கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாற்று முன்னர் இந்தியா

Page 1
ஸ்ருவாட் பிகற்
 


Page 2


Page 3


Page 4
S-CP 800-1,004 (4168)

வரலாற்று முன்னர் இந்தியா

Page 5

வரலாற்று முன்னர்
இந்தியா
ஸ்ருவாட் பிகற்
வரலாற்று முன்னர் தொல்பொருளியல் பேராசிரியர்,
எடின்பரோ பல்கலைக்கழகம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

Page 6
முதற் பதிப்பு-1970
PREHISTORIC INDIA
by STUART PIGGOT
Professor of Prehistoric Archaeology Endinburgh University
TRANSLATED ANd PUBLISHED BY TE COWERNMENT OF CEYLON
by arranдететt и th
The Penguin Books Ltd., Harmondsworth, Middlesex
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தினருக்கே

முகவுரை
இந்நூல் ஸ்ருவாட் பிகற் அவர்கள் எழுதிய 'Prehistoric India" எனும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். வரலாற்றைத் தெளிவுற அறிவதற்கு வரலாற்றுக்கு முன்னர் என்ன நடந்ததென் பதை அறிதல் இன்றியமையாததாம். வரலாற்றுக்கு முன்னர் நடந்ததையே இங்கு நாம் வரலாற்று முன்னர் என்கிமுேம், வா லாற்று முன்னரிலிருந்தே வரலாறு எழும். வரலாற்று முன்னரை யும் வரலாற்றையும் பிரித்து நிற்பது மெல்லிய ஒரு கோடே. பதிவு சர்ன்ற சாதனங்கள் பல தம்முள் மாறுபடாது ஒரு காலச் செய்தி களே நமக்கு அளிக்கும்போது நமக்கு உண்மை வரலாறு தோன்று கிறது.
வரலாறு என்பது உண்மையில் வரலாற்று முன்னரிலிருந்த கல்வி, பண்பாட்டுப் பொருளியல் வாழ்வின் மலர்ச்சியிலிருந்து தோன்றிய உருவப்பாடே. எனவே, வரலாற்று முன்னர், பெரும்பாலும் மக்கட் பரம்பலையும், உறையுள் அமைத்தலையும், பொருளியல் பண்பாட்டியல் வாழ்விற்குரிய கருவிகள் சாதனங்கள் அமைத்தலையும் பற்றிய தாகவே இருக்கும். -
இவற்றைச் சேர்த்து, முறைப்படத் தொகுத்து, நெறிப்பட அவை கூறும் உண்மைகளை உய்த்தறிதல் எல்லார்க்கும் கைவரக்கூடிய ஓர் ஆற்றல் அன்று. அல்லாமலும் கூறியது கூறலே விட்டுப் புதியன தொகுத்தும் பழைய செய்திகளோடு நேரே புலம் அளந்து அறிந்த வற்றைச் சேர்த்தும் முன்கூறப்படாத செய்திகளைத் தால் எல்லாத் தொல்பொருளியலாளர்க்கும் இய்ையக்கூடியதன்று. '
இந்நூல் சிறப்பாக இப்பணியை ஆற்றியுள்ளது. காய்தல் உவத்க லில் அமிழ்ந்துவிடாது புதியது கூறவும் அஞ்சாது இந்நூல் பணி யாற்றியுள்ளது. இந்நூலாசிரியரான ஸ்ருவாட் பிகற் தொழில் முறைத் தொல்பொருளியலளவையாளர்; நேரே புலங்கள் ஆய்ந் தும் பல்கலைக்கழகமமர்ந்து போதிப்பவருமாவர். எனவே அவர் இந் நூலில் கூறும் செய்திகள் அரியவை; பெரும்பாலும் முற்கூறப்ப டாதவை.

Page 7
vi முகவுரை
தாம் எடுத்துக்கொண்ட பொருள்களுக்குப் பொருள் வரையறை கூறித் தம் விடயத்தை இவர் ஆய்வது மிகப் பொருத்தமுடையது. இந்நூல் கூறும் இந்திய அரசியல் இந்தியாவன்றி பண்பாட்டு முறையிலமைந்த அகல் இந்தியா என்பதை இவர் எடுத்துக் காட்டி யுள்ளார்.
பண்பாட்டால் பல்வேறு மக்களும் ஒருவர்க்கொருவர் சார்புடைய வர் என்பதை பிகற் அவர்களின் ஆராய்ச்சி தெளிவுற எடுத்துக் காட்டும். V
வரலாற்று முன்னர்க்குரிய நாகரிகங்கள் பண்பாடுகள் ஆகியவற் றில் காணப்பட்ட பல்வேறு கருவிகள், ஆபரணங்கள், ஆடைகள், போகப் பொருள்கள், நகரமைப்புக்கள், புதைப்பு முறைகள் யாவும் இந்நூலில் விவரமாகத் தெளிவுபெறக் கூறப்பட்டுள்ளன. ஆரியரும் இருக்கு வேதமும் என்னும் இறுதி அதிகாரம் பல்லாற்ருனும் வர லாற்றில் புது ஒளிதரும் படலமாகும். வரலாற்றையும் அதன் முன்ன ரையும் இணைக்கும் பாலம் போன்றது. அது முன் நாம் அறியாப் பல செய்திகளைக் கூறுவது.
வரலாற்று மாணவர் யாவர்க்கும் இந்நூல் மிகப் பயனுடையதா கும்.
இதை மொழி பெயர்த்தவர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்க
ளாவர்.
வ. ஆனந்த ஜயவர்த்தணு
ஆணையாளர். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் கொழும்பு.

පෙරවදන
. මෙම පොත ස්ටුවට් පිගට් විසින් ලියන ලද ** Prehistoric India ” මේ ඉංග්‍රීසි පාඨ ග්‍රන්ථයෙහි දෙමළ පරිවතීනය වෙයි. ඉතිහාසය ගැන පැහැදිලි අවබෝධයක් ලබා ගැනීමට නම් ප්‍රාග් ඉතිහාසයේ සිද්ධීන් ගැන පළමුවෙන් දැන ගැනීඹ අවශ්‍ය වේ. ප්‍රාග් ඉතිහාසය යනුවෙන් අප අදහස් කරන්නේ' ඉතිහාසයට පෙර ඇති වූ සිද්ධීන් පමණකි. ඉතිහාසය පටන' ගන්නේ ප්‍රාග්-ඉතිහාසයෙනි. ඉතිහාසය ප්‍රාග්-ඉතිහාසයෙන්' වෙන් කෙරෙනුයේ ඉතාමත්ම පටු සීමාවකිනි. විවිධ ලිඛිත සාක'ෂා3 මගින් පරස්පර විරෝධිතාවකින් තොර ව, යම් විශේෂ කාලපරිච්ජෙදයක සිද්ධීන් පහදනු ලැබූ විට සැබෑ ඉතිහාසය අපට වටහා ගත හැකිය.
· ඉතිහාසය යනු, ප්‍රාග්-ඉතිහාසය යුගයේ දී අධායාපනික, සංස්කෘතික හා ආර්ථික ජීවිතයේ පරිණාමය ප්‍රකාශ කිරීමකි. එහෙයින' ප්‍රාග්-ඉතිහාසයෙන' පුධාන වශයෙන් දැක්වෙන'නෙන් මිනිසුන්ගේ විසීරී යාම හා පදිංචියත් ආර්ථික හා සංස්කෘතික ජීවිතයට අවශ්‍ය උපාය මාර්ග සොයා ගැනීමත් ය.
මේ විවිධ සාක්ෂා එකතු කිරීමත්, ක්‍රමානුකූල ව ඒවා සකස් කිරීමත්, නිවැරදි නිගමනවලට එළඹිමත් සෑම කෙනකුටම කළ හැකි ඒවා නොවේ. ඒ හැර මුලින් කියන ලද අදහස් නැවත දැක්වීමක් නොමැති ව අලුත් කරුණු සොයා ගැනීමත් සෘජු පර්යේෂණ මගින් සොයා ගත් කරුණු සාක්ෂා සමග ගැළපීමත් අලුත් කරුණු ඉදිරිපත් කිරීමත් සෑම පුරා විදයාඥයකුට ම කළ හැකි ඒවා නො වේ.
මේවා මේ පොතේ විශේෂ ලක්ෂණ වේ. කතුවරයා තම සිද්ධාන්ත ඉදිරිපත් කරන්නේ පුද්ගලික රුචි අරුචිකම් වලින් තොරවයි. මෙහි කර්තa ස්ටුවට් පිගට් වූ කලී පුරාවිදයා ගවේෂණ කටයුතුවල යෙදී සිටින්නෙකි. විශේව විදයාලයීය මහාචාර්ය වරයකු වන ඔහු එහි කෙරෙන ගවේෂණ ද මෙහෙයවයි. එම නිසා ඔහු ඉදිරිපත් කරන සාධක යුක්ත වන්නාක් මෙන් ම නවීනතම ද වේ.
vii

Page 8
viii පෙරවදන
ඔහු තෝරා ගත් අරමුණුවල අර්ථ නිරූපණය කළ විෂයය ගැන ඔහුම සාකච්ඡා කිරීම ඉතා යෝග්‍ය වේ. තමා සාකච්ඡා වට ලක” කොට ඇත්තේ සංස්කෘතික සම්බන්ධතාව පදනම් කොට ගත් ඉන්දියාව මිස දේශපාලන ඉන්දියාව නො වන බව ඔහු පැහැදිලි ලෙස හඟවා ඇත්තේ ය.
විවිධ ජාතීන් අතර සංස්කෘතික සම්බන්ධතාවක් පවතින බව පිගට් මහතාගේ පර්යේෂණවලින් පැහැදිලි ලෙස ම එළිදරවු වෙයි.
ප්‍රාග් ඉතිහාසයේ සභාපත්වවලටත් සංස්කෘතිවලටත් අයත් විවිධ ආයුධ, ආභරණ වස්තු, ප්‍රීතිය ගෙන දුන' වස්තු, නගර සැලසුම් ක්‍රම ආදිය මේ පොතෙන් සවිස්තර ව දැක්වෙයි. “ ආර්යයන් සහ සෘග් වේදය ”, නම් වූ අවසාන පරිචෙඡදය බොහෝ කරුණු සම්බන්ධයෙන් මනා අවබෝධයක් ලබා දෙයි. ඉතිහාසයත් ප්‍රාග්-ඉතිහාසයත් සම්බන්ධ කරන්නක' ලෙස මේ පරිච්ජෙදය ක්‍රියා කරයි. අප කලින් අසා නැති බොහෝ සිද්ධීන් එය අප වෙත ගෙන එයි.
· මෙම ග්‍රන්ථය ඉතිහාසය හදාරන සියල්ලන්ට ම බෙහෙවින් ප්‍රයෝජනවත් වෙනු ඇතැයි අපේක්ෂා කරමු.
මෙය පරිවර්තනය කරන ලද්දේ ඥානම් රතිනම් මහත්මිය 岛岛分。
ම. ආනන'ද ජයවයින,
අධ්‍යාපන ප්‍රකාශන කොමසාරිස්.
අධ්‍යාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුව, කොළඹ 3.

முன்னுரை
மிக்க முன்னைக் காலத்திலிருந்து கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண் டின் பிற்பாதி காலத்தில், வடமேற்குப் பகுதியில் ஆரியர் குடியேறி யது வரை உள்ள இந்திய வரலாற்று முன்னர் (Prehistory) பற்றி நாம் அறிந்தவற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. எமக்குக் கிடைத்துள்ள அரைகுறையான ஆதாரத்தையும் விளக்கத்தையும் மதிப்பீடு செய்வதாகவே இது அமைந்துள்ளது. எனினும், இத்துறை யில் மேலும் ஆராய்ச்சி செய்யப்படுவதற்கு இதுவோர் பூர்வாங்க மும் தூண்டுகோலுமாகும். இங்கு ஏதோ ஒருவகையான தொழிற் பாட்டுக் கருதுகோள், எவ்வளவோ திருத்தத்துக்கு உரியதெனினும், அத்தியாவசியம். ஆகையினலே, ஆதிகால இந்தியாவின் உருவாக அமைந்த பல்வேறு மனிதப் பண்பாடுகளின் தன்மையையும் தொடர்ச்சியையும் எடுத்துக்காட்ட முயன்றுள்ளேன்.
இந்நூலில் எடுத்துக்கூறப்பட்டுள்ள விடயங்களுள் பெரும்பகுதி ஒன்றில் இதுவரை வெளிவராத புதியனவாக அல்லது முதன்முதல் தொகுக்கப்பட்டனவாகவே இருக்கும். ஆகையினலே, எவ்வளவோ வினைநுட்ப விவரங்களும், கீழைத்தேச தொல்பொருளாராய்ச்சியில் சிறப்பான அறிவு உள்ளவருக்கே உரிய விவாதங்களும் இங்கே தவிர்க்க முடியாத வகையில் இடம்பெற்றுள்ளன. ஆயினும், வரலாற் றுக்கு முந்திய இந்தியாவின் நிகழ்ச்சிகளின் போக்கு சிறப்பான அறிவு இல்லாதவருக்குமே விளங்கக்கூடிய முறையில் முரண்பாடின் றிக் கூறப்பட்டுள்ளது என்பது எனது நம்பிக்கை.
நான்கிலிருந்து ஆறு வரையுள்ள அத்தியாயங்களுக்கு ஆதாரமான மூல ஆராய்ச்சியை 1942 இற்கும் 1945 இற்கும் இடைப்பட்ட காலத் தில் எனது இராணுவ உளவுக் கடமைகளிலிருந்து அவகாசம் கிடைத்தபோதெல்லாம் இந்திய நூதனசாலையில் (சிறிது வெளியி லும்) செய்தேன். இந்தியத் தொல்பொருள் அளவைத் திணைக்களத் தில் கடமையாற்றிய என் நண்பர்களுக்கு எனது நன்றி உரியது. இவர்கள் எனக்குக் கைகொடுத்து உற்சாகமூட்டினர். இவர்களுள் அளவைத் திணைக்கள மா இயக்குநராக முன்னேநாள் கடமையாற்
ix

Page 9
X முன்னுரை
றிய காலஞ் சென்ற ராவ்பகதூர் கிக்சித் அவர்களும் கலாநிதி கே. என். பூரி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள், 1944 இல் கலாநிதி (இப்போது பேராசிரியர்) ஆர். ஈ. மோட்டிமர் விலர் மா இயக்குந ராக நியமனஞ் செய்யப்பட்டார். இவரும் நானும் இந்தியாவில் இருந்த காலத்திலும், பிரித்தனுக்கு நான் திரும்பியதன் பின்னரும், எனக்கு வேண்டியவாறு உதவி செய்வதில் இவர் தமது காலத் தையோ சிரமத்தையோ பொருட்படுத்தவில்லை. இவருக்கு எனது நன்றியறிதல்த் தெரிவித்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சிதருவதர் கும்.
எனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான என் சகாக்கள் திரு. எச். யே. எச். ஹம்மண்ட் அவர்களும் பேராசிரியர் மைல்ஸ் டில்லன் (இவர் இப்போது டப்ளினிலுள்ள உயர் கல்வி நிலையத்தி அலுள்ளார்) அவர்களும் தயைகூர்ந்து, இரண்டாவது அத்தியாயமும் ஆருவது அத்தியாயமும் கைப் பிரதிகளாக இருக்கும்போது அவற்றை முறையே வாசித்து விமரிசஞ் செய்தனர். ஆசிரியரு டைய தேர் பற்றிய பரிசீலனையில் செல்வி ஏச். எல். லொறிமர் எனக் கும் பெரிதும் உதவியுள்ளார். இவர், அன்று வெளியிடப்படாத நிலை யில் இருந்த தமது ஓமரும் நினைவகங்களும் (Homer and Monuments) எனும் நூலின் சில பகுதிகளைத் தட்டெழுத்துப் பிரதி யில் வாசித்தறிய மனமுவந்து எனக்கு அனுமதி கொடுத்தார். மூன்றி லிருந்து ஆருவதுவரையுள்ள அத்தியாயங்களின் இறுதிக் கைப்பிரதி களைச் சிகாகோ பல்கலைக்கழகத்துக் கீழைத் தேச நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி டொனல் மக்கோவன் அவர்களுடன் கலந்தாலோ சிக்கும் வாய்ப்புக் கிடைத்தமை ஒரு நற்பேறேயாகும். 2500 தொடக் கம் கி. மு. 1100 வரையான காலத்துக்குரிய மேற்காசிய தலங்களுக் குரிய ஒப்பீட்டுக் காலகணிதம் பற்றிக் கலாநிதி குளோட் காவர் எழுதிய சிறந்த நூல் எனது நூல் எழுதிய பின்னசே வெளிவந்தது. ஆணுலும், இந்தியப் பிரச்சினைகளோடு சம்பந்தமுடைய சில திருத் தப்பட்ட தேதிகளை என்னல் சேர்த்துக்கொள்ள முடிந்தது. பொதுப் படையாகக் கூறின், நாம் தனித்தனியே செய்துள்ள முடிபுகளுக் குள் ஓர் நெருங்கிய ஒற்றுமை உண்டெனலாம். படங்களுள் அநேகம் முதல் தடவையாகப் பிரசுரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆசிரியருடைய மூலக் கைச் சித்திரங்களிலிருந்து எடுக்கப்பட்டன

முன்னுரை Χί
படங்கள் 1, 3, 13-23, 25 திரு. எல். எவ். வெனெபிள்ஸ் அவர்களுக்கு உரியவை 4-10 உம் 12 உம் செல்வி ஈ. எம். அவாட் அவர்களுக்கு உரியவை. அரைப்பதன் தகடுகள் மா இயக்குநருடைய அனுமதி யுடன் இந்தியத் தொல்பொருள் அளவைத் திணைக்களம் வழங்கிய புகைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்டன.
இந்நூல்வரிசைப் பதிப்பாளரான பேராசிரியர் எம். ஈ. எல். மலோவன் அவர்கள் இந்நூலின் அமைப்பு விபரம் ஆகியவை பொறுத்தமட்டில் எனக்கு உதவிசெய்துள்ளார். அது குறித்தும், இந் நூலே எழுதும்படி என்னை அழைத்தமைக்காகவும், அவர்களுக்கு
நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
ஸ்ருவாட் பிகற்
எடின்பரோ பல்கலைக்கழகம் f9会9

Page 10

உள்ளுறை
முன்னுரை
வரலாற்று முன்னர் இந்தியக் காட்சி
11 ஆரம்பம் - இந்தியக் கற்காலம்
III பிற்களம் - மேற்கு ஆசியாவில் ஆதி விவசாயச் சமுதாயங்கள்
1W மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி வேளாண் சமுதாயங்கள்
V சிந்து, பஞ்சாப் ஆகியவற்றின் நகர்கள் V இடர் நிறைந்த காலமும் மாநகர்களின் முடிவும்
VII மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர் - ஆரியரும் இருக்குவேத
(1ԲւԸ
தகட்டு வரிசை (150 இற்கும் 151 இற்கும் இடை)
அரப்பா : நகர்க் காப்பரண் வெட்டுமுகம்
அரப்பா : நகர்க் காப்பரண் வெட்டுமுகம் பற்றிய விவரம்
அரப்பா : தானியங் குத்தும் மேடை
அரப்பா இடுகாடு R 37 இல் உள்ள புதைப்புகள்
அரப்பா இடுகாடு R 37 இல் உள்ள அடக்கப் புதைப்பு
அரப்பா : வண்ணக் கலங்கள்
அரப்பா : வண்ணக் கலங்கள்
அரப்பா : களிமண் சிற்றுருக்கள்
பட வரிசை
பண்டைய தலங்களைக் காட்டும் மேற்காசியத் தேசப்படம் மேற்கிந்தியாவில் வெண்கல ஊழிக் குடியிருப்புத் தலங்கள்
மாதிரிக் குவெற்றக் கலங்கள்
அம்றி, நுந்தரா வனை பொருள்
நல் வனைபொருள் - 8 p.
குள்ளி வனைபொருள் P.
குள்ளிக் கலங்களில் முக்கியமாக மிருகங்களைக்கொண்ட நோக்கு
ருக்கள் v
xiii
பக்கம்
ix
15
41
7
155
257
295
தகடு
பக்கம்
46
77
81
93
99
16
8.

Page 11
KW
10.
1.
12.
3.
14.
5.
6.
17.
18.
... 19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
பட வரிசை
குள்ளிச் சிற்றுருக்களும் நுந்தரா வனைபொருள்களும் பெண்கள் சிற்றுருக்கள், குள்ளிப் பண்பாடு உட்குழித்த கற்பாண்டங்கள், குள்ளிப் பண்பாடு வெண்கலக் கண்ணுடி, குள்ளிப் பண்பாடு * தரைத்தோற்றத்தில் விலங்குகள் ” செங்கபிலக்கலத்து நோக்கு
ருக்கள் அகல்கள், ராணு குண்டை 11 . . - வனைபொருள், ராணு குண்டை I a உம் IIb உம் வனைபொருள், ராணு குண்டை II C பெண்களின் சிற்றுருக்கள், சோப் பண்பாடுகள் அரப்பாப் பண்பாட்டுத் தலங்களைக் காட்டும் தேசப்படம் மொகஞ்சோ-தாரோவினதும் அரப்பாவினதும் தலத் திட்டங்கள் . . நகராண், மற்றும் பிறவற்றினது திட்டம், அரப்பா
நகர்க் காப்பரண் வெட்டுமுகம், அரப்பா
நகர்க் கட்டடத் தொகுதி அமைப்புத்திட்டம், மொகஞ்சோ-தாரோ
முத்திரை இலச்சினைகளின் பதிவுகள், மொகஞ்சோ-தாரோ மிருகங்களையும் மனிதர்களையும் கொண்ட மட்கலத்துண்டுகள்,
-9UÜLJf7 a
செப்பு, வெண்கலக்கருவிகள், அரப்பாப் பண்பாடு வனைபொருள், சாகி-தம்ப் இடுகாடு செப்புப் பொருள்கள், சாகி-தம்ப் இடுகாடு கோடரி, ஊசிகள், இலச்சினைகள், பிற, யுகர்ப் பண்பாடு செப்புத்துளைத் தண்டுக் கோடரி, மொகஞ்சோ-தாரோ இடுகாடு - கலங்களின் உருவரைப்படங்கள், அரப்பா ரசன்பூரிலிருந்த வெண்கல வாள், பஞ்சாப் தேர், கி.மு. 15 ம் நூற்றண்டிலிருந்து 13 ம் நூற்றண்டு வரை இருக்குவேத காலத்துத் தேர் . .
காலவரையறை அட்டவணை
அட்டவணை 1
அட்டவணை 11
123
124
128
129
34
141
143
144
148
162
180
190
191
196
29
23
238
261
264
268
275
282
285
335
341
பக்கம்
70
294

அதிகாரம் 1 வரலாற்று முன்னர் இந்தியக் காட்சி
*உலக அலுவல்களிலிருந்து ஒய்வு பெற்று தம் முழு நேரத்தையும் மெய் யியல் துறைகளிலும் இலக்கியத் துறைகளிலும் செலவழிக்கும் வெறும் கல் வியறிவாளரான ஒருவரை இந்தியாவில் வாழும் ஐரோப்பியரிடைக் காண் பதரிது."
(Asiatick Researches)
இந்தியாவில் வரலாற்றுக்காலம், வரலாற்றுக்கு முந்திய காலம் என்பவற்றுக்குள்ள வேறுபாடு தனிமுறையில் மயக்கம் தரும் ஓர் அமிசமாகும். என்றி பேர் சொல்வது போல் “இந்தியாவில் பல சம்பவங்கள் நடந்ததுண்மை. ஆயின் அங்கு வரலாறென்டதில்லை” என்று ஒருவர் சொல்லலாம். பதிவு செய்யப்பெற்ற இந்திய வர லாற்றுக் காலம் என்று சொல்லப்படும் பருவங்களுள் இயை புடைய ஒரு கால வான்முறை அமைப்பொன்றை ஆக்க முயலும் போது மேற்கூறிய பொதுப்பாடான கூற்றின் உண்மையை ஒரு வர் உணர்வர். எனினும் எவ்வகை இலக்கியப் பதிவுகளிலும் அகப் பட முடியாப் பண்டை இந்தியப் பண்பாட்டுப் பருவங்கள் உள் ளன. பொதுவாக, மேற்காசியாவின் வரலாற்று முற்காலம் கி.மு. 3000 பின் உடன் தொடர்ந்த நூற்முண்டுகளில் மெசப்பொற்றே மியா, இரானின் அயற்பகுதி, எகித்து முதலிய இடங்களில் எழு துங்கலை தோன்றவும் முடிவுறுகின்றது. எழுதுங்கலையுடன் குல முறைப்பதிவுகள், அரசர் வரிசைகள் அவைபோன்றவை தோன்று கின்றன. இவை பற்றிய விவரங்களில் பிணக்குகளிருப்பினும், கிறித்து ஊழிக்கு முந்திய செவ்விய ஆண்டுகள் வரிசையிலமைந்த, ஒரளவு நம்பிக்கைக்குகந்த, காலவரன்முறைக்கு ஓர் ஆதாரமாக இவை உள்ளன என்ற அளவில் இவற்றிற்கு நாம் விளக்கமளிக்
&56)ff`ዚù.
ஆயின் இந்தியாவில் கி. மு. இரண்டாம் மூன்றம் ஆயிரத்தாண்டு களில் எழுதுங்கலே அறியப்பட்டுப் பயிலப்பட்டு வந்ததாயினும் குறித்த எழுத்துமுறை இன்னும் தெளிவுபடுத்தப்படாதுளது. இதைப் படைத்த நாகரிகமும் மினேன்கிறீற்றைப் போல் வரலாற்

Page 12
2 வரலாற்று முன்னர்
அறுக்கு முந்தியது ; இதுவும் எழுத்தறிவுடையதாயிருந்ததெனினும் வாசித்து விளங்க முடியாத ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந் தது. இவ்விந்திய எழுத்துமுறை கி. மு. 1500 வரை பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆயின் இதன்பின் கி. )اJP۵۰ மூன்ரும் நூற்ருண்டில் நிறுவப்பட்ட அசோகன் பொறிப்புக்கள் வரையுள்ள காலம் கல் லிலோ களியிலோ உலோகத்திலோ எழுதப்பெற்ற பதிவுகள் இல் லாத வெறும் காலமாக உள்ளது. இவ்விடைக்காலம் பற்றிய ஒத்த காலப்பதிவுகளுக்கு ஒரோவொரு வேளைகளில் மேல் நாட்டுடன் கொண்ட தொடர்புகளில் நாம் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. இங்கு பதிவு செய்யப்பெற்ற வரலாறு அறிவறிந்து கடைப்பிடிக்கப் பெற்ற ஓர் ஒழுங்குமுறையாயிருந்தது. இஃதில்லா வேளைகளில், நாம், பல நூற்றண்டுக்காலமாக வாய்முறையாக வந்த தொல் கதை இலக்கியங்களில், அல்லது வழிபாட்டு இலக்கியங்களில், தங்கி யிருக்க வெண்டியுள்ளது.
எனவே வரலாற்றுக்கு முந்கிய இந்தியா எனும்பொழுது, அது, அதன் விரிவான பொருளில், பழைய கற்காலந் தொடங்கி கிறித் தூழிக்கு அண்மையிலுள்ள காலம்வரை இவ்வுபகண்டத்திலிருந்த எல்லா மனித சமுதாயங்களையும், சில வேளைகளில் இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களிலிருந்தவரையும் அடக்கும். எனவே இந்தியாவின் வரலாற்று முன்னரைக் கண்டறிவதும் விளக்கம் அளிப்பதும், பதிவு செய்யப்பெற்ற வரலாறு தோன்றுமுன் ஐரோப் பாவின் மனித வளர்ச்சியை ஆராய்வதற்கு எடுத்துக்கொண்ட வழி வகைகளைப் பின்பற்றியமைதல் வேண்டும். இவ்வரலாறு இயல் பாகவே இப்பிரதேசம் உரோமப் போாசுடன் இணைக்கப்பெற்ற பின் னரே தொடங்குகிறது. தொல் பொருளியல் கலைநுண்மைகளான இவ்வழிவகைகள், இன்று அவை உள்ள தெளிவான விஞ்ஞானப் பாங்கில் மிக அண்மையில் தோன்றியனவாம்; எனினும் இவற்றுட் பல வழிவகைகளைப் பதினெட்டாம் நூற்ருண்டுக்குப் பின்னர் தொடங்கி ஆங்கிலேயர் அறிந்திருந்தனர்.
வரலாறு பற்றிய எண்ணக் கரு, வரலாற்ருராய்ச்சி முதலியவை உட்பட ஐரோப்பியச் சிந்தனை முறைகளை இந்தியாவுட் புகுத்தினே ரின் தலையாயபற்று. கல்வியோடியைந்ததாயிருக்கவில்லை; எனினும்

இந்தியக் காட்சி 3
இத்தகைய துறைகளின் பயனை நயக்கவும், கடினமான கால நிலை இயைந்த இடத்தில் அலுவல் மிகுந்த தம் தொழில் வாழ்வில் வரும் ஓய்வு நேரங்களில், அத்துறைகளில் தாமே ஈடுபடவும், அவர் கல்வி கூடிய அளவில் விரிவான ஒன்ருயிருந்ததுண்மையே. சேர் வில்லி யம்சு யோன்சு, சிராம்பூர் கேரி போன்ற பெரியோர், கீழைநாட்டு மொழிக் கல்வி, ஒப்பியல் மொழிநூல் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பணி ஓரளவில் தொழின் முறையானதே; ஆயினும் அாய கல்விப் பண்பு அதில் உளங்கொளப்படாதிருக்கவில்லை. தொழின் முறை யானதென்பது இங்கு விவிலிய நூலை மொழிபெயர்த்ததும் இந்துச் சட்டக்கைக் கற்றறிந்ததுமாம். வங்காள ஆசிய சங்கத்தை நிறு வியது இந்தியாவில் பழைமை பாராட்டுதலுக்கு ஓர் நிறுவகம் அளித்ததாகும். அஃதல்லாமலும் இது அக்காலத்தில் மெய்யியல் என்று வகுபடக்கூடிய ஆய்துறை அமிசங்களுக்கும் ஓர் இடம் அளித்ததாகிறது. இப்பழைமை பாராட்டல் இந்தியாவின் எப்பண் டைப் பகுதியையும் வரலாற்று அல்லது வரலாற்று முன்னர்ப் பகு தியையும் ஆராயும் சிந்தை கொண்டிருந்தது. -
ஆயின், பண்டைய பிரிட்டிசுக் குடியிருப்புக்கள் வங்காளத்திலி ருந்தமையாலும், இப்பகுதி வரலாற்றுக்கு முந்திய தொல்பொருள் களளவில் அக்காலத்தில் முற்றும் அறியப்படாத ஒரு பகுதியாக விளங்கினமையாலும், கிதைவுகள் யாவற்றையும் இங்குள இயற் கைத் தாவரவளம், ஒரு பத்தாண்டுக் காலத்துள் புலப்படாதவாறு செய்தமையாலும், வெளிப்புலங்களிலிருந்த இந்தியத் தொல் பொருள்களை ஆராய்வதற்கு மக்களிடை ஆர்வம் இல்லாமற் போய் விட்டது. இதனுல் வங்காளத்திருந்த பழம்பொருள் கல்லூரியின் பெரும்பணி என்றும் மொழிக்கல்வியில் ஆற்றிய அளப்பரும் தொண் டாகவேயிருக்கும். வெளிப்புலத்துத் தொல்பொருளியலளவையும், தொன்மையான நினைவகங்களை, அவை வரலாற்றுக்கு முன்னரான மண்வேலைகளாயிலென் நடுக்காலக்கோயில்களாயிலென், பதிவு செய் தலும், பத்தொன்பதாம் நூற்முண்டின் முற்பகுதியில் கற்றறிவாள ாான ஆங்கில மேன்மக்களின் பொழுதுபோக்காக இருந்தன; எனி னும் இந்தியா இங்கிலந்தன்று. மேற்குக் கோட்டு மலைகள் வில்சயரி லிருந்த மென்மையான மேய்ச்சல் சாரல்களல்ல. இங்கு பிரயா ணம் இடர்தருவதாயும் அபாயம் நிறைந்ததாயுமிருந்தது. தாடு,

Page 13
4 வரலாற்று முன்னர்
அளந்து படம் வரையப்படாத ஒன்ருயிருந்தது. நகரிடைத் தூரங் கள் மிக நீண்டனவாயிருந்தன. எனவே, படைஞரிடையும் கம்பனிச் சேவையாளரிடமும் இத்தகைய துறைகளில் கவற்சி கொண்டோர் இருந்தனரெனினும், சூழ்நிலைகள் மாறிவரும்வரைக்கும் தொல் பொருளியல் புலவேலை பொறுத்திருக்க வேண்டியிருந்தது என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
வடமேற்கிந்தியாவின் வரலாற்றுக்கு முன்னரான பெரும் நாக ரிகம் அக்காலத்திற்கே சிறப்பாக உரிய எந்திரத்தொழிலான இரும் புப்பாதை அமைத்தலில் காட்டப்பெற்ற விக்ரோறியா காலத்து ஊக்கினல் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது; இது ஓர் அதி சயமே. தற்செயலாகவே அச்சந்தர்ப்பங்களையும் நாம் அறிந்தோம். அவற்றை இங்கு கூறுதல் பயனுடைத்து. 1856 இல் இரு சகோதரர் கள் கராச்சியிலிருந்து இலாகூருக்குரிய கிழக்கிந்திய இரயில் பாதை அமைத்தலில் ஈடுபட்டிருந்தார்கள். யோன் என்பவரும் வில்லியம் பிறன்றன் என்பவருமே இவர்கள். யோன் தென்பகுதிக்குப் பொறுப் பாயிருந்தார். மற்றையவர் பஞ்சாபில் முல்தானிலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற பகுதிக்குப் பொறுப்பாயிருந்தார். ஒய்வு பெற்ற பின் யோன் என்பார் தம் போப்பிள்ளைகளுக்காக தம் பழம் நினைவு களை-1812 இலிருந்து 1899 வரை நடந்தவற்றை-எழுதிவைத்தார். இதில் அவர் தாம் அமைத்த இருப்புப் பாதையிலிருந்தும் பிராமின பாத் என்னும் இடிந்த பழைய நகர் ஒன்று அண்மையிலிருந்த தென்று கேள்விப்பட்டதாகக் கூறுகின்றர். 'இருப்புப்பாதைக்கு எவ்வாறு அடி அணைப்பு அமைக்கலாமென்று நான் மிகவும் கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். நான் கேட்டதெல்லாம் உண்மையாயின் செங்கட்டிகளால் கட்டப்பெற்ற இந்நகர் இவ்வடியாண் அமைப்ப தற்கு ஏற்ற ஓர் சுரங்கமாக அமையும் ' என்று அவர் எழுதியிருந் தார். எனவே நடுக்காலத்திற்குரியதான பிராமினுபாக் எனும் இந் நகர் உண்மையில் ஈவிரக்கமில்லா இந்த ஆங்கிலேய எஞ்சினியரால் இருப்புப்பாதை அமைப்பதற்காகக் கொள்ளையடிக்கப்பெற்றது.
முல்தான் - இலாகூர் இரும்புப்பாதை பிறிதொரு பண்டைய நக சிற்கு அண்மையிலேயே இருந்தது. இது அப்பொழுது ஒரு வடிவமு மில்லாத பாரியதுரசு படிந்த திடற்கும்பமாக விளங்கியது ; இதன்

இந்தியக் காட்சி 5
ஒரு பகுதியிருந்த செங்கட்டிகள் அத்தலத்திலேயே, இப்பொழுது அசப்பா எனப்படும் நகர் கட்டுவதற்காகக் கொள்ளையடிக்கப்பட் t-6ði • இருப்புப்பாதைக்கு அடியாணமைப்பதற்கு எவ்வாஅனூ பொருள் பெறலாமென்னும் அற்புதமான தம்கருத்தை வில்லியத் திற்கு யோன் கூறியிருத்தல் வேண்டும். வரலாற்றுக்கு முன்னர்
உரிய பஞ்சாபின் ஒரு நகரான அரப்பா பிரமினபாத் போல் ஈவி ாக்கமின்றிக் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் பயனுக இன்று புகை வண்டிகள் நூறு மைலுக்கு மேலான தூரம் மூன்றும் ஆயிரத்தாண் டிற்குரிய செங்கட்டிகளால் அமைக்கப்பெற்ற ஓர் உறுதியான அடிப் படையில் ஓடுகின்றன. செங்கட்டிகள் களவெடுக்கப்பட்ட காலத்தில் பல்வகைப் பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள் மிக விசித்திரமானவற்றை வேலையாட்களும் எந்திரிகளும் தம்முடன்
வைத்துக் கொண்டனர்.
தொல்பொருளியலளவையோடு பிறன்றன் கொண்ட தொடர்பு இத்துடன் நிற்கவில்லை. கராச்சியில் பிறன்றன் விழைந்தோர் படைக்குத் தலைவனுக விளங்கினர். தாமே குறிதவரு வீசனுக விளங் கியபடியால் மிகத்திறனுன துவக்குப் படையொன்றை அவர் அமைத்தார். இவர் படை அங்கிருந்த தொல்படையினருடன் பல முறையும் போட்டியிடுவதுண்டு. இத்தொல்படையின் ஆணையாள ரான தளபதி, விழைந்தோர் படை பலமுறையும் போட்டியில் வெற்றி ஈட்டியதைக் கண்டு சிறிது மனம் வெதும்பியதுண்டு. இவர் பெயர் கன்னிங்நாம் ஆகும். இவர் 1861 இல் ஓய்வுபெற்றபின் வட இந்தியப் பகுதிக்குத் தொல்பொருளியலளவை இயக்குநர் நாயக மாக நியமிக்கப்பட்டார். பத்தொன்பதாம் நூற்றண்டிற்குரிய இந் தியத் தொல்பொருளியலளவையில் பெரும்புகழ் பெற்முருள் தள பதி கன்னிங் நாமும் ஒருவர். பிறன்றனின் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமான 1856 இல் கன்னிங்நாம் அசப்பாவைச் சென்று பார்த்தார். வேலையாட்களிடமிருந்து இவர் பல பழம் பொருள்கள் சேர்த்தார். இவற்றுள் பொறிப்புக்கள் கொண்ட சுதீற்றைற்று இலச்சினைகளும் இருந்தன. இவற்றின் வகையினவே வரலாற்றுக்கு முன்னரான இந்து நதி நாகரிகம் பஞ்சாப் நாகரிகம் ஆகியவற்றிற்குச் சிறப்பானவையென்று இப்பொழுது பலராலும் கொள்ளப்படுபவை. இவ்விலச்சினைகளில் தெளிவில்லா ஓர் எழுத்து

Page 14
6 வரலாற்று முன்னர்
முறையும் எருத்துருவும் காணப்பட்டன. இவ்விலச்சினைகள் தாம் அறிந்த இந்தியப் பழம்பொருள்களினின்றும் புறம்பானவையென் பதைக் கன்னிங்ங்ாம் உணர்ந்தார். இவை மிகப் பழையவை என் அறும் முக்கியம் வாய்ந்தவையென்றும் அவர்க்குப் புலப்பட்டது. இதன்பின் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரே இவற்றின் சிறப்பு உணரப்பட்டது; அாப்பாத்தலத்தினுல் பெயர் கொண்ட நாகரிகம் யாதென உணரப்பட்டுத் தெளிவாக்கப்பட்டது.
1859 இல் கன்னிங்நாம் அாப்பாவைச் சென்று பார்த்தபின் இடா வின் எழுதிய 'இனங்களின் தோற்றம்' என்னும் நூல் வெளியிடப் பட்டது. அதே ஆண்டில் சேர் யோன் எவான்சு புவிவரலாற்றிய லாளரான பல்கனர், பிரஸ்ாவிக் ஆகியோருடன் அபேவில் எனும் இடத்தைப் பார்க்கச் சென்றனர். இங்கு இறந்தொழிந்த முலையூட்டி வகைகளுடன் காணப்பட்ட மனிதனல் செய்யப்பட்ட தீக்கல் உபகர ணங்கள் புவி வரலாற்றியன் முறையில் தொன்மைவாய்ந்தன என்ப தில் அவர்கள் உறுதியாய் நம்பினர். 1863 இல் லயல் என்பார் 'மனி தனின் தொன்மைக்குரிய புவி வரலாற்றில் சான்று' என்னும் தம் நூலை வெளியிட்டார். ஐரோப்பாவில் பழஞ்சிலை மனிதன் என்பான் ஒருவன் இருந்தான் என்பது உணரப்பட்டது. ஆயின் அவ்வாண்டி லேயே புவிவரலாற்றியலாளரான புறாசு புட் என்பார் இந்தியாவின் முதல் பழஞ்சிலை உபகரணத்தைச் சென்னைக்கண்மையில் கண்டார். பழைய உலகின் முன்னைக் கற்காலப் பண்பாடுகள், அடிப்படையில், ஒற்றுமையான பண்புகள் கொண்டவை என்னும் கருத்திற்கு ஆகார மான முதற்சான்று இதிலிருந்தும் உதயமாயது. இதன் பின்னரும் தொடர்ந்து பல கண்டுபிடிக்கப்பட்டன. இவையும், அக்காலத்து நிலவிய புவிவரலாற்றியலறிவு தொல்பொருளியலறிவு ஆகியவற்றி விருந்த அளவிற்கேற்ப மதிப்பிடப்பட்டு அவ்வளவில் போற்றப் பட்டன. இன்று நாம் இந்தியாவிலிருந்த மிக முன்னைய கல்லுப கரணங்கள் ஏறக்குறைய நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன என்று கூறின் அது ஓரளவிற்கு நிகழ்தகவுடையதா யிருக்கும்.
புட் என்பார் தென்னிந்தியாவில் ஆராய்ச்சி செய்து பழங் கற் காலம் ஒன்றிருந்தது என்று நிறுவினர். கன்னிங்காம் வட இந்தியா

இந்தியக் காட்சி W 7
வில் ஆராய்ச்சி நடத்தி பதிவு வரலாற்றிலகப்படாத பண்டை நாகரி கங்கள் அங்கிருந்திருக்கலாம் எனக் காட்டினர். இதனல் இந்தியா வின் வரலாற்று-முன்னரைப் பற்றிய அறிவு ஆரம்பமாயது. இதன் பின்னர் இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றண்டுப் பழம் பொருள் ஆய்வு, வரலாற்றுாழிகள் எனப்படுவனவற்றைச் சார்ந்த மிகச் சிக் கலானவற்றை விளக்குவதில் ஈடுபட்டது. இந்த நூற்றண்டின் ஆரம் பத்தில் இந்தியாவினுள் போக்குவரத்து நல்நிலைமையடைந்து அர சியல் நிலைமை அமைதி பெற்றதெனினும் தொல்பொருளியலளவை வேலைகள் வளர்ச்சியடைவதற்குப் பதிலாகக் குன்றின. இந்தியாவி லிருந்த பிரிட்டிசாருள்ளே சேர் வில்லியம் யோன்சு, கன்னிங்காம் போன்றரின் திறனும், பல்வேறுபட்ட மனநாட்டமும் உடையவர்கள் இருக்கவில்லை. ஒரு நூற்முண்டோ அதனிலும் கூடிய காலத்திற்கு முன்னரோ இருந்த தலையானேரின் தொல்பொருளியல் முயற்சிக ளெல்லாம் ஆங்கிலேயன் ஒருவன் ஊக்கா குடிப்பதைப் போலவும் நாட்டான் ஒருத்தியைக் காமத்திக்கிழத்தியாய்க் கொண்டது போல வும் காலத்திற்கியையாதனவாகவும் வெறுக்கத்தக்கனவாகவுமாயின போல் தோன்றின. தொல்பொருளியல் வேலைகளெல்லாம் நல்நிதி பெரு அரசுத்திணைக்களம் ஒன்றினல் வழிநடாத்தப்பெற்றன. இங் கிருந்த பணியாளர் சிலரே. இவர்களின் வினைநுண்மையும் ஐசோப் பிய முன்னேற்றத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இயல்பினதாயிருந் தது.
இந்தியத் தொல்பொருளியலளவைத் திணைக்களம் தன் வரை யறுத்த அதிகாரத்துள், தன் காலத்தின் முதற் கால் நூற்றண்டுப் பகுதியில், இந்தியப் பழம்பொருள்கள் பற்றி நல்லளவு ஆராய்ச்சி கள் நடாத்தியது; எனினும் ஆயிரத்துத்தொளாயிரத்து இருபது வரை அசப்பாவின் சான்றினைக் கொண்டு, கன்னிங்காம் அவர்களால் இருக்கக்கூடும் என்று கருதப்பெற்ற வரலாற்று முன்னர்த் தவங் களைப் பற்றி, அதிகம் அத்திணைக்களம் அக்கறை கொள்ளவில்லை. 1922 இல் அரப்பாவோடு இணைந்த சிந்திலுள்ள மொகஞ்சோதாசோ நகர் என்பதொன்று உளது என்பதை அறிந்து அவ்வாண்டில் அங்கு பொருளியலளவைத் திணைக்களத்தைச் சார்ந்த காலஞ் சென்ற திரு. ஆர். டி. பனேர்சி அவர்களுக்கே உரியதாம். அரப்பாவில் ஈர் ஆண்டு களுக்கு முன் தயாராம் சகாணி நெறிப்படுத்த வேலைகள் ஆரம்.

Page 15
8 வரலாற்று முன்னர்
மாகியிருந்தன. இவ்வீர் இடத்து வேலைகளையும் அக்காலத்தில் இந் தியத் தொல்பொருளியல் இயக்குநர் நாயகமாயிருந்த சேர் யோன் மாசல் அவர்கள் இணைத்து நடாத்தினர்கள்.
மொகஞ்சோதாரோவிலும் அரப்பாவிலும் அகழாய்வுகள் தடைப் பட்டுத் தடைப்பட்டு பல பருவங்கள் தொடர்ந்து நடைபெற்றன; சிந்துத்தலத்தில் 1922 இலிருந்து 1931 வரை நடைபெற்றன ; பஞ் சாபிலுள்ள மிக வடபாலிருந்த தலத்தில் 1920 இலிருந்து 1921 வரையும் பின்னர் 1933 இலிருந்து 1934 வரையும் நடைபெற்றன. பெருவளவில் நடைபெற்ற இவ்வேலைகளோடு, மேற்காசியாவில் டோ கழ் வாய்வுகள் நடாத்திய காலஞ் சென்ற சேர் ஒரல் ஸ்ரீன் என்பார் பிரிட்டிசு இந்தியாவின் மிக மேற்குக் கோடியிலிருந்ததும், நன்கறி யப்படாது இருந்ததுமான, பலுக்கித்தானத்தில் வரலாற்று முன் னர்த் தலங்கள் இருந்தனவோ என்றறிய ஆய்ந்தறிய முயன்முர், 1926-27 வரை உள்ள காலத்தில் அவர் வடபலுக்கித்தானத்திற்கும் 1927-28 வரை உள்ள காலத்தில் தெற்கு பலுக்கித்தானத்திற்கும் பயணஞ் செய்து வட கிழக்கிந்தியாவின் வரலாற்று முன்னரை, இரான் மெசப்பொற்றேமியா ஆகிய இடங்களிலிருந்த பண்டை நாகரிகப்புலங்களோடு இணைப்பதற்கு மிக முக்கியமான சான்றுகளை அளிக்கக்கூடிய பல தகவல்களைச் சேர்த்தார். ஸ்ரீன் மேற் கொண்ட பயணங்கள் யாவும் முக்கியமாக உளவறிவதற்காகவே நடைபெற் றன ; இங்குமங்குமாய்ச் சிற்றகழிகள் தோண்டியதைத் தவிர அவர் வேறு பெரும் அகழ்வுகள் நடாத்தவில்லை. அப்பொழுது பழைய குடி யிருப்புக்களைச் சுட்டிக்காட்டுவனபோல் மேற்பரப்பில் காணப் பெற்ற பொருள்களையே அவர் சேகரித்தார். இவை பெரும்பாலும் மிக முக்கியமாக விளங்கிய கல ஒடிசல்களே. இவை தொல்பொரு ளியலார் பண்டைக் கிழக்கை அறிவதற்குப் பெரிதும் உதவின. ஆயி லும் ஆகிரிவ்சு என்பார் 1925 பலுக்கித்தானில் ஓர் இடுகாட்டை யும் ஒரு குடியிருப்பையும் பாத்தளவில் அகழ்ந்தாய்ந்தார். இவ்வ கழ்வில் அகப்பட்ட சான்றுகள் ஸ்ரின் அவர்கள் கண்ட வியக்கத் தக்க முடிபுகளுக்கு ஆதாரமாயமைந்தன.
இந்தியாவில் தொல்பொருளியல் வெளிப்புலவேலை குறைபாடு டையதாக விளங்கவில்லை. நற்றிறன் வாய்ந்த இளந்தொல்பொருளிய லாளரான என். சி. மகும்தார் அவர்கள் 1927 இலிருந்து 1931

இந்தியக் காட்சி 9.
வரை உள்ள காலத்தில் சிந்திலும் இந்துநதி வெளியிலும் மிக விரி வான அளவைகள் நடாத்தினர். அப்பொழுது அவர் அரப்பா, மொகஞ்சோதாரோ ஆகிய இரு நகர்களினதும் ஆதிக்கத்துட்பட்ட பிரதேசத்துள் இருந்த சிறு வரலாற்று முன்னர்க் குடியிருப்புக் களின் பரப்பினை வரையறுத்து, முக்கிய சில அகழாய்வுகளையும் நடாத்தினர். 1938 இல் அவர் புதிய வெளிப்புல வேலை நடாத்தும் பொழுது கிர்தார் மலைப்பகுதியில் கொள்ளைக்காரரால் கொலை செய் யப்பட்டார். இன்னுெரு பெரிய அகழாய்வு வடமேற்கு இந்தியாவிற் குரிய ஒரு வரலாற்று முன்னர்த்தலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது சிந்திலுள்ள சானுதாரோ எனுமிடமாம். இங்கு தோண்டல் நடாத்தியவர் காலஞ்சென்ற ஏணசு மக்கி ஆவர். இவர் 1935-36 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிந்திய அகழாய்வுகளுக்குப் பொறுப்பாயிருந்தார். அசப்பா நாகரிகத்தின் இறுதி நிலை பற்றி யறிவதற்கு மிக முக்கிய சான்றுகள் இங்கு கிடைக்கப்பெற்றன; இவ்விடத்து நாகரிகம் இப்பொழுது அரப்பா நாகரிகம் என்ற பெயரைப் பெற்றது.
1930 இன் பிற்பகுதியில் வட மேற்கிந்தியாவின் வரலாற்று முன் னர்க் காலம் பற்றிய அறிவு இவ்வாருய நிலையிலிருந்தது. பஞ்சாபி லும் சிந்திலும் இரு பெரிய நகர்களில் மிக விரிவான அகழாய்வுகள் நடைபெற்றன. ஒரு சிறு நகரிலும் இவ்வாய்வு நடைபெற்றது. மசூம்தார், ஸ்ரீன் ஆகிய இருவரின் ஆய்வுகளின் பயனுக பல்வேறு வரலாற்று முன்னர்ப் பண்பாடுகளுக்குமுரிய புவியியல் பரப்பைப் பற்றி நல்லதொரு அறிவு தோன்றியது. 1939-45 வரை நடந்த போரின் முற்பகுதிக் காலத்தில் இராசபுதனத்திலும் லசுபேலாவி லும் ஸ்ரீன் இன்னும் பல கண்டுபிடித்தார் ; இதன் பேருக, பல் வகைப் பிரதேசப் பண்பாடுகளின் பரவல் பற்றிய எம் அறிவு விரி வடைந்தது.
இடர் நிறைந்த குழலில், நிலவுதற்கரிய தரையில் நடாத்திய வெளிப்புல வேலைகளில் வெற்றியீட்டியமை என்றும் புகழ்ச்சிக் குரிய செயலே. ஆயினும் எங்கள் ஆய்விற்கு வேண்டிய பிற்களச் செய்திகளை அளித்திருக்க வேண்டிய அகழாய்வுகளைப் பற்றி நாம் அவ்வாறு சொல்வதற்கில்லை. இந்தியர் ஈட்டிய செய்திகளைச் செவ் விய முறையில் மதிப்பிடவேண்டுமெனில் குறை நிறை கூறுதல்

Page 16
O வரலாற்று முன்னர்
தவிர்க்க முடியாதது மன்றி இன்றியமையாததுமாம். மொகஞ் சோதாரோவிலுள்ள நகரமைப்பு, விதிகள், விடுகள், வடிகால்கள் முதலியவை பற்றிய பொது உண்மைகளுக்கு, அவை பற்றிய விவாங் கள் நிறைவற்றவையாயினும் எங்களிடம் ஏராளமான சான்றுகள் உள; அல்லாமலும் அங்கு கடைப்பிடித்த அகழாய்வுகளுக்குரிய பெருவளவினவான வழிமுறைகளில்லாவிடின் இந்து நிதிப் பள்ளத் தாக்கின் பெருநகர் நாகரிகத்தைப் பற்றிய அறிவு உதயமாயிருக்க முடியாது. ஆயின் 1931 இலிருந்து 1943 வரையுள்ள காலத்தில் அாப்பா, மொகஞ்சோதாரோ, சானுதாரோ பற்றி மனங் கவரும் எட்டு குவாட்டோத் தொகுதிகளில் வெளியிடப்பெற்ற பதிவுகள் 1890 இல் ஐரோப்பியத் தொல்பொருளியலளவையில் ஏற்படுத்தப் பெற்று 1920 தொடக்கம் சாதாரணமாகப் பயின்றுவரும் தொல் பொருளியல் நியமங்களை அணுகா என்று நாம் சொல்வதில் இழுக் கின்று.
ஐரோப்பிய வினை நுண்மைகளின் உயர் நியமங்களில் துறை போகியவரும் அவற்றை நன்முறையில் கடைப்பிடிப்பவருமான ஒரு தொல்பொருளியலார் அண்மையில் இந்தியாவில் நடாத்திய அக ழாய்வுகளில் இவ்வகை நியமங்களையும் வழிவகைகளையும் கடைப் பிடிப்பதில் இடர்ப்பாடுகள் இல்லையென்பதைச் சிற்றளவில், எனி னும் நன்முறையில், எடுத்துக்காட்டியுள்ளார். 1945 இலிருந்து 1948 வரை உள்ள காலத்தில் பேராசிரியர் ஆர். இ. மோட்டிம விலர் இந் தியத் தலங்களில் நடாத்திய அகழாய்வுகளில் பழைய முறைகள் அறவே கைவிடப்பட்டன; இதனுல் படையாக்கங்களைக் கணிப்பில் எடுத்துக் கொள்வது கைவிடப்பட்டு குறித்த ஒரு தரவு மட்டத்தி லிருந்து அளவெடுத்து மட்டங்கள் அமைக்கப்பெற்றன. வீலரின் சொற்களில் கூறுவதானுல் இந்நம்பரும் முறையினுல் இந்துநதிப் பள்ளத்தாக்கின் படையாக்கங்கள் எனப்படுபவை, உள்ளிடத்து நோக்கலினலன்றி வெகுதூரத்திலிருந்த கராச்சிக்கடல் மட்டத் தினுல் ஆட்சிப்படுத்தப்பட்டன. படையாக்கம் என்பது நன்முறை யிலாட்சிப்படுத்தப்படாத பெருவகழ்வாய்வுகளில் செவ்விய நோக் கலைக் கைக்கொள்ள முடியாமற் போனதற்காக, எகித்து, மெசப்
பொற்றேமியா ஆகிய நாடுகளின் பெரும் ஆற்றுப் பள்ளத்தாக்கு

இந்தியக் காட்சி l
களின் வண்டல்மண் வெளிகளில் கண்டுபிடித்துக் கடைப்பிடித்த ஒரு பழம் முறையாகும். இப்பொழுதுள்ள வெளிப்புலத் தொல் பொருளியலளவையின் வினை நுண்மையில் இதற்கிடமில்லை அாப்பா நகராணிலே இதுவரை அறியப்படாத காப்புக்களை 1946 இல் அகழ்ந்தாய்ந்த பொழுது நகரைப் பற்றிப் புதுக் குறிப்புக்கள் தோன்றலாயின; இவ்வாய்விலிருந்து இத்தலத்தின் படையமைவு பற்றிய தெள்ளிய உண்மைகள் முதன்முதலாக நிறுவப்பட்டன.
தொல்பொருளியலில் என்ன செய்யலாம் என்பது பலுக்கித்தா லுக்கும் இந்தியாவிற்கும் செய்து காட்டப்பட்டது. புதியவான வழி வகைகளில் ஓரளவிலாகுதல் பயிற்சிபெறும் வருங்காலப் பணியாளர் இந்தியாவில் இம்மரபினைத் தொடர்ந்து பேணி வருவார்களென எதிர்பார்க்கிருேம். இவ்வழிவகைகள் இந்தியாவிற்குப் புதியனவாயி ம்ை எங்களுக்குப் பரிச்சயமானவையே. ஐரோப்பியத் தொல் பொருளியலாளரும் கீழைநாட்டுத் தொல்பொருளியலாளரும் தம் முள் பணியாளரையும் கருத்துக்களையும் அடிக்கடி பரிமாறிக் கொள் வதாலேயே நிறுவப்பெற்ற நியமனங்கள் பேணப்பெற்று காலத்திற் கியைந்தனவாய்ப் போற்றப்படலாம். பண்டைநாளில் இந்தியத் தொல்பொருளியலளவைத் திணைக்களத்திற்குப் போதிய நிதி உத வாமைக்கும், அகழாய்வு வினை நுண்மை வளர்ச்சிகளை திணைக்களம் நேர்வற அறிய வையாததற்கும் பிரிட்டிசாரே பெருவளவிற் பொறுப்பாவர்.
இந்தியாவிலும் பலுக்கித்தானத்திலும் பொருள்களைச் சேகரிக்கும் முயற்சி நடந்த காலத்திலேயே மேற்காசியாவிலுள்ள மற்றை நாடு களில் புதிய வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. குறிப்பாக இரானில் 1930 இல் பிரெஞ்சுக்காரரும் அமெரிக்கரும் நடாத்திய அகழாய்வுகளினுல் இரானின் வரலாற்று முன்னர்க்குரிய மறை நிகழ்ச்சிகள் அம்பலமாயின. இக்காலத்தில் அவ்வயரா உழைப்பாளி யான செர் ஒரல் ஸ்ரீன் என்பார் பார்சிலிருந்து ஊர்மியா வாவிவரை குறிப்பிடத்தக்க பல புதிய உளவுகள் கண்டுபிடித்தார். இவை, அகழாய்வுகளின் படையாக்கங்களில் காணப்பெற்ற பண்பாட்டுப் பரவலைப் பற்றியறியவேண்டிய, பல புவியியல் அமிசங்களுக்கு இன்றியமையாச் செய்திகளை, அளிப்பவையாயிருந்தன. ஏலவே

Page 17
12 வரலாற்று முன்னர்
1933 அளவில் பேராசிரியர் கோடன் சைல்ட் என்பார் வடமேற்கு இந்தியாவில் பெற்ற பொருள்களையும் செய்திகளையும், மிகத் தொன் மையான கீழைநாட்டு மற்றைப் பண்பாடுகளோடு கொண்ட உறவுக ளோடு சார்த்தி, மிக நுண்முறையில் தொகுத்து விளக்கம் அளித் தார். பத்தாண்டுகளின் பின் போரினல் எழுந்த எதிர்பாரா நிகழ்ச் சிகள் என்னைப் புதுதில்லிக்கு இட்டுச் சென்றன. இதனல் சைல்ட் அவர்களின் அடிப்படை வேலையை, இடையிட்ட பத்தாண்டுகளில் ஈண்டிய புத்தறிவினைக் கொண்டு நான் புதிதமைக்க வேண்டியிருந் தது. டோரின் பின் இப்பணியைச் சிகாகோவிலுள்ள கீழைநாட்டு நிறுவகத்தைச் சார்ந்த கலைநிதி தொனுல் மக்கவுன் அவர்கள் தொடர்ந்து நடாத்தி வருகிறர்கள்.
புறுசு புட் அவர்கள் நடாத்திய தலையாய பணியின் பின், 1930 வரை இந்தியக் கற்காலத்தைப் பற்றிய ஆய்வு புறக்கணிக்கப்பட்டு வந்தது. இதன்பின் திரு. மைல்சு பர்கிற்று என்பார் சில தென்னிந் தியப் பொருள்களைப் பற்றி விளக்கமளிக்க முயன்முர். இவர் பணி செய்த காலத்திலேயே வேறு பணியாளர் வட மேற்கில் பழைய கற் கைத்தொழிற் பொருள்களையும் புவிவரலாற்றியல் தோற்றப்பாடு களேயும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். இதன் பயணுக 1935 யேல் பல்கலைக்கழகமும் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகமும் கூட்டாக புல ஆய்வு நடாத்தச் சென்றன. இவ்வாய்விற்கு டி தெரா என்பாரும் பற்றேசன் என்பாரும் தலைமை வகித்து நடாத்தினர். இவர்கள் வேலைக்கு இவரின் பின் ஆய்வு நடாத்திய மோவியசு என்பாாதும் கிருஷ்ணசுவாமி என்பாரதும் பணி துணையாக அமைந்தது. இவ் வாய்வாளரின் ஆய்வின் பலனுல் புவிவரலாற்றியல் அடையல்களோ டியைந்த பழங் கற்காலமனிதனின் மிக முக்கியமான கைத்தொழிற் பொருள்களைப் பற்றி நாம் அறியக்கூடியதாயிருந்தது; இவை இமா லயப் பிரதேசத்தின் இற்றுத்தளவரிசைகளில் காணப்பட்டவை, எவ்வகையினும், வட ஐரோப்பாவில் கண்டறிந்த கிரமவரிசை யோடு மிக இணைபுடையன போல் தோன்றுகின்றன.
ஆயினும் இந்தியாவின் வரலாற்று முன்னரைப்பற்றிய எம் அறி வில் ஆங்காங்கு அறியாப் பெரும்பகுதிகள் பல உள; இப்பொழுது நாம் கூறிய பழங்கற்காலத்துக்கும் பலுக்கித்தானத்தின் மிக முன்

இந்தியக் காட்சி 13
னைய குடியிருப்புக்களின் காலத்திற்குமிடையிலுள்ள பகுதி அறியப் படாத பகுதிகளுள் மிகப்பெரியதும் இருள் நிறைந்ததுமாகும். கி.மு இரண்டாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதியில் அரப்பாப் பண்பாடு ஒடிந்து வீழ்ந்தபின் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் ஒத்த அளவில் இருள் நிறைந்தனவே; இப்பருவமே ஆரியர் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் இந்தோ ஆரிய மொழி பேசும் கிளையினர் இங்குற்ற பருவம் என்று மாபுரை பொதுவாகக் கூறும். ஆயின் இந்நிகழ்ச் சிக்கு நேரிய தொல்பொருளியல் சான்றில்லை. எனினும் புதிய வேலை யும் இற்றைநாள்வரை படைத்துக் கொண்ட வினை நுண்மைகளும் மீண்டும் எம் அறிவெல்லையை விரிவுபடுத்துமுன், இதுவரை ஆய்ந்த வற்றைத் தொகுத்துக் காணவும் இந்திய வரலாற்று முன்னர் பற்றி இப்பொழுதுள்ள எம்மறிவை மதிப்பிடவும் இக்காலம் நல்ல தருண
tAfrւb.
அதிகாரம் 1 இற்குரிய குறிப்புக்கள்
இந்தியாவில் நடந்த தொல்பொருளியல் பற்றிய பொதுவான sia ri5òG5 Luridi5, Revealing India's Past (ed. J. Cumming, 1939) பழஞ்சிலைக்காலம் பற்றிய முன்னை வேலை பற்றி, கிருஷ்ண சுவாமி, Ancient India இல் எண். 3 (1947), 13, குறிப்பிட்டுள் at Iri. John Brunton's Book a rairl ig Gu Tir Gifu Ji Gu. at it. Gait பம் என்பாரால் திருத்தி 1939 இல் வெளியிடப்பெற்றது. இந்நூலில் பின்னர் குறிப்பிடப்படும் அகழாய்வுகள் பற்றிய சிறப்பறிக்கைகளை விட இந்தியத் தொல்பொருளியலளவையினர் நீள்வரிசையான Memoirs, Annual Reports என்பனவும் வெளியிட்டுள்ளார்கள். பிற் கூறிய தொடரின் வெளியீடு இப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. பதிலாக Ancient India எனும் வெளியீடு 1946 இல் தொடங்கி நான்கு பகுதிகள் வெளியாகி உள்ளன. இந்திய, பாக்கித்தான் அரசு கள் அமைத்தபின் எதிர்காலத்துத் தொல் பொருளியலளவை வெளி யீடுகள் பற்றி ஒன்றும் அறிவிக்கப்படவில்லை.

Page 18
14 வரலாற்று முன்னர்
இந்தியாவில் நடந்த முந்திய அகழ்வுகளின் நியமம் பற்றி விரி வான விமரிசம் Ancient India, எண் 3, (1947) 143-149 இல் உள் ளது. இதை எழுதியவர் பேராசிரியர் ஆர். இ. எம். விலர் ஆவர். இவர் அக்காலத்தில் இந்தியாவில் தொல்பொருளியலளவை இயக்கு நர் நாயகமாக விளங்கியவர். இதில் சானுதாரோவைப் பற்றி நான் எழுதிய குறிப்பும் ஒன்று உளது.

அதிகாரம் II ஆரம்பம் - இந்தியக் கற்காலம்
தறிக்கும் கலைத்திறனுக்குரிய முடிவான இம்மாதிரிகள், மனித குலமானது மக்கள் முன்னர் ருதியவாற்றிலும் மிகத் தொனமையானது என்பதைக் காப் டுகின்றன. இந் நிலையை நிறுவ வேறு எச்சமில்லையென்பதை அவர் ஒரு பொருளாகக் கருதவில்லை.
\,
ரி. எல். பீகொக், கிரில் கிராஞ் (1860)
இந்தியாவின் வரலாற்று முன்னரில் இருந்த மனிதக் குடியிருப் புக்களுக்குரிய தொல்டொருளியல் பதிவுச்சான்று புவிவரலாற்றி யன் முறையில் மிகமிகத் தொன்மையான ஒரு பருவத்தைக் குறிப் பதாகும். புவி வரலாற்றியன் முறையில் கணக்கிடும்போது எழும் மாபெரும் கால எல்லைகள், முதன் முதல் மனிதன் தோன்றிய அறி குறிகளைக் காட்டும் இயற்கையின் வளர்ச்சியைக் கொண்ட இறு திக் காலப் பகுதிகள் உட்பட, ஞாயிற்றண்டுகளாகக் கணிக்கப் படக்கூடியவை எனினும், மனத்திலே மலைப்பை ஏற்படுத்தக்கூடி யனவாகும். எனினும் இவ்வகையில் கணக்கெடுக்க முயற்சி எடுக் கப்பட்டது; அதன் பலாபலன்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியனவாயுள்ளன. பிளிதொசீன் காலத்துப் புவிவரலாற்றியல் பொருள்களுக்கும் மாறுபடும் ஞாயிற்றின் கதிர்வீச்சு வளைகோட் டுக்குமிடையே அமைந்த இணைப்பை உள்ளடக்கிய கணக்கெடுக்) கும் முறைகள் இக்கணக்கெடுப்பில் கையாளப்பட்டன; கதிர்வீச்சி டன் அந்நிகழ்ச்சிகள் நெருங்கிய தொடர்பு கொண்டன போலத் தோன்றுகிறது; இதன் பலகை இக்கால எல்லையின் ஆரம்பம் ஏறத்தாழ 600,000 ஆண்டுகட்கு முன்னசாகக் கொள்ளப்பட்டுளது பழைய உலகில் கருவி உபயோகிக்கும் ஒருவனக மனிதன் விளங்கி, யமையை எடுத்துக் காட்டும் கல்லில் செய்த ஆதிகருவிகள், கற் பன போன்ற இந்த மிகுதொன்மைக் காலத்தையே சார்ந்தன குறிப்பாக அறியக்கூடிய சில வடிவங்களில் அமைந்த கற்கருவிகளை ஆக்கும் செயல்முறையில் அபிவிருத்தி அடுத்து வந்த ஓர் இலட்சம் ஆண்டுகளிலே ஏற்பட்டமைக்கு ஐயமில்லை. இது ஐரோப்பாவில்
5 3-CP 3040 (6814)

Page 19
6 ஆரம்பம்
செவ்விதாகவும் ஆபிரிக்காவில் ஓரளவிலும் புலப்படுகிறது. பிதிகந் திாபசு இனத்தவருக்கு மிகத் தொன்மையான எடுத்துக்காட்டாக விளங்குவதாகப் புவிவரலாற்றியலார் சிலர் கருதும் யாவாவிலே மொட்சோகேர்த்தோவைச் சேர்ந்த மண்டை ஓடும் இக்காலத்தைச் சார்ந்ததாதல் கூடும். இக்காலத்திலிருந்து மனிதனின் ஆதி வளர்ச்சியின் கதையை கருவிகளும் உயிர்ச்சுவடுகளும் பல்லாயிரத் தாண்டுகட்கூடாக்த் தற்காலம் வரை எடுத்தியம்புகின்றன. ' தற் காலம்’ என்பது புவிவரலாற்றியலாரின் கருத்துப்படி பதினைந்து இருபதினுயிரம் ஆண்டுகட்கு முன்னர் உள்ள காலமேயாகும்.
இவ்வூழி முழுவதும் பெரும் புவிவரலாற்றியற் பிரிவான குவாற் றேனேறிக் காலப் பகுதியையும் பிளிதொசின் எனும் உப பிரிவை யும் உள்ளடக்கியதாகும். தொல்பொருளியற்படி பிளிதொசீன் காலப் பொருள்களான மனித எச்சங்களும் கருவிகளும், மனிதனின் வளர்ச்சியில் பழஞ்சிலை அல்லது பழங் கற்கால ஊழியைச் சேர்ந் தனவாக வகுக்கப்பட்டுள்ளன. இன்னும் பிளிதொசீன் பழஞ்சிலை ஆகிய இரண்டும் முன், பின் என இரு பெரும் உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆயினும் முன்னர்க் கூறப்பட்ட, ஞாயிற்றுக் கதிர்வீசல் மாற்றங்களுடன் இணைக்கப்பட்ட பிளிதொசீன் புவிவா லாற்று வளர்ச்சி தொடர்பாக, வேறு முக்கிய உபபிரிவுகளும் உள.
பிளிதொசீன் கால் முழுவதும் சில பெரும் காலநிலை மாற்றங்கள் பருவமுறையில் ஏற்பட்டன. இவை பல்லாயிரம் ஆண்டுகட்கூடாகப் பரவியபோதிலும் பழைய உலகின் வட பாகங்களில் மாறி மாறிக் குளிரும் வெப்பமும் உடைய நிலைகளைக் கொண்டனவாக விளங்கின. இவை தெற்கே ஒருவேளை ஈரமும் வாட்சியுமுடைய காலநிலைகளாக விளங்கியிருக்கலாம். இக்குளிர் நிலைகளே நாமறிந்த பனிக்கட்டி ஊழிகள் அல்லது பணியாற்று ஊழிகள். இவை பணியாற்றிடைப் பருவங்களால் வேருக்கப்பட்டன; இரண்டும் மாறுபடும் கால அளவுடையனவாக விளங்கின. இக்குளிர் நிலைகளின்போது, தற் போது வடதுருவப் பன்ரிக்கட்டிப் படை எல்லையாக விளங்குவது ஐரோப்பாவில் தெற்கே இங்கிலாந்தின் கேமிசு ஆறு வரை தொடர்ச்சியான பனிக்கட்டித் திரளாக விரிந்தது; வட இந்தியா வில் இது இமயமலையின் அடிவாரத்தை அடைந்தது. மூன்று பணி பாற்றிடைக் காலங்களாற் பிரிக்கப்பட்ட நான்கு பிரதான பணி

இந்தியக் கற்காலம் 17.
பாற்றுக் காலங்கள் அறியப்பட்டுள்ளன. மனிதன் உறைவதற்கு ஏற்ற நிலை எல்லைகட்கும், நிரந்தரமான, உறைவதற்குத் தகுதியற்ற பனிக்கட்டி வலயத்து எல்லைகட்கப்பாற்பட்ட காலநிலைக்கும் காரணிகளாக இருந்த இப்பெரும் மாற்றங்களுடன் (பலியொலி திக்கு) பழங்கற்கால மனிதன் பற்றிய ஆராய்ச்சி நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ጎ
பழஞ்சில்க்க்ால மென்பது ஆயிரத்தாண்டு காலமாக நீடித்த மிகப் பாரிய அளப்பரும் வாளாமை என்றே சொல்லல் வேண்டும். மிக மிக மந்தகதியில் முன்னேறிய மனிதனின் கைத்தொழிற் பொருள்களின் எச்சங்கள் மீதிகளிலிருந்து இது அறியக் கூடியதா யுள்ளது. ஒருவேளை 200,000 ஆண்டுகள் நீடித்திருக்கக் கூடிய பெரும் பணியாற்றிடைக் காலத்திலே ஆக்கப்பட்ட கருவிகளின் வகையில் ஏற்பட்ட மாற்றங்கள் தொல்பொருளியல் முறையில் சிற் றளவினதாயிருத்தல் வேண்டும். வேண்டிய உருவத்தைப் பெறுமாறு கற்களே உடைத்தும் சில்லம் வெட்டியும் ஆக்கும் நுண் திறமையின் மிகு மந்தமான வளர்ச்சியை இது காட்டுகின்றது. பிந்திய |g|ଶଙ୍ଖ தொசீன் காலத்திலே கருவிகளையும் ஆயுதங்களையும் திருத்தி ஆக்கு வதில் விரைவான வளர்ச்சி காணப்படின், இது, புவிவரலாற்றியல் கால அளவை முறையில், குறிப்பான மாற்றத்தைக் காட்டக்கூடிய தான ஐம்பதினுயிரம் ஆண்டுக் காலத்தைச் சுட்டுவதாகும்.
கால அளவிற் போலவே எல்லை அளவிலும் பழஞ்சிலைக்காலப் பண் பாடுகள் பெருவளவில் நீடிப்பனவாகும். பிளிதொசின் காலத்திலே எவ்விதத் தெரிவுமேயின்றி, ஒரே வகையில் ஆக்கப்பட்ட ஒரே வடி வமுடைய கருவிகளைத் தென்னிந்தியா, ஆபிரிக்க தென்னிங்கிலாந்து ஆகிய இடங்களில் எடுக்கலாம். மூன்று இடங்களிலும் இக்கருவிக ளின் ஆக்குமுறையும் அமைப்பும் தோன்றிய வரலாறும் அவற்றி னின்று எழுந்த வளர்ச்சியும் ஒரே தன்மையனவாயிருப்பதை நாம் காணலாம். பழஞ் சிலைக்காலத்தைச் சார்ந்த கருவியாக்கும் மரபு கள் கண்டம் கடந்து பரந்தவையாம் பிரதேசத்தின் ஓர் எல்லையில் நடப்பது ஏறத்தாழ அதே நேரத்தில் மறு எல்லையில் நடக்கிறது போலத் தோன்றுகிறது.

Page 20
8 ஆரம்பம்
பழஞ்சிலைக்காலம் முழுவதும் வாழ்விற்கு ஆதாரமாக அமைந் தவை யாதோ ஒரு வகையில் வேட்டையாடுதலும் உணவு சேகரித் தலுமேயாம். நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளினின்றும், ஒரு சிறு குடித்தொகையினர் சிறு கிளைக் குழுக்களாகவோ இனக் குழுக் களாகவோ வாழ்ந்து, மாபெரும் நிலப்பரப்பில் தாம் உணவுக்காகக் கொல்லும் மிருகங்களைத் தேடிச் செல்லும் காட்சியை நாம் இப் பொழுது எண்ணிப் பார்க்கலாம். வாழ்வு நிலையற்று, ஆபத்து நிறைந்து தனிமையுடையதாக விளங்கியது; குழுவுக்குக் குழு கருத்துக்கள் பரிமாறுதல் எளிதாக விருக்கவில்லை. குழு மனம் எனும் ஒன்றுளது என ஏற்றுக்கொள்ள உளநூலார் எம்மை அனு மதிப்பின், மனித உணர்வின் வளர்ச்சியின் ஆதி நிலையிலே, புவியில் வசித்தற்குரிய பெரும் நிலப் பிரதேசங்கள் எங்கணும் கருவியாக்கு முறைகளிலே ஏற்பட்ட மந்தமான மாற்றங்கட்கு இதுவே (இக்குழு மனமே) காரணம் எனக் கொள்ளல் கூடும்.
பழஞ்சிலைக் காலத்தைச் சார்ந்த (புறப்) பொருட் பண்பாட்டு எச்சங்கள் அழியாக் கற்கருவிகளேயாகும்; பிற் பழஞ்சிலைக் காலம் வரை, மனிதர் உறைவிடத்திற்கு உறுதியான சான்று, அது வேட சின் தங்குமிடமேயாயினும், காண்டலரிதாயுளது. முற்பழஞ்சிலைக் கால மனிதனையும் அவன் செய்வினைகளையும் பற்றி அறிவதற்கு ஆற் றுப் பரற்கற் படைகளில் கிடக்கும் கைவிடப்பட்ட கற்கருவிகள், ஆங்காங்கு காணப்படும் மனிதரின் உயிர்ச் சுவடுகள்-பெரும்பா லானவகையில் வேட்டையாடப்பெற்ற விலங்குகளின் உயிர்ச் சுவடு கள்-முதலியவையே எமக்கு இப்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள சாதனங்கள். தொல்பொருளியற் கல்வியாவும் தற்செயலான எச்சங் க்ளால் பிழைபடுவனவாயுள. ஒரு மக்கள் கூட்டத்தின் பொருளியற் பண்பாட்டுப் பொருள்களுள் அழிதகமையில் குறைந்தனவே நிலை நிற்கக் கூடியனவாம். ஆயினும் வரலாற்று முன்னர்க் காலத்துள் பழஞ்சிலைப்பருவத்தைப் பற்றிய அறிவைப்போல் எப்பருவ அறி வும் தெளிவற்றதாயில்லை தொன்மையில் மயங்கிய இப்பருவகாலத் துக்குரிய வரலாறு பற்றிய எம் அறிவு எப்பொழுதும் ஓரளவிற்கு *மனித பண்பு பற்றிய இயல்பில் குறைந்ததாகவே இருந்து வந் துள்ளது. அன்றியும் இவ்வறிவும் மனித வரலாறு பற்றி நாம் அறி யக்கூடிய அல்லது கற்பனை செய்யக்கூடிய தெளிவான எல்லைக்குட்

இந்தியக் கற்காலம் 9 படும் எதனுேடும் தொடர்பிற் குறைந்தனவாயுமிருக்கும். பழைய உலகத்தில் மனித பரிணுமம் பொதுவாக வளர்ந்தவாற்றேடு எவ் வாறு நாம் அறிந்த கற்கைத்தொழில்கள் இயைகின்றன என்றும் கால தேச வர்த்தமானத்தோடும் அவை பொருந்துகின்றன என்றும் காட்டுவதிலும் இந்தியக் கற்கால ஊழியின் ஆரம்பகாலத்தை விவ ரிப்பது மிக மிகக் கடுமையாகும். இத்தகைய ஒர் எல்லைக்குள் எங்களிடமுள்ள சான்றுகளைக் கொண்டு பழஞ்சிலைக் காலத்தில் இந்தியா என்ன இடத்தைக் கொண்டுள்ளது என்று மட்டும் சொல்லலாம்; கி.மு. நான்காம் அல்லது ஐந்தாம் ஆயிரத்தாண்டுக ளில் வேளாண்மை புகுத்தியபின் தொடர்ந்த பருவங்களுக்கு ஒரு முன்னேடியாக மிக மிகத் தொன்மைக் காலத்திற்குரிய பண்டை வேட்டையாடிகளின் நீள்பருவங்களைப் பற்றி விவரிப்பதும் சாலும் ; இங்கு நாம் கூறிய வேளாண்மை புகுந்த பருவமே இந்தியாவைப் பற்றிய வரலாற்று முன்னர்ப்பருவத்திற்குரிய பெரும்பகுதிச் செய்திகள் கிடைக்கப்பெறும் பருவமாகும்.
காசுமீரம், பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்குரிய இமாலயத்தின் கீழ்ச்சரிவுகளிலுள்ள புவிவரலாற்றியல் படிவுகளிலிருந்து, பணியாற் அறுச் செயற்பாடுகளிற்குரியன எனப் பிரிக்கப்பட்ட, ஒரு தொடர் வரிசையான பணியாற்றுப் பருவங்களை நாம் அறியலாம். இவற்றை யும் நாம் மறுபால் இராவல்பிண்டியிலுள்ள ஆற்றுப்பள்ளத்தாக்கு களின் அமைப்புக்களோடு இணைத்து நோக்கலாம்; இங்கு இதற்கு முன்னர்ப் பருவத்தில் கொண்டுவரப்பட்ட பாறைத்துண்டுகளை ஆற் முெழுக்கு வெட்டித் தளவரிசைகள் அமைத்துளது. பணியாற்றுப் புவியியற் பிரச்சினைகள் மிகச் சிக்கலானவை; வாசகர்களுக்கு இவ் விடர்களைப் பற்றி எடுத்து அதிகம் ஒதாமல் இப்பிரச்சினையில் சிக் கல் உள்ளது என்றுமட்டும் அழுத்திக் கூறினுற் போதுமானது. வட இந்தியாவில் காணப்படும் பணியாற்றுத் தோற்றப்பாடுகளோடு ஆற் அறுத்தள வரிசைகள் இணைந்து தோன்றுவதை நோக்கும்போது பிளித்தொசீன் காலத்தில் இடையிட்ட ஐந்து பணியாற்றுப் பருவங் கள் இருந்திருக்கலாம் என்று சொல்லலாம்.
இப்பருவங்களின் கிரமத்தில் ஓர் ஒழுங்குளது; முதன்முதலாக அல்ப்சிலும் பின்னர் வட ஐரோப்பாவிலும் நடைபெற்றன என்று என்றே அறியப்பட்ட கிரமத்தோடு இது பெருவளவிற்குக் காலத்

Page 21
20 ஆரம்பம்
தால் இணைந்து செல்வதாயுள்ளது. இந்தியாவில் நடந்த பணியாற் அறுப் பருவங்கள் ஐரோப்பாவில் நடைபெற்ற முக்கிய பனி ஊழிக ளோடு (முதலாவதைத் தவிர்ந்து) இயைபுடையனவாயுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற இறுதிப் பணியாற்றுப் பருவங்கள் இறுதி ஐரோப்பியப் பணியாற்றின் மிக உச்ச விரியப்பருவங்கள் மூன்றுட னும் ஒத்து நிற்பனவாயுள்ளன. ஐரோப்பா, இந்தியா ஆகிய இரண் டிடங்களிலும், இக்காலநிலை மாற்றங்களின் ஒழுங்குக் கிரமத்தோடு இயைந்த ஆற்றுத் தளவரிசைகளில், மனிதனுக்கிய கருவிகள் காணப்பட்டன. எனவே, இயற்கைத் தோற்றப்பாட்டில் மிகு தொலையிடங்களுக்கிடை காணப்படும் இணைபினைக் கொண்டு, கருவி வகைகளிலும் இங்கும் இணைபு காணப்படும் என எதிர்பார்ப்பது இயற்கையே. இவ்வாறு ஒருவர் எதிர்பார்ப்பது போலவே இவ் விரண்டிடங்களிலும் கருவிசெய்வினை நுண்மையில் ஒத்த பரிணுமம் இருப்பது உண்மையே. வடமேற்கு இந்தியக் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் பர்மாவின் மேற்பகுதியிலும் வடசீனுவிலும் நடந் தேறின என்றும் நாம் கொள்ளலாம். இதனுல் மிக்க வடபகுதியின் பால் பணியாற்றுப் பருவங்கள் நடைபெறுவதற்குக் காரணமா யமைந்த இயற்கை ஊக்குகள் (பெரும்பாலும் ஞாயிற்றின் கதிர் விச்சு மாற்றங்கள்) தென்னிந்தியாவிலும் கிழக்காசியாவிலும் மாறி மாறி வந்த ஒப்பீட்டளவிலான ஈரக்காலநிலைகள் உலர்காலநிலைகளை விளைவித்திருக்கலாம். ஈரக்காலநிலை, உலர்காலநிலை என்பன மழை பொழி பருவம் பொழிவிடைப் பருவங்களாம். இவ்வுண்மை புவி வரலாற்றிபலாலும் தென்னிந்தியாவிலும் கிழக்காசியாவிலும் உள்ள உயிர்ச்சுவட்டு எச்சங்களாலும் அறியக்கிடக்கிறது.
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் நடைபெற்ற இயற்கையான கால நிலை மாற்றங்களோடு எண்ணிப் பார்க்கையில், மனித மரபுகள் கருவியாக்கு முறைகள் ஆகியவற்றுக்கேற்ப அமைந்த, பிரதான பிரிவுகளை எடுத்துக் காட்டும் சில பிரதான கருவி வகைகளை நாம் காணக்கூடியதாக விருக்கிறது. இத்தகைய கைத்தொழில் நடை பெற்ற இடங்கள் எங்கணும், குறித்த ஒரு தொழினுக்காக, எ.கா. வெட்டுதல், கிழித்தல் போன்றவற்றிற்காகக், கற்களை உடைக்கும் அல்லது சில்லம்படுத்தும் முறைகள் சில அடிப்படைத் தத்துவங்

இந்தியக் கற்காலம் 2.
களைக் கொண்டிருந்தன்; எனினும், குறித்த சில பெரிய புவியியல் பகுதிகளில் பிற்பழஞ்சிலைக்காலம் முழுவதும் பிரத்தியேகமான சில வினை நுண்மைகள் இருந்தன என்பதற்கு அறிகுறிகள் இருந்தன. இத்தகைய பெரிய ஒரு தொகுதிப் பிரிவுகளைப் படைத்துக் கொள்ள லாம் என்ற ஓர் கருத்துதயமானவுடன், தொல்பொருளியலளவை யாளர் தெரிவித்த அடிப்படை வினை நுண்மைப்பிரிவு, காழ்க்கருவி கள் ஆக்கல் சில்லக்கருவிகள் ஆக்கல் என்னும் பிரிவுகளாம். காழ்க் கருவி என்பதில் தாய்த்துண்டை வெட்டி உடைத்து அல்லது சில்லம் பொளிந்து, விரும்பிய ஓர் உருவரும்வரை கருவி அமைக்கப்படும். இத்தத்துவம் பெருவளவில் சிற்பவமைப்பை ஒக்கும். சில்லக் கருவி வகைகளில் முதல் நடைபெறவேண்டியது கற்றுண்டமொன்றி லிருந்து பெரும் சில்லமொன்றைப் பிரித்தெடுத்தல் ; பின்னர் அத னேச் செவ்விய கருவியாகச் சமைத்தல். காழ்க்கருவிகளை அமைக் கும் முறையிலேயே சில்லங்கள் தோன்றல் இயல்பே. இவையும் பின் னர் பல்காலும் கருவிகளாக்கப்படும். ஆயினும் காழிலிருந்து படைக்கப்பெற்ற கருவிகளே... எங்கும் மிகுந்து காணப்பட்டன. ஆயின் சில்லக் கைத்தொழிற் பொருள்கள் உள்ள இடங்களிலும், உண்மையான காழ்க்கருவிப் பண்பாடுகளுடன் தொடர்பு ஏற்பட்ட காழ்த்தொழில் வினைநுண்மை காணப்படுகின்றது.
இப்பாகுபாடே முதன்முதலாக ஏற்பட்ட எளிய பிரிவு ; அளவை யியல் வல்லுநர் சிலர் இப்பிரிவுடன் மூன்முவது பெரும் பிரிவு ஒன் றையும் இணைத்துள்ளனர். இது சில்லக் கைத்தொழிற் பொருள்களை நிகர்த்தது எனினும் தனியாக வைத்தெண்ணற்பாலது என்று அவர் கள் கருதினர். இவை தறிகைகளாகப் பயன்படும் கருவிகளாயிருந் தன. தறிக்கும் கருவித் தொகுதியென்று இது ஒரு திருத்தமற்ற முறையில் அழைக்கப் பெற்றது. இது ஆசியாவைப் பொறுத்தவரை யில் தனி ஒரு சிறப்பமிசம் பெற்றது. ஏனெனின் இது தனி ஒரு வகையினவான வட இந்தியப் பின் பழஞ்சிலைக்காலம் கைத் தொழிற் பொருள்களையும் அடக்கியுள்ளது. ஆயினும், புறம்பான ஒரு வகையைச் சேர்ந்தவை என்று கொள்ளப்பட வேண்டிய அவ
சியமில்லையென்றும் சில்லக் கைத்தொழிற் பொருள்களும் அடங்கும்

Page 22
22 ஆரம்பம்
என்றும் வேறு பிற தொல் பொருளியலாளர் கருதுகின்றனர். எனி ணும் தென்னிந்தியாவிலும் நடு இந்தியாவிலும் காழ்ப்பண்பாடுகள் இருந்தன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள. இதுபற்றி ஒரு பிணக்குமில்லை. இன்னும் சில இடங்களில் இந்தியாவின் இரு பெரும் தொகுதிகளின் வினை நுண்மைகள் கலந்து மயங்கியவாற்றை யும் நாம் காணலாம்.
அவப்பேருகப் பழஞ்சிலை மனிதனின் எலும்புக் கூட்டுச் சிதைவு கள் இந்தியாவில் ஓரிடத்திலேனும் காணப்படவில்லை. எனினும் ஆசி யாவே மனிதனின் ஆதிக் கூர்ப்பிற்குரிய சில மிக முக்கிய சான்று களை அளித்துள்ளது. மனிதனும் மானுடமொத்த விலங்குகளும் இறு தியில் கிளர்ந்தெழுந்த பொது இனம் கூர்ந்து ஆகிய முறையில் ஓரி டம் கொண்ட, விலங்குகளின் முக்கிய உயிர்ச்சுவட்டு எச்சங்கள் சீவலிமலைகளின் மேல் மயோசீன் படிவுகளில் காணப்பட்டன. (இவை மூன்றம் புவியியல் பருவத்தில் பிளிகொசீன் பருவத்திற் கும் பின் இடைபுகுந்த பிளியோசீன் பருவத்திற்கும் பல்கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்திற்குரியன.) இக்குரங்கு கள் அளிக்கும் சான்றும், ஆபிரிக்காவில் இவற்றைப்போலவே தொன்மை வாய்ந்தன என்று சொல்லக்கூடிய அளவினவான குரங் குகள் அளிக்கும் சான்றும் இன்றைய மனிதனின் கபாலத்திலுள்ள சில அமிசங்கள் (எடுத்துக் காட்டாகக் கீழ்த்தாடை) மிகப் பழைமை வாய்ந்தது என்பதையும் அது பற்றிய பண்பு இவ்வுயிர்ச் சுவடுகளிலிருந்து அறியக் கிடக்கிறது என்பதையும் சுட்டுவனவா யுள்ளன. இவ்விடயத்தில் ஆயிரம் ஆயிரமாண்டுகளாக நடைபெற்ற வேறுபட்ட சிறப்பாக்கங்களுள் ஒருபகுதியே இக்காலம் குரங்குகள் கபாலங்களின் விசேட சிறப்பாக்கம் என்பதும், பழைய பொது வான உருவிலிருந்து எங்கள் உருவம் வேறுபடுவதிலும் பார்க்க, கூடிய வேறுபாடுடையது இது என்பதும், இச்சான்றுகளிலிருந்தும் புலனுகும அமிசங்களாம்.
தடுப்பிளிதொசீன் பருவமளவில் உயிர்ச்சுவடுகளிலிருந்து இரு பெரும் தொகுதி மக்களைப் பிரித்தறியக் கூடியதாயிருந்தது. அவரா வர் நியாந்திரோப்பிக்கு, பழையந்திரோப்பிக்கு அடிகளிலிருந்து தோன்றியவராவர். இப்பருவத்தில் போற்றத்தக்க பிரிவு இவர்
களிடை உண்டாகிவிட்டபடியால் இவர்களுக்குப் பொதுவான

இந்தியக் கற்காலம் 23
மூதாதையோர் இருந்த காலம் மிகத் தொன்மை வாய்ந்த கால மாயிருந்திருக்க வேண்டும். நியாந்திரோப்பிக்குத் தொகுதிக் குரங் குகள் காழ்ப்பண்பாடுகளோடு தொடர்புபட்டவை யென்பதற்கு ஐரோப்பாவில் சிறிது சான்றுளது ; இக்குரங்குகளின் கபாலங்கள் இக்கால மனிதனுடையவற்றிலிருந்தும் வேறுபடுவன. பழையந்தி ரோப்பிக்கு அடியிலிருந்து தோன்றிய குரங்குகளின் பண்பாடு கிழக்காசியாவிலிருந்த வறிக்கைக்கருவிப் பண்பாடுடன் தொடர் புடையதாயிருக்கலாம். இத்தொகுதிக் குரங்குகளின் கபாலங்கள் பொது மனிதக் குரங்குத் தொகுதிகளின், கபாலங்களோடு பெரும் ஒப்புமை கொண்டுளதாம். ஆயினும் இத்தொகுதியினரின் சந்ததி யினர்க்கு, பிற்பழஞ்சிலைக் காலத்தில் சில்லக்கருவிகள் ஆக்குவதே முக்கிய கைத்தொழிலாக அமைந்தது. கிழக்காசியாவிற்குரிய பழை யந்திரோப்பிக்குத் தொகுதிக்குப் பிரதிநிதியாயமைந்தது யாவா வில் காணப்பட்ட பிதிகந்திரோபசும் சைணுவிலுள்ள செளகூட்டி யனிலிருந்து வந்த அதன் இனங்களுமாம். இங்கு கூறிய இத்தலத் தில் மனித உயிர்ச்சுவடுகளுடன் காணப்பட்ட கரடுமுரடான குவாட் சைட் உபகரணங்கள், வடஇந்தியாவிலும் ஆசியாவின் பிற இடங் களிலும் காணப்பட்டவற்றுடன் ஒப்பிடக்கூடியனவாயுள. இதை நாம் பின்னர் ஆராய்வோம்.
மேற்கூறியவற்றை நாம் பின்வருமாறு கூறலாம். இந்தியாவின் பழங்கற்காலப்பருவத்திற்குப் பிற்களமாயமைந்தது பிளிதொசின் பருவத்தில் நேர்ந்த பருவ காலமாற்றங்களாம். இவற்றேடு இணை பாக ஐரோப்பாவில் நேர்ந்தவற்றையும் தென்னிந்தியாவிலும் ஆபிரிக்காவிலும் பனியுருகலுக்குப் பதிலாக நடந்த மழைபொழிவு நிலைகளையும் நாம் கூறலாம். இவ்வியற்கைப் பிற்களத்தோடு உப காண உற்பத்தியில் இரு முக்கிய மரபுகள் சேர்ந்திருந்தன என்று கூறலாம். ஒன்று வட இந்தியாவிலிருந்தது. இது பல கிழக்காசிய நாடுகளில் காணப்பட்ட ஒத்த சில்ல அல்லது தறிகைக் கைத் தொழில்களுடன் தொடர்புடையது போல் காணப்பட்டது. மற் றைய மரபு தெற்கிலிருந்தது. இது காழ்க்கருவிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது ஆபிரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் காணப் படுகிறது. இங்கு மனிதனின் உயிர்ச்சுவடுகள் காணப்படவில்லையா

Page 23
24 ஆரம்பம்
யினும் பழைய உலகின் பிற பாகங்களில் காணப்படும் சான்று சில் லம் அல்லது தறிகை மசபுக்கருவிகள், மனிதபரினமத்தில் அமைந்த பழையந்திரோப்பிக்கு அடி (பிதிகந்திரோபசு போன்றது) யிலி ருந்து தோன்றிய கருவிகளே எனக் கொள்வதற்கு ஓரளவு அனு கூலமாயுள்ளது. அவ்வாறே அச்சான்று காழ் வினை நுண்மைக்கருவி கள், நியாந்திரோப்பிக்குத் தொகுதியைச் சார்ந்த "ஒமோ சப் பியன்ஸ்' இனத்திற்குரிய முன்னையோரால் ஆக்கப்பட்டன என்றும் கூறும். இப்பருவரையான விபரங்களை மனத்திலிருத்திக் கொண்டு இந்தியச்சான்றுகளை இன்றும் சிறிது விரிவாக ஆராய்வோம்.
இந்தியாவின் பிளிதொசீன் பருவத்தில், கருவிசெய் மனிதன் முதன் முதலாகத் தோன்றிய பருவம் இரண்டாம் பணியாற்றுக் காலத்தின் பிற் பருவத்தில் அல்லது இரண்டாம் (பெரிய) பணியாற் றிடைக் காலத்திலாயிருக்கல்ாம். வட இந்தியாவில் இப்புவிவரலாற் றியற் பருவத்திற்குரிய படிவுகளில் பெரிய கரடுமுரடான சில்லக் கருவிகள் காணப்பட்டன. இவை பிற்பிளிதொசீன் பருவத்தின் மிக இறுதிக் காலத்திற்குரியனவாயிருக்கலாம். இவை யாவாவிலி ருந்த முன்னைய பிதிகந்தரபொயிட்டுகளோடு ஒத்த காலத்தவையா யிருக்கலாம். வட இந்தியாவில் இப்படிவுகள் பொத்வார் (இராவல் பிண்டி) பகுதியில் காணப்பட்டன; ஒரு வேளை நடு இந்தியாவில் மேல் நருமதைப் பள்ளத்தாக்கிலும் (யுபல்பூர் மாவட்டத்தில் செங்கபாத்தில்) இவை இருக்கலாம். இக்காலத்தில் மேற்கு ஐரோப்பாவிலும் நடு ஐரோப்பாவிலும் காழ்க் கைத்தொழில்களும் சில்லக் கைத்தொழில்களும் புறம்பு புறம்பாகப் பிரித்தறியக்கூடிய இயல்பினவாயிருந்தன. இந்தியச் சில்லக் கைத்தொழில் சோகன் முன்னர்க் கைத்தொழில் எனப்பட்டது. இது சோகன் ஆற்றுப்பள் ளத்தாக்கில் காணப்பட்ட முக்கிய முற்பழஞ்சிலைப் பண்பாட்டு வரிசைகளிலிருந்தும் கரலத்தில் முந்தியது எனச் சுட்டிக்காட்டு வதற்காக இவ்வாறு குறிக்கப்பட்டது. சோகன் நதி என்பது பஞ் சாப்பில் பொத்வார்ப் பகுதியில் உள்ளது; இது இந்து நதியின் ஒரு கிளையாகும். இப்பொழுது நாமறிந்தவரையில் இம்முன்னைச் சில்லக்கருவிகளோடு ஒத்த இயல்பு பிற ஆசிய நாடுகளில் இல்லை யென்றே சொல்லவேண்டும். -

இந்தியக் கற்காலம் 25
எனினும், இமாலயத்தின் இரண்டாம் பணியாற்றிடைப் பருவத் தில் நாம் ஏலவே குறித்த முக்கிய இரு பகுதிகளுக்குமுரிய, தெளி வாக அறியப்பெற்ற, மனிதக் கைத்தொழிற் பொருள்கள் வடமேற் கிந்தியாவின் ஆற்றுத் தள வரிசைகளிலும் பிற படிவுகளிலும் கண்டு பிடிக்கப்பட்டன. முதன்முதலாக, இப்பொழுது நாமறிந்த வரை யில், இந்தியாவில், சோகன் பள்ளத்தாக்கு இந்து நதிப் பள்ளத் தாக்கு ஆகிய இடங்களிலும், யேலத்திற் கண்மையிலுள்ள பூஞ்சி லும், சோலிற் மலையடுக்கத்தில் சில இடவரிசைகளிலும் மட்டும் காணப்படும் சில்லக் குடும்பத்தைச் சார்ந்த கருவிகளைப் பற்றி மட் டும் ஆய்தல் வாய்ப்புடையதாகும். மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் படக்கூடிய இக்கைத்தொழில் சோகன் பண்பாடு என அழைக்கப் படுகிறது.
ஆதி சோகன் கைத்தொழில் இரு முக்கியவகை உபகரணங்களைக் கொண்டதாகும். இவற்றுள் ஒருவரிசை வட்டப் பரல்களிலிருந்து செய்யப்பட்டது. இதனுல் உபகரணத்தின் வடிவில் மாற்றம் வேண் டியவாறு செய்தல் இயலாததாயிற்று. இதனுல் தறிகை வடிவம் ஒன்றை ஆக்குவதற்கு எவ்வளவு குறைவான சில்லமாக்கல் வேண் டுமோ அத்தகைய ஒன்றே கண்டு பிடிக்கப்படும். இத்தகைய மிகப் பாரிய பாற்கருவிகள் தென்னுபிரிக்காவிலும் கிழக்காபிரிக்காவிலும் உள்ள அண்ணளவில் ஒத்த காலத்தினவான பழஞ்சிலைப் படிவு களில் காணப்பட்டன; இவை காலத்தால் முந்தியவையாயுமிருக் கலாம். ஆயின் இங்கு இக்கருவியின் வடிவத்தின் ஒளிமை, கல்லின் திரவியத்தினுலானதாம். இதனுல் இதை முற்கூறியவற்றுடன் ஒப் யிடுதல் அறிவுடைமையன்று. முன்னை சோகன் வரிசைகளுள் அடங் கிய மற்றைவகை, தடித்த பாரித்த சில்லங்களும் அவை பிரித்தெடுக் கப்பட்ட ஒத்த வகையில் காடான மூலக்காழ்களுமேயாம். இந்தச் சில்ல உபகரணங்கள் கிளக்ரோனியன் கைத்தொழிற் பொருள்களில் காணப்பட்ட மிக முன்னைக் காலத்து ஐரோப்பிய சில்லக்கருவிகளு டன் ஒப்பிடக் கூடியவை. எனவே சில தொல் பொருளியலாளர் பழைய உலகின் பெரும்பகுதியெல்லாம் பாவிக்கிடக்கும் சில்லக்கரு விகளின் பொதுக் கிளக்ரோனியன் குடும்பத்துள், சோகன் குடும்பத் தின் இந்த அமிசத்தை அடக்க முயல்வர். ஆயினும் அண்மையில் அமெரிக்கத் தொல் பொருளியலாளரான மொலியசு என்பார் கிளக்

Page 24
26 ஆரம்பம்
ரோனியன் சில்லக் கருவிகளுடன் இணைந்ததான புதிய ஒரு தறி கைக் கருவி வகையொன்றை நாம் கணிப்பிற் கொள்ள வேண்டு மென்றும் இவை மேற்கூறியவற்றின்பாற்பட்டன என்று கொள்ள லாகாதென்றும் கூறியிருக்கிருர். இந்தத் தறிகைவகைத் தொகுதி யில், மொலியசு, அவர்கள், சோகன் கைத்தொழிலையும், அதனே டொத்தவையான பேமா (அனயதியன்) மலாயா (தம்பானியன்) யாவா (பசிதானியன்) ஆகிய இடங்களிலுள்ள கைத்தொழில்களை யும் அடக்குவர் ; சிலவேளைகளில் செளகூட்டியனில் காணப்பட்ட பிதிகந்தரசுடன் காணப்பட்ட கரடான குவாட்சைட்டுக் கருவி களையும் சுண்ணும்புக் கற்கருவிகளையும் அவர் அடக்குவர். இதில் பிற்கூறிய இணைபு உண்மையாயிருக்குமானுல் இதிலிருந்து கருவிக் தொகுதிகளுக்கும் மனித உயிர்ச்சுவட்டு வகைகளுக்குமிடையில் மிகப் பயனுடைய தொடர்பொன்றை நாம் காணலாம்; இன்னும் இவ் வமிசம் நடுப் பிளிதொசீன் காலத்துத் தறிகைக் கருவித் தொகுதி மனித குடும்பத்தின் பழையந்திரோப்பிக்குக் கிளையின் செய் பொருள்கள் என்பதனை அரண் செய்வதாயுள்ளது. ஆயினும் சோகன் கைத்தொழில் உறவுமுறை அமிசங்களில் கிழக்காசிய வகையினதென்று நாம் சொல்லலாம். புலவேலைகள் மேற்கொள்ளப் படின் வட இந்தியாவிற்கும் பேமாவிற்கும் இடையில் வேறு பிற தலங்களையும் நாம் காணலாம்.
புவியியல் சூழல், காலத்தாற் பின்னையதாகி வர வர, சோகன் கைத்தொழில் வினை துண்மையில் விருத்தியடைந்து வந்தது. முன்னைச் சோகன் கைத்தொழில் பெருவளவில் நடுப்பிளிதொசின் பருவத்தின் முன்னைக் காலத்தது; இரண்டாம் பணியாற்றிடைப் பருவத்தது. ஞாயிற்றின் கதிர்வீச்சு முறையால் இது 400,000 இலி ருந்து 200,000 ஆண்டுகளுக்கு முன்னேய ஒரு காலத்திற்குரிய தெனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இப் பருவத்தின் இறுதிக் காலத்தில் கல்லைச் சில்லுமாக்கும் வினை நுண்மை இருபகுதிகளாகப் பிரிந்து வளர்ந்தது. பின்னச் சோகன் கைத்தொழிற் காலத்திற் சிறப்பாயமைந்த கைத்தொழில்களில் இப்பிரிவை நாம் காணலாம். இப்பிரிவு மூன்ரும் பணியாற்றுக் காலத்தில் தொடங்கியிருக்கலாம். ஆயினும் பிற்காலம்வரையும் நீடு நின்றதாகும். இப்பிரிவுகள் ஒன்றி னுள் பரற்கல்லமிசம் மிகத் துலக்கமான முறையில் பேணப்பட்

இந்தியக் கற்காலம் 2
டது; ஆயின் மற்றையதில் இப்பூர்விக அமிசம் கைவிடப்பட்டுச் சில்லங்களைப் பிரிக்காது காழினை செப்பமாக்கும் வினை நுண்ம்ை யொன்று கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வினை நுண்மை தென்னபி ரிக்கா, பலத்தீனம், மேற்கு ஐரோப்பா முதலிய இடங்களில் ஒத்த காலத்தில் நடைபெற்றது என்பது புலப்படுகிறது. குறித்த இவ்வினை நுண்மைமுறை, சில்லக்கருவி, ஆக்கப்பட்ட பல்வேறு இடங்களில் ஒரே முறையில் தோன்றியது என்பதைத் தவிர வேறு ஒன்றையும் புலப்படுத்த வில்லையென்பதே இப்பொழுது நிலவும் பொதுவான அபிப்பிராயம். சோகன் கைத்தொழிலின் இறுதிப்படிவங்கள் இ திப்பனியாற்றிடைக்காலத்திலும் அதற்குப் பின்னரும் நிலை நின்றி வடமேற்கிந்தியாவில் எங்கும் பெருவளவில் பரந்துள்ளது.
பிற்பழஞ்சிலைக் கல்லுபகரணங்களின் காழ்க்கருவிக் குடும்பத் திற்கு எடுத்துக்காட்டாயமைந்தவை. தென் கிழக்கிந்தியாவிை மையமாகக் கொண்ட பல உபகரணங்களாம். இவ்விடத்திலன்றி இவை நடு இந்தியா மேற்கிந்தியா ஆகிய பகுதிகளிலும் காணப்பப் டன; அஃதல்லாமலும் சோகன் பண்பாட்டுப் பிரதேசத்திலுமே இவற்றிற்கு எடுத்துக்காட்டான உபகரணங்கள் உள. இந்த இந்திய வகைக் காழ்ககருவித் தொகுதிக்கு சென்னைக் கைத்தொழில் (மப் ராஸ் அசுல்) எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. இவை இவ்விடத் திலேயே முக்கியமாக மண்டிக் கிடந்தனவாதலின் இப்பெயர்) பெற்றன. . . ) சோகன் நதி, இந்துநதி ஆகியவற்றின் ஆற்றுத்தளவரிசைகளில் இரண்டாம் பணியாற்றிடைப் பருவத்திற்குரிய நாலு தல்ங்களில் விருந்து இத்தகைய சில கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன; இதி லிருந்து நாம் இவற்றைப் பணியாற்றுப் பருவமுறையோடு ೩ಜಿಂTLA படுத்திக் கூறக்கூடியதாயுள்ளது. இதனல் பொதுவான ஒரு காலக் கிரமவரிசையையும் நாம் அமைக்க முடிகிறது. இன்னும் அதே பிரs தேசத்தில் உள்ள ஒரு தலத்தில் (செளந்தாா) பின்னர்ச் சோகன் வகைக்குரிய நன்முறையிலமைந்த காழ்க்கருவிகள் காணப்பட்டன, இதிலிருந்து இவ்வகைக் கருவிகள் சுட்டும் பண்பாட்டு முறை Art ஒன்று அங்கு நிலை நின்றது என்பதும் நமக்குப் புலனுகிறது. பனி, யாற்று நிலைமைக்குப் பதிலாக மழைபொழிவுப்பருவங்கள், இருந்) தன எனப்படும். தென்னிந்தியா, நடு இந்தியா முதலிய இடங்களில், இரண்டாம் பணியாற்றிடைப் பருவத்தோடு බෙ பகுதியிணைந்து

Page 25
28 ஆரம்பம்
போகக்கூடிய பொழிவுப் பருவமொன்றில், காழ்க்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஆயினும் இப்பொழிவுப்பருவம் மூன்ரும் பனி யாற்றிடைப் பருவம் வரைக்கு மட்டுமல்லாமல் இன்னும் பிந்திய பருவம் வரைக்கும் நீடித்ததாயிருந்தது.
சென்னைக் கைத்தொழில் கருவி வகை சிறப்பாகப் பேரிவடிவின தாய் அல்லது அண்டவடிவினதாயிருந்தது. தொடரான வெட்டு விளிம்புடையதாய் இருமுகமும் சில்லம் வெட்டியதாயிருந்தது. இதுவே கைக்கோடரி எனப் பட்டது. சென்னைக் கைத்தொழில் களுக்கும் சோகன் கைத்தொழில்களுக்குமிடையே இடையருத ஊக்கிருந்து வந்தது. ஒருவர் எதிர்பார்க்குமாறே காழ்க்கருவி அமிசம் தெற்கிலும் தென்மேற்கிலும் பிரபலமாயிருந்தது; சில்ல வகைகள் எனும் தறிகைவகைகள் வடபால் செல்லச் செல்ல, உதா ரணமாகச் கர்நூல் பகுதியில், பிரபலமாயிருந்தன. முன்னை நடுப் பிளிதொசீன் பருவத்திலிருந்து முன்னைப்பின் பிளிதொசீன் பருவம் வரையுள்ள காலம் வரையுள்ளன எனக் கண்டுபிடிக்கப் பெற்ற நீண்டகாலத்திய பொருள்களிலிருந்து வினைநுண்மை ஒன்று விருத்தியடைந்ததை நாம் காணலாம். இதில் சில்லமாக்கு முறையி லேயே பெரும் சதுரப்பாடு பெறப்பட்டது. இதனுல் மிக விரிவான செய்கைப்பாடுடையனவும் சிறியனவுமான கருவிகள் ஆக்கப் பெற்றன. சென்னைக் கைத்தொழிலில் (சோகனில் நடந்தவாறே) முதல் சில்லமாக்கல் வேலை சம்மட்டிகளின் உதவிகொண்டு நடை பெற்றதென்பதற்கும் பின்னர் நடந்த நூண்ணிய வேலைப்பாடுகள் மரக்கட்டையால் அல்லது கொம்புக்கட்டையின் உதவிகொண்டு நடைபெற்றனவென்பதற்கும் சில சான்றுகள் உள. பிற்கூறியவற் றின் உதவியினலேயே அங்கு சிறப்பாயமைந்த தட்டைச் சில்ல வடுக்கள் தோன்றியிருக்கலாம். ஐரோப்பிய பழஞ்சிலைக் கைத் தொழில்களைப் பற்றிய ஆய்வினில் இது பரிசோதனை முறையில் காட்டப்பட்டது. ஆயின் சோகன் ஊக்கு மிகுந்திருந்த சென்னைப் பகுதியிலுள்ள கர்நூல் பிரதேசத்தில் காணப்பட்ட கைக்கோடரி களுள் பல சோகன் மரபுச் சில்லமாக்கு வினைநுண்மை முறையா லேயே பெரும்பாலும் ஆக்கப்பெற்றன. மேற்கூறிய பிரதேசங்களை விட, சென்னைக் கைத்தொழிற் கருவிகள், இந்தியாவில், தெற்கே

இந்தியக் கற்காலம் 29
காவிரி வைகை ஆறுகள் வரையிலும், மேற்கே பம்பாயைச் சுற்றி யும், நருமதைக்கு வடபாலும், வடகிழக்கே கங்கையின் ஒரு கிளை யான சோனைநதியின் மேற்புலங்கள் வரைக்கும், பாவிக் கிடந்தனல் சென்னைக் கைத்தொழில், கருவிகளின் வினை நுண்மையிலும் அவை மலர்ந்த வாற்றிலும், தென்னபிரிக்காவின் முற்பழஞ்சிலைக் கைத்தொழில்களுள் ஸ்ரெலன்பொஸ்ச் தொகுதியை நேர்முறையில் ஒத்ததாகும். இவ்வாபிரிக்கத் தொகுதி செலஸ்-அச்குல்' எனும் பெயர்பெற்ற பிரெஞ்சுக் காழ்க்கருவிகளின் கிரமமுறையைய்ொட்டி இப்பெயரைப் பெற்றது. இப்பிரெஞ்சு மொழித் தொடரை நாம் உப யோகிப்பது நமக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுவதாயுள்ளது. அகா வது காழ்க்கருவிப் பிரதேசம் வட்-மேற்காக ஐரோப்பாவையும் தென்னிங்கிலாந்தையும் சேர்க்குமுகமாகப் பரந்து நீண்டுள்ளது: இந்தியா தென்னுபிரிக்கா, மேற்கு ஐரோப்பா முதலிய இவ்விடங்கள் யாவிலும் முற்ருெருமை என்று சிலவேளைகளில் சொல்லுமளவிற்குக் கைக்கோடரிகளிலும் அவை செய்யப்படும் வினை நுண்மைகளிலும் நெருங்கிய ஒற்றுமைகளை நாம் காணலாம். இந்த ஐரோப்பா-ஆபிரிக் கப் பிரதேசத்திற்கே தென்னிந்தியப் பழங்கிலைப் பண்பாடுகளும் உரியன. இற்றைவரை நாம் இதுபற்றி அறிந்த அளவில் தென்னிந்தி யாவே இப்பண்பாட்டின் மிகக் கிழக்கான விரிவெல்லையாகும். ஒரு வேளை புவியியன் முறையில் அண்மையான காழ்க்கருவியுள்ள பிரி தேசம் அராபியாவாயிருக்கலாம். இங்கு ஒத்தி கைத்தொழிற் சுவடு கள் உள்ளன. இப்பிரதேசம் முழுவதற்கும் ஏற்ற வகைக்குறிப்பானி தென, இங்கிலாந்தில் சுவான்ஸ் கூமில் கண்டுபிடித்ததை நாம் சான்முகக் கொண்டால், `காழ்க் கருவிகள் "ஒமோ சப்பியன்ஸ்" (Homo sapiens) இற்கே உரியன எனக் கொள்ளலாம் ; இச்சான்று இத்தலத்திற்குரிய ஒரு அச்சூல் (சென்னை) வகைக் காழ்க் கருவிக ளோடு சேர்ந்து காணப்பெற்ற ஒத்த காலத்து வகைகளினின்றும் வேறு பிரித்தறிய முடியாத ஒரு கபால வகையாகும்
இந்தியாவின் முற்பழஞ்சிலைக் காலத்துக் கற்கருவிகள், அவற்றை ஆக்கியோர் வாழ்வைப்பற்றி ஏதாயினும் நாம் ஊகித்தறிவதற்கு ஏற்ற 'சான்றுகளை அளிப்பன்வ்ாயில்லை என்று நாம்"ஒத்துக்கொள் ளக்தர்ன் வேண்டும். ஆயின் உலகின் "மற்றைப் பகுதிகள்தாமும் அவ்வழியில் நமக்கு நல்" ஆதார்ம்ளிக்கவில்ல்ை நாட்ோடில்ேடரின்

Page 26
30 ஆரம்பம்
பொருளியற் பண்பாட்டின் அழியா எச்சங்கள் மட்டும் நமக்குக் கிடைத்திருக்கின்றனபோல் தெரிகிறது. ஆயினும் அழிபதார்த்தங் களான மாம், தும்பு, புல்லு, இலை முதலியவற்ருலும் உரி தோல் போன்ற உயிருடைப் பிராணிகளின் திரவியங்களாலும் ஆக்கப் பெற்ற உபகரணங்களை இவர்கள் நன்முறையில் பயன்படுத்தியிருக் கக் கூடும். சோகன் தறிகைகளோ சென்னைக் கைக்கோடரிகளோ எவ்வகையில் பயன்பட்டன என்பதை நாமறியோம். ஒருவகைப் பயனுமின்றி இதுபற்றி நாம் பலவகையில் மட்டும் ஊகிக்கலாம்; எளிய ஓர் வெட்டுக்கருவியோ அறுக்கும் கருவியோ, ஊன்வெட் டிவோ மரம் வெட்டவோ கிழங்கு தோண்டவோ பயன்பட்டிருக்க லாம் என்று நாம் பல்வேறு பயன்பாட்டினை எண்ணலாம். முற்பழஞ் சிலைக்காலக் கைத்தொழில்களின் மிக ஆச்சரியமான அமிசங்கள் அவற்றின் நீண்டகால நிலை பேறும், அவற்றின் காலத்தில் தொழில் வினை நுண்மையில் மனிதன் மிக மந்தகதியில் முன்னேறியதுமாம். நீண்டகாலம் என்பது 400,000 ஆண்டுகட்கு முன்னரிருந்து இறுதிப் பணியாற்றுக்காலம் வரை நீடித்தது. இக்காலம் ஒருவேளை 100,000 ஆண்கெட்கு முன்னராயிருந்திருக்கலாம்.
இந்தியாவில் பழஞ்சிலைக்காலத்தின் இறுதிப்பருவங்கள் இன்றும் மயக்கமாகவே உள. சில்லக் கருவிகளில் பின்னைச் சோகன் மரபு சிறப்பான காழாக்க வினை நுண்மை (இது லெவலொயி வினை நுண்மையெனவும்படும்) யோடியைந்து சில இடங்களில் தொட ர்ந்து விளங்கியது போல் தோன்றுகிறது. இவை ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் (பஞ்சாப், நருமதை, தென்னிந்தியா) பணி பர்ற்றிடைக்காலம் வரைக்கும், இன்னும் ஒருவேளை அப்பாலும், நீடித்தனபோல் தோன்றுகிறது. அஃதல்லாமலும் தக்கணக்கிலுள்ள கர்நூலிலும் பம்பாய்க்கண்மையிலும் சில கற்கைத்தொழில்கள் ப்ாரிய சில்லத்தை அடிப்படையாகக் கொண்டமையாது காழி விருந்து பிரித்தெடுத்த மெல்லிய அலகை அடிப்படையாகக் கொண்டமைந்தன என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய கைத்தொழில்கள், பின்னைப் பணியாற்றிட்ைப் பருவத் தில்,ஐரோப்பாவிலும் மேற்காசியாவின் சில பாகங்களிலும் நேர்ந்த பழஞ்சிலைக் காலத்தின் இறுதி நிலைகளுக்குச் சிறப்பாயமைந்தன்வ பாம், இக்கைத்தொழில்களை ஒப்பிட்டாயும்பொழுது இவை மூன்று

இந்தியக் கற்காலம் 3.
முக்கிய ஆதித் தொகுதிகளாகப் பிரிக்கப்படக்கூடியனவெனவும்: அவை யாவும் ஐரோப்பாவிற்கே வெளியே ஒருவேளை மேற்காசியா வில் தோன்றியிருக்கலாமெனவும் தோன்றுகிறது. இத்தொகுதி களுள் இரண்டாவது ஒரிக்னேசியன் எனப்படுவது (இது முன்னர் நடுஓரிக்னேசியன் எனப்பட்டது) கிழக்கே பலத்தீனம், ரான்ஸ்கோக் கேசியா ஆகிய இடங்களுக்கப்பால் காணப்பட்டதாகத் தெரிய வில்லை. இத்தொகுதி, ஐரோப்பாவில் படைமுறையிலமைந்த தலங் களில், மேற்குநோக்கி அலையலையாக மக்கள் பெயர்ந்து சென்றதைச் சுட்டுவதாயுள்ளது. எனினும் சிலர் இத்தொகுதி இரானியப் பீடபூமி அளவு தொலையில் தோன்றியிருக்க வேண்டு மென்று கருதுகின்றர்கள். சீனுவில் உள்ள சுயிதுங்கு ஆற்றருகில் காணப்படும் கைத்தொழில்களிற் சில, ஒரிக்னேசியன் வடிவப் பொருள்கள் அங்கும் இருக்கலாம் எனத் தெரிவிப்பனவாயுள்ளன. இவ் முன்னைப் பிற்பழஞ்சிலைக் கைத்தொழில்களுள் மூன்றும் பிரிவு கிரவெற்றியன் எனப்படுவது. இதைச் சார்ந்தவை கிழக்கே வட இாாக்கிலுள்ள கேடிஸ்தான் வரை காணப்படுகின்றன. இந்தியாவி லுள்ள உண்மை அலகுக் கைத்தொழில்கள் காணப்படின், அவை ஏலவே நாம் அறிந்த தொகுதிகளுடன் உறவுடையனவாயிருந்தா லென்ன அற்றனவாயிருந்தாலென்ன, பிற்பழஞ் சிலைக்காலப் பிரச் சினைகள் பற்றி அறிய நமக்கு மிகவும் உதவுவனவாயிருக்கும்.
இப்பொழுது ஆராய்விற்குப் போதிய மூலாதாரங்கள் இல்லை. இவ் வழியில் நமக்கு நம்பிக்கையூட்டக்கூடியனவாயுள்ளன, ஐரோப்பா விலும் மெற்காசியாவிலும் பிற்பழஞ்சிலைக்கால மனிதன் மாரி காலத்தில் பல்காலும் குடிவாழ்ந்த குகைகள் பாறை ஒதுக்கங்கள் போன்ற குடிவாழ்ந்த இடங்களை இந்தியாவிலும் அகழ்ந்து நடாத் தும் ஆராய்வுகளே. பிற்பழஞ்சிலை மக்டலீனியன் உருவுகளை ஒத்த எலும்புபகரணங்கள், 1884 இல் கர்நூலிற்கண்மையிலமைந்த ஒரு குகையில் மறைந்தொழிந்த முலையூட்டிகளின் என்புகளோடு காணப் பட்டன. ஆயின் அவை காணுமற்போயினவாதலின் அவற்றைப் பற்றி மேலும் ஒன்றும் அறியமுடியவில்லை. இவை மக்டலீனியன் வகையினவாக இருத்தல் ஒருபொழுதும் இயலாது. ஏனெனில் இப் பண்பாடு பிரான்சில் மட்டிலுமே காணப்படுவது. எனினும் கங்கை நதிப் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் ஆயிரத்தாண்

Page 27
32 ஆரம்பம்
டின் நடுப்பாகத்துக்குரிய சில உலோக ஈட்டிகள் பிற்பழஞ்சிலைக் காலத்து அல்லது மெசோலிதிக்கு மாபிற்குரிய முள் என்புகளையும் கலைக்கொம்பின், நுதிகளையும் போன்றவையாயிருந்தன என்பதை நாம் பின்னர்க் காண்போம் (ப. 286).
இவ்விடத்தில், சில நடு இந்தியப் பாறை ஒதுக்குகளில் காணப் பட்ட ஓவியங்களைப் பற்றியும் கூறல் வேண்டும். சிங்கன்பூரில் உள்ளவை இதற்கு உதாரணங்களாம். சிலர் இவ்வோவியங்கள் பிற் பழஞ்சிலைக் காலத்துக்குரியன என்பர் ; அல்லாமலும் இவற்றை மேற்குப் பிரான்சிலும் சுபெயினிலும் உள்ள குகைகளில் காணப் பெறும் புகழ்பெற்ற ஒவிய வரிசைகளுடனும் ஒப்பிடுவர். ஆயின் அண்மையில் இது பற்றி கோடன் ஆராய்ந்தபோது இவை பழஞ் சிலைக்குரியன என்பதற்கு ஆதாரமில்லையென்பதும் மிகப் பழைய தேதி கொள்ளின் எவ்வகையிலும் இவை கி. மு. ஐந்தாம் நூற்ருண் டுக்கு முன் தேதி கொள்ளக் கூடியனவல்லவென்பதும் அங்குள்ள சான்றுகளின் அனுமானங்களிலிருந்து புலப்படுகிறது. ஐரோப்பா விலோ, அண்மைக் கிழக்கிலோ உள்ள பிற் பழஞ்சிலைப்பண்பாடு களுக்கு ஒத்த பண்பாடுகள் இந்தியாவிலிருந்தன என்பதற்கு அறுதி யான சான்றுகள் இனித்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எனி ம்ை இங்கு இன்னேர் விடயத்தைக் குறிப்பிடுதல் பொருளுடைத்து பேமாவில் உள்ள அனயதியன் கைத்தொழில் (சோகனுடன் ஒப்பிடப்படக்கூடிய ஒரு தறிகைக் கருவிப்பண்பாடு) அவ்விடத்து நியோலிதிக்குப் பண்பாடு தோன்றும்வரை பிறநாட்டு ஊக்கு ஒன்று மின்றி இடையூறின்றித் தொடர்ந்து விருத்தியடைந்து வந்தது. இந்த நியோலிதிக்குப் பண்பாடு மிக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியாயிருக்கலாம்.
ஐரோப்பா, வட கிழக்காபிரிக்கா ஆகிய இடங்களிலும் பின்னர்ப் பலத்தீனத்திலும், பணியாற்றுக் காலத்தின் உடன் பின்னர், பனி tt J[T-g)! இப்பொழுதுள்ள கன் எல்லைகளுள் அடங்கும்போது, பல வகைப் பிரதேசப் பண்பாடுகள் எனும் கைத்தொழில்கள் வளர்ந் கோங்கின. இவை பிற்பழஞ்சிலை அலகுக்கருவி மரபுகளுக்கியைய அமைந்தனவாயினும் பல்காலும் மிகச் சிறிய பரிமாணங்களில் அமையும் வகையினவாயிருந்தன. இவ்வமிசம் ஒருவேளை இவ்வா யுதத் தொகுதிகள் பெரும்பாலும் மாத்தாலோ என்பாலோ செய்யப்

இந்தியக் கற்காலம் 33
பட்டதாலாயிருக்கலாம். கங்கை நதிமேற்புலத்திலிருந்து கச் இான் வரை ஒரு கோடு கீறினல் அதற்குத் தென்பால் தென்னிந்தியா விலும் நடு இந்தியாவிலும் உள்ள பல புலங்களிலும், திசை திசை யாய் அங்குமிங்குமாய்க் காணப்படும் சில இடங்களிலும் (சிந்து, வடமேற்கு பஞ்சாப்) இத்தகைய சிறிய உபகரணங்கள் கொண்ட கற்கைத்தொழில்கள் காணப்படுகின்றன. இவை ஐரோப்பாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள மெசோலிதிக்குக் கைத்தொழில்களின் பணியாற்றுக்குப் பிந்திய கப்சியன் தொகுதியினவோடு ஒப்பிடக் கூடியனவாயிருந்தன. கப்சியன் கைத்தொழிற் பொருள்கள் கீனியா வில் காணப்படுகின்றன. குசராடத்திலுள்ள சில எலும்புக்கூடுகள், அவ்வூரிலுள்ள நுண்சிலைக் கைத்தொழிற் காலத்தவை என்று சொல் லப்படுவன, அமிற்றிக்குச் சிறப்பியல்புகளையோ நெகிரொயித்துச் சிறப்பியல்புகளையோ உடையனவாயிருக்கின்றன. இச்சான்றிற்கு எவ்வளவு மதிப்பினை நாம் அளிப்பினும், இந்திய நுண்சிலைக் கைத் தொழிற் பொருள்கள் வட ஆபிரிக்காவிலிருந்து கிழக்கு நோக்கிப் பாந்த, பல பிரதேசங்களில் காணக்கூடியவற்றிலிருந்தும் மாறு
IL L6OT 6 G)6)-
இந்திய நுண்சிலைக் கைத்தொழிற் பொருள்கள், காலமறியப்பட்ட யாதாயினும் ஒரு புவிவரலாற்றியல் படிவுத்தலமொன்றிலேனும் காணப்படவுமில்லை ; பழஞ்சிலைக் கைத்தொழில்களில் இறுதிப் பரு வத்தோடு யாதாயினும் ஒரு தொடர்பு காட்டுமாறு, பழைய மனிதக் கைத்தொழில்களோடு படை அமைப்புமுறைத் தொடர்பும் கொண் டிருக்கவில்லை. ஆயினும் சில இடங்களில் கைத்தொழில்கள் குறைந் தது முன்னே வரலாற்றுக் காலம் வரையாகுதல் இருந்திருக்க வேண்டுமென்பதற்குச் சான்றுள்ளது. இவை உண்மையில் பழஞ் சிலைக் கைத்தொழிற் காலத்திலிருந்து மிக முன்னேறிய அல்லது சிறப்புவகையான கைத்தொழில்களாகப் பரிணமித்த வகைக்கு எடுத்துக் காட்டுக்களாக அமைந்தனவாயிருக்கலாம். ஆயினும் இம் மாற்றம், இன்னும் மேற்காக உள்ள நாடுகளில் ஒத்த நிகழ்ச்சி நடந்த, அவ்வளவு தொலை காலத்தில் நடந்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில், பழஞ்சிலைப் பண்பாடுகளே பணியாற்றுக் காலத்தின் பின் *னரும் மிக நீள்காலம் நீடித்திருக்கலாம்.

Page 28
34 ஆரம்பம்
இந்தியாவின் நுண்சிஃலக் கைத்தொழில்கள், பெரும்பாலும் இருந் திராத, பழஞ்சிலைக் கால அலகுக் கைத்தொழிலிலிருந்து மலர்ந்தன என்பதை விட, புதிய மக்கள் புகுந்தனர் என்பதைச் சுட்டுவதா யுள்ளன ; வந்தவர்கள் மேற்கிலிருந்து வந்தவர்களாயிருக்கலாம். இவ்வுண்மை, இக்கைத்தொழில்களைப் பின்னசெழுந்தனவற்முேடு தொடர்புபடுத்துகின்றதேயன்றி முன்னிருந்தனவற்றேடு தொடர்பு படுத்துவதாயில்லை. நுண்சிலைக் கைத்தொழிற் பொருள் செய்தோர் ஐரோப்பாவிலிருந்த தம்மவரைப்போல், பழஞ்சிலைக்கால மரபி லமைந்த வேட்டையாளரும் உணவு சேர்ப்பாருமோ அல்லது வேளாண்மையாளரோ என்பது தெரியவில்லை. இன்னும் இந்தியா வில், பழைய உலகின் வேறு சில பகுதிகளைப்போல, வேளாண்மைக் கலை பண்ணைப் பெருக்கக்கலை ஆகியவை மேற்கொள்ளப்படக்கூடிய அளவில் மனித முன்னேற்ற அமிசம் ஒன்றிருந்தது என்று காட்ட முடியுமோ தெரியவில்லை. ஆயினும் இங்கு உலோகம் அறியப்பட்ட பொருளாக விளங்கவில்லை. இது புதுச் சிலை வளர்ச்சிப்படியில் ஒன் ருகும்.
நாட்டில் பாவிக் கிடக்கும் பல வேறு இடங்களிலெல்லாம், பிற இடங்களில் புதுச்சிலை வகை என அறியக்கிடக்கும் தேய்த்தாக்கிய கற்கோடரிகள் மிகப் பெருவளவில் உள என்பதுண்மையே; இவை பெரும்பாலும் நுண்சிலைகளுடன் சேர்ந்தே காணப்பட்டன. ஆயின் பலுக்கித்தானம், சிந்து முதலிய இடங்களில் மிக முன்னையவை என அறியப்பெற்ற வேளாண்மைச் சமுதாயங்களுடன், படையமைப்பு முறையில் ஒத்த, புதுச்சிலை"ப் பொருள் என கூறப்படுவனவற்றைக் கொண்டுள்ள தனிப்பட்ட குடியிருப்புத் தலங்கள் இதுவரை காணப்பெறவில்லை. வகை குறியியல், அல்லது கோடரிமேற் பரப் பிலுள்ள நிறக்கறை முதலியவை, தொன்மையை அளந்தறியக்கூடிய சிறந்த சாதனங்களல்ல. இவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற் பாப்பில் காணப்படுவனவற்றிற்கு மிகப்பழமையான தேதி கொடுத் தலை நாம் பொருட்படுத்தாது விட்டுவிடலாம். ஆயின் படைமுறை யிலமைந்த சில தலங்களில், தனிப்பட்ட, பண்பாட்டு அடிப்படையி லமைந்த ஒரு மட்டத்தில், தேய்த்தாக்கிய கற்கோடாரிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் ஆராய்தல் வேண்டும்.

இந்தியக் கற்காலம் 35
வீலர் அவர்கள் அண்மையில் மைசூரில் நடாத்திய ஆய்வுகளின் பின்னர், தென்னிந்தியக் கற்கோடரிப் பண்பாடுகள் புதிய ஒரு நிலைமை கொண்டு விளங்குகின்றன. முன்னர் 1945 இல் இவர் சோழ மண்டலக் கடற்கரையோசத்தில் நடாத்திய ஆய்வுகளிலிருந்து அப் புலத்தின் பண்பாடுகள் வளர்ந்த கிரமத்திற்கு நிலையான ஒரு தேதி கொள்ளப்பட்டது; புதுச்சேரிக் கண்மையிலுள்ள அரிக்காமேட்டி லிருந்த ஓர் உரோம வணிகத்தலத்தில் காணப்பட்ட கி. பி. முதலாம் நூற்ருண்டிற்குரிய இறக்குமதியான நாணயங்கள் மட்கலங்கள் முத வியவற்றேடு இப்பண்பாடுகளைச் சார்த்தியே இத்தேதி நிறுவப்பட் டது. இப்பொழுது கண்டறியப்பெற்ற, தேதி குறிக்கப்பட்ட உள் ளூர் மட்பாண்ட வகைகளோடு அக்காலத்துக்குரியனவான உரோம நாணயங்களைச் சார்த்தி இச்சான்றை மைகுரில் பயன்படுத்தக் கூடி யதாயிருந்தது. இதனுல் சித்தலதுர்க்கப் பிரதேசத்தில் கிரமமுறை யொன்று பின்வருமாறு நிறுவப்படக்கூடியதாயிருந்தது.
1. கற்கோடரிப் பண்பாடு. இதற்குச் சிறப்பாக அமைந்தவை உள் ளூர்ப் பாறையிலிருந்து செய்யப்பெற்ற துலக்கிய கூாடி கொண்ட கோடரிகள் ; யசுபர், தீக்கல், அகேற்று, பளிங்கு முதலியவற்றலாய காட்டுவகை நுண்சிலைக் கைத்தொழிற் பொருள்கள். செம்பாலான இரு சிறு பொருள்கள் காணப்பட்டன. இவை இவ்வுலோகம் அறி யப்பெற்றவொன்றென்பதையும் ஆயின் மிக மிக அருமையாயிருந்த தென்பதையும் காட்டின. மட்பாண்டங்கள் கையாலாக்கப்பெற்றன ; அருமையாகவே வண்ணமூட்டப்பெற்றன, செதுக்கப்பெற்றன. இப் பருவநிலை கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் தொடங்கியிருக்கலாம். பின்னர் கி. மு. 200 வரையில் இதைத் தொடர்ந்து அமைந்தது. y
2. பெருஞ்சிலைப் பண்பாடு-இது புறத்திருந்து வந்த ஓர் பண் பாடு. இரும்பைப் பயன்படுத்தியது. சக்கரத்தால் மட்கலம் செய் தது. விரிவான பெருஞ்சிலைக் கல்லறைகள் செய்தது. கி. பி. முதலாம் நூற்முண்டுவரை தொடர்ந்து, வரலாற்றறிவு பெற்ற ஆந்திரப் பண் பாட்டுடன் மயங்கியது.
3. வாலாற்றறிவுபெற்ற ஆந்திரப் பண்பாடு-இதன் ஆகிபகுவம் கி. மு. முதலாம் நூற்றண்டிற்குரிய உரோம நாணயங்களாலும்

Page 29
36 ஆரம்பம்
அரிக்கா மேட்டு மட்கலவகைகளாலும் தேதி நிர்ணயிக்கப்பெற்றது. இது. கி. பி. மூன்ரும் நூற்முண்டுவரை நிலை நின்றது.
இச்சான்றுகளிலிருந்து அறியக் கிடப்பது என்னவெனில் தென் னிந்தியாவின் சிலவிடங்களிலேனும் புதுச்சிலைப் பண்பாடுகள் ஒப் பீட்டளவில் மிக அண்மையில் தோன்றி, பதிவு பெற்ற வரலாற்றுக் காலத் தொடக்கம்வரை நிலைபெற்றவையென்பதாம். இந்தியாவில் நுண்சிலைகளும் கற்கோடரிகளும் பரவியிருக்குமாற்றைக் காட்டும் படமொன்றை வீலர் வெளியிட்டுள்ளார். கம்பே குடாக்கடலி லிருந்து இலட்சுமணபுரி வரை ஒரு கோடு கீறின் அதற்கு தெற்கே யும் மேற்கேயும் மட்டுமே அவை காணப்படுகின்றனபோல் தோன்று கிறது; எனினும் கம்பேயிற்கும் கராச்சிக்குமிடையிலும் சில நுண் சிலைத்தலங்கள் உள.
காசுமீரத்திலுள்ள மிக்க முன்னைய ஒரு புதுச்சிலைப் பண்பாட் டைப்பற்றி மிகைப்படுத்திய கூற்றுக்கள் பல சொல்லப்பட்டிருக்கின் றன. சிறீநகரிற்கும் கந்தர்பாலிற்குமிடையே உள்ள புர்சகோமில் நடைபெற்ற அகழாய்வுகள் நன்முறையில் நடைபெற்றனபோல் தோன்றவில்லை. அவைபற்றிய அறிக்கைகள் செவ்வியவாயில்லை. இதி விருந்து கீழ்க்காணும் ஒரு பண்பாட்டு வரிசை பெறப்பட்டது.
படை அ-பெளத்தச் சார்பானது. கி. பி. நாலாம் நூற்றண்டு. படை ஆ-நன்கு துலக்கிய கருங்கலப்பாண்டங்கள்; செதுக்கற்
கோலங்கள் கொண்டவற்றின் சில்லிகள். படை இ-வானிலையால் அழிவு பெருத பணியாற்றிற்குப் பிந் திய தளர்மணல். இது 9 அடி ஆழமுடையதாயிருந் தது. இதற்குக்கீழ் கண்ட மண்மேல் மட்கலங்கள். துலக்கிய கோடரிகள் என்பாலாய கருவிகள் முதலிய வற்றுடன் சேர்ந்து ஓர் அடுப்பு காணப்பட்டது. படை (ஆ) விலிருந்து பெற்ற மட்கலத்தை அகழ்ந்தாய்ந்தோர், இவ்வரிசைக் கிரமத்தைப்பற்றி விளக்கமளிக்கும்போது அதிகாரம் V இல் விவரிக்கப்பெற்ற யங்கர் கலங்களுடன் அவற்றை ஒப்புட்டுள் ளனர். இக்கலத்திற்கும் தேதி இன்னும் நிறுவப்படவில்லை. எவ்வா முயினும் இது கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதி யிலும் பிந்தியதாகவே இருத்தல் வேண்டும். ஆயின், துலக்கிய

இந்தியக் கற்காலம் 37
கலங்கள் வீலர் கூறும் "வடபுலத்துத் துலக்கிய கருங்கலங்கள்" போல் தோன்றுகின்றன; உதாரணமாகத் தச்சசீலத்திலிருந்து எடுக்கப்பெற்றதைக் கூறலாம். இது கி. மு. ஐந்தாம் நூற்ருண்டி லிருந்து இரண்டாம் நூற்றண்டுவரையுள்ள காலத்திற்குரியது என்று கொள்ளப்பட்டது. இவைபோன்றவை மெளரிய அரசில் மிகப் பாந்து காணப்பட்டன. ஆ படையை எக்காலத்திற்குரியதெனக் கொள்ளினும், 9 அடி ஆழமான தளர்மணற்படை மிக நெடுங்கால மாகக் குவிந்திருக்க வேண்டுமென்றும் அதனடியில் உள்ள புதுச் சிலைப்பொருள்கள், சில அகழாய்வார்கள் கூறுவதுபோல, கி. மு. ஐந்தாம் அல்லது ஆரும் ஆயிரத்தாண்டிற்குரிய மிகப் பழைய மெசப்பொற்றேமிய வேளாண்மைப் பண்பாடுகளிலும் மிகத் தொன் மையன என்று கொள்வதும் மிகத் தவமுன அனுமானமாகும். காசு மீரத்தின் புதுச்சிலைப்பண்பாடு கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டிற் குரியதாயிருக்கலாம் என்றும் அவ்விடத்தில் மிக விரைவாக காற் றடித்துச் சேர்ந்த மணல் குவிந்தது என்றும் கொள்வதன்றி அது அதற்கப்பால் உள்ள ஒரு தொல்காலத்திற்குரியதெனக் கொள் வதற்கு வலிமையான காரணம் கிடையாது. v
சுக்கூர் சுண்ணும்புக்கல்லினின்றும் பெற்ற தீக்கல், சேட் முதலிய வற்றிலிருந்து செய்யப்பெற்ற ஒரு சிறப்புவகையான கைத்தொழிற் பொருள்கள், சிந்திலுள்ள ரோரி, சுக்கூர் முதலிய இடங்களிலும் கராச்சியில் டிரை வீதியிலும் இருந்தன என்பது பலகாலமாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். இவற்றை அடித்து ஆக்கப்பெற்ற சில நீண்ட மெல்லிய அலகுகளும். கூம்புகாழ்களும் கி. மு. 25001500 வரையுள்ள காலத்திற்குரிய அரப்பா பண்பாட்டுப் பொருள்க ளோடும், இவற்றை ஒத்த தீக்கற் கைத்தொழிற் பொருள்களாக்கிய அரப்பாவிலும் பண்டையவான சிந்திலுள்ள அம்றி, சோப் பள்ளத் தாக்கு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட பொருள்களோடும் செவ் விதில் ஒத்தவையாயுள்ளன. ஆயின் மற்றை உபகரணங்கள் புறச் சார்பிலாத மரபிற்குரியனபோலவும் இன்னும் தொன்மையான மர டைச் சார்ந்தன போலவும் தோன்றுகின்றன. இன்னும், காழ்கள், அலகுகள் முதலியவற்றை விட இலவலோய் சில்லக்கருவிகள், அண்டவடிவுக் கைக்கோடரிகள் போன்ற மிகப் பண்டைய பொருள்
களும் அங்கு காணப்பட்டதிலிருந்து சோரிக் கைத்தெழிழ்ச்சி

Page 30
38 ஆரம்பம்
முறையில் மிகத் தொன்மையானதாயிருந்திருக்கக் கூடும். தோற்றப் பாட்டளவில் ஒத்ததான ஐதராபாத்திலுள்ள இரைச்சூரிலிருந்து பெற்ற கைத்தொழிற் பொருள்களின் தேதிபற்றி ஒன்றும் திட்ட வட்டமாகச் சொல்ல முடியாது.
ஆக, எம் சான்றுகளிலிருந்து நாம் அறியக் கிடப்பது இதுவே. காழ்க் கருவித் தொகுதியினரையும் சில்லக் கருவித் தொகுதியின ரையும் சார்ந்த முற்பழஞ்சிலைப்பண்பாடுகள் நடுப் பிளிதொசீன் காலத்தில் இந்தியாவில் இருந்தனவென்பதும், இவை பிந்திய பணி யாற்றுப்பருவம் முடிந்தபின் நெடுங்காலம்வரை, பேமாவின் பழஞ் சிலைக்காலப் பண்பாட்டோடு ஒப்பிடக் கூடியவகையில் மிகப் பழைய சீர்திருத்தாவகையினவாய் நீடித்திருந்தன என்பதுமாம். நுண் சிலைத் தீக்கற் கைத்தொழில்கள், ஐரோப்பாவிலும் அண்மைக் கிழக் கிலும் இருந்த பணியாற்றுக்குப் பிந்திய காலத்தின் ஓரளவிற்கு முன்னைய பருவத்தைச் சார்ந்த கைத்தொழில்களோடு ஒத்த காலத்தையுடையனவாயிருக்கலாம் ; அல்லது பிந்திய காலத்தைச் சார்ந்தனவாயிருக்கலாம். எனினும் இந்தியாவிலோ, இவற்றிற்கு அடிகோலியவை என்று கருதப்படுகின்ற பிற்பழஞ்சிலை அலகுக் கைத்தொழிற் பொருள்கள் காணப்படாதபடியால், இவை புதிய ஒரு பண்பாட்டையோ சிலவேளைகளில் புதிய ஓர் இனத்தவரையோ குறிப்பனவாக இருக்கலாம். இன்னும் இவ் நுண்சிலைப்பண்பாடுகள், புதுச்சிலை மரபில் மட்கலங்கள், தேய்த்தாக்கிய கற்கோடரிகள் செய்த சமுதாயங்களுடன் உடனுறைந்திருக்கலாம். இந்தப் புதுச் சிலைப்பண்பாடுகள் எவ்வாறு தோன்றின என்பது அறியப்படாத ஒன்முக உள்ளது. இவை இந்தியாவிலுள்ள புறச்சார்பின்றித் தோன்றியவை என்பதிலும் பார்க்க மேற்கிலிருந்து புகுந்த மக்களி யக்கத்தாலானவையாயிருக்கலாம். இப்போது கிடைக்கும் சான்று களிலிருந்து, நடு இந்தியாவிலோ காசுமீரத்திலோ உள்ள இப்பண் பாடுகளை கி. மு. 500 இற்கு மிக முந்தியவையென்று செவ்விய முறை யில் சொல்ல முடியாது.
சிந்திலுள்ள அலகுக் கைத்தொழில்கள் உண்மையில் ஒரு பகுதி யளவில் அம்றியிலுள்ள அவ்வகையினவற்றேடும் பிந்திய பண்பாடு களோடும் தொடர்புடையன எனினும், பழஞ்சிலை மரபொன்றி லிருந்து தோன்றின என்பதற்கும் ஒப்பீட்டளவில் பண்டைய தேதி

இந்தியக் கற்காலம் 39
கொள்ளக் கூடியனவென்று சொல்வதற்குமுரிய சில பண்புகள் உடையனவாம். தீக்கற் கைத்தொழிலைப்பற்றி வேறு யாதாயினும் சொல்லப்புகின் மிக்க மேற்குத் திசையிலிருந்து அவை வந்திருக் கலாமென்பதும் மிக முன்னைய வேளாண் மக்களோடு அவை வந் திருக்கலாமென்பதுமேயாம்.
இந்தியாவின் வரலாற்று முன்னர்ப் பகுதியின் பிந்திய செய்திகளை அறியவேண்டுமெனின் நாம் இப்பொழுதுள்ள எல்லைகளுக்கப்பால் மேற்காசியாவின் புலங்களையே நோக்கல் வேண்டும். இந்தியாவி லுள்ள பொருள்களை நாம் விளங்கிக் கொள்ளவேண்டுமெனின் பேசியா, மெசப்பொற்றேமியா ஆகிய இடங்களிலுள்ள வசலாற்று முன்னர்ப் பண்பாடுகளின் கிரமத்தை நாம் அறிந்திருத்தல் அவ சியம். நாம் நன்கு செவ்விதில் அறிந்துள்ள மிக்க மேற்பாலுள்ள நாடு களிலுள்ள பண்பாடுகளுடன் இந்தியாவின் பண்பாடுகளை ஒப்பிட்டு ஆராய்தல் அவ்வறிவிற்கு வேண்டிய ஓர் அமிசமாகும். ஆகவே அடுத்த அத்தியாயத்தில் கி. மு. ஐந்தாம் அல்லது ஆரும் ஆயிரக் தாண்டிற்கும் இரண்டாம் ஆயிரத்தாண்டிற்குமிடையில் மேற்காசி யாவிலிருந்த மிகப் பண்டைய வேளாண்மைச் சமுதாயத்தினரின் வரலாற்றை ஆராய்வோம்.
அத்தியாயம் 11 இற்குரிய குறிப்புக்கள்
கீழை நாட்டிலும் மற்றைய இடங்களிலும் உள்ள பிளிதொசீன் பண்பாடுகள் காலவரையறை முதலியனபற்றி பேராசிரியர் எப். g). Q.Fuygorii (F. E. Zeuner) Dating the Past (1946) at girl 156) ஆராய்ந்துள்ளார். இந்தியா பற்றிய விடயங்களை வி. டி. கிருஷ்ண சுவாமி அவர்கள் தொல்லிந்தியாவில் (Ancient India) எண் 3 (1947), 11-57 இல் சுருக்கமாக அளித்துள்ளார். இப்பொருள் பற்றிய முக்கிய ஆய்வு நூல்கள் எச். எச். டி செராவும் ரி. ரி. பற்றே Fayib (H. H. De Terra and T. T. Peterson) Gry@uu Studies on the Ice Age in India and Associated Human Cultures என்பதிலும் எச். எல். மோவியசு எழுதிய Early Man and Plaistocene Stratigraphy in Southern and Eastern Asia (Papers of the Peabody Museum, Harvard 1944) argirl gays உள. இப்பிந்திய நூலிலிருந்தும் எடுக்கக் கூடிய முக்கிய பகுதி

Page 31
40 ஆரம்பம்
களின் சுருக்கங்களும் பிதிகந்திரோபசு பற்றி பேரா. டபிள்யு. இ. லெகொரொஸ் கிளாக் (Le Gros Clerk) என்பார் கொண்டுள்ள gaids to);55u a CDaigdisabi, Antiquity, XIX (1945), 1-5, ibid XX (1946) 9-12 என்பவற்றில் உள. ஆசியாவிற்கும் பிற இடங் களுக்கும் உரிய உயிர்ச்சுவட்டு மனிதர் பற்றி அறிய அவ்வாசிரியர் argugu History of the Primates (1949) at air Laoasuyuh luridis. ஐரோப்பாவிலும் மேற்கிந்தியாவிலுமுள்ள பிற்பழஞ்சிலைபற்றி Gurt. QLr G Gastro. GTair uti (Dorothy Garrod) Proc. Prehist. Soc. IV (1938), 1-26 என்பதில் ஆராய்ந்துள்ளார். இந்தியா வின் குகை ஓவியங்கள் பற்றி அறிய கிருஷ்ணசுவாமியின் மேற் கூறிய பத்திரிகை பார்க்க : மகாதேவ மலைகளிலுள்ளனவற்றிற்கு Listidia, Indian Art and Letters, X 35-41. 337 Ga,60tó) p. 3rd. கோடன் எழுதிய கட்டுரை. மைசூரின் கற்கோடரிப் பண்பாடு பற்றி பேரா. வீலரின் அறிக்கைக்கு பார்க்க Ancient India, No. 4, (1948), 181-310. புர்சகோம்தலம் பற்றிய விடத்துக்கூறிய வட திசைத் துலக்கிய கருங்கலம் பற்றிய அவர் கூற்றிற்குப் பார்க்க Ancient India, arait 1 (1946), 55-58.

அதிகாரம் II பிற்களம் - மேற்கு ஆசியாவில் ஆதி விவசாயச் சமுதாயங்கள்
பூமிக்கும் குன்றங்களும் உயர் பூமிகளும் உள. பூமியோர் அகண்ட வெளி: பல்பயன்தரு தாவரங்கள் பூமியில் உள. பூமி இன்னும் வளமுடையளாய் எம்மைத் தாங்குவாளாக
அதர்வேதம்.
மேற்கு ஆசியாவிலோ வட ஐரோப்பாவிலோ வேட்டையாடுதலை யும் பழங்கள் உண்ணுதற்குரிய தாவரப் பொருள்கள் சேகரித்தலை யும் அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலை நிலவியதால் வாழ்க்கைக் கலையில் சிறிதளவு அபிவிருத்தியே ஏற்படக்கூடிய தாயிற்று ; பனிக்கட்டிப்படை இறுதியாக நீங்கிய பழைய உலகின் பெரும் பகுதிகளில் வேடர் குழுவினர் மட்டுமே சிற்றளவில் வாழ்ந் தனர்; மாறுபடும் காலநிலை காரணமாக விலங்கு நிரைகள் மடிந்த தாலோ, பிறநிலங்களை தேடிச் செல்லவேண்டி நேர்ந்ததாலோ பரம் பரை பரம்பரையாக அடுத்தடுத்துப் பல பிரச்சினைகள் இவர்கட்கு எழுந்தன. மனித வரலாற்றிலே இது ஒரு முக்கிய காலபருவமா யிருந்தது; பல்லாயிரமாண்டுகள் நீடித்த கணமது ; மனிதன், மாற்றம் யாதுமின்றித் தன் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துதற்கு ஏற்ப வேறு பிரதேசங்களையோ காலநிலைகளையோ தேடி விலங்குகளைப் போலச் செல்லாது, மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அமைத்து உணவு தேடுதற்குப் புது வழிகளைக் கண்டு பிடிக்கத் தீர்மானித்த அரிய கணம் இது.
ஏறத்தாழ கி. மு. 10,000 தொடக்கமாக, மெசோலிதிக் பருவம் எனப்படும் பருவத்திலே, ஐரோப்பாவின் பெரும் பகுதியிலும் வட ஆபிரிக்காவிலும் குழ்நிலைக்கு ஏற்ப அமைவுபடும் முறையை நாம் காணலாம். வடக்கே பரவும், காடுகளை வெட்டக் கோடரி ஆக்கப் பட்டது போலத் தோன்றுகிறது ; வேட்டையாடுதற்குரிய விலங்கு கள் இப்பொழுது சிற்றளவு கிடைக்கத் தொடங்கியதும் வேட் டைக்கு உதவுதற்கு நாய் இற்படுத்தப்பட்டது. எனினும் இம்
4.

Page 32
42 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
மெசோவிதிக் பருவம் பழங் கற்கால வாழ்க்கை முறையில் சிறு மாற்றத்தோடு திறம்பட அமைந்த ஒரு தொடர்ச்சியேயாகும்; நில் யான பெரும் குடியேற்றங்கள் ஏற்பட முடியாதவாறு உணவு கிடைக்கும் அருமையும் தொடர்ந்து நிலவியது. மனிதனல் பெரு வளவில் கட்டுப்படுத்தப்படக்கூடிய உணவு உற்பத்திமுறை ஒன் றைக் கண்டுபிடித்தலே இப்பொழுது பிரதான தேவையாக விளங்கி யது-இந்தப் புரட்சிக் கருத்தே, வேடனிலிருந்து கமக்காரனும் மந்தை வளர்ப்போனும் தோன்ற ஏற்பட்ட மாற்றமே, பழைய உல கின் பண்டை நாகரிகங்கட்குப் பின்னணியாக விளங்கியது. கமத் தொழிற் சமுதாயங்கள் உண்டாகியதும், மனிதனுக்கு ஓரளவு உறுதியான பொருளாதார நிலையில் வாழவும், கூடுதலாக சில பொருள் மூலங்களைத் தேடிச் சேர்க்கவும் அதன் பயணுகக் கூடிய ஒய்வு நேரத்தைப் பெறவும் தன்பொருட்டு ஏனைய கைப்பணியாள ரின் வேலைகட்கு ஊக்கம் அளிக்கவும் கூடியதாயிருந்தது.
இந்தியாவிலேயே இம்மாற்றத்தின் வரலாற்றை நாம் கண்டறிதல் இயலாது ; பொதுவாக நோக்குமிடத்து உணவு சேகரித்தலிலிருந்து உணவு உற்பத்தி தோன்றிய இம்முக்கிய மாற்றமானது மேற்கிலே ஏற்பட்ட அதே காலத்திலே தனிப்பட்ட முறையில் இந்தியாவில் ஏற்பட்டிருத்தல் கூடும் என்பது பொருத்தமற்றதாகத் தோன்று கிறது. தொல்பொருளியற் பதிவுகளில் நாம் காணுமாறு கோதுமை பாளி வகையான தானியங்கள் வளர்த்தலுடனேயே கமத்தொழில் தோன்றியது. ஆசியாவின் மற்றைய பிரதான தானியமான நெற் செய்கையின் முன் வரலாறு இன்றும் தெளிவற்றதாகவே விளங்கு கிறது. சீனுவில் தோன்றியதற்கு முன்னரே இந்தியாவில் நெற் செய்கை தோன்றியிருத்தல் கூடுமெனத் தெரிகிறது; நெற்செய்கை பற்றிய அறிவு யாங்சி வழியாகச் சீனவை அடைந்து சீன வெண் கலக் காலத்திலே ஏறத்தாழ கி. மு. 2000 இலே அங்கு தோன்றி யது; வட சீனவிலே புதுக்கற் காலத்தைச் சார்ந்த பயிர் தினை போல் தெரிகிறது. ஆயின் கி. மு. 2000 இலேயே பேசியா மெசப் பொற்றேமியா ஆகியவற்றில் குறைந்தது 3000 ஆண்டுகளாகவும் மேற்கிந்தியாவிலே 1000 ஆண்டுகளாகவும் வேளாண்மை நிலைபெற் றிருந்தது. வேட்டுவத் தொழிலிலிருந்து கமத்தொழிலுக்கு ஏற் பட்ட மாற்றத்திற்கான சான்றுகளை பேசியா தொடக்கம் எகிப்து வரையுள்ள பிரதேசத்திலேயே நாம் தேடுதல் வேண்டும்.

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 43
தொல்பொருளியலளவை மட்டுமே இப்பிரதேசத்தைச் சுட்ட வில்லை ; தாவரவியல் விலங்கியல் சான்றுகளுமே இப்பிரதேசத்தைச் சுட்டுகின்றன. தற்போது பயிர் செய்யப்படும் கோதுமை பாளி ஆகியவற்றின் முன் தோன்றல்களான காட்டுப் புற்கள் இப்பிச தேசத்திலேயே காணப்படுகின்றன ; பனியாற்றுப் பிற்பருவக் கால நிலைகள் இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்றனவாக விளங்கின. ஆசியா மைனர் தொடக்கம் திரான்சுகெளகேசியா ஊடாகப் பேசியா துருக் கித்தான் அபுகனித்தான் ஆகியவற்றுக்கும் காட்டுப் பாளி பரவி யுளது. ஒருவேளை அராபியா அபிசீனியா ஆகியவற்றிற்கும் இது பரவியிருக்கலாம். எம்மர் என்றழைக்கப்படும் (திரித்திக்கும் டிக் கொக்கும்) ஆதிவகையான கோதுமை சீரியா பலத்தீனம் ஆகிய வற்றிலிருந்து மெசப்பொற்றேமியாவிற்கூடாக மேற்குப் பேசியா வரையும் பரவியது. இதுவும் ஒருவேளை அபிசீனியாவிலும் புகுந் திருக்கலாம். (பழைய காட்டுத் தானியவகைகளுக்கு ஒரு மத்திய இடமாக இப்பிரதேசத்தையும் சேர்ப்பதற்கு ஆதாரமாகவுள்ள ତ) தாவரவியற் கருதுகோள்கள் யாவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவன வல்ல.) மற்முெரு ஆதி தானிய வகை, திரித்திக்கும் மொனுெகொக் கும் Triticum monococum என்பது காட்டுப் பயிராக போல்கன் நாடுகள் தொடங்கி சிறு ஆசியாவிற்கூடாக வட சீரியாவிலும் கேடிஸ்தான், பேசியா ஆகியவற்றின் எல்லைகளிலும் பாவியது என் பது அறியப்பட்டுள்ளது. புல்விதைகளை, முதலில் பயிரிடாவிடினும், உணவுப் பொருளாகச் சேகரித்தல் கூடும் என்ற கருத்து இப்பிர தேசங்களிலே வாழ்ந்த வேட்டுவக் குழுவினருக்குத் தோன்றியிருத் தல் கூடும் திட்டமிட்டு விதைத்தலும் அறுவை செய்தலும் ஆகிய ஆதார முறைகள் அறியப்பட்டதும், பயிர் விளைவை உறுதியாகப் பெறக்கூடிய சிறு சமுதாயங்கள் அதன்பின் ஏற்படுதலும் கூடும். தானியப் பயிர்களால் ஒன்றிற்கு மேற்பட்ட உபயோகங்கள் இருத் தல் கூடும் ; நேரான உணவினுல் மட்டும் மனிதன் உயிர்வாழ்தல் இய லாது; பெரும்பான்மையான தானியங்களிலிருந்து புளித்த பீர் குடி வகை ஆக்குதலும் கூடும் ; இது விவசாயம் போன்று மிகு தொன் மையான கலையாக இருக்கலாம். ஆதிமனிதனின் மனத்திலே இது உணவுப் பயிர் போன்று பிரதானமானதாக இருந்திருத்தல் கூடும். வடக்கு ரொடீசியாவில் உள்ள கிளையினரை முதன் முதல் ஐரோப்

Page 33
44 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
பியர் சென்று பார்த்தபோது, அவர்கள் ஆண்டுதோறும் ஏற்படும் உணவுக் குறைவால் துன்புறினும் பீர் ஆக்குவதற்குரிய தானி யத்தை உணவிற்கு எடார் என்பதைக் கண்டனர்.
மிகத் தொன்மையான விவசாய முறையுடன் அருகருகே விலங்கு இற்படுத்துதல் நடைபெற்றதோவென்பது தெரியவில்லை ; கலப்பு வேளாண்மையின் இவ்வீர் அமிசங்களும் இரு வேறு ஆரம்பங்களை யுடையனவாயிருத்தல் கூடும். உணவு சேர்ப்பாரிலிருந்து (ஒரு வேளை பிரதானமாகக் கிளையினருட் பெண்களிலிருந்து) தானியப் பயிர்ச் செய்கையும், ஏலவே நாயை இற்படுத்திய வேடரிலிருந்து விலங்குகளை இற்படுத்துதலும் தோன்றியிருத்தல் கூடும். காட்டு விலங்குகளை அடக்கும் பொருட்டு அவற்றிற்கு உணவளித்தற்காக முதன் முதலில் தானியம் வளர்த்திருத்தல் கூடும். ஆயின் "நற் " புற்கள் காமாகக் கட்டுப்பாடின்றி வளரும் அதே பிரதேசங்களி லேயே வெள்ளாடுகள் செம்மறியாடுகள் நல்லினங்கள் ஆகியவற்றின் காட்டு மூதாதையரைப் பிரித்தறியலாம். காட்டுச் செம்மறியாடு களைப் பொறுத்தவளவில் இது குறிப்பாகத் தெளிவாகவுளது ; மத் தியதரையிலிருந்து சிறு ஆசியா மூலம் பேசியாவரை மெளயிள ணும், பேசியாவிலிருந்து துருக்கித்தானம் அபுகனித்தானம் ஊடா கப் பஞ்சாப் பலுசித்தானம்வரை ஊrயலும், இதற்குக் கிழக்காக ஆகலும் பரவியிருத்தலிலிருந்து இது தெரிகிறது. அதிக காலம் செல்லுமுன் தானியம் வளர்த்தலும் மந்தை வளர்த்தலும், வெவ். வேறு ஆரம்பங்களை அவை கொண்டிருந்தனவெனினும் ஒன்று சேர்ந்து கணிப்பட்ட ஓர் பொருளாதார அமைப்பாக விளங்கின மனிதனும் கலப்பு வேளாண்மை செய்பவனுக விளங்கினன்.
இதன் விளைவாக மட்டும் முற்றிலும் ஓரிடத்துறையும் சமுதாயங் கள் உருவாகியிருத்தற்கு ஏதுவில்லை. ஆயர் வாழ்வு முற்முக இடம் பெயர்தலை ஏற்படுத்துதல் கூடும் ; பூர்வீக மண்வெட்டிப் பயிர்ச் செய்கையாலுமே மண்வளம் விரைவில் அழிந்துவிடல் கூடும். ஆண்டுதோறும் புதுக்களிமண் அளிக்க ஆற்று வெள்ளப் பெருக்கு இல்லாவிடில், சிற்றளவு பருவங்கள் கழிய, மீண்டும் மீண்டும் புதுப் புலங்களைக் குடியிருப்போர் நாடுதல் வேண்டும். ஆயினும் சில இடங் களில் மக்கள் பாளையம் அடிக்கும் இடங்களுக்கு ஒழுங்காக மீண்டும் மீண்டும் செல்தல் கூடும் , கிளையினர் சிலர் பயிர்களைக் காத்தற்

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 45
பொருட்டுப் பெரும்பாலும் நிரந்தரமாகப் பின் தங்குதலும் கூடும். வேளாண்மைச் சமுதாயத்திலே உணவு கூடிய அளவிலும் உறுதியா கவும் பெறுதல் கூடுமாதலால் பெரிய குடும்பங்கள் உருவாதல் கூடும்; குறைந்தவளவினவான சிறப்புத் தொழிற்றிறன் வேண்டிய வேட்டுவக்கிளையினரிடைப் போலல்லாது, இம்மக்கள் இங்கு பிள்ளை களை மேய்த்தல், களைபிடுங்கல், கொத்துதல் ஆகிய பல வேலைகட்கு உபயோகித்தல் கூடும்.
பலத்தீனத்திலே ஒரு கிளையினரின் பொருளாதாரம், வேட்டை யாடுதல் உணவு சேகரித்தல் பருவத்திலிருந்து உணவாக்கும் பரு” வத்திற்கு மாறியதற்குச் சுவைதரும் தொல் பொருளியற் சான்று கள் கிடைத்துள. இம்மக்கள் பெரும்பாலும் மெசோலிதிக்கு மரபு வேட்டுவராகவே இருந்தனர்; தம்முள் இறந்தோசைப் புதைத்து வைத்திருந்த குகைகளின் வாயிற் புறங்களில் இவர்கள் பாளையங் கள் ஏற்படுத்தியிருந்தனர். (இது ஒரு வேளை சில பருவங்களிலா யிருக்கலாம்.) இவர்களின் தீக்கல் அலகுகளும் கத்திகளும் பழைய வேட்டுவ முறைக்கேற்ப அமைந்த தோல் விராண்டிகளும் கண்டெ டுக்கப்பட்டுள. என்பு ஈட்டி முனைகளும், முள் கூர்களும், மீன்பிடித் தற்குரிய அாண்டில் வலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுடன் எலும்புத் தண்டுகளில் தவாளிப்புகளமைத்து அவற்றில் பசையிட் டுப் பதித்து தீக்கல் அலகுகள் காணப்பட்டன. இவ்வலகுகள் நுட்ப மாகப் பொளிந்து தொடரான வாள் பல்லுபோல் விளங்க ஒரு வரி சையாக வைக்கப்பட்டிருந்தன. எலும்பின் ஒரு அந்தம் ஒரு விலங் கின் தலை உருவில் அமைந்த கைப்பிடியாகுமாறு செதுக்கப்பட்டி ருந்தது. இக்கூட்டுக் கருவிகள் உண்மையில் தானியம் வெட்டும் கத்திகள் அல்லது அரிவாள்களே. இடையருது உபயோகித்ததன் பயணுகப் புற்களிலும் தானியக் காம்புகளிலும் உள்ள சிலிக்கா வானது, தீக்கல் விளிம்புகளை மிக்க ஒளிபெறுமாறு மினுக்கியுள் ளது ; வைக்கோல் அறுத்தற்கு உபயோகிக்கப்படும் எத்தீக்கற் கருவியும் இத்தன்மை பெறுவதை நாம் அறிவோம். குகை வாயிலில் மட்டமான தரையில் தானியத்தை மாவாக இடித்ததனுல் ஏற்பட்ட பொந்துகளும் அதே காரணத்திற்காக உபயோகிக்கப்பட்ட வேறு கல்லுரல்களும் உள்ளன. இந் நட்விேயர் (வாடி-எல்-நட்வ்ே எனும் இடத்தில் இவர்களின் பாளையம் ஒன்று இருந்ததால் இவர் இப்

Page 34
பிற்களம்-மேற்கு ஆசியாவில்
46
I q.-ın
七高n大德子安武�重 §yıs $now sựko函喻必s
•_ș 减淤Ộ 5
●Ꮏ Q蚤)却正 ()乞 *FQșờng sĩ �恩S%密n发 șűvesmốĝon umųjų9 -愈 長安: g學3*|-
● -، 自思主aq.o***0: sae sytuosoთGნplé,底端
9 gsgs・g
-«pot», moșđì nạnạnşıņķo ogoff *n磁***-|-
him (8' usær sý Gło
 
 

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 47
பெயர் பெற்றனர்) தாமே தானியம் வளர்த்தனரோ இன்றேல் தானுக வளர்ந்தவற்றை அறுத்தனரோ என்பது அறியப்படவில்லை; ஆயினும் நன்கு அமைக்கப்பட்ட அரிவாள்களிலிருந்து விவசாயம் ஏலவே நன்கு விருத்தியாயிருந்தது போல் தெரிகிறது.
இந்நட்டூவியத் தலங்கள் எக்காலத்தனவெனத் திடமாகக் கூறு தலரிது; ஆயினும் எல்லா நிகழ்தகவுகளையும் நேர்க்குமிடத்து அவையாவும் கி. மு. 5000 இற்கு முற்பட்டவை என்பது தெளிவு. மேற்கு ஆசியாவில் உள்ள மிக்க ஆகியான வரலாற்றிற்குட்பட்ட கால எல்லை கி. மு. 3000 ஆகும். வரலாற்று முன்னர் உள்ள கலா சாரங்கள்பற்றி, அவை இக்காலத்துக்கு முன்னைய என்று மட்டுமே கூறலாம்; அத்துடன் மெசப்பொற்றேமியா அல்லது பேசியாவிலே நீண்ட தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்த வரலாற்று முன்னர்ப் பருவங்கள் யாவற்றையும் அடக்குதற்கு ஆயிரமாண்டுக் காலமே மிகக் குறைந்த கால அளவாகும். குயவேலைப் பாணிகள், கருவி வகைகள், கட்டட வழக்கங்கள் புதைத்தல் வழக்கங்கள் ஆகியவற் றில் ஏற்படும் புது மாற்றங்களால் வேறுபடுத்தப்படும் இப்பருவங் களிடையுள்ள தொடர்புகளை, பண்டைக் குடியிருப்புத் தலங்களின் படைகளினமைப்பு முறையிலிருந்து அறியலாம் ; இங்கு கிராமத் தின் பின் கிராமமோ பட்டணத்தின் பின் பட்டணமோ முன்னைய தன் சிதைவின் மேல் பின்னையதாக மீண்டும் மீண்டும் கட்டப்பட் டன : ஈற்றில் 100 அடி வரை உயரமுள்ள கிடலோ * தெல்லோ" இதில் அமைந்துவிடும். இத்தகைய ஒரு (Tell) கெல்லினை அகழ்ந் தால் ABCDE எனத் தலத்தின் முதல் குடியிருப்பிலிருந்து கடை சிக் குடியிருப்புவரை அமைந்த ஒரு வரிசையை நாம் காணலாம். மற்ருெரு திடலில் இவ்வரிசை D யிலிருந்து தொடங்கி B வரைக்கு மட்டுமன்றி F, G, H வரையும் தொடரும். ஓரிடத்திலே, உதாரண மாகத் தென் மெசப்பொற்றேமியாவில் A மட்டத்திற்கு (இதுவே கண்டறியப்பட்ட மிகப் பழைய குடியிருப்பு) முன்னதான குடி யிருப்புக்கள், I, II, III ஆகியன, தென்மெசப்பொற்றேமியாவின் ஒரு பகுதி பேசியாக் குடாக்கடலுள் அமிழ்ந்திருந்த காலத்திலே, அதற்கு வடக்கேயுள்ள குடி வாழ்கற்குகந்த பகுதியில் காணப்பட் டன என்பது அண்மையிலே அறியப்பட்டுளது. படையாக்க முறையை விவரித்தற்கு எடுத்துக்கொண்ட இவ் விளக்கப்பட
4-CP 3040 (6814)

Page 35
48 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
முறையை நாம் பின்வருமாறு கூறலாம். பதிலான சரித்திரத்தினுல் அறியப்பட்டு, சரித்திரப் பருவம் ஒன்றிலே பொருந்தக்கூடிய பாணி யுடைய பொருள் ஒன்றினுல் அல்லது கல்வெட்டு ஒன்றினல் அத் தாட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பான ஒரு திகதி பற்றிய சான்று B பருவத்திலே காணப்படின், நாம் உடனே A, B, C, D ஆகிய பருவங் கள் இக்காலத்துக்கு முற்பட்டனவென்றும் F, G, ஆகியன இதற் குப் பிந்தியன என்றும் கூறிவிடலாம். ஒப்பீட்டளவில் இதை ஒத்த ஓர் சிரமம் இருப்பதை எத்தனை தலங்களிற் காண்கிருேமோ, அத் துணையளவில் இத்திட்டவமைப்பின் உண்மை ஒரு தலத்திற்கோ நெருங்கியமைந்த சில கலங்கட்கோ மட்டுமன்றிப் பரந்த பெரும் நிலப்பரப்பிற்கும் மிகக் கூடிய அளவில் பொருந்துவதாகும்.
மெசப்பொற்றேமியாவிலே, ஆதிக் குலமுறைக் காலமான கி. மு. 2800 இற்கு முன் குறைந்தது ஐந்து வரலாற்று முன்னர்ப் பருவங் களே அடக்குமுறையில் இத்தகைய கிரமம் இருந்ததாக நன்கு உறுதியாகியுளது. இது, பேசியாவிலும் சிரியாவிலும் இதே போன்ற கிரமத்துடன், மிக நெருங்கிய இணைப்புக்கொண்டதெனக் கூறலாம். ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள வேளாண்மைச் சமுதாயத்தின ருள் மிக முன்னேயவரை ஆராய்தல் இப்பொழுது பயன்தருவதொன் ருகும்.
மோசலுக்கு அருகாமையில் ஒரு தலம் அண்மையில் அகழ்ந்தா யப்பட்டது. மெசப்பொற்றேமியாவிலே இதுவரை அறியப்பட்டவற் அறுள் மிகுதொன்மையான விவசாயச் சமுதாயத்தை இது காட்டு கிறது. தெல் அசுனு (Tel HaSSuna) எனப்பட்ட திடலின் கீழே முன்னைய நிலப்பரப்பிலே மிக ஆதியான மட்டத்திலே, முழுதும் ஓரி டத்துறையும் தன்மையிலாத மக்களின் பாளையமடித்த இடங்கள் போன்றவை காணப்பட்டன; இங்கு காணப்பட்ட அடுப்புக்களும் மற்றும் அறிகுறிகளும், இங்கு உறைவிடங்கள் யாவேனும் இருப்பின் அவை பாளையங்களாகவுே விளங்கியிருத்தல் வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. ஆயின் இம்மக்கள் ஏலவே கலப்பு விவசாயிகளா யிருந்தனர்; ஏனெனில் ஆநிரைகளினதும் ஆடுகளினதும் எலும்பு கள் பெருவளவிற் காணப்பட்டதுமல்லாமல் அவர் கொண்டிருந்த கல்மண்வெட்டிகளில் கைப்பிடி இறுக்குவதற்குப் பயன்படுத்திய பிற்றுமனின் சுவடுகளும் காணப்பட்டன. இன்னும் இவற்றுடன்

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 49
தானியத்தை மாவாக இடிக்கவோ அரைக்கவோ உதவிய கல்லுரல் களும் உலக்கைகளும் காணப்பட்டன. இம்மக்கள் கற்கருவிகளைப் பயன்படுத்தினர். முரடானவையெனினும் ஒரளவு நல்லவையான மட்கலங்களையும் இவர் செய்தனர். இக்கலங்கள் செதுக்கிய கோடுக ளால் அணி செய்யப்பட்டிருந்தன.
ஆயின் இப்பழைய பாளைய அடுப்புக்களுக்கு மேலாக நிலையான குடியிருப்பு இருந்தது. இக்குடியிருப்பில் முற்றம் ஒன்றைச் சுற்றி அறைகள்கொண்ட சிறு மனைகள் இருந்தன. இம்முற்றம் ஓர் அடுக் களேயென்பது தெளிவுறப் புலப்பட்டது. பாண், உலையும் திறந்தபடி யிருந்த பண்டச்சாடிகளும் அப்படியே இருந்தன. ஓர் அளவளாவு மறையும் ஒரு தனியான சமையலறையும் அங்கு இருந்தன. சமைய லறையை அடுத்து முற்றத்தில் தானியங்கள் சேமிப்பதற்காக புதைக்கப்பட்டிருந்த இரு கலங்களும் இருந்தன. அகழ்ந்தாய்ந்த பகுதியில் முப்பதுக்கு மேலான இத்தகைய தானியம் ரே மிக்கும் கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்கட்டிட அமைப்புக்கள், எகிப் திலிருந்த ஒத்த காலத்திய அல்லது பிந்திய ஒத்த கட்டிட அமைப் புக்களை நினைவூட்டுவனவாயுள்ளன. இக்கிராமத்தில் அரிவாள் கீக்கற் களும் காணப்பட்டன : இவை சிறிது வளைந்த மரப்பிடி களில் இறுக் கப் பெற்றிருந்தன. இவை ஏலவே நாம் கூறிய நட்பிேயன் அரி வாள் - தீக்கற்களை ஒத்தவையாயிருந்தன. வீடுகள் பதப்படுக்கிய மண்ணுல் கட்டப் பெற்றிருந்தன. இம்மண் கீழைக்கேயமெங்கணம் விடு கட்டுதற்குவந்த திரவியமாக விளங்கியது.
வடபேசியாவில் கசானிற்கு அருகாமையில் உள்ள கெபி சியல்க் திடலின் அடியில் இக்குடியிருப்பைப் பெரிதும் ஒத்த ஒன்று இருந் தது என்று தெரியவருகிறது. இங்கும் நிலையான மனைகள் இருந்தன என்பதற்குரிய சுவடுகள் புலப்படுவனவாயில்லை ; ஆயின் மரக்கரி, சாம்பல் ஆகியவற்முலாய படைகள், பரும்படியாயமைந்த குடிசை களின் மரங்கள் கிளைகள் கரிந்ததைச் சுட்டுவனவாயுள. மக்கள் இப் பொழுதும் கற்காலத்திலேயே இருந்தனர் போல் தோன்றியது. தீட் டிய கற்கோடரியொன்றைக் கையிலேந்தியவாறுள்ள மனிதன் ஒரு வன் ஒரு புதைப்பில் காணப்பட்டான். இங்கு நீக்கல் அலகுகளுக் கான துளை கொண்ட என்புகள் காணப்பட்டன; இவை நட்டூவியன் வகை அரிவாள்களின் ஒரு பகுதியாயிருந்திருக்கலாம். இவற்றுடன்

Page 36
50 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
கல்லாலான மண்வெட்டி அலகுகளும் இருந்தன. காணப்பட்ட மட் கலங்களுள் சில கறுப்புக் கோலங்கள் கொண்டிருந்தன. இவை கையாற் செய்யப்பெற்றவையாயுமிருந்தன; (அகுமாவிலிருந்தவை போல) இச்சிதைவுகள் கொண்ட படைகளுக்கு உடன் மேலாக மண் ணுற் செய்த வீடுகள் கொண்ட குடியிருப்புகளிருந்தன. இங்கும் செம்பினுல் செய்த சிறுசிறு பொருள்கள் முதன் முதலாகத் தோன்றுகின்றன.
இத்தலங்களும், இவற்றிலும் விவரம் குறைவாக அறியப்பட்ட சிலிசியாவிலுள்ள மேசினிலுள்ளனவும், வேட்டையாடுகின்ற பகுதிநாடோடி வாழ்வுமாறி நிலையான பயிர்செய் வாழ்வு மேற்கொள்ள வேண்டிய மாற்றத்தினளவை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் காட்டுவனவாயுள்ளன. பலுக்கித்தானத்தில் செவ்விதில் இதை யொத்த, ஆயின் இதன் தொன்மையோடீடில்லாத, குடியிருப் பொன்று சோப் பள்ளத்தாக்கில் உள்ள ராணு குண்டை தெல்லில் இருக்கும் மிகத் தாழ்வான வாழ்தலத்தில் காணப்பட்டது. ஆயின் இந்தியாவில் உள்ள உள்ளூர்ப் பண்பாடுகளையும், மெசப்பொற்றேமி யாவிலும் பேசியாவிலும் அவற்றேடொத்தனபோல் தோன்றுகின் றனவற்றையும் ஒப்பிட்டு, ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவிலுள்ள இரு பிரதேசங்களிலுள்ள இவை, ஒத்த காலத்தவை என்று கருதும் இயல்பிற் காளாகாமல் நாம் கவனமாயிருத்தல் வேண்டும்.
உயர்ந்தனவும் மிகப் பண்டையவுமான பண்பாடுகளின் பிரதேசங் களுக்கப்பாலுள்ள பண்பாடுகளை வலயப் படுத்தும் கருத்தினை ஐரோப்பியத் தொல்பொருளியலார் தம் கண்டத்துள் வேலை செய் யும்பொழுது, கற்றறிந்தனர். ஆயினும் இக்கருத்துமுறை எவ்வாறு (மெசப்பொற்றேமியா, சிரியா ஆகியவற்றிலுள்ளன என்று கூறப் பட்ட தலங்கள், ஏறக்குறைய ஒத்த காலத்தினவான சிரியா, ஆசிய மைனரிலுள்ள தலங்கள் போன்ற) மிகப் பண்டைய பயிர்ச்செய்கை மையங்களுக்கு மேற்பாலுள்ள நாடுகளுக்குப் பொருந்துவதோடு அவ்வாறு கீழ்ப்பாலுள்ளனவற்றிற்கும் பொருந்துவதாம். முழுமை யையும் நோக்குமிடத்து பயிர்ச்செய்கையின் விரிவான வினை நுண் மைகளும், சிறிது பின்னராகக் கண்டுபிடிக்கப்பெற்ற உலோகவியல் துறையும், பண்ட்ை உலகில் 'புறம்பு புறம்ப்ாக மலர்ந்தன என்பது இயலக்கூடியதாகத் தோன்றவில்லை. இப்பொழுது நமக்குள்ள தொல்

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 5.
பொருளியலறிவை எண்ணின் மனித நாகரிகத்திற்காய அடிப்படை ஆதார அம்சங்கள் ஆசிய மைனருக்கும் தேக்கித்தானத்திற்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசத்தில்தான் தோன்றியிருக்க வேண்டு மென்று நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரையில் பயிர்ச்செய்கைக் கலை புகுந்தவாற்றையறிய நாம் மேற்குத் திசையையே நோக்க வேண்டும். இந்தியப் பொருள் கள் யாவற்றையும், அவை பொதுவாக மேற்காசியப் பிற்களத்தோடு இயையுமாற்றை அறிந்தே செவ்விதில் விளங்கிக் கொள்ளலாம் என் பதை இந்நூல் முழுவதும் காணலாம். இந்திய வரலாற்று முன்னர்ப் பண்பாடுகளின் ஒப்பீட்டுக் காலவரன்முறை இன்னும் தற்காலிக மான முறையிலேயே உள்ளது. எனவே இவற்றிற்கு உண்மையான தேதிகள் இல்லாமையால் அடிக்கடி நாங்கள் மெசப்பொற்றேமியக் கிரமத்தையும், குறைந்த அளவில் பேசியக் கிரமத்தையும் இவற் ருேடு மாட்டெறிந்து காட்டி, அடுத்தடுத்தமைந்த பருவங்களுக் குரிய பொதுவாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட பெயர் களைப் பயன்படுத்தி, இந்தியாவின் அண்ணளவிலமைந்த காலவான் முறை நிலைமையைச் சுட்ட வேண்டும். வட பலுக்கிக்கானில், சாளு குண்டையின் தெல்லில் படைமுறை ஒழுங்கு ஒரு கிரமப்படுத்தப் பட்டுள்ளது ; ஆகவே வட பலுக்கித்தானில் மட்டும் இந்தியாவிற் குரிய ஒருகால நிரலை நாங்கள் அமைக்க முயலலாம்.
ஆயின், அசுணு, சியல்க் ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்குடி யிருப்புக்களின் பின்னுள்ள, வரலாற்று முன்னர் ஒழுங்கினையும் முன்னை வரலாற்று ஒழுங்கினையும் ஆராயுமுன்னர் நாம் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமொன்றுளது. மிக்க முன்னைய காலத்து இவ்வேளாண் குடியிருப்புக்கள் ஒரு கற்காலக்கிற்குரியன என்று நாம் கூறியிருந்தோம்; இவ்வாறு நாம் கூறும்பொழுது நாம் கருதி யது என்னவெனில் இக்குடியிருப்புக்களிலமர்ந்து அடுத்துள வயல் களில் பயிர் செய்த மக்கள், கருவிகள் செய்யவோ வேறு யாதா யினும் செய்யவோ ஒருவகை உலோகமும் அறியாதவர்களாயிருந்த னர் என்பதே. ஆதியில் வட ஐரோப்பாவிற்கென அமைத்துக் கொண்ட, கல், வெண்கல, இரும்பு ஊழிகள் எனும் கிரமம், அதைப் பொறுத்தவரையில், வேறுபல பிரதேசங்களுக்கும் ஒப்பீட்டளவில் பொருந்துவதாம் ; சிறப்பாக, எந்த உலோகத்தையும் பயன்படுத்து

Page 37
52 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
முன்னர் உடைத்தாக்கிய அல்லது தேய்த்தாக்கிய கல்லே எங்கும் பயன்பாட்டிலிருந்திருக்கலாமென்னுமளவில் இது உண்மையே. ஆயி னும் மக்கள் கல்லூழியிலிருந்து திடீரென நேரே இருப்பூழிக்குச் செல்லலாம் ; இப்புதிய திரவியம் திடீரென வெளியிலிருந்து புகுத் தப்பட்டாலும் இது நடைபெறல் கூடும். அல்லது உலோகம் பற்றிய அறிவு அவர்களின் பொதுப் பொருளியலில் யாதாயினும் ஒரு பயனை நல்காதபோதும் இது நடைபெறும். இக்காலத்திலும் ஐதராபாத்தி லுள்ள செஞ்சுக் கிளையினர் பழஞ் சேர்க்கும் நாடோடி வாழ்வு வாழ் கின்றனர். இவர்கள் வாழ்வில் இரும்பு நல்கிய பங்கு கிண்டுதடியின் அந்தத்திலமையக்கூடிய ஒர் ஊசியே; இவர்கள் பெரும்பாலும் தம் வாழ்விற்கு வேண்டிய உணத்தகு கிழங்குகளை இத்தடிகளின் உதவி கொண்டு கிண்டினர்.
எனினும் மேற்காசியாவின் வரலாற்று முன்னர்ச் சமுதாயங்களில் பயிர்ச் செய்கை வாழ்வு செழித்தோங்கத் தொடங்கியதும் இரண் டாம் படியான புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பொன்று ஏற்பட் டது. சிறப்பு முறைச் சூடாக்கல் நிபந்தனைகளில் சுத்தியல் கொண் டடித்தோ, அல்லது உருக்கியே , வேண்டிய உருவெடுக்கவும் கூரான வெட்டுவிளிம்பைக் கொள்ளவும் செய்யக்கூடிய கடின திரவிய மொன்றினைச், சில கற்களைச் சிறப்புமுறையால் குடாக்கி ஆக்கிக் கொள்ளலாம் என்று கண்டுபிடித்ததே அப்புதுமை, செம்புத்தாகிற் கும் உலோகத்திற்குமிடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தது பெரும் பயன் அளித்த ஒரு விடயமாகும். இது இரசாயனத்திற்கும் எல்லா உலோகவியலிற்கும் ஆதாரமாயமைந்தது.
செம்பு தாதாக (மலசைற்றுபோல்) விளையலாம் ; அல்லது பாறை வெடிப்புக்களின் மேற்பால் இயற்கை உலோகமாகத் தோன்றலாம் ; பின் கால நிலை அழிவால் மேற்பரப்பில் கண்கூடாகலாம். இவ்வியற் கையான உலோகம் அடித்துருவாக்கப்படலாம் என்பது விரைவில் உணரப்பட்டது. இவ்வுலோகம் வட மெசப்பொற்றேமியாவிலும், பேசியாவிலும் உயர் நிலப்பகுதிகளில் பெருவளவில் பரந்து கிடந் தன; எனவே, முதன் முதலாகக் காணப்பட்ட செப்புப் பொருள் கள், எடுத்துக்காட்டாக சியல்க்கில், நிலத்தின் மேற்பரப்பிலிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட உருக்காத உலோகத்திலிருந்தும் சுத்திய லாலடித்தாக்கப்பெற்ற சிறு குண்டூசிகள், கூரூகிகள் முதலியவையே.

53
ஆதி விவசாயச் சமுதாயங்கள்
தாதுப் பொருளிலிருந்து செம்பை உருக்குவதற்கு கட்டிலாக் காற்று வரவிடாது தடுத்த வளி மண்டல நிலையில் 700 இலிருந்து 8000 அளவு குறைவான வெப்பநிலை வேண்டற் பாலதாம். பூர்வீகக் குயவேலைச் சூளைகளில் குறித்த இந்நிபந்தனைகளைப் பெற்றுக் கொள் ளலாம் என்பது முன்னர்க் காட்டப்பட்டுள்ளது. எளிய செப்பமற்ற கலங்களைத் திறந்த நெருப்பில் குளை வைக்கலாமெனினும், கலங் களின் மேற்பரப்பு நிறத்தைக் கட்டுப்படுத்தவோ, இன்னும் அவற் றில் கோலங்கள் போடவோ மூடிய குளை கட்டாயமாக வேண்டற் பாலதொன்முகும். மூடிய குளேயிலிருந்து ஓர் உருக்கு נשק60(%_פ அமைப்பதற்கு அதிகம் சிந்தனைவேண்டியதில்லை. எனவே, மிக்க முன்னைக் காலத்தில் செம்பை உருக்கியதற்குரிய சான்றினைப் பண்டைக் கிழக்கிலிருந்த வண்ணக் குயவரிடை நாம் காண்பதில் வியப்பொன்றுமில்லை.
ஆயின், செம்பின் பயனையும் பெறவேண்டுமெனில் இன்னும் ஒரு முறையையும் கையாளவேண்டியிருந்தது. அதுவே செம்பை வார்ப் பதற்குச் செப்புலோகத்தை உருக்க வேண்டிய முறை. இதற்கு மிக உயர்வான வெப்பநிலை 1085 வேண்டற்பாலதாம். இவ்வெப் பத்தை, தாதினின்றும் உலோகத்தை உருக்கியெடுப்பதற்கு வேண் டிய வெப்பத்திலும், மிக உயர்ந்ததை அளிக்கக்கூடிய உயர் வகைச் குளேயொன்றிலிருந்தே பெறலாம். எனவே, நெடுங்காலமாகச் செம்பை அடித்தும் வெட்டியுமே வேண்டிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. இது இயற்கை உலோகத்திலிருந்தும் அல்லது தாதிலிருந்து உருக்கி எடுத்த உலோகத்திலிருந்தும் செய்யப்பட்டி ருக்கலாம். பின்னர் உருக்குலை வகைகள் மெசப்பொற்றேமியாவில் விருத்தியடைந்தனபோல் தோன்றுகிறது. இயற்கைச் செம்பு கிடைத்தலரிதான பின்னரே உலோகவுருக்கல் ஒரு நுண் வினையாகப் புதிதாக அமைக்கப்பெற்றதென்று சில உலோகவியலார் கருதுகின் றனர். ஆயின், இந்த முரண்பாடான கிரமமுறைக்குரிய சான்று முடிவானதாக இல்லை.
மேற்கிந்தியாவில் மிக்க முன்னேயவான வேளாண் சமுதாயங்கள் அமைகின்றபொழுது அவற்றிடை செம்புக் கருவிகளில்லாத குறை “ வறுமை நிலை' யை விட வேறு யாதேனையும் குறித்திராது. விலை கொடுத்திவற்றை வாங்க இயலாமையே கல்லூழி இவர்களிடை

Page 38
54 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
கட்டாயமாக நீடு நின்றதற்குரிய காரணமாம். எனினும், விரைவில் இந்திய உலோகத் தொழிலும், உள்ளூர்ச் செம்பினையும் வெள்ளியத் தாதினையும் பயன்படுத்தி இயங்கத் தொடங்கியது. பொதுவாகக் கூறின் நாம் ஆராயவேண்டிய வரலாற்று முன்னர் இந்தியப் பண் பாடுகள் யாவும் நியமமுறையில் வெண்கல ஊழிக்குரியனவாம்.
எம் ஆராய்ச்சியை நாம் மெசப்பொற்றேமியாவின் வரலாற்று முன்னர்ப் பண்பாடுகளின் வகுப்பாக்கத்துடனேயே தொடங்க வேண்டும். இங்கு நாம் வெவ்வேறு பருவங்களையும் சுட்டவகைத் தலப் பெயர்களையே பயன்படுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக உறுக் என்பது ஓர் இடத்தின் பெயர் மட்டுமன்று (பைபிளில் இது எரெக், இப்பொழுது அரபு மொழியில் வர்க). இதை உறுக் பண் பாட்டினைச் சுட்டவும் பயன்படுத்தலாம். பண்பாடு என்கின்ற பொழுது அது இங்கே குறித்த ஒரு காலத்தில் குறித்த ஒரு மக் களால் ஆக்கப்பெற்ற பல்வகைக் கட்டிடங்கள், மட்கலம், கருவிகள், சிற்பங்கள் முதலிய யாவற்றையும் குறிக்கும். இதைக்கொண்டு நாம் பிறிதொரு பண்பாடு உறுக்காலத்தது என்று கூறலாம். இதன் பொருள் மெசப்பொற்றேமியாவில் உள்ள கிரம முறையில் உறுக் பண்பாடு என்ன இடத்தைக் கொண்டுள்ளதோ அவ்விடத்தை இது கொண்டுள்ளது என்பது பொருள். தொல்பொருளியலளவைப் பெயரிட்டில் இது ஓர் அடிப்படை முறை. இந்தியப் பண்பாடுகளை விவரிக்கும்போது நாம் இவ்வாறே இவற்றைப் பயன்படுத்துவோம். இம்முறையினலேயே, பல பருவகாலம் மக்கள் உறைவதாலாய தெல்லுகள் தலங்களிலுள்ள கிரம முறையிலமைந்த படைகளுக்கு வரிசை எண் அளிக்கப்படுகிறது. இங்கு நியமமான நியாயமான வழக்கு என்னவெனில் அகழாய்வின் ஒழுங்கு முறையைத் தலை கீழாக்குவதாகும். இதில் மிக்க மேலமைந்த (மிகப் பிந்திய) குடி யிருப்பு முதன்முதலாக அகழப்படும் என்னும் பண்டைக் குடியிருப் பிலிருந்தே எண் வரிசிை தொடங்கும்.
இதனுல் கிரம முறைக்கு நல்லதொரு சுலபவழி உண்டாகிறது. இதில் வகைத்தலப் பெயர்களின் பின் உரோம இலக்கங்கள் பயன் படுத்தப்படுகின்றன. இது அடுத்தடுத்தமைந்த வாழ் தலங்களைச் சுட்ட சியல்க் 1 சியல்க் I என்ற முறையிலமையும். ஆயின் இத் தலத்தில் ஒரே கூட்ட மக்களால் அடுத்தடுத்த மட்டங்களில் கட்டி

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 55
டங்கள் தொடர்ச்சியருது தோன்றுமாறு மீள அமைக்கப் பெறின், அவை I a Ib என்ற முறையில் எங்களால் சுட்டப் பெறும். புதிய ஓர் உரோம இலக்கம் தலத்தில் புதிய ஒரு கூட்டத்தினர் வாழ்ந்தனர் என்பதைச் சுட்டும். இலக்கத்தின் பின் உள்ள எழுத்து மக்கட் கூட்டம் மாறவில்லை, ஆயின் ஏலவே இருந்த மக்களே புதிதா கத் தமக்கு வாழ்தலம் கோலினர் என்பதைக் குறிக்கும். அவப்பேரு” கக் கீழை நாட்டில் அகழ்ந்தாய்ந்தோர் இவ்வெண்ணிட்டு முறையை ஒரு சீராகக் கடைப்பிடிக்கவில்லை; இதனுல் சில தகவல்கள் பின்னி ருந்து முன்னக எண்ணிடப்பட்டுள்ளன. இங்கு மிகப் பிந்திய வாழ் தலம் 1 ஆக மிக்க முன்னையது XX ஆகவோ வேமுென்முகவோ இருத்தல் கூடும். இத்தலங்களுக்குட் புதிதாக எண்ணிடல் மிகப் பெரிய மலைவினை அளிக்கும். எனவே, வாசகர்கள் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். எடுத்துக் காட்டாக சியல்க் V முன்னைய தாக சியல்க் IV பின்னையதாகப் பொதுக் கிரமத்தில் அமைவதைக்
காணலாம்."
மெசப்பொற்றேமியாவிலுள்ள மிக்க முன்னைய பருவத்தை நாம் முன்னரே விவரித்துள்ளோம். அது அதற்குரிய வகைத்தலத்தால் அசுணு என நன்கறியப்பட்டுள்ளது. பேசியாவிலுள்ள சியல்க் 1 இன் பொருளியல் அமைப்பு இதனேடு மிகவும் ஒத்ததாயினும், மட்கல வகை முதலியவற்றில் உள்ள வேறுபாடுகள் அதை அசுனு 1 உடன் முழு ஒற்றுமைப்படுத்துவதற்குத் தடையாயுள்ளன. இக்குறிப்பு ஆசிய மைனரிலுள்ள மேசின், சிரியாவிலுள்ள சச்சர்மா ஆகிய தலங்களுக்கும் பொருந்துவதாகும். ஆயின், நினேவாவிலுள்ள மிக்க முன்னைய மட்டமும் (நினேவா 1) சிலவேளைகளில் தெபிகள்ாா (கவ்ரா பழையது) உம் மிகப் பொருத்தமாக ஒப்பிடக்கூடியன வாயுள. இக்கலங்களுள் சியல்க் I மட்டும் வண்ணமட்கலம் உடை யது. இவ்விடயத்தில் நாம் சிறிது புறம்பான விடயங்களேக் கூறல் இன்றியமையாததாயுள்ளது.
1 பின்னேக்கி எண்ணிடப்பட்ட முக்கிய தலங்கள் வருமாறு ; மெசப்பொற் றேமியாவில் அர்ப்பச்சியா (1 -X), கவ்ரா (1 -XX,a -f), உறுக் (1 -XVII), உக்கேர் (1 -WI) ; பேசியாவில் கியன் (1 -W), A -D என மீள வகுக்கப்பட்டுள்ளது, ஆயின் A என்பதே முன்னைய குடியிருப்பு. இந்தியாவில் மொகஞ்சோதாரோவும் அரப்பாவும் அசாதாரண குறிப்பு முறைகள் கொண்டுள. இவற்றை அதிகாரம் V இல் விவரித்துள்ளோம்.

Page 39
56 பிற்களம்-மேற்கு ஆசியாவில் -
அசுனு 1 போன்ற மிக்க முன்னைய பூர்விகக் கல்லூழி நிலைமை களின்பின், மெசப்பொற்றேமியாவினதும் இன்னும் மேலாகப் பேசி யாவினதும் மிகச் சிறந்த அமிசம் யாதெனில் பலமுறைகளிலும் சில வேளைகளில் தனிப்பட்ட முறையிலுமான, ஒரு வண்ணந் தீட்டியவையும் குறைந்த அளவில் இரண்டு அல்லது பல வண் ணந் தீட்டியவையுமான மட்கலங்கள் காணப்பட்டதாம். இத் தகைய வண்ணந்தீட்டிய மட்கலங்கள் பல்வகைக் கோலங்களும் பாணிகளும் உடையனவாயிருந்தன. இவையே வரலாற்று முன்னர் மேற்காசியப் பண்பாடுகளின் வகுப்பாக்கங்கள் பலவற்றிற்கும் அடிப்படையா யமைந்துள்ளன. இன்னும் சிற்றளவு விஞ்ஞான முறை அகழாய்வே நடைபெற்ற பலுக்கித்தானத்தில், பல்வேறு பகுதி மக்கட்டொகுதியினரையும் அவர் வணிகம் புடைபெயர்ச்சி முதலியவற்றையும் வேறு பிரித்தறிவதற்கு அடிப்படையாயமைந் தது வண்ண மட்கலங்களின் பாணிமுறையின் ஒப்பீடேயாம்.
கல வண்ணந்தீட்டல் வினை நுண்மையும், அதற்கு கலங்களைச் குளேவைப்பதற்கு வேண்டிய மிக விரிவான அமைப்பின் நுண்மை யும், வடபேசியாவின் உயர் நிலங்களிலும் மெசப்பொற்றேமியாவி லும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்போல் தோன்றுகிறது. இது சிரி யாவிலும் நிகழ்ந்திருக்கலாம். இன்னும் வரலாற்று முன்னர்க் காலத் தில் பேசியக்குடாக் கடல் சுருங்க மெசப்பொற்றேமியாவிற்குத் தென்பாலிருந்த பகுதி வாழ்வதற்குகந்த இடமாயமைய, அங்கு இக் கண்டுபிடிப்புக்கள் தோன்றியதும் மலைவாழ்பகுதிகளிலிருந்து வெளி களுக்கு மக்கள் பெயர்ந்து வந்ததனலேயாம். வண்ண மட்கலங்கள் உபயோகித்த பண்பாடுகள் வடக்கே தேக்கித்தான்வரையும் தென் கிழக்கே பேசியா ஊடாகத் தென்பலுக்கித்தான் வரையும் கண்டு பிடிக்கப்பெற்றன ; இப்பொழுது தொல்பொருளியலளவை அளவில் பலுக்கித்தானத்தைப் பற்றிய எம் அறிவு குனியமாக உள்ளது. ஆயின், வடபலுக்கித்தரினத்தில் வண்ண மட்கலங்கள் மீளத் தோன்றுகின்றன. இத்தகைய பரந்த ஒரு பரப்பில் உள்ள தலங்களி லிருந்து பெற்ற பெருவளவு திரவியங்களையும் ஒப்பிட்டாய்ந்ததன் பயனுக, தொனுல் மக்கவுன் என்னும் அமெரிக்கத் தொல் பொருளிய லாளர் அவை அடிப்படையான இரு பிரிவுகளில் அடங்கும் என்று காட்டியுள்ளார். இப்பிரிவு வண்ணக் கோலத்திற்கு மிகத் துலக்க

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 57
மான பிற்களமாயமைந்த, சிவப்பு நிறம், கபில மஞ்சள் நிறங்களா லானதாம். இக்கபில மஞ்சட் கலங்களும் செங்கலங்களும் மாறு முறையில் பரந்துள; கபில மஞ்சட் கலம் தெற்கிலும் செங்கலம் வடக்கிலுமாகப் பரந்துள. இப்பாவன்முறை பலுக்கித்தானத்திலும் ஒத்த முறையில் காணப்பட்டுள்ளது. இதை நாம் பின்னர்க் காண் போம்.
இனி மெசப்பொற்றேமியக் கிரமத்தை ஆராய்வோம். இங்கு சிரி யாவிலிருந்தும் வடமெசப்பொற்றேமியாவிலிருந்தும் அறியப்பெற்ற அலவ் பண்பாடு மிக முன்னராகவே செம்பு, கல் முதலியவற்றை உபயோகித்தது போலவும் மண்ணுலும் செங்கட்டியாலுமாய கட் டிடங்களை அமைத்ததுபோலவும் தோன்றுகிறது. இக்கட்டிடங்க ளுள் ஒருவகைக் கோயில்கள் என்று சொல்லக்கூடிய அளவினவான சிறப்பான கட்டிடங்கள் இருந்தன. இன்னும் இங்கு பெரும்பாலும் கபில மஞ்சட் பிற்களத்தில் சிவப்பாலும் கறுப்பாலுமாய வண்ணக் கோலங்கள் கொண்ட மிக அழகிய மட்கலங்களும் காணப்பட்டன. இம்மட்கலமும், ஒருவேளை இப்பண்பாடுமே, சிரியாவிலோ அல்லது கேடிஸ்தானிலோ தோன்றியிருக்கலாம். ஆயின், இதையொத்த கல மொன்று சமராக் கலமென்பது, கபில மஞ்சளில் கறுப்பு என்ற முறையில் மட்டுமமைந்தது, பேசியாவில் உள்ள சில கலங்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்ட காயிருந்தது. அகவிைல் சமராக் கலம் உண்மையான அலவ் மட்கலங்களுக்குக் கீழ்ப்படையாயமைந் துளது. ஆயின், மற்றை இடங்களில் இதுவே முக்கிய சம காலத்தது ஆக உள்ளது. இவ்விரு பாணிகளும் இரு தொ குதி மக்களேச் சுட்ட வும் கூடும். அலவ் மக்கள் தம் வட புலத்திற்கே உரியவராக இருக்க லாம். (இவர் வடபேசியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்). சம ராக்கலம் மிக்க தென்பாலிருந்து வந்த, தொடர்புடைய ஆயின் தனிச் சிறப்புடைய, மக்கட்டொகுதியைக் குறிக்கலாம். இங்கு மிக நன்கறியப்பட்ட தலங்கள் சிரியாவில் உள்ள தெல்லு அலவ் (வா லாற்றுப் புகழ் பெற்ற நகர்க்குக் கீழான படையிலமைந்தது) அர்ப் பச்சியா (VI இலிருந்து X வரையுள்ள மட்டங்கள்) சமாா முதலியவையாம். சமசாவில் கி. பி. ஒன்பதாம் நூற்முண்டிற்குரிய அபசித் பட்டினத்திற்குக் கீழ் வரலாற்று முன்னர் இடுகாடொன் றிருந்தது.

Page 40
58 பிற்களம்-ம்ேற்கு ஆசியாவில்
அல் உபெய்த் பண்பாட்டின் மட்கலங்களிலிருந்து அவை பேசிய உயர் பூமியிலிருந்து வந்தன என்பதை நாம் தெளிவாக அறியலாம். அவை அங்கு காணப்பட்டமை மெசப்பொற்றேமியாவின் தென்பகு தியில் முதன் முதலாக மக்கள் குடியேறினமையைச் சுட்டுவதாக உள்ளது. வட பகுதியில் உள்ள தலங்கள் படைமுறையிலமைந்தது. அது இப்பிரதேசத்திற்கு அலவ் பருவத்தின் பின் வந்ததென்பதைக் காட்டுவதாயுள்ளது. தெற்கில் அது புகுந்ததும் அதற்கு மிக முன் னர் நடந்திருக்க முடியாது. குடியிருப்புக்கள் இடுகாடுகள் அங்கு காணப்பட்டன; செம்பு சிற்றளவில் பயன்பட்டது; வயல்கள், அசுணு 1 இலிருந்து கல் மண்வெட்டிகளால் கொத்தப்பட்டன; விடு கள் கற்களாலும் மண் செங்கட்டிகளாலும் கட்டப்பெற்றன. அண்மையிலும் கூட, அல் உபெய்த் மக்கள் மிகப்பாரிய கோயில்கள் கட்டினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது; இவற்றின் திட்டங்கள் பின்னெழுந்தனவற்றை முன்னறிவிப்பனவாயிருந்தன. 'ஊர்' இல் பிரளயம் ஒன்று இக்காலத்தில் ஏற்பட்டது; இது இத்தலத்தைத் தடித்த ஓர் ஆற்றுக் களி மண்ணுல் மூடியது; இங்கிருந்த மற்றை முக்கிய தலங்கள் எரிடு (அபசாயின், இங்கு 1946 இல் கோயில்கள் அகழ்ந்து வெளிக்காட்டப்பட்டன) தெல் உக்கேர் (பரப்பு TV), உறுக் IX-XVIII, தெபி கவ்ரா XII-XIX, என்பனவாம்.
அடுத்த பருவம் மெசப்பொற்றேமியாவின் வரலாற்று முன்னரைப் பற்றிய வகையில் ஒரு விசேட அமிசமுடையதாகும். எனினும், அதைப்பற்றி நாம் இங்கு விவரிக்க முடியாது. அதன் சிறப்புப் பண்புகளுள் ஒன்று மட்கலங்கள் வண்ணந்தீட்டிய வகையிலிருந்து திடீரெனச் சிவப்பு நிறமோ நரைநிறமோ கொண்டனவாய்ப் பெரும்பாலும் துலக்கப் பெற்றவையான சாதாரண வகையினவாய் மாறியதாகும். இந்த உறுக் பண்பாடு (வகைத் தலத்தில் V இலிருந்து X வரையுள்ள மட்டங்களில் குடிகொண்டவை) இப் புலத்திற்கு புதிய மக்கள்/புதுப்பண்பாட்டமிசங்களுடன் வந்ததைக் குறிக்கின்றது. உட்பதித்த உருளை இலச்சினைகள், களி மண்ணில் எழுத்து, கல்லால் கட்டப்பெற்ற வட்டவடிவான கோயில்களின் சிற் பம், முதலியவை இப்புதிய அமிசங்களின் பாற்பட்டவை. இவை பலவழிகளிலும் சுமேரியன் என்று நாம் கூறக்கூடிய பண்பாட்டின்
சிறப்பாக்கங்களுக்கு முன் வகையினவாயமைந்தவையாம். உறுக்

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 59
பண்பாட்டுக் குடியிருப்புக்கள் அல் உபெய்த்தின் பண்பாடுகளுக்கு மேலாக வகைத்தலத்தில் மட்டுமன்றி கவ்ரா (VIII-XI) நினேவா (TV-II) உக்கேர் (V-VIII) ஆகிய இடங்களிலும் இன்னும் பிற இடங்களிலும் படைகளாக அமைந்து காணப்படுகின்றன.
வண்ண மட்கலங்கள் ஆக்கும் தன்மையால் தமக்கென ஒரு தனிப் பண்பு ஒன்று வாய்க்கப் பெற்றவரான பண்டை மக்களுக்கிடையி லும், தம்மட்கலமாக்கு முறையினுல் இவரிற்கு முற்றிலும் மாமுன ஒரு பண்பாட்டு மரபுடையவருமான புதிய மக்களுக்குமிடையிலும் பண்பாட்டு மரபுகள் எவ்வாறு கலந்தனவோ நாம் அறியோம். ஆயினும் இக்கலப்பினுல் மட்கலங்களில் வண்ணந்தீட்டும் புதுப் பாணிகள் மீள முகிழ்ததுண்மை. இக்காலத்திற்குரியதும் சிறு காலமே நிலைத்திருக்கக்கூடியதுமான யெம்டெற் நசர் பருவத்தில் கறுப்பிலும் இளம் சிவப்பிலும் கோலங்கள் கொண்ட ஒரு சிறப்பு வகைக்கலத்தை நாம் காண்கிருேம். இவ்வமிசம் ஊரில் உறுக் (I- III) at56511rir (VII—VIIII) p.l5G'as if (III—IV) gy,GRuu a56y)Äja56wf?@ylb பிற தலங்களிலும் கண்டறியப்படக்கூடியதாய் உளது. இதன்பின் எழுத்துமுறையிலும் இலச்சினையாக்கு முறையிலும் உறுக்கிற்குரிய புதுமுறைகள் அபிவிருத்தியடைந்தன. இப்பொழுது நாங்கள் பதிவு சான்ற வரலாற்றுக் காலத்திற்கும் மெசப்பொற்றேமியாவின் அரசர் வரிசைக் காலத்திற்கும் மிக அண்மைக்கு வந்து விட்டோம். இத ல்ை யெம்டெற் நசரிற்கு ஆண்டுக் கணக்கில் ஓர் அண்ணளவான தேதியை (கி.மு. 3000 வரை) கொடுக்கலாம். ஏனெனில் இதன் பின் னரே முன்னைக் குலமுறைகள் தோன்றினவாம். இப் பருவமே சுமேரிய, எபிரேய வரன்முறைகளில் மிகப் பெருவளவில் மிக முக் கியமாக விளங்கியது; இப்பருவத்திலேயே பிரளயத்தின் பின்னர் "அரசிறைமை மீண்டும் விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்திறங்கி யது'. ஆயினும் மெசப்பொற்றேமியாவின் முன்னே வரலாற்றுப் பருவங்களைப்பற்றி விவரமாகக் கூறுமுன்னர் பேசியாவிலும் தேக் கித்தானிலுமுள்ள ஆறு முக்கிய படைமுறையிலமைந்த தலங்களை எடுத்து அவற்றின் சிரமத்தை, அசுனுவிலிருந்து யெம்டெற் நசர் வரைக்கும் உளதென்று நாம் ஏலவே நிறுவிய சிரமத்தோடு ஒப் பிடுவோம்.

Page 41
60 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
சகனிற் கண்மையிலிருந்த தெபி சியல்கைப்பற்றி அதன் மிக்க முன்னைய வாழ்தலமாகிய சியல்க் I சம்பந்தமாக ஏலவே கூறியுள் ளேன். இது பண்பாட்டளவிலில்லாவிட்டாலும் கால வரன்முறையி லேனும் அசுனுவிற்குச் சமமானதாய் இருத்தல் வேண்டும். சியல்க் I முன்னைய பண்பாட்டிலிருந்து வளர்ந்ததென்பதையும் பேசியக் குடாவுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததென்பதையும் காட்டு வதாயுள்ளது. இது அலவுடன் ஒத்த காலத்தது. இதன் பின் இத் தலம் ஒரு சிறு காலம் கைவிடப்பட்டதுபோல் தோன்றுகிறது. ஆயினும் அத்தலத்திலுள்ள முன்னைய மீள விருத்தியாக்கப்பட்ட ஒரு பண்பாடு, முன்னை உபெய்த் காலம் தொடங்கி உறுக் பருவத் தின் இடைக்காலம் வரை இங்கு குடிகொண்டிருந்தது. ஆயின் சியல்க் II இன் பிற்பகுதியில் வார்த்தாக்கிய கருவிகள் கொண்ட நிறை செப்பூழியொன்று நிலை கொண்டது. கட்டிடப் பாணிகள் உறுக் பண்பாட்டுடனும் உறுக் பருவத்து உபெய்த் பண்பாட்டுட னும் ஒப்பிடக்கூடியனவாய் விளங்கின. இவை ஒரு வேளை தொடர் பும் கொண்டிருந்திருக்கலாம். சியல்க் IV இல் உண்மையான யெம் டெற் நசர் மட்கலமிருந்தது. ஆயினும் இது மிகப் புகழ் பெற்ற வண் ணக் கலமன்று. இத்துடன் முன்னைய பொறிப்புக்கள் வரையப் பெற்ற துண்டங்களும் இருந்தன.
நிகவென்ட் இற்கு அண்மையிலிருந்த தெபி கியன் வாழ்தலம் Va இல் வண்ணக் கபில மஞ்சட் கலங்களுடன் ஆரம்பமாகிறது. இக் கலம் தேதியில் முன்னை அலவ் ஐப் போல் தோன்றுகிறது. இவ்வாழ் தலம் உபெய்த் காலம் முழுவதும் நிலைபெற்று WG இல் நடு உறுத் தின் காலம் வரை தொடர்ந்திருந்தது. இதன்பின் இத்தலம் தற் காலிகமாகக் கைவிடப்பட்டது. கியன் V பொதுவாக சியல்க் III உடனும் இறுதி நிலையில் இசார் I உடனும் ஒப்பிடப்படக்கூடியது. இசாசைப்பற்றிப் பின்னர்க் கூறுவோம். கியன் IV முன்னைச் சுமேரி யக் குலமுறைக் காலத்திற்குரியது. இதைப் பற்றியும் பின்னர்
ஆராய்வோம். \
இப்பொழுது நாம் குறிப்பிட்ட தெபி இசார் தம்தனிற்கு அண்மை யிலுள்ளது. இசார் 1 சிவப்பில் கரும் வண்ணமிட்ட கலமுடையது. இதன் கோலங்கள் கியன் Vd இன் கபில மஞ்சளில் கரும் வண்ணக் கலங்களின் கோலங்களை ஒத்திருந்தன. இன்னும் இங்கிருந்த

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 6
வார்ப்புலோகக் கருவிகளும் பிற அமிசங்களும் சியல்க் I உடன் பொருந்துவனவாயுள்ளன. ஆதலால் இசார் 1 பின்னை உறுக் காலத் திலும் மிக முன்னையதாயிருக்க முடியாது. அடுத்த கட்டமாகிய இசார் T1 இல் பழைய வண்ண மட்கல வழக்கு சாதாரண துலக்கிய நரைநிற அல்லது கருநிறக் கலங்களின் தோற்றத்தால் அற்றுப் போகிறது; இப்புதுக்கலம் உறுக்கின் நாைக்கலத்தைப் போன்ற தன்று. ஆயின் இப்புதுக்கலம், வண்ணமட்கலப் புலத்திலிருந்தும் யெம்டெற் நசர் காலத்திலோ பிந்திய காலத்திலோ பிறர் புதிது புகுந்தனர் என்பதைக் காட்டுவதாயுள்ளது. இசார் II குடியிருப்பு டன் இம்மட்கலம் பிரதானமாக விளங்கியது; இதைப்பற்றி நாம் பின்னர் ஆராய்வோம்.
சுசா என்பது, அதன் படையியல் நன்கறியப்பட முன் பல் லாண்டுகளுக்கு முன் அகழ்ந்தாயப்பட்ட ஒரு புகழ் பெற்ற தள மாகும். மக்கவுன் என்பார் பழைய சுசா இனைச் சுசா 'A' என்று பெயரிட்டதுமல்லாமல் அது உபெய்த், இசார் 1, சியல்க் III, கியன் முதலியவற்றுடன் ஒத்த காலத்தியது என்றும் கூறியுள்ளார். இதற்கு மேலாக உள்ள சுசா B இறக்குமதி செய்த உண்மையான உறுக் மட்கலங்களைக் கொண்டுள்ளது. ஆகவே மிகத் திட்டவட்ட மாக இக்கட்டத்திற்குரியதெனத் தேதியளிக்கப்பட்டுள்ளது ; சுசா C யெம்டெற் நசர் காலத்தோடு ஒன்ருக்கப் ட்டுள்ளது ; சுசா II என்றழைக்கப்பட்ட சுசா D என்பது முன்னைச் சுமர்க் குலமுறை யோடு ஒத்த காலத்தது என்று காட்டப்படல் கூடும்.
தென்பேசியாவில், பார்ஸ் மாவட்டத்தில் பேசிபொலிசிற்கண்மை யில் இரு வரலாற்று முன்னர்த்தலங்கள் அகழ்ந்து வெளிக்கொண ரப் பெற்றன. தல்-ஐ-பகுன் A, B என்பன அவை. இவற்றுள் தலம் B என்பதே முன்னையது ஆகியது. BI அசுனுவுடனும், BI அலவுடனும் தேதி கொள்ளலாம். ஆயின் தலம் A இல், வாழ்வு A, முன்னை உபெய்த் காலத்தில் தொடங்கி AV இல் உறுக் காலம் வரை யும் செல்கிறது.
இரசிய தேக்கித்தானில் அஸ்கபாத்திற்கு அண்மையில் அனே வில் அகழ்ந்த ஓர் முக்கிய தலமுண்டு. இங்கு முதலாயமைந்த குடி யிருந்த அனே la அலவின் தேதி கொண்டது; இது சியல்க் 11,

Page 42
62 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
கியன் Va உடன் தொடர்புகொண்டுள்ளது. Ib இல் செம்பு முதன் முதலாகத் தோன்றுகிறது; ஏலவே Ta இல் இருந்த மட்கலம் உபெய்த் காலம் வரை இருந்து உறுக் காலம்வரை தொடர்ந்து இருந்தது. இசாரிலிருந்தவாறே, Ib இன் கால முடிவில் இப்பகுதி யுள் புது மக்கள் புகுந்ததை நரைக்கலங்கள் சுட்டுகின்றன. இவ்விரு வகையினரும் அனே I இன் அருகருகே தொடர்ந் தமைந்து இருந்தனர். இப்பொழுது புதிது புகுந்த பிற மட்கலப் பாணிகள் பலுக்கித்தானத்துடன் உறவிருந்ததையோ அங்கிருந்து வந்த குடிவரவையோ கட்டுவதாயிருக்கலாம். அனுே III இன் கால மளவில் இசார் II இன் பண்பாட்டுடன் பல அமிசங்களிலும் ஒத்த ஒரு பண்பாடு நிறுவப்பட்டது. இவை இரண்டையும் சேர்த்து நாம் பின்னர் ஆராய்வோம்.
எனவே, பேசியாவிலும் தேக்கித்தானிலும் தம்முள் குறிப்பான தொடர்புகொண்ட பண்பாடுகள் உள என்பதும் அவை மெசப் பொற்றேமியக் கிரமத்துடன் ஒத்த தேதி கொள்ளக் கூடியன என் பதும் முன் கூறியவற்றிலிருந்து புலப்படும். எனினும் மெசப்பொற் றேமிய வழக்கைப் பின்பற்றி இவற்றை அடக்கமான வகைத்தலப் பெயர்களுள் கொடுத்தல் இயலக்கூடியதாயிருக்கவில்லை. அதனுல் இவற்றை நாம் தலப் பெயராலும் படையாக்கத்தின் கிரம எண் ஞலும் குறித்தல் வேண்டும். இது சிக்கல் நிறைந்த ஓர் விடயம் போல் தோன்றுகிறது. பொது மேற்காசியப் பிற்களத்தோடு இணைத்து இந்திய வரலாற்று முன்னர்ப் பண்பாடுகளை நாம் மதிப் பிடும்போது நாம் அவற்றை அடிக்கடி பேசியாவோடோ அல்லது மெசப்பொற்றேமியாவோடோ சார்த்தியே விவரித்தல் வேண்டும். இந்த அதிகாரம் இந்திய விடயங்களுக்குப் பிற்களமாயமைந்தவற் றைத் தெளிவாக்க முயல்வது, இதனுல் இந்நூலில் பின்னர் முன்னைக் குலமுறைக்காலத்து வணிக உறவுகள் அல்லது 'கியன் இன் மட்கல வகைகள்' எனும் பதங்கள் வரும்போது வாசகர்கள் அவற்றைச் செவ்வனே விளங்கிக் கொள்ளக்கூடும்.
ஆயின் நாம் யெம்டெற் நசர் காலத்தின் பின்னரான மெசப் பொற்றேமியக் கிரமத்தை மீள ஆய்தல் வேண்டும்; இக்காலத் கிலேயே நாம் பதிவு சான்ற வரலாற்றுக் காலத்திற்கு வருகிருேம். குறைந்தது கி. மு. 2000 வரையிலாகுதல் அரசர் வரிசைகள் குல

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 63
முறை வரிசைகள் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டது. இவற்றுள் முன்னைய பகுதி சிறப்பாக ஆட்சிக் காலங்களின் நீட்சி (எடுத்துக் காட்டாக பிரளயமுன்னர் குல முறையைச் சார்ந்த எட்டு மன்னர் 241,200 ஆண்டுகள் ஆண்டனர் என்பது) மிக மிக வரம்பிகந்ததா யிருந்தது; எனினும் கி. மு. 2800 இலிருந்து ஓரளவிற்கு இசை வான காலவரன்முறை யொன்று இவ்விபரங்களிலிருந்து தேர்ந் தெடுத்து அமைக்கப்பட்டுள்ளது. சுமர் அரசின் முன்னைக் குல முறைக்காலம் இத்தேதியில் இருந்தே தொடங்கியதுபோல் தோன்று கிறது. இது தொல்பொருளியல் சான்று, படைவரைச் சான்று முதலியவற்றல் மூன்று பகுதிப்பட (B. D. 1 இலிருந்து E, D, ITI) வகுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருள்கள் பற்றி நாம் ஆராயும் இவ்வுப விரிவுகளைப் பற்றி நாம் அதிகம் கவற்சி எடுக்கவேணடிய தில்லை. முழுவதும் கற்றறிந்த மக்கள் நிறைந்த நகர்ப் பண்பாடு விருத்தியடைந்த உலோகவியல், பாரிய கட்டிடங்கள், சிற்பங்கள் முதலிய அமிசங்கள் நிறைந்த முன்னைச் சுமர்க்குல முறையின்
சாதனைகளைப் பற்றி நாம் இங்கு விவரமாகக் கூற முடியாது.
E, D. 1 காலத்தில் பக்தாத் பிரதேசத்தில் பல தலங்களில் கருஞ் சிவப்புக் கலம்' எனும் ஒரு வகை வண்ண மட்கலம் காணப்பட் டது; இது அதற்கு முன்னேயதான யெம்டெற் மட்கலத்தோடு சில ஒற்றுமைகள் கொண்டிருந்தது எனினும் முன்னைப் பருவத்தில் பயன்பட்ட ஆழ் பிளம் சிவப்பிற்குப் பதிலாகப் பிரகாசமான கருஞ் சிவப்பு வண்ணம் கொண்டிருந்தது. இம் மட்கலத்தை நாம் மீண் டும் சுசா D இல் காண்கிறுேம் ; இதிலிருந்து கருஞ் சிவப்புக்கலத் திற்கும் தென்பலுக்கித்தானிலுள்ள குறித்த சில மட்கலத்திற்கு முள்ள சில முக்கிய ஒப்புமைகளை நாம் காணலாம். முன்னைக் குல முறைக் காலத்தில் மெசப்பொற்றேமியாவிற்கும் பலுக்கித்தானத் திற்கும் இருந்த இன்னுெரு பிணைப்பு குறித்த சில செதுக்கிய கற் பாண்டங்களாகும்; இவை மேற்பரப்பில் செதுக்கிய அணிவேலை கொண்டிருந்தன. இவை B. D. II இற்குரியவை. ஒருமுறை ஊரில் உள்ள “புகழ் பெற்ற அரசுக் கல்லறைகளில் ” இவை காணப் பட்டன. இக்கல்லறைகள் பண்டைச் சுமரின் மிக நன்கறியப்பெற்ற
ஒரு தலமாக விளங்கக்கூடியது. இது B. D. TII கட்டத்திற்குரியது.

Page 43
64 பிற்கனம்-மேற்கு ஆசியாவில்
பண்டை மெசப்பொற்றேமியா தெற்கே சுமர் அரசாகவும் வடக்கே அக்கட் அரசாகவும் பிரிக்கப்பட்டிருநதது. இதன் முன்னை வரலாற் றில் அடுத்த முக்கிய கட்டம், சர்கன் என்பான் தலைமையில் அக்கட் அரசு விறு கொண்டெழுந்ததும் அவ்வரசன் சுமரை வென்று மெசப்பொற்றேமியா முழுவதிலுமே ஒர் அக்கட் அர சாட்சியை நிறுவியதுமாம். இந்த நிகழ்ச்சி கி. மு. 2300 இற்குச் சிறிது முன்னராக நடைபெற்றிருத்தல் கூடும். சர்கனுக்கும் அவனை அடுத்தாண்டார்க்கும் கீழிருந்த ஒரு நூற்றண்டுக் காலம் வரை யினதுமான காலம் அக்கடியன் பருவம் எனப்படும். சில வேளைகளில் சர்கனித்துக் காலம் எனவும் படும். இதன்பின் சீர்குலைவும் காப் பின்மையும் தோன்றின. அக்காலத்திருந்த, எழுத்தாளன் ஆற்ருமை யொடு கூறியவாறு யார் அரசன், யார் அரசனில்லை ? என்றவாறு நிலமையிருந்தது. ஏனெனில் ஒரு குடைக்கீழ் கொண்டு வரப்பட்ட தன்னிச்சை கொண்ட சர்கன் ஆட்சி உள்நாட்டுக் கலகங்களை உண் டாக்கிப் பல நகரரசுகள் எழவும் விழவும் காரணமாகியது. ஆயின் கி. மு. 2100 இற்குச் சிறிது முன்னராக ஊரின் மூன்முங் குலமுறை யெனப்படுவது விரிவான நல் அதிகாரம் கொண்டதாய் நிறுவப்பட் டது; இதன் பின் ஐசின், லாசா எனப்படும் புறம்பு புறம்பான இரு நகர் அரசாண்மைகள் எழுந்தன. இதன் பின் (கி. மு. 2000 வரை யளவில்) பபிலோன், அசிரியா ஆகிய நாடுகளின் ஆட்சிக்குட்பட்டி ருந்த மெசப்பொற்றேமியாவின் விதியைப் பற்றி ஆராயவேண்டிய தில்லை. இந்தியா பற்றிய ஆராய்ச்சியில் சைரசின் காலத்திற்கு முன் னிருந்த பெரும் நாகரிகங்களைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. சுமர்ப் பேரரசின் முடிவின் பின்னரும் நாம் காண் பது நகர் வாசிகளல்லரான காட்டவரையே.
பேசியாவில் கியன் என்னும் ஒரு தலமே, மெசப்பொற்றேமியா வின் வரலாற்று முன்னர்க் கிரமத்திலிருந்து முன்னைக் குலமுறை வரையும், இன்னும் அப்பாலும், ஒப்பிடக்கூடிய வகையில் பண்பாடு களிலிருந்தறியக்கூடிய ஒரு தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு தல மாகும். கியன் IV சுசா D உடன் ஒத்த காலத்தியது போல் தோன்றுகிறது. அதனல் முன்னைக் குலமுறையின் சில கட்டங்

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 65
களுடன் ஒத்த காலத்தியது போலவும் தோன்றுகிறது. அது அக் கடியன் காலத்திலோ பின்னரோ முடிவுற்றிருக்கலாம். கியன் 11 இல் பபிலோனின் முதற் குலமுறையில் (கி. மு. 1000-1600 வரை) வழக்கிலிருந்த வகையினதான ஓர் உருள் இலச்சினை காணப்பட் டது. இதன் முடிவிற்கும் கியன் 11 இற்குமிடையில் ஓர் இடைவெளி இருந்தது போல் தோன்றுகிறது; இது 1400 வரை நீடித்தது போல் தோன்றுகிறது. கியன் 1 இற்கு முன்னராகவும் இன்னுமொரு இடைவெளியிலிருந்திருக்கலாம். இவ்விடைவெளி இரும்பு புகும் வரை நீடித்தது. ஏலவே இசார் I, அனே II பற்றிய விடத்துக் கூறிய துலக்கிய நரைக்கலங்களையும் இது கொண்டதாயிருந்தது. கியன் இறுதியாக ஒரு வாழ்தலமாக அமைந்தது (செவ்விகில் சொல்லில் இரு காடாயமைந்தது) கி. மு. 1300 வரையில் அல்லது பின்னராயிருக்கலாம்.
மெசப்பொற்றேமிய, பேசிய விடயங்களை விட்டு இந்திய விடயங் களுக்கு எம் கவனத்தைச் செலுத்து முன் நாம் இங்கு கூற வேண் டிய ஓர் பிரச்சினை உளது; தெபி இசார், அனுே ஆகிய இடங்களில் உள்ள படையாக்கங்களைப்பற்றி விவரிக்கும்போது பழைய வண்ண மட்கலங்களிடைபுகுந்து இறுதியில் அவற்றின் இடத்தை எடுத்துக் கொண்ட வண்ணமிடப்படாத நரைமட்கலங்கள் கரும் மட்கலங் களைப் பற்றிக் கூறியுள்ளேன். இது மட்கலம் செய்வாரிடையோ வாங்குவாரிடையோ நேர்ந்த ஒரு நாகரிக அமிசத்திலும் மேலான விடயமாகும். முற்றிலும் வேறு வகையானதும் வேறுவகைச் குளே அமைப்புடனும் குளே வைத்தலுடனும் இணைந்ததான இவ்வகைக் கலம் இங்கு காணப்பட்டது, இக்காலத்தில் வட பேசியாவிலும் தேக்கித்தானத்திலும் புதிய மக்கள் புகுந்தனர் என்ற பொருளையே தரும். அங்கு கண்டு பிடிக்கப்பட்ட பிற பொருள்கள் இதற்குச் சான்முக உள்ளன. புதிது குடிபுகுவார் வரும்பொழுது கொண்டு வருவர் என எதிர்பார்க்கக்கூடிய புதுமைகள் இங்கு காணப்பட் டன; இங்கு புதிய வகைச் செப்புக் கருவிகள், வெண்கலக் கருவி கள் ஆயுதங்கள் காணப்பட்டன. இசாரில் பொன், வெள்ளி, ஓரளவு உயர்வகை மணிகள் முதலியவற்றலாய ஏராளமான செல்வமும் காணப்பட்டது. இசாரில்தான் இது காணப்படக்கூடியதாயிருந்தது. புதிது புகுந்த இவர்கள் நாம் ஏலவே கண்டவாறு இசார், கியன்,

Page 44
66 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
அனுே ஆகிய இடங்களில் நாம் முன்னை வரலாற்று-மன்னர்க்குரிய வாழ் தலங்கள் பற்றியாய்ந்த தலங்களில் குடிகொண்டனர் என் பதற்குச் சான்றுளது. இன்னும் இவர்கள் இசாரினின்றும் அதிக தொலைவில்லாத சாதெபியில் உள்ள இரு தலங்களிலும் உறைந்தனர். போலவும் தோன்றுகிறது. இங்கு இவர்கள் இசார் II வகையின வான வண்ணக் கலமாக்கியோரின் இடத்தை எடுத்துக் கொண்ட னர்; முன் வாழ் தலம் காணப்படாத அண்மையிலிருந்த துரங் தெபியிலும் இவர்கள் குடிகொண்டனர். அனேவிற் கண்மையி லிருந்த நமஸ்கா தெபியிலும் அஸ்காபாத்திலும் ஒத்த வகை நரைக் கலம் ஆக்கியோர் பற்றிய சான்றுளது ; சியல்கில் முன்னை வர லாற்று-முன்னர் அடையல்களுக்கு மேலாக ஒத்த வகைக் கலம் கொண்ட இடுகாடு (இடுகாடு B) உளது. இன்னும் இம்மக்களின் சின்னங்கள் அபுகனித்தானில் நாடி-அலியிலும் காணப்பட்டன. இந்தியாவில் அசப்பாப் பண்பாடு சிதைந்தபின் நடந்த சம்பவங் களை அதிகாரம் VI இல் நாம் ஆராயும்போது இக்கலங்கள் பற்றி நாம் மீண்டும் எடுத்துக் கூறவேண்டி நேரிடும். ஆயின் இப்பொழு துள்ள பிரச்சினை இசார் II போன்ற குடியிருப்புக்களின் காலம் யாது? என்பதாகும். அங்கு காணப் பெற்ற பொருள்களுள் பெரும் பாலன முன்னைச் சுமர்க் குலமுறையின் உலோக வேலைகள், அணி கலன்கள் முதலியவற்ருேடு நெருங்கிய பண்புடையனவாயும் இன் னும் பிற அமிசங்களில் ஒத்தவையாயும் உள்ளன. அவ்வமிசங்களி விருந்து சில தொல் பொருளியலாளர் இசார் 11 இன் காலம் முன்னைக் குலமுறைக்கு அண்ணியது என்றும் கி. மு. 2800 இற்கு அதிகம் பிந்தியதன்று என்றும் கொள்கின்றனர். இசார் II உடன் நாம் (உதாரணமாக) அனுே III ஐயும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் சிந்திக்கற்பாலது. ஆயினும் இக்கருத்தினைச் சான்றுகள் கொண்டு அரண் செய்வது இலகுவானது போல் எனக் குத் தோன்றவில்லை. இன்னும் அரப்பாப் பண்பாட்டையும் அடுத்து இந்தியாவில் நடந்த நிகழ்ச்சிகளையும் பற்றி நாம் ஆயும்போது இன்னும் பல இடர்களை நாம் எதிருறலாம்.
இப்பிரச்சினைக்குரிய தீர்வு பெருவளவில் இரு விடயங்களில் தங்கி யுள்ளது. ஒன்று உயர் நாகரிக மையங்களிலிருந்து காலமுறைமை யில் பண்பாடுகளைப் புறம் நோக்கி வலயப்படுத்துதல் , மற்றையது

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 67
வளமிக்க ஆற்று வெளியின் செல்வ நகர மக்களுக்கும் சுதெப்பி வாழ் காடவர்க்குமிடை யமைந்திருக்கக்கூடிய தொடர்பு. சுமரிற்கு வடக்கையும் மேற்கையும் முன்னைக்குலமுறைக் காலத்திலும் அடுத்த எட்டு அல்லது ஒன்பது நூற்முண்டுகளும் நாம் நோக்குவோமானல் அன்று நாகரிக உலகமிருந்தவளவில், அதைச் சுற்றி உள்ளூர் வெண்கல ஊழிகளின் பல்வேறு படிநிலைகளில் அமைந்த பல காட வர் கிளையினரை நாம் காணலாம். இவர்கள் ‘புலம்’, ஆசிய மைன ரிலிருந்து தென் இரசியாவிற்கும் கோக்கசிற்கும், நான் கருதுமாப் போல், கிழக்கு நோக்கி கசுபியனிற்கு அப்பாலும் பாத்திருந்தது. அடிக்கடி இம்மக்கள் தம் அரசரையோ தலைவர்களையோ மிக்க ஆடம்பரத்துடனும் தாம் தேடக்கூடிய அளவு செல்வத்துடனும் சேர்த்துப் புதைத்தனர். இத்தகைய கல்லறைகள் ஆசிய மைனரில் அலகா உயுக்கிலும் தென் இரசியாவில் மைகப், சார்ஸ்காயா ஆகிய இடங்களிலும் காணப்பட்டன. இசார் II இலுள்ள கல்லறை கள் இவற்றை ஒத்தவை. ஆயின் 'அரசியலில் பிற்குறைந்தவை. ஆயின் துரங்தெபியில் ஒரு நூற்முண்டிற்கு முன்னர் பல பொருள் குவையொன்று காணப்பட்டது. இது “அஸ்ரறபாத் புதையல் செல் வம்’ எனப்பட்டது. இவையும் மைகப்பிலிருந்த அரசக் கல்லறை யில் குவித்து வைத்திருந்த திரவியங்களை ஒத்தவையாயிருந்திருக் கலாம். திரோய் இலிருந்த இரண்டாம் (அல்லது மூன்ரும்) குடி யிருப்பிலிருந்த புகழ்பெற்ற திரவியங்களும் இவ்வாறே ஒப்பிடத் தகையனவாம். இத்தலத்துப் பொருள்களும் பொற் பாண்டங்களும் வெள்ளிப் பாண்டங்களும் வேறு பல பொருள்களும் இருந்தன. இவற்றுட் பல சுமர்ப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை போல் காணப்பட்டன. இவற்றுடன் நுண்ணிய வெண் கலம், செம்பு முதலியவற்முலாய கருவிகளும் ஆயுதங்களும் காணப் பட்டன. போர்வீரர்களின் திரவியங்கள், இப் புதைப்புக்கள் முத லியவற்றிலிருந்து பெறும் சான்றுகள், ஒரே முகமாக இவை கி. மு. 2300-2000 வரையுள்ள காலத்திற்கே உரியன, முன் தேதிக்குரியன அல்ல என்பதைக் குறிப்பனவாயுள. (புதைப்புக்கள் திரவியங்களி லிருந்து பிணக்கிலுள்ள இசார் III, துரங்தெபி ஆகிய இரண்டையும் நீக்கி விடலாம்.)

Page 45
68 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
எனவே, இசார் I, அனுே III ஆகிய குடியிருப்புக்களையும் சா தெபி, துரங் தெபி ஆகியவற்றிலுள்ள இடுகாடுகளையும் இசார் தலத் திலுள்ள இடுகாட்டையுமே இத்தேதிகளுக்குள் அமைந்தன என்று கொள்ள வேண்டாமா ? ஆசிய மைனரில் நரைக்கல வினைநுண்மை மிகப் பண்டைய ஒன்ருயிருந்தது. மெசப்பொற்றேமியாவிற்குள் காடவர் புகுந்தனர் என்பதற்கு ஆவணச் சான்றுளது. அவர் புக வும் அங்கிருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம்; அல் லது குழப்பமான காலங்களில் காடவரின் தலையோர் ஏவலில், கைப் பணியாளர் வேண்டிய சேவை செய்திருக்கலாம். வடபுலத்து நாடோடிகளிடை திடீரெனத் தோன்றிய சுமர்பாணிச் செல்வம் பல வகையால் ஏற்பட்டிருக்கலாம். சாதாரண அமைதியான காலத்து வணிகத்தால் இது ஆயதாயிருக்கலாம்; அல்லது சாத்துவணிகவழி யில் நின்று நாடோடிகள் இவர்களை ஆறலைத்துக் கொள்ளேயடித்த தால் உண்டானதாயிருக்கலாம்; அல்லது மெசப்பொற்றேமியாவின் உயர் நாகரிகம் உட்பகையால் ஒருபொழுது நொய்ந்திருந்தபோது, எல்லை கடந்து நடாத்திய கொள்ளைகளினல் ஏற்பட்டதாயிருக்க லாம். இவ்வகையில் நோக்குமிடத்து இசார், அனுே ஆகிய இடங்களி விருந்த குடியிருப்புக்கள் மிக்க முன்னைய நிலையில் அக்கடியன் பரு வத்தினவாயிருக்கல் வேண்டும். இப்பண்பாடுகளை இந்தோஐரோப்பிய மொழி பேசும் கிளையினர் கி. மு. முன்னை இரண்டாம் ஆயிரத்தாண்டில் பரவியவாற்றுடன் தொடர்புபடுத்துவதற்கு நியா யம் உண்டு. இதைப் பின்னர் நாம் காண்போம். மேலே ஆய்ந்த சாத்தியக்கூருரன காலவரன் முறைத் தொடர்புகள் நிரல் 1 இல்
சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ளன (ப. 70).
அதிகாரம் 111 இற்குரிய குறிப்புக்கள் வரலாற்று முன்னர்க் கீழைநாட்டைப்பற்றிய மிகவிவரமான சிறந்தநூல் பேரா giluft V. G. Childe's, New-Light on the Most Ancient East (1934) 6Tairl 15 it கும். இன்றும் இது இப்பொருளிற்குச் சிறந்த நூலாகும். ஆயினும் இதற்குத் துணை யாகப் பின்வரும் நூல்களைக் கூறலாம். A. L. Perkins எழுதிய Comparative Archaeology of Early Mesopotamia (Oriental Institute of Chicago,
1. இதை நான் எழுதியபின்னர் சாசாவர் என்பார் இசார் II இன் தேதியை ஆராய்ந்து அது கி. மு. 2300-2100 வரை உள்ள காலத்திற்குரியதெனச் சொல்லியிருக்கிறர். இக்கருத்து எனக்கும் உடன்பாடாயுள்ளது.

ஆதி விவசாயச் சமுதாயங்கள் 69
1949) D. McCown atopgul The Comparative Stratigraphy of Early Iram (tbid., 1942). 1934 இன் பின் கண்டறியப்பெற்ற தலங்கள் அகழ்வுகள் முதலியவை பற்றிய விவரம் யாவும் தெல் அசுனு தவிர, Seton Lloyd என் LIITaf7 6th Fuad Safar 6T 6ð7 Lustgrīgyuh Journ. Near Eastern Studies, vi (1945) 255 என்பதில் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய விடயத்தில் சியல்க் Japolé5605. Lôas (pá®uloffa07gJ. R. Ghirshman, Fouilles de Sialk (Q76ö7G தொகுதிகள், 1938-1939).
நட்பிேயன் மெசோலிதிக் பண்பாடுபற்றி பேரா. D, Garrod என்பார் The Stone Age of Mount Carmel (Gg, TG56} 1, 1937) 3TGöTL19ổ) cóì6ufigi giGiron Tử. பண்டைச் செம்பு வேலை வெண்கல வேலைகளுக்குப் பின்வரும் கட்டுரைகள் காண்க: H. H. Coghlan 6T(ipGu Man (1939), 92: Antiquaries Journal, XXIII (1942), 22-38; H. Maryon in Amer. Journ. Arch. LIII (1949), 93-124. இசார் பற்றிய சில பிரச்சினைகளை நான் Antiquity, XVII (1943), 169—182 (3QĞI) -2, IT IT stupišg Girl@GIT GÖT. Luft iřaias, T. Burton-Brown, Studies in Third Millennium History (1946), 23. VI, i). H. Gordon, " சியல்க், கியன், இசார், முதலியவையும் இந்தோ இரானியன் தொடர்பும்,”, Man in India, XXVIII (1947), 196-241. FELDGINGGIT QELS LÍNaớatifi&g QupŮLJŮ. LEO6Jugippó Eurasia Septemtrionalis Antiqua, V (1930), 9, 21 Q@yub FEITLş. Joy69uîgy Git GT606), Lippo Revue des Arts Asiatiques, XIII (1939), 10-22 இலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூல் வெளி வந்ததன் பின்னர் Dr. Claude Schaetters எழுதிய அரிய J5F G) Stratigraphie comparee et chronologie de l'Asie occidentale என்பது வெளிவந்துள்ளது.

Page 46
70 பிற்களம்-மேற்கு ஆசியாவில்
国て མཁས་མཁས་ حص ar
இராக் இராள் முதலிய கோக்கசக
پیشo. G s
: சிபல்க் இடுகாடு காசற்! " 登 2 கு.ை 2 ಸಲಣ್ಣೆ லுசிஸ்தான்
ബത്തബ്- كك
இடைக்காலம் றியவெற்றி
! ?;ử, &sv. f”-
.----------- {ణిL W
ஒரிஸ்தான்
ாTம் குல. illüsü ili (pగఓt
gyα ή ΙΙ: இடைக்காலம் ങ്ങത്ത് -Nడిg லுரிஸ்தான் at அக்கது 8Säisä
aడిg II முற்குலமுறை 蕊莎醫 雪》 இடைக்காலம்
3000 வெம்டெற் நசன் sist c gués夏亨
இடைக்காலம் aడి 葛 ●g膏狂
hasis w Jag ’
அல் உபெய்த் 函8馆夏
இடைக்காலம்
 
 
 
 
 
 
 
 

அதிகாரம் IV மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி வேளாண் சமுதாயங்கள்
கல்லுகளூடே பல்லிகள் பாம்புகள் நொறுங்குமாறு நகர்ந்தன. மூத்துத் தனித்த கடாத்தலைமேல் பிணமுண்ணிப் பருந்துகள் பறந்தன. காய்நதிப் படுக்கை வழியே கழுதைகள் தளர்நடை போட்டன.
(வி. சக்லில் வெஸ்ற், 'நிலம்")
பலுக்கித்தானம், மக்கிரன், சிந்து ஆகிய மூன்று பாகங்களையும் அடக்கிய மேற்கிந்தியப் பகுதிகள் யாவும் இன்று அணுக அரியவை, பாழ்மலைகளாலானவை, வறண்ட பாலையும் மணற் காடுமானவை. ஆயின் இவற்றிற் கூடாக சுக்கூர் அணையினுலும் இணேந்த நீர்ப் பாய்ச்சற் கால்வாய்களாலும் கட்டுப்படுத்தப்பெற்ற இந்து நதி செழுமையான வண்டல் மண் நிலப்பகுதிகளை, இப்பிரதேசத்திற் குக் கிழக்காயமைந்த எல்லைப்பகுதியில் படைத்துள்ளது. மக்கிரன் கடற்காைப்பகுதி குவதரிலுள்ள பேசிய எல்லைப்பகுதியிலிருந்து முந்நூறு மைல்களுக்கு மேலாகக் கிழக்கு நோக்கிப் பாந்துள்ளது ; இக்கடற்கரையோரம் முழுவதும், ஆழமில்லா அகண்ட ஆற்றுவாய் களிலமைந்த அடர்சோலைச் சதுப்புக்களும் வெருட்டும் மணற் குன்றுகளும் செறிந்துள; ஆயின் இங்கு ஒடுங்கிய கடற்கரையோர வெளி நிலங்களுக்குப் பின்பாக, சந்திரனின் இயற்கைத் தோற்றத் திற் கொப்பாக, மலைகள் வெறுங் கன் முகத்துடன் நீலவானிற் கெதி ராக விசித்திரக் கோலங்காட்டி நிற்கின்றன. நாட்டுள்ளே இக்கிணிவு கள் வடதிசை நோக்கி அடர்ந்து சென்று 7000 அடி உயர மேல் வரைக் கோட்டிலும் உயரமாக ஒழுங்கற்ற விளிம்பு முகடுகளாக அமைந்து செல்கின்றன. இவற்றிடையமைந்த மஸ்கை அல்லது நல் அல்லது ஆப் போன்ற ஆறுகளின் பள்ளக்காக்குகள் ஒன்றிலிருந் தொன்று புறம்பு புறம்பானவை. இகளுல் கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் போக்குவரத்துக்கள் இம்மலையடுக்கங்கள் மீகாக அடிைந்த ஒழுங்கான கணவாய் வழிகளே நாடவேண் *ழுஷ்டித ழித் நோக்கிப் பாய்ந்து சிந்துள் விழும் நதிகளின்”பள்ளத்தாக்குகளை
7

Page 47
79 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
அடைந்து கீழமைந்த சம நிலத்திற்கு முலா அல்லது கச் நதி களின் வழி சரிவான பாதையாகச் செல்லவேண்டும்.
கலத்திற்கு அண்மையில் இம்மலைகள் கிழக்கு மேற்காக நூறிலும் குறைவான மைல் நீளத்திற்கு ஒடுங்குகின்றன. இக்குறைவான பகுதி யக்கோபபாத்தின் அயலிலுள்ள மேற்பால் சிந்தின் பாலை நிலத்திலிருந்து, பிஷின் லோரா நதியினப்பாலிலிருந்து சிஷ்டன், எல்மண்ட் ஓஅசிசு ஆகியவை வரை பரந்துள்ள 3,000 அடி உயர வரைக்கோட்டிற்கும் மேலாக உள்ள பீடபூமிவரை செல்கின்றது. இப்பகுதியிலுள்ள சிகரங்கள் கொஹிமாரனில் 10,000 அடிக்கு மேலாக எழுகின்றன. இப்பொழுது குவெற்ரு எனப்படும் நகரை, ஒரு கீழை நாட்டுக் கம்பளி (Camberley) எனலாம். இது பெரிய போலன் கணவாயின் முகப்பில் அமைந்த பண்டைச் சாத்து நகர்க் கண்மையில் அழகற்ற முறையில் பரந்து கிடக்கின்றது. இது கந்த காரை இந்தியாவைச் சமவெளிகளுடன் இணைப்பதாயுள்ளது. இது மலைகளுக்கிடையிலமைந்த அகன்ற ஓர் வளமிக்க பள்ளத்தாக் காகும். இங்கு இலைதுளிர் காலத்து மலரும் புறுட்புளொசம் மலர்கள் இன்னும் மலைமிசை தங்கி நிற்கும் பனியின் பிரகாசத்தைக் கொண்டு இலங்கின.
சிந்துப் பாலைநிலம் இக்காலத்து நீர்ப்பாய்ச்சல் வேலை கொண்டி ருந்தும் செயற்கையிலமைந்த நீர்க்கான்களின் எல்லைகளுக்கப்பால் மக்கள் உவக்காப் டகுதியாகவும் குடிதாங்க முடியாததாகவும் விளங் குகிறது. நின்று நின்று ஓயாது நிலைமாறும் இந்து நதியின் கழி முகங்களானவை, களப்புக்கள் சோலைச் சதுப்புகளாலாய ஒரு காட் டிடை யாருங் கண்டறிய முடியாவகையில் மறைந்து விடுவனவா պ@T. எனினும் உள்ளூருள் 20 மைல்களுக்கப்பால் பழைய நதி தீரக் கோடுகள் புலப்படுவனவாயுள்ளன. இவற்றைச் சார்ந்து குன்றங் களும் தரைமுனைகளும் நெடுநாள் நின்றுலர்ந்த பாலைமண்பரப்பைப் பார்த்தவண்ணமுள. கராச்சிக்கு அப்பால் கிர்தார் மலையடுக்கங் களின் அடிவாரங்கள், மணற்பரப்பினின்றும் கல்லென வீறுகொண் டெழ; ஆங்காங்கு கிடக்கும் சிறு வெஞ்சுனைகள் எதிர்பாரா வகை யில் மறைவான ஓஅசிசுகளைப் படைத்து அங்கே அயன மண்டலத் தாவரங்கள் செழுமையுடன் கிளர்ந்தெழ வழிகோலின.

வேளாண் சமுதாயங்கள் 73
வடபால், லர்க்கணுவை அடுத்த கவர்ச்சியில்லா நாட்டுப்பகுதியில் மண்பாப்பெல்லாம் உப்புக்கவிந்திருந்தது; இதனுல் இங்கு நிழலி லேயே 120° இலும் உயர்ந்தெழும் கோடைவெப்பத்தில் இவ்வுப்பு உலர்ந்து நொறுங்குமியல்புடைய ஒளிவிடும் மேற்படையாக அமை யும். இப்படையோ காலடிச்சுவடு பட பனிப்படையைப் பழிப்பது போல் நொறுங்குவதை நாம் காணலாம். இங்கு இத்தரைத்தோற் றம் முழுவதும் வெண்ணிறமாகி, சமவெளியெலாம் படர்ந்திருந்த தறுக்கணித்துப் பொலிவிழந்த மரங்கள், கபிலப்பச்சைப் பற்றை கள் முதலியவற்றிற்கெலாம் பிற்களமாயமைந்து நிற்கும்.
இதுவரையில் இந்தியாவிலிருந்தோரென அறியப்பட்ட மிக்க முன்னைய வேளாண் சமுதாயத்தவர் இந்த மலைசார் பாலைவனப் பிர தேசங்களிலேயே இருந்தனர் என அறியப்பட்டுள்ளது. இப்பிர தேசத்தமைந்த மனிதக் குடியிருப்புக்கள் குறைந்தது கி. மு. மூன் மும் ஆயிரத்தாண்டின் ஆரம்பத்திற்குப் பின்னுேக்கித் தேதி கொள் ளக் கூடியன. இவை ஆரம்ப காலந்தொடங்கியே இன்னும் மேற்பாற் புலத்துப் பண்டை வெண்கல வூழிப் பண்பாடுகளுடன் குறிப்பான தொடர்புகள் கொண்டவை போல் தோன்றுகின்றன. பலுக்கிமலை களிலும், இந்துவெளியிலும் பண்டைக் குடியிருப்புகளுக்கான ஏரா ளமான சான்றுகள், இற்றை நாளிலும் பார்க்க அற்றை நாட்களில் அங்கு கடுமை குறைந்த கால நிலைமைகள் இருந்தன என்பதைச் சுட்டுவனவாயுள்ளன. இன்னும் அலக்சாந்தரின் காலத்தில் பலுக் கித்தானத்துக் காலநிலை அண்ணளவில் இன்றையதை ஒத்ததாயி னும், பண்டைநாட்களில் இந்துநதிப் பள்ளத்தாக்கில் கனமான மழை வீழ்ச்சியும் பரந்த காடுகளும் இருந்தன என்பதற்குச் சான் றளது என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். சூளை வைத் துச் செய்த செங்கட்டிகள் அரப்பாப் பண்பாட்டில் ஏராளமாகப் பயன்பட்டது என்பதிலிருந்து கி. மு. மூன்ரும் ஆயிரத்தாண்டில் அங்கு எல்லையற்ற அளவில் மரக்குற்றிகள் பெறக்கூடிய வசதியிருந் தது என்பது புலப்படுகிறது. பருவப் பெயர்ச்சி மழைகள் ஒரு சிற் றளவிலேனும் மேற்பால் பாந்திருக்குமெனின் இந்தியாவின் இம் மேற்குப் பகுதியின் இயற்கை முழுவதுமே மாறியிருக்கலாம்.
இந்து நதிப் பள்ளத்தாக்கின் பண்டைக் கால நிலைக்குரிய சான் றினைக் கண்டுபிடிப்பதிலும் பலுக்கித்தானத்தினது கால நிலைச்

Page 48
74 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
சான்றைக் கண்டு பிடித்தல் எளிது. வரலாற்று முன்னர்க் குடியிருப் புக்கள் பலவற்றைக் கொண்டுள்ள மக்கிரன், கரன், தென் பலுக்கித் தானத்திலுள்ள யலவான் ஆகிய புலங்களில் இன்று வாழ் குடிமக் கள் தொகை மிக அருகியதே. (கானில் இது ஒரு சதுர மைலுக்கு இருவர் என அமைந்துள்ளது.) இன்று இவ்விடங்களிலுள்ள மக்கள் ஓரளவிற்கு இடம்பெயரும் இயல்பினர். இவ்வதிகாரத்தின் பொரு ளாக அமைந்த குடியிருப்புக்களை இன்று நமக்கு எடுத்துக்காட்டு வனவாயுள்ளவை சிதைவுகள் குவிந்த 'தெல்லுகளே' நிலையான குடியிருப்புக்கொண்ட சமுதாயங்கள் பல நூற்ருண்டுகளாக ஓரிடத் தில் இருப்பதாலேயே இத்தகைய 'தெல்லு 'கள் சமைதல் கூடும். கொல்வா பிரதேசத்தில் இத்தகைய குடியிருப்புக்கள் குறிப்பான முறையில் ஏராளமாக உள்ளன. (ஸ்ரீன் கூற்றின்படி) முன்பு இப் புலமே மக்கிரனில் பெரிய உலர் பயிர்ப்பகுதியாகும். நன்மழை வீழ்ச்சி ஆண்டுகளில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாளி யின் அளவு ஏராளமானதாகும். அவர் பின்னும் தொடர்ந்து கூறுவ தாவது : “ இப்புலத்தில் வாழும்மிகக் குறைந்த தொகை மக்கள் நாடோடிகளாயிருப்பதிலிருந்து இம்மழை வீழ்ச்சி எவ்வளவு அரு கியது என்பதும் பயிர்ச்செய்கை எவ்வளவு இடருடையதென்பதும் புலப்படும்.” இந்நாடோடுமியல்பு எனும் பருவப்பெயர்வு, இப்பொ ழுதுள்ள நியமங்களில், பலுக்கித்தானத்தில் குறிப்பிடத்தக்க ஓர் அமிசமாகும். இதை ஸ்ரீன் கூறுவதிலும் நன்முறையில் எடுத்துக் காட்ட முடியாது. அவர் கூறுவதாவது : “நீர்ப்பாய்ச்சப்படாத நிலங்களில் பயிர்செய்தல் நிலையான ஒரு முயற்சியாகாதாதலின் நிலமுடையோர், நிலம் குத்தகை எடுத்தோர், ஆகிய இரு பகுதி யினருள்ளும் பெரும்பாலானேர் ஆண்டுதோறும் மழை மாதங்க ளில் தொழில் நாடி சிந்துச் சமவெளிநாடிச் செல்வதுண்டு. இத ல்ை அப்பருவத்தில் உபர் பள்ளத்தாக்கிலிருந்து கீழ் விசும் கடுங் குளிர்க் காற்றுக்களிலிருந்தும், அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வர். ஆயின் பின் இலைதுளிர் காலத்தில் இந்து நதிப் பள்ளத் தாக்கின் சூடு பரவவும் இம்மக்கள் தம் குடும்பத்தினருடனும் தாம் மிச்சம் பிடித்துச் சேர்த்த பணத்திற்குப் பெற்ற பொருளு டனும் மீண்டு வருவர். இவ்வாறு பருவத்திற்குப் பருவம் வந்து

வேளாண் சமுதாயங்கள் 75
போதல் இல்லாவிடின், வாய்ப்பளியா ஆண்டுகள் பல தொடர்ந்து களிமண் பாலையாகத் தோன்றுதலும் உண்டு'.
இத்தகைய பருவமுறைப் புலப்பெயர்வு, சூழ்ந்து நிற்கும் அயல் நாட்டுப் புறத்தினின்றும் நூறு அடிக்கோ அதற்கு மேலாகவோ " தொடர்ந்து நீள்காலம் நிலைபெற்ற குடியிருப்புக்களுக்கு உறுதி யான சான்முக எழும் தெல்லுகளோடு இசையாதென்பது எவர்க் கும் எளிதிற் புலப்படும். இன்று நாடோடி மக்களை மிக அருகிய நிலையில், இழிந்த நியமனங்களில் வைத்துப் பேணிய அப்பள்ளத் தாக்குகளே வரலாற்று முன்னரான பண்டைக் காலத்தில் மக்களைப் பயன்தரும் வேளாண்மையால் சிறுவளத்தோடு வாழக் கூடியவரா கச் செய்தன.
பலுக்கித்தானத்தில் நடாத்திய புல ஆய்வுகளின்போது கFல நிலை, மக்கட் செறிவு பற்றிய பிரச்சினைகளிலேயே சேர் ஒரல் ஸ்ரீன் கண்ணுங்கருத்துமுடையவராயிருந்தார் ; அதனல் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கெனுங் காரணமொன்றிற்காகவே திட்டமிட்ட மைக்கப்பெற்ற இயற்கையினமையாத கல்லாலாய அணைகள், குள வரிசைகள் பலவற்றை அவர் சுட்டியறியக் கூடியதாயிருந்தது ; இவை யலவனில் கபர்பந்து ' என அழைக்கப்பெற்றன. இவை எக் காலத்திற்குரியன என்பது தெரியவில்லை; ஆயின் ஸ்ரீன் அவர்கள் கூறுவதுபோல், அவை பெருமழைவீழ்ச்சிக் காலநிலையை மட்டு மன்றி அவற்றைக் கட்டுவதற்கு வேண்டிய தொழிலாளரை நல்கக் கூடிய மக்கட்டொகையையும் குறித்தது. மஸ்கைப் பள்ளத்தாக்கில் குறிப்பான வகையில் நிலைநிற்கும் பாரிய ஓரிணைக் கண்முக அணை கள் காணப்பட்டன. இவை 16 யார் இடைவெளி கொண்டு நின்றன. இவை மேல்நின்ற குன்றங்களிலிருந்து வரும் வெள்ள நீரைக் கோலி வழிகாட்டத் திட்டமிட்டமைக்கப்பெற்றவை ; இன்னும் இவை தள வரிசையிலமைந்த வயல்களோடு இணைந்து காணப்பட்டன. இன் னும் வடபால் இலக்கோரியன் கணவாய்க் கண்மையில் மிக்க வியத் தகு நீர்ப்பாய்ச்சல் வேலை கண்டு பிடிக்கப்பட்டது. இது உண்மை யில் பெரிய ஒர் அணைக்கட்டே ; இன்றும் இது 12 அடி உயரத்திற்கு நிற்கிறது. இது முழுவதும் 348 யார் நீளமுடையது. பின்னல் பேர ளவு நீர்த்தேக்கத்தை அணைக்கக்கூடியவகையில் இது கட்டப்பெற் றுள்ளது. இவ்வணைக்கு நன்முறையில் கட்டப்பெற்ற கன்முகம்

Page 49
76 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
இருந்தது. இக்கற்றுண்டங்கள் 4 அடி, 3 அடி 2% அடிப் பரிமாணங் கள் கொண்டிருந்தன. கன்முகங்கள் மண்சரிவணை கொண்டிருந்தன. இவ்வேலைகள் எப்பண்பாட்டிற்குரியன? எக்காலத்திற்குரியன ? என் பது பற்றி இதுவரை ஒன்றும் அறியப்படவில்லையெனினும், பண் டைக்காலத்தில் பெருமழை வீழ்ச்சிக்கு அவை இன்றும் நிற்பது சான்முகும். உண்மையில், இவை பலுக்கிமலைகளில் மக்கள் வர லாற்று முன்னர்க் காலத்தில் வாழ்ந்த ஒரு காலமளவு பிந்தியவை யாயிருத்தலும் கூடும்.
சிந்தில் வரலாற்று முன்னர்க் காலத்தில் மழை வீழ்ச்சி பெரியதா யிருந்தாலும் பயிர்ச்செய்கை பெருமளவில் இந்துநதியோடிணைந்த நீர்ப்பாய்ச்சல் வேலைகளில் தங்கியிருத்தல் வேண்டும் : இக் காலத் தில் இலைதுளிர் காலத்தில் ஆற்றுப்பெருக்கில் ஆண்டுதோறும் ஓர் உயர்வுண்டு. இது ஆறு எழும் இமாலயத்தில் மாரிப்பனி உருகுவ தாலாம். ஆதிகால நிபந்தனைகளில் இந்நிலைமை ஆண்டுதோறும் நைல்நதிப்பெருக்கு தைகிரிசு-யூபிறற்றிசுப் பெருக்குகளோடு ஒப் பிடக்கூடிய வெள்ளப்பெருக்குகளை உண்டாக்கியிருக்கலாம். ஆயின் இப்பெருக்கு நைல்நதிப் பெருக்கிலும் சாந்தம் குறைந்ததாயும் நம் பத் தகுதியற்றதாயும் தைகிரிசு-யூபிறற்றிசுப் பெருக்குடன் கூடிய அளவு ஒப்பிடக்கூடியதாயுமிருந்திருக்கலாம். இந்த ஆதிகால நிலை மையில் இந்நதி, சிந்துTடாகப் போகும் வழியில் மென் மண்களை விட்டு வன்மையான சுண்ணும்புக் கல்லை வெட்டும் இடங்கள் இர்ன்டே (சுக்கூரும், கொக்கிரியும்) இருந்தன என்பது குறிப் பிடத்தக்கது. கால்வாய் தன் நிலையை மாற்ற முடியா இவ்விர் இடங் களுக்குமிடையில், மனிதராக்கிய அணைகளில்லாத இயற்கையான நியமங்களில், அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு வெள்ளப்பெருக் கின் பின்னரும், இந்துநதி ஆண்டுதோறும் தன் போக்கை மாற்றும் இயல்புடையதாயிருந்திருக்கும். பண்டை நாட்களில் இத்தகைய வழிமாற்றமும் அதனலாகும் பொல்லா வெள்ளப்பெருக்குகளும் இருந்தன என்பதற்கு அரப்பாப் பண்பாட்டுத் தலங்களில் ஏராள மான சான்றுகள் உள.
புவியியற் பிற்களம் பற்றிய ஆய்வினை நிறுத்தி வரலாற்று முன் னர்ப் பண்பாடுகளை ஆராய்வதில் இறங்குமுன், இந்து நதிக்கும் யோகிக்கண்டையில் பலுக்கிமலைகளின் கிர்தர் அடுக்கங்களுக்கு

வேளாண் சமுதாயங்கள் 7.
மிடையிலுள்ள மஞ்சார் வாவியைப் பற்றி நாம் இங்கு குறிப்பிடல்
வேண்டும். சாதாரணமாய் இவ்வாவி 8 இலிருந்து 10 மைல் நீள
முள்ள வாவி, அவ்வளவு அகலமும்
கொண்டது. இது இந்துநதி
i:
وں مسند وہifکیEچھ؟ དང་། ཅོ་
ス
மேற்கிந்தியாவில் வெண்கல ஊழிக்குடியிருப்புத் தலங்கள்
oகுவெற்றக் கலம் இதோப் பண்பாடுகள் ஐஅம்றிப் பண்பாடு தேல்-துத்தரா பண்பாடுமுராஷிதம்ப் பண்பாடு
qisit f'Liċi Ċ, Gt.
ဗြုံးဝ ஃகைட்-கீஊமேல்க
அராபியன் கடல்
படம் 2
யோடு தொடர்பு கொண்டிருப்பதாலும் மேற்பாலுள்ள மலைகளிலி ருந்து நீர் பெறுவதாலும் வெள்ளப்பெருக்குக் காலத்தில் இது மிகப் பேரளவில் பெருத்து 200 சதுரமைல் பரப்பைக் கொண்டிருக்கும். ஆயினும் இது ஓரிடத்திலேனும் 10 அடிக்கு மேலான ஆழமுடைய

Page 50
78 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
தாயிருக்கவில்லை. மகும்தார் அவர்கள் சிந்தில் நடாத்திய புல ஆய் வின் பயணுக மஞ்சார் வாவியோரமாகப் பல வரலாற்று முன்னர்த் தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுட் சில உயர் வெள்ளப் பெருக்குக் காலத்தில் ஒரத்திற்கண்மையிலிருப்பவையாயினும் இப் பொழுது உயர்நீர்ப்பெருக்கில் நீர்குழ்ந்தவையாயிருந்தன. மஞ் சார்ப் பகுதிக்குப் பலுக்கித்தானத்திலிருந்து இப்பொழுது வழக்கி அனுள்ளவற்றுள் முக்கியமான இரு வழிகள் இருந்தன ; இவற்றுள் மிக்க வடபாலுள்ளது முலாக் கணவாய் வழி அவ்வாற்றின் வழி சென்று மலையடிவாரம் ஒரமாகத் தென்பால் திரும்பி யோகிக்கும் (Johi) மஞ்சார்ப்பகுதிக்கும் செல்கின்றது. தெற்கிலமைந்த வழி மஸ்கை, நல் ஆகிய பள்ளத்தாக்குகளிலிருந்து தொடங்கி லக் புசி, லக் சோகல் ஆகியவற்றைக் கடந்து யோகிக்கண்மையிலுள்ள பண்டிவாகியில் சிந்தை வந்தடைகிறது. இவ்விரு வழிகளையும் விட வரலாற்று முன்னர்க் காலத்தில் இப்புலத்திற்கு கச் நதிவழி போக்கு வாத்து இருந்ததென்பதற்குச் செவ்விய சான்றுளது. முந்திய அதி காரத்தில் பேசியாவிற் கண்ட வரலாற்று முன்னர்ப் பண்பாடுகளை, மட்கலத்தில் வண்ணந்தீட்டும் வினைநுண்மையைக் கொண்டு, பரும் படியாகப் பாகுபாடு செய்தல் இயலுமென்று கண்டோம் ; தெற்கே கபில மஞ்சட்கலமும் வடக்கே செங்கலமும் என்பதே அப்பாகுபாடு. பலுக்கித்தானத்திலும் ஒத்த ஒரு வேறுபாட்டினை நாம் காணலாம். இங்கே கபிலமஞ்சட்கலம் தெற்கிலும் செங்கலம் வடக்கிலுமாக அமைந்தன. இன்னும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து வந்த மண்ணி லாய மனித உருவமாதிரிகளும் பண்பில் வேறுபட்டனவாயிருந்தன. இன்னும் சிந்து, தென்பலுக்கித்தான் ஆகிய இடங்களிலிருந்த கபில மஞ்சட்கல மாவட்டத்தினுள்ளும் இன்னும் சில உபபிரிவுகள் செய் யப்படவேண்டுமென்பது என் கருத்து. இவ்வுபபிரிவிற்கு செவ்விய முறையில் அறியப்பட்ட பண்பாடுகளேக் கொண்ட தலங்களிலிருந்து பெறப்பட்ட பெயர்களைப் பயன்படுத்தல் நலம். அவ்வாறு செய்யும் பொழுது பின்வரும் ஒரு தொகுதிமுறையை (உரு. 2) நாம் அமைக்
56tr.
அ. கபிலமஞ்சட் பண்பாடுகள்.
(1) குவெற்றப் பண்பாடு (போலன் கணவாயிலுள்ள தலங்களி
லிருந்து).

வேளாண் சமுதாயங்கள் 79
(2) அம்றி-நல் பண்பாடு (இருதலங்களிலிருந்து. முதலாவது சிந்திலுள்ளது; இரண்டாவது பலுக்கித்தானிலுள்ள நல் பள்ளத்தாக்கின் தலைப்பில் உள்ளது).
(3) குள்ளிப் பண்பாடு (தென்பலுக்கித்தானிலுள்ள கொல்வா
எனும் இடத்திலுள்ள ஒரு தலத்திலிருந்து).
ஆ. செங்கலப் பண்பாடுகள்,
(4) சோப் பண்பாடுகள் (வடபலுக்கித்தானிலுள்ள சோப்
பள்ளத்தாக்கிலுள்ள தலங்களிலிருந்து).
இப்பண்பாடுகள் மட்டுமன்றி ஸ்ரீன் என்பாரால் பலுக்கித்தானத் திலும் மகும்தாரால் சிந்திலும் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று முன்னருக்குரியனவா யிருக்கக்கூடிய தலங்களில் மட்கலங்கள் காணப்பட்டன; ஆயின் நமக்கு இப்பொழுதுள்ள அறிவைக் கொண்டு இவற்றை முற்கூறிய பிரிவுகளுள் அடக்க முடியாது. இக் தலங்களுள் சிலவற்றைப் பற்றி (எ. கா. மக்கிரனிலுள்ள சாகிதம்ப் இடுகாடு, யுகர், லொகம்யோதாரோ, சிந்திலுள்ள சானுதாரோ முத விய இடங்களிலுள்ள மட்கலம் சுட்டும் பண்பாடுகள்) பின்வரும் ஓர் அதிகாரத்தில் (அதிகாரம் VI) ஆராய்ந்துள்ளோம். அதில் இவை ஒப்பீட்டளவில் பிந்தியவை என்பதற்குரிய நியாயங்களை அளித் துள்ளேன்.
ஆகவே வரலாற்று முன்னர்ப் பலுக்கித்தான்பற்றிய அளவையைக் குவெற்றுப் பண்பாட்டுடன் தொடங்குவோம். மிக்க கவர்ச்சிகர மான இக்கட்டத்தில் ஒரு சிறு பகுதியே இப்பொழுது எஞ்சியுளது. ஆதலின் இதனைப் பண்பாடு என்று சொல்வது அதற்கு ஓர் உயர் வளித்ததாகும். இவ்வாராய்ச்சிக்கு, குவெற்முவிற்கு மிக அண்மையி அலுள்ள ஐந்து தெல்லுகளிலும் மேற்பரப்பில் காணப்பட்ட ஒரு சிறப்பு வகை மட்கலம், அலபஸ்ார் கிண்ணங்களின் சில உடைசல் கள் முதலியவற்றையே ஆதாரமாகக் கொள்ள வேண்டியுள்ளது. இத்தெல்லுகளுள் மிகப்பெரியது அடியில் 600 அடி வரை விட்ட முடையதாய் 45 இலிருந்து 50 அடிவரை உயரமுடையதாயிருந் தது. ஆதலின் இது ஒரு சிறு கிராமமாகவே இருந்திருக்கும். இத் தலங்களிலிருந்தும் மற்றைத் தலங்களிலிருந்தும் அறியக்கூடிய அள
5-CP 3040 (6814)

Page 51
80 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
வில் வீடுகள் மண்ணுலோ மண் செங்கட்டிகளாலோ கட்டப் பெற்றவையாயிருந்தன; இவை மீண்டும் கலப்பற்ற களிமண்ணுகச் சிதைந்துவிட்டன.
ஆயினும் இத்தலங்களிலிருந்து பெற்ற மட்கலம் மிகவும் கவர்ச்சி யுடையதாகும் (உரு. 3). இது கபிலமஞ்சட்கலத் தொகுதியைச் சார்ந்தது; இது ஒர் ஊதாக்கபில வண்ண மையால் (கரும்) நுண் ணிய கிண்ணிய கட்டிலா ஒரு பாணியில் வண்ணந்தீட்டப் பெற்றி ருந்தது. இரண்டாவது நிறம் ஒன்று (எ. கா. சிவப்பு) இங்கு பயன்படுத்தப்படவில்லை ; இது பலுக்கித்தானில் ஓர் அசாதாரண அமிசமாக விளங்கியது. ஏனெனில் கறுப்பும் சிவப்பும் சேர்ந்த முறைமையே இங்கு மிகச் சாதாரண வழக்காயிருந்தது. பெறக் கூடிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கடங்களின் வடிவங்கள் பல வகையினவாயிருந்தன. அவற்றுள் சிறிது வளைந்த வாயுடைய குவளைகள், தடித்த இருகூம்புடைய அல்லது கோளமான அகல் கள், தட்டைத் தட்டங்கள், முக்கோணத் துளைகள் கொண்ட ஓர் உயர்ந்த கால்மிதியின் ஓர் உடைசல், முதலியன காணப்பட்டன. மென்சிவப்பு வெள்ளை தொடக்கம்-பச்சை நிற வண்ணமுடைய கலங்களிலிருந்தன ; பச்சை நிறம் குளைச் குட்டின் மிகையால் ஆயதாயிருக்கலாம். இன்னும் மிகத் திண்ணிய கருவண்ண அணி கொண்ட அழகிய நரை நிறத்தட்டை அகல்களின் இரண்டொரு உடைசல் துண்டுகளும் காணப்பட்டன.
அணிக் கோலங்கள் முழுவதும் கேத்திரகணித முறையிலமைந் திருந்தன. மிருகங்கள் தாவரங்களின் உருவங்கள் இதுவரை காணப் படவில்லை. தடித்தவும் மெல்லியவுமான பட்டைகளால் இணைக்கப் பெற்ற செவ்வரண்கள் (பிணைச்சலுரு) காணப்பட்டன; அடங் கலும் விட்ட வழியில் வகுக்கப்பட்ட சதுரங்கசி எதிரமைந்த முக் கோணச் சோடிகள், மிகத்தனிப் பண்புடையனவான அண்ட வடிவ வரிசைப்படுத்திய நோக்குருக்கள் முதலியன கொண்ட கோலங்கள் காணப்பட்டன. \
எனினும் இம்மட்கலத்தொகுதியில் மிகத் தெளிவான அமிசம் ஒன்றிருந்தது : பலுக்கித்தானத்தில் ஸ்ரீன் கண்டுபிடித்த பல தலங் களிலிருந்தும் சிந்தில் மகும்தார் கண்டுபிடித்த தலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான கலச்சில்லிகள் எடுக்கப்பெற்றனவாயினும்,

வேளாண் சமுதாயங்கள் 8.
அவற்றுள் குவெற்றக் கலங்களுடன் ஒப்பிடத் தக்க வழியில் ஒரு தொகுதியாக அமைந்தவை இருக்கவில்லை யென்பதே அவ்வமிச
படம் 3 மாதிரிக் குவெற்றக் கலங்கள்.
மாம். கருவண்ணக் கோலங் கொண்ட நாைக்கல அகல்கள் சோப் பள்ளந்சாக்குத் தலங்களிலும் (எ. கா. சுர்யங்கல்) சிஸ்ானிலும்

Page 52
82 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
காணப்படுவது உண்மையே. ஆயினும் மிக அதிகமாயுள்ள கபில மஞ்சட் கலங்களுக்கு நோானவற்றை நாம் வேறு எங்கேனும் பார்க்க வேண்டுமாயின், இந்தியாவிற்கு வெளியே மேற்குத் திசை யைத்தான் நோக்க வேண்டும். இங்கு, பேசியாவிலுள்ள பார்ஸ் மாகாணத்தில் உள்ள தலங்களில் காணப்பெற்ற முன்னை மட்கலத் தொகுதியில் நாம் இந்நேரிய ஒப்புமைகளைக் காண்கிருேம்; முக்கிய மாக பேசிப்பொலிசுத் தலத்திற்கண்மையிலமைந்த தல்-ஐ-பகுனில் இவற்றை நாம் காண்கிருேம். பின்னர் சாகிதம்ப் இடுகாட்டைப் பற்றி ஆராயும்போது இக்கலங்களின் சில வடிவங்கள் தென் பேசியாவிலும் பலுக்கித்தானிலும் நீடுநின்றன என்பதை நாம் காண்போம். ஆயின் வழிப்பேற்முக வந்த இம்மட்கலம் குவெற்றத் தலங்களில் காணப்பட்டனவற்றிலிருந்தும் மிக வேறுபட்டனவாம். உண்மையில் குவெற்ருக் கலம் தல்-ஐ-பகுன் தலத்திலேயே காணப் பட்ட கலத்துடனும், சுசா 1, கியன் V, சியல்க் II ஆகியவற்றுட லும் ஒப்பிடக் கூடியதாயுள்ளது. அதனுல் காலத்தால் முன்னைய தாயுமிருக்கலாம். இதற்கு ஆதாரமான சான்றை நாம் இரசிய தேக்கித்தானிலுள்ள அனேவிற் காண்கிமுேம். இங்கு அனே 1 இற் கும் அனுே 11 இற்கும் இடை புகுந்த அமிசங்களுள், சிவப்பில் கறுப்பான வண்ணக்கலம், சிவப்பிலும் கறுப்பிலும் அணிகொண்ட கபிலமஞ்சட்கலம், தனிமுறையிலான வரிசைமுறை நோக்குருக்கள் கொண்ட கபிலமஞ்சட்கலம் முதலியவை அடங்கியிருந்தன. இவ் வீட்டங்களின் தொகுப்பு இவை பலுக்கித்தானில் தோன்றியவையா யிருக்கலாமென்பதைக் காட்டுவனவாயுள்ளது.
மேற்கிந்தியாவில் அறிந்தவற்றுள் மிக முன்னையதெனத் தோன் அறும் குவெற்றப் பண்பாட்டைப் பற்றிய முழு விபரங்களையும் மேலும் அகழ்வாய்வும் புலவேலையும் நடந்தாலன்றி நாம் அறிய முடியாது. கபில மஞ்சட்கலத்தொகுதியுள் அடங்கிய அடுத்த பண் பாட்டுத் தொகுதியைப் பற்றி நாம் ஆயத்தொடங்கும்போது, மிகப் பரந்த பிரதேசமெங்கணும் அமைந்திருக்கும் பல கலங்கள் பற்றி அதிகமான செய்திகள் கொண்டவராயிருக்கின்ருேம். எனினும் இவற்ருல் பெற்ற சான்றுகளுள் ஒன்றேனும் விஞ்ஞானமுறை யிலமைந்த பெரிய அளவினவான அகழாய்வுகளிலிருந்து பெறப் பட்டது அன்று s

வேளாண் சமுதாயங்கள் 83
அம்றி-நல் பண்பாடு எனும் இணைபதம், ஒரு வகையில் 2-Apq கொண்ட ம்ட்கலத்தொகுதிகளுள் மிக்க மாறுபாடுடைய இருகோடி களைச் சுட்டுவதாயுள்ளது. இத்தொகுதியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். வகை குறிமுறையில் இவற்றுள் முன்னையது சிந்தில் உள்ள அம்றியில் காணப்படுகின்றது. ஆயின் காலவரன்முறையில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இது முன்னையதன்று என்பதை நாம் பின்னர்க் காண்போம். அம்றியிலேயே இவ்வகைக்குரிய கலத்தை மகும்தார் முதன்முதலாகக் கண்டுபிடித்தார். இவற்றுள் கடைசிக் கட்டத்தைச் சார்ந்தது பலுக்கித்தானில் நல்லில் உள்ள இடுகாட் டில் காணப்பட்டது. இது ஆகிரீவ்ஸ் என்பாரால் அகழப்பட்டது. தென்பலுக்கித்தானில் உள்ள நுந்தராத்தலம், ஸ்ரீனல் கண்டறியப் பட்டது, நடுக்கட்டத்திற்கு வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும். இம் மட்கல வகைகள் தொடர்புடையவை என்பது மிகத் தெளிவாகும். இதுவும் பிற அமிசங்களும் (சிறப்பாக, மூன்று கட்டங்களிலும் விலங்குச் சிற்றுருக்களோ மனிதர் சிற்றுருக்களோ இல்லாமை) இவற்றை ஒருதலைப்பில் வைத்து ஆய்வதற்கு ஆதாரமாயமைந்
துளளன.
அம்றி கட்டத்திற்குப் பிரதிநிதி முறையிலமைந்த அமிசங்கள் புவியியன் முறையில் நோக்கும்பொழுது, பெரும்பாலும் சிந்திலுள்ள தலங்களில் காணப்படுகின்றன. இவை கிர்தார் .அடுக்கத்து அடி யிலும் பான்நதி, கச்நதி ஆகியவற்றிற்கிடையிலும் காணப்படுகின் றன. இதன் இறுதிக்கட்டங்களில் இதன் முக்கிய வாழ்தலங்கள் தென்பலுக்கித்தானிலிருந்தன ; இவை கெச்கோரின் ஊற்றுப்பகுதி யிலிருந்து கொல்வரவிற்கூடாக வடவழக்காக மஸ்கைப் பள்ளத் தாக்கு வழிசென்று யாவனிலுள்ள நல்வரையும் பாவின. இன்னும் குவெற்முவிலுள்ள போலன் கணவாய் வரை மிக வடக்காக ஆங்காங் கான தலங்களிலும், கொலாச்சியின் ஊற்றுமுகத்தயலில் உள்ள இடங்களிலும், மேற்கூறிய வழிகள் ஊடாக சிந்தில் மஞ்சார் வாவிக்கு மேலாக கொலாச்சி-கச் பள்ளத்தாக்குகள் வழியாகவும் இவ்வாழ்தலங்கள் அமைந்திருந்தன.
இனி, குடியிருப்புக்களின் வகையையும் அளவையும் நோக்கு மிடத்து இவை, எல்லா இடங்களிலும் ஈண்டியமைந்த வாழ்தலங் களின் சிதைவுகளாலாய தெல்லுகளாக அமைவதை நாம் காண்

Page 53
84 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
கிருேம். இவை 10 அடியிலிருந்து 40 அடி வரை உயரமுடையனவா யிருந்தன. தனித்தனி ஒவ்வொரு குடியிருப்பிற்குமுரிய பாப்பினை மதிப்பிடுதல் இலகுவாகவில்லை. ஏனெனில், பண்பாட்டைத் தனிப் படுத்தி அறிவதற்குத் துணைபுரியும் சிறப்பியல்பான மட்கலங்கள் திடல்களின் மேற்பரப்பிலோ, மிக மேலான மட்டத்தில் பரிசோதனை முறையிலமைந்த வெட்டுகுழிகளிலோ எடுக்கப்பெற்றவையாயிருந் தன. தெல்லின் உயரத்தில் வாழ்தலமாயமைந்த பாப்பு, திடல் அடி யின் முழுப் பரிமாணத்தினும் மிகச் சிற்றளவினதாயிருக்குமென்ப துண்மையே. உதாரணமாக ரக்ஷனிலுள்ள கர்குஷ்கிடாம் என்பது ஒரு தெல்லாகும் ; இது அடியில் 530 யார், 360 யார் நீள அகலம் கொண்டது; 40 அடி உயரமுடையது. இங்கு ஸ்ரீனின் பரிசோதனை முறை அகழிகளிலிருந்து கட்டிடச் சுவர்களோடு சார்ந்தனவான சில்லிகள் பெறப்பட்டன; இவை நல் வகையினவாயிருந்தன. இவ் வகழ்வுகள் 30 அடி உயர எழுவரைக்குமேலாக நடத்தப்பட்டன; இம்மட்டத்தில் வாழ்வதற்குரிய இடம் 200 யார் 100 யார் நீள வகலப் பரப்பாகச் சுருங்கி விட்டது; எனவே இதற்கு முற்படை யாக அமைந்த 30 அடி ஆழமான அகழாத பகுதிகளிலுள்ள அமிசங் களும் மேற்பகுதியைப் பயந்த ஒரே பண்பாட்டினது ஆக்கமா யிருக்குமென்று எவருங்கொள்ளலாகாது.
எனினும், நுந்தாாவில், இத்தலத்திற்குரிய வகை என்று சொல் லப்படும் மட்கலத்தை நல்கிய குடியிருப்பு, தெல்லு இடங்கொண்ட 220 யார் 180 யார் நீளவகலப்பரப்பினும் அதிக பரப்புடையதாய் விளங்கவில்லை. ஆயின் சிந்தில் பந்தினியில் அம்றி குடியிருப்பு 450 யார் 230 யார் நீள அகல அளவினதாயிருந்திருக்கலாம். சிந்திலுள்ள பண்டி வாகி, காசி சா ஆகிய தலங்களில் நடாத்திய அகழ்வுகளி லிருந்து அம்றிக் கலமட்டங்கள் திடல்களின் அடிமட்டத்திலிருந் தன என்பது உறுதியாது அறியப்பட்டது; ஆயின் இவற்றின் பாப் புகள் முறையே 150 யார் 115 யார், 170 யார் 160 யார் நீளவகலங் கள் கொண்டவையாயிருந்தன. மற்றைத் தலங்களும் ஒத்த பரிமா ணங்கள் கொண்டிருந்தன. இதுவரை அறியப்பட்டவற்றிலிருந்து கூறுங்கால் இக்குடியிருப்புக்களின் பரப்பு இரண்டு ஏக்கரிலும் குறைவானதாகவே இருந்தது. மெசப்பொற்றேமியாவிலுள்ள மிகப்

வேளாண் சமுதாயங்கள் 85
புகழ்பெற்ற வரலாற்று முன்னர்த் தலமாகிய தெபி கவ்ரா வின் மிகக் கீழான உயரக் கோட்டாலான பரப்பின் அளவினதாக இப் பரப்பிருந்தது.
சிந்தில் கொத்ராஸ் புதியில் ஒரு மலைமுளையில் ஒரு சிறு குடியிருப் புளது ; ஐரோப்பியத் தொல்லியலளவையில் வழக்கிலுள்ள பக மொன்முற் குறிப்பிடின் இங்கு தலத்திற்குரிய ஒரு "முனக் கோட்டை' யோவென அமையுமாறு இக்குடியிருப்பில் முளேயி னடிக்குக் குறுக்காக இரட்டைக் காவல் மதில்கள் கட்டப்பட்டிருந் தன. இவ்வரண் சிந்திலுள்ள பிறிதொரு தலமாகிய தாரோ மலையி அலுள்ள தலத்தோடு ஒப்பிடும் வகையிலமைந்துளது. இங்கு தனி யான ஒரு தட்டைத்தலைக் குன்றுளது ; இப்பொழுது இது நாட்டி னுள்ளாக இருப்பினும் வரலாற்று முன்னர்க் காலத்தில் ஒரு கரை யோரமாக இருந்தது; இதிலிருந்து இத்தலம் வெள்ளச் சதுக்கங் களினுள்ளே தீவாகவோ தரைமுனையாகவோ முன்தள்ளி நின்றிருக் கும். கொத்ராஸ் புதியிலுள்ளனபோன்ற அரண்கள் இரட்டைமதில் களாய் வளைந்து பாரிய அமைப்புடையனவாய் தம்முள் 250 அடி இடைவெளி கொண்டனவாய் மலையின் தென்பாகத்து நீள்பகுதியை உண்மையான முனைக்கோட்டை வகையில் வெட்டுவனவாயமைந் திருந்தன. இம்மதில்கள் இப்பொழுது அழிந்து போயின; எனினும் உள் காவலரண் பகுதியின் ஓரிடத்தில், இதன் முதன் மேற்பரப்பில் ஒரு பகுதி இப்பொழுது புலப்படுமாறுளது; எனினும் இத்தலத்தை மகும்தார் சென்று பார்த்து அதுபற்றி அறிக்கை எழுதும்போது அதன் இயல்பைச் செவ்விதில் உணரவில்லை. அம்றிக்கலம் இங்கு மேற்பரப்பில் காணப்படுகிறது. ஆயினும் அாப்பாவினதை ஒத்த எளிய செங்கலங்களோடிணைந்த குடியிருப்பு இங்கு பெருமுறை யிலிருந்ததென்பதற்குரிய சான்றுளது. எனவே இக்காப்பரண்கள் எக்கட்டத்திற்குரியன என்று சொல்ல முடியாது; எனினும் இவை அம்றிப்பருவத்திற்குரியன என்று கொள்ளல் பொருத்தமுடைத்து. சிந்தில் இன்னுமோரிடத்தில், டிலனிசோகொட் எனுமிடத்தில் அம் றிக் குடியிருப்பைச் சுற்றியமைந்த காப்பு மதில்களின் சுவடுகள் உள; ஆயினும் கிராமங்கள் பொதுவாக மதில்களாலோ கொத்தளங் களாலோ அரண் செய்யப்படாமலிருந்தனபோல் தோன்றுகிறது.

Page 54
86 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
கட்டிடச் சிற்பங்களில் சிதைவுகள் கண்டறிப்படக்கூடிய இடங் களிலெல்லாம், தலங்கள் யாவற்றிலும் மதில்களின் அத்திவார வரிசைகள் கட்டுவதற்காகுதல் கல் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். சில சிந்துத் தலங்களில் மட்டும் மதில்களின் மேற்பகுதி மண்கட்டி அல்லது பிசைமண்ணுல் கட்டப்பெற்றிருக்கலாம்; சில கல் வரிசைகள் மட்டும் அத்திவாரமாயமைந்திருக்கலாம். ஆயின் நுந்தரா, கர்குஷ்கி டாம், பலுக்கித்தானிலுள்ள ரொட்கன் ஆகிய இடங்களில் களிமண் சாந்தில் பதியப்பெற்ற வரிசைக்கற்றுண்டங் கள், சாளர உயரமட்டுமாகுதல் விட்டுச் சுவர்களுக்குப் பயன்படுத் தப்பட்டன. பிற் கூறிய தலத்தில் சிறிய தட்டைக்கல்லாலாய மூவரிசைகளோடு பெரிய துண்டங்கள் மாறி மாறியமைந்தது நல்ல வோர் அணிவேலைப்பாடாயது.
நூந்தராவில் மண்செங்கட்டிகளாலான சில சுவர்களும் கட்டுவேலை களும் காணப்பட்டன; தனிச் செங்கட்டிகளின் பரிமாணங்கள் 21 அங். 10 அங். 4 அங். ஆக இருந்தன. நல் இடுகாட்டில் இரு குழந்தைகட்கும் ஒரு வளர்ந்த மனிதனுக்கும் கட்டப்பெற்ற கல் லறையும் மேற்கூறிய பரிமாணங்களைக் கொண்ட செங்கட்டிகளால் கட்டப்பெற்றிருந்தது. நுந்தராவில் கல்லாலும், செங்கட்டிகளாலு மான சுவர்களின் உட்பரப்பு, வெண்சாந்தால் பூசப்பட்ட நுட்பப் பாடு கண்டு வியக்கப்படக்கூடியதா யமைந்தது.
குடியிருப்புக்குரிய ஏராளமான சிதைவுகளிருந்தும் கட்டிடங் களின் சுவடுகள் புலப்படாத, சிந்திலுள்ள தலங்களான பண்டி வாகி காசி சா ஆகிய இடங்களில், பிசைமண் மட்டுமே உபயோகிக்கப் பட்டிருத்தல் வேண்டுமென்றும், பின் அது (குவெற்றவில் நடந்த வாறு) பல் நூற்ருண்டுக்கால அளவில் சிதைந்தழிந்திருக்கலாம் என்றும் கொள்ளலாம். எனினும் மண் செங்கட்டிகள் இருந்தும் அவற்றை அகழ்வோர் அறிய முடியவில்லை யென்பதும் இயலக் கூடியதாம். سمبر-s
இங்கு நடைபெற்ற அகழ்வுகள் மிகச் சிற்றளவின; குறித்த சில தலங்களின் மேற்பரப்பில் காணக்கூடியனவாயிருந்தன என்று சுருக் கமாகக் கூறப்பட்ட சிதைவுகள் பற்றி விவரமான புல அளவைகள் நடாத்தப்பெறவில்லை. இக்காரணங்களினல் இக்குடியிருப்புக்களின் கள அமைப்பு பற்றிய எம்மறிவு மிக அற்பமானது. நுந்தராபற்றி வெளியிடப்பட்ட மாதிரிப்படம் பொதுவான ஒரு புது நாட்டத்திற்

வேளாண் சமுதாயங்கள் 87
கமைவுபெற்ற கட்டிடவரிசைகளைக் காட்டுவதாயுள்ளது ; சிறப்பாக இது இத்தலத்தின் தென் கிழக்குப் பகுதியில் தெளிவாயுள்ளது. ஏலவே குறிக்கப்பெற்ற கொத்ராஸ் புதி எனும் கவர்ச்சிகரமான குன்றுக் கோட்டையில் கண்ட எண்ணற்ற பல அறைகளின் பரு வரைவை, மேன்முகத்தில் தோன்றியவாறு மகும்தார் விவரித்துள் ளார். இவ்வறைகள் சில சிறியனவாயும் சில பெரியனவாயும் இருந் தன ; தொகுதிபட இவை சேர்ந்தமைந்திருந்தன ; இத்தொகுதிகள் மிகப் பாரியகாவல் மதில்களினுள்ளாக அமைந்த ஒழுங்கைகளால் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனல் தோற்றப்பாட்டில் யாதோ ஒரு வெளி யிடத்தால் பிரிக்கப்பட்டிருந்தவைபோல் இவை தோன்றின. பெரிய துண்டங்களால் பரும்படி வரிசையிலமைந்த இம்மதிலில் குறைந் தது நான்கு வெளிக் கொத்தளங்கள் இருந்தன. இவற்றுடன் ஒரு வாயிலின் சிதைவுகளும் இருந்தன. 100 அடி அரசத்தில் சிறிது புறம் பாக வெளியிலமைந்த காவல் மதிலொன்றின் இடிபாடுகள் காணப் பட்டன. எனினும் வெளியிடப்பட்ட மாதிரிப்படம் மிகவும் குறை பாடுடையதாகும்.
தனிப்பட்ட கட்டிடங்கள் அல்லது அறைத் தொகுதிகளின் அமைப்பைப் பற்றி இன்னும் சிறிது கூடச் சொல்லல் முடியும். எந்த ஒரு தலத்திலுள்ள கட்டிடமும் சிதைவுத் தொகுதியும் அங்கு கோயிலோ அரண்மனையோ இருந்தது என்பதைச் சுட்டுவதாயில்லை. பெறப்பட்ட எல்லா அமைப்புத்திட்டங்களும் தனிப்பட்ட சிறுமனை களுக்குரியனவாயிருந்தன. நுந்தராவில் அறைத்தொகுதிகள் அவற் அறுடன் இணைந்த மற்றை அமிசங்களுடன் சேர்ந்து 40 அடிச் சதுரக் கண்டங்களாக அமைகின்றன. இவற்றுள் பெரிய அறைகள் அல்லது முற்றங்களாலும் சிறு அறைகளாலுமாய எட்டு அல்லது பத்துச் சிறு பிரிவுகள் அடங்கியிருந்தன. பெரிய அறைகள் (முற்றங்கள்) 15 ஆல் 15 அடி அளவு பரிமாணத்திலிருந்து 15 ஆல் 10 அடி அள வுப் பரிமாணத்தையுடையனவாயிருந்தன. சிற்றறைகள் 8 ஆல் 5 அடி அளவுப் பரிமாணத்தையும் அதில் குறைவானவற்றையும் கொண்டிருந்தன. இங்கிருந்த இரு கண்டங்களில் ஓரளவிற்கு ஒரு சீராக அமைந்த பெரிய அறைகள் (அல்லது முற்றங்கள்) கொண்ட ஒரு திட்டமிருந்தது; இவை ஒவ்வொன்றுடனும் ஆறு சிற்றறை களும் இணைந்திருந்தன. சிந்தின் தலங்களிலும் ஒத்த பரிமாணங்க்ளி

Page 55
88 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
லமைந்த அறைகள் வழக்கிலிருந்தனபோல் தோன்றுகிறது. கொத் சாஸ் புதியில் ஒரு நீராட்டறை என்று மகும்தாரால் விளக்கப் பெற்ற ஒரு கட்டு, வாயிலிற்கருகிலிருந்த அறையின் மூலையிலிருந் தது. அதே விட்டில் படிக்கட்டின் சிதைவுகளும் காணப்பட்டன; சிதைவு, வீட்டில் தட்டைக் கூரையோ மேல்மாடியோ யாதோ ஒன் றிருந்தது என்பதைக் காட்டியது. கல் அத்திவாரம் மட்டும் எஞ்சி நிற்கும் வீடுகளின் வாயில்களைக் கண்டறிதல் இலகுவாயிருக்க வில்லை. ஏனெனில் அவை கதவுகளின் வாசற்படி ஆக நிலைபெற்றிருந் தனவாதலின். ஆயின் கர்குஷ்கி டாம் இல் இன்றும் மர உத்திரத் தின் சுவடுகளைக் கொண்டிருந்த வாசல்வழி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. ரொட்கனில் இன்னும் 5 அடி உயர அளவில் நிற்கும் ஒரு சுவரில் 1 அடி 4 அங். அகலமான சாளரமொன்று நிலை நின்றது. இச் சாளரத்தின் மேற்பகுதி ஒன்றின் ஒன்று மேலமைந்த தண்டியம் கொண்ட கற்களாலானதாயிருந்தது. நுந்தராவில் உயரமான சுவர் கள் நிலைகொண்டுள்ள பல அறைகள், ஒன்றின் வகையில் இது குறைந்தது 10 அடி உயரமிருக்கும், சுவர்களில் துவாரங்கள் இல்லா மலிருந்தன. இவற்றின் நடுவில் மிகப் பாரிய சதுரமான கல்லாலான தூனென்று இருந்தது. இத்தகைய அறைகளைக் கீழறைகளென்றும் மேலே உள்ள அறைகளிலிருந்து மறைகதவுகளால் வரக்கூடியவா யிருந்தனவென்றும் அங்கிருந்த நடுத்துரண் மேல் அறைத் தளத் திற்கு மேலதிகமான ஆதாரமாக விளங்கியதென்றும் விளக்கமளிக்க லாம். வீடுகளுக்கிடையிருந்த விதிவழிகள் சில இடங்களில் அளக் கப்படக்கூடியனவாயிருந்தன. நுந்தராவில் இது 6 இலிருந்து 8 அடி வரை இருந்தது. லோகிரியிலும் கொத்ராஸ் புதியிலும் ஒடுங்கிய வழி கள் 3 அடியிலிருந்து 2 அடி 6 அங். வரை அகலமுமுடையனவா யிருந்தன.
குடியிருப்புத்தலங்களில் இருந்து பெற்ற இச் செய்திகளோடு இரண்டு இடுகாடுகள் பற்றியும் அறியக்கூடியதாயிருப்பது நற் பேறே. இவற்றுள் ஒன்று பலுக்கித்தானிலும் மற்றையது சிந்திலும் உள்ளன ; இரண்டிலும் நல் பருவத்து மட்கலங்கள் இருந்தன. இதற் குரிய பெயர் முற்கூறியதிலிருந்து பெறப்பட்டதே. நல்லில் உள்ள சோர்டாம் மிகப் பெருவளவில் அகழப்பட்டது. ஆயின் சிந்திலுள்ள டாம் புதி இடுகாட்டில் வேலை சிற்றளவிலேயே நடைபெற்றது.

வேளாண் சமுதாயங்கள் 89
ஆகவே பண்பாட்டிற்குரிய புதைப்புக்கிரியைகள் பற்றிய முழுமை யான செய்திகளுக்கு நல்லையே நாம் நோக்க வேண்டும்.
ஆகிரீவ்ஸ் என்பார் நல்தலத்தில் தம் வேலையைத் தொடங்கும் போதே இந்நூற்ருண்டின் தொடக்க காலத்தில் பண்டைப் பொருள் விரும்பும் பாங்குளம் கொண்ட ஒர் ஆங்கிலக் கேணலால் இத்தலம் கொள்ளையடிக்குமுறையில் பெருமளவில் குறையடிக்கப் பட்டிருந்தது. இக்கேணலுக்கு இருந்திருக்கக்கூடிய சிற்றளவு விஞ் ஞான மனப்போக்கிலும் வண்ணக் கலங்கள் சேர்க்கவேண்டு மென்ற அவா மிகுதியாயிருந்தது. இவ் இடுகாட்டிலிருந்து குறைந் தது 200 கலமாகுதல் அகற்றிய கீழ்மை இக்கேணலுக்கே உரி யது. இவை பின்னர் காணுமற்போன பொறுப்பும் இவர்க்கே உரிய தாம். இத்தலத்தின் பிரதான தெல்லில் கீழ்ச்சரிவுகளிலமைந்தி ருந்த ஒரு குடியிருப்பின் கைவிடப்பெற்ற இடிபாடுகளில் புதைப் புகள் நடைபெற்றிருந்தன என்பதை ஆகிரீவ்ஸ் கண்டார். இக் குடியிருப்பில் இவர் பல சோதனைமுறை அகழ்வுகள் நடாத்தினர்; ஆயின் இங்கிருந்தும் அம்றி நல் பண்பாட்டிற்கு இயல்பான யாதா யினும் ஒரு புனைபொருளும் கிடைக்கவில்லை. கிடைக்கப்பெற்ற அற்ப அளவு மட்கலங்கள் சோப் பண்பாட்டு வரிசையில் அடங்கு வனவாயுள. எனவே அத்தலைப்பின் கீழேயே குடியிருப்புத்தலம் விவரிக்கப்படும்.
எனினும் இடுகாட்டில் (ஆகிரீவ்ஸ் தலங்கள் A உம் G உம்) 30 இலிருந்து 40 வரையளவான புதைதொகுதிகள் அகழப்பட்டன; இவற்றுட் பேரளவின சிறப்புவகையான மட்கலங்கள் கொண்டி ருந்தன. இங்கு 270 பாண்டங்கள் பெறப்பட்டன. புதைப்புக்கள் இக்கலங்களுக்குக் கொண்டுள்ள விகிதசமன் ஒரு வகைகுறிக்கும் இயல்பினதாயிருத்தல் கூடும். ஆகவே கேணல் யேக்கப்ஸ் என்பா ரும் அவர் போன்று விஞ்ஞான முறை கடைபிடிக்கா அகழ்வோரும் இவ்விடுகாட்டில் கிண்டும்போது கண்டுபிடிக்கப்பட்ட 300 வரை யிலான கடங்களும் இன்னும் ஒரு தொகுதி 40-50 வரையான புதைகளங்களைச் சுட்டுவனவெனலாம். எனவே யாதோ ஒரு வகை யால் கிண்டியகழ்ந்தாய்ந்து பதிவு செய்யப்பெற்ற அவ்விடுகாட் டின் பகுதியில் 100 புதைப்புக்கள் வரை செய்யப்பட்டிருத்தல் வேண்டும். புதைக்களத்தின் முழுப்பரப்புப் பற்றியோ கண்டுபிடிக்

Page 56
90 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
கப்பெற்று ஆயின் பதிவு செய்யப்படாப் பொருள்கள் பற்றியோ யாம் என்றும் அறியோமாதலின் இங்கு கூறிய தொகையளவு உண்மையில் ஒரு குறைந்த அளவினதேயாம்.
ஓர் இடுகாட்டில் இவ்வளவு புதைகளங்கள் இருந்தன என்பது ஓரளவு நிலைபேறுடைய ஒரு சமுதாயம் அங்கிருந்தது என்ப தைக் காட்டுகிறது, ஆகிரீவ்ஸ் அவர்கள் ஒன்றின்மேலொன்முய மைந்த இருபடைப் புதைப்புக்கள் இருந்தன என்று கண்டுபிடித் தது இவ்வுண்மையை அரண்செய்வதாயுள்ளது. (சில நல் புதைப் புத் தொகுதிகள் ஆறேழு மனிதரின் என்புச் சிதைவுகளைக்கொண் டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) மறுபால், மேற் கூறிய வாழ்தலங்களிலிருந்தும், அங்கு வாழ்ந்தோர் என அறியக் Ժւգա பல சிறு சமுதாயத்தோர் குறைந்த அளவினதான ஒரு காலநேரத்தில் ஓர் இடுகாட்டைப் பொதுவாக உபயோகித்திருத் தல் கூடுமென்றும் நாம் கொள்ளலாம். சோர் திடலுக்கடுத்துள அயற்பகுதியில் ஒன்றிற்கு மேற்பட்ட இத்தகைய இடுகாடுகள் இருந்தன என்பதற்கு மேற்பரப்பிலேயே சான்றுகள் இருந்தன.
புதைப்பு முறை அடக்கமாகவே இருந்தது. நல்லில் வயதுவந்த ஒருவரும் மூன்று குழந்தைகளும் இடுகாட்டின் ஒரு பகுதியில் முழு என்புக்கூட்டுடன் சாதாரண முறையில் புதைக்கப்பட்டிருந்த னர். வயது வந்த ஆள் சிறிது குடங்கி இடப்பக்கமாய்க் கிடந்த தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இங்கும் டாம் புதியி லும் எலும்புக் கூட்டின் துண்டங்களைப் புதைத்தலே முக்கிய கிரியை ஆக இருந்தது. இது புதைப்பிற்கு முன்னராகத் திறந்த வெளியில் வைத்திருந்து சிதையவிட்டுப் பின்னர் நடைபெற்றதா யிருக்கலாம். நல் தொகுதிகள், சில வயதுவந்தவர் குழந்தைகள் உட்பட்ட பல தனியோரை அடக்கியதாயிருந்தது. மற்றையவை தனி ஒரு என்புக் கூட்டிலிருந்து பெறப்பெற்ற சில எலும்புகளையே கொண்டிருந்தன. டாம் புதியில் ஓரிடத்தில் ஒரு தனிப்புதைப்புத் தொகுதியில் குறைந்தது இரண்டு முதியோர் ஆகுதல் இருந்தி ருக்க வேண்டும்.
நல்லில் பிணங்கள் சாதாரணமாக மண்ணில் ஒரு காப்புமின்றிப் புதைக்கப்படும். ஆயினும், முழுமையான அடக்கங்களுள் மூன்று

வேளாண் சமுதாயங்கள் 9.
(ஏலவ்ே குறிக்கப்பட்ட முதியோரும் இரண்டு குழந்தைகளும் கொண்டவை) செவ்வக மண் செங்கட்டிப் புதைகுழிகளுள் அடக் கப்பெற்றவையாயிருந்தன. தனிச் செங்கட்டிகள் 21X9X34 அங். பரிமாணம் உடையவாயிருந்தன. புதைகுழிகள் மூடப்பெற்றதற் குரிய அறிகுறியொன்றும் காணப்படவில்லை. டாம் புதியில் பகு திப்பட்ட புதைப்புக்கள் அடுத்தடுத்தமைந்த ஒழுங்கான சிறிய செவ்வகக் கல்லாலாய கூடங்களிலமைந்திருந்தன. இவை 5 அடி 8 அடிப் பரிமாணங் கொண்டிருந்தன; இவை நல்லிலிருந்த செங் கட்டி அமைப்புக்களை ஒத்தவையாயிருந்திருக்கலாம். கைவிடப் பெற்ற வாழ்மண்களின் அறைகளாய் அவை இருத்தல் கூடுமென் பதையும் நாம் மறத்தலாகாது.
இவ்விரண்டிட்ங்களிலும் பகுதிப் புதைப்புக்களிலிருந்த புதை குழிப்பொருள்கள் பெரும்பாலும் மட்கலங்களாயிருந்தன; நல் லில் ஒரு புதைப்பில் ஒரு தட்டைச் செப்புக் கோடரி காணப்பட் டது. இத்தலத்தில் குறைந்தது ஆறு புதைகுழிகளில் விலங்கெலும் புகள் முக்கியமாக செம்மறிகள் வெள்ளாடுகளின் எலும்புகள் காணப்பட்டன; டாம் புதியில் எருத்தெலும்புகள் காணப்பட் டன; இவை பலி உணவுகளாயிருந்திருக்கலாம். ஒவ்வொரு தலத் திலும் செவ்வண்ண்மை கொண்ட புதைப்பொன்று இருந்தது. டாம் புதியில் இம்மை ஒரு சோடி கருநீலச் சிப்பி ஓடுகளில் வைக் கப்பட்டிருந்தது; நல்லில் இது சுண்ண உரலுடன் வைக்கப்பட்டி ருந்தது. அதே பகுதியில் நல்லில் ஏராளமான மணிகள் காணப் பட்டன; எனினும் இவை பகுதிப் புதைப்புக்களுடன் சம்பந்தப் படாதவகையில் காணப்பட்டன. சிந்துத்தலத்தில் சிப்பிகளும் மட் Ꮿ5ᎧᎩ வளையல்களும் சிறப்பான அமிசமாக விளங்கின.
நல்லில் நடைபெற்ற முழுமைப் புதைப்புக்களுடன் மட்கலங்கள் இணைந்து காணப்படவில்லை. காணப்பட்ட புதை குழிப்பொருள் கள் அக்குழந்தைகளுடன் காணப்பட்ட மணிக்கழுத்தணிகளே. ஆயினும் இப்புதைப்புக்கள் மற்றையவற்றுடன் ஒத்த காலத்தின வல்ல வென்று சொல்வதற்கு நேர்முறைச் சான்றில்லை.
நல்லில் இடுகாட்டுப் பகுதியில் இரு செப்புக்கருவிக்குவியல்கள் காணப்பட்டன; இவற்றேடு நேர்முறையில் இணைந்த என்பு எச் சங்கள் காணப்படவில்லை. இவையும் புதைப்புக்கள் மட்கலங்கள்

Page 57
92 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
ஆகியவற்றுடன் ஒத்த காலத்தனவாயிருத்தல் வேண்டும். பகு திப் புதையல் ஒன்றுடன் காணப்பெற்ற கோடரி, குவியலில் காணப்பட்டவற்றை ஒத்ததாயிருந்தது.
ஒரு பண்பாட்டிலிருந்து மற்றையதைப் பிரித்தறிய முக்கிய மாக மட்கலத்தையே நம்பியிருக்க வேண்டுமென்பதை எலவே நாம் கண்டோம் (உரு. 4). நல் கலம், அம்றி கலம் எனும் இவ்விரு மட்கலவகைகளும் ஒரு பண்பாட்டில் தோன்றிய, இணைந்த ஆயின் சிறிது புறம்புபட்ட ஆக்கப்பொருள்களே என எனக்குத் தோன்று கிறது. அறியக்கூடிய வரையில், இதன் பொருளியல் கட்டிடச் சிற் பவியல் அமிசங்களை அம்றி-நல் பண்பாடு எனும் முறையில் சற்று முன்னர் விவரித்துள்ளோம். தென்பலுக்கித்தானில் நுந்தாா போன்ற தலங்களில் பல கலச்சில்லிகள் காணப்பட்டன; இவை வடிவிலும் சிறப்பாக அணிவேலையிலும் பழைய ஒரு தொகுதிக் கலங்களைச் சுட்டுவனவாக உள. இத்தொகுதியிலிருந்தே, ஒருபால் இந்து மலைச்சாரல்களில் காணப்பெற்ற சிறிது அபிவிருத்தி யடைந்த அம்றிக்கலங்கள் பெறப்பட்டன; மறுபால் மிக உயர் முறையில் அபிவிருத்தியடைந்த நல்கலம் பெறப்பட்டது. இந்நல் கலம் பலவன் வகைத்தலத்தில் மிக உயர்ந்த சிறப்பமிசம் பெற்று விளங்கியது. யலவன், நல்நதியின் ஊற்று முகத்தில் உள்ளது. இவ் யலவன் வகைத்தலம் இப்பொழுது நாம் விவரித்த இடுகாடேயாம். மாறுபாடுகள் மிக வேறுபட்டிருக்கும் அமிசங்களிலும், இம்மட் கலங்களின் பாணிகள் ஓர் முதலில் இருந்து தோன்றின என்பதற் குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தன. பின்வரும் மட்கலங்கள் பற்றிய மிக விரிவான விவரணங்களில் இவற்றின் கீழ்ப்பிரிவுகள் பொதுவாய்க் கொண்டுள்ள அமிசங்களை முதன்முதல் பார்ப் போம் ; பின்னர்ச் சிறப்பு வகையான வேறுபாடுகளை ஆராய் \வோம். V
நல், அம்றி ஆதியாம் இடங்களிலுள்ள கலங்கள் யாவற்றுள்ளும் பெரும்பாலானவை, தெளிவான மிக நுண்ணிய மென்மையான கபில மஞ்சள் நிற அல்லது மென்சிவப்பு நிறப் பூச்சுடையனவா யிருந்தன. இந்நிறம் சில வேளைகளில் ஒரு வெள்ளையை யடுத்த நிறச்சாயலை சிலவேளைகளில் ஒரு பச்சைச் சாயலையும் கொண்டி ருக்கும். இதன் மேல் வண்ண அணிவேலைக்கு ஒரு பிற்களமாய

வேளாண் சமுதாயங்கள் 93.
மையுமாறு வழக்கமாக ஒரு வெள்ளைப்பசை இடப்படும். நல்லில் நடைபெற்ற மிக்க பெருவளவின்தான அகழ்வினுலும், ஒர் இடு காட்டிலிருந்து பெறக்கூடிய உடையாக் கலங்களின் மிகுதியினு
படம் 4. அம்றி, நுந்தரா வனேபொருள்.

Page 58
94. மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
அலும், மற்றெல்வழியிலும் பெறப்படாத வகையில் பல வரிசைக் கலங்கள் காணப்பட்டன; ஆயினும், இங்கும் நசை நிற அல்லது கருங்கபில நிறக் கலங்களும் சிலவேளைகளில் கறுப்பான கலங் களும் சிறு அளவில் காணப்பெற்றன; இவை ஒன்றில் அணிவேலை யில்லாதனவாயோ புடைப்பத்திலோ மென் வண்ணத்திலோ நோக் குரு கொண்டனவாயோ இருந்தன. இவை இங்கு வெளிறிய பசை கொண்டனவாய் ஏராளமாய்க் காணப்பட்ட பாண்டங்களிலும் புறம்பானவையாயிருந்தன. பாண்டங்கள் யாவற்றிலும் உள்ள பசையின் உயர்வும் ஒரு சீர்த்தன்மையும் கலங்களின் தடிப்பின் அளவிலிருந்து அறியப்படும். கடங்கள் யாவும் பொதுவாகச் சக் கரத்தா லாக்கப்பெற்றவையாம்.
கடங்களின் வடிவங்களை நாம் ஆயும்போது அதன் வேறுபாடு கலவகை, அணிவகை முதலியவற்றில் காணப்படுவதிலும் பார்க் கத் துலக்கமாகத் தோன்றியது. கடச்சில்லிகள் அருகியே காணப் படுகின்றன. இதனுல் அம்றிப்பாண்டங்களுள் மிகச் சிலவற்றையே முழு உருவிலமைக்கலாம். ஆயின், எடுத்துக்காட்டாக லோரி, சிந் திலுள்ள டாம் புதி முதலிய இடங்களிலுள்ள உயர்ந்த கோளவடி *வக் குவளைகளை, சிந்திலுள்ள எல்லாத் தலங்களிலும் காணப்படும் ஒத்த வகையினவற்றின் எண்ணற்ற விளிம்புத் துண்டங்கள், புயத் துண்டங்கள் முதலியவற்றுடன் இணைத்து நோக்கும்போது, அவற் றின் வடிவமே எங்கும் சிறப்பாக அமைந்த ஒன்முக விளங்கியது போல் தோன்றுகிறது. பலுக்கித்தானிலுள்ள சில்லிகளும் சிறப்பு வகை நல்லின வடிவங்களுடன் சேர்ந்து, ஒத்தவகைக் கடங் களையே சுட்டுகின்றன. சிலாவிலும், ஓர்-கலற்றிலும் உள்ளவை இதற்கு எடுத்துக்காட்டுக்களாம். இந்தக் குவளைகளில் உள்ள அணி வேலைகளும் அம்றிக் கோலங்களுடன் மிக இயைந்தவையாய் உள்ளன.
குறைந்தது இரண்டு ஆம்றித் தலங்களில் (அம்றியிலும் பண்டி வாகியிலும்) அறியக்கூடிய ஒரு தனிவகைப் பொருள் மட்டமான அடிக்காலாகும்; இது வேளை வகைப் பாண்டங்களுக்குரியனவா யிருக்கலாம். அல்லது பிற வழியால் அறியப்படாத அகல்களுக் குரியனவாயிருத்தலும் கூடும்; இவ்வியைபு சிற்றளவிலேயே பொருந்தும். நல்லில் தனி ஒரு அடிக்கால் காணப்பட்டது. இது

வேளாண் சமுதாயங்கள் 95
அம்றிச் சில்லிகளிலிருந்து அறியக்கூடியனவற்றிலும் உருவில் நீள மாயிருந்தது ; அல்லாமலும் ஒரு அகல்வகை, அல்லது குத்து நிலை பலிப்பாண்ட வகையிலிருந்து பெறப்பட்டது என்பது உறுதியாகப் புலப்பட்டது.
நுந்தராபோன்ற பலுக்கித்தானிலுள்ள தலங்களில் மட்கலம் உள்ளூர்வகையினது; இது நல் இடுகாட்டில் காணப்பட்ட மா ணச் சடங்குப் பாண்டங்களில் உள்ளவாறு மிக உயர் முறையில் பாணிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இங்கு நேர்ப்பக்க வாளி வகை ஒன்று காணப்படுகிறது. இதனுடன் சேர்ந்து எளிய குவளைவகை கள், அம்றிக்கலத்திற்குரிய நியமக் கோளத்தன்மையிலும் குறை 6) Ifat கோளத்தன்மையுடையவை, காணப்பட்டன. இவ்வகையில் ஒன்றேனும் நல் இடுகாட்டில் காணப்படவில்லை. இங்குள பாண் டங்களுள் பெரும்பாலன அகல்வகையினவே, இவற்றின் விட்டங் கள் உயரங்களில் கூடியவாயிருந்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட அகல்கள் பலதிறத்த, ஆழமில்லாத் திறந்த வடிவ அகல்கள்; (இவ் வமிசம் இத்தலத்திற்குச் சிறப்பாக உரிய ஒரு கருங்கலத்திற்கும் இயல்பாயமைந்தது) ; புய விடம் வாய்விட்டத்திலும் கூடியதா யிருக்குமாறு விளிம்பு உள் கூம்பிய கோள அகல்கள்; சிறிய நேர் பக்கக் கிண்ணிகள் ; அகல்களை ஒரளவு ஒத்த தட்டைப்புயங் கொண்ட கடங்கள்; என்பன அகல் அவை. நல்லில் மட்டுமன்றி பலுக்கித்தான் சிந்து ஆகிய பண்பாடுகளின் பல தலங்களிலும் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வடிவம் நேர்ப்பக்க சிமிழ்' வகைப் பாண்டமாகும் ; இது நல் மட்கலவகைகள் யாவற்றுள் ளும் மிகத் தனித்தன்மை வாய்ந்தது. இவ்வகைகளுள் பெரும் பாலன டாம் புதி இடுகாட்டிலும் உயர் குவளைகள் போன்று மற்றை வகைகளுடன் கலந்து காணப்படுகின்றன; இவை சிறப் பாக அம்றிக் கலத்தின் இயல்பை மிகக் கொண்டிருந்தன. நல் விற்கே பிரத்தியேகமானவை சிறு தட்டுக்கள். இவை தற்கால இந் திய ‘சிராக்' என்பவற்றைப் போன்ற பாண்டங்களாக அமையு மாறு நாலு பக்கங்களிலும் கூர் விடச் செய்யப்பட்டிருந்தன. இத ஞல் இவை, இன்று இவற்றை ஒத்தனவற்றைப்போல் விளக்குக ளாகப் பயன்பட்டனவாயிருக்கலாம். சில இருமடி உருளைக்கடங் களும் நல்லிலிருந்து பெறப்பட்டன.

Page 59
96 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
இவ்விரு தொகுதி மட்கலங்களிலும் உள்ள வண்ண அணிவேலை முதற்பார்வையில் பிரமிக்கத்தக்க பலவகை நோக்குருக்களைக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். ஆயின் இவற்றை ஓர் எளிய வகையில் முறைப்படுத்தும் சில முக்கிய வகுப்பீடுகள் அங்கமைந் திருந்தன. விலங்குகள் தாவரங்கள் முதலியவற்றை உருவகிக்கும் கோலங்கள் அம்றிக்கலத்தில் இல்லை; ஆயின் இவை நல் கடங் களுக்குச் சிறப்பாயமைந்தன. தன்டோாகிம் கான் இலிருந்து பெறப்பட்ட எருத்தின் பகுதியுருக்கொண்ட ஓர் அம்றிச் சில்லி யும், இதைப்போன்றதா யிருக்கக்கூடிய செளரோவிலிருந்துபெற்ற பிறிதொன்றும், நாம் இனிக் காட்டுமாறு, குள்ளிக் கலத்திலிருந்து பெற்ற வகைகள் இல்லாவிடங்களைத் தவிர்ந்த மற்றெல்லாத் தலங் களிலும், இவ்வுருவகையின அறவே இல்லையென்பதை அழுத்திக் காட்டுவனவாயுள்ளன. இன்னும் நல்லில் உள்ள பொருள்கள் தமக் கென உரிய நோக்குருக்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி, மிக்க தென்பாலுள்ள நுந்தரா முதலிய தலங்களிலும் அம்றிக் கலத்தி லும் காணப்படும் பல கோலங்கள் இல்லாதனவுமாய்க் காணப்படு கின்றன. ஆகவே அலங்கார நோக்குருக்களை நாம் இலகுவில் இரு தலைப்பின்கீழ்ப் பிரிக்கலாம். இவற்றுள் முதலாவது அம்றிக்கும் நுந்தராபோன்ற நல் பண்பாட்டின் தென் தலங்களுக்கும் பொது வானது. இதனுள் அம்றிக்கே பிரத்தியேகமான சிறு கீழ்ப்பிரிவு களும் அடங்கும். இரண்டாவது எல்லா நல் தலங்களுக்கும் பொது வானது. ஆயின் அம்றியில் இல்லாதது. இதனுள் நல் இடுகாட் டுக்கே பிரத்தியேகமான கீழ்ப்பிரிவுகளும் அடங்கும். எல்லா நோக் குருக்களும் விறைப்பான துளரிகை யொன்றினல் கறுத்த அல்லது கபில வண்ணத்தில் வரையப்பட்டிருந்தன. அம்றியிலும் நுந்தராத் தலத்தொகுதியிலும் சிவப்பு வண்ணம் இரண்டாம்படியாக உப யோகிக்கப்பட்டது. நல்லினும் இன்னும் பிற சில தலங்களிலும் சிவப்புடன் மஞ்சள், நீலம், பச்சை முதலிய வண்ணங்கள் சேர்க் கப்பட்டு ஒரு பொலிவண்ணப்பாணி அமைக்கப்பட்டது. நீலமும் மஞ்சளும் இங்கு பயன்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அமி சமாகும். ஏனெனில் வரலாற்று முன்னர்க் காலத்தில் மேற்கிந்தி யாவில் இது அறியப்படாத ஒன்ருயிருந்தது.

வேளாண் சமுதாயங்கள் 97
நுந்தரா, கர்குஷ்கி டாம் போன்ற தென்பலுக்கித்தான் தலங் களுக்கும் அம்றிக்கும் இன்னும் சில தலங்களுக்கும் பொதுவான அலங்கார அமிசங்கள் வருமாரும். முதலாவதாக, பொட்டிப்பு வேலையொன்று எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும்; இப் படிகள் செங்குத்தாகவும் கிடைத்தளமாகவும் அமைந்த பல்கோடு களால் உருவரையப்பட்டிருக்கும். இவ்வாருய் செவ்வகங்களுள், அடிக்கடி காணப்படும் நோக்குரு கறுப்பினுலும் வெள்ளையினுலு மாய சதுரங்களைக் கொண்ட ஒரு துணைப்பொட்டிப்பாயிருக்கும். இச்சதுரங்களைச் சுற்றி சிவத்தக் கறுத்தக் கோடுகளால் மாறி மாறியமைந்ததாய் ஒருமையச் செவ்வகங்கள் இருக்கும். இன்னும் மூலக்கு மூலையாயமைந்த திண்ணிய வைரக்கற்கள், நுண்கோ டிட்ட வைரக்கற்கள், சிறு செவ்வரன்கள், வட்டங்கள் (சில வேளை களில்-பலதொடுத்தவை), சிக்மா, அணி, செதிற் கோலங்கள் முதலியவற்றை நோக்குருவாகக் கொண்ட கிடைத்தளப் பட்டை கள் பெருவளவில் பயன்படுத்தப்பட்டன; நிலக்குக்கானவை சிற் றளவிலிருந்தன.
சிந்தில், அப்பிரதேசத்திற்குரிய அம்றிக்கலத்திற்குப் பிரத்தி யேகமாயமைந்த நோக்குருக்கள் காணப்பட்டன; இவை பலுக் கித்தானத்தில் காணப்படவில்லை. இந்நோக்குருக்கள், கடத்தில் அணி வேலை செய்யப்பட்ட பகுதியில் மேலேயிருந்த கருங்கோடு களுக்கு நடுவே அகலமான கிடைத்தளப்பட்டையாகச் செவ்வண் ணப் பிரயோகத்துடன் தொடங்குகின்றன ; ஒருவகையில் இது கீழே தொடங்குகிறது. சதுரநோக்குருவில் கவர்ச்சிகரமான இரு மாற்றங்கள் இருந்தன. கிடைக்கோடுகள் குத்துக்கோடுகளின் வெட்டுத் துண்டங்கள் அமைக்கப்பெற்ற பொட்டிப்புகள் ; அரை வாசி மூலைவிட்ட முறையில் நிரப்பப்பெற்ற சதுரங்கள் கொண்ட பொட்டிப்புகள்; இவையே அம்மாற்றங்கள். இவற்றுள் ஒன்று பெரிய கூரிய அண்டவடிவங்களையும், சுற்றி மாறி மாறியமைந் திருந்த கறுத்தச் சிவத்தக் கோடுகளையும் கொண்டிருந்தது. வேறு பட்ட இவ்வணிவேலைகள் அசாதாரணமானவை என்பது தெளிவு. ஆயின் அகன்ற சிவத்த கிடைத்தளப்பட்டைகள் மட்டும் மீண்டும் மீண்டும் காணப்பட்டன. கடங்களுள் பெரும்பாலன நரந்தசாப்
பாணியோடியைந்த அணி நோக்குருக்கள் கொண்டிருந்தன.

Page 60
98 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
நல் பாணிக்குப் புறம்பாயமைந்த அணி நோக்குருக்களை நாம் ஆயின் பொட்டிப்புகள் அமைக்கமட்டுமன்றிப் பல்வேறு கோலங் கள் அமைக்கவும் பல சமாந்தரக் கோடுகளைப் பயன்படுத்தும் ஓர் பாங்கு முக்கிய அமிசமாக அமைந்ததை நாம் காணலாம். இக் கோலங்கள் பலவகையின; இவற்றுள் கோணியமைந்த அடுக்கு வரிகள் அல்லது வரிசைச் செவ்வரன்கள் (Chevrons) சமச் சிறைச்சிலுவைகள், வைரங்கள், வட்டங்கள், பொலியலைக் கோலங். களிலமைந்த முழுவதும் வளைகோடுகளாலமைந்த பல்வகை நோக்குருக்கள் முதலியன இருந்தன. இந்தக் கேத்திரகணித நோக்குருக்கள் நல் பாணிக்கு மிகவும் பிரத்தியேகமானவை. நுந் தாா பிரதேசத்தில் இது சிவப்புடன் இணைந்திருந்தது. நல்லிலும் ஒத்த தலங்களிலும் இது சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் வண்ணங் களுடன் இணைந்து காணப்பட்டது. இவ்வண்ணங்கள் கோடுக ளாக இல்லாமல் தடித்த நிறத்துண்டங்களாகப் பயன்படுத்தப்பட் ι σοτ (ε» (τό 5).
இதைவிட விலங்குகளின் கவர்ச்சிகரமான உருவங்களும் காணப் படுகின்றன ; நுந்தராக் கலங்களில், விலங்குகள், இவை சிங்கங் களாயிருக்கலாம், மீன்கள், பறவைகள் முதலியன உருவகிக்கப் பட்டிருந்தன; இவற்றின் உடல்கள் பெரும்பாலும் சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தன. ஓர் எருத்தின் உருவம் காணப்படுகிறது; (இது ஒர்கலற்றி எனும் தலத்தில் உரு. 8 அடிமையம்) அரச மாத்து இலையுருக்களில் அமைந்த இதயவுரு நோக்குருக்களும் காணப்படுகின்றன. இந்து நதிப்பள்ளத்தாக்கின் ஊக்கினுல் இவை தோன்றியிருக்கலாம். இதை நாம் பின்னர்க் காண்போம். வா லாற்று முன்னர் இந்தியாவில் அரச மரம் ஒரு புண்ணியமரமாகக் கொள்ளப்பட்டது; இன்றும் அது ஒரு புண்ணிய மரமாகக் கரு தப்படுகிறது. ரொகல்-யோ-குண்ட், பண்டி வாகி, கெர்சக் ஆகிய இடங்களிலும் சிந்திலுள்ள பிற தலங்களிலும், விலங்குகள் அல்லது பாணிப்படுத்திய மலையாட்டுத் தலைவரிசைகள் பொது வான நல் அணி வேலைகளுடன் சேர்ந்து காணப்படுகின்றன; இவை குள்ளிப் பண்பாட்டிலிருந்து பெறப்பட்டவைபோல் தோன்றுகின்றன.

வேளாண் சமுதாயங்கள் 99
படம் 5. நல் வ?னபொருள்.
நன்கு அபிவிருத்தியடைந்த நல் கட்டத்தில், இடுகாட்டிலேயே புலப்படும் ஓர் அமிசம், அணிவேலைத்தொகுதி ஓர் எல்லைக்குளடங்
கியதர்யும் சிக்கலானதாயுமுள்ளது. சதுரங்கள், வைரங்கள், செல்

Page 61
100 மேற்கிந்தியாவின் வெண்கல ஊழி
வெளிவரைப் பொட்டிப்புகள், சிக்மா சின்னங்கள், முதலிய எளிய கோலங்கள் மக்கள் நினைவிலிருந்தகன்றனபோல் தோன்றுகின் றன. பல்வெளிவரைச் செவ்வக உருக்களும் வளையுருக்களும் மிகச் சிக்கலாம் உருக்கள் கொண்டு தலைமைபெற்று விளங்கின. கடங் களும் ஒன்றையொன்று வெட்டும் வட்ட அணிவேலையும் காணப்பட் டது. இப்பொழுதுள்ள விலங்குருக்களில் புதுவகைப் பறவைகள் மலையாடுகள், தேள்கள் முதலியன அடங்கியிருந்தன; நூதனமான ஓர் நுக வடிவச் சின்னம் அடிக்கடி தோன்றுகிறது; இது ஒரு வேளை சிக்மாவிலிருந்து பாணிப்படுத்தப்பட்டதாயிருக்கலாம். இப் பொழுது நிறங்கள் சிவப்போடு நின்றுவிடாது நீலம், பச்சை, மஞ் சள் ஆகிய எல்லா நிறங்களையும் அடக்கியவையாயிருந்தன. பிற் கூறிய நிறங்கள் மறைந்துபோகக் கூடியனவாயிருந்தாலும், கடத் தின் மேற்பரப்பிலிருந்து இலகுவில் அழிபடக்கூடியனவாயிருந்தா லும் சிவப்பு நிறத்தைத் தவிர வேறு நிறச்சுவடு ஒன்றும் நுந்தரா வில் காணப்படும் ஏராளமான சில்லிகளில் காணப்படாமையா அலும் அங்கு இருநிற அணிவேலையே வழக்கிலிருந்தது என்று நாம் மட்டிட்டுக் கொள்ளலாம்.
அம்றி, நுந்தரா, நல் ஆகிய இடத்துக் கடவண்ணந் தீட்டும் பாணிகளுக்கிடையமைந்த உறவினை, பாணிப்படுத்தல் வகைக்கிர மம் என்று நாம் கூறினேமாயினும், இப்படி நிலைகள் உண்மையில் காலக்கிரம முறையில் ஒன்றின்பின் ஒன்முய் வளர்ந்தன என்று சொல்லல் முடியாது. இவற்றிற்கு ஒரு முடிவான சான்று உண்மை யில் படையமைவியலே. ஆயின் நாம் முன்னர்க் கண்டவாறு இந் திய வரலாற்று முன்னர்க் காலத்தைப் பற்றிய அறிவில் படை யமைவியற்கிரமத்தைப் பற்றிய நல்லறிவில்லாமை ஒரு பெருங் குறைபாடே. எனவே இம்முறையைக் கொண்டு இம்மூன்று பாணி களுக்குமுள்ள தொடர்பைப்பற்றி நாம் அதிகம் விளக்கமளிக்க முடியாது. அதுந்தாாப் பிரதேசத்தில் உள்ள தலங்களில் அம்றிவகை கள் மேலெழுந்தவாரியாக நுந்தாாவிற்கே பிரத்தியேகமானவற் அறுடன் இணைந்து காணப்படுகின்றன. சிந்தில் நல் நோக்குருக் களும் கடச்சில்லிகளும் படையமைவு முறையில் காணப்படுகின் றன; இது இவை குறைந்தது அம்றியின் பிந்திய ஒரு கட்டத்
கோடு காலத்தால் ஒத்தவையென்பதைக் காட்டுவனவாயுள்ளன.

வேளாண் சமுதாயங்கள் O
முழுமையையும் நோக்குமிடத்து, இவற்றிலிருந்து விசித்திரமான விவரமான நல் பாணி யலவன் மலையடுக்கங்களில் தோன்றியதென வும், தனிப்பண்பு குறைந்த அம்றி நோக்குருக்கள் சிந்தில் அதிக மாற்றமில்லாமல் அநேக காலம் மக்களால் போற்றப்பட்டு வந்தன எனவும், நுந்தரா பாணி இவை இரண்டுடனும் அடுத்து நிலை நின்றிருக்கலாமெனவும், ஒருவர் அனுமானித்துக் கொள்ளலாம்.
பொருளியல் பண்பாட்டின் பிற அமிசங்களை நாம் நோக்கில் அம்றி-நல்தொகுதியில் உலோகவேலையிருந்ததென்பதற்கு முக்கிய சான்றுளது. நல் இடுகாட்டில் இருகுவியல் செப்புக் கருவிகள் காணப்பட்டன; முதலாவது குவியல், இடுகாடு அகழப்பட்ட பாழ் போன குடியிருப்பின் ஒரு வீட்டிலுள்ள அறை As இல் இருந்தது. இதில் ஐந்து பொருள்கள். இவற்றுள் மூன்று தட்டைக் கோடரிகள். இவற்றின் வெட்டுவிளிம்புகள் விரிந்திருக்கவில்லை. அடிகள் கூம்பியி ருந்தன. மற்றை இரண்டு பொருள்களில் ஒன்று மிக நீண்ட சமாந்த ரப் பக்கங்கொண்ட உளி; இது விரியாத விளிம்பு கொண்டிருந்தது. மற்றையது கூம்பு கோடரியினதோ உளியினகோ ஒரு துண்டம். அறை A 5 இலிருந்து மற்றைச் செப்புக்குவியலிலிருந்த பொருள் கள் : சிறிது விரிந்து வெட்டு முனைகளுடனும் ஒடுங்கி நீண்ட அடி களும் கொண்ட இரு கோடரிகள்; சிறிது விரிந்த முனையுடனும் மிக நீண்டு கோல் வடிவு கொண்ட அடியுடைய ஒரு கோடரி அல் லது உளி, நேர்ப்பக்க வாள் ஒன்று ; கத்தியோ ஈட்டித் தலையோ ஒன்றினது பகுதி, இன்னுமொரு துண்டு, இது ஒரு கத்தியின் பகுதியாயிருக்கலாம். இக்கருவிகள் பற்றி நற்பகுப்பாய்வு நடை பெறவில்லை. ஆயின் இத்தகைய ஒரு கோடரியின் துண்டைப் பகுத் தாய்ந்ததில் பின்வரும் அமைப்புப் புலப்பட்டது.
செம்பு 93.05 சத வீதம் வெள்ளியம் 2.14 9.
நிக்கல் 4.80 yj ஆசனிக் சுவடுகள்
நல்லில் செப்புக்கருவிகளின் வேறு பிற துண்டுகளும் காணப் பட்டன; நுந்தராவில் ஒரு செப்பு வளையலும் காணப்பட்டது. (எலவே நாம் கண்டவாறு ஒரு புதைப்பில் ஒரு கோடரி காணப்

Page 62
102 மேற்கிந்திய வெண்கல ஊழி
பட்டது. சிந்தில் காசி சாவில், அம்றி மட்டத்தில் ஒரு செப்புமணி யிருந்தது.
இச்செப்புக்கருவிகள் பல்வகை அமிசங்களிலும் கவற்சியுடையன வாயிருந்தன. வியக்கத்தக்க அளவு சதவீதத்தில் நிக்கல் கொண்டி ருந்த இவ்வுலோகத்தின் கூறுபாடு கீழைநாட்டுச் செப்புப்படிவு களில் செறிந்துள மாசுகள் பற்றிய செவ்விய அறிவு நமக்குக் கிடைத்தவுடன், இயற்கைத் தாது எங்கிருந்து பெறப்பட்டதென்ப தற்கு வழிகாட்டுவதாயமையும். மெசப்பொற்றேமியாவிலிருந்து பெற்ற செப்புப்பொருள்கள் சில தம் அமைப்பில் ஒப்பீட்டளவில் உயர் சதவீதத்திலமைந்த நிக்கல் உடையனவாயிருந்தன. இரு முன்னைக் குலமுறைமாதிரிகள், முறையே ஊரிலிருந்தும் கிஷ் இலிருந்தும் பெறப்பெற்றவை. 3.34 சதவீதமும், 2.20 சதவீதமும் கொண்டிருந்தன. பொதுவான சராசரி இவற்றிலிருந்து குறைவான தாயிருந்தது. சுமர் செப்பிற்கு ஓமன் மலைகள் விளைதலமாயிருத்தல் கூடும். ஏனெனில் இவற்றின் தாதுக்கள் நாம் கண்டறியக்கூடிய அளவு நிக்கல் கொண்டவையாயிருந்தன. மறுபால் நோக்குமிடத்து மொகஞ்சோதாரோவிலும் அரப்பாவிலும் பயன்படுத்தப்பட்ட செம்பிலும் சில வேளைகளில் நிக்கல் காணப்பட்டது. இது ஒரு பொருளில் 9.38 சதவீத அளவு உயர்வாயும் இன்னென்றில் 3.34 சதவீத அளவாயும் இருந்தது. இராசபுத்தானம், அபுகனித்தான் முதலிய இடங்களில் காணப்பட்ட தாதுக்கள் இது இவ்வாறிருப்ப தற்குச் சான்முக உள்ளன. எனவே, இப்பொழுது நமக்குள்ள அறிவுப்பரப்பை நோக்குமிடத்து நல் செம்பின் தோற்றுவாயைக் கண்டுபிடிப்பதற்கு அவலப்பேருகப் பரந்த ஓர் புலத்தினை ஆராய வேண்டியுள்ளது. இது ஒருவேளை பலுக்கியிலுள்ள ஓர் உள்ளூர்த் தாதுவாயிருக்கலாம். ஏனெனில் பண்டைச் செம்பு எடுக்கும் வேலைப்பாடுகள் அங்கு இருந்தன என்று சொல்லப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறு விகிதமாகக் காப்பட்ட ஆசனிக்கு அரப்பாப் பண்பாட்டிற்குரிய செம்பை அளித்த மூலத்திலிருந்தும் புறம்பான ஓரிடத்திலிருந்து இவை தோன்றின என்பதைத் தெரிவிப்பதா யுள்ளது. - -
பண்பாடுகளின் ஒற்றுமைப்பாடு, தேதி முதலியவை பற்றி நாம் பின்னர் ஆராயும்போது கருவிகளின் வகைகள் பற்றி எடுத்துக்

வேளாண் சமுதாயங்கள் 03
கூறப்படும். ஆயினும் இப்போது தட்டைக் கோடரியின் பூர்வீக வடிவத்தைக் குறித்துக் கொண்டால் போதுமானது. இது அாப் பாப் பண்பாட்டிற்குரிய ஒத்த வகையில் பூர்விகவகையினதான கோடரியைப் பொதுவில் ஒத்ததாயிருந்தது; ஆயின் எல்லா வகை யிலும் ஒத்ததாயிருக்கவில்லை. மெசப்பொற்றேமியாவில் முன்னைக் குலமுறைக் காலந்தொடங்கி அறியப்பட்ட மிகப் புனைவுற்ற தண்டுக் துளைக்கோடரி மேற்கிந்தியாவிற்கு மிகப் பிந்தி வந்த ஒன்ருகும்.
முத்திரை இலச்சினைகள் பேசியா, மெசப்பொற்றேமியா முத விய இடங்களிலுள்ள பண்டை வெண்கல ஊழிப் பண்பாடுகள் முழுவதும் மிக ஏராளமாகக் காணப்பட்டனவாயினும் மேற்கிந்தி யாவில் அவை காணப்படாமை மிகக் குறிப்பிடத்தக்கது. ஆயின் இதற்கு ஒரு புறநடை அரப்பாப் பண்பாடாம். இது மிகவும் புகழ் பெற்ற தனிவகையிலமைந்த சதுர இலச்சினைவரிசைகளைக் கொண் டது. அம்றி-நல் பண்பாட்டில் ஒரேயொரு இலச்சினையே பதிவு செய்யப்பட்டுள்ளது ; இது நல் இடுகாட்டிலிருந்து பெறப்பட்டது. இங்கு வல்லூறு ஒன்று பொறிக்கப்பட்ட ஒழுங்கற்ற வடிவமுடைய ஒரு விசித்திர இலச்சினை காணப்பட்டது; வல்லூற்றின் கால் பாம்பொன்றின் மேல் இருந்தது. வல்லூற்றைச் சுற்றி, மட்கலங்களி அலுள்ள பறவைச் சித்திரக் கலே நுண்மையைப் பின்பற்றிக் குறுக்குக் கோடுகள் வரையப்பட்டிருந்தன. இலச்சினை சுதீற்றைற்றல் செய் யப்பட்டிருந்தது. இதன் மேற்பரப்பு அசப்பாப் பண்பாட்டில் சாதாரண வழக்கிலிருந்த வகையில் செயற்கைமுறையில் வெளிற்றப் பட்டிருந்தது. நல் அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்த செம்பாலான முத்திரை இலச்சினையும் இருந்தது ; இது ஒப்பீட்டள வில் மிகப் பிந்திய காலத்திற்குரியதாயிருக்கலாமென நாம் பின்னர்க் காண்போமாயினும் இதனை முந்திய குடியிருப்புடனே பிந்திய இடுகாட்டுடனே இணைப்பதற்கு ஆதாரமாய் ஒன்றும் காணப்பட வில்லை.
நல் இடுகாட்டில் இருகோளவடிவினதான, அகேற்றல் அல்லது காணலியனுல் ஆக்கப்பெற்ற மணிகள் ஏராளமாகக் காணப்பட் டன , சிந்தில் காசி சாவில் ஒர் அகேற்று மணி காணப்பட்டது. நல்லில் மணிகள் செய்வதற்கு வைரிேயமும் பயன்படுத்தப்பட்

Page 63
04 மேற்கிந்திய வெண்கல ஊழி
டது. சிந்தில் பண்டிவாகியிலும் இக்கல்லாலான ஒரு மணி காணப் பட்டது. வைடூரியம் பண்டைய காலத்தில் கீழைநாட்டில் மிகவும் பாராட்டப்பெற்ற ஓர் அற்புதப் பொருளாகும். இது பேசியாவி லும் அபுகனித்தானிலுமே பெரும்பாலான அளவில் எடுக்கப்பெற்ற பொருள். அரப்பா மக்களும் இதை மிகப் பயன்படுத்தினர்; பலுக்கித்தானில் மற்றைத் தலங்களிலிருந்தும் வைடூரிய மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நல்லில் மணி செய்வதற்காக, சிறப்பாகச் சிறிய தட்டுகள் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு வகைத் திரவியம் கண்ணுடிப்பொடி சேர்ந்த ஒரு செயற்கைப் பசையாகும். இது ‘பேயன்சு (faience) என்று அறியப்படுவது. இது அசப்பாப் பண்பாட்டில் நன்கு அறியப்பட்ட ஒரு பொருள். ஆயினும் இது வரலாற்று முன்னர்க் காலத்திற்குரிய மேற்கிந்தியா வில் அறியப்படாத ஒரு பொருள். இது வெளிற்றப்பட்ட சுதீற் றைற்று இலச்சினையிலிருந்து பெறக்கூடிய அறிவோடு பொருந்துவ தாயுள்ளது. இவ்வாருரன தொடர்புக்குரிய பிற சான்றுகளுமுள. நல்லிலிருந்து பெறப்பட்ட துளை கொண்ட கல்நிறையும் நிச்சராவில் அதே பண்பாட்டிற்குரிய ஒரு தலத்திலிருந்து பெற்ற வேறு இரு கல்நிறைகளும் இதற்குச் சான்முக உள. இவையெலாம் மொகஞ் சோதாரோவில் இருந்த நிறைகளின் வடிவத்தை மிகவும் ஒத்திருந் தன. அரப்பாப் பண்பாட்டில் உள்ள நிறைத் தொகுதி விசித்திர மானதும் தனித்தன்மை வாய்ந்ததுமாகும்; ஆயின் நல்லிலுள்ள நிறைவகை மொகஞ்சோதாரோ மாதிரியுடன் தனிப்பட்ட முறை யில் ஒற்றுமையுடையதாயினும், அறியப்பட்ட வரிசை எதனுடனும் இயைவதாயில்லை.
டாம் புதி இடுகாட்டில் அசப்பாப் பண்பாட்டில் காணப்பெற்ற வற்றை ஒத்த மட்கலம், சிப்பிக் காப்புகள் முதலியன இருந்தன. சிந்தில் குறைந்தது ஏழு அம்றி தலங்களிலாகுதல் சேட்டு அலகு களும் காழ்களும் காணப்பெற்றன. கற்கருவிகளாக்கும் உலோகத் துக்கு முன்னரான கைத்தொழில் பற்றி ஏலவே அதிகாரம் 11 இல் கூறியுள்ளோம். இகளுல் இவை யாதாயினும் சிறப்பு வகையால் மிகத் தொன்மையானவை என்று பொருள்படுமாறில்லை. ஏனெனில் அாப்பாப் பண்பாட்டிலேயே போற்றத்தக்க அளவில் இத்தகைய அலகுகள் நிலைநின்றன. இறுதியாக நாம் இங்கு குறித்துக்கொள்ள

வேளாண் சமுதாயங்கள் 05
வேண்டியது, நல் அகழ்வுகளில் காணப்பட்ட விலங்கு மண் சிற்றுருக்களில் யாது ஒன்முயினும் இடுகாட்டோடு இணைந்து காணப்படவில்லை; இன்னும் அம்றி-நல் பண்பாட்டோடு இணைந்த மற்றைத் தலங்கள் யாவற்றிலும் அவை அறவே காணப்படவுமில்லை என்பதாம் ; இதனுல் இவை இடுகாடு வெட்டியமைக்கப்பெற்ற பழைய சிதைவுகளுக்குரிய குடியிருப்பிற்கு (செங்கல மக்கள்) உரி யனவாயிருக்கலாம் எனல் பொருத்தமானது
இப்பொழுது அம்றி நல் பண்பாடு பற்றி யாம் அறிந்தவற்றைச் சுருக்கமாகக் கூறி, மற்றை இந்தியாவின் வரலாற்று முன்னர்ப் பண் பாடுகளுடனும் பொதுவாகக் கீழைநாட்டு வெண்கல ஊழியின் பண் பாடுகளுடனும் கொண்ட தொடர்புகளுடன் அதைச் சார்த்தி ஆசா யவும் கூடியவராய் உள்ளோம். கல்லாலோ மண்கட்டிகளாலோ ஆய மனைகள் கொண்ட சிறு குடியிருப்புக்கள் குள்ளி அல்லது சோப் பள்ளத்தாக்கு மக்களின் குடியிருப்புக்களுடன் ஒப்பிடப்படக்கூடி யனவாயுள்ளன ; இதை நாம் பின்னர்க் காண்போம்; சுட்ட செங் கட்டிகள் இங்கு காணப்படாமை, அரப்பாப் பண்பாட்டுடன் இருந் திருக்கக்கூடிய எந்தத் தொடர்பும், இத்தகைய கட்டிடமுறையைப் புகுத்தியிருக்கக்கூடிய அளவு அடிப்படையானதன்று என்பதைக் காட்டுவதாயுள்ளது. மனைகளின் திட்டங்கள், அமைப்பு முறை முத லியவற்றைப் பற்றி நாம் ஒன்றும் அறியோம் ; ஆயின் ஒன்றுமட்டும் நாம் கூறலாம். இங்கிருந்த சமுதாயங்களும், பலுக்கித்தானிலுள்ள மற்றைப் பண்பாடுகளில் இருந்த கிராமச் சமுதாயங்கள் அல்லது சிறு நகர்ச் சமுதாயங்கள் போலவே வரலாற்று முன்னர்க் காலத் தில் பண்டைக் கீழ்நாடுகளிலிருந்த சமுதாயங்களுடன் பொதுவான ஓர் ஒற்றுமைகொண்டிருந்தன ; இவை இந்தியாவிலிருந்த சமுதா யங்களோடு ஒத்த காலத்தனவல்லவாயினும், அவை முகிழ்த்தெழுவ தற்கமைந்த பிற்களமாயமைந்தவைபோலிருந்தன.
நல்லிலும் டாம் புதியிலும் முழு மண்ணடக்கங்களுடனும் பகுதி மண்ணடக்கங்களுடனும் அமைந்த இடுகாடுகளில் காணப்பட்ட புதைப்புக் கிரியைகள் பிறபகுதிகளுடன் தொடர்பு யாதும் கொண் டிருந்தனவோ வென்று காட்டுவனவாகவில்லை. சோப் பண்பாட்டில் பிரேதத்தைத் தகனம் செய்யும் கிரியை வழக்கிருந்தது; ஒருவேளை குள்ளியிலும் இது வழக்கிலிருந்திருக்கலாம். சிந்திலுள்ள தாரோ

Page 64
06 மேற்கிந்திய வெண்கல ஊழி
மலையில் காப்பரண் கொண்ட குடியிருப்புக்களுக் கண்மையில் புதைப்புகளுக்குரிய பதுக்கைகளிருந்தன. இவை மண்ணடக்கங்க ளுக்கு மேலமைந்தவையாயிருக்கலாம். ஆயின், இவற்முேடிணைந்த கடங்கள், இத்தலத்திருந்த அம்றிக்கலங்களோடு தொடர்புகொண்டி ருந்தன என்பதைவிட அரப்பாப் பண்பாட்டோடு ஒருவகையில் இணைந்தவை என்பதைச் சுட்டுவனவாயுள்ளன. அாப்பாவிலுமே R 37 இடுகாட்டிலுள்ள புதைப்புக்கள் விரிவான மண்ணடக்கங்க ளாகும். இவை நகரில் மக்கள் குடிகொண்ட காலத்தோடு ஒத்த காலத்தவை. அதே தலத்தில் பிற்காலத்தெழுந்த H இடுகாட்டில் முன்னேக் கட்டத்தில் சாதாரண அடக்கங்களும் பகுதி அடக்கங் களும் காணப்பட்டன. இவை மண்ணில் இருந்தன. கடங்களும் இவற்ருேடு சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் கட்டத்தில் இருந்த புதைப்புக்கள் பகுதிப்புதைப்புக்களாகக் கடங்களில் வைக் கப்பட்டிருந்தன. இவ்விரண்டு கட்டங்களும் நகரின் முக்கியமான குடியிருப்பு தோன்றிய காலத்திற்குப் பின்னர் நிகழ்ந்தனவாம்." முழுமையையும் நோக்குமிடத்து நல் இடுகாட்டின் கிரியைகள் மற் றைத் தலங்களிலிருந்தவற்றிலும் பார்க்க அாப்பாவிலுள்ள H இடு காட்டின் முதற்கட்டத்தோடு ஒப்பிடக்கூடிய வகையிலுள்ளன. ஆயின் இது இவ்விரண்டிற்குமிடையே பண்பாட்டாலோ காலவான் முறையாலோ யாதாயினும் நெருங்கிய தொடர்பு இருந்ததென்ப தைக் குறியாது. VK.
அம்றி கலத்தைக் குறைந்தது அரப்பாப் பண்பாட்டுடன் சார்த்தி ஓரிடம் அளிப்பதற்கு சிந்தில் நேரான படையமைவியல் சான்று சிறிதளவுண்டு. அம்றி வகைத் தலத்திலேயும், காசி சா, லோரி பண்டி வாகி ஆகிய இடங்களிலேயும் பண்டையமைவு முறைக்கிச மம் அம்றிக்கலத்துடன் முன்னர் ஒரு குடியிருப்பு இருந்ததென்ப தையும் பின்னர் இதைத் தொடர்ந்தோர் அரப்பாப் பண்பாடு இருந்ததென்பதையும் காட்டுவதாயுள்ளது ; (சிற்றளவினவான நல் வகைக் கலங்களும் இங்கு காணப்பட்டன). எனினும் கச் பள்ளத் தாக்கிலுள்ள பய்சோ கொடிதிரோவில் உள்ள இவ்விரு பண்பாடு
* அரப்பாப் பண்பாட்டில் டைபெற்ற தகனத்தின் பின்னாான புதைப்புக்களை நான் புனிதப்புக்கள் எனக் கொள்வதில்லை. இப்பொருள்பற்றி நம் பின்னர் மிக விரிவாக ஆராய்வோம்.

வேளாண் சமுதாயங்கள் 07
களும் கலந்து காலவரன்முறையால் பிரித்தறிய முடியாதனவா கின. காசி சாவில் உள்ள பிந்திய குடியிருப்பு மிகவும் கவற்சியளிப் பதாயுள்ளது; ஏனெனில் இதில் அாப்பா வகை சிவப்பில்-கரும் கலம் மட்டுமன்றி, குள்ளியிலிருந்து பெற்ற நோக்குருக்கள் கொண்ட பிற கலங்களும் இருந்தன; இன்னும், ஒரு கடத்தில், ஆழ் சிவப்புப் பிற்களத்தில் கறுப்பில் நுந்தரா (அல்லது நல்) கோலங்கள் தீட்டிய ஒரு கடமும் இருந்தது. இவற்றிலிருந்து, குறைந்தது அம்றி நல் பண்பாட்டின் இறுதிக் கட்டங்களும், குள் ளியின் பண்பாடும் அண்ணளவில் ஒத்த காலத்தனவாயிருந்திருக்க லாம் எனவும், ஒருவேளை இவற்றுடன் சிந்திலிலுள்ள அரப்பாப் பண்பாட்டின் முன்னைக்குடியிருப்புக்களும் அவ்வாறே அண்ணள வில் ஒத்த காலத்தினவாய் இருந்திருக்கலாம் எனவும் கொள்ளக் கூடியதாயுள்ளது. இன்னும் கச் பள்ளத்தாக்கிலுள்ள சொகல் சோ குண்ட் இல் காணப்பட்ட நுந்தரா அல்லது நல் பாணிகளுடன் ஒத்த காலத்தினவான சில்லிகளில் குள்ளியின் ஊக்கு புலப்படுவ தாயுள்ளது; இவ்வூக்கு சிந்தில் உள்ள வேறு பிற தலங்களிலும் காணப்படுகிறது. ஆயின், நாம் முன்னர்க் கூறியவாறு, அரப்பாப் பண்பாட்டுடன் தொட ர்பிருந்ததென்பதற்கு நல் இடுகாட்டில் தெளி வான சான்றுளது. இன்னும் மொகஞ்சோதாசோவில் அாப்பா பின் னர் (யுகர் பண்பாடு) மட்டத்தில் நல் கலத்திலிருந்து பெற்ற ஒரு சில்லியுளது; இதிலிருந்து நாம் யாதாயினும் ஊகித்தறியலாம்.
நஎந்தசாவில் உள்ள விலங்கு அணிவேலை குள்ளிப் பண்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய கவற்சிகரமான அமிசங் கொண்டது. நல்லில் உள்ள தும் சிற்றளவில் அத்தகையதே. நுந்தராக் கடங்களில் விலங்குகள் (பெரும்பாலும் சிங்கங்கள், ஓரிடத்தில் ஓர் எருது) முன்னங் கீழ்க்கால்களிலும் இடுப்புக்களிலும் விசித்திரமான கிடைத்தள வரிப்பட்டைகளால் வண்ணந்தீட்டப்பட்டிருந்தன. இந்த விசித் திசமான முறைமை குள்ளிப் பண்பாட்டின் வண்ணக் கடங்களில் காணப்படவில்லை; ஆயின் அங்குள்ள வண்ண விலங்குச் சிற்றுருக் களில் காணப்படுகிறது (உரு. 8). ஒரு பாண்டத்திலுள்ள அணி வேலைப்பாட்டுப் பகுதியின் மேலும் கீழும் அகலமான செவ்வண் ணப்பட்டைகள் போடும் வழக்கு அம்றிக் கலத்திற்கும் குள்ளிக் கலத்திற்கும் பொதுவான ஒரு வழக்காகும். நல்சிமிழ், குள்ளி

Page 65
108 மேற்கிந்திய வெண்கல ஊழி
மெகித் தலங்களில் கண்டறியப்பெற்ற தட்டைப் போத்தில் வடி வத்தோடு ஒப்பிடப்படக்கூடியதாகும் (உரு. 6). ஆயின் நல்லில் அரச இலைநோக்குரு, வெட்டும் வட்டங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்தியமையும் அரப்பாவின் தொடர்பினலாயதாயிருக்கலாம். அவ் வாறே பேயன்சு மணிகள், வெளிற்றப்பட்ட சுதீற்றைற்று முத்திரை இலச்சினைகளும் தொடர்பு கொண்டிருந்தவையாம். கல் நிறைகளும் ஒருவேள்ை அவ்வாறு தொடர்புபட்டனவாயிருக்கலாம். மொகஞ் சோதாரோ, அாப்பா ஆகிய இடங்களுக்குரிய பொலி வண்ணமட் கலம் ஓர் அற்ப அளவில் நல்லினத்தோடு ஒப்பிடக்கூடியது; அவ் வளவேதான்; ஆயின் சானுதாரோவிலிருந்து பெற்ற மஞ்சட் பிற்களங்கொண்ட தனிச்சில்லி ஒருவேளை ஒப்பிடப்படக்கூடிய ஒற்றுமை கொண்டதாயிருக்கலாம்.
நல் செப்புக்கருவிகள் ஒரு பகுதியளவில் அரப்பா வகையின வோடு ஒப்பிடப்படக்கூடியனவாம்; ஆயின், கோடரிகள் உருவரை யில் வேறுபட்டவை ; ஈட்டித்தலையும் வாளும் அாப்பாவரிசை யோடு ஒப்பிடக்கூடியன. அவ்வாறே நீண்ட கோலுளிகளும் இக் கருவிகள் நல்லிற்கும் கங்கைப்பள்ளத்தாக்கிற்குரிய உண்மை புலப் படாத செப்புக்கருவிகளுக்கும் உள்ள முக்கிய ஒரு தொடர்பை விளக்குவனவாயுள்ளன ; இவை அாப்பாக் கருவிகளோடு தொடர் புடையனபோல் தோன்றுகின்றன; ஆயினும் இவை பிந்திய ஒரு காலத்திற்குரியனவாயுமிருக்கலாம்.
அம்றி-நல் பண்பாட்டிற்கு ஒத்தனவற்றை நாம் பேசியாவின் அல் லது மெசப்பொற்றேமியாவின் வரலாற்று முன்னர்ப் பண்பாடுகளில் தேடிக் காண முயலின் நாம் தெளிவற்ற ஒப்புமைகளையே காண்கி முேம். அதற்கு மேலாக நாம் ஒன்றையும் காணமுடியவில்லை. மட் கலம் இங்கு கபிலமஞ்சள் தொகுதியைச் சார்ந்தது என்பது தெளிவு. நோக்குருக்களில் பொதுப்பாடான (சிறப்பாக அம்றிக் கலங்களில்) ஓர் ஒற்றுண்மயிருந்தது எனினும் குவெற்ருக்கலத்திற் கும் பார்ஸ் கலத்திற்கும் உள்ள திட்பமான ஒற்றுமை இங்கிருக்க வில்லை. உண்மையில் பார்சின் பொருள்கள் வெளிப்படையான அள விலேயே அம்றிப் பொருள்களோடு ஒப்புடையன. அன்றியும் இந் திய மட்கலத்தில் பெருவளவில் இடையருது செவ்வண்ணத்தைத் துணைவண்ணமாகப் பயன்படுத்தியமை அதனை மற்றைப் பேசிய

வேளாண் சமுதாயங்கள் 109
வரிசைகளினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதற்கு ஒப்பா கச் சொல்லக்கூடிய கலங்கள் மெசப்பொற்றேமியாவின் யெம்டெற் நசர் கலங்களே. இவையும் மிகவும் வெளிப்படையான அமிசங்களி லேயே ஒற்றுமை கொண்டவையாக விளங்கின. நல், நுந்தாா ஆகிய இரண்டிடங்களிலும் கீறப்பெற்று விலங்குகள் முன்னைச் சுமர்க்குல முறைக்குரிய செதுக்கிய என்புகளிலும் சிப்பித் தட்டணிகளிலும் காணப்பெற்ற திறமைவாய்ந்த வெளிவரைகளுடன் ஒப்பிடப்படக் கூடியனவாய் விளங்கின. ஆயின் இவை சுமரோடு தொடர்புகொண்டி ருந்ததுபோல் காணப்பட்டாலும் அதன் பிந்திய வளர்ச்சி தனிப் பட்டமுறையில் நடைபெற்றிருத்தல் வேண்டும் அல்லது கிழக்கி லிருந்த அரப்பாப் பண்பாட்டுடன் கொண்டதொடர்பினுல் நடை பெற்றிருத்தல் வேண்டும். கோல் அமைப்பிலும் அளவுகொண்ட அமைப்பிலும் தனிப்பண்புகொண்டதும் உறுதியும் திடமும் வாய்ந் ததுமான நல்லின் பாணி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது மேற் காசியாவின் பல வண்ண மட்கலங்களினின்றும் வேறுபட்டதாகும். உட்பதிவு வினைநுண்மை, மேற்பூச்சு வினைநுண்மை முதலியவற் றில் இவை முன்னைச் சுமர்க்குலமுறையின போன்றவற்றேடு சிறு தொடர்பு கொண்டிருந்தன என்ற குறிப்பிலும் கூடிய சான்றிங் குளது. இவ்வினை நுண்மைகள் முழுமையையும் நோக்குமிடத்து இவை மிக்க வினைத்திறனுடையனவாயும் புனைபாடுடையனவாயும் விளங்கின என்று கூறலாம்.
கபில மஞ்சள் தொகுதியுள் தனியாக எடுத்துக் கூறக்கூடியதான மேற்கிந்தியாவிலுள்ள மூன்ருவது பண்பாடு குள்ளிப்பண்பாடு எனப்படும். இது தென் பலுக்கித்தானத்தில் கொல்வாப்பகுதியில் உள்ள ஒரு தலத்திலிருந்து பெயர்கொண்டது. மற்றையவற்றைப் போலவே மிகத் தனிப்பண்புகொண்ட ஒரு வண்ண மட்கலப் பாணியி ஞலேயே பெரும்பாலும் இது பிரித்தறியப்படுகிறது. இதற்குரிய தலங்கள் தென் பலுக்கித்தானில் கொல்வா மாவட்டத்தில், (கொல் வாவிலேயே ஸ்ரீன் என்பார் குள்ளி வகைத்தலத்தில் பரிசோதனை அகழிகள் கிட்டினர்) ஒப்பீட்டளவில் சிற்றளவிலும், மஸ்கையில் ஒன்றுமாக உள்ளன. இத்தலங்கள் சில தஷ்ட் நதிக்கருகிலும் பரந்து தனித்திருந்தன. ஒரு தலம் மிகத் தொலைவில் தனியாக கொாகன் நதியின் ஊற்று முகத்திற் கண்மையில் இருந்தது.

Page 66
110 மேற்கிந்திய வெண்கல ஊழி
அதன் மட்கலப்பாணியின் ஊக்குச் சுவடுகள் கிழக்குப் பேசியா வில் காணப்பட்டன; இப்பண்பாட்டின் மட்கல வண்ணப்பாணி மரபுகளின் ஊக்கு, மஞ்சார் வாவிப்பகுதி, கச் பள்ளத்தாக்கு முத லிய இடங்களிலிருந்த அன்னிய கலங்களில் காணப்படக்கூடியதா யிருந்தது; எனினும் இப்பண்பாடு கிழக்கு நோக்கி மலைத்தடைக ளேக் கடந்து இந்து நதி வெளியை அடைந்ததுபோல் தோன்ற வில்லை. பலுக்கித்தானில் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலான வற்றில் குள்ளிக் கலம் பெருவளவில் அம்றி நல் பண்பாட்டிற்குரிய நுந்தராக்கலம் நல் கலங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. ஆயி இனும் நல் கலத்திற்குரிய வகைத் தலத்திற்கும் போலன் கணவாய்க்கு மிடையில் நல் கலமாக்கியோர் வாழ்ந்த பிரதேசமளவு வடதொலைப் பிரதேசங்களில் அது காணப்பட்டதாகத் தெரியவில்லை. அதல்லா மலும் அதைச் சமைத்தோர் யல்வனில் கிழக்கு நோக்கிச் சென்ற தாகவும் தெரியவில்லை. இது கொலச்சிப் பள்ளத்தாக்கு, கச் பள்ளத் தாக்கு என்பவற்றில் காணப்பட்ட நல் கலத்திலிருந்து புலப்படு கிறது. இதை நாம் ஏலவே குறித்துள்ளோம். குள்ளிப் பண்பாட் டிற்குப் புறம்பமைந்த மட்கலவடிவங்களும் அணிகலங்களுமுண்டு. இவற்றைவிடக் குள்ளிப் பண்பாட்டிற்கு இன்னும் கூடிய இலட் சணங்களும் உள. அம்றி-நல் பண்பாட்டோடு ஒப்பிடும்போது, இதன் புதைப்புக் கிரியையின் இயல்பாலும், இப்பண்பாடு உள தென்று கண்டறியப்பட்ட இடமெல்லாம் மண்ணுலான பெண் சிற் அறுருக்கள் விலங்குச் சிற்றுருக்கள் மிகுதியாகக் காணப்பட்டமை யாலும், இதன் தனித்தன்மை வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மஸ்கையில் மெகி தலத்தில் உள்ள பண்பாட்டில் இரு பிரிவுகளை நாம் காணலாம். ஒன்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கு வன சாதாரண வண்ணக் கலங்கள்; மற்றையதற்கு, சாதாரண கலங்களும் அவற்முேடியைந்தனவும், பஞ்சாபிலிருந்தும் இந்துநதிப் பள்ளத்தாக்கின் அசப்பாப் பண்பாட்டிலிருந்தும் பெறப்பட்ட இனத்தைச் சார்ந்தவையுமான புனைபொருள்களுமாம். இவ்விரு பிரிவுகளுக்குமிடையமைந்த ஒன்றிலொன்றன் ஊக்கும் தெளிவாகப் புலப்பட்டதுமன்றி மிகக் கவர்ச்சிகரமாயுமிருந்தது.
அம்றி-நல் பண்பாட்டில் உள்ளவாறே குள்ளிக் கலத் தலங்கள் பொதுவாகத் தெல்லுகளாகவே விளங்கின. இத்தகைய கூட்புப்பிரி

வேளாண் சமுதாயங்கள் II.
வுத்திடல்களின் மேற்பகுதியிலமைந்த குடியிருப்புக்களை மட்டுப் படுத்துவதற்குரிய காரணிகளென ஏலவே நாம் அறிந்த அமிசங் கள் ஒத்த அளவில் இங்கும் இருந்தன. வகைத்தலமான குள்ளி யிலேயே, அப்பண்பாட்டிற்கு இயல்பான பொருள்களை நல்கிய கண்ணுக்குப் புலப்படக் கூடியதாயிருந்த சிதைவுகளின் பரப்பு, 20 அடி உயரக்கோட்டுக்குமேலாக, 200 யார் சதுரத்திலும் பாந்து இருந்தது. ஓர் வாழ்தலப் படைவரைக்கும் ஓர் சிறு இடுகாடு வரைக்கும் சென்ற மெகி அகழ்வுகள் யாவும் பெருந்திடலின் 30 அடி உயரக்கோட்டுக்குள்ளாக இருந்தன. இந்த வாழ்தலப்படையும் இடுகாடும் ஒரு பண்பாட்டிற்குரியனபோல் தோன்றின. இங்கு இந்தக் குடியிருப்பின் கட்டம் ஒர் 25 அடிக்கோட்டுள் அடங்கி யிருந்ததெனக் கொள்ளல் தகும் (30 அடி உயரக் கோட்டுள் ஒரு சிறு நகரரண் இருந்தது; இது 50 அடி வரை உயர்ந்து நின்றது). இந்த 25 அடிக்கோடு 175 யார் 150 யார்ப் பரிமாணங்கொண்ட ஒரு பரப்பை அடக்கியிருந்தது. சாகிதம்பிலுள்ள தெல், அடிவரை மட் டும் அகழப்பட்டபொழுது குள்ளிப்பண்பாட்டின் சிதைவுகள் மிகக் கீழான மட்டங்களில் காணப்பட்டன. இத்தெல்லின் குறுக்களவு 80-90 யார் வரையிருந்தது. வகைக்குறியான குடியிருப்புக்களின் பருமன், அம்றி-நல் பண்பாட்டில் இருந்தனவற்றைப் போல் உண் மையில் இரண்டு ஏக்கரிலும் கூடியதாயிருக்கவில்லே.
சாகிதம்பில் மேற்பதிந்த அடைவுகளில் இாண்டு கட்டிடக் கட் டங்கள் கண்டறியப்பட்டன. மூன்முவது ஒன்றும் இருந்திருக்க லாம். எல்லாம் ஒரே பண்பாட்டிற்குரியனபோல் தோன்றுகின்றன. தோசி, மசினுடாம் எனும் தென் பலுக்கித்தானிலுள்ள இரு தலங்க ளில் குடியிருப்பைச் சுற்றி காவல் மதில் எனக்கூடிய ஒன்று இருந் ததென்பதற்குரிய சான்றுகளை ஸ்ரீன் அவதானித்தார். இத்தலங்கள் குள்ளிப் பண்பாட்டிற்குரியனவாயிருக்கலாம். யோவில் உள்ள சியா டாமில் மேற்கூறியவற்றை ஒத்த காவல் மதில்கள் இருந்திருக்க
6ւ)!TLD. -
கட்டிடத்திற்குப் பயன்படுத்தப்பட்ட திரவியம் பொதுவாகக் கல் லாக இருந்தது. மண் சாந்தில் பதித்த காடான பரற்கல் வேலைப் பாடு தொடக்கம், நன்முறையில் சதுரமாக அமைக்கப்பட்ட சேல் கற்கள், வெட்டுமணற்கல் துண்டங்கள் ஆகியவற்றல் அணிபெற
Ꮾ--ᏟᏢ 8040 (Ꮾ81Ꮞ) S.

Page 67
12 மேற்கிந்திய வெண்கல ஊழி
வரிசைப்படுத்தி அமைத்த வேலைப்பாடுவரை யமைந்த கட்டிடங்கள் இங்கிருந்தன. இக்கற்கள் வகைத்தலத்திலிருந்து குறைந்தது 2 மைல் தொலையிலுள்ள ஓரிடத்திலிருந்து கொண்டு வரப்பெற்றன. அடஸ்சா யாம்பிலும் இவ்வாறு பயன்பட்டது புலப்படுகிறது. இங்கு மேற்பரப்பில் காணப்பட்ட பொருள்கள் இத்தலம் குள்ளிப் பண் பாட்டிற்குரிய தென்பதைப் புலப்படுத்துவனவாயுள்ளன. மெகியில் கல்லுடன் வரையறையில்லாப் பருமன்கள் கொண்ட மண்செங் கட்டிகளும் பயன்படுத்தப்பட்டனபோல் தெரிகிறது. சாகிதம்பின் இறுதிக்குடியிருப்பிற்குரிய சுவர் ஒன்று கல் அத்திவாரமுடையதா யும் 19 x 10 x 3 அங். பரிமாணம் கொண்ட மண்செங்கட்டிகளா லாய மேற்கட்டும் உடையதாயுமிருந்தது.
மிகப் பரந்த கட்டிடச் சிற்பச்சிதைவுகள் காணப்பெற்ற குள்ளி யில் ஓரிடத்தில் உள்ள தாழ்ந்த நடைபா ஒன்று காணப்பட்டது. இன்னேரிடத்தில் ஒருநிலக் கீழ் அறையை மேல்மூடி ஒரு மரத் தளம் இருந்ததற்குரிய அறிகுறிகளும் இருந்தன. நுந்தாாவைப் போலவே இங்கும் கற்சுவர்களின் உட்பக்கம் வெண் சாந்து பூசப் பட்டிருந்தது. இப்பண்பாட்டுத்தலத்தில் நடைபெற்ற அகழ்வுகள் சிற்றளவின ஆதலின் வீடுகளைப் பற்றி அதிகம் சொல்லமுடியாது. குள்ளியில் 12 X 8 அடிப் பரிமாணத்திலிருந்து 8 X 6 அடிப் பரி மாணங்கொண்ட அறைகள் இருந்தன. நுந்தராவில் இருந்தமாதிரி யான சாளரமில்லாக் கதவில்லாக் கீழறைகள் இங்கும் காணப்பட் டன. குள்ளியிலுள்ள கற்படிவரிசையின் கீழ்ப்படிகள் அங்கு மட்ட மான கூரைக்கோ மேல் மாடிக்கோ அவை இட்டுச் சென்றன என் பதைக் குறிப்பனவாயுள்ளன.
புதைப்புக்களோடியைந்த கிரியைகள் பற்றிய தகவலும் சொற் பமானதே. குடியிருப்பின் இடிபாட்டில் 4 அடிக்குக் கீழ் குடங்கி யமைந்த ஓர் மண்ணடக்கம் காணப்பட்டது. புதைகுழிப்பொருள் கள் அங்கு காணப்படவில்லை. எனவே இப்பண்பாட்டுடன் தொடர்பு கொண்டதோ என்பதை நிறுவ முடியவில்லை. எனினும், மெகியில் ஸ்ரீன் ஒரு சுடுகாட்டில் ஓர் அகழி வெட்டினர். இங்கு தெல்லின் மேற்பாற் சரிவின் மேற்பரப்பில் இருந்த 6 அடிச் சிதைவுகளில் புதைப்புக்கள் நடைபெற்றிருந்தன. இங்கு தகனக் கிரியைகளில் சிறு வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்பெற்றன; இவை அவ்விடத்தி

வேளாண் சமுதாயங்கள் 3
லேயே செய்யப்பெற்றனபோல் தோன்றின. சில புதைப்புக்களில் தகனம் செய்யப்பட்ட எலும்புகள் கடங்களில் வைக்கப்பட்டிருந் தன. சில இடங்களில் இவை நேரே மண்ணில் இடப்பெற்றிருந்தன. ஓரிடத்தில் தகனம் செய்யப்பெற்ற முதியவர் மேலாக ஆறு குழந்தைகளின் கபாலங்கள் வைக்கப்பெற்றிருந்தன. மட்கலம், மண் சிற்றுருக்கள் செம்புப்பொருள்கள் முதலியன புதைகுழிப்பொருள் களாக விளங்கின. 75 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட ஓர் அகழியில் பத்துப் புதைப்புக்களே காணப்பெற்றனவாதலின் குறிப் பிடத்தக்க நெருக்கம் அங்கிருந்ததாகத் தெரியவில்லை. திடலின் சரிவில் அதனுல் குடியிருப்புப் பகுதிக்கப்பாலமைந்த இடுகாட்டின் தானம், இடுகாடு இத்தலத்தின் இறுதிக்குடிவாழ்வின் கட்டத்தோடு ஒத்த காலத்தினதாயிருக்கலாமென்பதைக் காட்டுவதாயுள்ளது.
குள்ளிக் குடியிருப்புக்களிலிருந்து பெற்ற மட்கலங்களைப் பற்றி ஆராய்தல் இடர்நிறைந்த ஒரு விடயமாக உள்ளது. ஏனெனில் இங்கு பல மரபுகள் காணப்படுவதாலும் இவற்றைப் படையமைவு முறையில் வேறு பிரித்தறிய முடிய இயலாமையாலுமாம். மெகியி விருந்து பெற்ற பொருள்கள் இயல்பாகவே ஒரு பருவத்திற்குரிய எனக் கொள்வதில் இடருண்டு என்பதை மகும்தார் உணர்ந்தார். பாணி முறைகளை நோக்குங்கால் அங்கு இருவனைமண் பிரிவுகள் இருந்தன என்று புலப்படுகிறது. இவற்றுள் ஒன்று உள்ளூர்க்குரிய வண்ணக் கலத்தோடியைந்தது; மற்றையது இதன் மேல் வந் தணைந்த சாதாரணக் கலல்வ; இது அரப்பாப் பண்பாட்டிலிருந்து முளைத்தெழுந்த ஒரு கிளையே. இவ்விரண்டு வகையினவற்றுள்ளும் அணி வேலை மட்கலமொன்றே 'குள்ளி' என்ற பெயர் பெறத் தகுதி யுள்ளது. இதனுடன் அரப்பாக்கலம் சேர்ந்தாய கலப்புக்கலத்தை "மெகி'க்கட்டத்துக்குரியதென்று வேறு பிரித்தறியலாம். ஏனெனில் மெகியிலேயே இதற்குரிய நல் எடுத்துக்காட்டை நாம் காணலாம். ஆயின் அரப்பா எனச் செவ்விதில் அறியக்கூடிய அரப்பாக் கலக் தைப் புறம்பாகவும், கலப்புக் கலங்களை மற்றை வண்ண மட்கலங்க ளுடன் சேர்த்தும் விவரித்தல் நன்முறையாகும்.
பின்வரும் ஓர் அதிகாரத்தில் அாப்பாப் பண்பாட்டையும் அதன் குடியமைப்புக்களையும் பற்றி ஆயும்போது தென்பலுக்கித்தானில்
காணப்படும் அரப்பாப் பண்பாட்டமிசங்களை ஆராய்வோம். இப்

Page 68
114 மேற்கிந்திய வெண்கல ஊழி
பொழுது சுற்ககன்டோர், மெகி, குள்ளி ஆகிய மூன்று தலங்களில் தனிமுறையிலமைந்த மட்கலங்கள் காணப்படுகின்றன என்பதை மட்டும் குறித்துக்கொள்வோம். இவற்றுள் சுற்ககன்டோர் எனும் தலம் அறவே உள்ளூர் அமிசம் ஒன்றும் கலவாத அரப்பாப் பண் பாட்டின் ஒரு குடியிருப்புப் போல் தோன்றுகிறது. குள்ளியில் இக் கலம் ஒரு சிற்றளவிலேயே காணப்படுகிறது. இங்குள மட்கலங்கள் உண்மையான குள்ளிப்பாணியில் வண்ணந்தீட்டிய சில்லிகளோடு கலந்திருந்தனவல்லாமலும் குள்ளி அணிவேலையின் மாற்றங்கள் கொண்ட அரப்பாவிற்குரிய வடிவமுடைய பாத்திரங்களாயுமிருந் தன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை பலிபீடங்கள்' எனப்படும் கால்கொண்ட தட்டுக்களாகும். இன்னும் சில சில்லிகள் மீதிருந்த அணிவேலைகளில் இந்து நதிப்பள்ளத்தாக்கின் ஊக்கிருந்தது என்ப தற்கு ஓரளவு ஆதாரமுமுள்ளது. பின்வரும் குள்ளிக்கலம் பற்றிய ஆராய்வில் ஸ்ரீன் சேகரித்த மட்கலங்களில் காணப்படும் அர்ப்பா அமிசங்கள் உள்ளூர்க் கலங்களோடு சேர்ந்து உண்மையான கலப்புக் கலங்களாயமையுமளவிலேயே அவை பற்றிய குறிப்புக்கள் அமை պւհ.
மட்கலத்தில் உள்ள பசை பொதுவாக மென்சிவப்பாக அல்லது கபில மஞ்சளாக இருந்தது. இவற்றுள் கபில மஞ்சள் ஒப்பீட்டள வில் மென்மையாயிருந்தது. மற்றையது, சிறப்பாக அாப்பாக்கலங் களின் ஊக்குக் கொண்ட கடங்களில் வழக்கமாக ஒரளவு இறுக்க மாயிருந்தது. பல்காலும் வண்ண அணிவேலை ஒரு மஞ்சள் சிவப்பு அல்லது சிலவேளைகளில் வெள்ளைக் களியில் இடப்படும். இக்களி பெரும்பாலும் கறுப்பாயிருக்கும். சிலவேளைகளில் இது சிவப்பா லாய அகன்ற கிடைத்தளப்பட்டைகளாயிருக்கும். ஆயின் அாப்பா ஊக்கினுற் போலும் சிவப்பின் மேல் கறுப்புக் கொண்ட கலங்கள் காணப்படுகின்றன; இங்கு, சிவப்பு அாப்பாவிற்கு இயல்பாயுள்ள ஆழ் சிவப்புக்களியினும் வெளிறியதாயிருந்தது அல்லது சோப் பள்ளத்தாக்குக்கலங்களில் உள்ளதைப் போலிருந்தது. இங்கு ஒரு சிற்றளவு வன்மையான நுண்ணிய வெளிற்று நாைச்சில்லிகளும் காணப்பட்டன; இவற்றில் சில, துலக்கிய மேற்பரப்புடையனவா யும் வெறுமையான உருவரையுடையனவாயுமிருந்தன. நாைக்கலங்

வேளாண் சமுதாயங்கள் 15
கள் பெரிய சேமிப்புச்சாடிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஓரிடத் தில் செதுக்கு அணிவேலை கொண்ட ஒரு பாத்திரமாகவும் இது பயன்பட்டது. இவ்வணிவேலை ஒரு கல் மூலத்திலிருந்து படியெடுக் கப்பட்டது.
இங்கு பலவித வடிவங்களிருந்தன. அரப்பா ஊக்கினல் ஆயது என்று உறுதியுடன் சொல்லக்கூடிய வகையின கால்கள் கொண்ட தட்டுக்களே. கோளக் குவளைகள், சிற்றடிக்குடுவைகள், உயர்ந்த போத்தல் வடிவக்கோளைகள், சிறுதட்டைத்தட்டுக்கள், நேர்ப்பக்கக் கோப்பைகள் பொதுவழக்கிலிருந்தன. தனிப்பட்ட முறையில் சிறப்பாக அமைந்த ஒரு வடிவம் தட்டையான நேர்ப்பக்கச் சாடி யாகும் (உரு. 6). பெரிய சேமிப்புப் பாண்டங்கள், சில வண்ணந் தீட்டியவை சில சாதாரணமானவை, கோள முகவெட்டும் புயங்க ளில் இழைகளும் கொண்டிருந்தன. சிலவற்றில் இவற்றுடன் பதிந்த அலையுருவப் பட்டைகளும் இருந்தன. துளைகொண்ட, உயர்ந்த கூம்புருவப் பாண்டங்கள் தணற்றட்டுகளாக அல்லது வெண்ணெய்க்கட்டி அயுத்திகளாக இருக்கலாம். இவை அாப்பா வகைகளோடு மிக ஒற்றுமையாயிருந்தமையின் வெளியிலிருந்து வந்தவையாயிருக்கலாம்.
குள்ளிக் கலங்களில் பொதுவாக அமைந்த வண்ண அணி வேலை கள், உருவமில்லா நோக்குருக்களாலாய வலயங்கள் கொண்டிருந் தன ; இவற்றிடை பல இடங்களிலும் விலங்குகள் செடிகளாலாய அணிவரிகள் இருந்தன. இவ்வணிவரியே கடத்தின் அணிவேலையின் பெரும் பகுதியாயிருந்தது. இது கடத்தைச் சுற்றித் தனி ஓர் ஒடி யாப் பட்டையாக விளங்கியது. இது நல் கலங்களில் உள்ள நெருங் கிய சதுர இடைத்துளைகளுக்கிடையமைந்த விலங்குகளின் ஒழுங்கு களைப் போலல்லாமல் ஓர் உருளை இலச்சினை முறையில் உருவாக்கப் பட்டுள்ளது எனலாம். இவ்விலங்கு ஒழுங்கினை முத்திரை இலச்சினை யோடு ஒப்பிடலாம். இவ்வணிவரி ஒரு நியமக்காட்சி கொண்டதா யிருந்தது; இக்காட்சியில் இரு விலங்குகள், வழக்கமாகத் திமி லுடை நல்லினங்கள், சிலவேளைகளில் பூனையினங்கள், கோரமான முறையில் நீடிக்கப்பெற்ற உருவில், நியமவடிவிலமைந்த மரங்களும் சிலவேளைகளில் சிற்றுருவினவான பாணிப்படுத்திய வெள்ளாடு களின் துணைவரிசைகளும் கொண்ட நிலக்காட்சியில், தலையெடுத்து

Page 69
6 மேற்கிந்திய வெண்கல ஊழி
를 ፳፰ብ፬እሩmእሉ
N989y
படம் 6 குள்ளி வ. பொருள்
 

வேளாண் சமுதாயங்கள் 17
நின்றன. பெரிய விலங்குகளுக்கு மேலாக் வடிவ உருவங்கள் மரபு முறைப்படுத்திய பறவைகளை உருவகிப்பனவாயிருக்கலாம். ஓரிடத் தில் மட்டும் ஒரு மீன் இருந்தது என்று கொள்ளலாம். பல்வேறு உரோசனிகளும் குறியீடுகளும் சில கடங்களில் காணப்படுகின்றன. இவை, சைல்ட் அவர்கள் கூறியவாறு பயங்கரமான வெற்றிடத்தை நினைவூட்டுவனவாயுள்ளன. இது வரலாற்று முன்னர்க் கிரேக்கரின் திப்லியன் கோளை வண்ணந் தீட்டுவோரை நினைவுபடுத்துவதாயுள் ளது. குள்ளிக்கடங்களின் பாணிமுறைக் கிரமத்தை நோக்கும் போது அதில் ஒரு சீர்கேடு இருப்பதை நாம் காணலாம். இதில் பிற்களம் படிப்படியாகப் பொருத்தமில்லாக் குறியீடுகள் நிரம்பப் பெற்றிருப்பதை நாம் காணலாம் ; நல்லினங்கள் மரங்களின் சித்தி ரங்கள் மென்மையற்று அழகற்றுப் போய் விடுகின்றன. இறுதியில் இவை சிதைந்தழியும் வெள்ளாடுகளும் சிக்மா நோக்குருக்களும் கொண்ட ஒரு குழ்நிலையிலிருந்து துன்பத்தோடு வெளிநோக்கும் பலூன் உடல் கொண்ட கொம்பன் வண்டுகள்போல் தோன்றின.
வழக்கமாக இந்நல்லினங்கள் கட்டப்பட்ட நிலையில் காட்டப்பெற் றிருந்தன. இவை நிற்கும் மரம் ஒன்றிலோ அல்லது இனந்தெரியாப் பொருளொன்றிலோ கட்டப்பெற்றிருந்தன. மெகியிலுள்ள ஒரு சில்லியில் இவ்வினந்தெரியாப் பொருள், அசப்பா ஊக்கினுற் போலும், அப்பண்பாட்டின் இலச்சினைகளுக்குச் சிறப்பாயமைந்த திவ்விய கணற்றட்டின் உருவத்தை ஒத்திருந்தது (உரு. 7 மேற் பாகம்). முன்னைய காட்சிகளில் கூருடைய உருவங்களாயிருந்த, மரங்களிலிருந்த இதயவுரு அரசிலைகள், இப்பொழுது இச்சில்லியி ஆலும் பிறவற்றிலும் பாணிமுறையில் சீரிழிந்து காணப்பட்டன. இது கிழக்குத்திசையிலிருந்து இந்நோக்குருக்கள் வந்தன என்ப தைக் காட்டுவதாயிருந்தது. ஏனெனில் அது நல் கலங்களில் புகுத் தப்பட்டதற்குச் சான்றுகளைக் கண்டறிந்துளோமாதலின். அணிவரி மிக்க நிறைவுள்ளதாயிருந்த ஒரு குள்ளிப்பாண்டத்தில் ஓர் எருதும் பமூவும் உருவகிக்கப்பட்டிருந்தன; இதுவே சாதாரண வழக்கா யிருந்திருக்கலாம்.
வண்ணம் தீட்டும் வினை நுண்மை முழுவதும் கறுப்பிலேயே அமைந்தது. நெகிழ்வுடைய தூரிகை இதற்குப் பயன்பட்டது. ஈனை யொன்அறுள் விலங்குகளின் உட்பகுதி தடித்த கோடுகளால் அல்லது

Page 70
Igooooo1.gio-lingslos) șiŋɛŋɛsʊgi olloning#fi) qoysɛŋassșųısıļo@ z qızın
 

வேளாண் சமுதாயங்கள் 19
அழகிய வடிவான குடங்கிய துல்லிய குறுக்குக் கீறுகளால் நிரப்பப் பட்டிருக்கும். கண் எப்பொழுதும் மிகைப்படுத்தப்பட்டு, வட்டத் தட்டைச் சுற்றியமைந்த ஒரு வெள்ளைச் சக்கரமாகக் கீறப்பட்டிருக் கும் ; உடல் விசித்திரமான முறையில் நீட்டப்பெற்றிருக்கும். ஆயின் கால்களும் குளம்புகளும் மெய்ம்மை பட விவரமாக வரையப்பட்டி ருக்கும். எனினும் மிகச் சீரிழிந்த வடிவங்களில், உடல்கள் நீட்டப் பெருது கோளவடிவினவாக அமையும்; அப்போது இயல்பான விவ சங்கள் மறைந்து போய்விடுகின்றன. இங்குள நல்லினங்கள், மேற்கிந் திய வரலாற்று முன்னர்ப் பண்பாடுகள் எங்கணும் காணப்படும் வகைக்குறியான கிமிலுடைய வடிவமே (Bos Indicus). பலகாலும் கோளேச் சித்திரங்களில் உள்ள நல்லினங்களோடு சேர்ந்து காணப் படும் வெள்ளாடுகள் மிகப் பாணிப்படுத்தப்பட்டிருந்தன ; இதனல் இவை வளைந்து பின்னுேக்கிய கொம்புகளையுடைய கறுத்த கலைமான் களையோ மலையாடுகளையோ ஒத்த முறையில் உருவகிப்பனவாயிருக்க லாம். சில வேளைகளில் மீன்கள் தட்டையான தட்டுக்களில் ஒடியாப் பட்டை போன்ற ஒரு கோலத்தில் அமைக்கப்பெற்றிருக்கும் ; இதில் இவை ஒரு வட்ட வலயத்துள் தலையொடு வால் சேர்ந்த முறையில் ஒன்றையொன்று பின்பற்றுவனவா யமைந்திருக்கும். சாதாரண மான வகையிலகப்படாத பூனையினங்கள் நகங்கொண்ட பாதங்கள் உடையனவாயிருந்தன; ஆயின் வேறு சிறப்பமிசங்களைக் காண முடியவில்லை. தலைகளில் செவிகளும், நல்லினங்களுக்கிருந்தவை போன்ற பெரிய வட்டக் கண்களும் இருந்தன. மரநோக்குருக்களில் பல வடிவங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. சில அாப்பாவுடன் கொண்ட தொடர்புகளால் மாற்றுருக் கொண்டிருந்தன. மட்கலம் ஒன்றின் துண்டொன்றில் காணப்பெற்ற பறவைகள் அரப்பாவி லிருந்து பெறப்பட்டவை என்பது உறுதியாய்ப் புலப்பட்டது.
மேற்கூறிய நோக்குருக்களுடன் சேர்ந்து பயன்படுத்தப்பட்டதும் தனியாகப் பயன்படுத்தப்பட்டதுமான கேத்திர கணித அணிவேலை பல்வகைப்பட்டதாயிருந்தது; இது அபூர்வமாகவே பொட்டிப்புக் களிலிருந்தது; ஆயின் சாதாரணமாக வலயங்களில் அமைக்கப்பெற் றிருந்தது. கிடைத்தளக்கோடுகளிடை அலைக்கீற்றுப் பட்டை இங்கு இயல்பாயிருந்தது. இது சிலவேளைகளில் கடத்தின் உடலில் மேலெழுமுறையில் இடப்பெற்ற இழைமேல் புடைப்புமுறையில் செய்

Page 71
120 மேற்கிந்திய வெண்கல ஊழி
யப்பட்டிருக்கும். கூரோடு கூரான இரட்டை முக்கோணங்கள் சேர்ந்து அபூர்வமான சதுரவெளிக் கோலங்களை யமைத்தன. கீறிட்ட முக்கோணங்களும் வைரங்களும் திண்ம முக்கோணங்களில் அடியிலிருந்து நுனிவரை கூரிய கோடுகளும் பெருவழக்கிலிருந்தன. பதக்கக் கொளுவிகளின் சங்கிலி இன்னுெரு கோலமாயமைந்தது. ஓர் அண்டத்துள்ளோ வட்டத்துள்ளோ கண்வடிவ அல்லது சிக்மா வடிவ நோக்குருக்களும் சாதாரணமாயமைந்திருந்தன. சிலவேளை களில் பாண்டங்களின் முக்கிய அலங்கார வலயத்திற்கு மேலும் கீழும் செவ்வண்ணம் அகண்ட கிடைத்தளப்பட்டைகள் வடிவில் பயன்படுத்தப்பட்டது.
சாகி தம்பிலுள்ள வாழ்தலப்படைகளிலிருந்து பெறப்பெற்ற ஒரு துண்டம் நேர்க்கோடுகளிலும் வளைகோடுகளிலும் அமைந்த ஆழ்ந்த வெட்டுக்கள் கொண்ட வன்மையான ஒரு நரைக் கலத்தின் பகுதியா யிருந்தது; இது பின்னர் எம்மால் விவரிக்கப்படும் கற்பாண்டங் களைப்போலமைக்கப்பெற்ற ஒரு தனிவகை மட்கலத்திற்குரியதாகும். இத்தகைய துண்டுகள் பலுக்கித்தானிலிருந்தும், பேசியாவிலும் சிஸ்சனிலும் இருக்கும் அயற்புலங்களிலிருந்தும் பெறப்பட்டன. சாகிதம்ப் வாழ்தலப்படைகள் குள்ளிப் பண்பாட்டிற்குரியன; அத்தலத்திலுள்ள இடுகாட்டிற்கு முன்னையன.
குள்ளிமட்கலம் பற்றிய விவரங்களை முடிக்குமுன்னர், பலுக்கித் தானின் மேற்கெல்லைக்கப்பால், ஆதலின் வரலாற்று முன்னர் இந்தி யாவை மட்டும் ஆசாயும் இந்நூலின் அடக்கப் பொருளுக்கமையாத, இரு தலங்கள் பற்றியேனும் குறிப்பிடவேண்டும். ஏனெனில் அவை பார்சின் வண்ணக் கலங்களின் பழைய மரபும், பொதுவாகப் பேசி யக் கலங்களின் மரபும், குள்ளிக்கலங்களின் மரபும் கலந்து மயங்கிய தற்கு உறுதியான சான்றினை நல்குவனவாயுள்ளன. பேசிய மக்கி ாானிலுள்ள பம்பூர்ப் பிரதேசத்தில், இழைகளுக்கிடையமைந்த உயர் அலைப்பட்டைகள், பாணிப்படுத்திய கலைமான்கள் மலையாடுகள் கொண்ட் நிரைகள், மரநோக்குருக்கள், இடைக்கிடை இயற்கையோ டியைந்த பெருவளவு விலங்கு முதலிய சிறப்பமிசங்கள் கொண்ட பாண்டங்கள் காணப்படும் இடுகாடுகளும் குடியிருப்புத்தலங்களும் உள, சிஸ்ரனிலும் இத்தகைய குடியிருப்புக்கள் உள. இவை குள்ளிக் கலங்களை நினைவூட்டுவனவாய் அதனல் கருத்துக்கள் பரிமாறப்

வேளாண் சமுதாயங்கள் 2.
பட்டன என்பதையும், சிலவேளைகளில் மஸ்கை கொல்வார்ப் பகுதிக் கும் மிக்க மேற்குப் புலத்திலிருந்த புலத்திற்குமிடையே மக்களும் இடமாறியமைந்தனர் என்பதையும் தெரிவிப்பனவாயுள்ளன. ஏலவே எடுத்துக்கூறிய கற்பாண்டங்களும் அவற்றைப் பின்பற்றியெழுந்த மட்கல மாதிரிகளும் இவ்விரு பகுதிகளுக்குமிடையிருந்த இன்னு மொரு பிணைப்பைக் காட்டும். இவற்றைப் பின்வரும் ஒரு பகுதியில் ஆராய்ந்துள்ளோம். பம்பூரிற் கண்மையிலுள்ள குராப் இடுகாட்டி லிருந்து பெற்ற உயர்புயமும் எளிய துலக்கமான சிவப்புக் களியும் கொண்டசில புறநடையான பாண்டங்கள் மெகியிலுள்ள இடுகாட்டி லுள்ள சிலவற்றேடு நேரொத்தவை. இவ்விரண்டிடங்களிலும் இவை அரப்பா மக்களிலிருந்தும் இங்கு புகுந்த செல்கல மரபுகளினலான வையாயிருக்கலாம்.
குள்ளிப்பண்பாட்டினது மிக்க கவற்சியும் கவர்ச்சியுமானதும், நாம் ஆய்ந்த மற்றைப் புலத்தொகுதிகளினின்றும் அதனைத் தனித் தெடுத்துக் காட்டுவதுமான அமிசம் களிமண்ணில் சுட்டமைத்த பெண்களின் சிற்றுருவங்களும் நல்லினங்களின் சிற்றுருவங்களு மாம். ஆரம்பத்திலேயே இச்சிற்றுருவங்களின் பயனையும் நோக்கை யும்பற்றி நாம் ஒன்றுமறியோம் என்று சொல்லவேண்டும். சில இடங்களில் இவற்றை விளையாட்டுப் பொருள்கள் எனக் கொள்ளல் வேண்டும்; ஆயின் பெண் சிற்றுருவங்களை விட்டுத்திருமனைகளின் தெய்வங்களெனக் கொள்ளுதற்கு இடமுண்டு. இத்தகைய மண் ணுருவங்கள் அடியார் காணிக்கைப் பொருள்களாகவும் கிராமத் திருக்கோயில்களில் அமைந்த தெய்வங்களாகவும் இப்பொழுதும் பயில்விலுள்ள இந்து சமயத்தில் காணப்படுகின்றன. இவ் இந்து சமயத்தின் மூலாதாரம் வரலாற்றுமுன்னர்த் தொன்மைக்குச் செல் கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தக்கணத்தில், ஒரு கிராமமும் அயலில் இல்லா ஒரு இடத்தில், ஒருமுறை, பாறைத் தட்டொன்றில் பத்துப் பதினைந்து மண்ணுலாய குதிரைகள் யானே களின் உருவங்களைக் கொண்டிருந்த ஒரு திருமனையை நான் கண் டேன். இப்பாறையின் மேற்பரப்பில் காணப்பட்ட பசைத்தன்மை புடைய பலிப்பொருள்களைக் கவனியாது விட்டால் இவ்வுருவங் கனே இதை ஒரு திவ்விய தலமாக்கப் போதியனவாயிருந்தன.

Page 72
22 மேற்கிந்திய வெண்கல ஊழி
குள்ளிச் சிற்றுருவங்கள் களிமண்ணுலானவை; விலங்குகள் வண்ணந்தீட்டப்பெற்றவை ; பெண்கள் தீட்டப்பெறவில்லை; ஆயின் பெண்ணுருவங்கள் விலங்குகளிலும் பார்க்க நல்விவரமான முறை யில் உருவாக்கப்பெற்றிருந்தன. கலங்கள் பொதுவாக மென்சிவட் புக்கபில நிறமாயிருந்தன; சிலவேளைகளில் முழுவதும் வெள்ளையா கவே இருந்தன.
நல்லினச் சிற்றுருக்கள் மிகப் பெருவளவில் காணப்பட்டன; உதாரணமாக, ஸ்ரீன் கிண்டிய ஒதுக்கமான எல்லேக்குள் 66 காணப் பட்டன , சாகிதம்பில் மிகக் கீழான வாழ்தலக்களத்தில் ஓர் ஒதுக்க மான இடத்தில் 85 இற்குக் குறையாமல் காணப்பட்டன; இவை விளையாட்டுப் பொருள்கள் கடைச்சரக்குகள் என்பதிலும் பார்க்க திருமனை ஒன்றில் ஈண்டிய காணிக்கைகள் போலக் காணப்பட்டன. உருவங்கள் 3 இலிருந்து 4 அங். வரை நீண்டிருந்தன. திமில் கொண்ட நல்லினங்களின் இயல்பான அமிசங்கள் போதிய முறை யில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. கண்களுள் வண்ணந்தீட்டப் பெற்றிருந்தது; இன்னும் உடலிற்குக் குறுக்காக நிலைக்குத்துக்கோடு கள் கீறப்பட்டிருந்தன ; தோள்களிலும் முன்னங்கால்களிலும் குறுக்கு முறையில் சிறு கோடுகள் போடப்பட்டிருந்தன (உரு. 8). இவ்வெளிவேலை நுந்தராக்கடங்களில் விலங்குகள் வண்ணந்தீட்டப் பெற்றவாற்றினை நினைப்பூட்டுவதாக இருந்தது என்பதை நாம் ஏலவே கண்டோம். இவ்வணிவேலை ஒருவேளை சிற்றுருவிற்குரிய தனி அலங்காரமாயிருக்கலாம்; அல்லது, இன்றும் நசைவெள்ளை பிராமனி எருதுகளை விழாக்காலங்களில் அலங்கரித்து நிற்கும் கண்கவரும் காவிப்புள்ளிகள் கோடுகள் போன்றவற்றைக் கொண்டு, உண்மை விலங்குகளுக்கு வண்ணந்தீட்டும் வரலாற்று முன்னர்க் காலத்திலிருந்த ஒரு வழக்கினைச் சுட்டுகிறதாயிருக்கலாம். மென் டாம்ப் என்னும் ஒரு தலத்திலிருந்து ஓர் எருத்துச் சிற்றுரு எடுக் கப்பட்டது; இதன் பாரித்த பாணிப்படுத்திய கால்களில் சில்லச்சு களுக்காகத் துளைகள் 'போடப்ப்ட்டிருந்தன ; வேண்டியவாறு இழுக்க ஓரிழை போடுவதற்காகத் திமிலில் ஒரு துளையும் போடப் பட்டிருந்தது. மற்றைத் தலங்களில் மண் சில்லுகளும் காணப்பட் டன. இவ்விடத்தில் இது ஒரு குழந்தையின் விளையாட்டுப் பொருள் என்பது இலகுவிற் புலப்படும். இவ்விடத்தில் மெகியில் கண்டெடுக்

123
வேளாண் சமுதாயங்கள்
கப்பட்ட ஒரு கடத்தின் விளிம்பில் இருந்த ஒரு நாயின் சிறுமாதிரி யுருவத்தைப் பற்றியும் நாம் குறிப்பிடுதல் வேண்டும். இன்னும் சில இடங்களில் மாதிரிப் பறவையுருவங்களும் இருந்தன. இவை பெரும்பாலும் உள்ளே கோதாகவும் வாலில் ஒரு துளையும் கொண் டிருந்தன. இத்துளையை நன்முறையில் வாயில் வைத்து ஊதினல் ஆச்சரியப்படத்தக்க ஒரு பெரிய அலறும் ஓசை எழும். இதை
戴
i
படம் 8 குள்ளி சிற்றுருக்களும் நுங்தரா வனேபொருள்களும்.
நான் 1942 இல் ஒரு நாள் மத்திய ஆசிய அரும்பொருளகத்தில் எனக்கே (இன்னும் அங்கிருந்த பணியாளர்க்குமே) வியப்புத்தரும் வகையில் கண்டறிந்தேன். ஆயின் இந்தப் பறவை ஊதிகள் அரப் பாப் பண்பாட்டில் மிகப் பொதுவான வழக்கில் இருந்தன. எனவே இவை குள்ளித்தலங்களில் காணப்பட்ட வாற்றைக் காண்பதற்கு அவ்விடத்தையே நாம் நோக்கவேண்டும். பெண் சிற்றுருவங்கள் நல்லினச் சிற்றுருவங்களிலும் தொகையில் குறைந்தனவாயினும் குள்ளிப் பண்பாட்டுத் தலங்களில் பரந்து காணப்படுகின்றன;

Page 73
24 மேற்கிந்திய வெண்கல ஊழி
இவை மிகவும் கவற்சியளிப்பனவையாயுமுள்ளன (உரு 9). சிறிது வளைந்த தட்டை அடிப்பீடத்தில் இவை இடையுடன் முடிவடை கின்றன; கைகள் இடுப்பில் வைத்தபடி இருந்தன ; ஓரிடத்தில்
படம் 9 பெண்கள் சிற்றுருக்கள், குள்ளிப்பண்பாடு.
 

வேளாண் சமுதாயங்கள் 25
மட்டும் இவை முலைகட்குமேலாக எழுந்திருந்தன. முகத்தை இயற்கையாகக் காட்ட முயற்சி எடுக்கப்படவில்லை; இது களிமண் ணில் கிள்ளி விசித்திரமான ஒரு கழுகின் முகவெட்டை நிகர்த்த தாக ஆக்கப்பட்டிருந்தது. பயந்த ஒரு பெட்டைக் கோழியை நிகர்த்த ஒரு கேலியுருவமாக இது அமைந்தது. இதன் கண்கள், நடுவில் துளைத்த சிறு குண்டுகளைப் பதித்தாக்கப்பெற்றிருந்தன. வாய்க்கு நிகர்த்ததொன்றும் இதில் இருக்கவில்லை. பல சிற்றுருவங் களிலும் முலைகள் காட்டப்பட்டிருந்தன. ஆயின் தாய்மைப் பண் பைச் சுட்டக்கூடிய மிகைப்படுத்தல் அங்கிருக்கவில்லை. பல உதா ரணங்களில் இச்சிற்றுருவங்கள் பாரிய மணி மாலைகளைத் தாங்கி நிற்பதுபோல் காட்டப்பட்டபடியால் முலைகள் சுட்டிக் காட்டப்பட வில்லை. ஆயின் சிற்றுருவம் ஒன்று அதன் கைகளில் இரு குழந்தை களைத் தாங்கி நிற்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வுருக்களின் முகங்கள் தெளிவுறக் காட்டப்படவில்லையெனி னும், அவற்றின் தலையலங்காரம் ஆபரணங்கள் முதலியவற்றை உருவகிப்பதில் நற்கவனம் எடுக்கப்பட்டது. இந்த முரட்டுத்தன மான களிமண் மாதிரியிலிருந்து குள்ளிக் கன்னி ஒருத்தி நன்கலங் கரிக்கப்பெறின் எப்படியிருந்திருப்பாளென நாம் எண்ணிப் பார்க்க லாம். அவளின் முன்மயிர் முன்பக்கமாக உயர் சுருள்குவியலாக அமைந்தது. பின்விழாதபடி நெற்றிக்கு மேலாக இருந்த ஒரு நெற் றிக் கச்சால் அது பிணிக்கப்பட்டிருந்தது. தேசத்தின் பெரும்பகுதி பாரிய குடுமியாகச் சுற்றி முடிக்கப்பட்டுக் கழுத்தின் பிடரில் தங்கி யிருந்தது. இதுவே நியமமான பாணியாக இருந்தது. ஆயினும் இரு சிற்றுருவங்களில் இது நீண்டமயிர்ப்பின்னல்களாக தோள்முன்னர் கிடந்தன. காதுகளின் மேல் கூம்புருவ அணிகள் இருந்தன (இத்த ബbtL அணிகள் அப்பா நகர்களிலும் காணப்பட்டன). கழுக்தைச் சுற்றி சிக்கலான முறையிலமைந்த மணிவரிசை ஒன்றிருந்தது. மிக விரிவாக இருந்த வகைகளில் இது ஓர் அட்டியலில் தொடங்குகிறது. அட்டியல் பெருமணிகளாலாயதாய் நேரே நாடியோடு ஒட்டி நின்றது. இதன்பின் சிறுமணிகளாலாய மூன்று வரிசைக் கழுத்தணி கள் உள. இவற்றுள் கீழானது அண்டவடிவத் தொங்கட்டான்களைக் கொண்டிருந்தது. இத்தொங்கட்டான்கள் கெளரிகளாக இருக்க லாம். இவற்றிற்குக் கீழாகவும் இடைவரைக்கும் நீண்ட மணிச் சங்

Page 74
26 மேற்கிந்திய வெண்கல ஊழி
கிலிகள் தொங்கின; இவை ஒவ்வொன்றினடுவிலும் ஒரு பதக்க மிருந்தது.
அணிகலன்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. ஏனெனில் இந்தியக் கன்னியர் இன்றும் மிக விரும்பும் காப்புக்களை இக்குள்ளி உருவங் களின் மணிக்கட்டுக்களிலும் புயங்களிலும் நாம் காணலாம். காப் புக்களில் பல ஒவ்வொரு மணிக்கட்டிலும் காட்டப்பட்டுள்ளன. ஆயின் இடக்கையில் மட்டுமே முழங்கையடியிலும் மேலாகவும் காப் புக்கள் இருந்தன. இது இக்கை வெறுங்கையாக இருக்குமாறு சேலை அணியப்பட்டது என்பதைச் சுட்டுவதாயுள்ளது. ஏனெனில் இவ்வுரு வங்களிலிருந்து சேலை அணியப்பட்டதென்பதற்கு வேறு நேர்முக மறைமுகச் சான்று ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும், பரும்படியாகவே இவ்வுருவங்கள் மாதிரியெடுக்கப்பட்டவையாயி ணும் வரலாற்று முன்னர்ப் பலுக்கித்தானிலிருந்த மக்களைப்பற்றி மிகக் கவர்ச்சிகரமான ஒரு சித்திரத்தை நமக்களிக்கின்றன. இன் றேல் இவர் கதையை நமக்கு எடுத்துக் காட்டும் கடச்சில்லிகள் சிதைவுகள் முதலியவற்றின் பின்னல் இவர் நிழலுருவமாயமைந்த தொல்பொருளியல் அருவுருவங்களாகவே அமைந்திருப்பர். எனவே இந்தக் களிமண் சிற்றுருவங்களை ஆய்ந்தபின் குள்ளிப் பெண்டிசை நேருக்கு நேராக எதிருற்றவராகின்ருேம். பின்னர் அரப்பாப் பண் பாட்டைப் பற்றி ஆயும்போது பிறநகர் ஒன்றிலிருக்கும் குள்ளிக் கன்னி ஒருத்தியை எதிருறுகின்ருேம் என நினைக்கின்றேன்.
குள்ளிப் பண்பாட்டின் மண்ணுலாய விளையாட்டுப் பொருள்கள் சிற்றுருவங்களைப் பற்றிய ஆய்வை முடிக்குமுன், நாம் இன்னு மொரு முக்கிய படிவத்தைப் பற்றிக் கூறவேண்டும். இதை அடி யார் காணிக்கை என்று கொள்வதிலும் விளையாட்டுப் பொருள் எனக் கொள்ளல் பொருத்தமுடையது. ஒரு தலத்தில் சக்கசத்தி லமைந்த எருதொன்றை நாம் கண்டோம் என முன்னர்க் கூறப் பட்டது. இவ்வாறு நகரக்கூடிய படிவங்களுக்குக் களிமண் சக் கரங்கள் பல காணப்பட்டன. மெகி, சாகி தம்ப் ஆகிய இடங்களி லும் மண்ணியல் வண்டிகளின் சிறுதுண்டுகள் காணப்பட்டன. அாப்பாப் பண்பாட்டில் மண்வண்டிகள் மிகச் சாதாரணமாகக் காணப்பட்டன. இப்பண்பாட்டின் தலங்கள் ஒவ்வொன்றிலுமே
இவற்றின் துண்டங்கள் பல்வகைப்பட்ட சிற்றளவுகளில் காணப்

வேளாண் சமுதாயங்கள் 27
பட்டன். எனவே சாகி தம்ப், மெகி ஆகிய இடங்களில் இவை காணப்படுவதிலிருந்து இவை அரப்பாவிலிருந்து இறக்குமதியாக் கப்பட்டன என்று கொள்ளலாம். சாகி தம்ப் உடைசலை உண்மை யில் பெருவளவில் அரப்பா வகையினதென்றே கொள்ளலாம். இதற்கு நல் முறையிலொப்பானவை பல சானுதாரோவில் உள. மெகியிலிருந்து பெற்றது சாதாரண வகைப் பண்பில் குறைந்தது ஆயினும், முழுமையையும் நோக்குமிடத்து குள்ளிப் பண்பாட்டி அலுள்ள வண்டிகள் அப் பண்பாட்டின் இன்றியமையாப் பகுதியா யமைந்தனவென்றே சொல்லல் முடியாது; இவை மஸ்கை, மக்கி ரான் பிரதேசங்களிலிருந்த அரப்பா வணிகருக்குரியவையாயிருக் கலாம். மலைப்புலமாய பலுக்கித்தானிலுள்ள வேளாண் மக்களுக்கு இந்தப் பள்ளத்தாக்கிலுள்ளவர்களிலும் பார்க்க வண்டிகள் பயன் குறைந்தனவாயிருக்குமன்ருே.
மென்கல்லில் இருந்து குடைந்தெடுக்கப்பட்ட மிக முக்கிய பாண் டத்தொகுதிகள் மெகியில் கிடைக்கப் பெற்றன; இவை கிழக்கி லுள்ள அரப்பாப் பண்பாட்டுடன் மட்டுமன்றி மேற்கிலுள்ள மெசப் பொற்றேமியாவுடனும் வியக்கத்தக்க தொடர்பு கொண்டவையா யிருந்தன என்பதை நாம் பின்னர்க் காண்போம் (உரு 10). இங்கு பல்வகைக் கலங்கள் உருவகிக்கப்பட்டிருந்தன. குறுக்கே 2 இலி ருந்து 3 அங். நீளமுள்ளனவும் சில அங்குல தாழ்ப்பமுமுள்ளனவு :மான சிறு உருளைக் கடங்கள் , 4 அங். விட்டமுடையதாய் நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டதுமான பெரிய தடமொன்று ; பிறி தொன்று நான்கு அறைகொண்டது, ஆயின் சதுரமானது ; சில எளிய சின்னங்கள்; இவற்றுள் ஒன்று முடிவுருதது. மிக விரிவான முறையிலமைந்த தடங்கள், அழகுபெறச் செதுக்கிய செவ்வான் கோலங்கள் கீறிட்ட முக்கோணக் கோலங்கள் ஆகியவற்ருல் அணி செய்யப்பட்டிருந்தன. இவை, புதிய ஏற்பாட்டில், தைலம் கொண் டிருந்த வெண்கல்பெட்டியைப் போல் கண் மை அல்லது யாதோ ஒருவகைத் தைலம்போன்ற அலங்காாப் பொருள் கொண்டிருந்தன வாயிருக்கலாம். மெகியிலிருந்த இக்கடங்களைப்போன்றவை பம்பூர், சிஸ்ான் ஆகியவற்றிற் கண்மையிலமைந்த தலங்களில் காணப்படு கின்றன ; இத்தலங்களில் உள்ள மட்கலவகைகள் குள்ளித் தொடர்பு கள் கொண்டிருந்தன என்று எலவே குறிப்பிட்டுள்ளோம். இவ்வீர்

Page 75
128 மேற்கிந்திய வெண்கல ஊழி
இடங்களிலும் கற்கலத்தைப் பின்பற்றியமைந்த வல்நரை மட்கலங் களும் காணப்பட்டன; இவை சாகி தம்ப் இலுள்ள உடைசலை நினைப்பூட்டுவனவாயுள. குள்ளிப்பண்பாடு மெசப்பொற்றேமியா வோடு கொண்டுள்ள தொடர்புகளை ஆராயும்போது இக்கற்கடங்
கள் எவ்வளவு முக்கியமானவை என்பதைக் காண்போம். மொகஞ்
படம் 10. உட்குழித்த கற்பாண்டங்கள்.
/ー
சோதாரோவில் அடையப் பெறக்கூடிய மிக்க முன்னைய குடி யிருப்பு மட்டத்தில் வட்டப் பாண்டமொன்றின் துண்டமொன்று காணப்பட்டது ; பிந்திய ஒரு வாழ்தலமட்டத்தில் சதுரக் கல மொன்றின் பகுதியொன்று காணப்பட்டது. முழுமையையும் நோக்குமிடத்து, இதுவரை நாம் ஆய்ந்த பொருள்களுள் இப்
 

வேளாண் சமுதாயங்கள் 29
பாண்டங்கள் மேற்கிற்கும் கிழக்கிற்கும், அதாவது, சிரியாவின் எல்லேயிலிருந்து இந்துநதிவரை, இருந்த தொடர்புகளுள் மிகக் கவர்ச்சிகரமானவையாகும்.
ஈமச் சடங்கில் இடப்பட்ட பிரேதப் பொருள்களுள் மெகி இடு காட்டில் காணப்பட்டவை ஆச்சரியப்படத்தக்க முறையில் செம் புப் பொருள்கள் வெண்கலப் பொருள்களில் மிகுந்தவையாய்க் காணப்பட்டன; ஆயின் இவை எரியூட்டப்பெற்றிருக்கவில்லை. இவற்றுள் மிகச் சிறந்த பொருள் ஒரு செப்புக் கண்ணுடியாகும். இது 5 அங். விட்டங்கொண்டிருந்தது; இதற்குச் செம்பாலான ஒரு கைப்பிடியும் இருந்தது. இக்கைப்பிடி மண் சிற்றுருவங்களைப் போல் முலைகளும் மரபு முறையிலமைந்த இடுப்பிலமைந்த கைக ளும் கொண்ட பாணிப்படுத்தப் பெற்ற ஒரு பெண்ணுருவிலமைந் திருந்தது. இங்கு தலை ஆடி பார்ப்பார் நிழலினுல் அளிக்கப்படும் (உரு. 11). இதன் வியக்கத் தகுந்த நுட்பமும் உலோக வேலையின்
படம்11. வெண்கலக் கண்ணுடி, குள்ளிப் பண்பாடு.

Page 76
30 மேற்கிந்திய வெண்கல ஊழி
புனைபாடும், பண்டைய முழுக்கிழக்கு நாடுகள் யாவற்றிலுமிருந்த அலங்காரத் துணைப்பொருள்களுள், இந்த ஆடியை மிகத் தலை சிறந்ததாக்குகின்றன. மற்றெல்வகையிலும் உயர்ந்த அரப்பாப் பண்பாட்டில் இதையொத்த தொன்றுமில்லை. மனித உருவொன்று ஆடிக்கைப்பிடியாக அமைந்த வழக்கு எகித்தில் XVI குல முறையில் (கி.மு. 1570 வரையிலிருந்து) பழக்கமான ஒன்முயிருந்த தெனினும் மேற்காசியாவில் அறியப்படாத ஒன்முயிருந்தது. மெகி ஆடிக்கைப்பிடியினுருவத்திற்கும் அத்தலத்திலும் குள்ளிப் பண் பாட்டின் பிற தலங்களிலும் இருந்த மண் சிற்றுருவங்களுக்கும் இருந்த நெருங்கிய ஒற்றுமை அது ஓர் உள்ளூர்ப் பொருள் என்று நாம் கொள்ளும் நம்பிக்கையை வலியுறுத்துவதாயுள்ளது ; அல் லாமலும் அக்காலத்துப் பலுக்கித்தான் உலோக வேலையாளரின் படைப்புத்திறனுக்குப் புகழ்மிக்க சான்முகவும் உள்ளது. மெகி இடு காட்டில் இன்னுமொரு ஆடி காணப்பட்டது; இது 5 அங். குறுக் களவு கொண்டது; கைப்பிடியில்லாதது. இவ்வடிவம், உதாரணமாக இழத்துச் சூசாவிலிருந்த மிக்க முன்னைய இடுகாட்டிலும் மொகஞ் சோதாரோவிலும் காணப்பட்டவற்றைப்போல் எளிய வடிவம் கொண்டிருந்தது. மொகஞ்சோதாரோவில் கைப்பிடியுள்ள வகை களும் காணப்பட்டன. ஆயின் கைப்பிடிகள் தனிவகை வடிவும் அணிவேலைப்பாடும் இல்லாதவையாயிருந்தன.
மெகி இடுகாட்டில் ஒவ்வோர் ஆடியுடனென்முக இரண்டு செப்பூசி களும் காணப்பட்டன; இவ்வூசிகளும் ஒன்று தட்டையான தட்டு வடித்தலை கொண்டிருந்தது. மற்றையது சிறிய ஒரு வைடூரியத்தலை கொண்டிருந்தது. சிறிய செப்புக் காப்புக்கள், சிறியதொரு அகல் முதலியவற்றின் உடைசல்களும் மெகியில் காணப்பட்டன. இவ்வகல் பகுத்தாயப்பட்டபொழுது நிக்கல் சுவடுகள் காணப்பட்டன. குள்ளி யில் சிறிது வளைந்த தலையுடைய ஓர் ஊசியும் காணப்பட்டன.
இறுதியாகக் குள்ளிப் பண்பாடு இந்திய அமைப்பிலும் மேற்காசிய அமைப்பிலும் என்ன தாக்னத்தைக் கொள்கிறதென்று ஆராயுமுன் னர் அங்கு காணப்பட்ட சில சில்லறைப் பொருள்களையும் பற்றி நாம் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். குள்ளியிலுள்ள கல்லாலாய ஆட்டுக்கல்லும் குழவியும் அங்கு தானியச் செய்கை இருந்ததென் பதைக் காட்டுகின்றன. சாகிதம்ப், மசினெட்ாம் ஆகிய இடங்களி

வேளாண் சமுதாயங்கள் 3.
லுள்ள சேட்டு அலகுகள் மிகப் பழைய உருவங்களிலிருந்து வழி வந்தவை என்பதைக் காட்டுகின்றன. குள்ளியில் அகேற்று மணி களும் வைடூரிய மணிகளும் காணப்பட்டன. இத்தலத்தில் ஒரு விசித்திரமான கிரியை முறைத் தூணும் காணப்பட்டது. இது துலக்கிய கடுஞ் சிவப்புக் கல்லாலும் பல வண்ண வெள்ளைக் கற் களாலும் செய்யப்பட்டிருந்தது; இது 8 அங்குல உயரமும் அடியில் 4 அங்குல விட்டமும் கொண்டிருந்தது. மெகியில் கனவடிவ நரைச் சேட்டு நிறை ஒன்று, 0.85 அங்குல சதுரமும் 0.6 அங்குலத்தடிப்பும் கொண்டது, செவ்விதில் அரப்பா வகையை ஒத்தது, கண்டெடுக்கப் பட்டது. இது இறக்குமதி செய்யப்பட்டவொன்றென்பதற்குத் தெளி வான எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் தொடர்புகளை நோக்கும் போது பலுக்கித்தானத்தில் வணிகர் இருந்தனர் என்பதை இது நினைவூட்டுவதாயுள்ளது. மெகியிலும் சியாடாம்பிலும் மண் காப்பு கள் காணப்பட்டன , குள்ளியிலிருந்து என்புத்துண்டுகள் பெறப் பட்டன. மெகி இடுகாட்டில் புதைகுழிப் பொருள்களுடன் சேர்ந்து என்புக் குமிழ் ஒன்று காணப்பட்டது. இதில் சிலுவையுருக் கோலம் ஒன்று துளைக்கப்பட்டிருந்தது. குள்ளியில் ஒரு தனிப் பொற்றகட் த்ெ துண்டும் காணப்பட்டது என்று இறுதியில் கூறலாம்.
எங்களுக்குக் கிடைக்கக் கூடிய செய்திகளைக் கொண்டு குள்ளிப் பண்பாட்டை நாம் ஒப்பிட்டாய்வோமானல், நாம் செய்தியறிந்த சில குடியிருப்புக்கள் அம்றி-நல் பண்பாட்டின் குடியிருப்புக்களி லிருந்தும் எவ்வகையிலும் வேறுபட்டன அல்லவென்பதையும் அவ் வாறே மெசப்பொற்றேமியா, பேசியா ஆகிய இடங்களிலுள்ள கமத் தோர் சமுதாயங்களினின்றும் வேறுபட்டனவல்ல என்பதையும் நாம் காணலாம். அசப்பா அமிசம் அம்றி-நல்லிலும் பார்க்கக் குள்ளியில் மிகத் தெளிவாக உருவெடுத்துள்ளது; இங்கு இது நேர் இறக்கும்தியாக அமைந்துள்ளது. இச்சான்று தென்பலுக்கித்தானில் அரப்பா வணிகர் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. ஆயினும் உண்மையான அரப்பாக் குடியிருப்புக்கள் இருந்த இடங்களில் மிக இயல்பாயமைந்த சுட்டசெங்கல் கட்டிடச் சிற்பத்தின் சுவடொன் றேனும் இங்கிருக்கவில்லை. சுட்டெரித்த செங்கட்டிக் கட்டிடப் பகுதிகள் கொண்டிருந்த அரப்பா வணிகத் தலம் குறைந்தது ஒன் முகுதல் மக்கிசானில் இருந்திருக்க வேண்டுமென்பதை நாம் பின்

Page 77
32 மேற்கிந்திய வெண்கல ஊழி
னர்க் காண்போம். ஆயின் மெகியில் உள்ளூர் கடவண்ணப்பாணி மாற்றங்கள் காட்டும் தொடர்பைத் தவிர, அரப்பாவோடு கொண் டுள்ள தொடர்புகள் சாத்துக்களின் வரவாலும், நகரங்களில் சில வேளைகளில் வணிகர்கள் தங்கியமையாலும் ஏற்பட்ட தொடர்பு களேயாம். அதற்கு மேற்பட்டவையல்ல. வணிக முறைப் பண்ட மாற்றங்கள் ஏற்பட்டன என்பதற்கும் பலுக்கித்தான் குன்றுகளிலி ருந்து மனிதரும் பொருள்களும் இந்துவெளிக்குச் செல்லக்கூடிய தாயிருந்ததென்பதற்கும் நற்சான்றுளது.
உண்மையில் அரப்பாத் தொடர்புகள், இவ்விருவிடங்களிலு மிருந்த பண்பாடுகள் அண்ணளவில் ஒத்த காலத்தினவாயிருந்தன வென்பதற்குச் சான்முக உள்ளன. அரசிலைகள்போன்ற அரப்பா நோக்குருக்கள் உள்ளூர் தடங்களில் புகுந்தமையிலிருந்து, இத் தொடர்பு குள்ளித்தடவண்ணப் பாணி நன்கு வளர்ந்து ஒருவேளை உச்ச நிலையைக் கடந்தபின்தான் ஏற்பட்டதாயிருக்கலாமென்றும் அனுமானிக்கக் கூடியதாயுள்ளது. குள்ளிக்கட்டிடமட்டங்கள் மூன் அறும், இறுதிக் கட்டக்குடியிருப்பின் சிதைவுகளுள் அகழ்ந்தமைக்கப் பெற்ற இடுகாட்டிலும் முந்திய காலத்தவையென்பதற்குச் சாகிதம் பில் படையமைவியல் முறைச் சான்று ஒரளவிற்குள்ளது. இக்கட் டிடங்கள் அாப்பாவோடு ஒத்தகாலத்தின என்று ஒரு மண்வண்டி யின் உடைசல் துண்டொன்றின் சான்று கொண்டு கொள்ளப் பட்டன. இத்துண்டைப் பற்றி ஏலவே குறிப்பிட்டுள்ளோம். இந்தச் சாகிதம்ப் இடுகாட்டின் காலம் தெளிவாக வரையறை செய்யப் பட்டுள்ளது. இதைப்பின்னர் நாம் காண்போம். இது இந்துப் பள்ளத்தாக்கில் அரப்பாப் பண்பாட்டின் இறுதிக்காலத்தோடு ஒத்த காலத்தது. எனவே குள்ளிப் பண்பாட்டின் காலத்திற்குரிய மற் றைச் சான்றேடு நன்கு பொருந்துவதாயுள்ளது.
இன்னும் மட்கலங்களில் உள்ள வண்ணநோக்குருக்களும் பாணி யும் மாறுபடுமுறையில் பரிமாறப்பட்டதற்குரிய சான்றை நாம் சிந்தில் காணலாம். கச் பள்ளத்தாக்கில் உள்ள ரொகல்-சோ-குண் டிலும் மஞ்சார் வாவிக்கண்மையிலுள்ள காசிசாவிலும் குள்ளிக்கலங் களல்லாக் கடங்களில் குள்ளிப்பாணியில் வண்ணித்த விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு கூறியவற்றுள் முதல் தலத்திலுள்ளவை அம்றிதல் தொகுதி வகையைச் சார்ந்தவை போலுள; காசிசாவி

வேளாண் சமுதாயங்கள் 133
அலுள்ள பாண்டங்கள் அாப்பாப் பண்பாட்டின் வண்ணக் கலங்களின் வகையவான துலக்கமான சிவப்புக் களிப் பிற்களத்தைக் கொண் டிருந்தன. இத்தலத்தில் உள்ள படையமைவியலிலிருந்து அறியக் கிடப்பது என்னவென்முல் அம்றிக் கலத்துடனியைந்த குடியிருப் பொன்றின்பின் சிவப்பில் கருமைகொண்ட கலத்தை ஆக்கிய அல்லது பயன்படுத்திய ஒரு குடியிருப்புத் தோன்றியது என்பதா கும்; இப்பிந்திய குடியிருப்பின் கலம் சிலவேளைகளில் குள்ளிவகை விலங்குகளுடனும் கூர் வளார் கொண்ட மரங்களுடனும் இருந்தன. இன்னும் சிலவேளைகளில் மொகஞ்சோதாரோ, அரப்பா ஆகிய இடங்களுக்கியல்பான நோக்குருக்களையும் கொண்டிருந்தன. இவ் வாறு கடவண்ணக் காரரிடை நேர்ந்த கொடுக்கல் வாங்கல்களி லிருந்து குள்ளியும் அரப்பாவும், ஓரளவிற்கு அடுத்தடுத்துச் செழிப்புற்று விளங்கின என்று காணலாம். மேலும் தென்பலுக் கித்தானில் காணப்பெற்றனவும் குள்ளிப் பண்பாடோடி யைந்தனவு மான கல்லணிக் கடங்களும் சிலவேளைகளில் இந்துநதிப் பள்ளத் தாக்கிற்கு இறக்குமதியாக்கப்பட்டன என்பதையும் ஏலவே கண் டோம்.
இம்மட்டோடும் அரப்பா குள்ளித் தொடர்புகள் நின்றுவிடவில்ல். அரப்பாக் கலையில் மிக வியக்கத்தக்கதான ஒருபொருள் வெண் கலத்தாலாய நடனப்பெண் ஒருத்தியின் உருவமே. இதைப்பற்றிப் பின்வரும் ஓர் அதிகாரத்தில் கூறுவோம். இங்கு கவர்ச்சிகரமான அமிசமென்னவெனில் இப்பெண்ணின் தலையலங்காரம் குள்ளிச் சிற் றுருக்களில் கண்டவகையைச் செவ்விதில் நிகர்க்கதா யிருந்த தென்பதாம். இங்கும் பாரிய மயிர்வடம் பிடரின் மேலாகச் சென் றது; குள்ளிப்பாணியைப் பின்பற்றி இவள் தன் வலக்கையில் சில வளையல்களே அணிந்திருந்தாள் ; ஆயின் இவள் இடக்கையோ மணிக்கட்டிலிருந்து முழங்கைக்கு மேலாகவும் காப்புகளால் நிரப் பப் பெற்றிருந்தது. பலுக்கிமலைக்குச் சென்று மீண்ட வணிகர் தம் வணிகப் பொருள்களுடன் பெண்டிரையும் கொண்டுவந்திருப்பர்.
இந்தியாவைவிட்டு நாம் அப்பால் மேற்காசியாவின் பண்டை நாகரிகங்களை நோக்குவோமானுல் குள்ளிப் பண்பாட்டிற்கும் இழம், மெசப்பொற்றேமியா ஆகிய நாடுகளுக்கும் உள்ள தெளிவாகத் துலங்கும் மிக முக்கிய ஒப்புமைகளை நாம் காணலாம் ; குள்ளிக் கடங்களில் காணும் விலங்குகளமைந்த நிலக்காட்சிகள் கொண்ட

Page 78
34 மேற்கிந்திய வெண்கல ஊழி
பட்டிகள், சுசா, குசிஸ்தான் ஆகிய இடங்களில் காணப்படும் பாணி களை மிக அண்ணியவாக ஒத்தவை. பக்தாத் பிரதேசத்திற்கண்மை யிலுள்ள தியலாவிலுள்ள கடங்களும் அத்தகையனவே. கறுப்புடன் ஒரு துலக்கமான சிவப்பு நிறம் இவற்றில் உபயோகிக்கப்பட்டதால் இவை செஞ்சிவப்புக் கலம் எனப் பெயர்பெற்றன (உரு. 12). இப் பாண்டங்களில் கூரிலை மாநிலக் காட்சியில் பெரிய விலங்குகள் நின் றன. இவற்றின் மேலும் கால்களிடையும் அமைந்த இடங்கள் சிற் அறுருவங்களால், வழக்கமாகப் பறவைகளின் உருவங்களால், நிரப்பப் பெற்றிருந்தன. எல்லாவிடங்களிலும் இவ்விலங்கு எருதாக இல்லை; நல்லினங்கள் தோன்றின; கரும் கலைமான்களும் வெள்ளாடுகளும்
படம் 12 ‘தரைத்தோற்றத்தில் விலங்குகள்." செங்கபிலக் கலத்து நோக்குருக்கள்.
இருந்தன. முசியனைச் சுற்றியமைந்த சுசாப் பிரதேசத்திலிருந்து பெற்ற மற்றைக் கடங்களில், குள்ளிப் பாணியில் அமைந்த சுருக் கெழுத்தாலான ‘ வெள்ளாடுகள் மலையாடுகளின் நீண்ட நிரைகள் இருந்தன. அண்மையில் சுசாவில் கண்டெடுக்கப்பெற்ற செஞ்சிவப் புக் கலங்களில் ஒரு கட்ம் ஒரு போர்த்தேர் கொண்டிருந்தது ; இத்தேர் குள்ளி வண்ணக் கடத்தோரின் பாணியை மிக நிகர்த்த ஒரு பாணியில் வரையப்பெற்ற ஓர் எருத்தால் இழுக்கப்படுவதா யிருந்தது. இதன்கண் முன்னேயதைப்போல் மிகைப்படுத்திய வட்ட வடிவினதாயிருந்தது. இவ்விரு மட்கலத்தொகுதிகளிலும் அமைப்
 

வேளாண் சமுதாயங்கள் 35.
பிலும் ஆர்விலும் இருந்த பொது உணர்ச்சியிலோ இன்னும் வினை நுண்மையில் ஒரளவிலிருந்த பொது உணர்ச்சியிலோ ஓர்வித ஐயமு மில்லை. மெசப்பொற்றேமியாவிலிருந்த மட்கலம் முன்னைக் குல முறைக் காலத்திற்குரியதெனச் செவ்விதில் (கி. மு. 2800 வரை) வரையறுக்கப்பட்டுள்ளது.
இத்தொடர்புகள் இவ்வளவுடன் நிற்கவில்லை. மெசப்பொற்றேமியா விலும் மாரியிலுள்ள சிரியா எல்லைக்குச் சிறிதப்பாலும் எட்டுப் பத்துக் கற்பாண்டங்கள் கண்டெடுக்கப் பெற்றன. (இவையும் முன் னைக் குலமுறையோடியைந்தவையே.) இவை தென் பலுக்கித்தானி லிருந்து கிடைத்தவற்றைச் செவ்விதில் ஒத்தவகையினவாயிருந் தன. இங்கு சில உதாரணங்களில் ஒப்புமை முற்முெருமையாகவே மாறிவிடுகிறது. ஊரிலுள்ள சுபத்தின் கல்லறையிலிருந்து இவ்வகுப் பைச் சேர்ந்த் ஒரு சிறிய கற்கோப்பை பெறப்பட்டது; இது மிக விரிவான செதுக்கணிவேலை கொண்டிருந்தது. இவ்வேலைப்பாடு அணியப்பெம் ஓர் நெசவாடையைப் பின்பற்றியமைக்கப்பட்டதா யிருக்கலாம். மக்கிரானில் டஸ்ற் நதியிலிருந்து பெற்ற ஒரு துண்டு செவ்விதில் இதை ஒத்திருந்தது. கூடைவேலையை நிகர்க்குமாறு செதுக்கப்பெற்ற மற்றைக் கோப்பைகள் மெசப்பொற்றேமியாவில் உள்ள கிஷ் இலும், இழத்தில் உள்ள சுசாவிலும் மொகஞ்சோதாரோ விலும் காணப்படுகின்றன. மேற்பரப்பில் செதுக்கப்பட்ட சாதாரண ஓர் உருவம் ஒரு நாணல் குடிசையாகும். உண்மை நாணல் குடிசை களில் கதவுகள் யன்னல்கள் மேல்நிலைகள் நாணற் கட்டுகளாலாக்கப் பெற்றிருக்கும்பொழுது உள்ளாங்கிச் சிறிது தொய்ந்திருக்கும். எனவே, இங்கும் அவை உருவகிக்கப்படும்போது மெய்ம்மை படத் தொய்ந்தவாறு செதுக்கப்பட்டிருந்தன. இந்த 'வீட்டுக்குண்டங் கள் சிஸ்ானிலும், பேசிய மக்கிரானிலுள்ள குராப்பிலும் காணப் பட்டன; முன்னைச் சுமர்க்குலமுறைக் காலத்து மாரி, கபசா, லகஷ், அடப் ஆகிய இடங்களிலும், இழத்தில் சுசாவிலும் காணப்படுகின் றன. இவையும் என்றும் முன்னைக்குலமுறைத் தொடர்புகளுட னேயே காணப்படுகின்றன. இங்கு நாம் மக்கிாானிலிருந்து மேற்கே ஏற்றுமதி செய்யப்பெற்ற கடங்களேயே ஆராய்கிறேம். இவை ஒரு வேளை ஆதியில் விசித்திசமான சரக்குக்களால் நறுமணம் பெற்ற வாசனைப் பொருள்களைக் கொண்டிருந்தனவாயிருக்கலாம். இவை

Page 79
36 மேற்கிந்திய வெண்கல ஊழி
முன்னைக் குலமுறைச் சுமர்களுக்கு அரியவையாய்க் தோன்றின. எனவே இவர்கள் பெரிய அரசக் கல்லறைகளில் அரசியரோடு சேர்த்துப் புதைக்கப்படக்கூடியவையென இந்தச் சிறிய செதுக்கிய பாண்டங்களைப் போற்றிப் பேணினர்.
இவ்வணிகம் எவ்வகையில் உருவாயது ? சுமெரியர் கப்பல்கள் (பருவப் பெயர்ச்சிக் காற்றுக்களின் இயல்பை ஒருவேளை வாய்ப் பாய்க் கொண்டு) டஸ்ற் நதியின் கழிமுகத்தில் துறை தங்கி வைடூரி யங்களையோ பொன்னையோ அளித்து அவற்றிற்கு மாற்முக நறும் மணம் நல்கும் நாகரிக நாைம்பச்சைக் கற்கடங்களைப் பெற்றிருக்க லாம். அல்லது ஊரின் துறைமேடைகளுக்கு பண்படாத மொழி பேசு பவரும் விசித்திரமான கடவுளரை வணங்குபவருமான வணிக மக் களின் கப்பல்கள் வந்தனவா ? இது இவ்வாறு நேர்ந்ததென்பதற் குச் சில சான்றுகள் உள ; பலுக்கி வணிகர் சுமரில் குடியேறித் தம் முள் அடங்கிய ஒரு சமுதாயமாகத் தம் உரிமைகள் பழக்கவழக்கங் களுடன் வாழ்ந்தனர் என்பது உண்மை. செஞ்சிவப்புக் கலமொன் றில் எருத்தை வணங்கும் ஒரு காட்சியுள்ளது. இச்சமயக் கிரியை சுமரில் வேறு ஓரிடத்திலும் உருவகிக்கப்பட்டிருக்கவில்லை. டியலாப் பிரதேசத்தில் உள்ள தெல் அகாப்பில் சுதீற்றைற் கோப்பை ஒன் அறுளது. இது உண்மையான சுமர்ப் பாணியில் செதுக்கப்பட்டுள் ளது. ஆயின் செதுக்கப்பட்ட பொருளோ திமிலுடைய பெரிய ஓர் எருதாகும். இது சுமர்க்கலைஞன் ஒருவனல் செதுக்கப்பட்டதா யினும் ஒருவித ஐயமுமின்றி இந்திய வகையினதாகவே தோன்று கிறது. இன்னும் ஊரில் ஓர் உருளை இலச்சினை உள்ளது. உருளை இலச் சினையைப் போல் சந்தேகத்திற்கிடமில்லாத சுமர்ப் பொருள் ஒன் றிருக்கமுடியாது. இதில் ஓர் எருதுண்டு. இவ்வெருத்தின் பெரிய வட்டக் கண் குள்ளிக்கலத்தில் உள்ள எருதுகளோடு இது கொண்ட ஒப்பையும் இந்தியக், கல்வெட்டுவான் ஒருவனின் கைத்திறனையும் எடுத்துக் காட்டுவதாயுள்ளது. இன்னும் சுசாவில் திமிலுடை எருதுகளின் களிமண் சிற்றுருக்கள் உள்ளன. திமிலுடை எருது (Bos indicus) அன்றும் இன்றுமுள்ள இந்துத்தானின் சமயத்தில் முக்கியமான ஒரு சின்னமாகும். சுசாவிலிருந்து பெற்ற செஞ்சிவப் புக் கலமும் குள்ளிக் கல வேலைப்பாட்டை ஒத்த வேலைப்பாட் டையே கொண்டிருந்தது.

வேளாண் சமுதாயங்கள் 137
மக்கிரான், பலுக்கித்தான் ஆகிய நாடுகளுடன் சுமர் கொண் டிருந்த வணிகத்திற்குரிய சான்றும் முன்னைக் குலமுறைக் காலத் தில் இழம், சுமர் ஆகிய பெரு நகர்களில் இந்திய வணிகர் இருந்த மையும் மிக முக்கியமான செய்திகளாகும். இத்தொடர்புகள் தென் பலுக்கித்தானத்தோடு இருந்ததன்றி இந்துப் பள்ளத்தாக்குடனே அல்லது அாப்பாப் பண்பாட்டுடனே அல்ல என்பது தெளிவு. இந்து நதியோடும் இரட்டை நதிகளோடும் நடைபெற்ற வணிகம் ஐந் நூறு ஆண்டுகளின் பின்னரே நடைபெற்றது என்பதைப் பின்னர்க் காண்போம். இங்கும் வணிகம் கடல்வழியினுலன்றித் தரைவழியில் நடைபெறவில்லை. ஏனெனில் பேசிய மக்கிாான் எல்லைக்குச் சிறிதப் பால் உள்ள பம்பூருக்கு மேற்குப் பக்கமாகத் தரைப்பகுதியில் குள்ளித் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. பேசியாவின் பார்சு மாகாணத்தை ஸ்ரீன் புலமாய்ந்தனரெனினும் அங்கு குள்ளிக் குடி யிருப்பிற்கோ வணிகத்திற்கோ உரிய அறிகுறியொன்னிறயும் அவர் காணவில்லை. ஆயின், அங்கு, வண்ணக் கலத்தல் ஐ-பகுன் பாணியை அடிப்படையாகக் கொண்ட நெடுநாள் நிலைநின்ற வண் னக் கலப்பாணியுடைய பண்பாடுகள் பல நூற்முண்டுகள் நிலைநின்ற தைக் கண்டார். பண்டைய இந்தியத் தொல்கதையொன்று சாதகக் கதைகளுள் இடம்பெற்றது, நல்ல ஒரு செய்தி கூறுவதாயுள்ளது. இந்தியாவிலிருந்து சில வணிகர் கடல்வழி பபிலோனிற்குச் சென் றனர் என்றும் பல அரிய பொருள்கள் கொண்டு வந்தனர் என்றும் அவற்றுள் மயிலொன்று இருந்ததென்றும் இது விரலால் நொடிக்கக் கத்தவும் கைகொட்ட ஆடவும் பழக்கப்பெற்றிருந்ததென்றும் இது மரக்கலத்தின் முற்பகுதியில் நின்று சிறகடித்து இனிய ஒலிபரப்பி நடனமாடியதென்றும் இக்கதை கூறுகிறது. இத்தகைய கதைகளில் வரலாற்று முன்னர் வணிகத்திற்குரிய விளக்கமிலா மரபுரைகள் பல அடங்கியுள. கி. மு. மூன்றும் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் மக் கிசானிலிருந்து சுமர் துறை மேடைகளுக்கி ைகாணப்பட்ட தந் தம், குரங்குகள், மயில்கள் கொண்டுவந்த வணிகரைப்பற்றியும், விசித்திரமான கற்கடங்களிலமைந்த அரிய தைலங்கள் பற்றியும், அன்னிய மொழியும் சமயப் பழக்க வழக்கங்களும் உடையவரைப்
பற்றியும் இக்கதைகளில் பல விவரங்கள் அடங்கியிருக்கலாம்.

Page 80
138 மேற்கிந்திய வெண்கல ஊழி
இப்பொழுது நாம் வட பலுக்கித்தானை நோக்க வேண்டும்; சிறப் பாக சோப்பள்ளத்தாக்கினையே நோக்க வேண்டும். இது குவெற்ரு விற்கும் போலன் கணவாயிற்கும் பின்னமைந்த மலைகளிலிருந்து வடகிழக்காகச் செல்கின்றது. இவ்விடத்திலும் போலன் கண வாய்க்கு வட மேற்காயமைந்த பிசின் லோராப் பிரதேசத்திலும் வரலாற்று முன்னர் வாழ் தலங்களுக்குரிய சான்றுகள் நல்கிய பல தெல்லுகள் காணப்பட்டன. இங்குள்ள தலங்கள் சிந்திலோ தென் பலுக்கித்தானிலோ உள்ள அளவு எண்ணிக்கை கொண்டனவல்ல. ஆயினும். இவை இங்கு ஒரு தொகுதிப் பண்பாடுகளிருந்தன என்பதற்குத் தெளிவான சான்றுகளை நல்குவன ; இப் பண்பாடுகள் நாம் விவரித்தனவற்றைப் பொது அம்சங்களில் ஒத்தவையாயினும், தென் பலுக்கித்தான் தலங்களுக்கு இயல்பான கபிலமஞ்சட் கலப் பண்பாடுகளைவிட, பேசியாவிலுள்ள செங்கலப் பண்பாடுகளுடன் இயைந்த புறம்பான தொகுதியின, என்று சொல்வதற்கு ஏற்ற வகையில் தெளிவான வேறுபாட்டமிசங்களைக் கொண்டிருந்தன. இவற்றையே நாம் சோப் பண்பாடுகள் என்கிருேம். இன்னும் புல வாய்வுகள் நடாத்தப்படின் இப்பண்பாடுகளின் புவியியல் எல்லைகள் விரிவுறல் கூடும். போலன் கணவாயின் மிக்க தென்பால் நல் ஆற்றின் முகம் வரை தென் திசையாக இவ்வெல்லை பசந்திருத்தல் கூடும்.
சோப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு தலத்தில் பிரிகேடியர் ரொஸ் அவர்கள் நற்புலவேலைகள் நடாத்தினர்; இங்கு ராணு குண்டை எனும் ஒரு தெல்லில் மனிதர் வாழ்தலம் பற்றிப் படையமைவியன் முறையிலமைந்த அரிய ஒரு கிரமத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த ஒழுங்கமைப்பின் அடிப்படையில் பிற இடத்து மேற்புலங் களில் காணப்பட்ட பொருள்களை நாம் கிரமப்படுத்தலாம். எனவே தென் பலுக்கித்தானிலும் பார்க்க, இங்கு பல்வேறு மட்கலப் பாணி களுக்கும் ஒரு காலவரன்முறை அமைப்பதற்கு நல் வாய்ப்புளது ; இம்முறை உண்மையான ஆண்டுக் கணக்கில் உறுதியற்றதாயிருப் பினும் ஒப்பீட்டளவில் அமைந்த உள்ளூர்க்குரிய கிரமம் ஒன்றை நல்குந்தகையதாயுள்ளது.
சாளு குண்டையில் ரொஸ் அவர்கள் நடாத்திய வேலை, அகழாய் விலாமல், இத்தகைய ஒரு தலத்தில் நுண்ணறிவுடைய நோக்க
லுடன் என்ன செய்யலாம் என்பதற்கோர் எடுத்துக் காட்டாகும்.

வேளாண் சமுதாயங்கள் 139 (அகழாய்வு என்பதை இங்கு நாம் சாதாரண சொற்பொருளில் எடுத்துக்கொள்கிமுேம்) இவ்வகழாய்வு வேலை உண்மையில் பத்துப் பன்னிரண்டு பலுக்கித் தலங்களில் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆயின் இதுவரை இது மேற்கொள்ளப்படவில்லை. சாளு) குண்டை திடல் 40 அடி உயரம் வரை உளது. உள்ளூர்க் கிராமத்தவர், இப் பொழுது, இதில் உள்ள பண்டைவாழ் தலமட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறும் சாம்பல் நிறைந்த மண்ணைத் தம் வயல்களுக்குப் பசளேபோடுவதற்காக மிக மும்முரமாகக் கிண்டியெடுத்துக் கொண் டிருக்கிருர்கள். தற்காலத்துக் கிராமங்களுக்கண்மையிலுள்ள தெல் லுகள் பலவற்றிற்கும் இவ்விதி பொதுவாக நேர்ந்துள்ளது. இயல் பாக இது தலத்தை அழிப்பதாயுள்ளதாயினும் பல இடங்களில் திடல்களில் குறுக்கு வெட்டமைப்பையும் அதன் உட்கிடக்கையை யும் நிறைவுறக் காட்டுவதாயுள்ளது. இவ்வாறு கிறந்துவிடப்பெற்ற ஏறக்குறைய நிலைக்குத்தான மேற்பரப்புக்களிலிருந்து. மனிதர் வாழ்தலத்திற்குரிய கடச்சில்லிகள் முதலிய பொருள்கள் சேகரித் தல் கூடும்; பின்னர் இவற்றை இவை கிடைக்கப்பெற்ற மட்டங் களோடு சார்த்தி நோக்கும்போது கீழிருந்து உச்சிவரைக்கும் நன் கமைந்த ஓர் படையமைவு முறைக் கிரமத்தை நாம் வகுத்துக் கொள்ளலாம். பல்லாண்டுகளாகப் பொறுமையுடன் நடத்திய ஆய்வு களாலும் நோக்கல்களாலும், ராணுகுண்டையில் ஐந்து முக்கிய வாழ்வுப் பருவங்களையும், எல்லாப் படைகளின் மொத்த எண்ணிக் கையை ஒன்பதாக்கும் வேறு பிற உப கட்டங்கள் அல்லது கட்டிட மட்டங்களையும் ரொஸ் வேறு பிரித்தறியக்கூடியவராயிருந்தார். இந்தக் கிரமத்தை அறிந்தபின் இந்த மூலதலத்திற் குறிக்கப்பட்ட பருவங்களோடு மற்றைத் தெல்லுகளின் மேற்பரப்புக்களில் காணப் பட்ட பொருள்களை ஒப்பிட்டு நோக்கக்கூடியதாயிருந்தது.
இந்நூலில் மாட்டெறிந்து சுட்டுவதற்கு இலகுவாக, ராணு குண்டை கிரமத்தின் ஒழுங்கில் அத்தலம் பற்றி முதன்முதலாக வந்த வெளியீட்டிலுள்ள கிரமத்தின் பெயரீட்டு முறையைச் சிறிது மாற்றி அமைத்துள்ளேன். இப்புதுப் பெயரீடு பண்டைப்படை யமைந்த தலங்களை விவரிப்பதற்குப் பொதுவாகக் கடைப்பிடிக்கும் வழக்கோடு இயைந்ததாகும். இதை நிரல்படுத்தினுல் சோப் பண் பாடுகளை விளக்குவதற்கேற்ற ஒரு திறவுகோலாக இது அமையும்

Page 81
140 மேற்கிந்திய வெண்கல ஊழி
ராணு குண்டை கிரமம் (மிக்க முன்னையதிலிருந்து மிகப் பிந்திய படைவரை அடைப்புக்குறிகளுள் உள்ள எழுத்துக்கள் முந்திய அறிக்கையில் காணப்படும் மட்கலத் தொகுதிகள்) ராணு குண்டை 1 (புதுமண்ணிலுள்ள திடலின் அடிப்பாகம்) AT IT GO9 Gg56ðơ760).- II (A) .
தற்காலிகமாகத் தலம் கைவிடப்படல். ராணு குண்டை 111a (B) U (TGog) Gej6öo760) L IIIb (C) a TS09 Gg GÖioTGOL IIIc (D)
மட்கலத் தொடர்ச்சியில் ஒரு முறிவு. ராணு குண்டை TV (E)
வண்ண மட்கலத்தின் மறைவு. ராணு குண்டை Wa (F) UTE0y G600760L Vb (G) TITeo) (g676).L. Vc (H)
பல்வேறு பருவங்களையும் ராகு 1 (RG) ராகு I என்று குறிப் பிடுதல் வாய்ப்புடையதாகும். இன்னும் வகைத்தலத்தில் உள்ள கிரமம் குடியிருப்புப் பரப்பு முழுவதற்கும் பொருந்துவதாயினும், பிற தலங்களும் அவ்வகையில் ஆராயப்படும்வரை, பல்வேறு குடி யிருப்புக்களையும் ஒத்தனவெனக் கொள்வதை நன்கு சிந்தித்துச் செய்யவேண்டும்.
ராகு 1 இற்கு இப்பொழுது பிரதிநிதியாயமைந்தது வகைத் தலமே ; எனினும் இதுவரை அகழப்படாத தெல்லுகளின் அடிப் பாகங்களில் இதுபற்றி இன்னும் ஏதேனும் அறியக்கூடும். ஆயினும் சாகு 1 இல் 14 அடிக்கு மேலான மண்ணுலான படிவுகள் இருந் தன. இவற்றில் அடுப்புக்களைச் சுட்டுவனவான சாம்பற்படைகள் அடிக்கடி காணப்பட்டன எனினும் கட்டிட எச்சங்கள் இருக்க வில்லை. இதை அகழ்ந்தவர், நிலையில்லாத குடிசைகள் அல்லது கூடாரங்கள் உடைய, அரை நாடோடி மக்கள் இடையிடைவிட்டு, ஆயின் அடிக்கடி இவ்விடத்தில் வாழ்ந்திருக்கலாமென்று கூறுகின் முர். காணப்பட்ட மட்கலம் யாவும் வண்ணந்தீட்டப்பெருதவையா யிருந்தன (ஒரேயொரு சில்லி மட்டும் பருமட்டாய்ச் சாய்சதுரக் கோல வண்ணம் கொண்டிருந்தது). மட்கலங்கள் சக்கரத்தில் செய் யப்படாதன. எனவே தென் பலுக்கித்தானில் காணப்பட்ட வகை யினவான தீக்கல் அலகுகள் அங்கிருந்தன. ஆயினும் அவை அரி

வேளாண் சமுதாயங்கள் 14
வாள்-தீக்கல்களாகப் பயன்படுத்தப்பட்டவோ என்பதற்குச் சான் றளிப்பவையாய்க் காணப்படவில்லை. இன்னும் அங்கு இரண்டு என் புக் கூர்களும் துளைகொண்ட ஊசியும் காணப்பட்டன. விலங்கு களின் என்புகள் கவர்ச்சிகரமானவையாயிருந்தன; இவற்றில் திமில் GTCBg (Bos indicus) @öl u@ GsFi ħLDAS) (Ovis vignei) 356MB (Equus asinus) என்பவை இருந்தன. இவை எல்லாவற்றையும் விட மிகக் கவர்ச்சிகரமானவையும் முக்கியமாயுமமைந்தவை இற்படு குதிரையின் (Equus Cabalus) நான்கு பற்கள். ராகு 1 இல் காணப்பட்ட பொருள்கள் குதிரையூர்ந்த நிரையாளர் இத்தலத்தை ஒரு பாசறை நிலமாகப் பயன்படுத்தினர் என்பதைத் தெரிவிப்பன வாயுள்ளன. இம்மட்டத்தில் குழந்தையின் என்புக்கூடொன்றும் புதைக்கப்பட்டிருக்கக் காணப்பட்டது.
சாகு T1 இல் இத்தலத்திற்குப் புதியவர்கள் வருவதை நாம் காண் கிருேம்; இவர்கள் ராகு 1 இன் நெருங்கிய சிதைவுகளில் கற்பாறைப் பீடங்களில் வீடுகள் அமைத்தனர். சக்கரத்தின் துணைகொண்டு மிக உயர் முறையில் வண்ண மட்கலங்கள் செய்தனர். இவை பாணிப் படுத்தப்பட்ட மிக அழகிய திமிலெருதுகள் கருமான்கள் ஆகியவற் முல் அணி செயப்பட்டிருந்தன. இவை மென் சிவப்பு அல்லது கபில மஞ்சள் நிறத்திலிருந்து கரும் செங்கபில நிறம் வரை மாறியமைந்த பிற்களத்தில் மிகத் திறம்படக் கருவண்ணத்தில் தீட்டப் பெற்றிருந் தன. இவற்றில் சிவப்பு இரண்டாம் நிறமாகப் பயன்படுத்தப்பட வில்லை (உரு 13). சாகு 11 இற்கு வகைமுறையான எருத்துமட்கலங் களின் சில சில்லிகள் சோப் பள்ளத்தாக்கில் பிற இடங்களில், சிறப்
படம் 13. அகல்கள், ராணு குண்டை 11.

Page 82
42 மேற்கிந்திய வெண்கல ஊழி
பாக சுர்யங்கவில், காணப்பட்டன. ஆயின் ராணு குண்டை யிலிருந்து பெறப்பட்ட புதிய பொருள்கள் அக்கடங்கள் மிக அழகியவை என்பதை வலியுறுத்துகின்றன. அகல்கள் நன்முறையில் ஆக்கப்பெற்றிருந்தன; இவற்றிற்கு ஒரு அடிவளையமோ அடிப் பீடமோ இருந்தது. இவை ஒவ்வொன்றிலும் பாணிப்படுத்திய எருதோ கருமானே கொண்ட ஒர் அணிவரி இருந்தது. இவ்வணிவரி களில் கால்கள், கொம்புகள் குள்ளி விலங்குகளில் கிடைத்தளப்பாட் டில் நீட்டப்பெற்றிருந்ததற்குமாமுக, நிலைக்குத்துப் பக்கமாக நீட் டப் பெற்றிருந்தன. குள்ளிப் பண்பாட்டில் காணப்படும் விலங்கு களிலும் பார்க்க ராகு 11 இன் விலங்குகள் தெளி துலக்கமான முறையில் மெய்மைப்பாடு குறைந்த முறையில் கையாளப்பட் டிருந்தன. வட பேசியாவில் விலங்குகள் வரையப்பட்டவாற்றிற் கும் அங்கு காணப்பெற்ற அகல்களின் பாணிக்கும் ஒத்த முறையி லமைந்த உதாரணங்கள் இங்குமிருந்தன.
சாகு II இல் மக்கள் வாழ்ந்த காலம் மிக நீண்டதாயிருக்கவில்லை. ஒரேயொரு கட்டிடமட்டமே காணப்படக் கூடியதாயுள்ளது. இதைத் தொடர்ந்து காணப்பட்ட பொருள்கள் செய்தியொன்றும் அளிப்பனவாயிருக்கவில்லை. இது இத்தலத்தில் ஒரு சிறுகாலம் மக் கள் வாழவில்லையென்பதைச் சுட்டுகின்றது. ஆயின் ராகு III ஒரள விற்கு நீடியதாயிருந்தது. இதில் மூன்று கட்டிடக் கட்டங்கள் இருந் தன. ஒடியாமுறையிலமைந்த மட்கல வளர்ச்சியும் இங்கிருந்தது. இதுவும் ராகு I இலிருந்து பெறப்பெற்றவையாகும். ராகு III a இல் η πΘύ I இலிருந்த நுண்ணிய தூரிகை வேலை தொடர்ந்து காணப் பட்டது. இது இங்கு ஒரு பாவனைப்போலியாகவே வந்துவிடுகிறது. இவ்விடத்தில், தென்மாக்கின் நியோலிதிக்கு மட்கலத்திற்குரிய இத் தகைய பாணிமுறைக்குப் பயன்படுத்திய பதங்களை உபயோகித்து, பெரிய பாணியைத் தொடர்ந்த ஒரு சீரிய பாணி என்று இதைச் சொல்லலாம். இன்னும் இங்கு பிற்களம் சிவப்புக் களியாயிருந்தும் சிவப்பு நிறம் ஒரு துணை வண்ணமாயிருந்தது. இது சிவப்பின்மேல் சிவப்பான ஒரு புதிய வினை நுண்மையைக் குறித்தது. இவ் விரு நிறப் பாணியில் செய்யப்பட்ட பிறகோலங்களுள் பல, கோடுகள் Aெர்:Fiலும் கறுப்பிலுமாய சதுரங்களாம். இவை அம்
றியை நிக்னவூட்டின. இதனுல் இவை இரண்டும் ஒருகாலத்தியவை
 

வேளாண் சமுதாயங்கள் 143
என்றும் கருத்துப் பரிமாறல்கள் இவற்றிடை நடந்திருக்கலாமென் றும் ஊகிக்க இடமளித்தன. அம்றிக்கலங்களிலும் ΤιτΦ п, III a ஆகியவற்றிலுள்ளவாறு நிலைக்குத்துக் கோட்டுத் தொகுதிகள் கொண்ட கால் தட்டுக்கள் இருந்தன. சுர்யங்கல் தலத்தின் முக்கிய வாழ்தலம் ராகு I a உடனும் அடுத்த I b உடனும் ஒப்பி டக்கூடியது. இங்கு IIb இல் உயர்ந்த கூசா போன்ற பாண்டம் கள் காணப்படுகின்றன. இப்பாண்டம் சுர்யங்கலிலும் காணப்படு கின்றது (ரு. 14). இக்கட்டத்திலும் அடுத்த ராகு I C இலும்
படம் 14 வனைபொருள், ராணுகுண்டை Ia, உம் Ib உ.ம். '
மட்கலவண்ணத்துத் தூரிகை வேலை முரட்டுத் தன்மை பெறுகின் றது. பிற்களம் முழுவதும் ஆழ் சிவப்புத்தன்மை பெற்றுவிடுகிறது. இப்பருவத்திற் குரியனவும் இதனுடன் ஒப்பிடக்கூடியனவுமான மற்றைத் தலங்கள் சண்டிமன் கோட்டைக்கண்மையில் இருக்கும் பெரியனே குண்டையும் மோகல் குண்டையுமாகும் (உரு. 15).
சாகு II C கட்டத்தின் முடிவு மிகச் சடுதியாக முடிந்தது போல் தோன்றுகிறது. இது எரியூட்டப்பட்டதற்குச் சான்றுளது ; இத்தலம் கொள்ளையடிக்கப்பட்டும் இருக்கலாம். இதை அதிகாரம் V1 இல் காண்போம். ஏனெனில் ராகு IV, V ពុំប្រ៊ូ மட்கலம் செய்வதில் முழுதும் வேறுபட்ட மரபுக ;תiTLמ ண்கி
7-CP 3040 (6814)

Page 83
144 மேற்கிந்திய வெண்கல ஊழி
முேம்; இங்கு ராகு 1 இலிருந்து IC வரை இருந்த ஒடியாக்கிச மம் முறிந்துபோவதை நாம் காண்கிருேம். எனினும் இப்பிந்திய கட்டங்களை ஆயுமுன்னர், ராகு 111 இற்குரிய கட்டப் பிரிவுகள் மூன்றினுள் ஒன்றுடனே கூடியவற்றுடனே மாட்டெறியக்கூடிய, மற்றைத் தலங்களிலிருந்து பெற்ற சான்றுகளைக் கருத்திலெடுத் அப், பருவம் πιτG5 III முழுமையையும் பற்றிய எம் கருத்தை ଘଜh
படம் 15 வனைபொருள், ராணுகுண்டை 111 c.
வடையச் செய்யலாம். கட்டப் பிரிவுகளுள் பெரியனே குண்டையை நாம் சிறப்பாகக் குறிப்பிடலாம். இது பொதுவில் ராகு 111 C இற் குரியதுபோல் தோன்றுகிறது. இன்னும் பிந்திய இடுகாடு வெட்டப் பெற்ற நல்லில் உள்ள குடியிருப்புத்தலமும், அங்கிருந்து பெற்ற சிற்றளவு கடங்களைக் கொண்டு அளவிடும்போது ராகு IC இற்குக் காலத்தால் அண்ணளவினதாகத் தோன்றுகிறது.
தென்பலுக்கித்தானத்துத் தலங்களிலுள்ள குடியிருப்புக்களின் பருமனை மதிப்பிடுவதில் ஏற்படும் குறைபாடுகளைப்பற்றி ஏலவே நான் கூறியுள்ளேன். அவை இங்கும் ஒத்தமுறையில் பொருந்தும். ஆயினும் இவ்விரு பகுதிகளிலும் உள்ள தெல்லுகளின் சராசரிப் பருமன்கள் ஒத்த அளவினவேயாம். சுர்யங்கல் தெல்லு மிகச் சிறியது. இதன் குறுக்களவு 40 யார், உயரம் 16 அடி மறுபால், இவற் றுள் பெரியதோ, லொசலைக் கண்மையிலுள்ள டபர்கொட்டின் மிகப் பாரியதிடலாகும். இது 500 யார் விட்டமும் 113 அடி உயரமுங் கொண்டது. இங்கு பிற்கூறிய தலத்தில் இறுதியாக அமைந்த வாழ் கலம் ஓர் அசப்பாக் குடியிருப்பாகவோ வணிக நிலையமாகவோ
இருப்பதால், இதன் பருமனிலிருந்து இவ்விடத்தில் முக்கியமான பல
 
 

வேளாண் சமுதாயங்கள் 145 வரலாற்று முன்னர் நகர்கள் தொடர்ச்சியாகப் பல காலம் இருந்தன என்று நாம் ஊகிக்கலாம். இவை கி. மு. மூன்ரும் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதிக்கு முற்பட்டவைபோல் தோன்றுகின்றன.
ராகு III இன் காலத்திற்குரிய குடியிருப்புக்களுள், நல் ஒன்றைத் தவிர மற்றையவற்றின் அமைப்பைப் பற்றி ஒன்றுமே நாம் அறி யோம். நல்லில் இருந்த அறைகளோ முன்றில்களோ பல பருமனிலி ருந்தன. இவை 11 அடி 13 அடிப் பரிமாணத்திலிருந்து தடித்த சுவர்கள் கொண்ட சிறிய 5 அடிச் சதுரப் பரிமாணமும் இன்னும் சிற்றளவினதுமான அறைவரை பல்பருமனிலமைந்தன. மோகல் குண்டையில் குடியிருப்பிற்கென அமைந்தன என்று கொள்ளக் கூடிய காவல் மதிலின் சுவடுகள் காணப்பட்டன. சுவடுகள் காணப் படக்கூடிய தலங்களிலெல்லாம் மனைகள் யாவும் கல் அத்திவாரத்தில் மண் செங்கட்டிகள் கொண்டமைக்கப் பெற்றிருந்தன. செங்கட்டி
களின் பருமன்கள் பல்வகையின :
நல்லில் 12, 12, 74 அங். ராணு குண்டையில் 13, 6-8, 24 அங். பெரியனே குண்டையில் 14, 9, 2 அங். நல்லில் 23, 9, 3% அங்.
டபர் கொட்டில் 24, 16, 4 அங்.
நல்லிலுள்ள பெரிய செங்கட்டிகள் தென்பலுக்கித்தானிலுள்ள
நுந்தராவிலுள்ளவற்றுடன் பருமனில் ஒத்தவை. நல்லில் உள்ள சில அறைகளில் நிலவடைப்பில் பருமட்டாகப் பரற்கற்களும் சிறு கற் களும் அவதானமாகப் பாவப்பட்டிருந்தன. இத்தலத்திலும் ராணு குண்டையிலும் கரிந்த மரக்குற்றிகள் காணப்பட்டன. நல் குடி யிருப்பு உண்மையில் எரிந்தழிந்ததாகும். (தெல்லின் நிலத்து நிறக் திலிருந்தே இக்கலத்திற்கு இப்பொழுதுள்ள சோர் டாம்ப் எனும் பெயர் கிடைக்கப்பெற்றது. சோர் டாம்ப் என்பது சிவப்புத் திடல் என்று பொருள்படும்) ஏலவே நாம் குறித்த ஒரு சிறு அறையில் நிலைநின்ற கரிந்த மரவளைகள் பிணைச்சல்கள் உருண்டை வடிவின வாய் முறையே 9 அங். 5% அங். விட்டம் கொண்டிருந்தன. இவை இப்பொழுதும் நிலைநின்று 6 அடி 3 அங். வித்தியாசங்கொண்ட இரு நிலத்தளங்களை அமைக்கும் வகையில் இருந்தன.

Page 84
46 மேற்கிந்திய வெண்கல ஊழி
ஏலவே நாம் குறித்த ராகு 111 இல் காணப்படும் மட்கலம் ராகு 11 இற்குரிய எருத்து மட்கலங்களின் தொடர்ச்சியான அபிவிருத் தியேயாகும். சுர்யங்கலில் ஒர் உயர் பீடத்திலமைந்த திறந்த அகல் கள் பலவற்றை நாம் காண்கிருேம். இப்பீடம் தொகுதி தொகுதி யாக நிலைக்குத்துக் கோடுகளால் வண்ணந் தீட்டப்பெற்றிருந்தது. அகலின் உட்பக்கம் திமில் நல்லின அணிவரி ஒன்றினல் அணி செய் யப்பட்டிருந்தது. விசித்திரமான முறையில் நீட்டப்பெற்ற இவ் வெருத்தின் கால்களும் வால்களும் பாண்டத்தில் மையப்பகுதிவ0ை சென்றன. இக்கோலம் படிப்படியாகச் சீரழிந்து, விலங்குருவம் மிகச் சிற்றளவில் புலப்படுமளவிற்கு வந்துவிடுகிறது. இதனுல் இக் குறிப்பு முறைக்கோலங்களை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்தோர் இக்கோலங்களின் முதல் நோக்கையும் கருத்தையும் மறந்துவிட்ட னர் என்றே சொல்லலாம்.
சுர்யங்கலில் உள்ள இருநிற வண்ணந்தீட்டல்கள் மிகக் கவர்ச்சி கரமானவையாயிருந்தன. இதில் தென்பலுக்கித்தானில் உபயோகிக் கப்பட்ட ஆழ் செஞ்சிவப்பிலும் உயர்துலக்கமான மிக்க மஞ்சள் தொனி ஒன்றிருந்தது. இதனுல் சிவப்பின் மேல் சிவப்பாயமைந்த கடங்களின் வண்ணிக்கப்பெற்ற வரைகள் செழித்த சிவப்புக்களி பில் நிறங்குறைந்து தோன்றின. பல சிவப்புக்கறுப்பு வரைகளால் குழப்பெற்ற சதுரப் பொட்டிப்புக்களைப்பற்றி ஏலவே கூறியுள் ளோம். இவை அம்றி நூந்தரா முதலிய இடங்களில் உள்ளனவற் றைப் பெரிதும் ஒத்திருந்தன. ஆயினும் இவ்வகை மட்கலம் வட பலுக்கித்தானிற்கே பிரத்தியேகமானவை. சுர்யங்கலிலிருந்து கரு மையில் தீட்டிய அணிவேலைகொண்ட மெலிந்தவன்மையான நரை அகல்களின் இரண்டொரு துண்டுகளும் காணப்பட்டன. இவற்றை மிக நன்முறையில் ஒத்தவை குவெற்றத் தலங்களிலும் சிஸ்சனி லும் காணப்படுகின்றன.
г. те, Пт с இன்டிட்கல விருத்தி பெரியனே குண்டையில் மிக்க நன்முறையில் காணப்படுகின்றது. இங்கு சிவப்புக்களி மாருமல் பிற் களமாயமைந்துள்ளது. இதன்மேல் கறுப்பு வண்ணத்திலேயே தீட் டல் வேலை நடைபெற்றுள்ளது. ஆயின் தூரிகை வேலைப்பாடு மென்மை குறைந்து வந்துவிடுகிறது. இங்கு மிகப் பொதுவான வடி வம் திண்ணிய பீட அடிகொண்ட ஒரு சிறு குவளை அல்லது புட்டி

வேளாண் சமுதாயங்கள் 47
யாகும். இது நல்குடியிருப்பை இக்கட்டத்துடன் இணைப்பதாயுள் ளது (உரு 15). பெரியனே குண்டையிலிருந்து ஓரளவு இற்படு விலங்குகள் (மான் அல்லது எருதாயிருக்கலாம்) வண்ணிக்கப் பெற்ற சில்லிகள் சில பெறப்பெற்றன. இன்னும் இரண்டு சில்லி களில் மீன்கள் வரையப்பெற்றிருந்தன. இவற்றைத் தவிர்ந்த மற் றைய அணிவேலைகள் எல்லாம் கேத்திர கணித முறையிலமைந்தன வாயிருந்தன. குறுக்குவரை வலயங்கள் கொண்ட சில துண்டங்கள் சிஸ்சனின் சில்லிகளுடன் ஒப்பிடத்தக்க வகையிலிருந்தன. ஆயின் இத்தலங்களில் வண்ணந்திட்டல் கபில மஞ்சளில் கறுப்பாயிருந்
தது.
தென் பலுக்கித்தானின் குள்ளிப் பண்பாட்டோடு ஒத்த முறை யில் சோப் பள்ளத்தாக்குத் தலங்கள் களிமண்ணுலாய பல சிறு நல் லிளவுருக்கள் பெண்ணுருக்களைக் கொண்டிருந்தன. ராணு குண்டை யின் படை முறையிலமைந்த படிவுகளில் இவை காணப்படவில்லை யாயினும் சுர்யங்கல், பெரியனே குண்டை, மோகல் குண்டை, கெளடனி முதலிய இடங்களிலும், டபர் கொட்டிலும் இவை காணப் பட்டன; ஆதலின் இவற்றை கட்டம் ராகு I இற்குரியன எனக் கொள்ளலாம். திமிலெருத்துக்களின் சிற்றுருவங்கள் சிலவற்றைப் பற்றி யாதாயினும் இங்கு சொல்லவேண்டியதில்லை. ஆயின் பெரி யனே குண்டையிலிருந்து பெற்ற மண் சிற்றுரு, குதிசையை உருவ கித்தது போல் தோன்றுகிறது. சாகு 1 இல் வகைத்தலத்தில் காணப்பெற்ற குதிரைப் பற்களோடு சேர்த்துப் பார்க்கும்பொழுது இது கவர்ச்சியளிப்பதாயுள்ளது.
எல்லாவகையிலும் பெண்ணுருவங்கள் மிகக் கவர்ச்சியளிப்பவை (உரு 16). குள்ளிப் பண்பாட்டில் உள்ளனவற்றைப்போலவே இவை சிறு பீடங்களில் இடுப்புடன் முடிவடைந்துவிடுகின்றன. பலவற்றில் இவை பல கழுத்தணிகள் கொண்டு விளங்குகின்றன. ஆயின் தென் பாகத்தில் காட்டப்பெற்ற வகையினும் பார்க்க இவை முறைமை யிலமைக்கப்பெற்றனவாய் விளங்கின. ஆயின் முகங்கள் மிகவும் வேறுபட்டிருந்தன. தலையை மூடி ஒருவகைக் குல்லாவோ சால் வையோ இருந்தது. உருவங்களின் முழிக்கும் வட்ட வடிவக் கண்க ளுக்கு மேலாக உயர்ந்த ஒப்புரவான நெற்றிகளிருந்தன. இவற் றிற்கு ஆந்தைச் சொண்டு மூக்கும் அவலமான கிழிந்த வாயும்

Page 85
48 மேற்கிந்திய வெண்கல ஊழி
இருந்தன. 2 அங்குல உயரம் கொண்ட ஒரு சிறு மாதிரியிலுமே இவை பயங்கரமாயிருந்தன. டபர் கொட்டிலிருந்து பெற்ற இரண்டி லும் பாவையென்ற பெயர்க்கிடமேயில்லாமல் இவை இளிக்கும் கபா லங்களாகவே இருந்தன. குள்ளிச் சிற்றுருவங்களைப் பற்றி நாம்
படம் 16 பெண்களின் சிற்றுருக்கள், சோப்பண் பாடுகள்.
என்ன சொல்லினும் இவை ஒருபொழுதும் விளையாட்டுப் பொருள் களாயிருக்க முடியாது என்று சொல்லவேண்டும். இவை சிறந்தவர் காவல் தெய்வமான காளியின் பயங்கர படிவமாக விளங்கின. இக் காளி பிணத்தோடும் மண்ணுக்குக் கீழ் விதைக்கப்பெற்ற விதைத் தானியம் இண்டோடும் சம்பந்தப்பட்ட ஒரு நிலக்கீழ்த் தெய்வ மாக விளங்கினுள்.
. இத்தகைய நிலக்கீழ் தெய்வங்களோடு பல்காலும் இணைந்ததான வளமை அமிசம் உண்மையில் பிற மாதிரிகளால் உருவகிக்கப்பட்டுள்
 

வேளாண் சமுதாயங்கள் 149
ளது. இதற்கீடான ஒன்றையும் நாம் தென் பலுக்கித்தானில் காண முடியாது. மோகல் குண்டையில் கல்லிற் செதுக்கிய இலிங்கம் ஒன் றிருந்தது. பெரியனே குண்டையில் கரடுமுரடான மட்கலத்தாலாய இன்னேர் எடுத்துக்காட்டும் உளது என்று நாம் கொள்ளலாம். இன் னும் இத்தலத்தில் மிக மிகைப்படுத்திக் காட்டப்பெற்ற பெண்குறி யும் தொடைகளும் கொண்ட ஒரு சிற்றுருவும் காணப்பட்டது. அரப் பாப் பண்பாட்டிலும் ஒத்த வளமை குறிக்கும் குறியீட்டுச் சின்னங் கள் காணப்பட்டன.
ттз, III கட்டத்தின் பொருளியற் பண்பாட்டின் பிற அம்சங்கள் பற்றி விளக்கமான செய்தியளிக்கும் சான்றுகள் எங்களிடம் இல்லை. சாகு 1 இல் ஏலவே காணப்பட்ட தீக்கல் அலகுகள் ராகு II 9) @yLi III இல் வகைத் தலத்திலும் காணப்படுகின்றன. இன்னும் சுர்யங் கல், பெரியனே குண்டை ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. இத்தலங்களிலிருந்து தீக்கல் முனைகளும் நல்ல ஓர் இலையுரு அம்பு முனையும் காணப்பட்டன. இத்தகைய ஓர் அம்புமுனை பத்தொன்ப தாம் நூற்ருரண்டில் நோட்லிங் என்பவரால் டபர் கொட்டில் கண்டு பிடிக்கப்பட்டது. பெரியனே குண்டையில் காணப்பட்ட துண்டங் களிலிருந்து அங்கு அலபஸ்சர் கோப்பைகள் இருந்தன என்பன புலப்பட்டது. அவ்வாறே டயர் கொட்டிலும் மோகல் குண்டை யிலும் இனந் தெரியாக் கண்மணிகள் காணப்பெற்றன. பெரியனே குண்டையில் வைடூரியமணிகளும் யேட் என்று சொல்லப்படும் மணி களும் காணப்பெற்றன. டபர் கொட்டில் என்பு மணிகள் காணப் பெற்றன. ராகு 1 இல் இருந்தவற்றைப் போன்ற என்பாலான வளை யல்கள் ஊசிகள், சிறுதட்டைமணிகள் முதலியனவும் பெரியனே குண்டையில் காணப்பட்டன. உலோகம் மிக அருகிலேயே காணப் பட்டது. ஓரிடத்திலாகுதல் சாகு I இன் தேதிகொண்டது ஒன் றும் காணப்படவில்லை. ஆயின் பெரியனே குண்டையிலிருந்து செப் புப் பொருள்கள் (ஒரு கோலும் ஒரு மோதிரமும்) பெறப்பட்டன. டபர் கொட்டிலிருந்து ஒரு செப்புக் கோப்பையின் ஒடிசல்கள் பெறப்பட்டன. இத்தலத்திலிருந்து ஓர் பொன்னூசியும் உலோகத் தகட்டின் துண்டொன்றும் கிடைக்கப்பெற்றன; இவை ஒருவேளை இத்தலத்திலிருந்து அாப்பாக் குடியிருப்பால் வந்தவையாயிருக்
கலாம்.

Page 86
1岳门 மேற்கிந்திய வேண்கல நாழி
இங்கிருந்த இரு சிறிய துர முக்திரை இலச்சினே மீளும் அப் பாத் தொடர்பினுல் காண்டட்டனன என்று கோள்ளவேண்டும். இவர் அதன் ஒன்று ஓர் பச்சைக் கல்லாலானது. Lrಕಿಪಳ್ಳಿ)uy :DfÂFಣಿ பாத் திரவியம் ஒன்றினுளியது. இது நோட்விங் அவர்கள் Tួិ சித்திரத்திலிருந்தே அறியப்பட்டது. இர்ைஆன் தலாவது டர் கோட்டிலிருந்து எந்த' மூக்களிலுள்ள 3ä: 1 21: , பொட்டிப் புக்களுக்கிடையே ஒத்த சிறை வெனிகொண்ட பிலுவையாக அமைந்தது, மற்றைய பெரியனே குண்டையிலிருந்து வந்ததா ருேக்கலாம். படத்திளிருந்து இரண்டும் ஒத்த வகையின போல் தோன்றுகின்றன. அப்டாப் போருள்கன் டர் கொட்டல் 12ம் பான ஒரு குடியிருப்பாகக் தோன்றுகின்றன ; ஆயினும் இத்தப் பன் னத்தாக்கிலிருந்து இறக்குமசியான பொருண்களின் வரிகள் ஆங் காங்கு பிற தலங்கனில் காணப்பட்டன. மோகன் குண்டை தோர் _చాT ஆகிய இ ங்களிலிருந்து இறக்குமதியா ே ெ ாகுன்களின் சுவடுகள் தளங்களின் it air Gir, it "...i குண்டை தோர் . န္တပ္မါ ၊၊ ၊၊ இடங்களிலிருந்து பெர் புெதுக்கே காண வியன் புனிஃ? இதற்கும் url ' T # ##ರ್ಛೆf: பெரியனே ryšiai II). ஜிே குந்து பெறப்பெற்ற அல்பருவ வெளி விளிம்புடைய காரின் தரப்பு ான் சாலு:சோவின்னே ஆாப்ப" மட்ட க்கிலுன்னாற்ஜேடு ஒப் புடைான3 இவையும் ஆசே, இடக்கிலிருந்து ாேன்சியிருக்கலாம்.
ராகு T1 இற்குரியன என்று சொல்லக்கூடி , y gymry' i 'Lyci, yn air ŵ Ŷ பங்கள், ெ ரியனுே குண்டை, மோங் குண்டை முதலிய இடங் துளில் காணப்பட்டன. முதலாவது தனக்கில் 'க்குண: இருகி சிறு பதுக்கைகன் கொண்ட ஒர் இயோடு கு' விருப்பிளிருந்து -ே? பார்வரை தோனிேன் இருந்தது ஆரியப்பட்டது. இன: "(ச) III
இன் வகைக்குரிய சில்லிருடன் சேர்ந்த கண் ரெப்த 13ம்பு
= - ܨ -∎ ܗܘ ܕ அடக்கங்களே! ',767 ஓரி க்கில் :: ?!! நிலப்பரப்வீேரர் சிக்கன் ஆவன:/ம் முடியிருந்தன. போகல் -5 ' አ ... ( ''ቸ፧ ; " ,", i. Fror · የነ * GITA, Y y . பாது " أ. المية
ܕ *
昊。一 . ܘ ܗ
. 231 . இனத்தை ஒக்கனவாயிருந்த பககனசு களும் இப்பருவத்திற்குரியன எனக் கொள்ளலாம். cr:ỉiojiri, Gäll ரூல் அகழப்பட்ட இா ண்டே'ரு தளங்கள், சில்லுேள்ள இடுக'ட் டோடு ஒத்த காலத்தன என்று சொல்லக்கூடிய கையில் ந்ேதரத்
-| :... -| ܕ= ܩܘ s - ܧܝܨ திற்குரிய சான்றிஜன நல்கின. ஆயின் இக்கலிக்கிலும் பேரிடனே
குண்டையிலும் நீரிழைகள் கடங்களிலேயே சேய்யப்பட்டன.

|- | |- |-
முகம்,
நகர்க் காப்பரண் வெட்
| || || II 14):
|-

Page 87
%%%%
ம்.
ஷ்ரிய விவர
க் காப்பரண் வெட்டுமுகம் ப
அரப்பா 14
தகடூ 2.
 
 
 

--Tos::::II
E TT
韶
嘎感
gm
In Italis
*}1
Ġ1
LIII] siro
柯
$i;
rīs
iso

Page 88
·lssohnowls lloiso « œŒ œ s slogs : głosi „mysler
**|-|-----**诹% ¿:¿Źź%
 

s
፭..§
s

Page 89
ينتين : " في
S.S.S.S.
:" }} S.
懿 ፵፰..
རྗེ་
E===============================
 
 
 
 

|-, ! ! ! !
* II:sessio = 's~Eto i trois : j + BI IIII || Ils
I
甲
| | |-|- . No.| s. s

Page 90
|- ----
 
 

வேளாண் சமுதாயங்கள் 1丘l ஒன்று ஒர் அறையின் நிலத்துக்குக் கீழிருந்தது. 'ற்,ன'ஆ ஒரு சுவரருகே சிறிய ஆண்ணப் பாண்டங்களுடன் சேர்ந்து காணப்பட் டது. வகைத் தலத்திலுள்ள பிந்திய வாழ்தலமட்டங்கஃனப் பற்றி ஆத்தியாயம் W II இன் ஆராய்வோம்.
பேசியாவிலும் செப்பொற்றேமியாவிலும் உள்ள பிறமேற்காசி வரலாற்று முன்னர்த்தலங்களே நோக்குவோமாயின் சாணு குண்ணி பின் கிரமத்திற்கு ஒத்தனவற்றை நாங்கள் அங்கு காணலாம் ராகு 1 இல் பாரேயத் தலங்கன் என்று கொள்ளப்பட்டனவற்றை மெசப் பொற்றேமியாவில் தென் ஆகளுளின் முதலாம் குடியிருப்போடு வகையளவில் ஒத்தனவெனக் கொள்ளலாம். ஆயினும் இவ்வொப்பு பொது ஒற்றுபைன்றி அதனினும் rோன ஒன்றன்.' என்பதை நாம் இங்கு அழுத்தமாகக் கூறவேண்டும். ஏனெனில் பாகு 1 இற்கு எத்தர்ைபிய வியப்பூட்ம்ே தேதி கொடுத்தாலும் அதனிலும் நிகப் பண்டையது அசுணுக்குடியிருப்பு என்பதை தாம் உணரவேண்டும் ஆயின் JJ ప్ర III இங் உள்ள அழகிய ଶ! ୋirଞh୮ ட்கணங்களினுன் நாம் ஐக்ேகக்கூடியதான புது மக்களின் வாளைக் கொண்ே மிகச் சென்னிய முறையில் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவீரம் ஒரரேனில் இக்கட்டத்திற்குரிய மட்கலம் இசார் 1 இற்குரிய பாண்டங்களுடன் வடிவிலும் பாணியிலும் கோளே வண்ணிப்பீன் பொருள் முறை பிலும் நேருங்கி ஒப்புக்கள் கொண்டிருந்தது. இசார் 1 என்பது செங்கலப்பிரதேசத்தான் ஒரு வகைக்குறிப்பான தலமாகும். இன் ஆம் நரம் முன்னர் wண்டவாறு 'ாகு 11 இல் சிலப்பின் கீப்புக் கலங்களுன் பெரும் பகுதிwள. வெப்புப் பிற்காம் "கு IT இல் மாருதமைந்து விடுகிறதென்பதையும் நாம் கண்டோம். x_பேசியா டைபலுக்கித்தன் ஆகிய சரிடங்களிலும் ! ங்கனில் உருவகிக்கப் பட்ட விலங்குகள் வேறுபடுகின்றன என்பதுண்மையே. ஆயின் இது இவ்விரு பண்பாட்டிலும் உன்ளே இயற்கையான விலங்குகளா லும் இப்பந்ேதிய விலங்குகளின் இனவகைகளாலும் எற்பட்டது என்று கோள்ளலாம். இன்வமிசத்தைவிட்டு உள்ள ஒற்றுமைகளே நோக்கும்போது அவற்றின் நெருங்கிய ஒப்புமையிலிருந்து இசார் 1 உம் ராகு 11 டர் செங்கப் பிரதேசக்கிலுள் ஒத்: முறையில் வளர்ந்தனa என்று கொள்ளவிாம். ஆயின் இன்விரு கட்ட i சேகிகளேயும் ஒன்றெனக் கொள்ளலாமோ என்பது தெரியவில்ஃ.
i]-[:T HIII, IIէ8 1)

Page 91
152 மேற்கிந்திய வெண்கல ஊழி
ஆயின் பலுக்கித்தானில் உள்ள சான்றிலிருந்து ராகு 11 அாப்பாப் பண்பாட்டிலும் காலத்தில் உரிய அளவு முன்னையதென்று கொள்ள வேணடுமென்றும், அதன் தேதி கி. மு. நான்காம் ஆயிரத்தாண்டு ளமையவேண்டுமென்றும் ஒருவேளை யெம்டெற் நசருடன் ஒத்த காலத்தினதாயிருக்கலாமென்றும் நாம் கொள்ளலாம். எனவே ராகு III முன்னைக் குலமுறையில் தோன்றி அக்கடியன் காலத்திலும் அதற்குப் பின்னரும் அாப்பாப் பண்பாட்டோடு மேலியமைந்தது என்று கொள்ளல் தகும்.
ராகு I குடியிருப்பு இறுதிக் காலத்தில் மிக வன்மையான முறையில் அழிவுபெற்றது என்பதற்குச் சான்றுளது என்பதை நாம் பின்னர்க் காண்போம். இரண்டாம் ஆயிரத்தாண்டின் பிற்பகு தியில் மேற்கிலிருந்து மக்கள் இந்தியாவுட் புகுந்தவாற்றினை ஆரா யும்போது நாம் இங்கு கூறிய விடயமும் நல்லில் சோர் டாம்பி லுள்ள குடியிருப்பு இது வகையில் எரியூட்டப்பெற்ற விவரமும் நமக்குச் சில செய்திகளை அறிவுறுத்துவனவாயுள்ளன. மட்கலவகை யில் ஏற்பட்ட முழுமாற்றம் முன்னைப் பண்பாடு அழிந்தது என்ப தைக் காட்டுவதாயுள்ளது. இது ராணு குண்டையிலும் நாம் காணக் கூடியதாயுள்ளது. வண்ணக் கலங்களின் பின்தோன்றும் புடைப்ப முறையில் மிக விரிவாக அலங்கரிக்கப்பட்ட மட்கலத்தின் பண் படாப் பாங்கு முந்திய மரபுகளுக்கு மிக எதிர்மாமுக அமைந்துள் ளது. இது பலுக்கித்தானில் மக்கள் குடியிருப்பு அற்றுப்போன தென்று பொருள்படாது. ஆயின் மக்கள் தொகை பெருமளவில் குறைந்தது என்றே பொருள்படும். இது குறைந்ததும் பண்டைக்கல வண்ணந்தீட்டும் மரபு அறவே மறைந்து விடவில்லை. கி. பி. ஆமும் நூற்முண்டுகளுக்குரிய சசேனியன் துணிகளிலுள்ள கோலங்களைப் பார்த்து வண்ணந்தீட்டிய கடங்கள் குவெற்ருப் பகுதிகளிலுள்ள தலங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இத்துணிகளை வணிகர் போலன் கணவாயிற்கூடாகக் கொண்டு வந்திருக்கலாம். இன்றும் குவெற்று அல்லது பெசாவார் அங்காடிகளுக்கூடாக ஒருவர் நடந்து செல்வாராயின் பளபளப்பான கறுப்பிலும் சிவப்பிலும் அணிசெய்யப்பெற்ற கடங்கள் விற்பனைக்கு அடுக்கி வைத்திருப்ப தைக் காணலாம்; இவை மலைவு தரும் வகையில் பண்டைக் கோலங்

வேளாண் சமுதாயங்கள் 53
களைக் கொண்டிருந்தனவாயினும் ஒருநாளோ சிலநாளோ முன்னர் தான் உள்ளூர்ச் குளேயில் வைத்தெடுக்கப்பெற்றவையாகும்.
பிற்குறிப்பு
இந்நூல் எழுதியபின்னர் செல்வி பியாற்றிஸ் டி காடி என்பார் போரின் பின்னர் மத்திய பலுக்கித்தானில் தாம் நடாத்திய பரி சோதனைகளைப்பற்றி இலண்டனிலுள்ள பண்டைப்பொருள் கழ கம்' என்னும் சபையில் ஓர் கட்டுரை வாசித்தார்கள். இவர் குவெற் முக் கலங்கள் இன்னும் தென்பால் பாவின என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். புதிய ஒரு மட்கல வகையை (தோகோக்கலம்) வேறு பிரித்துக்காட்டி அவர் மற்றைப் பண்பாடுகள் பற்றிய எம் அறிவையும் விரிவாக்கியுள்ளார். பலுக்கித்தானிலுள்ள பிந்திய வா லாற்று முன்னர்த் தலங்களில் அவரின் கண்டுபிடிப்புக்கள் பற்றிப் பின்வரும் அதிகாரம் IV இல் குறிப்பிட்டுள்ளோம்.
அதிகாரம் IV இற்குரிய குறிப்புக்கள்
பலுக்கித்தான் மட்கலம் பற்றிய அடிப்படை விவரங்கள் பேரா சிரியர் சைல்ட் எழுதிய Ancient Egypt, 1933 இல் உள்ளது. 9,5637 37(555h New Light on the Most Ancient East (1934), அதி. IX இல் உள்ளது. இதற்கு ஆதாரமாயமைந்தவை இந்தியாவில் உள்ள பொருள்களை ஆய்ந்தமையும் சேர் ஒரல் ஸ்ரீன் அவர்களின் நேர்முறை அறிக்கைகளுமாம். An Archaeological Tour in Waziristan and North Baluchistan (1929) and An Archaeological Tour in Gedrosia (1931); c.1667. சி. மசூம்தாரின் Explorations in Sind (1934) என்பதும் இதில் அடங்கும். மிக அண்மையில் நடந்த வேலைகளே அடிப்படையாகக் கொண்டு அதிக பொருள்களை விவரமாக ஆய்ந்து நான் கண்ட முடிபுகளைப் பின்வரும் இதழ்களில் கூறியுள்ளேன். Ancient India I (1946), 8-26 ; அவ்விதழ் எண் 4. (1948), 26-40 ; Antiquity, XVII (1943), 169-182; இன்னும் மக்களுக்குப் Siful soft GOT (p60sou56) Some Ancient Cities of India (1945), அதி. 11 இலும் இப்பொருள் பற்றி எழுதியுள்ளேன்.
தென்பலுக்கித்தானின் முன்னைக் காலநிலை நிபந்தனைகள் பற்றிய சேர் ஒரல் ஸ்ரீன் அவர்கள் ஆய்வுரை அவரின் Gedirosia

Page 92
154 மேற்கிந்திய வெண்கல ஊழி
தொகுதியில் (7-13, 24-25, 113-14 இல்) வெளிவந்துள் ளது. மஞ்சார் வாவிப் பகுதி பற்றிய விவரம் மசூம்தாரால் Explorations in Sind, 96). VQ6) GlasfTGääLjLLGGTGPg.
Gg5@@gibo(ma LDLÆGdLib Lupi)pó) Ancient India, 6 TGỞOT 3. (1947),113-142 இல் நான் எழுதியுள்ளேன். எஞ்சிய பலுக்கித் தான் கலங்கள் பற்றி அவ்விதழில் 1 (1946), (8-26) இல் எழுதியுள்ளேன். மசூம்தார் சிந்திற்கு இறுதியாகச் சென்று சேகரித்த ஆயின் வெளியிடாத தகவல்களையும் திரு கிருஷ்ண தேவ அவர்களின் தயையினல் நான் பயன்படுத்தியுள்ளேன். தாரோ குன்று பற்றிய விவரம் அங்கு நாம் 1943 இல் நடாத்திய புல வேலைகளை அடிப்படையாகக் கொண்டது. நல் g@BASTGB lupihpý) gy@ff6$ iGi) Excavations in Baluchistan 1925 (1929) என்பதில் விவரித்துள்ளார்கள். பம்பூர் (பேசிய மக்கிரான்) usii) Garf $16) Giofait, Archaeological Reconnaissances in N. W. India and S. E. Iran (1937), (106-110) 6T657Luga) எழுதியுள்ளார்.
பபிலோனிலுள்ள இந்திய வணிகர் பற்றிய கதை (பாவேறு சாதக) சாதகக் கதைகளிலிருந்து பெறப்பட்டது. மொழிபெயர் ப்பு இ. பி. கொவல் முதலியோர் III,83. ராணு குண்டைக் $g Lolo aSalfaias, JUGaitot (5176) Journ. Near Eastern Studies, V(1946), 284—316.

அதிகாரம் V சிந்து, பஞ்சாப் ஆகியவற்றின் நகர்கள் யேலம் நதி, பீசு நதி ஆகியவற்றிற் கிடையமைந்த நிலத்தில் கொஸ் நகர ளவு பெரிய, ஐயாயிரம் மாநகர்கள் இருந்தன என்று சொல்லப்படுகிறது. இது மிகைப்படுத்திய கூற்றென நான் கருதுகிறேன்.
திராபோ.
பலுக்கித்தானிலிருந்தும், இறுதி அதிகாரத்தில் விவரித்த வர லாற்று முன்னர் சமுதாயங்களிலிருந்தும் அகன்று பஞ்சாபில் ஐந் தாறுகளும் இன்னும் தெற்காக இந்து நதியும் ஓடுகின்ற வெளிகளே நோக்கி நாம் வருகின்ற காலை ஏற்படும் மாற்றங்கள் பல அப்போது நாம் குன்றுகளிலிருந்து வெளிகளுக்கு வருகிருேம்; அடுத்தமைந்த திலிருந்தும் துண்டிக்கப்பெற்ற தனித்தனி பள்ளத்தாக்குகள் உடைய கடக்க அரும் ஒரு மலை நாட்டிலிருந்து, இயற்கையான போக்குவரத்து நெடுஞ்சாலையாக அமைந்த ஓர் ஆற்றுத் தொகுதி யால் வடக்கும் தெற்கும் இணைக்கப்பெற்ற ஒரு பெரிய பிரதேசக் திற்கு வருகிருேம் ; கிராமங்களிலோ அல்லது நாட்டுப்புறத்து சந்தை நகர்கள் என்று சொல்லக்கூடியனவற்றிலிருந்து பண்டைய முழுக் கீழைநாடுகளிலும் நகராண்மையில் பருமனிலும் அலுவல் முறையிலும் தலையோங்கி நிற்கும் மாநகர்களுக்கு நாம் வருகிருேம். பலுக்கி மலைத்தடைகளுக்குக் கிழக்காக இந்தப் பெரும் பகுதியில், இந்தியாவின் உண்மை எல்லை தொடங்கும் இவ்விடத்தில், நாம் இன்னுமொரு வரலாற்று முன்னர்க் குடியிருப்புத் தொகுதியொன் றைக் கண்ணுறுகிருேம். இவை பலுக்கித்தானின் கிராமங்களோடு ஒத்த ஒரு கமத்தொழில் முறை அடித்தளத்தையும் பண்பாட்டொரு மையில் குறித்த ଜର୍ଜ அமிசங்களையும் கொண்டிருந்தன எனினும், பல இயல்புகளில் ஒப்பினைவிட மாறுபாடுகளைக் கொண்டிருந்தன என்று கூறலாம்.
பலுக்கித்தான் சமுதாயத்தவரிடை எழுந்த பொருள்களிடை பல் வேறுபட்ட பாணிகள் வினை நுண்மைகள், உதாரணமாக மிக்க தனிப்பண்புகொண்ட மட்கலவகைத் தொகுதிகள் இருந்தன; இதைக் கொண்டு, சோப் பள்ளத்தாக்கு அல்லது கொல்வா,
55 w

Page 93
156 சிந்து, பஞ்சாப்
மஸ்கை பள்ளத்தாக்குகளில் போன்ற, இயற்கைப் பகுதிகளில் ஒவ் வொன்றும் தம்முள் தாம் நிறைவு பெற்ற சிறுசிறு வேளாண் சமு தாயத்தவர் அரசுகள் இருந்தன என நாம் அனுமானிக்கலாம். உள் ளூரமைந்த இப்பண்பாடுகளிடை நாம் காணும் ஒற்றுமைகள் இடர் நிறைந்த நிலத்தில் பயிர்ச்செய்யும் வேளாண் மக்களிடை எழும் பொதுவான தேவைப்பாடுகளினல் எழுவன. இப்பிரதேசம் முழுவ தும் ஓர் எதேச்சையான ஒரு சீரான நியமம் கடைப்பிடிக்கப் பட்டதற்கோ விதிக்கப்பட்டதற்கோ உரிய சான்று ஒன்றும் கிடை யாது. சிந்திலுள்ள அம்றி மக்களின் குடியிருப்புக்கள் பலுக்கித் யிருப்பு வீட்டுக் கைப்பணிகளில் தனக்கென உரிய ஒரு மரபுடைய தானுக்குரிய செய்திகளேயே மீள எடுத்துக்காட்டுவன. இக்குடியி ருப்பு வீட்டுக் கைப்பணிகளில் தனக்கென உரிய ஒரு மரபுடைய அம் உள்ளூரிலமைந்ததுமாகும். கைப்பணியில் மட்டுமன்றி மற்றை வாழ்விற்குரிய அமிசங்களிலும் இக்குடியிருப்பு தனக்குரிய மர பினைக் கொண்டிருந்ததென்று கொள்ள இடமுண்டு.
இந்த அம்றிக் குடியிருப்புக்களைப் பின்பற்றி வந்தோர் தனி ஒரு சிறு அரசுக்கு மட்டும் பணிவுடைமை கொண்டவராயிராது பேரரசு ஒன்றிற்குப் பணிக்கடன் பூண்டவராயிருந்தனர். வரலாற்று முன் னர் இந்தியாவில் நாம் இதற்கு முன் காணுத ஒரு பெரிய விசால மான பரப்பில், வேறுபாடுகளுக்குப் பதிலாக ஒரு சீர்மை குடி கொண்டது. பொருளியற் பண்பாட்டில் நிறைவான ஓர் இணக் கத்தை, மக்கிரான் கடற்கரையிலிருந்து கத்தியாவார் வரைக்கும் பரந்து, வடக்கே இமாலயத்தின் அடி வரைக்கும் சென்ற ஒரு புலத் தில் நாம் காண்கிருேம். இப்புலம் ஓர் ஒழுங்கற்ற முக்கோணவடிவி லிருந்தது; இதன் பக்கங்கள் ஏறக்குறைய 950,700,550 மைல்கள் எனக் கொள்ளலாம். இப்புலத்தின் ஒரு கோடியிலிருந்து மற்றைக் கோடிவரையுள்ள, ஏறக்குறைய நாற்பது குடியிருப்புத் தலங்களி லிருந்து ஒத்த முறையில், பெரும்பாட்டாக்க முறையில் செய்யப் பட்ட மட்கலப் பாண்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. வீடுகள் நியமப் பரிமாணங்கள் கொண்ட சுட்ட செங்கட்டிகளால் கட்டப் பெற்றிருந்தன. முத்திரை இலச்சினைகள் ஒத்த காட்சிகளையும் இது வரை வாசித்து விளக்கமறியப்படாத ஒரு சீர் எழுத்துமுறையை யும் கொண்டிருந்தன. ஒரு நியம நிறைமுறையையும் நாம் அறியக் கூடியவராயுள்ளோம். சில தலங்கள் கிராமங்களாயிருந்தன. சில

ஆகியவற்றின் நகர்கள் 157 சிறு நகர்களாயிருந்தன. இவற்றிடை பெரிய இரு மாநகர்கள் 350 மைல் இடைவெளிகொண்டு நின்றன. இவை ஒவ்வொன்றும் குறைந் தது ஒரு சதுரமைல் பரப்புடையனவாயிருந்தன. இவை இரண்டும் ஒரு பேராசின் இரட்டைத் தலைநகர்களாக விளங்கின. இதை நோக்கும் ஒரு பிரித்தானிய தொல்பொருளியலாளர்க்கு மனதில் தம் நாட்டிலிருந்த வரலாற்று முன்னர் இருப்பூழியின் காடவர் குடியிருப்புக்களை மேவி நின்ற உரோமப் பேரரசே தவருத ஓர் ஒப்புமையாகத் தோன்றும். ‘அரப்பாப் பண்பாடு' எனப்படும் பொருள்படாத் தொல் பொருளியற் பெயரிட்டுள் மேற்காசியாவி லிருந்த பெயரறியா அரசுகளுள் ஒன்று மறைந்து கிடக்கின்றது.
பண்டைக் காலத்தில் அாப்பாப் பண்பாட்டுள் அமைந்த பகுதி யின் இயற்கை நிலைமை கவர்ச்சிகரமானது. இன்று பஞ்சாப் ஆசியா விலேயே செய்யும் மிகச் சிறந்த பகுதியாகும். சிந்தோ ஒரு பாலை வனம் ; ஆயின் இந்து நதியின் நீரினைப் பயன்படுத்தும் மிகவிரிவான நீர்ப் பாய்ச்சல் வேலையால் மீட்கப்பட்டு வளம்பெற்றுள்ளது. இன்று வரை நடைபெற்ற புலவேலையிலிருந்து புறப்படுவது என்னவென்முல் குடியிருப்புக்களுள் மிகச் செறிந்த பகுதி இந்து நதிக்கு மேற்குப் பக்கமாகச் சிந்திலிருந்தது என்பதாகும். ஆயினும் பகவல்பூர் சமத் தானத்துப் பாலைப் பகுதிகளில் உள்ள இன்று வற்றிய கக்கர் நதி ஒரமாகப் பெரிய அளவின எனக்கூடிய நகர்களுக்குரிய பத்துப் பன்னிரண்டு தலங்களுள. வடபகுதித் தலைநகரான அசப்பா பஞ்சா பில் உள்ளது. இது இலாகூரிலிருந்து தென்மேற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. தென்நகரமான மொகஞ்சோதாரோ சிந்தில் இந்து நதி தீரமுள்ளது. இது கராச்சியிலிருந்து வடக்கே ஏறக் குறைய 300 மைல் தொலைவில் உள்ளது. இப்பெரிய மாநகர்களும் பட்டினங்களும் இருந்தமை, தம் உடன்தேவையிலும் மிகையாகப் போதிய உணவு பயிரிட்டு நகர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய ஏராளமான வேளாண் மக்கள் இங்கு இருந்தனர் என்று கொள்ள இடமளிக்கின்றது. அவ்வாறே அாப்பாப் பண்பாடு முழுவதும் சுட்ட மண் செங்கட்டிகள் கிரமமாகப் பயன்படுத்தியதிலிருந்து இப்பொழு துள்ள பற்றைகளும், தமரிக்கு மரங்களும் நல்கக்கூடியவற்றிலும், மிக உயர்ந்த மரவளங்கள் குளேவைப்பதன் பொருட்டு இருந்திருக்க

Page 94
158 சிந்து, பஞ்சாப்
வேண்டுமென்று கொள்வதற்கு இடமுண்டு. அாப்பாப் பண்பாட்டில் இப்பொழுது உருவமாக நிற்கும் எச்சங்களிலிருந்து நாம் ஊகிக்கு மளவில், சிந்தில் இப்பொழுதுள்ள கால நியமங்களில் அரப்பா அரசை நிறுவியிருத்தலியலாது. எனினும் அவ்வரசு படைக்கப் பெற்று இப்புலத்தில் பல நூற்ருண்டுகள் நிலைநின்றது. இம்மாற் றத்தை விளங்குதற்கு மாறும் இயற்கை நிலைகளையே நாங்கள் நோக்க வேண்டும். S. நற்பேருக இப்புலத்தில் கி. மு. மூன்றும் ஆயிரத்தாண்டிலிருந்த நிபந்தனைகளுக்குரிய நற்சான்றுகள் நமக்குள. அரப்பாப் பண்பாட் டின் சாதனைகளுள் உருவகிக்கும் கலையும் ஒன்ருகும். இது பெருவள வில் விலங்குருவங்கள் இயற்கையுருவங்களையே கையாண்டது. ஒத்த காலத்துக் காட்டு விலங்குகள் இற்படுவிலங்குகளின் இவ்வுருவகிப்புக் களை, அகழ்வுகளிலிருந்து பெற்ற விலங்குகளின் உண்மை எலும்புகள் இன்னும் விளக்குகின்றன. இதிலிருந்து நாம் அறியக்கிடப்பது என்னவென்முல் காலநிலை நிபந்தனைகள் காண்டாமிருகம், புலி, நீரெருமை, யானை முதலியவற்றிற்கு உவந்த கால வாழகமாயமைந் தன என்பதாம் ; இவற்றுள் ஒன்றேனும் இப்பொழுது இப்பகுதியில் காட்டினங்களாக வாழவில்லை. ஒரே புறநடையாயுள்ளது புலி ; இது சிந்தில் சில வேளைகளில் காணப்படுகிறது. ஆயின் பண்டைய ஒரு செதுக்கல் முத்திரை இலச்சினையில் இவ்விலங்குகள் யாவும் முக்கிய இனங்கள் எல்லாம் தம்பரிவாரமாக அமைந்த ஒரு விலங்கரசகை விளங்கும் ஒரு தெய்வத்தைச் சூழ நின்றன. இவ்விலங்குகளின் வேறுபல உருவச் சித்திரங்கள் அரப்பாக் கலையிலும் காணப்பட்டன. புவியொன்றைத் தவிர்ந்த மற்றையவற்றில் எலும்புகள் மொகஞ் சோதாரோவிலோ, அாப்பாவிலோ காணப்பட்டன.
இவ்விரண்டு தலங்களிலுமோ ஒன்றிலிருந்த்ோ அறியப்பெற்ற பொல்லா விலங்குகளுள், காரியல்(Gharial) வகையினதான ஆற்று முதலையும் ஒன்ருகும் ; இது இன்றும் சிந்து நதியில் காணப்படுவது. கரடி, குரங்கு அணில், கிளி, முதலியவற்றின் சில இனங்களும் அங் கிருந்தன. பாசிங்க (Barasingha) மானும் அங்கு காணப்பட்டது. மான் கொம்புகளும் காணப்பட்டன; இவை காசுமீரத்தின் புள்ளி கொண்ட சம்பூரினதாயும் பன்றி மானினதாயும் (hog-deer) இருக்க லாம். சில வேளைகளில் இவை இறக்குமதி செய்யப்பட்டனவாயிருக்க

ஆகியவற்றின் நகர்கள் 59
லாம். நரிகள் ஓநாய்களும் அங்கு இருந்தன. நகர் ஓரத்தே இருந்தன. தெருக்கள் பிரகாரங்களில் எலிகள், கீரிகள், பல்லிகள், ஆமைகள் நடமாடியிருந்திருக்கலாம். ஆறுகளிலிருந்தெடுத்த மீன் கள் உணவாயின. நற்பேருக எஞ்சிநிற்கும் சில எரிந்த குன்றுகளி லிருந்து பெற்ற அளவிலேயே மரங்கள் பற்றிய எங்கள் அறிவுள்ளது. இவற்றுள் தேவதாருமரக் குற்றிகள் வடதிசை மனைகளிலிருந்து கொண்டுவரப் பெற்றனவாயிருக்கலாம். எனினும் சிந்தில் சிசுமாம் (Siss00) இன்னும் வளர்கின்றது. இம்மரத்தைப் புதிதாக அரியும் பொழுதுண்டாகும் ஓர் தெவிட்டும் இனிய நறுமணம் இன்றும் வடமேற்கிந்தியாவின் வாழ்வில் ஓர் அமிசமாகக் கலந்துள்ளது.
பெற்ற இச்சான்றுகள் முடிவாக ஒன்றும் கூற வல்லனவல்ல ஆயி னும், விலங்குகளும், கோடிக்கணக்கான செங்கட்டிகள் சுடுவதற்கு வேண்டிய மரங்களும், செழிப்புற்று ஓங்கிய ஓர் வேளாண் சமுதா யப் பிற்களமும் சேர்ந்து இன்று மொகஞ்சோதாரோவில் விளங்கும் காலநிலையிலும் புறம்பானதோர் காலநிலை அன்று விளங்கியதென்ப தைக் காட்டுகின்றன. இங்கு ஆண்டின் வெப்ப நிலை மாரியில் 120 பானைற்றிலிருந்து மாரியில் உறைபனிவரையுள்ளது. ஆண்டின் மழை வீழ்ச்சி 6 அங்குலத்திலும் குறைவாக உள்ளது. பண்டைக் கிழக்கில் பொதுவாகப் பயன்பட்ட கட்டிட திரவியமான வெயிலில் காய்ந்த மண்செங் கட்டிக்குப் பதிலாகச் சுட்ட செங்கட்டி உபயோ கித்தமையே இடையமுது பெய்த அல்லது பெருவளவில் பெய்த மழை வீழ்ச்சி நியமங்களில் உறுதியான திரவியம் ஒன்றை வேண்டி நின்றமையைச் சுட்டுவதாக உள்ளது. மாநகர்களில் காணப்பட்ட விரிவான கான்முறைகளும் மழைநீரின் டெருவளவினல் தோன்றிய வென்பதை விளக்குவனவாயுள்ளன.
பெரிய அலெக்சாந்தரின் படையெடுப்புக்கள் பற்றிய வரலாற் முசிரியர்களின் எழுத்துச் சான்றுகள் கி. மு. நான்காம் நூற்றண் டில் சிந்து (மெளசிக்கானுேசின் பிரதேசம்) பிரதேசம் வளமை மிக்க நாடாயிருந்ததென்று கூறுகின்றன. அஃகல்லாமலும் இப் பொழுதிருப்பதை விட மொகலாயர் காலம்வரை இந்நல்நிலைமை நீடுகின்றது என்பதற்கும் சான்றுளது. ஒப்பீட்டளவில் அண்மையில் ஏற்ற காலநிலைச் சீர்கேட்டிற்கு நாம் கூறக்கூடிய மிக ஏற்புடைய

Page 95
60 சிந்து, பஞ்சாப்
விளக்கம், தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றுப் பரப்பின் எல்லை ஒரம் கிழக்குப் பக்கமாக மாறிவிட்டது என்னும் ஓர் ஊகமே யாம். இதனுல் இந்து நதி பண்டைக்காலத்தில் பருவப் பெயர்ச்சி மழைகளின் பாப்புள் இருந்தது என்று கொள்ளப்படும். இதுபற்றி இதற்குமாமுக ஒரு விளக்கம் உண்டு ; அதாவது பனிக்கட்டியாற்றின் உடன் பின்னர் இருந்த நியமங்களால் வடதிசைப் புயல் வலயம் தென்திசை நோக்கித் திசைமாறியது என்றும் மற்றவகைகளில் சாதாரண கால நிலைமைகள் செவ்விதில் மீளத்தோன்றிய போதும் மாறிய நிலைமை தொடர்ந்திருந்த தென்பதுமே அவ்விளக்கம். ஆயின் இவ்விளக்கத்திலும் முன்னர்க்கூறியதே இயைபுடைத்தாக உள்ளது. அலெக்சாந்தர் பின்வாங்கிச் செல்லுங்கால் தென்பலுக்கித்தானம் இப்பொழுதுள்ள வறண்ட காலநிலைமையை அடைந்ததென்று கொள்ளினும், இந்து நதிப்புலம் பருவப் பெயர்ச்சி மழைப் பிரதேசத் தின் மேற்றிசை ஒாத்தில், பின்னரும் சில நூற்முண்டுகள் தன் ஈரலிப்புக்கால நிலைமையைப் பேணிக்கொண்டிருத்தல்கூடும்.
பொருள்களின் உற்பத்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வல்ல அரசாங்க முறைமையிலமைந்த, மிகக் கட்டுப்பாடுடைய ஒரு சமுதாயத்திற்குரிய பொருள்கள் எவ்வாறு கவர்ச்சியற்ற ஒரு தன்மையினவாகத் தோன்றுமோ, அம்முறையில் அரப்பாப் பண் பாட்டின் ஒரு சீரான பொருள்களை இங்கு ஏலவே விவரித்த பிரதே சத்தினுள் நாம் காணலாம். இவ்வரசாங்கம் தன்னுட்சிப் புலத்துள் சுங்கவரித் தீர்வை வரிமுறைமையொன்றையும் விதித்து நடாத்தி யிருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை. அரப்பா நகரும் மொகஞ் சோதாரோவும் வேறு வேறு காலத்தின என்று கொள்வதற்கு ஒரு சான்றுமில்லை என்பதை நாம் பின்னர்க் காண்போம். பொதுவான ஒரு நிலத்திட்டத்திலமைக்கப்பெற்றவை இவை ; இவற்றின் காவல் மதில்கள் எஞ்சிய பகுதிகளிலிருந்து மிக உயர ஓங்கி நின்றன; இவற்றை நோக்குமிடத்து இவை ஓர் ஒன்றிய அரசாங்கத்தின் வடக் கும் தெற்குமாக அமைந்த இரட்டைத் தலைநகர்களெனத் தோன் றின. இது வரலாற்று முறையில் வடமேற்கிந்தியாவில் ஒப்புமை யொன்றுள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுவதாயுள்ளது; இங்கு

ஆகியவற்றின் நகர்கள் 16
சகர் என்பாரும் குசனர் என்பாரும் ஓர் அரசினை வடக்கே தச்ச சீலத்தில் அல்லது பெசாவாரிலிருந்தும் தெற்கே மதுரையிலிருந்தும் ஆண்டனர்.
வட அரசாட்சி என்று நாம் நியாயமான முறையில் கருதக்கூடிய பிரதேசத்தில் அாப்பாவைவிட பதினன்கு கிராம அல்லது சிறு நகர்த்தலங்கள் அறியப்பட்டுள்ளன. பஞ்சாபில் இப்பொழுது இரண்டு தலங்கள் அறியப்பட்டுள்ளன ; புலவேலை ஆய்வுகள் நடாத்தப்பெறின் இங்கு இன்னும் கூடிய தலங்கள் காணப்படலாம் என்று ஒருவர் ஐயுறல் இயற்கையே. எஞ்சிய தலங்கள் இந்துநதி சட்லச்நதி ஆகிய இரண்டிற்கும் கிழக்காக பகவல்பூர் சமத்தானத் தில் செறிந்துள (உரு 17). தென்பாலான மொகஞ்சோதாரோ அரசாட்சியில் இவைபோன்ற பதினேழு துணைக்குடியிருப்புக்கள் உள; இவற்றுட் பல ஏலவே அம்றிப் பண்பாடும் அதனேடியைந்த பண்பாட்டிற்குமுரிய வேளாண் மக்களால் குடிகொள்ளப்பட்டவை. கத்தியாவாரிலுள்ள சங்கபூர் தலம், வட பலுக்கித்தான் மலைகளின் கீழ் ஒரத்தில் உள்ள டபர் கொட் என்பதைப்போல் ஒரு நாட்டுப் புறத்து வணிக நிலையமாகத் தோன்றுகிறது. தென்பலுக்கித்தானி லுள்ள தலங்கள் குறிப்பாக மெகி, அாப்பா மக்களுடன் வணிகம் நடைபெற்றதென்பதற்குச் சான்றுபகர்வனவாயுள்ளன. மக்கிரான் கடலோரத்தமைந்த சுற்ககன்டோர் வணிகரின் அரண்செயப்பட்ட ஒரு நகராணுயிருக்கலாம் ; இது அராபியக் கடற்கரையிலமைந்த ஒரு துறையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம்.
பின்கூறிய தலங்கள் மற்றைக் குடியிருப்புக்கள் காப்பின் பொருட்டு அமைக்கப்பட்டவைபோல் தோன்றவில்லை; தலைநகர் களில் நகராண்களின் காப்பணிகள் மட்டும் இருந்தன என்று நிறு வப்பட்டுள. எனினும் நகர்களுக்கு மதில்களும் இருந்திருக்கல் கூடும். தலைநகரான அரப்பா ரவிநதி தீரத்திலிருந்தது. மற்றைத் தலைநகரான மொகஞ்சோதாரோ இந்துநதி ஓரத்திலிருந்தது. எனவே வடக்குத் தலைநகரையும் மேற்குத் தலைநகரையும் தொடர்பு படுத்தும் பெரிய ஓர் இயற்கை வழியாக ஆற்றுவழி அமைந்தது. பலுக்கித்தானிற்கு இட்டுச் செல்லும் கணவாய் மேலாகப் பொதி விலங்குகள் வணிகாைக்கொண்டு சென்றிருத்தல் கூடும்.

Page 96
162 சிந்து, பஞ்சாப்"
அரப்பா பண்பாட்டில் காணப்பட்ட உற்பத்திப் பொருள்களின்
ஒரு சீர்மை மிகக் கட்டுப்பாடாக விதித்துச் செயற்படுத்திய சட்டங்
களால் மட்டும் ஆனதென்று விளக்கமளிக்க முடியாது. செங்கட்டி
出
i
S
i
களின் பருமனையும், கவர்ச்சியற்ற முறையில் பயன்பாட்டுக்கான வடிவங்களில் சக்கரங்களில் அமைக்கப்பெற்ற கடங்களின் கொள்
ளளவு வகை முதலியவற்றையும், நிறைகள் அளவீடுகள் முதலியவற்
 
 
 
 
 
 

ஆகியவற்றின் நகர்கள் 163
றின் முறைமையையும் கட்டுப்படுத்த இங்கு நன்முறையில் நிறுவப் பட்ட ஒரு வணிகக் கட்டுக்கோப்பும் நியமப்படுத்தப்பெற்ற ஓர் உற் பத்தி முறை வினை நுண்மையும் இருந்திருத்தல் வேண்டும். மொகஞ் சோதாரோவிலேயே பல நூற்முண்டுகளாக அடுத்தடுத்த நகர் மீளமைப்பின்போது தெருமுகப்பு நிலங்களைக் கட்டாயமாக அமைக் கும் ஒழுங்கிலிருந்து வணிகக் குழு அல்லது சாதி முறைமை முதலியவைபோன்ற நிபந்தனைகளுக்குரியதான மரபுரிமை முறை யில் வந்த நில ஆட்சி, வணிக வழக்கு அங்கிருந்தன என்று தெரி கிறது ; அாப்பாவில் கமத்தொழில் விளைவினை நகராண்மைக் கழகம் கட்டுப்படுத்தியதென்பதை நாம் பின்னர்க் காண்போம். இங்க மைந்த பெரும் தானியக் களஞ்சியங்கள் வியத்தகு முறையில் உரோ மப் படைகளின் களஞ்சியங்களுக்கு முன்னேடிகளாயமைந்தன. திறமை வாய்ந்த அரைக்கும் பொறிகள் அங்கில்லாதிருந்தபடியால் கூலிகளை நன்முறையில் ஒழுங்குபடுத்தி மா இடிக்கப்பட்டது. இதற்கு ஒத்த முறையிலமைந்த ஈரறைக்குடிசை வரிசைகள் இழி வான முறையில் சமைக்கப்பட்டிருந்தன. உரோமிலிருந்த மிகக் கேடானவை எல்லாவற்றையும் நினைவூட்டும் தகையதான பொல்லா ஒரு செயற்றிறன் அரப்பாப் பண்பாட்டிலுமிருந்தது. எனினும், மிக விரிவாக அமைக்கப்பட்டிருந்த ஒழுங்குமுறைகளோடு, பழைய உலகில் எங்கும் ஒப்பிடமுடியா ஒரு தனிமைப்பாடும் விருத்தியின் மையும் ஒன்று சேர்ந்திருந்தன. எனினும் இவற்றிற்கு ஒப்பாகப் பண்டைத் தென் அமெரிக்க நடு அமெரிக்கப் பண்பாடுகளில் சில அமைந்திருக்கலாம்.
அரப்பாப் பண்பாட்டின் வியத்தகு ஒரு சீர்மைத் தன்மை இட முறையில்மட்டுமன்றி காலமுறையிலும் புலப்படுவதாகும். அரப்பாத் தலத்திலேயே, வட பலுக்கித்தான் பண்பாட்டுடன் தொடர்புடைய ஒரு வேளாண் குடியிருப்பருகிலமைந்த முதல் நகர், அதைப்பற்றி யறியப்பெற்ற எல்லா அமிசங்களிலும் முழுவதும் விருத்தியடைந்த பண்பாட்டிற்கு ஒருவகைக் குறிப்பாயிருந்தது. ஆயின் இங்கும் மிக்க ஆழமாகச் சேர்ந்த படைகள் நிறைந்த இடமென அறியப் பெற்ற மொகஞ்சோதாரோவிலும் இதன்பின்னர் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பிற்கூறிய தலத்தில் அதன் வரலாற்றுக் காலத்திற் குள்ளாக, குறைந்தது ஒன்பது முறையாகுதல், அது திருப்பிக் கட்டப்பெற்றிருக்கவேண்டும். மிக்க சேதம் விளைவித்த ஆற்றுப்

Page 97
64. சிந்து, பஞ்சாப்
பெருக்குகளினலேயே இது பலமுறை நடைபெற்றிருத்தல்வேண்டும். ஆயின் இங்கு மேலிருந்து கீழ் வரை சென்றிருந்த படைகளில் பொருளியற் பண்பாட்டினில் மாற்றம் ஒன்றும் புலப்படவில்லை. இதி லிருந்து புலனுக்ககப்படா மனிதரின் மற்றைப் பண்பாட்டமிசங் களும் இவ்வாறே மாற்றமுற்றிருக்கா என்று நாம் அனுமானித்துக் கொள்ளலாம். மாற்றமுறும் சிந்தனைக்கு ஒரு சுட்டியாக விளங்கக் கூடிய எழுத்து வடிவும் காலம் முழுவதும் மாறுபடாமலே இருந் துள்ளது. மொகஞ்சோதாரோவில் உள்ள மிகத் தாழ்ந்த தெரு மட்டத்தில் நின்று மேல்நோக்கி எமக்கு மேலாக 30 அடி உயரத் திற்கு நிமிர்ந்து நிற்கும் மாறுபடாக் கட்டிடக் கட்ட வரிசைகளை நோக்குங்கால், இந்தியாவில் பல் நூற்முண்டுகளாக மிளமீளக் காணப்படும் சிந்தனை முறையில் இயல்பான பழைமை பாராட்டும் பண்பின் முதன்முதலான உதாரணத்தை மிக்க உறுதியான முறை யில் நாம் கண்ணுறுபவர் ஆவோம்; இப்பழைமை பாராட்டல், தனிமையில் பேணப்படும் தருணங்களில் எல்லாம் என்றும் விருத்தி யின்மையாகவே முடிந்துவிடும்*
மீளக் கட்டப்பட்ட நீள் ஒழுங்குக் கிரமத்தை நோக்கின் இதன் கால நீட்சி எழுநூறு ஆண்டுகளாகவோ அதற்கு மேலாகவோ இருக்கும் போலத் தோன்றினலும், தொல்பொருளியல் சிறு பொருள்களிலன்றி, பொருளியல் முறையில் இம்மாற்றங்கள் புலப் படவில்லை. வியத்தகு முறையில் தட்டை வெண்கலக் கோடரி நடுத்தண்டில்லா ஈட்டி முதலியன போன்ற பூர்விகப் பொருள்கள் மாற்றமடையாமல் திருத்தமுமுமல் நீள்காலம் நிலைபெற்றன. அாப்பா அரசிற்கும் சுமர், அக்கட் ஆகிய அரசுகளுக்கும் நெடுங் காலமாக வணிகம் இருந்ததெனினும், மூன்ரும் ஆயிரத்தாண்டின்
1.மொகஞ்சோதாரோ, அரப்பா ஆகிய இடங்களில் நடாத்தப்பெற்ற அகழ் வுகள் பற்றிய அறிக்கைகள் அடுத்தடுத்தமைந்த கட்டங்களைச் சட்ட அசாதாரண மான ஒரு குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளன. இதை நாம் முன்னர் 55 ம் பக் கத்தில் குறித்துள்ளோம். இங்கு மூன்று பிரதான பருவங்கள் இருந்தன. முற்கால, இடைக்கால, பிற்கால என்பவை இவை ; இவை ஒவ்வொன்றும் மும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன; ஆயின் இக்கீழ்ப் பிரிவுகள் தலை கீழ்முறையில் எண்ணிடப்பட்டிருந்தன. இதனல் முன்னைப் பருவக் கட்டம் 1 இஜனத் தொடர்ந்து இடைப்பருவக் கட்டம் II வந்தது. இயலா முறையிலமைந்த இம்முறையைப் பின்வரும் என் விவரங்களில் நான் கைக்கொள்ளவில்லை.

ஆகியவற்றின் நகர்கள் 165
ஆரம்ப காலந்தொடங்கி மெசப்பொற்றேமியாவில் காணப்பட்ட கைபிடிபோடுவதற்காகக் கோடரிகள் பிற கருவிகளில், துளைபோடும் தீர்க்கமான வினைநுண்மை வளர்ச்சி, பஞ்சாபிலும் இந்துநதிப் பிா தேசத்திலுமிருந்த உலோக வேலை செய்வாரை அணுகவில்லை. நாம் அறிந்தவரையில் சொல்லக்கூடிய தென்னவென்முல் மொகஞ்சோ தாரோவில் நாம் காணக்கூடிய முதல் தண்டுத்துளைக் கோடரி, நக ரைக் கொள்ளையடிக்க மேற்குப் புலத்திலிருந்து வந்த ஒருவ ஞலேயே கொண்டுவரப்பட்டிருக்கும் என்பதே. இது கி. மு. இரண் டாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதிவரையில் நடைபெற்றிருத்தல் கூடும்.
அாப்பாப் பண்பாடுபற்றி நாம் அறியக்கூடிய காலம் முழுவதும் இந்த விருத்தியின்மையும் மாருத் தன்மையும், பெரிய நகர்களில் அதன் கிரமத்தை மட்டிட முடியாமற் செய்தன; இன்னும் அவற் றிற்குள்ள தொடர்புகளையும் உணரவிடாமல் தடுத்துவிடுகின்றன. மொகஞ்சோதாசோவில் அறியப்பட்ட ஒன்பது கட்டிடக் கட்டங் களும் (இங்கு இவை ஆதி இயல் மண்வரை செல்லவில்லை) அாப்பா வில் அறியப்பட்ட ஆறு கட்டங்களுக்கும் பிந்தியவையாயிருத்தல் முடியாது. எனினும் அரசிருக்கையை ஒரு தெற்குத் தலத்திற்கு மாற்றுவதும் (அல்லது மொகஞ்சோதாரோ முன்னத்தலமாக, அச சிருக்கையை மறுவிதத்தில் மாற்றுவதும்) இரு நகர்களுமாகச் சேர்ந்து ஆயிரமாண்டுகளுக்கு மேலாக நிலைநிற்றலும் கொள்கையள வில் நடைபெறமுடியாதவையல்ல. அாப்பாப் பண்பாட்டினை அதன் விருத்தியடைந்த நிலையிலேயே நாம் அறிவோம். அதன் ஆதி அறியப் படாதவொன்ருகும். பரும்படியாக அது பற்றி அறிந்த நிலைக்கு முன்னையவான கட்டங்கள் தெளிவுற அறியப்படவில்லை. இந்தியா விற்கு வெளியான ஒரு புலத்திலிருந்து இது தோற்றங்கொண் டிருக்குமெனக் கொள்வதற்கு உள்ளமைந்த சான்றுகள் ஆதார மளிப்பனவாயில்லை. ஆயின் இத்தோற்றம் எங்கு எவ்வகையில் உரு வாயது என்பது பற்றி ஒன்றும் புலப்படவில்லை.
மிகப் பெரிய ஒரு பேரரசில் விரிவான ஒரு சமூகக் கோப்பும் பொருளாதார அமைப்பும் சேர்ந்ததையும், அவற்றுடன் இயைந்த அப்பேரரசின் வினை நுண்மை வளர்ச்சிகளுள் பலவற்றை வியத்தகு முறையில் பூர்வீக நிலையிலேயே விட்டுவைத்ததுமான ஒரு தனிப்

Page 98
166 சிந்து, பஞ்சாப்
பாட்டையும், நாம் நோக்குங்கால், ஒருவர்க்கு ஒத்த காலத்துச் சுமரோ எகித்தோ நடு அமெரிக்க நாகரிகங்களோ பற்றிய எண்ணமே கருத்தில் தோன்றும். இங்கும் ஒருவர் ஒத்த வகையின வான பெரிய கட்டிடச் சிற்பச் சிதைவுகளையும் (இவை அாப்பா நாகரிகத்திலுள்ளவற்றிலும் மிக உயர் வளர்ச்சி பெற்றவை) மிக்க கட்டுப்பாடான அதிகார முறையான ஆட்சியையும், அரப்பாச் சான்றுகளிலிருந்து அனுமானித்தறியக்கூடியவான மிக விரிவான சமயக் கருத்துக்களையும் காணலாம். இன்னும் ஒருவகைப் பூர்விகச் சமயமுறை எழுத்துவடிவையும் வினை நுண்மையில் வளர்ச்சி யின்மையும் நாம் காணலாம். இவ்வினை நுண்மையில் வளர்ச்சி யின்மை அமெரிக்காவில் மிகப் பின்தங்கிய நிலைமையிலிருந்தது. ஏனெனில் இங்கு மக்கள் கருவிகளுக்கு உலோகத்தைப் பயன்படுத் தும் முறையை அறியாதவராயிருந்தனர். ஆயினும் கி. மு. இருப தாம் நூற்முண்டில் மேற்கிந்தியா தனித்திருந்ததிலும் பார்க்க கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் அமெரிக்கா தனித்திருப்பதற்குப் போதிய காரணங்கள் இருந்தன.
ஆகவே பல வகைகளிலும் அாப்பா நாகரிகம் மேற்காசியா விலிருந்த ஒத்த காலம் மற்றை நாகரிகங்களிலும் பார்க்க ஓரள விற்கு விளங்க முடியாத புதிர் கொண்டதாயுள்ளது. இப்பண்பாடு நகரோடியைந்ததாலும் கல்வியறிவு கொண்டிருந்ததாலும் இரும் பையன்றி செம்பு வெண்கலத்தைக் கருவிகளுக்கெனப் பயன்படுத் தியபடியாலும் இது கி. மு. மூன்ரும் ஆயிரத்தாண்டில் எகித்து, மெசப்பொற்றேமியா, பேசியா ஆகிய இடங்களிலிருந்த நாகரிகங் களுடன் ஒப்பிடப்படக்கூடியதா யிருந்தது. இது புறம்பான ஓர் இறுதியான இடத்திலிருந்து தோன்றியதென்று சொல்லமுடியாது. இதனில் மெகி, ராணு குண்டை முதலிய இடங்களிலிருந்தவற்றைப் போன்ற பண்பாடுகள் மறைந்துகிடந்தன. அஃதன்றியும் எழுத்து வடிவத்திலும், ஓரளவிற்கே. மெசப்பொற்றேமியாவில் இறுதி நான் காம் ஆயிரத்தாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த புதுக் கண்டுபிடிப் புக்களில் தங்கியிருந்ததென்று சொல்லலாம். இது சுமரில் மட்டு மன்றி முன்னைக் குலமுறை எகித்திற்குமே எழுத்துக்கலையில் ஓர் ஊக்கினை நல்கியுள்ளது. ஆயின் முதிர்ந்த பருவத்தை அடைந்த பொழுது, இந்த ஒரு பருவத்தையே நாம் அறிவோம்; அது முக்கிய

ஆகியவற்றின் நகர்கள் 67
அமிசங்களில் புறம்பான ஒன்முக, இயல்பாக இந்தியப் பொருளாக மாறிவிட்டது. அடுத்துவரும் பக்கங்களில் இதன் பல்வேறுபட்ட அமிசங்களையும் ஆராயும்போது இப்பொழுதுள்ள இந்துப் பண்பாட் டென் அது கொண்டுள்ள குறிப்பிடத்தக்க ஒப்புமைகளை நாம் காணலாம். இப்பிணைப்புக்கள் உண்மையில் இந்தியாவின் நடுக் காலக் கூற்றில் மிக நெருங்கியவையாயிருந்தன.
அசாதாரணமான இந்நாகரிகத்தின் பல்வேறுபட்ட விரிவான விவரங்களை ஆராயுமுன்னராக இந்நாகரிகம், பலுக்கித்தானின் வேளாண் சமுதாயங்களோடும் இன்னும் மேற்கே பண்டைக் கிழக்கு நாட்டிலிருந்த மற்றைப் பண்பாடுகளுடனும் காலவான்முறையில் எத்தகைய தொடர்பு கொண்டிருந்ததென்பதைப் பருவரைவாக எடுத்துக் காட்டலாம். கிடைத்த சான்றுகள் யாவற்றையும் குற்ற மற ஆய்ந்தபின் இவ்வதிகாரத்தின் இறுதியில் கால வான் முறைப் பிரச்சினை விரிவாக ஆராயப்பட்டுள்ளது ; ஆயின் இப்பண்பாட்டின் முழுமையும் அமைந்தவாற்றை நன்குணர்வதற்கு அதன் பொது வான நிலைபற்றி ஓரளவு அறிந்திருத்தல் அவசியமாகும்.
முதலாவதாக நாம் குறிப்பிடவேண்டிய அமிசம், அாப்பாப் பண்பாட்டில் பெருவளவிலுற்பத்தியான வண்ணந்தீட்டா உபயோக வகைக் கலங்களோடு வண்ண மட்கலவகைகள் ஓரளவிற்கு அடுத் தடுத்துக் காணப்படுகின்றது என்பது. இவ்வண்ண மட்கலங்கள் ஆழ்ந்த துலக்கமான சிவப்புப் பிற்களத்தில் கறுத்தக் கோலங்கள் கொண்டிருந்தன; இக்கலவுகை, தெற்குப் பலுக்கித்தான் பகுதி யிலிருந்த கபில மஞ்சட்கலங்கள் உபயோகித்த பண்பாடுகளோடு கொண்ட தொடர்புகளிலும் பார்க்க வட பலுக்கிக்கானிலுள்ள செங்கலத் தொகுதிப் பண்பாடுகளுடனேயே முக்கிய தொடர்பு களிலிருந்தன என்பதைக் காட்டுவதாயுள்ளது. ஆயின் இப்பொழுது நாம் அறிந்தவற்றைக் கொண்டு நேரான தொடர்பு இருந்ததென்று நிறுவ முடியாது. ஆயினும் அாப்பாவில் அண்மையில் (1946) நடந்த அகழ்வில் கிடைத்த சிற்றளவு பொருள்கள், அத்தலக்கிலிருந்து முதல் நகர் பலுக்கித்தான் தொகுதியில், ராண குண்டையின் Ic கட்டத்தில் காணப்பட்ட கட்ட நிலைக்குரியவெனத் தோன்றும் மட் கலங்களை உபயோகித்த மக்களின் குடியிருப்பின் மேல் அமைந்

Page 99
It8 சிந்து, பஞ்சாப்
திருந்தது (உரு. 20) என்பதைக் காட்டுவனவாயுள்ளன. எனவே பஞ்சாபிலுள்ள விருத்தியடைந்த அாப்பாப் பண்பாடு ராகு Ic இற்குப் பிந்தியதாகும்.
இன்னும் தென்பாலுள்ள தலங்களிலிருந்தும் ஒத்த சான்றுகள் கிடைத்துள. அாப்பாப் பண்பாட்டிற்குரிய பகவல்பூர் நகர்களுள் ஒன்று கபில மஞ்சள்மேல் கறுப்புக் கலமுடையார் குடியிருப்பொன் றின் மேல் இருந்தது. ஆயினும் இக்கலம் இப்பொழுது அறியப் பெற்ற பலுக்கித்தான் கலங்களுள் யாதாயினும் ஒரு வகையினதுட ணும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகப் புலப்படவில்லை. ஆயினும் சிந்தில் மூன்று வரலாற்று முன்னர்க் கிராமங்களில் அம்றிவகுப்பிற் குரிய மட்கலங்கொண்ட குடியிருப்புகளுக்கு மேல் அரப்பா மக்க ளின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. இச்சான்று, கபில மஞ்சட் கிராமத்தில் அம்றி காலவான் முறையில் என்ன இடங்கொண்டுள் ளது என்று நாம் அறிந்ததுடன் அல்லது கருதுவதுடன் இயை புடையதாயுள்ளது. இன்னும் குள்ளிப் பண்பாடு தென்பலுக்கித்தா னில் செழிப்புற்றேங்கிய காலத்தில் அங்கு அாப்பா வணிகர் இருந் தனர் என்பதற்கும் மேற்கொண்ட சான்றுகள் உள. இவ்வணிகர் குடியேறிகளாயுமிருக்கலாம். அஃதல்லாமலும் நல்லில் இருந்த இடு காடு பஞ்சாப் இந்து நதி ஆகிய இடங்களிலிருந்த நாகரிகத்துடன் சில தொடர்புகள் கொண்டிருந்த மக்களுடையதுபோலவும் தோன் றியது. இந்த இடுகாடு ராகு Ic மக்களின் குடியிருப்பின் சிதைவு களுள் கிண்டியமைக்கப்பட்டபடியால், இது அாப்பாவிலேயே உள்ள படையமைவியன் முறைச் சான்றுடன் நன்கு பொருந்துவதாயுள் ளது. வெளிகளிலிருந்த நகரப் பண்பாட்டினர் குள்ளி, நல், பெரி யனே குண்டை ஆகியவற்றின் பாணியில் மட்கலம் ஆக்கிய மலை வாழ் வேளாண் மக்களுடன் அண்ணளவில் ஒத்த காலத்தினரா யிருந்தனர் போல் தோன்றுகிறது. அண்ணளவில்தான் இவர்கள் ஒத்த காலத்தினர்; ஏனெனில் குள்ளிப்பாணி, அரப்பா மக்கள் தென் பலுக்கித்தானை அடையுமுன்னரே தொடங்கிவிட்டது; அன் றியும் நல்பாணியோ, அரப்பா அரசாட்சியின் பெருவளமையிருந்த பருவத்திலும் கூடிய காலத்திற்கு நீடித்தது போலத் தோன்றியது. சிந்தில் மூன்று தலங்களில் கைவிடப்பட்டு அழிந்த அரப்பா நகர் களில் (கிராமங்களாயுமிருக்கலாம்) அரப்பாவிற்குரிய பல்வகைப்

ஆகியவற்றின் நகர்கள் 169
பட்ட நகாவகை வாழ்முறைக்குப் புறம்பாயமைந்ததும் பண்படா ததுமான வாழ்முறை கொண்ட புதிய மக்கள் புகுந்ததற்குரிய சான் அறுகள் கொண்ட குடியிருப்புக்கள் காணப்பட்டன. மொகஞ் சோதாரோ சீரிழந்துபோகும் காலத்தில் இத்தகை மக்கள் புதி தாய்ப் புகுந்தனர் என்பதற்கு ஒரு சிறிது சான்றுளது. சிந்தில் உள்ள சானுதாரோவைப் போலவே அரப்பாவிலும் நகராண் அமைப்புக்கள் காவல்கள் ஆகியவற்றின் சிதைவுகள்மீது சீர்பெழுத குடிசைகள் அமைத்துக்கொண்ட மக்களின் ஓர் இறுதிக் குடியிருப் பிருந்தது. இம்மக்கள் இறந்தோரை, கைவிடப்பட்ட நகரின் குப் பைகளை கிண்டிப் படைத்த ஓர் இடுகாட்டில் புதைத்தனர். பலுக் கித்தானில் ஒத்த காலத்தியதுபோல் தோன்றும் ஓர் இடுகாடு குள் ளிக் குடியிருப்பின் இடிபாடுகளில் கிண்டியமைக்கப்பட்டிருந்தது. இங்கும் சான்று ஒருமுகமாயுள்ளது.
அாப்பா நாகரிகத்தின் முடிவோடு ஒத்தி காலத்தில் ஐயுறுவகை யில் தோன்றும் இப்புதிது புகுந்தவர் இந்தியாவிற்கு மேற்கிலிருந்து வந்தவராவர். அவர்களைப் பற்றியறிந்து அவர் வந்த காலத்தை மட் டிட அாப்பா வணிகர் தொடர்பு கொண்டிருந்த இந்தியாவிற்கு மேற்கிலமைந்த நாடுகளையே நாம் நோக்கவேண்டும். இங்கும் இது பற்றிய விவரமான ஆராய்ச்சியைப் பின்னர் நாம் அரப்பா அரசு பிறநாடுகளுடன் கொண்டிருந்த உறவுகளை ஆயும்போது ஆய்வோம். இப்பொழுது நாம் இந்திய நாகரிகத்துடன், தைகிரிசு நாகரிகங்கள் கொண்டிருந்த உறவுகளுக்கு மெசப்பொற்றேமியாவை நோக்கு வோம். இந்த இந்திய நாகரிகம் விளக்கமளிக்க முடியா எழுத்து வடிவினைக் கொண்டிருந்த தன்மையால் வரலாற்று முன்னர்ப் பண் புடையதாயிருந்தது. ஆயின் மற்றையவற்றின் வகையில், யாதோ ஒருவகையில் எழுத்து முறையிலமைந்த பதிவு, அவற்றை, கி. மு. 3000 அதிகம் பின்னரில்லாத ஒரு தேதியிலிருந்து வரலாற்றுக்குரிய தெனக் கொள்ளச் செய்கிறது.
முந்திய அதிகாரத்தில் கி. மு. 2800 வரையில் முன்னேக்குல முறைப்பருவத்தில், தென்பலுக்கித்தானுக்கும் குள்ளிப் பண்பாட்டு மக்களுக்கும் சுமரிற்குமிடையே வணிகத் தொடர்புகள் இருந்தன என்பதற்கு நற்சான்றுளது என்பதை நாம் கண்டோம். தென்பலுக்

Page 100
170 சிந்து, பஞ்சாப்
கித்தானின் வணிகத் தொடர்புகள் மேற்குத் திசையாகக் கடல் வழி நடக்கவில்லையென்பது மெகிபோன்ற தலங்களில் உள்ள ஏராளமான சான்றுகளிலிருந்து புலனுகின்றது; இங்கு மாற்றுமுறையாக அமைந்த வணிகத் தொடர்புகள் கிழக்கு முகமாகத் தரைவழியே இந்து நதிப்பள்ளத்தாக்குப் பண்பாடுடனும் அாப்பாப் பண்புடனு மாக இருந்தது. இந்த நதியில் கழிமுகங்களின் விலகிவிலகி அமை யும் களங்களும் சதுப்புச் சோலைகளும் அங்கு ஒரு துறையை அமைக்க உதவா. அாப்பாவிற்கும் மேற்குப் பகுதிக்கும் நடை பெற்ற ஆதி வணிகத்தில் குள்ளி வணிகர் இடை வணிகராயிருந் திருக்கலாம். இவர்கள் மக்கிசான் கடற்கரையிலிருந்து தம் பய ணத்தை மேற்கொண்டனர். எவ்வாறெனினும் முன்னைக் குலமுறைக் காலத்தில் சுமரும் அரப்பாப் பேரரசும் தொடர்பு கொண்டிருந்தன என்பதற்குச் செவ்விய உறுதியான சான்றில்லை. தொடர்பிற்குரிய தெளிவான சான்றுகள் அக்கடியன் காலத்திலேயே கி. மு. 2300 அளவிலேயே முதன் முதலாகத் தோன்றுகிறது. அரப்பா நாகரிகத் தின் யாதோ ஒரு கட்டம் இசார் III பருவத்துடன் ஒத்த காலத்தது என்று தெரிக்கும் சில குறிப்புக்கள் வடபேசியாவிலுள. இரசிய தேக்கித்தானில் அனே II இல் அாப்பா தொடர்புகள் புலப்படு கின்றன. இது வேறு வழியில் இசார் II உடன் ஒத்த காலத்த தாகும். இக்கட்டங்களுக்குரிய தேதிகள் இன்னும் விவாதத்திற்குரி யன. எனினும் கி. மு. 2300-2000 வரையுள்ள காலம் பொருந்தக்
கூடியதாகும்.
சானுதாரோ, அரப்பா ஆகிய இடங்களிலும் பிற இடங்களிலும் உள்ள சிதைந்த அாப்பாத் தலங்களில் இறுதியாக வாழ்தலமமைத்த புதிது புகுந்த காடவர்கள் இசார் II அனே II ஆகிய பண்பாட் டுத் தொகுதிகளுடனும் தொடர்புகள் கொண்டிருந்தனர் போல் தோன்றுகிறது. ஒருவேளை இவை இவர்களின் இறுதி நிலையுடன் இயைந்தனவாயும் இவர்கள் வட இரானிய தேக்கித்தான் புலங்களி லிருந்து கிழக்குத் திசையாகப் புலம் பெயர்ந்ததைச் சுட்டுவனவா யும் இருத்தலும் கூடும்; எனினும் அவர்கள் இந்தியாவிற்கு வந்த காலம் கி. மு. 2000 இலிருந்து இரண்டு மூன்று நூற்முண்டுகளுக்குப் பின்னராயிருத்தல் வேண்டும். கி. மு. 1500 வரையெனில் அண்ணள வில் இயைபுடையதாயிருக்கும். எனவே மேற்புலத்திலிருந்து வந்த

ஆகியவற்றின் நகர்கள் 7.
சான்று நன்கு விருத்தியடைந்த அரப்பா நாகரிகம் கி. மு. 25001500 இற்குமிடையில் செழிப்புற்றிருந்ததென்று கூறலாம். இப்பண் பாட்டின் இவ்விருத்தியடைந்த கட்டமொன்றையே நாம் இப் பொழுது அறிந்துள்ளோம் என்பதை இங்கு கூறுதல் வேண்டும். அதன் தொடக்கத்திலும் பார்க்க அதன் முடிவைப் பற்றியே நாம் உறுதியாக அறிவோம். ஆயின் அதன் ஆயிரத்தாண்டு நின்ற இடைக்காலத்தில் புதிர்போன்ற இந்நாகரிகத்தின் அமைப்பு, வடி வம் ஆகிய இரண்டிலும் போற்றத்தக்க மாற்றமொன்றும் இருக்க வில்லை என்று மட்டும் சொல்லலாம். எனவே அடுத்துவரும் பக்கங் களில், படையமைவியன் முறையில் விமரிசநோக்கில்லா அகழாய்வு முறைகளால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளுக்கு அதிகம் ஆளாகா மல் நாம் பொருளை ஆயலாம் ; கிடைக்கக்கூடிய சான்றுகள எல்லா வற்றையும் அரப்பா மக்களையும் அவர்களின் சாதனைகளையும் பற்றி யறிவதற்குப் பயன்படுத்தலாம்.
எனவே முதன்முதலாக மக்களை எடுத்துக்கொள்வோம். அரப்பா மக்களின் உடலியல் வகை, ஆள்தோற்றம் ஆகியவற்றிற்குரிய சான்றுகளுக்கு இரு மூலங்களை நாம் காணலாம். என்புக்கூடுகளின் உண்மை எச்சங்கள், அகழ்ந்தாயப்பட்ட தலங்களில் காணப்பெற்ற கற்சிற்பம் வெண்கல வார்ப்புக்கள் ஆகியவற்றில் காணப்பட்ட உரு வகிப்புக்கள் என்பவை அவை. மொகஞ்சோதாரோ, அரப்பா, சானு தாரோ ஆகிய இடங்களில் என்புக்கூடுகளும் அவற்றின் துண்டுகளு மாக ஐம்பது உருப்படிகள் வரை கண்டறியப்பட்டன. இவை பல் வேறு நிலைகளிலிருந்தன ; கிரியைமுறை அடக்கங்களிலிருந்து நக ரின் வரலாற்றிறுதியில் மிக்க வன்மையான முறையில் வதை செய் யப்பட்டிருந்த நிலைவரையுள்ள வெவ்வேறு நிலைமைகளில் இவை காணப்பட்டன. இவற்றுட் சிலவற்றைத் தொல்பொருளியலளவை யாரும் உடற்கூற்றியலறிஞரும் ஆய்ந்து அறிக்கையளிக்காள்ளார் கள். அாப்பா நகரின் செழிப்புற்ற வாழ்காலப் பருவத்திற்குரிய இடு காடு R 37 இல் 60 புதைப்புக்கள் காணப்பட்டன; ஆயின் இவை பற்றி உடற்கூற்றியல் முறையில் ஆராயப்படவில்லை. ஆயின் கிடைக் கக்கூடிய சான்றுகளிலிருந்து, முக்கியமாக மொகஞ்சோதாரோவிலி ருந்து பெறப்பட்டனவற்றிலிருந்து, மக்கட்டொகையில் ஒன்றிற்கு மேற்பட்ட மனித இனத்தவர் இருந்தனர் என்பது புலனுகும்.

Page 101
172 சிந்து, பஞ்சாப்
மொகஞ்சோதாரோ மக்கள் எவ்வாறு இறந்தனர் என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம். இவர்களின் எச்சங்களே இந்நக ரின் இறுதிக்கட்டத்தில் அமைந்த வீடுகளிலும் ஒழுங்கைகளிலும் காணப்பட்டன. இப்பொழுது எம் ஆராய்ச்சிப் பொருள் இம்மக் களின் வாழ்வோடியைந்ததாகும்.
ஒருவகுப்புப் படுத்தக்கூடிய கபாலங்களுள் பாதிக்குமேற்பட்டவை ஓரளவிற்கு ஓரினத்தவையாகும். பலுக்கித்தானில் உள்ள நல் இடு காட்டிலிருந்து பெறப்பட்ட மிக்க நல்நிலையில் பேணப்பட்ட ஒரே யொரு கபாலமும் இவ்வினத்தைச் சார்ந்ததாம். இத்தொகுதியே மெடிற்றாேனிய வகையினதென வகுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இவ்வினத்தின் இபரியாளியிலிருந்து இந்தியாவரை சார்ந்த பல் தொகுதி மக்களும் அடக்கப்பட்டுளர்; இதற்குச் சிறப்பான வகை பலத்தினத்தில் பிந்திய நடுபியன் காலத்தில் தோன்றுகிறது. (இக் காலத்தைப் பற்றி இரண்டாம் அதிகாரத்தில் கூறியுள்ளோம். இது மெசோலிதிக்குக் கட்டத்தைச் சார்ந்தது. இது, கி. மு. ஒன்பதாம் அல்லது பத்தாம் ஆயிரத்தாண்டுவரையிலிருந்து தொடங்குவதா யிருக்கலாம்.) இவ்வினம் வட ஆபிரிக்காவின் தென் சுதெப்பி வெளி களிலும் ஆசியாவிலும் இனபேதமடைந்து மேற்குத் திசையாகவும் கிழக்குத் திசையாகவும் புலம் பெயர்ந்திருக்கலாம். முன்னைக் குல முறை எகித்தியர் உண்மையில் இந்த இனத்தையே சார்ந்தவர். இன்று இவ்வினத்தைச் சார்ந்த துரயவர் அராபியக்குடா நாட்டி லேயே காணப்படுவர். இந்தியாவில் இன்று இவ்வினம் வட பகுதி மக்களிடை தலையாய ஒரு கூருக அமைந்துள்ளது. மற்றை இடங்க ளில் மேல்வகுப்பாரிடை பரந்தமைந்துள்ளது. இவ்வகை மக்கள் நடுத்தரத்திலிருந்து உயரமான உயர்வு கொண்டிருப்பர். இவர் நிறம் கறுப்பிலிருந்து மெல்லிய ஒலின் கபிலம் வரை இருக்கும். தலையும் முகமும் நீண்டிருக்கும். மூக்கு ஒடுங்கி ஒப்பளவில் எடுத்ததாயிருக் கும். மயிர் கறுப்பாயிருக்கும். கண்கள் கறுப்பிலிருந்து கபிலம் வரையிருக்கும்; சிறப்பாகப் பெரியவாய்த் திறந்தவையாய் இருக் கும். உடல் மெல்லிதாக அமைந்திருக்கும்.
நீண்ட தலையுடைய இம்மெடிற்றாேனியன் வகையினர் மேற்காசி யாவில் ஒவ்வோரிடத்திலும் மிக்க ஆதிப் பயிர் செய் மக்கள் குடி யிருப்புக்களோடு இயைந்து காணப்பட்டனர். உதாரணமாக சியல்

ஆகியவற்றின் நகர்கள் 73
கில், அல் உபெய்த்தில், அனுேவில், அலிசர் ஆகிய இடங்களில் இவ் விணைப்புக் காணப்பட்டது. அல் உபெய்த்தில் உள்ள கபாலங்கள் மொகஞ்சோதாரோவில் உள்ளவற்றுடன் மிக்க ஒப்புமை உடையன வாயிருக்கின்றன. இவற்றிலுள்ள அபுகனித்தன் பண்புகளைப்பற்றி ஏலவே கூறியுள்ளோம். பலுக்கித்தானின் வண்ணமட்கலத்தின் சான்றும், அரப்பாப் பண்பாட்டின் வண்ணக் கலத்தின் சான்றும் இந்தப் பல்வகைப்பட்ட வேளாண் சமுதாயங்களிடையமைந்த அறுதியான ஓரினத்தன்மையைச் சுட்டுமாறு போல, உண்மையான உடற்கூற்று வகையும், இம்முழுப்பரப்பிலுமிருந்த மக்களின் முக் கிய மனிதவின ஒருமையைக் காட்டுவதாயுள்ளது. வரலாற்று முன் னர் இந்தியாவில் இம்முன்னை மெடிற்றரேனியன் வகை தோன்று வது மேற்கிலிருந்து மக்கள் பாம்பியவாற்றினைச் சுட்டுவதாயுள்ளது. ஆயினும் மொகஞ்சோதாரோ மக்களில் வின்னுமொரு மிகப் பூர் விகப் பண்புமொன்று அமைந்துள்ளது. இங்கு காணப்பட்ட கபா லங்களுள் மூன்று ஆதி ஒசுத்திரலொயிட் தொகுதியெனப்படுவ தைச் சார்ந்தனவாம். இவ்வகையைச் சிலர் வெத்தொயிட் வகை யென்பர். இவ்வகை இந்நாட்டின் ஆதிக்குடி மக்களுக்குரியன என்று கொள்ளவும் நல்லுரிமை கொண்டுளது. இம்முறையில் இவ் வகைக்கு ஒத்த ஒப்பை ஒசுத்திரேலியக் கறுப்பு மக்களிடையும் இலங்கை வேடரிடையும் காணலாம். ஒசுத்திரேலியாவிற்குரிய பூர் விக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கூடாகவும் மெல னிசியாவிற்கூடாகவும் சென்றனர் என்று இப்பொழுது ஒரு கருத் துள்ளது. தென்னிந்தியாவில் இவ்வகைக்குரிய நல் எடுத்துக் காட் டுக்கள் இப்பொழுதும் உள. இவ்வகையினர் சிற்றுருவினர்; கரு மையை அண்ணும் இருள் நிறத் தோலுடையர் : சுருண்ட ஆயின் முறுக்கற்ற மயிருடையர் ; நீண்ட தலையும், அகன்று சப்பையான மூக்கும், தடித்து வெளித்தள்ளும் உகடுகளுமுடையர். இம்மக்கள் இப்பொழுது தென்னிந்தியாவிலும் நடு இந்தியாவிலுமுள்ள ஆதிக் கிளையினரில் முக்கிய கூமுக அமைந்துள்ளனர். இவர்கள் இந்து சம யத்தவரிடை புறச்சாதியினரெனப்படுவாரிடை பெரும் பகுதியின ராயுமுள்ளனர்.
அரப்பாப் பண்பாட்டில் உள்ள எஞ்சிய கபாலங்களுள், மொகஞ் சோதாரோவின் பிரதான் வாழ்தலத்திலும் காலத்தாற் பிந்திய ஒரு

Page 102
174 சிந்து, பஞ்சாப்
புதைப்பிலிருந்து பெறப்பெற்ற வகைசார் முறையில் மிகவும் மொங் கோலியன் வகையைச் சார்ந்த ஒருவனின் கபாலமும் உள்ளது. இது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றன்று. இவ்வகை பிற்பழஞ்சிலைக்காலந் தொடங்கி சைனவிலும் உள்ளது. இங்குள்ள ஒன்று. (ஒருவேளை நான்காயிருக்கலாம்) சிறு தலைகொண்டவை அல்பைன் வகையின வென்று ஒப்பிடப்படக்கூடியனவாயிருந்தது. சியல்கில் பருவங்கள் I, III, IV ஆகியவற்றில் இவ்வகை, மக்கட்டொகையில் மிகச் சிறு விகிதமாக அமைந்துள்ளது. இதன் தோற்றம் பற்றி விரிவாக ஆராய்வு நடாத்தப்பட்டுள்ளது. இந்த வட்டத் தலையுடையார் சிறு தலையும் சிறுமுகமும் கொண்ட பிற்பழஞ் சிலைக் காலத்திலிருந்து எஞ்சியவராயிருக்கலாம். இவர் தோற்றம் சிறப்பான வட்டத்தலை யுடைய மொங்கலொய்த்து வடிவத்தினர் தோற்றத்தோடு ஒத்த தாகும். சியல்க் சான்றிலிருந்து கி. மு. மூன்றும் நான்காம் நூற் முண்டுகளில் இரானியன் பீடபூமியில் இத்தகைய மண்டை ஒட்டு வகைகள் இருந்திருக்கலாம் எனப் புலப்படுகிறது. இவ்விந்தியக் கபாலங்களிலிருந்து நாம் அறியக்கூடியது என்னவென்றல், மேற் கிந்தியாவில் அருகியவையாகக் காணப்பட்டாலும் இவை அக்காலத் தில் மேற்குத் திசையிலிருந்து ஓரினமக்கள் இந்து நதிப் பள்ளத் தாக்கிற்கு வந்தனர் என்பதைச் சுட்டாமல் உள்ளூர்க்குரிய உடற் கூற்று வகைக்குரியன என்பதைச் சுட்டுவன என்பதே. இன்று இந் தியாவிலுள்ள மக்களுள் ஒரு தொடர்புகொண்ட சிறுதலை அமிச மொன்று பல பிரதேசங்களிலும் பரந்துள்ளது. சில தொல் மனிதரி யலளவையாளர் பலுக்கித்தானிலுள்ள பருசி மக்களையும் இத்தொகு தியுள் அடக்குவர். ஆயின் மற்றையவர், ஆதி ஒசுத்திரலொயிட் வகையினரும் மெடிற்றாேனிய வகையினரும் கலந்து இவர் தோன் றினர் என்று சொல்வர். பொதுவாக அல்பைன் இனத்தவர் இவ்வி னத்தவரிலும் சிறிது வெண்மையான நிறமுடையவராயும் உடலில் ஏராளமான மயிரும் விட்ட முகமும் உறுதியான மூக்குமுடையவ ga) ft.
கபாலங்களிலிருந்து பெற்ற முழுச் சான்றுகளையும் நோக்கும் போது அாப்பாப் பண்பாட்டில் முதன் முதலாக பூர்வீக ஆதி ஒசுத் திரலொயிட்வகை இருந்திருக்கலாம். இவ்வகையினர் இன்றிருப்ப தைப்போல் சமூகத்தில் அன்றும் தாழ்ந்தவராயிருந்திருக்கலாம்.

ஆகியவற்றின் நகர்கள் 175
இரண்டாவது வகையினர் மிகப் பெருவளவிலிருந்த மெடிற்றரேனி யன் வகையினரே. இவர்களே மேற்கிந்திய வரலாற்று முன்னர்க் குரிய வேளாண் அமிசங்களையும் நகரமிசங்களையும் பெருவளவில் நல்கியவராயிருக்கலாம். இவர்களுடன் சிறுதலையுடைய அல்பைன் வகையும் சேர்ந்திருக்கலாம். மூன்மும் வகையினர் ஆங்காங்கு காணப்படும் அயலவர். இவர்கள் நேபாளம் அல்லது அசாம் ஆகிய மலைநாட்டிலிருந்து வந்திருக்கலாம் அல்லது சைனுவிலிருந்தே வந் திருக்கலாம். இவர்கள் வலிது புகுந்தவர்களாயிருக்கலாம்.
சிற்பத்திலிருந்து பெற்ற சான்றுகளை மிகக் கவனத்துடனேயே நாம் எடுத்தாளவேண்டும். ஆயின் கபாலங்களிலிருந்து நாம் பெற்ற அறிவோடு அவை முரண்படவில்லை. மொகஞ்சோதாரோவிலிருந்து நான்கு கலைப்புனைவுகளை நாங்கள் உண்மையில் எங்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளலாம். இவற்றுள் முதலாவது ஒரு சிறுமியின் ஒரு வெண்கலச் சிற்றுரு. இது தென்பலுக்கித்தானிலுள்ள குள்ளிப் பண்பாட்டில் களிமண் சிற்றுருவங்களோடு தலையலங்காரங்களிலும் மற்றை அணிவகைகளிலும் ஒத்திருந்தது என்பதை அதிகாரம் TV இல் கூறியுள்ளோம். இச்சிறுமி உண்மையில் ஓர் ஆதி ஒசுத்திர லொயிட் வகையினளாகவே உளஸ். நிறை உதடுகள் உடையவளாக இவள் இருந்தாள். உண்மையாகவே இவள் பலுக்கித்தான் வகையை உருவகிப்பவளாக இருந்தாள். இவ்விடத்தில் ஒரு குறிப்பை நாம் கூறலாம். ஆதி ஒசுத்திரலொயிட் தொகுதியோடு மிகக் கறுப்புநிறம் இணைந்து வந்துள்ளது. இது தொல்காலத்தில் தென்பலுக்கித்தானத் கிற்கு வழங்கிவந்த பெயரோடு இணங்குவதாயுள்ளது. இப்பெயர் கெட்ரோ சியா-கரும் மக்கள் நாடு-என்பதாகும்.
இன்னுமொரு சிற்பம் சுண்ணும்புக் கல்லால் ஆக்கப்பட்டது. இது ஒரு மனிதனின் தலையை மட்டும் காடியுடனும் மிக விரிவான தலை மயிர் அலங்காரத்துடனும் உருவகித்தது. பின்பக்கம் ஒரு குடுமி யிருந்தது. குடுமி ஓரிழையால் கட்டப் பெற்றிருந்தது. இது செவ் விதில் ஒரு மெடிற்றரேனியன் முக வகையோடு பொருந்தியது. இதையொத்த இன்னுமொரு தலையில் கண்கள் படைக்கப்பட்ட விதம் மொங்கோலிய முக அமிசத்தைச் சுட்டியது. ஆயின், இவ் வொப்பிற்கு அதிகம் முக்கியம் அளிக்கலாகாது. ஆயினும் இன்னு மொரு முக்கிய சிற்பமொன்றுண்டு. இது மிகப் புகழ் பெற்றது;

Page 103
76 சிந்து, பஞ்சாப்
இச்சிற்ப மனிதன் மும்முனை இலை அணிகொண்ட ஆடை அணிந் திருந்தான். இச்சிற்பம் மனித இனவியல் முறையில் மயக்கம் அளிப் பது. இச்சிற்பத்தில் சிறுதலைகொண்ட ஆமெனுெயிட் வகையைச் காணலாம் என்று சிலர் சொல்வர். இவ்வுடற் கூற்றுவகை, முன்னைக் குலமுறைக் காலம் தொடங்கி மெசப்பொற்றேமியாவில் மக்கள் தொகுதியில் ஒரமிசமாக விளங்கி வந்துளது. ஆனல் சியல்கில் இது பின்ன இடுகாடு B இலிருந்து மட்டுமே அறியப்பட்டுள்ளது. இது கி. மு. 1000 இற்கு முன்னையதாயிருக்காது. பொதுவாக இது இன் னும் சில நூற்ருண்டுகளுக்குப் பின்னராயிருக்கலாம். ஆயின் பண் டைச் சிற்பங்களிலிருந்து பண்டைக் கபாலங்கள் பற்றிக் கூறுவது என்றும் ஆபத்தானது. இன்னும் சியல்கிலும் மொகஞ்சோதாரோ விலும் அல்பைன் வகை என்ற கபாலங்களில் முன்னைக் காலத்திற் குரிய சிறுதலை அமிசமொன்றிருந்தது. பல மனிதவினவியலாளர் ஆமெனுெயிட் வகையை அல்பைன் தொகுதியும் மெடிற்றரேனியன் இனத்தின் அல்பைன் தொகுதியும் கலந்ததனலான நிலையான கலவன் என்று கொள்கிறர்கள். ஆக முன்னைக் காலத்தில் மூன்மும் ஆயிரத்தாண்டில் இது ஆங்காங்கு காணப்படுவது இயலக்கூடியதே.
வடமேற்கிந்தியாவில் அரப்பாக் குடியிருப்புக்களின் பரவலைப் பற்றி ஏலவே பொதுப்படக் கூறியுள்ளோம். அக்காலத்திலிருந்த சுமர், எகித்து ஆகியவற்றைப்போலவே அரப்பாப் பண்பாடு சிறப் பாகப் பெரிய ஆறுகளாலேயே இணைக்கப்பட்டிருந்தது. இவையே இந்நாகரிகம் விரிவடைவதற்கும் இத்தகைய ஒரு பெரிய பரப்பில் பின்னர் இதன் ஒற்றுமையைப் பேணவும் முடிவான புவியியற் காரணிகளாக அமைந்தன. இதன் முக்கிய இரு மாநகர்களும் ஒரு நீள் வளையத்தின் குவிபுள்ளிபோல், அறியப்பட்ட குடியிருப்புப் புலத்தின் வடக்கே ஒன்றும் தெற்கே மற்றையதுமாக அமைந்தன. மொகஞ்சோதாரோ, சிந்தில், இந்துநதியின் வலதீாத்திலும், அரப்பா, பஞ்சாபில் ரவியின் இடதீாத்திலும் இருந்தன. சிந்தில் மிகப்பரந்த புலவேலை நடாத்தப்பட்டுள்ளது. எனவே, பிற்காலத்தில் நடுக்கால, இக்கால நகர்கள் கிராமங்கள் முதலியவற்ருல் மூடப் பெற்ற தலங்களைவிட, மற்றைத் தலங்கள் பரவலைப்பற்றி ஓரளவு முழுமையான செய்தியை நாங்கள் அறிந்துள்ளோம். பஞ்சாபில் மிகப் பரந்த முறையில் புலவேலைகள் நடாத்தினுல் அங்கும் பல

ஆகியவற்றின் நகர்கள் 177
தலங்களை நாம் காணல்கூடும். இப்பொழுது அறியப்பட்ட கிராமம் ஒன்றுளது. இது அரப்பாவிலிருந்து அதிக தூரத்திலில்லை. இன் னென்று இமாலயத்தின் அடிவாரத்தில் ரூபரில் சட்லச் நதிக்கருகில் உள்ளது. ஆயின் இந்து நதிக்குக் கிழக்கே பகவல்பூர் அரசில், இந்திய காவியங்களில் சரசுவதி என்று சொல்லப்படும் இப்பொழுது காய்ந்துபோன கக்கர் நதியின் போக்குவழியே, பத்துப் பன்னிரண்டு நகர்த்தலங்கள் அல்லது கிராமத் தலங்கள் உள. இவற்றின் நிலை களைப் பார்க்கும்போது இவை அரசியன் முறையில் அசப்பா அரச ரின் ஆட்சி எல்லைக்குள் இருந்தன போல் தோன்றுகிறது. எனவே இவை வடதிசையில் ஓர் அரசிருந்தது என்பதற்குச் சான்முக உள்ளன. பஞ்சாபில் இதுவரை கண்டறியப்படாத தலங்கள் பற்றிய அறிவைக் கொண்டு இக்குறிப்பை இன்னும் நாம் விரிவாக்கி அறிந்து கொள்ள வேண்டும் (உரு. 17).
மிக்க தென்பால் பகவல்பூரிலுள்ள தலத்திற்கும் இன்னும் மிகத் தெற்கே மிக்க அண்மையில் கைர்ப்பூர் சமத்தானத்திலுள்ள தலத் திற்கும் இடையே 150 மைல் தூர இடைவெளி உண்டு. ஆயின் இவ் விடைவெளி இவ்விடைப்புலத்திலே புலவேலை நிறைவுற நடக்காமை யாலிருக்கலாம். இங்கு குடியிருப்பு தொடர்ச்சியாயிருந்திருக்கலாம். ஆயினும் இப்புள்ளியிலிருந்து தென் முகமாகவும் தென்மேற்கு முக மாகவும் கராச்சிக் கயல்வரை குடியிருப்புக்கள் ஈட்டமாக உள்ளன. இவற்றுள் தலையாயது மொகஞ்சோதாரோவேயாகும். இது குடிச் செறிவிருந்த பகுதியின் வட எல்லையாகும். இம்முறைமை இந்நகரி லிருந்து ஆட்சிபுரிந்தவர்க்கு அடங்கி வாழ்ந்த மக்கள் இப்பகுதியி லிருந்தனர் என்பதைக் காட்டுவதாயுள்ளது.
இன்னும் கூடிய புலவேலை ஏலவே நாம் அறிந்த முதல்தரமான இரு நகர்களைப் போன்ற தரத்தினவான வேறு நகர்களை வெளிப் படுத்தக்கூடுமென்பது இயலக்கூடியதன்று. இப்பொழுதுள்ள சான்றி லிருந்து அரப்பா ஆட்சியானது 350 மைல் இடைவெளி கொண்ட மைந்த இரு தலைநகர்களால் ஆளப்பட்டது என்றும் அவை ஒடியா முறையிலமைந்த அகல் வழியாலிணைக்கப்பட்டிருந்தனவென்றும் கருத இடம் உண்டு. இவ்வாட்சியை நாம் வட ஆட்சி தென்னுட்சி யென வகுக்க முடியுமானல் அவை உண்மையில் ஓர் அலகின் பிரிவு களேயாம். இது மிக்க வடபாலுள்ள தலத்திலிருந்து மிக்க தென்பா

Page 104
78 சிந்து, பஞ்சாப்
லுள்ள தலம் வரையிருந்த பொருளியல் பண்பாட்டின் முற்ருெரு மையிலிருந்து புலப்படுகிறது. இவ்விடத்தில் நாம் கற்பனை முறையி லமைந்த எந்த எல்லைகளையும் புறக்கணித்துவிடலாம் ; உதாரணமாக பகவல்பூருக்கும் கைர்ப்பூருக்குமிடையமைந்ததைக் கூறலாம். விதி முறைமை எப்படியிருப்பினும் அது எவ்வாறு செயற்படுத்தப்பட்ட தாயினும் அது போட்டியிலிடுபட்ட இருநகரரசுகளின் முறைமையா யிருக்காது ; ஆயின் இரு அரசாங்க இருக்கை கொண்ட ஒரு பொது அதிகாரத்தையே அது சுட்டும்.
நகர்த்தலங்கள் பல நூற்ருண்டுகளாக இடைவிடாது குடிவாழ் தலங்களாக அமைந்தன என்பதற்குத் தொல்பொருளளவைச் சான் றுளது. மொஞ்சோதாரோவில் ஆதியிருந்த தெருத்திட்டம், பெரிய விதிகளையும் சிறு ஒழுங்கைகளையும் அருகணைந்தமைந்த வீட்டு வரைகளை ஓரிடத்திலாகுதல் மீறியதாகத் தெரியவில்லை. இது மொகஞ்சோதாரோவிற்குச் சிறப்பாக அமைந்த ஒாமிசமாகும். இதிலிருந்து அரசு ஒடியாமுறையில் நிலைநின்றதென்பது புலனுகின் றது. குலமுறைகள் அல்லது அதிகாரமுடைய தனி மனிதர்கள் எவ் வகையில் மாறுபட்டாலும் இம்மரபு மாறுபடாமல் பேணப்பட்டது என்பது என்றும் மாருவிதியாக இருந்தது என்பதும் புலகிைன் றது. சான்றுகளிலிருந்து நம்பிக்கையுடன் அனுமானித்தல் இடர்ப் பாடுடையதாயினும், பல சந்ததிகளுக்கு இத்தகைய ஒரு மரபு நீடித்தற்கு சமய அதிகாரமே காரணமாயிருந்திருக்கலாம் என்று ஒருவர் கூறலாம். அரப்பா நாகரிகம் அதன் போற்றத்தக்க வைதி கத்திலும் பல நூற்முண்டுகளாக நாளாந்த வாழ்வுமுறை விவரங் களைக் கவனமாகப் பேணிய முறையிலும் ஆழ்ந்தமைந்த இறை யியல் சார்புடையதாயிருந்தது. அல்லாமலும், இவ்வமிசங்கள், தனி ஓர் ஆட்சியாளனின் அவா, அரசபீடத்தின் சமயஞ் சாராச் சார்பின் நிலைபேறு ஆகியவற்றிலும், கோயில்களின் முறைமை மாரு மரபே பெரிதாகக் கருதப்பட்ட ඉංග්‍ර சமுதாய அமைப்பே இப்பண்பாட்டில் பெரிதாக இருந்தது என்பதையும் காட்டுவனவாயுள்ளன. அல்லா மலும் இப்பண்பாட்டில் நிலங்கொள்முறைமையும் மதத்தலைவர்கள் ஏவவிற்கியையப் பேணப்பட்டதென்பதும் தெளிவாகின்றது.
குடியிருப்புக்கள் முழுமையையும் நோக்குமிடத்து, அவற்றில் உட்கிடையாகப் புலப்படும் இவ்விரு நகர்களிலும் அமைந்த மைய

ஆகியவற்றின் நகர்கள் 179
அதிகாரம் மிகத் துலக்கமாகவும் உடனடியாகவும் எவர்க்கும் புல ஞகுவதாகும். இவ்விரு தலங்களும் ஒரு பொதுநிலத்திட்டத்திற் கமைய அமைக்கப்பட்டிருந்தன. நகரின் மேற்கோசத்தில் மனங் கவரும் ஒரு நகராண் எழுந்து நின்றது. அண்ணளவில் இது ஒரு செவ்வகமாகவோ இணைகரமாகவோ அமைந்தது; இதன் நீளச்சு வடக்குத் தெற்காகவும் பரிமாணம் 400 யார் 200 யாராகவும் அமைந் தது (உரு. 18). இது 30 அடி உயரமான ஒரு செயற்கை மேடை மேலமைந்திருந்தது. இது மண்செங்கட்டியாலாயது. முகப்புகள் சுட்ட செங்கட்டிகளாலாயவை. அரண்செய்யப்பட்ட இதன் உச்சி யில் தனிப்பட்டவர் மனைகள் இல்லை; ஆயின் மக்கட்குப் பொது வானவையும் கிரியைகளோடியைந்தனவுமான கட்டிடத்தொகுதி களேயிருந்தன. இதை நாம் பின்னர்க் காண்போம். அரண்செயப் பெற்ற உயரமான நகராணிலேயே விழா முறைக்குரிய தளங்களும் பாரிய வாயில்களும் இருந்தன. நகராணுக்குக் கீழாகவே நகரின் விதிகள் மனைகள் முதலியனவும் ஒரளவடிமைநிலையிலிருந்த தொழி லாள வகுப்பினரின் குடிவாழ்தலங்களும் இருந்தன (உரு, 19).
அரப்பாவில் விலர் அவர்கள் நடாத்திய ஆராய்ச்சி, நகர்களி னதும் ஆட்சியாளர்களினதும் முக்கிய பண்புகளைச் சிறப்புற வெளிப்படுத்தியுள்ளன. இவ்விடத்தில் இவை பற்றிய அவர் கூற்றினை இங்கு தருவாம்.
“அரப்பா ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் எவ்வாறு வந்த தாயினும், அவர்கள் தம் நகரை, சுமர், அக்கட் ஆகிய இடங்களி லமைந்த மதகுரு முறை அரசர் ஆட்சிபுரிந்த முறையிலும் அதிகம் வேறுபட்டமுறையில் ஆட்சி புரியவில்லை; இவர்கள் (அரப்பா) ஆட்சியில் ஓரளவிற்கு சமய அமிசம் தலைதாக்கி நின்றது என்று நாம் கொள்ளலாம். சுமரில் நகராசின் செல்வமும் ஆட்சி ஒழுங்கும் தலைமைத் தெய்வத்தில், அதாவது மககுருமுறைமையில் அல்லது குருவும் அரசருமான ஒருவரில் தங்கியிருந்தது. உயரிய முறையில் போற்றப்படும் கோயிலே குடிமை ஒழுங்குகளுக்கு மையமாக விளங் கியது; இது தெய்வ ஆணை பெற்ற, விரிவான செவ்விய முறையி லமைந்த இலெளகிக ஆட்சிக்கும் மையமாக விளங்கியது. உண்மை யில் மிகைச் செல்வத்தை முறைப்பட அமைத்து வகுத்துக் காக்க

Page 105
சிந்து, பஞ்சாப்
180
· Isc oig-rigogos qī£109,59 unfinio quae lootge ling) usĒJio@@ ou Tito)
* 8 I)חד נג
。ー〜 ge&g
więđộngriftstespæłaqun -rytmuss,の *głogoipsięstriņuo apshụún ņhạsửs�多
|-{}Y★之鲁多__)容强*| -溶劑ぷ*爆Fシ s)鬣斗劑灣% * \独乙!)%% }*石#ダ涂逝 必。も03'u-ș .ī£8ff;ūİ 舞Q.*) たシ}\心感
Yesa
きずggag *povuspuo use@xunto
 
 
 
 
 
 

ஆகியவற்றின் நகர்கள் 8.
வல்ல கட்டுப்பாடான உயர்நிலையில் மலர்ந்த பணிக்குழுவாட்சி யாகவே இவ்வாட்சி இருந்தது; ஆயின் தனிமனிதனின் அரசியற் சுதந்திரத்திற்குச் சாதகமற்றதாகவே இது விளங்கியது".
எனவே அாப்பா நாகரிகத்தைப் பற்றிய தொல்பொருளியல் சான்றுகளிலிருந்து நாம் நியாயமான முறையில் அறியக்கூடியது, அவ்வரசு இரு பிரதான அரசிருக்கைகளிலிருந்து தன்னிச்சையான தனி அதிகாரஞ் செலுத்திய மத குரு-அரசர்களால் ஆட்சிசெய்யப் பட்டது என்பதும் இவ்வரசின் தலைநகர்களுக்கிடையமைந்த முக்கிய போக்குவரத்துத் தொடர்பு படகோட்டக்கூடிய பெரிய ஒரு நதியாலளிக்கப்பட்டது என்பதுமாம். இத்தகைய மாநகர்களி னதும், பெருவளவிற்குச் சிறு நகர்களினதும் மக்கள் தொகையைப் பேணிக் காப்பதற்கு, வேண்டிய மிகை உணவை உற்பத்தி செய்யக் கூடிய போதிய அளவில் நெறிப்படுத்தப்பட்ட ஒரு கமத்தொழில் முறைமை அங்கிருந்திருக்க வேண்டும்; ஆயின் அதன் இயல்பினைக் காட்டுவதற்காய நேர்ச் சான்ருே அல்லது அதனேடியைந்ததா யிருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கக்கூடியதான செயற்கை முறை நீர்ப்பாய்ச்சலுக்குரிய நேர்ச்சான்றே அங்கு காணப்பட GÉ9ổdåd. LJITGðist GastTg7GDLDuqub (Triticum compactum GT6ör Lug7th sphaerococcum Grašt Lug7th) utafuyii (Hordeum vulgare என்பதும் hexastichum என்னும் வகையும்) இங்கு பயிர் செய்யப் பட்டன. எள்ளும் வயல் பயறும் (Pisum arvensis), பிராசிக்காவின் ஒருவகையும் (ஒருவேளை B, juncea ஆக இருக்கும், இக்கால இந்திய ரை) பயிர் செய்யப்பட்டன. தானியப் பயிர் வகைகள் இன் னும் நாம் ஆய்வதற்கேற்ற வகையில் கவற்சியுடையன.
பாளி மிக்க முன்னைக்காலம் தொடங்கி மேற்காசியாவில் பயிரிடப் பெற்ற ஒரு தானியம். வட மெசப்பொற்றேமியாவில் உள்ள அர்ப் பச்சையாவில் தெல் அலவ் காலத்தில் இகற்குரிய சான்றுளது. அல்லாமலும் எகித்தின் பயுமிலும், பண்டை மெசப்பொற்றேமியா வின் உறுக் கட்டத்தினேடு ஒத்த காலத்திலும் இது வளர்க்கப்பட் டிருக்கலாம். எகித்தில் காணப்பட்டனவற்றுள், வரலாற்று முன்னர் இந்தியாவில் காணப்பட்டனவற்றைப்போல், குறிப்பிடத்தக்க முறையில் பாளியின் எக்சாஸ்ரிக்கும் (hexastichum அறுவரிசை)
வகையும் காணப்பட்டது. பயிர் செய்யப்படும் தானிய வகை

Page 106
182 சிந்து, பஞ்சாப்
தோன்றுவதற்கு மூலமாயமைந்த காட்டுவகைப் புல்லுகள் இன்னும் தேக்கித்தான், பேசியா, வட அபுகனித்தான் ஆகிய இடங்களில் வளர்கின்றன. பாண்கோதுமையெனப்படுவதின் காட்டின மூதாதை யோர் யாவை என இன்னும் அறியப்படவில்லை. (இப்பாண் கோதுமையில் 21 குரோமொசோம்கள் இருக்க மற்றை முக்கிய இருவகைகளிலும் 14 உம் 7 உமே இருந்தன.) ஆயினும் பயிர் செய் யப்படும் வகைகளுள் மிக்க தொன்மையானவை இன்று பேசியா, அபுகனித்தான், பொகாராவைச் சூழ்ந்த பகுதி, காசுமீரம், மேற் கிந்தியா ஆகிய இடங்களில் பயிர் செய்யப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. அன்றியும் ஸ்பயிரோகொக்கும், கொம்பக்ரம் (sphaerococcum, compactum) at 657 apil is 6/6055Gat Lisi)6Op வகைக் கோதுமைகளை ஒத்த இனப்புல்லுகளோடு ஒட்டிக் கலந்தாக்கியவகையில் தோன்றிய மிக்க முன்னைய ஊண் கோதுமை வகையினவாயிருக்கலாம். தாவரவியல் அடிப்படையில் வவிலோவ் போன்ற ஆய்வாளர்கள் ஊண்கோதுமை அபுகனித்தானிலுள்ள இமாலய ஓரத்தில் தோன்றியது என்று கூறியுள்ளார்கள் ; வேறு சில ஆய்வாளர்கள் சக்ரொசு மலைகளுக்கும் கசுபியனிற்கும் இடை யமைந்த பகுதிக் கிடையில் தோன்றியது எனக் கொள்வர். இது பற்றிய தொல்பொருளியல் சான்றுகள் மிகக் குறைவு. ஆயினும் றிற்றிக்கும் auâbat GT (Triticum vulgare) au62)45uGaoto/Irgot 2316ir கோதுமைத் தானியங்கள் தேக்கித்தானில் அனே இன் கடச்சில்லி களில் பதிந்திருக்கக் காணப்பட்டன. இதிலிருந்து இது மேற்கிந்தி யாவிலிருந்தும் அதிக தொலைவிலில்லாத பகுதிகளிலேயே முதன் முதலாகத் தோன்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கு அாப்பாப் பண்பாட்டின் சான்று ஊண்கோதுமைகள் கி. மு. மூன் மும் ஆயிரத்தாண்டில் வளர்க்கப்பட்டன, என்பதைச் சுட்டுவதா யுள்ளது.
அாப்பாவிலாகுதல் தானியச் சேமிப்பு அரசாங்க வேளாண்மைக் கொள்கையின் ஒரு பகுதியாகக் கொண்டு நடாத்தப்பட்டிருக்க லாம். இது மொகஞ்சோதாரோவினும் நடாத்தப்பட்டது என்று நாம் கொள்ளலாம். இன்னும் நகராண்மைக் கழகத்தின் தானியக் களஞ்சியங்களுக்கு அருகாமையில், மா இடித்தல் தொழிலும் முறை மையிலமைந்த தொழிலாளரை வைத்து நடாத்தப்பட்ட கட்டுப்

ஆகியவற்றின் நகர்கள் 183
பாட்டுப் பொருளியலின் ஒரு பகுதியாயிருந்தது. செங்கட்டி உற். பத்தி செய்தலும் இதற்கு மட்கலம் சுடுவதற்கு மர எரி பொருள் அளித்தலும் அரசுக்குட்பட்ட மற்றைக் கைத்தொழில்களென நாம் கொள்ளலாம். பெருவளவில் இவை உற்பத்தி செய்யப்பட்டனவாத, வின் காட்டுத் தொழிலுக்கென ஒரு தொழிற்படை செயற்பட்டிருக் கலாம். இதுவரை செங்கட்டிச் குளே ஒன்றும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இவை மிகப் பெரியனவாயிருத்தல் கூடுமாதலின், இவற்றி லெழும் புகை குடிவாழ்வாருக்கு இடரளியாவகையில் இவை நக ரின் முக்கிய குடியிருப்புப் பகுதியினின்றும் புறம்பான ஓரிடத்தில் நிறுவப்பட்டிருத்தல் கூடும். மட்கலச் சூளைகள் மொகஞ்சோதாரோ வின் மிக்க இறுதிக்கட்டத்திலேயே காணப்பட்டன; இவை சீரிழி வின் சின்னமாக விளங்கின. இக்காலத்திலும் இந்தியாவில் மிகச் சிறுமட்கலச்சூளைகள் நகர் மதில்களுக்கு அப்பாலேயே நிறுவப்பட் ளெ. இது ஓரளவிற்குப் புகைவராமலிருக்கவும் ஓரளவிற்கு அடுத் துள வாசத்தலங்களில் தீ பற்ருமலிருப்பதற்காகவுமாம். ஆயின், மொகஞ்சோதாரோ சீர்குன்றி வருங்காலத்தில் இவை Æጫ ருள்ளேயே அதுவும் தெருவிலேயே நிறுவப்பெற்றன.
அாப்பா நாகரிகத்து மக்களால் பயிர் செய்யப்பெற்ற மிக்க கவர்ச்சிகரமான இன்னுமொரு பயிர் பருத்தியாகும். நற்பேமுக மொகஞ்சோதாரோவில் காணப்பெற்ற பருத்தி காட்டு ஒன்று இதற்கு அறுதியான சான்முக அமைந்துள்ளது. செவ்வண்ணம் தீட் டிய உண்மையான பருத்தித்துணியின் துண்டுகள் ஒரு வெள்ளிக் கோளையின் பக்கத்தில் ஒட்டியிருந்தன. இத்துண்டுகளின் இழையை நல்கிய செடி கொசிபியம் ஆபோரியம் (GoSSypium arboreum) வகையினதென்பது தெளிவு. இது பயிர் செய்யப்படும் ஒருவகை யினதன்றிக் காட்டு வகையுள் ஒன்றன்று, அசப்பா நாகரிகத்தில், ப்ருக்கியாடை முக்கியமான ஒரு வணிகப்பண்டமாயிருந்திருத்தல் வேண்டும். மெசப்பொற்றேமியாவுடன் நடைபெற்ற வணிகத்தில் ஒரு பகுதி பருத்திப் பொருள்களை அடக்கியதாயிருத்தல் வேண்டும். இந் நாட்டில் பிந்திய வரலாற்றுக் காலத்தில் இந்தியப் பருத்தி சிந்து என அறியப்பட்டது; இச் சொல் கிரேக்கமொழியில் பின்னர் சின் டன்' என்ற வடிவில் புகுந்தது. -
அாப்பா ஆட்சியின் வளமைக்கு ஆதரவாயிருந்த வேளாண் பொருளாதாரத்தில் காய்கறிப் பயிர்களுடன் பல்வேறு இற்படு
10-CP 3040 (684)

Page 107
184 சிந்து, பஞ்சாப்
விலங்குகளும் இயல்பாகவே சேர்ந்திருந்தன. அரப்பாவில் காணப் பட்ட விலங்கு என்புகள் பற்றி நன் முறையிலமைந்த விலங்கியல் அறிக்கைகள் நமக்குக் கிடைத்தது ஒரு நற்பேறே; இவற்றிலிருந்து நாம் இவை பற்றி விவரமாக ஆராயலாம். பலுக்கித்தானில் நடந் தவாறே இந்தியத் திமிலெருது, செபு எனப்படுவது (Bos indicus) இங்கும் இற்படுத்தப்பட்டது. இவ்வாறே சிறிய பருமனுடைய சிறு கொம்புகள் கொண்ட திமிலற்ற வகைகளும் இற்படுத்தப்பட்டன. திமிலெருது எங்கு தோன்றியது என்பது தெரியவில்லை. இதன் காட்டினங்கள் அறியப்படவில்லை; இதன் தோற்றத்தை ஆராயின் இது இற்படுத்தப்பெற்ற வகையினதென்றும் பழைய பிளித்தொசீன் காலத்திற்குரிய பொசு நொமடிக்கசு என்பதுமாகும் என்றும் கொள்ளலாம். பண்டை நாட்களில் இது இந்தியவகையாயிருந்த ஓரினமாகும். இதற்குச் சிறப்பாக அமைந்த திமில் ஒத்த காலத்தில் மேற்காசியாவின் பிறபகுதிகளிலிருந்த இற்படுத்திய இனங்களில் இருக்கவில்லை. இது ஏலவே நாம் கண்டவாறு, வடபலுக்கித்தானின் ராணு குண்டை 11 ஆம் கட்டகால அளவிற்குரியதென்பது உண்மை யாகும். ஒருவேளை இசார் 1 உடன், இன்றேல் யெம்டெற் நசருடனகு தல் ஒத்த காலத்தினதாக இருக்கலாம்.
அசப்பாப் பண்பாட்டில் இருந்த மற்றை இற்படுத்தப்பெற்ற விலங்குகள் இற்படுத்திய இந்திய எருமை (Bos bubalis), @a)/6ŷr GIT ITGB (Capra aegagrus, r. indicus), @Fuitter? (Ovis vignei, P. domesticus) என்பனவாம். இவ் வெள்ளாடுகள் காசுமீரத்து வெள்ளாடுகளின் தொகுதியைச் சார்ந்தனபோல் தோன்றுகின்றன. இக்காசுமீர இனத்தவையே புகழ்பெற்ற காசுமீரச் சால்வை செய் வதற்கான சிறந்த கம்பளி நல்குபவை. எனவே அரப்பாப் பண் பாட்டில் வெள்ளாட்டுக் கம்பளி பயன்படுத்தப்பட்டிருத்தல் கூடும் என்பதை நாம் மனத்தில் இருத்தல் வேண்டும். செம்மறிகள் காட்டு ஊரியல் இனங்களிலிருந்து இற்படுத்தப்பட்டிருக்கக் கூடியவையும், சியல்க் I, அனே ஆகிய இடங்களிலிருந்து பெறப் பட்டவையும், பல்வகை கம்பளி தரும் இனத்தை அடக்கிய நீண்ட வால் நீண்டகால் கொண்ட இனத்தைச் சார்ந்தவையாயிருத்தல் கூடும். பன்றிகள், இந்தியாவில் இன்று காணப்படும் மெல்லிய சுறுசுறுப்பான முள் மயிர் இனத்தைச் சார்ந்தவையாகும்.

ஆகியவற்றின் நகர்கள் 185
அரப்பாப்பண்பாட்டின் ஆதிகாலந் தொட்டே தாய் இற்படுத்தப் பட்டதென்பதற்குச் சான்றுளது. உண்மையில் இம்மிருகம் ஐசோப் பாவில் இற்படுத்தப்பெற்றவற்றுள் மிக்க முன்னையதாகும். இது பனிக்கட்டியாற்றுப் பின்னரான மெசோலிதிக்குக் காலத்தில் ஏறக் குறைய கி. மு. 8000 வரையில் நடைபெற்றது. எலும்புகள், அசப்பா வில் உள்ள உருவகிப்புகள் ஆகியவற்றின் சான்றுகளிலிருந்து குறைந்தது இருவகை நாய்கள் இருந்திருக்க வேண்டுமென்பது புலனுகிறது. ஒன்று இப்பொழுதுள்ள பாறைநாயை ஒத்தது ; மற்றையது மஸ்ரிவ் (Mastift) தாயை ஒத்தது. முந்திய வகை (Canis tenggeranus r. harappensis) Gp6ör&Ori 5 TGOJ GJ GM5 நாயை மிக ஒத்தது; இது கிழக்கு ஐரோப்பா அல்லது மேற்காசி யாவிலிருந்து பெறப்பட்டதாயிருக்கலாம். ஒருவகை நடுத்தரப் பருமனுன ஒநாயிலிருந்து இது பெறப்பட்டதாயுமிருக்கலாம். இற் படுத்தப்பட்ட பூனைகளுக்குரிய சான்றும் இங்குண்டு. அரப்பாவி லிருந்து இதற்குரிய எலும்புகள் கிடைக்கப் பெற்றன. சானுதாரோ வில் சுடமுன் மென்மையாயிருந்த செங்கட்டியொன்றின் மீது நாயொன்று பூனையைத் துரத்திக்கொண்டு சென்ற பொழுது இவை இரண்டும் தமக்குச் சிறப்ப்ான காலடையாளங்களை விட்டுச் சென் றன. காலடையாளங்களின் ஆழமும் அவற்றின் பரவலும் இரண்டு விலங்குகளினதும் . வேகத்தைக் காட்டுவனவாயிருந்தன. நாயின் அடையாளம் பூனையின் அடையாளத்தைச் சிறிது முன்பற்றுவதி லிருந்து நாய் இரண்டாவதாக வந்ததென்பதைக் காட்டுகிறது. அாப்பாய் பூனை (Felisocreata, r. domestica) உருவக்தில் சாதா ரண ஐரோப்பிய பூனையை மிக ஒத்திருந்ததுபோல் தோன்றுகிறது.
ஒட்டகத்தை அசிரியர் கி. மு. ஒன்பதாம் நூற்ாரண்டு கொடக்கம் மிகப் பரந்தமுறையில் உபயோகிக்கனர் ; எனினும் எவ்வாறு பண்டைநாட்களில் இற்படுத்தப்பட்ட கென்பது பற்றிய வாலாறு மறை பொருளாக உள்ள வா, மிருகம் ஒட்டகமrரும். இன்று காட்டு மிருகமில்லை. ஒருதிமில், இாதிமில் ட்ைடகங்கள் இரண்டும் இற்படுத் தப்பட்டுள்ளன. பண்டைக் கிழக்கில் முன்னேக் காலக்கில் இம்மிரு கத்தின் உருவகிப்பு ஓரிடமும் காணப்படாதது வியப்பிற்கரியகே. எனினும் இந்தியவகையான ஒ(ா திமில் ஒட்டை யின் (Camelus dromedarius) சில எலும்புகள் மொகஞ்சோதாரோவிலும் அரப்பா

Page 108
86 சிந்து, பஞ்சாப்
விலும் காணப்பட்டன. இன்னும் தேக்கித்தானினுள்ள அனேவிலும் தென்னிாசியாவின் புதுச்சிலைக்காலத்துக்குரிய ஹிப்பொலைப் பண் ப்ாட்டிலும் இவை காணப்பட்டன. இவை இங்கு அசப்பாப்பண் பாட்டுடன் அண்ணளவில் ஒத்த காலத்தினவாயிருக்கலாம். al லாற்று முன்னர் மேற்காசியாவில் ஒட்டகத்தின் அபூர்வமான ஓர் உருவகிப்பு கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டிற்குரியதாயிருக்கக் கூடியதான ஒரு தலத்திலிருந்து கிடைக்கப்பெற்றது. இது பலுக் கித்தானின் எல்லைக்கப்பால் பேசிய மக்கிரானில் உள்ள குராபி லிருந்து பெறப்பட்டது. இங்கு இது ஒரு வெண்கலப் பொருளில் அடைப்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
f?!*@iatsup6M5 u yui (Equus asinus) g@a7M Tuyt (Equus Caballus) உருவகிக்கப்பட்டுள்ளன. குதிரையை வடபலுக்கித்தானிலுள்ள ராணு குண்டைத்தலத்தின் முதற் குடிமக்கள் ஏலவே அறிந்திருந் தனர் என்பதை நாம் முன்னர்க் கண்டோம். அனேவிலிருந்தும் சியல்கின் இரண்டாம் கட்டத்திலிருந்தும் அது அறியப்பட்டுளது. இவற்றின் எச்சங்களிலிருந்து இவை இக்காலத்திய இந்திய நாட்டுக் குதிரைகளுடன் ஒப்பிடத்தகுந்தன என்பதைக் காட்டுவனவாயுள. அாப்பா மக்களால் இற்படுத்தப்பெற்ற விலங்குகளுள் யானையை யும் உறுதியாகச் சேர்த்தல் வேண்டும். இலச்சினைகளிலுள்ள உரு வகிப்புகள், இந்தியாவில் இன்று அறியப்பட்ட இருவகைகளையும் காட்டுவனவாயிருக்கலாம். இவற்றுள் குமூரியா தண்டியா என்பது சப்பையான புறமும் சதுரத்தலையும் வலிய கால்களும் கொண்டது. மற்றையது மீர்க என்பது குறைந்த தாத்தது ; திண்மை குறைந்த உடற்கட்டும் வளைந்த புறமும் கொண்டது.
யானைகள், நீரெருமைகள் போன்ற சிறப்புவகை இந்திய விலங்கு களை விட, அரப்பாவில் உள்ள இற்படுத்திய விலங்குகளின் தொகு தியை மற்றை மேற்காசியத் தலங்களின் தொகுதியினின்றும் வேறு பிரித்துக் காட்டும் சுவையுசன அமிசம், இங்கு குதிசை, ஒட்டகம் முதலியவை காணப்பட்டதாகும். பண்டை உலகில் மனிதப்பண் பாட்டின் வேட்டையாடும் படிநிலையை வேளாண்மைப் பொருளியல் வாழ்வு அடுத்துத் தொடரும்போது, எருது, செம்மறி, வெள்ளாடு பன்றி, நாய் முதலியனவே இயல்பான இற்படுவிலங்குகளாக அமை ன்ெறன ; நாம் முன்னர்க் கண்டவாறு நாய் இப்படிநிலையை எய்து

ஆகியவற்றின் நகர்கள் 87
முன்னராகவே இற்படுத்தப்பட்டதாம். பண்டைக்கிழக்கில் பொதி விலங்குகள் பெயர்ச்சி விலங்குகளுள் ஒட்டகம் அமைந்தது ඉෂ புதிராகவே உள்ளது. குதிரை எவ்வகையினும் மெசப்டொற்றேமியா வில் ஆதியிலிருந்த விலங்கன்று ; ஆயினும், அது முதன்முதலாக தோன்றுகிறபொழுது, இது யெம்டெற்நசர் காலத்திலாயிருக்கலாம், மலைக்கழுதை' என்று குறிப்பான முறையில் சுமர்ப்பெயர் பெற் றது. ஒருவேளை இது தேக்கித்தான் அல்லது உயர் பீட பேசிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். இப்பகுதி யோடு பலுக்கித்தானும் சேர்ந்து பொதுவாயமைத்த ஒரு புவியியல் மாவட்டமாயமைந்த ஒரு புலத்திலிருந்தே குகிசையை அடக்கி யாண்டதற்குரிய மிக்க முன்னைய சான்று கிடைக்கப்பெற்றுள்ளது. அரப்பா மக்களின் உண்மையான மாநகர்களையும் நகர்களையும் பற்றி இனி நாம் ஆராய்வோம். எனவே முதன்முதலாக நாம் அரப்பா, மொகஞ்சோதாரோ ஆகிய இருதலைநகர்களையும் ஆராய் வோம். இரண்டு தலங்களும் குறித்த சில கவர்ச்சிகரமான பொதுப் பண்புகள் கொண்டுள; அகழ்வதற்கு முன்னரே மேற்பரப்பிலும் இவை புலப்படுவன. இவ்வொப்புமைகள், சென்ற இருபதாண்டிலும் தொல் பொருளியலார் நடாத்திய வேலையால் உறுதிப்பட்டுள்ளன. இருதலங்களும் நிலையில் ஒரு தன்மையன; இரண்டும் ஓர் ஆற்ற ருகே இருந்தன. அரப்பா இந்துநதியின் ஒரு கிளையான ரவியின் இருபிரிவுகளின் ஒரு பண்டைச் சங்கமத்திற்கருகில் உள்ளது. இப் பொழுது பிரதான ஆற்றுக்கால்வாய் ஆறுமைல்களுக்கப்பால் உள்ள தெனினும். கி. மு. மூன்மும் ஆயிரத்தாண்டில் இருந்திருக்கக் கூடி யது என நாம் கண்ட கனத்த மழை வீழ்ச்சி நியமங்களில், இந் நகர் வெள்ளம் பெருக்கெடுக்கக்கூடிய நிலத்தில் அமைந்திருக்கல் வேண்டும். இத்தலத்தில் நகராணின் காவலரண்களின் முன்னைக் கட்டமாயமைந்த மண்ணுலும் மண்கட்டியாலுமமைந்த பெரிய கொத்தளம், முக்கியமாக வெள்ள நீரைக் கடுக்க எழுப்பிய அணை யாயிருக்கலாம்.
மொகஞ்சோகாரோ அவ்விடக்கில் 'துருத்தி ' (தீவு) எனப்படும் ஓரிடத்தில் உள்ளது; இப்பெயர் குறிப்பிடக்தக்கது. இப்பகுதி இந்துநதியின் பிரதான படுக்கைக்கும் மேற்கமைந்த நாாவ?ளவிற் கும் இடையமைந்தது. இது மிக்க அண்மைக்காலம் வரை பெருக் கிற்ககப்பட்டது. பின்னர் நீளணையொன்று கட்டிய பின்னரே வெள்

Page 109
188 சிந்து, பஞ்சாப்
ளப்பெருக்கு நிறுத்தப்பட்டது. நகரிற்கும் மிக்க அண்ணிய ஆற் றின் பகுதிக்குமிடையில் வரலாற்று முன்னர்க்குரிய ஓர் அணைக் கட்டின் சிதைவுகள் உள்ளன. இவ்வணைக்கட்டு ஒருமைல் வரை நீளத்திற்குச் செல்வது. அகழ்வுகளிலிருந்து, இத்தலத்தின் வரலாற் றில் அடுத்தடுத்தாய பல வெள்ளப்பெருக்குக்கள் நடைபெற்றதற் கும் அதனுல் மண்டிப் படிவுகள் ஆனதற்கும் தெளிவ?ன சான்று கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உண்மையில் இந்துநதி கொண்டு வந்த மண்டியின் கனவளவு மிகப் பெரியதாயிருந்தது. இதனல் இவ்வெளியின் மேற்பரப்பு, அகழ்ந்து அடையப்பெற்ற மிகக் கீழான அத்திவாரத்திலிருந்து ஏறக்குறைய 30 அடி வரையில் உயரமாயுள்ளது. வரலாற்று முன்னர்க் காலத்தில் இந்நகரை மேற் பாலோரத்தில் இந்நதியின் பண்டைக்கிளையொன்அ அனைத்தற் குரிய சான்று சில உள. மொகஞ்சோதாரோவில் அடிக்கடி வெள் ளப்பெருக்கு நடைபெற்றது போல் அரப்பாவில் நடைபெற்றதற் குரிய சான்று தெளிவாக இல்லை; ஆயின் இங்கும் நகரின் மேற்பால் காப்பணை ஒன்றிருந்ததற்குரிய சுவடுகள் இருந்தனபோல் தோன்று கிறது.
உண்மையான திட்டத்திலும் ஒழுங்கமைப்பிலும் இருநகர்களும் வியத்தகு முறையில் ஒத்தனவாயிருந்தன. அாட்பாவில் விலர் அண் மையில் நடாத்திய அகழாய்வுகள் ஒரு சீரான இத்திட்டத்தின் பொருளை நன்முறையில் விளக்குவனவாயமைந்தள. இவ்விருதலங் களிலும் இப்பொழுது உள்ள சிதைவுகளில் கிழக்குப் பாங்கர் ஒழுங் கற்ற வரிசையான திடல்கள் உள. ஆயின் ஏறக்குறைய நடுவிலும் தலத்தின் மேற்பாலோரத்திலுமாக குறிப்பிடத்தக்க முறையில் உய ரமான மிக நெருங்கியமைந்த ஒரு திடல் இருந்தது. இரு நகர்களி அலும் இத்திடலின் அமைப்பு பருமட்டாக வடக்குத் தெற்காக 400 யாரும், கிழக்கு மேற்காக 200 யாரும் கொண்ட ஒர் இணைகரமாக இருந்தது. அாப்பாவில் இது சூழ்வரவிருந்த வெளியிலும் 50 அடி வரை உயர்ந்திருந்தது; மொகஞ்சோதாசோவில் 35 அல்லது 40 அடிவரை உயர்ந்திருந்தது. மொகஞ்சோதாரோவில் மேற் பால மைந்த இவ்வுயர்திடல் கிழக்கு மேற்காக அமைந்த இரு பிரதான விதிகளுக்கிடையிலமைந்திருந்தது என்பதைக் காட்டுவதற்கு வேண்டிய அளவு ஆகி விதித்திட்டம் அகழ்ந்தாய்ந்து பெறப்பட்

ஆகியவற்றின் நகர்கள் 189
டுள்ளது. இத்திடல் ஒரு சீர்மைத்தான ஒழுங்கமைப்பொன்றில் இருந்த பெரிய கட்டிடத்தொகுதிகளில் ஒன்முக அமைந்திருக் கலாம் என்பதை இனி நாம் காண்போம்.
இத்திடல்கள் கவர்ச்சிகரமான அரண் செய்யப்பட்ட நகராண் களின் இடிபாட்டுச் சிதைவுகள் என்பதை இப்போது நாம் அறி வோம். இங்கு 30 அடியோ அதிலும் கூடிய அளவோ உயரமான ஒரு செயற்கையான மண்செங்கட்டிகளாலாய மேடையொன்றில் குறித்த ஒருவகைத் திட்டத்திலமைந்த கட்டிடங்களிருந்தன. இவற் றிற்குக் காப்பாகக் கூம்பு மதில்கள் இருந்தன. இம்மதில்கள் உட் பகுதி மண்செங்கட்டியால் கட்டப்பெற்று வெளிப்பகுதி சுட்ட செங் கட்டியால் அணைக்கப்பெற்றிருந்தன. மதில்களில் செவ்வகக் கோபு ரங்கள் இருந்தன; இவற்றில் பெரும் வாயில் வழிகளும் இருந்தன (உரு. 19, 20, தகட்டுத்தாள் 1, 2). அரப்பாச் சான்றுகள் நிறை வானவை; இவை தற்காலத்தொல்பொருளியல் வினை நுண்மைக் கிணங்க, இந்திய வரலாற்று முன்னர்த்தலங்களில் நடாத்தப்பெற்ற முதல் அகழ்விலிருந்து பெறப்பட்டன. ஆயின் இங்கு உயர்த்தில மைந்த கட்டிடங்களின் திட்டத்தை இசைவுபெற அமைக்க முடியா வகையில் கட்டிடங்கள் சிதைவுற்றிருந்தன. ஆயின் இந்த விவாங் களே அறிவதற்கு நாங்கள் மொகஞ்சோதாரோவை நோக்குவோம்; பின் அரப்பாவில் கண்டனவற்றைக் கொண்டு அங்கு அகழ்ந்தா
யாத காவலரண்களின் எச்சங்களுக்கு விளக்கமளிப்போம்.
அாப்பாவில் காணப்பட்ட கிரமம் வருமாறு (உரு. 20). இத்தலத் தில் முதன்முதல் குடியிருந்தோர் வடபலுக்கிக்கானின் சிவப்பில் கறுப்பு வகைமட்கலத்தை உபயோகித்த ஒரு கிராமத்தவரே. இக் கலம் ஒருவேளை ராகு IC கட்டக்திற்குரியதாயிருக்கலாம். இங்கு பொல்லா அழிவுதரும் வெள்ளப் ெ ருக்குகள் ந!ை பெற்றதற்குரிய சான்றுகள் பல உள. அரப்பா நாகரிக மக்கள் இங்கு வந்ததைப் பெரிய ஒரு காவல் மதில் கட்டப்பெற்றது சுட்டுவதாயுள்ளது; இம் மதில் மட்செங்கட்டியாலான உட்பாகத்தையும் மண்ஞலும் சிதை வுகளாலுமான வெளிப்புறத்தையும் கொண்டிருந்தது. இம்மதில் அணைக்கட்டொன்றின் மேல் அதனேடு ஒன்றியவகையில் கட்டப் பெற்றிருந்தது. இம்மதில் காவலரண்களின் அத்திவாரத்தை வெள்ள மட்டத்தினின்றும் உயர்த்துவதற்காகக் கட்டப்பெற்றதாகும். முக்

Page 110
90
சிந்து, பஞ்சாப்
*nne/ ستة
s
s
ላ కోతిeశోకమిటsడHE"gare; } } e 32o i. ،ت
99 0 Ke g Q9 ds
தானியக் கள
"י"ת "ש$ 3
Ei.
அரப்ப்ா
நகரரண் முதலியன
அடிவளவுத்திட்டம்
 
 
 
 

19.
ஆகியவற்றின் நகர்கள்
0 & qrısı
&
isegirissorno
역치m 이R니림TT정参刻ww身!TM
3、多多 & 毛o || !/ ¡Ao fii ș %
}\ *Åsı \!\“三令% 多&毛季, 渗\\||% 三之三· țiți 每i多”& 多 2 & _soooooo, họ@y, bęstornos séf,Nosonąĝo signs;三く ご岭�|- •“、多 多い>。シミ多多 2%�乡�兵|-多く*: ,|- &らにミ“aシ多/忽必N Wミy」能にシ|-|-りa 给 翻壕感癥影|-│ │ ~o%。マ J|- No——,. .«な(. . . »* ...“像ダ盛* 门|- • •, !いら*{{ E的T.仁明平和的地야후!|- § enę!=门「ひfis sées 5a်း၊ク i瞄quaesoți suo aes n a**, ... • e 露ひ * 『
(hovno o isson gonnons)
vissans legs 60+q)
邻印a《心* 《以|-;{ ș 蜀 &
atriotą. eloņsis----
*n-i-, gossassie tyre|- (gų surssi rit crasse) qofÊSinnes (iš , se yisoissinnte sæt tæą: roșiesennog ng
ffŵŶo.• işgıņ@ųnta@|-|- *|-|-|- , , un ŋoo tạo

Page 111
192 சிந்து, பஞ்சாப்
கிய காவல்மதில் மண் செங்கட்டியால் கட்டப்பெற்றது. உட்புறமும் வெளிப்புறமும் இது கூம்பியிருந்தது. வெளிப்புறத்தில் இம்மதில் சுட்ட செங்கட்டியால் பதிக்கப்டெற்றிருந்தது. இம்மதில் முழுவதும் அடியில் 40 அடி அகலமும் 35 அடிவரை உயரமும் கொண்டிருந் தது (தகட்டுத்தாள் 1 2). இது, நகராணிற்குரிய முக்கிய கட்டிடங் களைத் தாங்கி நின்ற மண்ணுலும் மண்செங்கட்டியாலுமான மேடையை அடக்கியிருந்தது. இது திட்டத்தில் 1200 அடி 600 அடி யாலான ஓர் இணைகரமாயிருந்தது. இதற்குத் தொகுதி முறையில மைந்த ஒரு மேற்கு வாயில் வழியிருந்தது. இதனுடன் இணைந்து விழாமுறைகளுக்குரிய தளங்கள் இருந்தன. வடபாலும் இதற்கு உள்வளைந்த வாயில்வழி இருந்தது. ஒருவேளை இதுவே பிரதான வாயிலாயிருந்திருக்கலாம். இக்காவல் மதிலுக்கு அரணுகச் செவ்வக முனைப்புகள் இருந்தன. இவை முக்கிய மதிலிலும் உயரமாக அமைந்து கோபுரங்களாக இருந்தன.
காவலரண்களிலிருந்து இரண்டு மீளமைப்புக் கட்டங்களை நாம் காணக் கூடியதாயிருந்தது. ஆதிவேலை காலநிலையாலழிந்து பழு தானபின் சுட்ட செங்கல்லாலான முகவலைப்பு ஆகிவே?லயிலும் பார்க்க மிக முதற்றரமான முறையில் மீளக் கட்டப்பெற்றது. சில இடங்களில் இது அகலங்கூட்டி அமைக்கப்பெற்றது. இது அாப்பா நககரிகம் மிக உச்சநிலையிலிருந்தபொழுது நடைபெற்றது. மீளமைப்பின் இரண்டாம் கட்டத்தின்போது வடமேற்கு மூலை கூடிய ஒரு முனைப்புடன் அசண்செய்யப்பட்டது. அத்துடன் மேற்கு வாயில் முறைமையில் உள்ள இருவாயில்களும் முழுவதுமாகவோ பகுதியளவிலோ அடைக்கப்பட்டன. 'நகரின் இந்தப் பிந்திய கட்டத்தில் அாப்பா மக்கள் தாக்குதலை எதிர்பார்த்தவராயிருந் தனர்" என்று விலர் கூறியது குறிப்பிடத்தக்கது.
மொகஞ்சோதாரோவில் உண்மையான அகழ்வு நடாத்தாமல் சிறு புலவேலையொன்றினல் தலத்தின் மிக்க மேற்பாலமைந்த திடலைச் சுற்றி ஒத்தவகையினவான காவலரண்களிருந்திருக்கவேண்டுமென விலர் காட்டக் கூடியவராயிருந்தார். இத்திடலின் உச்சியில் இப் பொழுது கி. பி. மூன்முவதோ நான்காவதோ நூற்முண்டுக்குரிய அாபி அமைந்துள்ளது. முன்னர் நடந்த அகழ்வுகளிலிருந்து மாச லும் மக்கேயும் தாபித்திடல் குறைந்தது 20 அடி உயரம் வரையி

ஆகியவற்றின் நகர்கள் 193
லான மண்செங்கட்டியாலான பெரிய ஒரு செவ்வக மேடையைக் கொண்டிருந்திருக்க வேண்டுமென்று காட்டியுள்ளனர்; இது அத் தலத்தில் அறியப்பெற்ற முதல் கட்டிடக்கட்டத்தின உடன்பின்னர்க் கட்டப் பெற்றது என்பதும் அவர் கருத்து. (இங்கு கன்னி மண் தளம் நீர்மட்டத்தின் காரணமாக அடையப்பெறவில்லை.) இம் மேடையில், இப்பொழுது தூபியாலும் அதன் முன்றிலாலும் மூடப் பெற்ற யாதோ ஒரு கட்டிடம் இருந்திருத்தல் வேண்டும் , அகழ்ந் தாய்ந்தோர் இதை நற்பேறற்றமுறையில் அகற்றவில்லே. இது ஒரு நல்தரத்திலில்லாத கட்டிடச் சிற்பமாகும். இத்தலத்தை வருங் காலத்தில் ஆய்வார் நன்முறையில் ஆராய்வர் என்று எதிர்பார்க் கிருேம். ஆயின் இதனை அடுத்து வியத்தகு முறையிலமைந்த கட்டி டக்கோட்டம் ஒன்றிருந்தது. இதை மாசல் அவர்கள் பாரிய ஒரு *நீர்மருத்துவ நிலையம்' என்று வருணித்துள்ளார்கள். மொகஞ் சோதாரோவின் நகராணின் உண்மையான கட்டிடங்கள் பற்றிக் கூறும்போது மற்லொக் அல்லது பேடன் பேடன் (Matlock or Badlh Baden) பற்றிய நினைவுகள் பொருந்துவன அல்ல. ஆயினும் நடுமை மையமாக அமைந்த அமிசம் இக்கால இந்தியப் பதத்தில் கூறின் ஒரு பெரிய நீராட்டுக்கேணி எனலாம். இது ஏறக்குறைய 40 அடி 24 அடி பரிமாணங்கொண்டிருந்தது ; 8 அடி ஆழமாயிருந் தது. படிகள், ஆதியில் செங்கட்டி வேலையிலமைந்த மரமிதிகள் கொண்டிருந்தன. இவை ஒவ்வோர் அந்தத்திற்கும் இட்டுச்சென் றன. கேணியின் சுவர்கள் எல்லாம் நீர் கசியாவண்ணம் பிற்றுமன் பதிக்கப்பட்டிருந்தன. தேவையானபொழுது கேணியின் நீரை வடித்து விடவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. மூன்று பக் கங்களிலும் சிற்றறை வரிசைகள் இருந்தன. இவை P டைமாற்றும் அறைகள் போலிருந்தன. இவ்வறையொன்றுள் ஒரு கிணறு இருந்
தஅது.
இந்நீராட்டுக் கட்டிடத்துடன் இன்னுமொரு பெரிய கட்டிடம் இருந்தது. இது 230 அடி 78 அடிப் பரிமாணங் கொண்டிருந்தது. இது தனி ஒரு கட்டிடச் சிற்பம் போல் அமைந்திருந்தது. இதில் ஒரு கூடமுற்றமுமிருந்தது. இது அந் நீராட்டுக் கேணியை நினை வூட்டியது. இதில் பல அறைகள் ஓர் ஒழுங்குபட அமைந்திருந்

Page 112
194 சிந்து, பஞ்சாப்
தன. இதை அகழ்ந்தவர்க்கு இது ஏதோ මෙ வகைக் கல்லூரி போன்ற ஒரு கூட்ட அமைப்புப் போல் புலப்பட்டது. இதன் திட் டம் நகரத்தின் மற்றைப் பகுதிகளிலிருந்து அறியப்பட்ட மற் றைச் சாதாரண வீட்டமைப்புகளைப் போல் தோன்றவில்லை. இக் கட்டிடங்களுக்குத் தென் திசையாக ஒத்தவகையில் விசித்திர மான பிறிதோாமைப்பிருந்தது. இது பல வகையில் மாற்றி மாற் றிக் கட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்தால் ஆதியில் இது எல்லா வழியிலும் 80 அடி அளவு கொண்ட ஒரு அண்ணளவில் சதுரமான ஒரு மண்டபம் போலிருந்தது. இதன் கூரை செங்கட்டிக ளாலான இருபது செவ்வகத் தூண்களில் தங்கியிருந்தது.
புறநடையாயமைந்த இக்கட்டிடங்களைத் தவிர, மொகஞ்சோ தாரோவின் நகராண் பரப்பிலும், அங்கிருந்த திட்டங்களை ஒப் பிட்டு நோக்கும்போது நகரின் மற்றைப் பகுதிகளிலிருந்த வீடு களை ஒத்த வீடுகள் இருந்தன எனலாம். ஆயினும் நகராணின் கட்டிடச் சிற்பத்தின் பொதுப் பண்பு, பெரிய நீராட்டுக் கேணி, கல்லூரிக் கட்டிடம், அரண்மண்டபம் ஆகியவற்றிற்கும், தூபிக்குக் கீழ் உள்ள கட்டிடம் எதுவோ அதற்கும், அடங்கி இயைந்ததா யிருந்தது. இதன் பொருளை விலரின் மொழியில் சொல்வதா னல் "இங்கு நாம் குறிப்பிடத்தக்க முறையில் சமய வாழ்வினதோ ஆட்சி வாழ்வினதோ ஒருமையத்தைக் காண்கிமுேம் எனலாம். நடுக்காலத்தில் இந்தியாவிலிருந்த இந்துக் கோயில்களோடு இணைந்திருந்த கேணிகளை நாம் கருத்தில் கொள்ளும்போது இப் பெரிய நீராட்டுக் கேணி அவ்விடத்தை வகிப்பதை நாம் காண லாம். உண்மையான கோயில் எது என்று நாம் சுட்டியறிய முடி யாவிட்டாலும் அாபியிருந்த தலத்தில் சமய மரபு ஒடியா நிலையில் பேணி வளர்க்கப்பட்டிருக்கலாம். .'
அாப்பாவின் மேற்கு வாயில்வழி, நகராணின் மற்றைப் பகுதி களைப்போல், செங்கட்டிக் கள்வரால் பெருமளவில் கொள்ளையடிக்கப் பட்டு அழிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பொறுமையுடன் அகழ்வார். விழா முறைக்குரிய தளங்கள், படிக்கட்டு வரிசையிலிருந்து உண்மைவாயில், வழிகளுக்கு இட்டுச் செல்லும் ஒரு வலம் வரும் வழி ஆகியவற்றின் சிதைவுகளைப் பிரித்தறியக்கூடிய அளவிற்குப்

ஆகியவற்றின் நகர்கள் 195
போகிய மீதிகள் இருந்தன. இத்தளங்களின் வெளி மூலைகளில் காவல் அறைகள் இருந்தன (உரு. 19). இவையாவும் காவல்மதிலின் விசித்திரமான ஓர் உள்வளைவோடு பொருந்தியிருந்தன. சாதாரண மான காவல் வழிமுறைகளால் இதற்கு விளக்கமளிக்க முடியாது. இத்திட்டம் சமய சம்பந்தமான இலௌகிகமான அல்லது இரு முறையும் சார்ந்த ஏதோ சடங்கு அல்லது விழா ஒன்றுடன் இணங்குமுகமாகத் திட்டமிட்டமைக்கப்பெற்றது என்ற முடி விற்கே நாம் வரவேண்டியிருக்கிறது. இவ்விழாவிலோ கிரியை பிலோ ஒரு தளமோ தளங்களோ முக்கிய இடம் வகித்திருத்தல் வேண்டும். இதற்கு வருவதற்கு அணிமுறையில் வலம் வருதல் நியம மாயிருந்திருத்தல் வேண்டும். இத்திட்டத்தைப் பல்வகை அணிவலக் கிரியைகளோடு நாம் சார்த்தி நோக்கலாம்; ஆயின் அரப்பாச் சம பம் ஆட்சி முதலியவை பற்றி நாம் அதிகம் அறியாமல் இவற்றுள் ஒன்றைத் தேர்ந்து சொல்லுதல் பயனுடையதாகாது.
ஒவ்வொரு நகரிலும் முக்கிய குடிமக்களுக்குரிய மற்றை விதிகள், கடைகள், வாழ்மனைகள் முதலியன நகராண்களிலும் தாழ்வாக இருந்தன. இக்கட்டிடங்களைக் காட்டி நிற்கும் திடல்களின் வெளி யோாங்களை நீர் மிக மோசமான முறையில் அரித்துவிட்டது. நகர சண்களின் மதில்களைத் தவிர்ந்த நகரின் மற்றை மதில்களின் சுவடு கள் திடம்பட்டமுறையில் இனங் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயி லும் மொகஞ்சோதாரோவில், வெளியில் உள்ள ஆற்றுக்கு இட்டுச் செல்லுவதாயமைந்த படிவரிசை கொண்டுள்ள மதிலின் பகுதி யொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இது ஒருவேளை நகரின் சுவராயிருக்கலாமென்றும் கொள்ளப்படுகிறது. இத்தலத்திலும் பார்க்கச் செங்கட்டிக் கொள்ளையிலகப்படாது நன்முறையில் நிலை நிற்கும் கட்டிடங்களிலிருந்து கெருத்திட்டம், தனிவீடுகளின் திட் டம் முதலியவற்றை நரம் மீட்டறியக் கூடும் (உரு 21). .
இன்று மொகஞ்சோகாரோ நகரைச் சுட்டுவனவாயுள்ள திடல் கள் ஒரு சதுர மைலளவினவாயுள்ளன. சில பிரதான விதிகளின் மேற்பரப்பின் இயல்பும் அறியக்கூடியதாயுள்ளது. இதனை அகழாய் வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வகழாய்விலிருந்து சிறு விதி களின் விவசங்களும் சில இடங்களிலுள்ள ஒழுங்கைகளின் விவாங்

Page 113
96 சிந்து பஞ்சாப்
களும் அறியப்படக்கூடியனவாயுள்ளன. கிடைத்துள்ள சான்றுக
ளைச் சேர்த்து வெளியிட்ட திட்டம், அடிப்படையமைப்பானது பிச
L.
p--
ベ
ub,
படம் 21 நகர்க் கட்டிடத்தொகுதி அமைப்புத்திட்டம், மொகஞ்சோதாரோ. தான விதிகள் கொண்ட ஒரு நெய்யரியாயிருந்தது என்பதைக் காட்டுகின்றது. இப்பெரும்விதிகள் வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்குமாகச் சென்றன; இவை நகர்ப் பாப்பைக் கிழக்கு மேற்
 

ஆகியவற்றின் நகர்கள் 197
காக 800 அடி அகலமும் வடக்குத் தெற்காக 1200 அடி நீளமும் கொண்ட அண்ணளவில் ஒத்த பருமனும் செவ்வக உருவும் உடைய பகுதிகளாகப் பிரித்தன. இத்தகைய துண்டங்கள் ஆருே ஏழோ இருந்தன என்பது அகழ்வுகளால் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறே செங்கோணத்திலமைந்த இரு பிரதான வீதிகளும் (கிழக்குவிதி யும் முதல்வீதியும்) முதல் வீதிக்குச் சமாந்தரமாய் அதற்குக் கிழக்காக அமைந்த ஒரு மூன்றும் வீதியின் ஒரு பகுதியும் இருந் தன என்பதும் புலப்பட்டுள்ளது. திடல்களின் ஓரங்கள் அழிவு பெற்றன என்பதை ஏலவே குறித்துள்ளோம். இதனுல் நகரின் சுற் றுவரையைப் பற்றிய உண்மையான நிலையையும் இயல்பையும் நாம் ஒன்றும் அறியமுடியாதவராயிருக்கின்முேம். ஆயின் நடுவிதி யின் திட்டம் சுட்டும் ஒழுங்கமைப்பை நாம் ஒரு சீர்ப்பட விரித்து நோக்குவோமானுல் ஒருமைல் குறுக்களவுள்ளதும், கிழக்கு மேற் காக ஒவ்வொன்றும் நான்கு துண்டங்கள் கொண்ட மூன்று வரிசை யுடைய பன்னிரண்டு பாரிய கட்டிடத் துண்டங்களையுடையது மான ஒரு சதுர நகரை இங்கு நாம் காணலாம். இவ்வாறு மீள வமைந்த ஒழுங்கில் மேற்பாலமைந்த நடுத்துண்டம் நகாரணுக இருக்கும்; இது இதன் காரிய மகிமைக்கேற்ற ஒரு தானத்தை வகித்து நின்றது. பிரதான விதிகள் பாவப் பெருதவை; 30 அடி வரை அகலமுடையவை; பெரிய துண்டங்களுக்கிடை ஒழுங்கற்ற சிறு விதிகள், ஒழுங்கைகள் வழிகள் முதலியவற்முலான வலைவேலை ஒன்றிருந்தது. இவை ஓரளவிற்கு நகரமைப்பின்படி கோலப்பட்டி ருந்தன. இவை துண்டங்களைத் தனி மனைகளாகப் பிரித்தன. அரப் பாவில் பொது ஒழுங்கின் விவரங்களைப் பற்றியோ தனி விடுகளின் விவரங்களைப் பற்றியோ, ஒன்றும் அறிய முடியவில்லே.
அாப்பாவிலும் மொகஞ்சோதாரோவிலும் ஒரு வரிசை கட்டிடக் கட்டங்களை நாம் அறியக் கூடியவராயுள்ளோம்; இத்தலங்களின் வாழ்வமைப்புக்களின் கடைசியான சீரிழிந்த கட்டங்கள்வரை கட்டிடங்களின் ஆதித்திட்டங்கள் செவ்விய முறையில் கடைப் பிடிக்கப்பெற்றன. மொகஞ்சோதாரோவைப் பற்றிய வகையில் இதைநாம் ஓரளவிற்கு உறுதியாகக் கூறலாம். இதனுல் விடுகளில் உட்பாகத்தில் மாற்றங்களும் சிறு பிரிவுகளும் செய்யப்பட்டன. படையமைவினைப்பற்றி இவ்வத்தியாயத்தின் பிற்குதியில் விவர

Page 114
98 சிந்து, பஞ்சாப்
மாக ஆராய்ந்துள்ளோம். ஆயினும் பொருளியல் பண்பாடு இங்கு ஒரு தன்மைத்தானது ஆதலின், எங்களுடைய இப்பொழுதைய நோக்கத்திற்கு இருதலங்களிலுமுள்ள குடியிருப்புச் சிதைவுகள் கட்டிடச் சிதைவுகளின் முழு ஈட்டத்தையும் ஒரு தனிப்பொரு ளெனக் கொள்ளலாம். எனவே, சிற்பக்கட்டிட அமிசங்களும் G/P632 வதற்கும் பொருந்தும் பதங்களில் எடுத்துரைக்கப்படும்.
மொகஞ்சோதாரோவில் வீடுகள் கடைகள் அல்லது இரண்டு அமிசங்களும் கொண்டவை என்று சொல்லப்பட்ட கட்டிடங்கள் பல்வேறு பருமன் ஆகியவற்றேடு இயைந்தனவாயிருந்தன என்ப தில் ஐயமில்லை. ஆயின் அவற்றின் பொதுவான திட்டம் ஒரு மாதிரி யாகவே இருந்தது. நல்தரத்தார் வீடுகள் நன்முறையில் சுடப் பெற்ற செங்கட்டிகளால் கட்டப் பெற்றிருந்தன; இவை பொதுவில் 11 x 5. 5 x 2. 5 அங்குலப் பரிமாணங்கள் கொண்டிருந்தன. எனி னும் இவற்றில் வேறுபாடுகளும் இருந்தன. சுவர்கள் திண்ணிய முறையில் கட்டப்பட்டிருந்தன; பரற்கல் முகங்கொண்டிருக்க வில்லை. வீடுகளின் உட்பக்கத்தில் மண்சாந்து பூசுதல் பெருவழக்கா யிருந்தது. சிலவேளைகளில் வெளிப்புறமும் அப்படியே பூசப்பட்டி ருந்தது. ஆயின் இரண்டொரு இடங்களில் அணிமுறையில் செங் கட்டிகள் பதித்த இடங்களில், சுவர்கள் சாந்துபூசப்பட்டனபோல் தோன்றவில்லை. செங்கட்டி பதிக்கும் வழக்கு ஆங்கிலக்கட்டு' முறையர்கவே இருந்தது. செங்கட்டிகள் சுவர் மேற்பரப்பிற்குத் தலைகாட்டுவனவாகவும் பக்கம் காட்டுவனவாகவும் மாறி மாறி அடுக்கப்பட்டிருந்தன. * -
சாதாரணமான கீழைநாட்டு வழக்கிற் கேற்ப, தெருக்களை நோக் கிய விடுகளின் சுவர்கள், இயன்றவரையில் வேலைப்பாடற்றனவா யிருந்தன. இவற்றை வெறும் வாயில்வழிகளே இடைமறித்தன. இவை சராசரி 3 அடி/4 அங். அகலமுடையன். சாதாரணமாய் இவை தட்டையான மர உத்திரங்கள் உடையன. எனினும் இவற் றுட் சில தண்டியங்கொண்ட்வை. நல்முறையில் நின்ற சுவர்களி லுமே சாளரமிருந்த சுவடு ஒன்றேனும் புலப்படவில்லை. ஒரு வேளை அவை அறையில் மிக உயரத்திலமைந்தனவாயும் சிறியனவாயு மிருக்கல்ாம். இவை நெய்யரி கொண்டிருந்திருத்தல் வேண்டும். இவற்றின் கல்லாலான சில பகுதிகள் நிலைபெற்றுள. மொகஞ்சோ

ஆகியவற்றின் நகர்கள் 199
தாரோவில் அகழ்ந்த தெருக்களில் இன்று ஒருவரை எதிருறும் செங்கட்டிகளாலான வெறுக்கத்தக்க வெறும் சுவர்களைப் பற்றி மாசல் குறிப்பிட்டுள்ளார்கள்; இவற்றை அவர் ஒரு இலங்கசயர் கைத்தொழில் வாழ்தலப் பகுதியின் சிதைவுடன் ஒப்பிட்டது பொருத்தமானதே. சாந்தும் வண்ணமும் கொண்டனவாயிருந்தா லும் இங்கிருந்த சிற்றெழுங்கைகளும் குறுவழிகளும் நடப்பதற்குக் கூச்சமும் அச்சமும் தருவனவாயிருந்திருக்க வேண்டும்.
செல்வருடைய வீடுகளின் பொதுவான அமைப்பு ஒரு முற்றத் தைச் சார்ந்தமைந்திருந்தது. இதற்குச் செல்வதற்கு ஒரு கதவு இருக்கும். இக்கதவு பிரதான வீதியிலில்லாமல் ஒரு பக்கவழியி விருந்தது. வாயிலிற்கு உடன் அண்மையில் ஒரு காவலன் நிற்ப தற்கு ஓர் ஒழுங்குமிருந்தது. இம்முற்றத்தைச் சுற்றி அல்லது இரண்டு மூன்று பக்கங்களில் மட்டும் பல்வகைப் பருமன்களி லமைந்த அறைத்தொகுதிகளிருந்தன. இவற்றுடன் நீராட்டு அறை களுமிருந்தன. இவற்றின் தரைகள் நன்முறையில் செங்கட்டிகள் பதிக்கப்பெற்றிருந்தன. இவற்றேடு தெருவிற்கு இட்டுச் செல்லும் விரிவான வடிகான்கள் இருந்தன. ஆயின் ஒதுக்கிடங்கள் ஒரிடமும் இருக்கவில்லை. சுவர்களுக்கூடாக ஊத்தை வடிகால்கள் இருந்தன. இவை வெளியில் செங்கட்டியால் கட்டப்பெற்ற செவ்வகத்தொட் டிக்கு இட்டுச் சென்றன. இவை நகராண்மைக் கழகங்களின் ஆணை யால் துப்புரவாக்கப்பட்டிருக்கலாம். தெருக்களின் கீழ் ஒடிய விரி வான் வடிகான்களுக்கும் நகராண்மைக் கழகமே பொறுப்பாயிருந் 'தது. வீட்டு வடிகால்கள் இந்த நகர்வடிகான்களுடன் இணைக்கப் பெற்றிருந்தன. சிறப்பாக இதற்கெனச் செங்கட்டியால் செய்யப் பெற்ற ஆட்டுளை மூடிகளைத் தூக்கி யெடுத்துப் பிரதான வடிகான் களைத் துப்புரவாக்கலாம். இதுபற்றிய எண்ணக்கரு கீழைநாட்டில் வரலாற்று முன்னர்ப் பண்டை க்காலத்திலும் இக்காலத்திலும் ஈடில் லாத முறையில் அமைந்த நல்வழி கசாகாாம் முதலியவை பற்றி மக்கட்கிருந்த ஒரு கவற்சியை எடுத்துக் காட்டுவதாயுள்ளது. இறுதியில் குப்பைகூளங்கள் நனகுழிகளை வந்தடைந்தன.
கணப்படுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. தேவையான செயற்கை முறைச் குடாக்கல் கரிக்கணற் சட்டிகளிலிருந்து பெறப்பட்டிருக் கலாம். மேல்மாடிகளோ தட்டைக் கூரையோ இருந்ததைச் சுட்டும்

Page 115
200 சிந்து, பஞ்சாப்
படிக்கட்டுகள் பெருவழக்கிலிருந்தன். சில இடங்களில் உண்மை யான மேற்றளத்துக்கான உத்தரத் துவாரங்கள் காணப்பட்டன. அரப்பாவில் எரிந்து கரிந்த பைன் பிணைச்சல்கள் காணப்பட்டன. மொகஞ்சோதாரோவில் சிகுமரம் இருந்ததற்கும் சான்றுளது. இங்கு 14 அடி வரை நீளமுடைய சதுரவன்களுக்கான சாரக்கட் டைத் துவாரங்களும் காணப்பட்டன. வாசற்கதவுகளின் மேற் கட்டைகளுக்கும், ஏலவே நாம் கூறியவாறு பெரிய நீராட்டுக் கேணியின் படிக்கட்டுமிதிகளுக்கும் மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மரத் தூண்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆயின் இது அரு மையாக இருக்கலாம். சில சுண்ணும்புக்கல் போதிகைகளும் அடிப் பீடங்களும் காணப்பட்டன. வீடுகளின் தட்டைக் கூரைகள் மூங்கி லாலும் நாணல் வகையாலுமாய பாய்களால் வேயப்பட்டு, நீர் உள் விடாத் திண்ணிய படையாக அமைவதற்காக களியாலும் மண்ணு அலும் பூசப்பட்டிருந்தன.
பொதுவில், மொகஞ்சோதாரோவின் நகரமைப்பில் வீட்டுவகை யில் அதிக வித்தியாசம் காட்டவில்லை. ஆயின் ஓரிடத்தில் மட்டும் ஒரு சிறிது கவர்ச்சிகரமான மாற்றமிருந்தது. இது ஒரு தொழிலா ளர் வசிப்பிடமாயிருந்திருக்கலாம். இங்குள்ள மனைகள் ஒரே மாதிரி யான திட்டத்திலமைந்திருந்தன. நீர் ஒழுங்கான முறையில் கொண்டுவரப்பெற்றது; இதற்குச் சிறப்பு முறையிலமைந்த ஒரு கிணறும் இருந்தது. இக்குடிசைத் தொகுதி அகழாய்வின் HR பகுதி யில் வடமேற்கு மூலையில் உளது. இதில் ஒரு தன்மையான திட்டங் கொண்ட பதினறு கட்டிடங்களிலிருந்தன. இவை உட்பக்கமாக 20 அடியால் 12 அடி பரிமாணங் கொண்டு ஈர் அறைகளாகப் பிரித்திருந் தன; ஒர் அறை மற்றையதிலிருந்து இருமடங்காக இருந்தது. இவை இரண்டு சமாந்தர வரிசைகளிலமைந்தன. இவற்றின் ஒரு பக்கத்தில் ஒடுங்கிய ஒழுங்கை யொன்றும் மற்றைப்பக்கத்தில் ஒரு தெருவும் இருந்தன. இவ்வறைகள் மெல்லிய சுவர்கள் கொண்டிருந் தன. எனவே இவை ஓர் அடுக்கு விடுகளாயிருந்திருக்க வேண்டும். இவற்றின் அமைப்பு முழுவதையும் நோக்கும்போது இவை இக் காலத்து ஒரு கூலியாளர் வரிசை வீடுகளை ஒத்திருந்தன. இது உண் மையாயிருக்கலாம். ஏனெனில் இது ப்ற்றி அரப்பாவிலிருந்து பெறும் தெளிவான சான்று இதனை உறுதிப்படுத்துவதாயுள்ளது.

ஆகியவற்றின் நகர்கள் 20
இங்கு வடபாலமைந்த நகாரணுக்குக் கீழாக நகர்த்தொழிலாளி களின் குடிவிடுகளிருந்திருக்கலாம். இது பலவற்றுள் ஒன்ருயிருக்க லாம். மொகஞ்சோதாரோ ஒழுங்கிலமைந்த இருவரிசைக் குடிசை கள் இங்கு காணப்பட்டன. ஒவ்வொன்றும், ஒன்றைவிட மற்றையது பெரியதாயமைந்த ஈர் அறை முறைமையைக் கொண்டனவாயிருந் தன; ஆயின் தனி விடுகள் மொகஞ்சோதாரோவில் இருந்தவற்றி லும் இருமடங்கு பெரியவாயிருந்தன. இத்தகைய பதினன்கு விடு கள் காணப்பட்டன; இன்னும் பல இருந்திருக்கலாம் என்று அனு மானிக்க இடமுண்டு (உரு. 19).
இக்கூலியாளர் வரிசை வீடுகள் இருந்த பகுதி முழுவதும், விலர் கூற்றில் சொல்வதானுல் 'பாளையக் குடியிருப்புப்போல் அளிபெற்று நின்று ஒர் அதிகாரத்தைச் சுட்டுவதாயிருந்தது' எனலாம். தொழி லாளர் வாழிடங்களுக்கு அப்பால் அகழப்பெற்ற இடங்களில் வட்ட வடிவிலமைந்த நன்முறையில் சுட்ட செங்கட்டியால் கட்டப்பெற்ற வேலைசெய் நிலத்தினங்களிருந்தன. இவை ஏறக்குறைய 10 அடி விட்டங் கொண்டிருந்தன. இவை ஆதியில் நடுவில் நிலத்தில் தாழ்க் கப்பெற்ற ஓர் உாலைக் கொண்டிருந்தன. இதில் தானியங்கள் இடப் பெற்று நீண்டபாரிய உலக்கைகளால் மாவாக இடிக்கப்படும். இது இன்றும் வங்காளம் காசுமீரம் முதலிய இடங்களிலுள்ள வழக்கை ஒத்ததாகும். பூர்விகத் தானிய மிடிக்கும் இந்த உபாயங்களுக்கு, நடுவிற் கண்மையிலமைந்த தேய்ந்த செங்கட்டிகள், அடிமைகள் தானியங்களை இடிக்கும்போது எங்கு நின்றனர் என்பதைக் காட் டின. நடுவிலமைந்த இந்தக் குழிகள் சிலவற்றில் கொதுமை, பாளி, பதர் ஆகியவற்றின் மீதிகள் உண்மையில் காணப்பட்டன (தகடு 3). இவற்றிற்குப் பின்னகப் பெரிய ஒரு களஞ்சியம் செங்கட்டியா லாய ஒரு மேடைமீதிருந்தது. இம்மேடை 150 அடி அகலமுடைய தாயிருந்தது. இது 200 அடி நீளமுடையதாயிருந்திருக்கலாம். இக் களஞ்சியத்திற்கு அணைசுவர்கள் இருந்தன. களஞ்சியத்தை இரண் டாகப் பிரிக்கும் ஒரு நடைச்சிறையிருந்தது. இதன் இருமருங்கும் தனித்தனிச் சேமிப்புப் பகுதிகள் இருந்தன. இவை ஈர நிலத்திலி ருந்தும் உயரமாக எழுப்பப்பட்ட செங்கட்டியாலாய சிறு பீடங்கள் மேலிருந்தன. இப்பகுதிகள் ஒவ்வொன்றும் 50 அடி 20 அடிப் பரி மாணங் கொண்டிருந்தன. இன்னும் இந்தக் களஞ்சியத்திற்கும்

Page 116
202 சிந்து, பஞ்சாப்
தொழிலாளர் மேடைகளுக்கும் அண்மையில் உலோகவேலையாளர் உலைகள் இருந்தன. இது அரப்பாவின் இப்பகுதி சிற்றளவு கைத் தொழில் முறைப்பட்டிருந்த இயல்பினைச் சுட்டுவதாயிருந்தது.
இவ்வகையில் திட்டமிட்டமைந்த பொருளியல் சாதனங்கள் பற்றி நாம் கூறும்பொழுது அடிமைத் தொழிலைப்பற்றி நாம் இங்கு குறிப் பிடுதல் வேண்டும். கவர்ச்சியற்ற முறையிலமைந்த நியமப்படுத்திய சிறு வீடுகள், பெரிய அரசக்களஞ்சியம், நகராண்மைக்கழகத்து மா இடிக்கும் ஆலைகள் இச்சாதனங்களாகும். இந்தக் கூலிமக்கள் குடில் வரிசைக்கு மிக அண்ணளவில் ஒத்தது தெல் எல் அமர்ணுவில் உள்ள தொழிலாளர் கிராமமாகும். இதிலும் ஒத்த முறையில் திட்ட மிட்டமைத்த குடிசைகள் கொண்ட பிரிவுகள் இருந்தன. ஆயின் அாப்பா ஒழுங்கமைப்பு எகித்தினதிலும் குறைந்தது ஒராயிரத் தாண்டளவில் முந்தினதாயிருத்தல் வேண்டும். பல்வேறு வணிகங் களும் கைத்தொழில்களும் குறித்த சில பகுதிகளில் செறிந்திருத் தல் இன்று கீழைநாட்டு நகர்களில் சர்வசாதாரணமான வழக் காகும். இது நடுக்கால ஐரோப்பாவில் இருந்த வழக்கை ஒத்தது. பண்டைச் சுமரிலும் வணிகமும் கைத்தொழிலும் பெருவளவில் மையப்படுத்தப்பெற்ற கட்டுப்பாட்டில் இருந்தன. ஆயின் குறித்த சில தொகுதி முயற்சிகளை நகரில் வரையறுத்த ஒரு பகுதிக்கு ஒதுக்கி வைத்ததும், அவனுடன் நகர் நிறுவியோரின் அலுவலகத் திட்டத்தில் சமைக்கப்பெற்ற திட்டம் போன்ற ஓர் ஒழுங்கிற் கியைய ஒரு மனைத் திட்டத்தை அமைத்ததும், வேண்டுமென்று நிரு மாணஞ் செய்யப்பட்டன என்பதிலும் கூடிய பொருள் கொண்டன வாய் விளங்கின. கைப்பணியாளர் கெழுமம் என்பதிலும் புறம்பான முறையில் உண்மையில் நன்முறையில் அமைந்த ஒரு கைத்தொழில் முதன்முதல் மேற்காசியாவில் அமைத்த பெருமை அரப்பா நாகரி கத்திற்கே உரியதாகும்.
இரு நகர்களுக்கும் வுேண்டிய நீர் நன்முறையில் செங்கட்டி பால் கட்டப்பெற்ற கிணறுகளிலிருந்து பெறப்பெற்றன. நிலமட்டம் நெடுங்காலக் குடியிருப்பாலும் வெள்ளை மண்வண்டலாலும் உயர்ந்து வந்தபடியால இக்கிணறுகளுக்கு அடுத்தடுத்து வளையம் வளைய மாகச் செங்கட்டிவேலைப்பாடு கட்டவேண்டியிருந்தது. இதனுல் இப் பொழுது அகழ்ந்தாய்ந்த தலங்களில் இக்கிணறுகள் பயங்கரமான

ஆகியவற்றின் நகர்கள் 203
தொழிற்சாலைப் புகைப் போக்கிகளைப்போல் காட்சியளிக்கின்றன. சில கிணறுகள் தனிப்பட்டோர் விடுகளுக்குத் தனிமுறையில் நீரளித்தன; ஆயின் சில பொதுவாகப் பயன்பட்டன என்பது உறுதி. இது இக்கால இந்தியாவில் உள்ள பொது நீர்க்குழாய்களைப் போலமைந்தன. இத்தகைய கிணறுகளின் மேற்பாகங்களைச் சுற்றி வர, பெரு முறையாக்கப்பாட்டிலுற்பத்தி செய்யப்பட்ட சிங் மண் கிண்ணங்களின் ஏராளமான உடைசல் துண்டுகள் காணப்பட்டன. இக்காலத்து இந்துசமய வழக்கைப்போல், அக்காலத்திலும் ஒரே கிண்ணத்தில் இருமுறை நீர் பருகுவதற்கு யாதாயினும் கிரியை முறையில் அமைந்த ஒரு தடையிருந்திருக்கலாம். அதல்ை ஒவ் வொரு கிண்ணமும் ஒருமுறை உபயோகிக்கப்பட்டபின் வீசப்பட்டி ருக்கலாம் அல்லது உடைக்கப்பட்டிருக்கலாம் என்பதை இக்குவியல் கள காடடின.
விரிவான முறையிலமைந்த வடிகான்களைப் பற்றியும் எங்கும் நிறைந்த நீராட்டறைகளைப்பற்றியும் நாம் ஏலவே குறிப்பிட்டுள் ளோம். இற்றை நாள் இந்தியாவைப் போல் பெரிய ஒரு சாடியில் நீரெடுத்து உடல்மேல் ஊற்றி நீராடப்பெற்றது. நன்முறையில் செங் கட்டியால் பாவப்பெற்ற சிறு நீராட்டறைகளிலேயே இது நபுை. பெற்றது. இவ்வறையின் மூலையில் இதற்குரிய வெளிவழி வடிகானி ருந்தது. சில தசைகள் இன்றும் வெறுங்கால்கள் பதிந்த அழுக்கக் தைக் காட்டுவனவாயுள்ளன. வெப்பமான காலநிலையில் தோல் காய்ந்து விடாமலிருப்பதற்காக எண்ணெய் உபயோகிக்ககால இவ் வழுத்தம் ஏற்பட்டிருக்கலாம்.
அாப்பா நாகரிகத்தை இவ்விரு மாநகர்களன்றியும் பல பருமனி லும் படித்தரத்திலுமமைந்த பல சிறு நகர்களும் கிராமங்களுக் எடுத்துக் காட்டுவனவாயுள்ளன. இன்னும் ஈர் அரண் செய்யப்பட்ட தலங்களும் இவற்றுடன் சேர்ந்தனவாகும். இக்குடியிருப்புக்களின் பருமனில் பெருவளவு வேறுபாடுகள் உள இவை சானுதாசோ போன்ற பெருந்தலத்திலிருந்து அமிலனேபோன்ற சிறு கிராமம் வரை வேறுபடுவனவாயுள. சானுதாசோவின் இப்போதைய சிதைவு 1000 *յգ 700 அடிப் பரிமாணங்கொண்டது; மற்றையது 300 3յգ200 அடிப்பரிமாணமுடையது. டபர் கொட்டிலுள்ள அசப்பாக்
குடியிருப்பின் பரப்பினைச் செவ்விதில் மதிப்பிடல் இலகுவன்று.

Page 117
204 சிந்து, பஞ்சாப்
ஏனெனில் நாமறிந்த வரையில் இது 100 அடி உயரமான பெரிய தெல்லில் உயர்பகுதியில் மட்டுமே இடங்கொண்டுள்ளது; இத் தெல்லு அடியில் 1200 அடி விட்டமே கொண்டுளது ; ஆயின் இது 450 அடி குறுக்களவு கொண்ட ஓர் பரப்பில் இடங்கொண்டிருந் திருக்கலாம். இவ்வாறே கக்கர் ஆற்முேரத்தில் சந்தனவாலாவில், அடியில் 750 அடி 500 அடிப் பரிமாணம் கொண்டு 28 அடி உயரம் கொண்டிருந்த திடலின் மேற்பகுதி 9 அடியில் மட்டுமே அரப்பாக் குடியிருப்பு அமைந்திருந்தது.
மாநகர்களில் சுட்ட செங்கட்டி பரந்து காணப்படுவதுபோல் சிறு தலங்களில் பரந்து காணப்படவில்லை. இத்தகைய கட்டிடப் போருள் களுக்கு வேண்டிய எரிபொருள், தொழில் முதலியவற்றை நாம் எண்ணும்போது இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. ஆயி னும் அரப்பாவின் நியமப் பரிமாணங்களுடைய சுட்டசெங்கட்டிகள் மேற்பால் சட்லச் தீரத்து ரூபார், பிக்கானீரின் தெர வார், கத்தியா வாரின் சங்கபூர் ஆகிய தொலைவிடங்களிலும், சானுராசோவிலும், லர்களு அயலிலுள்ள தலங்களிலும் காணப்பட்டது குறிப்பிடத்தக் கது. டபர் கொட்டில் சுட்ட செங்கட்டிகள் காணப்பட்டன : ஆயின் இவை 25 X 16 x 4 அங்குலப் பரிமாணமும் 24 X 16 x 3 அங்குலப் பரிமாணமும் கொண்டிருந்தன. இவை அரப்பாச் செங்கட்டிகளில் காணப்பட்டவகை வேறுபாட்டெல்லைக்கும் புறம்பானவை. ஆயினும் இத்தலங்களிலுமே 21X10X3 அங். பரிமாணமுடைய மண்செங் கட்டிகளிருந்தன. இவை அரப்பாவோடு ஓரளவிற்கு ஒத்து நிற் கக் கூடியவை. இவை குள்ளி, அம்றிநல் பண்பாடுகளின் தலங்களில் உள்ளனவற்முேடு பருமனிலும் திரவியத்திலும் ஒத்தவை. மொக்லர் என்பார் பத்தொன்பதாம் நூற்ருண்டில் சுற்ககன்டோரில் சுட்ட செங்கட்டி அமைப்புக்களைக் கண்டு பதிவு செய்தார். ஸ்ரீன் கண்ட உரிய இடத்தில் இல்லாத சில செங்கட்டிகள் 16x 6x24 அங். பரி மாணம் கொண்டிருந்தன. இவையும் அாப்பாவிலிருந்த பருமனளவு களோடு இயைந்தவையாயில்லை.
தெற்குச் சிந்திலிருந்த பல தலங்களில் கல் அத்திவாரத்தில் மண் செங்கட்டியாலோ அல்லது மண்களியினலோ ஆய சுவர்கள் நிலை நின்றிருத்தல் வேண்டும். இத்தலங்களில் கல் சிதைவுகளில்லாமை

ஆகியவற்றின் நகர்கள் 205
யையும் வாயில் வழிகளினல் தடைபடாது கற்பதிவு நின்றமையை யும் கொண்டு இதை நாம் அறியலாம் (எ. கா. அமிலனே. இங்கு கற்பதிவுகள் தெளிவாயுள). சந்தனவாலாவில் மண்செங்கட்டிச் சுவர்கள் இருந்தனபோல் தெரிகிறது. ஆயின் சுற்ககன்டோரில் வீடுகளின் வெளிச்சுவர்கள் குறைந்தது 5 அடி உயரத்திற்காயினும் கொத்தர் வேலைப்பாட்டாலமைந்ததாகும். உள்ளமைந்த பகு சுவர் கள் மண்செங்கட்டிகளுக்கு ஆதாரமாக 3 அடி உயர கொத்தர் வேலை அத்திவாரங் கொண்டிருந்தன. இத்தலத்திலும் நிலையாக இருந்த கல்லடிவாரங்களைக் கொண்டு ஸ்ரீன் அவர்கள் மரத்தூண்கள் பயன்
படுத்தப்பட்டன என்று அனுமானித்தார்.
அரப்பாப் பண்பாட்டில் உள்ள அரண் செயப்படாச் சிறு தலங் களுள் சானுதாரோவே மிக விரிவாக அகழ்ந்தாயப்பட்டது. இது சிற்றளவுக்கு மாநகர்களுடன் பொது ஒப்புமை கொண்டது. ஆயின் இதற்குக் குறிப்பிடத்தக்க ஒரு விதிவிலக்குணடு; இத்தலத்தின் அாப்பாப் பண்பாட்டுக் குடியிருப்போடியைந்த அடுத்தடுத்தன வாயுள்ள ஐந்து கட்டிட அமைப்புக் கட்டங்களும் வெள்ளப்பெருக் குக் கொண்டு வந்த சிதைவுகளால் பிரிக்கப்பட்டுள என்பதே அது. இதனுல் மீள அமைந்த கட்டிடங்கள் முந்திய குடியிருப்பின் திட் டத்திற்கேற்ப அமையவில்லை. இங்கு கான்கள், கிணறுகள், வீட்டுத் திட்டங்கள் மாநகர்களின் திட்டங்களுக்கியைய அமைந்தன. மற் றைத் தலங்களைப் பற்றிச் சிற்றளவு விவரமே பதிவு செய்யப்பட்டுள் ளது. டபர் கொட்டில் சிறப்புவகையான செங்கட்டிக் கானும் கிண நூறும் காணப்பட்டன. ஆயின் மற்றை இடங்களில் கிண்டப்பெற்ற பரீட்சார்த்தமான அகழிகளில் முற்றுப்பெருத விட்டுத்திட்டங் களன்றி வேறு ஒன்றும் காணப்படவில்லை.
அமிலனேவில் தலத்தின் பெரும்பகுதியில் கல்லத்திவாரங்கள் காணப்பட்டன. இது ஒழுங்கமைப்பு முழுமையும் ஒரு சீர்மை யடையதாயிருந்ததென்பதையும் பரும்படியாகச் செவ்விய நாற் றிசைகளினின்றும் தொடங்கியது என்பதையும் உணர்த்திற்று. இக் குடியிருப்பின் மிக்க சிறிய பருமன், இது கடற்கரைக்கு இட்டுச் சென்ற வழியிலமைந்த ஒரு தங்கிடமாயிருந்தது என்பதைக் காட்டி

Page 118
206 சிந்து, பஞ்சாப்
யது. இவ்வழி ஐதராபாத்திலிருந்து கராச்சிக்கு இப்பொழுது செல் லும் மார்க்கத்தையொட்டியது; இது இத்தலத்தைக் கடந்து செல் '6/37. w
அரண் செய்யப்பட்ட தலங்கள் சில அறியப்பட்டுள. சிந்திலுள்ள அலிமுசத் 3 இலிருந்து 5 அடிவரை கனமுடைய ஒரு கற்சுவரால் குழப் பெற்றுள்ளது. இது ஒழுங்கற்ற ஒரு செவ்வகப் பரப்பை அடக்கியுள்ளது. இதனுள் விடுகளும் ஒரு கிணறுயினுமிருந்திருத்தல் வேண்டும். கள்வர் நிரை கவர்வோர் முதலியோரைத் தடுப்பதற் காக இத்தகைய உறுதிமிக அற்ற காப்புக்கள் கிராமங்களில் பொது வழக்காயிருத்தல் வேண்டும். ஆயின் மக்கிரானில் சுற்ககன்டோரில் மிகப் பாரிய அரணமைப்பிருந்தது. இங்கு கன்மதில் 125 யார் 170 யார் பரிமாணங்கொண்ட ஒரு செவ்வகப் பரப்பைக் கொண்டிருந் தது. இம்மதில் வரிசைப்பட அமைந்த பரும்படிச் சதுரமான கற்க ளால் கட்டப்பெற்றிருந்தது. இம்மதில், அடியில், 30 அடி அகலமும் நிலைக்குத்தான உண்முகமும் கொண்டிருந்தது; இதன் வெளிமுகம் 40 பாகை அளவில் சாய்ந்திருந்தது. ஸ்ரீன் அவர்கள் இதன் ஆதி
உயரம் 20 அடியிலிருந்து 25 அடி வரை இருந்திருக்கலாம் என்று கருதுகிருரர். இத்தலம் முழுவதும் மிகப்பலமாகக் காப்புச் செய்யப்
பட்ட ஒரு நகராணுக விளங்கியதென்பது தெளிவு. 8 அடி அளவு
மட்டும் அகன்ற ஒரு வாயில் தென் மேற்கு மூலையில் இருந்ததற்கு
ரிய சுவடுகள் இங்குள. இதற்கு இரு மருங்கும் காவல்மனைகள் இருந்திருக்கலாம். இவ்வாயிலின் உள்ளும் புறமும் கட்டிடங்கள்
இருந்திருக்கலாம்.
சிந்தில் அரண்செய்யப்பட்ட தாரோ தலத்தைப்பற்றி ப. 84 இல்
'ஏலவே கூறியுள்ளோம். இத்தலத்தில் காட்டப்பெற்ற காவலமைப்
புக்கள் அம்றிப்பண்பாட்டினுல் ஊக்கப்பட்டனவாயிருக்கலாம். ஆயி ணும் அவை அாப்பாப் புண்பாட்டினலாயனவாயிருத்தல் கூடுமென்
'பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அத்
தலத்திலிருந்து பெற்ற பல வடிவவகை மட்கலங்களுள் அரப்பா
விற்கே சிறப்புவகையில் பொருந்திய, "பலிபீடங்கள் கொண்ட
:மென்மையான பண்படாத சிவப்பு மட்கலங்கள் பல இருந்தன.
இன்னும் மலையில் பல இடங்களில் அரப்பா எழுத்து வரியை அண்
ணளவில் ஒத்த படமுறை வரைவுகள் இயற்கைப் பாறையில்

ஆகியவற்றின் நகர்கள் 207.
செதுக்கப்பட்டிருந்ததை மகும்தார் கண்டார். மேலும் அயலில் அரப்பாப் பண்பாட்டு இயல்போடொத்த முறையிலமைந்த புதைப்" புப் பதுக்கைகளும் அங்கிருந்தன.
இம்மாநிலத்தலங்களுக்கு விளக்கமளித்தல் கடினமன்று. மாநகர் க்ள் இருந்தன என்னும் கொள்கையிலிருந்து ஒரு பிற்களமாக வேளாண்மக்கள் சமுதாயம் ஒன்று இருந்தது என்றே நாம் இங்கு ஊகித்துக் கொள்ளல் வேண்டும். இவற்றுட் தில முக்கியமாக வணிக நிலையங்களாயிருந்திருத்தல் வேண்டும். சுற்ககன்டோரி இதற்கு உண்மையான காட்டாகும். டபர்கொட்டும் அவ்வாறிருக் கலாம். இன்னும் சுற்ககன்டோர் பேசிய குடாவிற்கும் அராபியக் கடலிற்கும் இடையமைந்த கடல் வணிகத்தில் ஒரு தொடர் நிலைய மாயிருந்த முக்கியத்துவம் கொண்டதாயுமிருந்தது.
அாப்பா நாகரிகத்தில் பயன்பாட்டிற்கும் அணிவேலைக்கும் உத விய பல்வேறு கற்களையும் உலோகங்களையும் விவரமாக ஆராய்ந் தால் இவ்வணிகத்தின் இயல்பினை நாம் ஒருவாறு உணரலாம். மேற் பால் பலுக்கித்தானிலிருந்து பிற்றுமன் அல்பசுதர் முதலியனவும், ஒருவேளை சுதீற்றைற்றும் பெறப்பட்டிருக்கலாம். இன்னும் தொலை, விலுள்ள அபுகனித்தான் வெள்ளி அளித்திருக்கலாம்; எனினும் பேசியா அவ்வாறு நல்கியதென்று கொள்ளல் பொருத்தமுடைத்து. பேசியாவே'பொன்னும் நல்கியிருக்கலாம். வெள்ளி, காரியம், வெள் ளியம் முதலியன அங்கிருந்து வந்தன என்பது உறுதி. குறையரு மணிகளுள் பேரோசனை, வைடூரியம் என்பன பேசியாவிலிருந்தோ அபுனித்தானிலிருந்தோ வந்திருக்க வேண்டும். வைடூரியம் பதக் சானிலிருந்து வந்ததென்பது உறுதி. இவ்விடம் பலநூற்முண்டு களாக அருமணிக்குப் பெயர்போனதாகும். இதைக்கண்டே பதினைநீ தாம் நூற்றண்டில் கில்லியிலிருந்த புலவனை மிர் என்பான் தன் காதலியை எண்ணிக் கவி பாடும்போது
உன்கண் கவின்சொல இந்துத்
தானத்து மானினைக் கூறவோ ! உன்றன் இதழ்நிறம் இயம்ப
பதக்சான் மணியினைக் கூறவோ !
எனக் கூறிஞன்.

Page 119
208 சிந்து, பஞ்சாப்
பேசியக் குடாவிலுள்ள தீவுகளிலும் ஒமுசிற்கண்மையிலும் இருந்த பாரிய செவ்விருப்பொட்சைட்டுப்படிவுகளைப் பண்டை நாட்களில் சுமர் மக்கள் பயன்படுத்தினர். இப்பொருளும் இந்தியாவில் வண் ணந்ட்தீட உதவியதுபோலும்.
தென்பால் கத்தியாவாரில் குறிப்பிடத்தக்க முறையில் ஓர் அரப் பாக் குடியிருப்பிருந்தது. இப்பகுதி உட்பதிவிற்கும் வேறு அணி வேலைகளுக்கும் வேண்டிய சங்குகளை நல்கியது; மணிகளுக்கு வேண்டிய அகேற்று, காணலியன், ஒனிக்சு, கல்டெனி முதலிய மணி வகைகள் நல்கியது. இன்னும் பாறைப்படிகமும் இங்கிருந்து வந் திருக்கலாம். இன்று மேற்பாலிந்தியக் கடற்கரையில் உலர்த்தி உப் பூட்டப்படும் அரியசு வகையைச் சார்ந்த மீன் மொகஞ்சோதா ரோவில் உண்ணப்பட்டிருக்க வேண்டுமென்று அதன் எச்சங்களி லிருந்து புலப்படுகிறது. இதுவும் இப்பகுதியிலிருந்து அல்லது கராச்சியிலிருந்து பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
அாப்பா உலோகவேலையாளர் பயன்படுத்திய செம்பும், இந்து நதிக்குக் கிழக்கிலிருந்து, இராசபுதனத்திலிருந்து வந்திருத்தல் கூடும். காரீயமும் ஒருவேளை இங்கிருந்து (அச்மீர்) வந்திருக் கலாம். இப்பகுதியிலிருந்தே மணிகளுக்குரிய சுதீற்றைற்று, சிலேற்று, யசுபர், குருதிக்கல், பச்சைக்கல் சிட்னி முதலிய கற்கள் வந்தன. தக்கணத்திலிருந்து அமதிசு வந்திருக்கலாம். நீலகிரிமலையி லிருந்து அமசனைற்று எனும் ஓர் அருங்கல் வந்திருக்கலாம். இது காசுமீரத்திலிருந்தும் வந்திருத்தல் கூடும். காசுமீரமும் இமாலய வனமும் தேவதாரு மரம் நல்கின. இவை ஆற்றின் வழி கடத்தப் பட்டனவாயிருக்கலாம். இவற்றுடன் மக்கள் மருந்தென உபயோ கிக்கப்பட்ட சிலாசத்தும் மான்கொம்பும் இங்கிருந்து வந்தன வாயிருக்கலாம். இன்னும் மலைகளுக்கப்பால், பமீர், கிழக்குத் தேக் கித்தான் முதலிய இடங்களிலிருந்தும், திபெத்து, பேமா இடங் களிலிருந்துமே யேடயிற்று, வந்திருக்கலாம்.
அரப்பா ஆட்சி எல்லைக்குள் நடந்த வணிகத்தைத் தவிர மற்றை இவ்வணிகம் முழுவதும் நடைபெறுவதற்குப் பெரிய ஒரு வணிக வகுப்பினர் இருந்திருத்தல் வேண்டும். இவ்வாறிருப்பின் இதற்கு உதவுமுகமாக வகுக்கப்பெற்ற வணிகவழிகளில் இயங்கும் சாத்துக் கள் இருந்திருக்க வேண்டும். தொலையமைந்த மாவட்டங்களில்

ஆகியவற்றின் நகர்கள் 209
தங்குமிடங்களும் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும். சிந்திலுள்ள அமிலனே இத்தகைய ஒரிடமாயிருக்க வேண்டுமென்றே ஏலவே கூறியுள்ளேன். பொருள்கள் காவுதலில் ஒட்டகங்கள் பெரும்பங் கெடுத்திருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கலாம். பொதி சுமக் கும் குதிரைகளும் இங்கு பயன்பட்டிருக்கலாம். சிறப்பாக மலைப்பிர தேசங்களில் இது நடைபெற்றிருத்தல் கூடும். சிந்திலுள்ள யுகரில் பொதிச்சேணத்தின் மண்மாதிரி யென்று சொல்லக்கூடிய ஒன்று காணப்பட்டது. இது அரப்பாப் பருவத்திற்குரியதாயிருக்கலாம். ஆயின் மலைப்பிரதேசத்தில் பொருள் காவுதற்கு பல விலங்குகளைப் பயன்படுத்தலாம். லடாக்கிலிருந்து இந்தியாவிற்கு கணவாய்கள் வழிவரும் நீள்மயிர் ஆடுகள் ஒவ்வொன்றும் முதுகுகள் மேல் பாறை உப்பு மூட்டை ஒன்றைக் காவிவருவதைக் காண்பவர் இதை இலகு வில் உணர்வர்.
ஆறுதலாகப் பாாங்காவுதற்கு அரப்பாப் பண்பாட்டில் மாட்டு வண்டி மிகப் பரந்த அளவில் பயன்பட்டது. பஞ்சாப், சிந்து ஆகிய இடங்களில் வரலாற்று முன்னர்த் தலங்களில் பொதுவாகக் காணப் படும் பழம்பொருள்களில் மண்ணியல் சிறுவண்டி மாதிரிகளும் இருந்தன. இங்கு உருவகிக்கப்பட்ட அந்த வகையே இன்றும் மொகஞ்சோதாரோவைச் சேர்ந்த கிராமங்களில் பெருவளவில் திண்ணிய சில்லுகளுடன், கொழுப்பிடப்படாமல் கிரிச் ரிெச் என்ற சத்தத்துடன் மந்ககதியில் செல்லுகின்றது ; உண்மையில் இவ்வகை யினவே டொக்றிப் புகைவண்டிநிலையத்திலிருந்து தலத்தை நீர் பார்க்கச் செல்கையில் அங்கு உம்மை அமுைர்தச் செல்கின்றன. இன்று நாம் அறியும்வகை அதன் சில்லடியிலும் உருமாருதது. ஏனெனில் அரப்பாவில் அண்மையில் நடந்த அகழாய்வுகள் நகர் மக்களின் முன்னைக்குடியிருப்புக் கட்டமொன்றில் ஏறக்குறைய 3 அடி 6 அங். இடைவெளியுடைய சுவடுகள் இருந்ததைப் புலப் படுத்தியுள்ளன. இவ்விடைவெளியே சிந்தில் இன்றுள்ள வண்டிகளி அலும் காணப்படுவது. இத்தகைய வழக்குகள் மிக நீண்டகாலத்திற்கு நிலைபெறும் தகையன. இக்காலத்து ஆங்கில வண்டி நியமக்குறுக் களவும் இத்தீவுகளில் கி. மு. மூன்றும் நூற்முண்டளவிலேயே உறு தியாக்கப்பட்டதாகும்.

Page 120
210 சிந்து, பஞ்சாப்
ஆற்றுவழிப்போக்குவரத்தும் பெருவளவில் இருந்திருக்கலாமெனி னும் படகுகள் இருந்ததற்குச் சான்றில்லை. இரண்டு உருவகிப்புக் களே இப்போதுள்ளன. ஒன்று மட்கலச்சில்லியில் பருவரைவில் கீறப்பட்டது. இதில் ஒருவர் உயர்முற்சாலையும் கடைசாலையும் untuit, மாத்தையும் சுருட்டியபாயையும் நீண்ட நெறிப்படுத்தும் தண்டு பிடித்த ஒரு நெறியாளனையும் காணலாம். மற்றையது ஓர் இலச் சினையில் கவனத்துடன் செதுக்கப்பட்ட ஒன்ருகும். இதில் மிக உயர மான முற்சாலும் கடைசாலுமுடைய ஒரு கலக்தைக் காணலாம். இது நாணல் தடிகளால் ஆக்கப்பட்டது போல் தோன்றியது. ஏனெனில் அவற்றை இணைத்த கட்டுக்கள் செவ்விதில் புலப்பட்டன. நடுக்கலம் ஒரு சதுர அறையாயிருந்தது; இதுவும் நாணலால் ஆக் கப்பட்டிருக்கலாம். இது ஒரு கூடாரமாயுமிருக்கலாம். நெறியாளன் பருவரைவாகவே கீறப்பட்டுளான். இவன் முற்சாலில் உயர்ந்த மேடையொன்றில் அமர்ந்திருந்தான். உருவகிப்புக்களைக் கொண்டு கணிக்கும்போது இத்தகைய கலங்கள் வரலாற்று முன்னர் மெசப் பொற்றேமியாவில் பெருவழக்காயிருந்தன எனலாம்.
வணிகத்தோடும் வணிகப்பொருள் பெயர்த்தலோடும் மட்டும் இயையுடைய தன்முயினும் அசப்பாப் பண்பாட்டில் காணப்பட்ட இன்னெரு வகைக்கலத்தைப் பற்றியும் கூறுதல் இங்கு பொருத்த மானது. அாப்பாவிலேயே காணப்பட்ட சிறிய ஓர் அழகிய வெண் கலமாதிரியிலிருந்தும், இதைச் செவ்விதில் ஒத்ததான சானுதா சோவில் காணப்பட்ட இன்னுெரு மாதிரியிலிருந்தும் இக்கலத்தைப் பற்றி நாம் அறிகிருேம். இவ்விரு மாதிரிகளும் 400 மைல்களுக்கப் பாலிருந்த இடங்களின் பண்பாட்டில் காணப்பட்ட ஒற்றுமையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டும் இன்னேர் உதாரணமாகும். இம்மாதிரிகள் இக்காலத்து இந்தியாவின் எக்காவை (ஒற்றைக் குதிரை வண்டி) மிக நிகர்த்த ஒரு மூடுகட்டு வடிவினையுடையனவா யிருந்தன ; இவை வண்டியின் கட்டுவேலைமீது நான்கு கோல்கள் நிறுத்தி அதன்மேல் துணித்திரை விரிக்கப்பட்டிருந்ததையும் ஒரு கூரையையும் ஒரு பொறிக்கதவையும் சேர்த்து உருவகித்தன. அரப்பா மாதிரியில் சாரதி ஏர்க்கால்களுக்கிடை நன்முக முன் தள்ளி, ஒருகை முழங்கையில் தங்க, மற்றையது கடிவாளத்தைப் பிடித்தவாறமைய இருந்தான். இரண்டு மாதிரிகளிலும் இழுவை

ஆகியவற்றின் நகர்கள் 2. '
விலங்குகள் காணுமற் போய்விட்டன. ஆயின் மொகஞ்சோதாரோவி லிருந்து செவ்விதில் இவற்றை ஒத்த மாதிரிகளிலிருந்து வந்தவை போல் தோன்றும் இரண்டு வெண்கல எருதுகள் பெறப்பட்டன. இவை சானுதாரோவிலூம் அரப்பாவிலும் காணுத சான்றினை நல்கு * வனவாயுள்ளன. வண்டியிலும் எருதுகளிலும் உள்ள சில்லுகளுக் குரிய போதிகைகள் கீழே உலோக வளையங்களாலமைந்திருந்தன. இவை ஒத்தவகையொன்றின் மாதிரிகளுக்குரியன என்பதில் சிறி அம் ஐயமின்று. r.
அாப்பா நாகரிகத்திற்கும் மற்றை அரசுகளுக்கு மிடையமைந்த வணிகம், உறவு முதலியவற்றைப் பற்றி இவ்வதிகாரத்தின் இறுதி. யில் ஆராய்வோம். வணிக உறவு பற்றித் தொல்பொருளியல் எங்கட் குப் பிழையான செய்திகளை அளிக்கலாமென்பதை நாம் ஒருபொழு அம் மறுக்க முடியாது. ஏனெனில் இதற்குரிய சான்றுகள் எப்பொ ழுதும் பெரும்பான்மையாக அழியாப் பொருள்களோடியைந்தவை. வரலாற்று முன்னர் இந்தியாவிலிருந்து எவ்வளவு பருத்தி ஏற்று செய்யப்பட்டது என்பது அறியப்படாத ஓர் விடயம். சுமர் (گLD பட்டினங்களில் இந்திய வணிகர் குடியேறியிருக்கலாம் எனினும் இந் தியாவிற்கு இவர்கள் என்ன கொண்டுவந்தார்கள் என்பதற்குரிய சான்று ஒன்றுமில்லை. விளங்கக்கூடிய எழுத்துப்பதிவு ஒன்றுமில் லாதவிடத்து மிளகு முதலிய சரக்குவகைகள் போன்று பொருள் கள் மூன்ரும் ஆயிரத்தாண்டளவிலேயே மேற்கு நாடுகளுடன் நடந்த வணிகத்தில் நிலையான பொருளாய் அமைந்தனவோ, அல் லது பிற்காலத்திருந்தவாறு வாசனைத்திரவியம்தான் ஒரு விற்ப னைப் பொருளாயமைந்ததோ நாம் அறியோம். கபாலவகைகள் சந் தேகமான உளவு தந்தாலன்றி அடிமை வியாபாரமும் பெருவளவில் தொல்பொருளியல் வழியால் அளந்தறிய முடியாத ஒருவிடய மாகும். ஆயின் மொகஞ்சோதாரோவிலிருந்து வந்த நடனமாதின் வெண்கலவுரு தென்பலுக்கித்தானின் குள்ளிப்பண்பாட்டிற்குரிய மயிரணிவகையையும் அலங்காரங்களையும் மிக நெருங்கிய முறையில் உருவகிப்பதால் அவ்வொப்பு ஒன்றைத் தெரிப்பதாயுள்ளது ; அதாவது, தென்பாலமைந்த சாத்துவழி வந்த வணிகர், அரப்பா அல்லது மொகஞ்சோதாசோவின் உழைப்பால் இளைத்த வணிகரின்

Page 121
22 சிந்து, பஞ்சாப்
சிந்தனையை அருட்டக்கூடிய வியப்புறும் நடனமும் இயற்கையழகு முடைய மகளிரைத் தம்முடன் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமென் பதே. s
இனி வணிகரையும், வணிகத்தையும் விட்டு எழுத்து, கணிதம் என்பவற்றை ஆய்தல் பொருத்தமானதே. ஸ்பீசர் இவ்வுறவைக் கவர்ச்சிகரமான நையாண்டிமுறையில் எடுத்துக் கூறியுள்ளார். “எழுதுதல் குழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றன்று. ஆயின் தனி யுடைமை பற்றிய ஆழ்ந்த உணர்ச்சியால் எழுந்த ஒரு தற்செய லான விளைவே '. எனவே, இன்றும் நிலைபெறும் அரப்பா நாகரிகத் திற்குரிய பொறிப்புக்களுள் பெரும்பாலான முத்திரை இலச்சினை களிற் பொறிக்கப்பெற்றனவேயாம்; இவற்றில் விருங்குருக்கள் செதுக்கப்பட்டன. சிலவேளைகளில் தேவர், மனிதர் உருக்கள் செதுக்கப்பட்டன. இவை தனிப்பட்டோர் உடைமைகளைப் பிரித் தறியப்பட்டவையாயிருக்கலாம் (உரு. 22). இலச்சினைப் பொறிப் புக்களைவிட மட்கலங்களில், சூளை வைக்கப்பட்ட பின் கீறப்பெற்ற பொறிப்புக்கள் அல்லது சிறு முத்திரைக் குறியீடுகள் இருந்தன. இவை சிற்றளவினவே. தனிப்பட்ட முறையில் பொறிப்பமைந்த ஒரு தொகுதி சிறு செப்புப்பட்டயங்களாகும். இவற்றில் பொறிப் புக்களும் விலங்குகளின் வெளிவரைகளும் இருந்தன.
இலச்சினைகளின் வகை, குறிப்பு முதலியவற்றை இப்பொழுது கவனியாது விடுத்து அாப்பா எழுத்து வடிவைப்பற்றிய சில செவ் விய உண்மைகளை ஆராய்வோம். மீண்டும் இவ்வடிவு வேறுவடிவில் எழுதப்பட்டவில்லையென்பதையும் வாசிக்கப்படவில்லையென்பதையும் நாம் இங்கு கூறுதல் வேண்டும். இவ்வடிவு குறிக்கும் மொழி பற்றி நாம் ஒன்றும் அறியோம். இவ்வெழுத்து வடிவு நாமறிந்த மேற் காசிய பண்டை வடிவொன்றுடனுதல் இயைபு கொண்டதாகத் தெரியவில்லை. எந்தப் பிறவடிவுடனுகுதல் இயைபுகொண்டதாகவும் தெரியவில்லை. எனினும் இவ்வுண்மை பொறுப்பற்ற கொள்கை யாளரை வேண்டியவாறு விளக்கம் செய்யவிடாது தடுக்கவில்லை. ஒருவர் அன்றிப் பலர் அரப்பாப் பொறிப்புக்களை, ஒருவித அதிகார ஆதாரமுமின்றி மூடத்தனமான துணிவுடன் வாசித்து ' ஒன்றிற்கு மேற்பட்ட விளக்கங்கள் அளித்துள்ளார்கள். ஆயின் ஒன்றுமட்டும்
சொல்லலாம் ; இவ்வெழுத்து வடிவைப் பசிபிக்கிலுள்ள ஈஸ்ார்

ஆகியவற்றின் நகர்கள் 213
தீவின் மக்களுக்குரிய பத்தொன்பதாம் நூற்றண்டின் வடிவத்தோடு ஒப்பிட முனைந்தது ஒன்றைத் தவிர்ந்த மற்றை முறைகளில், மினேன் வரிவடிவை விளக்க முயன்றர்களிலும் குறைந்த அளவி லேயே அறிவற்றவர் முயற்சிகளுக்கு இது ஆளாகியுள்ளது. பயிஸ் ரோஸ் தட்டுகளை பஸ்குமொழிக்குரிய அறுசீரடிகளாக எழுத்து மாற்றிய விந்தையை நாம் அறிவோம். அரப்பாவில் இது நிகழாது போனது ஒருவேளை இங்கு பொறிப்புக்களின் எண்ணிக்கை குறை வாயிருந்ததனுலாயிருக்கலாம்.
அரப்பாவின் வரிவடிவத்தில் முழுவதுமாக 400 வடிவங்கள் பயன் பட்டனபோல் தோன்றுகிறது. இவற்றுள் உருமாறுவனவற்றை விட் டால் இவற்றை 250 வடிவங்களுக்குள் அமைத்துவிடலாம். இதிலி ருந்து புலப்படுவது என்னவென்முல் வரிவடிவத்தின் பிந்திய வளர்ச்சி நிலையிலேயே இதைக் காண்கிருேம் என்பதாகும். ஏனெ னில் ஒப்புமைகளை அறிய மெசப்பொற்றேமியாவை நாம் நோக்கி ஞல், முன்னைச் சுமர்க்குலமுறை வரிவடிவில் ஏறக்குறைய 900 எழுத்துக்களையும் உறுக் பருவத்தில் இது ஏறக்குறைய 2000 ஆக இருத்தலையும் காண்கிமுேம், மொழியும் எழுத்து முறையும் வளர வடிவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பாங்கு ஒன்று இயல் பாக எழுவதுண்டு. அரப்பா வரிவடிவில் இத்தகைய வளர்ச்சிக்கரிய சான்றும் அாப்பா நாகரிகத்தை நாம் அதன் இறுதிக்கட்டங்களி லேயே அறிவோம் என்று இந்நூலில் நாம் பல்காலும் கூறியதுடன் இணங்குவதாயுள்ளது. இன்னும் அாப்பா நாகரிகம் விருத்தியின்றி யிருந்தது என்பதற்கு இங்குள பெருநகர்களில் மக்கள் வாம்ந்த நீண்ட வரலாற்றுக்காலம் (trழுவதிலும் வரிவடிவில் ஒருவகை விருத் தியுமில்லாதிருந்ததென்பதே ஒரு வியக்ககு சான்முகும்.
இவ்வரிவடிவு இயன்முறையில் சிக்கிாவடிவானது. உருவகிக்கப் பட்ட பொருள்களை நாம் உணாமுடியவில்லையாயினும் இது உண் மையே. இது திட்டமானது ; கிட்பமானது. இது இதன் நியமத்தில் எகித்தின் மறைவாைவுகளைச் செவ்விதில் ஒத்ததாயிருந்தது. எசிக் தில் மறையோர் கையிலும் மக்கள் கையிலும் ஏற்பட்ட எ(புத்து முறையின் விருத்தியையோ மெசப்பொற்றேமியாவின் ஆப்பு மறை வடிவில் எழுந்த விாத்கியையோ வரலாற்று (மன்னர் இங்கியாவில் நாம் காணவில்லை. இவ்வெழுத்துக்கள் எழுதப்பெற்ற நிலையிலாப்

Page 122
214 சிந்து, பஞ்சாப்
பத்திரங்கள் கிடைக்கப்பெருமையால் இது ஆயது என்று சிலர் கருதலாம். ஏனெனில் எகித்தில் இது பப்பிரசு மடலில் எழுதப்பெற் றது. சுமரில் மண் தட்டில் எழுதப்பெற்றது; ஆயினும் மட்கடம் போன்றவற்றில் கீறப்பெற்ற பருவரைவான பொறிப்புக்களில் உள்ள இவ்வெழுத்துக்களின் வடிவங்கள் இலச்சினைப் பொறிப்புக்களில் மிக்க கவனத்துடன் வெட்டப்பெற்ற நியமக்கோல வடிவங்களே ஒத்திருந்தன.
இருபதுக்கு மேலான குறியீடு கொண்ட ஒரு பொறிப்பாயினும் கிடைக்கப்பெறவில்லை. ஆயின் மொழி வலமிருந்து இடமாக வாசிக் கப்பட்டது என்பதை நாம் அறியலாம். ஆயின் பொறிப்பில் இரண் டாம் வரியொன்றுவரின், பண்டைக் கிரேக்க நாட்டிலிருந்த உழு Fira) முறையில் அஆதி எழுதப்பெற்றது. அதாவது ஒரு வரி வல. மிருந்து இடம் செல்ல மற்றையது இடமிருந்து வலம் செல்லும். சில குறிகள் பொறிப்புக்களின் தொடக்கத்திலோ இறுதியிலோ சாதா ரணமாக வருவதை நாம் காணலாம். சில இலக்கங்களைச் சுட்டுவன. வாயிருக்கலாம். அழுத்தத்தைக் குறிக்கவும் வேறுபாட்டினைக் குறிக் கவும் சில வடிவங்கள் பயன்பட்டிருக்கலாம். இக்குறிகள் நெடுங் கணக்கு முறையிலமைந்தனவாயில்லே. ஒப்புமையால், அவை பதங் கள், கருத்துருவங்களைக் குறிக்கலாம், அல்லது சுட்டிகளாக, அமைந்து சொல்குறிக்கும் வகைப்பொருள்களைக் குறிக்கலாம். -
இலச்சினைகளில் உள்ள பொறிப்புக்கள் தனிப்பெயர்களையும் ஒரு வேளை பட்டப்பெயர்களையும் சுட்டுவனவாயிருக்கலாம் என்றும் நாம் நியாயமுறையில் ஊகிக்கலாம். இலச்சினையில் செதுக்கப்பட்ட உபா. யத்திற்கும் தொல்கதைகளிற் காணப்படுவனவற்றிற்கும் நேர்த் தொடர்பிருந்தது என்பதற்குரிய சான்று ஓரிடமும் இருக்கவில்லை; ஆயினும் சிறு செப்புப் பட்டயங்களில் பொதுவாக உருவகிக்கப் பட்ட விலங்குகளுக்கும் அவற்முேடியைந்த குறித்தொகுதிகளுக்கும் ஒற்றுமை இருக்கக் காணப்பட்டது. அரப்பா நாகரிகத்தில் பொது வான பொறிப்புக்களோ நினைவகப் பொறிப்புக்களோ இருக்கவில்லை. வணிகப் பத்திரம், தனியார் கடிதம், வரலாற்றுப் பதிவு, இலக்கியப் பத்திரம் என்று கருதக்கூடிய ஒன்றும் இருக்கவில்லை. இருமொழிப் பொறிப்புக்கள் காணப்பட்டு வரிவடிவு அவற்றின் துணைகொண்டு வாசித்தறியப்படின் மக்களின் வாழ்வு சிந்தனை பற்றி நன்முறையில்

ஆகியவற்றின் நகர்கள் 215
நாம் பல விடயங்கள் அறியலாமென்பது ஐயத்திற்கிடமானதே. புதிய இலக்கியம் ஏதேனும் இனி அறியப்ப்டும் என்பதும் இயலாத தொன்றே.
அசப்பா வரிவடிவு இப்பொழுதுள்ள முறையில் தனித்தன்மை வாய்ந்தது. புதியது புகுந்ததாய் பின்வழித்தோன்றல்கள் அற்றதா யுள்ளது. மெசப்பொற்றேமியாவின் பண்டை வரிவடிவுகளோடு அஆதி கொண்டுள்ள தொடர்பும் எகித்திய எழுத்து முறையோடு ஒப்புடை யதாயுள்ளது. எகித்திய முறையும் சுமரில் அறியப்பட்ட யாவற்றி னின்றும் புறம்பானது. ஒருவேளை, பேசும் மொழியொன்றை நிலை { ff (2ðf" குறியிடுகள் கொண்டு உருவகிக்கலாம் என்னும் கருத்தளவில் -9|-Չմ சுமரினல் ஊக்குப்பெற்றிருக்கலாம். எழுத்துமுறையைக் கண்டு பிடித்தது என்ற அளவில் மெசப்பொற்றேமியாவே முதலிடம் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது. அங்கிருந்தே எழுத்து வரி வடிவை எகித்தைப் போலவே இந்தியாவும் பெற்றது என்பதை இது காட்டுகின்றது. ஆயின் எகித்தைப் போலவே இங்கும் வரி வடிவு ஓர் சிறப்பியல்பான உள்ளூர் வடிவினை ஆதியிலேயே எடுத் துக்கொண்டது. அரப்பா ஆட்சியில் வழங்கிய வரிவடிவின் போலவே பேசப்பட்டிருக்கக்கூடிய மொழியின் வகையும் விவரம் அறியப்படாத ஒன்முக விளங்கியது. ஆயின் உறுதியாக இந்தோ ஐரோப்பிய மொழிகளுள் அது ஒன்றன்.று என்பதை உறுதியாகக் கூறலாம். பலுக்கித்தானிலுள்ள பருகி மக்களிடை தனிக்தமைந்து நிலைநின்ற ஒரு திராவிட வகை மொழியொன்று அர்ப்பாமொ ழியும் இவ்வகையினதாயிருக்கலாம் என்னும் ஒரு எடுகோளை உண்டாக்கி விட்டது. ஆயினும் இந்தியாவிலுள்ள ஆதி ஒசுத்திரலொயிட் மக்க ளால் இன்று பெருவழக்கில் பேசப்படும் முண்டாமொழியும் இவ் வுரிமையைக் கொண்டாடுகின்றது. திராவிடமொழி, சுமர்மொழி போன்ற ஓர் ஒட்டியல்மொழியாகக் கொள்ளப்படலாம் என்னும் உண்மை திராவிடமொழிக்காதாரமாகக் கொண்டு வரப்படுகிறது. ஆயின் பொறிப்புக்களின் மறை நீக்கப்படும்வரை இவ்வாதம் வெறும் கல்வி முறைவாத அளவிலேயே நிற்கும்.
ஒரு சீர்முறைமைக்குரிய பல நிறைவரிசைகள் அரப்பா நாகரிகத் திற்குரிய இருதலை நகர்களிலும், சிந்திலுள்ள சானுதாரோவிலும் மற்றைச் சிறுதலங்களிலும், தென்பலுக்கித்தானின் மெகியிலும்
11-CP 3040 (6814)

Page 123
26 சிந்து பஞ்சாப்
காணப்பட்டன. மொக்கிலரின் விவரங்களிலிருந்து மக்கிசானிலுள்ள சுற்ககன்டோரிலும்கூடக் காணப்பட்டன எனலாம். வழக்கமாக, இந்நிறைகள், பட்டைபொறிக்கப்பட்ட கவனமான முறையில் வெட் டப்பெற்ற, சேட்டுக் கனதிண்மங்களாகும். பண்டை உலகில் ஓரிடத் அம் அறியப்படாத தனித்தன்மையான வகையில் விசித்திரமான முறையில் மிகத் திருத்தமாக இவை தரப்படுத்தப்பட்டிருந்தன. மற்றை இடங்களிலும் பார்க்க இந்நிறைமுறைமை மிகக் கட்டுப் பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது போலவும் தோன்றுகிறது. இந்நிறைகள் 1, 2, 8/8, 4, 8, 16, 32, 64, 160, 200, 320, 640, எனும் ஒரு விதத்தில் செல்வது அவதானிக்கப்பட்டது. இது 16 விதத்தை அலகாகக் கொண்ட ஒரு முறைமை போலுளது. இது 13.64 கிரா மிற்குச் சமமானது. இந்நிறை வரிசை கீழ்ப்பாகத்தில் துவிதமாக வும் மேல்வரிசையில் பத்துக்களிலும், மூன்ருவது பின்னத்திலு மாக அமைந்தது. 16 ஐ ஒரு பெருக்கலாக இங்கு கொண்டது விசித்திசமானதும் சிந்தனைக்குரியதுமாகும். இவ்வெண் ஆதி இந் திய எண்ணிட்டு முறையில் மரபுவழிவந்த ஒரு முக்கியம் கொண் டது. இப்பொழுதுள்ள நாணயமுறையிலும் ஒரு ரூபாயில் 16 அணு என்று நிலைநிற்பதாகும்.
சிறிய நிறைகள் பொற்கொல்லராலும் மணிசெய்வோராலும் உப யோகிக்கப்பட்டன. உண்மையில், பலநிறைகள் சானுதாரோவில் மணிசெய்வோர் கடையொன்றில் காணப்பட்டன. நிறையைச் சுட்டு வதற்கு இவற்றில் யாதாயினும் ஒரு குறிப்பும் இடப்படவில்லை யாதலின் எழுத்துக்கலையும் எழுத்துக்கணிதமும் தெரியா ஒரு வணிக மக்களிடையே இது வழக்கிலிருந்தது என்று கூறப்பட்டுள் ளது. ஆயின் இது அசம்பாவிதமானதுபோல் தோன்றுகிறது. அரப் பாக் குடியிருப்புக்குரிய பகுதி முழுவதற்கும் அப்பண்பாட்டின் அறியப்பட்ட கால எல்லேயின் ஆதியோடந்தம் வரைக்கும் இந் நிறைமை முறைமை போற்றப்பட்டவாருே விதிக்கப்பட்டவாருே மிகக் குறிப்பிடத்தக்கதாம்.
ஒத்த முறையில் செவ்விய அளவை முறைமைகளுக்குரியனவான சான்றுப் பகுதிகளும் கிடைக்கப்பெற்றுள. ஓடொன்றில் செதுக்கப் பெற்ற ஒடிந்த அளவைத் திட்டம் மொகஞ்சோதாரோவிலிருந்து கிடைக்கப்பெற்றது. இதில் திருத்தமாகப் பிரிக்கப்பெற்ற ஒன்பது

ஆகியவற்றின் நகர்கள் 27
இடைவெளிகள் இருந்தன. இது 1.32 அங்குலத்தாலாய ஒரு தசம அளவைச் சுட்டியது. இத்திட்டம் ஒரு 13.2 அங்குலத் தாலாய ஓர் அடிக்கு உயர்வதாயிருக்கலாம். அாப்பாவில் வெண்கலக் கோலொன்று 0.3676 அங்குல அலகுகளில் அளவிடப்பட்டிருந்தது காணப்பட்டது. இது 20.62 அங்குலத்தாலாய ஒரு முழத்தின் அளவு அடிப்படையிலமைந்திருக்கலாம். இம்முழ அளவு பண்டை உலகில் பெருவழக்கிலிருந்தது. இவ்விரு அளவுத்திட்டங்களிலிருந்து பெற்ற முடிபுகளும், அரப்பாவிலும் மொகஞ்சோதாரோவிலுமுள்ள 150 கட்டிடச்சிற்ப விவரங்களை அளந்து முறைப்படப் பரிசோதிக் கப்பட்டன. இதிலிருந்து 20.3 அங்குலத்திற்கும் 20.8 அங்குலத்திற் கும் இடைப்பட்ட ஒரு முழு அளவலகும், 130 அங்குலத்திற்கும் 13.2 அங்குலத்திற்கும் இடைப்பட்ட ஓர் அடியலகும் ஒரே காலக் தில் பயன்பட்டன என்பது நிறுவப்பட்டது. பரிமாணங்கள் பெரும் பாலும் இந்நியம அலகுகள் ஒன்றின் எளிய மடங்குகளாக அமைந் தன. உதாரணமாக மொகஞ்சோதாரோவிலிருந்து பெருநீராடுதுறை 13.1 அங்குலத்தாலாய அடியில் 36 அலகும் 21 அலகும் கொண்ட பரிமாணமுடையதாயிருந்தது. அரப்பாவிலிருந்த தொழிலாளர் வாழ்பகுதியிலுள்ள மாவிடிப்பதற்குரிய வட்டத்தொழின் மேடை யில் விட்டம் 13.2 அங்குலத்தாலாய 10 அடியுடையதாயிருந்தது.
மிகப் பரந்த முறையில் பண்டை அளவையியலை ஆராய்ந்த சில ருள் ஒருவரான காலஞ்சென்ற சேர். பிளின்டேஸ் பெற்றி என் பார் 13.2 அங்குல அடி, மேற்காசியா, வரலாற்று முன்னர் ஐரோப்பா, உரோமானிய ஐரோப்பா ஆகிய இடங்களில் மிகப் பரந்த வழக்கிலிருந்தது என்றும் இது ஆங்கில நாட்டு நடுக்காலக் கட்டிடங்களில் கட்டுநர் அடியாக நிலைநின்ற தென்றும் கூறியுள் ளார். 20.62 அங்குல அளவான ‘அாசமுழம்' ஒத்த அளவில் பரந் திருந்தது. இது சாண், விரல் என உட்பிரிவு கொண்டிருந்தது. அசப்பா அளவு 0.3 சதவிகிதக்திற்குச் செவ்வையான அளவில் அமைந்த ஓர் அசைவிால் அளவைக் கொண்டிருந்தது. திருத்தமாக அமைக்கப்பெற்ற அளவுத் திட்டங்களில் செயன்முறைக் கேத்திர கணிதம் பற்றியும் நில அளவை பற்றியும் செவ்விய அறிவிருந்திருத் தல் வேண்டும். அரப்பாவின் தெரு முறைமை, மனத்திட்டங்கள்

Page 124
EIS
ந்து, பஞ்சாப்
ஆகியவற்றின் ಘಿ',7ಾ।r ஒழுங்கனமீப்பில் இவ்வறிவு கட்டாய
ாக இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவு.
பொறிப்புக்கள் வெட் ப்பெற்ற பொருள்களேப் பற்றி ஆய்ந்த பொழுது சிறப்பட்ட செதுக்கள் இலச்சினேகள், பிறவழிகனாலும் īti அலகானத்திற்குரியவா கின்றன 'உகு $2. ஆவற்றில் ஃபைப் பட்ட காட்சிகனில் பக்க முகவரைவில் காட்டப்பெற்ற விலங்குகள் இருந்தன ; பல்காலும் இவை போற்றத்தக்க உறுதியான கைவின்ன படையனவாயிருக்கும். சிலவிலங்குகள் ஒற்றைக் கொம்பன்கள், 6ñ?„Tari r. Y Chimera) வகைகள் போன்றவை, புராணப்படைப்புக் சுனாம். ஆயின் பிற விலங்குகள் ஆட்விேலங்குகளாகவோ இஷ் LILL TIGA FT MIT , श्रृं। y a'r í Tial, *a'ayi yaşar yait . ಸ್ಟಿ' ப்பேற்றவையா யிருந்தன. எனக் கறலாம். স্তে","।","। Yn 11, 3 Figgy 1 + -->/*****. Y dy wyth கொண்ட எருதுகள் இன்விலங்குகனின் பிற்றுருவங்கள் மிகப் போன் நத்தக்களைப்"பிருந்தன. சில இலச்சிஃ:ள் புராணக் காட்பிரேம்
காட்டின. இவை ஆாப்ட்ர சமயச் சிந்தஃபில் இருந்திருக்கக்கூடிய
போக்குக்கள் பற்றிய அமிசங்களே நமக்குக் காட்டுகின்றன. பின்னர் ஆாப்பாச் சமயத்தைப் பற்றி நாம் ஆயும்போது இப்பொருள்கள் பற்ஜிக் Kıy:: Ii. ity it :ல்ே நிறு ჭრl:n: li இக்கரன் ராப்படும் Jጋኗ'U வகைப் பொருண்கள் ': ಜಸ್ಜಿ; ፵(U விக்கிளிருந்தும் பெற்று டெ'ருள் iளில், குறிப்பிடத்தக்க முறையின் படை விைஃ பீட்டக் அடடியன மிகச் சிற்றளவின; ஆப்பொருள்களில் இன்னிச்சினேகளும் ஆடங்கும். ஏனெனில் இவை மிகக் கிழான பட்டங்களுக்கே உரிய
வாய் விணங்கின.
ஆயின் இன்விட்ச்சினேகளின் முக்கிய ஆசிசம் அன்ை மூத்திரை இலச்சினேகள் என்றும் வகுப்பிற்குசின் 11 பிருந்தன என்பதே. இன்னினச்ன்ேகள் இக்காந்து இர்விஃகள் அல்லது இரஞ்
சஃது போரேங்கள்' ir jų ir ir i'r ys6) e T. y 3, ால், உப:ே கத்திரி கிருக்க மென்திரனியத்தின்மேல் அழுத்தப்பட்டன. ஆஃகன்லா மீனும் அரப்பா இல்ச்சினேகள் பெரும்பாலும் சதுTாயிருந்தன. I 71 í 3 e.s.8:Fri. குறிப்பிடுவதற்கு இச்சிஃ ஓர் உபாயமாம். மிகப் பண்டைய வழக்கிலுள்ளதுமாம். இது பண்டைக் கிழக்கில் மிகப்
 
 
 

ஆகியவறறின் நகர்கள் 2|
பரந்த வழக்கிலிருந்தது. ஆயின் ஓரீக் கோவிப்பட்டை ஒன்றை
அல்லது நீள்சதுரக் காட்சியொன்றை நல்குமாஅ இலச் கிளேத் திர
படம் 2: முதல் :னகளின் பதின் மோதசோதாரோ.
வியக்கில் உருட்டப்பம்ே உருளே இEச்சினே போன்ற ஒரு தனிப்
பட்ட அமிசம் அறவே மர்ள் கண்டுபிடிப்பாகும், ன் "லாற்று முன்

Page 125
220 சிந்து, பஞ்சாப்
னர்க் காலத்தில் மேற்காசியாவிற்குரிய எந்தப் பண்டைப் பண்பாட் டிலேனும் அது காணப்படின் அது சுமர் ஊக்கினல் ஆனதென்று நாம் திடமாகக் கூறலாம். வரலாற்று முன்னர் எகித்திலிருந்த அரிய உருளை இலச்சினைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். உருளை இலச்சினைகள் எவ்வாறு எகித்தில் அருகியவையாயிருந்தனவோ அவ்வாறே அரப்பா நாகரிகத்திலும் அருகியவையாயிருந்தன. இது இந்தியப்பண்பாடு சுமரிலிருந்து மறைமுகமான சிற்றளவு ஊக்கைப் பெற்றது ; வேறு வழியில் அதன் சுதந்திர நிலைமை ஊக்கப்பட வில்லையென்பதைக் காட்டுவதாயுள்ளது. முத்திரை இலச்சினைகள் இங்குதோன்றுவதற்குச் சுமரே ஆதாரம் என்று சொல்ல முடியாது.
சிரியாவின் அலவ் (Halat) காலம் அளவு முன்னைக் காலத்தி லேயே முத்திரை இலச்சினைகள், யாதோ ஒருவடிவில், அறியப்பட் டவையாயிருந்தன. இவை அலங்காரக் கோலங்கள் கொண்டிருந் தன ; இயற்கைவடிவக் கோலங்கள் கொண்டிருக்கவில்லை. இன்னும் தென்பேசியாவில் தலைபகுன் A கட்டத்தில் ஒத்த வகையினவான பொத்தான் இலச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றுடன் களி மண் இலச்சினைப் பதிவுகள் காணப்பட்டன. இதிலிருந்து இவ்விலச் சினைகள் இவ்வலுவல் பொருட்டே பயன்பட்டன என்பது புலப்படு கிறது. இவை இன்னும் சியல்க் II, கியன் V, வடக்கே இசார் 1 இலும் காணப்பட்டன. பொதுவாக இவ்விலச்சினைகள் யாவும் கேத் கிரகணித வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆயின் கியனில் பரும்படியாகச் செதுக்கப்பட்ட ஒரு தேளின் உருவம் இருந்தது. அசப்பாப் பண்பாட்டின் முத்திரை இலச்சினைகள் இருந்தன என் பது, அதன் ஆதி முன்னுேடிவகைகள் பேசியாவில் இருந்திருக்க வேண்டுமென்பதைச் சுட்டுவதாயுள்ளது. ஆயின் பலுக்கித்தான் பண்பாடு ஒன்றிலேனும் முத்திரை இலச்சினை காணப்படாதது வியப்பிற்குரியது. ஏலவே அதிகாரம் TV இற் குறிப்பிடப்பட்ட வட பலுக்கித்தானில் காணப்பட்ட சோடி இலச்சினைகள் அரப்பாவகை யின. இவை இந்துநதிச் சமவெளிகளிலிருந்து பெறப்பட்டனவா யிருக்கலாம். அரப்பாவின் வண்ண மட்கலத்திற்கும் வடபலுக்கித் தானத்திற்கும் இடையில் சில ஒப்புமைகள் இருப்பினும் இலச்சினை கள் பற்றிய வகையில் உள்ள வேறுபாடு கவர்ச்சிகரமானது. இது பலுக்கித்தானில் அறியப்பட்ட வேளாண் மக்கள் பண்பாடு யாதோ

ஆகியவற்றின் நகர்கள் 22
ஒன்றிலிருந்து ஓரளவு நேர்முகமாக அாப்பா நாகரிகம் வளர்ந்தது என்னும் கொள்கையை மறுப்பதாக உள்ளது. அாப்பா இலச்சினை கள் செதுக்கியபின் குடாக்கப்பட்டன; இது அவை ஆக்கப்பெற்ற சுதீற்றைற்று மேற்பரப்பு ஒளிர்விடும் வெண்முகம் பெறுவதற்காகும். இவ்வினைநுண்மை நல்லிலிருந்து பெற்ற இலச்சினையிலும் காணப் படும். ஆயின் இங்கு செதுக்கல் வினை நுண்மை அரப்பாக்கலைஞ னுடையதைப் போன்றிருக்கவில்லை. ஆயின் உள்ளூர்க் கோலங்களுள் காணப்படுவதை ஒத்திருந்தது.
இலச்சினைகளில் காணப்படும் செதுக்கல் வினையை விட அாப் பாத் தலங்களில் சுற்றிவர வியத்தகு முறையிலமைந்த சிற்பங்கள் காணப்பட்டன. இப்பொருள்கள் சிலவற்றில் எதிர்பாராத முறை யில் காணப்படும் இயற்பாடு, இவை மூன்றும் ஆயிரத்தாண்டின் வேலைப்பாடோ என்பதில் ஐயப்பாட்டினை உண்டாக்கியுள்ளது. அாப் பாவிலிருந்து பெற்ற மணற்கல்லாலான தலையில்லுடல் யாவற்றுள் ளும் புகழ்பெற்ற ஒன்ரும். இதில் மனிதவுருவம் தேறியவினை நுண்மையுடன் படைக்கப்பட்டிருந்தது. இன்னும் பிற்காலத்து இந் தியச் சிற்பங்களுடன் ஒத்தவையாய் அமைந்த, நுண்ணிய, ஆயின் புலப்படும், பாணி ஒப்புமைகளும் இதிலிருந்தன. இவற்றிலிருந்து இது மிகத் தொன்மையானதோ என்பதில் ஐயமேற்பட்டுள்ளது. இன்னும் வயிற்றில் உள்ள பாரித்த வரைகள் கையாளப்பட்ட விதம் குசன் காலத்தில் சில வேலைப்பாடுகளுடன் வியத்தகு முறையில் ஒப்புமை கொண்டதாயிருந்தது.
இந்நகரில் காணப்பட்ட நரைச் சுண்ணும்புக்கல்லிலான இரண் டாவதொரு சிற்பத்தையும் நாம் சிந்தைக்கெடுத்தல் வேண்டும். இது ஒரு நடன உருவம் ; இதில் தலை புறம்பாக உலோகமுனைகள் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. கைகளும் கால்களும் பல துண் டங்களால் ஆக்கப்பெற்று ஒத்தவகையில் இணைக்கப்பெற்றிருந்தன. முலைக்காம்புகள் யாதோ ஒருவகைச் சாந்திலைாய உட்பொதி கொண்டிருந்தன. மணற் கல்லாலாய தலையிலா உடலும், உட்பொதி கொண்டிருந்த முலைக்காம்புகள் கொண்டதாயிருந்தது. அன்றியும் தோள் தட்டுக்களும் புறம்பாகச் சேர்க்கப்பட்ட ஒரு தலையுங் கொண்டிருந்தது. இவ்விரு உருக்களிலும் சிற்ப வினை நுண்மை வேறுபட்டிருந்தது. தலையிலா உடலில் ஒப்புரவாகச் சூழ்ந்திருந்த

Page 126
222 சிந்து, பஞ்சாப்
மேல்வரைகளில் இல்லாத மிதப்புகள் தாழ்வுகள் நடன உருவத்தில் இருந்தன. இவை இரண்டும் ஒரு கைவினைஞனல் ஆக்கப்பெற்றன வாயிருக்கலாம்.
தொல்பொருளியன் முறையில் இவை காணப்பட்ட குழல் திருத்தி கரமாக அமையவில்லை. ஏனெனில் படையமைவியன் முறைப்பதிவு எமக்குத் திட்பமான சான்றினை நல்குவதாயில்லை. ஆயின் நாம் ஒப்பிடக்கூடிய சான்றுகளுக்கு வேறு தலங்களை நோக்குவோம். உறுதி கொள்ளக்கூடிய தொல்பொருளியல் சூழலில் மொகஞ்சோ தாரோவிலிருந்து பல கற்சிற்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றுள் அணிகொள் ஆடை போர்த்த தாடி மனிதனின் உருவம் தகுதியான முறையில் புகழ் வாய்ந்த ஒன்ருகும். அரப்பாமுண்டத்தில் உள்ள இயற்பாட்டிலும் கூடிய நியமமும் மறைவியல்புமுடைய ஒரு கலை மரபை நாங்கள் இங்கு காண்கிருேம். ஆயின் இங்கும் உட்பொதி வும் உலோகமும் பயன்பட்டவாற்றை நாம் காணலாம். ஆடையில் மூவிலைகளையும் வெறும் வலக்கையில் தட்டையும் நாம் காணலாம். கண்கள், ஒருவேளை காதுகளும், உட்பொதிவுகள் கொண்டிருந்திருக் கலாம். உலோகத்தாலாய கழுத்துப்பட்டை இடுவதற்காக காதுக ளின் பிற்பக்கமாக மயிர்களின் கீழ் குழிகள் இடப்பட்டதையும் நாம் காணலாம். இவ்வுலோகம் பொன்னுயிருக்கலாம். இத்தலத்தி லிருந்து பெற்ற சுதீற்றைற்முலான, அழகிய சிறு எருதைக் காட் டும் இன்னெரு சிறிய சிற்பம், உலோகக் காதுகள், கொம்புகள், கண் களுக்குக் குழிகள் கொண்டிருந்தது. இத்தகையது இஃதொன்றே இங்கு காணப்பட்டது.
சிற்பங்களை உட்பொதிவும் உலோகமும் கொண்டு அணிசெய் வழக்கு வரலாற்று முன்னர் மேற்காசியாவில் பெருவழக்கிலிருந் தது. ஆயின் இந்தியாவின் ஆகி வரலாற்றுக்குரிய சிற்பத்திற்கியல் பாயுள்ளதாகத் தெரியவில்லை. எனவ்ே இவ்வீர் அாப்பாச் சிற்பங் களேயும் ஒரு கி.மு. மூன்றும் ஆயிரத்தாண்டிற்குரிய வரலாற்று முன்னர் இந்தியக்கலைக்குரியன என அதிகாரபூர்வமான முறையில் ஒருவர் எற்றுக்கொள்ளலாம். இம்முடிபிற்கு இன்னும் ஆதாரமான சான்றுளது. மொகஞ்சேர்தாசேர்விலிருந்தும் நடனமாதொருத்தி யின் சிறந்த ஒரு வெண்கலவுருவம் கிடைத்துள்ளது. இதைப்பற்றி ஏலவே குறித்துள்ளோம். இங்கு உடலும் அங்கங்களும் உணர் நலன்

ஆகியவற்றின் நகர்கள் 223
மிக்க முறையில் உருப்பெற்றுள்ளன. இது அரப்பாச் சிற்பங்களின் உணர்ச்சியை ஒத்ததாயுள்ளது. இவ்வெண்கலச்சிலை குறைகாண, முடியா ஒரு தொல்பொருளியற் குழலில் காணப்பட்டுள்ளது. இது. கூந்தலணிதல், அலங்காரம் முதலியவற்றின் விவரங்களில், குள்ளப் பண்பாட்டின் மட்கலங்களில், பரும்படியாயும் ஒருநெறியிலு மமைந்த பெண்வகையை புனைவுபடுத்தியமைத்த ஒரு மாற்றத்தைச் சுட்டுவதாயுள்ளது என்பதை நாம் கண்டுள்ளோம். இது மொகஞ் சோதாரோவிற்கும் தென் பலுக்கித்தானிற்கும் இடையில் நடை பெற்ற வணிகத்தைச் சுட்டுவதாயிருக்கலாம். எனவே எல்லாச் சான்றுகளிலிருந்தும் நாம் அறிவது என்னவென்முல் பிற்காலத்திய இந்திய கலைவடிவுகட்கு முன்னேடிகள் போலமைந்த இயற்கைப் பாட்டு மனிதவுருச்சிற்பம், அரப்பா நாகரிகத்திலேயே பிறந்தது என்பதும் இயல்பாக அது இந்தியாவிற்குரியது என்பதுமாம்.
'அாப்பா நாகரிகத்தின் சிற்பக்கலையோடு இயைந்த ஓர் அமி சத்தை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். இங்கு சிற்பமுறை நினை வகங்களான அமைப்புக்களோ பொது அமைப்புக்களோ இல்லாம விருப்பதே அவ்வமிசம். இவ்வமிசம் பொதுப்பொறிப்புக்கள் இல் லாமையோடு ஒத்ததாகும். இங்குள சிற்பங்களுட் சிலவேனும் தேய் வங்களை உருவகித்தவையாயின் அவை தனியார் திருமனைகளுக் குரியவையாயிருந்திருத்தல் வேண்டும். அவ்வாறயின் அரசக்கிரியை களில் அவை பங்குகொண்டவையாயிருக்கா. அசப்பாக்கலேயுலகு முழுவதிலும் இம்மறைவழக்கு நிலவுகிறது; இதிலிருந்து இந்நகர் களில் மற்றையோர் அணுகரும் பெருஞ் சுவர்கள் இருந்தன வென் அறும் இவற்றிற்கு உட்புறம் செல்வம் குவிக்கப்பட்டு மிக்க பொருமை யுடன் பேணப்பட்டது என்றும் நாம் விரும்பத்தகாத முடிவிற்கு வரவேண்டியவர்களாயிருக்கிமுேம்,
ஆடவர் கொண்டிருந்த சிறு தாடிகள், இருமுனையும் பின்தொங்க இழைகொண்டு கட்டிய கூந்தல், வலத்தோள் வெறுமனே இருக்கு மாறு அணிந்த அணிசெய்த ஆடை முதலியவை கொண்ட சிற்பங் கள் மக்களின் ஆடைவகை மயிர்புனைவு வகை முதலியவை பற்றி நமக்கு அதிகம் அறிவு கொளுத்துவனவாயிருக்கவில்லை. இங்கு ஏராளமான பெண் மண்சிற்றுருக்கள் காணப்பட்டன; இவற்றுட்
சில விளையாட்டுப் பொருள்களாயிருக்கலாம். சில மனைகளுக்குரிய

Page 127
224 சிந்து, பஞ்சாப்
திருமனைகளின் சிறுதெய்வங்களாயிருக்கலாம். இவை, பலுக்கித்தா னில் இவற்முேடொத்த உருவங்களைப் போல் விரிவான தலையணிக ளின் விவரங்கள், கழுத்தணிகள் ஆபரணங்களின் பொலிவு முதலி யவற்றைக் காட்டுவனவாயுள உருவங்களிலிருந்து நாம் அனுமா னித்தறியக்கூடிய உயர் அணிகலன்கள் அாப்பாத் தலங்களிலிருந்து நாம் பெற்ற பொருள்களிலிருந்து அறியப்பட்டவையேயாம்.
பல்விடயங்களிலும் சிதறுண்ட மணிகளும் அணிகலன்களின் சிறு துண்டுகளும் காணப்பட்டன. ஆயினும் சில இடங்களில் மிகப் புற நடையாக முழு உருவங்களையும் பேணியிருந்த கண்டு பிடிப்புக் களும் இருந்தன ; இவற்றுள் கழுத்துப்பட்டைகள், அட்டியல்கள், ஒட்டியாணங்கள், காதணிகள் இருந்தன. இவ்வாறு கண்டுபிடிக்கப் பெற்றவற்றுள் ஒன்று கி. மு. மூன்ரும் ஆயிரத்தாண்டில் மிக வெற்றி கரமாக நடைபெற்ற களவின் பயணுக அமைந்ததாகும். ஏனெனில் அாப்பாவில் உள்ள கூலி நிரைவீடுகளில் உள்ள ஒரு குடிசையின் அடியில் ஏழோ எட்டோ அடி ஆழமாக வெட்டிய ஒரு துளையில் பொன்னுலும் அருங்குறைமணிகளாலுமான பல ஆபரணங்கள் காணப்பட்டன. இவற்றுடன் காப்புக்களிலிருந்து பணிகள் வரை யான ஐந்நூறு பொன்னலான பொருள்கள் இருந்தன. பலவரிசை மணிகளாலும் உலோகத்தாலுமான பூாணமான கழுத்தணிகளும் பல இருந்தன. இது காணப்பட்ட இடத்தை நோக்கும்போது இப் பொருள்கள் நியாயமான முறையிற் சேர்க்கப்பட்டனவோ என்பது. பற்றி ஓர் ஐயமேற்படுகின்றது; உற்று நோக்கும்பொழுது உயர் குலத்துப் பெண்மணி ஒருத்தியின் நகைப்பெட்டி களவாடப்பட்டது போல் தோன்றுகிறது. இன்றேல் ஒருவேளை இத்தொகை முழுவதும் ஒரு பொற்கொல்லனின் மூலக் களஞ்சியமாயிருக்கலாம், அதை ஒரு கள்வன் களவெடுத்து வந்து இங்கு புதைத்திருக்கலாம் ; பின் அதை மீட்கத் தவறியிருக்கலாம். இப்பொற்கொல்லன் அரப்பாவின் காட்டி uJ TT (Cartier) யிருந்திருக்கலாம்.
மொகஞ்சோகாரோவிலிருந்து இதே வகையில் நான்கு புதையல் கள் எடுக்கப்பட்டன. ஆயின் அவற்றின் விவரம் வேறுபட்டதாகும். அவை யாவும் நகரின் இறுதி வாழ்தலத்திலிருந்து வந்தவை என் பது தெளிவு. அரப்பா நாகரிகம் மேற்கிலிருந்து வந்த காடவரின் வல்வரவினல் முடிவுற்றது அல்லது முடிவுறுமாறு திடீரென ஊக்கப்

ஆகியவற்றின் நகர்கள் 225
பட்டது என்பதற்குச் சான்றுளது என்பதை நாம் அடுத்த அத்தி யாயத்தில் காண்போம். இப்புதையல்களுட் சில வெள்ளிச்சாடி களுளிடப்பட்டு துணியால் மூடப்பெற்றிருந்தது ; அக்காலம் குழப் பமான காலம் என்பதற்குச் சான்று UdCl5th. இவற்றை முதன்முத லாக வைத்திருந்தோர் திடீர்த்தாக்குதலின்போது அவசரம் அவ சசமாக ஓரிடத்தில் மறைத்து வைத்திருக்கலாம். அல்லது தாக்கு தலின்போது தாக்கினேர் கொண்ட கொள்ளைகளாயும் பின்னர் அவ சரப்பட்டுச் சிறிது பின்வாங்கும்போது மறந்துவிடப்பட்டவையா யுமிருக்கலாம். எவ்வாருயிருப்பினும் அவை அக்காலத்திருந்த காப் பின்மையையும் அசப்பா ஆட்சியின் பண்டை மரபுகள் வீழ்ந்தழிந் தன என்பதையும் நமக்கு அறிவுறுத்துவனவாயுள.
அணியப்பட்ட உண்மை ஆபரணங்களுள் அலங்காசமாக வெள்ளைப்பசை உட்பொதிவு கொண்ட பொன் ஊசிகள், வெறும் பொன் காப்புக்கள், கோளமணிகள், பொன்னலான கூம்பு அணிகள் பல்வகைக் கழுத்தணிகள், ஒட்டியாணங்கள் முதலியன இருந்தன; இவற்றுள் கூம்பணிகள் பெண்கள் காதுகளின்மேல் அணியப்ப்ட்டி ருந்தன என்பதை நாம் குள்ளிச்சிற்றுருக்களிலிருந்து அறிவோம். கழுத்தணிகளும் ஒட்டியாணங்களும் இடையமைப்புக்களினல் சமாந்தர வரிசையிலமைக்கப்பெற்ற பலவரிசை மணிகளால் ஆக்கப் பட்டிருந்தன. தனித்தனி மணிகள் மிக்க வினைக்கிறனுடன் ஆக்கப் பட்டிருந்தன. இவற்றுள் மிக விரும்பியாக்கப்பெற்ற வகை மிக நீண்ட குழாய் வடிவக் காணலியனுகும். மற்றைக் திரவியங்களுள் யேடயிற் என்பதும் ஒரு வகை. இது வடபேமாவிலிருந்தோ திபெத் திலிருந்தோ கொண்டுவரப்பட்ட தாயிருக்கலாம். கமரில் வைடூரியம் பெருவழக்கில் பயிலப்பட்டது; ஆயின் இங்கு அது அருகியே காணப்பட்டது. ஆயின் செங்காணலியனில் வெள்ளேக் கோலம் ஒன்று செதுக்கும் ஒரு விவித்திா விக்ன நுண்மை சிலவேளைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இக்ககைய கோலங் கொண்ட காணலியன் மெசப்பொற்றேRயாவிலும் பேசியாவிலும் கி. மு. மூன்ரும் இரண் டாம் ஆயிரத்தாண்டுகளில் அறியப்பெற்றதாயிருந்தது. இதனல் இது அரப்பா நாகரிகத்தின் காலம், வணிகக்கொ ர்பு பற்றிய
வகைகளில் பொருள் குறித்து நிற்பதாகும்.

Page 128
226 சிந்து, பஞ்சாப்
சானு தாரோவில் மணி செய்வானின் கடையொன்று அகழப் பட்டது. இதிலிருந்து நீள் காணலியன் அல்லது அகேற்று மணிகள் செய்யும் வினை நுண்மையைக் கண்டறிதல் கூடும். பட்டைபோடப் படாத கல் முதன்முதலாகப் பிளந்து ஒரு கோலாகப் பொருத்தப் பெறும். இது 3 அங்குல நீளமும் சதுர வடிவும் கொண்டிருக்கும். எமரி அல்லது தூளாக்கிய பளிங்கு கொண்ட செப்புவாள் இதற்குப் பயன்படுத்தப்படும். இந்தக் கோல் பின்னர் பரும்படியாக ஓர் உருளையாமாறு சில்லம் வெட்டப்படும். பின்னர் தேய்த்துத் துலக் கப்படும். அதே சமயத்தில் நடுவணமைந்த நீள்பக்கத்துத் துளையும் பொறிக்கப்படும். இதற்குச் சிறிய கல் துறப்பணம் பயன்படும். இத் துறப்பணங்கள் 1% அங்குல நீளமும் 0.12 அங்குல விட்டமுங் கொண்ட கோல்களாகும். ஓர் அந்தத்தில் தேய்க்கும் தூள் கொண்ட ஓர் கிண்ண வடிவக் குழிவு இருக்கும். இத்தாளினலேயே துளை போடல் உண்மையில் நடைபெறும் பரிசோதனை யொன்றிலிருந்து எமரியை உரோஞ்சியாகப் பயன்படுத்தி ஒரு மில்லிமீற்றர் ஆழம் துளைக்க 20 நிமிடங்கள் சென்றன என்பது அறியப்பட்டது. இதி லிருந்து 3 அங்குல மணியைத் துளைக்க 24 மணி நேரம் வேண்டு மென்பது உணரப்பட்டது. பயிற்சி பெற்ற கம்மியர் விரைவில் வேலை செய்வர் என்று கொண்டு கல்முனைகள் பொருத்தப்பெற்ற மாவில் துறப்பணம் பயன்பட்டன என்று கொண்டாலும் மணிகள் செய் வது மிக்க வினைகேடானவேலை என்றே கொள்ளல் வேண்டும். ஆயின் அரப்பா நாகரிகத்தின் நீள்கால விருத்தியின்மையை நோக்கும் போது இது போற்றப்படக்கூடிய வினைக்கேட்ன்று.
மணிகளோடு காதணிகள், மூக்குத்திகள் இன்றைய இந்துத் தானத்திலுள்ளவைபோன்றவை இருந்தன. கைப்பிடியுடைய எளிய செப்புக்கண்ணுடிகள் அலங்காாத்திற்குப் பயன்பட்டன. அஞ்சனம் போன்ற බෝග பொருள் ஒப்பனைப் பொருளாகப் பயன்பட்டது போலவும், இது ஒரு சிறு ஈடியினல் சார்த்தப்பட்டது போலவும் தோன்றுகிறது. மழிப்பதற்கு மழிகத்திகள் பயன்பட்டன.
சுட்டகளியிலிருந்தாய கவர்ச்சியான விளையாட்டுப் பொருள்களும் இங்கு இருந்தன. ஆயினும் இவ்வகைகளில் பிள்ளைகளின் விளை யாட்டுப் பொருள்களையும் வீட்டுத்திருமனைகளில் வீற்றிருந்த சிற்று ருக்களையும் நன்கு வேறு பிரித்தறிதல் கடினமாயிருந்தது (த.தா.8).

ஆகியவற்றின் நகர்கள் 227
நூலொன்றினல் தலையாட்டக்கூடிய நல்லினங்கள், கயிறு வழி நக ரும் குரங்குகள், இவை இவற்றிலிருந்த வளைவான துளையினல் இழையை இறுக்குவதால் வேண்டியவாறு நிற்பாட்டப்படக்கூடி யன, முதலியன விளையாட்டுப் பொருள்களேயன்றி வணக்கப் பொருள்கள் என்பது தெளிவு. பல விளையாட்டு வண்டிகளும் அத் தகையனவே. மண்ணுலியன்ற மாதிரி வண்டி முன்னை வரலாற்றித்தி யாவில் மிக விரும்பப்பெற்ற ஓர் விளையாட்டுப் பொருளாகும். மண் ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்) என்பது இந்தியாவில் பண்டை நாட்களில் எழுதப்பெற்ற மிகப் புகழ்பெற்ற ஒரு வடமொழி நாட கம். இது கி. மு. எட்டாம் நூற்ருண்டிற்கு முன்னராக எழுதப்பெற் றது. இந்நாடகத்தின் குழ்ச்சி சிறு பையனின் விளையாட்டு வண்டி யில் நகைகளைக் களவ்ெடுத்து மறைத்து வைத்தலைச் சூழ்ந்துள்ளது. இன்னும் மண்ணுலாய ஊதிகள், கோழிகள் பறவைகளின் வடிவத் தில் செய்யப்பட்டன. இவை செவ்வியமுறையில் ஊதப்பெறின் வியத்தகு ஒலம் இடக்கூடியன.
பரும்படியாக யாதோ ஒர் விளையாட்டிற்காகக் கோடிடப்பெற்ற இரு செங்கட்டிகள் காணப்பட்டன. ஒன்றில் ஒருமுழுமையின் பகுதியொன்றுள்ளது. இது நாம் அறிந்த ஒரு மசுர் விளையாட்டுப் பலகையையோ எகித்திலிருந்த ஒன்றையோ ஒத்ததாயிருந்தது. இன்னுெரு செங்கட்டியில் வரிசையிலமைந்தகுழிகளிருந்தன. இவை பாற் கற்கள் அல்லது அவை போன்ற பயறுகள் இட்டு எடுக்கக் கூடியவையாயிருந்தன. இவை ஆபிரிக்கக் கிளையினரிடை காணப் படும் விளையாட்டுக்கள் போன்றவை ஆடுவதற்கு உதவுவனவாயிருந் திருக்கலாம். இரண்டு செங்கட்டிகளும் நடைபாக்களிலிருந்து பெறப்பட்டனவாயிருக்கலாம். இதிலிருந்து இவை மனப்பணி மக் கள் விளையாடுவதற்குப் பயன்பட்டன எனும் உறுதியான சான்றினை அளிப்பனவாயிருந்தன. இவர்கள் ஒருவேளை முன்றில் மூலையொன் றின் நிழற்பகுதியில் விளையாடியவர்களாயிருக்கலாம். இது குதாட்ட மாயிருக்கலாம். கவறுகள் பயன்பட்டன என்பது உறுதி. எனவே இவை தற்செயல் விளையாட்டிற்குப் பயன்பட்டனவாயிருக்கலாம். இவற்றில் உள்ள பொட்டுக்கள்' இப்பொழுதுள்ளவாறில்லை. இக் காலத்தில் எந்த ஈர் எதிர்ப்பக்கங்களின் கூட்டுத்தொகையும் மொத் தமாக ஏழாக அமையும். ஆயின் இவற்றில் 1 இற்கு 2, 3 இற்கு 4,

Page 129
228 சிந்து, பஞ்சாப்
5 இற்கு 6 ஆக எதிர்ப்பகுதிகள் அமைந்திருந்தன. இத்தகைய அடையாளங்கள் கொண்ட் துண்டொன்று தெபிகல்ரா அளவு தொலைவில் இராக்கின் வடபால் காணப்பட்டது என்பதை இங்கு நாம் குறிப்பிடலாம். இவ்விடத்தோடு வேறு பிற இந்திய தொடர்பு கள் இருந்தன. விளையாட்டுக்களில் குதாடுவதை ஆரியர் மிக உவந் தனர் என்பதையும் இவர் இந்தியாவிற்கு வரவும் அரப்பா நாகரிகம் முடிவுற்றது என்பதையும் நோக்கும்போது இத்தகைய முறையில் அமைந்த கவற்றின் பயன்பாடு கவற்சியுடையதே.
சிறிய கலைகள், கைப்பணிகள் முதலியவற்றைக் கைவிட்டு அடிப் படையான கைத்தொழில்களை நாம் ஆராயின் நாம் முதன் முதலாக மட்கலத்தை எடுத்துக்கொள்வோம். அதிகாரம் IV இன் பெரும் பாகம் மட்கலப்பாணிகள் அணிவகைகளை நுணுக்கமாக ஆசாய் வதில் ஈடுபட்டது; அவ்விவரங்களை அவ்வதிகாரத்துடன் முடித் தமை கண்டு வாசகர்கள் சிறிது ஆறுதல் பெற்றிருப்பார்கள். ஆயி னும் அரப்பா நாகரிகத்தின் மட்கலம் பற்றிய விவகாரங்களை ஆய் வதை ஒரேயடியாகத் தவிர்க்க முடியாது; பலுக்கித்தானில் நன்கு விவரங் கண்டறியாச் சமுதாயங்களின் பண்பாட்டில் மட்கல விவ ரங்கள் இடங்கொள்ளுகின்ற அளவு மிக முக்கிய இடத்தை அவை அாப்பாவில் கொள்ளாவிடினும் அவை பற்றிய விவரத்தை நாம் ஆராய்தல் வேண்டும். அபுகனித்தானின் சிறிய சமுதாயங்களில் பண்பாட்டு வேறுபாடுகள் அறிவதற்கு உள்ளூர்க் குயவேலைப் பொருள்களின் வேறுபாடுகள் மிக உதவுவன.
மொகஞ்சோதாரோவின் பிந்திய கட்டத்தில் குயவர் குளேகள் இருந்தன என்பது புலனுகின்றது. நகர் சீரிழிந்து வரும் காலத்தில் நகராண்மைக் கழகத்தின் குன்றிவரும் ஆணை குடிவாழ் புலங்களில் இச்குளை அமைக்க மக்கட்கு இடமளித்ததிலிருந்து புலனுகின் றது. இச்சூளைகள் வட்ட வடிவின; இவற்றில் துளைகொண்ட நிலத் தளத்தின் கீழ் ஓர் உலையும் உலைவாய்த்துளையும் இருந்தன. இந்நிலத் தளம் ஆதியில் ஒரு கும்மட்டக் கூரையால் மூடப்பெற்றிருந்தது. இவை சியல்க் II இல் காணப்பட்டதிலிருந்தும் மிக்க விருத்தி யடைந்த ஒரு வகையைக் குறிப்பதாயிருந்தன. இவை முன்னைக் குலமுறைக் காலத்துக்குரிய சுசா மெசப்பொற்றேமியத் தலங்களி லிருந்தவற்றுடன் ஒப்பிடக்கூடிய வகையினவாயிருந்தன. மொகஞ்

ஆகியவற்றின் நகர்கள் 229
சோதாரோவில் காப்பான ஒரு பகுதியில் ஆறு குளேகள் காணப் பட்டன. இப்பகுதி ஒரு குயவர் பகுதியைக் குறிக்கிறதென்பது தெளிவு.
அசப்பா மட்கலங்கள் பெருவளவில் எளியவையாக வெறும் பயன் பாட்டிற்கெனவே ஆக்கப்பட்டவை. அசப்பா ஆட்சிக்கே பிசத்தி யேகமான வகையின. இதற்கு முன்னுேடிகளோ ஒப்புக்களோ பிற இடங்களில் இருந்தனபோல் தோன்றவில்லை. இங்கு காணப்பட்ட வகைகளுள் ஒன்று குறிப்பிடத்தக்கது. இது உயர் அடிப்பீடத்தில் அமைந்த ஒரு தட்டுடையதாயிருந்தது. இது ஒரு 'பலித்தட்டு' எனப்பட்டது. இவ்வகைக் கலமொன்றின் சில்லிகள் ஒரு தலத்தில் காணப்பட்டால் அது அத்தலத்தில் அரப்பா நாகரிகம் இருந்தது என்பதைச் சுட்டுவதாகும்; சமியன் மட்கலம் எவ்வாறு ஐரோப்பா வில் உரோமக் குடியிருப்பைச் சுட்டியதோ அம்முறையில் உறுதி யாக இவையும் சுட்டின. இவை அடிப்பீட அகல்களிலிருந்து உரு வாயின; இதற்கு உதாரணமாக, சோப் பள்ளத்தாக்கின் ராணு குண்டை 11 ஆம் கட்டத்திலிருந்து பெற்றவற்றைக் கூறலாம். இவ்வகை பலுக்கித்தானின் மஞ்சட்கபிலக் கலங்களுள் காணப்பட வில்லை; ஆயின் அம்றிக் கட்டத்தில் ஒருவேளை இதற்கு உதாரண வகைகள் இருந்திருக்கலாம். *
அரப்பாப் பண்பாட்டின் அணி செய்யப்பெற்ற மட்கலங்களி லிருந்து (தகடு 6, 7) அவை எங்கே இருந்து உருவாகின என்பதை நாம் இலகுவில் அறியலாம். ஏனெனில் அவை சிவப்பில் கறுப்புக் கலங்களாயும் கோலங்கள் துலக்கமான ஆழ்ந்த சிவப்புக்களியில் வண்ணிக்கப்பட்டவையாயுமிருந்தன. இப்பண்பு இவை வட அலுக்கித் தான் கலங்களுடன், பெரியனுே குண்டையிலுள்ள ராணு குண்டை கட்டம் III இலும் சிறு தலங்களிலுமிருந்த கலங்கள் போன்றவற்று டன், தொடர்பு கொண்டிருந்தன என்பதை மிக வன்மையாக வலி யுறுத்துவதாயுள்ளது. ஆயினும் இக்காலத்திற்குள்ளாகவே அாப் பாப் பாணிகள், வடபலுக்கிக்கான் மட்கல வண்ணப்பாணிக்கு org) வகையிலும் கடப்பாடில்லாக வகையில் சிறப்புவகையான தனி முறையிலமைந்து விட்டன. ஆனல் இவை தென்பாலிருந்த குள்ளிப் பாணியோடு நெருங்கிய தொடர்புடையனவாயிருந்தன. w

Page 130
230 சிந்து, பஞ்சாப்
இரு தொகுதிக்கோல முறைகள் சாதாரண வழக்கிலிருந்தன; கேத்திர கணித வடிவு அல்லது அருவ வடிவ உருவங்கள் சிறப்பு முறையான ஒன்றையொன்று வெட்டும் வட்டங்களை அடங்கலும் மீள மீள வரும் முறையில் கொண்டிருந்தன. மற்றைச் சிறிய ஆயின் குறிப்பிட்த்தக்க முறையிலமைந்த தொகுதி, தாவரங்கள் விலங்கு களின் கோலங்களைக் கொண்ட இயற்படு நோக்குருக்களைக் கையாண் ட்வையாயிருந்தன. முதல் தொகுதிக்கோலவுருக்களை ஒப்பிட்டுரை கூறுதல் இலகுவன்று ஆயின் குண்டிக்காய் வடிவ நோக்குரு அரப் பாப் பொன்னக்ைகள், ஒட்டு உட்பொதிவுகள் ஆகியவற்றிலிருந்த வாறு போல், கட்ல் அணிவகைகளுக்குமிருந்ததென்றும், ஒன்றை யொன்று. வெட்டும் வட்ட்க்கோலவுரு நல் இடுகாட்டிலிருந்து பெற்ற ஒரு பாண்டத்திற் காண்ப்பெற்றதென்றும் மட்டும் கூறலாம்; ஆயின் இங்கு இக்கோலம் ஒரு மஞ்சட்கபிலப் பிற்களத்தில் வண்ணிக்கப் பட்டிருந்தது. இயற்படுகோலவுருக்கள் கவற்சியுடையவை. இவை பெரும்பாலும் எங்கும் அடர்ந்த சிதறிப்பரவும் வினை நுண்மை யைக் கட்ைப்பிடித்து எண்ணிக்கப்பட்டிருந்தன; இக்கோலங்கள் பாண்டத்திற் பெறக்கூடிய பாப்பு முழுவதையும் ஒழுங்கற்ற முறை யிலமைந்த பற்றிகள் வ்ளரிகள் முதலியவற்றின் ஈட்டத்தால் மூடி நிற்க, இவற்றிட்ை, பறவைகளும் (சில வேளைகளில் மயில்களும்) சிற்றளவில் விலங்குகளும் கலந்திருந்தன. இது அழகற்ற வளமை மிகு பாணியாகும்; பலுக்கித்தான் மட்கலத்திற் காணப்பெற்ற நிய மமோ திட்டமான கோலவமைப்போ இங்கு இருக்கவில்லை. வன்மை யான வறண்டி, மலைநாடு, இறுக்கமான உரமான ஒரு பாணியை நல்க, கீழமைந்த ஈரலிப்பான சமவெளிகள் வளமைமிக்க காட்டுப் பாணியொன்றை அளித்தது என ஒருவர் கொள்ள வேண்டியதாயுள் ፌኸffdjj•
விலங்குகள் பறவ்ைகளின்உடல்களை உருவகித்தவாறு குள்ளிப் பாணியுடன் மிக ஒப்புடிை கொண்டது; இவை தடித்த வெளிவரை கள் கொண்டிருந்தன; உள்ளமைந்த இடத்தைச் சமாந்தர வரிசைக் கோடுகள் குறுக்குமறுக்குமாக நிரப்பியிருந்தன. கிடைத்தளமாக நீட்டும் பாங்கு ஒன்றிங்கிருந்தது. இது வடபாற் பகுதியிலும் பார்க் கக்குள்ளிக்கே பொருந்துவதாயிருந்தது. வடபகுதியில் நிலைக்குத்து முறை விகாரப்பாட்டினை சாகு. II, II, ஆகிய கிரமங்களிலிருந்து

ஆகியவற்றின் நகர்கள் 23.
நாம் இலகுவில் அறியலாம். சில கட்டங்கள் குள்ளியைக் குறிப்பிடத் தக்க முறையில் நினைவூட்டும் காட்சிகளைக் கொண்டிருந்தன. உதா ரணமாக மஞ்சட் கபிலக் களியுடைய ஒரு கடம் உண்டு. இது மொகஞ்சோதாரோவில் மிகப் பிந்திய சூழலிலிருந்து பெறப்பட் டது. இதில் நீட்சி பெற்ற வெள்ளாடோ, மானே ஒன்றிருந்தது. இதன் உடல் குறுக்குக் கோடிடப்பட்டிருந்தது. இது, புள்ளியொடு வட்டங்கள், குறுக்குக் கோடிட்ட புள்ளிகள் கொண்ட ஒரு நிலக் காட்சியில் நின்றது. இக்காட்சியில் இன்னுமொரு மிருகமுமிருந்தது. இது ஒருவேளை நரியாயிருக்கலாம். இவற்றுடன் சேர்ந்து ஒரு கூர்க் கிளைமாமும் நின்றது. இப்பாணி தூய குள்ளிப்பாணியாயில்லாவிடத் ஆம் நகரின் வரலாற்றின் பிற்காலத்தில் அங்கிருந்து பெற்ற ஒரு மாற்றமாக விளங்கியது. ஆயின் சானுதாரோவிற் சாதாரணமான அசப்பா வண்ணவகை மட்கலங்களில் கலைமான் காட்டாடு முதலிய வற்றின் உருவங்கள் காணப்படுகின்றன. இக்கலங்கள் இத்தலத்தின் முக்கிய குடியிருப்புப் பருவத்திற்குரியவை. இத்தகைய காட்சிகள் அரப்பாவிலும் காணப்பெற்றன.
ஆயின் அசப்பாவிலிருந்து பெற்ற வியத்தகு வண்ணச் சில்லிகள் மனித உருக்கள் கொண்ட காட்சிகளையுடையனவாயிருந்தன (உரு. 23), ஒன்றிலொரு மீனவன் தன் தோள்மீதமைந்த கோலொன்றில் தொங்கும் இருவலைகளைக் காவுபவனுகக் காட்டப்
படம் 23 மிருகங்களையும் மனிதர்களேயும் கொண்ட மட்கலத் துண்டுகள், அரப்பா.
பட்டுள்ளான்; அவன் காலடியில் ஒரு மீனும் ஆமைபோன்ற ஒன் அறும் காணப்பட்டன. இவை குறுக்குக் கோடிட்ட ஒரு பட்டையில் தங்கியிருந்தன. இது ஒருவேளை அவன் சென்றுகொண்டிருந்த தீரத்து நதியைக் காட்டுவதாயிருக்கலாம். இத்தலத்து வரலாற்றின் இறுதிக்கட்டத்திலிருந்து பெற்ற பிறிதொரு கடத்தின் ஒடிசல்கள்

Page 131
232 சிந்து, பஞ்சாப்
கடத்தின் பரிதியைச் சுற்றிப் பெரு எடுப்பான பொட்டிப்புவரிசை கள் இருந்தன என்றும் அவற்றில் சதுரவேலைப்பாடு கொண்ட அணி துளைகளுடன் இயற்படு காட்சிகள் மாறி மாறியமைந்தன என்றும் புலப்படுத்துவனவாயுள. எஞ்சிநிற்கும் காட்சிகளுள் ஒன்றில் பல கிளைகளுடன்கூடிய மரமொன்றையும் அவற்றுள் ஒன்றில் பறவை ஒன்றிருந்ததையும் நாம் காணலாம். அம்மரத்தடியில் பெண்மான் ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டிக் கொண்டு நின்றது. பொட்டிப் பின் மேற்பால் இரு பறவைகளும் ஒரு மீனும் ஒரு நட்சத்திசமும் இருந்தன. இன்னெரு காட்சியில் ஒரு மனிதன் ஒரு கைய்ைத் தூக்கியவாறும் மற்றக்கையால் தலையைத் தொட்டவாறும் நின்று கொண்டிருந்தான். குழந்தையொன்று கைகளைத் தூக்கியவாறு நின்று கொண்டிருந்தது. வயலில் ஒரு சேவலும் இரண்டு மீன்களும் காட்சியளித்தன. வேறு இரண்டு பொட்டிப்புக்களின் ஒடிசல் ஒன்றில் ஒரு மரமும், ஒரு மனிதனின் தலையும் தோளும் காணப் பட்டன ; பிறிதொன்றில் படமுடைய நாகமொன்றிருந்தது ; பிறி தொன்றில் கிளையுடைய பெரிய மரம் இருந்தது.
அரப்பா நாகரிகத்தின் வேறு அமிசங்களுக்குரிய முன்னுேடிகளேச் சுட்டிக் காட்டல் எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமாகும் மேற் கூறிய பல்வேறு நோக்குருக்களுக்கும் உரிய மூலத்தினைச் சுட்டிக் காட்டில் குள்ளி மூலமாயிருக்கலாம் என்று நான் தெரித்துள்ளேன். பகுதியளவிலாகுதல் அது மூலமாயிருந்திருக்கலாம். பேசிய மக்கி சானிலுள்ள குராப் இடுகாட்டில் கிளையுடைய மரங்கள், காட்டாடு கள் முதலியவற்றின் உருக்களுடன் மாறி மாறியமைந்த சதுர வேலைப்பாட்டுப் பொட்டிப்புக்கள் கொண்ட பெரிய மஞ்சட் கபிலக் கடங்கள் காணப்பட்டன என்பதை இங்கு நினைவு கூர்தல் நலம். இம்மட்கலத்தைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம். இவை அண்ணளவாக அரப்பாப் பண்பாட்டின் பிற்கட்டங்களோடு -அ-து கி. மு. 2000 வரை அல்லது சிறிது பின்னரான காலம்ஒத்த காலத்தனவாயிருக்கலாம்.
அாப்பாப் பண்பாட்டிற்குரிய இன்னெரு வகை வண்ணமட்கலம் பற்றியும் இங்கு நாம் குறிப்பிடவேண்டும். இதிற் கோலங்கள் பல நிறங்களில் வண்ணிக்கப்பட்டிருந்தன. பண்டைக் கிழக்கில் இரு நிறங்களில், வழக்கமாகக் கறுப்பிலும் சிவப்பிலும், வண்ணித்தல்

ஆகியவற்றின் நகர்கள் 233
சாதாரண வழக்கமாயிருந்ததாயினும், பல்வேறு பண்பாடுகளில் பல் வேறு காலங்களில் தெல் அலவ், யெம்டெற் நசர், சோப் பள்ளத் தாக்கு அம்றி போன்ற இடங்களில் இது காணப்பட்டதாயினும், பல் வண்ணக்கலம் மிக அரியதாகவே இருந்தது. ஆயினும் அரப்பாவி லும் மொகஞ்சோதாரோவிலும் உள்ள சில்லிகளிற் காணப்படும் மஞ்சள் கபிலக் களியில் சிவப்பிலும் பச்சையிலும் வண்ணிக்கப் பட்ட உண்மைப் பல்வண்ணமும், சானுதாரோச் சில்லிகளில், மஞ் சள் பிற்களத்தில், கறுப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில் பறவைகளை இயற்படுகாட்சிகளிற் காட்டும் உண்மைப் பலவண்ண மும் அசாதாரணமானவையே. முடிந்த அத்தியாயத்தில், சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் முதலியவை உள்பட்ட முழு நிறங்களேயும் உபயோகித்த பல்வண்ணக்கலம் பலுக்கித்தானின் நல் பண்பாட்டிற் குச் சிறப்பாயமைந்தது என்று கண்டோம். ஆகவே அரப்பாத் தலங்களிற் காணப்பட்ட சில காட்டுக்களிலிருந்து இவற்றைப் பிரித்து நோக்குதல் பொருத்தமன்று. சானுதாரோச் சில்லியை நோக்கும்போது, அது மட்டுமேனும் அதன் மஞ்சள் நிற வண்ணத் தில் நல் வரிசை வண்ணக் கடங்களுடன் யாதோ ஒருவகையில் தொடர்புள்ளதாயிருக்கிறதென்பதைக் காட்டுவதாயுள்ளது.
அாப்பா நாகரிகத்திற் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்படுக்கிய ஒரு முக்கிய பதார்த்தம் பேயன்சு (Faience) என்ப தாகும். இது பிரதானமாய் ஒரு தாசகியுடன் தாளாக்கப்பெற்ற துலக்கியினைக் கலந்து, துலக்கமான மேற்பரப்புடைய ஆடிப்பொரு ளாகுமாறு சுடப்படும் ; பின்னர் இது சேர்த்து உற்பத்தியாக்கப் படும்பொழுது பல்வேறு கணிப்பதார்த்தங்களு. இன் சேர்க்கப்பட்டு நிறமூட்டப்படல் சுடும். உற்பத்தியாக்கன்முறை சிக்கற்பாடானது. இது பசுமங்கள் துலக்கிகள் பலவற்றின் பயன்பாட்டோடு நெருங்கி யிணைந்தது. ஆயின் கண்ணுடியின் ஆக்கப்பாட்டுடன் இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய விரிவான ஒரு செய்முறை, வரலாற்று முன்னர்க் காலத்தில் மேற்காசியாவின் பல்வேறிடங்களில் தனிப்பட்ட முறையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமென் பது இயலக்கூடியதன்று. எனினும் மெசப்பொற்றேமியாவிலும் சிரியாவிலும் இது யெம்டெற் நசர் காலமளவு முன்னிலையிலேயே

Page 132
234 சிந்து, பஞ்சாப்
பேயன்சு மணிகள் சாதாரண வழங்கிலிருந்தபொழுது அறியப்பட்ட் ஒன்ருயிருந்திருக்கலாம். அக்கால அளவிலேயே இப்பொருள் ள்கித்தி அலும் காணப்பட்டது. இழந்த சுசாவிலே அத்தலத்துக் குடியிருப்பு, புதைப்பு முதலியவற்றின் முதற் கட்டத்தில் இருந்த மக்களால் அறி யப்பட்ட ஒன்ரு யுமிது இருந்தது. பொதுவில் நோக்குமிடத்து சுசா 1 கட்டம் மெசப்பொற்றேமியாவில் அல் உபெய்த் பருவத்தின் பிற் பாதியோடும் உறுக் பருவத்தின் பிற்பாகியோடும் ஒத்தகாலத்தின தாகும். எனவே பேயன்சு இங்கு தோன்றியது மேற்காசியாவில் இது முதன்முதல் தோன்றியதைக் குறிப்பதாகும். ஆயின் பலுக்கிக் தானில் நல்லைத்தவிர வேறு இடங்களில் இது காணப்படவில்லை. நல் வில் காணப்படும் சிற்றளவு மணிகள் அரப்பாவிலிருந்து இறக்குமதி யாக்கப்பட்டன என்பது தெளிவு. இன்னும் இந்தியாவிற்கு உட னண்ணிய மேற்குப் புலங்களில் இது ஆங்காங்கு பிந்திய காலங் களிலேயே காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக அனுே III இல் காணப்பட்ட தனி ஒரு மணியையும் சா தெபியில் காணப்பட்ட மற்றென்றையும் நாம் இங்கு குறிப்பிடலாம். எனவே அரப்பா நாக ரிகத்தினர் பேயன்சின் உபயோகத்தை அந்நாகரிகத்தின் சுட்டியு sorս զբգաT * 5 முன்னை வளர்ச்சி நிலையில் மெசப்பொற்றேமியாவி லிருந்தோ ஒருவேளை இழத்திலிருந்தோ பெற்றிருக்கலாம். ஏனெ னில் அகழப்பெற்ற தலங்கள் யாவினும் எல்லா மட்டங்களிலும், குடிகோளின் துவக்கம் தொட்டிறுதிவரை, இது பல்லிடங்களிலும் காணப்பட்டது; இங்கு இது முன்னைக் குலமுறைச் சுமரில் பயன் படுத்தப்பெற்றதிலும் கூடிய அளவில் பயன்படுத்தப்பட்டது.
அாப்பாவின் உலோகக் கைத்தொழிலில் பல விசித்திரமான கவர்ச்சிகரமான அமிசங்களிருந்தன. மேற்காசியாவின் முன்னை நகர் நாகரிகங்கள் எல்லாவற்றையும்போல் அரப்பா நாகரிகமும் நியமமுறையில் ஒரு வெண்கல ஊழியினது; ஏனெனில் இங்கு கருவிகள் ஆயுதங்கள் செய்வதற்குச் செம்பும் வெண்கலமுமே பயன் பட்ட உலோகங்களாகும். பேசிய ம்ேட்டு நிலங்களிலோ அயற்புலங்க வளிலோ உள்ள வண்ண மட்கலமாக்குவரர் எவ்வாறு செம்பின் பய னேக் கண்டு பிடித்தனர் என்று அதிகாரம் II இல் கண்டோம் ;

ஆகியவற்றின் நகர்கள் 235
முதன் முதல் இவர் மூல உலோகத்தின் இயற்கையான துண்டுகளை அடித்துருவமளித்துப் பயன்படுத்தினர். பின் அதனைத் தாதிலிருந்து காய்ச்சிப் பிரித்து வார்ப்பதற்கிதமாக உருக்கி எடுத்தனர். அரப் பாக் கருவிகள் செய்வதற்குப் பயன்பட்ட உலோகத்தை வகுத் தாய்ந்தபோது தற்செயலாக அதில் சேர்ந்த மாசுகள் இயற்கைத் தாதுகள் எங்கிருந்து வந்தன என்பதைக் காட்டுவனவாயுள்ளன. ஏனெனில் அரப்பாப் பண்பாட்டினைப் பற்றி எக்கட்டத்திலிருந்து நாம் அறிவமோ அக்கட்டத்திலிருந்தே அம்மக்கள் உலோகமுருக் கலை அறிந்திருந்தனர் என்று நாம் கொள்ள வேண்டும். அதற்கு மாருகக் கொள்வதற்குரியது எது என்றும் இப்பொழுது நமக்குக் கிடைக்கவில்லை. அசப்பாச் செம்பில் சாதாரணமாகச் சிற்றளவு நிக் கல் இருந்தது (இது 0.5 சதவீதத்தில் குறைவாகவும் ஒருபொழு தும் 1.00 சதவீதத்திற்கூடாமலும் இருந்தது). ஆயின் ஆசெனிக் கின் வீதம் உயர்வாகவும் சிலவேளைகளில் மிகையாகவும் இருந்தது. இங்கு ஆசெனிக்கிருந்ததிலிருந்து சுமர் மக்கள் செம்பு பெற்ற இடத்திலிருந்தே அரப்பா மக்களும் தம் செம்பினைப் பெற்றனர் என்று கொள்ள இடமளியாது. ஏனெனில் இவர்கள் கையாண்ட தாதுவில் அற்ப நிக்கலிருந்தது ; ஆசெனிக்கிருக்கவில்லை. இவர்கள் தாது பேசியக்குடாவின் தென்மேற்கிலிருந்த ஒமனிலிருந்து பெறப் பட்டிருக்கலாம். அாப்பாச் செம்பு இராசபுதனக்து மாவட் த்தி லுள்ள இந்தியத் தாதுகளிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். பேசியா விலிருந்து ஒன்றும் பெறப்படவில்லையென்று அறவே நீக்கிவிடமுடி
யாது.
அாப்பா உலோக வேலையாளர் தம் பொருள்களைச் சுத்தமற்ற அல்லது சுத்தமான செம்பில் செய்தனர்; வெண்கலத்திலும் (செம் புடன் அண்ணளவில் 10 சதவீதத்தில் வெள்ளியம் வேண்டுமென்ருே தற்செயலாகவோ கலந்தது) செய்தனர்; செம்பு ஆசெனிக்குக் கலிப்பிலும் செய்தனர் ; இது தற்செயலால்ாய கலப்பு; ஆயின் உலோகத்திற்குக் கூடிய ஒருவன்மையை அளித்தது. இவ்வுலோகங் களின் உண்மைப் பாகுபாடுகளின் பெறுபேறு வருமாறு . . . . . .

Page 133
236 சிந்து, பஞ்சாப்
செம்பு வெண்கலம் ஆசெனிக்
செம்பு 96. 85.3 94,76 வெள்ளியம் O 1.09 0.09 அன்றிமணி 0.88 ୪f qu08 0 ஆசெனிக் 0.丑岳 0.07 4.42 இரும்பு 0.03 . 0.18 0.15 நிக்கல் 1.2ሽ 0.6 0.14 காரீயம் 0.02 $fରf(3 0.26 கந்தகம் 0.98 0.11 0.
முன்னைக்காலத்தில் வெண்கலம் பயன்பட்டதுபற்றிய பிரச்சினை கவர்ச்சிகரமானது. பல இடங்களில் வெள்ளியக்கலப்பு தற்செய லாய் நிகழ்ந்ததாகும். செம்புடன் இவ்வரிய உலோகம் இலகுவில் பெறக்கூடியதாயிருந்த அளவிலேயே இது பயன்பட்டது. பல்காலும் இவ்விருதாதுக்களும் ஒருங்கு காணப்பட்டன. இதனுல் வெண்கலம் இலகுவில் தற்செயலாக ஆக்கப்படக்கூடியதாயிருந்தது. சுமரில் முன்னைக்குலமுறை III இன் காலத்தில் ஊரின் அரசக்கல்லறைக ளில் வெண்கலம் முதன்முதலாகக் காணப்படுகின்றது. கியன் TVb இல் இது இன்னும் முன்னராகத் தோன்றியிருக்கலாம். யெம்டெற் நசர் காலத்தோடு இது ஒத்த காலத்ததாயிருக்கலாம். செம்பு அனே வின் முதல் கட்டங்களில் உபயோகிக்கப்பட்டவாறே சியல்க்கிலும் முன்னை வரலாற்றுப் பருவங்கள் முழுவதும் பயன்பட்டது. ஆயின் அனே I இல் இந்தியாவிலிருந்ததைப் போன்ற ஓர் செம்பு-ஆசெ னிக் அறியப்பட்டிருந்தது. இசார் II இலிருந்து பெற்ற பொருள் களில் வெள்ளீயச் சுவடுகள் இருந்தனவாயினும் (ஒன்றில் கிட்டத் தட்ட 3 சதவீதமிருந்தது) இத்தலத்தில் உண்மை வெண்கலம் பயன்பாட்டிலிருக்கவில்லை.
அராப்பா உலோகவியலில் வார்ப்பு, காய்ச்சியடித்தல் ஆகிய இரு வினை நுண்மைகள் உபயோகத்திலிருந்தன. வார்ப்பு முறையில் உலோகத்தை எழுத்தில் வார்க்குமுன் உருக்குதல் வேண்டும். ஆயின் வார்ப்புமுறை முன்னைச் சுமரில் விருத்தியடைந்த அளவில் வரலாற்றுமுன்னர் இந்தியாவில் வளரவில்லை. இந்த எளிய வினை நுண்மை இங்கு நிலை நின்றதால் சில பூர்விகக்கருவி வகைகள் நெடுங்காலம் பேணப்பட்டன. ஆயின் இவை மேற்காசியாவின் மற் றைப் பகுதிகளில் விரைவில் வழக்கழிந்து போயின. மூடிய எழு

ஆகியவற்றின் நகர்கள் 237
தகம் ஒன்றில் வார்ப்பதற்குச் செம்பு ஒரு கடினமான உலோக மாகும். இது அங்கு கட்டிலா ஒட்சிசன் குமிழிகளே ஆக்குவதாலும் அதனல் செம்பு பஞ்சுத்தன்மையடைந்துவிடுவதாலுமாம். ஆயின் சிற்றளவு சதவீதத்தில் (1 சதவீதத்திலும் குறைவாக) வெள்ளீயம் சேர்த்தால் அல்லது ஆசெனிக் சேர்த்தால் அவை ஒட்சிசன் நீக்கும் காரணிகளாக உதவுகின்றன. இதனுல் இச்சிக்கலான மெழுகழிவு (cire perdue) வார்ப்பு முறையினுலும் நல்ல வார்ப்புகள் செய்தல் சாலும், இதில் மாதிரி ஒன்று மெழுகில் செய்யப்பட்டுக் களிமண் ஞல் போர்க்கப்படும் ; பின் இது குடாக்கப்பட்ட மெழுகு உருகி சுடப்பெற்ற எழுதகத்துடன் கலந்து விடும். அதன் பின்னர் உருக் கப்பெற்ற உலோகத்தை அவ்வெழுத்தகத்தில் வளர்த்து மெழுகு மாதிரியின் உருவத்தை எடுக்கச் செய்யலாம். மொகஞ்சொதாரோ வில் உள்ளது போன்ற நடனமாதின் உருவம் விச்செய்முறையால் வார்க்கப்பட்டதா க்கலாம். இதன் மேற்பரப்பு பின்னர் செதுக் கித் துலக்கி அமக்கப்பட்டிருக்கலாம். விதானங்கொண்ட சிறு மாதிரி வண்டிகளும் இவ்வகையிலேயே ஆக்கப்பெற்றனவா யிருக் கலாம். மெழுகழிவு முறையோ அல்லது அதனிலும் நுண்மையிற் குறைந்த வகையில் தனித்தனித் துண்டுகளாக எழுதகங்களேப் பயன்படுத்தும் முறையோ குழிகொண்டு கைப்பிடி கவ்விய கருவி களைச் செய்வதற்கு ஒருபொழுதும் அாட்பா நாகரிகத்திற் பயன்பட வில்லை என்பது விசித்திரமானது; ஆயினும் இவ்வினை நுண்மை மிக்க முன்னைக்காலத்திலேயே சுமரில் கண்டுபிடிக்கப்பெற்று இம் மையத்திலிருந்து குழ்வரவிருந்த புலங்களில் விரைவில் மேற்கொள் ளப்பெற்றது.
அசப்பா உலோக வேலையாளரால் செய்யப்பெற்ற கோடரிகள் எளிய தட்டைவகைகளாகும். இவ்வகையே பண்டை உலகின் (கீழ் நாடு) பல பாகங்களிலும் உலோகக்கருவி ஆக்கத்தின் மிக்க முன்னைப் பருவத்தில் ஆக்கப்பெற்ற வகையாகும். இதனை மிக்க பூர் விக வகைக்குரிய திறந்த எழுத்தகத்திலிருந்து வார்த்துக் கொள்ள லாம் (உரு. 24). அசப்பா வகையினதைச் செவ்விதில் ஒத்த தட்டைக் கோடரிகள் சியல்க் III, இசார் 1c, கியன் WC, சுசா 1 ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவற்றின் பருவம் அண்ணளவில் பின்னை அல் உபெய்த்திலிருந்து மெச்ப்பொற்றேமியாவின் முன்ன?

Page 134
238 சிந்து, பஞ்சாப்
உறுக் பருவம் வரை உள்ள காலத்தோடு ஒத்ததாகும்.இக்கோடரி களை கி. மு. ஐந்தாம் ஆயிரத்தாண்டிற்குரியன என்று சொல்லா, விட்டாலும் நாலாம் ஆயிரத்தாண்டிற்குரியன என்று சொல்லலாம். ஆயின் மிக்க பூர்விகத் தட்டைவகைகளுடன், சியல்க் II இலும் சுசா 1 இலும் பரும்படியாக செம்பாலோ வெண்கலத்தாலோ ஆன தண்டுத்துளே கொண்ட வாய்ச்சிகள் ஏலவே செய்யப்பட்டன. அல் உபெய்த் பண்பாட்டிலும் யெம்டெற் நசர் பண்பாட்டிலும், உலோகத் தண்டுத் துளைக் கோடரிகளுள் மிக்க முன்னேறிய வகையின
a.
படம் 24 செப்பு, வெண்கலக் கருவிகள், அரப்பாப் பண்பாடு.
வற்றைக் குறிப்பனவான மட்கல மாதிரிகள் இருந்தன. மொகஞ்சோ தாசோவின் ஒத்த வகையினதான மண்மாதிரியொன்று மிகக் கீழ் மட்டத்தில் காணப்பட்டது உண்மையே; இதுவும் ஒரு தண்டுத் துளைக்கோடரிவகையினதைச் சுட்டுவதாயுள்ளது. ஆயின் ஏராள மான உலோக வேலைப்பொருள்களுள் இவ்வகை காணப்படாதது இது செயன்முறையில் பயன்படவில்லையென்பதைக் காட்டுவதா யுள்ளது. எனினும், சுமரில் தண்டுத்துளைக் கோடரியும், இவ்வாறு மற்றைக் கருவிகள் ஆயுதங்களுக்குத் தண்டமைத்தல் விதியைப் பிரயோகித்தலும் முன்னைக்குலமுறைக்காலத்தில் பெருவழக்கிலிருந் தன.
 

ஆகியவற்றின் நகர்கள் 239
எனவே இதிலிருந்து புலப்படுவது என்னவெனில் தட்டையான செம்பு அல்லது வெண்கலப் பூர்விகக் கோடரியோடியைந்த முன்னை இரானிய மரபினை வரித்துக்கொண்ட, யாதோ ஒரு பண்பாட்டி லிருந்து அசப்பா நாகரிகம் தோன்றியதென்பதும்; இந்தியப் பண் பாட்டில் இயல்பாயமைந்த பழமைபேண் அமிசத்தாலும், மேற் காசியாவினுள் தண்டுத்துளைவகை மிக நீண்டகாலம் வழக்கிலிருந்த இழத்தோடும் அயலமைந்த மெசப்பொற்றேமியாவோடும் நன்முறை யிலியன்ற தொடர்பின்மையினலும், இவ்வடிவு விருத்தியடைந்து மலாவில்லையென்பதுமாம். வடபேசியாவில் இசாரிலும் இத்தகைய ஒரு அமிசத்தை நாம் காணலாம் ; இங்கு இசார் II இல் தண்டுத் துளைவகைகள் முதன்முதலாக, சுமரிலிருந்து மிக்க ஊக்குப்பெற்ற பல பொருள்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன; இவை அக்கதி யன் காலத்திற்கு முற்படாதவை (கி. மு. 2300 வரை) யாயிருக்க லாம். இசார் II இல் இவ்வாயுதங்கள் தோன்றுதல், இந்தியாவிற்கு முதன்முதலாகத் தண்டுத்துளைக்கருவிகள் கொண்டுவந்த மக்களின் புடைப்பெயர்ச்சியோடு தொடர்புடையதென்பதை நாம் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
பழைமைபேணும் கட்டுப்பாட்டினுள் அடங்கியவராய், அசப்பா உலோகவேலையாளர் உளிகள், கத்திகள், மழிகருவிகள், ஈட்டிகள், மீன்கொளுவிகள், தட்டைக்கோடரிகள் முதலியவற்றை ஏாாள மாகத் திறமைமிக்க வேலைப்பாடுடன் படைத்தார்கள். இவர்கள் கட்டுப்பாடு தாமாக இவர் அமைத்துக்கொண்டதாம். ஈட்டிகள் பற்றிய அமைப்பில், உலோக வேலையில் முன்னேற்றமடைந்த மையங் கள் மிக விரைவில் விருத்திசெய்த நடுத்தண்டு இங்கு அமைய வில்லை. தட்டைக்கோடரிகளைப்பற்றி ஏலவே நாம் கூறியுள்ளோம். சானுதாரோவில், இக்கோடரிகள் இரானில் காணப்படும் பழைய வகைகளிலும் பார்க்க நீண்ட ஒடுங்கிய வடிவத்தை எடுப்பனவா யிருந்தன. இவை நல் இடுகாட்டில் காணப்பட்ட நீண்ட உளிகள், வட இந்தியாவில் காணப்பட்ட மற்றைக் கருவிகள் முதலியவற் அறுடன் ஒப்பிடக்கூடியனவாயிருந்தன. இவற்றை நாம் அடுத்த அத் தியாயத்தில் ஆராய்ந்துள்ளோம். இங்கு பல்வகையான வெண்கலங் கள் இருந்தன; ஆயின் வெள்ளி அகல்கள், கோப்பைகள், கோளைகள், பிற பாண்டங்கள் குறைவாக இருந்தன. இவற்றுள் ஒன்ருயினும்

Page 135
240 சிந்து, பஞ்சாப்
வினை நுண்மையுடையதா யிருக்கவில்லை. கவர்ச்சியில்லாச் சாதா ாணத்தன்மையில், இவை இப்பண்பாட்டின் மட்கலங்களை ஒத்தவை யாயிருந்தன. -
அாப்பாக் கலைப்பொருள், கைவினைப் பொருள்களிலிருந்து நாம் பெறக்கூடிய ஓர் உணர்வு சுவையின்மையே. இவை பற்றி நான் பிறிதோரிடத்தில் கூறியுள்ளது வருமாறு
“அர்ப்பாத்தலங்களும் பொருள்களும் பண்டைய பூர்விகப் பண் பாடுகளின் பண்பாடுருத இயற்கைத் திறனைக் காட்டாததுமின்றி, முன்னைக் குலமுறைச் சுமரின் உற்சாகமூட்டும் விண் ஆடம்பரத் தைக் காட்டாத, ஒரு நகரவணிக வகுப்பினரின் விரிவான அமைப் பைத் திறம்படக் குறிப்பனவாயுமிருந்தன ; அன்றியும் புலனிடான கலைப்பொருள் கைவினைப்பொருள் ஆகியவற்றின் எல்லாத்துறைகளி லூம், நகர் வாழ்வினர்க்குரிய கவர்ச்சியில்லாச் சாதாரணத் தன்மை யைக் காட்டுவனவாயுமிருந்தன”.
வினைத்திறனினன்றி வடிவமைப்பில் பழைமை பேணும் பயனிலா வினைப்பாடு அரப்பாப் புனைபொருள்கள் யாவற்றிலும் காணப்பட் டது. சிக்கலான வினை நுண்மைச் செய்முறைகள் அறியப்பட்டனவா யிருந்தன; நன்கு விளங்கப்பெற்றனவாயுமிருந்தன; ஆக்கப்பாட் டிற்கு வியத்தகு முறையில் அமைக்கப் பெற்றுமிருந்தன. ஆயின் நியமப்படுத்துகையாலும் நன்னெறிக்கிணங்கிப் பயன்பாட்டை மட்டும் அவாவும் உள்ளத்தாலும் விளைவுப் பலன் குறைந்ததாயிருந் தது. பல்நூற்றண்டுகளாக ம்ாருவியல்புடைய மரபுமுறை வடிவங் கள, மாண்டுமடிந்த உள்ளச்சிறையெனும் குறுகிய எல்லைகளுக்குள் வேலைசெய்யும், கலைஞரும் கம்மியரும் வினைநுண்மைத்திறனிலன்றி வேறு வகையில் புதுமை கண்டுபிடித்தறியார். அரப்பா நாகரிகத் தின் இயல்பு கோவில்கள், அரமனைகள், கல்லறைகள் போன்ற பெரிய நினைவகங்கள் படைப்பதைத் தடுப்பதாயிருந்தது. இவை எழுந்து இவற்றில் கலையியல் மலர்ந்திருக்குமேயானுல் உறையும் கடவுளர்க்கு விறையும் பகட்டான பெருவாழ்வு கொண்ட அரசர்க் குப் பெருமிதத்தையும் இவை அளித்திருக்கும். வெறுமையான செங்கல் சுவர்களின் மறைசுட்டும் இயல்பு, நகராண்களின் அணி பெருச் சிற்பக்கட்டிடங்கள், தெருக்களின் ஒரு தன்மையான ஒழுங் கமைப்பு, உயிரற்ற மரபின் புதுமைக்கிடங்கொடாத பழக்கக்

ஆகியவற்றின் நகர்கள் 24l
கொடுமை, எல்லாம் சேர்ந்து பண்டைக் கிழக்கின் வரலாற்றில், அரப்பா நாகரிகத்தை மிகக் கவர்ச்சியற்றவற்றுள் ஒன்முக்கிவிடுகின் றன. எவ்வாறு மாகாணங்களில் ஒருவர். உரோமப்படையில் குடி யியல் எந்திரவியல் வேலைகளைக்கண்டு போற்றுவாசோ, அவ்வாறே அரப்பா நாகரிகத்தின் மிகச் சட்டதிட்டமான ஆட்சியின் விளைவு களையும் மனமின்றிப் போற்றலாம். அசப்பா நாகரிகத்தில் வெறுத் தொதுக்கக்கூடிய அமிசமொன்றுளது என்று மட்டும் நான் இங்கு கூறலாம்.
எங்களுடைய அளவையை முடிக்குமுன் அாப்பாப் பண்பாட் டைப் பற்றிய பிறிதொரு அமிசமொன்றுண்டு. அாப்பா ஆட்சியின் அமைப்பின் பின்னல் அமர்ந்த ஆக்க நிறைந்த சத்தி முழுவதும் இலெளகிகமானதென்று சொல்லமுடியாது; நாம் ஏலவே கண்ட வாறு, இருதலைமாநகர்களிலுமமைந்த நகராண்களின் மதில்களுக் குளமர்ந்த யாதோ ஒரு சமயத்திற்குரிய குருமார்கள், அசப்பாப் பொருளியலை ஒழுங்குபடுத்தினர் என்பதற்குரிய சான்று வெறும் குறிப்பிலும் கூடியவகையில் அமைந்துள்ளது. மேற்காசியாவி லிருந்த பண்டைநாரிகங்களைப்பற்றி நாமறிந்தவற்றேடு நோக்கும் போது, குருமார்களாலோ குரு-அரசர்களாலோ இயங்கும் இத் தகைய ஆட்சி முழுவதும் இயையக்கூடிய ஒன்ருகும். அவ்விடங் களில் உள்ள எழுத்துப் பதிவுகள் தொல்பொருளியல் எல்லைகளுக் கப்பாலும் நம்மை நோக்கச் செய்துள; எனவே அரப்பா நாகரிகம் தனித்தன்மை வாய்ந்ததாயினும் மற்றைய உடனிணைந்த ஆட்சிகளி அலும் முற்றும் மாறியதாயிருக்கும் என்பது இயலக்கூடியதன்று.
இத்தகைய குருவாட்சி நடாத்திய சமயவிதிகளைப் பற்றி அாப்பா எச்சங்கள் சில நமக்கு ) ளவுகள் அளித்தன. மண்ணலான 6.j If T6YT மான பெண் சிற்றுருக்கள், பலுக்கித்தானிலிருந்தவாறுபோல், யாதோ ஒருவகை அம்மன் வணக்கம் இருந்தது ፍ] Gö} [ ] Jኝ)ዶ],ዛዞ፩, இவ்வுருக்கள் வீடுகளின் கிருமனைகளில் அமைந்தன என்பதையும் சுட்டுவனவாயுள்ளன. இன்னும் ஓரிடத்தில் பெண்ணுெருக்கியின் கருப்பையிலிருந்து தாவரம் தோன்றுவதை உருவகிக்கும் ஓர் முத் திரையும் காணப்பட்டது. இது தாவரமலர்ச்சியோடு சார்ந்த மண். தேவியின் கருத்தினை எடுத்துக் கூறுவதாயுள்ளது; இன்றும் கிராமப் பகுதிகளில் இத்தகைய பெண் தெய்வங்கள் இந்து சமயத்தோடு

Page 136
242 சிந்து, பஞ்சாப்
இயைந்து காணப்படுகின்றன; இவை நாட்டுத் திருமனைகளில் விளங்கும் கிராமத் தெய்வங்களாகும். மேற்கூறிய குருக்கள்மாரோ பிராமணரல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. பிராமணர் அதிகாசம் கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதியில் ஆரியர் படை யெடுத்து வந்த காலம் அளவு முற்பகுதிக்குரியது. ஆயின் முற்கூறி பவர்களோ கடவுளர்க்கு முன்பாகக் கடவுளர் நெறிகளையறிந்த புறச்சாதியினராக விளங்கினர்.
இது ஒன்று மட்டும்தான் இப்பொழுதுள்ள இந்து சமயத்தோடு கொண்டுள்ள தொடர்பன்று. மொகஞ்சோதாரோவிலும் அசப்பா விலும் இருந்தெடுக்கப்பெற்ற இலச்சினைகளில் ஆண்கடவுளொன் றின் ஒன்றிற்கு மேலாய உருவகிப்புகள் இருந்தன; இக்கடவுள் யோக இருக்கையில் கால் மடித்துக் குதியோடுகுதி பொருந்துமா றிருந்தார். மூன்று முகமும் கொம்புகளும் இவருக்கிருந்தன; ஓர் இலச்சினையில் இவரைச் சூழ நான்கு விலங்குகள் நின்றன. யானை, புலி, காண்டாமிருகம், எருமை என்பவை அவை. இவர் காலடியில் அவர் அரியணைக்குப் பக்கத்தில் சில மான்களும் நின்றன. விலங்கு களின் இறைவனுயும் இராசயோகியாயும் விளங்கும் பெருமானுகிய சிவனின் முதல் வடிவத்தையே இங்கு நாம் காண்கிருேம் என்பதில் ஐயமின்று. இவர் நான்முகம் உடையவராகக் கருதப்பட்டுத் தம் நான்கு விலங்குகளுடனும் நான்கு திசைகளையும் நோக்குபவராக இருக்கலாம். இது சாரநாதில் கி. மு. மூன்றும் நூற்றண்டிற்குரிய மெளரிய துரணத்தில் காணப்பட்ட குறியிட்டு முறையிலமைந்த யானை, சிங்கம், குதிரை, எருது முதலியவற்றை ஒருவர்க்கு நினை வூட்டும். கடவுளின் அரியணையோடமைந்த மான்களும் பிற்காலத் தெழுந்த மற்றைச் சமயத்தோடும் சாரநாதோடும் குறிப்பிடக் தக்க இன்னுெரு பிணிப்பைக் கொண்டு விளங்குகின்றன. ஏனெனில் இவ்வாறமைந்திருக்கும்பொழுது, இவை மான்சோலை உபதேச உருவத்தால் புத்தசோடு சேர்ந்த இன்றியமையாத் துணையென இவை விளங்குவதை நாம் காணலாம்.
இன்னும் யாதோ ஒருவகை இலிங்க வழிபாடிருந்ததென்பதற்கும் இங்கு சில சான்றுள. இதில் ஆண்குறி பெண்குறி உருவகிப்புக்கள் கலந்திருந்தன. மரங்களே வணங்கியதற்கும் சான்றுளது. அரசமரத் துக் கிளையொன்றில் கடவுள் ஒன்று காட்டப்பட்டுள்ளதிலிருந்து

ஆகியவற்றின் நகர்கள் 243
இது புலனகிறது. அரசமரம் இன்றும் புனித மரமாகக் கொள்ளப் படுகிறது. பண்டைக் காலத்தில் அரப்பாப் பண்பாட்டிலிருந்த பல மட்கலம் வண்ணிப்பார்க்கு அரசிலை நோக்குருவாக விளங்கியது. இவர்கள் ஊக்கினுல் இது குள்ளியிலும் நல்லிலுமே இடம்பெற்றது. இலச்சினைகளில் உள்ள உருவகிப்புக்கள் புண்ணிய விலங்குகளெனக் கருதப்பட்டவற்றைக் காட்டுகின்றன. இவற்றுள் திமிலுடைய எரு தொன்று. இன்றும் இதற்கு அந்த் உயர்நிலையுண்டு. இன்றும் இது அங்காடிகள் வழியே தடுப்பாரின்று தன் திருநிறைபதவியினல் வேண்டியவற்றை வாயிலிட்டுச் செல்வதை நாம் நோக்கில் இவ்வுலா கி. மு. மூன்மும் ஆயிரத்தாண்டில் இந்துநதி தீரத்திலும் ரவிதீரத் திலும் தொடங்கியிருக்கலாம் எனலாம். இலச்சினையிலுள்ள மற்றை வழிபாட்டு விலங்குகள், அவற்றின் வழிபாடோடியைந்த யாதோ விசித்திரமான " தொழுவங்கள் தணற்றட்டுகளுக்கு முன்பாக நின்றன. ܖ
இரண்டொரு இலச்சினைகளில் வீரன் ஒருவன் புலிகளையோ வேறு விலங்குகளையோ வெல்வதாகக் காட்டப்பட்டுள்ளது (உரு. 22 அடிக் கீழ் வலம்). இவை சுமர் விரர்களான எங்கீடு, கில்கமேஷ் என்பார் சிங்கங்களோடு போரிடுவதை நினைப்பூட்டுவனவாயுள. இதிலிருந்து அாப்பாப் பண்பாடு செழிப்புற்று விளங்கிய காலத்தில் அாப்பாவிற் கும் சுமருக்கும் இடையே சமய விடயங்களில் மென்மையான ஒரு பொதுமையிருந்தது அல்லது சுமர் அாப்பாவை ஊக்கியிருக்கலாம் என்று கொள்வதற்கு இடமுண்டு. ஆயின் மற்றை அமிசங்கள் யாவிலும், தொல்பொருளியல் சான்றிலிருந்து அறியக்கூடிய சமய மோ, மேற்காசியாவிலிருந்தறியப்பட்ட யாவற்றினும் குறிப்பிடக் தக்க முறையில் வேறு பட்டதும் ஆகியிலிருக்கே அடிப்படை அமி சத்தில் இந்தியப் பண்புகொண்டதுமாகும். இங்கு கோயில் ஒன் றிருந்தது என்று உறுதியாக நிறுவச் சான்றுகளில்லாமற் போன தற்குக் காரணம், மொகஞ்சோகாரோவிலுள்ள தாபி அத்தகைய ஒரு கட்டிட அமைப்பைக் கீழே மறைத்திருப்பதாலுமிருக்கலாம்அல்லது அாப்பாவில் செங்கட்டிக் கள் வரால் அத்தகைய ஒன்று அறவே அகற்றப்பட்டுமிருக்கலாம் என்பதாம். எனினும் இத்தலங் களிலோ பிற தலங்களிலோ இத்தகைய ஒரு கட்டிடச் சுவடு கிடை யாமற் போனது அதிசயமே. சுமர் கோயிலின் நியமத்திட்டம் அல்

Page 137
244 சிந்து, பஞ்சாப்
உபெய்த் காலத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டதென்பதை நாமறி வோம். அவ்வாறே பழைமைபேணும் ஒரு நாகரிகமான அாப்பா விலும் ஆதிகாலந் தொடங்கியே சட்டதிட்டமான அறியக்கூடிய கோயிலமைப்புத் திட்டமொன்றிருந்திருக்கலாம் என ஒருவர் எதிர் பார்க்கலாம். நகராண் பகுதிகளுக்கப்பால் அறியக்கூடிய திட்டங் களிலமையப்பெற்ற சிறு திருமனைகளையTகுதல் ஒருவர் எதிர்பார்க் கலாம். இவ்வாறு அமைந்த திருமனைகள் இல்லாமை சிறப்பா யமைந்த கோயில்களில் நடைபெற்ற மையப்பட்ட வழிபாட்டிலும் வீட்டுத்திருமனைகள் முக்கியம் வாய்ந்திருந்தன என்பதைக் காட்டு வதாயுள்ளது.
அாப்பாச் சமயத்திற்கும் இக்காலத்து இந்து சமயத்திற்குமுள்ள தொடர்புகள் மிக்க கவற்சியுடையன. ஏனெனில் இவை அரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியோடோ பின்னரோ ஆரியர் கொண்டுவந்த மரபுகளிலிருந்து உய்த்தறிய முடியாதனவற்றிற்கு விளக்கமளிப்பன வாயுள்ளன. பழைய கொள்கைகள் இலகுவில் இறக்கா ஆகி இந்து சமயச் சமூக அமைப்பு சங்கத மொழி பேசிப் படையெடுத்து வந்தோர்க்குக் கடமைப்பட்டதிலும் அரப்பாவிற்குக் கூடிய கட மைப்பட்டதாயிருக்கலாம்.
அண்மைக்காலம் வரை அசப்பா மக்களின் புதைப்பு முறைகளைப் பற்றிய நல்விவரம் அறியப்படாத ஒன்ருயிருந்தது. பண்டைக் கிழக்கு நகர்களில், குடிவாழ் பகுதிகளின் நட்டநடுவிலும், ஒரு விட்டில் வாழ்வோர் குடியிருக்கும்பொழுதே, அம்மனைகளுள்ளோ அவற்றிடையோ இறந்தாசைப் புதைக்கும் வழக்கம் சாதாரண மாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒன்ருகும். ஆயினும் மாசலும் அவ ரைப் பின்பற்றியோரும் கூறிய கூற்றுக்கள் எவ்வாருரயினும், ஆக, இரு முக்கிய தலங்களிலும், நகர்களின் புலத்துள்ளாக அரப்பா நாகரிகத்தோடொத்த காலத்தினவான, உண்மையான புதைப்புக் கள் காணப்பட்டனவென்று, நான் கருதவில்லை. இதுவும் இந்தியா வின் ஒரு தனித்தன்மையாயிருக்கலாம் அல்லது மிகக் கண்டிப்பான நகர் விதிகளால் வந்த ஒழுங்காயிருக்கலாம். மொகஞ்சோதாரோவில் ஒரு வரிசை எலும்புக் கூடுகள் காணப்பட்டன. இவை பல வயது களுக்கும் இருபாலார்க்கும் பல்வகை மனித இனத்தார்க்கும் உரியன வாய் இருந்தன. இவை தனித்தனியாயும் பதினன்கு பேர் வசையி

ஆகியவற்றின் நகர்கள் 245
லமைந்த தொகுதிகளிலும் காணப்பட்டன. இவை எல்லா வகைகளி அலும் உடல்கள் ஒழுங்கற்றுக் கிடந்தன. இதுவும் மற்றைச் சூழ்நிலை களும் இம்மக்கள் திடீரென வன்மையான முறையில் இறந்தனர் என்பதைச் சுட்டின அன்றி குழ்ந்தமைந்த ஒரு புதைப்புக்குழியைக் குறிக்கவில்லை. அாப்பாவில் நகர்ப்புறத்தில் இருபது மக்களுக்கு மேலானவர்க்குரியவை என்று கொள்ளப்படக்கூடியனவான மக்கள் கபாலங்களும் பிற எலும்புகளும் விசித்திரமான வகையில் இறுக்க மாக அடுக்கப்பட்ட முறையில் காணப்பட்டன. இவை எவ்வாறு இங்கு வந்தன என்பதற்கு ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆயின் இது ஒரு சாதாரண முறையிலமைந்த புதைப்பு அன்று. இந் நகரில் பிறிதொரு தலத்திலிருந்தும் எலும்புத்துண்டுகள் காணப் பட்டன. இவை பகுதிப் புதைப்புக்கள் எனக் கொள்ளப்பட்டன. ஆயின் இவை (பிந்திய) காலத்துக்குரியனவாயிருக்கலாம். மொகஞ் சோதாரோவில் உறுதியாக அறியப்பட்ட பகுதிப்புதைப்பு ஒன்று டன் மட்கலப்பாண்டம் ஒன்று காணப்பட்டது. இக்கலவகை அாப்பா நாகரிகத்தின் பின்னமைந்த ஒரு கட்டத்துக்குரியதென்று இப்பொழுது அறியப்படுகிறது. மாசல் அவர்களால் பகுதிப் புதைப் புத் தொகுதிகளைச் சார்ந்தவையென்று காட்டப்பெற்ற உடைந்த கலத்தொகுதி எவ்வகையிலும் பிரேதச் சடங்கு முறையில் பொருளு டையவாகத் தெரியவில்லை.
எனினும் மொகஞ்சோதாரோவிலும் அரப்பாவிலும் “சுட்டபின் சிதைவு பேணப்படும் குண்டங்கள்’ எனப்படுபவை காணப்பட்டன. இவற்றில் பலவகைப்பட்ட சில்லிகள், புனைபொருள்கள், அணிவகை கள், விலங்கெலும்புகள் முகலியன காணப்பட்டன. இவற்றுள் ஒரு பொழுதும் மனித எலும்புகள் காணப்படவில்லே. இகருக்கள் விடுகள் ஆகியவற்றின் கீழ் காணப்பட்ட இக்குண்டங்களை, முழுவதும் தக னஞ் செய்த உடல்களின் புதைவைப்புகள் என அகழ்வோர் கருதி னர். அல்லாமலும் இப்பொழுதுள்ள இந்து சமய வழக்கத்தோடி வற்றை ஒப்பிட்டு இவை ஆறுகளில் எறியப்பட்டன அல்லது வேறு பிற வழிகளில் தீர்த்துவைக்கப்பட்டன என்று இவர்கள் கருதினர். மனிதரின் புதைப்புக்களுடன் இவை யாதானும் சம்பந்தங்கொண்டி ருந்தன என்று விலர் கருதுமாறு நான் கொள்வதற்கில்லை. இவை ஒரு வேளை சில வடிகான்களைப் போலவோ அடைகுழிகளைப்

Page 138
246 w சிந்து, பஞ்சாப்
போலவோ அமைந்திருக்கலாம் என்றும் வேண்டா அழிவுப் பொருள் இவற்றை இறுதியில் வந்தடைந்தன என்றும் நாம் கொள்ளல் கூடும். அரப்பாவின் தென்கோடியில், நகாரண்களின் காவல்களுக்கு உட னண்மையில் அமைந்த கட்டிட வரிசைகளுக்குப் பின்னல் ஒரு நிரைப்பட அமைந்த (ஒருவேளே இவை தூம்புகளுக்குக் கீழாகவும் அமைந்தனவாயுமிருக்கலாம்) இக்கட்டிடங்கள் நாம் மேற்கூறிய பய
ணுக்கே இவை பயன்பட்டன என்பதைத் தெரிவிப்பனவாயுள.
ஆயின் 1937 இல் நகரானுக்குத் தெற்காக உள்ள வகைத்தலத்தில், நகரில் கட்டிடம் கட்டப்பெற்ற பகுதிக்கு அப்பால், முன்னர்க் காணப்பட்ட சுடுகாடு H' இற்கு அண்மையில் அரப்பாப் பண்பாட் டின் தேதியிலும் பிந்திய ஒரு காலத்திற்குரியதான, அரப்பா மக்க ளுக்குரிய இடுகாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புதிய இடுகாடு R 37 1946 இல் கலா. வீலரால் மேலும் ஆராயப்பட்டது. அப் பொழுது அது நகரின் முக்கிய வாழ்காலத்தோடு ஒத்த காலத்தது என்பதும் இடுகாடு H இன் முன்னைக் கட்டத்திலும் முன்னையது என்பதும் நிறுவப்பட்டது. 1937 இலும் 1946 இலும் ஐம்பத்தேழு புதை குழிகள் அகழப்பட்டன. இவை பற்றிய முழு அறிக்கை இன் இனும் வெளிவரவில்லை; எனினும் 1946 இற்குரிய பொருள்கள் (பத் துப் புதை குழிகள்) பற்றிய அறிக்கை ஏலவே பிரசுரிக்கப்பட்டுள் ளது (தகடு 4).
நியாயமான அளவு காலத்துக்கு இடுகாடு ஒடியாது பேணப்பட் டது என்பதற்குப் பிந்திய பதினெட்டுப் புதைகுழிகள் சான்றளித் துள்ளன. இவை முன்னைப் புதைகுழிகளுள் புகுந்தமைந்தவை. இன்னும் இவற்றுள் புகுந்த பிந்திய எட்டுப் புதைகுழிகளும் இதற் குச் சான்று பகர்வனவாம். ஆயினும் இவை முழுவதிலும் காணப் பட்ட புதைகுழிப் பொருள்கள் முழு உதாரணங்களிலும் ஒரே தன்மையதான கலாசாரத்தைச் சுட்டுவனவாயுள்ளன. புதைப்புக் கள் உடல் நீட்டியவையாயிருந்தன; கலை வழக்கமாக வடக்கு நோக்கியிருந்தது. பெரிய புதைகுழி ஒன்று மட்கலங்கள் கொள்ளு மாறு பெரியதாக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இவை பதினைந்தி லிருந்து இருபது வரை இருக்கும். சில நாற்பதுவரை அள தொகை கொள்ளக்கூடிய பெரியவாயிருந்தன. -

ஆகியவற்றின் நகர்கள் 24
சிலவேளைகளில் சொந்த நகைகளும் சிங்காரப்பொருள்களும் இறந்தோருடன் சேர்த்துப் புதைக்கப்படும். வலதுகை மூன்ரும் விரலில் ஒரு செப்பு மோதிரம், அட்டியல்கள், பாதசாங்கள், வளையல் கள், மணிக்கோவைகள், கண் மைக்கோல் இவையெலாம் இப்பொருள் களுள் அடங்கின. பன்னிரண்டு புதைகுழிகளுள் கைப்பிடிகொண்ட செப்பாடிகள் இருந்தன. ஒன்றில் ஒரு சிறு விளக்கும் இறந்தவரின் காலடியில் கோழியொன்றின் எலும்புகளும் இருந்தன.
1946 இல் மிகக் கவர்ச்சிகர மரப்பிணப்பெட்டியொன்றில் வைத்து ஓர் உடல் புதைக்கப்பட்டிருந்தது. இது ஒரு சிறுமியின் உடலா யிருக்கலாம். மாப்பெட்டி நாணல் பிணமூடுதுரிையால் சுற்றப்பட் டிருந்தது. இவற்றின் சுவடுகள் இன்றும் நிலைநிற்கின்றன (தகடு 5). இத்தகைய நாணல் பிணமூடுதுணிகள் பிணப்பெட்டிகள் பிரேதத் தைப் பேணுவதற்காக அமைந்தவையாம். இவற்றைப்பற்றிச் சுமர் மக்கள் முன்னைக்குலமுறைக் காலத்திலும் அக்கடியன் காலத்திலும் (அதாவது கி. மு. 2800 இலிருந்து 2000 வரை ; எனவே அாப்பா வோடு ஒத்தகாலம்) அறிந்திருந்தனர். எனவே R 37 இடுகாட்டில் இவ்வகையிலமைந்த புதைப்பு இரு நாகரிகங்களுக்குமிடையில் தொடர்பிருந்ததைக் காட்டுவதாகும் என கலா. விலர் அவர்கள் கருதினர்கள்.
இன்னும் இவ்விடங்களிலிருந்தும் தொலைவான இடத்தில் பிற இடு காடுகளும் புதைப்புத்தொகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன; இவை பகுதியளவிலோ முழுமையிலோ அரப்பாப் பண்டாட்டிற்குரியவா யிருந்தன. பகவல்பூர் அரசிலுள்ள கக்கர் ஆற்றுக்கருகமைந்த கொ வாரிலுள்ளதை இதற்குச் சிறப்பாகக் காட்டலாம். இங்கு ஓர் இடு காடு இருந்தது. இது குறைந்தது 200 யார் சதாமுடையதாயிருக்க லாம். ஸ்ரீன் இதைப் பரிசோதனை முறையிலகழ்ந்தபோது இங்கு பகுதிப்புதைப்புக்கள் காணப்பட்டன (அதாவது பிறிதோரிடத்தி லிருந்து கொண்டுவந்த எலும்புக் கூடுகள் இங்கு புதைக்கப்பட்டிருந் தன என்பதாம். இதல்ை இவை ஒழுங்கற்றவையாய் முழுமையாக அமையாமலிருந்தன). R 37 இடுகாட்டில் அரப்பாக் கடத்தொகுதி கள் பல இருந்தன. சில இடங்களில் ஒரேயொரு புதைகுழியில் இரு பத்தொரு கடங்கள் வரை காணப்பட்டன. அாப்பாவிலுள்ளவாறே தெரவாரின் இடுகாடுகள் பக்கத்திடல்களுக்கப்பால் இருந்தன. இவை
12-CP 3040 (4168)

Page 139
248 சிந்து, பஞ்சாப்
40 அடி உயரம் வரை குடியிருப்பின் சிதைவுகளைச் சுட்டுவனவா யிருந்தன. மக்கிரானில் சுற்ககன்டோரில் மூன்று பெரிய கடங்கள் கோட்டைச் சுவருக்கு வெளியே அதன் சிதைவுகளுக்குள் நேராகப் புதைக்கப்பட்டிருக்கக் காணப்பட்டன; இவற்றுள் தகனம் செய்யப் பட்ட மனித எலும்புகளும் சிப்பிச் சிறுபாண்டங்களும் இருந்தன. காப்பும் அணி செயப்பெற்ற தட்டும் இவை இம்மதில் இடியுண்டு வரும் காலமான நகரின் பிந்திய காலத்தில் புதைக்கப்பட்டனவா யிருக்கலாம். ஒரு புதைப்பில் காணப்பட்ட பலிபீடவகையின் சில்லி யிலிருந்து இவை அாப்பாப் பண்பாட்டிற்குரியனவாயிருக்கலாம் என்று கொள்ள இடமுண்டு.
சிந்தில் தாரோ குன்றிலுள்ள குடியிருப்பிற்குரிய காவல் மதில் களுக்கு வெளியே சிறு அண்டவடிப்பதுக்கைகளிலிருந்து குறிப் பிடத்தக்க சிறு கற்கட்டிட அறைகளை மகும்தார் அகழ்ந்து கண் டார். இவற்றுள் என்புக் கூட்டிற்குரிய சுவடுகள் இல்லையாயினும், இவை ஆகியில் அடக்கம் செய்யப்பெற்ற புதைப்புக்களைக் கொண் டிருந்த புதைகுழிகள் என்றும் இப்பொழுது அப்புதைபொருள்கள் உக்கிப்போயின என்றும் கொள்ளலே பொருந்தக்கூடிய விளக்க மாகும். இவ்வறைகள் சாந்திலாத சுவர்களால் ஆய செவ்வகங் களாம்; இவை சராசரி 10 அடியால் 3 அடி கொண்ட பரிமாணங் கொண்டவை; சுவர்கள் தரையிலிருந்து ? ೨]lಣ್ಣ. உயரமாயிருந்தன. இவை எல்லாமாக 12 அடியால் 20 அடிப் பரிமாணங் கொண்ட பதுக்கைகளால் மூடப்பட்டிருந்தன. இவற்றுள் பலிபீடங்கள்' கொண்டிருந்த மட்கலங்களும் அடங்கியிருந்தன. இப்பலிபீடங்கள் அாப்பாவகையை நிகர்த்த எளிய செங்கலவகையின.
மெகியிலுள்ள இடுகாட்டைப் பற்றி முன்னரே அதிகாரம் IV இல் விவரித்துள்ளோம். அங்கு கிடைத்த பொருள்கள் சில. அவை பற்றிய பதிவுகள் செப்பமற்றவை. ஆகவே அங்குள்ள அரப்பா அமிசத்தைக் கணித்தல் இலகுவாகத் தோன்றவில்லை. ஆயின் பூக் கடங்கள் போன்ற உருவினவும் தட்டை அடிக்கோப்பை ஒன்றும் உள்பட்டவை, வெறும் சிவப்புக்கலங்கள் சில அரப்பாத் தொடர்பு கள் கொண்டவையாயிருக்கலாம். பேசிய மக்கிரானில் எல்லைக்கப் பால் குராப்பில் உள்ள இடுகாட்டில் காணப்படும் மேற்கூறிய

ஆகியவற்றின் நகர்கள் 249
வற்றை மிக ஒத்த பண்டங்களுக்கு மேற்கூறிய கூற்று பொருந்து வதாகும். மெகியில் பிரேதச்சடங்கு தகனமாகும். குராப்பில் இது பகுதிப்புதைப்பாக இருக்கலாம்.
R 37 இல் காணப்பட்ட சுமர் பழக்கங்கள் என்று சொல்லக்க டிய வற்றை விட இத்தகைய பல்வேறு புதைப்புக்களுக்கும் நல்முறை யில் நேரொத்த வகைகளை எடுத்துக் காட்டல் இலகுவன்று. இறந் தோருடன் புதைக்கப்பட்ட பல்வகைப் பாண்டங்களைப் பற்றிய வகையில், ஏலவே நாம் விவரித்த பலுக்கித்தானின் நல்லிலுள்ள இடுகாடு, R 37 உடன் சில ஒப்புமைகள் கொண்டதாகும். நல்லில் இருந்த செங்கட்டியாலாய ஓரங்கொண்ட புதைகுழிகளோடு ஒப் பிடக்கூடியதாக R 37 இலும் ஒன்றிருந்தது. ஆயினும் மேற்காசியா வில் வரலாற்றுக்குரிய வரலாறு முன்னர்க்குரிய புதைகுழிகள் யாவற்றிலும் பல கடத்தொகுதிகள் காணப்படுவது மிகப்பொது வழக்காம். உதாரணமாக அரப்பாக் காலத்திற்குப் பின்னராக மக் கிரானில் சாகி தம்ப் இடுகாட்டிலும், அாப்பாவிலேயே பிற்காலத் துக்குரிய இடுகாடு R இலும் இவற்றை நாம் காணலாம்.
இப்பொழுது நாம் அரப்பா நாகரிகத்தின் இறுதிப்பாங்கினை, அதாவது பிறநாட்டாட்சிகளுடன் அது கொண்டிருந்த தொடர்பு, அதனுல் மேற்காசியாவின் ஒத்த காலத்து நாகரிகங்களோடு ஒப் பிடும்போது அது கொண்டிருந்த நிலைமை, அதன் காலம் முதலிய வற்றை நோக்கக்கூடியவராக உள்ளோம். தென்பலுக்கித்தானி லிருந்த குள்ளிப்பண்பாட்டின் வணிகருக்கும் சுமரின் முன்னைக் குல முறை வணிகருக்கும் தொடர்பிருந்ததென்பகை, IV ஆம் அதிகாரத் ல்ெ அறிந்தோம். இத்தொடர்பு கி. மு. 3800 இற்கு உடன் பின்னர் நேர்ந்ததாயிருக்கலாம். ஆயின் இவ்வளவு முன்னையதாகவே அாப்பா விற்கும் சுமரிற்குமிடையில் தொடர்புகள் எற்பட்டன என்று உறுதி யாய்க் கொள்ளல் இயலாது. மொகஞ்சோதாரோவில் மிக்க ஆதி. மட்டமொன்றில், தென்பலுக்கித்தானிலும் முன்னேக்குலமுறைச் சுமரிலும் காணப்பட்ட செதுக்கிய சுதீற்றைற்றுப் பாண்டத்தை ஒதத பாண்டமொன்றின் உடைசல் ஒன்று காணப்பட்டது, இதைச் சான்முகக் கொண்டு இந்நகரின் இக்கட்டம் முன்னைக் குலமுறைச் சுமரோடு ஒத்த காலத்தது என்று கூறலாம். ஆயின் அரப்பாப் பண்பாட்டிற்கும் குள்ளிப்பண்பாட்டிற்கும் இடையே தொடர்

Page 140
250 சிந்து, பஞ்சாப்
கள் அந்நகர்கள் செழித்தோங்கிய காலம்வரை ஒடியது இருந்தன என்பதை ஏலவே நாம் அறிந்துள்ளோம். குள்ளியிலிருந்தே இத் தகைய சுதீற்றைற்றுப் பாண்டங்கள் தோன்றின. இன்னும் இந்நகர் களின் வரலாற்றின் இறுதிக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க மிக நெருங்கிய முறையிற் குள்ளித் தொடர்பு சிறப்பாக இருந்ததென் பதற்கு உறுதியான சான்அறு உண்டு என்பதை நான் சுட்டிக்காட்டி யுள்ளேன். இக்குறிப்பிற்கு நான் ஆதாரமாகக் கொண்டது மட்கல மாகும். மொகஞ்சோதாசோவில் மிகப் பிந்திய மட்டங்களில் இரு சுதீற்றைற்றுப் பெட்டிகளின் (பாண்டங்கள்) உடைசல்களும் காணப்பட்டன. இவ்வகையானது தென்பலுக்கித்தானில் நீடூழி நிலவியது என்று நாம் கொள்ளல் வேண்டும். எனவே இக்கற்பாண் டங்களின் உடைசல்கள் அாப்பாப் பண்பாட்டுத்தலங்களில் காணப் பட்டமையைக் கொண்டு அவற்றைத் தேதி குறிக்கும் பொருள் களாகக் கொள்ளலாகாது.
சுமரில் அரப்பாத்தொடர்பு இருந்ததென்பதற்குத் தெளிவான உறுதியான அக்கடியன்காலம்வரை சான்றில்லை. இக்காலம் கி. மு. 2300-2000 வரையும் இன்னும் சிறிது பின்னருமான காலமாகும். இப்பருவத்திற்குரிய படிவுகளில் அாப்பாவிற்கே உரிய செதுக்கிய இலச்சினைகள் காணப்பட்டன; ஒரு முத்திசையின் பிற்பக்கத்தில் காடான ஒரு துணியின் பதிவொன்று காணப்படுகிறது. இவ்விலச் சினைகளும் இன்னும் அசப்பாவகையினதான உட்பதிவுவேல், அபிப் பாமுறைப் பொட்டுக்கள் கொண்ட கவறு. திமிலெருத்தொன்றின் கீற்றுருவகம் ஆகிய சான்றுகளும் அாப்பா வணிகர் சுமர்நகர் களில் இடங்கொண்டு, நெசவுப் பொருள்கள் உட்பட்ட பண்ட வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதைத் தெரிவிப்பனவா புள. ஆயின் இவ்வணிகத்தொடர்பு எவ்வளவு காலம் நீடித்திருந்த தென்பது தெளிவாக இல்லை. ஆயின் கி. மு. 2000 இற்கு உடன்பின் னர் இது நின்றுவிட்டதுபோல் தெரிகிறது.
ஆயின் இவ்வணிகத்திற்கு அனுசரணையான அமிசத்திற்குரிய சான்முக, இந்துப்பள்ளத்தாக்கில் அல்லது பஞ்சாபில் சமர்ப் பொருள்கள் காணப்படவில்லையென்பது ஒரு குறைபாடே. மொகஞ் சோதாரோவில் மூன்று உருளை இலச்சினைகள் இருந்தன. இவை தனிச் சுமர் வகையின; இத்தகைய பொருள்களில் புறநாட்டுச்

ஆகியவற்றின் நகர்கள் 25.
சுவைபெற்றவர்க்காக அரப்பா அருங்கற்சிற்பியொருவனல் இவை ஆக்கப்பட்டனவாயிருக்கலாம்; இவர்கள் ஒருவேளை சுமரில் பஞ்சு வணிகம் செய்து ஓய்வுபெற்றவராய் இருக்கலாம். இங்கு ஒரு சிறிய வெண்கல ஒப்பனை அணியம் இருந்தது. இது சுமர்ப்பொருளாக இருக்கலாம். R 37 இடுகாட்டிலிருந்த நாணல் பிணத்துணியும் சுமர்ப்பொருளாயிருக்கலாம். இவற்றைவிடச் சுமர்த் தொடர்புடை யன என்று திட்டமாகக் கூறக்கூடியது ஒன்றுமில்லை. சுமர்அாப்பா வணிக உடன்பாடு எவ்வாறிருந்தாலும் இங்கு அனுப்பிய பண்டம் பெரும்பாலும் அருவ ஏற்றுமதிகளாகவே இருந்திருக் கும். ஏலவே நாம் குறிப்பிட்ட செதுக்கிய காணலியன் மணிகள், சானுதாரொவிலேயே உற்பத்தியாக்கப்பட்டவை போலத் தோன் அவதாலும், அவற்றை ஆக்கும் விசித்திர வினேநுண்மை இன்றும் சிந்தில் நிலைபெறுவதாலும், கி. மு. மூன்றும் ஆயிரத்தாண்டில் இந்தியரால் புதிது கண்டுபிடிக்கப்பட்டவைபோல் தோன்றுகின் றனவாயினும், இவை சுமரிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதிசெய் யப்பட்டவையாயிருக்கலாம். எனினும் இவை சுமரில் முன்னைக்குல முறையிலிருந்து அக்கடியன் காலம்வரையும் இன்னும் பின்னரும், அரப்பாவில் காணப்படுவதை விடப் பெருவளவில் காணப்படுகின் றன. இன்னும் இவை சிரியாவில் ரஸ் சம்ரா, கோக்கசசில் திறய லெற்றி ஆகிய அளவு தொலைவிடங்களிலும் காணப்படுகின்றன. பிற் கூறிய இடத்தில் இது காணப்படும் இடம் மூன்மும் ஆயிரத்தாண் டிற்குரிய ஒரு புதைகுழியாயிருக்கலாம். இவ்வினை துண்மை பிற் காலங்களில் பிறர்சார்பின்றி மீளக் கண்டுபிடிக்கப்பட்டிருத்தலும் கூடுமாதலின் இவை சுமரிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவையாயிருக்கலாம்.
எனினும் அசப்பாவுடன் தொடர்புகொண்டிருந்த சுமர் தவிர்ந்த பிற நாகரிகங்களும் இருந்திருத்தல் வேண்டும். அவ்வாறே சுமர் தவிர்ந்த பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த பிற இறக்கு மதிகளும் இருந்தன. பொதுவில் அக்கடியன் காலம் தொடங்கித் தேதிகொள்ளக்கூடிய வட பேசியாவின் இசார் III பண்பாட்டில் அாப்பாத் தொடர்புகளைக் காட்டும் பல பொருள்கள் உள. இக் கூற்று அனே II இற்கும் பொருந்துவதாகும். இவ்விருதலங்களும் அசப்பா உலோக வகைகளைக் கொண்டுள்ளன. இன்னும் அனுேவில்

Page 141
252 சிந்து, பஞ்சாப்
சானுதாரோவில் உள்ள சிலவற்றுடன் ஒப்பிடக்கூடிய மண்வண்டி மாதிரி யொன்றுள்ளது. இத்தலத்திலிருந்து வரும் விசித்திர பேயன்சு மணியும் சா தெபியிலிருந்து வரும் உடைபெற்றமணியும் அரப்பாவிலிருந்தும் வந்திருக்கலாம் ; சுமரிலிருந்தும் வந்திருக்க லாம். இன்னும் இசார் III, சா தெபி ஆகிய இடங்களிலிருந்து பெற்ற செதுக்கிய காணலியன் மணிகள் சுமரைவிட இந்தியாவி விருந்து தோன்றியிருக்கலாம்; எனினும் இதற்குரிய சான்று அறுதியானதன்று. அண்மையில் ஸ்ரோன் அவர்கள் நிறமாலைப் பதிவு முறை வகுப்பீடு ஒன்று செய்து அதன் முடிவை வெளியிட் டுள்ளார்கள் ; இது அரப்பாவிலிருந்து படையமைவிலகப்படாத பேயன்சு மணிக்கும் கி. மு. 1600 வரைக் காலத்திற்குரியதும் கிறீற்றிலிருந்து பெற்றதுமான ஒரு மணிக்கும் உள்ள உட்கூற் முெற்றுமையைக் காட்டுவதாயுள்ளது. இவ்விவரத்தைப் பின்வரும் அதிகாரம் VI இல் கூறியுள்ளோம்.
அாப்பா, மொகஞ்சோதாரோ, சானுதாரோ ஆகிய இடங்களி லிருந்து சுருள் உச்சிகள் அல்லது விலங்கு உருவகங்கள் முதலிய கொண்ட தனிப்பட்ட முறையில் அணிசெயப்பெற்ற வெண்கல ஊசிகள் (கோல்கள்) கிடைக்கப்பெற்றன. இவை கோக்கசசிலிருந்து தேக்கித்தான் வரை பரவியிருந்த சுமர், அக்கது அரசாட்சிகளின் வட ஓரங்களிலமைந்த பண்படா உலோக வேலையுடைய ஒரு ரும் மாவட்டத்திலிருந்து வந்தவைபோல் தோன்றுகின்றன; ப்புலத்துப் பெருவேலை கி. மு. 2000 அல்லது பிந்திய காலத்திற் குரியதாயிருக்கலாம். இந்திய தலங்களின் பல மட்டங்களிலும் இவ்வூசிகள் காணப்பட்டன. இதிலிருந்து மேற்காசியாவின் பண் படாப் புலங்களிலிருந்து ஒரோவொருவேளைகளில் சிற்சில இறக்கு மதிகள், மற்றெல்லா வகைகளிலும் பிறபொருள் புகா அாப்பா ஆட்சியை அணுகின என நாம் அறியலாம்.
சுருங்கக் கூறின், அசப்பா நாகரிகம் பெருவளவில் தன்னிறை வுடையதாயும் தோற்றத்திலும், அதன் தனித்தன்மையான யாப் பமைவின் பண்பிலும் இயல்பிலும், சிறப்பாக இந்திய மூலமாக விளங்கியதாயினும், இடையிடையிட்டுச் சில புறத்தொடர்புகளு டையதாயும் விளங்கியதுண்மை. சுமருடன் கொண்ட வணிகம் முன்னைக்குலமுறைக் காலங்களில் குள்ளிப்பண்பாட்டைச் சார்ந்த

ஆகியவற்றின் நகர்கள் 253
தென்பலுக்கித்தான் வணிகரால் முதன்முதலாகத் தொடக்கப்பட் டது என்பது உறுதி. இவ்வணிகரே சுமர் நகர்களில் தொழிலகங் கள் நிறுவ அதைச் சுற்றி இந்திய வணிகர் குடியிருப்புக்கள் அமைத்து அங்கு தம் முறைப்படி வாழ்ந்து மரபின்படி சமயமும் பேணி வளர்த்தனர் என்பதற்காதாரமான சான்றுகள் பெறவும் நாம் அதிகம் இடர்ப்பட வேண்டியதில்லை. கி. மு. 2300 அளவி லேயே மிகச் செழிப்புற்றிருந்த ஒரு வணிகத்தை அாப்பா வியா பாரிகள் அமைத்திருந்தனர். இன்னும் ஊர், லகாஷ் ஆகிய வணிக மையங்களிலும் பிற இடங்களிலும் இவர்கள் அத்தலங்களில் வாழ்ந்த முகவரைக் கொண்டிருந்திருக்கலாம். இவர்கள் வணிகப் பொருள்களிலும் பதிவேடுகளிலும் தமக்குரிய இலச்சினைகளைப் பொறிக்கும் வழக்கமுடையவராயிருந்தனர். இவ்வணிகம் உண்மை யில் பேசிய குடாவழி கடல்மார்க்கமாயமைந்ததாகும். இதில் சுற் ககன்டோரிலமைந்த அாண்செய்யப்பட்ட நிலையம் ஒரு முக்கிய இடம் வகுத்திருக்கலாம். இந்நிலையம் குவாதர் குடாக்கடலிற்கும் குவாடரிற்கும் இடையமைந்த பல சிறு துறைகளிலிருந்து உள் நாடுகள் வந்த பல வணிகவழிகள் கூடுமிடத்தில் இருந்தன. இந்து முகத்திலும் பிற துறைகள் இருந்திருக்கலாம்.
மேற்றரை மார்க்கமாகவும் ஒரோவழிப் போக்குவாத்துக்களும் இருந்தன. புதியது முயலும் சாத்தொன்று தேக்கித்தானத்திற் குப் போயிருக்கலாம். இது வைடூரியம், பேரோசனை, கொண்டுவந் திருக்கலாம். பிறநாட்சிேயொன்றினை ஒர் அரும்பொருளாகக் கொண்டுவந்திருக்கலாம். தொலையிலுள்ள கக பியன் கடல் நாட்டி அலுள்ள குழப்பங்கள் துன்பங்கள் பற்றிய கதைகள் கொண்டுவந் திருக்கலாம். சுமரிலிருந்து வந்து தைகிரிசிலும் யூபிறற்றிவிலும் நங்கூரமடித்த கப்பல்கள் கொண்டுவந்த பொருள்களைப்பற்றி நாம் தொல்பொருளியல் ஒன்றில்ை மட்டும் அறிந்துகொள்ள Qpti) u.Jfr,97. வேறு பிற நாடுகளிலுள்ள பொறிப்புக்கள் இதைப்பற்றி என்றே னும் சில சொல்லல் கூடும். இந்தியப் பஞ்சுப்பொருள் ஒர் ஏற்று மதியாயிருந்தது என்பது உறுதி; இதற்குப் பதிலாகப் போதிய இறக்குமதியும் இருந்திருக்க வேண்டும்.
அரப்பா நாகரிகத்தின் ஆகிவரலாறு பற்றி இன்னும் நாம் ஒன் ஆறும் அறிய முடியாமலிருக்கிமுேம். ஆயின் ஒன்றுமட்டும் கூறலாம் ;

Page 142
254 சிந்து, பஞ்சாப்
அதன் செழிப்புமிக்க நிலைமை கி. மு. 2500 இற்கு முன்னராக இருக்க முடியாது; எழுத்துமுறையிலமைந்த பதிவுகளைக் கொண்டு நோக்கும்பொழுது மேற்கு நாடுகளுடன் அது தொடர்புகொண்டி ருந்திருக்கலாம் எனக் கொள்ளக்கூடிய காலம் கி. மு. 2300 இற். கும் 2000 இற்கும் இடைப்பட்ட காலமாகும். இக்காலத்தின் உடன் பின்னர் சுமருடன் கொண்ட வணிகத் தொடர்பு அற்றிருக் கலாம். இது அமுராபிக்கும் இழத்திற்கும் இடையே நிலவிய பூசல் களினல் எல்லேமார்க்கங்கள் ஒருபொழுது தடைப்பட்டதால் ஏற் பட்டிருக்கலாம். சுமரும் ஒருகால் மலைப்பகுதிகளிலிருந்து புகுந்த காடவர் படையெடுப்பால் வருந்தியிருக்கலாம். அவ்வாறே அாப்பா நகர்கள் பட்டினங்கள், பலுக்கித்தானின் கிராமங்கள் ஆகியவற் றின் தொல்பொருளியல் பதிவுகளிலும், அரசாட்சியும் அங்கு நில விய ஒழுங்குமுறைமைகளும் முடிவுற்றமைக்குரிய சான்றினைக் காண்கிருேம். காடவர் மெசப்பொற்றேமிய அரசுகளில் தாம் நடத் கிய அதிகம் வெற்றியீட்டித்தராத தாக்குதல்களுக்குப் பிந்தியே இங்கு தோன்றுகின்றன. இந்தியா கிழக்கே இன்னும் தொலைவி லிருந்த தன்மையால் சிறிது காலம் தப்பிப் பிழைக்கக்கூடியதாக இருந்தது. இதனுல் இந்துநதி பஞ்சாப் ஆகியவற்முேடமைந்த நாக ரிகம், ஓரிரண்டு நூற்றண்டுகளுக்கு தெய்விக நகரசண்களான நிலையான இரு மையங்களைச் சுற்றி, நெடுங்காலம் இருந்து வந்த முறைமையில் நிலவுமாறு விடப்பட்டது. ஆயினும் முடிவுகாலம் தாழ்ந்து வந்ததேயன்றித் தவிர்க்கப்படவில்லை. அடுத்த அதிகாரத் தில் அசப்பா நாகரிகம் எவ்வாறு முடிவுற்றது, எவ்வாறு காடவர் வந்தனர், என்பவைபற்றி ஆராய்வோம்.
அதிகாசம் V இற்குரிய குறிப்புக்கள்
அசப்பா நாகரிகத்திற்கு அடிப்படையான சான்றுகள் அகழ்வறிக் GM3535 Gifâd d GitarraOT—3 g. LDT SF@yah (Lappitti ), Mohenjo-daro and the Indus Culture (1931); g). IndiGs, Further Excavations at Mohenjo-daro (1938); 6Tair. G. LaGühgr†, Explorations in Sind (1934), இது சிறு தலங்களுக்கு, எம். எஸ். வாற்ஸ், Excavations at Harappa (1940) ; gi. g), at i, 6?ai, Harappa 1946 : R 37

ஆகியவற்றின் நகர்கள் 255
இடுகாட்டின் காப்பரண்கள்' Ancient India, எண் 3 (1947) 58130; g. LeảGas, Chanhu-daro Excavations (1943); GFCt5iai iš 56 g). Ltd;Gs, The Indus Civilization (1935) 6T65, Lugg) pair; af2. g6. a) foil, New Light on the Most Ancient Esat (1934), e.g. VIII; Grov. Glast", Some Ancient Cities of India (1945.) ,
அதி. I.
கபாலங்கள் பற்றிய அறிக்கைகளும் உடலியல்வகை பற்றிய குறிப்
புரைகளும் பல்வேறு அகழ்வறிக்கைகளில் உள்ளன ; பார்க்க, எச். எப். பிரெடெரிக்ஸ் உம் எச். டபிள்யு. முல்லரும், Anthropos, XXVIII (1933), 383-406; 19. arch). Gair, Racial Elements
in the Population (Oxford Pamphlets on Indian Affairs, 1944 373. 62, aujöGaëTi, Les Ossements Humains de sialk', in
Fouilles de Sialk, GaBr35G II, 113-192. Quetņöpo(3 traofulu Gör வகைக் கபாலத்திற்குப் பார்க்க, சி. எஸ். கூன், The Races of Europe (1939), 146-152, 400-509.
மேற்கூறிய நூல்களில் தானியங்கள் பற்றிய அறிக்கைகளும் அடங்கியுள்ளன. இவற்றைப்பற்றி இன்னும் விரிவாக எச். பீக் என்பார் Man இல் (1939, 36, 53) ஆராய்ந்துள்ளார். அசப்பா விலங்குகள் சிறப்பான ஒரறிக்கையில் ஆராயப்பட்டன; டி. பிரசாத், Animal Remains from Harappa (1936), saofu assiaO)556fgyli. இவைபற்றி உள.
மொகஞ்சோ காசோ அசப்பா ஆகியவற்றின் அமைப்புப் பற்றியும் நகராண்களின் சிறப்புப்பற்றியும் அறிய, பார்க்க. ஆர். இ. எம். Goodi, Ancient India, GT Går 3 (1947), 58-64, 74-77; 51T6ofululßņláš கும் மேடைபற்றியறியப் பார்க்க அந்நூல், 78. அரப்பாப் பண் பாட்டின் சிறு தலங்கள் பற்றியறியப் பார்க்க, மசூம்தார், Explorations in Sind (1934). 6of°6ör, An Archaeological Tour in Gedrosia, 60-71 (giả)4 + Gỏi G_Tỉ); An Archaeological Tour in Waziristan and North Baluchistan 55-64 (Li 'iGast'). கக்கர் ஆற்றுத்தலங்கள் பற்றி இதுவரை வெளியிடப்படாத செய்திகள் எனக்குக் கிடைத்தமைக்கு நான் திரு. கிருஷ்ணதேவா விற்குக் கடமைப்பட்டுள்ளேன். இதுபற்றி ஸ்ரீன் சுருக்கமாகக்

Page 143
256 சிந்து, பஞ்சாப்
கூறியுள்ளார் பார்க்க ; Geog. Journ, XCIX (1942), 173-182. அமிலனே பற்றிய என் அறிக்கை அங்கு நான் 1942 இல் நடத்திய வேலைகளின் முடிபுகளைக் கொண்டுள்ளது.
புலவர் மீர் என்பாரின் கவிதை பேராசிரியர் அகமத் அலி அவர் களின் மொழிபெயர்ப்பிலிருந்து பெற்றது. பேராசிரியர் ஸ்பைசர் gyalisaffair Gilfi).3a. It lugs, The Beginnings of Civilization in Mesopotamia என்பதிலிருந்து எடுக்கப்பெற்றது. இது Journ. Amer. Orient. SoC, (1939) என்பதற்கு அனுபந்தமாக அமைந்தது. அரப்பாச் சிற்பம் பற்றிய என் குறிப்புக்கள் நான் எழுதிய கட் டுரை ஒன்றிலிருந்து எடுக்கப்பெற்றது ; The Burlington Magazine CX (1948), 33-37, இது வெளியீட்டாளர் அனுமதியுடன் இணைக் கப்பெற்றது. அரப்பாக்கலை பற்றிய மேற்கோள் நான் எழுதிய BT66oßq5ögl GTOåæL'OL opg. Some Ancient Cities of India (1945). அடக்கத்திற்குப் பின்னர் அமைந்த கடங்கள் பற்றிய என் குறிப்புக்களுடன் ஆர். இ. எம். விலரும் இணங்கியுள்ளார்கள். R 37 இடுகாடு பற்றிய விவசமும் அதே அகழ்வறிக்கையில் உள்ளது. தாரோ மலையில் உள்ள அடக்கப்பதுக்கைகள் பற்றிய விவரம் 1943 இல் நான் நேரே பார்த்தறிந்த முடிபுகளாகும்; இவை மகும்தாரின் கூற்றுகட்கு ஆதரவாயமைந்தன.
சுமருடன் கொண்ட தொடர்புகள் பற்றிய சுருக்க விவரங்கள் 6T6ör 45 GGD) Tu?@jih Antiquity, XVII, 169—182, gigi. SG). GTLh. விலரின் கட்டுரையிலும், Ancient India எண் 3,78-80 இல் உள் ளன. செதுக்கிய காணலியன் மணிகள் பற்றியறியப் பார்க்க எச். பெக், Antiq. Journ, XIII (1933), 384-398; அாப்பாத்தலங் களில் காணப்பெற்ற மேல்நாட்டுப்புலத்து வழி வந்த ஊசிகள் கோல்கள் பற்றியறிய பார்க்க என் கட்டுரை, Ancient India, எண் 4 (1948), 26-40. பேயென்சு மணிகளுக்கு ஜே. எவ். எஸ். ஸ்ரோனின் கட்டுரை Antiquity, XXIII (1949), 201-205 பார்க்க.

அதிகாரம் VI இடர் நிறைந்த காலமும் மாநகர்களின் முடிவும்
குருவளிபோன்ற தாக்குதலை மேற்கொண்ட ஒரு பகைவன் : மாநகர் என்பதறியாத மக்கள். .
(ஊரில் மூன்றம் குலமுறை ஆண்டுத் தேதி) கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் ஆரம்பத்தில், வரலாற்று முன்னர்க் காலத்திற்குரிய மேற்கிந்தியாவில், சமவெளிகளில் அமைந்த அாப்பாவின் பெருநகர் நாகரிகமும் பலுக்கித்தான் மலை களில் அமைந்த எளிய வேளாண் சமுதாயமும் சேர்ந்த இரட்டைப் பண்பு, பெருவளவில் அதிகம் மாறுபாடின்றி, குறைந்தது, ஏழெட்டு நூற்முண்டுக் காலt Tகுதல் நிலைநின்றிருத்தல் வேண்டும். பலுக்கிக் குடியிருப்புக்களே கி. மு. 3000 அளவு முன்னராகவே தோன்றியிருக்கலாம். அவற்றுட் சில இதற்கு முன்னராகவும் தோன்றியிருக்கலாம். இக்காலத்திற்குரிய தொல்பொருளியற் பதிவு களில் வன்மையான மாற்றத்திற்குரிய சான்று ஒன்றும் காணப்பட வில்லை. கிராமங்கள் கைவிடப்பட்டன; வெள்ளப்பெருக்கொன்றின் பின் நகர்கள் மீளக் கட்டப்பெற்றன ; புதிய குடியிருப்புக்கள் கோலப்பெற்றன; ஆயின் மலைகளிடையும் தொலைப் பள்ளத்தாக்கு களிடையுமமைந்த சிறிய தன்னிறைவுபெற்ற சமுதாயங்களும் சம வெளிகளிலமைந்த அரப்பாப் பேரரசான பாரிய அமைப்பும் புற உலகத்தினல் யாதொரு வழியானும் பாகிக்கப்படாது தம் வாழ்வை நடாத்தி வந்தன.
ஆயின் இந்தச் சமுதாயங்களின் விருத்தியற்றதாயினும் அமைதி யான நீண்ட தனிமையை முறிக்க என்ன நேர்ந்ததென்பதை நாம் ராணுகுண்டை திடலின் படையமைவிலிருந்து அறிகிருேம். இத் தலத்தில் ஒடியா முறையிலமைந்த குடியிருப்பொன்றிருந்தது ; இது விருத்தியடைந்துவந்த ஒரு மட்கலப்பாணியோடு இயைபு பட்டதாயிருந்தது. இப்பாணி கி. மு. நான்காம் ஆயிரத்தாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கி அாப்பா நாகரிகத்தின் ஒரு பகுதி யான, ராகு IC கட்டம் அளவுவரை நீடுநின்றதாயிருக்கலாம். இது கி. மு. 2000 வரையளவு காலவரையாயிருக்கலாம். இவ்விடயத்தில்,
257

Page 144
258 இடர் நிறைந்த காலமும்
இக்குடியிருப்பு கொள்ளையடிக்கப்பெற்று எரியூட்டப்பெற்றதென் பதற்குச் சான்றுளது. இங்கு சாகு IC கட்டத்தின் அத்திவாா மட்டம் மேல் எங்கும் சாம்பல் ஈட்டங்கள் குவித்து கிடந்தன. இவை யாதோ ஒரு பெரிய தீ விபத்து நடந்தது என்பதைச் சுட்டுவனவாயிருந்தன என்று இத்தலத்தின் படையமைவு பற்றிய தம் விவரணத்தில் பிரிகேடியர் ரொஸ் அவர்கள் கூறியுள்ளார்கள். எரிபட்ட இப்படைக்கு மேலாக ராகு IV கட்டத்தில் உள்ள மட் கலங்கள் கீழமைந்தவற்றிலும் முழுவதும் வேறுபட்டனவாகத் தோன்றுகின்றன. காடான அகல்கள் வண்ண அணிகள் கொண் டவையாய்த் தோன்றுகின்றன. இவை செவ்விதி லாக்கப்பெற் றவையா யிருந்தன; விசித்திரமான பாணியிலமைந்தவையாயினும் கவர்ச்சியற்றவையாயிருக்கவில்லை'. இக்குடியிருப்பும் மீண்டும் எரி யினல் அழிக்கப்பெற்றது. மீண்டும் ராகு V இல் உள்ள மட்கல மாற்றம் எரியழித்த பண்டை ராணுகுண்டை தெல்லில் புது மக்கள் குடியிருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. இம் மட்கலம் வண் ணிக்கப்படாத வகையினதாய் மேற்பரப்பில் புடைப்பக் கோலங் கள் பதிக்கப்பெற்றதாய் விளங்கியது.
வன்மையையும் விரைவில் மாறும் மக்கள் கூட்டத்தினையும் சுட் டும் சான்று ராகு TV, சாகு V ஆகிய கட்ட காலங்களில் வட பலுக் கித்தானில் இடர்கள், காப்பின்மை, கொள்ளை, தீ வைப்பு, தாக்கல் முதலியன நிறைந்திருந்ததைக் காட்டுவதாயுள்ளது. ராணுகுண்டை யிலுள்ள சான்றுடன் நல்லின் சான்றையும் நாம் கூறலாம். இங்கு சோப்-கலக் குடியிருப்பின் இறுதிக்கட்டத் தலமும் தீயூட்டி எரிக் கப்பெற்றது. இது "சோர் டாம்ப்" என்று அழைக்குமளவிற்கு மிக்க வன்மையாக எரியுண்டது. "சோர் டாம்ப்' என்பது செந் திடல் எனும் பொருள்படும். இத்திடல் நெருப்பினுல் சிவப்பாய மண்ணிஏறல் இப்பெயர் பெற்றது. டபர் கொட்டில் தெல்லின் மேற் பாகத்தில் 6 அடிப்பாகம் குறுக்கு முகமாக வெளிக்கொண்டு வந்த போது நாவிற்குக் குறையாத தடித்த சாம்பற் படைகள் காணப் பட்டன. இது பிந்திய குடியிருப்புக்கள் பேரழிவுறு முறையில் மீள Sart எரியூட்டப்பெற்றன என்பதைக் காட்டுவதாயுள்ளது. இங்கு மேற்பரப்பில் ராகு V இற்குரிய மேலணிகொண்ட கலங்களின் உடைசல்கள் பல ஏராளமாகக் காணப்பட்டன. இத்தலத்திலும்

மாநகர்களின் முடிவும் 259
பிந்திய குடியிருப்புக்களுள் ஒன்று அரப்பா மக்களினுடையதாகும். இதிலிருந்து இக்குடியிருப்பு தாக்கப்பட்ட காலத்தை அண்ணள வில் அறிந்துகொள்ளலாம்.
தென் பலுக்கித்தானத்தில் பிந்திய குடியிருப்புக்களில் இத்தகைய தீயூட்டல் நடைபெற்றதற்குரிய பதிவுச் சான்று இல்லைப்போல் தெரி கிறது. ஆயின் இங்கு அகழ்வு பெரிய அளவில் நடைபெறவில்லை என் பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனினும் ஒரு தலத்தில், தர்ப்பத் திற்கண்மையில், சாகிதம்பிலுள்ள ஒரு சிறு தலத்தில், குள்ளிப் பண் பாட்டிற்குரிய கைவிடப்பட்ட ஒரு கிராமத்தின் சிதைவுகளில் ஓர் இடுகாடு அமைக்கப்பெற்றது. இதனையும் அப்புலத்தில் அரப்பா மக் கள் வந்திருந்த காலத்தோடொத்த காலத்தது என்று கூறலாம். அவ்விடத்தில் அாப்பா மக்களுக்குச் சிறப்பியல்பாயமைந்த மண்ணி யல் மகிழி வண்டியின் ஓர் உடைசல் காணப்பட்டதனுல் நாம் இவ் வாறு கொள்ளலாம். எனவே சாகிதம்ப் இடுகாடு குள்ளிப்பண்பாட் டிலும் அரப்பாவின் சில கட்டங்களிலும் பிந்தியதாகிறது. ஸ்ரீன் அகழ்ந்த பகுதியில் பன்னிரண்டு அடக்கப் புதைப்புக்கள் காணப் பட்டன. இவற்றைவிட ஏழு தொகுதிப் புதை குழிப் பொருள்களை யும் அவர் கண்டார்; ஆயின் இவற்றில் மனித எச்சங்கள் அறியப் படக்கூடிய வகையில் காணப்படவில்லை.
இன்னவை என்று அறியப்பட்ட அடக்கங்கள் யாவற்றினும் அவை முதுகுப் புறத்திலும் பக்கப்பாட்டிலும் கால்கள் மடிந்தபடி கிடந்தன. பெரும்பாலான இடங்களில் கடத்தொகுதிகள் புதை குழிகளில் கிடந்தன. எனினும் செம்பாலோ வெண்கலத்தாலோ ஆன கருவிகளும் அணிகளும் கண்மணிகளும் அல்பகதர் கோப்பை களும் காணப்பட்டன. ஸ்ரினிைைடய A, B எனும் இரு புதைப்புக் கள் மற்றையவற்றிலும் உயர்வகையான புதை குழிப்பொருள்கள் கொண்டிருந்தன. புதைப்பு A இல் காணப்பட்ட என்புக்கூடு வலது பக்கத்தில் முடங்கிக் கிடந்தவன் ஒருவனுடையதைப் போலிருந் தது. இப்புதை குழியில் ஐம்பதிற்கு மேலான மண்ணகல்கள், கோப்பைகள் கெண்டிகள், ஒரு செம்பு முத்திரை இலச்சினை, ஒரு கல்லுலக்கை, இரத்தினம் போன்ற ஒரு கண்மணி, ஒரு கல்லாயு தம், பன்னிரண்டு கடற்பொருளோடுகள் கொண்ட ஒரு தொகுதி முதலியன கபாலத்தோடு சேர்ந்து காணப்பட்டன. புதைப்பு B ஓர்

Page 145
260 இடர் நிறைந்த காலமும்
ஆண்மகனுடையது என்பது உறுதி. இதிலும் ஏராளமான மட்கடங் கள் இருந்தன. இவை ஐந்து அடுக்கு அகல்களுள் அடுக்கப்பெற்றி ருந்தன. இவற்றேடு வைரிேயம், அகேற்று, ஒனிக்சு மணிகளாலான அட்டியல் ஒன்று, செப்பு ஈட்டித் தலை ஒன்று, பாரிய துளைத்தண்டுச் செப்புக் கோடரி ஒன்று முதலியன இருந்தன. இவற்றேடும் மற் றைப் பிற புதைப்புக்களோடும் சேர்ந்த பாண்டங்கள் சிலவற்றுள் விலங்கென்புகள் காணப்பட்டன. இதிலிருந்து நாம் அறியக்கூடி யது என்னவென்றல் மரணச்சடங்கிற்குரிய இறைச்சிப் படைப்புக் களும் பிணத்தோடு சேர்த்துப் புதைக்கப்பட்டன என்பதாம்.
புதைப்புக்கள் எல்லாவற்றிலும் காணப்பட்ட மட்கலங்கள் ஒரு தன்மையானவாய்ச் சிறப்பியல்புடையனவாயிருந்தன (உரு. 25). இக்கலங்கள் வன்மையானவையாய் மெல்லியனவாய் நன்முறையி லமைந்தனவாயிருந்தன. இவை நசைநிறத்திலிருந்த இளஞ்சிவப் புவரை நிறங்கொண்டிருந்தன. சில தெளிந்த மஞ்சட் கபில நிறங் கொண்டிருந்தன. பெருவழக்காயிருந்தது தாட்பக் குறைவான ஓர் அகலாகும். இதற்கு ஒரு வளைய அடியிருந்தது. இதனை ஒத்தவை மிகப் பெரிய ஆழமான அகல்களாகும். சில ஒத்த சிறிய பருமனி லமைந்த கோப்பைகளாகும். இருவகையான கெண்டிகளிருந்தன. ஒன்று கோள வடிவினது. மற்றையது கூம்புருவினது. சில தட்டை யான கடங்களாக அமைந்தன. இவை சிறு கழுத்தும் கால்களும் பிதுங்கும் உடலும் கொண்ட புட்டில்களாக உருவெடுத்தன. அடி கொண்ட அகல்கள், நான்கு கால்கொண்ட ஓர் அகல், மூன்று அலகு களால் பொருத்தியாக்கப்பெற்ற முக்கலங்கள், சில மேற்கூறியவற் றிற்குப் புறநடையாயமைந்தவையாம்.
வண்ண அணி மெல்லிய தூரிகையொன்றினல் வண்ணிக்கப்பெற் றிருந்தது. வண்ணமையும் கறுப்பிலிருந்து மென்கபிலம் வரை சென்று செங்கபிலம் வரை நிறங்கொண்டிருந்தது. இதன் சிறப்பியல் liai அமிசம் வண்ணக்கோட்டின் மெல்லிய மயங்கிய ஒசமாகும்; இங்கு மெல்லிய வண்ண மை, துளை கொண்ட பிற்களத்துள் புகுந் துளறிவிட்டது. வினை நுண்மை திடமிகுந்ததாயிருக்கவில்லை. பல் காலும் ஒழுங்கற்றதாயிருந்தது. இவற்றேடு மிக நெருங்கிய ஒப் புமை கொண்டவை என்று சொல்லக்கூடிய இரானியக் கலங்களி
லிருந்த உறுகியான துடிதுடிப்பை நாம் இங்கு காண முடியாது.

மாநகர்களின் முடிவும் 26 இவ்விரானியக் கலங்களைப்பற்றி இனி நாம் ஆராய்வோம். பாண்
டங்களின் வெளிப்புறத்திருந்த அணிவேலை வழக்கமாக வலயங்களி விருந்தன. சில இடங்களில் பொட்டிப்புக்களில் இருந்தன. அகல்
"" కొత్త
リ芽ラエ
படம் 25, வஜனபொருள், சாகி-தம்ப் இடுகாடு.
களின் மையத்தில் சுவத்திகாவோ அல்லது அது போன்றதோர்
நோக்குருவோ இருந்தது. இவற்றின் மேலாக வலயக்கோலங்கள் அமைந்திருந்தன அல்லது முழு உட்பக்கமும் பகுதிப்படப் பிரிக்

Page 146
262 இடர் நிறைந்த காலமும்
கப்பெற்று அதனுள் வட்ட அமிசங்கள் அல்லது மோல்ராச் சதுரங் கள் என்பன புகுத்தப்பட்டிருந்தன. வெளிப்புறத்தில் இருந்த வல யப் பொட்டிப்பு அலங்காரத்தில் பெருவழக்கிலிருந்த செல்வரன் கள் நீள்சதுரங்கள் முக்கோணங்களைவிட, வலயமாகவும் பொட்டிப் பாகவும் அமைந்த சுவத்திகாக்களும் கோணச் சுருளிகளும் լ յայ6ծr படுத்தப்பட்டன. ஒரு பாண்டத்தில் சிவப்பிலும் கறுப்பிலுமான செவ்வான்களிருந்தன.
இம்மட் கலத்திற்கு நெருங்கிய ஒப்புமை கொண்ட கலங்கள் பம் பூரிற் கண்மையில் குராப்பிலுள்ள இடுகாட்டிலிருந்து வருகின்றன. இவை மேற்கே 150 மைல் தொலைவில் பேசிய எல்லைப் புறத்துக்கப் பால் உள்ளவை. இவற்றின் தேதி குள்ளி, அரப்பா ஆகியவற்றேடு அண்ணியதாயுள்ளது. குராப்பில் உள்ள பாண்டங்கள் மெகி இடு காட்டின் கடங்களோடு மிக ஒற்றுமை கொண்டவை (இவை அத் தலத்தின் பிந்திய கட்டத்திற்குரியவை. ஒருவேளை அத்தலத்தைக் கைவிட்டபின் உள்ள ஒரு காலத்திற்குரியனவாயு மிருக்கலாம்). பொதுவாக, குராப்பும் பம்பூரிற்கு அண்மையிலுள்ள இடுகாடுகளும் கி.மு. 2000 இனை முன்பின் அடுத்த அல்லது ஒருவேளை சிறிது பிற் பட்ட நூற்ருண்டுகளுக் குரியனவாயிருக்கலாம். ஆயினும் நன்கு நோக்கின் சாகிதம்ப் கலங்களும் ஒத்தவகைக் கலங்களும் பார்சி அலுள்ள சுசா I இலும் பிற தலங்களிலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்ற மஞ்சட் கபிலக் கலங்களிலிருந்தே ஆரம்பித்தன என்று கொளளலாம். இன்னும் காரநோக்கின் சமராக்கலங்களிலிருந்தும் உதயமாகின என்றும் சொல்லலாம். பாண்டங்களின் வடிவம், கோலங்களின் ஒழுங்கு, உண்மையான அணிக்கோலத்தொகுதி பெருவளவில் இங்கு மாறுபடாதிருப்பதை நாம் காணலாம். ஆயின் சாகிதம்பின் கலங்களில் காணப்படும் சீரிழிந்த கோலங்கள், சழித்த துளரிகை வேலை, மெல்லிய வண்ணமை, அவை பழைமையானவை யல்ல ஆயின் பழைமை பேணுவாருடையவை என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றனவாயுள்ளன. இதனுல் இவை இவற்றுடன் சேர்ந்த பொருள்கள் சுட்டுமாப்போல் பிந்திய ஒரு காலத்திற்குரி யன என்பதைக் காட்டுவனவாயுள்ளன. இது தென்பேசியாவில் ஒருவேளை கி. மு. ஐந்தாம் ஆயிரத்தாண்டிலிருந்து தொடங்கி இரண்டாம் ஆயிரக்தாண்டின் ஆரம்பம் வரை நிலைநின்ற ஒரு மர

மாநகர்களின் முடிவும் - 263
பின் உறுதியான தோற்றத்தை நமக்குப் புலப்படுத்துவதாயுள்ளது. தம் முன்னுேடிகளிலிருந்து உருவிலும் செய்பொருளிலும் மாறு படாதவையாய் விளங்குபவையான, இடுகாட்டிலிருந்து பெற்ற சிறிய கூம்புருவ அல்பசுதர் பாண்டங்களும் இம்மாபிற்கே உரிமை
llit”.D.
இடுகாட்டிலிருந்து பெற்ற பிற பொருள்களுள் புதைப்பு B இலி ருந்து பெற்ற துளைதண்டுப் போர்க்கோடரியும் செப்பீட்டியும் இது ஓர் போர்வீரனின் புதைப்பென்பதைப் புலப்படுத்தின (உரு. 26). ஈட்டித் தலை 9 அங்குல நீளமானது; இதற்கு நடுத் துண்டிருக்க வில்லை. இது அரப்பா வகைகளை நினைவூட்டுவதாயிருந்தது. ஆயின் வயிரப்படச் செய்த கோடரி 12 அங்குல விட்டமுடைய துண்டுத் துளை கொண்டது. சுமர், அக்கது முதலிய பகுதிகளிலுள்ள வகை களிலிருந்து ஆயதுபோல் தோன்றுகிறது. ஆயின் இவற்றேடு அண் ணிய வகையில் ஒத்த வகையினவானவை தென்னிரசியாவில் மைகப், சார்ஸ்காயா ஆகிய இடங்களிலுள்ள கீழை நாட்டு நாக ரிகங்களின் எல்லையோரங்களுக் கப்பாலுள்ள காடவர் கிளையினரின் தலைவர்களுடைய புதைப்புகளிலிருந்து பெறப்பட்டன; இது குறிப் பிடத்தக்க ஒரு விடயமாகும். சுதெப்பியிலும், மெசப்பொற்றேமி யாவிலும் உள்ள மிக்க நிலைகொண்ட சமுதாயத்தவரின் எல்லைகளி லும் பரந்திருந்த செவ்விதில் அமைவுபடாத அரைகுறைக்காடவர் சமுதாயத்தினரிடையே, ஆகியில் சுமர் உலோக வேலையாளரிடை தோன்றிய இவ்வகைப் பொருள்கள், பெருவளவில் விரைவில் பா வுந் தகையனவாயிருந்தன.
சாகிதம்பிலிருந்து பெற்ற செப்புமுத்திரை இலச்சினைகள், இவற் அறுள் ஐந்து கண்டறியப்பட்டன, மேற்றிசைத் தொடர்பு பற்றிய வகையில் மிகக் தெளிவானவையாம் (உரு. 86). அவை யாவும் தனி யொரு வகையின; இன்னும் பலுக்கித்தானிலிருந்து பெற்ற மற்றுத் தனி ஒன்முனது நல்லில் உள்ள சோர் டாம்பிலிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாம். இப்பகுதி எரியூட்டப்பட்டது என் னும் உண்மையுடன் இது தொடர்பு கொண்டது என நாம் கொள்ள லாம். இவை யாவும் வட்ட வடிவின; முகத்தில் எளிய கோலங் கொண்டவை ; மேலெழும் உலோகத் துணுக்குகளால் பகுதிப்படக் கட்டப்பட்டிருந்தன. பொதுவில் இவ்வகையை யொத்த இலச்சினை

Page 147
264 இடர் நிறைந்த காலமும
கள் இசார் IIb, 11b, அனே I, சுசா ஆகிய இடங்களில், கி.மு. 2000 அல்லது சிறிது பின்னரான ஒரு காலத்தைச் சுட்டும் குழ லில் காணப்பட்டன. ஒத்த இலச்சினை ஒன்றே சிந்தில் காணப்பட்
ulib 26. செப்புப் பொருள்கள் சாகி-தம்ப் இடுகாடு.
டது எனலாம். இது அரப்பர்ப் பருவத்திற்குப் பிந்திய பருவத்திற் குரியது. எனவே, சாகிதம்ப் இடுகாட்டிலுள்ள இந்த உலோகப் பொருள்கள் கி.மு. 2000 கிற்குப் பின்னரான ஒரு தேதியைச் சுட்டு
 

மாநகர்களின் முடிவும் 265
கின்றன என்றும் மேற்கு நாடுகளிலிருந்து வந்த இயக்கங்களோடு தொடர்புடையன என்று கொள்வதற்கும் மேற்கூறிய சான்று மிக உறுதியான ஆதாரமாகவுள்ளது.
இப்பொருள்கள் வணிகத்தைக் குறிக்கின்றனவா? இன்றேல் புலம்பெயர்வைக் குறிக்கின்றனவா ? இனிவரும் மற்றைச் சான்று களையும் எதிர்பார்த்து நாம் நோக்குவோமானுல் புலம் பெயர்வே மிகச் சாத்தியமானதுபோல் தோன்றுகிறது. அல்லாமலும் மட்கலம் ஓர் உள்ளூர் மசபுப் பொருள்போல் தோன்றுவதால் புலம் பெயர் வும், அதிக பாரம் சுமக்காது, எடுத்துச் செல்லக்கூடிய இலச்சினை கள், ஈட்டிகள், போர்க் கோடரிகள் முதலியவற்றுடன் மிக எளி தான சுமையுடன் சென்ற மக்களையே சுட்டுவதாக உள்ளது. இவர் கள் போர்க் கூட்டத்தினராயிருத்தல் கூடுமோ? போகும் வழியில், கடம் செய்யக்கூடிய பெண்டிரை அடிமைப்படுத்தி மணந்து உறைந் தனரோ ? சாகிதம்ப் இடுகாடு பலுக்கித்தான் கிராமங்களைச் சூறை யடித்ததோடு யாதோ ஒரு வழியால் தொடர்புடையதாயிருக் குமோ ? கபாலங்கள் எதற்கும் போதிய ஆதாரங்களாகா. அவற் றின் பரிமாணங்களிலிருந்து உய்த்தறியக் கூடியவற்றில் நாம் முழு நம்பிக்கை வைத்தலாகாது. ஆயின் ஈட்டியுடனும் கோடரியுடனும் புதைக்கப்பெற்ற சாகிதம்ப் மனிதன் கபாலத்தை ஆய்ந்த உறுப் பியலறிஞர், அதில் கலப்புத் தோற்றத்தின் அறிகுறிகள் இருந்தன என்றும் அமிசங்களில் அது கசுபியன் அல்லது நோ டிக் வகைக் கபாலத்தை, அண்ணளவில் ஒத்த போக்கினதாய் உள்ளதென்றும் கூறியுள்ளார். இப்பொழுதுள்ள நிலைமையில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பெற்ற அடைமொழி பொருத்தமற்றதாயினும், சாகி தம்ப் இடுகாடு, பழங்குடி மக்களினுடையதென்று சொல்வதிலும் பார்க்க அப்புலக்கிற்கு வணிக முறையில் பெறப்பட்ட புதுவகை இலச்சினைகளுடனும் ஆயுகங்களுடனும் புதிதாக வந்தோருடைய தென்று கொள்ளல் பொருக்கமுடையதாயிருக்கலாம்.
இதுபற்றிச் சென்ற அதிகாரத்தில் குறிப்பிட்ட சான்றினைக் கூற லாம் ; மொகஞ்சோதாரோவின் இறுதிக் கட்டத்தில் அரப்பாப் பண் பாட்டிற்கும் குள்ளிப் பண்பாட்டிற்குமிடையே திடீரென்று e-թ6լ பலமானதையும் நகர் மக்களின் பிந்திய மட்டங்களில் கென் பலுக்
கித்தான் வகையினவான மட்கலங்கள் கற்பாண்டங்கள் தோன்றின

Page 148
266 இடர் நிறைந்த காலமும்
என்பதையும் கண்டோம். பலுக்கித்தானில் நிலைமை குழப்பமுற்றி ருந்தது என்பதனுடனும், அப்புலத்தின் தென்பாகத்தில் அமைதி யான முறையில் குடியேறிய வேளாண் மக்கள் என்று கருதக் கூடாதவர்கள் புகுந்து தம்மை நிலைநாட்டிக் கொண்டனர் என்பத னுடனும் மேற்கூறிய சம்பவம் முற்றும் இணங்காத ஒன்முக இருக் குமா? போலன், லக்புரி, கச் பள்ளத்தாக்கு ஆகியவற்றிற்கூடாக, தாம் நெடுங்காலம் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நகர்களில் புகலிடம் நாடி இந்துச் சமவெளியுள் நுழைந்த அகதிகள் அன்றி ருந்தனரோ ? இது உண்மையாயின், இந்நகர்கள் நீள்காலம் தப்பி யிருக்கவில்லை. ஏனெனில் மேற்புலத்திலிருந்து வந்த மக்கட்கு மலைப் பிரதேசங்கள் ஒரு சிறு பொழுதைய தங்கிடமாக மட்டுமே இருந் தது என்பதற்குச் சிந்திலிருந்து தெளிவான சான்று கிடைத்துள் ளது. ஒருகால் கிர்தார் அடுக்கத்தைக் கடந்து அவர் கீழ் நோக் கியதும் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு மிக உவந்தனவாயிருந்த செழித்த சமுதாயங்களைக் கண்டிருப்பர். இவற்றெடு ஒப்பிடும் போது பலுக்கிக் கிராமங்கள் வெறும் பாழாக அவருக்கு விளங் கின. அவர் இப்பொழுது ஒரு நாகரிகத்தின் எல்லைப்புறத்திலிருந் தனர்; ஆயின் அவ்வரசோ பாதுகாப்புத் திறனற்றதாய் எதிர்த்துத் தாக்குதற்கு ஆயத்தமில்லாததாயிருந்தது. சானுதாரோ, யுகர், சிந்தின் லொகம்சோதாரோ ஆகிய இடங்களில் அரப்பா நகர்கள் அழிந்த வாற்றினைத் தொல்பொருளியல் ஓரளவிற்குக் காட்டியுள் ளது. இவை ஒவ்வொன்றிலும் படையெடுத்தோர் கொள்ளையடித்த பின் தாமே இடங்கோலி உறைந்தனர்.
யுகர் தலம், சிந்தில், இவ்வகையில், வலிது குடிபுகுந்த சிறப்பு வகையான பண்பாட்டிற்குத் தன் பெயரை அளித்துள்ளது. இது இங்கு உள்ள மூன்று தலங்களிலும், கைவிடப்பெற்ற அாப்பாக் குடி யிருப்புக்களின் இடிபாடுகளுக்குள், அவற்றின் மேலாக படையியன் முறையிலமைந்து காணப்படுகிறது. ஆயின் சானுதாரோவில்தான் மிகப் பெரிய சான்றுகள் தோன்றுகின்றன. எனவே, அடுத்து வரும் விவரணங்களில் அத்தலத்தைப் பற்றியே நாம் முக்கிய கவனம் செலுத்துவோம். தெளிவுபடுத்தற் பொருட்டு வேண்டிய இடங்களில் மற்றைத் தலங்களிலுள்ள சான்றுகளையும் எடுத்தாளு

மாநகர்களின் முடிவும் 267
வோம். சானுதாரோவிலுள்ள படையமைவினை, இவ்விடயங்களில் மேற்கொள்ளும் சாதாரண வழக்கைப் பின்பற்றிப் பின்வருமாறு கூறலாம் :
சானுதாரோ Ia
சானுதாசோ 94(JL'UTU LGöTLT(8
சானுதாரோ 10)
சானுதாரோ I யுகர் பண்பாடு
சானுதாரோ I யங்கர் பண்பாடு இத்தலத்துக் குடியிருப்பின் இறுதிக் கட்டத்தைப் பற்றிப் பின்னர் விவரிப்போம். இப்பொழுது எம் அவதானம் கட்டம் சானுதாரோ I ஐப் பற்றியதாகும். இது யுகர்ப் பண்பாட்டு மக்களின் ஓர் குடி யிருப்பாகும்.
இக்குடியிருப்பு அாப்பாவின் IC கட்டத்து இடிபாட்டில் வலிது
புகுந்திருந்த ஒரு மக்களுக்குரியவற்றுள் ஒன்முகும். சில இடங் களில் தலங்களின் பிற இடங்களிலிருந்து களவெடுத்த செங்கட்டி உடைசல்களிலிருந்து சில விடுகள் அரைகுறை முறையில் மீளக் கட்டப்பெற்றன எனினும் மற்றைக் குடிசைகள், பாய்கள் போன்ற அழியும் பொருள்களால் கட்டப்பெற்றிருந்தன. இவை ஒரு செவ் வகச் செங்கட்டித் தரையைப் பருமட்டில் சுற்றி அமைந்திருந்தன.
இவற்றுள் ஒன்று 17 அடி நீளமும் 8 அடி அகலமுமுடையதாயிருத்
தது. இச்செங்கட்டித் தரைகள் கூடாரங்களுக்குரிய தளங்களாக அமைந்தனவென்றும் கொள்ளலாம். எல்லாவற்றையும் நோக்கு மிடத்து அவை மிக்க சீரிழிந்தவை போலவும் நிலையற்றவை போல வும் தோன்றின. கணப்பிடங்கள் கவர்ச்சிகரமான புதிய அமிசங் களாகும். இவை சிலவேளைகளில் வாயில் வழிகளிலோ, இடிபாடுற்ற விட்டுச் சுவர்களின் மாடங்களிலோ, அல்லது சிறு செவ்வக முறை யிலோ வைத்துச் செம்மையற்ற முறையில் கட்டப்பெற்றிருந்தன.
இப்பூர்விகக் குடியிருப்புக்களால் பிரதிபலிக்கப்பட்ட பொருளி யற் பண்பாடுகளுள் aT Tft GTt Df60T பிறப்பியல்பு கொண்ட மட்கலங் கள், முத்திரை இலச்சினைகள், காப்பணிகள், மணிகள், உ.லொகக் கருவிகள் ஊசிகள், என்புச் சருமானுாசிகள், ஒரு மட்கலத் தலையணை (உரு 27) முதலியன காணப்பட்டன. இது ஒரு விசித்திரமான

Page 149
268 இடர் நிறைந்த காலமும்
தனிச் சிறப்புடைய ஈட்டமாகும். இது தான் இடங்கொண்ட அரப் பாப் பண்புடன் நெருங்கிய முறையில் எதிரொப்புடையதாகும். ஆயினும் அதனுடன் தெளிவான தொடர்பற்றதாயுமிருக்கவில்லை.
படம் 27. கோடரி, ஊசிகள், இலச்சினைகள், பிற, யுகர்ப் பண்பாடு
 

மாநகர்களின் முடிவும் 269
மட்கலம் ஒரு மஞ்சட் கபிலக் கலமானது; இது கறுப்புச் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களாலுமாய பல்வகைக் கோலங்களைக் கொண்டு விளங்கியது. இவற்றின் வடிவங்களுள் சிற்றடிச் சாடி களும் புட்டில்களும் இருந்தன. இவ்வகைகள் டலுக்கித்தானி லுள்ளனவற்றேடு ஒப்பிடக் கூடியன; ஆயின் விளிம்பில் வளையக் கோலங்கொண்ட பலிபீடங்களும் பலித்தட்டுக்களும் அரப்பா வழித் தோன்றல்களாக அல்லது அாப்பா ஊக்குப் பெற்ற குள்ளிப பண்பாட்டு ஊக்கின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அலங் காாங்களின் வகை பல்வகைப்பட்டதாயிருந்தது. கேத்திரகணித வடிவங்களும் பாணிப்படுத்திய தாவர உருவங்களும் அலங்காரங் களாக அமைந்தன. இத்தாவரங்கள் குள்ளிக்கலங்களில் இருந்த மரங்களோடு மிக்க ஒப்புமை கொண்டவையாய் விளங்கின. அகன்ற பிளம் சிவப்பு நிறக் கிடைத்தளப் பட்டைகள் கொண்ட மற்ற எளிய கேத்திரகணிதக் கோலங்கள் அம்றிப்பாணியை நினைவூட்டு வனவாயிருந்தன. கறுப்பிலும், துலக்கமான சிவப்பிலும் நெருக்கி யமைந்த செவ்வரன்கள் தென்பலுக்கித்தானிலுள்ள சயக்கிலிருந்து பெற்ற ஒரு சில்லியிலிருந்தனவற்றை மிக ஒத்தன. இன்னும் மற் றைக் கோலங்களும் இவ்வாறே ஒப்பிடப்படக்கூடியனவாயிருந்தன. எடுத்துக் காட்டாக யுகரிலிருந்த பல்வளையங்களும் பந்தும் தண் டும் கொண்ட கோலங்கள் சார்-பரொமிலும் யை-டாம்பிலும் காணப் பட்டன. சானுதாசோவில் காணப்பெற்ற இரு விலங்கு உருவங் களுள் ஒன்று வட பலுக்கித்தானில் பெரியனுேகுண்டையில் உள்ள ஒன்றைப் போன்றிருந்தது.
எனவே பொதுவாக நோக்குமிடத்து சிந்துத் தலங்களிலிருந்து பெற்ற யுகர் மட்கலங்கள் பல்வகை அம்சங்கள் கொண்டு விளங் கின; இவற்றுட் பெரும்பாலும் அம்றிப்பண்பு அடிப்படையாய் அமைய குள்ளியின் நோக்குருக்கள் மிகுந்து விளங்கின. அரப் பாவின் நோக்குருக்களும் இதில் கலந்தன என்றும் சொல்லலாம். அாப்பா மக்களல்லாதவரை அடிப்படையாகக் கொண்டதும் தென் பலுக்கித்தானிலிருந்து சில புதிய அடி அமிசங்களேப் பெற்றது மான ஓர் உள்ளூர்வகை மக்கட் குழுவிடமிருந்து நாம் எதிர்பார்க் கக்கூடிய ஒன்றையே நாம் இங்கு :ಶ್ನೋತ್ಲಿಶ್
நோக்குருக்கள் மேற்பாலிருந்து வந்தவையெ f"Lð 6:f'Cf

Page 150
270 இடர் நிறைந்த காலமும்
லாம். உதாரணமாக இரட்டைச் சுருள்கள் கொண்ட செடி 'சியல்க் III இலும் இசார் 1b இலும் உள்ளன. ஆயினும் இது பின்னரும் பிற்கூறப்படும் மக்கிரானிலுள்ள யிவன்றியின் பிற்காலத்துக்குரிய இடுகாட்டிலும் காணப்படுகிறது. முழுமையையும் நோக்குமிடத்து, அாப்பாப் பேரரசு வீழ்ந்தபின் புகலிடம் தேடும் கிளைச்சாதியினர் பலுக்கித்தானை விட்டுச் சிந்தில் குடிகோலும்போது நிகழ்ந்த மக் கள் பெயர்ச்சிகளும் குழப்ப நிலைகளும் சேர்ந்த ஒரு குழ்நிலை யிலேயே, யுகர் மட்கலம் உள்ளூரில் தோன்றியது என்று கொள்ளலா மேயன்றி வேறு விளக்கமளிக்க இடமில்லை.
அாப்பாவோடு மிக்க கவர்ச்சிகரமான முறையில் ஒப்பும் முர அணும் கொண்டு விளங்குவன சானுதாரோ I இல் காணப்படும் யுகர் இலச்சினைகளும் அவற்றைச் சார்ந்த காப்பணிகளுமாம் (உரு, 27), இலச்சினைகள், மட்கலம், பேயன்சு, கல், உலோகம் முதலியவற் முலாக்கப்பட்டவை. அலங்கார நோக்குருக்களில் இவை புகழ் பெற்ற அரப்பா வரிசைகளினின்றும் முழுதும் வேறுபட்டவை. இவற்றில் பொறிப்புக்கள் இல்லை. ஆயின் இவை முத்திரை இலச் சினைகளாம். வழக்கமாக இவை வட்ட வடிவின; புறநடையாகவே சதுரமாக அமைவன. இவை இத்தகைய பெரும் மேற்காசியப் பொருள்களுள் அடங்குபவை. இவற்முேடொத்த பிறவற்றை நாம் இங்கு காணலாம். பேயன்சு இலச்சினைகளுள் ஒன்று சாகிதம்ப் இடு காட்டிலுள்ள செப்பு இலச்சினைகளிலுள்ள ஒரு கோலத்தோடு செவ்விதில் ஒத்த கோலத்தைக் கொண்டிருந்தது. வேறு இரண்டில் விலங்குகள் வரையப்பட்டிருந்த விதம் வேறு இந்திய ஒப்புக்களை நினைவூட்டாமல் சுமசையும் இழத்தையுமே நினைவூட்டுவதாயிருந் தது. பிறிதொரு இலச்சினையிலுள்ள குறுக்கிழைச் சுருட்கோலம் ஆசியா மைனரில் உள்ள இற்றைற்றுச் சூழலில் உள்ளனவற்றையே பெரிதும் ஒப்புமைகொண்டதாயுள்ளது. இன்னும் சானுதாரோ II இல் காணப்படும் இருபக்கக் காப்பணிகள், இலச்சினை வகைகள் முதலியவற்றிற்கு ஓரளவிற்கு ஒப்புமை கொண்ட பொருள்களை இப் பகுதியில் காணலாம். மட்கலத்தைப் பற்றி நாம் என்னவேனும் கூறலாம்; ஆயின் யுகர் இலச்சினைகள் . இந்தியாவிற்கு அன்னிய மானவை. இவை மேற்கிலிருந்து யாரொ புதிது புகுந்தனர் என்

மாநகர்களின் முடிவும் 27
பதைக் காட்டுவனவாயுள. இவர் சாகிதம்பில் இறந்தாசைப் புதைத் தவருடன் தொடர்பற்றவராயிருக்க முடியாது.
இங்கு கிடைத்த மணிகளும் இதே சான்றை யளிப்பனவாயுள. லொகம்சோதாரோவிலிருந்து பெற்ற ஓர் அலங்காரக் கல்மணிக்கு ஒத்தவை இசார் IC இலும் அனுே TIT இலும் காணப்பட்டன; சானுதாரோ I இலிருந்து பெற்ற நீண்ட உருளைவடிவ பேயன்சு மணிகள், பகுவடிவங்கள் கொண்டவைபோல் பரும்படியாக அணி செய்யப்பெற்றவை, யெம்டெற் நசரினை ஒத்த வகையில் பகுவடிவங் கொண்ட உருளை மணிகளையும் சுமரில் முன்னைக் குலமுறைக்குரிய வற்றையும் நினைவூட்டுவனவாயுள. இத்தலத்திலிருந்து பெற்ற மிகப் பெரிய பகுவடிவ மணிகட்கு ஒப்புக்கள் அரிய ; ஆயினும் எகித்தில் மணிகள் பற்றிய கிரமத்தில் இவற்றை ஒத்த குரூர வடிவங்கள் மிகப் பிந்திக் காணப்படுகின்றன. மீண்டும், மேற்கிலிருந்து புதிய வகைகள் புகுந்தன என்று நாம் கொள்ளலாம். இவை சுமர், அக் கது ஆகிய அரசுகளின் எல்லைகளிலிருந்து வந்திருக்கலாம்.
செம்பினுலாய தண்டுத் துளைக் கோடரி ஒன்று சாகிதம்ப் இடு காட்டுடன் கொண்ட இன்னுமோர் தொடர்பினைக் காட்டுவதாயுள் ளது. இன்னும் இங்குள்ள ஊசிவரிசைகள் அசப்பா ஆடைவழக் கிற்கு மாமுன ஒரு வழக்கினைச் சுட்டுவதாயுள்ளது. அரப்பாவில் இவ்வழியில் குற்றியணிந்த ஆடை வகை காணப்படவில்லை. இங்கு ஏழு ஊசிகள் இருந்தன ; இவற்றின் தலைகள் ஒரு வகையில் உருட் டப் பெற்றிருந்தன. இவ்வகை குறைந்தது சுமரின் முன்னேக்குல முறைக் காலத்திலிருந்தாகுதல் அறியப் பெற்றது என்று சொல்ல லாம். ஆயின் இவ்வகை குறிப்பிடத்தக்கவாறு முதன்முதல் இசா ரின் கட்டம் IIb இல் தோன்றுகின்றது. மற்றை ஊசிகளுள் ஒன்று சியல்க் TV இல் காணப்பட்ட ஒன்றுடன் ஒப்புடையது என்று ஒரு தெளிவற்ற முறையில் சொல்லலாமேயன்றி எல்லாவற்றையும் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது.
ஏராளமாகக் காணப்பட்ட எலும்பினுலாய சருமாைசிகளும் புதியவையே; ஏனெனில் இவற்றுள் ஒன்றேனும் அரப்பா மட்டத் தில் காணப்படவில்லை. இவை பாய் பின்னுவதற்கு உதவின என்று மக்கே குறிப்பிட்டுள்ளார். செப்பமற்ற கருவிகள் யுகர்பண்பாட்டின் நாகரிகமற்ற தன்மையை அழுத்திக் கூறுவன வாயுள்ளன. இது

Page 151
272 s இடர் நிறைந்த காலமும்
கைவிடப்பெற்ற நகரின் சிதைவில் கட்டப்பெற்ற சிறு புன்குடிசை களிலிருந்து ஏலவே புலப்படுவதாயுள்ளது. மனங்கவர் முறையில் அணி செயப்பெற்ற மட்கலத் தலையணை குறிப்பிடத்தக்க ஒரு பொருளாகும். இதற்கு ஒப்பான ஒன்றைச் சொல்லல் இலகுவன்று. ஆயினும் அரப்பா அல்லது பலுக்கிப் பண்பாடுகளிலிருந்து நாம் அறிந்தவை யாவற்றுடனும் இவை காட்டும் ஒப்பின்மை குறிப் பிடத்தக்கது.
யுகரிலிருந்து பெற்ற பொருள்களிலிருந்தும் பெறும் காட்சி சாகி தம்பிலிருந்து பெறும் குறைவான எச்சங்களிலிருந்து பெறும் காட்சியிலிருந்தும் வேறுபட்ட தன்று. இரு பண்பாடுகளிலும் காணப்படும் மட்கலம் ஓரளவிற்கு உள்ளூர் வகையொன்று தன் மலர்விலோ, அழிவிலோ எய்திய இறுதிக்கட்டத்தைச் சுட்டுவது போலுள்ளது. ஆயின் இலச்சினைகள், மணிகள், உலோக உபகரணங் கள், ஆயுதங்கள் போன்ற காவத்தகும் சிறு பொருள்கள், ஊசிகள் போன்றவற்றுள் சுட்டப்பெறும் உடை வழக்குகள், யாவும் இல் புலத்திற்குப் புதியவர் புகுந்தமையைக் காட்டுவனவாயுள்ளன. சானுதாரோவில் கவர்ச்சிகரமான அமிசங்களில் ஒன்று, யுகர் மக் கள் பேயன்சினை வழங்கியதாகும். இதற்கு ஒரேயொரு வகை யிலேயே விளக்கம் அளிக்கலாம். அதாவது படையெடுத்து வந் தோர் அசப்பா அழிவினின் அம் தப்பியிருந்த தம் தொழிலில் வல்லு நரான உள்ளூர்க் கம்மியரைத் தம் பணிக்கேற்றவாறு கட்டாயப் படுத்தி வேலை வாங்கியிருக்க வேண்டும்; அல்லது இக்கம்மியர் தம் புதிய ஆட்சியாளர் வேண்டியவகை மணிகளைத் தம்மாலியன்ற அளவு உற்பத்தியாக்க அவற்றை வாங்கியிருத்தல் வேண்டும். புதியவர் பேயன்சினைக் கண்டறிந்தவராயிருக்கலாம். ஆயினும் அதில் வேலை செய்யக்கூடியவரைத் தம்முடன் கூட்டிக்கொண்டு வந்திருப்பரோ என்பது சந்தேகத்திற்குரியதே. எனினும் நாம் முன்னர்க் கண்ட வாறு கிழக்கு மெடிற்றரேனியன் புலத்திலிருந்து சில பேயன்சு மணிகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். யுகர் பண்பாடு காணப்பட்ட இந்த மூன்று சிந்துத் தலங்களிலும் காட வர் அாப்பா நாகரிகத்தை அழிக்க வந்தவராகவோ அல்லது முதன் முதல் கொள்ளையடித்தவர்க்குப் பின் வந்தவராகவோ புகுந்தனர் என்பதை நாம் காண்கிறேம். அவர் தம்முடன் எடுத்து வந்த

மாநகர்களின் முடிவும் 273,
பொருள்களே குறிப்பிடத்தக்கவை. இவையே இவர் எங்கிருந்து வந்தனர் என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. இணைந்த பண் பாடுகளின் இயல்பு, உள்ளுறை முதலியவற்றை மதிப்பிடுவதில், மட் கலத்திற்கு இரண்டாம் இடத்தை நாம் அளிக்கின்முேம்,
இவ்விடத்தில் யன்கர் பண்பாட்டைப் பற்றிச் சிறிது சொல்லல் பொருத்தமானது. இது சானுதாரோ I இல் யுகர் குடியிருப்பின் பின், அத்தலத்தில் இருந்த இறுதிக் குடியிருப்பாக விளங்குகிறது. சிந்திலும் வகைத்தலத்திலும் இங்கு மட்டுமே காணப்பட்ட பண் பாட்டைப்பற்றி நாம் சிறிதே அறிவோம். அது பண்டைய வண் ணித்த மட்கலமரபினின்றும் மாறுபட்டதென்பதையும் அதற்குப் பதிலாகச் செதுக்கிய அலங்காரத்துடன் கூடிய ஒரு நரை நிற அல்லது கறுத்தக் கலங்கொண்டிருந்தது என்பதையுமே நாம் அறி வோம். மட்கலம் மிகப் பூர்விகமானதுபோல் தோன்றுகிறது. ஆயின் அதன் காலம் தெரியவில்லை. இது ஒரு கிளையினரைச் சார்ந்த ஓர் தனி உள்ளூர்ப் பண்பாட்டினைக் குறிப்பதாகவும் இருக் கலாம். இது கி. மு. முதற் சில நூற்முண்டுகளுக்கு முற்படாத தாயுமிருக்கலாம். யன்களிலுமே பூர்விகக் கலங்களுடன் சேர்ந் தவை போன்ற சில்லிகள் காணப்பட்டன. இவை சுங்கர் காலத்திற் குரிய மட்கலங்கள் போலத் தோன்றுகின்றன. சுங்கர் மட்கலங்கள் கி. மு. இரண்ட்ாம் அல்லது மூன்றம் நூற்முண்டிற்குரியனவா யிருக்கலாம்.
மொகஞ்சோதாசோவை நாம் நோக்கின் அந்நகரின் வரலாற் றின் இறுதிக்கட்டங்களுக்குரிய சான்று சானுதாரோவில் காணப் படுவதிலும் குறைவாகவே அங்கு காணப்படுகின்றது. அாப்பாப் பண்பாடு அழிந்தபின் அங்குள சிதைவுகள்மேல் குடியிருப்புக்கள் அமைக்கப் பெற்றதுபோல் தோன்றவில்லை. அகழப்பெற்ற இடங் களில் இது இல்லையென்றே சொல்லலாம். ஆயினும் மற்றைத் தலங் களில் உள்ளவாறே இத்தலத்திலும் குழப்பமான நிலைமை இருந்து பின் சீரறவும் அழிவும் நேர்ந்ததென்பதற்குக் குறிப்பிடத்தக்க பல அறிகுறிகள் இருந்தன. மொகஞ்சோதா சோவில் மிகப் பிந்திய படையில் காணப்பட்ட நகைகளும் பிற அரிய பொருள்களும் சேர்ந்த குவியல்களைப்பற்றி நான் ஏலவே குறிப்பிட்டுள்ளேன். இத்தகைய குவியல்களை மறைத்தல் குழப்பமான பாதுகாப்பற்ற

Page 152
274 இடர் நிறைந்த காலமும்
நிலைமைகளுக்கு அறிகுறியான அமிசம் என்பதையும் நான் ஏலவே குறிப்பிட்டுள்ளேன். இதற்கு ஒத்ததான ஆதிகால இந்திய வா லாற்று நிகழ்ச்சி உண்டு; இது செயழர் சமத்தானத்தில் இாைர் நகரில் நடந்தது. இங்கு பல நாணயக் குவியல் புதையல்கள் காணப்பட்டன. இவை கி. மு. இரண்டாம் நூற்முண்டின் ஆரம்ப காலத்தில் மெளரியர் குலமுறை வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற் பட்ட குழப்பநிலைமையைத் தொடர்ந்து புதைபட்டவையாயிருக்க லாம். மொகஞ்சோதாரோவிற் காணப்பட்ட செப்புக் குவியல் களுள் பலவும் நகரின் பிற்காலத்துக் கட்டங்களுக்குரியனவாம். இவை அக்காலத்து மக்களின் மனதில் நிலவிய காப்பின்மையை எடுத்துக் காட்டுவனவாயுள்ளன.
உண்மையான கட்டிடங்களும் அவற்றின் அமைப்பும் பிற்காலத் தில் அவற்றின் நியமங்கள் வீழ்ச்சியுற்றமையையும் காட்டுகின் றன. தெரு முகப்புக்கள் பற்றிய விதிகள் செம்மையில் கடைப் பிடிக்கப்படவில்லை. செங்கல்வேலை சிலம்பலாயிருந்தது. பெரிய வீடுகள் சிறு சிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இது பல மக்கள் கீழ்த்தரமான வசதிகளுடன் வாழ்வதற்காக ஏற்பட்ட தாம். DK பரப்பில் நகர் எல்லைக்குள் மட்கலச் சூளைகள் அமைக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இது திடுக்கிடச் செய்யும் சீரிழிவினைக் குறிப்பதாகும். முந்திய காலத்து நகராண்மைக் கழக மக்கள் இவ்வாறு நடைபெறுவதை ஒருபொழுதும் மன்னித்திருக்க மாட் டார்கள். காப்பின்மை, தாக்குதல்களினல் வரும் அச்சம், பெரிய விடுகள் சிறு மாடிகளாகப் பிரிக்கப்பட்டமை, நகர்ப் பெருமை யின் வீழ்ச்சி, நகரின் குடிவாழ்புறம் கைத்தொழிற் சேரிகளாக மாறியமை எல்லாம் சீரிழிவையும் தொடர்ந்து வரும் அழிவை யும் குறிப்பனவாயிருந்தன. வேறு பிற தவறினும் தெருவிலும் படிக்கட்டுக்களிலும் கொல்லப்பட்டவரின் ஒன்றுடனென்று அடுக் கிக்கிடந்த எலும்புக் குவியல்கள், தாக்குதல்கள் இக்காலத்தில் நடைபெறலுற்றன என்பதைத் தவருது எடுத்துக்காட்டின. இறந் தவரைப் புதைப்பதற்கு எண்ணமெழாது ஓடித் தம்முயிரைப் பேண வேண்டுமென்று யாவரும் நிந்திக்கும் ஓர் சந்தர்ப்பத்தி லேயே இக் கொலைகள் நடைபெற்றன.

மாநகர்களின் முடிவும் 275
மொகஞ்சோதாரோவில் இத்தகைய ஒரு குழப்பமான நிலை யோடு தொடர்புடையன என்று சொல்லக்கூடிய குறிப்பிடத்தக்க சில தொல் பொருளியற் சான்றுகள் உள. இங்கு பிந்திய படை யொன்றில், பொருத்துவதற்குத் தண்டுக்குழாயுடைய செம்பாலான கோடரி வாய்ச்சி ஒன்று காணப்பட்டது. இது அாப்பாப் பண்பாட் டில் காணப்பெற்ற உலோக வகைகளுள் மிக விசித்திரமானது (உரு. 28). ஆயின் இவ்வகை வடபேசியாவில் உள்ள பல தலங்களில் - இசார் I, சா தெபி, தாங் தெபி ஆகியவற்றில் காணப்படுவது. இது அண்ணளவில் மெசப்பொற்றேமியாவின் அக்கதுப் பருவத் தோடு ஒத்த காலத்ததாயிருக்கலாம். மற்றைத் தலங்களிலும் இது நிலைநின்றது. (எ. கா. அகுச் சியல்கிலுள்ள B இடுகாடு) இது கி. மு. ஒன்பதாம் நூற்ருண்டுவரை நிலைநின்றதாயிருக்கலாம். இது மேற்
படம் 28. செப்புத் துளேத் தண்டுக் கோடரி, மொகஞ்சோ.தாரோ.
குத் திசையிலிருந்து புதிது புகுந்த போர்க்கருவியாகும். கி.மு. இரண்டாம் ஆயிரக்கான்டிற்குரியதாயிருக்கலாம். இது சானு தாரோ I, சாகிதம்ப் தண்டுத்துளைக் கோடரிகளுடன் வைத்தாாா யப்பட வேண்டியதாகும். இன்னும் வாள்கள் என்று சொல்லக்கூடிய ஒரு தொகுதிப் பொருள்களும் காணப்பட்டன. இவை 1% அடி நீளமும், பலமான நடுத்தண்டும் உடையனவாயிருந்தன. இப்பண்பு கள் அசப்பா மரபிற்கு மாறுபட்டன. இவையும் இவற்றிற்கு ஒத்த வகைகளைத் தேடிப் போகும்போது விளங்கமுடியாதனவாயுள்ளன. மொகஞ்சோதாரோவில் காணப்பட்ட வகையளவிற்கு அண்ணள வில் ஒத்தனவான கைப்பிடி கொள்வதற்கு வால்களும் பூண்களும் கொண்ட வாள்கள், ஈட்டிகள் எனப்படுவன பலத்தீனில் காணப்படு பவையே. இவை கி. மு. 1800 இலிருந்து 1500 வரை தேதி கொள்

Page 153
276 இடர் நிறைந்த காலமும்
ளக்கூடியன. இங்கு இவை பெரும்பாலும் ஐக்சொஸ் பருவத்தோடு இணைந்து காணப்படுவன. ஆயின் பலத்தீனமோ இந்தியாவிலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. எனவே இவ்வீர் இடங்களுக்குமிடை யில் எங்கேனும் இவை காணப்பட்டிருக்கலாம் என ஒருவர் எதிர் பார்க்கலாம். எனினும் மொகஞ்சோதாரோவில் அவை வலிது புகுந்தவை போல் தோன்றுகின்றன. அசப்பா அரசின் மேற்கெல் லைக்கப்பாலுள்ள யாதோ ஓரிடத்திலிருந்து படையெடுப்பாளரால் அவை கொண்டுவந்தவை போல் தோன்றுகின்றன.
மொகஞ்சோதாரோவில் ஒரு புதைப்புண்டு. இது HR பகுதியி லுள்ள கைவிடப்பட்ட ஒரு வீட்டு முன்றிலில் சிதைவுகளில் இருந் தது. இது படையெடுபட்டவர்க்குரிய தென்பதை விடப் படை யெடுத்தார்க்குரியது போல் தோன்றியது. சிறு பாண்டங்கள், மணி கள், ஒட்டுக் காண்டிகள் போன்ற பொருள்கள், பெரியதொரு d51.li ஆகியவற்றின் குழம்பிய ஓர் உடைசற் குவியலிடை சில எலும்புக ளும், ஒரு மனிதனின் கபாலமும் காணப்பட்டன. இத்தொகுதி யுடன் காணப்பட்ட ஒரு கடம் (இதுவரை வெளியிடப்பெற்ற ஒன்று) அரப்பாவில் ஓர் இடுகாட்டில் மீள மீளத்தோன்றுவது என் பதை நாம் காண்போம். இவ்இடுகாடு அந்நகரின் பிரதான குடியிருப் புக் காலத்திலும் தெளிவாகப் பிந்திய தலம் எனப்படும் ஓர் இடத் திலேயே உள்ளது. ஆயினும் இங்குள்ள அலங்கார வகைகள் குள்ளி நோக்குருக்களையும் யுகர் நோக்குருக்களையும் நினைவூட்டுவனவா யுள்ளன. ஆயினும் ஆச்சரியப்படத்தக்க முறையில் இப்புதைப்பி விருந்து பெறப்பெற்ற கபாலம் மொங்கோலியத் தொகுதிக்குரிய தென்பது தெளிவு. உதாரணமாக இக்காலத்து நாகர் வகையுடன் நெருங்கிய ஒப்புமை கொள்ளக்கூடியது. இது அாப்பாவின் பிந்திய காலத்தில் அங்கு படையெடுத்த ஒரு பகுதியினரின் புதைப்பு என் பது உண்மையானல், படையெடுத்தோர் பல்லினத்தோர் கலந்த படையினர் என்பதுபோல் புலப்படுகின்றது. கூலிப்படையினரும் இவருள் அடங்கியிருக்கலாம். கூலிப்பட்டாளத்தவன் ஒரு குர்க்கா இனத்தவனுயிருக்கலாம்.
அாப்பாவில் அகழாய்வு நடாத்திய வாற்ஸ் என்பவர் நகாரணுக் குரிய சிதைவுகளாலாய திடலின் மேற்படிவுகள், நகரின் அாப்பாக்

மாநகர்களின் முடிவும் 277
குடிவாழ்விற்குரிய மட்கலத்திற்குரிய சில்லிகளிலும், புறம்பான தனித்தன்மை வாய்ந்த கலச்சில்லிகள் கொண்டிருந்தன என்ப தைக் கண்டார்; ஆயின் இக்கலம் இடுகாடு H என்னும் நகரின் எல்லைகளுக்கப்பால் தெற்கேயுள்ள ஒரு முக்கிய இடுகாட்டிலுள்ள தோடு ஒத்ததாயிருந்ததென்பதை அவர் கண்டார். இவ்விடுகாடு அாப்பா பருவத்திற்கும் பிந்தியது என்பது இலகுவில் அறியப் படக்கூடியது. நகராணின் மேற்படைகளில் வீலர் நடாத்திய அகழ்வு களிலிருந்து, கி. மு. 1800 வரையளவிற்குரிய மினேவன் பேயன்சு மணிகளுடன் ஒப்புமை கொண்டவற்றுடன் மிக்க ஈடுசொல்லக்கூடிய பல பகுமுறை மணி வகைகள் பெறப்பட்டன என்பதை ஸ்ரோன் அவர்கள் அவதானித்தார்கள். நகராண்திடல் உச்சி செங்கட்டிக் கள்வரால் மிகப் பழுதுற்றிருந்தது. இக்கலத்திற்குரியதெனச் சொல் லக்கூடிய குடியிருப்புப் படையொன்றையேனும் வாற்ஸ் அவர்கள் நிலைநாட்ட முடியவில்லை. ஆயினும் 1946 இல் விலர் அவர்கள் தாம் நிறுவிய நான்காவதும் இறுதியுமான கட்டத்திற்குரிய மேற்கு வாயிலிலும் அதனுேடிசைந்த படிக்கட்டுக்களிலும் இத்தனித்தன்மை வாய்ந்த மட்கலம் காணப்பட்டது என்பதை நிறுவக்கூடியவாா யிருந்தார். இப்பிந்திய கட்டத்தைத் தொடர்ந்து ஓர் இடைக்காலம் உள்ளது. அதன்பொழுது படித் தளங்களோடு இயைந்த அமைப் புக்கள் சீரிழிந்துவிட அவற்றை இடிபாடுகள் மூடி நின்றன. இக் குடியிருப்பை எடுத்துக்காட்டுவனவாயுள்ளன Satij- சீரிழிந்த முறையில் கட்டப்பெற்ற கட்டிடங்களின் பகுதிகளே; இவை குடி மனைகளாயிருக்கலாம். இவற்றின் சுவர்கள் சில இடங்களில் ஒரு செங்கட்டிக் தடிப்புடையனவாயிருந்தன.
நகராண்திடலின் மேற்படையில் நடாக்கிய முன்னேய அகழாய்வு களில் காணப்பெற்ற கட்டிடச் சிதைவுகளுள் வில, அசப்பாக் குடி வாழ்வின் ஒரு சீரிழிந்த நிலைமையின் ஒரு பகுதிக்குரியவாயிருக்க லாம். அதனுடன் புதிது புகுந்த இடுகாடு M இற்குரிய வில அமிசங் களும் புகுந்திருக்கலாம். வாற்ஸ் அவர்கள் ப ை II இல் இருந்து பெற்ற இடுகாடு H இற்குரிய வகைக்குறிப்பான கடம் ஒன்று பற் றிப் பதிவு செய்துள்ளனர். இது இக்கட்டத்திற்கே மீளப்பயன் படுத்திய இடி செங்கட்டிகளால் இழிவான முறையில் கட்டப் பெற்ற சுவர்கள் உரியன என்பதைப் புலப்படுத்துவதாயுள்ளது. இச்சுவர்

Page 154
278 இடர் நிறைந்த காலமும்
கள் இப்படைக்கே சிறப்பாயுள்ளன என்று அவர் கருதுகின்முர். இவ்வமைப்புக்களுள் வட்டமான களஞ்சிய அறையொன்று உண்டு. இன்று இது 6 அடி உயரமும் 4 அடி விட்டமும் கொண்டுள்ளது. இங்கு செங்கட்டி பரவிய பகுதிகள் பரும்படியாகச் சதுரமானவை யாயுள; இவை சானுதாரோ I இலுள்ள யுகர் பண்பாட்டிலிருந் தவற்றை நிகர்த்தவையாயுள்ளன. நகராண் திடலில் பிறிதோர் இடத்தில் அாப்பாப் படையினது என்று சொல்லக்கூடிய ஓரிடம் உண்டு. இதில் மூங்கில், பைன் ஆகியவற்றின் எரிந்த சிதைவு களோடியைந்த ஒத்தவகைப் பாவு நிலங்கள் இங்கிருந்தன. இவை நகர் செழிப்புற்றிருந்த காலத்தில் நகராணுள் இருந்திருக்கக்கூடிய அமைப்புக்கள் என்பதை விட வலிது புகுந்த காடவர் குடிசைகள் என ஐயப்படக்கூடிய வகையில் உள்ளன. ஆயின் அகழாய்வுப் பதிவுகள் திட்பமான ஒரு முடிவிற்கு வரக்கூடிய போதிய சான்று கள் கொண்டிருக்கவில்லை. இவ்விடத்தில் ஒன்று கூறல் வேண்டும். இவ்விடத்தில் ' பகுதிப் புதையல்' எனப்படுவது ஒன்று காணப் பட்டது. இது அரப்பாப் பண்பாட்டிற்குரிய தென்று கொள்ளப்பட் டது. இது இக்கர்லப் புதைக்குழியாயில்லாவிட்டால் அாப்பாக் குடி வாழ்வுக் காலத்தோட்ொத்த காலத்ததாயிருக்கக்கூடியது என்பதி லும் பார்க்கப் பிந்திய கால்த்தது என்று சொல்லக்கூடியதாகும். புதைப்புக்களுள் காணப்பட்ட உயர் மூக்கெலும்புடைய நாசியுடைய குறுங்கபாலமுடையோர் (அல்பைன் வகை) புதிது புகுந்த வகை யினர்போல் தோன்றுகின்றனர். இவர்கள் இத்தலத்தின் வரலாற்று முன்னரின் இறுதிக் கட்டத்தில் படையெடுத்தோருடன் தொடர்பு கொண்டிருந்தவராயிருக்கலாம்.
நகரில் நிகழ்ந்த குடியிருப்பின் முக்கிய கட்டத்தின் பின் புதி யோர் புகுந்தனர் என்பதற்கு உறுதியான சான்று பெரிய இடுகாடு H என்பதிலிருந்து கிடைக்கின்றது. இதுவும் இரு பருவத்திற்குரி யது. இவ்விரு பருவங்களும் அண்மை அகழ்வுகளிலிருந்து அசப்பா ஊழிக்குரிய இடுகாடு R 37 இலும் பிந்தியவை என்பது தெளிவா கின்றது. இப்பிந்திய இடுகாடு ஓர் இயற்கையான பள்ளத்திலிருந் தது. இப்பள்ளம் இடுகாடு வழக்கற்றுப் போனபின் அசப்பாக் கடச் சில்லிகள் பல கொண்ட இடிபாடுகளினல் நிரப்பப்பெற்றது. இந்த இடிபாடுகளினுள்ளேயே இடுகாடு R 37 இலிருந்து வடகிழக்காக

மாநகர்களின் முடிவும் 279.
120 யார் தொலையில் ஓரிடத்தில், இடுகாடு H இற்குரிய புதைப் புக்கள் கிண்டப்பெற்றன. இங்கு R 37 இடுகாட்டின் கீழிருந்த படைகளுக்குமிடையிலும் இடுகாடதனிலும் அதன்மேலுள்ள இரு இடிபாட்டுப் படைகளிலுமுள்ள மட்கல வகைகளில் கவனிக்கத்தக்க வேறுபாடுகள் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆயின் இடுகாடு H உடன் இந்த மாற்றம் திடீரெனவும் உறுகியாகவும் தோன்றுகின்றது.
இடுகாடு H (படை III) இல் உள்ள முன்னைப் புதைப்புக்கள் விரி, வாக்கப் பெற்ற அடக்கங்களே. இவை சாதாரணமாக வடக்குக் கிழக்கு முறையிலும் தெற்கு மேற்கு முறையிலும் கிடைப்பவை, இங்கு கால்கள் சிறிது முடங்கியிருக்கும். இவை இப்பொழுதுள்ள மேற்பரப்பிலிருந்து சராசரி ஆறடி கீழிருந்தன. அகழ்ந்த பிா. தேசத்தில் இத்தகைய புதைப்புக்கள் இருபத்து நான்கு காணப்பட் டன. இவற்றுட் சில உறுப்பழிக்கப் பெற்றவையாயும் பகுதிப்பட் டவையாயும் இருந்தன என்று கூறப்படுகின்றது. ஆயின் இந் , நிலைமை பண்டை நாளிலிருந்த குழப்பநிலைமையால் ஏற்பட்டிருத் தலாகாதோ என்று கூறப்படுகின்றன. சில வேளைகளில் புதைப்புக் களுடன் உணவுப் படைப்புக்களும் காணப்பட்டன. ஒரு புதைப் பில் இருந்த மனிதனுடன் உறுப்பறுத்த ஒரு முழு வெள்ளாடு காணப்பட்டது. எப்பொழுதும் ஏராளமான மட்கலப்பாண்டங்கள் காணப்பட்டன. இரண்டு புதை குழிகளில் மட்டும் வேறு பொருள் காப்பிலிருந்தது. இன்னென்றில் எஞ்சிநின்ற மூன்று பல்லும் பொற் கம்பியால் சுற்றப் பெற்றிருந்தன. இது ‘அழகிற்கோ காப்பிற்கோ ஆக இருக்கலாம்' என்று விலர் எள்ளற் குறிப்புப்படக் கூறுகின் முர். இடுகாடு H (படை 1) இல் உள்ள பிந்திய புகைப்புக் கள் இப்பொழுதுள்ள மேற்பாப்பினின்றும் இரண்டு மூன்றடியே கீழாக உள்ளன. இவை பெரிய கடங்களிலமைந்த உண்மையான பகுதிப் புதைப்புக்களாகும். இவற்று ன் புதைகுழிப் பொருள் களோ புடைப்புக்களோ இருக்கவில்லை. மனிதன் இறந்தபின் புகைப் பதற்குச் சிறிதுகாலம் முன்னராக உடல்கள் வெளிக்குத் திறந்து வைக்கப்பட்டன என்பது பல உதாரணங்களில் எலும்புகளால் அறியக் கிடக்கிறது. இவ்வாறு வெளிக்குத் திறந்து வைத்தபின் இடுகாட்டில் அடக்கம் செய்வதற்குக் கபாலமும் சில நீள என்பு களுமே தேர்ந்தெடுக்கப்படும். இங்கு இத்தகைய 140 புதைப்புக்கள்
13-CP 3040 (4168)

Page 155
280 இடர் நிறைந்த காலமும்
காணப்பட்டன. இவற்றுள் பன்னிரண்டு வரையின சிறு குழந்தை களின் புதைப்புக்களாகும். இக்குழந்தைகள் முழுமையாகப் புதை சாடிகளுள் முடங்கியவாறு புதைக்கப்பட்டிருந்தன. இச்சாடிகள் உடைந்த கடச்சில்லிகளால் மூடப்பெற்றிருந்தன. இடுகாட்டின் இரு படைகளிலுமிருந்த மட்கலம் அரப்பா மட்கலத்திலிருந்தும் வே(mன தாயிருந்தது. சில சிறப்புவகையான வடிவங்கள் மேற்படைக்கும் கீழ்ப்படைக்கும் புறம்பாக அமைந்தனவெனினும் இவ் வேறுபாடு அப்பொழுது நிலவிய செய்முறை வேறுபாட்டால் வந்ததன்று. இடு காட்டின் இரு கட்டங்களிலும் கலத்தினதும் வண்ணிப்பினதும் வினை நுண்மை அடிப்படையில் ஒன்முகவே இருந்தது. எனவே இதனை நாம் முழுமையாக நோக்கி, புதைப்பு வழக்கங்களில் மாற்றங் கள் இருப்பினும் ஒரு பண்பாட்டின் விளைவெனக் கொள்ளலாம்.
இம்மட்கலத்தைப் பற்றி ஆய்வதற்கு முன்னராக அங்கு காணப் படும் மனிதவகைகளைப் பற்றி யறியப்பட்ட மிக்க அற்பசெய்தி யைச் சுருக்கமாகக் கூறுதல் நன்று. இன்னும் இவைபற்றிப் போதிய அறிக்கைகள் கிடைக்கவில்லை. ஆயின் முன்னைக் கட்டக் தில் தலையாயமைந்த கபால வடிவம் ஆதி ஒசுத்திரலொயிட் வகை யினதாகத் தெரிகிறது. இரண்டாம் கட்டத்துப் புதையல்களுள்ளும் குறைந்தது இத்தகையது ஒன்றுள்ளது. ஆயின் இப்புடைப்புக் களுள் இந்தியாவின் இப்போதைய ஆதிவாசிகளிடை காணப்படும் சிறு தாழ்தலை இனம் ஒன்றினை ஒத்த ஒரு வகையை நாம் கண் டறியலாம். இடுகாட்டின் இரண்டாம் கட்டத்திலிருந்து, பிரீடெரிக்ஸ், முல்லர் எனும் இருவராலும் ஆமெனெயிட் எனக் கருதப்படும் இரு கபாலங்கள் காணப்பட்டன. இது அறுதியான முடிவன்று இயலக் கூடிய ஒரு நிகழ்தகவு எனக் கொள்ளப்பட வேண்டும். எல்லா வற்றையும் நோக்குமிடத்து மேற்கிலிருந்து வந்த புலப்பெயர்வோடு தொடர்புபடுத்தக்கூடிய வகையில் வலிது புகுந்த மக்கள் இருந் தனர் என்பதற்குச் சான்று மிக அரிதே.
இரு படைகளிலிருந்தும் பெறப்பெற்ற மட்கலம் நல்வகையிலாக் கப்பட்டதாயிருந்தது. இது வன்மையான சிவத்த உடலும் துலக்க மான சிவப்புக் களியும் கொண்டிருந்தது. இங்கு கறுப்பில் அடிக் கடி வண்ணிக்கப்பட்ட அலங்காரம் விளிம்புகளில் ஓர் அணி 'ஒட் டம் உடையதாயிருந்தது. சாகிதம்பிலிருந்து பெறப்பெற்ற, முழு

மாநகர்களின் முடிவும் 28
ம் வேறு வகையினதான கலம்பற்றிக் கூறுகையில் இதுபற்றி நான் ஏலவே கூறியுள்ளேன். அரப்பாவைத் தவிர இக்கலம் பகவல் பூரில் இரண்டு தலங்களிலேயே காணப்பட்டது. இது தெற்கே 150 மைல் தொலைவில் சட்லிச் நதியின் மறுபால் இருந்தது. இதன் விவ ாங்கள் பற்றிய வினை நுண்மை அரப்பாக் கலத்தினுடையது போன்ற தன்முயினும் சிவப்பின் மேல் கறுப்பு எனும் அணி முறைமை யாதோ ஒருவகைத் தொடர்பைச் சுட்டும் , செங்கலப் பிரதேசம் முழுவதையும் நோக்கும்பொழுது ஆயினும், இது இவ்வாருகும் என்று சொல்லலாம். இன்னும் இடுகாட்டின் முன்னைக்கட்டத்தின் சிறப்பியல்பான வடிவங்களுள் ஒன்று தட்டையான ஒரு பலிதட் டாகும். இஃதே அரப்பாவின் உயர்வகைகளுடன் ஒப்பிடப்படக் கூடியது. ஆயின் இதிலுள்ள அலங்காரமோ அரப்பாவிலிருந்தும் அறவே நீக்கப்பட்ட பிறிதொரு உலகத்திற்கு நம்மை இட்டுச் செல் கின்றது.
வண்ணிப்பின் வினைநுண்மை பாண்டங்களின் வடிவத்தைப்போல உறுதியானதாயும் புனைவு மிகுந்ததாயுமிருந்தது. இது குளை பயன் படுத்தப்பட்டது என்பதையும் அது மொகஞ்சோதாரோவின் பிற் பருவத்தில், அறியப்பட்டவளவிலாகுதல், முன்னேற்றமானதாயிருக் கலாம் என்பதையும் சுட்டுவதாயுள்ளது. பல்வகை உடுக்கள், பாணிப் படுத்திய தாவரவடிவங்கள், வளையப் புள்ளிக் கோலங்கள், நேர்க் கோடுகள், சுருள், கோடுகள் ஆகியவற்றின் தொகுப்புக்கள், பிற் களங்களை நிரப்புவதற்காகப் பயன்படுத்திய திரிதருகோடுகள் முத லியவையே சிறப்பியல்பான நோக்குருக்களாயிருந்தன. மிக்க நியம மான இக்கோல அமிசங்களைத்தவிர நல்லினங்கள், வெள்ளாடுகள், மயில்கள், மீன்கள் முதலியவையும் அடிக்கடி அணிசெய் மரபில் உருவகிக்கப்பட்டிருந்தன. இவை சிலவேளைகளில் கோளையைச் குழ்ந்திருக்கும். ஒடியாக் காட்சிகளில் அல்லது பொட்டிப்புக் களில் அமைந்திருக்கும்; அல்லது கடமூடிகளின் வட்டக்கீழ்ப் பக்க அணிவட்டங்களில் அமைந்திருக்கும் (உரு. 29). இவ் வுருவங்கள் இயற்படு வகையினவல்ல; ஆயின் குறியீட்டு இயல்பு முறையில் அமைந்தவையாயிருந்தன. இவை பலதிறப்பட்டிருந் தன. உடுக்கள் அல்லது ஞாயிறு நோக்குருத் தொகுதிகளிடை யமைந்த ஒரு வரிசை மயில்கள் தம்முள்ளேயே ஒரு மனிதனின்

Page 156
282 இடர் நிறைந்த காலமும்
ஒரு சிற்றுருவைக் கொண்ட ஒரு வட்டத்தைக் கொண்டிருந்தன. இன்னெரு பண்டத்தில் மயில்களுக்கிடை, வெள்ளாட்டின் அல்லது மானின் கொம்புகள் கொண்ட ஒருவகை நாபரி இருந்தது. மேற் படையிலிருந்த ஒரு விசித்திரக்கோளை ஒடியா முறையிலமைந்த
படம் 29. இடுகாடு H கலங்களின் உருவரைப் படங்கள், அரப்பா.
ஒரு படலணி கொண்டிருந்தது. இது இரண்டு மயில்களுடன் ஆரம்ப மாகித் தொடர்ந்து ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தது; இக்கட்
 

மாநகர்களின் முடிவும் 283
டத்துள் பறக்கும் பறட்டை மயிருடைய ஒரு மனிதன் இரண்டு பசுக்களைப் பிடித்துக் கொண்டு நின்முன்; இவற்றுள் ஒன்றின்பின் ஒரு நாய் நின்றது. இதன்பின் இன்னுமொரு கோலம் காணப்படு” கிறது. அதைத் தொடர்ந்து திமிலுடைய எருத்தொன்றின் அசா தாரணமான புனைவுருவொன்று தோன்றுகிறது. இவ்வெருத்தின் மிகப் பாரிய கொம்புகள் சிறுகொடிகள் போன்ற எழு விளங்கரும் பொருள்களைத் தாங்கிநின்றன ; பின் இரு பசுக்களிடை (இவை எருதுகளாயும் இருத்தல் கூடும்) ஒரு மனிதனைக் காண்கிருேம். இப்பசுக்கள் தம்கொம்புகளிடை ஒவ்வொரு கொடி தாங்கிநின்றன. இவை இரட்டைக் கோடரியைத் தாங்கிநின்ற ஒரு மினுேவன் எருத்தை நினைவூட்டுவனவாயிருந்தன. இக்காட்சி முழுவதும் உடுக் கள், இலைகள், வளைகோடுகள் நிரம்பியிருந்தன. பிறிதொரு பாண் டத்தில் ஒத்த வளைகோடுகள் பிற்களமாயமைந்திருந்தன. இதில் திமிலுடைய எருதுகள் பாணிப்படுத்திய மரங்களுக்கிடையில் நின் றன.
இவ்வியத்தகு மட்கலவரிசையோடு பாத்தளவில் ஒத்தவை என்று சொல்லக்கூடியவற்றைக் கூறுதல் அரிது. முழுமையையும் நோக்கு மிடத்து அறியப்பெற்ற பண்டைக் கிழக்குப் பண்பாடுகளுள் இவற் றிற்கு இணையானவை இல்லை. ஒன்றுமட்டும் சொல்லலாம். விலங்கு கள் மரங்களைத் தொகுத்த முறை, குள்ளிக் கலங்களில் இருந்த விலங்குகள் நிலக்காட்சிகள் அமைந்த கோலங்களைப் பொதுவாக வன்றிச் சிறப்பாகவும் ஒத்திருந்தது ; உடுநோக்குருக்களும் பறவை நோக்குருக்களும் சேர்ந்து கி. மு. 1550-1200 வரையுள்ள காலத்திற் குரிய இயன் 11 இடுகாட்டிலிருந்து பெற்ற கடங்களிலுள்ள மனிதர் கோலங்களை நினைவூட்டுவனவாயுள்ளன. விலங்குகளையும் மனிதர் களையும் கையாண்டவிதம் இந்தியாவிலோ பலுக்கித்தானிலோ காணப்பெற்ற எல்லா வரலாற்று முன்னர்க் கலங்களிலிருந்தும் வேறுபட்டதாகும். இக்கலங்கள் காலத்தாலும் இடத்தாலும் சம சாக் கலங்களிலிருந்தும் பேசியாவில் அவற்றை ஒத்தவற்றினின்றும் மிக்க அப்பாற்பட்டவையாயினும், இவற்றில் மனித உருவங்களைப் புனைந்தவாறும் ஓரளவிற்கு விலங்குகள் சிலவற்றைப் படைத்த வாறும் முழுவதும் மாறுபட்ட வகையில் அமையவில்லை என்று கூற லாம். இவ்வொப்புமைகள், இடுகாடு H இல் நடைபெற்ற புதைப்புக்

Page 157
284 இடர் நிறைந்த காலமும்
களுக்குப் பொறுப்பான பண்பாட்டில் யாதோ ஒரு வகையிலாயி லும் யாதோ ஒரு பண்டை இரானிய அல்லது வடமெசப்பொற்றே மிய அமிசம் இருந்தது என்பதைக் காட்டுவனவாயிருக்கலாம். இதற்கு மிஞ்சி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. எனினும் இங்கும் குள்ளிப் பண்பாட்டுடன் இருந்திருக்கக்கூடிய தொடர்பு பலுக்கித் தான் அமிசங்களின் உறவுகளையும் சுட்டல் கூடும். இடுகாடு H இற் குரிய மக்கள் அரப்பா உலகிற்கு உண்மையில் புதிது வந்தவரே. ஆயின் அவர் ள்ங்கிருந்து வந்தனர் அவரின் பிந்திய வரலாறு யாது என்பன பற்றி இன்னும் கூடிய அகழ்வுகள்தான் செய்தியளிக்கக் கூடும்.
ஆங்காங்கு தனித்தனியாயிருக்கிற ஆயின் இன்னும் ஒன்று சேர்க் கப்படவேண்டிய சில செய்திகள் உள. இவை அரப்பா நாகரிகத் துடனும் அதன் முடிவுடனும் நேரே சம்பந்தப்பட்டவையல்ல. ஆயி னும் முக்கியம் அற்றவையல்ல. வடமேற்கு எல்லைப்புற மாகாணத் திலுள்ள குரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தனியணுக ஒரு பொருள் ஒரு விசித்திர வகையினதான பக்கச் செவிகளுடைய தட்டைச் செப்புக் கோடரியாகும். இதுவே செவிக்கோடரி எனப்படுவது; இது ஐரோப்பாவில் பற்பல இடங்களில் பற்பல காலங்களில் காணப் பட்டது. ஆயின் மேற்காசியாவில் இதற்கீடான மாதிரி வட பேசியா வில் உள்ள துரங்தெபியிலும் குரத்திலுமே காணப்பட்டது. துரங் தெபி கோடரி இசார் I, அனே II ஆகியவற்றுடன் ஒத்த காலத்ததாயிருக்கலாம். அது கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் ஆரம்ப காலத்திற்குரியதாயிருக்கலாம்.
ஓரளவு பிந்திய காலத்தில் மேற்குடன் தொடர்பு கொண்டிருந் தது என்பதைச் சுட்டக் கூடியதான பிறிதொரு பொருள் பஞ்சாப் பில் ரசன்பூரில் காணப்பட்ட ஒரு வெண்கல வாளாகும். இது போற் றத்தகு ஓர் ஆயுதம்; இது பேசியாவிலுள்ள லுரித்தன் புதைகுழி களில் பெருவளவில் காணப்படும் ஒரு வகையினதைப் போன்ற விரி வான ஒரு பிடியுடையதாயிருந்தது. இவ்வகை வாள்கள் இங்கு கி. மு. 1400-1200 வரையுள்ள காலத்திற்குரியனவாயிருக்கலாம். இவை அண்ணளவில் ஒத்த காலத்துக் கோக்கசசிலிருந்து பெற்ற மற்றையவற்றையும் போலிருந்தன (உரு. 30). இவ்வகை வாள் இந்தியாவில் தனியணுகவே காணப்பட்டது. ஆயின் வேறு வகை வாள்களின் இரு குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒன்று

மாநகர்களின் முடிவும்
மேல் கங்கைப் பள்ளத்தாக்கிலுள்ள பத் காரிலும் மற்றையது தக்கணத்து ஐதரபாத்
துச் சமத்தானத்திலுள்ள குல்லூரிலும்
காணப்பட்டன. பத்கார் குவியலில் வாள்கள் பதின்மூன்றிற்குக் குறையாமல் இருந்தன. இவை செம்பினுலானவை என்று சொல்லப் படுகின்றன. இவற்றிற்கு மெல்லிய முதுகுத் தண்டுகள் இருந்தன. ஒன்றைத் தவிர மற் றைய யாவும் சிறப்பு வகையான அலகோடு சேர்த்து வார்த்த பிடியுடையனவாயிருந்தன. இப்பிடிகள் இறுதியில் மீசை கொண்டன போல் வெளிவிரிந்து வந்தனவாயிருந்தன. இந்த வகை வாள்களே குல்லூரிலிருந்த நாலு வாள்களும். ரசன்பூர் வகை பிடியுடைய வாள்கள் பிந்திய வெண்கல ஊழிக்காலத்துக் கோக்கசசிற்குரிய தலிஷ் புதைகுழிகளில் காணப்படுகின்றன. இவையும் கி. மு. 1350
1200 இற்குரியனவாகும். இது லுரித்தனுடன்
நெருங்கிய தொடர்பு கொண்ட ஒர் உலோக வேலைக் கலை முறையைக் குறிக்கின்றது. எனவே நம் ஆய்வுப் பொருளான வாள்கள் யாவும் கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டிற் குரிய கோக்கசசு-பேசியன் பாணிகளோடு தொடர்புடையனவாயிருக்கல் கூடும்.
கங்கை வடிபுலத்திலும் தென்கிழக்கயலி லுள்ள உயர் பூமியிலும் பல செப்புக்கருவி கள் காணப்பட்டன. இவை தனியாயும் (பலகாட்டிலுள்ள குங்கேரியாவில் கண். வாறுபோல்) 400 இலும் குறையாப் பொருள் கள் கொண்ட குவியல்களாகவும் காணப்பட் டன. இவை இரண்டு தொகுதிகளில் அடங்கும். ஒரு தொகுதி யமுனையும் கங்கையும் கலக்கும் இடத்திற்கு மேலாக அமைந்த, அவற்றின்
III I 8 () Ué 6ზ'uსfia:Ülცსibჯ5 (ი)a)160ხ7 &5) Gitt Gir, 1 FITŮ.

Page 158
286 இடர் நிறைந்த காலமும்
பள்ளத்தாக்குகளில் உள்ளது. மற்றையது ராஞ்சி மேட்டுப் பூமிக ளைச் சுற்றியுள்ளது. இங்கு எவ்விடத்தும் காணப்படும் சிறப்பியல் பான கருவி தட்டையான செப்பு அல்லது வெண்கலக் கோடரி யாகும். இவை எளிய வடிவின; பொதுவாக அரப்பாப் பண்பாட் டின் தட்டைக் கோடரிகளை நிகர்த்தவை. இவற்றின் வடிவங்களின் எளிமையே இவை நெருங்கிய தொடர்பு கொண்டன என்று சொல் வதற்கு மாமுக உள்ளன. எனவே இப்புலங்களில் மீளமீளக் காணப் படும் பிறிதொரு வடிவத்தை நம்பிக்கையோடு நோக்கலாம்; 'கோல்-உளி' எனப்படும் நீள் கோடரி அல்லது உளி எனப்படு வதே அஃது. இக்கருவிகளுக்குச் செவ்விதின் நேரியவை அாப்பா உலோகவரிசைகளுள் இல்லை. ஆயினும் குறிப்பாகச் சானு:காரோ வில் மிக ஒடுங்கிய நீள் கோடரிகள் காணப்படுகின்றன. இவை பண்டையவையாயிருத்தல் கூடும். பலுக்கித்தானிலுள்ள நல் இடு காட்டிலிருந்து பெற்ற முக்கிய செப்புக் கருவி வரிசைகளுள் கோலுளியின் சிறுமாற்றம் ஒன்று உண்மையில் காணப்பட்டது. நல் இடுகாட்டின் தேதி அாப்பாப் பண்பாடுடன் அண்ணளவில் ஒத்தது என்பதை நாம் முன்னர்க் கண்டோம். ஆயினும் பகுதியளவில் அது பின்னும் நீடித்திருக்கலாம். நல்லிலிருந்து கோலுளி காணப்பட்ட மிக்க அண்ணிய இடம் (மேற்கங்கையில் ராச்பூர்) மிக்க தொலைவி அலுள்ளது. ஆயின் பொதுவாகக் கூறுமிடத்துக் கங்கைப் புலத்துக் கோடரி, கோலுளி வரிசைகள் அரப்பா உலோக வேலைகளினின்றும் தனித்துச் சார்பற்று மலர்ந்தன என்பது இயலாததொன்முகும்
யமுனை, கங்கை ஆகியவற்றின் பள்ளத்தாக்குகளோடு அடங்கிய பல குவியல்களிலும் காணப்பட்ட இக்கோடரி வகைகளோடு சேர்ந்து காணப்படும் வியத்தகு செப்பு ஈட்டி வரிசை ஒன்றுண்டு. இவ்வரிசையிலுள்ளவற்றைப் பூர்விக வகைதொடங்கிப் படிப்படி மலர்ந்த வகைவரை வகை குறி முறையில் வரிசைப்படுத்தலாம். இப் பூர்விக வகைகள் எலும்பு அல்லது கொம்பு முதலியவற்முலாய ஆதிவகைகளைப் பார்த்து ஆக்கப்பட்டன என்பது தெளிவு. இவ் விட்டிகள் ஆற்முேரச் சமுதாயத்தவரிடை அவர் தலத்திலேயே தோன்றியதாயிருக்கலாம்; இவர்கள் பொருளியல், மீனை ஈட்டியால் குத்திப் பிடிப்பதனை மையமாகக் கொண்டு வளர்ந்திருக்கலாம். பின்

மாநகர்களின் முடிவும் 287
இவர்களிடை உலோகவியல் அறிவு பரவவும் இவர்கள் பூர்விக உப கரணங்கள் உலோகவேலைப் பொருள்களாக மாறியிருக்கலாம். ஐரோப்பா, மேற்காசியா ஆகிய பகுதிகளிலிருந்த மெசோலிதிக் பண்பாட்டவர் அறிந்திருந்த ஈட்டிகளின் வடிவு கொண்ட ஈட்டிகள் இருந்திருந்தன என்னும் இவ்வனுமானம் ஓரளவு கவனத்திற்குரி யது; இதுபற்றி அதிகாரம் II இல் குறிப்பிட்டுள்ளோம்.
இக்கோடரிகள், ஈட்டிகளின் தேதியைச் செவ்விதாக வரையறுக்க முடியாது. கோடரிகளும் ‘கோலுளி களும் ஒருவேளை, மேற்கிந் தியாவிலிருந்த அரப்பாப் பண்பாட்டிலிருந்தும் பிற ஒத்த பண்பாடு களிலிருந்தும் தோன்றியிருக்கலாம். இவ்வாறு நாம் கொள்ளா விடின் வரலாற்று முன்னர் இந்தியாவில் பிறிதொரு மையத்திலோ பல மையங்களிலோ இவை தனித்துப் பிற சார்பின்றிக் தோன்றி யிருக்கலாமென்று நாம் கொள்ள வேண்டும். எனவே இவ்வாறு கண்டனவற்றை அப்பண்பாட்டின் தேதியுள்ளோ அது முடிந்த சிறிது காலத்துள் தொடர்ந்த ஒன்றினுள்ளோ அடக்க ஒருவர் உள்ளங்கொள்வது இயல்பே. ராஞ்சியைச் சுற்றி இவை செறிந்து காணப்படுவதால் உள்ளூர்ச் செம்பு அங்கு பயன்பட்டது என்பதை அவை தெரிப்பனவாயுள்ளன. அாப்பாவிலிருந்து முந்நூஅறு மைல் கிழக்காகவுள்ள ராச்பூர் வரை நோக்கி, மேற்குப் பாங்கராகக் காணப்பட்ட பொருள்கள் பரவிக் கிடந்தன. இதிலிருந்து அரப்பா ஆட்சி எல்லைகளிலிருந்து கிழக்கு நோக்கி உலோக வேலை வினை நுண்மைகள் பரவ, அவற்றைத் தொடர்ந்து அவற்றிற் குப் பொறுப்பாயமைந்தோரும் பரவினர் என்னும் கருத்து வலு வடைகின்றது. இவ்வியக்கத்தை வணிகத்திலும் சிறிது மேலான ஓர் இயக்கம் எனக் கொள்ளவும், அாப்பாப் பேரரசு அழிந்ததும் மேற் புலத்திலிருந்து கொள்ளையடிப்போர் அங்கு புகுந்ததுமான காலத் தில் பஞ்சாப், இந்துப் பள்ளக்காக்கு ஆகிய இடங்களிலிருந்து இட மற்ருேரும் அகதிகளும் கங்கை வடி புலத் பில் வந்து குடியேறினர் என்று கொள்ளவுமே நம்மனம் விழையும், குவியல்கள் புதைபட்டி ருந்ததே காப்பின்மையையும் பொருளியல் ஈடாட்டத்தையும் குறிக் கும்; படையெடுப்புக்களின் வேகம் வளர்ந்து அசப்பா ஆட்சியின் பழைய எல்லைகளைக் கடந்து கங்கைப் பள்ளத்தாக்கை அடைந்து
சென்று தாக்கவும் இவ்வகதிகள் நெடுங் காலத்திற்கு அமைதியில்

Page 159
288 இடர் நிறைந்த காலமும்
வாழவிடப்படவில்லை என்பதையும் இது குறிக்கும். ஆயின் இங்கு நாம் தொல்பொருளியல் விட்டுத் தொல்கதை மரபுரை ஆகியவற் றின் ஐயக்குறிப்புக்களையே எடுத்துக்கொள்ள வேண்டியது.
மேல் கண்டவற்றைத் தொகுத்துக் கூறின் நாம் வருமாறு கூற லாம். கி. மு. 1500 என்று கருதக்கூடிய ஒரு பருவத்தில் (வசதிக் காக ஒரு நூற்றெண்ணை எடுப்போம்) வடமேற்கிந்தியாவில் தெடுங் காலமாக நிறுவப்பட்டிருந்த பண்பாட்டு மரபுகள் மேற்கிலிருந்து வந்த புது மக்களால் கொடூரமாக ஈவிரக்கமின்றி முறியடிக்கப் பட்டன என்று கொள்வதற்கு பலுக்கித்தான், சிந்து, பஞ்சாப் ஆகிய இடங்களிலிருந்து பெற்ற சான்றுகள் ஓரளவிற்கு ஒருமுக மாக அமைந்த அறிகுறிகளாக உள்ளன. புதிது புகுந்தவர்கள் பெருவளவில் அதிக பாரப் பொருள் கொண்டுவராதவராயும் நாடு வெல்பவராயும் இருந்தனர் என்பதும் தாம் நிலைத்த பகுதிகளி லுளள மட்கலப் பாணிகளைத் தாமும் மேற்கொண்டனர் என்பதும் பலுக்கிக் கிராமங்களை எரித்தமையிலிருந்தும் சாகிதம்பிலிருந்த உப கரணங்களிலிருந்தும் புலனுகின்றது. சிந்தில் சானுதாசோவில் கைவிடப்பட்ட அரப்பா நகர் ஒன்றின் சிதைவுகளில் காடவர்க்குரிய குடியிருப்பொன்று காணப்பட்டது. இங்கு உள்ளூர்க் கம்மியர் தங்கி நின்று தம் எசமானரான அயலார்க்குப் பணி செய இசைந்திருக் கலாம். இங்குள மட்கலம், அரப்பா அமிசமல்லாத உள்ளூர் அமிசங் கள் வளர்ந்தோங்கின என்பதைக் காட்டுவதாயுள்ளது. மொகஞ் சோதாரோவில் மிக நெடுங்காலம் நிலைபெற்ற நாகரிகம் கொள்ளை யடிப்போர் வந்தகாலத்தில் ஈனமுற்று நிலைகுன்றி வருவதாயிருந் தது. அரப்பாவில் நகரின் இறுதிக்காலத்தில் மக்கள் தாக்குதல்களை எதிர்ப்பவராயிருந்தனரென்பதை நகராண்மதில்கள் மீளக் கட்டப் பெற்றதிலிருந்து அறிகிருேம். ஆயினும் இவர்களின் ஏற்பாடுகள் வலிது புகுந்தவரை அவர் எங்கிருந்து வந்தாரெனினும் தடுத்து நிறுத்திவைக்க முடியவில்லை. வலிது புகுந்தவர்கள் பின்னர் இடி பாடுகளில் மனையமைத்து வாழ்ந்தனர்; தம் இறந்தோரைப் பல சந் ததிகளுக்கு இடுகாடு-இல் புதைத்தனர். மேற்புலத்திலிருந்து அபா யம் நெருக்கவும் பண்டை அரப்பா ஆட்சியிலிருந்த மக்கள் கிழக்கு

மாநகர்களின் முடிவும் 289
நோக்கிப் பரவினர் என்பதையும் அங்கிருந்து வினைநுண்மைகள் பர வின என்பதையும் சுட்டுமளவிற்குக் கங்கைப் பள்ளத் தாக்கி விருந்து சான்று கிடைத்துள்ளது.
மக்களின் புலப்பெயர்வும் புறநாட்டுக் காடவர்களால் பண்டை நகர்கள் அழிபட்டதும், கி. மு. 2000 இற்குப் பின்னாான நூற் முண்டுகளில், இந்தியாவில் மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சிகளல்ல. மெசப்பொற்றேமியாவில் அக்கது நகரில் சர்கொனின் ஆட்சியும் அவன் மகன் நாம்-சின் என்பான் இறந்தபின், குடி என்னும் கிளே யினரும் பிறரும் அந்நகரைத் தாக்கியதனுல் மிக விரைவில் சீரிழி தலுற்றது. இங்கு நகர் மீளவும் தலையெடுத்துப் பெருவளம் பெற்ற தெனினும், சிறப்பாக இது தென்பாகத்திலேயே நடைபெற்றது ; சில நூற்ருண்டுகளின் பின்னர் இக்காடவர் மீண்டும் தம் தாக்கு தலைத் தொடர்ந்து நடாத்தினர். அப்பொழுது இதுபற்றி எழுதிய எழுத்தாளன் பயந்தவனுயிருந்தாலும் இவரை ஏளனமாகக் கரு தினன் ; ஊரின் மூன்ரும் குலமுறையைச் சார்ந்த அமுறு காலத் தில் இவன் இதுபற்றி எழுதும்பொழுது இவர்கள் தாக்குதல் சூரு வளியை நிகர்த்ததாயிருந்தது. இவர்கள் இதற்குமுன் ஒரு மாநகரைக் கண்டறியாதவராயிருந்தனர்' என்கின்முன். ஆசியா மைனரில் இற்றைற்றுப் பேரரசு எழுந்த பருவமே இக்காலம். சிரியாவிலும் வடபேசியாவிலும் மக்கள் நடமாட்டத்திற்குரிய தொல் பொருளியலளவைகள் தெளிவாயிருக்கின்றன; ஆயின் இசார் II கட்டத்தில் ஏலவே தலைகாட்டத் தொ.ாங்கிய பழைய வண்ண மட்கலப் பண்பாடுகளுக்கு அன்னியமான அமிசங்கள், இசார் I கட்டத்தில், நகரில் தலையெடுத்து நின்றன. இந்தக் கட் டத்தில், துரங்கெபி, சாகெபி ஆகிய ஒத்த காலத் தலங்களில் உள்ளவாறு, புதுவகை அணிகலன்கள் கருவிகள் ஆயுதங்களே நாம் காண்கிருேம். இவை மெசபபொற்றேமியாவின் முன்னேக் குல முறைக்காலம், அக்கடியன் காலம் ஆகியவற்றிற் குரியனவற்றைப் பார்த்து ஆக்கப்பட்டவையாயிருந்தன. இப்பொழுதே, நாகரிக மான சமுதாயத்தவர்களின் எல்லைப் புறங்களைத் தாக்கியழிந்த காடவரிடையும் கிளையினரிடையும் இப்பொருள்கள் முதன்முதலாகப் பரவலுற்றன. இக்காடவரோ எல்லைகளை அழித்ததல்லாமல் கொள்ளை எடுத்தும் சென்றனர். புதிய வினை நுண்மைகளையும்

Page 160
290 இடர் நிறைந்த காலமும்
அறிந்து சென்றனர். தம் தலைவர் ஆளவைக்குக் கம்மியரையுமே கூட்டிச் சென்றனர்.
போர்க் குழுவினர், புலம்பெயர் மக்கள் ஆகியோரின் இயக்கத் தைக் கசுபியனிலிருந்து இரசிய தேக்கித்தானிலுள்ள அனேவரை யான கீழ்த்திசை எல்லைவரை கண்டறியலாம். இங்கே இத்தலத் தின் மூன்மும் கட்டக் குடியிருப்பு இசார் II உடன் நல்ல தொடர்புகொண்டிருந்த தென்பதற்கும், சிறிது குறைந்த அளவில் அாப்பாவுடன் தொடர்புகொண்டிருந்ததென்பதற்கும் தெளிவான அறிகுறிகள் உள. இவ்வாருக கி. மு. 2000 இலும் பின்னன சில நூற்றண்டுகளிலும் நடைபெற்ற மக்கட் பெயர்ச்சிக் காலத்திலேயே பலுக்கிக் கிராமங்களும் அரப்பாத் தலங்களும் அழிவுற்றன என்று பின்னரும் இரண்டாம் முறையாகப் பலுக்கித்தானில் மேற்கி லிருந்து வந்த ஒரு படை வெற்றி நிகழ்ந்ததற்கோ, குடியிருப்பு ஒன்று நிறுவியதற்கோ, உரிய சான்றுளது.
கியன், சியல்க் ஆகிய ஈர் இடங்களின் தலங்களிலும் உள்ள பிந் திய குடியிருப்புக்களும் இடுகாடுகளும் ஓரளவு காடவரான மக்க ளின் பண்பாட்டைக் குறிப்பனவாயுள்ளன. எனினும் இப்பண்பாட் டவர் ஈட்டிய வெற்றிகளுள் சவாரிக்குக் குதிரையைப் பழக்கிய தைக் கூறலாம். தேரிழுப்பதற்கும் இவர் குதிரையைப் பழக்கி யிருத்தல் கூடும். அப்கன் சிஸ்ானில் நட்-இ-அலியில் உள்ள தெல்வி லிருந்து பெற்ற வகைக் குறிப்பான மட்கலங்களும் வெண்கல அம் புத் தலைகளும் இம்மக்கள் இந்திய எல்லைகளை அடைந்துவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன. வட பலுக்கித்தானிலே மோகல் குண் டையிலுள்ள பதுக்கைப் புதைப்புக்கள் கொண்ட ஒரு சிறு இடு காட்டில் பல வெண்கலப் பொருள்கள் காணப்பட்டன. மோதிரங் கள், காப்புக்கள், குதிசைமணிகள் ஒருகாப்பு, ஒரு முக்காலிச்சாடி இப்படிப் பல பொருள்கள். இவை சியல்கிலுள்ள B இடுகாட்டு வகையை நிகர்த்தனவாயிருந்தன. தென் பலுக்கித்தானில், யிவன்றி, சங்கியன் ஆகிய இடங்களிலுள்ள இடுகாடுகள் அதே பேசிய இடு காட்டிலிருந்து பெற்ற கடங்களோடு தொடர்புடையனவான தனி வகை வடிவுடைய கடங்களைக் கொண்டிருந்தன. நல்லிலிருந்து அதி கம் தொலைவிலில்லாத லொண்டோவிலிருந்து, சியல்க் B இலிருந் தவற்றின் ஓர் உள்ளூர் மாற்றம் பெற்றன போன்ற வண்ணச் சில்லி

மாநகர்களின் முடிவும் 29.
கள் கிடைக்கப்பெற்றன. இவை விலங்கலங்காரங்கள் கொண்டிருந் தன. குதிரைகளாலாய ஓர் அணிவரிசையும் இவற்றிலிருந்தன. சியல்க் B இடுகாடு கி.மு. 1250-1100 வரை தேதி மேற்கொள்ளக்கூடி யது. எனவே இங்கு நாம் கூறிய பலுக்கித்தான் இடுகாடுகள் கி.மு. 1100-1000 வரையுள்ள காலத் திற்குரியன எனக் கொள்ளலாம்.
மக்களின் இப்புலப் பெயர்வுகள் எல்லாம் பண்டை மேற்காசிய நாகரிகங்கள் அழிந்து பண்டை நாகரிக வாழ்வின் அரண்களுள் புதிய இரத்தம் புதிய கருத்து ஏன் புதிய வினைநுண்மைகள் புகு கின்ற காலத்திலேயே நடைபெற்றன என்பதை நாம் காணலாம். போரில் குதிசையிழுக்கும் தேரும் புதிய வினைநுண்மைகளுள் ஒன்ருகும். பழையனவும் புதியனவும் கலக்க பல இடங்களில் மாற் றம் பெற்ற அமைப்பும் இயல்பும் பெற்ற நாகரிகங்கள் தோன்றின. பல மரபுகள் கழிய ஒன்றுடனென்று இவை இயைந்து கலந்தமை யால், இவற்றிலிருந்த மாறுபாடு அமிசங்கள் ஒன்றி வேறுபாடு பண்பு குறைந்தது. தாம் வெறுத்ததாயினும் போற்றிய நாகரிக மரபுகளைத் தாம் அறியாமலே காடவர் மேற்கொண்டனர். அவர் மற்றை நாகரிகத்தை வென்றதெல்லாம், அதன் நுண்ணிய நின்றுாக் கும் ஆற்றலால் தாமே வெற்றி கொள்ளப்படுவதற்கே யெனலாம். இருள் ஊழியில் அவ்வூழி தானே அழித்ததைத் தானே மீண்டும். நிறுவும் முயற்சி, ஆகி நடுக்கால ஐரோப்பாவோடு மட்டும் நிற்கும் ஒரு அமிசமன்று.
கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதியில் இந்தியா வைப் பாதித்த இயக்கங்கள் பற்றிய வரலாற்று முன்னர்க்குரிய தொல்பொருளியற் சான்றுகளை ஆாாய்வதோடு மட்டும் இவ்வதி காரம் அமைவுறுகின்றது. எனினும் எடுத்துக் கூறுவதற்கு வேருெரு விடயமும் உண்டு; இது மொழியியலேயும் சில இலக்கியத் துணுக்கு களையும் சான்முகக் கொண்டது. இவை கவனமில்லாதார் பலரைப் பன்முறையும் ஆதாரமற்ற கொள்கைகள் எழுப்பவும் படுபிழைகள் விடவும் காரணமாயிருந்தவை. கவனமாயிருந்தவரையும்கூடப் பன்முறையும் ஒத்த நிலைக்கு ஆளாக்கியவை. இந்தோ-ஐரோப்பியத் தொகுதியுளமைந்த மொழிபேசுவாரின் புலப்பெயர்வும் வட இந்தி யாவிற்கு ஆரியக் குடியேறிகள் வருகையும் தொல்பொருளியற் சான்றுடன் உற்ருயவேண்டியவை.

Page 161
292 இடர் நிறைந்த காலமும்
அதிகாரம் W1 இற்குரிய குறிப்புக்கள்
rr62)(356:r60 - Grubb Journ. Near Eastern Studies V (1946), 284-316 என்பதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆகிரீவ்ஸ் என் பவர் நல் குடியிருப்புக்களைப் Luis Excavations in Baluchistan 1925 (1929) என்பதில் கூறியுள்ளார். டபர் கொட்டைப் பற்றி, awfair Arch. Tour in Waziristan and North Baluchistan (1929), (57) என்பதில் கூறியுள்ளார். இன்னும் ஸ்ரீன் சாகிதம்ப் £3006 (Tl''-60)L -- Arch. Tour in Gedrosia (88-105) ar 6ört Ggyth (g5tl (Luigi) g(as it '60L. Arch. Reconnaissances (106110) என்பதிலும் கூறியுள்ளார். சாகிதம்ப் முத்திரை இலச்சினை கள் பற்றி நான் Antiquity XVII (1943), 179-181 என்பதில் ஆராய்ந்துள்ளேன். இடுகாட்டிலிருந்து பெற்ற கபாலம்பற்றி செவல் Arch. Tour in Gedrosia (191-200) GT Görlu@ổd ggr Ituiuji.g7Girar Ti.
சானுதாரோவில் நடைபெற்ற யுகர் பண்பாட்டின் குடியிருப்பு upsis LDiGas Chanhu-daro Excavations (1943) at airuga) விவரித்துள்ளார். ஊசிகள் பற்றி Ancient India, எண் 3, 145 இல் என் குறிப்பினைப் பார்க்க. யுகர், லொகம்சோதாரோ ஆகியவற்றைப் Lö4) Explorations in Sind (1934) GT6örLß6) மகும்தார் விவரித்துள்ளார். இதில் யன்கர் பற்றிய விவரமும் உண்டு. ஆயின் பிற்காலத்திய தோற்றமுடைய மட்கலம் பற்றிய (நடு ஆசிய அரும் பொருளகம்) குறிப்பொன்றும் இதில் இல்லை. மொகஞ்சோதாரோ, அரப்பா ஆகியவற்றில் பிற்கட்டங்கள் பற்றிய குறிப்பு அதிகாரம் V இல் மேற்கோள் காட்டப்பெற்ற அறிக்கைகளில் உள்ளன. அரப்பா நகராணின் இறுதிக் குடியிருப்பு பற்றி விலர் Ancient India, எண் 3 (59-130) இல் ஆய்ந்துள்ளார்கள். இதே சஞ்சிகையில் (பக். 84. 86) H இடுகாடு பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இது வாற்ஸ் அவர் soir Excavations at Harappa G76öI L 16ìảò GrQị6ujGirGT G23ởò அறிக்கைக்கு அனுபந்தமான முறையிலமைந்துள்ளது.
கங்கைப்புலத்துச் செம்பு வெண்கல உபகரணங்கள் பற்றி நான் Antiquity XIII (1944), 173-182 என்பதில் ஆராய்ந்துள் ளேன். இதில் குரம் கோடரி வடமேற்கெல்லைப் புறமாகசனத்திற்

மாநகர்களின் முடிவும் 293
குரிய தென்று சொல்வதற்குப் பதிலாக அது ராஞ்சி மாவட்டத்திற் குரியதென்று தவமுகக் கூறப்பட்டுள்ளது. ரசன்பூர் வாள் எடின் பரோவிலுள்ள நாட்டினத் தொல்பொருள் அரும்பொருளகத்திலுள் ளது. மோகல் குண்டைப் பதுக்கைகள் பற்றியறிய Man in India XXVI (1947) 234 இல் கோடன் எழுதிய கட்டுரை பார்க்க, லொண்டோ தளம் செல்வி பி. டி காடி என்பாரால் கண்டுபிடிக்கப்
--gile

Page 162
294
பலுக்கித்தான்
இடர் நிறைந்த காலமும்
சிந்துவும் பஞ்சாபும்
ama
தென் பலுக்கித்தான் மோகல் தன்ன uhn
co
இடுகாடு str8E, tim
fs savų, ೩1ಣ್ಣೆ
17 ஞற குண்டை W را به
ராணு குண்டை mo-H - 1Ꮩ! 盟 Π
(36an6 “H”) ሰ 2 Ο90 l சாகி தம்ப r (ಒà¥)
அழிவு سلطنت+ t2ئH پہنما ہند
4.
Gen&త్త31 «24 Juu T f es தாரோ R 37 ن 19) இடுகாடும்) குண்டை نامش
*ه uu శ్రీGuj s துந்தரா (ராகு 111)
3000
anútól t
14 ஒற . sey nul اللغةپه
"), "y gwyl) (YTFFIL- 2
s
அட்டவணை I
 
 
 
 
 
 
 
 

அதிகாரம் VII மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்ஆரியரும் இருக்குவேதமும்
போர்வீரன் நோக்கு இடிமழை முகிலென இருந்தது.
பரிசை பூண்டதும் அவன் போரின் மடியினை நாடினன் ,
புண்படா உடலோடு நீ வெற்றி பூணுவாய் நின்
பாசையின தடிப்புனைக் காக்க ;
அயற்பகையாயினென் உட்பகையாயினென்
யாரெமைக் கொல்வார் ;
கடவுளர் யாவரும் அவனுக்கிடர் சூழ்க ;
எனக்கு நெருங்கிய பரிசை பராவலே ,
(இருக்குவேதம் V1, 15) பதினெட்டாம் நூற்றண்டின் இறுதியில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு சமயத் தூதுவரும் ஓர் ஆங்கிலேய ஆட்சியாளருமான ஓர் ஐரோப்பியர் பிரமிக்கத்தக்க முறையில் ஒரு மொழி பற்றிய செய்தியைப் புதிதாகக் கண்டறிந்தனர் (இது தனித்தனியாக நடைபெற்றதாகும்); 1767 இல் கோடோவும் 1786 இல் சேர் வில்லியம்சு யோன்சும் பண்டை இந்திய சமய மொழியான (எடுத் துக் காட்டாக இருக்கு வேதமொழி) சங்கதம் பற்றித் தாம் ஆராய்ந்த முடிபுகளை வெளியிட்டனர். இம்மொழி இலத்தின், கிரேக்க மொழிகளுடன் சொற்பரப்பிலும் இலக்கணத்திலும் போற் றத்தக்க ஒப்புமைகள் கொண்டிருந்ததை இவர்கள் இருவரும் கண்டனர். இம்மொழிகள் இத்தகைய வியக்ககு ஒப்புமைகள் கொண்டிருப்பதற்கு இறந்துபட்ட பிறிதொரு மொழியில் பொதுப் பட அவை தோன்றின. பின் அங்கிருந்தோர் கிழக்கும் மேற்குமா கப் பரந்தனர் எனக் கொள்வதாலேயே விளக்கமளிக்கலாம் என எண்ணினர். இவர்கள் கருதுகோள் பின் தோன்றிய போப் போன்ற இலக்கணவியலாரால் நன்முறையில் உறுதியாக்கப்பட்டது. பின் 1813 ஆம் ஆண்டளவில் இத்தொகுதி மொழிகளையும் உத்தேசமான அவற்றின் மூல மொழியையும் சுட்ட "இந்தோ-ஐரோப்பியன்” 295

Page 163
296 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
என்ற பதம் வாய்ப்பானது என்று குறித்தனர். இப்போதைய ஆய்வுகளில் இப்பெயர் நிலைத்துள்ளது. இவ்வாய்வுகள், சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் பற்றி நல்விளக்கமளித்துக் கோடோ, யோன்சு ஆகியோரின் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளன.
இந்தோ-ஐரோப்பியத் தொகுதி மொழிகள் ஒப்பீட்டளவில் பண்டை உலகின் மொழிக் குலத்தில், இளையவை என்பதையும் சுமர் மொழியும் அமிற்றிக்கு, செமிற்றிக்குத் தொகுதி மொழிகள் போற்றத் தக்க தொன்மையுடையனவாயிருந்த காலத்தில் மலர்ச்சி பெற்றன என்பதையும் நாம் இன்று அறியக்கூடியவராயிருக்கிருேம். ஆதிப் பண்டைய மொழியொன்றிலிருந்து பலமாற்று மொழிகள் தோன்றி வளர்ந்து பரவியுள என்பதை நாம் இப்பொழுது காணக் கூடியதாக உளது; இவ்வாதி மொழி ஆதிகாலந் தொட்டே கலப் புடையதாயும் இரு பிரதான கூறுகளைத் தன்னுள் அடக்கியதாகவும் விளங்குகின்றது. அக்கூற்றுகளுள் ஒன்று ஊசல் கூறு; மற்றையது கோக்கசசுத் தொகுதியோடு இணைந்த கூருயிருக்கலாம். அப் பொழுது புறம்பான ஒரு மொழித் தொகுதியினர் தோன்றியிருக்க லாம். இவர்கள் தோற்றத்துடன் உண்டாய இக்கலப்பு தென்னிரசி யாவிற்கும் தேக்கித்தானிற்கும் இடையில் சுமர், அக்கது ஆகியவற் றின் ஆட்சியின் வெளி எல்லைப்புறங்களில் உருவாகியிருக்கலாம். ஒன்றேனும் ஒருகாலத்தில் ஆதியில், மொழியிலேனும், இந்தோஐரோப்பிய ஒருமை என்று ஒன்றிருந்தால், விரைவில் கிளைமொழி கள் பிறழ்மொழிகள் அதிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். முக் ܖ கிய மொழித் தொகுதியின் முதற் பிரிவுகள் அத்தொகுதி தோன் றிய இடத்திலிருந்து மக்கள் கிழக்கும் மேற்குமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்திருக்கலாம்.
இத்தகைய ஒரு பிரிவினை 'க' ஒலிகொண்ட அண்ண எழுத்து, நூறு என்னும் சொல்லில் வருகின்ற வேறுபட்ட முறையிலிருந்து நாம் காணலாம். ஒரு தொகுதியில் இது இலத்தீன் மொழி சென்றும் (Centum) என்று நிற்க, சங்கத மொழியில் இது சதம் எனப்படும். *சென்றும் ' மொழிகள் பொதுவாக மேற்குத் திசையில் பரவியுள் ளன. இப்பொழுது வாழ்கின்ற மொழிகளுள் செல்றிக், இற்றலிக், சேமானிக், கிரேக்கக் கிளைமொழிகள் முதலியன இத்தொகுதியில் அடங்கும். இறந்தவற்றுள் இலிரியனும் ஒருவேளை லிகுரியனும்

ஆரியரும் இருக்கு வேதமும் 297
அடங்கும். இதற்குப் புறநடையாயுள்ளதும் ஓர் இறந்த மொழியே. அது தொக்காரியன் எனப்படும். இது ஸ்ரீன் அவர்களால் சிங்கியாங் கில் கி. பி. முதற் சில நூற்ருண்டுகளுக்குரிய கைப்பிரதிகளிலிருந்து கண்டறியப்பட்டது. இது ஒன்றே கீழை நாட்டிலிருந்த ஒரு 'சென் அறும் மொழி. சதம் தொகுதியில் போல்ரிக், சிலாவிக் மொழிகளும் ஆமீனியன், இரானியன், சங்கதம் அதிலிருந்து தோன்றிய பிற்றை இந்திய மொழிகள் முதலியனவும் அடங்கும். கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டிலிருந்த இற்றைற்று மொழியின் கிளைமொழியான நசிலியும் சென்றும் தொகுதியோடு தொடர்புடையதாகும். இதைப் பல மொழியில்வல்லுநர் இத்தலோ-செல்றிக் தொகுதியோடு மிகத் தொடர்புடையது எனக் கொள்வர். முந்திய மொழிவலாரிலும் பிந்திய மொழிவலார் சென்றும்-சதம் பிரிவினைக்கு அதிக முக்கியம் அளிப்பதில்லை. இவர்கள் ‘ர்‘ ஒலியில் உள்ள செயப்பாட்டுவினை அமிசத்தைத் தனித்தறிந்து பிறிதொரு தொகுதியையும் வகைப் படுத்தினர். இத்தொகுதியில் இற்றைற்று, தொக்காரியன், பிரிசியன், இற்றலிக், செல்றிக் முதலிய மொழிகள் அடங்கின.
ஆயினும் இப்பிரிவுகளை நீக்கி அறியப் பெற்ற இந்தோ-ஐசோப்பி யத் தொகுதி மொழிகளுள் மிக நெருங்கிய ஒற்றுமைகளை நாம் காணின் ஒரளவு உறுதிப்பாட்டுடன் ஆதித் தாய்மொழியின் முக்கிய அமிசங்களையும் பண்பாட்டுப் பிற்களத்தையும் மீளவமைக்கல் சாலும், சமுதாயம் ஒன்றிற்கு அடிப்படையானவையாய், ஆயின் குழல் மாற்றங்களினல் அதிகாரம் பெருதவையான, பொருள்கள் கருத்துக்களை எடுத்துரைக்கக்கூடிய சொல்லொப்புக்களை எட்டு, ஆறு மொழிகளில் நாம் காணலாம். எடுத்துக் காட்டாக : குடும்பத் துள் தந்தையைச் சுட்டுவதற்கான சொற்கள் சங்கதம், பிதர் ; கிரேக்கம், பதார் ; இலத்தீன், பேற்றர் ; ஐரிசு, அதிர் ; சேமானிக், பதர் ; தொக்காரியன், பாதர் ; ஆமீனியன், ஐயர். இற்படுத்தப்பட்ட பொதுவான ஒரு விலங்கான குதிரையை எடுத்துக் கொள்வோம். சங்கதம், அஸ்வ; கிரேக்கம், இபொஸ்; இலத்தீன், இகுடஸ்; செல் றிக், எச் அங்லோ சக்சன், எகு, லிது.ஆனியன், அஸ்வ; தொக் காரியன், யக்வே. இத்தகைய ஒப்புமைகளைக் கொண்டு கருதுகோள ளவிலமைந்த ஓர் இந்தோ-ஐரோப்பிய சமுதாயம் ஒன்று புனைத் தமைக்கப்பட்டது; இவர்கள் பயிர் செய்வோர். குதிரையை இற்

Page 164
298 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
படுத்தியவர், சமுதாய அமைப்பில் தந்தை வழி பேணுபவர், இரும் பன்றிச் செம்பும் வெண்கலமும் பயன்படுத்துவோர், ஒருவகைச் சடங்குடன் மனிதவுருக் கடவுட்டொகுதி ஒன்றை வணங்குவோர் எனக் கொள்ளப்பட்டது. இவ்வாறமைந்த முறையில் குறைபாடிருந் தது. சங்கதமொழி வல்லுநரான எ. பி. கீத் அவர்கள் ஒருமுறைச் சாட்சியை மிகச் சொல்லொரு பொருள்வழி கொள்ளின் ஆதி இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநர் பாலையறியாது வெண்ணெயை அறிந்தவர் என்றும், மழைப்பனியையும் பாதங்களையும் அறிந்த வர் ஆயின் மழையையும் கைகளையும் அறியாதவரென்றும் கொள்ள வேண்டும் என்று கூறினர். எனினும் பரும்படியான விவரங்கள் உறுதியானவை ; மொழிமுறைச் சான்றின் உதவியிலிருந்து அமைக் கப்பெற்ற சமூக அமைப்பு, மேற்காசியா, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களிலிருந்தும் நாம் பெற்ற கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண் டிற்குரிய தொல்பொருளியற் சான்றுடன் இணைத்துப் பரிசோதிக் கப்படும்போது உறுதியுடையதாயுள்ளது.
இன்னும் ஒரு முக்கியமான குறிப்புண்டு. மொழிகளும் மொழி பேசுந் தொகுதியினரும் புவியியல் முறையில் பரந்தவாற்றில் ஒரு தொடர்புண்டு எனும் கருத்து மொழியியலாளர் பலரிடை உண்டு. அத்துடன் நடுமொழிப் பரப்புக்களுக்கும் சூழ் புலங்களுக்கும் இடையே ஒரு வேறுபாடுண்டென்ற உணர்வும் அவரிடை தோன்றி யுள்ளது நடு மொழிப் பாப்புக்களில் புதியன புகுதல் பொதுவாக விரைவில் நடைபெறுமென்பதும் சூழ்பலங்களில் பண்டை மொழி யியல் மரபுகள் பெருவளவில் மாறுபடாமல் இயங்குகின்றன என்ப தும் அவ்வேறுபாட்டமிசங்களாகும். இதை உளங்கொண்டு நோக் கும்போது புவியியன் முறையில் தொலைவிலுள்ள பகுதிகளை உறுதி யோடு இணைத்து நோக்கலாம். இவை குழயற்புலத்துள் அமைந் திருப்பின் அவ்வாறு ஒப்பிடலாம். ஏனெனில் விரைவாக விருத்தி யடையும் நடுப்பாப்பில் மன்றந்துபோய் குழயற்புலத்தில் இயங்கும் சில அமிசங்கள் இங்கு காணப்படலாம் என்பதே காரணம். உதா ரணமாகத் தொக்காரியன் மொழியிலுள்ள இலக்கண விக்ற்பங்கள் இற்றலோ-செல்றிக் தொகுதியில் காணப்படுகின்றன. பிற இடங் களில் மறைந்துபோன பழைய மரபுகள் இற்றைற்றிலும் பழைய ஐரிசு மொழிகளிலும் காணப்படுகின்றன.

ஆரியரும் இருக்கு வேதமும் 299
எனவே, இவ்வொப்புக்களை, பழைய மொழிகளோடு இணைந் திருந்த தொல் கதைகள் கிரியைகள் முதலியவற்றிலும் நாம் ஆய்ந்து பார்க்கலாம். ஆதலால் அன்றே பண்டை இந்திய அசுவ மேதயாகமெனும் விசித்திரமான சிக்கற்பாடு நிறைந்த கிரியையின் அமிசங்கள் இன்றும் உள் அல்தாய் துருக்கியரிடையும் காணப்படு கின்றன. கி. பி. பன்னிரண்டாம் நூற்றண்டுவரை அயலந்திலும் நிலை நின்றன. இங்கு இன்னுமோர் அமிசத்தையும் காணலாம். முன் ஃனச் சங்கதநால்களில் காணப்படும் பண்டை இந்தியச் சமுதாய முழு அமைப்பும் அதன் போர்முறைப்பாங்கும்,காலத்தாலும் இடத் தாலும் பெருவளவில் மாறுபட்டவையாயிருப்பினும் செல்றிக் இரும் பூழிக்குரிய ஐரிசுவீரர் கதைகளை வியத்தகுமுறையில் நமக்கு நினை வூட்டுவனவாயுள்ளன.
இந்தோ- ஐரோப்பியத் தாயகம் ஒன்றிருந்திருக்கவேண்டுமென்று கொண்டு அந்த இடம் எங்குளதென்று தீர்மானித்தல், மொழி யியற் சான்றிலிருந்து ஊகித்தறியக்கூடிய பண்பாட்டினை ஒரளவு ஒத்துவரக்கூடிய தொல்பொருளியல் தோற்றப்பாட்டுடன் ஒன்ருக்கி நோக்கல் ஆகிய இரண்டு விடயங்கள் பற்றிய கருக்தூக்களும் " சென்ற நூற்றண்டில் முதன்முதலாக எழுந்த காலந்தொட்டுப் பிணக்குக்குரிய விடயங்களாக அமைந்துள்ளன. இதுபற்றிய ஆய்வு ஐரோப்பாவில் நாட்டின உணர்வு பற்றிய முறையில் பிறழ் வழியில் சென்றுவிட்டது; உதாரணமாக சேமானிய கல்விமான்கள் கொவினு என்பார் தலைமையில் இந்தோ-ஐரோப்பியரின் ஆதி அகம் வெண் சிவப்பு நிற நோதிக்குக்கள் நிரம்பிய வட ஐரோப்பியச் சமவெளி யெனக் கொண்டனர். இந்தியாவிலோ அற்புத விடயங்களிலிருந்த பற்று, ஆரியர் கி.மு. ஆருயிரம் ஆண்டுகட்கு முன்னர் வடதுருவத் திலிருந்து வந்தனர் என்பது போன்ற கற்பனைகளுக்கு இடமளித் தது. ஆயினும் பொறுப்புணர்ச்சியுடைய மொழியியலாளரும் தொல் பொருளியலாரும் இம்மொழி தோற்றியிருக்கக்கூடிய இடத்தை மட் ப்ெபடுத்தி, அது தனூபிற்கும் ஒக்சசிற்கும் இடையில் யுாதோ ஓரி டத்திலிருக்கவேண்டுமென்று கொண்டுள்ளனர். கைல்சு என்பார் மொழி முறை அடிப்படையில் மிக்க முன்னைய இந்தோ-ஐரோப்பி யப் பேச்சுமொழி அங்கேரியச் சமவெளிகளில் மலர்ந்திருக்கலாம் எனக் கருதினர். வேறு சிலர் நடு ஆசியாவில் தோன்றியிருக்கலாம்

Page 165
300 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
எனக் கொண்டனர். குறித்த சில சொற்களின் (உதாரணமாக, பீச் மரத்தைக் குறிக்கும் சொல்) குறிபொருளைக் கொண்டு இயற்கை வளத்தை மட்டிட்டு இம்மொழி பேசியோர் பரப்பினை, வரையறுக் தவில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆயினும் இன்றும் பல் வேறு மக்கள் தாவரங்கள் விலங்குகளின் பெயர்களை அவதான மின்றி வழங்குவதை நாம் காணலாம். ரொபின் எனப்படும் பறவை இங்கிலாந்தில் ஒன்முகவும் அமெரிக்காவில் வேமுென்முகவும் இருப் பதை நாம் இன்றும் காணலாம். எனவே இத்தகைய நியாயமுறை களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.
அறிவுமுறைக்கு மிக இயைந்ததும் மொழியியல் தொல்பொருளி யல் ஆகியவற்றின் தேவைகளுக்கு இணங்கக் கூடியதுமான கருது கோள், ஆதியில் பேராசிரியர் யே. எல். மையேசு என்பாராலும் காலஞ் சென்ற அரல்ட் பீக் என்பாராலும் உருவாக்கப்பட்டு பேரா சிரியர் சைல்ட் என்பாரால் பின் விருத்தி செய்யப்பட்ட ஒன்முகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் தென் இரசிய சுதெப்பிகள், கசுபி யன் கடலிற்குக் கீழ்த்திசையிருந்த நாடுகள் ஆகிய இடங்களி லிருந்த முன்னை வேளாண் மக்களிடை மலர்ந்தன என்று இவர்கள் கொண்டனர். மொழியியல் முறைச் சான்றினைக் கொண்டு சென்ற நூற்முண்டில் சிரேடர் போன்ற கல்விமான்கள், மேற்கூறிய நிலப் பாப்பே மொழிதோன்றிய இடமென்று கொண்டனர். இன்னும் நாம் இப்பொழுது கொண்டுள்ள தொல்பொருளியலறிவும். மொழி சுட்டும் உண்மைகளுக்கிணக்கமான முறையில் பொருளியல் பண் பாட்டிற்கு மிக உவந்த சான்றுகளை நல்குவதாயுள்ளது. இந்தத் தென்னிரசியப் பரப்பினில் கி.மு. பின்னைய மூன்ரும் ஆயிரத்தாண் டிற்கும் முன்னே இரண்டாம் ஆயிரத்தாண்டிற்கு முரிய காலத்தில் இருந்த அடிப்படைப் பண்படு வேளாண் மக்களின் பண்பாடாக இருநதது. இது ஒருவுேளை பாத்தளவில் நாடோடி வாழ்வோடி யைந்ததாயிருக்கலாம். ஆயின் சிறு இடுகாடுகள் அமைக்குமளவிற் குப் போதிய நிலையான குடிவாழ்வு கொண்டதாயிருக்கலாம். இக் குடி வாழ்வு ஒரு வேளை ஒப்பீட்டளவில் நிலையான குடியிருப்புக்க ளிருந்த இடங்களுக்கண்மையில் நடைபெற்றிருக்கலாம். இங்கிருந் கோர் செம்மறி, நல்லினம் முதலியவற்றை இற்படுத்தினர்; பண் பாட்டின் ஆதிகாலத்திலில்லாவிட்டாலும் இறுதிக்கட்ட்த்தில் முதன்

ஆரியரும் இருக்கு வேதமும் - 30
முதலாகக் குதிரை பழக்கப்பட்டது என்பது உறுதி. தனித்தனிப் புதைகுழிகளில் புதைப்புக்கள் காணப்பட்டன; இவற்றுட் சில திடலின் கீழோ அல்லது கற்குவியலின் கீழோ இருந்தன. இவற் அறுட் சிலவற்றில் ஒரு கல்லாலான போர்க்கோடரி (அருமையாக இது செம்பாலிருக்கும்) இருந்தது. இதிலிருந்து இம்மக்களின் சமூக அமைப்பில் போர்வீரர்களும் படைத்தலைவர்களும் இருந் தனர் என்பது புலனுகின்றது.
சில இடங்களில், தென் இரசியாவின் மைகப் போன்ற இடங்களில், சிறு படைத்தலைவரிலும் உயர் நிலையிலிருந்தோரின் பெரிய கல்லறை கள் இருந்தன. இங்கிருந்த கருவிகள், ஆயுதங்கள் வெள்ளியாலோ பொன்னலோ செய்யப்பட்டனவாயிருந்தன. அல்லாமலும் இவற் றின் உலோக வேலைகள் முன்னைக்குலமுறை, அல்லது அக்கடியன் காலத்திலிருந்து பெற்ற வகையினவாயிருந்தன. இத்தகைய உலோக வேலைப் பொருள்கள் இன்னும் மிகக் கீழ்த்திசையாகக் காணப்படக் கூடியனவாயிருந்தன. உதாரணமாக கசுபியன் கடலிற்குத் தென் கிழக்கு மூலையிலிருந்த தெபி இசார், துரங்தெபி ஆகிய தலங்களில், இவை காணப்பட்டன. அலகா உயுக்கிலுள்ள செல்வப் பொருள் நிாைத்த கல்லறைகளிலும், இன்னும் சிறிது பிற்காலத்திற்குரிய கோக்கசசிவிலுள்ள தயலெற்றியிலுள்ள கல்லறைகளிலும், இவை காணப்பட்டன. இவ்விடத்தில் சில ஒப்புமைகள் நோக்குதற் குரியன; கோடரிக்கும் செம்பிற்குமுரிய இந்தோ-ஐரோப்பியன் சொற்கள் மெசப்பொற்றேமியாவிலிருந்து தோன்றினபோல் புலப் படுகின்றன. கோடரிக்குச் சங்ககச் சொல் பாசு, கிரேக்கச் சொல் பெலிகுசு ; இவை பெலகு என்ற ஓர் ஆகிச்சொல்லிலிருந்து பிறந் திருக்கலாம். செம்பிற்குரிய ஆகிச் சொல் ரெள கொஸ் (அசிரியன் பிலக்கு, சுமேரியன் உருக்). இவ்வாறே எருது, உடு ஆகியவற்றிற் குரிய சொற்களிலும் ஒத்த ஓர் உறவிருக்கலாம். சுமேரிய வகை உலோகத் தண்டுத்துளைக்கோடரியை, சுமர், அக்கது ஆகிய ஆட்சி களின் எட எல்லைகளிலிருந்து காடவர் அமைக்கெடுத்ததைப்பற்றி அதிகாரம் V இல் கூறியுள்ளேன். உண்மையில் சாகிதம்ப் கோட ரிக்கு மிக ஒத்த கோடரிகள் மைகப் கல்லறையிலேயே உள. எனவே, கி. மு. 2000 அளவில் தென் இரசியாவிலிருந்து தேக்கிக்கான்வரை பல கிளையினரை அடக்கியிருந்த ஒரு தளர்வான கூட்டாட்சியிருந்

Page 166
302 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
திருக்கலாம். இக்கிளையினர் சில பண்பாட்டமிசங்களில் ஒன்றுபட்ட வராயிருந்திருக்கலாம். தம் உலோகவேலை வினைநுண்மைகளுக்கு உயர்நாகரிக மையங்களில் தங்கியிருந்ததும் அவ்வமிசங்களில் ஒன்முயிருந்திருக்கலாம். இவர்கள் இந்தோ-ஐரோப்பிய அமைவுள் அடங்கிய மிக்க உறவுபூண்ட கிளேமொழிகள் பேசுபவராயிருக்க லாம். ஆசிய மைனர், மெசப்பொற்றேமியா ஆகிய இடங்களிலிருந்த கல்வியறிவுடைய நகர்ப்பண்பாடுகளுக்குரிய வரலாற்ருவணங்களின் சான்று இக்கருத்திற்கு ஆதாரமாயுள்ளது. ஏனெனில் இந்தோ ஐரோப்பியத் தொகுதிக்குரிய ஒரு மொழியான இற்றைற்றின் நசி G6-iG&T மொழி, இப்பொழுது நிலைநிற்கும் இற்றைற்றுப் பேரரசிற் குரிய பொறிப்புக்கள் ஆவணங்களிலிருந்தும், கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் உடன்பின்னராக விளங்கியதாகப் புலப்படு கின்றது.
கி. மு. பதினரும் நூற்றண்டின் ஆரம்பத்தில், பபிலோனின் முத லாம் குலமுறை கெட்டழியவும் வடபாலிருந்து வந்த மலையவர் படையெடுப்பினுல் மெசப்டொற்றேமியா மீண்டும் துன்புற்றது; இக் குலமுறை பெரிய அமுசேபியின் தலைமையில் உச்சநிலை அடைந்திருந் தது. இப்படையெடுப்பின் பின்னர் கசைற் குலத்தினர் தலைமையில் புதிய ஒரு குலமுறை நிறுவப்பட்டது. இக்குலமுறை மன்னர் இந் தோ-ஐரோப்பியப் பெயர் பூண்டிருந்தனர். இவர்கள் வடக்கோ வட கிழக்கிலிருந்தோ வந்திருக்கல்ாம் ; இவர் வருகை இந்தோ-ஐரோப் பிய மொழி பேசுவார் கிழக்கு நோக்கிப் பெருவளவில் பரந்ததின் ஆரம்பத்தைச் சுட்டுவதாயிருக்கலாம். இக்குலமுறை பற்றி நம் அறிவு அற்பமானதே; ஆயின் இது ஐந்தாறு ஆண்டுகள் வரை நிலை நின்றது. ஆயின் இக்காலத்தில் கசைற் அரசாட்சியின் வடமேற்கு எல்லையில், பிறிதோர் இந்தோ-ஐரோப்பிய தொகுதியினரான மித் தனி என்பார் பற்றி, முதன்முதலாக அறிய வருகிமுேம். இவர்கள் கபூர் ஆற்றின் பொங்குமுகத்தைச் குழ்ந்த மாவட்டத்தில் குடி யமைத்து வட சிரியாவின் பெரும்பகுதியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். −
கி. மு. பதினன்காம் பதினைந்தாம் நூற்முண்டுக் காலங்களில் மிக் தனி ஆட்சியாளரிடை இந்தோ-ஐரோப்பியப் பெயர்கள் பெருவழக் கில் பயின்றன. இவை எகித்தில் உள்ள எல் அமர்ணு, ஆசிய மைனரி லிருந்த இற்றைற்றுத் தலைநகர், போகசு கியு ஆகிய இடங்களி

ஆரியரும் இருக்கு வேதமும் 303
லிருந்து வெளிப்போந்த அரசுமுறைத் தொடர்பாவணங்களில் காணப்படுகின்றன. இவ்வாவணங்கள் மட்பலகைகளில் உருமாறி யமைத்த ஆப்புருவ எழுத்தில் எழுதப்பெற்றிருந்தன. இவற்றுள் மிகக் கவர்ச்சிகரமான பத்திரம் இற்றைற் அரசன் சுபிலுலியுமா என் பானுக்கும் மித்தனியைச் சார்ந்த துஸ்ரத்தா என்பானின் மகன் மத்தியுசா என்பானுக்கும் இடையமைந்த ஓர் உறுவொப்பந்த மாகும். இது 1380 இல் ஏற்பட்டது. இதில் பிற்கூறப்பட்டவன் தன் கடவுளர்களைச் சான்முக வேண்டுகின்றன். இதற்குரிய வாசக வாய்ப் பாடு வருமாறு அமைகிறது. மி-இத்-கிர-அஸ்-சி-இல் இலணி உ-ரு-வ்-ன-அஸ்-சி-இல்இலுஇன்-த-ர இலணி ந-ச-அத் -தி-இய-அன்-ன. இங்கு கூறப்பட்ட கடவுளர் இருக்குவேதம் போன்ற ஆதிச் சங்கதச் சமய நூல்களில் கூறப்பட்ட பண்டை இந் தியக் கடவுள் தொகுதியினரான மித்ரன், வருணன், இந்திரன் ஆகி யோராகவேயிருத்தல் கூடும். இந்நூல்கள் பற்றிப் பின்னர்க் கூறு வோம். இங்கு கூறப்பட்ட கடைசிக் கடவுளர் நாசத்தியராக இருத் தல் கூடும். இப்பெயர் அந்நூலிலேயே அசுவினிகட்கு மாற்ருக அமைந்த ஒரு பெயராகும். அசுவினிகள் ஒரு தெய்வ இரட்டைய ராவர். இற்றைற் உறவொப்பந்தத்திலிருந்து இக்காலத்தில் மித்தனி அரசில் இந்தியர் இருந்தனரென்று பொருள் கொள்ளலாகாது. ஆயின், இது மொழி ஒப்புமைகளால் நாம் அறியக்கூடிய இந்தோஐரோப்பிய மக்களின் பொதுத் தொல்கதைத் தொகுதியினையே சுட்டுவதாக உள்ளது. அதாவது மித்தனியின் கடவுளர்களே பெரும் இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தின் கீழ்த்திசைக் கிளையினரின் கடவுளர்களாகவும் விளங்கினர் என்பதாம்.
இன்னும், பொதுவான ஒரு பண்பாட்டுமுறை மரபினை, ஒத்த முறையில் சுட்டும் மேலதிகமான ஒரு சான்றுண்டு; ஆயின் இது உண்மையை உறுதிப்படுத்துவதற்கு நிறைவானதன்று. ஒத்த காலத்திற்குரியவான போகசு கியு பக்கிாங்களுள் தேரூர்தல் பற்றி ஒரு சிறு கைநூல் உண்டு. இது சிதைந்த உருவிலேயே உள்ளது. தேரூர் புலத்தைச் சுற்றி வரும்போது நடைபெறும் பல திருப்பங் களைக் குறிக்க உபயோகிக்கும் கலைச்சொற்களில், இந்நூலாசிரிய ஞன கிக்குலி எனும் பெயரிய மித்தனியன், சங்கதச் சொற்களோடு மிக அண்ணிய பல பதங்களை உபயோகித்துள்ளான். தேர்ச்சவாரி

Page 167
304 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
யின் ஒரு சுற்று மூன்று சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்று முதலிய வற்றைக் குறிக்க ஐகவர்த்தன, தேரவர்த்தன, பஞ்சவர்த்தன, சட வர்த்தன என்ற பதங்கள் உபயோகிக்கப்பட்டன. சங்கதமொழியில் வர்த்தனம் என்பது ஒரு திருப்பம் என்று பொருள்படும். இந்நூ லில் உயர்குலப் போர்வீரர் வகுப்பொன்று பற்றிய குறிப்புண்டு. இவ்வகுப்பினர் மரியன்னு எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இப்பதம் ஓர் இளம்வீரன் என, பொருள்படும் வட சொல்லான மார்ய என்ற பதத்தோடு ஒப்பிடப்படக்கூடியது. இங்கும் பொதுவான விளையாட் டுக்களையும் பற்றுக்களையும் நாம் காணலாம். இந்தியாவிலிருந்த மிக்க முன்னைய இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநர் தேர்ச்சவாரி யில் ஈடுபட்டிருந்தவர் என்பதை நாம் பின்னர்க் காண்போம். இவை அல்லாமலும் பொதுவான ஒரு சொற்கோவையையும் இச் குழலில் நாம் காணலாம். இச்சொற்கோவை, கி. மு. பதினன்காம் நூற்றண்டின் முற்பகுதியில் சங்கதமும், மித்தனியனும் சொன்மாலை யில் அதிகம் வேறுபட்டிருக்காது என்பதைக் காட்டுவதாயுள்ளது.
கி. மு. இரண்டாம் ஆயிாத்தாண்டளவில் இந்தியாவிற்கும் இந் தோ-ஐரோப்பிய மொழி பேசுவார்க்கும் இருந்த உறவைத் தொல் பொருளியன்முறையிலும் மொழியியன் முறையிலும் நாம் இங்கு கூறிய அளவிற்கே அண்ணியதாக்கலாம். மித்தனியன் அரசாட்சியை விட்டு நாம் பேசியாவையும் அதற்கப்பாலும், நோக்கின், நாம் எழுத்தறி சமூகங்களை விட்டு நேர் தொல்பொருளியற் சான்றில்லா ஓர் உலகிற்கு வருகிருேம். இங்கு வாய்முறை மரபொன்று முன்னை இந்தோ-ஐரோப்பிய இலக்கியத்தை நமக்கு விட்டுச் சென்றுள்ளது; இதன் காலத்தை, பொறிப்பு வரைவுமுறை பழைய வரைவுமுறைச் சான்றுகளைக் கொண்டு கணித்தறியக்கூடிய வாய்ப்பறவேயில்லை. எனவே இதன் காலத்தை அண்ணளவாகவே கணித்தறியலாம். பேசி யாவிலுள்ள அவெஸ்தாவும் இந்தியாவின் இருக்குவேதமுமே இப் பொழுது நாம் ஆராயும் புருவத்திற்கு மொழியியன் முறையில் உரி யனவெனக் கருதக்கூடிய ஈா இந்தோ-ஐரோப்பியச் சமய நூல்க ளாம். ஆயின் நாம் இவ்வாறு கொள்வதற்கு அகச்சான்று ஒன்றையே முழுவதும் நம்பியிருக்கிறுேம். இங்கு நாம் இருக்குவேதத்தையும், இன்னும் அதை ஆக்கியோரின் பொருளியற் பண்பாடு பற்றி நம் மறிவை அரண்செய அதிலிருந்து நாம் பெறக்கூடிய சான்றையுமே

ஆரியரும் இருக்கு வேதமும் 305
முக்கியமாக ஆய்கிமுேம், இச்சான்றும் மீளத் தொல்பொருளியற் சான்றுடன் மாட்டெறிந்து மதிப்பிடப்படும். இது எவ்வாறிருத்தல் கூடுமென்பதை எதிர்பார்த்து நாம் யாதானும் கூறின், இருக்கு வேதம், அதன் முக்கிய பொருள்களை நோக்குமிடத்து கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதிவரை காலங்கொள்ளக் கூடிய ஒரு நூலாக விளங்குகிறது என்பதில் ஒருவித ஐயமுமில்லை; ஒத்த காலத்து மேற்காசியாவின் தொல்பொருளியல் பற்றிய நம் அறிவுடன் இப்பிரச்சினையை நாம் அணுகில் இந்நூல் அக்காலத் துக்கு இயல்பான ஓர் இந்தோ-ஐரோப்பிய நூல்களாக விளங்கு கிறது என்றே கூறவேண்டும்.
அாப்பா நாகரிகம் அழிந்தபின் கி. மு. மூன்றும் நூற்முண்டின் நடுப்பகுதிவரை இந்தியாவில் இருந்தன என்றறியப்பட்ட பொறிப் புக்களோ கைப்பட்டிகளோ காணப்படவில்லை. இக்காலத்திற்குரிய னவே அசோகன் ஆணையால் வெட்டப்பெற்ற புகழ்பெற்ற பொறிப் புக்கள் ; இவை பிரமி எழுத்து முறையில் பெளத்தத்தைப் பரப்பு வதற்காக இயற்கைப் பாறை முகங்களில் அல்லது தூண்களில் வெட்டப்பெற்றன. இவ்வெழுத்துமுறையும் செமிற்றிக்கிலிருந்து தோன்றியது போல் தெரிகின்றது. இக்காலத்தின்பின்னர் ஒரள விற்குக் கிரமமான பொறிவரை நினைவுச் சின்னங்களை நாம் காண லாம். தோல், பட்டை, ஒலை போன்ற அழிபொருள்களில் எழுதப் பெற்ற பத்திரங்களைப் பேணுவதற்கு இந்தியக் காலநிலை மிக்க பிாசி கூலமானதாகும். கி. பி. ஐந்தாம் நூற்முண்டின் பிற்பகுதியில் பேச் பட்டையில் எழுதப்பெற்ற பின்னமான ஒரு பெளத்தச் சமய நூலே மிக்க முன்னைய இந்திய கைப்படியாக இருத்தல் கூடும். இப்படி தச்சசீலத்து யெளலியன் துறவகத்தில் காணப்பட்டது. அதே பொருளில் எழுதப்பெற்ற டக்சாலிக் 6»տ՛ւյգ கொன்மையில் அடுத்த இடம் வகிக்கின்றது. ஆயினும் இது பன்னிரண்டாம் நூற் முண்டிற்கே உரியது. இந்தியாவிலுள்ள கைப்படிகள் பற்றிய நோறிவினைப் பெறுதல் மிக மிகக் கடினமாயுள்ளது. கடதாசி இந்தியாவில் முசிலிம்களால் பதின்மூன்மும் நூற்ருண்டில் கொண்டு வரப்பெற்றது. ஆயின் இதனிலும் இதைப்போன்றவற்றிலும் இருந்த முன்னைக் கைப்படிகளுள் பெரும்பாலான அழிந்துபோயின அல்லது கறையானுல் அரிக்கப்பட்டுப்போயின.

Page 168
306 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
குறித்த சில இந்து சமயநூல்கள் இந்திய நடுக்காலவூழியிலும் பின்னரும் எழுதப்பெற்றன எனினும் பிராமண மரபு புண்ணிய வசனங்களை எழுத்தில் அமைக்கும் பாபச் செயலை முழுமூச்சுடன் எதிர்த்தது. இவ்விடயம் பற்றிய மரபு, அடிப்படையில், பண்டும் இன்றும் குருவிடமிருந்து மாணுக்கனுக்கு வாய்முறைவழி நூல் கற்றுக்கொடுத்தலேயாம். நியமமுறையில் இவ்விருவரும் எழுத்தறி வற்றவராக இருக்கலாம். ஆயின் இவர்கள் எழுதுதல் வாசித்தல் வினை நுண்மைப் பயிற்சியில்லாத ஒரு பண்பினுல் தம் ஞாபகவாற்றலை இயல்மிகைப் படுமுறையில் கூர்மைப்படுத்தியிருந்தார்கள். சிறிது காலத்திற்கு முன்னராக, வாரணுசியில், அக்காலம்வரை அறியப் படாததும் பதியப்படாததுமாயிருந்த நீண்ட ஒரு செய்யுள் நூலை கல்வியறிவில்லா இந்துமதகுரு ஒருவன் நின்விலிருந்து வாயால் ஒதக் கூடியவனுயிருந்தான். இந்நூல் மொழியாலும் நடையாலும் அதன் அகச் சான்றிலிருந்து குறைந்தது நடுக்காலத்திற்குரியதா யிருக்கலாமெனக் கொள்ளப்படக் கூடியதாயிருந்தது. இந்நூல் அக்காலத்தின் பின்னர் வாய்முறைவழி, குறித்த ஒரு மதகுரு வமி சம் மூலமாக இக்காலம் வரை நிலைநின்றுள்ளது.
பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதின் முற்பகுதியிலுமே முன்னே இந்துசமய இலக்கிய நூல்கள் எழுதப் பெற்றன. இது சேர் வில்லியம் யோன்சு போன்ற பிரிட்டிசு அறிஞர் களின் தூண்டுதலினலேயே நடைபெற்றது. அக்காலத்தில் சில பிராமணரின் ஒத்துழைப்பினலேயே இது நடைபெற்றது என்று கருதப்பட்டது. எனவுே வாசக விமரிசம் அல்லது தொல்வரைவியல் ஆகியவற்றின் பிரமாணங்களைக் கொண்டு இவ்விலக்கியத்தை நாம் ஆய்தலியலாது. ஏனெனில் மாருத்தனி ஒரு மாற்றத்தில் நமக்குக் கிடைத்த தனி ஒரு நியம நூலே எம்மிடம் உள்ளது. சென்ற நூற்ருண்டில் மாக்சு முல்வர் அவர்கள் கிடைக்கக்கூடிய இருக்குவேதப் பிரதிகள் யாவற்றையும் ஆய்ந்தபின், கைப் படிகள் என்ற முறையில் அவற்றில் ஒரு பயனுமில்லை, ஏனெனில் அவை எல்லாம் බෙ வாசகத்தையே பெருவளவு அவதானத்துடன் பார்த்தெழுதிய மாற்றுப்படிகள் எனக் கூறினர்கள். இந்நூல்கள் ஆக்கப்பட்ட காலத்திற்கும் இறுதியில் இவை எழுதப்பட்ட காலத் திற்குமிடையில் அசாதாரண கால இடைவெளி இருப்பினும்

ஆகியரும் இருக்கு வேதமும் 307
வாசகத்தூய்மையில் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். செவ்விய முறையில் அசையும் அழுத்தமும் பேணிய ஒழுங்கு மிக முக்கிய மானதெனக் கருதப்பட்டது. ஓசைகள் மந்திரக் குறிப்புடையன எனவும் அவை மாற்றப்படின் ஒதுவானுக்குப் பொல்லாத தீங்குறு மென்றும் கருதப்பட்டது. பிற்காலத்துக்குரிய ஒரு சமய நூலில் இவ்விடரைப் பற்றி ஒரு கதையுண்டு. தவஸ்துறு என்னும் அசுரன் இந்திரனைக் கொல்லவேண்டி ஒரு மந்திரம் ஒதுகின்றபொழுது அழுத்த ஒசையில் ஒரு பிழைவிட்டான். அதனல் அம்மந்திரப் பலன் அவனுக்கு மாமுகி அவனைக் கொன்றுவிட்டது. இதுவே அக்கதை.
வாய்முறை இலக்கிய மரபு எழுத்தறிவிலாதாரிடை பொதுவான ஒரு மரபெனக் கொள்ளலாம். இந்தோ-ஐரோப்பியத் தொகுதியின ரிடை, கோவில் கி. மு. முதல் நூற்முண்டில் கெல்றிக் மக்களிடை இது வழக்காயிருந்ததெனக் கெய்சர் குறிப்பிட்டதை இங்கு நாம் குறிப்பிடலாம்.
அவர் கூறுவதாவது "துருயிட்டு மக்களிடை தம் கொள்கைகளை எழுதி வைத்தல் அவர் பிரமாணங்களுக்கு மாமுனதாகும். தம் ஆரம்பகாலத்தில் இம்மக்கள் பல செய்யுள்களை ஞாபகப்படுத்திக் கொள்கின்றனர்”. இந்தோ-ஐரோப்பிய மக்களின் பரவலில் கிழக் கும் மேற்குமமைந்த எழுத்தறிவில்லாத எல்லைச்சூழல்கள் இரண்டில் புண்ணிய நூல்களை வாய்முறையில் பாவிப் பேணும் ஒழுங்கு முறையை ஒருவர் காணலாம். இவ்வொழுங்குமுறை, மிக்க முன்ன ாான பருவத்தில் எழுத்துமுறைப் பயிற்சி பெற்ற பிரதேசங் களில் வேண்டப்படாத ஒன்ருயிருந்தது ; அதனல் அது வழக்கம் அறுப் போனது.
இவ்வாரம்ப முன்னுரைகளுடன் நாம் இந்து சமயத்திற்குரிய பண்டைச் சமய நூல்களையும் அவற்றின் காலங்களையும் ஆராயலாம். இவை இந்தோ-ஐரோப்பிய மொழியான சங்கதத்தில் எழுதப்பெற் றிருந்தன. இவை முழுமையும் நாலைந்து முக்கிய பிரிவுகளில் அடங்கு கின்றன. இவற்றுள் இருக்குவேதம் எனப்படும் பாநூல் தனித் தன்மை வாய்ந்தது. ஏனெனில் மற்றையவை யாவும் அதன் உண்மை யை ஏற்பனவாய்ப் பெருவளவில் அதை ஆாதாரமாகக் கொண்ட விரிவுரைகளையுடையவையாய் உள்ளன. எனவே கிரமமுறை ஒன்று

Page 169
308 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
வகுக்கும்போது அதற்கு முதலிடம் கொடுத்தலே முறையாகும். இதனேடு நெருங்கிய தொடர்புடையவை மற்றை மூன்று வேதநூல் களாகும். அவையாவன சாமவேதம், யசுர் வேதம், அதர்வேதம் என்பனவாகும். யசுர்வேதம் இருக்குவேதத்தை யடிப்படையாகக் கொண்ட உரைநடையில் அமைந்த வழிபாடுகள் மந்திரங்கள் கொண்டது. சில இடங்களில் இது இருக்குவேகப்பாடல்களின் பத வுரை கொண்டிருந்தது. அதர்வவேதம் செய்யுளிலமைந்து பிரார்த் தனைகள் கொண்டிருந்தது. இடைக்கிடை உரைநடைப்பகுதிகளும் இதில் இருந்தன. சாமவேதம் இருக்குவேதப் பாசுரங்கள் பாட வேண்டிய பண்ணிற்குரிய விதிகள் கொண்டிருந்தது. இவற்றின் பின் பிராமணங்கள் என்னும் நூல்கள் இருந்தன. இவை இவற்றின் பெயர்கள் சுட்டுமாறு வேதநூல்களை அடிப்படையாகக் கொண்ட கிரியைழுறை விளக்கங்கள் கொண்டவையாயிருந்தன. பெளதிகவதி தங்கள் பற்றிய மறை உபதேசங்கள் கொண்ட உபநிடதங்கள் அடுத்த தொகுதி நூல்களாகும். இவற்றுடன் குத்திரங்கள் எனப் படும் நூற்ருெகுதியும் இருந்தது. இவை வேத வழிபாட்டுடன் இணைந்த கிரியைகளின் மிகச் சுருக்கமான கைநூல்களாகும்.
இத்தொகுதியில் இருக்குவேதம் தலைமைதாங்கியதென்பதை ஏலவே கூறியுள்ளோம். பிராமணங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றி அலும் பிந்திய காலத்திற்குரியன குத்திரங்கள் என்பது அகச் சான்றி லிருந்து புலப்படுகிறது. இதிலிருந்து பல்வேறு நூல்களுக்குமிடை யேயுள்ள தொடர்பு நிறுவப்பட்டுள்ளது. ஆயின் இக்கிரமத்தை மாட்டெறிந்து நோக்கக்கூடிய ஒரு காலவரன்முறைச் சட்டம் ஒன்றைக் காண்பதற்கு நமக்குப் போதிய தரவுகள் இல்லை.
ஆயினும் உறுதியான செய்தியொன்றுண்டு; புத்தர் போதித்த மதம் உபநிடதங்களில் காணப்படும் மெய்யியல் எண்ணக்கருக்களை ஆதாரமாகக் கொண்டதும் அவற்றிலிருந்து விருத்தியடைந்தது மாகுமென்பதே. புத்தர் ဓု. மு. 500 இலிருந்து ஒரு பத்தாண்டள விற்கு முன்பின் இறந்தார் என்பதற்குப் பெருவளவில் எல்லோரும் இணங்கியேற்ற ஒரு சான்றுண்டு. எனவே உபநிடதங்கள் கி. GPC. ஆமும் நூற்முண்டிற்கு முன்னிருந்திருக்க வேண்டும்.
இத்தேகிக்கப்பால் உள்ள தேதி பற்றிய விவரங்களில் நாம் ஒரு மெய்யியல் முறைக் கணக்கீட்டையே நம்பியிருத்தல் வேண்டும்.

ஆரியரும் இருக்கு வேதமும் 309
இது மாக்சு முல்லரால் நிறுவப்பட்டு இன்றும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி பிராமணங்கள் கி. மு. ஏழாம், எட் டாம் நூற்முண்டிற்குரியன. பிந்திய வேதங்கள் ஒன்பதாம் பத் தாம் நூற்முண்டிற்குரியன. இருக்குவேதத்தின் முன்னைப் பகுதி கள் பதினென்ரும் பன்னிரண்டாம் நூற்முண்டுகளுக்குரியன என்று கொள்ளப்பட்டன. பின்னர் முல்லர் அவர்கள் இத்தேதிகள் மிகப் பிந்திய தேதிகள் என்று கொண்டார். இதன்பின் இருக்கு வேதம் கி. மு. 1400-1500 வரையுள்ள தேதியில் ஆக்கப்பட்டிருக் கலாமென்பதில் பொதுவான ஒரு உடன்பாடுண்டு. இவ்வுடன்பாடு இருக்குவேதக் கடவுளர் பெயர்களைக் கொண்ட 1380 இற்குரிய மித்தனியன் பத்திரத்தினுல் ஊக்கப்பட்டதாகும். ஆயின் இதற்குத் தனியுறுதியான சான்றென்றுமில்லை.
தொல்பொருளியற் சான்றின் பிற்களத்தோடு சார்த்தி நோக்கும் பொழுதும், இப்பொழுது நாம் அறியக்கூடியதாக உள்ள கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் நடுப்பகுதியில் மேற்காசியாவில் நடைபெற்ற மக்களின் புலப்பெயர்வுகளோடு சார்த்தி நோக்கும் பொழுதும் இக்காலவரையறை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன் முக உள்ளது. கி. மு. 2000 இன் பின்னரான நூற்றண்டுகளில் மேற்கிலிருந்து படையெடுப்பாளர்கள் வடமேற்கிந்தியாவுட் புகுந் தனர் என்பதற்கு நல்ல தொல்பொருளியற் சான்றுண்டு என்பதைச் சென்ற அதிகாரத்தில் கண்டோம். இவர்கள் இந்தோ-ஐரோப்பியரா யிருக்க வேண்டியதில்லை. ஆயின் மேற்கில் நடைபெற்ற இந்தோ ஐரோப்பியர் சம்பந்தப்பட்ட, பொதுவான பெயர்ச்சிகளுடன் இவர் வரவு தொடர்புபடுத்தி நோக்கப்படக்கூடியது. மித்தனி அரசும் கசைற் அரசும் நிறுவப்பட்டமை கிழக்கு நோக்கி, குறைந்தது பேசிய எல்லைகள் வரை, போர்வீரர் கூட்டங்கள் நெருங்கி முன் னேறினர் என்பதற்குப் பொருளுடைய சான்றுகளாம். இசார் III, சியல்க் போன்ற வட பேசியத் தலங்கள் உண்மையில் புதிய மனித வினவகையினர் தோன்முவிடினும் புதிய பண்பாடுகள் தோன்றி னமை இரண்டாம் ஆயிரத்தாண்டின் முற்பாதி முழுவதும் பரந்து நடைபெற்ற மக்கட்பெயர்ச்சியோடு தொடர்பற்றதாயிருக்காது. இன்னும், தேக்கித்தானில் உள்ள அனுே III, அப்கன் சிஸ்ானில் உள்ள நட்-இ-அலி ஆகிய இடங்களிலிருந்து வந்த மட்கலங்களும்

Page 170
30 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
மோகல் குண்டை யிவன்றி ஆகிய இடங்களின் இடுகாடுகளும் இம்மக்களின் குடியிருப்புக்கள் மிக்க கீழ்த்திசையில் பிந்திய ஒரு காலத்தில் கி. மு. 1100-1000 வரையுள்ள ஒரு காலத்தில் நிறுவப் பட்டன என்பதைக் காட்டுவனவாயுள்ளன.
இருக்குவேதத்தின் வாசகத்திலுள்ள குறிப்புக்களிலிருந்து பெறக் கூடியதாயுள்ள அந்நூலையாக்கியோரின் பொருளியற் பண்பாட்டை ஆயின், ஆசியாவிலும் ஈகியனிலும் இருந்த பண்டைநகர் நாகரிகங் களின் எல்லைகளைச் சுற்றியிருந்த முன்னை இந்தோ-ஐரோப்பிய நாக ரிகத்தினரின் பிரதேசங்களிலிருந்து பெற்ற தொல்பொருளியற் சான்றிலிருந்தறியக்கூடிய நிபந்தனைகளோடு அது முற்றும் இணங்கு வதை நாம் காணலாம். தொல்பொருளியற் சான்றுகளிலிருந்து இருக்குவேதத்தை அக்காலத்திற்குரிய உண்மையான நூலென்றும் மந்திரச் சொற்கள் சிறிதளவேனும் பிசகின் பொல்லாத் தீங்குறும் என்ற இடையருத பயத்தினுல் உருவழியாது பேணப்பட்டது என் அறும் கொள்வதிற் பழுதில்லை. காவியமொன்றினை மாற்றலாம். காலத் திற் கேற்றதாக்கலாம், வீரச்சுவை இலக்கியங்கள் பற்றி மாறுஞ் சுவைகளுக்கியைய இணங்க வைக்கலாம். மகாபாரதம், இராமாய ணம் எனும் இந்தியக் காவியங்கள் இரண்டும் இதற்குரிய நற் காட்டுக்களாம். இன்று இவை உள்ளவாற்றில் கி. பி. முதல் நூற் முண்டிற்கு முன் இவை தேதிகொள்ளக்கூடியனவல்ல. சமய நூலொன்றில் காலவழு வொன்றினை நீக்கவோ, பொருள் மறந்து விடப்பெற்ற ஒரு செயலை விளக்கவோ வேண்டிய அவசியமில்லை. சொற்கள் சொற்ருெடர்களின் செவ்விய சிரமத்தையன்றிப் பொருள் இங்கு பெரிதும் போற்றப்படுவதில்லை. நாங்களும் பாசுர நூலிலோ (Book of Psalms) பண்டைக் கீதங்களும் இன்றைய கீதங்களும் (Hymns Ancient and Modern) 6T6); at 66Gair pair or Luapu வழக்குச் சொற்ருெடர்களின் பொருள்களைப்பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை.
இருக்குவேதம் விசித்திரமான ஒரு பதிவேடாகும். அதன் அடித் தொகையளவில் அது அண்ணிதாக இலியத்தும் (Iliad) ஒடெசியும் (Odyssey) சேர்ந்த தொகையளவிற்குச் சமமாக இருக்கும். இதில் ஆயிரத்திற்கு மேலான பாசுரங்கள் உள. இவை பல்வேறு வகையின. காவியப்பாடல்கள், புகழ்க் கீதங்கள், கடவுளர்ப்பராவல்கள், மந்திர

ஆரியரும் இருக்கு வேதமும் 3.
மொழிகள், மக்கட் பாடல்களின் சிறு துணுக்குக்கள் முதலியன இருந்தன. இவை பல்வேறு தரப்பட்டனவாயிருந்தன ; மெய்ப்பா ைெடயன, நேரியவை, விழுமியவை, சிறுபிள்ளைத்தனமானவை, மறைபொருளானவை, கீழ்த்தரமானவை எனும் பல்வேறு தாக் தவையாயிருந்தன. இவ்வாறே மாக்சு முல்லர் அவர்கள் இந்நூல் பற்றிக் கூறியுள்ளார்கள். இந்நாவின் மொழி நடை விரிவானது உளங்கொண்ட இலக்கிய இயல்பினதாயிருந்தது. இதன் யாப்புரு வம் அசைகொண்ட செய்யுள் வடிவினதானது ; பலவிடங்களில் சிக்கல் நிறைந்ததாயிருந்தது. இருக்குவேதத்தில் காணப்படும் வாழ்வுமுறையும் கருத்தும் எவ்வளவு பண்டையதாயும் பண்பற்றதா யிருப்பினும் அது அரும்பாடுபட்டுப் புனைந்த பாத்தொகுதியா *கும்; அது அந்நூலில் ஆரியர் எனப்படுவாரதும் புதிது கொண்ட பூமியை வென்முேராகக் கூறப்படுவாரதும் பண்பாட்டின் ஒரு பிற் பட்ட பருவத்தில் ஆக்கப்பட்டது; அன்றியும் தொழின்முறையில் பாடலியற்றுவோரால் உளங்கொண்ட புனைவாற்றலால் தொகுக்கப் பட்டதாகும்.
ஓர் ஆதார நூல் என்றமுறையில் இதில் ஒவ்வாகன பல உள இன்னும் இது ஓரளவிற்கே பயன்படக்கூடியது. இது எழுதப்பெற்ற தொன் முறைச் சங்ககம் அதன் திட்டவட்டமான குறிப்பின இழந்தபடியால், இந்திய நடுக்காலத்தில் பழைய வாசகத்தை விளக்குவதற்கு மிக விரிவான உரைகள் கண்டுபிடிக்க வேண்டியதா யிருந்தது. இதனல் பிழையாக விளங்கப்பெற்ற மூலவாசகக்கிற்கு மிக விரிவாயமைந்த உருவகமுறை விளக்கங்களை வலிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆரிய சமயத்தை ஆசாய்வோர்க்கு இந்நூல் பாத்தளவு உண்மை நிலையையே காட்டும். ஏனெனில் இது ஒரு வரையறைப்பட்ட தொகுதிக் கடவுளர்களையும் கிரியைகளையுமே பற்றிக் கூறியது. பல நம்பிக்கைகள் பற்றியும் கிரியைகள் பற்றியும் இது கூருமல் விட்டிருத்தலும் கூடும். இருக்குவேதத்தைப் பற்றிய விளக்கத்தில் அதை ஆதாரமாகக் கொண்டெழுந்த பிந்திய நூல் களை நாம் புறக்கணிக்கலாகாது. ஏனெனில் அவை எவ்வளவுதான், காலத்தாற் பிந்தியவையாயினும் மிக்க முன்னைய கட்டத்திற்குரிய L 162iiior 60oL - அமிசங்கள், கொண்டிருத்தலும் கூடும். எனவே ஆரிய சம
" (4/68) 3040 CP-س14

Page 171
32 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
வம் பற்றிய எந்த ஆய்விலும் இருக்குவேதத்தை அதர்வவேதம் போன்ற அதனுடன் தொடர்புடைய பிறநூல்களிலிருந்தும் வேறு பிரித்தெடுந்தாளவியலாது.
இத்தகைய விளக்கம் அரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்படாத ஒரு காலத்தில் வளர்ந்தோங்கியது. அப்பொழுது இந்தியாவிற்குப் படையெடுத்துவந்த ஆரியர் பூர்விகக் குடிகளான பண்பாடற்ற கும்பல்களையே எதிருற்றிருப்பர்; இவர் வேத சிந்தனைக்குச் சில பூர் வீக இயற்கை வணங்கும் கோட்பாடுகளையே நல்கியிருப்பர் அன்றி வேறு வழியில் ஒன்றும் நல்கியிரார் ; பிந்திய இந்தோ ஆரிய சமூகம் உருவாவதற்கு ஒரு வழியிலும் உதவியிரார் என்றே பொது வாக எல்லோரும் கருதினர். இத்தகைய ஒரு எடுகோளிற்கியைய வேத நாற்முெகுதி பெரும்பாலும் ஆரிய மலர்ச்சியையே சுட்டும்; வெற்றி கொள்ளப்பட்ட பஞ்சாபின் பண்டைமக்கள் இத்தொகு திக்கு நல்கிய அமிசம் ஒன்றுமில்லை என்று கொள்வது பிழையற்றது என்று கொள்ளல் பொருத்தமுடையதாயிருந்தது. ஆயின் இத் நூலின் முந்திய அதிகாரங்கள் சுட்டிய உட்பொருளைக் கவனித்தால் ஒன்று புலப்படும்; ஆரியர் இந்தியாவுள் படையெடுத்துப் புகுந்தது உண்மையில் இங்கு நிலைமை இயற்கைக்கு மாறுபட்டதாயிருந்தது ; வெற்றி கொண்டோர் வெற்றிகொள்ளப்பட்டோரைவிட நாகரிகம் குறைந்தவராயிருந்தனர். இருக்குவேதத்தில் இவ்வெற்றியை ஆரியர் நோக்கிற்கியையவே காண்கிருேம் (தற்செயலாகக் கண்ணுறுகி முேம்). ஆரியரே இங்கு வெற்றியாளராகத் தோன்றுகின்றனர். போர்க்கலையிலும் அமைதி வாழ்வுக் கலையில் தேர்ந்தவரான தம் வெறுக்கத்தக்க எதிரிகள் பற்றி இவர் சிறிதேனும் புகழ்மொழி இங்கு கூறவில்லை. ஆயினும் அசப்பா மரபு முழுவதும் கிடீரென ஒழிக்கப்பட்டிருக்க முடியாது என்பதை நாம் இனிக் காண்போம். இவ்வறிவைக் கொண்டு நாம் நோக்கும்போது, வடமேற்கிந்தியா விலிருந்த முதல் ஆரியர் சமுதாயத்தின் பொருளியற் பண்பாட் டினைச் சூழ்ந்தறிய முயலுதல் இடர்நிறைந்ததாகும்; இது அசப்பா அமிசங்கள் ஆரிய சமுதாயத்தில் பரவியிருந்த காலத்துத் தொகுத்த நூல்களிலிருந்து சான்றினை எடுப்பதாகும். ஆகவே இவ் வதிகாரத்தில் தொடர்ந்து வரும் பகுதிகளில், இந்தோ-ஐரோப்பிய மரபு அரப்பா அமிசங்களோடு கலவாமுன்னர், ஆரியர் வெற்றியின்

ஆரியரும் இருக்கு வேதமும் 33 தோற்றுவாய்க் கட்டத்தை நம்பவருமுறையில் சுட்டுவதுபோல் தோன்றும், இருக்குவேதத்தையே பயன்படுத்தியுள்ளேன். இடைக் கிடை பிந்திய நூல்களையும் நான் பயன்படுத்தியுள்ளேன்.
எனினும் இவ்வரையறைகளுடனும் பொருளியற் பண்பாடுபற்றிய செய்திக்குரிய மூலமாக இருக்குவேத வாசகத்தைப் பயன்படுத்த வில் பெரும் இடர்ப்பாடுகளுள. தேவபாணிகளான பாடல்களின் நடைப்போக்கு சொல்லொடு பொருளாயிருந்த பகுதியிலிருந்து முழுமையும் உருவகமுறைமையிலிருந்த பகுதிக்கு மாறினமை திடீரென உண்டாயதுபோல் உளது. இன்னும் அஃது புலப்படாத வகையிலமைந்துளது. ஆரியர் தலைவன் ஒருவனின் உண்மையான தேர் ஒன்று ஆச்சரியப்படத்தக்க முறையில் திடீரென உச்சிவேளை ஞாயிருக மாறிவிடுகிறது; களிவெறிகொண்ட நிரைகவர் இளைஞர் திடீரென வானின் நாற்றிசைக் காற்றுகள் ஆகிவிடுகின்றனர். பொருளியற் பண்பாட்டின் அமிசங்களை விவரிக்கும் சொற்கள் நிலை நிற்கும் பண்பு, இத்தேவபாணிகள் எவர்பொருட்டாகப் பாடப் பட்டனவோ அவ்வுயர்குடிமைப் போர்வீசருக் குகந்தவற்றேடு சமய உருவகங்களாக நெகிழ்ந்து நிற்கக் கூடிய தன்மையிலும் தங்கி யிருந்தது. தேர்கள் மிக விவரமாக விவரிக்கப்பட்டிருந்தன. இதனல் இக்காலத்துத் தேர் செய்வான் ஒருவன் இந்திரனின் தேரை மிக ஒத்ததொன்றை இலகுவில் செய்தல் கூடும். ஆயின் ஆரியர் விே ஒன்று எப்படியிருக்குமென்பதை நாம் ஒன்றும் அறியோம்.
ஆயின் தொல்பொருளியல் அறிவுகொண்டு மீளப் புனைந்து விளங் கக்கூடிய செய்திகள் பல உள. இப்பொழுது நாங்கள் வடமேற் கிந்தியாவில் ஒரு புலத்தில் அல்லது மேற்காக அபுகானித்தானில் குடிகோலியவர் என்று கொள்ளக்கூடிய ஆரிய சமுதாயத்தினரை மனதில் கொள்கிருேம். இது பஞ்சாபின் அம்பலாவிற்குக் கிழக்காக இவர்கள் இன்னும் வெற்றிகொள்ளாத காலம். சில ஆராய்ச்சியாளர் இருக்குவேதம் குறித்த இம்மாவட்டத்திலேயே யாக்கப்பட்ட தென்று கருதுகின்றனர். தேவபாணியில் உள்ள நிலங்கள் விவரணங் கள் பனிபடர்சிகர மலைகள் பற்றிய அறிவினையும் பேராறுகள் நிறைந்த ஒரு புலத்தறிவினையும் குறிப்பனவாயுள்ளன. மலைகள் இமாலயத்தைக் குறிப்பன என்பது ஓரளவிற்கு உறுதியாம். இக் காலத்தில் மழை வீழ்ச்சி போதியதாயிருந்தது; இது பருவப்

Page 172
314 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
பெயர்ச்சிப் புலம் மேற்றிசை விரிந்ததைக் காட்டியதாயினும் பஞ் சாபையும் பாதித்தது என்பதைச் சுட்டுவதாயுள்ளது. இவ்விரிவே அாப்பாப் பண்பாட்டின் வளர்ச்சி மிகு காலத்தில் காலநிலையை ஊக்கியிருக்கலாம் என்பதை நாம் முன்னர்க் கண்டோம். இப் பொழுதைய இந்தியாவில் மேற்பாலமைந்த கோதுமை வளர் பகுதி களுக்கும் கீழ்ப்பாலமைந்த நெல்வளர் பகுதிகளுக்கும் இடை பமைந்த எல்லையாக லக்நெள அண்ணளவில் விளங்குகிறது என வழக்கமாகக் கருதப்படுகின்றது. இருக்கு வேதத்தில் நெல் பற்றியோ புலிபோன்ற அயனமண்டல விலங்குகள் பற்றியோ குறிப் பில்லை. ஆயினும் அதர்வவேதம் இவை இரண்டையும் பற்றிக் குறிப் பிடுகின்றது. இதனுல் இந்நூல் யாக்கப்பட்ட காலத்தில் ஆரியர் பிர தேசம் கங்கைவரை கீழ்ப்பால் விரிந்து விட்டதென்பது புலனுகின் றது. அரப்பா இலச்சினைகளில் புலிகள் உருவகிக்கப்பட்டதை நாம் கண்டோமாயினும் இக்கூற்றுப் பொருந்துவதாகும்.
இருக்குவேகத் தேவபாணிகள் சமூகத்தின் உயர் வகுப்பினரின் வாழ்வையும் அவாக்களையும் காட்டுவனவாயுள்ளன ; இச்சமூகம், மற்றை இந்தோ-ஐரோப்பியச் சமுதாயங்களைப் போல் நியமப்பட மூன்று பிரிவுகளாக, சத்திரியர், பிராமணர், வைசியர் என வகுக்கப் பட்டிருந்தது. இப்பிரிவுகள் உரோமர் சமூகத்திலிருந்து மிவிற்றெஸ் (milites) (GalTif@a3T6 (flamines) (356s?ósósíalov (quirites) Gr@yuh பிரிவுகளையும் கோல் நாட்டு கெல்ற் மக்கள் பற்றி கெய்சர் கி. மு. முதல் நூற்றுண்டில் பதிவு செய்தவாறு இருந்த இக்குவிற்றீஸ் (equites) ட்ருயிடீஸ் (druides) ப்ளீபீஸ் (plebes) எனும் பிரிவு களையும் ஒத்திருந்தன. ஆயினும் பிந்திய நூல்களிலிருந்தறியப் பெற்றவாறுள்ள சாதியென்பது பற்றிய எண்ணக்கரு இருக்கு வேதத்தில் காணப்படவில்லை. இந்த முப்படி ஒழுங்குமுறை, சமுதா யம் ஒன்றில் இயல்பிாத எழக்கூடிய பொறுப்புக்கள் பற்றிய முறை யிலமைந்த ஒரு பிரிவாகும். ஆயின் அதன் நியமமுறைப்பகுப்பு சிறப்பான ஓர் இந்தோ-ஐரோப்பிய முறையினதாகும். இத்தேவ பாணிகள் மதக்குருமார்களால் தமக்காகவும் தம் ஆதரவாளரான போர்வீரர்பொருட்டும் இயற்றப்பெற்றவை. இவை பொதுவில் மனிதவுருவுடைய கடவுளரையும் திருநின்ற நீரான ‘சோம'வை

ஆரியரும் இருக்கு வேதமும் 315
யும் விளித்து இயற்றப்பெற்றவை. இவற்றை வழிபடும் ஒழுக்கத் தைச் சார்ந்தே இத்தேவபாணித்தொகுதி முழுவதும் அமைந்தது. இங்குள்ள கடவுளர் பலரின் வீரப்புகழ் கொள்ளுமளவிற்கு உயர்த் கிக் கூறப்பட்டுள்ள ஆரியரையே நாம் காணலாம். இருக்கு வேதத் தின் உயர் கடவுள் இந்திரனே. தேவபாணிப்பாடல்களில் காற்பகுதி இவனை நோக்கியே விளிக்கப்பட்டன. இவனே ஆரியப் போர்த்தலை வனின் தேவாமிசம் பெற்றுயர்ந்தோன்; இவன் வலிமையான தோள்களும், பாரிய உருவும், கபில மஞ்சள் தாடியும், கள்குடியால் கடவயிறும் உடையவன் ; கடவுள் மூர்த்தத்தில் இவன் இடியைப் பிரயோகிப்பவன்; ஆயின் தன் தேரிலிருந்தவாறு வில்லும் அம்பும் கொண்டு போரிடுபவன். கீத் அவர்கள் கூறுமாறு 'அவன் வல்லா ளன், இளைஞன், அமரன், பழையவன்; அவன் பசி பெரியது. அவன் மாட்டிறைச்சி, கூழ், பணிகாரங்கள் முதலியன பேரளவில் உண் டான். பின் அவற்றை வெறிதரும் சோமபானத்தால் அல்லது மது வால் கழுவி உள்ளிறக்குவான்' அவனுடைய குடிப்போதையும் அதன்பின்-விளைவும் உறுதியளிக்கும் முறையில் விவரிக்கப்பட்டுள. அவன் ஒரு நிரைகவர்வோன்; அல்லாமலும் பகைவர் அரண்களே அழிப்போன் ; பஞ்சாபிலிருந்த பகைக்குரிய பண்டைப் போசசை வெல்வதில் ஆரியரை வழிநடத்தி வெற்றிவீரன். இவனுடன் சேர்ந்து இளைய போர்வீரர்களான மாருதிகளும் போரிட்டனர். இவர்கள், இந்திரனுக்குப் போட்டியாயும் சில வழிகளில் அவனின் ஒர் அமிசமுமான உருத்திரனின் தலைமையில் சேவைபுரிந்தனர். உருத்திரன், ‘வெல்லுதற்கரியவன், விரைவில் இயங்குவோன், இளே ஞன், முதுமை எய்தாதவன், உலகையாள்பவன் ’. இவனுக்கு வேறு தீய குணங்களும் இருந்தன. இவனே பிற்காலத்து இந்து சமயச் தில் சிவனுக மாறியவன்.
மிகப்புனைவுபெற்ற சங்கதச் செய்யுள்களில் விசித்திரமான முறை யில் ஒதப்பெற்ற இக்கடவுளர் சித்திரங்கள் அவர்தம் வெளிப்படை யான புல்லிய இயல்பினை நமக்கு உறுதியாக எடுத்தியம்புகின்றன. அல்ஸ்சர், வடபிரித்தன் ஆகிய பகுதிகளில், கி.மு. முதல் நாம் முண்டில் இருந்த நியமங்களைப் பிரதிபலிக்கும் ஐரிசுக் கதைகளின்
15-CP 3040 (4168)

Page 173
316 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
தாசனையை இந்நூல்களும் கொண்டிருந்தன. இந்திரன் பல்காலும் இக்கதைகளிலுள்ள கோமளமான அடங்காப் பசியுடைய தக்தாவை நினைப்பூட்டுபவனுக இருந்தான். உருத்திரனும் மாருதிகளும் பின்னையும் பியன்னுவையும் (Finn, Fianna) ஒருவர்க்கு நினைவூட்டி னர். இவர்களும் இளம் போர்வீரர்களே. இரண்டு இடத்திலும் நிரைகவர்தலும் ஒத்த வழக்கினதே. ஆயின் ஆரியர் கவர்கையெல் லாம் பஞ்சாப் சமவெளிகளில் நடைபெற்றன. இந்திரனும் அவனைப் பின்பற்றினேரும், பகைவர் போர்க்களத்துக்குரியவர், ஆதலின் பயப்பட வேண்டியவர் என்ற முறையிலல்லாமல், சாதாரண போர் விரன் எவ்வாறு குழ்ச்சியுடைய நகரத்தானை மூடப் பயத்துடன் நோக்குவானே அத்தகைய பயத்துடன் இப்பகைவருடன் போர் புரிந்தனர்.
இவ்வாரியர் தாக்குதலுக்கு எதிரானவர்கள் ; விண்ணிலும் மண் ணிலும் இந்திரனின் மேலாண்மையை எதிர்க்கத் துணிந்த வெறுக் கத்தக்க இப்பகைவர்கள், தாசியு அல்லது தாசர் எனப்பட்டனர். இவர்கள் கறுப்பானவர் ; நாசியில்லாதவர் ; விளக்கமில்லாத பேச் சுடையவர்; எல்லாவற்றிற்கு மேலாக மிலேச்சர். இவர்களுக்குக் கிரியைகள் கிடையா. இவர்கள் கடவுளரைப் போற்றுவதில்லை; விசித்திரமான பழக்கவழக்கங்களைக் கைப்பிடித்தனர்; ஆரியர் வேள் வியைப் பின்பற்றுவதில்லை. இவர்கள் இலிங்கத்தை வணங்குபவர் களாயிருக்கலாம். ஆயின் இவர்கள் பொன் நிதிக்குவியலுடைய செல்வசாயிருந்தனர். இவர்கள் தொகுதிகளாக அல்லது அரசுகளாக வாழ்ந்தனர். அரண்செய்த கோட்டைகளில் இவர்கள் வாழ்ந்தனர். ஆரியர் நோக்கில் இவர் இறுதியில் அடைய வேண்டிய இறுதியை இவர்கள் பெயர் குறிக்கலாம். இது தஸ் என்ற அடியுடன் தொடர் புடையதால் 'அழி' என்ற பொருள்படும். 'தாஸ் யு' என்பது வெற்றி கொண்டபின் இருந்த பாழிடத்தில் வசித்தோர் என்பது அவ்வடியிலிருந்து பெறப்படும் பொருளாகும்.
கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் ஆரம்பத்தில் வட இந்தி யாவிலும் மேற்கிந்தியாவிலும் அரப்பா நாகரிகம், மிக்க வலிமை பெற அரண் நகர்களைச் சுற்றிச் செழித்து வளர்ந்தது என்பது பற்றியும், கருந்தோலும் கட்டை மூக்குமுடைய ஆதி ஒசுத்திரலொ பிட் மக்களைப் பெருமளவில் கொண்ட மக்கட்டொகையை அந்

ஆரியரும் இருக்கு வேதமும் 37
நாகரிகம் கொண்டிருந்தது என்பது பற்றியும் இந்நகர்கள் வலிந்து திடீரென அழிக்கப்பட்டன என்பது பற்றியும் நாம் கொண்டுள அறிவு தாசியு, தாச மக்களாவோர் அரப்பா மொகஞ்சோதாரோவி லிருந்த மக்களேயாவர் என்று கொள்வதை உறுதிப்படுத்துமுக மாக உள்ளது. அரப்பா நகராணின் காவல்கள் பற்றிய வீலரின் அண்மை ஆய்வுரைகளில் இந்திரனை அரண் அழிப்பாளனுகக் கூறிய குறிப்புக்கள் மேற்கூறிய கருத்தினை வலியுறுத்துவனவாயுள.
“எல்லாம் வெல்லும் தேருருளியுடைய இந்திரனே, நெடும்புகழ் பெற்றேய் அறுபதினுயிரத்துத் தொண்ணுாற்முென்பது துணைவரு டன் வல்லமையாக அஞ்சாது போரின் பின் போராக நடாத்திக் கோட்டைகள் பலவற்றை அழித்தாய்’ இவ்வாறு இருக்கு வேதத் கில் முதல் நூலில் உள்ள ஒரு பாடல் கூறுகின்றது (1.53). இந்திரன் அழித்த கோட்டைகள் கல்லாலாக்கப்பட்டவை என்று கூறப்பட்டுள் ளன ; அல்லது "ஆமா' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளன. இச்சொல் சுடாத செங்கட்டிச் சுவர்களைக் குறிப்பதாயிருக்கலாம். சில இலையுதிர் காலத்து என்று அடைமொழி குறிக்கப்பட்டிருந்தன. இது இவை மழையின் பின் ஆற்றுப்பெருக்கினின்றும் காப்பாற்றப் பட்டவை என்பதைக் குறித்தது. இந்திரன் புரந்தான்' எனப் பட்டான். அதன் பொருள் அாணழிப்பான் என்பதாகும். பகை வரை வீழ்த்துவோய்' " அரண்களை அழிப்போய் எழரண்களை அழிப்போய்' என்று பாணர் அவனைப் புகழ்கின்றனர். காலம் ஆடையை அழிப்பதுபோல் அவன் அரண்களை அழித்தான்.
இவன் தாக்குதலில் கட்டிடங்களுக்குத் தீயிடலும் ஒரு வழக்கா கும் :
“கொளுத்திய தீயில் அவன் அவர் ஆயுதம் யாவற்றையும் அழித்தான், குதிரைகள் தேர்கள் நிாைகள் கவர்ந்து தன் செல்வம்
பெருக்கினன்' (ii. 15) இது போர்க்கடவுள் அனுக்கிரகம் பெற்ற ஒருவனுல் இயற்றிய பாடல். அரப்பா நகர்களைக் காக்கக் கட்டிய அணைகளை அழிப்

Page 174
3.18 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
பதற்காக, நீர் நகர்களைத் தாக்குமாறு விடப்பட்டது பற்றிய சில குறிப்புக்களை ஒருவர் இந்நூலில் தேடிக் காணலாம். இதுபற்றி உறுதியாகச் சொல்லமுடியாது. ஏனெனில் திடீரென இந்திரன் பற் றிய வருணணை உருவகமாக மாறி அவனை வருணனுக்கி அவனைக் கொண்டு மழை பொழியச் செய்து ஆறுகளைப் பெருகச் செய்கின் றது. ஆயின் பெருக்கும் வெற்றி கொள்ளலும் மேலே காட்டிய மேற்கோட்பகுதி கொண்ட பாடலில் மிக்க வியத்தகு முறையில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
“ஒசையிட்டோடும் பெருக்கினை அவன் ஓடாது நிறுத்தி, அதில் நீந்த முடியாதோரை மறுகரைக்கு இட்டுச் சென்றனன். ஆற்றின் மறுகரையடைந்தோர் செல்வம் பெற்றனர். வள' என்பதை அவன் அழித்தான். மலையின் அரண்களில் ஒரு பகுதியை அவன் உடைத் தான். சதுர்ப்பட அமைந்த அவர் காவல்களை அவன் கிழித்தெறிந் தான். வெற்றிக்கொடியோன் அங்கு செல்வம் கண்டனன்"
பின்னர் அவன் ‘ஆற்றின் நடைகளை சுதந்திரமாக விட்டுவிடுகின்றன்"
ஆறுகளின் தீரங்கள் யாவும் அவன் ஆண்மைக்கு அடிபணிந்தன (II. 13) முற்காலத்தில் தாசியு, தாச மக்களின் அரண்கள் கற்பனைக் கோட்டைகள் எனக் கருதப்பட்டன அல்லது ஒருவேளை அவை ஆரியர் வெற்றி கொண்ட காலத்தில் வட இந்தியாவிலிருந்த பூர் விகக் குடிமக்கள் கட்டிய மண்வேலைப்பாடுகள் அல்லது கம்ப வரி சைகள் ஆக இருக்கலாம் எனக் கருதப்பட்டன. ஆயின் இப்பொ ாழுது வீலர் அவர்கள் இதுபற்றிக் கூறியது சிந்திக்கற்பாலது.
‘அண்மையில் அரப்பாவில் நடந்த அகழ்வுகள் நாம் கொண்ட கருத்தினை மாற்றியமைத்துவிட்டன. இங்கு மிக்க நன்முறையில் மலர்ந்த, அடிப்படையில் ஆரியரல்லா ஒரு மக் களின் நாகரிகம் ஒன்றைக் காண்கிருேம். இவர்கள் பாரிய அரண்களைப் பயன்படுத்தினர்கள் என்பதை இப்போது நாம் அறிகிருேம். இன்னும் அப்புலத்தில் ஆரியர் படையெடுத்
திருக்கலாம் என்று கொள்ளக்கூடிய காலத்திற்கு அண்மையான

ஆரியரும் இருக்கு வேதமும் 39
காலத்தில் வடமேற்கிந்தியாவின் ஆற்றுத்தொகுதியைக் கட்டுப் படுத்தினர்கள் என்றும் அறியவருகிருேம். எனவே சந்தர்ப்ப நிலைமைகளைக் கொண்டு நோக்கும்போது இந்திரனே குற்ற வாளியாகத் தோன்றுகிருன் ’. அதிகாரம் V இல் விவரமாகக் கூறிய தொல்பொருளியற் சான்று கள் இருக்கு வேதத்தில் கூறப்படும் வெற்றிக்கதையுடன் நன்முறை யில் பொருந்துவதால் வேறு ஒரு முடிபினை மேற்கொள்ளல் முடி, யாததாகும். தாசியுக்களின் அரண்கள் அசப்பா நாகரிகத்தின் நக சாண்களே. இவற்றையே வேண்டினுேர்க்கருளும் இறைவனை இந் திரனைப் பரவியமைத்த போர்க்கூட்டம், இந்திரன் தலைமையை ஏற் காத மக்களை எவ்வாறு கொன்றனரோ அவ்வாறு அழித்துச் குறை யடித்தது.
மெசப்பொற்றேமியாவின் ‘அமுறு மக்களைப் போல் ஆரியரும் முன் ஒருபொழுதும் நகர் அறியாதவராயிருந்தனர். இவர்கள் வாழ்வு முறை இருக்கு வேதத்தில் நன்முறையில் காட்டப்பட்டுள் X ளது. இது, மூன்ரும் ஆயிரத்தாண்டின் ஆரம்பகாலந் தொடங்கி யிருந்த கீழைநாட்டு நாகரிகங்களின் பண்டைமையங்களுக்கு இயல் பாயிருந்த சிக்கல் முறையான நகர் நாகரிகங்களிலிருந்தும் பெரி தும் மாறுபட்ட ஒன்முக இருந்தது. இவர்கள் நாகரிகம் உரோ மப் பேரரசு வரைக்கும் அதன் பின்னரும் வரலாற்று முன்னருக் குரிய ஐரோப்பிய ஆசியா எங்கனும் அறியக்கிடந்த வெளாண் சமுதாயத்தினரின் எளிய வாழ்வு முறையைச் சார்ந்ததாயிருந் தது. இது ஓமரின் காவிய உலகில் காணப்படுவதிலும் கூடிய கொடுந்தன்மை கொண்டிருந்தது. பேயலுல்வ் காட்டிய கொடுந் தன்மைக்கு அண்ணியதாயிருந்தது. இவ்வாழ்விற்குப் பிற்களமா யமைந்தது வேளாண்பொருளாதாரம், இதில் ஒரு தானியப் பயிர்ச் செய்கையடங்கியிருந்தது. எனினும் நல்லினம், செம்மறி, வெள் ளாடு முதலியவை கொண்ட நிாைவளர்ப்பே அதிமுக்கியம் வாய்ந் திருந்தது. இந்தோ-ஐரோப்பிய வழக்கைப் பின்பற்றிச் செல்வம் நல்லினத்தின் முறையால் கணிக்கப்பட்டது. இங்கு இலற்றின் மொழியில் பெக்குஸ் (Pecus) என்ற பதத்திலிருந்து பெக்குனியா (Pecunia) என்ற சொல் தோன்றுகிறது. போர்க்கூட்டம் ஒன்று

Page 175
320 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
'பசுக்களைத் தேடும் கணம்' என்று கூறப்படுகிறது. ‘பாதுகாத்தல்' என்ற சொல்லின் அடி பசுவினைக் காத்தல்' என்ற பொருள்படுகின் AD7.
எல்லா எளிய ஆயர் சமுதாயங்களிலும் உற்றவாறு ஆரியர் சொன்மாலேயும், நிரை பற்றிய எல்லா அமிசங்களையும் குறிக்கும் சொற்கள் பல கொண்டது. ‘விசித்திரக் கன்றுடைய பசு' 'ஈன்ற பின் மலடான பசு' 'மூன்முண்டான எருது' என்றித்தகைய கருத்துடைய தனிச் சொற்கள் இச்சொன்மாலையில் உள. இவ்வாறு பல. ஒட்டகத்திற்கு அராபியர் கொண்டுள்ள பல சொற்களை இத னேடு ஒருவர் ஒப்பிடலாம். சிவப்பு, கறுப்பு, புள்ளி, மென்னிறப் பசுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. காதில் உள்ள தனிமுறைப்பிளவு களைக் கொண்டு நிரைகள் பாகுபடுத்தப்பட்டன. இது சென்ற நூற்முண்டுவரை வேல்சிலும் நிலைநின்ற ஒரு வழக்கினைப் பின்பற் றியதாகும். பால், உணவில் முக்கியமான ஒரு பொருளாக அமைந் தது ; பாலாகவும் தயிர், மோராகவும் இது உட்கொள்ளப்பட்டது. ஆயின் வெண்ணெய்க்கட்டி உண்டாக்கப்பட்டதற்கு நேரிய சான் றில்லை. சுதெப்பி மரபினைப் பின்பற்றி புளித்த பெண்குதிரைப் பாலைப் (கெளமிஸ்) பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை. பசுக் களில் ஒருநாளைக்கு மூன்றுமுறை பால் கறக்கப்பட்டது. நல மெடுத்தல் வழக்கிலிருந்தது. எருதுகள் வயல்களுக்கு வேண்டிய பொருள்களின் பெயர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன. மாட்டி றைச்சி முக்கிய ஊன் உணவாகப் பயன்பட்டது. ஆரிய மேலோ ரிடை விருந்தினர்க்குப் பசுக்களைக் கொன்று உணவளித்தல் பெரும் புகழான விருந்தோம்பலாக இருந்தது. இந்திரன் மாட்டிறைச்சி உண்ணலில் பெருவிானக இருந்தான். இப்பொழுதுள்ள இந்து சமய அகிம்சைக் கொள்கையும் சமயமுறையில் ஊனுணவு தவிர்த அலும் பின்னரெழுந்தி பிராமணங்களுக்குப் பின்னன மறு பிறப்புக் கொள்கைகளுடன் இயைந்தனவாம். இவை ஆரியர் கொள்கைகளி லிருந்தும் அறவே மாறுபட்டனவாம்.
ஆரியர் விருந்துகள் கெல்ற் மக்களின் விருந்துகளை நினைவூட்டு வன. நெருப்பின் மீது கடக்கொழுவிகள் கொண்டு மேல்வைக்கப்
ஐரிசு,
பட்ட கவண்கலக்கடாரம் அங்கிருந்தது (சங்கதம், கறு, ஐ

ஆரியரும் இருக்கு வேதமும் , 32
கொயிரே). விருந்தினர் அங்கு பிரதம பங்கிற்காகக் காத்துக்கொண் டிருப்பர். இதுபற்றி ஒரு பாடல் மிக்க இதமாகக் கூறுவது வரு
totgy :
* ஊன் சமைக்கும் கடாரத்தின்பரிசோதனை-அகப்பை ஆணம் ஊற்றும் பாண்டங்கள், குடாக்கும் கடங்கள், கட்டுக்களின் மூடிகள் கொழுவிகள், ஊன்வெட்டும் பலகை ” (I, 62.) இறைச்சி ஊசிகளிலும் வதக்கப்பட்டது. செம்மறி ஆட்டிறைச்சி யும் வெள்ளாட்டிறைச்சியும் மாட்டிறைச்சியுடன் உண்ணப்பட்டன. தோல் பல காரியங்களுக்குப் பயன்பட்டது. கவண்கள், வில் வார் கள், தேர் இழுவை வார்கள், பருமங்கள், சவுக்குக்கள் செய்வதற்கு இது பயன்பட்டது. இருக்கு வேதத்தில் தோல் விரித்திழுக்கு முன்னராக அது நனைக்கப்பட்டது என்பது பற்றியும் யாதோ ஒரு முறையில் அது பதனிடப்பட்டது என்பது பற்றியும் குறிப்புகள்
2.67. '
இங்கு பயிரிடப்பெற்ற தானியம் பாளி போல் தோன்றுகிறது. இது நாம் முன்னர்க் கண்டவாறு வடமெசப்பொற்றேமியாவில் தெல் அலவ் காலங்களிலிருந்து அறியப்பட்ட ஒன்முகும். இதன் மூதாதை களான காட்டினங்கள் ஆசியமைனர், தேக்கித்தான், கிரான்சுகோக் கசியா, வடபேசியா ஆகிய இடங்களில் வளர்ந்தன. வயல்கள் எருது இழுத்த கலப்பையால் உழப்பட்டன; இது ஒருவேளை மிகப் பெரியப் தாயும் கனமாயும் இருந்திருக்கலாம். ஏனெனில் இருக்கு வேதத் திற்கு உடன் பின்னரான காலத்தில் பாரிய பருமனுடைய எருத்துக் கூட்டங்கள் உழுதலுக்குப் பயன்பட்டன. ஆயின் நுகம் பயனில் இருந்ததாகத் தெரியவில்லை. இவ்வலுவல் பற்றிய இடத்தில் இது பற்றி இருக்கு வேதத்தில் ஓரிடத்திலேனும் குறிப்பில்லை. முன்னைக் குலமுறைச் சுமரிலும் முன்னை எகித்திலும் (மூன்மும் குலமுறை) காணப்பட்ட கலப்பை உருவகிப்புக்களில் நுகம் பயன்பட்டதாகத் தெரியவில்லை யென்பதிலிருந்து மேற் கூறிய உண்மையும் நம் கவ னத்திற்குரியது. இவ்விடயங்களில் கலப்பையின் இழுவை வார்கள் மாடுகளின் கொம்புகளில் மாட்டப்பெற்றிருந்தன. மெசப்பொற்றே மியாவில் கசைற். மரபினல் தோன்றிய இத்தகைய ஓர் உருவகிப்பு

Page 176
322 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
ஒத்த வினைநுண்மையைக் காட்டுகின்றது. இங்கு பயன்பட்ட எருது கள், ராணுகுண்ட்ையின் முன்னை மட்கல வண்ணிப்புக்களிலும் அரப் பாப் பண்பாடு நிலைநின்ற காலமுழுவதும் இருந்த மட்கலவண் ணிப்புக்களிலும் அறியப்பட்ட இந்திய இனங்களுக்குச் சிறப்பான திமிலுடையனவாயிருந்தன.இவ்வமிசத்தின் பொருண்மை எவ்வாரு பினும், கி. மு. பதினைந்தாம் நூற்றண்டிற்குரிய இந்தோ-ஐரோப் பிய மொழித் தொகுதியினராயிருக்கக்கூடிய கசைற் இனத்தவர், இந்தியாவில் ஆரியர் பயன்படுத்தியது என்று கொள்ளக்கூடிய ஒத்தவகை கலப்பை முறை உழவைப் பயன்படுத்தியது நம் கவனத் திற்குரியதாம்.
பாளியின் முற்றிய கதிர்கள் கத்தியாலோ அரிவாளாலோ வெட் டப்பட்டுக் கட்டுக்களாகக் கட்டப்பட்டு, போரடிக்கும் நிலத்தில் போாடிக்கப்பட்டு, இறுதியில் பதரினின்றும் நன்மணியைப் பிரிப் பதற்குத் துளற்றப்படும். யாதோ ஒருவகை அளவுக்கொள்கலம் அளப்பதற்கு இங்கு பயன்பட்டது. இக்கலம் ஊர்தா என்று சொல் லப்பட்டது. ஊர்தா எவ்வாறு தானியத்தால் நிரப்பப்படுமோ அவ்வாறு இந்திரன் குடிவகையால் நிரப்பப்பெறுவான். இதுபற் றிய விடத்து அசப்பா வகைத்தலத்தில் கைவிடப்பெற்ற, நகரா ணில் இருந்த அாப்பாவிற்குப் பிந்திய குடியிருப்பில் காணப்பட்ட, வாற்சு அவர்களால் தானியக் கொத்து என்று விளக்கமளிக்கப் பெற்ற ஒரு வட்ட அமைப்பினை நினைவுகூரலாம். ஒரு பாடலில், 'கிண்டியெடுத்த நீர் பற்றிய குறிப்பிலிருந்து செயற்கை முறை யில் நீர் எடுக்கப்பட்டதென்பது புலனுகின்றது. இது பெரிய நீர்ப் பாய்ச்சல் முறையை விட்டுக் கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப் பெற்றதைக் குறிக்கும்.
விட்டுக் காவலுக்கும் பன்றி வேட்டைக்கும் நாய்கள் பயன்பட் V, டன . இவை யாகங்களிலிருந்தும் விலக்கப்பட்டன. ஆயின் நிரை வளர்த்தற்கு அவை பயன்பட்டன என்பதற்கு நேரான சான்றி ருக்கவில்லை. நிரை காவலர்கள் எருது துரத்துங் கோல்கொண்டு நிரை மேய்த்தனர்.இவர்கள் மந்தைகளில் செம்மறிகளும் வெள் ளாடுகளும் இருந்தன. இவை ஊனிற்காகவும் கம்பளிக்காகவும் வளர்க்கப்பட்டன. வெள்ளாட்டிற்குரிய சங்கதச்சொல் பெயர்ச்சி

ஆரியரும் இருக்கு வேதமும் 323
முறையால் கம்பளிக்கும் பயன்பட்டது. செம்மறிக்கம்பளியே பெரு வழக்கிலிருந்ததென்பதில் ஐயமில்லை. வெள்ளாட்டுக் கம்பளியும் பயன்பட்டதற்குச் சான்றுளது. இது மிக்க நீளமயிருடைய காசு மீர விலங்குகளிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். இதுபற்றி அத்தி யாயம் V இல் குறிப்பிட்டுள்ளேன். கம்பளி நூலாக நூற்றபின் கைத்தறியில் நெசவு செய்யப்பட்டது. பெண்டிர் இவ்வேலையைச் செய்திருக்கலாம். தறியோடியைந்த பாநூல், ஊடுநூல், நூனுழி என்பனவற்றிற்குப் பெயர்கள் இருந்தன.
நல்லினத்தைவிட ஆரியர்க்குச் சிறப்பான இற்படுத்திய விலங்கு குதிரையாகும். இருக்கு வேதத்தில் குதிரை நிறம் பற்றிய விவரங் களிலிருந்து இவர்களிடமிருந்த குதிரைகளின் தலையும் முதுகும் செங்கபில நிறமானவையாயிருக்க உடலின் கீழ்ப்பாகம் மங்கு கபிலமாக மாறியது என்று ரிட்ச்வே அவர்கள் கருதினர்கள். இது சுதெப்பிகளிலிருந்த பிரசவல்சுகியின் குதிரை யெனப்பட்ட காட் டுக் குதிரையின் வண்ணமுறைமையைக் கொண்டிருந்தது. இக் குதிரைகள் மொங்கோலிய அல்லது மேலாசியத் தொகுதியைச் சார்ந்தனவாயிருந்தன. சில நேரங்களில் அவை தொழுவங்களில் அடைக்கப்பெற்றிருந்து பின்னர் மேயவிடப்படும்பொழுது கயிறு கட்டப்பெறும். ஆண் குதிசைகள் சிலவேளைகளில் தலமடிக்கப்பட் டன. வடவைகள் சிறப்பாகப் போர்த்தேரிழுக்கும் விலங்குகளாகப் பயன்பட்டன. சவாரி அருவழக்காக இருந்தது ; போர்த்தொழிலில் ஒரு கலே நுண்மையாக ஒருபொழுதும் இருந்ததில்லை. குதிரைப் பருமனின் விருத்தியில், விளங்கமுடியாவகையில், அங்கபடிகள் மிகப் பிந்தியே தோன்றின. பாக்தளவில் இது இதற்கு ஒரு காரண traffids இருக்கலாம். அங்கபடிகளன்றிப் போர் விரன் உறுதியான இருக்கை ஒன்றினைக் குதிரைமீது கொள்ளலரிது. ஆரியரும் அக்கி மினிது மக்களும் குதிரைப்படை பற்றிய அறிவுடையவராயிருந் தனர். குதிரையீாட்சி பற்றிய அறிவில் பண்டைக்கிழக்கு நாட் டினரே அங்கபடிகளின் பயனைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய வராயிருக்கலாம். இந்தியாவில் அங்கபடி வளையங்கள் சாஞ்சியி லுள்ள கி. மு. இரண்டாம் நூற்முண்டிற்குரிய செதுக்கல்களிலும், வட இந்தியாவில் சற்றுப் பிந்திய காலத்திற்குரிய செதுக்கிய ஒரு

Page 177
324 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
செப்புப்பாண்டத்திலும் காணப்படுகின்றன. எவ்வகையினும் முன்னை ஆரியர் கட்டத்திற்கும் மிகப் பிந்தியே இவை வழக்கிற்கு வந்தன. ஆரியர் குதிரைகள் முக்கியமாக, போரிலே விலங்காகவோ தேர் விலங்காகவோ பயன்பட்டன. போரினைப்பற்றிப் பின்னர்க் கூறு வோம். தேர்ச்சவாரி மிக உவந்த ஒரு விளையாட்டாக இருந்தது. இவ்விளையாட்டு வெறும் பொழுது போக்கிற்காகவும் பரிசிற்காக வும் பயிலப்பட்டு வந்தது. ஆயின் புறநடையாகச் சில நியாய மான சமய விழாக்களிலும் அரசர் முடிசூட்டுவைபவம் போன்ற வற்றிலும் இது நடைபெறுதல் உண்டு. இத்தகைய சவாரிகள் தேர் கள் சுழன்று திரும்பி வருவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு வழியா கவே நடைபெறும். இத்தகைய ஒரு சுற்று, மேலே நாம் கூறிய சவாரி நிலம் பற்றி மித்தானிய கைந்நூல் சொல்லும் ஐகவர்த்தன என்பது போன்றதாகும். இத்தகைய ஒரு சவாரி நிலத்திலிருந்தே உரோமர் சேக்கசும் (Circus) விளையாட்டரங்கு போன்ற கிரேக்க ரிடையே நிலவிய ஒலிம்பியாவில் இருப்பது போன்ற ஒக்தியோவ் உம் தோன்றியிருக்கலாம். இங்கு தேர்ச்சவாரி மக்களுவக்கும் ஒரு விளையாட்டாக இருந்ததாயினும், கி. மு. ஏழாம் நூற் முண்டின் நடுப்பகுதியில் குதிரை ஊரும் சவாரி ஒரு புதுமை யாகப் புகுத்தப்பட்டது. இது அயலந்தின் இருள் ஊழியில் காமன் சந்தையிலும் பிற கூட்டங்களிலும் நடைபெற்ற பண்டை கெல்றிக் மக்களின் குதிரைச் சவாரிகளை நினைவூட்டியது.
குதிரை தென்னிரசியாவில் மத்திய குபன் காலத்தில் (கி. மு. 2000-1500 வரையில்) இற்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது. காலத்திற் சிறிது முன்னரான மைகப் கல்லறையில் இருந்து பெற்ற ஒரு வெள்ளிக்கோளையில் பிரசவல்சுகியின் குதிரையின் உருவகிப் புக்கள் காணப்படுகின்றன. ஆயின் அனே, சியல்க் ஆகிய இடங்களி லிருந்து பெற்ற சான்றிலிருந்து மிக்க பண்டைக் காலத்தில் குதிரை அங்கு இற்படுத்தப்பெற்றது என்பதுபோல் தோன்றுகிறது. மீண் டும் இத்தகைய சான்று பலுக்கித்தானினும் சாணு குண்டை 1 இலும் காணப்பட்டது. அாப்பாப் பண்பாட்டில் இது அருமை யாகவே உள்ளது. எனவே, ஆரியர்தான் இந்தியாவிலோ அதன் மேற்கெல்லைப்புறங்களிலோ முதன்முதலாகக் குதிரையை இயற்படுத்

ஆரியரும் இருக்கு வேதமும் 325
கியவர்கள் என்று கொள்ளலாகாது. ஆயின் அவரே குதிரையை முதன் முதலாக விரைவான பெயர்ச்சிக்குப் பயன்படுத்தியவர் களுள் முதலானவர்கள் என்பது திண்ணம். ஆரியர்களின் கம வேலைக்கு எருதிழுக்கும் நான்கு சில்லுவண்டிகள் பயன்பட்டன போல் தெரிகின்றது. குதிரைகள் விளையாட்டிற்கும் போருக்கும் இலேசான இரு சில் தேர்களில் பூட்டிப் பயன்படுத்துவதற்காக மட் டுமே வளர்க்கப்பட்டன.
ஆரியர் குடியிருப்புக்கள், மனைகளின் ஒழுங்கமைப்பு, தோற்றம் முதலியவை பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. ஆயின் இவ்விடயத் திலும் எம் ஆராய்ச்சிப் பொருள் தோட்டக் கட்டிடங்கள் கிராமங் கள் ஆகியவற்றிலும் பெரிய அமைப்புக்கள் பற்றியதாக இருக்காது என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய இலெளகிக விடயங்கள் போர்க்கடவுளுக்கெழுந்த பாடல்களில் உருவகங்களாக அமைவ தற்கு வாய்ப்புடையனவாயிருக்கவில்லை. ஆயினும் விடியற்காலேயின் கடவுளான உஷைதேவி தன் எருதிழுக்கும் தேரில் மனங்கவரும் நாட்டுப்பாங்கான தோற்றத்தில் தோன்றுகிமுள். இவள் தோற்றம் தெமெற்றரையும் தசிற்றசு விவரிக்கும் தேவி நேதாவையும் நினை வூட்டுவதாயிருந்தது. இங்கும் இவள் உருவும் இவ்வகையிலேயே தேரில் வைத்து இழுக்கப்பட்டது. இத்தேர், ஐரோப்பாவில் இற்றவி, அல்கேஸ், தென்மார்க் ஆகிய இடங்களில் அறியப்பட்டதும் கி. மு. ஐந்தாம் நூற்றுண்டு தொடங்கிக் காலம் கொண்டதாயும் கடவு ளொன்றின் அரியாசனத்தைச் சுமந்து சென்ற ஒரு சமயச்சடங்கிற் குரிய உண்மையான வண்டிகளை நினைப்பூட்டுவதாயுமிருந்தது. எனி ணும் ஆரியர் கட்டிடங்கள் யாவும் மாத்தாலானவை போல் தோன்று கின்றன. விடு செவ்வக வடிவினதாய் வேய்ந்த கூசை கொண்டதா யிருந்தது. இது ஒன்றிற்கு மேலான அறைகளாகவோ பகுதிக ளாகவோ பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு தனிக்கூரையின் கீழ் மனையக மும் நல்லினமும் வெள்ளாடுகளும் ஒருங்கே அமைந்தன என்று பொருள்படுமாறு சில சொற்ருெடர்கள் உள்ளன. வாசல்வழிக்குரிய சங்கதச்சொல்லான ஆதா (இச்சொல் எப்பொழுதும் உருவக முறை யில் வாளின் வாயில் வழியைக் குறிக்க உபயோகிக்கப்பட்டது) என்பதை இலத்தின் சொல்லான அந்தாயி என்பதோடு சொல் லொடு பொருளான ஒற்றுமை கொண்டுள்ளதென்று கொள்வோ

Page 178
326 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
மானுல், அச்சொல், கட்டிடத்தின் இறுதிச் சுவர்கள் முன் தள்ளி நிற்கும் பகுதிகளுக்கிடையில் அமைந்த ஒரு முகமண்டபம் (தலைக்கடை) என்னும் பொருள்படும். இக்கட்டிடச் சிற்ப உத்தி மெகான் விட்டிற்கு இயல்பான ஒாமிசமாக இருந்தது. இவ்விடு GPL lạ6Dylid (Troad) கிழக்கு ஐரோப்பாவிலும் அறியப்பட்டதா யிருந்தது. இது குறைந்தது கி.மு. மூன்றும் ஆயிரத்தாண்டின் ஆரம்பமளவு முன்னைக் காலத்தைச் சார்ந்ததாயிருக்கலாம். இது கிரீசில் இந்தோ-ஐரோப்பிய மொழியினை ஆதியில் பேசுபவரோடு இணைந்திருந்தது என்பது உறுதி. ஆயின் இவ்வொப்புமையை வலியுறுத்தி மேலும் பொருள் கொள்ளல் தவறு.
மெகசனிலிருந்தவாறு ஆரியர் வீட்டிலும் நடுவணமைந்த அடுப்பு சிறப்பு வகையான ஒரு முக்கியம் வாய்ந்தது. இது விட்டுக் கிரியை களில் நடுமையமாக விளங்கியது. வாட்டுங்கோல்கள், வெண்கலக் கடாரங்கள், அவித்த மாட்டிறைச்சியில் சுவைப்பகுதிகளை உரிப்ப தற்கான ஊன் காண்டிகள் முதலியவை பற்றி ஏலவே குறிப்பிட் டுள்ளோம். இன்னும் வீட்டணியங்களில் அரைப்பதற்கான கைப்பிடி போட்ட திரிகைகள், தானியங்களை மாவாக இடிப்பதற்கான உலக்கை முதலியனவும் இருந்திருக்கலாம். இருக்குவேதத்தில் பிற் கூறியவை குறிக்கப்பட்டுள்ளன என்பது உறுதி. ஆயின் முற்கூறி யவை குறிக்கப்பட்டிருக்கலாம். மட்கலப்பாண்டங்கள் பற்றிய குறிப்பும் இந்நூலில் உள்ளது. விழாக்களில் பருகப்படும் குடிவகை களில் மது ' என்பதும் ஒன்று. இச்சொல் இந்தோ-ஐரோப்பியக் கிளைமொழிகள் எல்லாவற்றிலும் பொதுவான ஒரு சொல்லென்பதை உறுதியாகக் காட்டுமுறையில் அமைந்துள்ளது (சங்கதம், மது ; கிரேக்கம், மெ ; கெல்றிக், மித் பண்டை உயர் யேமன், மெது ; பண்டை சிலவோனிக், மெது). இன்னெரு வகை வெறிதரும் குடி சுரா என்பதாகும். இது தானியத்திலிருந்து வடிக்கப்படும் ஒரு வகை பீர்பானமாகும். தெய்வத்தன்மை பொருந்திய ‘சோம் என் னும் பானம் தனியச் சமயச்சடங்குகட்கு மட்டும் பயன்படுத்தப் பட்டது. இது இப்பொழுது அறியப்படாத ஒரு தாவரமொன்றின் கண்டுகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்டது. இது ஆக்கும் முறையும்

ஆரியரும் இருக்கு வேதமும் - 327
குடிக்கும் விதமும் இதுபற்றிய ஆரியர் சமய வழக்கிற்கு என ஆக்கப்பெற்ற பல பாடல்களிலும் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்
6ኽT6ሻ፲`•
ஆடை வகைகள் பெரும்பாலும் கம்பளத்தாலானவை என்ப கைத் தவிர வேமுென்றும் அவற்றைப்பற்றி அறிவதற்கு முடிய வில்லை. அணிசெயப்பெற்ற அல்லது அலங்காரக் கோலம் பெற நெசவு செய்யப்பெற்ற ஆடைகளைப் பெண்டிர் அணிந்தனர். இரு பாலாரும் ஓர் மேலங்கியணிந்திருக்கலாம். இது பற்றிய விடத்து மைகப் காலத்தோடொத்த காலத்துக்குரியதும் தென்னிரசியா வில் சார்ஸ்கயா என்னும் இடத்தில் உள்oாதுமான கல்லறைகளுள் ஒன்றில் காணப்பட்ட சிவப்பிலும் ஊதாவிலும் சாயமூட்டிய ஓர் ஆடையும் கபிலக் கம்பளத்தாலாய மேலங்கியும் நம் நினைவிற்கு வரும். தலைப்பாகை வழக்கிலிருந்ததென்பது பிராமணங்களிலி ருந்து தோன்றிய நூல்களில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது (இது அாப்பாப் பண்பாட்டிலிருந்து பெறப்பட்டது என்பது உறுதி).
இருக்கு வேதத்தில் ஆடவன் தோடணிந்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. பெண்டிருக்குரிய ஓர் அலங்காரத்தலையணி பற்றிய குறிப்புமதிலுள்ளது. இதன் சொல்லடி இது ஒரு கொம்புபோல் நின்றதெனக் குறிக்கின்றது. மோதிரங்கள், சிலம்புகள், கழுத்தணி கள், மார்பணிகள் யாவும் பொன்னுல் செய்யப்பட்டிருந்தன. மயிர்மழித்தல் பற்றிய குறிப்புமுள்ளது ; மீசைகள் தாடிகள் பற்றிய குறிப்புக்களும் உள; இந்திரன் மஞ்சட் கபில நிறத்தாடிக்குப் புகழ் போனவன்.
இவர்கள் சமுதாயத்தில் வழக்கிலிருந்த சிறப்புக் கைப்பணிகளுள் உலோக வேளையாளர் கலையும் ஒன்முகும். இவர்கள் உலோகப் பாண்டங்களும் உபகரணங்களும் செய்தனர்; அல்லது படைக்கலங் கள் சமைத்தனர். ஆயின் தச்சன் முக்கியமான மரியாதைக்குரிய தொழிலுடையவனுயிருந்தான். இவன் கோடரியோ உளியோ கொண்டு தொழில் புரிந்தான். தேர்களை அணிசெய நுண்ணிய செதுக்கல் வேலைப்பாடுகள் செய்தான். விடுகளின் கதவுநிலைகளை அணிசெயவும் செதுக்கல் வேலைகள் செய்தான். இவன் உபகரணங் களில் துறப்பணமும் அடங்கியிருந்திருக்கலாம். யாகத்தி (மனைத் தீயும் உட்பட) ஆக்குவதற்குரிய உபகரணத்திலிருந்து இத்துறப்

Page 179
328 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
பணம் பயன்பட்டதென்பது புலனுகின்றது. வெண்கலமொன்றே பயன்பட்ட உலோகம்போல் தோன்றுகிறது. இதிலிருந்து செம்பும் பயன்பட்டது புலப்படும். எனினும் இவ்வுலோகத்திற்குரிய சொல், வெள்ளியத்தைப்போல் இருக்கு வேத காலத்திற்குப் பின்னரே தோன்றுகிறது.
ஆரியர் சமுதாயம் பருவத்திற்குப் பருவம் கூட்டங்கள் நடத்தி யதுபோல் தோன்றுகிறது. இது இதற்கென உரிய ஒரு சங்கமனை யில் நடந்தது. இச் சங்கங்களுக்குப் பெண்டிர் விலக்கப்பட்டிருந் தனர். இக்கூட்டங்களில் குலத்தவர் அலுவல்கள் ஆராயப்பட்டது மன்றி, கமத்தவரின் சாதாரண அம்பற்கதைகளும் நடைபெற்றன. இங்கு ஆடவர் விதைகள் கொண்டு சூதாடினர். இவ்விதைகள் கவறு களுக்குரிய குறிகள் கொண்டிருந்தன. எனினும் இவ்விளையாட்டு அாப்பாப் பண்பாட்டில் வழக்கிலிருந்தவற்றைப்போல் வழக்க மான குறி கொண்ட கவறுகளுக்குரிய விதிகளுக்கியைய ஆடப்பட் டிருக்காது. இவ்விதைகள் நிலத்திலுள்ள குழிகளை நோக்கி எறி யப்பட்டன; யாதோ ஒரு சிக்கலான முறையில் பந்தயம் அமைத்தே இவை உருட்டப்பெற்றன. இதைப் போன்றதாயிருக்கக் கூடிய ஒரு விளையாட்டினை நான் ஒருமுறை கவனித்துள்ளேன் ; இமாலயத்தினடிவாரத்தில் கங்ராமா வட்டத்திலுள்ள ஒரு கிராமத் தில் இவ்விளையாட்டு நிலத்திலுள்ள குழியை நோக்கி விதைகள் எறிந்து விளையாடப்பெற்றது. பல்காலும் இவ்விளையாட்டிற்குரிய பந்தயம் மிக உயர்வாயிருந்தது. இருக்குவேதத்தில் உள்ள (34) ஒரு பாடல் சூதாடியொருவனின் துக்கம் நிறைந்த புலம்பலாயிருந் தது. இதில் அவன் மற்றை முறை நல்லமனத்திடம் வரவேண்டு மென்று தொழுகின்றன். அவன் முன்னர்த் தன் மனைவியையே பண யம் வைத்திழந்துவிட்ட்ான்; ஒருவேளை அவளின் அன்பினைச் குதி ணுல் இழந்தவனுயிருக்கலாம்.
"ஒருபொழுதுமவள்என ஏமாற்றியதில்லை சினந்ததுமில்லை; எனக்கும் நண்பருக்கும் அவள் இனியவளாக விளங்கினுள்”

ஆரியரும் இருக்கு வேதமும் 329
ஆயினும் “ என் மனைவி என்னைப் புறக்கணிக்கிருள்; அவள் தாயென்னை வெறுக்கிருள். எனினும் குதோ இன்னும் என்னை அழைக்கின்றது’.
“குதன் குதுமனை நாடிச் செல்கையில் தன்னுடல் தீபம் றியதோ என்றெண்ணுகிருன் ; இம்முறை வெற்றி என நாடுமோ” என்றேங்குகிறன்.
அவன் செய்யக்கூடியது தனக்குற்ற விதியைக் கூறி மற்றவர்க் கிடித்துரைத்தல் ஒன்றேயாம்.
'கவறுடன் ஆடேல்; உன் கூல நிலத்தைப் பயிர்செய்; பய னைத் துய்த்து அச்செல்வம்போதுமென்று மனமமைக. குதா ! W உனக்கு நல்லினமுண்டு மனைவியுண்டு”. ஆரியர் இசைபற்றி நற்சான்றுகளுள. ஆடலுடன் சேர்ந்திசைப்ப தற்குத் தாளங்கள் இருந்தன. இத்துடன் முழவுமிருந்தது. இன்னும் புல்லாங்குழலும் யாழ் வகுப்பைச் சார்ந்த நரம்பிசைக்கருவி யொன்றும் இருந்தன. இவ்விசைக்கருவி ஏழிசை கொண்டதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி பண்டை இசைபற்றியறிவதற்கு மிக முக்கியமானதாகும். நிலையான சுரவரிசை நிலையுடைய யாழ், புல்லாங்குழல் போனற கருவிகள் மேற்காசியாவில் பண்டைக்காலந் தொடங்கி அறியப்பட்டனவாகும் என்று கல்பின் என்பார் கூறியுள் ளார்கள். யெம்டெற்நசர் காலத்தில் வில்வடிவ யாழ் ஒன்று வழக்கி லிருந்தது. இதனிலும் மிக விரிவான வகைகள் ஊரின் முன்னைக் குலமுறை அரசகல்லறைகளில் காணப்பட்டன என்பது பிரசித்தம். இக்கருவிகள் ஏழுசுர அளவுமுறையில் அமைக்கப்பட்டன என்ப தற்கு நல்ல சான்றுளது. இதில் எட்டாவது சுரம் இந்த வரிசையை முடிப்பதாக உள்ளது. இது இக்காலத்து ஐரோப்பிய இசைக்கருவி கள் யாவற்றிற்கும் உள்ளது போன்றது. இந்த எழுசுரவரிசை முறையே இக்காலத்து இந்துசமய இசைக்கு ஆதாரமாயுள்ளது. இங்கு இது உலகின் மற்றைப் பாகங்களிலுள்ளவாறு மிக்கபூர்விக அளவைமுறையான ஐந்து சுர வரிசையுடன் ஒருங்கே வழக்கி லிருந்து வருகிறது. இந்த ஐந்து சுர வரிசை பூர்விகக் குரல் மரபை யும் ஐந்தாமிடத்து ஒத்திசையையும் அடிப்படையாகக் கொண்

Page 180
330 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
டது. இது எங்கள் நியம இசைமுறையில் மூன்முவது ஏழாவது சுரங்களும் அரைச் சுருதி இடைவெளிகளும் அற்ற ஓர் முறையே யாகும். கேவன் என்பார் இவ்விரு இசை அளவை முறைகளையும் ஆராய்ச்சியில் இன்னும் ஒருபடிக்குயர்த்தி எம் தொல்பொருளிய லறிவுடன் இணைத்துவிட்டார். இவ் எழுசுரவரிசையின் பாம்பல் மேற்காசியாவின் நகர் நாகரிகங்களில் தோன்றிய கருவியிசை யுடன் நெருங்கிய தொடர்புகொண்டதென்றும், ஆயின் அதன் ஆதித் தோற்றப்புலத்திலிருந்து அது கி.மு. இரண்டாம் ஆயிசத் தாண்டிலும் பின்னரும் இந்தோ-ஐரோப்பிய மக்களால் பிற இடங் களுக்குப் பரவியதென்றும் இவர் கூறுகிருரர். இது மிக முன்னேய தாக இந்தியாவிற்குச் சென்றதென்றும், சீனத்திற்கே சென்றிருக் கலாமென்றும் பின்னர் இது மேற்கு நோக்கிப் பரந்து கெல்றிக்
மக்களையடைந்தது என்றும் அவர் கூறுகிருரர். பிரித்தனே இது இறுதியாக அடைந்த இடமாகும். இங்கு இது கி.மு. முதலாம் ஆயி ாத்தாண்டில் வந்தது. இதனுல் எப்ரிடியன் நாட்டுப் பாடல்கள் பண்டை இந்தோ-ஐரோப்பிய காலத்திற்கு முன்னராக ஐஞ்சுர வரிசையை இன்றும் கொண்டுள. மேற்காபிரிக்காவிலிருந்து பெற்ற ஐஞ்சுரமுறைமை இக்காலத்து யாஸ் இசையில் அதற்குரிய இடத் தைக் கொண்டுளது என்பதும் இங்கு எம் கவனத்திற்குரியது.
இருக்குவேதப் பாடல்களுள் (IX, 112) மதச் சார்பற்ற ஒன் றள் ஆ. எபிரேயமதப்பாடல்களுள் * பாடல்களுள் பாடல்' என்ப தைப்போன்ற தானத்தை வகிக்கின்றது. இதில் இந்து, ஒடுக, இந் திரன் பொருட்டு ஒடுக ' எனும் ஒருவரி பல்லவிபோல் அமைந்துள் ளது. இது ஒவ்வோர் இணையடிகளுக்கும் இடையில் வந்துள்ளது. இந்தப் பத்திநிறைந்த பாகங்களை விட்டு நாம் இதை நோக்கின் வழக்குமொழியிலமைந்த் ஒரு பாடலை நாம் காண்கிருேம். இப் பாடல், கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் பஞ்சாபில் இருந்த ஆரியர் காட்சியை வியத்தகு முறையில் இயல்புபடவும் பழுதின்றி யும் எடுத்துக்காட்டுகின்றது. இப்பாடலில் உள்ள அசைகள் மூலத்தி
லுள்ளவாறமைந்துள்ளன.

ஆரியரும் இருக்கு வேதமும் 33.
மக்கட்கு வழிகள் பல
எங்கள் ஆசைதிட்டம் L. IGNO கம்மி பணி, குருகூட்டம், மருத்துவன் பிணியோரென, நாடி, முறைப்படச் செல்வர். விற்கம்மி, உலர்வன்புல், வான்புள் சிறகு, கூர்துதி வெண்கலம், சுடர்விடுகரி கொண்டு நற்பணம் தரும் மக்களை நாடித் திரிவன். நானேர் கவி, எந்தை வைத்தி அன்னை திரிகையில் கூலம் அரைப்பாள், ஒன்றன்பின்னென்முய் நிரைகள் தொடர்வது போல நாம் பல்வழி செல்வம் சேர்ப்போம்.
குதிசை சிலநிறை வண்டியை விரும்ப, விருந்தளிப்பான் களித் திளித்து மகிழும். தவளை மழை நாடுமாறு ஆடவன் பெண்ணை நாடுவன்.
அறியப்பட்ட இந்தோ-ஐரோப்பிய ஆயர் பாடல்களுள் மிக்க முன்னை யது இது என்று ஒருவாறு கொள்ளலாம். இது இப்பொழுது சிறந்து பட்ட முன்னைச் சங்கதப்பருவத்து இலௌகிகப் பாடலை ஒருவழி யில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இது மக்களின் நாள்முறை வாழ்வை விவரிக்கின்றது. இத்தகைய அமிசங்களையே நாம் பெரி அம் முயன்று பெறவிரும்புகிருேம். ஆயின் இருக்குவேகத்தின் முக்கிய இலக்கு போரெனும் பொல்லாப்பொருளே. இதுபற்றி இனி நாம் ஆராய்வோம். - -
பாடல்கள் ஆக்கப்பட்ட காலம் பிந்தியதாயிருப்பினும், அவை கூறும் நிலைமைகள் வெற்றியாளர் கொண்ட முதல் வெற்றியை வெளிக்கூறுவனவாம். இங்கு சத்திரியரே வீரர்கள்; பெரும்கடவுளர் யாவரும் அவர்கள் உருவில் ஆக்கப்பட்டுள்ளனர். இந்திரன் போர்
16-CP 3040 (4168)

Page 181
332 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
விரனின் காவல் தெய்வம்; இந்திரனின் விரச்செயல்கள் காடவன் தலைவன் தன்னுட்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும் செயல்களே. இதனுல் ஆரியர் போரினை நாம் சாதாரண போர்வீரர் பற்றிய முறையில் நோக்குவதற்கில்லை. இங்கு போர் வீரர் கூட்டத்தில் நேர் நின்று கைகொண்டு போரிடுவார் இருந்தனர். இவர்கள் சாதாரண காலாட் படையினராயிருக்கலாம். ஆயின் இங்கு நாம் போரினை உயர்குடிப் போர்வீரர் பற்றிய முறையிலிருந்தே காண்கிமுேம். இவர் கள் தம் தேரில் போருக்குச் சென்றனர். இவர்களே நன்கியங்கக் கூடிய காவற்படை கொண்டவராக விளங்கினர்.
ஆரியரின் போர், வில்லினைக் கைக்கொண்ட போர் வீரன் அமர்ந் திருக்கும் வேகமான குதிரைத் தேர்களுடன் நடைபெற்றது. தேர் களைச் சாாதிகள் செலுத்தினர். இவ்வுண்மை தொல் பொருளியன் முறையில் மிக முக்கியம் வாய்ந்தது. இதுபற்றி இருக்குவேத வரு ணனைகள் மிக விவரமானவை என்பதை நாம் பின்னர்க் காண் போம். இதிலிருந்து கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டின் நடுப் பகுதியில் இந்தியா மீது படையெடுத்து வந்த ஆரியப்படை யெடுப்பாளரின் தேர்களின் தோற்றத்தைப்பற்றிப் பெருவளவிலும் அமைப்புப் பற்றி நன்முறையிலும் நாம் அறிந்து கொள்ளலாம். இவர்களின் தேர்கள் கீழை நாட்டுச் சமயங்களில் உருவகங்களுக்கு நன்கியைந்தனவாயிருந்தன. உதாரணமாக இவ்வரிகளை நோக் குக: “முழங்கிடிமுகில் அமைத்த இவன் சினத்தேர்கள்". இத் தகைய வரிகள் இருக்கு வேதத்திலிருந்தே பெறப்படலாம். அரப்பா நாகரிகம் சில்லுவண்டிகளை நன்கறிந்திருந்தது. ஆயின் அவற்றைப் போருக்குப் பயன்படுத்தியதுபோல் தோன்றவில்லை. அரப்பாப் பேரரசில் தாக்குதலிற்கோ காவலிற்கோ அமைந்த போாமைப் பொன்றிற்குரிய சான்று ஒன்றும் ஆச்சரியப்படுமுறையில் காணப் படவில்லை; இதை நாம் முன்னர்க் கண்டோம். ஆரியர் தேர்கள் இந்திய உள்ளூர் மரபுகளிலிருந்து ஒன்றும் பெறவில்லையென்பது தெளிவு. இவை வியத்தகு புதுப்படைப்புக்களாகத் தோன்றுகின் றன. இவற்றின் தோற்றமூலங்களை அறிவதற்கு நாம் மேற்குக் திசையையே நேர்க்க வேண்டும்.
மேற்காசியாவில்,ஒருவகைத் தேரென்று சொல்லக்கூடிய ஒரு சில்லுடைய வண்டிலின் மிக்க முன்னைய உருவகிப்பு தெல் அலவி

ஆரியரும் இருக்கு வேதமும் 333
லிருந்து பெற்ற ஒரு வண்ணமட்கலத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு மனித உருவம் வட்டப்பொருளொன்றில் அருகில் நிற் கிறது. இப்பொருள் குறுக்குக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிப்பு அது ஒரு எட்டு ஆசை கொண்ட ஒரு சில்லு என்று சொல்லுந்தகையதாயிருந்தால் இத்தகைய சில்லொன்று ஆக்கு வதற்கு வேண்டிய நிறைவுள்ள தச்சக் கலையும் சில்லாக்கற் கலையும் மிக்க முன்னைய காலத்தில் காபூர் ஆற்றங்கரையோரம் விருத்தி செய்யப்பட்டன என்பது கருத்தாகும். இது நடந்திருக்கக்கூடிய நிகழ்ச்சியன்று. ஆரைச்சில்லொன்றை ஆக்குவதென்முல் தசமிக்க உலோகக் கருவிகள் தேவைப்படும். தெல் அலவ் காலத்தில் இருந்த தயக்கமான பரீட்சார்த்தமான உலோகவியல் இத்தரத்தை அடைநீ திருக்க முடியாது என்பது உறுதி. எனவே இவ்வுருவகிப்பினைச் சில்லு வண்டியினது என எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனல் சுமரின் முன்னைக்குலமுறையின் ஆரம்பகாலம் இதற் குரிய காலம் என்று கொள்வதில் பழுதின்று. மு. கு. இன் காலத் திற்குரிய கருஞ்சிவப்புக் கலப் பாண்டங்கள் இலேசான இரு சில் தேர்களின் உருவகிப்பைக் கொண்டிருந்தன. இவற்றில் உயர் முன் மேடையிருந்தது. இவை ஒருவனையோ இருவரையோ கொண்டு செல்லக்கூடியவையாயிருந்தன. இவை கழுதைகளால் அல்லது எருது களால் இழுக்கப் பெற்றன. அவற்றின் சில்லுகள் நன்முறைமைப் படத் திண்ணியவாகக் காட்டப்பட்டிருந்தன. ஊர், கபசா ஆகிய இடங்களிலிருந்த காலத்தாற் சிறிது பிந்திய முன்னைக் குலமுறைப் புடைப்ப ஒவங்களிலும் ஊரின் அரச கல்லறைகளிலிருந்து பெற்ற புகழ் பெற்ற உட்பொதிவு கொண்ட ' விருதி லும், ஒத்த வகை யினவான கழுதைகள் இழுக்கும் வண்டிகளும் மிக்க விவரமான' முறையில் காட்டப்பட்டுள. இவை திண்ணிய சில்லுகள் கொண் டிருந்தன; சில்லுகள் இரு அரைத்தட்டுக்களைத் தொப்பையடி யில் மூட்டி ஆக்கப் பெற்றிருந்தன. விருதில் தேர்கள் முதல் பார்வைக்கு நாலு சில்லுகள் கொண்டனபோல் தோன்றுகின்றன. ஆயின் சிட்னி சிமித் அவர்கள் கூறியவாறு இது பிரபல ஓவியர், பிகாசோவின் வினைநுண்மை போன்ற ஒரு விசிந்திர உருவதிப் பாகும்; இதில் ஒரு சேர்ப்பில் ஒரு பொருள டிருந்த்தسرچين கத் தோற்றமும் காட்டப்படும்). இத்தேர்கள் முரட்டுச் சில்லுகளில்

Page 182
334 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
கிரிச்சிட்டு ஒலமிட்டுச் சென்றனவாயினும், ' விருதில் காட்டப் பெற்ற இறுதிக் காட்சியிலுள்ளவாறு, கழுதைகள் அவற்றை முழு வேகத்திலும் இழுத்துச் செல்லும்போது முதன்முதலாக அவற் றைக் கண்ணுறும் சுமரின் பகைவருக்கு அவை மிக்க பயமளிப்பன வாயிருந்திருத்தல் வேண்டும்.
இரண்டாம் ஆயிரத்தாண்டின் ஆரம்ப காலத்தில் ஆசிய மைன ரில் இத்தகைய தேர்கள் பயனிலிருந்தன. ஆயின் இவற்றில் இரு முக்கிய வேறுபாடுகள் இருந்தன. இவை இலேசான ஆரையுடைய சில்லுகள் கொண்டிருந்தன; அல்லாமலும் இவை குதிரைகளால் இழுக்கப் பெற்றவாயுமிருந்தன. இக்காலத்தைத் தொடர்ந்து இக் தகைய தேர்கள் முதன்முதலாக ஈசியன்நாடுகளில் தோற்றமளிக் கின்றன. இவை குறிப்பிடத்தக்க முறையில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநருடன் சேர்ந்தே காணப்படுகின்றன. இக்காலம் கிரீசின் நடுநாட்டில் கி. மு. 1500 இற்கு முன்னரும் (இது ஓமர் பருவம் வரை நிலைநின்றது) கிறீற்றில் கி. மு. 1450 வரையில் ஒரு நூற்றண்டின் பின்னரோ அதன் பின்னரோ உள்ளதுமாம். இன் லும் அக்கியன் அரசகுமாரர் இற்றைத் தலைநகருக்கு, தேரூர்தலில் தேர்ச்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர் என்பதற்குச் சான் அறுளது. எகித்தில் இத்தகைய தேசொன்றின் மிக்க முன்னைய உரு வகிப்பு முதலாம் அமெனேதெப்பின் காலத்திலாகும். இது கி. மு. 1550 வரையிலாகும்; பதினெட்டாம் குலமுறை அரசாளர் லெவென்ற் இற்கு எதிராக நடாத்திய போராட்டங்களின் ஆரம்ப காலத்தில் தேர்ப்போர் முறை எகித்துப் படைகளிடை புகுத்தப் பட்ட காலமிது. கி. மு. பதினைந்தாம் நூற்முண்டளவிறுதியில் மித் தனியரே எகித்திற்குத் தேர்கள் ஏற்றுமதி செய்தனர்.
நடு ஐரோப்பாவிலும் வட ஐரோப்பாவிலும் இந்தோ-ஐரோப்பிய கெல்ற் மக்களிடை கி. மு. ஐந்தாம் நூற்முண்டிற்கு முன் தேர் தோன்றிய தென்பதற்குச் சான்றில்லை. ரைன் நதிப் பிரதேசத்தின் நடுப்பகுதியிலும் மாணிலும் அவற்றின் காலத்தின் பின்னரும் தேர்களின் அமைப்புப் பற்றிய பல சான்றுகள் உள. (மாணும் மேற்காசியாவிலிருந்து இதைப் பெற்றிருக்கலாம்). இவ்வமைப் பொற்றுமைகள் இப்பொழுது நம் ஆராய்விற்குரிய பண்டைக்

ஆரியரும் இருக்கு வேதமும் 335 கிழக்கின் முன்னத் தேர்வரிசைகளுடன் இத்தேர்கள் பொதுப் படத் தொடர்புடையனவாயிருந்தன என்பதை உறுதிப்ெபடுத்து வனவாயுள்ளன. கெல்ற்றிலிருந்து பெற்ற சான்றினைப் பற்றி அண்.
படம் 31. தேர், கி. மு. 15ம் நூற்றண்டிலிருந்து 13ம் நூற்றண்டு வரை
மையில் சேர் சிறில் அவர்கள் அற்புதமான முறையில் ஒரு விளக்க மளித்துள்ளார்கள். இதைப் பின்பற்றிக் கீழைநாடுகளிலிருந்து பெற்ற பொருள்களை ஆராய்தல் நலம்.

Page 183
336 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
இதிலிருந்து புலப்படுவது என்னவென்முல் போர்-வண்டி யென் பது முன்னைக் குலமுறைச் சுமரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நுண் மையாகும் என்பதே. இது கி. மு. 2000 இற்கு உடன் பின்னரான காலத்தில் சுமர், அக்கட் ஆகிய அரசுகளின் வட எல்லைப்பகுதி களில், பிறவினை நுண்மைகள் ஏற்றுக்கொள்ளப்படும்போது மாற்றி யமைத்துக் கைக்கொள்ளப்பட்டது. இங்கு இத்துடன் பிறவினை நுண்மைகளும் மேற்கொள்ளப்பட்டன; உலோகவேலை, தண்டுத் துளைக்கோடரி போன்றவை அவை. கருவியிசையில் ஏழிசைமுறை யும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். இப்பகுதியில் தேர் களுக்கு ஆரைச்சில்லுகள் பூட்டப்பட்டன. தேர்கள் இழுப்பதற் குக் குதிரைகள் உபயோகிக்கப்பட்டன. இதனல் தேரின் வேகம் கூட்டப்பெற்றது. இதன்பின் தேர் கிழக்கும் மேற்கும் பரவியது. கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டுவரை அம்பேந்திய போர் வீரனை ஏந்திச் செல்வதற்காகத் தேர் பபிலோனியாவிலும் அசிரியாவிலும் படைகளுக்குரிய முக்கிய ஒரு சாதனமாக விளங்கியது.
ஆரியன் தேர் இருக்கு வேதத்தில் 'சத' எனும் பெயருடையது. இது இந்தோ-ஐரோப்பிய மொழியில் சில்லுக்குரிய சொல்லிற்குச் சமமாகும். இது இலத்தின் மொழியில் 'ரோத' என்றும் கெல்றிக் மொழியில் ரொத் ? என்றும் பழைய உயர் சேமன் மொழியில் * சட்' என்றும் இலிதுஆனியன் மொழியில் ' சதஸ் என்றும் வழங்கப்படும். இவ்வாறே சில்லு, அச்சு, நுகம், தொப்பை என்பன வற்றிற்கும் இத்தொகுதிமொழிகளில் உள்ள சொற்கள் ஒத்த வகை யினவாம். தேரின் உடற்கட்டுப்பகுதி வாளியைக் குறிக்கும் கோஷ" எனுஞ் சொல்லினல் சுட்டப்பட்டது. இது ஓரளவிற்கு மூடப் பெற்ற வண்டியென்பதைக் குறித்தது. இது முன்னும் பின்னும் திறந்திருந்த கெல்ற்றிக் இருப்பூழிக்குரிய ஒருவகையைப்போன் றிருக்கவில்லை; ஆயின் இது மேற்காசிய, மைசீனியன், எகித்து வகைத் தேர்களை ஒத்ததாயிருந்தது. இவை சேர் சிரில் பொக்ஸ் அவர்கள் கூறியவாறு இக்காலத்து (milk float) தெப்பத்தை நிகர்த்த வகையில் கட்டப்பெற்றிருந்தது. இத்தேருடல் எப் பொருளால் கட்டப்பெற்றதென்பது தெரியவில்லை. ஆயின் பிற ஒப்புமைகளிலிருந்து நோக்கும்பொழுது இவை மரச் சட்டக வேலை

ஆரியரும் இருக்கு வேதமும் 337 யில் வளார்வேலைப்பாட்டாலும் (ஈசியன் தேர்களும் கெல்ற்றிக் தேர் களும்) ஒருவேளை தோல் வேலைப்பாட்டாலும் (எகித்து) அமைந் தனவாயிருக்கலாம்.
தேரின் மாத்தட்டானது அச்சுடன் தோல்பட்டிகளால் பிணிக்கப் பட்டிருந்தது. அச்சு தேர் உடலிலிருந்து இரண்டு பக்கமும் கட்டின் றித் தள்ளிக் கொண்டிருக்கும். இத்துடன் சில்லுகள் வெளிப் பக்கத்தில் இறுக்கப்பெற்ற சடையாணிகளால் பொருத்தப்பட் டிருந்தன. மிக விரைவாக உருளும் சில்லில் இவ்வாணிகள் உறுதி யாக நின்றன. இப்பண்பினை நன்முறையில் இலக்கிய ஆசிரியர்கள் உருவகப்படுத்தியிருக்கிருரர்கள். மைசீனியாவிலிருந்தனவற்றையும் ஆசியா மைனரிலிருந்த முன்னைய (பதினன்காம் நூற்முண்டு) மலத்திய புடைப்பங்களையும் ஒப்புநோக்கின் ஒருவர் இத்தேரின் அச்சாணி, தேர்த்தட்டின் நடுவில் இறுக்கியிருக்குமென்று எதிர் பார்ப்பர் (இருப்பூழி ஐரோப்பாவிலிருந்தும் இவ்வொப்பினை ஒரு வர் எதிர்பார்க்கலாம்). பிற்காலத்தில் தேர் உடல்கட்டும் அசிரிய ரின் செய்கை முறையில் இவ்வச்சாணி உடலின் பிற்பக்கம் கொண்டு வரப்பட்டது. சடையாணி வழக்கு கெல்ற்றிக் தேர்கள் எகித்திய தேர்களில் பொதுவழக்காயிருந்தது; இது எங்கும் நில விய ஒரு வழக்காயிருந்திருக்கலாம். இது காடு முரடான நாட்டில் செல்வினும் ஈடுகொடுக்கக்கூடிய ஓர் இசைவான பூட்டாக அமைந் தது ஆதலின். இம்முறை, இக்காலம்வரை, ஆங்கில நாட்டுக் கம வண்டிகளிலும் நிலைநிற்குமளவிற்கு உறுதியளிப்பதாயிருந்தது.
ஆரியர் தேர்களின் சில்லுகள் ஆரைகள் உடையனவாயிருந்தன. ஆயின் இவற்றின் தொகை ஓரிடத்திலேனும் குறிப்பிடப்படவில்லை. இத்தொகையை நான்கிலிருந்து (மைசீனியன், எகித்து, முன்னை இற்றைற் உதாரணங்கள்) ஆறு அல்லது எட்டு வரை உயர்த்தும் ஒரு போக்கு இருந்தது. ஒமர் வருணித்த தேர்கள் எட்டாரைகள் கொண்டிருந்தன. கெல்ற்றிக்கு வகைகள் நான்கிலிருந்து பத்துப் பன்னிரண்டு வரை கொண்டிருந்தன. அவ்வாறே பிந்திய இற் றைற்று அசிரியவாகனங்கள் ஆறிலிருந்து எட்டுவரை கொண்டி ருந்தன. குடத் தொப்பைத் துளையின் பயன் வண்டி அச்சாணியில் இலகுவாக ஒடலேயென்பது உணரப்பட்டு உணர்த்தப்பட்டுமுள்

Page 184
338 S- மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
ளது. சில்லுகளாக்கம் பற்றியவிடத்து மிகக் கவர்ச்சிகரமான செய்தி வட்டையை வடிவம்பெற வளைப்பது பற்றிய குறிப்பாகும்.
* கம்மியன் கிண்ணிய தருவினில் வட்டை வளைவது போல் நானும் என் பாடலில் வளைந்தேன்'
(VIII, 32)
என உவமை கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து வட்டை ஒரு தனிக் கட்டை என்பதும் அது வட்டமாக வளைக்கப்பெற்ற தென்பதும் புலனுகின்றது. இது கெல்ற்றிக் தேர்ச் சில்லுகள் செய்தவாறே செய் யப் பெற்றன. எகித்துத் தேர்ச்சில்லுகள் இவ்வாறு செய்யப்பட வில்லை. உருவகிப்புக்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது மைசீனி யன் சில்லுகளும் இவ்வாறு செய்யப்படவில்லை யெனலாம். பின்னை இற்றைப் புடைப்பங்களோ அரிசிப் புடைப்பங்களோகூட இப்பூர் விக, ஆயின் மிக்க வன்மையும் இலேசானவையுமான சில்லாக்க முறையைச் சுட்டுவனவாயில்லே. சில்லுகள் திறம்பட இயங்க வேண்டுமெனில் பெருவளவில் ஆரைகள் தேவைப்படும். இதனல் தான் ஆரியர் சில்லுகள் நான்கிலும் கூடிய ஆசைகள் கொண்டிருந் தனவாயிருக்கலாம். காலத்தாலும் இடத்தாலும் மிக்க மாறுபட்டி ருந்த இந்தோ-ஐரோப்பியப் பண்பாட்டின் சுற்றுப்புறத்தமைந்த ஈரிடங்களில் அது காணப்படுவது வியற்பிற்குரிய விடயமே. இது இன்றும் தேக்கித்தானத்தில் நிலைநிற்கின்றது. சில்லுகள் உலோக வட்டைமூடிகளால் பூட்டப்பட்டிருந்தன. அவ்வாறே ஓமரின் தேர் களும் இப்பொழுது இங்கு குறிப்பிடப்பெற்ற இருப்பூழி கெல்ற் மக்களின் தேர்களும் பூட்டப்பெற்றிருந்தன.
குதிரைகள் ஒரு தனி நடுக்கம்பத்தில் பிணைக்கப்பட்டிருந்தன. அறியப்பெற்ற உருவகிப்புக்களின் ஒப்புமையிலிருந்து, ஊகிக்கப் படுமாறுபோல, இக்கம்பம் தேரின் அடிப் பாகத்திலிருந்து, வளைநது மேலெழுந்து, நுகத்தைப் பெருவளவில் கிடைத்தளத்தில் பொருந்து மாறு நேராகச் சென்றது. இந்தவகையில் நுகத்தைப் பயன்படுத்தல் எருதுகளுக்குப் பொருத்தமானது. ஆயின் குதிரைக்குப் பொருத்த மற்றதாகும். இதைப் பற்றி கொன்றினே என்பார் “ இங்கு குதிரையின் ஆற்றல் கழுத்தை நெரிப்பதனை எதிர்ப்பதற்குச்

ஆரியரும் இருக்கு வேதமும் 339
சமமாகும்” என்ருர், ஆயின் இம்முறைமை பண்டை உலகு முழுவதும் இயல்பாக இருந்தது. குதிரைக்குப் பருமனிடும் முறை யும் குதிரைக்குக் கடிவாளம் இடுவதும் ஐரோப்பாவில் உரோமப் பேரரசு காலத்திற்கு முன் காணப்படவில்லை. இதுவே மிக்க முன் னைய காலமெனலாம். நுகம் தேரோடு பெருவழக்கில் பயன்படுத்தப் பட்டது. பதினெட்டாம் குலமுறை எகித்திலும் சரி கி. மு. முத லாம் நூற்றண்டின் கெல்ற்றிக் பிரித்தனிலும் சரி இது இவ்வாறே பயன்பட்டது. இருக்குவேத வருணனையிலிருந்த நுகத்தை வண் டித்துலாவிற்கு இறுக்கும் வகைமுறை, எல்லா விதங்களிலும் இந் தோப்பிய வழக்கினை ஒத்ததாயிருந்தது. இங்கு முக்கிய பிரச்சினை துலாவிற்கும் நுகத்திற்குமிடையில் உறுதியான ஆயின் சிறிது சுழன்று கொடுக்கக்கூடிய ஒரு மூட்டை அமைப்பதே. இது விலங் குகள் இழுத்தாலென்ன தடுத்தாலென்ன ஒப்பற்ற தகைப்பிற்கு ஒரு வழியமைப்பதாகும். இதற்கு உறுதியான ஓர் ஊசி அல்லது கோல் (தடி) ஒன்றை துலாவின் கோடி முனைக்கண்மையில் அத லூடாக இட்டு அதனுடன் மரநுகத்தை வார்களால் பிணித்து விடலே வழியாகும்.
தேர்நுகத்தை வார்கொண்டு சேர்த்திறுக்க
முயல்வது போல், பின் ஆறு கடக்கும் பொழுது,
நின்னலைகள் ஊசிகளைக்காவ, நீரே
வாரினேக் காக்க"
எனப் பாடல்கள் வருவதைக் காண்க. இது இப்பொழுது எகித் தில் நிலவும் வழக்கினையும் இலியத் எனும் காவியத்தில் 'பிாை யம்’ என்பானின் வண்டி பிணிக்கப்பட்டதையும் நினைவூட்டுவதா யுள்ளது.
வெளிப்பக்கத்தில் இழுவைவார்கள் இருந்தன என்பதற்குச் சில சான்றுகள் இருந்தன. இவ்விடத்தில் வானி' என்ற ஓர் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்விழுவை வார்கள் கட்டப்பெற்ற கோல் தடியைக் குறிப்பதாக இருக்கலாம். வழக்கமாக இருகுதிரை கள் பயன்படுத்தப்பட்டன. ஆயின் வேண்டியபொழுது புறப்பக்க மாக ஒன்ருே இரண்டோ கூடப் பூட்டப்பெறலாம். உண்மையில்

Page 185
340 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
முன்னர்க் கூறிய சுமரிலிருந்து பெற்ற செங்கபிலக்கலத்துக் காட்சி களுள் ஒன்றில் இத்தகைய ஒன்று காணப்பட்டது. இவ்வழக்கு ஒமர் காலத்திலும் அறியப்பட்ட ஒன்முயிருந்தது.
சாரதியும் போர்வீரனுமாக இருவர் இருக்கக்கூடிய வகையில் தேர் அமைந்திருந்தது. போர்வீரன் இடப்பக்கத்தில் அமர்ந்திருந் தான். அவனுக்கு ஒர் ஆசனம் இருந்தது. அதை அவன் போரில் நேரே ஈடுபடாதிருக்கும் போது உபயோகித்தான். அவன் ஆயுதம் ஒரு வில்லாகும். சிலவேளைகளில் அது ஈட்டியாகவுமிருந்தது ; ஆயின் அவன் வாளைப் பயன்படுத்தியதில்லை; இது ஆரியர் முதன் முதல் இந்தியாவிற்கு வந்த காலம் பற்றிய அளவிலாகுதல் உண்மை யாயிருக்கலாம். இருக்கு வேதத்தில் 'கத்தி' என்ற பொருள்படப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல், அதர்வ வேதத்திலும் காவியங்க ளிலும் வாள் அல்லது ஈட்டி என்று குறிப்புக் கொள்ளக்கூடிய ஓர் ஆயுதத்தின் பொருளைக் கொண்டு நிற்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சாரதிக்கு ஆசனமில்லை. இவனுக்குரிய ஒரு பெயர் ‘சாத்து' என்பது, ‘நிற்பவன்' எனப் பொருள்படுவது அவனுக்கும் வில்லிக்கும் உள்ள வேற்றுமையைப் புலப்படுத்துவதா யுள்ளது. ஆயின் அவன் பணி புகழ்கொண்டதாயிருந்தது. அவன் அவ்வுயர்குடிப் போர்வீரனின் உறவினயிைருக்கலாம். இதற்கு ஒம ரின் கிரிசையும் அயலந்தின் இருப்பூழியையும் ஒப்பிடலாம்.
தேரின் சில பகுதிகளின் பரிமாணங்கள், பிந்திய காலத்து ஒரு நூலான சுல்ப சூத்திரத்தில் அங்குலிக்கணக்கில் கொடுக்கப்பட்டுள் ளன. இங்கு துலா, அச்சு, நுகம் ஆகியவற்றின் நீளங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. 16 அங்குலி (விாலகலம்) ஒரடிக்குச் சமமெனக் கொண்டு கணித்தால் துலா அண்ணிதாக 12 அடியும் அச்சு 6 அடி 6 அங்குலமும் நுகம் 5 அடி 4 அங்குலமும் கொண்டிருந்தன. இவ் வளவுகள் ஆச்சரியப்படத்தக்க முறையில் பெரியவையாயிருந்தன. இப்பொழுது ஏராளமான உருவகிப்புக்களிலிருந்து பண்டை மேற் காசியத் தேர்களின் சில அளவுகளை ஒரளவு செவ்விதாக மதிப் பிடல் கூடும். துலாநீளம் எப்பொழுதும் பக்கப்பாட்டில் அறியக் கிடப்பது 6 அடியிலிருந்து 7 அடி 6 அங். வரை இருந்தது. இது இப்பொழுதுள்ள எகித்திய தேர்களுடனும் (6 அடி) இருப்பூழி ஐரோப்பாவின் தேர்களுடனும் (6 அடி 6 அங்குலத்திலிருந்து 7

ஆரியரும் இருக்கு வேதமும் 34
அடிவரை) பொருந்துவதாயுள்ளது. அங்குல" என்பதற்கு 4 அங் குலம் என்னும் பெறுமதியைக் கொண்டால் 7 அடி 10 அங்குல முடைய ஒரு துலாவினை நாம் பெறுவோம். இன்னும் ப்ரெளக என் னும் ஒரு சொல் நுகத்திற்கப்பால் ஆரியர் துலா குறிப்பிடத்தக்க அளவு முன்தள்ளி நின்றதென்பதைச் சுட்டுவதாயிருந்தால் மேற் கூறிய அளவு நியாயமுடைத்தாகும். இந்தப் பெறுமானத்தில் மற் றைப் பரிமாணங்களைக் கணித்தால் இதுபற்றிய விளக்கத்தில் எம் நம்பிக்கை இன்னும் உறுதியாகின்றது. இதிலிருந்து 4 அடி 6 அங் குல அச்சு நீளத்தையும் 3 அடி 6 அங்குல நுக நீளத்தையும் நாம்
திருகனி * இருக்குவேத இரதம்
சில்
வார் (ரஷ்மி)"
நுகம் முளை (சம்ய)
பேரர்வீரன் ssemp 一十→
ச்சு a p origg-A ೨ಆ. القسطهه கட்டு
சுழல்கோல்-மரம் (வாணி)
சக்கரக்குடம் (நாபி)
அச்சுத் துளை
கம்பமுனை தேர்முன்
M als
இரதத்தட்டு - -
۹لق قسیسی سلسلے غسل


Page 186
342 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
இவ்வளவுகள் இவ்வலுவலுக்கு மட்டும் அங்குலி என்பது 4 அங் குலப் பெறுமானமுள்ளதென்றும், இன்றும் ஆரியர் தேர், பொருள் முறையில் அறியப்பெற்ற விகிதசமன்களைக் கொண்டிருந்தன என் அறும் கொள்ளலாம்.
இங்கு கூறிய சங்கத நூலில் கொடுக்கப்படாத சில்லின் விட்டம் 2 அடி, 6 அங்குலத்திலிருந்து 3 அடி வரை யிருந்திருக்கலாம். தேரின் உடலும் அச்சிலிருந்து ஒத்த அளவு மேலெழுந்திருக்க லாம். பிரசவல்சுகியின் குதிரை ஒரு சிறு விலங்கு. அது 12 இலி ருந்து 13 சாண் உயரத்திற்கு மேற்பட்டிருக்காது. இப்பொழுதுள்ள உருவகிப்புக்கள் மேற்காசியத் தேர்களை ஒத்த வகைச் சிறிய குதிரைகள் இழுப்பதையே காட்டுகின்றன. ஐரோப்பாவில் இருப் பூழிக்குதிரைகள் பிடரியில் 11% சாணளவே (3 அடி 10 அங்குலம்) உயரமுடைய சிறிய விலங்குகளாயிருந்தன. இம்முடிபுகள் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டிற்குரிய ஆரியர் போர்த்தேசெவ்வாறிருக் கும் எனக் காட்டும் ஓர் சித்திரத்தில் காட்டப்பட்டுள்ளன (உரு. 32). எனவே எங்கள் ஆய்வுகளின் முடிபுகளைப் பின்வருமாறு சுருக் கிக் கூறலாம். தொல்பொருளியல் சான்றுடன் வேத வாசகங்களை இணைபுபடுத்தி, இந்திய ஆரியரின் போர்த்தேர், அடிப்படையில் மற்றை இந்தோ-ஐரோப்பிய குடியேற்றப்பகுதிகளான மைசீனியா, ஓமரின் கிரீசு, கெல்ற்றிக் பிரித்தன் ஆகிய இடங்களிலிருந்த தேர் களை ஒத்தது என்பதை நிறுவமுடியும். இருப்பூழியில் ஐரோப்பா பிரித்தன் ஆகிய இரண்டு இடங்களிலுமிருந்த தேர்களின் உடலில் சிறிது குறிப்பிடத்தக்க மாற்றமிருந்தது; இவை U வடிவில் கட் டப்பெற்றிருந்தன; ஆயின் மற்றையமிசங்களில் நெருங்கிய ஒற் அறுமை கொண்டிருந்தன. இன்னும் இவை சுற்றுப்புறமான பிரித்தனி அலும் இந்தியாவிலும் மிக நெருங்கிய ஒற்றுமை கொண்டவையாய்க் காணப்பட்டன. (ஒரு தனி வட்டைத் துண்டிலும் நுகத்திலும் அவை பொருத்தப்பட்ட விதத்திலும், சில்லடியிலும் ஒற்றுமைக ளிருந்தன) இடைப்பட்ட இப்பிரதேசம் முழுவதும் தேர்கட்டு வோர்கள் சில்லாக்கிகள் முதலியோரின் பழக்கமுறை ஒரேமாதிரி யாயிருந்தது போல் தோன்றுகிறது. இது ஒராயிரமாண்டளவின

ஆரியரும் இருக்கு வேதமும் 343
தாயிருக்கலாம். ஆரிய இந்தியாவின் தேர்ப்போரிலும் மற்றைக் கீழைநாட்டு வழக்கினைப்போல் வில்லே முக்கிய ஆயுதமாக விளங் கியது. ஓமரின் கிரீசில் ஈட்டியும், இருப்பூழி ஐரோப்பாவில் வாளும் போர்வீரரின் தேர்ந்தெடுத்த ஆயுதங்களாக விளங்கின. விற்கள் தேவையான நோம் வரை தளர்த்தி வைக்கப்படுமென்றும் பின னரே நாணேற்றப்படுமென்றும் இருக்குவேதத்திலிருந்து நாம் அறி ருேம். வில் நாண் பசுத்தோலிலிருந்து ஆக்கப்பட்டது. இது காதடிவரை இழுக்கப்படுவது, ஓமரின் கிரீசில் நடைபெற்றது போன்று நெஞ்சு வரை இழுக்கப்படுவது அன்று. அம்புகள் உலோக நுனிகொண்டிருந்தன; முள்ளேற்றப்பட்டுமிருந்தன. வில் நாண் திருப்பியடிப்பதிலிருந்து இடதுகை மணிக்கட்டைக் காப் பாற்றுவதற்காகக் கையில் ஒரு காப்பு அணியப்பட்டது. ஆயின் வில் எத்தகையது, தனி ஓர் அமைப்பானதோ அல்லது கூட்டமைப் பானதோ என்று அறிவதற்கு ஒருவகைச் சான்றும் கிடைக்க வில்லை.
இப்பொழுதுள்ள பூர்விகக் குடிமக்களிடை வில் பரவியுள்ள வாற்றை நாம் ஆராயும்பொழுதும் அதன் பழைய வரலாற்றை நோக்கும்பொழுதும் வில்லில் இரண்டு முக்கிய குடும்பங்கள் இருப் பதை நாம் காணலாம். மாத்தாலான எளிய வில் ஒன்று : இது முக்கியமாக ஆபிரிக்காவில் பரவலாக உள்ளது; அங்கேயே தோன்றி யிருக்கலாம். கூட்டமைப்பான வில்லு மற்றைத் தாக்கது; இது கொம்பும் தசைநாரும் கொண்டு அமைக்கப்படுவது. இது சிறிய தும் இறுகியதுமானது. இது சுகெப்பி, சைபீரியா, துருக்கி, பேசியா, இந்தியா, வட அமெரிக்கா, எசுகிமோப் பகுதி ஆகிய இடங்களில் அறியப்பட்ட ஒன்முயிருந்தது. மெசோலிதிக் பருவ காலத்திற்குரியதான தென்மாக்கிற்குரிய வில்லொன்றும் இருந்தது. கிறீற்றிலிருந்து வந்துள்ள சான்றிலிருந்து மினேவன் மக்கள் போர்த்தேர்ப் பயிற்சி பெற்ற காலத்திலேயே கூட்டுக் கொம்பு வில்லை மேற்கொண்டனர் என்று அறியக் கூடியதாயுள்ளது. பண்டை எகிப்தில் உள்ள கூட்டு விற்களுள் ஒன்று பத்தொன்பதாம் குல முறையொடு அமைந்ததாயிருந்தது. இது சிரியாவுடன் போர் புரிந்த காலமும் தேரினை மேற்கொண்ட காலமுமாகும். மற் றைக் கூட்டுவில் கி. மு. ஆரும் அல்லது ஏழாம் ஆாற்ருண்டளவு

Page 187
344 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
பிந்திய காலத்தினதாயிருக்கலாம். இது ஒருவேளை சிதிய நாட்டில் தோன்றியிருக்கலாம்.
அசிரியாவில் முதலாம் ஆயிரத்தாண்டிலிருந்த உருவகிப்புக்கள் தேரிலிருந்து வில்லிகள் ஒருவகைக் கூட்டம்பினை உபயோகித்த னர் என்பதைக் காட்டுவனவாயுள்ளன. எளிய நீண்ட வில்லிலும் இதன் சிறிய வடிவம் வாய்ப்புடையதாயிருந்தது. முழு விவாங் களையும் நோக்குமிடத்து, கொம்பும் தசைநாரும் கொண்ட கூட்டு வில் ஆசிய சுதெப்பியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாமென்பதும் முன்னே இந்தோ-ஐரோப்பியப் போக்கலங்களில் இதுவும் ஒன்ரு பமைந்திருக்கலாம் என்பதும் இயலக்கூடியனவாம். இத்தகைய விற் களே இந்தியாவில் ஆரியரும் பயன்படுத்தியிருக்கலாம். வகை யெவ்வாறு அமைந்ததாயினும் அது மக்களுவந்த ஒரு கருவியாக விளங்கியது. இதன் நாணின் ஓங்காரம் போர்வீரன் காதில் காதலி பொருத்தியின் அன்புமொழியினைப்போல் ஒலித்தது.
* வில்லொடு நிரையைக் கொள்வோம், விறற் போரில் வில்லொடு விளங்குவோம் ; எம் பொல்லாப் போட்டிகளில் வில்லொடு வெல் வோம், பகைவர்க்கு வில்லால் துன்பமும் துயரும் சேரும்'. வில் லொடு படைகொண்ட நாங்கள் புலமெல்லாம் அடிமை கொள் வோம். காதடிநெருங்கிக் கதைசொல வேள்குவாள் போல அவள் தன் அன்புறு நண்பனை ஆகத்தொடணைப்பள். அம்பினில் பொருந்தி, அவள் பெண்போல் மறைபல மொழிவாள். இவளே எங்களைப் போரில் காத்தளிப்பவள் .
ஆரியரின் சமயக் கொள்கைகள் தம்மளவில் ஒரு பெரிய இலக் கியமாக அமைவன. இது இந்நூலின் எல்லைக்கப்பாற்பட்ட சிக்க லான பொருளாகும். இதுவரையில் மனித உருவிலமைந்த இந்திரன், உருத்திரன், அசுவினிகள், மாருதிகள் ஆகிய தேவரைப்பற்றி யறிந்து கொண்டோம். இந்தோ-ஐரோப்பியரின் தெய்வமான தயுஸ்பிதருக்கு இருக்குவேதத்தில் முக்கிய இடமில்லை. அவ்வாறே மித்தாவும் வருணனும் நல்லிடங் கொள்ளவில்லை. குரியனும் உஷாவும் இயற் கைத் தோற்றப்பாடுகளை உருவகப்படுத்தியமைந்த, கடவுளர்களா, கும். இது அக்கினி நெருப்பிற்குரியதானவாறு போல. "சோம" எனப்படும் இனந்தெரியா ஒரு தாவரத்தில் வீறளிக்கும் சாறு:

ஆரியரும் இருக்கு வேதமும் 345,
தெய்விகமாக்கப்பட்டது. இப்பானத்தைத் தேவர்கள். மிக விரும் பிக் குடிப்பார்கள். இதனேடு இணைந்து பல வேதக் கிரியைகள் இருந்தன. ஆரிய மக்கள் செவ்விய சொற்களை ஒதிச் செவ்விய முறையில் தம் யாகங்களைச் செய்தால் தம் கடவுளர்களிடமிருந்து தாம் வேண்டியவரம் பெறலாம் என்று கருதினர். இவ்வாறமைந் தஅது அவர்க்கும் அவர் கடவுளர்க்கும் உள்ள உறவு. கீத் அவர்கள் குரு ஒருவன் இந்திரனை நோக்கிக் கூறுவதை ஒரு குறும்பான பாணியில் எடுத்துரைத்துள்ளார்கள். ' எங்களுக்கு ஆசைகள் உள. உன்னிடமோ கொடைகள் உள. நாங்களும் இதோ பாடிக்கொண்டு வந்திருக்கிமுேம். இந்தப் பரிமாற்றம் நல்லதென்பதைத் தேவன் உணர்வான்’ என்று அந்தக் குருவானவர் கூறுவதாக அவர் கூறி யுள்ளார்.
கிரியைகள் பெரும்பாலும் மனைகளோடமைந்தவையாயிருந்தன. அடுப்படியையே சுற்றியமைந்தன. ஆயினும் உழுதல், மேய்ச்ச அக்கு நல்லினங்களை விடல், அழைத்து வருதல், திருமணங்கள் மாணங்கள் ஆகியவற்றிற்குப் புறம்பான பாடல்கள் இருந்தன. கோயில்கள் கட்டப்பெற்றதற்குச் சான்று ஒன்றும் இல்லை. பலி பீடம் என்பது ஒரு புற்றரையாகவே இருந்தது. ஆயின் வேதக் கிரியையில் மிக முக்கியமாக விளங்கிய விலங்கு வேள்விகளில், யாகத்திற்காக விலங்கு பிணிக்கப்படும் தம்பம் மிகப் பரந்த முறை யிலமைந்த விழாவுடன் நிறுவப்படும். ஒரு பாடலில் (I, 8) வரி சைப்பட நிறுவப்பெற்ற சிறு தம்பங்கள் பற்றிய குறிப்புண்டு. வேள்வித் தம்பமான யூபம் பின்வருமாறு விளக்கப்பட்டது :
முறைப்பட நெறியில் நின்றேர் தம்மால் உறுதியாய் நிறுத் தப் பெற்முேய் ; கோடரிசமைத்த காட்டு சவரன் ; இங்குள தைவிகத் தம்பம் யாவும் இன்பமாய் எமக்கு வேண்டும் நிதி யொடு மக்கட் செல்வம் அருளச் செய்க. அகப்பைகள் உயர்த் தும் பெரியீர், நிலம் வெட்டி நாட்டிய இவைதாம் மண்ணிற்கு 'இன்பம் ஈந்து கடவுளர்க்கும் எம்மரும் கொடைகள் அளிப் பவையாக ; நீரிகோடெனப் பறக்கும் அன்னங்கள். பேர்ல இத்தம்பங்கள் ஒளிவிடும் நிறங்களில் நம்மை நண்ணின. ఐడిr அணிபெற்று நிலமிசை நிற்குமிந்தக் கம்பங்கள்.

Page 188
346 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
இவ்விடத்தில் ஒரு குறிப்புக் கூறலாம். புண்ணிய தம்பங்களை நிரைப்படவும் வட்டமாகவும் அமைக்கும் வழக்கு வெண்கல ஊழி ஐரோப்பாவிலிருந்தது. இது தென்னிரசிய சுதெப்பிகளின் போர்க் கோடரியுடைய மக்களுடன் தொடர்புகொண்ட மக்களிடையேயே இருந்தது. இவ்விருபுலத்தவர்க்குமிடையில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவார்க்கிடையிலமையக்கூடிய யாதோ ஒருவகைச் சம பத் தொடர்பு இருந்திருக்கலாம். இன்னும் புதைப்பு வழக்குக்கள் பற்றிய வகையிலும் இவர்களிடை தொடர்பு இருந்திருக்கலாம்.
புதைப்பு மரபுகள் பற்றிய சான்று இருக்குவேதத்தில் ஒரே யொரு புதைப்புப் பாடலோடு நின்றுவிடுகிறது (X, 18). முன்னை ஆரிய பருவத்தில் உடலை அடக்கஞ் செய்தலும் தகனம் செய்தலும் ஒரே காலத்தில் ஒருங்கே இருந்த வழக்குக்களாம். எனினும் தக ன்மே பின்னர் விரைவில் தலையாய வழக்காக வந்தது. இப்பாடல் ஓர் அடக்கக் கிரியையை விவரிக்கின்றது. இதில் போர்விசன் ஒரு வனின் வில் அவன் புதைகுழியில் கிடக்கும்பொழுது அவன் கையி னின்றும் எடுக்கப்படுகின்றது. அதன்பின் அவன், அன்னை பூமியின் அரவணைப்பில் விடப்படுகிமுன். இப்பாடலின் அடிகள் வருமாறு :
அன்னை பூமியின் மடியினை உவப்பாய். கருணையும் அன்பும் உடைய நீள்திசை விரிந்த அன்னையவள்; இளையவள் ; பரிசளிப்பார்க்குக் கம்பளி மென்மைகொண்டவள்; அழிவினின்றும் அவள் உனைக் காக்க ; பூமியே,
மேல்மூச்சுவிடுக, கீழ்நோக்கிப் பாரமாய் அழுத்துதல் தவிர்க. அவனுக்குச் சுகவழி விடுக. அவனை மென்மையுடன் காக்க. அன்னை பூமி, தன் குழந்தையை மடியால் போர்க்கும் அன்னைபோல்
அவனை நீ அணைப்பாய்.
இதன்பின்னர் கிரியைகள் சம்பந்தமாய் நிறுவப்பட்ட தம்பம் பற்றிய ஓர் குறிப்பொன்றுண்டு. இதற்கு முன்னராக விளங்க முடி யாத ஒரு கூற்முென்றுள்ளது. அது பின்வருமாறுள்ளது : 'உயிர் வாழ்வாருக்கான தடையை இங்கு நான் எழுப்புகிறேன். உரை

ஆரியரும் இருக்கு வேதமும் 347
யாசிரியர்கள் இதை, புதைகுழியை அல்லது அதன்மேலுள்ள திட லைச் சுற்றியமைந்த ஓர் வேலியெனக் கொண்டனர்.
இதற்குரிய சான்று உறுதியானதன்று. ஆயினும் அடக்கம் ஒன்று ஓர் திடலின்கீழ் நடைபெற்றதென்றும் வாழ்வாருக்கும் இறந்தா ருக்கும் இடையில் ஒரு தடை எழுப்பப்பட்டதென்றும் பொருள் படும். பீக் என்பாரையும் மற்றவர்களையும் பின்பற்றி அவர்கள் நோக்கிற்கியைய நான் இதுபற்றிக் கூறக்கூடியது என்னவெனில், இது வெண்கல ஊழி ஐரோப்பாவில் நடைபெற்ற புதை திடலைச் சுற்றிக் கிரியை மாத்தம்பங்கள் நிறுவும் வழக்கோடுமட்டும் தொடர் புடையது மட்டுமன்றி இந்தியாவில் கி. மு. இரண்டாம் மூன் மும் நூற்ருண்டுக்காலத்தில் மெளரியர் சுங்கர் காலத்தில் திடீ ரெனப் பெளத்தர் வணக்க வழக்குகளுள் ஒன்முகத் தோன்றிய தூபி நினைவகங்களோடும் தொடர்புடையது என்பதாகும். இவற் நுட் பல சுற்றிவர மாவேலிகள்போன்ற விரிவான கல்வேலிகள் கொண்டுள்ளன. கல்வேலைப் புதுமையொன்று அது இருந்தவாறே தச்சர் வினைத்திறனில் புகுத்தப்பட்டதுபோலிருந்ததால் ஆதி மா வேலைத் தம்பங்கள் இருந்தகாலம் மிக்க அண்ணியதாயிருந்திருத் தல் வேண்டுமென்பது தெளிவு , தூபியின் கருத்து முதன்முதல் ஓர் புதைப்பின்மேல் எழுப்பப்பெற்ற புதைதிடலைப் பின்பற்றியது என்பது இப்பொழுது யாவரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். இத்தூபி இதன் கிரியை முறை வழக்கில் ஓர் எச்சத்தை அடக்கி யுள்ளது. சில இடங்களில் இப்புதைத்திடல்களைச் சுற்றித் தம்பங் களும் மா அளிவேலிகளும் இருந்தன. இத்தகைய அடைப்புக்கள் நாமறிந்த ஆரியர் புதைவழக்குக்களுக்கு மாறுபட்டவையாயிருக்கா. இப்பொழுது இத்தகைய புதை திட6 1ளுக்குரிய தொல்பொருளியற் சான்றில்லை. லெளரிய நந்திகாரில் காணப்பட்ட அமைப்புக்கள் புதைத்திட்டல்கள் எனக் கொள்ளப்பட்டது. ஆயின் அவை பின்னர் அரபிகளேயெனக் காணப்பட்டன. இத்தகைய புதைத்திடல்களைக் கண்டுபிடித்தல் வருங்காலத்தில் இந்தியத் தொல்பொருளியலாரின் ஆற்றலுக்கோர் அரிய சோதனையாகும்.
இந்தியாவை ஆரியர் வென்றதற்குரிய புலனிடான தொல்பொரு ளியற் சான்று அழிபட்ட நகர்களின் சிதைவுகளேயன்றி வேறில்லை. போர் முடிந்தபின் பாசறையினர் நிறுவிய ஒழுங்கற்ற குடில்களை

Page 189
348 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
யும் இவற்றுடன் சேர்க்கலாம். எனினும் இருக்குவேதத்திலிருந்து அவர்களின் பொருளியற் பண்பாட்டின் சில அமிசங்களைப் பற்றிப் பொருந்தக்கூடிய நியாயமான ஒரு வரலாற்றைப் பெறக்கூடிய வராயுள்ளோம். எனினும் ஆராயப்படவேண்டிய முக்கிய பிரச்சினை ஒன்றுள்ளது. படையெடுப்புத் தொடங்கியபின் வெற்றி கொண் டோருக்கும் தோற்முேருக்குமிருந்த உறவு எவ்வாறமைந்தது என் பது அது. ஆரியர், தம் இலக்கியத்தில், மிக்க இழிந்தவரான தாசி யுக்களையும் தாம் வென்றனரென்றும் அதன் பிறகு நடந்த வெல்லாம் இந்திரனின் பிரியத்துக்குரியோர் ஒன்றின் பின்னென்முக வெற்றி வாகை குடித் தம்மைத் தாம் பலப்படுத்திக்கொண்டனர் என்றும் ஒரு கதையை அயராது பரப்பியுள்ளனர். இவ்வாறு இவர்கள் செய் தது பொய்யெனக் கூமுவிட்டாலும் ஓரளவில் ஒரவாங்கியமானது என்று நாம் கூறலாமா ? நிலைமையை நோக்கில் முந்திய மக்களை ஒழித்தல் என்பது இயலக்கூடிய ஒன்றன்று. ஆரியர் தாக்கிய மக்கள் பண்பாடற்ற காடவர் கிளையினருமல்லர் ; ஒன்றுமறியாப் போதையருமல்லர். ஆயின் பண்டைய விரிவான ஒரு நாகரி கத்தின் குடிமக்கள் எனவே, எவ்வளவுதான் தம்மைப் பாது காக்க ஆயத்தமில்லாதவராயிருந்தாலும், வெற்றிகொண்டோரின் கருத்தையும் இலக்கியத்தையும் ஓரளவிற்கு ஊக்காது மறைந் திருக்க மாட்டார்கள். மைசினியப் புலவர் மினுேவன் மக்களைப் பற்றி நல்லது பாதும் கூறுவதற்கு இல்லாமலிருந்திருக்கலாம். ஆயினும் கிரேக்க வாழ்வு சிந்தை முதலியவற்றின் இறுதியுருவம், இந்தோ-ஐரோப்பிய அமிசம் ஒன்றினல் மட்டும் உருவாயதன்று என்பதை உணர்வதற்கு எமக்குப் போதிய பண்டை வரலாற்றறி வுண்டு.
அாப்பாப் பண்பாட்டைப்பற்றி யாம் அறிந்தபின், ஆரியர் மூல மாக வந்திருக்க முடியர என்று உணரப்பட்ட நடுக்காலத்திற் குரியதும் தற்காலத்திற்குரியவுமான இந்து சமயத்தின் பல அமி சங்கள், பண்டை நாகரிகத்திலிருந்தும் நாம் அனுமானித்துக் கொண்ட பல அமிசங்களுக்கு முன்னுேடிகளாக விளங்கின. இவ் விடத்தை விவரமாக இங்கு ஆராய வேண்டியதில்லை; இது விரி வாக ஆராயப்பட்டுப் பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள் ளப்பட்ட ஒன்ருகும், முதன் முதலாகப் பஞ்சாபைத் தீவிரமாக

ஆரியரும் இருக்கு வேதமும் 349
ஆரிய மயமாக்கியபின் ஒருவகை அலுவல்முறையை இவர்கள் கைக் கொண்டனர். அங்கு இல்லையென்று கொண்டாலும் இவர்கள் எல்லை கிழக்கு நோக்கிச் செல்ல, கங்கை வடிபுலத்தில் பிராமணரின் சமயக் கருத்துக்களில் அாப்பாச் சிந்தனைகள் குடிகொண்டன. மேற்காசியா வின் சமகால நாகரிகங்களில் நடந்தவாறு அாப்பா நாகரிகமும் பெரும்பாலும் மதகுருக்கள் மேலாண்மையில் நடைபெற்றதென்று கொள்வோமாயின், வேதநாகரிக மலர்ச்சியில் சாதாரணமாகக் காணப்படும் சத்திரியர் மேல் பிராமணர் கொண்ட மேலாண்மை, இரு பண்பாட்டு மரபுகள் ஒன்றியதால் இயற்கையாக எழுந்த ஒரு தோற்றப்பாடென்பது எளிதில் விளங்கும். இருக்குவேதத்தில் மதகுருமார் முக்கியமானவராய் விளங்கினரேனும் சமூகத்தில் மேலாண்மை பெற்றவராய் விளங்கவில்லை. சமய சிந்தனையில் அரப் பாவின் ஊக்கினை நாம் ஏற்றுக்கொள்வோமாயின் (இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதே), மற்றை மனித வினைப்பாடுகளிலும் ஒத்த ஒரு கலப்பினை நாம் எதிர்பார்க்கலாகாதா?
இந்தியாவில் முதல் ஆயிரத்தாண்டின் இரண்டாம் அரைப்பகுதி யிலிருந்த இருட்டூழி திடீரென கி. மு. 300 அளவில் மேற்கிலிருந்து வந்த ஒளியினல் திடீரென ஒளிபெறுகின்றது. மெளரியர் மரபின் முதற் பேரரசனன சந்திரகுத்த மெளரியனின் அரசவையிலிருந்த ஒரு கிரேக்கனை மெகத்தனிசு என்பான் தான் கண்ட நாகரிகத் தைப்பற்றி விடயபூர்வமான முறையில் ஒரு விவரம் அளித்துள் ளான். இந்நாகரிகம் பகுதிப்பட்டுப் பின்னர் எஞ்சிநின்றது. குறைந் தது வட இந்தியாவின் பெரும்பகுதியிலாகுதல் ஆதிக்கம் நிறு விய ஒர் ஆட்சியைப்பற்றி அவன் விவரித்துள்ளான். இந்நாகரிகத்து மக்கள் முழுவதும் கல்வியறிவு பெற்றவராய், நகர் வாழ்பவராய், நன்முறையிலமையப்பெற்ற நிறுவகமுடையவராயிருந்தனர். இவர் அநசிருக்கை கங்கைக்கருகிருந்த பாடலிபுரத்து பெருஞ்சுவர் நக ருளமைந்த வியக்கத்தக்க ஒரு நகராணில் இருந்தது. இல்வா சினை வலிமைமிக்க ஒரு படை காத்து வந்தது. இப்படைக்குப் போாலுவலகம் ஒன்றிருந்தது. இது ஆறு கூறுகளைக்கொண்டதா யிருந்தது. இக்கூறுகள் முறையே, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை, படைகளுக்கு உறையுள் உணவு
அளிப்பதையும் படைக்கலன் பேணிக் காப்பதையும் கடமை
w

Page 190
350 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
யாகக் கொண்ட பகுதி, கடற்படைகளுடன் உறவு கொள் பகுதி என்பனவாம். இதைப்போல் விரிவாகவே குடியியற் சேவை யும் அமைக்கப்பெற்றது. இச்சேவையில் பயிர்ச்செய்கைக்கும் பொது வேலைக்குமென ஓர் அமைச்சு இருந்தது. இதன் பரிபாலனத்தில் விதியமைப்பு, நீர்ப்பாய்ச்சல் கான்கள், சுரங்கங்கள், காடுகள், நிலவரிகள், பெருவிலங்கு வேட்டை முதலியவை பற்றிய அலுவல் கள் இருந்தன. நகர் மன்றமும் போர் அலுவலகத்தைப் போல் ஆறு கிளைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இது, கைத்தொழில், நிறைகள் அளவுகள், பிறப்பிறப்புப் பதிவு, அரசுக்கடைகளை ஆட்சி செய்தல், விற்பனை வரி சேர்த்தல், பிறநாட்டிலிருந்து வருவோர் அலுவல்களைக் கண்காணித்தல் முதலியவை சம்பந்த மான அலுவல்களில் ஈடுபட்டிருந்தது. அரசுரிமை தந்தைமுறை வழியிலேயே சென்றது. அரசனே படைக்குத் தலைமைபூண்டு போருக்கிட்டுச் செல்பவன். இப்படையில் 6 அடி வில்லுடைய காலாட்படையினர் இருந்தனர். சிலர் வாள் கொண்டிருந்தனர். இங்கு பெளத்தரும் சிற்றளவில் இருந்தனர். ஆயின் பெரும்பா லானுேர் இந்துக்களே.
இந்தியாவில் பெரும்பகுதியில் ஆட்சிகொண்ட இத்தன்னதிகார ஆட்சி பற்றிய வியப்பிற்குரிய இவ்விவரணத்தில் நாம் இப்பொ ழுது உலகில் காணும் பல அமிசங்கள் உள, உற்பத்திப்பொருள் களைக் கட்டுப்படுத்தியாளல், நிறைகள் அளவுகளைக் கட்டுப்படுத் தல், மைய ஆட்சிகொண்ட விரிவான நகர் நாகரிகம் முதலியன அவை. அாப்பா நாகரிகச் சான்றிலிருந்து நாம் பெறக்கூடிய காட்சி இதிலிருந்து அதிகம் வேறுபட்டதன்று. மெளரியப் பேரரசு என்பது ஆரியர் மரபு உள்நாட்டில் பெற்ற மலர்ச்சியென்று கூற லாம். இது மேற்குத்திசையிலிருந்த எளிய மரப்பெட்டி வீடுகளி லிருந்து ஆயிரம் ஆண்டுகளின் பின்னுய மிக்க புனைவுள்ள அதிகார மிக்க அரசாக மாறியதே இம்மலர்ச்சி. இம்மலர்ச்சியில், இந்தி யாவிலிருந்த மிகப் பண்டையதும் ஆரியர் கண்ணுற்றதுமான நகர் நாகரிக மரபளித்திருக்கக்கூடிய செல்வாக்கினை நாம் மறந்துவிட லாமா ? சந்திரகுத்த மெளரியன் அந்நியன் அல்லன். அரசனைப் போன்ருே பாபரைப் போன்ருே இந்திய மக்கள்மேல் தன் இச் சையை வலிந்துறுத்த வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்பாள

ஆரியரும் இருக்கு வேதமும் 35
லும் அல்லன். அவன் நெடுங்காலம் நிலைநின்ற மரபின் அடிப்படை யில் உருவானவன். இவன் தன் ஆட்சியை அாப்பாவின் சில்லோ ராண்மையும் வணிகர் அமைப்பும் இணைந்த பண்டைக்குடியியல் மரபின் அடிப்படையில் அமைத்திருக்கலாம்; அதனுடன் காடவர் போன்ற ஆயின் நல்லாண்மை நல்கும் ஆரியரின் போர்வீரர் சாதிக் குக் காரணமான விருத்தியின்மை சீரிழிவு ஆகிய அழிவுதரும் போக்குகளுக்கு ஈடுகட்டக்கூடியவகையில் ஒரு புதிய அமிசத்தை யும் இவர் அளித்திருக்கலாம்.
சந்திரகுத்த மெளரியனும் அவன் குலமுறையினரும் அரப்பா வின் அழிவில் முடிசூடி அமர்ந்த அாப்பாவின் வழித்தோன்றல் கள் என்பது மிகையாயிருக்கலாம் ; தொயின்பியன் கூற்றில் மெளரியர் ஆட்சியில் அாப்பா ஆட்சி புலப்பட்டது என்று சொல் வதும் அத்தகையதே. ஆயின் இந்திய நடுக்காலத்துக் கலப்பு முறை அமைப்பில் பஞ்சாபினதும் இந்துநதியினதும் பண்டை நகர் நாகரிகங்களின் ஊக்கு அற்பமாயிருக்கவில்லை. இவ்வூக்கு சமயச்சிந்தனைகள் அல்லது கிரியைழுறைச் சடங்குமுறை மரபு களில் மட்டும்தான் அமைந்ததன்று. நடுக்கால இந்து சமூகத்தின் முழுப்பண்பும் அதன் அரசு ஆட்சி ஆகியவற்றின் அமைப்பும் சிந்து, பஞ்சாப் ஆகியவற்றின் வெண்கல ஊழியின் ஒரு மாற்ற மென்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
அதிகாரம் WI இற்குரிய குறிப்புக்கள்
ஆரியர் பற்றிய இலக்கியங்கள் அளவற்றவை. ஆயின் பின்வரும் நூல்கள் Gung Gaug šias Galé) Lólasė: 6ppföA6M61 : Cambridge History of India, Vol. I. வி.சி. சைல்ட் என்பார் எழுதிய The Aryans (1926) ; n1 ன் அவுரல் என்போர் 6T(p5u Ancient India, and Indian Civilization (trans. Dobie, 1934); era). 1 g) aua) Gor eraţ6)u Indo Europeens et Indo iraniens) 1936 ; சி. எஸ். கூன் எழுதிய Races of Europe (1939). என் இருக்குவேதச் சான் றுகளுக்கு ஆதாரம் எ. எ. மக்டொனலும் எ. பி. கீதும் எழுதிய Wedic Intex of Names and Subjects (ggb. Ga;ft:(955), 1912). 985 giboa,5é g83007 Luñg55x6006au ஆர். ரி. எச். கிரிபித் அவர்களின் மொழிபெயர்ப்பான இருக்குவேதப் பாசுரங்கள். சமய விடயங்கள் பற்றிய ஆதாரநூல் எ. பி. கீத் எழுதிய Religion and Philosophy of the Veda (Harvard Oriental Series, Vols. 31-32, 1925). இந்தோ-ஐரோப்பிய மரபுகள் பற்றி மைல்ஸ் டிலன் அவர்கள் Trans. Philolog. Soc., 1947, 15-24; Proc. Brit. Acad. XXXIII (1947) (Rhys Memorial Lecture) 6T6ötugal) gait tipiscitatin fascit.

Page 191
352 மேற்பாலிருந்து வந்த வெற்றியாளர்
மைகப் தென்னிரசியப் பண்பாடுகள் பற்றியறிய வி. சி. சைல்ட் எழுதிய The Dawn of European Civilization, (1939) 69. GMasuit 6Tp Suu Stratigraphie Comparee (1948) என்பவற்றைப் பார்க்க. அரப்பாவை ஆரியர் அழித்தற்குரிய சான்று ஆர். ஈ. எம். வீலரால் Ancient India (எண் 3) இல் ஆராயப்பட் டுள்ளது. மேற்காசியாவில் உள்ள ஏர்கள் பற்றியறியப் பார்க்க, சி. டபிள்யு. பிசப் அவர்கள் கட்டுரை Antiguity X (1936), 261. குதிரைகள் பற்றியறிய untidis, LSoitu. ft dGal 67(p5u Origin and Influence of the Thoroughbred Horse (1905). 6,607.96).5GT utifufu Uttais, Realexikon der Vorgeschichte, s. v. Wagen, Djebjerg, Ohnenheim : Tacitus, Germania xl 674696DF# 5FtTGAufî605F uțòpóThe Music of the Sumerians. Qốo GTL’. டபிள்யு. கல்பின் ஆராய்ந்துள்ளார் ; Antiguity XIV (1940) 347 இல் இ. சி. கேவன் ஆராய்ந்துள்ளார். தேர்பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு நடை பெற Gề6ư68%19Qup6ötg) Gềgữ 6ìfìã) QLfTđịch) -9ịGuño Gir A Find of the Early Iron Age from Lyn Cerrig Bach (1947) STGÖTLu Sổi) GipóluyGİTGMT TiffatsGiī ; (European Iron Age evidence). முன்னை மெசப்பொற்றேமிய உருவகிப்புக்களுக்குப் பார்க்க, es). g. 6036). 916 its at TupSuu New light on the most Ancient East. (1934) ; கீழை நாடு ஈகியன் பற்றியறிய எச். எல். லொரிமர் எழுதிய, Homer and the Monuments (1951) (?ơữ gbgữ GrouGöTới GT(tạ6)u Palace of Minos TV, 809. வில்லுகள்பற்றிக் குறிப்பிட்டோர், எவன்சு, Palace of Minos II, 48 ; IV, 832; Reallexikon, s. v. Bogen : Journ. Anthrop. Inst. XIX (1890) 220 ; XXIV (1895), 51 : XXVI (1897) 210.
தூபிகளின் முன்னேடிகள் பற்றி நான் Antiguity XVII (1943) இல் குறிப்பிட்டுள்ளேன். மெகஸ்தினிசின் விவரம் மக்கிரின்டில் எழுதிய Ancient India (1877), 86 இல் காணப்படுகிறது. மெளரியர் பாடலிபுரத்துச் சிதைவுகள் Ancient India எண் 4, (95-103) இல் நல்முறையில் விவரித்து எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.

அகரவரிசை
அகழாய்வு, 11, 138-40, 163-4 அங்கபடிகள், 323 அம்றி-நல் பண்பாடு, 83-109 அரப்பா, 5, 7, 155-254, 276-83
oyacun gQasTG) *H ', 277-83 அரப்பா இடுகாடு ‘ R ’, 34, 246அரப்பப் பண்பாடு, 155-254
அரிக்காமேடு, 35 அல் உபெய்த் பண்பாடு, 58 அலகா உயுக், 61, 301 அலவ் பண்பாடு, 57, 332 அனுே, 61-2, 65, 82, 251, 309
g
இசை, 328-30 இந்திரன், 315, 317, 327 இந்து நதி, 76, 176, 187-8 இந்தோ-ஐரோப்பிய மொழிகள், 295
300
இராவல்பிண்டி, 19, 24 இருக்குவேதம், 307-50 இலச்சிஜனகள், 104, 218-2,
263-5 269-70
இற்றைற் 301-4
250,
艇_
6 ,60 ,58 ,54 ,@tudiorum ثة للسفر
353
ஊசிகள், 252, 287, 271
ஊர், 59, 64, 102, 135, 333
s
எழுத்து, 58, 60, 212-6, 305
莎G
கக்கர் நதி, 177, 204, 247
கங்கை நதி, 29, 31 கச் நதி, 72, 78, 83, 106, 110, 132 கசைற் குலத்தினர், 302, 309, 321 கர்குஷ்கி-டாம், 84, 86, 88
கர்நூல், 28, 30, 3
24-3,
கல் உபகரணங்கள், 20-1
33-9, 49-50, 104, 141
கற் கலங்கள், 120-1, 127-9, 134-6,
250, 259-60
காசி சா, 84, 86, 102, 103, 106, 132
காசுமீரம், 19, 36 காடி, செல்வி பியாற்றிஸ் டி, 153
காவிரி ஆறு, 28
综
இத், எ. பி. 298

Page 192
354
(85
குகை ஓவியங்கள், 32
குங்கேரியா, 285
குரம், 284
குல்லூர், 285 குவெற்ற, 72, 152 குவெற்ருப் பண்பாடு, 79-82
குள்ளிப் பண்பாடு, 107,
168-70, 175, 231, 250
109-37,
&t
கொத்ராஸ் புதி, 85, 87, 88
கொல்வா, 74-5, 79
சங்கியன், 290
சமராக் கலம், 57
s
சாகிதம்ப், 111, 120, 122, 127, 132,
258-65,301
Frriai)situit, 67, 263, 327
சானுதாரோ, 127, 150, 169, 170, 171, 185, 203, 211, 215, 226,232, 239,
252, 266-72
சிங்கன்பூர், 32
சிந்து, 72, 78
Galapur6:37, 127, 185
கக்கூர், 37
SFFrr, 61, 134-6
சர்யங்கல், 143, 148,
கற்ககன்டோர், 114, 161, 204, 206,
26, 253
f
ઉોઠr
செஞ்சிவப்புக் கலம், 134, 333
செம்பு வெண்கல உபகரணங்கள், 50,
52-4, 57, 60, 61, 91, 102, 108,
128-31, 235-40, 259-60, 262-5,
271, 274-5, 283-7, 327 செம்மறியாடு, காட்டுச், 44-5, 184-5
சென்னை, 6, 28
சென்னைக் கைத்தொழில், 26-9
சைல்ட், வி. ஜி. 12, 117
Gigir
(FFTæ6ör i 6ðsiLifr(6, 25-6
சோப் பண்பாடுகள், 138-52
(gertub, 326
l
Luf?“Glassru, 144, 147, 161, 203, 204
டஸ்ற் நதி, 135-6
டாம்புதி, 88-91

தா
தாரோ மலை, 85, 105, 206
தானியங்கள், பயிரிடுதல் 42-3,
181-2, 321-2
g
துரங் தெமி, 66, 67, 284, 289, 301
தெ தெபி இசார், 65, 239, 251, 264, 301 தெபி கவ்ரா, 55, 58, 228
தெபி கியன், 60, 85
தெமி சியல்க், 49, 55, 60, 172,
174, 175
தெல் அக்ரப், 36 தெல் அசுணு, 48, 55-6 தெல் உக்கேர், 58-60 தெல் எல் அமர்ன, 202, 302
தே
த்ேர்கள், 323-4, 332-42
த
நருமதை ஆறு, 24, 29, 30 நல், 83, 88-91, 144-6, 168, 171, 263
நி
நிறுத்தலும் அளவையும், 215-8 நினேவா, 55, 59
நுந்தரா, 83, 88, 87-8, 95-100
355
77, 28i படகுகள், 210
பகவல்பூர்,
பண்டி வாகி, 84, 86 பத்கார், 285 upLITuil, 29, 30 பம்பூர், 120, 127, 137, 262 பயிர்ச்செய்கை, 42 பருத்தி, 183
பி பிறன்றன், யோன், 4-5
나 புட், புறுசு, 6 புர்சகோம், 38
ኧ
பெ
பெரியனே குண்டை, 143-4, 147-9 பெருஞ்சிலைப் பண்பாடு 35
பேயன்சு, 104, 233-5, 252, 271, 277
GTI பொக்ஸ், சேர் சிரில், 336
மக்கவுன், தொனுல், 12, 56, 61 மஞ்சார் ഖT്, 77-9, 88, 110, 182 insofact, 91, 103-4, 130-1, 149,
207-8,224-5, 246, 251, 267, 271 மது, 326
மனித வகைகள்,
276, 279-81
மஸ்கை, 71, 75, 78, 83, 110
73-6, 263-5,

Page 193
356
மித்தனி, 302-3, 309, 334
(p முல்லர், மாக்சு, 306, 309, 3.
முலா, 72, 78 முன்னைக் குலமுறையினர் காலம்,
62-4, 108-9, 249-50, 333-4
முன்னைச் சோகன் பண்பாடு, 29
Gud
மெகி, 110-14, 117, 122, 127, 130-1,
16, 215, 249, 262
o
60) last, 67, 263, 301, 327
மைசூர், 35-6
Goor
மொகஞ்சோதாரோ, 7, 155-254,
273一6
Guor
மோகல் குண்டை, 143, 147-50, 290,
30
யன்கர் பண்பாடு, 273
யிவன்றி, 290, 310
u qasir, 209, 266
யுகர் பண்பாடு, 267-72
Gun
யெம்டெற் நசர், 59-60, 61
g
ரசன்பூர், 285
TT
ராஞ்சி, 286-7
ராணு குண்டை, 50, 51, 138-45, 167,
257-8
ரோ
Garrís, 37
Gosт
லொண்டோ, 290
வண்டிகள், 126-7, 132, 209, 211,
227, 324-6
வி
விலங்குகள் இற்படுத்தல், 44, 91, 141,
183-6, 320-24
விளையாட்டுக்கள், 227-8, 328
விற்கள், 342-5
வீலர், ஆர். இ. எம்., 10, 35-6, 179,
188, 193, 246, 279, 317, 318
6)
ஸ்ரீன், சேர் ஒரல், 8, 11


Page 194


Page 195


Page 196


Page 197