கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரமும்

Page 1
||- |-|- |-|-
 


Page 2

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
கலாநிதி பரமு புஷ்பரட்ணம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் 41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
: 26359906, 26251968

Page 3
Title
Author
Edition
Copyright
Code No
ISBN
No. Of pages
Price
Text Printed at
LANGAI THAMIZHARUM NAGA NAATTU ARASA MARABUM
Kalanithi Paramu Pushparatnam
First - August, 2006 Author Α 1461
81 - 234 - 1034 - 4
iii + 54
Rs.30.00
Pavai Printers (P) Ltd. 142, Jani Jan Khan Road, Royapettah, , Chennai – 600 014. 雷:28482441,28482973

பதிப்புரை.
தொல்லியல் அகழ்வாய்வுகள் நோக்கில் சுட்டப்படும் இலங்கைத் தமிழர் நாகநாட்டு அரச மரபு வாழ்ந்து வந்ததன் அடையாளத்தை இந்நூல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கின்றது. பண்டைக்கால இலங்கையில் வாழ்ந்த மக்களை இயக்கர்’ ‘நாகர்’ எனவும், வடமொழியில் ‘நாகதீப" எனவும்: தமிழில் ‘நாகநாடு’ எனவும் அழைக்கப்பட்டு வந்ததை அக்கால ஆய்வுப்படி உறுதிப்படுத்துகின்றது. மேலும், கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வட இலங்கை நாகதீபம் என அழைக்கப்பட்டதாகவும், அங்கு நாக வமிசத்து மன்னர்களே ஆட்சி செய்து வந்ததாகவும் ஒரு சேதி
நாகநாட்டில் அரச மரபு இருந்தது என்பதற்கும் தொல்லியல் சான்றுகளில்நாணயங்கள்முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதற்கும் பல சான்றுகள் இந்நூலில் கிடைக்கும். தமிழர் படையெடுப்புகளுக்கு மையமாக “மாதோட்டம் இருந்ததாகவும்,பின்புதமிழர்களும் அப்படையெடுப்பாளர்களுடன் இணைந்துகொண்டதற்கான சான்றுகளும் ‘பாளி' இலக்கியங்கள் வாயிலாக அறிய வாய்ப்புண்டு. நாயன்மார் பாடல்கூட இதன் வர்த்தக முக்கியத்துவத்தையும் நகரங்களின் சிறப்புகளையும் பற்றி புகழ்ந்துரைப்பதை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஆதிகால இலங்கையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இனக் குழுக்கள் வாழ்ந்து வந்தன என்றும், அவர்களிடையே தமிழர்கள் செல்வாக்குப் பெற்று தேசத்தின் பல பகுதிகளிலும் குடியேறி,ஆங்காங்கே அதிகாரம் செலுத்திவந்தனர் என்பதும் ஆய்வாளர்க்ள் கூற்று. இன்னும் பல ஆதாரங்களுடன் இலங்கைத் தமிழர் சிறப்பினை நல்கும் நூலின் ஆசிரியர் தோழர் திரு. கலாநிதி பரமு
புஷ்பரட்ணம் அவர்களை பாராட்டலாம்.
- பதிப்பகத்தார்

Page 4

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
தனித்துவம் வாய்ந்ததாகக் கணிக்கக்கூடிய பாரம்பரிய வரலாறு இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களுக்கும் இருப்பதாகக் கூறமுடியாது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பிராந்தியத்தைப் பொறுத்தவரை அது பண்டுதொட்டு இலங்கையின் வரலாற்றுப் போக்கில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதைச் சமகால வரலாற்று மூலங்களிலிருந்து இனம்காண முடிகிறது. இலங்கையின் முதல் வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்தபோது அனுராதபுரத்திற்கு வடக்கிலமைந்த பிராந்தியத்தை நாகதீபம்) எனவும், அங்கு ஆட்சியில் இருந்த இரு நாகவம்சத்து மன்னர்களுக்கிடையிலான சிம்மாசனப் போராட்டத்தை அவர் ŠiģgJGOGJģg5g5sT856quid SingpléßgDg (Mahavamsa Vill: 54-3). AjögöITGóláid புத்தர் இலங்கை வந்ததாக கூறுவது ஐதிகமாக இருப்பினும், அந்நூல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வடஇலங்கை நாகதீபம் என அழைக்கப்பட்டதையும். அங்கு நாகவம்சத்து மன்னர்களே ஆட்சி செய்தனர் என்பதையும் இச்செய்தி உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
இதற்கு மேலும் ஆதாரமாக வடஇலங்கையில் பெரிய புளியங்குளம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நான்கு பிராமிக் கல்வெட்டுக்கள் வடஇலங்கையில் நாகச் சிற்றரசர்களது ஆட்சியிருந்ததாகக் eBo-gplu Lu (66 u 60og5ë si L'Lq-ë55 ITL 'L-GoT Lib (Paranavithana 1970: no 338 - 41). அதேவேளை அக்காலப் பகுதிக்குரிய இன்னொரு பிராமிக் கல்வெட்டு இலங்கையில் “நாகநகர்” என்ற பெயரில் ஒரு தலைநகர் இருந்ததாகக் கூறுகிறது. அத்தலைநகரைப் பேராசிரியர் இரகுபதி (1991) கந்தரோடையாக இருக்கலாம் எனக் கருதுகிறார்.

Page 5
2. இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
ஆனால் நிக்கோலஸ் என்ற இன்னொரு ஆய்வாளர் இது பதவியாவுக்கு அண்மையில் இருந்த தலைநகர் என்பதற்கு கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டில் வரும் இதையொத்த இன்னொரு பெயரை ஆதாரமாகக் காட்டுகிறார் (Nicholas 1963.81). கி.பி. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க நாட்டவரான தொலமியின் குறிப்பில் “நாகதீபோய்” என்ற இடப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலியார் இராசநாயகம் (1926) இவ்விடப்பெயரை மகாவம்சத்தில் வரும் மேற்கூறப்பட்ட நாகதீபம் என்ற பெயருடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறார். இக்கூற்றுக்கு மேலும் சான்றாக 1936ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் கிடைத்த கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொற்சாசனத்தில் குறிப்பிடப்படும்"நாகதீபம்” என்ற பெயரைப் பிற்கால ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சற்றுப் பிற்பட்ட காலத்தில் ஈழத்தில் எழுந்த சூளவம்சம் என்ற இன்னொரு பாளி நூலில் நாகதீபம்) என்ற பெயர் உத்தரதேசம்) என்ற பெயராலும் அழைக்கப்பட்டதற்குச் சில சான்றுகள் காணப்படுகின்றன.இதற்கு கிபி 7ஆம்நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த சிங்கள மன்னனுக்கு எதிராக உத்திரதேசத்தை சேர்ந்த பூரீநாக என்பவன் தலைமையில் படையெடுப்பொன்று நிகழ்ந்ததாக இந்நூல் கூறியுள்ளதை ஆதாரமாகக் காட்டலாம், ஆனால் இதே பாளி நூலில் கி.பி.10ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மன்னர் ஒருவர் நாகதீபத்தின் மீது படையெடுத்தான் என்ற செய்தியும் காணப்படுகிறது (Culavamsa 53:12-6). இவற்றை நோக்கும்போது அநுராதபுரத்திற்கு வடக்குப் பக்கமாக நாகதீபம் இருந்ததால் அது உத்தரதேசம் (பாளிமொழியில் “உதர” என்ற சொல்லுக்கு வடக்கு என்ற கருத்துண்டு) என அழைக்கப்பட்டது எனலாம்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குரிய சிங்களக் கல்வெட்டில் வடஇலங்கையை “உதகர” அதாவது ‘வடகரை” என அழைக்கப்பட்டதை இவ்விடத்தில் குறிப்பிடலாம். இக்காலத்தில் நாகதீபத்தின் மீது படையெடுத்த தென்னிந்திய மன்னன் முதலாம் பராந்தக சோழனாக இருக்கலாம் என்பதை அவனது 37 ஆட்சியாண்டுக் கல்வெட்டில் வரும் "ஈழமுமி

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 3
மதுரையும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்” என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது (South Indian Inscriptions. 11:35). இந்த ஈழத்து வெற்றி என்பது நாகநாட்டு வெற்றியைக் குறித்திருக்கலாம் என்பதற்கு இப்படையெடுப்பைத் தொடர்ந்து முதலாம் பராந்தக சோழன் வெளியிட்ட நாணயங்களில் வரும் “உரக” என்ற பெயர் சான்றாக உள்ளது (Pushparatnam 2002). உரக என்ற வடமொழிச் சொல் நாகபாம்பை,நாகஇனமக்களை,அம்மக்கள் வாழ்ந்த நாட்டைக் குறிப்பது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
வடமொழியில்"நாகதீப" அல்லது"உரக” எனஅழைக்கப்பட்ட இத்தமிழர் பிராந்தியம் தமிழில் “நாகநாடு” என அழைக்கப்பட்டதற்கு சமகாலத்தில் பல சான்றுகள் காணப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் நாகநாடு பற்றிப் பேசுகின்றன. இந்த நாகநாடு இலங்கையில் இருந்த நாகநாட்டையே குறித்திருக்கலாம் என்பதற்கு அவ்விலக்கியங்களில் நாகநாட்டோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் வரலாற்றுச் சம்பவங்கள் சான்றாக் உள்ளன. கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் செப்பேடு ஒன்று பல்லவ இளவரசன் ஒருவன் “நாகநாடு” சென்று அங்குள்ள இளவரசியை மணந்ததாகக் கூறுகிறது. தமிழ்நாட்டில் குடுமியாமலை என்ற இடத்தில் கண்டுபிடித்த கி.பி.1262ஆம் ஆண்டுக்குரிய பாண்டியக் கல்வெட்டு ஒன்று ஈழத்தைச் சேர்ந்த சிங்கள அமைச்சன் ஒருவன் பாண்டி மன்னனிடம் சென்று உதவி கேட்டதன் பேரில் வீரபாண்டியன் என்ற மன்னன் தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும், அப்படை சிங்கள மன்னனுக்குச் சார்பாக நாகநாட்டின் மீது படையெடுத்து அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த சாகவ மன்னனைக் கொன்று அவன் மகனை ஆட்சியில் sg) Drigslu ug5(TESGAqid Gil-gépg (Puthukkoddai inscriptions no. 366). இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சமகால ஈழத்துப் பாளி, சிங்கள இலக்கியங்கள் இச்சாகவனது ஆதிக்கம் நிலைத்திருந்த இடமாக வடஇலங்கையையும், கிழக்கிலங்கையிலும் உள்ள பல இடங்களைக் குறிப்பிடுகின்றன (Culavamsa Ch. 82-83).
மேற்கூறப்பட்ட சான்றுகளில் இருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட அரசின் ஆதிக்கம் வடஇலங்கையில் பரவ முன்னர் இப்பிராந்தியம்

Page 6
4. இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
வடமொழியில் நாகதீப எனவும். தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை தெரிகிறது. இது பிற்காலத்திலும் தொடர்ந்ததற்குப் போத்துக்கேயரது ஆவணங்களில் வரும் சில குறிப்புகள் சான்றாக உள்ளன. ஆயினும் இதன் எல்லை அக்காலப் பகுதியில் எது வரை பரந்திருந்ததென்பது தெரியவில்லை. சிலர் இப்பெயர் அநுராதபுரத்திற்கு வடக்கேயுள்ள தற்கால வட இலங்கையைக் குறித்ததாகவும். வேறுசிலர் யாழ்ப்பாணத்தைக் குறித்ததாகவும், இன்னும் சிலர் நயினா தீவைக் குறித்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர் (Rasanayagam 1926, இந்திரபாலா 1972 சிற்றம்பலம் 1993). ஆனால் பண்டைய கால வரலாற்றில் ஓர் இடத்தின் பெயர் காலப்போக்கில் அந்த நாட்டின் பெயராக மாறியதற்கும், ஓர் நாட்டின் பெயர் பிற்காலத்தில் ஒர் இடத்தின் பெயராக அழைக்கப்பட்டதற்கும் பல சான்றுகள் உண்டு. ஆயினும் 3 நாகதீப அல்லது நாகநாடு என்ற பெயர் குறித்து நிற்கும் பிராந்தியம் பல சந்தர்ப்பங்களில் தற்கால வட இலங்கையுட்பட கிழக்கிலங்கையின் சில வட்டாரங்களையும் (உதாரணமாக பதவியா, திருகோணமலை உள்ளடக்கியிருந்ததற்குப் பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களிலும்,சோழ,பாண்டிய,விஜயநகரக்கல்வெட்டுக்களிலும்
சான்றுகள் காணப்படுகின்றன.
பாளி இலக்கியங்கள் ஆதிகால இலங்கையில் வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் கூறுகின்றன. ஆனால் சிங்கள மக்களின் மூதாதையினர் கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்துடைய பேராசிரியர் பரணவிதானா இயக்கர், நாகர்களை மனிதப்பிறவிகளற்ற அமானுசர்கள் எனக் கூறுகின்றார் (Paramavithana 1970). அவர் இம்மக்களை மனிதர்களாகக் கொண்டாலும் அவர்களைத் தமிழர்கள் எனக் கூறமுடியாது எனவும், மாறாக வடஇந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறுவதே பொருத்தம் எனக் கருதுகிறார். இதற்கு வடஇந்திய இடப்பெயர்கள் பல “நாக” என்ற சொல்லை முன்னொட்டாகக் கொண்டு தொடங்குவதைச் சான்று காட்டுகிறார்.
பாளி இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் பண்டைய கால மக்கள் பற்றிய ஆய்வு அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளினால் மறுதலிக்கப்பட்டு

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 5
வருகிறது. இதுவரை கிடைத்த சான்றுகளிலிருந்து வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததற்கான பாளி இலக்கியங்கள் கூறும் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்ததற்கான சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்ட மக்களைப் பழைய கற்காலப் (Plaeolothic), புதிய கற்காலப் (Neolithic) பண்பாட்டுக்கு உரியவர்கள் எனத் தொல்லியலாளர் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அறுதியிட்டுக் கூறக்கூடிய வகையில் கி.மு. 28000 ஆண்டிலிருந்து இடைக் கற்காலப் பண்பாட்டிற்குரிய ஆதி ஒஸ்ரலோயிட் மக்கள் மலைநாடு தொட்டுத் தாழ்நிலம் வரை வாழ்ந்ததற்கான சான்றுகளே பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் வடஇலங்கையில் மாதோட்டம், பூநகரி, மாங்குளம் போன்ற இடங்களில் இப்பண்பாட்டிற்குரிய கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Ragupathu 1987, புஷ்பரட்ணம் 1993). இப்பண்பாட்டிற்குரிய மக்களும், தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு தேரி மணற்குன்றுப் பகுதியில் வாழ்ந்த மக்களும் மானிடவியல், மொழியியல், தொல்லியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஒரே இன மக்கள் என்ற கருத்துப் பல நிலையிலும் இன்று வலுப்பெற்று வருகிறது. இப்பண்பாட்டை அடுத்து கி.மு. 800-க்குப் பின்பாக தென்னிந்தியத் திராவிட மக்களது குடியேற்றம் நடந்ததற்கான சான்றுகள் வடஇலங்கையுட்பட நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (Strambalam 1990, Seneviratne 1984, Ragupathy 1987, Pushparatnam 2002). இப்பண்பாட்டு மக்களோடு இதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த இடைக்கற்காலப் பண்பாட்டிற்குரிய மக்களில் பலர் ஒன்று கலந்திருக்கலாம் என்பதைப் பண்பாட்டுத் தொடர்ச்சியும், மாறுதல்களும் சுட்டிக்காட்டுகின்றன. பெருங்கற்கால திராவிட மக்கள் தொடர்பான சான்றுகள் சிங்கள மக்களின் மூதாதையினர் வடஇந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்ற பாரம்பரிய கருத்தை முற்றாக மாற்றியமைத்துள்ளது. மாறாக அவர்களும் தமிழ்மக்களைப் போல் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்பதைக் கோடிட்டுக்காட்டுகின்றன. தென்னிந்தியாவில் எப்படிபெருங்கற்காலப் பண்பாட்டின் பின்னணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிவழிப் பண்பாடு தோன்றியதோ

Page 7
6 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
அதேபோல் இலங்கையிலும் தமிழ், சிங்கள மொழி வழிப் பண்பாடு தோன்றியது என்ற கருத்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது (Strambalam 1990). இதில் சிங்கள மொழி தோன்றும் முன்னரே தமிழ்மொழிபயன்பாட்டிலிருந்ததைஇப்பண்பாட்டுமட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் அப்பண்பாட்டு வழிவந்த மக்களும்"நாக” என்ற பெயரைப்பெற்றுள்ளனர்என்பதைப் பூநகரியிற் கிடைத்த மட்பாண்டச் சாசனம் உறுதிப்படுத்துகிறது. இலங்கையில் இப்பண்பாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலேயே பெரும்பாலும் பிராமிக் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கி.மு.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 80-க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் “நாக”என்ற பெயர் குலம், அரசன், அரசவம்சம், தனிநபர் சார்ந்த பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது (Paramavithana1970, புஷ்பரட்ணம் 2001அ).
நாக” என்ற பெயர் ஆதிகாலம் தொட்டு வழக்கிலிருந்து வருவதற்கு அறிஞர்கள் பல்வேறு காரணங்களைக் கொடுத்து வருகின்றனர். அவற்றுள் மத வழிபாட்டில் நாகபாம்பை குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்ததே காரணம் என்ற விளக்கமே முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்படுகிறது. இப்பெயர் இலங்கையில் மட்டுமன்றி ஆசியாவின் பல வட்டாரங்களிலும் பயன்பாட்டிலிருந்துள்ளன. வடஇந்தியாவில் அரசமைத்த குப்தரும், தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக வம்சத்தினர் என அழைத்துக்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டினம் என்ற இடம் நாகர்களின் தலைநகர் என்ற ஐதிகமும் உண்டு சங்ககாலத்தில் குறுநிலத் தலைவர்களுடனும், புலவர்களுடனும், நாடு, பட்டினம், ஊர் ஆகிய இடப்பெயர்களுடனும் இப்பெயர் இணைந்து வருவதனைக் காணலாம் (Pillai 1975: 37, Mahadevan 1966). இலங்கையில் இப்பெயர் இடைக்கற்காலப் பண்பாட்டிற்குரிய ஆதிஒஸ்ரலோயிட் மக்களைக் குறித்ததாக அறிஞர்களில் சிலர் கருதுகின்றனர் (Seneviratne 1984). இன்னும் சிலர் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய திராவிட மக்களைக் குறித்ததாகக் கூறுகின்றனர். தொடக்க காலத்தில் நாகர்களை மனிதர்கள் அல்ல என வாதிட்ட பரணவிதானாகூடப் பிற்காலத்தில் அக்கருத்தை மாற்றி அவர்களைத் திராவிடர் என வாதிட்டார் (Ray 1960). இவர்கள் எந்த

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 7
இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் ஆதிகால இலங்கையில் இப்பெயர் பல இன, பல மொழி பேசும் மக்களோடு தொடர்புடைய ஆட்பெயராகவும், குலப்பெயராகவும் இருந்ததற்குப் பொருத்தமான சான்றுகள் காணப்படுகின்றன (Katunaratne1984:no.82). ஆயினும் காலப்போக்கில் இலங்கையின் ஏனைய இன மக்களிடம் இருந்து இப்பெயர் படிப்படியாக மறைந்து போக தமிழரிடம் தற்காலத்திலும் அப்பெயர் ஆட்பெயராகவும் (நாகன், நாகி, நாகராசா, நாகநாதன், நாகமுத்து, நாகவண்ணன், நாகம்மா, நாகம்மாள்), இடப்பெயராகவும் நாகர்கோயில், நாகபடுவான், நாகமுனை, நாகதேவன்துறை, நாகதாழ்வு இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடிகிறது. இச்சான்றுகள் இலங்கைத் தமிழரிடையே நாக மரபின் எச்சங்கள் இன்னும் மறையவில்லை என்ற உண்மையைக் காட்டுகின்றன.
நாக மன்னர்கள்
பண்டைய இலங்கையில் ஆட்சிபுரிந்த மன்னர்களில் கணிசமானோர் “நாக” என்ற பெயரைப் பின்னொட்டுச் சொல்லாகக் கொண்டிருந்ததற்கு கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு துல்லநாக (கி.மு. 119) கல்லத்நாக (கி.மு. 109-103), சோறநாக (கி.பி. 63-51), மகாநாக (கி.பி.7-19), இளநாக (கி.பி.33-43), மல்லகநாக (கி.பி.136-143), குஜநாக (கி.பி.186-187), குஞ்சநாக (187-189), பூரீநாக (கி.பி.189-209), அபயநாக (கி.பி. 231-240), பூரீநாக (கி.பி. 240 - 242) போன்ற மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் “பூரீநாக” என்ற பெயர் வரலாற்றில் மாறி மாறி வருவதை நோக்கும்போது “நாக” என்பது வம்சப் பெயராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் அரசு பற்றி ஆராய்ந்த முதலியார் இராசநாயகம் (1926) சுவாமி ஞானப்பிரகாசர் (1928) போன்ற அறிஞர்கள் இலக்கியங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு பண்டுதொட்டு வடஇலங்கையில் கதிரைமலையைத் தலைநகராகக்கொண்ட நாக அரசர்களின் ஆட்சி இருந்ததென்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் பிற்காலத்தில் இவ்வரசு பற்றி ஆராய்ந்த தமிழ், சிங்கள அறிஞர்கள் இலங்கையில் முதலாவது தமிழ் அரசு பதின்மூன்றாம் நூற்றாண்டின்

Page 8
8 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
பிற்பகுதியில் வடஇலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டே தோற்றம் பெற்றதென்ற கருத்தை முன்வைத்தனர் (Paranavithana 1961; 174-24, இந்திரபாலா 1972). அவ்வாறு கூறப்பட்டதற்கு இக்காலப்பகுதிக்கு முன்னர் செறிவான தமிழர் குடியிருப்புகள் இருக்கவில்லை என்ற ஆணித்தரமானநம்பிக்கையும் ஒரு காரணமாகும். ஆனால் இக்கருத்துஅண்மைக்காலத்தொல்லியற் கண்டுபிடிப்புகளால் பல நிலையிலும் மறுதலிக்கப்படவேண்டும் என்பதைப் பேராசிரியர் இந்திரபாலாவே 1999-இல் வெளியிட்ட தனது நூல் ஒன்றில் சூசகமாகத் தெரிவிக்கின்றார். இந்த இடத்தில் தொல்லியல் சான்றுகளை முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு எழுதப்பட்ட எனது "பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்” என்ற நூலிற்கு வாழ்த்துரை வழங்கிய இலங்கையின் தலைசிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் அந்நூலில் கூறிய கருத்துகளை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பல நிலையிலும் பொருத்தமாகும்.
“முன்பொரு காலத்தில் சிலர் கிபி 13ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையில் பரவலாகத் தமிழரின் குடியிருப்புகள் அமைந்திருக்கவில்லை எனக் கட்டியம் கூறியுள்ளனர். ஆனால், ஆதிகால இலங்கையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இனக்குழுக்கள் வாழ்ந்தன என்பதும், அவர்களிடையே தமிழர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பதும், தேசத்தின் பல பகுதிகளிலும் குடியிருந்தனர் என்பதும், ஆங்காங்கே அதிகாரம் செலுத்தினர் என்பதும் இப்போது இவரது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பழைய சிந்தனைகள் வலுவற்றுப் போகின்றன. வரலாற்றாராய்ச்சியிலும் புதிய பார்வையும், புதிய சிந்தனையும், புதிய உத்தியும் அழுத்தம் பெறப் போகின்றன என்பதை எண்ணுமிடத்து இந்த நூற்றாண்டு ஒரு மங்களகரமான முன்னேற்றத்தை நாடிச் செல்வதாக அமைதிகொள்ளலாம்.” பேராசிரியர் பத்மநாதனின் இக்கூற்று இலங்கைத் தமிழருக்கு இந்நாட்டு மண்ணோடொட்டிய நீண்ட வரலாறு உண்டு என்பதைச் சுட்டிச் செல்லும் அதேவேளை, அவர்களது பண்டைய வரலாற்றின் பல பரிமாணங்களை இந்நாட்டோடு இணைத்துப் பார்க்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் 9
தமிழ் அரசு உருவாக்கம்
கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து அநுராதபுரம் பலம் மிக்க அரசியல் மையமாக விளங்கியபோது அதற்கு தெற்கிலும், வடக்கிலும் இன குழு நிலையில் இருந்து அரசு தோன்றுவதற்கு இடைக்கட்டமாக குருசில்கள். நிலக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் என்போரது ஆட்சி நடைபெற்றதை சமகாலப் பாளி இலக்கியங்கள், பிராமிக் கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன. இதில் சங்க காலத்திற்குச் சமமான காலத்தில் இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றியதை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்த பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் வேள், ஆள், பெருமகன் (பருமகன், பருமகள், பருமக) போன்ற பட்டப் பெயர்கள் உறுதி செய்கின்றன: வடமொழியில் “ராஜா” என்ற பட்டம் என்ன கருத்தைக் கொண்டிருந்ததோ அதே கருத்தை தமிழ்மொழிக்குரிய “வேள்” என்ற பட்டமும் கொண்டிருந்ததாக றோமிலாதபார் குறிப்பிடுகின்றார் (1995).
ஆனால் பண்டைய இலங்கையின் அரசியல் வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்து பின்னர் அநுராதபுர மன்னனாக வந்த சிங்கள மன்னர்களை இந்நாட்டுக்குரிய சுதேசிகள் எனக் கூறும் அதேவேளை சேனன், குத்திகன், எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களை வர்த்தகர், படையெடுப்பாளர், சோழர், பாண்டியர், அக்கரையில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை இந்நாட்டுக்குச் சொந்தமற்ற அந்நியர்களாகவே கூறுகின்றன. அதேவேளை நம்பகரமான தொல்லியற் சின்னங்களை ஆதாரம் காட்டி சிங்கள மக்களைப் போல் தமிழருக்கும் இந்நாட்டில் தொன்மையான வரலாறு உண்டு என வாதிடும் ஆய்வாளர்கள்கூட அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்தமேற்கூறப்பட்ட தமிழ் மன்னர்களைத்தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என அழுத்தி கூறுவதே பொருத்தமெனவும் வாதிடுகின்றனர். இத்தனைக்கும் புராதன காலம் தொட்டு ஈழத்துடன் தமிழகத்திற்கு இருந்த வர்த்தக, பண்பாட்டு உறவுகள் பற்றிக் கூறும் தமிழக வரலாற்று மூலங்களில் இக்காலத்தில் நிலவிய அரசியல் உறவுகள் பற்றியோ, படையெடுப்புகள் பற்றியோ எந்தச் சான்றுகளும் காணப்படவில்லை. காதலையும், வீரத்தையும் புகழ்ந்து பேசும் சங்க இலக்கியம், சேரன் செங்குட்டுவன் இமயம்வரை படையெடுத்துக்

Page 9
10 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
சென்று கல் கொண்டுவந்து கண்ணகிக்கு சிலைவடித்ததாகப் பெருமை பேசும் சங்க இலக்கியம் கற்பனைப்படுத்தியாவது ஏன் தமிழகத்தின் எல்லைக்கோட்டில் அமைந்திருந்த இலங்கையுடனான அரசியல் உறவு பற்றிக் கூறமுற்படவில்லை என்பது புரியவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தில் அழகர்மலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் கல்வெட்டு ஒன்று (வேங்கடசாமி 1983:53) ஈழத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனான“ஈழத்துவாவிராயன்” தமிழகம் வந்து அங்குள்ள சமணத்துறவிக்கு தானம் அளித்ததாகக் கூறுகிறது. இந்த வேறுபட்ட ஆதாரங்களை நோக்கும்போது அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ்மன்னர்களின் பூர்வீக வரலாற்றிற்குரிய சான்றாதாரங்களை தமிழகத்தில் தேடுவதைவிட ஈழத்தில் தேடுவதே பொருத்தமாகத் தெரிகிறது.
கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த சேனன், குத்திகன், எல்லாளன், புலகதன், பாகியன், பழையமாறன், பிழையமாறன், தாதிகன், நீலியன், வடுகன், தீஸன் போன்ற தமிழ் மன்னர்களது பெயர்கள் பாளி இலக்கியத்தில் அதன் மொழிக்கு ஏற்ப சேன, குத்திக, எலாரா, புலகத, பாகிய, பழையமாற பிழையமாற, தாதிக, நீலிய, வடுக, திஸ என மாறுதல் அடைந்து காணப்படுகின்றன. ஆயினும் இதையொத்த பெயர்கள் சமகாலத்தில் தமிழகத்தில் பயன்பாட்டிலிருந்ததற்கு சான்றுகள் காணப்படவில்லை. ஆனால் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் மேற்கூறப்பட்ட பெயர்களில் குறுநிலத் தலைவர்கள், வணிகர், அரச அதிகாரிகள், கப்பல் தலைவர்கள், கப்பலோட்டிகள் என சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்ததற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2001). இப்பின்னணியில் வைத்து பார்க்கும்போது அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களை இந்நாட்டிற் குரியவர்கள் எனக் கூறுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
சிங்கள மன்னர்களை இந்நாட்டிற்குரியவர்களாகக் கூறுவதற்கு அவர்கள் தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்து பின்னர் அநுராதபுரத்து மன்னர்களாக வந்ததை ஒரு சான்றாகக் காட்டப்படுகிறது. ஆனால் சிங்களச் சிற்றரசுகள் போல் சமகாலத்தில் தமிழ்ச் சிற்றரசுகள் வடஇலங்கையில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் ஆட்சிபுரிந்ததை மேற்கூறப்பட்ட

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் 1.
சான்றாதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கே தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்த சிங்கள மன்னர்களே காலப்போக்கில் அநுராதபுரத்தை வெற்றிகொண்டு ஆட்சி செய்தனர் எனப் பாளி இலக்கியங்கள் கூறுவதை உண்மையான வரலாறு என ஏற்றுக்கொண்டால், ஏன் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களே காலப்போக்கில் அநுராதபுரத்தை வெற்றிகொண்டு ஆட்சிபுரிந்த ஈழத்து மன்னர்கள் எனக் கொள்ளமுடியாது?
இக்கூற்று கற்பனையாகாது என்பதற்கு அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலும், வடஇலங்கையில் கந்தரோடை, உடுத்துறை, பூநகரி போன்ற இடங்களிலும் கிடைத்த நாணயங்கள் உறுதியான சான்றாக விளங்குகின்றன. தென்னிலங்கையில் எழுத்துப் பொறித்த 40-க்கு மேற்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அவையனைத்தும் இன்றைக்கு 2300 வருடங்களுக்கு முற்பட்டவை (Bopearachchi 1999). அவற்றுள் சில நாணயங்களில் உதிரன், மகாசாத்தன்,
Ulio - 1
தென்னிலங்கையில் 2200 வருடங்களுக்கு முன்னர் தமிழ் அரச மரபு இருந்ததைக் காட்டும் நாணயங்கள்.

Page 10
12 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
கபதிகஜபன், தஜபியன், சடநாகராசன் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. (படம்).
இப்பெயர்களின் இறுதி தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் “அன்” என்ற விகுதியில் முடிவதால் இவை தமிழரால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இவ்வகை நாணயங்களை வடிவமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் அச்சுக்கள் பல தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு இங்கிருந்த தமிழரால் இவை வெளியிடப்பட்டவை என்பது உறுதியாகிறது (Pushparatnam2000). பண்டையகால நாணயங்கள் பொதுவாக அரச வம்சத்தால் அல்லது சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களால் மட்டும் வெளியிடப்பட்டிருந்தன. இங்கே நாணயத்தில் வரும் பெயர்கள் தமிழருக்கு உரியதாக இருப்பதால் அவை ஈழத்தில் அரசமைத்திருந்த தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. இதை நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள
திஸபுரசடநாகராசன்” என்ற பெயர் பொறித்த நாணயம்.
“சடநாகராசன்” என்ற பெயர் (சடநாகராசன்) மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (புஷ்பரட்ணம் 2001) (படம் - 2).
இந்நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட தென்னிலங்கையில் திராவிட மக்களுக்குரிய பெருங்கற்காலப் பண்பாட்டுச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், இங்கு கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களில்தான் நாட்டின் ஏனைய வட்டாரங்களைவிட அதிக அளவில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் காணப்படுகின்றன. இவ்வாதாரங்கள் சங்ககாலத்
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 13
தமிழகத்திற்குச் சமமான காலத்தில் தென்னிலங்கையிலும் தமிழ் அரச மரபு தோன்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இந்த இடத்தில் மகாவம்சம் என்ற பாளி இலக்கியம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எல்லாளனுக்கும் துட்டகாமினிக்கும் நடந்த போராட்டம் பற்றிக் கூறும்போது துட்டகாமினி எல்லாளன் என்ற தமிழ் மன்னனை அநுராதபுரத்தில் வெற்றிகொள்வதற்கு முன்னர் அவனுக்குச் சார்பாக தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொள்ள நேரிட்டதாகக் கூறும் செய்தியை நினைவுபடுத்துவதும் பொருத்தமாகும்.
இவ்வாதாரங்களை வைத்து நோக்கும்போது சிங்கள மன்னர்களைப் போல் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களில் பலரும் தொடக்க காலத்தில் தென்னிலங்கையிலோ அல்லது வடஇலங்கையிலோ சிற்றரசர்களாக இருந்தே பின்னர் அநுராதபுர மன்னர்களாக ஆட்சிக்கு வந்தனர் எனக் கூறலாம் (புஷ்பரட்ணம் 2000). அவ்வாறு ஆட்சிக்கு வந்தோர் தாம் வெளியிட்ட நாணயங்களில் தம் இனத்தை அல்லது மதத்தை அடையாளம் காட்டும் தனித்துவமான சின்னத்தையும், நாட்டைக் குறிக்கும் பொதுவான சின்னத்தையும் பயன்படுத்தினர் எனக் கூறலாம். அதில் சிங்கள மன்னர்கள் சிங்கத்தையும், தமிழர்கள் காளையையும் பயன்படுத்தியதற்குப் பொருத்தமான சான்றுகள் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2001) (படம்-3).
LL-io - 3
தமிழ் மன்னரது நாணயம்
சிங்கள மன்னரது நானயம்
அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் சிங்கள மன்னர்களது நாணயங்களில் காணப்படும் ஒற்றுமையும், வேற்றுமையும்.

Page 11
14 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
வடஇலங்கையும் நாகச் சிற்றரசர்களும்
வடஇலங்கையை நாகதீபம் எனக் கூறும் மகாவம்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்தபோது நாகதீப மன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் போரைத் தீர்த்து வைத்ததாகக் கூறுகிறது (8:54). இதில் புத்தர் வருகை பற்றிய செய்தி ஓர் ஐதிகமாக இருப்பினும் இந்நூல் எழுந்த காலமாகக் கருதப்படும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வடஇலங்கை நாக மன்னர்களுடன் தொடர்புடைய பிராந்தியமாக இருந்ததை நினைவுபடுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். இதை உறுதிப்படுத்தும் வகையில் வடஇலங்கையில் கிடைத்த கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நான்கு கல்வெட்டுக்கள் நாகச் சிற்றரசுகளது ஆட்சிபற்றிக் கூறுகின்றன (Paramavithana 1970 nos 38-41). இருப்பினும் நாக மன்னர்களுடைய ஆட்சி பண்டைய காலத்தில் வடஇலங்கையில் மட்டுமே இருந்ததெனக் கூறமுடியாது. மாறாக கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களையும், நாணயங்களையும் எடுத்து ஆராய்ந்தால் நாட்டின் பல வட்டாரங்களில் இச்சிற்றரசுகள் ஆட்சிபுரிந்ததைக் காணமுடிகிறது. இதில் தமிழ்ச் சிற்றரசர்களும் அடங்குவர். தென்னாசியாவின் பல வட்டாரங்களில் “நாக” என்ற பெயர் வடமொழியில் நாஹ என்றே எழுதப்பட்டது.ஆனால் சமகாலத்தில் இலங்கையிலும், தமிழகத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இது தமிழில் “நாக” என்றும் ‘ணக” என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது (Mahadevan 1066,புஷ்பரட்ணம் 2). இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் எமது தொல்லியல் ஆய்வின்போது உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் வரும் பெயர் அமைந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவின் வட எல்லையில் உள்ள கடற்கரைக் கிராமங்களில் உடுத்துறையும் ஒன்றாகும். இக்கிராம மக்கள் 1994ஆம் ஆண்டு கிணறொன்றை வெட்டும்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் ஆழமான மையப் பகுதியில் மிகப் பழமையான நந்தி விக்கிரகத்துடன், புராதன குடியிருப்புகள் இருந்ததை உறுதிப்படுத்தும் மட்பாண்டங்கள், சங்கு சிற்பி, கூரை ஓடுகள் மற்றும் செங்கற்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் இதுபற்றிய செய்தி எமக்குத் தெரியப்படுத்தியதன் பேரில் நாம் அவ்வூர் மக்களது ஒத்துழைப்போடு அவ்விடத்தையும்,

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் 1岁
அதன் சுற்றாடல்களையும் ஆராய்ந்து பார்த்தோம். அப்போது சில இடங்களில் மிகப் பழமையான குடியிருப்புகள் இருந்ததை அடையாளம் காட்டும் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய மட்பாண்ட ஒடுகள், கல்மணிகள் மற்றும் பண்டைய காலப்பகுதியில் புழக்கத்திலிருந்த பலதரப்பட்ட நாணயங்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தது. இருப்பினும் 1995-இல் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கையால் தொடர்ந்தும் அவ்விடங்களில் தொல்லியல் ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த ஆய்வின்போது கண்டுபிடித்த தொல்பொருட்களைக் குறிப்பாக நாணயங்களை மிக அண்மைக் காலத்தில் மீண்டும் சுத்தம் செய்து ஆராய்ந்து பார்த்தபோது அவற்றுள் சில நாணயங்கள் இதுவரை வரலாற்று வெளிச்சத்திற்கு வராத புதிய வரலாற்று உண்மைகளைத் தருவனவாக இருக்கின்றன.அவற்றுள்“நாக” என்ற பெயர் குறித்து நிற்கும் நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
மிகச் சிறிய இச்செப்பு நாணயம் 0.7 சென்டிமீட்டர் விட்டமும், 15 கிராம் நிறையும் உடையது. இதன் முன்புறத்தில் விளிம்பை ஒட்டி சுவஷ்திகாசின்னமும், இதற்கு கீழே வலப்புறமாக குத்துவிளக்கும், இடப்புறமாக பிறைச்சந்திரனும், சூரியனும் இச்சின்னங்களுக்கு மத்தியில் பக்கவாட்டாக இரு மீன் சின்னமும் காணப்படுகின்றன. இவ்விரு மீன் சின்னங்களுக்கு கீழே நாணயத்தின் விளிம்பை ஒட்டியவாறு நான்கு பிராமி எழுத்துக்கள் சிறிதும், பெரிதுமாக பொறிக்கப்பட்டுள்ளன (படம்-4).
LuLo - 4
நாகபூமியா? நாகவம்சமா?
உடுத்துறையில் கிடைத்த நாணயம்.

Page 12
16 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
இவற்றின் எழுத்தமைதி கொண்டு இந்நாணயம் கி.பி.1-2ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டிருக்கலாம் எனக் கூறமுடியும். இதில் “நாக” என எழுதப்பட்டுள்ள முதலிரு பிராமி எழுத்தும் தெளிவாக உள்ளன. ஏனையஇருஎழுத்துக்களும் சற்றுதேய்வடைந்துஇருப்பதால் அதன் வாசகத்தை நிச்சயப்படுத்திக் கூறமுடியவில்லை. அவற்றை இரு எழுத்தாக எடுத்தால் “பூமி” எனவும், ஓர் எழுத்தாக எடுத்தால் “ஹ” எனவும் வாசித்து நாணயத்தில் உள்ள வாசகத்தை நாகபூமி அல்லது நாகஹ' அதாவது நாகனுடைய நாணயம் எனப் பொருள் கொள்ளமுடியும். ஆனால் தமிழகத் தொல்லியற் பேராசிரியர் சுப்பராயலுவும், இந்திய தொல்லியல் அளவீட்டுத் திணைக்கள முதுநிலைக் கல்வெட்டாய்வாளர் இராசவேலுவும் அதிலுள்ள மூன்றாவது எழுத்தை “வ” என எடுப்பதே பொருத்தம் எனக் கூறியுள்ளனர். அப்படியானால் நாணயத்தில் உள்ள வாசகத்தை நாகவம்சம்) எனப் பொருள் கொள்ளமுடியும்.
நாணயத்தின் பின்புறத்தில் வலப்புறமாக விளிம்பை ஒட்டி சுவஷ்திகா சின்னமும், மத்தியில் கிடையான அமைப்பில் ஒரு மீன் சின்னமும், இச்சின்னங்களுக்கு கீழே பிராமி எழுத்தில் பொலம் என்ற தமிழ்ச் சொல்லும் காணப்படுகின்றன. இதில் பொறிக்கப்பட்டுள்ள “பொலம்” என்ற சொல்லுக்கு பொன், பொன்னிறமான காசு, அழகு சிறந்தது எனப் பல கருத்துகள் உண்டு. இச்சொல் சங்ககாலம் தொட்டு நாணயத்தோடு தொடர்புடைய பெயராகக் பயன்படுத்தப்பட்டதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. அதற்கு ஐங்குறுநூற்றில் (310 : 1) பொலம்பசு பாண்டிற்காசு என்றும், குறுந்தொகையில் 66:41,48:3). பொலங்கல ஒரு காசு எனவும், பொலஞ்செய் கிண்கிணி காசு எனவும், அகநானூற்றில் (293 7, 315 12) பொலஞ்செய்காசு எனவும் வரும் குறிப்புகளைச் சான்றாகச் சுட்டிக்காட்டலாம். ஆயினும் இச்சொல் சமகாலத்தில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் அல்லது சங்ககால மன்னர்கள் வெளியிட்ட நாணங்களில் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இச்சொல் உயர்ந்த என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன (Parana-vithana 1970: no. 216). 960TTG) 5L6gdi) “பொலம்” என எழுதப்படவேண்டிய இச்சொல் அக் கல்வெட்டுக்களில் அதன்

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 17
பிராகிருத மொழிக்கு ஏற்ப “பொல” என்றே எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் வழக்கிலிருந்த பல தமிழ்ப் பெயர்கள் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் அதன் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பிராகிருத மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அப்பெயர்கள் FD 5 T6) நாணயங்களில் தமிழில் எழுதப்பட்டதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. அதை மேலும் உறுதிப்படுத்துவதாக மேற்குறித்த உடுத்துறை நாணயத்தில் வரும் “பொலம்” என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம்.
நாணயத்தின் முன்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள“நாக” என்ற பெயர் இவ்விடத்தில் சிறப்பாக ஆராய்ந்து பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தென்னாசியாவில் புழக்கத்தில் இருந்த பிராமிக் கல்வெட்டுக்களில் இப்பெயர் பிராகிருத மொழியில் “நாஹ” என்றே எழுதப்பட்டுள்ளன (Mahavamsa 1950, Culavamsa 1953, Paranavithana 1970). ஆனால் விதிவிலக்காக தமிழகத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களிலும், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சில பிராமிக் கல்வெட்டுக்களிலும் இப்பெயர் தமிழில் “நாக’ என்றும் “ண கா’ என்றும் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம் (Mahadevan 1961. no. 33). அதேபோல் தென்னிலங்கையில் கிடைத்த சில நாணயங்களிலும் இப்பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் (Bopearachchi 1999; no. 19, 25). இந்த வேறுபாடு இப்பெயருக்கு உரியவர்கள் தமிழர்கள் அல்லது இப்பெயரை எழுதியவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர்கள் எனக் கூறலாம். இவற்றின் அடிப்படையில் உடுத்துறையில் கிடைத்த நாணயத்தை தமிழ் மன்னன் அல்லது தமிழ்ச் சிற்றரசனே வெளியிட்டான் என எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
இந்நாணயத்தை தமிழ் மன்னன் வெளியிட்டதாகக் கொள்ளும்போது அவன் எந்த நாட்டைச் சேர்ந்த தமிழ் மன்னன் என்பது முக்கிய கேள்வியாக எழுகின்றது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சங்ககாலத் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘நாக’ என்ற பெயர் கொண்ட மன்னன் அல்லது வம்சம் நாணயங்களை வெளியிட்டதற்கோ அல்லது நாணயங்களை வெளியிடும் அளவுக்கு அப் பெயர் கொண்ட மன்னர்களது ஆட்சி அங்கு இருந்ததற்கோ

Page 13
18 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
இதுவரை எந்தச் சான்றுகளும் கிடைத்ததாகத் தெரியவில்லை. சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் தமது அரச இலட்சனையான மீனைத் தமது நாணயங்களில் பொறித்ததற்கு தமிழகத்திலும், இலங்கையிலும் (கந்தரோடை, பூநகரி, அநுராதபுரம், அக்குறுகொட) கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் சான்றாக உள்ளன. ஆயினும் அந்த நாணயங்கள் சதுரவடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நாணயத்தின் பின்புறத்தில் மட்டும் ஒரேயொரு மீன் சின்னம் அதுவும் கோட்டுருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது (Krishnamurthy 1997). ஆனால் உடுத்துறையில் கிடைத்த நாணயம் வட்டவடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் அதன் இருபுறத்திலும் மூன்று மீன்கள் கோட்டுருவத்திற்கு பதிலாக முழு உருவமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அதேவேளை உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் காணப்படும் சின்னங்களை ஒத்த வடிவமைப்பில் தமிழகத்தில் அதிலும் குறிப்பாகச் சங்ககாலத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டதற்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையில் இதே வடிவமைப்பில் பல நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதற்கு அவற்றை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்களே சான்றாகக் கிடைத்துள்ளன (Bopearachchi 1999). இவை உடுத்துறை நாணயம் இன்னொரு நாட்டிலிருந்து கொண்டு வரப்படாது இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்டதென்பதற்கு சிறந்த சான்றாக உள்ளது. இவற்றின் அடிப்படையில் இந்நாணயத்தை இலங்கையில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனே வெளியிட்டான் எனக் கூறமுடியும்.
மேற்கூறப்பட்ட சான்றுகள் நாட்டின் ஏனைய வட்டாரங்களைப் போல் வடஇலங்கையிலும் நாகச் சிற்றரசுகள் பண்டைய காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. இதனால் இங்கு ஆட்சியிலிருந்த அனைத்துச் சிற்றரசர்களும் தமிழர்களாக இருந்தனர் எனக் கூறமுடியாது. எப்படித் தென்னிலங்கையில் தமிழ்ச் சிற்றரசுகள் இருந்தனவோ அப்படியே வடஇலங்கையிலும் சிங்கள அரசுக்கு முன்னோடியான சிற்றரசுகள் இங்கிருந்தன எனக் கூறலாம். ஆனால் தென்னிலங்கையைப் போல் வடஇலங்கையும் பண்டுதொட்டு மக்கள் நடமாட்டத்திற்குரிய பகுதியாக இருந்ததைத் தொல்லியற் சான்றுகள் மட்டுமன்றிப் பாளி இலக்கியங்களும் எடுத்துக் கூறுகின்றன. அப்படியிருந்தும் அநுராதபுர அரசிற்கும்

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 19
தென்னிலங்கைச் சிற்றரசுகளுக்கும் இடையே இருந்த அரசியல் தொடர்புகளை விரிவாகக் கூறும் பாளி நூல்கள் அநுராதபுரத்திற்கு வடக்கே மிகக் கிட்டிய தொலைவில் இருந்த நாகநாட்டு சிற்றரசுகளுடனான அரசியல் உறவு பற்றிக் குறைந்த அளவுதானும் கூறவில்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட ஒருசில அரசியல் உறவுகள் பற்றி இந்நூல்கள் கூறியிருந்தாலும் அவை நாகநாட்டிலிருந்து அநுராதபுர அரசிற்கு எதிராக ஏற்பட்ட படையெடுப்புகள், கிளர்ச்சிகள் பற்றியதாகவே உள்ளன. இச்சான்றுகள் அநுராதபுரத்தின் அரசியல் வட்டத்திற்குள் உட்படாத வகையில் நாகநாட்டில் தமிழ் அரசமரபு தோன்றி வளர்ந்திருக்கலாம் என எண்ணத் தூண்டுகிறது.
நாகநாட்டில் தமிழ் இராசதானி
பண்டைய காலத்தில் ஏனைய சிற்றரசர்கள்அல்லது குறுநிலத் தலைவர்களது ஆட்சியைப் போல் தமிழர்களின் ஆட்சியும் நாட்டின் பல வட்டாரங்களில் இருந்தமை மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து தெரிகிறது. ஆயினும் இவையனைத்தும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாகத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் இவ்வாட்சியாளரிடம் ஏற்பட்ட ஆள்புல வேட்கையால் வலிமை மிக்க அரசுகளால் வலிமை குன்றிய அரசுகள் பல வெற்றி கொள்ளப்பட்டன. வேறுசில தம் பாதுகாப்புக் கருதி தமது அரசியல் மையங்களை இடம் மாறிக்கொண்டன. இதில் தமிழர்கள் தமது ஆட்சிக்குரிய மையமாக நாகநாட்டைத் தெரிவுசெய்திருப்பார்கள் என்பதற்குச் சாதகமான பல காரணங்களைக் காட்டலாம். அவற்றுள் பக்தி இயக்கத்திற்கு முக்கிய பங்குண்டு. தமிழகத்தில் ஏற்பட்ட இப்பக்தி இயக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியபோது அது இங்கு வாழ்ந்த தமிழ், சிங்கள மக்களிடையே இன முரண்பாட்டையும், இந்து, பெளத்தம் என்ற சமய வேறுபாட்டையும் ஏற்படுத்தக் காரணமாகியது. பேராசிரியர் கே.எம்.டி. சில்வா பக்தி இயக்கத்தின் செல்வாக்கே இலங்கைத் தமிழர் இன அடிப்படையில் தமது தனித்துவத்தை இட்டு முனைப்புப் பெறக் காரணம் எனக் கூறுகிறார் (1981). இதற்குப் பிரதேசஅடிப்படையில் தமிழர் தம் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நாகநாடு சாதகமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பக்தி இயக்கத்தின் செல்வாக்கு ஏற்படும் முன்னரே நாகநாட்டில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக

Page 14
20 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு திராவிட மக்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் நாகநாட்டில் நிலவிய இப்பண்பாடு பெருமளவுக்கு தென் தமிழ்நாட்டை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இப்பண்பாட்டு வழிவந்த மக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கலாம் என்பதற்கு பூநகரி வட்டாரத்தில் உள்ள மண்ணித்தலை, வெட்டுக்காடு, பரமன்கிராய், ஈழவூர், வீரபாண்டியன், முனை போன்ற இடங்களிலும், யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை, கந்தரோடை போன்றஇடங்களிலும் பெருங்கற்கால மட்பாண்டங்களில் பெறப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்களும், தமிழ்ப் பெயர்களும் சான்றாக உள்ளன (புஷ்பரட்ணம் 1993. கிருஷ்ணராஜா 1995, Ragupathy 1987). அவற்றுள் பூநகரி வட்டாரத்தில் பெறப்பட்ட சாசனங்களில் வரும் பெயர்கள் தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் “அன்” என்ற விகுதியுடன் முடிவடைவது சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை நினைவுபடுத்துகின்றன. இதையொத்த பெயர்களே தமிழகத்தில் கொடுமணல், அழகன்குளம், வல்லம், திருக்காம்புலியூர், காவேரிபூம்பட்டினம், அரிகமேடு போன்ற இடங்களில் கண்டுபிடித்த பெருங்கற்கால மட்பாண்டங்களிலும் பெறப்பட்டுள்ளன (Rajan 1994,Subbarayalu1991). இவ்வொற்றுமை இலங்கையின் ஏனைய வட்டாரங்களைக் காட்டிலும் நாகநாடு தமிழகத்தோடு நெருங்கிய ஒற்றுமை கொண்டிருந்ததைக் காட்டுகின்றன (படம்-5).
படம் - 5
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் 21
பூநகரியில் கிடைத்த 2300 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்.
தமிழகத்தில் பெளத்த மதம் வீழ்ச்சியடைந்தமைக்கு அது நிறுவனரீதியாக வளராமை முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டு வருகிறது. இக்காரணம் நாகநாட்டிற்கும் பொருந்தும், இங்குக் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களை நாட்டின் எனைய வட்டாரங்களில் கிடைத்த கல்வெட்டுக்களுடன் ஒப்பிடுகின்றபோது அவற்றிடையே பிரதான வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கலாம். நாகநாட்டில் கிடைத்த அறுபதுக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் பெளத்த குருமாருக்கு கொடுத்த குகை அல்லது கற்படுக்கை பற்றியே அதிகம் பேசுகின்றன. இந்த அம்சம் நாட்டின் ஏனைய வட்டாரங்களில் உள்ள ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும், அங்குள்ள பிற்பட்ட காலக் கல்வெட்டுக்கள் பலவற்றில் தனிப்பட்ட பெளத்த குருமாருக்குப் பதிலாக பெளத்த சங்கத்திற்கு, விகாரைக்கு நிலம், குளம், கால்வாய், நில வருவாய் போன்றவை தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தி காணப்படுகின்றன. அதில் மக்கள் சொத்தான குளமும், நிலமும் டிப்படியாக மன்னன் சொத்தாக மாறும் நிலையையும், இவற்றை னமாகப் பெற்ற பெளத்த சங்கங்கள் சொத்துடைய நிறுவனமாக றுவதையும் காணமுடிகிறது. இதனால் பொருளாதார ரீதியில் 1ளத்த சங்கத்தின் நிலங்களையும், குளங்களையும் நம்பி

Page 15
22 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
பெருமளவு மக்கள் வாழும் சூழ்நிலை உருவாகியது. இவை அரசுக்கு சமனாக பெளத்த சங்கமும் வளரக் காரணமாகியது. அதேவேளை பெளத்த குருமாரும் சமயக் கடமைகளில் மட்டுமன்றி பல சமூகக் கடமைகளில் ஈடுபட்டு மக்களோடு இணைந்து வாழ முற்பட்டதைக் காணமுடிகிறது. இந்த வளர்ச்சிப் போக்கை நாகநாட்டில் காணமுடியவில்லை. சமகாலப் பாளி இலக்கியங்கள்கூட கி.பி.5- ஆம் நூற்றாண்டின் பின்னர் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்கள் பற்றிக் கூறியதுபோல் நாக நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்கள் பற்றி அதிகம் கூறவில்லை. இந்த வேறுபாடுகள் நாகநாட்டில் பெளத்தமதம் நிறுவனரீதியில் வளரவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் செல்வாக்கு இலங்கையிலும் ஏற்பட்டமை நாகநாட்டில் பெளத்தமதம் மேலும் வீழ்ச்சியடையவும், இந்து மதம் மறுமலர்ச்சியடையவும் காரணமாக இருந்தது. பக்தி இயக்கத்தில் இந்து மதத்தையும், தமிழ் மொழியையும் முதன்மைப்படுத்திப் பாடிய நாயன்மார்கள் சமகாலத்தில் இலங்கையில் நாகநாட்டிற்கு வெளியே பல இந்து கோவில்கள் இருந்தும் நாகநாட்டில் உள்ள திருக்கேதீஸ்வரத்தையும், கோணேஸ்வரத்தையும் மட்டுமே பலவாறு புகழ்ந்து பாடியிருப்பது அக்காலத்தில் நாக நாட்டோடு தமிழருக்கிருந்த உறவையும், உரிமையையும் புலப்படுத்துவதாக உள்ளது.
இலங்கையின் பண்பாட்டு வரலாறு பாரதத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்தாலும் அரசியல் ரீதியான உறவுகள் தமிழகத்துடன் மட்டுமே நீண்டகாலத்திற்கு இருந்து வந்தது. இதனால் தமிழகத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட அரசியல் மாறுதல்கள் சமகாலத்தில் இலங்கை அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தின. இச்செல்வாக்கு அரசியல் ரீதியாக மட்டுமன்றி பண்பாட்டு ரீதியாகவும் சிங்கள மக்களை பெரிதும் பாதித்தமைதான் பாளி இலக்கியங்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் அன்னியராக, கொடியவர்களாக, படையெடுப்பாளர்களாக வருணிப்பதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். இதில் இலங்கைத் தமிழர்கள் புவியியல் அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் தமிழக மக்களோடு ஒன்றுபட்டவர்களாக

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் 23
இருந்ததால் தமிழ்நாட்டின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் தமிழருக்குச் சாதகமாகவே இருந்தன. இதில்நாகநாடு தமிழக இலங்கைப்பண்பாட்டு உறவின் குறுக்கு நிலமாகவும், அதன் தொடக்கவாயிலாகவும் இருப்பதால் தமிழர்களின் தனித்துவம் இங்கு தொடர்ந்தும் பாதுகாக்கப்பட அதிக வாய்ப்பாகியது.
மேற்கூறப்பட்ட காரணங்கள் நாகநாட்டில் சிற்றரசுக்குப் பதிலாக ஒரு மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட இராசதானி தோற்றம் பெறச் சாதகமாக இருந்தன எனக் கூறலாம். அதற்கான ஆக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டிருக்க வேண்டும். அதைத் தொல்லியற் சான்றுகள் மட்டுமன்றி சமகால இலக்கியங்களும் சூசகமாகக் கோடிட்டுக்காட்டுகின்றன. இக்காலகட்டத்தில் இருந்துதான் இதுவரை காலமும் பாளி இலக்கியங்களால் மறக்கப்பட்ட அநுராதபுர-நாகநாட்டு அரசியல் உறவு ஓரளவுக்கு கூறப்பட்டு வருகின்றன. அந்த உறவுகூட நாகநாட்டிலிருந்து அவ்வப்போது அநுராதபுர அரசிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், கிளர்ச்சிகள் பற்றியதாகவே உள்ளன. இந்த இடத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு கால இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாக வெளிநாட்டு யாத்திரிகரான கொஸ்மஸ் , இன்டிகோபிளியஸ்டிஸ் கூற்றினைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். அவர் கூற்றிலிருந்து இலங்கையில் இரு அரசுகள் இருந்தமையும் ஓர் அரசின் மன்னனிடம் செந்நிற மணிகள் காணப்படும் நிலப்பகுதியும், இன்னொரு மன்னனிடம் மிகப்பெரிய வாணிப நகரத்தை உள்ளடக்கிய துறைமுகமும் இருந்தமை தெரிகிறது.
இவ்விரு அரசையிட்டு அறிஞர்களிடையே இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பேராசிரியர் பரணவிதான செந்நிற மணிகள் காணப்படும் நிலப்பரப்பு தென்னிலங்கை அரசு எனவும், பெரிய வாணிப நகரத்தை உள்ளடக்கிய துறைமுகம் மாதோட்டம் எனவும் அது அநுராதபுர மன்னன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதி எனவும் கூறுகிறார். அதில் தென்னிலங்கை இன்னொரு சிங்கள மன்னராம் ஆளப்பட்டமைக்கு இக்காலத்தில் தென்னிலங்கை மன்னன் அநுராதபுர மன்னனுக்கு கீழ்ப்படிய மறுத்ததே காரணம் எனவும் விளக்கம் கூறுகிறார் (1961 : 184). இவரின் கருத்தே பொருத்தம் என்பது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்தாகும்

Page 16
24 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும்
(1972:5). ஆனால் முதலியார் இராசநாயகம் பெரிய துறைமுகமான மாதோட்டத்தை உள்ளடக்கிய பிராந்தியம் யாழ்ப்பாண அரசுக்கு உட்பட்ட பகுதியெனவும், மற்றயது அநுராதபுர அரசு எனவும் குறிப்பிடுகிறார். அண்மையில் பேராசிரியர் சிற்றம்பலம் இக்கருத்திற்குச் சார்பாக சமகால இல்க்கியங்களில் இருந்து மேலும் பல சான்றாதாரங்களை எடுத்துக்காட்டியுள்ளார் (1993 - 175 - 83). மேற்கூறப்பட்ட இரு கருத்துகளில் இரண்டாவது கருத்தே பொருத்தப்பாடாகத் தெரிகிறது. ஏனெனில் கொஸ்மஸ் இலங்கை வந்த காலத்திலிருந்து நாகநாடோ அல்லது அதன் எல்லைப் பரப்புக்குள் இருந்த மாதோட்டமோ சிங்கள மன்னர்களின் மேலாதிக்கத்திற்குள் நிலையாக உட்பட்டிருந்ததெனக் கூறக்கூடிய இலக்கிய ஆதாரமோ அல்லது தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. மாறாகச் சிங்கள இராசதானிகளின் வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்கள் இக்காலத்தில் தென்னிலங்கையைக் காட்டிலும் நாகநாட்டிலிருந்து தமிழரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளும், நடவடிக்கைகளும் அநுராதபுர அரசை ஆட்டம் காணச் செய்தன எனப் பொருள்படும் வகையில் பல செய்திகளைத் தருகின்றன.
கொஸ்மஸ் இலங்கை வந்த காலத்தில்தான் பூரீநாக என்பவன் (கி. பி. 619 - 25) தமிழர் படையுடன் நாகநாட்டைக் கைப்பற்ற முனைந்தான் எனப் பாளி நூல்கள் கூறுகின்றன. முதலியார் இராசநாயகம் இவனை ஒரு தமிழ் மன்னன் எனக் குறிப்பிடுகிறார். இதை தொடர்ந்து கி.பி. 8 - 9ஆம் நூற்றாண்டுகளில் மேலும் பல கிளர்ச்சிகள், படையெடுப்புகள் நாகநாட்டிலிருந்து அநுராதபுர அரசிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. அவை அடக்கப்பட்டதாகப் பாளி இலக்கியங்கள் கூறினாலும் அதே பாளி இலக்கியங்கள் அப்படையெடுப்புகள் தொடர்ந்தும் நிகழ்ந்ததாக கூறுகின்றன. இதே காலப்பகுதியில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த சிங்கள அரச வம்சத்தைச் சார்ந்த ஹட்டதத்தனே அரசனாக வரவேண்டும் என விரும்பிய மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தமிழகப் படைவீரர்களுடன் இணைந்து அவனை கி.பி. 661இல் மன்னனாக்கியதாகச் சூளவம்சம் கூறுகிறது. (45 17 - 20). கி.பி.9ஆம் நூற்றாண்டில் முதலாம் சேன மன்னன் அநுராதபுரத்தில்

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 25
ஆட்சி செய்துகொண்டிருந்தபோது (கி.பி. 833 - 853) பாண்டிய மன்னன் பூரீமாறயூரீபல்லவன் இலங்கை மீது படையெடுத்தான் எனவும், அப்போது மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களும் அவர்களுடன் இணைந்து சிங்கள அரசை வெற்றிகொண்டு பாண்டியரின் மேலாண்மையை ஏற்கச் செய்தனர் எனவும் சூளவம்சம் கூறுகிறது (49:84-5). இப்பாளி இலக்கியச் செய்திகளையும், பிற சான்றாதாரங்களையும் ஒப்பிட்டு இக்காலத்தில் மாதோட்டத்தில் இருந்து அநுராதபுரம் வரையான பிரதான மையங்களில் தமிழர் குடியிருப்புகளே இருந்தன என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் உண்மை எதுவாக இருப்பினும் இக்காலத்தில் அநுராதபுர மன்னனைத் தீர்மானிக்கும் அளவிற்கு நாகநாட்டில் தமிழரின் செல்வாக்கு அதிகரித்திருந்தது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. இதற்கு மேலும் ஒரு சம்பவத்தை பாளி இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டலாம். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழர்களது ஆதரவுடன் ஆட்சியைப் பெற்ற ஹட்டதத்தனுக்குப் பயந்த “மான” என்னும் சிங்கள இளவரசன் நாகநாட்டில் அடைக்கலம் பெற்றப் பின்னர் தமிழ்நாடு சென்றான் எனக் கூறுகிறது. இலங்கையின் பண்டைய கால வரலாற்றில் அநுராதபுரத்திற்கு தெற்கே மகாகமையில் சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்த சிங்கள அரசர்கள் பின்னர் அநுராதபுர மன்னர்களாக வருவதும், அநுராதபுரத்தில் பதவி இழந்தவர்கள் பின்னர் மகாகமையில் அடைக்கலம் பெறுவதும் பொது வழக்கமாக இருந்தது. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அநுராதபுரத்திற்கு வடக்கே நாகநாட்டிலிருந்து சிங்கள மன்னர்கள் ஆட்சிக்கு வந்ததற்கோ அல்லது பதவி இழந்த சிங்கள மன்னர்கள் நாகநாட்டில் அடைக்கலம் பெற்றதற்கோ எந்தச் சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு விதிவிலக்காக முதன் முறையாக “மான” என்ற சிங்கள இளவரசன் மகாகமையை விட நாகநாடு பாதுகாப்பெனக கருதி அங்கு அடைக்கலம் பெற்றுப் பின்னர் தமிழ்நாடு சென்றமை நாகநாட்டில் ஓர் அரசமரபு இருந்ததையே காட்டுகிறது. இவ்வரச மரபை அறுதியிட்டுக் கூறுவதில் தொல்லியற் சான்றுகளுக்கு முக்கிய பங்குண்டு.
நம்பகரமான தொல்லியற் சான்றுகளுள் நாணயங்களுக்கு முக்கிய இடமுண்டு. இவை கல்வெட்டுக்களைப்போல் விரிவான

Page 17
26 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
தகவல்களைத் தராவிட்டாலும் பண்டையகால எழுத்து, மொழி, மதம், ஆட்சிப்பரப்பு, அயல்நாட்டுத்தொடர்பு என்பவற்றை அறிவதற்குப் பெருமளவு உதவுகின்றன. இலங்கைத் தமிழர் கி.பி.13ஆம்நூற்றாண்டின் பின்னரேநாணயங்களை வெளியிட்டனர் என்ற கருத்து நீண்டகாலமாகக் கூறப்பட்டு வந்தது (Cogington 1024). ஆனால் அண்மைக்கால ஆய்வுகளில் இருந்து இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பதற்கு உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன (Pushparatnam 2002). அவை இலங்கைத் தமிழராலே வெளியிடப்பட்டன என்பதற்கு அவற்றுள் பலவற்றில் பொறிக்கப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சான்றாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசராக இருந்து வெளியிடப்பட்ட இந்நாணயங்கள் கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்பாக நாகநாட்டில் ஓர் இராசதானிக்குரிய நாணயமாக வெளியிடப்பட்டதற்கு அவற்றின் வடிவமைப்பு, பொறிக்கப்பட்ட சின்னங்கள், எடை, அளவு கண்டெடுக்கப்படும் பிராந்தியம் என்பவற்றில் உள்ள ஒருமைப்பாடு ஆதாரமாகக் காணப்படுகின்றன. இதில் கி.பி. 6-க்கும் கி.பி.10-க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டதாகக் கணிக்கப்படும் நாணயங்கள் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை நாணயத்தில் இரு குத்துவிளக்கிற்கும் இடையில் இரு புறமும் மீன் சின்னம் காணப்படுகின்றன. இரண்டாவது வகை நாணயத்தில் இரு குத்துவிளக்கிற்கு இடையில் முன்புறத்தில் காளையும், பின்புறத்தில் யானையும் காணப்படுகின்றன. மூன்றாவது வகை நாணயத்தில் முன்புறம் காளை, அல்லது யானையும் பின்புறம் குதிரை அல்லது மீன் காணப்படுகின்றன (படம்-6). இம் மூன்று வகை நாணயங்களும் சதுரவடிவில், வட்டவடிவத்திலும் காணப்படுவதோடு அவற்றில் பொறிக்கப்பட்ட சின்னங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை கால மாற்றத்தையும், வேறுபட்ட மன்னர்களால் வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டலாம்.
இந்த இடத்தில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெண் தெய்வ உருவங்கள் பொறிக்கப்பட்ட நீள்சதுர நாணயங்கள் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகும். இவை கி.மு. 3 - 2ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்ததை

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 27
LULLlib - 6
தொல்லியல் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இவை அதிக எண்ணிக்கையில் நாகநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் நாகநாட்டுக்குள்தான் இவை வெளியிடப்பட்டன எனக் கூறமுடியாத அளவிற்குப் பல அளவுகளிலும், வடிவங்களிலும் நாட்டின் பல வட்டாரங்களில் கிடைத்துள்ளன. இந்த வேறுபாடுகள் புராதன காலத்தில் நாட்டின் பல வட்டாரங்களில் சிற்றரசர்களாக இருந்து ஆட்சிபுரிந்த தமிழர்கள் அவ்வவ் வட்டாரங்களின் தேவை கருதி இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. ஆயினும் பிற்காலத்தில் இவை பெரும்பாலும் நாகநாட்டிற்குள் வெளியிட்டிருக்கலாம் என்பதற்கு அண்மையில் உடுத்துறை என்ற இடத்தில் கிடைத்த அரிய இரு நாணயங்கள் சான்றாக உள்ளன. நீண்டகாலமாக இந்நாணயங்கள் பற்றி ஆராய் தோர் இவற்றில் பெண் தெய்வம் மட்டுமே பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எமக்கு கிடைத்த நாணயத்தில் ஆண் தெய்வமும் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இதன் பயன்பாடு கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுடன் மறைந்துவிட்டது எனப் பலரும் கூறிவந்துள்ளனர். ஆனால் எமக்கு கிடைத்த நாணயத்தில் பின்புறத்தில் தமிழில் “ஓம்” என்ற வாசகம்

Page 18
28 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
காணப்படுகிறது. இவற்றின் எழுத்தமைதியிலிருந்து இந்நாணயம் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது என்பது தெரிகிறது. இந்த நீள்சதுர நாணயத்தின் இன்னொரு கட்ட வளர்ச்சியே கி.பி.10-11ஆம் நூற்றாண்டில் லஷ்மி என்ற பெயருடன் இலங்கைத் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட வட்டவடிவிலமைந்த [b1T600TuJLOT55b (Pushparatnam 2002). (LULLò-7).
இலங்கைத் தமிழர்கள் வெளியிட்ட தெய்வ உருவங்கள் பொறித்த நாணயங்கள். மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டில் முதலாம் இராசராசசோழன் நாகநாடு உட்பட அநுராதபுர அரசை வெற்றிகொள்வதற்கு முன்னர் நாகநாட்டில் ஒரு தமிழ் அரச மரபு இருந்தமை தெரிகிறது. இதற்குச் சமகால இலக்கியங்களிலும் சான்றுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண அரசு கால இலக்கியங்கள் சோழர் வருகையுடன் கதிரமலையில்
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 29
இருந்த தலைநகர் சிங்கை நகருக்கு மாறியதைச் சூசகமாகத் தெரிவிக்கின்றன. இவை பிற்பட்ட கால இலக்கியங்களாக இருப்பினும் சோழ அரசு மறைந்து பல நூற்றாண்டுகள் சென்ற நிலையிலும் நாகநாட்டிலிருந்த தலைநகர் சோழரோடு இடம்மாறியதாகக் கூறும் செய்தி பண்டைய வரலாற்று நினைவுகள் மாறவில்லை என்பதைக் காட்டுகிறது எனக்கொள்ளலாம். ஏறத்தாழ இதையொத்த காலத்தில்தான் தென்னிந்திய மன்னன் ஒருவன் நாகநாட்டின் மீது படையெடுத்தான் என சூளவம்சம் கூறுகிறது (Culavamsa 53 : 12-16). oùLbLD66T60TG06OTë élabff où J T6qJ55).L வம்சத்தவன் எனவும் வேறுசிலர் முதலாம்பராந்தக சோழன் எனவும் கூறுகின்றனர். இம்மன்னன் யாராக இருப்பினும் இக்காலத்தில் முதலாம்பராந்தக சோழன் இலங்கை மீது படையெடுத்து வடஇலங்கையை வெற்றிகொண்டான் எனச் சமகாலச் சோழக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இதன் மூலம் இவன் “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்” என்ற பட்டம் பெற்றதை அவனது 38வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இதைக் கலிங்கத்துப்பரணியும், மூவருலா போன்ற இலக்கியங்களும் உறுதிப்படுத்துகின்றன. தமிழக வரலாற்று மூலங்களில் முக்கியப்படுத்திக் கூறப்படும் இச்செய்தி சமகால அநுராதபுர அரசின் வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்க ளில் மறைமுகமாகத்தானும் கூறப்படவில்லை. அப்படியானால் பராந்தக சோழன் ஈழத்தில் பெற்ற வெற்றி நாகநாட்டை வென்ற செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் பராந்தக சோழனது படையெடுப்பைத் தொடர்ந்து முதலாம் இராசராசசோழன் இலங்கையில் அடைந்த வெற்றியில் நாகநாடு உட்பட அநுராதபுர அரசும் உள்ளடங்கியிருந்ததை இலங்கை, தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் மட்டுமன்றி ஈழத்துப் பாளி இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. இவ்வெற்றிக்காக இராசராச சோழன் பூரீலங்கவீர என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான் என்பதை இரு நாடுகளிலும் கிடைத்த நாணயங்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பராந்தகசோழனைப் பொறுத்தவரை ஈழத்து வெற்றியைத் தொடர்ந்து அவன் கல்வெட்டுக்களில் ஈழக் காசு, ஈழக் கருங்காசு என்ற செய்தி காணப்படுகிறது. இதில் வரும் ஈழம் இலங்கையோடு தொடர்புடையதென்பதில் சந்தேகமில்லை.

Page 19
30 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
தமிழகத்தில் ஈழக் காசு பற்றிய செய்தி 21 கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அவற்றுள் 17 கல்வெட்டுக்கள் முதலாம் பராந்தகன் காலத்தோடு தொடர்புடையது. இப்புள்ளி விபரம் பராந்தகசோழன் காலத்தை அடுத்து இதன் பயன்பாடு படிப்படியாக மறைந்ததைக் காட்டுகிறது. இத்தனைக்கும் பராந்தகன் பெயரில் ஒரு நாணயம் இதுவரை தமிழகத்தில் கிடைக்கவில்லை (Nagaswamy 1981). ஆனால் அவனால் வெளியிடப்பட்டதெனக் கருதப்படும் “உரக” என்ற பெயர் பொறித்த நாணயம் தமிழகத்திலும், வடஇலங்கையிலும் பரவலாகக் கிடைத்துள்ளன. இந்நாணயம் இலங்கையில் உள்ள அக்கசாலையில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதை அவற்றின் வடிவமைப்பு, அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சின்னங்கள், உலோகம் போன்ற அம்சங்கள் சமகால தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இருந்து வேறுபட்டிருப்பதைச் சான்றுகளாகக் காட்டலாம் (Pushparatnam 2002). அவற்றுள் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள “உரக” என்ற வடமொழிச்சொல் மிக முக்கியத்துவமுடைய சான்றாக உள்ளது (படம்-8).
Lo - 8
“உரக” என்ற வடமொழிச்சொல்லுக்கு பாம்பு நாகம், நாகர் (உரகர்) எனப் பல கருத்துண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை, மூவர் தேவாரம், கலிங்கத்துப்பரணி போன்ற தமிழ் நூல்களில் நாகம் என்பதைக் குறிக்க உரக என்றும், நாகரைக் குறிக்க உரகர் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன (பாலசுப்பிரமணியம் 1988). கி.பி. 8ஆம் நூற்றாண்டில் சோழநாட்டுக் காவிரியின் தென்கரையில் உள்ள பாம்பூர் என்ற இடம் உரகடரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதை பல்லவர்காலக் கூரம் செப்பேடுகள் கூறுகின்றன (பல்லவ செப்பேடுகள் முப்பது 44, 65). ஏறத்தாழ இதே
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 31
காலப்பகுதியில் இலங்கையில் இருந்த நாகநாடு உரக என்ற பெயரால் அழைக்கப்பட்டதை திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி என்ற இடத்தில் கிடைத்த முற்காலச் சோழக் கல்வெட்டில் வரும் “உராகிரிகாம” என்ற இடப்பெயருடன் உறுதிப்படுத்துகிறது (பத்மநாதன் 1998: 17-8).
தமிழ்நாட்டு மன்னர்கள் இன்னொரு நாட்டை வெற்றிகொள்ளும் போது அந்நாட்டின் பெயரில் நாணயங்கள் வெளியிட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டை வென்றதற்காக “சோழநாடு கொண்டான்” என்ற பெயரிலும், முதலாம் இராஜராஜ சோழன் சேரநாட்டை வெற்றிகொண்டதன் நினைவாக “மலைநாடுகொண்ட சோழன்” என்ற பெயரிலும், இலங்கையை வென்றதற்காக “பூரீலங்கவீர” என்ற பெயரிலும், இராஜேந்திரசோழனது கங்கைநாட்டு வெற்றிக்காக “கங்கைகொண்ட சோழன்” என்ற பெயரிலும் நாணயங்கள் வெளியிட்டதை உதாரணமாகக் குறிப்பிடலாம் (Nagaswamy 1981) இவற்றின் அடிப்படையில் பராந்தக சோழன் வெளியிட்ட நாணயத்தில் வரும் “உரக” என்ற பெயர் அவன் வெற்றிகொண்ட நாகநாட்டைக் குறித்ததெனக் கருத இடமுண்டு. இதையே அவன் காலக் கல்வெட்டுக்களில் வரும் ஈழக் காசு என்ற சொற்றொடரும் உறுதிப்படுத்துகிறது. ஈழக் காசு என்ற பெயர் சோழருக்கு முன்பாக இலங்கைத் தமிழரால் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். இதற்கு அநுராதபுரத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ்க் கல்வெட்டு சிறந்த சான்றாகும். இக்கல்வெட்டில் வரும் குமாரகணம் என்பது தமிழ்நாட்டிற்குரிய வணிக கணம் என்ற கருத்து நீண்டகாலமாக இருந்து வந்தது இந்திரபாலா1972). ஆனால் அண்மையில் அக்கல்வெட்டை ஆய்வு செய்த இந்தியாவின் தலை சிறந்த கல்வெட்டாய்வாளரான சுப்பராயலும், பேராசிரியர் பத்மநாதனும் குமாரகணம் என்ற பெயரில் ஒரு வணிக கணம் தமிழகத்தில் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி கல்வெட்டில் வரும் “குமாரகணத்துப்பேரூர்” என்ற சொற்றொடரில் இருந்து அதை உள்ளூரில் இயங்கிய வணிக கணமாகக்கொள்வதே பொருத்தம் என முடிவு செய்துள்ளனர். அத்துடன் இக்கல்வெட்டின் காலத்தையும் அவற்றின் எழுத்தமைதி கொண்டு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டெனக் கணித்துள்ளனர் (பத்மநாதன் 1999).

Page 20
32 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
இக்கல்வெட்டில்தான் இக்குமாரகணத்து வணிகரால் இங்கிருந்த ஆலயத்திற்கு ஈழக் காசு வழங்கியச் செய்தி முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து ஏற்கெனவே இங்கு வழக்கிலிருந்து ஈழக் காசு என்ற பெயரையே முதலாம் பராந்தக சோழன் நாகநாட்டு வெற்றியைத் தொடர்ந்து தனது கல்வெட்டுக்களிலும் பயன்படுத்தினான் எனக் கருதலாம். பொதுவாகச் சோழர் தமது கல்வெட்டுக்களைத் தமிழில் வெளியிட்டிருந்தாலும் வெளிநாட்டு வர்த்தகத்திற்காக நாணயங்களில் வரும் பெயர்களை வடமொழிகளில் வெளியிடுவது வழக்கமாகும். இங்கே பராந்தக சோழன் நாகநாட்டைக் குறிக்க தான் வெளியிட்ட நாணயங்களில் “உரக” என்ற வடமொழிப் பெயரையும், அதேநாகநாட்டைத் தனது கல்வெட்டுக்களில்"ஈழம்" என்றும் குறித்தான் என்றும் கூறலாம். அப்படியானால் நாகநாடிற்கு ஈழம் என்ற இன்னொரு பெயரும் இருந்திருக்க வேண்டும்.
இலங்கையின் நீண்டகால வரலாற்றில் ஈழம் என்ற பெயர் சில சந்தர்ப்பங்களில் முழு இலங்கையைக் குறிப்பதாக பொருள் கொள்ளப்பட்டாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிலும் குறிப்பாக பராந்தகன் காலத்தில் அப்பெயர் வடஇலங்கையை அதாவது நாகநாட்டைக் குறித்ததற்கு பல சான்றுகள் காணப்படுகின்றன. கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதயணன் பெருங்கதையும், பிற்பட்ட மயிலநாதர் உரையும் தமிழகத்தைச் சுற்றியுள்ள நாடுகளாக ஈழத்தையும், சிங்களத்தையும் தனித்தனியாகக் கூறுகின்றன. (வேலுப்பிள்ளை 1986: 10). பிற்காலப் பாண்டியர்காலக் கல்வெட்டில் இப்பெயர் நாகநாட்டையும் (ARE 1917 No.588of1916), விஜயநகரக்கல்வெட்டில் நாகநாட்டிற்குட்பட்ட யாழ்ப்பாணத்தையும் குறிக்கிறது (S. No 778), இந்த வேறுபாடு ஆள்புலத்தைக் குறிக்காது அரச மையங்கள் அமைந்திருந்த இடங்களைக் குறித்திருக்கலாம். ஏனெனில் விஜயநகர காலத்தில்
யாழ்ப்பாணத்தில் இருந்த தலைநகர் பாண்டியர் காலத்தில்
யாழ்ப்பாணத்தில் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. இவற்றிலிருந்து இக்காலத்தில் இலங்கையில் இருந்த இரு அரசுகளில் பராந்தக சோழன் நாகநாட்டை வென்றான் என்பது தெரிகிறது. இதனால்தான் சிங்களவரலாற்று மூலங்களில் மெளனம் சாதிக்கப்பட்ட பராந்தகனது நாகநாட்டு வெற்றி தமிழக வரலாற்று மூலங்களில் முக்கியப்படுத்திக் கூறப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் அநுராதபுர அரசின் வரலாற்றை

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 33
மையமாகக்கொண்டெழுந்த பாளி இலக்கியங்கள் அதன் அதிகார வட்டத்திற்கு உட்படாது இருந்த நாகநாட்டின் வரலாற்றைக்
கூறவேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் முதலாம் இராஜராஜ சோழனது வெற்றி அநுராதபுர அரசையும் உள்ளடக்கி இருந்ததால் அந்த வெற்றி பாளி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
கி.பி. 993-இல் இராஜராஜசோழன் அநுராதபுரத்தைக் கைப்பற்றிய போது அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாகநாடு மீண்டும் சிங்கள மன்னர்களது ஆட்சி கி.பி. 1070இல் பொலநறுவையில் ஏற்பட்டபோது அதன் ஆதிக்கம் நாகநாட்டில் ஏற்பட்டதற்கு உறுதியான எந்தச் சான்றும் காணப்படவில்லை. மாறாக முற்பட்ட காலங்களைவிட தமிழ்க் குடியிருப்புகளின் பெருக்கமும், அரசில் ஆதிக்கமும் ஏற்பட்டதற்கே அதிக சான்றுகள் காணப்படுகின்றன. இக் காலச் சிங்க ளக் கல்வ்ெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும் தமிழரைக் குறிக்க தமிழர், சோழர், பாண்டியர் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இவர்களுள் சோழர், பாண்டியர் எனக் குறிப்பிடப்படும் அனைவரையும் அவ்வப்போது தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்பதைவிட இந்நாட்டுக்குரிய தமிழர்களாக இருந்தனர் எனக் கூறுவதே பொருத்தமாகும். ஏனெனில் தமிழகக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் இவர்கள் ஈழத்திற்குரிய சோழர்களாகவே (ஈழச் சோழர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 'ሎ
இதற்கு முன்பொரு காலத்தில் சோழ நாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் இங்கு பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்கள் 1011ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழர் ஆட்சியின் பின்னர் தம்மை ஈழச்சோழர் என அழைத்துக்கொண்டமை காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் தனியொரு நாடாக ஆட்சி செய்யப்பட்ட கொங்கு நாட்டில்கூட பிற்காலத்தில் சோழர் ஆட்சி ஏற்பட்டு மறைந்ததன் பின்னர் அங்கிருந்த சுதேச வம்சங்கள் தம்மை கொங்குச் சோழர் என அழைத்துக்கொண்டதை இவ்விடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். சோழ வீழ்ச்சியைத் தொடர்ந்து பொலநறுவையில் ஏற்பட்ட சிங்கள மன்னர்களது ஆட்சி கி.பி. 1215வரை நிலைத்திருந்தாலும் இவர்களது ஆட்சிக்கும், பெளத்த மதத்திற்கும் தமிழரால் ஆபத்து என்ற எச்சரிக்கை இச்சிங்கள மன்னர் சிலரால் வெளியிடப்பட்ட கல்வெட்டுக்களிலும் பாளி இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. இதற்கு வடக்கே நாகநாட்டிலிருந்த தமிழ் அரசு ஒரு காரணமாக இருக்கலாம்.

Page 21
34 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
இக்காலத்தில் ஓர் தமிழ் அரசு இருந்ததென்பதற்கு அறுதியிட்டுக் கூறும் நம்பகரமான சான்றுகளுள் நாகநாட்டில் கிடைத்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இந்நாணயங்களை அவற்றின் வடிவமைப்பு, சின்னங்கள், அளவு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு முப்பது வகையாகப் பிரிக்க முடிகிறது. ஆயினும் அவற்றை இருபிரதானபிரிவுகளுக்குள் அடக்க முடிகிறது. முதலாவது பிரிவில் உள்ள நாணயத்தின் முன்புறத்தில் இடம் அல்லது வலப்புறம்பார்த்தநிலையில் பீடத்தின்மேல் அமர்ந்திருக்கும் காளை பிரதான சின்னமாக உள்ளது. இதற்கு இருபுறமும் குத்துவிளக்கும், இவற்றிற்கு மேலே விளிம்பை ஒட்டிப் பிறைச்சந்திரனும் காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறத்தில் பீடத்தின் மேல் கிடையாக அல்லது பக்கவாட்டில் இரு குத்துவிளக்கிற்கு இடையில் இரு மீன் சின்னங்கள் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2001) (படம்-9).
இவ்வகையைச் சேர்ந்த வேறு சில நாணயங்களின் முன்புறத்தில் காளை அல்லது தனியொரு மீன் சின்னம் காணப்படுகின்றது. இவை பெரிதாகவும், மிக அழகாகவும் உள்ளன. பின்புறத்தில் ஒன்று அல்லது இரண்டு மீன் சின்னத்துடன் சங்கு, பூரணகும்பம்,
LiLo - 9
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 35
செண்டு, தாமரைக் கொடி போன்ற பிற சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. வேறு சிலவற்றில் காளைக்குப்பதிலாக குதிரை பின்புறத்தில் இரண்டு அல்லது மூன்று மீன் சின்னம் காணப்படும். இவை காலவேறுபாட்டை அல்லது நாணயங்களை வெளியிட்ட மன்னர்களுக்கிடையிலான வேறுபாட்டைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம். இரண்டாவது பிரிவில் இடப்புறம் பார்த்த நிலையில் நிற்கும் குதிரை. இதன் முகத்திற்கு கீழே பலிபீடம் காணப்படுகிறது. விளிம்பையொட்டி மேல்புறமாக இடப்புறத்தில் சந்திரனும், மத்தியில் சங்கும் காணப்படுகிறது. பின்புறத்தில் பீடத்தின் மேல் கிடையாகவுள்ள மூன்று மீன் சின்னங்கள் இரு குத்துவிளக்குகளுக்கிடையில் உள்ளன. இவ்வகை நாணயங்கள் சிலவற்றின் பின்புறத்தில் வரும் பீடத்துடன் காணப்படும் மீன் சின்னங்கள் சில நாணயங்களில் கடலினுள் இருக்கும் தாவரபட்சியை உண்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பாக கவனிக்கத்தக்க அம்சம் சில நாணயங்களில் “ணக” என்றும் சிலவற்றில் “ந” என்று அல்லது “ஓம்’ என்று வாசிக்க கூடிய எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவை நாகநாட்டை அல்லது நாகவம்சத்தைக் குறிக்கலாம். மேற்கூறப்பட்ட இருவகை நாணயங்கள் எமது கள ஆய்வின்போது மட்டும் 1360-க்கு மேல் வன்னியில் குறிப்பாக மாதோட்டம், பூநகரி போன்ற இடங்களில் கிடைத்துள்ளன (படம் - 10). இவை இலங்கையில்கூட நாகநாட்டிற்கு வெளியே மிக அரிதாகவே அநுராதபுரத்திலும், தென்னிலங்கையிலும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1215-இல் பொலநறுவையைக் கைப்பற்றிய கலிங்க மாகன் தமிழருக்குச் சார்பாகவும், சிங்கள மக்களுக்கு எதிராகவும் ஆட்சி புரிந்ததால் சிங்கள இராசதானி தெற்கு நோக்கி படிப்படியாக இடம்மாறத் தொடங்கியது. இதனால் பொலநறுவையில் ஆட்சிபுரிந்த கலிங்கமாகன் காலப்போக்கில் தனது அரச மையத்தை நாகநாட்டிற்கு இடம்மாற்றியதாகத் தெரிகிறது. இந்த மையம் எங்கிருந்ததென்பதை கலிங்கமாகன் வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் குறிப்பிடாவிட்டாலும் அவனது, படைகள், கோட்டைகள் நிலைகொண்டிருந்த இடங்களாக பொலநறுவை, குருந்தி, மன்னார், மாதோட்டம், இலுப்பைக்கடவை, காக்கையன்
குளம், பதவியா, கந்தளாய், கொட்டியரம் வலிகாமம், ஊர்காவற்துறை

Page 22
36 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
ஆகிய இடங்களைக் குறிப்பிடுகிறது (Culavamsa 83. 15 - 19). இவற்றுள் பொலநறுவை தவிர்த்த அனைத்துஇடங்களும்நாகநாட்டில் இருப்பதால் அவனது அரசு நாகநாட்டில் இருந்ததென்பதில் ஐயமில்லை. இச்சந்தர்ப்பத்தில்தான் சாகவன் என்னும் மன்னன் நாகநாட்டு மன்னனாக இருந்து தம்பதேனியாவில் ஆட்சிபுரிந்த சிங்கள மன்னருக்கு எதிராகப் படையெடுத்தான் என்ற செய்தி பாளி நூல்களில் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியாமலையில் உள்ள 262ஆம் ஆண்டுக்குரிய வீரபாண்டியனது கல்வெட்டொன்று சிங்கள அமைச்சன் உதவி கேட்டதன் பேரில் பாண்டியப்படை நாகநாட்டின் மீது படையெடுத்து ஆட்சியிலிருந்த சாகவ மன்னனைக் கொன்று பாண்டியருக்கு அடிபணிந்த அவனின் மைந்தனை ஆட்சியில் அமர்த்தி தமது அரச சின்னமான இரட்டைக் கயலை கோணாமலையிலும், திரிகூடகிரியிலும் பறந்துகொண்டிருந்த சாகவனின் கொடியில் பொறித்ததாகக் கூறுகிறது (Puthukkoddai Inscriptions.239.no 366). வன்னிப்பிராந்தியத்தில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்போது கிடைத்த பல நாணயங்களில் பூரீவாகவ என்ற பெயர் காணப்படுகிறது (புஷ்பரட்ணம் 2001) (படம் -1.
Lu Lid - 11
இப்பெயரைப் பேராசிரியர் பத்மநாதன் பூரீசாகவன் என வாசிக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார். மேற்படி இரு ஆதாரங்களில் இருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நாகநாடு சாகவனாலும், அவன் மைந்தனாலும் ஆட்சி செய்யப்பட்டமை உறுதியாகத் தெரிகிறது.
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 37
நாகநாட்டில் அரச மரபு இருந்ததென்பதற்கு நாம் காட்டிய தொல்லியற் சான்றுகளில் நாணயங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆயினும் இந்நாணயங்கள் நாகநாட்டு அரசால்த்ான் வெளியிடப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தப்படவேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு. மேற்காட்டப்பட்ட நாணயங்களில் காளை, மீன்சின்னம் பொறித்த நாணயங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து அண்மைக் காலம்வரை பலராலும் ஆராயப்பட்டுவந்துள்ளன. அவர்களுள் பிரின்செப (1856), எலியட், சட்டோப்பாத்திய, கொட்றிங்ரன், பிடுப்பே, அண்மையில் மிக்சனர் (1999) போன்ற நாணயவியலாளர்கள் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாணயங்கள் வடஇலங்கையில் இருந்தே கிடைத்தன என்பதைத் தமது ஆய்வுகளில் தனித்துக் காட்டத் தவறவில்லை. ஆனால் தமிழகத்தில் பாண்டிய வம்சம் வெளியிட்ட நாணயங்களிலும் மீன், காளை போன்ற சின்னங்கள் இருப்பதால் இவற்றைப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களாக இருக்கலாம் என்ற கருத்தையும் குறிப்பிடத் தவறவில்லை. ஆனால் இக்கூற்று எந்த வகையிலும் நாகநாட்டில் கிடைத்த நாணயங்களுக்குப் பொருந்துமாறில்லை.
1. தமிழகத்தில் கி.பி.4ஆம் நூற்றாண்டுவரை வெளியிட்ட நாணயங்களில் மீன் கோட்டுருவமாகவே காட்டப்பட்டுள்ளன. ஆனால் நாகநாட்டில் கிடைத்த நாணயங்களில் அவை முழு உருவமாகவே வார்க்கப்பட்டுள்ளன (படம் -12).
uLab - 12

Page 23
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
தமிழகத்தில் பாண்டியர் மதுரையில் ஆட்சி புரிந்த போது ஒரு மீன்சின்னத்தையும் திருநெல்வேலியை வெற்றிகொண்டபோது இரு மீன்சின்னத்தையும் தமது நாணயங்களில் பொறித்தனர். இலங்கையை வெற்றிகொண்டபோதுகூட தாம் இரு மீன் சின்னத்தையே பொறித்ததாகத் தமது கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் கிடைத்த எந்தப்பாண்டியர் கால நாணயங்களிலும் இரண்டுக்கு மேற்பட்ட மீன் சின்னம் காணப்படவில்லை. ஆனால் நாகநாட்டில் கிடைத்த எல்லாக் காலகட்டநாணயங்களிலும் இரண்டு முதல் ஐந்துவரையிலான மீன் சின்னம் காணப்படுகிறது (படம்-13).
ULib - 13
நாகநாட்டில் கிடைத்த பெரும்பாலான நாணயங்களில் மீன் சின்னம் மூன்று கோடுகளால் ஆனபீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இப்பீடம் இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களுக்கேயுரிய சிறப்பம்சம் (படம்-14). இதைத் தமிழக நாணயங்களில் மட்டுமன்றி இந்திய நாணயங்கள் எதிலும்
காணமுடியவில்லை.
LILLlib - 14
 
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 39
தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் பெரும்பாலும் பிற சின்னங்களுடன் இணைந்தே மீன் சின்னம் காணப்படும். ஆனால் நாகநாட்டு நாணயங்களில் அதுவே முக்கிய சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
நாகநாட்டுநாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளநாணயங்களின்
தத்துரூபமான வடிவமைப்பும், அழகும், தெளிவும் தமிழக நாணயங்கள் எதிலும் காணப்படவில்லை (படம்-15).
U Lo - 15
தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி வலுவிழந்து நாணயங்கள் வெளியிடாத காலகட்டத்தில் கூட நாகநாட்டில் மீன் சின்னம் பொறித்த நாணயங்கள் வெளியிட்டதற்குச் சான்றுகள் உண்டு. குறிப்பாக கி.பி. 4ஆம் -9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும், சோழருக்கு அடிபணிந்து திறைசெலுத்திய கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கும் 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலும் பாண்டியர் நாணயங்கள் வெளியிட்டதற்கு இதுவரை எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை. ஆனால் இக்காலத்தில் எல்லாம் நாகநாட்டில் மீன் பொறித்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியிட்டதற்குச் சான்றுகள் உண்டு (LLlb-16).

Page 24
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
படம் - 16
சங்ககால நாணயங்களில் அரிதாகப் பொறிக்கப்பட்ட குதிரை பிற்காலத் தமிழக நாணயங்களில் பெரும்பாலும் இடம்பெறவில்லை. ஆனால் நாகநாட்டு நாணயங்களில் அவை ஒவ்வொரு காலப்பகுதியிலும் காளையைப் போல் முக்கிய சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளன (படம்-17)
U Lo - 17
தமிழகத்தில் சங்ககாலம்தொட்டு கி.பி.13ஆம் நூற்றாண்டுவரை பாண்டியர், சோழர் வெளியிட்ட பல நாணயங்கள் எமது ஆய்வின் போது நாகநாட்டில் கிடைத்துள்ளன (படம்-18). ஆனால் நாகநாட்டில் ஆயிரக்கணக்கில் கிடைத்த
 
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 41
நாணயங்கள் (அண்மையில் காளையும் மீன் சின்னமும் பொறித்த நாணயங்கள் தமிழகத்தில் மதுரை, இராமேஸ்வரப் பகுதியில் அரிதாகக் கிடைத்துள்ளன) தமிழகத்தில் இதுவரை வெளிவந்த எந்த ஆய்விலும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவை தமிழ்நாட்டு வம்சங்களால் வெளியிடப்பட்டிருந்தால் நாகநாட்டை விடத் தமிழகத்தில்தான் கூடுதலாகக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.
நாகநாட்டு நாணயங்களில் வருவது போன்ற காளையை நாணயங்களில் பொறிக்கும் மரபை பாண்டியர் மட்டுமன்றி பிற தமிழ்நாட்டு வம்சங்களும், இந்திய வம்சங்கள் பலவும் பின்பற்றியதற்குப் பல சான்றுகள் உண்டு. பல்லவர், சோழரும் தமது நாணயங்களில் முக்கியச் சின்னமாகப் பயன்படுத்தியுள்ளனர். இம்மரபு ஈழத் தமிழரிடமும் பண்டு தொட்டு இருந்து வந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. அதேவேளை சில தனித்துவமான அம்சங்களும் அதில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சங்க காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் குறிப்பாக பாண்டிய நாணயங்களில் காளை ஒரு முக்கிய சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது. அனால் இவை நிற்கும் நிலையிலேயே Ð GTGTGOT. (Krishnamurthy, 1997, Plate-1-19 Nos: 1-253). GOTTGd சமகாலத்தில் இலங்கை நாணயங்களில் நிற்கும் நிலையிலும், அமர்ந்த நிலையிலும் இவ்வுருவம் காணப்படுகிறது. இவ்வடிவம் பண்டைய காலத்திலேயே இலங்கையில் ஏற்பட்டதை அவற்றிற்குரிய அச்சுக்கள் கிடைத்திருப்பதைக்கொண்டு உறுதிப்படுத்த முடிகிறது. (Bopearachchi 1999. 106-8, Plate 23-4. Nos: K14-K31). geg5 6T தொடர்ச்சியை நாகநாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களிலும் காணமுடிகிறது. நாகநாட்டு நாணயங்களில் காணக்கூடிய இன்னொரு சிறப்பு இக்காளை உருவங்கள் மீன் சின்னங்களைப் போல் மூன்று கோடுகளால் ஆனால் பீடத்தின் மேல்படுத்திருக்கும் வகையில் காணப்படுகிறது. இந்த வடிவத்தை தமிழக, இந்திய நாணயங்களில் பார்க்க முடியவில்லை. மேலும் இந்நாணயங்களில் பொறிக்கப்பட்ட காளையின் கழுத்தும், ஏரியும் சமகாலத் தமிழக நாணயங்களில் இருந்து வேறுபட்டதாக நீண்டும், உயர்ந்தும் காணப்படுகின்றன. தமிழக நாணயங்களில் கொடுக்கப்படாத

Page 25
42 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
அளவிற்கு நாக நாட்டு நாணயங்களின் முன்பக்கத்தை முழுமையாக அலங்கரிக்கும் வகையில் காளை பொறிக்கப்பட்டுள்ளது. (படம்) இந்த அம்சத்தையே கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நல்லூரில் அரசமைத்த ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்களும் பின்பற்றினர் எனக் கூறலாம்.
அப்படியானால் இந்த நாக அரசு எங்கே அமைந்திருந்தது என்பது முக்கிய கேள்வியாகும். முதலியார் இராசநாயகம் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப்படும் கதிரைமலையை கந்தரோடையுடன் தொடர்புபடுத்தி கந்தரோடைதலைநகராக இருந்திருக்கலாம் எனக் கருதுகிறார். கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக்' கல்வெட்டுக்களில் நாக நகர் பற்றிய குறிப்பு வருகிறது. இதை ஆதாரமாகக் காட்டி கலாநிதி இரகுபதி இது கந்தரோடையாக இருக்கலாம் எனவும், நிக்கிலஷ் கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரிய இன்னொரு கல்வெட்டையும் ஆதாரம் காட்டி வவுனியாவுக்கு அண்மையில் உள்ள ஓர் இடமாகவும் கருதுகிறார். கதிரைமலையைக் கந்தரோடையுடன் தொடர்புபடுத்துவோர், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் கதிரைமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த உக்கிரசிங்கன் வரலாறு கந்தரோடை வட்டாரத்துடன் தொடர்புபடுத்திக் கூறியிருப்பதையும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் புராதன தொல்லியல் சின்னங்களைக்கொண்ட இடமாகக் கந்தரோடை காணப்படுவதையும் காரணங்களாகக் காட்டுகின்றனர். ஆனால் உக்கிரசிங்கன் வரலாறு கூறும் பல தரப்பட்ட இலக்கியங்களையும் ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது அவனின் தலைநகர் இலக்கியத்திற்கு இலக்கியம் வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. யாழ்ப்பாண வைபவமாலை (சபாநாதன் 194913) கைலாயமாலை ஜம்புலிங்கபிள்ளை 1937:2) என்பனவற்றில் வலிகாமத்துடன் தொடர்புபடுத்தப்படும் கதிரமலை திருக்கோணாசல புராணத்தில் (சண்முகரத்தின ஐயர் 19093) மாணிக்க கங்கைக்கு அருகில் உள்ள இடமாகவும், கோணேஸ்வரர் கல்வெட்டில் திருகோணமலையில் இருந்த இடமாகவும், (வைத்தியலிங்க தேசிகர் 1915:32-34) மட்டக்களப்புமான்மியத்தில் நடராசா 196229-35) மட்டக்களப்பில் அமைந்த இடமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை பெளத்த மதத்துடன் தொடர்புடையதாக

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 43
இருந்த கந்தரோடையை நாக நாட்டின் தலைநகராக அடையாளம் காண முற்படுவது பெருத்தப்பாடாகத் தெரியவில்லை.
எமக்குக் கிடைத்த தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகளை
வைத்து நோக்கும்போது நாகநாட்டு அரசின் தலைநகர் யாழ்ப்பாணத்திற்கு வெளியே வன்னிப்பிராந்தியத்தில் இருந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத் தெரிகிறது. இதற்குப்பலகாரணங்கள் உண்டு.
1.
நாகநாட்டு அரசால் வெளியிடப்பட்டதாக மேலே காட்டப்பட்ட பெரும்பாலான நாணயங்கள் வன்னியில் மாதோட்டம், பூநகரி, தென்னியங்குளம் போன்ற வட்டாரத்தில் உள்ள பல மையங்களில், கண்டுபிடிக்கப்பட்டவையாகும். நல்லூர் தலைநகராக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட சேதுவாசகம் பொறித்த நாணயங்கள் யாழ்ப்பாணத்தில் கிடைத்த அளவிற்கு வன்னியில் கிடைக்கவில்லை. அதேபோல் நாகநாட்டுஅரசால்வெளியிடப்பட்டநாணயங்கள் வன்னியில் கிடைத்த அளவிற்கு யாழ்ப்பாணத்தில் கிட்ைக்கவில்லை. *
ஒரு புராதன நகரத்தின் அழிபாடுகள் எனக் கருதக்கூடிய கட்டட எச்சங்கள் எவையும் யாழ்ப்பாணத்தில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் வன்னியில் எமது கள
ஆய்வின்போது மூங்குவில், செழியாவில், நீராவி,
Uluso - 20

Page 26
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
கோணாவில், அரசபுரம், பனங்காமம், சாமத்தியமேடு, கோவிற்காடு போன்ற இடங்களில் பல கட்டடச் சிதைவுகளைக் காண முடிந்தது. இவையனைத்தும் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எனக் கருதக் கூடிய வகையில் காலத்தைக் கணிக்கக் கூடிய எழுத்துப் பொறிப்புடன் கூடிய இந்து விக்கிர கங்கள் இரண்டில்) கைவிரல் அடையாளம் பொறித்த ஓடுகள் இக்கட்டட அழிபாடுகள் இடையே குறிப்பாக செழியாவில் கிடைத்துள்ளன.(படம்-20).
1215க்குப் பின்னர் தமிழருக்குச் சார்பான கலிங்க மாகனின் கோட்டைகள், படைகள் நிலைகொண்டிருந்த இடங்கள் பற்றிப்பள்ளி இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த இடங்களை திருகோணமலையையும் மாதோட்டத்தையும் இணைக்கும் வன்னிப்பிராந்தியத்தை உள்ளடக்கியிருப்பதைக் காணலாம்.
இலங்கைத் தமிழரோடு தொடர்பான தொடக்க கால இலக்கியங்களானநாயன்மார்பாடல்கள், பள்ளுஇலக்கியங்கள், கைலாயமாலை என்பன வன்னிப்பிராந்தியத்தியே முக்கியப்படுத்திக் கூறுகின்றன. இதில் கதிரைமலை கந்தரோடையாக இருந்திருந்தால் அங்கு ஆட்சி செய்த உக்கிரசிங்கனது சிவாலயத்தை நாயன்மார் போற்றிப் பாடியிருப்பர். ஆனால் அதற்கு மாறாக மன்னாரிலும், திருகோணமலையிலும் இருந்த சிவாலயங்களையே பாடியுள்ளனர். (கி.பி.16ஆம் நூற்றாண்டு வட இலங்கை வந்த
 

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 45
போத்துக்கேயர்கூட வன்னியோடு தொடர்புடைய பூநகரியை உரயில் பூநகரி, உரா-நாகம், நாகர், நாகர் இடம்) நாக நாட்டுடன் அல்லது நாக் இன மக்களுடன் தொடர்புடைய இடமாகக் கூறியுள்ளார். இது பிற்காலத்திலும் நாக நாட்டு அரசமரபு பற்றிய நினைவு நிலைத்திருந்ததைக் காட்டுகிறது.
5. கதிரைமலையின் பின்னர் தலைநகர் சிங்கை நகருக்கு மாறிய காலத்தில் அங்கு ஆட்சி புரிந்த மன்னன் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தை யாழ்பாடிக்குப் பரிசாகக் கொடுத்தான் எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இதிலிருந்து நல்லூருக்கு முன்னோடியான அரசு யாழ்ப்பாணத்திற்கு தெற்கே அதாவது வன்னியில் இருந்தமை தெரிகிறது. நாக அரசு வன்னியில் இருந்ததெனக் கொண்டாலும் அதன் மையம் எவ்விடத்தில் இருந்ததென்பதற்கு மேலும் ஆய்வுகள் அவசியமாகிறது. ஆனால் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கொஸ்மஸ் இலங்கை வந்த போது மாதோட்டம் பல நாட்டு வணிகர்கள் வந்து செல்லும் துறைமுகமாக இருந்ததுடன் அதுவே அப்போதைய அரசின் முக்கிய பொருளாதார மையமாக இருந்தமையும் தெரிகிறது. நாயன்மார் பாடல் கூட இதன் வர்த்தக முக்கியத்துவம் பற்றியும், இங்கிருந்த நகரங்களின் சிறப்புப் பற்றியும் பலவாறு புகழ்ந்து கூறுகின்றன. இங்கு நாகர்கள் அமைத்த அரச கோட்டை பற்றிய பல ஐதிகக் கதைகளும் உண்டு. காலத்திற்கு காலம் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் இருந்து இத்துறைமுகமும், அதன் சுற்று வட்டாரங்களும் பண்டைய கால வரலாற்றில் பெற்ற முக்கியத்துவம் தெரியவருகிறது. பல தமிழ் படையெடுப்புகளுக்கு மையமாக இத்துறைமுகம் இருந்ததுடன், இங்கு வாழ்ந்த தமிழர்களும் அப்படையெடுப்பாளர்களுடன் இணைந்து கொண்டதற்குப் பாளி இலக்கியங்களில் பல சான்றுகள் உண்டு. இச்சான்றுகளை எல்லாம் வைத்து நோக்கும்போது நாக நாட்டின் ஆரம்ப தலைநகர் மாதோட்டத்தில் இருந்திருக்கலாம்போல் தெரிகிறது. இதனால் நாகநாட்டின் ஆரம்ப தலைநகரான கதிரைமலையை மாதோட்டத்திற்கு தெற்கேயுள்ள குதிரை மலையுடன் தொடர்புபடுத்தி எதிர்காலத்தில் ஆராய்ந்து பார்க்க இடமுண்டு.

Page 27
46 இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
எனவே இதுவரை எடுத்துக் கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் இருந்து படையெடுத்து வந்த பாண்டியரின் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகளால் நல்லூரில் அரசொன்று அமைக்க முன்னர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாகநாட்டில் கி.பி 6-7 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட தமிழரசு இருந்ததெனக் கூறலாம். இந்த அரசை நாகநாட்டு அரசு என்பதை விட நாக அரச மரபு என அழைப்பது பொருத்தமாகத் தெரிகிறது. தமிழகத்தில் பண்டைய காலத்தில் இருந்த சோழ நாடு, சேரநாடு, பாண்டியநாடு, கொங்குநாடு என்பன அரச வம்சத்தால் ஏற்பட்ட நாட்டுபெயராகும். இலங்கையில் உள்ள வடஇலங்கைக்கு நாகநாடு என்ற பெயர். கி.மு. 6ஆம் நூற்றாண்டு நாக மன்னர் ஆட்சியோடு ஏற்பட்டதைக் காணலாம். இப்பெயரே ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற புதிய அரச வம்சத்தால் நல்லூரில் அரசமைக்கும் வரை வடஇலங்கைக்கு உரிய பெயராக இருந்ததை 1262 ஆம் நூற்றாண்டுக்குரியபாண்டியக் கல்வெட்டில் இருந்து அறியமுடிகிறது. இச்சான்று ஒன்றே இங்கொரு அரசு இருந்தமைக்கு முக்கிய சான்றாகும்.
இலங்கைத் தமிழரிடம் நீண்டகாலமாக ஓர் அரச மரபு இருந்தது என்ற கருத்தை முன்வைக்கும்போது ஆய்வாளர் பலரும் பண்டைய தமிழ் சமூக அமைப்பு அழியப்படாத நிலையில் அரச மரபுபற்றிப் பேசலாமா என்றும், ஈழத் தமிழருக்கு இலக்கிய மரபின்றி அரசு இருந்தது எனக் கூறமுடியுமா எனவும் எழுப்பப்படும் கேள்விகளின் நியாயத் தன்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே வேளை இலக்கியம் இல்லை என்பதற்காக இருந்த அரசை இல்லை என வாதிடுவதும் நியாயமானதாகத் தெரியவில்லை. இன்று இந்திய நாகரிகத்தின் தொட்டில் என்று வருணிக்கப்படும் தமிழகத்திற்கு கி.பி.14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு வரலாற்று இலக்கிய மரபு இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்திற்கு காரணமாக இருந்த பல்லவரின் வரலாற்றைக் கூற ஓர் இலக்கிய மரபு இதுவரை காணப்படவில்லை. அதனால்யாரும்பல்லவ அரசுஇருக்கவில்லை எனவாதிடுவதில்லை.

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 47
தென்னிந்தியாவில் முதலில் பேரரசைத் தோற்றுவித்த சோழருக்கும் மூவருலா போன்ற இலக்கியம் தோன்றிய போதிலும் அவற்றின் மூலம் சோழர் வரலாறு தெளிவு பெறும் என யாரும் வாதிடமுடியாது. ஆனால் பிற்காலத்தில் இவ்வரச வம்சங்கள் தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள், பட்டையங்கள், நாணயங்கள், கட்டடங்கள், சிற்பங்கள் போன்ற தொல்லியற் சின்னங்களே அவர்களின் வரலாற்றை தெளிவடையச் செய்தன. இதுபோன்ற ஆய்வுகள் இலங்கைத் தமிழரை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டதாக பெருமைப்பட எமக்கு வாய்ப்பில்லை. அப்படி மேற்கொள்ளப்படுமானால் இதுவரை வெளிச்சத்திற்கு வராத தமிழர் வரலாற்றின் பல பரிமாணங்கள் புதுவெளிச்சம் பெறும் என்பதில் ஐயமில்லை. அண்மையில் கலாநிதி சிவலிங்கராஜா எழுதிய இலக்கியச் செல்நெறி என்ற நூலை அறிமுகம் செய்த துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை எழுப்பிய கேள்வியின் நியாயத்தன்மையை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது பலநிலையிலும் பொருத்தமாகும்.
ஈழத்து இலக்கியம் பற்றி ஆராய்ந்த பலரும் ஈழத்து தமிழருக்கு பண்டைய காலத்தில் இலக்கியம் இல்லை என்ற பொருள்படக் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பக்தி இயக்கத்தை தலைமை ஏற்று நடாத்திய நாயன்மார்கள் அங்கிருந்துகொண்டு ஈழத்து ஆலயங்களைப் பலவாறு புகழ்ந்து பாடியிருக்கும்போது இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவ்வாலயங்கள் பற்றி நாலு வரியாவது பாடியிருக்கமாட்டார் என்று எப்படிக் கூறமுடியும். இக்கூற்று ஈழத் தமிழருக்கு இலக்கியம் இல்லை என்பதை விட இருந்த இலக்கியம் எப்படி இல்லாமல்போனது என்பதையாவது ஆராய்ந்து பார்க்கத் தூண்டுகிறது. அது பற்றிய ஆய்வே ஈழத் தமிழர் இலக்கியத்திற்குள் புகைபடிந்துள்ள பண்டைய அரசும். சமூகமும் வரலாற்று வெளிச்சத்திற்கு வரத் துணைநிற்கும். இதற்கான பொறுப்பை தொல்லியல் மற்றும் வரலாற்றாய்வாளர்களுக்குரியதென ஒதுங்கிக்கொள்ளாது பல துறை சார்ந்த ஆய்வாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு வாஞ்சையுடன் அழைக்கிறோம்.

Page 28
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
அடிக்குறிப்பு
இங்கு கிடைத்த மட்பாண்டத்தில் பூதன், நாக என்ற பெயர் இருப்பதாக தமிழகத்தின் மூத்த கல்வெட்டாய்வாளரான மகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தொல்லியற் பேராசிரியர் ஏ. சுப்பராயலு உரையாடலின் போது கூறியது.
பேராசிரியர் இராசு. 18-9-2000 அன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த எனது கலாநிதிப்பட்ட வாய்மொழித் தேர்வின்போது கல்வெட்டுக்களை ஆதாரமாகக் காட்டிக் கூறிய கருத்து.
உசாத்துணை நூல்கள்
பல்லவ செப்பேடுகள் முப்பது, 1999, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு.
யாழ்ப்பாண வைபவமாலை. 1953, சபாநாதன், குல (பதிப்பு), கொழும்பு
பூரீதசுஷ்ண கைலாசபுராணம் 1942, (பதிப்பு இரகுநாதையர். இசி, யாழ்ப்பாணம்.
இந்திரபாலா, கா, 1972, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், கண்டி
இராசு. செ. 1991, கொங்கு நாட்டு ஆவணங்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம். தஞ்சாவூர். கிருஷ்ணராசா, செ,1983, யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள், சிந்தனை. 171-84.
கிருஷ்ணராசா, செ,1998, தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்டாட்டுத்தொன்மையும்,பிறைநிலாவெளியீடு,யாழ்ப்பாணம்.

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 49
குணராசா, க. 1996, ஈழத்தவர் வரலாறு, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு சிவசாமி, வி. 1974, யாழ்ப்பாணக் காசுகள், நான்காவ்து அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள். (ப.அபூ), வித்தியானந்தன், சு. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கை கிளை, கொழும்பு 26-36.
சிவசாமி, வி. 1998, தமிழும் தமிழரும். குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
சிற்றம்பலம், சி.க. 1993, யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி
சீதாராமன், ஆறுமுக.1994 தமிழகத் தொல்லியல் சான்றுகள் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், தொகுதி-1, தனலக்ஷமி பதிப்பகம், தஞ்சாவூர். சீதாராமன், ஆறுமுக.1989, இராஜராஜனின் ஈழக்காசுகள், தமிழ் நாடு நாணயவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.
ஞானப்பிரகாசர், சுவாமி, 1928, யாழ்ப்பாண வைபவவிமர்சனம் அச்சுவேலி.
பத்மநாதன், சி.1992, ஆரியச்சக்கரவர்த்திகள் காலம், யாழ்ப்பாண இராச்சியம்,(பஆ) சிற்றம்பலம், சிக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு. யாழ்ப்பாணம்.
பத்மநாதன்,சி.1984, இலங்கையில் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி.பி. 1000-1200), சிந்தனை, தொகுதி. 2. யாழ்ப்பாணம். பவானி, மா.2000, இடைக்காலத் தமிழ் கல்வெட்டுக்களில் நாணயப் பெயர்களும் அவற்றின் புழக்கமும், ஆவணம் 11 : 130-134. பாலசுப்பிரமணியம், குடவாயில்,1988, ஈழத்து வெற்றியும் ராஜராஜன் காசும், தினமணி (9-12-1988).
புஷ்பரட்ணம், ப. 1993, பூநகரி-தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.

Page 29
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
புஷ்பரட்ணம், ப. 1998, பூநகரியில் கிடைத்த அரிய சங்ககால நாணயங்கள், ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 914119.
புஷ்பரட்ணம்,ப,1998.அண்மையில் வடஇலங்கையில் கிடைத்த லக்ஷ்மி நாணயங்கள் ஒரு மீள் பரிசீலனை, ஒன்பதாவது தமிழக தொல்லியல் கழக ஆய்வரங்கு, புதுக்கோட்டை, 1-12, புஷ்பரட்ணம். ப. 1999அ. வட இலங்கையில் அரச தோற்றமும் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களும், தமிழ் நாட்டு நாணயங்கள், அருட்காட்சியகங்கள் சென்னை 6-9. புஷ்பரட்ணம், ப, 2000, தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை. புஷ்பரட்ணம், ப, 2001, இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம், சென்னை. வேலுப்பிள்ளை, ஆ. 1986, தொடக்ககால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம். வேங்கடசாமி, மயிலை. சீனி, 1983, இலங்கையில் தமிழர், தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் அரசியல், தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை 592-639.
Biddulph, C.H. 1966, Coins of Pandyas. NNMno11 of the Numismatic Society of India.
Bopearachchi, O. and Wickramesinhe, W. 1999 Ruhuna an Ancient Civilization Revisited, with the collaboration of the Archaeological.
Codrington, H.W. 1924 Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A.No.3, Colombo.
Culavamsa, 1953, Geiger, W. (Ed) Ceylon Government information Department, Colombo.
Desikachari, T. 1933, South Indian Coins.
Elliot, W. 1970, Coins of South India, Prithivi Prakasan, Varanasi.

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் 51
Gnanapragasar, S. The forgotten Coinage of the Kings of Jaffna, Ceylon Antiquary.5.
Gunawardana, R.A.L.H. 1977, Prelude to the State an Early Phase in the Evolution of the Political institution in Ancient Sri Lanka in The Sri Lanka Joumal of the Humanities, University of Peredeniya, VIII(182):1-39.
Gupta, P.L. 1965, The Early Coins from Kerala, Department of Archaeology Government of Kerala, Trivandrum.
Gupta, P.L. 1969, Coins, National Book Trust, India, New Delhi.
Havalaiah, N. 1999, Two Unpublished Copper Coins of Mysore Wadeyars in S.S. l.l. IX::130-2.
Hettiaratchi, D.P.E. 1950, Numista Zeylanica of a Newly Discovered Type of Lakshmi Plagues in Joumal of the Ceylon Branch of thee Royal Asiatic Society, Colombo, 1:04-22.
indrapala, K. 1969, Early Tamil Settlements in Ceylon in Joumal of Royal Asiatic Society of Ceylon Branch,XIll:43-61.
James, E. 1887-88, Pandyan Coins in southern India in Madras Joumal of Literary and Science New Series, 138-144,
Krishnamurthy, R. 1997, Sangam Age Tamil Coins, Gamet Publications, Madras.
Loventhan, E., 1888, The Coins of Tinnevelly, Higginbotham and Co., Madras.
Mahadevan, I., 1979. Some Rare Coins of Jaffna in Damilica 1:111-120.
Mahadevan, ., 2000, Ancient Tamil Coins from Sri Lanka, To be published in the Joumal of the Institute of Asian Studies, Madras.
Mahalingam, T.V., 1988, Inscriptions of Pallava, Indians Council of Historical Research New Delhi.
Mahavamsa, 1950 (e.d)Geiger, W., The Ceylon Government information Department, Colombo.

Page 30
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
Mictohiner, M. 1998. The Coinage and History of southern India, Hawakins Publication.
Nagaswamy, R., 1981, Tamil Coins, Madras.
Nicholas, C.W., 1963, Historical Topography of Ancient and Medieval Ceylon in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Colombo,VI.
Nilakanta Sastri, K.A., 1958, A History of South India, 2nd (revised) Edition, London.
Paranavitana, S., 1928, Anuradhapura: Slab-Inscription of Khudda Parinda in Epigraphia Zeyfanica, The Archaeological Department of Ceylon, ll: 111-114.
Paranavitana.S., 1961, The Arya Kingdom of Northern Sri Lanka in Journal of Royal Asiatic Society of Ceylon Branch, VI-174-224.
Paranavitana.S., 1970, inscription of Ceylon Early Brahmi inscriptions. The Department of Archaeology Ceylon, Colombo-1.
Paranavitana.S., 1983, inscription of Ceylon: Late Brahmi inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa, il(1).
Parkar, H., 1981, Ancient Ceylon, Asian Educational Services, New Delhi.
Pathmanathan, S., 1978, The Kingdom of Jaffna, Arul M. Rajendran, Colombo.
Pathmanathan, S., 1980. Coins of Medieval Sri Lanka. The coins of the Kings of jaffna, SpiliaZylanica Vol. 35, Partland ll: 409–417.
Peyatissa Senanasyake, 2000, Reference to Kahavana in Early Historic inscriptions of Sri Lanka in Studies in Indian Epigraphy, XXVI, 84-95.
Rrensep's 1858, Ceylon Coins, Essays on indians Antiquities, London.
Pushparatnam, 2001, "Tamil Coins From Northern Sri Lanka - A Historica"

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும் S3
Pushparatnam, 2001 Tamil Brahmi Graffiti From Northern Sri Lanka:" Studies in Indian Epigraphy, Volum, XXVI, 2000, Maysore. V
Pushparatnam, 2001 :"Parathava Society as Cleaend from Sri Lankan Brahmi inscriptions" in Studies in Indian Epigraphy, VolumXXVII, 2001, Maysore.
Pushparatnam, 2001 "Tamil Place Names as Gleand From the Brahmi inscriptions of Sri Lanka Kaveri, ProfessorYS. Subbarayalu Felicitation Volum, Chennai 2001.
Pushparatnam, P. 2001, Tamil Coins from Southern Sri Lanka - A Historica Perspective" Madras Coins Society special Bulletin Volume Vil, Chennai,2000.
Ragupathy, P.1991. The language of the Early Brahmi inscription in Sri Lanka. (Unpublished).
Rajan, K. 1994, Archaeology of Tamil Nadu(Kongu Country) Book India Publishing Co., Delhi.
Rasanayagam, C. 1926, Ancient Jafna A.S. Everyman's Publishers Ltd, Madras.
Ray, H.C. 1960, (e.d) University of Ceylon History of Ceylon, Vol. 1, Part I, Colombo.
Schoff, W.H., 1912(E.d)The Periplus of Erythraean Sea, New York.
Seneviratne, S. 1984, The Archaeology of the Megalithic-Black and Red Ware Complex in Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka 5:237-307.
Seneviratne, S., 1993 From Kudi to Nadu: A Suggested Framework for Study pre state political Formations in Early iron Age South India in The SriLanka Journal of the Humanities, XIX(182):57-77.
Seyon, K.N.V. 1998, some Old Coins Found in. Early Ceylon, Nawala, Sri Lanka.

Page 31
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரசமரபும்
Sharma, S. 1990, Ealry Indian Symbols-Numismatic Evidence, Agam Kala Prakashan, Delhi.
Silva, K.M.D., 1981, History of Sri Lanka Colombo.
Sircar, D.C. 1971, (e.d) Early Indian indigenous Coins Sri Sibendranath Kanjilal, Calcutta.
Sivasamy, V.1985. Some Aspects of Early South Asian Epigraphy Thirunelveli.
Srinivasa Iyengar, P.T., 1995, History of Tamils from thee Earliest Times to 600 A.D. Asian Education Service, New Delhi.
Sitrampalam, S.K. 1990. Proto Historic Sri Lanka: An Interdisciplinary Perspective in Journal of the institute of Asian Studies, VIII (1):1-8.
Sitrampalan, S.K., 1992, A Note on the Lakshmi Plaques of Sri Lanka in S.S./C. Madras,l: 151-158.
Sitrampalan, S.K., 1993, The Parumakas of the Sri Lankan Brahmi Inscriptions in Kalvettu Tamil Nadu Archaeological Department, 29 : 19-28.
South Indian inscription, 1986, (Vol-26) Archaeological Survey of india, New Delhi.
Subbarayalu, Y., Brahmi Graffiti on Potshes From Kodumanal Excavation(unpublished article)
Tracey, J.E., 1889-94. Setupathi Coins in Madras Journal of Literature and Science.
Thapar, Romila, 1995. (e.d) Recent Perspectives of Early Indian History Popular Prakashan, Bombay.
Velüppilai, A. 1980 a, Epigraphical Evidences for Tamil Studies, Publisher international Institute of Tamil Studies Madras.
Zvelebil, V. Kamil, 1997, Dravidian Linguistics An introduction, Pondicherry Institute of Linguistics and Culture, Pondicherry.


Page 32
தமிழர் படையெடுப்புகளு
மையமாக 'மா தோட்
இருந்ததாகவும் பின்பு தமிழர்க
அப்படையெடுப்பாளர்களு இணைந்து கொண்டதற்க சான்றுகளும் பாளி" இலக்கியங் வாயிலாக அறிய வாய்ப்புண் நாயன்மார் பாடல்கூட இதன் வர்த் முக்கியத்துவத்தையும் நகரங்க சிறப் புக  ைள யும் ப
புகழ்ந்துரைப்பதை இந்ந
தெளிவுபடுத்துகின்றது.
நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் (பி) விமிடெட் 4-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், சென்னை-600 098,
 
 
 

.
=心圆=| == Ĥ =-+ + ==== *書官 —... - ;| ~ , : 日|- 口
C
-