்கந்தராசா

Page 17
13.1 : 1927
5. i. 927
5. I. 1927
15. 1 . 927
18.11. 1927
8. ( . 1927
18.1 - 1927
9, 1927
20. I. 1927
22, 11.1927
22. 1927
23.1 : 1927
24. 11, 1927
24. 1927
25.1 1927
26. I. 1927
26.1. 1927
29 1.1927
மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில்
கொழும்பு விவேகானந்த சபை கொழும்பு மாநகரசபை கொழும்பு ஆனந்தாக் கல்லூரி நாலந்தக் கல்லூரி மாத்தளையில் பொதுக் கூட்டம் கண்டி தர்மராஜா கல்லூரி கண்டி பொதுக் கூட்டம் பதுளையில் பொதுக் கூட்டம் நுவரெலியா விஜயம் கொழும்பு சகிரா கல்லூரி இலங்கை தேசிய காங்கிரஸ் காலியில் பொதுக் கூட்டம் காலி மகிந்தா கல்லூரி பரிசளிப்பு விழா கொழும்பு ரெட்டியார் சங்கம் யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் யாழ்.மாணவர் காங்கிரஸ் யாழ்/ சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ் மத்திய கல்லூரி உடுவில் மகளிர் கல்லூரி சுன்னாகம் இராமநாதன் கல்லூரி
சின்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி
4, flyfi A .DIliq as dh

மகாத்மா காந்தி யாழ்ப்பாண வருகையும் பங்கு பற்றிய அறிஞர்களும்
இந்தியக் கண்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு மாற்றமும் சேய் நாடான இலங்கையிலும் அது பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும்
ஏற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட சுதந்திர தாகம் யாழ்ப்பாண மாணவரிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக 1920 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் ஆரம்பமானது. இவருடன் தோழோடு தோள் நின்று உழைத்தவர்கள் ஒறேற்றர் சுப்பிரமணியம், செனட்டர் பி.நாகலிங்கம், செனட்டர் S.R.கனகநாயகம், அட்வற்கேற் பாலசுந்தரம், பேராசிரியர் சுந்தரலிங்கம், புரொபஸர் நேசையா செனட்டர் சுப்பையா, நடேசபிள்ளை ஆகியோராவர். (அக்கால கட்டத்தில் இவர்கள் மாணவர்கள்)
மகாத்மா காந்தியின் வரவேற்புக்கு மேற்கூறப்பட்டவர்களுடன் யாழ்ப்பாண மக்கள் இன மத வேறுபாடு இன்றி ஒத்துழைத்து மகாத்மா காந்தியை வரவேற்றனர். இவற்றை விட சேர்.பொன்.இராமநாதன் (Hindu Board) இராஜரத்தினம் போன்றோர்களும் மகாத்மா காந்தியை இராமநாதன் கல்லூரிக்கு அழைத்து பெரிய வரவேற்புகள் வழங்கப்பட்டது.
* காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்த போது அவரைக் கெளரவிக்கு
முகமாக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. காந்தி சென்றவிடமெல்லாம் சிறப்பான வரவேற்புக்கள் வழங்கப்பட்டன.
மகாத்மா காந்தியின் எண்ணக் கருத்துக்களால் கவரப்பட்ட இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தினர் பலர் வெளிநாட்டு பொருள்களை பகிஸ்கரித்தனர். கதராடைகள், தேசிய உடையை அணிந்தனர். இவர்களுள் ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம், அட்வற்கேற் S.R.கனகநாயகம், புரொபஸர் நேசையா, செனட்டர் பி.நாகலிங்கம் இன்னும் பலர் வாழ்நாள் முழுவதும் தேசிய உடையையே சகல 鼩 ஆக்கும் ஆணிந்தனர்.
27 இ. சிறிஸ்கந்தராசா

Page 18
முக்கிய விடயம் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். 1931ம் ஆண்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியல் திட்டம் முழு அரசியல் சுதந்தித்தை வழங்கவில்லை என அதை பகிஷ்கரித்தனர். 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரெற்கவுன்சில் தேர்தலில் எவருமே பங்கு பற்றவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
இளைஞர் காங்கிரஸ் மாநாடுகளிலும் ஏனைய கூட்டங்களிலும் இந்தியாவிலிருந்து பங்கு பற்றிய இந்திய காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் பின்வருமாறு : காந்தி, நேரு, சத்தியமூர்த்தி கல்யாணசுந்தர முதலியார் மற்றும் கமலா தேவிசட்டோ பாத்தியாய, ராஜாஜி என முப்பதுக்கு மேற்பட்ட தொண்டர்கள் வந்தனர்.
காந்தியின் கொள்கைகளினால் கவரப்பட்டு தென்னிலங்கையில் டாக்டர் S.A.விக்கிரமசிங்காவின் தலைமையில் முக்கியமான தேசியஇயக்கம் சூரிய மல் இயக்கமாகும். இதனை ஏனைய தொண்டர்கள் Dr.N.M.பொரேரா Dr.கொல்வின் ஆர்.டி.சில்வா ரோபோற் குணவர்த்தனா, பிலிப் குணவர்த்தனா போன்ற இன்னும் பல தலைவர்கள்.
@ @ @
மகாத்மா காந்தி ஏன் தென்னாபிரிக்கா சென்றார் தெரியுமா?
காந்தி தென்னாபிரிக்காவில் தனது அகிம்ஷைப் போராட்டத்தை நடத்தினார் என்பது நாமறிந்த விடயம். ஆனால் அவர் ஏன் தென்னாபிரிக்கா சென்றார் தெரியுமா?
போர் பந்தரில் வியாபாரம் செய்த தாதா அப்துல்லா கம்பனியாரின் வழக்கை கவனிக்கவே தென் ஆபிரிக்கா டாய்ன் நீதிமன்றத்திற்குச் சென்றார்.
G G G)
தூய தமிழில் பேசுவோம்
"தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழைப் பயில வேண்டியது அவர்களது இன்றியமையாத கடமை. தமிழர் தம்
காந்தி அடிகள் 28

தாய்மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளை விட முதன்மையாகக் கருத வேண்டும். இப்படிச் சொல்லியிருப்பவர் யார் என்கிறீர்கள்? வேறு எவருமல்லர். காந்தியடிகளேதான்.
காந்தியடிகள் தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு போதாது என்று கருத நேர்ந்தது எப்படி?தென்னாப்பிரிக்காவில் தமிழர்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய 10,00,000 எனலாம். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுக்குத் தமிழினத்தோடு நன்கு பழகும் வாய்ப்பு இருந்தது. தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமிழைவிட்டு விலகிச் சென்றதை காந்தியடிகள் கண்கூடாகக் கண்டார். அவருக்கே பொறுக்கவில்லை. அதனால்தான் இப்படிச் சொல்லியிருந்தார்.
(g) (Gg) (S2)
மகாத்மா காந்தி பற்றிய கேள்விக்கு வின்சன்ட் சர்ச்சில் அளித்த பதில்
நிராயுத பாணியாய் நின்று போராடும் மகாத்மா காந்தியின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ்காரரால் ஏன் நசுக்க முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கேட்டபோது சர்ச்சில் சொன்ன பதில், ஆழமானது.
அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியை தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கியை எடுத்து போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன்.
அவர் அகிம்ஷை என்று சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். அகிம்ஷையை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நண்பர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார் சர்ச்சில், அகிம்ஷை முன் அல்லா ஆயுதங்களும் கூர் மழுங்கிப் போயின.
G G G)
29 இ. சிறிஸ்கந்தராசா

Page 19
காந்தியடிகள் 1913 ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரை 17 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். காந்தி அனுஷ்டித்த உண்ணாவிரதங்கள் சில
மகாத்மா காந்தி பல தடவைகளில் பரிசுத்தத்துக்காகவும் ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காகவும் உண்ணாவிரதம் எடுத்திருக்கிறார். அந்த உண்ணாவிரதங்களில் முக்கியமானவைகள் பின்வருமாறு.
1924 செய்18ல் கோஹத்தில் ஹிந்துமுஸ்லிம் கலவரத்தைநிறுத்த டில்லியில் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார். 1932, செப் 20ல் மாக்டொனால்டு வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து ஏர்ர வாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். செப்டெம்பர் 26ம் திகதி சர்க் கார் அனுப்பிய அறிக்கை கண்டு திருப்தியடைந்து, உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.
1933 மே ல் தம்மை பரிசுத்தமாக்கிக் கொள்ள காந்திஜி எர்ர வாடா சிறையில் 21 நாள் உபவாசமிருந்தார். அதே தினம் சர்க்கார் அவரை விடுதலை செய்தனர். பூனாவில் உள்ள பர்ணகுடியில் உபவாசம் முடிந்தது.
1943 பி.ப.10ல் ஆகாகான் அரண்மனையில் 3 வாரம் உண்ணாவிரதமிருந்தார்.
1947ல் செப்1 ல் கல்கத்தாவாசிகள் நிதானமடையும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
செப.4ம் திகதியன்று கல்கத்தா வில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாக தலைவர்கள் கூறியதன் மீது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
1948 ஜன 13 புதுடில்லியில் வகுப்பு ஒற்றுமையை ஏற்படுத்த சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 18ம் திகதியன்று தலைவர்கள் அளித்த வாக்குறுதி மீது உபவாசத்தை கைவிட்டார்.
(3) (3) (3)
காந்தி அடிகள் 30

மாணவர்களே நீங்கள் பின்பற்ற சில அருள்மொழிகளை கூறியிருக்கிறார் காந்தியடிகள்
மாணவர்கள் அரசியலிலும் கட்சிவாதங்களிலும் ஈடுபடக்கூடாது. அவர்கள் அரசியல் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபடக்கூடாது. அவர்கள் நூல் நூற்பதை தங்களுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாக கருத வேண்டும். அவர்கள் கதருடையே அணிய வேண்டும்.
மாணவர்கள் வகுப்பு உணர்ச்சிக்கோ, அல்லது தீண்டாமை உணர்ச்சிக்கோ, மனதில் இடந்தரலாகாது. தேசியக் கொடியின் தத்துவத்தை அவர்கள் உணரவேண்டும் மாணவர்கள் தோட்ட வேலை செய்யவும் தயாராக அருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களுடைய உயிர் போவதாக இருந்தாலும் அஹிம்சையை கைவிடலாகாது. அவர்கள் ரகசியமாக எதுவும் செய்யக்கூடாது. அவர்கள் எப்பொழுதும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றார்.
இ) G G
காந்தியின் ஒன்பது கட்டளைகள்
காந்திஜி பின்பற்றிய ஒன்பது கட்டளைகள் இவை. தினமும் வரிசையாக ஒவ்வொன்றாகப் பின்பற்றவும். முதல் வாரம் நீங்கள் செய்யும் செலவுகளுக்குக் கணக்கு எழுதுங்கள். இரண்டாவது வாரம் கணக்கு எழுதுவதுடன் அளவோடும் சாப்பிடுக. மூன்றாவது வாரம் முதல் மற்ற ஏழு கட்டளைகளையும் பின்பற்றி வாழ நெஞ்சினில் உறுதி பிறக்கும். அதன்பிறகு எப்போதும் முன்னேற்றம்தான்!
சிே மிதமாகப் பேசு
சி எவர் எது சொன்னாலும் கேட்டு எனக்குச் சரியென்று
தோன்றுவதைச் செய். * ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் வேலை செய்
* ஏழைபோல் வாழ். செல்வத்தில் பெருமை கொள்ளாதே.
31 இ. சிறிஸ்கந்தராசா

Page 20
நீசெய்யும் செலவிற்குக் கணக்கெழுது மனம் ஒன்றி கல்வி கற்றுக்கொள். நாள்தோறும் உடற்பயிற்சி செய்.
அளவோடு சாப்பிடு.
நாள் தவறாமல் நாட்குறிப்பெழுது
G G G
காந்திஜி காண விரும்பிய நாடு
பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதிஎன்பதே இருக்கக்கூடாது. எல்லாச்சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன். இது உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம்
என்று அறிவிக்கிறார்
- பிரதமர் நேரு.
G G G)
அவரே ஓர் அற்புத பிறவி அளவு கடந்து நல்ல பராக இருப்பது எவ்வளவு அபாயம் என்பதையே காட்டிவிட்டது. அவர் முடிவு
- அறிஞர் பெர்னாட்ஷா
(3) (3) (3)
கர்ந்தியடிகளை அனுபவபூர்வமாக அவரை நாம் பரிசோதித்து பார்க்கிற பொழுது அவர் ஓர் அரசியல்வாதியாக மட்டும் இல்லை. ஒரு சீர்திருத்தக்காரராக மட்டும் இல்லை. ஓர் ஒழுக்கசீலராக மட்டும் இல்லை, இவைகளையெல்லாம் சேர்ந்த ஒரு மகாபுருஷராகவே அவர் விலங்குகிறார். அவர் சிறப்பாக ஒரு மத புருஷன். மனித குணங்கில் எவைஎவை சிறந்தனவோ அவை யாவும் அவரிடத்தில் இருக்கின்றன. அவர் தமது சக்தியின் எல்லை நன்கு உணர்ந்திருக்கிறார்.
காந்தி அடிகள் 32

அவரிடத்தில்நகைச்சுவைநிரம்ப உண்டு. எல்லோருடைய அன்புக்கும் அவர் உரியவராயிருக்கிறார்.
- டாக்டர் ராதாக்கிருஷ்ணன்,
முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரபல தத்துவஞானி
G G G
1948ம் ஜனவரி 20ம் நாள் நடந்த சம்பவம்
நேர்மைக்கும் நிதானத்திற்கும் எப்பொழுதுமே உலகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் வந்திருக்கின்றது. 1948 ஜனவரி 20ஆம் நாள் மாலை பிரார்த்தனைக்கு காந்திஜி வந்து கொண்டிருந்த பொழுது குண்டு வீசப்பட்டது. ஆனால் அக்குண்டு சற்றுத் தொலைவிலேயே வெடித்து விட்டதால் காந்திஜி உயிர் தப்பினார். அப்படி குண்டு வீசியவன் ஒர் இளைஞன். அவனை மன்னித்துவிடும்படி அரசினரைக் கேட்டுக் கொண்டார் காந்திஜி என்னே அவர் பெருந்தன்மை.
(3) (3) (3)
1948 ஜனவரி 30ம் திகதி இறுதி நேரம் என்ன நிகழ்ந்தது
ஜனவரி 30 - 1948ல் வழக்கம் போல் அன்று விடியற்காலை 3.30 மணிக்கு அண்ணல் காந்தியடிகள் விழித்தெழுந்தார். அன்று வெள்ளிக்கிழமை காலைப் பிரார்த்தனைகளை செய்தார். காங்கிரஸின் புதிய அரசியல் சட்ட திட்டங்களில் சில திருத்தங்களை செய்து கொண்டிருந்தார். உடம்பு முடியாத சூழலிலும் ஏன் இவர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் நாளைக்கு இல்லாமல் போகலாம் என்றார்.
இது நிற்க மாலை 3.30 மணியளவில் உதவிப் பிரதமர் சர்தார் பட்டேல் காந்தியடிகளை சந்தித்து உரையாடினார். சர்தார் பட்டேல் காந்தியடிகளிடம் உங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பிரார்த்தனை மண்டபத்தை சுற்றி பொலிஸ் காவல் போட இருப்பதாகவும், பிரார்த்தனை மண்டபத்திற்குள் செல்பவர்களை சோதனை செய்துதான் உள்ளே விடப் போவதாக சொல்ல,
33 இ. சிறிஸ்கந்தராசா

Page 21
காந்தியடிகள் அப்படி செய்ய வேண்டாம் என்றும் பிரார்த்தனைக்கு வருவோரை சோதனை செய்தால் பிரார்த்தனையின் மகிமையே அற்றுப் போய்விடும் என்றார். சிறப்புப் பாதுகாப்பை மறுத்த காந்தி பட்டேலிடம் என் உயிரை நீங்கள் காப்பாற்றி விட முடியாது கடவுள் தான் என் காவலன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
அதற்கு பட்டேல் பிரார்த்தனை மண்டபத்தை சுற்றி சாதாரண உடையில் பொலிஸ்காரரை காவலுக்கு போடுவதாக கூறினார். இத்துடன் பட்டேலுக்கும் பிரதமர் நேருவுக்கும் இருந்த மனக் கசப்பால் மனம் உடைந்திருந்தார். காந்தி இருவரில் ஒருவர் மந்திரிசபையிலிருந்து விலக வேண்டும் என்பதை வெளிப்படையாக கூறினார். பட்டேலிடம் லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் இதழில் நேருவுக்கும் பட்டேலுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலைப்பற்றி வெளிவந்த கட்டுரையை காண்பித்தார்.
பட்டேல் புறப்பட்ட பின் மாலை உணவாக ஆட்டுப்பால் கொஞ்சம் காய்கறிகள் இரண்டு ஆரஞ்சு துண்டு இஞ்சித்தண்ணிர் முதலியவை சாப்பிட்டு முடிந்தவுடன் நேரம் 5 மணி ஆயிற்று. காலதாமதமானதால் குற்ற உணர்வுடன் தம் பேத்திகளாகிய மனுகாந்தி ஆவா காந்தி இவர்களின் தோள்களில் தம் கைகளை போட்டுக் கொண்டு வந்த பொழுது பிரார்த்தனை மண்டபத்திற்கு போக மக்கள் ஒதுங்கி வழி விட்டனர். அந்த நேரத்தில் விநாயக தூரம் கோட்சே காந்திஜியை நோக்கி அவசரமாக வந்தான். அவரைக் கைகூப்பி தொழுதான். காந்தியும் கரம் கூப்பினார். அதே சமயத்தில் மறைத்து வைத்திருந்த தன் கைத்துப்பாக்கியை எடுத்து காந்தியை நோக்கி மூன்று முறை சுட்டான். நமஸ்காரம் தெரிவித்த காந்தியின் கூப்பிய கரங்கள் கீழே தொங்கின. ஹேராம் என்றுமுணுமுணுப்புடன் பூவினும் மென்மையான காந்தியின் உடல் தரையில் சாய்ந்தது.
அரை மணி நேரத்திற்குள் எல்லாம் காந்திஜி அமரத்துவம் அடைந்துவிட்டார். இச் சோக செய்தி இவ்வையகம் முழுவதையுமே ஒரு உலுக்கு உலுக்கியது. உருகி வருந்தாதோர் கிடையாது.
காந்தி இறந்த செய்தி அறிந்து வந்த பிரதமர் நேரு, உதவிப் பிரதமர் சர்தார் பட்டேல் இருவரும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல்
காந்தி அடிகள் 34

தேம்பி தேம்பி அழுதார்கள். மறுநாள் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் தொடர்ந்தது. அவருடைய சிதைக்கு மூன்றாவது மகன் தீயிட்ட பொழுது மக்கள் கோவென அழுதனர்.
காந்தியடிகளின் இறுதிச் சம்பவம் முற்கூட்டியே இதுபோலவும் நடக்கக்கூடும் என்பதை வள்ளுவரின் நுண்ணறிவு எப்படித்தான் முன் கூட்டி உணர்ந்திருந்ததோ
தொழுத கையுள்ளும் படையெடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிர் அனைத்து (குறள் 828) பகைவர்கள் வணங்குகின்ற பொழுது அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருக்கும். அவர்கள் கண்ணிர் கொட்டி அழுவதும் அப்படிப்பட்டதே என்று அடையாளங் காட்டுகிறார் அவர். அண்ணல் காந்தியடிகளின் முடிவு இந்தக் குறளை மெய்ப்பிக்கும் எடுத்துக்காட்டால்லவா.
காந்தியடிகள் மறைந்த செய்தி அறிந்த பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில்வின்சன்ட்சர்ச்சில்கூறியதுமிக ஆழமான பேச்சு.அவர் கூறியதாவது பிரிட்டிஸ் அரசாங்கம் 60 வருடத்துக்கு மேலாக காந்தியை பாதுகாத்து வந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த காந்தியை இந்திய மக்களால் ஒரு ஆறுமாதம் கூட காப்பாற்ற முடியவில்லையே என்று கூறினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய மண்ணில் காந்தியடிகள் வ்ாழ்ந்த நாட்கள் 167 தினங்கள் மட்டுமே. காந்தியடிகள் மறைந்த தினம் இலங்கை வானொலி எந்த நிகழ்ச்சியும் ஒலிபரப்பாமல் துக்கம் அனுஸ்டித்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
G G G)
காந்தி கண்ட கனவுகள் சில
கிராமத் தொழில்களை மேம்படுத்துதல், கதர் அணியச் செய்தல், மதுவிலக்கை ஏற்படுத்துதல், தீண்டாமை ஒழித்தல், சாதி மத பாகுபாட்டை ஒழித்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை நிறுவுதுதல்,
35 இ. சிறிஸ்கந்தராசா

Page 22
ஆதாரக் கல்வியை மேம்படுத்துதல் , தேச பக்தியை வளர்த்தல், மகளிர் முன்னேற்றம், விவசாய தொழிலாளர் நலன், தொழுநோய் ஒழிப்பு, பொருளாதார சமத்துவம், சமூகக் கல்வியை பரப்பல், ஒழுக்கத்தை வளர்த்தல், சர்வோதயம், கிராம சுயராஜ்யம் போன்ற பல அரிய திட்டங்களை தீட்டினார்.
நாட்டு விடுதலைக்காக சட்டமறுப்பு சத்தியாக்கிரகம் உண்ணாவிரதம் போன்ற அறப் போர்களில் ஈடுபட்டார். அவரது ஆன்ம வலிமை கண்டு உலகமே அதிசயித்தது. அவரது அகிம்ஷைதத்துவம் உலக அரசியல் ஆண் வேரையே அசைத்துப் பார்த்தது.
G G G)
காந்திஜி வாழ்க்கையை மாற்றிய அரிச்சந்திர நாடகம்
மகாத்மா காந்தியடிகள் சிறுவனாக இருந்த பொழுது அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். உண்மைக்காக ஹரிச்சந்திரன் பட்ட துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டார். அது போன்று தானும் சத்தியத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்று உறுதியாக தீர்மானித்தார். அதனால் அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா, நஞ்சமா! அகில உலகமும் அண்ணலின் சத்திய விரதத்தை கண்டு வியந்தது.
(3) (3) (3)
காந்திஜி வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் 1893 ஆண்டில் தென்னாபிரிக்காவில் ஒரு வழக்குக்காக சென்றிருந்தார். தலைப்பாகையுடன் கோர்ட்டுக்கு வந்ததை கண்ட
நீதிபதி தலைப்பாகையை அகற்றும் படி உரைத்தார். காந்தியடிகள் அங்ங்ணம் செய்ய மறுத்து கோர்ட்டை விட்டு வெளியேறினார்.
இன்னொரு சமயம் பிரிடேரியா என்னும் இடத்துக்கு முதல் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்தார். நிறத்திமிர் கொண்ட ஒரு வெள்ளையன் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளின் உதவியைக் கொண்டு அவரை முதல் வகுப்பு வண்டியினின்றும் கீழே இறக்கி விட்டான். இத்தகைய கொடுமைகளே காந்தியடிகளுக்கு வெள்ளையரின்
காந்தி அடிகள் 36

நிறத்திமிரை ஒழித்துக் கட்ட உறுதி கொள்ளும் படி செய்தது. கடைசியில் வெள்ளையரின் ஆதிக்கமே இந்நாட்டில் இல்லாது ஒழித்ததற்கு உத்தமரின் ஒயா உழைப்பே காரணமாயிற்று.
(35) (g5) (S)
காந்திஜி நடாத்திய பத்திரிகைகள்
காந்தி மகான் இங்கிலாந்திலே முறையாக ஆங்கிலம் கற்றவர். ஆங்கில மொழி மூலமும், தொழில் பார்த்தவர்.தமது கருத்துக்களை தமது தாய் மொழியை அறியாதோரும் அறிதல் வேண்டும் என்பதற்காக இந்தியன் ஒப்பீனியன் யங் இந்தியா ஹரிஜன் ஆகிய மூன்று பத்திரிகைகளை ஆங்கிலத்தில் எழுதியும் பொறுப்பேற்றும் நடத்தியும் இருக்கிறார்.
இருப்பினும் தமது தாய் மொழியான குஜராத்திலே நவஜீவன் பத்திரிகை, வெளியிடுவதில் தான் அதிக மகிழ்ச்சியடைந்தார். தமது சுயசரிதையை தாய் மொழியில் எழுதி அப்பத்திரிகை மூலமே வெளியிட்டார்.
(3) (3) (3)
காந்தி மகாத்மா காந்தியான வரலாறு
ஒருமுறை சபர்மதி ஆசிரமத்திற்கு ரவீந்திர நாத்தாகூர் வந்திருந்தார். காந்திஜியைக் கண்டு அளவளாவினார். காந்திஜி அங்குள்ள மற்ற ஆசிரமவாசிகளிடம் பழகும் விதத்தையும் பேசும் தோரணை கூட சீர்தூக்கிப் பார்த்தார். நிச்சயமாக காந்திஜியின் பேச்சிலும் சிந்தனையிலும் செய்கையிலும் கூட வியப்புக்குரிய அரிய சக்தியொன்று நிறைந்திருப்பதைக் கண்டார். ஆழ்ந்த சிந்தனையிலானார். நாட்டு மக்களின் தேவைகளையும் நிறைவேறச் செய்ய அந்தச் சக்தியினாலேயே ஆகும் என்று ஒரு நொடியில் தீர்மானித்தார்.
உடனே மிகவும் பவ்வியமாக காந்திஜியின் கரங்களை பற்றிக் கொண்டு தங்களுக்கு மகாத்மா என்ற பட்டமளிக்கிறேன் நான் என்றார். அன்று முதல் காந்திஜி மகாத்மா காந்தியானார். நாட்டு
37 இ. சிறிஸ்கந்தராசா

Page 23
மக்களும் அதை மிகவும் மனமுவந்து வரவேற்றனர். அதுவரை அவரவர் மனதிற்கு தோன்றியும் வாய்விட்டுச் சொல்ல முடியாத சொல்லத் தெரியாத பட்டமாகவே அது அமைந்துவிட்டதைக் கண்டு வியப்புற்று புகழ் அஞ்சலி செலுத்தினார் காந்திஜி
G) (3) (G)
காந்தி வசதிகளை விரும்பவில்லை சங்கடங்களையே
வசதியாக்கியவர்.
காந்தி மற்றவர்கள் விரும்பும் வசதிகளை எதிர்பார்ப்பதில்லை. வசதியீனங்கள் சங்கடங்களை செளகரியமாக்கிக் கொண்டார்.
கட்டில், மேசை, கதிரை என்றெல்லாம் அவருக்குத் தேவையில்லை. எத்தனையோ தடவை அவர் கீழே அமர்ந்துதம் கால் தொடை மீதே காகிதத்தை வைத்துக் கடிதம் எழுதியிருக்கிறார் தெரியுமா?ஆனால் நாள்தோறும் காற்றோட்டமாக வெகு துரத்திற்கு சென்று உலாவுவதை அவாமிகவும் விரும்பினார். அதால் உடலுக்குப் பலம் உள்ளத்திற்கும் ஒரு சாந்தி என்றார்.
G) (3) (3)
மகாத்மா காந்தி விரும்பிய உணவு
மகாத்மா காந்தியின் உணவு விஷயமோ இன்னும் புரட்சிகரமாக அமைந்தது. அவர் உண்பதற்காக வாழவில்லை. வாழ்வதற்காகவே உண்டார். அவருடைய உணவிற்காக அதிக நேரமோ செலவோ வேண்டியதில்லை. எளிதில் தயாரித்து விடலாம். அதற்காக ஆகும் செலவிே மிகவும் சொற்பம். அதோடு அவர் உண்ட உணவுகளின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. எளிதில் கிடைக்கக் கூடிய தேன் ஆட்டுப்பால் பேரீச்சம்பழம் வேர்க்கடலை முதலியவைகளை அவருடைய உணவாகும். சிலசமயம் எளிதான காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேக வைத் தோ சாப்பிட்டுள்ளார்.
காந்தி அடிகள் 38

காந்திஜி வர்தாவில் தங்கியிருந்த பொழுதும், பாரத நாட்டு சுற்றுப் பயணத்தின் பொழுதும் இங்கிலாந்து சென்றிருந்த பொழுதும் அதே எளிய உணவுதான் அவருக்கு. அநேக வியாதிகள் உணவுக் கோளாறுகளினால் ஏற்படுபவைதானே. அதனால் அந்த எளிய உணவையும் அளவோடுதான் உண்பார். உலகில் அனேக வியாதிகள் மக்கள் அதிகம் உண்பதினாலேயே ஏற்படுகின்றன என்று கூறினார் காந்திஜி அவர் விரும்பிய உணவு வகைகள் கிடையாத இடங்களில் வேய்யிலையை சட்னி செய்து உணவு அருந்துவதும் உண்டு.
காந்திஜி செய்கையின் வெற்றியைப் பெரிதாக கருதுபவர் அல்லர். கடமையையே பெரிதெனக் கருதுபவர். அதனால் அவர் எரிக்கும் கானலிலும் கொட்டும் பனியிலும் நடுங்கும் குளிரிலும் கலவரம் நடந்த இடங்களில் கிராமம் கிராம நடந்து சென்று பணியாற்றினார். பீகாரின் கலவரம் நேருஜியின் முயற்சியால் ஒடுக்கப்பட்டது என்றாலும் மீண்டும் தலைதுாக்கத் தொடங்கியது.
காந்திஜி மறுபடியும் அங்கு சென்று தீமையை தீமையால் அழிக்க முடியாது. நன்மை செய்வதாலேயே தான் அதை துடைக்க முடியும் என்று எடுத்துக் கூறி நாட்டை விட்டோடிய முஸ்லிம்களை மீண்டும் அழைத்து வந்து அமைதியாக வாழும்படி செய்தார்.
G G G)
மகாத்மா காந்தியடிகள் பற்றி லண்டன் நியூஸ் கிராணிகள் பத்திரிகை வெளியிட்ட செய்தி
உண்ணாவிரதத்தின் மூலம் மகாத்மா காந்தி பெற்றுள்ள வெற்றி அணுக் குண்டைக் காட்டிலும் மகத்தான சக்தி ஒன்று இருக்கிறது என்பதை நிரூபிக்கிறதென்று பிரபல பிரிட்டிஸ் பத்திரிகை கூறுகிறது.
மேற்படி வெற்றியானது மேல்நாட்டினரின் மனத்தில் ஒருங்கே பொறுமையையும் நம்பிக்கையையும் உண்டு பண்ணியிருக்கிறதென்றும் அந்த அற்புத சக்தியின் மகிமையை மேல் நாடுகள் சிரத்தையுடன் கவனித்து வரவேண்டுமென்றும் மேற்படி பத்திரிகை பயபக்தியுடன் குறிப்பிட்டிருக்கின்றது.
39 இ. சிறிஸ்கந்தராசா

Page 24
மேலும் அப்பத்திரிகையில் காந்திஜியின் ஆத்ம சக்திக்கு எதிரே எவ்வித ஸ்தூல ஆயுதங்களும் வெற்றி பெற முடியாது என்பதை ஐரோப்பாவும் அமெரிக்காவும் உணர்ந்து வெகு காலமாகின்றது. மனிதனின் சிருஷ்டிகள் மனிதனையே கபஸ்ரீகாரம் செய்து விடாமல் தடுக்க முடியும் என்பதையும் எக்காலத்திலும் மேற்படி சிருஷ்டிகளை காட்டிலும் மனிதனே மேலானவன் என்பதையும் காந்திஜி நீரூபித்து வருகிறார். எழுபத்தொன்பது வயதான இந்தக் கிழவரின் சக்தி பெரும் மாயமாக இருக்கிறது. அது உலகத்தையே ஆட்டி வைத்து உலக மக்களின் மனத்தில் ஒரு புதிய சக்தியையும்நம்பிக்கையையும் உண்டு பண்ணுகிறது என்று அந்தப் பத்திரிகை மகாத்மா காந்தியின் ஆத்மா சக்தியை பெரிதும் போற்றியிருக்கிறது.
G G G
மாஞ்செஸ்டர் கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்தி
அரசியல் மேதாவிகளிடையே முனிவராகவும் முனிவர்களிடையே ஓர் அரசியல் மேதாவியாகவும் திகழ்ந்து வரும் காந்தியின் ஆத்ம சக்தி இந்தியாவுக்கே இணையற்ற ஒரு வரப் பிரசாதமாகும் என்று மேற்படி பத்திரிகை பாராட்டியிருக்கிறது.
9ே (9 (9
உலகம் உய்யப் பிறந்த மகான்கள் சிலருடைய வாழ்க்கை முடிவுகள்
உலக சரித்திரத்தில் மனித குலத்துக்கு வாழ்வு அளிக்க வந்தவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களையும் அனுபவித்து இருக்கிறார்கள். சிலருடைய வாழ்க்கை முடிவு நெஞ்சு பதைக்க கூடிய சோக சம்பவமாக நேர்ந்திருக்கிறது.
அன்பு வழியைப் போதித்தருளிய ஏசுநாதர் தாம் பிறந்த நாட்டு மக்களின் துண்டுதலினால் சிலுவையில் அறையப்பட்டார்.
அடிமை பட்டிருந்த பிரஞ்சு தேசத்துக்கு விடுதலை அளித்த ஜேன் ஆப் ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைக் கிறிஸ்தவ
காந்தி அடிகள் 40

சிரேஸ்டர்கள் சூனியக்காரி என்று கூறி உயிரோடு வைத்துக் கொழுத்தினார்கள்.
உலகத்திலிருந்து அடிமைத்தனம் என்னும் பயங்கர இழிவை போக்கிய உத்தமர் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவருடைய சொந்த நாட்டுப் பாதகன் ஒருவனால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
இச்சரித்திரம் தொடர்கிறது. 22.11.1963 ஜோன் எப்.கென்னடி 4.4.1986 மாட்டின் லூதர் சிங்.
கிரேக்க அறிஞர் சோக்கிரட்டீஸ் 31.10.1984 பிரதமர் இந்திரா காந்தி 21.05.1991 ராஜீவ் காந்தி.
1948 ஜனவரி 30ல் மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட சம்பவம் ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் அன்று நம் அறிவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் மாறவில்லை. அன்றைக்கு நம் இதயத்தில் உண்டான துயரம் இன்னும் திரவில்லை. இச்சம்பவத்தை நினையாத நெஞ்சு உண்டோ?உருகாத உள்ளம் உண்டோ?
உலகத்தின் உத்தம புருஷர்கள் ஒன்று, வாழ்க்கையில் பெரும் துயரங்களை கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள் அல்லது அவர்களது வாழ்க்கையின் முடிவு சோகத்துக்குரியதாகயிருக்கிறது.
(9) (9) (39)
, காங்கிரஸ் மாநாட்டில் காந்தியின் சொற்பொழிவு
1929ல் காங்கிரஸ் மாநாடு ஜவாஹர்கலால் நேருவின் தலைமையில் லாகூரில் கூடியது. முழுச் சுதந்திரமே இனிநாம் இலக்கு என்று காந்தி சுயராஜ்ஜியதீர்மானத்தை மாநாட்டில் படித்தார். சபர்மதி ஆச்சிரமத்தில் காந்தியை சந்தித்த தாகூர் நமது அடுத்த திட்டம் என்ன? என்று கேட்ட போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உள்ள இருளில் ஏதேனும் ஒரு ஒளிகற்றை கூட என் கண்ணுக்கு தெரியவில்லை என்று விரக்தியுடன் கூறினார் காந்தி.
இருப்பினும் காந்தி 11 அம்சத்திட்டம் ஒன்றை பிரிட்டிஷ் அரசுக்கு முன் அனுப்பி வைத்தார். நிலவரி குறைப்பு, உப்பு வரி நீக்குதல்
41 இ. சிறிஸ்கந்தராசா

Page 25
மதுவிற்பனை விலக்கு இந்திய கப்பலுக்கு விதிக்கப்பட்ட அனுமதி மறுப்புகள், இராணுவச் செலவை 50 வீதங்களுக்கு மேல் குறைத்தல் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மிக அதிகமான சம்பளத்தைக் குறைத்தல் போன்ற அம்சங்கள் அவை,
அப்போதைய ஆளுநராக இருந்த வோர்டு இர்வினுக்கு இதுபற்றி கடிதம் ஒன்றும் எழுதினார் காந்தி. தாங்கள் இந்தியர்கள் மீது நடத்தும் ராஜபோக நிர்வாகத்திற்கான செலவீனம் உலகிலேயே மிக அதிகமானதாகும். உதாரணத்திற்கு உங்கள் சம்பளத்தையே எடுத்து கொள்ளுங்கள் 21 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளமாகப் பெறுகிறீர்கள் நீங்கள். அதாவது ஒரு நாளைக்கு 700 ரூபாய். ஒரு இந்தியக் குடிமகன் வாங்கும் சம்பளத்தைப் போல் 500 மடங்கு அதிகமாக வாங்குகிறீர்கள். உங்கள் நாட்டுப் பிரிட்டிஷ் பிரதம மந்திரியோ அந்நாட்டுக் குடிமகன் வாங்கும் சம்பளத்தைப் போல் 90 மடங்கு சம்பளமாகப் பெறுகிறார். நான் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்குப் பெருந்தொகையான இவ்வளவு சம்பளம் தேவையில்லை. ஏழைகளின் வரிப்பணத்தால் உங்களுக்கு வழங்கப்படும் இம் மாபெரும் சம்பளம் என்பது ஏழைகள் மீது நீங்கள் தொடுக்கும் ஒரு திட்டமிட்ட வன்முறையாகவே எனக்குப்படுகின்றது' என்று எழுதியிருந்தார் காந்தி.
மார்ச் 12, 1930 அன்று 78 பேர் கொண்ட தொண்டர்களுடன் தன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டி கடற்கரைக்குப் பிரிட்டிஷ் அரசின் உப்பு வரியை எதிர்த்துக் பயணப்பட்டார் காந்தி. இடையூறுகள் பல எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் பெண் தொண்டர்களை அவர் அனுமதிக்கவில்லை. தன்னோடு வரும் 2 முஸ்லிம், ஒரு கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்துத் தொண்டர்களின் பெயர்களையும் "யங் இந்தியா'வில் வெளியிட்டிருந்தார். அதில் இந்துக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இருந்தனர். நடக்க உதவும் மூங்கில் சுழி ஒன்றுடன் தொண்டர்களுடன் புறப்பட்டார் காந்தி. அவரால் தொடர்ந்து நடக்க இயலாத போது ஏறிக் கொள்வதற்காகக் குதிரை ஒன்றும், மாட்டு வண்டி ஒன்றும் இருந்த
காந்தி அடிகள் 42

போதும், காந்தி அதன் மீது ஏறவில்லை. மகாத்மா காந்தியைக் காண்பதற்கு மக்கள் கிராமங்களில் சூழ்ந்து கொண்டனர். கிராமந்தோறும் மக்களைச் சந்தித்த போதெல்லாம் கதர் ஆடையை அணிய வேண்டினார் காந்தி. தாழ்த்தப்பட்ட மக்களைச் சகோதரவாஞ்சையடன் நடத்துங்கள் என்று வேண்டினார். "கிராமத்தின் தூய்மையை நீங்கள் பாதுகாக்க வேண்டும். மது அருந்துதலை எப்படியாவது நீங்கள் கைவிட வேண்டும் என்றெல்லாம் சந்தித்த மக்களை வேண்டிக் கொண்டார். பயணத்தின் போதெல்லாம் சூரிய உதயத்தின் போதும், அஸ்தமனத்தின் போதும் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தத் தவறவில்லை. தினந்தோறும் யங் இந்தியாவிற்காகக் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருந்தார்.
ஏட்ரல் 5 காந்திதண்டி கடற்கரையை அடைந்தார். 79 தொண்டர். களோடு புறப்பட்ட பயணத்தில் தற்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த உப்புத் தடைச் சட்டத்தை மீறித்தண்டி கடற்கரையின் உப்பளத்தில்குனிந்து ஒரு கைப்பிடி உப்பை எடுத்தார் காந்தி. இந்தியர்களால் விளைவிக்கப்படும் உப்பிற்கு நாம் ஏன் பிரிட்டிஷ் அரசக்கு வரி செலுத்த வேண்டும்? உப்பு என்பது வேர்வை சிந்தி உழைக்கும் இந்தியருடைய உணவில் மிக முக்கிய ஒன்றாகும். இங்கு விளையும் உப்பை இங்கிலாந்து அரசு பெற்றுக் கொண்டு, அங்கு வரியில்லாமல் செலவிடுகிறது. உப்பை விளைவிக்கும் இந்தியர்களோ வரி செலுத்திவிட்டு உப்பைப் பெறுகிறார்கள். முக்கால்பகுதி உப்புலண்டனுக்கு அனுப்பப்பட்டுகால் பகுதி உப்பினையே இந்தியாவில் விற்பனைக்கு அளிக்கின்றனர். இது என்ன கொடுமை. இந்திய உப்புக்கான வரியை நாங்கள் இனிக் கொடுக்க மாட்டோம். வலிமைக்கு எதிரான உரிமையின் போர்தான் இந்த உப்புச் சத்தியாகிரகம் என்றார் காந்தி. தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி காந்தி எடுத்த ஒரு பிடி உப்பு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது. மனித வர்க்கத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் காந்தியின் இக்குரல் இன்றும் உலகில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
G) (3) (3)
43 இ. சிறிஸ்கந்தராசா

Page 26
சொல்லினால் அடங்குவதில்லை. நினைவுக்குள் நிற்பதில்லை. கற்பனைக்கு எட்டுவதில்லை. மகாத்மா காந்தியின் பெருமை.
கவிதை திகைக்கிறது. காவியம் திணறுகிறது கலைகள் தலை வணங்குகின்றன. காந்தியடிகளின் அற்புத சரிதத்தை எண்ணி, இமயத்தைக் காட்டிலும் உயர்ந்து நின்றவர். கங்கை நதியைக் காட்டிலும் புனிதமானவர். சூரியனை விட ஒளி படைத்தவர். தாயைக் காட்டிலும் கருணை உள்ளவர். கடவுளைப் போல் நம்மைக் காக்க வந்தவர். சத்தியத்தை போல சரியாது நின்றவர். உலகம் போற்றும் உத்தமர்.
1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி உலகத்தைஉய்விக்க அவதானித்தார். நம்முடைய காலத்தில் நம் கண் முன்னே நடமாடிய அவதார புருஷர். மகாத்மா காந்தி.
இவர் பாரம மக்களை அடிமைத்தனம் என்னும் கொடிய பூதத்தின் வாயிலிருந்து காப்பாற்றினார். தீண்டாமை என்னும் ராட்சதன், மதுபானமென்னும் அரக்கன், அறியாமை என்னும் காட்டேரி ஆகியவர்களிடமிருந்துநம்மைக் காந்திமகான்ரட்சித்து அருளினார்.
ரீ ராமர் கோதண்டம் ஏந்தினார். பூரி கிருஷ்ணன் சக்ராயுதம் தரித்தார். ஆனால் மகாத்மா காந்தியொ பலாத்கார ஆயுதங்கள அடியோடுபுறக்கணித்து அஹிம்சையாகியவில்லையும் சத்தியமாகிய சக்கரத்தையும் தரித்து பாழ்பட்டு நின்ற பாரத தேசந்தன்னை அடிமைத்தனம் முதலிய அரக்கர்களிடமிருந்து காப்பாற்றி பாரத மக்களுக்கு வாழ்வை அளித்தார். ஒருவர் நமக்கு ஒரு உதவி செய்தால் அதை உயிர் உள்ள வரைக்கும் மறக்கக் கூடாதென்பது மனித குலத் தர்மம், மக்களில் உயர்ந்தோர் அனைவரும் இந்த தர்மத்தை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
திணைத்துணை நன்றி செயினும் பணைத் துணேயாக் கொள்வர் பயன் தெரிவார் (குறள் 104) என்று தமிழ் முறை கூறுகிறது.
காந்தி அடிகள் 44

காந்தி மகாத்மா நமக்குச் செய்திருக்கும் நன்றி தினைத் துணையானதா? அறச் சொற்பமானதா? அதற்கு ஈடு இணை சொல்ல வேறு ஒன்று உண்டா.
இந்தியாவில் உள்ள முப்பது கோடி மக்களையும் முப்பது கோடி புழுக்களாக மதிக்கிறார்களே அயல் நாட்டார் என்று சுவாமி விவேகானந்தர் அன்று கதறினார்.
காந்தி மகானுக்கு நாம் செலுத்தக் கூடிய நன்றி அவர் காட்டிய வழியில் நடப்பது. அவர் போதித்த உபதேசங்களை கடைப்பிடிப்பது அவர் ஆரம்பித்து நடத்திய தொண்டுகளை தொடர்ந்து நடந்தது. எனவே காந்திஜி காட்டிய வழியில் அகிலம் புகழ, விண்ணவர் வாழ்வோமாக.
(g) (9) (g)
விண்ணவர் வியக்க வாழ்வோமாக
கரை காணாத திரைகடலின் நீளத்தையும் அகலத்தையும் கணக்கெடுத்திருக்கிறார்கள்.
ஈடு இணையின்றி கம்பீரமாகநிற்கும் இமயத்தில் உள்ள எவரெஸ்டு சிகரத்தின் உயரத்தைக் கண்டுபிடித்து உச்சியையும் எட்டிய் பிடித்து விட்டார்கள்.
ஆனால் அகில உலகும் அஸ்டதிக்கும் வியாபித்து நட்சத்திர மண்டலத்தை தொட்டுக் கொண்டு வானோங்கி நிற்கும் காந்தி
மகானுடைய புகழின் சிகரத்தை யாராவது அளவிட்டுக் கூற முடியுமா?
காந்திஜி மரணத்தை வென்ற மாபெரும் முனிவர். இந்த உலகை நீத்த பிறகும் அவர் ஒவ்வொருவருடைய இதய பீடத்திலும் உயிருடன் வீற்றிருப்பார் என்ற கவி ரவீந்திரநாத் தாகூரின் தீர்க்க தரிசனம் அப்படியே உண்மையாகியிருப்பதைக் காண்கிறோம்.
இன்று காந்திமகானின் உடல் மறைந்துவிட்டது. ஆனால் அவரது ஆத்மஜோதி சந்திர சூரிய நட்சத்திர மண்டலங்கள் உள்ளவும் பாரத புண்ணியபூமி உள்ளவும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமுண்டோ!
45 இ. சிறிஸ்கந்தராசா

Page 27
மகாத்மா காந்தி குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ மாத்திரமல்ல அகில உலகத்தையும் உய்விக்க வந்த உத்தமராக திகழ்ந்தார்.
மெய்ஞ்ஞானத் துணிவினை மற்றாங் கிழிபடு போர் கொலை தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனிற் பிணைத்திடத் துணிந்தனை என்று பாரதியார் கூறியது போன்று பொய்யும் பித்தலாட்டமும் போர் வெறியும் நிறைந்த அரசியலை தூய்மைப்படுத்தும் வழியைக் காட்டினார்.
அன்பும் அறநெறியும் மிளிர்ந்த அரசியல் முறைகளை செயலில் காட்டி வெற்றி பெற்றனர்.
வெளிநாடுகள் செய்யும் தவறை சுட்டுக்காட்டி அவற்றின் கடமைகளை வற்புறுத்தவும் காந்திஜிதயங்கியதில்லை.
சென்ற உலக மகாயுத்தத்தின் போது இந்திய மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்தியாவை யுத்தத்தில் இழுக்கக் கூடாது என்று பிரிட்டிஸ் அரசாங்கத்தாருக்கு அறிவுறுத்தினார்.
அதே சமயம் பிரிட்டிஷாரும் ஜெர்மனியர்களும் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கான வழியையும் எடுத்துக் கூறினார்.
காந்தி மகான் அப்போது பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும் ஜெர்மன் சர்வாதிகாரி அடால்பு ஹிட்லருக்கும் எழுதிய கடிதங்களே இதற்கு சான்றாகும்.
А
"ஜெர்மனியை அழித்துவிட்டு பிரிட்டனே ஐரோப்பாவோ வாழ முடியாது. அது போலவே பிரிட்டனை நாசம் செய்துவிட்டு ஜெர்மனி வாழ முடியாது. இந்தப் போரை தடுக்கும் சக்தி உங்களில் ஒருவருக்குத்தான் உண்டு. நீங்கள் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கா. விடில் ஏற்படக் கூடிய பயங்கரமான விளைவுகளை எண்ணவும் நடுங்கிறது." இவ்விதம் காந்திஜி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
காந்தி அடிகள் 46

ஆனால் போர் வெறிகொண்டிருந்த ஹிட்லரின் செவிகளில் அந்த உத்தமரின் உபதேசம் ஏறவில்லை. இறுதியில் காந்திஜியின் தீர்க்க தரிசனம் உண்மையாயிற்று.
அந்த யுத்தத்தில் அழிந்த ஜெர்மனியை புனருத்தாருணம் செய்து, பலப்படுத்தினால் அன்றி ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு ஏற்படாது என்று இப்போது பிரிட்டனும் அமெரிக்காவும் அபிப்பிராயப்படுகின்றன.
ஜெர்மனியை மறுபடியும் ஆயுத பலம் வாய்ந்ததாக செய்யும் விஷயத்தில் வல்லரசுகளுக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமை மற்றொரு போருக்கு விதையாக அமைந்திருக்கிறது.
அன்று காந்திஜியின் அறமொழிகளுக்கு வல்லரவுத் தலைவர்கள் செவிமடுத்திருந்தால் இன்று உலகம் பரிதவிக்கும்படியான நிலைமை ஏற்பட்டிராது என்பது நிச்சயம். ஆனால் வல்லரசுகளைப் போல் பாரத நாடு ஏமாந்து போகவில்லை.
காந்தி மகானின் உபதேசத்தை சிரமேற் கொண்டு அவரது அடிகளை பின்பற்றியதாலேயே இன்று பாரத நாடு பெறுவதற்கரிய சுதந்திரத்தை அடைந்து உலக நாடுகளிடையே உன்னத ஸ்தானத்தை வகிக்கின்றது.
அறநெறியையும் அன்பு வழியையும் அனுஷ்டித்துவரும் வரையில் பாரதநாட்டை எத்தகைய இன்னல்களும் அனுகா என்று காந்திமகான் அபயம் அளிக்கும் அற்புதக் காட்சியை நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.
காந்திஜி காட்டிய வழியில் அகிலம் புகழ விண்ணவர் வியக்க வாழ்வோமாக.
)ே (9 (9
காந்தியடிகளும் திருக்குறளும்
குறளில் இன்னா செய்யாமை" என்ற சொற்பதம் தான் பிற்காலத்தில் அகிம்சையாக மாறியது என்பது குறள் ஆய்வாளர் கருத்து. பிறர் திங்கு புரிந்தால் அதற்கு எதிராக தீங்கு புரிதலை
47 இ. சிறிஸ்கந்தராசா

Page 28
பெரும்பான்மை மனித இயல்பு. ஒருவர் தீங்கு செய்தால் பதிலுக்கு தீங்கு செய்யதிருத்தல் நன்று என்பதை குறள்கள் மூலம் விளக்கம் தருகிறார்.
காந்தியடிகள் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயரால் அடைந்த துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள் கணக்கில் அடங்கா. புகை வண்டியிலிருந்து இழுத்து வெளியே வீசப்பட்டவர் தான் காந்தி. ஆனாலும் பொறுமையை கடைப்பிடித்தும் அகிம்சையை கைவிடாதும் நின்றதால் மகாத்மாவாகப் போற்றப்படுகிறார். இங்கே வள்ளுவர் அகிம்சையை போற்றுவதைக் காணலாம்.
கறுத்துஇன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா செய்யாமை மாசற்றார்கோள் (குறள் 312)
ஒருவன் கோபங்கொண்டு தீயவற்றை செய்த போதிலும் திருப்பி நாம் அவனுக்கு தீங்கு செய்யாதிருத்தல் குற்றமற்ற பெரியோர் கொள்கையாகும்.
திறன் அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று (குறள் 157)
செய்யத்தகாத கொடியவற்றை தனக்கு பிறர் செய்த போதிலும் அதனால் அவருக்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவைகளை செய்யாதிருத்தல் நன்று.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள் 314)
வள்ளுவர் காலத்தில் அகிம்சை என்ற சொல் வழக்கில் இருக்கவில்லை. இன்னா செய்யாமை என்ற சொல் வழக்கத்தில் இருந்தது. பிற்காலத்தில் இன்னா செய்யாமை என்ற சொல்லே அகிம்சையாக காந்தியடிகள் வாழ்க்கையின் தாரக மந்திரமாக மாறியது. இன்னும் பல குறள்கள் அகிம்சையை வலியுறுத்துகின்றன. 155, 852, 152 எனப்பல குறள்களை இனங்கண்டு கொள்ளலாம்.
உலகின் பல பாகங்களில் கண் முன்னே நடந்த நடக்கின்ற நிகழ்சிகளும் குறளும் ஒத்துப் போவதைக் காண வியப்பாகவும்
காந்தி அடிகள் 48

புதுமையாகவும் இருக்கின்றது.
சில சம்பவங்களை நோக்கின் இது சரியெனப் புலப்படும். 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி பிற்பகல் மகாத்மா காந்தி பிரார்த்தனை மேடையை நோக்கிக் கொண்டிருந்த போது கூட்டத்தினரோடு வீழ்ந்து வணங்குவது போல பாசாங்கு செய்த கொட்கே என்பவன் கையில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் காந்தியைச் சுட்டார். இதை வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்னரே குறளில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். தொழுத கையுள்ளும் படையொடுங்கும் என்பது அவர் எழுதி வைத்த குறள்.
தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுதகண்ணிரும் அனைத்து (குறள் 828)
வாய்ச்சொல் போதாது செயலிலும் இறங்கிக் காட்ட வேண்டும் என்ற கொள்கையை என்ற அடிப்படையாக கொண்டவர் காந்திஜி அவர் எழுதியதை விட அதன்படி வாழ்ந்து காட்டியதனாலேயே அவர் என்றும் இறைவா ஏற்றம் பெற்றார்.
சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் (குறள் 664) இக்குறளுக்கு அமையவாக தாம் எண்ணியபடி, சொல்லியபடி வாழ்ந்து காட்டினார். -
காந்தியடிகள் வள்ளுவர் பெருந்தகையின் வாக்குப்படி அவர் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நிலைத்து வாழ்கிறார். இதற்கு காரணம் எண்ணிய வண்ணம் சொன்னார். சொல்லிய வண்ணம் செயலாற்றினார். பொய் இல்லாத உள்ளம் உடையவன் உலகத்தோர் உள்ளத்தில் இருப்பான்.
'உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்
உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன். (குறள் 294)
(3) (3) (G)
49 இ. சிறிஸ்கந்தராசா

Page 29
காந்தியும் எளிமையும்
இறுதிவரை தலைவர்களாகவே வாழ்ந்து மடிய விரும்புகிறவர்கள் காந்திஜியிடம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வெற்றியின் இரகசியம் ஒன்றுள்ளது. அதுதான் அவருடைய கலப்படமற்ற தன்னலமின்மை.
அவர் மக்களிடமிருந்து தமக்காக தேடிக் கொண்டது அற்பத்திலும் அற்பமானது. ஆனால் கொடுத்ததோ கோடான கோடி பெறும் சுதந்திர நாடு. பணமூட்டைகள், பலர் அவர் காலடியில் காத்துக் கிடந்தார்கள். பதவிகள் மண்டியிட்டு அவரிடம் காத்திருந்தன. ஆனால் அவருக்கு இந்த நாட்டில் சொந்த வீடில்லை. சொந்தக் காரில்லை. சொந்தமாக சொத்து எதுவுமேயில்லை. எளிய உணவு எளிய உடை எளிய குடிசை வாழ்வே தேடிக் கொண்டார். வெள்ளையருடன் சமமாய் முதல் வகுப்பில் பிரயாணம் செய்யப் போராடியவர். மூன்றாம் வகுப்பிலேயே நாடெங்கும் பிரயாணம் செய்தார். அவருடைய மரணத்தின் பின் விட்டுச் சென்ற அவருக்கு பின் விட்டுச் சென்ற அவருக்கு சொந்தமான சொத்துக்கள் இரண்டு ஜோடி செருப்புகள். இடுப்பில் அவர் தொங்க விடப்பட்டிருந்த கடிகாரம் ஒன்று. முக்குக் கண்ணாடி, கீதை நூல் சோற்றுக் கிண்ணமும், சிறுகரண்டியும் மூன்று குரங்குகள் சேர்ந்த பொம்மை ஒன்று இவ்வளவே. இவையனைத்தையும் விட ஒப்புயர்வற்ற ஒன்று விலைமதிக்க வெண்ணாத இவ்வையகத்தில்எங்கும் கிடைக்கப் பெறாத காந்திய சமதர்ம தத்துவத்தை விட்டுச் சென்றார்.
@ @ @)
காந்தியடிகளும் தமிழும்
காந்தியடிகளுக்குத் தமிழ் மொழி மீது அளவு கடந்த பற்றுதலுண்டு. இம்மொழியில் சிறந்த பயிற்சி பெற வேண்டும் என்பது அவரது பேராவலாய் இருந்தது. இதற்கு அவர் தமக்குப் பொழுது கிடையாத நிலைமையை எண்ணி வருந்துவதும் உண்டு.
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கிய போது அவருக்குத் துணையாக நின்றவர்கள் தமிழ்ப்
காந்தி அடிகள் - 50

பெருமக்களே ஆவர். பீனிக்ஸ் என்று ஊரில் இவர் அமைத்த ஆசிரமத்தில் தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்றனர். அவர்களுக்குத் தங்கள் தாய்மொழியாகிய தமிழிலேயே கல்வி போதிக்க எண்ணினார். இதற்காகத் தாமே தமிழ் கற்கத் தொடங்கினார்.
1937ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை இந்திப் பிரச்சார சபையில் பாரதீய சாகித்திய பரிசாத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் தலைவர் காந்தியடிகள் ஆவர். மாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள். மாநாட்டு நிகழ்ச்சியில் பேரறிஞர்கள் பலர் வந்து குழுமியிருந்தனர்.
தமிழ்த் தாத்தா சொற்பெருங்காற்றினார். இச்சொற்பெருக்கைக் கேட்டு உள்ளம் பூரித்த காந்தியடிகள் தமது உரையில், "சாமிநாத ஐயரவர்களைப் பார்க்கும் போதும் அவர் சொற்பெருக்கைக் கேட்கும் போதும் அவரது காலடியின் கீழிருந்து தமிழ் கற்க வேண்டும் என்று ஆர்வம் எனக்கு உண்டாகிறது" என்று கூறினார்.
1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் காந்தியடிகள் சிறையினின்றும் விடுதலையாகி வெளியே வந்திருந்தார். அப்போது சேவாக கிராமத்தில் நாட்டின் பெருந்தலைவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ராஜாஜியும் அங்கே வந்திருந்தார்.
காந்தியடிகளின் உடல்நிலையைக் கண்ட ராஜாஜி அடிகளிடம் அவரை ஒரு மாதம் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டிக் கொண்டார். அடிகளும் இசைந்தார். ஆனால் அந்த ஒரு மாதத்தையும் பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதில் பயன்படுத்த எண்ணினார். அதில் நாள்தோறும் அரைமணிநேரம் தமிழுக்காக ஒதுக்கி வைத்துத் தமிழ் கற்கலானார்.
கவிஞர் பாரதியாரின் "ஓடி விளையாடு பாப்பா" என்ற வரியைத் தினமும் பார்த்துப் பார்த்து வெள்ளைக் காகிதத்தில் எழுதி வருவார். இதற்கு உதவியாக இருந்து அடிகளுக்குச் சொல்லிக் கொடுத்தவர் சேவாக்கிராமத்திருந்த தமிழர் ஆர்.சங்கரன் என்பவர் ஆவர்.
எட்டையாபுரத்தில் பாரதியாருக்குப் மண்டபம் அமைக்க மக்க
ளிடம் நிதி வழங்குமாறு தமிழிலேயே காந்தியடிகள் கையெழுத்துப்
51 இ. சிறிஸ்கந்தராசா

Page 30
போட்டுக் கொடுத்திருக்கிறார். இவற்றிலிருந்து காந்தியடிகளின் தமிழ்ப்பற்றை நன்கு தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா!
G G G)
காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?
உலகின் பல் வேறு நாடுகளை தங்கள் சாதனையால் கவர்ந்த மனிதர்கள், உலக சமாதானத்துக்கு பாடுபட்டவர்கள், ஒவ்வொரு துறையிலும் சாதனை செய்தவர்கள் இவர்களுக்கெல்லாம் நோபல் பரிசு வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிற ஒன்றே.
ஆனால் இந்த நோபல் பரிசு இந்திய சுதந்திரத்துக்காக அகிம்சை வழியில் பாடுபட்ட காந்திக்கு கிடைக்கவில்லை என்பது மனதை நெருடும் விஷயம்.
சரி, காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை? யாராவது சிபாரிசு பண்ணினால்தான் நோபல் பரிசு கொடுப்பார்கள் என்றால், அப்படி சிபாரிசு பண்ணக்கூடவா ஆளில்லாமல் போயிற்று?
ஒரு முறையல்ல 3 முறை காந்தி பெயர் நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யப்பட்டது. 1937 -ல் முதன் முதலாக சிபாரிசு செய்யப்பட்டது. 1947-ல் இந்தியாவுக்கு அவரால் சுதந்திரம் கிடைத்த போது இரண்டாவது முறையாக சிபாரிசு செய்யப்பட்டது.
ஆனால் இருமுறையும் சிபாரிசு முயற்சி கிணற்றில் போட்ட கல் மாதிரியே இருந்து விட்டது.
1948 பிப்ரவரி முதல் தேதி மூன்றாவதாக சிபாரிசு செய்யப்பட்டது.
இதில்பெரிய சோகம், இரண்டு நாளைக்கு முன்புதான் அதாவது ஜனவரி 30-ல் தான் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த மூன்றரவது முயற்சிக்கு நோபல் பரிசு தேர்வுக்குழுவிடம் இருந்து பதில் வந்தது. உயிரோடு இருப்பவர்கள் தான் நோபல் பரிசு பெறத்தகுதியானவர்கள் என்று அவர்கள் அறிவித்து இருந்தனர்.
இப்படி கடைசி வரை காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்ன தெரியுமா?
காந்தி அடிகள் 52

நார்வேநாட்டில்தான் நோபல்பரிசுத்திட்டம் உருவானது.நார்வே, இங்கிலாந்து நாட்டுக்கு ஆதரவான நாடு. நார்வே நாட்டின் நோபல் பரிசுக் குழுவில் இங்கிலாந்தைச் சேர்ந்த 5 பேர் அந்த கால கட்டத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.
இங்கிலாந்திடம் இருந்து இந்திய தேசத்தின் விடுதலைகசூ பாடுபட்டவர் காந்தி. தனது நேச நாடான இங்கிலாந்தை எதிர்த்து காரிய மாற்றும் காந்திக்கு நார்வே எப்படி நோபல் பரிசு கொடுக்கும்? அப்படிக் கொடுத்தால் இங்கிலாந்தின் விரோதத்தை வலிய சம்பாதித்துக் கொள்வது போலாகாதா?
இப்போது காரணம் உங்களுக்கு புரிந்திருக்குமே. 1948-ம் காந்தி இறந்த பிறகு சிபாரிசு செய்யப்பட்ட நிலையில், 'உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமே நோபல் பரிசு' என்று அவசர அறிவிப்பு பிறந்ததே இதனால்தான்.
நோபல் பரிசு பெரும்பாலும் 1940-ஆம் ஆண்டு வரையிலும் ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர். களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 1936-ல் தான் விதிலக்காக அர்ஜெண்டினா நாட்டு பிரமுகருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு 1960-ல் அபூர்வமாக ஆப்பிரிக்கா பிரமுகருக்கு கொடுத்தார்கள்.
எது எப்படியோ, காந்திக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என்ற 50 வருட புதிருக்கு விடை கிடைத்து விட்டது.
(3) (3) (3)
காந்திஜி கைது எரவாடா சிறை
காங்கிரஸ் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதற்கு உ.பி. மாநிலத்தில் சவ்ரி சவ்ரா என்ற இடத்தில் நடந்த வன்முறை சம்பவம் காரணம். இதை வைத்துகாந்திஜியை கைதுசெய்து சிறை வைத்துவிடலாம் என அரசு எண்ணியது. தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று காந்திஜியும் எதிர்பார்த்தார்.
53 இ. சிறிஸ்கந்தராசா

Page 31
ஆனால், வழக்கம் போல பிரார்த்தனை கூட்டங்கள், எழுத்து வேலை ஆகியவற்றை கவனித்தார்.
மார்ச் மாதம் 10ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அரசு மீது தேவையின்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. காந்திஜி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த அரசின் மீது நம்பிக்கை இன்மையை மக்களிடையே பரப்புவதை நான் மிகவும் விரும்புகிறேன்' என அவர் குறிப்பிட்டார்.
காந்திஜிக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.'உங்கள்நாட்டு மக்களுக்கு நீங்கள் சிறந்த தலைவராக, தேச பக்தி மிக்கவராக இருந்தாலும், இந்த தண்டனை தவிர்க்க இயலாதது," என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
புனே நகரில் எரவாடா சிறைச்சாலையில் காந்திஜி அடைக்கப்பட்டார். கோர்டில் இருந்த மக்கள், எளிமையின் சின்னமாக உறுதியுடன் நின்ற காந்திஜியை பார்த்து கண்ணிர் விட்டனர்' என சரோஜினி நாயுடு குறிப்பிட்டார்.
(3) (3) (3)
தமிழ் மொழி பற்றி காந்தி
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போரில் தமிழ் மக்கள் புரிந்த துணையைப் போல் வேறெந்த இந்தியரும் புரியவில்லை. அவர்களுக்கு நன்றியறிதல் காட்ட நூல்களைப் பயில வேண்டுமென நினைத்தேன். அப்படியே அவர்கள் மொழியைப் பயில்வதில் ஊக்கமாக ஒரு மாதம் கழித்தேன். அம் மொழியைப் பயிலப்பயில அதன் அழகை உணரலானேன். அது மனங்கவரும் ஒரு இனிய மொழி. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே நான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம், திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று என் உள்ளத்தில் எழுந்த ஆசையேயாகும். தமிழர்கள் தம் மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளை விட முதன்மையாகக் கருதவேண்டும்.
G G G)
காந்தி அடிகள் 54

தமிழர்களுக்கு ஈடு இணை இல்லை
தென்னாபிரிக்க சத்தியாக்கிரகத்தில் தமிழர்கள் மேற்கொண்ட பங்குக்கு ஈடு இணையாக வேறு எந்த இந்தியரையும் குறிப்பிட முடியாது. அதனால் தான் தமிழை நன்றாகக் கற்று தமிழர்களுடன் நெருங்கிய தொடர்புகொள்ள வேண்டும் என்று என்மனம் விரும்புகிறது. சென்ற ஒரு மாத காலமாகவே தமிழை மிக அக்கறையுடன் கற்றுவருகிறேன். எவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்து அம்மொழியைப் பயில்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு அம்மொழியின் அழகை உணருகிறேன். மிக நேர்த்தியான, இனிமையான மொழி தமிழ். தமிழர்களில் சிறந்த சிந்தனையாளர்களும் மேதைகளும் நிறைய இருக்கின்றனர்.
G G G)
வ.வே.சு.அய்யரும் காந்திஜியும்
"மனித சிருஷ்டியில் உயர்ந்தவரும் ஒப்பற்றவருமான ஒருவரை இன்று சந்தித்தேன்" என்று அளவற்றமகிழ்ச்சியுடன் கூறினார் வ.வே.சு. அய்யர்.
அவர் சாதாரண மனிதர் அல்ல அவருடன் பேசப் பேச என் மனம் அவரிடமே ஈடுபட்டுவிட்டது. என்ன அன்பு என்ன மரியாதை! என்ன தேசபக்தி என்ன உண்மை! சொல்லிமுடியாது என்று அய்யர் பேசிக்கொண்டே போனார்.
அய்யரும் சாவர்க்கரும் காந்தியடிகளுடன் நான்கு நாட்கள் வாதாடியும் புரட்சி சதியாலோசனை இவைகளுக்கான ஆதரவை அவர்களால் பெற முடியவில்லை. அஹிம்சை மூலம் அரசியல் துறையில் வெற்றிபெற்றுவிடலாம் என்று சாதிப்பதைத்தான் என்னால் ஏற்க முடியாமல் இருக்கிறது என்றும் வ.வே.சு.அய்யர் கூறினார்.
இதே வ.வே.சு.அய்யர் பின்னர் மனம் மாறி துப்பாக்கியை விட்டெறிந்து தக்ளியை எடுத்துக் கொண்டு நூற்க ஆரம்பித்துவிட்டார்.
G G G)
55 சிறிஸ்கந்தராசா

Page 32
சத்தியமூர்த்தியின் பதில்
இட்லரின் பொருளாதார மந்திரி டாக்டர் ஷாட் சில வருஷங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தார். அவருக்குச் சென்னை வர்த்தகர்கள் ஒரு விருந்து வைத்தார்கள். டாக்டர் ஷர்ட தமது தலைவரான இட்லரின் அருமை பெருமைகளை வானளாவய் புகழ்ந்தார். அங்கிருந்த சத்தியமூர்த்தியைப் பிறகு பேசச் சொன்னார்கள். அந்த டாக்டர் வெட்கித் தலைகுனியும் படி "உலகமே கண்டிராத அற்புதத் தலைவர் இப்போது இந்தியாவில் தான் பிறந்திருக்கிறார். அவர்தான் மகாத்மா காந்தி, உலகில் வேறு எந்தத் தலைவருமே அவருக்குச் சமானமில்லை" என்று வாதகோசரமாக சத்தியமூர்த்தி செய்த பிரசங்கத்தைக் கேட்டு டாக்டர் ஷர்ட் பிரமித்தே போனார்.
G G G)
சுதேசி இயக்கம் பற்றி காந்தி
சுதேசி இயக்கம் தமிழகத்தில் இன்னும் தீவிரமடையவில்லை என்றாலும் அந்நியத்துணி வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று சென்னை வியாபாரிகளிடமிருந்து அறிந்தேன்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் தமிழர்கள் தீவிரமானவர்கள் என்பதை நான் உணர்வேன். எளிய வாழ்க்கையும் வெள்ளையுள்ளமும் கொண்டவர்ள் நல்ல உழைப்பாளிகள். ஆகவே இந்த இயக்கத்தில் அவர்கள் பிற மாகாணங்களை மிஞ்சினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.
G G G)
மகாத்மா
மகாகவி ரவீந்திரநாத் டாகூர் மகாத்மாஜியிடம் அளவற்ற மரியாதையும் பெரு மதிப்பும் வைத்திருந்தார். காந்திஜி உண்ணா. விரதம் இருந்தது போன்ற பல சந்தர்ப்பங்களில் மகாகவி அவருக்கு அஞ்சலி கூறியிருக்கிறார். பின்வரும் பொன் மொழிகளைப் படித்தால்
காந்தி அடிகள் 56

காந்திஜியின் பெருமையை உள்ளது உள்ளபடி கணித்தவர் மகாகவி டாகூர் தான் என்று தோன்றும்.
"எல்லா மனிதர்களுடைய இதயங்களிலும் குடிகொண்டு இருக்கும் ஆண்டவனை, உபநிஷதங்கள் 'மகாத்மா' என்று அழைக்கின்றனவென்பது நமக்குத் தெரியும். மகாத்மா' என்ற அந்த அடைமொழி இன்று நாம் மதித்துப் போற்றும் தெய்வத் தன்மை வாய்ந்த மகா புருஷனுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது முற்றிலும் பொருத்தமேயாகும். ஏனெனில், காந்தி என்ற அந்த மகாத்மா எண்ணிறந்த மக்களுடைய
உள்ளங்களில் குடிகொண்டிருக்கிறார்."
-இரவீந்திரநாத் டாகூர்
இ) டு (G)
நம்புவார்களா?
"காந்திஜி வெளி அதிகாரத்தின் ஆதரவு எதுவும் இன்றி மக்களுக்குத் தலைவராக வந்தவர். சூதுவாதுகளும் தந்திரங்களும் இன்றித்தம்முடைய சொந்த ஒழுக்கத்தின் சக்தியையே துணையாகக் கொண்டு அரசியலில் வெற்றி கண்டார். என்றும் எக்காலத்தும் பலாத்காரத்தைப் புறக்கணித்த வீரர் விவேகமும் தன்னடக்கமும் மிகுந்து, உறுதியும் அசைக்க முடியாத மனவலிமையும் நிறைந்து, மக்களின் ஷேமத்துக்காகத் தம்முடைய சக்தி முழுவதையும் அர்ப்டிணம் செய்தவர். ஐரோப்பாவின் மிருக பலத்தை எதிர்த்து வெற்றி பெற்று எக்காலத்தம் உன்னத ஸ்தானத்தை அடைந்தவர்.
இ) (9 (9
என் துர்பாக்கியம் : அவரை எதிர்த்தேன்
சரித்திரப் பிரசித்தி பெற்ற தென்னாபிரிக்க சக்தியாக்கிரகம் நடந்த போதுகாந்திஜியைச் சிறையில் வைத்த பீல்ட்மார்ஷல் ஸ்மட்ஸ் கூறியது:
"சுமார் ஒரு தலைமுறைக்கு முன் காந்திஜிக்கு எதிரியாயிருந்த நான், இப்போது அவரை ஒரு வீரராக வணங்க முன் வந்திருக்கிறேன்.
57 இ. சிறிஸ்கந்தராசா

Page 33
அவரைப் போன்ற மகான்கள் நம் போன்றவர்களை சாதாரண நிலைமையிலிருந்து உயர்த்துகிறார்கள்.
தென்னாபிரிக்காவில் இருந்த போதே அவரிடம் எனக்கு விசேஷ மதிப்பு இருந்தது. ஆயினும், அவரை நான் எதிர்த்து நிற்கவேண்டி இருந்தது. காந்திஜி சிறையில் இருந்தபோது தைத்த ஒரு ஜோடி செருப்புகளை, விடுதலையானவுடன் எனக்குப் பரிசாக அளித்தார். அதை வெகு காலம் வரை உபயோகித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த மகாபுருஷன் தைத்த செருப்புக்களைக் காலில் அணிய நான் தகுதியுடையவன் அல்ல என்ற உணர்ச்சி மாத்திரம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
இ இ ஜூ போர்வீரர் காந்தி - டாக்டர் அன்னிபெஸண்டு
சிறுவராயிருக்கும் போதுதான் உற்சாகத்துடன் ஒன்றைப் பின்பற்றுவது சுலபம். உற்சாகம் தோன்றக்கூடிய காலம் அதுதான். மகாத்மாவின் மேன்மையான குணங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்றையறிந்து அதன்படி வாழ்வதைவிட மேன்மையான காரியம் ஒன்றுமில்லை.
பெல்காம் காங்கிரசுக்கு மகாத்மா இப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வெளி வித்தியாசங்களையெல்லாம் போக்க மகாத்மாவை விட மேம்பட்ட ஒருவர் அகப்பட முடியாது. வருங்காலத்தில் எனக்கும் மிக்க நம்பிக்கையுண்டு. ஒன்றில் தவறுவதால் அதைரியமடைய வேண்டியதில்லை. இந்தியா விடுதலையடைய வேண்டுமென்ற விஷயத்தில் அபிப்பிராய பேதமே கிடையாது. முறையில்தான் வித்தியாசம். போராட்டத்தில் தவறினால் பாதகமில்லை. லட்சியந்தான் பிரதானம்,
இந்தியா விடுதலையடைந்து உலகத்துக்கே உபகாரியாயிருக்கப் போகிறது. அப்படியிருக்கையில் அதைரியப்பட்டுக்கொண்டு நடுவழியில் போராட்டத்தை விடக்கூடாது. சுலபமான வழிகளில் வேலைசெய்து ஜெயிப்பது பிரமாதமல்ல. ஜெயிப்பது கஷ்டம் என்று
காந்தி அடிகள் 58

தோன்றும் நிலைமையில் தைரியமாகப் போராடுவதுதான் போர் வீரருக்கு அழகு. அப்படிப்பட்ட போர் வீரர் மகாத்மா காந்தி
G G G)
காந்திஜியும் விவேகானந்தரும்
காந்தியும் விவேகானந்தரும் சாதாரண இரண்டு மனிதர்களாக நமக்கு காட்சியளிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் இவர்கள் இரண்டு சக்திகள. இரண்டு ஸ்தாபனங்கள்.
காந்திஜியும் விவேகானந்தரும் எவ்வளவு துன்புற்றிருக்கிறார். கள்? எத்தனை விதமான அவமானங்களை அடைந்திருக்கிறார்கள். எல்லாம் தங்கள் தாய் நாட்டிற்காக? இருவரும் குழந்தை உள்ளம் படைத்தவர்கள். ஆனால் யாருக்கும் எதற்கும் அஞ்சாதவர்கள். இருவருடைய வாழ்க்கையிலும் எத்தனை விதமான அனுபவங்கள்.
சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 12ம் திகதி திங்கட்கிழமை பிறந்தவர். தாய் தந்தையர் பெயர் விசுவநாத தத்தர் தாயார் புவனேஸ்வரி.
ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையை சுமார் நாற்பது வருடத்திற்குள்ளேயே வாழ்ந்து விட்டுப் போய்விட்டார் விவேகானந்தர் என்று கூறினார் ஒரு அறிஞர். இது மிகவும் உண்மை. விவேகானந்தருடைய வாழ்க்கையை சிறு வயதிலிருந்து நாம் கவனித்துப் பார்த்தோமானால் ஒரு துடிதுடிப்பு ஒரு வேகம் எதையும் சீக்கிரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்ற வேகம் இவையெல்லாம் காண்கிறோம். காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர் பந்தர் என்ற கிராமத்தில் 1869 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் 79 வயது வரை வாழ்ந்தவர்.
காந்தியடிகளும் சுவாமி விவேகானந்தரும் இருவரும் இரண்டு சக்திகள். இரண்டு ஸ்தாபனங்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இருவரிடமிருந்தும் இரண்டு இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஒன்று காந்தியம், மற்றொன்று ராமகிருஷ்ணர் இயக்கம். இரண்டும் இந்தியாவிலே தோன்றி உலகம் முழுவதிலும் பரவியிருக்"
59 இ. சிறிஸ்கந்தராசா

Page 34
கின்றன. இந்த இயக்கங்களில் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கையை ஒரு புதிய கோணத்திலிருந்து பார்க்கிறவர்கள். தங்களுக்கென்று ஒன்றும் இல்லாதவர்கள். ஆனால் உலகத்தையே தங்கள் குடும்பமாக கொண்டவர்கள் இவர்கள்.
காந்தி ஒரு மகாத்மா. எவனொருவருடைய இருதயத்திலிருந்து ஏழைகளுக்காக ரத்தம் வடிகிறதோ அதாவது யார் ஏழைகளுடைய துன்பத்தை தங்களுடைய துன்பமாக கருதுகின்றனரோ அவர்தான் மகாத்மா. இல்லாவிட்டால் அவர் துரோத்மா என்பது விவேகானந்தர்
வாககு.
விவேகானந்தர் ஒரு துறவி. துறவி என்பது என்ன? காந்தி கூறுகிறார். செயலில் செயலின் மூலமாக துறவு காண வேண்டும். செயலை துறந்து விட வேண்டுமென்பதல்ல. ஏனென்றால் உயிர் வாழ்க்கைக்குச் செயல் இன்றியமையாதது. எனவே எவ்வித பத்துமின்றி செயல் செய்து கொண்டிருப்பது தனது கடமையென்று கருதிச் செயலைச் செய்து கொண்டு போகிறவனே துறவி.
மகாத்மா தன்மைக்கு துறவி லட்சணங் கூறியிருக்கிறார். அப்படியே துறவுக்கு மகாத்மா லட்சணங் கூறியிருக்கிறார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் லட்சியம் என்ன என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இருவரும் இந்தியாவை ஒரு தொகுப்பாகவே பார்க்கிறார்கள்.
பாஷை வித்தியாசம், மாகாண வித்தியாசம் முதலிய வித்தியாசங்களை இவர்கள் மனத்தில் எழுதுவதேயில்லை. அப்படியே இவர்கள் மதம் வேறு வாழ்க்கை வேறாகப் பிரித்துப் பார்ப்பதேயில்லை. மனிதர்களிலும் ஏழையென்றம் பணக்காரரென்றும் உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் வித்தியாசம் பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாவற்றையும் கடவுள் மாயமாகவே பார்க்கிறார்.
இருவரும் வெளிப்பார்வைக்குச் சுலபத்தில் அணுக முடியாதவர்கள் போல் காணப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் கூட இவர்களிடத்திலே தாராளமாகப் பழகுகின்றன. ஏனென்றால் இவர்கள் குழந்தை உள்ளம் படைத்தவர்கள் அதனால் கபடமின்றி
காந்தி அடிகள் 60

உரக்கச் சிரிக்கிறார்கள். கலகலத்து பேசுகிறார்கள். இவர்கள் சொற்பொழிவை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது சகஜம். துறவிபேசுற போது அணையை உடைத்துக் கொண்டு ஆற்று வெள்ளம் புரண்டோடுவதைப் போலிருக்கும். மகாத்மா பேசுகிறபோது அடங்கியிருக்கும் ஓர் எரிமலை தன் உள்ளிருந்து நிதானமாக நெருப்புத் துண்டங்களை மேலே வீசி எறிவது போலிருக்கும். இருவருடைய பேச்சுக்களும் கேட்பவர்களுடைய உள்ளத்தை திறந்து விடும். அந்த உள்ளத்திலிருக்கும் கோழைத்தனம் மந்தம் முதலிய மாசு மனுக்கள் யாவற்றையும் கரைத்தும் எரித்து விடும்.
இருவரின் வரலாற்றையும் மற்றும் பெருமை சிறப்புகளையும் இச்சிறுநூலில் எடுத்துக் காட்டுவதென்பது முடியாத காரியம். மேலோட்டமாக தொட்டுக் காட்டியுள்ளேன்.
சுவாமி விவேகானந்தர் தனது 34வது வயதில் 1897ஆம் ஆண்டு ஜனவரி 15ல் கொழும்பு வந்ததும் மகாத்மா காந்தி தனது 58 வது வயதில் 1927 நவம்பர் 18ம் திகதி கொழும்பு வந்ததும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(3) (3) (3)
நம்பிக்கை மூலம் சாதனை படைத்தவர் காந்தியடிகள்
நம்பிக்கையின் மூலம் உலக சாதனையாளராக வெற்றி பெற்றவர்களில் முதலிடம் வகிப்பவர் காந்தயடிகள். உலகத்திற்கு ஒரு அதிசயமான உதாரணம் விந்தை மனிதர், அவர் காலத்தில் வாழ்ந்தவர்களின் அதிக சக்தி படைத்த மனிதர் இவர்தான். இத்தனைக்கும் இவரிடம் அதிகாரத்தின் அம்சங்களான பணபலமோ, படைபலமோ இல்லை. தன்னுடைய என்று சொல்லிக் கொள்ள வீடு கிடையாது. உடை கூட இல்லை. ஆனால் அதிகாரம் இருந்தது. இந்த அதிகாரம் எப்படி அவருக்கு வந்தது.
நம்பிக்கை கோட்பாட்டைச் சரிவரப்புரிந் கொண்டதால் அதிகார சக்தியை அவர் உருவாக்கிக் கொண்டார். சுதந்திரம் அ ைவோம் என்ற நம்பிக்கையைபலகோடி மக்களின் மனதில் துளிர்விடச் செய்த
61 இ. சிறிஸ்கந்தராசா

Page 35
சாதனையால் அவருக்கு அதிகார சக்தி கிடைத்தது.
பல கோடி மக்களின் மனங்களை ஒன்றிணைத்து ஒருமுகமாக ஒரே திசையில் மக்கள் சக்தியை வழி நடத்திய பிரமிப்பான சாதனையை நடத்திக் காட்டியவர். மகாத்மா காந்தி
நம்பிக்கையை தவிரவேறு எந்த சக்தியால் இந்த பூமியில் இப்படி சாதித்து காட்ட முடியும்.
G G G
திருக்குறளும் மகாத்மா காந்தியும்
காந்தி தென்னாபிரிக்காவில் சத்தியாக்கிரகப் போர் நடத்திக் கொண்டிருந்த போது அரசாங்க சார்பில் இவருக்கு எதிரியாயிருந்தவர். தளபதி ஸ்மட்ஸ் என்பவர். இவர் சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுகிற தமது பொறுப்பை முன்னிட்டு காந்தியை சிறையிலே வைத்தார். தம்மை சிறையில் வைத்தவருக்கு காந் என்ன உபகாரம் செய்தார் தெரியுமா?
சிறையிலிருந்த பொழுது என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு ஜோடி மிதியடிகளை தயாரித்து விடுதலையானவுடன் அவற்றை சன்மானமாக அளித்தார். அதனை அதிக காலம் வரை நான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின் மீது நான் நிற்கத் தகுதியுடையவனல்லன் என்ற உணர்ச்சி மட்டும் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது என்று கூறினார் தளபதி சமட்ஸ்.
இந்த இடத்தில் காந்தியின் சாண்றாண்மைக் குணம் சிறந்து விளங்குகிறது. வள்ளுவரது குறளுடன் காந்தியின் வாழ்க்கை ஒத்து போவதை காணலாம்.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் என்ன பயத்ததோ சால்பு. (குறள் 989)
(3) (3) (3)
காந்தி அடிகள் 62

ஜாதி ஒழிக காந்தியடிகள் கமலாம்பூர் என்னும் கிராமத்தில் 1947 பிப்ரவரி 21ந் திகதி பிரார்த்தனைப் பிரசங்கம் செய்த பொழுது சில கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளும் அவர் கூறிய பதில்களும் வருமாறு.
கேள்வி: ஜாதி ஒழியவேண்டுமென்று கூறுகின்றீர்கள். அப்படியானால் இந்துமதம் அழிந்து விடுமல்லவா? கிறிஸ்துவமதம், இஸ்லாம்மதம் போன்ற முன்னேற்றமான மதங்களுடன் இந்துமதத்தைச் சேர்த்துப் பேசலாமா?
பதில் : இந்துமதம் அழியாமல் இருக்கவேண்டுமானால் இப்பொழுது நாம் வைத்துக் கொண்டிருக்கும் ஜாதிகளெல்லாம் ஒழிந்து திரவேண்டியது அவசியமாகும். கிறிஸ்துவமதமும் இஸ்லாம் மதமும் முன்னேற்றமான மதங்கள் என்றும் இந்து மதம் முன்னேற்றம் இல்லாத மதமென்றும் கூறுவதை நான் நம்பவில்லை. எந்த மதத்திலுமே சரியான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரியவில்லை. உலகத்திலுள்ள மதங்கள் முன்னேற்றமுடையதாக இருந்தால் உலகத்தில் இப்பொழுது காணப்படும் சண்டையும் சச்சரவும் உண்டாகியிருக்கமாட்டா. வருணங்களைக் கடமையாக அனுஷ். டித்தால் அதற்கு எல்லா மதங்களிலும் இடமுண்டு. முஸ்லிம் மெளலவியோ கிறிஸ்தவப் பாதிரியாரோ தம்முடைய ஜனங்களுக்குப் பண நோக்கத்துடனின்றித் தம்முடைய திறமையைப் பிறருக்காக உபயோகிக்க வேண்டும் என்றி நோக்கத்துடனேயே போதனை செய்வார்களானால் அவர். களும் பிராமண வருணத்தவர்களே ஆவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுபோல்தான் மற்ற வருணங்கள் விஷயமும் ஆகும்.
கேள்வி : தாங்கள் ஜாதியை ஒழித்துவிட வேண்டுமென்று கூறுவதால்
கலப்பு மணத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
63 இ. சிறிஸ்கந்தராசா

Page 36
பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி
பதில்:
ஆம் நிச்சயமாக ஆதரிக்கிறேன்.
அனேகதொழில்களைச் சில ஜாதியாரே ஏகபோகமாகச் செய்து வருகிறார்கள். இதையும் ஒழித்து விட வேண்டுமல்லவா?
ஜாதிகள் ஒழிந்து போனால் இந்தக் கேள்விக்கு இடமில்லை. இன்ன தொழில் இன்ன ஜாதிக்குச் சொந்தமென்பதும் ஒழிந்துபோகும். ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் என்று சொன்னால் ஒரே ஒரு மதந்தானே இருக்க வேண்டும்?
இது ஒரு விநோதமான கேள்வி மரத்தில் லட்சக்கணக்கான இலைகள் இருக்கின்றன. அதுபோல் கடவுள் ஒருவரேயானாலும் மனிதர்கள் பலராய் இருப்பதால் மதங்களும் பலவாக இருக்கின்றன. நாம் வேறு வேறு மதங்களை அனுஷ்டிப்பதால் இந்தத் தெளிவான உண்மையை அறி. யாமல் இருந்து வருகிறோம். நான் இந்துதான். ஆயினும் மற்ற இந்துக்களைப் போலவே நானும் கடவுளை வணங்குவதாகச் சொல்லமுடியாது.
G G G
சில சம்பவங்கள்
இந்தியாவில் சுதந்திர போராட்டங்கள் நடக்கும் போது யாழ்ப்பாணக் கல்லூரியில் இந்திய சுதந்திர போராட்டத்தை சித்திரிக்கும் நாடகம் நடிக்கப்பட்டது. அப்போது மகாத்மா காந்தியாக திறம்பட நடித்து சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர் ஒறேற்றர் சுப்பிரமணியம் ஆவார்.
G G G)
மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தின் போது பேச்சுவார்த்தைக்கு சென்ற போது வின்சன் சர்ச்சில் மிக கோபத்தில் காந்தியைப் பார்த்து பின்வமாறு கூறினார்.
காந்தி அடிகள் 64

Nau seating and humiliating spectacle of one time, innertemple lawyer, now a seditious fakir going to have parley in equal terms withour Viceroy Her majesty the king's representative.
G G G)
While Mahadma Gandhi was travelling in a train some body asked him. Have you read the work DAS Capital? Gandhi replied
"Yes I read. He asked what is your opinion about that work sir? Gandhi replied "I do not have that amount of genius to put such a . simple matter is such a complicated form.
G G G)
ஹண்டிப் பேரின்பநாயகம் ஓர் சிறந்த காந்தியவாதி. தீவிரமான காந்திபக்தர் என்று தான் கூற வேண்டும்.
இவர் தன்னுடைய திருமணத்தின் போது கதர் சேலையை கூறைச் சேலையாக வாங்கி மனைவிக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சகலரும் வாழ்நாள் பூராக தேசிய உடையில் தான் சகல வைபவங்களுக்கும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் பலர். இச்சிறு நூலில் ஒரு சிலரையும், ஒரு சில சம்பவங்களையும் தொட்டுக் காட்டியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியும் காங்கிரஸ் தொண்டர்கள் 30 மேற்பட்டோரும் 1927 நவம்பர் மாதம் நடுப்பகுதியில் வந்தது யாவரும் அறிந்ததே.
9ே (9 (9
காந்தியின் பதில்
காந்தியடிகள் சிறுவராக இருந்த போது லண்டன் மெட்ரிக் தேர்வு
எழுதினார். வினாத்தாளில் பொன்னை விடப் பெரியது எது? என்ற
65 இ. சிறிஸ்கந்தராசா

Page 37
வினா இருந்தது. அதற்கு அவர் எழுதிய விடை என்ன தெரியுமா? உண்மை,
இ இ இ
அண்ணல் காந்தியடிகள் தந்த ஆச்சரியம்
காந்திஜி இங்கிலாந்தில் இருந்த நேரம், அங்குள்ள இந்திய சங்கத்தினர் ஒருமுறை அவருக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தனர். விருந்து மாலை 6மணிக்கு நடக்கவிருந்தது. ஆனால் மணி530 ஆகியும் காந்திஜி வரவில்லை. காந்திஜியின் நேரம் தவறாமை நாடறிந்த ஒன்று. எனவே அவர் வந்தவுடன் விருந்து ஆரம்பிக்க
வேண்டும் என்பதால் சங்கத்தலைவர் அனைத்து வேலைகளையும் சரிபார்க்க ஆரம்பித்தார்.
சமையற் கூடத்திற்கு வந்ததும் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். காரணம் அங்கு காந்திஜி மற்றவர்களோடு தாமும் அங்கிருந்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
சங்கத் தலைவர் ஓடிவந்து பாபுஜி என்ன செய்து கொண்டிருக்" கிறீர்கள். விழா நாயகரான தாங்களே இவ்வேலைகளை செய்ய லாமா? என்று பதற்றத்துடன் கேட்டார்.
அதற்கு காந்திஜி அமைதியாக இது இங்கிலாந்து நானோ சைவ உணவுக்காரன் இங்கு சைவ உணவைப் பெரிய அளவில் தயாரிப் து. என்பது சுலபமல்ல, எனவே தான் 4 மணிக்கே வந்து இவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். விழா 8 மணிக்குத்தானே என் I பதிலளித்தார்.
அங்கிருந்த சமையல்காரர்கள் காந்திஜியைப் பற் 而 கேள்விப்பட்டிருந்தார்களே தவிர சரியாக பார்த்ததில்லை. பிறகு தங்களுடன் பணிபுரிந்து வருபவர் காந்தி மகான் என்பதை அறிந் து வியந்து நின்றார்கள்.
காந்தி அடிகள் ES
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோயாளியும் மகாத்மா காந்தியும்
காந்தியடிகள் ஒரு சமயம் பூனா போயிருந்தார். அங்கு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது அருகே தொழுநோய் (துவிட நோய்) கொண்ட ஒருவன் வந்து அமர்ந்தான். இதைக் கண்ட பலருக்கு அந்நோயாளி மீது வெறுப்பும் கோபமும் பிறந்தன. அவன் எப்படி வந்து மகாத்மாவின் பக்கம் அமரலாம் என்று அவர்கள் ஆத்திரமுற்றனர்.
அந்நோயாளியைக் கண்ட காந்தியடிகளுக்கு அவன் மீது இரக்கம் பிறந்தது. அவனருகே சென்று அவனது புண்களிலிருந்து வரும் நீரைத் தமது போர்வையால் துடைத்துத் தூய்மைப்படுத்தினார். துடைத்த அப்போர்வையை மீண்டும் தன்மீது போர்த்திக் கொண்டார்.
இத்தகைய தொழுநோயினரைத் தமது ஆசிரமத்தில் அமர்த்தி அவர்களுக்குப்பணிவிடை செய்வதில் மிக்க மனநிறைவைப் பெறுவார் காந்தியடிகள், "அவர்களது புண் நிறைந்த உடம்புகளைத் தமது கையால் தடவிட் பணிபுரிவார். அவர்களுக்கு தக்க சிகிச்சைகளை தவறாது செய்ய அவரது கருத்து எப்போதும் உன்னிப்பாக இருக்கும். இதைக் கண்ட டாக்டர் ஒருவர், "இப்படித் தொழு நோயாளிகளைத் தொட்டுச் சிகிச்சை செய்கிறீர்களே" என்று வினாவினார்.
மறுமொழியாகக் காந்தியடிகள், "இவரை இவரது மனைவி கைவிட்டு விட்டார். மக்களும் கைவிட்டனர். அனாதையாக இருக்கிறார். நானும் கைவிட்டுவிட முடியுமா?" எனக் கூறினார்.
இ இ இ
காந்தி தைத்த செருப்புகள்!
தென்ஆபிரிக்காவில் நடந்த நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் மகாத்மா காந்தி கலந்து கொண்டார். அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது காந்தி ஒரு ஜோடி செருப்புத் தைத்தார்!
67 இ. சிபிளப்கந்தரா

Page 38
அந்தச் செருப்புகளை, அப்போது தென் ஆபிரிக்கப் பிரதமராக இருந்த சமட்சுக்கு காந்தி அனுப்பி வைத்தார்!
நிறவெறி பிடித்த சமட்சு, அந்த செருப்புகளைக் கையால் தொடக்கூட மறுத்துவிட்டார்!
இப்போது அந்தச் செருப்புகள், தென் ஆபிரிக்காவில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன!
G G G)
ஆட்டின் ஆகாரம்
சபர்மதி ஆசிரமத்தின் பகல் உணவின் போது வேப்பிலை சட்னி பறிமாறுவது வழக்கம். வேப்பிலையின் கசப்பு சுவை பிடிக்காமல் ஒருமுறை நிறைய தொண்டர்கள் முகம் சுளித்தார்கள்.
அதைக் கவனித்த உதவிப் பிரதமரான பட்டேல், "பாபுஜி இத்தனை காலம் ஆட்டுப்பாலை சாப்பிட்டுவந்தார். இப்போது ஆட்டின் ஆகாரத்தையும் சாப்பிட ஆரம்பித்து விட்டாரே என்று கூறினார். இதைக் கேட்டதும் காந்திஜி உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.
G G G)
காந்தியடிகளின் பதில்
ஒருசமயம் காந்தியடிகள் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நடந்த நிகழ்ச்சி.
ரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி வரும் காந்தியை அதிருப்தி கொண்ட ஆங்கிலேயன் ஒருவன் காந்தியை நையாண்டி செய்து சில கவிதைகளை கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டுப் போனான். அதைப் படித்த காந்தியடிகள் அதிலுள்ள,
குண்டுசிகளை எடுத்துக் கொண்டு காகிதங்களை கிழித்து தூர எறிந்து விட்டார்.
காந்தி அடிகள் 68

மறுநாள் அந்த ஆங்கிலேயன் அவரிடம் வந்து என் கவிதைகள் எப்படி இருந்தன என்று கேட்டான். காந்தியடிகள் அவனிடம் குண்டுசியைக் காட்டிச் சாரத்தை எடுத்துக் கொண்டு சக்கையை எறிந்துவிட்டேன் என்றார். ஆங்கிலேயன் வெட்கி தலைகுனிந்தான்.
G G G
மன ஒருமைப்பாடு
ஒருமுறை மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்கு ஆசார்ய கிருபளானி வந்தார்.
அவர் காந்திஜியிடம், "மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி" என்று வினவினார். *っ
மகாத்மா, "அதைப்பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. வாசலில் வினோபா உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் போய்க் கேளுங்கள்" என்றார்.
கிருபளானிவாசலுக்கு வந்தார். வினோபா அச்சமயம் கீதையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். 'வினோபாஜி என்று கிருபளானி ஒருமுறை அல்ல, மூன்று முறைகள் அழைத்தார். வினோபாவின் கவனத்தை ஈர்க்கவே முடியவில்லை.
உள்ளே சென்ற கிருபாளனியிடம் மகாத்மா, "பார்த்தாயா,
அதுதான் மனதை ஒருமுகப்படுத்துவது" என்றார்.
(3) () (3)
மகாத்மாவின் நகைச்சுவை பதில்
காந்திஜி ஒருமுறை மைசூருக்கு சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் அவரிடம், பாபுஜி தாங்கள் ஜெரசப்பாவுக்குச் செல்ல வேண்டும் என்றனர். அங்கு என்ன விசேஷம் என்று காந்திஜி கேட்டார். அங்குதான் ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. உயரத்திலிருந்து தண்ணிர் கொட்டுவதைப் பார்க்க மிக அழகாக இருக்கும் என்றனர்.
69 இ. சிறிஸ்கந்தராசா

Page 39
அதைவிட அதிகமான உயரத்திலிருந்துநீர் கொட்டுவதை நான் பார்த்திருக்கிறேன் என்றார் காந்திஜி. எங்கே பார்த்தீர்கள் என்று மக்கள் கேட்டார்கள்?வானத்திலிருந்து மழைநீர் என்றார் காந்திஜி
G G G)
என் மீது கல் எறியுங்கள் - காந்தியடிகள்
பாரதத்தில் காந்தியடிகள் முதன் முதலாக பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த சமயம் ஒருநாள் நண்பர் ஒருவருடன் அவருடைய காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
காந்தியடிகள் அந்தக் காரில் பயணம் செய்கிறார் என்று அறிந்த அவரைப் பிடிக்காத சிலர் மறைவாக இருந்து கொண்டு கார் மீது சரமாரியாக கற்களை வீசினார்.
காந்தியடிகள் வண்டியை நிறுத்தச் சொன்னார். பிறகு காரை விட்டு இறங்கி கார் மீது கல் வீசியவர்கள் இருந்த இடத்திற்கு சென்றார்.
அவர்களை நோக்கி, உங்களுக்கெல்லாம் என்மீது கோபம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் கோபத்தை காண்பிக்க என் மீது கல் வீசுவதுதான் நியாயம். இந்தக் கார் என்னுடையதன்று. எனது நண்பருடையது. இந்தக் கார் மீது கல் வீசினால் அது என்னைப் பாதிக்காது. நண்பரின் கார்தான் சேதமடையும். அதனால் தனியே நிற்கிறேன். உங்கள் கோபம் திரும் வரை என் மீது கல் வீசுங்கள் அப்புறம் இந்த இடத்தை விட்டுசெல்கிறேன்என்றார். கல்எறிந்தவர்கள் வெட்கப்பட்டு காந்தியடிகளை வணங்கி விட்டுச் சென்றார்கள்
(3) (3) (3)
காந்தியின் பதில்
ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் காந்தியிடம் நாங்கள் எல்லோரும் ஒரே நிறமாக இருக்கிறோம். ஆனால் இந்தியர்கள் ஒவ்வொரு நிறமாக இருக்கிறார்களே எனக் கேட்க,
காந்தி அடிகள் 70

காந்திஜிகழுதைகள் எல்லாமே ஒரேநிறமாக இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் உள்ளன என்றார். பதிலைக் கேட்ட வெள்ளைக்காரன் தலை குனிந்தான்.
(B) (GB) (GB)
வனவிலங்குகளின் தொகை காடுகளில் குறைவதேன்?
ஒருமுறை எட்வேர்டு தாம்ஸன் என்ற ஆங்கிலேயர் காந்தியடிகளிடம் உலகம் முழுவதிலும் காடுகளில் உள்ள வனவிலங்ககளின் தொகை குறைந்து கொண்டுவருகிறதே என்று கவலையோடு கேட்க,
அதற்கு காந்தியடிகள், அதனாலென்ன நகரங்களில் தான் அவற்றின் தொகை பெருகி வருகிறதே என்று கூறி புன்முறுவல் செய்தார்.
இ) G G)
ஜீவா நீங்கதான் நாட்டின் சொத்து
கம்யூனிஸ்ட் தலைவரான ஜீவானந்தம் தொடக்கத்தில் காங்கிரசில் இருந்த போது காந்திஜியை சந்தித்தார்.
உங்களுக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா? என்று கேட்டார் காந்திஜி - தாய்நாடு தான் என் சொத்து என்றார் ஜீவா.
இல்லை இல்லை நீங்கள் தான் தாய்நாட்டின் சொத்து என்றார் காந்திஜி.
G G G
காந்திஜியின் பதில்கள்
ஊருக்கு எல்லாம் அகிம்சையைப் போதிக்கின்றீர்கள். ஆனால் நேரு தடியடிப்பிரயோகம் செய்தால் பேசாமல் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நச்சுப் பாம்பு! இவ்வாறு முதிய தொண்டர் ஒருவர் காந்தியை குற்றஞ் சாட்டினார்.
71 இ. சிறிஸ்கந்தராசா

Page 40
நீங்கள் கூறுவதைப் போல நான் நச்சுப் பாம்பாக இருக்கலாம். ஆனால் இந்தப்பாம்புக்கு பல்லில்லை. இது தெரியாதா? என்று கேட்ட காந்தி தமது பொக்கு வாயை காட்டிச் சிரித்தார்.
9ே (9 (9
காந்திஜியின் பதில்
அன்று காந்தியின் பிறந்த நாள் நெற்றியிலே குங்குமம் பொட்டுடன் காட்சி அளித்தார். இதனைப் பார்த்த சரோஜினி அம்மையார் அவரை கேலி செய்ய விரும்பினார். காந்திஜி நீங்கள் மாப்பிள்ளையைப் போல காட்சி அளிக்கின்றீர்கள் என்றார்.
ஆம் நீங்கள் என் பக்கத்தில் மணப் பெண்ணை போன்று காட்சி தருகின்றீர்கள் அல்லவா என்று மறுகணமே காந்தி பதிலளித்தார்.
ஆண்மை
சிறைச்சாலையிலே நடந்தது இது. காந்தியை சரோஜினி அம்மையார் பாட்மிண்டன் விளையாட அழைத்தார். "நான் இதுவரை பாட்மிண்டன் மட்டையைக் கையாலும் தொட்டதில்லை. ஆனாலும், விளையாட்டில் நானே வெற்றி பெறுவேன்" என்றார் காந்தி. விளையாட்டுத் தொடங்கியது. அம்மையாருக்கு வலக்கை சுளுக்கி இருந்தது. எனவே, மட்டையை இடக்கையிலே பிடித்தார். அதைப் பார்த்து காந்தியும் மட்டையைத் தமது இடக்கையிலே பிடித்துக் கொண்டார். "என் வலக்கையிற் சுளுக்கு. எனவேதான், இடக்கையில் மட்டையை வைத்திருக்கிறேன்" என்று அம்மையார் சிரித்தபடி விளக்கினார். காந்தி மட்டையைத் தமது வலக்கைக்கு மாற்றவில்லை. "நீங்கள் இடக்கையால் ஆடுகிறீர்கள். உங்களுக்கு எதிராக நான் வலக்கையில் மட்டை பிடித்து ஆடுவது ஆண்மையாகுமா?பெண்ணின் அசெளகரியத்தை எனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை" எனக் கூறிக் காந்தி சிரித்தார்.
G G G
காந்தி அடிகள் 72

காந்திஜியின் பதில்
இங்கிலாந்து தேசத்துப் பத்திரிகையாளன் ஒருவன் காந்தியை கேலி செய்ய விரும்பினான். எனவே, அவன் காந்தியைப் பார்த்து, "இந்திய மக்கள் ஏன் உங்களைத் தலைவராக அனுப்பி இருக்கிறார்கள்? உங்களிலும் பார்க்க நல்ல தலைவர் ஒருவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா" எனக் கேட்டான்.
"அப்படியல்ல உங்கள் நாட்டவர்களைத் தக்கபடி கையாள நானே போதுமானவன் என்று இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்" என்று காந்தி அமைதியாகப் பதிலளித்தார்.
G G G
காந்திஜியின் பதில்
"நீங்கள் ஏன் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்கின்றீர்கள்?" இவ்வாறு ஓர் அன்பர் காந்தியிடம் கேட்டார்.
"அதுவா? நான் தேர்ந்தெடுப்பதற்கு நான்காம் வகுப்புப் பெட்டி கிடையாதல்லவா?" -இவ்வாறு காந்தி பதில் அளித்தார்.
G G G)
எனது பேனா சுதேசிப் பேனா
* கையெழுத்துப் பெறுவதற்காகப் பலர் காத்திருந்தார்கள். காந்தியும் சலிப்பில்லாமல் கையெழுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். பேனாவில் மை கூட வற்றிவிட்டது. சிலருக்குக் கொடுத்த கையெழுத்துத் தெளிவற்றதாகவும் இருந்தது. அப்பொழுது இளைஞன் ஒருவன் கையெழுத்துப் பெறும் முறை வந்தது. "பாபுஜி, எனக்கு என் பேனாவினாலேயே கையெழுத்துப் போட்டுத்தாருங்கள்" என்று கூறிய அவன், தனது பேனாவை அவரிடம் நீட்டினான்.
அவனுடைய பேனாவை காந்தி பெற்றுக் கொள்ளவில்லை. "என்னுடைய பேனா சுதேசிப் பேனா" என அவர் விளக்கினார்.
G G G)
73 இ. சிறிஸ்கந்தராசா

Page 41
முறை வரும்வரை பொறுத்திருங்கள்
அக்காலத்தில் மெக்டோனால்ட் என்பவர் பிரித்தானியப் பிரதம மந்திரியாக இருந்தார். அவர் அவசர காரியமாக காந்தியைச் சந்திக்க வந்திருந்தார். தனது மரியாதையைக் காந்திக்குச் செலுத்த, அதே நேரத்தில் தபாற்காரன் ஒருவனும் வந்திருந்தான். "முதலிலே தபாற்காரரையே சந்திக்க விரும்புகின் றென். பிரதம மந்திரி ராஜதந்திரியாவார். எனவே, சந்தர்ப்பம் வரும் வரை காத்துக் கொண்டிருப்பது அவருடைய தொழிலாகும்" என்று காந்தி கூறினார்.
(3) (3) (3)
இந்த உடையுடனா?
சக்கரவர்த்தி அளித்த விருந்தொன்றில் காந்தி கலந்து கொண்டார். காந்தி சட்டை அணியாத எளிய உடையினர். அவ்வாறே விருந்திலும் கலந்து கொண்டார். இஃது அந்நாட்டுப் பத்திரிகையாளரை வியப்பில் ஆழ்த்தியது. "என்ன? இந்த உடையிலேயா சக்கரவர்த்தி முன்னாற் சென்றீர்கள்?" என்று பத்திரிகையாளன் ஒருவன் வெளிப்படையாகவே கேட்டான்.
"ஆம், எல்லோருக்கும் தேவையான உடைகளைச் சக்கரவர்த்தியே அணிந்து வந்தார். அது போதாதா?" என்று கேட்டு அப் பத்திரிகையாளனின் வாயை அடைத்தார்.
(3) (3) (3)
ഉണ് ി
"நீங்கள் பென்சிலின் ஊசி ஒன்று ஏற்றிக் கொள்ளுங்கள். மூன்றே நாள்களில் உங்களுடைய சளிநோய் குணமாகிவிடும். இல்லாவிட்டால், குணமாவதற்கு மூன்றுமாத காலம் பிடிக்கும்!" இவ்வாறு டாக்டர் ஒருவர் காந்திக்கு ஆலோசனை கூறினார்.
"அப்படியா? என் நோய் மெதுவாகக் குணமாகட்டும். அவசரம் எதுவும் கிடையாது" என்றார் காந்தி. "உங்களுடைய நோய் மற்றவர்.
காந்தி அடிகள் 74

களுக்குத் தொற்றக் கூடும்" என்றார் டாக்டர்.
"அப்படியானால் அவர்களுக்குப் பென்சிலின் ஊசியை ஏற்றி விடுங்கள்" என்று கூறிக் காந்தி சிரித்தார்.
(3) (G) (9
காந்திஜியின் பதில்
புகழ் பெற்ற விஞ்ஞானியான சி.வி.ராமன் அவர்கள் "மதங்களால் ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது. முழுமையான சகோதரத்துவத்திற்கான நிலையை விஞ்ஞானமே அமைக்கின்றது. விஞ்ஞானி. கள் எல்லோரும் சகோதரரே" என்றார்.
"மாறாகப் பார்ப்போம். விஞ்ஞானிகள் அல்லாதவர்களால் சகோதரர்களாய் வாழ முடியாதா?" என்று காந்தி கேட்டார். "எல்லோராலும் விஞ்ஞானிகள் ஆகமுடியுமே" என்றார் ராமன்
"அப்படியானால், இஸ்லாம் அளித்துள்ளதைப்போல, விஞ்ஞானம் பற்றிய கலிமா ஒன்றினை நீங்கள் தந்தாக வேண்டும் என்றார் காந்தி.
G G G
காந்தியின் யுக்தி
தமது சாம்ராச்சியத்திற்கு எதிராகக் காந்தி போராடுவதை ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் விரும்பவில்லை. இதனால் மன்னர் அவர் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை. இருப்பினும், சந்தர்ப்பம் காரணமாக அவர் காந்தியைத் தமது அரண்மனைக்குத் தேநீர் விருந்திற்கு அழைத்தார். காந்தியும் சென்றார். விருந்து
முடிந்தது. காந்தி புறப்பட ஆயத்தமானார்.
மன்னரால் தமது உணர்ச்சியை அடக்க முடியவில்லை. "காந்தி, என் சாம்ராச்சியத்தில் எத்தகைய எதிர்ப்பையோ சண்டையையோ நான் விரும்பவில்லை. இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்" என்று மன்னர் கூறினார். "தங்களுடைய விருந்தாளியாக இங்கு வந்தேன். தங்கள் உபசரிப்பைப் பெற்றேன். எனவே, இந்த இடத்தில்
75 இ. சிறிஸ்கந்தராசா

Page 42
நான் அரசியல் பேச விரும்பவில்லை" என்று காந்தி பெருந்தன்மையுடன் பதிலளித்தார்.
G G G)
மனைவியின் ஆணை
சேவாக்கிரம ஆசிரமத்தில் எல்லோரும் எல்லா வேலைகளையும் நேரகுசிப்படி செய்தார்கள். அன்று டாக்டர் குமரப்பாவும், காந்தியும் பாத்திரங்களைத் தேய்த்துச் சுத்தமாக்கும் முறை வந்தது. அப்பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்பொழுது அன்னை கஸ்துரி பாய் அவ்விடம் வந்து சேர்ந்தார். மகாத்மா காந்திபாத்திரம் கழுவும் கோலத்தை அவராலே பொறுக்க முடியவில்லை. "நீங்கள் போங்கள். நானே பாத்திரங்களைக் கழுவுகிறேன்" என்று கூறிய அன்னை, தாமே பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினார். "குமரப்பா! நீகொடுத்து வைத்தவன். இப்படி அதிகாரம் செய்வதற்கு உனக்கு மனைவி ஒருத்தி இல்லை. குடும்ப அமைதியைக் பேணுவதற்காக நான் மனைவி சொற்படி நடக்க வேண்டும் போலிருக்கிறது" என மகாத்மா முறுவலுடன் கூறினார்.
G G G)
காந்திஜியின் பதில்
அந்த மகாநாட்டிற்குக் காந்தி தலைமை தாங்கினார். பண்டிதர் மதன்மோகன் மாளவியா பிரேரிக்க வேண்டிய தீர்மானத்தின் வேளை வந்தது. அந்தச் சமயம் மாளவியா சந்தியா வந்தனம் செய்து வர வெளியே சென்றிருந்தார். அவருடைய தீர்மானத்தை இன்னொருவரைப் பிரேரிக்கும்படி காந்தி கேட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த தீர்மானமும் பிரேரிக்கப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்பொழுது தாம் மாளவியா ஒட்டமும் நடையுமாக மகாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தார். மாளவியாவுக்குப் பேசச் சந்தர்ப்பம்
காந்தி அடிகள் 76

கொடுக்கும் படி சிலர் கேட்டார்கள. "சந்தியா வந்தனத்திற்காக மகாநாடு காத்துக் கொண்டிருக்க மாட்டாது" என்று காந்தி கண்டிப்புடன் பதிலளித்தார்.
(32) (3) (39)
ஏழை
சுங்க அதிகாரியிடம் காந்தி பின்வருமாறு கூறினார். "நான் ஓர் ஏழைப் பரதேசி, ராட்டை, சிறைச்சாலைத் தட்டுகள், ஒரு குவலை ஆட்டுப்பால், வீட்டிலே நெசவு செய்த ஆறு வேட்டிகளும், துவாய்கள் சில. இவையே என்னிடம் இருக்கின்றன.
மறுகணம், "என் கீர்த்தியும் இருக்கிறது. அதற்கும் அதிக மதிப்புக் கிடையாது" என்று காந்தி கூறிச் சிரித்தார்.
9ே G G)
வினா
காங்கிரஸ் கட்சி பதவி ஏற்பது பற்றி எங்கும் பேச்சாக இருந்தது. இரகசியத்தை காந்தியிடம் அறிந்து கொள்ளலாம் எனப் பத்திரிகையாளன் ஒருவன் நினைத்தான். எனவே, "பாபுஜி, காங்கிரஸ் மந்திரிசபைப் பதவியை ஏற்குமா?" என அவன் காந்தியிடம் நயமாகக் கேட்டிான். "ஏன்?மந்திரியாக வர நீங்களும் விரும்பகின்றீர்களா?" என காந்தி கேட்டார். இந்த வினாவே விநயமான பதிலாக அமைந்தது.
(3) (3) (3)
நகைகள் எதற்கு
காந்திஜி ஒருமுறை சுதந்திரப் போராட்டத்திற்காகப் பெண்களிடம் நகைகளை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருந்தார். இதைத் தன் அம்மாவுடன் வந்த ஒரு சிறுமி பார்த்து காந்தியிடம் கோபமாகக் கேட்டாள். "ஏன் இப்படி எல்லாருடைய நகைகளையும் வாங்குகிறீர்கள்?" என்று. அதற்கு காந்திஜி "நம் நாடு சுதந்திரம்
77 இ. சிறிஸ்கந்தராசா

Page 43
அடைவதற்காக" என்றார். அது புரியாத சிறுமி "சுதந்திரமா? அப்படீன்னா என்ன?" என்று கேட்டாள்.
அந்தச் சிறுமிக்குக் காந்தி "இய்ய உங்க வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்து தங்குகிறார். அவரை நன்றாக உபசரித்து வைத்திருக்கும் போது - அவர் வீட்டை விட்டு செல்லாமல் இது என் வீடுநீங்கள் எனக்கு அடிமை. உங்கள் வீட்டுப் பொருள் எல்லாம் என்னுடையது என்றால் நீ என்ன செய்வாய்? அவரை எப்படியாவது வெளியேற்ற நினைப்பாய் தானே? அதுபோல நம் நாட்டில் தங்கி நம்மையே அடிமையாக்கிய வெள்ளைக்காரர்களை விரட்டி அடிக்க நிறையப் பணம் தேவை. அதற்காகத் தான்நானட நகைகளை வாங்கிக் கொண்டிருக்கிறேன்" என்றார். உடனே சிறுமிதன் கைகளில் கிடந்த தங்க வளையல்களைக் கழட்டி காந்திஜியிடம் கொடுத்து விட்டாள். ஒரு சிறுமிக்குப் புரியும் அளவிற்குச் "சுதந்திரம்' பற்றி எப்படி அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் காந்திஜி!.
G G G)
அன்பு
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி சென்னைக்கு வரும் போதெல்லாம் ஜி.ஏ.நடேசன் என்ற தேச பக்தரது இல்லத்தில் தான் தங்குவார். ஒருமுறை அவ்வாறு தங்கியிருக்கும் போது அவரது பெண் குழந்தைக்கு காந்திக்கு அன்புப் பரிசாக ஒரு பென்சிலைக் கொடுத்தாள். அதை காந்திஜி மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.
ஒருநாள் சபர்மதி ஆசிரமத்தில் காந்தி எதையேதமும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தார். ரொம்ப நேரம் தேடி அந்தப் பொருளைக் கண்டுபிடித்தார். எல்லாரும் ஏதோ முக்கியமான பொருளைத் தான் காந்தி தேடிக் கொண்டிருந்தார் என்று நினைத்து அவர் அருகே சென்று பார்த்தால், அது அந்தக் குட்டிப் பெண் கொடுத்த பென்சில். "போயும் போயும் இதையா இவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடினீர்கள்?" என்று ஆசிரமத்திலிருந்த அனைவரும் கேட்டார்கள். உடனே காந்தி,
காந்தி அடிகள் 78

"பொருளின் அளவைப் பார்க்காதீர்கள். அதைக் கொடுத்தவரது உள்ளத்தில் உள்ள அன்பை மட்டும் பாருங்கள் என்றார்.
මෙ ම ම
கடிதம் தான் முக்கியம்
எந்தப் பொருளையும் வீணாக்க காந்தியடிகளுக்கு மனம் வராது. தமக்கு வரும் கடிதங்களின் மேல் உறைகளை எடுத்து வைத்துக்கொள்வார். அவற்றைப் பிரித்து, உட்புறம் எழுதாமல் இருக்கும் இடத்தில் குறிப்பகள் எழுதி நண்பர்களுக்கு அனுப்புவார். "தங்கள் கடிதங்களை நாங்கள் பத்திரமாகப் போற்றி வைத்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த மாதிரி காகிதத்தில் தாங்கள் எழுதுகிறீர்களே"என்று சிலர் இவரிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.
"கடிதம் தான் முக்கியம். காகிதம் எல்ல. அதிலுள்ள செய்தி உங்களுக்குத் தெரிந்த பிறகு அந்தக் காகிதத்துக்கு என்ன வேலை?" என்று கேட்டார் காந்திஜி
(3) (9 (3)
மாணவன் கேள்வியும் காந்தியின் பதிலும்
ஏழைகள் மீது மிகுந்த அன்பு ஸ்ளவர் காந்தி அவர்களைப் போன்றே அவரும் வாழ்ந்தார். சட்டை அணிவதை தவிர்த்தார். வறுமை காரணமாகவே காந்தி சட்டை அணியவில்லை என மாணவன் ஒருவன் நினைத்தான். எனவே அம்மாவிடம் சொல்லி ஒரு சட்டை வாங்கித் தருகிறேன் அணிந்து கொள்கிறீர்களா? என அவன் கேட்டான்.
நான் ஒருவனல்லன். என்னுடன் நாற்பது கோடி சகோதரர்கள் சட்டை அணியாதவர்களாக இருக்கிறார்கள். உங்கள் அம்மாவினால் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டை வாங்கித்தரமுடியுமா? அப்படியானால் நான் சட்டை அணிந்து கொள்ளுகிறேன். இவ்வாறு காந்தி சிரிப்புடன் கூறினார்.
(g). (S) (g)
79 இ. சிறிஸ்கந்தராசா

Page 44
மனைவியை மதிக்கும் பண்பு
அன்னை கஸ்தூரிபாய் காலமானதும் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது காந்தியடிகள் அங்கேயே அமர்ந்து இருந்தார். அங்கு இருந்த ஒருவர் காந்தியடிகளிடம் வந்து, "இறுதிவரை இங்கு இருக்க வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு காந்தியடிகள், "அறுபத்தியிரண்டு ஆண்டுகள் கஸ்தூரிபாயுடன் நான் வாழ்ந்தவனாயிற்றே! இப்போது அவள் உடல் எரிந்துமுடிவதற்கு முன் நான் திரும்பிவிட்டால், என் கஸ்தூரிபாய் என்னை மன்னிக்கவே மாட்டாள்" என சோகத்துடன் பதில் அளித்தார்.
G G G
காந்திஜி கூறிய கீதையின் ரகசியம்!
ஒரு நண்பருக்குக் கீதையின் ரகசியத்தை அறிய ஆவல். ஆதலால் அவர் காந்திஜியிடம் சென்றார். கீதையின் ரகசியத்தை விளக்கும்படி வேண்டிக்கொண்டார். அதற்கு காந்திஜி "சரி இதோ பாருங்கள். இங்கே சில செங்கற்கள் இருக்கின்றன. இவற்றை எண்ண வேண்டியிருக்கிறது. நீங்கள் இந்தப் பணியைச் செய்து வாருங்கள்" என்றார். அந்த நண்பரும் அப்படியே தினமும் கொஞ்சம், கொஞ்சமாக செங்கற்களை எண்ணி வந்தார். சில நாட்களில் அவருக்கு இந்த வேலை சலித்து விட்டது. உடனே அங்கிருந்த ஒருவரிடம், அவர் கேட்டார்: "இதென்ன செங்கற்கள் எண்ணுவது என் வேலையா? இது தொழிலாளி செய்ய வேண்டிய வேலை கீதையின் ரகசியத்தைக் கேட்பதற்காக நான் இங்கே வந்தேன்! எனக்கு செய்கல் எண்ணும் வேலையைக் கொடுத்து என் நேரத்தை வீணதக்க வைக்கிறார் காந்திஜி!" என்றார். இந்தச் செய்தி எப்படியோ காந்திஜியின் காதுகளுக்கு எட்டியது. உடனே அந்த நண்பரைக் கூப்பிட்டு காந்திஜி, "கீதையின் ரகசியத்தை இன்னுமா நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. தன்னலமற்ற பணி புரிவதே கீதையின் இரகசியம் என்றார். நண்பர் திகைத்து மனம் தெளிந்து போனார்.
G) இ G)
காந்தி அடிகள் 80

மகாத்மாவின் பண்பு
காந்திஜி வாழ்ந்த காலத்தில் அவர் செய்த தவறுகளை தைரியமாக மற்றவர்கள் அவரிடமே சுட்டிக்காட்டுவார்கள். அதனை அவர் பெருந்தன்மையுடன் திருத்திக் கொள்ளும் மாண்பு உடையவராக இருந்தார். ஒருசமயம் காந்திஜி நடத்திய ஆங்கிலப் பத்திரிகைக்கான அர்ஜுனன் அவர் எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரையில் சில பிழைகள் இருந்தன. அந்தப் பிழைகளை லால் பகதூர் சாஸ்திரி காந்திஜியிடமே தைரியமாக சுட்டிக் காட்டியுள்ளார். காந்திஜி தன் தவறுகளை ஒப்புக் கொண்டார்.
இ) G G)
கொள்கை
ஒரு கிராமத்திற்கு காந்திஜி விஜயம் செய்தபோது அவருடன் கவிக்குயில் சரோஜினி தேவியாரும் உடனிருந்தார். காந்திஜி வழக்கமாகப் பருகும் வெள்ளாட்டு பாலும் பச்சை வேர்க்கடலையையும் தேடித் தொண்டர்கள் அந்தக் கிராமத்தில் அலைந்துதிரிந்த போது அவர்களுக்கு அவை கிடைக்கவேயில்லை. அந்தக் கிராமத்தில் துரதிஸ்டவசமாக வறட்சி ஆட்சி செய்துவந்திருந்ததால் அங்கு விளைச்சல் ஏதுமில்லை. ஆனாலும் காந்திஜியின் உணவுக்குக் குறைவைக்க விரும்பாததொண்டர்கள் அடுத்துள்ள கிராமங்களுக்குச் சென்று வெள்ளாட்டுப் பாலையும், வேர்க்கடலையையும் கொண்டு வந்தார்கள. அதற்கோ ஏகப்பட்ட செலவாகி விட்டது. இதனை அறிந்த சரோஜினி, காந்திஜி, நீங்கள் எளிய பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் அந்த எளிய பழக்கத்தின் இன்றைய விலை நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று" என்று கிண்டலாகச் சொன்னார். உடனே தன்னிலை உணர்ந்த தேசத்தந்தை "என் கொள்கையைப் பின்பற்றுங்கள். ஆனால் என்னைப் பின்பற்றாதீர்கள் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
මෙ ම ම
81 இ. சிறிஸ்கந்தராசா

Page 45
கட்டுரை எழுதுவோருக்கும் மேடையில் பேச விரும்புவருக்கும் தகவல்கள்
சந்தனமெடுத்துச்செய்த உருவம் கையில் ஊன்றுகோல், அதுவும் தரைக்கு வலிக்குமேயன்றி அஞ்சியோ என்னவோ மெதுவாக ஊன்றுவார். அருள்பொழியும் முகம், கனிவு ததும்பும் விழிகள். புன்னகை தேங்கியிருக்கும் வாய்ப்பூ விதழ்கள் அவரைச் சுற்றி நூற்றுக்கணக்கானவர் இருக்கின்றனர் என்றாலும் அவர்கள் எல்லாம் பகல் நேரத்து விண்மீன்களாகவும், அவர் மட்டுமே கதிரவனாகவும் நம் கண்களுக்கு காட்சி தருகிறார். அவர் வாய்மையின் வடிவம், அன்பின் திருவுருவம், அவர்தான் கருணைக்கடல் காந்தியடிகள்.
G G G) அறவழியே அவர்வழி. அநியாயத்தை எதிர்க்கும் போது அவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளவும் தயாராக களம் நோக்கிச் செல்வார். இந்திய மண்ணின் சுதந்திரத்தை பெற்றிட அவர் தியாக நெருப்பில் குளித்தார். அடிமைத்தனம் எங்கிருந்தாலும் அவர் அதனைக் களைந்திடவே விரைந்தோடுவார். மனிதனை மனிதன் தீண்டக்கூடாது எனும் சாதிக் கொடுமையை வேரோடு வீழ்த்த கொடி தூக்கினார். சமுதாயத்தை சாய்க்கும் தீமைகளாம் குடியாட்டம் குதிரை ஓட்டம் முதலியவற்றை அறவே ஒழிக்க வேண்டுமென நாளெல்லாம் பாடுபட்டார். அமளிகள் கலகங்கள் குழப்பங்கள், எங்கு நடந்தாலும் அவைகள் ஒயும் வரை உண்ணமாட்டார். உறங்க மாட்டார். மகா வீரரைப் போல் புத்தரைப் போல் வாழ்ந்து காட்டிய அவர் அந்த உலக உத்தமர்தான் காந்தியடிகள்.
G) (9 (9)
காந்தி அடிகள் 82
 

பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகாத்மா வீரருக்குள் வீரர். மகான்களுக்குள்ளே மகான். ஞானிகளுக்குள்ளே பரமஞானி. புத்தரிலே பரமபக்தர். தொண்டருக்குள்ளே தொண்டர். தலைவருக்குள்ளே தலைவர். சென்ற இரண்டாயிரம் ஆண்டு காலத்தில் பாரத தேசத்தில் இத்தகைய ஒரு மகாபுருஷர் அவதரித்ததில்லை.
காந்தியடிகள் ஓர் அரசியல்வாதியாக மட்டும் இல்லை. ஒரு சீர்திருத்தக்காரராக மட்டும் இல்லை. ஓர் ஒழுக்க சீலராக மட்டும் இல்லை. இவை எல்லாம் சேர்ந்த ஒரு மகா புருஷனராகவே இவர் விளங்கினார்.
G G G)
உலகநாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி கப்பல் விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்திலிருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதன் எந்த ஆயுதமும் எடுக்காமல் போர்க்களத்தில் புகுந்தார்.
கடல் போன்ற எதிர்ப்புக்களுக்கு எல்லாம் அசையாது மலை போன்று உறுதியாய் நின்றவர் தீவிர உண்மைகளை சோதனை செய்வதில் சற்றும் தளராதவர், உடல் வருந்தினாலும் தம் உள்ளத் தெளிவை விடாதவர். இவ்வண்ணம் பல அற்புதங்கள் நிறைந்தது அன்னாரது வாழ்க்கை.
G G G) துறவிகளும், மகான்களும் மட்டுமல்ல சாதாரண மனிதரும் அகிம்சையை மேற்கொண்டு வெற்றி பெறலாம் என்று போதித்தவர் மகாத்மா காந்தி,
மனித சரித்திரத்தில் அகிம்சைக் கொள்கையை தனிப்பட்டவரிடம் இருந்து சமுதாய வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பரப்பிய முதல் மனிதர் மகாத்மா காந்தி கடவுள் சத்தியமானவர்.
G G G
83 இ. சிறிஸ்கந்தராசா:

Page 46
காந்திஜி நமது நாட்டின் மாபெரும் தந்தை. நம்மைச் சுதந்திரத்துக்கு அழைத்துச் சென்ற மாவீரர். சத்தியமே கடவுள் என்ற பொய்யா மொழியை உலகுக்கு போதிக்க சத்திய நெறிநின்று தம் வாழ்க்கையையே சத்திய சோதனைக்குள்ளாக்கிய சத்தியாக்கிரகி அவர். அவருடைய அகிம்சை ஓர் இணையற்ற சக்திவாய்ந்த ஆயுதம், அகிம்சை கோழைத்தனமன்று. வீரத்தின் சிகரம் என்பதை உணர்ந்து அதைக் கையாண்டு கத்தியின்றி இரத்தமின்றியுத்தமொன்றுநடத்தி அடிமைத்தளையை அறுத்தெறிந்த பெரியார். எதற்கும் அஞ்சாது நல்லதையே செய்வது என்பது அவரது ஆண்மை.
G G G) ஒரு காலத்தில் புத்தரிடமிருந்து மற்றொரு காலத்தில் திருவள்ளுவரிடமிருந்தும் இன்னொரு காலத்தில் சங்கரரிடமிருந்தும் கடந்த காலத்தில் இந்த நாட்டுக்கு மூலதனமான சிந்தனைகள் கிடைத்ததைப் போல் அண்மைக் காலத்தில் வாய்மையான சிந்தனை மூலதனத்தை அளித்தவர் காந்திஜி இந்திய மக்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய
மூலதனம் காந்தியம் என்னும் மூலதனம்,
G G G) கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம். ஆனால் ஒரு நாளும் தர்மம் தோல்வியடையாது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தியடிகள். ஆங்கிலேய ஆட்சிதான் நமது எதிரியன்றி ஆங்கிலேயர் அல்ல என்பதை/அவர் ஒவ்வொரு உரையிலும் வலியுறுத்தி வந்தவர்.
மாண்புடனே வாழ்ந்து விட்டு மேன்மை மிக அடைந்து விட்ட சத்தியத்தின் இருப்பிடமாம் மாந்தருள் மாணிக்கமாம். அண்ணல் காந்தி மகான் உலகுக்கோர் எடுத்தக்காட்டாக மக்கள் மக்களாக வாழ வழிகாட்டி விளக்கம் தந்த ஒர் உத்தமர். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவன், அகிம்ஷா வீரன், அன்பின் திருவுரு இந்திய விடுதலை வீரன் கல்வித் தத்துவஞானி இவ்வாறு
காந்தி அடிகள் 84

வையகமே வாழ்த்துரைக்கும் அண்ணல் 20ம் நூற்றாண்டின் வாழ்ந்து மறைந்த ஆசிய ஜோதி.
G G G)
காந்திஜி அகிம்ஷை சத்தியம் என்ற இரண்டு முகங்களைக் கொண்ட தர்ம நாணயத்தை உருவாக்கினார் கால தேச வர்த்தமானங்களை கடந்து செல்லும் மதிப்பு அதற்கு உண்டு. உலகிலே கீர்த்தி பெற்ற அனேகர் ஏதேனும் ஒருதுறையில் மட்டுமே மேன்மை பெற்று விளங்கினார்கள். இது வரலாறு பகரும் உண்மை. ஆனால் காந்தி மகானின் அன்புப் பார்வை பட்டு புனிதமடையாத வாழ்க்கையின் எந்தத் துறையுமே இல்லை என்பதை துணிந்து disp6TD.
G G G)
காந்தி இராஜதந்திரி அரசியல்வாதி, சீர்திருத்தச் செம்மல் சமூகத் தொண்டர், சத்தியாக்கிரகி விடுதலை போராளி, தீண்டாமையில் வைரி, மதுவின் எதிரி, மாதர் இயக்கத்தின் தலைமகன் குருபோதகர் மனிதாபிமானி. சர்வதேசமித்திரன் சத்தியபரிசோதகர், ஞானி, புனித மகான், மகாத்மா எனப்பலப்பட காட்சியளிக்கிறார். ஒல்லியான மெல்லிய உடலமைப்புக் கொண்ட இந்தக் குறுமுனி சாதித்தவற்றை போன்று இந்த இருபதாம் நூற்றாண்டினி வரலாற்றில் வேறெந்த தனிமனிதருஞ் சாதிக்கவில்லை.
(3) (3) (3) காந்தி புதுமையின் பிரதிநிதி. புதுமையின் சங்க நாதம். இயற்கையின் தொண்டர். செயற்கையின் எஜமானர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு சுமைதாங்கி, வாழ்கிறவர்களுக்கு கலங்கரை விளக்கம். அவரை கடவுளாக நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதராக இவரை நாம் பின்பற்ற வேண்டுமென்று உலக அறிஞர்களின் கூற்று.
G G G
85 இ. சிறிஸ்கந்தராசா

Page 47
.
மகாத்மா காந்தியின் மணி மொழிகள்
மன்னிக்கும் தன்மையே விரனின் பண்பு.
குறிக்கோளை அடையும் முயற்சியில் தன் பெருமை இருக்கிறதே ஒழிய அதை அடைவதில் அல்ல.
எதிரியால் தாக்கப்படுகின்ற பொழுதெல்லாம் அவனை அன்பினால் வென்றுவிடு!
மதங்கள் மனிதர்களைப் பிரிப்பதற்காக அல்ல, அவை மனிதர்களை ஒற்றுமைப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலட்சியங்ஸ் நடைமுறையில் காரிய சாத்தியமானவையாக இருக்க வேண்டும். இல்லையேல் அவை ஆற்றல் அற்றுப் போதும்.
நம்பிக்கை இல்லாமல் செய்யும் முயற்சி அடிவாரம் இல்லாத கிணற்றை ஆழம் காண முயற்சி செய்வதற்கு ஒட்டாகும். ஜூனன்மையைச் சொல்வதற்காக தூக்குமரம் ஏற வேண்டி வந்தாலும் தயாராக இருங்கள்.
கடவுளை அறிய உண்மை, அவிழிம்சை, அன்பு இம் முன்றும் சிறந்த வழிகளாகும். நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
காந்தி அடிகள் B6
 

.
I.
5.
.
8.
고,
87
கண் பார்வை அற்றவன் குருடன் எல்ல, தன் ஆற்றங் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ. அவன் தான் சரியான குருடன்,
வலிமை என்பது அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. மனத்தின் தூய்மை அதிகம் இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும்.
நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
துரப்மையான இதயம் இல்லாத யாரும் இறைவனின் சந்நிதியை நெருங்க முடியாது
மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் முலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்.
அடக்க மற்ற மனிதன் வெளியிடும் பொய் வதந்திகளால் அவன் மட்டும் அன்றி தன்னுடைய சமுதாயத்திற்கே பெரும் கேட்டினை விளைவிக்கின்றான்.
முன்பின் யோசிக்காமல் அவசரத்தில் யாருக்கும் வாக்குறுதி அளிக்கக்கூடாது. ஒருமுறை வாக்குறுதி அளித்துவிட்டால் உயிர் போனாலும் அதை நிறைவேற்றியே திர வேண்டும்.
எல்லாரும் தம் கடமைகளைப் பற்றி கவலைப்படாமல் உரிமைகளுக்காகவே போராடுவதென்றால் ஒரே குழப்பமும் கலவரமும் தான் இருக்கும்.
உண்மையான மக்களாட்சி என்பது பலமுள்ளவர்களுக்கு உள்ள உரிமைகள் யாவற்றையும் பல மில்லாதவர்களும் எளிதில் பெறச் செய்வதே ஆகும்.
சமூக சேவை பயனுடையதாக இருக்க வேண்டுமானால் படா டோபமின்றிச்செயல்படவேண்டும் வலக்கை செய்வதை இடக்கை அறியாமல் செய்யும்போதுதான் அதுதலைசிறந்த சேவையாகும்.
மிருகங்களை போல நடந்து கொள்ளுகிற எவணும் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.
இ. சிறிஸ்கந்தராசா

Page 48
2.
22.
24
26
27
28
29
30.
3.
32.
33
பிறரிடம் பெறுவது அல்ல மகிழ்ச்சிக்குரிய செயல். பிறருக்கு எதைக் கொடுக்கின்றீர்களோ அதிலிருந்து தான் உண்மையான மகிழ்ச்சி பிறக்கும்.
சத்தியமும் அகிம்சையும் எனது கடவுள். எனது நம்பிக்கையின் முதல் படி அஹிம்சை, கடைசிப்படியும் அஹிம்சையே.
நான் நம்பிக்கையை எப்பொழுதும் இழக்கவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்திலும் நம்பிக்கை என துள்ளத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும். என்றும் எனது நம்பிக்கையைக் கொல்ல முடியாது.
ஆத்மீக மனப்பான்மைக்குப் பீதியின்மையே முதல் தேவையாகும். கோழைகளிடம் தார்மீக மனப்பான்மையைக் காணமுடியாது. எங்கு பீதி நிலவுகிறதோ அங்கு மதம் இல்லை. கடவுளும் இல்லை.
உடலுக்கு உணவு எவ்வளவு அவசியாே அது போல ஆத்மாவுக்குப் பிரார்த்தனை மிகவும் அவசியம்.
ஹிருதய பரிசுத்தத்தில்தான் அழகைக் காண முடியும்.
வாழ்க்கையின் ஒரு மாறுதலே சாவாகும். அதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆதலால் சாவை நாம் எப்பொழுதும் எதிர்பார்க்க வேண்டும். சாவுக்கு அஞ்சுபவன் கோழையே.
அடக்கம் தான் வெற்றிக்கு சாவி.
என்றைக்கும் வாழ்வோம் என்பது போல் நாளையே இறந்து விடுவோம் என்பது போல் வாழ். தொண்டுதான் உண்மை அன்பைக் குறிக்கும். வாய்ச்சொல்
நோக்கத்தைப் பற்றி சந்தேகம் எழுமானால் எது செய்தாலும் தவறாகவே தோன்றும்.
அன்பு எங்கு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. வெறுப்பு
காந்தி அடிகள் 88

34.
35.
36.
37.
38.
39.
40.
4.
42.
43.
45.
46.
அழிவுக்கு முன்னோடி.
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறு இல்லை.
கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதி பார்க்கக்கூடாது.
ஆசையும் கவலையும் சாமர்த்தியத்தை கெடுக்கும்.
பகைமையால் எப்போதும் முடிவுஅழிவுதான்.அன்பு ஒரு போதும் மடிவுவதுமில்லை.
நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகள் அல்ல நம் வாழ்க்கையே.
உழைப்பின்றி உயர்பவர்களை திருடர்கள் என்று தான் கூற வேண்டும்.
கன்னிப் பெண்களின் அழகு துய நடத்தையில் இருக்கிறதே அன்றி அணிகலன்களை அணிவதில் இல்லை.
தேவதாஸ் காந்தி மகாத்மா காந்தியின் மகனாவார். கலப்புத் திருமண கொள்கையை அமுலாக்கும் வகையில் ராஜாஜியின் மகளை மணம் புரிந்தவர்.
நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலே உற்பத்தியாக வேண்டும்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு வீரனாக இருந்தால் உங்கள் திருமணத்தின் போது செய்யப்படும் தேவையற்ற செலவீனங்களை எதிர்த்து நிற்பீர்கள்.
தோல்வி மனச்சோர்வைதருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.
எங்கே ஏழைக்காக ஊக்கத்துடன் நற் செயலாற்றும் அன்பு இருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்.
பகுத்தறிவிற்கு எட்டாத ஒன்றில் நம்பிக்கை வைப்பது குருட்டுத்தனமான நம்பிக்கையாகும்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 49
1869 அக்டோபர் 02 காந்திஜி பிறப்பு
1881
1883
1888 செப்டம்பர்
1891, ஜூன்.
1893, ஏப்ரல்
1896
1896, நவம்பர்
1906,
. 1907,
காந்தி அடிகள்
காந்திஜியின் வாழ்விலே!
ராஜ்கோட் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
அன்னை கஸ்தூரிபாவை
மணந்தார்.
இங்கிலாந்துப் பயணம்.
இந்தியா திரும்பி வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
தென்னாப்பிரிக்கா பயணம்.
இந்தியா திரும்பினார்.
தமது குழந்தைகளுடனும் மனைவியுடனும் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பவும் சென்றார்.
டிலான்சுவாலிலிருந்த ஆசிய மக்களுக்கு 7எதிரான சட்டத்திருத்தத்தை எதிர்த்து
அறப்போர் தொடங்க உறுதி எடுத்துக் கொண்டார்.
வழக்கறிஞர் தொழிலை உதறித் தள்ளிவிட்டு அறப்போரில் இறங்கினார்.
90
 
 

1908,ஜனவரி 10
1908, ஜனவரி 30
1908, பிப்ரவரி 8
1908, ஆகஸ்டு
1908, அக்டோபர்
1909, ஜூன்
1911-12
1912
1913
1913, நவம்பர்9
1913, டிசம்பர் 18
1914, ஜனவரி 21
91
டிரான் சுவாலிலிருந்து வெளியேற மறுத்ததால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
a
ஓர் உடன்பாடு ஏற்பட்ட தால் விடுதலை பெற்றார்
ஒரு பட்டாணியன் அவரைக் கொல்ல முயற்சி செய்தான்.
மீண்டும் அறப்போர்.
மீண்டும் சிறைவாசம்.
೫೫ போக
ஆங்கிலேய அரசிடம் இங்கிலாந்து பயணம்.
ஒரு வாரம் உண்ணாவிரம். 4 மாதங்களுக்குத் தினசரி ஒருவேளைச் சாப்பாடு, பின்னர் 14 நாட்கள் உண்ணாவிரதம்.
ஐரோப்பிய ஆடைகளைத் துறந்தார். பழ வர்க்கங்களை மட்டும் உண்ணத் தொடங்கினார்.
மூன்று பவுன் தலைவரிவிதித்ததை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் தொடங்கினார். கைது
செய்யப்பட்டு விடுதலையடைந்தார்.
மீண்டும் கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத்தண்டனையடைந்தார்.
நிபந்தனையின்றி விடுதலையடைந்தார்.
காந்தி -சுமட்சு உடன்படிக்கை, சத்தியாக்
கிரகம் நிறுத்தப்பட்டது.
இ. சிறிஸ்கந்தராசா

Page 50
1914 :"575)
1914 ஆகஸ்டு
1915, ஜனவரி
1915 மே
I9I5 - It,
1918, ஜனவரி
1919 பிப்ரவரி
1914 ஏப்ரல் f
1919, ஏப்ரல், 8
1919, ஏப்ரல் 13
1919, ஏப்ரல் 14
காந்தி அடிகள்
காந்திஜி இலண்டனில்
இந்தியர் இயங்கு மருந்தகப் படையைத்
திரட்டினார்.
இந்தியா திரும்பினார்.
சபர்மதி ஆசிரமம் தொடங்கினார்.
இரயில் வண்டியில் 3வது வகுப்பில் இந்திய - பர்மா சுற்றுப் பயனம்,
தீர்வையை நிக்க பம்பாயிலுள்ள கெய்ரா மாவட்டத்தில் சத்தியாக்கிரகம் தொடங்கினார்.
ரெளலட்சட்டத்தை நீக்கச் சத்தியாக்கிரக உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
அகில இந்திய சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கினார். நாடெங்கும் வேலைநிறுத்தம்.
பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமிருதசரசில் ஜாலியன் வாலா பாக் படுகொலை,
மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மூன்று நாள் உண்ணாவிரதம்
92
 
 

1919, ஏப்ரல் 18
199, cliff JLL if
2.
1920, ஆகஸ்ட் |
1920 டிசம்பர்
1921, Eg"5Jal
1922 பிப்ரவரி 1
1923 பிப்ரவரி,
2, ,
93
சத்தியாக்கிரக நிறுத்தம்,
நவஜீவன்' ஆசிரியரானார். அக்டோபரில் பங் இந்தியா' ஆசிரியரானார்.
கிலாபத் ஒட்டி இராசப் பிரதிநிதியிடம் துது
கேசரிஹிந்த் மெடல், ஜுலு புத்தமெடல், போயர் புத்த மெடல் ஆகியவைகளைத் துறந்தார்.
அகிம்சா முறையில் நாடு விடுதலை பெறுவ தென்று நாகபுரி காங்கிரசில் ஒரு தீர்மானம் நிறைவேறியர்.
அந்நியத் துணிநீக்க இயக்கம்,
பர்தோலியில் சத்தியாக்கிரகம் தொடங்கப் போவதாக இராசப் பிரதிநிதிக்கு அறிக்கை.
செளரி செளராவில் மக்கள் கொள்னை சூறையில் ஈடுபட்டதால் 5 நாள் உண்ணாவிரதம் தொடங்கினார். சத்தியாக்கிரக நோக்கத் தையும் கைவிட்டார்.
அரசுக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய் யப்பட்டு பி ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
இ. சிறிளப்கந்தராசா

Page 51
1924 ஜனவரி,21
1924 செப்டம்பர் 18
1924 டிசம்பர்
1975, நவம்பர்
1925, நவம்பர்
1928 டிசம்பர்
1929 டிசம்பர்
1931), பிப்ரவரி
| )3). IFF,
1930 மார்ச் 12
| 13 I, (EII: 5
காந்தி அடிகள்
குடல் அனுபந்அறுவைச் சிகிச்சை பிப்ரவரி 3ல் விடுதலையானார்.
இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு 2 நாள் ஐ இன்னாவிரதம் தொடங்கினார்.
பெல்காம் காங்கிரசுக்குத் தலைமை தாங்தினார்.
ஆசிரமவாசிகள் தீரராக நடந்து கொண்டதால் உண்ணாவிரதம் இருந்தார்.
சத்திய சோதனை காந்தியடிகள் தன்வரலாறு எழுதத் தொடங்கினார்.
մեlՐ:Jչ
1929க்குள் இந்தியாவுக்கு டொமினியன் நிலை அளிக்கப்படாவிடில் சதந்திரப் போராட்டம் தொடங்கப் போவதாகக் காங்கிரசில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்தியாவின் முழு விடுதலைக்குப் போராடுவதாக லாகூர் காங்கிரசில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்க முடிவு
உப்புச் சத்தியாக்கிரகம்,
தண்டி பாத்
திரை
கைதுசெய்யப் பட்டு விசாரனையின்பிச் சிறை.
94
 
 
 

1931, ஜனவரி 2ம்
1931, மார்ச்
1981, ஆகஸ்ட், 29
1931 டிசம்பர் 28
1933 ஜனவரி 4
JU 32. (Meri JLILI, 20
32 செப்டம்பர் 2
95
நிபந்தனையின்றி விடுதலை.
காந்தி-இர்வின் உடன்படிக்கை
காங்கிரகத் தூதராக இரண்டாவது வட்ட மேrச மகாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து பயணம்,
இந்தியா திரும்பினார்.
கைது செய்யப்பட்டு விசாரணையின்றிச் சிறையில் தள்ளப்பட்டார்.
அரிசனங்களின் தனித் தொகுதியை ஒழிக்கச் சிறையில் சாகும்வரை உன்ைனாவிரதம்
தம் வேண்டுகோள் ஏற்கப்பட்டதால் உண்ணாவிரதம் நிறுத்தம்.
இ. சிறிஸ்கந்தராசா

Page 52
33. பிப்ரவரி,
933. CEL, 9
1934 ஜனவரி, ப்ே
ஹரிஜன்" பத்திரிகை தொடங்கினார்.
சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது.
உண்ணாவிரதம் முடிந்தது.
சத்தியாக்கிரக ஆசிரமம் கலைக்கப்பட்டது
Iர34 செப்டெம்பர் 17 அக்டோபர் முதல் தேதியிலிருந்து
1934 டிசம்பர் 14
1936, ஏப்ரல், ப்ே
1937 அக்டோபர்,22
13 மார்ச், 13
அரசியலிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.
அகில இந்தியக் கைத் தொழில் மன்றம் தொடங்கினார்.
வார்தா அருகிலுள்ள சேவா கிராமம் தலைமைச் செயலகமாயிற்று.
வார்தா கல்வித் திட்டம்,
ராஜ்கோட்டை சீர்திருத்தம் சம்பந்தமாக உண்ணாவிரதம் தொடங்கினார். இராசப் பிரதிநிதி தலையீட்டால் மார்ச் 7ந் திகதி உண்ணாவிரதம் நின்றது.
காந்தி அடிகள்
96
 

4ெ), செய்டம்பர்
4), அக்டோபர்
1941 டிசம்பர் 30
1942 ஜனவரி 18
| 2. IIri , 27
ஒ42 மே
1942 ஆகஜ்டு.8
1942ஆகஸ்ட்,
Iர43 பிப்பரவரி,
1944 பிப்ரவரி 22
1944.மே,
14:44, செய்-927
14, ஜனவரி2)
1946 பிப்ரவரி
புத்த நிலைமை பற்றி இராசப் பிரதிநிதியைச் சந்தித்தார்.
தனிப்பட்டவர் அனுமதி
சத்தியாக் கிரகத்துக்கு
காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
ர40 அக்டோபரில் நிறுத்தப்பட்ட 'ஹரிஜன்" பத்திரிகையை மீண்டும் தொடங்கினார்.
புதுடெல்லியில் ஸ்டார்போர்டு கிரிப்ஸ்டன் சந்திப்பு
இந்தியாவை விட்டு வெளியேறுமாறு
ஆங்கிலேயரைக் கேட்டுக் கொண்டார்.
குவிட் இந்தியா' தீர்மானம் பற்றி பம்பாயில் நடந்த அ.இ.கா.க.கூட்டத்தில் பேசினார்.
கைது செய்யப்பட்டுப் பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.
2நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
கஸ்தூரிபாய் காந்தி ஆகாகான் சிறையில் உயிர்நீத்தார்.
நிபந்தனையின்றி விடுதலை
பாகிஸ்தான் சம்பந்தமாக ஜின்னாவுடன் பேச்பி.
சென்னைக்கு வருதல்
சென்னையில் பார்லிமெண்டரி தூதுக்குழு சந்திப்பு
இ சிறிளப்கந்தாசா
أو

Page 53
1946 ஏப்ரல்
1948 ஜூன், 30
| r, அக்டோபர்
14ெ7, ஏப்ரல், ப்
1947 ஆகஸ்ட், 15
1947 செப்டம்பர்.
1947 செப்டம்பர்
1948 ஜனவரி 13
காந்தி அடிகள்
ஹெர்பர்ட் ஹவருடன் சந்திப்பு.
LL5TT அருகில் காந்திஜி சென்ற தனி
ரயிலைக் கவிழ்க்க ! முயற்சி.
நவகாளி கலவரப் : பகுதிகளில் கற்றுப் : பயணம்,
அமைதி ஏற்படக் காந்தியடிகள் ஜின்னா பீட்டு அறிக்கை
இந்தியா விடுதலையடைந்தது.
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு கல்கத்தாவில் உண்ணாவிரதம்
73 மணி நேரம் கழித்து உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.
டில்லி கலவரத்தைக் கண்டித்து மீண்டும் காலவரையறையின்றி உண்ணாவிரதம் தொடங்கினார்.
39 943 98.
 
 

1948 ஜனவரி 18 தலைவர்கள் வாக்குறுதியின் மீது
உண்ணாவிரதம் நிறுத்தம்
1948 ஜனவரி 20 வழிபாட்டில் குண்டு வீசப்பட்டது.
1948, ஜனவரி 30 வழிபாட்டுக் கூட்டத்துக்குப் போகும் பொழுது
காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
99 இ. சிறிஸ்சந்தராசா
冉

Page 54
ஆசிரியரின் பிற நூல்கள் திருக்குறள் ஒவியத்தில் திகழும் வர்ண ஜாலங்கள் 135.00 நகைச்சுவைக் கதம்பம் 100.00 பஞ்சவர்ணக் கதம்பம் 150.00 நகைச்சுவைப் பூங்கா 120.00 பல்சுவைக் கதம்பம் 125.00 நகைச்சுவை முத்துக்கள் 100.00 பல்சுவை மணிகள் 100.00
காந்தி அடிகள் 100


Page 55


Page 56


Page 57
WWEL AWAYWAY IEL : (011) 2586
SIGLDI HAVIERDEN LA LIELINIO: (0:1) 2
 

EEEE20
|- [...] [...] Ľ. [−] Lae |- |- No. No.
== ). ! !! !! 1 彭心呼
sae |- ---- Noi 轟 *門. | || || 니口. £ 5 C Ľ
sae |- C s. 5 | 1 C [...]
LE ROAD)
56,020, O77