கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்

Page 1
|× |(-)
 

: ,
స్త్ర
3. % 犯
、
ళ இ
、
| -

Page 2

வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம்
பதிப்பாசிரியர் கலாநிதி மாலினி டயஸ்
பணிப்பாளர் (சிலாசாசனவியல், நாணயவியல்)
தமிழாக்கம் விஸ்வநாத் வஜிரசேனா
(இளைப்பாறிய மொழிபெயர்ப்புக் கண்காணிப்பாளர், அரசகரும மொழித் திணைக்களம்)
தொல்பொருளியல் திணைக்களம், சேர் மாக்கஸ் பெர்னாந்து மாவத்தை, கொழும்பு 07.

Page 3

உள்ளடக்கம்
சனாதிபதி அதிமேதகு ரணசிங்க பிரேமதாச அவர்களின்
D6)
வணக்கத்துக்குரிய பேராசிரியர் வல்பொல ராகுல மாதேரர்
அவர்களின் உரை
பண்பாட்டு அலுவல்கள், தகவல்துறை, சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு வி. ஜ. மு. லொக்குபண்டார அவர்களின் ஆசிச்செய்தி
வல்லிபுரம் பற்றியும் அங்குள்ள இடிபாடுகள் பற்றியும் பண்டைய அறிக்கைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள்
வசப மன்னர் ஆட்சிக் காலத்துக்குரிய வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனம் - பேராசிரியர் எஸ். பரணவிதான
அவர்கள்
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தின் மொழிநடை - பேராசிரியர் வினிேவிதாரண அவர்கள்
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் வருங்காலச் சந்ததி யினருக்காகக் காப்பாற்றப்படுதல் வேண்டும் - கலாநிதி
மாலினி டயஸ் அவர்கள்
வசப மன்னனுடைய ஆட்சிக் காலம் - பேராசிரியர் சிறிமல் ரணவல்ல அவர்கள் w
வட மாகாணத்தின் நிலப்படம்
நிழற்படங்கள்
3一
பக்கம்
01.
05
09
11
14
31
42
49
56
57

Page 4

1991 பெப்புரவரி மாதம் 03 ஆந் திகதியன்று வல்லிபுரம் தங்கத்
தகட்டுச் சாசனத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிப்பதற்காக
சனாதிபதிச் செயலகத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போது
அதிமேதகு சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஆற்றிய உரை
இன்று நாம் அனைவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததொரு வைபவத்தில் கலந்துகொள்ளுகின்றோம். 1982 ஆம் ஆண்டில் நான் இலண்டன் நகரத்தில் இருந்தபொழுது கலாநிதி வல்பொல ராகுல தேரர் அவர்களது உதவியைக்கொண்டு வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தங்கத் தகட்டுச் சாசனம் வல்பொல ராகுல தேரர் அவர்களது நண்பரொருவரிடம் உள்ளதென்பதையும் அதனை 1930 ஆண்டுகளில் தாம் கண்டதாக்வும் மேலும் அவர் அதனை அப்பொழுது தொல்பொருளியல் ஆணைய்ாளராக விளங்கிய கலாநிதி செனரத் பரணவிதான அவர்களுக்கு காட்டியதாகவும் அந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தை மீண்டும் நாங்கள் பெற்றுக்கொள்ளலாமெனவும் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இதன் சரித்திரம்பற்றி ஒரளவு எனக்குத் தெரிந்திருந்தமையால் அதன் முக்கியத்துவம்பற்றி நான் உணர்ந்துகொண்டேன். அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அத் தருணத்தில் என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்தேன். அவ்வுதவிகளைப்பற்றி வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்கள் இங்கு. பேசியபொழுது குறிப்பிட்டதற்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தை மக்களிடம் ஒப்படைக்கக்கூடிய பொருத்தமான தினம் எதிர்காலத்தில் வருமென்றும் அன்றைய தினத் தில் அதனை நாட்டு மக்களிடம் சமர்ப்பித்தல் வேண்டுமென்றும் இலண்டனில் என்னைச் சந்தித்தபொழுது வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்கள் தெரிவித்தார்கள். அத்தங்கத் தகட்டுச் சாசனத்தை மக்களிடம் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்தினை அத்தேரருக்கே வழங்குவேன் என்றும் அதுகாறும் அத்தங்கத் தகட்டுச் சாசனத்தை அத்தேரரிடமே வைத்துக்கொள்வது நல்லதென்றும் அதற்கு அவர்கள் உரிய பாதுகாப்பினை அளிப்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு என்றும் நான் குறிப்பிட்டேன். அண்மையில் ராகுல தேரர் அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு இப்பொழுது தங்கத் தகட்டினைப்பற்றி பொதுமக்கள்

Page 5
2
விசேட ஊக்கம் காட்டிவருகின்றார்கள் என்றும் அதனைப் பொது மக்களிடம் ஒப்படைப்பதற்கு பொருத்தமான காலம் வந்துள்ளதென்றும் தெரிவித்தார்கள். எமது நாடு சுதந்திரம் பெற்று நாற்பத்திமூன்று ஆண்டுகள் நிறைவுபெறும் இந்த நாளில் இந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தை நாட்டுக்கும், மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் ஒப்படைப் பதற்குக் கருதிய வணக்கத்துக்குரிய வல்பொல ராகுல தேரர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். இதுவரை காலம் இந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தைத் தேரர் அவர்கள் தமது உயிரினும் மேலாக பாதுகாத்து வந்துள்ளாரென்பதையும் நான் அறிவேன். இலண்டன் நகரத்திலுள்ள வங்கியொன்றில் இத் தங்கத் தகட்டுச் சாசனம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அது இப்பொழுது எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந் நாட்டு மக்களின் சார்பாக நான் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தங்கத் தகட்டுச் சாசனத்தை ஏற்றுக்கொள்கின்றேன். தொல்பொருளியல் பணிப்பாளர் அதிபதி கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களும் தேசிய நூதனசாலையின் அதிபர் கலாநிதி திருமதி தெல்மா குணவர்த்தனா அவர்களும் இங்கே பிரசன்னமாயிருக்கிறார்கள். பண்பாட்டு அலுவல்கள், தகவல்துறை அமைச்சர் மாண்புமிகு. வி. ஜ. மு. லொக்குபண்டார அவர்களது நம்பிக்கைப் பொறுப்பின்கீழ் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை அவ்வுயர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றேன். தொல்பொருளியல் வித்தகர்கள் சிலரும் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளுகின்ற அறிஞர்களும் இங்கு வந்துள்ளார்கள். அதே போன்று இதற்கு முன்னர் கலாநிதி பரணவிதான அவர்கள் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை வாசித்தபொழுது எடுக்கப்பட்ட நிழற்படப் பிரதிகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பும் இப்பொழுது கிடைத்துள்ளது. அதற்கு வேண்டிய எல்லா வசதிகளும் உண்டென்பது எனக்குத் தெரியும். வேண்டிய ஆய்வுகளை மேற்கொண்டு இதனை உரியவாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் பொது மக்கள் அதனைக் கண்டுகளிக்கக் கூடியவாறு காட்சிக்கு விடப்படவும் இப்பொழுது வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இத் தங்கத் தகட்டின் மூலம் அறியக்கூடிய வரலாற்றுச் செய்திகள் மிக முக்கியமானவைகளாகும். வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் எமது நாட்டின் எல்லாப் பகுதிகளும் ஒற்றையாட்சியின்கீழ் இருந்த தென்பதை இதன் மூலம் அறியலாம். வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் அத்தகைய ஒற்றையாட்சி இருந்ததென்பது இலங்கையின் சகல பகுதிகளில் இருந்தும் கிடைத்துள்ள தொல்பொருளியல் ஆதாரங்

களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கலாநிதி மெண்டிஸ் ரோஹனதீர அவர்கள் அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சிப் போட்டியின் போது சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாவதாக, அந்த ஒற்றையாட்சி நிலவியகாலத்தில் அந்தந்தப் பகுதிகளில் மக்கள் நன்மையினைக்கருதி அரசனுடைய பிரதிநிதிகளாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர் என்பது இத் தங்கத் தகட்டினால் அறியப்படலாம். மூன்றாவதாக, அக்காலத்தில் நாட்டின் எல்லாப் பகுதி களையும் சேர்ந்த மக்கள் தமது ஆன்மீக நலன்கருதி புத்த சமயத்தின் நல்லாசிகளைப் பெற்றிருந்தனர் என்பதும் புலனாகிறது. ஏனைய சமயங்களைப் பின்பற்றியவர்கள் இருந்திருக்கலாமெனினும் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் புலனாகிறது. இம் மூன்று முக்கய செய்திகள் இத் தங்கத் தகட்டின் மூலம் அறிந்து கொள்ளப்படலாம்.
இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை தமிழ் இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வணக்கத்துக்குரிய வல்பொல ராகுல தேரர் அவர்களுக்கு ஒப்படைத்திருப்பது விசேட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். எமது நாட்டு மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் பொது நன்மைக்காகச் சேவையாற்றும்பொழுது அவர்கள் பெருந்தன்மையோடு செயல்புரிவரென்பதை இந்தச் சம்பவத்தால் அறியமுடியும். அத் தமிழ் பெரியார் இப்பொழுது உயிருடன் இல்லை. அவருடைய பெயர் எனக்குத் தெரியுமென்றாலும் வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்கள் அதனை அம்பலப்படுத்தும் வரை நான் அந்தப் பெயரை வெளியிடமாட்டேன். ஆயினும் அறிவிற் சிறந்த அத் தமிழ் பெரியார் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வரலாற்று உண்மையினை உணர்ந்துகொண்டு அதனைப் பாதுகாக்க வேண்டுமென கருதினா ரென்பதை நன்றியறிதலோடு இங்கு குறிப்பிடல் வேண்டும். அதன் வண்ணம் இந்த நாட்டில் பொது நன்மையில் அக்கறைகொள்ளுகின்ற பரந்த மனப்பான்மையுடையவர்கள் பலர் இருக்கின்றார்களென்பதை நாங்கள் அறிந்துகொள்ள முடியும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத் தங்கத் தகட்டுச் சாசனம் எமது நாட்டு மக்களிடையில் சகவாழ்வினையும் சகோதரத்துவத்தினையும் ஏற்படுத்துவதற்குத் துணைபுரியுமென்பதை நாங்கள் அறிந்துகொள்ளுதல் வேண்டும். அத் தமிழ் பெரியார் இதனை அழிப்பதற்கு நினைத்திருப்பாராயின் இதனை அவர் கண்டெடுத்த நாள்களிலேயே அழித்திருக்க முடியும். ஆனால், அவர் அங்ங்ணம் செய்யாது இதனைக் காப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இத்'

Page 6
4.
தங்கத் தகட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தினை எடுத்தியம்பி அவர்களுக்கும் இன்னல் ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து இதனை அவர் காப்பாற்றி உள்ளார். கோவிலுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை நாசம் செய்யாது பாதுகாப்பதற்கும் பின்னர் வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்களுக்கு அதனை ஒப்படைப்பதற்கும் அத் தமிழ் பெரியாரே துணைபுரிந்துள்ளார். கலாநிதி பரணவிதான அவர்கள் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை வாசித்த பின்னர் அதன் செய்திகள் வெளியாகியமையையடுத்து இந்தச் சாச னத்தின் பெருமதிப்பினை யாவரும் அறியக்கூடியதாக இருந்தது. அதன் விளைவாக இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை அழித்துவிடக்கூடிய நிலை இருந்தபோதிலும் அவர் அங்ங்ணம் செய்யவில்லை.
இத் தமிழ் பெரியார் பிறந்த குடும்பத்தில் யாவரும் நாட்டின் எல்லா இன மக்களினதும் நலன்கருதி அருஞ்சேவையாற்றியவர்களென்று வணக்கத்துக்குரிய வல்பொல ராகுல தேரர் அவர்கள் எனக்குத் தெரிவித்தார். அதேபோன்று காலஞ்சென்ற அத் தமிழ் பெரியார் எல்லா இனங்களையும் சேர்ந்த மாணாக்கர்களுக்கு கல்விபுகட்டிய மதிப்புமிக்க ஆசிரியராக இருந்தாரென்றும் வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்களும் அவரிடம் கல்வி கற்றாரென்றும் எனக்குத் தெரிவித்தார். அப் பெரியார் யார் என்பதை உரிய நேரத்தில் அம்பலப்படுத்தும் பொறுப் பினை நான் வணக்கத்துக்குரிய ராகுல தேரர் அவர்களுக்கு வழங்குகின் றேன்.
இந்த வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனத்தை இலங்கை அரசாங்கத் தின் சார்பிலும் இலங்கைவாழ் மக்கள் சார்பிலும் நான் ஏற்றுக்கொள்ளு கின்றேன். அதனை அரச நூதனப்பொருள் களஞ்சியத்தில் தக்கவாறு வைத்துப் பேணுவதற்கும் பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடு செய் வதற்கும் ஆவன செய்வேன் எனக் கூற விரும்புகின்றேன்.

வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனத்தைக் கையளித்த வைபவத்தின்போது வணக்கத்துக்குரிய பேராசிரியர் வல்பொல சிறி ராகுல மாதேரர் அவர்கள்
ஆற்றிய உரை
சனாதிபதி அவர்களே ! இதற்குச் சுமார் ஐம்பத்திநான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் அதாவது 1936 ஆம் ஆண்டளவில் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த எனது நெருங்கிய தமிழ் அன்பரொருவர், ஒருநாள் இரகசியமாக மிகவும் விலையுயர்ந்த ஒரு பொருளை எனக்குக் காட்டினார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையிலுள்ள வடமராட் சிப் பிரதேசத்தில் வல்லிபுரம் என்னும் ஊரின் விஷ்ணு கோவிலின் தர்மகர்த்தாவானவர் எனது நண்பரின் நெருங்கிய உறவினராவர். அவர் கோவில் வளவினைத் தோண்டும் பொழுது அங்கு ஓர் அத்திவாரத்தின் கீழ் இருந்த சாசனத்துடனான தங்க ஏடொன்று கிடைத்துள்ளது. எனது நண்பர் அந்தத் தங்கத் தகட்டினைத்தான் என்னிடம் காட்டினார். அத் தங்கத் தகட்டுடன் வேறு பல தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன வென்று எனது நண்பர் கூறினார். ஆனால், அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இது, இலங்கையில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகட்டுச் சாசனமாகும்.
அக்காலத்தில், நான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராகப் படித்துக்கொண்டிருந்தேன். நான் அந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தை வாசிப்பதற்கு முயன்றபொழுதிலும் என்னால் புரிந்து கொள்ள முடியாத சில சிக்கல்கள் இருந்தன. எனவே, அக்காலத்தில் தொல்பொருளியல் ஆணையாளராகவிருந்த எனது நண்பர் கலாநிதி செனரத் பரணவிதான அவர்களிடம் இத் தங்கத் தகட்டினைக் காட்டி னேன். அவர் புதினத்தாள் செய்தியொன்றை வாசிப்பவரைப்போன்று இதனை எதுவித கஷ்டமுமின்றி வாசித்து ஒப்பற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாசனமாக அது அமைந்துள்ளதெனக் கூறி அதனை இலங்கைச் சிலாசாசனத் தொகுப்பில் வெளியிடுவது பயனு டைத்து எனவும் தெரிவித்தார். அதன் பொருட்டு அத் தங்கத் தகட்டுச் சாசனத்தை ஆராயவேண்டுமெனவும் அதன் நிழற்படமொன்றை எடுக்க வேண்டுமெனவும் கூறி சில தினங்கள்வரை அதனைத் தம்மிடம் வைத்துக்கொள்வதற்கு அனுமதி கோரினார். நான் அதற்கு இணங்கி னேன். இத் தங்கத் தகட்டுச் சாசனத்தைப்பற்றி கலாநிதி பரணவிதான அவர்கள் எழுதிய மிகமதிப்புக்குரிய ஆய்வுக் கடடுரையொன்று இலங்

Page 7
6
கைச் சிலாசாசனத் தொகுப்பின் நாலாம் பாகத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
3 1/2 அங்குலம் நீளமுள்ளதும் ஓர் அங்குலம் அகலமுள்ளதுமான இச் சிறிய தங்கத் தகட்டில் நாலு வரிகளைக்கொண்ட சிறு குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது, மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாகும். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :-
வசப மாமன்னனுடைய ஆட்சிக் காலத்தில் இஸிகிரய என்னும் அமைச்சர் நகதிவத்தை (நாகதீபத்தை) ஆட்சி செய்யும்பொழுது பியங்குகதிஸ்ஸ் என்பவரால் பதகர அதன என்னுமிடத்தில் விகாரை ஒன்று கட்டப்பட்டது ".
(இந்த மொழிபெயர்ப்பு கலாநிதி பரணவிதான அவர்களது வசன அமைப்பின்படி கொடுக்கப்பட்டுள்ளது.)
கி. பி. 126 - 170 ஆம் ஆண்டுவரை அனுராதபுரத்தில் ஆட்சி புரிந்த வசப மாமன்னனுடைய அமைச்சரொருவர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆளுநராக இருந்த காலத்தில் அக்குடாநாட்டின் வட கோடியில் அமைந்த பதகர அதனவில் (இன்றைய வல்லிபுரம் என்ற ஊரில்) பியங்குகதிஸ்ஸ எனப் பெயரிய ஒருவரால் இந்த விகாரை கட்டப்பட்டதென்பது இதன் பொருளாகும்.
அன்று, இச்சம்பவம் நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளில் உள்ளவர் களுக்கு அவ்வளவு முக்கிய செய்தியாக அமையவில்லையாயினும், தங்கத் தகட்டுச் சாசனத்தைப் புதைத்துவைத்த அப்புண்ணியவானின் செயலா னது, பதினெட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழுகின்ற இன்றைய தலைமுறையினரான எங்களுக்கு அதிமுக்கியமான செய்தியாகும். கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணக் குடாநாடும் அனுராதபுரத்து மன்னருடைய ஆணையின் கீழ் இருந்ததென்பது இத்தங்கத் தகட்டுச் சாசனத்தினால் ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத் தங்கத் தகட்டினைக் கண்டெடுப்பதற்கு முன்னர் மகாவம்சம் முதலிய வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபம் என்பது யாது, அது எங்கே அமைந்துள்ளது என்று அறிஞர்கள் பலர் மத்தியில் அபிப்பிராயபேதம் ஏற்பட்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அண் மையிலுள்ள சிறிய தீவுதான் நாகதீபம் என அனுமானித்தவர்களும் இருந்தனர். ஆயினும் இத்தங்கத் தகட்டுச் சாசனத்தால் அக் கருத்து வேறுபாடுகள் யாவும் பிழையானவையென்று தெளிவாகின்றது. இத்

7
தங்கத் தகட்டுச் சாசனம் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடபகுதியில் உள்ள வல்லிபுரத்தில் இற்றைக்கு ஆயிரத்துஎண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர் கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விகாரையொன்றின் அத்திவாரத்திலிருந்துதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்பு புதைக்கப் பட்ட இடத்திலேயே அது இருந்தமைக்கு யாதொரு ஐயமுமில்லை. அந்த விகாரையானது நாகதீபத்தில் கட்டப்பட்டிருந்ததென இத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடியால் நாகதீபம் எனப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடன்றி வேறு ஒரு சிறிய தீவன்று என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
\ . இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை பரணவிதான அவர்கள் பார்வை யிட்ட பின்னர் நான் அதனை மீண்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எனது அன்பரிடம் ஒப்படைத்தேன். அதன் பின்னர் அது எங்கேயிருந்த தென அறியமுடியாமல் இருந்தது. பதினெட்டு நூற்றாண்டுகள் வரை நிலத்துக்குக் கீழே புதைந்திருந்தபடியால், கண்டுபிடிக்கப்பட்டபின் சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடுவதற்காக நிலத்துக்குக் கீழே அடைக்கப்பட்டிருந்த காலத்துக்கு ஈடாகும்முறையில் இத் தங்கத் தகட்டுச் சாசனம் பல நாடுகளில் நீண்ட பிரயாணம் செய்து கொண்டிருந்ததாகத் தெரிகின்றது.
இற்றைக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை என்னிடம் வழங்குவதற்குத் தான் கருதுவதாக எனது யாழ்ப்பாணத்து நண்பர் எனக்குத் தெரிவித்தார். அதற்காக, இந்த அரிய சொத்தினைக் கண்டுபிடித்தவருக்குத் தகுந்த பணத்தைச் சன்மானமாக வழங்குவது நியாயமானதென்றும் குறிப்பிட்டார். அக் காலத்தில் பிரதமராக இருந்த இன்றைய சனாதிபதி அவர்களுக்கு நான் அதனைத் தெரிவித்த பின்னர் உடனடியாகவே அப்பணத்தை கிடைக்க ஆவன செய்தது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதன் பின்னர் இத் தங்கத் தகட்டுச் சாசனம் இலண்டனில் எனது கைக்கு வந்தது. அன்றுதொட்டு இன்றுவரை அதனை நான் பாதுகாப்பாக வைத்திருந் தேன். சனாதிபதி அவர்கள் இலண்டனிலுள்ள எனது ஆவாசத்தில் இந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தைப் பார்வையிட்டாரென்பது எனது ஞாபகம்.
உடன்பிறந்தவொருவரைப் போன்று எனக்கு பலவாறு உதவிபுரிந்த
வரும் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை எனக்குப் பெற்றுத்
தந்தவருமாகிய எனது ஆருயிர் நண்பர் இன்று உயிருடன் இல்லை.
4一

Page 8
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் மறைந்த அன்னாரை நன்றியறிதலுடன் நான் நினைவுகூருகின்றேன். அவரின் ஆன்மா சாந்தி அடைவதாகுக !
சனாதிபதி அவர்களே !
ஈடு இணையற்ற இத் தேசியச் சொத்தினை நான் இதுகாறும் பேணிப் பாதுகாத்து உள்ளேன். வருங்காலத்தில் அதனைப் பாதுகாப்பாகப் பேணுவதன்பொருட்டு இப்பொழுது அதனை நாட்டுமக்கள் சார்பில் தங்களிடம் கையளிக்கின்றேன்.

வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தை அதிமேதகு சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களிடம் சம்பிரதாய பூர்வமாக கையளித்த வைபவத்தின்போது பண்பாட்டு அலுவல்கள், தகவல் துறை அமைச்சர் மாண்புமிகு வி. ஜ. மு. லொக்குபண்டார அவர்கள் ஆற்றிய உரை
இன்றைய தினம் எங்கள் தொல்பொருளியல் வரலாற்றின் பொன் னெழுத்தினால் குறிக்கப்பட வேண்டிய தினமாகும். அதேபோன்று நாளைய தினத்தில கொண்டாடப்படவுள்ள நாற்பத்துமூன்றாவது சுதந் திர தின ஞாபகார்த்த விழாவுக்கு முன்னர் இத்தகைய மதிப்புமிக்க தொல்பொருளொன்றினை பெற்றுக்கொள்வதற்குத் துணைபுரிந்த வணக்கத்துக்குரிய வல்பொல ராகுல தேரர் அவர்கள் எங்கள் நாட்டின் பெருமதிப்புக்கு ஆளாவார் என்று கூறுதல்வேண்டும். எங்கள் சனாதிபதி அவர்கள் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம்கொண்ட தொல்பொருளியல் விடயங்களைப்பற்றி அரசாளும் எந்த மன்னரிடத்தும் காணப்படாத ஊக்கத்துடன் பணிபுரிந்து வருகின்றாரென்பதை அவர் சனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னரும் பிரதம அமைச்சராகப் பதவிவகித்த காலத்தில் இவ்விலையுயர்ந்த சொத்தினைப் பேணுவதற்கு எடுத்த முயற்சியினைக்கொண்டு தெள்ளிதின் அறியலாம். ஆதலால், தொல்பொருளியல் துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர் என்றவகையில் எனது தனிப்பட்ட கெளரவத்தினை அதிமேதகு சனாதிபதி அவர் களுக்கு தெரிவிக்கின்றேன்.
சிங்கள சிறப்புப் பட்டத்துக்காக சிலாசாசனங்கள் சிலவற்றை ஆராயவேண்டியிருந்தபொழுது நான் தேசிய நூதனசாலைக்கு வந்து சிலாசாசனத் தொகுப்பில் நாலாம் பாகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனத்தை பிரதிபண்ணிய விதம் எனது ஞாபகத்துக்கு வருகின்றது. இன்று, தேசிய நூதனசாலையால் ஏற்பாடு செய்துள்ள இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பெரும்பேறாகக் கருதுகின்றேன்.
இந்த ஆண்டில் தொல்பொருளியல் நூற்றாண்டு விழாவினை கொண்டாடவிருக்கின்றோம். தொல்பொருளியல் நூற்றாண்டு விழா வினைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் அதிமேதகு சனாதிபதி

Page 9
10
ரணசிங்க பிரேமதாச அவர்களது தலைமையில் அறிவிற்சிறந்த குழாத்தினர் புடைசூழ மேலைத்தேய, கீழைத்தேய அறிவுக்கடலில் துறைபோந்து மிக்க புகழோடு விளங்குகின்ற ராகுல தேரர் அவர்களிடமிருந்து இத் தங்கத்தகட்டுச் சாசனத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை எமது நற்பேறு மட்டுமன்றி ஒளிமயமான வருங்காலம் எமக்குண்டென்பதன் சகுனமாகவும் உள்ளதெனக் கருதுகின்றேன்.
எமது நாட்டின் பண்டையச் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்ற இந்த நிகழ்ச்சியை ஆராயுமிடத்து கலாநிதி மெண்டிஸ் ரோஹணதீர அவர்கள் கூறியதுபோன்று ஆட்புல ஒருமை, சுபீட்சம், செளபாக்கியம் ஆகியவற் றுடன் இணைந்த வளமலி நாட்டினைக் கட்டியெழுப்பும் வகையில் நாற்பத்திமூன்றாவது சுதந்திர தின நினைவு விழாவினை எடுக்க முடியுமென்பது உறுதியாக உள்ளது. ராகுல தேரர் அவர்கள் இந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தை எவ்வளவு சிரத்தையோடும் மதிப்போடும் காப்பாற்றினாரோ அதே சிரத்தையோடும் மதிப்போடும் பண்பாட்டு அலுவல்கள் தகவல்துறை அமைச்சும் தேசிய நூதனசாலையும் அதனை காப்பாற்றும் எனக்கூறி விடைபெறுகின்றேன்.

வல்லிபுரம் பற்றியும் அங்குள்ள இடிபாடுகள் பற்றியும் பண்டைய அறிக்கைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் (வட மாகாணத்தின் தொல்பொருளியல் பணிகள் பற்றிய சில குறிப்புகள்-திரு. ஜே. டீ. லூவிஸ் அவர்கள், Ceylon Antiquary and Literary Register, Gg5Ts5S II)
" . . . . . . . . . இப்பொழுது நாங்கள் காவலூர் துறைமுகத்தை அல்லது கடல் நீரிணையைத் தாண்டி "அம்ஸ்டர்டாம் " என்னுமிடத்தினூடாகச் சென்று மிகுந்த அக்கறையுடன் வேளாண்மை செய்யப்பெற்ற வளம் மலிந்த இத் தீவினைக் கடந்து செல்வோம். அடுத்ததாக, சுமார் இரண்டு மைல் நீளமுள்ள புன்னாலைப் பாலத்தின் ஊடாகச் சென்று குடா நாட்டின் கடலோரத்தைச் சுற்றி பருத்தித்துறைவரை ஓடும் பாதையில் மேலும் இரண்டு அல்லது மூன்று மைல்களைத் தாண்டிச் செல்வோம். இந்தக் கடலோரப் பாதையின் இறுதியில் வல்லிபுரம் என்னும் கிராமம் உள்ளது. இந்தப் பெயரினைக் கேட்கும்போது அப்பகுதி கிராம மொன்றைவிட விசாலமான நிலப்பகுதியைக் குறிப்பதாகத் தோன்று கின்றது. மரபுவழிக் கதைகளின்வண்ணம் நகரத்துடன் சம்பந்தப்பட்ட பகுதியாகவும் மிகப் பழைய காலத்தில் மணல்மேடுகளால் புதைக்கப்பட்ட ஒரு பட்டணம் இங்கு இருந்ததாகக் கூறப்படுகின்றது. உண்மையில் இவ்விடத்தின் அழகு கண்களைக் கவரும் காட்சியாகும். சாதாரணப் பார்வைக்கு சுண்ணாம்புக் கற்குவியல்களின் தொடர்கள் காணப்படும். அவற்றைத் தாக்கினால் இடிந்துவிழும் சீமெந்துப் பொருளாக இருக்கும். இத்தகைய சீமெந்துப் பாறைகளான மணல் மேடுகள் வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கிச் சுமார் மூன்று மைல்கள்வரை அமைந்துள்ளன. ஓர் இடத்தில் வனைதற் தொழில் செய்தோர் வாழ்ந்த அறிகுறிகள் உள்ளன. சிதறிப்போன தம்பங்கள், ஓடுகளின் துண்டுகள் முதலிய வற்றைக் கொண்ட ஒரு மேடு அங்கு இருக்கின்றது.
அந்த மணல் மேட்டின்மீது பிரமாண்டமான விஷ்ணு கோவில் உண்டு. இக் குடாநாட்டில் நான்கு விஷ்ணு கோவில்கள் உள்ளன. அவை வண்ணார்பண்ணை, புன்னாலை, பச்சிலைப்பள்ளி, இயக் கச்சிக்கு அருகாமையிலுள்ள மல்வில் ஆகிய இடங்களில் அமைந் துள்ளன. இங்குள்ள கோவில் அண்மையில் கட்டி எழுப்பப்பட்டது. அதன் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. வடக்கிலிருந்து தெற்கு வரை (உண்மையில் வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை) கோவில் வளவுக்கும் கடலுக்கும் இடையில் செங்கல்லினால் கட்டப்பட்ட மதி

Page 10
12
லொன்றின் இடிபாடுகள் காணக்கூடியதாக உள்ளனவென இந்தக் கோவிலின் குருக்களான பிராமண ஐயர் அவர்கள் எனக்குத் தெரிவித்தார். அதனை நிரூபணம் செய்வதற்கு மணலைத் தோண்டி செங்கற்துண்டுகள் சிலவற்றை எடுத்து அவர் எனக்குக் காட்டினார். இங்கிருந்து சுமார் 50 யார் வடகிழக்குப் பக்கத்திலிருந்து புத்தரின் உருவச் சிலையொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 1902 ஆம் ஆண்டுவரை அப்புத்தர் சிலை கோவிலின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் குருக்களிடம் கேட்டேன். அவர் மிகுந்த பெருந்தன்மையுடன் அதனை என்னிடம் ஒப்படைத்தார்.
அதற்குப் பிற்பட்ட சரித்திரம் பற்றியும் இங்கே குறிப்பிடலாம். அந்தப் புத்தர் சிலை யாழ்ப்பாணத்தின் பழைய பூங்காவில் உள்ள போதிமரமொன்றின் கீழ் சுன்னாகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வேறு புத்தர் சிலையின் அருகில் தாபிக்கப்பட்டு இருந்தது. 1906 ஆம் ஆண்டில், வல்லிபுரம் புத்தர் சிலையின் பண்டையச் சிறப்பினை அறிந்த சீயம் நாட்டு மன்னர் அதனைப் பெற்றுக்கொள்ள ஆவல் கொண்டிருந்தமையால் மகாதேசாதிபதி அதிஉத்தம ஹென்றி பிளேக் அவர்கள் அந்தப் புத்தர் சிலையினை அம் மன்னனுக்கே அன்பளிப்புச் செய்தார். சுன்னாகம் புத்தர் சிலைக்கு நிழல்தந்த அரசமரம் பட்டுப்போனதால் பழைய பூங்காவிலுள்ள ஏனைய அரசமரத்தடியில் அது இன்றும் கொலுவீற்றிருக்கின்றது. புத்தர் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கற்பலகையொன்றில் அந்தப் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடமும் பழைய பூங்காவிற்கு முதன்முதல் அது கொண்டுவரப்பட்ட திகதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னர் குறிப்பிடப்பட்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயமொன்று பொலிசு விதானையிடம் இருந்ததென்பதை நான் வல்லிபுரத்துக்கு வந்தபொழுது அறிந்துகொண்டேன். 1890 இல் கண் டெடுக்கப்பட்ட இந்த நாணயத்தைப் பெற்றுக்கொண்டு அதனை இனம் காணும் பொருட்டு திரு. பெல் அவர்களுக்கு அனுப்பினேன். இந்த நாணயம் கலப்புத் தங்கத்தினால் ஆக்கப்பட்ட " இரக " அல்லது " தரக " எனப்படும் சிங்கள நாணயம் என இனங்காணப்பட்டுள்ளது. அதற்குச் சில காலத்துக்குப் பின்னர் பண்டத்தரிப்பில் அண்மையில் மேற்கொண்ட அகழ்வொன்றின்போது கண்டெடுக்கப்பட்ட நான்கு செப்பு நாணயங்களை வண. பிதா ஈ. வொர்லாந்தர், ஓ. எம். ஐ. அவர்கள் என்னிடம் கையளித்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். இந்த

13
நாணயங்கள் சீரழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டமை துரதிஷ்ட வசமாகும். அவை லீலாவதி அரசியினது (12, 13 ஆம் நூற்றாண்டுகள்) ஆட்சிக் காலத்துக்குரிய நாணயங்களென அடையாளம் காணப் பட்டுள்ளது.
புத்தர் சிலையும் " இரக " நாணயமும் வல்லிபுரத்தில் புதைந்து போன நகரத்துடன் தொடர்புடையனவெனக் கருதமுடியும். இந்தப் புத்தர் சிலையின் கண்டுபிடிப்பும் அதனை அடுத்து இந்த நாணயங் களின் கண்டுபிடிப்பும் இந்தக் குடாநாடு பண்டுதொட்டு சிங்கள மாவட்டமாக இருந்ததற்குச் சான்று பகருகின்றன. "
(தொல்பொருளியல் திணைக்களத்தின் நிருவாக அறிக்கைகள் -
1905 - 06 T 101 பக்கம்)
"வல்லிபுரத்தின் மணல் நிறைந்த கிழக்குக் கரையோரத்தைப் பரி சோதனை செய்தபொழுது பல்வேறு மட்பாண்டத் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நூதனசாலைக்குக் கொண்டுவரப்பட்டன. வல்லி புரத்துக் கோவில் வளவினையும் பரிசோதனை செய்ததையடுத்து பண்டைய வேலைப்பாடுகள் உள்ள மட்பாண்டத் துண்டுகள் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளன.
(எச். டபிள்யு. கொட்றின்றன் - 1975 மீள் பதிப்பு பக்கம் 22 - 49)
கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள்
யானைச் சின்னத்துடனானதும் சுவஸ்திக சின்னத்துடனானதுமான மூன்று நாணயங்கள், குஷாண ஆட்சிக்குரிய நாணயம் ஒன்று.

Page 11
வசபன் ஆட்சிக் காலத்துக்குரிய வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனம்
எஸ். பரணவிதான
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் வல்லிபுரம்" என்ற கிராமம், தற்பொழுது யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்துமக்கள் பெரும்பான்மையினராக வாழுகின்ற இடமாக இருக்கின்றது. இலங்கை வரலாற்றின் முற்காலப் பகுதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் சிங்கள பெளத்த கலாசாரம் பரவியிருந்ததைப்போன்று, வடக்கிலும் பரவியிருந்தமைக்கு வடமராட்சியில் உள்ள அழிபாடுகள் சான்று பகருகின்றன. கடலுக்கும் இந்த ஊருக்கும் இடையில் அமைந்த மணற்பரப்பின் நான்கு மைல்கள் நீளமாகவும் ஒரு மைல் அகலமாகவும் உள்ள பிரதேசத்தில் பண்டைய மனித வாழிடத்தின் அழிபாடுகள் சிதறிக் கிடந்துள்ளன. அவ்வப்பொழுது கிராமவாசிகளால் கட்டிடங்களின் அத்திவாரங்கள், செங்கற்கள், மட்பாண்டத் துண்டுகள், நாணயங்கள் முதலியவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊரிலுள்ள விஷ்ணு கோவிலுக்கு அண்மையிலுள்ள காணியிலிருந்து இதற்குச் சில வருடங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட அமராவதி பாணியிலமைந்த கல்லினால் செதுக்கப்பட்ட அழகான புத்தர் சிலையொன்று யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பழைய பூங்காவில் வைக்கப்பட்டிருந்தது. அந்த புத்தர் சிலை 1906 ஆம் ஆண்டில் சேர் ஹென்றி பிளேக் ஆளுநரால் சீயம் நாட்டின் மன்னனுக்கு
அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
1936 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு சமீபகாலத்தில் இந்தக் கடிதத்தை வரைதற்கு ஏதுவாகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கத் தகடும் ஏனைய சிறிய தொல்பொருள்கள் சிலவும், விஷ்ணு கோவிலுக்குரிய காணியிலமைந்திருந்த பண்டைய கட்டிடத்தின் அத்திவாரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கண்டு பிடிப்புப்பற்றி தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. இந்தத் தங்கத் தகட்டினை பார்வையிடுதல், நிழற்படமெடுத்தல், இக்கண்டுபிடிப்புப் பற்றிய விபரங்களைப் பெறுதல் என்பவற்றுக்காக ஒழுங்குசெய்து கொடுத்த கொழும்பு சர்வகலாசாலைக் கல்லூரியின் பட்டதாரி மாணவரான

15
டபிள்யு இராகுல தேரர் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றோம். இந்த நிகழ்ச்சிபற்றி அரசாங்கத்தின் பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வரிய தொல்பொருளினை மக்கள் பார்வைக்காக வைக்கக்கூடியநாள் விரைவில் உதயமாகும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.? கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய பண்டைக்காலப் பகுதியில் எழுதப்பட்ட தங்கத் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல்தருணம் இதுவாகும்.
மிக மெல்லிய தங்கத் தகடொன்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் நீளம் 3.3 அங்குலமாகவும் அகலம் ஓரங்குலமாகவும் உள்ளது. அதன் எடை 89 : “ கிரேன்களாகும். தங்கத் தகட்டின் இடது பக்கத்தில் அங்குல அளவிலான இடைவெளி உள்ளது. எஞ்சிய பகுதியில் முதலாவது வரிக்கும் இரண்டாவது வரிக்கும் இடையில் " சித்த " என்னும் மங்கலச் சொல் குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிக்கும் தங்கத் தகட்டின் கீழ்ப் பகுதிக்கும் இடையில் ஆறு எழுத்துக்களைக் கொண்ட நான்காவது வரி நெருக்கமாக எழுதப்பட்டுள்ளது. காலத்தைக் குறிப்பதற்காக குறுகிய கோடொன்று இடப்பட்டுள்ளது.
இந்தச் சாசனமானது கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. அந்த எழுத்துக்கள் இலங்கையில் ஏனைய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள அக்காலத்துக்குரிய சிலாசாசனங்கள் பலவற்றில் உள்ள எழுத்துக்களுக்கு ஒப்பான நிலையில் உள்ளன. எங்ங்ணமாயினும் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் உள்ள எழுத்துக்கள் ஏனைய சிலாசாசனங்களில் காணப்படும் எழுத்துக்களின் அளவுக்கு நேரிய உருவம் கொண்டவை அல்ல. அவை தொடர்ந்தோடும் பான்மையிலமைந்த எழுத்துக்களாகும். எழுத்துக்கள் இங்ங்ணம் அமைவதற்குக் காரணம் அவை, தங்கத் தகடொன்றில்
Pp PP
எழுதியமையேயாகும். எடுத்துக்காட்டாக, و 9ک Јг ஆகிய எழுத்துக்களின் நேர்கோடுகளும் மத்திய " உ " உயிரெழுத்தைக் காட்டுகின்ற கோடும் அதேகாலத்துக்குரிய ஏனைய சிலாசாசனங்களில் காணாதவாறு, கீழ்ப் பகுதியில் இடதுபக்கமாகச் சுருண்டு மேல்பக்கம் நோக்கி செல்கின்றன. " சித்த " என்னும் சொல்லிலுள்ள " சி " எழுத்தின் இடது பக்கக் கோடு சிறு கோண வடிவில் அமைந்துள்ளது. " த்த " என்னும் எழுத்தின் இடதுபக்கக் கோடு இக்காலத்துக்குரிய சிலாசாசனங்களில் காணப்படும் வடிவத்தின்படி அரைவட்டமாக இருக்கவேண்டியதெனினும் அது மூலைவிட்டக் கீறல் இரண்டின்மூலம்
S

Page 12
16
கவனக்குறைவாக இணைக்கப்பட்ட கிடைவடிவ கீறல் இரண்டின்மூலம் இணைக்கப்பட்டுள்ளது. முதலாவது வரியினதும் நான்காவது வரியினதும் இறுதியில் உள்ள "த" எழுத்து கண்ணி வடிவத்தைக் கொண்டிருந்ததெனினும் மூன்றாம் வரியிலுள்ள அதே எழுத்து அந்த வடிவத்தில் எழுதப்படவில்லை. " மெ " எழுத்தின் (இரண்டாம் வரி) இடதுபக்க மூலைவிட்ட வடிவினைக்கொண்ட கீறலானது இடதுபக்கக் கீறலினைவிட மேலேகொண்டு செல்லப்பட்டதுடன் அந்தக் கீறலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள கிடைக் கீறல் தென்பக்கமாக விரிந்து செல்வதில்லை. இரண்டாவது வரியின் இறுதியில் காணப்படுகின்ற " நி” எழுத்தின் மேற்கீறலானது கிடைவடிவத்திலில்லாமல் மூலைவிட்ட வடிவத்திலும் அங்குள்ள "இ" என்னும் உயிரெழுத்தினைக் காட்டும் அடையாளம் சுருண்டுபோகும் வடிவத்திலும் எழுதப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் சாதாரணமாகக் காணப்படுமாறு " ந "எழுத்தின் நீள்கோடு நேரான ஒரு கீறலாக இருப்பதெனினும் மூன்றாவது வரியிலுள்ள " நெ " எழுத்து இடதுபக்கமாக சாய்ந்துள்ளதோடு அதேவரியில் அது மூலக்கோட்டோடு ஒன்றிணையாமல் இடதுபக்கத்தில் ஒன்றிணைந்துள்ளது. அந்த அடையாளத்தின் மேலேயுள்ள குறுகிய கிடைக்கீறல் மத்திய " எ "உயிர் அடையாளத்துடன் ஒன்றிணைந்துள்ளதுடன் நேர்கோட்டின்மீது தென்பக்கமாக விரிந்து செல்வதில்லை. இவைகளும் இச்சாசனத்தி லுள்ள பல்வேறு வித்தியாசங்களும் எழுதும்போது ஏற்பட்ட தொடரெழுத்துப் பாணியால் ஏற்பட்டதெனலாம்.
இக் காலப் பகுதிக்குரிய ஏனைய சிலாசாசனங்களிலுள்ள எழுத்திலக்கண முறைகளுக்கு ஒருவாறு சமமான தன்மையினைக் கொண்ட பண்டையச் சிங்களமொழிநடை இச் சாசனத்தில் காணப் படுகின்றது. அங்ங்ணமாயினும் ஒரே வசனத்தைக்கொண்ட இந்த சாசனத்திற்கு சரியான முறையில் பொருள் கொடுப்பதற்கு அங்குள்ள ஒரு சொல்லின் இலக்கண அமைதிகளை திட்டவட்டமாக கண்டு பிடிப்பது அவசியமாகும். இரண்டாம் வரியிலுள்ள "புஜமெநி” என்னும் சொல்லினை ஆராய்ந்துதான் அந்த இலக்கண அமைதிகளைக் கண்டு கொள்ள முடியும். "புஜமெநி” என்னும் சொல்லின் வேற்றுமை விகுதிகள் கவனத்திற்கெடுக்காமல் அந்த சொல்லினை ஆராயும் போது அது, "புஜ்" என்ற வினையடியைக்கொண்ட பாளி மொழியில் உள்ள "புஞ்ஜமான" என்னும் நிகழ்காலத் தொழிற்பெயர் வடிவுக்கு முற்றிலும் ஒப்பானதாகும். ஆயினும், அந்தச் சொல்லின் வேற்றுமை விகுதிகள் யாவை என்பது பற்றித் திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலை உண்டு. "நகதிவ

17
புஜமெனி" என்ற சொற்றொடர் "அமெதெ இஸிகிரயெ" என்ற சொற்றொடரின் அடைமொழியாகக் கொண்டு பின்னர் எழுதப்பட்டுள்ள இரண்டு சொற்கள் முதலாம் வேற்றுமை ஒருமைக்கிளவிகளாகக் கொண்டால் "புஜமெநி” என்ற சொற்றொடரும் ஒரே வேற்றுமை யினையும் (முதலாம் வேற்றுமை) ஒரே எண்ணினையும் (ஒருமை எண்) உணர்த்தும் பதமாகக் கருதுதல் வேண்டும். "இ" எழுத்து இறுதியில் முடிகின்ற முதலாம் வேற்றுமை வடிவங்கள் இக் காலத்துக்குரிய சிங்களமொழியில் சில இடங்களில் காணப்படுகின்றன. ஆயினும், எங்களுக்குத் தெரிந்தவாறு, முன் எழுத்திலுள்ள "அ" அகரம், "எ" எகாரமாகத்திரிந்த வேறு இடங்கள் இல்லை.
இந்த ஐயத்தினை நீக்கும் பொருட்டு, பேராசிரியர் கைகர் அவர்களால் ஆராயப்பட்ட நவீன சிங்கள மொழியில் பரவலாகக் காணப்படுகின்ற " மின் " என்னும் விகுதியைக்கொண்ட நிகழ்காலத் தொழிற்பெயர் வடிவத்துக்கு சமமான ஒரு சொல்லமைப்பாக "புஜமெநி " என்னும் பதம் இருக்குமா என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். நிகழ்காலத் தொழிற்பெயர்களை ஆக்கிக்கொள்ளும் விகுதியான " மான " முன்னர் கொள்ளப்பட்டதெனினும் பேராசிரியர் கைகர் அவர்களின்
" என்பதன் வளர்ச்சியாக " மின் " என்னும் விகுதி
கருத்தின்படி அது, "ம " என்னும் தொழிற்பெயரின் மூன்றாம் வேற்றுமையின் சொல் வடிவாகும். இந்தக் கருத்தினை ஏற்றுக்கொள்வோமாயின் " புஜமெனி " என்பது " புஜம " என்பதன் மூன்றாம் வேற்றுமையின் ஒருமை வடிவமாகவும் தற்காலச் சிங்கள மொழியின் " புதிமின் " என்பதற்கு சமமான வடிவமாகவும் கொள்ளுதல் வேண்டும். ஆனால் "ம " கார விகுதியினைக் கொண்ட தொழிற்பெயர்கள் இரண்டாம் நூற்றாண்டினைப்போன்ற பழைய காலத்தில் பிரயோக சிங்கள மொழியில் ஆளப்படவில்லையென்பதைக் குறிப்பிடல் வேண்டும். இந்த இரண்டு பத உரைகளின் எந்தவொரு பதவுரையின்படியும் வசனத்தையமைத்துக்கொள்ளுமிடத்து “ அமெதெ இஸிகிரயெ " என்ற சொற்றொடர் முதலாம் வேற்றுமையைக் கொண்டுள்ளது.
இந்தச் சொற்றொடருக்கு வேறுவிதமாகவும் பொருள் கூறலாம். "புஜமெநி " என்னும் சொல் ஏழாம் வேற்றுமை ஒருமைச் சொல்லாக இருப்பதனால் " அமெதெ இஸிகிரயெ நகதிவ புஜமெநி " என்னும் சொற்றொடர் காலங்காட்டும் ஏழாம் வேற்றுமையில் அமைந்த சொற்றொடராகவும் எடுத்துப் பொருள் கூறலாம். அங்ங்ணம் எடுக்கும்

Page 13
18
பொழுது அது, பாளி மொழியில் உள்ள " புஞ்ஜமாநே " என்பதற்குச் சமமாகும். " புஜமெநி " என்பது " புஞ்ஜமாநே " என்ற சொல்லின் மறுவடிவமான " புஜமநெ " என்பதன் திரிபாகும். அது பின்பு, உயிரெழுத்துக்களின் இசைவிணக்கத்தின் விளைவாக " புஜமெநெ " என்ற வடிவம் கொண்டுள்ளது. அப்பொழுது " எ "எகரமானது, " இ " இகரமாக மாறி " புஜமெநி " என்ற வடிவம் பிறந்துள்ளது." " புஜமெநி " என்பதற்குக் கொடுக்கப்படும் இந்தப் பொருள் விளக்கத்தின்படி " அமெதெ " என்ற சொல்லும் " இஸிகிரயெ " என்ற சொல்லும் காலத்தைக் காட்டும் ஏழாம் வேற்றுமையில் எழுதப்பட்டுள்ளதெனக் கொள்ளுதல் வேண்டும். அதன்வண்ணம், " அமெதெ இலிகிரயெ நகதிவ புஜமெநி " என்ற சொற்றொடர் பாளி மொழியில் எழுதும்பொழுது " அமெச்சே இஸிகிரயே நாகதீபம் புஞ்ஜமானே " என்று மொழிபெயர்க்கப்படல் வேண்டும். இக் காலத்துக்குரிய சிலாசாசனங்களில் உள்ள ஏழாம் வேற்றுமை ஒருமைவிகுதி "ஹி”* ஆகும். இதுவரை எங்களால் ஆராயப்பட்ட ஏழாம் வேற்றுமைக்குரிய அத்தகைய சொற்கள்யாவும் ஒன்றன்பால் (நபுஞ்சக லிங்கம்) பெயர்களாகும். ஆனால், நாங்கள் இச்சாசனத்தில் ஆராய்ந்த பெயர்கள் யாவும் ஆண்பாலினைக் குறிப்பதோடு " எ " என்னும் விகுதியைக் கொண்டனவாகும். " . " எகர pluúlíř இறுதியினைக்கொண்ட ஏழாம் வேற்றுமை ஒருமைச் சொல் வடிவங்கள் நபுஞ்சக லிங்கப் பெயர்களிலும் சிலபோது காணப்படலாம். எடுத்துக்காட்டாக 11 ஆவது சிறிநாக மன்னனின் வெஸ்ஸகிரிய சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள “ அதெ குறிப்பிடலாம். தற்காலச் சிங்களத்தில் ஏழாம் வேற்றுமை ஒருமைச்சொல் வடிவத்துக்காக " எ " எகரவிகுதி ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது."
என்ற சொல்லைக்
இந்தப் பொருள் விளக்கத்தின்படி, செய்வினையின்பாற்பட்ட வினைமுற்றொன்றின் பயனைப் பலமாக உணர்த்துகின்ற " கரிதெ " என்னும் இறந்தகால செயற்பாட்டு வினையெச்சத்தின் எழுவாயாக " ஒளிலிகிரயெ " என்னும் சொல் பயன்படுத்தப்பட முடியாது. வேறு எழுவாய்தான் பயன்படுத்தப்பட வேண்டும். முதலாம் வேற்றுமை விகுதி சேர்க்கப்படாத நிலையில் இருந்ததெனினும் " பியகுக திச " என்னும் சொல் இந்த வாக்கியத்தின் முதலாம் வேற்றுமையைக் கொண்ட எழுவாயாக எடுத்துக் கொள்ளப்படலாம். முதலாம் வேற்றுமையின் பயனைக்கொண்ட இத்தகைய அரைகுறையான சொற்பிரயோகங்கள் இக்காலத்துக்குரிய ஏனைய சிலாசாசனங்களிலும்

19
காணப்படலாம்." " புஜமெநி " என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள ஏனைய பொருள் விளக்கத்தினை அதாவது " இஸிகிரயெ ” என்னும் சொல் எழுவாயாக கொள்ளப்படுமாயின் அதனையடுத்துள்ள " விஹர " என்னும் சொல் " பியகுக திச " என்பதுடன் தொகுத்து நிற்கும். இந்த சாசனத்துக்குப் பொருள் கூறுவதற்கென நாங்கள் இங்கே கடைசியாகக் கூறப்பட்ட பொருள் விளக்கத்தினை கையாளுகின்றோம். எனினும், ஏனைய இரண்டுபொருள் விளக்கங்களைப் பிழையானவையெனக் கூறி நிராகரிக்கவும் மாட்டோம்.?
9.
bs
வஹ(ப) அரசனுடைய (வசப, கி. பி. 126 - 170 வரை) ஆட்சிக் காலத்துக்குரிய இந்த சாசனம் இஸிகிரய எனப் பெயரிய அமைச்சர் நகதிவ (நாகதீபம்) த்தில் ஆளுநராக விளங்கிய காலத்தில் பியகுகதிச என்பவரால் பதகர அதன என்னும் இடத்தில் விகாரையொன்று கட்டிய செய்தியை குறிப்பிடுகின்றது.
இந்தச் சாசனத்தில் "வஹ " என்று எழுதப்பட்டுள்ள அரசபெயர் "வஹப" என்பது திட்டவட்டமாக விளங்குகின்றது. "வஹ" என்னும் இரண்டு எழுத்துக்களினால் உணர்த்தப்பட்ட ஏனைய அரசனுடைய பெயரொன்று முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் உள்ள ஆவணங்களில் காணப்படுவதில்லை. அதனால், இந்தச் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ள "வஹயஹ" என்ற இடத்தில் வரவேண்டிய "ப" எழுத்தை செதுக்கியவர், தமது கவனக்குறைவால் அந்த எழுத்தினை குறிக்கவில்லையாதலால் அது எழுத்துப்பிழையாகக் கருதலாம். அங்ங் னம் கூறும்பொழுது, அதனை எழுதியவர் நாட்டினை ஆண்ட மன்னருடைய பெயரைப் பதிவு செய்வதில் அவ்வளவு கவனம் எடுக்கவில்லையென்பது தெளிவாகின்றது. அதேபோன்று, இத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் இந்தச் செய்தியைப் பொறித்தவர் எழுத் தறிவற்றவராக இருந்தாலன்றி இத்தகைய பெரும் பிழையொன்றைச் செய்வதற்கு இடமில்லையென்று அனுமானிக்கலாம். எனவே, இந்தப் பிழை எழுத்துப் பிழையாகக்கொண்டு முடிவெடுப்பதற்கு முன்னர், இதற்கு ஏதுவான ஏனைய காரணங்கள் உள்ளனவாவென்பதை ஆராய்வது சாலப் பொருத்தமாகும்.
பண்டைய இலங்கையிலும் பண்டைய இந்தியாவிலும் ஆட்க ளது பெயர்கள் குறிப்பிட்டவொரு பொருளை உணர்த்துவனவாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததென்பது யாவரும் அறிந்த உண்மையாகும். பல சந்தர்ப்பங்களில் பொதுப் பெயருக்குப் பதிலாக அதே கருத்தினை உணர்த்துகின்ற மறுபெயர்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உதா

Page 14
20
ரணமாக, மஹாவமிசத்தின் ஆசிரியரால் பராக்கிரமபாகு மன்னரைக் குறிப்பதற்கு மன்னரைக் குறிப்பதற்கு “விக்கந்த - பாகு" " என்ற சொல்லும் "விக்கம - புஜ' என்ற சொல்லும் விஜயவாகு மன்னரைக் குறிப்பதற்கு "விஜய - புஜ" * என்ற சொல்லும் பாவிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்
S pp
கூறலாம். பண்டையச் சிங்கள மொழியிலுள்ள “வஹப" என்னும்
பரகந்த - புஜ " " என்னும் சொல்லும் விக்கிரமபாகு
சொல்லும் அதன் பாளி வடிவமான "வசப" என்னும் சொல்லும் "இடபம்" என்ற பொருளினையும் "மிகச் சிறந்தவர்" என்ற பொரு ளினையும் உணர்த்துகின்ற "விருசபம்" என்ற வடமொழிச் சொல்லி லிருந்து பிறந்துள்ளன. இந்த வடமொழி சொல்வடிவம் பலவிடங்களில் அதன் கடைசியிலுள்ள "ப" எழுத்து இல்லாமல் "விருச” என்ற வடிவத்திலும் ஆளப்பட்டுள்ளது. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய பண் டையச் சிங்கள மொழியில் "விருசப" அல்லது "விருச" ஆகிய இரண்டு வடமொழிச் சொற்களிலிருந்தும் மருவிய இரண்டு சிங்களச் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்குமாயின் இந்த சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ள "வஹ" என்னும் பதம் பிழையான உபயோகமாகக் கொள்ளாது அதன் மருஉ எனக் கொள்ளலாம்.
இத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் குறிப்பிடப்படுகின்ற "இஸ்கிரிய" "பியகுதிஸ" ஆகிய பெயர்கள் ஏனைய நூல்களில் காணப்படுவனவல்ல. இஸிகிரய என்னும் பெயர் இத் தேசத்துக்குத் தொடர்பில்லாத பெயராக இருப்பதுடன் அதன் சிங்கள வடிவம் எத்தகைய வடமொழிப் பெயரைத் தழுவியிருந்ததென்பதைக் கண்டுபிடிப்பது அரிதாகும். அதன் கடைசி இரண்டு எழுத்துக்கள் இன்றைய தமிழ் பெயர்களில் கடைசியாக உள்ள “ராயன்” அல்லது "ராயர்" ஆகியவற்றுக்குச் சமமாக இருப்பதைக் காணலாம். ஆயினும், "இஸிகி” என்பதன் தமிழ் மொழி வடிவம் தெளிவற்றதாக உள்ளது. பியங்கு (தீப) தீபம் என்ற இடத்தில் வாழ்ந்த திஸ்ஸ எனப்பெயரிய ஒருவர் பியங்குகதிச என்ற சொல்லால் குறிக்கப் படுவார். இப்பெயர் விகாரையின் பெயராகக் கொள்ளுவோமாயின் இந்த சாசனம் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்தவராக இருக்காவிட்டாலும் பியங்குகதிஸ்ஸ என்பவருடைய பெயரில் அந்த விகாரை கட்டப்பட்ட தென்பதைக் கருதலாம். பியங்கு தீபத்தில் வாழ்ந்த திஸ்ஸ என்னும் தேரர் ஒருவர் பற்றி துட்டகைமுனு மன்னனுடைய கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 அந்த மன்னன் பேராபத்தொன்றை எதிர் நோக்கியிருந்தவோர் சந்தர்ப்பத்தில் மேற்சொல்லப்பட்ட தேரர் அம் மன்னனுடைய அன்னதானத்தை ஏற்றுக்கொள்வதற்காக ஆகாய

21
மார்க்கமாக வந்தடைந்தாரென்று அக் கதையில் கூறப்பட்டுள்ளது. மகாவமிசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின்படி பியங்கு தீபத்தைச் சேர்ந்த திஸ்ஸ தேரர் அட்டசித்திகளைப் பெற்றிருந்த சங்கப் பிதாவாக கருதப்பட்டவராதலால் பின்னொரு காலத்தில் அவரின் நினைவாக விகாரையொன்று கட்டப்பட்டதென்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
புத்தபகவான் இலங்கைக்கு மூன்று தடவை விஜயம் செய்தாரென்று மகாவமிசத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக விஜயம் செய்த இடம் நாகதீபமாகும்." இந்தச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பூகோளப் பெயரான "நகதிவ” என்ற இடம் நாகதீபத்துக்கு சமமானதாகும். புத்த தருமத்தை இத் தீவுக்குக் கொண்டுவந்த செய்தியோடு தொடர்பு கொண்டுள்ள நாகதீபமானது பத்தாம் நூற்றாண்டுவரை எழுதப்பட்டுள்ள வமிச வரலாற்றுக் கதைகளில் எடுத்தாளப்பட்டுள்ளது.* நாகதீபம் என்ற இடம் இலங்கையின் வடபகுதியில் அமைந்த ஓரிடமெனக் கருதப்பட்டு வந்ததெனினும் " கலாநிதி போல் ஈ பீரிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட "நாகதீபமும் யாழ்ப்பாணத்து பெளத்த அழிபாடுகளும்” ? என்ற கட்டுரையால் அந்த ஐயம் நீங்கி உண்மையினை அறியக்கூடிய நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தொல்பொருளியல் ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை எடுத்துரைத்த அந்தக் கட்டுரையால் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் நாகதீபம் என்று அக்காலத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளதென்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கலாநிதி பீரிஸ் அவர்கள் தமது மூல நூலாக இலங்கையின் விகாரைகளின் விபரங்களைப் பதிவுசெய்துள்ள பிற்காலத்துக்குரிய ஆவணமான "நம்பொத " " என்ற நூலைப் பயன்படுத்தி உள்ளார். இதுவரை இனங்காணப்பட முடியாத யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் சில தமிழ்ப் பட்டணத்தில் (தமிழ்த் துறைமுகம்) உள்ள நாகர் கோவிலுடன் சேர்க்கப்பட்ட வணக்கத் தலங்களின் தொகுதியாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய "தமிழ்ப் பட்டணம்" என்ற இடமானது தற்போதைய யாழ்ப்பாண நகரமென கலாநிதி பீரிஸ் அவர்கள் இனங்கண்டுள்ளார். இந்தக் கட்டுரையைச் சமர்ப்பித்ததை யடுத்து நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போது கலாநிதி பீரிஸ் அவர்களது நாகதீபம் இனங்கண்டு கொண்டமைக்குச் சான்றுபகருகின்ற சில செய்திகளை மணிமேகலையிலிருந்து முதலியார் சி. இராசநாயகம் அவர்கள் எடுத்துக் கூறினார். இங்ங்ணம் நாகதீபம் எங்கேயமைந் துள்ளதென்பதை நிரூபிப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி அக்காலத்தில் சில சந்தேகங்கள் நிலவியதெனினும் இப்பொழுது அதன் உண்மையினை பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.? ஆனால், பண்டைய

Page 15
22
காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டை நாகதீபம் என்று குறிக்கப் பட்டுள்ளதை இத் தங்கத் தகட்டுச் சாசனம் ஐயந்திரிபற எடுத்துக் காட்டுகின்றது.
இத் தங்கத் தகட்டுச் சாசனம் இரண்டாம் நூற்றாண்டில் அது வைக்கப்பட்ட இடத்திலிருந்தேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்பதை, அது கண்டுபிடிக்கப்பட்ட சூழலினை உற்று நோக்கும்போது நிச்சயமாக அறியக்கூடியதாக உள்ளது. விகாரை ஒன்று கட்டப்பட்ட செய்தியைக் குறிக்கும் இந்தச் சாசனத்தில் அக் காலத்தில் முழுநாட்டினையும் ஒரு குடையின்கீழ் ஆண்ட மன்னனுடைய பெயர் மட்டுமன்றி அக் காலத்தில் நாகதீபத்துக்கு ஆளுநராக இருந்த மண்டலாதிபதியின் பெயரும் காணப்படுகின்றன. நாகதீபம் எனக் கூறப்பட்டுள்ள நிருவாகப் பிரதேசத்துக்குள் சம்பந்தப்பட்ட விகாரை அமைந்திருக்கவில்லை யாயின் அந்த விகாரை நிறுவப்பட்ட காலம்பற்றி அதிலுள்ள செய்தி பொருத்தமாக இருந்திருக்கவில்லை என எண்ணலாம். இந்த வழி பாட்டுக் கட்டிடத்தின் அத்திவாரம் அமைந்திருந்த காணி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் இருந்தமையால் நாகதீபம் என்னும் பெயரால் சுட்டப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு என்பது வெள்ளிடைமலை*
இரண்டாம் நூற்றாண்டில் நாகதீபம் அனுராதபுரத்தைச் சேர்ந்த மன்னனுடைய அமைச்சரொருவரால் நிருவகிக்கப்பட்டு வந்தமையும், சிங்களமொழி அக் காலத்தில் அங்கு வழங்கிவந்தமையும், பெளத்த வழிபாட்டுத் தலங்கள் அங்கு கட்டப்பட்டிருந்தமையும் இத்தங்கத்தகட்டுச் சாசனத்தால் நிரூபிக்கப்படுகின்றன. இலங்கையில் எழுதப்பட்ட் பாளி நூல்களிலும் வமிச வரலாறுகளிலும் நாகதீபம் பற்றி குறிக்கப்பட்ட செய்திகளின்படி அப்பகுதியில் பண்டைக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இனரீதியாகவும் மொழிரிதியாகவும் மதரீதியாகவும் தீவின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு ஒப்பானநிலையில் இருந்தனரென்பது புலனாகும். இதன்வண்ணம், பண்டைச் சிங்கள மக்களின் அரசியல், மத, பண்பாட்டு வரலாற்றுடன் இத் தீவின் வடபகுதியும் எல்லாவிதத்திலும் இணைந்திருந்ததென்பது நிரூபிக்கப்படுகின்றது. மக்கள் தொகையின் தமிழ் மக்களது இனவிகிதாசாரம் தீவின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வடபகுதியில் அதிகரித்துக்கொண்டு வந்ததெனினும் முன்னர் கூறப்பட்ட ஒற்றுமையானது பொலன்னறுவைக் காலத்தின் இறுதிவரை இடையறாது நிலவிவந்தது.
விகாரை கட்டப்பட்டிருந்த இடமான "பதகர அதன" என்பது ஐயத்துக்கிடமின்றி இன்றைய வல்லிபுரத்தின் பழைய பெயராகும். "பதகர" என்னும் சொல் பாளி மொழியில் உள்ள "பத்தாகர" அல்லது

23
"பத்தகர" என்ற சொற்களுக்கு ஒப்பானதாகும். “அதன" என்னும் சொல் கிறித்துவுக்குப் பின்னரான நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட சிலாசாசனங்களில் குறிப்பிடப்பட்ட இடப்பெயர்களில் ஒன்றாக இருப்பதெனினும் வமிச வரலாறுகளில் "பதகர அதன" என்னும் இடப்பெயரொன்று? குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. “பியகுகதிச" என்னும் சொல்லிலுள்ள "பியகுக" என்னும் சொல் மகாவமிசத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள "பியங்குதீபம்" என்ற தீபத்தோடு ஒத்திணைந்துள்ளது.* பியங்குதீபம் என்பது "நம்பொத" என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள “புவங்குத் தீவாக" இருக்கலாம் என்பதுடன் இப்பொழுது யாழ்ப்பாணத்துக்கு தென் மேற்கிலுள்ள சிறிய தீவான புங்குடு தீவு ஆக அது இருக்கலாம்.
இறுதியாக, எழுத்துப் பொறிக்கப்பட்ட இத்தகையத் தங்கத் தகடு வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடமொன்றின் அத்திவாரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தமைபற்றி ஒரு வார்த்தை கூறவேண்டும். வருங்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ளும் பொருட்டு வரலாற்றுத் தகவல்களைக் கொடுக்கும் நோக்கத்துடன் அது செய்யப் படாதமையைத் திடமாகக் கூறலாம். தங்கச் சாசனம் அங்ங்ணம் புதைக்கப்பட்டபொழுது மனிதர்களால் அதனைக் காணமுடியாததால் அந்தச் சாசனத்தால் பயனேதும் ஏற்படாது. அது, எழுதாத ஆவணத்துக்கு ஒப்பானதாகும். அந்தக் கட்டிடத்தை இடித்த பின்னர் அல்லது அதன் அத்திவாரத்தினை அகழ்ந்தெடுத்த பின்னர்தான் அதனைக் காணும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஒருவர் செய்த அறச்செயலை அதற்குச் சம்பந்தமான கட்டிடத்தை இடித்த பின்னர் மக்கள் அறியக்கூடிய நிலை ஏற்படுமாயின் அந்தக் கட்டிடத்தை எழுப்பியவர்களது மனதில் எத்தகைய பூரிப்பும் ஏற்படாது. மேலும், தங்கச் சாசனத்தை அகழ்ந்தெடுத்த பின்னர் அதில் எழுதப்பட்டுள்ள பண்டைக்கால செய்திகளைவிட அதிலுள்ள தங்கத்தை மாத்திரம் மதிக்கின்ற ஒருவரது கையில் அது அகப்படும் என்ற எண்ணம் இந்தக் கட்டிடத்தை நிறுவியவரது உள்ளத்தில் எழுந்திருக்கலாம். எனவே, வணக்கத் தலத்தினை எழுப்பியவர் தமது அறச் செயலினைத் தம்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் தெரிவிக்கக் கருதினாராயின் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் செய்யப்படுவதைப் போன்று அந்தச் செய்தியினை, பகிரங்கமான இடத்தில் கல்லில் செதுக்கி வைத்திருக்கலாம். இந்தத் தங்கத் தகட்டுச் சாசனம் நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்தமையால் அது கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்காக அல்லது தற்காலத்தில் வாழ்ந்த
6

Page 16
24
வர்களுக்காக எழுதப்பட்டதொன்றல்ல எனவும் விண்ணுலகத்தில் பிறந்தவர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படலாம்.
"விகாரையொன்றைக் கட்டியெழுப்பிய ஒருவர் தாம் ஆற்றிய அறச்செயலினை இங்ங்ணம் விண்ணுலகத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் யாது ? இலங்கை மக்களிடையில் பரவியிருந்த பெளத்த நம்பிக்கைகளின்படி சக்கர பவனத்தில் வாழுகின்ற தேவர்கள் மனித வர்க்கத்தின் ஒழுக்கநெறி மேம்பாடு பற்றிய அக்கறைகொண்டுள்ளனராதலால் நற்செயல்களைப் புரிகின்ற மனிதர் களது கருமங்களைப் பதிவு செய்யும் நோக்கில் ஒவ்வொரு பெளர்ணமி நாளன்றும் மண்ணுலகத்துக்கு வருவார்கள். பெளர்ணமி நாளன்று இங்ங்ணம் வந்து மனிதர்களுடைய அறச்செயல்களைத் தங்கத்தாலான நூலொன்றில் குறித்துக் கொண்டு தேவர் சபையில் வாசித்து, மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் பிறக்க உள்ளவர்களின் பெயர் களைப் பிரகடனப்படுத்துவார்கள். இத்தகைய சோதனைப் பயணங்களின் போது தேவர்கள் நிச்சயமாக மனிதக் கண்ணில் படாதவற்றை காணக்கூடியவர்களாக இருப்பதனாலும் விகாரை யொன்றின் அத்திவாரத்தைத் தேவர்களால் சோதனையிட்டுப் பார்க்கும் ஓரிடமானதாலும் இத் தங்கத் தகட்டுச் சாசனம் அவர்களது கண்ணில் படுமென்பது திண்ணமென்று விகாரையினை எழுப்பியவர் நினைத்து தேவர் சபையின் தேவர்களால் விண்ணுலகத்துக்கு வரவழைக்கப் படுபவராக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு எண்ணி யிருக்கலாம். விகாரையினைக் கட்டப்பட்ட திகதியினையும் ஏனைய தகவல்களையும் விபரமாக எழுதியுள்ளமைக்குக் காரணம் தமக்கெதிராக தேவர்சபையில் காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவற்றை நிராகரிக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காகும். இந்தச் சாசனம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டுள்ளதன் காரணம் விண்ணுலகப் பதிவாளர்கள் அதனைப் பாரமில்லாதவாறு கொண்டு சென்று அந்தத் தங்கத் தகட்டினைத் தேவர் உலகத்திலுள்ள தங்கப் புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதற்காகும் என ஊகித்துக் கொள்ளலாம்.?
மூலம்
சித்த* மஹரஜ வஹயஹ* ரஜெஹி அமெதெ இஸிகிரயெ நகதிவ புஜமெநி பதகர அதனஹ பியகுக - திச விஹர கரிதெ

25
மொழிபெயர்ப்பு??
நலமேயாகுக ! வஹ(ப)" பேரரசனுடைய ஆட்சிக் காலத்தில் அமைச்சரான இஸிகிரய நகதிவத்தை? ஆண்டபொழுது பியகுகதிசன் * என்பவரால் பதகர - அதன என்ற இடத்தில் விகாரையொன்று கட்டப்பட்டது.
குறிப்பு . வல்லிபுரத்திலுள்ள தொல்பொருளியல் அழிபாடுகள்பற்றிய 65uTriassidiassrs Ceylon Antiquary and Literary Register 11 ஆந் தொகுதி 96 - 97 பக்கங்களைப் பார்க்க.
. இந்தக் கட்டுரையினை எழுதியபின்னர் இத் தங்கத் தகட்டுச் சாசனத்தை கொழும்பு நூதனசாலைக்குப் பெற்றுக்கொள் வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆயினும், அம் முயற்சி தோல்வி கண்டதென்பதை வருத்தத்துடன் கூறுதல் வேண்டும்.
. உதாரணமாக, எப்பிகிரபியாசிலனிக்கா 1 ஆம் தொகுதி, 13, 27, 30 ஆகிய நிழற்படங்களையும் III ஆம் தொகுதி, 7, 13, 22 ஆகிய நிழற்படங்களையும் பார்க்க. . உதாரணமாக கனிட்டதிஸ்ஸவின் ஜேதவனாராம சிலாசாசனத்தில் " மழுதிஸ மகரஜி " ஒப்புநோக்குக. எப்பிகிரபியா சிலனிக்கா 1 ஆம் தொகுதி 255 ஆம் பக்கம். ... sonssfsir Grammar of the Sinhalese Language
கொழும்பு, 1938, 158 ஆம் பக்கம். . இக் காலத்தில் உயிரெழுத்துக்களின் இசைவிணக்கம் சிங்களமொழியில் பரவலாகக் காணக்கூடியதாக உள்ளது.
உதாரணமாக,
எப்பிகிரபியா சிலனிக்கா 1 ஆம் தொகுதி 62 ஆம் பக்கம். " விளிதி ” (வடமொழியில் - விம்சதி), * பிகு ” என்பதற்குப் பதிலாக * புகு " 6T6 மாறுதல் (பாளிமொழியில் - பிக்சு). எப்பிகிரபியா சிலனிக்கா IV தொகுதி 227 ஆம் பக்கம். I . " மஹரஜெ" என்பதற்குப் பதிலாக " மகரஜி " எனவும் " புதெ " என்பதற்குப் பதிலாக " புதி " எனவும் எழுதப்பட்டுள்ளதை ஒப்புநோக்குக. எப்பிகிரபியா சிலனிக்கா 1 ஆம் தொகுதி 211 ஆம் பக்கம்.

Page 17
26
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
எப்பிகிரபியா சிலனிக்கா 1 ஆம் தொகுதி 58 - 99 வரையும் 67 ஆம் பக்கத்தினையும் 252 ஆம் பக்கத்தினையும் பார்க்க.
எப்பிகிரபியா சிலனிக்கா IV ஆம் தொகுதி, 222 ஆம் பக்கம், எப்பிகிரபியா சிலனிக்கா 1 ஆம் தொகுதி 67 ஆம் பக்கத்தோடும் எப்பிகிரபியா சிலனிக்கா I ஆம் தொகுதி 120, 123 ஆம் பக்கங்களோடு ஒப்புநோக்குக.
கைகர் அவர்கள் எழுதிய மேற்சொல்லப்பட்ட சிங்கள இலக்கண நூலினைக் காண்க.
எப்பிகிரபியா சிலனிக்கா 1 ஆம் தொகுதி 252 ஆம் பக்கம்.
இது தொடர்பில், நான் யூலியஸ் த லணரோல் அவர்களிடம் விசாரித்த பொழுது, “ புஜமெநி " என்னும் சொல் காலங்காட்டும் ஏழாம் வேற்றுமையாக உள்ளதெனவும், " பியகுகதிச விஹர " என்னும் சொற்றொடர் சம்பந்தப்பட்ட விகாரையின் பெயராக இருக்க முடியுமெனவும் எனக்கு தெரிவித்தார். அவருடைய கருத்தின்படி, இந்த விகாரையினை எழுப்பியவரது பெயரினைக் குறிப்பிடாதவாறு இந்த வசனத்தை மொழிபெயர்ப்பதில் தவறேதும் இல்லை. அவருடைய எண்ணத்தின்படி, வசப மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் விகாரை ஒன்று கட்டப்பட்டமையும் " இஸிகிரய " என்பவரால் நாகதீபம் ஆளப்பட்டமையும் கூறப்படுவதனால் இங்கு குறிக்கப்பட்டுள்ள இருவரும் இந்த விகாரையினை எழுப்புவதற்கு துணையாக இருந்தனரென்பது தெளிவாகின்றது.
மகாவமிசம், IXIII அத்தியாயம், 38 ஆம் சுலோகம்.
மகாவமிசம் IXX அத்தியாயம், 238 ஆம் சுலோகத்தையும் IX அத்தியாயத்தில் 7 ஆம் சுலோகத்தையும் பார்க்க
மகாவமிசம் 1 ஆம் அத்தியாயம் 44 - 70 வரையான சுலோகங்கள்.
மகாவமிசம் XXIV அத்தியாயம், 22 - 27 வரையான சுலோகங்கள்.
மகாவமிசம் 1 ஆம் அத்தியாயம், 44 - 70 வரையான சுலோகங்கள்.

27
18. கலாநிதி பீரிஸ் அவர்களால் நாகதீபம் பற்றி வமிச
19.
20.
21.
22.
23.
வரலாறுகளில் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் திரட்டப்பட்டுள்ளன. ஜே. ஆர். ஏ. எஸ். சீ. பீ. XXVI தொகுதியில் 11 - 12 ஆம் பக்கங்களைப் பார்க்க. கலாநிதி கைகர் அவர்கள் மொழிபெயர்த்த மகாவமிச ஆங்கில நூலில் 6 ஆம் பக்கத்தில் உள்ள குறிப்பு 2 இல் நாகதீப மென்பது இலங்கையின் வடமேற்குப் பகுதியென்று குறிப் பிடப்பட்டுள்ளது. முதலியார் ஏ. எம். குணசேகர அவர்கள் முன்னர் நாகதீபமென்பது ஒரு தீவு எனவும் பின்னர் புத்தளம், சிலாபம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோரப் பகுதி களைக்கொண்ட பிரதான நிலப்பகுதியெனவும் நிரூபிப்பதற்கு (pugigsfroit Tif. (Ceylon Notes and Queries)(1916Gafiosi buff, 120 - 124 வரையான பக்கங்கள்)
ஜே. ஆர். ஏ. எஸ். சீ. பீ, XXVI தொகுதி, 11 ஆம் பக்கம் (p56). (Journal of the Royal Asiatic Society - Ceylon Branch)
கலாநிதி பீரிஸ் அவர்கள், இந் நூலானது பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளதென்று கூறுகின்றார். அந் நூலில் தலதா மாளிகையைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளதாதலால் சிங்கள இராசதானி கண்டி நகரத்தில் நிறுவப்பட்டதற்குப் பின்னர் இந் நூல் எழுதப்பட்டுள்ளதெனக் கொள்ளலாம்.
Gasr 'fairloir 6Top5u Short History of Ceylon 6T6irg/BJ, T656) 6 ஆம் பக்கத்துடனும் சூழவமிச ஆங்கில மொழிபெயர்ப்பு 1 ஆம் பகுதி, 72 ஆம் பக்கத்திலுள்ள 5 ஆவது குறிப்பினையும்
JTT35. Se
புராண நூல்களில் பூகோள விடயங்களைக் குறிப்பிடும் அத்தியாயங்களில் “பாரதவருஷம்" எனப்படும் இந்திய நாடு ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவ் ஒன்பது பகுதிகளுள் நாகதீபமும் தாமிரபர்ணியும் அடங்குவனவாகும்.
பேராசிரியர் மஜூம்தார், இந்த நாகதீபம் "எலிபன்டா"வாக
இருக்கலாமெனக் குறிப்பிடுகிறார். கலாநிதி கே. பி. ஜயஸ்வால் அவர்களும் திரு. வி. எஸ். அக்கிரவாலா அவர்களும் அதனை "fossturit" 36ssir (Journal of the Bihar and Orissa Research Society) 6T6 Tai (55.5G&airpTifassir. (XXI தொகுதி 133 - 137 வரையான பக்கங்களைப்

Page 18
28
24.
25.
26.
பார்க்க). புராண நூல்களில் சொல்லப்பட்டுள்ள நாகதீபமானது இலங்கையிலுள்ள பாளி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபமாக இருக்குமிடத்தும் அதனை மறுத்துக் கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாதவிடத்தும் மேற்குறித்த இந்திய அறிஞர்களால் நாகதீபம் எங்குள்ளதென்பதைக் கண்டறி வதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் பிழையானவையாகும். புராண கிரந்தங்களை ஆக்கியவர்களின் கருத்துப்படி, நாகதீபமென்பது இலங்கையிலிருந்து (தாமிரபண்ணி) வேறுபட்ட பிரதேசமாகும். காரணம், அவை பாரத வருஷத்தின் ஒன்பது பகுதிகளில் இரண்டு பகுதிகளாகக் குறிக்கப் பட்டுள்ளமையாகும். பெருங்காப்பியமான மணிமேகலையில் (1 காதை 21 - 23 வரிகள்) நாகதீபமென இனங்காணப்பட்ட மணிபல்லவத்துக்கு அருகேயுள்ள இரத்தினதிபம் (இலங்கை) என்ற வேறு தீவு இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், புத்தபகவான் இலங்கைக்கு மூன்றுமுறை விஜயம் செய்துள்ளா ரெனவும் ஒருமுறை அவர் விஜயம் செய்த நாகதீபம் என்னும் இடம் இலங்கையின் ஒரு பகுதியாக மகாவமிசத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். “தம்மன்னா கந்த" என்னும் இடத்திலுள்ள சிலாசாசன மொன்றில் குறிப்பிடப்பட்டுள்ள "உதரபர அதறிஹி" என்பதையும் ஒப்புநோக்குக. A.S.C. Seventh Progress Report 47 gið LušasLð.
மகாவமிசம், அத்தியாயம் XXVI, 28 ஆம் சுலோகத்தையும் XXV அத்தியாயத்தில் 104 - 107 66/T6 சுலோகங்களையும் XXXI அத்தியாயத்தில் 52, 55 ஆகிய சுலோகங்களையும் பார்க்க. பொற் தகடுகளிலும் தாமிரத் தகடுகளிலும் எழுதப்பட்ட இதற்குச் சமமான சாசனங்கள் வட இந்தியாவிலுள்ள தாது கோபுரங்களிலும் ஏனைய பெளத்த சமயக் கட்டிடங்களிலும் புதைக்கப்பட்டிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை எழுதப்பட்ட நோக்கம்பற்றி பேராசிரியர் ஸ்ரென் கொனோவ் அவர்களது கருத்துக்களை இங்கு குறிப்பிடுவது ஏற்புடையதாகும் :-
"எனவே, இத்தகைய சாசனங்கள் வழமையான இதிகாச சாசனங்கள் அல்லது அறிவிப்புக்கள் எனக் கொள்ளல் ஆகாது. திரு. எம். பார்த் அவர்களின் கூற்றுப்படி "அவை ஒரு

29
வகையான பிரசித்தத்தினைப் பெறும்நோக்கில் செய்யப்பட்ட அறச் செயல்களாகும். ஆயினும், அந்தப் பிரசித்தம் விசேடமாக மறுமைக்காக செய்யப்பட்டதொன்றாகும்."
"இந்தச் சாசனங்கள், சிலபோது, தாதுகோபுரத்துக்குள் வைக்கப்பட்டு அல்லது எந்தவிதத்திலும் மனிதர்களது கண்ணில்படாதவாறு வைக்கப்பட்டு இருந்தனவென்பது தெரிய வரும். இவற்றில் கொடையாளிகளின் பெயர்களைக் குறிப்பிடவும் அவர்களது உறவினர்களினதும் உற்றார் களினதும் பெயர்களைச் சேர்ப்பதற்கும் எடுத்த முயற்சியும் "பதிக” மற்றும் “மாணிகியல" எனப்படும் அறிக்கைகளில் "நவகார்மிக" ரின் பெயரினைச் சேர்த்துக்கொள்வதற்கும் எடுத்த முயற்சியும் எந்த நோக்கத்தின்படி செய்யப்பட்ட தென்பதை நாங்கள் புரிந்துகொள்ளலாம். திரு. பார்த் அவர்களின் கூற்றின்படி தமது மனதில் தாம் பற்றி எழுந்த கர்வம் காரணமாக இப்பெயர்க் குறிப்புகள் அந்த சாசனங்களில் சேர்க்கப்படவில்லை. அவை, ஆழ்ந்த ஆன்மீக தன்மையினைக் குறிப்பதுடன் தெய்வீகத் தன்மையினைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன."
“கரோஷ்டி சிலாசாசனங்களின் இயல்பினை ஆராயுமிடத்து, மேற்போந்த கருத்துகளை மனதில் வைத்துக் கொள்வது அவசியமாகும். திகதியைச் சேர்த்துள்ள இடங்களைப் பற்றியும் அதேமுறையில் ஆராய்ந்துபார்த்தல் வேண்டும். இக் குறிப்புகள் வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்க எழுதப்பட்டவை அல்ல. ஆன்மீகச் செயல்களைக் கண்காணிக்கின்ற தெய்வீகச் சக்திகளின் கவனம், இந்த அறச்செயல்மீது ஈர்க்கப்படாதிருக்கும் நிலை ஏற்படுமிடத்து அதனைத் தடுப்பதற்காகவே இச் சாசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தெய்வீகச் சம்பத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்ன அறச்செயல் இன்ன சந்தர்ப்பத்தில் செய்யப்பட்டதென்பதைக் குறிப்பிடுதல் அதன் விசேட நோக்க மாகும். அப்பொழுது பெயரினை அல்லது ஏனைய நிகழ்வினை அறிந்துகொள்ளத் துணைபுரியும் முயற்சியாக திகதியைக் குறிப்பிடுதல் எடுத்துக்கொள்ளப்படலாம். ( Corpus inscriptionum Indicarum , 11 ஆம் தொகுதி 1 ஆம் பாகம் கரோஷ்டி சிலாசாசனங்கள், சி 111 பக்கம்.)"
27. மேலே குறிப்பிட்ட குறிப்புகளைக் காண்க. 229 ஆம் பக்கம்.

Page 19
30
28. எழுத்தாளரின் பிழையாகக் கொள்ளக்கூடுமா என்பதை அறிவதற்கு மேற்குறிப்பிட்ட நூலில் 232 ஆம் பக்கத்தைக் காண்க.
29. "புஜமெநி” என்னும் சொல் முதலாம் வேற்றுமையினை உணர்த்துவதாகக் கொள்ளப்படின் இரண்டு முதல் நாலாம் வரிகளின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு அமைதல் வேண்டும். "நகதிவத்தை நிருவகிக்கும் இஸிகிரய எனப் பெயரிய அமைச்சர் பதகர அதன என்னும் இடத்தில் பியகுகதிச என்னும் விகாரையினைக் கட்டியெழுப்பினார்." "புஜமெநி” என்னும் சொல் வினையெச்சமாகக் கொள்ளப்படுமிடத்து "நகதிவத்தை நிருவகிக்கும்" என்பதை "நகதிவத்தை நிருவகித்துக்கொண்டு" என மாற்றுதல் வேண்டும்.
30. பாளி மொழியில் "வசப" என நிற்கும்.
31. “இஸிகிரயெ" என்னும் சொல் வடமொழியில் "இருசிகிரிக” என்ற சொல்லுக்கு அல்லது பாளி மொழியிலுள்ள "இஸிகிரிக” என்ற சொல்லுக்கு ஒக்குமெனக் காட்டப்படலாம்.
32. பாளி மொழியில் நாகதீபமென நிற்கும்.
33. பாளி மொழியில் "பியங்குகதிஸ்ஸ” என நிற்கும்.
(தமிழாக்கம் : விசுவநாத் வஜிரசேனா)

வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தின் மொழிநடை
றுகுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைப் பேராசிரியர் வினி விதாரண
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் மாணவராக கல்விகற்ற காலத்தில்தான் நான் முதன் முதல் யாழ் குடா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த வடமராச்சியைச் சேர்ந்த வல்லிபுரமென்னும் கிராமத்துக்கு விஜயம் செய்தேன். வல்லிபுரம் சிறு கிராமமாக இருந்த தெனினும் அக் கிராமத்திலிருந்து சிறிது தூரம் கிழக்குத் திசை நோக்கிச் சென்ற எமது மாணாக்கர் குழுவின் வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் குலரத்னம் அவர்கள் ஒரு நிலப்பகுதியை எங்களுக்குக் காட்டி "இதுதான் இலங்கையிலுள்ள பாலைவனம். இது, சராசரியாக இரண்டு மைல் அகலமுள்ளது. இடைக்கிடையில் சில மரங்கள் வளர்ந்துள்ள தெனினும் இந்தப் பாலைவனத்தின் நீளம் சுமார் முப்பது மைல்கள் ஆகும். இது, உலர்வலயப் பாலைவனமாகும். இதுதான், ஆசியாக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள பாலைவனம். சிறிதாக அமைந்துள்ள தெனினும் இது பாலைவனமாகும்" என்று கூறினார்.
எமது பின்பட்டப் படிப்புக் கட்டுரைக்கு வேண்டிய செய்திகளை நாங்கள் குறித்துக் கொண்டோம். பேராசிரியர் குலரத்னம் அவர்கள் மேலும் பேசுகையில் - “எமது இச் சிறிய தீவிலுள்ள புவியியல் அமிசங்களைப் பாருங்கள். குளிர், சம சீதோஷ்ண காலநிலைமுதல் உலர்வலயக் காலநிலைவரை மாறிக்கொண்டு போகின்ற பல்வேறு சீதோஷ்ண வலயங்கள் இத் தீவிலுள்ளன. குளிர் சம சீதோஷ்ண காடுகள்முதல் உலர்வலய மணற்காடுகள் வரை அமைந்த மரச் செடி களைக் கொண்ட வலயங்களும் உள்ளன. இப் புவியியல் வேறுபாடுகள் யாவும் 160 மைல்களைக் கொண்ட இச் சிறிய தீவில் காணப்படுகின்றன. உலகிலுள்ள வேறெந்த நாட்டிலும் இத்தகைய புவியியல் சிறப்பமிசங்கள் காணப்பட முடியாது” என்று கூறினார்.
எங்கள் முன்னிருந்த மணற்பரப்பினை நாங்கள் உன்னிப்பாகப் பார்த்தோம். சூறாவளியொன்றால் கடல் அலைகள் மோதி வருவதைப் போன்ற உயர்ந்த, நீண்ட மணல்மேட்டுத் தொடரொன்று சமாந்தரமாக

Page 20
32
தென்திசை நோக்கி அமைந்திருந்ததைக் கண்டோம். அந்த மணல் அலைகள் கடல் அலைகளைப் போலல்லாது அசையாமல் ஆடாமல் இருப்பதைக் கண்டோம்.
"இப்பொழுது சற்று அங்கும் இங்கும் திரிந்து பாருங்கள். ஆனால், நான் இருக்கின்ற இடத்திலிருந்து தூரத்துக்குச் செல்ல வேண்டாம். மணற்பரப்பு ஒரேமாதிரியாக இருக்கின்றபடியாலும் சுவடுபடாத இடமாக இருக்கின்றமையாலும் நீங்கள் வழி தவறிப் போகலாம்" என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.
இந்தச் சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் வல்லிபுரம் பற்றி மீண்டும் அக்கறை காட்டவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்பொழுது, நான், புவியியல் கல்வியினை நிறுத்திவிட்டு சிங்கள சிறப்புப் பட்டத்துக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். சிங்கள சிறப்புப் பட்டத்தின் ஒரு பாடமாக நான் புராதன எழுத்துக்கலையினையும் சிலாசாசனங்களையும் படித்துக் கொண்டிருந்தேன். நான் படித்த பழைய சாசனங்களுள் வல்லிபுரத் தங்கத்தகட்டுச் சாசனம் எனது மனதைப் பெரிதும் கவர்ந்திருந்தது. வல்லிபுரம் என்பது நான் முன்னர் அறிந்திருந்த பாலைவனப் பகுதியாகும். பாலைவனத்திலும் தங்கம் கண்டெடுக்க முடியுமென அன்று நாங்கள் அறிந்திருந்தோமாயின் எமது பேராசிரியரின் எச்சரிக்கையினையும் அசட்டைசெய்து நாங்கள் அந்த மணற்பரப்பின் அப்பாலிலுள்ள இடங்களுக்கும் சென்றிருக்கக் கூடுமென்ற எண்ணமும் எனக்கு வந்தது. என்றாலும் இந்தத் தங்கத் தகட்டுச் சாசனம் இன்று என்னை அத்தகைய நீண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டவில்லை. மாறாக, சிங்களமொழி வரலாறு என்ற பாதையிலே நீண்டதூரம் செல்லும்படி அந்தத் தங்கத் தகட்டுச் சாசனம் இன்று என்னைத் தூண்டியுள்ளது. அந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் எழுதப்பட்டிருந்த சிறிய செய்தி "பிராமி” எழுத்தினால் வரையப்பட்டிருந்தது.
உலகைப் படைத்த பிரம்மதேவருடன் இந்தப் "பிராமி” என்னும் எழுத்து தொடர்பு கொண்டுள்ளதென்று சிலர் கருதுகின்றார்கள். ஆனால், “லலிதவிஸ்தர" என்னும் வடமொழி நூலில் "பிராமி" என்பதன் பொருள் "எழுத்து" எனக் கூறப்பட்டுள்ளது. அது, எங்ங்ணமாயினும் இந்த எழுத்துக்கள் அசோகப் பேரரசனுடைய ஆட்சிக் காலத்தில் முதன்முதல் வழங்கப்பட்டுள்ளனவென்பது புலனாகும். வட இமாலயப் பிரதேசத்திலுள்ள "சாபஸ்கர்", "மான்சேரா" ஆகிய

33
இடங்களிலிருந்து தென் பாரதத்தில் கிருஷ்ணா நதிக் கரையிலமைந்த சித்தபுரம் வரையிலுள்ள பாறைகளிலும் சிலாஸ்தம்பங்களிலும் உள்ள சாசனங்கள் பல இவ்வெழுத்தினைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஆயினும், இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் பிரின்செப் எனப் பெயரிய அறிஞர் அந்தக் குறியீடுகளை இனங்கண்டறியும் வரை நூதனர்கள் அவ்வெழுத்துக்களை வாசிக்க முடியாதவர்களாக இருந்தனர்.
இலங்கையில், கண்டெடுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களால் வரையப்பட்ட சிறிய சாசனங்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருப்பதனால் அந்தப் பிராமி அரிச்சுவடி கண்டெடுக்கப்பட்ட பாரத நாட்டிலும் அவ்வளவு தொகையான சிலாசாசனங்கள் இல்லை யெனலாம். இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிய இராச்சியத்தில் தங்கியிருந்த றொபட் நொக்ஸ் அவர்களும் இப் பிராமி எழுத்திலான சாசனங்களைக் கண்டதாக அறிக்கையிட்டுள்ளார். ஆயினும், அவற்றை வாசிப்பதற்கு அறிவுள்ளவர் எவரும் அக்காலத்தில் இந்நாட்டில் இருக்கவில்லை.
1874 ஆம் ஆண்டில் தொல்பொருளியல் ஆணையாளராக
நியமனம்பெற்ற பீ. கோல்ட் ஸ்மித் என்னும் அறிஞர் இலங்கையிலுள்ள பிராமி எழுத்துக்களை முதன்முதலாக வாசித்தார். அன்றிலிருந்து ஒரு
வருடத்துக்குப் பின் அவர் பிரசுரித்த அறிக்கையில் 83 பிராமி
சாசனங்கள் அடங்கப்பட்டிருந்தன. அன்று ஆரம்பமான
இவ்வெழுத்துக்கள் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து விரிவடைந்து இன்று
பிராமி எழுத்துக்களை மாத்திரமன்றி அதனை மருவிய ஏனைய எழுத்து
உருவங்களையும் வாசிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பல
நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எத்தகைய சிலாசாசனத்தையும்
வாசிக்கக்கூடிய அறிவு நவீன தொல் எழுத்து அறிஞர்களுக்கு உண்டு.
பல சிலாசாசனங்களில் உள்ள பிராமி எழுத்துக்கள் கோடுகளால் எழுதப்பட்டவை. சில எழுத்துக்கள் வட்டவடிவமானவை. இன்னும் சில வட்டங்களைக் கொண்டும் கோடுகளைக் கொண்டும் அமைந்தவை. அவற்றுள் சில உரோம அரிச்சுவடி எழுத்துக்களுடன் பெரும்பாலும். ஒத்த வடிவம் கொண்டவைகளாகும். பின்வரும் உதாரணங்களால் அதனைக் காணலாம் :-
4. = p6oT ZA 1 = எந 十○ = 5Lー /\.*r = sg5 O I= Lusor AE = கஜ D
حا
==
点
6

Page 21
34
"இ" உயிரெழுத்தினைக் காட்டுவதற்கு மேல்நோக்கிய கோடும், உ " எழுத்தினைக் காட்டுவதற்கு கீழ்நோக்கிய கோடும், " எ " எழுத்தினைக் காட்டுவதற்கு இடதுபக்கத்து கோடொன்றும், “ ட எழுத்தினைக் காட்டுவதற்கு மேலே இருமருங்கில் இரண்டு கோடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெடில், புள்ளி அடையாளம், மெல்லெழுத் தொட்டு, இணை எழுத்துக்கள், "பிந்து" முதலியன ஆதி பிராமி எழுத்துக்களில் இல்லை.
இதனால் பிராமி அரிச்சுவடி எளிமைவாய்ந்ததொன்றாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் உள்ளது. இங்ங்னம் இன்று வழக்கத்திலில்லாத எழுத்தினால் எழுதப்பட்டதும் இத்தகைய மொழி நடையினைக் கொண்டதுமான பண்டைய சிங்களம் இன்றுள்ளவர் களுக்கு விளங்குமா என்பது சந்தேகமாகும். எடுத்துக்காட்டாகப் பின்வரும் சிலாசாசனத்தை வாசித்துப் பார்ப்போம். " பருமக நகஹ புத சுமனஹ லெணெ அகத அநகத சதுதிஸ ஸகஸ ” மேற்போந்த வசனம் தற்காலச் சிங்கள மொழிநடையில் பின்வருமாறு அமையும் :
" பிரமுக நாககே புத் சுமனகே லெண பெமிணி நொபெமிணி சத்தர
திஸா சங்கயாட்ட
(பிரமுக நாகனின் மகன் சுமனனுடைய குகை இங்கே சமுகமளித்த அல்லது சமுகமளிக்காத பிக்கு சங்கத்தினருக்கு கொடையாக வழங்கப்பட்டது) - அப் பண்டையச் சிங்களமொழிக்கு " மூலச் சிங்களம் " அல்லது " சிங்களப் பாகதம் " என்று இன்றைய மொழி இலக்கண நூலார் பெயரிட்டுள்ளனர்.
pp.
பிராமி அரிச்சுவடியினை ஏலவே படித்திருந்த எனக்கு 49 எழுத்துக்களாலான வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தை வாசிப்பதில் எதுவித கஷ்டமும் ஏற்படவில்லை. தொல்பொருளியல் விற்பன்னரான பரணவிதான அவர்கள் அந்தச் சாசனத்தின் மூலத்தை விளக்கமாகப் பிரதிபண்ணியிருந்தமையால் அதனை எளிதில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
" சித்த மகரஜ வஹயஹ ரஜெஹி அமெதெ இஸ்கிரயெ நகதிவ புஜமெனி பதகர அதனெஹி பியகுக திஸ விகர கரிதெ "

35
இற்றைக்கு பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்களமொழியில் வழங்கிவந்த சொற்களாகிய " மகரஜ, ரஜெஹி, அமெதெ, திஸ, விகர " ஆகியன இன்றைய சிங்கள மொழியிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய மொழியமைப்புக் கொண்ட வேறு மொழிகள் உலகத்தில் இருக்கின்றனவா என்பதை ஆய்ந்தறிதல் வேண்டும்.
அந்த ஆய்வு பயனற்றதாகும். காரணம், இன்றைய உலகத்திலுள்ள நவீன மொழிகள் பல பதினெட்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் பிற்பட்டு எழுந்தமையாகும்.
இத் தங்கத்தகட்டுச் சாசனத்தில் உள்ள மூல பாடத்தில் நெடில் எழுத்துக்கள் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இலங்கையிலுள்ள ஏனைய பிராமி சாசனங்கள் யாவும் கல்லில் எழுதப்பட்டவைகளாகும். “ எழுதப்பட்டவை " என்ற சொற்பிரயோகம் வழக்கிலுள்ளதெனினும் இச் சாசனங்கள் யாவும் கல்லில் செதுக்கப் பட்டுள்ளவைகளாகும். அந்த எழுத்துக்கள் ஆழமாகச் செதுக்கப் பட்டுள்ளன. வெஸ்ஸகிரியாவிலும் மிகிந்தலையிலும் உள்ள சிலா சாசனங்களில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் சிறிய அளவினைக் கொண்டனவாகவும் அவ்வளவு ஆழமில்லாதனவாகவும் காணப்படு கின்றன. ஆயினும், தம்புள்ளைப் பாறையிலுள்ள சிலாசாசனங்களில் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் பெரிதானவை, ஆழமானவை, அகலமானவை. எனவே, பதினைந்து அடிக்கு மேலே செதுக்கப்பட்டுள்ள சாசனங்களையும் நிலத்திலிருந்தே வாசிக்க முடியும். இங்ங்ணம் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் நேர்கோடுகளால் உருவாக்கப்பட்டவைகளாகும். ஆயினும், இந்தத் தங்கத் தகட்டுச் சாசனத்தில் காணப்படும் எழுத்துக்கள்
செதுக்கப்பட்டவைகள் அல்ல. அவை எழுத்தாணியால் எழுதப்பட்டவைகளாகும். அவ்வெழுத்துக்களில் வட்டவடிவமான அமைப்புகள் கூடுதலாகக் காணப்படுகின்றன. "அ", "ர" ஆகிய
எழுத்துக்களில் தலைக்கோட்டின் கீழ்முனை இடது பக்கமாக வளைந்துள்ளது. கீழேயுள்ள உயிரெழுத்துக்களைக் குறிக்கும் அடையாளங்கள் இடதுபக்கமாக வளைந்து மேல்நோக்கிச் செல்லுகின்றன. " த " " ந " ஆகிய எழுத்துக்களின் குறுங்கோடுகளும் ஓரளவு வளைந்திருப்பதைக் காணலாம்.
கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களைப் போலல்லாமல் தங்கத்தகடுகள், ஒலைகள் முதலிய மெல்லிய தாள்களில் எழுத்தாணியினைக்கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்கள் இக்கால

Page 22
36
கட்டத்தில் வளைந்த அமைப்பினைக் கொண்டிருந்தனவென்று ஊகிக்கலாம். அதேபோன்று, கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களைக் காட்டிலும் இத்தகைய மெல்லிய தாள்களில் எழுதப்பட்ட எழுத்துக்கள் வளைந்த வடிவினைக் கொண்டிருக்கலாமெனவும் கூறலாம்.
அடுத்தபடியாக, இந்தத் தங்கத்தகட்டுச் சாசனத்தில் ஆளப்பட்டுள்ள சொற்கள் ஒவ்வொன்றையும் எடுத்து அவற்றின் ஒலியமைப்பு, பொருளமைப்பு, இலக்கண அமைப்பு முதலியவற்றை புரிந்து கொள்வதற்கு முயலுவோம்.
இங்கே " சித்த " என்பது வடமொழியில் வாழ்த்துரைகூறும் அவ்விய பதமாகும். அதாவது, " சித்தம் " என்பது மேற்குறித்த எல்லைகளின் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டவாறாகும். இந்த வடமொழிச் சொல்லினை இயன்றளவு சுருக்கி எழுதும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததென்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும். சில இடங்களில் அந்தச் சொல் " சி " என்ற தனியெழுத்தின்மூலமும் எழுதப்பட்டுள்ளது."மகரஜ" இச் சொல்லும் இரண்டாம் நூற்றாண்டுக்குரிய சொல்லாக அல்லது இருபதாம் நூற்றாண்டுக்குரிய சொல்லாகவும் எடுக்கப்படலாம். கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து அது, அதேவடிவத்தில் சிங்கள மொழியில் வழங்கப்பட்டு வருகின்றது. உண்மையில், இச் சொல்லின் பொருளுக்கு ஒத்த " மகரஜ " என்னும் பதம் இந்திய வலயத்தில் முதன்முதல் இந்து-கிரேக்க மன்னர்களால் ஆளப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பர்சீய நாட்டைச் சேர்ந்த அரசர்களும் அந்த அடைமொழியால் குறிக்கப்பட்டுள்ளனர். ஒப்பீட்டு மொழியியலின்படி இந்து-ஆரிய ஒலிவடிவங்கள் சிங்கள மொழிக்கு அல்லது ஈழ மொழிக்கு மருவிவரும்போது நெடில் எழுத்துக்கள் குறில்களாக மாற்றமடைகின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, "மகரஜ" என்னும் சொல் அமைகின்றது. "மகரஜ" என்பது "மஹாராஜ" என்பதன் திரிபாகும்.
சில பிராமி சாசனங்களில் இந்தச் சொல்லிலுள்ள "ஜ"-காரத்துக்கு மகாப்பிராண வடிவத்தைக் கொடுத்து "மகரஜ்ஹ" என்ற வடிவத்தில் அது எழுதப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் மகாப்பிராண எழுத்துக்களில் "ஜ்ஹ" என்னும் எழுத்துத்தான் அதிகமாக ஆளப்பட்டுள்ளது. (அன்று, "மகள்" என்பதைக் குறிப்பதற்கு "ஜ்ஹித” என்னும் சொல் பயன்பாட்டில் இருந்தது). ஆயினும், அன்றைய உச்சரிப்பு மகாப்பிராண ஒலி இருந்ததா என்பதைக் கூறமுடியாது.

37
கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த (தேவாநம்பியதீச மன்னனுடைய சகோதரரான) உத்திய மன்னனை மிகிந்தலையிலுள்ள கல்வெட்டுச் சாதனங்கள் இரண்டில் "கமணி உதி தெவனபிய மஹரஜ்ஹ" என்றவாறும் "தெவனபிய மஹரஜ்ஹ கமணி உதி" என்றவாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனங்கண்டுகொள்ள முடியாத ஏனைய மஹரஜ்ஹ என்ற பெயரைக் கொண்டவர்கள் சமகாலத்திய சிலாசாசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். "தெவனபிய கமனதிஸ் மஹாரஜ" எனப்பெயரிய ஒருவர் (கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த) நுவரகல சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இருபத்துமூன்று நூற்றாண்டுக் காலமாக எழுத்து உருவிலும் சொல்பொருளிலும் எந்தவிதமான மாற்றமுமின்றி வழங்கிவருகின்ற மேலும் பல சொற்கள் சிங்கள மொழியில் உள்ளன. எடுத்துக்காட்டாக,- கவி, கல, கண, ஜன, தெர, புத, லெண ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஏனைய உலக மொழிகளில் இத்தகைய பழமைவாய்ந்த சொற்கள் உள்ளனவா என்பதை ஆய்ந்தறிதல் ஆராய்ச்சி விருந்தாக அமையும்.
"வஹயஹ" இதன் பொருள் வசப மன்னனுடைய என்பதாகும். "வசப" என்பது வடமொழியில் "விருஷப" என்னும் சொல்லோடு தொடர்பு கொண்டுள்ளது. விருஷபம் என்பதன் பொருள் இடபமாகும். ஆனால், அது, ஆட்களின் மாட்சியைக் குறிப்பதற்கு வடமொழியிலும் அதனோடு தொடர்புகொண்ட ஏனைய பாரதீய மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள, பெருங்காப்பியமான "கவ்சிலுமிண" என்ற நூலிலும் "ஸஸதா" என்ற சிறு காப்பியத்திலும் "ரஜவஹப்" (இராஜ விருஷபம்) என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட இந்து-ஆரிய மொழி இலக்கணத்தின்படி வடமொழியிலுள்ள ஒன்றிணைந்த எழுத்துக்களுக்குச் சிங்கள மொழியில் ஒரு எழுத்துத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது, எழுத்துத் திரிபின் ஒரு முறையாகும். இன்னொரு முறையின்படி ஒன்றிணைந்துள்ள அவ்வெழுத்துக்கள் கூறுபிரிந்து உயிரெழுத்துகளுடன் வழங்குவதுமுண்டு. இதன்வண்ணம், "வ்ரு" என்னும் வடமொழி எழுத்து சிங்களத்தில் "வ" எழுத்தாக மாறும். (அல்லது "வுரு" ஆக மாற்றமடையும். பேச்சுவழக்கில் "வ்ருஷப" என்னும் வடமொழிச் சொல் "வுருஸப" என உச்சரிக்கப்படும்) இரண்டாவதாக தூய சிங்கள மொழியில் "ஸ" எழுத்து மாத்திரம் வழங்கிவருதலால் "ஷ"
எழுத்துக்கும் "a" எழுத்துக்கும் "ஸ" எழுத்துத்தான் பயன்படுத்தப்படல்

Page 23
38
வேண்டும். அதன்பின்னர் தூய சிங்கள மொழிக்கே சிறப்பான இலக்கண விதிகளின்வண்ணம் (ஸம - ஹம, ஸ்க் - ஹக், ஸ்பினி - ஹபினி "ஹ" ரமாக மாறும். தூய சிங்களத்தில் மகாப்பிராண எழுத்துக்கள் இல்லாதமையால் “ப்ஹ" வடமொழி எழுத்து "ப" கரமாக மாற்றமடையும். அதன்வண்ணம், வ்ருஷப என்னும் சொல் தூய சிங்களத்தில் "வஸப" எனவும் "வஹப" எனவும் உருதிரியும். எனவே, கி. பி. 67 முதல் கி. பி. 111 வரை இலங்கையினை ஆண்ட மன்னனுடைய பெயர் வசப எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “வஹய" என்னும் பெயரால் தங்கத்தகட்டுச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் அந்த மன்னனைக் குறிக்கும். "வஹப" என்னும் சொல் மெல்லொலியைப் பெற்று இறுதியில் “வஹய" என திரிபடையும்.
முதலிய திரிபுகளைப்போன்று) மேற்குறிப்பிட்ட "ஸ" கரம்
இந்தத் தங்கத்தகட்டுச் சாசனத்தில் காணப்படுகின்ற "வஹயஹ" என்னும் சொல்லிலுள்ள இறுதி "ஹ" காரம்பற்றிய வரலாறும் சொல் விற்பன்னர்களுக்கு நல்விருந்தாக அமையும். வடமொழியிலுள்ள 6 என்னும் பொருள்கொடுக்கும் "ஷட்" என்ற சொல்லும் வடமொழியில் ஆறாம் வேற்றுமை விகுதியான "ஸ்ய" என்ற விகுதியும் பாளிமொழியில் ஆறாம் வேற்றுமை விகுதியான "ஸ்ஸ" என்னும் விகுதியும் ஆதி சிங்கள மொழியில் ஸ, ஹ, ய ஆகிய எழுத்துக்களாக திரிபடைந்துள்ளன. தெரஸ், ஸ்கஸ், புதஹ, திஸய ஆகிய சொற்கள் எடுத்துக்காட்டாகும். இதன்வண்ணம், "வஹயஹ" என்பதன் பொருள் "வசபனுடைய” என்பதாகும்.
"ரஜெஹி": வடமொழியில் “ராஜ்ய" என்னும் சொல் தூய சிங்களத்தில் “ரஜ" வாக திரிபடையும். இன்றைய சிங்கள மொழியில் ஏழாம் வேற்றுமை விகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற "எஹ” என்னும் விகுதியானது அப் பழங்காலத்திலும் வழக்கத்திலிருந்தமைக்கு "ரஜ+எஹி=ரஜெஹி" என்பது உதாரணமாகும்.
"அமெதெ இஸகிரயெ": வடமொழியில் உள்ள "அமாத்ய இருவழிகிரக" என்னும் சொற்றொடர் அக்காலத்து ஆதி சிங்கள மொழியில் எழுவாயாக பயன்படுத்தப்பட்டவாறாகும். "அமாத்ய” என்னும் சொல் அக்காலத்திய தூய சிங்களத்தில் “அமத” எனத் திரிபடைந்திருந்தது.
வடமொழிப் பெயரான "இருவழிகிரக" என்ற சொல் தூய சிங்களத்தில் "இஸிகிரய" என்ற வடிவத்தைப் பெறுகின்றது.

39
பண்டைய சிங்களமொழியில் முதலாம் வேற்றுமை விகுதியாக "எ" 'கரம் வழங்கி வந்தமைக்கு பல உதாரணங்கள் உள்ளன. "கமெ", "லெணெ" ஆகியவற்றைக் காண்க. அதன்வண்ணம், "அமத + எ” "அமதெ” ஆக வழங்கி வந்துள்ளது. அவ்வாறே, "இஸ்கிரிய + எ” இஸ்கிரயெ ஆக வழங்கியது. “அமதெ இஸ்கிரயெ என்ற இரண்டு சொற்களிலும் முதலாம் வேற்றுமை விகுதியான "ஏ" பயன் படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். சொல்லும் அடையும் ஒரே வேற்றுமை விகுதி ஏற்பது வடமொழி மரபாகும்.
"நகதிவ"; வடமொழியில் "நாகத்துவிப" மெனவும் பாளிமொழியில்
"நாகதீப" மெனவும் இது வழங்குகின்றது. "நகதிவ” என்பது சிங்களமொழித் திரிபாகும்.
"புஜமெணி" வடமொழியிலுள்ள “புஞ்ஜன", “போஜ” முதலிய சொற்களின் பொருள் அறிந்தவர்கள் இதன் கருத்தினை எளிதில்
புரிந்துகொள்வர். இச் சொற்கள் இரண்டினதும் பொருள் துய்த்தல்
என்பதாகும். நிருவகித்தல் என்ற பொருள்பட அச்சொல் உபயோகப்பட்ட இடங்களும் உள்ளன. (எ. கா : “கிராம போஜக, புஞ்ஜக” கிராமத்தை நிருவகித்தவர்). சிங்களத்தில் "புஜ" என்னும் வினையடியிலிருந்து "புஜயி" (துய்க்கிறான்), "புஜதி" (துய்க்கிறார்கள்) என்ற வினைமுற்றுக்கள் தோன்றுகின்றன. "மின்" என்னும் நிகழ்கால வினைஎச்ச விகுதி ஏற்கும்போது "புஜமின்" (துய்த்துக்கொண்டு) என்ற வடிவம் கிடைக்கும். அப்பொழுது "புஜமெனி” என்பது "நிருவகித்துக்கொண்டு இருந்த காலத்தில்" என்ற பொருள்படும். மெனி, மினி, மின் என்பன ஒருபொருள் கிளவிகளாகும். -
"பதகர அதன” என்பது இடப்பெயரொன்றாகும். இந்தத் தங்கத்தகட்டுச் சாசனத்தில் “எஹறி” என்னும் ஏழாம் வேற்றுமை விகுதியுடன் அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
" பியகுக திஸ்விகர " : இது பியங்குக திஸ்ஸவிகார என்பதன் திரிபாகும்.
பியங்குக திஸ்ஸ எனப் பெயரிய அருகதர் ஒருவர் பியங்கு தீபத்தில் (இன்றைய புங்குடுதீவு) என்னும் இடத்தில் துட்டகைமுனு மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தாரென மகாவமிசத்தில் (24 ஆம் அத்தியாயம் - 22 ஆம் சுலோகம்) குறிப்பிடப்பட்டுள்ளது. பியகுகதிஸவிகர என்பது அந்த அடியாருடைய பெயரில் எழுப்பப்பட்ட மடமாக இருக்கலாம்.

Page 24
40
"கரிதெ ” : “ செய்யப்பட்டது " என்ற பொருளுடைய வினைமுற்றாகும்.
இப்பொழுது இந்தத் தங்கத்தகட்டுச் சாசனத்தின் கருத்தினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். " நலமேயாகுக ! S6FL மாமன்னனுடைய ஆட்சிக்காலத்தில் இஸிகிரக என்னும் அமைச்சர் நாகதீபத்தை நிருவகித்துக் கொண்டிருந்தகாலத்தில் பதகர அதன என்னும் இடத்தில் பியங்குக திஸ்ஸ விகாரை கட்டப்பட்டது. "
(கலாநிதி பரணவிதான அவர்கள் " எப்பிகிரபியா சிலனிக்கார்" (இலங்கையில் கல்வெட்டுச் சாசனங்கள்) என்னும் ஆங்கிலச் சஞ்சிகையின் (iv) பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருள் இதனைக் காட்டிலும் சிறிது வித்தியாசமானதாகும். ஆனால், மேலே குறிப்பிட்ட பொருள் அதனைவிடச் சரியானதாகத் தோன்றுகின்றது.)
இத்தங்கத்தகட்டுச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வசபன் என்னும் மாமன்னன் (கி. பி. 87-111) சிங்கள அரச பரம்பரையில் பிரகாசமாகத் தோன்றுகின்ற பேரரசராகும். மகாவம்சத்தின்படி இந்த மன்னரால் 44 வைசாக விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. அந்த மன்னன் அநுராதபுரத்திலும், மிஹிந்தலையிலும் பல பெளத்த கோவில்களைக் கட்டியுள்ளான். உறுஹானுரட்டையில் உள்ள மாகாமம், சித்துல்பவ்வை ஆகிய இடங்களிலும் தமது பட்டத்து அரசியான * பொத்தா " எனப் பெயரிய இராணியுடன் மேலும்பல பெளத்தக் கோயில்களைக் கட்டியுள்ளான். அநுராதபுரம் மாநகரத்துக்கு எழில்ஊட்டிய அம்மன்னருடைய Gluurf எழுதப்பட்டுள்ள சிலாசாசனங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மாகாமம் வரைக்கும் வடமேல் மாகாணத்திலிருந்து ஊவா மாகாணம் வரைக்கும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவருடைய ஆட்சிக்காலத்தில் நாட்டில் சமாதானம் நிலவியது. நாட்டு மக்களும் அறநெறியினைத் தழுவியவர்களாக வாழ்ந்து வந்தனர்.
ஆயினும், அம்மன்னன் ஆட்சிபுரிந்த நீண்டகாலப்பகுதியில் விசேடமாக இந்நாட்டில் தேசிய நீர்ப்பாசனத் தொழினுட்பம் மாபெரும் வளர்ச்சிகண்டது. சிறிய குளங்களும், பெரிய குளங்களுமாக பல நீர்ப்பாசனத் திட்டங்கள் இவராண்ட நாற்பது ஆண்டுக் காலத்துக்குள் கட்டப்பட்டன. எமது நாட்டிலுள்ள 11 பெரிய குளங்களும் 12 பெரிய வாய்க்கால்களும் அக்காலத்தில் கட்டப்பட்டவைகளாகும். இலங்கையின்

41
வடபகுதியை நிருவகித்துவந்த இஸிகிரக எனப்பெயரிய அமைச்சருக்கு தமது எஜமானனின் அபிவிருத்தி வேலைகள் பேருதவியாய் இருந்திருக்கலாம்.
இத்தங்கத்தகட்டுச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபமானது இன்று நயினதிவு என்றழைக்கப்படும் சிறிய தீவன்று. யாழ்ப்பாணக்குடா நாடு முழுவதும் அன்று நாகதீபமென வழங்கப்பட்டுவந்தது.
ஆயினும், " இஸிகிரக " என்ற பெயரும் " பியங்குக திஸ்ஸ விகாரை " என்ற இடமும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏனைய சாசனங்களில் காணமுடியாதவைகளாகும். இன்று வல்லிபுரத்தில் விட்டுணு தேவாலயம் அமைந்துள்ள நிலப்பரப்பில் " பியங்குக திஸ்ஸ விகாரை " கட்டப்பட்டிருந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த விகாரையில் ஏனைய அழிபாடுகள் அக்கோவிலின் அடித்தளத்திலும் அப்பகுதியில் உள்ள மணற்பரப்பின் கீழும் புதைந்துகிடக்கலாம்.
ஆனால், " பதகர அதன " என்னும் இடம்பற்றிய விபரங்களைக் கூறமுடியாது. இன்று வடமராட்சி என்ற பெயருடைய இந்த மணல் நிலப்பரப்பு இற்றைக்கு 18 நூற்ருண்டுகளுக்கு முன்னர் அப்பெயரினைக் கொண்டு அழைக்கப்பட்டிருக்கலாமென ஊகித்துக் கொள்ளலாம்.
(தமிழாக்கம் - விசுவநாத் வஜிரசேனா)

Page 25
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் வருங்காலச் சந்ததியினருக்காகக் காப்பாற்றப்படுதல் வேண்டும் கலாநிதி மாலினி டயஸ் பணிப்பாளர் (சிலாசாசனவியல், நாணயவியல்,
தொல்பொருளியல் திணைக்களம்)
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சிப் பகுதியில் இப்பொழுது வல்லிபுரம் என்று அழைக்கப்படும் கிராமத்தில் பழம்ப்தியொன்று இருந்தமைபற்றி எடுத்துக்கூறும் தொல்பொருளியல் அழிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்கிராமத்துக்கும் கடலுக்கும் இடையில் சுமார் 10 சதுரக் கி. மீற்றர் அளவான நிலப்பரப்பு எங்கிலும் பழைய கட்டிடங்களின் அத்திவாரங்கள், செங்கற்கள், மட்பாண்டத் துண்டுகள், நாணயங்கள் என்பன சிதறிக் கிடக்கின்றன. பண்டைய இலங்கையின் வடபகுதியில் சிங்கள பெளத்த நாகரீகமொன்று நிலவிவந்தமையினை இவை காட்டுகின்றன. தங்கத்தகட்டுச் சாசனமும் அதன் மொழி பெயர்ப்பும்
1903 - 04 ஆகிய ஆண்டுகளில் வடமாகாணத்தின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ஜே. பி. லுவிஸ் அவர்கள், வல்லிபுரத்திலுள்ள விஷ்ணு கோவிலுக்கு அண்மையிலிருந்து எட்டு அடி உயரமுள்ள புத்தருடைய கற்சிலையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சிலோன் அன்ரிகுவாரி அன்ட் லிற்றறரி ரெஜிஸ்ரர் (Ceylon Antiquary and Literary Register) 6Tairgilis F566045ussi (55. பிட்டுள்ளார். அந்த புத்தர் சிலையானது கோவிலின் பரிபாலன குருவால் ஒப்படைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பழைய பூங்காவில் நிறுவப்பட்டிருந்தது. அந்தச் சிலை அங்குள்ள போதிமர நிழலில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், 1906 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் தேசாதிபதியான சேர் ஹென்றி பிளேக் அவர்களால் தாய்லாந்து மன்னனிடம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்தப் புத்தர் சிலை அமராவதி கலைப்பாணியில் செதுக்கப் பட்டிருந்ததென்று பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 1936 ஆம் ஆண்டில் வல்லிபுரத்தில் அமைந்த பழைய கட்டிடமொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து வசப (கி. பி. 65 - 109) மன்னனுடைய தங்கத்தகட்டுச் சாசனமொன்று கண்டு

43
பிடிக்கப்பட்டதையடுத்து அப் பகுதியில் மிகப் பழைய காலத்தில் செல்வம் படைத்த நகரமொன்று இருந்ததை அறியக்கூடியதாக
உள்ளது.
இந்தத் தங்கத்தகட்டுச் சாசனம் "எபிகிரபியா சிலனிக்கா", (இலங்கையின் சிலாசாசனங்கள்) என்ற சஞ்சிகையின் 1 ஆம் தொகுதியில் பேராசிரியர் பரணவிதான அவர்களால் அதன் மொழி பெயர்ப்புடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக, கோபஸ் ஒப் இன்ஸ்கிரிப்ஸன் ஒப் சிலோன் (Corpus of Inscriptions of Ceylon) 6T6irp நூலிலும் பரணவிதான அவர்களால் இத் தங்கத் தகட்டுச் சாசனம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனம் வண. பேராசிரியர் வல்பொல ராகுல அவர்களால் பார்வையிடும்பொருட்டு அவரிடம் ஒப்படைக்கப் பட்டதெனக் கூறப்படுகின்றது. ராகுல தேரோ அவர்கள் தங்கத்தகட்டுச் சாசனத்தின் உரிமையாளருக்கு அதனைத் திருப்பிக் கொடுக்கும் நிபந்தனையின் பேரில்தான் அங்கு கொண்டுவந்திருந்தார். அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு முன்னர் பேராசிரியர் பரணவிதான அவர்கள் தங்கத்தகட்டுச் சாசனத்தை வாசித்து, அதன் நிழற்படமொன்றையும் எடுத்து தேவையான குறிப்புகளையும் பதிவு செய்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களில் கொடுத்த தகவல்களின்படி தங்கத் தகட்டுச் சாசனத்தின் ஒருபக்கத்தில் மட்டுமே எழுதப் பட்டிருந்தது. அதன் நீளம் அகலம் 1 அங்குலமுமாகும். எடை 69 1/2 கிரேன்ஸ் ஆகும். இது, கி. பி. 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமி எழுத்தில் பண்டையச் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. அக் காலத்தில் வழக்கிலிருந்த பிராமி எழுத்துக்கள் போலல்லாமல் இச் சாசனத்தில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் வட்ட வடிவம் கொண்டவையென்பது நுணுகி ஆராயும்போது தெரிகின்றது. அதில் எழுதப்பட்டுள்ள வரிகள் வருமாறு:-
1. சித்த மஹரஜ வஹயஹ ரஜெஹி அமெதெ
2. இஸிகிரயெ நகதிவ புஜமெனி
3. பதகர - அதனெஹி பியகுக - திஸ்
4. விஹர கரிதெ

Page 26
44
இந்தச் சாசனத்தின் வசனநடை இலக்கணத்தை உற்று நோக்குமிடத்து, அதற்கு இரண்டு வகையில் பொருள் கூறலாம் :-
1. நலமேயாகுக. வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் இஸிகிர என்னும் அமைச்சர் நாகதீபத்தை நிருவகித்தபொழுது பியங்குகதிஸ்ஸ என்பவரால் பதகர அதன என்னும் இடத்தில் விகாரையொன்று கட்டப்பட்டது.
2. நலமேயாகுக. வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் ஸிகிர என்னும் அமைச்சர் நாகதீபத்தை நிருவகித்தபொழுது பியங்குகதிஸ்ஸ விகாரையானது பதகர அதன என்னும் இடத்தில் கட்டப்பட்டது.
இந்தச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை உற்று நோக்குமிடத்து அது எழுதப்பட்ட காலத்தில் நிலவிய அரசியல் நிருவாகம் பற்றிய சில முடிவுகளுக்கு வரலாம். குறிப்பிட்ட காலப் பகுதியில், அதாவது வசப மன்னனுடைய ஆட்சிக்காலப் பகுதியில் "நகதீவ" எனப் பெயரிய இடம் "இஸிகிர" என்னும் அமைச்சரால் நிருவகிக்கப்பட்டது. அத்துடன், “பதகர அதன” என்னும் இடத்தில் விகாரையொன்று கட்டப்பட்டதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கத் தகட்டுச் சாசனத்துக்குச் சமமான மேலுமொரு கல்வெட்டொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் என்ற கிராமத்துக்கு அருகாமையிலுள்ள காசிமோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலாசாசனத்தில் குறிப்பிட்டவொரு விகாரையின் வளவில் கட்டப்பட்ட தாதுகோபுரத்தின் பராமரிப்புக்கென வழங்கப்பட்ட நெற்காணிக் கொடையொன்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வசப மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் "தேவநாக" எனப் பெயரிய அமைச்சரொருவர் கிழக்கு மாகாணத்தை பரிபாலனம் செய்து வந்தாரெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இல. : 48, இலங்கையின் சிலாசாசனங்கள் தொகுதி 1, பாகம் 1, எஸ். பரணவிதான அவர்களின்
பதிப்பு)
வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள செய்தியினையும் காசிமோட்டை சிலாசாசனத்தில் எழுதப்பட்டுள்ள செய்தியினையும் உற்றுநோக்குமிடத்து இலங்கையின் வடக்கு கிழக்கு

45
தெற்கு ஆகிய மாகாணங்களை நிருவகிப்பதற்கு வெவ்வேறு ஆளுநர்கள் வசப மன்னனால் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பது புலனாகும். காசிமோட்டை சிலாசாசனத்தின்படி "தேவநாக” என்பவர் ரோஹண மாநிலத்தின் பிரதி ஆளுநருடைய புதல்வரெனத் தெரிகின்றது.
வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனத்தில் மன்னனுடைய பெயர் "வஹ" என குறிப்பிடப்பட்டுள்ளது. அது, "வஹப"அல்லது "வசப" என்பவற்றின் திரிபாகும். காசிமோட்டை சிலாசாசனத்தில் குறிப்பிட் டுள்ள செய்தியின்படி அந்தக் கொடையானது வஹப (வசப) மன்ன னுடைய ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதென்பதைத் தெளிவாகக் காணலாம்.
புத்தபகவான் இரண்டாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்த இடமென மகாவமிசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபம் என்னும் இடம் வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனத்தில் காணப்படும் “நகதிவ" என்றே ஐயத்துக்கிடமின்றிக் குறிப்பிடலாம். நாகதீபம் என்ற பெயர் எங்ங்ணம் வழக்காற்றுக்கு வந்ததென்பதை எடுத்துக்காட்டுகின்ற நல்லதோர் கதை “சத்தர்மாலங்காரய” என்னும் சிங்கள நூலில் கூறப்பட்டுள்ளது. அக் கதையின்படி பெளத்த துறவிகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்த "நாகா" எனப் பெயரிய பெண்மணி ஒருத்திக்கு 60 காபனங்கள் (பண்டைய கால நாணயவகை) போதாதிருந்தமையால் அவற்றை தனவந்தரொருவரிடமிருந்து இரவல் வாங்கியிருந்தார். அப்பணத்தை திருப்பிக்கொடுப்பதற்கு வழியில்லாத நிலையில் அத்தனவந்தரின் கீழே அப் பெண்மணி அதற்கீடாக அடிமைத் தொழில் புரிந்து வந்தார். இதனை அறிந்த நாட்டை ஆண்ட மன்னன் அப் பெண்மணியின் கடனைத் தீர்த்து அவருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தார். அப் பெண்மணியின் அரிய செயலை அங்கீகரிக்கும் வகையில் நாகதீபம் என இப்பொழுது குறிப்பிடப்படும் நிலப்பகுதியை அரச ஆணையினால் அந்தப் பெண்மணிக்குக் கொடையாக வழங்கினார். அந்த நிலப்பகுதிக்கும் அவருடைய பெயர் இடப்பட்டது.
இடத்தினை அறுதியிடுதல்
நாகதீபம் எனக் குறிப்பிடப்பட்ட நிலப்பகுதி இலங்கையின் வடபகுதியில் இருக்கலாமென்ற ஊகம் நிலவிவந்ததெனினும் அதன் சரியான இடத்தை அறுதியிடுவதற்கு 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பலர் ஆர்வம் காட்டி வந்தனர். "நாகதீபமும்,

Page 27
46
யாழ்பாணத்து பெளத்த அழிபாடுகளும்" என்னும் கட்டுரையின் மூலம் கலாநிதி போல் ஈ. பீரிஸ் அவர்கள் நாகதீபம் என்பது யாழ்பாணக் குடாநாடு என முதன்முதல் இனங்கண்டு கொண்டார். அவருடைய அக் கட்டுரையில் யாழ்பாணக் குடாநாட்டில் தாம் மேற்கொண்ட தொல் பொருளியல் ஆராய்ச்சிகள் அடங்கியிருந்தன. வல்லிபுரம் தங்கத் தகட்டுச் சாசனம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து திரு. போல் ஈ. பீரிஸ் அவர்கள் முன்வைத்திருந்த கருத்து ஊர்ஜிதமானதுடன் அதுகாலம்வரை அறிஞர்கள் மத்தியில் நிலவிவந்த ஐயமும் தீர்ந்துவிட்டது.
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நான்கு சரித்திர உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. (1) கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணக் குடாநாடு நாகதீபம் என்றழைக் கப்பட்டது. (2) கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் "இஸிகிர" எனப் பெயரிய அமைச்சர் ஒருவர் நாகதீபத்தின் ஆளுநராக இருந்தார். (3) தங்கத் தகட்டுச் சாசனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் "பதகரஅதன" அல்லது "பத்தகர-ஆயதன" (வருமானம் கிடைக்க வாய்ப்பான இடம்) என்றழைக்கப்பட்டது. (4) பிக்கு சங்கத்தாரின் பயன்பாட்டுக்காக, இவ்விடத்தில் விகாரையொன்று கட்டப்பட்டிருந்தது.
தங்கத்தகட்டுச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "பியகுகதிஸ்ஸ" என்னும் சொற்றொடரிலுள்ள "பியகுக" என்னும் இடம் வமிசவரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பியங்குதீபமாக இருக்கலாம். அச் சொல்லின் இறுதியிலுள்ள "க" என்னும் விகுதி உடைமையினைக் குறிக்கும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. மகாவமிசத்தின்படி பியங்குதீபம் என்னும் இடத்தில் “திஸ்ஸ" எனப் பெயரிய தேரர் ஒருவர் வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அந்தத் தேரர் துட்டகாமினி மன்னன் பேரிடருக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில் அம் மன்னனுக்கு அனுக்கிரகம் செய்யும் பொருட்டு அம் மன்னனிடமிருந்து அன்னதானத்தைப் பெறுவதற்காக வந்தாரென்று கூறப்படுகின்றது.
" சிகளவத்து " என்னும் பாளிமொழி நூலின்படி துட்டகாமினி மன்னனுடைய இளைய சகோதரரான சத்தாதீசன் என்ற மன்னன் பற்றிய ஒரு கதையிலும் பியங்குதீபத்தைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்தாதீச மன்னன் தாமே உழைத்த ஊதியத்தைக்கொண்டு பிக்கு சங்கத்தாருக்கு அன்னதானம் வழங்கும்நோக்கில் மாறுவேடம் பூண்டு சாதாரணக் கமக்காரராக வயல் வேலை செய்தாரென்று கூறப்படு'

47
கின்றது. அங்ங்ணம் உழைத்த ஊதியத்தைக்கொண்டு பியங்குதீபத்தைச் சேர்ந்த திஸ்ஸதேரரின் மாணாக்கராக விளங்கிய பிக்கு ஒருவருக்கு தானம் வழங்கினார். சூத்திர பிட்டகத்துக்கு எழுதப்பட்டுள்ள பாளி உரை நூல்களிலும் பிய்ங்குதீபம் பற்றிய செய்திகள் வருகின்றன. அச் செய்திகளின்படி பியங்குதீபத்தில் தவக்குன்றுகளாக வாழ்ந்த துறவிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகின்றது.
பெளத்த கோவில் கட்டிடமொன்றின் அத்திவாரத்துக்குள்ளே தங்கத் தகட்டுச் சாசனத்தை வைப்பதற்கு ஏதுவான காரணத்தை அறிந்து கொள்ளுதல் முக்கியமானதாகும். தாம் செய்த அறச்செயல்களைத் தங்கத் தகட்டொன்றில் பதித்துவைப்பதன்மூலம் அந்த விகாரையினைக் கட்டியெழுப்பியவர் மறுமையில் விண்ணுலகத்தில் பிறப்பதற்கு எண்ணியிருக்கலாமென இச் செயலுக்கு விளக்கம் காட்டலாம். இதேநோக்கில் புதைத்து வைக்கப்பட்ட பொன்னாலான அல்லது செம்பாலான தகட்டுச் சாசனங்கள் இந்தியாவிலும், விசேடமாக தக்ஸிலா என்னும் பிரதேசத்திலும் அமைந்துள்ள தாதுகோபுரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கி. பி. 2 ஆம் நூற்றாண்டு அளவில் முழு இலங்கையும் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த மன்னருடைய நிருவாகத்தின் கீழ் இருந்ததென்பதை வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் தெளிவாகக் காட்டுகின்றது. வடக்கில் வழங்கப்பட்ட மொழியும் மதமும் இலங்கையில் ஏனைய பகுதிகளில் வழங்கிவந்த மொழியினின்றும் மதத்தினின்றும் வேறுபட்டிருக்கவில்லை. இத் தங்கத்தகட்டுச் சாசனம் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் கி. பி. 2 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஏனைய சிலாசாசனங்களில் காணப்படும் பிராமி வரிவடிவமாகும். பண்டைய இலங்கையின் அரசியல், மத, பண்பாட்டு வரலாற்றினை உற்றுநோக்கு மிடத்து இத் தீவின் வடபகுதி மிகுந்த சிறப்பினைக்கொண்டு திகழ்ந்ததாகத் தெரிகின்றது.
வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் இலங்கையின் வட மாகாணத்தின் அரசியல் வரலாற்றினை நுனித்து அறியத் துணைபுரியும் ஒரு சாதனமாகத் திகழுகின்றது. அத்துடன், இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மிகப் பழைய தங்கத்தகட்டுச் சாசனமாகவும் அது திகழுகின்றது.

Page 28
48
இறுதியாக இத் தங்கத்தகட்டுச் சாசனம் எமது வருங்காலச் சந்ததியினரின் பயன்கருதி பேணிக் காக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற தேசியச் சொத்தெனக் குறிப்பிடல் வேண்டும். பேராசிரியர் பரணவிதான அவர்கள் எழுதிய கட்டுரையில் இத்தங்கத் தகட்டுச் சாசனத்தை தேசிய நூதனசாலைக்குப் பெற்றுக் கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன என்று குறிப்பிட்டுள்ளார். வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதனை வருங்காலச் சந்ததியினருக்காகப் பேணிக்காக்க வேண்டுமென்று இலங்கையர் அனைவரும் அவாவுறுகின்றனரென்பதை இறுதியாகக் கூற விரும்புகின்றேன். *
1991 பெப்புருவரி மாதம் 04 ஆந் திகதியன்று வண. பேராசிரியர் வல்பொல ராகுல அவர்களால் இலங்கை சோசலிசச் சனநாயகக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு ரணசிங்க பிரேமதாச அவர்களிடம் சனாதிபதிச் செயலகத்தில் வைத்து இத் தங்கத் தகட்டுச் சாசனம் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கப்பட்டதென்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும்.

வசப மன்னனுடைய ஆட்சிக் காலம்
பேராசிரியர் சிறிமல் ரணவல்ல
வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தை (கி. பி. 65 - கி. பி. 109) உற்றுநோக்குமிடத்து பண்டைய இலங்கையின் சரித்திரம்பற்றிய மிகத் தெளிவான அறிவினைப் பெற்றுக் கொள்ளலாம். காரணம் அவருடைய ஆட்சிக் காலத்தில் அரசியல் துறையிலும், மதத்துறையிலும், நீர்ப் பாசனத்துறையிலும் பல அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றமை யாகும். இந்த நாட்டினை மூன்றரை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முதலாவது லம்பகர்ண அரச பரம்பரையின் பிதாமகனாக வசப மன்னன் திகழ்ந்தான். அந்த மன்னன் பிறப்பினால் இலங்கையின் இறைமைக்கு உரித்துடையவராக இருக்கவில்லையாயினும் மகாவமிசத்திலும் தீவின் பல்வேறு பகுதிகளில் அவர் தாபித்த சிலாசாசனங்களிலும் குறிப்பிட்டுள்ள செய்திகளின்படி அவர் அநுராதபுரத்தில் அரியாசனம் ஏறிச் சிலகாலத்துக்குப் பின்னரே இலங்கைநாடு முழுவதினையும் பொருளாதாரவகையில் சிறப்படையச் செய்தார்.
வசப மன்னனுடைய ஆட்சிக்காலம் பற்றிய செய்திகளை ஆராயத் துணை புரிகின்ற பிரதான மூலநூலாக மகாவமிசம் விளங்குகின்றது. மகாவமிசத்தின் 35 ஆம் அத்தியாயத்தில் அம் மன்னனுடைய ஆட்சிக் காலம்பற்றிய விரிவான விளக்கமொன்று தரப்பட்டுள்ளது. அந்த அத்தியாயத்தில் பாடப்பட்டுள்ள 127 பாடல்களுள் 35 பாடல்கள் வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்துக்குரிய விபரங்களைக் குறிப்பனவாகும். ஏனைய 74 பாடல்கள் யாவும் அம் மன்னனுக்குப்பின் வாழ்ந்த பதினொரு மன்னர்கள்பற்றிய செய்திகளை எடுத்தியம்புவனவாகும். இதன்வண்ணம், ஆதி அநுராதபுரக் காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வசப மன்னனை மாபெரும் சிறந்த அரசனாகப் போற்றி வந்தனரென்பது தெளிவாகும். ஆயினும், அநுராதபுரத்து அரியாசனத்தை அவர் கைப்பற்றிய விதம்பற்றியும் இலங்கை முழுவதினையும் தமது அரச குடும்பத்தினருக்காக வென்றெடுத்த விதம்பற்றியும் மகாவமிசத்தில் சரியான தகவல்கள் தரப்படவில்லை. எவ்வாறாயினும் அவருடைய சமயப் பணிகள்பற்றி யும் பொதுப்பணிகள்பற்றியும் விரிவான தகவல்கள் மகாவமிசத்தில் தரப்பட்டுள்ளன.*

Page 29
50
வசப மன்னனின் ஆட்சிபற்றி மகாவமிசத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள வல்லிபுரம், தென் மாகாணத்திலுள்ள திஸ்ஸமகாராம, சித்துல்பகுவ, குருநாகல் மாவட்டத்திலுள்ள மடவல, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள° காசிமோட்டை, கொண்டைவட்டவான் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அவருடைய ஆட்சிக்காலத்துக்குரிய சுமார் பன்னிரண்டு சிலாசாசனங்களினால் சான்றுபடுத்தப்பட்டுள்ளன. இப் பன்னிரண்டு சிலாசாசனங்களுள் யாழ்ப்பாணத்திலுள்ள வல்லிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கத் தகட்டுச் சாசனம், ஏறாவூர்பற்றிலுள்ள காசிமோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட சிலாசாசனம் ஆகிய இரண்டு சாசனங்கள் அவருடைய ஆட்சிக் காலத்தில் இலங்கையின் அரசியல் நிலையினை அறிவதற்குப் பெரிதும் துணைபுரிவனவாகும். இத் தீவின் வடபகுதியானது அவருடைய இராச்சியத்தின்கீழ் இருந்ததென்பதையும் அப்பகுதியை அவருடைய அமைச்சரொருவர் ஆட்சி புரிந்தார் என்பதையும் வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனம் ஐயந்திரிபறக் காட்டுகின்றது. அதேபோன்று காசிமோட்டை சிலாசாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளின்படி இத் தீவின் ஏனைய பகுதிகளான உறுகுணையும் கிழக்கு மாகாணமும் வசப மன்னனுடைய உத்தரவின் படி அவருடைய அமைச்சர்களால் ஆளப்பட்டு வந்துள்ளனவென்பது புலனாகும்.
மகாவமிசத்தில் கூறப்பட்டுள்ளவாறு s மன்னன் அநுராதபுரத்தில் அரியாசனத்தில் அமர்ந்துகொண்ட வரலாறு அக் காலத்தில் மக்களிடையில் பரவிய நாட்டுக் கதையொன்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதையின்படி வசப மன்னனுக்கு முன்னர் அநுராதபுரத்தை ஆண்ட சுபன் என்ற மன்னனுக்கு அவரைச் சிங்காசனத்தில் இருந்து வீழ்த்துவதற்குப் பலவந்தமாக அரசினைக் கைப்பற்றும் ஒருவர் வருவாரென்று ஆருடம் கூறுகின்ற நபர் ஒருவர் சொல்லியிருந்தாராம். எனவே, சுபன் என்ற மன்னன் வசப என்ற பெயருடையவர்கள் அனைவரையும் கொலை செய்வதற்குக் கட்டளையிட்டிருந்தாராம். அக் காலத்தில் வடமாகாணத்தைப் (உத்தர பஸ்ஸ) பிறப்பிடமாகக் கொண்ட லம்பகர்ண வமிசத்தில் பிறந்த வசப எனப் பெயரிய ஒருவர் தமது தாய்வழி மாமனாராகிய அநுராதபுரத்து இராணுவத் தளபதியோடு வாழ்ந்து வந்தாராம். அந்த இராணுவத் தளபதி மன்னனுடைய உத்தரவின்படி வசப எனப் பெயரிய தமது மருமகனை அரசனிடம் ஒப்படைக்க விரும்பினார். எவ்வாறாயினும் வசபனை அரசனிடம்

51
ஒப்படைக்கும் நோக்கத்தினை அறிந்துகொண்ட தளபதியின் மனைவியார் தப்பிச் செல்வதற்கு வசபனுக்கு உதவிபுரிந்து அவருடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு வேண்டிய பண வசதிகளையும் அளித்து உதவினாராம். பேராசிரியர் பரணவிதான அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளவாறு இந்தக் கதையின் மூலம் சுபன் என்ற மன்னன் வசபனுடைய இராஜபக்தியைப்பற்றி சந்தேகக் கண்கொண்டிருந்தாரென்றபடியால் வசபனைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்திருக்கலாம். ஆயினும், அந்தச் சூழ்ச்சியினை அறிந்துகொண்ட வசபன் தப்பிச் சென்றிருக்கலாம். மகா வமிசத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளின்படி அநுராதபுரத்து மகாவிகாரையைச் சேர்ந்த பிக்குமார்களும் அத் தருணத்தில் அரசைக் கைப்பற்றிக்கொள்வதற்காக வசபனுக்கு உதவியதாகத் தெரிகின்றது. மகாவமிசத்தின்வண்ணம் அநுராதபுரத்து மன்னராகிய சுபன் என்ற அரசனுக்கு எதிராக கிளர்ச்சிசெய்து ரோஹண மண்டலத்துக்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கு அவர் அநுராதபுரத்து மன்னருக்கு எதிராகச் செயல்புரியக்கூடிய பலரின் நட்பினைப்பெற்று அம் மண்டலத்தைத் தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்தார்.
_AP
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் பெரும்படையினைத் திரட்டிக்கொண்டு அநுராதபுரத்துக்கு ஏகி சுபன் என்ற மன்னனைத் தோற்கடித்து அரியாசனத்தில் அமர்ந்து கொண்டார். அவர், அநுராதபுரத்தில் அரச பதவியை ஏற்றபின்னர் தற்காலிகமாக ரோஹண மண்டலத்தின்மீதான ஆதிக்கத்தை இழந்திருந்தாரெனவும் தெரிகின்றது. இதற்குச் சான்றாக அம்பாறை மாவட்டத்து முவங்கல என்னும் இடத்தில் உள்ள முதலாம் நூற்றாண்டுக்குரிய சிலாசாசன மொன்று இருக்கின்றது. அச் சிலாசாசனத்தில் சப? ராஜாவின் மகனான திஸ்ஸ மகாராஜா எனப் பெயரிய அரசன் ஒருவரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுபன் அல்லது சபன் எனப் பெயரிய மன்னனுடைய மகனுக்கு மகாராஜா என்ற அடைமொழி கொடுத்திருப்பதன் காரணமாக வசப மன்னன் அநுராதபுரத்தில் ஆண்ட சுபன் மன்னனை வீழ்த்திய பின்னர் சுபனுடைய புதல்வர் ரோஹண மண்டலத்துக்கு வந்து தம்மை அரசனாகப் பிரகடனம் செய்து சிறிதுகாலம் ஆட்சிபுரிந்திருக்கலாம் எனத் தெரிகின்றது. ஆயினும், சில காலத்துக்குப் பின்னர் வசப மன்னன் மீண்டும் ரோஹண மண்டலத்தை தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். காசிமோட்டை, திஸ்ஸமகாராமை, கல்லோயாப் பகுதியிலுள்ள கொண்டைவட்டவான்

Page 30
52
ஆகிய ரோஹண மண்டலத்துக்குரிய இடங்களில் கண்டு எடுக்கப்பட்ட் 6F மன்னனுடைய சிலாசாசனங்கள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
சுபன் என்ற மன்னனையும் அவருடைய புதல்வரான மகாராஜதிஸ்ஸ மன்னனையும் தோற்கடித்த போர்களுக்குப் பின்னர் வசப மன்னன் ஆட்சிபுரிந்த 44 வருடகாலப் பகுதியில் இடம்பெற்ற ஏனைய போர்கள் அல்லது கிளர்ச்சிகள் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் பற்றிய செய்திகள் எவையேனும் இருந்ததாகத் தெரியவில்லை. முன்னர் குறிப்பிட்டவாறு தீவின் பல்வேறு பகுதிகளில் வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்துக்குரிய ஏராளமான கல்வெட்டுச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்ங்ணம் அநுராதபுரத்து அரியாசனத்துக்கு மரபுரிமைவழிபட்ட உரிமை ஏதேனுமில்லாத நிலையில் அவர் அரசுப் பதவியினை ஏற்றியிருந்தாரெனினும் சிறிது காலத்துக்குள்ளேயே தமது ஆதிக்கத்தை நாடெங்கிலும் வசப மன்னன்
பரப்பினார்.
அவருடைய மிகப் பிரசித்திபெற்ற வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தின்படி அவருடைய அமைச்சரில் ஒருவரான இஸிகிரிய என்பவர் வடமாகாணத்தை நிருவாகம் செய்து வந்தார். தற்போதைய யாழ்ப்பாணக்குடாநாடு" அந்தக்காலத்தில் நகதிவ என அழைக்கப் பட்டதென்றும் இஸிகிரய அமைச்சரின் தலைமையகம் அங்கு நிறுவப் பட்டிருந்ததென்றும் வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றிலுள்ள காசிமோட்டை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனத்தில் இந்த மன்னரின்கீழ் பணிபுரிந்த தேவநக" எனப் பெயரிய அமைச்சரொருவரைப்பற்றிய செய்தி வருகின்றது. அந்தக் கல்வெட்டுச் சாசனத்தின்படி அந்த அமைச்சர் ரோஹண மண்டலத்தின் பிரதி தேசாதிபதியின் புதல்வராக இருந்தார். அவர், கிழக்குக் கரை (பாசீனக்கரை) க்குப் பொறுப்பான நிருவாக உத்தியோகத்தராக இருந்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் தேவமதி ஹத்பத்துவின் உடுகஹ கோரளேயில் உள்ள மடவல என்னும் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னுமொரு சிலாசானத்தின்படி அந்த சிலாசாசனம் நிறுவப்பட்டுள்ள இடத்தில் வசப மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் ஹவாரதிஸ்ஸ " என்பவரால் பெளத்த விகாரையொன்று கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. இலங்கையின் தென்கோடியிலுள்ள திஸ்ஸமகாராமத்தில் சந்தகிரி தாகப (தாது கோபுரம்) அமைந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிலாதம்பச் சாசனங்களில் வசப

53
மன்னனாலும் அவருடைய பட்டத்து அரசியாலும் அண்மையிலுள்ள குளத்தின் நீர்வரிகளும் வயல்நிலங்களும் கொடையாக வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. * கல்லோயாப் பள்ளத்தாக்கில் உள்ள கொண்டைவட்டுவான் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதலாம் நூற்றாண்டுக்குரிய சிலாசாசனம் ஒன்றில், அந்தச் சிலாசாசனம் நிறுவப்பட்ட இடத்தில் அமைந்திருந்த அகழி - அரபா எனப் பெயரிய விகாரைக்கு அந்த மன்னன் மானியமாக வழங்கிய நிலம்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 மேற்போந்த சிலாசாசனங்களில் உள்ள செய்திகளின்படி வசப மன்னன் அக்காலத்தில் 44 வருடங்கள் முழு இலங்கையினையும் தமது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்தார் என்பது தெள்ளிதின் புலனாகும்.
நாடுமுழுவதனையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த வசப மன்னர் அதன் பின்னர் பல்வேறு பொதுப்பணிகளுக்காகவும் சமயப் பணிகளுக்காகவும் தமது காலத்தை செலவழித்துள்ளார். அவர் ஆற்றிய சமயப் பணிகள்பற்றி மகாவமிசத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த மன்னர் புதிய விகாரைகள் பலவற்றைக் கட்டியதோடு சீரழிந்திருந்த பல பெளத்த கோவில்களையும் புனருத்தாரணம் செய்துள்ளார். மகா வமிசத்தின்படி வசப மன்னன் சித்துல் பகுவ என்னும் இடத்தில் பத்துப் புதிய தாதுகோபுரங்களைக் கட்டினார். ரோஹண மண்டலத்தில் அநுராராமத்தினையும் மஹாவல்லிகோத்தா எனப் பெயரிய விகாரையினையும் கட்டினார். மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் 14 முசேலா எனப் பெயரிய விகாரையையும் கட்டியுள்ளார். உபோசத இல்லங்கள் சிலவற்றையும் தூபிகரங்கள் சிலவற்றையும் பல புத்தர் சிலைகள் பிரதிட்டை செய்யப்பட்ட உருவ சிலையில்லம் ஒன்றையும் அந்த மன்னன் கட்டினாரென மகாவமிசம் கூறுகின்றது.* அம் மன்னன் மகாசங்கத்தினருக்குப் பல கொடைகளை வரையாது வழங்கினாரென்றும் நாற்பத்திநான்கு வைசாகப் பண்டிகைகளை கொண்டாடினாரென்றும் கூறப்பட்டுள்ளது. அந்த மன்னன் அநுராத புர நகர எல்லைக்குள் புதிய அரண்மனையொன்றினையும் கட்டினார். அந்த அரண்மனை வளவில் அழகிய பூந்தோட்டங்களும் குளியற் தொட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தன. அக் குளியல் தொட்டிகளுக்கு நிலத்தடியில் செல்லுகின்ற நீர்க்கால்வாய்களும் அமைக்கப்பட் டிருந்தன."
வசப மன்னனுடைய நாற்பத்திநான்கு ஆண்டுகளைக் கொண்ட நீண்ட ஆட்சிக் காலப் பகுதியானது இலங்கையின் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட ஒரு காலப்பகுதியாகும். தமது ஆட்சிக் காலத்தில் அந்த மன்னரால் பதினொரு வாவிகளும் பன்னிரண்டு

Page 31
54
கால்வாய்களும் கட்டப்பட்டன. 18 மகாவமிசத்தின்படி அந்தப் பதினொரு வாவிகளின் பெயர்கள் வருமாறு :- சயந்தி, ராஜாப்பல, வஹ, கோலம்பகாமக, மஹாநிக்கவட்டி, மஹாவாமெத்தி, கோகால, காளி, கொம்புட்டி, சாதுமங்கன, அக்கிவத்தமான என்பனவாகும். பிற்றைய காலத்துக்குரிய கட்டளைகளின்படி இந்தக் குளங்கள் பெரிய குளங்களாக அமையவில்லையாயினும் அவை, அக்காலத்துக்குரிய கிராமக்குளங்களை விட அளவில் பெரியனவாகும். இங்ங்ணம் கிராம அடிப்படையிலான சிறிய குளங்கள் பெரிய நீர்ப்பாசனக் குளங்களாக வளர்ச்சியடைந்த காலத்தின் ஆரம்பத்துக்கு இந்த மன்னரே காரணகர்த்தாவாக இருந்தாரென்பது தெரிகின்றது. அதேபோன்று பெரிய குளங்களை கட்டுவித்த அநுராதபுரத்துக் காலத்துக்குரிய முதல் மன்னராகவும் வசப மன்னன் திகழ்கின்றார். காலவாவி அல்லது கலாவெவ என்னும் குளம் தாதுசேன (459 - 477 கி.பி) மன்னரால் கட்டப்பட்டதாக பொதுவாக நம்பப்பட்டு வருவதாயினும் அக் குளத்தின் ஒருபகுதியை வசப மன்னரே கட்டியுள்ளார். வசப மன்னனால் கட்டப்பட்ட பதினொரு குளங்களில் ஒன்றாக காலவாவி என்ற குளம் இருக்கின்றது. இது தற்போதைய கலாவெவவாக இருக்கலாம். தாதுசேன மன்னன் கட்டியதாகக் கூறப்படுகின்ற காலவாபி என்னும் பெயரிய குளம்பற்றி சூழவமிசத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : “காலவாபிம் ச கண்ஹித்வா பந்தி கோணம் மகாநதிம் " அதாவது, காலவாபியினை உள்ளடக்கும்வகையில் மிகப் பெரியகோண ஆற்றின் குறுக்கே அணையொன்றினை தாதுசேன மன்னன் கட்டினான். இந்தக் கூற்றின்படி காலவாவி " அல்லது கலாவெவ என்னும் குளம் தாதுசேன மன்னனுடைய ஆட்சிக்காலத்துக்கு முன்னரும் இருந்ததென்பது புலனாகுகின்றது. பூஜாவளிய என்ற சிங்களதுரலின்படி தாதுசேன மன்னன் கட்டிய குளத்தின் பெயர் கலா - பளல்லு ஆகும். * அதன் வண்ணம் தாதுசேன மன்னன் பளல்லு எனப் பெயரிய வாவியை கலாவாவிக்கு இணைத்தாற்போல கட்டி அந்தக் குளத்தை மேலும் விசாலமாக் கினாரென்பது தெரிகின்றது.
வசப மன்னன் கட்டியதாகக் கூறப்பட்டுள்ள பன்னிரண்டு கால்வாய்களுள் எலகர கால்வாய் மட்டுமே தற்பொழுது இனங்காணப் பட்டுள்ளது. அந்தக் கால்வாய் அம்பன் கங்கையாற்றினூடாக எலகர என்னுமிடத்தில் அணையொன்றின்மூலம் கட்டப்பட்டுள்ளது. அது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மின்னேரி குளத்துக்கு நீரினைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

55
நாற்பத்திநான்கு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்னர் வசப மன்னன் விண்ணுலகமெய்தினார். அவருடைய ஆட்சிக்காலம் சமாதானமும் சுபீட்சமும் நிறைந்தவொரு காலப்பகுதியாக இருந்தது. அரசியல் துறையிலும் பொருளாதாரத்துறையிலும் சமயத்துறையிலும் அவர் ஆற்றிய பணிகளை உற்றுநோக்குமிடத்து அநுராதபுர இராசதானியைச் சேர்ந்த மாபெரும் மன்னராக வசப மன்னன் இருந்தாரெனத் தெரிகின்றது.
(தமிழாக்கம் - விசுவநாத் வஜிரசேனா)
மேற்கோள்
1. மகாவமிசம், 35. 69 - 111
2. மகாவமிசம், 35. 77 - 100
3. இலங்கையின் சாசனங்கள், (ஐசி), தொகுதி : 11. பாகம் :1,
பக்கங்கள், 63 - 81
4. மகாவமிசம், 35, 69 - 70
5. பரணவிதான, எஸ். நிகோலஸ், கொட் ரின்றன்ட் -
இலங்கையின் சுருக்க வரலாறு, பக்கம் - 77.
6. மகாவமிசம், 35. 66 - 69
7. இலங்கையின் சாசனங்கள், தொகுதி 11, பாகம் 1, பக்கம் - 62
8. இலங்கையின் சாசனங்கள், தொகுதி 11, பாகம் 1, பக்கம் - 76 -
77, ஏஎஸ்சிஏஆர் 1953, பக்கங்கள் - 21, 28
9. அதே நூல் பக்கம் 81.
10. அதே நூல் பக்கங்கள் 74 - 75.
11. அதே நூல் பக்கங்கள் 73.
12. அதேநூல், பக்கங்கள் 76 - 77.
13. ஏஎஸ்சிஏஆர், 1953, பக்கங்கள், ஜி. 21, 28.
14. மகாவமிசம், 35. 81 - 84
15. மகாவமிசம், 35. 85 - 89
16. மகாவமிசம், 35. 77 - 79
17. மகாவமிசம், 35. 96 - 97
18. மகாவமிசம், 35, 94 - 95
19. சூழவமிசம், 38. 42.
20. பூஜாவளிய, பக்கம் 778, (கிரிஅல்லே ஞானவிமல தேரரின்
பதிப்பு)

Page 32
岳6
国-) £f====ıış" sıfır)'ı
→ · · · ----
i === ==+++ + +, −, si
** = - ****』』』
=== F → ss, --haeruae == Ĥrisii i sh→ )
『*』』
~ - saes) à un si ius: , !
■■■)
!!!!!!
•';
불패事
 
 
 

5富
省|帽
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வல்பொடி ராகுல தோர் മൃഖtsി வல்லிபுரம் தங்கத்தகட்டுச் சாசனத்தை அதிமேதகு சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களிடம் கையளிக்கின்றார்.

Page 33
58
. m பேராசிரியர் வல்பொல ராகுல தேரச் அவர்கள் வல்லிபுரம் தங்கத்தகட்டுச் #f443rárings அதிமேதகு சனாதிபதி ரனசிங்க பிரேமதாச அவர்களிடம் கையளித்தபோது பண்பாட்டு
அலுவல்கள், தகவல்துறை, சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு
வி. ஜ. மு. லொக்குபண்டார அவர்கள் அருகில் இருக்கின்றார்.
 

59
|-曬 -

Page 34
50
பிக்கப்பட்டி ருந்தவாறு. ழ்ப்பானத்து பழைய பூங்காவில் தா ந்கர்சிதுை யாங் வல்லிபுரம் புத்தர்
 

:::တ္ထိ
தாய்லாந்து நாட்டின் கருட பாசான விகா ஈரயில் வைக்கப்பட்டுள்ள
வல்லிபுரம் புத்தர்சிலை,

Page 35
62
بداية حس۔ வல்லிபுரம் புத்தரிசிலை தற்பொழுது வைக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டின் ತಿ!-
LITFT&T till:Tiant.
; ? eچستاحلئے


Page 36


Page 37
|S: இ
(
... E
·
 
 

భ