கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து நாடோடிப் பாடல்கள்

Page 1


Page 2


Page 3

ஈழத்து நாடோடிப் பாடல்கள்
பதிப்பாசிரியர் :
வித்துவான் F, X, C. நடராசா
மட்டுநகர்.
பதிப்பு : ஆசீர்வாதம் அச்சகம்,
யாழ்ப்பாணம்.
1962
உரிமை பதிவு (விலை ரூ. 1-50

Page 4
முதற் பதிப்பு: DIT óf 1962 -
யாழ்ப்பாணம், 32, கண்டி வீதியில் உள்ள ஆசீர்வாதம் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்று வெளியிடப் பெற்றது.
qqSqSSLASLSSLLSLSSSSSASSASqSqJqSqqSLLSLSSLSLSSLSLSLSLSLSLASSSASLSSASSSqSAqSqqSLLSLLASLSLLLLLSSASLSSASASqSqqSAS

நீட்டுமக்கள் பாடி மகிழும் பாடல்களே காட்டுப் பாடல்களாம். காட்டுப் பாடல்கள் வழங்காத ஊர் களோ இல்லை. உலகெங்கும் அவை வழங்குகின்றன. ஈழத்திலும் பல பாடல்கள் வழங்கிவருகின்றன. இப் பாடல்கள் ஊருக்கு ஊர் மாற்றமுடையன. ஏனெனில் இவை ஏட்டில் எழுதாதவை; இலக்கணத்தைப் பாரா தவை; இதயத்துடிப்பில் எழுந்தவை; ஆகவே உள்ளத் தைக் கவர்ந்தவை. எனவே நிலைபேறு பெற்றவை. கால வெள்ளத்திற்கு இரையாகவேயில்லை.
ஈழத்தில் வழங்கும் காட்டுப் பாடல்களைச் சேர்க்கும் முயற்சியில் யான் ஈடு பட்டு என்னிடம் பயின்ற கன் மாணுக்கரிடம் என் கருத்தை வெளியிட் டே ன். அன்று அட்டா8ளச்சேனை ஆசிரியர் கல்லூரியிற் கடமையாற்றினேன், அங்கு பயிற்சிபெறவந்த ஆசிரி யர்களிற் பலர் ஆங்காங்கு வழங்கும் காட்டுப் பாடல்களைச் சேகரித்துத் தருவதிற் பெரிதும் ஊக்கங் காட்டிஉழைத்துவந்தனர். சோனகசமூகத்தைச்சேர்ந்த கல்லாசிரியர்கள் பலர் பலகவிகள் சேகரித்துத் தந்தனர். கண்பர் மருதமுனை ஏ. எம். சரிபுதின் ஆசிரியர் அவர்கள் ஆசிரியராகப் பயிற்சி பெறுங் காலத்தே தாம்சேகரித்த பல கவிகளைத் தந்துதவி, அகப்பொருளிலக்கணத் துடன் ஒப்பிட்டுப் பார்த்து தி2ணதுறை வகுத்து நூல் வடிவில் வெளியிடுமாறு தூண்டி நின்றனர்.
ஏருவூர் எம். எம். சாலி அவர்களும் அக்கரைப் பற்று எம். எம். இபிறலெல்வை அவர்களும் அட்டா ளைச்சேனை ஆசிரியகலா சாலையிற்பயிற்சி பெறும்போது தாங்கள் தொகுத்துவைத்த ல்விப்புத்தகங்களை தந்து உதவியதுமன்றி எழுத்து வேலையிலும் துணை புரிக் தனர். 1950ஆம் 51ஆம் ஆண்டில் இவையெல்லாம்

Page 5
IV
கடந்தன. காட்டுப் பாடல்கள் இலங்கை முழுவதிலு மிருந்து சேகரிக்கப்பட்டன. தமிழ் ஆசிரியர்கள் பலர் கவிகளையும் பாடல்களையும் எழுதியனுப்பினுர்கள். பாடல்கள் யாவும் தொகைவகை செய்யப்பட்டன.
கொம்புமாாநகரில் எமக்கு வேறு உத்தியோகம் கிடைத்தது. தினகரன் ஆசிரியர் பண்டிதர் வே. க. ப. காதன் அவர்கள் கவிகள், காட்டுப்பாடல்கள் பற்றி எழுதுமாறு தூண்டினர். எழுதினேன்; தினகரனில் வெளிவந்தன பல கட்டுரைகள்,
வெளிவந்த கட்டுரைகளையும் வேறும் பல்வேறு பாடல்களையும் சேர்த்து நூல்வடிவமாக்கி அச்சேற்ற முயன்றேன். கைகூடவில்லை. யாழ்ப்பாணஞ் சென் றேன்; 'விவேகி' ஆசிரியரைக் கண்டேன். ஆசிரியர் அவர்களும் அச்சேற்ற ஒப்புக்கொண்டார்
இந்நூல் உருப்பெறத் துணைக்காரணமாக நின்ற நண்பர்கள் யாவருக்கும் அச்சேற்ற உதவிய அன்பர் திரு. மு. வி. ஆசீர்வாதம் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த கன்றி என்றென்றும் உரிமையுடைத்து.
F. X. C. Bl stn FT 53, மத்திய வீதி,
மட்டுநகர். -2.62

பதிப்புரை
எமது அச்சகத்திலிருந்து வெளிவரும் * வி வே கி ?? என்னும் மாத இகழுக்கு விடயதானம் செய்து வருபவரும் இலங்கை அரசகரும மொழிப்பகுதியில் தமிழ் ஆராய்ச்சித் துணைவராய்க்கடமையாற்றுபவருமான வித்துவான் F. X. C. நடராசா அவர்களை யாவருமறிவர்
வித்துவான் அவர்கள் தாம் முன்னர் வெளியிட்டுள்ள எண்ணெய்ச்சிந்து, மொழிபெயர்ப்புமரபு,இலங்கைச்சரித்கிரம் முதலிய நூல்களைத் தொடர்ந்து “ஈழத்து நாடோடிப் பாடல் கள்?’ என்னும் நூலை ஆக்கி அதனை வெளி யி ட எமது ஆதரவை விரும்பினர். அவரது விருப்பத்திற்கிசைய ஈழத்து 6ாடோடிப் பாடல்களை நாம் நூல்வடிவமாக ஆக்கியுள்ளோம்.
அச்சேற்றுங்கால் மூலப்பிரதியோடு நாமே ஒப்பிட்டு
பிழைகள் திருக்கியமையாலும், முதற் பகிப்பாகலினுலும் பாடல்களிலே எழுத்துப் பிழைகள் முதலியன ஏற்பட்டி

Page 6
ருக்குமென எண்ணுகின்றுேம். அவ்வித பிழைகளை அன்பர் கள் எமக்கு எடுத்துக்காட்டி மறுபதிப்பில் கிருத்த உதவு
வார்களாக.
நம் முன்னேரின் சுவட்டிலே காமும் செல்லக்கூடிய தாகவும், தமிழ்த் தாய் இன்புற்று விளங்கவும் மறைந்த செல் வங்களை மக்களுக்குப் பேணிவைக்கும் இதுபோன்ற அருங் தொண்டுகன் பல செய்து பல்லாண்டுவாழ வித்துவான் அவர் களுக்கு இறைவன் எல்லா கலன்களும் ஈவானுக.
மு. வி. ஆசீர்வாதம் 32, கண்டி வீதி 'அதிபர்” யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகம்
1-2-62

நாடோடிப் பாடல்கள் தோற்றுவாய்
இலக்கி ம் என்பதனைச் செய்யுள் அல்லது நூல் என்பர் பண்டைத் தமிழர். சங்க இலக்கியம், சாவியங்கள், பிசபக் தங்கள் இவையெல்லாம் செய்யுள்களாலான நூல்கள். இவை கற்ருேசாற் புனையப்பட்டவை; கற்ருர்க்கே உரிமையானவை. படித்தவர்களும் படியாதவர்களும் இன்புறும் பாடல்கள், கதைகள், நொடிகள் இவையெல்லாம் நாடோடி இலக்கியங் ாளாம்.
தொழில் புரியும் மக்க%ள, அஃதாவது 5ெற்றிவியர்வை சிக்த நாள்தோறும் உழைத்து வாழும் மக்களைக் கொண்ட ஊர்மனையை நாடு எனல் பொருத்தமாகும் உண்ண உண வும் உடுக்க உடையும், உறங்க ஊர்மனையும் வேண்டுமன்றே. இவையாவும் உழைப்பால் வருபவை. உழைப்பும் இலகு வானதன்று. காடுவெட்டிக் குளம்தொட்டுப் புரி த ல் வேண்டும். تھی۔
கால்வகை நிலத்திற்கிசைய நால்வகைத் தொழில்கள் நிகழும். வேட்டைத் தொழில், மேச்சற் தொழில், உழவுத் தொழில், கடற் தொழில், இவற்றை மக்கள் செய்யத் கலைப்படனர். செய்தொழில் வேற்றுமையால் பல்சாதிப் பகுப்பினாாயினர். பல்சாதியினரும் தங்கள் தங்கள் கடும் உழைப்புகளை உல்லாசமாகப் புரிந்து கொள்ளத் தெம்மாங் குகள் பாடிமகிழ்ந்தனர். ஆடிப்பாடி வேலைசெயதால் அலுப்பு இருக்காதுதானே. ஆட்டமும் பாட்டமும் இசையோடு நிகழ்ந்தன. ஆகவே இசைப்பாடல்கள் தோன்றின. இப் பாடல்கள் கிராமங்தோறும் தோன்றின; 5ாடுகள் தோறும் தோன்றின. கிராமங்க தோறும் கடந்த தொழில்கள் யாவற்றிற்கும் பாடல்கள் கிளம்பின. உழுதல், விதைத்தல்,
a. e)

Page 7
4.
களைபிடுங்கல், அரிவி வெட்டல், உப்பட்டி கட்டுதல், குடு மிதித்தல், ஏற்றம் இறைத்தல், நெல்குற்றுதல், வண்டி ஒட் டுதல், படகு ஒட்டுதல், என்ற தொழில்களை அலுப்பின்றிச் செய்ய நாடோடி இலக்கியங்கள் தோன்றலாயின. இன்னும் இளைப்பாறும் நேரங்களிற் பொழுது போக்காகச் செ யும் ஊஞ்சலாடல், பல்வகைவிளையாட்டுக்கள், இவற்றிலும் பாடல் கள் எழுந்தன. மழை காலத்தில் வீட்டிலிருக்கவேண்டியதா யிற்று. கூடைமுடைதல், கடகம், பாய் இழைத்தல் இவை கடக்கும்போது கதைகள் சொல்வராயினர். பிள்ளையைச் தொட்டிலிலிட்டு ஆட்டும் போதும், பிள்ளையின் விளையாட்டுக் களைப் பார்த்து மகிழும் போதும் இசைப்பாடல்கள தோன் றலாயின. துன்பத்திலும் பாடல்கள் எழுந்தன. ஒப்பாரி
அவ்வகையினதே.
பாட்டாளி மக்கள் பாடுபட்டுத் தேடித் தந்த பல்வகைச் சம்பத்துக்களில் நாடோடி இலக்கியமும் ஒன்ருகும் பாட் டாளிமக்கள் நமக்குக் கிராமக் தங்கனர்; பட்டணம் தந்தனர்; நாடு தந்தனர்; சமூகந்தந்தனர்; நாடோடி இலக்கியமுக் கக் தனர் நாடோடி இலக்கியத்தைத் தமிழ்ச் சமுகம் அறிந்து (δυτό ο இப்போதுதான் காலெடுத்துவைகன்ெறது. மேல் 6ாடுகளில் அதற்கு ஏலவே பெருமதிப்பு ஏற்பட்டு விட்டது; நூல்வடிவங்களிலும் வந்துள்ளன. கீழைக் தேசங் சளின் மொழி, இலக் யம், ஒவியம் என்பவற்றிற்கு உயிர் அளித்து முள்ளார்கள் மேலமக்கள். இவ்வாறிருந்தும் நாடோடிஇலக்கி யம் தமிழ்மக்களின் வெகுகவனத்தை இன்னும் ஈர்க்கவில்லே. இவ்வகை இலக்கியத்தின்மேன்மையை உணர்ந்தார்பலரில்லைப் போலும், அக்காலத்தில் இவ ற் றி ன் மேன்மையை உணர்ந்தே இளங்கோவடிகள் தமது செந்தமிழ்காப்பிய மாகிய சிலப்பதிகாரத்தில் நாடோடிப்பாடல்களின் சாயலிற். பல கவிகள் புனேந்துள்ளார்: மணிவாசகர் திருவாசகக் கிலும் நாட்டுப் பாடல்களின் சாயல் தொனிக்கின்றது.

நாடோடி இலக்கியங்களினல் நாமடையும் பயன்தான் என்னர் பயண தெரியாது அவற்றில் ஈடுபடுவது எவ்வாறு?
மக்களின் பாரம்பரியம், பண்பாடு, கலைகள் இவற்றை நமக்கு அவை புலப்படுத்தி மக்கள் வரலாற்றினை அறிய உதவுகின்றன மக்களின் பழக்கவழக்கங்களைப் புலப்படுத்து கின்றன. மக்கள் அனுபவித்த இன்ப துன்பங்களை அவை எடுத்துக் காட்டுகின்றன.
எழுத்தும் சொல்லும் நாம் படிப்பது பொருளுணர் தற்கே என்ருர் இறையனர் அகப்பொருள் உரையாசிரியர். பொருளென்பது அகமும் புறமும். இல்லறவாழ்க்கையை யும் அரசியல் வாழ்க்கையையும் நமக்கு நாடோடி இலக் கியங்கள் எடுத்தோதுகின்றன. r
பல்வேறுவகை நம்பிக்கைகளை நாம் அறிய அவை உதவு கின்றன. ஒய்வு நேரங்களில் மக்கள் அனுபவித்த இன்ப வாழ்க்கையை எடுத்கியம்புகின்றன. ஆடிப்பாடி விளையாடிய ஆட்டங்களை நமக்கு உர்ைத்துகின்றன. மக்களின் தொன்மை நாகரிகத்தையும் அது வளர்ந்த வரலாற்றையும் அவை உரைக்கின்றன. இதனுல் நம் முன்னேற்றவழி வகைகளுக்கு அவை உபகாரமாக இருக்கின்றன கல் வெட்டுகள், சிலா சாசனங்கள் நமக்கு எவ்வாறு உ தவுகின் றனவோ அவ்வாறே இவையும் உ த வுகின் றன சரித்திரத்தில் அஃதாவது மொழி, காகரிகம், பண்பாடு இவற்றின் வரலாற்றில் ஈடுபடும் யாவர்க்கும் நாடோடி இலக் கிங்கள் உறுதுணையா யமையுமென்பதே துணிபு.
கதைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், பழமொழி கள், விடுகதைகள் அல்லது கொடிகள், ஒப்பாரி, கவிகள், தாலாட்டுகள், கும்மிப்பாடல்கள். ஊஞ்சம்பாடல்கள், கப்பற் பாட்டுகள், பாலர் விளையாட்டுப்பாடல்கள், இவையெல்லாம்

Page 8
நாடோடி இலக்கியங்களில் அடங்கும். இவைகளைப் போற்று வார் இன்று அகன்று விட்டனர் புதுப்புதுக் கதைகள் பு?னவாகும் கவிதைகள் தொடுப்பா ருமாக மாறிவிட்டனர். ஆண்டவன் படைப்பைப்போல் ஒன்று இல்லாமையிலேயே ககைகள்உருவாகின்றன. இக்காலக்கதைகளுக்கு உருவகமு மில்ல; படிப்பனையுமில்லை, கதைசொல்லும் ஆற்றலும் அக் காலத் துப் பாட்டிமாருக்கு இருக்ததுபோல அமையவுமில்லை.
ஒப்பாரிகள், தாலாட்டுகள் காட்டிற் குன்றிவிட்டன. வாய்திறந்து சோகந்தீர ஒப்பாரி படிக்கமுடியாது மலைக் கின்றனர்; இக்காலத்துப் பெண்கள். படிப்பு வாசினையற்று கைக்கீறு போட்ட பெண்கள் சொற்களை அடுக்கி எதுகை மோனை அமைய ஒப்பாரி பாடும்போது நாமுஞ் சேர்ந்து அழக்கான்வரும். இக்காலத்துப் பெண்கள் அழுவதே யில்லை ; பின்னர் எவ்வாறு ஒப்பாரி வரும்.
கவிதை கவிதை என்று கூச்சலிடுகின்றனர் இக்காலத்துக் கவிகள். இவர்கள் கவிகளில் மோனேயுமில்லை ; முகனையு மில்லை புதுமாதிரிக் கவிதைகளாம். பழைமையிற்ருனே புதுமை தோன்றுதல்வேண்டும். இதற்கு முதலிற் பழைமை தெரிதல் வேண்டும். பண்டைமக்களின் பாடல்களைக் கற் மறிதல் வேண்டுமன்முே. வசனக்கவிதை என்றெரு புதுத் தினிசு இக்காலத்தில் அதிகம் பயின்று வருகின்றது. மேலை காட்டில் இது அகிகம். கவிதைக்கு வாய்ப்பில்லாத மொழி களில் வசன் கவிதைக்கு இடமிருக்கும் அல்லது வாய்ப் பிருந்தும் புலமைமிக்க புலவர்கள் வாய்க்கவில்லையென்றல், என் செய்வது வசன கவிதையாகுதல் இயற்றலாந்தானே; தமிழ்மொழிக்கு இவ்வக்ைக்கேடு இன்னும் ஏற்படவில்லை; னிமேல் எத்தகைய நிலை வருமோ தெரியாது. வசன கவிதையென்று பேராசிரியர் சுந்தாம்பிள்ளை பா டி ன ர்; பாரதியும் பாடினர். இருவர் கவிதைக்குமுளள தாாதம்மி யங்களை அறிஞர்கள் கருத்திற்கொள்வார்களா?

இன்னும் வசன கவிதைகளைப் பார்க்கவேண்டுமானல் ஏன்; அம்மானை, மாலை, கவிதை இவற்றைப் பார்த்தாலும் புலப்படும். இவைகளும் பழையனவே இவற்றைப் படிக் தறியாதார்க்கு இக்காலத்து வசன கவிதைகள் புதுக்கினி சாகவே காணப்படும். இக்காலத்துக் கவிதைகளிலும் பார்க்க ஒப்பாரிகள். அஃதாவது படிப்பு வாசினையற்ற பெண்களின் கவிதைப் போக்கு வெகு அழகாகவிருக்கும்.
ஈக்குப்போல் மூக்கல்லவோ-உமக்கு இளம் பிறைபோல் நெற்றியல்லவேரு கையுங் கணக்கொழுதும்-உமது கறுத்த விழி பார்த்தெழுதும். விரலுங் கணக்கெழுதும்--உமது வெள்ளை விழி பார்த்தெழுதும்.
இவ்வொப்பாரிக்கண்ணிகளில் அமைந்துகிடக்கும்உவமை களென்னே; எதுகைமோனைச் சொல்லடுக்குகள் என்னே; சாதாரண கொச்சை மொழிகளிற் பயிலப்படும் கவிதை கசரின் சொல்லழகு எதுகைத் தொனி இவற்றைக் கேட்சி எவ்வளவு ஆனந்தமாகவிருக்கின்றது.
மச்சான் செத்தால் மயிராச்சு கம்பிளி மெத்தை நமக்காச்சு என்று இசைத்துச் சொல்லும் போது தமிழ்த்தேன் சொட்டுகிறது இதில் வந்துள்ள சொற்களோ முழுக் கிராமியம் இன்னும் தற்காலத்தில் சிறுகக் கஞ்சிக்குப் பயறு போட்டாற்போல் சில ஆங்கில வார்த்தைகளை வைத் துப் பேசுவதும், கவிதை ஆக்குவதும் வெகு சகாசம். அவ்வா றெழுந்த ஒரு கண்ணி இது.
ஏன் காணும் நிற்கிறீர் ரோட்டிலே-கொஞ்சம் இளைப்பா றிப் போங்காணும் வீட்டிலே

Page 9
பழமொழிகள் கூட இது காலத்தில் புதிது புதிதாக வருகின்றன அவ்வாறு வந்த பழமொழி இது.
‘எல்லாரும் றேஸ் ஒடுகிருரர்களென்று ஈழையர் வீட்டுச் சொந்தியரும் றேஸ் ஓடினராம் இதில் றேஸ் (Race என்ற ஆங்கிலச்சொல் வந்தாலும் தமிழ்ப் பழமொழிகள்போற் தொனிக்கின்றதல்லவா ?
கிராமங்தோறும் மக்கள் விவசாயம் செய்கிரு?ர்கள். விவசாயஞ் செய்யும் மக்கள் வானத்தை எதிர்பார்த்திருப் பர் வானசாத்கிரம் அறிந்து மழைபெய்கற்கான அர் குறிகளையும் அவதானத்தின் மூ ல ம் அறிந்துகொள்வர். அவ்வகை மழைக்காலமாகிய கார் காலத்தை நாட்டுப் புறத்து வாழும் உழவர்கள் பாடிய கவிகளில் காணலாம். அகில் அமைந்துள்ள அழகினைப் பாருங்கள் :
கன்னிக் கிரான்குருவி
கடும் மழைக்கு ஆத்தாமல் மின்னிமின்னி பூச்செடுத்து
விளக்கெடுக்கும் கார்காலம் காரானை நீரெழுந்து துணி
ஆலமெல்லாம் நீர்குடித்து வானங் கறுத்த மாரி
செய்யுங் கார்காலம்' இவ்வாறு பலவகைச் சங்கர்ப்பங்களில் எழு ந் தர இாடோடி இலக்கியங்களில் ஈடுபட்டு உழைத்தவர்கள் சிலர் இருக்கிறர்கள். பாரதியாரும் இவ்வகைப் பாடல்களில் சொக்கியுள்ளார். அவர் பல்வகைப் பாடல்களைக் கேட்டு,
‘மானுடப் பெண்கள் வளருமொருகாதலினல் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுங்தேன்'
என்று காதற்கவிதையினேயும்

*ஏற்றர்ேப் பாட்டின் இசையினிலும்’
என்று ஏற்றப்பாட்டினையும், நெல்லிடிக்கும் கோற்ருெரடியார்குக்குவெனக் கொஞ்சு ஒலியினிலும்'
என்று உலக்கைப் பாட்டினையும் 'பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
என்று பள்ளுப்பாட்டினையும், 'வட்டமிட்டுப் பெண்கள்
வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர்
கூட்டமுதப் பாட்டினிலும்
என்று கும்மிப்பாட்டினையும், குறிப்பிட்டு
‘நாட்டினிலுங் காட்டினிலும்
நாளெல்லாம் நன் ருெரலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப்
பறிகொடுத்தேன் பாவியேன்”
என்று நாட்டுப் பாடல்களின் சிறப்பினையும், மேன்மை
யினையும் கயம்படக்கூறியுள்ளனர். இவ்வகை அருமைப்பாடல்
களை பாசதியார் வழிநின்று கட்டுரைப்போமாக.

Page 10

4.
5.
8
பொருள் அடக்கம்
கவிகள்
முன்னுரை is
தோற்றுவாய் k
மட்கக்களப்புப் பகுதியில் வழங்கிவரும்
கிராமியக்கவிகள்
காதலில் வளர்ந்த கவிகள் கருத்தொருமித்த காதலருள்ளத்தில் மலரும் உணர்ச்சிகள்-நாட்டுப்பாடல்களில் செறிந்திலங்கும் அகப்பொருள். O கூடிப்பிரியும் காதலர் குறிப்பிடும் இரவு பகற் குறிகள் தலைவன்மீது கொண்ட காதலைத் தாய்குணர்த்திய
தலைவி Y XA பிரிந்த காதலர் பிரிவாற்ருதிரங்கல்-உள்ளுணர்வைச்
சித்திரிக்கும் உருக்கமிகு கவிகள் உடன்போக்கு a ... கற்பைப் பேணும் தமிழகப் பெண்கள் சுவைமிகுந்த கவிகள்.
11 நாட்டுப்பாடல்கள்
தாய் தந்தையர் கொஞ்சுமொழிப் பாடல்கள்
பிள்ளைகளின் விளையாட்டுப்பாடல்களும்
வேடிக்கைப் பாடல்களும்
கலியாணப் பேச்சு
கும்மிப்பாடல்கள்
நாட்டு மக்களின் ஊஞ்சற்பாடல்கள்
சிருங்கார ரசப் பாடல்கள்
17
罗6
3盛
4S
5。
50
w
63
67
75
8.
S4
36
90

Page 11
2
().
2.
3. 14. 15.
6.
.
8.
19.
20.
கப்பற் பாடல்கள். பள்ளுப் பாடல்கள் அரிவி வெட்டுப் பாடல்கள் ஏர்ப்பாடல்கள் பொலிப்பாடல்கள் சூடுமிதிப் பாடல்கள் கள்ளுப்பாடல். கலியாணப்பாடல்கள் நொண்டிச்சிந்து மீன்பிடிகாரர்பாடல் அடுப்பங்கரைப்பாடல் . பல துறைப்பாடல்கள் தெம்மாங்கு
பறங்கியர் பற்றிய பாடல்கள்
சத்தியவேதப் பாடல்கள் .
96
100
108
08
0
14 114
I I ό
6
117
24
27 130

ஈழத்து நாடோடிப் பாடல்கள்
1 கவிகள்
1. மட்டக்களப்புப் பகுதியில் வழங்கிவரும் கிராமியக் கவிகள்
மட்டக்களப்புப் பகுதியில் தமிழரும் சோனகரும் வசிக் கின்றனர். இவர்கள் இரு சாதியினரும் பேசும் மொழி தமிழ். சிலபல பழக்கங்களும் ஒத்தும் ஒவ்வாதுமிருக்கின் மன. மொழி சம்பந்தப்பட்ட அளவில் தமிழரிலும் பார்க் கச் சோனகர் புலமையில் மிஞ்சிவிட்டனர் என்று சொல்ல இடமுண்டு.
சோனகர் மொழியில் கிராமியம் உண்டேலும் இயற் கைப் புலவர்கள் பலர் ஆங்காங்கு இருக்கின்றனர் சோனது மக்கள் ஆண்களாயினுஞ்சரி பெண்களாயினுஞ்சரி கவிபாடு வதில் திறமை வாய்ந்தவர்கள். ஆண்களும், பெண்களும் பாடிக் களிக்கும் கவிகளை வைத்துக்கொண்டு சிலர் அவற்றை நாடோடிப் பாடல்கள் என்ற தலையங்கத்துடன் எழுதிவிட் டார்கள் பல பத்திரிகைகளில், கவியும்காடோடிப்பாடல்தான்; அது ஒரு பகுதி. ஆனல், சோனக மக்கள் மத்தியிற்முன் கவி?? உண்டு. இக்கவிகள் ஈரடிக் கண்ணிகளாலானவை. அகப் பொருட் துறைகள், இவற்றில் நிறையவுண்டு. ஆனல் தொடர்ந்து பொருள் தருவனவல்ல. சந்தர்ப்பத்துக்கேற்ற முறையாகப் பாடப்பட்டுள்ளன. கவிகள் பொதுமக்கள் மொழியாகிய கிராமியத்திலிருந்தாலும் சொற்கள் இலக்கிபு சம்பந்தமானவை. சிறந்த உவமைகள் நிறையவுண்டு,
w 13

Page 12
4. ஈழத்து காடோடிப் பாடல்கள்
அகப்பொருளில் ஐந்து கிணைகளிலும் தலைவன் கூற் அறுக் குறைவு. தலைவி தோழி கூற்றுகவே எல்லாம் அமை யும். ஆனல் இக்கவிகளில் பொதுவாக எல்லாம் த%லவன் கூற்றுகவே அமைந்திருக்கும். த%லவிகூற்று சிறுபான்மை விாவிவரும். அல்ல குறிப்பட்ட தலைமகன் தன்னெஞ்சொடு கவறல் என்ற துறையாகவரும். பாடலின் அழகைப் பாருங்கள் :
ஓடிவருந் தண்ணிரில்
உலாவிவரும் மீனதுபோல் நாடிவந்தேன் பெண்ணே
உன்றை நட்புதலை எப்படியோ ; ஆருயம் வெள்ளி
அசருரலே தாழுமட்டும் காத்திருந்து போறேனென்று
உன்றை கதவுநிலை சாக்கிசொல்லும். உல்லாசமாய் உலாவித்திரியும் மீன்போல் உன்தன் கட்புக்காரணமாகச் சிறைப்புறம் காடிவந்த தலைமகன் ஆறு யம் வெள்ளி மூன் றாைமணிப் பொழுதுவரை (அசறு.பிற் பகல் மூன்றசை மணிக்கும் یےE0J மணிக்குமிடையில் தொழுகின்ற தொழுகைக்குப் பெயர்) காத்திருந்து சென்று னகையால் துணிமிகுதியால் தன்னெஞ்சொடு கவலுகின் முன் தான் வந்ததற்குக் கதவுகிலையில் அடையாளமும் வைத்துள்ளான். தன் பெயர்ப்பொறியை இட்டிருப்பான் போலும், அகப்பொருளில் அல்ல குறிப்படுதலாவது: தலைவன் இரவுக்குறியின்கண் வந்தவுடன் தன் வா வி%னத் தலைவிக்கும் தோழிக்கும் தெரிவிப்பான் வேண்டிப் பூஞ்சோலை மரங்களிற்கூடித் தங்கியிருக்கும் பறவைக்கூட் டங்களை யெழுப்பிவிட்டாவது குளக்கரையிலுள்ள தென்னை முதலியவற்றின் காய்களைப் பறித்து நீரிலிட்டாவது ஒலி புண்டாக்குவன். அவ்வொலியின் குறிப்பினைக் கொண்டு

கிராமியக் கவிகள் ÍS
தோழி தலைவியை அழைத்துச் சென்று தலைவன்பாற் சேர்ப்பள். சில நாட்களில் தலைவன் வருவதற்கு முன்னரே வேறுவகையில் இவ்வொலி எழும்பல்கூடும். அவ்வேளை தோழி தலைவியுடன் வந்து தலைவனக் காணுது கலவியு டன் கிரும்புவள். அவ்வொலிக் குறியே அல்ல குறி எனப் படும். தலைவியும் தோழியும் வந்து கிரும்பியபின் தலைவன் கோன்றி தலைவி வந்துசென்ற குறிகளைக் கண்டு மயங்கி நிற்பான். அப்பொழுது வேறுவகையில் எழுப்பப் பெற்ற பறவை ஒலியால் ம ரு ண் ட பெடையன்றில் கூவுதலைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும். தலைவியின் மனையிலோ பறவைக் கூக்குரலாலும் அன்றிற் கூவலாலும் பலர் உறக்க மின்றியிருப்பர். அல்லகுறியால் மனையிலுள்ளோர் உறக் கங்கெட அதனுல் தலைவனை மறுமுறை சென்று க | ன வழியில்லாமற்போக இதனையறிந்த தலைமகன் தன்னெஞ் சொடு கவலுகிறன், கவன்றவழி வந்த கவிகளே மேல்
வந்த கவிகள ாகும்.
இனி, இரவுக்குறியின்கண்வந்த தலைமகன் தலைவி யைக் கண்டவுடன் தன் ஆ ைச நேசமெல்லாம் புலப்பட் வாய்விட்டுக் கவிபாடுகின்றன்.
வாழைப்பழத்தை வயிர்
கிறையத் திண்டாலும் தேனெருகால் தின்னுட்டி
தியக்கிறல்ல என்மனது. இஃது குறைநயப்பு என்னுக்துறை. தலைமகன்தன் உல் லாச சீவியக்கிலுள்ள குறைபை எடுத்துக்காடடி தன் மனத்தில் கவிருடம் புரியும் நளினமொழியாளைக் கண்டு களிக்காவிடில் தன்மனம் நிம்மதியடையாதென்கிமுன் தலை வன். குறை6யப்புக் கூறிய தலைமகன் இயற்படமொழிக்கு புணர்ச்சியை விரும்புகிறன் :

Page 13
16 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
வாழைப்பழமே
வடிதயிரு சக்கரையே சீனிாசமான வண்டே உன்னைத்
தின்னமல் போகட்டோ. உன்னைத் தின்னுமற் போகமாட்டேன் எ ன் பது பொருள் கலவிதுய்த்த தலைமகன் தலைவியைப் பிரியும் போது கவலுகின்றன். தலைவி இடையூறின்றி உறைவிடம் சோலை விரும்புகின்றன்.
காக்கே யடியாதே என்றை
காணலே நீ வீசாதே நிலவே எறியாதே என்றை
நீலவண்டாள் போய்ச் சேருமட்டும். தன் தலைவியை நீலவண்டிற்கு ஒப்பிட்டு இயற்கைப் பொருட்களைத் தலைவியின் வழித்துணையாகும்படி ஆசித்து வழியனுப்புகின்றன்.
 

2. காதலில் வளர்ந்த கவிகள்
காதலின்பம், இஃது உள்ளத்தால் உணரப்படுவது.
உள்ளத்தின் மலர்ச்சியிலிருந்து வெளிப்படும் தேனே கவி.
காதல்வழி நின்ற ஆடவர், மங்கையர் உள்ளுணர்ச்சி தேனுய் அமுதமாய்க் கனியாய்ப் பின்னர் கவியாய் வெளி வரும். இவ்வுண்மையினை காட்டுப்பாடல் மூலம் நாம் அறிதல் கூடும்.
படிப்பு வாசினையற்ற காதலனும், காதலியும் உள்ளத் துணர்ச்சிமிகுதியால் ஒருவருக்கொருவர் மாறுத்தாமாகக் கவிபாடி இன்பங் கிளைக்கும் வழக்கம் மட்டக்களப்பு மக்க
ளிடத்து, பெரும்பாலும் சோனக மக்களிடம்_நிறைய உண்டு.
கோவை நூ ல் களி ல் வரும் தலைவன், தலைவி கிணைப்புனத்திலோ, பூங்காவனத்திலோ அ டு ப் பாரும் கொடுப்பாரும் இன்றிச் சந்திப்பார். இது புலனிெறி வழக் கம். ஆனல், சாதாரண வாழ்க்கையை நடாத்தும் நாட்டு மக்களிடம் இவ்வண்ணமான சங்கிப்பு நேராது. தண்ணீர் அள்ளப் போகும் போதும், தோட்டத்தில் கட மாடும்போதும் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத சமயங் களிலும், வெற்றிலை பாக்குத்தேடிக் கேட்கும்போதும் காத லர் சந்திப்பர்; சந்தித்துக் காதல் மொழிகள் பேசுவர் ; இதனை ஊரார் அறிவர்; உற்ருர் அறிவர்; பின்னர் பெற் முர் அறிவர். அறத்தொடு நிற்றல் என்ற துறைக்கே இடமில்லை.
தண்ணீர் மொள்ளுஞ் சாட்டாகத் தலைவி அடிக்கடி வீட்டை விட்டுக் கிளம்புவள். காதற் தலைவனும் அவ் வழியில் மினைக்கெட்டு நிற்பான். கிணற்றடிக்குப் போவ தற்குத் தலைவி உத்தரவு கேட்கின்முள் தன் தாயிடம்,
17

Page 14
18 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
ஆற்றுக்கு அக்கரையால்
ஆசைகுழல் ஊது தம்மா தங்குதில்லை தரிக்குதில்லை
நான் தண்ணிக்குப் போய்வரட்டோ. என்று கவிபாடிக்கொண்டே குடத்தை எடுத்தனள், தாயோ தடுக்கமுடியாத தவித்தாள். கவி மூலமே மறு மொழி சொல்லுகின்றுள்,
தண்ணிக்குப் போமகளே தரியாமல் வாமகளே கண்ணுக்கு உயர்ந்தவரை
கடைக்கண்ணுலும் பாரா தேகா. "தலைமகனே நம்மிலும் உயர்ந்தவன்; அவனைக் காத லிப்பது விண்; முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட லாமா? கவனமாக நடந்துகொள்’ என்ற உறுதிமொழி யைச் சாடையாக அறிவித்து விடைகொடுத்தனள்.
தெரு நீளம் மறுகிமறுகி மான் வெருட்சி காட்டி நடக் கின்ருள். அவள் வருகைக்காகக் காததுக் கிடக்கின்முன் தலைவன்.
அன்புக் களஞ்சியமே
அழகொழுகுஞ் சித்திரமே கற்புக்கணிகலமே உன் னைக்
காணவென்று காத்திருந்தேன். என்று மெய்மறந்து பாடினுன் தலைவன். கலைவி யின் கண்பேசியது ; வாய் அடைத்திருந்தது. திருவாய் மலரச் செய்வதே தலைவனின் நோக்கம். விக்கிரமாதித்தன் பேசாமடங்தையைக் கதைமூலம் பேசச் செய்கான். இங்கு
இவன் கவிதைமூலம் கதைக்கச் செய்யமுயன்று,

காதலில் வளர்ந்த கவிகள் 19
வாழைப்பழமே
வலதுகையிற் சர்க்கரையே ஏலங் கராம்பே உன்னை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்.
மாமி மகளே
மருதங்கிளி வங்கிசமே ஏலங் கராம்பே உன்னே
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்.
என்று பாடிக் கதைபேச முயன்றன். முறுவலன்றிப் பேச்சு வருவதாயில்லை. தலைவனுக்கு நாவும் வறண்டு விட்டது தண்ணீர் விடாய்மூலம் காதல் விடாய் தீர்க்க முயன்றவன் கபிலரைப்போல் “சுடர்த்தொடீஇ கேளாய்" என்று தொடங்க வில்லை. தலைவியும் தண்ணீர் கொடுத் தாளுமல்லள் ; த லை வ னு ம் கை தொட்டானுமல்லன், தாயேயென்று தலைவி அழைக்கவுமில்லை. காதலுக்கு அழி வும் ஏற்படவில்லை; ஆனல் வளர்ந்தது. s
தலைவியின் பொட்டழகும் சட்டையினழகும் தலைவனை மயக்கின. உடனே,
சட்டை போட்டுப் பொட்டெழுதித்
தண்ணிகொண்டு போறகண்டார் சட்டை போட்ட கையாலே
கொஞ்சந்தண்ணிர்தா கண்மணியே. என்று கேட்டான். இது உண்மைத் தாக மல்ல, தன்னுடன் கதைபழக விரும்புக் தாகம். தலைவிக்கும் கதைபழக உள்ளூர விருப்பம் ; ஆனல் தெருவிற் கதை பழக விருப்பமில்லை. கண்டவர்கள் காணுதவர்கள் குறை யெல்லாம் கேட்க விரும்பினுள் அல்லள். எனவே
ஒடையிலே போறதண்ணி
தும்பிவிழும் தூசி விழும்

Page 15
20 ஈழத்து காடோடிப் பாடல்கள்
வீட்டுக்கு வாங்க மச்சான்
வெந்த தண்ணி நான் தருவேன். என்று மிகுந்த கனிவுடன் தன் காதலை வெளிப்படுத்தி “இப்படித் தெருவிலும் வழியிலும் நாம் பழகுவது 5ல்ல தல்ல ; வீட்டுக்கு வாருங்கள் ; உங்களுக்கு உற்றதைப் பெற்ருருக்குக் கூறி ஏற்ற முறையில் என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள்?’ என்று உரைத்து மென்னடை போ ட் டு அசைந்தனள். அவள் நடைபோடும் அழகைக் கண்டு கயந்து,
தண்ணிக் குடமெடுத்து
தனிவழியே போற கண்ணே ! தண்ணிக் குடத்தினுள்ளே தளும்புதடி என் மனசு. என்று பாடி மகிழ்கின்றன். அவளும் இவனை விட்டுப் பிரிய மனமில்லாமற் தடுமாறுகிருள் ; தடுமாற்றத் தையும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அது நாணம்.
இந்த இடம் தப்பினுல் எந்த இடம் வாய்க்குமோ என்பது தலைவனின் எண்ணம். ஆகவே, தன் காதல் அமுதத்தை அள்ளிச் சொரிய எண்ணுகின்முன் தன் கினவெல்லாம் கனவாகக் காணும் காட்சியை நினைக்கின்றன்; தன்லவியின் வடிவழகை கினைக்கின்றன்; குஞ்சி முகத்தைக் கெஞ்சு முகங்கொண்டு கவினுறுகின்ருன். இளம் பிறை நெற்றியைப் போற்றுகின்றன் ; இதயத்திலிருந்து கவி ஊற்றெடுக்கின்றது :
குஞ்சிமுகமும் உன்றை
கூர் விழுந்த முக்காடும் நெற்றி இளம் பிறையும்
என்றை நித்திரையிற் தோணுதுகா.

காதலில் வளர்ந்த கவிகள் 2 A
என்று வாய்விட்டுப் பாடுகின்றன். ஒத்த குணமும் ஒத்த அழகும், ஒத்த கல்வியும் படைத்த தலைவி தன் னிதயத்தை வெளிப்படுத்தாமல் விட்டுக் கொடுப்பாளா; பாட்டுக்குப் பாட்டு, சூட்டுக்குச் சூடு என்ற முறையிற் பாடியே விட்டாள்,
நித்திரைக் கண்ணிலையும்
நினைவிலையும் தோணுறது கரிமா விரலும் மச்சான்
கல்பதித்த மோதிரமும். என்று பாடியதும் தலைவனுக்குக் குதூகலம் உண் டாயிற்று. தலைவியின் அழைப்பை ஏற்று வீட்டுக்குப் போக நினைக்கின்றன்.
மாடாப்புருவே எண்ட
மலைநாட்டு நங்கணமே மாமிக்கொரு மகளே
என்னே மறந்து விட எண்ணுதே என்று கூறிப் பெருமகிழ்ச்சி கொண்டானுயினும் తాడిమ வியின் விடு செல்வதிலுள்ள தொல்லைகளை நினைக்காமி வில்லை. தலைவியினிடமே வழிதேடும் முறையினைக் கேட்டு விடுகின்றன்,
சுற்றிவர வேலி
சுழலவர முள்வேலி எங்கும் ஒரே வேலி
நான் எங்காலே வந்திடட்டும் இவை பரிதாபமான வார்த்தைகள் ; தென்பு வார்த் தைகள் கூறுகின்ருள் தலைவி; வழியும் சொல்லி வைக் கின்றள்,
வெத்திலையைக் கைப்பிடித்து
வெறும் பிளவை வாயிற் போட்டு
kasar. tr. 2

Page 16
92 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
சுண்ணும்பு தேடி நீங்க
சுற்றி வாங்க மச்சானே இவ்வாறு கூறியும் த லை வ ன் ஒருப்படுகின்றனில்லை, அவனுக்கு உள்ளூரப்பயம். அண்ணன் மாரின் காவல் ஒருபுறம் ; தாய் அஞ்சாமை, நாய் துஞ்சாமை, தகப்பன் துஞ்சாமை இவையெல்லாம் அவன் நினைவுக்கு வருகின்றன.
கெருவாலை போக வொண்ணு தேன்போல மணக்கிறது
உறவாட நான் வருவேன்
உங்க அண்ணமார் காவலாமே.
த%லவன் இவ்வாறு பாடுவதைக் கண்டதும் தலைவிக்கு பெருவியப்பும் 5 ய ப் பும் உண்டாயிற்று. *எவராலும் கவர்ந்து கொள்ள முடியாத என்னுள்ளத்தையே கொள்ளை கொண்ட கள்ளனுக்கு இவ்வெளிக் காவல் எம் மாத்திரம். சிறைகாக்கும் காப்பு என் செய்யும் நிறைகாக்கும் காப்பு இல் லாத இடத்து, என்ற வள்ளுவர் வாக்கையும் நினைக்கின்ருள்; கற்பின் வழிகின்ற களலொழுக்கந்தானே இப்போது நிகழ் கின்றது; இல்லொழுக்கத்தில் தலைவனுக்கு உறுதுணையாதல் என்கடன்' என்று பூரிப்புக்கொண்டு மச்சான்' என விளித்து,
காவலானே மச்சான்
கள்ளனுக்கு முள்ளானே வேலியானே வேணுமென்ற
'கள்ளனுக்கு கடப் படியில் வந்து நின்று
காளை கனைக்கு மென்ருரல் எங்கிருந்த போதும் நாகு
எழுந்துவர மாட்டாதோ

காதலில் வளர்ந்த கவிகள் 忽?
சந்தன மரத்தை மச்சான்
சந்திக்க வேணுமென்ருரல்
பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்திடுங்கோ
வாசலிலே வந்து நின்று எருது கக்த மென்ருல் : பசு மாடு தன்வலிய எழும்பி வருவதுபே7 ல் “யானும் எழுந்து வருவேன்; நீங்கள் பொழு துபட துரவுக்குப் பக் கம் வாருங்கள்?? என்று கூறியும் தலைவன் முகத்தில் ஈயா டாதது கண்டு, அவ்வாறு வரப்பயங்தால்,
ஊரு மடங்கினயின்
ஒரு சாமமாயின பின் வாப்பா உறங்கினயின்
வந்தழைத்தால் நான் வருவேன் என்று திடங்கறினள். தலைவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி ; மனக்கிளர்ச்சி; மச்சியென்றன்; தாலிக்கொடியே என்றன் : தாய்மாமன் மகளே , மாமிக்கொருமகளே ; என் முன்.
தாலிக்கொடியே எண்ட
தாய்மாமன் ஈண்டகண்ணே மாமிக்கொரு மகளே
மச்சி மறுகுதலை பண்ணுதேகா *நான் கேட்பதை மறுக்காதே; இன்னுமொன்று கேட் கின்றேன் ; கொடுத்தருள்? என்றனன்.
‘என்ன மச்சான்; நான் எதிர் ஒன்றுஞ் சொல்லா திருக்கப் புதிர் ஒன்று போடுகிறீர்களே ; உள்ளத்தைத் கிறந்துதான் சொல்லுங்களேன்’ என்றதும்,
கன்னி விராலே எண்ட
கற்பழியா நங்கணமே

Page 17
24 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
தங்கமுலாக் கோப்பையாலே
மச்சி நானருந்தத் தந்தாலென்ன "இளம் வரால் மீன்போன்றவளே ; கற்புக்கு உறை விடமான பெண் னணங்கே ; * நான் அருந்தும்படி செய்வா யாக' என்றன். அது கேட்ட கலவி,
தங்கமுலாக் கோப்பையா லே மச்சான் நானருந்தத் தந்தேனென்ருரல் மானமென் னுங் கண்ணுடி
மங்கிடுமோ நானறியேன் கோம் போனதே தெரியவில்லை; காதலரிருவரும் கதையும் கவிதையுமாகக் காதலுரையாடி நின்றனர். தங் கள் காதல் மொழிகளைக் குறைத்துத் தங்கள் இல்லம் செல் லுமுன், இனி நடக்கவேண்டியதை நினைப்பூட்டுமுகத்தான்,
தங்கக்குடமே நடைகத்தி
யொடு நங்கனமே செக்கலுக்கு நான் வருவேன்
திண்ணையிலே காத்திருப்பாய் என்றனன். அப்போது தலைவி பிரிந்து சென்று கொண்டே பாடினுள்.
வந்து வழி பண்ணிடுங்கோ
வம்புக்கிடம் வையாதிங்கோ பூத்தமரங் காய்க்குமென்ருரல்
இந்தப் பூவலன் ருே கை தருகும் இது கேட்ட தலைவன் இந்த வாதுகவிக்கு எகிர் வாது சொல்லி முடிக்கின்றன்.
* ஊராாறிய உறவினாறியச் செய்யமுடியாத விவாகங் அளில் பெண்ணைக் கொண்டு சோறு கொடுப்பித்தலை நிறை வேற்றி மணம் முடித்துவைப்பர். இதனைக் கலத்திற் போடு தல்" என்பர்.

காதலில் வளர்ந்த கவிதைகள் 25
கைவிடுவேன் என்று சொல்லிக் கவலைப்பட வேணுங்கிளி அல்லா அறிய உன்னை
யடையாட்டிக் காட்டுப்பள்ளி.

Page 18
3. கருத்தொருமித்த காதலருள்ளத்தில் மலரும் உணர்ச்சிகள்.
கவிகளிற் செறிந்திலங்கும் அகப்பொருள்
உள் வருணர்ச்சியை ந் தலமையாகக் கொண்டு கருத் தொருமித்த காதலரிடையே நிகழக் கூடியனவற்றை கவி தன் புலன் நெறியில் வைத்துச் சொல்வதே அகப்பொரு
6ff1A,
அறிவும் அழகும்மிக்க செம்மலும் எழிலும்வணப்பும்மிக்க கன்னிகல்லாள் மங்கையொருத்தியும் காட்டுவாரும் கூட் டுவாருமின்றித் தனியிடக்கில் சங்கித்துக் காதல் மொழி பேசி உல்லாச சல்லாபம் பயில்வர்.
பிரிந்து செல்லவேண்டிய நேரத்தில் பிரிந்து சென்று தத்தம் மனை சேர்ந்து காதற் காட்சிக%ள கினைந்துருகுவர். தலைவனுக்குத் தலைவி சதா கண்ணுள் காட்சியளிப்பாள்.
காதலின் வேகத்தால் மங்கைநல்லாள் தெ ய் வ ப் பெண்ணுேவென ஆசங்கிப்பதுமுண்டு. பின் தெளிதல் தேற்றம். தெளிந்த நேரத்தில் தலைவியின் அழகு, உணர்ச் சியையும் கிளர்ச்சியையும் தூண்டிவிட அவள் அழகைக் குறித்துப் பாடலுறும்,
மேகப்பொருளே மெய்ப்பொருளே
பெட்டகமே உன்மேனி மினுமினுப்பு மிருதுடை பளபளப்பும்
கழுத்துப் பொளு பொளுப்பும் கனதன மதமதப்பும் என்
கண்ணெதிரே மின்னுதடி தலைவியின் காட்சியை நினைத்தும் அவளின் அங்கலட் சணப் பொருத்தங்களையும் அவற்றின் மினுமினுப்பு, பள 26

கருக்தொருமித்த காதலர் உள்ளத்தில் மலரும் உண. 27
பளப்பு, பொளுபொளுப்பு, மதமதப்பு இவற்றையிட்டுத் த%லவன் மனம் கற்பனைபண்ணுக் திறனும் இன்பம் பயப் பதாயிருக்கிறது.
பெண்களின் கூந்தலழகில் மந்தர் சொக் குவ து இயற்கை. அதனுலன்ருே பெண்களும் தங்கள் கூந்தலை அடிக்கடி சீர்மைப்படுத்துவதும் பலவகையாகக் கோகி முடிப்பதும் ஐம்பாலாய் வகுத்துக் கட்டலும் உலகப் பிரசித் தம். இந்தக் காலத்துப் பெண்களைப் போல் அந்தக்க லத் துப் பெண்கள் கூந்தலை வெட்டி அரை குறையாக்கிச் சிலுப் பிக் கொண்டு திரிந்ததில்லை. கூந்தலை நீளமாய் வளர்க்கவே தளரா ஊக்கம் காட்டி வந்தனர். உச்சியில் முடிந்தால் ‘முடி? என்பர். ஏதாவது ஒரு பக்கத்திற் கட்டினுற் *கொண்டை? எனப்படும். அப்படியே அள்ளிச் சொருகி விட்டால் 'சுருள்?" ஆகும். மயிர் சுருட்டியை வைத்துச் சுருட்டிவிடுவதும் உண்டு. அது "குழல்’ ஆகும். ‘பனிச்சை' சாதாரணமாய்ப் பின்னித் தொங்கிவிடுவது. இவ் ജഖഞ്ഞ്
எ ன் பது
யான கூந்தல் கட்டும் வழக்கம் அந்தக் காலக் தொட்டுத் தமிழகத்தில் நடைமுறையிலுண்டு. மயிரை வெட்டி ஆயில் சத்தெட்டு வேல் குத்தினுற் போல் "அயர்காக்குகளை’ மாட்டி அலங்கோலப் படுத்துவதில்லை. தலைவியின் மகிழம் பூப்போம் கட்டப்பட்ட கொண்டையும் அவளின் மிக்கு நீண்ட கூந்தலும் அவன் கண்முன் காட்சி கொடுக்கவே கவியும் இதய கமலத்திலிருந்து வெளிவருகிறது.
சீப்பெடுத்துச் சிக்கொதுக்கிச்
சிமிழ்போலக் கொண்டைகட்டி வாந்துமுடித்த மகிழம்பூக் கொண்டை
மார்பில் விழுகுது மடியில் விழுகுது பூமியில் விழுகுது புழுதி பிரளுது
அவள் ஒரு புருடன் முகம் காணுது.

Page 19
28 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
இப்படி அவள் கூந்தல் அங்கமெல்லாம் பு ர ண் டு விழுந்து இன்னும் பூமியிலும் விழுந்து புழுதியிற் புரளு கிற தென்முல் கூந்தலின் அடர்த்திதான் என்னே! நீளக் தான் என்னே !
இனி, த%லவன் கலைவியின் கடையலங்காரத்தையும் உடைத்தூய்மையையும் விரித்துக் கூறுமிடத்து அவ் வலங் காரத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனதில் வேறு கவலைகள் தோன்று என நவில்கின்றன்; அந்திபட்டநேரம் ஆறுமணி வேளையில் நீ
அரண்ட நடைநடந்து மலர்ந்த துகிலுடுத்து நடந்த நடையழகை
நான் நாள்முழுவதும் பார்த்திருந்தேன் இவ்வாறு தலைவன் தலைவியின் காட்சியில் மயங்கித் தவித்திருந்து கவிபாடி இன்புறுவன். மேலே தந்த கவி கள் சாதாரணமாய் வழங்கும் கவிகளிலும் வித்தியாசமானவை. பல சொற்கள் அடுக்கி இடையிற் துள்ளலோசை பெற்று வந்த அடுக்குக் கவிகள் எனப்படும்
இவ்வாறு கவிபாடிக்கொண்டு தனியிடக்கிருந்த தலைமகன் தலைவியின் வடிவழகுஅம்சங்கள் கண்முன் தோன்ற அவற்றை யிட்டுக் கவிபுனைகின்றன். முல்லை சிரித்தாற் போன்ற சிரிப்பும் பல் முத்துப்போற் தோன்றலும், கண்ணில் மருட் சியும், வல்லிக்கொடிபோன்ற இடையும் அவன் மனக்கண் மூன் ஊசலாடும். அப்போது :
முல்லைச்சிரிப்பழகும் முக்தழகும்
கண்ணழகும் வல்லியிடையழகும் என் மனத்தைவிட்டுச்
செல்வதெங்கே இவ்வழகெல்லாம் ஒரு சணமும் செல்லாது. “மீதான் காட்சியளிக்காவிட்டாலும் என் கண்கள் உன்னைப் பார்க்கின் நன" என்றே களிப்படைகின்றன்.

கருத்தொருமித்த காதலர் உள்ளத்தில் மலரும் உண. 29
கொண்டையழகும் கூர்விழுந்த
மூக்கழகும் நெற்றியழகும் பெண்ணுர் என் நெஞ்சைவிட்டு
மாறிடுமோ. என்று இவ்விதம் கெஞ்சொடுகிளந்த தலைமகன், தான் தலைவியைக்கண்டு கனகாலமாச்சே என்று தவிக்கின்றன்.
பாலைப்பழமே என்ர பகலெறிக்கும்
செண்பகமே கண்டுவம்மிப்பழமே உன்னைக்கண்டு கனகாலமாச்சே, இப்படித் தலைவியின் பேரழகில் ஈடுபட்டுருகும் தலை வன் தன் வருங்காலக்தை நினைக்கின்றன். தலைவியுடன் ஆற அமர இருந்த கதைபழகும் காலங்தான் எப்போது வரும் என அங்கலாய்க்கின்றன். ஆசைக்கிளியே எண்ட
ஆசியத்து உம்மாவே பேசிக்கதைக்க ஒரு
பாக கியந்தான் என்று வரும. இஃதிவ்வாருக அகம்கலாய் கொண்ட தலைவன் தலவி யின் முத்தத்தை எதிர்பார்க்கின்றன். கனவில் முத்தம் தரும்படி வாய்விட்டே புலம்புகின்றன். நடையழகி நளினசித்திர
வாயழ இடையழகி கதிசா ஒரு
இனபமுத்தம் தாகிளியே வாய்விட்டுப் புலம்பிய தலைவன் தன் கன  ைவ நினைத்து வாடுகின்றன்,
வட்டமுகமும் வடிவில் உயர் மூக்கும் கட்டு உடலும் என்னைக்
கனவிலேயும் வாட்டுதுகா. (25pr. Lur. 3

Page 20
30 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
தலைவியை நினைத்துக் கனவில் நினைவில் நிக்கிரை யில் வாடிய தலைவன் தலைவியைக் கண்ணுரக் காண்பதெப் போதென்று நினைந்துருகுகின்றன். நெற்றிக்கு நேரே நிலாக்
கிளம்பி வாறதுபோல் வேலி ககுமேலே மச்சிட
வெள்ளமுகம் காண்பதெப்போ என்றும்,
தங்கச் சிலையே மச்சி தாமரைமுக கிலாமுகமே
செக்கல் வடிவே நாங்க சேருவது எப்பகிளி
இப்படியாகக் தலைவன் தலைவியைக் கண் ட நாட் தொட்டுக் தனியிடமிருந்து நெஞ்சொடு கிளத்தல், பண் டைப் புலவர் புலன் நெறிவழக்கத்திலுண்டு. அப்போது தான் பாங்கன் தோற்றமளிப்பான். தன்னேரில்லா தனி நிகர் தலைவனின் உரம் பொருந்திய நெஞ்சு தளர்ந்து தன்வசமற்று பன்னுவதும்உன்னுவத மின்றி இடையிடையே பெருமூச் செறியா நிற்பகைக் கண்ணுறும் பாங்கன் அவ னுக் குற்றதை அருட்டியும் தெருட்டியும் கேட்பன். கேட்ட பாங்கனுக்கு உற்றது கூறிக் தலைவியின் அழகெலாம் எடுத்துரைப்பன். உரம் பொருந்திய தலைவனின் கெஞ் சைக் கொள்ளை கொண்ட வெள்ளைப் பெண்ணத் தேடியூ பார்த்துத் தலைவனுக் கேற்றவள்தான் என்று தலைவனைப் போற்றி இருவரையுஞ் சேர்த்து பைப்பன். இம்முறை இக்காலத்தக் கொல்லாது. உற்ற பாங்கனைச் சற்றும் பெறு தல் சாலாக் கருமம். ஆகவே இக்காலத்தில் த லை வன் தலைவி இருபேரும் தாமாகவே சந்திப்பதற்கேற்ற வழி முறைகளை எற்படுத்திக் கொள்வர். பகற்குறி, இரவுக் குறி சிறைப்புறத்தே எற்படுத்திக் கொள்வர். சிறைப் புறத்தே நடக்கும் இரவுக்குறி பகற்குறி இவற்  ைற ப் பற்றியெழுந்த கவிகளை அடுத்த கட்டுரையில் உரைப்பாம்.

கருத்தொருமித்த காதலர் உள்ளத்தில் மலரும் உண, 31
1.
வெள்ளைப் பொடிச்சி என் ர
வெள்ளிநகை பூண்டபிள்ளை கொள்ளிக்குப் போனியென்ற உன்னைக்
கொடுங்கையிற் தூக்கிடுவேன் காலி விளைபாக்கிற்கும்
கழுதாவளை வெற்றிலைக்கும் ஏலங்காாம்பிற்கும் ஏற்றதுதான
உன்னெழில்வாய் அக்காையிற் கொக்கே
அணிற்கோதா மாம்பழமே இக்கரைக்கு வந்தியென்ருரல்
இனிச்ச கனிநான் தருவேன் ஒன்றுக்குமில்லைகிளி
உன னை விரும்பிறது சங்குசடைக்கும் நல்ல சரிஞ்சுழுந்த
தேமலுக்கும் கொச்சிப் பழத்தை
குறுக்காலை வெட்டினற்போல் பச்சவடச்சேலை உண்ட
பயல்முலேக்கு ஏற்றதுதான் ஆசைக்கிளியே எண்ட
ஆசியத்து உம்மாவே ஒசைக்குரலாலே உங்க
உம்மாவைக் கூப்பிடுங்க இஞ்சி மணங்கா புள்ளை
இலாமிச்சம்வேர் மணங்கா மஞ்சள் மணங்காபுள்ளை
பால்மணங்கா உன் சோடிமுலை தங்கத்தகடே தகதக்க பொன் தகடே வெள்ளித்தகடே உன்னை
விலைமதிக்கக் கூடுதில்லை.
saA S

Page 21
4. கூடிப்பிரியும் காதலர் குறிப்பிடும் இரவு பகற் குறிகள்.
இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தது; தலைவன் தலைவி ஒருவரையொருவர் விட்டுப் பிரிகின்றனர். பின்னர் இர வுக்குறி பகற்குறி ஏற்படுத்தி ஒருவரையொருவர் சந்திப் பர். இரவிலும் சங்கிப்பர் ; பகலிலும் சந்திப்பர்; சேர்க் கின்புறுவர்.
இங்கு குறி என்பது இடம்; அஃதாவது சந்திக் கும் இடம். இரவுக்குறிகளாவன : அட்டில், கொடடில், மால் முகலாயின. இவை தலைவியின் மனையகத்தே புறம்பே
a 6 a.
பகற்குறி இடங்களான கிணற்றடி, மாத்தடி, குளத் தடி, இவை தலைவியின் மனையகத்துக்கு அப்பாலிருப்பவை. தலைவன் கலைவியர் கூடிப்பிரியும்போது மறுநாட் குறி யிடக்தைக் குறித்து கோகாலத்தையுஞ் சுட்டிக்காட்டிப் பிரிந்து செல்வர்.
சந்தன மரத்தை மச்சான்
சந்திக்க வேண்டுமென்ருரல் பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்திடுங்கோ பூவல் என்பது கிணறு, கல்லாம் கட்டாத துரவு. பொழுதுபட்ட பிற்பாடு பூவலடிக்கு எவ்வாறு தலைவி வரு தல் கூடுமென்று சந்தேகப்படுகின்ருன் தலைவன். தன்னக் தனியே இரவு நேரத்தில் எவ்வண்ணம் தலைவி வருகல் கூடுமென்பதே தலைவனின் மயக்கம். அப்போது தலைவி, கடப்படியில் வங்துகின்று காளைகனைக்கு மென்ருரல் எங்கிந்த போதிலும் நாகு எழுந்து வரமாட்டாதோ.
என்று பாடினுள். ö易

கூடிப்பிரிபும் காதலர் குறிப்பிடும் இரவு பகற் குறிகள் 33
என்னே உவமையின் அழகு. இறைச்சிப் பொருள் பயக்கும் உவமை. ‘தலவனே! உன் பின்னேவா எப்
பொழும் ஆயத்தம்’ என்பதே பொருள்.
அகப்பொருளிலக்கணத்தில் பகற்குறி கூறப்பட்டிருப் பினும் காட்டு மக்களிடம் சாதாரணமாக நிவழ்வது இரவுக்
குறியேயாகும்.
இரவுக் குறியிடத்தே வருவதாகச் சென்ற தலைவன் அவ்விடத்தே வந்ததும் பற்பல அறிகுறிகள் நிகழ்த்துவன். இவ்வறிகுறிகள் தன் வரவை அறிவிப்பதற்கே நிகழும். நீர் நிலையில் கல்லையோ தேங்காயையோ விட்டெறிந்து ஒலிப் படுத்தல், புள்ளெழுப்புதல் முதலாயின. இவை தலைவன் செய்கையாலன்றி இயற்கையால நிகழ்வதுமுண்டு. காய் கனிகள் காற்றல் நீரில் விழுந்தும் ஒலி யெழுப்பும். நிலவு தோன்றியவிடத்தும் வேற்றுப்புள் தோன்றியவிடத்தும் புள்ளெழும்பிக் கத்திக் கலையும். இயற்கையானிகழ்ந்த இக்குறிகள் தலைவன் வரவுக் குறிகளென நினைத்துத் தலைவி எழுந்து வந்து பார்த்து தலைவனில்லாமை கண்டு. வருந்தி மீண்டு போதலுமுண்டு. இஃது அகப்பொருளி லக்கணத்தில் ‘அல்லகுறிப்படுதல்’ என வழங்கும். தலை வனே குறித்த கோத்கில் அங்குவந்து நிற்பான். அல்ல குறிப்பட்டகை அவன் அறியான். தலைவி வந்துபோனதை அறியான், வருவாள் வருவாள் என்று விடியுமட்டும் காத் துக்கிடப்பன். பலார் பற்றி விடிந்ததும்
விடியா விடியளவும்
விடிஞ்சந்த நேரமட்டும் காத்திருந்து போனேனென்று அந்தக்
கதவுகிலை சாட்சி சொல்லும்
என்றும்,

Page 22
ஈழத்து நாடோடிப் பாடல்கள் " 4?م
ஓடிவருந் தண்ணிரிலே
உலாவிவரும் மீனதுபோல்
நாடிவந்தேன் பெண்ணே உன்றை
நட்புதலே எப்படியோ ?
ஆருரலும் வெள்ளி அசருரலே
தாழுமட்டும் - காத்திருந்து
போறேன் என்று உன்றை
கதவுகிலை சாச்சி சொல்லும்
என்றும்
பாடிக் கவலைகொள்வன் தலைவன் இவ்வாறு அல்ல குறிப்பட்டுத் த%லவியைக் காணமுடியாது போவதுண்டு. அஃதேபோல் தலைவியும் தலைவனுக்காகக் காத்திருந்து கிரும் புவதுமுண்டு. அதற்குக் கவி இது :
ஒரு போக வேளாண்மைக்கு
உயர்வானைப் பார்ப்பதுபோல் இருகண்ணுஞ் சோர எந்தன்
இராசாவைப் பார்த்திருந்தேன்.
உண்மையில் பொருத்தம் எவ்வளவு அமைகியாகப் பொருக்கியிருக்கின்றது. ஆண் டி லொ ரு மு  ைற வரும் வோளாண்மைத் தொழிலுக்கு வானத்தை எவ்வளவு ஆவ லுடன் உழவர் எதிர்பார்த்திருப்பரோ அவ்வளவு ஆர்வத் துடன் தலைவனுக்காகக் காத்திருந்தவள் என்பதைப் புலப் படுத்தும் ஆற்றல் போற்றுதற்குரியதே. இயல்பில் எழுந்த உவமை இது; ஆகவே அழகுடைந்து,
சிலசமயங்களிற் தலைவி குறியிடத்து வாாது நித்திரை
யிலாழ்ந்து விடுவதுமுண்டு. சிறைப்புறக்தாணுகிய தலைவன் பள்ளியெழுச்சி பாடுவான்,

கூடிப்பிரியும் காதலர் குறிப்பிடும் இரவு பகற் குறிகள் 35
கண்டுவம்மிப் பூநிறத்தாள்
கவரிபுள்ளிமாங்குயிலாள்
அரும்புமுகைப் பூமு?லயாள்
மச்சி ஆசனத்தில் நித்திரையோ
ST607. Mid
பொடுபொடுத்த மழைத் தூத்தல்
பூங்காரமான நிலா
கருமிருட்டு மாலைவெள்ளி
கதவுதிற கண்மணியே
என்றும்
த%லவன் பாடத் தலவி தூக்கத்திலிருந்து துள் எளி யெழும்பிக் குதித்துப் பறந்து குறியிடக்கிற்குப் போதலு முண்டு. அப்போது தலைவன்
மான்போலத் துள்ளி
மயில்போற் சிறகொதுக்கி
தேன்போல் குடிகிளம்பி
என்ட சின்ன வண்டே எங்கை போருய்
என்று தலைவியை முன்னேவிட்டுப் பின்னே நி ன் று ஆசைப்பரிகாசஞ் செய்வதுமுண்டு. நாய் துஞ்சாமை, காய் துஞ்சாமை, காவல் மிகுத்தமை காரணமாக இது நிகழ்தல் கூடும். ஆளரவம் நேரிடும். இச்சமயங்களில் தலைவி இல்லி ருந்தபடியே,
ஆட்காட்டி கத்து துகா
ஆளரவம் கேட்குதுகா காக்கை கிராவுதுகா
நம்மகாக்கா பெண்டில் வாசலிலே.
என்று எச்சரிக்கை செய்தலுமுண்டு.

Page 23
፵6 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
எவ்வண்ணமே இரவுக்குறியிட்த்துக் கூடிக்குலாவி இன்புற்றிருப்பர். விட்டுப்பிரியும் நேரம் வரும்போது அவ சவர் போகவேண்டிய வழியினது அருமையை நோக்கி அழிவும் அச்சமும் உறுவர். ஒரு வ ரு க் கொரு வர் புத் தி (பு ம் புகல்வர். தங்களை ஒன்று சேர்த்த தெய்வத்தையும் வேண்டிக் கொள்வர். அக்கம் பக்கங்களில் அரவம் ஏற்படும்போது தலைவனுக்கு ஏக்கமுண்டாகும். தலைவி எவ்வாறு வீடு சேர்வாள் என்பது தலைவனின் ஏக் கம், கலைவன் காடும்மலையுந் தாண்டி எவ்வாறு ஊர் புகுவன் என்பது தலைவியின் ஏக்கம்.
ஆளரவங் கண்டு ஆக்காண்டி
கத்துதையோ ஆராலுங் கண்டாலும்
என் அன்புக்கிளி என்ன செய்யும் என்று தலைவன் இரங்குகின்றன். ஆட்கள் பரிமாறு வதைக் கண்ட ஆக்காண்டிப்பறவை கந்துகின்றது. இத னுற் தலைவிக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோவென்று பதைக் கின்றன் தலைவன். பின்னும் இயற்கைப் பொருள்களாம் கடல், காற்று, நிலவு இவற்றையும் தங்கள் செயல் மறந்து
ற்கும்படி வேண்டுகின்மூன். கடலே இரையாதே
காற்றே நீ விசாதே நிலவே எறியாதே என்ட
நீலவண்டார் போய்ச்சேருமட்டும். இவ்வாறு நிலைகலங்கி நிற்கும் தலைவனைப் பார்த்து,
குதிரை கஃனக்கு துகா
கோழிகுருரன் ஒது துகா
ஆளும் பரிமாறு:துகா மச்சான்
ஆரோடே போய்ச்சேர்வாய்.

கூடிப்பிரியும் காதலர் குறிப்பிடும் இரவு பகற் குறிகள் 37
பலவிதமான நடமாட்டமிருப்பதை அறிந்த தலைவி தலைவனை நினைந்து வருந்துகின்ருள். அப்போது தலைவன்
குதிரை கனைக்கவில்லை
கோழிகுருன் ஒதவில்லை
ஆளும் பரிமாறவில்லை
நான் போய் வாறேன் கண்மணியே.
இப்படிக் களவொழுக்கத்தில் நீடித்த காதலர் இரு வரைப்பற்றியும் ஊரிற் பலவித கதைகளுமுண்டாகும். தன்லவியின் தோற்றத்திலும் மாற்றம் ஏற்பட்டுவருவதையுங் கண்ணுற்றுள் கற்ருய். களவு வெளிப்படப் போகின் ஹதை யறிந்த தலைவி அதன்மேல் அறத்தொடு நிற்கும். இஃது அடுத்து விரித்துரைக்கப் படுகின்றது.
4 .rונ_r t/6)

Page 24
5. தலைவன்மீது கொண்ட காதலைத் தாய்க்குணர்த்திய தலைவி
சிறைப்புறத்து இரவுக்குறி பகற்குறி வைத்துப் பல காலும் களவொழுக்கத்தில் நீடித்து நிற்கின்ற தலைவனை 16யத்தாலும் பய்த்தாலும் எச்சரித்து வரைந்து கொள்ளு மாறு வேண்டுதல், தோழிக்குரிய செயலாகும்.
கிராமாந்தா வாழ்க்கையில் தோழிக்கு இடமே து? ஆகவே தலைவியே வேண்டிக்கொள்வள்.
வட்டமிட்டு வட்டமிட்டு
வாசலுக்கு வாறவர்க்கு திட்டமொன்று சொல்லத்
திறம் போதாதென் கிளிக்கு இங்கு என்னைத் தேடியும் நாடியும் வருகின்ற என் கிளிக்குத் திட்டமாய் வரைந்து கொள்ளுகின்றேன் என்று சொல்லத் திறமில்லையே யென்று மெல்ல கவில்கின்றுள். அப்போது தலைவன் தலைவியிடத்துள்ள தன் -4{ 68T 40) Lנ வெளிப்படுத்தி தான் ஒருபோ தும் இரண்டகம் எண்ணமாட் டானென்றும் வற்புறுத்தித் தன் மனநிலையை அறிவிக்கின் முன்.
தேகமன்பை யறியாது தெவிட்டுவது மில்லையது உள்ள மறியுமதை ஒதுக்கி விடமுடியாது
எவ்வளவு அழகான வார்த்தைகள். காதல் என்பது தலைவன் தலைவியரிடத்து நிகழும் அன்பு. அது தெவிட் டுமா ? இல்லவேயில்லை. உள்ளமே யறியும். வேறெதனுலு மறிதல் முடியாது. அதற்கு அழிவுமில்லை. தற்காலத்தில் காதல் என்பதை எவ்வளவு சீர்கேடாய்க் கருதுகிறர்கள். கண்டதுங் காதல், காணுதவிடத்து மறத்தல். இதுதான் தற்காலமுறை. இந்தக் காதல் பேரின்பத்திற்கும் வழியா

தலைவன்மீது கொண்டகாசுலைத் தாய்க்குனர்க்கிய தலைவி 99
காது. உலக வாழ்க்கையில் நிலைநின்ற காதல் பரலோக வாழ்க்கைக்கு ஏது. நிலையற்ற இவ்வுலகத்தில் நிலையான அகப்பொருளின்பத்தை அனுபவிக்கமுடியாதவன் எவ்வாறு தன்னை மறு உலகத்திற்குத் தகுதியாக்கிக் கொள்ளுதல் சாலும். பேரின்பத்தை நினைக்கும் போது சிற்றின்பம் நிலை பேருரன பொருளாகத் தோன்றும். ஆகவே காதல் என் பது அழிவில்லாத பொருள். அது கோட்டுச் சட்டத் தாலோ அன்றேல் வேறு வகையினலோ அழிக்கப்படக் கூடியதன்று. அப்படி யழிக்கப்படக்கூடுமாயின் அது உண் மைக்காதலாகாது, வெறும் பொய்வேடம், மிருகக்குணம்.
இப்படித் தலைவன் தன் காதலின் உறுதியை வெளிப் படுத்தியதும் தங்கள் களவொழுக்கத்தை நினைக்கின்ருள். அதனை நீடித்தல் கெடுதலைச் செய்யும். களவு வெளிப் படுங்கால் சுற்றத்தார் தலைவியை இற் செறிப்பர். தலை வனுக்கும் வழியாலும் பொழுதாலும் ஏதம் நிகழ்த்துவர் என்றிவ்வாறு தலைவி சிந்திக்கலானள். களவொழுக்கத்திற் கருத்துன்றி நின்ற தலைவற்கு உளத்தடுமாற்ற்ம் எப்படி ஏற்படும். ஆகவே களவொழுக்கம் நடந்துகொண்டிருக்குக் ஊரில் அலர் ஏற்பட்டது; மலருமாயிற்று. தலைவிக்குக் காவல் மிகுத்தது. தாய் தூக்கமின்றியிருப்பள். தமை பன்மார் காவல் புரிவர். கடுங்கட்டளையும் விகிக்கப்படுவள்.
கடப்பைக்கடந்து காலெடுத்து
வைத்தியென் ருரல் இடுப்பை ஒடித்து வேலி இலுப்பையின்கீழ்ப்
போட்டிடுவேன் வாசல் கடந்து வழிகண்டு போனியென்ருரல் வேசை மகளே உன்னை
வெட்டிடுவேனிரண்டு துண்டாய்.

Page 25
40 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
இவை தாய் கூற்று. நியாயமான சட்டமிடப்படலா யிற்று. தலைவனைக் காணவே முடியாது. காதல் நோய் ஏற்படுகிறது. மெய்வேறுபடும். ஊண் உறக்கத்கிற் கவனஞ் செல்லாது. உடைகலைய நடைமெலிவடையும். இவ்வேறு பாடுகளைக் கண்ட நற்ருய்
வார்ந்து முடிந்த கொண்டை
மகிழம்பூக் கமழும் கொண்டை சீர்குலைந்து வேர்வைசிந்த
செய்த கடும் வேலையென்ன ? பொட்டுக்கரைய பிறநெற்றி நீர் துளிக்க
கட்டுந்துகில் கலைய கழுத்து வடம்புரிபுரள மார்பு பதைப்பதென்ன?
மலர்க் கண்கள் சிவப்பதென்ன ? சோர்வு கதிப்பதென்ன ?
சொல்லிடுகா என்மகளே.
மகளின் கோலத்தையும் மனவெதுவெதுப்பையும் கண் டிரங்கும் கற்றுய்க்கு தலைவியானவள் தன் கனவை வெளிப் படுத்த விருப்பமின்றி வேறு சாட்டுகள் சொல்லித் தப்பிக் கொள்ளப் பார்க்கின்றள்
கோழியடைத்து வைத்தேன்
கொழியரிசி குத்திவைத்தேன் தாழத்துலாத் தாழ்த்தி
தண்ணி நிறைத் துவைத்தேன் கோழியை முட்டைக்கு அடைத்துவைத்தேன், அரிசி குத்கினேன், தண்ணீர் அள்ளிவைத்தேன் என்றும்
தேங்காய் திருவிவைத்தேன்
தேவைக்கு அரைத்துவைத்தேன் பாங்காய்ச் சமைப்பதற்கு
பட்டகஷ்டம் இவ்வளவா

தலைவன்மீது கொண்டகாதலைத் தாய்க்குணர்த்திய தலைவி 41
இப்படித் தன் அலுவல்களைத் தலைவி கூறி உள் ளார்ந்த மனக் கவலையை மறைக்கப் பார்த்தாள். நற்ருய் இலகுவில் விடுவாளா? மேலும் கிண்டத் தொடங்குகின்ருள்.
இரவு நடுச்சாமம்
நானுறங்கு ம் வேளையிலே ஆரோடுமகள் நீ
வாதுகவி பாடினது என்று பெரிய ஒரு கேள்வியைப் போட்டதும் தலை விக்குத் தலை கிறுகிறுக்கத் தொடங்கிற்று. என்ரு?லும் மனத்திடம் தளரவில்லை. அறக்தொடு கிற்றலே தகுதி யுடைத்து. இனியும் காலதாமதமாகாது. இதற்கு மேலும் களவு ஒழுக்கக்தை மறைத்துவைத்தால் பலவித சங்கடங் கள் ஏற்படுதல் கூடும். ஆகவே,
ஊராரென்று மெண்ணுதே
ஒருத்தரோடுஞ் சொல்லாதே மாமிவிட்டு நாய் வந்து
காவலல்லோ காத்திருந்தது தலைவி உண்மையாக அறிவு படைத்தவள். மாம் வீட்டு நாய் வந்து காவல் படுத்ததென்ருல் அர்த்த மென்ன ? வேறு ஆளுமில்லை, நம் சொந்தக்காரன்தான் ; என் மாமி மகன் கான் ; மச்சானே மச்சான்தான். மச் சான் வந்தார், அவருடன் நாயுங்கூட வந்தது. இவ்வளவு தான். இதனே மற்றவர்களுக்குச் சொல்லி என்ன பயன்? இனிமேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களை கடத்த வேண்டியதுதான். ஆகவே, மனம் நிறைவேறுகின்றது. களவியல் போய்க் கற்பியல் தொடங்குகின்றது. இல்லறம் நடாத்துகின்றனர். பொருள் தேவைப் படுகின் ற து. பொருள் தேடப் பிரிவன் தலைவன். இரங்கலும் இாங்கல் நிமித்தமுமாகிய நெய்தற் கிணை நிகழுகின்றது. இல் லொழுக்கத்தை எடுத்துக் காட்டுங் கவிகள் தலைசிறந்தவை.

Page 26
4罗 ஈழத்து காடோடிப் பாடல்கள்
மற்றத் துறைகளுக்குரிய கவிகளிலும் இவை மிகுந்த பொருள் வளம் படைத்தவை. உவமான உவமேயங்களிற் சிறந்தவை. இயற்கையின் வனப்பை எடுத்துக் காட்டும் கவியின் கற்பனைகள் நிறைந்தவை. உதாரணத்திற்கு ஒன் றினைத் தந்து இக்கட்டுரையை முடித்து மறு கட்டுரையில் அதனையும் அதுபோன்றவற்றையும் விரிப்பேன்.
கன்னிக்கிரான் குருவி
கடும் மழைக்கு ஆத்தாமல் மின்னி மின்னிப் பூச்செடுத்து
விளக்கெடுக்குங் கார்காலம்.
1. அன்புக் கழிவுமுண்டோ
ஆசைக்கோ ரெல்லையுண்டோ பருவ முதிர்ந்தாலும் அன்புப் பற்றுத்தான் தீர்ந்திடுமோ 2. அன்று முளைத்து நாளை
அழிந்துவிடும் பூண்டோ தான் என்றும் நிலைத்திருக்கும் நல்ல
இன்பம் உண்மை அன்பாம் 3. உன்னை மறப்பதென்ருரல்
உயிரோடு ஆகாது மாண்டு மடிவதுதான்
மறப்பதற்கு மாயவழி.
 

6. பிரிந்த காதலர் பிரிவாற்ருதிரங்கல். உள்ளுனர்வைச் சித்திரிக்கும் உருக்கமிகு கவிகள்
இல்லறம் இனிது 6 டா த் த ப் பொருள் வேண்டும். பொருள் கோடப் புறப்படுகின்றன் “தலைவன். பொரு ளின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கின்றன் ; ஆகவே தான் காடி டைவைத்தும் காடிடைவைத்தும் பிரியவேண்டி பிருப்பதை எடுத்துரைக்கின்முன் தலைவிக்கு.
தலைவிக்கோ இவையொன்றும் மனதிற்படாது. காத லனை நினைந்துருகுவள். அறிவுடையளேனும் பொறுத்தி ருக்கும் ஆற்றலற்றவள். காதலனைப் பிரிந்திருக்கப் பெருத வள். அப்படியாயின் எப்படிப் பிரிவுக்குச் சம்பகிப்பள். ஆற்றலும் அறிவும் படைத்த தலைவன் எப்படியோ போதிய ஈமாகாணங்கூறிப் பொருளீட்டச் செல்வன். பொருளிட்டுங் காலத்துக் காதலியை நினைத்து இரங்குவன். தலைவியும் தன் தலைவனை நினைத்து இரங்குவள். கார்காலவரவு இவர் களின் காதல் வேட்கையை அதிகரிக்கும். கார்காலத்தைக் காதலர் ஆரமுதமென வரவேற்பர். பிரிந்திருக்கும் காதலர் ஃாகில் கார்வந்து கூவுங்காலத்தில் ஆற்றுமை கைகடத்த லும், கலக்கமிகுதியாற் கவிபாடுதலும், கனக்காணுதலும் நிகழும். இந் நிகழ்ச்சிகளை வள்ளுவனுர் “தனிப்படர் மிகுதி கினைந்தவர் புலம்பல், கனவுநிலையுரைத்தல்' என்ற அதி காரங்களாற் கூறியுள்ளார். ஆகவே இக்கார்ப்பருவம் காத லர்க்கு நோயைக் கொடுக்கக்கூடியது. கவிச்சக்கரவர்த்கி யாகிய கம்பரும்,
அளவில் காரெனு மப்பெரும்
பருவம்வந் தணந்தால் தளர்வ ரென்பது
தவம்புரி வோர்கட்குத் தகுமால்
43

Page 27
44 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
கிளவி தேனினு மமுதினுங்
குழைத்தவள் வளைத்தோள் வளவி யுண்டவன் வருந்து
மென்ருரலது வருக்கோ. மனையாளோடு கூடிவாழும் வாழ்க்கையைப் பற்றற விட்டுச் சென்று தவஞ்செய்யும் துறவிகளுக்கும் கார்காலம் மனவுறுதியைப் போக்கவல்லது எனின் தேனினும் அமி: தினும் இனிமைமிக்க சொற்களைப் பயிலும் பெண்ணி, முயக்கத்தைப் பெற்றவரின் படர் மிகுதியைக் கூறலும் சாலுமோ. பிரிந்தவர்க்குக் கார்காலம் அமைகியின்மையை யளிக்கும் ; சேர்ந்திருப்பவர்க்கு மனக்குதூகலத்தையளிக்க வல்லது. அப்படிப்பட்ட கார்காலத்தை 5ம் புலவர்கள் வர் னிப்பதைப் பாருங்கள் :
காரானை நீரெழுந்து
துளிஆல மெல்லாம் நீர்குடித்து வானங்கறுத்து மாரிசெய்யுங்
Š5 [Í ዘ`Š5 ፥] 6ì) ዚ[D கன்னிக்கிரான் குருவி
கடும் மழைக்கு ஆத்தாமல் மின்னிமின்னிப் பூச்செடுத்து
விளக்கெடுக்குங் கார்காலம் ஆகவே கார்காலம் என்பது மாரிக்காலம் ; மாசி காலக்தான் இங்கு மழைக்காலம். மழைக்காலத்திற்கு வேண்டுபவற்றிற்காக மற்றை யெட்டு மாதங்களிலும் முயல வேண்டும். அப்போதுதான் இல்லறம் இனிது கடக்கும். மனையாளுடன் இன்பம் அனுபவிக்கலாம். பொருளை யி . டப் புறப்படும் தலைவன் தலைவியிடம் விடைபெறுகின்றன்,
கடலிலே கதிரநபி
கப்பலிலே கயாத்துநபி மலையிலே முகையதின்
மலைநங்கணமே போய்வாறேன்.

பிரிந்த் காதலர் பிரிவாற்ருதிரங்கல் 45
போய்வருகிறேன் என்ற தலைவனுக்கு எப்படிப் ‘போய்வாரும்' என்று தலைவி சொல்ல முற்படுவாள். ஆகவே தயங்குகிருள்
போகட்டோவென்று
பொற்கொடியார் கேட்குகிருரர் போவென்று சொல்லப்
பொருந்துதில்லை என்மனசு தலைவி இவ்விதம் மனக்கலக்கம் அடைதலைக் கண்ட தலைவன்
வங்காளம் போறனென்று
மனக்கவலை வையாதே சிங்காரக் கொண்டைக்குச்
சின்னச் சீப்பிரண்டு வாங்கிவாறன். என்ற சின்னப்பிள்ளையை ஏமாற்றுவதுபோல் தட்டிக் கழித்துப் புறப்பட்டான் தலைவன் பொருள் தேடுவதில் முனைந்து நிற்கின்றன். என்ருலும் தலைவியின் எண்ணம் மனதை விட்டு அகலவில்லை. தலைவியும் தன் தலைவனை நினைத்து உருகுகின் முள், இரவில் வீசும் இளங்காற்றையும் அக்காலத்கிற் தோன்றும் கிலாவையும் எதிர்த்துப் போராடுகின்றுள்.
இரவிலே வீசும்
இளங்காற்றுஞ் சந்திரனும் அராவாத வாள் போல்
அறுக்குதே என் மனதை அராவாத வாள் முறையாக அறுப்பதில்லை ; பல் விடமும் பாய்ந்து சென்று அறுக்கும். சித்திரவதை செய்வதை ஒத்து அறுக்கும். இப்படி மனம் புண்பட இரங்கிக்கொண்டிருக்கும் தலைவிக்கு தன் தலைவனுடன் அனுபவித்த இன்ப நினைவுகள் எல்லாம் மனதுக்கு வரு
5r. ur, 5

Page 28
46 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
கின்றன; இன்பம் அனுபவித்த இடங்களையெல்லாம் சுற்றி வருகின்றுள். அங்கோர் மரத்தைக் காண்கின்முள் அதுவுமோர் வயதுவந்த புளியமரம். அந்தப் புளியமரத் தடியில் வைத்துத் தலைவன் சொன்ன வாக்குறுதிகளை நினைக்கின்றுள்
வாயிருந்தால் இந்த
வயதுவந்த புளியமரம் சொல்லாதோ எந்தன் -
துரைசொன்ன உறுதிமொழி. *கார்காலம் வருவதற்கு முன்னே வீடுவந்து சேர் வேன்? என்று சொன்ன உறுத மொழியைத் தலைவன் மறந்துவிட்டான்போலும் என்று நினைக்கின்ற7ள். இரா இராவாய்ச் சொன்ன கதைகளை நினைக்கின்ருள்.
வெள்ளி விடிவெள்ளி
வெள்ளாப்பில் மறையுமட்டும் சொன்ன கதைகளெல்லாம்
சொப்பனமாய் மறந்தாரோ சொப்பனங்கண்டு அதனைப் பின்மறந்தல் யாவர்க்கு முள்ள குணம். இந்த இயற்கைக் குணத்தை எவ்வளவு * அழகாகக் கவியிற் பொருத்தியிருக்கின்றுள் இப்படிக் கவ6
றிரங்கிக் கொண்டிருக்கும் தலைவிக்கு நாட்கள் கழிவதே பெரும் வேத%ன. தலைவன் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிடுகின்ருள்.
அஞ்சுதிங்கள் அஞ்சு வெள்ளி ஐயாறு முபபது 5ாள மறுபிறையுங் கண்டேன் அவரின் மறுமொழியைக் காணவில்லை பிறைக்கணக்கில் நாட்களை எண்ணுகின்ருள். எண்ணி எண்ணிப் பிரயோசனம் என்ன? இதனையே திருவள்ளு
வரும்;

பிரிந்த காதலர் பிரிவாற்ருதிாங்கல் 47
வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்தவிரல்
அஃதாவது அவர் நம்மைப் பிரிந்துபோய காள்கள் சுவரின்கணிழைத்தவற்றைக் கொட்டெண்ணுவதா லென் விரல்கள் தேயந்தன. அதுவேயன்றி அவர்வரும் வழி பார்த்து என் கண்களும் ஒளியிழந்தன; புல்லியவாயின.
இப்படி வழியும் பார்த்து நாளும் எண்ணி இரங்கிக் கொண்டிருக்கும் தலைவிக்குப் பார்க்குமிடமெல்லாம் இரங்கு வன போலத்தோன்றும். கட்டில் அழும் ; விசிறி குள
றும் ; கிணணையோ குளறியழும்.
கட்டிலழுகுதுகா
கடதாசி மின்னுதுகா விசிறி குளறுதுகரி எங்கட
வேந்தர்வரக் காணவில்லை. அந்தி விடிந்து
அனுதினமும் ஒடிவங் து குந்துமந்தத் திண்ணை
குளறி அழுகுதுகா
இப்படி விட்டிலுள்ள சகல பொருட்களும் இரங்கத் தலைவியின் ஆற்றலாகாத் தன்மை யதிகரிக்கின்றது. நெடு நல்வாடையோ கடுமையாக வீசி தடுக்க முடியாத காத லோடு கூதலையும் கொடுக்கின்றது. இப்படியான இந்த கேரத்தில் உண்மையான தலைவன் சுணங்குவானே? சுணங்க மாட்டான் என்ற தேறுதல் எண்ணம் கவியாக உருவடை கின்றது.
இந்த மழைக்கும்
ஈனவாற கூதலுக்கும்
சொந்தப் புருஷனென்ருரல்
சுணங்குவாரோ முன்மாரியிலே

Page 29
48 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
இஃகிவ்வாறுகத் தலைவி தாங்கொணுக் கலக்கமுற்று ஆற்றது நிலை தளர்ந்திருக்கும்போது பொருள்தேடச் சென்ற த%லவன் கன் காதலியை கினையாமலிருப்பானே? இருக் கவே மாட்டான். புலவர் புலனெறிவழக்கில் தலைவன் ஆற் முனுயினன் எனல் பொருந்தாதெனினும் உலகியல் வழக்கி லுண்டு
ஆசைக்கிளி வளர்த் து
அக்கரையிற் கொண்டுவைத்துப் பேசிப் பழகமுதல்
அதைப் பிரிந்துவிட்டு வங்தேனே
இஃது எதனை வெளிப்படுத்துகின்றது தலைவி மாட் டுள்ள ஈடுபாட்டை எடுத்துரைக்கின்றது. மனையறத்தில் தன் தலைவியுடன் நீடுவாழமுடியாமைக்கு வருந்துகின்றன். இனியெப்போது போய்க்காண்பது என்னுருயிரின் வெள்ளை முகக்கை. வேலிக்கு மேலால் என்வரவை எதர்பார்த்துக் கொண்டிருக்கும் காதற் கனியைக் காண்பது எப்போது கைகூடுமென்று எண்ணுகின்றன்.
நெற்றிக்கு நேரே
நிலாக் கிளம்பிவாறதுபோல் வேலிக்குமேல் மச்சிடவெள்ள முகம்
காண்பதெப்போ இங்ஙனம் தலைவியின் நினைவாகவே தன் வேலையில் ஈடுபட்டிருக்கும் தலைவனுக்கு, கனவும் அவள் மயமாகவே
யிருக்கும். கனவிற் காட்சியளிக்கின்ருள். எப்படி,
காவற் பரணிலே
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணுன மச்சிவந்து
காலூண்டக் கண்டேனே

பிரிந்த காதலர் பிரிவாற்றதிரங்கல் 49
இப்படிக் கனவுகண்டு துயில் துறந்த தலைவனுக்குச் சந்திரன் காட்சியளிக்கின்றன். சந்திரன் உண்மையாகவே தூதுகொண்டு வருகின்றன் என்று நினைக்கின்றன். உடனே அவனிடம் விசாரிக்கின்றன்.
மாங்தோப்புக்குள்ளாலே
வந்துமின்னுஞ் சந்திரரே ஏந்திழையாள் என்மனைவி
என்ன சொன்னுள் உங்களிடம்
என்று சந்திரனிடம் வினவினன். மறுமொழி வருமா ? வராது. அப்போது இருகிளிகள் சோடாகப் பறந்து செல்கின்றன. இக் கிளிகளாவது ஏதேனும் விசே ட ம் சொல்லுமா என்று பார்க்கின்றன். உடனே,
கூட்டாகச் சேர்ந்து
கூவையிட்டுச் செல்லுகின்ற சோட்டுக் கிளியினங்காள் எண்ட
சுந்தரியாள் சேமமென்ன,
என்று கேட்டான். “நீங்கள் ஒன்றுமே சொல்லவேண் டாம். அவளி ன் சேமத்தையாகுதல் சொல்லுங்கள்? என்று பரிதவிக்கின்றன். நினைந்து நினைந்து இரங்கவே செய்யமுடியும். த ல வியின் வடிவழகையும் சாயலையும் நினைத்துப் பார்க்கின்றன். வடிவலங்காரத்தை நினைக்கின் முன். தலைவியின் பாதாதிகேசம் பிரதிவிம்பிக்கின்றது.
வட்ட முகவழகி
வண்டுபாடும் குழலழகி இட்ட முலையழகி யுன்னே
என்ன சொல்லிக் கூப்பிடட்டும். என்றும்

Page 30
50 ஈழத்து காடோடிப் பாடல்கள்
ஆற்றுமணலே
அலையாற்றுப் பூமணலே தொந்திமணலே யுன்னைத்
தொட்டகையும் பூமணம் டீ என்றும் கவிபாடி ஆற்றியிருக்கப் பார்ப்பான்.
தான் பாடுபட்டுக் களைப்புறும்போது தன் தலைவியின் பாட்டையும் நினைப்புறுவன். தன்பாட்டைக் கவனியாது காதலியின் பாடுகளை நினைந்து கவலைப்படுவன்.
நடவாக் கிடாவும்
நானுமிந்தப் பாடுபட்டால் காயாப் புழுங்கலும்
என் கண்மணியும் என்னபாடோ தன் அலுப்பைக் கவனிக்கின் முளில்லை. கனக்குத் துன்பம் வரும்போது தன் தலைவி எவ்வாறு என்னென்ன துன்பங்களை யடைகின்ருளே வென்று அவன் நி%னக்கின் முன். இஃதன்றே உத்தம காதல்.
இரங்க ல், 1. கத்தாதே காகம்
கரையாதே புன்காகம் எத்தாதே காகம்
நான் எறிஞ்சிடுவேன் கல்லாலே. 2. வட்டமுகமும் வடிவில்
உயர் மூக்கும் கட்டு உடலும்-என்னை,
கனவிலையும் வாட்டுதுகா. 3. மனசை மனசறியும்
வஞ்சகத்தை நெஞ்சறியும் மன சிலுள்ள பூங்காரத்தை-அல்லா,
யாரறியப் போருரங்கா.
K

பிரிந்த காதலர் பிரிவாற்றதிரங்கல், 5座
4.
ஏத்தால வெள்ளாமை
இளங்குடலை பூஞ்சோலை மாட்டால அழியுதென்று- எங்க
மன்னவர்க்குச் சொல்லிடுங்கேர். கூரையிலே நின்று
கூவுகின்ற சேவலரே நான்தனியே யிருககே னென்று,
நாவெடுத்துச் சொல்லிடுங்கோ.
米 来源 தேமல் முலையும்
தேனினுக்கும் செவ்வுதடும் வாழை உடலும்-என்
வாட்டுதடி நித்திரையில்.
. காக்கா மார் இல்லை
கதி சாவும் வாடியிலை தேக்கமரப்பரணில்-என்னை வாட்டுதடி நித்திரையில், மாடாப்புருவே எண்ட
மாசுபடாச் சித்திரமே கோடைக் கனவிலே
கொதிக்கின்றேன்டி கண்மணியே
来源 苯 烹调 அந்திக்கு வாறனென்று
ஆணைசொல்லிப்போன மச்சான் வாரங்கள் பலசென்றும்
வந்திடாத காரணமென்ன ? முந்திரிக்குக் கீழே
முத்துமணல் பாயிருந்து மச்சாண்ட மடியில் -கான்
மகிழ்ந்திருத்தல் எப்பொழுதோ.

Page 31
5% ஈழத்து காடோடிப் பாடல்கள்
11. அரிக்கமிலையில்
அரிச்சள்ளிப் போடையிலே தரிக்கயில்லை என்மனசு-தங்கமச்சான்
வாறதெப்போ. 12. நாளைக்குவருவேன்
இரண்டு நாள் சென்று நான் வருவேன் என்றெல்லாம் சொல்வாய் மச்சான் உண்டை
சொல்லையுமா நம்பிறது | பொழுதை வரவிடவா
பொன்வண்டைத் தூதிடவா நிலவை வரவிடவா-எண்ட
நீலவண்டே கூறுகிளி.
14|பொழுது கிளம்பி
பூமி இந்தச் சூடுசுட்டால் வெள்ளாம வெட்டும்
மச்சாண்ட மேனி என்ன சூடுசுடும்.

7 உடன் போக்கு
உலக வழக்கில் தூக்கிக்கொண்டுபோதல் என்பார்களே அதனைத்தான் புலவர்கள் உடன்போக்கு என்றனர்.
கல்லாத மக்கள் பொல்லாத சொற்களாற் கூறுவதைப் புலவர்கள் செம்மையும் தூய்மையும் பொருங்கிய சொற்களிற் புலனெறி வழக்கஞ் செய்து காடடுவர்.
அகப்பொருளில் வரும் கலைவன் தலைவியர் ஒழுக்கக் தைப் பற்றி யாம் அறிந்திருக்கிருேம். அகில் ஒரு பகுகி தான் உடன்போக்கு
தலைவியின் தமர் கலைவனை ஏற்றுக் கொள்ளாது, கல வாஞ் செய்வாராயின் தலைவன் தலைவியைத் தமாறியாது அழைத்துச் செல்வான். இது உலக வழக்கே , எங்கும் கடப்பதே. புலவர்களும் இதன்வழி நின்று புலவெறி வழக் கஞ் செய்வர்; கவிதைகள் புனைந்து காட்டுவர்.
தலைவனுக்கும் தலைவிக்கும் நட்புரிமை வளர்ந்தது. காகல் கருத்தொருமித்தாரிடம் ஆதரவு பெற்றது. அன் பினல் இருவரும் ஒருவரானுர், இக்காதல் அலராகிப் பின் மலராய் ஊரறிந்த கதையாய் வளர்ந்துவிட்டது. தாய்தக் தையருக்குப் பொறுக்கமுடியாத துன்பம்; தமரும் இருவர் காதலை வெறுக்கின்றனர். பெண்ணுக்கோ பெரிய நெருக்கு வாாம். வான் வேறு தேடுகின்றனர். கேசமும் பாசமும் மாறிக் கண்டிப்புங் காவலும் வளர்ந்துகொண்டேயிருந்தன. அன்பும் ஆதரவும் போய் ஏச்சும் ப்ேச்சும் நிலவத் தொடங் கின. எடுத்ததற்கெல்லாம் நற்முய் அடுத்தடுத்த மிரட்டு வாளாயினுள். தலைவியின் ஒவ்வோர் செய்கையிலும் குறை கான்கின்றுள் அன்னை, மகள் செய்கின்ற அலங்காரம், குலுக்குநடை, இவையெல்லாம் தலைவனை நினைத்தே என்று புழுங்குகின்றுள். தாயின் ஆத்திர உணர்ச்சி கவிகளாயின,
16T. Lr. 6 Ö፰

Page 32
54 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
சாயக் கொண்டை கட்டிறதும்
சளிக்க எண்ணெய் பூசிறநும்
ஏவி ஏவி நடக்கிறதும்
இளந்தாரிக்கு வாழவென்றே.
நேருக்கு நேர் தாய்க்கும் மகளுக்கும் போதாது. தலை விக்கு அழுகையும் தொழுகையுந்தான் தஞ்சம். இடையி டையே தலைவனைக் கண்டால் ஆறுதல். அழுத கண்ணிரும் சிந்திய மூக்குமாக இருப்பதைக் காண்கின்றன் தலைவன்.
சீனத்துச் செப்பே
எண்ட சிங்காரப் பூங்குயிலே
வானத்தைப் பார்த்தழுத
காரணத்தைச் சொல்லுகிளி
O O se
கண்டு வம்மிக் கீழிருந்து
கண்கசக்கி ஏனழுதாய்.
என்ருன் தலைவன்.
நெருக்கம் பொறுக்க ஒண்ணு நினைக்கழுதேன் மச் சானே என்று விடையிறுத்தாள் தலைவி. மேலும் அவன் வினுவுகின்றன். ஏது செய்வோம்? என்ன செய்வோம் ?
மாமி மகளே -புள்ள
மலைநாட்டு நங்கணமே கூவி நடக்க உண்ட
கொள்கையென்ன கூறுகிளி
இருவரும் எங்கேனும் ஒடலாமோ என்று யோசிக்க லாயினர். தலைவியின் சம்மதத்தை அறியவிரும்பிய தலை வன்,

5
உடன் போக்கு
பேட்டு மயிலே
பொலிசையிடத் தங்கையரே காட்டு வழிநடக்க
உங்க காக்காமார் சம்மதமோ என்று கேட்கின்றன். தலைவிக்கோ ஐயமுண்டாகிறது. ஒடிப்போகும்போது காய்தந்தையர் கண்டாற் தடுத்துவிடு வார்கள் : அவர்கள் காணுமல் எவ்வாறு போக முடியும் என்று யோசிக்கலானள். இதனை ஊகித்தறிந்த தன்லவன்.
ஒட நல்ல ஒழுங்கை
ஒழிக்க நல்ல பூவரசை பாயநலல பாழவளவு
நீ பயமில்லாமல் வாகிளியே
என்று தலைவன் கூறிக்காட்டியதும் தலைவிக்கு த் தென் புண்டாயிற்று. தலைவன்மேல் வைத்த காகலன்பு காரண DIS உடன்போக்குக்கு ஆயத்தமாகின் முள். வில்லுக்கரத்தை யிற் பூ ட் டி ய வெள்ளைமாடு இரண்டுகட்டி வந்துநின்றன் தலைவன். தலைவியும் வெகுஉற்சாகம் கொண்டவளாய்,
வில்லுக் கரத்தையிலே
வெள்ளைமாடு இரண்டுகட்டி தட்டி விடுகா மச்சான் நாங்கள்
சம்ம 1 ன்துறை போய்வருவோம். காட்டாந்தரை வழியே செல்கின்றர்கள் காலதர்கள். விட்டார்க்குப் பொருமலும் தும்மலும். காட்டார்க்கு கிண் டலும் கேலியும், உற்ருர் உறவினர்க்குப் பரபரப்பு. கற் முய்க்குப் பெருந்துன்பம். இடையிடையே புலன் விசாரணை போற்றிவளர்த்த 5ற்ருய் ஆற்றது அழுகின்றுள், வீடு வாசல், வேலி வளவு, எங்குக் தேடுகின்ருள். கண்டதென்ன? மகளின் காலடிகள். அவள் காதலனுடன் கூடிச்சென்ற பாதையைக் காண்கின்றுள். . . "

Page 33
あtj ஈழத்து நாடோடிப் பாடல்கள்
தண்டை பதிந்திருக்கு
கொலிசம் இழுபட்டிருக்கு அன்ன5டை இன் ைஇருக்கு
எண்டதாள் விளக்கைக் காணவில்லை. மகள் சென்ற பாதையினை அவள் அன்ன நடைச் சுவடுகளாலும். கொய்சகம் இழுபட்டிருக்கும் பான்மையா அலும் அறிந்து இரங்குகின்றுள். மேலும்,
புல்லுச் சவண்டிருக்கு
போனதடம் இன்ன இருக்கு தண்டை பதிந்திருக்கு என்ரை
தங்கம் எங்கே போனதுகா. என்று தன்னுள்ள க்கையே கேட்கின்முள். பெற்ற மனம் பித்தல்லவா? மகளை நினைந்து நினைந்து புலம்பு கின்ருள். இங்ஙனம் புலம்புத%ல அயலும் புடையுமுள்ள மாதர் கண்டு வாளாவிருப்பாா? முன்னர் பழி தூற் றிய மாதர் இப்போது துன்பதுயரமாற்றுவிக்க வந்தனர். இதேசெய்தி பழைய பாடலில்-கற்றிணையில் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.
ஆங்காங்கு தெருக்களிலே கூடிகின்று கடைக் கண் ணுலே சுட்டி நோக்கி வியப்புடையார்போலத் தத்தம் மூக்கு நுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறிக் தூற்: வாாாயினர். அப்பழிமொழியை அன்னை கேட்டாள். அது மெய்மையாகுமெனக் கொண்டு, சிறிய கோலொன்றனை யேந்தி அது சுழலும்படி வீசி அடித்தனள். நற்றிணைப் Lirla9ä,
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை.

உடன் போக்கு 67
என்றும், பின்னர் அந்த மாதர்களே அன்னையின் அவலத்தை அடக்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றனர்.
ஒருமகள் உடையேன் மன்னே அவளுஞ் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் இனியே தாங்குகின் அவலமென்றீர் அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே.
என்று கேட்கும்பான்மையில் முடிகின்றது அச்செய் யுள்.
இவ்வாறு பெற்ற மனம் உற்றபொருளை இழந்தால் அது சும்மா இருக்குமா? தலைவன் தலைவி சென்ற வழியே போகும்படி தூண்டியது. வில்லுக்காக்தையிற் சென்றவர் களைக் கண்டுபிடிக்கக் கால்நடையில் விரைந்து செல்கின்ருள். போகும் வழியிலே, விடியற்கான்லயிலே, மாட்டுப்பட்டிகளிற் பால் கறக்கின்ற அண்ணல்களைக் கண்டாள். தன் மகளைக் கண்டதுண்டோ என்கின்ருள்.
பட்டியடிப் புட்டியிலே
பால்கறக்கும் அண்ணன் மாரே கொண்டையிலே பூமுடித்த
குமரிவந்தாள் காணலையோ. வில்லுக் கரத்தையிலே
தெருட்சியான மாடுகட்டி பாய்ச்சலிலே போன-என்ரை
பசுங்கிளியைக் கண்டீரோ இவ்வண்ணம் தாயொருத்தி தன்மகளைக் குறித்துக் கேட்டபொழுது பால்கறக்கும் அண்ணன்மார் வாளாவிருக்க முடியுமா? அவர்களும் மகளின் கடை, உடை, தோற் றம், அழகு இவைகளைக் குறித்து விசாரிக்கின்றனர். தாய் மகளின் தன்மைகளைக் கூறுகின்ருள்.

Page 34
58
V ve ஈழதது கார்டாடிய பாடலகள
சிட்டுப்போல் நடையழகி
சிறுகுருவித் தலையழகி பட்டுப்போல் மேனியாளைப்
பாதையிலே பாத்தீங்களோ. கோரை மயிரழகி
குருவிந்தப் பொட்டழகி பவளம்போல் பல்லழகி
பாதையிலே பாத்தீங்களோ, பட்டம்போல் நெற்றி
பவளம்போல் வாயழகி முத்துப்போல் பல்லழகி
முன்போகக் கண்டீரோ வாகை மரமேறி
வடக்கேதெற்கே பாக்கும்போது தோகை மயில்போலை
தோகையளைக் கண்டீரோ
பால்கறக்கும் அண்ணன்மாருக்கு அவதியுறுங் தாய்
அமைதிபெற வாய்ப்பான நல்லுரை கூறத் தெரியவில்லை.
கலித்தொகையில் வந்த அந்தணர்போல் அருமறை படித்த வர்களா ? ஒதியுணர்ந்தவர்களா? சிப்பி பெற்றது முத்து, மலையிலுண்டாயது மணி. தமிழி ம் பிறப்பது இன்பம்.
முத்தோ மணியோ இன்பமோ இவற்றல் தாய்மார்க்கு მI ჯჭწ1
நன்மை. இவ்வண்ணம் இவர்களாற் சொல்லமுடியுமா கலித் தொகையிலே,
இவ்விடை என்மகளொருத்தியும்
பிறன்மகனெருவனுங்
தம்முள்ளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னர் இருவரைக் காணிரோ பெரும.

உடன் போக்கு 59
எ ன் று அக்கவழிவக்க அந்தணரைக் கேட்கின்றள் தாயொருக்கி. உடனே அந்தணரும், அவர்களைக் கண் டோம் கண்டு அஃது அறம் என்றே கருகிப் போங்கோம் என்று கூறுவாராயினர்.
பலவுறு நறுஞ்சாந்தம்
படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு
மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையள்
சீர்கெழு வெண்முத்த
மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு
நீர்க்கவைதா மென்செய்யுங் தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கஃனயள்
ஏழ்புண ரின்னிசை
முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும்
யாழ்க்கவைதா மென்செய்யுஞ் குழுங்கால் அம்மகள் நுமக்கும் ஆங்கஃனயள்.
அவள் மிகுந்த கற்புடையாள். தாய்தந்தையரினுஞ் சிறந்த கணவனை வழிப்பட்டு அவன்பின்னே போள்ை. இதுவே பெண்ணுக்குத் தலையாய அறம்.
இவ்வுரைகேட்ட கற்றப் வீடு கிரும்பினள். காதலர் காதல் நெறியிற் படர்ந்தனர்.

Page 35
8 கற்பைப் பேணும் தமிழகப் பெண்கள்
தமிழ்ப் பெண்கள் எக்காலத்திலும், எச்சமயத்திலும் எங்கிலையிலும் தங்கள் கற்பைப் பேணிவருவார்கள். எங்கள் காட்டுக் கவிகள் கூட இதற்குத் தக்க சான்று தருகின்றன. ஒரு பெண் மாரி வெள்ளத்தில் தன் அலுவல் கார ணமாக வெளிச் சென்று வீடு திரும்புகின்ற ள ஆண்மகன் ஒருவன் அவ்வழியால் வருகின்றன். அவ ன் அப்பெண் ஃணப் பார்த்து,
மார்பளவன் தண்ணிரிலே
மன்னி மன்னிப்போற பெண்னே மார்பிலிருக்கும் அந்த
மாதுளங்காய் என்னவிலை. இப்படி அவன் கேட்கப் போகின்முன் என்பகை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவன் எவ்வூருக் காமுகன் என்று வியப்படைகின்றுள். அவளோ வாழ்க்கைப்பட்டவள். பிள்ளையும் பெற்றவள். எ ன வே இவற்றை நினைத்துக் கொண்டு மறுமொழி பகர்கின்றுள் மாதுளங்காயுமில்லை
மலுக்காரம் பிஞ்சுமில்லை பாலன் குடிக்கும் பால்
முலைடா சண்டாளா, என்று அறைந்தாற்போல விடை பகர, ஆண்மகனும் அப்பால் விலகிச் சென்றனன். அவளும் கன்வழியே சென் நனள். தமிழ்ப் பெண்கள் இவ் வா று வெடுக்கென்று: பாய்ந்து ஆண்களுக்கு புத்தி புகட்டுவது இயல்பு.
இன்னெரு நாட்டுப்புறப் பெண்ணப் பாருங்கள். வயல் வேலை முழுவதுங் தெரிந்தவள். வயலில் பட்சிகள் உலாவு வதைக் காண்பவள். பெரிய வரம்புகளில் புருக்கள் உலாவி
60

கற்பைப் பேணும் தமிழகப் பெண்கள் 6t
வருவதைப் பார்த்து மகிழ்ந்திருப்பவன் அந்த வரம்புகள் எந்தப் புருவுக்கும் சொந்தமானவையல்ல. காமவசந்தன கிய ஒருவன் உசாவியதற்கு இப்பெண் மறுமொழி பகரு ன்ெருள்.
போட்டா வரம்பாலே
புரு நடந்து போறதுபோல் நாட்டாருக்கெல்லாம்
நடைவரம்போ என் சடலம்
இங்கே போட்டா வரம்பென்றது பெரிய வரம்பை. இன்னேர்வித மறுமொழியைப் பாருங்கள் : வண்ணுரக்கல்லோ
வடக்கத்தி காளை மாடோ சாராயக் குத்தகையோ மச்சான்,
தவறண்ணயோ என் வீடு இங்கு சொல்லப்பட்டவையெல்லாம் பொதுப் பொருள் கள். வண் ணுன் கல்லில், எந்த வண்ணு னும் சீலையை வெளுக்கலாம் ; ஒருவனுக்கஞ் சொந்தமானதல்ல. காளை மாட்டை எவரும் வண்டிலிற் கட்டி ஒட்ட லா ம் சாரா யக் குத்தகை வருடாவருடம் கைமாறுவது; தவறண யில் யாரும் போய்க்குடிக்கலாம். இந்த விடும் அவை போன்றதல்ல என உவமையாற் சுட்டிக்காட்டுகின்றுள்.
காதல் கொள்ளும் ஆண்பெண் இருவருக்கிடையில் மோதல் உண்டாகிப் பிரிந்து கொள்வர். காதலிந்த பெண் களுக்கு ஆண்கள் துரோகஞ் செய்வதும் வேறுபெண்ணைக் கட்டிக்கொள்ளுதலும் நடைமுறையிலிருக்கின்றது இவற் றிற்குப் பல காரணங்களிருக்கும்; சீகனம், சாகி, குலம், இனசனம், பழமை, உத்தியோகம் இவற்றின் காரணமாகக் காதலர்கள் பிரிக்தவைக்கப்படுகின்றனர். ஆனல் ஆண்மக னல் நீக்கப்பெற்ற பெண்ணிற்கு இக்காரணங்கள் புலப்படா.
6Ar, Lutr. 7

Page 36
62 ஈழத்து காடோடிப் பாடல்கள்
*/
அவள் நினைக்குங் காரணமென்ன? தன்னிலும் பார்க்கத் தன் காதலன் முடித்த பெண் அழகுடையவளா? என்ற கேள்வியே அவளுக்கு முன்வரும்.
என்னில் அழகியோகா
ஏந்துகொண்டைக் காரியோகா பல்லால் அழகியோகா
மச்சான் பார்த்தெடுத்த செங்குரங்கு என்று இப்படிக் கை விடப்பட்ட பெண் நினைப்பதே பெருவழக்கு
பெண்கள் தங்களுக்குப் பேசிவரும் ஆண்களுக்கு வக் கணங்கூறிப் பழித்துரைப்பதும் வழக்கம். கண்டபடி பெரும் மோசமான உவமானங்கள் கோத்துவைப்பதிற் சமர்த்தர்கள். அப்படியான சில கவிகள் வருமாறு: கச்சான் அடித்தபின்பு
காட்டில் மரம் நின்றதுபோல் உச்சியிலே நாலு மயிர்
ஒரமெல்லாம் தான் வழுக்கை கண்ணுமொரு பொட்டை
காதுமவை செவிடாம் குருத்தெடுத்த வாழைபோல்
அவர் கூனி வளைந்திருப்பார். முப்பத்திரண்டிலே
மூணுபல்லுத்தான் மீதி காகக்கறுப்பு நிறம்
ஒருகாலுமல்லோ முடமவர்க்கு.
 

9 சுவை மிகுந்த கவிகள்
. போதுமப்பா போதும்
புத்தளத்து வியாபாரம் பொன்பரப்பி ஆற்ருலே
போகவரக் கிட்டாதே . எண்ணி இறசாலை
எடுத்திடடி சின்னச்சி இன்னுசியாருக்கும் இதிலை
இரண்டு பங்குண்டு . எருக்கலம் பிட்டிக்
எருவுகொண்டு போறகம்பி மச்சானைக் கண்டாலுன் னை
மயில்வரட்டாம் என்று சொல்லு . இன்றையென்று நாளையென்று
எத்துதலை பண்ணுகிருய் கல்லோ என்னெஞ்சு
கரைந்துபோனல் நீ என்னசெய்வாய் . பாலாய்க் கொதிக்கின்றேன்
பச்சைபோல் வாடுகிறேன் நெய்யாய் உருகிறேன்
உன்னடை நினைவுவங்த நேரமெல்லாம் Bாவல் உரலைவெட்டி
நற்சுளகைக் கிட்டவைத்து பாலப்பழ நிறத்தாள் பச்ச
நெல்லோ குத்திறது. . காகமிருந்து கத்துணட
நோமெல்லாம் திண்ணையிலே நானிருந்து உங்கடை
செய்தியெல்லாம் கேட்டறிந்தேன்
63

Page 37
4.
0.
ll.
3.
4.
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
என்னில் அழகியோகா
ஏந்துகொண்டைக் காரியோகா
பல்லால் அழகியோகா மச்சான் பார்த்தெடுத்த செங்குரங்கு
, ஆதங்காக்கா ஆகங்காக்கா அவரைக்
கண்டாச் சொல்லிடுங்கோ நம்மட பூவரசங்கன்னி பூமலர்ந்து போச்சுத்ெனறு. போருரய் மகனே, உனக்குப்
புத்திசொல்லத் தேவையில்லை ஊரார் மணிக்கோவை
உடைந்துவிட்டால் வந்திவரும்
ஏத்தாலே 'வேளாண்மை
இளங்குடலை பூஞ்சோலை மாட்டாலழியுதென்று எங்கள்
மன்னருக்குச் சொல்லிடுங்கோ காற்றுக்குக் காற்று
கமழும் மகிழமணம் மூச்சிட்டுப் பார்த்தேன் அவர்
முன்றிலுள்ள பூமண்ந்தான். சிற்றெழுங்கையாலே செருப்பழுது
போறசெப்பம் ஆரென்று பார்த்தேன்
என் அழகுதுரை மாமிமகன். பட்ட மரத்தில்
பதினறு பூப்பூத்து எல்லாம் விலைப்போக
ஏனிருக்காய் மாலைவெள்ளி.

15.
6.
7.
18.
9.
சுவை மிகுந்த கவிகள் 65
பட்டமரத்தில் பழமிருந்து
என்ன செய்ய இலையிருந்து காற்றடித்தால் கிளி எங்கிருந்தும் தங்கவரும். ஆதங்காக்கா ஆதங்காக்கா
அவரைக்கண்டால் சொல்லிடுகா மாதுளங்கன்னி மடல்
விரிந்து போச்சுதென்று. வாழைப்பழத்தார்க்கும்
வாப்பாவுக்கும் சொல்லிடுங்கோ சீனி வெள்ளை நாகு
சீர்குலைந்து போச்சுதென்று LD AT DIT GDJ GMT iš 35
மாம்புள்ளிச் சேவலொன்று தேற்ருரவின் கீழிருந்து
சிறகடித்து கூவுதுகா. வீட்டைச் சுற்றிப் புளியமரம்
உலுப்பிவிட்டால் கலகலக்கும் பேரான பேர்வழிக்குப்
போசொல்ல நேரமில்லை

Page 38

ஈழத்து நாடோடிப் பாடல்கள்
11 நாட்டுப்பாடல்கள்
1. தாய்தந்தையர் கொஞ்சுமொழிப்
Lu TL.-6b356it
நாட்டில் வழங்கும் பாடல்களை காட்டுப்பாடல்கள் என் பர். இப்பாடல்களெல்லாம் இசைப்பாடல்களே.
பலர் சேர்ந்து பாடும்போதுதான் இசைப்பாடல்களின் அழகு புலப்படும். ஏனெனில் இசைப் பாடல்களெல்லாம் சமுதாயப் பாடல்களேயாமென்க. சமுதாயத்தார் போற்றி வழங்கும் பாடல்களையே காம் இங்கு சமுதாயப் பாடல்
என்போம்.
கிராமத்திலுள்ளார் பல சந்தர்ப்பங்களில் "ஒன் து கூடுவர். திருநாட்காலங்களில் மக்கள் ஒன்று சேர்வர். ஒன்று சேர்ந்த இடக்கில் பலரும் பலவித கோலாகலத் தில் ஈடுபட்டு மகிழ்ந்து கிற்பர். சிலர் கூடியிருந்து கதை யாடுவர்; வேறு சிலர் விளையாடுவர்; இன்னுஞ் சிலர் கூத்தாடுவர்; மேலுஞ் சிலர் கூடிப்பாடுவர், மற்றுஞ் சிலர் ஆடல்களையும் பாடல்களையும் பார்த்துங் கேட்டும் மகிழ் வர். இப்படியான சந்தர்ப்பங்களிலும், கூடித்தொழில் புரியும்போதும், ஊஞ்சலாடும் போ து ம், காதலுரை
யாடும்போதும், கப்பலோட்டும்போதும், கூடி விளையாடும் போதும், ஒருவரை ஒருவர் பரிகாசஞ்செய்யும்போதும், கவ லைப்படும்போதும், இசைப்பாடல்களாம் காட்டுப் பாடல்கள் இகயத்திலிருந்து உதித்தெழும். இப்பாடல்களிற் பல வற்றை நாம் இழந்துவிட்டோம். சிலவற்றைத் தலை Ay

Page 39
68 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
முறை தலைமுறையாக காமறிந்திருக்கின்ருேம். இ  ைவ பொதுவாக எழுதாப்பாடல்களே, கேட்டுக் கேட்டு அனு பவம் மூலம் பாடமாக வந்தவை. இப்பாடல்களை ஏற்ற ஏற்ற பகுதிகளாகப் பிரித்து ஆராய்வோமாக. வயதுக் கேற்றமுறைப்படி வகுத்துக்கொண்டு பிள்ளைகளின் பாடல் களை முதலில் ஆராய்வோமாக,
பிள்ளைகளின் பாடல்களில் முதலிடம் பெறக்கூடியவை அவர்கள் பெற்றோம் பாடப்பட்டவையாகும். சிறு பிள் ளைகளாக அஃதாவது கைப்பிளளைகளாக இருக்கும்போதும் பாடசாலைக்குப் போகுமுன்னும் பெற்றர் அப்பிள்ளைகளு டன் அளவளாவி மகிழ்ந்துரையாடும்போது எழுந்த பாடல் களைப் பற்றி அறிவோமாக.
wo-mamis
தாய்மார் பாடும் பாடல்கள்
பிள்ளைகளைப் பெற்ற தாய்மார் பரம்பரையாகப் பாடி வரும் தாலாட்டு, ஒராட்டு கிராமத்துக்குக் கிராமம், சாதி குச்சாகி, மதத்துக்கு மதம் வித்தியாசமுடையவையென முலும் சில சொற்கள் பொதுவானவை
பச்சையிலுப்பை வெட்டிப்
பால்வடியத் தொட்டில்கட்டித் தொட்டிலுமோ பொன்னுலை
தொடுகயிருே முத்தாலே முத்தென்ற முத்தோநீ
முதுகடலில் ஆணிமுத்தோ சங்கீன்ற முத்தோ
சமுத்திரத்தி னணிமுத்தோ.

தாய்தந்தையர் கொஞ்சுமொழிப் பாடல்கள் 69
என்ற வரிகள் பொதுவாக எல்லாவகைத் தாலர்ட்டி அலும் காணப்படும். ஒவ்வோாடியும் அந்தாதியாய் அமைக் தள்ளது. இப்படித் தாலாட்டுஞ் சமயத்திலும் அழுவதை நிறுத்தாத பட்சத்தில், ஆராரோ ஆராரோ
ஆரிரரே ஆரிரரோ ஆரடித்து நீயழுருய்
கண்மணியே கண்ணுறங்காய் கண்ணே யடித்தாரார்
கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள்
விலங்கு போட்டு வைப்போம் அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணிவைப்போம் டாட்டி அடித்தாளோ
பாலூட்டுங் கையாலே அத்தை அடித்தாளோ
அமுதூட்டுங் கையாலே மாமன் அடித்தானே
மகிழ்ந்தெடுக்குங் கையாலே அண்ணன் அடித்தானே
அணைத்தெடுக்குங் கையாலே, என்று இனசனத்தார் ஒவ்வொருவரையுங் கே ட் டு வைப்பள் தாயானவள். இஃதிவ்வாருகத் தாலாட்டு நேர மொழிந்து பிள்ளை சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது செல்லங்கொஞ்சுவார்கள். பி வளை சாய்ந்தாடும்; பிள்ளை தலையாட்டும் ; கைகொட்டும், பிள்ளையின் இவ்வித செயல்களைப் பெற்ருர் பார்த்து அகமகிழ்வர். ‘தலையாட்டி வந்தான். தலையாட்டி? என்று பாடவுக் தொடங்குவர்
Isr ut. 8.

Page 40
Y0 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
பிள்ளை சாய்ந்தாடுதலைக் கண்டு,
சாஞ்சங்கண்டே சாஞ்சம் சாய மயிலாரே சாஞ்+ம் வட்டிக்கும் சோத்துக்கும் சாஞ்சம் வாழைப்பழத்துக்குஞ் சாஞ்சம் குத்துவிளக்கே சாஞ்சம் கோயிற் புரவே சாஞ்சம் அன்னே பின்னே சாஞ்சம் அழகுள்ள ம்யிலே சாஞ்சம்
என்று பாடுவார்கள். இப்பாடலின் திருத்தமே பாட சாலைகளிற் படிப்பிக்கப்படும்
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோவிற்புருவே சாய்ந்தாடு பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவளக்கொடியே சாய்ந்தாடு சோலைக்குயிலே சாய்ந்தாடு
தோகைமயிலே சாய்ந்தாடு கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகத்தருவே சாய்ந்தாடு கண்டேதேனே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு
என்ற பாட்டாகும்.
இன்னுஞ் சில கிராமங்களில் வேறுவிதமான பாடல் கள் பாடப்பட்டும் வருகின்றன. பிள்ளை ஆனபோலத் தன் உடம்பு முழுவதையுஞ் சேர்த்து ஆடுவதைக்காணும் போது,

தாய்தந்தையர் கொஞ்சுமொழிப் பாடல்கள் 7t
ஆஃன ஆடுவான் தம்பி ஆனை ஆடுவான் என்னனே, அது பொன்னனை எங்கள் குலத்துக் கரசானை முத்துக் கொம்பன் ஆணையது முதுகு சொறியு மானையது சப்பட்டைக் காலன் ஆனையது. ஆனை ஆடுவான் தம்பி ஆனை ஆடுவான்
சப்பாணி கொட்டுதல்
பிள்ளை தன் கைகளைச் சேர்த்துக் கொட்டுவதைச் சப்பாணி கொட்டுதல் என்பர். பிள்ளை இதனைச் செய்யும் போது,
சப்பாணமாங் தம்பி சப்பாணம் செப்புநிறைங் தொருகையாலே செண்பகம் பூ க்தொருகையாலே முத்துப் பதித்தொரு கையாலே மோதிரம் போட்டொரு கையாலே முழங்கிக் கொட்டுமாம் சப்பாணி என்று பாடுவர். இன்னும் பிள்ளையின் இரு கைக ளையும் பற்றி மேலுங் கீழும் உயர்ததியும் பதித்தும்

Page 41
Yge ஈழத்து நாடோடிப் பாடல்கள்
ஆலாப் பற பற
அழகு பற பற
கோழி பற பற
கொக்கு பற பற
குருவி பற பற
என்றும், கானும் பட்சிக%ளக் காட்டிப் பாடி மகிழ்வர்.
இப்படிப் பிள்ளையின் கோலாகலங்களைக் காணும் பெற்றர் பிள்ளைக்கு ஆசைக் கலியாணம் பேசுவர். இந்த மனக்கருத்தையும் பாட்டாகப் பாடிக் காட்டுவர்.
தம்பி சமர்த்தன் தம்பட்டக்காரன் தம்பிக்கு யார் பெண் கொடுப்பார், மாமா கொடுப்பார் மாமி கொடுக்காள்.
பொதுவாகப் பிள்ளைக%ளத் தாய்மார்தான் அதிகமாகப் பேணிக்காத்து வளர்ப்பர். அவர்களுக்குப்பின் பெண் சகோ,காங்கள் பிள்ளைகளிடங் கவனஞ் செலுத்துவர். பிள்ளை எங்கேனும் பார்த்துக் கொண்டிருந்தால் 'என்ன அக்காவா வேணும் ? என்று கேட்டு.
பெரியக்கா வருவாள் போக்காய் தருவாள் சின்னக்கா வருவாள் சிமிட்டிக்காய் தருவாள் குஞ்சக்கா வருவாள் குறிஞ்சிக்காய் தருவாள் என்று பாடத் தொடங்குவாள் அன்னை.
இந்தச் சிறிய பருவம் போக, நடந்து ஒடியாடி விளை யாடும் பருவத்தில் பிள்ளைகள் பல சேர்தல் கூடும் அவர் கள் தங்களுக்குள் கூடி நாடிப் பற்பல அனுபவங்களை யிட்டுப் பாட்டுக்கள் பாடி மகிழ்வர்.
இந்தப் பாடல்களுக்கு ஏதேனும் பொருளுண்டோ நான்பது ஆராய்தற்குரியது. அங்குமிங்குமாய் பல பொருள் களேப் பற்றிய சொற்கள் வந்து சேருமேயன்றி தொடர்ந்து

தாய்தந்தையர் கொஞ்சுமொழிப் பாடல்கள் 78
ஒரு பொருளைக் குறிப்பதாயிராது. எதுகையும் ஒவ்வோர் அடியின் ஈற்றெழுத்திலேயே அமையும். மாதிரிக்குச் சில
பாடல்கள் வருமாறு :
1.
அம்மா சுட்டதோசை ஐயா முறுக்கின மீசை தின்னத் தின்ன ஆசை விளக்குமாத்துப் பூசை. மின்னி மின்னிப் பூச்சி என்னென்ன தந்தாய் காங்கு தந்தேன் க2ணயாளி தந்தேன் கைக்குப் பலமோதிரங் தந்தேன் செப்பைத் திறந்து பணமள்ளித் தந்தேன் சிங்காரக் கொட்டினில் நெல்லள்ளித் தந்தேன் பத்துப் பணம் என்ன பாரமோ பழைய பட்டணம் என்ன துாரமோ.
ஆத்து வாழை குலைபோட ஆறனும் பெண்டிலும் கூத்தாட முத்தத்து வாழை குலைபோட முத்தனும் பெண்டிலும் கூத்தாட வேலியில் வாழை குலைபோட வேலனும் பெண்டிலும் கூத்தாட பக்கத்து வாழை குலைபோட பத்தனும் பெண்டிலும் கூத்தாட அழாதம்மா அழாதே அப்புச்சி வருவார் அழாதே மானுங் கையிலே பிடித்துக்கொண்டு தேனுஞ் சுரையிலே எடுத்துக்கொண்டு மகிழம்பூ மாலையும் போட்டுக்கொண்டு தெகிழம்பூ மாலையும் தட்டிக்கொண்டு உடும்புக் குட்டியாம் தோலிலே காக்கிளியான் பாஞ்சானல் இடுப்பிலே கடந்துவா கண்ணே கடந்துவா

Page 42
74
ஈழத்து காடோடிப் பாடல்கள்
மருத்துவிச்சி வாழ்த்து
அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி அரிசி மலைநாடுங்கண்டீரோ தம்பி கெல்லுப் பொதியோடும் வந்திரோ தம்பி கெல்லு மலேகாடுங் கண்டீரோ தம்பி மிளகுப் பொதியோடும் வந்தீரோ தங்கம் மிளகு மலைாகாடுங் கண்டீரோ தங்கம் இஞ்சிப் பொதியோடும் வந்திரோ தங்கம் இஞ்சி மலைகாடுங் கண்டீரோ தங்கம் உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி உள்ளி ம8லாகாடுங் கண்டிரோ தம்பி மஞ்சட் பொதியோடும் வந்திரோ தம்பி மஞ்சள் மலைகாடுங் கண்டீரோ தம்பி உப்புப் பொதியோடும் வக்திரோ தங்கம் உப்பு மலோகாடுங் கண்டீரோ தங்கம் காசுப் பொதியோடும் வந்தீரோ தங்கம் காசுமலைாகாடுங் கண்டீரோ தங்கம் கோச்சி வாழ கொப்பர் வாழ பேத்தி வாழ பேரன் வாழ பூட்டி வாழ பூட்டன் வாழ கொம் மான் வாழ மாமிவாழ குஞ்சியாச்சி வாழ குஞ்சியப்பு வாழ பெரியாச்சி வாழ பெரியப்பு வாழ ஊர்வாழ தேசம் வாழ குருவுக்கும் சிவனுக்கும் கல்லபிள்ளையாயிரு அயலும் புடையும் வாழவேண்டும் .
அன்னமுஞ் சுற்றமும் வாழவேண்டும் ஆச்சியும் அப்பாவும் வாழவேண்டும்
அம்மானும் மாமியும் வாழவேண்டும் காக்கா, கண்ணுக்கு மைகொண்டுவா குருவி, கொண்டைக்குப் பூ கொண்டுவா கொக்கு, குழந்தைக்குத் தேன் கொண்டுவா கிளியே, கிண்ணத்தில் பால் கொண்டுவா,

2 பிள்ளைகளின் விளையாட்டுப்பாடல்களும் வேடிக்கைப் பாடல்களும் கீச்சி மீச்சித் தம்பலம் 1. கீச்சி மீச்சித்தம்பலம்
கீயா மாயாத் தம்பலம்
மாச்சி மாச்சித் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்.
கண்ணுரே கடையாரே.
2. கண்ணுரே கடையாரே
காக்கணமாம் பூச்சியாரே ஈயாரே எறும்பாரே உங்களம்மா என்னகாய்ச்சினுள் கூழ் காய்ச்சினுள் கூழுக்குள் என்ன விழுக்தது ஈ விழுந்தது ஈ எல்லாம் தட்டி எறும்பெல்லாந்தட்டி உனக்கொருகாயும் எனக்கொரு பழமும் கொண்டோடிவா.
கிட்டியடித்தல் 3. கவடி யடிக்கக் கவடியடிக்கக்
கைகால் முறியக் கைகால்முறியக் காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு. மாம்பட்டை மருதம் பட்டை வெளவாலோடிய தென்னம் பட்டை பூம் பட்டை புளியம் பட்டை பட்டணம் பட்டனம் பட்டணம். பாக்கப் பழுத்தால் பதிஞருே2ல. மூங்கிலோலை முதிரப்பட்டு வீரவாகு பட்டணம்பட்டணம்.

Page 43
76
ஈழத்து காடோடிப் பாடல்கள்
ஆலையிலே சோஜலயிலே ஆலங்காடிச் சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்கப்பாலாறு பாலாறு பாலாறு பாலாறு ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு இறுக்கி இறுக்கிக் கட்டு.
ஈச்சோலை தும்போ?ல பாக்குப் படிச்ச வண்ணுன் ஒலை மூங்கிலோலை முதிரைக்குட்டி சின்னவாளி பட்டணம் பட்டணம்.
கவடிக் கவடிக் கொட்டை கம்பளி வீரக்கொட்டை. பறைப்பயல் இலுப்பைக்கொட்டை பாடிவா தும்புக்கட்டை தும்புக்கட்டை.
கீழாருே2ல மேலாருே2ல எண்ணிப் பார்த்தால் பதினுருேலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு. ஆலஞ்சருகு மட மடன்ன ஆங்கோர் வண்டி உருண்டுவர சோலைக்கிளியார் கொத்தியடிக்க ாகாய்குலேக்க கல்லாண்டம்மா பையோடா பையோடா. நத்தைச்சூரி புல்லுத்தின்ன நறுவிலி சங்கிலி பாராயோ காரா வென்கிற பசுவைக்கண்டால் கடைக்கண்ணுல்ே பாராயோ பாராயோ பாராயோ.

பிள்ளைகளின் விளையாட்டுப் பாடல்களும் வேடிக்கைப். 77
கண்ணும் பொத்தி கடகட மாரி மூன்று விளாச்சி மூக்கறைபொத்தி பாலையுஞ் சோற்றையுங் கொண்டுவா கொண்டுவா கொண்டுவா.
ஈச்சருமன்னர் இழைச்சருமன்ஞர் ஈச்சம் பழந்தின்ன வந்தீரோ மன்னுர் எங்கடைமச்சான் எங்கடை மச்சான்.
ஆலஞ்சருகு மடமட வெனவே அங்கொரு வண்டிலுருண்டு வரக் காலாடி வரப் பொழுதேறிவரத் தெர்தட்டத் தெருத்தட்ட தெருவெங்கும் பொறித்தட்ட பூம்பட்டை புளியம் பட்டை வெளவாலோடிய தென்னம்பட்டை கவடிக் கவடிக் கவடிக்.
இப்பாடல்களைக் கிட்டியடிக்கும்போது பாடி"ஓடி மூச் சப் பிடிப்பர். ஒவ்வோர் பாட்டின் கடைசிச் சொல்லை - மீண்டும் மீண்டும் மூச்சிருக்கும்வரை சொல்லிக்கொண்டு ஒடுவர். மூச்சுத் தரிப்பதைக் கவனிக்க இன்னுேர் விரன் பாடுபவன் பக்கமாக ஒடுவன். அவனின் கவனத்தை முறி யடிப்பதற்காக சில பாடல்களில் வசை மொழிகள் இழி மொழிகள் வந்துள்ளன.
4. சோக்குச் சோக்குத்தான் சோமசுந்தரா
சொக்கான் கீரைத்தண்டுதான் சோமசுந்தரா வாசலிலே வல்லிமரம் சோமசுந்தரா வாதுவாதாய் ஓடுமரம் சோமசுந்தரா வம்புவந்து கேருதையா சோமசுந்தரா கோட்டையிலே கொய்யா மரம் சோமசுந்தரா

Page 44
78
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
கொத்துக் கொத்தாய் ஒடுமரம் சோமசுந்தரா கொத்துப் போனபக்கமெல்லாம் சோமசுந்தரா கொடுமை வந்து கேருதையா சோமசுந்தரா சோக்குச் சோக்குத்தான் சோமசுந்தரா சொக்கான் கீரைத்தண்டுதான் சோமசுந்தரா
ஆற்றிலே இரண்டு முட்டை
கண்டேன் கண்டேன் அழகான கொய்யாப்பழம்
தின்றேன் தின்றேன் சிற்றெறும்புக் கணக்கெடுத்துப் பார்த்தேன் பார்த்தேன் இந்தச் சின்னத்துரை பெண் சாதிக்குத்
தோத்தேன். தோத்தேன்.
குழைமறைவிலே சிலபறவைகள் சிறகுகோத La r உன்ன2ணத் தோழ கண்ணுணைத் தோழ
எறியட்டோ செட்டை முறியவே
கடல்மேலே கப்பல் பாரு
கப்பல் மேலே தட்டுப்பாரு
தட்டுமேலே லோட்டுப்பாரு லோட்டு மேலே லோயாப்பாரு லோயாமேலே ஆயாப்பாரு ஈயா வீட்டுக் கையைப்பாரு ஈயாவீட்டுக் கையைப்பாரு
பார்க்க வடிவான பாட்டு மகிழ்வுடனே கேட்டு உங்கள் சோக்குக் கையைப்போட்டு இழுத்து விடுங்கோ கோட்டு இழுத்து விடுங்கோ கோட்டு.

பிள்ளைகளின் விளையாட்டுப் பாடல்களும் வேடிக்கைப். 79
9.
10
11.
12.
முத்தை இதோ தேடுவேன் அத்தை வீட்டிற் போடுவேன் சித்தி வீட்டில் ஆடுவேன் சுற்றிச் சுற்றி ஒடுவேன் காணுமற் போனமுத்தை கண்டெடுக்குமட்டும் கடுகளவும் ஒயமாட்டேன் கால்போஞலென்ன கைபோனலென்ன களஞ்சியத்திலிட்ட முத்தை கணப்பொழுதிற் கண்டெடுப்பேன்
முத்தே முத்தே ஓடிவா கல்முத்தே ஓடிவா வெண் முத்தே ஓடிவா தண் முத்தே ஒடிவா
மழை வா வெய்யில் போ கொட்டைப் பாக்குச் சிட்டுத்தாறேன் கொழுந்து வெற்றிலை மடிச்சுத்தாறேன் கல்லாலே வீடுகட்டி ஆலமரத்திலே வ்ச்சியா
தாடுதாடுமெல்லியரே தலையிடிக்கிற மெல்லியரே கொக்கு நின்று கூவக் கூவக் குளவி யம்மா பால் காய்ச்ச அடுப்புக் குள்ளே போட்டதாங் கொட்டை ஆரெடுத்த பண்டியெடுத்த பண்டிக்கு மேலே படம் விழுந்து சீப்புக் கொண்டை சித்தாடைக்கொண்டை செட்டியார் பெண் சாதி
சிறுகால் நீட்டு.
சின்னச் சின்ன வெத்தி2லயாம் சின்னத் தம்பி நித்திரையாம் பெரிய பெரிய வெத்திலையாம் பெரிய தம்பி நித்திரையாம்

Page 45
80
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
13. அம்புலிமானே அம்புலிமானே
அழகிய சொக்கா எங்கெங்கு போருய் காட்டை போறேன் காட்டையேன்
கம்புவெட்ட
கம்பேன்
மாடுதுரத்த
மா டேன்
சா ைகம்போட சானகமேன்
வீடுமெழுக
வீடேன்
பிள்2ள பெற
பிள்?ளயேன் எண்ணெய்க் குடத்துக்கையும் தண்ணிக்குடத்துக் கையும் துள்ளித்துள்ளி விளையாட. பிள்ளைக்கு வைத்த மாம்பழமெங்கே? காகம் கொண்டு போய்விட்டுது காகம் எங்கே? சுட்டுப்போட்டேன் சுட்டசாம்பல் எங்கே ? வித்துப்போட்டேன் வித்த காசெங்கே? அரிசிவாங்கிப்போட்டேன் அரிசிளங்கே? ஆக்கிப் போட்டேன் ஆக்கின சோறெங்கே? அண்ணன் வீட்டு காயும் அக்கா வீட்டுப் பூனையும் திண்டுவிட்டு ஓடிவிட்டன.

3 கலியானப் பேச்சு
விணு 660)
தாலி பூலி பெண்ணுண்டோ ?
தாலி பீலி பெண்ணுண்டு தாமரையாரே பெண்ணுண்டோ ?
தாமரையாரே பெண்ணுண்டு வண்ணச்சின்னப் பெண்ணுண்டோ?
வண்ணச்சின்னப் பெண்ணுண்டு வடிவுள்ள எங்கள் கண்ணனுர்க்கு
வடிவுள்ள உங்கள் கண்ணணுர்க்கு.
காலி பீலி சீதனமென்ன?
தாலி பீலி பாதிவளவு தாமரையாரே சீதனமென்ன?
தாமரையாரே பாகிவளிவு வண்ணச்சின்னச் சீதன மென்ன?
வண்ணச்சின்னப் பாகிவளவு வடிவுள்ள எங்கள் கண்ணணுர்க்கு
வடிவுளள உங்கள கணணஞாககு
தாலி பீலி சம்மதமில்லை
தாலி பீலி முழுவளவு தாமரையாரே சம்மதமில்லை
தாமரையாரே முழுவளவு வண்ணச்சின்னச் சம்மதமில்லை
வண்ணச்சின்ன முழுவளவு வடிவுள்ள எங்கள் கண்ணனுர்க்கு
வடிவுள்ள உங்கள் கண்ணணுர்க்கு,
81

Page 46
82
ஈழத்து காடோடிப் பாடல்கள்
தாலி பீவி சம்மதங்தான்
தாலி பீலி சம்மதத்தான் தாமரையாரே சம்மதங்தான்
தாமரையாரே சம்மதக்கான் வண்ணச்சின்னச் சம்மதந்தான்
வண்ணச்சின்னச் சம்மதத்தான் வடிவுள்ள எங்கள் கண்ணனுர்க்கு
வடிவுளள உங்கள கணணனாககு.
தாலி பிலி சீதனமென்ன ?
தாலி பீலி ஒட்டவட்டில் தாமரையாரே சீதனமென்ன?
தாமரையாரே ஒட்டவட்டில் வண்ணச்சின்னச் சீதனமென்ன ?
வண்ணச்சின்ன ஒட்டவட்டில் வடிவுள்ள எங்கள் கண்ணணுர்க்கு.
வடிவுள்ள உங்கள் கண்ணணுர்க்கு.
காலி பீவி சம்மதமில்லை
தாலி பீலி கல்ல வட்டில் தாமரையாரே சம்மதமில்லை
தாமரையாரே கல்ல வட்டில் வண்ணச் சின்னச் சம்மதமில்லை
வண்ணச்சின்ன கல்ல வட்டில் வடிவுள்ள எங்கள் கண்ணணுர்க்கு.
வடிவுள்ள உங்கள் கண்ணணுர்க்கு
தாலி பீலி சம்மதங்தான்
தாலி பீலி சம்மதந்தான் தாமரையாரே சம்மதங்தான்
தாமரையாரே சம்மதந்தான்

1 ().
கலியானப் பேச்சு 8.
வண்ணச்சின்னச் சம்மதக் கான்
வண்ணச்சின்ன சம்மதந்தான்
வடிவுள்ள எங்கள் கண்ணனர்க்கு
வடிவுள்ள உங்கள்கண்ணணுர்க்கு.
தாவி பீவி சீதனமென்ன ?
தாலி பீலி ஒட்டச் செம்பு தாமரையாரே சீதனமென்ன?
காமரையாரே ஒட்டச் செம்பு வண்ணச்சின்ன சீதனமென்ன?
வண்ணச் சின்ன ஒட்டச் செம்பு வடிவுள்ள எங்கள் கண்னஞர்க்கு
வடிவுள்ள உங்கள் கண்ணணுர்க்கு
தாலி பீலி சம்மதமில்லை
தாவி பீலி சல்ல செம்பு தாமரையாரே சம்மதமில்லை
தாமரையாரே நல்ல செம்பு வண்ணச்சின்னச் சம்மதமில்லை
வண்ணச்சின்ன நல்ல செம்பு வடிவுள்ள எங்கள் கண்ணணுர்க்கு
வடிவுள்ள உங்கள் கண்ணனுர்க்கு
திராவி பீலி சம்மதத்தான்
தாலி பீலி சம்மதகதான தாமரையாரே சம்மதந்தான்
தாமரையாரே சம்மதங்தான் வண்ணச்சின்னச் சம்மதந்தான்
வண்ணச்சின்னச் சம்மதந்தான் வடிவுள்ள எங்கள் கண்ணணுர்க்கு.
வடிவுள்ள உங்கள் கண்ணனுர்க்கு.
ampurnard

Page 47
4 கும்மிப் பாட்டு
கும்மியடி பெண்கள் கும்மிடி கோவிலங்காயைக் குலுக்கியடி ஒன்பது சட்டியிற் கறியாக்கி கறிக்கு மாங்காய் பறிக்கப்போய் கையில் வெட்டிச்சாம் கிழக்கத்தி ஆற்றுத் தண்ணிரில் ஊற்றெடுத்து ஆவரம் பூவிற் போருக்கி பட்டை மரத்திற் தொட்டிகட்டி பச்சைப் பாய்களைப் போட்டாட்டி மின்னிட்டாம் பூச்சியில் விளக்கேற்றி வேடிக்கை பார்க்கிருய் வீராயி
இந்த நிலாவும் நிலாவு மல்ல நித்திரைக் கேற்ற நிலாவுமல்ல இந்த நிலாவுக்கும் சங்தனப் பொட்டுக்தம் இப்படியா கும்மி கொட்டுறது மாதா கோவிலு போன மக்காள் என்னென்ன அடையாளங் கொண்டுவந்திர் கல்லால் மோதிரம் காணிக்கைச் சப்பறம் வெள்ளானைக் கோட்டையைக் கொண்டுவந்
தோம் கல்லு மலையிலே கல்லுருட்டி கல்லுக்குக் கல்லு போட்டுருட்டி மருதகுளம் மன்னவர் வாருரு பாருங்கடி சாயை வேட்டியே தானுடுத்து தங்க அருணுவை மேல் பூட்டி வீசி நடப்பவர் கம்மையா இந்த நிலவும் நிலாவு மல்ல ங்த்திரைக்கேற்ற நிலாவுமல்ல.

3. சக்தனப் பொட்டடி கானுனக்கு சந்து சவ்வாதடி நீயெனக்கு சந்தனப் பொட்டுக்கும் சாந்துச்சவ்வாதுக்கும் சம்மதமோ முத்து வீராயி.
குத்து விளக்கடி கானுக்கு கொவ்வப் பழமெடி நீயெனக்கு குத்து விளகசூக்கும் கொவ்வப்பழத்துக்கும் சம்மதமோ முத்து வீராயி.
St. Lur, 10

Page 48
5 நாட்டு மக்களின் ஊஞ்சற் பாடல்கள்
ஊஞ்சலாடும் பழக்கம் தமிழ்மக்களக்கே சொந்தமான கென்றல் மிகையாகாது. அன்ன வூஞ்சல், ஒற்றை யூஞ்சல் என்று ஊஞ்சலில் இருவகையுண்டு. ஊஞ்சல்கள் வளமான மரங்களிற் கட்டப்படும். விட்டங்கட்டியும் ஊஞ்சல் போடு வர். வீடுகளில் விட்டமிட்டு ஊஞ்சல் போட்டும் வைக் திருப்பர்.
ஈழத்தில் வருடப்பிறப்பு தோறும் ஆண்களும் பெண் களும், பெரியோரும் சிறியோரும் ஊஞ்சலாடி மகிழ்வர். ஊஞ்சலாடும்போது பாடித்தான் ஆடுவர். பாடல்களெல் லாம் இசைப்பாடல்களாக இருக்கும். இப்பாடல்களில் இடை இடையே சிருங்காச ரசம் தோன்றச் சில அடிக%ளச் சேர்த் திருப்பர். ப ரி கா ச மொழிகளையு மிட்டுவைப்பர். ஊஞ்சலைக் கப்பலாக நினைக்துக் கொண்டும் பாடு வர்.
சந்தனமரம் பிளந்து ஊஞ்சாலுங்கட்டி சாதியாரொரு பலகை விட்டமும் பூட்டி தெந்தணு தெனதெனு வென்றுபாட்டுக்களு
Lሠበ L? கப்பல் ஏலை ஏலோம் கப்பல் ஏலை ஏலோம்
என்று ஒருமுகம்பாடி முடித்து வேறுவேறு பாடல்களைப பின்பு பாடுவர். ஊஞ்சலைக் கப்பல்போல் நினைத்து அதற் குச் சுக்கான் பிடிக்க, பீரங்கி சுட, வெவ்வேறு ஆட்களை நிறுத்திவைப்பது போல் பாட்டுக்கள் பாடுவர். மாகிரிக்கு ஒன்று காட்டுதும் : s
அரிமிளகு, திரிமிளகு அன்னம் பிலாக்காய் அம்பட்டவண்ணுனைக் கூப்பிட்டழைத்து ஆறுமுகச் சாமியைக் கயிருகத் திரித்து பன்னிரண்டு கப்பலுக்குப் பாய்மரம் நிறுத்தி 86

காட்டு மக்களின் ஊஞ்சம் பாடல்கள் 87
வெள்ளைக்காரன்கப்பலுக்குவிளக்கேற்றிவைத்து போடியார் வள்ளியக்கா பீரங்கி வைக்க அக்காளும் தங்காளும் சுக்கான் பிடிக்க போகுதாம் கப்பல் அது-பெரியது துறைபார்க்க ஏலை ஏலோம்
பரிகாசப் பாடல்கள்.
நடக்கமுடியாக சில சம்பவங்களை வைத்து பரிகாச முறையிலும் பாட்டுக்கள் வரும். ஊஞ்சல் கட்டுவதற்கு கல்ல பெலனுன மாக்கினைத் தெரிந்தெடுப்பர். விட்டம் பூட்டுவதாயின் வலுவான உத்தரங்களைக் திெரிக்தெடுததுக் கட்டுவர். ஆனல் கள்ளிமரம், கத்தாளைவிட்டம் இ ைவ பாட்டில் வருகின்றன. குறைந்தசாதி மக்களையும் அவ் ஆஞ்சலில் ஆடவைப்பர்.
கள்ளிமரத்தாலே ஊஞ்சலுங் கட்டி கத்தாளை மரத்திலே விட்டமும் பூட்டி பள்ளிபறைச்சி இருந்தாட பண்டாரச்சுப்பன் உதைந்தாட இப்படி முசுப்பாற்றிப் பாடல்களையும் பாடுவர்.
சிருங்காரச் சுவைதோன்றவும் சில பாடல்கள் பாடப் படும்.
கருக்கல்பட கருக்கல்பட வாறேனென்ருண்டி கருக்கப்பளி சேலைவாங்கித் தாறேனென்ருண்டி பொழுதுபட பொழுதுபட வாறேன் என்ருண்டி பொன்னல் மூக்குத்தி தாறேன் என்ருண்டி
என்றும், கடற்பரவி மணற்பரவி கடக்க முடியாதே கன்னிமார் பொன் ஊஞ்சல் ஆடி முடியாதே.

Page 49
\ &8 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
ஈரடிக் கண்ணிகள்
சில ஊஞ்சற் பாடல்கள் மிகவும் நீளமாக இருக்கும். ஆனல் ஈரடிக் கண்ணிகளாக ஏறிக்கொண்டுபோகும். இக் கண்ணிகளில் பலவித சுவைகளும் கலந்து மிகுத்துத் தோன் அறும்,
அழகழகு முத்தழகு பலகை க8ளச்சேர்த்து அம்புக்கு இரண்டம் புகால் வாங்கி காட்டி காட்டியரே தோழியரே நாமேழுபேரும் - வந்த சிவராத்திரிக்குச் சிந்துகவி பாட ஈர்க்கீக்கித் தெய்வானை யாடுவோம் வாகாக ஈசுவரித் தாயாரே யாடுவோம் வாகாக
கந்தருடை வெள்ளாமை பால்வெள்ளம்போட கதிரேச பிள்ளையருக்குச் சீட்டெழுதியனுப்ப
அல்லியுந் தாமரையும் அலர்த்திடுவோமே ஆகாச மடலெழுதி அனுப்பிவிடுவோமே
ஒட்டோட்டைப் புளியமரம் உடைந்துடைக் து пѣдь Т ஒரு கிண்ணிச் சந்தனம் வேர்த்து விளையாட
மாரிடை மகளுக்கு மறு இடத்த கலியாணம் சிப்பிரெண்டு சுட்டெ டுங்க சீக்கிரம் போய்
வருவோம் வெட்டியே சுட்டியே வெட்ட வெளியாக வேலியுங் கட்டித் தினையும் விதைத்து
ஆராரைக் காவல் வைப்போ மென்றென்னி அண்ணரிடை வள்ளியையும் பாங்கியையும்
வைத்தார் சந்தன மரம் பிளந்து ஊஞ்சாலுங் கட்டி சாதியா ரிருபலகை விட்டமும்பூட்டி

காட்டு மக்களின் ஊஞ்சற் பாடல்கள் h 89.
பித்தானே வன்னியன் போட்டதொரு ஊஞ்சல் பேய்க்காட்டுப் பெண்டுகள் ஆடுவோம் வாகா
வெட்டவெட்டத்தழைக்கு மரமென்னமரமையா இருபேர்கள் கொண்டோடு மரமென்னமரமைய
என்று இப்படி ஈரடிக் கண்ணிகளாகவும் ஊஞ் ச ந் பாட்டுகள் பாடுவர்.
சின்னஞ் சிருர் கூடி ஊஞ்சலாடும்போதுதான் பாட்டுச் கள் வெகு மும்முரமாக வெளிவரும். ஒருவர் மாறி ஒரு வர் அவதி அவதியாகப் பாடுவர். அவர்கள் பாடலுள் ஒன்று காட்டுதும் :
சின்னக்குட்டி புரியன் சீமாஞம் சிப்பிலிச் சந்தைக்தப் போனணும் அங்கை யொருத்தியைக் கண்டாணும் ஆவட்டஞ் சோவட்டம் போட்டானம் பாக்குமரத்திலை முத்தெடுத்துப் பவளம் பூப்போலச் சோருக்கி வாடா மச்சான் சோறுதின்னப் போடடி மச்சாள் சட்டியிலே இப்படிக்கொத்த மச்சா8ள வறுத்திடித்து வாயிலை போட்டாலா காதோ. இப்பாடலை இன்னேர் மாகிரிப்பாடுவர். அதுவருமாறு:
அரைக்கொத்தரிசி ஆக்கியிருக்கு கரப்பொத்தாப் பூச்சி சுண்டிருக்கு ஈச்சோலை ஆணமொன்றும் இந்திர வர்ணப் புளி வைத்திருக்கு வேப்பையடி கட்டிருக்கு வாராய் மச்சான் சோறு தின்ன. இப்படிப்பல வித சுவைகள் நிறைந்த பாடல்களைப் பிள்ளைகள் வருடப் பிறப்புக்காலங்களிற் பாடுவதை கேட் போமாக.

Page 50
90
6 சிருங்கார ரசப் பாட்டுகள்
பஞ்ச வர்ணக் கிளிபோலொரு பெண்ணை
கான் பார்த்து வந்தேன் சாமி
கொஞ்சமுஞ் சந்தேக மில்லாமலே
யந்தக் கோலமயிலை நீர் கொள்ளுஞ்சாமி
அனுகூலம் வந்ததென்று துள்ளும்
கல்ல காலம் கவலையைத்தள்ளும்
மாமரத்துக்கும் பூமரத்துக்கும்
மைலைக்கண்ணுட்டி
மாமிபெற்ற மருக்கொழுந்துக்கு
ாகானே பெண்டாட்டி
ஏன் காணும் ரோட்டிலே நிற்கிறீர்-கொஞ்சம் இ8ளப்பாறிப் போங்காணும் வீட்டிலே மான்புள்ளிப் புருவொன்று கூட்டிலே- மன்னன் மான்வேட்டைக் கேகிருன் காட்டிலே
பாக்கு வெற்றிலை கேட்கிருர் அவர் போக்கணம் கெட்ட மாப்பிளை பசிக்குதென்று சோறு கேட்டால் அடிக்க வாருர் மாப்பிளே மடியைக்காட்டிப் பிச்சை கேட்டால் தடியைக் காட்டிருர் அடிபணிந்து தெண்டனிட்டால் வெளியே போடி என்கிருர்,
தங்கம்மா தங்கம்மா என்னுணம் காய்ச்சினுய் கருவாட்டாணம் காய்ச்சினேன் கையில் ஊத்தி கக்கினேன் அவரைக் கண்டு விக்கினேன்
அம்மியடியில் கக்கினேன்.

சிருங்கார ரசப் பாட்டுக்கள் 91
மழைபேயிது மழைபேயிதுமத்தாளங்கொட்டுது
மத்தாளங்கொட்டுது எங்கட ங்லையிலே எல்லாமச்சானும்
வாங்கோ வாங்கோ ஆத்தங் காயைவெட்டிப் பார்த்தால்
அங்கேயில்லைக் கள்ள மச்சான் பயத்தங்கட்டை அவிழ்த்துப் பார்த்தால்
அங்கேயில்லைக் கள்ளமச்சான் முத்துத்தேங்காயை உடைத்துப்பார்த்தால் முத்துக்குளிக்கிருர் கள்ள மச்சான் *அப்படிக்கொத்த மச்சானை வறுத்திடித்து
வாயிலே போட்டால் ஆகாதோ ; ஆகாதோ கேற்று வந்தகாற்றுக்குத் தூற்றிவிட்டால்
ஆகாதோ ; ஆகாதோ.
சின்னக்குட்டி புரியன் சீமானம் சிப்பிலிச்சந்தைக்குப் போனணும் அங்கையொருத்தியைக் கண்டாஞம் ஆவட்டம் சோவட்டம் போட்டாணும்
பாக்கு மரத்திலே முத்தெடுத்து பவளம் பூபபோற் சோருக்கி வாடா மச்சான் சோறு தின்ன போடடி மச்சாள் சட்டியிலே இப்படிக்கொத்த மச்சானை வறுத்திடித்து வாயிலை போட்டாலாகாதோ
வேலிக்கு காட்டிட்ட கட்டைக்கும்-இந்த வேசைகள் செய்கிற வம்புக்கும் காலுக்குள் மிதிபட்ட மண்ணுக்கும் சுலிகாலக் கொடுமையைச் சொல்கிறேன் சின்னவயதில் மயில் ஆடுமோ வாழை சீக்கிரமாய்க் குலைபோடுமோ தன்னை யறியாக் குமர் வாழுமோ

Page 51
9.
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
குளத்துத் தண்ணிரை வெள்ளங்கொண்டோடுமோ இன்னமும் என்னடி நித்திரை.
ஊரார் உறங்கையிலே
உற்ருருங் தூங்கையிலே கல்ல பாம்பு வேடங் கொண்டு
கான் வருவேன் சாமத்திலே கல்ல பாம்பு வேடங்கொண்டு கடுச்சாமம் வந்தா யானுல் ஊர்க்குருவி வேடங் கொண்டு உயரப்பறந்திடுவேன் ஊர்க்குருவி வேடங்கொண்டு
உயரப் பறந்தா யா குல் செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய்த் தூக்கிடுவேன் செம்பருந்து வேடங் கொண்டு
செந்தூக்காய்த் தூக்கவர்தால் பூமியைக்கீறியல் லோ
புல்லாய் மு?ளத்திடுவேன். பூமியைக்கீறியல் லோ
புல்லாய் முளைத்தாயாளுல் காராம்பசு வேடங்கொண்டு
கடித்திடுவேன் அந்தப்புல்லை காராம்பசு நீயானல்
கழுத்துமணி கான் ஆவேன் ஆலமரத்தடியில் அரளிச்செடி
கான் ஆவேன். ஆலமர முறங்க ஆ
அடிமரத்தில் வண்டுறங்க உன்மடியில் நானுறங்க
என்ன வரம் பெற்றேனடி அத்திமரம் காணுவேன்
அத்தனையும் பிஞ்சர்வேன் கத்திவரும் மச்சானுக்கு
முத்துச் சரம் நானுவேன்

சிருங்கார ரசப் பாட்டுக்கள் 99.
10. சிற்ருடை தான் உடுத்திச்
சிறுவரம்பே போறவளே உற்ருர் அறியாமல் ஒரு
உற்ற கதை சொல்லிவிட்டுப்போ உற்ருர் அறியாமல் உனக்கு
உற்றகஸ்தை சொல்லுவேன் இக்குடத்தை ஒருகையால்
உயர்த்தி விட்டாலா காதோ. குடமும் உயர்த்தவேண்டி உன்றை
கொங்கை இரண்டும் தாங்குவேண்டி நாடி வந்த காரியத்தை
காவாலுரைத்திட டி. தட்டான் அறியாமல் எனக்குத்
தாலி பின்னித் தருவியோடா தட்டான் அறியாமல்
தாலிபின்னித் தருவேனஞல் அடுப்பு மூன்று கல்லில்லாமல்
எனக்குச் சோறு ஆக்கித் தருவியோடி. அடுப்புமூன்று கல்லில்லாமல்
சோறு ஆக்கித் தருவேனுணுல் கனதனங்களிரண்டும் முட்டாமல்
எனக்கு ஒரு மதலைதருவியோடா,
11. வாடா வெத்திலை வதங்க
வெத்திலை வாய்க்கு நல்லால்லே
கேத்து வைச்ச சாந்துப்பொட்டு கெத்திக்கு கல்லால்லே
குருவிகொத்தின அரளிப்பூவு
கொண்டைக்கு நல்லால்லே
மாமன் வந்து தோப்பிலே
நிக்கிறது மனசுக்கு கல்லால்லே.
12. அரிசி விக்கிற விலையிலே
அவள் கிடக்கிற கிடையிலே ', 'r. Lir. 1 1

Page 52
94
13.
14.
15.
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
இரண்டு பெண்டாட்டிக்கு ஆசை இளுபடுகிறதே மீசை,
மாமரத்துச் சோ?ல பிலே வைக்கக்கட்டு மூலையிலே அந்தக் கோமளத்தின் குட்டிவந்தா கொஞ்சிக்கிட்டுப் குக்தியிருப்பேன்.
சமத்தி சின்னத்தங்கம்
சுதந்திரப் பெண்ணு வெகு தாராளமாக
அவளுக்கிட்டே சங்கதி ஒன்று ஒய்யாரமாகக் குலுக்கி கடப்பா
அவளே என் கண்ணு ாகான் அடியும் படுவேன்
சிலசமயம் அவக்கிட்டே நிண்ணு. ஆமாண்ணே கமது சொத்து
அதுக்கு மேலே அவளுமுத்து சாமானியப் பேரு சரியாய்
அவளுக்காசை என் மேலேதான் என் சொல்வேன் அவளைக்கண்டு
ஏமாந்து போனேன்" இதுபோலே வாய்க்கா தெடா
மாரிமுத்து அண்ணே அவஇருந்தாலே இனிக்காதெடா சர்க்கரையும் அண்ணே. ஆக்கவேண்டாம் காச்சவேண்டாம்
சுண்டெலிப் பெண்ணே அருகிருந்தாற் போதுமடி
சுண்டெலிப் பெண்ணே, குத்தவேண்டாம் கொழிக்க வேண்டாம்
சுண்டெலிப் பெண்ணே.
கூட இருந்தாற் போதுமடி சுண்டெலிப்பெண்ணே.

16.
சிருங்கார ரசப் பாட்டுக்கள் 95
மாட்டான் மருக்கொழுக்தே
மாடுமேய்க்கும் சின்னத்தம்பி நீமேய்க்கும் மாடுகளெல்லாம்
மலையேறிப் டோகுதடா மலையேறிப் போனுலென்ன
மஞ்சம் புல்லு மேய்ந்தாலென்ன குேளிக்கும் மஞ்சளுக்கு V
நின்று தவஞ் செய்கிறேன்டி கின்று தவஞ் செய்தேனென்று கண்ணைமூடிப் பேசாதேடா அண்ணுர்ந்து பார்த்தா யானுல்
உன்னுக்கைப் பிடுங்கிடுவேன்.

Page 53
96
7 கப்பற் பாட்டு
ഒr& எலோ தங்கைதாம் ஏல ஏலோ அக்காளும் தங்காளம் அஞ்சான் இழுக்க ஆனதொரு மீனச்சி சுக்கான் பிடிக்க பொக்குவாய்ச் சின்னச்சி பீபங்கி தீட்ட புளியடிச் சோனகன் மீசை முறுக்க அடியடா தேங்காயை ஐயனருக்கு திருப்படா கப்பலைத் தெற்குமுன்னத எலை ஏலோ பாலான பின்னணியில் மேவியே சென்று பக்குவ மதாகவே சுக்கான் பிடிக் து மாலாஞ்சு முக்காவை வளமுடன் பார்த்து வரிசைபெறு கும்பாசை வைத் து நேரோடி நூலாலி ழைக்கிட்ட சவுகாரிப் பாயை நுடங்கிடாதே பின்னடங்கிடக கட்டி காலானதாற் பொரு முக்காவைக் காட்டி கடுவேக மதாகவே விடுவீர்கள் கப்பல் ஏலரலோ பாங்கான சோலையிலே பற்பலவிதங்கள் கெரிபுது பார் சமுத்திர மேடிடும் பள்ளம் எல்லையுந் தாண்டி யப்பா விதோ வந்தோம் எதிரே யிலங்குது எசித்துமா நகரம் துல்லி பம தாய் வேகமோடு விடு கப்பல் சுறுக்காக வோடியே துறைசேருவோமேஎ ல லோ. செகமெங்கு மஞ்ச அக்கினி கக்கின்ற சிசிலித் தீவுறு மெற்ணுப் பர்வதமிதோ பார் தகைகொண்ட நங்கூர மதையிங்கு வைத்து தவறுது கந்தகமும் உப்புகளுமேற்றி தொகை கொண்ட மாலுமிகள் சோபனம் பாடிக் தூக்கியே பாய்களைத் துரிதமாயோடி வகை கொண்ட பாங்கான நீரணையைக் கடந்து மகிக்கிாேனியாக் கடலில் வந்ததே கப்பல் ஏலே.

6,
கப்பற் பாட்டு 97
சீலமதுறைந்ததொரு வீதி தெரியுதுபார் கேரிற் குாைகவி திசைகள் சென்றிடுவதைப் பார் கோல மயிலோடு குயிலாகியன புட்கள் கூடிவிளையாடி வரு கொள்கைதனையும் பார் காலமது தவமுது பாயைச் சுருக்கிக் கட்டவே யாவருஞ் சட்டென வெழுந்து நாலு கிசையுங் கலாசுகள் பரவிநில்லும் நங்கூர மிட்டிங்கிறங்கிடச் சொல்லும் ஏலைவரலோ.
ஏலேலோ எலிலோ தாத்தையா ஏலோலோ எலிலலோ
நாழிகை ஒன்றுக்கு நானூறு கப்பல் நாடோறுக் கப்பாமல் தினம் வங்கிறங்கும் சீருடையநெடிய நகர்க்கப்பல் வருஞ்செய்கி சென்னபட்டினங் கோட்டைச்சனங்களெல்லாம்கேட்டு பூரித்து ஆனந்த சங்தோஷமாகி புதுமகளைப் பார்க்கவென்று காைதனிலேகிற்க குண்டுகள் மருந்துகள் உரொம்பவே தொட்டி குணமான துப்பாக்கி மாலுமைகட்டி பண்டுசெய்த பிராமணாைப் பக்கமாய் இருத்த பதமான இராட்சதரைப் பாய்மரமாய்க்கட்டி கிறுகிறென்று சுற்றுதடா சிங்காரக் கப்பல் பொன்னை துறைமுகம் விட்டுப்போகவே
ஏ லலோ ஏ லலோ மேலான மூலமாம் பகுதியிட மெடுத்து விண்ணுகி ஐம்பூதம் பலகைகளைத் தொடுத்து கள்ளமாம் மதத்துவமெனும் சுள்ளாணிதைத்து கசடான இராகமெனும் சீல்பூசி வைத்து கர்மமாம் பொருளா விக்கப்பலுண்டாக்கி கருத்தமான ஆன்மாவில் காவலாய்த் தாக்கி

Page 54
0.
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
மோகமெனும் அடிப்பாரம் முடிக்கவே சுமத்தி
மூதூர்ப்பிரபஞ்ச மெனும் முழுக்கட லமிழ்த்தி சொர்க்க நரகங்களெனும் கப்பிகளும் கட்டி சோதிமதி கண்ணுடி சமுக்காவும் ஒட்டி துர்கர்ம மென்னுமொரு சுக்கானுக் கிருத்தி தர்க்கஞ் செய்விவேக மெனும் மாலுமியிருத்தி புலனும் அமாறுவடம் புக்கவே முறுக்கி பொறியாகும் சிறுகயிறு போகவே இறுக்கி விசயமெனும் சரக்குகளை மிக்கவே ஏத்தி நீங்காமல் ஆங்காரமாய்ப் பாய்மாமும் bாட்டி நிலையிலா மனமெனும் பாய்ச்சீலை பூட்டி நிலையிலர் அலைமோதும் பவசாகரத்தில் நில்லாமல் ஒடுதே இல்லாத கப்பல் எ லலோ ஏ லலோ
ஏலலோ ஏலலோ பங்கய மேல்வரிசை அம்புகோதண்டம் பரிதான சங்கு வாள் வச்சமொடு தண்டம் தங்கு கோழிக்கொடி தாங்கு கையிலங்க தாள மணி செச்சையும் தன்மார் பிலங்க பொங்கிய வீரரும் சூாரும் சூழப் பொதிய மாமலை முனிவர் போற்றி செய்திடவே திங்கள் வெண்குடை கவரிசிதறி ஒலி பொங்க தேவாம்பையர் ஆட துந்துமி முழங்க எங்கும் நிறைந்தே அமார் பூமாரி சொரிய எழிலாகவே முருகர் ஏறினர் கப்பல் ஏ லலோ ஏ லலோ ஏ லலோ ஏ லலோ அஞ்சாமல் நின்றபனை மீன் வருகுதேபார் ஆரைமீன் தன்குஞ்சை நாடி வருகுதேபார் மிஞ்சியோ வாடையோ கோடையோ விசுது

கப்பற் பாட்டு 9-y
விசயமலி அருர்க்கரை கண்டு ஓடுது மஞ்சு சூழ்,கரு வேதவன மதோ தோன்றுது வய விரகத்தியார்க்கு உடையடா தேங்காய் கஞ்ச நிறை செங்கியம் பதியில் வந்ததுவே கப்பலின் பாயை எடுதண்டா நங்கூரம் ஏலலோ ஏலலோ
அம்பா.
கம்பியே தங்கப்பா - என்படகு தண்ணீரிலே சலசலா - என்படகு காவுமாம் என்படகு சலசலா தேக்கமாத்தாலே-என்படகு-சலசலா தேர்ந்தவன் செய்தானே. என்படகு-சலசலா பாக்குமாத்தாலே-என்படகு-சலசலா பாங்காகச் செய்தானே-என்படகு-சலசலா தூரமாய் ஒடுதே நிறுத்து தம்பி-சலசலா ஒரமாய் ஒட்டியே நிறுத்து தம்பி-சுக்கானை-சலசலா.

Page 55
8 பள்ளுப் பாட்டு.
ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே; ஆனக்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று -ஆடுவோமே. இது சுப்பிரமணிய பாரதியாருடைய பள்ளுப்பாட்டு. சுதந்திர எண்ணத்தைக் கிளர்ச்சி செய்ய யாக்கப்பெற்றது. இவ்வித இசைப்பாடல்கள் பல சந்தர்ப்பங்களிற் பாடப்படு கின்றன. நாடகம் ஆடுமுகத்தானும் பாடப்படுகின்றன: உற்சாக மூட்டுமுகத்தானும் பாடப்படுகின்றன தெய்வத் தைப் பசவுமுகத்தானும் பாடப்படுகின்றன. பல விதத் கிலும் எழுந்த பள்ளுப்பாடல்கள் நூ ல் வடிவமாகவும் தோன்றின.
ஈழத்திற் தோற்றிய பள்ளு நூல்கள் கான்கே நான்கு:
1. கதிரை மலைப்பள்ளு 2. தண்டி கைக் கனகாகா யன்பள்ளு 3. பரு2ள விகாயகர் பள்ளு 4. ஞானப்பள்ளு இந்த நால்வகைப் பள்ளுமன்றி வேறு தனிப்பட்ட பள்ளுப் பா ட ல் க ள் ஈழத்தில் அநேகமுண்டு. அவற்றுட் சில வற்றை மட்டக்களப்பு வசந்தன் கவித் கிாட்டிலே பார்த்தல்கூடும். இவற்றை அற்றை நாள் விக்கி யாதரிசியாயிருந்து காலஞ் சென்ற முகாந்திரம் சதாசிவ ஐயர் வேறும் பல காட்டுப்பாடல்களுடன் தொகுத்து அச் சேற்றியுள்ளார். ஐயர் அவர்களின் கண்ணிற்படாத வேறும் எத்தனையோ பள்ளுப் பாடல்களை நாம் கேட்கக் கூடியவர்களாயிருக்கின்முேம்,
இந்தப் பள்ளுப்பாடல்கள் பொதுவாக வயல் நிலங் களில் உருவாகும். வயலுக்குச் சொந்தக்காரன் ஆண்டை யெனப்படுவான். ஆண்டையின் ஏவலாட் பள்ளன் குடும்
100

பள்ளுப் பாட்டு ALVI
பன் எனப்படுவான், இவனுக்கோ இருபெண்டாட்டிகள் ; மூ த் த பள் ளீ, இளைய பள்ளி எனப்படுவர். மூத்த பள்ளியே இவனுக்கு உரிந்தானவள், இளையபள்ளியோ நாட்டியக்காரி: குடும்பனின் காதற்கிழத்தி. மூத்தபள்ளி பள்ளனைப்பற்றியும் இளையாளைப்பற்றியும் ஆண்டையிடம் முறையிடுவாள். முறையிடும் பாட்டு இது.
தெக்தென்னு தெங்தென்னு தெந்தென்னு தென தென்னு தெனதென்னு தென தென தெக்தென்னு தெங்தனணுணு 1. அருக்குவாள் சற்றே விழிக்கு மை யெழுதுவாள்
அழகான கூந்தல் அள்ளி முடிவாள் 2. செருக்குவாள் சற்றே செல்லங்கொண்டாடுவாள்
தேனுடன் கொஞ்சம் பாலுங் கலப்பாள் 3. உறுக்குவாள் ஊரில் பள்ள ரெல்லோரையும்
உச்சியம் பொழுதுானுக்கழைப்பாள் 4. நொறுக்குவேன் கையில் மண்வெட்யோலேகான் ஆண்டைக்காகப் பொறுத்து விட்டேனே. இவ்வண்ணமாக இளைய பள்ளியைப் பற்றி முறையிட்ட மூத்தபள்ளி மேலும் பள்ளனைப்பற்றி முறையிடுவாள்.
பள்ளன் படுகோபக்காரன்; அவன் அடிக்கின்றன் ; சட்டிபானைகளை உடைக்கின்றன் ; இளையபள்ளி வீட்டுக்குப் பலசாட்டுக்கள் கூறிப் பாய்ந்தோடுகின்ருரன் ; வயம் பக்
கமே போவதில்லையென்று முறையிடுகின்றுள் :
காலத்தாலே கல்ல பாலுங்கறந்து கமுகம்பூப்போல அரிசியுந்தீட்டி காலத்தாலே நான்காய்ச்சிய பாற்கஞ்சி காலாலே தட்டிப்போஞனே ஆண்டே ஆண்டே ஆண்டே இவன் செய்யும்மேம்பாட்டை) ஆரோடை சொல்லி ஆறுவேன் ஆண்டே இப்படிக்கொத்த கல்நெஞ்சப் பள்ளணுக்கு
厄町。Lr、1°

Page 56
fe ஈழத்து நாடோடிப் பாடல்கள்
எப்படிக் கஞ்சி காச்சுவணுண்டே தூக்கினன் பல சாதிக்குங் காட்ட உப்பில்லாக் கஞ்சி காச்சச் சொன்னேனேடி ஊரெல்லாங் கொண்டுலாத்தச் சொன்னேனுேடி பள்ளிச்சி கஞ்சி காச்ச ஒண்ணுதோடி பாரடி உக்தன் பல்லை உடைக்கிறேன் பார்.
என்று கூறிப் பள்ளன் எங்கோ போனன் ஆண்டே என்றதும், ஆண்டை பள்ளன் போன இடம் வினவுகின்றன். அதற்கு அவள் விடை பகருகின்ருள். ஆண்டை கேட் ன்ெமுன்:
பள்ளிச்சி பள்ளன் எங்கேயடி போனுன் பள்ளம் பார்த்துப் பயிர்செய்யப் போனணுே கள்ளணுே இவன் பள்ளனுேதானே காரியக் காறஞய் இருப்பாணுே
என்று ஆண்டை கேட்டதும் பள்ளி சொல்லுகின்முள்:
முள்ளிப் பூப்போல முப்பட்டுச் சால்வையும் மூ2லசாய்ந்த கடகமுங் கொண்டு தள்ளித் தள்ளியே சாய்ந்த கடைகளும் சாடையும் பலகேள்விகளும் பேசி கொத்துக் கொண்டு கொடுவாளுங்கொண்டு கோழிக்கூட்டுக்கு மண்வெட்டப்போஞன் வட்டுக்காய்போல முட்டை வயிறனை காவடா என்று கூப்பிடப்போஞன் என்று பதிலளித்தாள் பள்ளி.
இவ்வாறு பள்ளி சொல்லிக் கொண்டு நிற்கும்போது பள்ளன் வெளிப் படுகின்றன். ஆண்டையின் கண்களிற் படுகிமுன், ஆண்டைக்கும் கோபம் மி ஞ் சி விட்ட து ; அஞ்சினன்போல் பள்ளன் பாசாங்கு பண்ணுகின்றன். உடனே ஆண்டையும் கணக்குக் கேட்கின்றர்.

பள்ளுப் பாட்டு t
வகை சொல்லடா பள்ளா வகை சொல்லடா எந்தன் ஏழிணைக்கா8ளக்கும் வகை சொல்லடா என்று வெருட்டுகின்றர். மறுமொழிசொல்லலுற்முள் பள்ளன்:
கட்டின தடத்தில் ஒற2ணக் காளை பட்டல்லோ போச்சு, பார்வைத் தாழ்ச்சியால் ஒற2ணக்காளை பாழாய்ப் போச்சுதே நயிங்தை மூத்தபிள்ளை தோதை கத்தி மூக்குத்தி என்ருள் மொட்டைக்கா8ள இரண்டு விற்றல் லோ
போட்டேன் அடியாருக்கரை முழத் துண்டில்லையென் ருள் அதற்கும் ஒறனை விற்றல்லோ போட்டேன் திருக்கை திமிங்கிலம் தின்பதற்காக செங்காரிக்கா 2ள இரண்டு தீர்ந்துபோச்சே கள்ளுச் சாராயம் கனக்கக் குடித்ததால் கறுப்புக்கா8ள இரண்டு கணக்கன் வாங்கினுன், குச்சு வீடுகட்டிக் குடிபுகுந்த செலவுக்கு மற்றக்கா8ள இரண்டு விற்றல்லோ போட்டேன். என்று தட்டிக் கழித்துக் காளைக் கணக்குச் சொல்வி முடிக்கிருன் பள்ளன். ஆண்டை பள்ளனைத் தொழுவில் மாட்டிவிட்டார். பின்னர் மூத்தபள்ளி வேண்ட விடுதலையாக் குகின்றர்.
வயலில் மும்மூரமாக வேலை 15டக்கிறது. உழுது விாைர் துப் பயிராக்கி, வெட்டி மிதித்துத் திானியமுமாக்கியாய் விட்டது. பங்குபோடுகின் முன் பள்ளன். இளைய பன் ளிக்கே அதிகம் அள்ளி வழங்குகிறன். இருவருக்கும் சண்டை மூளுகி றது. கைச்சண்டையல்ல; வாய்ச்சண்டை
தான். ஊர் இழுபடுகிறது: 6ாடு இழுபடுகிறது. பள்ளிக

Page 57
f04 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
ளிருவாரும் தன் தன் காட்டின் பெருமை கூறுகிறர்கள்.
ஒருக்கி பாண்டிநாட்டாள்; இளையவள் சேர நாட்டாள்.
மூத்தவள் பாண்டி நாட்டுவளங் கூறுகின்ருள்.
காடெல்லாம் நல்ல கானகவாரி கடலெல்லாம் நல்லசிப்பியும் முத்தும் வீடெல்லாம் நல்ல வெண்கல விளக்கேற்றி வீரபாண்டியர் கா டெங்கள் காடே.
என்றதும் கூழுக்கு மாங்கய் தோற்குமா என்ற முறை யில் சேரநாட்டாளாகிய இளைய பள்ளி : வெத்தி2லயாற் செத்தைகட்டும்
எங்கள் காடடிபள்ளி வேந்தனுார்ப் பட்டினமும் எங்கிள் காடடிபள்ளி
இன்னும் கேளடி:
பாக்கால் மடைபாவும் எங்கள் காடடிபள்ளி பர்க் தனுார்ப் பட்டினமும் எங்கள் காடடி பள்ளி வள்ளிகாடு வளர்சோலே வருஷம் மூன்று வி2ளவுள்ளாகாடு கன்னிநாடு கதிர்ச்சோலைகாடு காராளர் வாழுங் கன்னியர் காடு இவ்வாரு கத் தங்கள் காட்டை விதந்துரைத்துத் தீர்த்து வைப்பாரின்றியே வாய் ஒய்ந்த மட்டில் தங்கள் தங்கள் பாட்டில் செல்வர். இதுவே பள்ளநிலை மக்கள் வாழ்க்கை. வாழ்க்கையோடு ஒட்டிய நாட்டுப்பாடல்கள் இவை. இன் னும் அநேகமுண்டு. வாய்க்குக்தோறும் வெளியிடலாம். 1. பள்ளிச்சி பள்ளன் எங்கேடி போனுன் s
பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போஞன் கள்ளனே இவன் பள்ளணுே தாணுே காரியக் காறஞய் இருப்பானே முள்ளிப் பூப்போல முப்பட்டுச் சால்வையும்

பள்ளுப் பாட்டு 105.
மூலை சாய்ந்த கடகமுங்கொண்டு தள்ளித் தள்ளியே சாய்ந்த கடைகளும் சாடையும் பலகேள்விகளும் பேசி கொத்துக் கொண்டு கொடுவாளுங் கொண்டு கோழிக் கூட்டுக்கு மண்வெட்டப் போனுன் வட்டுக்காய் போல முட்டவயிறனை காவெடா வென்று கூப்பிடப் போனன். காலத்தாலே பாலுங் கறந்து கமுகம் பூப்போல அரிசியுங் தீட்டி காலத்தாலே காச்சின பாற்கஞ்சி காலாலே தட்டிப் போனன் ஆண்டே இப்படிக் கொத்த கல் கெஞ்சப் பள்ளனுக் கெப்படிக் கஞ்கி காச்சுவன் ஆண்டே துப்பரவாகக் காச்சிய கஞ்சியைத் தூக்கினுன் பலசாதிக்குங் காட்ட உப்பில்லாக் கஞ்சி காச்சச் சொன்னேைனடி ஊரெல்லாம்கொண்டுஉலாத்தச்சொன்னணுணுேடி
பள்ளிச்சி கஞ்சி காச்ச ஒண்ணுதோடி பாரடி உந்தன் பல்லை உடைக்கிறேன், Lחנff,
அண்டமும் பிண்டமும் கண்டவனுரடா ஆண்டவனெ டங்கே நின்றவஞரடா ஆதிபரன் மனுவாயுலகில் வந்தவரே சோதி அவர் பிறந்தார் வளக்தார் பூலோக மாண்டார்-போனுர் பரலோகம். அவருடன் கூடியே பன்னிரண்டு சீடர்கள் ஒருவன் காட்டியே கொடுத்தானம் அவர் கரையிலங்க முடிதுலங்கப் போனுர் பரலோகம். தெந்தினு தெங்தினு தெங்தினுஞ தெந்தின தெந்தினு தெந்தினுஞ பள்ளத்துப்பள்ளன் எங்கேடி போஞன் பள்ளந் தோறும் பயிரேத்தப் போஞன்

Page 58
106
ஈழத்து காடோடிப் பாடல்கள்
அறுத்த கூலியும் கையுமங்கே கொடுப்பான் அருவாளும் கையுமாயிங்கே வருவான். யேசு கசரேனு வென்பான் கான்தான் நான்தான் எனைப்பிடிக்க இத்தனைபேர் ஏன் தான் ஏன்தான்
வன்னிநாடு வளர்சோலை காடு வரியம்மூன்று வி2ளவுள்ள காடு கன்னி காடு கதிர்சோ 2ல நாடு காராளர் வாழுங் கன்னியர் காடு
4. புல்லரிவுவெட்டவென்றுபொடியளுக்குஞ்சொல்லி
புழுத்த கருவாட் டிலொரு ஆண முங்காச்சி கெல்லரிவு வெட்டவென்று பொடியளுக்குஞ்
சொல்லி கெத்தலியிலே ஒரு ஆணழுங் காச்சி கறுத்தக்காளை ஒரனை ஈர2ண சிவலிங்க வளவுழவுக்கே.
எங்கள் காட்டிலும் சோழர்கள் காட்டிலும் எங்கும் மா மழை பெய்யவே தொடங்கி எங்கள் காட்டு வளமை பெருமை சொல்லக் கேள் சோழமண்டலப் பெண்ணே. ஆறுபோந்தங்கு தண்ணிருமள்ளி அழுத பிள்ளைக்குப் பாலுங் கொடுத்து சீறுபூறென்று சிறுகெல்லுக் குத்தி தீட்டியாக்கவே அங்கேரஞ் சென்றது. காலத்தாலே கான் பாலுங் கறந்து கமுகம் பூப்போல் அரிசியுந் தீட்டி கேரத்தோடு நான் ஆக்கியபாற்கஞ்சி காலாலே தட்டிப் போருளுண்ைடே ஆண்டே ஆண்டே ஆண்டே இவன் செய்யும்
மேம்பாட்டை
ஆரோடை சொல்லி ஆறுவேன் ஆண்டே

பள்ளுப் பாட்டு 107
அருக்குவாள் சற்றே விழிக்கு மையெழுதுவாள் அழகான கூத்தல் அள்ளிமுடிவாள் செருக்குவாள் சற்றே செல்லங்
கொண்டாடுவாள் தேனுடன் கொஞ்சப் பாலுங் கலப்பாள் உறுக்குவாள் உளரில் பள்ளரெல்லோரையும் உச்சியம் பொழுதுானுக்கழைப்பாள் கொருக்குவேன் கையில் மண்வெட்டியாலோகான் ஆண்டைக்காகக் பொறுத்து விட்டேனே முள்ளிப்பூப்போல முப்பட்டுச் சேலையும் மூலைசார்ந்த கடகமுங் கொண்டு தள்ளித் தள்ளித் கதிர்கள் பொறுக்கின்ற காடகப் பள்ளி தோடங்கக்காறி.
தெக்தென்னுன தெனதென்னுன தென தென்னுன தென தென்னு கறுத்தப்பள்ளியும் சிவத்தப் பள்ளியும் கலந்து காத்து கடுதற்கே கறுத்தப் பள்ளியா ரெறிந்த காத்துf கமலகுண்டலம் வீசவே சிவத்தப்பள்ளியாரெறிந்த காத்து சோழமண்டலம் வீசவே
கறுத்தக்காளை ஒறனை பூட்டிக் கமுகடி வயல் உழையுக்கை எருத்தைத் தெய்தெய் யென்றுரப்பப்போனேன் எதிர்த்துக் கொண்டது பள்ளரே
தேய் கடை யருவாள் தாளம்போட எங்கடை யடியார் உங்கடை கயிஞர் பொன்னின் சட்டை தோளிற் போட்டு செந்கெல் பார்க்கப் போய்விட்டார்.

Page 59
ه1
9 அரிவி வெட்டுப் பாடல்
ஆற்ருேடு ஆற்றுநீர் அலைந்து வருமாப்போல் அகன் பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல் சேற்றேடு வெள்ளம் தெளிந்து வருமாப்போல் செங்கால் bாரையினம் மேய்ந்து வருமாப்போல் சினந்தரிவி வெட்டும் இளந்தாரிமாரை கண்ணன் எங்களுர் இளந்தாரிமாரை கண்ணுாறு படாமற் காரும் ஐயனரே, மட்டுருக்காலை அருவாளுமடித்து மாவிலங்கன் பிடி சீவி பிறுக்கி வெட்டும் பிடியைச் சிறக்கவே போட்டு வெள்ளிக் தகட்டினல் விரல்கூட்டமிட்டு வளர்ந்தரிவி வெட்டும் இளந்தாரிமாரை காவூறு வாராமற் காரும் ஐயனரே.
10 ஏர்ப் பாடல்
1. ஒாம்போ.சால்பார்
108
ஏ எ எ. ஒஒஒகோ. சால்பார்த்த கள்ளனடா-செல்லன் தாய் வார்த்தை கேளாண்டோ பாரக் கலப்பையடா செல்லனுக்கு பாரமெத்தத் தோணுதடா வரம்போ தலைகாணி-செல்லனுக்கு
 

எர்ப் பாடல் 109
வாய்க்காலோ பஞ்சுமெக்தை செல்லன் நடக்க நடை-இன்று சொல்லவொண்ணு அன்ன கடை இந்த நடை கடந்து-செல்லா காம் எப்போ கரை சேருவதோ வெள்ளிமதியாணி-செல்லனுக்கு வெண்கலத்தாம் சுள்ள சண சுள்ளாணிக்குள்ளே-செல்லா ஒரு குத்திரத்தை வைத்தாண்டோ சாலை அறிவாண்டோ-செல்லன் சால் பலகைத் தப்பாண்டா மூலை வம்போரம்-செல்லா நீ முடுகிவளை கல்லகண்டே ஒடி நடந்தாண்டா-செல்லன் உறுதியுள்ள காலாலே தள்ளாடித் தள்ளாடி-செல்லன் சாய்ந்தாடிப் போருண்டா தள்ளாதே கண்டே-நீ சலியாதே நல்ல கண்டே முன்னங்கால் வெள்ளையல்லோ-செல்லனுக்கு முகம் நிறைந்த சீதேவி எட்டுக்காலோடா-செல்லனுக்கு இருகால் தலைமூன்று. வானங் குடையாமோ - செல்லனுக்கு மல்லிகைப்பூச் செண்டாமோ ஆழியிலே போய் முழுகி - செல்லா மீ
அண்டி வந்த தீானடா.
sp. , r. 18

Page 60
1Í0
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
11 பொலிப் பாட்டு - சூடுமிதிப் பாட்டு
.
பொவி பொலி காயே பொலி தம்பிரானே பொலி
பூமி பொலி
பூமாதேவித் தாயே
மண்ணின் களமே
மாதாவே நிறைகளமே பொன்னின் களமே பூமாதேவி அம்மா பொலி பொலி பொலியே.
நாளது கேட்டு நார்க்கம்பு வெட்டி நல்ல கடாக்கள் தெரிக் து பிணைத்து எாது பூட்டி இடம்பட உழுது எல்லையில்லாத செந்நெல் வி ைகத்துச் சோழன் எருதுகள் கொண்ணுருயிரம் பாண்டியன் எருதுகள் பன்னீராயிரம் இரவும் பகலும் எத்தி இழுக்கப் பொலி வளாய் பொலி பொலி பொலியே, கணபதியே கரிமுகனே கந்தருக்கு மூத்தோனே பொலி பொலி பொலியே.
பானே வயிற்றேனே பழமேந்தங் கையானே பேழை வயிற்றேனேபெருச்சாளிவாகனனே-பொலி. வட்டி வலமாக வலம் புரியோர் சங்காக நாலு மூலைச்சக்கரமாய் நடுவே சிதம்பரமாய் - பொலி வடபுறத்து வாட்டியிலே வசுதேவர் அட்சரமாம் - பொலி கென்புறத்து வாட்டியிலோ சிறிாாமன் அட்சரமாம் - பொலி எழுவான் புறத்து வாட்டியிலே பரசுராமர் அட்சரமாம் - பொலி

2
பொலிப்பாட்டு - குடுமிதிப்பாட்டு 111
சங்கோ சமுத்திரமோ சமுக்கிரத்தின் ஆணிமுத்தோ - பொலி முந்தோ பவளமோ முகற்றாக்து ஆணிமுத்தோ - பொலி வெள்ளி வெளிச்சத்திலே விளையாடி வாருமம்மா . பொலி வாரிக் களங்கேடி வாழுவோம் சீதேவி - பொலி சங்கு முழங்குதல்லே - சிவ சங்கரனுர் கோவிலிலே - பொலி வேடர் வனந்தனிலே - கங்கர் வேங்கை மரமானராம் - பொலி` குறவர் வனங்,னிேலே - கந்தர் கோலூன்றி நின்ரு ராம் . பொலி. பொன்னுல் அவுரி கட்டி - கந்தர் புத்தகத்தில் நாள்பார்த்து பொன்னவுரி மேலிருந்து - கந்தர் பொலியழகு பார்ப்பாராம் - பொலி முன்னங்கால் வெள்ளையல்லோ முகம் நிறைந்த சீதேவி வாரி சொரிய - இந்த வயநாடு பொன்சொரியும் - பொவி கந்தாடக் களம் நிறைய - எங்கும் கருங்களங்கள் தாமுதிர - பொலி. கந்து நெறு கெறென்னக் களத்தில் கெல்லுக்கான் பொலிய - பொலி. போரேறப் பொலி வளாப் புவியிலுள்ளோர் ஈடேற . பொலி பெரவி
பொலி, பிள்ளையாரே, பொலி மட்டக்களப்பின் மை ழக்குமிழிபோல கொட்டியாரப் பொலிகொண்டுவா பொவி

Page 61
112
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
கடை வயிறன் குடுவைக் கொம்பன் வருகுது எருது வலம்புரிச்சங்கு சங்கு வலம்புரிச் சாதிப்பெருங்கடல் பொலி மேலே நின்ற ம%லநாடு பார்க்கப் பொலி அம்மாள் காயே பொலி பிய்த்தும் பிரிந்தும் பிரியாய் கடாவே பின்னடிக் குளம்பினுல் வாரிச் சொரிவாய் தாயே பொலி பொலி பூமாதேவித்தாயே பொலி பொலி பொலி பொலியே.
ஆத்தாப் பொலி தளத்தாப்பொலி கருமதாயே ஒ ஓ ஒ பொலி முன்பிறந்த மூத்தோனே என்கணபதியே ஆறுமுகனே - ஒ ஓ ஒ பொலி போரேறப் பொலிவளாப் பூமியுள்ளோர் ஈடேற ஒ ஓ ஒ பொலிதாயே பால் மாடு ஈண்ட கண்டே தாயே பொலி பார்த்து கட நல்லகண்டே மானே மாகதமே மாணிக்க முக்தனே பசுங்கிளியே தென்னமுதே வந்திாடா-ஒஒஒ பொலி
ஒகோ.ஓகோ பொலிதா மாகாயே கறுத்தாட்டுப்பலி தேறேன் பொலி களம் நிரம்ப வாபொலியே - ஒகோ. வட்டக் கலையர்களே வாலாட்டும் கொம்பர்களே - ஒகோ போர் ஏறப் பொலிவளர பொலிக் கும்பக் கான் வளர - ஒகோ. வாம்போ தலையணையோ வாய்க்காலோ பஞ்சுமெத்தை . ஒகோ.

பொலிப் பாட்டு - குடுமிதிப் பாட்டு 118
வெள்ளி விளக்கெரிய வெண்கலங்கள் நின்றெரிய - ஒகோ முத்தளப்பன் செட்டிமகன் முடிசமைப்பன் ஆசாரி - ஒகோ. ஆசாரி கல்ல தம்பி அருமைப் பாடுள்ள வண்டி - ஒகோ. அன்ன நடையோ கண்டார் அலங்கா வால் வீச்சோ - ஒகோ. கீச்சானும் கத்துதவே
ழெக்கும் வெளுக்குதுவே - ஒகோ. பாலும் அடுப்பிலே பாலகனும் தொட்டிலிலே - ஒகோ
==ாை =
12 கள்ளுப் பாடல்
பாட்டாச் சுத்தி பளபளென்ன பாளையன் கோட்டை நறுகறென்ன பனையுங் கறுத்திருக்கும் பனே வட்டுஞ் சிவத்திருக்கும் - அதிலே இறக்கிய நீரைப் பருனெல் தலை கிறு றுெக்கும் செம்புபோல் வடிவத்துள்ளே சோறு போல் கொதிக்கும் - சுள்ளே எங்களை வளர்த்த கள்ளே எங்கை போய் ஒளித்தாய் கள்ளே கள்னே
sessmag.are

Page 62
114
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
13 கலியாணப் பாடல்கள்
எலிக் கலியாணம்.
சண்டெலி நாட்டாருக்குக் கலியானமாம் சோளன்கொட்டைப் பல்லக்கிட்டு தூங்கிருராாம் சுண்டெலி காட்டாரே நீங்களும் வங்கிடுங்கோ சுறட்டெலி காட்டாரே நீங்களும் வந்திடுங்கோ மண்டெலி நாட்டாரே நீங்களும் வந்திடுங்கோ மறட்டெலி நாட்டாரே நீங்களும் வந்கிடுங்கோ. ஒரு எலி வந்து நின்று ஊரைக் கூப்பிடுதாம் இரண்டெலி வந்து நின்று ஆசனங்கள் போடுதாம் மூண்டெலி வந்து நின்று முத்து விளையாடுதாம் 5ாலெலி வந்துகின்று 15ாகசின்னம் ஊதுதாம் அஞ்செலி வந்துநின்று பஞ்சாங்கம் பார்க்குதாம் ஆறெலி வந்துகின்று பரிசம் செலுத்துகாம் ஏழெலி வந்து நின்று ஏகாந்தம் பாடுதாம் எட்டெலி வந்துநின்று ஒரு கொட்டாரம் கட்டுதாம் ஒன்பதெலி வந்துநின்று ஒலைகொண்டு போகுகாம் பத்தெலி வந்துநின்று பந்துவிளையாடுதாம் பல்லில்லாத எலிவந்து பெண்ணைத் தூக்கி ஒடுதாம்.
14 நொண்டிச் சிந்து அஞ்சு கல்லால் ஒரு கோட்டை - அந்த ஆனந்தக் கோட்டைக்கு ஒன்பதுவாசல்
-ஒன்பது வாசல் இஞ்சிக்கு ஏலங் கொண்டாட்டம் - அந்த எலுமிச்சம் பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் கஞ்சிக்குக் கழனி கொண்டாட்டம் - அக்தி கடைகெட்ட மூரிேக்குக் கோபங் கொண்டாட்டம்

கொண்டிச் சிந்து ' f 15
நந்த வனத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவ%ன வேண்டி கொண்டு வந்தா னொ கோண்டி - அதை கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி ஆண்டியைத் தூண்டில் போட்டாட்ட - அந்த அழகப்பன் திருமகளை ஐயா போட்டாட்ட பூனையைப் பொரிச்சமீனுட்ட - அந்த புளியானப் பத்த%னப் பெண்டில் போட்டாட்ட -
தான தகுதன.
15 மீன் பிடிகாரர் பாடல்.
புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே கட்டுவ%ல எடுத்துக் கிட்டுப் புறப்படுவோமே கடல் கடந்து செல்வதற்கு தோணியுமுண்டு கட்டை சுரு? உழுவை மீன் கடலிலே உண்டு கடவுள் தந்த கைகளே முழுப்பட உண்டு
-மச்சான் முழுப்பட உண்டு. கடல் கடந்து பீன்பிடிப்போமே - விண் கவலையற்று வாழ்க்கிடுவோமே முப்பது நாள் உழைத்துழைத்து
நிறையப் பணம் வாங்கி அதை மூன்று நாளிற்கிண்டுவிட்டுக்கடனேயும் வாங்கி பாக்கி நாளிற் பெரும் பகுதியைப் பட்டினியாக்கி மனப் பதறலோடு மாாடிக்கும் சன்மமும் வேண்டாம் மன்-மாாடிக்கும் சண்மும் வேண்டாம் புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே கட்டுவலை எடுத்துக்கிட்டுப் புறப்படுவோமே.

Page 63
116 ஈழத்து காடோடிப் பாடல்கள்
16 அடுப்பங்கரைப் பாடல்
செழும் அடுப்பை ஊகிப் பக்கமெல்லாம் 5ோகுது பச்சைக் கட்டையை வைத்துக் கொழுக்தப் பக்தமாட்டேன் என்குது பத்தமாட்டேன் என்குது ஏழு மாடியில் இருந்த எனக்கு இப்படிக் காலம் வந்தது எதை கி%னப்பது ஏஅக்கழுவது என்கதி யிப்படியாச்சுது சட்டிபானை இல்லாமற் சமைப்பாளா ஒரு பெண்ணு சமைப்பாளா ஒரு பெண்ணு சமத்துப் பேசிப்பேசி என் கழுத்தை யறுக்கிருரர் ஆம்பிளை என்ன நேரமோ என்ன கிறகசாரமோ இப்படியாச்சு அடக்குச் சனியன் பிடிச்சுக்கிட்டான்
அடுக்களையும் போச்சு
 

17 பலதுறைப் பாடல்கள்
1 எங்கே போகிறீர் போகாதே நில்லும்
ஏன் போகிறீர் கோயிலுக்கு என்னுணை சொல்லும் சங்கை கெட்ட வள் நீயொரு வேசை தன்ம வாழ்வில் உனக்கென்ன ஆசை கன்னங் தெறிக்க ஒதுக்கிய பாக்கு கள்ளி உனக்கென்ன போர்வை மொட்டாக்கு வடக்கு வாசலிற் பனைபோல நிற்பாள் வாங்கி நில்லென் ருற் புலிப்பாச்சல் பாய்வாள்.
2. மழைவா வெயில் போ
கொட்டைப் பாக்குச் சுட்டுத் தாறேன் கொழுந்து வெத்திலை மடிச்சுத்தாறேன் கல்லாலே வீடுகட்டி ஆலமரத்திலே வக்கசீயா
3 கட2ல கொந்தாய் அவிச்ச கடலே கடலே கொந்தாய் அவிச்ச கடலே ருலாமி வாங்கோ அப்புகாமி வாங்கோ சின் ஜூனயா வாங்கோ பெரியையா வாங்கோ * கம் மடை புருசன் செத்து பேர் வெள்ளியம்மர் கொழும்புக்குப் போட்டுச் செல்லுவோம் கொழும்புக்குப் போட்டுச் செல்லுவோம் தாறேன் தாறேன் கியலா தறகணங் மட்ட அறிலா கொழும்புக்குப் போட்டுச் செல்லுவோம்
4. ஏண்டி குட்டி என்னடி குட்டி
என்னுடி செய்தாய் அம்மியடியில் கும்மியடித்தேன்
சும்மாவா இருந்தன் ஏண்டி குட்டி என்னடிகுட்டி என்னுடி செய்தாய் 6T. Lur, 14

Page 64
118
ஈழத்து காடோடிப் பாடல்கள்
ஆட்டுக்குஞ்சுக்கு ஆறுதற் பண்ணினேன்
சும்மாவா இருந்தன் ஏண்டி"குட்டி என்னடிகுட்டி என்னுடி செய்தாய் கோழிமுட்டையில் மயிர் பிடுங்கினேன்
சும்மாவா இருந்தன் ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னுடி செய்தாய் பாம்புக்குட்டிக்கு பல்விளக்கினேன்
சும்மாவா இருந்தேன்.
என் பொண்டாட்டி சண்டைக்காறி
- சாகதமாமா
இன்டைக்கெல்லாம் ஏசக்கேப்பாள்
தோழமாமா
தஞ்சாவூர் சங்தைக்குப் போனேன்
- சாதமாமா
சாகிற கிழவியைப் போட்ட டித்தேன்
- தோழ மாமா . எட்டு காளாய்ச் செத்துக்கிடந்த
சாரைப்பாம்பை - சந்தமாமா எட்டிநிண்டு தொட்டுப்போட்டேன்
- தோழமாமா ஓட்டைப் பானைக்கை ஒனுன்பூந்தது
- சாக தமாமா அடிக்கப்போனேன் கடிக்கவந்தது
- 5 தாழமாமா கடைக்குப் போனேன் வெத்தி2ல வாங்கச்
- சந்தமாமா காசு கொடாமல் ஓடிவந்தேன்
- தோழமாமா w என்னைப்போலச் சமத்தனுண்டோ
- சந்தமாமா

பலதுறைப் பாடல்கள் 19
இத்தனைபோலே ஒருவனைக் காட்டடா
- தோழமாமா -
இரண்டாட்டுக்கு எட்டுக்காலடா
- சாகதமாமா
என்பெண்டாட்டியைக் கேட்டுப்பாரடா
- Gas Tp LDIT LOT
சாராயப் போத்தலை கம்பு - அதைச் சாப்பிட்டபின்பு கடி ஒரெலும்பு தாயாரைத் தடிகொண்டு மாட்டு - பெற்ற தகப்ப2னயும்பாட்டனையும்வீட்டைவிட்டோட்டு
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய் கல்லைப் பிளந்து கடலருகே
முட்டை வைத்தேன் வைத்ததுமோ காலுமுட்டை
பொரித்ததுவோ மூன்று மூத்த குஞ்சுக்கு இரைதேடி
மூன்றுமலே சுற்றி வந்தேன் இளைய குஞ்சுக் கிரைதேடி
ஏழுமலை சுற்றிவங்தேன் பாத்திருந்த குஞ்சுக்கிரைதேடி
பவளமலே சுற்றி வந்தேன் மாயக் குறத்திமகன் வழிமறித்துகண்ணிகுத்தி காலிரண்டும் பட்டு சிறகிரண்டும் மாரடிக்க கானழுத கண்ணிரும் குஞ்சழுதகண்ணிரும் வாய்க்கால் நிரம்பி வழிப்போக்கன் கால்கழுவி இஞ்சிக்குப்பாய்ந்த இடத்தேலா மிச்சைவேரூன்றி மஞ்சளுக்குபாய்ந்த இடத்தேமாதாளே வேரூன்றி தாழைக்குப் பாய்க்த இடத்தே
தளம்பினது கண்ணிர் வாழைக்கு பாய்த இடத்தே
வற்றினது கண்ணிர்.

Page 65
1፻0
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
உளரான் ஊரான் தோட்டத்திலே
ஒருவன் போட்டது வெள்ளரிக்காய்
காசுக்கு இரண்டாய் விற்கச் சொல்லி
காகிதம் போட்டானம் வெள்ளே க்காறன்
வெள்ளேக்காறன் பணம் வெள்ளிப்பணம் வேடிக்கைபார்க்குதாம் சின்னப்பணம்
9 கோட்டையிலேகொய்யாப்பழம் விற்குதுமச்சான்
10.
11.
கொக்கையைத்தான் விற்றுப்போட்டு
வாங்கித்தா மச்சான் சந்தையிலே சாயச்சீலை விற்குதுமச்சான்-உண்ட
தங்கச்சியை விற்றுப்போட்டு வாங்கித்தா மச்சான் பட்டணத்திலே பட்டுச்சீலை
விற்குது மச்சான் - உண்ட பாட்டஞரை விற்றுப்போட்டு வாங்கித்தா மச்சான் பாண்டிருப்புப் பானைசட்டி வாங்கித்தாமச்சான்
கனகாலத்துக்குப் பாவிக்கலாம்
பார்த்துக்கொள் மச்சான் ஏலங்கராம்பு கைப்பு வாங்கித்தா மச்சான்
வெற்றிலைக்கு என்றைக்கும்
போட்டுச்சப்ப கல்லது மச்சான்
தேவையானவை வழுவாமல் வாங்கிக்கொண்டு ஓடிவாமச்சான்.
குண்டுமணித் தோட்டத்துக்குள்
கூட்டமென்னடி கூட்டம் குதிரைக்காறப்பயலைக் கண்டால் ஒட்டமென்னடி ஓட்டம் தந்தனத்தங் தோப்பிலே
தயிரு விற்கிற பெண்பிள்ளாய் தயிருபோன மயிராச்சு
கிட்டவாடி பெண்பிள்ளாய்

பலதுறைப் பாடல்கள் 13 Ι
12. ஒருசுழ கிருசுழ கீச்சங் கொட்டை ஒன்பது பெண்டுகள் கூடிக்குத்தி கல்லும் மண்ணுங் கலந்து குத்திக் கல்லடி நாச்சாருக்குக் கல்யாண மாம் கடுகு பிறப்பிடத் தாலிகட்டி என்னதாலி, பொன்தாலி என்ன பொன், காக்காப்டொன் என்னகா க்கா, அண்டங்காக்கா என்ன அண்டம், சோத்தண்டம் என்ன சோறு, பழஞ்சோறு என்ன பழம், வாழைப்பழம் என்னவாழை, கறிவாழை என்னகறி, நத்தைக்கறி என்னாகத்தை, குளத்துகத்தை என்னகுளம், திரிக்குளம் என்னதிரி, விளக்குத்திரி என்ன விளக்கு, குத்துவிளக்த என்ன குத்து. கெல்லுக்குத்து என் லாகெல்லு, வால்கெல்லு என்ன வால், மாட்டுவால் என்ன மாடு, சும் மாடு 6 T601 607 éj LDuofT, egy LDLDT. 13. புங்கம் புங்கம் புளியமி2ல
எங்கிருக்குது பொன்னப்பன் தோட்டத்திலே
மிகுந்திருக்குது * * ܗܝ * ܘ ܀ அப்பா வாறேன் அவ்விடத்திலே
o v பூச்சியிருக்குது பூச்சிக்கு என்கையில்
Om · v « S V’ V மருந்திருக்குது கட்டாரி சே2லமேல்
9 KO Y A U V W OP O கண்ணிருக்குது மாமனுக்கும் எனக்குமொரு
u w w . . . . 4 w வம்பிருக்குது
sr. ur. 15

Page 66
192
14.
15.
16.
17.
ஈழத்து நாடோடிப் பாடல்கள்
மாமா மாமா பன்னுடை மாமியார் வீட்டுக்குப் போகாதே சுங்காங் காயைத் தின்னுதே சூத்தை யறுத்துச் சாகாதே நாணயம் மெத்தப் பேசாதே ாகாக்கை யறுத்துச் சாகாதே
அ. சி. கடையிலே கான் கிடக்கிற கிடையிலே உருேசாப்பூ வாங்கிக் கொண்டைக்கு குத்தினேன் கோவிலுக்கு போனேன் ஐயரைக் கண்டேன் அரிசிப் பெட்டி கொடுத்தேன் புக்கைப் பெட்டி தந்தர்ர் புட்டுப் புட்டுப் போட்டேன்
கொக்குத் தலை மூன்று குருவித் தலை காலு எல்லாஞ் சேர்ந்தால் ஏழு என் பெண்டாட்டியைக் கேளு ஒன்று இரண்டு மூன்று காலு ஐந்து ஆறு ஏழு அடுத்த வீட்டுப் பெண் பி2ளயிடம் வெத்திலை பாக்குக் கேளு
காக்காக் குஞ்சுக்குக் கலியான மாம் காசுக்கு இரண்டு மஞ்சலாம் தொட்டுக் குளித்தால் பூக்குமாம் துரையைக் கண்டால் மணக்குமாம் ஏ குட்டி வீராயி உன் புருஷன் வாருண்டி வீட்டை மெழுகடி
வெள்ளிப் பாயை போடடி

18.
பலதுறைப் பாடல்கள் 139
கிள்ளு முள்ளுச் சந்தனத்தை கிட்டெடுத்து வையடி
பேழை வரும் பெட்டி வரும்
பொன்னுலே தாலி வரும்.
சோக்குச் சோக்குத்தான் சொக்கான் கீரைத் தண்டுதான் சோடி யெங்கும் காமடி சொல்லி வாாறன் கேட்டுக்கோ சோடி இரண்டு மாட்டிக்கோ கன்னு மின்னுச் சரிகைச்சீ2ல பார்சல் எடுத்துத் தருகிறேன் காங்கணங்கள் போட்டுக்கோ - நல்ல காப்பிரண்டு மாட்டிக்கோ.

Page 67
18 தெம் மாங்கு
நாடோடிப் பாடல்கள் பல மெட்டுகளிற் பாடப்பட்டு வருகின்றன. கொண்டிச்சிந்து, கும்மி தெம்மாங்கு இவை யெல்லாம் அவற்றிற்கிசைந்த மெட்டுடன் கடப்பவை. இந்த மெட்டுகளுள் சிறந்தது தெம்மாங்குபோலும் ; ஆகவேதான் இப்பெயர் பெறலாயிற்று தென்பாங்கு என்னுஞ் சொற் ருெடர் தெம்மாங்கு ஆயிற்றுபோலும்.
மக்கள் பற்பல தொழில்கள் புரிந்து வாழ்க்கை கடத்து வர். உழுதுண்பார் பலர்; அவர் உடம்பிற்கு அலுப்பு வராமற் பாட்டுப்பாடி மகிழ்வர் சிரிப்பு உடம்பிற்குச் தேறுதலளிக்கும். சலிப்பு உடம்பை நின்று மாய்க்கும். எற்றமிறைப்பவன் களைப்பை மாற்ற இன்னிசையெழுப்பு வான். வண்டி ஒட்டுபவன் தன்னையும் மாடடையும் தட்டிக் கொடுக்கப் பாட்டிசைப்பான்.
வண்டிஒட்டுபவர்கள் பொதுவாக நாள்முழுவதும்.அகனே ஒட்டிப் பிழைப்பவர்கள். பகல்கோம் முழுவதும் அகிக மாக வெளியிலிருப்பதால் வீட்டிலிருக்கும் மனையாளை நினைக் தும் உருகுவர். கூடமாட மனையாளும் வந்து வேலை செய் தாற் தெம்மாங்காயிருக்கும்மென்றும் மெ லிவர். இவ் வுணர்ச்சி கவிதையாகின்றது
சின்னச் சின்ன வண்டி கட்டி
சிவத்தக்காளை இரண்டு பூட்டி வன்னவன்னப் பாரமேற்றி
வாராண்டி உன்புருஷன் மாடுமோ செத்தல் மாடு
மணலுலோ கும்பி மணல் மாடிழுக்க மாட்டாமல்
மாய்கிருண்டி உன்புருசன் J忽4 ‘

தெம்மாங்கு 互25
இவ்வண்ணம் தன் மனைவியை விளித்துப் பாடுகிமுன். மனைவியை நினைக்தத் தெம்மாங்கு பாட வேலைக் களைப்பு நீங்கித் தென்படைகின்ருன் வண்டிக்காான்.
விடிந்தது விடியமுக்கி வேலைக்குப் போகவேண்டியவர் கள் தொழிலாளர். கடன்சொல்லிக் கடையப்பமும் வாங்கி உண்பர். கடன் காசுக்குத் தினங்தோறும் சாக்குச் சொல்வியும் வருவர். இராமுழுவதும் நினைப்பும் இது; விடிந்தால் இடியப்பஞ் சாப்பிடுதல் வேண்டும்; கடன் காசு கொடுத்தல்வேண்டும், இதற்கு ஆறுதல் கவிதைதான்.
வெள்ளி விடிஞ்சு போச்சு
விடியற்புற நேரமாச்சு இடியப்பக்காறி வந்து
மடியைப் பிடிக்கப் போருள் தெரு வழியே கடந்து செல்கின்றன் தொழிலாளி. குறுநடை போட்டுக் குக்கி மிதித்துப் போகலாமrமுடியாது. எட்டி கடக்கவேண்டும். நடை உல்லாசமாக இருப்பதற்கு அமைந்த ஒரு பாட்டு.
சாலையிலே இரண்டு மரம்
சக்கார்கள் வைத்தமரம் அது ஓங்கி வளர்ந்திருக்கு-சிவசெங்கு
உனக்கேற்ற தூக்குமரம். மாமி மகளிருக்க
மாலையிட்ட பெண்ணிருக்க சாரங்கெட்ட சுண்ணும்பு
காசுகொடுத்து வாங்கலாமோ ஆற்றிலே தலைமுழுகி
ஆவரம் பூப்பட்டுடுத்து துற்றுகிருரள் தலைமயிரை
துரைமக்கள் கையெடுக்க

Page 68
126
ஈழத்து காடோடிப் பாடல்கள்
வெள்ளை வெள்ளைச் சீலைக்காரி
வெள்ளரிக்காய்க் கூட டைக்காரி
கோணல் மாணல் வெள்ளரிக்காய்
கொண்டுவாடி திண்டுபார்க்க.
கப்பலிலே சோருக்கி கடலவரைப் பூப்பொரித்து வட்டிலிலே சோறு போட்டு வருகுதாண்டி துரக்குமரம் தூக்குமரம் என்ன செய்யும் தூண்டிக்கயிறு என்ன செய்யும். புட்டியிலே வீட்டைப் பாரு பூவரசம் மரத்தைப் பாரு தண்ணிக் குடத்தைப் பாரு தங்கம்போற போக்கைப்பாரு.
 

19 பறங்கியர் எனப்படும் சட்டைக்காரர்கள்
அவர்களைப் பற்றித் தமிழில் நிலவும் நாட்டுப்பாடல்கள்.
போத்துக்கல் தேசத்திலிருந்து வந்தவரைப் போத்துக் கீசர் என்றும் ஒல்லாந்து தேசத்திலிருந்து வந்தவரை ஒல் லாந்தரென்றுங் கூறுதல் தகுதியுடைத்தெனிம்ை இவர்களிரு சாகியினரையும் பறங்கியர் என்று அழைப்பதே பெருவழக் காய் விட்டது.
பிராஞ்சியர் என்ற பெயர் பறங்கியர் என மருவி வழங்க லாயிற்று. பிராஞ்சியருக்கு முதன்முதலாக இடப்பட்ட பெயர் காலககியில் ஐரோப்பாவிலிருந்து வந்த அங்கிய வெண்ணிற மக்கள் யாபேருக்கும் வழங்குகலாயிற்று. போர்க் துக்கீச ஒல்லாங்க சந்ததியினராகிய சட்டைக்காாசைப் பறங் கியர் என்று இலங்கை மக்கள் வழங்குவர்.
பறங்கியரின் இராச்சியம் தமிழ் காட்டில் அதிக காலம் டிேக்கவில்லை யெனினும் அவர்களின் பழக்கவழக்கங்கள் பல இன்றும் மக்கள் வாழ்க்கையில் கலந்திருக்கின்றன. புச் வீடுகளின் மேல் கொடியெடுத்தலும், பொலியளக்குமுன் சாணியாற் சிலுவை போடலும், ஆலயங்களில் பீரங்கிவெடி தீருதலும் பறங்கியரால் ஏற்பட்டவை. கமிசு, களிசான் முதலிய உடைவிசேடங்களும், கவுத்தோர், பேணிச்சி முத விய நகை விசேடங்களும், மேசை, கதிரை, கவிச்சு )Upعر லிய தளபாட விசேடங்களும், பிந்தாரிக்கிறது, கந்தாரிக் கிறது, தொலுக்கரிக்கிறது முதலிய மொழி விசேடங்களும்
இன்றும் வழக்கிலிருக்கின்றன.
பறங்கியர் மக்களுடன் கூடிப்பழகிய தன்மை ய ர ற் போலும் நாட்டிற் பல நாட்டுப் பாடல்கள் வெளிவந்துள் ளன. பறங்கியர் புகையிலையைச் சுங்கானி லிட்டுப்புகைப் 12Y

Page 69
128 ஈழத்து நாடோடிப் பாடல்கள்
பர் ஆகவே அவர்கள் சுங்கானும் கையுமாகத்திரிவர். சில சமயங்களில் இழந்திவிடுவதுமுண்டு. இதையிட்ட ஒரு காட்டுப்பாடலுண்டு.
சங்கானைச் சந்தையிலே - பறங்கியர் சுங்கானைப் போட்டுவிட்டார் பாக்தெடுத்தவர்க்குப் பறங்கியர் பாதிச்சுங்கான் கொடுப்பாராம். இவர்கள் அதிகமாக மாட்டிறைச்சியை விரும்பி உண்பர். சோறு பிடிக்காது. கருவாடு, அவர்கள் விரும்பி உண்ணும் பொருள். அவர்களின் உணவைப்பற்றியும் பாட்டுப்பாடி யுள்ளார்கள். V
மாட்டிறைச்சியாம் - பறங்கிக்கு மானுமிணங்காதாம் சுட்டகருவாடாம்-பறங்கிக்கு சோறுமினங்காதாம் நிலத்கில் வாழும் எலிகளையும் பிடித்துண்பர். எலி பிடித்தலைப் பற்றிஎழுந்த பாட்டு ஆனந்தமளிக்கின்றது.
என்ன பிடிக்கிருய் அந்தோனி - நானும் எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் பிடி அங்தோனி-அது புத்துக் கொண்டோடுது சிஞ்ஞோரே பறங்கியர் கப்பலில் வந்தவர்கள். அவர்கள் போக்கு வரத்து அதிகமாகக் கப்பல் மூலமே நடைபெறும். பறங்கியர் கொண்டு வந்தபடியால் கோழிக்கோட்டு வாழைப் பழத்தைப் பறங்கிப் பழம் என்றும் கப்பலில் வந்தபடியால் கப்பற்பழமென்றும் தற்காலம் கள்ளிக்கோட்டையென்றுசொல்லப்படும் கோழிக்கூடு என்ற இடத்திலிருந்து வந்தபடி யால் கோழிக்கூட்டுப் பழம் என்றும் வழங்குவர். இவர்கள் கப்பலிற்பல பொருட்களை ஏற்றியிறக்கி வியாபாரஞ்செய்வர். கரும்பென்ருல் சீவன் போலும்.

பறங்கியர் எனப்படும் சட்டைக்காரர் J89
ஒரு கட்டுக் கரும்பாம்
பறங்கியுண்டால் ஆயிரமாம் அந்தக்கட்டுக் கரும்பே பறங்கி ஏற்றுங் கப்பலிலே கப்பலுங் கொள்ளாதோ பறங்கி கடலுங் கொள்ளாகோ கப்பலும் செட்டிமகள் பறங்கி
எப்போது வருவாரோ.
இங்கு வந்த பறங்கியரிற் பலர் சுதேசிகளை விவாகஞ் செய்துமிருந்தனர். ஒரு பெண், பறங்கியர் ஒரு வரை நோக்கிப் பாடியதுபோல் ஒர் பாடலுண்டு.
தூ 0ா தூரத்திலே - பறங்கி துப்பட்டி விற்குதடா துப்பட்டி வாங்கிக் தாடா - பறங்கி கோளுக்கு மட்டம் பார்த்து துலுக்கன் சந்தையிலே - பறங்கி உலக்கை விற்குதடா உலக்கை வாங்கித் தாடா - பறங்கி குலுக்கி மாவிடிக்க காலாகாலத்திலே - பறங்கி காலாழி வாங்கித்தாடா - பறங்கி காலிலே போட்டுக்கொள்ள. பறங்கி வந்தான் தமுக்கடிச்சான் பன்னிரண்டு கப்பல் ஒட்டிவந்தான் ஏழு கோட்டை இழுத்தடிச்சான்.
ଧ୍ବଜ୍ଞ
، مسع
Atsar. Luar. Il 6

Page 70
20 சத்திய வேதத் தத்துவார்த்தம் செறிந்த நாட்டுப் பாடல்கள்.
ஈழவள நாட்டிலே போக்துக்கீசர் வருகையுடன் சக்திய வேதம் பாடபக் கொடங்கியது சக்கிய வேதம் பாம்பத் தொடங்கிய அதே நூற்றுண்டில் அஃதாவது பதிகுரும் நூற்றண்டிலே வேத சாட்சிகளையும் இலங்கை கண்டது. அந்த நூற்றுண்டு தொடக்கம் யேசு சபைக் குருமார் ஒரு வர் பின்னுெருவராக இலங்கை வந்து வேசோபதேசஞ் செய்து மக்களைத் தம் மதம் பிரவேசிக்கச் செய்தனர். மக் களும் விசுவாசங் கொண்டவர்களாய் வேதநெறி வழுவாது ஒழுகலாயினர். ஒழுகவே மக்களின் வாழ்க்கையும் சக்கிய வேதமும் ஒன்ருேடொன்று பிணைந்து நின்று மிaரிாலாயின.
இயற்றமிழ் பேசிய நம் மக்கள் வாயில் இயல்பாகவே பாடல்கள் எழும்பும், கவிதை நடையே இயற்றமிழின் போக்கு; எனவே மக்கள் ஆடியும் பாடியும் மகிழ்வர். ஆட் டத்திற்கிசைந்த பாடல்களே காட்டுப் பாடல்கள். நாட்டுப் பாடல்களில் சமய போதனைகளும் மருவிவரும். இஃது இயற்றையே. இவ்வியற்கையை ஒட்டி ஈழத்தில் வாழ்ந்த சத்தியவேக மக்கள் தம் சமயக் கருத்துக்களைப் பொருக்கிப் பல காடடுப் பாடல்கள் ஆக்கியுள்ளார்.
மல்லாகம், கெல்விப்பழை என்னுமிடங்களில் 1840இல் கத்தோலிக்க மக்கள் பலர் வாழ்க் கனர் என்பதற்குச் சான்று களுண்டு. மல்லாகத்திலிருந்த கோயில் சங். இன்னசியாரின் காமந்தால் வழங்கியது. இந்த இன்னசியாரின் திருநாமம் யேசுசபைக் தாபகரை நினைவூட்டுகின்றது யேசுசபைக் குருமாரின் மேற்பார்வையில் வாழ்ந்த சத்தியவேத மக்கள் இன்னுசியாரைப் புணைந்து பாடல்கள் ஆக்கியுள்ளார்கள். ஞானப்பள்ளில்வரும் :
180

சக்திய வேத நாட்டுப் பாடல்கள் 13
'சங் நாசி இன்னுசிதேவனே
மேலானதவ முனிவன் வாழவேகூவாய் குயிலே' என்ற அடிகள் அவரின் நாமத்தை எமக்கு கினே வூட்டுகின்றன. நாட்டுப் பாடல் ஒன்றில் அவரின் காமம் அமைந்தவாறு காட்டுதும்.
எண்ணி யிறைசாலை எடுத்திடடி சின்னுச்சி இன்னுசி யாருக்கும் இதி%ல இரண்டு
பங்குண்டு மக்கள் செய்யும் தொழிலால்வரும் ஆதாயத்தில் ஒன்று இரண்டு பங்குகளைக் கோயிலுக்குச் செலுத்திவருவது வழக் கம். அவ்வழக்கத்தை அனுட்டித்தே இப்பாடலும் எழுக் துள்ளது
இனி, சக்திய வேத மக்களுக்குப் பாலன் பிறந்த தினம் பெரும்மகிழ்ச்சிக்குரிய திருகாளாகும். இதனையே 16த்தார் என்பர். ஆண்டவன் மனிதனுய் அவதரித்த இப் பெருமகிழ்ச்சியைப் பள்ளுப் பாட்டில் அமைத்துள்ளார்கள்.
அண்டமும் பிண்டமும் கண்டவனுரடா ஆண்டவனே டங்கே கின்றவனுரடா ஆதிபரன் மனுவாயுலகில் வந்தாரே-சோதி அவர்பிறந்தார்வளர்ந்தார்பூலோகமாண்டார் போனர் பரலோகம், தெந்தினு தெந்தினு தெந்தினணு மக்கள் செய்யுங் தொழில்களுக் கிசைய காட் டு ப் பாடல்கள் எழும். கப்பல்கள் கட்டிக் கடலில் ஒடிச் திர வியங் தேடும் பழக்கம் தமிழ்மக்களுக்கே உரியது. ஆரிய ருக்கு இவ்வழக்கம் கிடையாது. கப்பலோடும் போது

Page 71
f9% ஈழத்து காடோடிப் பாடல்கள்
எலை எலோம் தத்தைதா , லை ஏலோம் என்று அம்பா
பாடிக் தொழில் புரிவர். பற்பல சமயத்காருக்கிசையப்
பாடல் வரும். அவற்றிலொன்று :-
ஆனுச்சி மீனுச்சி அஞ்சான் இழுக்க வள்ளமகள் மூத்தவள் சுக்கான் பிடிக்க சண்டியன் சின் னையா பீரங்கி போட அவன தம்பி இலக்கோட்டன்பாய்மரமிழுக்க ஏரோதன் கப்பலும் பாய் இழுத்தோட ஏலை ஏலோம் தத்தைதா ஏலைஏலோம்.
கப்பலேறிக் கடலிற் பயனஞ் செய்வது அபாயமானது. இஃது அக்காலத்துக் கொள்கை ஆண்டவனே முன்னிட்டு சிந்தாத்கிரை செய்யவே விரும்புவர். சிக்கா-யாக்கிரை என்ற பகங்கள் மருவிச் சிந்தாத்திரையானது. சிந்தாத் திரை மாதா என்ற பெயர் மரியம்மைக்கு வழங்குகின்றது. சத்கியவேத மக்கள் வழங்கும் சிந்தாத்திரைப் பாடல் ஒன்று காட்டுதும்
ஆண்டவரை நம்பியல்லோ அம்மா ஆழிகடல் ஏறிவிட்டேம் ஏறினுேம் கப்பலிலே
எல்லாஞ் சிந்தாத்திரையாக சிந்தாத்திரைப் பயணம்
சீமானுர் போய்வாருேம் போய்வாருேம் சாமி யென்றே
பூமுடிக்குத் தெண்டனிட்டோம். தெண்டனிட்டு அடி பணியத்
திரு வளமோ மரியேதாயே தாயே சலியாதே
M சஞ்சலத்தால் வாடாதே வாடைப்பூவே மருக்கொழுந்தே வாசமுள்ள ரோசாப்பூவே.

சத்திய வேத காட்டுப் பாடல்கள்
அக்காலத்திலும் இக்காலத்திலும் சிலர் நிலத்தெவியை உணவாகக் கொள்வர். கில எலியைப் பிடிப்பதற்குமுன் அதன் பாழியறிந்து பிடித்தல் வேண்டும். அங்தோணி என்பான் எலிபிடிக்கின்றன். பிரபு பார்த்தார்.
என்ன பிடிக்கின்றுய் அந்தோணி- கானும்
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே சிஞ்ஞோர் என்ற வார்த்தைக்குப் பிரபு எ ன் ப து
பொருள். இதனைக் கேட்ட சிஞ்ஞோர்
பொத்திப் பொத்திப்பிடி அங்கோனி
என்ருர், அதற்கு அக்தோனி:
一一°g புத்துப்போட்டோடுது சிஞ்ஞோரே
என்றன்.
பெண்கள் கும்மியடிக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் தொன்று தொட்டது. சக்கியவேத மக்கள் மாதது,பத்தர்கள். மாதாவை நினைத்துக் கும்மியடிக்கிருரர்கள்.
இந்த நிலவும் நிலவுமல்ல நித்திரைக் கேற்ற நிலவுமல்ல இந்த நிலவுக்கும் சந்தனப் பொட்டுக்கும் இப்படியா கும்மி கொட்டுறது மாதா கோவிலுக்குப் போன மக்காள் என்னென்ன அடையாளங் கொண்டுவந்தீர் இவ்வாருகப் பல நாட்டுப் பாடல்கள் ஈழ வளநாட்டில் சத்தியவேத தத்துவார்த்தங்கள் பொருக்கிய பல பாடல் களாக வழங்குகின்றன. இவ்வகை நாட்டுப் பாடல்களின் வளர்ச்சியே பிரபந்தங்கள் தோன்றக்காரணமாயின. பள்ளுப் பாட்டு அம்மானை, பிள்ளைப்பாட்டு என்ற பிரபந்தங்கள் சத்கியவேசப் புலவர்களாற் பாடப்பட்டிருக்கின்றன. இலன்

Page 72
194 ஈழத்து காடோடிப் பாடல்கள்
கையில் முதன்முதலாகத் தோன்றிய அம்மானே : கத் தோலிக்க சமயத்தைச் சார்ந்ததே அதுவே சந்தியோகு மையோர்.அம்மானை. இது 1847இல் பாடப் பட்டது. இதே யாண்டுகளிற்முன் ஞானப்பள்ளும் பாடப்பட்டது. இவ வகைப் பிரபக்கங்களின் வளர்ச்சி ஏற ஏறக்காவியமும் அமை யலாயிற்று. அதுவே திருச்செல்வர் காவியம்.
o
--་་ཟ་མཆོག་ VAvvyvw
... تب معین
 
 
 


Page 73


Page 74


Page 75