கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி (நினைவு மலர்)

Page 1


Page 2

JFL DÍT II பணும் சரவணையூர் அருள் மிகு
தில்லைமேடைச் சிவனுக்கு

Page 3

பெற்றோர் நினைவாக அருள் ஒளி
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணி பதம்நாடு.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சரவணையூர் சைவ வேளாண்குல திலகள் பார்வதி நடராஜர் நினைவு
வெளியீடு ஆணித் திங்கள் உத்தரநாள் 1997
தொகுப்பு மகள்

Page 4

அருள் ஒளி
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க, ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க, ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க, வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க, பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க, புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க, கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க, சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க, ஈசன்அடி போற்றி எந்தை அடிபோற்றி, தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி, நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி, சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி, ஆராத இன்பம் அருளுமலை போற்றி, சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச், சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன்யான், கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்த்ெய்தி, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி, விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங் கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர், பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன், புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்,

Page 5
அருள் ஒளி 2
பல்விருக மாகிப் பறவையாய் பாம்பாகிக், கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய், வல்லசுரராகி முனிவராய் தேவராய், செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள், எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன், உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற, மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள், ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, வெய்யாய் தனியாய் இயமான னாம் விமலா, பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி, மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே, எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே, அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே, ஆக்கம்அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும், ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய், போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும் பின்,
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே, மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே, கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச், சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று, பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான், நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த, மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை,
மறைந்திடி மூடிய மாய இருளை, அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப், புறந்தோல் போர்தெங்கும் புழுஅழுக்கு மூடி, மலஞ்சோரும் ஒன்பது வாயிற்குடிலை, மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய,

அருள் ஒளி 3.
விலங்கு மனத்தால் விமலா உனக்கு, கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும், நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத், தாயிற் சிறந்த தயாவான தத்துவனே, மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே, தேசனே தேனார் அமுதே சிவபுரனே, பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் "ஆரியனே, நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப், பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே, ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே, ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே, நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே, இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே, அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம், சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே, ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே, ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெரும்ானே, கூர்த்தமெஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின், நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே, போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே, காக்கும் எம் காவலனே காண்பரிய பேர் ஒளியே, ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற, தோற்றச் சுடர் ஒளியாய் சொல்லாத நுண் உணர்வாய், மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம், தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள், ஊற்றான உண்ணார் அமுதே உடையானே, வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடப்ப, ஆற்றேன் எம் ஐயா அரனே ஒ என்று என்று,

Page 6
அருள் ஒளி 4.
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார், மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே, கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே, தில்லையுள் கூத்தனே. தென்பாண்டி நாட்டானே, அல்லற் பிறவி அறுப்பானே ஒ என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச், சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப், பல்லோரும் ஏத்தப் பணிந்து.
ựổ தட்ஷிணாமூர்த்தி துதி
வேதநூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி, சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவனாகி, சோதியாய் குருவு மாகி
சொாக்கத்தை மண்ணில் நல்கும், ஆதியாம் குருவே: நின்தான்
அடைக்கலம் போற்றி, போற்றி
கல்லாலின் புடையமர்ந்த
கருணைமிகு கண்ணாளனே. சொல்லாடிய நல்லுர்மனக்
குறையகல வல்லானே, எல்ல நிலையும் எடுத்தியம்பி
சொல்லா நிலைகr -டி, கல்லாக்கலை ஞானத்தை கருத்துள்
கனிவித்த குருவே போற்றி.

அருள் ஒளி , 5
மறைமிகு கலைநூல் வல்லோன்,
வானவர்க்கு அரசன் மந்திரி, நறைசொரி கற்பகம் பொன்
நாட்டினுக்கு அதிபனாகி, நிறைதனம் சிவிகை மண்ணில்
நீடு போகத்தை நல்கும், இறையவன் குரு வியாழன்
இருமலர் பாதம் போற்றி.
உம்மைப்பணிய உண்மை தரவேண்டும்,
குருவைப்பணிய குணம் தரவேண்டும், பர்த்தாவைப் பணிய பதுமை தரவேண்டும்,
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் சேக்கிளநாயனார், சித்தாங்கமாகிய
முத்த முதலாகிய சிகவர் விளங்க, வந்த தெட்சணாமூர்த்தியே
செம்மையானந்த குருவே.
தட்ஷிணாமூர்த்தி தோத்திரம்
உபாசகர் உபாசனைக் குரியது எதுவோ,
உயர்நல சுயவடிவு உடையதும் எதுவோ,
தபோஞான வடிவாய் வடவாலின் கீழே
தங்கிடும் ஒளியென் சிந்தையில் மலர்க:
தயையினுக்குஇருப்பிட மாயும் مزوفريد
ஆலின் அடியில் குமிழ்நகை மெளனம்
மாச்சர்யமற்று அக்ஞான இருளை
மாற்றும் முதல்குரு நாதரைக் கண்டேன்,

Page 7
அருள் ஒளி 6
முனிவரர் சீடர் மனஇருள் முற்றும்
முந்துரும், தயையால் விரட்டி அவர்க்கு.
தனித்திரு முத்திரை காட்டி வெம்மாயை
தடுத்து தத்துவசி ஞானம் தருகிறார்,
எல்லையில்லா காருண்ய அமுத அலையில்
எழுகின்ற கடைக்கண் பார்வை யதனால்
தொல்லைப் பிறவி தியில் தவிக்கும்
சீடரைநோக்கும் ஞானக் குருவினைக் கண்டேன்.
ஆதிதேவனே ஆல்டியில் அமர்ந்து
அபார கருணை என்மீது வைத்தைய.
ஒதுவிப்பாய் ஓங்கார பிர்ம வித்தையை
ஒட்டுவாய் அஞ்ஞான இருள் குருநாதா.
சந்திரக் கலையென அங்க அமைப்பும்
தரள முத்தென உடலும் அமைந்த
சுந்தர அக்ஞான இருளது அகல
தோன்றிய வைகறையெனத்திகழ் குருநீ.
வலது முழங்காலில் இடதுகால் வைத்து
வளர்நாக அணியாய் யோகபட்டம் தரித்து நிலத்தில் அபஸ்மார அசுரனை மிதித்த
நிலை மனத்தார்க்கு அஞ்சலி செய்வாம்,
சுந்தர வடிவன், சீடர்கள் முனிவரர்
தூய ஆத்ம ஞானம், மெளனத்தால் புகட்ட,
இந்தமண் பாக்கியம் இணையிலா ஆச்சார்ய,
ஆச்சார்ய தேவனை அடைந்தேன் சந்குருவாய்,

அருள் ஒளி 7
ஒருகரம் சின்முத்திரை மானொரு கரத்தில் ஓங்கும் கோடரி மற்றொரு கரத்தில்
ஒருகரம் முழங்காலதன் மேல்வைத்த ?
உயர்ந்த சற்குரு என்முனே தோன்றுக,
மன்மத உடலில் திருநீறு பூசியும்
வரிப்புலி தோலை ஆடையாய் தரித்தும்,
என் அக்ஞான ஆழியில் படவாக் கினியாய்
எழுந்த ஆச்சார்ய தேவனைக் கண்டேன்.
சுந்தரப் புன்னகை சுடர்மதி அணியும்,
சுருள்சடை மகுடம் கரத்தில் வீணையும்
சிந்தையில் இன்னிசை மகிழ்ந்திடும் பொலிவும்,
தேக்கிய நினையே யோகியார் துதிப்பார்.
பற்று கர்வம் அற்ற சுகரணைய
பழமை முனிவரர் உபாசித்து மகிழும்
உற்றதெட்சணாமூர்த்தி உருதாங்கிய
உயர்மகேசா என்மோகம் போக்குவாய்,
சுந்தர நிந்தித மல்லிகை மொட்டென
தூயன் ஆலடியில் தயைமிகு பார்வையால்,
சிந்தை தெளிந்த முனிவர்க்கு ஆத்ம ஞானம்
சின்முத்ரா தத்வமசி தெளிய வைக்கின்றார்,
பகது நிறமும் படர்நெற்றிக் கண்ணும்
பழுத்த அமைதியும் அரவணி தரித்து
மடிய மனமோகம் மாயம் தவிர்த்த
மாரன் இருக்க மற்ற தெய்வம் எதற்கோ

Page 8
戟
அருள் ஒளி
உலகில் எத்தனை தெய்வம் இருப்பினும்
உள்ளம்நின்ற தெய்வம் வேறேதும் இல்லை,
உலகினர்க்குஉபதேசம் செய்திடற் கென்றே,
ஓங்கும் தெட்சணாமூர்த்திஒருவரே தெய்வம்,
ஆனந்த சாகரம் தண்மதி தரித்தார்
அங்கத்தே நீறணிந்து உள்ளம் கவர்ந்தார்,
தானே உலகமாயை ஆக்கிட வல்ல
தெட்சணாமூர்த்தியின் தாள் பணிவோமே.
சுற்றிலும் திருச்சடைகள் சூழ்ந்து தொங்க
சுடரும் பிறைமதி நெற்றிமேல் இலங்க,
முற்றிய நிலவென முகமது திகழ
முன்வினை நீங்கிய வென் மனதின் சோதி நீ.
உபாசனை புரிவோர்முன் உமையொடு தானும் உயர்மதி யென்ன தரிசனம் நல்கி
தபோமனச் சந்திரகாந்தக் கல்லது உருக
தரிசனம் தரும்நினைக் கண்டேன் இன்றே,
முடிமீதில் மதியணி பெம்மான் நின்றன்
முழுஉரு தியானத்தில் மனத்தில் இருத்தி
அடிசார்ந்த மனத்தார் செல்வம் கல்வி 途
ஆனந்தம் ஆயுளொடு அடைவார் ஆத்மஞானம்,

அருள் ஒளி 9
றிநாராயணன் துதிகள் ஒம் நமோ நாராயணா (பெரிய திருமொழி)
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மொடு
அவர்தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளரஸ்
உணர்வெனும் பெரும்பதம் தேரிந்த்(
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
ஆவியே அமுதே எனநினைந் துருகி
அவரவர் பணைமுலை துணையா பாவியேனுணராது, எத்தனை பகலும்
பழுது போயொழிந்தன நாட்கள் தூவி சேரன்னம் துணையொடும் புணரும்
ஆழ்புனற் குடந்தையே தொழுது என் நாவினாலுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும் வலம்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.

Page 9
அருள் ஒளி O
திருமங்கையாழ்வார். பச்சைமா மலைபோல் பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே இன்னும், இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேணி டேன் அரங்கமா நகருளானே.
í கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை, அண்டர் கோனணி அரங்கன் என் அமுதினைக், கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.
கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ, மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும், நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன்! சொல்லாழி வெண்சங்கே.
சுவாமி விவ்ேகானந்தர்
எழுந்திடுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், குறிக்கோள் நிறைவேறும் வரை பணியாற்றுங்கள்.
காலத்தால் அழியாத இந்த வாசகங்களை உலகிற்கு வழங்கிய ஆன்மீகப் பேரொளி தத்துவஞானி அவதாரபுருசர் சுவாமி விவேகானந்தர். பகவான் யூரீ ராமகிருஸ்ணர் தன்னிடம் ஒப்படைத்த பணியை சிரமேற் கொண்டு புண்ணிய பாரதத்தின் தார்மீகச் சிறப்பையும் கலாச்சாரப் பெருமையையும் உலககெங்கும் பரப்பி

அருள் ஒளி 11
மானிட சமுதாயத்தின் உயர்வுக்கு வழிகாட்டிய ஆன்மீகப் பெரியார் சுவாமி விவேகானந்தர்.
கல்கத்தா நகரில் விசுவநாத தத்தர் என்ற வழக்கறிஞருக்கும் புவனேஸ்வரி அம்மையாருக்கும 1863-ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் மகர சங்கராந்தியன்று மகனாகப் பிறந்த தெய்வீகக் குழந்தை, சுவாமி விவேகானந்தர். பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் நரேந்திர நாத் தத்தர். தாயே இவரது முதற்குரு. பள்ளிக்குச் சென்று கல்விகற்கத் தொடங்குமுன்பே, இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச புராணங்களைத் தன் தாயிடமே கற்றறிந்தார் நரேந்திரர் . குழந்தையாக இருந்த போதே கட்டுக்கடங்காத வீரமும், ஞானமும் நரேந்திரரிடம் நிறைந்திருந்தது. கோகுலக் கிருஸ்ணனிடம் இருந்த குறும்பும், குருசேத்திர கண்ணனிடம் இருந்த அறிவும் குழந்தை நரேந்திரரிடம் இருந்தது.
உலகில் வேறெவருக்கும் நிகழ்ந்திடாத அற்புத அனுபவம் நரேந்திரருக்கு குழந்தைப் பருவத்தில் தினமும் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் நித்திரைக்குச் செல்லுமுன் அவர் ஒரு காட்சியைக் காண்பார். விண் வெளியிலிருந்து சூரியனைப் போன்ற பிரகாசமான ஜோதி ஒன்று அவரை நோக்கி நகர்ந்து வரும், அப்பேரொழியில் அவரும் கலப்பது போல ஒரு பரவசநிலை, நரேந்திரருக்கு ஏற்பட்ட அருள், பின்னால் அவரை ஒரு தெய்வீக மனிதனாக மாற்றியது.
நரேந்திரரின் ஆறாவது வயதில் அட்சர அப்பியாசம் ஆரம்பமானது. ஒரு சிறிய பள்ளியில் சாஸ்த்திரப்படி அவர் ஆரம்பக் கல்வி தொடங்கியது. அபார ஞாபக

Page 10
அருள் ஒளி 12
சக்தியும். வயதிற்கு மீறிய அறிவும் இருந்ததை அவர் ஆசிரியர்கள் உணர்ந்தனர். இசையிலும் நரேந்திரர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அனுமனைப் போலவே புத்திசாதுர்யமும், வீரமும் தொண்டு செய்யும் திறனும் பெற்றுத் திகழவேண்டும் என்பது அவரது அவா.
பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரியில் பிரவேசித்த நரேந்திரர் ஆங்கிலத்தோடு, தாய்மொழியான வங்காளம், சமஸ்க்கிருதம், விஞ்ஞானம் தத்துவம், தர்க்கம் ஆகிய சாஸ்த்திரங்களிலும் ஈடுபாடு செலுத்தி அவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அன்பும், பண்பும், அடக்க்மும், எளிமையும் அவரிடம் தனித்தன்மையாக, விளங்கின.
இளமையிலேயே நரேந்திரர் உள்ளத்தில் தீவிரமாக ஓர் அவா எழுந்தது. அது எப்படியாவது கடவுளைக் காண வேண்டும் என்பதே. பார்க்கின்ற இடமெல்லாம். கடவுளைத் தேடினார். கடவுளைக் காட்டும் குரு, யாராவது கிடைக்கமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் நரேந்திரர் வாழ் வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் தட்சிணேஸ்வரத்தில் பகவான் ரீராமகிருஸ்ணரைச் சந்தித்தார். கடவுளைத் தேடித்தேடி அலைந்த அவருக்கு கடவுளைக்கான வழிசெய்தவர் பகவான் ரீராம கிருஸ்ண பரமஹம்சர்.
குருதேவர் : உனக் காக எத்தனை காலம் காத்திருக்கிறேன்! நீ ஓர் மகரிஷி. தெய்வீகத்தையும் ஆன்மீகத்தையும் உலகுக்குப் பரப்பி உலகத்தோரை துன்பத்தினின்றும் காக்க மீண்டும் அவதரித்துள்ள

அருள் ஒளி 13
மகான் நீ. அதன் பின்பு நரேந்திரர் அடிக்கடி தட்சிணேஸ்வரம் சென்றார். குருதேவரைச் சந்தித்தார். ஆன்மீகத்துறையில் வளர ஆரம்பித்தார்.
நரேந்திரரின் பதினேழாவது வயதில், அவர் வாழ்க்கையில் ஒரு துயரமான சம்பவம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக அவர் தந்தை காலமானார். குடும்ப பாரம் நரேந்திரர் மீது விழுந்தது. நேர்மையான வருமானத்தால் குடும்பத்ன்தச் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த நரேந்திரரின் தந்தை பெருமளவு செல்வம் ஏதும் திரட்டி வைக்காமல் மறைந்து விட்டார். அவர்கள் குடியிருந்த வீட்டையும் உரிமை கோரி தாயா தியர்கள் வழக்குக் கோரிவிட்டனர். குடும்பம் ஏழ்மையாலும், வறுமையாலும், பிரச்சினைகளாலும் துயருற்று வாடியது. துயருற்றவர்களுக்குத் தெய்வம் தானே துணை. அந்த நிலையில் நரேந்திரர் தனக்குக் கடவுளைக் காட்டிய ஆசானாய் அமைந்த ராமகிருஸ்ணரை நாடிச் சென்றார். அந்தக் காலங்களில் நரேந்திரருக்கு சடங்குகளிலும் விக்கிரக ஆராதனையிலும் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. காளியிடம் கூட அப்போது அவருக்கு பக்தி கிடையாது. இருந்தாலும் தன் கஸ்டம் திருவதற்காக "குருதேவா, தாங்கமுடியாத துன்பமும் துயரச் சூழ்நிலையும் என்மீது விழுந்திருக்கிறது. என் தந்தையார் மறைவிற்குப் பின் ஏழ்மையும், வறுமையும் எங்கள் குடும்பத்தை வாட்டுகின்றது. என் நலனுக்காகத் தங்கள் அன்னை காளியிடம பிரார்த்தனை செய்யுங்கள்.” என்றார். குருதேவர், “நரேந்திரா நான் பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை. நீயே பிரார்த்தித்துக் கொள்ளலாம். உலகனைத்திற்கும் தாயாக கருணை பொழிபவள் அன்னை காளி.

Page 11
அருள் ஒளி 14
அவள்தான் உன் துயர் நீக்க வல்லவள். எனவே நீயே நேரடியாகச் சென்று காளியிடம உன் வறுமையையும், ஏழ்மையையும் நீக்கும்படி வேண்டிக் கொள்” என்றார்.
குருதேவர் கூறியவண்ணம் நரேந்திரர் காளி கோவிலுக்குச் சென்றார். அந்த அனுபவத்தை விவேகானந்தரான பின்பு சுவாமிகளே குறிப்பிடுகின்றார். "நான் அன்னை காளி ஆலயத்தின் பிரகாரத்தை அடையும் போதே அன்னையை அன்று தரிசிக்கப் போகின்றோம் என்ற பரவச உணர்வு எனக்கு ஏற்பட்டது ஆலயத்தினுள் சென்று அன்னையின் விக்கிரகத்தைப் பார்த்தேன். அங்கே நான் அப்போது அன்னை காளியையே பிரத்தியட்சமாகக் கண்டேன். ஆகா! பிரபஞ்சத்தின் அழகு முழுவதையும் தரிசித்தேன். தெய்வீகமான அவள் அங்கு ஊற்றாகப்பெருக்கெடுத்து ஓடுவதை உணர்ந்தேன். பக்தியாலும் பிரேமையாலும் நான் பரவச நிலையை அடைந்தேன். அன்னையை மீண்டும், மீண்டும் நமஸ்கரித்தேன். என்வறுமையைப் பற்றியோ, ஏழ்மையைப் பற்றியோ எந்தவிதமான நினைவும் வரவில்லை, ஆம் அவளிடம் வரம் கேட்டேன். என் துயர்தீர்க்கும் செல்வத்தை அல்ல, பற்றற்ற நிலையைத் தரும் படி கேட்டேன். ஞானத்தையும், பக்தியையும் வைராக்கியத்தையும் தரும்படி கேட்டேன்.சதா சர்வகாலமும் அவளுடைய திவ்விய தரிசனம் தட்டாமல் கிடைக்க வேண்டுமென்று கேட்டேன். அப்போது பேரின்பத்தோடு கூடிய அமைதி என்னுள் நிலவியது. என்னையும், என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் மறந்திருந்தேன். அன்னை காளி ஒருவளே என்னுள்ளத்தில் வியாபித்திருந்தாள்.”

அருள் ஒளி 15
இந்தத் தெய்வீக அனுபவத்தைப் பெற்ற உடனேயே நரேந்திரர் தன் குருவிடம் வந்தார். குருதேவர்: “நரேந்திரா, காளியிடம் உன் ஏழ்மையையும், துயரத்தையும் போக்குவதற்கு வரம் கேட்டாயோ?” என்றார். இல்லை சுவாமி, குருதேவர்: ஏன்?
நரேந்திரர்: அதைப்பற்றிய நினைவே எனக்கில்லை. அன்னையை தரிசித்த மாத்திரத்தில் இவ்வுலகத்தைப் பற்றிய எண்ணங்களே என்னை விட்டு மறைந்து விட்டன. குருதேவர்; பரவாயில்லை, மீண்டும் அன்னையிடம் போ. இந்தமுறை மறக்காமல் உன் கஸ்ட்டத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்.
குருவின் ஆணைப்படி இரண்டாவது முறை மட்டுமல்ல மூன்றாவது முறையும் காளியிடம் சென்றார் காளியைத் தரிசித்தார். ஆனால் தன் கஸ்ட்டத்திற்கு பரிகாரம் தேடி காளியிடம் அவரால் வரம் கேட்க முடியவில் லை. துறவுற வாழ்க் கையையும் , பக்தியையும், வைராக்கியத்தையும் ஒவ்வொரு முறையும் வரமாகக்கேட்டு வாங்கி வந்தார். இப்போது நரேந்திரருக்கு தன் பிறவிப் பயனும் வாழ்க்கை லட்சியமும் பரிபூரணமாகப் புரிந்தது. உலக பந்தங்களுக்காக தன்னை இறைவன் படைக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார். காளியிடமும் காளியைத் தனக்குக் காட்டிய குருநாதரிடமும் அவருக்கு பூரண நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டது. அப்போது குருநாதர் "அவரிடம் : குழந் தாய் அன்னை உனக்குக் கட்டளையிட்ட பணியைச் செய். உன் குடும்ப கஸ்ட்டங்களைப் போக்கும் வழிமுறைகளை

Page 12
அருள் ஒளி 16
அன்னையே பார்த்துக் கொள்வாள்” என்று கூறி அனுப்பினார்.
காளியின் அருளாலும் குருதேவரின் ஆசியாலும் நரேந்திரரின் குடும்பத்தைப் பிடித்திருந்த வறுமை மெல்லநீங்கத் தொடங்கியது ஏழ்மையையும், துயரத்தையும் துணிவோடு வென்று நியாயம் பெற்று இழந்த சொத்துக்களை மீண்டும் அடைந்து குறையில்லாத ஜீவனம் நடத்தினார் நரேந்திரர். அப்போது அவருக்கு வயது பதினெட் டு. விடாமுயற்சியுடன் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து பட்டப்படிப்பையும் முடித்தார்.
படிப்போடு மட்டும் நரேந்திரரின் மனம் திருப்திப் படவில்லை. வீணை கற்றுக்கொண்டார். மிருதங்கம் முதலிய தாள வாத்தியங்களில் தேர்ச்சி பெற்றார். உடல் வலிமைக்காகச் சிலம்பம், குஸ்தி முதலியன பயின்றார். நாடகத்திலும், நடிப்புத் திறமையிலும் சிறப்புற்று விளங்கினார். சுருங்கச் சொன்னால் நரேந்திரர் புத்திபலத்தில் அனுமனாகவும், உடல் வலிமையிலே வீமனாகவும், மன உறுதியிலே ஒரு பீஷ்மனாகவும் கல்வியறிவிலே வசிட்டராகவும், இசைத்திறனிலே நாரதராகவும் திகழ்ந்தார்.
தட்சிணேஸ்வரத்திற்கு அடிக்கடி சென்று வந்த நரேந்திரர் குருதேவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றதோடு நிற்காமல் அவரது மறைவுக்கு முன்பே அவர் பெற்றிருந்த சித்திகளையும், சக்திகளையும் பெற்றார். குருதேவர்: நரேந்திரா என் சக்திகள் அனைத்தையும் உனக்குத் தானம் செய்து நான் எதுவுமில்லாத பிட்சாண்டியாகி விட்டேன். இந்தச்

அருள் ஒளி 17
சக்தியைக் கொண்டு அன்னையின் பணியைத் தொடர்ந்து செய் உலகோருக்கு நன்மைசெய். என்பணி முடிந்தது. உன் பணி தொடரட்டும் என்றார்.
தன் அவதாரப் பணியை முடித்துக் கொண்டு குருதேவர் ராமகிருஸ்ணர் மறைந்தார். குருதேவரின் ஆசியாலும் அவரிடமிருந்து பெற்ற சக்திகளின் பலனாலும் நரேந்திரர் விவேகானந்தராக மாறினார். குரு தேவரின் மறைவின் துயர் விவேகானந்தரைப் பெரிதும் வாட்டியது. தன் அறிவுக் கண்களைத் திறந்து தாய்க்குத் தாயாக, தந்தைக்கு தந்தையாக தன்னிடம் கருணை காட்டி, ஒரு ஞானப் பொக்கிசத்தையே தன்னிடம் தந்து விட்டு மறைந்த குருநாதர் தனக்கு இட்டபணிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். தன் ஒரு குடும்பத்தின் பொறுப்பை மட்டுமன்றி உலகிலுள்ள அத்தனை குடும்பங்களிலும் தார்மீகமும், தெய்வீகமும், ஆன்மீகமும் தழைக்க, தன்னை ஒரு பூரண பிரம்மச்சாரியாக ஆக்கிக்கொண்டு அந்தப் பணியில் இறங்கினார் விவேகானந்தர். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் உயரிய நோக்கோடு உலக மக்களுக்கெல்லாம் பகவான் ராமகிருஸ்ணரின் தத்துவப் புகழ் பரமப் எண்ணினார். அதற்காகப் புண்ணிய பாரதத்தில் புனித யாத்திரை தொடங்க விரும்பினார் சுவாமி விவேகானந்தர். அன்னை சாரதா தேவியாரின் ஆசியைப் பெற்றுக் கொணி டு அவர் பயணம் தொடங்கியது. தன்னலமில்லாத ஒரு தியாக புருசனாக, முற்றும் துறந்த ஒரு முனிவனாகத் தன் யாத்திரையைத் தொடங்கினார்.

Page 13
அருள் ஒளி 18
விவேகானந்தரின் அறிவுரைகள்
1. எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்
தான் நாத்திகன் என்று சொல்லுகின்றது.
2. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கின்றது. ஒரு மனிதனோ ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்தவுடனேயே
அழிவு வருகின்றது.
3. நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும். இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து உங்களிடத்தே நம்பிக்கையில்லா விட்டால்
கதிமோட்சமில்லை.
4. நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமைபடைத்தவனாகவே
ஆகிவிடுவாய்.
5. சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும்
எதையும் எதிர்பார்க்காதே.

அருள் ஒளி 19
10.
11.
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது சர்வவல்லமை படைத்தவன் நீ.
நீங்கள் கடவுளின் குழந்தைகள். ஒ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.
போராட்டங்களையும், தவறுகளையும் பொருட் படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியததைக் கைக்கொள்.
வலிமை உடையவர்களாக இருங்கள். ஒவ்வொரு மனிதன் முன்பும் இந்த ஒரு கேள்வியை நான் வைக்கின்றேன். நீ வலிமையுடையவனாக இருக்கின்றாயா? நீ வலிமையை உணர்கின்றாயா? ஏனென்றால் உண்மை ஒன்றுதான் வலிமை தருகின்றது. என்பதை உணர்ந்திருக்கிறேன். உலகத்தின் நோய்க்கு வலிமை ஒன்றுதான். சரியான ԼD(55Ֆl.
வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும் பெரும் உறுதியும் வேண்டும். கடுமையாக உழை. உனது குறிக்கோளை அடைவாய்.
உழைப்பே உருவெடுத்த, சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள். அளவற்ற ஆற்றல், பெரும்

Page 14
அருள் ஒளி 2O
12.
ஊக்கம் , அளவுகடந்த அஞ் சாமை, அளவில்லாத பொறுமை- இவையே நமக்குத் தேவை.
வாழ்க்கையில் வெற்றிபெற விவேகத்தோடு வீரமும் வேண்டும்.
மனதின் ஆற்றல்கள்
ஒருகருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு.
வெற்றிக்கு இது தான் வழி.
தீர்க்கதரிசிகளும், மகான்களும், ஞானிகளும் என்ன செய்திருக்கிறார்கள்? ஒரே வாழ்க்கையில் அவர்கள் தங்களைப் பரிபூரணப்படுத்திக் கொண்டு விடுகின்றார்கள். வேறு எந்தவிதமான கருத்துக்காகவும் ஒருகணமும் அவர்கள் வாழவில்லை உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது என்பது இது தான். தேவையான காலத்தை சுருக்கிவிடமுடியும்.
al
ஒரு முகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறமுடியும். கடவுள் வழிபாடோ, பணம் சேர்ப்பதோ, எந்த ஒரு வேலையானாலும் செய்துமுடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளம் பாய்ந்தோடச் செய்யும்.

அருள் ஒளி
4. உலகிலுள்ள அறிவு அனைத்தையும் மன்தின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்துவதைத் தவிர, வேறு எந்த வகையால் மக்கள் பெற்றிருக்கிறார்கள் மூடப்பட்டுள்ள கதவை எப்படித் தட்ட வேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்திருந்தால் , உலகம் தனது இரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கின்றது. அத்தகைய வலிமையும், தாக்கும் வேகமும் மனதை ஒருமுகப் படுத்துவதன் மூலம் தான் கிட்டுகின்றது. மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
S. மனது அதிகமாக ஒருமுகப்பட அதன் ஆற்றல் அதிகமாக ஓர் இடத்தில் செலுத்தபடுகின்றது. இதுதான் மனதின் ஆற்றல் பற்றிய இரகசியமாகும்.
6. எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பி விடமுடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கியான நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக ஆன்மீக சக்தியாக இருக்கச் செய் பிரம்மச் சரியம்தான் எலி லா ஒழுக் கங்களுக்கும் , எ ல் லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகின்றது. என்பது இதனின்று தெளிவாகின்றது.
7. அடக் கப்படாமல் சரியான வழியிலி செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும்

Page 15
அருள் ஒளி 22
என்றென்றைக் குமாக கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்து விடும். அழித்துவிடும். ஆனால் அடக்கப்பட்டு சரியான வழியில் செலுத்தப்பட்டமனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும்.
8. நாம் நம்மைத் துய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவியாக்கிக் கொண்டால் அவை. நம்முள் விளைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்பதில்லை.
9. உன்னிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை மற்றவர்களுக்கு கொடு.
மனிதன் தனது விதியைத் தானே அமைக்கின்றான்.
1. நமது நன்மைக்காக, நமது விருப்பத்திற்காக நாம் நல்லவர்களாக இருப்போம். நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். V−
2. இந்த மனித உடல்தான் பிரபஞ்சத்திலேயே மிகச்சிறந்த உடலாகும். மனிதனே மேலான ஜீவன். தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன். இயற்கையை மீறி மேலெழுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் வரையில் தான் மனிதன் மனிதனாக இருக்கின்றான். இந்த

அருள் ஒளி 23
இயற்கையானது அகம், புறம் என இரு வகைப்படும். இயற்கையை வென்று தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யும் மக்கள் அதிகரிக்கும் போது தான். ஒரு நாட்டிற்கு எழுச்சி வருகின்றது. ஒவ்வொரு மனித இனத்தின் வலிமைக்கும் உயிர்நாடி அதன் ஆன்மீகப் பண்பில்தான் அடங்கியிருக்கின்றது.
3. இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை யுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கின்றோம். தனிமனிதர்களின் நிலை உயர்த் தப்பட்டால் தேசமும் , அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.
4. உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு எவரும் உனக்கு கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மீகவாதி ஆக்கிவிடவும் முடியாது. உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.
5. விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத் தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கின்றோம். எனவே அதன் பொருட்டு துாற்றுவதற்கும் எதுவுமில்லை பாராட்டுவதற்கும் எதுவுமில்லை.
6. எழுந்து நில், தைரியமாக இரு. வலிமையுடன் செயலாற்று. பொறுப்பு முழுவதையும் சுமந்து

Page 16
அருள் ஒளி 24
10.
கொள். உனதுவிதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடிகொண்டிருக்கின்றன. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்து இருக்கின்றது.
ஏன்? எதற்கு? என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று. மாறாக செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவதுதான் நமது கடன். சத்தான காரியங்களைச் செய்வதற்காகத்தான் ஆண்டவன் நம்மைத்தேர்ந்தெடுத்திருக்கிறான். செய்து முடிப்போம் என்று உறுதியாக நம்பு. உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று உறுதியாகச் சொல் வேனி . எனவே உயர் நீ த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.
மனித வளர்ச்சியின் வரலாற்றுப் படி, இயற்கைக்கு கீழ்ப்படியாமல் இருப்பதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஆக்கியமைத்திருக்கின்றது.
நமது வாழ்க்கை சிறந்ததாகவும். தூய்மை யுடையதாகவும் இருந்தால் மட்டும் தான் உலகமும் சிறப்பும், தூய்மையும் பெற்றதாக இருக்கமுடியும்.

அருள் ஒளி 25
11.
12.
3.
14.
சணி டையிடுவதிலும், குறை சொல் லிக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கின்றது? நிலைமையை சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்து கொண்டு, தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவர் தவறாமல் ஒளியைக் காண்பார். உயர்ந்த கடமைகள் தேடிவரும்.
உலக இயந்திரத்தின் சக்கரங்களிலிருந்து தப்பி ஓடாதே. அதன் உள்ளேயே நின்று கொண்டு கர்மயோகத்தின் இரகசியத்தைக் கற்றுக் கொள். இயந்திரத்தின் உள்ளேயிருந்து சரியானபடி வேலை செய்வதன் மூலமும் அதிலிருந்து வெளியே வந்து விடுவது சாத்தியமே.
நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், செயலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சூட்சுமத்தன்மையை அடைகின்றது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கின்றது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பின் அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகின்றது. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன். தனது வாழ்க்கையை தானே உருவாக்கிக் கொள்கின்றான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

Page 17
அருள் ஒளி 26
15.
16.
17.
18.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
எப்போதும் விரிந்து மலர்ந்துகொண்டே யிருப்பதுதான் வாழ்க்கையாகும்.
இயற்கையை எதிர்த்து போராடுவதற்கு உயிர் உணர்ச்சி இருக்கிறது. இத்தகைய எதிர்ப்பு உள்ள இடத்தில் உயிர் வாழ்வதற்கான அறிகுறி வெளிப்படுகிறது.
ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு பின்பு கடைசியாக ஏற்றுக்கொள்ளுதல். தனது காலத்தை விட்டு முன்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும் தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஜீவான்மாவிலும் தெய்வீகத்தன்மை மறைந்திருக்கின்றது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்வீகத் தன்மையை மலரும் படி செய்வது தான் முடிவான இலட்சியமாகும். இதைக் கர்ம

அருள் ஒளி , 27
யோகம், கடவுள் வழிபாடு, மனக்கட்டுப்பாடு, தத்துவ விசாரம் என்னும் ஒன்றினாலோ எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இருப்பீர்.
கல்வியும் சமுதாயமும்.
1. மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.
2. எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக் காலில் நிற்கும்படி செய்கிறதோ அதுதான் உண்மையான கல்வியாகும்.
3. தாழ்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களுடைய உயர்ந்த நிலையை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
4. மேலை நாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்து வேதாந்தமும், பிரம்மச்சாரியமும் வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கின்றது என்று வேதாந்தம் சொல்கிறது. ஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியனுடைய வேலையாகும்.

Page 18
அருள் ஒளி 28
5. எங்கு உயர்ந்த உண்மைகள் நடைமுறையில் இருக்கின்றதோ, அந்தச் சமுதாயம் தான் சிறந்தது. சமுதாயம் உயர் நீத உண்மைகளுக்குத் தகுதியாக இல்லாவிட்டால், அதைத் தகுதி உடையதாகச் செய். எவ்வளவு விரைவில் இதைச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நன்மை ஏற்படும்.
6. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும்
பெருமை அடைவதற்கு மூன்று விடயங்கள்
அவசியம்:-
i. நன்மை தரக் கூடிய சக்திகளில்
உறுதியான நம்பிக்கை.
ii. பொறாமையும், சந்தேகமும் இல்லாம
லிருத்தல்.
iii. நல் லவர்களாக இருக்கவும் , நன்மையைச் செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.
7. சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உரிய இரகசியமாகும். இந்த உண்மை. வாழ்க்கை மலர்ச்சி பெருவதற்கு அடிப்படையாக இருந்து பெரிதும் துணை புரிகின்றது. சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை நன்றாக அனுசரித்துக் கொள்பவன் நீண்டகாலம் வளமான வாழ்க்கை வாழ்கின்றான்.
8. அன்பு, பொறுமை, நேர்மை ஆகியவற்றுடன் வளர்ச்சியடைவது தான் வாழ்க்கை. அதாவது

அருள் ஒளி 29
10.
அன்பு விரிவடைதல், அதுதான் அன்பாகும். எனவே அன்பு வாழ்க்கை ஆகும். அன்பு ஒன்று தான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும். அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருதமுடியாது.
மேலைநாட்டுக் கருத்துக்கள், மொழி, உணவு, உடை, நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றினால் நாமும் உறுதியும், ஆற்றலும் உடையவர்கள் ஆவோம் என்று புதிய இந்தியா சொல்கிறது. மாறாக இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் துயரமும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழ்ச்சியும் மறைந் திருக்கின்றன.
தியாகத்தால் மட்டுமே அமர நிலை அடையப்படுகின்றது. இனத்திற்குப் பின் இனமாக ஆசைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாழ்க்கைப் புதிரைத் தீர்க்கத் தங்களால் ஆனவரையிலும் அவை முயற்சி செய்தன. ஆனால் அவை எல்லாம் தோல்வியையே அடைந்திருக்கின்றன. பழைய இனங்கள் எல்லாம் பொன்னாசை அதிகார வெறி ஆகியவற்றின் விளைவாக கொடுமை துன்பம் முதலியவற்றின் சுமைதாங்க முடியாமல் அழிந்தே போயிருக்கின்றன. புதிய இனங்களோ அதே சுமைகளால் தள்ளாடி விழும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற உலக ஆசையற்ற தியாகம் தான் சிறந்தது.

Page 19
அருள் ஒளி 3O
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
1. குறிக்கோளுக்கு செலுத்தும் கவனத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டுமென்பதில், வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
2. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான். இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.
3. சமநிலையிலிருந்து பிறழாதவன் சாந்தமானவர் நன்மையை ஆராய்ந்து ஏற்பவர், அமைதி படைத்தவர் இரக்கமும், அன்பும் பெரிதும் உள்ளவர் நல்ல பணிகளில் ஈடுபடுகின்றனர்.
4. தனது அறியாமையை ஆன்மிக ஞானம் என்ற நெருப்பைக் கொண்டு, தன்னிடமிருந்து விரட்ட முயற்சி செய்யும் போது, அவை அந்த முயற்சியை எதிர்த்துப் போராடுகின்றன.
5. கர்ம யோகத்தின் விதிப்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக் கும் வரையிலும் அழிக்கமுடியாது. கருமம் தனக்கு உரிய

அருள் ஒளி 31
பலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு தீய செயலைச் செய்தால் அதற்குரிய துன்பத்தை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். அதேபோல ஒருவர் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்குரிய நல்லபலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்தி லுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்கமுடியாது.
6. நீயே என்னும் இந்த மனப்பான்மைதான் எல்லா நன் மைகளுக்கும் எலி லாச் சிறந்த ஒழுக் கங்களுக்கும் அடிப் படையாக விளங்குகின்றது. உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இது தான இப்போது கற்றுக் கொள்ள வேண்டிய முதற்பாடமாகும். நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாக பணியாற்றுகின்றான் நன்மை செய்யுங்கள். அத்தோடு நல்லவராகவும் இருங்கள். அதுவே உங்களை முக்திக்கு அழைத்துச்செல்லும்.
7. தன்னலமற்ற மனப்பான்மைதான் ஆன்மீக வாழ்க்கை இருப்பதற்கும் இல்லாதிருப்பதற்கும் உரிய சோதனையாகும்.
8. உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக சேவைதான் செய்ய முடியும். இந்த அரிய வாய்ப்பு உனக்குக் கிடைத் திருக்கிறது. இதனால் நீ பாக்கியசாலி ஆகின்றாய். எனவே இந்தச் சேவையை கடவுள் வழிபாடாகவே செய்.

Page 20
அருள் ஒளி 32
10.
11.
12.
13.
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கின்றார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல் லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகுதான் உணரமுடிந்தது.
உலகத்தில் ஒருவரால் ஒரு நாளைக்காகிலும் ஒருவருடைய இதயத்திற்கு சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அந்த ஒன்றே ஒன்று மட்டும் தான் உண்மையாகும்.
துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுமே காரணமில்லை. இந்தக் கருத்தை தெளிவாகப் பார்க்கிறேன். உலகிற்கு யார் ஒளிதரப் போகின்றார்கள்? உலகில் தைரியமும், சிறப்பும் பெருமளவில் பெற்றவர்கள் தங்களைத் தியாகம் செய்து தான் ஆக வேண்டும்.
தேவையில்லாத விஷயங்களில் அலட்டிக் கொள்வதில் நமது சக்தியை சிதறவிடாமல் அமைதியுடனும் ஆளுமையுடனும் ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபடுவோமாக.
நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப் படுத்துவதற்கான ஒரே வழி மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவி செய்வது தான். இயல்பாகவே இயற்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால், அப்போதும் கூட அனைவருக்கும் சமமான வாய்ப்பு வசதிகள் இருக்கத் தான் வேண்டும். அல்லது

அருள் ஒளி 33
14.
15.
16.
ஒரு சிலருக்கு அதிகமாகவும், மற்றும் சிலருக்கு குறைவாகவும் வாய்ப்பு வசதிகள் அமைந் திருக்குமானால், வலிமையுள்ளவர்களுக்குத் தருவதைவிட, பலவீனமானவர்களுக்குத்தான் அதிக அளவில் வாய்ப்புகள் தரப்படவேண்டும்.
தூய்மையாக இருப்பதும் மற்றவாகளுக்கு நன்மை செய்வதும் தான், எல்லா வழி பாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகின்றான். இறைவனை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றது.
பரிபூரணமான தியாக உள் ளத்துடன் சேவையில் ஈடுபடு. வெற்றிபெறுவதற்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து, விடாமுயற்சி செய்கிறது என்பதை உணர்ந்து கொள். வாழ்க் கையெனும் போர்க்களத்தின் நடுவில் வாழ்ந்து வா.
புனிதமான வாழ்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சியடைந்தவர்கள் கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள். ஏழை, எளிய வகளிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாக சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள். வலிமை நிறைந்த ஒரு களஞ்சியமாக உன்னை உருவாக்கிக் கொள் . முதலில் உலக மக்களின்

Page 21
அருள் ஒளி 34
துன்பங்களைக் குறித்து நீ வருந்து. வெறுப்பு உணர்ச்சியாலோ, பொறாமையாலோ உன்னுடைய மனம் அலைக்கழிக்கப்படாமல் இருக்க கேட்டுக்கொள்.
மதமும் ஒழுக்கமும்
1. பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ள வனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்.
2. மனிதன் முடிவில்லாத பிரம்மாண்டமான ஒரு வட்டம் போன்றவன். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை. ஆனால் அந்த வட்டத்தின் மையம் குறிப் பிட்ட ஒரு புள்ளியிலி அமைந்திருக்கின்றது. கடவுள் பிரம்மாண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது. ஆனால் அந்த வட்டத்தின் மையம் எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கின்றது. கடவுளுக்குமி மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இதுதான்.
3. சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர கடவுளுக்கும், சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத் தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். கடவுளுக்குச் சமமான ஆற்றல் கள் சாத்தானுக்கும் உண்டு. ஆனால் தெய்வீகத்

அருள் ஒளி 35
தன்மை மட்டும் தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கின்றது. இந்தக் கருத்தை நவீன உலக்தோடு ஒப்பிட்டுப்பார். தெய்வீகத் தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
4. நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதே நல்லொழுக்கம்: கீழ்நிலைக்கு இழுத்துச் செல்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பு மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று குணங்களால் மனிதன் உருவாக்கப் பட்டிருக்கின்றான். உன்னிடமுள்ள தெய்வீகத் தன்மையை வளர்க்கக் கூடியது தான் நல்லொழுக்கமாகும். உன்னிடமுள்ள மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பை உன்னிடமிருந்து அழித்துவிட்டு மனிதத் தன்மை கொண்டவனாக நீ மாற வேண்டும். அதாவது அன்புள்ளமும் தர்ம சிந்தனையும் உடையவனாக இருக்க வேண்டும். பின் நீ அந்த நிலையையும் கடந்து சென்று துாய ஸத் -சித் ஆனந்தமாக ஆகவேண்டும். சுடும் தன்மை இல்லாத நெருப்பாகவும், அற்புதமான அன்புள்ள வனாகவும். அதே சமயத்தில் பாமர மனிதனின் உணர்ச்சி வசப் பட்ட அன்பு என்ற பலவீனத்திற்கும் துன்ப உணர்ச்சிக்கும் உட்படாதவனாகவும் ஆக வேண்டும்.
5. சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து

Page 22
அருள் ஒளி 36
தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்த போதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருக்கலாம். அப்போது அவன் கடவுளிடமே இருக்கின்றான்.
6. உற்சாகத்துடன் இருக்கத் தொடங்குவது தான் சமய வாழ்க்கை வாழ ஆரம்பிப்பதற்கான முதல் அறிகுறியாகும். துன்பம் பாவத்தினால் ஏற்படுகின்றது. அதைத் தவிர பாவம் விளைவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இருளடைந்த முகங்களோடு உனக்கு என்ன தொடர்பு வேண்டிருக்கின்றது? அப்படியிருப்பது பயங்கரமானது. உன் முகத்தில் இருள் சூழ்ந்திருந்தால் அன்றையதினம் நீ வெளியே போகாமல் உன் அறையின் கதவை மூடிக்கொண்டு உள்ளேயே இரு. வெளி உலகத்திற்கு இந்த நோயைச் சுமந்து கொண்டு போவதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கின்றது?
7. தீர்க்கதரிசிகளின் ஆற்றல் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்தே நீ அறிந்ததில்லையா? அது எங்கே இருந்தது? அவர்களின் அறிவாற்றலிலா இருந்தது? அவர்களில் எவராவது தத்துவத்தைப் பற்றியோ, மிகவும் நுட்பமான தர்க்க நியாயங்களைப் பற்றியோ, ஒரு நூலாவது எழுதி யிருக்கின்றார்களா? அவர்களில் ஒருவருமே அப்படி எதுவும் எழுதியதில்லை. ஒரு சில வார் தி தைகளை மட்டுமே அவர்கள் பேசினார்கள். உயர்ந்த மனநிலைதான்

அருள் ஒளி 37
10.
வாழ்க்கையாக அமைகின்றது. வலிமையைத் தருகின்றது. உயிர் நாடியாக விளங்குகின்றது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால் அறிவாற்றல் எவ்வளவு தான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது.
ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் இலட்சியம் மனிதனின் உண்மையான இயல்பை அறிந்து கொள்வது என்பது தான். மேலும் கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபடமுடியாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்? இதுவே வேதாந்தம் அறிவுரையாக வழங்கும் செய்தியாகும்.
உண்மையில் நீ துTயப் மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால் உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால் நாம் அதை வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடக்க நாம் அனைவரும் முயற்சி செய்வோம்.
உன்னிடமுள்ள தெய்வீகத் தன்மை தான் கடவுள் ஒருவர் இருக்கின்றார். என்பதற்குறிய சான்றாகும். நீ ஒரு தீர்க் கதரிசியாக

Page 23
ஆருள் ஒளி 38
11.
12.
இல்லாவிட்டால் கடவுளைப்பற்றிய எந்த உண்மையும் ஒரு போதும் இருந்திருக்க முடியாது. நீ கடவுளாக இல்லாவிட்டால், கடவுள் என்ற ஒருவர் இருக்கவில்லை. இனி இருக்கப்போவதுமில்லை. - இந்த உண்மையே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியம் என்று வேதாந்தம் சொல்லுகின்றது. நாம் ஒவ்வொருவரும் தீர்க்கதரிசியாகவே ஆகவேண்டும்.
கடவுள் இல்லாதது என்று எதுமே இல்லை. உயிருள்ள கடவுள் உனக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மனித உடலிலுள்ள மனித ஆன்மா ஒன்றுதான் வழிபட வேண்டிய ஒரே கடவுளாகும். விலங்குகளும் கூடத்தெய்வத்தின் கோயில்கள் தான், ஆனால் மனிதனே இவற்றுள் மேலானவன் . கோவில்களில் தாஜ்மகாலைப் போல மனிதன் உயர்ந்தவன். கடவுளை நான் அத்தகைய கோவிலில் வழிபட முடியவில்லை என்றால் வேறு எந்தக் கோயிலும் எனக்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை.
சமய சாதனையின் நுட்ப இரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அணுடிப்பதில் தான் அடங்கியிருக்கின்றது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வதுதான் சமய சாதனையின் முழு உணி மையாகும் . மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்.

அருள் ஒளி 39
3.
மதம், ஆன்மீக வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ஒழுக்கம், நீதி ஆகிய இவை, பரந்த மனிதகுலம் முழுவதிலும் புகுந்து நற் செயலாற்றமுடியும்.
தாய் நாடு.
உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மீகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப் பளித்தவள் இந்தியத் தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இனி னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகின்றார்கள்.
நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரீகத்தை ஏற்றிக் கொண்டு வந் திருக் கினி றது. தனது எண் ணற்ற அரும் பெரும் செல் வங்களால் உலகம் முழுவதையும் மேலும் வளமாகி கிக் கொண்டிருக்கின்றது. பல ஆயிரக் கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை எனும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கின்றது. பல்லாயிரக் கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலில் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்ற படியே இருக்கின்றது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் துவாரம் விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைமைக்கு உங்களுடைய தவறுகளே காரணம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைக்

Page 24
அருள் ஒளி 40
குறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் அதில் அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இப்போது நீங்கள் செய்யப்போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் தூற்றிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் சண்டையிடப் போகின்றீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பழுது பார்க் க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன் படுத்தப் போகின்றீர்களா? நமது இதயத்தை மனமுவந்து அந்தப் பணிக்கு தருவோமாக.
3. நமது நாட்டில் உயிர் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் சாம்பல் பூத்து இறந்து விட்டதைப் போலக் காணப்படுகின்றது. ஆனால் அதன் அடியில் நெருப்பைப் போன்று இன்றும் கனன்று எரிந்து கொண்டிருக்கின்றது. நமது நாட்டின் வாழ்க்கை மதத்தில் தான் அமைந்திருக்கின்றது. அதன் மொழியும் மதம் தான். மதமே அதனுடைய கருத்துக்கள் அதனுடைய அரசியல் , சமுதாயம் , நகராட்சிமன்ற அமைப்புக்கள், நோய்த்தடுப்பு வேலைகள், பஞ்ச நிவாரணப்பணிகள் ஆகிய இவை எல்லாமே மதத்தின் மூலமாகத்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இனிமேலும் அப்படியே நடத்தபடவேண்டும். அவ்விதம் இந்தப்பணிகள் நடத்தப்படா விட்டால் ஒன்றுமே இல்லாமல் பயனற்றவையாக முடிந்து போகும்.
4. ஆன்மீகத் துறையில் பெரும் வலிமைபடைத்த சமயச் சான்றோர்கள் தமது சமுதாயத்தை

அருள் ஒளி 41
முன் னின்று வழிநடத்துகின்றார்கள் . தேவைப்படும் போது மீண்டும் அவர்களே சமூகத்தின் விதிமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றியமைக்கின்றார்கள். அவர்கள் சொல்வதை நாம் அமைதியுடன் கேட்கின்றோம். அவர்களின் க்ட்டளைகளைப் பின்பற்றி நடக்கவும் செய்கின்றோம்.
5. முதலில் இதைப்புரிந்து கொள்ள முயற்சி செயப் யுங்கள் மனிதன் சட்டங்களை உருவாக்குகின்றானா? அல்லது சட்டங்கள் மனிதனை உருவாக்குகின்றனவா? மனிதன் பணத்தைச் சம்பாதிக்கின்றானா? அல்லது பணம் மனிதனைப் படைத்ததா? முதலில் மனிதனாக இரு. யாவும் தாமாகவே உன்னைத் தொடர்ந்து வருவதைக் காண் பாய். வெறுக்கத்தக்க பொறாமையையும் , கர்ச் சனையையும் விட்டுவிடு. நல்ல இலட்சியத்துடன் வாழ்ந்து மறைந்ததற்குப் பின்னால் ஓர் அழியாத இடைவெளியை விட்டுச் செல். ء خیبر
6. உண்மை, அன்பு நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரந்த உலகம் ஒளியை வேண்டுகின்றது. அதை எதிர்பார்க்கின்றது. அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அணி னையை உலகம் முழுவதும் பிரகடனப்படுத்துங்கள்.
7. தனி மனிதரோ அல்லது நாடோ மற்றச் சமூகத்தினரிடமிருந்து விலகி நின்று

Page 25
அருள் ஒளி 42
வாழமுடியாது ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதும் வாங்குவதும் தான் இயற்கையில் உள்ள விதியாகும். இந்தியா மீண்டும் ஒருமுறை தன் உயர்ந்த நிலையை அடைய விரும்பினால், தன்னிடமுள்ள அரும் பெரும் ஆன்மீகப் பொக்கிசங்களை வெளியே கொண்டு வந்து ஏனைய உலக நாடுகளிடையே பரப்பியாக வேண்டும். அதற்குப் பதிலாக மற்றநாடுகள் கொடுப்பதையும் பெறத்தயாராக இருக்க வேண்டும். இது முற்றிலும் இன்றியமையாத தாகும்.
8. செய்துமுடிக்கப்பட வேண்டிய கடமைகளோ ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான வசதிகளோ இல்லை. அறிவு இருக்கின்றது. ஆனால் பணிபுரிவதற்கான கைகள் இல்லை. நம்மிடம் வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆற்றல் இல்லை. உலக சமத்துவம் பற்றிய கொள்கை கூறப்பட்டிருக்கின்றது. நடைமுறை வாழ்க்கையிலோ வேற்றுமை.
9. கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம் உதடுகளை முடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். இந்த நாட்டின் கதிபோட்சத்திற்காகவும் உலகத்தின் கதி மோட்சத்திற்காகவும் பணியாற்றுங்கள்.

அருள் ஒளி 43
பல் சுவை
1. நெஞ்சம் புண்பட்டபோதும், துன்பப் புயல் நம்மைச் சூழ்ந்த போதும், வாழ்க்கையில் இனி ஒளியையேகாண முடியாதா என்று தோன்றும் போதும் நம்பிக்கையும் துணிவும் அறவே நம்மைவிட்டு அகன்று விட்ட போதும், பெரிய ஆன்மீகப் புயல் சூழ்ந்த நிலையின் நடுவில்தான் பிரம்மத்தினுடைய ஒளி நமது உள்ளத்தினுள் பிரகாசிக்கின்றது. ஆடம்பர வாழ்க்கையின் மடியிலே தாலாட்டப் பட்டு வளர்ந்தவன், றோசா மலர்ப்படுக்கையில் இருப்பவன் அவன் என்றைக்காகிலும் சான்றோனாக ஆகியிருக்கின்றானா?
2. அறிவு உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவுக்கு பகுத்தறிவு என்னும் . ஒரே நிலை மட்டும் தான் உண்டு. அந்த ஒரு நிலைக்குள் இருந்தபடியே அறிவு வேலை செய்கின்றது. தனக்குரிய அந்த எல்லையைக் கடந்து அறிவு செல்ல முடியாது. அறிவாற்றலால் ஒருபோதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக்கொண்டு போகின்றது. இதயம் அறிவையும் கடந்து, தெயப் வீக அருள் என்னும் நிலையை அடைகின்றது. அன்புள்ளம் கொண்ட மக்களுக்குப் பாலிலிருந்து வெண்ணெய்

Page 26
அருள் ஒளி 44
கிடைக்கின்றது. அறிவாற்றல் நிறைந்த மக்களுக்கோ மோர் மட்டுமே கிடைக்கின்றது.
3. நாம் அனைவரும் நேர்மையானவர்களாகத் திகழ்வோம் இலட்சியத்தை நம் மால் பின்பற்றமுடியவில்லை என்றால் பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் இலட்சியத்தை இழிவுபடுத்தாமல் இருப்போமாக.
4. மனிதகுலம் பிழையிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை. மாறாக உண்மையிலிருந்து மற்றோர் உண்மைக்கு மனிதகுலம் செல்வதாக நீங்கள் கருதலாமேயன்றி, பிழையிலிருந்து உண்மைக் குச் செல்கின்றோம். என்று நினைப்பது பொருந்தாது.
5. உயிரினம் தாழ்ந்ததாக இருப்பதற்கு ஏற்ப புலனின்பத்தை நாடும் நாட்டமும் அவற்றில் மிகுந்து காணப்படும். எல்லா நாடுகளிலும் மனித இனத்தில் தாழ்ந்த இயல்புடையவர்கள் புலனின்பங்களிலேயே மகிழ்ச்சியடையவர்களாக இருக்கின்றார்கள். அதே சமயத்தில் பண்பாடு மிக்கவர்களும், படித்தவர்களும், சிறந்த சிந்தனை, தத் துவங்கள், கலைகள், விஞ்ஞானங்கள், ஆகியவற்றில் இன்பம் காண்பவர்களாக இருக்கின்றார்கள். ஆன்மீக வாழ்க்கை என்பது இவற்றையெல்லாம் கடந்த மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கின்றது.
6. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற

அருள் ஒளி 5ے
நேர் மையும் , அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்தக் குணங்கள்தாம் அவர் வாழ்க்கையில் அடைந்த சிறந்த வெற்றிகளுக்குக் காரணங்களாகும்.
7. உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இம்மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றதோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ, மண்ணுலகிலோ இல்லை. இம் மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
8. மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் தர்மமாகும். மற்றவர்களுக்கு தீமை செய்வது பாவமாகும். வலிமையும், ஆண்மையுமே தர்மம். பலவீனமும் கோழைத்தனமும் தீமை. சுதந்திரமான வாழ்க்கை புண் ணியமாக அமைகின்றது.
9. என் சொற்களின் உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டு, அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக் கொள். போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக் கின்றேன். அதில் சிறிதளவாவது செயலுக்கு கொண்டுவாருங்கள். அறிவுரைகளைக் கேட்டதன் பயனாக வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவீர்களளாக.

Page 27
அருள் ஒளி 46
அந்த மூன்று பொருட்கள்
பேண வேண்டியவை: தீமை செய்யாமை, உண்மை, தூய்மை. பெற்றிருக்க வேண்டியவை: நம்பிக்கை, பொறுமை, இனியபண்பு இருக்க வேண்டியவை: நாணயம், நேர்மை, ஒழுக்கம். கொள்ள வேண்டியவை: அமைதி, இரக்கம், தோழமை அடைய வேண்டியவை: உண்மை, ஒழுங்கு, ஊக்கம் அழிக்க வேண்டியவை: இறுமாப்பு, பெருமை, அகந்தை. வெற்றி கொள்ள வேண்டியவை: காமம், சினம், பேராசை. விட்டுவிட வேண்டியவை: தன்னலம், ஆசை, கபடம். கட்டுப்படுத்த வேண்டியவை: மனம், புலன்கள், மூச்சு விசாரணை செய்ய வேண்டியவை: நான் யார்? உண்மை எது? மாயை எது? வளர்க்க வேண்டியவை: தர்மம், சமாதானம், நலம். ஆதரிக்க வேண்டியவை: ஒற்றுமை, உணர்வு, அறிவாற்றல், நட்பு, செய்ய வேண்டியவை: மறைநூல் ஒதுதல், சிந்தித்தல், தியானம், பின்பற்ற வேண்டியவை: குருவின் அறிவுரைகள், மறைகளின் கட்டளைகள், மனச்சாட்சியின் ஆணைகள்.

அருள் ஒளி 47
10.
12.
13.
14.
15.
இன்றியமையாத போதனைகள்
காலை நான்கு மணிக்கு விழித்தெழு, ஜெபமும் தியானமும் செய், சாத்வீக உணவைப் புசி, வயிற்றை வரம்பின்றி நிரப்பாதே. சாதுக்கள், துறவிகள், ஏழைகள், நோயாளிகள், கஷ்டப்படுகின்றவர்களுக்கு சேவை செய். உன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மம் செய். தினந்தோறும் பகவத்கீதை ஓர் அத்தியாயம்
Lig. வீரியத்தைக் காப்பாற்று தனியாகப் படுத்துறங்கு. ராஜஸ உணவு, மதுபானம், புகை தவிர். ஏகாதசி அன்று உபவாசம் இரு. அல்லது பால், பழம் மட்டும் உட்கொள். தினநீ தோறும் இரணர் டு மணி நேரம் மெளனத்தைக் கடைப்பிடி, உணவருந்தும் போது பேசாதே. எவ் வகையிலும் உணி மையே பேசு, குறைவாகவும், இனிமையாகவும் பேசு. தேவைகளைக் குறைத் துக் கொள் . சந்தோசமாக வாழ்க்கை நடத்து. மற்றவர் உணர்ச்சிகளைப் புண்படுத்தாதே எல்லோருடனும் அன்பாக இரு. தவறுகளைப் பற்றிச் சிந்தனை செய், தன்னைத் தானே விசாரணை செய்துபார். வேலையாட்களை எதிர்பார்த்திருக்காதே, உன் வேலையை நீயே செய்து கொள். காலை விழித்தவுடனும், இரவு உறங்கும் முன்பும் ஆண்டவனை நினை.

Page 28
அருள் ஒளி 48
16.
17.
18.
19.
உயர்ந்த நோக்கம், எளிய வாழ்க்கை என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடி. ஜெபமாலையை எப்போதும் கழுத்தில் அணிந்துகொள். தியானம் செய்வதற்கு தனியாக ஓர் இடம் வைத்திரு. ஆன்மீக தினசரி குறிப்பு எழுதிவா. தினசரி வாழ்க்கை முறையை வகுத்து அதை ஒழுங்காக கடைப்பிடி. தினசரி யோகாசனப் பயிற்சி செய்துகொள்.
உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன், கோன் முறை அரசுசெய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க!. நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க! மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.


Page 29