கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனிப் படமாட்டேன்

Page 1


Page 2


Page 3

@GOT LLADT ĈG366
(இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் அவலகிலே பற்றிய புதினம்)
ஸி. வி. வேலுப்பிள்ளை
ان ؟
వీ
மீனுட்சி புத்தக நிலையம்
60, மேலக்கோபுரத்தெரு, மதுரை-1
கிளை 222, டாக்டர் நடேசன் சாலை ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை-5

Page 4
முதற்பதிப்பு: ஜனவரி 1984 மீனுட்சி 202 உரிமை பதிவு
ENI PPADA MAATEN Tamil Nove By C. V. VELU PILLA First Edition : January 1984 iv -- 1 96 Pages 10 Pt, Letter S 1 8 X 1 2. 5 cms. 1 0. 9 Kg. D/c. Seshasayee White Printing Box Board Binding Agathiyar Achchukudam, Madras-17.
Meenakshi Puthaka Nilauan,
60, West Tower Street, Madurai-1
Branch : 222, Dr, Natesan Road,
ice House, Madras-5.

பாராட்டுரை
கலாநிதி அமரர் க. கைலாசபதி நூலாசிரியருக்கு இந்நூலைக்குறித்து எழுதிய கடிதம்
17-05-82 My dear C. V.,
Herewith have enclosed your manuscript.
enjoyed it immensely. Since it has elements of very personal experiences the story rings true. The events of 1977 and 1979 were crying out for an author like Pirendello, 'Six characters in search of an author. Characters like Santiyago have found an appropriate author. Structurally the story is almost perfect. Flashbacks have been handled imaginatively and artistically. Pasupathy and Kannamma will become immortal. The hopeful and positive line in which the story ends speaks eloquently of the author. a fact this should be done in English too. The Crisp Conversations, and casual portrayal of human relations are quite in contrast to the sentimental stuff in most Tamil stories.
The real success of your story is in the fact that I am curious to find out the persons behind Sundaram, Rajan, and Karthigesu etc.
With regards,
Sincerely yours, (Sd.) KALAS;

Page 5
ஆசிரியர் குறிப்பு
எனது இளம் பிராயத்தில் மாலை வேளைகளில் எனது பாட்டியின் அருகில் இருந்தவாறே கதைகள் சொல்லுமாறு அவளை நச்சரிப்பது எனது வழக்கம்.
பாட்டியும் எனக்கு எண்ணற்ற கதைகளை மறுக்காமல் சொல்லி இருக்கின்ருள்.
இருந்தும் ஒவ்வொரு கதையைச் சொல்லுமுன்பும் அவள் மெல்லப் பின்வருமாறு முணங்கிக்கொள்வது வழக்கம்.
th. நான் பொறந்த கதய சொல்வேன, இல்ல நான் பட்ட கதய சொல்வேன,” என்று.
அன்று அவளின் 'இந்தப் புலம்பலுக்கு நான் எந்த ஓர் அர்த்தத்தையும் கண்டேனில்லை. W
ஆனல் இன்ருே அது அவளது குரலாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் குரலாகவும் எனக்குப் படுகிறது.
இன்று நானும் பாட்டியிலிருந்து சற்று வேறுபட்டு, “இனிப் படமாட்டேன்’ என்று கதை சொல்ல வருகிறேன் போல் தோன்றுகிறது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குமுன் இந்நாவல் வாசகர் களுக்கு வீரகேசரி மூலம் அறிமுகமானது. வீரகேசரிக்கும், அதன் ஞாயிறு பதிப்பின் ஆசிரியர் திரு. பி. ராஜகோபால் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.
ty: இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைத் தீவினிலே அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து தமிழ்நாட்டு வாசகர்கள் எந்த அளவுக்குத் தெரிந்துள்ளார்கள் என்பது கேள்விக்குரிய தொன்றே.
இச்சூழலில், இன்று இந்நாவலைத் தமிழ்நாட்டு வாசகப் பெருமக்களுக்கு அறிமுகப்படுத்தும் பெருநோக்கோடு, பல சிரமங்களை மேற்கொண்ட என் இனிய நண்பர் திரு. சிதம்பர ரகுநாதன் அவர்களுக்கும், மதுரை மீனுட்சி புத்தக நிலையத் தாருக்கும், நானும் எனது இந்திய வம்சாவளிச் சமூகமும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
வR. வி. வேலுப்பிள்ளை

அணிந்துரை தொ. மு. சி. ரகுநாதன்
"வெள்ளிக்கிழமை உங்க வீட்டு அம்மாளை நல்லாப் பாத்தேனே. ரொம்ப மிடுக்கா சிங்கள நடைபோட்டு உங்க ளோடே போச்சே."
“அதென்ன சிங்கள நடை? என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.?
“சிங்கள ஆளுக நடக்கிறதையும், தமிழ் ஆளுக நடக்கிற தையும் பாத்தாலே தெரியும். அவங்க சொந்த வீட்டுக் குள்ளே நடக்குற மாதிரி நடக்குழுங்க. நாம பரக்கப் பரக்கப் பாத்து நடக்குருேம்.”
-மேலே காண்பது நீங்கள் படிக்கவிருக்கும் இந்தக் கதையில் வரும் உரையாடலில் ஒரு பகுதி. இலங்கை நாட்டி லுள்ள இந்திய வம்சாவளித் தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், சிங்களப் பெண்ணுெருத்தியைக் காதலித்து மணந்துகொண்ட அதே தமிழினத்தைச் சேர்ந்த ஒர் ஆணும் பேசிக்கொள்ளும் பகுதி இது. இந்த வரிகளே இலங்கையி லுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் அங்கு எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதைப் புல்ப்படுத்தி விடுகின்றன.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டு வந்த காலத்தில், இங்கு பஞ்சம் பிழைப்பதற்காகப் பரிதவித்துக் கொண் டிருந்த மக்களைத் தமது ஆட்சியின் கீழிருந்த கண்காணுத காலனி நாடுகளுக்கும் தீவுகளுக்கும் பாடுபட அழைத் துச் சென்று அவர்களைக் கொடிய நரக வாழ்வுக்கு உள்ளாக் கினர். இதனுல் இந்த நூற்றண்டின் தொடக்கத்திலேயே காந்தியடிகள், கோகலே போன்ற தேசியத் தலைவர்களும்

Page 6
பிறரும் இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடினர். அப்போதுதான் மகாகவி பாரதியும் கண்காணுத பீஜித் தீவில் கண்ணிர் வடித்த தமிழ்நாட்டுப் பெண்களுக்கிரங்கி, *கரும்புத் தோட்டத்திலே’ என்ற தனது அமர கவிதையை யும் பாடினன். அவ்வாறு அயல்நாடு சென்ற தமிழர்களில் அண்டையிலுள்ள இலங்கைத் தீவில் அவதிப்பட்டுவந்த மலையகத் தமிழ் மக்களைக் குறித்து, புதுமைப்பித்தனும் "துன்பக்கேணி’ என்ற அருமையான நெடுங்கதையை எழுதினர்.
இவ்வாறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே பல் வேறு நாடுகளுக்கும் சென்று, அந்த நாடுகளைக் காடு திருத்திக் கழனியாக்கி அவற்றைச் செழிக்கச் செய்தவர்கள், இன்று காலனியாதிக்கம் ஒழிந்துபட்ட நாடுகள் பலவற்றி லும், தாம் பாடுபட்டு உழைத்து வளமாக்கிய அந்தந்த நாட்டின் குடிமக்களாகவே மாறி வாழ்ந்து வருகின்றனர். ஆணுல் அண்டையிலுள்ள இலங்கையிலோ, காலணி யாதிக்கம் ஒழிந்து ஒரு தலைமுறைக் காலம் கழிந்த பின்னரும், அந்நாட்டின் பொருளாதாரத்துக்கே முதுகெலும்பாக விளங் கும் தேயிலையையும் பிற மலைபடுபொருள்களையும் இன்றும் உற்பத்தி செய்துவரும் லட்சக்கணக்கான இந்திய வம்சா வளித் தமிழர்கள் நாடற்றவர்களாகவும் வீடற்றவர்களாக வும் இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்ல. அவர்கள் பாது காப்பற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மையைத்தான் மேலே கண்ட உரையாடல் இரண்டே வரிகளில் உணர்த்தி விடுகிறது.
சென்ற ஜூலையில் இலங்கையில் நடந்த படுபயங்கர மான இனப் படுகொலைக்குப் பின்னல், இலங்கைத் தமிழர்' பிரச்சினை இன்று இந்தியாவில் நாடு தழுவிய கவனத்தைப் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனல் இந்த நிலைமை திடீரென்று வெடித்த தல்ல. உண்மையில் கடந்த கால்நூற்ருண்டுக் காலமாகவே

இலங்கையில் இனக்கொலைத்தாண்டவம் பல்வேறு சமயங் களில் பல்வேறு அளவுகளில் நிகழ்ந்தே வந்துள்ளது.
‘இனிப் படமாட்டேன்’ என்ற இந்தக் கதை ஒராண் டுக்குமுன்பே எழுதப்பட்டதாகும். மேலும், கதையில் இடம் பெற்றுள்ள கால கட்டமும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முற் பட்டதாகும். அப்போதே இலங்கையிலுள்ள இந்திய வம்சா வளித் தமிழர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதையே இந்தக் கதை படம் பிடித்துக் காட்டுகிறது.
நூலாசிரியர் ஸி. வி. வேலுப்பிள்ளை இலங்கையில் *ளி. வி. என்று பலராலும் அன்போடு அழைக்கப்பெறும் முதுபெரும் எழுத்தாளர் ஆவார். முப்பதாம் ஆண்டுகளி லிருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் கதைகள், கவிதைகள், நாவல்கள் முதலியவற்றை எழுதி வருபவர் அவர் எழுத் தாளன் என்பவன் வாழ்க்கையில் வெறும் பார்வையாளனுக இருக்கக்கூடாது. அதில் பங்கெடுப்பவனுகவும் இருக்க வேண்டும். “ளி. வி. எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஆசிரிய ராக இருந்தவர். அவர் ஓர் அரசியல்வாதி; இந்திய வம்சா வளித் தமிழர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப் பினராகவும் இருந்தவர், மேலும் அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவரும்கூட. இன்றும் அவர் தொழிற்சங்க வாதியாகவே இருந்து வருகிருர். சொல்லப்போனல், எழுத்தாளர் என்ற முறையில் இலங்கை நாட்டின் மலையகப் பாட்டாளி மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் இலக்கியத்தின் கருப்பொருளாக்கியதில் அங்கு அவரே முன்னுேடியாக விளங்கினர் எனலாம். அவர் எந்த மக்களைப்பற்றி எழுது கிருரோ, அந்த மக்களின் நலன்களுக்காகப் போராடியவர்; போராடி வருபவர்.
எனவேதான் அவரது கதைகளில் நாம் உண்மையான வாழ்க்கையைக் காணமுடிகிறது. நறுக்குத் தெறித்தாற் போன்ற சுருக்கமான வாக்கியங்களில், சற்றேனும் உணர்ச் சிப் பெருக்குக்கு உள்ளாகாமல், உள்ளதை உள்ளவாறே

Page 7
கூறும் உத்தி, அவரது கதைகளில் ஒர் அலாதியான சிறப் பாகும். நூலாசிரியரின் அடக்க சுபாவத்தைப் போலவே, அவரது கதைகளும் அடக்கமும் அமைதியும் மிக்கவை. "இனிப் பட மாட்டேன்’ என்ற இந்தக் கதையும் இத்தகையது தான். ஆயினும், கொதி நிலையை எட்டாத நீரிலும், குமுறத் தொடங்காத எரிமலையிலும் குடிகொண்டிருக்கும் அமைதி யல்லவா அது
நாம் இருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம் - இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் என்று பாடினன் பாரதி.
இந்த உணர்விலே ஊறி, இந்த உரிமையையும் இலங்கை யிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் பெறுகின்ற நாளிலேதான் அவர்களுக்கு விமோசனம் கிட்டும். அந்த உணர்வைச் சூசகமாக உருவேற்றும் ஓர் அருமையான நாவல், இப்போது உங்கள் கையில். சென்னை 4-1-84 ரகுநாதன்
நன்றி இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்களுக்கு அளித்த ஆசிரியர் திரு. ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்களுக்கும், அதற்குத் தூண்டுகோலாய் அமைந்த நண்பர் திரு ரகுநாதன், டாக்டர் S, இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், தமிழக, இலங்கை மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களுக்கும் எங்கள் உளமார்ந்த
நன்றி.
Lugs Lonġibg5 VT li

இனிப் படமாட்டேன்
அத்தியாயம் ஒன்று
சொல்லி வைத்தது போல் சரியாய் மூன்று மணிக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. சென்ற பத்து நாட்களாய் இதே நிலைதான்.
சம்பாஷணை அறையின் ஜன்னலுக்குப் பக்கத்திலிருந்த திவானில் என் படுக்கை, வாய் கொப்பளிப்பதற்கு புத்தகப் பெட்டி மேலிருந்த டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஜன்னலைத் திறந்தேன். வெளியே இருள். கோடானு கோடி கறுப்பு அணுக்கள் பூமியிலிருந்து வான் வெளிவரை நிரம்பி நின்றன. மரங்களிலிருந்து இலைகள் கூரையில் உதிர்ந்து விழும் மிருதுவான சத்தம் டிக் டிக், ரு ரு, இர் இர், ருவி ருவி, என்ற ஆயிரக்கணக்கான பூச்சிக் கிண்ணரங்கள் ஒலித்தன.
வாயைக் கொப்பளித்தேன்.
“நீங்கள் தூங்கவில்லையா,” என் மனைவி சித்ரா ஆங்கிலத் தில் தெளிவான குரலில் கேட்டாள்.
*நீ தூங்கியதாய் தெரியவில்லையே,’ என்றேன்.
“உங்களுக்குத் தூக்கம் வராவிட்டால் எனக்கும் அப்படித் தான்.”
நல்ல கதை.

Page 8
6 இனிப் படமாட்டேன்
கதையல்ல, உண்மை.
சில சமயங்களில் சித்ராவுக்குத் தூக்கம் பிடிக்காவிட் டால் நானும் படுக்கையில் உழன்று கொண்டு கிடப்பேன்.
*வெளியே போகவேண்டும்,” என்றேன்.
*இந்த நேரத்தில் முன் கதவைத் திறந்துகொண்டு வெளியே போக வேண்டாம். இப்படியே பாத்ரூமுக்கு வாருங்கள்”, என்ருள்.
படுக்கையறை வழியாய்ப் போனேன். விளக்கு மங்க லாக எரிந்து கொண்டிருந்தது. என் மகன் ஜகன் பெரிய கட்டிலில் நீட்டி குப்புறப் படுத்திருந்தான். கட்டிலின் நீளம் அவனுக்குச் சரியாக இருந்தது. வயதுக்கு மேல் வளர்ந்திருந் தான். என் தந்தை ஆறடி மனிதர். அவரோடு போட்டி போட்டுக் கொண்டு இவன் வளர்வது போலிருந்தது. இன்றைய மோஸ்தர்படி தலைமயிரை கழுத்துவரை கிராப் வெட்டியிருந்தான். அவன் புஜங்கள், முதுக அந்த மங்கிய வெளிச்சத்தில் 'குளுமையோடு, பளுப்பு மஞ்சள் நிறத்தோடு காணப்பட்டன. இடையில் சாரம் நழுவியிருந்தது. தலை முடியை தடவிவிட்டு சாரத்தை சரிபடுத்தினேன்.
*சாரம் சரியாக கட்ட மாட்டானே!"
படுக்கிறபோது யார் பெல்ட் போடுகிறதாம்!” என்ருள் சித்ரா.
ஒத்ரா கொஞ்ச நாளாய் நான் காலி செய்த கட்டிலில் படுப்பதில்லை. சிமிந்தியில் பாயை விரித்துப் படுத்துக்கொள் வாள்.
நான் படுக்கையறையைக் கடந்து நடை பாதை வழி . யாய் பாத்ரூமுக்குப் போனேன்.
'அம்மி நீங்களா சாரத்தைச் சரிபடுத்தினிர்கள்” என்று சிங்களத்தில் கேட்டான்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 7
*உன் தாத்தி,” என்ருள். 'நீங்கள் இருவரும் என்னை அம்மணமாய் கண்டிருக்க மாட்டீர்கள்தானே.”
*எப்படி கண்டிருக்க முடியும்” என்று சித்ரா பதில் சொன்னுள்.
*பாவம்,” என்ருள்.
எனக்கு சிரிப்பு. சித்ராவும் சிரித்திருக்க வேண்டும்.
பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன் சித்ரா லாம்பும் கையுமாக நின்ருள்.
*பாத்ரூமுக்குப் போக வேண்டுமா? என்றேன்.
*இல்லை தாழ்வாரத்தில் இருந்து பணித்தண்ணீர் விழு கிறது. சிமிந்தி வழுக்கும். இப்படி வாருங்கள்.”
என் கையைப் பிடித்தாள். அந்த விளக்கு வெளிச்சத் தில் அவளது அடர்ந்த தலைமயிர், நெற்றி, புருவங்கள், புகை போன்ற ஆழமான கண்கள், கச்சிதமான மூக்கு, அந்த இரக சியம் நிறைந்த உதடுகள், படுக்கை அங்கிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவளது உடல், 26 வருடங்களுக்கு முன் உள்ளத்திற்குள் எரிமலையை கிண்டிவிட்டன. பாலில் குளித்த பூரண சந்திரனுக்கும் எங்கள் உறவுக்கும் எவ்வளவு நெருக்கம் *அவளுக்கு எத்தனை கவிதைகளை எழுதிக்கொடுத்தேன். ஆசையின் மது இன்று அன்பின் தேனுய், வார்த்தைக்கு அப்பாற்பட்டதாகிவிட்டது. அதன் அலைகள் எங்கள் மூவரை யும் சுற்றிக் கொண்டிருந்தன.
“ašит.“
«.ubی» “எனக்கு தூக்க்ம் வரும்வரை திவானில் படுத்துக்கொள்.”
'இல்லை, இங்கேயே உங்கள் கட்டிலில்.”

Page 9
8 இனிப் படமாட்டேன்
படுக்கையறையில் காலியாக இருந்த கட்டிலில் சுவற்றுப் பக்கம் ஒதுங்கிப் படுத்தேன். சித்ரா ஜகன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டு,
“எனக்கு தூக்கம் வருகிறது. நீங்களும் துரங்குவீர்களா"
அவளது தலைமயிர் மணம், கழுத்தில் தொங்கிக் கொண் டிருந்த சங்கிலி, டப்பையான படுக்கை அங்கி, அதை அழகு படுத்த தைத்திருந்த மெல்லிய ரேந்தை, இவைகளெல்லாம் என் உள்ளத்தை உறுத்தின.
கடந்த பத்து நாட்களாய் நான் கேட்டதும், கண்டதும் தூரத்தே கேட்கும் பூகம்பத்தின் குமுறல் போலிருந்தது. நிம்மதி குலைந்துவிட்டது. பீதிக்கும் பயத்திற்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஓர் உணர்ச்சி. இவைகளுக்கு காரணமான நிகழ்ச்சிகளை நினைத்துக்கொண்டு சித்ராவைப் பார்த்தேன். என்னல் அவளுக்கு எத்தனை தொல்லை. எத்தனை நரக வேதனை. அவள் மனம் புண்பட இந்த பிரச்சனைகளை அவளோடு நான் பேசுவதில்லை. தமிழன மணந்து கொண்ட தால் அவள் அனுபவித்த சுகம் இதுதான். கர்மம் முன் செய்த வினை. அவள் கத்தோலிக்க மதம். தன் கர்மத்தில் அவளுக்கு நம்பிக்கையில்லை. நல்ல வேளை,
சேவல் குரல் கொடுத்தது. கொஹா- வானம்பாடி *கொஹா, கொஹா” என்று புதிய நாளை வரவேற்றது.
எழுந்தேன். சித்ரா என் பக்கத்தில் இல்லை. சமைய லறைக்கு போய் விட்டாள். ஜகன் குறட்டையிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். சம்மணமிட்டு உட்கார்ந்தேன். எனது இடது பக்க சுவற்றில் பதித்திருந்த ஆல்டரில் மாதாவின் சிலை, கருணை ததும்பும் முகம். அதை நிறைவுபடுத்த சிறு கண்ணுடிப்பாத்திரத்தில் நிரப்பிய எண்ணெய்யில் திரி பிரகா சித்தது. லேசாய் அந்த வட்டத்துள் மிதந்தது. நான் மாரி யம்மன் திருவிழாவின்போது தெர்ப்பத்தேர் பார்த்ததை ஞாபகப்படுத்தியது. அதையடுத்து வேல் தாங்கிய இள

ஸி. வி. வேலுப்பிள்ளை 9
முருகனது படம். முருகனுக்கு எத்தனையோ பெயர்கள். பெளத்த ஆலயங்களில் தனிக் கோவிலில் ஆறுமுக வேலவன் சிலையை வைத்து, கந்த கதிரயா என்று கும்பிடுகிறர்கள். கதிர்காமத்தில் காவடி எடுத்து ஆடுகிறர்கள். இருந்தாலு மென்ன.
சித்ரா தன் ஒன்றுவிட்ட சகோதரி லீலாவோடு பேசும் சத்தம் கேட்டது. லீலா சிறு வயதிலேயே பெற்ருேரை இழந் தவள். என் மாமியின் பராமரிப்பில் வளர்ந்தவள்; அவள் மறைவுக்குப்பின் எங்களோடுதா னிருக்கின்ருள். அதிகாலை யில் எழுந்து சித்ராவுக்கு உதவிவிட்டு 7 மணிக்கெல்லாம் வேலைக்கு போய் மாலை 7 மணிக்குத்தான் வருவாள். வந்ததும் உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டு வேலைகளை கவனிப்பாள். அவள் இருக்குமிடம் தெரியாது. துணை தேடி தோல்வி கண்டவள். மிருகங்கள் மேல் அவளுக்கு அளவிலா அன்பு. ஓய்வு நாட்களில் அவற்றைக் குளிப்பாட்டுவாள். தொட்டுத் தடவி அவைகளோடு பத்தா என்று அன்பு கனியப் பேசுவாள். அதற்கேற்றபடி பசு தன் அரம்போன்ற நாக்கால் அவள் முகத்தை நக்கும். நாய்கள் அவள் கட்டிலில் படுப்பதைப் பற்றி அவள் கவலைப்படுவதில்லை. ஜகன தன்“பிள்ளைபோல் பேணுவாள்.
சித்ரா தேனீர் கொண்டு வந்தாள்.
*தேனிர் குடித்துவிட்டுப்படுங்கள். இன்று சனிக்கிழமை தானே?
ஒருவிதமாய் பார்த்தாள்.
*ஆபீசுக்குப் போக வேண்டும். ராஜன் அவசியமாய் வரச்சொன்னர்.”
'நீங்கள் வர வர வாலிபணுகிவிட்டீர்கள். ஒரு நாளைக்கு இந்த உடம்புக்கு ஓய்வு வேண்டாமா? எனக்கு பெரிய தலையிடி," என்று வெதும்பினள்.

Page 10
O இனிப் படமாட்டேன்
'தலையிடியல்ல, இது உன்தலைவிதி” என்றேன்.
*போதும்?
படீரென திரும்பி சமையல் கட்டுக்கு போய்விட்டாள் வாய் கொப்பளித்துவிட்டு தேனீர் குடித்தேன். பின் காலைக்கடன்களை முடிப்பதற்கு பின்புறம் போனேன்.
*ஜகன் ஜகன்! புத்தா!” சித்ரா அவனைக் கூப்பிட்டபடி தேனீர் கொண்டு போனுள்.
“தாத்தி ஆபீசுக்கு போக வேண்டுமாம். சீக்கிரம் தேனீரை குடித்துவிட்டு தயாராகு.”
*அந்த ரூ. 15. தருவீர்களா.” சிங்களத்தில் கேட்டாள்.
“erair?” *குமார கருணரத்ணுவின் புது நாவல் வந்துவிட்டது. தருவதாய் சொன்னீர்களே.”
“தாத்தி கிட்ட கேள் சில்லறை இல்லை.” *நான் கேட்கிற போதெல்லாம் சில்லறையில்லை.” என்று கடிந்தான்.
“நான் தருவேன், சத்தம் போடாதே,” என்று குரல் கொடுத்தேன்.
“பார்த்திங்களா அம்மா! சல்லியை மாத்தி வையுங்கள். அந்திக்கு ரூ. 15 வேணும்.
“பல்லை தீட்டிவிட்டு வா?
“பல் தீட்டப்போறேன், வந்ததும் தருவீங்களா?
குளித்துவிட்டு கிராப்பை சீவிக்கொண்டு சம்பாஷணை அறைக்கு வந்தேன். காலையில் எதை வாசிப்பது, எட்வின் ஆர்ஞேல்ட் மொழி பெயர்த்த தேவகீதம் என்ற பகவத்கீதை யையா அல்லது கிருஷ்ணமூர்த்தியின் தெரிந்ததிலிருந்து,

ஸி. வி. வேலுப்பிள்ளை 11
விடுதலையையா. பகவத்கீதையை எடுத்து என் மனக்குழப்பம் நீங்க சில வரிகள் படித்துவிட்டு உடுத்திக்கொண்டேன்.
முன் கதவை தட்டும் சத்தம்.
*யாரது?
*நான் அங்கில்.”
*மனேஹரியா, கதவு திறந்திருக்கிறது.”
உள்ளே வந்தாள்.
வளர்ந்த பெண். 5 அடி இருப்பாள். 18 வயது. உயரத்திற்கேற்ற அங்க அமைப்பு. தோளோடு ஒட்டிய டீ சேர்ட், நீல நிற பெல்பொட்டம், நீண்ட மூக்கு, நெற்றியில் குங்குமப் பொட்டு, உதடுகளில் குங்கும மை தீட்டியிருந் தாள். கைவிரல்களில் அதே மை. அந்த வெள்ளை டீ சேர்ட்டில், ‘என்னைத் தொடாதே’ என்று பொறிக்கப் பட்டிருந்தது.
“அந்த ஜகன் எங்கே அங்கிள்?
* ‘மாமிஇட்டே போய் கேள்.”
‘மாமி, மாமி,” என்று கணிரென இரைந்துகொண்டு போனள். *
அவள் என் நண்பன் கார்த்திகேசன் மகள். என்னைப் போல் சிங்களப்பெண்ணை மணந்தவர். கடற்படையில் ஆபிசராக இருந்தவர். 4 வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் பட்டு இறந்துபோய்விட்டார். மனைவிக்கு பெரிய வீடு கட்டி வைத்தார். இன்று அந்த வீடு சிங்கள மயமாகிவிட்டது. மனேஹரிக்கு தமிழ் பேசத்தெரியாது. அவளும் ஐகனைப் போல் தமிழ்-சிங்களம். சித்ராவும் கார்த்திகேசனின் மனைவி பத்மினியும் சினேகிதிகள். பிள்ளைகளைப் பற்றி ஏதோ ஒப் பந்தம் செய்திருப்பதுபோல் தெரிந்தது,

Page 11
12 இனிப் படமாட்டேன்
‘மாமி அந்த ஐகன் எங்கே? *அவன் பாத்ரூமில்.”
*உங்கள் மகன் பலே கெட்டிக்காரர்.” *என்ன அப்படி கெட்டிக்காரன்?
*பாத்ருமுக்குள்ளே பெரிய வேலை செய்கிருர், எவ்வளவு நாற்றம் வருகிறது. எப்படி இந்த வீட்டில் இருக்கிறீர்கள்!" அவள் மூக்கை பிடித்துக்கொண்டு ஒரு விதமாய் பேசும் சத்தம் வந்தது.
*ஏ மனே வீட்டுக்குப்போய் மூக்கை வைத்துவிட்டு? தராசு, கொண்டு வந்து நிறுத்தப்பார்.”
அது ஜகன் பதில். *சி, சீ பேய்களே! உங்கள் மாமா சாப்பிடப் போகிருர்.” ‘மாமி நான் இன்னும் சாப்பிடவில்லை.” *உங்கள் மூன்று பேருக்கும் மேசையில் பிளேட் போடு கிறேன். சாப்பிடுங்கள்.”
‘மாமி எங்கள் இரண்டு பேருக்கும் குசினியில் போடுங்கள். அங்கிளுக்கு அங்கே கொடுங்கள். இடைஞ்சல் இல்லாமல் நீங்கள் பேசலாம்.”
*அடி கள்ளி, யாருக்கு காது குத்துகிருய்,” என்று சித்ரா களுக் என்று சிரித்தாள்.
*சற்று வருங்களேன். எல்லாம் ரெடி, என்று சித்ரா கூப்பிட்டாள்.
சாப்பாட்டு அறை மேசையில் தட்டுக்களில் சுடச்சுட அப்பம், சம்பல், தேனீர் தயாராக இருந்தன. உட்கார்ந்து சாப்பிட்டேன். என்தாயார் நேர்த்தியாய் பதார்த்தங்களை சமைப்பார். அதற்கு சித்ரா நிகர்,

ஸி. வி. வேலுப்பிள்ளை 13
“இருட்டுவதற்கு முன் வீடு வந்து சேர வேண்டும். நான் பேசும் இங்லீஸ் புரிகிறதா?
“புரிகிறது. நல்ல இலக்கணத்தோடுதான் எப்போதும் பேசுகிருய்.”
“வீட்டில் சல்லியில்லை. அது தெரியுமா?
“நீ என்பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தால் அது எனக்கு புரியும்.”
‘நேற்று 100 தேங்காய் விற்றேன். வந்த ரூ.150ம் பஞ் சாய்ப் பறந்துவிட்டது.” என்ருள்.
*செக்குத்தான் கொண்டு போகிறேன். பாங்கில் மாற் றிக்கொண்டு வருவேன். ஏன் இப்படி உன் முகம் வாடிப் போய் இருக்கிறது?
“ஒன்றுமில்லை. ஜகன் சீக்கிரம் வா,” என்று மழுப்பிக் கொண்டு எழுந்து போவிட்டார்.
நான் பெருமூச்சு விட்டேன். எழுந்தேன். சித்ரா வழக்கம்போல் மாதாவின் விளக்கிலுள்ள எண்ணெய்யை தொட்டுக்கொண்டு வந்து என் நெற்றியில் வைத்து ஒன்றும் வராது, இருட்டு முன் வாங்கள்.”
ஜகனும் மனேவும் வந்தார்கள். ஜகன் சினிமா நட்சத் திரம்போல் உடை அணிந்திருந்தான். பெல்பொட்டம், வரிக்கமிசு, அந்த தவளை சப்பாத்து, இடது கையில் ஒருவித வெள்ளிக்காப்பு, மேல் உதட்டில் லேசாய் மீசை, பிளாஸ்டிக் பையில் இருவருடைய கட்டுச்சாதமும் வைத்திருந்தான்.
மகனும் தாயும் போட்டிப்போட்டுக்கொண்டு முத்த மிட்டுக்கொண்டார்கள். மனே பார்த்துக்கொண்டு சிரித் தாள்.
*வரட்டுமா, சியரியோ,’ என்று புறப்பட்டோம். சித்ரா வாசல்படியில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டு நிற்கிருள். வழக்கம்,

Page 12
14 இனிப் படமாட்டேன்
கடந்த 25 வருடங்களாக பார்த்த காட்சியை பார்த்துக் கொண்டு மேளனமாய் நடந்தேன். ஜகன் எனக்கு பின்னல், வயல் பச்சை வெல்வெட்டு தண்ணிர்போல் உறைந்து நிலப் பரப்பை மூடியிருந்தது. காற்று வீசும்போது நெற்கதிர்கள் நெளிந்தன வெள்ளை நாரைகள் சிறகடித்துப்பறந்து வயல் களில் இறங்கி மீன் வேட்டையாடின. பச்சையும் வெள்ளை யும், ராபட் பு(நக் பாடிய "இருண்ட கண் வாயில் வெண் பறவைகள்” என்ற அடிகள் ஞாபகம் வந்தது. புல்லில் பணி நீர் பாசிக்கோர்வை கட்டியிருந்தது. தவுட்டுப்புளுக்கள் கீ, கீ என்று சப்தமிட்டுக்கொண்டு புழுக்களை தேடிக்கொண்டு இங்கு அங்குமாக பறந்தன. பத்தி பத்தியாய் தென்னைக் கூட்டம், அவைகளின் தோகைகளிலிருந்து பணி நீர் வடித்து கொண்டிருந்தது.
பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். கூட்டம் அன்று
குறைவு. தெரிந்தவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டோம்
சிறு சம்பாஷணை. பெண்கள் பளிச்சென்று பல வர்ண சின்டெக்ஸ், டெட்ரோன், நைலக்ஸ் சேலை கட்டி அதற்கேற்ற ரவிக்கை அணிந்து பைகளை தோளில் மாட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆண்கள் பெல்பொட்டம், நைலோன் கமிஸ், நீண்ட தலைமயிர், சிலர் தாடி, கன்னக்கிருதா, தொங்கு மீசை,
104 பஸ் வந்தது. எல்லோரும் ஏறிக் கொண்டோம். காலியான சீட்டில் அமர்ந்தேன். எனது பக்கத்தில் பெண். சென்ட் வாசனை. ஜகன் அடுத்த வரி சீட்டில் உட்கார்ந்திருந் தான். டிரைவர் அலட்சியமாய் கியர் மாற்றியதும் பர்
என்று புறப்பட்டது பஸ். வாகனங்கள் முன்னும் பின்னு
மாக இரைந்து கொண்டு சென்றன. மோட்டார் சைக்கிள் களின் இரைச்சல், சனிக்கிழமைகளிலும் இத்தனை அமளி. எனக்கு முன் சீட்டிலிருந்தவன் அவனுக்கு பக்கத்திலிருந்தி வளைக் சுேட்டான்: ‘கத்தரகம வந்த யாத்திரிகளை திஸ்ஸமஹாராமையில் வைத்து வெட்டி சாய்த்துவிட்டார் களாமே தெரியுமா?
هـ

ஸி. வி. வேலுப்பிள்ளை 15
பக்கத்திலிருந்தவன் பேசவில்லை.
*இந்தியக்காரன் ஏன் நம் நாட்டுக்கு வரவேண்டும்.” பதில் இல்லை. யாரும் பேசவில்லை. பேச்சை வளர்க்க முடியவில்லை. ஜகன் என்னைப் பார்த்தான். நான் தெரியாதது போலிருந்தேன்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த பேய் இரண்டாவது நிழல்போல் இரவும் பகலும் என்னை ஒட்டிக் கொண்டிருக் கிறது. இந்த துர் விசத்தின் நிழல் எங்கள் வீட்டுக்குள் புகை படலத்தைக் கொண்டு வந்ததை நினைத்துக் கொண் டிருந்தேன். களனி பாலம். வெலிக்கடை ஜெயிலைக் கடந்தது கூட மனதில் பதிய வில்லை. பொரளே வந்ததும், “தாத்தி இறங்குங்கள். அம்மி உங்களை அந்தோனியார் கோவி லுக்குப் போகச் சொன்னர்கள்.”
இறங்கி கோவிலுக்குச் சென்று சிலைக்கு முன் மெளன மாய் நின்றேன். ஐகன் கத்தோலிக்க முறைபடி மண்டி யிட்டு சிலுவை அடையாளம் போட்டுக் கொண்டு ஜெபம் செய்தான், பின் எழுந்து சொருபமிருந்த கண்ணுடிப் பெட்டியை மூன்று தடவை தொட்டு முத்தமிட்டுக் கொண்டான். f
(6G It Gaith.'
அவனை பின் தொடர்ந்து பஸ் ஸ்டான்டில் போய் நின்றேன். இரண்டு சிப்பாய்கள் நின்றர்கள். துப்பாக்கி பாரம் தாங்க முடியாத இளைஞர்கள்.
104 வந்தது. சீட் இல்லை. நின்ருேம். சில நிமிஷங் களில் பம்பலப்பிட்டி வந்து இறங்கி கடல் பக்கமுள்ள நடை பாதை வழியால் ஜகன் முன்னும் நான் பின்னுமாக நடந் தோம். இந்த பகுதியிலுள்ளவர்களுக்கு எங்களைத் தெரியும். தலையாட்டினர்கள். லேசாய் சிரித்தார்கள். லேசாய் சிரித்துக்கொண்டும் தலையாட்டிக் கொண்டும் சென்ருேம். வழக்கம் போல் கார்கள், பஸ்கள், கோச்சுகள், மோட்டார்

Page 13
16 இனிப் படமாட்டேன்
சைக்கிள்கள் மடை திறந்தாற்போல் இரு திசைகளிலும் ஓடின. போலிசோ மிலிட்டரியோ இல்லை. அமைதிதான். இது மேல்மட்டத்தில் அடியில் கலவரம் தான்.
ஆபீசுக்கு முன் வந்த போது நடைபாதையில், இலக்ரி சிட்டி போர்ட்டு அமைந்திருக்கும் பெட்ரீ பெட்டியில் சுவரொட்டியை சில நாட்களாய்ப் பார்த்த ஞாபகம். சற்று நின்று எழுத்தை கூட்டி வாசித்தேன்.
“ւյր) தெமிள”
ஜகன் என்னை திரும்பிப்பார்த்து,
“தாத்தி, என்ன செய்கிறீர்கள். வாருங்களேன்," கண்டிப் பாய் கூப்பிட்டான்.
கிட்டத்தில் போனதும், "ஜகன் அதில் என்ன எழுதியிருக்கு. "அந்த வேசை மக்கள் தமிழர்களை தூசித்து எழுதி போட் டிருக்கிருர்கள்.”
என் உள்ளத்தை கூர்வாளால் குத்தியது போலிருந்தது சித்ரா என்று துணைவி. அவள் தாய் வேசை இனத்தை சேர்ந்தவளா. “வீட்டில் போய் அப்படி பேசாதே, ஜாக்கிரதை மகனே.”
66 gplib.**
அத்தியாயம் இரண்டு
காரியாலயம் வந்து சேர்ந்தோம். குமாஸ்தாக்கள் தங்கள் மேசைகளுக்கு முன் அமர்ந்து தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 17
ஜகன் அவன் மேசைக்கு போனன். என் அறைக்குள் போய் நாற்காலியில் அமர்ந்தேன். டெலிபோன் என்னை வெறித்துப் பார்ப்பது போலிருந்தது.
முதலாவது குமாஸ்தா சதாசிவம் உள்ளே வந்து,
*மிஸ்டர் ராஜன் கம்பளை வழியாக நுவரெலியா போயி ருக்கிருர் நாளை வருவாராம், சார். மேசையில் நோட் வைத்தார்,” என்ருன்.
டெலிபோனுக்கு அடியில் கடிதம் இருந்தது. எடுத்து வாசித்தேன்.
*சந்திரன்,
நாளை வருவேன். உங்கள் இருவருக்கும் வீட்டில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். போகும் வழியில் முகாமை போய் பார்த்தால் நல்லது. சதாசிவம், கணேசலிங்கம் இருக்கும் பகுதி களில் நிலைமை எப்படியென்று தெரிந்து கொள்வது
நல்லது. .لأهلي
ராஜன்.” w *சதாசிவம் கணேசலிங்கத்தைக் கூப்பிடுங்க,” என்றேன்.
சதாசிவம் வெளியில் நின்று கணேசலிங்கத்தை கைகாட் டிக்கூப்பிட்டான். வந்தார்கள். அவர்கள் இருவரும் வத்தளை யில் ஒரு ரூமில் தங்கியிருந்தார்கள்.
‘எப்படி நிலைமை,” என்று கேட்டேன்.
“ஒரு மாதிரியாதான் இருக்கு. நிச்சயமா சொல்ல முடியாது சார். போலிசும் மிலிடரியும் சுத்துராங்க. நேத்து அந்திக்கு கீரை தோட்டத்து ஆட்களை காடையங்க அடிச்சு விரட்டிவிட்டானுங்க, பஸ் ஸ்டான்டில் ஒரு தமிழ்க் கிழவனை அடிச்சாங்க. போலிஸ்காரன் சும்மா பாத்துகிட்டு போனன்? இது சதாசிவத்தின் விளக்கம்.

Page 14
18 இனிப் படமாட்டேன்
*கணேசலிங்கம் சொல்லுங்க.”
*சார் பெண்கள் ஜாஸ்தியா நடமாட்டமில்லே , பிள்ளை களைக்கூட பள்ளிக்கூடத்துக்கு போக விடாமே வீட்டிலே நிப்பாட்டிருக்காங்க. பெண்கள் ருேட்டுக்கு வரும்போது பொட்டு வைக்கக்காணம், பேலியாகொடையில் எப்படி.”
*எரிந்த கடைக அலங்கோலமாய் கிடக்கு. சொந்தக் காரங்க யாழ்ப்பாணத்துக்கு போயிட்டாங்க. சாக்கு கடை நாடார் முகாமுக்கு வந்திட்டாரு.”
*சரி வேலையை பாருங்க.”
டெலிபோன் கணிரென்றடித்தது. உடன் என் கை அதை எடுக்கவில்லை. தயக்கம்! என்ன செய்தியோ! டெலி போன் சொல்லும் அபாய செய்திகளை கேட்கத்தானே வந் தேன். பின் எடுத்து, “சந்திரன் இங்கே,’ என்றேன்.
* மிஸ்டர் சந்திரன், லலித்த குணசேகர பேசுகிறேன். பதினைந்தாம் தேதி காலையில் ஒரு சந்திப்பிருக்கிறது.கிருஸ்தவ தொழிலாளர் சகோதர சங்கம் வன்செயல் சம்பந்தமாய் சில விபரம் தெரிந்துகொள்ள வேண்டுமாம். நீங்கள் வந்தால் நல்லது.”
“என்ன விபரம். சிங்களவர் தமிழர்களை உதைக்கிருர்கள்! அதுதான் விபரம். கிண்டலாய்ச்சொன்னேன் சே அப்படி பேசாதீர்கள்! எல்லா சமூகத்திலும் காடையர்களும் குண் டர்களும் இருக்கத் தானே செய்கிருர்கள்.”
“நான் தெரிந்துகொண்ட உண்மையில் அதுவும் ஒன்று.”
*கட்டாயம் நீங்கள் வரவேண்டும்.” *சரி வருகிறேன்.”
நான் டெலிபோனை வைத்தேன். அவள் ஒரு விடாக் கண்டி.

ஸி. வி. வேலுப்பிள்ளை 19
சந்திப்பு, கருத்துப்பரிமாறல், கருத்தரங்கு இவைகளில் எனக்கு நம்பிக்கை குன்றிப்போய்விட்டது. மேல்மட்டத்தில் நடக்கும் வறட்டுப்பேச்சு.
இடது பக்கத்து ஜன்னல் திறந்திருந்தது. வீடுகளின் ஒடு வேய்ந்த கரைகள் ஊடே பூந்தோட்டங்கள். அவைகளுக்கப் பால் நீலக்கடல், கண் தொடும்வரை நீலக்கடல் இன்று அதன் ஆழத்திற்கேற்ற அமைதியோடு பெருமூச்சுவிட்டு நித்திரை செய்தது போலிருந்தது. கரையோரத்தில் ரேந்தை பின்னியது போன்ற குழந்தை அலைகள். கற்பாறை சளை தொட்டுவிட்டு ஒடித்திரும்பிய வண்ணமாய் இருந்தன. இந்த கடலைப்பற்றி எத்தனையோ சித்திரங்கள், எத்தனையோ காவியங்கள். இந்த கடலைக்கடந்து வந்த இந்தியத்தமிழர் களின்சந்ததியினர்களில் பாதிப்பேர்கூடஇந்த கரைகொள்ளா ஜலத்திரளை பார்த்ததில்லையே. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக் கும் இடையே 22 மைல் தண்ணிர் இல்லாவிட்டால் பர்மா இந்தியர்களைப் போல் இங்குள்ளவர்கள் உயிரைப்பிடித்துக் கொண்டு ஓடி இருப்பார்களே,
6 கணிர், கனிர், டெலிபோன்!
கையிலெடுத்தேன்.
*சார், சாமி பேசுறேன், நிலமே மோசமாயிருக்குதே என்ன செஞ்சிருக்கிறீங்க?
'ஜனதிபதிக்கு கடிதம், தந்தி, இந்திய தூதருக்கு டெலி போன் எல்லாம் செய்திருக்கிருேம். செட்டித் தெருவுக்கு மிலிட்டரி போட்டதாய் கேள்வி.”
*ரெண்டே ரெண்டு பேர் தொவக்கை வச்சுட்டு சந்திலே நிக்கிருங்க.”
*அதுமாத்திரமா?
“அரை மணிக்கு ஒருக்கா ஜீப்லே போலீஸ் வந்துட்டு போருன்.”

Page 15
20 இனிப் படமாட்டேன்
*அப்புறமென்ன பயம்.”
“ரொம்ப கலவரமான பேச்சு அடிபடுதுங்க சார். எந்த நேரத்திலே என்ன நடக்குமினு தெரியலேங்க. ஏதாவது டெலிபோன் செய்யுங்களேன், நல்லது.” டெலிபோனை. வைத்தேன்.
சாமி 26 வயது. செட்டித் தெருவில் நகை கடை கணக் காளர். பெரிய உடல் பயில்வான் போன்றவர். வேறு இடங் களில் நடந்த வன்செயல்கள் அவர் உடலில் எதி ரொலித்தன.
என்னுடைய நண்பர் மீரான் சாய்பு கடைக்கு டெலி போன் செய்தேன்.
*யார் பேசறது? “ஜமீல் சார், அப்பா வூட்லே.” *எப்படி?
‘நேற்றைக்கு விட இன்னைக்கு ஒரு மாதிரி. மிலிட்டரி போலீஸ் வந்து வந்து போருனுக. நாங்க எல்லாத்துக்கும் தயார் சார். ஏதும் நடந்தா டெலிபோன் செய்றேன்.
“ரொம்ப நல்லது. வேறென்ன?
*மொட்டை காயிதம் போட்டிருக்கானுங்கோ தமிழ னும் முஸ்லீமும் இந்த நாட்டுக்கு சனியனும். நம்மளை தொலைச்சு கட்டணுமாம். கடன் கொடுக்க, வாங்கல் வியாபாரம் எங்களோடு செய்யக்கூடாதாம். ஜெம் வாங்கக் கூடாதாம், நாங்க எதுக்கு இவங்ககிட்ட போகணும். ஜெம் எல்லாம் வெளி நாட்டுக்கு கொண்டு போவோம் சார்நேத்துக்கூட பேறுவளையில் எங்க தலைவர்மார் கூட்டம் அப்பா போயிருந்தார்.”
*நீங்க இந்திய முஸ்லீமாச்சே."

ஸி. வி. வேலுப்பிள்ளை 21
*சார் முஸ்லீம்ன (பாக்கிஸ்தான்) இந்தியா, இலங்கை யினு இல்லே சார். தக்க நடவடிக்கை எடுக்க (p96 9FTř எங்களே விரட்ட முடியாது, நாங்க எல்லோருக்கும் குல்லா போடுவோம் சார்?
“ரொம்ப நல்ல பேச்சு. ஜமீல் உங்களுடைய அடுத்த கடை சாமி ஒரு மாதிரியா.”
*ரொம்ப பயந்தவன் சார். அவங்களை செம்மையா ஒதைக்கனுங்க. நேவிக்காரனுக்கு 4 லட்சம் கொடுத்து காவல் போடப்போருங்களாம். எல்லாம் அப்பாகிட்டே கேளுங்க.”
“ரொம்ப நல்லது ஜமீல்.’
வெளிப்பகுதியில் வேலை வழக்கம்போல் நடந்தது. ஜகன் எனக்கு தேனீர் கொண்டு வந்து வைத்தான். கோப்பையை கையிலெடுத்தேன். மறுபடியும் டெலிபோன்.
*சந்ரன் இங்கே யாரது?
‘நான் சந்தியாகு சார்.”
*சந்தியாகு, ஞாபகமில்லையே."
‘சாமி பியோவோடே காலத்தை கோவிலில் இருக் குறேன் சார்?
*இதற்கு முந்தி சந்தித்திருக்கிறமா?
‘என்ன சார். நான் முந்தி கரவளை தலைவன் சார் சந்தியாகு.?
*சுகமா? சுகம்???
“இரவு பகலாய் ஏசுநாதருக்கு தொண்டு செய்கிறவன். என்னை அவர் கைவிட்டுட்டார் சார்.” குரல் மங்கி உடைந்தது.
“உங்களை காண வேணும். இன்னும் அரை மணி நேரத் தில் வர்றேன் சார்.”
இ-2

Page 16
22 இனிப் படமாட்டேன்
“நல்லது. எங்கேயிருந்து பேசுறிங்க?
“அகதிக முகாம்லே, பம்பலபிட்டி கதிரேசன் கோவில்லே. gFT filo.”'”
““Fif), Fif? GurrĚJF5.”
கவரவளை சந்தியாகு. ஆம். கவரவளை தோட்டக் கமிட்டித் தலைவர் சந்தியாகு. கவரவளை
அந்த டெலிபோன் கம்பி மூலமாய் என் ஞாபகம் மனுே வேகமாய் 1946 ம் வருடத்திற்கு காலத்தால் மறைக்கப்பட்ட அந்த நாட்களுக்கு சென்றது. அப்போது எனக்கு 24 வயது. கல்லூரி படிப்பை முடித்துக்கொண்டு, முன் நான் படித்த ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு ஆசிரியணுக சேர்ந்தேன். என் எதிர் காலத்தில் அதிக அக்கறை கொண்ட என் குரு தேவர் ஸ்டீபன் ஜோசப்பே இதற்கு காரணம். அவர் தலைமை ஆசிரியர், பக்கத்திலுள்ள ஹோஸ்டலில் நான் தங்குவதற்கு எல்லா ஏற்பாடு செய்திருந்தார்.
ஹட்டன் டவுனுக்கு மேல் ஒரு குன்றின் மேல் ஹொஸ்டல் அமைந்திருந்தது. கீழே சம நிலத்தில் இரண்டு படுக்கையறைகள், சாப்பாட்டுக்கூடம், விசாலமான முகப்பு இவைகளைக் கொண்ட பங்களா. மேல் மட்டத்தில் ஆறு சிறிய படுக்கையறைகள். இந்த கட்டிடத்தை ஒரு வரிசைப் படிகள் கீழேயுள்ள பங்களாவோடு இணைத்தன.
என் கல்லூரி நண்பர் ராஜனும் நானும் தொங்கலில் உள்ள இரட்டை ரூம்களில் தங்கி இருந்தோம். அடுத்த அறைகளில் கோர்ட்டு முதலியார், மொனராவலை. பொஸ்கோ கல்லூரி உப அதிபர் குணரத்ன, கடைசி அறை யில் முன்னுள் பிரபல கிரிக்கெட் வீரர் பொலக், எல்லோரும் நண்பர்களாகவும் தோழ  ைம யோ டு ம் இன்பகரமான வாழ்க்கை நடத்தினுேம்
மாலை நேரங்களில் நானும் பெரியவர் பொலக்கும் வெளிக்கிளம்பி டன்பார் பகுதிக்கு நடந்துபோவோம்.

ஸி வி. வேலுப்பிள்ளை 23
6 மணிக்கெல்லாம் ஹொஸ்டல் வந்து சேர்ந்து உடைகளை மாற்றிக் கொள்வோம். பொலக், முதலியார், குணரத்ன மூவரும் சீட்டுப் போடுவார்கள். இராச்சாப்பாட்டிற்கு முன். ராஜன் களைத்துப்போய் வருவார். கதர் கால் சட்டை, கதர் சர்வானி, காலில் சப்பான் மிதியடி, உயர்ந்தவர், உயரத் திற்கு தக்க பருமன். மாநிறம், 25 வயது. அவருக்கு நிகர் அவரே.
'ஏய் ராஜன் ஏன் இவ்வளவு நேரம்.”
“சற்று வேலை முதலியார்.”
*உனக்கு சந்தா பைத்தியம். செய்த வேலையை விட்டுப்போட்டு இதில் வந்து மாட்டிக்கொண்டு கிடக்கிருய். அந்த சங்கத்திற்கு சந்தா எவ்வளவு.”
*25 சதம்.”
‘இன்றைக்கு எனக்கு வருமானம் எவ்வளவு தெரியுமா.”
“தெரியாது.”
*300. சும்மா கிடைத்தது. இதை நாளைக்கே காலி செய்வேன். பேங்கில் இந்த சனியனை போடமாட்டேன்,”
எல்லோரும் சிரிப்போம்.
முதலியார் நன்முக பாடுவார். ஜோன் டி. சில்லா இயற்றிய பராக்கிரமபாகு என்ற நாடகத்திலுள்ள பாடல் களை உருக்கமாய் பாடுவார். ஆனல் குறுகிய தேசபக்தி தொனிக்கும்.
திராவிடர் சைனியங்கள் கடல் உடைந்து அலைபோல திரண்டு வருகின்றன. என் தாயே எழுந்து உன் வாளாயுதத்தால் இவர்களை துவம்சம் செய்.

Page 17
24 இனிப் படமாட்டேன்
என்று பாடியபின் எங்களைப் பார்த்து, “ஏ தெமளா ஜாக்கிரதை,” என்று பற்களை நற நறவென்று கடிப்பார். எல்லோரும் சிரிப்போம். ஆணுல் ராஜன் “வீரம் செறிந்த பாடல், எவ்வளவு தேச அவமானம், ஜோன் டி சில்வா பெரிய நாடகாசிரியர் தான்,” என்பார்.
சனி, ஞாயிறு அன்று நான் சங்க ஆபிசுக்கு போய் ராஜனேடு பேசிக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் கூட்டங்களுக்கு அவரோடு சென்று பேசுவேன். ஒய்வு நேரங் களில் இலக்கிய சமூக பிரச்சினைகள்பற்றி வீரகேசரிக்கு எழுது வேன்.கவி எழுதுவதிலும் எனக்கு ஈடுபாடு அநேகமாய் தோட் டப்பகுதியினருக்கு என் பெயர் தெரியும்.
ஒரு வெள்ளிக்கிழமை மாலை ராஜன் அறைக்கு திரும்பிய போது சற்று யோசனையோடு காணப்பட்டார்.
*சந்திரன் தெரியுமா விஷயம் டி எஸ். சேனநாயக்கா களனிவெளிப்பகுதி உருளைவள்ளி தோட்டத்தை கிராம விஸ்தரிப்புக்காக எடுத்துவிட்டார். 350 தொழிலாளர் களுக்கு ஒரு மாத நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரச்சினையை தீர்க்க குறுக்கு வழி கண்டுபிடித்த மாதிரி தெரிகிறது.
:இந்த350 தொழிலாளர்களுக்கும் எங்கே போவார்கள்?
*ருேட்டுக்கு. இதில் அவர்கள் வெற்றி கண்டால் பல தோட்டங்களை எடுத்து நம் தொழிலாளர்களை வெளியே
போடுவார்கள்.”
'அவர்கள் போக மறுத்தால்?
அத்துமீறி இருப்பதாய் கோர்ட்டில் வழக்கு போட்டு மறியலுக்கு அனுப்புவார். பின்னல அவர்கள் ருேட்டுக்கு தான் போக வேண்டும்.”
*நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்."

ஸி. வி. வேலுப்பிள்ளை 25
*நாளை கொழும்பில் அவசரக்கூட்டம் நடக்கப் போகிறது. ஒரு முடிவு செய்வோம். நான் இராக்கோச்சியில் போகிறேன்,” என்ருர்,
அன்று இரவு ராஜன் கொழும்பு புறப்பட்டார்.
ஞாயிறு கழிந்தது. திங்கட்கிழமை காலையில் நான் பள்ளிக்கூடத்திற்கு போக தயார் செய்து கொண்டிருக்கும்போது வந்தார்.
“என்ன முடிவு செய்தீர்கள் ராஜன்? *களனி வெளிப்பகுதியில் நாளை முதல் 40, 000 தொழி லாளர்கள் ஹர்த்தால் செய்ய ஏற்பாடு. பின் அட்டன் பகுதியிலும் ஹர்த்தால் செய்ய முடிவு செய்வோம். நாளை அந்திக்கு இது சம்பந்தமாய் நம் ஆபீசுக்கு முன் கூட்டத்திற்கு தயார் செய்திருக்கிறேன்."
எனக்கு வியப்பு. ராஜன் அசுர வேகத்தில் எந்த விசயத் திலும் ஈடுபடக்கூடிவர்.
நான் கல்லூரிக்குப் போனேன். அன்று மாலை ராஜன் வரவில்லை. இரா சாப்பாட்டிற்கும் வரவில்லை. இராச்சாப்பாட்டிற்கு பின் நான் படுத்தேன். இரவு 11 மணிக்கு ராஜன் அறைக் கதவை திறந்த சத்தம்.
‘ராஜன்!” என்றேன். "தூங்கவில்லையா. நம் மக்கள் மேல் உங்களுக்கு அதிக அன்பு. நீங்கள் உண்மையான கவி. ஹோ.”
‘சரி தூங்குவோம்." மறுநாள் சாங்கிரஸ் ஆபீசுக்கு முன் தோட்டத் தலைவர்கள் கூட்டம். இலங்கை இந்தியர் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து ராஜனும் மாவட்டத்தலைவர் முதலி யாரும் பேசியபோது உருளை வள்ளி தோட்ட போராட்டத்

Page 18
26 இனிப் படமாட்டேல்
தின் அவசியத்தை வெகுவாக அறிவுறுத்தி பேசினர்கள். கடைசியாக நானும் பேசினேன்.
கூட்டம் முடிவடைய இரண்டு மணியாகிவிட்டது. ஆபீசுக்குள் போய் அமர்ந்தோம். ஹர்த்தால்பற்றி விபரம் கேட்டுக்கொண்டு பலர் அவரைச் சுற்றிக்கொண்டு நின் முர்கள்.
கரவளை தோட்டத்தலைவர் சந்தியாகு ராஜனை அணுகி,
“சார் இன்னக்கு எங்க தோட்ட கூட்டத்துக்கு கட் டாயம் வரணும்,” என்ருர்.
“எப்படி வரமுடியும். வட்டவளை, நோட்டன் பகுதிக்கு போக ஏற்பாடு செய்திட்டேன், அப்புறம் எப்படி சார். ஆட்க என்னை சும்மா விடமாட்டாங்க.”
*சரி எது முக்கியமினு சொல்லுங்க தலைவர்”
**விளங்குது சார். நீங்க ரெண்டு பேரும் வாங்க” என்று என்னையும் முதலியாரையும் பார்த்தார்.
*நல்ல முடிவு நீங்க ரெண்டு பேரும் போங்க,” என்ருர் ராஜன்.
சந்தியாகு கூட்டத்தை தயார் செய்ய எங்களுக்கு முன் போய்விட்டார். சாப்பாட்டுக்குப் பின் முதலியாரும் நானும் காரில் புறப்பட்டோம். போகும் வழியில் தோட்டத் தலைவர்கள் தங்கள் தோட்டங்களுக்கு திரும்பி போவதைக் கண்டோம். சில இடங்களில் எங்களை நிறுத்தி ஹர்த்தால் பற்றி விசாரித்தார்கள். சில மணி நேரத்தில் செய்தி எங்கும் பரவியது. தமிழ் கடை முதலாளிமார் சோடை போவ தாய் சிலர் எங்களிடம் குறை சொன்னர்கள்.
கரவளையை சேரும்போது மணி ஐந்தாகிவிட்டது. மாரியம்மன் கோவிலுக்கு முன்னுள்ள திடலில் பெரும் கூட்டம், கோவிலுக்கு பக்கத்தில் மேடையமைத்து அலங்கரிக் கப்பட்டிருந்தது.

ஸ்ஸி. வி. வேலுப்பிள்ளை 27
“பாரத மாதாவுக்கு ஜே, மகாத்மா காங்கிரசுக்கு ஜே, ராஜனுக்கு ஜே, முதலியாருக்கு ஜே” என்று கோஷித் தார்கள். சந்தியாகு, “பாலச்சந்திரனுக்கு ஜே” என்ருர்,
எல்லோரும் ஜே போட்டார்கள்.
சந்தியாகு தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது. கோவி லுக்கு முன் நட்டிருந்த கொடி கம்பத்துக்கு பண்டாரம் பூசை செய்தார். எல்லோரும் எழுந்து நின்ருேம்.
கம்பத்துக்கு விபூதி, குங்குமப்பொட்டு சாத்தியபின்,
“நமது ஜில்லா தலைவர் திரு. முதலியார் கொடியேற்றி வைப்பார்,” என்ருர் சந்தியாகு.
முதலியார் கொடியேற்றினர்.
கூட்டம் ஆரம்பிக்க சந்தியாகு பதினைந்து நிமிடங்கள் பேசினர். பின் முதலியார் தனக்கே சொந்தமான ஒலி பெருக்கி தொனியில் உருளைவள்ளி போராட்டம் பற்றியும் ஹர்த்தால் அவசியம் பற்றியும் பேசினர். அவர் காலி செய்த நாற்காலிக்கடுத்து ஒரு பெண் அமர்ந்திருந்தாள். மஞ்சளை அரைத்து பூசியதுபோன்ற மேனி. பச்சை பட்டு சேலை, நீலக்கறுப்பு வெல்வெட் ரவிக்கை. அவள் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தது. கழுத்தில் ஒரு சரம் தங்கச்சங்கிலி, அடர்ந்து சுருண்ட முடியைக்கோதி கொண்டை. அதில் ஒரு மயிர் குஞ்சம். அந்த கருவிழிகள் என்னை கவனித்தன.
வண்டு ரெண்டு கட்டி
மணங்காக்கும் செம்பகப்பூ.
லேசாய் பார்த்தேன். அவளுக்கு வயது 25 இருக்கும். அழகு அவளுக்கு சொந்தம். காலியாயிருந்த நாற்காலிக்கு வந்து,
“நீங்கள் தானே பாலச்சந்திரன்?

Page 19
28 இனிப் படமாட்டேன்
*"!ggibے،9 *நீங்கள் எழுதுற கட்டுரைகளே நான் வாசித்திருக் கிறேன். ரொம்ப நல்லாயிருக்கு. நீங்கள் நடுவயதுள்ள வருனு நினைச்சேன்.”
“ஏன்? என்று சிரித்தேன். ஆனல் கூட்டத்தில் பேசு வதற்கு அச்சமாயிருந்தது.
“நல்ல கருத்து அனுபோ..” நிறுத்திக்கொண்டாள். முதலியார் பேச்சை முடித்துக்கொண்டு உட்கார்ந்தார். "பாலச்சந்திரன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில், அதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். பத்திரிகைக்கு எழுதுவார். நமது பிரச்சனைகளில் ரொம்ப ஆர்வம் தலைவர் ராஜனுக் காக வந்திருக்கிருர். பேசுவார்.” இப்படி சந்தியாகு அறிமுகம் செய்து வைத்தார்.
15 நிமிடங்கள் பேசினேன். பெண் என் பேச்சை கவனித்துக்கொண்டிருந்தாள்! பேச்சின் மத்தியில்,
*வியாதி வரும்போது போஸ்ட் கார்ட்டு போட்டுவிட்டு வருவதில்லையே,” என்றேன்.
களுக் என்று சிரித்தாள்.
*இந்த பிரச்சனை நம் உடலை சிரங்குபோல் கப்பிக் கொண்டுவிட்டது. எழுந்தால் சொறியவேண்டும். படுத் தால் சொறிய வேண்டும். தூக்கத்தில் சொறிய வேண்டும். அம்மன் சந்நிதானத்துக்கு வந்தாலும் சொறிய வேண்டும்" இது அறி சிரங்கு, சொறி சிரங்கு,” என்றேன்.
பெண் சிரித்தாள். எல்லோருக்கும் சிரிப்பு.
இருள் வர ஆரம்பித்தது. பெற்ருேல் மெக்ஸ் பல இடங் களில் பற்ற வைத்துவிட்டார்கள். சற்று நேரத்தில் அவள் அங்கில்லை; கூட்டம் ஜே கோஷத்தோடு முடிவுற்றது.

ஸி. வி. வேலுப்பிள்ளை 29
*சார் இன்றைக்கு பெரிய கணக்குப்பிள்ளை வீட்டில் சாப்பாடு,” என்ருர் சந்தியாகு,
*நான் போகவேண்டுமே பின்னல் ஒரு நாளைக்கு, என்றேன்.
“ஐயோ முடியாது வாங்கசார்”
*மாஸ்டர் சிரமப்பட்டிருப்பாங்க, நாமெல்லாம் பொது ஜன ஊழியர்கள்தானே, வாங்க,” என்ருர் முதலியார்,
சந்தியாகு டோர்ச் பிடித்துப்போக நாங்கள் பின்னல் போனேம்! ஆட்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்க்கொண் டிருந்தார்கள்!
கணக்கப்பிள்ளை வீடு சற்று பெரியது. முகப்பில் நின்று சதாசிவப்பிள்ளையும் அவரது நண்பர்களும் எங்களை வர வேற்றர்கள். ஒரு பெரிய தோட்டத்தை நடத்தும் திறமை அவர் முகத்தில் இருந்தது.
*வணக்கம் வணக்கம். வாங்க முதலியார், வாங்க பாலச்சந்திரன். ராஜன் ஜோலியாய் போய்விட்டதாய் கேள்விப்பட்டேன்.”
அவர்கள் முகப்பிலுள்ள நாற்காலிகளில் அமர்ந்தார்கள். அடுத்த அறையில் எனக்கு ஆசனம், கணக்குப்பிள்ளையின் மனைவி எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு மறைந் தார்கள்.
*அம்மா பசுபதி எல்லோருக்கும் தேத்தண்ணி கொண்டு போ,” பின்கட்டில் குரல்.
பின் கதவு வழியாய் அந்த பெண் தட்டில், தம்ளர்களில் தேனீர் கொண்டு வந்து மற்றவர்களுக்கு பரிமாறிவிட்டு உள்ளே போய் எனக்கு டீ கப்பில் தேனீர் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு, "சாப்பிடுங்க,” என்ருள்.
எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ‘தலைவரே எங்க வீட்டில் யாருக்கும் சிரங்கு இல்லை,” என்ருள்.

Page 20
30 இனிப் படமாட்டேன்
எல்லோரும் கணிரென்று சிரித்தார்கள். நல்ல பிரசங்கம் மாஸ்டர், எல்லோரும் கச்சிதமாய் பேசினீங்க, என்ருர் சதாசிவப்பிள்ளை.
கூட்டத்திற்கு வந்திருந்த மானேஜ்ர் கங்காணி, உதவி கணக்கப்பிள்ளை, சின்ன டீமேக்கர் எல்லோரும் வந்துவிட் டார்கள். அவர்களுக்கு அங்கே நாற்காலி. நானும் பசுபதியும் இடைஞ்சல் இல்லாமல் பேசினுேம். என் கட்டுரைகளைப் பற்றி தான் பேச்சு.
“உங்களே பார்க்க மிச்ச நாள்.” நிறுத்திக் கொண் LITGir.
வீரகேசரியில் வந்த கட்டுரையை வெட்டி எடுத்து வைத்திருந்தாள். லாச்சியை திறந்து எடுத்துக்காட்டினள், அப்போது அவள் கை என் கையில் பட்டது.
*நேரமாகிவிட்டது, என்னேடே இலைவெட்ட தோட்டத் திற்கு வாங்க,” என்று ஒரு மாதிரியாக சிரித்தாள்.
எனக்கு தயக்கமாக இருந்தது. எனினும் சரியென்றேன். சில நிமிடங்களில் மடக்கு கத்தி, டோர்ச் லைட்டோடு பின் பக்க கதவு வழியாக வீட்டுக்கு பின்புறம் வந்தோம். இருட்டில் என் கையை பிடித்துக்கொண்டு, லேசாய் டோர்ச்சைத் தட்டிக் கொண்டு தோட்டத்திற்குள் போனேம். என் பக்கமாய் திரும்பினள். ஒரு கை என் தோளில், என்னை அறியாமலே இரு கைகளாலும் அவளை கட்டிப்பிடித்தேன். அவள் தலைமுடியில் தேய்த்திருந்த வாசனை தைலம் என் நாசில் என் இதயத்திலும் மூளை யிலும் எதோ வெடித்தது. நூறு ஆயிரம் வின் மீன்கள் உதிர்ந்து கொட்டின. சில வினடிகளில் இரு உடல்களும் நெருங்கின.
“ஐயோ என்னை விடுங்க.” சரேலென்று கைகளை எடுத்துக்கொண்டேன். அவள் கரங்களே விடுவித்துக் கொண்டாள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 31
டோர்ச்சை தட்டி, “அந்த மூணு இலைகளை வெட்டுங்க” என்ருள்.
வெட்டிச் சேர்த்தேன். எனக்கு தலையிலிருந்து கால் வரை நடுக்கம். அவள் கையைப்பிடித்துக் கொண்டு வாசற் படி சேர்த்தேன். தொண்டை வரண்டுவிட்டது. இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
எனக்கு இருபத்து நாலு வயதாயிருந்தாலென்ன, அறுபத்தைந்து வயதாயிருந்தாலென்ன. என்னை கெளர வித்து, மரியாதை செய்த வீட்டில் இவ்வளவு கீழ்த்தரமாய் நடந்துவிட்டேன். ராஜனின் பிரதிநிதியாக வந்த நான் ஒரு மேலான ஸ்தாபனத்தின் சார்பாக வந்த நான், ஒரு ஆசிரியனுக வந்த நான் இவ்வளவு கேவலமாய் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்துவிட்டேன். என்னை நொந்து கொண்டேன்.
பசுபதி வந்தாள். ஒரு மாதிரியாக இருந்தாள். முகம் கழுவியிருக்க வேண்டும். தலையைக் குனிந்து கொண் டிருந்தேன்.
‘என்ன,” உடைந்த குரல்.
“ஒன்றுமில்லை.”
*நான்தானே குத்தவாளி. ஏதோ முன் பிறப்பிலே பட்ட கடன் தீர்த்து போச்சு, உங்களைவிட ஒரு வயது கூடியவள் நான் அது உங்களுக்கு சாந்தி தரும். நீங்கள் நல்லபிள்ளே நல்ல தாய் வளர்த்த பிள்ளே. எனக்கு வார மாசம் கல்யாணம்.”
போய்விட்டாள்.
விருந்து ஒரு மருந்துபோல் முடிந்தது. எல்லோருக்கும் திருப்தி. எனக்கு.
ஒன்பது மணி, புறப்பட்டோம். சதாசிவம்பிள்ளை, மனைவி, பசுபதி ஆகியோர் எல்லோரையும் மரியாதையோடு வழியனுப்பினுர்கள்.

Page 21
32 இனிப் படமாட்டேன்
“அட்டன் வரும்போது உங்களை பார்ப்போம் மாஸ்டர்,”
என்ருள் பசுபதி.
இது தொட்ட கடன்; விட்ட கடன். அவள் அட்டன் வரவில்லை. கல்யாணத்திற்கு கார்ட் தான் வந்தது. ஆசி தந்தி அடித்தேன். போகவில்லை.
அவளையும் என்னையும் சில நிமிடங்கள் சேர்த்து வைத்த சந்தியாகு, இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் இன்று துன்பக்கேணியிலிருந்து பேசினர். வருகையை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.
முந்நூற்றி ஐம்பது தொழிலாளர்களை உருளைவள்ளி தோட்டத்தில் நிறுத்த களனிவெளி பகுதியில் நாற்பதாயிரம் தொழிலாளர்களும் அட்டன் பகுதியில் அறுபதாயிரம் தொழிலாளர்களும் வீரப் போராட்டம் நடத்தினர்கள். ஆனல் இன்று;
முப்பத்தைந்து வருடங்களுக்குப்பின் ஆயிரக்கணக்கா தொழில் மக்கள் நிர்க்கதியின்றி அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
அத்தியாயம் மூன்று
11 மணிக்கு சந்தியாகு என் அறைக்குள் வந்தார். சென்ற 25 வருடங்களின் தேய்வு, கரைவு அவரை மாற்றி விட்டன. உலர்ந்து வாடிய முகம், மெலிந்த உடல், தலை கூடச் சற்று வழுக்கையாகிவிட்டது. பெரும் அதிர்ச்சியால் ஏற்பட்ட வடு. கைகூப்பினர். பேசவில்லை.
*உட்காருங்க சந்தியாரு."
அமர்ந்தார்.
“கடவுள் என்னே கைவிட்டுட்டாரு சார். மகன் போயிட்டான், அழுகக்கூட கண்ணீர் இல்லே சார்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 33
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்தக் கண்களில் எத்தனை வேதனை. கண்ணிரைக் கக்கிவிட்டு விதவையான கண்கள். நான் பேசவில்லை, பிள்ளையைப் பறி கொடுத்து விட்டு வந்த மனிதரிடம் என்ன ஆறுதல் சொல்வது?
*சுவாமி பியோ ஒரு புண்ணியவான், ஒரு மஹாத்மா. அந்தப் பெரிய சோதனையான நேரத்திலேகூட, நெருப்பு சுவாலைவிட்டு எரியயிலேசுட அவர் நம்ம ஜனங்களுக்கு கை குடுத்தாரு, அவரு ஏசுவின் உண்மையான ஊழியன் சார், நடந்ததே வாயால சொல்ல முடியாது. எல்லாம் இதுலே எழுதியிருக்கிறேன். பின்னலே வாசிச்சுப்பாருங்க. ஜே ஆருக்கும் கொப்பி அனுப்பி இருக்கிறேன். யாருக்கு சொல்லி என்ன பிரயோஜனம். பிள்ளே போயிட்டான் நஸ்டஈடாம். நஸ்டஈடு, என் பிள்ளை உயிருக்கு ஈடு செய்யுமா.”
நான் பேசவில்லை. அவர் கொடுத்த கடிதக்கட்டை வாங்கி லாச்சியில் வைத்தேன்.
*சார் முகாமே பார்த்தீங்களா?
*ரெண்டு நாளைக்கு முந்தி போய் பார்த்தேன்.”
“இப்ப ரொம்ப ஆள் கூடிப்போச்சுங்க. அந்தத் தம்பி யாருங்க? ஜகனக் காட்டினர்.
“Grøör Lð56ör.'
*நேத்து அங்கே வந்து கந்தையாகிட்டே பேசிட்டு வந்தாரு.”
*எனக்கு சொல்லல்லே. ஜகன்.”
உள்ளே வந்து
“தாத்தி.”
"நேத்து முகாமுக்கு போனியோ?”
"ஆமா, மாலினி, ரஞ்சன், மஹிந்த எல்லோரும் போய் பார்த்தோம்.”

Page 22
34 இனிப் படமாட்டேன்
*நல்லது எங்களோடு இப்போது வாயா, போவோம்.”
“இல்லை தாத்தி.” தலையை ஆட்டினன்.
‘ராஜன் வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்திருக்கிருர்.”
“இங்கே சாப்பிடுகிறேன் தாத்தி, நீங்க போங்கள்.”
முகாமுக்குப் போக அவனுக்குப் பிரியமில்லை போலிருக் கிறது.
*டெலிபோன் வந்தால் குறித்து வை.”
தலையாட்டினன்.
நானும் சந்தியாகுவும் புறப்பட்டோம். ருேட்டுக்கு வந்து, ஒரு டாக்சியை நிறுத்தி ஏறி அமர்ந்தோம்.
64 எங்கே? சிங்களம்.
*பம்பலப்பிட்டிய.”
நாங்கள் பேசவில்லை. இருவரும் மெளனமாயிருந்தோம். டாக்சி விரைந்தது. வழக்கம் போல் கார், பஸ் இரு திசை களிலும் மடை திறந்தாற்போல் ஒடிக்கொண்டிருந்தது, நடை பாதையில் ஜனங்களின் நேருக்கம். எதையோ பறிகொடுத்த வர்கள் போல் விரைந்து கொண்டிருந்தார்கள் சந்தியில் ஐந்து போலீஸ்காரர்கள் ரோந்து செய்து கொண்டு இருந் தார்கள். டாக்சி கோவிலுக்கு அருகே வந்ததும், நிறுத்தி, இறங்கி பணத்தைக் கொடுத்தேன்.
கோவிலுக்கு பெரிய இரும்புகேட், உள் பக்கத்து மூலை யில் ஒரு சிறு அறை. அதன் கதவண்டை விளம்பர அட்டை போடப்பட்டிருந்தது. “சப்பாத்தி, செருப்பு, குடை வைக்கு மிடம்,” அந்த இடத்தில் ஒரு கான்ஸ்டபிள் நாற்காலியில மர்ந்து காவல் செய்து கொண்டிருந்தான். உள்ளே சென் ருேம். மண்டபத்துக்குள் குட்டைச்சுவர்கள் மேல் நடுவய தானவர்கள், மெலிந்தவர்கள், இடையில் மாத்திரம் சாரம் காட்டியவர்கள், பரட்டைத் தலையர்கள், அரைத்தாடிக்காரர்

ஸி. வி. வேலுப்பிள்ளை 35
கள், உட்கார்ந்திருந்தனர். மண்டபத்தினுள் பலர் அலங் கோலமாய் படுத்துக்கிடந்தார்கள், பக்க வாசலில் பிள்ளைகள் அழுக்குப்படிந்த சட்டைகளோடு விளையாடிக்கொண்டிருந் தார்கள். தொங்கல் வாசலில் கூட்டம் - ஆண்களும் பெண் களும் கர்ப்பிணிகளும் சிறுபிள்ளைகாரிகளும் குமரிகளும் பரட்டைத் தலையோடும், அழுக்குப்படிந்த உடைகளோடும் இங்குமங்கும் திரிந்தார்கள். இரண்டு பெரிய அண்டாக்களில் அரிசி வெந்து கொண்டிருந்தது. அதையடுத்து பெரிய பாத்திரத்தில் குழம்பு கொதித்தது. சமையல்காரர்கள் பெரிய அகப்பைகளைப் போட்டு கிளறிக் கொண்டிருந்தார்கள் இவர்கள் வீடற்றவர்கள். மறுநாள் என்ன நடக்கு மென்று தெரியாதவர்கள். அலங்கோலமான, எதிர்கால மில்லாத அணுதைக்கூட்டம். வீடு, வாசல், மானமிழந்து நடுரோட்டில் நிற்கும் கூட்டம். என்ருலும் பேசினர்கள், சிரித்தார்கள், நடமாடினர்கள்.
வேன்கள், லொரிகள் சாப்பாட்டிற்கான அரிசி, காய்கறி இலை பால்சுண்டு, துணி மணி இவைகளைக் கொண்டு வந்து இறக்கும்போது, அகதிகள் அங்கு ஓடி சாமான்களை இறக்கி, தூக்கி உள்ளேயுள்ள அறைக்குக் கொண்டு போய்ச் சேர்த் தார்கள்.
இந்த அன்பளிப்புக்கள் சமூக சேவை, கத்தோலிக்க கிருஷ்தவ ஸ்தாபனங்களிலிருந்து வருவதாய் சந்தியாகு எனக்கு சொன்னுர்.
*ஆபிஸ் இங்கே சார்.” பார்த்தேன். பெண்கள் தூங்கும் மண்டபத்திற்குள் உள்ளே ஒரு அறையில், கந்தையா அவரது உதவி காரியதரிசி கள் அகதிகளைப் பற்றிய விபரங்களையும் நன்கொடை அனுப் பியவர்களின் பெயர்களையும் பதிவு செய்துக்கொண்டிருந் தார்கள்.
*வாங்க மிஸ்டர் சந்திரன், வேலையாக இருக்கிருேம். உட்காருங்கள்.”

Page 23
36 இனிப் படமாட்டேன்
நாற்காலியில் அமர்ந்தேன்.
“சமுக சேவை அமைச்சு ஏதாவது செய்ததா?”
*இதுவரை இல்லை. பொது ஸ்தாபனங்கள், கிருஷ்தவ மடங்கள், காந்தீயம் இவர்கள் ஆதரவில்தான் எல்லாம் செய்கிருேம். கடந்த இரண்டு நாட்களாய் கூட்டம் அதி கரித்து இருக்கின்றது. கீரைத்தோட்ட ஆட்கள், அந்தக் கூலிகள், சாக்கு பேப்பர், போத்தல் வாங்கும் ஆட்கள், ரட்ணபுரி, பல்மதுளை, காவத்தை பகுதி தோட்டத்தொழி லாளர்கள், சாப்பாட்டுக்கு இல்லாதவர்கள், எல்லாம் இங்கே யிருக்கிருர்கள்.” என்ருர்,
*மன்னர், வவுனியா பகுதிக்கு இவர்களை அனுப்ப உத் தேசமா” என்று கேட்டேன்.
*இல்லை, இல்லை. தாய் நாடு போக வேண்டுமென்று ஒரே பிடிவாதமாக இருக்கிருர்கள். அங்கே போய் செத்தால் போதுமாம். வேண்டுமென்ருல் நீங்கள் பேசிப்பாருங்கள்." நானும் சந்தியாகுவும் வெளியே வந்தோம். என்னை சில வருடங்களுக்கு முன்னே தெரிந்த இருவரைக்கண்டேன்.
*எப்படி?” என்றேன். ‘எப்படிங்க தாங்க தலைவர்மார் எங்களுக்கு என்ன செஞ் சிருக்கிறீங்க? எங்க பாட்டே பாருங்களே. இப்ப நாங்க எல்லாம் யூ.என்.பி.சங்கம். சும்மாக்கிடக்கிறவங்களே நடு சாமத்திலே வந்து அடிச்சு விரட்டி, நெருப்பு வச்சாங்க. பொம்புளே பிள்ளைகளே அவமானம் செஞ்சாங்க. காட்டு சாதி பயக. இந்த ஊர்லே மனுசன் இருக்க முடியுங்களா?” என்றர்.
*வவுனியா, மன்னர் பகுதியில தோட்டப்பகுதி ஆள்க நிறைய இருக்கிருங்க. அங்கே வசதியிருக்கு,” என்றேன்.
*சிங்கள ஆளுக்கும் யாழ்பாணத்து ஆளுக்கும் சண்டை வாறப்ப எங்களேதான் முதல்லே கொத்துவாங்க இந்தியா வுக்கு போய் பிச்சை எடுக்கிறது நல்லதுங்க சார்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 37
என்னுடைய உபன்யாசம் ஏறவில்லை.
*உங்கள் பிரியம்??
“சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்சு சார். எத்தனை நாளைக்கி இப்படி பிச்சே சோறு சாப்பிட்டுகிட்டு இருக்கிறது.”
என்ருன் பின் பேசிய வாலிபன்.
*அது உண்மைதான்; சொல்கிறேன்” என்றேன்.
*சார் பசுபதி அம்மாள்கூட தப்பி இங்கே வந்திருக் கிருங்க மறந்திட்டேன், போய் வரச் சொல்கிறேன்.” சந்தியாகு உள்கட்டு மண்டபத்திற்கு போனர். w
“பசுபதி அம்மாள் என்ன விபரீதம், என் இருதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. என்ன நடந்ததோ" என்று வருந்தினேன்.
உள்ளேயிருந்து வந்தாள். பசுபதிதான். வெள்ளை நைலான் சாரி, கருப்பு ரவிக்கை, உடல் சற்றுக்கனம், முகம் சற்று மங்கலாய்த் தெரிந்தது. இது யாரோ? அருகில் வந்து கைகூப்பினள். இரு கைகளையும் கூப்பி “வாங்க வாங்க?? என்றேன்.
“நமஸ்காரம் மாஸ்டர்; என்னை தெரிகிறதா” என்று தழு தழுத்த குரலில் கேட்டாள்.
பசுபதிதான். அந்த மஞ்சள் படிந்த கன்னங்களில் ஒரு வித நீலக்கருப்பு படிந்திருந்தது.
“சணிய பகவான் எனக்கு கொடுத்த செல்வம் இது மாஸ்டர். சுகமாயிருக்கிறீங்களா. என்ன அப்படியே
நிக்கிறீங்க. கை கீழே போடுங்க” என்ருள்.
*சுகம்தான்.” எனக்கு பேச்சு ஒடவில்லை. கைகளை கீழே போட்டேன்.
இ-3

Page 24
38 இனிப் படமாட்டேன்
*கடைசியா முருகன் சந்நிதானத்துக்கே வந்திட்டேன். 25 வருசத்திற்கு பிறகு உங்க முகத்தேயும் பார்த்திட்டேன்" எல்லாம் நல்லதுதான் நடந்திருக்கு.”
*உங்க வீட்டுக்காரர்.” *அவர் ஒரு வருசத்திற்கு முந்தியே போயிட்டார். பென்சன், மத்த கடைகளில் போட்ட பங்கு எல்லாம் இப்ப தான் ஒரு மாதிரியாய் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ளே இந்த அநியாயம் வந்திட்டுது பாத்தீங்களா? நேத்தைக்கி மகன் வந்தான்! பார்த்தேன். பிள்ளைக்கு தமிழ் பேசத் தெரியலே! 25 வருசத்திற்கு முன்னே அப்படித்தான் இருந்தீங்க!”
சந்தியாகு உள்ளே போய்விட்டார்.
*எப்டோ இங்கே வந்தீங்க?
"நேத்து சுவாமி பியோ என்னே இங்கே அனுப்பி வெச்சார்! நம்ம சாமியார், சன்யாசி, பூசாரிமாருக்கு மடம் கட்ட சல்லி வாங்கத்தான் தெரியும். இந்தமாதிரி அவசரக் காலத்தில் இங்கே பேசாம முக்காடு போட்டு படுத்துக் கிருவாங்க!”
*இங்கே பேச வசதியில்லே, என்னுேட வருவீங்களா?
*வருவீங்களா பேஷா வருவேனே! எங்க போகணும்? *ராஜன் வீட்டுக்கு. சாப்பாடு தயாராயிருக்கு வரச் சொல்லி இருக்கிருர்.”
*குளிக்க வசதியுண்டா? குளிச்சு மூணு நாளாச்சு? * வாங்க! வசதியுண்டு.”
பின் கட்டுக்குப் போனுள். நான் கந்தையாவிடம் போனேன்!
*அந்த அம்மாளை ராஜன் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூட்டிப் போறேன்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 39
“பெரிய இடம்போல் தெரிகிறது. பெரிய இடம், சின்ன இடம் எல்லாம் ஒரு மட்டமாய், புளுதியாய் போச்சுது சந்ரன். பாவம் கூட்டிப்போங்கள்,” என்ருர்,
மாற்றுடைகளோடு பசுபதி வந்தாள்.
*மிஸ்டர் கந்தையா மூன்று மணிக்கெல்லாம் திரும்பு வேன்!”
‘போய்வாருங்கள் அம்மா.”
இருவரும் ருேட்டுக்கு வந்து டாக்ஸி பிடித்து பின் சீட்டில் அமர்ந்தோம்.
என் கையைப்பிடித்து, விரலோடு விரல்களை பின்னிக் கொண்டு;
‘ஐந்து வயதினிலே, அறியாப் பருவத்திலே” “கிளிக்கண்ணி மாஸ்டர், நான் கிழவி இப்ப, முருகன் எனக்கு ஒரு வருசத்திற்கு முன் பேரப்பிள்ளை கொடுத்திருக் கிருன், நாளை அவனை பார்க்கப் போறேன்.”
*அந்த சந்தோஷத்தில எனக்கும் பங்குண்டு!”
«6 მჭ’Lo_(ჭ6)???
டாக்ஸியை நிறுத்தி பயணத்தைக் கட்டிவிட்டு நடந் தோம்!
*வீட்லே சுகம் என்னலே அவளுக்குப்பெரும் தொல்லை” ‘என்ன செய்வது பிராப்தம்!” நாகுக்காகப் பேசினுள். ராஜன் வீட்டுக்கு வந்தோம். சுவற்றிலுள்ள பெல்லை அழுத்தினேன். வேலைக்கார பெரியம்மாள் வந்தாள். அறுபது வயதுதா னிருக்கும். சிங்கள அம்மாள் சீத்தையும் ரவிக்கையும் தான் அவளது உடை.
*இருங்க, சாப்பாடு ரெடி'

Page 25
40 இனிப் படமாட்டேன்
“இந்தம்மா குளிக்க வேணும்.”
“Fırf GunT sus!”
பசுபதியை குளியலறைக்குக் கூட்டிச்சென்ருள். நான் விராந்த நாற்காலியில் அமர்ந்தேன்! இது கனவா, கட்டுக் கதையா! 1 மணிக்கு முன் பசுபதியை நினைத்தேன்! இப்போது அவள் அறைக்குள் குளிக்கிருள். வன்செயலின் அலை இவளை இங்கு தள்ளிவிட்டது. முகாமிலுள்ள எத்தனை பெண்களுக்கு குளிக்க வசதியுண்டு சித்ராவைப்பற்றி நினைத்தேன்! அதிகாலையில் எழுந்து அவள் கையால் சமைத்த சாப்பாட்டை இன்று நான் சாப்பிடாமல், பசுபதியோடு சாப்பிடப்போகிறேன். இவைகளையெல்லாம் முன்கூட்டியே நான் செய்யவில்லை என்பதில் சாந்தி.
10 நிமிசத்தில் குளித்து, உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.
*அப்பாடி, இப்பதான் நான் மனுசியாய் இருக்கேன்!.
“வந்து உட்காருங்க. உங்களுக்கு என்ன நடந்தது??
*எல்லோருக்கும் நடந்ததுதான் எனக்கும் அதை ஏன் கேக்குறீங்க போங்க.”
கல கலவென்று சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிறீங்க?
"அழுது முடிஞ்திருச்சு இப்ப சிரிக்கிறேன்! பாட்டியான பெறகுகூட எனக்கு நிம்மதியில்லே. கொழப்பம் வந்து ராவு இரண்டு பயக கையிலே ஆப்புட்டு கடவுள் புண்ணியத்தாலே மானத்தே காப்பாத்திக்கிட்டேன். அந்த ரவு நடந்த அட்டூழியத்தை எப்படி சொல்வேன் மாஸ்டர். கண்ணு இல்லாத காட்டுமிராண்டிங்க!”
*எல்லோரையும் அப்படி சொல்ல முடியுமா?
*அந்தக் களிசரே கூட்டத்தை சொன்னேன்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 4.
*சாப்பிட வாங்க.” பெரியம்மாள் சாப்பிட்டாள். உள்ளே போய் அமர்ந்தோம்!
மேசையிலே சாதம், கறி, சுண்டல், குழம்பு எல்லாம் மணத்துக்கொண்டிருந்தன: "உங்களோட இருந்து சாப்பிட குடுத்து வச்சுதே!” என்ருள்.
எதையோ நினைத்து தலையாட்டிக்கொண்டு, எனக்குப் பரிமாறிவிட்டு தானும் பரிமாறிக் கொண்டாள்.
“அந்த விருந்து ஞாபகமிருக்கா மாஸ்டர்? “இன்றைக்குக்கூட அதை நினைத்தேன்.” *சந்தியாகு தலைவர் என்னே பத்தி சொல்லலையா?
*முகாமுக்கு வத்ததுதான் சொன்னுரு.”
*வினை மாஸ்டர்.”
*சரிதான் பசுபதியம்மாள்? என்றேன்.
“என்ன அம்மா பட்டம். சும்மா பசுபதியினு சொல் லுங்க!”
பின் சாப்பிட்டுவிட்டு முகப்புக்கு வந்தோம். *அவரே பத்தி நீங்க ஒன்னும் சொல்லலியே,’ என்றேன்.
*வாழ்க்கையிலே சுகமும் துக்கமுந்தான் சார், 32 வரு. சத்திலே சந்தோசம், சலுப்பு, கோபதாபம் எல்லாம் இருக்கத் தான் செஞ்சுது, ஆன அவரு நல்லவரு. சொந்தக்காரரு அன்பான மனுசன். கடைசி நாள்ளேதான் நல்லா இருந் தோம். ஏதோ.*
பேசாமலிருந்தாள்.
“ரொம்ப நாள் சுகமில்லாமே இருந்தாரோ.”
*ஆமா. அந்த சிறிமா அம்மா தோட்டங்கள எடுத் திச்சே அதுக்கு சத்தே முந்தி என் முகமெல்லாம் மேகநீர்

Page 26
42 இனிப் படமாட்டேன்
மாதிரி பச்சேயா படர்ந்திருச்சு, மருந்து மாயம் எல்லாம் செய்து ஒன்னும் சரிப்படலீங்க சாதகக்காரன் ‘ஏழரை நாட்டுச்சணியன், ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு’ சொன்னன். விதி வர்ரப்போ எது செய்துதான் என்ன. தொலஸ்பாகே பகுதியிலே டீமேக்கர் அவர், தோட்டத்தே எடுத்த 24 மணி நேரத்திலே எங்கள வெளியே போட்டுட் டான் குத்தம் கித்தம் ஒன்னுமே சொல்லலே நல்லவேளை யாய் தலத்துஒயாவிலே மூணு ஏக்கர் நெலம், சின்ன வீடு இருந்திச்சு. ஏதோ வந்து சேர்ந்தோம். கொஞ்ச நாளாய் நிம்மதியாய் இருந்தோம். ஆக்டிங் டீமேக்கரா ஸ்டோருக் குப் போவாரு. பென்சன், பிரவிடன்பண்டு கேட்டுகிட்டு காயிதத்துமேலே காயிதம் எழுதினரு கையிலேயிருந்த காசே பாங்கிலே போட்டாரு பண விசயத்திலே ஏதோ கவனமாயிருந்தாரு, எங்க ஆளுங்க சங்கதி உங்களுக்கு தெரியுமே.”
சிரித்தாள்.
*தெரியுமே,” என்றேன்.
*1977ல் பூரீலங்கா கட்சி தோத்திச்சு யூ என் பிகாரங்க கிட்டே வேலே தேடி ஒஹியோ பக்கம் போகனுமினரு. நீங்க இளந்தாரியில்லே சும்மா இருங்களேன்னேன். கேக்கல்லே. அக்டோபர் மாசம் 11ந்தேதி புறப்படனுமின்னரு முந்தின ராவு எனக்கு தூக்கமேயில்லே அதிகாலையிலே புறப்பட்டாரு. பசுபதி புள்ளே பத்திரமாயிரு சீக்கிரமா வர்ரேன்னு சொல்லி புறப்பட்டாரு. வாசப்படி தாண்டவும் கருச்சான் கர்ணு கரஞ்சுது. அவரு முன் வச்ச காலே பின் வைக்க மாட்டார். திரும்பி பாத்திட்டு போனரு. முத இரண்டு நாள் போச்சு. மறுநாள் யாழ்ப்பாணம், அனுராதபுரம் கலவரம்னு பேச்சு வந்துச்சு. திடீர்னு கண்டியிலே பெரிய கலவரம். பெரிய ஆளுங்க தூண்டிவிட்டு காடை யங்க செய்த அட்டூழியம், அக்ரமம் சொல்ல முடியாது. நாங்க இருந்த பகுதிக்கே கரச்ச வந்திருச்சு, ரொம்ப அந்நியோன்யமா இருந்தவங்க கூட தலேயே சாச்சுகிட்டு இருந்தாங்க, தெரிஞ்ச ரெண்டு

ஸி. வி. வேலுப்பிள்ளை 43
சிங்கள ஆளுகளுக்கு பணம் குடுத்து வீட்லே காவலுக்கு வெச்சிக்கிட்டு பிரார்த்தனை செஞ்சிகிட்டு இருந்தேன். நாலா நாள் சொந்தக்காரர் கண்டியிலேருந்து கார்லே வந்தாரு, தங்கச்சி மச்சானே கோச்சிலே வச்சு கத்தியாலே குத்திட்டான். கண்டி ஆஸ்பத்திரிக்கு போலிஸ் கொண்டு வந்து போட்டுட்டாங்க. எனக்கு சேதி தெரிஞ்சு நேர்சிங் ஹோமிலே வைச்சிருக்கேன். புறப்படுன்னர். கட்டுன துணியோட புறப்பட்டேன். கார்லே ஏறி அப்படியே கிடந் ததுதான் தெரியும். பின்னே கார் நிக்க இறங்கி நேர்சிங் ஹோமுக்குள்ளே போனேன். என்னே கண்டவுடன் புலம் பினரு. "பசுபதியம்மா! நீ சொன்னதத் தட்டி வந்தேனே. என்னே பாரு.” ஏதேதோ சொல்லிப் புலம்பினரு. தோள்ளே இரண்டு எடத்திலேயும் இடுப்பிலேயும் கத்திக்குத்து. ஒரு பாவமும் அறியாத மனுசனுக்கு வந்தக் கொடுமே.”
அவள் கண்கள் கலங்கின. தொடர்ந்து பேசினுள்.
*25ம் நாள் அங்கேயிருந்து பார்த்தேன். திருச்சியிலே யிருந்து மகளும் மருமகனும் வந்து பார்த்துட்டு போனங்க. சீக்கிரமா வரச் சொன்னங்க. பின்னடி வீட்டுக்கு கூட்டிப் போனேன். அதிலேயிருந்து அவருக்கு நல்ல சுகமில்லே. ஒரு மாதிரி மனப்பிராந்தி; சொப்பனத்திலே ஐயோ கடவுளே என்னே காப்பாத்து. நான் இந்தியாக்காரன், ஐயோன்னு அலறுவாறு. மருந்து, மாயம், நேத்திக்கடன், சாந்தி, சடங்கு எல்லாம் செய்தேன். போன வருசம் திடீருன்னு மாரடைப்பு வந்துச்சு. ஒரு மணி நேரத்திலே நேர்சிங் ஹோமுக்கு கொண்டு போய் சேர்த்தேன். பிரயோஜனமில்லே, போய்ட் டார். மூணு வருசத்துக்கு முன்னே போக வேண்டிய உயிர். உங்க அன்பாலே இருந்தாருன்னு டாக்டர் சொன்னுரு. இதுதான் கதை.”
நான் பேசவில்லை. ஒரு பானை சோற்றுக்கு இரண்டு அரிசிதான் பதம் என்பதுபோல பசுபதியின் சோகக்கதை தமிழ் மக்களது அவல வாழ்க்கை நிலையை பிரதிபலித்தது.

Page 27
44 இனிப் படமாட்டேன்
*மலே நாட்லே எவ்வளவு பேர் இறந்திருப்பாங்க சார்.”
““6rtlዚ ዘ.”
*1977 கலவரத்திலே,”
“பெரிய தொகை பசுபதியம்மாள். குறைந்தது நாலா անց`ւb GւյrՒ.”
*அப்பா,” என்று மார்பை அழுத்திக்கொண்டாள். அவள் கண்களில் நீர் சுரந்தது *இதுதான் என் கதை. நீங்க தங்கச்சியே எப்படி கண் டீங்க என்பதே எனக்கு எழுதி போடுங்க. சந்தியாகு கொடுத்த அறிக்கையை வாசிங்க மகனுக்கு கல்யாண விசயம் எப்படி.”
"சித்ரா முடிவு செய்திருக்கிருள். என்னுடைய நண்பர் கார்த்திகேசன் என்னைப்போலவே சிங்கள பெண்ணை கட்டிய வர். அவர் பிள்ளைதான்.”
“கல்யாணத்தை கட்டி பின்னே திருச்சிக்கு அனுப்பங்க.” "சரி நல்லது.” “தங்கச்சிக்கும் உங்களுக்கும் குறை வராது. நான் இலங்கே பிரஜே மாஸ்டர். வெள்ளைக்காரி கக்கூசுக்கு போயிட்டு பேப்பர்லே தொடப்பாளாம். அதுக்குக்கூட இந்த பத்தரம் ஒதவாது. என்ன பேசாம இருக்கிறீங்க. நம்ம தலைவர்மாரு மந்திரிமாரு என்ன கிழிச்சிட்டாங்க. நம்ம எல்லோருக்கும் தண்ணி கசந்திருச்சு. ஏதோ நாம செய்த பாவம்.”
*கர்மம் பசுபதியம்மாள்.”
*மனி என்ன.”
“epgog)]
*சரி, எந்திரிங்க. எழுந்தோம்.”
9

வி வி. வேலுப்பிள்ளை 45
என் புஜங்களை பிடித்துக்கொண்டு, கன்னத்தோடு கன்னம் வைத்துவிட்டு, இரு கைகளையும் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டாள்.
“வாங்க தங்கச்சியை கேட்டதாய் சொல்லுங்க.” “நாளை எத்தனை மணிக்கு பயணம்.”
*1, 30 மணிக்கு பிளேன். 9 மணிக்கு புறப்படுவேன்.”
சமையற்கார அம்மாளுக்கு சொல்லிவிட்டு புறப்பட்டு போனேம். முகாம் வந்து சேர 3, 15 மணி மறுபடியும் பயணம் சொல்லிவிட்டு, புறப்பட்டேன். இது இன்பம் துன்பம் கலந்த பிரியாவிடை.
சித்ராவிடம் சொல்ல வேண்டும். அது என் முடிவு.
ஆபீஸ் போய் சேர்ந்தேன். ராஜன் மறுநாள் வருவதாய் டெலிபோன் செய்திருந்தார். இந்தியத்தூதரக காரியதரிசி நாளை பேசச்சொன்னராம்.
ஜகனும் நானும் வீட்டுக்கு புறப்பட்டு சந்தியில் வந்து பஸ் ஏறினுேம், அரை மணி நேரத்தில் எல்லாம் தோட்டத் திற்கு பக்கத்திலுள்ள ஸ்டாண்டில் இறங்கி தார் ருேட் வழி யாய் சென்ருேம். தெரிந்தவர்களை சந்தித்தோம். தலை யாட்டிக் கொண்டோம் ஜகன் என் முன்னல் விரைந்து போனன். நான் வீட்டு முகப்பையடையும் போது சித்ரா வின் சத்தம் கேட்டது.
‘நான் உனக்கு படித்துப்படித்துச் சொன்னேன். நீ இப்படித்தான் எங்களை தாங்கப்போகிருயா. நான் பஸ் அடிக்கு போகிறேன். உனக்கு அந்த குட்டியோட பெட்மிங் டன் விளையாடினுல் போதும் அந்த மனிதன.”
கதவைத்திறந்து கொண்டு உள்ளே சென்றதும், என்னைக் கண்டாள்.
“கழுதை, என்னை ஏன் இப்படி ஆட்டி வைக்கிருய்.”

Page 28
46 இனிப் படமாட்டேன்
ஜகன் “ஹை, ஹொய்” என்று கனைந்தான்.
"ஜகன், மகன் சட்டை மாற்றிக்கொள், தேத்தண்ணி தயார்.” என்ருள்.
“கழுதை தேனீர் சாப்பிடாது.”
திவானில் அமர்ந்தேன்.
“ஏன் இப்படி அலட்டிக்கொள்கிருய் சித்ரா.”
சிரித்தாள்.
அத்தியாயம் நான்கு
மாலை வேலையில் நான் தோட்டத்திற்குள் உலாவுவது வழக்கம்.
எங்கள் தோட்டத்தில் தெற்குப் பகுதியில் வயல் காடு. சில பகுதிகளில் தண்ணிர் தேக்கம். அது சதுக்கமான ஐஸ் கட்டி உருகுவது போலிருந்தது மாலை மயங்கி தூரத்தே. உள்ள தோப்புகள் இருண்டு, புகை மயமாகின்றபோது சூரியன்இரத்தச்சக்கரமாய்சுழன்றுஇறங்கிக்கொண்டிருந்தது. வானத்தில் குங்குமம் தெளித்ததுபோன்ற வர்ணம் பரவியது. இது வயல்களில்தேங்கி நிற்கும்நீரில் பிரதிபலித்துநடுங்கியது. இந்தக் காட்சி அடிக்கடி மாறும் வர்ணப்போட்டி,
தோட்டத்தின் வட பகுதியில் ரப்பர் தோட்டம். அண்மையில் அங்கு புது வீடுகள் தோன்றியுள்ளன. இங்கு ஆள் நடமாட்டம் அதிகமில்லை. ஆடு மாடுகள் அங்கு மேயப் போகும்போது நாய்கள் வல், வல் என்று குறைத்து மிருகங் களைத் துரத்துவது வழக்கம்! முன்பெல்லாம் நாய் குரைக்கும் சத்தம் சர்வ சாதாரணம். இப்போது அப்படியில்லை. நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் நான் அதை ஊர்ந்து கவனிப்பேன். ஒரு சில வினடிகளில் அதைச் சமாளித்துக் கொள்வேன்,

ஸி. வி. வேலுப்பிள்ளை 47
மாட்டுத் தொழுவத்திற்குப் பக்கத்திலுள்ள புல் திடலில் ஜகன், மனே, கல்யாணி, ரஞ்சன் எல்லோரும் பெட்மிங்டன் விளையாடினர்கள் விளையாட்டோடு சத்தமும் கூச்சலும் கலந்திருந்தன “பெண்கள் ஒரு பக்கம், ஆண்கள் மறுபக்க மாய் விளையாடுவதுதான் எங்களுக்கு தோக்கிறது,” என்ருள் கல்யாணி.
நீண்டு வளந்தவள், மாநிறம், அடத்தியான தலைமயிர், வட்டமான முகம். மனேகரியைப்போல் பெல்பொட்டம், டி சேர்ட் அணிந்திருந்தாள். "ஜகனும் கல்யாணியும் பார்ட்னர்ஸ், நானும் ரஞ்சனும் பார்ட்னர்ஸ்," என்ருள் மனே.
இந்த மாற்றத்தோடு மறு ஆட்டம் ஆரம்பித்தது. சில நிமிடங்களில் இருள் மிதந்து வந்தது.
இவர்கள் விளையாட்டைக் கடந்த பத்து நாட்களாக நான் கவனிப்பதில்லை. முன்பெல்லாம் அங்கு நின்று ரசித்துக் கை தட்டுவேன்! சித்ரா என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டு போவாள். ஆனல் இப்போது அவர்கள் விளையாட்டில் எனக்கு நாட்டமில்லை. வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டில் விளக்கேற்றியதும் இளைஞர்கள் சமையலறையில் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். நான் சம்பாஷணை அறையில் தினசரி வாசித்துக்கொண்டிருந்தேன். பத்மினியின் குரல் கேட்டது சித்ரா வந்தாள்.
*மடு திருவிழா டி. வியில் இன்று இரவு 10 மணிக்கு வருகிறதாம். பத்மினி வரச்சொன்னுள். நீங்களும் வாருங் கள்,” கேட்டாள் சித்ரா.
'பாக்கலாம்,” என்றேன்
பத்மினி வந்தாள். இன்றைய மோஸ்தரில் டிரஸ் அணிந் திருந்தாள். வயது 40 தானிருக்கும். விதவைதான். அதனுல் அவள் தோற்றம் மாறவில்லை, களையோடு காணப்
பட்டாள். இது கார்த்திகேயன் அவளை மணந்ததற்கு ஒரு காரணம் போலும்.

Page 29
48 இனிப் படமாட்டேன்
*சந்ரு, நீங்கள் இவளை படம் பார்க்க கூட்டிப்போற தில்லை. இவளுக்க இரவு பகலாக வேலை. கலர் டிவியில் நல்லாயிருக்கும். 930க்கு அவசியம் வரவேண்டும்!” நல்ல ஆங்கிலத்தில் சொன்னுள்.
*அங்கள், அங்கள்!”
மனேகரியும் ஒத்து ஊத, வந்து சேர்ந்தாள்.
*காப்பி போடுவேன், அங்கள், கேக் செய்திருக்கிறேன். உங்களுக்கும் கேக் பிரியம்தானே.” என்ருள்.
*வேறு யாரும் வருகிறீர்களா,” என்றேன். “கல்யாணியும் ரஞ்சனும் அங்கள், எங்கள் வீட்டுக்கெல் லாம் நீங்கள் வர மாட்டீர்கள்,” என்று ஒரு மாதிரியாக மூகத்தைப் பண்ணிக்கொண்டாள்.
*வருவேன்?
“ஜகனயும் கூட்டி வாருங்கள்.” *வீட்டுக்கு யார் காவல் மனே.” என்றேன்.
*ஏன் அந்த சந்தனம் என்ன செய்கிருன். மாட்டுப் பட்டி அட்டில் எந்த நேரமும் தூங்கிருனே, ஸ்தோப்பில் வந்து படுக்கட்டுமே,” என்ருள்.
'சித்ரா, லீலாவையும் கூட்டி வா,’ என்று பத்மினி சொன்னுள்.
பத்மினி மனேவைக் கூட்டிக்கொண்டு பயணமானுள்.
கார்த்திகேயனின் அகால மரணத்தால் பத்மினிக்குப் பெரும் தொகை நஷ்டஈடும் மாதப் பென்சனும் கிடைக் கின்றன. அதோடு ஒரு கம்பெனியில் டைப்பிஸ்ட் தொழில். கஸ்டமில்லாத வாழ்க்கை நடத்தக்கூடிய வசதிகள் அவளுக்கு நிறைய இருந்தன. மனேகரி கொன்வெண்டில் உயர் படிப்பு படித்துக்கொண்டிருந்தாள். சிங்கள காடையர்களையும்

ஸி. வி. வேலுப்பிள்ளை 49
இனத்துவேசம் பேசும் அரசியல்வாதிகளையும் சிங்களத்தில் திட்டுவாள். தந்தையின் இனத்தவர் மேல் அவளுக்கு பற்று. படிப்பு, பண விஷயத்தில் யாழ்ப்பாணத்தமிழர்களுக் குள்ள குணுதிசயங்கள் அவளிடமிருந்தன. எனவே பத்மினி அவளைச் ‘சரியான பனங்கொட்டை” என்று சொல்லு வாள்.
‘நான் பனங்கொட்டை நீங்கள் பிலாக்காய்,” என்று பதில் சொள்ளுவாள் மனேகரி.
8.30 மணிக்கு இராச் சாப்பாட்டின்போது பசுபதியைப் பற்றிச் சித்ராவுக்கு விபரமாய்ச் சொன்னேன்.
*நீங்கள் அவளை இங்கு கூட்டி வந்திருக்கலாம்.” *அகதிகளைவிட்டு வந்திருக்க மாட்டாள்,” என்றேன்.
*அது உங்களுடைய உத்தேசம். நீங்கள் எதையும் முன் யோசனையோடு செய்வதில்லை. பக்கத்தில் நம் வீடு இருக்கும் போது என்று” நிறுத்திக்கொண்டாள்.
அது உண்மை. இந்த விஷயத்தில் நான் சற்று மட்டம் தான். அது அவளுக்கு தெரியும்.
9.45க்கெல்லாம் பத்மினியின் வீடு போய்ச் சேர்ந்தோம். எல்லா வசதிகளோடும் அமைக்கப்பட்ட சம்பாஷணைக்கூடம் , ஒரு மேசைமேல் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. ரஞ்சனும் கல்யாணியும் மனேகரியும் எப்போதும்போல் பேச்சை ஆரம் பித்தார்கன். ரஞ்சனும் கல்யாணியும் அடுத்த பங்களாவில் வசிக்கும் அமயரட்டனின் பிள்ளைகள். அவர் கல்வி இலாக் காவின் ஒரு பகுதியில் தலைமைக்குமாஸ்தா. பண்பான மனிதர் புத்தகப்பிரியர். அவர் பிள்ளைகளை பத்மினி வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும்தான் அனுப்புவார்.
டி.வியில் மடுமாதாவின் விழா 21 வயது சிங்கள இளைஞன், இயக்குனராயிருந்து தயாரித்தது. யாத்திரிகள் வருகையிலிருந்து விழா முடியும் வரையுள்ள அம்சங்களையும்

Page 30
50 இனிப் படமாட்டேன்
சிரமமாக சேகரித்து தயாரிக்கப்பட்டிருந்தது. வாழ்க்கை ஒரு நாடகம் என்பது தெளிவாக இருந்தது. இதில் விஷேச மென்னவென்ருல் நடுத்தர வகுப்பு யாத்ரிகளையும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களையும் காட்டவில்லை. பிராத்தனைக் கூட்டத்தில்கூட கீழ்மட்டத்திலுள்ள பக்தர்கள்தான் இருந் தார்கள். சில கூட்டங்களில் தோட்டத் தொழிலாளர் குடும் பங்களும் காணப்பட்டன. கத்தோலிக்கர்கள் கெட்டிக் காரர்கள், முஸ்லீம்களைப்போல் திறமைசாலிகள். தங்கள் சமூகம் சிதருது காத்து வளர்க்கும் அபிமானிகள். இந்துக் கள் மத்தியில் இந்த உயர்ந்த லட்சியம் இல்லையே என்று வருந்தினுேம்.
நாங்கள் திரும்பும்போது 11 மணியாகிவிட்டது. பத்மினி யின் பங்களாவுக்கு பின் பக்கத்தில் உள்ள பாஸ் வீட்டில் டி. வி. பார்த்துவிட்டு எங்களுக்கு முன் சிலர் போனர்கள்: பின்னலும் வந்தார்கள்! எல்லாம் சிங்களர். அவர்களை வழக்கத்திற்கு மாருக ஒருவிதமாய் எடை போட்டுப் பார்த் தேன். நான் தமிழன் என்பது இவர்களுக்குத் தெரியும். என்னை இருட்டில் இனம் தெரியாது என்று சமாதானம் செய்துகொண்டேன். லீலாவும் ஜகனும் முன்னே சென்ருர்கள். சித்ரா என்னேடு எப்போதும்போல் பேசிக் கொண்டே வந்தாள். அவள் குரலைக் கேட்டவர்கள் சற்று ஒதுங்கி வழிவிட்டார்கள்.
சித்ராவுக்கு கிராமத்தில் நல்ல மதிப்பு. மாமியின் மறைவுக்குப்பின் அவரது கடைமைகளை சித்ரா வழுவாது செய்து வந்தாள். கோவில் விசயங்களிலும் கிராமத்தில் நடக்கும் கரும காரியங்களிலும் கலந்து கொள்வதோடு கஸ்ட நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்வாள். அவதூறு சொல்பவர்களையும் வசைசொல்கிறவர்களையும்கூட பெரிதாக அவள் கருதுவதில்லை. மாமி, மைத்துனர் இறந்த தினங் களிலும், கிருஸ்மஸ் பண்டிகை சமயத்திலும் வீட்டுக்கு வரும் நாடோடிகளை உபசரித்துச் சாப்பாடு போட்டு சிலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவாள். சித்ரா ஒரு சிறந்த பெண்

ஸி. வி. வேலுப்பிள்ளை 51
பிறவி, தலைக்கணமில்லாதவள். கிராம வாசிகள் இவளை வெள்ளை மிசி என்றும், என்னை வெள்ளை மிசியின் மாத்தியா வென்றும் குறிப்பிடுவார்கள். கிராமவாசிகளும் இங்குக் குடியேறிய பட்டின உத்தியோகஸ்தர்கள்,அவர்களின் குடும்பத்தினரும். என்னேடும் ஜகனேடும் இணக்கமாகப் பழகு வார்கள். எனக்கு நல்ல சிங்களம் தெரியாதபடியால் அவர்க ளோடு அதிகம் நான் பேச்சை வளர்ப்பதில்லை சிங்களத்தில் நான் பண்டிதனுயிருந்தால்கூட என்ன தமிழன் தமிழன்தானே. நாட்டுப்பகுதிகளில் தலைமுறை தலைமுறை யாக இருந்தவர்கள் கூட 1977ல் தாக்கப்பட்டார்கள். அது
வெறி.
நாங்கள் வீடு வந்து சேர்ந்த போது முற்றத்தில் சந்தனம் லாந்தரை வைத்துக்கொண்டு ஏதோ வாசித்துக்கொண்டிருந் தான். எங்களைக்கண்டு எழுந்தான்.
*சந்தனம், தனியாயிருந்தது ஒருமாதிரியாய் இருந்திச்சோ,” என்றேன்.
"இல்லங்க சார்,” என்ருன்.
மலைநாட்டில் நான் பிறந்த தோட்டத்தைச் சேர்ந்தவன் சந்தனம். அவனது பந்துக்கள் நாலு தலைமுறையாக எங்களோடு இருந்தவர்கள். அவன் தகப்பன் எங்கள் காய் கறித் தோட்டத்தில் வேலை செய்தவர். ஆறு வருடங்களுக்கு முன் வியாதியால் கொழும்பு ஆஸ்பத்திரிக்கு வந்தவனை எங்கள் வீட்டிலிருந்து உடம்பைத் தேற்றிக்கொண்டு போகச் சொன்னேன். சித்ரா அவனைக் கவனித்துப் பார்த் தாள். உடம்பு தெம்பானதும் எங்களோடே இருந்து கொண்டான். 'சந்தனம் போய் படுத்துக்கொள்,” என்று சித்ரா சொல்லிவிட்டு. கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனள்.
எல்லோரும் படுத்தோம். திவானில் படுத்த நான் பசுபதியைப் பற்றி நினைத்தேன். மனிதன் மனம் ஒரு தேன்

Page 31
5. இனிப் படமாட்டேன்
கூடு போன்றது. ஒவ்வொரு அறையிலும் தனித்தனி ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புக்கள், ஏமாற்றம், வெற்றி தோல்வி இவைகளையெல்லாம் சேர்த்துக் கொண்டு இருப்பது தான் மனம்.
மனதை அடக்கியே சும்மா இராமல் சில நேரம் சிந்தித்தேன். நல்ல வேளையாகத் தூங்கிவிட்டேன்.
ஹொ, பிலா மரத்திலிருந்து சத்தமிட்டு என்னை எழுப்பிவிட்டது.
சமையல் கட்டில் சித்ராவும் லீலாவும் பேசிக்கொண்டு சமையல் வேலைகளை ஆரம்பித்தது போலிருந்தது. நான் எழுந்து படுக்கை அறை வழியாகப் பாத்ரூமுக்குப் போனேன். நான் பாத்ரூம் கதவைச் சாத்திய சத்தம் கேட்டு;
“டீ கொண்டு வருகிறேன்,” என்ருள் சித்ரா,
*ஏன் இவ்வளவு அதிகாலையிலேயே.” என்றேன். *நான் பசுபதியை வழியனுப்பப் போகிறேன். அவருக்குச் சாப்பாடு தயாரிக்கின்றேன்.”
“எனக்குச் சொல்லவில்லையே,’ என்றேன். *அதற்கு உங்கள் உத்தரவு வேண்டுமோ? நான் சிரித்துக்கொண்டு படுக்கையறைக்குச் சென்றேன். தேனீர் வந்தது. “நேரத்தோடு போக வேண்டும், 7 மணிக் குப் புறப்பட வேண்டும்.” என்ருள்.
*நீ ரொம்ப நல்லவள்.”
*வெறும் சேர்ட்டிபிக்கேட் வேண்டாம்.”
சமையல் கட்டுக்குத் திரும்பினள்.
5-30 வரை கண்ணை மூடிக்கொண்டு குருவியின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சரியாய் 7 மணிக்

ஸி. வி. வேலுப்பிள்ளை 53
குப் புறப்பட்டு 8-30க்கு அகதிகள் முகாமை அடைந்தோம். சித்ராவும் ஜகனும் பேசிக்கொண்டு எனக்குப் பின்னல் வந்தார்கள். அங்குள்ள அலங்கோல நிலையைப் பார்த் தார்கள். இன்று முகாமில் சற்று பரபரப்பு. தலையில் கைகளை வைத்துக்கொண்டு சிலர் சும்மா வெறுமனே உட்கார்ந்திருந்தார்கள். சிலர் படுத்துக் கிடந்தார்கள். சிலர் சிட்டமாக உட்கார்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இதற்கு மத்தியில் பலர் இங்கும் அங்குமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். பிரயா ணத்திற்கு தயாராவது போலிருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். சித்ராவின் முகம் வாடி கவலையும் வெறுப்பும் கலந்திருந்தது.
நான் நேரே கந்தையா தற்காலிகமாக அமைத்துக் கொண்டிருக்கும் ஆபீசுக்குப் போனேன். பசுபதி பிரயாணக் கோலத்தோடு அவருடன் பேசிக்கொண்டிருந்தான்.
"ஆ, மாஸ்டர் என்னை வழியனுப்பவா, ஏன் இவ்வளவு Gg Lob?’’
“பசுபதியம்மா, இவள் தான் உங்களை வழியனுப்ப வந்திருக்கிரு.”
பசுபதி சித்ராவின் இரு கரங்களையும் பற்றிக்கொண் டாள். இருவரும் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண் டார்கள். இந்தக் காட்சியைப் பார்த்து அகதிகள் சிரித்துக் கொண்டார்கள். அன்பு ஒரு தொற்று நோய்
பசுபதி சித்ராவிடம் சாதாரண சிங்களத்தில் பேசினுள் சுகம் விசாரித்துக் கொண்டார்கள்.
“ஏதோ இருக்கிறேன். தெரியுதுதானே,” என்று பசுபதி
சிரித்தாள்.
*நீங்கள் நேற்றே வீட்டுக்கு வந்திருக்க வேண்டும்.” இ-4

Page 32
54 இனிப் படமாட்டேன்
'சித்ரா நான் அகதி, இவங்களோடு ஒடி வந்தவ. இவங்க எனக்கு உதவி செய்தவங்க, இவங்களை விட்டுப் பிரிந்து போவது மனசுக்குத் தொந்தரவாயிருந்தது.”
*ரொம்ப சரி.? "மகனுக்குக் கல்யாணம் கட்டி எங்கிட்டே அனுப்பி விடுங்க. நான் எல்லாம் கவனிச்சுக் கொள்வேன்.”
*ஜகன் நீ போறியா? *நீங்கள் அனுப்பினுல் போவேன்,” என்ருன். *கெட்டிக்காரப் புள்ளே. நீ அங்கே வந்தா உங்க
தாத்திக்குச் சில சமயம் சுகமில்லாமலே போனலும் போகுமே.”
“பசுபதியக்கா எனக்கு மாத்திரம் சுகமில்லாமே வராதோ.”
“எனக்கு ஒரே ஒரு பிள்ளை, பெண். அவளே விட்டுட்டு தானே இங்கே இதுவரை இருந்தேன்.”
*படிக்குதா?”
*கல்யாணம் கட்டிக்கொடுத்திட்டேன். அவளுக்கும் ஒரு பிள்ளையிருக்கு. நான் பாட்டி.”
சிரித்துக் கொண்டார்கள். கந்தையா எழுதிக்கொண்டிருந்தார்.
‘மிஸ்டர் கந்தையா இன்று சற்று பரபரப்பாக இருக்கே.”
‘இன்று 150 பேரை நாடு கடத்துகிருேம். எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது.” என்ருர்,
*இந்த முகாமிலிருந்து அந்த முகாமுக்குப் போகிருர்
களா, அரசு ஏதாவது உதவி செய்கிறதா,” என்று கேட்டேன்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 55
“தலைக்கு 300 ரூபாவும் பிரயாண செலவும் கொடுத் திருக்கிருர்கள்," என்று கந்தையா ஆங்கிலத்தில் சொன்னர்.
சித்ரா மரம் போல் நின்று கேட்டுக்கொண்டிருந்தவள்; “மிஸ்டர் கந்தையா, நீங்கள் மெசஞ்சர் பத்திரிகையை வாசித்துப் பாருங்கள். இந்த அநியாயத்தை எல்லாம் உண்மையாகக் கண்டித்திருக்கிருர்கள்.”
“ஹிந்துக்களுக்கென தனி பத்திரிகை இல்லை மிசிஸ் சந்திரன். அதோடு எங்கள் மத குருமாருக்கு யோசிப் பதற்கே நேரமில்லை. ஆத்மீக விஷ1ங்களில் ரொம்ப ஈடுபட் டிருக்கிறர்கள். அருள் இருந்தால்தானே அந்த உலகிற்குப் போக முடியும்.”
“அது சரிதான். எனக்கும் நேரமாகிறது. இது என் காணிக்கை,” என்று ஒரு கட்டு 10 ரூபா நோட்டுக்களை கந்தையாவுக்கு பசுபதி கொடுத்தாள்.
நன்றி சொல்லிக்கொண்டு, நாற்காலியிலமர்ந்து உடன் ரசீது எழுதிக்கொடுத்தார்.
“பண விஷயத்தில் யாழ்பாணத்தார் ரொம்பக் கெட்டி, என்று பசுபதி சிரித்தாள்.
*அதனல்தானே நாங்கள் கஷ்டப்பட வேண்டியிருக் கிறது," என்ருர் கந்தையா.
“அது மாத்திரமல்ல, நாட்டை துண்டுபோட வேண்டும் என்ற பேச்சும் கூட,” என்ருள் சித்ரா,
*நாட்டை எதற்காகப் பிரித்துக் கேட்கிருேம். அதற்கு முக்கியப் பிரச்சனைகளை உண்டு, மிசிஸ் சந்திரன்?
*அந்தப் பிரச்சனைகளை வெளியூருக்கு ஏற்றுமதி செய் இறீர்கள். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போய் பிரச் சாரம் செய்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் பிரச்சனைகளைச் சிங்களத்தில் எழுதி கிராமம் கிராமமாய் போய் சொல்லத் கூடாது? சிங்களவர்களும் மனிதர்கள்தானே.”

Page 33
56 இனிப் படமாட்டேன்
"அதை நான் பல கருத்கரங்குகளில் வற்புறுத்தியுள்ளேன் ஆனல்.”
அப்போது ஒரு மஞ்சள் நிற கார் கேட் வழியாய் உள்ளே வந்தது.
"மிஸ்டர் கந்தையா, கார் வந்துருச்சு. நீங்கள் செய்த உபகாரத்தை இந்த ஜென்மத்திலே மறக்க மாட்டேன். போனதும் காயிதம் போடுறேன். நான் இந்தியா போழுப் புலே நினைக்கலே இந்திர லோகம் போற மாதிரிதான்
நினைக்கிறேன். இருந்தாலும் ஆபத்திலேயும் துக்கத்திலேயும் ஒன்ருயிருந்தவங்ககிட்டே சொல்லிட்டு வர்றேன்.”
முகாமிலிருந்த அகதிகளுக்கு பசுபதியைப்பற்றிய விபரங் கள் தெரியும். கார் வந்ததும் பெண்களும் பிள்ளைகளும் கூடி விட்டார்கள்.
'அம்ம பொயிட்டு வாங்க, அம்மா பொயிட்டு வாங்க.* சந்தியாகு கார் பக்கத்தில் வந்து நின்றவர், *அம்மாளே பொயிட்டு ஏன் வரச்சொல்றீங்க?
*அது பழக்கம்தானே தலைவரே.”*
சில பெண்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள் சிலர் மூக்கை சிந்திக்கொண்டார்கள். பசுபதி சித்ராவையும் ஜகனையும் முத்தமிட்டாள். என் கன்னங்களையும் இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டாள், பொதுவாக எல்லோருக்கும் கரம் கூப்பிவிட்டு காரில் ஏறினுள். சந்தியாகுவும் காரில் ஏறினர்.
*பசுபதியம்மாள் போய் வாருங்கள்,” என்ருர் கந்தையா. கார் புறப்பட்டது.
“பசுபதியம்மா மேன்மையானவள். அவளை உங்களுக்கு வெகு காலமாகத் தெரியுமா சந்ரு,” என்று சித்ரா கேட்டாள்

ஸி. வி. வேலுப்பிள்ளை 57
“இல்லை அவள் கல்யாணத்திற்கு முன் ஒரு நாள் சாப் பாட்டிற்குப் போயிருந்தேன். அவ்வளவுதான்.” என்றேன்
ஒரு டாக்சி உள்ளே வந்து நின்றது. கமிராக்களோடு இருவர் வந்திறங்கினர்கள். பத்திரிக்காரர்கள் போல் தெரிந்தது.
*இங்குள்ள அகதிகளில் அநேகர் மற்ற சங்கத்தின் அங்கத் தினர்கள். இவர்களை பயணம் அனுப்பி வைக்க காரியதரிசி வருகிருர். பிரியாவிடைக்காட்சியை படம் எடுப்பதற்காக பத்திரிகை நிருபர்கள் வந்திருக்கிருர்கள்.” கந்தையா ஆங்கிலத்தில் சொன்னர்,
“ஒ, நல்ல விளம்பரக்காரர்கள்.” "இதோடு நிற்காது. போர்ட் ஸ்டேசனிலும் வைத்து படம் எடுப்பார்கள். நாளே எல்லா தமிழ் பத்திரிகைகளிலும் படங்கள் முன் பக்கத்தில் வரும்,”
*,ஆக பிரச்சனை தீர்ந்து போகும்,” என்ருள் சித்ரா, “நாங்கள் வருகிருேம், மிஸ்டர் கந்தையா,” என்றேன். எல்லோரும் புறப்பட்டோம். ஆபீசுக்கு வந்து சேர்ந்தோம். அங்கு வழக்கத்திற்கு மாருகக் கூட்டம். எல்லோரும் எழுந்து கை கூப்பினர்கள். அட்டன், மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
என் அறைக்குள் நானும் சித்ராவும் போனுேம். ஜகன் அவனிடத்தில் அமர்ந்து கொண்டான். ராஜன் எழுந்து சித்ராவை வரவேற்ருர்,
‘ஹலோ சித்ரா, சந்திரனுக்குக் காவலாக வந்தீர்களா.” ‘அப்படி இல்லை. இவருக்குத் தெரிந்த அம்மாளை பயணம் அனுப்ப வந்தேன்.”
“அப்படியா உட்காருங்களேன்.

Page 34
58 இனிப் பட மாட்டேன்
சித்ரா உட்கார்ந்தாள். நான் என் ஆசனத்தில் அமர்ந் தேன்.
“இன்று 150 பேர் இந்தியா செல்கிருர்களாம். ஹைகமிசன் காரியதரிசிசொன்னர்.
ஆமா சங்கத்துக்காரர்களை வைத்துப் படமெடுக்க பத்திரி கைக்காரர்கள் வந்தார்கள், நாங்கள் தப்பி வந்துவிட்டோம்.
*உலகத்தில் ஏமாற்றுக்காரர்கள் ஆயிரக்கணக்கில் பிறக் கிருர்கள். அதேபோல் ஏமாறுகிறவர்களும் பத்தாயிரக் கணக்கில் பிறக்கிருர்கள், என்ன செய்வது,” என்ருர், ராஜன்.
“நீங்கள் மேல் பகுதிக்கு போ னீர்களாமே நிலைமை எப்படி?
*கினிகத்தேனையிலிருந்து பசறை வரை அமைதியா இருக்கிறது, அங்கு சிங்களவர்களும் நம்மவர்களும் அந்நி யோன்யமாக இருக்கிருர்கள். இந்த நிலை குலையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.”
சித்ரா தலையாட்டிக் கொண்டாள்.
கடந்த 25 வருடங்களில் ராஜன் அதிகமாய் மாறவில்லை. நல்ல உயரம், உயரத்திற்கேற்ற உடல் வாகு. மில்டரி உத்தி யோகஸ்தர் போன்ற சாயல், அசைக்க முடியாத அமைதியில் லயித்திருக்கும் கண்கள். அடர்ந்த புருவங்கள், மீசையில்லாத பளபளப்பான முகம், சேவை செய்வதே தன் இலட்சியம் என்பது அவர் பேச்சிலும் போக்கிலும் பிரதிபலிக்கின்றது. அவர் அப்பழுக்கில்லாத வாழ்க்கை நடத்தும் கர்ம யோகி.
இன்று அவர் சந்தோசமாக இல்லை.
*தோட்டப்பகுதியிலுள்ளவர்கள் பயந்துபோய் எந்த நேரமும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு இருக்கிருர்கள். பயம் மனிதனை ரொம்ப கீழ் நிலைக்குத்தள்ளி விடுகிறது இது கெட்ட மன நோய்.” என்று ஆங்கிலத்தில் சொன்னர்.

ஸி. வி. வேலுப்பிள்ளை, 59
“ஒடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்குத் தொக்கு என்று ஒரு பழமொழி உண்டு,” என்ருள், சித்ரா,
*அதே போன்று பழமொழியொன்று தமிழிலும் உண்டு.
அந்த வகையில் தமிழர்களும் சிங்களவர்களும் ரொம்ப நெருங் கியவர்கள்தானே.”
“மிஸ்டர் சந்திரனும் நானும் ஒரு வீட்டில் இருக்கிருேம் தானே,” என்று சித்ரா சிரித்தாள்.
*அது பெரிய உண்மை. ஜகளுதனும் உங்களோடு தானே?
எல்லோரும் சிரித்தோம். “இன்றைக்குக் கூட்டமாக இருக்கிறதே?” என்று சித்ரா ராஜனிடம் கேட்டாள்.
இவர்கள் அட்டன், மஷ்கெலியா பகுதிகளைச் சேர்ந்தவர் கள். பூரீலங்கா பிரஜாவுரிமை பெற்றவர்கள், அதை ரத்துச் செய்துவிட்டு தமிழ் நாடு போக வேண்டுமாம்.”
“என்ன விபரீதம். நூற்றுக்கு நூறு தமிழர்கள் இருக் கின்ற இடத்திலிருந்து கொண்டு இப்படி பயப்படலாமா. இவர்களுக்கு நீங்கள் தெம்பு சொல்ல வேண்டும் சரி நான் புறப்படுகிறேன்."
சித்ரா எழுந்தாள். ராஜனும் எழுந்தார். சரி வருகிருேம். ராஜன், அவளோடு வெளிப்பகுதிக்கு நானும் வந்தேன்.
*புத்தா நேரத்தோடு வா,” என்று ஜகனுக்கு சொன்னுள் அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் சித்ராவைக்கண்டு எழுந் தார்கள்.
“எனக்கு அட்டன் பக்கம் தெரியுமே. நீங்க எல்லாம்
பயம் புடிச்சு ஓட வேண்டா, அங்கேயே இருக்க வேணும் தெரியுமா. நான் வர்றேன்.”

Page 35
60 இனிப் படமாட்டேன்
எல்லோரும் எழுந்து சிரித்த முகத்தோடு கைகூப்பினர் கள். சித்ரா புறப்பட்டாள்.
அத்தியாயம் ஐந்து
சித்ராவை அனுப்பிவிட்டு என் அறைக்குத்திரும்பினேன். ராஜன் என் வருகைக்காக எதிர்பார்த்திருந்தது போல் தெரிந்தது. அவர் மேல் பகுதிக்குப் போய் தான் கண்ட சம்ப வங்களையும் கேட்ட தகவல்களையும் என்னேடு கலந்து கொள்ள விரும்புகின்ருர் என்று யூகித்துக் கொண்டேன். எனவே நானே பேச்சை ஆரம்பிக்தேன். வழக்கம்போல் ஆங்கிலத்தில் பேசினேன்.
*மேல் பகுதியில் நிலைமை எப்படி இாக்கிறது ராஜன்?
“பார்ப்பதற்கு எல்லாம் அமைதியாகத்தா னிருக்கிறது அமைதி இரண்டு விதமானது தானே.
“பீதியால் வரும் அமைதி, தைரியத்தால் வரும் அமைதி. வீண் வதந்திகளைக்கேட்டு நம்மவர்கள் பெரிதும் பயப்படு கிருர்கள். அதுதான் மனதுக்குக் கஷ்ட்மாயிருக்கிறது.”
‘நான் நேற்று முகாமுக்குப்போனபோது, தெரிந்த சிலரை வவுனியா, முல்லைத்தீவு பகுதிக்குப் போக முடியுமா என்று கேட்டேன். முடியாது, தாய் நாட்டில் போய் செத்துப் போவோம், என்று ஒரே பிடியாய் நின்ருர்கள்!”
தலையை ஆட்டிக்கொண்டு, *அவர்களுக்கு எந்த இடத்தில் பாதுகாப்பு இருக்கிறது. அதோடு இனக் கலவரத்தின் பேரால் கொள்ளையடிப்பதும் பெண்களை மானபங்கம் செய்வதும் சாதாரணமாகிவிட்டது. அதை எதிர்க்கத் திடமில்லை அட்டன் பகுதியிலிருந்து வந்

ஸி. வி. வேலுப்பிள்ளை 61
திருக்கிருர்களே. அவர்களைப்பாருங்கள். கூப்பிட்டுக் கேட் போம். என்ன சொல்கிருர்களென்று பார்க்கலாம்.”
மணியைத்தட்டினர். பியூன் வந்தான்.
*தம்பி அங்கே இருக்கிற ஆட்களை வரச்சொல் லுங்க.”
நீ என்று பேசும் வழக்கம் அவளிடமில்லை.
பையன் வெளியில் போய் ஆட்களை அனுப்பினன்.
மூன்றுபேர், நாற்பது வயதிற்கு கீழ்பட்டவர்கள், முதல் நாள் அணிந்திருந்த உடைகளோடும் கலவரமான முகத் தோடு காணப்பட்டார்கள்.
*உக்காருங்க,” என்ருர் ராஜன்.
மேசைக்கு முன் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந் தார்கள். சில நிமிடங்கள் பேசாது, ஜன்னல் வழியாக கடலைப் பார்த்தார்கள். கொழும்புக்கு வந்த பின் தான் கடலை இவர்கள் கண்டிருக்கிருர்கள், என்று ராஜன் யூகித்திருக்க வேண்டும்.
*சரி என்ன விசயம். உங்க பகுதியிலே எல்லாம் எப்படி?” என்று பேச்சை ஆரம்பித்தார்.
*என்னெ விசயங்க. அப்டியு இப்படியுமா இருக்குங்க. பழனிமுத்து நீ சொல்லலையா?” என்று சற்று வளந்த நபரைப் Lu TrijgsrTrř.
பழனிமுத்து சற்றுத் திடமான ஆள். சவரம் செய்து கொள்ளாத முகத்தில் லேசாய் நரை கண்டிருந்தது. அவரு டைய இரண்டு நண்பர்களை போல் அவரும் சாரம் கட்டி யிருந்தார். அனேகமாய் சிங்களர்களைப்போல் இருந்தார்கள்.
“என்ன உங்களுக்குத் தெரியாதுங்க. எங்கப்பாதான்
செல்வமுத்து தலைவருங்க, நீங்க அட்டனுலே இருக்கிறபோ

Page 36
62 இனிப் படமாட்டேன்
ஆபிசுக்கு வந்திருக்கிறனுங்க. மாஸ்டரையும்தெரியுங்க,” என்று என்னையும் பார்த்தார்.
*செல்லமுத்து தலைவர் சுகமாயிருக்ருரா?
*ஆமாங்க சார். பென்சன் வாங்கிட்டார். மாத்தைக்கு இரண்டு தரம் ஜில்லாக்கமிட்டிக்கு போவாருங்க. எங்க இரண்டு பேரு குடும்பத்துக்கும் இவங்க பிரசா உரிமை கிடைச்சிருங்க. இவளுக்கு விசாரணை முடிஞ்சிச்சுங்க,” என்று தயக்கமாக பேசினர்.
**rf.'
*சொந்தக்காரங்க அடுத்த மாசம் இந்தியாவுக்கு போறங்க. அவங்களோட போகணுங்க.
பிரசா உரிமயே வாபஸ் செய்யனுரங்க சார்,” என்ருர் பழனிமுத்து.
‘பரம்பரயா நீங்க எல்லாரும் இலங்கே தானே, எதுக் காகப் போகணும்,” என்று கேட்டார் ராஜன்.
“இங்கே இருந்து என்ன பிரயோசனங்க சார், வருசா வருசம் இந்த வன்செயல் தாணுங்க. அங்கிட்டு போயிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.”
*உங்க பேரென்ன."
*ராமையா சார். எங்கப்பாகூட மட்ராசிலேதான் பெறந்தாருங்க. இருந்தும் என்னங்க. சாப்புடுற சாப்பாடு கூட உடம்பிலே ஒட்டலிங்க புள்ளே கூட்டிகளே கூட்டிகிட்டு போயிட்டா நல்லதுங்க. பிரசா உரிமையே வாபஸ் செஞ் சிருக்கு சார்.”
"இந்த மாதிரி வாபஸ் செய்ய மிச்சப் பேர் இருக்கிருங் g;G6TIT?'
*ஆமாங்க. எத்தனே நாளைக்கு உயிரே கைலே புடிச் சிட்டு இருக்கிறதுங்க.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 63
“மலைநாட்டிலே நூத்துக்கு நூறு நாமதானே இருக்கி ருேம். அப்புறம் என்ன பயம் ராமையா?”
*அது முந்திங்க சார். இப்ப எல்லாம் தலை கீழா மாறி போச்சுங்க.தொரை, கண்டாக்கு, டிமேக்கர்,கிளாக்கர், சப்பர் வைசர்.சிகுருட்டி இஞ்சின் டிரைவர், மேசன் பாஸ், ஆயம்மா. எல்லாரும் சிங்கள ஆளுங்க. அதோட பக்கத்திலே இருக்கிற கடைக்காரனும் சேத்துகிருங்க.”
*அப்படி இருந்தும் நாம தானே கூட இருக்கிருேம்.”
*சற்று தயங்கி,
*கடே பக்கம் பெண்டுபுள்ளேகளே கூட்டிப்போக முடி யாதுங்க.”
‘அட்டன், டிக்கோயா பகுதியிலே ஏதாவது நடந்துச்சா, gt nr 60) Duurt?”
*இல்லிங்க. அப்படி நடந்தாலும் போலிஸ் அவுங்க பக்கம்தானே பேசுவாங்க.”
“போன கிழமே மேக்கணக்கு ஆறுமுகம் காரியதரிசி போலிசிலே முறைபாடு சொன்னுரு. அந்த ஆளயே புடிச்சு அடச்சிட்டானுங்க. பின்னடி 200 ரூபா லெஞ்சம் குடுத்துக் ஆளே வெளியே எடுத்தாங்க.”
‘பாத்தீங்களா சார், கரச்ச வந்தா யாருகிட்டே போய் சொல்றதுங்க.”
“நாம் எப்போதும் சங்கத்தேயும் போலிசையும் நம்பி வாழ முடியாது, மத்த சங்கத்துக்காரர் என்ன சொல்ருங்க?"
*அவுங்க அரசோட இருக்கிருங்க. 500 ரூபா குடுத்தா இந்தியா பாஸ்போர்ட் கிடைக்குமாம் சார்.”
"அது எப்படி முடியும்?” என்றேன்.

Page 37
64 இனிப் படமாட்டேன்
*சல்லி பேசுதுங்க, என்ருர் ராமையா.
“அப்படி வாங்கிப்போன ஆள்களே தெரியுமா?” என்று கேட்டார் ராஜன்.
*சல்லி குடுத்தது தெரியுங்க. பாஸ்போர்ட் சுருக்கா கிடைக்குமா, கண்டி ஹைகமிசன் ஆபிசுலே ஆளைப்புடிக்சு செய்கிருங்களாம்.”
*இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே கொள்ளேக்கூட்டம் வரும். நாம ஏமாறக் கூடாது. பாஸ்போர்ட் வாங்குறது அவ்வளவு சுலபமில்லை,” என்ருன் TIT gait.
“இலங்கே பிரசா உரிமை இருந்துஎன்னங்க. அது கூலி வேலே வாங்கத் தானுங்க ஒதவுது. நம்ம பொடியங்களுக்கு எந்த வேலே குடுக்கிருங்க. நம்ம படிச்ச புள்ளேகளுக்கு ஆயாம்மா வேலே, சுப்பவைசர் வேலே குடுப்பாங்களா. சும்மா பிரசா உரிமே ஒட்டு வாங்க மாத்தரம்தான் சார்,” என்(?ர் பழனிமுத்து.
பசுபதி பிரஜாவுரிமை பத்திரத்தை ஏளனம் செய்தது ஞாபகம் வந்தது.
“ஒட்டு போட்டு பின்னடி"தோத்த கட்சிகிட்டே ஒதே வாங்கணும்.”
தொழிலாளர்கள் விசயத்தை நன்கு புரிந்திருக்கிருர்கள். எனினும் பயம்தான் அவர்களை வாட்டுகிறது! தெம்பு வந்து விட்டால் எதையும் சாதிக்கும் திறமை அவர்களுக்கு உண் டாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது!
“இப்பதோட்டக்காட்டுலே பதினறு, பதினெட்டு நாள் வேலே குடுக்குருங்க. வாங்கிற சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தல. மூக்கு மூட்ட கடனுங்க. தோட்ட உத்தியோகஸ் தர்களுக்கு தானுங்க வாசி, எப்படி வாசி,”
*தொரையும் டீமேக்கரும் சேர்ந்து கள்ள மார்க்கட்டுக்கு தேயிலே விக்கிருங்க. அது மாத்தரமா தேக்கு கதவு சன்னல்

ஸி. வி. வேலுப்பிள்ளை 65
தேக்கு மேசை, நாற்காலி எல்லாம் சொந்த வீட்டுக்கு கொண்டு போருனுங்க. தோட்டத்துக்கு வர்ர உரம், பெயிண்டு தகரம், கொக்கி, சரணிரு எல்லாம் சாப்புக்கு திரும்பு போயிட்டு மறுபடி வருதுங்க”
“இதபத்தி யாரும் கேட்கதில்லையா,”
“பெரிய ஆளுகளுக்கு எல்லாம் பங்கு சார்.” *மத்த சங்க இதபத்திக் கவனிக்கிறதில்லையா,’ என்று கேட்டேன்.
*அவங்க எல்லாம் தொரமாரு பக்கம் தானுங்க. கண் டாக்கு, கணக்கப்பிள்ளை, தொரே கூட அவங்க சங்கத்துக்கு ஆள் கட்டுராங்க. சந்தா கெடச்சா போதும். தொழிலாளி என்னமா போன என்னங்க சார்.”
*நீங்க உண்மையா ஒளைக்காட்டி நம்ம அவங்களோடே போட்டி போட முடியுமா,” என்ருர் ராமையா.
*நீங்க பெரிய மனசு பண்ணி பிரசா உரிமேயே ரத்து செஞ்சு குடுங்க சார். நீங்க நெனச்சா முடியும்,” என்றர் பழனிமுத்து
*பிரஜா உரிமை கிடச்ச பிறகு அதை ரத்து செய்யறது மிச்சம் கஷ்டம்! முடியாத காரியம்! இந்திய ஹை கொமிசன் பிரஜா உரிமை குடும்பேன்னு காயிதம் குடுக்கணும்! அப்படி காயிதம் குடுக்கமாட்டாங்க! நிலமே இதுதான் பழனி முத்து,” எனழுர் ராஜன்!
*பேசிப்பாருங்க சார். “எத்தனை தரம் பேசியாச்சு ராமையா. இந்தியாவிலே வீடு வாசல் உண்டா!”
*இல்லீங்க சார். இந்தியா போனதே இல்லீங்க? இன்னைக்கு தானுங்க கடலேகூட கண்டோ!”
*நல்ல வேளை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்திலே போன வங்ககூட ரொம்ப கஸ்டப்படுகிறது தெரியுமா. குடும்பம்

Page 38
66 இனிப் படமாட்டேன்
பிரிஞ்சு போய் வேலை தேட முடியாது. குடும்பத்துக்கு ரெண்டு பேருக்கு தான் வேலே கிடைக்கும். சில இடங் களிலே நம்ம தமிளே பேசுறதில்லையே. வேலே தேடி அலுத்து போயிட்டாங்க,” லன்ருர் ராஜன்.
"வேலே கிடைக்கிற வரைக்கும் இரண்டு மூணு மாசம் காம்புலே இருக்கணும்! இப்ப சல்லியே கைல குடுத்து வியாபாரம் செய்யுறதுக்கு போகச் சொல்லுருங்க,” என்றேன்!
பழனிமுத்து, ராமையாவும் மற்ற நபரும் தின்கத்துப் போய் பேசாதிருந்தார்கள். அவர்கள் திக்கற்ற நிலை என்னை வாட்டியது
தேனீர் குடிக்க போயிருந்த வேருெரு நபர் வந்திருந் தார்.
*நீங்க போக முடியாதன்னு சொல்லிவிங்கன்னு எங் களுக்கு தெரியுங்க.” என்ருர் அவர்.
‘எப்படி தெரியும்?
'சங்கத்துக்கு ஆள் கொறஞ்சு போகும்,” என்று முரட் டுத்தனமாய் பேசினர்!
'தம்பி நம்ம சங்கத்திலே இருந்து இதுவரை 9000 பேர் இந்தியா டோயிருக்காங்க! நிலம், வீடு இருக்கிறவங்களே மாத்திரம் போசுச் சொன்னுேம். உங்க அஞ்சு குடும்பம் போனப்பலே நம்ம சங்கம் உடைஞ்சு போகாது. 500 ரூபா வுக்கு பாஸ்போர்ட் வாங்கிக்குடுக்குருங்களாம். அப்படி கிடச்சா பாத்துகிட்டுப்போங்க! சட்டம் இருக்கிற நிலைலேயே எவ்களாலே ஒண்ணும் செய்ய முடியாது.”
முரட்டு வாலிபன் பேசவில்லை! ராஜன் தொடர்ந்து பேசினர்.
**இதுவரை ரட்ணபுரி, பலாங்கோடை, பெல்மதுளை டவுனிலும் தோட்ட பகுதியிலேயும் தான் வன்செயல்

ஸி. வி. வேலுப்பிள்ளை 67
நடந்தது! அதுலே கஸ்டப்பட்டவங்க எல்லாரும் தோட்டங் களுக்கு போயிட்டாங்க. இனிமேல் இந்த மாதிரி இனக்கல வரம் வராமே பாத்துகிறதா அரசு சொல்லியிருக்கு. அதோட நாமும் பெண்சாதி பிள்ளேகளே பாதுகாக்க சித்த மாயிருக்கணும்,” என்ருர் ராஜன்.
*நாட்டான் "கத்தி, வாள் , போம் கொண்டாமுணும். எங்ககிட்ட என்ன இருக்கு, வேலைக்கி வச்சிக்கிற அலவாங்க, கல்வாத்து, கத்தியே போலிசும் மில்டேரியும் எடுத்துகிட்டு போருங்க அரசு எங்களே கொலைகாரனுக்குக் காட்டிக் குடுக்கிறப்ப எப்படிங்க,” என்ருர் பழனிமுத்து.
*அதபத்தி பலமான முறைப்பாடு சொல்லியிருக்கோம்" தோட்டங்களுக்கு காவல்படை போடுவதாய் பேச்சு வார்த்தை நடக்குது, பழனிமுத்து,” என்ருர் ராஜன்.
‘என்ன செய்றது சார்,” என்ருர் பழனிமுத்து.
‘அதைத்தான் நானும் கேட்கிறேன்! முன் பின் தெரி யாத ஊருக்கு போறது நல்ல முடிவு இல்லே! இனக்கலவரம் எல்லா ஊர்லேயும் இருக்கு. அது கால்ரா. பேதி மாதிரி வந்து மறையும். அதுக்கு நாம மருந்து தேடணும்! இலங்கை நாம பிறந்து வளர்ந்த நாடு. நம்ம பாட்டன், பூட்டன் இந்த நாடு செழிக்க உடலையும் உயிரையும் குடுத்திருக்காங்க! பயந்து ஒடுறதினலே பிரச்சனை தீராது. எத்தனையோ நாடு கள்ளே நம்ம ஆள்கள் குடியேறியிருக்காங்க! சண்டை, சச்சரவு, குழப்பம் இருக்கத்தான் செய்யுது. அவுங்க எல்லாம் இந்தியாவுக்கு திரும்ப ஒடலே! எத்தனை சோதனை, கஸ்ட மெல்லாம் வந்தும், அதையெல்லாம் சமாளித்து மனிதராக வாழ்ழுங்க கடைசியா ஒன்னு சொல்றேன்! சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் காலவறையாச்சு. இனிமே யாருக்கும் இந்தியா பிரஜாவுரிமை கிடைக்காது.” ராஜன் என்று பேச்சை முடித் தார்!
* ரூ. 500, கொடுத்தா பாஸ்போர்ட் தர்ரமினு சொல் ருங்களே,” என்ருர் முரட்டு வாலிபர்!

Page 39
68 இனிப் படமாட்டேன்
'நீங்க எந்த தோட்டம்.”
“சலங்கண்டிங்க. இவரு யு. என். பி. சங்கம்,” என்ருர் UT IT GðDLADL JÍT,
*அது அரசு சங்கம். அவுங்களுக்கு சலுகை ரொம்ப; ஆபீஸ் பக்கத்திலே இருக்கு. போய் கேளுங்க! எங்களால இந்தியா பாஸ் போட் வாங்கிக்குடுக்க முடியாது,”என்று கண் டிப்பாய்ராஜன் சொன்னர்.
சரி வாங்க போகலாம், என்று முரட்டு வாலிபர் மற்றவர் களையும் கூப்பிட்டார். நீ போய்யா, இவருக்கு முடியாததை வேறே யாரும் செய்ய முடியாது. நீ போய் பேசி பாத்துட்டு
of
முரடர் எழுந்து போனர்.
“அவன் தாங்க எங்களே இழுத்துகிட்டு வந்தான். அதோட அப்பாவும் உங்க யோசனையே கேட்டுகிட்டு வரச் சொன்னருங்க,” என்ருர் பழனிமுத்து.
*பழனிமுத்து நா சொல்ல வேண்டியதெல்லாம் சொல் லிட்டேன். ஆன ஒண்ணு சொல்லுறேன். தாய் நாடுன்னு சொல்லுற நாடு நீங்க முன் பின் அறியா இடம், அங்கே போனவங்க படுற பாட்டேபத்தி சொன்னேன். இங்கே அதுவும் தோட்டப்பகுதி நாம பிறந்து வளர்த்த இடம். இப்ப இது காடா மாறிவருது அதே திடமா நாம நிறுத்தனும். வீடு, வாசல், பெண்டு புள்ளேகளே காப்பாத்தனும்னு மனதே திடப்படுத்திடனும், சரிதானே, இரண்டு மாசம் முடிஞ்சு நா அட்டன் பக்கம் வர்றப்போது வந்து சந்திங்க.”
*சரிங்க,” என்ருர் ராமையா.
‘போய் வாங்க. அஞ்சாமே கட்டுக்கோப்பா இருங்க. செல்லமுத்து தலவரே கேட்டதா சொல்லுங்க.”
வந்தவர்கள் எழுந்து,

ஸி. வி. வேலுப்பிள்ளை 69
“வணக்கம் சார் போயிட்டு வர்ருேம், நீங்க அட்டனுக்கு வர்றப்போ வந்து சந்திக்கிருேம்,” என்று சொல்லிவிட்டு புறப் பட்டார்கள்.
*வணக்கம் போய் வாங்க,” என்ருர் ராஜன்.
அவர்கள் திக்கற்றவர்கள் போல் குனிந்த தலையோடு சென்ருர்கள். ராஜன் அவர்களைப் பார்த்து தலையை அசைத்துக்கொண்டார்.
*நாம் ஒரு போக்கிடம் இல்லாத சமூகம். திமிங்கிலங் கள் கடலைவிட்டு பூமிக்கு வந்து தற்கொலை செய்து கொள்லது ஏன் சந்ரன்.”
*அது பரிசோதனையில்தான் இருக்கிறது. ஆராய்ச்சி யாளர்கள் இன்னும் முடிவு காணவில்லை. வியட்னும் மக்கள் உயிரை பாதுகாக்க படகுகளில் ஏறி ஓடியபோது ஆயிரக் கணக்கில் தண்ணிரில் மூழ்கிச் செத்திருக்கிருர்களே.”
*அந்த நிலைதான் நம்மவர்களுக்கும் வந்திருக்கிறது என்ருர் ராஜன்,”
“மனித சரித்திரத்திலே இது புதிதா, என்றேன் எனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்த,”
“இல்லை. இது ரொம்பப் பழையது. இதற்குப் பரிகாரம் கண்டதிலிருந்துதான் நாகரிகம் வந்தது. இலக்கியம் என்ன சொல்கிறது.*
"தீமையை எதிர்க்க தர்மயுத்தம். அதிலிருந்து சுத்த வீரர்கள் உண்டாகி சமாதானத்தை நிலைநாட்டுகிருர்கள். மகாகவி அதைதான் சொன்னர்,” என்றேன்.
இப்படியே எங்கள் விசாரணை விரிவடைந்தது. ஆனல்
என் மனதுக்குச் சாந்தி தரவில்லை. பெளத்த தர்மத்தைப்
பற்றி நினைத்தேன். இந்த நாட்டில் பெளத்த தர்மம் தோல்வி
யுற்றது. அரசியல்வாதிகள் இதற்கு உலைவைத்ததுமில்லாமல்
5

Page 40
70 இனிப் படமாட்டேன்
குண்டர்களுக்கும் முதலிடம் கொடுத்துவிட்டார்கள் என்று நினைத்தேன்.
செல்லமுத்து, ராமையா மலைநாட்டில் இன்று வீசும் புயல் காற்றின் சின்னங்கள். அவர்களை பற்றி சிந்திக்கும்போது, என்னை அறியாமலே சிங்களவர்மேல் ஒரு வெறுப்பு. சிங்களப் பெண்ணை நான் மணந்ததால், என் இனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டேன் என்ற புதிய எண்ணம்கூட திடீரென தோன்றிவிட்டது. எங்கள் உறவிலிருந்துதானே ஜகன் உதித் தான். இப்போது ஜகன்கூட என் பக்கத்தில்தானே சேர்ந்து விட்டான்.
இந்த குழப்பமான நிலையோடு வீட்டிற்கு புறப்படத் தயாரானேன்.
*நாளை சந்திக்கலாம் சந்ரன் போய் வாருங்கள்,” என்ருர் ராஜன்.
நானும் ஜகனும் வீடு வந்தபோது, சமையல் பகுதியில் உற்சாகமான பேச்சு நடந்தது. ‘அம்மீ தாத்தி முந்தியே வந்தாரே எங்கே?” என்று இரைந்துகொண்டு ஜகன் பின் கட்டுக்குப் போனன்.
சித்ரா ஏமாறவில்லை.
*போ கழுதை,” இது சித்ராவின் பதில்,
சித்ரா ஆறுமாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு வந்தாள். அது வெண்ணெய் கட்டிப்போல் உருண்டு திரண்டிருந்தது வண்டு போன்று துடிக்கும் கரு விழிகள், சிகப்புப்பூவை ஒத்த பாஷை தெரியாத வாய், என்னைச்கண்டு ஆ,ஆ என்று சிரித்து கையை நீட்டியது. அதே சமயம் அதன் தாயும் தந்தையும் - வருணியும், திலக்கும் வந்தார்கள்.
*அங்கள் நீங்கள் நேரத்தோடு வந்துவிட்டீர்கள்” என்ருள் வருணி.

ஸி. வி. வேலுப்பிள்ளை 7
*எப்படி அங்கிள் சுகமா?” என்ருர் திலக்,
*நல்ல சுகம், உங்கள் சுகம் எப்படி?”
சித்ரா குழந்தையை என்னிடம் நீட்டினுள். வாங்கி அணைத்துக்கொண்டேன். பால் மணம், சோப்பு மணம்; பெளடர் மணம், குழந்தை மணம். தேசிய மொழி தெரியாத தமிழ் சிங்களம் தெரியாத தெய்வக்குழந்தை. அதன் ஸ்பரிசம் என் உள்ளத்தை தூய்மை செய்தது.
'திலக், அந்திப்பட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டு பஸ் இடைஞ்சலில் வரக்கூடாது. நேரத்தோடே வரவேண்டும்,” என்றேன்.
‘வீவு இல்லை அங்கிள்,” என்ருர் திலக்.
‘இந்த மனிதருக்கு லீவு எடுக்க முடியாது அங்கிள்,' என்ருள் வருணி,
‘சரி வந்து உட்காருங்கள்! டீ சாப்பிட்டீர்களா?” ‘இவன் பால் குடித்தான்,” என்ருள் வருணி.
திலக், அதாவது திலகரட்ண கல்வி இலாகாவில் ஒரு அதிகாரி எழுத்தாளங்ைகூட, இருவரும் எங்கள் குடும்ப நண்பர்கள், அவர்கள் குழந்தைக்கும் சிங்களம் தெரியாது:
அத்தியாயம் ஆறு
இன்று சனிக்கிழமை நான் வீட்டிலிருந்து ஒய்வெடுத்துக் கொள்வது சித்ராவுக்குப் பரம திருப்தியாகத் தெரிந்தது வழக்கத்திற்கு மாருக அரை மணி நேரம் தூங்கிவிட்டு, 7.30க்குத் தேனீர் கொண்டு வந்தாள். வாயைக்கொப்பளித்து விட்டு தேனிரைச் சாப்பிட்டேன்.
தூங்கிய அரை மணி நேரத்தை ஈடு செய்வதற்காக சமையல் கட்டுக்குப்போய் அதை கூட்டிப்பெருக்கிவிட்டு,

Page 41
72 இனிப் படமாட்டேன்
பாத்திரங்களை துலக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பது எனக்குத் தெரியும். லீலா வீட்டைச் சுற்றிக்கூட்டும் சத்தம் கேட்டது. ஜகன் படுக்கையறையைவிட்டு எழுந்திருக்கவில்லை. சனி ஞாயிறு தினங்களில் அவனுக்கு தூக்கம் கலைய நேரமாகும். எனக்கு அது அதிருப்தி,
அழுக்குப்பட்ட என் உடைகளை துவைப்பதற்காக, பின் கட்டுக்குப்போய் தண்ணிர் கொண்டு வரும்படி சந்தனத் தைக்கூப்பிட்டுச் சொன்னேன். மாடுகளுக்கு வேலை செய் வதைவிட எனக்கு வேலை செய்வதில் அவனுக்குப் பெரும் சந்தோசம். ஒடியாடி இரண்டு வாளி தண்ணிர் கொண்டு வந்து வெளிக்கட்டில் சலவைப்பகுதியில் வைத்தான்.
*உங்களுக்கு ஒரு நாளைக்கு சும்மாயிருக்க முடியாதோநான் அவைகளை துவைத்துப் போடுவேன்.” சித்ராவின், கண்டனம்.
*இது என்ன பிரமாதம். வேண்டுமென்ருல் உன்னுடைய உடைகளைக்கூட துவைத்துப்போடுவேன்.”
*சி, என்ன கேவலம். என்னைப்பார்த்து இந்த கிராமமே சிரிக்குமே.”
உள்ளே ஓடி அவளுடைய அழுக்குப்பட்ட உடைகளை எனக்குத் தெரியாமல் பத்திரப்படுத்தி விட்டு திரும்பினுள்.
நான் சிரித்துக்கொண்டு என் சட்டைகளை நனைத்து சவர்க்காரம் தேய்த்தபடி, "ஜகன் எழுந்திருக்கவில்லையா,? என்று கேட்டேன்.
* பாவம் துரங்கட்டும்,” என்ருள்.
*பிள்ளைகள் படிப்பதில் நமக்கு அக்கறையில்லை. யாழ்ப் பாணத்தார் வீடுகளில் பிள்ளைகள் இரவு 11 மணி வரை படிக்கிறர்கள். பின் காலை 430க்கு எழுந்து படிக்கிறர்கள். பெற்றேர் அவர்கள் படிப்பில் ரொம்ப கண்ணும் கருத்துமா யிருக்கிருர்கள். அந்த விசயத்தில் நாம் ரொம்ப பின்தங்கிய வர்கள்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 73
*யாழ்ப்பாணத்தார் போட்டிப்போட்டு படித்து முன் னேறியதால்தான் நாட்டில் நிம்மதியில்லாமல் போய்விட்டது அதோடு அவர்கள் ஒரிடத்தில்போய் உட்கார்ந்துவிட்டால் வேர் இறங்கிப் போகும். பின் அலவாங்கு போட்டுத்தான் கிளப்ப வேண்டும்,” என்ருள்.
*அதனல் ஜகன் மேல் படிப்புக்கு பிரயாசை செய்யக் கூடாதென்று அர்த்தமா,” கேட்டேன்.
“அவன் ஆர்கிடெட் பாடம் எடுக்கிருனே.”
“அந்த வேலை அவன் குணத்திற்கு உகந்ததில்லை.”
*சனிக்கிழமையை நீங்கள் குடும்ப விமர்சனத்திற்கு வைத்துக்கொள்வது வழக்கம்” என்று இடித்தாள்.
*மற்ற நாட்களில் உன்னேடு பேச அவகாசம் கிடைப்ப தில்லையே அதுதான் சொல்கிறேன். ஜகன் என்னைப்போலு மல்ல, உன்னைப்போலுமல்ல.”
*அப்படியென்ருல் யாரைப்போலாம்? வெடுக்கென்று கேட்டாள்.
“என் தகப்பனுரைப்போல் தான், அவருக்கு சற்று முரட்டு சுபாவம்.”
“மறைந்தவர்களைப் பற்றி நீங்கள் வக்கணை சொல்வது எனக்குப் பிரியமில்லை.”
*இல்லை கோபித்துக்கொள்ளாதே, ஜகன் என் தந்தை யைப்போல் இருக்கிருன் என்று சொல்ல வந்தேன்.”
*அந்த மட்டில் எனக்குத் திருப்தி. இந்தக் காலத்தில் காந்தி பக்தர்களுக்கு இடமில்லை. சரி துணிகளை இங்கே தாருங்கள். நான் காயப்போடுகிறேன். முகத்தைக் கழுவுங் கள். டீ சாப்பிட நேரமாகிறது.*
துவைத்த துணிகளை அள்ளிக்கொடுத்துவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு உள்ளே போனேன். ஜகன் படுக்கையி

Page 42
74 இனிப் படமாட்டேன்
லிருந்தபடி ஒரு சிங்கள நாவலை வாசித்துக்கொண்டிருந்தான் நான் சித்ராவோடு பேசியது அவனுக்கு கேட்டிருக்க வேண்டும். அவனுடைய உடைகளை காலியாய் கிடந்த கட்டிலிலும் துணி ராக்கையிலும் அலங்கோலமாய் போட் டிருந்தான். சம்பாசணை, சாப்பாட்டு அறைகளிலுள்ள மேசைகள் மேல் சஞ்சிகைகள், தினசரிகள், புத்தகங்கள், பாடப்பிளான்கள் எல்லாம் தாறுமா ருய் போட்டுக்கிடந் தான். இவைகளை ஒழுங்குப்படுத்தும் பொறுப்பை சித்ரா வுக்கும் எனக்கும் விடுவதுதான் அவன் வழக்கம்.
'ஜகன் இந்த அறைகளை கொஞ்சம் சரிபடுத்து, அம்மிக்கு வேலை கூட,” என்றேன்.
“தாத்தி நான் பாடத்திற்கு போக வேண்டும். அந்திக்கு வந்ததும் அரேஞ்ச் பண்ணுலேன். இன்று விசிடர்ஸ் யாரும் வருவதாய் இல்லையே.”
*விசிட்டர்களுக்காகவா நாம் சுத்தமாக இருக்க வேண்டும்.”
'நீங்கள் அந்திக்குப் பாருங்கள்.”
நான் வார்த்தையையை வளர்க்க விரும்பவில்லை.
தேனீர் சாப்பிட சித்ரா கூப்பிட்டாள்; நான் சாப்பாட்டு அறைக்குப்போனேன். ஜகன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். நாகுக்காக உடுத்தியிருந்தான் நான் வழக்கமாக உட்காரும் நாற்காலியில் அமர்ந்தேன். என் தட்டில் பிட்டுத்துண்டுகளை வைத்துவிட்டு தேங்காய்ப்பால் சொதியை கரண்டியால் வார்த்தாள். குனிந்து சாப்பிடும் ஜகனைப் பார்த்துவிட்டு, சித்ராவைப் ஏறெடுத்துப் பார்த்தேன். லேசாய் புன்னகை செய்தாள். ஜகன் மேல் அவளுக்கு அளவில்லா அன்பு, என் மேல் அவள் வைத்திருந்த ஆசை, அன்பு, காதல் எல்லாம் ஒன்ருய் திசை மாறி ஜகன் பக்கம் சென்றிருந்தது. நான் இதற்கு சாட்சி
*ஜகன் எத்தனை மணிக்கு கிளாஸ் ஆரம்பம்?

ஸி. வி. வேலுப்பிள்ளை 75
*11 மணிக்கு. பத்மினி மrமீ வரச்சொன்னர், பார்த்து விட்டுப்போவேன்,”
*மனேவும் பாடத்திற்குப் போவாளோ? சித்ரா கேட்டாள்.
சற்றுத் தயங்கி,
**ஆமாம்,”
என்ருன்.
*சரி நேரே பொலி டெக்னிக் போ. வேறு எங்கும் போய் ஆட வேண்டாம். புரிகிறதா? சிங்களத்தில் கடுமையாகச் சொன்னுள்.
தேனீர் குடித்து முடிந்தது. நான் விராந்தையில் அமர்ந்து சந்தியாகு கொடுத்த கடிதத்தை படிப்பதற்கு ஆயத்தமானேன்.
ஜகன் புறப்பட்டான். சித்ரா அவனை முத்தமிட்டு, நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு அனுப்பினள்.
*ருேட்டுக்களை தாண்டும்போது ஜாக்கிரதை மகனே, என்றேன்.
*சரி தாத்தி, தினம் தினம் இதைத்தான் சொல்வீர்கள்.”
சிரித்துக்கொண்டு 'வருகிறேன் தாத்தி,’ என்று புறப்பட்டான். அவன் போய் மறையும் வரை நானும் சித்ராவும் பார்த்துக்கொண்டிருந்தோம். "ஜகன் மனேவோடுதான் போவான் போலிருக்கிறது. பத்மினி செல்லப்பிள்ளை வளர்க் கிருள். சென்ற வாரம் இவர்கள் இரண்டு பேரும் மியூசியத் திற்கு போயிருக்கிழுர்கள். அந்த சாந்தி டீச்சர் எனக்கு சொன்னர். பத்மினிக்குச் சொல்லி வைத்தேன். பிள்ளை களைக் கணக்கிற்கு மேல் கட்டுப்படுத்தினுல் கோட்டை தாண்டி விடுவார்கள்,” என்று எனக்கு உபன்யாசம் சொன்னுள்,

Page 43
76 இனிப் படமாட்டேன்
நான் பேசவில்லை.
“என்ன சும்மாயிருக்கிறீர்கள்?
*அது உங்களுடைய வேலை. நீயும் பத்மினியும் பிள்ளை களை கண்டித்து வைக்க வேண்டும் வீட்டில் சந்திக்கிருர்கள் பெட்மிங்டன் விளையாடுகிருர்கள். அப்புறம் தனியே போய் என்ன பேசப்போகிருர்கள். இந்த மாதிரி விசயங்களில் அவனிடம்நான் என்ன கேட்பது. நீதான் கண்டித்து வைக்க வேண்டும்?
"நான் கண்டிக்கத்தான் செய்கிறேன். பத்மினி அந்தக் குட்டிக்கு ரொம்ப இளக்காரம் கொடுத்து விட்டாள், தகப்பனில்லாவிட்டால் அப்படித்தான்.”
'இம்,” என்றேன்.
பசுபதியை முதன் முதலில் சந்தித்த ஞாபகம் மற்ற ஞாபகங்கள் பளிச்சென்று தோன்றி மறைந்தன. ஜகன குறை சொல்ல எனக்கென்ன யோக்கியதை. இல்லை அனு பவத்தால் கற்றதை அவனுக்காக.
*சல்லி கொண்டு வந்தீர்களா?
பணம் கேட்கும்போது ஏதோ குற்றம் செய்ததுபோல் பச்சை சிரிப்பு சிரிப்பாள்.
“பாக்கெட்டிலிருக்கு, எடுத்துக்கொள்.” *பின்னல் எப்போது தருவீர்கள்.” “இது முடிய 15 நாட்கள் ஆக வேண்டாமா?”
“அது முந்தி சார், இப்போது பத்து நாட்களுக்குக் கூட சமாளிப்பது கஷ்டம்.”
*நல்லதாய் போச்சு.”
*வேண்டுமென்ருல் வீட்டை நடத்திப் பாருங்களேன்!”
*அப்படியென்ருல் நீ ஆபீசுக்குப்போக உத்தேசமா?

ஸி. வி. வேலுப்பிள்ளை 77
இருவரும் சிரித்தோம்.
பணத்தை எடுப்பதற்கு சித்ரா சம்பாஷணை அறைக்குப் போனள்.
அவசிய உணவுப்பொருட்களின் விலை அசுர வேகத்தில் ஏறிக்கொண்டு இருந்தது. வீட்டுக் கூலி நாங்கள் கட்டுவ தில்லை. தேங்காய்ப்பால், விறகு இவைகளை விலைக்கு வாங்கு வதில்லை. எனினும் என் சம்பளமும் பென்சனும் ஐந்து பேர் சாப்பாட்டிற்கே போதவில்லை. நல்ல வேளையாய் நானும் சித்ராவும் சொகுசான உடை, விசேச உணவுகளைப்பற்றி சிந்திப்பதில்லை. ஜகனுக்கு நவீன உடைகளும் ருசியான சாப்பாடும் கொடுப்பதில் சித்ர தயங்கியதில்லை.
இந்தச் சாப்பாட்டு சோதனை எங்கள் வீட்டுக்கு மாத்தி ரம் வந்ததில்லை. நிதி மந்திரி பட்ஜெட் கொண்டு வந்த பெட்டிக்குள் இருந்து வெளிக்கிட்ட பூதம் மக்கள் இரத் தத்தை உறுஞ்சிக்கொண்டிருந்தது.
சந்தியாகு கொடுத்த கடிதக்கட்டு சற்று பெரிதாகவே இருந்தது. எடுத்து வாசிக்கலானேன்.
“மதிப்புக்குரிய திரு. சந்திரன் அவர்களுக்கு,
‘என் தலை விதியை, என் துக்கத்தை வாய்விட்டுச் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. எனவே இந்தக் கடி தத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எனக்காகவும் என்னைப் போன்றவர்களுக்காகவும் இறைவன் மன்ருடுவீர்களென்ற நம்பிக்கையில் எனக்கொரு சாந்தியுண்டு. இந்த துர்பாக்கிய மான கதை உங்களின் அறிக்கையில் சேர்க்கப்பட்டால் எதிர் வரும் சந்ததியினர் தெரிந்து கொள்வார்கள். எதிர் காலத் தில் நம் சந்ததியினர் இந்நாட்டில் இருப்பார்களா என்ற சந்தேகம் எனக்குண்டு!
‘நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பிறக்கின்றன. நூற்றுக் கணக்கான பிள்ளைகள் இறக்கின்றன அதைப்பற்றி நாம்

Page 44
78 இனிப் படமாட்டேன்
நினைப்பதில்லை. ஆனல் நம் வீட்டிற்கு பிறப்பும் இறப்பும் வரும்போது அந்த சம்பவம் நம் உள்ளத்தை எவ்வளவு தொடுகிறது என்பது உங்களுக்கு தெரியும்,
“பத்து வருடங்களுக்கு முன் கடவுள் எனக்கு பிள்ளை பிச்சைக்கொடுத்தார். அது ஆண் பிள்ளை. எம் சந்ததியை வளர்க்க வந்தவன். அவனை நானும் என் மனைவியும் உயிருக்கு உயிராக வளர்த்தோம். எங்கள் கனவு சாம்பலாய் போய்விட்டது.
*நான் ஏசுவுக்கு பணி செய்கிறவன். மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவன். எனக்கு ஏன் இந்த சோதனை வந்ததென்பது எதுவும் தெரியவில்லை. கடந்த சில நாட்களாக என் மனைவியும் அழுத கண்ணிர் இவ்வளவு அவ்வளவென்பதில்லை. வீடு, வாசல், தேடிய பொருள் எல் லாம் இழந்தோம்! இந்த என் சந்ததிக்கு உயிர் கொடுக்க வந்த மகனை இழந்தோம். இந்த சொல்லொன துயரம் எங்களுக்கு மாத்திரம் வரவில்லை. இந்த அநீதிகள் தமிழ் பேசும் இனத்துச்கே சொந்தமாகிவிட்டது. இந்த நிஸ்டூரங் களை கண்ணுல் கண்டும், மனதால் உணரும்போதும் மனித இனத்தின் கருணையில் எனக்கு நம்பிக்கையில்லாமல் போகுமோ என்ற பயம் ஏற்படுகிறது. தார்மீகம், தர் மிஸ்டர் எல்லாம் வெறும் பேச்சா.
“எனினும் நம்பிக்கை இழந்து நாம் தேய்ந்து போவதா, மனிதன் இந்த நிலைக்கு இடம் கொடுக்கலாகாது என்பதே யேசுவின் கட்டளை. எக்ைகு அரசியல் ஞானமில்லை, நான் கோவிலில் பணி செய்கிறவன். எனவே நம்மவர்களுக்கு ஏன் இத்தனை சோதனைகள். வருகின்றன என்பதை சிந்தித்தவன் சிக்திக்கின்றவன். இங்கு நான் குறிப்பிடும் விசயங்கள் உங்களுக்குத் தெரியாதவை அல்ல. இருந்த பொழுதிலும், நான் சொல்ல வேண்டியதை பாரபட்சமின்றிக் குறிப்பிடு கிறேன்.
*ஈழப்பிரச்சனைக்கும் மலை நாட்டுத் தமிழ்பேசும் மக்களுக் கும் எந்தவிதமான தொடபுர்மில்லையென்பதை உங்களுக்கு

ஸி. வி. வேலுப்பிள்ளை 79
சொல்லத் தேவையில்லை! நமது பிரச்சினை வேறு, எனினும் அவர்களை ஒதுக்கி வைத்துப் பேசுவது இழுக்கு. அவர்கள் இந்நாட்டின் பழங்குடி மக்கள். ஆனல் நாம் நிற்க நிழலின் றித் தவிக்கிருேம். நாடற்றகூட்டம். நமக்கு சொந்த மான வீடு இல்லை; வாசல் இல்லை, நமக்கு நிரந்தரமான தொழில் இல்லை. 150 வருடங்களுக்கு முன் நமது மூதா தையர் கூலிகளாக இந்நாட்டிற்கு நம்பர் போட்ட தகரத் துண்டை மாட்டிக்கொண்டு வரப்பட்டார்கள். இன்னும் நம்மவர்கள் கூலிகளாகவே வயிற்றைக் கழுவிக்கொண்டு இருக்கிருர்சள், இந்த நிலையிலுள்ள நம்மை ஏன் சிங்களவர் தாக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முக மாசு எனக்குத் தெரிந்த ஒரு சில தகவல்களை இங்கு குறிப் பிடுகிறேன்.
*1939ம் ஆண்டு டொனமூர் அரசியல் அமைப்பில் நம்ம வர்களுக்கு சர்வஜன வாக்குரிமையில் பங்கு கிடைத்தது. அந்த நாள் முதல் இனவாத சிங்கள அரசியல் வாதிகளும், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளும் துவேசப்பிரச்சாரம் செய்தது. செய்து வருவதும் உங்களுக்கு தெரியும். கட்டுரை, காவியம், சரித்திரம், நாடகம் இவைகள் எல்லாம் இந்தியத் தமிழரை வசைப்பாடுகின்றன. இந்த விஷவித்து சாதாரண சிங்கள மக்களிடத்தில் விருட்சமாக வளர்ந்துவிட்டது. நம்மவர்களை நாடு கடத்த வேண்டுமென்று எண்ணம் பல வருடங்களாய் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது.
*1972 -76ல் சிறிவங்கா சுதந்திரக்கட்சி காணி சீர் திருத்துச்சட்டத்துக் கீழ் தோட்டங்களை சுவிகரித்து கிராமங் களுக்குப் பக்கத்திலுள்ள தோட்டங்களை அரசு கிராம விஸ்தீரணத்திற்காக எடுத்தபோது, தொழிலாளர் களுடைய வாழ்வு சிதைக்கப்பட்டது. அவர்களின் உரிமைக் காக தொழிற்சங்கங்கள் பேரம் பசினே. நேரடி நடவடிக்கை களும் எடுத்தன. இதனல் கிராம விஸ்தீரணத்தில் கணக்கம் ஏற்பட்டது. சிங்கள அரகியல்வாதிகள் இதை பலாத்காரத்தினல் தீர்ப்பதற்கு கிாாமவாசிகளை தூண்டி

Page 45
80 இனிப் படமாட்டேன்
விட்டார்கள்.1977ல் கம்பளை பகுதியில் டெல்டா பச்சைக்காடு, சங்குவாரி தோட்டங்கள் தாக்கப்பட்டன. இதிலிருந்து வயல்களுக்கு தீவைப்பது கொள்ளையடிப்பது, பெண்களை மானபங்கம் செய்வது சகஜமாகிவிட்டது.
*1977ல் வன்செயல் நடந்தபோது, மலைநாட்டு தொழி லாளர்கள் தாக்சுப்பட்டதற்கு இன்னேரு காரணமும் உண்டு.
“இக்காலக்கட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முக்கூட்டுதலைவர்களில் ஒருவராகமலைநாட்டார்ஒருவர் சேர்ந் தார். இதிலிருந்து மலைநாட்டு மக்களும் நாடு பிரிக்கும் போராட்டத்தில் சேர்த்துவிட்டார்கள்.என சிங்கள அரசியல் வாதிகள் பிரச்சாரம் செய்தனர். 1977 பொதுத்தேர்தலில் பூரீலங்கா கட்சி படு தோல்வியடைந்தது தங்களுக்குத் தெரி யும், சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே வசை, வாக்குவாதம், கைகலப்பு நடந்தன. சிறிவங்கா சுதந் திரக்கட்சி தோல்வியுற்றதற்கு மலைநாட்டு வாக்காளர்களும் காரணம் என்று நம்மை ஈவிரக்கமின்றி தாக்கினர்கள். நம் மக்கள் எத்தனை துன்பங்களுக்குள்ளானர்கள். உயிர், மானம், மரியாதையெல்லாம் சாம்பலாய்ப் போயின.
இதுவரை நான் எழுதியவற்றில் பல குறைகள் இருக்க லாம். என்னுடய படிப்புக்கும் அறிவுக்கும் ஏற்றபடிதான் எழுதுகிறேன். *
சற்று நிறுத்தினேன்.
சந்தியாகு விசயங்களை சற்றுச் சிந்தித்தேன்! சம்பவங்கள் சரக்கோர்வைப்போல் வந்தன. அவரது அபிப்பிராயங்கள் கடந்த 25 வருடங்களில் எழுத்திலும் கருத்திலும் பெரிதும் வளர்ந்திருந்தன. கோவில் பணி பெரியார் சேர்க்கை அவர் மேம்பாடடைய ஆதரவாக அமைந்திருந்தன போலிருந்தது.
சித்ரா தேனீரும் சிற்றுண்டியும் மேசையில் வைத்தாள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 81
*மெனக்கட்டு வாசிக்கின்றீர்களே, என்ன அது?
“காவத்தை மாதா கோயில் அண்ணுவியார் சந்யாகு எனக்கு கொடுத்த கடிதம்,” என்றேன்!
*ஆ, சந்தியாகு! எனக்கு ஞாபகமிருக்கிறது. அவ ருடைய பிள்ளை தீபட்டு எரிகாயங்களுடன் இறந்து போனுன் பிசப் இல்லத்தில் இந்தக் குழந்தைக்கு விசேட ஆராதணை நடத்தப்பட்டது. சுவாமி பியோ பிரதேத்தை கணத் தைக்கு கொண்டுபோய் தகனம் செய்தார்.”
“எனக்குத் தெரியாதே!”
'பத்திரிகைகளில் எதை வாசிக்கின்றீர்கள். சந்தியா குவை உங்களுக்குத் தெரியுமா?
*ஆம் பசுபதியிருந்த தோட்டத்தில் தலைவராக இருந்தவர், நேற்று பசுபதி காரில் ஏறும்போது அவள் பக்கத் தில் நின்றவர்தான்.”
*நீங்கள் நல்ல பொதுசன ஊழியர் போங்கள்! வாசித்த பின் அதன் சாராம்சத்தை என்னிடம் சொல்லுங்கள்,” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்ருள்.
பிள்ளையின் தகனத்திற்கு போக முடியவில்லையே என்று வருந்தினேன். என்னிடம் உள்ள எத்தனையோ குறை களில் மறதியுமொன்று. எதையும் மேலாந்த வாரியாக பார்க்கும் குணம்.மற்றது.
தேனீர் சாப்பிட்டபின் சந்தியாகுவின் கடிதத்தைத் தொடர்ந்து வாசிக்கலானேன்.
*சென்ற மாத இடைத்தேர்தலில் ஐக்கிய தேசிய வேட்பாளர் தியாகராசா இனம் தெரியாத ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்காரனை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை! இதற்குப்பின் மூன்று போலீஸ் காரர்கள் கூட்டத்தில் வைத்து சுடப்பட்டார்கள். இந்த சம்பவம் நடந்த 10 நிமிடங்களுக்குள்ளே ஏதோ திட்ட

Page 46
82 இனிப் படமாட்டேன்
மிட்டதுபோல் கடைகளும் வீடுகளும் போலீஸ்காரர்களைப் போன்ற நபர்களால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தில் வெளிப்பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குண்டர்கள் முழுக்க முழுக்கக் கலந்து கொண் டார்களாம்!
“இணையற்ற வாசிகசாலை தீக்கிரையாக்கப்பட்டது. அறிவுப் பொக்கிஷங்கள் சாம்பலாக்கட்டன கொடும் சர்வாதிகாரிகள் தங்கள் நாட்டு கல்வி மான்களையும் புலவர் பெரு மக்களையும் தேச பக்தர்களையும் சுட்டுக்கொன்று அவர் கள் புதைகுழிமேல் புதிய சரித்திரம்படைத்திருக்கிருர்களாம்.
வாசிகசாலையை சுட்டெரித்தது இதற்கு ஒப்பான தாகும். யுத்த காலத்தில்கூட எதிரிகள் கலைப் பொக்கிஷங் களைத் தொடுவதில்லையாம். இந்த வாசிகசாலையின் வளர்ச் சிக்காக தன் வாழ்நாளையம் உடலையும் உடலையும் உயிரையும் அர்ப்பணித்தவண பிதா டேவிட் அவர்கள் இந்த அட்டூழியத் தைக்கண்டு மனம் குமுறி அங்கே உயிர் நீத்தார். இதெல் லாம் நடக்கும்போது இரு முக்கிய அமைச்சர்கள் யாழ்ப் பாணத்தில் இருந்தார்களாம்.
பின் ஆளும் கட்சி முக்கிய உறுப்பினர்கள் எதிர்க் கட்சி தலைவர்மேல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவந்தார்கள். அவர்கள் பேச்சுக்கள் இனக் கலவரத்தை துரண்டிவிடும் தோரணையில் அமைந்தன. பாராளுமன்றத்தில் இந்த வாக்குவாதம் நடக்கும்போது, மலைநாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜனநாயக அமைப் பின் கீழ் நாட்டை பிரிக்க யாரும் கேட்கலாம் என்று எடுத்துக்கூறினர். இதைக் கேட்ட தமிழர்கள் அமைச்சருக்கு வாழ்த்துக்கூறி தந்திகள் அனுப்பினர்கள். தமிழ் பத்திரி கைகள் புகழ் பாடின. ஆனல் சிங்கள இனவாதிகள் மலை நாட்டுத் தமிழனும் நாடு பிரிப்பதற்கு ஆதரவு கொடுக்கிருன் என்று சீற்றம் கொண்டார்கள்

வி. வி. வேலுப்பிள்ளை 83
நம்பிக்கையில்லாத் தீர்மானம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளைக்கொண்ட ஹன்சாட் அறிக்கை இரகசிய I) f விநியோகிக்கப்பட்டது. தமிழர்களுக்கெதிரான சுவரொட்டிகள் பல பிரதேசங்களில் வெளிவந்தன. தமிழர்கள் இருபத்தியொரு போலிஸ்காரர்களை சுட்டார்கள். நாட்டை பிரிக்க புரட்சி செய்தார்களென்று துவேசத்தை கிளறிவிட்டார்கள்.
அம்பாறையில் மாணவர்களுக்கிடையே நடந்த இச் சம்பவம் வெடி மருந்து பீப்பாய்க்குள் தீக்குச்சி வைத்தது போல் நாடெங்கிலும் பரவியது உங்களுக்குத் தெரியும்.
இம்புல்பிட்டிய, நீர்கொழும்பு, ஜாலை, பேலியாகொடை மற்றும் சில பகுதிகளில் உள்ள தமிழர்கள் கடைகளை இனந் தெரியாத குண்டர் கூட்டம் வாகனங்களில் வந்து தீவைத்து அமர்க்களம் செய்ததை பத்திரிகைகளைப் பார்த்து தெரிந்து கொண்டோம். இதுபோன்ற பயங்கரச்செயல்கள் எங்கள் பகுதிக்கும் வருமோவென்று பயந்தோம்.
இந்த இடத்தில் வாசிப்பை நிறுத்தினேன். சந்தியாகு விவரித்த சம்பவங்கள் சில நாட்களுக்கு முன் நடந்தவை. எனக்குத் தெரியாத சிலவற்றைத் தெரிந்துகொண்டேன். பெரிய மனிதர்கள், பொறுப்புள்ளவர்கள் என்று பட்டம் போர்த்தியவர்கள்தான் இத்தனை அநீதிக்கும் அபலைகளின் துன்பத்திற்கும் காரணமாயிருந்திருக்கிறர்கள். காடையர் களையும் குண்டர்களையும் தூண்டிவிட்டிருக்கிறர்கள் என்பது எனக்கு வேதனையை தந்தது.
புளுக்கமாயிருந்தது. குளிப்பதற்கு மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு தொழுவத்திற்கு பக்கத்திலுள்ள கிணற் றுக்குப்போனேன். சந்தனம் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். “சார், தண்ணி குளிரா இருக்குங்க, முந்தியே சொல்லியிருந்தா சுடுதண்ணி போட்டிருப் பேனுங்க,” என்ருன்,
பச்ச தண்ணி உடம்புக்கு நல்லது, என்றேன்.

Page 47
84 இனிப் படமாட்டேன்
ஜகனும் மனேவும் ஒய்வு நேரங்களில் அவனேடு வம் பளந்து கொண்டிருப்பார்கள். ஜகனை அவன் துரைக்குட்டி என்று அன்பாய் கூப்பிடுவாள்.
*துரைக்குட்டிக்கு கல்யாணம் செய்யனும்,” என்று ஒரு நாள் சொன்னன்.
ஜகனும் மனேவும் சுற்றிக்கொண்டு திரிவது அவனுக்கும் தெரியும்.
*உத்தியோகம், சம்பளம் வேணுமே,” என்றேன்.
“சார் வீடு, வாசல், ஆடு, மாடு, தோட்டம் இருக்கு, இது போதுங்க, பேரப்புள்ளையே கண்ணுலே பாத்திருங்க, என்ருன்.
பசுபதி சொன்னது குளிக்கும்போது ஞாபகம் வந்தது.
அத்தியாயம் ஏழு
நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல சென்ற பத்து நாட்களாக எனக்கு மன நிம்மதியில்லை. அதோடு சரியான தூக்கமுமில்லை. சாப்பாட்டில் மன நாட்டமில்லை. இவை களையெல்லாம் சித்ரா கவனித்துக்கொண்டிருந்தபடியால் அவளுக்கும் என்னுடைய வியாதி தொற்றிக்கொண்டது. இதை வெகு சாமர்த்தியமாய் மறைத்துக்கொண்டாள்.
நான் குளித்துவிட்டுத் திரும்பியபோது சரியாய் பிற்பகல் 1 மணியாகிவிட்டது. உடனே என்னைச் சாப்பிடக் கூப்பிட்டாள். நான் மேசைக்குப்போனேன். எனக்குப் பிரிய மான காய்கறி பதார்த்தங்களைத் தயாரித்து வைத்திருந் தாள். ஜகன் சாப்பாட்டுப்பிரியன். என்னேடு இருந்து FIT L'ul îT UD6) பாடத்திற்குப் போய்விட்டானேயென்று

ஸி. வி. வேலுப்பிள்ளை 85
என்ன யோசனை??
*ஜகன் எப்போது சாப்பாட்டிற்கு வருவான்.”
“அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்,” என்ருள்.
அவள் கட்டளைப்படியே சாப்பிட ஆரம்பித்தேன் குளித்துவிட்டுச் சாப்பிடுவதில் நல்ல குணமுண்டு. சற்றுக் கூடவே சாப்பிட்டுவிட்டேன். சாப்பாட்டிற்கு உகந்த டெசர்ட் பழவகை கலவை இருந்தது. அதையும் சாப்பிட்டு விட்டு திவானில்போய் படுத்தேன்.
*ஏய் மாஸ்டர், கெட் அப்,” என்ற சத்தம் என்னை எழுப்பியது.
நான் எழுந்து உட்கார்ந்தேன்.
‘மணி 4, நன்முக தூங்கிவிட்டீர்களா, மேலுக்கு அவ்வளவு அலுக்கை. விளங்குகிறதா, தேனீர் சாப்பிட்டு விட்டு சும்மா படுங்கள்.”
மேசைக்குப் போனேன். இரா சாப்பாட்டை கெடுத்து விடாதபடி டிபனும் தேனீரும் வைத்திருந்தாள். சாப்பிட்ட பின் சந்தியாகு எழுதிய கடிதத்தின் குறையை வாசிக்க லானேன்.
*16ம் திகதி வரும் கோவில் உற்சவத்திற்காக ஏற் பாடுகள் செய்து கொண்டிருந்தோம். அதோடு 40 பிள்ளைகள். 14 வயதிற்குட்பட்டவர்கள் ஞான ஸ்நானம் பெறுவதற்குப் பாடம் சொல்லிக்கொள்ள வந்திருந்தார்கள்.
*பொதுவாக பல வதந்திகள் வந்தபோதும் இந்த வேலைகளை ஒத்திவைக்க முடியவில்லை.
“பெல்மதுளையிலிருந்து காவத்தைக்கு வன்செயல் பரவி வருவதாய் செய்தி வந்தது காலை 11 மணியிலிருந்து டவுனி லுள்ள தமிழ் வியாபாரிகள் கடை சிப்பந்திகள், இதர
இ- 6

Page 48
86 இனிப் படமாட்டேன்
ஜனங்களும் தங்கள் உயிரையும் உடலையும் காப்பாற்றிக் கொள்ள கோவிலில் தஞ்சம் புகுந்தார்கள், சிலரைப் போலீஸ்காரர்களே கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.”
*பகல் 12 மணிக்கு பெல்மதுளையிலிருந்து காடையர்கள் கோஷ்டி பஸ்களிலும் வேன்களிலும் வந்து இறங்கினர்கள். *தெமஞ, தெமஞ” என்று ஆர்ப்பரித்துக் கொண்டு, தமிழ் கடைகளுக்கள் நுழைந்து கொள்ளையடித்தார்கள். பெரும் கூச்சல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். டவுனி லுள்ள பந்து என்ற காடையன் மோட்டார் சைக்கிளில் ஏறி இங்குமங்கும் ஓடி தமிழ் கடைகளுக்கு தீ வைக்கத் தூண்டிக் கொண்டிருந்தான். காடையர் கூட்டம் கோவி லுக்கு முன்னுள்ள பவானி ஸ்டோருக்குள் நுழைந்து பிடவை மற்ற சாமான்களை அள்ளி வெளியே எறிந்துவிட்டு கடைக்குத் தீ வைத்தார்கள். எல்லா தமிழ் கடைகளையும் இப்படியே நாசம் செய்தார்கள். ஜனங்கள் தலைவிரிக்கோலமாக அபயக் குரல் எழுப்பிக்கொண்டு ஓடினர்கள். காடையர் கோஷ்டி ஒடுகிறவர்களை விரட்டிக் கம்புகளாலும் கத்திகளாலும் தாக்கினர்கள். விழுந்தவர்களை ஏறி மிதித்தார்கள். இந்த நாச வேலை மாலை 3 மணிக்கு முடிந்தது,
3 மணிக்கு குண்டர்கள் கூட்டம் சிங்களவர்களுக்கு ஜே கோஷம் எழுப்பிக்கொண்டு வந்தது. ஒரு போலிஸ்காரன் துவக்கோடு அவர்களுடன் வந்தான். இதைக்கண்ட நான் பதறிக்கொண்டு கோவிலுக்கு ஒடிப்போய் படிக்க வந்திருந்த பிள்ளைகளை ஒரு அறைக்குள் போட்டு பூட்டி நானும் அவர் களோடு இருந்தேன். காடையர் கூட்டம் கோவில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து “தெமஞ” எங்கே, என்று சப்தமிட்டார்கள். பிள்ளைகள் நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தவாறு வாயைப் பொத்திக் கொண்டு அழுதார்கள்.
நான் முன் சென்று அவர்களுக்காக பரிந்து பேசினேன்"

ஸி. வி. வேலுப்பிள்ளை 87
‘இவர்கள் ஏழைத் தோட்டப்பிள்ளைகள், இவர்களை இம்சிக்காதீர்கள்; வேண்டுமென்ருல் என்னை எதுவும் செய்யுங் கள்,” என்று கெஞ்சிக் கும்பிட்டேன். நான் பேசிக் கொண் டிருக்கும்போதே என் தலைமயிரைப்பிடித்து மடக்கி என்னை அடித்தார்கள். வேருெரு காடையன் என்னை கம்பால் அடித்துத் தாக்கினன். என் மூக்கிலிருந்து இரத்தம் சிந்தியது. என் கமிசையை கிழித்து, அதில் இருந்தவைகளை எடுத்தார் கள். பிளளைகளை அவர்கள் இம்சிக்கவில்லை. தமிழர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைக் காட்டும்படி என்ன துன்புறுத் தினர்கள். இதற்கிடையில் மற்ற கோஷ்டியினர் மிசன் ஹவுசில் ஒளிந்திருந்தவர்களைக் கண்டு அவர்களை தாக்கினர் கள். மிசன் ஹவுஸ் சமையலறை நெருப்புப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. என் மகன் நெருப்புச் சுவாலையில் சிக்கிக் கொண்டு தன்னை காப்பாற்றும்படி அலறிப் புலம்பினன். நான் உள்ளே ஒடி மகனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தேன். நிற்க முடியாமல் அவன் கீழே விழுந்தான். வெட்டுப்பட்டவர்கள், நெருப்பில் காயப்பட்டவர்கள் எல்லாம் ஜீப்பில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். முதல் ஜீப்பில் மகனைக் கொண்டு செல்வதற்கு ஜீப்பில் இடமிருக்கவில்லை. இரண்டாவது ஜீப்பில் அவனை காவத்தை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றேன். அவள் நிலைமை மோசமாக இருந்ததினுல் ரட்ணபுர ஆஸ்பத்திரிக்கு ஒரு ஆம்புலன்ஸில் அனுப்பினர்கள். அதோடு காயப்பட்ட 25 நபர்களையும் ஒரு லொறியில் அங்கு அனுப்பி வைத்
தார்கள்.
‘ரட்ணபுரி ஆஸ்பத்திரியில் மற்றவர்களோடு அவனை சேர்த்தபோது காடையர் கூட்டம் எங்களை தாக்கி நாங்கள் வைத்திருந்த பணத்தையும் பறித்துவிட்டுக் காயப்பட்டவர் களுக்கு மருந்து கட்ட வேண்டாமென்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களைப் பயமுறுத்தியது. அவர்களைக்கொல்ல வேண்டும் அல்லது யாழ்ப்பாணத்திற்கு அனுப்புங்கள் என்று கத்தினர்கள்.

Page 49
88 இனிப் படமாட்டேன்
“என் மகனின் நிலைமை மோசமாகிக் கொண்டு வந்தபடி யால், அன்றிரவு அவனை கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு ப்ெதார்கள். அவனை பிள்ளைகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்புகிறபடியால் அவனேடு என்னைப் போக அனுமதிக்க வில்லை.
“இரண்டு நாட்களாக ரட்ணபுரி அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தேன். எப்படி இருந்தேன். என்ன செய்தேன் என்பதுகூட எனக்கு தெரியாது. 19ம் திகதி நான் கொழும்பு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது என் மகன் இறந்துவிட்டான் என்று செய்தி கேட்டேன். என்ன அன்புடன் நேசித்த மகன் போய்விட்டான். யாரிடத்தில் சொல்வேன். நஷ்டஈடு என் பிள்ளைக்கு ஈடாகுமா?
*அரசியல்வாதிகளும் பெரிய மனிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களும் தான் அவன் சாவுக்கு பொறுப்பு. குண்டர்களையும் காடையர்களையும் தூண்டி விட்டவர்கள் அவர்கள் தானே.
*சுவாமி பியோ என் மகனுக்கு பிசப் மாளிகையில் கடைசி சடங்குகளையும் ஆராதனையையும் நடத்தினர். அவன் சடலத்தை கனத்தையில் கொண்டுபோய் வைத்தோம்.
‘என் வாழ்வு தகர்ந்துவிட்டது. இனி நான் கஹாவத்தை மாதா கோவிலுக்கு போகக்கூடிய நிலையில் இல்லை.
*எனது துக்கத்தின் சிலுவையை தூக்கிக்கொண்டு எங்கு செல்வதென்று தெரியவில்லை, கடவுள்தான் எனக்கு வழி காட்ட லேண்டும்.”
இத்துடன் முடிக்கிறேன்.
தங்கள் அன்பை மறவாத, சந்தியாகு.”
சந்தியாகுவைப் போல் எத்தனை எத்தனை பேர் பாதிக்கப்
பட்டிருப்பார்கள் என்று பலவாருகச் சிந்தித்தேன்.

வி. வி. வேலுப்பிள்ளை 89
கடிதத்தை மடித்து வைத்தேன்.
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வளவு நெருக்க மான தொடர்புண்டு. கலாச்சாரம், பண்பு, மதம், உறவுகள் இவைகளெல்லாம் ஒரு மரத்தின் கிளைகள்தான். இனவாதி களையும் குண்டர்களையும் ஒரு சமுகமாகவோ அல்லது அதன் பிரதிநிதிகளாகவோ கருத முடியுமா? இவர்கள் செய்த தீய செயல்களை சிங்கள சமுகத்தின் தலையில் கட்டி வைக்கலாமா?
சித்ரா, லீலா, ஏன் மாமியார், மைத்துனர்கள், என் னுடைய ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள், நண்பர்கள் இந்தக் கிராமவாசிகள், எத்தனை எத்தனை சிங்களவர்கள்; அன்பும் பண்பும் உடையவர்கள்தானே. அவர்கள் எல்லோ ரையும் நினைத்தேன். சித்ரா ஒரு சிங்களத்தி. அவள் ஒரு பெண். என் துணைவி. அதேபோல் மற்றவர்களும் மனிதர் கூட்டம் தானே.
வெளியே பேசிக்கொண்டு வருபவர்களின் சத்தம் கேட்டது.
பத்மினி, ஜகன், மனே மூவரும் வீட்டுக்குள் நுழைந்
தார்கள்.
*சந்ரு, என்ன பெரிய யோசனை போலிருக்கிறது, ஒரு மாதிரியாக,” என்ருள் பத்மிணி.
“ஒன்றுமில்லை, உட்கார்.”
*சித்ரா கோபமாக இருப்பாள். உள்ளே போகிறேன்.” என்ருள்.
சித்ரா வந்து,
“எனக்கு கோபமுமில்லை. தாபமுமில்லை, உட்கார். ஜகன் சாப்பிட்டுவிட்டாயா மகனே,”
அவன் பேசுமுன்;

Page 50
90 இனிப் படமாட்டேன்
'இல்லை மாமி, நான் ஜகன பொலிடெக்னிக்கில் போய் கண்டு கூட்டி வந்தேன். எங்கும் தங்கவில்லை, எனக்கும் பசிக்குது,” என்ருள் மனே.
“நீங்கள் இரண்டு பேரும் ஜகனுக்கு வக்காலத்து எனக்கு விளங்கு மனே.”
எல்லோரும் சிரித்தோம். ஜகன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போனன்! *பத்மினி வா நம்முடைய கோட்டைக்குப் போவோம்,' சித்ரா கூப்பிட்டாள்.
எல்லோரும் சமையலறைக்குப் போனர்கள். முன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. *வாருங்கள்,” என்று எழுந்து போனேன். அபயரட்னா வந்திருந்தார்.
* வரவேண்டும், வரவேண்டும்!” என்று அழைத்து சம்பாஷணை அறையில் அமர்ந்தோம்.
“எப்படி சுகம் சந்ரன்! சில நாட்களாய் வரமுடிய வில்லை. பெரிய அக்கப்போர்,” என்று பேச்சை ஆரம்பித் தார்.
“நல்ல சுகம். நீங்கள் வேலையாக இருப்பீர்களென்று எனக்குத் தெரியும்!”
ஆங்கிலத்தில் பேசினேம். *நான் 8, 15க்கு காரியாலத்தில் இருப்பேன். என் பகுதி யில் வேலை செய்யும் கிளார்க், பியூன் எல்லாம் 9 மணிக்குத் தான் வருவார்கள். கண்டித்துக்கேட்க முடியாது. கேட்டால் போச்சு. நான் அவர்களை விக்டிமைஸ் செய்வதாய் எம்.பி யிடமும், தொழிற்சங்கத்திலும் முறைப்பாடு சொல்லு வார்கள். கரைச்சல் வரும்போது எனக்காகப் பேசுவது Այmii,**

ஸி. வி. வேலுப்பிள்ளை 9
இருவரும் சிரித்தோம். “இப்போது தோட்டப்பகுதிகளில் எப்படி?” என்று நேரே விசயத்துக்கு வந்தார்.
“சற்று அமைதிதான்,” என்றேன்.
“தொழிலாளர்கள் அப்பாவிகள், ஒரு பாவமும் அறியாத வர்கள், அவர்களை இப்படித் துன்புறுத்துவது பெளத்த தர்மத்திற்கே இழுக்கு. 1958க்கு முன் நாமெல்லாம் எப்படி அந்நியோன்யமாக வாழ்ந்தோம், இப்போது பாருங்கள். குண்டர்கள் ஆட்சி வந்துவிட்டது. சரி ஜோன் என்ன சொன்னர் தெரியுமா சந்ரன்?”
*எதைப்பற்றி சொல்கிறீர்கள்?
*மரம் ஏறுகிறவர் பார்லிமெண்டுக்கு போனபடியால் பாக்கு பிடுங்க ஆள் இல்லை என்ருர், அது சரியாய் போய் விட்டது.
“இது சாதாரண மக்கள் காலம் தானே.”
“நீங்கள் போங்கள். சாதாரண மக்கள் என்ருல் பொறுப் பில்லாதவர்கள் என்று அர்த்தம். என்னுடைய பகுதியில் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது வேலை செய்கிருர்களா? அடிக்கொரு தரம் தேனீர் சாப்பிட வெளியே போவது, டொப்லட்டுக்குப் போவது, பின் பேப்பர் வாசிப்பது, வம் பளப்பது இதுதானே வேலை.”
“கல்வி இலாக்கா ஒரு காடு என்கிருர்களே?
*அது பொய்யா, செத்துப்போனவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிருர்கள். அப்படிப் பார்க்கும்போகு தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு எவ்வளவு உழைத்துக் கொடுத்திருக்கின்றர்கள்.”
"அதைக்கேட்டு எனக்கு சந்தோசம் -9յւսա,’ என்றேன்.

Page 51
92 இனிப் படமாட்டேன்
“உண்மையைச் சொல்கிறேன். இந்த அநியாயங்கள் நடக்கும்போது உங்களை வந்து பார்க்க எனக்கு வெட்கமாகி இருந்தது.”
“குண்டர்கள் எந்த சமூகத்தையும் சேராதவர்கள்!. அவர்கள் உங்கள் பிரதிநிதிகள் இல்லை!"
“அது உண்மை என் மனைவி உங்களைப் பார்க்கும்படி இரண்டு நாட்களாய் கரைச்சல்*
*அப்படியா, ரஞ்சனும் கல்யாணியும் தினம் வந்து போகிருர்கள் தானே.”
*உங்கள் வீடு, பத்மினி வீடு தவிர வேறெங்கும் அவர் களை அனுப்ப மாட்டாள். இந்தக் காலத்தில் ரொம்ப பார்த்துப்பழக வேண்டும் சந்ரன்.”
*உண்மை, உண்மை.”
*எல்லோரும் பெல்பொட்டம், சப்பாத்து போடு கிருர்கள். ரொம்ப நாகுக்காக உடுத்திய பையன்கள் ரத்ம லான பகுதியில் 'பகல் கொள்ளையடிக்கிருஷர்களாம். எப்படி கதை. நல்லா உடுத்திய நபாகளை வீட்டுக்குள் கூப்பிடுவது ஆபத்து போலிருக்கிறது. ஆக பிள்ளைகளை நல்லவர்களோடு பழக விட வேண்டும், நலலவர்களை பந்தம் பிடித்துத்தான் தேட வேண்டும் போலிருக்கிறது.”
*கேள்வியும் பதிலும் சொல்கிறீர்கள்?
“இந்தக் காலத்தில் கேள்வி கேட்டால் பதில் வராது, எனவே பதிலையும் நாமே சொல்லிக்கொள்ள வேண்டும்.”
'நீங்கள் வுட்கவுசை ரொம்ப படிக்கிறீர்கள் போலும்?” என்றேன்!
“பழை புத்தங்களை புதிய நோக்கோடு படிக்கிறேன். புது புத்தகம் வாங்வதென்ருல், உடைமைகளை அடவு வைக்க வேண்டும்!”

ஸி. வி. வேலுப்பிள்ளை 93
“அது உண்மைதான். நான் புது புத்தகம் வாங்கி பல வருடங்களாகிவிட்டது. என் மகனுக்கு ஆங்கில புத்தகங் களில் நாட்டமில்லை. அவன் மடையணுய் போனல் பாதக மில்லை. முரடணுகப் போய்விடக்கூடாதென்பது என்
goly 601 T.”
“இன்றுகூட எனக்கும் சித்ராவுக்கும் சண்டை.”
“என்ன சண்டையும் போடுவீர்களோ?
“இல்லை வாக்குவாதம். ஜகன் என் தந்தையைப்போல் சற்று முரட்டுக்குணம் உடையவன் என்று சொல்லி விட்டேன்!??
“நீங்கள் இறந்தவர்களைப்பற்றி, அதிலும் உங்கள் தந்தை யைப்பற்றி அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அது ஐரோப் பியப் பண்பு. கிறிஸ்தவர்கள் அதை ரொம்ப அனுஷ்டிப் பார்கள்! அப்புறம் என்ன நடந்தது?"
“நான் மழுப்பினேன். காந்தி பக்தர் காலம் மலையேறி விட்டது என்ற தோரணையில் பேசினள்.”
"நூற்றுக்கு நூறு உண்மை. காந்திச் சிலையைக்கூட உடைத்ததாய் எங்கோ வாசித்த ஞாபகம்!”
*அவரை சுட்டு, ரொம்ப நாளைக்கு பின்னர் தானே சிலையை உடைத்தார்கன்.” என்றேன்.
"நல்லதாகப் போய்விட்டது,” என்று சிரித்துக் கொட்டினர்!
காப்பி வந்தது, குடித்தோம்.
“இந்த ஈழப்பிரச்சனை தீர்ந்த பாடில்லை. பயங்கர வாதிகள், புலிக்கூட்டத்தார்,கொள்ளைக் கூட்டத்தார் எல்லா மாகச் சேர்ந்து ஒரு முடிவு வராமல் செய்கிறர்கள். போலிஸ் காரர்களை கொலை செய்தால் பிரச்சனை தீர்ந்துபோகுமா?
தலையை ஆட்டினேன்?நீங்கள் யாழ்ப்பாணத்தைச் சேரா தவர், உங்கள் அபிப்ராயம் என்ன?

Page 52
இனிப் படமாட்டேன் 4 وح
‘என்னுடைய அபிப்பிராயம் நாளுக்கு நான் மாறி வG கிறது?
“அப்படியென்றல் நாடு பிரிப்பது உங்களுக்கு சம்மதமா. நீங்கள் அதற்கு ஆதரவா?
“முற்றிலும் இல்லை. எங்கள் பிரச்சனை வேறு அவர்கள் பிரச்சனை வேறு. நாங்கள் எல்லா சமூகத்தோடும், சினேகப் பான்மையோடும், செளஜன்யமாகவும் வாழ வேண்டி பவர்கள்.*
“அப்படியென்றல் உங்கள் அபிப்பிராயம் எந்த வகை யில் மாறிவிட்டது?
“பயங்கர வாதிகள், புலிக்கோஷ்டிகள், பகல் கொள்ளைக் காரர்கள் மத்தியில் இன்று யாழ்ப்பாண மக்கள் அகப்பட்டுக் கொண்டு பெரும் அவஸ்த்தைப்படுகிருரர்கள். அதோடு போலிசார் கொலைக்கு இலக்காவதற்கு, பெரிய திருட்டுக்கள் போவதற்கும் பொது மக்கள் பொறுப்பா? யாழ்ப்பாணத் தில் இந்தக் கோஷ்டிகள் எப்படித் தோன்றின. அதற்கு யார் காாணம் என்ன என்பதை யாராவது தெரிந்து கொண் டோமா? இதைப்பற்றி ஆராய்ச்சி, ஆய்வு நடத்தப்பட்டிருக் கின்றனவா? யாழ்ப்பாணத்தாருக்காக நான் வக்காலத்து பேசவில்லை. உண்மையென்பதை சிங்கள மக்கள் தெரிந்து கொள்ளவேண்டாமா?
*அது சரி,” தலையாட்டிவிட்டு, சற்று சுணங்கி,-
*அதே சமயத்தில் யாழ்ப்பாணத்தார்கள் பிரச்சளை இது தான் என்று சிங்களவர்களுக்குச் சொல்லி இருக் கிருர்களா?
*சொல்கிருர்கள். ஆனல் பத்திரிகைகள் அதை இரட் டிப்பு செய்கின்றன.”
“அது சாக்கு போக்கு. யாழ்ப்பாணத்தார்கள் தலை வர்கள் உலகமெல்லாம் சென்று பூரீலங்காவை பற்றி பாதக

ஸி. வி. வேலுப்பிள்ளை 95
மாக பிாச்சாரம் செய்ய லட்சக்கணக்கில் செலவிடுகிருர்கள் ஏன் ஒரு சிங்கள பத்திரிகை அவர்கள் நடத்தக்கூடாது. அல்லது ஆங்கிலப் பத்திரிகை நடத்தக்கூடாது.”
**ஆங்கிலப் பத்திரிகை வார வெளியீடு ஒன்று தற்போது வெளிவருகின்றதே! படித்தவர்கள் மத்தியில் தென்னிலங்கை யிலும் நன்முக பரவுகிறதாகக் கேள்வி”
"அப்படியா!அதுபோல் சிங்களப் பத்திகையும் வெளியிட வேண்டுமல்லவா?
‘நல்ல அபிப்பிராயம், ஆயினும் இதில் சில நடைமுறைப் பிரச்சனைகள் அதாவது வினியோகம், அச்சகத் தொழிலாளர் போன்ற பிரச்சனைகள் இருக்கும் ஆயினும் நாம் முயலத்தான் வேண்டும்’
*உடன் ஆரம்பியுங்கள். நான் மொழி பெயர்ப்பு வேலையில் உங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நாடு அழகான நாடு. நீங்கள் கவி. சில காலமாக அது ரத்தக் கறைப்பட்டுவிட்டது இது பெளத்த தர்மத்திற்குச் சோதனை. மனிதரை மாத்திரமல்ல, எல்லா உயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டுமென்று பெருமான் சொன்னதை மறந்துவிட்டோம். சரி நேரம் ஆகிறது. வருகிறேன். கவலைப்படாதீர்கள்.”
"நீங்கள் வந்தது ரொம்ப பிாயோனமாகிவிட்டது. நல்ல விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.”
‘அதைவிட என் மனதிற்கும் சாந்தி. சித்ராவும் நீங்களும் வீட்டுக்கு வாருங்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங் களில் தான் நாம் சந்திக்க வேண்டும்.”
*கட்டாயம் வருவோம்,” என்றேன்.
‘நன்முக இருட்டிவிட்டது. எழுந்தார்.”
*சித்ராவுக்குச் சொல்ல வேண்டும்,” என்ருர்,
*ம்.” நான் குரல் கொடுத்தேன்.
*வருகிறேன்.”

Page 53
96 இனிப் படமாட்டேன்
சித்ரா, பத்மினி, மனே மூவரும் வந்தார்கள். “அரசியல் பேசினீர்களோ,” என்ருள் சித்ரா.
அபயரட்ண சிரித்தார்.
"நீங்களும் அரசியலும். அரிசி கிலோ ரூ, 9 - 00, வெங்காயம் ஒரு ருத்தல் ரூ. 25-00.”
*சித்ரா நீங்கள்தான் அரசியல் பேச வந்துவிட்டீர்கள்.”
*நீங்கள் யூ. என். பி தானே,”
*கத்தோலிக்கர் எல்லாம் யூ. என். பிதான்,” என்ருள் சித்ரா,
*சரி வருகிறேன். சித்ரா சந்ரனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்.”
*நான் ரெடி. இவர் வீட்டைவிட்டு கிளம்ப மாட்டார்! ւսաւb.”
எல்லோரும் சிரித்தோம்.
*நாங்கள் போகிருேம், நாங்கள் போன பின் ஜகன ஒன்றும் சொல்ல வேண்டாம்,” என்ருள் பத்மினி.
மனே சித்ராவின் கன்னங்களில் முத்தமிட்டாள், பதில் முத்தம் பெற்றுக்கொண்டாள்.
எல்லோகும் L-rT id:603 தட்டிக்கொண்டு புறப் பட்டார்கள்.
நின்று வழியனுப்பினுேம்.
அத்தியாயம் எட்டு
ஆபீசுக்குப்போகும் வழியில் கிரீன் கபேக்கு பக்கத்தி லுள்ள புத்தகக்கடையில் தாமதித்து புதிதாக வந்திருந்த புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் ஒரு கண்ணுேட்டம்

ஸி. வி. வேலுப்பிள்ளை 97
விட்டேன. பின் எனக்குப் பிடித்த மிரர் மெகசினை வாங்கி லேசாய் பார்த்தபடி நடை பாதையில் ஒதுங்கி டந்தேன். சற்று தூரம் சென்றதும் பெண் குரல் கேட்டது
*மாஸ்டர், என்ன இப்படி தெரியாத மாதிரி போறிங்க."
அந்த குரலைக்கேட்டு பத்து வருடங்சுளாகியும் அதை நான் மறக்கவில்லை. என்னைக் கூப்பிட்டவள் கண்ணம்மா வாகத்தானிருக்க வேண்டும். நான் நின்று திரும்பிப் பார்த்தேன்.
அவள் எனக்கு அருகில் வந்துவிட்டாள்.
"மாஸ்டர் நா என்ன கொடுமே செஞ்சேன். ஏன்
இப்படி பாரா முகமாக போநீங்க.” தளுதளுத்த குரலில்
கேட்டாள்.
"ஆ, மிசிஸ் சுந்தரம், பாராமுகமாக போறது என் பழக்கமில்லே. காலை வெயிலிலே புஸ்தகம் பாத்தது கண் மினு மினுத்துப்போச்சு. எப்படி சுகமாயிருக்கிறீங்களா? மிஸ்டர் சுந்தரம் சுகமாயிருக்காரா? அவரே பத்தி அடிக்கடி பத்திரிகையிலே பார்க்கிறேன்.”
பதில் சொல்லாமல் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டு நின்ருள். இன்றைய மோஸ்தர்படி உயர்ந்த ரக சாரி, அதற்கேற்றற்போல் ரவிக்கை, சிலிப்பர், தங்கச் சங்கிலி, வளையல்கள் அவள் அழகை அழகுபடுத்தின. வயது நாற்பதிற்கு கிட்ட ஆகியும், இளமை அவளை சுற்றிக் கொண்டிருந்தது.
"என்ன பேசாம நிக்கிறீங்க,” லன்றேன்.
*மிசிஸ் சுந்தரம், மிஸ்டர் சுந்தரம், அறியாத ஆளுகளே சொல்ற மாதிரி சொல்லுறீங்களே. கண்ணு சுந்தர் இன்ன காலம் மாறி, மிஸ்டர், மிசிஸ் பட்ட மாச்சே, அதேதான் தெனைச்கிகிட்டு நிக்கறேன். ’ என்ருள்.
அது உண்மைதான்.

Page 54
98 இனிப் பட மாட்டேன்
*காலம் வெரசா போகுது, நாமெல்லாம் மாற வேண்டியவங்க தானே. நீங்க நல்லா இருக்கீங்க அந்த மட்டும் எனக்கு சந்தோசம்,” என்றேன்.
“உங்களுக்கு எப்பவும் பெரிய மனசு, ஒரு கொறையும் வராது. வெள்ளிக்கிழமே நீங்க, உங்க வீட்டு அம்மா, மகன் எல்லாரும் இந்த வழியே போய் அந்த கேட்டுக்குள்ளே நுழைஞ்சீங்க. இன்னக்கு வருவீங்கனு தான் காத்துக்கிட்டு இருந்தேன்,” என்ருள்.
“எனக்காக காத்திருந்தீங்களா?”
‘ஏன் காத்திருக்கக் கூடாதா. வீட்டுச்சாமான் வாங்க வந்தேன். அதோடே உங்களேயும் பார்க்க நின்னேன்.”
*ரொம்ப சந்தோசம். கண்டு பத்து வருசமாச்சு, ஆன நா மறக்கலே.”
*அது எனக்குத் தெரியும். நீங்க எங்க வீட்லே ஒரு கோப்பை தேத்தண்ணி குடிச்சதில்லே. இங்கேயாவது வாங்க.”
கண்ணம்மா எனக்கு முன் கபேக்குள் போனள். நான் பின் சென்றேன். ஜன்னலுக்கு அருகே காலியான மேசையைக் காட்டினுள். அங்கு போய் இருவரும் அமர்ந்தோம்.
வெயிட்டர் வந்தான்.
*எ பொட் ஆப் டீ,” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து சிரித்தாள்.
“என் மிசிஸ் சுந்தரம்?
*என்ன மிசிஸை கண்டுப்புட்டீங்க. சும்மா கண்ணம் மான்னு கூப்பிடுங்க. என் இங்கிலீஸ் எப்படி இருக்கு?
**நல்லாயிருக்கு கண்ணம்மா." என்றேன்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 99
ஒரு தட்டில் இரண்டு செட் கோப்பைகள், டீ பொட்டில், தேனீர், கூசாவில் பால், கிண்ணத்தில் சீனி, கரண்டிகள் இவைகளை வெயிட்டர் கொண்டு வந்து கண்ணம்மாவுக்கு முன் வைத்தான், கண்ணம்மாள் இரண்டு கோப்பைகளில் தேனீர் விட்டு அவைகளில் பால் வார்த்து, கரண்டியையும் சீனிக்கிண்ணத்தையும்எனக்கருகில் தள்ளிவைத்தாள்.இரண்டு கரண்டிசீனியை போட்டுக் கலக்கினேன். அவளும் அப்படியே போட்டுக்கொண்டாள்.
தேனீரை சாப்பிட்டுக்கொண்டு பேசினுேம்.
“கொழும்புக்கு வந்த இந்த வேகட வேலையெல்லாம் படிச்சுக்கிட்டேன் மாஸ்டர்.”
“இங்கே ஒரு வேசம், தோட்டம் போனல் வேறே வேசம்.”
*நாடகமே உலகம் கண்ணம்மா!”
*உண்மே மாஸ்டர். இப்படி எல்லாம் வருமினு நா சொப்பனத்திலேகூட கண்டதில்லை. இதெல்லாம் நீங்க
கொடுத்த பாக்கியம் மாஸ்டர் அவரு மறந்தாலும் தான் மறக்கமாட்டேன்.”
‘நம்ம செய்வது ஒண்ணுமில்லே, நடப்பது
நடக்கும்!”
*ஆமா மாஸ்டர். ஞாயத்துக்கிழமே பேப்பர் எப்போதும் பார்ப்பேன். மிச்ச நாளா நீங்க ஒண்ணும் எழுதக்காணம், ஏன் மாஸ்டர்.”
*சும்மா எழுதி என்ன பிரயோஜனம், ஏதாவது செய்யனும்.”
'உண்மே மாஸ்டர் ராஜன் எப்படி இருக்காரு?
*நல்லாயிருக்கார்.”

Page 55
100 இனிப் படமாட்டேன்
*ரொம்ப மேலான மனிதர். நீங்க ரெண்டு பேரும் சிலரே கண்டிச்சு பேப்பருக்கு சேதி குடுக்குறீங்க, ஆன இவரேபத்தி ஒண்ணும் சொல்றீங்க இல்லையே?
நான் சிரித்தேன். 'நீங்க கண்டிக்க அவருக்கு தகுதியில்லையா?” "அவர் நம்ம ஆள்தானே?” “பேச்சுக்கு அப்படி சொல்லுறீங்க.”
*இம், உங்களை கண்டு பத்து வருசமாச்சு! புள்ளே கலி யாணத்துக்கு வந்து மூலையிலே இருந்துட்டு எனக்குத் தெரி யாமே போயிட்டீங்க.”
“புள்ளே நல்லாயிருக்கா?
**நல்லாயிருக்கு மாஸ்டர்!”
*தோட்டத்துக்கு போனிங்களா?”
“நம்ம ஆளுக எல்லாம் நல்லாயிருக்குழுங்களா?”
“போன மாசம் போனேன். அம்மாளுக்கு வயசாச்சு. அக்காமாரு ரெண்டு பேரும் நல்லாயிருக்குருங்க. மாணிக்கம் மச்சான் எப்போதும் போலே கிண்டல் கேலி பண்ணுது. அங்கே போன அம்மா காம்பராவிலேதான் போய்படுப்பேன். அங்கே படுக்கிறது இங்கே பிரதம மந்திரி வீட்டுக்குப்போற மாதிரிதானே எனக்கு!”
**கண்ணம்மாளுடைய வெளித்தோற்தம் மாறியிருந்தது. அவள் உள்ளம் மாறவில்லை.
“மிஸ்டர் சுந்தரம் தோட்டத்திற்குக் கிட்டத்திலே Gunr 35 GS7G3uurr?”
“மூனு மாசத்துக்கு முந்தி வியாபார விசயமா பெரிய தலவாக்கொல்லைக்கு போனரு. மோல வீட்டுக்குப் போகலே வயத்துக்கு போறது அவருக்கு பிடிக்கல்லே போலே,” என்ருள் கண்ணம்மாள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 101
“அவருடைய அப்பா அம்மா கொழும்புக்கு வந்திருக் கிருங்களா?
“வருவாங்க. கொழும்பு வீடு அவங்களுக்கு பிடிக்கல்லே. குசினியிலே கொல்லப்பக்கத்திலே இருந்துட்டுப் போவாங்க. மகன் பெரிய ஆளா வரணுமினு ரொம்ப ஆசைப்பட்டுப் படிக்க வச்சாரு. அந்த மட்டும் சரிதானே. என் கடனே நா செய்யறேன். மாசாமாசம் அவங்களுக்குப் பணம் அனுப்புறேன்!”
“ரொம்ப நல்லது. பெத்தவங்களையும் பிறந்த இடத்தை யும் மறக்கக்கூடாது கண்ணம்மா !”
“உங்க மாதிரியானவங்க பெருமைப்படலாம். அவரும் நானும் லயத்துலே தானே பிறந்து வளர்ந்தோம்!”
“என்ன கண்ணம்மா எங்க பழைய வீடு லயம்
9 தானே.
*அதே கப்பலாரு செஞ்சு சிமிந்தி போட்டு சீலிங்கெல் லாம் அடிச்சிருந்திச்சே,’ என்ருள்.
“சிமிந்தி, சுண்ணும்பு, சீலிங் மாத்தரம் வீடாகாது கண்ணம்மா.”
‘எங்க கொழும்பு வீட்டுக்கு ரொம்ப சுண்ணும்பு, சிமெண்ட் போட்டிருக்கு.”
சிரித்தாள். நானும் சிரித்தேள். அழகாக இருந் தாள்.
*நல்ல சிரிப்பு,” என்றேன்.
*நல்ல சிரிப்பு எத்தனை, எத்தனை காலம் பாத்த சிரிப்பு. லயத்திலே, பெரிய வீட்டிலே, பள்ளிக்கூடத்திலே தோட்டத் துக்குள்ளே நீங்க பாத்த சிரிப்பு! இப்ப கொழம்பு சிரிப்பை யும் பாத்திட்டீங்க மாஸ்டர்.பொம்பளைக்கு ரொம்ப ஞாபகம்
199
மாஸ்டர்
இ-7

Page 56
02 இனிப் படமாட்டேன்
"உண்மை! நீங்க எல்லாம் நல்லாயிருக்கிறதிலே எனக்குப் பெரும் சந்தோசம் கண்ணம்மா."
*அதுதான் தெரியாத மாதிரி போனிங்களாக்கும்!” *வெய்யிலிலே வாசிச்சது கண் நீலம் பூத்ததே சொன்னே. அதோட வயசும்.”
*வயசு கொழும்புலே அரே வயசு போனவனெல்லாம் குமரிக்குட்டிகளே கூட்டிகிட்டு திரியிருன்.”
*அது போகட்டும். வெள்ளிக்கிழமே உங்க வீட்டு அம்மாளே நல்லா பாத்தேனே. ரொம்ப மெடுக்கா சிங்கள நடே போட்டு உங்களோட போச்சே."
*அதென்ன சிங்கள நடே,” என்றுசிரித்துக்கொண்டே கேட்டேன்!
“சிங்கள ஆளுக நடக்கிறதையும் தமிழ்ஆளுக நடக்கிற தையும் பாத்தா தெரியும் அவுங்க சொந்த வீட்டுக்குள்ளே நடக்குற மாதிரி நடக்குருங்க. நம்ம பரக்க பரக்க பார்த்து நடக்குருேம்.”
*வெறும் பயம் தான் கண்ணம்மா! நாம் படிச்சது ஞாபகமிருக்கா தமிழனென்று சொல்லடா..?
*ஆமா, தலைகுனிஞ்சு நில்லடா,” என்று சொல்லிவிட்டு கணிரென்று சிரித்தாள்.
அடுத்த மேசையில் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவள் சிரித்தாள். தமிழ் பெண்ணுக இருக்க வேண்டும்.
"உங்க வீட்டு அம்மாளே பத்தி கேள்விப்பட்டேன். நல்ல படிப்பாம், சொந்த வீடு, தோட்டம் எல்லாம் இருக்காம், உங்க மணம் போல எல்லாம் அமைஞ்சிருக்கு, மாஸ்டர்.”
‘வாழ்க்கையிலே எதிர்பாராதவிசயம் ரொம்ப நடக்குது கண்ணம்மா.”
*அதுன்ன உண்மே மாஸ்டர்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 103
*உங்களே கண்டது எனக்கு ரொம்ப சந்தோசம், நீங்க நம்மதோட்டம், வீடு, ஆள் எல்லோரையும் ஞாபகப்படுத்திட் டீங்க. சரி வரட்டுமா, மிஸ்டர் சுந்தரத்தை கேட்டதாய் சொல்லுங்க,”
“எனக்கும் ரொம்ப சந்தோசம் மாஸ்டர்.”
வெயிட்டர் பில் கொண்டு வந்து வைத்தான், பணத்தை வைத்துவிட்டு எழுந்தாள். நானும் எழுந்தேன்.
*வணக்கம் மாஸ்டர்” என்று கைகூப்பினுள்
“வணக்கம் வணக்கம்,” என்று பதிலுக்குக் கை எடுத்தேன்.
மூன்முவது மேசையிலிருந்து எங்கள் பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்த பெண் எழுந்து “மோனிங், நீங்கள் மிஸ்டர் பாலச்சந்திரன்தானே,” என்று கையை நீட்டினுள்.
*ஆம்,” என்று கைகுலுக்கிவிட்டு, கண்ணம்மாளையும் அறிமுகம் செய்து வைத்தேன்.
*இவர் திருமதி சுந்தரம், இவருடைய துணைவர் முனிசிபல் கவுன்சில் மெம்பர்,”
“ஒ,” என்று கைகுலுக்கினுள். *அடிக்கடி அவரைப்பற்றி பத்திரிகைகளில் பார்த்திருக் கிறேன். உங்களைப்பற்றி என்னுடைய மைத்துனர் பேசுவார்.
“gali ust fit?'
‘மிஸ்டர் நடராஜா, நீங்கள் எல்லோரும் ஓரிடத்தில் பிறந்தவர்களாம்,”
*தெரியும், தெரியும். அவர் பெரிய வியாபாரி, பண மூட்டையாச்சே, இவரும் அதே தோட்டக்காட்டில் பிறந்த வர்தானே,” என்றேன்.
*தோட்டக்காடு,” என்று சிரித்தாள்.

Page 57
104 இனிப் படமாட்டேன்
“டவுன் காடு,” என்ருள் கண்ணம்மாள். *எல்லாம் காடுதான்,” சிரித்தோம்.
நீங்கள் செண்டரில் பேசியபோது கேட்டிருக்கிறேன். நல்ல பேச்சு, மிஸ்டர் நடராஜாவுக்கும் சொன்னேன்.”
**உங்க பேர்,” *ரஞ்சனி சுப்ரமணியம், ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாங்க டெலிபோன் செய்கிறேன். சந்தித்தது மிக சந்தோசம்,”
சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தோம். *அவளும் நம்ம ஆள்தான், யாள்ப்பாணத்தி மாதிரி பேசுருள்,” என்ருள்.
*இல்லை, அது கொழும்புத்தமிழ்,” என்றேன். “எனக்கு தோட்டக்காட்டு தமிழ் போதும், ’ என்ருள் *அப்ப வரட்டுமா,” *போய்ட்டு வாங்க மாஸ்டர்.”* ஆபீசுக்குப் புறப்பட்டேன். சுந்தரம், கண்ணம்மாள் நான் பிறந்த மால்வெளி தோட்டத்தில் பிறந்தவர்கள் . என்னேடு விளையாடியவர்கள், என்னேடு தோட்டப்பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள், பின் சுந்தரம் என்னேடு தலவாக்கொல்லை, நுவரெலியா பள்ளிக் கூடங்களில் படித்தான். என் இணைபிரியா தோழன். இன்று அவன் பல வகையிலும் உயர்ந்துவிட்டான். அதிகாரப் பீடத்திற்கும் அவனுக்கும் அதிக நெருக்கம். அவன் முன் னேற்றத்தில் எனக்குப் பெருமிதம், ஆனல் எங்கள் உறவு கரைந்து போய்விட்டது. கடக்க முடியாத ஆறு எங்கிள் இருவரையும் பிரித்துவிட்டது காலத்தால் வரும் மாற்றங் களை யார் தவிர்க்க முடியும்.
நான் ஆபிசை அடையும்போது பத்து மணியாகிவிட்டது ஜகன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 105
*ஏன் தாத்தி இவ்வளவு நேரம்.” *பிறந்த இடத்து நண்பர் ஒருவரைச் சந்தித்தேன் ” அறைக்குப்போய் ஆசனத்தில் அமர்ந்து ஜன்னல் வழி யாய்க் கடலைப்பார்த்தேன்.
மூங்கில் இலை மேலே தூங்கும் பணி நீரே. பனித்துளிபோல் அமர்ந்து கடல் பெருமூச்சு விட்டுக் கொண்டு மோன நிலையிலிருந்தது.
மூன்று நாள் பத்திரிகைகள் மேசை நிறைய இருந்தன; அவைகளைப் பார்த்தாக வேண்டும். அது கடமை.
ஆங்கிலப் பத்திரிகையை எடுத்து விரித்துப் பார்த் தேன். நடுப்பகுதியில் படங்கள் ஜனதிபதி, பிரதம மந்திரி மேல் மட்ட போலிஸ், மில்டரி அதிகாரிகள். இவர்கள் வன் செயலால் சேதமடைந்த காட்சிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள் வன் செயலுக்குள்ளான ரத்னபுரி, காவத்தை, பெல்மதுளை டவுன்களில் தமிழர்களின் கடைகளை யும், துன்புறுத்தப்பட்டவர்களைக் கண்டு பேசும் படங்களும், சேதமடைந்த தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களையும் கண்டு சந்தித்துப் பேசும் படங்களும் இருந்தன.
நீலகாம தோட்டத்தொழிலாளி சுப்பையா வை, ஈழம் என்ருல் என்ன என்று ஜனதிபதி கேட்பதும், எனக்கு தெரியா தென்ற பதிலும் இருந்தன.
ஈழம் தெரியாதவர்கள் தாக்குண்டதைப் பார்த்த ஜனதிபதி வருந்தியிருக்க வேண்டும்.
ஒரு பெரியம்மாள் தன் பெட்டைக்கோழியும் முட்டை களும் பறிபோனதை முறையிட்டதற்கு கோழியும் கொடுப் போம், முட்டையும் கொடுப்போம், என்ருர் என்று பத்திரிகை சொன்னது,
நூற்றி ஐம்பது வருடங்கள் சம்பாதித்த ஒரு கோழியும் முட்டைகளும் தானே.

Page 58
106 இனிப் படமாட்டேன்
குறவன் சட்டியிலே முட்டே அவிச்சான் அவன் சாகும் வரை துக்கம் வச்சான். இதுதான் பெரியம்மாளின் ஜீவிய சரித்திரம். பின் ஒரு கூட்டத்தில் ஜனதிபதி பேசும்போது, தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.பிக்களும் இன வாதம் பேசியதுதான் நாட்டில் வன்செயல் நடக்க காரண மென்றும், கட்டுப்பாடும் கெளரவமும் இல்லா கட்சியில் தான் இருப்பதைவிட வெளியேறுவது மேல் என்றும் குறிப்
பிட்டுள்ளார்.
போற்றத்தக்க வார்த்தைகள். ஜனதிபதி நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் என்று நினைத்
தேன்.
லலிதா குணசேகர என் அறைக்குள் நுழைந்தார்.
"ஹலோ, சொல்லாமல் வந்துவிட்டேன்.”
*பாதகமில்லை. உட்காருங்கள்.” எழுந்து வரவேற்றேன்! ‘அந்த சர்ச்சையை ஒத்தி வைத்துவிட்டோம்.” **ரொம்ப நல்ல காரியம், " என்றேன்.
“என்ன, நீங்கள் ஒரு பிற்போக்குவாதிபோல் மாறி வருகிறீர்கள்."
*நான் பிற்போக்குமில்லை, முற்போக்குமில்லை. பேசிப் பேசி என்ன பிரயோஜனம். 1977 பூராவும் பேசினேம். நடந்தது என்ன?”
"இடதுசாரி இயக்கங்களுக்கும் முற்போக்கு வாதிகளுக் கும் பலமில்லைதானே.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 107
“ஒற்றுமையும் இல்லை. வன்செயலைப்பற்றி பேசுவது எல்லோருக்கும் ஒரு டொழுதுபோக்காக அமைகிறது.”
“என்ன செய்வது சந்திரன்.” *சரி இதைப் பாருங்கள்,” என்று படங்கள் வந்திருந்த பத்திரிக்கையைக் காட்டினேன். வாங்கிப் படித்துவிட்டு, வாயைக் கோணிக்கொண்டான்.
*ஏன்? என்றேன். *கோழி முட்டை கொடுப்பாராமே அது நல்ல செய்தி தான்! மற்ற உபன்யாசங்கள் எல்லாம் அவர் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். நடந்த பின் செய்வதில் என்ன பயன் எதிர்க்கட்சித் தலைவர் மேல் கொண்டுவந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தை அவர் தடுத்திருக்கலாமே.”
தலையை ஆட்டினேன்! “பித்தர்களைக் கண்டிக்க அவருக்கு முடியவில்லை யாக்கும்.
"இந்தியா பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது. உலக அரங்கிலும் இவருக்கு நல்ல பேரில்லையாம். இவரது சுற்றுப்பிரயாணம் அதைச் சற்றுச் சமாளிக்கலாம்” என்ருன்.
“சரி போகட்டும். நாங்கள் உதைபட்டது தான் மீதம். பூனிலங்கா ஆட்சிக் காலத்திலும் எங்கள் கதி அப்படித்தான். சரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
*தோட்டப் பகுதிகளில் நடந்த சம்பவங்களின் விபரம் தருவீர்களா?
“அவைகளெல்லாம் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன,” என்றேன்.
“அவைகளை யார் நம்புவார்கள்?” *சரி என்னிடம் ஒரு தமிழ் ரிப்போர்ட் இருக்கிறது அதை மொழி பெயர்த்துக் கொண்டு பிரதியை எனக்கு அனுப்புங்கள்.”

Page 59
108 இனிப் படமாட்டேன்
*ரொம்ப உதவி.?
சந்தியாகு எனக்கு எழுதிய கடிதத்தைக் கொடுத்
தேன்.
*உங்கள் ஆபீசுக்கு வந்தால் தேனீர் கிடைக்காதோ,” அப்போது தட்டில் பியூன் டீ கொண்டுவந்து வைத்தான். “சிங்களவர்களுக்கு ஸ்பெஷல் டீ,” என்றேன். சிரித்துக்கொண்டு தேனீர் சாப்பிட்டோம்.
'நீங்கள் சிங்களப் பெண்ணைத்தானே மணந்திருக்
கிறீர்கள்.”
“அந்த மேசையில் இருப்பவன் அதற்கு சாட்சி:” என்று
ஜகனக் காட்டினேன்.
கொல் என்று சிரித்தான். “உங்கள் மனைவி வேலை செய்யும் பெண்ணு?
*அவள் ஒரு டிரேண்ட் கிரஜ்வேட் டீச்சர், இப்போது சமையல் வேலை,” என்றேன்.
"நீங்கள் ரொம்ப பிற்போக்கான மனிதர்!’
*சமையல் மாத்திரமல்ல, ஆடு மாடுகளையும் கவனிக் கிருள்,” என்றேன்.
“சே, அவளை ஒரு தரம் பார்க்க வேண்டும்.”
“கட்டாயம் வாருங்கள், பால் எடுக்கச்சொல்லி கொடுப் Aurreir.
*தமிழ் பேசும் ஆண்களை நையப்புடைக்க வேண்டும் என்று சிரித்துக்கொண்டு எழுந்தான்.
*சரி வருகிறேன்.”
*அவனை கதவு வரை போய் அனுப்பி வைத்தேன்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 109
அவன் காலஞ்சென்ற பிலிப் குணவர்த்தணுவின் மைத் துனர் மருமகன்! அவரைபோலவே தர்க்கரீதியாய் பயமில்லால் பேசுவான். சமத்துவத்திற்கும் சமாதானத் திங்கும் வேலை செய்யும் எல்லா ஸ்தாபனங்களிலும்போய் சரளளாகப் பேசுவான். அவன் ஒரு ஆராய்ச்சியாளன் அது அவனேடு ஒட்டிக்கொண்டிருந்தது. இவனுக்கும் சித்ராவுக்கும் எவ்வளவு வித்தியாசம். அதேபோல் கண்ணம் மாளுக்கும் பசுபதிக்கும் சில வித்தியாசங்கள். பொதுவில் எல்லோரும் கெட்டிக்காரர்கள்.
கண்ணம்மாள் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவள், பல வழிகளிலும் அவள் உயர்ந்திருந்தும் தலைக்கணமில்லை. உடை மாத்திரம் மாறியிருந்தது. அவள் தந்தை ராஜகாத்தான் வாத்தியார். அவர் தினம் பாடிய பதினெட்டு சித்தர்கள் பாடல்கள், நளன் கதை, பாண்டவர் வனவாசம், தோத் திரப்பாடல்கள், இவற்றின் முத்திரை அவன் போக்கில் பதிந்திருந்தன.
பத்து வருடங்களுக்குப்பின் கண்ணம்மாளை நான் சந்தித்தது என் உடலோடு உடலாய் ஒட்டிக்கொண்டிருந்த நினைவுகள், தேய்ந்த கனவுகள் எல்லாம் என் உள்ளத்தில் அலை அலையாய் எழுந்து மோதின கண்ணம்மாள் என் பால்யப் பருவத்தில் வந்த ஒரு சோதனை. சித்ரா என் வாழ்க்கைக்குள் வந்த முதுமை. அவள் என்னைத் துணையாக ஏற்றுக்கொண்டது ஒரு விசித்திரமான கதை.
அத்தியாயம் ஒன்பது
பசுபதி என் வாழ்க்கையில் இடி முழக்கம்போல் வந்து அதன் எதிரொலிபோல் மறைந்தவள்.அந்தசந்திப்பு வினையின் பயன்: முன் ஜென்ம தொடர்பின் முடிவு. விருப்பு வெறுப்பு என்பதில்லாமல் முடிந்தது.

Page 60
110 இனிப் பட மாட்டேன்
ஆனல் சித்ரா என்னைத் துணைவனப் எடுத்துக்கொண் டது இன்னும் எனக்குப் புதிராக இருக்கிறதுவே இதிலிருந்து ஒரு பெண்ணின் மனம் எப்படிப்பட்டதென்று கணிக்க முடியாத காரியம். அது கேள்விக்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டது!
25 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை இப்போது நினைத்தேன்.
பசுபதியை திடீரென்று சந்தித்த பின் எனக்கு அமைதி யில்லை. இதை யாரிடத்தில் சொல்லி ஆறுதலடைய முடியும். எனக்கு ஒரேயொரு சினேகிதை உண்டு. அவள்தான் கண்ணம்மாள். நான் பிறந்த இடத்தில் பிறந்தவள். என்னேடு வளர்ந்தவள், என்னுேட படித்தவள். அம்மாளுக்கு துணையாக எங்கள் வீட்டில் அப்போ வேலை செய்துகொண்டி ருந்தாள்.நான் கல்லூரிபடிப்பைமுடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும், பழைய கண்ணம்மாளை புதிய தோற்றத்தோடு கண்டேன். கண்ணும் மூக்குமாக இருந்தாள். அவள் உடலமைப்பு என் மூச்சைப்பிடிப்பது போலிருந்தது. அவளை வீட்டில் சந்தித்ததில் எனக்கு மிக சந்தோஷம். அவளுக்கும் சந்தோஷம் என்றே தெரிந்தது. ஆனல் அம்மாளுக்கு சற்று திருப்தியில்லை. இதை அவர் மறைத்து வைக்கவில்லை. நான் வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளே என்னிடம் சொன் ஞர்கள்
*சந்ரா, நல்ல மனுசனுக்கு நாலு வார்த்தே. அதே நல்லா கேட்டுக்க கண்ணம்மா நம்ம சொந்தக்காரப்புள்ளே தான். நீ கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கணும். முந்தி தான் நீங்க சின்ன புள்ளேக! இப்ப அப்படி இல்லே, நீ வேலைக்கு போன பிறகு அடிக்கடி வீட்டுக்கு வராதே?
அதற்கு மேல் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. 10 நாட்களில் ஹைலண்ட்ஸ் கல்லூரி வேளையை ஏற்று அட்ட னுக்கு வந்துவிட்டேன். வீவு நாட்களில் வீட்டுக்குப் போவ தில்லை. ஏதோ வீட்டுக்குப் போனல்கூட ஒரு இரவு தங்கி மறுநாள் திரும்பிவிடுவேன்,

வி. வி. வேலுப்பிள்ளை 1.
பசுபதியை மறக்க முடியாமல் மனதை கூசிக்கொண்டி ருந்தேன். நான் வீட்டுக்குப்போய் கண்ணம்மாளுடன் என் இரகசியத்தைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. இந்தக் காலக்கட்டத்தில்தான் சித்ரா ஹோஸ்டலுக்கு வந்தாள்.
அன்று ஒரு சனிக்கிழமை. எங்கள் சக போர்டர் முதலியார் மொனராவளை வீட்டுக்குப் போய்விட்டார். ராஜன் கொழும்புக்கு போயிருந்தார். கிரிக்கட் வீரர் பொலக்.குணரட்ண,நான்மூவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மெண்டிஸ் அம்மையார் அங்கு வந்தார். காரணம் இல்லாமல் அங்கு அவர் வரமாட்டார்! ஏதோ முக்கிய விசயம் சொல்லப்போகிருர் என்று எதிர்பார்த்தோம்.
'ஒரு புதிய போர்டர் நாளை வரப்போகிருர், அவள் சிறியாத கல்லூரிக்கு டீச்சராக வருகிறவள்! உங்கள் சகோதரியைப்போல் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும்? என்ருர்,
எங்கள் சார்பாக பொலக் பேசினர்.
'நீங்கள் சொன்னபடி நடக்கும். இந்த பாட்டா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன்.”
மெண்டிஸ் அம்மையார் சிரித்துக்கொண்டு போய் விட்டார்.
சாப்பிட்ட பின் மேல் பகுதிக்கு சென்று விராந்தையில் அமர்ந்தோம் குணரட்ண கிண்டல் பேர்வழி. என்னை பார்த்து ஒரு விதமாய் சிரித்தார்.
“என்ன குணே,” என்ருர் பொலக்
‘சந்திரன் கவி எழுதுகிறவன், அவனுக்கு ஒரு இன்பி ரேசன் வரப்போகிறது, தூங்காமல் சரமாரியாய் கவி எழுதப்போகிருன், கொஞ்ச நாளாய் காதல் நோய் கண்டது போலிருக்கிருன் அதற்கு மருந்து வருவதில் எனக்கு திருப்தி,” என்ருர்

Page 61
12 இனிப் படமாட்டேன்
“ஒரு பெண் இந்த இடத்திலிருந்தால் சற்று சோபை யாக இருக்கும். உங்களைப்போன்ற வாலிபருக்கு அது நல்லது. ஒழுக்கமாய் நடந்துகொள்ள அது ஒரு சந்தர்ப்பம்,” என்ருர், பொலக்.
‘சார் நீங்கள் சொல்லுவது சரி. நான் சொன்ன ஒரு விச யத்திற்குபதில் நீங்கள் சொல்லவில்லை.”
“என்ன? என்ருர் பொலக்.
'சந்ரனுக்கு காதல் நோய் போலிருக்கிறது. ராஜனேடு தோட்டங்களுக்கு போனவிடத்தில் யாரையோ கண்டு மயங் கிப்போய் கிடக்கிறன்."
எனக்கு சரக்கென்றது.
“அதெல்லாம் அவசியம் வரவேண்டியதுதான் குணே,” என்ருர் பொலக்,
“சரி சார் அந்த மயக்கத்தோடே புதிதாக வருகிறவளைக் கண்டு விழாமலிருந்தால் சரி,” என்ருர் குணரட்ண.
எல்லோரும் சிரித்தோம்,
அன்று இரவு எனக்கு வழக்கம்போல் தூக்கம் வரவில்லை. பசுபதியை நினைத்தேன். கண்ணம்மாளைக் கண்டு பேசு வதற்கு வழியில்லையே என்று நொந்துக்கொண்டேன். அதோடு மறுநாள் வரவிருக்கும் போர்டரையும் நினைத்துக் கொண்டு எப்படியோ தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலையில் ராஜன் கொழும்பிலிருந்து திரும் பினர். வழக்கம்போல் காலை தேனீர் சாப்பிடும்போது புதிய போர்டர் வருகையைப்பற்றி பொலக் சொன்னர்.
“நல்லது,” என்று ராஜன் தலையாட்டினர்.
ராஜன் சில்லறை விசயங்கள் பேசுவதில்லை. இத எல் லோருக்கும் தெரியும். எனவே போர்டரைப்பற்றி மேலும் பேச்சு வரவில்லை,

ஸி. வி. வேலுப்பிள்ளை 113
தேனீர் சாப்பிட மேலே வந்தோம். *சந்ரன் நான் அடிக்கடி பல கிளை ஆபீசுகளுக்கு போக வேண்டும். உங்களுக்கு வேலையில்லாத நாட்களில் ஆபீசில் வந்து சற்றுக் கவனிக்க வேண்டும். நம் ஆட்களுக்கு உங்கள் மேல்பிரியம்,’ என்ருர்,
“நல்லது ராஜன்,” என்று ஒத்துக்கொண்டேன். அன்று அவரும் நானும் காரியாலாம் சென்ருேம். அவர் பதுளைக்குப் புறப்பட்டார் முதலியார் காரியாலயத்திலிருந் தார். அவரோடு பல விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். பின் உருளை வள்ளி தோட்ட வழக்கு பிரிவுக்கவுன்சலில் பேசப் படுவதை எனக்குச் சொன்னர்.
'ஏழைகளுக்குக்கடவுள் நீதி வழங்குவார்,” என்ருர், முதலியார் எப்போதும் கதர் உடுத்துவார். அவர் உயரத்திற்குத் தக்க பண்புடையவர். தூய்மையானவர், அவரை எல்லோரும் சாமி என்று கூப்பிடுவது வழக்கம்.
"மாஸ்டர் ராஜன் அடிக்கடி ஜோலியாய் போனர். நீங்க சனி, ஞாயிறு நாள்கள்ளே இங்கே வாங்க,” என்ருர்,
‘ராஜனும் எனக்குச் சொன்னர் சாமி,” என்றேன். 'அப்ப என்ன நீங்க வாங்க." மணி ஒன்றரையானதும் சாப்பாட்டிற்குப் புறப்பட் டேன்.
ஹொஸ்டலுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு சற்றுத் தூங்கிய பின் படிக்கட்டு வழியாய் கீழ்ப்பகுதியிலுள்ள பூந்தோட்டத் திற்கு போனேன்.
இங்கே தான் மிசி என்ற பேச்சுச் சத்தம் கேட்டது. நான் நின்று கவனித்தேன். போர்டர் மூன்று பெரிய சூட்கேசுக்களைத் தூக்கிக்கொண்டு முன் வந்தான். அதற்குப் பின் நாங்கள் எதிர்பார்த்த போர்டர் பளிச்சென்ற வெளிச் சம்போல் வந்தாள்.

Page 62
114 இனிப் படமாட்டேன்
“இதுதான மிசிஸ் மெண்டிஸ் வீடு? அழுத்தமான குரலில் கேட்டாள்.
*இதுதான்,” என்றேன்.
ஒரே பார்வையில் தலையிலிருந்து கால்வரை பார்த்து விட்டு முகப்புக்குப் போனள். நான் முதலில் கவனித்தது நீண்ட அடர்த்தியான சடை, நீல நிற ஒர்கண்டி சாரி, சற்று கருநீல பிளவுஸ், உயர்ந்த குதிகால் செருப்பு சப்பாத்து அணிந்திருந்தாள். நிறம் மஞ்சளுமல்ல, சிவப்புமல்ல இரண் டிற்கும் மத்தியில், உயரத்திற்குத்தக்க பருமன். நடையில் ஒரு தாளம். எல்லாம் அவளை அலங்கரித்தன. பட்டதாரியாக இருக்கவேண்டும். என்னையறியாமலே எனக்கு தாழ்வு மனப் பான்மை ஏற்பட்டது. பார்த்துவிட்டு மேலே போனேன்.
பொலக் ஜன்னலருகில் அமர்ந்திருந்தார்.
‘போர்டரைக் கண்டாயா?”
**ஆம் சார்.”
குணரட்ணவும் வந்தார்.
“நீ கவி எழுதுவதற்கு அவளிடம் இலட்சணங்கள் உண்டா?
*உண்டு, உண்டு," என்று சிரித்தேன்.
குணரட்ண பி.ஏ. ஒனர்ஸ்காரர். சென் ஜோன் பொஸ் கோவில் உப அதிபர். எல்லோருடனும் ஜோலியாய் பழகும் சுபாவமுடையவர்.
“என் கணக்கில் பேனை, மானிட்டர் எக்சசைஸ் புத்தகம் வாங்கித்தருவேன். ஒரு டயரி தோரணையில் கவிதையாக எழுது,” என்ருர்,
“எனக்கு மானிட்டர் எக்சசைஸ் இன்றே வாங்கிக் கொடுத்தால் நல்லது.”
“பாடத்திட்டம் எழுத நீ விலை கொடுத்து வாங்கு,” என்று சிரித்தார்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 115
மணி நான்கு. வேலைக்காரப்பையன் தேனீர் சாப்பிடக் கூப்பிட்டான். மூவரும் மேலே போய் மேசையில் அமர்ந் தோம். மெண்டிஸ் அம்மையார் போர்டருடன் வந்தார். நாங்கள் எழுந்தோம். அறிமுகம் செய்து வைத்தார்.
*மிஸ் சித்ரா பெர்னண்டு. மிஸ்டர் பொலக், மிஸ்டர் குணரட்ண பொஸ்கோ கல்லூரி உப அதிபர், மிஸ்டர் பாலச்சந்திரன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாஸ்டர்,” என்ருர்,
“சித்ரா உன்னைப்பற்றி மிசிஸ் மெண்டிஸ் சொன்னர்கள், உட்கார்,” என்ருர் பொலக்.
எல்லோரும் அமர்ந்தோம், மெண்டிஸ் அம்மையார் சிற்றுண்டித்தட்டை சித்ரா பெர்ணுண்டுவுக்கு தள்ளி வைத் தார்.
‘மிஸ் பெர்னண்டு உங்களுக்காக ஸ்பெஷல்,” என்ருர் குணரட்ண.
*உணவில் ஸ்பெஷலாய் ஒன்றுமில்லை. வசதியாய் கிடைத்ததைச் சாப்பிடு,” என்ருர் பொலக்.
சிரித்துக்கொண்டு சாப்பிட்டோம்.
மிஸ்டர் ராஜனும் முதலியாரும் இன்றில்லை.
‘ஒ மிஸ்டர் பொலக். உங்கள் பெயரைக் கேட்டதாய் ஞாபகம்,” என்ருள்.
*மிஸ் பெர்ணுண்டோ இவர் பிரபல கிரிக்கட் வீரர், பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்,”
*சரி, சரி உங்களைப்பற்றி பத்திரிகைகளில் நான் பார்த் திருக்கிறேன்.” என்ருள் சித்ரா பெர்ணுண்டு.
*பாலச்சந்திரன் ஒரு கவி. இனிமேல்தான் அவரை ப் பற்றி பத்திரிகைகளில் வரும்,” என்ருர் குணரட்ண.
கண்களை லேசாய் உயர்த்திக்கொண்டு என்னைப் பார்த்
தாள்.

Page 63
16 இனிப் படமாட்டேன்
தேனீர் அருந்தி முடிந்தது. வெளியே கதவைத்தட்டும் சத்தம், வேலைக்காரப்பையன் வந்து; "பறிபாத பெரிய மாஸ்டர் வந்திருக்கிருர்,” என்ருன் சிங்களத்தில்.
குணரட்ண முகப்புக்குப்போனர்.
“ஹலோ தந்தே மிஸ் பெர்ணுண்டோ வந்துவிட் டார்கள்,” என்ருர்,
சித்ரா பெர்னண்டோவும் முகப்புக்குப் போனுள். நாங்கள் எங்கள் இடத்திற்குப் போனேம். ‘சந்ரன் உலாவப் போவோம். தயாராகு,’ என்ருர் பொலக்.
என் அறைக்குப்போய் உடுத்திக்கொண்டு விராந்தைக் குச் சென்றேன். குணரட்ண வந்தார். ‘ஏய் சந்ரன் உனக்கு சான்ஸ் இல்லை. டிரெய்ன்ட் ஹொனர்ஸ் கிராஜ்வேட். பெண்கள் பகுதிக்கு உப அதிபர் மாதிரி. நீ 60 ரூபா சம்பளம் வாங்கும் சாதாரண ஆசிரியன். தந்த நாராயண யாரையும் அவளை அணுக இடம் கொடான்,” என்ருர்,
தந்த நாராயண முறுக்கான மீசைக்காரன். நெசனல் பட்டு உடைக்காரன். என் போன்றவர்களிடம் சரியாய் பேசும் வழக்கமில்லை.
*கவலைப்படாதே சந்ரன், உனக்கு ஒரு யோகக்காரி வருவாள். வா போகலாம்," என்ருர் பொலக்.
இருவரும் கீழே இறங்கிப் போனுேம். முகப்பில் தந்த நாராயண சித்ரா பெர்ணுண்டுவுடன் பேசிக்கொண்டிருந் தார்.
நாங்கள் மல்லியப்பூ ரஸ்தா வழியாய் 2 மைல் நடந் தோம். நடக்கும்போது பொலக் பேசமாட்டார். அவர் ஒரு தனிரக மனிதர். கிரிக்கட்டைப்பற்றி பேசமாட்டார். அதைப்பற்றி பேச வைப்பது பெரும் கஷ்டம். பேசினலும் ஒரே வசனத்தில் முடித்துவிடுவார்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 117
“ஒரு காலத்தில் நான் நன்முக விளையாடினேன். இப் போது நான் பென்சன்காரன். அது வாழ்க்கையில் முடிந்த அத்தியாயம்,” என்பார்.
அவரின் பேச்சுக்கு அட்டனில் மரியாதை. பெரிய கிரிக் கெட் போட்டி தரவளை கிளப்பில் நடக்கும்போது அவருக்கு விசேஷ அழைப்பு வரும். கிரிக்கட் கோர்ட் அணிந்து காரில் போய்வருவார். முதலியாருக்கு இதுபோன்ற விசயங்களில் மோகம்.
*எப்படி சார்? என்பார் முதலியார் .
“ஏதோ மெச் நடந்தது.” அதற்கு மேல் பேச்சு வளராது. மற்ற விசங்களைப்பற்றித் பேசுவார்,
7 மணிக்கெல்லாம் ஹோஸ்டல் திரும்பினேம். சித்ரா பெர்னண்டு இராச்சாப்பாட்டிற்கு வருவாள் என்ற எண் ணத்தோடு போனேன். அவள் இல்லை. நாங்கள் மூவரும் சாப்பிட்டோம். சந்ரன் சித்ராவுக்கு பிரயாண அலுப்பில் படுக்கப்போய்விட்டாள்.
‘போய் ஏதாவது எழுது," என்று குணரட்ண தூண்டினர்.
முதல்நாள் இப்படித்தான் ஆரம்பித்தது. அன்றிரவு எனக்கு தூக்கம் லேசில் வரவில்லை. 11-30க்கு கீழ் கோச்சு சத்தம் கேட்டது. பின் 2 மணிக்கு மேல் கோச்ச சத்தம் கேட்டது. இது என்ன பைத்தியம். யாராவது அழகான பெண் வந்தால் நாம் மெனக்கட்டு அவளைக் கனவு கண்டு கொண்டிருப்பதா? என்று என்னை நொந்துகொண் டேன். காலையில் களைத்துப்போய் எழுந்தேன்.
“என்ன ஒரு மாதிரியாய் இருக்கிருய், தூங்கவில்லையா முடவனுக்கு கொம்புத்தேன் கிடைக்காது வீண் ஆசைப் படாதே சந்ரன்,” என்ருர் குணரட்ண.
எனக்கு எரிச்சல். நான் பதில் சொல்லவில்லை. பள்ளிக் கூடத்திற்குப் போக தயாரானேன். சென்ற வெள்ளிக்
இ-8

Page 64
118 இனிப் படமாட்டேன்
கிழமை அணிந்திருந்தவைகளைப் போட்டுக்கொண்டு காலை தேனீர் சாப்பிட மற்றவர்களோடு போனேன். குணரட்ண அன்று புது சூட் போட்டிருந்தார். எங்கள் மூன்று பேருக்கு மாத்திரம் தட்டுக்கள் போடப்பட்டிருந்தன. சித்ரா பெர் ஞண்டு நேரத்தோடு போய்விட்டாள்.
அன்று மாலை ஒரு ஏழு மணியளவில் முதலியார் மொனருவளை வந்ததும், குணரட்ண புதிதாக வந்த போர் டரெப்பற்றி சொன்னர்.
**நல்லது நல்லது பார்க்கலாம்.” என்று ஒருவிதமாய்ச் சொன்னர்.
அதற்குப்பின் பட்டுச்சாரம், பட்டு பிஜாமா கமிஸ் அணிந்துகொண்டார். வயது 55 ஆகியும் வாலிபனைப் போலிருந்தார். சாப்பாட்டிற்கு முன் பாட ஆரம்பித்தார் அது தன்னை விளம்பரம் செய்துகொள்ளும் தோரணையிலி ருந்தது.
கீழ் சாப்பாட்டிற்கு உட்கார்ந்த பின் சித்ரா பெர்ஞண்டு வந்தாள். முதலியார் தன்னை அறிமுகம் செய்துகொண் டார். அவள் தெரிந்துகொள்வதற்காக ருேட்டில் நடக்கும் விசயங்களையும் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் அவர் சந்தித்த வெள்ளைக்காரர்களைப்பற்றியும் பொலக்குவுக்கும் குணரட்ண. வுக்கும் சொன்னர்.
சாப்பாடு முடிந்தது முதலியார் முகப்புக்குப் போனர். அங்குச் சித்ரா பெர்ணுண்டு போகவில்லை. தன் அறைக்கு போய்விட்டாள்.
நாங்கள் மேலே வந்தோம்.
*அவள் கொம்பி. இந்த முதலியாரின் படோடோப கதைகளில் மயங்க மாட்டாள்! இவன் வெள்ளைக்காரர் சப்பாத்தை நக்கிறவன், வெள்ளைச் சிப்பாய்களை வீட்டுக்குக் கூட்டி போய் விருந்து போட்டு தான் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று பீத்துகிறவன் உண்மையில் இவன் தகப்பன் ஒரு பார் கீப்பர்,” என்ருர் குணரட்ண

வி. வி. வேலுப்பிள்ளை 9
பொலக்கும் நானும் சிரித்துக்கொண்டோம். ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாள் மாலையில் முதலியார் 5 மணிக்கெல்லாம் ஹொஸ்டல் திரும்பி புதிய பட்டுச்சாரம், பிஜாமா கமிஸ் போட்டுக்கொண்டு கீழே போனர். அப்போது தந்த நாரா யண சித்ரா பெர்ணுண்டுவுடன் முகப்பில் பேசிக்கொண்டிருந் தார். என்ன நடக்கிறதென்று பார்க்க குணரட்ணவும் கீழே போனர்.
போய் 10 நிமிசத்தில் குணரட்ண சிரித்துக்கொண்ட மேலே வந்தார்.
*தெரியுமா சங்கதி?"
*என்ன? என்றேன்.
*அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இவன் போயி ருக்க வேண்டியதில்லை. தந்த நாராயண இவனுக்கு சாட்டை கொடுத்துவிட்டான். ஹலோ முதலியார் இன்றைக்கு வாசியா,உங்களுக்குப் போல் எங்களுக்கு வாசியில்லை. ரூ.300 சம்பாதித்திருப்பீர்கள்,” என்று பச்சையாக போட் டான்.
‘இவனுக்கு முகம் செத்துவிட்டது. இனி போக மாட்டான்,”என்று சிரித்தார்.
*முதலியார் அசல் சின்னப்பிள்ளை.” என்ருர் பொலக்.
‘ராசா வீட்டுப் பிள்ளை,” என்ருர் குணரட்ண
அன்று இராச்சாப்பாட்டின்போது முதலியார் கதை அளக்கவில்லை. பொலக் சித்ரா பெர்னண்டுவோடு சில வார்த்தைகள் பேசினர். அவள் குணரட்ணவின் பள்ளிக்கூட விசயமாக இரண்டொரு விபரம் கேட்டாள்.
அவள் நடத்தை எல்லோரையும் சற்று ஒதுங்கியிருக்கச் செய்தது. ஆனல் என் மனம் எரிமலைப்போலக் குமுறிக்

Page 65
20 இனிப் படமாட்டேன்
கொண்டிருந்தது. நான் வேலைசெய்யும்போதும், ஹோஸ்ட லுக்கு வரும்போது படுக்கும்போதும் அவள் முகம் என்னை விட்டு அகலவில்லை. எவ்வளவோ சமாதானம் சொல்லிக் கொண்டேன். அவள் பெரிய இடத்துப்பெண், நீ தோட்டக் காட்டான். அவள் பட்டதாரி, நீ வெறும் 60 ரூபா சம்பளக் காரன். அவள் உப அதிபர். நீ சின்ன பள்ளிக்கூடத்தில் சின்ன வாத்தியார். இவைகளை என் மனம் புரிந்துகொண்ட தாய்த் தெரியவில்லை. பத்து நாட்களுக்குப்பின் ராஜன் வந்தார். மாலை தேனீர் நேரம்.
“ஒரு, விசயம்.” என்ருர்,
என்ன ராஜன்? “சோல்பெரித்திட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தின் பொதுத்தேர்தல் வருகிறது. என்னையும் போட்டியிடும்படி காரியக் கமிட்டிமுடிவு செய்திருக்கிறது,” என்றர்.
எனக்கு பெரும் சந்தோஷம் *வெற்றி உங்க்ளுக்கு, நீங்கள் எம்.பிதான்,” என்றேன். நாங்கள் பேசியதை குணரட்ண கேட்டுவிட்டு, “ராஜன் கொங்கிராஜலேசன்,” என்ருர்,
*தேர்தலுக்கு ஒரு மாதமிருக்கிறது," என்ருர் ராஜன்.
“எந்தத் தொகுதிக்கு? *மஸ்கெலியா நடேச ஐயர் சீட்.” “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.” பொலக் ராஜன் கையை குலுக்கினர்.
தேனீர் சாப்பிடப்போனுேம். சித்ரா தேனீர் குடித்துக் கொண்டிருந்தாள். ராஜனை மேலும் கீழுமாக பார்த் தாள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 12
‘இவர்தான் ராஜன் வருகிற தேர்தலில் போட்டியிடப் போகிருர்,” என்றேன்.
ராஜன் சித்ரா பெர்ணுண்டுவுக்கு கைகூப்பினர். அவளும் எழுந்து வணங்கினுள்.
*உங்களைப்பற்றி சொன்னுர்கள்,” என்ருள்.
“நீங்கள் வருவதாய் சொன்னர்கள். நீங்கள் இங்கிருப் பதில் எங்களுக்குச் சந்தோசம்,” என்ருர் ராஜன்.
ராஜன் சில்லறை சங்கதிகள் பேசுவதில்லை. தேனீரை சாப்பிட்டு முடித்தோம்.
‘ராஜன் நீங்கள் பார்லிமெண்டுக்கு நிச்சயம் போவீர் கள். கல்வி அமைப்பில் மாறுதல் வேண்டுமென்று கேட் பீர்களா? குணரட்ண கேட்டார்.
*அரசியல் கொள்கை எனக்கு லேசாய் தெரியும். நடை முறையில் செய்ய வேண்டியதை உங்களிடம் நான் தெரிந்து கொள்ளவேண்டும். எனக்கு ஒரு சந்தேகம். படிப்பு எதற்காக? உயர்ந்த வேலையில் அமர்ந்து வெறும் சம்பளம் பெறுவதற்காகவா அல்லது நாகரீகமான மனிதர்களாய் வாழவா குணே?
*நாகரீகமான மனிதர்களாக வாழத்தான்,” என்று குணரட்ண பதில் சொன்னர்.
‘அதற்கு நல்ல தீர்க்க கல்வி முறை, தீர்க்க தரிசனமுள்ள விசாலமான அன்பு மனம் படைத்த ஆசிரியர்கள் தேவை,” என்ருர்,
*லந்தர் பிடித்து தேட வேண்டும்,” குணரட்ண சொன்னர்.
'நீங்கள் மூன்று பேரும் எக்காரணத்திற்காக ஆசிரியர் தொழிலை ஏற்றுக்கொண்டீர்கள்?
தாங்கள் பேசவில்லை.

Page 66
122 இனிப் படமாட்டேன்
*சந்ரன் ஒரு பத்திரிகையில் சேர்ந்து நல்ல சம்பளம் வாங்கியிருக்கலாம். ஏன் குணே நீங்கள் பட்டதாரி. அட்வ கேட்டாயிருக்கலாம்.”
*மிஸ் பெர்ணுண்டும் பட்டதாரி,” என்ருர் குணே. சித்ரா பெர்ணுண்டு முகத்தை ஒரு மாதிரியாய் செய்தாள்.
நல்லது நீங்கள் ஏன் உபாத்திமை தொழிலுக்கு வந்தீர்கள். சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தானே?
*ஏதோ சமூக சேவை,” என்ருல் சித்ரா பெர் ஞண்டோ.”
“சமூக சேவை மாத்திரமல்ல, புனித சேவையும்கூட. தேர்தலில் வெற்றி கண்டால் கல்வி விசயமாக நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்,” என்று எழுந் தார்.
வெளியே கதவைத்தட்டும் சத்தம், தந்த நாராயண வந்திருந்தார். ராஜன் அவரைப்போய் சந்தித்தார். சித்ரா பெர்ணுண்டுவும் போய், “மிஸ்டர் ராஜன் தேர்தலில் போட் டியிடப்போகிருர்,” என்ருள்.
*போட்டி என்ன? நீங்கள் எம்.பிதான். உங்களுக்கில் லாத ஒட்டா.”
தந்த நாராயண மரியாதையாகப் பேசினர்.
*வெற்றி பெற்ருல் கல்வி விசயமாக உங்களிடம் பாடம் கேட்டுக்கொள்வேன்.”
*நல்லது சரி நான் வருகிறேன்.”
*ஒ, ஹோ பிரச்சாரத்தின்போது எங்கள் பள்ளிக்கூடத் தில் உங்களை பேச வைக்கப்போகிருேம்.
“நல்லது சரி, நான் வருகிறேன்.?

ஸி. வி. வேலுப்பிள்ளை 123
மரியாதையோடு தலையாட்டிவிட்டு மேலே வந்தார் நானும் பின் தொடர்ந்தேன்.
*சந்ரன் சித்ரா பெர்ணுண்டு மேன்மையான, மேலான
பெண் போல தெரிகிறது. எதற்கும் யோகம் வேண்டும்.*
“யாருக்கு ராஜன்?
“உங்கள் போன்றவர்களுக்கு.”
*நான் எங்கே அவள் எங்கே. அவள் பட்டதாரி, பெரிய இடத்துப்பெண் போலிருக்கிறது.”
'நீங்கள் தாழ்வு மனப்பான்மை ஆசாமி. அதற்கு மற்ற பெயர் அடக்கம். சரி நாளையிலிருந்து தேர்தல் பிரச்சாரம் அது சம்பந்தமான ஏனைய வேலைகளை கவனிக்க வேண்டும். என் பகுதியை நீங்களும் முதலியாரும் கண்காணிக்க வேண்டும். என்னை மற்ற தொகுதிகளில் போய் கண் காணிக்கும் படி உத்தரவு. கடமையைச்செய்ய வேண்டும். ஆபிஸ் போகலாமா.”
இருவரும் சங்கக்காரியலயம் போகும்போது இராச்சாப் பாட்டிற்கு சுணங்கி வருவதாய் கூறினேம்.
எப்போதும்போல் கூட்டம், ராஜன் போட்டியிடப் போவதைப்பற்றி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி.
*உருளைவள்ளி போராட்டத்தளபதி ராஜனுக்குத்தான் ஒட்டு. கைமேல் வெற்றி,” என்று முதலியார் அன்போடு சொன்னர்.
'உங்கள் ஆசிர்வாதம் கிடைத்தது என் யோகம் சாமி," என்ருர் ராஜன்.'
அன்று 11 மணிவரை தேர்தல் வேலைக்கான திட்டம் வகுத்தேன். அவைகளை அமுல்படுத்துவதற்கு ஆட்களை

Page 67
124 இனிப் படமாட்டேன்
நியமித்தோம். மஸ்கெலியா தொகுதி வேலைகளை முதலியாரி ட மும் என்னிடமும் ஒப்படைத்தார்.
சாப்பிட்டுப்படுக்கும்போது இரவு 12 மணி. ராஜன் சித்ரா பெர்ணுண்டுவைப்பற்றி சொன்னதை நினைத்துக் கொண்டு கிடந்தேன். எனக்கும் அவளுக்கும் எவ்வளவு தூரம். முடவனுக்கு கொம்புத்தேன் என்ற கதைதான்.
தேர்தல் வேலையை கவனிப்பதற்கு என் குரு தேவர் ஸ்டீபன் ஜோசப்பிடம் உத்தரவு கேட்டேன். கிழமை நாட்களில் வேண்டிய நேரம் லீவு தருவதாய் சொன்னர் அதன்படி வேலையை மும்முரமாகச் செய்தேன். ஒரு நாள் மாலை கவரவளை சதாசிவம் கணக்கப்பிள்ளை வீட்டுக்குப் போனுேம். சந்தியாகு எங்களுக்குப் பெரும் மரியாதை செய்தார். பேச்சோடு பேச்சாக பசுபதி திருச்சிக்குப்போய் இருப்பதாக சொன்னர்.
ஐந்து மாதங்களுக்கு முன் பசுபதியும் நானும் இலை வெட்டப் போன தோட்டத்தைப் பார்த்தேன். அந்த சம்பவம், அதன் ஞாபகம் என்னை என்னவோ செய்தது.
அத்தியாயம் பத்து
ஹாஸ்டலில் என் வாழ்க்கை சரளமாய் ஒடிக்கொண் டிருந்தது. சித்ரா பெர்ணுண்டு இங்கு வந்து மூன்று வாரங் களாகிவிட்டன. முதல் நாள் அவளை எந்த தூரத்தில் கண்டேனே அதே தூரத்தில் தானிருந்தாள்.
தேர்தல் வேலை அநேகமாய் மாலை 5 மணிக்குத்தான் ஆரம்பமாகும். சில சமயங்களில் மாலை தேனீர் சாப்பிடும் போதுதான் அவளைக் காண்பேன். அப்போது குணரனட் அல்லது தந்த நாராயண வந்து விடுவார்கள். நான் விலகிப் போய்விடுவேன்.

ஸி வி. வேலுப்பிள்ளை 125
கோர்ட் நாட்களில் அதாவது, திங்கள், செவ்வாய், புதன் நாட்களில் சித்ரா பெர்ணுண்டு இராச்சாப்பாட்டிற்கு மேசைக்கு வரமாட்டாள். முதலியார் மொனராவளையை அவளுக்குப் பிடிப்பதில்லை. அவர் லஞ்சப் பேர்வழியென் பதை தந்த நாராயண சொல்லியிருக்க வேண்டும். எனவே அவள் முதலியாருடன் பேசாது சற்று ஒதுங்கியே இருந்தாள்.
ஒருநாள் மாலையில் தேர்தல் சம்பந்தமாக குணரட்ண வோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்,
“இந்த மூளும் கிளாஸ் முதலியார் ஒண்ணும் கிளாஸ் சித்ராவுக்கு வலை போடப்பார்த்தார். அது நடக்கவில்லை. இவன் ராஜ குடும்பமாம். எனவே தோட்டக்காட்டு ராஜனுக்கு ஒட் கொடுக்க மாட்டானும்,” என்று சொன்னர்,
'உண்மையா,” என்றேன்.
*ஆமாம். இவனுக்கு இனத்துவேசம். சாக்கடையி லிருந்து வரும் வெள்ளை சோல்ஜர்களை வீட்டுக்குக் கொண்டு போய் விருந்து போடுறவன் போக்கு அது. ராஜன் போன்ற மேதைக்கு இவன் ஒட்டு எதற்கு. எனக்கு தெரிந்த அநேக சிங்களவர்கள் ராஜனுக்கு G3 GT L - கொடுப்பார்கள்,” என்றர்.
இவர் சொல்வதில் உண்மையிருப்பது போல் உணர்ந் தேன். சில சமயங்களில் பொலக், குணரட்ண, நான் தேர்தல் விசயமாக பேசும்போது முதலியார் மொனரா வளை அங்கு வரமாட்டார். கேலி செய்வதுபோல் இரண்டொரு வார்த்தைகளை எறிவார்.
“என்னடா தோட்டக்காட்டானுக்கு ஒட்."
அப்போது குணரட்ண கண் சாடை செய்வார்.
மெண்டிஸ் அம்மையார் கத்தோலிக்கர். பொலக் டச்சு பரங்கி, குணரட்ண பண்புள்ள ஆசிரியர். இவர்கள் ராஜன்

Page 68
126 இனிப் படமாட்டேன்
வெற்றி பெற உதவும்படி தங்கள் நண்பர்களிடம் சொல் வார்கள். பொதுவாகவே ஹட்டன் பகுதி சிங்களவர்கள் ராஜனுக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர் பொதுஜன ஊழியர் படித்தவர், பண்புள்ளவர், அவர் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நினைத் தார்கள். எங்கள் அதிபர் ஸ்டீபன் ஜோசப், மூத்த ஆசிரியை மிஸ் மல்தெனிய ஆகியோர் ராஜனுக்காக பெற்றேரிடம் பிரச்சாரமும் செய்தார்கள்.
ஒரு திங்கட்கிழமையன்று வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். ஸ்டீபன் ஜோசப் என்னைக் கூப்பிட்டு அனுப்பினர், போனேன்.
*உதவி டைரக்டர் ஜெயசூரிய வந்திருக்கிருர், நேற்று மாலை அவரை அடம்ஸ்பீக் ஹோட்டலில் வைத்து சந்தித் தேன். அவர் என் நண்பர். கிருத்துவக்கல்லூரியில் நாங்கள் இருவரும் மாணவர்களாக இருந்தவர்கள். பின் ஒரே கல்லூரியில் படிப்பித்துமிருக்கிருேம். இன்று 130 மணிக்கு பறிபாத கல்லூரியில் ஆசிரியர்கள் கூட்டமிருக்கிறது? உன்னைப்பற்றி அவருக்குச் சொன்னேன். சந்தோசப்பட் டார். சில சமயம் கூட்டத்தில் நீ பேசவேண்டி வரும்,' என்ருர்,
எனக்கு சற்று பதட்டம். அதோடு என் மனம் வெகு வேகமாய் வேலை செய்தது. சித்ரா பெர்ணுண்டு கட்டாயம் கூட்டத்தில் இருப்பாள். அவசியம் பேச வேண்டும். என்ற முடிவுக்கு வந்தேன்.
‘சார், நான் எதைப்பற்றி பேச வேண்டும்?”
*உன்னை பேசக் கூப்பிடுவதாய் சொன்னர். வேருென்றும் சொல்லவில்லை.”
சரி, என்று சொல்லிவிட்டு என் வகுப்புக்கு வந்து வேலை யில் ஈடுபட்டேன். பாடங்கள் முடிய 12-30 ஆகிவிட்டது

ஸி. வி. வேலுப்பிள்ளை 127
நான் ஹோஸ்டலுக்கு சென்றபோது சித் ரா பெர்ணுண்டோ ஜல்லென்று உடுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
*மிஸ்டர் சந்ரன், எங்கள் கல்லூரியில் இன்று ஆசிரியர்கள் கூட்டம். நீங்கள் வரவில்லையா, நேரமாகி விட்டதே,” என்ருள்.
“சீக்கிரம் வருவேன். நீங்கள் போங்கள்,” என்றேன்.
இன்றுதான் சித்ரா பெர்ணுண்டோ என்னிடம் அவ்
வளவு பேசினுள். குணரட்ண சைனுசில்க் சூட்டணிந்து மாப்பிள்ளைபோல் வந்தார்.
*ஏய் சந்ரன், உடைகளை மாற்றிக் கொண்டு சீக்கிரம் வா,’ என்ருர்,
'நீங்கள் போங்கள், சாப்பிட்டதும் வருகிறேன்."
இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு சூட்டை மாற்ற மேலே போனேன். பொலக் இருந்தார்.
*நீ போகவில்லையா? என்ருர்,
“குணரட்ண உடைகளை மாற்றச்சொன்னர்,” என்றேன்.
*சே! நேரமாகிவிட்டது, போட்டிருக்கிற சூட் சுத்தமா யிருக்கிறது. இதுபோதும். ஒடு,” என்ருர்,
நான் பூரீபாத கல்லூரி ஹாலுக்குள் போகும்போது 100 ஆசிரியர்கள் கூடியிருந்தார்கள். எங்கள் அதிபர் ஸ்டீபன் ஜோசப், ஆசிரியை மிஸ் மல்தெனியா ஆகியோர் ஒரு பக்கத் திலிருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் நானும் போய் அமர்ந்தேன்.
*சந்ரன் நீ கட்டாயம் பேசு,” என்ருர் மிஸ் மல்தெணிய
நான் தலையை ஆட்டினேன்,

Page 69
128 இனிப் படமாட்டேன்
சித்ரா பெர்ணுண்டோ எங்கே என்று கவனித்தேன். அவள் முன் வரிசையில் தந்த நாராயணவுக்கு பக்கத்திலிருந் தாள். அவள் தலையும் பாதி முகமும் தெரிந்தது.
உதவி டைரக்டர் வருகைக்காக பார்த்துக்கொண் டிருந்த மாணவன் ஓடி வந்து அவர் வருவதாய் சொன்னன்.
மூன்று கல்லூரிகளின் அதிபர்களும் வெளியில் போய் உதவி டைரக்டர் ஜயசூரியாவை அழைத்து வந்தார்கள் எல்லோரும் எழுந்து மரியாதை செய்த பின் எதிரில் போட் டிருந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். சற்றுப் பின் ஜயசூரிய எழுந்து பேசினர்.
“இந்தப் பட்டனத்திலுள்ள பள்ளிக்கூடங்களின் அதிபர் களையும் ஆசிரியர்கள் எல்லோரையும் சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உங்கள் பள்ளிக்கூடங்களின் சேவைகள். எப்படி, உங்கள் பிரச்னைகள் என்ன என்பதை சொல்லலாம்."
பூரீபாத கல்லூரி அதிபர் எழுந்து, கல்லூரியின் சரித் திரத்தையே சொல்லிவிட்டார். 100 பிள்ளைகளோடு ஆரம் பித்த இந்த ஸ்தாபனம், இன்று 1250 பிள்ளைகளையும் 50 ஆசிரி யர்களையும் கொண்டியங்குவதாகவும், பெளத்த தர்மத்தை தழுவிய கல்வி போதனை செய்யப்படுவதாயும், பெண் கல்வியை உயர்த்தும் முகமாய் பட்டதாரி ஆசிரியைகளை நியமிப்பதாயும் விளையாட்டுத்துறையில் கைப்பந்தாட்ட, கால்பந்தாட்ட கோஷ்டிகள் அமைத்து செயல்படுவதாயம், பூரீபாத யாத்திரிகள் வரும்போது அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள் செயல்படுவதாயும் சொன்னர். அதோடு அந்தப் பட்டணத்தில் வெளியூர் ஆசிரியர்கள் வந்து தங்குவது மிக மிக கஸ்டம் என்றும் மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உபகரணங்கள் இல்லை என்றும் முடித்தார்
சென் ஜோன் கல்லூரி அதிபர் வண. பிதா ஜோசப்பும் இதே தோரணையில் பேசினர். கத்தோலிக்கப்பள்ளிக்கூட மாயிருந்த போதும் சகல மத மாணவர்களுக்கும் கல்வி

வி. வி. வேலுப்பிள்ளை 129
போதிப்பதாகவும், விசேஷமாய் சாரணர் கோஷ்டி மூலம் பல வகை தொழில் செய்வதாயும் குறிப்பிட்டார். வளர்ந்து வரும் கல்லூரியை விஸ்தரிக்க இடவசதி மற்ற சாதனங்கள் இல்லையென்றும் குறிப்பிட்டார்.
அடுத்து எங்கள் அதிபர் ஸ்டீபன் ஜோசப் பேசினர். ஹட்டனில் பழைமையான கல்லூரி ஹைலண்ட்ஸ் கல்லூரி என்றும் 150 பிள்ளைகள் கல்வி பயில்வதாயும் கிராமியக்கலை, நாட்டுத்தலைவர்களின் சரித்திரம், தேச பக்தியை வளர்க்கவும் பாடங்கள் நடத்தப்படுவதாயும் குறிப்பிட்டார்.
அதிபரின் பேச்சை ஜயகுரிய கவனித்துக் குறிப்பெடுத் தார். பின் ஸ்டீபன் ஜோசப்பை பார்த்து, “கிராமியக்கலை, நாட்டுத்தலைவர்களின் சரித்திரம் இவைகளை எப்போது ஆரம்பித்தீர்கள்?”
‘எங்கள் புதிய ஆசிரியர் பாலச்சந்திரன் ஆரம்பித்தார்." *அவர் யார்? நான் எழுந்தேன். எல்லோரும் என்னை பார்த்தார்கள். *மிஸ்டர் பாலச்சந்திரன், நீங்கள் கல்வி போதனை திட்டங்கள் வாசித்திருப்பீர்கள்.”
*ஆம் சார்.” *நீங்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள், திட்டங் களுக்கு அப்பாற்பட்டவை,” என்று சிரித்தார்.
**ஆம் சார். நமது இளைஞர்கள் நம் சொந்த பண்பையும் நம் தலைவர்களின் பெருமையையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பாடங்களை பள்ளிக்கூடம் முடிந்த பின் தான் சொல்லிக்கொடுக்கிறேன்,” என்றேன்.
*சரி. எங்கள் கல்விக்கொள்கையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
குணரட்ண என்னை பார்த்து மூக்கை சுளித்தார். சித்ரா பெர்ணுண்டோ என்னை திரும்பி பார்த்தாள்.

Page 70
130 இனிப் படமாட்டேன்
*சந்ரு, பேசுபிள்ளை,” என்ருள் மிஸ் மல்தெணிய,
‘இந்த சபையில் கல்விமான்கள், அனுபவமுள்ள பெரி யோர்கள் இருக்கிருரர்கள். நான் படிப்பிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்தவன். எனினும் எனக்குக் கற்பித்த குருதேவர் கள் நான் படித்த கல்லூரிகள் தேச பக்தியின் அவசியத்தை வெகுவாகப் போதித்தன. நம் நாட்டிற்கு முன்மாதிரியான பிரஜைகளையும் லட்சியவாதிகளையும் தோற்றுவிக்க வேண்டும் என கற்பித்தார்கள் அதைத்தான்.”
ஜயசூரிய குறுக்கிட்டு,
“அந்த புதிய லட்சியவாதிகளில் நீங்களும் ஒருவரா?
நான் பேசவில்லை, ஒருவரும் சிரிக்கவில்லை. என்ன சொல்லப்போகிறேன் என்று பார்த்தார்கள்.
“பேசுங்கள் பாலச்சந்ரன்,” என்ருர் ஜயசூரிய
‘இன்று இந்தியா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளது. பல துறைகளிலும் புதுமைக்காணவும் அதற்கு அஸ்திவாரம் போடும் முகமாகவும் கல்வி முறையை மாற்றி, நாடு புனர்ஜென்மம் எடுக்கக்கூடிய வகையில் அமைத்து வருகிறர்கள். மகாத்மா காந்தியின் வார்தா திட்டம் பீகாரில் கோசின் போர்ட் தேசிய கல்விமுறை, கவிதாகூரின் சாந்தினிகேதன் இதற்கு எடுத்துக்காட்டு. கீழ்ப்பட்டவர்கள் அக்ஸ்போர்ட் கேம்பிரிஜ்ட், சர்போன் போன்ற பெரும் கல்விப்பீடங்களுக்குப்போகிmர்கள். மேல்நாட்டு அறிஞர்கள் கவிகள், கல்விமான்கள், சிந்தனையாளர்கள், சித்திரக்காரர் கள், நடன வித்வான்கள் சங்கீத வித்வான்கள் சாந்தினி கேதன் வந்து கீழ்நாட்டு தத்துவங்களையும் கலைகளையும் கலாச் சாரங்களையும் தெரிந்துகொண்டு போகிருர்கள். எனவே நம் கல்வி முறை நம் சொந்த நாகரிகத்திற்காக உயிர் கொடுக்கும் முறையில் அமைய வேண்டும்.”
ஜயசூரிய குறுக்கிட்டார்.
“நம் கல்வி முறையில் அது இல்லையா?”

ஸி.வி. வேலுப்பிள்ளை 131
‘அப்படித்தான் நினைக்கிறேன்.”
"பாலச்சந்திரன் நீங்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு கல்வி மந்திரியாய் வந்தால் நல்லது.”
எல்லோரும் சிரித்தோம்.
*என்ன மிஸ்டர் பாலச்சந்திரன்?
‘நான் ஆசிரியணுய் இருந்தால் போதும் சார்.”
*உங்கள் அதிபர், என் நண்பர். நீங்கள் கவி எழுது வதாய் சொன்னர்.
சற்று தயங்கி;
**ஆம் சார். அது எங்கள் குடும்பத்தில் உண்டு.”
*பாலச்சந்திரன் நீங்கள் வாலிபர். காதல் கதைகள் கவிதைகள் எழுத வேண்டும்,” என்ருர்.
*நான் அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்,” என்ருர் குணரட்ண.
பலத்த சிரிப்பு.
சித்ரா பெர்ணுண்டோ என் பக்கம் திரும்பவில்லை.
“உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஆசிரியர் கூட்டத்தை எல்லா பட்டணங்களிலும் கூட்டி வருகிறேன். இதனுல் எனக்குப் பெரும் அனுகூலம். பரிட்சையில் தேர்ச்சி பெறுவது, பட்டம் பெறுவது, பெரிய சம்பளத்தை பெறுவது மாத்திரம் போதாது. நல்ல பிரஜை களை உருவாக்குவது மிக மிக முக்கியம். அந்தப் புதிய சமு தாயத்தை உருவாக்கும் வேலையில் நீங்கள் ஈடுபடவேண்டும்.”
சற்று நிறுத்தி;
'நீங்கள் எங்கு படிப்பிக்கின்றீர்கள்? சித்ரா பெர்ணுண் டோவைப் பார்த்துக் கேட்டார்.

Page 71
132 இனிப் படமாட்டேன்
‘பூரீபாதவில் சார்,” என்ருள் சித்ரா பெர்ணுண்டோ.
“ஒ, பெளத்த மதத்தை வளர்க்க பெண் பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கின்றீர்கள்?
‘புத்த பெருமான் வாழ்க்கை சம்பந்தமான கதைகள்.”
*புதிய சமுதாயம் அமைக்க என்ன செய்ய வேண்டும் மிஸ் பெர்ணுண்டோ.”
“பெண் கல்வி, பெண்களுக்கு சம அந்தஸ்து,” என்ருள் சித்ரா பெர்ணுண்டோ.
*நீங்கள் மிஸ்டர் பாலச்சந்திரனைக்கண்டு பேசுவீர் களோ?
“நாங்கள் ஒரே ஹாஸ்டலில்தானிருக்கிருேம். இவை களைப்பற்றி பேச சந்தர்ப்பம் இல்லை,” என்ருள்.
எல்லோரும் சிரித்தோம். இதற்குப்பின் கூட்டம் கலைந்தது. குணரட்ணவும் மற்றும் நண்பர்களும் என் சையை குலுக்கி வாழ்த்தினர்கள்.
*சித்ராவும் நீயும் சேர்ந்து கொண்டு ஒரு திட்டம் வகுக்க வேண்டும்,” என்று குணரட்ண கிண்டல் செய்தார்.
மற்றவர்களும் சேர்ந்துகொண்டு சிரித்தார்கள். இதை கவனித்த ஆசிரியைகள் பக்குவமாய் அந்த இடத்திலிருந்து நழுவிவிட்டார்கள்.
மிஸ் மல்தெனியாவுக்கு பெரும் மகிழ்ச்சி. ஸ்டீபன் ஜோசப்புக்கு சந்தோசம், அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு சங்கக்காரியாலயம் போய் சேர்ந்தேன். நான் பேசியதில் எனக்குத் திருப்தி, சித்ரா கவனித்திருப்பாள், என்னை மதிப்பாள் என்று வாயை சப்பிக்கொண்டேன்.
தோட்டங்களைச் சுற்ற முதலியாரும் நானும் உடன் புறப்பட்டோம். எங்கள் தேர்தல் வேலை திட்டமிட்டபடி நடந்து வந்தது.

ஸி. வி. வேலுப்பிள்ளை 133
மறுநாள் காலை நான் தேனீர் சாப்பிட்டுக்கொண்டிருக் கும்போது சித்ரா பெர்ணுண்டோ வந்தாள். நல்ல வேளை யில் அப்போது யாருமில்லை.
*மோர்னிங் மிஸ்டர் பாலச்சந்திரன், நன்ருஜய் பேசினீர் கள். வார்தா திட்டம்பற்றிய புத்தகம் உங்களிடம் உண்டா? **ஆம். மத்தியானம் சாப்பாட்டிற்கு வரும் போது தருகிறேன்.”
*தேங்ஸ். நீங்கள் எங்கே படித்தீர்கள்? "கொழும்பு நாலந்தா கல்லூரியில் மெட்ரிக் எடுத்தேன்." *மேல்படிப்புக்குப் போய் இருக்கலாமே." *வசதி குறைவு.* அவள் பேசவில்லை. எனக்கு மனப்பதட்டம்.
“சரி வருகிறேன்,” என்று புறப்பட்டாள்.
அன்று எனக்கு நேரம் ஒடவில்லை. நல்ல முறையில் பாடமும் கற்பிக்க முடியவில்லை. எனினும் மிஸ் மல் தெணிய, வெகுவாய் பாராட்டினர்கள்.
நம் கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கிவிட்டாய் பிள்ளை என்று சொல்லிவிட்டு சித்ராவைப் பற்றியும் விசாரித் தார்கள்.
வகுப்பு முடிந்ததும் சாப்பாட்டுக்கு ஹொஸ்டல் வந்தேன். முகத்தைக்கழுவி, தலையை சீவி, கழுத்துப் பட்டியை சரிபடுத்திக்கொண்டு வந்தேன். பொலக் இருந் தார்.
*சார் சாப்பிட வாருங்கள்,” என்றேன்.
நான் அந்த கோமாளியோடு சாப்பிட்டுவிட்டேன், நீ போய் சாப்பிடு, நீ நன்றப் பேசியதாக சித்ரா சொன்னுள். இனி பேசும்போது இதைவிட நன்ருய் பேச வேண்டும்.
g-9

Page 72
134 இனிப் படமாட்டேன்
நல்லது சார்.
வார்தா திட்டம் என்ற தூலை எடுத்துக்கொண்டு கீழே போனேன். சித்ரா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“ஹலோ,” என்ருள்.
“ஹலோ” சொல்லிவிட்டு, புத்தகத்தை அவள் பக்கத்தில் வைத்துவிட்டு அவளுக்கு முன் அமர்ந்து சாப்பிட்டேன்.
அவள் என்னேடு பேசப் பிரியப்படுவது போலிருந்தது *உங்கள் ஊர் எங்கே,” என்றேன்.
“எனக்கு கெலனியவுக்கு பக்கத்தில். உங்கள் ஊர் 6r[äGg?”
“எனக்கு சொந்த ஊர் இல்லை. நான் தேயிலை தோட் டத்தைச் சேர்ந்தவன்.”
*கம்பனி தோட்டங்கள் தானே.” *ஆம், என் பந்துக்கள் தோட்டத்தில் வேலை செய்கிற வர்கள்,” என்றேன்.
அதற்கு பின் பேசவில்லை. தேனீர் முடிந்து புறப்பட் GLIrth.
எனக்கு நாளுக்கு நாள் தேர்தல் வேலை கூடிக்கொண் டிருந்தது. ராஜன் இரவில் வருவார். அதிகாலையில் போய் விடுவார். சில சமயங்களில் என்னேடு மஸ்கெலியா, டிக்கோயா, வட்டவளை பகுதி தோட்டங்களுக்கு போய் ஆட்களை சந்திப்பார்; எனவே சித்ரா பெர்ணுண்டோவை பகல் சாப்பாட்டு நேரத்தில் மாத்திரம் சந்திக்க வசதி யிருந்தது. அதுவும் குணரட்ண போனபின்தான் அயை வேண்டும்.
எல்லாம் என் மனம்போல் நடந்தது. அடுத்த பத்து நாட்களில் மதிய சாப்பாட்டின்போது சந்தித்துப் பேசு

ஸி. வி. வேலுப்பிள்ளை 135
வோம். எங்கள் சிநேகம் வளர்ந்தது. என்னை அவள் சந்ரன் என்றும் அவளை நான் சித்ரா என்றும் கூப்பிடும் நிலைக்கு வந்துவிட்டோம். நான் அந்தரத்தில் நடந்தேன். நினைப்ப தெல்லாம் சித்ரா பார்ப்பதெல்லாம் சித்ரா மயமாகவே யிருந்தது.
ஒருநாள் குணரட்ண; “ஏது வெகு சந்தோசமாய் இருக்கிருய், காதல் கவிதை கள் எழுதி சித்ராவுக்கு காட்டினயோ?” என்ருர்,
எனக்கு சுருக், என்றது. *அப்படியொன்றுமில்லை. ராஜனுக்கு வெற்றி கிடைக் கும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்று மழுப்பினேன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தளிர்விட்டு வளரும் எங்கள் சிநேகத்திற்கு நானே ஒருநாள் உலை வைத்தேன்.
மாலை தேனீர் சாப்பிட்டுவிட்டு சித்ராவும் நானும் வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தோம். சுமார் ஐந்து மணியளவில் அது நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு போக வேண்டிய நேரம். அதோடு தந்த நாராயணவும் வரும் நேரம். என்னை அறியாமலேயே அவரைப்பற்றி எனக்கு பொருமை புகைந்து கொண்டிருந்தது.
மிஸ்டர் தந்த நாராயண வருகிற நேரம். நான் குறுக்கே நிற்கக்கூடாது வருகிறேன். என்று எழுந்தேன்.
சித்ராவின் முகம் திடீரென சிவந்தது. கோபம் பொங்கியது.
ஆண்களோடு கொஞ்சம் பழகிவிட்டால் வரம்பு மீறி பேசுவார்கள். என் சொந்த விசயத்தைப்பற்றி நீங்கள் அப்படி பேசக்கூடாது, என்ருள்.
என் தலையில் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது.

Page 73
136 இனிப் படமாட்டேன்
வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள், என்றேன்.
அவள் எழுந்து நின்று என்னை நெருப்புக்கண்களால் பார்த்தாள்.
ரொம்ப தவருக நடந்ததை உணருகிறேன். என்னே தயவு செய்து மன்னித்துவிடுங்கள், என்று இரு கரங்களையும் கூப்பினேன்.
தலையை குனிந்தபடி தன் அறைக்குள் போனள்.
நானும் என் அறைக்கு போய் தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தேன். ஏன் அப்படி பேசி னேன் என்று எனக்கே புரியவில்லை. என்னை பலவாருய் நொந்துகொண்டேன். வெண்ணெய் திரண்டு வரும்போது முட்டி உடைந்தது போலாகிவிட்டது. சித்ராவின் முகத்தை இனி எப்படிப் பார்ப்பது. அதற்குப்பின் அவள் என் முகத்தை ஏறெடுத்து பார்க்க மாட்டாள். என்பது எனக்குத் தெரியும். இனி அந்த இடத்தில் இருப்பது அவளுக்கும் எனக்கும் தர்மசங்கடம். எனவே திடீர் முடிவுக்கு வந்தேன். வேலைக் காரப் பையனைக் கூப்பிட மணியை அழுத்தினேன். அவன் வந்தான். இலக்சன் வேலையாய் நான் அடிக்கடி வெளியூர் போகவேண்டியிருப்பதால் பத்து நாட்களுக்கு வரமாட்டேன் என்று மெண்டிஸ் அம்மையாருக்கு சொல்லும்படி சொல்லி விட்டு சூட்கேசை எடுத்துக்கொண்டு மிஸ்டர் பொலக்குக்கும் சொல்லிவிட்டு ஆபீசுக்கு வந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ரெயில்வே ஸ்டேசனில் மேல் கோச்சுக்கு டிக்கட் கொடுக்க மணியடித்தார்கள். உடன் வீட்டுக்குப் போக முடிவு செய்தேன். ஸ்டேசனுக்கு சென்று டிக்கட் வாங்கிக் கொண்டு பிளாட்பாரமடைந்தேன். கோச்சியும் வந்தது. மூன்ரும் கிளாஸ் பெட்டியில் ஏறி ஜன்னல் பக்கத்தில் அமர்ந்தேன். யாரையும் நான் கவனிக்கவில்லை வண்டி டக டக பக் பக் என்று ஓடியது, இரண்டு ஸ்டேசன்களில் நின்றது.

வி. வி. வேலுப்பிள்ளை 137
ஆட்கள் ஏறினர்கள் இறங்கினர்கள். நான் உன்மத்தம் பிடித்தவன் போலிருந்தேன்.
வட்டக்கொடை வந்து நின்றது. சூட்கேசை எடுத்துக் கொண்டு இறங்கினேன். இருட்டி விட்டது. எங்கும் இருட்டு என் உள்ளத்தில் வெள் இருட்டு கோச்சி போகும்வரை பிளாட்பாரத்தில் நின்றேன். என்னைத் தெரிந்தவர்கள் அந்த நேரத்தில் யாருமில்லை போர்டரிடம் டிக்கட்டைக் கொடுத்து விட்டு சூட்கேசை பிடித்துக்கொண்டு இருளோடு இருளாய் நடந்தேன்.
அத்தியாயம் பதினென்று
புண்பட்ட மனதிற்கு சாந்தி தேடி பிறந்த இடத்திற்கு, வளர்ந்த வீட்டிற்கு வந்தேன். பாலைவனத்தில் வழி தப்பிய பிரயாணி, தாகம் தணிக்க கிணறு தேடிப் போவது போல என் பால்ய சினேகிதை கண்ணம்மாளைக் காண வேகமாய் நடந்தேன். பழைய கரத்தை ருேட்டு; எனது 7 வயதி லிருந்து என் கால்பட்ட பாதை அந்த இருட்டிலும் என்னை பள்ளம், முடக்கு, கல்பாறை இவைகளைக் காட்டி வரவேற்றது பத்து கடைகளைக் கொண்ட கடைவீதி தூங்கி விழித்தவனைப் போல் தோன்றின. அதற்கு நேர் கீழ் லயன்களின் உருவம் அவைகளை தாண்டி தபால் கந்தோர். உயர்ந்த பெரிய தேயிலை ஸ்டோர், அதன் தேன்கூடு போன்ற நூற்றுக்கணக் கான ஜன்னல்களில் லைட் வெளிச்சம். ஜங்,ஜங் என்ற எஞ்சின் சத்தம். தேயிலை மணம். இவைகளைப் பார்த்து கேட்டு, நுகர்ந்தவாறு நடந்தேன். பார்க்குமிடமெல்லாம் ஈயக்கறுப்புக்குன்று. இத்தனை தேயிலையின் விசாலமான பரப்பு. உயர்ந்த நிலம், குன்றுகள் என் நெஞ்சை அள்ளும் நீலகிரி மலைத்தொடர்; மறுபக்கத்தில் உனுக்கொட்டுவ மலைச்சாரல், இவைகள் உயிர்பெற்று, ராட்சத வடிவங்கள் போல் நின்றன. தூரத்து தேயிலை ஸ்டோர்களில் லைட்கள்.

Page 74
138 இனிப் பட மாட்டேன்
இவைகள் எல்லாம் என் உடலில், இரத்த ஓட்டத்தில் இனம் தெரியாத வேதனையை கொடுத்தன.
வீட்டுக்கு அருகில் வந்துவிட்டேன். சமையல் பிறை ஜன்னலில் வெளிச்சம் இருந்தது. முகப்புக்கதவு திறந்திருந்தது அதன் இடது பக்க ஆபீஸ் அறையில் மாமா கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். கணக்கப்பிள்ளைகள் விபரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், வலது பக்கத்தில் என் படுக்கையறை. நான் பகல் கனவு கண்டு கொண்டிருந்த அறை. கதவைத்திறந்தேன். விளக்கு லேசாய் எரிந்து கொண்டிருந்தது. நான் படுக்கும் சோபா சுத்தமாய் விரித் திருந்தது. வாயில்லா, உயிர் துடிப்பில்லா இந்த அறை என் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது போல் இருந்தது. ஜன்னலுக்கருகில் சிறு மேசை, தலைப்பக்கம் என் சிறு புத்தக அலுமார், சுவற்றில் அழகான பூரீ கிருஷ்ணர் படம். சற்று தயங்கிப்பார்த்துவிட்டு மேசையில் சூட்கேசை வைத்துவிட்டு ஹாலுக்குப் போனேன். தொங்கும் குலோப் லாம்பு பிர காசித்துக்கொண்டிருந்தது இடது பக்கத்திலுள்ள தாத்தா வின் அறை கதவு சாத்தப்பட்டிருந்தது. தாத்தாவின் பெரிய படம் ஹால் கதவின் திரைச்சீலைக்கு மேல் வீட்டுக்கு காவல் செய்வது போலிருந்தது. திரைச்சீலையைத் தள்ளிக் கொண்டு சாப்பாட்டு அறை வழியாய் சமையற் கட்டுக்குள் நுழைந்தேன். சமையல் பிறையை அம்மா வெகு சுத்த மாயும் பிரகாசமாயும் வைத்திருந்தாள். வெள்ளைக்களி மண்ணுல் தீர்த்திய சுவர்பால் நிறமாயிருந்தது. கோவி லுக்குப் போகும் தோற்றத்தோடு அம்மா அடுப்படியில் வேலை கெய்துகொண்டிருந்தாள். அத்தை நெற்றியில் மாருத விபூதி, குங்குமம் இருந்தன. கண்ணம்மாள் மஞ்சள் பட்டுச்சேலையும் ரவிக்கையும் அணிந்து, கொண்டையில் மல்லிகைப்பூச்சரம் குடி நின்றள். என்னைக்கண்டு திகைத்தது போல்.
*ஹா மாஸ்டர்,” என்று குனிந்து என் பாதங்களைத் தொட்டு வணங்கினுள். நான் திகைத்து நின்றேன்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 139
*சந்ரா, வா மகனே! நல்ல நேரம் பார்த்துதான் வந்திருக் கிறே. காலையிலேதான் கண்ணம்மாளுக்கும் சுந்தரத்திற்கும் கோவில்லே கல்யாணம் முடிஞ்சிச்சு,” என்ருள் அம்மா.
நான் குனிந்து கண்ணம்மாளின் கரங்களைப் பிடித்து தூக்கினேன்.
‘சாமி, தாத்தா காம்பராவுக்கு போய் கண்ணுக்கு விபூதி பூசுங்க,” என்ருள் அத்தை,
*வா, கண்ணு!” தாத்தாவின் அறைக்குப்போனுேம்,
அவர் இரட்டை மெத்தை கட்டில் காலியாய் கிடந்தது. அதை சுற்றிக் கொசுவலை தொங்கியது. அதற்கு எதிரே வெள்ளை அலமார். பக்கத்தில் மேசை மேல் விபூதி தட்டு. சிறு குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. விபூதியை அவள் நெற்றியில் பூசிவிட்டு, அவளை அணைத்து அவளின் இரு கன்னங்களிலும் என் கன்னங்களை வைத்தேன்.
“என் தலையே தொட்டு ஆசீர்வதிங்க.”
தலையை தொட்டு: *நீ எப்போதும் நல்லாயிருப்பே கண்ணு,"என்றேன்.
என் புஜங்களை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.
வேதனையின் சிரிப்பு. அவள் கண்கள் கலங்கி யிருந்தன.
*நான் யோகக்காரி தான் மாஸ்டர். உடுப்பே மாத் துங்க. தேத்தண்ணி கொண்டு வாறன்.
என் அறைக்கு போனேன்.
*யாரது?’ என்று மாமா கேட்டார்.
“இப்பதான் வந்தேன்," என்றேன்.
*நல்லது, போய் தேத்தண்ணி சாப்பிடு.”

Page 75
140 இனிப் படமாட்டேன்
பேச்சு முடிந்தது. அதிகம் பேசமாட்டார். உடைகளை மாற்றிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தேன். என்ன விசித்திரமான உலகம் இது கண்ணம்மான் இன்று சுந்தரத் தின் மனைவியாகிவிட்டாள். இனி யாரிடம் என் கதையை சொல்வேன்.
கண்ணம்மாளின் கண்கள் ஏன் கலங்கியிருந்தன. அது யாருக்கு தெரியும்?
தட்டில் பழம், பலகாரர் தேனிர் கொண்டு வந்து மேசை யில் வைத்தாள்.
*சாப்பிடுங்க மாஸ்டர்,” எள்முள்.
வாழைப்பழத்தை எடுத்து, உரித்து “நீ சாப்பிடு;” என்று கொடுத்தேன்.
வாங்கிச்சாப்பிட்டாள்.
பலகாரத்தை சாப்பிட்டுவிட்டுத் தேனீர் குடித் தேன்.
“சுந்தரம் வந்து,”
*பத்து நாளாச்சு, கல்யாண பேச்சோட வந்தார்.”
*அப்படியா?
*அப்படிதான் போங்க.”
*உங்க அப்பா நல்லாயிருக்காரா?”
**ஆமா மாஸ்டர், நீங்க பேப்பருக்கு எழுதுறதே மெனக்கட்டு படிப்பாரு. சரி மாஸ்டர் நாளே 9 மணியே போல ரெண்டு பேரும் வர்ருேம்.” போய்விட்டார்கள்.
ஆபிஸ் வேலை முடிந்ததும், பல் கட்டி கணக்குப்பிள்ளை வந்தார். அவர் எங்களது நெருங்கிய பந்து. எனக்கு அப்பச்சி முறை. என்னிடம் சுகம் விசாரித்தார்.

ைெ. வி. வேலுப்பிள்ளை 14
'ஐயா தாத்தாவுக்கு பொறகு ஒங்க பேருதான் ஒங்குது கடவுளோட கிருபே.”
அன்போடு என் பக்கத்தில் அமர்ந்தார். எப்போதும் போல் காக்கி கோர்ட், கம்பி வேஷ்டி, லேசாய் அழுக்கு பட்ட கமிஸ். கணக்கப்பிள்ளை முண்டாசு அணிந்திருந்தார். சேப்பில் சிறிய கோப்பிக்கத்தி, மறு சேப்பில் வெத்திலை குட்டான், மேல், சேப்பில் செக்ரோல் எல்லாம் இருந்தன.
‘நீங்க வந்தது வீட்டுக்கு எவ்வளவு களையாய் இருக்கு.” சற்று சுணங்கி
*உங்க அம்மாளுக்கு நல்ல சுகமில்லே;” *ஆமா பாத்தேன். யார் வைத்தியம் செய்றது?
“நம்ம டாக்டரு உயிரே குடுத்து பாக்குராங்க, இப்ப கொஞ்சம் தேவல்லே.”
அம்மாளுக்கு எப்போதும் ஓயாத வேலை.வியாதி வந்தால் தன்னல் விலகிப்போய்விடும் என்ற சுபாவமுடையவர், டாக்டர் அவரை கவனிப்பதில் எனக்குத் திருப்தி.
“ஒரு விசயம் ஐயா!” தயக்கமாய் ஆரம்பித்தார். *என்ன? என்றேன்.
“நீங்க படிச்ச புள்ளே. நா ரொம்ப சொல்லத் தேவை. யில்லே. சுந்தரம் லயத்து நாட்டு பய. நம்ம வீடுதான் அவனே தூக்கி விட்டுச்சு. நாலு வருசமாய் மில்டோரியிலே இருந்துட்டு வந்து மூணு கெழமையாச்சு. ஒரு நாள் வந்தான். அப்புறம் இங்கிட்டு வர்றதேயில்லே. மிலிட் டேரி உடுப்பே போட்டுக்கிட்டு மோடியா திரியிரான் கண்ணம்மாளே நம்ம வீட்டுக்கு வராமே நிப்பாட்டிட்டாள் கண்ணம்மாளோடே ரொம்ப பேச்சு வச்சுக்காதீங்க? என்று முடித்தார்.
““Fif)” GrGTG3 SAGT,

Page 76
142 இனிப் படமாட்டேன்
அம்மாளுக்கு நல்ல சுகமில்லே. இன்னக்கு மாதிரி தினம் அந்தி கோச்சிக்கு வாங்க.”
99.
*நல்லது,” என்று முடிவு செய்தேன்.
வேலைக்காரப்பையன் மேய்யன் கல்யாண வீட்டுக்குப் போயிருக்க வேண்டும். எனவே அத்தை வந்து எங்கள் இருவரையும் சாப்பாட்டுக்கு அழைத்தார். நாங்கள் சமையலறைக்குப்போனேம். மாமா ஏற்கனவே போய் உட்கார்ந்திருந்தார். நாங்களும் அமர்ந்தோம்.
*சந்ரா, ராஜன் போட்டி போடுவதை பேப்பர்லே பார்த்தேன். நடேச ஐயரே இவராலே தோக்கடிக்க முடியுமா?
“மிஸ்டர் ராஜனுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. வெற்றிப் பெறுவார்!’ என்றேன்.
“நீகூட போட்டிக்கு நின்னுருக்கலாமே!” நான் சிரித்தேன். “அதுக்கெல்லாம் டயம் இருக்கு,” என்ருர் பல்லுக்கட்டி கணக்குப்பிள்னை.
அம்மாள் எங்களுக்கு சாப்பாடு பறிமாறினர். அந்த பதார்த்தங்களுக்கு தனி சுவை. சம்பா அரிசி சாதம் உருளைக்கிழங்கு பொரியல், மாசி சம்பல், பூஞ்சிக்காய் பொரியல் தேங்காய்ப்பால் சொதி இவைகளை சுவைத்து சாப்பிடுவதில் தனி இன்பம். இந்த நேரத்தில் சித்ரா பெர்ணுண்டுவின் நினைவு வந்தது.
*ராசா,” என்ருர் அத்தை, “என்ன,” என்றேன். *மிச்ச நாளைக்குப் பொறகு வீட்டுக்கு வந்திருக்கிறீங்க, வீடு இன்னைக்கு கல கலன்னு இருக்கு. தாத்தா உங்களுக்கு சொல்லிக்கொடுத்த விருத்தங்களே கொஞ்சம் படிங்க,” என்ருர்,

ஸி. வி. வேலுப்பிள்ளை 143
ஆமா, ஐயா தாத்தா காம்பராவிலே படுப்பம். நீங்க கொஞ்சம் படிங்க,”
*சரி,” என்று ஒத்துக்கொண்டேன். இவைகளெல்லாம் என் புண்பட்ட மனதிற்கு சஞ்சீவிபோல் அமைந்தன.
17 வருடங்களுக்கு முன் தாத்தாவின் அறையில், மாலை பூசை நடப்பது ஞாபகத்திற்கு வந்தது.
பூசை நேரம் பார்த்து நான் சமையலறையில் சுற்றிக் கொண்டிருப்பேன். அம்மா பூசைக்கு சாம்பிராணி தட்டில் நெருப்பு கொண்டுபோகும்படி சொல்லுவார்கள். உடனே தட்டில் தணலை நிரப்பிக்கொண்டு தாத்தாவின் படுக்கையறைக்கு கொண்டுபோம் முருகன் படத்திற்கு முன் கீழேயுள்ள மேசையில் வைத்துவிட்டு, நிற்பேன்! தாத்தா குளித்துவிட்டு, நார்படி பட்டு வேஷ்டி கட்டி அறைக்குள் வருவார். அப்போது அவருக்கு 50 வயதிருக்கும். நடுத்தர உயரம், உயரத்திற்கு தக்க பருமன், சிங்கமுகம், காதுகளில் வைரக்கல் கடுக்கன்கள், கை நிறையதாக மோதிரங்கள். பெரிய 'மனிதர் என்பது அவரதுதோற்றத்தில் எழுதியி ருந்தது.
"எல்லாம் தயாரா?” என்று கேட்பார்.
"ஆமா தாத்தா,” என்பேன்!
*சரி உட்காரு” என்பார்.
அவருக்கு பக்கத்தில் சம்மணமிட்டு உட்காருவேன் கற்பூரத்தை ஏற்றி தூய தீபாராதனை செய்வார். பின் மலர்
களை எடுத்து படத்திற்கு முன் தூவுவார். கரங்களை தலைக்கு மேலே உயர்த்தி பாடுவார்.
இன்று அந்த காட்சி என் கண் முன் சினிமா படம் போல் ஒடியது.
சாப்பாட்டுக்குப்பின் படுக்கைகளை தாத்தாவின் அறை யில் விரித்துக்கொண்டோம். நான் என் படுக்கையிலமர்ந்து

Page 77
144 இனிப் படமாட்டேன்
தாத்தா எனக்கு அன்புடன் சொல்லி வைத்த விருத்தங்களைப் பாடினேன்.
வற்ருத பொய்கை வளநாடு கண்டு மலைமீது நின்ற குமரா உற்ருர் எனக்கு ஒரு பேருமில்லை உமையாள் தனக்கு மகனே முத்தாடை கொண்டு அடியேனை நாடி விஸ்தாரமான மயில் மீதிலேறி முருகா இறங்கி வரவே. என்னுடைய பாடல் எனக்கே ஒரு அமைதியைக் கொடுத்தது. நான் தேடிவந்த மருந்து தீர்த்தம்போல் என் உள்ளத்திலிருந்து ஊற்ருய் கிளம்பியது. விருத்தங்கள் ஒன்றன்பின் ஒன்ருய் வந்தன. தொடர்ந்து பாடினேன்.
உற்பரா தற்பரா சண்முகா உலகம் ஈரேழு நிறைவாய் உருகின்ற சஞ்சலம் உன்னிடம் கேட்கவில்லையோ ஒன்றுமறியாததாய் ஊனம்போலிருக்கின்றீர் உன் செவியில் கேட்கவில்லையோ திரு கேத்திரங்களில் ஈராறு தானுமிலையோ திரு கிருபையாளனே குறவி மணவாளனே சினமெல்லாம் போற்றும் அமுதே.
அத்தை கதவுக்குப் பக்கத்தில் கைகூப்பியபடி நின்ருள் பதினெட்டு வருசங்களுக்குப் பொறகு இன்னக்கித்தான் இந்தப் பாடலைக்கேட்டேன். நம்ம வீட்டுக்கும் நல்ல காலம்) உங்களுக்கும் நல்ல காலம் வரும். இனி படுங்க, என்று சொல்லிவிட்டு போனர்கள் -
படுத்தோம் தூக்க அலைகள் எங்களைச் சுற்றிக் கொண்டன.
பிரட்டுத்தப்பு குமுறியது. எழுந்தேன், கணக்கப்பிள்ளை பிரட்டுக்குப்போய்விட்டார். ஜன்னலைத்திறந்து பார்த்

ஸி. வி. வேலுப்பிள்ளை 145
தேன். ஆண், பெண் தொழிலாளர்கள் வாரிச் சுருட்டிக் கொண்டு ஒடிஞர்கள். சலவை தெரியாத சேலைகள், அழுக்கு வேஸ்டிகள் கட்டியவர், குமரிகள், அரை வயதான பெண்கள், விடை பையன்கள் எல்லோரும் தலைவிரி கோலமாக ஓடினர்கள். ஜன்னலண்டை பார்த்துக்கொண்டிருந்தேன்.
வெளி உலகம் மாறிக் கொண்டிருந்தது. ஆனல் இந்த உலகம் மாற்றத்தை எதிர்த்தது போலிருந்தது.
காலைக்கடன்களை முடித்த பின் சமையல் பிறைக்கு காலை தேனீர் சாப்பிடப் போனேன். அம்மா அடுப்பை விட்டு விலகி திண்ணைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். ஒரு விருந்தினருக்கு செய்யும் உபசாரம் எனக்கிருந்தது. தேனீர் சாப்பிட்டேன். அத்தை நான் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
*ராசா நீங்க இன்னே ரவைக்கு மஸ்தான் சாய்பு பாடலே படிங்க, படிக்கிறவங்களுக்கும் கேட்கிறவங்களுக்கும் நல்லது.”
*படிக்கிறேன்.”
அம்மாளைக் கவனித்தேன். முகமும் உடம்பும் வாடி யிருந்தது. உள் வியாதி, ஏதோ சப்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. நான் பார்த்ததைக் கவனித்தாள். ஆனல் ஒன்றும் கேட்கவில்லை, என் மனதில் ஒடும் எண்ணங்கள் அவருக்கும் தெரிந்தது போலிருந்தது.
*ஏன் ஒரு மாதிரியா இருக்குரே சந்ரா, திடீருன்னு வந்துட்டியே ஏதும் நடந்திச்சா.”
*பிரமாதமில்லே அம்மா, சின்ன சங்கதி”
*இம்.”
தாய்க்குத் தெரியாத ரகசியம் உலகத்தில் உண்டா என்பார்கள். சின்ன சங்கதி என்று சொன்னதில் எனக்கு ஒரு சாந்தி, அம்மா புன்னகை செய்ததுபோல் கண்டேன்.

Page 78
146 இனிப் படமாட்டேன்
“என்ன நடந்தாலும் வீட்டுக்கு வந்தா தீந்து போகும் ராசா. ரவைச்குப் படிங்க,” என்ருர் அத்தை.
பழைய வீடு இருந்த இடத்தைப் பார்க்கத் தோட்டத் திற்குள் போனேன். வேலிக்கு வெளியில் பழைய வீடு இருந்த இடத்தில் புல்லும் கல்லும்தான் மீதம், நான் பிறந்த வீடு, வளர்ந்த வீடு, தாத்தா பாட்டையாமார்கள் பாட்டி, அம்மா, மாமன். மாமி மற்றும் (நெருங்கிய பந்துக்கள் கொம்பும் குலையுமாக வாழ்ந்த வீடு. கடந்த 17 வருடங்களில் எத்தனை மாற்றங்கள். நாம் தேடிய இலாபங்களைவிட நாமடைந்த நஷ்டங்களே பெரியவை. இதில் எத்தனை உண்மை பொதிந்துள்ளது.
பாட்டி வாழ்ந்த தொங்கல் அறை இருந்த இடத்தைப் பார்த்தேன். பாட்டியின் பெயர் அங்கம்மாள். அவர் உடலும் அழகு, உள்ளமும் அழகு, அப்போது அவருக்கு வயது 65. சுருங்கிய மஞ்சள் பட்டு போன்ற மேனி. வெள்ளித் தலைமயிர், வட்டமான முகம். செண்பகக்கண்கள், பேசும் போது ஏலம் கிராம்பு வாசனை வரும்.
பள்ளிக்கூடம் முடிந்த பின்பு சுந்தரமும் நானும் பாட்டி வீட்டில் தானிருப்போம். சில சமயம் கண்ணம்மாளும் வருவாள். மாலை 4 மணிக்கு அவர் கையால் தயாரித்த பலகாரங்களோடு தேனீர் கொடுப்பார். சாப்பிட்டுவிட்டு பாட்டியை கதை சொல்லும்படி கெஞ்சுவோம்; அல்லி ராணியை அர்ச்சுணன் மணந்த கதை, ஏழு தட்டு பல்லாக்கில் வந்த பல் வரிசையின் கதை. விக்ரமாதித்தன் கதை சொல்வார். பின் மாரியம்மன் தாலாட்டைக்கூட பாடிக்காட்டுவார். சென்றுபோன என் பிள்ளைப்பருவத் தோடு அவரும் போய் மறைந்து விட்டார்.
வீட்டுக்குத் திரும்பும்போது முகப்பில் சுந்தரம் அமர்ந் திருந்தார். என்னைவிட 4 அங்குலம் உயரத்தில் கூட, அதைபோல் பருமன். மில்டரி காக்கி கால்சட்டை. வெள்ளை கமிஸ், கருப்பு சப்பாத்து அணிந்திருந்தான்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 47
பட்டாளம் அதன் முத்திரையை அவன் முகத்தில் பதித் திருந்தது. சென்ற ஏழு வருடங்களில் பெரும் மாறுதல் அடைந்திருந்தான்.
“ஹலோ சந்ரு, என்று என் கையைப்பற்றி குலுக்கினுன், இருவரும் அமர்ந்து சுகம் விசாரித்துக் கொண்டோம்.
அடுத்த 30 நிமிசங்களில் அவன் யுத்த கால அனுபவங் களை எனக்குச் சொன்னன். டிரக் டிரைவராய் கடமை யாற்றியதால் டிரைவர் வேலை தேடிக் கொண்டிருப்பதாய் சொன்னன். f
“சே, அது வேண்டாம். ஏதாவது ஆபிஸ் அல்லது சாப்பு வேலை பார்க்கலாம்," என்றேன்.
*நான் பாய் கடையில் கணக்கு எழுதியிருக்கிறேன். கொஞ்சம் அனுபவம் உண்டு. ஏதாவது பாருங்கள். கல்யாணம் செய்த பிறகு சும்மாயிருக்க முடியாது.” என்று மிலிட்டரி ஆங்கிலத்தில் சொன்னன்.
*மிஸ்டர் ராஜனின் தேர்தல் முடியட்டும் கவனிக் கலாம்," சில தினங்களில் முடிவு சொல்வதாய் சொன்னேன் ஏதோ ஜோலியாய் கடை விதிக்குப்போக வேண்டு மென்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனன். எனக்குச் சற்று ஏமாற்றம் நான் எதிர்பார்த்த சுந்தரத்தை அவனில் நான் காண முடியவில்லை.
பின் நேரம் கண்ணம்மாள் குற்றம் செய்தவள் போல் முழித்துக் கொண்டு வந்தாள்.
*அவர் வந்தாரா,”
"ஆமா,” என்றேன். W
*லொரி டிரைவர் வேலை தேடுருரு.”
*கேள்விப்பட்டேன். கொழும்பிலே எங்கிட்டாவது நல்ல எடமா பார்க்கிறதா சொன்னேன்,” என்றேன்.

Page 79
lA8 இனிப் படமாட்டேன்
*கொஞ்சம் கவனிங்க மாஸ்டர், எப்புடி ஆள் இப்ப?” *உனக்குத்தானே தெரியும்.” *அப்புடின்ன முந்தி மாதிரியில்லேன்னு அர்த்தம், அப்புடி தானே.”
*உன் புருஷனைப்பத்தி எங்கிட்டே அபிப்பிராயம் கேட்காதே கண்ணு.”
“நா இன்னும் சின்னக்குட்டி தானே.” “அது óቻff].” *அம்மாளே பாத்துட்டுப்போறேன். எப்பப் போறிங்க?" *நாளை காலையிலே.?? போய்விட்டாள். என்னேடு முன்போல் பேசுவதற்கு அச்சம் போலிருந்தது.
அன்று இரவு பலர் வந்து என்னைக் கண்டு சுகம் விசாரித் தார்கள். அவர்களுக்குள் முக்கியமானவர் வட்டக்கொடை கங்காணி. சுந்தரத்தையும் என்னையும் தலவாக்கொல்லை பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிப் போனவர். அவர் விஷேசமான ஒரு பத்திரம். வட்டக்கொடை முன்னல் பங்களா முன்னுள் காவல்காரராக இருந்தவர். துரை கேட்டிருந்த பரீசஸ் கால்சட்டை. வேட்டைக்குப்போடும் கோட், இவைகளை அணிந்து சிகப்பு முண்டாசு கட்டியிருப்பார். வெள்ளைக் காரனைப்போல் நாலு வார்த்தை பேசுவார். நிமிர்ந்து நடப்பார். துப்பறியும் நாவல் வாசிப்பதில் அவருக்குச் சரியான மோகம். ரங்கராஜ் எழுதிய மின்சாரமயமானவன் கதையை 'தவருமல் தினம் எங்களுக்குச் சொல்வதில் அவருக்குத் தனி சந்தோசம் கேட்பதில் எங்களுக்கு சந்தோசம்.
அன்று இரவு பழைய கதைகளைப் பேசினுேம். அவருக்கு என்மேல் பெரும் பெருமை. நீங்கள் படிப்பாளி, வித்வான், வீரகேசரியிலே நீங்க எழுதும் கட்டுரே ரொம்ப நல்லா யிருக்கு, என்ருர்,

ஸி. வி. வேலுப்பிள்ளை 149
மின்சாரமயமானவன் கதையை ஞாபகப்படுத்தினேன். *அந்தக்காலம் மாதிரி வராது,” என்றர். வெகுநேரம் பேசினுேம்.
காலைக்கோச்சியில் அட்டன் போய் சேர்ந்தேன். காரியாலயத்தில் ராஜன் இருந்தார். அம்மாளுடைய சுகக் குறையைப் பற்றிச் சொன்னேன்.
*சந்ரன் தேர்தல் முடியும்வரை அந்த அஸ்டின் காரை அமர்த்திக் கொள்ளுங்கள், இரவு 12 மணியானலும் காரில் வீட்டுக்குப்போங்கள். உங்கள் அன்னையின் பக்கத்தில் இருங்கள்,” என்ருர்.
ஏற்றுக்கொண்டேன். அதன்படி இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்குப் பல இடங்களைக் கவனித்துவிட்டு வீட்டுக்குப்போவேன். சாப்பாடு எனக்குக் காத்திருக்கும். அம்மாவோடும் அத்தையோடும் பேசிக்கொண்டிருந்துவிட்டு தாத்தாவின் அறையில் படுப்பேன். கணக்கப்பிள்ளை எனக்குத் துணை. பழைய கதைகளை தூக்கம் வரும்வரை பேசுவோம். மறு நாள் காலையில் புறப்படுவேன். கண்ணம் மாளையும் சுந்தரத்தையும் நான் சந்திக்கவில்லை.
ஒருநாள் மாலை 7 மணிக்கு வீடுவந்தேன். அப்போது வயற்கார அப்புஹாமியும் அவரது மருமகளும் வந்திருந்தார் கள். அவர் எங்கள் வயலில் நெல் விதைத்து அறுவடை யாக்குபவர். எங்கள் வீட்டு நெடுநாள் நண்பர் வரும்போது கூடை பெட்டி நிறைய பலகாரம், போத்தலில் பாணி, வாழைப்பழம் இவைகளை அன்பளிப்பாய் கொண்டு வருவார். இரவில் அவருக்கு விருந்து நடக்கும். அன்றும் அப்படியே வந்திருந்தார். நான் போனதும்;
*ஒ மாஸ்டர், எப்படி சுகமா. என்ன எல்லாம் மறந்ததா?” என்றர்.
@一10

Page 80
150 இனிப் படமாட்டேன்
*எப்படி மறக்க முடியும் வயற்காரரே,” என்றேன். அவர் குள்ளன். பெரிய தாடி, வரி சாரமும் வெள்ளை கமுசும் அணிந்திருந்தார். அவர் மருமகள் சீத்தையும் ரவிக் கையும் கண்டியர் பாணியில் அணிந்திருந்தாள். செங் கரும்பு போன்ற குமரி. எல்லோரும் சமையல் பிறையில் உட்கார்ந்து பலகாரம், பழம் தேனிர் சாப்பிட்டோம்.
“பலகாரம் எப்படி?” என்ருர் சிங்களத்தில். *ரொம்ப ருசி, ஜோர்,” என்றேன். எல்லோரும் சிரித்தோம். ஆனல் அந்தப் பெண் சிவந்த முகத்தோடு,
*மாத்தியா பொய் சொல்ருர்,” என்ருர்,
*மருமகள் தான் பலகாரம் சுட்டது,” என்ருள். *அதுதான் சரியான ருசி,” என்றேன். *உங்களுக்குப் பொய் சொல்லத் தெரியும் மாத்தியா,” என்ருள்.
அம்மாளை பார்த்து,”
*மாத்தியாவுக்கு சிங்கள புள்ளே தான் கட்ட வேணும், என்ருர் அப்புஹாமி.
*அவன் பிரியம் என் பிரியம்,” என்ருர் அம்மாள். ‘ஏதும் பாத்திருக்கா மாஸ்டர்,” கிண்டலுக்காக *ஆமா, தேடிப்புடிச்சுட்டேன்.” *எங்கே, என்ன செய்றது.” எடீச்சர், நல்ல படிப்பு ரெண்டாவது பிரின்சிபல்.”
*ரொம்ப நல்லது மாஸ்டர். உங்களுக்கு சிங்கள புள்ள தான் சரி, பேர் என்ன?”

வி. வி. வேலுப்பிள்ளை 151
என்னை அறியாமல்,
“சித்ரா,” என்றேன்.
“நீங்க சரியான ஆள்தான்,” என்று பெண் கல கல வென்று சிரித்தாள்.
எல்லோரும் சிரித்தோம்
இரவு படுத்திருக்கும்போது, ஏன் இப்படிப் பேசினேன் என்று யோசித்தேன். எனக்கே புரியவில்லை.
அத்தியாயம் பன்னிரண்டு
தேர்தல் நாள் திருவிழாக் கோலமாகயிருந்தது. ஆண், பெண், பிள்ளைகள், ஒட்டு உள்ளவர்கள், ஒட்டு இல்லாத வர்கள் அனைவரும் புது உடைகள் அணிந்து கூட்டம் கூட்ட மாய் சங்கத்தின் மூவர்ணக்கொடிகளைப் பிடித்துக்கொண்டு ஒட்டுப்போடும் குடில்களுக்குப் படையெடுத்தார்கள் ராஜன் போன இடமெல்லாம் அமோக வரவேற்பு நடந்தது. பகல் 12 மணிக்கெல்லாம் வாக்குக்கள் கொடுத்து முடிவடைந்தன.
சாப்பிட்டு முடிந்ததும் 5 கார்களில் ஏறி கண்டி கச்சேரி போய் சேர்ந்தோம், கவர்மெண்ட் ஏஜன்ட் தலைமையில் வோட்டுக்களை எண்ணினர்கள். நடேச ஐயர் வரவில்லை. ஏனைய மூன்று ஆபேட்சகர்கள் வாய் காய்ந்து இருந்தார்கள் ராஜன் முகம்கூட ஒரு மாதிரியாக இருந்தது.
இரவு 11 மணிக்கு தேர்தல் முடிவை கவர்மண்ட் ஏஜன்ட் வெளியிட்டார். ராஜனுக்கு அமோக வெற்றி, அவரோடு போட்டியிட்டவர்கள் டிபாசிட்டை இழந்துவிட் டார்கள், நாங்கள் திரும்பும் வழியில் கினிகத்தேனையி லிருந்து ஹட்டன் வரை அமோகமான வரவேற்புக்கள் நடந்தன. நாங்கள் ஹாஸ்டல் வந்து சேரும்போது காலை3 மணியிருக்கும். பொலக், ஸ்டீபன் ஜோசப், குணரட்ண ஆகி யோர் பட்டாசு கொளுத்தி ராஜனுக்கு மலர் மாலை சூட்டி ஞர்கள், மெண்டிஸ் அம்மையார் ராஜனை கைகுலுக்கி

Page 81
1S2 இனிப் படமாட்டேன்
விட்டு எல்லோருக்கும் சுடச்சுட அப்பமும் கோப்பியும் பறி மாறினர்கள். சித்ரா பெர்ணுண்டோவை மாத்திரம் காண வில்லை. பள்ளிக்கூட விடுமுறையாதலால் வீட்டுக்குப் போய் விட்டதாக பிறகு கேள்விப்பட்டேன்.
அடுத்த பத்து நாட்களுக்கும் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல மஸ்கெலியா பகுதியில் சுற்றுப் பிரயாணம் செய்தார். எங்கள் பள்ளிக்கூடத்திலும் விடுமுறையாதலால் நானும் அவருடன் சென்றேன். ஆனல் மாலை 7 மணிக்கெல் லாம் என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். என் வருகைக் காக பல்கட்டிக் கணக்கப்பிள்ளையும் கங்காணியும் காத்திருப் பார்கள். சாப்பாட்டிற்கு பின் பழைய கதைகளைப் பேசு வோம். அதோடு ராஜனின் தேர்தல் வெற்றியைப்பற்றி வெகுவாகப் பேசிக்கொள்வோம்.
எனக்கு மனச்சாந்தியில்லை. நாளுக்கு நாள் அம்மாளின் சுகம் குறைந்துகொண்டு வருகிறது. டாக்டர் கொடுக்கும் மருந்து உடம்பில் ஒட்டாதது போலிருந்தது ஒருநாள் காலையில் எங்கள் குடும்ப டாக்டர் ஜயசிங்ஹ அவர்களிடம் அம்மாளின் சுகத்தைப் பற்றிக் கேட்டேன். அம்மாளுக்கு உள்ள நோய்க்கு இளைப்பாற வேண்டும், வெகு அமைதியாய் இருக்க வேண்டும், அதிர்ச்சி ஆகாது, என்ருர்,
ஆனல் முழு விபரமும் என்னிடம் சொல்லவில்லை. நானும் அழுத்திக் கேட்கவில்லை. எனக்கு மனதில் நிம்மதி யில்லை. டாக்டரின் யோசனைப்படி கட்டிலில் அமர்ந்து ஓய் வெடுக்க அம்மாள் ஒத்துக்கொண்டார். பகல் சாப்பாட் டிற்குப் பின் கட்டிலில் அமர்ந்திருப்பார் அப்போது கண்ணம் நாள் வந்து பேசிக்கொண்டிருப்பாள். கால் பிடித்து விடுவாள்.
அம்மாளுக்குச் சுகமில்லையென்பது தோட்டம் முழுதும் பரவிவிட்டது அடிக்கடி பெண்கள் வந்து பார்த்துப் போவார்கள். அதோடு சுந்தரமும் வருவான். பார்த்து விட்டு என்னேடு பேசிவிட்டுப் போவான்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 153
ராஜன் ஒருநாள் அம்மாளைப் பார்ப்பதற்கு வந்தார். பார்த்துவிட்டு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். மந்திரி வந்திருக்கின்ருர் என்று கேள்விப்பட்டு ஆட்கள் கூடிவிட்டார் கள். சுந்தரமும் வந்திருந்தான். அவன் வேலை சம்பந்தமாய் பேசினேன்.
“தலைமை ஆபீசில் வேலை இருக்கிறது, உடன் வரலாம்” என்ருர்,
“ஒரு கிழமையில் வர்ரேன் சார்,” என்ருர்,
ஆபீஸ் வேலை கிடைத்ததில் கண்ணம்மாளுக்குச் சந்தோசம். எனக்கு நன்றி சொன்னுள்.
“மொதல்லே இருந்து நீங்கதான் எங்க கொல தெய்வம்.” ராஜன் தலையாட்டி சிரித்தார். பின் ராஜன் புறப்பட்டுப்போனர்.
மறுநாள் ஹட்டன் போனேன். ஹொஸ்டலிலிருந்து கொண்டு சங்க காரியாலயத்திற்குப் போய் முதலியாருக்கு உதவியாய் வேலைகளைக் கவனித்தேன். தேர்தலுக்குப் பின் ராஜனுக்கு கொழும்பு ஆபிஸ் வேலை அதிகரித்தது. வாரத் திற்கு ஒரு முறை சனி, ஞாயிறு தினங்களில் வருவதாய் சொல்லிவிட்டுப் போனர்.
ஒரு கிழமை சென்று வீட்டுக்குப்போனேன். சுந்தரமும் கண்ணம்மாளும் கொழும்பு போய்விட்டதாகச் சொன்னர் கள். கண்ணம்மாளின் தந்தை ராஜகாத்தான் அன்று மாலை புத்தகமும் கையுமாக வந்தார்.
*தம்பீ, நீங்க வயதிலே கொரஞ்சாலும் பெரிய மனுசர். பத்திரிகையிலே நீங்க எழுதுறதே வாசிச்சிட்டு வந்தேன் உங்களுக்கு சரஸ்வதி கடாட்சம்,” என்ருர்,
*அம்மாளுக்கு சாதகம் எப்படி இருக்கு?” “ஒங்க அப்பாவாலே மன நோவு. ரொம்ப கஸ்டமான கட்டம். ஏதோ அந்த முருகன் கிருபே வேணும்,” என்ருர்,

Page 82
54 இனிப் படமாட்டேன்
“அவன் கிருபை வேணும்," என்ருர் பல்கட்டி கணக்கப் 96ir&nt. &
நான் பேசவில்லை.
*தம்பீ, நீங்க கண்ணே சகோதரி மாதிரி பாத்திருக் கீங்க, கொழுந்தியா கூட்டாளியாட்டம் பாக்கலே. பொடி யனுக்கும் வேலே தேடி குடுத்திட்டீங்க, அது போதும்,” என்ருர்,
அம்மாளைப்பற்றி எனக்குக் கவலை வினைப்படி நடக் கட்டும் என்று நினைத்தேன். ஆனல் என் உள்ளமும் உடலும் சொல் முடியாத வேதனையில் ஆழ்ந்தன. இராசகாத்தான் வாத்தியாரிடம் அன்று இரவு இருந்து பதினெட்டு சித்தர்கள் பாடல் பாடச்சொன்னேன். சாப்பாட்டிற்குப் பின் ராச காத்தான் வெகு நேரம் பாடினர். தோட்டக்காட்டில் இப்படிப் பாடக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
மறுநாள் அம்மாள் களைப்பாக வருவதாய் நேரத்தோடு படுத்தார்கள், நான் பக்கத்து நாற்காலியில் இருந்தேன். என்னை பேய் தூக்கம் பிடித்து அமுக்கியது. அத்தை வந்து கட்டிலில் இருந்தார்கள். அம்மா தூங்கிக் கொண்டிருந் தார். நான் படுக்கைக்குப் போய்விட்டேன்.
காலை மூன்று மணிக்கு அம்மாள் அறையில் பெரும் கூக் குரல். எழுந்து ஒடினேன். அம்மாள் தூங்கும்போது உயிர் துறந்துவிட்டார்கள். என்ன செய்வது. எதைச் சொல்வது. எங்கள் வீட்டு வெளிச்சம் போய்விட்டது.
அம்மாள் மறைந்து ஒரு மாதமாகிவிட்டது. என் குரு நாதர் ஸ்டீபன் ஜோசப்பும் ராஜனும் ஒருநாள் வீட்டுக்கு வத்தார்கள். எனக்குப் பெரும் ஆறுதல் சொன்னர்கள்.
*சந்ரன் நீ இந்த இடத்தைவிட்டு கொஞ்ச நாள்
வெளியூரில் இருக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறேம், கொழும்பில் நெசனல் டியூட்டரி என்ற

ஸி. வி. வேலுப்பிள்ளை 15
பள்ளுக்கூடத்தில் உனக்குவேலை ஏற்பாடு செய்தாகிவிட்டது. முதல் திகதி நீ போக வேண்டும். இடமாற்றம் மனமாற்றம்.”
“சார் இப்போது செய்யும் வேலை,” *எப்போதும் என்னேடு இருக்க வேண்டுமென்பதில்லை. விலகியிருப்பது நல்லது, சந்ரன்,” என்ருர் ஸ்டீபன் ஜோசப்.
ஏற்றுக்கொண்டேன். சித்ரா பெர்னண்டோவைப் பற்றி நினைத்தேன். என்ன பயன்.
மறுநாள் ஹாஸ்டலுக்குப்போய் நான் கொழும்பு போவதுபற்றி மெண்டிஸ் அம்மையார், பொலக்,குணரட்ண9 முதலியார் ஆகியோருக்குத் தெரிவித்தேன்.
“அது நல்லது. கொஞ்ச நாட்களுக்கு புது ஊரில் இருப்பது நல்லது,” என்ருர்கள்.
நான் வேறு இடம் போவதில் மிஸ் மல்தேனியாவுக்கு வருத்தம். எனக்குப் பள்ளிக்கூடத்தில் பிரியாவிடை நடந்தது.மிஸ்மல்தெனியா அழுஅழுது பேசினர்.என்மாண வர்கள் சிலர் அழுதார்கள். ஹோஸ்டலில் மெண்டில் அம்மையார் எனக்கு விருந்து போட்டார்கள். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, சித்ரா பெர்னண்டோ வேறு பள்ளிக்கூடம் போய்விட்டதாகச் சொன்னர்.
*சந்ரன் நீ போய் பார்,” என்ருர் குணரட்ண. *மெண்டில் அம்மையார் சிரித்துக்கொட்டினர். *நல்ல பெண் கொஞ்ச நாளாக ஏதோ கவலையாய் இருந்து போனுள்.”
மறுநாள் எல்லோருக்கும் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனேன். பல்கட்டி கணக்கப்பிள்ளை, சுப்ரமணி கங்காணி என்னை வழியனுப்ப காத்திருந்தார்கள் 9மணிக்குப்புறப்படத் தயாரானேன். தாத்தா அறையில் கற்பூரம் ஆராதனை

Page 83
156 இனிப் படமாட்டேன்
செய்தும் அத்தை எனக்கு விபூதி வைத்தார்கள் அம்மாள் அறையில் குத்துவிளக்கு எரிந்தது. ஐந்து நிமிசம் அங்கு நின்று காலியாய் இருந்த கட்டிலை தொட்டுக் கும்பிட்டுவிட் டுப் புறப்பட்டேன்.
நான் கொழும்பு வந்து ஒரு வருடமாகிவிட்டது. லுக்கு மஞ்சி சதுக்கத்தில் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் ராஜன் தங்கியிருந்தார். நானும் அவரோடு இருந் தேன். காலை 7 மணிக்கெல்லாம் நெசனல் டியூட்டரிக்குப் போய் மாலை 6 மணிவரை வகுப்பு மாறி மாறி எடுப்பேன். களைத்துப்போய் வீடு திரும்புவேன். ராஜன் இரவு பதினெரு மணிக்கு வருவார். எங்களுக்கு ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரும். சாப்பிடுவோம். அரசியல் தொழிற்சங்க விசயங்கள் பேசுவோம். சனிக்கிழமை நாட்களில் சங்க தலைமைக்காரியலயம் போவோம். சுந்தரம் இப்போது மெயில் கிளார்க் கடித போக்குவரத்து வேலை செய்துகொண் டிருந்தான். தெமட்டக் கொடையில் சொந்தக்காரர் வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பதாய்ச் சொன்னன். சங்க பொக்கிஷதாரருக்கு செட்டித் தெருவில் பாக்கு, ஜவுளிக் கடை இருந்தது. ஒய்வு நேரங்களில் அங்கு போய் கணக்கு எழுதுவதாய் சொன்னன். கண்ணம்மாளுடைய சுகம் விசாரித்தேன். சுகமாயிருப்பதாகச் சொன்னன். யாரோடும் நெருங்கிப்பழகுவதுபோல் தெரியவில்லை.
டியூட்டரியில் ஒருநாள் வேலைகூட இரவு 8 மணிக்கு புறப்பட்டேன். போகும் வழியில் பெரும் மழை. நனைந்து கொண்டு போய் குளித்துவிட்டு சாப்பிட்டதும் படுத்தேன். காலையில் எழுந்திருந்ததும் லேசாய் உடம்பு சுட்டது. அதை கவனிக்காது குளித்து, சாப்பிட்டுவிட்டு டியூட்டரிக்குப் போய் வேலை செய்தேன். வீடு திரும்பும்போது மழை தூறிக்கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். அன்று ராஜன் பதுளை போயிருந்தார். காலையில் எழுந்திருக்க முடியவில்லை. காய்ச்சல் நெருப்புப்போலிருந்தது.எட்டுமணிக்குராஜன்வந்து

ஸி. வி. வேலுப்பிள்ளை 157
என்ப் னைபார்த்துவிட்டு உடன் பக்கத்திலுள்ள சுலேய்மான் நேர்சிங் ஹோமுக்கு காரில் போட்டுக்கொண்டு போனர். டாக்டர் என்னை சோதித்துவிட்டு;
*நிமோனியா காய்ச்சல், ஆஸ்பத்திரியிலிருந்து சுகம் பார்க்க வேண்டும்,” என்று தீர்ப்பு கொடுத்தார்.
ராஜன் என்னை உடன் நேர்ஸ்சிங் ஹோமில் சேர்த்தார். டாக்டர் சோரித்துவிட்டு மழையில் நனைந்ாதன என்று கேட்டார். நனைந்தது, குளித்தது எல்லாம் விபாமாய் சொன் னேன். நேர்சும் ராஜனும் கேட்டுக்கொண்டு "நின்றர்கள்.
*சரி மிஸ்டர் ராஜன், நாங்கள் கவனித்துக்கொள் வோம். வசதிபோல் வந்துபாருங்கள் இரண்டு மூன்று நாட் களில் காய்ச்சல் இறங்கி விடும்!”
*சந்ரன் வீட்டுக்கு எழுத வேண்டுமா?
“வேண்டாம். அவர்களுக்கு ஏன் தொல்லை, டியூட் டரிக்கு டெலிபோன் செய்யுங்கள் வசதி இருந்தால் சுந்தரத்தை வரச் சொல்லுங்கள்.” &ể
ராஜன் போஞர். டாக்டர் சாப்பிட வில்லைகளைக்கொடுத்து ஊசியும் போட்டார். அவர் கட்டளைப்படி தலைக்கு ஐஸ் பொட்டலம் கட்டினுள் நேர்ஸ். மூன்று மணிக்கு வருவதாய் சொல்லி விட்டு டாக்டர் போனர்.
“உங்கள் இருப்பிடம் எங்கே, சொந்தக்காரர்களுக்குத் தெரிவித்தால் நல்லதுதானே,” என்று கனிவுடன் நேர்ஸ் கேட்டாள்.
*நான் ஹட்டன் பகுதி மாமா மாமி மாத்திரத் நெருங்கிய பந்துக்களாக இருக்கிருர்கள். அவர்களுக்கும் தொல்லை கொடுக்க எனக்கு பிரியமில்லை.”
*பெற்றேர்கள் இல்லையா?

Page 84
158 இனிப் படமாட்டேன்
"அம்மா ஒரு மாதத்திற்கு முன்இறந்து போய்விட்டார்” “உங்கள் அப்பா? *அவர் மேல் நாட்டில்,” *சொரி, வேறு யாரும் சொந்தக்காரர்கள் இருந்தால் சொல்லுங்கள். எழுதிப்போடுவேன்!”
“நீங்கள் எல்லோரும் தான் எனக்கு சொந்தம்.” என்றேன்.
*தேங்யூ. இன்றைக்கும் நாளைக்கும் சுரம் கூடும்: பக்கத்தில் யாரும் இருந்தால் நல்லது. நான் இரவில் வந்து கவனித்துக்கொள்வேன்,” என்று சொல்லிவிட்டு போனர். சுரம் விஷம்போல் ஏறிக்கொண்டிருந்த போதிலும் அவள் போகும்போது அவள் நடையை கவனித்துப்பார்த் தேன். பின்னழகு நன்முகவிருந்தது. உனக்கு பைத்தியமா என்று என்னையே கேட்டுக்கொண்டேன். ஆண் பெண் காந்தத்திற்கு எல்லையிருப்பதாகத் தெரியவில்லை.
மூச்சு நெருப்பாகி கபகபவென்று வந்தது. வாயிலிருந்து ஆவியும் தணல்போல் வெளிவந்தது. அந்த அறை லேசாய் சுற்றுவது போலிருந்தது. பிற்பகல் 1 மணிக்கு டாக்டரும் நேர்சும் வந்து பார்த்தார்கள். மறுபடியும் வில்லை, மிக்சர் மருந்து கொடுத்தார்கள். சாப்பிட மோல்ட்மில்க் நேர்ஸ் புகட்டினுள். உயிரற்ற நிலைநில் நான் கூரையைப் பார்த்துக் கொண்டு கிடந்தேன். நாலு மணிக்கு சுந்தரம் வந்தான். எப்படியிருக்கிறது என்று விசாரித்தான். நான் பதில் சொல்லும் போது பேச்சு சரளமாய் வராதது போலிருந்தது. என்னுடைய வேஸ்டி, கமிஸ்களையும் மேசையில் இருந்த நோட் புத்தகத்தையும் கொண்டு வரச்சொன்னது போல் ஞாபகம். k
நெருப்புக்கிணற்றில் மிதப்பது போலிருந்தது. நான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தேன். டாக்டர், நேர்ஸ் மற்றவர்கள் வருவது போவது தெரிந்தது-தெளிவில்லை.

ஸி. வி. வேலுப்பிள்ளை 159
யாரோ என் கையை பிடித்துக்கொண்டு காதுக்குள் *சந்ரன், சந்ரன், நான் கூப்பிடுவது கேட்கவில்லையா?” பெண் குரல். நான்தலையை ஆட்டியிருக்க வேண்டும். அந்த சத்தம் வெகு தூரத்தில் கேட்டிருக்க வேண்டும்.
திடீரென்று எனக்குக் குளிர். புரண்டு படுத்தேன். கண்களைத் திறந்து பார்த்தேன். சோபாவில் யாரோ படுத் திருந்ததைக்கண்டேன்.
*எழுந்திருக்க வேண்டாம் சந்ரன். நான் வருகிறேன்.” பெண் குரல், நேர்சாயிருக்க வேண்டும். *குளிர்,” என்றேன். துப்பட்டியை இழுத்து போர்த்திவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து, ‘என்னைத் தெரிகிறதா சந்ரன்,” என்ருள்.
நன்முய் கவனித்துப்பார்த்தேன். கண் நீலம் பூத் திருந்தது. தெரிந்த முகம். “நான் சித்ரா சந்ரன். இப்பொழுது தெரிகிறதா.”
கையை நீட்டினேன். இறுகப்பிடித்துக்கொண்டு கன்னத் தில் வைத்துக்கொண்டாள்.
மறுபடி தூங்கிவிட்டேன். நான் காலையில் கண் விழிக்கும் போது அவள் பக்கத்தில் நின்ருள். வீட்டிற்கு பெண்கள் அணியும் ஹவுஸ் கோட் போட்டிருந்தாள்.
*நான் இங்கே இருப்பது எப்படி தெரியும்.” *ராஜன் சொன்னர். பேசாமல் படுங்கள்.” *சரி எத்தனை நாளாய் இருக்கின்றீர்கள்.” மூன்று விரல்களைக் காட்டினள். ‘இனி உங்களுக்கு சுகம். நான் வீட்டுக்கு போய் வருகிறேன்.” Y
'நல்லது,” என்று தலையாட்டினேன்,

Page 85
160 இனிப் படமாட்டேன்
சித்ரா நான் பக்கத்திலிருப்பதை சட்டை பண்ணுது என் பக்கம் முதுகை திருப்பிக் கொண்டு சட்டை, சாரி அணிந்து கொண்டாள் தலை சீவினுள். பெளடர் போட்டுக் கொண்டு சப்பாத்தும் மாட்டிக்கொண்டாள்.
*சந்ரன் அம்மாவோடு அந்திக்கு வருவேன். நீங்கள் துரங்க வேண்டும்.”
புறப்பட்டுப்போனள், டாக்டரும் நேர்சும் 7 மணிக்கு வந்தார்கள். “ஹலோ சந்ரன்.” என்ருர் டாக்டர். பின் என்னைச் சோதித்துவிட்டு, “இனி வில்லைகள் போதும். இரண்டு நாட்களில் போகலாம்.”
தேங்ஸ் டாக்டர், " என்றேன். அவர் போய்விட்டார். நேர்ஸ் 2 வில்லைகள் கொடுத்த பின் டோஸ்ட் காப்பி கொடுத்தார்.
*நேற்று மாலை மிஸ்டர் ராஜன் எம். பி பார்த்து விட்டு பதுளைக்குப் போயிருக்கிருர். இரண்டு நாட் களில் வருவதாய் சொல்லச்சொன்னர், மிஸ், பெர்ணுண்டோ உங்கள் பிரண்ட் தானே. நான் கேட்டபோது நீங்கள் அவளைப்பற்றி சொல்லவில்லையே?
“ஒரு ஹோஸ்டலில் இருந்தோம்."
“உங்களை ரொம்ப கவனித்துப் பார்த்தாள். முதல் நாள் அவள் தாய், தம்பி எல்லோரும் வந்து பார்த்துவிட்டுப் போனர்கள். மிஸ் பெர்ணுண்டோ இங்கே தங்கினுள். நீங்கள் Guurt 55eisrir Trio.”
சிநேகிதி போல் பேசினள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 161
“உங்கள் நோட் புக் என்னிடம் இருந்தது. நைட் டியூட்டி யின்போது எல்லாம் வாசித்தேன்.”
நான் பதில் சொல்லவில்லை. *நீங்கள் தானே எழுதியது.* "ஆம்,” என்று தலையாட்டினேன். 'நீங்கள் நல்ல கவி. அதுதான் எல்லோரும் உங்களுக்கு சொந்தம் என்று சொன்னீர்கள். நான் டாக்டருக்கு அதை சொன்னேன், சிரித்துக்கொண்டார். உங்களை ரொம்ப கவனித்துப் பார்த்தார்,” என்ருள்.
*ஏன் நீங்களும் என்னை ரொம்ப கவனித்தீர்களே,” என்றேன்.
“உங்களுக்கு டிலீரியம் இருந்தது. நான் கவனித்தது எப்படி தெரியும்.” *உத்தேசம்.” 'சரி நீங்கள் துரங்க வேண்டும்.” சொல்லிவிட்டுப் போனள்.
நான் சித்ராவை நினைத்துக்கொண்டு கிடந்தேன். என்ன அதிசயம் இது. சித்ரா மெயின் வீதிக்கு போயிருந்தபோது ராஜன் அகஸ்மத்தாய் சந்தித்திருக்க வேண்டும். இருந் தாலும் எதற்காக 3 இரவுகள் தங்கி என்னை அவள் பரிந்து பார்க்க வேண்டும். என் மேல் அன்பு.
நான் தூங்கி விழிக்கும்போது சித்ரா அவளது அம்மா இருவரும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். நேர்ஸ் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
*மேலுக்கு இப்பொழுது எப்படி சந்ரன்,” என்ருள் பெரியம்மாள். நல்ல ஆங்கிலத்தில் பேசினுள்.
உயர்மட்ட நடுத்தர வகுப்பு போலிருந்தது.

Page 86
62 இனிப் படமாட்டேன்
‘இன்றைக்கு தான் சற்று நன்ருயிருக்கிறது," என்றேன். "சித்ரா இனி துணைக்கு தங்க மாட்டாள்,” என்ருள். *ஏன் அம்மா?
*அப்படிற்தான் பிள்ளை.”
"நான் குழந்தையில்லை.”
“fs குமரி.”
சித்ராவும் நர்சும் சிரித்தார்கள். நேர்ஸ் என்னை பார்த்துக் கண்ணை ஒரு மாதிரியாய் செய்தாள். நான் பேசாதிருந்தேன்.
*சந்ரன் எனக்கு நேரமாகிவிட்டது. நான் போகிறேன் பத்திரமாயிருக்க வேண்டும்.”
புறப்பட்டாள் பெரியம்மாள். . .V.
*5 நிமிசத்திலே வருவேன்.” சொல்லிவிட்டு சித்ரா வெளியே போனுள்.
*நீங்கள் யோகக்காரர் சந்ரன்,” என்ருள் நேர்ஸ்.
“என்ன யோகம்?
"நீங்கள் ஒன்றும் அறியாத பபா.”
சித்ரா வந்தாள்.
‘என்ன சிரிப்பு, என்னைப்பற்றியா பேச்சு.”
*இவரை யோகக்காரர் என்றேன். என்ன யோகம் என்று கேட்டார். நீங்கள் ஒன்றுமறியாத பபாவா என்றேன். அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள். என்ருலும் இன்றைக்கு இவருக்கு யோகமில்லை."
“grgiy?' s
*நீங்கள் இங்கே படுக்க மாட்டீர்கள் தான்ே. இந்த காலத்தில் யாரை நம்ப முடியும்?” என்று கிண்டல் செய்தாள்.

வி. வி. வேலுப்பிள்ளை 163
“டீ போடுவோமா,” சித்ரா மழுப்பினள்.
இருவரும் போய் பின் சித்ரா டீ தட்டுக்களுடன்
வந்தாள். நான் படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்தேன்.
*எப்படி சந்ரன்.”
**மோசமில்லை.??
“மோசமில்லை, எனக்குப் பயந்துகொண்டு ஓடினீர்களே. இப்பொழுது எப்படி.”
இது கர்மம் சித்ரா,
**ஆம். நான் கத்தோலிக்க மதம். என்ருலும் வினையை
இப்போது நம்புகிறேன் சந்திரன்.”
“நீங்கள் என்னை வந்து காண மாட்டீர்களென்று எனக்கு தெரிந்ததும் இங்கே வந்துவிட்டேன்.”
“நான் பெரும் தவறு செய்தவன். உங்கள் முகத்தை
பார்க்க அருகதையற்றவன்.”
*நாம் விரும்பும் ஒருவர் நம் மனம் புண்படும்படி பேசினல் கோபம் வராதோ.”
புரியவில்லையே.
சுகமில்லாதிருக்கும்போது புரியாதுதான். கம்மா யிருங்கள்.
*5 மணிக்கு நீங்கள் போக வேண்டும். அம்மா காத்திருப் பார்," என்றேன்.
அம்மாவுக்கு எல்லாம் தெரியும். நான் எல்லாம் சொல்லி யிருக்கிறேன். நான்கு மாதங்களுக்கு முன் ஒரு பேச்சு வந்தது* முடியாது தனியே வாழ்க்கை நடத்துவதாய் சொன்னேன். அம்மா மிகவும் வருந்தினர்கள்.
*ஏன்? நீங்கள் தனியாய் அருக்க வேண்டும்.

Page 87
164 இனிப் படமாட்டேன்
*சந்ரன் உங்கள் தலையில் காய்ச்சல் வெறி போகவில்லை போலிருக்கிறது.”
66 நீட்டினேன். என் கையை பிடித்துக்கொண்டு நெருங்கி உடகார்ந்தாள்.
என் போன்றவர்களை எதற்கு.
“நீங்கள் சுயமரியாதையுள்ளவர்,” தன்னலமற்றவர் அம்மாவிடம் பேசுங்கள்.
எனக்கு பயம். நீங்கள் சொல்லி முடிவு செய்யுங்கள். ஹட்டனில் உங்களைக் கண்டதும் ராஜன் என்ன சொன்னர் தெரியுமா? “மென்மையானவள்” அவளை அடைகிறவன் யோகக்காரன்.
இம். அம்மாவிடம் கேட்டுக்கொண்டு நாளை வருகிறேன்.
என் கன்னங்களை தட்டிவிட்டுப் போனள். நேர்ஸ் அதே சமயம் என் நோட் புத்தகத்துடன் வந்தாள்.
*சித்ரா இதை வாசித்துவிட்டு கொண்டுவாருங்கள்.”
சித்ரா வாங்கிக்கொண்டு போய்விட்டாள்.
*நீங்கள் போனதும் எங்களை மறந்துவிடுவீர்கள்.”
*அது உண்மை,” என்றேன்.
எப்படி இப்பொழுது.
நன்ருகவிருக்கிறது.
*வேணுமென்ருல் நாளை போகலாம். இன்றைக்கு உங்களுக்குத் தூக்கம் வராது,” என்று சிரித்தாள்.
*எப்படித் தெரியும்??
*ஏன் தெரியாது!”
மறுநாள் எழுந்தேன். சித்ரா சோபாவில் இருந்தாள். முகம் கழுவ எனக்கு உதவினள்.
டோஸ்ட், முட்டை காப்பி சாப்பிட வைத்தாள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 165
‘அம்மா என்ன சொன்னர்?
“என்னிடம் உங்களைக் கேட்கச் சொன்னர். பயமா,” கேட்டால் என்ன சொல்வீர்கள்.
கேளுங்கள் பார்க்கலாம். மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. *ஒன்றுமில்லாத என்னை ஏற்றுக்கொள்வீர்களா. பின்னல் உங்களுக்கு தொல்லை."
*நான் நாளை உங்களை வீட்டுக்கு கூட்டிப்போகிறேன். அப்புறம் யோசித்து பதில் சொல்கிறேன்” என்ருள்.
*பதில் தெரியாமல் எப்படி எனக்கு வரமுடியும்?" ‘நண்பர் என்ற முறையில், எனக்கு கவி எழுதியவர் என்ற முறையில், நீங்கள் உண்மைக்கவி சந்திரன் எல்லாம் வாசித்தேன்.”
ராஜன் சிரித்துக்கொண்டு வந்தார். *சித்ரா உங்கள் நோயாளி எப்படி? *சுகம் மிஸ்டர் ராஜன். இவரை அம்மா வீட்டுக்கு கூட்டி வரும்படி சொன்னர். நீங்கள் வரும்வரை பார்த் திருந்தேன்,’ சிரித்தாள்
**நல்ல ஏற்பாடு.”
அடுத்த 45 நிமிசங்களில் டாக்டரும் நேர்சும் என்னை அனுப்பினர்கள். ராஜனும் சித்ராவும் என்னை சித்ராவின் வீட்டிற்கு இட்டுச்சென்ருர்கள்.
இது கற்பனையா கதையா, வினையா என்று புரியவில்லை. உன்மத்தம் பிடித்தவன் போலிருந்தேன். மேல் நிலத்தில் அமைந்த ஒட்டு வீட்டின் முன், 45 நிமிசங்களில் கார் வந்து நின்றது. ராஜன் முன் இறங்கி நான் இறங்குவதற்கு
g) - 11

Page 88
166 இனிப் படமாட்டேன்
உதவினர். முகப்பில் சித்ராவின் தாயார் நின்ருர், வீட்டுக்குப் பக்கத்தில் சிறு கூட்டம். படிக்கட்டுக்களை ஏறினேன். *வாருங்கள், வாருங்கள்,” என்ருர் அம்மையார். ராஜன் வணக்கம் செய்தார். பெரிய விராந்தையில் மூன்று பெரும் கதவுகளை திரைச் சீலைகள் அலங்கரித்தன. தொங்கல் அறைக்கு சித்ரா கூட்டிப் போனள். எல்லாம் தயாராகவிருந்தன. பெரியம்மாள் வந்து
“கொஞ்சம் நாற்காலியிலமர்ந்து விட்டு பிற்பாடு படுக்க லாம்,” என்ருர்,
இப்படித்தான் 25 வருடங்களுக்கு முன் சித்ராவின் இல்லம் வந்து சேர்ந்தேன்.
அத்தியாயம் பதின் மூன்று
வீட்டில் சூழ்நிலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வந்தது. வன்செயலில் வீசியக் காற்று முற்றிலும் தணிந்தது போலிருந்தது.
சித்ரா சந்தோசமாயிருந்தாள். வீட்டு வேலைகளையும் ஆடு மாடுகளையும் கண் காணிப்பதற்கு அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. சித்ராவோடு நான் கதை அளக்கும் வழக்கமில்லை, தாயும் மகனும் எப்போதும் பேசிக்கொள் வார்கள். என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். திடீரென்று ஜகன் சித்ராவைக் கிண்டல் பண்ணும் தோரணையில் கேள் கள் கேட்பாள். s
“அம்மி தாத்தியை முதல் முதல் எங்கே கண்டீர்கள்? எப்படிப் பேசினீர்கள். யார் உங்களை சேர்த்து வைத்தது காதல் கல்யாணம் தானே?”

ஸி. வி. வேலுப்பிள்ளை 167
*உனக்கு வேலையில்லாவிட்டால் ஒரு புத்தகத்தை
எடுத்து வாசியேன்.”
“உங்கள் கதை புத்தகக்கதைக்கு மேல் ருசியாம்.”
*போ கழுதை. அம்மா அப்பா சந்தித்ததைக் கேட்க உனக்கு வெட்கமில்லையா?”
*நீங்கள் பெரிய கர்நாடகம் அம்மி. எனக்கு எல்லாம்
ஆச்சி சொல்லியிருக்கிருர், நீங்கள் தானே தாத்தியை இங்கு கொண்டு வந்தீர்கள்.”
“eg, Drt t-lit, ஆமர்ம்.”
இன்றும் அப்படி கிண்டல் செய்து கொண்டிருந்தாள். நான் கேட்காது போலிருந்தேன். கார் வரும் சத்தம் கேட்டது. இத்த நேரத்தில் யார் வரக்கூடும் என்று யோசித் தேன். ராஜனே வந்திறங்கினர்.
*ஹலோ ராஜன்” என்று வெளியில் சென்று வரவேற்றுக் கூட்டி வந்தான். مخر
ஜகன் சித்ராவுக்கு ராஜன் வருகையைப் பற்றிச் சொல்லிக் கூட்டி வந்தான்.
“இன்றைக்கு சரியான மழை வரப்போகிறது ராஜன்,” என்ருள்.
எல்லோரும் சம்பாஷணை அறையில் அமர்ந்தோம்.
*ராஜன் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வெட்கமில்லை. ஜகன் நாங்கள் இரண்டு பேரும் எப்படிச் சந்தித்தோம், எங்கே சந்தித்தோம் என்றெல்லாம் கேள்வி கேட்டு எங்களைக் கிண்டல் செய்கிருன்” என்ருள் சித்ரா.
“ஜகன்!”
*அங்கிள்,?

Page 89
168 இனிப் படமாட்டேன்
“உங்கள் அப்பாவை லீவு இருக்கும்போது அந்தக் கதையை எழுதச்சொல். ரொம்ப ருசிகரமான, யாதார்த்த கதை அது,” என்ருர்.
ராஜன் சேப்பிலிருந்து எயர் மெயில் கடிதமொன்றை யெடுத்து என்னிடம் நீட்டினர். நான் வாங்கி வாசித்தேன். வண. பிதா தோமஸ் ஜோசப் நான்கு பேரைக்கொண்ட ஒரு தூதுக் குழுவை மெட்ராசில் நடக்கவிருக்கும் கருத்தரங் கிற்கு வரும்படி எழுதியிருந்தார்.
"நல்லது, நீங்கள் அவசியம் போக மேண்டும். நான் இங்கிருந்து மற்ற வேலைகளைக் கவனித்துக் கொள்வேன்,” என்றேன்.
*எங்கே ராஜன்? சித்ரா கேட்டாள்.
“மெட்ராசில் ஒரு வாரம் கருத்தரங்கு நடக்கிறது. அழைப்பு வந்திருக்கிறது. அதற்கு ஜகனயும் கூட்டிப்போனல் நல்லதென்று படுகிறது. ஜகன் பெரிய பிள்ளை. என்னேடு அனுப்புவதில் உங்களுக்குப் பயமில்லையே."
“என்ன பயம், போய் ஜகன் வருகிருயா? "நீங்கள் அனுப்பினல் போய்வருவேன். இரண்டு வாரம் தானே. அந்த பசுபதியம்மா ஆண்டி வீட்டையும் பார்த்துவிட்டு வருவேன்.?
“இவ்வளவு சுலபமாக விசயம் முடியும் என்று நான்எதிர் பார்க்கவில்லை. சித்ரா நீங்கள் எதிர்ப்பு சொல்வீர்கள் என்று நினைத்தேன்.”
“இல்லை, சந்ரு எங்களைவிட்டு பிரிந்து வாழ முடியாதவர். இங்கே என்னேடும் ஜகனேடும் இருப்பதில் மட்டும் திருப்தி. இந்த வீடு, தோட்டம் இவைகளைப்பற்றி அவர் ரொம்ப சிந்திப்பதில்லை. ஜகன் அப்பாவைப்போல் இருக்கக்கூடாது." “ஒரு திருத்தம் ராஜன். சித்ராவும் ஜகனும், எனக்கு நெருக்கமானவர்கள். அவர்களுக்குச் சொந்தமான எல்லா வஸ்துக்களும் எனக்கும் சொந்தம்.”

வி, வி. வேலுப்பிள்ளை 169
“எனக்கு சந்தோசம் சந்ரன். நாளை பாஸ்போர்ட் பிரயாணத்திற்கான மற்ற விசயங்களைக் கவனிக்கிறேன். செல்லமுத்து தலைவர் மகன் பழனிமுத்துவையும் சந்தியாகு வையும் கூட்டிப் போகலாமா?
*ரொம்ப நல்லது.”
*ஜகன் மூன்று சூட்கள் போதும். மற்றவைகளை அங்கு வாங்கிக்கொள்ளலாம்.”
“நல்லது அங்கிள். ஏழு மணியாகிவிட்டதே சாப்பிட்டு விட்டுப் போங்கள்.”
“இல்லை நேரமாகிறது. நாளை சந்திப்போம்.” ராஜன் புறப்பட்டுப் போனர். சித்ரா என்னருகில் உட்கார்ந்து, “முன்பின் யோசிக்காமல் சரியென்று சொல்லிவிட் டோம். உங்களுக்கு ஜகனில்லாமல் இருக்க முடியுமா?” *நீ தானே கதை பேசினய்.” 16* *கோபிக்காதீர்கள், எனக்கு தனியே இருக்க முடியாது.”
ஜகன் வந்தான். “என்ன அம்மி எனக்கு மாத்திரம் தனியே போதவற்குப் பெரும் சந்தோசமா, ராஜன் அங்கிள் நல்லதற்குத் தானே கூப்பிடுகிருர், இந்த ஊரிலே எப்போதும் வன்செயல், இனவாதம் போன்ற அக்கப்போர் வருடாவருடம் நடக் கிறது. போய்ப் பார்க்கிறேன். அந்த ஊர் நல்லதாயிருந் தால் இதையெல்லாம் விற்றுவிட்டு அங்கே போவோம்” என்ருன். -
“அந்த முடிவு தாத்தி செய்ய வேண்டியது. இதுவரை தாத்தி என்னை எங்கேயும் கூப்பிடவில்லை; என்னேடு தானி
ருக்கிறர்." . .

Page 90
170 இனிப் படமாட்டேன்
“சரி சரிநான்போய்ப் பார்த்துவிட்டுவருகிறேன்.இரண்டு வரேங்களுக்கு பல்லைக்கடித்துக்கொண்டு இருங்கள்,”
எங்களுக்கு புத்தி சொன்னன்.
அன்றிரவு சாப்பாட்டிற்குப் பின் சித்ராவும் லீலாவும் ஜகளுடு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் படுத்தேன்' வெகுநேரம் தூக்கம் வரவில்லை. பாச பந்தம் மனிதனை என்ன வாட்டுவாட்டுகிறது என்று பலவாறு சிந்தித்தபடி துரங்கிவிட்டேன்.
மறுநாள் காலையில் நாங்கள் காரியலயம் போகும்போது சித்ராவும் லீலாவும் எங்களோடு பயணமானர்கள். ஜகனுக்கு வேண்டிய சாமான்கள் வாங்க வேண்டுமென்று சொன்னர்கள்.
காரியாலயத்திற்குப் பக்கத்தில் வந்ததும் ஜகனும் அவர் களோடு போஞன்.
ஆபிஸ் வந்ததும் ராஜன் தூதுக்கோஷ்டி போவது சம் பந்தமான வேலைகளை செய்து கொண்டிருந்ததைக் கவனித் தேன். கருத்தரங்கிற்கான விபரங்கள், புத்தகங்கள் மற்ற தஸ்தாவேஜிகளை நான் தாயாரிக்கலானேன். இந்த வேலைகள் முடிந்த பின் ராஜன் போக வேண்டிய இடங்கள் பற்றி முடிவு செய்தோம்.
மாலையில் நான் வீடு திரும்பி வந்தபோது சித்ராவும் ஜகனும் பிரயாணத்திற்கு வாங்கிய உடைகள் மற்றும் சாமான்கள், பசுபதிக்கு வாங்கிய அன்பளிப்புக்களைக்காட்டி ஞர்கள். இந்த வேலையில் பத்மினியும் மனேவும் வந்து சேர்ந்தார்கள்.
“யார் போதவற்கு இத்தனை தடல்புடல்," என்றள் பத்மிணி.
"ஜகன் இந்தியாவில் பெண் பார்க்கப்போ கிருன்,? சித்ரா கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சொன்னுள்.

ஸி. வி. வேலுப்பிள்ளை 171
'நீங்கள் எல்லோரும் பொல்லாத வஞ்சனைக்காரர்கள்,” என்று மனே அழத்தொடங்கினுள்.
பின் சித்ரா விளக்கம் சொல்லி மனேவைத் தேற்றி ஞள்.
‘இவர் பெரிய கெட்டிக்காரர். சொன்னவுடன் ஏன் ஓம் போட்டார். பெரிய லோபர். ஊர் சுற்ற ரொம்ப ஆசை," என்ருள் மனே.
நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மனே வும் ஜகனும் சமையல்கட்டிற்குச் சென்று பேசிக்கொண்டி ருந்தார்கள். அந்த சமயத்தில் அபயரட்ணவும் வந்து சேர்ந் தார். ராஜன் தமிழ்நாடு போவதுபற்றியும் ஜகன் அவரோடு போவதுபற்றுயும் சொன்னுேம். சந்தோசப் பட்டார்.
"ஜகன் பிடித்துவிட்டு வளர்ந்துவருகிருன். இந்தத் தோட்டம், கொழும்பு டவுன் மாத்திரம்தான் அவனுக்கு தெரியும். பெரிய ஊரைப்பார்க்க வேண்டும். அப்போது தான் அவன் போக்கு விசாலமாகும். போய்வரட்டும். உங்களுக்குத் தனிமை ஒரு மாதிரியாகத்தானிருக்கும். நாங்கள் அடிக்கடி வருகிருேம். சித்ரா, ஆண்கள் ம%னவி, பிள்ளைகளை விட்டுப்போட்டு பாரேன், டுபாய் போன்ற இடங்களுக்கு மூன்று நான்கு வருடங்களுக்கு போயிருக்கி முர்களே. பிள்ளை இரண்டு வாரம் போய்வரட்டுமே,’: என்ருர்,
அப்போது ஜகனும் மனுேவும் வந்தார்கள்.
“தாத்தி ஆச்சியை பார்த்து மூன்று வருடங்களாகி விட்டன. வரச்சொல்லி நாளை தந்தியனுப்புங்கள்,” என்ருன்.
“ரொம்ப நல்ல யோசனை, உன் ஆச்சியை வரச்சொல்லி நாளை தந்தி யடிப்பேன். கட்டாயம் வருவார்.”
7-30க்கு எல்லோரும் போனர்கள். மனேவுக்கு சந்தோச மில்லை. சிணுங்கிக் கொண்டு போனள்.

Page 91
172 இனிப் படமாட்டேன்
அடுத்த இரண்டு நாட்களில் ஜகன் பிரயாணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் தடல்புடலாக செய்து முடி வடைந்தன. அத்தை வரவை எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். ராஜன் ஏற்கனவே முடிவு செய்ததற் கிணங்க அடுத்த நாள் மாலை 5 மணிக்கு அத்தையும் வயற் காரர் மருமகள் துணையுடன் காரில் வந்திறங்கினர்கள். நான் முன் சென்று அத்தையை கரம்கூப்பி வரவேற்றேன். சித்ராவும் ஜகனும் ஓடி வந்து இதில் தங்கள் பங்கையும் ஏற்றுக்கொண்டார்கள்.
*ராசா சுகமா என் சின்ன ராசா, என் கண்ணு இங்கே வா,” என்று ஜகன அணைத்துக்கொண்டார்.
வயற்காரர் மருமகள் மெனிக்கே கண்டிய பாணியில் உடையலங்காரம் செய்துகொண்டு வந்திருந்தாள். அவள் முகத்தில் சிரிப்பும் சந்தோசமும் பொங்கிக்கொண்டிருந்தது. நன்முக இருந்தாள்.
*மாஸ்டர் சுகமா? இது தானே சித்ரா நோன, இவரு மகன் தானே,” என்று சுகம் விசாரித்தாள்,
"எல்லோரும் சுகம் மேனிக்கே,” என்றேன்.
இருவரையும் விருந்தினர் அறைக்கு இட்டுச்சென்று உடை மாற்றி முகம் கழுவ ஒழுங்கு செய்துவிட்டு சித்ரா என்னிடம் வந்தாள்.
“இங்கே, அந்த பெண் யார். அவளுக்கு என் பெயர் எப்படித் தெரியும்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“அவள் எங்கள் வயலை குத்தகைக்கு எடுத்து பார்க்கும் அப்புஹாமியின் மருமகள். எங்கள் குடும்ப நண்பர்கள். நான் ஹோஸ்டலைவிட்டு ஓடிப்போய் வீட்டிலிருந்தபோது அப்புஹாமியும் இவளும் வந்தார்கள். எனக்கு சிங்கள பெண்ணை dill- வேண்டுமென்று அம்மாளிடம் சொன்னர்கள்.”

ஸி. வி. வேலுப்பிள்ளை 173
“ஒ, அத்தை என்ன சொன்னர்.”
* அவன் பிரியம் என் பிரியம்,” என்ருர்,
‘இந்த மெனிக்கே யாரையும் நான் கண் வைத்திருக்கி ருேஞ என்று கேட்டாள். நான் ஆம் என்று கிண்டல் செய் தேன். விபரம் கேட்டபோது, பெண் பூரீபாத கல்லூரியில் உப அதிபர், பெயர் சித்ரா என்றேன்.”
நீங்கள் திருடன் சந்ரு, என்று என் கையை இருக்கிப் பிடித்துவிட்டு போய் அனைவருக்கும் தேனீர், பலகாரம், பழம் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டுக்கூப்பிட்டாள்.
அத்தை, ஜகன், மெனிக்கே மூவரும் கூடி தேனிர் அருந்தினர்கள். நானும் அவர்களோடு சேர்ந்துகொண் டேன். ベ
*எப்படி பலகாரம்?” என்று மெனிக்கே பழைய கேள்வி யைக் கேட்டாள்
*ரொம்ப ருசி ஜோர்,” என்றேன். அத்தையும் மெனிக்கேயும் கொல்லென்று சிரித்தார்கள்.
*சித்ரா நோன உங்களே பத்தி பேசின அன்னிக்கி இப்படித்தான்ங் சாப்பிட்டு ஜோர் சொன்னர் மாஸ்டர். இப்ப எல்லாம் ஜோர் ஜோர். இருபத்தைந்து வருசமாகியும் மறக்கல்லே.”
மாலை 7 மணிக்கெல்லாம் வீட்டு வேலைகள் முடிந்ததும் சித்ராவும் ஜகனும் பிரயாணத்திற்கு ஆவன எல்லாம் செய்து முடித்துவிட்டு நண்பர்களை எதிர்பார்த்துக்கொண்டி ருந்தார்கள்.
அபயரட்ண, அவர் மனைவி, பத்மினி, மனே, ரஞ்சன், கல்யாணி எல்லோரும் வந்து அளவளாவிப் பேசிக்கொண்டி ருந்தார்கள். பத்மினி அத்தையிடம் கொச்சைத்தமிழில் பேசிக்கொண்டு ரொம்ப நெருக்கமாகப் பழகினுள். மனே அத்தையைக்கட்டிக்கொண்டிருந்தாள்.

Page 92
174 இனிப் படமாட்டேன்
*ஆச்சி நீங்கள் தானே அங்கிளை வளர்த்துவிட்டவர்." மெனிக்கே மொழிபெயர்த்தாள்.
**ஆமாடி பொண்ணு.”
*அங்கிள் சின்ன வயசிலே ஜகன் மாதிரி கிண்டல் செய் aurrrir?”
“இல்லடி கண்ணு.”
"அப்படியானல் ஜகன் பெரிய வால்.”
பேச்சு வளர்ந்துகொண்டு போனது. 9 மணிக்கு எல்லோரும் ஜகனுக்கு பிரியாவிடை சொல்லிவிட்டுப் போஞர்கள்.
மறுநாள் சரியாய் காலை 6 மணிக்கு மூன்று கார்கள் வந்து வாசலில் நின்றன. ராஜன், சந்தியாகு, பழனிமுத்து முவரும் இறங்கி வந்து முகப்பில் அமர்ந்தார்கள்.
*ராஜன் நான் எயார் போட்டுக்கு வரமாட்டேன். மகன் பிளேன் ஏறும்போது மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கும். சின்னம்மாளும் அப்படித்தான் சொல்கிருர்கள்.”
“உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். நேரமாகிறது ஜகண் ஆசிர்வதித்து அனுப்புங்கள்.”
எல்வோரும் பூசையறைக்குச் சென்று திரு உருவங் களுக்கும் இளமுருகனுக்கும் வணக்கம் செய்தோம். சித்ரா ஜகன் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு ஆசிர்வதித் தாள், அத்தை ஜகனுக்கு விபூதி வைத்தார். ஜகன் எல்லோ ரையும் முத்தமிட்டு கைகூப்பிவிட்டு வெளியில் வந்தான்.
*அம்மி நான் பாட்டா ஊர் போனதும் தாத்திக்கு டெலிபோன் செய்வேன்,”
குட்கேசை சந்தனம் எடுத்துக்கொண்டு ஜகனுடன் போய் காரில் ஏறினன். பழனிமுத்து, சந்தியாகு இருவரும் சித்ராவிடம்;

ஸி. வி. வேலுப்பிள்ளை 175
*ஒண்ணும்யோசிக்காதீங்க அம்மா. பிள்ளை கெட்டிக் காரர் 150 வருடத்திற்கு பிறகு பாட்டா ஊரே பாக்க போருரு. அதே பெருசு, நாங்க எல்லாம் பாத்துக்கொள் வோம்,” என்ருர்கள்.
நானும் ராஜனுக்கு பக்கத்திலமர்ந்தேன். எல்லோரும் புறப்பட்டோம்.
*ராசா குட்டி மறந்திடாமே தந்தி சொல்லுங்க,” என்று கம்மிய குரலில் சந்தனம் சொன்னன்.
*நல்லது சந்தனம். எப்போதும் வீட்டிலே இருக்க வேண்டும்,” என்ருன் ஜகன்.
*வேறே எனக்கு என்ன வேலே போயிட்டு வாங்க, என்று சந்தனம் கைகூப்பினன்.
நான் வீடு திரும்பும்போது அநேகமாய் 11-30 இருக்கும். அத்தையும் சித்ராவும் முகப்பில் நின்ருர்கள்.
*சந்ரு எப்படி பிள்ளை போனன், அழுதானே,” *சே நல்லாய் போனன். அவன் திடமான"ஆள்" *எஸ் ராசா குட்டி அந்த பாவி மாதிரி,” என்ருள் அத்தை.
"என்ன என்ருள்,” சித்ரா,
விசயத்தை மாற்றிச் சொன்னேன். “என் அப்பாவைப் போலாம்.” *அந்த மாதிரிதான் பிள்ளைகள் இருக்கவேண்டும்.”
**மெனிக்கே எங்கே.*
*பின்கட்டில். இங்குள்ளவர்களுக்கு உங்கள் வீட்டைப் பற்றி வெகுவாக அளந்து கொண்டிருக்கிருள்.” காரியாலயம்
போய் நேரம் சென்றுதான் வருவேன். சில சமயம் ராஜன் கூட டெலிபோன் செய்வார்.” என்றேன்.

Page 93
176 இனிப் படமாட்டேன்
*டெலிபோன் வந்ததும் ஓடி வர வேண்டும்," என்று கனிவுச் சிரிப்பு சிரித்தாள்.
பின் கட்டுக்குப் போனேன். நாட்டுப்பெண்கள் சிலர் இருந்தார்கள். மெனிக்கே ஏதோ அளந்து கொண்டிருந் தாள்.
“ஓ மாஸ்டர் நம்ம சின்ன மாத்தியா சந்தோசமா போனதா? கேட்டாள்.
*சந்தோசம். அவர் வந்த பிறகு இதெல்லாம் விற்றுப் போட்டு இந்தியா போவோம். இங்கே கரச்சல் தானே, என்றேன்.
*சே, சே என்ன பேச்சு மாஸ்டர் நீங்களும் ராஜன் தொரேயும் எங்க சிங்கள ஆளுகளுக்கு எவ்வளவு ஒதவி. கரச்சல் வாரப்போ தோட்ட ஆளுகளுக்கு புத்தி சொல்லி எங்களுக்கு கரச்சல் வராம கவனிக்கிறது தானே. அந்த பெரிய வீடு, தோட்டம், பெரிய வேலை எல்லாம் வுட்டு போட்டு இங்கே சித்ரா நோன வூட்டுக்கு வந்திச்சு. நோன, புள்ளே, பங்களா, தோட்டம், எல்லாம் ஒங்களுக்கு சொந்தம் தானே. சாமி கொடுத்தது: இந்த நாட்டு ஆள் உங்க மேலே நல்ல பிரியம் நீங்க எங்களுக்கு தொனே, நாங்க உங்களுக்கு தொனே ஏன் போக வேணும்."
மெனிக்கே சொன்னதில் உண்மையிருந்தது சித்ரா கவனித்துக்கொண்டிருந்தவள் “ஒங்க மாஸ்டர கூட்டிக்கொண்டு ஊருக்கு போ மெணிக்கே அங்கே இருக்கிற பெரிய வீட்டிலே இருக்கட்டும்”
“எனக்கு எல்லாம் தெரியும் சித்ரா நோன,” *எப்புடி கதே,” என்ருள் சித்ரா, இருவரும் தமிழில் பேசிக்கொண்டார்கள். அத்தை சித்ராவை அணைத்துக்கொண்டு சிரித்தார்கள்.

ஸி. வி. வேலுப்பிள்கள 1ግግ
காரியாலயம் சென்றேன். தூது கோஷ்டியை அறுப்ப வந்தவர்கள் இருந்தார்கள். அவர்களோடு பல விசயங்கள பேசிக்கொண்டிருந்தேன். சரியாய் மாலை 4 மணிக்கு டெவி போன் அடித்தது. கை நடுக்கத்தோடு எடுத்தேன்.
பெண் குரல்,
*யாரு பேசறது தெரியுமா மாஸ்டர்?
“ஒ, தெரியுமே பசுபதியம்மாள் சுகமா?
*நல்ல சுகம். மகன் பக்கத்திலே, மத்தவங்க சாப்பிட்டு கொஞ்சம் சாஞ்சிருக்காங்க.
ராஜன் வெளியே போயிட்டார்.”
‘எப்புடி மகன் பேரப்புள்ளே எல்லாம்?
*நல்ல சுகம் மாஸ்டர்.வாக்கு தவருமே புள்ளயே அனுப் பிட்டீங்க. தங்கச்சி எப்படி சுகமாயிருக்கா?
*நல்ல சுகம்.” "இந்தாங்கமகன் பேசுவார்.”
“தாத்தி அம்மி, ஆச்சி, அந்த மாமி, மகுே 6T6(6חעLb எப்படி, மாட்டுக்கார சந்தனம் எப்படி?”
என்ன மகன் காலையிலே தானே பார்த்தாய்.” "ஆமாம் தாத்தி. அம்மா அழுதார்களா, நல்லாயிருக்
கிருர்களா. தாத்தி இரவில் அம்மியை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் தெரியாமல் அழுவார்கள்.”
‘நான் கவனிப்பேன் ஜகன். நீ உன்னை பார்த்துக்கொள் மிஸ்டர் ராஜன் எங்கே?
“Go6u 6vfQBunu GBL untu nrri.”
"அந்த ஆண்டியை பேசச்சொல்.”
“89ሀufi®u Jrr.”
“பசுபதியம்மாள்,”

Page 94
178 இனிப் படமாட்டேன்
*இம் சொல்லுங்கள்,” *மிச்ச நாளா நான் கரவளை பக்கம் போகல்லே. *சரிதான் உங்களே இலே வெட்டக்கூப்பிட ஆள் இல்லே தானே, சரி மாஸ்டர் வணக்கம்.”
*வணக்கம்.”
சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு பின் சித்ரா கேட்டுக் கொண்டபடி வீட்டுக்குப் புறப்பட்டேன்.
சித்ராவும் அத்தையும் என் வருகைக்காக காத்திருந்தார். கள். டெலிபோன் செய்தியை சொன்னேன்.
*உன்னை இரவில் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டு மாம். நீ இரகசியமாக அழுவாயாம் உன் மகன் சொன்னன். “என் கண்ணு!? அவளுக்கு இதைக் கேட்டுக் கண் கலங்கியது.
*போ சித்ரா, வேலைகளைக் கவனி.? *ராசா உன் அப்பா போய் பத்து வருசம். அப்புடி அழுதேன்; சரி போய் உட்காருங்க, முருகன் எல்லாம் பாத்துக்கொள்வான்.”
நான் சிரித்தேன். அத்தை சித்ராவுக்கு உதவப்போனள். 7 மணியைப்போல் மனே பத்மினியுடன் இரைந்து கொண்டு வந்தாள்.
*அந்த மாட்டுக்கார சந்தனத்தை கட்டாயம் அடிப் பேன் மாமி. அவன் ஜகன் பெண் பார்க்கப் போயிருக்கான் என்று என்னை பார்த்து ஆடுகிருன். அவன் பெரிய தடியன். மெனிக்கே அவனை சும்மாயிருக்கச் சொல்.”
*பேபி நீங்க அடிங்க, நான் சப்போர்ட்." எல்லோரும் சிரித்தோம்.
ஜகன் இந்தியா சென்றதை பெரிதுபடுத்தாததுபோல் எல்லோரும் நடந்துகொண்டோம். ஆனல் மணுே மட்டும்

ஸி. வி. வேலுப்பிள்ளை 179
காலியாயிருந்த கட்டிலில் போய் படுத்துக்கொண்டாள் சித்ரா அவளுக்கு தின்பண்டங்களைக்கொடுத்தாள். அவ ளோடு சற்றுப்பேசி அவளைத் தேற்றினுள்.
9 மணியானதும் பத்மினியும் மனுேவும் புறப்பட்டார்கள் அத்தை சாம்பிராணி தூபம் எல்லா அறைகளுக்கும் பிடித்தார். சித்ரா திருச்சிலைகள் அமைந்திருந்த கண்ணுடிக் கூடுகளுக்கு முன் தீபம் ஏற்றினுள். பின் அத்தை என்னிடம் வந்து;
*ராசா இன்னிக்கி ஏதாவது பக்தி பாடல்களைப் பாடணும்,” என்ருர்,
*சின்னம்மா சொல்கிறபடி பாடுங்களேன். நீங்கள் பாடி நான் கேட்டதில்லை,” என்ருள் சித்ரா,
நான் சித்ரா படுக்கும் பாயை பூசை அறையில் விரித்து அதிலமர்ந்து தாத்தா எனக்கு சொல்லி வைத்த விருத்தங் களைப்பாடினேன். எங்கிருந்தோ ஊற்றுப்போல் திரண்டு உருண்டு அருவியாய் வந்தது. அத்தை கைகூப்பி மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்தாள். சித்ரா கண்களை மூடிக் கொண்டு தனக்குத் தெரியாத வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள், எவ்வளவு நேரம் பாடினேனே எனக்கே தெரியவில்லை. பின் நான் எழுந்தேன்.
*சந்ரு நீங்கள் அழகாப் பாடினீர்கள். எனக்கு ஒரு மாதிரியா தூக்கம் வந்தது.”
'கோயிலில் பாடும் ஹிம் போன்றவை,”
*தினமும் இப்படியே பாடுங்கள். வீட்டுக்கு சாந்தி யுண்டு,” என்ருள்.
*சரி,” என்று ஒப்புக்கொண்டேன்.
அன்று இரவு சித்ரா டப்பை அங்கியை அணிந்து கொண்டு திவானுக்கு பக்கத்தில் பாயை விரித்துப்படுத்தாள்.
மகன் வீட்டில் இல்லாதது அவள் உள்ளத்தில் தனிமை வந்துவிட்டது.

Page 95
180 இனிப் பட மாட்டேன்
கொகா பட்சியின் சத்தம், துரக்கம் கலைந்ததும் சித்ரா வின் முகத்தை தொட்டுத் தடவினேன்.
*சத்ரு, நான்.” என் கையை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.
மறுநாள்.
அத்தியாயம் பதினுன்கு
ராஜன் மெட்ராஸ் சென்று ஒரு வாரமாகிவிட்டது. அத்தையும் மெணிக்கேயும் எங்கள் தனிமையை நிரப்பினர் கள். வீடு நிறைய பேச்சு, சிரிப்பு, நடமாட்டம் இருந்தும் ஜகன் பிரிவை ஈடுசெய்ய முடியவில்லை போலிருந்தது.
நான் காரியாலயத்திலிருக்கும்போது ஜகன் காலி செய்த மேசை என் கண்ணை உறுத்தும். வேலைகளைக் கட்டிக் கொண்டு அதில் மூழ்கிவிடுவேன், தனியாக வீடுவருவது ஒரு மாதிரியாய் இருந்தது. வீட்டில் அவன் பேசும் கிண்டல், சிறு வாக்குவாதம் இல்லாதிருப்பது என் தனிமையை மிகைப் படுத்தின.
இராச்சாப்பாட்டுக்கு முன் அத்தை மேற்பார்வையில் கூட்டுப்பிராத்தனை நடத்துவது, பாடுவது வீட்டுக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.
சித்ரா என் பக்கத்தில் படுத்துக்கொண்டு பல விசயங் களை வரவழைத்துப் பேசிக் கொண்டிருப்பாள். கையை நீட்டி என் கையைப் பிடித்துக்கொள்வாள். இத்தப் பிடிப்புக்குள் ஜகன் இருப்பதுபோல் நினைப்பாளோ, எனக்குப் புரியவில்லை. ஆசா பாசங்கள் மனிதனை துன்புறுத்துவதோடு அவ தூய்மைப்படுத்துகின்றன, s
ஏனைய பெற்ருேர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பிவிட்டு அவர்களைப்பற்றி சதா பேசிக் கொண்டிருப்ப தால் அர்த்தத்தை இப்போதுதான் புரிந்துகொண்டேன்,

ஸி. வி. வேலுப்பிள்ளை 181
மாலையில் பத்மினியும் மனேவும் வருவார்கள். மனே சோர்ந்து போயிருப்பாள். போட்ட உடைகளையே மாற்ரு மல் போட்டுக்கொண்டு வருவாள்.
*கண்ணு ஏன் உடுப்பு மாத்தல்லே,” என்பார் அத்தை. “யாரு பாக்க ஆச்சி,
மெனிக்கே அவளை மடியில் தூக்கி வைத்துக்கொள்வாள். அத்தை கதை சொல்வார். மெணிக்கே அதை கோர்ட் முதலியார் போல் மொழிபெயர்ப்பாள். மனே கண்களை மூடிக் கொண்டு இம் போட்டுக் கொண்டிருப்பாள். சித்ரா வும் நானும் தெரியாது போலிருப்போம்.
ஜகன் எங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தான் சித்ரா அதை வாசித்துவிட்டு கன்னி மேரி சிலையிருக்கும் கண்ணுடிக்கூடுக்குள் வைத்தாள் ராஜன் ஒரு தடவை டெலிபோன் செய்திருத்தார். கருத்தரங்கு மூன்று நாட்கள் நடப்பதாயும் அதற்குப்பின் சில இடங்களைப் பார்க்கப் போவதாயும் தெரிவித்தார். அதிகம் பேசவில்லை. அவர் பேச்சும் உற்சாகமாயில்லை,
நான் வீட்டுக்கு வந்ததும் சித்ரா டெலிபோன் வந்தத்ா என்று கேட்பாள். நான் பதில் சொல்லுமுன் முகத்தைப் பார்த்து புரிந்துகொள்வாள்.
நேற்று நான் முகம் கழுவிக் கொண்டிருக்கும்போது அத்தையும் மெனிக்கேயும் சந்தனத்திடம் பேசிக்கொண் டிருந்தது என் காதில் பட்டது. சந்தனம் சில ரசமான விசயங்களைச் சொன்னன்.
“நம்ம ஐயா பணத்திலே குளிச்சு முழகினவரு, பணம் வீடு சொத்து இதுகள்ளே அவருக்கு இம்மிகூட ஆசேயில்லே கேக்குறீங்களா சின்னம்மா, நம்ம பெரிய வீட்டிலே எதுக்குப் பஞ்சம். மெணிக்கே சொல்லுங்க ஓங்களுக்கு தெரியாதா. அந்த சுந்தரம் பணம் காணுதவன், பெரிய மனுஷ சகவாசம்
இ-12

Page 96
182 இனிப் படமாட்டேன்
இல்லாதவன். நம்ம ராசன் தலைவரு தானே சுந்தரத்துக்கு அந்த சங்கத்திலே வேலே வாங்கிக்குடுத்தாரு, கடசியிலே என்ன ஆச்சு. திண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ் ағпт6йт,**
*கேள்விப்பட்டேன்,” என்ருர் அத்தை.
*கொஞ்சமாவது நெனச்சானு, மில்டரிக்கு போனவன் கொலேகாரன் சின்னம்மா. அந்த தலைவனுேட சேந்துகிட்டு நம்ம ராஜன் தலைவருக்குத் திரிவச்சான். கடேக்கு கணக்கு எழுதப்போனவனுக்கு பங்கு சேர பணம் எங்கே வந்துச்சு, கடே மொதலாளி இந்தியா போனது பாத்து இமிகி ரேசனுக்கு பெட்டிசன் போட்டு அவனே வராமே அடிச்சு கடே முழுக்க எடுத்துடட்டானும், ரெண்டு மெத்தே வீடு கட்டிட்டான். இப்ப நம்ம ஐயாவேகூட தெரியாதுனு சொல்லுருளும். எத்படிங்கே கதே.”
*உனக்கி இதெல்லாம் எப்படித் தெரியும் சந்தனம்?
“நம்ம சுப்ரமணியன் கங்காணி மகன் கந்தரத்து கடேயிலே கொஞ்ச நாள் வேலே செஞ்சிட்டு இப்ப போத்தல் வியாபாரம் செய்ருரன். அவனுக்கு எல்லாம் தெரியும்.”
*அவன் சரியான ஆள் தான், சரியான களவாணிக்குத் தான்காலம்,” என்ருள் மெனிக்கே.
சந்தனம் சொன்னவைகள் உண்மை. சுந்தரம் கெட்டிக் காரன். நாளடைவில் பணம், வீடு செல்வாக்கெல்லாம் தேடிக்கொண்டான். ஆனல் தொழிலாளர்களுக்கு சேவை செய்சிறேனென்று சொல்லும் இவன் சுற்றத்தவர்களையும் நண்பர்களையும் திரைபோட்டு மறைப்பதுஎனக்கு விபரீதமாக இருந்தது. தோட்டப்பகுதியிலிருந்து கொழும்புக்கு வந்து வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் முகமுடி போட்டுக் கொள்வது புதிதல்ல. ஆனல் தொழிற்சங்கவாதி, பல்லுக் கட்டிக்கணக் கப்பிள்ளை ஜோசியம் பலித்துவிட்டது. ஏதோ கண்ணம்மாள் வசதியாய் வாழ்வதில் எனக்கு திருப்தி,

ஸி. வி. வேலுப்பிள்ளை 83
முகத்தைக் கழுவிவிட்டு பின் கட்டிலிருந்து தேனீர் சாப் 19 "Gotb.
“ராசா வந்து எட்டு நாளாச்சு, மாமா எப்புடி இருக்கி ருரோ தெரியல்லே. நாளைக்கு போன நல்லது. பேரன் வந்ததும் அங்கே அனுப்பி வைங்க, போகவர இருக்கணும். நம்ம சனங்களையும் தெரிஞ்சிக்கிறனும்.” என்ருர் அத்தை, “நம்ம வீட்டுக்கும் வரவேணும்,* மெனிக்கே சொன்னர்.
“ஒ சரி அனுப்புகிறேன்,” என்ருள் சித்ரா,
மறுநாள் காலையில் அத்தையை அனுப்புவதாய் முடிவு செய்தோம். அன்று இரவு அத்தை சந்தனத்தைக்கூப்பிட்டு ஏதாவது பாடச்சொன்னர்.
“எனக்கென்ன தெரியும் சின்னம்மா,” என்று மழுப் பினன்.
“ஏதோ வாயில வந்ததே படியேன். மாரியம்மன் தாலாட்டு கேட்டிருப்பியே, சும்மா வெக்கப்படாமே
gLfro at'
எனக்குப் பாட்டியின் ஞாபகம் வந்தது. அந்த அன்டி உருவம் ஆகாயத்திலிருந்து என்னைப் பார்ப்பது போலி ருந்தது.
அன்றிரவு சந்தனம் மாட்டுப்பட்டி அட்டிலில் படுத்துக் கொண்டு பாடினன்.
*உனக்கு சாஞ்சா சமயபுரம்
சாஞ்சா சமயபுரம் நீ சாதிச்சா கண்ணபுரம்
எங்க கண்ணபுர மாரிமுத்து கண்ணபுர மாரிமுத்து உனக்கு பொந்து புளியமரம் பொந்து புளியமரம் நீ போயிருக்க ஆலமரம்”

Page 97
184 இனிப் படமாட்டேன்
அமைதி ததும்பும் இந்த இரா வேளையில் சந்தனத்தின் பாடல் வெள்ளிச் சக்கரம்போல் ஆகாயத்தில் மிதந்தது.
“இது என்ன பாட்டு? சித்ரா கேட்டாள்.
“இது மாரியம்மனைப் பற்றியது, மாரியம்மன் என்ருல் மழைத்தெய்வம்”
*சந்தனம் கத்தோலிக்கன் எப்படி இந்த பாடல் தெரியும்.”
“மலைநாட்டில் எல்லோரும் ஒண்டி வாழ்கிறவர்கள். எல்லா சாமிகளையும் கும்பிடுகிறவர்கள், ஜாதி, மத பிரச்சனை 5 Gigi..'
*நீங்கள் ஒரு ஜாதி ஆட்கள்:” **ஆம் கூலிக்காரர்கள்,” *சீ! அப்படி சொல்லக்கூடாது."
மறுநாள் காலையில் அத்தையும் மெனிக்கேயும் பிரயாணத்திற்கு தயாரானர்கள். அன்பளிப்புகள், காய்கறி மூட்டைகள் எல்லாம் தயாராகவிருந்தன. சந்தனம் டக்சி கொண்டுவந்து சாமான்களை ஏற்றினன். அத்தை சித்ரா வுக்கு தெம்பு சொன்னள். மெணிக்கே சித்ராவின் முகத்தைத் தொட்டு சந்தோசமாயிருக்கச் சொன்னுள். பிரியாவிடை முடிந்ததும் அவர்களை டக்சியில் ஏற்றிக்கொண்டு ரெயில்வே ஸ்டேசனுக்கு புறப்பட்டேன்.
எப்படியோ இரண்டு வாரங்கள் ஓடி மறைந்தன. மாலையில் பத்மினி, மனே, "அபயரட்ண அவர் மனைவி பிள்ளைகள், ரஞ்சன், கல்யாணி ஆகியோர் வருவார்கள். வீடு நிறைந்திருந்த போதிலும் ஜகன் இல்லாதது பளிச்சென்று தெரியும்.
ராஜன் இன்று வருவார், நாளை வருவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

வி. வி. வேலுப்பிள்ளை 185
முகப்பில் அபயரட்ணவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது ஹாஸ்யமான பேச்சை ரசித்துக் கொண்டிருந்தோம். கார் வந்த சத்தம் கேட்கவில்லை.
*ருசிகரமான சம்பாஷணை போலிருக்கிறது சந்ரன்,” என்று சிரித்தபடி உள்ளே வந்தார் ராஜன்.
#: ஹலோ ராஜன்,” என்று இருவரும் கை குலுக்களுேம்.
ஜகன் சூட்கேசுக்களை வைத்துவிட்டு கன்னங்களில் முத்த மிட்டான்.
அம்மியை கூப்பிடாதீர்கள் தாத்தி, நான் உள்ளே போகிறேன்.
இரண்டு அடி வைக்குமுன் சித்ரா வத்தாள்.
*ஜகன்! புத்தா,”
தாய் மகன் சந்திப்பு எனக்கு இன்பத்தைத்தந்தது.
“ராஜன் உட்காருங்கள் வேலைகளெல்லாம் நன்ருது முடிந்தனவா?”
“ஒரு மாதிரியாய் முடிந்தன. உங்களுக்கு இப்போது சந்தோசம் தானே?
*அதை கேட்க வேண்டாமே,”
தாயும் மகனும் உள்ளே போனர்கள். லீலா, சந்தனம் ஆகியோரது பேச்சு கேட்டது.
நாங்கள் அமர்ந்தோம்.
"நீங்கள் மெட்ராஸ் போயிருப்பதாய் சந்ரன் சொன்னர்.”
**ஆம் பூரீறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் புனர்வாழ்வில் போகிறவர்களின் பிரச்சனைகளைப்பற்றி பேசினுேம்.”

Page 98
186 இனிப் படமாட்டேன்
“இங்கிருந்து போனவர்கள் நல்லாயிருக்க வேண்டுமே?”
“நல்லாயிருந்தால், இந்தக் கருத்தரங்கு நடந்திருக்காது” ராஜன் சொன்னர் .
“உண்மை. உண்மை. நாமெல்லாம் சுகமாயிருந்தால் டாக்டர்கள் எதற்கு. சரி இங்கிருந்து போனவர்கள் எப்படி இருக்கிருர்கள்?
*மிஸ்டர் அபயரட்ண இங்கிருந்து போனவர்கள் அங்கு அந்நியர்கள். வேண்டா விருந்தினர்கள், நல்ல வரவேற்பு கிடையாது, பிழைக்க முடியாதவர்கள் வந்துவிட்டதாக புறக்கணிக்கப்படுகிருர்கள். இங்கு அவர்கள் தோட்டப் பகுதிகளில் தனித்து வாழ்ந்த போதிலும் 150 வருடம் குடித் தனம் செய்துவிட்டார்கள். தோட்டப்பகுதி பழக்க வழக் கங்கள் ஏனைய தொடர்புகள் சமூக வாழ்க்கை அமைப்புக்கள் ஒரு தனித்துவ அம்சத்தை பெற்றுவிட்டன. எனவே இங்கிருந்து போகிறவர்களுக்கு தக்க புனர்வாழ்வு அமைய வில்லை. பெரிதும் கஷ்டப்படுகிருர்கள். எந்த நாட்டிலும் அரசியலுக்கு கண் இல்லை.”
தோல்வி கண்டவர்போல் ராஜன் பேசினர். இதில் விசேசம் ஒன்றுமில்லை. அறிக்கைகள் பத்திரிகைகள் மூலம் நாங்கள் தெரிந்துகொண்டதை பார்த்துவிட்டு வந்திருந் தார்!
“a 6760L D60)u மறைக்காமல் சொல்லிவிட்டீர்கள். வேறு யாருமாயிருந்தால் உண்மையை சொல்லியிருக்க மாட் டார்கள்.”
*உண்மை எல்லோருக்கும் சொந்தம். ஏழைகளுக்கு எந்த ஊரிலும் இடமில்லை. அதுவும் உண்மை,”
லீலா தேனீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
*மிஸ்டர் ராஜன் நம் நண்பர் சந்திரனேடு நான் இந்த விசயங்களை பேசுவது வழக்கம். மலை நாட்டு தொழிலாளர்கள் போக்கிடமில்லாதவர்கள். இந்த நாட்டில் என்ன கஸ்டம்

ஸி. வி. வேலுப்பிள்ளே 187
வந்தாலும் இவர்களை இங்கிருந்து ஓடாமல் தடுக்க வேண்டும்.”
“அது பெரும் பிரச்சனை. அதற்கு தக்க வழியும் அதன் முலம் பரிகாரமும் தேடவேண்டும்,அதற்கு உங்களைப்போன்ற சிங்களவர்களின் ஆதரவு வேண்டும்.”
“வாஸ்தவம் அதோடு உங்கள் பிரச்சனை என்னவென்பது எங்களுக்குத் தெரிய வேண்டாமா. இந்த நாட்டில் வாழ்கிற வர்களின் 10 விதம் தான் ஆங்கிலம் வாசிக்கிருர்கள். இவர் களுக்கே உங்கள் பிரச்சனை தெரியாது. மற்ற 90 வீதம் எப்படி குறை சொல்ல முடியும். அதோடு சிங்கள பத்திரி கைகள் உங்களுக்கு ஆதரவில்லையென்பது எனக்கு தெரியும். சந்திரனேடு இவைகளையெல்லாம் நான் பேசியிருக் கிறேன்."
நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
*சந்ரன் உங்கள் அபிப்பிராயங்களை எனக்குச் சொல்லி யிருக்கிருர். உங்களைப்போல் பல நண்பர்கள் எங்களுக்கு தேவை. சரி இன்று இவர்கள் குடும்பம் ஒன்றுகூடியிருக் கிறது. அவர்களுக்கு சற்று அவகாசம் வேண்டும். பின் உங்களை அவசியம் சந்திக்கிறேன்."
ராஜன் எழுந்தார்.
நான் சித்ராவையும் ஜகனேயும் கூப்பிட்டேன். வந் தார்கள். எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு ராஜன் போனர்.
*நீங்கள் இருவரும் விசேஷமான மனிதர்கள். அந்த வகையில் உங்கள் மக்கள் யோகக்காரர்கள். சரி நானும் வருகிறேன். பத்மினியை வரச்சொல்கிறேன்.”
நன்றி சொன்னேம். அவரும் போஞர்.
மற்ற நாட்களைவிட இன்று வீலா சற்று பலமாய் பேசிக் கொண்டு வேலைகளைக் கவனிப்பது போலிருந்தது.

Page 99
188 இனிப் படமாட்டேன்
'தண்ணிர் போட்டிருக்கிறேன். வந்து கால் கை கழுவு மகன்,” என்று ஜகனக்கூப்பிட்டாள்.
ஜகன் வந்துவிட்டானென்ற பூரிப்பில் நான் நாற்காலி யிலமர்ந்து சும்மாயிருத்தேன்.
*சந்ரு, இங்கே வாருங்களேன்.” சித்ரா என்னைக்கூப்பிட்டாள் நான் போனேன், கண்ணுடிக் கூடுகளுக்குள் இருக்கும் திருச்சிலைகளுக்கு முன் தீபம் ஏற்றிவிட்டு நின்றன் ஜகன். ஜகன் வந்ததும் இருவரும்" மண்டியிட்டு ஜபம் சொன்னர்கள். பின் சித்ரா எழுந்து அவன் நெற்றியில் சிலுவைக்குறி போட்டாள்.
நான் சிரித்தேன், *ஏன் சிரிக்கிறீர்களாம்? “சுவாமிகளுக்கு ஒவர் டைம் ஹோம் வேர்க் அதிகம் கொடுக்கக்கூடாது. மற்ற இடங்களிலும் அவர்களுக்கு வேலை இருக்கும்.”
*சும்மா போங்கள். சின்னம்மா இருக்கையில் மட்டும் தரையில் உட்கார்ந்து பாடி பூசை செய்தீர்களே. இப்போது எனக்கு வக்கனை சொல்கிறீர்கள்.” “தாத்தி பாடுவாரா அம்மி? *ஒ நல்லாய்ப் பாடினர். எனக்கு தூக்கம்கூட வந்து விட்டது.”
*பொப் பாடினரா,’ *போ கழுதை, "ஹிந்து ஹிம்ஸ் பாடினர். ஆச்சி தினம் பிரார்த்தனை நடத்தி இவரை பாடவைத்தார்.”
*ஆச்சியை நான் போய் பார்க்க வேண்டும் அம்மி ஆச்சிக்கு அவர்களிருக்கும் வீடுசொந்தமா,”
“இல்லை புத்தா அது கம்பனிக்காரர் வீடு,”

ஸி. வி. வேலுப்பிள்ளை 189
*அப்படியென்ருல் தாத்திக்கு.? பேச்சை நிறுத்திக் கொண்டான்.
சித்ராவும் பேசவில்லை.
அப்போது பத்மினியும் மனேவும் வந்து எங்களோடு சேர்ந்தார்கள்.
“ஜகன் புத்தா,” என்று ஜகனே முத்தமிட்டு அன்புடன் வரவேற்ருள் பத்மினி.
“ஹலோ லோபர்,” என்று ஜகனின் கையைப்பிடித்து மனே மேலும் கீழும் குலுக்கினுள்.
எல்லோரும் குதூகலத்தோடு சப்பாஷணை அறைக்கு வந்து அமர்ந்தோம்.
பின் ஜகன் சூட்கேசை கொண்டு வந்து அன்பளிப்புக்களை எடுத்து எங்கள் முன் பரப்பினன்.
“இது தாதிக்கு, இது அம்மிக்கு, இது லீலா ஆண்டிக்கு, இது மனேவுக்கு, இது ஆச்சிக்கு, இது பத்மினி ஆண்டிக்கு, இது ரஞ்சனுக்கும் கல்யாணிக்கும், இது சந்தனத்திற்கு, இது மோணிக்கா அந்த சந்தனத்திற்கு ஒன்றும் கொடுக்கக் கூடாது என்னை கேலி செய்தான்.”
“என்ன அப்படி கேலிசெய்தான், ஜகன் கேட்டான்.
*நீங்கள் பெண் பார்க்கச் சென்றிருப்பதாக சொல்லிக் கொண்டு என்னை பார்த்து பார்த்து ஆடினன்.”
எல்லோரும் சிரித்தோம்.
ஜகனும் மனேவும் பின்பகுதிக்கு போனதும்;
*ராசா குட்டி, ராசா குட்டி,” என்று ஜகன சந்தனம் வரவேற்றன். குதூகலமாய் பேசிக்கொண்டார்கள்.

Page 100
90 இனிப் படமாட்டேன்
இராச்சாப்பாடு ஜகனுக்கு விருந்தாக அமைந்தது.
பத்மினியும் மனேவும் போனபின் சித்ராவும் லீலாவும் ஜகனேடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
சம்பாசணை அறையில் நான் வாசித்துக்கொண்டிருந் தேன்.
அரைமணி நேரம் சென்று ஜகன் என் பக்கத்தில் வந்தமர்ந்தான்,
*தமிழ்நாடு எப்படி, பசுபதி ஆண்டி, அவர் பிள்ளைகள் பேத்தி எப்படி?” என்றேன்.
'சுகமாயிருக்கிருர்கள். அந்த ஆண்டி ரொம்ப நல்லவர், எங்களைக் கவனித்துப்பார்த்தார். பெரிய வீடு, ரொம்ப சிம்பில், ரொம்ப கிளின், என்னேடு சிங்களத்தில்தான் பேசினர்கள். பையன்களும் பெண்களும் இங்கிலீசும் தமிழும் கலந்து பேசினர்கள். என்னை சிங்களத்தமிழன் என்று கிண்டல் செய்தார்கள். என்னிடம் குர் கத்தியிருக்கிறதா, என்று கேட்டார்கள்.
சித்ரா வந்தாள்.
“என்ன தகப்பனும் மகனும் பெரும் பேச்சு போலிருக் கிறதே.”
பசுபதியைப் பற்றிச் சொன்னன். "ஜகன் அந்த ஆண்டி, பிள்ளைகள் சுகமா.” ஆம் அம்மி. உங்களை ரொம்ப விசாரித்தார்கள்.
*சாரி இங்கே மாதிரிதான் கட்டுகிருர்களா?
'இதே மாதிரிதான்.”

வி. வி. வேலுப்பிள்ளை 191
"ஜகன் அந்த ஆண்டியின் ஊர் உனக்கு பிடித்திருக் கிறதா. இந்த இடத்தை விற்றுவிட்டு போகலாம் என்ருயே?
“நமக்கு பிடிக்காது அம்மி. புது ஊரில் போய் என்ன செய்யப்போகிருேம். கைநிறைய பணம் பெறும் உத்தி யோகம் செய்கிறவர்களுக்கு சரி. பெரும் போட்டி, இந்தியா விலும் குளப்படி, வன்செயல் திருட்டு, கெடுபிடி நிறைய நடக்கின்றன. பார்த்தால் இங்கு அவ்வளவு மோசமில்லை," என்ருன்.
ஜகன் இரண்டு வாரங்களில் பல விசயங்களை கண்டு தெளிவடைந்துவிட்டதாய் நினைத்தேன். இந்த பிரயாணம் அவன் அனுபவத்தை விரிவுபடுத்தியது போலிருந்தது.
"ஜகன் கருத்தரங்கில் யார் யார் கலந்துகொண்டார்கள் என்ன முடிவு செய்தார்கள்.”
'பத்து ஸ்தாபனங்கள் பங்குபற்றின. இதில் கிருஸ்தவ ஸ்தாபனங்களைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள்கூட கலந்து கொண்டார்கள் ராஜன் அவர்கள் கருத்தரங்கில் முக்கிய பங்கெடுத்து பல பிரச்சினைகளைச் சொன்னர். அவர் பேச்சுக்கு ரொம்ப மரியாதை, சந்தியாகு உங்களுக்கு கொடுத்த அறிக்கையை வாசித்தார். பழனிமுத்து தொழிலாளர்கள் பயப்படுவதற்கான காரணத்தை சொன்னர்.”
*அப்புறம்.”
“மூன்ருவது நாள் இலங்கையிலும் இந்தியாவிலும் என்ன செய்யவேண்டும் என்பதை பாதர் தோமஸ் ஜோசப் பும் ராஜன் அவர்களும் சேர்ந்து இரண்டு திட்டங்கள் வகுத் தார்கள். அதை உங்களோடு கலந்து முடிவு செய்வதாய் சொன்னர்.”
‘சரி இங்கிருந்து போனவர்கள் இருக்கும் இடங்களைப் போய் பார்த்தீர்களா?

Page 101
192 இனிப் படமாட்டேன்
**ஆமாம் தாத்தி. ராமேஸ்வரம், மண்டபம் கேம்பு, கோடைக்கானல் பக்கத்திலுள்ள குமரிக்காடு போன்ற இடங்களைப் பார்த்தோம். இந்திய அரசு இவர்களுக்கு பிரமாதமாய் ஏதும் செய்துவிடவில்லை. புனர்வாழ்வுக்காக பலர் மண்டபம் கேம்பில் காத்து, காத்து கசங்சிப்போய் கிடக்கிருர்கள். பெரிய பரிதாபம். அங்குள்ள உத்தியோகஸ் தர்கள் ஈவிரக்கமில்லா முரடர்கள். இங்கிருந்து போனவர் களில் பலர் ராஜனிடம் முறையிட்டு அழுதார்கள்.”
நானும் சித்ராவும் ஒருவரையொருவர் பாத்துக்கொண் டோம்.
*சந்தியாகுவும் பழனிமுத்துவும் என்ன சொன்னர்கள்?
*சந்தியாகு தன் பிள்ளையை நம் ஜனங்களுக்காக பலி கொடுத்துவிட்டு இப்போது உயிருக்காக பயந்து ஒடமாட்டா ராம். சுவாமி பியோவோடு சேர்ந்து சேவை செய்வாராம் இந்தியாவிலே போய் நூறு வருடம் வாழ்வதைவிட இலங்கையில் மனிதனுய் சாவது நல்லதென்று பழனிமுத்து, சொன்னர்.”
சந்தியாகுவின் மனமாற்றத்தைக்கேட்டு நான் வியப் படைந்தேன். தியாகம் மனிதனுக்கு தைரியத்தைக் கொடுக் கிறதென்பதை அறிந்தேன். அத்தோடு ஜகன் வெளியூர் போய் வந்தது நல்லதென்று என் மனதிற்குப் பட்டது.
*நான் கூட ராஜன் அங்களோடு வெளியில் போய் வேலை செய்ய வேண்டும் அம்மி,”
"எங்கே போகப்போகிருய்? s
*மேல் பகுதியில் வாலிபர் இயக்கம் அமைப்பதாய் ராஜன் அங்கள் சொன்னர், அதில் வேலை செய்வேன்.”
*உன் ஆர்கிடெக்ட் கிளாஸ் எப்படி?”

ஸி. வி. வேலுப்பிள்ளை 193
*கிழமை நாட்களில் மாலையில் போவேன். ராஜன் அங்கள் ஒரு சங்கதி சொன்னர்?
“altairar?'
*தோட்டப்பகுதியில் நல்ல வீடுகள் கட்டவும் இளம் சமுதாயத்தின் மனதை மாற்றி பலப்படுத்தவும் என் மாதிரி பல ஆர்கிடெக்ட்கள் தேவை என்ருர் அம்மி”
“வீடு கட்டுவது இலேசு மகன், மனதை பலமாகக் கட்டுவது கஸ்டம்,"
சித்ரா மகனைப்பார்த்துப் புன்னகை செய்தாள்.
*அப்படியானுல் லேசானதை செய்துவிட்டு சும்மா யிருக்க வேண்டுமா அம்மி.”
“நீ நல்லவனக இருக்க வேண்டும் ஜகன். கோழை நல்லவனுக முடியாது.”
பேச்சு பிரசங்கம்போல் வளர்வதை கவனித்தேன் ஜகன் இப்படி பேசியதை நான் கேட்டதில்லை. சேவையில் நான் வெற்றி காணுதவன். வெற்றி தோல்வியைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஜகன் மக்களுக்காக சேவை செய்ய முடிவு செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
*நேரமாகிறது நான் பழைய இடத்தில் படுக்கட் போகிறேன்,” என்ருள் சித்ரா,
*நீங்கள் தாத்தி பக்கத்தில் படுங்கள். நான் பபா இல்லை, வேண்டுமென்ருல் திரைச்சீலையை மேலே போட்டு விடுங்கள். நான் படுத்திருப்பது தெரியும்தானே.”
இந்த உத்தரவை போட்டுவிட்டு ஜகன் படுக்கப்போஞன்.

Page 102
194 இனிப் படமாட்டேன்
சித்ரா பாயை விரித்துக்கொண்டு திவானுக்கு பக்கத்தில் படுத்தாள்.
*பிரயாணம் மனிதனை முழு மனிதனுக்குகிறது,”
*அதை எங்கே வாசித்தீர்கள்?”
*பேக்கன்,” என்றேன்.
*ரீடிங் மேக்கத் எ புல் மேன், வாசிப்பது மனிதனை முழுமையாக்குகிறது,” என்று திருத்தினுள்.
'பயந்தாங்கொள்ளிகள் சாவு வருமுன் பல தடவை
சாகிருர்கள். வீரன் ஒரு தடவை தான் சாவான், யார் சொன்னது? நான் கேட்டேன்.
*சேக்ஸ்பியர் மிஸ்டர்.” என்ருள்.
*அது சரியான பேச்சு தாத்தி, சேக்ஸ்பியர் கவிகள் எல்லாம் வாசித்திருக்கிறீர்களா அம்மி? s
“ஆம் மகன். அவர் மஹா கவி.”
"அம்மி உங்களுக்கு தாத்தி கவி எழுதினராமே, எங்கே வைத்திருக்கிறீர்கள்."
*வாங்கிய விலைக்கு வந்துவிட்டாய், துரங்கு புத்தா”
என்னை தூக்கம் தொடாமல் சற்று ஒதுங்கி நின்றது.
、、,て、ヘぶ。”・
மலைநாட்டில் வீடுகள் கட்டவும் இளைய தலைமுறையின் மனதை அச்சமில்லாது அமைக்கவும் சிற்பிகள் தேவை என்ற ராஜன் ஜகனிடம் சொன்னது உண்மையிலும் உண்மை. மலைநாட்டு மக்கள் தைரியத்தையும் வீரத்தையும் வளர்க்கவேண்டும்.

ஸி. வி. வேலுப்பிள்ளே 195
மனிதன் சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்துகொள்வது இயல்பு. இன்று புறமுதுகுக்காட்டி ஒடுகிறவன் நாளை வந்து சண்டை செய்வான் என்பது இதற்கு எடுத்துக்காட்டு.
மலைநாட்டவர் இந்நாட்டின் பாட்டைகளை அமைத்த வர்கள். பாலங்கள் கட்டியவர்கள், தோட்டங்கள் திறந்த வர்கள், உரிமைக்காக உருளைவள்ளி போராட்டம், 100 நாள் சத்தியாகிரக போராட்டம் நடத்திய வலிமையான உள்ள மும் உடலும், உடையவர்கள்.
மனிதன் தூசியாக்கப்பட்டபோது, அந்த தூசியிலிருந்து புனர்ஜென்மம் எடுத்துவரும் தனித்துவம் மனிதனுக்கு மாத்திரமுண்டு என்பதை நான் எங்கோ வாசித்த ஞாபகம்.
எனவே ராஜன் அமைக்கும் திட்டத்தில் ஜகன் சேர்ந்து சேவை செய்யவேண்டுமென்ற முடிவு எனக்கு கொஹா வானம்பாடி புதிய நாளை வரவேற்றது போலிருந்தது.

Page 103
எமது வெளியீடுகள்
இலக்கியம் கம்பனும் மில்ட்டனும்-ஒரு புதிய பார்வை
டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்
திருக்குறள் ஒரு சமுதாயப் பார்வை g இந்தியப் பண்பாடும் தமிழரும் s பாரதி காலமும் கருத்தும் ரகுநாதன் பாரதி சில பார்வைகள் 99 இலக்கிய விமர்சனம் 9 கங்கையும் காவிரியும் 99.
சமுதாய இலக்கியம் 9 9
நாவல்கள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிருள் 99 ஈஸ்வர அல்லா தேரே நாம் 99 சுந்தர காண்டம் 99 இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் ” சில நேரங்களில் சில ம்னிதர்கள் 99
மீனுட்சி புத்தக நிலையம்
60, மேலக்கோபுரத்தெரு, மதுரை-1
கிளை 222, டாக்டர் நடேசன் சாலை ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை-5


Page 104


Page 105