கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காந்தி தரிசனம்

Page 1
:, s:
 


Page 2


Page 3
இத்தரிசனத்தின் உயயகாரர்கள்
விநோபாஜி 0 ரவீந்திரநாத் தாகூர் 9 ஈன்ஸ்டீன் 9 பேர்ல் பக் உருரீ அரவிந்தர் ம எல்.பி. பியர்சன் 0 டபிள்யூ ஹெய்ஸன்பேர்க் e எம். சொலொக்கோவ் 0 எபி.வி. ராமன் உசங், பிதா டொமினிக் பியர் 9 மாட்டின் லூதர் கிங் 9 ஊ தாண்ட் 9 கேஸி பிரபு 9 கிளமென்ற் அட்லி உலூயி பிஷர் 9 ஹெய்லி ஸெலஸ்ஸி • ஜே. ஸி. ஸ்மட்ஸ் 0 ஹரோல்ட் வில்சன் 0 தேவதாஸ் காந்தி 0 அபுல் கலாம் ஆஸாத் 0 ஜவஹர்லால் நேரு 0 சரோஜினி நாயுடு 0 சேர் எம். ஸஃருல்லா கான் லடாக்டர் பிரதாப் சந்திர சந்தர் உசி. ராஜகோபாலாச்சாரி சராசேந்திர பிரசாத் 0 டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்  ைஸாக்கிர் ஹரஸைன் 9 வி.வி. கிரி மு சேர் இவான் மக்கே ை இந்திரா காந்தி0 ஜெயப்பிரகாஷ் நாராயண் 9 கிருபளானி 9 முல்க்ராஜ் ஆனந்த்

காந்தி தரிசனம்
எஸ்.பொ
&o & đ8/? く。 &
V ஒ R ba
32/9 ඌ%ffඅ5/I(6 ඊIIcග60 6.ඊඟීféනගI 24 தமிழ்நாடு இந்தியா

Page 4
GANDH THARISANAM
Compiled, Edited 8. Translated by Espo
Mithra Books First Edition 24 May 2008
Mithra : 68
ISBN: 81-89748 - 55 - 6
Mithra Books are Published by Dr. Pon Anura
Pages : 104
Price : 60
Cover Design :
Chithon
காந்தி தரிசனம்
6T6io. 6 IT
மித்ர :188
பக்கங்கள்: 104
subo: 60
Printed and Published by
Mithra Arts & Creations Pvt Ltd., 32/9 Arcot Road, Kodambakkam Chennai - 600 024. Ph : 2372 3182, 2473 5314 email: contactGmithra.co.in web : www.mithra.co.in

காந்தி நூற்றாண்டு
பதிப்புரை
காந்தி நூற்றாண்டு நினைவாக ஐந்து நூல்களை வெளியிடுவதிற் பேருவகையடை கின்றேன். தமது பிரார்த்தனைகளிலே அல்லாஹ் வின் திருவசனத்தையும் உச்சரித்து, பாரதநாட்டி லுள்ள ஆறு கோடி முஸ்லிம்களுந் தலைநிமிர்ந்து வாழத் தன்னம்பிக்கையூட்டும் பணியிலே தமது உயிரையே பலியிட்ட அந்த இனியவரின் நினை வாக ஐந்து நூல்களை ஏககாலத்தில் வெளியிடு வதால் உவகை இரட்டிப்பாகின்றது.
ஐந்து நூல்களுள் இதுவும் ஒன்று. ஈழத்து இலக்கிய அன்பர்களும், தமிழ்நூல் வெளியீட் டாளரும் இதனை ஒரு சாதனை என்றே கருதுவர். இப்பெருமையை எனக்குரியதாக எடுத்துக் கொள்ளாது, உலகிலே அன்பினாற் சாதனைகள் பல புரிந்த அந்த மஹாத்மாவுக்கே இச்சாதனை யையும் பயனையும் அர்ப்பணமாக்குகின்றேன்.
ஈழத்துத் தமிழ் உலகிலே சாதனைகள் பல இயற்றியவர் - இயற்றுபவர் நண்பர் எஸ்.பொ. இலக்கியத்தின் பல உட்பிரிவுகளிலுந் தமது கைவண்ணங் காட்டியவர். தனிப்பார்வையும்,

Page 5
தனிப் பாணியும் அவரது ஏகம். ஆறு நூல்களி லிருந்து இருநூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து, தொகுக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து, நுட்பமாக வரிசைப்படுத்தி, தமிழாக்கியுந் தந்துள்ளார். மொழிபெயர்ப்பாளர் பலரைக் கொண்ட அலுவலகம் ஒன்று, மாதங்கள் பல எடுத்தும், இவ்வளவு சத்துள்ளதாகத் தந்திருக் குமா என்பது கேள்விக்குரியது. எஸ்.பொ. தனி மனிதராக, உண்மையில், பத்தே நாள்களுக்குள் இதனைக் காரிய சாதனையாக்கியுள்ளார். "எஸ். பொ. ஒரு தனி மனித நிறுவனம்’ என்று இலக்கிய உலகில் வழங்கும் கூற்றுக்கு இவ்வித ஆற்றலும் ஒரு காரணமாக அமையலாம். இதனை, அவர் தமிழ் செய்த வேகம், இரு மொழி களிலும் அவருக்குள்ள ஆழ்ந்த புலமைக்கு அப்பாலும், அவருடைய வாழ்க்கையே தமிழ்ப் பணியாக அமைந்துள்ள உண்மையையும் புலப் படுத்தும்.
இனி, ‘காந்தி தரிசனத்தின் உங்களுடைய
சுவைப்பும் தரிசனமும். வாசக தரிசனம்.
டாக்டர் ல்ெ..ெ ரஷ்மரின்

முன்னீடு
காந்தி தரிசனம் என்னும் இந்நூலுக்காகத் தமிழ் செய்தமை சுகமான அநுபவம். இதிலுஞ் சுயத்தின் விழிப்பு. அதனால் நான் ஒரு பேராசைக்காரன் என்ற உண்மையின் உறைப்பு. ‘மிகக் குறுகிய காலத்தில், ஐந்து நூல்களை ஒரே சமயத்திற் பிரசுரிக்கத் திட்டமிட்டுள்ளேன். அவசிய நிலைமை களையும், சிரமங்களையும் நீங்கள் அறிவீர்கள். இதனால், நூல்களின் பக்கங்களை இயலுமான அளவிற்குக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் விடிந்திருக்கின்றது' என்று நண்பர் ரஹ்மான் என்னை எச்சரித்திருந்தும், அச்சில் நூற்றைம்பது* பக்கங்களுக்கு மேலாக நீளக்கூடிய பகுதிகளைத் தமிழ் செய்திருந்தேனென்றால் அது பேராசையாகாதா? ‘காந்தி தரிசனத்தை முழுமையாக வாசகன் முன்னால் நிறுத்துதல் வேண்டுமென்ற ஏது தோற்றியே, இந்தப் பேராசை விளைந்தது எனச் சுயத்தைச் சமாதானப்படுத்திக் கொள்ளுகின்றேன். மொழிபெயர்ப்பினைத் தொழிலாகக் கொள்ளாது, இலக்கியக் கலையாக நான் நேசிக்கின்றேன். எனவே, ‘தமிழ் மரபு” ‘புணரியல்’ எனக்கூறி மூல ஆசிரியன் வகுத்துக் கொண்ட எழுத்து நடையையும், கருத்து இசைப்புப் பாணியையுஞ் சிதைக்க நான் ஒப்புவதில்லை. இதனால், நூலின் சில பகுதிகள் கடினமானவையாகவும், கருகல் நிறைந்தவையாகவுந் தோன்றக்கூடும். சிறாருக்கேற்ற எளிய நடையிலும் எழுதுதல்

Page 6
சாலும், ஆனால், அது வேறொரு சுதர்மம். எளிமை என்ற போர்வையில், தமிழ் செய்யும் 'சாமானியன்’ ஒருவன், பெரியவர்களுடைய மனோபாவத்திற்கும் சிந்தனா ஒட்டத் திற்கும் மெருகு தீட்டுபவனாகவுந் தன்னை நியமித்துக் கொள்ளுதல் நேர்மையற்றது என்பது என் கட்சி, 'ஆங்கில மொழியறிவு இன்மை'யை மறைக்கத் ‘தமிழ் மரபு' சாமர்த் தியமான கேடயமாகப் பயன்படலாம். ஆனால், ஆங்கில மேதைமையைத் தமிழ் மரபு கொண்டு அளத்தல் நியாயத் திற்கும் தர்மத்திற்கும் புறம்பானது. வட எழுத்துக்களைத் தமிழிற் புகுத்திய பிதாமகர் நானல்லன். வடமொழி நான் அறியாத ஒன்று. ஆனாலும், தமிழிற் பயின்று வரும் அம் மொழிச் சொற்கள்மீது எப்படி எனக்கு மோகம் இல்லையோ, அப்படியே வெறுப்புங் கிடையாது. அவை பயன்படுவன. மூலத்தின் முழுமையைப் பிறிதொரு மொழியிற் பூரணமாகத் தரிசித்தல் சாலாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, அதேசமயம், மூலத்தின் வார்ப்பு முறையையுந் தரிசன நெறியையுஞ் சிதைக்காமலிருப்பதுதான் மொழிபெயர்ப்பிற் குரிய இலட்சணம் என்பது என் கட்சி இக்கருத்திற்கிசையவே இத்தமிழ்ப்பணி நிகழ்ந்துள்ளது. இம்முறையினால் தமிழுக்கு ஒரளவு நெகிழுந் தன்மையும் வந்து சேருகின்றது என்பது என் அநுபவம். அநுபவமே ஆசான் என்பதும் வழக்கு. இனி, இத் தரிசனத்தை உங்கள் தரிசனத்திற்கு விடுகின்றேன். வணக்கம்.
Gle3. 6ham மட்டக்களப்பு 2-10.69

புதிய
முன்னிடு
அண்மையில் ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இலாடபுரம் திரு குருசாமிநாயுடு அவர்கள் ‘தென்னாபிரிக்காவில் சத்தியாக்கிரகம்’ என்கிற நூலை வெளியிட்டு, காந்தி தரிசனம் என்கிற தலைப்பிலே பேசினார். காந்தியடிகளின் தொண்டராய்ப் பணியாற்றிய அப்பெரியவருக்கு வயசு நூறு. அவர் பேச்சு, ‘காந்தி தரிசனம்’ என்கிற தலைப்பில் நான் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட நூல்பற்றிய நினைவுகளைக் கிளறலாயிற்று.
இருபத்தொன்பது உலகத் தலைவர்கள் எவ்வாறு காந்தியின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் தரிசித்தார்கள் என்பதைப் படித் தறியும் வகையில் அந்நூலினைத் தொகுத்திருந்தேன். கையடக்கமான றிய நூல் ஆங்கில மூலங்களிலிருந்து, பல்வகைத்தான தரிசனங்களைத் தாகுத்து நூலாக்கியிருந்தேன். அதனைத் தமிழ் செய்தமை உண் மயில் ஓர் அபூர்வ அநுபவமாகவே என் நெஞ்சில் நிலைத்துள்ளது. நான் காந்திய பக்தன், தொண்டன் என்று என்றும் உரிமை ராட்டியவனல்லன். LonTriréisemólu வேதத்தை அரசியல் நெறியாகப் பயின்றவன். பதவி லோலர்களினால் மார்க்ஸியம் அழிவழக்காடப்படுவதைப் பார்த்து மனம் நொந்திருந்த காலம். எாவே, மார்க்ஸ் முன்மொழியாத பிறிதொரு அரசியல் பண்பாடு குறித்த படிப்பாய்வு வித்தியாசமான அரசியல் தரிசனத்தினைச்
மியங்கள் எனக் கற்பித்தாரோ, அவை அனைத்தும் கனவாய்ப் பழங்கதையாய் மாறியிருக்கும் அவலத்தைக் காண்கின்றேன். வியகூலத்தில் நெஞ்சம் கூனுகின்றது. அதேசமயம், தமிழ்நாட்டு வாசருக்கு நான் தயாரித்த காந்தி தரிசனம் சென்றடைதல் வேண்டும் என்கிற அக்கறையும் சடைத்தது.

Page 7
மேலும் சில கட்டுரைகளைச் சேர்த்து, சற்றே விரிவு படுத்தலாம் என நினைத்தேன். நண்பர் அரசுவுடன் கன்னிமாரா நூல்நிலையத்திற்குக் காந்தி பற்றிய நூல்களைத் தேடிச் சென்றிருந்தேன். காந்தி நூல்கள் அடுக்கப்பட்டிருந்த பகுதியிலே இரண்டு மணி நேரம் செலவு செய்தேன். பொது நூல் நிலையம் எவ்வாறு பராமரிக்கப்படலாகாது என்பதற்கு எடுத்துக்காட்டாக கன்னிமாரா செயற்படுவது கண்டு நாணினேன்.
ஒரு காலத்திலே அறிஞர் அண்ணா கன்னிமாரா நூல் நிலையத்தில் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கழித்துத்தான் அறிஞராய் உயர்ந்தார் என அறிந்து மகிழ்ந்திருந்தேன். எத்தகைய ஏமாற்றம்! அலட்சியம், உதாசீனம், மெத்தனம், சோம்பல் ஆகிய அனைத்தினதும் கலவையாக ஊழியர்கள் நடமாடினார்கள். இது கண்டனமல்ல. கன்னிமாரா அறிவுக் கோயிலாகச் செயலாற்றுதல் வேண்டும் என்கிற ஆதங்கத்திலே எழுதுகிறேன்.
வாழ்க்கையின் சத்தான பகுதியை நானும் நூல்நிலைய களிலேயே செலவு செய்துள்ளேன். அவை மனித நாகரிக எழுப்பியுள்ள அற்புத ஆலயங்கள் என்கிற பக்தி பாராட்டுத என் சுபாவம். தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடி குறித்துச் தகவல்களைப் பெறுவதற்காக, சென்ற ஆண்டில் கோபன்கேஹ நகரிலுள்ள நூல்நிலையத்திற்குச் சென்றிருந்தேன். டென்மாக் ஆங்கிலம் பயிலாத நாடு என் விசாரிப்புகளுக்குப் பதிலளிக்க ஆங்கிலம் அறிந்த ஊழியர் ஒருவரை உடனடியாகத் தருவித்தார்கள். அந்த ஊழியர் என்னுடன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, அனைத்துத் தகவல்களையும் திரையிலே காட்டி, எனக்குத் தேவையன தகவல்கள் அனைத்தின் print-out களை எடுத்து உடன் தந்ார். எதிர்காலத்திலும் உதவுவதாக வாக்களித்து, தொடர்பு கொள்ளுவதற்கான விபரங்கள் அனைத்தையும் தந்தார்.
‘சார், அந்த செல்ஃபில் இருப்பதுதான் காந்தி நூல்கள். பார்த்து எடுத்துக் கொள்.’ என்று கூறிக் கன்னிபுராரா ஊழியர் மாயமானார்! தூசும் செத்துக்கொண்டிருக்கும் காகிதங்களின் நாற்றமும் புடைசூழ நடந்தது தேடல். மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலே அவரை ரூபாய் நோட்டுகரிலே மட்டும் பார்த்துத் திருப்திப்பட வேண்டும். “உள்ளதுக்கு வள்ளிசு’ என்ற அப்பையாவின் கூற்று நினைவுக்கு வந்ததும், ஐந்து புதிய கட்டுரைகளை இணைத்து, இதனை இவ்வாறு உங்களுக்குக்
தருகின்றேன்.
Gyllum
சென்னை 24-05-08
 
 
 
 
 
 
 

δεΦαουσέ8
விநோபாஜி பூதான இயக்கத்தின் பிதாமகன்; சர்வோதய இயக்கத்தில் உயிர்நாடி. காந்திஜியின் ஆத்மீக வாரிசாக அடையாளங் காணப்பட்டவர்.
asruð-St-yð- sorrðassus?"ð>
மகா ஆத்மமான (மகாத்மா) காந்தியினதும், சிறந்த சிந்தனையாளரான (மகாமுனி) மார்க்ஸினதுமாகிய இரு கருத்துவங்களிடையே ஒப்புவமைகளைக் காண்பதைப் போன்ற கவர்ச்சியான படிப்பு வேறெதுவுந் தற்காலத்தில் நமக்கிருக்க முடியாது. கடந்த ஒரு நூற்றாண்டுகால மனித குல வாழ்க் கையைச் சூரணமாக்கினால், அநேகமாக, இவ்விரு Lf) doss" பெயர்களே எச்சமாகக் கிட்டும். மார்க்ஸில் லெனின் சீரண மாகியுள்ளார். டால்ஸ்டாயின் நிழல் காந்திமீது கவிந்துள்ளது. இரண்டு கருத்துவங்களும் ஒன்றையொன்று எதிர்நோக்கி நின்று, ஒன்றையொன்று விழுங்கப் பார்க்கின்றன. ரூஷியாவின் தலைமையிலுள்ள கம்யூனிஸ்டுகளும் ஐக்கிய அமேரிக்காவின் தலைமையிலுள்ள ஜனநாயக முகமூடி அணிந்துள்ள முதலாளித் துவர்களுமே அரங்கில் அமர்ந்திருக்கும் போட்டியாளராக வெளிப்பார்வைக்குத் தோன்றலாம். ஆனால், கருத்துவ

Page 8
காந்தி தரிசனம் 12
முறையில் பின்னது தன்னுடைய உயிர்த்துவம் முழுவதையும் இழந்துவிட்டது. அதனுடைய ராணுவச் சக்தியின் வல்ல பத்தில் அது வலிமையுடையதாகத் தோன்றிய போதிலும், கம்யூனிஸத்திற்கு எதிரான எதிரியாக அஃது உண்மையில் இருக்கின்றது என நான் கருதவில்லை. மறுபுறத்தில், காந்தீயக் கருத்துவம் எங்கேனும் நிறுவன அமைப்பில் இல்லாத போதிலும், உண்மைச் சிந்தனையின் உயிர்ப்பு அதிலே நிரம்பி யிருப்பதினால், கம்யூனிஸம் இறுதியான தன்னுடைய பலப் பரீட்சையைக் காந்தீயத்துடனேயே வைத்துக்கொள்ளும் என்றே நான் நம்புகின்றேன்.
காந்தியையும் மார்க்ஸையும் ஒப்புநோக்கிப் படிப்பதில் எவ்வளவு சிரத்தையோ, சிரத்தையினமோ இருந்த போதிலும், நமது சொந்த நாட்டில் மட்டுமாவது, கற்றோர் மத்தியில் இது நாளாந்த சர்ச்சைக்குரிய பொருளாக அமைந்துவிட்டது. ஒவ்வொரு சம்வாதியும் தன்னுடைய ஆற்றலுக்கு ஏற்ப அளக்கவும் நிறுக்கவும் முயலுகின்றான். காந்தீயச் சிந்தனை தன்னைச் சுற்றிலும் ஆன்மீகப் பரிவட்டத்தைக் காட்டுவதாக இருந்தால், கம்யூனிஸத்தின் பின்னால் விஞ்ஞானச் சொற் பயிற்சி உதவியாக இருக்கிறது. நமக்குச் சுயராச்சியம் பெற்றுத் தருவதில் தனது மதிப்பினை நிரூபித்துள்ளதால், இனிமேல், காந்தீயத்திற்குக் கற்பனை மயமானதென்றோ, செயல்முறைக்கு ஒவ்வாததென்றோ பெயரிடப்படமாட்டாது. மிகப் பண்டைய சீனாவை இளமையாக்கியதின்மூலம், தற்போதைக்கு, கம்யூ னிஸம் தன்னுடைய உயிர்ப்புத்துவத்தை நிரூபித்துள்ளது. இஃது இவ்விரு ஏற்பாடுகளுக்குமிடையில் ஐக்கியத்தைத் தேடும் முயற்சியில் பாட்டாளிகள் சிலரைத் தூண்டலாம். இதனால், “காந்தீயம் = கம்யூனிஸம் - வன்முறை" என்ற கணித சூத்திரத் தைக் கூறுவதற்கு வழி சமைந்துள்ளது. இவ்விடயத்தின் உண்மை யாதெனில், இவை இரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடுகள் அடிப்படையானவையாக இருப்பதினால், இவ்விரு கருத்துவங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த (Մ)ւգ-Ամո&l.

ఃఖఃఖ};
iš
/ / ரசீத்திரநாத் தாகூர்
கவியரசர் தாகூர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்று இந்தியா வுக்குப் பெருமை தந்தவர். சாந்திநிகேதனை நிறுவிய ‘குருதேவர்.
asmoaS 9 JZFñí
காந்தி அரசரின் காலடி தொடர்வோம். எங்களிடையே பொதுமை ஒன்றுள்ளது; வறியவரிடத்துப் பறிமுதல் செய்த பொருளினால் மடியினை நிறையோம்; பொருளுளார் மாட்டுக் குனிதலும் இலமே.
ஓங்கிய கரமும் உயர்த்திய தண்டுமாய் எங்களை அலைப்போர் அவர்கள் வருகையில், முறுவலித்து மொழிவோம் நாங்கள்: சிவந்த நும் பார்வை சிறிய குழந்தைகள் துயிலினைத் தொலைப்பது கூடும்; பயம் மறுத்தவரை என் பயம் செய்திடுமே?

Page 9
காந்தி தரிசனம் 14
எமது பேச்சுகள் எளியன, நேரிய, அரசியற் திரிப்பினால் அவை திரிவடையா; யாத்திரை யாளரை ஆற்றுப் படுத்திச் சட்டநூல் தடம் புரண் டுலையச் சிறையகத் தொல்லையில் அவை செலுத்திடுமே,
சிறைவழிக் கதவெதிர் இவர்கள் திரளவும், அவமதிப்புற்ற கறை யெலாம் அழியும்; நெடுநாட் பட்ட விலங்குகள் நிலத்திடை வீழுமே; நெற்றியிற் காந்தி ‘வாழிய!” என்ற வண்ணம் விளங்குமே!

ഒര[GാG് அல்பேட் ஈன்ஸ்டீன், ஜேர்மனிய யூதர். நோபல்பரிசு பெற்றவர்.
விஞ்ஞானத்தின் அடிப்படையையே மாற்றியமைத்த மாமுனிவர். அணுவுக்கும் சக்திக்குமிடையில் தொடர்பு சுட்டியவர்.
EDðve yiSoçDesayñi
உயர்ந்த மனுஷத்துவ உறவுக்காக நிலைநின்ற ஒரே யொரு இராச்சியதந்திரி. மனிதகுலத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டிருந்த ஒவ்வொருவனும் மகாத்மா காந்தியின் அகால மரணத்தினால் மிகவும் கலவரம் அடைந்துள்ளான். தம்முடைய கோட்பாடுகளுக்காக, அகிம்சைக் கோட்பாட் டிற்காக, தாமே இலக்காகி மரணமடைந்தார். தமது நாட்டில் பொதுவான எரிச்சலும் ஒழுங்கீனமும் இருந்த நேரத்தில், தமக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்புத் தேவையில்லையென மறுத்த காரணத்தினால் அவர் இறந்தார். வன்முறையின் உபயோகம் சுயமாகவே தீமையுள்ள ஒன்று என்பதில் அவர் தகர்க்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த காரணத்தினால், தமது நம்பிக்கையான உயர்நீதிக்குப் பாடுபடுவோர் அதனைத் தவிர்த்திடல் வேண்டுமென்றார். இந்த நம்பிக்கையை அவர்

Page 10
காந்தி தரிசனம் 16
நெஞ்சிலுஞ் சித்தத்திலும் இருத்திக்கொண்டு, பெரிய தேசம் ஒன்றினை அதன் விடுதலைப்பணியிலே வழிநடத்தினார். சாதாரண அரசியற் சூழ்ச்சிகளும் ஏமாற்று வித்தைகளுமுள்ள கபடமான சூதாட்டத்தினால் மட்டுமல்ல, வாழ்க்கையின் அறஞ்சார்ந்த ஒழுக்கத்தின் வலுமிக்க எடுத்துக்காட்டாகத் திகழ்வதின் மூலமும் சக்திமிக்க மக்கள் கூட்டத்தைத் திரட்ட இயலுமென்பதை அவர் நிரூபித்துக்காட்டினார். நமது காலத்தில் அறச்சார்பு மிகத் தாழ்வுற்றது என்ற உண்மையை அங்கீகரித்து, அவர் ஒருவர் மட்டுமே உயர்மட்ட மனுஷத்துவ உறவுக்காக உழைத்த இராச்சியதந்திரி என்ற உள்ளுணர்வின் அங்கீகாரத்திலேதான் உலகின் எல்லா நாடுகளிலும் மகாத்மா காந்தி கொண்டாடப்படுகின்றார் என்ற உண்மை தங்கியிருக் கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலைப் போராட் டத்திற்காக அவர் முற்றிலும் புதியதும் மனுஷத்துவமானது மான உத்தி ஒன்றினைக் கண்டுபிடித்து, அதனை மிகுந்த சக்தியுடனும் பக்தியுடனும் செயற்படுத்தினார். எவ்வித வெளி அதிகாரத் துணையுமின்றித் தமது மக்களின் தலைவரானார். தந்திரத்தின் மீதோ தொழில்நுட்ப உபயோக மேதமையிலோ அல்லாமல் எளிய தமது ஆளுமையின் நம்பிக்கையூட்டுஞ் சக்தியினால் வெற்றியீட்டிய அரசியல்வாதி. பலாத்காரத்தின் பிரயோகத்தை எப்போதுமே இகழ்ந்து வெற்றியீட்டிய போராளி உறுதியையும் நெகிழ்ந்து கொடுக்கும் சீருரையையும் ஆயுதமாகத் தாங்கி, ஞானமும் பவ்யமுமுள்ள மனிதராகத் தமது மக்களின் உயர்வுக்காகவும் அவர்களுடைய மேன்மைக் காகவுந் தமது சக்திகள் சகலவற்றையும் அர்ப்பணித்தார். ஐரோப்பாவின் மிலேச்சத்தனத்தினை ஒர் எளிய மனிதனின் மகிமையினால் எதிர்த்துத் தாக்கியவர். எனவே, எல்லாக் காலங்களிலும் அவரே ஒப்பற்றவராக எழுந்து நிற்கின்றார்.

(3උdré උගී பேர்ல் பக் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். நாவலாசிரியை. அமேரிக்கரான இவர் சீன மக்களுடைய வாழ்க்கையை வைத்துப் புகழ்வாய்ந்த நாவல்கள் எழுதியுள்ளார்.
தைரிசமூன் - சஞ்சலசமும்
காந்திஜியினுடைய பெயர் அவருடைய வாழ்நாளி லேயே ஒரு தனிநபரைக் குறிப்பதிலிருந்து விடுபட்டு, குழப்பம் நிறைந்த தற்கால உலகின் வாழ்க்கை முறைமை ஒன்றினைக் குறிக்கின்றது. கட்டுப்படாததும் தீமையுள்ளது மான சூழலில், அந்த வாழ்க்கைமுறைமையை மீண்டும் உறுதிப் படுத்துவதே, என்னைப் பொறுத்தவரையில், மிக முக்கிய மானதாகத் தோன்றுகின்றது.
தாம் தேர்ந்துள்ள வழியில் திருவாளர் காந்தி கொண்டிருந்த நிதான உறுதி, கோடிக்கணக்கான மற்றவர் களுக்குப் போலவே எனக்கும், உலகின் கொடுங்கோன்மையை எதிர்க்க, எல்லா எதிர்ப்புகளிலும் மேன்மையானதும்,

Page 11
காந்தி தரிசனம் 18
வெற்றி காணமுடியாததும், நிலை தவறாததுமான தைரியத்தைத் தந்துள்ளது என்பதை இப்பக்கங்களிலே கூறிக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
என் கணவர் திடீரென்று எங்களுடைய அறைக்குள் வந்தார். ‘வானொலி இப்பொழுது ஒரு பயங்கரச் செய்தியை அறிவித்தது. காந்தி இறந்தார்’ என்றார். தாங்க இயலாத அந்த விபரங்களைக் கேட்டோம்.
தம் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த சமாதானவாதியாகிய காந்தி கெ "ண்டார். எங்களுடைய பத்து வயது மகன் கண்ண’ Tச. தவண்ணம் துப்பாக்கி செய்ய யாருக்குமே தெரியாமல் போயிருக்கக் கூடாதா?’ எனக் கேட்டான்.

ரீ அரலிந்தர் ரீஅரவிந்தர் காந்திஜியுடன் சுதந்திரப்போரிலே சிறை சென்றார். பாரதியார்
காலத்தில் புதுவை சேர்ந்தார். ஆசிரமம் அமைத்தார். தியான நெறியிலே தாம் பாரதத்தின் விடுதலைக்குப் போராடுவதாக அவர் நம்பினார்.
தீபம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய சூழ்நிலைகளின் மத்தியிலே நான் மெளனம் காக்கவே விரும்பியிருப்பேன். ஏனெனில், நடந்தவற்றின் மத்தியிலே எந்தச் சொற்களுமே அர்த்தமற்றவை என்பதை நாம் கண்டு கொள்ளுவோம்.
இருப்பினும், இதனை மட்டும் நான் சொல்ல விரும்புவேன்.
நம்மைச் சுதந்திரத்தை நோக்கி வழிநடத்திய அந்தத் தீபம், ஐக்கியத்தினை நோக்கி இன்னமும் நம்மை இட்டுச்

Page 12
காந்தி தரிசனம் 2 O
செல்லவில்லையாயினும், அதனை வெற்றி கொள்ளும் வரை எரிந்து கொண்டே இருக்கிறது; எரிந்து கொண்டே இருக்கும்.
நமது தேசத்தினதும் மக்களினதும் ஊழ், ஒன்றுபடும் மகத்துவத்திலேயே தங்கியிருக்கின்றது என்று நான் உறுதியாகவே நம்புகின்றேன்.
மிகுந்த போராட்டங்களுக்கும் பாடுகளுக்கும் ஊடாகச் சுதந்திரத்தை வென்றடைவதில் வெற்றி பெற்ற அந்தச் சக்தி, எத்தகைய ஒற்றுமையின்மை மத்தியிலும், அல்லது தொந்தரவுகளுக்கு மத்தியிலும், இந்த பரிதாபகரமாக முடிவினைத் தழுவிய தலைவருடைய சிந்தனையில் அதிமுக்கியத் வம் பெற்றிருந்த எங்கள் மத்தியிலே நிலவ வேண்டிய ஐக்கியத்தைக் கொண்டுவந்தே சேர்க்கும்.
சுதந்திரமும் ஐக்கியமும் உள்ள இந்தியா உருவாகும். அன்னை தனது மக்களை ஒன்றிணைத்து, அவர்களை ஐக்கியமான மக்களாக, மிக உந்நதமான பலம் பொருந்திய ஒரே தேசியமாக ஒன்றுசேர்த்து வைப்பாள்.

ൺ.). caded്
எல். பி. பியர்சன், கனேடியர். கனடாப் பிரதமர் (1963-68); நூலாசிரியர்; சமாதானத்திற்கான நோபல் பரிசு (1958) பெற்றவர்.
ருவரது காலத்திற்குக் காந்தி
இதிலும் பார்க்கச் சிறந்த ஒர் உலகத்திற்காக எதிர் பார்த்திருத்தல் வேண்டுமென நாம் நினைக்கத் தேவை யில்லை. தமது வாழ்க்கையினாலும், தமது சீரிய செயல் முறை களினாலும், நாடுகளும் மனிதகுலமும் நகரத்தக்க வழியைக் காட்டக்கூடிய குறுங்கூட்டமான மனிதர்கள் இருந்திருக்கி றார்கள். காந்தியைப் போலவே லிங்கனும் நாடொன்றை உருமாற்றி, தம்முடைய கருத்துவங்களை அலட்சியப்படுத்து பவர்களை நாணச் செய்யும் நிரந்தர ஊக்க சக்தியாகவும் நிலைகொண்டுள்ளார். காந்தியைப் போலவே லிங்கனும் ஒர் உலகத்தை இயக்கினார். அவராலும் அவர்தம் சிந்தனை களாலும் உலகம் பிரபை பெற்று நிலைத்துள்ளது. பெரிக்கி லியன் காலத்து ஏதன்ஸ் நகரைப் பற்றி ஒருவன் பேசுவதைப் போலவே, நாம் காந்திய பரமார்த்தம் பற்றிப் பேசுகின்றோம்; அந்த மனிதரின் நாமம் ஒரு சங்கற்பத்தையோ அன்றேல் ஒரு காலத்தையோ ஒளிபெறச் செய்கின்றது.

Page 13
காந்தி தரிசனம் 22
அப்பக்கமே கண்களைத் திருப்பக்கூடியதாகவும், அதனுள் எல்லா மனித குலத்திற்குமான மனச்சாட்சியின் பண்டசாலை மனைகொள்ளத் தக்கதாகவுமுள்ள குன்றி லமைந்த நகரைப்போலத் தமது மக்களைக் காந்தியும் லிங்கனும் சங்கற்பித்தார்கள். வழிமாறாக, ஒல்லும் வகையின் வாழுஞ் சின்னங்களென அவர்களை மக்கள் சங்கற்பித்தார்கள். காந்தி இறந்தபொழுது ஈன்ஸ்டீன் கூறினார்:
நமது காலத்தில் அரசியல் மண்டலத்தில் உயர்ந்த மனுஷத்துவ உறவுக்காக உறுதியாக நின்ற ஒரே யொரு இர7ச்சியதந்திரி அவரேயாவர்.
இந்தியாவுக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதற்குமான ஒரு சோதனைக் காலத்தில் மகாத்மா காந்தி வாழ்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையினதும், நாநார்த்த தமது உலகத்தின துங்கூட, சாவதானம் - சாந்தம் - சமாதானம் ஆகியவற் றிற்கான ஏனைய நம்பிக்கைகளினதும் பூர்வபிதாக்களுள் காந்தியும் ஒருவராக இருந்தாரென மெய்யாகவே உரைக்கப் படலாம். காந்தி இறந்தபொழுது, "மிக ஏழைகளினதும், மிக நிர்ஜனமானவர்களினதும், ஆதரவற்றவர்களினதும் நண்பர்” என ஐக்கிய நாடுகள் சபையில் அவரை, பிலிப் நேயோல் பாக்கர் புகழ்ந்து, "காந்தியின் மிக உந்நத செயற்கருஞ் செயல் கள் இனியே நிகழவிருக்கின்றன" எனவுங் குறிப்பிட்டார்.
சகல மானிடரினதும் நம்பிக்கையே ஐக்கிய நாடுகள் சபை என இறுதி அர்த்தம் பெறப்படுவது போலவே, உண் மையில், காந்தியினுடைய வாழ்க்கையின் அர்த்தமும் அமைந்தது. வாய்மை - அன்பு - சுயத் தூய்மை - அடக்கம் - அகிம்ஸை ஆகிய கருத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைக்காத காரணத்தினாலும், சக மனிதர்களிலும் உந்நதத் திற்கான சாத்தியங்களிலும் அவர் ஆழ்ந்த நம்பிக்கை பூண்ட தினாலும், அவரைப் பொறுத்தவரையில், நம்பிக்கையின் இழை என்றுமே அறுந்தது கிடையாது. அவருக்கே உரித்தான வழியில், இந்த நம்பிக்கைக்காக அவர் போராட விரும்பி னார். அவர் கூறினார்:

23 எஸ். பொ.
தோல்வியையே அறியாத டபிறவிப் போராளி நான். ஏனெனில், மனுஷத்துவம் ஒரு சமுத்திரம், சமுத்தி ரத்தின் சில துளிகள் அசுத்தமாக இருப்பதினால், சமுத்திரம் முழுவதும் அசுத்தம7க மாறுவது கிடையாது உயர்ந்த கருத்துவங்களைக் கொண்டது போலவே, காந்தி செயல் வீரராகவும் இருந்தார் என்பது, எப்பொழுதும், சிறப் பாகவும் பிரதானமாகவும் நினைவுகூரத்தக்க ஒன்றாகும். இந்த இரு மூலக்கூறுகளும் அவரிலே சந்தித்து, வன்மையுடன் இணைந்த சக்திமிக்கச் சங்கற்பமாக மாற்றுருப் பெற்றது. தம்முடைய சங்கற்பங்களின் சித்தாந்தமான பிரயோகத்தின் மூலம் அவர் உள்ளமைதி எய்தினார். இவ்வாறு, ஐக்கிய நாடுகள் சபைக்கான எண்ணத்தின் நேரடி முன்னோடியாக அவர் விளங்கினார். காந்தி வாழ்ந்திருக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை மேலும் வறுமைப்பட்டிருக்கும். "இது வாழத் தகுந்த உலகமல்லவென்றால், நான் இதில் வாழ விரும்ப மாட்டேன்” என காந்தி கூறினார். இந்த இலக்கினை நோக்கி உழைக்கக் கூடிய வழியை அவர் நமக்கெல்லாங் காட்டினார். அவர் வதஞ் செய்யப்படுவதற்குச் சற்று முன்னர், இனக் கலவரத்தை நிறுத்தும் முகமாக அவர் மேற்கொண்டிருந்த இறுதியான அவரது உந்நத உண்ணாவிரதத்தை அவர் நிறுத்தியபொழுது, எல்லா மனித குலத்திற்கும் அவருடைய நற்செய்தியாகக் கூட அச்சாவாக அமைந்த பின்வரும் இந்த சுலோகத்தை உரத்து வாசிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு இருளிலிருந்து ஒளிக்கு என்னை வழி நடத்து

Page 14
ட்கிள்யூ ஹெல்லன்oேர்க்
டபிள்யூ ஹெய்ஸன்பேர்க், ஜேர்மானியர். பேராசிரியர்; பெளதீக தத்துவ நூல்களின் ஆசிரியர்; பெளதீகத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
அரசிசலில் அகில்லைச
மிக வர்த்தமானமாக, வன்முறையினால், அதாவது, தடையெனக் கருதப்படுபவர்களுக்கு எதிராக வன்முறை உபயோகித்தே நாடுகளுக்கிடையே நடைபெறும் அரசியற் கருத்து முரண்பாடுகளுக்கு இதுவரை காலமுந் தீர்வு காணப் பட்டு வந்தபோதிலும், நவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் சத்வம் இத்தாழ்வு மிகு காரியங்கள் தொடர்ந்து நடைபெறு வதற்கு எதிர்காலத்தில் அரிதாகவேனும் அநுமதிக்க மாட்டாது. எனவே, ஒரு கூட்டத்தினருக்கு எதிராக இன்னொரு கூட்டத் தார் நயங்களைப் பெறுவதற்கு, எதிர்கால உலகில், வேறு வழிவகைகள் இருத்தல் வேண்டும்.
 

25 6Teio. 6hurt.
இந்நிலையில் அகிம்ஸை பற்றிய கருத்துவம், இரு வகைகளிலே, தீர்க்கமான உதவியாக அமையலாம். முதலாவ தாக, "முடிவு வழிவகைகளை நியாயபூர்வப்படுத்துகின்றது" என்ற பழைய - அடிக்கடி வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகும் - கோஷத்தை அது மாற்றி அமைக்கின்றது. வழிவகைகளின் தரம் (எடுத்துக்காட்டாக, நல்ல முடிவு களுக்காக ஆக்கினைப்படும் நோக்கம்; ஆனால், மற்றவர்கள் மீது ஆக்கினையைச் சுமத்துவதல்ல) முடிவுகள் சம்பந்தமான நியாயபூர்வத்துவத்தைத் தருகின்றது என அகிம்ஸையின் கருத்துவங் கூறுகின்றது. எனவே, இரண்டாவதாக, மற்றவர் களுடைய - பெரும்பான்மை மக்களுடைய - அங்கீகாரத் தைப் பெற்ற பின்னர் மட்டுமே, நமது ஆதாயங்களைப் பின்தொடரலாமென அது கூறுகின்றது.
நாடுகளுக்கிடையே உள்ள கடுமையான விவகாரங் களைத் தீர்க்க, உதவிக்கு அழைக்கத் தக்க சர்வதேசீய நிறுவ னங்களையோ, நீதிமன்றங்களையோ உண்டாக்குதல் நமது காலத்தின் பொதுவான போக்காக அமைந்துள்ளது.
இது நிச்சயமாக, சரியான திசையில், எடுத்துவைக்கப் படும் சரியான நடையாகும். ஆனாலும், அண்மையிலுள்ள எதிர்காலத்திலாவது, அத்தகைய நிறுவனத்தின் அதிகாரம் கட்சிகளுள் ஒன்றினால் அடிக்கடி ஆட்சேபிக்கப்படலாம். அன்றேல், அப்பிரச்சினை சம்பந்தமாக மற்றைய நாடுகளுக் கிடையேயுள்ள பொதுவான அக்கறைக் குறைவு அத்தகைய சர்வ தேசீய நிறுவனத்தின் தீர்ப்பினை விபலமாக்கலாம். அத்தகைய கரும பாகங்களில், காந்தியின் கருத்துவமான சத்தியாக்கிரகம் அல்லது அகிம்ஸை மூலம், வாக்குவாதத்திற் குள்ளான பிரச்சினை குறித்து மிக அதிகமான மக்களுடைய கவனத்தை இழுத்து, அதன் தீர்விலுள்ள அவசியத்தை அழுத்திக் காட்டுதல் முடியும். ஏனெனில், சர்வதேசீய நீதிமன்றம் என்ற, சற்றே மூர்த்தியாகாத கருத்துவத்திலும் பார்க்க, ஆழமான சொந்த ஈடுபாட்டிற்குரிய கடப்பாட்டினை அடித்தளமாகக் கொண்ட காந்தியின் கருத்துவமான அகிம்ஸை சக்திமிக்க ஒன்றாக அமையலாம்.

Page 15
காந்தி தரிசனம் 26
எனவே, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளைப் பார்க்கிலும், அணு ஆயுதமில்லாத நாடுகள் மேலாகப் பாதுகாக்கப்படத்தக்க எதிர்கால உலகத்தின் அரசியல் அமைப்புக்கு, அன்றேல், மற்றைய நாடுகளுடைய சேமலாபங்களை அலட்சியப்படுத்தாது அவற்றிலே பங்கு கொண்டு உழைப்பதின் மூலந் தங்களுடைய சொந்தச் சேம லாபங்களைத் திறமையாகப் பேணும் வகைக்கு, காந்தியின் வழியிலமைந்த சிந்தனையே நேராக இட்டுச் செல்லுகின்றது. மிகத் தூய்மையான சொந்தக் கடப்பாட்டினை, வன்முறை யைப் பூரணமாகத் துறத்தலுடன் கலத்தல் சிறந்த வெற்றிக்கு வழி சமைக்கும் என்பதைப் பிரமாணமாகக் காட்டியதின் மூலம், ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு காந்தியால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எடுத்துக்காட்டுக்காக நாம் எல்லோரும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.

- - - - - ങ്ങി. ക്രൈകേr് எம். சொலொக்கோவ், ரூஷ்யர். 'டொன் நதி அமைதியாகப் பாய்கின்றது (நான்கு பாகங்கள்) போன்றவற்றை எழுதிய பிரபல நாவலாசிரியர்; இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
இதட்சத்தின் பெருவைச
ஒவ்வொரு தேசத்தின் பெரு மகான்கள் செய்தவற் றையும், அவர்களை ஊக்குவித்த இலட்சியங்களையும், அவர்கள் வாழ்வின் சாதனைகளையும் மனித சிந்தனை மதிப்பிற்குரிய இடத்தில் வைக்கின்றது. மனித இனத்தின் வரலாற்றிலே, அத்தகைய உயர்ந்த மகான்களுள் ஒருவர் மோகன்தாஸ் கரம்சந் காந்தி.
இன்றைய பிரதான தேவைகளை உணர்ந்த நான், காந்தியின் சில திட்டவட்டமான அம்சங்களை அதி கவனத் துடன் நோக்க விழைகின்றேன். இனக்குரோதத்திற்கு விரோ தமும், மற்றவற்றைப் பார்க்கிலுஞ் சில நாடுகள் மேலானவை என்ற கருத்துவத்தையும், வகுப்புவாதம் - குடியேற்ற நாடுகள் என்பவற்றையுஞ் சகிக்காத மேன்மையும் காந்தியிடம் உண்டு.

Page 16
காந்தி தரிசனம் 28
"மற்றைய நாடுகளைச் சுரண்டியோ, வியாகூலப்படுத்தியோ எழுப்பப்படும் தேசப்பற்றினை நான் ஒதுக்குகின்றேன்" என்ற காந்தியின் கூற்று மதிப்பிற்கும் அதி கவனத்திற்குமுரிய ஒன்றாகும்.
பல மத நம்பிக்கைகளினால் அபாயகரமாக உருவாக்கப் பட்ட பகைமையையும் துயரையும் எதிர்த்து காந்தி பல்லாண்டு களாகப் போராடினார். இப்போராட்டம் காந்தியின் சன் மார்க்கக் கருத்துக்கள் எழுப்பப்பட்ட அடித்தளத்தினாலும், நன்னடத்தை பற்றிய அவரது பொதுவான விதிகளாலும் ஆக்கப்பட்டது என்பது தெளிவாகும். ஆனால், செயல் முறையில் அது புதிய, விசாலித்த, முக்கியமான தேசப்பற்றி னதும் அரசியலினதும் உள்ளடக்கமாக அமைந்தது. தமது நீண்டகால முன்னோடிகளான ரோமரைப் பின்பற்றிய குடி யேற்ற ஆட்சியாளரின் 'பிரித்தாளும்’ ஆசையை அஃது எதிர்த்தது.
இந்திய வாழ்விலே தோன்றிய, நெடுங்காலமாக நிலவிய கொள்கைகள் பெற்றெடுத்த, "தீண்டாமையின் அவமானம்" என அவரே அழைத்த, கொடிய தோற்றப்பாட்டினை உடைத் தெறிவதைத் தமது வாழ்க்கையின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக வரித்துக்கொண்டார், நாட்டின் சனத்தொகையில் தீண்டாதார் என அழைக்கப்படுவோர் ஏறத்தாழ இருபது சதவீதத்தினர் என்பதை நாம் நினைவுகூரலாம்.
இந்தத் தேசக் கடமையைக் காந்தி நிறைவேற்றத் தவறியிருந்தால், ஏகாதிபத்திய அக்கிரமத்திலிருந்து நாட்டை மீட்கும் தேசீயப் போராட்டத்தில் ஒரு பெரிய சமூகப்பகுதி முற்றாக விடுபட்டிருக்கும். அவரே முழுமையாக உணர்ந் திருந்ததைப்போல, அது நிகழ்ந்திருப்பின், "சுயராஜ்யம்" - விடுதலை பெற்ற தாய்நாடு - என்ற ஒளிமயமான இலக்கினை அவர் அடைந்திருக்கமாட்டார்.
அடுத்து, இந்தியப் பெண்களின் விமோசனத்திற்கான காந்தியின் போராட்டத்தை, அவர்களுடைய ஏகாந்த வாசத் திற்கு எதிரான அவருடைய போராட்டத்தைப் பார்ப்போம். தமது மக்களின் இந்த அரைப்பங்கு பகுதியினரை மறைத்து

29 எஸ். பொ.
வைக்கப்பட்டிருக்கும் பெரிய சமூக சக்தியாக அவர் தரிசித் தார். ‘சுயராஜ்யத்தை நிதர்சனமாக்க வேண்டிய போராட் டத்திற்குத் தேசத்தின் எல்லாச் சக்திகளையும் ஒன்றுபடுத்தப் UfTGBL LfTri.
இவ்வாறு, காந்தியின் நடவடிக்கைகளின் ஒவ்வொரு முகமும், அவரை ஓர் அயராத உழைப்பாளியாகவும், தம் முடைய வழியில் ஏகாதிபத்திய முறையின் நிரந்தர எதிரி யாகவும், தமது நாட்டை வெகுவாக நேசித்து அதன் விடுதலை யையும் சுயாதீனத்தையும் விரும்பிய மனிதராகவும் அவரைக் காட்டும்.
ஆம். அகிம்ஸையின் மூலம் அமைதியான புரட்சியை முன்நடத்தக் காந்தி பாடுபட்டார். அதேபோன்று, எங்கள் நாட்டிலுள்ள நாங்கள், உள்நாட்டுக் கலகமின்றி, ரத்தக் களரி ஏற்படுவதை இயன்றமட்டுந் தடுத்துப் புரட்சி வெற்றி பெறு வதற்குப் பாடுபட்டோம். நமது புரட்சித்தீயின் சுவாலை களை அணைப்பதற்கும், எமது விடுதலையை நசுக்குவதற்கும் பதினான்கு ஏகாதிபத்திய நாடுகள் ஆயுதந் தாங்கித் தலை யிட்டபடியாலும், உள்நாட்டு எதிர்ப்புரட்சி தொடுக்கப் பட்டபடியாலும், நமது புரட்சியின் சாத்வீகமற்ற தன்மை நமது பாட்டாளிகள் மீது திணிக்கப்பட்டது. ض
இவை வேறுபட்ட பாதைகளாம்.
ஆனால், மக்களின் வெகுஜன இயக்கமாகவே எப் பொழுதும் புரட்சி அமைகின்றது என்ற காரணத்தினால், மக்கள் கூட்டத்தின் பலத்திலே காந்தி வைத்திருந்த நம்பிக் கையை நாம் பாராட்டத் தவறமாட்டோம். மேலும், ஏகாதிபத்தியவாதிகளை இறுதியில் வீழ்த்திய "வெள்ளையனே வெளியேறு" என்ற சுலோகத்திற்குக் காந்தி போராட்டத்தின் தர்க்க நியாயத்தைக் கொடுத்ததையும் பாராட்டாமலிருக்க (ԼՔւգ-Այո3il.
சத்தியத்தையும், சன்மார்க்கத்திற்கான தமது மனவுரு வத்தையும், அரசியற் போராட்டத்திற்கான குறிப்பிட்ட வழிவகைகளையும், தத்துவத்திற்கான மூலக்கோட்பாடு களையும் ஆராய்ந்து தேடிய காந்தியின் வாழ்க்கையும் சாத

Page 17
காந்தி தரிசனம் 3 Ο
னையும் தணியாத தாகம் நிகர்த்ததாக அமைந்தது.
இத் தேடலின் சிக்கல் நிறைந்த தன்மையும், விசாலித்த தன்மையும் இந்தியாவின் அபிவிருத்தியிலுள்ள சிக்கலையும் தனித்துவத்தையும் படம்பிடித்தன.
எக்காலமும் நின்றுலவக் கூடியதாகக் காந்தியின் நாமத்திற்கு “மகாத்மா” - உந்நத இதயம் - என்னும் அற்புதச்சொல்லை இந்திய மக்கள் சேர்த்தார்கள். இந்திய மக்களுடையதேயான, அவர்களுடைய தேசப்பற்றையும், விடுதலையிலும் சுயாதீனத்திலும் அவர்களுக்கிருந்த பெரு விருப்பையும் ஈர்த்துப் படம்பிடித்துக் காட்டிய வகையில், மக்களின் உந்நத மைந்தனாகிய இவருடைய இதயம் கவர்ச்சி வாய்ந்தது என்பதையுங் கூறவிரும்புவேன். அத்தகைய இதயம் மெய்யாகவே பெருமை வாய்ந்ததுதான்.

Gნ.&. garcodor
ஸி. வி. ராமன், தமிழர்; பாரதரத்தினம்; பிரபல விஞ்ஞானி; விஞ்ஞானத்திற்கான நோபல்பரிசு பெற்ற முதலாவது ஆசியாக்காரர்.
கருனாமூர்த்தி
என் சொந்தத் துரித வாழ்க்கையின் பெரும்பகுதி, அக்காலப் பொதுவாழ்க்கையின் அரங்கினைச் சுவீகரித்திருந்த அரசியல் விமோசனத்திற்கான போராட்டத்திலிருந்து மிகவும் விலகி நின்ற ஒரு துறைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அப் போராட்டத்தில் நான் தீவிர பங்கெடுத்துக் கொண்டதில்லை. அதில் ஈடுபட்டிருந்த தலைவர்களுடன் தொடர்புகொள்ள முயன்றதுமில்லை. ஆனால், நான் அறிந்திருந்த எவரிலும் பார்க்க மகாத்மா மிகப் பிரத்தியட்சமாகவே வேறுபட்டி ருந்தபடியால், அவரைப் பார்த்த, அவருடன் பேசிய, அவர் பேச்சைக் கேட்ட அநேக சந்தர்ப்பங்களுள் ஒவ்வொன்றும் என் ஞாபகத்தில் மிகத் தெளிவாகப் பதிந்திருக்கின்றது.
1914 ஆம் ஆண்டில், காசியிலே, இந்துப் பல்கலைக் கழகத்தின் காற்கோள் விழாவில், அங்கு குழுமியிருந்த பெரிய அவையில், அவர் பேசும்பொழுது ஏற்பட்ட திடீர் நிகழ்ச்சி யிலேதான் அவரைப் பார்க்கும் முதற் சந்தர்ப்பம் கிடைத்தது.

Page 18
காந்தி தரிசனம் 32
தமது பிரதேசத்தில் வாழும் மக்களைப் புறக்கணித்து, எடுப் பான விரய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் இளவரசர்களை அவர் கடிந்துகொண்டதை அப் பாரிய அவை திகைப்பான மெளனத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. அவ்வாறு கண்டிக்கப்பட்ட இளவரசர்கள் அங்கு சமூகமளித்திருந்தனர். எல்லாரும் அவ்வாறு கண்டிக்கப்படத்தக்கவர்களா என்னும் விடயம் சர்ச்சைக்குரியது. ஆனால், பேச்சைக் கேட்டதும் அவர்கள் எல்லோரும் இயல்பாகவே ஆத்திரமடைந்து மண்ட பத்தைவிட்டு வெளியேறினார்கள். அன்னிபெசன்ட் அம்மை யார் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று பங்கமுற்ற அவர்கள் உணர்ச்சிகளைச் சமாதானப்படுத்த முயன்றதிற் பயன் கிட்டவில்லை.
ஆண்டுகள் செல்லச் செல்ல, மகாத்மா காந்தி போதித்த வாழ்க்கை பற்றிய புதிய நோக்கும் அதன் பிரச்சினைகளும் அதிகமாக அறிமுகமாகியபொழுது, தமது நாட்டு மக்களின் சித்தத்தில் அவர் செலுத்திய செல்வாக்கு வளர்ந்தது. சுதந்தி ரத்திற்கான பெரிய போராட்டத்தில், இந்தியத் தலைவர் களுள் அவர்தான் முதன்மையானவர் என்பது ஒவ்வொரு வருக்கும் சீக்கிரமே தெளிவாயிற்று. வாழ்க்கையின் பிரச்சி னையை அவர் நோக்கிய விதம் தவிர்க்கமுடியாத வகையில் காருண்யம் பொருந்தியதாக அமைந்ததுதான் அவர்தம் செல்வாக்கின் இரகசியமென்பதும் அதிக அளவிலே தெளி வாயிற்று. பிறிதொரு வகையிற் சொல்வதானால், தூய சித்த மின்மைகளென அவர் கருதிய விஞ்ஞானத்திலேயோ, பொருளாதாரத்திலேயோ, அரசியலிலேயோ எவ்வித அக்கறை யுங்கொள்ளாது, மனிதருடைய வாழ்க்கையிலும் அவர்களு டைய மகிழ்ச்சியிலும் அக்கறை கொண்டார். மனித வாழ்க் கையின் சாமான்யத்திற்கு மேலாக இப்பாடங்கள் இடம் வகிக்கின்றன என்ற் மனப்பான்மை உள்ளவர்கள் திருப்தி கொள்ளாமல் இருந்தபோதிலும், சாதாரண மனிதன் இயல் பாக அவரை நேசித்தான்.

ඤ-ෙහ. රාෂq ශc>qගිණිකී රාගd சங். பிதா டொமினிக் பியர், பெல்ஜியக்காரர். ‘சமாதானத்திற் கான மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தை நிறுவியவர்; சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
உ0002ஆண்முல் காந்தி
என்னுடைய குஞ்சு அலுவலகத்தில் காந்தியின் பிரதிமை ஒன்றினை வைத்துள்ளேன். குஷ்டரோகி ஒருவன் தனது புண்களைப் பரிபாலிக்க உதவும் வகையில், விநயமும் சித்தியும் பொலிய அவர் குனிந்தவாறு காணப்படுகின்றார். அதிலே நான் பார்க்கும் காந்தி, நான் புரிந்துகொள்ளக்கூடிய மனிதராகக் காட்சியளிக்கின்றார். அவருக்கு நான் நெருக்க மானவன் என்பதையும் உணருகின்றேன்.
1960ஆம் ஆண்டிலும், மீண்டும் 1966ஆம் ஆண்டிலும், கெளரவமான வணக்கத்தைச் செலுத்தப் புதுதில்லியிலுள்ள காந்தி சமாதிக்குச் சென்றேன். 1966இல், அதே நகரத்திலுள்ள வறிய காந்தி மியூஸியத்தைப் பார்வையிட்டேன். அஃது எனக்கு அதிருப்தியூட்டுவதாக அமைந்தது. காந்தியின் அரசியல் வாரி சான நேருவின் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கிடையே நிறுவப்பட்டுள்ள நேரு மியூஸியம் எவ்வளவு ஆடம்பரமாக

Page 19
காந்தி தரிசனம் 34
அமைந்துள்ளது என்பது உணரப்படும் பொழுது, காந்தி மியூஸியத்தை இன்னுஞ் சிறந்த நினைவுச் சின்னமாக நிறுவு வதற்குக் காலம் பிந்திவிட்டது என்பதிற் சந்தேகம் இருக்க LDfTL"lL—fTğ5/.
காந்தியின் மரணம் - நான் பகிரங்கமாகக் கூறியுள்ளது போல - அவருடைய வாழ்க்கையிலும் பார்க்க என்னை அதிக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றது. "மாற்றுக் கட்சியைச் சார்ந்த அயலவனா”லேயோ, எதிரியினாலேயோ, “அந்நிய’ னாலேயோ அல்லாமல், ஒரு நண்பனால் - ஒரு சகோதர னால் - அவர் சார்ந்த அதே மதத்தவனால் அவர் கொலை செய்யப்பட்டார். நான் வெகு இளையவனாக இருந்த பொழுது, என் மனச்சாட்சியுடன் மாறுபட அமைந்துள்ள மனச்சாட்சியின்மீதும் அதே அளவு மரியாதை வைக்கும்படி எனக்கு என் அன்னை கற்பித்திருக்கின்றாள். தாகூர் எழுதிய பின்வரும் அடிகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளு கின்றேன்.
வேறுபாடுகளைத் துடைத்தெறிந்து எவ்வாறு ஒன்றுபடலாம் என்பதல்ல; ஆனால் எல்லா வேறுபாடு களையும் அப்படியே வைத்துக்கொண்டு எவ்வாறு ஒன்றுபடலாம் என்டதுதான் இன்றுள்ள உலகளாவிய நிலையாகும். தங்களுடைய இணக்கத்தை இயல்பாக வேறுபாடுகள் கண்டுபிடிக்கும்பொழுது, உண்மையான ஒற்றுமை ஏற்படுகின்றது.
இவ்வளவு வரையிலும் எழுதுவது எனக்கு இலகுவாக அமைந்தது. ஆனால், சக்தியற்றதும் மனக்குழப்பமுமான என் நிலையைச் சடுதியாக உணருகின்றேன். குடியேற்ற ஆங்கிலேய ஆட்சியாளரை அனுப்பித் தமது தேசத்தை விடுதலை பெறச் செய்வதில் காந்தி அடைந்த வெற்றியும், அகிம்ஸையும் 2000 ஆம் ஆண்டில் எத்தகைய மதிப்புப் பெறும்? வியட்நாமில், தென்னாபிரிக்காவில், வாஸ்தவத்தில் இன ஒதுக்கல் கொள்கை யுள்ள அமேரிக்காவில், கென்யாவிற்கூட அவற்றுக்குள்ள மதிப்பு என்ன? இதற்கான பதில் என்னிடமில்லை.
.இந்த வரிகளை எழுதும்பொழுது, நான் அமர்ந்தி

35 66ho. 6 UT.
ருக்கும் மேஜையின் இடக்கைப் புறமுள்ள காந்தியின் பிரதி மையைப் பார்க்கின்றேன். குறிப்பிட்டதும் வரையறுக்கப் பட்டதுமான சில சந்தர்ப்பங்களில், மிகக் கடினமான நிபந் தனைகளின் கீழ், பலாத்காரம் தேவைப்படலாமா என்ற ஒரு சந்தேகத்தைத்தானும் எழுப்பியதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கோருகின்றேன். என் பழைய நண்பர் அல்பேட் சுவெஸ்டர் போலவே, பிரகாசப்படுத்தப்பட்டதும், ஊக்கமும் உள்ளதான வெகுஜனப் பொது அபிப்பிராயத்தை உருவாக்கு வதுதான் சமாதானத்திற்காக சிறந்த உத்தரவாதம் என நானும் நம்புகின்றேன். நன்மையின் திறமையான அபிநயத்தி னுடைய சாந்தமான வெடிக்குந்தன்மையை நான் நம்பு கின்றேன்; காந்தி குஷ்டரோகியைச் சார்தல்! இன்று வியட் நாமிற்காக என்ன செய்திருப்பார் என்பது பற்றி, என்னிலும் அறிவுமிக்கவர்களிடமிருந்து ஒளிபெறக் காத்திருக்கின்றேன். அஃது உண்மையாகத் துறைத்தீபமாக அமையும். நான் பின் பற்றக்கூடிய எடுத்துக்காட்டாகவும் அமையும். ஆனால், தமது நாடு மூன்று துண்டாகக் கிழிக்கப்பட்டதைப் பார்த்து, ‘பிரி வினை’ இருபது இலட்சம் சகதேச மக்களின் உயிர்களையும், மேலும் 70 இலட்சம் மக்களின் இடம்பெயர்தலையும் விலை யாகக் கொண்டது என்பதை அறிந்த பின்னரே காந்தி இறந்தார்.
என்னைப் பொறத்தவரையில், இரவும் பகலும் தம்மை ஏழைகளுக்காக ஒப்படைத்த தூய்மையும் நலனும் எளிமையு முள்ள காந்தியின் எடுத்துக்காட்டு நிலைகொண்டிருக் கின்றது. காலக்காட்டில் அமைந்துள்ள சமாதானத்திற்கான மகாத்மா காந்தித்துவத், நாள்தோறும், மனச்சாட்சியுள்ள பணி களை நிர்மாணிப்பதின் மூலம், அவருடைய நூற்றாண்டினை நான் கொண்டாடுவேன்.

Page 20
ഴreളുr ജൂd à
மாட்டின் லூதர் கிங், அமேரிக்கக் கறுப்பர்களின் தலைவர். "இரண்டாவது காந்தி எனப் புகழ் பெற்றவர்; சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்; இனவெறிக்கு வாலிப வயதிலேயே பலியானவர்.
சூரன் சாதிரி
அணு ஆயுதப் பரிநாசத்தின் விளிம்பிலே இன்றைய நாகரிக உலகம் நின்றுகொண்டிருக்கின்றது. இனியும், யுத்தத் திற்கான ஆயத்தம் என்ற வழுவழுத்த பேச்சில் நியாயமான எந்த மனிதனும் ஈடுபடுதல் முடியாது. நிதானமான சிந்தனை யும், நியாயபூர்வமான பேச்சுப் பரிவர்த்தனையும், தார்மீகப் பொறுப்புணர்வும் இன்றுள்ள ஆபத்தான நிலையிலே தேவைப் படுகின்றன. முன்னர் எப்பொழுதும் இருந்ததைப் பார்க்கிலும், காந்திய வழிவகையான நேரடிச் சத்தியாக்கிரக நடவடிக்கை சர்வதேசீயப் பிரச்சினைகளில் பிரயோகப்படுத்தப்படுதல் அவசியமாகின்றது. இந்த வழிவகையை தேசத்தின் அகத்தே உள்ள முரண்பாடுகளிலே பயன்படுத்தத்தக்க வழிவகை மட்டுமே எனக் கொள்ளப்படலாகாது. இன்றைய உலகத்தி லுள்ள வல்லரசுக் கூட்டணிகளுக்கிடையிலுள்ள முரண்பாடு களுக்குத் தீர்வு காணவும் இந்த வழிவகையை ஆக்கபூர்வ மாகப் பயன்படுத்தலாம்.
 

3 7 எஸ். பொ.
அரசாங்கமும் மற்றும் உத்தியோக நிறுவனங்களும் முதலிற் செயலில் இறங்கத் தவறியபோதிலும், அநீதிக்கு எதிராக நாங்கள் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம். அநீதியான சட்டங்களுக்கு நாங்கள் கீழ்ப்படியவும் மாட் டோம்; நியாயமற்ற பழக்க வழக்கங்களுக்குப் பணியவும் மாட்டோம். ஓர் இனத்தின் சமாதானமே நமது குறிக்கோளாக அமைந்துள்ள காரணத்தினால், அகிம்ஸையின் வழிமுறை களையே நாங்கள் கைக்கொள்ளுவோம். நமது வார்த்தைகள் மூலம் அறிவுறுத்த நாங்கள் முயலுவோம். பேச்சு வார்த்தைகள் மூலம் நியாயமான உடன்படிக்கையைப் பெறுவதற்கு நாங்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்றோம். ஆனால், சத்தி யத்தை நாங்கள் தரிசிக்கும் வகைக்குச் சாட்சிகளாக மாறுவ தற்குத் தேவை ஏற்படின் துன்பம் அநுபவிப்பதற்கும், உயிர் களைப் பரித்தியாகஞ் செய்யவுங்கூட நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.
இனத்தின் நியாயத்திற்கான பிரச்சினையை நாங்கள் அணுகும் முறைக்கு வெற்றிகரமான முன்மாதிரி இல்லாம லில்லை. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பராக்கிரமத்தை எதிர்ப்பதற்கும், நூற்றாண்டுகளாக மக்கள்மீது திணிக்கப் பட்ட அரசியல் ஆதிக்கத்திலிருந்தும் பொருளாதாரச் சுரண்டலி லிருந்தும் தமது மக்களை விடுவிப்பதற்கும் அது மிகப் பிரமாண்டமான முறையில் மோகனதாஸ் கே காந்தியினால் உபயோகிக்கப்பட்டது. சத்தியம், ஆன்மீக சக்தி, அகிம்ஸை, மனோதிடம் ஆகிய ஆயுதங்களை மட்டுமே கைப்பற்றி அவர் போராடினார்.

Page 21
93 saroese ஊதாண்ட், பர்மாக்காரர். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலாள ராகப் பணியாற்றியவர். இப்பதவியை வகித்த முதலாவது ஆசியாக்காரர்.
2JāVasaryuveš” 62-6Mys
are onescoey
LD6oilögJ6oLu மதிப்பினையும் மகிமையையும் வலியுறுத்தும் முயற்சி ஒன்றிலேதான், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், தென்னாபிரிக்காவில், காந்திஜி முதன்முதலாக சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார். அதன் குறியீட்டு அர்த்தம் புலப்படுத்துவதைப்போல, சத்தியம் என்ற ஆயுதத்தை உறுதி யாகப் பற்றி, நிமித்தமாக உபயோகித்தால், வன்முறையை நாடாமலே சமாதான முறையில் மாற்றங்களை ஏற்படுத்த லாம் எனக் காந்திஜி நம்பினார். -
இஃது உண்மையிலேயே இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த கருத்துவங்களுள் ஒன்றாகும். எல்லாச் சிறந்த மதங்களிலும் பிரதிஷ்டாதானத்தில் அநுபவமாக வைக்கப்பட்டுள்ள ஒரு
 

39 எஸ். பொ.
பாவனையான அகிம்ஸையின் சமய தூதுவரெனக் காந்திஜி உரிமையுடன் பாராட்டப்படலாம். என்னுடைய சொந்தச் சமயமான பெளத்தத்தின் ஆதார மதக் கோட்பாடுகளுள் ஒன்றாக இது வாஸ்தவமாக அமைந்துள்ளது. எல்லாப் பிராயச் சித்தங்களும் அடங்கிய அவர்தம் அன்பு என்னும் ஞானத்தி னால் புத்தர் மனிதனை நல்வழிப்படுத்தும் தமது புனித தூதினைத் தொடங்கிய அந்த நாளிலிருந்து, அவர் நிமித்த மாகவோ, அவர் கணக்கிலேயோ ஒரு சொட்டு உதிரந்தானும் எப்பொழுதுஞ் சிந்தப்பட்டது கிடையாது. தமக்கு எதிராக மற்றவர்கள் பேசினாலுங்கூட ஆத்திரங்காட்டவோ, வன்மம் கொள்ளவோ வேண்டாமெனப் புத்தர் தமது சீடர்களுக்குப் போதித்தார். இருப்பினும், அகிம்ஸை என்பது எதிர்மறைக் கருத்துவம் என எண்ணப்படலாகாது. வன்முறை மூலம் பெறப்படுவனவற்றிலும் பார்க்க, உயிர்மை இடங்களில் அகிம்ஸையைக் கையாளுவதின் மூலம் மிக நீடித்த பயன் முடிவினைப் பெறமுடியுமென்று காந்திஜி நம்பினார். முடி வினைப் போன்றே வழிவகைகளும் புறக்கணிக்கப்படத் தகா தனவாக இருந்த காரணத்தினால், முடிவுகள் சமாதான வழி வகைகளின் மூலம் பெறப்படல் வேண்டுமென்பது அவருக்கு முக்கியமானதாக அமைந்தது.
“வழிவகைகளை முடிவு நியாயப்படுத்துகின்றது" என்னும் பழக்கப்பட்ட சொற்றொடர் ஒன்றை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருக்கின்றது. இக்கருத்தினைக் காந்திஜி ஆணித்தரமாக நிராகரித்தார். ஈனமான வழிவகையால் மேதக்க முடிவினைப் பெறமுடியும் என்பதை அவர் நம்பவில்லை. அவரைப் பொறுத்தவரையில் முடிவுடன் வழிவகைகளுங் கலந்தன. முடிவு வழிவகைகளை நியாயபூர்வப்படுத்தாது புனிதப்படுத்துவதாக அமையும்.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறு வதற்கு அகிம்ஸையின் எதிர்ப்பழுத்தம் என்ற உத்தியைக் காந்திஜி வெற்றிகரமாக உபயோகித்தார். இருப்பினும், இந்தியா வின் அரசியற் சுதந்திரத்தில் அவருக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ, அவ்வளவு அக்கறை அவருக்கு இந்தியாவின் சமுதாயஞ் சார்ந்த தீவினைகளிலும் இருந்தது. இந்தியாவில்

Page 22
காந்தி தரிசனம் 4 O
நடைபெற்ற ஆரம்பகாலச் சத்தியாக்கிரகங்களுள் ஒன்று, தென்னிந்தியக் கிராமம் ஒன்றில் நடைமுறையிலிருந்த தீண் டாமை வழக்கினை எதிர்க்கப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, மனிதனுடைய மதிப்பினதும் மகிமையினதும் முக்கியத் துவத்தையும், சாதி - சமயக் கோட்பாடுகள் ஆகியனவற்றின் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட மனிதர்கள் எல்லோரும் சம மாணவர்கள் என்ற மூலக் கோட்பாட்டினையும் காந்திஜி வலியுறுத்தினார். இந்தியாவின் சமுதாயஞ் சார்ந்த நீதி பற்றிய ஈடுபாடு மகாத்மாகாந்தியிடம் ஒத்திசை அக்கறையாக இருந்தது. அவருடைய நாடு அல்லது காலம் என்ற எல்லைக் கட்டுகளுக்கு அப்பாலும் எவ்வளவோ வியாபித்த அர்த்தமும் உட்பொருளும் கொண்டதாகக் காந்திஜீயின் தத்துவம் எனக்குத் தோன்றுகின்றது. அனைத்துலகப் பிரயோகத்திற்கு ஏற்றனவாகவும், நித்தியமாகச் செல்லுபடியாகும் நிலையில் உள்ளனவாகவும் அவருடைய அநேக மூலக் கோட்பாடுகள் திகழுகின்றன. சமாதான மாற்றத்திற்கு ஏற்ற கருவியாக அகிம்ஸையின் எதிர்ப்பழுத்தத்தில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை அவருடைய காலத்தில் இந்தியா ஏற்றுக் கொண் டதுபோல, காலப்போக்கில், உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளுமென நான் நம்புகின்றேன்.

Gaѣ66'ó)дси
கேஸி பிரபு, அவுஸ்திரேலியர். வங்காள தேசாதிபதி நாயகம் (1944-46); அவுஸ்திரேலியாவின் தேசாதிபதி நாயகம்; நூலாசிரியர்.
(seofuel abstaceo
1946ஆம் ஆண்டில், நான் இந்தியாவிலிருந்து வெளிவு யேறிய பொழுது, இந்தியாவில் ஓர் அவுஸ்ரேலியன்’ என்ற ழைக்கப்படும் சிறு நூலொன்றை எழுதினேன். அதிலே, இந்தியாவில் நான் சந்தித்த மிகச் சுவாரஸ்யமான தனி மனிதரும், எல்லோரிலும் அதி மேன்மை பெற்றவரும் மகாத்மா காந்தி’ எனக்கூறி, அவரைப்பற்றிய வர்ணனையையும், அவர் என் சித்தத்திலேற்படுத்திய தாக்கத்தையும் எழுதினேன்.
1945ஆம் ஆண்டின் பிற்கூறில், கல்கத்தாவில், நீண்ட நேரங்களாக அவரைச் சந்தித்துத் தெளிவுபெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்புகள் ஒரு பக்ஷ காலம்வரை பரந்தது. நாமிருவரும் எவ்வளவோ தடவைகளும், எவ்வளவோ நீண்ட நேரமும் பேச்சு வார்த்தைகள் நடத்தியபடியால், ஒரு தினம் நாமிருவரும் சந்திக்காதது குறித்துக் கல்கத்தாச் செய்தித்

Page 23
காந்தி தரிசனம் 42
தாளொன்று, "திரு. கேஸி நேற்று திரு. காந்தியைச் சந்திக்க வில்லை" என்று புதினம் பிரசுரித்திருந்தது.
மகாத்மா காந்தியின் ஆளுமை உண்மையானதாகவும், உயிர்த்துடிப்புள்ளதாகவும், மிக்க அன்புக்குரியதாகவும் இருந்தது. இந்திய இனத்தின் சகல பகுதியினராலும் அவர் மிகுந்த அன்புடனும் கெளரவத்துடனும் மதிக்கப்பட்டார். எங்கும், எப்பொழுது தோன்றினாலும் பாரிய கூட்டஞ் சேர்ந்து அவரைப் பின்தொடர்ந்தது. அவருடைய ஆளுமை, நேர்மை, கபடமின்மை, நெகிழ்வான தயை ஆகியன அவருடைய நாட்டவர்களுடைய உள்ளங்களிலும் சித்தங்களிலும் மிகப் பிரமாண்டமான தாக்கத்தினை ஏற்படுத்தின. அத்தகைய தாக்கம் என் மனைவிக்கும், எனக்குங்கூட ஏற்பட்டது.
அவருடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின்போது, ஒவ்வொரு சந்திப்பின் கடைசிக் கந்தாயத்திலும் என் மனைவி வருவாள். இதனால் நமது பேச்சு வார்த்தைகள் உற்சாகம் பெற்று, சில சமயங்களில், வேறு போக்குகளுக்குத் திரும்பி விடுவதும் உண்டு. என்னைப்போலவே அவளும் அவர் 61&FLDIT6OTrreit.
இந்தச் சந்திப்புகளுக்கடையில் நாமிருவரும் பெருந் தொகையான கடிதங்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒருவரை ஒருவர் சற்றுப் பரஸ்பரம் அறிந்துகொண்டதும், "அன்பு நண்ப" (Dear friend) என்று தமது கடிதங்களைத் தொடங்குவார். அவர் அவசரமாக எழுதியபொழுது அது சில சமயம் "அன்புப் பிசாசு" (Dear fiend) என்பது போலத் தோன்றியது.
நாமிருவரும் பேச்சுவார்த்தைகள் நடத்தியபொழுது, குறிப்பிட்ட சில விடயங்கள் சம்பந்தமாக அவருடைய မ္ဘီ தீர்மானமாக இருந்ததினால், விவாதத்தின் மூலம் அவை நம்பச்செய்ய முயல்வதிற் பயனில்லை என்பதைச் சற்று விரை வாகவே தெளிந்துகொண்டேன். எப்பொழுதுமே உபசாரமாக நடந்துகொண்டாலும், உறுதியான நிச்சயமுடையவராகவும் அவர் இருந்தார். அவர் நிரந்தரமான கருத்துக் கொண்டி ருந்த விடயங்களுள் ஒன்று குடிசைக் கைத்தொழிலாகும்.

43 எஸ். பொ.
அதற்கு எதிரான எந்த நியாயத்திற்கும் அவர் செவிசாய்த்த தில்லை. மிக நவீனமான பெரிய தொழில்களிலே மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான விவகாரத்தினை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய முயன்றேன். ஆனால், எதனையுமே கேட்க அவர் மறுத்தார். மக்கள் முழுப்பேருக்குமான நன்மை கருதிச் செலவு செய்யத்தக்க அரசிறையை உருவாக்குவதற் காக ஒரளவு வரிவிதித்தலோ அன்றேல் சுங்க விதியோ கொண்டு வரப்படல் வேண்டுமென்ற விவகாரத்தை முன் வைத்தேன். ஆனால், அதனை அவர் ஒப்பவில்லை. என்னுடைய அநுபவத்தில் அவரைப்பற்றி நான் அறிந்து கொண்ட மெச்சத்தக்க அபூர்வமான குணம், ஏனைய தனிப் பட்டவர்களைப் பற்றி - தன்னைப் பற்றிக் கொடுமையான விடயங்களைக் கூறியவர்களைப் பற்றிக்கூட - நிஷ்டூர அல்லது சங்கடமான கருத்துக்களைச் சொல்லாமலிருத்தலை அவர் பயின்றார் என்பதாகும். அவர்களுடைய பெயர்களை நான் பிரஸ்தாபித்தபொழுதெல்லாம், அவர்களைப்பற்றி ஏதாவது நல்லது சொல்ல எப்பொழுதுமே கண்டுபிடித்து விடுவார்; தீங்கு சொல்லவேமாட்டார்.
என் நூலிலே மகாத்மா காந்தி பற்றிய குறிப்புரைகளை முடிக்கும்பொழுது, "இன்றைய இந்தியாவில் அவரே மிக முக்கியமான பிரமுகர் என்பது பற்றி நான் நிச்சயமாக உள்ளேன். அவ்வாறே அவர் தொடர்ந்துந் திகழ்வார் என்றும் நம்புகின்றேன்" எனக் கூறினேன்.
இருப்பினும், இஃது இவ்வாறு அமைதல் கூடாததாக அமைந்தது. அவர் 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப் பட்டார். இந்தப் பயங்கர சம்பவம் நிகழ்ந்தபொழுது, இந்தியாவின் விசேட வகைத்தான ஜோதி ஒன்று அணைந்தது!

Page 24
හිංirගගණග්‍රෑ) ලෙශණික
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், தொழிற் கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த தலைவர். அவர் பிரித்தானியப் பிரதமராக இருந்த காலத்திலேதான் இந்தியா-இலங்கை-பர்மா போன்ற குடியேற்ற நாடுகள் சுதந்திரம் அடைந்தன.
e2ens Lyezési
தெய்வீகத்தன்மையினால் உணர்ச்சியூட்டப் பட்ட ஒரு புனிதர். தங்களுடைய மகா சிறந்த குடிமகனை இழந்துள்ள இந்திய மக்களுக்கு, ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானிய மக்களுடைய கருத்துக்களைத் தான் வெளிப்படுத்துகிறேன் என்பதை நான் உணருகின்றேன்.
இந்தியாவில் மகாத்மா காந்தி என அறியப்பட்ட அவர், இன்றைய வரலாற்றிலே, வேறொரு காலத்திற்கு உரித்தானவராகவே தோன்றினார். گھو
மிக மிகத் தன்னலம் மறுக்கும் வாழ்க்கையை மேற்கொண்டதினால், கோடிக்கனக்கான சக இந்திய மக்களினால் தெய்வீகத்தன்மை பொருந்திய ஒரு புண்ணிய
 

45 எஸ். பொ.
புருஷராக வணங்கப்பட்டார். அவருடைய செல்வாக்கு அவருடைய சக மதத்தவர்களுக்கு இந்துக்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்) அப்பாலாகவும் வியாபித்திருந்தது.
இந்தியப் பிரச்சினையைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கடந்த ஒரு கால் நூற்றாண்டு காலமாக, இந்த ஒரு மனிதரே மிகப் பெரிய காரணராய் விளங்கினார். இந்திய மக்களுடைய சுதந்திரத் திற்கான எழுச்சிகளின் வெளிப்பாடாகவே அவர் திகழ்ந்தார். அவர் தேசியவாதியாக மட்டுமே வாழ்ந்தவரல்லர்.
அவருடைய மிகத் தனித்துவம் பெற்ற கோட்பாடாக வன்முறையைத் தவிர்க்கும் அகிம்ஸை விளங்கிற்று. தாம் தவறெனக் கருதியவற்றை எதிர்ப்பதற்கு, சாத்வீகமாக எதிர்க்கும் வழியையே அவர் நம்பினார். அதன்மீது அவர் பூண்டிருந்த விசுவாசமும் பக்தியும் எப்பொழுதும் சந்தேகத்திற்கிடமற்றனவாகவே அமைந்திருந்தன.
சமாதானத்திற்கும் சகோதரத்துவத்துக்கும் பிரார்த் தனை செய்தவருடைய அந்தக் குரல் ஒரு கொலை யாளியின் கைகளினால் தாக்கப்பட்டு மெளனிக்கப் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவருடைய ஆன்மா அவருடைய தேச மக்களைச் சமாதானத்திற்கும் செளஜன் யத்திற்கும் தொடர்ந்து வழிநடத்தும் என்று நான் நிச்சயமாகவே நம்புகின்றேன்.

Page 25
gσαύ) όριά
லூயி பிஷர், அமேரிக்கர், நூலாசிரியர், பத்திரிகையாளர் கம்யூனிஸ நாடுகளைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள இவர், “மகாத்மா காந்தியின் வாழ்க்கை’ என்னும் நூலின் ஆசிரியருமாவர்.
assispá assnesvcsase
1942ஆம் ஆண்டிலும், 1946ஆம் ஆண்டிலும் காந்திஜி யின் "குடிசை” விருந்தினனாக நான் இருந்த பின்னர், அவர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை அமேரிக்க அரங்குகளில் விளக்க முயன்றேன். ஐக்கிய இராச்சியங்களில், முகாந்திரம் ஒன்றுக்காக உண்ணாவிரதம் இருத்தல் என்பது நகைப்பிற்கிடமானது என்பது பொதுப் பிரதிபலிப்பாக இருந்தது. ஆனால், அமேரிக்காவிலே சமாதானத்திற்கான உண்ணாவிரதங்கள் இன்று பெருவழக்காகிவிட்டன. 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மஸகுஸட்ஸிலுள்ள சிமித் கல்லூரியைச் சேர்ந்த 1,277 பெண் மாணாக்கர் வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக மூன்று தினங்கள் உண்ணாவிரதமிருந் தார்கள். உதை பந்தாட்டக் கோஷ்டியின் மயக்குந் தன்மை பெற்ற தலைவன் உட்பட, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த 250 மாணாக்கர் சமாதானத்திற்காக உண்ணா
 

47 sesuo. 6 Lurr.
விரதமிருந்தார்கள். ஹவாட் பல்கலைக்கழகத்திலும் ஏனைய இடங்களிலும், வியட்நாமில் அமேரிக்கர் தலையிடுவதற்கு எதிராக மாணாக்கரும் பேராசிரியர்களும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்கள் காந்தியின் எடுத்துக்காட்டினை ஆவாகனம் பண்ணுகிறார்கள்.
இளைஞர்கள், ஆயிரக்கணக்கில், வியட்நாமில் போராட மறுத்துச் சிறைக்கூடஞ் செல்கிறார்கள். மேற்படி சிறைத் தண்டனைகளை அநுபவித்தபிறகு எவ்வித அந்தஸ்து இழப்பும் இல்லாமல், மாணாக்கர் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அநேக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்காவில் காந்திஜி உயிர் வாழ்ந்து கொண்டி ருப்பவராகவே காணப்படுகின்றார். போலந்திலும் சோவியத் யூனியனிலும் சத்தியாக்கிரகம் நடைபெற்றது. ஆனால், இந்தியாவில்?
இந்தியாவின் தேசீய விடுதலைக்குக் காந்திஜி ஆற்றி யுள்ள சேவைகளைப் பாராட்டி, அவருடைய தத்துவத்தை விளங்கிக் கொண்ட இந்தியர்கள்கூட அவருடைய பொரு ளாதாரத் தத்துவங்களைப் பரிகசிப்பதில் ஆனந்தமடை கிறார்கள். இருப்பினும், இந்தியாவை அவர் நன்கறிந்திருந்தார் என்பன்த எவராலும் மறுக்கமுடியாது. தம்முடைய கண் களாலும் செவிகளாலும், தம்முடைய பாதங்களாலும் தோலி னாலும், தம்முடைய இதயத்தினாலும் இயற்கை அறிவினாலும் அதனை அவர் அறிந்திருந்தார். பல இலட்சம் கிராமங் களையும், ஜனத்தொகையின் எண்பது சதவீதத்திற்கும் மேலாக வுள்ள பல கோடிக்கணக்கான கிராமவாசிகளையுங் கொண்ட நாடாக இந்தியா அவருக்குத் தோன்றியது. விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது கவனத்தை அவையே பெறுமென அவர் நம்பினார். ஆனால், முதலாம் - இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிலுற்பத்தி அபிவிருத்திக்கு விவசாய அபிவிருத்தியைத் தாழ்வாகச் செய்துவிட்டமை என்பது இப்பொழுது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படு கின்றது. சோவியத் யூனியனிலும், செஞ்சீனாவிலுங்கூட இது நிகழ்ந்துள்ளது. உணவும் ஊட்டமும் கிராமமே தருகின்றது என்ற அடிப்படையை அவர்கள் மறந்துபோனார்கள். சீனா

Page 26
காந்தி தரிசனம் 48
வினுடையதைப் போல, ரூஷியாவினுடையதைப் போல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் இவ்வாறு விக்கின முற்றது. மக்கள் துன்புற்றார்கள். சிலர் பட்டினி கிடந்தார்கள். பணத்திற்கோ அன்றேல் நன்கொடையாகவோ தானியம் இறக்குமதி செய்யப்பட்டது.
வயல், தொழிற்சாலை, நீர்த்தேக்கம் ஆகிய எல்லாமே தேசிய அபிவிருத்திக்கு அவசியமானவை. ஆனால், காந்திஜி இவற்றைக் கிராம மண்ணிலிருந்து கட்டி எழுப்பியிருப்பார். திட்டமிடப்படும் ஒவ்வொரு முறையிலும், முதன்மையான வற்றிற்கே முதற்கவனஞ் செலுத்தப்படுகின்றது. இந்தியக் கிராமம் முதன்மையான இடத்தைச் தகிக்கவில்லை. இந்தக் கவலையீனத்திற்கு இந்திய மக்கள் தெண்டஞ் செலுத்தி விட்டார்கள்.
விவசாயியின் சேமலாபம் அன்றேல் அகிம்ஸை என்ப வற்றின் ஸ்தூலமாகக் காந்திஜி விளங்கினார் என்பதற்கு அப்பாற்படவும், பகிரங்கத் தூய்மையின் ஒரு வகைக்காகவும் அவர் நிலைநிற்கின்றார். வழிவகைகளே அவருக்கு எல்லாமாக இருந்தன. முடிவுகள் வந்து சேர்வதில்லை. ஏனெனில், முடிவுகள் மேற்கொண்டும் முடிவுகளுக்கு வழிவகைகளாக அமைந்து, அந்த முடிவுகள்கூட மேற்கொண்டும் வழிவகை களாகின்றன. இந்திய அரசியற் பொதுவாழ்வில் தூய்மை தனித்துவம் பெற்ற குண இயல்பாக அமையவில்லை என்று எனக்குத் தோன்றுகின்றது. ஆட்சியிலுள்ள நிர்வாகம் ஒன்றி னைக் கலைத்து அதனிடத்தில் வேறொரு நிர்வாகத்தை நிலைபெறச் செய்வதற்காக கம்யூனிஸ்ட் விரோதிகள் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுச் சேருகிறார்கள்; சோஷலிஸ்டு களும் கம்யூனிஸ்டுகளும் மதவெறி கொண்ட தேசீயவாதி களுடனும் மற்றும் அதி பழைமைப் பாதுகாப்பாளருடனும் கூட்டுச் சேருகிறார்கள். கருத்துவங்களிலும் பார்க்கப் பதவியே முதன்மை பெறுகின்றது. வெளிநாட்டுக் கொள்கைகளிலும் கூட்டுச்சேராமை என்பது மூலக் கோட்பாட்டின்மீது விசு வாசத்தை அநுமதித்து, வெளியாருடைய நெருக்குதலை எதிர்த்தல் வேண்டும் என்பதில் அறநிலை இல்லாமலிருக் கின்றது. உசிதமே மன்னன். அந்நிய நெருக்குவாரங்களை

49 6rsu. 6hut.
இந்திய அரசு எப்பொழுதும் எதிர்த்து நிற்கின்றதா? போலி யான ஆதாயங்களுக்காக மூலக்கோட்பாடுகள் பண்டமாற்றுச் செய்யப்படுகின்றனவா? காந்திஜி தொட்டிலை மெதுவாக ஆட்டினார் என்ற காரணத்திற்காக இந்திய தேசம் மற்றைய நாடுகளிலிருந்து வேறுபட்டதாகவோ சிறப்புற்றதாகவோ இருக்கின்றதா?
தனது மிகச் சிறந்த செல்வங்களை ஏற்றுமதி செய்ததி னால் இந்தியா வளங் குன்றியது. அது புத்தரைப் பெற்ற நாடு. இந்தியாவுக்கு வெளியே கோடிக்கணக்கானவர்கள் அவரை இப்பொழுது பின்பற்றுகிறார்கள்; உள்ளே கையடக்கமான வர்கள் மட்டுமே பின்பற்றுகிறார்கள். இந்தியாவின் காற்றும் மண்ணுமே காந்திஜியை வளர்த்தது. அவருடைய சொந்த நாட்டிலே எத்தனை காந்தீயவாதிகளை எண்ணிப் பார்த்தல் இயலும்? இந்தக் காந்தீயவாதிகள் எவ்வளவு செல்வாக் கினைப் பயிலுகின்றார்கள்? காந்திஜி இழக்கப்பட்ட மகாத்மா வாக ஆகுவதா? தாம் பிறந்த நாட்டிலேயே தீர்க்கதரிசிக்குக் கெளரவம் இல்லாது போவதா?

Page 27
ജൈdൺ ബാക്റ്റോൺ ஹெய்லி ஸெலஸ்ஸி, எதியோப்பிய நாட்டு மன்னர். அடிமை முறையை ஒழித்தவர் (1924); இத்தாலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்.
சனிகுசுகுந்திரமூன் eovazsmét5eroPmr asmrådetsuyučso
சுதந்திரமுள்ள மனிதர்களும், சுதந்திரத்தையும் நீதி யையும் நேசிக்கும் மனிதர்களும் வாழும் வரையிலும் மகாத்மா காந்தி எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கப்படுவார். மனிதகுலம், உண்மையில், மகாத்மா போன்ற ஒப்பற்ற புத்திரர் களை மிக அரிதாகவே உருவாக்குகின்றது. எதிர்வரும் ஆண்டு களில் மனிதர் அடையும் உந்நதம் மட்டுமே அவர்களுக்குப் பரிசாக அமைந்துள்ளது. இவ்வகையில், இந்தியாவுக்கு மட்டு மல்லாது முழு உலகத்திற்குமே, அநித்தியரான மனிதனிட மிருந்து எதிர்பார்க்கக் கூடியதிலும் பார்க்க எவ்வளவோ அதிகமாகக் காந்தி செய்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நாமமும் சத்தியம் - நீதி ஆகிய சொற்களும் ஒரு பொருட் கிளவிகளாயின. இந்த முடிவினை நோக்கி, நசுக்கப்பட்ட் கோடிக்கணக்கான மக்களுக்கு அது பிரபோதமாக அமைந்து, சுதந்திர தீபத்தை ஒளிரச் செய் துள்ளது. அவருடைய பணிகளை நினைவு கூரும்பொழுது, வாழ்வதற்கு மேலும் உகந்த இடமாக இந்த உலகத்தை ஆக்கு
 

51 எஸ். பொ.
வதற்கு அவர் எடுத்துக்கொண்ட பாரிய முயற்சிகளுக்காக உலகம் அவருக்குக் கடமைப்பட்டே நிற்கின்றது.
அழிவினைத் தவிர்த்து, மனிதகுலம் முழுவதும் முன்னேற வேண்டுமென உலகம் வேண்டினால், அது காலஞ் சென்ற மகாத்மா காந்தி போன்ற உந்நத மனிதர்களுடைய ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் மனதிற் கொண்டு நடத்தல் வேண்டுமென நாம் நம்புகின்றோம்.
"நன்மையைச் செய்ய விரும்புபவர்கள் சுயநலமற்ற வர்கள்” என்று உண்மையையே மகாத்மாகாந்தி கூறினார். இதற்கு மகாத்மா காந்தியிலும் பார்க்கச் சிறப்பான எடுத்துக் காட்டுப் பிற இல.
சுதந்திரத்திற்காகவும் நீதிக்காகவும் இந்தியாவிலும் ஆபிரிக்காவிலும் காந்தி நடாத்திய போராட்டங்கள் நற்பலன் அளித்துள்ளன. அவருடைய தத்துவம் உலகம் பூராகவும் பின்பற்றப்படுகின்றது. அது மானிட சுதந்திரக் கட்டடத்தின் மூலக்கல்லாகவும், அதேசமயம் ஆழ்ந்த அடித்தளமாகவும் அமைந்துள்ளது.
தம்முடைய வாழ்நாள்களுக்கிடையில் மனிதகுலத்தை நேசித்து அவர்களுக்கு இவ்வளவு தொண்டுகளும் ஆற்றிய இத்தகைய சான்றோன் ஒருவனை அளித்ததில் இந்தியா பெருமை கொள்ளலாம்.
"மானிட சேவைக்காகத் தன் சரீரத்தைத் துறந்து மரணத்தைத் தழுவவும் அவன் ஆயத்தனாக இருந்ததாற்றான், மனிதனாற் பூரண அன்பையும், முழுமையான உரிமைக் கவர்ச்சியையும் பயிலுதல் சாலும் என்ற மூலக் கோட் பாட்டிற்கு அவர் உண்மையிலேயே அர்ப்பணமாகியிருந்தார்.
உந்நத புருடர்கள் என்றும் மரணிப்பதில்லை. அவர் களுடைய பணி வாழ்ந்துகொண்டேயிருக்கும். எனவே, மகாத்மா காந்தி நம் மத்தியிலே இப்பொழுது இல்ல்ாமல் இருந்தாலுங்கூட, சிறியவர் - பெரியவர், இளையவர்முதியவர் என்ற பேதமின்றி, மனிதகுலத்தின் சேமலாபத் திற்காக அவர் ஆற்றிய பணியும் அர்ப்பணமும் நமது அன்றாட வாழ்க்கையில் என்றும் உயிர்ப்புள்ள நினைவாக வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

Page 28
ജേ. ബ്. ബG
ஸ்மட்ஸ், தென்னாபிரிக்காவின் பிரதமராக இருந்தவர். காந்தியும் இவரும் எதிரெதிர் முகாம்களில் நின்று போராடிய பொழுதுகூட பரஸ்பர மதிப்பு வைத்திருந்தவர்கள்.
• SSíðray
கிறிஸ்தவ சமயத்திற்கு உத்தரித்தல் மத்திய உந்து சக்தியாக இருக்கின்றது. மனித வரலாற்றின் மிகக் குறிப்பிடத் தக்க துன்பியலின் சின்னமாகச் சிலுவை இருந்து வருகின்றது. ஜேகோவாவின் உத்தரிப்புக்குள்ளான ஊழியக்காரனும், சிலுவையின் பெரும் உத்தரிப்புக்காரனுமானவன் தமது சகோதரர்களுக்காகத் தமது உள்ளத்தை வெளியே ஊற்றி ஏற்படுத்திய சக்திமிக்க உணர்ச்சி எழுச்சி, நியாய வாதங்களும் நம்பிக்கைத் தூண்டுதல்களும் ஏற்படுத்தக்கூடிய முழுவதுடன் ஒப்பிடமுடியாத மகத்துவங் கொண்டது.
சீர்திருத்தத்திற்கான தமது புதிய உத்தியை காந்தி உத்தரித்தல் என்ற சக்திமிக்க கோட்பாட்டின் அடித்தளத்தில் நிறுவினார். தம்மீது அநுதாபத்தைத் திருப்பவும், தம் நெஞ்சிலே
 

53 6T6io. 6LT.'
கொண்ட முகாந்திரத்திற்கு ஏனையோருடைய அநுசர ணையை வென்றெடுக்கவும், அவர் தம்மை உத்தரிப்புக்கார ராக்கிக் கொண்டார். சாதாரண அரசியல் வழிகளான நியாயம் பேசுதல், நம்பிக்கையைத் தூண்டுதல் ஆகியன தோற்ற பொழுது, கிழக்கினதும் இந்தியாவினதும் பண்டைய பழக்கங் களை அடித்தளமாகக்கொண்ட இப்புதிய உத்தியைக் கையாண்டார். இந்த வழிமுறை அரசியற் சிந்தனையாளரின் கவனத்திற்குரியது. அரசியல் விதிமுறைக்கு அதுவே காந்தியின் பங்களிப்பாகும்.
அநேக மக்கள், அவரை உண்மையாகவே மெச்சுபவர் களிற் சிலர்கூட, அவருடைய கருத்துவங்கள் சில பற்றியும், அவர் கருமமியற்றிய வழிவகைகள் சில பற்றியும் கருத்து மாறுபாடு கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவரது செயற்பாட்டுப் பாணி அவருக்குத் தனித்துவமானது; அவருக்கே சொந்தமானது. ஏனைய மேதைகளுடைய வாழ்க்கையிலுள்ளது போலவே, அது வழக்கமான அளவு களுக்குள் இசைந்தொழுக மறுத்தது. ஆனாலும், அவருடன் எவ்வளவுதான் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் கொண் டாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய அடிப்படை யான மனுஷத்துவம், தற்பற்றின்மை, நேர்மை முதலியன பற்றி எப்பொழுதுமே சேதநையுள்ளவர்களாக இருக்கின்றோம்.

Page 29
ஹரோல்& லில்சன்
ஹரோல்ட் வில்சன், பிரித்தானியப் பிரதமராக இருந்தவர்; பிரட்போட் பல்கலைக்கழக வேந்தர்; பல நூல்களின் ஆசிரியர்.
இந்திர - பிரித்தானிட்சருமபுர
தமது புகழின் உச்சியில், காங்கிரஸ் கட்சியின் ஏகப் பிரதிநிதியாக, இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிற் கலந்துகொள்வதற்காக, 1931ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி லண்டனுக்கு வந்தபொழுது, இந்தியாவிலும் பிரித்தானியா விலும் உக்கிரமமான அக்கறை எழுந்தது. பன்னிரண்டு ஆண்டு களாக சுதந்திரத்திற்கான இந்திய மக்களின் போராட்டத்தை அவர் வழிநடத்தியிருந்தார். ஒரு தடவைக்கு மேல் அவர் சிறைவாசம் அநுபவித்திருக்கின்றார். இந்தியாவின் தேசப்பிதா என்ற அவர் நிலை முன்னர் எப்பொழுதும் அவ்வளவு உயர்வாக இருந்ததில்லை. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடை பெற்ற காலத்தில் போவில் அமைந்துள்ள கிங்சிலி மண்ட பத்திலே தங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர்
 

55 எஸ். பொ.
ஏற்றிருந்தார். கிழக்கு லண்டனிலுள்ள தெருக்களில், அதி காலையில், நீண்ட தூரம் நடப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. அங்கு அவர் குழந்தைகளுக்கு மிகப் பிரீதியான வராக மாறினார்.
வட்டமேஜை மாநாட்டின் நடவடிக்கைகள் அவருக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனாலும், புனித ஜேம்ஸ் மாளிகைக்கு வெளியே, நண்பர்களை உருவாக்கி, இந்தியாவின் சுயாட்சி பற்றிய விவகாரத்தைப் பொறுமையாக விளக்கு வதில் அவர் அதிக நேரஞ் செலவிட்டார். "உண்மையான மாநாட்டு வேலை" என்று அதனைக் குறிப்பிட்டார். பிரித் தானியாவிற் செய்யப்பட்ட துணிகளைப் பகிஷ்கரிக்கும் க்ாங்கிரஸ் கட்சியின் இயக்கத்தாற் கடுமையாகப் பாதிக்கப் பட்ட லங்காசையரிலுள்ள பஞ்சாலைத் தொழிலாளர் மத்தியிற் குறிப்பிடத்தக்க வெற்றியளித்த விஜயத்தை மேற் கொண்டார். இந்த விஜயத்தின்போது இந்தியாவின் வறுமைக் கான பின்னணி முழுவதையும் விளக்கினார். ஈற்றன் மாணாக்கர் மத்தியிற் பேசினார். ஒக்ஸ்போட்டிற்கும் கேம் பிரிஜுக்கும் விஜயங்கள் மேற்கொண்டார். அநேக அரசியல் தலைவர்களுடன் உரையாடினார். பக்கிங்ஹாம் அரண் மனையில் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னருடன் தேநீர் அருந்தினார்.
மகாத்மாவினுடைய செல்வாக்கின் வளர்ச்சியைக் கண்டு, மலைப்புக் கொண்டு, ‘முடியின் மிக ஒளிரும் ஆபர ணத்திற்கு அஃது ஆபத்து விளைவிக்கும்’ எனக் கருதிய வின்சன்ட் சர்ச்சில் மிகுந்த நிந்தனையின் வசப்பட்டு, அவரைச் சந்திப்பதை முற்றாக மறுத்தார். இந்த இரண்டு ஒப்புயர்வற்ற புருஷத்துவர்களும் நேருக்கு நேராக எப்பொழுதாவது சந்தித்திருந்தால், அஃது உண்மையில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி யாகவே அமைந்திருக்கும். அவர்கள் அவ்வாறு சந்திக்காதது பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இழப்பாக அமைந்தது. அவருடைய பணி சம்பந்தமாக மாநாட்டிலே பல பிரதி கூலங்கள் ஏற்பட்டபோதிலும், பிரித்தானியாவிற் செலவு செய்த மூன்று மாதங்கள் முழுவதும் அவர் மனக்களிப்புடன் காணப்பட்டார். பத்திரிகையாளர்கள் அவருடைய ஆளு மையில் முடிவுற்ற கவர்ச்சியைக் கண்டார்கள். பிரித்தானிய

Page 30
காந்தி தரிசனம் 56
மக்களுக்கு இந்தியாவின் பிரச்சினைகளை விளக்குவதில் அவர் ஒரளவு வெற்றிபெற்றார். அவருடைய உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியா டொமினியன் நாடுகளுடன் சமபங்காளியாக இருப்பதைத் தாம் விரும்புவதாகத் தெரி வித்தார். ஆனால், இது சம இணக்கத்தில் அமைந்த பங்காளித் தனமாக இருத்தல் வேண்டுமென்றார். சுயஆட்சி பெற்ற இந்தியா பொதுநலவமைப்பின் சுதந்திர அங்கத்தவராகச் சேரல் வேண்டுமென்பதைச் செயற்படுத்துவதையே அவர் கோரினார். இக்கருத்தினை, இன்று நாம் ஒரு நடைமுறை வழக்கம் என ஏற்றுக் கொள்ளுகின்றோம்.
இந்தியாவின் அரசாங்கச் சட்டம் 1935இல் நிறைவேற்றப் பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் களின் பின்னர், 1937ஆம் ஆண்டிற்கும் 1939ஆம் ஆண்டிற்கு மிடையில், மகாத்மாகாந்தியின் பூரண அங்கீகாரத்துடன் ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பதவி ஏற்ற காலம் ஒன்று உண்டு பிரித்தானிய அரசு அதிகாரத்துடன் மத்தியில் இருக்க மாநிலங்களிற் காங்கிரஸ் ஆட்சி என்ற புதிய பரிசோதனை நடைமுறையில் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி இரு சாராரிடையேயும் சந்தேகங்கள் சில இருந்தன. நல்லெண் ணமும் தலையீடும் இருந்தன. புதிதாக வென்றெடுத்த அதி காரங்களுடனும், மகாத்மா அளித்த உற்சாகத்துடனும் காங்கிரஸ் அமைச்சர்கள் சமூக நிர்மாண வேலைகள் அளித்த வாய்ப்புகளில் ஈடுபடலானார்கள். வைஸ்ராயின் தலைமை யுடன், மாநிலத் தேசாதிபதிகள், புதிய ஏற்பாடு கூடுமான வரையிலும் சாந்தமாகச் செயற்படுவதை உறுதி செய்வதற் காகப் பாடுபட்டார்கள்.
இந்தியாவில் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்ப்ப தற்கும், பிரித்தானிய ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கும் மகாத்மா கையாண்ட வழிவகைகள் பற்றிச் சிறிதளவே கூறியுள்ளேன். கால்நூற்றாண்டு காலத்திற்குப் பரம்பிய நீண்ட போராட்டக் காலத்தில், சத்தியாக்கிரகத்தின் மூலக்கோட்பாட்டினை உள்ளடக்கிய, மூன்று பெரிய வன்முறையற்ற ஆணை கடத்தல் இயக்கங்களை அவர் நடத்தினார். உப்பு உற்பத்தி செய்தல்,

57 எஸ். பொ.
இந்தியாவுக்கு வெளியே உற்பத்தியான துணிகளை விற்கும் கடைகளைப் பகிஷ்கரித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற் கொண்டபொழுது, அவை முக்கியமாக அகிம்ஸை சார்ந்தன வாகவே இருந்தன. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொழுது அதிகாரத்திலுள்ளோர் எதிர்த்தால் அதற்கு எதிராக வன்முறை உபயோகிக்கப்படலாகாது என மகாத்மா வற்புறுத்தினார். இந்தக் கொள்கையைச் செயலாக்குவதற்கு நிரம்பிய சரீர - ஆன்மீகப் பலந் தேவைப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். போலீஸாருடன் கைபரிமாறுதல் நடத்தலாகாது; தம்மைச் சிறைச்சாலைக்கு எடுத்துச் செல் வதைச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவோர் தடுக்கலாகாது. இதன் நோக்கம் பகைவனை மனம் மாற்றுவதாகும். ஆன்மீக வச மாக்கல் மூலம், மீண்டும் மீண்டும் காங்கிரஸ் வைத்த சுதந்திரக் கோரிக்கைக்குப் பிரித்தானியாவை வழிநடத்துவதாகும். 1920இல் மகாத்மா வருமாறு எழுதினார்:
மிகப் பிரதிகூலமான சூழ்நிலைகளின்கீழ்க் கூட, நியா யத்திற்கும் காரணங்களின் தூண்டுதலுக்கும் இணங்கக் கூடிய சுபாவம் ஆங்கிலேயரிடம் இருப்பதைக் கண்டி ருக்கிறேன். நியாயமுள்ளவர்களாகத் தோன்ற அவர்கள் விரும்புவதினால், மற்றவர்களிலும் பார்க்க அவர்களை நாணச்செய்வதின் மூலஞ் சரியான காரியங்கள்ை இயற்றத் தூண்டுதல் இலகுவானதாகும்.
ஈற்றில், 1945இல் நடைபெற்ற பிரித்தானியப் பொதுத் தேர்தலின் பின்னர், யுத்தப் பின்தேதியில் ஏற்பட்ட முதலாவது தொழிற்கட்சி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கிய கிளமென்ற் அட்லி, மேற்கொண்டும் காலதாமதமின்றிச் சரியான கருமம் இயற்றப்படல் வேண்டுமெனத் தீர்மானித்தார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டில், எந்தச் சுதந்திரம் இந்தியாவுக்குத் தேவையானதென மகாத்மாகாந்தி பாடுபட்டாரோ, அஃது அதிகார மாற்றத்தின் மூலம் முழுமைபெறச் சத்தியாக் கிரகமும் நிறைவுற்றது. அஃது இவ்வளவு நீண்டகாலம் எடுத்ததா? இந்தியாவிலும் - பிரித்தானியாவிலுங்கூட - இவ்வாறு நினைத்த சிலர் இருந்தார்கள். இருப்பினும், உள்

Page 31
காந்தி தரிசனம் 58
நாட்டு ஆணை மறுப்பு இயக்கம், ஆரம்பத்திலிருந்தே, வன் முறையிலும், இரத்தக்களரியிலும் (மகாத்மா அவ்வாறு தேர்ந்தெடுத்திருந்தால், இத்தகைய இயக்கத்தை ஆரம்பித்தி ருக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமுங் கிடையாது நடத்தப் பட்டிருந்தால், வரப்போகும் எத்தனையோ தலைமுறை களுக்கு பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்குமிடையேயுள்ள தொடர்பு நஞ்சூட்டப்பட்டிருக்கும். விளைபயனின் முது சொம்மாக விரோதமும் கசப்புமே கிடைத்திருக்கும். மகாத்மா காந்தி சத்தியாக்கிரகத்தை வலியுறுத்தியதின் மூலமும், தமது இலட்சியத்தை அடைய அதுவே வழியென்று தீர்க்கமாக அவர் நம்பியதின் மூலமும் ஒப்பந்தத்திற்கு இரு சாராரும் முழுச்சம்மதம் தெரிவிக்க இந்தியாவின் சுதந்திரம் பெறப் பட்டது. வெற்றி - தோல்வி என்ற உணர்ச்சி எஞ்சாததினால், புதிய ஏற்பாட்டில் மகிழ்வுணர்வுகொண்ட பிரித்தானியா, இந்தப் பெரிய புதிய பங்காளியைப் பொதுநல நாடுகள் அமைப்பிற்கு வரவேற்பதை அவாவியது. இவ்வளவும், நமது நாட்டிற்கு எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக வந்து, நம்மை நன்றாக அறிந்துகொண்ட இந்தியத் தேசப் பிதாவினால் நிறைவேற்றப்பட்டது. இந்திய - பிரித்தானிய நேசஉறவின் பலத்த அத்திவாரத்தை உண்மையுடன் இட்ட அவருக்கு இந்நாட்டிலுள்ள நாங்கள் நன்றியறிதலுடன் கடமைப்பட்டுள்ளோம்.

தேலதாஸ் காந்தி
தேவதாஸ் காந்தி, காந்திஜியின் மகனாவர். ராஜாஜியின் மகளைக் கலப்புத் திருமணம் புரிந்தவர். “இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
மூந்திர இரவு
பாபுவுடன் ஒரு கண நேரந் தனிமையிலிருக்கும் அந்த அரிய அநுபவங்களுள் மிக அரிதான அநுபவமொன்று முதல் நாளிரவு எனக்கு ஏற்பட்டது. வழமைபோல 9.30 மணிக்கு அவரிடஞ் சென்றேன். அவர் படுக்கையிற் கிடந்தார். ஆனால், வார்தாவுக்கு முன்னதாகச் செல்லக்கூடிய ரயில் ஒன்று பிடிப்பது பற்றி, ஆசிரமத்தில் வசிப்பவர் ஒருவருக்கு அறிவூட்டு வதை அப்பொழுதுதான் முடித்திருந்தார். நான் உள்ளே அடியெடுத்து வைத்ததும், “என்ன புதினம்?” என என்னை உபசரித்தார். நான் புதினப் பத்திரிகையாளன் என்பதை எப்பொழுதும் அவர் இந்த வகையிலேதான் எனக்கு நினை வூட்டுவார். நான் நன்கு விளங்கிக்கொண்ட எச்சரிக்கை

Page 32
காந்தி தரிசனம் 6 O
யையும் அது சுமந்தது. என்னிடமிருந்து அவர் எதையும் மறைத்து வைக்கவில்லை என்றே கூறலாம். நான் கேட்ட வற்றின் எந்தச் சாரத்தையும் அவர் எப்பொழுதுமே தந்தார். ஆனால், பொதுவாக, மிக அத்தியாவசியமான தேவையை உத்தேசித்துத்தான் நான் கேட்கின்றேன்; அதுவும் புதினப் பத்திரிகைகளின் அர்த்தத்தில் புதினத்துடன் எத்தகைய தொடர்பும் இல்லாத நோக்கத்திலேயே கேட்கின்றேன் என்ற அநுமானங்களின் பேரிலேயே, நான் அறிய விரும்பிய விடயங் களை அவர் வெளிப்படுத்தினார்.
இவ்விடயங்களில் அவர் தம்மை நம்புவதைப் போலவே என்னையும் நம்பினார். அவரிடமும் கொடுக்கக்கூடிய எந்தப் புதினமும் என்னிடம் இல்லை. எனவே, "அரசென்னுங் கப்பல் எவ்வாறு பயணஞ் செய்கின்றது?” என நான் கேட்டேன். “இச் சிறிய வேறுபாடுகள் மறைந்துவிடும் என்பதில் நான் நிச்சயமாக இருக்கின்றேன்" என்றார்.
"ஆனால், வார்தாவிலிருந்து நான் திரும்பும் வரை யிலும் விடயங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். அதற்கு அதிக காலம் பிடிக்கமாட்டாது. அரசாங்கம் தேசபக்தர் களைக் கொண்டது. நாட்டின் நலன்களுடன் முரண்படும் எதனையும் எவருஞ் செய்யமாட்டார்கள். என்ன நேர்ந்த போதிலும் அவர்கள் ஒன்றுபட்டிருக்கவேண்டும்; அவ்வாறே செய்வார்கள் என்பதிலும் நான் நிச்சயமுள்ளவனாக இருக் கின்றேன். தாற்பரியங் குறித்த வேறுபாடுகள் எதுவும் இல்லை" எனத் தொடர்ந்து அவர் கூறினார்.
இந்தத் தடத்திலேயே மேற்கொண்டுஞ் சம்பாஷணை நிகழ்ந்தது. நான் தாமதித்திருந்தால், அந்த நேரத்திலும், வழக்க மான "கூட்டத்தை" நான் அழைத்தவனாகியிருப்பேன். எனவே, புறப்பட ஆயத்தமாகிக்கொண்டே, “பாபு இப்பொழுது நித்திரை கொள்ளப் போகின்றீர்களா?" எனக் கேட்டேன்.
"இல்லை; அவசரமெதுவும் இல்லை. நீ விரும்பினால் இன்னுஞ் சற்று நேரம் பேசலாம்" என்றார். சம்பாஷணையைத்
தொடரும் அநுமதியை அடுத்த தினம் புதுப்பிக்க இயலாது போய்விட்டது.

61 66ho. 6hurt.
சில தினங்களுக்கு முன்பு, இரவில் நான் விடைபெறும் பொழுது, உணவருந்த பியாரிலாலை என்கூடவே அழைத்துச் செல்வதாகக் கூறினேன். "ஆமாம்; அழைத்துச் செல். ஆனால், என்னை அழைப்பது பற்றி எப்பொழுதாவது நினைத்திருக் கின்றாயா?" எனக் கேட்ட அவர், எப்பொழுதும் போலவே மனம்விட்டுச் சிரித்தார்.
அவர் தில்லியிலே தங்கியிருந்த கடந்த சில மாதங் களாக பாபுவின் அன்புச் சீராட்டுதலைப் பெறுஞ் சலுகை என் மூன்று வயதுப் பையனுக்குக் கிடைத்தது. நாங்கள் பிர்லா மாளிகைக்குச் செல்லத் தவறியபொழுது, என்னிலும் பார்க்க கோபு வராமலிருந்ததைத் தாம் மிகவும் உணர்ந்ததாக, சமீபத்தில் ஒரு தடவை என்னிடங் கூறினார்.
தன் தாத்தா தனக்கு உபசரிப்புச் செய்யும் வகையை அபிநயித்துத் தன்னுடைய உதடுகளைப் பிதுக்கிக்காட்டி, இச்சிறு பயல் எங்களுடைய கண்களிலிருந்து இப்பொழுது புதிய கண்ணிரை வரவழைத்துக் கொண்டிருக்கின்றான்.

Page 33
ථició නගarඟී ජීර්ශvocré
மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அரபு, உர்து, பாரசீகம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். கவிஞர். ‘பிரிக்கப்படாத இந்தியாவில் முஸ்லிம்கள் சம அந்தஸ்துடன் வாழ்தல் வேண்டும்' என்ற கொள்கையாளர்.
Secoys CBgboðs
1948ஆம் ஆண்டு. ஜனவரித் திங்கள், பிற்பகல் இரண்டரை மணியளவில் நான் காந்திஜியிடம் சென்றேன். அவருடன் பேசவேண்டிய முக்கிய விடயங்கள் பல இருந்தன. ஒரு மணி நேரம் அங்கு தங்கினேன். அவரது யோசனையைக் கேட்கவேண்டிய மற்றும் முக்கிய விடயங்கள் இருப்பது ஐந்தரை மணியளவில் என் நினைவுக்கு வந்தது. பிர்லா மாளி கைக்குச் சென்றேன். வாயில் மூடப்பட்டிருந்தது. ஆயிரக் கணக்கில் மக்கள் புல்வெளியில் நின்றார்கள். தெருக்களிலும் மக்கள் கூட்டம் குழுமியிருந்தது. என்ன விடயம் என்பது எனக்கு விளங்கவில்லை. என் காரைக் கண்டதும் எல்லோரும் வழிவிட்டார்கள். வீட்டுக்குள் நடந்தேன். கதவுகள் பூட்டப்
 

63 Tdu). 6u.
பட்டிருந்தன. கண்ணாடி ஊடாக உள்ளேயிருந்து என்னைப் பார்த்த ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள்; பிரக்ஞையற்றுக் கிடக்கின்றார்” எனக் கண்ணிர் மல்க ஒருவர் கூறினார்.
இச்செய்தி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் இதனை எதிர்பார்க்கவேயில்லை. அச்சொற்களின் பொருளை என்னாற் புரிந்துகொள்ள முடியவில்லை. காந்திஜியின் அறைக்குச் சென்றேன். அறையினுள் அவர் படுக்கையிற் கிடந்தார். முகம் வெளிறிக்கிடந்தது. கண்கள் மூடிக்கிடந்தன. பேரப்பிள்ளைகள் இருவர், பாதங்களைப் பிடித்தவண்ணம் அழுதனர். என் செவிகளிலே "காந்திஜி காலமாகிவிட்டார்” என்பது கனவில் ஒலிப்பதைப் போலக் கேட்டது.
காந்திஜியின் கொலை, சகாப்தம் ஒன்றின் முடிவினைக் குறிக்கின்றது.
தற்கால இந்தியாவின் மகத்தான புதல்வருடைய உயிரைக் காப்பாற்றுவதில் நாம் எவ்வளவு அவலமாகத் தவறிவிட்டோம். கைக்குண்டு வீச்சின் நிகழ்ச்சிக்குப் பின்னர், தில்லிப் போலீசாரும் இரகசியப் போலீசாரும் அவருடைய பாதுகாப்பிற்காக விசேட ஏற்பாடுகளை இயற்றி இருப்பார் களென எதிர்பார்த்தல் இயல்பானதாகும். சாதாரண மனிதன் ஒருவனுடைய் உயிரைக் கவரச் சதி நடந்திருப்பினும் போலீசார் விசேட அக்கறை காண்பித்திருப்பார்கள். மிரட்டற் கடிதங்களோ, அன்றேல் வெளியீடுகளோ கிடைத்திருந்தாற் கூட இம்மாதிரிச் செய்வார்கள். காந்திஜி சம்பந்தமாகக் கடிதங்கள் - வெளியீடுகள் - பகிரங்க எச்சரிக்கைகள் வெளிவந்திருந்ததுடன், கைக்குண்டொன்றும் வீசப்பட்டி ருந்தது. மேலும், நமது சமகால இந்தியாவில் வாழ்ந்த மகத்தான புருடரின் உயிரைப் பற்றிய விடயம் இது. ஆனாலும் பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கை எவையுமே மேற்கொள்ளப்பட வில்லை. அவற்றைச் செய்வதில் சிரமமும் இருந்திருக்க முடியாது. பிரார்த்தனைக் கூட்டங்கள் திறந்த வெளியிலே நடைபெறவில்லை. பிர்லா மாளிகையின் முன்றலில் நடை பெற்றன. அது நாற்புறமும் மதில்களுள்ள இடமாகும். முன் வாயில் வழியாகத்தான் எவராலும் அங்கு வருதல் சாத்தியம்.

Page 34
காந்தி தரிசனம் 64
உட்புகும்பொழுதோ அன்றேல் வெளியேறும்பொழுதோ மக்களை அவதானித்துக் கொள்வதும் போலீசாருக்கு எளிதாக இருந்திருக்கும்.
கொலை நடைபெற்ற பின்னர், பார்த்துக் கொண்டி ருந்தவர்கள் கொடுத்த சாட்சியங்களிலிருந்து, கொலைகாரன் சந்தேகப்படும்படியான முறையிலேதான் உள்நுழைந்தான் என்பது தெளிவாகின்றது.
இவ்வகையில் அவனுடைய போக்கும் பேச்சும் இருந்திருந்தால், இரகசியப் போலீசார் அவனைத் தமது கண்காணிப்பில் வைத்திருத்தல் வேண்டும்; வைத்திருத்தலுஞ் சாத்தியம். போலீசார் ஏதாவது நடவடிக்கையை எடுத்திருப் பார்களேயானால், அவனை இனங்கண்டு ஆயுதத்தைப் பறித் திருக்கலாம். அவன் எவ்வித தடங்கல்களுமின்றிக் கைத்துப் பாக்கியுடன் வந்தான். காந்திஜி பிரார்த்தனைக் கூட்டத்தை அடைந்தவுடன், அவன் எழுந்து நின்று, "இன்று நீங்கள் தாமதித்து வந்திருக்கிறீர்கள்" எனக் காந்திஜியை நோக்கிக் கேட்டான். காந்திஜி, "ஆமாம்” எனப் பதிலளித்தார். அவருடைய வாயிலிருந்து இரண்டாஞ் சொல் வருவதற்கு முன்னர் மூன்று துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்பட்டன. உந்நத உயிரை அவை பலிகொண்டன.

ஜலஹர்லால் நேரு ஜவஹர்லால் நேரு, பாரதரத்தினம். காந்திஜியின் அரசியல் வாரிசு. சுதந்திர பாரதத்தின் முதலாவது பிரதமர். சிறந்த நூலாசிரியர்.
நித்திர சத்திரத்தின் நித்திரத்துவர்
நண்பர்களே, தோழர்களே! நமது வாழ்க்கையின் ஒளி அணைந்தது. எங்கும் இருளே சூழ்ந்திருக்கின்றது. உங்களுக்கு எதைக் கூறுவேன், எப்படி என்பதையும் முழுமை யாக அறியமாட்டேன். பாபு என நாம் அழைக்கும் நமது அன்புத்தலைவர், தேசப்பிதா இப்பொழுது இல்லை. நான் இவ்வாறு சொல்வது தவறாகவும் இருக்கலாம். இருப்பினும், இவ்வளவு ஆண்டுகளும் அவரைப் பார்த்து வந்ததுபோல, இனி நாம் பார்க்கமுடியாது. ஆலோசனைகளுக்காக நாம் அவரிடம் ஓடி, அவரிடமிருந்து தேறுதல் பெறமுடியாது. இப்பயங்கர இடி எனக்கு மட்டுமன்றி, இந்நாட்டிலுள்ள

Page 35
காந்தி தரிசனம் 66
கோடிக்கணக்கான மக்களுக்கு நேர்ந்திருக்கிறது. நானோ அன்றேல் யாருமோ தரக்கூடிய எந்த ஆலோசனையாலும் இந்த இடியின் தாக்கத்தை மென்மைப்படுத்திவிட முடியாது.
ஒளி அணைந்தது என்றேன் நான்; இருப்பினும், நான் தவறிழைத்தேன். ஏனெனில், இந்நாட்டிலே சுடர்வீசிய அவ் வொளி சாதாரண ஒளியல்ல. இந்த நாட்டினை அநேக அநேக ஆண்டுகளாக ஒளிர்விய அந்த ஒளி, மேலும் அநேக ஆண்டு களுக்கு இத்தேசத்தை ஒளிர்வி, ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், அந்த ஒளி இத்தேசத்திலே மேலுங் காட்சியளித்துக் கொண்டிருப்பதை உலகம் பார்க்கப் போகின்றது. எண்ணிக்கை யற்ற உள்ளங்களுக்கு அஃது ஆறுதல் தரப்போகின்றது. ஏனெனில், அவ்வொளி உடனடி நிகழ்காலத்திலும் பார்க்க எவ்வளவோ மேலான ஒன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அது நித்திய சத்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்தப் பண்டைய நாட்டைச் சுதந்திரத்திற்கு அழைத்துச் செல்வதில், தவறுகளிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்து, சரியான பாதையை நமக்கு ஞாபகமூட்ட இந்த நித்திய புருடர் தமது நித்திய சத்தியத்துடன் நம்முடன் இருந்தார்.
இவை எல்லாம் நடந்துவிட்டன. இயற்றப்பட வேண் டியன நிறைய உள. அவர் செய்வதற்கும் நிரம்பிய பணிகள் இருந்தன. அவர் தமது பணியை நிறைவேற்றி விட்டா ரென்றோ, அவர் அவசியமற்றவரென்றோ எப்பொழுதும் நான் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் குறிப்பாக இப்பொழுது எத்தனையோ வில்லங்கங்கள் நம்மை நோக்கி யிருக்கும்பொழுது, அவர் நம்முடன் இல்லை என்ற பயங்கர அடியை நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாது.
அவர் போய்விட்டார். நிர்க்கதியாகவும் அநாதை யாகவும் விடப்பட்டுள்ளதான ஒர் உணர்ச்சி இந்தியா அடங் கலும் பரவியுள்ளது. இந்த உணர்ச்சியை எல்லோராலும் அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்வுணர்ச்சியிலிருந்து எப்பொழுது விடுபடுவோம் என்பதையும் என்னாற் கூற முடியாது. ஆனால், அவ்வுணர்ச்சிகளுடன், இந்த மகத்தான புருடருடன் இணைந்து பணியாற்றிய இந்தத் தலைமுறையைச்

67 6T6iv. 6 LunT.
சேர்ந்த நமக்கு பீடுமிக்க நன்றியறிதலைச் செலுத்தவேண்டிய கடமையின் உணர்ச்சியும் இருக்கின்றது. எதிர்வரும் காலங் களில், நமக்குப் பின்னர் நூறாண்டுகளோ அன்றேல் ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்னர், கடவுளான இந்த புருடர் மண்ணில் நடமாடியபொழுது, அவருடைய பாதையைப் பின்தொடர்ந்து, அவருடைய பாதங்கள்பட்ட அதே புனித பூமியில் நடமாட முடிந்த நம்மைப்பற்றி - நாம் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலுங்கூட - இந்தச் சந்ததியினரைப் பற்றி - மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். அவருக்குத் தகுதியானவர்களாக வாழ்வோம். எப்பொழுதும் அவ்வாறே இருப்போம்.

Page 36
சரோதினிநாயுடு சரோஜினி நாயுடு சிறந்த கவிஞர். 'கவிக்குயில்’ என அழைக்கப்பட்டவர். மகாத்மாவுடன் நெருங்கி உழைத்தவர். கவர்னராக நியமனம் பெற்ற முதலாவது பெண்மணியாவர்.
agp6.P.
இந்த எளிய மனிதனால், இந்தச் சிறிய மனிதனால், குழந்தையின் உடலமைப்புக்கொண்ட இந்த மனிதனால், ஏழைகளுடைய வாழ்க்கையுடன் ஒத்திசையாக இருக்க வேண்டுமென்பதற்காகத் தாமே தேர்ந்தெடுத்த முறைமையாற் பட்டினியின் விளிம்பிலே வாழ்ந்துகொண்டிருந்த துறவியான இந்த மனிதனால், தம்மை மதித்தோர் மத்தியிலும், தம்மை வெறுத்தோர் மத்தியிலும், சக்கரவர்த்திகள்கூட என்றுஞ் செலுத்தியே அறியாத மேலான அதிகாரத்தை உலகம் முழு வதின்மீதும் ஏன், எவ்வாறு செலுத்த முடிந்தது?
ஏனெனில், அவர் பாராட்டுரையை விரும்பியதில்லை; கண்டனத்தைப் பாராட்டியதில்லை. அவர் உண்மையின் பாராட்டுரையை மட்டுமே மதித்தார். தாம் போதித்த - பயின்ற கருத்துவங்களை மட்டுமே மதித்தார். மனிதனுடைய
 

69 676vo. 6 UT.
பேராசையும் வன்முறைச்செயல்களும் ஏற்படுத்திய மிகக் கோரமான இடர்களின் மத்தியிலும், சமர்க்களங்களிலே உள்ள ஒடிந்த சருகுகளைப்போல, உலர்ந்த மலர்களைப்போல உலகின் நிந்தனை குவிக்கப்பட்டிருந்தபோதிலும், அகிம்சை என்னும் கருத்துவத்தில் அவர் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். முழு உலகமே தன்னைக் கொன்று குவித் தாலும், முழு உலகத்தின் உதிரஞ் சிந்தப்பட்டாலும், உலகின் புதிய நாகரிகமொன்றிற்குத் தமது அகிம்சைக் கோட்பாடு நிச்சயமான அடித்தளமாக அமையுமென அவர் நம்பினார். எவனொருவன் வாழ்க்கையைத் தேடுகின்றானோ, அவன் அதை இழக்கின்றான்; எவன் தன் வாழ்க்கையை இழக்கின் றானோ அவன் அதைக் கண்டெடுப்பான் என்பதையும் அவர் நம்பினார்.
நாம் மாரடித்து ஒப்புச் சொல்வதற்கும், மயிரைப் பிய்த்துப் புலம்புவதற்கும் நேரம் போய்விட்டது. எழுந்து நின்று, மகாத்மா காந்தியை அவமதித்தவர்களுக்கு, "நாங்கள் அறைகூவலை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறும் நேரம் இப்பொழுது இங்கே வந்துற்றது. அவருடைய வாழுஞ் சின் னங்கள் நாம். அவருடைய படைவீரர்கள் நாம். போருக் கணிவகுத்துள்ள உலகத்திற்கு முன்னால் துவஜம் தாங்குப வர்கள் நாம், சத்தியமே நமது துவஜம். அகிம்சையே நமது கேடயம். இரத்தமின்றி வெல்லவல்ல ஆன்மீக வாளே நமது வாள். இந்திய மக்கள் எழுந்து நின்று தமது கண்ணிரைத் துடைக்கட்டும். தமது அழுகுரலை அடக்கட்டும். நல்லெண் ணமும் களிப்பும் நிரம்பட்டும். அவரிடமிருந்து கடன் பெறு வோம். ஏன் கடன்பெறவேண்டும்? தமது ஆளுமையின் ஒளி யையும், தமது சுய துணிவின் மகிமையையும், தமது குண இயல்பின் இதிகாசப் பெருமையையும் நமக்குக் கையளித் துள்ளார். நமது எஜமானரின் அடிச்சுவட்டினை நாம் பின் பற்ற மாட்டோமா? நமது பிதாவின் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியமாட்டோமா? மகாத்மாவின் நிறைவுபெற்ற நற் செய்தியை நாம் உலகிற்குக் கொடுக்கமாட்டோமா? அவரு டைய குரல் மீண்டும் பேசமாட்டாதென்றாலும், உலகத் திற்கும் நமது தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல், உலகின்

Page 37
காந்தி தரிசனம் V 7 O
எதிர்காலச் சந்ததி சந்ததியாக அவருடைய நற்செய்தியைத் தாங்கிச் செல்ல நம் மத்தியில் கோடி கோடி குரல்களில் லையா? அவருடைய தியாகம் பயனற்றுப் போவதா? பயனற்ற சோகப் புலம்பலுக்காக அவருடைய உதிரஞ்சிந்தப்படலாமா? அன்றேல், உலகை உய்விப்பதற்காக, சமாதானப் போராளி களைக் கொண்ட அவருடைய படையின் சின்னமாக, அவருடைய உதிரத்தை நமது நெற்றிகளில் நாம் திலகமாக இட்டுக்கொள்ள மாட்டோமா? இங்கு இப்பொழுதே, இங்கு இப்பொழுதே, மரணிக்கமுடியாத மகாத்மாவின் சேவையிற் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக என்னைப் பிணைத்துக் கொண்டதுபோல, என்னையும் உங்களையும் பிணைத்துள் ளோம் என்பதை என் நடுங்கும் குரலைக் கேட்கும் உலகத் திற்கு முன்பாக நான் உறுதி செய்கின்றேன்.
என் எஜமானரின், என் தலைவரின், என் பிதாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டாம்; சாந்தியடைய வேண்டாம். ஆனால், எரிந்து சாம்பலாகிய சந்தனக் கட்டை விட்டுள்ள அவருடைய எலும்புகளின் பொடி, அவருடைய அஸ்தி, சுறுசுறுப்புடன் உயிர்ப்புப் பெற்று, அவருடைய மரணத்தின் பின்னுள்ள இந்தியா முழுவதும் சுதந்திரத்தின் நிதர்சனத்தை மீளுயிர்ப்புக் கொள்ளச் செய்யும் உயிராகவும் அருட்டுணர் வாகவும் விளங்கட்டும்.
என் பிதாவே, ஒய்வு பெறவேண்டாம். நாம் ஒய்வு பெறுவதற்கு அனுமதிக்கவேண்டாம். நமது உறுதிமொழியில் நம்மை வைத்திரும். நமது உறுதிமொழியை நிறைவேற்ற எங்களுக்கு, உமது வாரிசுகளுக்கு, உமது பரம்பரையினருக்கு, உமது காரியஸ்தர்களுக்கு, உமது கனவுகளின் பாதுகாவலர் களுக்கு, இந்தியாவின் தலைவிதியை நிறைவேற்ற வேண்டிய வர்களுக்குத் தேவையான பலத்தினைத் தாரும்.

ജേd ബ്. ബാകന്ദ്രങ്ങര 8്
சஃருல்லாகான் சட்டமேதை. பாகிஸ்தானிய தேசியத்தின் அடிப்படைக்கு உதவிய லாகூர் தீர்மானத்தின் சிற்பி. ஐக்கிய நாடுகளின் காஷ்மீர் தீர்மானத்தினை உருவாக்கியவர். சர்வதேச நீதிமன்றத்தின் தலைவரான முதல் ஆசியர்.
உடிைசதி வளைவின் மூலக்கல்
காந்தி கோடிக்கணக்கான மக்களினால் நேசிக்கப் பட்டார். அவர் நாமத்தைக் கேட்கும் எல்லோருமே அவரை ஆழமாகப் பூஜித்தார்கள். தமது வாழ்நாளில் அவர் எதிர் நோக்கிய ஆபத்தான நெருக்கடிகள் ஒவ்வொன்றிலும் தெளிந்த புத்தியினூடாக வெற்றிகரமாக வழிநடத்தக் கூடிய அவருடைய அபூர்வத்திறமை அவர் மிக மகத்தானவர் என்கிற உரிமைகோரலுக்கான குணங்களுள் ஒன்றாக அமைந்தது. அநேக நெருக்கடிகளுக்குள் உள்ளாகியிருக்கும் தற்சமயச் சூழலிலே, அவரே அந்த அமைதி வளைவின் மூலக்கல்லாய்த் திகழ்ந்தார் என்கிற உணர்வு கசப்பையும் சோகத்தையும் மிக அதிகரிக்கச் செய்கின்றது.
அந்த மூலக்கல் மிருகத்தனமான ஒரு கொடியவனாலே அகற்றப்பட்டுள்ளது. இது ஏற்படுத்தக்கூடிய அழிவுகளை மதிப்பீடு செய்வது கடினமாகவுள்ளது.

Page 38
ட்ாக்டர் பிரதாப் சந்திர சந்தர் வங்கம் தந்த அரசியல்வாதி, கல்விமான். மத்தியில் கல்வி அமைச்சராய்ப் பணியாற்றியவர். சரித்திர நாவல்கள், நாடகங்கள் பலவற்றின் ஆசிரியர்,
மூரண்பாஆகள் டிசத்திசில் காந்தி
தம்முடைய சொந்த அபிப்பிராயங்களிலே உள்ள முரண்பாடுகளையும் ஸ்திரமின்மையையும் காந்திஜியே எவ்வாறு நோக்கினார் என்பதை இப்பொழுது ויו"ח חו_ו போம். மிகப் புனிதமானவை என்று அவர் பிடிவாதமாகக் கொண்டிருந்த தமது கருத்துக்களிலே, மற்றவர்களுக்கு அவர் விதிவிலக்களித்தார். இது விதி, இவை விதிவிலக்குகள், விதிவிலக்குகளே விதியை நிரூபணஞ் செய்கின்றன’ என அவர் சொல்வது போன்றிருக்கும்.
எதனால் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உருவங்களிலே உண்மை அவருக்குத் தோற்றமளித்தது? வாழ்க் கையின் சிக்கல்கள் வாய்ந்த தன்மையையே அத்தகைய வேறுபாடுகளுக்கு அவர் காரணமாகக் காட்டுகிறார். “வாழ்க்கை
 

ア3 எஸ். பொ,
அநேக சக்திகளினால் ஆளப்படுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தின் வெளிப்படையான தேவையிலே, ஒரு பொதுவிதியின் பயிற்சி யிலே எந்த வகையான செயற்பாடு சரியெனத் தீர்மானிக்க முடியுமேயானால் அனைத்துமே நேர்சீராக நடைபெறும். ஆனால், அவ்வாறு சுலபமாக முடிவு செய்யக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.” என்று காந்திஜியே ஒரு சந்தர்ப்பத்தில் σε μίδιουτπή.
“முழு உண்மையையும் ஒரு மனிதனால் அறிதல் சாலாது. பார்ப்பதற்கு ஒர் உண்மையென ஏற்றுக்கொள்ளத் தக்கதாக வாழுதல் ஒருவனுடைய கடமை. செய்யும் பொழுது, தூய வழியை, அதாவது அகிம்ஸையைக் கடைப்பிடித்தல் அவசியம்."
இருப்பினும் அகிம்ஸையும், அவரைப் பொறுத்த வரையில், வேறுபட்ட உள்ளடக்கம் கொண்டதாக இருந்தது. “கொள்கையில் ஒரே சீராக இருத்தலை நான் ஒரு துஷ்ட தேவதையாக்க மாட்டேன். கணத்திற்குக்கணம் நான் எனக்கு உண்மையுள்ளவனாக வாழ்ந்தால், நான் நிரந்தரத் தன்மை இல்லாதவன் என்று என் முகத்தின்மீது வீசப்படும் குற்றச்சாட்டைப் பற்றி நான் கவலைப்படமாட்டேன்." என்று காந்திஜியே ஒப்புக்கொண்டார்.
காந்திஜியின் சிந்தனைகள் இத்தகைய மனோநிலையில் அமைந்தமையினால், அவருடைய சரியான கருத்துக்களை முறைப்படுத்துதலோ விளக்கப்படுத்துவதோ காந்தியப் படிப்பாளி ஒருவனுக்குக் கஷ்டமாகிவிடுகின்றது. அநேக சந்தர்ப்பங்களிலே தமது போஷகரை விளங்கிக்கொள்ள முடியாதவராக இருந்தமையை ஜவஹர்லால் நேரு உணர்ந்தார்.
“மக்களுடைய இதயங்களை அவர் அதிசயிக்கத்தக்க வகையிலே சென்றடைந்தார். ஆனாலும் காந்திஜியைப் பொறுத்தவரையில், அவரை விளங்கிக்கொள்வதற்கு மிகக் கடினமாக மனிதராகவே விளங்கினார். சாதாரணமான தற்கால மனிதனுக்கு, சில சமயங்களிலே, அவருடைய மொழி விளங்கக்கூடியதாக அமையவில்லை. இருந்த

Page 39
காந்தி தரிசனம் 74
போதிலும், அவர் தனித்தன்மை வாய்ந்த, மிக்க சிறந்த உந்நதமான தலைவர் என்பதை உணர்ந்து கொள்வதற்கு அவரைப் பற்றி நாம் போதுமானவற்றை அறிந்திருந்தோம் என்பதை நாம் எல்லோருமே உணர்ந்திருந்தோம். இதனால் அவர்மீது முழு நம்பிக்கை வைத்து, அவரிடம் தொகை எழுதப்படாத ‘வெற்று’க் காசோலையை அளித்தோம்.” என காந்திஜி பற்றி ஜவஹர்லால் நேரு கூறினார்.
ஆனால், ஏன் காந்திஜியிடம் ஜவஹர்லால் பூரண சரணாகதி அடைந்தார்? அறிவுக்கொவ்வாத வகையிலே தமது கொள்கைகளிலே காந்திஜி முரட்டு பக்தி காட்டிய தில்லை. நடமுறைக்குச் சாத்தியமான நெகிழ்ச்சியை அவர் எப்பொழுதும் கையாண்டார். சூழ்நிலைகளின் தேவையை அநுசரித்து, நேரத்தின் தேவைக்கேற்பத் தமது கொள்கைகளை அவர் திருத்தி அமைப்பதற்குத் தயாராகவே இருந்தார். எனவே, உயர்ந்த இலட்சியங்கள் உடையவராகவும், அநுபவமுள்ள செயல்வீரராகவும் ஏக காலத்தில் அவராலே செயற்பட முடிந்தது. தத்துவவாதியாக மட்டுமல்லாமல், அவர் செயல்வீரராகவும் விளங்கினார்.
+ டாக்டர் பிரதாப் சந்தரின் புகைப்படம் ஒன்றினைப் பெறமுடியவில்லை. 2008 இல் காலமான அவர் பற்றிய தகவல் களையும் அறிய முடியவில்லை. அவர் எழுதிய இரண்டு நூல்களின் அட்டைப்படங்கள் அவர் உருவம் படத்திற்குப் பதிலாக இங்கே இடம் பெறுகின்றன.

. β. σαεβΦαραοαταoσε στά
ராஜகோபாலாச்சாரி பாரதரத்தினம். இந்தியாவின் கடைசிக் கவர்னர் ஜெனறல். ‘ராஜாஜி' என்கிற சுருக்கத்தில் தமிழ் எழுத்தாளராகவும் போற்றப்பட்டார்.
இதடிசத்திலேசபலாத்காரல்
மகாத்மாஜியுடன் எவ்வளவோ அந்நியோன்ய உறவுள்ளவனாக இருந்தும், அவரைப்பற்றி எழுதப்புகும் போது, நான் எதுவுமறியாதவனாகிவிடுவது ஒரு புதிராகவே இருக்கின்றது. உதாசீனக்குணம் என்னை ஆட்கொண்டு விடுகின்றது. மதச்சார்பற்ற அபிமானிகள், பலாத்கார வழிக்குப் பதிலாக, சத்தியத்தினாலும் அன்பினாலும் வேற்றுமைகளுக் கான தீர்வுகாணும் முறையை உலகினுக்குக் காட்டியமைக் காக அவர்மீது பாராட்டுரைகள் கூறியுள்ளார்கள். அவர்கள் அநேகமாக அதனை ஓர் "உத்தி" என்றே அழைக்கிறார்கள். மதச்சார்பற்றவர்கள் மகாத்மாவை விளங்கிக்கொண்ட முறையின் மறைவான தாக்கக் கெள்ள்கை அவ்வுத்தியை

Page 40
காந்தி தரிசனம் 76
பலமற்றதாக்கி விடுகின்றது. சத்தியம் - அன்பு ஆகியவற்றிற்குப் பின்னால், நாம் இன்னும் ஆழமாகச் சுழியோடி, காந்திஜியின் தீர்வுகளைப் பயனுள்ள நிசர்சனமாக்க வல்லது எது என்ப தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று எனக்குத் தோன்று கின்றது.
தவறுக்கெதிரான போராட்டத்தில், அகிம்ஸையில் வேரூன்றிய ஒரு புதிய “உத்தி"யை உருவாக்கியவரெனக் காந்திஜியை வெளிநாட்டுத் தலைவர்கள் புகழ்ந்துள்ளார்கள். காந்திஜி போதித்தது ஒர் "உத்தி” என்ற எண்ணமே தவறுக்கும், அதனால் ஏமாற்றத்திற்கும் வழி சமைத்தது. அன்பையும் சத்தியத்தையும் தீமைக்கெதிராக மோத வைத்தலே மகாத்மா கரந்தியின் “உத்தி” என்பதில் ஐயமில்லை. ஆனால், அன்பும் சத்தியமும் சந்தையிற் கிடைப்பனவல்ல. துப்பாக்கிகளையும் சுழல்துப்பாக்கிகளையும் வாங்குவதைப்போல அவற்றைப் பெறமுடியாது. கடவுளிலுள்ள விசுவாசத்திலிருந்தே அவை பிறக்கும்.
மிருகங்களின் சக்தியைப் பயன்படுத்துவதிலிருந்து விடு பட்டு நீராவிச் சக்தியைப் பயன்படுத்தினோம்; நீராவியி லிருந்து நெய் எரிபொருளுக்கு மாறினோம்; எண்ணெயையும் விட்டு மின்சக்திக்கு வந்துவிட்டோம். சக்தியின் இந்தப் பல்வேறு மாறுபாடுகள் முழுவதும் மகாத்மாகாந்தியின் "உத்தி”யை விளங்கிக் கொள்வதற்கான அடிப்படையைத் தரமாட்டாது. ஆத்ம விசை எனக் காந்திஜி அழைக்க ஆசைப் பட்ட அறநெறிச் சக்தி நம்பிக்கையிலும் உண்மையான மத ஈடுபாட்டிலுமிருந்து பெறப்படுவதாகும்.
காந்தி தமது மரணம் வரை, எக்காலத்திலும், இவ்வழிநின்று சக்தியைப் பெறுவதில் அழுத்தமாக நின்றார். வசதிக்காகவோ அன்றேல் இரத்தக்களரியைத் தடுப்பதற் காகவோ, காந்தி போதனையைக் கடுமையாகப் பின்பற்றுவோர் பயின்ற அகிம்ஸை என்பதெல்லாம் இம்சையின் மாற்றுத் தோற்றங்களே. லத்தியையோ, கத்தியையோ, துப்பாக்கியையோ துணையாகக் கொள்ளாதிருப்பது மட்டுமல்ல அகிம்ஸை, அகிம்ஸை என்பதின் நேரிய அம்சம் உணரப்பட வேண்டிய ஒன்றாகும்; அது கடவுளின் ஆதிபத்திய நிதர்சனத்தில்

ァ7 எஸ். பொ.
உறுதியான நம்பிக்கை வைத்தலாகும். இஃதில்லாதவிடத்தில் அகிம்ஸை தோற்றுவிடும். ஆயுதங்களின் உபயோகத்தை மறுத்தல் என்பது காந்திஜி காட்டிய அகிம்ஸை வழிகோரும் நிபந்தனை என்பது பொதுவாக அறியப்பட்ட ஒன்றாகும். ஆனால், காந்திஜி சங்கற்பித்த அகிம்ஸை, பகைமை உணர்வையும் எரியும் ஆலகாலத்தையும் நெஞ்சிலே வைத்துக் கொண்டு உடல் பலாத்காரத்தை மட்டும் மறுத்தல் என்பது பொதுவாக உணரப்படவில்லை.
எதிரியின் பகையை - பொய்மை - பலாத்காரம் ஆகியவற்றிற்குத் தகுந்த வல்லமை பொருந்திய பதில் அன் பையும் சத்தியத்தையும் ஆயுதங்களாகக் கைக்கொள்ளல் வேண்டுமெனக் கூறுதல் எளிதானதாகும். உலகின் வகுப்பு வாத - பொருளாதார - அரசியல் முரண்பாடுகளை அன்பும் சத்தியமும் ஆகிய சக்திகள் தீர்க்கும்; அவையே தீர்வுக்கான ஒரேயொரு வழி எனவுங் கூறுதல் எளிதாகும். ஆனால், செயல்முறையில் திண்டாட்டமாகவே இருக்கும். வெறுப்பின் நிமித்தம் எனக்குத் தோன்ற அநேகம் செய்த ஒருவனிடத்தில் அன்பினை எவ்வாறு வரவழைப்பேன்? வெள்ளையன் ஒருவனை நீக்கிரோவால் எவ்வாறு நேசிக்க முடியும்? பாகிஸ்தானியத் தேசபக்தனால் எவ்வாறு இந்தியர் களை நேசிக்கமுடியும்? இந்தியத் தேசபக்தர்கள் எவ்வாறு பாகிஸ்தானியர்களை நேசிப்பார்கள்? அன்புக்கு எதிரான உணர்ச்சி ஏற்படக்கூடிய நல்ல நியாயமுள்ள ஓரிடத்தில் எவ்வாறு அன்பு ஊற்றெடுக்கும்? காந்திஜியின் வழியை வறட்டுச் சித்தாந்தமாகவோ ஏமாற்றந்தரும் உத்தியாகவோ மாறாமலிருப்பதை நாம் விரும்பினால், கடவுளிடத்திலுள்ள உறுதியான நம்பிக்கையிலும், மக்களுடைய உள்ளங்களுக்கு மேலாகவுள்ள கடவுளுடைய ஆதிபத்தியத்திலும் அஃது ஊற்றெடுத்தல் வேண்டும்.
எல்லோரது உள்ளங்களிலும் ஆண்டவன் இருக்கிறான் என்ற இரகசியமே சத்தியாக்கிரகத்தின் இரகசியமாக அமைந்தது. அது புதிய உத்தியொன்றின் பிரயோகமல்ல; ஆனால், பண்டைய ஆன்மீகப்போதனையை விளங்கிக் கொண்டமையம் அகன் சக்கியக்கிலமள்ள உாகியான

Page 41
காந்தி தரிசனம் ア8
நம்பிக்கையுமாம். ஐமிச்சப்படுவோருக்குச் சத்தியாக்கிரகம் உதவாது.
விஞ்ஞானம் என்று அழைக்கப்படும், உலகின் தோற்றப்பாடுகளிலும், உலகிற் காணப்படுவனவற்றை நுணுக்கமாகத் தரம் பிரித்தலிலும் ஈடுபடும் விஞ்ஞானத்திலே திருப்தி கொள்பவர்களுக்கு அஃது உதவாது அழகான ஊற்றுப் பேனா ஒன்று இருக்கலாம். ஆனால், அதில் மசி இல்லா விட்டாலோ அன்றேல் அதற்குள் நீரை மட்டுமே நிரப்பி னாலோ அது எழுதமாட்டாது. காந்திஜியின் பிறந்ததின நூற்றாண்டு கொண்டாடும் வேளையில், பழைய தொந்தர வுள்ள வழி ஒன்றினை இடம் பெயர்ப்பதற்காக மலிவான ஆயுதம் ஒன்றினைப் புதிதாக நிருமித்தவர் மட்டுமே என அவரை நோக்காமல், அவரது சத்திய போதனைகளையும், அவர் செயலின் உண்மையான பாடங்களையுந் தியானித்து உய்த்துணர்வோமாக காந்திஜி புதியன கண்டுபிடித்தவரல்லர். அவர் கடவுளின் மனிதர். எனவேதான் அவர் மகாத்மாவென அழைக்கப்பட்டார்.

ராசேந்திர பிரசாத்
ராசேந்திர பிரசாத்; பாரதரத்தினம். இந்தியாவின் முதலாவது ஜனாதிபதியாகப் பன்னிரண்டு ஆண்டுகள் பதவி வகித்தவர்.
LD5IöLDI காந்தி ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த நீண்ட காலத்திற்கிடையில், அவர் தொட்டுப் பார்க்காத வாழ்க்கையின் எந்தத் துறையும் இல்லையென்றே சொல்லலாம். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து பணி யாற்றும் சந்தர்ப்பம் பெற்ற நம் போன்றவர்கள் பாக்கிய சாலிகளே. மக்களுடன் உரையாற்றி, தமது கைகளாற் செய லாற்றி, இந்நாட்டிலே அவர் நடமாடித் திரிந்ததைப் பார்த்த கோடிக்கணக்கான எங்களைப்பற்றி, இனிப் பிறக்கப்போகும் சந்ததியினர் ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் நினைத்துப் பார்க்க விழைவார்கள்.

Page 42
காந்தி தரிசனம் 8 O
பல சம்பவங்கள் நிறைந்த அவர் வாழ்க்கையின் போக்கிலே, அரசியல் தலைவர் என்ற முறையில் அவர் ஒப்புயர்வற்ற கீர்த்தியைப் பெற்றார். ஆனால், அவரை ஓர் அரசியல் தலைவர் என நினைப்போமானால், அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் நோக்குபவர்களா வோம். சத்தியம் - அகிம்ஸை ஆகிய ஒப்பற்ற ஆயுதங்களைக் கைக்கொண்டு அவர் தேச சுதந்திரத்திற்காகப் போராடி னார் என்ற காரணத்தினால், அவருடைய அரசியல் வாழ்க்கை முக்கியத்துவம் பெறலாயிற்று. அவருக்கு முன்னர் வாழ்ந்த வர்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை, அதற்காகப் பணியாற்றவில்லை என்பதல்ல. உண் மையில், அநேகர் இப்பணிக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். நமக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த அகிம்ஸை - சத்தியாக்கிரகம் ஆகிய ஆயுதங்களை அளித்த வகையிலேதான் காந்திஜியின் தனித்துவப் பங்களிப்பு அமைந் துள்ளது. அரசியல் நோக்கத்திற்காக மட்டுமன்றி, இவை இரண்டினையும் அவர் தமது வாழ்க்கையின் மூலக்கோட் பாடாகக் கொண்டு, தம்முடைய பரிசீலனையின்கீழ் வந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவற்றைப் பிரயோகித்தார். தாம் ஒரு தத்துவத்தையோ அன்றேல் தத்துவ முறையையோ விருத்தி செய்துவிட்டதாக அவர் என்றும் உரிமை பாராட் டியது கிடையாது.
அவரைப் பொறுத்தவரையில் மிகச்சிறிய விடயமும், மூலக்கோட்பாட்டின் பிரச்சினையை அது தொடுமாயின் அது முக்கியமானதாக மாறிவிடும். தமது மூலக் கோட்பாடு களைப் பிரயோகிப்பதில் அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபடியால், மனிதனுடைய வாழ்க்கையில் பிரயோகிக்கக் கூடிய பிரதிக்ஞைத் தொடர் முழுவதையும் விருத்தியாக்கித் தந்தார். சுயராஜ்யம் போன்ற பெரிய விவகாரத்தைப் போன்றே குரங்கினைச் சுட்ட அல்லது பசுக்கன்றைக் கொன்ற ஒரு சிறு நிகழ்ச்சிகூட அவருடைய கவனத்தை ஈர்த்துவிடும். அவர் மூலக்கோட்பாடுகள் பற்றி மிகக் கவனமாக இருந்த புடியாலும், அவற்றைப் பிரயோகிப்பதில் ஆசார நுட்பத் துடன் இருந்தபடியாலும், அவர் விடயங்கள்மீது பரிக்கிரகண

8 எஸ். பொ.
நோக்குச் செலுத்தவில்லை என நினைத்தல் தவறானதாகும். ஒரு நாடு எப்படி இருத்தல் வேண்டும் என்பது பற்றி சம்பூரண படம் ஒன்றினை அவர் வைத்திருந்தார்.
அவர் நிறுவ அவாவிய சமுதாய வகையின் அடித் தளம் சத்தியமும் அகிம்ஸையுமாம். பல்வேறு மதங்களும், மொழிகளும், பழக்கவழக்கங்களும், மரபுகளுங்கொண்ட இந்தியாவிலே தமது மூலக்கோட்பாடுகள் பிரயோகிக்கப் படுவதைக் காணக் குறிப்பாக அவர் விரும்பினார்.
வேறுபட்ட மதங்களைச் சார்ந்த மக்கள், மற்றவர்கள் ஒவ்வொருவரும் தமது மதத்தையே ஏற்றுக்கொள்ளல் வேண்டு மென எதிர்பார்த்தால், சச்சரவுக்கு முடிவே ஏற்படாது என அவர் உணர்ந்திருந்தார். அவ்வாறே பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் தங்களுக்கிடையிற் சண்டையிட்டுக் கொண் டால் நாட்டிலே ஒற்றுமையும் சமாதானமும் நிலவமாட் டாது எனக் கூறினார். எனவே, தானும் வாழ்ந்து மற்றவர் களையும் வாழவிடும் மூலக்கோட்பாட்டினைக் கொண்ட அகிம்ஸையை அவர் வலியுறுத்தினார்.
சத்தியம் என்ற அடித்தளத்திற் கட்டி எழுப்பினா லொழிய அகிம்ஸையை நாம் வசப்படுத்தமுடியாது. காந்திஜி நாள்தோறும் கூறும் பிரார்த்தனையில் பதினொரு பிரதிக்ஞை களைப் பற்றிக் குறிப்பிடும் சுலோகம் ஒன்றைக் கூறுவார். காலையும் மாலையும் இந்தப் பிரதிக்ஞைகளைத் திரும்பத் திரும்பக் கூறினார். இந்தப் பிரதிக்ஞைகளை அடித்தளமாகக் கொண்டே அகிம்ஸா மாளிகை கட்டி எழுப்பப்படலாம்.

Page 43
carěbcldř எஸ்.ராதாகிருஷ்ணன் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், பாரதரத்தினம். உலகப் புகழ்
பெற்ற தத்துவஞானி. ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தவர். இந்தியாவின் தூதர்; ஜனாதிபதி.
படைத் தலைவர்களாலோ, தொழிலதிபர்களாலோ, s மதகுருமாராலோ, அரசியல்வாதிகளாலோ அல்லாமல், ஒரு நாட்டு மக்கள், அவர்களுடைய தணியாத சம்பூரணமுள்ள புண்ணியாத்மாக்களினாலேதான் மீட்கப்படுகிறார்கள். நமது இயல்பிலுள்ள அபசுரத்திலிருந்து விடுபடுவதற்கும், நமது ஆளுமையை முழுதாக்குவதற்குமான ஒழுக்கமுறையே மத மாகும். மூலாதாரமாக காந்தி ஒரு சமயவாதி. ஆன்மீகப் பயிற்சிகள், உண்ணாவிரதங்கள், பிரார்த்தனைகள் ஆகிய வற்றின் பயிற்சி மூலம், அச்சமற்ற - பேராசையற்ற - பகைமையற்ற புதுவகை மனிதனை உருவாக்குவதை அவர் இலக்காகக் கொண்டார். அந்த மனிதன் இன்னமும் பரிண மித்துக் கொண்டிருக்கின்றான்.
 

83 எஸ். பொ.
மெளனமோ கவிதையோ மிகப் பொருத்தமான உத்தர மாகத் தோன்றமுடியும் என்ற பரமனின் சொரூபங் கூறும் பணியில், சமயவளர்ச்சியின் வரலாற்றைச் சிந்தித்துப் பார்த்தால், செலவு செய்யப்பட்ட அறிவுசார்ந்த நிபுணத்துவம், ஆவேசம், உற்சாகபக்தி ஆகியவற்றின் தொகை நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும். சுயநேர்மை மதாவேசத்தை வளர்க்கும். ஏனையோரைப் பார்க்கிலும், மூடர்களும் மதாவேசத்தர் களும் கடவுளைப் பற்றிய தமது அபிப்பிராயத்திலே மிகவும் நிச்சயமாக இருக்கிறார்கள், மதப்போரில் ஈடுபட்டிருப்ப வர்களிடம் நியாயவாதம் செல்லுபடியாக மாட்டாது.
கடவுளுக்கு முன்னர் பண்பட்டவனுமில்லை காட்டு மிராண்டியுமில்லை; செல்வந்தருமில்லை ஏழையுமில்லை; ஆண்டானுமில்லை அடிமையுமில்லை. அவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள்; ஒரே பொதுநல அமைப்பின் குடிமக்கள். காந்திக்குச் சமயமென்பது பரமோத் தமத்துடன் நேரில் எதிர்ப்படுதலாகும். இந்த உள்ளுணர்வை உய்த்துணர அவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அரும் பாடுபட்டார். இந்து சமயத்தவராக இருந்தபோதிலும், பரமோத்தமத்தை எல்லாங்கடந்த தனிமமாக மட்டுங் கொள்ளாது, சொந்தக் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டார். ஆண்டவனிடத்திற் சஞ்சலமற்ற நம்பிக்கை வைத்த பக்தனாக கவே உண்மையில் இருந்தார்.
புனித வாழ்க்கையிலே சத்தியத்தின் ஒளி வெளிப்படு கின்றது. உண்மையான சமயவாதியினால் வாளாவிருக்க முடியாது; ஆனால், வழி நடத்தவேண்டும். பேசவேண்டிய நேரத்தில் அவனால் மெளனமாக இருக்கமுடியாது. உறுதியாக நிற்கவேண்டிய நேரத்தில் அவனால் சமரசத்திற்கு வரமுடி யாது. சகோதரத்துவத்திற் காந்தி வைத்திருந்த நம்பிக்கை எல்லாங் கடந்த தனிமமல்ல; ஆனால், வாழ்க்கையின் உண்மை களில் அதனை அர்த்தபாவஞ் செய்வதற்கு வந்த ஓர் அழைப் பாகும். தோல்விக்கும் விரக்திக்கும் உபதேசம் பெறுவதல்ல அவரது கோரிக்கை சன்மார்க்க மதிப்புகள் சமூக உண்மை களுடன் தொடர்புள்ளன. பாவம், பெருமை, பேராசை ஆகிய கோர உண்மைகளை நாம் எதிர்நோக்க வேண்டியவர்களே.

Page 44
காந்தி தரிசனம் 84
மனித இயற்கை அடிப்படையில் நன்று கொடுங்கோன்மை, அநீதி, எதேச்சதிகாரம் ஆகியனவற்றை அஃது எதிர்க்கின்றது. அச்சம், குற்ற உணர்வு, வன்முறையில் நம்பிக்கை ஆகியவற்றை வேருடன் களையவேண்டுமெனக் காந்தி மனிதரின் உள்ளங் களுக்கு வேண்டுதல் விடுக்கின்றார். சமயத்தை அவர் தமது வாழ்க்கையின் பிரதான பகுதியாக ஆக்க முயன்றதுடன், தாம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் அதனைப் பிரயோகித்தார். மற்றைய மதங்களைக் கனம்பண்ணுவது என்னும் பொறுமைப் பாரம்பரியம் - எதிர்மறையாக மட்டு மல்லாது, நேரடி அர்த்தத்திலுங்கூட - நம்முடன் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. பொறுமை என்பது மெளடிக மல்ல; ஆனால், தம்மிலுந் தாழ்ந்தவர்களிடங் காட்டும் செளஜன்னியமற்ற நம்பிக்கையாகும். வெளியிலுங் காலத்திலுமுள்ள தூரங்கள் நுண்பொறிச் சாதனங்களாற் குறைக்கப்படுகின்றன. மனித இனம் ஆழமாகப் பிரித்து வைக்கப்பட்டாலும், அந்நியோன்யமாக இணைக்கப் படுகின்றது. மனித இனத்தின் சேம லாபங்களுக்காக, வேறுபட்ட மதங்களின் பொறுப்புள்ள தலைவர்கள், மக்களின் கருமத் தொடர்பினைக் குவித்தல் வேண்டுமென வற்புறுத்துகின்றார்கள். பொது நோக்கம் குவிவதுதான் எதிர்காலத்தின் நம்பிக்கையாகும்.

ഞാrä ബ്രജ്ഞാr ஸாக்கிர் ஹராஸைன், பாரதரத்தினம். கல்வியாளர்.
துணைவேந்தர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா; அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்; பாரதத்தின் ஜனாதிபதி.
உண்னல் அழச்சுவரகு
உலக வரலாற்றின் இத்தருணத்தில் மனிதகுலத்தின் உள்ளத்தையும் உணர்வையும் இந்தியர்கள் என்றும், இந்தி யர்கள் அல்லாதோர் என்றும் நாம் எப்படி தனித்தனியே பிரித்தல் சாலும்? பிரிக்கமுடியாதபடி ஒன்றுபட்டிருக்கும் தனிமனிதனின் முழுமையான குடும்பந்தான் என் உள்ளத்தில் இருக்கிறது. காந்திஜி ஓர் இந்தியராக மட்டும் இருக்கவில்லை. அவர் இந்தியாவுக்கு மட்டுஞ் சொந்தமானவராக இருக்க வில்லை. நமக்குத் தெரிந்த நாகரிகங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்தவற்றை அவர் தம்முள் இணைத்துக்கொண்டார். காந்திஜியின் வாழ்நாளிலும், அவர் பணி செய்தபோதும்

Page 45
காந்தி தரிசனம் 86
இருந்த பிரச்சினைகள் மனிதகுலத்தின் முன் மேலும் இருக் கின்றன. அவற்றைச் சாதிப்பதில் மேலும் மனிதகுலம் ஈடு பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இன்று இருப்பதைப் போல ‘ஒருலகத்திற்கான வாய்ப்பு முன் எப்போதும் வரலாற்றில் இருந்ததில்லை. இருப்பினும், இந்த வாய்ப்பு முன் எப்போதும் இன்றுள்ளது போல நிச்சயமற்றதாகவும் இருந்ததில்லை. ஆதலால், மக்கள் எங்கிருப்பினும், எனது குரல் அவர்களை எட்டுமானால், அவர்களுடன் பேசும் பொறுப்பை நான் தட்டிக்கழிக்கப் போவதில்லை.
எவ்வளவு புரட்சிகரமான நோக்கமாக இருப்பினும், எவ்வளவு அவசியமான நோக்கமாக இருப்பினும், அதை அடைவதற்குத் தூய்மையான வழிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டுமெனக் காந்திஜி வலியுறுத்தி வந்தார். காந்திஜியைப் பற்றி மிக அதிகமாக இதுதான் உணரப்பட்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரையில், தூய்மையான வழிமுறைகள் என்றால் அன்பு, அகிம்ஸை ஆகியவற்றின் அடிப்படையிலான செயல் என்றே பொருள்.
அகிம்ஸை என்றால் அன்புச்செயல் என்று அவர் மிக எளிமையான இலக்கணம் வகுத்தார். உலகின் மாபெரும் சமயமரபுகளுக்குச் சம மரியாதை கொடுத்தல் வேண்டும் என்றும் காந்திஜி அறிவுறுத்தினார்.
மனித சுதந்திரத்தையும், சமூக நீதியையும் அடைவ தற்காக சமயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தி, அவற்றைப் பயன்படுத்தலாம் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்த நம்காலத்தைச் சேர்ந்த மகத்தான அரசியல் தலைவர் காந்திஜி காந்திஜி ஒரு புதிய ஜனநாயக வழியை உருவாக்கினார். உண்மை ஜனநாயகவாதிகளாக நாம் இருக்க விரும்பினால், அவர் காட்டிய வழியிலிருந்து மாறுபட்ட வழி எதுவுங் கிடை யாது. சிறுபான்மையினரின் சர்வாதிகாரமான ஜனநாயகத்தை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்லர். வலிமை மிக்க வர்கள் சுதந்திரத்தையும், சுபீட்சத்தையும் நோக்கி முன்னேறிச் செல்லும்போது, வசதி குறைந்தவர்கள் புறக்கணிக்கப்படலாம்

87 எஸ். பொ.
என்ற கொள்கையை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வில்லை. ஜனநாயகம் என்பது அந்தச் சொல்லுக்கு ஏற்ப அமையவேண்டுமானால், சிறபான்மையினரின் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படல் வேண்டுமென்பதோடு, ஜாதி வேற்றுமையோ வகுப்பு வேற்றுமையோ இல்லாமல், எல்லா மக்களும் முழுச்சுதந்திரத்தோடு நல்வாழ்வு வாழ்தல் வேண்டும் என்பதையும் நோக்கமாய்க் கொள்ளுதல் வேண்டும். அகிம் ஸைப் போராட்டத்தால் பெற்று, சமாதான முறையில் பாது காக்க வேண்டிய, வகுப்பு வேறுபாடற்ற - ஜாதிவேறு பாடற்ற - ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக அவர் பாடு பட்டார். இம்முறைமை சற்றுந் தயக்கமின்றி நின்று நிலைக்கும். எட்டக்கூடிய ஒரு புதிய ஜனநாயக தத்துவத்தை அவர் ‘சர்வோதயம்’ என்று அழைத்தார். இதை நன்கு புரிந்து கொண்டு இந்த உலகச் சூழ்நிலையில் உரிய விதத்தில் பயன் படுத்தினால் இதில் ஜனநாயகப் புத்தகத்தின் புதுவடிவத்தைக்
காணலாம்.

Page 46
ଠେଁଠେଁ, ଛାନ
வி. வி. கிரி; இந்திய ஜனாதிபதி. பழம்பெரும் தொழிற்சங்கவாதி. சென்னை மாநிலத்திலும், மத்தியஅரசிலும் அமைச்சராக இருந்தவர்.
வழிகாடீழ
காலங்காலமாகக் கிடந்து தூசியினால் நிரம்பி, கருகி வறண்டு கொண்டிருந்த ஒரு தேசத்திற்குக் காந்திஜி மகிழ்ச்சி என்னும் நீரைக் கொண்டுவந்தார். நூற்றாண்டுகளாக நிலைத்த சோம்பலினின்றும் இந்தியாவை உலுப்பி எழுப்பினார். தமது மக்களின் வாழ்க்கையிலே வேரூன்றி, அதிலிருந்து பிரிக்க முடியாத அங்கமானார். தமது மக்களுள் மிகத் தாழ்ந்தோரது எண்ணப் போக்குகள் பற்றி விழிப்பாயிருந்தார்; பிரமாண்ட மான முயற்சியை உருவாக்கக்கூடிய வலுப்பெற்றிருந்தார்; ஒருமனப்பட்ட தியானமும் களங்கமற்ற சமத்துவமும் கொண் டிருந்தார் - ஆகிய மனப்பதிவுகள் அவரைப்பற்றி யாருக்கும் ஏற்படாமல் விடாது.
 

89 6Tesiu. 6 u mr.
பழைமையின் முதுசொமான சிக்கல்களால் அமுக்கப் பட்டிருந்த பல்வகைத்தான மக்களின் நீண்ட போராட்டத்தை உருவாக்கி வழிகாட்டல் என்பதில், மனித இனத்தின் வரலாற்றி லேயே, வேறெந்தத் தனிமனிதனும் இதைவிடப் பாரிய சேவை ஆற்றியதில்லை. காந்திஜி இந்தியாவை மிக அதிகார பூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்தினார்; வெறெவரைப் பார்க்கிலும் தெளிவான தீர்க்கமான பார்வையுடையவராக இருந்தார். இந்திய வரலாற்றில் வேறெவருஞ் சாதிக்காத முறையில் அவர் தேசத்தின் ஆன்மாவைத் தம்முள்ளேயே அடக்கினார்.
காந்திஜியின் போதனைகளின் சாரத்தை மீண்டும் கைப்பற்றல் வேண்டுமென்னும் பெருந்தேவை இன்று போல என்றும் மிகுந்திருந்ததில்லை. கல்விக்கூடங்களிலுள்ள இளைஞரும், வாழ்க்கையின் வேறு துறைகளில் ஈடுபட்டுள் ளோரும் பாபுவின் செய்தியின் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொள்ள முயலவும், நாட்டின் வளர்ச்சியில் ஆக்கபூர்வமான பங்கெடுத்துக்கொள்ளக் கற்கவும், மிக உரிய காலம் வந்து விட்டது என்பதை நான் நேர்மையாக உணருகின்றேன்.
பாவங்கள் மலிந்து குவியும்பொழுது, தேசங்கள் ஒன்றுக் கொன்று அநீதியாக நடக்கும்பொழுது, இம்சையும் இரத்த வெறியும் நாளாந்த வாழ்க்கையாக மாறும்பொழுது, சில நூற்றாண்டுக்கு ஒரு தடவையே மகாபுருடர் ஒருவர் பிறக் கின்றார் என உலகமெங்கும் பொதுவாக நம்பப்படுகின்றது. அத்தகைய ஆன்மீகத் தலைவனும் மீட்போனும் சமாதானத் தையும் ஒழுங்கையுங் கொண்டுவந்து, துயருறும் மனித குலத் திற்கு வழியையும் ஆறுதலையும் அளிப்பார்கள். காந்திஜி அத்தகைய மீட்போனாவர்.
இராச்சியதந்திரி, அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, பேச்சாளர், எழுத்தாளர், போதகாசிரியர், மனிதாபிமானி, சர்வதேச மித்திரன், சத்திய சோதகர், ஞானி, புனிதர் ஆகிய முழுவதும் ஒன்றேயானவராகக் காந்திஜி விளங்கினார். திட விசுவாசமும் துணிவுங் கைவரப்பெற்ற அவர், தமது மனச் சாட்சியின் ஆணைப்படியே செயலாற்றினார். முழு உலகத் தையுமே எதிர்த்து, அடிக்கடி தன்னந்தனியனாகவே, அச்ச

Page 47
காந்தி தரிசனம் 9 Ο
மின்றி - பயமின்றி சத்தியத்தின் வீரனாகத் திகழ்ந்தார். நமது தேசத்தினை ஊக்குவித்துத் தலைமை தாங்கிய மகாத்மாஜி, கால் நூற்றாண்டு கால அகிம்சைப் போராட்டத்தின் பின்னர், அரசியற் சுதந்திரம் பெற்றுத் தந்தார்.
வாழ்க்கையின் சீர்முறையான தத்துவம் ஒன்றினை பாபு உருவாக்கித் தரவில்லை. அவருடைய வாழ்க்கையே சத்திய சோதனையின் தொடர்களாக அமைந்தது. அவர் கூறியதுபோல, அவருடைய வாழ்க்கையே அவருடைய நற்செய்தியாகவும் விளங்கிற்று. சத்தியம், அகிம்சை, ஜன நாயகம் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளிலே காந்திஜியின் முழுத் தத்துவமும் வேர் இறக்கி இருந்தது.
காந்திஜியின் காந்தத் தன்மையிலிருந்து நன்மை பெறாத எந்த மனிதமுயற்சியோ, தொடர்போ - பொருளாதாரம், அரசியல், சமூகம், கல்வி, மதம், கலாசாரம் ஆகிய எதுவா னாலும் - எதுவுமே இல்லையெனலாம். சமூக பொருளா தார விமோசனம், சன்மார்க்க வளர்ச்சி, ஆன்மீக மறுமலர்ச்சி ஆகியன வாழ்க்கையில் காந்திஜியின் தூதினைப் புனித மாக்கின.

(36°d ෂිමාqró[ ගඨිශිතී லெஃடினன்ற் கேர்ணல் சேர் இவான் மக்கே அவுஸ்திரேலியாவில் ஆளுநர் நாயகமாகப் பதவி வகித்தவர். சில ஆண்டுகள் இந்தியாவில் அவுஸ்திரேலியாவின் தூதுவராகக் கடமையாற்றியவர்.
assessassíncroyšs ePaçSuJVõruyerulariñi.
உலகின் ஒவ்வொரு வீட்டிலும் அறியப்பட்ட பெயர் மகாத்மா,
அவரை என்றுமே பார்த்திராத, நூல்களிலும் அவருடைய படங்களிலும் மட்டுமே அவரை அறிந்திருந்த அவுஸ்திரேலிய நாட்டிலே, மகாத்மாகாந்தி எவ்வாறு பயபக்தியுடன் மதிக்கப்பட்டார் என்பதை அறிய இந்தியா விலுள்ள உங்களுக்கு நிச்சயமாக மிகுந்த ஆவலாக இருக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவிலேகூட, இனி வருங் காலத்தில் இந்த வகையிலேதான் அவர் அறியப்படுவார்.

Page 48
காந்தி தரிசனம் 92
மகாத்மா காந்தியின் பெயர் அவுஸ்திரேலியாவில் வீடுதோறும் அறியப்பட்டதாக இருந்தபோதிலும், பத்திரிகை களில் அவருடைய புகைப்படங்களைப் பார்த்தும், அவர் பற்றிப் பத்திரிகைகளில் வாசித்தும் அவருடைய உந்நத செல்வாக்கினையும் புகழையும் அறிந்திருந்த போதிலும், உண்மையில் இந்தியாவில் நாம் கால் வைத்தபொழுதுதான், அவர் தமது மக்களுடைய உள்ளங்களிலே எத்தகைய செல்வாக்கினை, குறிப்பாக ஆன்மீக செல்வாக்கினை, செலுத்தினார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
அண்மைக் காலத்தில், மகாத்மா காந்தி உயிருடன் வாழ்ந்த காலத்தில், அவரைப் பார்க்கவும், அவருடன் உரையாடவும் அரிய வாய்ப்புப்பெற்ற அவுஸ்திரேலியர் களாகிய நாங்கள், உலக வரலாற்றிலே மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவரைப் பார்த்தமை மகா அதிர்ஷ்டமான வாய்ப்பு என்று இப்பொழுது மட்டுமல்ல, வருங்கால சந்ததிகள் மத்தியிலேயும் நிச்சயமாக உணருவார்கள்.

**ಿ
இந்திரா காந்தி
இந்திரா காந்தி, நேருவின் புதல்வி. கலப்புத்திருமணஞ் செய்தவர். காங்கிரஸ் கட்சியின் மாதர் பகுதியை நிறுவி, தலைவராகவும் விளங்கினார். பாரதப்பிரதமர். நேரு-காந்தி அரசியல் பரம்பரையைத் தோற்றுவித்தவர்.
காந்திதுசிசின் மூதுசொல்
ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு மாறுதலடைந்து வளர்ச்சி பெற்றிருக்கிறார்களோ, அந்த அளவுக்குக் காந்திஜி யைப் புரிந்துகொள்ளுகிறார்கள். என் வயதிலிருந்த பலருக்கும் அவரைப் புரிந்துகொள்ளுதல் சிரமமாக இருந்தது. அவரது கொள்கைகள் சிலவற்றை அபரிமிதமான பற்றுதல்கள் எனக் கருதி, நாங்கள் சிலசமயங்களில் பொறுமையை இழந்திருக்கி றோம். அவருடைய சில கோட்பாடுகளைத் தெளிவற்றவை எனக்கருதினோம். அவர் மகாத்மா என்பதைச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு, அரசியலில் ஆத்மீக உள்ளுணர்வைப் புகுத்தியதற்காகச் சண்டை போட்டோம்.

Page 49
காந்தி தரிசனம் 94
இஃது என் தலைமுறையினருக்கு மட்டும் பொருந்தும் என்று கொள்ளமுடியாது. எனது தந்தை, தமது சுயசரிதையில், காந்தியின் தத்துவங்களைத் தங்களது சொந்த சிந்தனை அமைப்பில் ஒன்றுபடுத்திக்கொள்ளத் தமக்கும் தமது தலை முறையைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு சிரமம் இருந்தது என்பதை விளக்குகின்றார். ஆனால், சிறுகச் சிறுக, நமது தேசீய இயக்கத்தின் ஏற்றத் தாழ்வுகளில் அநுபவம் பெற்ற பிறகு என் தந்தை காந்திஜியை மேலும் முழுமையாகப் புரிந்து கொண்டார். பிறகு காந்திTயின் சிந்தனையிலிருந்த முக்கிய அம்சங்களை தமது சொந்தச் சிந்தனையுடன் ஒன்று சேர்க்க அவரால் முடிந்தது. காந்திஜியை அவர் "ஒரு மந்திரவாதி” என அழைத்தார்.
காந்திஜியின் சிந்தனைகளுக்குத் தற்கால உருவங் கொடுப்பதற்காகவும், எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அவற்றை எளிமையாக்குவதற்காகவும், இளைஞ ருக்கும் அறிஞருக்குங்கூட அவற்றைப் பரப்புவதற்காகவும் என் தந்தை தம்மை அர்ப்பணித்தார்.
காந்திஜி நம்மை அச்சத்திலிருந்து விடுவித்தார். நாட்டின் அரசியல் விடுதல்ை இறுதிப்பயனாக இருக்கவில்லை; உள் உணர்வை விடுவிக்கும் செயலின் துணைப்பலனாகத்தான் அஃது அமைந்தது. இந்தியாவின் சமூகச் சூழ்நிலையில் அவர் செய்த மாறுதல் இதைப்பார்க்கிலும் முக்கியமானது. நமது சமூகப் பழக்கவழக்கங்களின் மதில்களிலிருந்தும், தளைகளி லிருந்தும் காந்திஜி நம்மை விடுவித்தார். ஆண்களும் பெண் களும், கீழ்க்குடியினரும் உயர்குலத்தினரும், நகரவாசிகளும் கிராமவாசிகளும் - எல்லோரும் சரிநிகர் சமானமானவர்கள் என்ற அவரது கருத்துவந்தான் மக்களைக் காந்தீய இயக்கத் துக்குள் இழுத்தது.
மகாத்மா காந்தி ஒரு தடவை எழுதினார்: ‘ஒருவரும் என்னை, காந்தியை, பின்பற்றுபவர் என்று கூறிக்கொள்ள வேண்டாம். நான் என்னையே பின்பற்றினால் போதுமானது. வேண்டிய அளவுக்கு நான் என்னையே பின்பற்ற முடிய வில்லை. ஏனென்றால், எனது எண்ணங்களுக்கு ஏற்ப என்னால் வாழ முடியவில்லை.

95 66h. 6hum.
தென் ஆபிரிக்காவில் அவர் ஆற்றிய பணி பற்றிக் கோபாலகிருஷ்ண கோகலே குறிப்பிடுகையில், காந்திஜி களிமண்ணிலிருந்து வீரர்களை உருவாக்கினார் என்று கூறு கிறார். நாம் மறுபடியும் களிமண் ஆகிவிட்டோமா எனச் சிலசமயம் நான் எண்ணுவதுண்டு. ஒர் உண்மையான மாபெரும் போதகருடைய காலத்தில் உருவாக்கும் உயர்வு நீண்ட நாள்களுக்கு இருக்கமுடியாது. ஆனால், இத்தகை யோரின் அறிவுரையுஞ் சிந்தனையும் தங்கள் காலத்தையும் நாட்டையும் கடந்து செல்லுகின்றன. காந்திஜியின் சொந்த வாழ்நாளில் காந்திஜியின் சொந்த நாட்டிற் பிறந்த நமக்கு அவரது முறைகளைப் பின்பற்றுங் கடமை இருக்கிறது. அவரது சொற்களைவிட அவரது வாழ்க்கைதான் அறிவுரையாக அமைந்தது.
இருள் சூழ்ந்திருந்தபோதிலும், ஒளி தொடர்ந்து இருக் கிறது என்று காந்திஜி கூறினார். நம்பிக்கை வேண்டும். ஆயுத பலத்தை ஆயுதங்கள் இல்லாமல் எப்படி எதிர்ப்பது என்பதை காந்திஜி நிரூபித்துக் காட்டினார். இஃது ஒரு தடவை சாத்தியமானால், மறுமுறையும் நடக்க முடியாதா, என்ன ?

Page 50
Ο ജൈഠഠ൬:൧൯ ஜெயப்பிரகாஷ் நாராயண், பாரத விடுதலை வீரர்களுள் முக்கியமானவர். இந்தியாவில் சோஷலிஸக் கட்சியை நிறுவியவர். சர்வோதய இயக்கத்தின் முக்கிய ஊழியர்.
அன்யின் தாக்கம்
உலக சமாதானத்தை நிறுவுவதல்ல; ஆனால், சமாதான வாழ்க்கைக்கான அடித்தளங்களை உருவாக்கு வதையே பூதான இயக்கம் நோக்காகக் கொண்டு செயற்படு கின்றது. சமாதானம் பற்றிய பிரச்சினைகளில் ஒவ்வொரு வரும் அக்கறை கொண்டுள்ளபோதிலும், மனித சமுதா யத்தில் யுத்தம் உட்பட எல்லா வகைப் பிணக்குகளும் ஏன் நிலைத்துள்ளன, மனிதருடைய மோதுதல்களின் மூலகார ணங்கள் எவையாக இருக்கலாம் போன்ற கேள்விகளைப் பரிசீலனை செய்வதற்கும் நாம் தரிப்பதில்லை.
மகாத்மா காந்தி விதிவிலக்காக அமைந்து, இப்பிரச் சினைகளின் மூலவேர்களை அணுகி, சத்தியம் - அகிம்ஸை என அவர் அழைத்தவற்றை அடிப்படையாகக் கொண்ட
 

97 எஸ். பொ.
வாழ்க்கைத் தத்துவத்தை அவர் கட்டி எழுப்பினார். தமது தத்துவத்தைக் கட்டி எழுப்புவதற்கு எங்கெல்லாம் உதவி பெறமுடியுமோ அவற்றை எல்லாம் ஏற்றார். எவ்வளவு ஆழ மாகக் கிறிஸ்து நாதருக்குக் காந்தி கடமைப்பட்டிருக்கின்றார் என்பது பிரசித்தமான ஒன்றாகும். தம்மை ஆட்கொண்ட தனிப்பெரும் அருட்புலமை மலைப்பிரசங்கமே என அவர் எப்பொழுதுங் கருதினார். முதலில் தென்னாபிரிக்காவிலும் பின்னர் இந்தியாவிலும் அபிவிருத்தி செய்யப்பட்ட அவரு டைய சத்தியாக்கிர இயக்கம் முழுவதற்கும் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டுந் தத்துவமே அடித்தளமாக அமைந்தது. தற்காலச் சிந்தனையாளர்களுள் டால்ஸ்டாய், ரஸ்கின், தோரோ ஆகியோரைத் தமது ஆசிரியர்களென அவர் ஒப்புக் கொண் டார். எதைச் செய்ய முனைந்தாலும், அதனை அவர் திறந்த உள்ளத்துடன் செய்தார். அந்நியநாட்டிலே நிகழ்ந்தது என்ப தற்காகவேனும் எதுவுமே அவருக்கு அந்நியமாக இருந்த தில்லை. நாம் அவரை ஓர் அனைத்துலக புருஷத்துவரென அழைக்கலாம்.
காந்தி தமது தத்துவத்தை இந்திய விடுதலை இயக்கத் திற்குப் பிரயோகித்தார். அக்காலத்து அநேக இந்தியர்களைப் போல, நானும் அவருடைய தாழ்மையுள்ள போர்வீரர்களுள் ஒருவனாக இருந்தேன். அப்பொழுது விடுதலைப் போராளி களான தேசீயவாதிகள் எல்லா வகைத்தான துன்பங்களையும் அநுபவிக்க நேர்ந்தது. அவற்றுள் சிறைவாசந்தான் ஆகக் குறைந்த சுகபங்கமாக அமைந்தது என்றே நான் நினைக் கின்றேன். ஆனால், பிரித்தானியாவுக்கு எதிராகவோ, அன்றேல் பிரித்தானிய மக்களுக்கு எதிராகவோ எத்தகைய விரோதமோ கசப்போ இல்லாத சிநேகபான்மை நிலவுவதை இன்று இந்தியா வுக்கு வரும் பயணிகள் அவதானிக்கலாம்.
நமது நாட்டின் விடுதலைக்காக நாம் போராட நேர்ந் தாலும், நாம் யாரை எதிர்த்துப் போராடுகின்றோமோ அவர் களுக்கு எதிராக நாம் விரோதமோ, பகைமையோ, துவேஷமோ கொள்ளலாகாதென அவர் அக்காலத்திலேயே நமக்குக் கற்றுத்தந்தார். உள்ளத்தில் நாம் பிரித்தானியரிடம் அன்புள்c வர்களாக இருத்தல் வேண்டுமெனக் கூறினார். கற்றுக் கொள்

Page 51
காந்தி தரிசனம் 98
வதற்கு இது கஷ்டமான பாடமாக இருந்தது. நம்முள் அநேகர் இதனை நன்றாகக் கற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு கற்றி ருந்தோமாயின், ஒருகால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கு மிடையில் நடைபெற்ற சண்டைகள் தவிர்க்கப்பட்டு, ஒரு கால் இந்தியா பிரிக்கப்படாமலேயே, இன்னுங் காலம் முந்திய தாகப் பிரித்தானிய விவகாரத்தில் தீர்வு கண்டிருக்கலா மென நான் நினைக்கின்றேன். ஆனால், இஃதொரு பழங் கதையாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர், மகாத்மா காந்தி நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருந்தால், சுதந்திர இந்தியாவின் பிரச்சினைகளுக்கு, சத்தியம் - அகிம்சை என்ற அதே தத்துவத்தை எவ்வாறு பிரயோகித்திருப்பார் என்று இப்பொழுது கூறுவது கடினமாக இருக்கின்றது. அரசியல் நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒய்வு பெற்றிருப்பார் என்பதிற் சந்தேகமேயில்லை. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இமாலயஞ் சென்று தியானமாகிய ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் அநேக இந்தியர்களைப்போல அவர் செய் திருக்க மாட்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உதவி, தமது கனவுகளின் இந்தியாவை உருவாக்குவதற்குத் தாம் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் வாழ விரும்புவதாக அவர் எப்பொழுதும் கூறுவது வழக்கம். அவர் கனவுகள் நிறை வேறுவதற்கு முன்னரே அவர் காலன் வசப்பட்டார்.

இருoளானி
ஆச்சாரிய கிருபளானி, இந்திய தேசீய விடுதலை வீரர். காந்திஜியின் வார்தா கல்வித்திட்டத்தை உருவாக்கிய சிற்பி.
அர நீதிசாளர்
மகாத்மாஜி பூதவுடம்புடன் நம் மத்தியில் இல்லை. அவரால் ஒளிர்விக்கப்பட்ட பாதையின் ஒளியிலே, அவரைப் பின்பற்றி நாம் உழைத்தால், நமது ஆன்மீகத்தில் அவர் என்றும் இருப்பார். அன்பு - அகிம்சை என்ற கோட்பாட்டினை அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பிரயோகித்ததை உலகம் இன்னமும் ஏற்றக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய மரணங் காட்டு கின்றது. இருப்பினும், வரலாறு பூராகவுமே அன்பு - அகிம்சை வழியே தியாகத்தின் வழியாகவும் அமைந்துள்ளது.
அற நீதியில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை சமீப கால நிகழ்ச்சிகளினால் மிகப் பாரிய முறையில் பரீட்சிக்கப் பட்டது. இருப்பினும், இச்சோதனையில் அவர் உறுதியுடன் நின்றார். தமது வாழ்க்கையின் மிக இருள் சூழ்ந்த நேரத்

Page 52
காந்தி தரிசனம் 1 Ο Ο
திலேகூட அவர் தமது நம்பிக்கைகளிலிருந்து பிறழ்ந்தது கிடையாது. அவருடைய மக்களெனக் கணிக்கப்படுபவர் களுக்கு என்னதான் நடந்தபோதிலும், பழிவாங்கலுக்கு இட மிருத்தல் ஆகாது, பதிலுக்குச் செய்யப்படும் பழித்தீங்கும் இருத்தல் ஆகாது. எண்ணத்திலேகூட பலாத்காரம் இருத்தல் ஆகாது. இந்துக்கள், சீக்கியர் ஆகியோருடைய வீடுகளுக்கு என்ன நடந்தபோதிலும், பயத்தினாலும் பலாத்காரத்தினாலும் காலி செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வீடுகளில் யாரும் குடி யேறுதல் ஆகாது. காலி செய்யப்பட்டுள்ள முஸ்லிம் கிராமங் களிலே கூடக் குடியேறுதல் ஆகாது. இந்து - சீக்கியப் பெண் களைப் பொறுத்தமட்டில் பாகிஸ்தான் அவ்வாறு நடந்து கொள்ளத் தவறினாலுங்கூட, பாகிஸ்தானிலிருந்து முஸ்லிம் பெண்கள் கடத்தப்பட்டிருந்தால் அவர்கள் பாதுகாப்புடனும் மானத்துடனும் திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும். தன் னுடைய சொந்தக் குற்றங்களையும், தன்னுடைய சமூகத்தின் குற்றங்களையும் ஒருவன் பெரிதுபடுத்திப் பார்த்து, மற்றை யவர்களுடையதும், மற்றைய சமூகத்தினுடையதுமான குற்றங்களை மிகக் குறைத்துக் கவனிப்பதையும் அறநிதியின் கடுமை எதிர்பார்ப்பதாகக் காந்திஜி எப்பொழுதும் வலி யுறுத்தினார். இவ்வாறு மட்டுமே அறநீதி உண்மையில் நிறை வேற்றப்படலாம். அவ்வாறு நிறைவேற்றப்படும்பொழுது பயன் முடிவுகளும் நல்லனவாக இருத்தல்வேண்டும். அற நீதியின் ஒளியிலே இயங்கும் மனிதனுக்கும் தேசத்திற்கும் துன்பமே வரமாட்டாது. எங்கு தர்மம் உண்டோ, அங்கு இறுதி வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்து - முஸ்லிம் - சீக்கியரிடையேயோ, அன்றேல், இந்தியர் - இந்தியரல்லாதாரிடையேயோ எவ்வித வேறு பாடுகளையும் அவர் கற்பித்ததில்லை. அவரைப் பொறுத்த மட்டில் ஒரேயொரு மனிதகுலமும், ஒரேயொரு நீதியுமே இருந்தன. அந்த அறநீதியினால் முழு உலகமுங் கட்டுப்பட்டு ஒற்றுமையுற்றது.

முல்க் ராக் ஆனந்த் முல்க் ராஜ் ஆனந்த் பிரபல ஆங்கிலமொழி நாவலாசிரியர், கலை விமர்சகர். முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். லலிதகலா அகடமியின் தலைவர்.
Eří 62 6souvrusův
மகாத்மா காந்தியின் ஆலோசனையின்கீழ், தீண்டர் தான்’ என்ற என் நாவலைத் திருப்பி எழுதுவதற்காக, 1929 ஆம் ஆண்டில், நான் லண்டனிலிருந்து வந்தேன். தாழ்த்தப் பட்டோருடைய பிரச்சினைபற்றி யங் இந்தியா’ பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருந்தேன். நான் பம்பாயை வந்தடைந்த மறுநாளே, காந்திஜியை அஹ மதாபாத்திலே சந்திக்கும் உடன்பாடு எனக்குக் கிடைத்தது. அவரைச் சந்தித்ததும் பின்வரும் உரையாடல் தொடர்ந்தது. க7ந்திஜி : லண்டனில் நீர் ஒரு விடயத்தைக் கற்றிருக்கின்றீர் - நேரந்தவறாமை. உண்மையில், நான் நூற்றுக் கொண்டிருந்தபடியால், சுணங்கிவிட்டேன். ஆசிரியர் : நான் தங்களுக்கு எழுதியது போலவும், கூறியது போலவும், நான் தீண்டாதான் ஒருவனைப்பற்றி ஒரு நாவல் எழுதியுள்ளேன்.

Page 53
காந்தி தரிசனம் 1 Ο 2
காந்திஜி ; அவர்களை இங்கு நாங்கள் ஹரிஜனர் என
அழைக்கின்றோம்.
ஆசிரியர் : வடஇந்தியாவிலுள்ள தீண்டாதவர்களுடைய வாழ்க்கை பற்றிய உண்மை அநுபவங்கள்மீது அஃது அமைக்கப்பட்ட போதிலும், அதனை எழுதியபிறகு அஃது ஆழத்திற் குறைவுபட்டிருப்பதை நான் உணருகின்றேன்.
காந்திஜி : "தீண்டாதார்"? "ஹரிஜன்" என்ற வார்த்தையை உபயோகிப்பதையே நாங்கள் விரும்புகின்றோம். நான் உமக்குக் கூறியிருக்கின்றேன்.
ஆசிரியர் : "ஹரிஜன்" என்பது கடவுளின் புத்திரனைக் குறிக்கும். கடவுளின் புத்திரர்களுக்குரிய அந்தஸ்து அவர்களுக்கு நமது சமுதாயத்தில் கொடுக்கப்படாதது கண்டு நான் வருத்தப்படுகின்றேன். அத்துடன், நான் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன்.
க7ந்திஜி : அவ்வாறாயின், நீர் இந்துவல்ல.
ஆசிரியர் : இல்லை - சாதி முறைமையைச் சகித்துக் கொள்ளும் பிரிவினரான ஒரு மதத்தில் இணைந்து கொள்ள நான் விரும்பவில்லை. உண்மையில், கிறிஸ்துவ மதஞ் சாதிமுறைமை பாராட்டுவதில்லை என்ற காரணத் திற்காகவேனும், கிறிஸ்துவ தேவாலயத்திற் சேரலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். கிறிஸ் தவர்கள்கூடத் தம்மைப் பின்பற்றுபவர்கள் கடவுள் நம்பிக்கைவைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார் களென்பதுதான் எனக்கிருக்கும் ஒரேயொரு வில்லங்கம்.
காந்திஜி ; எனவே, நீர் நாஸ்திகராக இருக்க விரும்புகின்றீர்?
ஆசிரியர் : ஆம்! நான் ஒரு சோஷலிஸ்ட்
காந்திஜி : இந்து சமயம் சாதிப் பிரிவினையைச் சகித்துக் கொள்ளுகின்றது என்ற உமது கூற்றை நான் ஏற்கவில்லை. வைதீக இந்துக்கள் தாழ்ந்த சாதிகளை ஒதுக்கினாலும் நல்ல இந்துக்கள் அப்படியல்ல.

to 3 6Tsio. 6 ur.
ஆசிரியர் : இந்து சமயத்தைப் பற்றி நீங்கள் தாராள மனப் பான்மை பூண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சாதி முறைமையே இந்து சமயத்தின் அடித்தளமாக இருக்கின்றது என்ற உண்மையை நீங்கள் அலட்சியப் படுத்துவதாகவே நான் நினைக்கின்றேன்.
காந்திஜி சாதி முறைமைதான் இந்து சமயத்தின் அடிப்படை என நான் நினைத்திருந்தால், நான் இந்து சமயத்தைச் சேர்ந்திருக்க மாட்டேன்.
ஆசிரியர் : எவ்வாறிருப்பினும், அஃது அவ்வாறு இருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன். அதனாலேதான் நான் என்னுடைய நாவலை எழுதியிருக்கின்றேன் - ஒருவகை
எதிர்ப்புப்போல.
காந்திஜி : இந்தப் பிரச்சினை குறித்து எழுதப்படுதல் முக்கிய மானதாகும். ஆனால், சாதி முறையைச் சாடி நேரடி யான நூலொன்று எழுதினாலென்ன? நேரடியான நூல் உண்மையானது. விடயங்களை மறைக்காமற் கூறி மக்களைச் சீர்திருத்த இயலும், ஆசிரியர் : நான் நாவலொன்று எழுத விரும்புகின்றேன். பிரசார துண்டுப் பிரசுரம் ஒன்றல்ல. நாவலிலே பிரச்சினை கூறப்படுகின்றதே ஒழிய, அதனைத் தீர்த்து வைப்பதில்லை. அதனைச் சீர்திருத்தவாதிகளிடம் விட்டு விடலாம். நான் மக்களைச் சீர்திருத்த விரும்பிய போதிலும், அப்பிரச்சினைக்கு விடைசொல்வதைப் பார்க்கிலும், அந்த வினாவை நிறுத்தி வைப்பதில் நான் நம்பிக்கை வைத்திருக்கின்றேன். காந்திஜி : மக்கள் உம்முடைய நூலை ஆங்கிலத்திலே வாசித்தல் சாத்தியமல்ல - எனவே உம்முடைய சொந்தப் புகழுக்காக இந்நூலை எழுத விரும்புகின்றீர்? ஆசிரியர் : ஒருவேளை நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஏனெனில், பராக்கிரமசாலியின் இயல்புடையவனாகக் கலைஞன் ஐரோப்பாவிற் கணிக்கப்படுகின்றான். ஆனால், என் அகங்காரத்தை அடக்கி, தீண்டத்தகாத

Page 54
காந்தி தரிசனம்
வரை நேசிப்பதே தங்களிடமிருந்து கற்றுக்கொள்ளு ஏதுவினால் நான் தங்களிடம் வந்திருக்கின்றே பஞ்சாபி, ஹிந்துஸ்தானிலுள்ள என்னுடைய கதாபா திரங்களுடைய சிந்தனைகளையும் உணர்ச்சிகளைய பூர்வாங்கமாக ஆங்கிலமொழியிலே சொல் முயலுகின்றேன்.
காந்திஜி ; உண்மை. வீணாக்க நேரமில்லை. தான் சொல் விரும்புவனவற்றைக் கைவரக்கூடிய எந்த மொழியிலு ஒருவன் சொல்லலாம். எனவே, உம்முடைய நூ ஏன் ஆங்கிலத்தில் அமைதல்கூடாது என்பதற் எத்தகைய காரணமுங் கிடையாது.
ஆசிரியர் : இந்தியாவின் சீர்கெட்ட விடயங்களை வெ6 யுலகத்திற்கு வெளிப்படுத்துதல் ஆகாது என அநே இந்தியர்கள் கருதுகிறார்கள்.
காந்திஜி ; உண்மை கூறப்படல் வேண்டும். அது யாரை புண்படுத்தினாலும் கவலையில்லை. புண்படுத்தினாலு கூட, உண்மையே!
ஆசிரியர் : கோகோல், டாஸ்ராவிஸ்கி, டால்ஸ்டாய் போன் எழுத்தாளர்கள் தமது நாட்டிலுள்ள தீயசெயலை காட்டியபொழுது ரூஷியர்களும் இவ்வாறே கூறினார்கள்
காந்திஜி ; டால்ஸ்டாயை நீர் வாசித்திருக்கின்றீர்.
ஆசிரியர் : கிட்டத்தட்ட அவர் எழுதியுள்ள எல்லாவற்றையு - சீமாட்டி டால்ஸ்டாய் அவரைப்பற்றி கூறியிருப் வற்றைக்கூட!
காந்திஜி அவர்மீது அவள் அதிகமாக அன்பு பாராட்( வதில்லை என்று கேள்விப்படுகின்றேன். Հ ஆசிரியர் : ஆசிரமத்தில் நான் தங்குவதற்கு அனுமதி உண்டா
காந்திஜி : நீர் தங்கலாம். உம்மீது நாம் அதிக கடுமையா நடந்து கொள்ளமாட்டோம். இப்பொழுது பிரார்த்தலை வேளையாகின்றது.

O 4
தம் air, ாத் |ம்
6)
ம்

Page 55
விநோபாஜி ரவீந்திரநாத் தாகூர் ஈன்ஸ்டீன்
பேர்ல் பக்
முரீ அரவிந்தர் எல்.பி. பியர்சன் டபிள்யூ ஹெய்ஸன்பேர்க் எம். சொலொக்கோவ் எபி.வி. ராமன் சங், பிதா டொமினிக் பியர் மாட்டின் லூதர் கிங் ஊதாண்ட்
கேளி பிரபு கிளமென்ற் அட்லி லூயி பிர் ஹெய்லிளெபலஸ்ளி ஜே. வி. ஸ்மட்ஸ் ஹரோல்ட் வில்சன் தேவதாஸ் காந்தி அபுல் கலாம் ஆஸாத் ஜவஹர்லால் நேரு சரோஜினி நாயுடு சேர் எம். ஸஃருல்லா கான் டாக்டர் பிரதாப் சந்திர சந்தர் சி. ராஜகோபாலாச்சாரி ராசேந்திர பிரசாத் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஸாக்கிர் ஹரஸைன்
வி.வி. கிரி
சேர் இவான் மக்கே இந்திரா காந்தி ஜெயப்பிரகாஷ் நாராயண் கிருபளானி முல்க்ராஜ் ஆனந்த்
 

HI THAR SAN AM