கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்திய விடுதலைப் போரில் இலங்கை மகன் பங்கு

Page 1


Page 2


Page 3

இந்திய விடுதலைப் போரில்
இலங்கை மகன் பங்கு
தியாகி கோ. இராஜகோபால் அவர்கள்
குரும்பசிட்டி 56šv LDTiš,5 560u.

Page 4
முதற் பதிப்பு - 1975 வெளியீடு -39 -س
சமர்ப்பணம்
தெய்வத்துக்கும் தாய்நாட்டுக்கும் சேவை செய்யப் பயிற்சி தந்து காந்தித் தொண்ட ணுக அடியேன உருவாக்கிய எனது குரு முத்தமிழ் வித்தகர் அருண்மிகு விபுலாநந்த அடிகளார் அவர்களுக்கு.

பொருளடக்கம்
முகவுரை Byo
முன்னுரை soo.
அணிந்துரை
un print-Gepper
பதிப்புரை 1. "கண்டேன் அவர் திருப்பாதம்!" . 2. காந்திஜி தண்டி யாத்திரை 3. உலக யுத்தத்தை எதிர்த்து அறப்போர் 4. நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம் 5. ஜப்பான் குண்டுமாரி . 6. எனது கதர்த் திருமணம் 8
கட்டுரைகள்
7. யார் ஐந்தாம் படை ? . 8. வெளியேறுக! 9. போய்வருக ! vi 10. காட்டிக்கொடுத்த தோழர்கள் 11. 'பாரதியை விபுலாநந்தரில் கண்டோம்" 12. வீரப்பணி ஆற்றிய வள்ளல் 13. யார் சத்தியாக்கிரகி? 14. Unt pray மணிக்கொடி 15. மாவீரர் மெளலான அபுல்கலாம் ஆஸாத்
பக்கம்
xi
xiV χνiι
XX
0
20
24
& 5
99
03
106
12
14
118
12
124
13.
40
iii

Page 5
.
".
E.
蠶曹。
.
墨晶。
.
『.
器岛。
1 w
U iiiL ħ தியாகிகள் மகாநாட்டில் ஈழத்துப் பிரதிநிதி 144 மட்டக்களப்பில் பாராட்டு விழா . காந்திச் சந்நியாசி நம்மைக் காக்கும்
நல்ல சுதேசி 147 காந்தி மகாத்மா யுகசக்தியின் புது மலர் 151 மகாத்மா காந்தி நூற்ருண்டு விழா 五岳岳 சர்வோதயம் என்பது நிர்மானப்பவரி If தியாகி இராஜகோபால் அவர்களின்
60ஆம் ஆண்டு நிறைவுவிழா If圭
"தமிழா, தெய்வத்தை நம்பு !
பயப்படாதே"
காந்திஜி கண்ணிர்விட்டழுத இரு சம்பவங்கீள் 172
பாரதத்தின் சொத்து
பாவலர் இராமலிங்கம்பிள்ளே 178
இலங்கையிற் பிறந்த கவிகள் காந்தி நெறியில் காமராஜர் IE 7 இந்தியாவின் ஒருமைப்பாடு அநுபந்தம் ... 墨重晶

விலாக் கீர்த்தி பேற்ருய்!
يوم .
கலே .
ளே முதனமை யுற்றம்!

Page 6

6.
முகவுரை
wwwpaws-ma-wu
*எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்" என்பது கீதாச்சாரியரின் சங்கநாதம். "ஜபமாலை உருட்டுவதை விட்டுவிடு மந்திரமும் தந்திரமும் ஆடலும் பாடலும் அவனைக் காட்டமாட்டா ! தாளிட்ட - அடைபட்ட கோயிலின் இருளடைந்த மூலையில், யாரைப்பூசிக்கிருய் கண்களைத் திறந்து, உன் கடவுள் உன் முன்னிலையில் இல்லையென அறிந்துகொள் ! கடினமான தரையில் ஏர் கட்டி உழுவாரிடமும், சாலை அமைக்கச் சரளைக் கல் உடைப்பாரிடமும் அவன் இருக்கின்ருன். அவர்களுடன் அவன் மழையில் நனைகின்முன், வெயிலில் உலர்கின்றன். அவன் ஆடையில் தூசி படிந்திருக்கிறது. உன் காஷாயத் தைக் களைந்தெறி அவனைப்போலவே நீயும் புழுதியில் இறங்கிவா! பூவையும் நறும் புகையையும் உன் பூசையை யும் விட்டு வெளியே வா ! உன் ஆடை கிழிந்து அழுக் கடைந்தால் என்ன ? நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்து, நின் ஈசனைக் கண்டுகொள்!" இது காந்தி மகாத்மா "குருதேவ்' என்று அன்புடன் கூவியழைத்த கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் "கீதாஞ்சலி"யில் வரும் ஒரு பாட்டின் பொருள். கோடிக்கணக்கான எனது மக்களை நான் மிக நன்முக அறிவேன். நான் முழுதும் அவர்களுடனேயே வாழ்கின்றேன். முதலும் முடிவுமாக நான் அவர்களுக்குத்தான் கடமைப்பட்டிருக்கிறேன். கோடிக்கணக்கான இந்த ஊமை மக்களின் உள்ளங் களில் உறையும் இறைவனைத் தவிர வேறு ஒரு கடவுளை அறியேன். இம் மக்களோ கடவுளை உணர்வதில்லை. ஆனல்
W

Page 7
நான் உணர்கிறேன். உண்மையைக் கடவுளாக வழிபடு கிறேன். கோடானுகோடி மக்களுக்குத் தொண்டு செய் வதன் மூலம் உண்மை என்ற கடவுளை வழிபடுகின்றேன்” என்ருர் காந்தியடிகள். பெரியவர்கள் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படுவார்கள். நாட்டைப்பற்றிக் கவலைப் படுவார்கள். உலகத்தைப்பற்றிக் கவலைப்படுவார்கள். சமுதாயம், நாடு, உலகம் இவையெல்லாம் எதிர்காலத் தில் எப்படியிருக்கவேண்டுமென்பது பற்றியே அவர்கள் கனவுகாண்பார்கள். உலகமெல்லாம் வாழ்க! இதைத் தான் சர்வோதயம் என்று காந்திஜி அழைத்தார்கள். "எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேருென் றறியேன் பராபரமே" என்ருர் தாயுமான சுவாமிகள். இதுதான் சர்வோதய தத்துவம். தத்துவம் நாட்டுக்குப் புதுமையானதல்ல. சர்வோதயம் என்ற பெயர்தான் புதியது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதாகும்.
கிராமத்தில் இருப்பவரும் நல்ல நகரத்தில் வாழ் பவரும் சரிநிகர் சமானமாக உணவு, உடை முதலிய எல்லாத் துறைகளிலும் சமமாக வாழ்தல் வேண்டும். மக்களிடம் ஆட்சியிருக்கவேண்டுமேயொழிய ஆட்சியால் மக்கள் ஆளப்படுவதில்லை : அன்புதான் தெய்வம். இதுவே உலகத்தை ஒன்றுபடுத்தும் சக்தி. சர்வோதய தத்துவப்படி காந்திஜி தன் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்து காட்டிஞர்கள். பூமிதான முனிவர், வினுேபாஜி அதைத் தொடர்ந்து பூமிதானம், கிராமதானம், சிரமதானம் முதலிய எத்தனையோ திட்டங்களை வகுத்து இந்தியா பூராவுக்கும் செயற்படுத்தி வருகின்ருர்கள். பல்லாயிரம் மைல்கள் பாதயாத்திரை செய்து சர்வோதய இயக்கத் துக்கு ஆக்கம் தேடினர்கள். ஆயிரம் ஆயிரம் தொண் டர்கள் பூமிதான முனிவரின் பணியிற் சேர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிருர்கள். பாதயாத்திரையில் சர்வோதய ஊழியர்களான ஆண்களும் பெண்களும்" ஈடுபட்டு இன்றும் தொண்டு செய்துகொண்டிருக்கின் ருர்கள். அந்தச் சர்வோதய இயக்கத்திற் சேர்ந்த நான்கு
V1

சகோதரிகள் ஆச்சாரிய விஞேபாஜியின் ஆசியுடன் சென்ற 20-8-74ஆம் திகதி இராமேஸ்வரத்திலிருந்து கப்பல் மூலம் தலைமன்னர் வந்து சேர்ந்தார்கள். தலை மன்னரிலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்து யாழ்ப் பாணக்குடாநாடு, வவுனியாப்பகுதி, கண்டி, கொழும்பு முதலான இடங்களுக்குச் சென்று சிரமதான இயக்கங் களிற் பங்குபற்றியும், காந்தி மகாத்மா, வினுேபாஜி இவர்கள் வாழ்ந்து காட்டிய உயர்ந்த சீரிய இலட்சியங் களை முன்னிலைப்படுத்திப் பல உருக்கமுள்ள பிரசங் கங்கள் செய்தும் இந்தியா திரும்பிவிட்டார்கள். இந்த லோக பாதயாத்திரைச் சகோதரிகள் நால்வர். அவர்களில் சகோதரிகள் ஹேமா பஹராலி, இலட்சுமி பூக்கன் ஆகிய இருவரும் அஸாம் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரி நிர்மல் வயிட் டில்லியைச் சேர்ந்தவர், சகோதரி தேவி ரிஜ்வாணி மத்திய பிரதேசத்தவர். வவுனியா அரசாங்க அதிபர் உயர்திரு. செ. சிவஞானம் அவர்களின் விருப்பத்திற்கிணங்கப் பாதயாத்திரைச் சகோதரிகளுடன் 20-9-74ஆம் திகதி முறிகண்டியென்னும் கிராமத்தில் யான் கலந்துகொண் டேன். ஆறுநாட்கள் சகோதரிகளுடன், மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம், ஓமந்தை, வவுனியா வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு அவர்க ளுடன் யானும் பேச்சு நிகழ்த்திக்கொண்டு வந்தேன், பாத யாத் திரையில் சகோதரிகள் பேசும்போது ** இலங்கையிற் கல்விமுறை காந்தீய அடிப்படையில் இருக்கவேண்டும் அழிவற்ற நித்தியமான சத்தியத் தைக் கடைப்பிடிக்க வேண்டும் சேவை செய்வதன் மூலம் மக்கள் மனம் விரிவடையும்படி செய்யலாம் சமுதா யத்தில் அன்பும் ஆனந்தமும் உண்டாஞல் சமுதாய ஒருமைப்பாடு ஏற்பட்டு உலகமும் ஒன்ருகிவிடும் சர்வோதயக் கருத்துக்கள் உலகெங்கும் பரவி ஒளி கொடுக்கும்போதுதான் உண்மையான சமத்துவமுள்ள, சுதந்திரமுள்ள மக்களாக நாமனைவரும் வாழ முடியும் 3 சிங்களமும் தமிழும் இரு கண்கள் போன் ற  ைவ.
vii

Page 8
ஆங்கிலம் மூக்குக்கண்ணுடி போன்றது; எனவே இரு மொழிகளையும் படித்துப் பின் ஆங்கிலத்தையும் படிப்ப தால் நம் உலக நோக்கு என்னும் பார்வை மிகத் தெளி வாகும்”. இப்படிச் சர்வோதயக் கருத்துக்களை மிகத் தெளிவாகப் பேசி வந்தார்கள். ஏற்கனவே மதுரையை யடுத்த கல்லுப்பட்டி, " காந்தி நிகேதன்" என்னும் ஆச்சிரமத்தில் யான் பயிற்சி பெற்றிருந்தமையினல் சகோதரிகளுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் காந்திஜி யின் குரல் தொனித்திருந்ததை உணர்ந்தேன். அவர்கள் தத்தம் ஊரைவிட்டு ஏழுவருடங்கள் ஆகின்றன. இது வரைக்கும் 16,000 மைல்களுக்கு மேலாக நடந்தே யாத்திரை செய்திருக்கின்ருர்கள். இவர்களைப் பார்த்தது எனக்குத் தெய்வ தரிசனமாக விருந்தது. வவுனியா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருக்கோணமலைக்கு யான் புறப்படும் செய்தியைச் சகோதரிகளுக்குச் சொன் னேன். அவர்களுள் இளையவரான இலட்சுமி பூக்கன் என்னைப் பார்த்துச் சொன் ன வை களை அப் படியே தருகின்றேன் "தியாகிஜி, நீங்கள் இலங்கை யில் ஓர் அரிதானவர். காந்திஜியின் சத்தியாக்கிரகத் துக்கும் உங்களுக்குமுள்ள தொடர்பை, அநுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிடுங்கள். அது இலங்கையிலுள்ள வருங்கால சமுதாயத்திற்கு மிகவும் பிரயோசனப்படும். இலங்கைக்கே பெருமையைத் தந்துகொண்டிருக்கும். எனவே அந்தப் பணியைச் செய்யும்படி உங்களை வேண்டு கின்றேன்" என்ருர்கள். யான் சம்மதம் கொடுத்துத் தலையை அசைத்தேன். உடனே அச்சகோதரி எழுந்து எனது இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு, " தயவு செய்து அப்பணியைச் செய்துவிடுங்கள் " என்ருர்கள். ஒரு தொண்டனின் பெருமையைத் தொண்டர்கள்தான் உணர முடிகிறது. ஆகவே, எனது சத்தியாக்கிரக அணு பவங்களை எழுத முற்பட்டேன்.
கொழும்பிலிருந்து வெளியாகும், “ சிந்தாமணி " பத்திரிகையில் "சுதந்திரப் போராட்ட நினைவுகள்" என்ற
viii

தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருந்தேன். யுத்தத்தை எதிர்த்துத் தனிநபர் சத்தியாக்கிரக இயக் கத் தி ல் சேர்ந்து உழைத்தேன். அதைக் குறித்து, சுன்னகம் "ஈழகேசரி "வார வெளியீட்டில் "எனது சத்தியாக்கிரகம்" என்ற தலையங்கத்தில் கட்டுரைகள் முன்னர் எழுதினேன் இது தொடர்பாக அப்போதைக்கப்போது எனது கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்தன. இவைக ளெல்லாவற்றையும் விரித்துத் தொகுத்து வெளியிட முன்வந்தேன். பாதயாத்திரை சகோதரிகள் புத்தகம் எழுதும்படி கேட்பதற்கு முன்னரே பல நண்பர்கள் இது விஷயமாகப் பேசியதுண்டு. பலகாரணங்களை முன்னிட்டு அதில் யான் கவனம் செலுத்தவில்லை. எது எப்படியிருந்த போதிலும் யோகசுவாமிகள் அருளியபடி "எப்பவோ முடிந்த காரியம்." அந்தக் காரியம் வெளிவருவதற்குத் திறவுகோலாகவிருந்த நான்கு சகோதரிகளுக்கும் குறிப் பாக இளைய சகோதரி இலட்சுமி பூக்கன் அவர்களுக்கு எனது உள்ளங்கனிந்த நன்றியைச் செலுத்துகின்றேன். அவர்கள் எனது மனக்கண்முன் நிற்கின்ருர்கள்.
இந்த நூலுக்கு முன்னுரை தந்துள்ள திருமதி சரசுவதி பாண்டுரங்கம் அவர்கள் இந்திய விடுதலைப் போரிற் பங்குகொண்டு பலமுறை சிறை சென்று வர்கள். முன்னர் சென்னை மேல்சபை அங்கத்தவ ராகவும், சென்னை உதவி மேயராகவும் இருந்திருக் கிருர்கள். அம்மையாரின் கணவர் யோகி எம். கே. பாண்டுரங்கம் அவர்கள் அ ப் போது காங்கிரஸ் முகாமுக்குத் தலைவர். தம்பதிகள் இருவருமே சரித்திர ஏட்டில் பொறிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து தேசத்திற்காக உழைத்திருக் கின்றேன். அந்தவகையில் என்னை நன்கு அறிந்த மாவீரத்தாய் திருமதி சரசுவதி பாண்டுரங்கம் அவர்கள் இந்த நூலுக்கு முன்னுரை தந்து அடியேனப் பெருமைப் படுத்தியிருக்கின்றர்கள். அடுத்ததாக யாழ்ப்பாணம் வாலிபர் மகாநாட்டின் தலைவரும், காந்தீயவாதியுமாகிய
ix

Page 9
பேரறிஞர் உயர்திரு. எஸ். எச். பேரின்பநாயகம், B, A, அவர்களின் அணிந்துரையும், திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் சிறப்பாக எனக்குப் பாடம் சொல்லித்தந்த இந் நாட்டின் கலைவிளக்குப் போன்றிருக்கும் தமிழ்ப் பேரறிஞர் குருக்கள் மடம் புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் " அரும் பெற ல் தியாகி’ என்ற தலைப்பில் என்னைப் பாராட்டி அனுப்பிய வாழ்த்துரை களும் இந் நூ லி ல் இடம்பெற்றிருப்பது எனக்குப் புகழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்துகொண்டிருக் கின்றன. இவர்கள் அனைவர்க்கும் எனது அன்பும் நன்றியும் கலந்த வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.
* இந்திய விடுதலைப் போரில் இலங்கை மகனின் பங்கு" என்று யான் எழுதிய நூலை வெளியிடுவதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்று, என்னைக் குரும்பசிட்டியின் சுவீகாரப்பிள்ளை, காந்தி பக்தன் என்றெல்லாம் tu mT pr mr L’- 1q- t'i பெருமைப்படுத்திக்கொண்டிருக்கும் இலங்கையில் மிகப் பிரபலமடைந்த குரும்பசிட்டி சன் மார்க்க சபையினருக்கு நன்றிகள் கூற வார்த்தைகள் போதா. சபையினரே வெளியீட்டு விழாவையும் நடாத்து கின்ருர்கள். இனி, இந்நூலை அச்சிட்டுப் பொலிவுறச் செய்த சுன்னகம் திருமகள் அழுத்தகத்தாருக்கும், குறிப்பாக எனது நீண்டகால கெழுதகை நண்பரும் அவ்வழுத்தக நிர்வாகியுமாகிய திரு. மு. சபாரத்தினம் அவர்களுக்கும் அநேக வ ண க் க த்  ைத உரியதாக்கு கின்றேன்.
வந்தே மாதரம் !
தியாகி கோ. இராஜகோபால் கோகுலம்", உப்புவெளி திருக்கோணமலை. 2-10- 75

s
முன்னுரை
a-a-a-se
உலகில் முற்போக்கு இயக்கங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அவ்வமயம் மன எழுச்சியும் உணர்ச்சி யும் முதிர்ச்சியு மடைந்த நிலையிலுள்ள பலர் அதிற் கலந்துகொண்டு ஊக்கமும் ஆக்கமும் பெற்றுத் தியாகப் பண்புடன் மிக்க வீரச்செயல்கள் புரிந்து தொண்டாற் றுவதுண்டு. அதிற் பலர் பின்னர் சோர்வடைந்தும் வாழ்க்கைச் சூழலிற் சிக்கித் தாம் முன்புகொண்ட இலக்கு களை மறந்தும் கைவிட்டும் சில சமயங்களில் எதிர்த்தும் நிலைதடுமாறி வாழ்க்கையை வாளா நடாத்துவதுண்டு. ஆனல் ஆயிரத்தில் ஒருவரேனும் ஆழ்ந்து மாரு நிலை கொண்டு முதலிற் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட சீரிய நோக்கைக் கைவிடாமல், படிப்படியாக அக்குறிக் கோளை யடைய இடைவிடாது செயல்புரிவது முண்டு. அவ்வியத்தகு புருஷர்களில் ஒருவராகச் சிறந்து விளங்கு பவர் எங்களுக்கு நெருங்கிய தோழராகவும் என் கணவ ஞரும் யானும் திரட்டிய தென்னிந்திய சத்தியாக்கிர கப் படையில் சேர்ந்து மகா வீரதீரச் செயலாற்றியவரு மாகிய இலங்கை தியாகி கோ. இராஜகோபால் என் னும் பெரியார். அவர் காந்தீய வாழ்க்கையின் ஒப்புயர் வற்றதொரு நலம் துய்த்தவர். மகாத்மா காந்தியின் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் நன்கு பண்பட்டு உயர்நிலை நின்று விளங்குபவரென்பது அவரைக் காண் பவர் அறிந்தவர் காணக்கிடக்கும் உண்மையாகும்.
இந்த நிலையில் அவர் தனது அனுபவங்களையும் ஆற்றல்மிகு எழுச்சிதரும் தொண்டுகளையும் அவர் கண்ட
X1

Page 10
தியாகத்தின் இணையற்ற சேவையினல் ஏற்பட்ட இன்பங்களையும் கட்டுரைகளாக அவ்வப்போது தினத் தாளிலும் வெளியீடுகளிலும் பிரசுரித்து மக்களை நல் வழியில் ஈடுபடத் தொண்டாற்றியது இயற்கையே. அக்கட்டுரைகளைத் திரட்டிப் புத்தகவடிவா ய60மத்துப் பிரசுரம் செய்யவேண்டுமெனச் சிந்தனையிலும் செயலி
லும் ஈடுபடுவதும் இயற்கையே.
வினுேபா அவர்களின் அடிச்சுவட்டில் உலக பாத யாத்திரை யக்ஞமதில் இந்திய கிராமங்களிலும் நகரங் களிலும் நடந்துசென்ற நான்கு சர்வோதய சகோதரிகள், பின்னர்த் தொடர்ந்து இலங்கையிலும் தங்கள் பாத பாத்திரையைத் தொடர்ந்தனர். அப்போது இந்தச் சத்தியாக்கிரகத் தொண்டர்களைச் சந்தித்து அவர்க ளுடன் தியாகியும் பல இடங்களுக்குப் பாதயாத்திரை செய்தது சர்வோதய சகோதரிகளுக்குப் பேருதவியாக விருந்தது மல்லாமல் அவர்களுக்கு மனவெழுச்சியையும் பெருமையையும் அளித்ததாகவும் அமைந்திருந்தது. அந்த நான்கு சகோதரிகளில் இளையவராகிய இலட்சுமி பூக்கன் அவர்கள் தியாகியின் மனவெழுச்சி, காந்திபக்தி நிறைந்த தொண்டை அவதானித்த பின்னர் அவரது சத்தியாக்கிரகத் தொடர்பை - காந்தியின் சொல் கேட்டு வேள்வித்தீயிலாற்றிய பணியை-புத்தகவடிவில் எழுதச் சொன்னர், அவரது வேண்டுதலை யேற்றுத் தியாகி கோ. இ. அவர்கள் புத்தகவடிவிற் தொகுத்து வெளியிட வாய்ப்பாகிவிட்டதையிட்டு நாம் மிகவும் பெருமை அடைகின் ருேம். இப்படிச் செய்ததன் மூலம் இலங்கை கோ. இ. அவர்களின் நல்வாழ்வுத் திட்டம் உலக மக்களும் சிறப்பாக இலங்கை மக்களும் அவ்வொப்புயர்வற்ற சீரிய வாழ்க்கை முறையில் ஈடுபட வாய்ப்பளிக்கும். அதனுல் அனைவரும் நலம் பெறுவர்.
இவ்வரிய சிறந்த நூலுக்கு என்னை முன்னுரை நல்குமாறு வேண்டியது என்னைக் கெளரவிக்கும் முறை யில் அமைந்துள்ளது.
xii

இத்தருணத்தில் நாங்கள் இவரை 1932இல் கண்ட பொழுது எவ்வாறு தன்னை மனப்பூர்வமாக அர்ப் பணித்துக் காந்தீய அறவழியில் ஊன்றி நின்று செயல் புரிந்து வந்தனரோ அந்த நிலையில் அணுவளவும் மாருது இன்றுவரையில் இவர் தொடர்ச்சியாக அப்பெருந் தொண்டில் ஈடுபட்டு முதிர்ச்சியுற்று வருகின்ருர் , 43 ஆண்டுகள் கடந்தபின்னர் தனது 65 வயதிலும் அவ் விளமை ஊக்கத்துடன் செயல்புரிந்து வருவது எங்க ளுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கும் நற்சாட்சியாகும். இந்த அபூர்வ தொண்டரின் மூலம் இலங்கை மக்களும் உலகமும் அமைதிப் பாதையில் காந்தீய அடிச்சுவட்டில் முன்னேறுவது திண்ணம் என்பது எங்கள் நம்பிக்கை. இதனுல் இன்றைய மக்கள் தட்டுத்தடுமாறித் தங்களது மனிதத்தன்மையுடைய பண்புகளை மறந்து வீழ்ச்சியுறும் தருணத்தில் இவரது சேவை அவர்கள் மீண்டும் மனிதப் பண்புகளைப் பெற்று உயர்ந்து தெய்வீக நிலையைப் பெற்றுய்ய நல்ல வாய்ப் பாகும். அம்மாதிரி உலகம் உயர்நிலை எய்தவேண் மென விழையும்,
கன்னியா குருகுலம் சரஸ்வதி பாண்டுரங்கம் திருவொற்றியூர் நிர்வாகி சென்னை
ه 75 - 4 - 6
, iii

Page 11
.ெ
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முன்னுள் ஆசிரியரும் கொக்குவில் இந்துக்கல்லூரியிலிருந்து இளைப்பாறிய அதிபருமாகிய திரு. ச. பேரின்பாகாயகம், B. A. அவர்கள் அளித்த
அணிந்துரை
பாரதநாட்டு விடுதலைப் போருக்குச் சங்குநாதம் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் மகாசபை 1885ஆம் ஆண்டில் பம்பாயிலுள்ள 'கோகுலதாஸ் தேஜ்பால்" சம்ஸ்கிருத கலாசாலையில் திரு. உமேச்சந்திர பெனர்ஜி அவர்கள் தலைமையில் 72 பிரதிநிதிகளுடன் ஆரம்ப மாயிற்று. 1906ஆம் ஆண்டில் கல்கத்தாவில் பூரீ தாதா பாஜ் நெளருேஜி அவர்கள் தலைமையில் 1664 பிரதிநிதி கள் 20,000 பார்வையாளர்களுடன் கூடிய 22ஆவது காங்கிரஸ் மகாசபையில் தேசியவிடுதலை நிர்ணயம் தீர்மானிக்கப்பட்டது. 'வந்தே மாதரம்" என்ற பாரத தேசிய கீதம் முதன்முதலிற் பாடப்பட்டது. அதன் விளைவாக வங்காளப் பிரிவினையை எதிர்த்து 7 கோடி வங்காள மக்கள் பகிஷ்காரம் செய்து உபவாசமிருந்து, வங்காள ஐக்கிய தினம் நாடெங்கும் கொண்டாடப் பட்டது. வந்தேமாதர கோஷம், தேசிய கீதங்கள் பாடக் கூடாதென அரசினர் தடுத்தனர். அடக்குமுறை , தடியடிப் பிரயோகம், சிறைபிடித்தல், வாய்ப்பூட்டுதல், 144ஆம் பிரிவுச் சட்டம் முதலியன புறப்பட்டன. காங்கிரசுக்கு விசேட ஆதரவு உண்டாயிற்று. 1920ஆம் ஆண்டில் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்தேறிய
xiv.

விசேஷ காங்கிரசிற்தான் மகாத்மா காந்தியின் பிரவேச மும் தீவிர நடவடிக் கைகளும் ஆரம்பமாயின ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பரவியது. சரோஜினிதேவி, மோதிலால் நேரு, பண்டித நேரு, ராஜன் பாபு, மெளலான ஆஸாத் முதலான பல்லாயிரம் தேசபக்த சத்தியாக்கிரகிகள் அஹிம்சா முறையிற் தியாகஞ் செய்ததன் பயனுக 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றது. இவை எனது ஞாபகம்.
பாரதநாடு தாய்நாடு: ஈழம் சேய்நாடு, தாய் நாட்டிற் தோன்றிய அரசியற் புரட்சி சேய்நாட்டிலும் பரவாமலில்லை. இலங்கையிலும் தேசிய சுதந்திரப்புயல் வீசத் தொடங்கியது. சேர் பொன். அருணசலம் அவர்களின் தலைமையில் அகில இலங்கைத் தேசிய மகா சபையும், யாழ்ப்பாணக் கல்லூரி உப அதிபர் ஜே. வி. செல்லையா, எம், ஏ. அவர்கள் தலைமையில் யாழ்ப்பான வாலிப மகாநாடும் (1924) ஆரம்பமாகி மாருதப் புயலாயிற்று. சரோஜினிதேவி, மகாத்மா காந்தி, பண்டிதநேரு, கமலா தே வி afL GL-IT untiguntu ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்து இங்கும் தேசிய விடுதலைக்கு வழிகாண்பித்தனர். அரியநாயகம் உவில்லியம்ஸ், பேனுட் அலுவிகாரா, இந்நூல் ஆசிரிய ரான இராஜகோபால் இன்னும் பலர் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டும் அருந்தியாகம் புரிந்தார்கள். சுதந்தர இந்தியமாதா நன்றி நவிலும் வழியில் தமது தியாகப் புதல்வர்களுக்குத் தியாக விருது அளித்து அவர்களை உலகுக்கு விளங்க வைத்தது அந்த வழியில் வந்தவர்தான் நமது தியாகி கோ. இராஜகோபால் அவர்கள். இவர் இலங்கை மண்ணில் - திருக்கோணமலையில் - பிறந்து தவழ்ந்து உருவான புதல்வன்.
இராஜகோபால் அவர்கள் எமது நண்பர், தோழர், சகோதரர். வாலிப மகாநாடு காலத்தில் எம்முடன் சேர்ந்து அவ்வியக்கத்தில் உழைத்தவர். எம்மவரிற்
XV

Page 12
சிலர் காந்தீய வாதிகள். ஆனல் இராஜகோபால் கதர் ஆடை வாதியும் ஆவர். கதராடையை விளம்பரஞ் செய்யும் காரணமாக, வண்ணுர்பண்ணையில் " காந்தி வஸ்திராலயம் " என்ற கதர்க்கடை ஒன்றை ஆரம்பித்து, விற்பனை செய்தவர்; தேசிய கீதங்களைச் சக்தி பிறக்கப் பாடுபவர்; சமூகத் தொண்டர்; காந்தி இராஜகோபால் என்ற பெயரையும் பெற்ற அத்தகைய தொண்டர்.
வினுேபா பாஜியின் ஆசீர்வாதத்துடன், சர்வோதய
இயக்கத்திற்குத் தம்மைத் தியாகம் செய்து 18000 மைலுக்கு மேலாகப் பாத யத்திரை கொண்டிருக்கும் தேவி றிஜ்வாணி சகோதரிகள் ச மீ ப கா லத் தி ல் இலங்கையில் பாத யாத் திரை செய்தார்களல்லவா? அவர்கள் காந்தி இராஜகோபாலின் தியாகத் தொண் டையும் பெற்றவர்கள். தியாகியின் தொண்டைப் பாராட்டிய அவர்கள், தாய்நாட்டின் விடுதலைப் போரில் சேய்நாட்டு மகன் ஒருவள் புரிந்துள்ள தியாகத்தை பூரீலங்கா மக்கள் என்றென்றும் போற்றக்கூடிய வகை யில் ஏன் ஒரு நூல் வெளிவரக்கூடாது என்று வேண்டிக் கொண்டமை காரணமாகவே தியாகி இராஜகோபால் இந்நூலை எழுதலானுர் என்று அறிந்து மகிழ்கின்றேன்.
தேசியம், சுதந்திரம், தியாகம், சத்தியநெறியில் அவசியம் வளர்க்கப்படவேண்டிய இலங்காதேவி மக்க ளுக்கு இந்த நூல் மிகவும் பயனுடையதாகும் என்று நம்புகிறேன்.
xvi

பாராட்டுரை
அரும்பெறல் தியாகி
தியாகம் துறவுக்கு நிகரானது, தியாகியும் துறவிக்கு நிகரானவர். இது பரமாத்துமாவின் வாக்கு. பரமாத்து மாவின் பிரதிநிதியாயுள்ளவர் மகாத்துமா. மகாத்துமா என்ருல் அது பெரிய ஆத்துமா எல்லா ஆத்துமாக்களை யும் தம்மிற் கண்டது மாத்திரமா ? அகில உலக ஆத்து மாக்களையும் தம்மிற் கண்ட மகாபுருஷர். எதனுற் கண்டார் ? எப்படிக் கண்டார் ? சத்திய சோதனையாற் கண்டார் : தியாக சிந்தையாற் கண்டார் ; உலகம் முழுவதும் அன்னியமின்றிக் கண்டார். மனித குலத்தின் மாணிக்கம் மகாத்துமா காந்திஜி, "மனிதர்க்குளெல் லாம் தலைப்படு மனிதன் ஹரன் சந்திர மோகனதாஸ் காந்தி " யென்று மகாகவி தாகூரும் மனம் விட்டுச் சொன்னர். இத்தகைய தியாகியை நூருண்டுகளும் காணமாட்டா. ஆயிரம் ஆண்டுகள் ஒருவேளை காண லாம். அரும்பெறல் தியாகி !
தியாகியைப் பற்றிச் சொல்லக் கேட்பது ஒரு பெரும்பேறே தியாகியை நேரே காணப்பெறுதலோ அதிலும் பெரும் பேறே. தியாகியின் சொற்களை அவர் தம் வாயாலேயே கேட்கப்பெறுதலோ அதிலும் பெரும் பேறே தியாகியின் கண்களால் நாம் காணப்பெறு
ii xvii

Page 13
தலோ அதிலும் பெரும்பேறே. தியாகியுடன் ஒரு நாளாவது உடனுறையும் வாய்ப்பினைப் பெறுதலோ அதிலும் பெரும்பேறே, எல்லாவற்றினும் மேல்ாகத் தியாகியின் அருள்நோக்கம் பெற்று அவர்வழி நின்று தியாக சேவைக்குத் தம்மை அர்ப்பனம் செய்யப் பெறுதலோ கிடைத்தற்கரிய மாபெரும் பேருகும். இத் தகைய அரும்பெறல் தியாகியைக் காணப்பெறுதல் அரிதினும் அரிதாகும். ஈழநாட்டிலே நம் கண்முன்னர் இன்று நாம் காண்பதென்ருல் அது வியப்புக்கும் நயப் புக்குமுரிய ஒர் அரும்பெறற் காட்சியே.
உண்மையாகவே இந்த அரும்பெறற் காட்சியினை நாம் நமது ஈழமணித் திருநாட்டிலே இன்று காணும் நற்பேறு பெற்றுள்ளோம். தியாகி இராஜகோபால் இன்று நம் கண்முன்னே வாழ்ந்து வருகின்ருர், நாம் மேலே கூறிய எல்லாப் பேறுகளையும் ஒருங்கே பெற்ற அரும்பெறல் தியாகியாக அவர் விளங்குகின்ருர்;
தியாகி இராஜகோபால் என் அன்புக்குரிய மாண வர் திருக்கோணமலை அன்னையின் தவப்புதல்வர் : மகாத்துமாகாந்தி அடிகளின் அருளுக்குப் பாத்திரமான தேசத்தொண்டர் : இந்திய விடுதலைப் போராட்டத் துக்கு ஈழமணித் திருநாடு அர்ப்பணஞ் செய்த தேசிய வீரர் : மகாத்துமாவின் சத்தியாக்கிரக போதனையை நன்கு உணர்ந்த சீடர் : சாத்வீகப் போராட்டத்தில் தலைகுனியாது சிறைபுகுந்த தியாகபுருஷர் இந்திய சுதந்திர தியாகிகளின் வரிசையில் இடம் பெற்றுள்ள உத்தம புத்திரர் பாரதப் பேரரசின் பாராட்டுக்கும் பரிசுக்கும் தியாகி என்கின்ற தெய்வீகப் பட்டத்துக்கும் உரிமைபெற்ற பாரத சேவகர் சமய பக்தர். நமது தியாகி என இவரை நான் சொந்தம் பாராட்டு கின்றேன்.
xviii

அரும்பெறல் தியாகி இராஜகோபால் அவர்கள் காந்திஜிக்கும், சத்தியாக்கிரகத்துக்கும், தமக்குமுள்ள தொடர்பை விளக்கி அனுபவ சாதனமாக வெளியிட் டுள்ள இந்த நூலை நான் நன்முக மதித்துப் பாராட்டுவ தில் மனமகிழ்வு கொள்கின்றேன். பாரதமாதாவின் மூக்கணியின் மணிமுத்துக் கழன்று அன்னேயின் பாதத்தை அணிசெய்து கிடப்பதுபோன்று விளங்குகின்ற நமது ஈழமணித்தாயின் இயற்கை அமைப்புக்கும் இணைபிரியாத தொடர்புக்கும் ஒரு புதிய அழகாகவும், அன்பின் பிணிப் பாகவும் இந்நூல் நின்று நிலவுக சிறப்பாக எதிர்கால இலங்கை மக்களுக்கு நிலையான பயணிந்து இந்நூல் நலம் பல புரிக சேவையின் சின்னமாக இது துலங்குக தியாகி இராஜகோபால் நீடு வாழ்க தியாகமே சேவை. சேவையே தியாகம்,
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை குருக்கள் மடம், கிழக்கு மாகாணம், I 2ー03-75,
xix

Page 14
பதிப் பு ைர 1934ஆம் ஆண்டு தொடங்கிய குரும்பசிட்டி சன்மார்க்க சபை,சென்ற நாற்பத்தொரு வருடங்களாக மெய்ந்நெறியிலும், உலகியலிலும் தன்னுல் இயன்ற சேவை செய்துகொண்டுவருகிறது; தொண்டின் ஓர் அம்சமாகப் பல நூல்களைக் காலத்திற்குக் காலம் வெளியிட்டுவருகி Pது. "இந்திய விடுதலைப்போரில் இலங்கை மகன் பங்கு" என்ற இந்த நூல் இவ்வரிசையில் 39ஆவது நூலாகும்.
இந் நூலே எழுதி உதவிய தியாகி கோ. இராஜகோபால் அவர்கள் திருக்கோணமலையிலே பிறந்தவராயினும் அவர் பலகாலம் ஈழகேசரிப் பொன்னேயா அவர்களின் அரவணைப்பில் வாழ்ந்தவர்; “ ஈழகேசரி"யில் தொண்டாற் றியவர்: சன்மார்க்க சபைமீது நீங்காத பற்றுடையவர். காந்தீய சகாப்தத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைச் சுருங்கக் கூறி அதனுல் ஏற்பட்ட பொதுசன எழுச்சி யையும், அதில் தன் பங்கையும் விளக்கமாக, சரளமான நடையில் தியாகி கோ. இராஜகோபால் அவர்கள் நன்கு எழுதியுள்ளார். சுயசரிதை போன்ற இந்த நூலில் உள்ள விடயங்களுக்கும் கட்டுரை களு க் கும் அவர் பொறுப்பாதவின் நாம் அவற்றைக் கூட்டவோ குறைக் கவோ முயலவில்லே. இக் கட்டுரைகளில் கூறப்படும் விடயங்கள் நடந்து முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனபடியால் இவற்றை அக்காலக் கண்கொண்டு பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளு கின்ருேம், காந்தியத்தை ஒரளவு மறந்துவரும் இக்காவ வாலிபருக்கும் இனிமேல் வரும் தலேமுறையினருக்கும் இந் நூல் நிச்சயம் பயன்படும்.
காந்தீய தத்துவத்தை நோக்கமாகக் கொண்ட திரு. நா. பொன்னேயா அவர்களின் பெரு முயற்சியால் ஆரம்பிக்கப்பெற்ற சன்மார்க்கசபை, தியாகி கோ. இராஜகோபால் அவர்களின் இந் நூலே வெளியிடுவதிற் பெருமையடைகிறது. குரும்பசிட்டி சன்மார்க்க சபையினர் 2-0-7.
XX
 

鷺
ܬܐܠܨܐ
-
==
முத்தமிழ் வித்தகர் அருண்மிகு விபுலாநந்த அடிகளார்

Page 15

.
*கண்டேன் அவர் திருப்பாதம்!”
இலங்கைவாழ் இந்துப் பிள்ளைகளுக்கு இலங்கைச் சரித்திரம் தெரியாது. கத்தோலிக்கர் எழுதி வைத் திருப்பதை எழுத்தெழுத்தாய்ப் பாடமாக்கி ஒப்புவித்த காலம். இந்திய சரித்திரங்கூடத் தெரியாது. குருகுலங் களிலும், மடங்களிலும் தேசியக் கல்வியை அள்ளியள்ளிக் குடித்து, தெவிட்டிக் குமட்டலெடுத்தவர்கள் எங்கள் தாய்நாட்டவர்கள். தாய்நாடாகிய இந்தியா சென்று குருப்பட்டம் பெற்று இலங்கை திரும்பிய அருண்மிகு விபுலாநந்த அடிகளார் பூரீஇராமகிருஷ்ண மிஷனின் சார்பில் திருக்கோணமலை இந்துக்கல்லூரியை 1925ஆம் ஆண்டு ஆனி மாதம் பொறுப்பேற்ருர்கள் அக் கல்லூரி யில் நானும் ஒரு மாணவனுக இருந்தபோது பூரீஇராம கிருஷ்ண பரமஹம்சதேவர், சுவாமி விவேகாநந்தா" இவர்களைப்பற்றி எங்களுக்கு விபுலாநந்த அடிகளார் எடுத்துரைப்பார்கள். சுவாமி விவேகாநந்தா சொல்லு வது போல் "நீங்கள் தேசபக்தி மிக் கவர்களாக இருக்க வேண்டும். நம் தாய்நாடு புத்துயிர் பெற்று எழுகின்றது. இமாசலத்தினின்று இளங்காற்று ஒன்று வீசுகிறது. நீண்டதோர் உறக்கத்தினின்று நம் தாய் எழுந்து நிற் கிருள். இளைஞர்கள் தேசாபிமானம் மிக்கவர்களாக விளங்கவேண்டும். பாரதத்தாயே நாம் வணங்கும் கடவுள். சுயநலத் தியாகமே நமது சொத்து, தூய்மையே நாம் படைத்துள்ள ஆயுதம், தர்மமே நம்மைக் காக்கும் கோட்டை. வீரியமே நமக்கு உயிர். உடல் இருக்கும் வரை தேசத்துக்காக ஓயாது உழைப்போம் " என்று வீரம் செறிந்த சொற்களிலே சுவாமி விபுலாநந்தா

Page 16
இந்திய விடுதலைப் போரில்.
மாணவர்களுக்குக் கூறித் தேசபக்தியை ஊட்டி வந்தார். எனக்குத் தேசியப் பாடல்கள் என்ருல் தேன் மாதிரி. மாணவர் கூட்டத்தில்,
" கரம் சந்திர மோகனதாஸ் காந்தி இந்திபா சுதேசி
கருனே நமக்கிருக்கக் கலங்குவதேன்' என்ற மதுரைப் பாஸ்கரன் அவர்கள் இயற்றிய பாடலேப் பாடினேன். அப்பொழுது விபுலாநந்த அடிகனார் அப் பாடல்க் கேட்டுக்கொண்டிருந்தார். கூட்டம் முடிந்த பின்னர் என்னே அழைத்து ஒரு சிறு புத்தகத்தை விரித்து இதோ பாட்டு - பாரதியார் பாடுகிருர்:
" விர சுதந்திரம் வேண்டிநிள் முர்பின்னர்
வேருென்று கொள்வாரோ" என்றும்,
" ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள் வில் அறிவைச் செலுத்துவாரோர்"
என்றும் அடிகளார் பா டி க் காட்டிஞர்கள். எனது வாழ்க்கையில் முதல் முதலாக பாரதி பாடல்களேப் பாட வைத்த பெருமை அடிகளாருக்கே உரியது. எனது உள்ளப் பார்வையை நன்கு அறிந்த அடிகளார் அதற் கேற்ற பயிற்சியை எனக்குத் தந்து வந்துள்ளார். சாதி, மதம், மொழி, இனம். நாடு என்ற எல்லேக்குள் மட்டும் நிற்காது உலகத்திலுள்ள மக்கள் யாவரும் ஒரு குடும் பத்தினர் போல வாழ வேண்டு மென் ற உயர்ந்த அறிவுரைகளே வாரியினறத்த பாரதியாரை அடிகளார் என்றும் போற்றிவந்தார்கள். அன்று நாம் ஆமைகளாய் இருந்த காலம். அன்னியசின் வவே க்குள் மக்கள் உட்பட்டு உழன்ற காலம் நாட்டின் புகழ் பாடு வதே தவறெனக் கரு த ப் ப ட் ட காலம். அந்தக் கோழைத் தன த்தை ப் போக்கத் தயங்காது பாரதி பாடல்களைத் திக்கெட்டும் பரப்பிய அடிகனாரைத் தமிழ் உலகம் என்றுமே பூஜித்து வருகின்றது.
2

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா கோந்திஜி இலங்கை விஜபம்)

Page 17

'கண்டேன் அவர் திருப்பாதம்!"
கண்டேன் காந்தி மகாத்மாவை :
1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை புரியப்போவதாகவும் இலங்கையில் சுற்றுப்பிரயாணஞ் செய்து, கதர் இயக்கத்துக்காகப் பணம் வசூல் செய்வார்கள் என்றும் பத்திரிகையில் படித்தேன். "வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க" என்ற பாரதியாரின் நினைவில் வைத்திருந்த எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காந்திஜி மாத்தளைக்கு வரும் திகதியை யான் முன்னரே அறிந்துகொண்டேன். நவம்பர் 18ஆம் திகதி காந்திஜி மாத்தளைக்கு வந்திருந் தார்கள். பொது மைதானத்தில் உள்ள மேடை தோர ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மேடை யில் மெலிந்த மனிதர் ஒருவர் சப்பாணியிட்ட வண்ணம் உட்கார்ந்துகொண்டு ஏ தோ எழுதிக்கொண்டிருக் கின்றர். அவர்தான் காந்தி மகாத்மா என்று மனப் பூரிப்பு அடைந்தேன். "கண்டேன் அவர் திருப் பாதம்” என்று எனது உள்ளம் சொல்லியது, மேடையை யான் அணுகும்போது ஐம்பது அறுபது பேர்தான் தரையில் உட்கார்ந்து இருந்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குக் கூட்டம் நடைபெறவில்லை. காந்தியடிகளுக்கு ஒவ்வொரு நிமிஷமும் பொன்ஞனது. ஆகவேதான் மக்கள் அங்கு, வந்து சேரும்வரை சும்மா காத்திராது மேடையில் இருந்தபடியே எழுதிக்கொண்டிருந்தார்கள். முப்பது நிமிஷங்களில் பெருந்திரளான கூட்டம். காந்திஜிக்கு அருகே ராஜாஜியும், அவருடைய காரியதரிசி மகாதேவ் தேசாயும் இருந்தார்கள். வரவேற்புச் சபைத் தலைவர் காந்தி ஜியின் தன்னலமற்ற சேவையைப் போற்றி எழுதிய வரவேற்புப் பத்திரத்தை வாசித்து அளித்தார். அதில் கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றியும் (காந்திஜியின் பாரியாரைக் காந்திஜியின் தாயாரெனத் தவருகக்) குறிப்பிடப்பட்டிருந்தது. அன்னை கஸ்தூரிபாயைப் பற்றிச் சபைத் தலைவர் பேசும்போது காந்திஜி பொக்கை வாயாற் சிரித்துவிட்டார்.

Page 18
இந்திய விடுதலைப் போரில்.
காந்திஜியின் சோற்பொழிவு:
பின்னர் காந்திஜி எழுந்து ஆங்கிலத்திற் பேசிஞர்கள்; ராஜாஜி அதனைத் தமிழில் பெயர்த்துக்கொண்டிருந் தார். காந்திஜி பேசுகையில் "வரவேற்புப் பத்தி ரத்தில் எனது மனைவி கஸ்தூரிபாயைத் தவருக எனது தாயாராக நினைத்துக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இது av prGausib sišas šis Lasoppløsnr sir. (It is a welcome mis take). கஸ்தூரிபாயை யான் இந்த ஊருக்கு அழைத்து வராது கண்டியில் தங்க வைத்துவிட்டு வந்தேன். காரணம், எனக்குச் செய்யவேண்டிய சில காரியங்களைக் கவனிக்கு மாறு அவர்களைப் பணித்துவிட்டு வந்திருக்கின்றேன். பல ஆண்டுகளாகவே கஸ்தூரிபாய் எனது தாயாகவும், வேலைக்காரியாகவும், எனது துணிகளைத் தோய்க்கின்றவ ளாகவும் இருந்துவருகின்ருள். கஸ்தூரிபாய் எனக்கு எல்லாமாகவு மிருக்கின்ருள். எனவே, அவர் இங்கு வராததையிட்டு மன்னிக்குமாறு வேண்டுகின்றேன். புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்: இடை யருது வறுமையின் வாசஸ்தலமாகவுள்ள இந்திய நாட் டில் ராட்டைதான் ஏழைகளுக்குக் கஞ்சிக்கு வேண்டிய உப்பை அளித்து வருகிறது. அந்தக் கதர் வேலைக்காகப் பணம் வசூலிக்க வந்திருக்கிறேன். இலங்கையில் ராட்டை யால் கதர் உற்பத்தி செய்யும்வரை எண்ணற்ற ஏழை மக்கள் உற்பத்தி செய்யும் கதரை வாங்கும்படி உங்கள் அனைவரையும் நான் பணிந்து கேட்கின்றேன். இலங்கைத் தீவின் புள்ளி விபரங்களைப் (Statistics) படிக்கும்பொழுது பொது வருமாளத்தில் குடிவகையால் வரும் வருமானம் கணிசமாகவிருக்கிறது. இந்தியாவைப்போல் அல்லாது இங்கு குடிப்பழக்கம் மரியாதைக் குறைவானதும் வெட்கப்படவேண்டியதும் என்று கருதுவதாகவில்லை. கெளதமர் வாழ்ந்ததும் ஞானேதயம் (enlightenment) கிடைத்ததும் எந்த நாட்டிலோ அந்த நாட்டைச் சேர்ந்தவன் நாள். இலங்கை பெளத்த அறிஞர்கள் இதற்கு மாருக என்ன சொல்லிவிட்டாலும் புத்த
4

**கண்டேன் அவர் திருப்பாதம்!"
பிரானின் உயர்ந்த கோட்பாடுகளுக்குக் குடிப் பழக்கம் மிகவும் நேர்மாறனது. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் நிரம்ப இருக்கின் ருர்கள். குடிப்பது இந்துசமயத்தில் பாவம் என்று கருதப்படுகிறது என்பதை யான் உங்களுக்குச் சொல்லு கிறேன்; அதேமாதிரி இஸ்லாம் சமயத்தின் நியதிக்கும் மாருனது. கிறிஸ்தவ ஐரோப்பாவில் குடிப்பது மரியா தைக் குறைவானதென்று கதுருவதில்லை என்பதை யான் மனவருத்தத்துடன் சமர்ப்பிக்கின்றேன்; ஐரோப்பாவி லிருக்கும் குடிப்பழக்கம் கிறிஸ்து பெருமானின் தத்துவத் திற்கு மாறனது என்று யான் அறிந்த நூறு அல்லது ஆயிரம் நண்பர்கள் உத்தரவாதம் கூறியிருக்கின்றர்கள். யான் அமெரிக்க மக்களுடன் தொடர்பு வைத்திருக்கின் றேன். அமெரிக்க மக்கள் எவ்வளவு தைரியமாகக் குடிப் பழக்கத்தை நீக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கின்ருர்கள். எனவே, இங்குள்ளவர்கள் - பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் - அனைவரும் ஒன்று சேர்ந்து பிரதான முயற்சி செய்து கொடிய குடிப் பழக் கத்தை இந்த நாட்டிலிருந்து வெருட்டுங்கள் இன்னுெரு விஷயத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின் றேன். உலகத்திலே தயாளமுள்ள சமயம் பெளத்தி மெனப்படுவது, அதில் தீண்டாமை நிலவ இடம் கொடுப்பதா? இவன் தீண்டப்படாதவன் என்று ஒரு வரைப் பார்த்துக் கூறுவீர்களேயானல் நீங்கள் பெளத்த சமயத்தை மறுந்தவர்களாவீர்கள். ஒவ்வொரு மனித னும் சமமான நிலையிலுள்ளவன் என்பதை உடனே கூறி விடுங்கள்." என்று காந்திஜி பேசி முடித்தார்.
பிடித்தது சதர் மோகம் :
காந்திஜியின் பேச்சு எனக்குத் தேவ வாக்கியமாக
விருந்தது. அப்போது எனக்கு வயது பதினேழுதான். நான் திருகோணமலைக்குத் திரும்பியதும் எனது தந்தை
5

Page 19
இந்திய விடுதலைப் போரில்.
திரு. கி. கோவிந்தசாமி அவர்களிடம் சென்று கதர் வாங்கித்தரும்படி வேண்டினேன். அக்காலத்தில் கதர் என்ருல் யாருச்கும் தெரியாத காலம். ஆண்டவனுடைய விருப்பப்படி ஒன்று நடந்தது. காந்திஜியின் காரியதரிசி, மகாதேவ் தேசாய் அவர்கள் அடுத்த வருடம் (1928ஆம் ஆண்டு) விற்பனை செய்வதற்காக கதர்த் துணி மூடைக ளுடன் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கு வந்தார்கள். தேசாய் அவர்களிடம் எனக்கு வேண்டிய கதர்த்துணிகளை எனது தந்தையே நேரில் வந்து வாங்கித் தந்தார்கள். அன்றிலிருந்தே நான் கதர் உடுத்தி வருகின்றேன்: கதர்த் துணியை யானே தோய்த்துக் கட்டுகிறேன்.
1931ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலண்டனில் நடந்த வட்டமேசை மகாநாட்டிற் பங்குபற்றிவிட்டு பம்பாய் வந்து சேர்ந்தார் காந்திஜி, துறைமுகத்தில் கூடியிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் "மகாத்மா காந்திக்கு ஜே!" என்ற கோஷங்கள் போட்டுப் பேரா னந்தத்துடன் வரவேற்றனர். "நான் வெறுங்கையுடன் தான் திரும்பியிருக்கின்றேன். என் நாட்டின் கெளரவத் திற்குப் பாதகம் ஏற்படும் வகையில் யான் நடந்து கொள்ளவில்லை" என்று காந்திஜி அங்கு கூடியிருந்த மக்களிடம் கூறிஞர். கப்பலிலிருந்து இறங்கியதும் காந்தி ஜிக்குக் கிடைத்த முதல்செய்தி, மனிதர்குல மாணிக்கம் ஜவஹர்லால் நேரு தன்னைச் சந்திப்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன் அலகபாத்திலிருந்து வந்துகொண் டிருக்கையிற் கைது செய்யப்பட்டார் என்பதுதான். இதையடுத்து எல்லைப்புறக் காந்தி கான் அப்துல் கபார்கான், அவரது சகோதரர் டாக்டர் கான் சாகேப் போன்ற தலைவர்கள் நாடெங்கிலும் கைது செய்யப்பட் டார்கள். அதேசமயம் இந்திய தேசிய காங்கிரசைச் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் அறிவித்து ஒரு அவசரகால சட்டத்தையும் பிறப்பித்தது. இவையெல்லாம் காந்திஜிக்குப் பெரும்
6

**கண்டேன் அவர் திருப்பாதம்!"
வேதனையை அளித்தன. அன்று மாலை அஜாத் மைதா னத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது? பம்பாய் நகரமே தி ரண் டு வந்தது போல அந்தக் கூட்டம் காணப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தன் மன வேதனையை வெளிப்படுத்திக் காந்திஜி உருக்கமாகப் பேசினர். அதன் சாரம் இதுதான் :
"இந்த அவசரகாலச் சட்டங்களை, காங்கிரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்றே நான் கருதுகிறேன்.மற்றும் ஒரு அக்கினிப் பரீட்சை ஏற்படாமல் தவிர்க்க எல்லா முயற்சிகளையும் நான் எடுத்துக்கொள்வேன் என்று மீண்டும் கூறுகின்றேன். ஐந்து அவசரகாலச் சட்டங்களுக் கும் அதிகமாக அரசாங்கம் பிரகடனம் செய்திருக்கிறது. இவற்றைக் கிறிஸ்தவ வைஸ்ராயான வெலிங்டன் பிரபு விடமிருந்து கிடைத்த கிறிஸ்மஸ் பரிசுகள் என்றே நான் கருதுகிறேன். ஏனென்ருல், கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பரஸ்பரம் வாழ்த்துக்கள் கூறிப் பரிசுகள் பரிமாறிக்கொள்வது வழக்கமல்லவா? எனக்கு ஏதாவது பரிசு அளிக்க வைஸ்ராய் விரும்பினர். இதுதான் எனக்குக் கிடைத்தது. சிறிதளவு நம்பிக்கையிருந்தாலுங் கூட அதைப் பற்றிக்கொண்டு சமரசப் பேச்சுக்களைக் கைவிடா மல் நடத்துவேன். ஆனல், நான் வெற்றி காணுமல் போனல் நான் நடத்தும் போராட்டத்தில் ஈடுபடும்படி உங்களை அழைப்பேன். அது இறுதிவரை நடைபெறும் போராட்டமாக இருக்கும். இந்தியாவின் விடுதலைக் காகப் பத்துலட்சம் மக்களின் உயிரைத் தியாகம் செய்யவும் நான் சிறிதும் தயங்கமாட்டேன். இதை யான் இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேய மக்களிடம் கூறி யிருக்கின்றேன்' என்று காந்திஜி கூறிமுடித்தார்கள். இதன்பின்னர் காந்திஜிக்கும் வைஸ்ராய்க்கும் இடையில் தந்திப் போக்குவரத்து நடைபெற்றது. சமரசத்துக்கு

Page 20
இந்திய விடுதலைப் போரில் ...
வர வைஸ்ராய் மறுத்துவிட்டார். எனவே, மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தை காந்திஜியின் தலைமையில் ஆரம் பித்து நடத்துவதென்று காங்கிரஸ் காரியக்கமிட்டி முடிவு செய்தது:
மகாத்மாவின் செய்தி பத்திரிகை மூலமாக :
"நான் கைது செய்யப்பட்டதும், தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளவேண்டுமென்று நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளுகின்றேன். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் வேள்வித்தீயில் தங்களிடம் மிகச் சிறந்த தாக உள்ளதை அர்ப்பணம் செய்யவேண்டுமென்று நான் விரும்புகின்றேன்." கவியரசர் ரவீந்திரநாத தாகூருக்கு அண்ணல் எழுதிய கடிதம் இது. 1932ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி காந்திஜியைக் கைது செய்யப் பொலீஸ் அதிகாரிகள் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தனர். மெய்ம் மறந் து உறங்கிக்கொண்டிருந்தார் அந்த உத்தமர். காந்திஜியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி தந்தையை எழுப்பினர். அன்று காந்திஜியின் மெளனதினம், இந்தியாவுக்கு வந்து மக்களுக்குக் குறிப் பாக மலைஜாதி மக்களுக்குச் சேவை செய்து வந்த பூஜ்யர் வெர்ரியர் எல்வின் அச்சமயம் காந்திஜியின் அருகில் இருந்தார். "என் நாட்டு மக்களிடம் நான் எப்படி அன்பு கொண்டிருக்கிறேனே அதைப்போலவே உங்கள் நாட்டு மக்களிடமும் நான் அன்பு கொண் டிருக்கிறேன் என்ற இந்தச் செய்தியை நீங்கள் அவர்க ளிடம் சொல்லுங்கள்" என்று தான் எழுதிய துண்டுக் கடிதத்தை எல்வின் பாதிரியார் அவர்களிடம் கொடுத் தார். "ஆண்டவனின் கருணை அளவேயில்லாதது சத்தியத்திலிருந்தும் அஹிம்சையிலிருந்தும் பிறழவே பிறழாதீர்கள். சுயராஜ்யத்தைப் பெறுவதற்கு உங்கள்
8

**கண்டேன் அவர் திருப்பாதம்!"
உயிரையும் சகலதையும் அர்ப்பணம் செய்யுங்கள்". இது சிறைக்குச் செல்லும் சமயத்தில் மகாத்மா மக்களுக்கு விடுத்த செய்தி, வந்த பொலீஸ் அதிகாரிகள் காந்தி மகாத்மாவை எர்வாடா சிறைக்குப் பாதுகாப்புக் கைதி யாக அழைத்துச் சென்றனர். இச்செய்தியை யான் பத்திரிகையிற் படித்தேன்.
“அன்னை உயிரினுக்கே இன்று ஆயத்து வந்ததடா
பின்னை உயிர்நமக்கேன் ரண பேரிகை கொட்டிடுவோம்." என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. எனது தந்தையிடம் சென்று "அப்பா, கடமை என்னை அழைக் கிறது. மனமுவந்து விடை தாருங்கள்: இந்திய சுதந்திரப் போராட்டத்திற் கலந்துகொள்ள முடிவு செய்துவிட்டேன்", என்றேன். அப்பாவின் கண் களில் நீர் மல்கியது. கண்ணைத் துடைத்துக்கொண்டு அப்பா சொன்னுர், “மகாத்மாவின் பேரில் நம்பிக்கை வைத்துள்ள உனக்கு ஆபத்து என்றும் வராது. சரி. சுகமே போய் வா. இந்தியாவிலிருந்து அடிக்கடி எழுது" என்ருர். 1932ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி நான் சென்னை போய்ச் சேர்ந்தேன், அப்போது வெலிங்டன் பிரபுவின் அடக்குமுறை ஆட்சி உச்ச நிலை அடைந்திருந்தது. தாய்நாடு சென்ற நான் காங்கிரசில் சேர்ந்தேன். உப்பு சத்தியாக்கிரகம், அன்னியத்துவி மறியல் போன்ற இயக்கங்களில் பங்குபற்றி உழைத் தேன். இந்த இயக்கங்களில் நான்பட்ட நெட்டூரங்க ளும், சிறையிற் செக்கிழுத்த கதையும் மறக்கமுடியாத வைகளாகும்.

Page 21
காந்திஜி தண்டி யாத்திரை
சென்னையில் சட்டமறுப்புப் போராட்டம் அப் போது நடைபெற்றுக்கொண்டிருந்தது. 'இம்" என்ருல் இதயம் வெடிக்கக் குத்துவர். “உம்” என்ருல் சிறைக்குள் தள்ளுவர். நண்பர்களாகவிருந்தாலும் அடக்கு முறைக்குப் பயந்து தெரியாதவர்களைப்போலப் போய்விடுவார்கள் நாட்டின் புகழைப் பாடிக்கொண்டிருப்பவரைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் அஞ்சுவர். அப்படியிருந்தும் தங்கள் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தாய்நாட்டின் விடுதலை வேள்விக்கே அர்ப்பணம் செய்த மனிதகுலத் தைச் சேர்ந்த செம்மல்கள் அன்று இருக்கத்தான் செய் தார்கள். தமக்கொரு சிறு தொகையையும் சேமித்து வைக்காமல் அன்ருடம் வரும் பொருளைத் தேசத்தொண் டர்களுக்கு வழங்கிய வள்ளல்கள், காங்கிரஸ் தொண்டர் முகாமைச் சென்னை நகரிலுள்ள ஒட்டேரி என்னும் பகுதி யில் நடத்திக்கொண்டு வந்தார்கள் அம் முகாமுக்குத் தலைவர் யோகி எம், கே. பாண்டுரங்கன் அவர்கள், முகாமுக்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டிருந் தவர், சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த மர வியாபாரி பூரீ ராமுலு நாயுடு அவர்கள். அம் முகாமில் நான் சேர்ந்தவுடன் சத்தியாக்கிரகப் போரில் ஈடுபடுபவர்கள் மேற்கொள்ளவேண்டிய சத்தியப்பிரமாணம் அடங்கிய பத்திரம் ஒன்றி ல் கையொப்பமிட்டேன். "இயக் கத்தின் தலைவர்கள் இடும் கட்டளைக்குப் பணிந்து நடப்பேன்" என்பதும் அப் பிரமாணங்களில் ஒன்று.
ஒரு மாதமாக அம்முகாமிற் பயிற்சி பெற்றேன். பிப்பிரவரி ஆரம்பத்தில் அந்நியத் துணி விற்கும் கடை களுக்கு முன் மறியல் நடைபெற்றது. அந்நியத் துணிகளை விற்ற ஒரு கடைக்கு முன்பாக மறியல் செய்யப் போயிருந்தேன். கையில் விநியோகிக்கும் துண்டுப் பிர
10

காந்திஜி தண்டி யாத்திரை
சுரங்கள் இருந்தன. "நம்மை அடிமைப்படுத்தி அடக்கு முறைச் சட்டங்களினல் ஆளும் ஆங்கிலேயரின் பொருள் களை வாங்குவது பாவமாகும். அது மட்டுமன்றி அது தேசத்துரோகமுமாகும். ஆகையால் சீமைத்துணியை வாங்காதீர்கள். ஆங்கிலேயரின் பொருள்கள் எதையும் வாங்கவேண்டாம்" என்று காணப்பட்டிருந்தது. அப் பிரசுரங்களை நான் விநியோகித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒருவர் (இரகசியப்பொலீஸ்) என் கையி லிருந்த பிரசுரங்களைப் பறித்துக்கொண்டு என் கன்னத் தில் பளிரென்று அறைந்தார். 'உன்னை அரஸ்ட் செய் கிறேன் பார். வா பொலீஸ் ஸ்டேசனுக்கு" என்ருர் அந்தக் கன வான். இது நடக்கும்போது காலை சுமார் பத்துமணியிருக்கும். சென்னையிலுள்ள சூளை பொலீஸ் நிலையத்திற்கு நான் இட்டுச்செல்லப்பட்டேன்: அங்கு ஒர் அறையில் என்னைத் தள்ளினர்கள். சிறிது நேரத்திற்குப்பின் அந்த அறைக்குள் வேறு ஒருவர் வந்தார். 'இந்த நோட்டீசை யாரடா உனக்குத் தந்தவர்கள் சொல்?" பதில் ஒன்றும் சொல்லாது நின் றேன். கேள்வி கேட்டவர் என்னை நன்முக நையப் புடைத்தார். எனக்கு மயக்கம் வந்தது. பின்னர் நடந்தது ஒன்றும் தெரியாது. பிற்பகல் ஐந்து மணி யிருக்கும். ஏதோ நித்திரையில் இருந்து விழித்தமாதிரி இருந்தது. ஆனல் உடம்பெல்லாம் ஒரே வலி. இந்த நிலையில் ஒருவர் என்னை இழுத்துக்கொண்டு பொலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. துரைசாமி நாயுடு அவர்களுக்கு முன்னுல் விட்டார். அவர் என்னைப் பார்த்து "டேய் சோதாப்பயலே சுயராச்சியம் கிடைத்தால் உனக்குக் கவர்னர் வேலை தரப்போருங்கடா. அடே பயலே,இந்தப் பக்கம் தலை காட்டாதே ஒடிப்போய்விடு" என்று இரைந் தார் அவர். இதைக் காதில் வாங்கிக்கொண்டு பொலீஸ் நிலையத்தை விட்டுக் கிளம்பினேன். பசியோடும் வேதனை யோடும் மெதுவாக எனது முகாமுக்குப் போய்ச் சேரும்
11

Page 22
இந்திய விடுதலைப் போரில்...
பொழுது இரவு பத்துமணியாகிவிட்டது. சிலநாட்கள் ஒய்வு எடுத்துக்கொண்டேன். V
உப்புச் சத்தியாக்கிரகம்:
1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினுேராந் திகதி அதிகாலை ஆறரை மணிக்கு காந்திஜி அவரது எழுபத் தொரு சீடர்களுடன் சபர்மதி ஆச்சிரமத்திலிருந்து உப்புச் சட்டத்தை மீறித் தண்டியில் உப்பு எடுக்கப் aTTaTLLL S LLLS S LTTT TTLLL LLLLLL TT TTLTT CLTTTTTCLC யாத்திரை செய்த காட்சியானது எந்த மொழியிலும் வர்ணிக்க முடியாததொன்று. "வெற்றி அல்லது சாவு" என்ற வீராவேசத்தோடு புறப்பட்டார் காந்தி அடிகள். "ஆங்கில ஆட்சியால் இந்தத் தேசம் நாசமாய்ப் போய் விட்டது. பணத்துக்குப் பணம் போயிற்று. கலைக்குக் கலை போயிற்று: ஆத்ம சக்தியே அழிந்துபோய்விட்டது. எனவே, இந்த ஆட்சியை நான் ஒரு பெருத்த சாபமாகக் கொள்கிறேன். இதை அழித்துப்போட நான் முற்பட்டு விட்டேன். "மன்னர் வாழ்கவே" என்ற பாட்டை நான் எத்தனையோ தடவை ராகம் போட்டு, வெகு அழகாகப் பாடியிருக்கிறேன். என்னுடைய நண்பர்களில் பலரையும் பாடச் செய்திருக்கிறேன், மனுப்போடுவ திலும் பேட்டி கண்டு பேசுவதிலும் அப்பொழுது நம் பிக்கை யிருந்தது. ஆணுல், இன்றே அவையெல்லாம் பறந்துவிட்டன. அந்த வழிகளில் இந்த அரசாங்கம் ஒரு நாளும் இணங்கி வராது. இப்பொழுது ராஜத் துவே ஷத்தையே எனது மதமாகக் கொண்டிருக்கிறேன். நமக் குச் சாபமாகவிருக்கும் இந்த அரசாங்கத்தை அழித் துப்போடுவதே நமது தர்மமாகும். இந்தப் போரில் வெற்றி கிடைக்காவிட்டால் எனது ஆச்சிரமத்தில் அடி யெடுத்து வைக்கமாட்டேன். சிறையிற் கிடப்பேன்" எனப் பகர்ந்து போர்க்களத்திற் குதித்த புனித நாள் அப்புனித தண்டி நாளையிட்டு 1932ஆம் ஆண்டு
12

காந்திஜி தண்டி யாத்திரை
மார்ச் மாதம் 11ஆம் திகதி சென்னைக் கடற்கரையில் அதிகாலையில் உப்புக்காய்ச்சி சட்டத்தை மீற ஏற்பாடு செய்யப்பட்டது: "திரு.ஆர். சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் ஒரு கோஷ்டி சென்னை ஹைக்கோட் கடற் கரையில் உப்புக் காய்ச்சவேண்டும், காலை ஏழு மணிக்கு எமது முகாம் தளபதி யோகி எம். கே. பாண்டுரங்கம் அவர்களின் பாரியார் திருமதி சரஸ்வதி பாண்டுரங்கம் அவர்களின் தலைமையில் ஒரு கோஷ்டி சென்னைச் சட்டக் கல்லூரிக்கருகில் இருந்து ஒர் ஊர்வலம் தேசிய கீதங் களை பாடிக்கொண்டு முக்கிய தெருக்கள் வழியாகச்செல்ல வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு இணங்க நான் தொண் டர்களுடன் ஹைக்கோட் கடற்கரைக்குச் சென்றேன், நாம் கொண்டுவந்த மண்பானைகளிற் கடல் நீரை எடுத்து வந்து தொண்டர்கள் உப்புக் காய்ச்சத் தொடங்கி ஞர்கள். சிறிய கம்பத்திற் கட்டிய தேசியக் கொடியை ஏந்தி நிற்கிறேன். பொலீஸார் இதைப் பார்த்துவிட் டார்கள் ! தடியுடன் வந்த பொலீஸார் எங்களைக் கைது செய்தார்கள், பொலீஸ் நிலையத்திற்குப் போகு முன் ஒரு சர்ச்சை நடந்தது. பொலீஸார் எனது கையி லிருந்த கொடியைப் பிடுங்க எத்தனித்தார்கள். உப்புக் காய்ச்சிய பானைகளைத் தொண்டர்களிடமிருந்து பறிக் கப் பார்த்தார்கள். அதற்கு நாங்கள் விடவில்லிை. உப்புக் காய்ச்சிய மண் பானைகளுடன் பொலீஸ் நிலையத் திற்குப் போனுேம்
திருமதி சரஸ்வதியின் வீர கர்ஜனை :
தேசியக் கொடியையோ அல்லது உப்புக் காய்ச்சிய பானைகளையோ பொலீஸார் பிடுங்க விடக்கூடாது. அதையிட்டு காந்திஜியின் மணி வாசகம் எம்மை வழி நடத்தி வந்தது. " உப்பை அள்ளும் பொழுது கையில் உள்ள உப்பை அரசாங்க அதிகாரிகள் அப்பிக்கொள்ள முற்படுவார்களானல் இயன்றவரை நாம் உப்பை விடக் கூடாது. ஒரு தாயானவள் தன் உயிர் போனலும்
13

Page 23
இந்திய விடுதலைப் போரில்.
எப்படித் தன் குழந்தையைப் பிறர் பறித்துக்கொண்டு போக இடங் கொடுக்க மாட்டாளோ அதே மாதிரி நாமும் நமது உயிர் போனலுங்கூட நமது கையில்உள்ள உப்பை பொலீஸார் பிடுங்கிச் செல்ல விடக்கூடாது." இதை மனதில் வைத்துக்கொண்டே நாம் பொலீஸ் நிலையம் அடைந்தோம்; அங்கிருந்து பொலீஸ் மோட் டார் வானில் எங்களைப் பொலீஸ் கமிஷனர் காரியா லயத்திற்கு இட்டுச்சென்ருர்கள். திருவல்லிக்கேணிக் கடற்கரையிற் கைது செய்யப்பட்ட திரு. ஆர். சுப்பிர மணியம் அவர்களின் கோஷ்டியும், ஊர்வலத்தில் கைதாகிய திருமதி சரஸ்வதி பாண்டுரங்கம் அவர் களின் கோஷ்டியும் பொலீஸ் கமிஷனர் காரியாலயம் வந்து சேர்ந்தன. எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை யானேம் அனைவரும். வெளியே வந்த அத்தனை சத்தியாக்கிரகிகளும் திருமதி சரஸ்வதி பாண்டுரங்கம் அவர்கள் தலைமையில் சென்னை ஹைகோட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்ருேம். அப்போது ஒரு பஸ் நம்மை வழி மறித்து நின்றது. படபடவென்று பஸ்ஸிலிருந்து தடியுடன் பொலீஸார் குதித்தனர். திருமதி சரஸ்வதி பாண்டுரங்கத்தைத் தனியே நிறுத்திவிட்டு எங்களுக்கு நல்ல அடி கொடுத்தார்கள். திருமதி சரஸ்வதி அம்மாள் வீர கர்ஜனை செய்துகொண்டு அங்குமிங்குமாக ஓடிய வண்ணம் எமக்கு அடி விழாது தடுக்கப் பார்த்தார்கள். கடைசியில் எங்களைப் பிரித்துவிட்டார்கள். பல கோணத்திலிருந்து மீண்டும் எம் முகாம் போய்ச் சேர்ந்தோம்.
தேசிய வாரம்:
1919ஆம் ஆண்டில் பாஞ்சால கவர்ணராக இருந்த சேர் மைக்கேல் ஒட்வியர், காங்கிரஸ் இயக்கம் பாஞ்சா லத்தில் பரவாமலிருக்க வேண்டிய முயற்சிகளில் புகுந் தார். பாஞ்சால மக்கள் தீரர்கள் போர்க்குணம் மிகுந்த வர்கள். 1914ஆம் ஆண்டு முடிந்த மகாயுத்தத்திற்கு
14

காந்திஜி தண்டி யாத்திரை
அவர்களில் அநேகர் சென்று பேரும் புகழும் பெற்றுத் தாய்நாடு திரும்பியிருந்தனர். இவர்களிடையே சுதந்திர தாகம் ஏற்படின் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி முடிந்துவிடும் என்று கவர்ணர் நினைத்தார். அந்த ஆண் டில் காங்கிரஸ் மகாநாடு பாஞ்சாலத்திலுள்ள அமிர்த சரஸில் நடைபெறவிருந்ததைத் தடுக்க அவர் எண்ணங் கொண்டார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களான டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்தியபால் என்ற இருவரும் கைதுசெய்யப்பட்டு, பிறகு போன இடம் தெரியாமற் கொண்டுசென்றனர் பொலீஸார். இதனுல் மக்களிடையே அமைதியின்மை மனக்குழப்பம் ஏற் படவே அங்குமிங்குமாகச் சில இடங்களில் கலவரம் அதில் சிலர் இறந்தார்கள், ராணுவச்சட்டம் பிறப் பிக்கப்பட்டது. ஏப்பிரல் மாதம் 13ஆம் திகதி அமிர்தசரஸ் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து பத்தா யிரம் மக்கள் திரண்டெழுந்து ஜாலியன்வாலா பார்க்கில் ஆங்கில ஆட்சியின் கொடுங்கோன்மையான சட்டத்தை எதிர்த்துக் கூடினர். ஜாலியன்வாலா பார்க் மைதானம் நாற்புறங்களும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டது. அதற்குள்ளே செல்ல ஒரு குறுகிய பாதைதான் இருந்தது. கூடியிருந்த ஆடவர்கள், பெண்கள், குழந்தைகள் இவர் களுக்கு நகரில் இராணுவச்சட்ட மியற்றியிருப்பதாகத் தெரியாது. இந்தத் தருணத்தில் ஜெனரல் டயர் என்ற இராணுவ அதிகாரி ஆயுத மோட்டார்கள் துருப்புக ளுடன் பார்க்குக்குள் சென்று எச்சரிக்கை எதுவும் இல்லாது கூட்டத்தைச் சுட உத்தரவிட்டார். என்ன இருந்தாலும் பத்தாயிரம் மக்கள் குறுகிய வாயிலின் வழியாக இரண்டு நிமிடங்களில் எப்படி வெளியேற முடியும்? அதற்கிடையில் 10 நிமிடங்கள் ஓயாமல் கதிகலங்கிவிட்ட கூட்டத்தினர்மீது சுட்டார்கள் இப் படுமோசத்தில் நானுநூறு பேர் மரணமடைந்தனர். இரண்டாயிரம் மக்கள் படுகாயமுற்றனர். கூட்டத்தில்
15

Page 24
இந்திய விடுதலைப் போரில்.
படுகாயமடைந்து கீழே விழுந்து துடிப்பவர்கள் அன்றிரவு முழுவதும் யாதொரு உதவியும் அளிக்கப் படாமல் அங்கு கிடந்தனர். பின் ஜெனரல் டயர் விசாரிக்கப்பட்டபொழுது அவர் சொன்ஞர் "காய மடைந்து கிடந்தவர்களைக் கவனிப்பது என் வேலையென்று நான் கருதவில்லே. ரவைகள் மட்டும் தீர்ந்திராவிடில் இன்னும் ஜனங்களேச் சுட்டு வீழ்த்தியிருப்பேன்" என்று. இந்தத் தியாகத் தீயில் மடிந்துபோன மக்களே நினைவு படுத்தும் நாளேத் தேசிய தினமாக ஒரு வாரம் கொண் டாடுவது பாரதம் எங்கும் வழக்கமாகவிருந்தது, சென்னே யில் அத்தினத்தைக் கொண்டாட ஒழுங்குகள் செய்யப் பட்டன. ஏப்பிரல் 10ஆந் திகதி என நினைக்கின்றேன். அப்பொழுது கடுமையான கண்காணிப்பு. அதிகாலேயில் முகாம் தஃபவர் திரு. எம். கே. பாண்டுரங்கம் அவர்களும் நானும் அன்னியத் துணிப் பகிஷ்காரம் விஷயமாகச் சில முக்கியமான குறிப்புக்களுடன் திருவல்லிக்கேணி வீதி யொன்றிற் சென்றுகொண்டிருந்தோம். எந்த அடிக்கும் அஞ்சாத பேர்வழிகள் நாங்கள். எங்களேக் கைது செய் யப் பொலீஸார் காத்திருந்தார்கள் என்பது பின்னரே தெரிய வந்தது. அதிகால நாம் இருவரும் கைது செய்யப் பட்டுச் சென்ஃனச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டோம். எம்மைக் கைது செய்ததிற் சில சட்டப்பிரச்சினே எழுந்த தால் வழக்கு மூன்று மாதங்கள் வரை நடைபெற்றது. கடைசியாக, சென்ரே முதலாவது மாகாண மஜிஸ்ரேட் வழக்கை விசாரித்து எமக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனேயும் ரூபா 100/- அபராதமும் விதித்தார்கள். அபராதம் கட்டாதுபோனுல் அதற்காக ஒன்றரை மாதம் தொடர்ந்து சிறையிலிருக்கவேண்டும். சென்னேச் சிறையில் என்னேயும் சேர்த்து 78 முன்ரும் வகுப்பு அரசியற் கைதிகள் இருந்தனர். ஒவ்வொருங்ரையும் தனித்தனியாக ஒவ்வொரு சின்ன அறையில் அடைத்து விடுவார்கள். காலே ஆறு மணிக்கு அறையைத் திறந்து
6

வங்கம் தந்த சிங்கம் சுபாஸ் சந்திர போஸ்

Page 25

காந்திஜி தண்டி யாத்திரை
விடுவார்கள். பின்னர் இரவு ஆறு மணிக்கு அடைத்து விடுவார்கள். அரசியற் கைதிகள் செக்கு இழுக்கவேண்டும் என்பது கட்டளையாம். நல்லெண்ணெய் வடிக்கும் செக்கு அது. செக்கிழுத்துக் கிடந்த மாதங்கள் பல ஒருநாள் காலை சிறை வாடர் ஒருவர் என்னைப் பார்த்து, “தேற்று சென்னைச் சிறைக்குக் காந்திக் குல்லா அணிந்த ஒரு பெரியவர் வந்திருக்கிருர். அவர் வங்காளத்தைச் சேர்ந் தவராம். அவருடைய பெயர் போஸ் என்று சொல்லு கிருர்கள். முதல் வகுப்புக் கைதிகள் இருக்கும் இடத்தில் இருக்கிருர்" என்று கூறினர். இதைக்கேட்டு அரசியல் கைதிகளாகிய நாங்கள் துள்ளிக் குதித்தோம் சுபாஸ் பாபுவை எப்போது பார்க்கப்போகிருேம் என்று துடி துடித்தோம். வங்கம் ஈன்ற சிங்கம் அல்லவா அவர்?
சுபாஸ் பாபு செய்த "கேசரி’
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சிறை வாடர் எங்கள் அனைவரையும் சுபாஸ் பாபு இருக்கும் சிறிய வீட்டிற்கு அழைத்துச் சென்ருர் . வீட்டு விருந்தையில் சாய்ந் திருக்கும் கட்டில் ஒன்றில் சுபாஸ் பாபு உட்கார்ந்திருக் கிருர், அழகிய உருண்டு திரண்ட முகம்; அகன்ற நெற்றி ஒளிவீசும் விழிகள் வீரருக்குரிய விரிந்த மார்பு; கம்பீர மான தோற்றம்; வெண்மையான கதர் உடையுடன் காட்சியளித்தார்கள். எம்மைப் பார்த்தவுடன் சுபாஸ்ர் பாபு கட்டிலை விட்டெழுந்து இரு கரங்களையும் கூப்பி நமஸ்தே" கூறி எங்களை உட்காரும்படி சொன்னர்கள்; ஒவ்வொருவராகச் சுகம் விசாரித்தார்கள். அதன் பின்னர் ஒரு அறைக்குள் சென்று மூடியிருந்த பாத்திரம் ஒன்றுடன் வெளிவந்து எங்களிடம் கொடுத்து "இதில் கேசரி தயார் செய்து வைத்திருக்கிறேன். இதை முதலில் சாப்பிடுங்கள்' என்ருர்கள். பாபுஜி முதல் வகுப்புக் கைதியானமையினல் இவ்வித சிற்றுண்டிகள் சாப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. மூன்ரும் வகுப்புக் கைதிகளாகிய எமக்கு இவ்வித சலுகைகள் கிடையா, காப்பி, தேநீர் முதலியவை தரப்பட மாட்டா. காலையில் அரிசிக்கஞ்சி, மதிய போசனம்
இ-2 17

Page 26
இந்திய விடுதலைப் போரில்.
பதினன்கு அவுன்ஸ் நிறையுள்ள தளிசை போன்ற சாதம். அத்துடன் சாம்பார் கொஞ்சம். அச்சாம்பாரில் சதா முளைக்கீரையும் பருப்புந்தான். விரித்துப் படுப்ப தற்குப் பாயில்லை. தலையணையுமில்லை. வெறும் தரை யிலே சாக்கை விரித்துப் படுக்கவேண்டியதுதான். இப்படியிருந்த எமக்கு பாபுஜி தயாரித்த கேசரி தேவாமிர்தம் போலிருந்தது. சிறிது நேரத்தின் பின் பாபுஜி எங்களைப் பார்த்துச் சொன்னர்; "உடல்நிலை சரியாயில்லை, அதனல் ஜபல்பூர் சிறையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டேன். நாம் அனைவரும் திடநம்பிக்கை யுடன் இந்த ஆட்சியை நாட்டைவிட்டுத் துரத்தச் சங்கற்பம் செய்வோம்.'" நாங்கள் அனைவரும் அன்னவ ரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு போவதற்கு முன்னர் பாபுஜியின் அறைக்குள் சென்ருேம் அவர் வழிபடும் பூரீ கிருஷ்ண பரமாத்மாவின் படம் அங்கு காட்சியளித்தது. பரமாத்மாவைத் தரிசித்துவிட்டு எமது இருப்பிடத்திற்குப் போய்விட்டோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணிக்கு பாபுஜியைப் பார்க்கப் போவோம். அங்கே அவர் நமக்கு அரசியல் வகுப்புக்கள் நடாத்தி வந்தார்கள். பல விஷயங்களையு மிட்டு விளக்கம் கூறுவார்கள். சென்னை சிறையில்தான் "SAMYAVADI' (India of the future) 6Tairpiisa) நூலை பாபுஜி எழுதி முடித்தார்கள். பாபுஜியின் பயணம்
பாபுஜியின் பக்கத்துக் கட்டிடத்தில் புரட்சிவீரர்கள் இருவர் இருந்தார்கள். வங்கத் தொழிலாளர் இயக் கத்திற்குத் தலைவராக இருந்த திரு. முகுந்தலால் சர் ஹார் ஒருவர். மற்றையவர் அமிர்ஹயர்க்கான் அல்லது சங்கர் எனப்படும் புரட்சிப்படைத் தளகர்த்தர். இன்னவர் சர்தார் பகவத்சிங்கின் தோழன். இத் தலைவர் களின் உறவு பாபுஜியால் எமக்கு ஏற்பட்டது. ஒவ் வொரு வாரமும் வீரக்கனல்த் தட்டியெழுப்பிக்கொண்" டிருந்த பாபுஜி எம்மோடு மூன்று மாதங்கள்தான் தங்கி யிருந்தார்கள். அவரை, சென்னைச் சிறைச்சாலைக்குக்
18

காந்திஜி தண்டி யாத்திரை
கொண்டுவந்தபின்னர் அவரது உடல்நிலையை எக்ஸ்ரே மூலம் ஆராய்ந்ததில் காசநோய் கண்டிருப்பதாகத் தெரிந்தது. ஸ்ர் நீலரத்தின சர்க்கார், டாக்டர் பி. சி. ராய் ஆகிய பிரபல வங்க டாக்டர்கள் வந்து பார்த்து சுபாஸ் பாபுவைக் குளிர்ச்சி மிகுந்த நாடான சுவிட்சர் லாந்துக்கு அனுப்பவேண்டுமென்று அரசினருக்கு ஆலோசனை கூறிஞர்கள். இதன்படி பாபுஜி பயண மாகப் போகிறர்கள் என்பதை அறிந்தோம். பாபுஜி புறப்படுமுன்னர் நாம் வசிக்கும் இடத்துக்கு வந்தார்கள். நாங்கள் தினமும் இழுக்கும் செக்குக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மண்டபம். அங்கு கூடி அந்த மாபெருந் தலைவருக்குப் பிரியாவிடை கூறிளுேம். பக்கத்திலிருந்த செக்கைப் பார்த்தார், கர்மயோகி சுபாஸ் பாபு. மறுகணம் அவர் கூறியதாவது: "விடுதலைப் பாதை யில் உறுதியுடள் செல்ல மகாத்மா காந்தி நமக்குக் கற்பித்துவிட்டார். இப்போது காந்திஜியும் ஏனைய தலைவர்களும் சிறைக்கதவுகளுக்குப் பின்னல் விடுதலைக் காகத் தவம் கிடக்கின்றர்கள். காந்திஜி ஆரம்பித்து விட்டுச் சென்ற பணியை நாம் நிறைவேற்றுவோம். டில்லியில் வெற்றிக்கொடி நாட்டுவோம். வெற்றி நமதே 1" பாபுஜி எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது நாங்கள் சிறுகுழந்தைபோல் வாய்விட்டு அழுதோம் ஓராயிரம் வருடம் ஓய்ந்துகிடந்த பின்ன்ர் வராதுபோல வந்த மாமணி நம்மிடம் விடைபெற்றுச் செல்வதை எப்படிச் சகிக்க முடியும் ?
“தண்ணீர்விட் டோவளர்த்தோம் ?
சர்வேசா! இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ ?”
என்ற பாரதியாரின் பாடலை எனக்குள்ளேயே பாடி இறைவனைத் துதித்தேன். சென்னைச் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்த பின்னர் விடுதலையடைந்து நேரே திருக்கோணமலை வந்து சேர்ந்தேன் ஜனவரி மாதம் 1933ஆம் ஆண்டு:
19

Page 27
உலக யுத்தத்தை எதிர்த்து அறப்போர்
தனிநபர் சத்தியாக்கிரகம்
1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் உல்கப்போர் மூண்டது. "போர் நோக்கங்கள் என்ன?" என்று அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளரைக் கேட்டனர்; அடிமைத்தளையிற் சிக்கிய இந்தியாவைப்போன்ற எல்லா நாடுகளினதும் விடுதலைக் காகவே போர் நடப்பதானுல்தான் இந்தியா போரில் ஈடுபடுவதற்கு மக்கள் ஆதரவு தரமுடியும். ஆட்சி யாளர்கள் இந்நோக்கத்தைத் தெளிவுபடுத்தாமல் மக்களின் விருப்பத்தையும் அறியாது செயலாற்றினர். எதேச்சாதிகாரத்தால் அவர்கள் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்திஞர்கள். எனவே இதை எதிர்த்து அப்போது ஆட்சிபீடத்திலிருந்து காங்கிரஸ் மந்திரிகள் அனைவரும் பதவியிலிருந்து விலகினர். பலர் தார்மீக வழிகளில் நீதியை நாடி எதிர்ப்பைக் காட்டிய காங்கிரஸ்"க்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கக்குழு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில் நாட்டிற்கு வழிகாட்ட மீண்டும் காந்தி அடிகளே அழைக்கப்பட்டார்,
போர் எதிர்ப்புக்கு அறிகுறியாகக் காந்திஜி அறப் போர் ஆரம்பித்தார்; ஆனல் இத்தடவை அது பொதுப் போராட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. அரசாங்கப் போர்க்கொள்கையை மட்டும் கண்டித்து அப்போர் முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடாதென்ற நோக் கத்துடன் காந்தியடிகள் தலைமையில் தனிப்பட்டவர்க ளின் அறப்போராகவே ஆரம்பிக்கப்பட்டது; இந்த நோக்கத்துடனேயே முதல் அறப்போர்த் தலைவராக சமர்பதி ஆச்சிரமத்தில் அடிகளாரின் பிரதம சீடரான
20

உலக யுத்தத்தை எதிர்த்து அறப்போர்
பூரீ வினுேபா பாவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிரிட் டிஷ் அரசாங்கத்தாரின் யுத்த முயற்சிகளுக்கு எந்தவகை யிலும் உதவிபுரியக்கூடாதென்று சகல மக்களையும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. 1940ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் பூரீ வினேபா பாவே "பிரிட்டிஷாரின் யுத்த ஏற்பாடுகளுக்குப் பண உதவியோ மனித Fantu Glor கிடைக்கும்படி செய்வது தவறு எல்லாவித யுத்தங்களையும் அஹிம்சா முறையில் எதிர்ப் பதே முறையாகும் ", என்று காந்திஜி வகுத்துக் கொடுத்த சுலோகத்தைக் கூறிச் சத்தியாக்கிரகம் செய்தார்கள். வார்தாவுக்கு ஏழு மைல்கள் தூரத்தி லிருக்கும் ஒரு கிராமத்தில் பூரீ வினுேபா பாவே இதனல் கைதுசெய்யப்பட்டு மூன்று மாத சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நானுாறு மாகாண சட்டசபை அங்கத்தவர்களும் முப்பது மத்திய சட்டசபை அங்கத்தவர்களும் காங்கிரஸ் காரியசபை அங்கத்தவர்கள் அனைவரும் போராட்டத்திற் கலந்து கொண்டார்கள்.
இங்ங்னம் இந்தியா எங்கும் யுத்த எதிர்ப்புக் கிளர்ச்சி மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. காந்திஜி யால் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதினுயிரம் சத்தியாக் கிரகிகள் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து சிறையில் வைக்கப்பட்டார்கள் ஆளுல் பக்கத் தி லிருக்கும் இலங்கையிலோ அதற்கு நேர்மாருன விஷயங்கள் நடந்தன? " இது தர்ம யுத்தம் யுத்தத்திற்காக உதவி செய்யுங்கள்" என்ற சுலோகத்தைக் கிளப்பி ஞர்கள் இலங்கைத் தலைவர்கள். "யாழ்ப்பானத்தின் பெயரால் போர் விமானம் அனுப்ப நிதி தாருங்கள்" என்று கூறிப் பணம் வசூலித்தார்கள் ஒரு சிலர். ஆனல் காந்தி பக்தர்கள் மட்டும் யாழ்ப்பாணத்தில் கூடி யுத்தத் திற்கு உதவிசெய்யக் கூடாதென்று மக்களைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றிஞர்கள். "இது
21

Page 28
இந்திய விடுதலைப் போரில்.
ஏகாதிபத்திய யுத்தம்: அதற்கு உதவுவது பாவம்" என்ருர்கள். இப்படி அப்பொழுது வீர கர்ஜனை செய்து உணர்ச்சியைக் கிளப்பிநின்ற சில தமிழ்ப் பெரியார்கள் கொள்கை மாருது இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண் டிருக்கின்ருர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ஈழத்து பேரறிஞர் உயர்திரு. எஸ் எச். பேரின்ப நாயகம் அவர்கள்.
ஈழகேசரியை விட்டுப் பாரதம் சென்றேன்
எங்கள் தாய்நாடாகிய பாரதத்தில் எழுந்த யுத்த எதிர்ப்பு முரசொலி என் காதுக்கு எட்டாமல் இருக்க முடியுமா, என்ன ? அப்போது "ஈழகேசரி"யில் பணி புரிந்துகொண்டிருந்த நான் நேரே மதுரை சென்றேன்; மதுரை பூரீமீனட்சியம்மன் கோயிலுக்குள் ஹரிஜனங்களை அன்று அழைத்துச்சென்ற, காந்திய நிர்மாணத்த&லவர் பூதி ஏ. வைத்தியநாதையர் அவர்களைச் சந்தித்து எனது நோக்கத்தைத் தெரிவித்தேன். பூரீ ஐயர் சொல்லுகின் ர்ேகள்: "அப்பா ஈழத்திலிருந்து வந்த உங்களை முதலிற் Hாராட்டுகிறேன். இதற்கு முன்னர் நடந்த சட்ட 19றுப்புப் போராட்டங்களில் நீங்கள் பங்குபற்றியமைக்கு மெச்சுகிறேன் யுத்தத்தை எதிர்த்துப் போராடும் இந்தச் சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர விரும்புகிறவர் *ளுக்கு முதலில் நாற்கத் தெரிந்திருக்க வேண்டும். காந்திஜி வகுத்த நிர்மாணத் திட்டத்தில் கதர், தீண் டாமை, மதுவிலக்கு இவைகளில் பூரண நம்பிக்கை உள்ளவருக்கே அடிகள் சத்தியாக்கிரகம் செய்ய அனு மதி தருவார்கள். நாம் நினைத்தபடி இலகுவிற் சத்தி யாக்கிரகி ஆகிவிடமுடியாது. முதலில் உங்களுக்கு நூற்கத் தெரியுமா? அப்படியானல் தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் மூலமாக காந்திஜியிடமிருந்து அனுமதி பெற்றுத் தருகிறேன்" என்ருர்கள். எனக்கு நூற்கத் தெரியாது என்பதை அறிந்துகொண்டு என்னிடம் ஒரு
22

V. M. OBEIADULLASAHEB,B. S. SANKARAN,
APPROVED到引
சத்தியாக்கிரகிகள் சின்னம்

Page 29

உலக யுத்தத்தை எதிர்த்து அறப்போர்
கடிதத்தைத் தந்து. மதுரைக்கு மேற்கே இருபது மைல் தூரத்தில் கல்லுப்பட்டி என்னும் இராமத்தில் 'காந்தி நிகேதன்" என்னும் ஆச்சிரமம் இருக்கிறது. திரு. கோ. வெங்கடாசலபதி அவர்கள் அவ்வாச்சிரமத்தை நடத்துகிருர்கள். அவர்களிடம் இக் கடிதத்தைக் கொடுத்து நூற்கப் பழகுங்கள். பின்னர் யோசிப் போம்" எனத் தெரிவித்தார்கள்.
ஆச்சிரமத்திற்குச் சென்றேன்; மூன்று மாதகாலம் ஆச்சிரம வாழ்க்கை: ஒரு மணித்தியாலம் நானூறு யார் நூற்கக்கூடிய திறமை பெற்றவர்களுக்குத்தான் பத்திரம் வழங்குவார்கள். இதன்படி நூற்கக் கற்றுக் கொண்டு பத்திரத்துடன் நான் மதுரை சென்று பூரீ ஐயரவர்களைப் பார்த்தேன். பத்திரத்தை வாங்கிக் கொண்டு " நான் உங்கள் பெயரைச் சத்தியாக்கிரக அட்டவணையில் சேர்க்கும்படி காந்திஜிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கு. காமராஜ் அவர் களைச் சிபார்சு செய்யும்படி எழுதுகிறேன். மீண்டும் ஆச்சிரமத்திற்குப் போங்கள். பதில் வந்தவுடன் அறி விக்கிறேன்" என்ருர்கள். ஒரு மாதம் மீண்டும் ஆச்சிரம வாழ்க்கை. காந்தியடிகளிடமிருந்து சத்தியாக்கிரகம் செய்ய அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் திரு. குஸ் காமராஜ் அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்கள். ஆகையினல் அப்போது தமிழ் நாடு காங் கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பூரீ வி. எம். ஒபையத்துல்லா அவர்கள், பூரீ ஏ. வைத்திய நாதையர் அவர்கள் வீட்டில் வைத்துக் காந்திஜியின் அனுமதிப்பத்திரத்தை எனக்கு வழங்கினர்கள். பத்திரத் தைப் பெற்றுக்கொண்டு சத்தியாக்கிரகம் செய்ய நாக பட்டினம் புறப்பட்டேன்
23

Page 30
நா ட் டினத்தில் சத்தியாக்கிரகம்
நாகபட்டினம் தஞ்சாவூருக்கு நேர் கிழக்கே 55 மைல் தூரத்தில் உள்ள ஒரு கடற்கரைப் பட்டினம். இங்கு இருக்கும் கோயில் மிகப் பிரசித்தம், காயா ரோகணர் - நீலாயதாகதி அம்பாள் சமேதராக இக் கோயிலில் காட்சி தருகின்றர்கள். இத்தலத்துக்கு சீம்பந்தர். அப்பர். சுந்தரர் மூவருமே வந்து காயா ரோகணரைப் பாடியிருக்கின்ருர்கள். பிறநாட்டிலிருந்து வந்தி முஸ்லீம், கிறிஸ்தவ சமயத்துக்குமே இங்கு இட (pண்டு. தாசுபட்டினத்திலிருந்து நாலு கிரிமல் வடக்கு நோக்கிப் போனுல் நாகூரில் மகம்மது மீரான் என்ற பெரியார் அடக்கமாகி உள்ளார். அங்கு நடக்கும் சுந்திரி சந்தனக்குடம், இதில் எல்லாம் கலந்துகொள்பவர்கள் இந்துக்களே. நாகபட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி எட்டு மைல் போனுல் அங்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில், தீராத நோய் தீர்த்தருள வல்லவள் அவள் என்பது பிரசித்தம். வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மக்கள் பிணியைத் தீர்க்கும் புகழ் உடையவள் இங்கு ஆயிரக்கணக்கான இந்துக்ாள் பிரார்த்தனே செய்து கொள்கின்றனர். நம்பிக்கையில் வளர்வதுதானே பக்தி. அத்தகைய பக்தி இத்தலத்தை ஒட்டி நல்ல சமரச முறையிலே வளர்கிறது. நாகபட்டினம் நகரப் பிரதான எல்லே வாசவில் அழகான உயரமுள் அா வளவு (ATch) ஒன்று மாநகரசபையாரால் எழுப்பப்பட்டிருக் கிறது. அந்த வஃாவின் மத்தியில் இந்துக்களின் சின்ன பாகிய கோபுரம், வலது பக்கத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசல், இடது புறத்தில் கிறிஸ்தவர்களின் மாதா கோவில் இத்தனே அலங்காரங்களுக்குக் கீழே பெரிய எழுத்தில், "நானகி தங்களே வருக! வருக! என்று
24

நாகை சத்தியாக்கிரகி திரு. கோ. இராஜகோபால் அவர்கள்

Page 31

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
அன்புடன் வரவேற்கிறது" என்று எழுதிய பலகையும் தொங்கவிடப்பட்டிருக்கிறது. இத்தனை காட்சிகளையும் பார்த்துக்கொண்டே நாகை நகருக்குள் பிரவேசிக்கின் ருேம், சாதி, சமய வேறுபாடின்றி எல்லோரையும் வரவேற்கும் உன்னத மரபினுல் நாகையின் புகழ் இத ஞல் ஓங்கி நிற்கிறது.
காந்திஜியின் சமரசப் பாங்கிலே இங்குள்ள மக்கள் வாழ்வதால் இந்த ஊரில் யான் சத்தியாக்கிரகம் செய்யத் தீர்மானித்தது எனக்கு எழுச்சியையும் மகிழ்ச்சி யையும் தந்தது. நாகை சத்தியாக்கிரகக் கமிட்டியார் எல்லா ஒழுங்குகளையும் செய்து தந்தார்கள்: "1941ஆம் ஆண்டு சித்திரை மாதம் 7ஆம் திகதி நாகை காந்தி மைதானத்தில் பிற்பகல் 6.30 மணிக்கு யுத்தத்திற்கு உதவிசெய்யக்கூடாதென்று கோஷம் செய்து சத்தியாக் கிரகம் செய்யப்போகிறேன்" என்பதாக ஒரு வாரத் திற்குமுன் நாகை மாஜிஸ்ரேட் அவர்களுக்குத் தெரிவித்திருந்தேன். சத்தியாக்கிரகம் செய்யப்போகும் முதல்நாள் நாகை சத்தியாக்கிரகக் கமிட்டியாரால் எனக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது. அது சமயம் நாகை காங்கிரஸ் தலைவர் திரு. இலட்சுமண் நாயுடு அவர்கள், காரியதரிசி திரு. அருணுசலம் அவர்கள் இன்னும் சிலரும் இலங்கையிலிருந்து தாய்நாட்டின் விடுதலைக்கு உழைக்கக் கடல்கடந்து வந்த என்னைப் பல வாருகப் பாராட்டிப் பேசினர். அந்நாள் தொட்டு சென்னையில் யான் கைதியாகும்வரை புதுமாப்பிள்ளையை எப்படி மாமியார் வரவேற்று உபசரிப்பாளோ அதே போன்ற குஷிதான் எனக்கு:
குறிப்பிட்ட நேரத்தில் சத்தியாக்கிரகம் செய்யக் காங்கிரஸ் மாளிகையிலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டேன். இந்த ஊர்வலம் எதற்கு? என்று கேட்டால், சிறை வாசலில் எதிர்கொண்டு வரவேற்க நிற்கிருள் மாமியார். புது மருமகனைச் சிறைக்கு அனுப்ப
25

Page 32
இந்திய விடுதலைப் போரில்.
வேண்டுமானல் இத்தனை உபசரணைகளும் வேண்டும் தானே மாப்பிள்ளைக்கு? இப்படி ஊர்வலமாகப் போய்க் கொண்டிருக்கையில் 1932ஆம் ஆண்டு நடந்த சட்ட மறுப்புப் போர் எனது ஞாபகத்திற்கு வந்தது. அக் காலம் வெலிங்டன் ஆட்சிக்காலம். "இம்மென்ருல் சிறைவாசம். ஏனென்ருல் வனவாசம்." அந்நாட்களில் சத்தியாக்கிரகிகள் வெளியே கிளம்பினல் போதும். அப்புறம் சொல்வானேன். தண்டப் பொலிசாரின் ஆர்ப் பாட்டங்கள். பிரப்பம் பழமோ வேண்டியளவு கிடைக் கும்; கொழுக்கட்டை தாராளமாகக் கிடைக்கும்; பொலிசாரின் கால்கள் நமது முகத்தை முத்தமிடும்; கைகள் கன்னத்தைத் தடவிச் செல்லும் குண்டாந் தடிகள் தலை மொட்டையை ஒரு பார்வை பார்த்துப் போகும் அடக்குமுறை ஆட்சியைத் தொடங்கும்போது ஆறு வாரத்தில் இயக்கத்தை அடக்கிவிடலாமென அதி காரிகள் மனப்பால் குடித்தனர். அது பலிக்கவில்லை. நமது எல்லை தெளிவாயிற்று. கணக்கற்ற பாரதச் சேய்கள் செய்துவந்த வீரப்போரைக் கண்டு உலகம் பிரமிப்படைந்தது. தன்னலமற்ற தியாகம் என்னும் சர்வகலாசாலையில் காங்கிரஸ் தியாகிகள் டொக்டர் பட்டம் பெற்ருர்கள். மகாத்மாஜியின் ஆத்மபலமே அன்று அதிகாரவர்க்கத்தைப் பணியச்செய்தது. கொழுக் கட்டை சாப்பிட்ட காலம் போய்விட்டதை நினைந்து யானும் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தேசீயக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தி மைதா னத்தை அடைந்தேன். மேடையில் ஏறினேன். காந்திஜி யின் கட்டளைப்படிக்கு ஒருவித ஆர்ப்பாட்டமுமில்லாது *பிரிட்டிஷாரின் யுத்த ஏற்பாடுகளுக்குப் பண உதவியோ மனித சகாயமோ கிடைக்கும்படி செய்வது தவறு. எல்லாவித யுத்தங்களையும் அகிம்சா முறையில் எதிர்ப் பதே ஞாயமான வேலை" என்ற யுத்த எதிர்ப்புச் சுலோகங்கள் சொல்லிச் சத்தியாக்கிரகம் செய்தேன்.
26

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
பொலிஸ் இன் ஸ்பெக்டர் வந்திருந்தும் என்ன அன்னவர் கைது செய்யவில்லை. மீண்டும் கோஷம் செய்தேன். ஒன்றும் நடக்கவில்லை. 'பேச்சுச் சுதந்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது" என்று திரளாகக் குவிந்திருந்த ஜனங்களுக்குச் சொன்னேன். “மகாத்மாஜியின் ஆக்ஞைப் படிக்கு கைது செய்யப்படாத சத்தியாக்கிரகிகள் மீண்டும் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்துகொண்டு கால்நடையாக டில்லியை நோக்கி நாளை புறப்படு கின்றேன்" என்றதும் கூட்டம் இனிது கலைந்தது.
கம்பியார் ககரில் கைது
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான அதி பத்தர் நாகபட்டினத்துக் கடற்கரையை அடுத்த நம்பியார் நகரில் பிறந்திருக்கின்ருர். பரதவர் குலத்தில் பிறந்த இவர் மீன் பிடிக்கும் தொழில் நடத்தியிருக்கின் ருர், சிவபெருமான் இவரது மெய்யன்பை யாவர்க்கும் விளக்கி உய்விக்கத் திருவுள்ளங் கொண்டு பல நாளும் ஒவ்வொரு மீன் மாத்திரம் அகப்படச் செய்தனர். அதனையும் விட்டு வருவதால் வருவாய் குறைந்து சுற்றத்தாரெல்லாம் பசியினுல் வருந்தவும், தாம் வருந் தாமல் அந்நெறியில் நிற்க, சிவபெருமான் அவருக்கு அருள் செய்யவேண்டுமென ஒருநாள் வீசிய வயிைல் ஒரு பொன்மீன் படும்படி அருள் செய்தார். அதையும் இறைவனுக்கு விட்டிருக்கிருர். இவர் அன்பை உணர்ந்து இவருக்குச் சிவபெருமான் உமாதேவியாருடன் காட்சி கொடுக்க அதிபத்த நாயனர் பணிந்து துதித்தனர். அவரை இறைவன் தன் திருவடிக்கண் சேர்த்தருளினுர்,
அதிபத்தாநாயனுர் திருவிழா
மேலே தரப்பட்ட சரித்திர சம்பந்தமானவைக்கு
அமைய அதிபத்தநாயனர் திருவிழா ஒன்று 1968ஆம் ஆண்டு ஆவணி மாதம் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை
27

Page 33
இந்திய விடுதலைப் போரில்..
நாகபட்டினத்தில் நடைபெற்றதை யான் பார்க்கக்கூடிய தாக விருந்தது. அன்று காலை 9 மணிக்கு அடியார்கள் பூரீ நீலாயதாகூரி அம்மன் தேவாலயத்திலிருந்து அதிபத்த நாயனர் விக்கிரகத்தைச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நம்பியார் நகருக்கருகாமையிலிருக்கும் கடற் கரைக்கு எடுத்துச்சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலின்கீழ் வைத்தார்கள் மாலை இரண்டு மணிக்கு கோடி வேஷ்டி சால்வை, பூமாலை, தேங்காய், பழம் முதலியன வைக்கப்பட்ட ஒரு தாம்பாளம் கோயில் மேளம் இவைகளுடன் ஒரு கோஷ்டி நம்பியார் நகர் சென்றது. நம்பியார் நகரில் அதிபத்த நாயஞர் வம்சபரம்பரையைச் சேர்ந்த சிவசிதம்பர நல்லதம்பி நம்பியார் பேரன் திரு. என். மாணிக்கம் நம்பியார் சிவசின்னம் அணிந்து அதிபத்த நாயனர் ரூபத்தோடு மீன்பிடிக்கப் போகக் காத்திருந்தார்கள். அன்னவ ருக்கு வேஷ்டி சால்வை கொடுத்து பூமாலை அணிவித்து ஊர்வலமாக மேளவாத்தியத்துடன் அதிபத்த நாயனர் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்கள். இதற் கிடையில் மாலை மூன்று மணிக்கு வெள்ளி ரிஷப வாக னத்தில் பூரீ காயாரோகண சுவாமி பூரீ நீலாயதாகழி சமேதராய்க் கடற்கரை வந்து சேர்ந்தார்கள். அதிபத்த நாயனர் எழுந்தருளிய விக்கிரகத்தை, தயார்செய்த கட்டுமரத்தில் அமர்த்தி திரு. மாணிக்கம் நம்பியார் இன்னும் ஆறு பேர்களுடன் மீன் பிடிக்க அக் கட்டு மரத்தில் புறப்பட்டார்கள். நடுக்கடலில் மீன்பிடிக்கும் பாவனையில் திரு. மாணிக்கம் செயல்பட்டு இருந்தபின் னர்,பொன்னுல் செய்யப்பட்ட ஒரு மீனைத் தூண்டிலுடன் கரைசேர்ந்தார்கள். அப் பொன்மீனை ஆண்டவனிடம் சேர்த்தபின்னர் பூசை நடந்தது. இவ்வளவு காட்சியை யும் திரண்டிருந்த மக்கள் பக்தியோடு கண்டு களித் தார்கள். இதன்பின் சுவாமி, அம்பாள், அதிபத்த நாயனர் இவர்கள் கோயில் வந்தடைய இரவு பத்து
28

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
மணியாகிவிட்டது. அதிபத்த நாயனருக்கு நாகபட்டி னத்தில் விழா எடுத்துப் பக்தியைச் செலுத்துகின்ருர்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும்
இப்படிச் சிறப்புடைய நம்பியார் நகருக்கு அடுத்த நாள் 8-4-41ஆந் திகதி பிற்பகல் 8 மணியளவில் சத்தி யாக்கிரகம் செய்யப் போயிருந்தேன். கைது செய்யப் படாத சத்தியாக்கிரகிகள் கிராமங்களில் யுத்த எதிர்ப் புக் கோஷத்தோடு அதை வியாக்கியானம்செய்து, ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்யலாமென்பது தளபதி காந்திஜியின் கட்டளை. எனவே, நம்பியார் நகரில் 1000 பேர்கள் அடங்கிய கூட்டத்தில் யான் பேசியதன் சுருக்கம்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த எண்ணத்துடன் வாழ்க்கை நடத்துவது நமது பண்பாடு. பொறி புலன்களைக் கட்டவிழ்த்து விட்டு உடல் வாழ்வு தான் வாழ்வெனக் கொண்டு அயலவருக்கு அடிமையாக விருந்தோம். காந்தியடிகள் இதுபற்றி அக்கறைகொண் டார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சிறந் ததே. ஆயினும் இதுவளர மக்கள் தாம் வாழும் மண் ணில் வேர்விடவேண்டும்; அங்கிருந்து உரம்பெற வேண் டும், அப்போது அண்டை அயல் சிறந்து நம்மையும், வாழ வைக்கும். நாம் அனைவரையும் இணைத்துக் கொண்டு வாழும்போது வையமும் வாழும். இத்தகைய பண்பே நிலைத்து நின்று மக்களினத்திற்குப் பயன்தரும் என்று காந்தியடிகள் சொல்லி அதன்படி வாழ்ந்து காட்டினர். அந்தக் காந்தி மகாத்மாவை நினைவில் வைத்திருப்போம்.
சுதேசி தர்மம்
காந்தியடிகள் இந்தியநாட்டின் பெரும்பாலான
கிராமவாசிகளைப்போல் கிராமத்தில் குடியேறி அவர் களைப்போல ஒரு விவசாயியாக வாழ்ந்தார்கள். தமது
29

Page 34
இந்திய விடுதலைப் போரில். XX e.
வாழ்வு அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்குப் பயன்படு மாறு வாழ்ந்தார். அவர்கள் சுகதுக்கத்தில் பங்கு கொண்டார். தமக்குத் தேவையானது எப்போதாவது வாங்கவேண்டியிருந்தால் அப்போது தம் ஊரில் அது கிடைக்குமானல் அதனையே அவர் வாங்கினர். இந்தச் சுதேசி தர்மத்தைப் பின்பற்றியதுடன் பிறரையும் பின்பற்றச் செய்தார். நம்நாட்டு ஏழை எளியவர் நெய்யும் துணிகளை வாங்கியணிந்து சுதந்திர வீரர்களாக வாழவேண்டும் நாம். "இடையருத வறுமையின் வாசஸ் தலமாகவுள்ள இந்திய நாட்டில், கைராட்டினந்தான் ஏழைகளுக்குக் கஞ்சிக்கு வேண்டிய உப்பை அளித்து வருகின்றது" என்று காந்திஜி கூறியிருக்கிருர். எனவே, துணிக்குக் கதர் என்ற விரதம் நாம் கொள்வோம்
தீண்டாமை
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்பது நமது பண்பாடுகளின் சிறந்த ஒன்று. இப்படித்தான் நமது பழங்கால வாழ்க் கை அமைந்திருக்கிறது: என்ருே எப்படியோ தடம் புரண்டுவிட்டது வண்டி. நமது பண்பாட்டில் உயர்வு தாழ்வு என்னும் பேய் நுழைந்து கொண்டது. இந்தத் தீண்டாமை இந்து சமயத்திற்கு ஒரு சாபக்கேடு. இதை ஒழிக்க எ த் த னை யோ தியாகங்களைக் காந்தியடிகள் செய் திருக்கின்ருர்கள் அதிபத்த நாயனரின் வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. காந்திஜி நிர்மாணித்த சமு தாயத்தை நாம் அமைக்கப் பாடுபடவேண்டும். இப் போது நடக்கின்ற இந்த யுத்தம் நமக்குத் தேவைப் படாதது. யுத்தத்திற்கு உதவி செய்வது தவறு என்று காந்திஜி நமக்குச் சொல்லித் தந்திருக்கின்ருர், எனவே எந்தவகையிலும் யுத்தத்திற்கு உதவி செய்யாதீர்க ளென்று யான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இரு பொலிஸாருடன் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் என்
30

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
முன்வந்து, "சார், உங்களை இந்திய பாதுகாப்புச் சட்டப் படி கைது செய்கின்றேன். வாருங்கள் ஸ்டேசன் போக லாம்" என்ருர், 'ஐயா! மிகவும் சந்தோஷம்" என்று சொல்லிச் சபையோர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பொலிஸ் ஸ்டேசனை யான் சேரும்பொழுது இரவு 9-30 மணியிருக்கும். அங்கு சில சடங்குகள் நடந்ததும் என்னை ஒரு தனி அறையில் விட்டுப் பூட்டி விட்டார்கள். சுகாதார முறைப்படி அவ்வறை கட்டப் படாதிருந்தமையால் இரவு முழுதும் தூக்கமில்லை. காலைக்கடனை முடிப்பதற்குக்கூட அவ்வறைக்குள் ஒன்றும் வைக்கப்படவில்லை. ஏதோ ஒரு விதமாக இரவு கழிந்தது அடுத்த நாள் காலை 9 மணியளவில் நாகை நீதிபதிமுன் கொண்டுபோகப்பட்டேன். அன்னவர் *1 10 நாட்க ளுக்கு நீங்கள் காவல் கைதி" என்ருர். "சந்தோஷம்" என்றேன். பின் நாகை சிறைச்சாலைக்குக் காலை 10-30 மணியளவில் அழைத்துச் சென்ருர்கள். அங்கு சென் றதும் வரிசையாக அறைகள் இருப்பதைப் பார்த்தேன். அவ்வறையினென்றிலிருந்து சத்தம் கேட்டது; காது கொடுத்துக் கேட்டேன். 'வந்தே மாதரம், காந்திஜிக்கு ஜே! வாங்கோ அண்ணு வாங்கோ!" தாத்தாவின் வானர சேனைகள்தான் வேறு யாராயிருக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டு அறையினருகே வந்தேன். வார்டரும் (சிறைச் சேவகன்) கதவைத் திறந்தார். அறைக்குள் நுழைந்ததும் நான்கு சத்தியாக்கிரக சகோ தரர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னை அணைத்தார்கள். "எப்படி ஒரு புது மாப்பிள்ளை தாலி கட்டிய பின்னர் புதுப்பெண்ணின் அறைக்குள் நுழைய ஆவலாயிருப் பானே அதேபோன்று தேசசேவகர்கள் சிறைச்சாலை யைப் பார்க்க ஆவலுள்ளவர்களாக விருக்க வேண்டு? மென்று அன்ருெருகால் காந்திஜி சொன்னரே அது எனது நினைவுக்கு வந்தது. பின்னர், கதவு உடனே பூட்டப்பட்டது. பழைய கதைகள் பேசினுேம். இந்நால் வரும் நன்னிலம் தாலுக்காவைச் சேர்ந்தவர்கள்.
3.

Page 35
இந்திய விடுதலைப் போரில்...
அவர்களுக்கும் 10 நாட்கள் றிமாண்டு (விளக்க மறியல்) இருநாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர்கள். அவரி களுள் ஒருவர், "என்னுங்க இந்தியாவிலும் 40 கோடி மக்கள் இருக்கின்ருர்களே அடிமைகளாக. இவ்வடிமையி னின்றும் மீட்சி பெறுவதற்காகப் போராடிக்கொண் டிருக்கும் இத்தனை கோடி மக்கள் போதாதென்று நீங்களும் கடல்கடந்து இங்கு வந்துவிட்டீர்களே !" என்ருர். "அண்ணு நீங்கள் சொல்வது சரிதான். இப் போது இவ்வறைக்குள் என்னைவிட நால்வர்கள் இருக் கின்றீர்கள். துரியோதனனிடமிருந்து உரிமை பெறச் சகாதேவனும் உங்கள் மத்தியில் வந்தான். நாம் பஞ்சபாண்டவர்களாகிவிட்டோ மல்லவா?" என்றேன்; சிரிசிரியென்று சிரித்தார்கள்.
சிறைக்கூடத்தில்
அன்று பிற்பகல் 4 மணிக்கு நாமிருந்த அறைக் கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்ததும் கைதிகளின் உபயோகத்திற்குரிய "அலுமினியம்" கோப்பை ஒன்று, ஒரு “டமிளர்", சிறிய மண்பானையொன்று, படுக்கைக்கு ஒரு சாக்கு, போர்த்திக்கொள்ள ஒரு கம்பளம் ஆகியவை ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்பட்டன. அவற்றைக் கொடுத்த் சிறைக் காவற் காரன் எங்களுக்கு ஒரு அறையையும் காட்டி 'ஸார், இதுதான் உங்க ளுடைய வீடு" என்ருன் நகர சபையாரின் குப்பை வண்டி மாதிரி. சகல ஐஸ்வரியங்களும் நிறைந்து வெகு அழகாக இருந்தது அறை. அதனைச் சுத்தப்படுத்திக் கொண்டு நான் கொண்டு சென்ற சாமான்களை அங்கு வைத்தேன். மணி அடித்தது. “சாப்பாடு சாப்பாடு!" என்று ஒருவர் சத்தம் வைத்தார். கோப்பையைக் கையிலெடுத்துக் கொண்டு சென்றேன். 7 அவுன்ஸ் நிறை புள்ள கட்டிச்சாதமும் சாம்பாரும் விநியோகஞ் செய் தார்கள். இருபது நிமிஷத்திற்குள் எல்லாம் முடிந்தது.
32

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
ஒரு சகோதர சத்தி:ாக்கிரகியுடன் எனது "வீட்டிற் குள் போனேன். 'டபார்" என்று அறைக்கதவு மூடிக் கொண்டது. அறைக்குள்ளிருந்த இருள் போதாதென்று அறையின் உட் சுவர்களுக்கும் தார் நன்ருகப் பூசப்பட் டிருந்தது. நெருப்புத் தண்ணிரின் சுகந்த வாசனை ஒரு புறம். இதைவிட மூட்டைப்பூச்சிகளும் எங்களுடன் உறவு கெண்டாட வந்துவிட்டன. இவ்வளவையும் ஊடறுத்துக்கொண்டு நித்திராதேவி எங்களை வந்து என்ன செய்யமுடியும்? வனவாசத்தின்போது இலட்சு மணப் பெருமான் "நித்திரை" செய்தது போல ஒருவாறு அந்த இரவைக் கழித்தோம். காலை 20 நிமிஷம்; மத்தி யானம் 20 நிமிஷம்: மாலை 20 நிமிஷம் ஆக ஒரு நாளைக்கு 60 நிமிஷங்கள்தான் வெளியில் வரலாம். மற்றப்படி சதா "லொக்கப்'தான். எந்த சப் "ஜெயிலும்" (விளக்க மறியல்) இவ்விதமாகத்தான் இருக்கும். எனது சகோதர சத்தியாக்கிரகிகளுடனும் மூட்டைப் பூச்சிகளுடனும் எட்டு நாட்கள் கழிந்தன. சர்க்கார் அவர்களனைவ ரையும் விடுதலை செய்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பின்னர் 18-4-41 நானும் விடுதலை செய்யப்பட்டேன். எனது உறவினர்கள் வீடு சேர்ந்தேன். நான் பதிது நாட்களும் சிறையிலிருந்தபோது, துப்பறியும் பொலீஸ் புலிகள் என்னுடைய பந்துக்கள் வீடு சென்று எனக்கு ஏதாவது சொத்து, காணி, பூமி உண்டா என்று விசா ரித்தார்களாம். "ஒன்றுமில்லை" என்று தெரிந்ததும் பத்தாம் நாள் என்னை வந்து விடுதலை செய்தார்கள், அப்படி எனக்கு ஏதும் ஆஸ்திகள் இருக்கும் பட்சத்தில் சிறைத்தண்டனையுடன், அபராதமும் சேர்த்து எனக்குச் சன்மானம் செய்திருப்பார்களாம். எனது துர்அதிஷ்டம் போலும் என்னிடம் பணமில்லை. எனக்கு அதிகாரிகள் பேச்சுச் சுதந்திரம் அளித்திருந்தார்கள். அந்தக் காலங் களிற் பணம் சொத்து உள்ளவர்களையே இந்தியா பாதுகாப்புச்சட்டம் காத்திருக்கும். சென்னை அரசாங் கம் அனுஷ்டித்து வரும் ஒரு விசித்திரமான முறை இது.
இ - 3 33

Page 36
இந்திய விடுதலைப் போரில்..
சத்தியாக்கிரகிகள் கடந்துகொள்ள வேண்டிய முறை :
விடுதலையான ஒவ்வொரு தடவையும் நமது போராட் டம் வெற்றிகரமாக முடியும்வரை திரும்பத்திரும்ப நாம் சத்தியாக்கிரகம் செய்யவேண்டும். காந்திஜி இதைக் குறித்துச் சொல்லுகின்றர்கள் "அநியாயத்துக்கும் மறச் செயலுக்கும் கொடுஞ் சட்டங்களுக்கும் உடன்பட்டு வாழ்வது சிறப்பாகாது. நீதி, அறம், சட்டம் முதலிய வற்றை விரும்புவோர் அநீதி முதலியன தம்முடன் வளர ஒருப்படார். அவர் சிறைக் கோட்டத்துக்கோ குண்டுக்கோ இரையாகும்வரை அநியாய முறைகளோடு கலந்து வாழார். ஆதலால் ஆத்மசக்தியாளர் தமது உடலுரிமையுள்ள மட்டும் அநியாய விதிகளை மீறி மீறிச் சிறைக்களன் நண்ணிக்கொண்டே யிருப்பர். இம்முறை யில் சிறைபுகுதல் மனித வாழ்வுக்குரியதாகும். உரிமை யில்லாத தேசத்திலுள்ள தேசபக்தர்களின் உறைவிடம் சிறைக்கோட்டம். தேச உரிமை குறித்து, ஒரு தேச பக்தன் சிறையில் நுழைவாஞயின், அவனது ஆன்ம சக்தி மின்சாரம்போல் எழுந்து நாலு சுவரையும் முட்டி ஊடுருவி வெளிவந்து வெளியிலுள்ள வரையுந் தட்டி எழுப்பும். சத்தியாக்கிரகிகள் சிறைவீட்டை மறுமை வீடாகக் கொள்ளச் சித்தமாயிருத்தல் வேண்டும். தீய அரசாட்சியில் சத்தியாக்கிரகிகள் வெளியே இருத்தல் அவ்வாட்சிக்கு உடன்பட்டு வாழ்வதாகும். ஒவ்வொரு முறை சிறைபுகுதலும் அவ்வவ்வளவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. நமக்கு மாண்பு தரும் இல்லம் சிறையே. இச் சிறைப்பாடு, உடலை மாற்ருர் வயப்படுத்தி, உயிரை ஆண்டவனிடத்தில் ஒப்புவிப்பதாகும். இஃது ஆன்ம சக்தி எனவும்படும். ஆன்மசக்தி கைவரப்பெற்றேர், துன்பத்தைத் தாம் ஏற்றுத் தன் துன்பத்தையும், பிறர் துன்பத்தையும் துடைக்க முயல்வர். ஆதலால், துன் பத்துக்குத் துன்பம் ஏற்கும் முறை மனித வாழ்விற்கு
34

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
உரியது. சட்டமறுப்பே சத்தியாக்கிரக்ம் என்று நினைக் கின்றவன் சத்தியாக்கிரக நுட்பத்தை உணர்ந்தவ னல்லன். சத்தியாக்கிரகம் என்பதில் சட்டமறுப்பு அடங்காமலில்லை. சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடப் பதில் தேர்ச்சிபெற்றவனே சட்டத்துக்குக் கீழ்ப்படியாது நடக்க அருகதை யுடையவளுவான்." காந்திஜியின் பொன்னன இக் கருத்துக்கள் சத்தியாக்கிரகிகளை எப் பொழுதும் வழிநடத்திச் சென்றன. சட்டமறுப்புச் செப் கின்றவர் கைது செய்யப்படாமலிருந்தால் ஒவ்வொரு வரும் டெல்ஹி கூேடித்திரத்தை நோக்கிக் கால் நடை யாக யாத்திரை போகவேண்டும். நாளொன்றுக்கு இரண்டு மூன்று மைல்கள் செல்லலாம். வழி வழியே கிராமவாசிகள் உவந்தளிக்கும் உணவுகளை ஏற்றுச் சத்தி யாக்கிரகிகள் நடந்து செல்லவேண்டும் வறுமைப்பட்ட கிராமமாகவிருந்தால் எதுவித உதவியையும் எதிர் பாராது நாமே பட்டினியோடு அடுத்த கிராமம் செல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலாக, சத்தியாக்கிரகி ஒருவர், ஜில்லாவில் (District) ஒவ்வொரு கிராமத்தி லும் தகுந்த பிரசாரம் செய்து, காங்கிரஸ் லட்சியங்கு ளேக் கிராம மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி அவர்களுடைய அன்பையும் ஆதரவையுந் திரட்டுவ தோடு அச்சத்தை யொழித்துத் தேச விடுதலைப் போராட் டத்திற்கு இலட்சக் கணக்கானவர்களைத் தயார் செய்ய வேண்டும். அடுத்தாற்போல், ஒரு சத்தியாக்கிரகி சிறை செல்ல நேரிடின் அவருக்கோ அல்லது அவருடைய உற்றர் உறவினர்களுக்கோ காங்கிரஸிடமிருந்து எவ்வித சகாயங்களையும் எதிர்பார்க்கக்கூடாது. ஒவ்வொரு சத்தியாக்கிரகியும் தினசரிக் குறிப்புப் புத்தகம் ஒன்று வைத்துக்கொண்டு வழிகளில் உள்ள கிராமக் காங்கிரஸ் பிரமுகரிடம் கையெழுத்துப் பெறவேண்டும்.
3S

Page 37
இந்திய விடுதலைப் போரில்.
டேல்ஹிப் பிரயாணம் :
மேலே குறிப்பிட்ட விதிகளையே சத்திவாக்கிரகிகள் கையாளவேண்டும். எனவே, விடுதலை அடைந்த அடுத்த நாள் நாக பட்டினத்திற்கு அருகாமையிலிருக்கும் ஆவராணியென்னும் கிராமத்தில் யுத்த எதிர்ப்புப் பிரசாரஞ் செய்தேன். 20-4-41ஆம் திகதி ஆவராணியில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் முதல் தேசிய கீதம் பாடிப் பின்னர் பேச்சு நிகழ்த்த அநுமதிக்கப் பட்டேன். பேச்சுக்சள் ஒலிபரப்பப்பட்டன. அங்கிருந்து மீண்டும் நாகை போய்ச் சேர்ந்தேன். மறுநாள் டெல்ஹி யாத்திரை மீண்டும் ஆரம்பமானது. என்னைப்போல் வேறு சத்தியாக்கிரகிகளும் வந்து சேர்ந்தனர். தோளில் ஒரு கதர்ப்பையில் சாமான்கள் : ஒரு கையில் தேசீயக் கொடி ; மற்றக் கையில் பறைசாற்றும் சிறிய டமாரம் (தப்புமேளம்); மகாத்மா ஜியால் அனுமதிக்கப்பட்ட சத்தியாக்கிரகியென்று பொது ஜனங்கள் இலகுவில் GastigiQas neit (65th Sair 607 b (approved Satyagrahi Badge) ஒன்று. இவைகள்தான் எனது அலங்காரம். நாகையில் சத்தியாக்கிரகஞ் செய்து கைதுசெய்யப்படாத நண்பர் பூg து. சிவஞானம்பிள்ளை அவர்களுடன் கால் நடையா கப் பிரசாரம் செய்யப் புறப்பட்டேன். பூரீது. சிவஞானம் பிள்ளை 1928ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் நடைபெற்ற றெயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்திற் சம்பந்தப் பட்டுச் சிறை சென்றவர். நாகை தோட்டிகள் சங்கத் தலைவராகவும், நூல் நூற்போர் சங்கக் காரியதரிசியாக வும் இருந்து கடமையாற்றியவர். நான் டெல்ஹி யாத்திரை போகும்போது இவரும் என்னுடன் கூடவே வந்தார்கள். கல்லுயிரீந்தும் கொடியினைக் காப்பர்: பூரணையன்று −
நாகையிலிருந்து புறப்பட்டுப் பல கிராமங்களுக் கூடாகச் சென்று யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டே 11-5-41ஆம் திகதியன்று எட்டிக்குடி என்னும்
36.

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
கிராமத்தை அடைந்தோம். தென்னிந்தியாவில் முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கும் முக்கிய ஸ்தலங்களுள் எட்டிக்குடியும் ஒன்று பூரீ சிதம்பர சுவாமிகள் ஆறு முகனை அறுசமயக் கடவுளாகவே வழிபடுகிருர். மயிலோ ஞகிற ஐயனை அந்த மயில் தூக்கிக்கொண்டே பறக்க முற்பட்டது ஒரு தலத்தில். சிற்பியொருவன் அறுமுக னின் அரிய திருவுருவத்தைச் செதுக்கிவிட்டு மயூரத் தையும் செதுக்கலானன். பிந்து சொரூபமான மயிலை மனமாரத் தியானித்துத் தன் உயிரையே உளி மூலம் செலுத்தச் செதுக்கினன். மயிலுக்குள் உயிர் புகுந்து விட்டது. முருகன் உருவத்தைத் தாங்கிய கல் மயில் பறக்கத் தொடங்கிவிட்டது.
திருப்பணியைப் பார்வையிட வந்த மன்னன் கூறிஞன், “மயில் பறக்கிறது, எட்டிப்பிடி, எட்டிப்பிடி” சிற்பி எழுந்து குதித்து மயிலை எட்டிப்பிடித்துப் பூமியில் நிறுத்தி, அதன் காலில் உளியால் ஒரு தட்டுத் தட்டினன் பறந்த மயில் அமர்ந்தது.
"எட்டிப்பிடி" என்பதே ஊரின் பெயராயிற்று. நாளாவட்டத்தில் "எட் டிக் குடி " ஆயிற்று, எட்டி மரங்கள் சூழ்ந்த வனமாக விருந்ததாலும் எட்டிக்குடி 6T676) nuo
நாங்கள் சென்றிருந்த காலம் கித்திராபூரணை உற்சவகாலம். திருவிழாப் பார்ப்பதற்கு இலட்சக் கணக்கில் ஜனங்கள் வந்திருந்தார்கள். பூரணையன்று மாத்திரம் சுமார் ஐயாயிரம் காவடிகள் வரை வந்திருந்தன. அதற்கு முதல்நாள் ஏனைய ஊர்களி லிருந்தும் பதினெரு சத்தியாக்கிரகிகள் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வருமாறு:-
1. திரு. சு. இரத்தினசாமித்தேவர், இடும்பாவனம் 2. , தா. மு. சாமித்துரை, வாடியக்காடு 3. ,. ச. க. சீனிவாசன், மறவக்காடு
37

Page 38
இந்திய விடுதலைப் போரில்.
4. திரு. த. க. சிங்காரவேலு. மருதூர் 5. , மூ. சடகோபாலன், ஆலயக்காறன் புலம் 6. . சு. ரா. இரத்தினசாமி, ஆமூர் 7; , வீ. சொக்கலிங்கம் , ஆமூர் 8. சொ. வ. வடுகநாதன், ஆமூர் 9. , , asi. p5rprint au 600Tór, ஆமூர் 10. , ப. சொக்கலிங்கம், ஆமூர் 11: ... a. கோதண்டராமன், திருவாரூர்
நாங்கள் எல்லோரும் தங்குவதற்கு ஒரு வசதியான மடத்தை எட்டிக்குடி காங்கிரஸ் தலைவர் அவர்கள் ஒழுங்குசெய்து தந்தார்கள். அந்தப் பிரமாண்டமான ஜனக் கூட்டத்தை நழுவவிட எங்களுக்கு விருப்பமில்லை, எனவே, சித்திரா பூரணைக்கு முதல் நாள் இரவு சுமார் பதினையாயிரம் ஜனங்களுக்குமேல் கூடியிருந்தனர். மாலை 7 மணிக்கு அம்மாபெரும் கூட்டத்தில் எல்லோரும் பேச்சுக்கள் நிகழ்த்தினுேம் கூட்டம் முடிய இரவு 12-30 மணியாகிவிட்டது. அடுத்தநாள் மாலை 12-5-41ஆம் திகதி ஊர்வலம். நான் பறைசாற்றும் "தப்பு" அடித்துக் கொண்டு ஊர்வலத்துக்கு முன்னல் செல்ல, எனக்குப் பின்னல் அணிவகுத்துத் தேசியக்கொடிகளுடன் வந்தே மாதரக் கோஷம் செய்துகொண்டு மற்றைய சத்தியாக் கிரக நண்பர்கள் வந்தார்கள். ஏராளமான பொது ஜனங்களும் எங்கள் ஊர்வலத்திற் கலந்து கொண் டார்கள். கோவில் மேற்கு வீதிச் சந்தியில் ஊர்வலம் நின்றது. இரவு 12 மணிவரைக்கும் பிரசங்கங்கள் செய்தோம். கூட்டம் இனிது முடிந்தது. மிகுந்த உற்சாகத்துடன் ஜனங்கள் திரும்பிச் சென்றதை யாம் பார்க்கக்கூடியதாக விருந்தது. அடுத்த நாள் காலையில்" சத்தியாக்கிரகிகள் அனைவரும் தத்தம் குறிப்பிட்ட எல்லைகளை நோக்கிப் பிரயாணமானர்கள்
38

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
சுதந்திரக் கொடி:
மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூரீ. வி. ஜி. அழகுசுந்தரம் அவர்கள், நாகை தாலுக்கா காங்கிரஸ் கமிட்டியின் முன்னள் தலைவர். இவர்கள் வீட்டில் இரு நாட்கள் தங்க நேரிட்டது. தாவர போசன பாக சாஸ் திரத்தை நன்கு அறிந்தவர். எங்களை மிக அன்போடு உபசரித்தார். நாங்கள் அவரை விட்டுப் பிரியும்போது தலைக்கு இரண்டு பைகள் வீதம் தந்து 'அன்பர்களே! ஒரு பையில் குரக்கன் மாவும் மற்றைய பையில் அரிசி மாவும் இருக்கின்றன. நீங்கள் வெகு தூரம் வழி நடக்க விருப்பதால் களையேற்படும்போது மோரில் அல்லது வெந்நீரில் இவற்றில் ஒன்றைக் கலந்து பிசைந்து அருந்துங்கள் " என்று அன்பொழுகப் பேசி வழியனுப் பிஞர். வழிநெடுக எதிர்ப்பட்ட சிறிய பெரிய கிராமங் கள் எல்லாவற்றிலும் பிரசாரம் செய்துகொண்டே 21-5-41 ஆம் திகதி வேட்டைக்காரனிருப்பு என்ற பிரசித்திபெற்ற கிராமத்தை அடைந்தோம் தென் னிந்தியாவில் இந்தச் சிற்றுார் அநேகருக்குத் தெரிந் திருக்கும். 1930ஆம் வருடம் நடந்த சம்பவம் ஒன்று இந்தக் கிராம மக்களுக்குள்ள தேச பக்தியையும், திட நெஞ்சத்தையும் நன்கு பகிரங்கப்படுத்தி விட்டது." 1930ஆம் வருடம் மகாத்மாஜியின் தலைமையில் சுதந் திரப்போர் நடந்துகொண்டிருந்தது. தொண்டர்களின் ஊர்வலம், சுதந்திர முழக்கம், சிறைபுகுதல் எல்லாம் சர்வசாதாரணமாக விருந்தது. தேசியக் கொடிகளை வீடுகளின்மேற் பறக்கவிடுதல் சட்டவிரோதம். பொது விடங்களிற் பறந்துகொண்டிருந்த கொடிகள் யாவற்றை யும் அரசினர் பறிமுதல் செய்துவிட்டனர். அடக்கு முறை தாண்டவமாடிற்று. தெரிந்தோ தெரியாமலோ தேசியக் கொடி வைத்திருந்தவர்கள், பறக்கவிட்டவர்கள் அனைவருஞ் சிறைப்படுத்தப்பட்டனர். நாடெங்கிலும் இவ்வளவு நெருக்கடியாக விருந்தபோது ஒரு சிறிய
39

Page 39
இந்திய விடுதலைப் போரில்.
கிராமத்தில் கொடியேற்றுவிழா மிகவும் சாவதானமாக நடந்துகொண்டிருந்தது. அன்று ஏற்றிவைத்த அந்த மணிக்கொடி இன்றும் கம்பீரமாகப் பறந்துகொண்டுதா னிருக்கிறது. அரசினரால் அந்தத் துவஜ ஸ்தம்பத்தை அணுகவே முடியவில்லையாம். லார்ட் இர்வின் ஆட்சிக் குச் சவால் (challenge) கொடுத்து கொடி ஸ்தம்பம் நாட்டிய இந்தக் கிராம மக்கள் பரம்பரையாக வேட் டைத் தொழில் செய்தே வாழ்க்கை நடாத்தி வருகின் ருர்கள். வெளியுலகினருடன் அதிக தொடர்பு இல்லாது தனித்து ஒரு புறம்பாக வாழும் இந்தக் காட்டு வாசிக ளிடையேகூடச் சுதந்திர வேட்கை கொதித்துக் கொண் டிருப்பதைக் கண்டு பாரதம் பேராச்சரியப்பட்டது பாரததேவியின் பேரபிமானத்திற்குப் பாத்திரமான இந்த வீர மக்களின் பூமியில் நாங்கள் கால் வைத்தது Grniš sig sao Luu umrš6@uu Lodãyavaunt ?
வறுமைப் பிணி :
25-4-41ஆம் திசதி புஷ்பவனம் என்னும் கிராமத்தை நோக்கி வருகிருேம். காலை 9 மணி. மாட்டுவண்டிகூடப் போகமுடியாத வெறும் மணற்பாதை. இடையிடையே காட்டுப் பற்றைகளும், பனந் தோப்புகளும். மாட்டுக் கொட்டிலைப் போன்ற ஒரு சிறிய குடிசை சற்றுத் தூரத்தில் தென்பட்டது. பக்கத்தில் உப்பு ஆறு பாய்கிறது; குடிசைக்கருகே வெளியொன்றில் ஒரு சேலை வெய்யிலில் உலர்ந்துகொண்டிருப்பதைச் சிறிது தூரத் தில் வரும்பொழுதே நாங்கள் கவனித்துக் கொண்டோம். குடிசையை நெருங்கி வந்துவிட்டோம் திடீரென்று ஓர் இளம் பெண் ஓடிவந்து அவசர அவசரமாகக் காய விட்டிருந்த அந்தக் கந்தைச் சேலையை அவிழ்த்துத் தனது தேகத்தை மூடிப் போர்த்திக்கொண்டாள். எங்களைக்" கண்டதும் அவள் முகத்தை மூடிக்கொண்டு ஓடியே போய்விட்டாள். இதைப் பார்த்து எனது உடம்பு
40

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
சிலிர்த்தது. என்ன பரிதாபம்! ஆயிரம் பொத்தல் உள்ள ஒரேஒரு சேல். ஸ்நானஞ் செய்யும்பொழுது தோய்த்து உலரவிடுவார்கள். பின்னர் அது காய்ந்து முடியும் வரைக்கும் காவலிருக்க வேண்டும். அவ்வள விற்கும் எங்கேயாவது மூலைமுடுக்குகளில் மறைந்து இருக்க வேண்டியதுதான். மானத்தைக் காப்பாற்றப் பிரத்தி யேகமான ஒருமுழத் துண்டுச் சீலைக்குக்கூட வழியில்லை. இவ்விதமாக உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வறுமைப்பிணியினுல் நலிந்து உழலும் 4 கோடி ஏழைகள் நமது பாரத நாட்டில் இருக்கின்ருர்கள். இவர்களுக்கு விமோசனம் பிறக்குமோ? கட்டத் துணியில்லாது வாழும் ஏழைமக்களின் வாழ்க்கையை உணர்ந்த காந்திஜி, அவர்களோடு ஒன்றிவிட்டார்கள். 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதியன்று காந்திஜி மதுரைக்கு வந்திருந்தார்கள். தென்னுட்டிலுள்ள பல இடங்களுக்கு வருகை தந்தார்கள். பல காட்சிகள். வறுமையால் வாடியிருக்கும் மக்களையும் பார்த்திருக் கிருர்கள். மதுரையில் அதிகாலை எழுந்தார்கள். உடை களை மாற்றிக்கொண்டார்கள் அரை நிர்வாணப் பக்கிரி யாகத் தன்னை ஆக்கிக்கொண்டார்கள். தென் பாண்டி நாட்டிலே உதயமான தேசியத் துறவுக்குப் பின் காந்தி யடிகள் தமது வாழ்நாள் முழுவதிலும் இந்த உடையி லேயே சுதேசித் தமிழனுகக் காட்சியளித்தார்கள். நிற்க, நாம் புஷ்பவனத்தைச் சேரும்போது காலை 9-30 மணி யிருக்கும். இக்கிராமத்தைச் சேர்ந்த சத்தியாக் கிரகிகள் பூரீ எஸ். கே. செல்லப்பா கவுண்டர், பூரீ வீ. வைரப்ப தேவர் முதலியவர்கள் எங்களுடன் கலந்து கொண்டார்கள். "இரவு 7 மணிக்கு புற்றுவளநாதசாமி கோயில் முன்பாகப் பொதுக்கூட்டம் நடைபெறு" மென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 6-30 மணிக்கு அவ்விடத்தை அடைந்துவிட்டோம். சனங்கள் சேரவில்லை. எனவே, கோவிலைப் பார்த்து வரலா மென்று சென்றேன்.
41

Page 40
இந்திய விடுதலைப் போரில்.
புத்தரின் சிலை :
ஒரு பெரிய அரச விருகூடித்தின் கீழ் கொட்டில் , ஒன்று. அதற்குள் சப்பாணி கொட்டியபடி 5 அடி உயரமுள்ள புத்த பகவானுடைய அழகான கற்சிலை ஒன்று காணப்பட்டது. பக்கத்திலுள்ளவர்களை விசா ரித்தேன், அந்தச் சிலை அங்கு எப்படி வந்தது என்று சில காலங்களுக்கு முன்னராக அந்தக் கற்சிலை முழுவ தும் புற்று மண்ணுல் மூடப்பட்டிருந்ததாம். பின்னர் நாளடைவில் அந்தப் புற்று உடைந்து போகவே கற்சிலை வெளிப்பட்டிருந்ததாம் இந்தக் காரணத்தையிட்டே அதற்குப் புற்றுவளநாதசாமி கோவில் என்று பெயரிடப் பட்டதென அங்குள்ளவர்கள் சொன்னர்கள். அது யாரைக் குறிக்கும் சிலை என்று ஒருவருமே சொல்ல வில்லை. கேட்டும்பார்த்தேன். 'புற்றுவளநாதசாமி" என்றுதான் பதில் வந்தது. இவ்வளவு தெளிவான புத்த சிலை அவ்வூரவர்களுக்குத் தெரியாமல் போனது எனக்குப் பெரிய ஆச்சரியமாக விருந்தது. புத்த பகவா னுடைய உருவப்படத்தையோ அல்லது அவரது வேறு சிலைகளையோ அந்தக் கிராம மக்கள் அவ்வளவு பேர் களுமா கண்டிருக்காதவர்கள்? புற்றுவளநாதசாமி கோவில் முன்பாகப் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. சத்தியாக்கிரகிகள் எல்லோரும் அவரவர் பாணியில் பிரசங்கம் செய்தோம். இரவு 10-30 மணிக்குக் கூட்டம் இனிது நிறைவெய்தியது.
வேதாரண்யம்-திருமறைக்காடு:
புஷ்பவனத்திற்கு அடுத்திருப்பது வேதாரண்யம் என்னும் திவ்ய ஷேத்திரம். வேட்டைக்காரனிருப்பி லிருந்து வேதாரண்யம் போகும் வழி நெடுக நாங்கள் அனுபவித்த காட்சிகள் என்றும் மறக்க முடி யாதவை; மிக மிக அழகான இடம். இயற்கைத்தேவி
42

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
தனது கையிருப்பு எல்லாவற்றையும் இங்கேதான் கொட்டியிருந்தாளோ என்னவோ? இராமபிரானும் இலட்சுமணரும் சீதாபிராட்டியைத் தேடிக்கொண்டு இந்தக் காட்டுவழியாகத் தான் போனர்கள் என்று கிராமச்சனங்கள் பேசிக்கொள்ளுகிருர்கள். 28-5-41 காலை 9 மணிக்கு வேதாரண்யம் வந்து சேர்ந்தோம்: வேதாரண்யம் ஊருக்கு மத்தியில் பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலம்-கோயில்-இருக்கிறது. வேதங்களால் பூசித்துப் பேறுபெற்ற இடம் ஆனதால் வேதாரண்யம் மறைக்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது இத்தலம். இந்தக் கோயிலுள் இருப்பவர் மறைக்காடரும் அவரது துணைவி யாழைப்பழித்த மொழியாளும். அன்று வேதங்கள் பூஜித்துத் திருக்காப்பு செய்த கதவைத்தான் அப்பர்-திருநாவுக்கரசு சுவாமிகள்,
பண்ணின் நேர்மொழி யாள் உமை பங்கரோ! மண்ணி னுர்வலஞ் செய்மறைக் காடரோ ! கண்ணி னுல்உமைக் காணக் கதவினத் திண்ண மாகத்தி றந்தருள் செய்ம்மினே. என்று பாடித் திறந்து வைத்திருக்கிருர், திறந்த கதவுை அப்படியே திறந்தே நின்றுவிடாமல் பின்னர் அடைக்க வும் பாடியிருக்கின்ருர் ஞானசம்பந்தப் பெருந்தகை;
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டு உறைமைந்தா இதுநன்கு இறைவைத்து அருள்செய்க எனக்குஉன் கதவம் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
என்பது சம்பந்தர் தேவாரம். இந்தத் தலத்தில் மண லெல்லாம் லிங்கமாகவும் நீர் எல்லாம் தீர்த்தமாகவும் கருதப்படுகின்றன. சேரமான் பெருமானுயனுரையும் உடன் கூட்டிக்கொண்டு வந்திருக்கிருர் சுந்தரமூர்த்தி
43

Page 41
இந்திய விடுதலைப் போரில்..
சுவாமிகள் இங்கு. திருவாரூர்த் தேர் அழகு, திருவிடை மருதூர்த் தெரு அழகு, காஞ்சிபுரம் குடை அழகு, திருவரங்கம் நடை அழகு, மன்னர்க்குடி மதில் அழகு என்பதுபோல வேதாரண்யம் விளக்கு அழகு என்பதும் பிரசித்தமானது. இந்தக் கோயிலில் விளக்கு அழகுள் ளது. அந்த அகல்விளக்குகளுக்கெல்லாம் நெய் ஊற்றியே விளக்கேற்றி யிருக்கிருர்கள் அந்தக்காலத்தில். அப்படி ஊற்றிய நெய்யை உண்ண ஓர் எலி வந்திருக்கிறது. உண்ணும்பொழுது சுடர் அதன் மூக்கில் பட்டிருக் கிறது. அதனல் திரி தூண்டப்பட்டிருக்கிறது. அணையும் தறுவாயிலிருந்த விளக்கைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்த காரணத்தால், அந்த எலியை மறுபிறப்பில் மகாபலிச் சக்ரவர்த்தியாய்ப் பிறக்க அருள் செய்திருக் கிருர் மறைக்காடர். இத்தனை பிரசித்தியுடன் இத் தலம் பெருமக்கள் பலரது பிறப்பிடமாகவும் இருந் திருக்கிறது. திருவிளையாடல் பாடிய பரஞ்சோதி முனி வரும், எண்ணரிய பாடல்களை எழுதிக் குவித்த தாயு மாஞரும் இத் தலத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கிருர் கள். நிரம்பச் சொல்வானேன்? நாம் அறிய, நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் செய்யத் தேர்ந்து எடுத்த இடம் இதுதான்
வேதாரண்யத்தின் வீரப்போர் :
1930ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11ஆந் திகதி காந்திஜி அவரது எழுபத்தொரு சீடர்களுடன் சபர்மதி ஆச்சிரமத்திலிருந்து உப்புச்சட்டத்தை மீறித் தண்டியில் உப்பெடுக்கப் புறப்பட்டார். அப்பொழுது பூரீ சக்ர வர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் உப்புச் சத்தியாக்கிரகத்துக்கு வேதாரண்யத்தைத் தேர்ந் தெடுத்தார். இவர் நிதியும் தொண்டர்களும் வேண்டி வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டில் சுற்றுப்பிர யாணம் செய்து வேதாரண்யத்துக்குச் சத்தியாக்கிரகிகள்
44

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
படை செல்லச் செய்வதற்காக அநேக பொதுக்கூட்டங் களிற் பேசினர். நிதிகள் வந்து குவிந்தன. அவர் விரும்பிய த ரம் வாய்ந்த தொண்டர்கள் எல்லா மாவட்டங்களிலுமிருந்து வந்து குவிந்தனர். பின்னர் பூரீ ச. இராஜகோபாலாச்சாரியார் திருச்சியிலிருந்து வேதாரண்யம்வரை யாத்திரை செய்ய டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன், பூரீமதி உ. லட்சுமிபதி ஆகியோர் அவருக்கு உற்ற துணைவர்களாக இருந்தனர். பூரீ இராஜாஜி, பொறுக்கி எ டு க் கப் பட்ட 99 சத்தியாக்கிரகிக ளுடன், திருச்சியிலிருந்து 1930ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ஆம் திகதி உப்புச் சத்தியாக்கிரகம் செய்ய வேதாரண்யம் புறப்பட்டார்கள். வேதாரண்யத்திலும் பல ஒழுங்குகளை முன்னேற்பாடாக பூரீ ஏ. வேதரத்தினம் அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். திருச்சியிலிருந்து திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங் களில் பூரீ இராஜாஜிக்கும் தொண்டர்களுக்கும் நல்ல வரவேற்புகள் நடைபெற்றன. கடைசியாக மார்ச்சு மாதம் 28ஆம் திகதி எல்லோரும் வேதாரண்யம் அடைந்தார்கள்: அன்று இராஜாஜி உப்பு எடுக்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். பூரீ கே. சந்தானம், பூg வேதரத்தினம், பூgமதி லட்சுமிபதி, டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் போன்ற இதர தலைவர் களும் தொண்டர்களும் உப்புச் சத்தியாக்கிரகம் செய் தனர். பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் சட்டமறுப்பு இயக்கமும் ஒரு முடிவுக்கு வந்தது. பாரத நாட்டுச் சுதந்திர வரலாற்றில் தண்டி யாத்திரையோடு ஒத்த சிறப்புடையது வேதாரண்யம் உப்புச் சத்தியாக் கிரகம். அவ்வியக்கத்தில்தான் வேதாரண்யம் வேதரத் தினம்பிள்ளை சர்தார் வேத ரத் தி ன மாய் ஆனர். வடக்கே ஒரு சர்தார் பட்டேல். கலியுக பீஷ்மர், இரும்பையொத்த வைராக்கியமுடையவர், இந்திய "பிஸ்மாக்" என்றெல்லாம் சர்தார் வல்லபாய் பட்டேலை அழைப்பார்கள். அந்தவகையில் தென்னுட்டுக்கு ஒரு
45

Page 42
இந்திய விடுதலைப் போரில்.
சர்தார் ஆகிவிட்டார் வேதரத்தினம் அவர்கள் பல வகைகளிலும் பிரசித்திபெற்ற வேதாரண்யத்தில் யாம் தங்கியபொழுது மேலே குறிப்பிட்ட புண்ணிய க்ஷேத் திரத்தின் மகிமை, தமிழ் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த பூரீ இராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற உப்புச்சத்தியாக்கிரகம் இவைகளை முன்னிலைப்படுத்திக் கூட்டத்தில் பேசி வேதாரண்ய மக்களைப் புகழ்ந்தோம்.
உறங்கும் புளி, உறங்காப் புளி:
வேதாரண்யத்திலிருந்து, இடும்பாவனம், தில்ை விளாகம் முதலிய கேஷத்திரங்கள் வழியாக 15-6-41 அன்று மறவக்காடு சேர்ந்தோம். நெடுந்தூரம் ஓய் வில்லாது நடந்து இக்கிராமத்தை யடையும்போது 158 மைல்கள் பூர்த்தி செய்துவிட்டோம். இதற் கருகாமையிலிருக்கும் திருப்பொய்கை நல்லூர் பொது ஆவுடையார் கோவிலைத் தரிசித்தோம். இக்கோவி லில் ஒரு விசேஷம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு பன்னிரண்டு மணி நேரத்தில்தான் இங்கு பூசை நடக்கும். பழைய காலந்தொட்டு ஓர் ஆலவிருகூடிம் கோவிலின் மூலஸ்தானத்தில் வளர்ந்து நிற்கிறது. மரத் தின் கீழிருக்கும் சிவலிங்கத்திற்குத்தான் அந்த நடுச் சாமத்தில் பூசை நடக்கும். மற்றும்படி கோவில் சதா பூட்டியபடியே இருக்கும். மணியடித்தபின்னர், கோவிற் பூசகர் பரிசுத்தமாகத் தூய மனதுடன் உள்ளே சென்று பூசைசெய்யவேண்டும். இல்லாவிடில் அங்கு ஒரு நாக பாம்பு படமெடுத்து நிற்குமாம். பூசை செய்யவிடாமல் தடைசெய்து கொள்ளுமாம். இன்னும் ஒரு விசேஷம் இங்குண்டு. கோவில் வளவில் இரு பெரிய புளிய மரங்கள் நிற்கின்றன. இவ்விரண்டு மரங்களுக்கும் உறங்கும் புளி, உறங்காப் புளி என்று பெயர். இரவில் இப்புண்ணிய மரங்களை யான் பார்க்க நேரிட்டது. ஒரு மரத்தின் இலைகளெல்லாம் செழித்து விரிந்திருந்ததைக் கண்டேன்.
46

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
மற்ற மரத்தின் இலைகளெல்லாம் வாடிச் சோர்ந்துபோய் இருந்தன. இரவில் உறங்கும் புளியமரம் பகலில் விழித் திருக்குமாம். பகலிற் செழிப்பாக நிற்கும் மரம் இரவில் சுருங்கி உறங்குமாம். யான் அடுத்தநாள் பகலில் போய் இந்த வித்தியாசத்தைப் பார்த்து வியப்படைந்தேன். எனவே, உறங்கும் புளி, உறங்காப் புளி என்று இவற்றை ஜனங்கள் அழைத்துவருகின்றர்கள்:
கதர்க் கல்யாண வைபவம் :
அடுத்தபடியாக, நாம் பட்டுக்கோட்டைத் தாலுக்கா விலுள்ள மறவக்காடு என்னுங் கிராமத்தையுந் தாண்டி 26-6-41 காலை 9 மணியளவில் மன்னுர்க்குடியை நோக்கி நடந்தோம். வண்டிப்பாதையோரங்களில் gap - யிடையே மாந்தோப்புக்கள் தோன்றி இயற்கையன்னை யின் கைத்திறனைக் காண்பித்தன. எமது பிரயாணத்திற் களை தோன்ருவாறு உற்சாகமூட்டுவதுபோல் வாயு பகவானும் மெதுவாக வீசிக்கொண்டு நின்றன். செல்லும் மார்க்கத்தில் மன்னங்காடு என்னுங் குக்கிராமத்தை யடைய நேரிட்டது. இங்கு அகில பாரத சர்க்கா சங்கக் கதர் விற்பனைத் தொண்டர் திரு. வீ. காத்த முத்து அவர்கள் வசிக்கின்றர்கள், 45 வயதினர். கிராமத்தில் செல்வாக்குடையவர். எங்களது வரவை முன்னதாகவே எதிர்பார்த்திருந்தவர்கள் போன்று அவரும் அவரது மனைவியரும், "அண்ணன்மார்களே ! உங்கள் அனைஞவக்கும் நமஸ்காரம் உங்களைக் கடவுள் தான் இச்சந்தர்ப்பத்தில் அழைத்துவந்திருக்கிருர். இங்கு ஒரு கதர்க் கல்யாணம் சிறிது நேரத்தில் நிகழவிருக் கின்றது. இச்சுப கருமத்திற் பங்குபற்றித் தம்பதிகளை ஆசீர்வதிப்பதற்கு யாராவது சத்தியாக்கிரகிகள் வர மாட்டார்களா? என்று ஆவலாய் எதிர்பார்த்திருந் தோம். அதுவும் பூர்த்தியாயிற்று " என்று அன்பொழுக எங்களை வரவேற்ருர்கள். எங்களது ஸ்நானுதிகளை
47

Page 43
இந்திய விடுதலைப் போரில்.
முடித்துக்கொண்டு நாங்கள் கல்யாண மண்டபத்துள் பிரவேசித்தோம். எங்களுக்கெனப் பிரத்தியேகமாக அமைக்கப்பெற்ற இடத்திற்கு அழைத்துச்சென்று எம்மை உபசரித்தனர். ஏழைக்குடியானவர்களாக விருந்தபோதிலும் அச்சிறிய கூரை மண்டபம் தேசிய சின்னங்களை நாணுபக்கங்களிலும் சுமந்து நின்றது. தேசியத் தலைவர்களின் படங்கள் தூண்களை அலங் கரித்தன ; ஏனைய இடங்களில் தேசியக் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. இந்து மதாசாரப்படி திரு. வீ. காத்தமுத்து அவர்கள் செல்வி கோவிந்தம்மாளுக்கும் மணமகன் பூரீவீ. காரிமுத்து வேளாளர்க்கும் புரோகிதர் திருமணவினை முடித்தனர். சத்தியாக்கிரகிகள் அனை வரும் மணமக்களை வாழ்த்தி ஆசியுரை கூறினுேம்: திருமண வைபவத்தின்போது அக்கிராம மக்களிடம் காந்தி பக்தி - சுதேசி பக்தி மிளிர்ந்திருப்பதை நாம் உணரக்கூடியதாகவிருந்தது. இந்த இடத்தில் காந்திஜி நமக்குப் போதித்த உபதேசங்கள் நினைவுக்கு வந்தன; காந்திஜி கூறுகின்றர்கள் சுதேசியும் தேசீயமும்:
** சுதேசி என்பதற்கு நான் கூறிவரும் விளக்கம் எல்லோருக்கும் தெரிந்தது. எனக்குக் கிட்ட இருப் பவர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்குவதன் மூலம் தொலைவிலிருக்கும் அக்கம் பக்கத்தாருக்கு நான் சேவை செய்யக் கூடாது. சுதேசி, பழிவாங்குவதற்காகவும் தண்டிப்பதற்காகவும் அல்லவே அல்ல. எந்த வகையிலும் அது குறுகிய மனப்போக்குடையதும் அன்று. ஏனெனில், என்னுடைய வளர்ச்சிக்குத் தேவையானவைகளை உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாங்குகிறேன். ஆனல் ஒருபொருள் எவ்வளவுதான் நன்ருகவும் அழகாக வும் இருந்தாலும், அது என்னுடைய வளர்ச்சியைக் கெடுப்பதாக இருக்குமாயின், நான் முதலில் கவனித் தாக வேண்டியவர்களாக யாரை இயற்கை செய்திருக்
48

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
கிறதோ அவர்களுக்குத் தீமை விளைவிப்பதாக விருந் தால், அத்தகைய பொருள்கள் எதையும் யாரிடமும் யான் வாங்க மறுக்கிறேன்; சத்திர சிகிச்சைக்கான கருவிகளை இங்கிலாந்திடமும், குண்டூகியையும் பென் சிலையும் ஆஸ்டியாவிடத்திலும், கடிகாரங்களை சுவிட் ஜர்லாந்திடமும் வாங்குகிறேன். ஆனல் இங்கிலாந்தி லிருந்தோ ஜப்பானிலிருந்தோ உலகின் வேறு எந்தப் பாகத்திலிருந்தோ உயர்ந்த நயமான பருத்தித் துணி யில் ஓர் அங்குலத்தைக்கூட நான் வாங்க மாட்டேன். ஏனெனில், இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு அத்துணி தீங்கு விளைவித்திருக்கிறது மேலும் மேலும் விளைவித்துக்கொண்டு வருகிறது. வெளிநாட்டுத் துணி கையினுல் நூற்ற நூலினலான இந்தியத்துணியை விட உயர்வானதாக இருக்கலாம். இந்தியாவின் வறுமை மிக்கவர்களான, வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்கள் கையால் நூற்று நெய்த துணியை வாங்க மறுத்து அந்நியத்துணியை வாங்குவது எனக்குப் பாவ மான காரியம் என்றே கருதுகிறேன். ஆகையால் என்னுடைய சுதேசி, கையினல் நூற்ற கதரையே முக்கியமாக மையமாகக் கொண்டிருப்பதோடு, இந்தியா வில் உற்பத்தியாகும், உற்பத்தியாகக்கூடிய எல்லாப் பொருள்கள் வரையிலும் போகிறது. என்னுடைய சுதேசி எவ்வளவு விசாலமான போக்குடையதோ அதே போன் றதுதான் என் தேசியமும், உலகம் முழுவதும் நன்மை யடைவதற்காக இந்தியா உயரவேண்டும் என்று விரும்பு கின்றேன். மற்ற நாடுகளை நாசப்படுத்தி இந்தியா உயர வேண்டும்என்று நான் விரும்பவில்லை.ஆகையால் பலமான தாகவும் செயலுள்ளதாகவும் இருந்தால், தனது கலைச் செல்வத்தையும் ஆரோக்கியமளிக்கும் மசாலைச் சரக்கு களையும் அது உலகத்திற்கு அளிக்கும். ஆனல், அபினையும். போதை தரும் சாராய வகைகளையும் அனுப்புவதால் இந்தியாவுக்கு எவ்வளவு லாபம் வருவதாயிருந்தாலும்
இ - 4 49

Page 44
இந்திய விடுதலைப் போரில்.
அவற்றை உலகிற்கு அனுப்ப இந்தியா மறுத்துவிடும்." எங்களது யாத்திரையின்போது காந்திஜி வகுத்துத்தந்த நிர்மானத் திட்டத்தின் அம்சங்களையும் விளக்கிக் கூறிக் கொண்டே சென்ருேம். மன்னங்காடு கல்யாண வைப வத்தில் கலந்தபின்னர் கதர்த்தொண்டர் பூரீ வி. காத்த முத்து அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு அடுத்த கிராமமாகிய மதுக்கருக்குப் புறப்பட்டோம்.
முஸ்லீம்களின் கலாட்டா :
மதுக்கூர், முஸ்லீம்கள் பெருந் தொகையினராக இருக்கும் ஒரு சிற்றுார். "முஸ்லீம் லீக்" கட்சியின் ஆதிக்கம் இங்கு செறிந்திருந்ததாகத் தோன்றிற்று. கைகளில் தேசியக் கொடிகளைத் தாங்கிக்கொண்டு தெருத்தெருவாய்க் கோஷம் செய்துகொண்டு செல்லு கையில், ஒரு சில முஸ்லீம் சகோதரர்கள் எங்களை இடைமறித்து, "சார், நீங்கள் வியாபாரிகளா? உங்க ளிடம் கதர்க்கொடி விற்பனைக்கிருக்கிறதா?" என்று பரிகாசமான நடையில் பல கேள்விகளைக் கேட்க லாயினர். இவற்றிற்கு அவர்கள் பெற்றுக்கொண்ட விடைகள் எங்களது புன்சிரிப்புக்களே. இன்னேர் இடத் தில் சில முஸ்லீம் குழந்தைகள் எம்மை அருவருக்கத் தக்க முறையில் வைதும், கைகொட்டி நகைத்தும் சூழ்ந்துகொண்டு பின்தொடரலாயினர். "மெளனம் கலக நாஸ்தி" என்ற திருமந்திரம் எங்கள் ஒவ்வொருவரினது மனதிலும் ஒரேநேரத்தில் எழுந்து, அவர்களை ஏமாந்த படி பின்வாங்கச் செய்தது.
சுயமரியாதைக் கட்சியின் வசைப்பிரயோகம் :
இப்படியாக அடுத்த ஊராகிய நீடாமங்கலம்
என்னும் கிராமத்தை நாம் அண்டினேம். இவ்வூருக் கூடாகப் போகும்போது ஒரு பாலத்தைக் கடக்க நேரிட் டது. இப்பாலக் கட்டிட ஓரத்தில் ஏறக்குறைய 15
5በ

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். நெடுந்தூரம் நடை யினுல் நாங்கள் கிறிது களைத்திருந்ததால் மெதுவாகப் பாலத்தைத் தாண்டிக்கொண்டிருக்கிருேம். அவ்வமயம் அக்கூட்டத்திலிருந்து ஒருவர் "சத்தியாக்கிரகிக்கு ஜே!" என்ருர், "இல்லையடா, அப்படிச் சொல்லாதே, தேசத் துக்கு லாட்டறி அடிக்கும் தொண்டர்களுக்கு ஜே!" என்ருர் இன்னெருவர். "அப்படியில்லையடா, கொடி பிடித்து சுயராஜ்யம் எடுக்கப்போகும் வீரர்கள்தாண்டா இவர்கள். என்ன! பிரிட்டிஷ் ஆட்சியைத் தகர்க்கவந்த சூரர்களாம்" என்ருர் மற்ருெருவர். "என்னவிதமாகச் சொன்னுலும் அவர்கள் தோலில் புகுந்துகொள்ளா தடா, சொரணை யென்பது மருந்துக்குமில்லையடா. எப்படி ஏசிஞலும் ஒன்றுமே பேசமாட்டார்கள். இது தான் இவர்களின் அஹிம்சை தர்மம். ஏன் ஐயா உங்களுக்கு இந்த வேஷம்." என்றின்னவாருக அடுக் கடுக்காக ஒவ்வொருவரும் வாய்க்குவந்தவாறு வசைபுராணம் பாடினர்கள், எங்களது ? வந்தே மாதரம்" என்ற மந்திரம்தான் இவை யாவுக்கும் விடை யிறுத்தது. நீடாமங்கலம் சுயமரியாதைக்காரர்கள் அநேகமாக நிறைந்த இடம். காலித்தனம் செய்வு தற்குப் பெயர் வாங்கிய இடமெனப் பின்னதாக நாம் அறிந்துகொண்டோம். மதுக்கூரிலும் நீடாமங்கலத் திலும் வகிப்பவர்கள் தமிழர்களே. தமிழர்கள் மரபு எத்தன்மையுடையதாக விருக்கவேண்டுமென்று திலகர் சகாப்தத்திலே தமிழ்நாட்டின் தளபதியாக, தென் ணுட்டின் திலகராக விளங்கிய கப்பலோட்டிய தமிழர் உயர்திரு வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் கூறுகின் ருர்கள். "எவரையும் வையாதே! எக்காரணத்தை முன்னிட்டும் வையாதே! ஏனெனில், வைவது தமிழ னின் மரபல்ல. பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணுதே! எவன் முன்னேறிஞலும், பிறரை வைபவன் முன்னேறவே முடியாது என்பதை நம்பு!
51

Page 45
இந்திய விடுதலைப் போரில்.
தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் பய மற்றுக் கூறு." இப்பொன்மொழிகளை அன்று எம்மேல் வசைபுராணம் பாடியவர்களுக்குச் சமர்ப்பிக்கின்ருேம்.
கும்பகோணத்து கண்பர் பூரீ செரீப் :
அடுத்த ஊராகிய கும்பகோணத்தில் முஸ்லீம் தலைவர் பூரீ கே. எம். செரீப் அவர்கள் உபசரணையில் நாம் தங்கினுேம் . இவர் ஓர் அசல் காங்கிரஸ் தொண்டர்; அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகசபை அங்கத்தினர்; வடநாட்டில் தோன்றிய “பாகிஸ்தான் " பிசாசைத் தென்னுட்டிலும் ஊசாடாதவாறு வேரோடு களைவதற்குப் பிரயாசையுடன் எதிர்த்துநிற்கும் வீரர் கும்பகோணத்தில் கூட்டப்பெற்ற பிரிவினை எதிர்ப்பு மகாநாட்டில் முன்னணியில் நின்று வெற்றிகரமாக நடாத்திவைத்த பொறுப்பு பூரீ செரீப் அவர்களையே சார்ந்தது. 6.7-41இல் இவ்விடத்திலுள்ள காந்தி மைதானத்தில், திருச்சி சிறையிலிருந்து விடுதலையடைந்த சத்தியாக்கிரகி பூரீ வெங்கட்டராம ஐயர், எம். எல். ஏ அவர்களுக்கு ஒரு வரவேற்புபசரணை நடைபெற்றது. அப் பொதுக்கூட்டத்துக்கு யான் தலைமைவகித்தேன். அப்பொழுது யான் பேசியது வருமாறு:- "விடுதலை அடைந்த பூரீ வெங்கட்டராம ஐயர், எம். எல். ஏ. அவர் களை நாம் வரவேற்கிருேம். அதனல் சத்தியாக்கிரகி களுக்கு மேன்மேலும் உணர்ச்சி பெருகிக்கொண்டிருக் கிறது. போராட்டம் நடத்தும் ஆர்வத்தில் கொஞ்ச மும் சளைக்காமல், மனச்சோர்வு அடையாமல், உற்சாகத் தைக் குறைக்காமல் எந்தக் கஷ்டம் அனுபவிக்க நேரிட் டாலும் அது பெரிதல்ல, எந்தத் தியாகம் செய்ய நேரிட்டாலும் அது பலமானதல்ல என்ற எண்ணம் தலைநிற்றல் வேண்டும். எனவே, இக்காரணம் பற்றியே நமது செந்தமிழ்நாட்டுத் தேசிய கவிச் சிங்கமான நமது பூரீ சுப்பிரமணிய பாரதியார் கூறுமிடத்து,
52

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
* சுடுதலும் குளிரும் உயிர்க்கில்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை
எடுமினே அறப்போரினை யென்றன்
எங்கோ மேதக மேந்தியகாந்தி!’ என்று அருளிச்செய்திருக்கிருர், இது அப்படி உண்மை யானுல் நம்போன்றவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் வேலைசெய்து வரவேண்டும். இளைப்புக் கும் களைப்புக்கும் இடங்கொடுக்கக்கூடாது. ஆனல் வேலை அதிகமாகச் செய்து உடல் அயர்வுற்ருல் அதைப் போக்க ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் தேசிய வேலை களில் ஈடுபட்டு உழைக்க அதற்கேற்றவாறு மீண்டும் உடல் வலிமை பெறவேண்டும். இந்நாட்டினருக்காக காந்திஜி பல அரிய பெரிய விஷயங்களைச் சாதித்திருக் கின்ருர், ஜனங்களிடையே போராட்ட உணர்ச்சியை எழுப்பி இந்தத் தேசத்தின் கெளரவத்தை மீட்டுக் காப்பாற்றிவருகிருர்கள். உலகினர் கண்முன்பாக எல்லோரும் காணும்படி நமது தாய்த்திருநாட்டின் கீர்த்தியை உயர்த்தியிருக்கிருர் நாம் எல்லோரும் இப்போது ஒரே மனிதன் உணர்வதுபோல் நினைத்து உணரக் கற்றுக்கொண்டோம். போராட்டத்தை வெற்றி கரமாக மேற்கொண்டு நடத்தப் புதிய வழிகளை நாம் இன்னும் தேடுமாறு காந்திஜி நமக்குச் சக்தியளித்திருக் கிருர். 'காந்தி சொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே' என்ற பாரதியாரின் வாக்குப் பலிக்க நாம் சேவை செய்வோம்.
சிதம்பரம்: W
எமது யாத்திரா மார்க்கத்தில் நாம் செய்த புண்ணிய வசத்தால் போலும், அனேக ஸ்தலங்களைத் தரிசித்துச் செல்லச் சந்தர்ப்பங்கள் நேரிட்டன. அவற்றை விரிவா யுரைக்க இடமின்மையால் விடுத்தாம். கும்பகோணத்தி லிருந்து புறப்பட்டு திருநாகேஸ்வரம்,திருவிடைமருதூர்,
53

Page 46
இந்திய விடுதலைப் போரில்.
மாயவரம், வைத்தீஸ்வரன் கோயில், சீகாழி முதலிய இடங்களைக் கடந்து சிதம்பரம் அடைந்தோம் 13-7-41 ஆம் திகதி சிதம்பரத்தில், அந்த மாவட்ட காங்கிரஸ் காரியதரிசி - நிர்மாணஊழியர் பூரீ ஆர் விநாயகம் அவர்கள் எம்மை உபசரித்தார்கள். அன்னவரது ஆலோ சண்ப்படி தெருத்தெருவாய்ப் பிரசாரம் செய்தோம்: மூன்று நாட்கள் சிதம்பரத்தில் தில்லைச் சிற்றம்பல வாணரைத் தரிசிக்கப் போயிருந்தேன். இறைவனின் உறைவிடங்களில் ஒன்று சிதம்பரம். இந்தத் தில்லைச் சிற்றம்பலமுடையான் கோயில் மிகப்பெரியது. ‘கோயில்" என்ருலே வைணவர்களுக்கு பூரீரங்கம், சைவர்களுக்குச் சிதம்பரம் என்று ஆகிவிட்டது. தமிழ் நாட்டில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடிய திருப்பதி சிதம்பரம்: மணிவாசகரை முழுக்க முழுக்க ஆட்கொண்ட அவர் பாடிய திருவாசகத்துக்குப் படி எடுக்கும் பெருமாளுக அமைந்தவன் சிற்றம் பல வன் . மாணிக்கவாசகரை கோவையார் பாடச் சொன்னவனும் அவனே. இன்னும் இத்தலத்தில்தான் சேக்கிழார் சுவாமிகள் எழுதிய திருத்தொண்டர் பெரியபுராணமும் அரங்கேறியிருக் கிறது. இத்துணைப் பிரசித்திபெற்ற சிவன்கோயிலுக் குள்ளே கனகசபைக்குப் பக்கத்தில் தென் திசையில் தலைவைத்து வடதிசையில் கால்நீட்டித் தில்லைக்கோவிந்த ராஜர் வேறே படுத்துக்கொண்டிருக்கிருர்! கருது செம் பொன்னின் அம்பலத்தில் ஒரு கடவுள் நின்று நடித்தால் காவிரித் திருநதியில் துயிலும் மாமுகிலான் அரங்க நாதனும் இங்கேயே வந்து காலைநீட்டிப் படுத்துக்கொண் டிருக்கிருர். தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும் நடராஜரைச் சேவிப்பது போலவே அரங்கநாதனையும் சேவிக்கிருர்கள்.
மாவாயி னங்கம் மதியாது கீறி மழைமா முதுகுன் றெடுத்த ஆயர் தங்கள் கோவாய் நிரைமேயத் துலகுண்ட மாயன் குரைமா கழல் கூடுங் குறிப்புடையீர்!
54

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
மூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி, தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைச் திருச்சித்ர கூடஞ் சென்று சேர்மின்களே.
என்று திருமங்கையாழ்வாரும்
வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக்கீறி வருகுருதி பொழிதரவன் கணைஒன்று ஏவி மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர்உண்ட மைந்தன் காண்மின் செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஒருமுவா யிரவர் ஏத்த அணிமணி ஆசனத்துஇருந்த அம்மான் தானே!
என்று குலசேகர ஆழ்வாரும்
இந்தக் கோவிந்தராஜர் கோயில்கொண்டிருக்கும் சித் திரகூடத்தை மங்களாசாஸனம் செய்திருக்கின்ருர்கள். கோவிந்தராஜரை தில்லைமூவாயிரவர் நாளும் போற்றி வழிபடுகின்ருர்கள். எனவே, மூவாயிரவர் உண்மையி லேயே "பொதுத் தீட்சிதர்கள் " தாம், நடராஜருக்கு மட்டும் உரியவரல்லர். சைவமும் வைணவமும் பின்னிப் பிணைந்து இணைந்து வாழும் பெருங்கோயிலாக நிலவு கிறது சிதம்பரம்:
தமிழ் நாட்டில் திருவெம்பாவை, திருப்பாவை விழா ஒருமித்து மார்கழி மாதத்தில் நடைபெற்றுவரு கிறது. அந்த விழாவில் மணிவாசகப் பெருந்தகை பாடிய திருவெம்பாவையில் உள்ள கருத்துக்களையும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று போற்றும் ஆண்டாள் பாடிய திருப்பாவையிலுள்ள கருத்துக்களையும் ஒப் பிட்டுச் சமரசம் காண்கின்ருர்கள் இங்குள்ள சைவ
55

Page 47
இந்திய விடுதலைப் போரில்.
வைஷ்ண அறிஞர்கள்: திருப்பாவை, திருவெம்பாவை வேறு வேறு தெய்வச் சார்புடையனவாயினும் ஒரே குறிப்புடையன. இரண்டும் தமிழ்நாட்டின் அழியாப் புகழ் எய்தி நிலைத்து நிற்பதை யாம் காண்கின்ருேம். இந்த இடத்தில் பாரதியாரின் நினைவு வருகிறது.
ஜீவன்முக்தி- அதுவே சிதம்பரம்:
குள்ளச்சாமி என்பவர் ஒரு பரமஹம்சர். ஜட பரதரைப் போல் யாதொரு தொழிலுமில்லாமல், முழங்காலுக்கு மேல் அழுக்குத்துணி கட்டிக்கொண்டு, போட்ட இடத்தில் சோறு தின்றுகொண்டு, வெயில், மழை பாராமல் தெருவிலே சுற்றிக்கொண்டிருக்கிருர், இவர் வந்து சோறு போடு என்று கேட்டார். தான் திருவமுதம் செய்யுமுன்பாக, ஒரு பிடி அன்னம் என் கையில் நைவேத்தியமாகக் கொடுத்தார். அதை வாங்கி உண்டேன். அப்பொழுது சாமியார் போஜனம் முடித்த பிறகு என்னுடன் மேல் மெத்தைக்கு வந்தார்: " கண்ணை மூடிக்கொள் " என்ருர், கண்ணை மூடிக் கொண்டேன். நெற்றியில் விபூதியிட்டார். "விழித்துப் பார் " என்ருர், கண்ணை விழித்தேன். நேர்த்தியான தென்றல் காற்று வீசுகிறது. சூரியனுடைய ஒளி தேனைப் போலே மாடமெங்கும் பாய்கிறது; பலகணி வழியாக இரண்டு சிட்டுக்குருவிகள் வந்து கண்முன்னே பறந்து விளையாடுகின்றன. குள்ளச்சாமியார் சிரிக்கிருர் கடைக் கண்ணுல் தளத்தைக் காட்டினர். கீழே குனிந்து பார்த் தேன். ஒரு சிறிய ஓலைத்துண்டு கிடந்தது. அதை நான் எடுக்கப்போனேன். அதற்குள்ளே அந்தக் குள்ள ச் சாமியார் சிரித்துக்கொண்டு வெளியே ஒடிப்போஞர். அவரைத் திரும்பவும் கூப்பிட்டால் பயனில்லை என்பது: எனக்குத் தெரியும். ஆகவே அவரைக் கூப்பிடாமல் கீழே கிடந்த ஒலையை எடுத்து வாசித்துப் பார்த்தேன்.
56

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
1. எப்போதும் வானத்தில் சுற்றும் பருந்துபோல போக விஷயங்களினல் கட்டுப்படாமல் பரமாத்மா வின் ஞானக் கதிரை விழித்து நோக்குதலே விடுதலை. அதுதான் சிதம்பரம். மகனே! சிதம்பரத்துக்குப் போ.
2. சிதம்பரத்தில் நடராஜருடன் சிவகாமசக்தி பக்த
ருக்கு வரம்தான் கொடுக்கிருர். போய் வரம் வாங்கு 3. " சிதம்பரமே பூரீரங்கம். அதுவே பழனிமலை; எல் லாப் புண்ணிய கூேடித்திரங்களும் ஜீவன் முக்திச் சின்னங்கள் என்று தெரிந்துகொள். உனக்கு க்ஷேமமும், நீண்ட வயதும், ஜீவன் முக்தியும் விளைக' என்று எழுதியிருந்தது இந்த வசனங்கள் நமது புராதன வேத தர்மத் திற்கு முற்றும் ஒத்திருந்த படியால் அவற்றை "சுதேச மித்திரன்" பத்திரிகை மூலமாக வெளியிடலானேன்? இவை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய " கட்டுரைகள் " என்ற நூலில் இருந்ததை யான் முன்னர் வாசித்திருந்தமையினுல் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் உள்ள சமரசப் பொதுக் குறிப்புகளை யாம் உணரக்கூடியதாக அமைந்திருக்கிறது சிதம்பரம். காந்திஜி சமயங்களைப்பற்றி என்ன கூறியிருக்கின்ருர்கள். என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. அதைச் சுருக்கமாகத் தருகிறேன்.
காந்திஜியும் சமயங்களும் :
காந்தியடிகள் உலகத்துக்கு விடுத்துள்ள செய்தியை ஆராய்ந்து பார்த்தால், அது சமய ஞானத்தை அறி வுறுத்துவதைக் காணலாம். காந்தி மகாத்மா உலகத் துக்கு என்ன போதிக்கிருர்? சத்தியம், அஹிம்சை என்னும் இரண்டையும் போதிக்கின்ருர் . இவ்விரண்டும் உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களின் அடிப்படை. சமயங்களுக்கு அடிப்படையான தருமங்களைப்போதிக்கக்
57

Page 48
இந்திய விடுதலைப் போரில்.
காந்தியடிகள் புறப்பட்டமையாலன்ருே, அவரை எம் மதத்தினரும் போற்றுகிருர்கள் உலகத்தில் எப்பகுதி யிலும் இந்நாளில் சமயங்கள் தேய்ந்து வருவது வெளிப் படை. மதப்பற்றும் மதவைராக்கியமும் மதவேஷமும் இப்பொழுது நிலவுகின்றனவன்றி மதங்களின் உண்மை செய்கையில் நிலவுவதில்லை. மக்கள் சமய உண்மையை மறந்து அரசியலை மதமாகக்கொண்டு உலகத்தைக் கலக்கி, இடர் விளைத்து வருவதைக் கண்டு சமயத்தின் மூல தர்மங்களாகிய சத்தியத்தையும் அஹிம்சையையும் காந்தியடிகள் போதிக்கத் தொடங்கினர்.
மகாத்மாஜி பிறந்த சமயம் வைஷ்ணவம். காந்தி
ஜியின் வைஷ்ணவம் எப்படிச் சமரச சன்மார்க்கமாகி
யது என்பதை ஆராய்ந்து பார்த்தல் நலம்.அவ்வாராய்ச்சி இக் காலத்துக்கு இன்றியமையாதது. தாய் தந்தையர் எச் சமயத்தில் நிற்கிறரோ அச்சமயத்தில் பிள்ளைகளும் நிற்பது வழக்கம். சிலர் மரணம்வரை அச்சமயத்தையே கடைப்பிடித்து நிற்பர். சிலர் ஆராய்ச்சியில் நுழைந்து தமது உள்ளம் விரும்பும் ஒரு சமயத்திற் புகுவது உண்டு. ஒருவன் தெளிவின்றி பரம்பரை வழக்கத்தையொட்டி வெறும் அனுட்டானங்களைப் புறத்திற் செய்யும் அள வோடு நின்றுவிடுவதும், ஒரு சமயம் பொய்யென்று மற்ருெரு சமயம் புகுவதும் போற்றுதற்குரியனவல்ல. மைந்தன் தான் பிறந்த சமயத்திலிருந்துகொண்டே, கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதலால், அச் சமயமே எல்லாச் சமயங்களாகவும் இருப்பதைக் காண லாம். மகாத்மாஜி தான் பிறந்த வைஷ்ணவ சமயத்தை எச்சமயத்திலும் காணும் பேற்றை நாளடைவிற் பெற லாயினர். அப்பேற்றைப் பெறுவதற்கு அவரது தாய் தந்தையர் நிலை, இனம், வாழ்வு. இல்லறவாழ்க்கை, பின் வாழ்விலுற்ற தியாகம், அவர் கொண்ட அருளறம், கண்ட உண்மை, அடைந்த அனுபவம் முதலியன படிப் படியே அவர்களுக்குத் துணை செய்தன. காந்தியடிகளின்
58

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
தாய் தந்தையர் தெய்வபக்தியிற் சிறந்தவர்கள். அவர் கள் தமது வைஷ்ணவத்தைக் குறுகிய ஓர் இருட்டறையி லிட்டுப் பூட்டி, அவ்விடத்திலிருந்து மற்ற இடங்களைக் காணுது கிடக்கவில்லை. அவர்களுக்குச் சமரச நோக் குண்டு. "என்னையின்றேர் விஷ்ணு கோயிலுக்குச் செல்வதுபோலவே சிவபெருமான் இராமபிரான் கோயி லுக்குச் செல்வர். ஜைன குருமார் என்வீட்டிற்கு அடிக் கடி வருவார்கள் எனது தந்தையார்பால் அவர் உரை யாடுவர். முஸ்லீம்களும் பாஸிகளும் என் தந்தையா ருக்கு நண்பர்களாக விருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் சமய உண்மைகளைச் சொல்வார்கள். என் தந்தையார் அன்போடு அவர்கள் மொழிகளைச் செவி மடுப்பார். தந்தையாருக்குப் பணிசெய்யும் நேரங்களில் அச்சமய உரையாடல்களை யானும் கேட்பதுண்டு. இத ஞல் எனக்குச் சமயப் பாரம் உண்டாயிற்று. காந்தி குடும்பத்தார் வைஷ்ணவ விரதங்களை மட்டுங் கொண் டொழுகுவோர் அல்லர். அவர் சைவ நோன்புகளையும் ஏற்ருெழுகுவார்கள். அவர் திருமால் கோயிலுக்கும் போவர் சிவன் கோயிலுக்கும் செல்வர். அக்குடும்பத் தினர் ஆவணி மாதம் முழுவதும் பிரதோஷ விரதம் அனுட்டிப்பர். யானும் அவ்வாறே செய்ய உறுதிகொண் டேன்" என்று காந்தியடிகள் தமது வரலாற்றில் சமரசத்தை விளக்கியிருக்கின்ருர்கள்:
காந்தியடிகள் பிறந்த சமயம் வைஷ்ணவமாயினும் அதை அவர் பிறப்பளவில் மட்டும் கொண்டு நின்ரு ரில்லை. நெற்றியில் திருமண்ணையோ கோபியையோ சந்தனத்தையோ எதையோ அணிந்து, மற்றச் சமயத் தவரைக் கண்டால் கண்ணை மூடிக்கொள்வது வைஷ்ணவ மாகாது: விஷ்ணு தொடர்புடையதும் வைஷ்ணவம், விஷ்ணு என்னுஞ் சொல்லுக்கு எங்கும் நிறைந்த ஒன்று என்பது பொருள். எங்குமுள்ள எம்பெருமான் விஷ்ணு
59

Page 49
இந்திய விடுதலைப் போரில்.
மூர்த்தி மற்றச் சமய மக்கள் உள்ளத்திலும் இராதோ . எங்குமுள்ள எனது ஐயனை ஒரு கோவிலிலும், ஒரு கூட்டத்தாரிடத்திலுஞ் சிறைப்படுத்தி, மற்றவரை நிந்திப்பது, எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அவனது முழுநிலையை மறுப்பதன்ருே? ஆகவே குறுகிய கொள்கை யுடையவர் உண்மை வைஷ்ணவராகார். காந்தியடிகள் சிவபரஞ்சுடரைச் சத்தியாக்கிரக ஆச்சிரமத்தில் பாவ மன்னிப்புக்குறித்து நாள்தோறும் காலையில் தொழுவது வழக்கம் இதைக்கொண்டு அவரைச் சைவர் என்று கொள்வது தவருகாது. ஆனல் மற்றச் சமயத்தவரைக் கண்டதும் எரிந்துவிழும் சைவம் காந்தியடிகளுடைய தன்று. "எவ்வுயிரும் நீங்காதுறையும் இறை சிவனென்று எவ்வுயிர்க்கும் அன்பாயிரு" என்று சைவசமய நெறி சாற்றுகிறது. எவ்வுயிரிடத்திலும் அன்பாயிருத்தல் சைவ மென்பது. இக்காரணத்தால் சிவத்தை "கருணைக் as L-ajeito (Shiva-God of Mercy) stdir p snr 56ugasair தொழுதனர். "சத்தியாக்கிரக ஆச்சிரமத்தில் காலைப் பிரார்த்தனையில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப் படும் எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு கருணைக் கடவுளாகிய சிவபரம்பொருளை நாங்கள் வேண்டுகிருேம்" என்பது காந்தியடிகளின் திருவாக்கு
இந்துசமயம், கிறிஸ்து சமயம், முஸ்லீம் சமயம் முதலியவற்றையெல்லாம் நிறுத்திப்பார்த்தால் அவைக ளின் அடிப்படையான உண்மை ஒன்றே என்பது பெற லாம். கடவுள் ஒருவரே. வேறுபட்ட வழக்க ஒழுக்கங்க ளால் பிணங்காது, உண்மை என்னும் செம்மை வழி பற்றி நடக்கக் காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கு வழி காட்டுகிறது. "நாம் அனைவரும் ஒரே பரமபிதாவின் பிள்ளைகள். அப்பிதாவை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியோர் வெவ்வேறு பெயராற் போற்றுகின்ருர்கள் அப்பிள்ளைகளுக்குச் சேவைசெய்வதே எனது மதமாகக் கொள்ளுகிறேன். தொண்டிற்குத் தொண்டுதான்
60

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
வெகுமதி. பிறருடைய துன்பத்தைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்வதில் எவன் இன்பமடைகின்றனே அவன் உண்மையான தொண்டன் " என்ற உயர்ந்த காந்தியடிக ளின் மணிவாசகங்கள் நமது வாழ்க்கைக்குத் திறவு கோலாகவிருக்கட்டும்.
வடலூர்:
சிதம்பரத்திலிருந்து வடலூருக்கு 16-7-41ஆம் திகதி போய்ச் சேர்ந்தோம். இதுவரைக்கும் 286 மைல்கள் கால் நடையாக நடந்து வந்திருந்தோம். வடலூர் ஒரு சிறிய கிராமம். ஆனல் பிரசித்திபெற்ற புண்ணிய இடம். வடலூர் என்ருல் திருவருட்பிரகாச வள்ளலார் இராம லிங்க சுவாமிகள் ஞாபகம் வரும். பாரதநாடு ஆன்மீக ஞானத்துக்குப் புகழ் பெற்றது: தமிழ்நாடோ தொன்று தொட்டுத் தெய்வமும் தேவர்களும் மகிழ்ந்து விளை யாடிய பூமி. தமிழ் மண்ணில் தோன்றிய முனிவர்களும், மகான்களும், யோகிகளும், கித்தர்களும் கணக்கில் அடங்கா. தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களும், திருக் குளங்களும் தமிழர்களின் தெய்வசிந்தையைப் பறை சாற்றும் வடலூருக் கருகாமையிலுள்ள மருதூர் என் னும் குக்கிராமத்தில் உயர்திரு. இராமையாபிள்ளை என்பவர் வாழ்ந்தார். அவர் ஓர் ஆசிரியர். உள்ளூ ரிலும் பக்கத்துக் கிராமங்களிலும் உள்ள குழந்தை களுக்குக் கல்வி கற்பிப்பதே அவருடைய தொழில். அவருடைய மனைவியாரின் பெயர் சின்னம்மை. தமிழ் நாட்டின் பண்பாட்டில் விருந்தோம்பல் ஒரு தலையாய பகுதி. மருந்தே ஆயினும் விருந்தோடுண்ண வேண்டும் என்பது நம் வழக்கம். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு சிவனுக்குப் புரியும் தொண்டு என்பது நம் முடைய நம்பிக்கை. சின்னம்மையும் இராமையா பிள்ளையும் இந்த நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள். அவர்கள் இல்லறம் நடாத்திவருநாளில் அவர்களுக்கு
61

Page 50
இந்திய விடுதலைப் போரில்.
1823ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இராமலிங்கம் என்று பெயர் சூட்டி அருமையாக வளர்த்துவந்தனர் பெற்றேர் குழந் தைக்கு ஐந்து மாதமானது. சிதம்பரத்துக்குச் சென் றனர். தில்லை நடராசனின் திருமுன் சென்று வழிபட் டனர். தாயின் மடியில் கிடந்த சிசு கைகால்களை உதைத்துக்கொண்டு விளையாடியவண்ணம் தில்லைப் பெருமானப் பார்த்துச் சிரித்தது. அங்கிருந்த தீட்சதர் ஒருவர் அதைக் கவனித்தார்: "இவன் அம்பலவானரின் செல்லப் பிள்ளை!" என்று வாயாரப் புகழ்ந்தார், போற் றினர். தங்கள் குழந்தை கடவுள் அருள் பெற்ற குழந்தை என்று பேசப்படுவதைக் கேட்டு மகிழாத பெற்ருேர் உண்டோ? அவர்கள் மகிழ்வும் களிப்பும் கொண்டவர்களாய் சிசுவை ஏந்திக்கொண்டு மருதூருக் குத் திரும்பினர்கள். இராமலிங்கத்துக்கு மூத்த சகோ தரர்கள் இருவர்கள். ஒருவர் பெயர் சபாபதிப்பிள்ளை, மற்றவர் பெயர் பரசுராமபிள்ளை சுந்தரம்மாள் உண்ணுமுலையம்மாள் இவ்விருவரும் இராமலிங்கத்துக்கு அக்காமார். சிதம்பரத்துக்குப் போய்வந்து ஒரு மாதம் கழிந்தது. இராமையாபிள்ளை திடீரென்று சிவபதவி பெற்றுவிட்டார். குடும்பச்சுமை முழுவதும் வீட்டின் மூத்த பிள்ளையான சபாபதிமீது விழுந்தது.
குடும்பம் சிறிது காலத்துக்குப் பிறகு அங்கிருந்து சென்னை நகரை வந்தடைந்தது. அங்கு சபாபதிப்பிள்ளை சென்னையிலுள்ள சபர்பதி முதலியார் என்ற மகா வித்துவான் அவர்களிடம் முறையாக இலக்கிய, இலக் கணங்களைப் பயின்ருர். விரைவில் சபாபதிப்பிள்ளை தமிழில் புலமை பெற்ருர் . பின்னர் சபாபதிப்பிள்ளை தமிழ் ஆசிரியராஞர். இராமலிங்கத்துக்கு ஐந்து வய தாயிற்று. அவனை நல்லறிஞனக வளர்க்க வேண்டு மென்பது சபாபதியின் விருப்பம். குழந்தைப் பருவத்தி லேயே தமிழ்த்தேனை அவன் குடிக்கத் தொடங்க
62

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
வேண்டும் என்று சபாபதி எண்ணினர். தமிழை முறை யாகவும், மனப்பூர்வமாகவும் கற்ருல் தெய்வஞானம் கிட்டும் என்பார்கள். ஆகையால், இராமலிங்கம் தமி ழில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்று அவர் கருதிஞர்: தம்பி இராமலிங்கத்தைத் தம் ஆசிரியரான சபாபதி முதலியாரிடமே மாணவனுகச் சேர்த்தார். முதலியா ரின் கைபட்டால் செம்பு பொன்னகும்; அவர் கை பட்டால் பொன் என்னவாகும் ? இராமலிங்கம் அரு ளால் பிறந்த பிள்ளை; பொன் போன்றவன்; முதலியா ரிடம் கல்வி பெற்ருல் அவன் மிகவும் உயருவான் என்று சபாபதிப்பிள்ளை நம்பினர். இராமலிங்கமும் முதலியா ரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினர். ஆனல் இராம லிங்கத்துக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை. ஆசிரியன் வீட்டுக்குச் செல்லும் வழியில் கந்தசாமி கோயில் இருந் தது. முருகப்பெருமான் இராமலிங்கத்தின் மனத்தைக் கவர்ந்தார். படிக்கச் செல்லும்போதும் திரும்பும்போதும் அவன் ஆலயத்துக்குச் செல்லுவான். கந்தனின் சந்நிதி யில் மெய்மறந்து நிற்பான். முருகனின் புறத் தோற் றம் அவனைப் பரவசமாக்கும்; பாடுவான், சுற்றிலும் இருப்பவர்களை மறந்து பாடுவான். கேட்கிற பாக்கியம் படைத்தவர்கள் மனம் கசிந்து நிற்பார்கள். பள்ளிப் படிப்பு ஏறவில்லை. சதா முருகனை வேண்டி சென்னை கந்த கோட்டத்தில் நின்று பாடும் செய்தி வித்துவான் சபா பதி முதலியாருக்கு எட்டியது. இராமலிங்கத்தை அழைத்தார். "கந்தகோட்டத்தில் நாள்தோறும் பாடு கிருயாமே, என்ன பாடுகிருய்?" என்று கேட்டார் சிறுவன் சிறிது தயக்கத்துடன், "முருகவேளைப் பாடு
கிறேன் " என்ருன். ** யாருடைய தோத்திரப் பாடல்கள்? " " நானே மனதில் தோன்றுவதைப் பாடுகிறேன் ஐயா!". "சரி, பாட்டுப்பாடு : கேட்க லாம்". இராமலிங்கம் "கணிர் " என்று வெண்கலக்
குரலிற் பாடத் தொடங்கினன்.
63

Page 51
இந்திய விடுதலைப் ப்ோரில்.
* மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
மதித்திடான் நின்அடிச்சீர் முகிழ்கல்வி கற்றிடான் சும்மா இரான்காம மடுவினிடை வீழ்ந்துசுழல்வான் h சினமான வெஞ்சுரத் துழலுவான் உலோபமாம்
சிறுகுகையி னூடுபுகுவான் செறுமோக இருளிடைச் செல்லுவான் மதம்எனுஞ்
செய்குன்றில் ஏறிவிழுவான் இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
இறங்குவான் சிறிதும் அந்தோ ! என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்கு
ஏழையேன் என்செய்குவேன் ! தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே ! −r தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!”
பாட்டு நின்றது. சபாபதி முதலியார் திகைத்துப் போய்ச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். குழந் தைப் பிராயத்தில் இவ்வாறு ஊனுருக, உள்ளுருகப் பாடிய மாணவனை அவர் கண்டதில்லை. பாட்டென்றல் வெறும் பாட்டா. எத்தகைய பொருட் செறிவு 1 எத் தகைய அருட் பொலிவு 1 மகாவித்துவான் சபாபதி முதலியார், ' இவனுக்கு நான் கற்பிக்க வேண்டும் என்பது வீண்முயற்சி. ஆண்டவனை ஆசிரியணுகப் பாடும் மாணவனுக்கு நான் ஆசிரியனுக இருக்க முடியுமா ?” என எண்ணிஞர். "" தம்பி இராமலிங்கம் ! இனி நீ என்னிடம் சொல்லிக்கொள்ள வரவேண்டாம். முருகப் பெருமான் உனக்கு எல்லாம் தருவார்!" என்று அவ னுக்கு விடுதலை அளித்துவிட்டார்.
64

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
படிக்கப் போவதும் வருவதும் பெரும் பந்தமாக இருந்தது இராமலிங்கத்துக்கு. ஆசிரியரின் சொற்கள் அவனுக்கு அமுதமாக இனித்தன. இனி, தங்கு தடை யில்லாமல் சண்முகமணியைப் பாடிக்கொண்டிருக்கலாமே! என்று உள்ளங்கொண்டார். இராமலிங்கம் கந்தகோட் டத்திலும் குமரகோட்டத்திலும் சுற்றத்தொடங்கினன்; பாடிக்கொண்டே சுற்றினன். சுற்றிக்கொண்டே பாடி ஞன். இராமலிங்கம் இளம்பிள்ளையாக இருந்தபோதே கடையை விரித்துவிட்டான்; ஆனல் அவன் கடையில் கொள்வார் யாருமில்லை. தமையனர் சபாபதிக்கே தம்பியினுடைய சரக்கின் அருமை விளங்கவில்லை. இராம லிங்கம் பள்ளியில் பயிலாது நிறையப் பாமாலை புனைந் தான். ஆண்டவன்மேல் சென்னை கந்தகோட்டத்திலுள்ள முருகனிடத்தும் திருவொற்றியூர்ச் சிவபிரானிடத்தும் மாருத பக்தி செலுத்தி வந்தார். அவருடைய உள்ளம் இறைவனிடத்திலேயே தோய்ந்திருந்தது. அவருக்குத் திருமணம்செய்துவைக்கத் தாயும், தமையனரும் அண்ணி யாரும் விரும்பவே இல்வாழ்க்கையில் மனமில்லாத இராமலிங்கர் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டு மென்ற அன்புப் பெருக்கால் தமது தமக்கை மகளான தனக்கோட்டி அம்மாள் என்னும் கன்னிகையை மணந்தார். ஆணுல் அவர்களிருவரும் தெய்வ நினைவிலேயே ஈடுபட்டு பிரமச்சரிய விரதத்தைக் குலைக்காமல் சீரிய வாழ்க்கை நடத்தினர்கள் இராம லிங்கரின் வழிபடு கடவுள் முருகன் தில்லை நடராஜர் வழிபடும் குரு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் வழிபடும் நூல் திருவாசகம், பள்ளியறையிலே திரு வாசகத் தேனை உண்டு மகிழ்ந்தார்கள் இராமலிங்களும் தனக்கோட்டி அம்மாளும், அப்படிப்பட்ட தூயவாழ்க் கையில் இராமலிங்கர் சதா இறைவனுடைய பெருமை யைப் பாடி வாழ்ந்தார்.
g) - 5 65

Page 52
இந்திய விடுதலைப் போரில்.
பின்னர் சென்னையைவிட்டுச் சென்று தில்லையம்பதி யிலும், அதற்கடுத்துள்ள வடலூரிலும் அவர் வதிந்து வந்தார். அந்தக் காலத்திலே அவர் பாடிய அருட் பாக்கள் மிகப் பல. சமரச சன்மார்க்கத்தையும், அன்பு வாழ்க்கையையும், இறைவனிடத்தே பொங்கிப்பெருகும் அளவுகடந்த பக்தியையும் அப்பாடல்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
* சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே " அலைந்து திரிவது அழகல்ல என்று அவர் சமரசம் போதித் தார்கள். " சாதிச் சமயச் சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன்' என்று இறைவன் அருள் பெறுவ தற்கு மார்க்கத்தை அவர் நமக்குக் காண்பித்தார் இராமலிங்கரின் பாடல்கள் மிக எளிமையானவை. "அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை யப்பா இனி ஆற்றேன்" என்று உரிமையோடும் பணி வோடும் இறைவனிடத்திலே முறையிடுகின்ருர் அவர். ** கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே" என்று தொடங்கும் பாடலிலும், "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே' என்ற பாட லிலும் இறைவனது பெருமையையும், கருணையையும் விளக்குகின்றர். அனுபவத்தின் வாயிலாக எழுந்த இப்படிப்பட்ட ஆருயிரத்துக்கு மேலான பாடல்கள் நமக்குப் பேருண்மைகளையும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சன்மார்க்க நெறியையும் பக்திச்சுவையோடு கலந்து அளிக்கின்றன.
வங்கமுனிவர் இராமகிருஷ்ண பரமஹம்சர், இராம லிங்க வள்ளலார் ஆகிய இரண்டு மகான்களின் வாழ்க்கை யிலும், உபதேசங்களிலும் பல ஒற்றுமைகளே நாம் காணலாம். இருவரும் சமரச நெறியையும் அன் வாழ்க்கையையும் போதிக்க வந்தவர்கள், ஏகதேசமாக
66

நாகபட்டினத்தில் சத்தியாக்கிகரம்
ஒரே காலத்தில் இரண்டு தெய்வச்சுடர்ப் பொறிகள் வடநாட்டிலும் தென்னுட்டிலும் எழுந்து நம்மை உய் விக்க வந்தனவோ என்று கூறும்படியாக இவர்கள் தோன்றியருளியுள்ளார்கள். இனி வள்ளலாருக்கும் காந்திமகாத்மாவுக்கும் கொள்கை உடன்பாடு இருந்த தைப் பார்ப்போம்; மறைந்ததிலும் ஒற்றுமை. வள்ள லார் மறைந்த காலத்தில் காந்தியடிகளுக்கு ஐந்து வயது. வள்ளலார் 1823ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாளில் தோன்றினர். காந்தி யடிகள் 1869ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாளில் வடக்கே போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார். இந்தப் பெரியார்கள் இருவரின் மறைவிலே யும் வியக்கத்தக்க ஒற்றுமையைக் காண்கின்ருேம், வள்ள லார், 1874ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று மறைந்தார். காந்தியடிகள் 1948ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று மறைந்தார். இராமலிங்கரி நாட்டிலே நல்லாட்சி அமையவேண்டு மென்பதிலும் அக்கறை கொண்டிருந்தாராயினும் ஆத்மார்த்தத் துறையிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினர் காந்தியடிகளும் ஆத்மார்த்தத் துறையிலும் அக்கறை கொண்டிருந்தாராயினும் அரசியல் துறையிலேயே அதிக அளவில் ஆர்வம் காட்டினர். இந்த முரண்பாடற்ற வேற்றுமைக்குக் காரணம் இரு பெரியார்களும் வாழ்ந்த காலத்தில் நாட்டின் சூழ்நிலையிலிருந்த வேறுபாடுதான். வள்ளலார், 'கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக," எனக் கூறி, "அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க", எனப் பாடினர். அதனையே "இராமராஜ்யம்" என்ருர் காந்தி யடிகள். இதுதவிர, இன்னும் எத்தனையோ துறைகளில் வள்ளலாரே காந்தியாக வந்தாரோ என்று ஐயுறுமள வுக்கு அவர்களிடையே கருத்தொருமை, ஆன்மநேய ஒருமைப்பாடு இருக்கக் காண்கின்ருேம்.
67

Page 53
இந்திய விடுதலைப் போரில்.
'பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்தர் ஆதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே."
இப்பாட்டு தலைவி தோழிக்கு உரைக்கும் பாவனையில் இராமலிங்க சுவாமிகள் பாடியவையாகும். அருகர் = புத்தர் என்னும் பெயர்களும் தாம் வணங்கும் ஆண்டவ னுடைய பெயர்களே என்கிருர், இது காந்தியடிகளின் சமயக் கொள்கைக்குப் பொருத்தமுடையதாக விருப்பது தெளிவு. இராமலிங்கர், சாதிவேற்றுமைகள் அடியோடு தொலையவேண்டும் உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதி அவற்றின் பால் அன்புசெலுத்தவேண்டும்; பட்டினி தொலைந்து பாரிலுள்ள அனைவரும் பசியாற உண்ண வேண்டும் என்னும் சீரிய கொள்கைகளை எல்லாம் செந்தமிழ்நாட்டு மக்களிடையே பரப்பப் பாடுபட்டார். இந்தக் கொள்கைகள் அனைத்தும் காந்தியடிகளாலும் வலியுறுத்தப்பட்டன. சுருங்கச் சொன்னல், தமிழ் நாட்டில் "ஜோதி" வடிவாக விளங்கிய இராமலிங்கர், வடக்கில் "காந்தி" வடிவிலே காட்சியளித்தார் என்று சொல்லலாம், தெற்கில் இராமலிங்க வள்ளலார் உபதே சித்தபோது ஏற்காத கொள்கைகளை, வடக்கில் தோன் றிய மோகனதாஸ் சுரம்சந்திர காந்தி சொன்னபோது, வாழ்த்தி வழிபட்டு வரவேற்றனர் தமிழ்மக்கள். இதனை முன் கூட்டி அறிந்தே, “நான் இப்போது உங்களுக்கு விணில் சொல்லும் சிறந்த உண்மைகளையே, வடக்கில் மகாத்மாக்கள் தோன்றி உங்களுக்குச் சொல்வார்கள் அப்போது நீங்கள் தெரிந்து கொண்டு மதித்து நடப்
68

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
பீர்கள்." என்று தமிழ் மக்களைப் பார்த்துக் கூறிச் சென்ருர் இராமலிங்கர், வயிற்றுப் பசியைத் தணித் தால்தான் ஆன்மீகப் பசியைத் தூண்டிவிடமுடியும் என்ற மனுேதர்ம உண்மையைப் போதித்துச் சாதித்துக் காட்டி வாழ்ந்த இராமலிங்கர் பிறந்த புண்ணிய பூமியில் கால் எடுத்து வைத்ததைப் பெரும் பேருக நாம் கருது கின்ருேம், வடலூரிலிருந்து சித்தணி என்னும் கிராமத் துக்குப் புறப்பட்டோம்.
இளாகங்கையின் தேசப்பற்று:
வடலூரிலிருந்து பல கிராமங்களைக் கடந்து 20-7-41ஆந் திகதி காலை 11 மணியளவில் சித்தணி என்னும் கிராமத்தை அடைந்தோம். காலமோ மிகவும் வரட்சியானது. வெப்பத்தால் கிராமம் புல்பூண்டுக ளற்ற ஒரே மணற் தரையாயிருந்தது. வறுமைப்பிணி மக்களை வாட்டிநின்றது. இக் குக்கிராமத்தில் அரசினர் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. விடுமுறை கால்மாத லால் அங்கு ஐந்து சத்தியாக்கிரகிகளும் தங்குவதற்குச் செளகரியமாகவிருந்தது. பாடசாலைக்கணித்தாக ஒரு சிறிய வீடு இருந்தது. அவ்வீட்டில்தான் பாடசாலைத் தலைமை ஆசிரியரும் அவரது குடும்பமும் சீவிப்பதாக அறிந்தோம். நாம் பாடசாலையில் தங்கியிருப்பதைக் கேள்வியுற்ற செல்வி வ, திலகவதி (ஆசிரியரின் மரு மகள்) என்னும் இளநங்கை ஓடோடியும் வந்து எங்களை அன்புடன் விசாரித்தார்கள். இப் பெண்ணிற்குப் பதி ணுறு வயதிருக்கும் ; அதே பாடசாலையில் எட்டாவது வகுப்பில் வாசித்துக்கொண்டிருப்பதாக அறிந்தோம். 9 அண்ணன்மார்களே! நீங்கள் வெகுதூரத்திலிருந்து வந் திருக்கின்றீர்கள்; எங்களது மாமா காரியார்த்தமாக வெளியூர் சென்றுள்ளார். தாகசாந்திக்கு இதோ மோர் கொண்டுவந்திருக்கின்றேன். அருந்தியபின் சிறு களைப் பாறுங்கள் ஒரு மணிக்குள் சாப்பாடு செய்து தருகின்
69

Page 54
இந்திய விடுதலைப் போரில்.
ருேம் " என்று உணர்ச்சியோடு பேசியபின் சென்று விட்டார் நாமும் சற்று உறங்கி எழுந்ததும் சாப்பாடு எங்களைக் காத்துக்கொண்டிருந்தது? சாப்பாடானது. சிறிது நேரம் தங்கிப் புறப்படுவதற்கு ஆயத்தம் செய் தோம். அந்த நேரத்தில் சகோதரி திலகவதியார் தோன்றி, "பெரியவர்களே! நீங்கள் கொடுத்துவைத்த புண்ணியவான்கள். இத்தேசத்திற்காகச் சேவைபுரிந்து மகத்தான தியாகங்களைப் புரிந்துவிட்டீர்கள். ஆனல் என்போன்ருேர்க்கு இப்பணியில் ஈடுபட்டுத் தொண் டாற்றக் கொடுத்துவைக்கவில்லையே! எனினும் தங்களைப் போன்ற தேசத் தொண்டர்களைக் காணும் பாக்கியத் தையும் அவர்களுக்கு என்னுல் இயன்ற சேவை புரிவ தற்கு ஏற்ற சந்தர்ப்பத்தையும் அளித்ததுவே எனக்குப் போதுமானது. இவையே என் மனதிற்குச் சாந்தி யளிக்கும். காந்திஜி நம்மெல்லோரையும் ஆசீர்வதிப்பா ராக. அண்ணன்மார்களே! போய் வாருங்கள்" என்று கூறி வழியனுப்பினர். இவ்விளமங்கையின் ஒவ்வொரு வார்த்தையிலும் தாய்நாட்டன்பும், தொண்டர்களை உபசரிக்கும் பண்பும் இருப்பதை யாம் உணர்ந்தோம்: பெருமிதம் கொண்டோம்; இம்மாதிரியான உணர்ச் சிப் பெருக்கோடு பேசும் பெண்மணிகள் எங்கும் நிறைந்திருந்தால் எந்த நாடுதான் விடுதலையடைய மாட்டாது ?
தாகசாந்தி:
திண்டிவனம் என்னுமூர் சித்தணியிலிருந்து பதினுெரு மைல்களுக் கப்பாலிருக்கிறது. இடையில் தங்கக்கூடிய வசதிகள் கிடையா. நாங்கள் வேகமாக நடந்து செல்கின்ருேம். மாலை வேளையாதலால், நாங்கள் கூட்ட மாக நடந்து செல்லாது ஒருவரை யொருவர் பிரிந்து வேகமாக நடக்கின்ருேம். எனக்குக் களைப்பு அதிக மாய்விட்டது; தாகம் அதிகரித்துவிட்டது. தாகசாந்தி
70

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
செய்ய வேண்டுமென்ற ஆவல். நாம் செல்வது சென் னைக்குப் போகும் பெரிய நெடுஞ்சாலை. அந்த நெடுஞ் சாலையிலிருந்து சிறிய தூரத்துக்கப்பால், பாதையோ ரத்தில் ஒரு சிறு குடிசை தென்பட்டது. அங்கே சென்று எனது தாகத்தைத் தணிக்கலாமென்று எண்ணினேன்; வீட்டைச் சமீபித்ததும், அங்கிருந்து ஒருவர் வெளியே வந்ததைக் கண்டு, "அண்ணு! நமஸ்காரம், கொஞ்சம் தண்ணிர் கொடுப்பீர்களா?" என்றேன். அவர் மனக் கிலேசம் அடைந்தவர்போல் காணப்பட்டார். என்ன ஏற இறங்க நோக்கி, தனது உடம்பை ஒடுக்கி வணங் கியபடி நின்று, "சாமி, நம்ப வண்ணுன் ஜாதியுங்க, எப்படி சாமி தர்றது? எனக்குப் பாவமாச்சே" என்ருர் நான், "அண்ணு பறவாயில்லை, நான் ஜாதி பேதம் பார்ப்பதில்லை. நான் ஒரு காங்கிரஸ் தொண்டன்" என்று பதிலளித்தேன். 'நம்ப ஊட்டுக்கு வாங்க" என்று அவர் என்னை அழைத்துச் சென்ருர். அங்கே எனக்கு ஒரு சிறிய வாங்கைக் காட்டி "சாமி உட்கா ருங்க" என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார் உள்ளே அவர் யாருடனே குசுகுசுவென்று பேசும் சத்தம் மாத்திரம் என் காதில் பட்டது. "காந்தி மவராஜாட ஆக்களா நீங்க?" என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் சிறிய செப்புப் பாத்திரமொன்றை நீட்டி "சாமி, ஜலம் குடியுங்கோ" என்ருள்; நான் சந்தோஷமாகத் தண் ணிரை அருந்தினேன். நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று அவர்கள் விரும்புவதாக ஊகித்துக் கொண்டேன். தீண்டாமை, மதுவிலக்கு, சமூக முன் னேற்றம், தெய்வவழிபாடு முதலியனபற்றிச் சிறிது நேரம் பேசினேன்; அவ்வளவு நேரமும் அந்த அம்மணி இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக்கொண் டிருந்தாள்.
அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் போய்ச் சேர இரவு ஏழரை மணியாகிவிட்டது; அடுத்தநாள் அங்கே
71

Page 55
இந்திய விடுதலைப் போரில். .
ஒரு பெரிய கூட்டத்தில் யுத்த எதிர்ப்புச் சொற்பொழிவு கள் நிகழ்த்தினுேம். பூரீ எஸ். நடேசபிள்ளை என்பவர் அந்த ஊரில் ஒரு பிரமுகர். அவர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர். 22-7-41இல் காலையில் சென்னையை நோக் கிப் புறப்பட்டோம். திண்டிவனத்தைவிட்டுக் கிளம்பும் பொழுது 318 மைல்கள் பூர்த்திசெய்துவிட்டோம்: தஞ்சாவூர்ப்பகுதியில் பிரயாணம் செய்யும்போது குளங் களிலும், காவேரி நதியிலும் குதூகலமாகக் கும்மாளம் போட்டோம், ஆனல் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குப் போய்ச்சேரும்வரை எல்லாம் வரட்சியாகவே காணப் பெற்றன. தண்ணிருக்குப் பெரிய க்ஷ்டம். தெண் பெண்ணை, பாலாறுகளிலும் கூடத் தண்ணிர் கிடையாது. அதிலிருந்து 10, 15 மைல் தூரத்திற் தான் கிராமங்க ளுண்டு. கடுநடை நடந்து, மதுராந்தகம், செங்கல் பேட்டு, தாம்பரம் முதலான ஊர்களில் பிரசாரம்செய்து கொண்டு 26-7-41இல் சென்னையைச் சேர்ந்தோம்.
சென்னை காங்கிரஸ் மாளிகையில் நாங்கள் தங்குவ தற்குப் பல செளக்ரியங்கள் செய்து தரப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரியாலய அதிபரிடம் எனது தினசரிக் குறிப்புப் புத்தகத்தைக் கொடுத்தேன். நாகபட்டினத்திலிருந்து யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்துகொண்டு 400 மைல்கள் கால்நடையாகச் சென்னே வந்து சேர்ந்தேன். இதுவரை 250 கிராமங்களில் பிரசாரம் செய்திருக்கின்றேன். 90 பொதுக்கூட்டங் களில் பேச்சு நிகழ்த்தியிருக்கின்றேன். இவையெல்லாம் விபரமாக எனது தினசரிக்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தேன். குறிப்புப் புத்தகத்தைப் பரிசீலனை செய்தபின்னர் "4-8-41 காலை 9.30 மணிக்கு இராயபுரத்தில் சத்தியாக்கிரகம் செய்யத் தயாரா யிருங்கள்" என்ருர் காரியாலய அதிபர்.
72

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
கான்கு மாதக் கடுங்காவல்
நாகையிலிருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டம், தென்ஞற்காடு மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய இடங்களில் ஏற்ற பிரசாரம் செய்துகொண்டு சென்னையை அடைந்த பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரியாலய அதிபர் எனக்குச் சிறிது ஓய்வு தந்தார்கள் எட்டு நாட்களுக்கு ஒய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்ய ஆரம்பித் தேன். மகாத்மாவின் சத்தியாக்கிரகப் படையில் கலந்து கொண்டவ்ர்களுக்கு அவர் கட்டளைகளை நிறைவேற்று வதே தவிர வேறு சிந்தனே என்னவேண்டியிருக்கிறது?
இராயபுரத்தில் கைது :
4-8-41 காலை 9.30 மணிக்கு இராயபுரம் மாதா கோவில் தெருவில் ஓர் பகிரங்கக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் நான் யுத்த எதிர்ப்புப் பேச்சு நிகழ்த்தப் போவதாகச் சென்னைப் பொலிஸ் கொமிஷனருக்கு முன்னறிவித்தல் செய்திருந் தேன். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே இராய புரம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தம்முடன் கூடப் பத்துப் பொலிஸாருடன் பிரசன்னமாகப் பிரசங்க மேடையைச் சுற்றி அலங்கரித்து நின்றனர்; இராயபுரம் காங்கிரஸ் சபையாரி என்ன ஊர்வலமாக அழைத்துச் சென் ருர்கள்: தேசீயக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மேடைமீது ஏறினேன்; 'வந்தேமாதர முழக்கத்தோடு நான் பேசினேன். அப்போது யான் பேசியதன் சுருக்கம் 'யான் நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம் செய்து பல கிராமங்கள், நகரங்கள், இவைகளில் வாழும் மக்களை யும் பார்த்து வந்திருக்கின்றேன். காந்தியடிகளின் சத்தி யாக்கிரக இயக்கம் மக்களிடையே உணர்ச்சியை, தேசாபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கண்ணுரப் பார்க்கக்கூடியதாக அமைந்திருந்தது.
73

Page 56
இந்திய விடுதலைப் போரில்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பரந்த எண்ணத் துடன் வாழ்க்கை நடத்துவது நமது பண்பாடு. க்ாந்திஜி இதுபற்றி அக்கறை கொண்டார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சிறந்ததே. ஆயினும் இதுவளர மக்கள் தாம் வாழும் மண்ணில் வேர்விட வேண்டும். காந்திஜியின் அறிவுரைகள் அனைத்துலகுக்கும் பொருந்தக்கூடியவை. அவர் அடிப்படை நெறிகளை அறிவுறுத்திக் கூறினர். மனிதனின் மனச்சாட்சியிடம் பேசினர். சொந்த நாடு, இனம் ஆகியவற்றைப் பார்க்காமல், உலக மக்கள் அனைவரும் அவரைப் புரிந்துகொண்டார்கள். நல்ல அறிவுடைய தேசிய வாதத்தின் அடிப்படையில்தான் சர்வதேசவாதம் அமையமுடியும் என்று காந்திஜி நமக்கு உணர்த்தியிருக்கின்ருர்கள். தேசியவாதம் தீயது அல்ல. குறுகிய மனப்பான்மையும், சுயநலமும், தனித்துவாழ வேண்டுமென்ற விருப்பமும்தான் தீய அம்சங்கள் என்று காந்திஜி கூறியிருக்கின்ருர்கள். இந்திய சுதந்திரத்தின் மூலம் மனித சகோதர உணர்வை ஏற்படுத்த எண்ணி ஞர் காந்தியடிகள். அவர் எந்த இனத்தவரையும் வெறுக்கவில்லை. தாய்நாட்டுக்காக் எத்தகைய தியாகத் தையும் செய்யவும் அவர் ஆயத்தமாக இருந்தார். ஆனல் மற்றவர்களை அழித்து, தாய்நாட்டைச் சிறப்பிக்க அவர் விரும்பவில்லை. இந்தியாமீது அவர் அசையாத நம் பிக்கை கொண்டிருந்தார். குறுகிய பிராந்திய வாதம் அபாயகரமானது என்று எச்சரித்தார். ஒவ்வொரு பிராந்தியமும் சுயாட்சி உரிமையுள்ள தனிப்பகுதியாக எண்ணிக்கொண்டால் இந்தியாவின் சுதந்திரம் பொருள் இழந்துவிடும் என்றும், மற்றப்பகுதிகளின் சுதந்திரமும் அழியக்கூடும் எனவும் குறிப்பிட்டார். "வெளி உலகம் குஜராத்திகள் என்ருே, மகாராஷ்டிரர்கள் என்ருே, தமிழர்கள் என்ருே குறிப்பிடுவதில்லை. இந்தியர்கள் என்றுதான் அவர்களுக்குத் தெரியும்" என்ருர் காந்திஜி.
74

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதி உடலைக்கூட மறைக்கமுடியாமல், அரை வயிற்றுக்குக்கூட உணவு இல் லாமல் இன்னலுறுவதைப் பார்த்து வேதனையடைந்தார் காந்திஜி அவர்கள். நிலையான சத்தியம்தான் கடவுள் என்று அவர் கூறினர். கடவுளிடம் இருக்கும் நம்பிக்கையி லிருந்துதான் அஹிம்சையில் நம்பிக்கை ஏற்படமுடியும், காந்திஜி எளிமையாக வாழ்கின்ருர், ஆனல் அவர் உயர்ந்த சிந்தனையாளர். அஹிம்சையிலும், மனிதனின் நற்பண்புகளிலும் அவருக்கு அசையாத நம்பிக்கையிருந் தது. இங்ங்ணம் உயர்ந்த பண்புகளுக்கொப்ப வாழ்ந்த காந்திஜி தமது சத்தியாக்கிரக இயக்கத்துக்குத் தளபதி. அந்த மகாத்மாஜியின் கட்டளையை நிறைவேற்றவே உங்கள் முன்னிலையிலிருக்கின்றேன். இங்ங்ணம் பேசிக் கொண்டிருக்கையில், பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெள்ள எனக்கருகாமையில் வற்து நின்ருர். என்னிடமிருந்து எதையோ அவர் எதிர்பார்ப்பது போல அடிக்கடி என்னை யும் தமது கைக்கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த் துக்கொண்டிருந்தார். 'ஸார், நேரமாகிறது. தயவு செய்து உங்கள் யுத்த எதிர்ப்புக் கோஷங்களைச் செய்து பேச்சை முடியுங்கள்" என்று கடைசியாக அவர் என்ன வேண்டிக்கொண்டபிறகுதான் எனக்கு விஷயம் விளங் கியது. எனக்காக இத்தனை பேர்களுடன் வந்து காத் திருந்து இவ்வளவு தாழ்மையாகக் கேட்கப்படும் ஒரு கோரிக்கையை அலட்சியஞ் செய்யலாமா? அவர் கேட்டுக் கொண்டபடியே எனது பேச்சை அதிகம் வளர்க்காமல், *பிரிட்டிஷாரின் யுத்த ஏற்பாட்டிற்குப் பண உதவியோ மனித சகாயமோ கிடைக்கும்படி செய்வது தவறு. எல்லாவித யுத்தங்களையும் அஹிம்சா முறையில் எதிர்ப் பதே ஞாயமான வேலை. வந்தேமாதரம்" என்ற கோஷங்களைச் செய்தேன். உடனே அவரும் சிறிதும் தாமதியாமல் வந்து, "ஸ்ார். இந்திய பாதுகாப்புச் சட்டப்படி உங்களைக் கைது செய்கின்றேன்." என்று ஒரு பெருமூச்சுடன் சொன்னர். ஒருவித மறுப்புமின்றி
75

Page 57
இந்திய விடுதலைப் போரில்.
அங்கு கூடியிருந்த பிரமாண்டமான சனக்கூட்டத்துக்கு வந்தனம் அளித்து நன்றி செலுத்திவிட்டு அவரைப் பின்தொடர்ந்தேன். "எங்கே போகவேண்டும்" என்று கேட்டேன். அவர் பக்கத்தில் நின்ற ஒரு பஸ் வண்டியைக் காட்டி அதில் ஏறிக்கொள்ளும்படி கூறினர் ஏறி உட் கார்ந்துகொண்டேன். இன்ஸ்பெக்டரும் மற்றைய பொலிஸார்களும் ஏறிக்கொண்டார்கள். ஆஞல், வண்டி நகரவில்லை. வண்டியைச் சுற்றி வளைத்துக்கொண்டு வாண்ப்பிளக்க வந்தேமாதரக் கோஷங்கள் செய்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினரை அப்பாற்படுத்து வது மிகவும் சிரமமாய்ப்போய்விட்டது. கடைசியாக நான் தலையை நீட்டிக் கும்பிட்டு ஒருவித குழப்பங்களும் செய்யவேண்டாமென்று வேண்டிக்கொண்ட பின்னரே ஒருவாறு வண்டி போவதற்கு வழிவிட்டுக் கொடுத்தார் கள் சத்தியப் போர் வீரர்களுக்கு முரட்டுத்தனமும், பலாத்கார குணங்களும் வெகுதூரமல்லவா
வேடிக்கையான விடைகள் :
ஒருவாறு வண்டி இராயபுரம் பொலிஸ் ஸ்ரேசனே அடைந்தது. எல்லோரும் ஸ்ரேசன் அறைக்குச் சென் ருேம். அங்கே எனக்கு அளிக்கப்பட்ட ஆசனத்தில் நான் உட்கார்ந்துகொண்டதும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சர மாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்; எனது பிறப்பிடம், வயது, தொழில் முதலியவற்றை விபர மாகக் கேட்டுத் தெரிந்துகொண்டதும் இன்னுமொரு வேடிக்கையான கேள்வியையும் அவர் கேட்டார்;
* ஸார், நீங்கள் என்ன பிள்ளை ? ?"
"ஏன் ஸார், சந்தேகமில்லாமல் நான் ஆண்பிள்ளை தான்"
"அதைக் கேட்கவில்லை; உம்முடைய வர்ண மென்ன ? ""
76

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
" பார்க்கத் தெரியவில்லை ஸார், ஏன் - கறுப்பு வர்ணம்தான் ??.
g62), gdipa) (What is your caste?) Brissir என்ன ? காஸ்ற் " ஸார் ? முதலியாரா அல்லது நாயுடுவா"?
"ஓஹோ அதைக் கேட்டீர்களா? எனக்குச் சாதி வித்தியாசம் கிடையாது. ஒரே ஒரு சாதி; அது ஆண் சாதிதான்" w
"சரிதான் காங்கிரஸ்காரர்களுக்குச் சாதி வித்தி Lumrarh 66AD i Lunras Givavaurr?”
இந்த ரீதியில் சம்பாஷணை நடந்தது:
எழும்பூர் நீதிமன்றத்தில் :
எழும்பூர் நீதிமன்றத்துக்குப் புறப்படும்படி உத்தர வாயிற்று. பஸ்ஸில் ஏறினுேம், சிறிது நேரம் சென்றதும் நீதிஸ்தலத்தை அடைந்துவிட்டோம். இங்கே விசேஷ மாக எதுவும் நடைபெறவில்லை, விசாரணை நடை பெற்றது. சென்னை மாகாண பிரதம மாஜிஸ்ரேட் என்னைக் கூர்குறிப்பாகப் பார்த்துவிட்டு, "இந்திய பாதுகாப்புச் சட்டப்படி நீர் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறீர். குற்றவாளியென்பதை ஒப்புக்கொள் கிறீரா?" என்று கேட்டார். "ஒருவித ஆட்சேபனையு மில்லாமல் நான், பிரிட்டிஷாரின் யுத்த ஏற்பாட்டிற்கு எந்தவகையிலும் உதவிசெய்யக்கூடாதென்று பிரசாரம் செய்தது உண்மையே' என்றேன். 'சரி உமக்கு நான்கு மாதக் கடுங்காவலும், "ஸி" வகுப்புத் தண்டனையும் அளிக்கிறேன். அலிப்புரம் சிறைக்குக் கொண்டுபோவார் கள்" என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனையை ஏற்றுக்கொண்டு நீதிஸ்தலத்திலிருந்து புறப்படும்போது மத்தியானம் 12 மணியிருக்கும். ஏனைய ஊர்களிலு மிருந்து சென்னையில் வந்து சத்தியாக்கிரகம் செய்து
77

Page 58
இந்திய விடுதலைப் போரில்.
அன்றைய தினமே தண்டனையடைந்த வேறு சத்தியாக் கிரகச் சகோதரர்களுடன் எழும்பூர் "லொக் அப்"பில் இருந்தேன்.
அலிப்புரம் சிறைச்சாலை :
அடுத்த நாள் காலை 7 மணியளவில் எங்களை ரயில்வே நிலையத்திற்குக் கூட்டிச் சென் ருர் கள் பொலிஸார். எங்களைத் தொடர்ந்து வேருெரு பஸ்ஸில் ஏற்கனவே தண்டனையடைந்து சென்னை மத்திய சிறையில் வைக்கப் பட்டிருந்த சத்தியாக்கிரகக் கைதிகள் ஸ்டேஷனுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். எல்லோருமாக 32 பேர்கள் அலிப்புரம் சிறைச்சாலை செல்லத் தயாராக விருந்தோம். எல்லாக் கைதிகளும் மிகவும் உணர்ச்சியுடனும் உற்சாகத் துடனும் காணப்பட்டார்கள். ராணுவவீரர்கள்போல இவ்விரண்டு பேர்களாக அணிவகுத்துச் சென்ருேம் 'சிறைசெல்லுகிருேமே" என்று எவர்களாவது சிறிதும் கவலைப்பட்டவர்களாகத் தெரியவில்லை. ரயில் வண்டி வந்ததும், பிரத்தியேகமாக எங்களுக்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்த வண்டியில் எல்லோரும் ஏறிக்கொண்டோம்: காலை 9.30 மணிக்குச் சென்ரல் ஸ்டேசனை விட்டுப் புறப் பட்டோம். ஆர்கோணம், ரேணுகுண்டா, குண்டக்கல் முதலான முக்கிய ஸ்டேசன்களில் காங்கிரஸ் பக்தர்கள் எங்களுக்காகக் காத்திருந்து, எங்களை வரவேற்று நன்றி செலுத்தி வாழ்த்தி வழியனுப்பினர்கள். ஒரு பகலும் ஒரு இரவும் ரயிலில் கழிந்தன. அடுத்த நாள் காலை 9-30 மணியளவில் பெல்லாரி ஸ்டேசனை அடைந்தோம்; இவ்வூர் சென்னையிலிருந்து வடமேற்கே 306 மைல் தூரத்திலுள்ளது. ஸ்டேசனை அடைந்ததும் எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் வண்டியில் எல்லோரும் ஏறிக்கொண்டோம். பத்து நிமிஷத்தில் அலிப்புரம் சிறைவாசல் அடைந்தோம். எல்லோரும் இறங்கினேம். காராக்கிருகத்தில் நுழைந்தோம்.
78

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
பிரதான சிறைவாசற் கதவு திறக்கப்பட்டதும் ஒவ் வொருவராக நாங்கள் உள்ளே நுழைந்தோம். சிறை முற்றத்திலிருந்த சிறைக் காவற் காரன் ஒருவர் "ஹோல்ட்! எல்லோரும் கீழே உட்காருங்கள்” என்ருர். நாங்கள் பழைய ஜெயில்வாலாக்களா யிருந்தபடியினல் காவற்காரன் கூறியதை எளிதில் தெரிந்துகொண்டு நான்கு பேர்களாகக் கீழே உட்கார்ந்து கொண்டோம். பிரதம சிறைக் காவலாளனும் (Chief Warden) அவ் விடம் வந்தார். எல்லோரும் தத்தம் உடைகள், பை முதலியனவற்றை ஒரு மூடையாகக் கட்டிக்கொண்டு ஆயத்தமாக விருந்தோம். கைதிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அலுமினியக் கோப்பை, ஒரு டமிளர், சிறிய மட்பாத்திரம் ஒன்று, படுக்கைக்கு ஒரு சாக்கு, போர்த் திக் கொள்ளக் கம்பளம், இரு அரைக் காற்சட்டை, இரு பெனியன், தலைக்குக் குரங்குத் தொப்பி, தேகம் துடைக்க இரு சிறிய துண்டு ஆகியவைகள் வழங்கப் பட்டன. எங்களிடமிருந்த சொந்த மூடைகளை அதி காரிகளிடம் ஒப்படைத்தோம். அப்பழுக் கில் லாத சிறைக் கைதிகளாகத் தற்போது காட்சி யளித்தோம். * எழுங்கள்! எல்லோரும் புறப்படுங்கள்" என்று ஒரு காவற்காரர் ஆக்ஞாபித்தார். எங்களிடமிருந்த தட்டு முட்டுச் சாமான்களையும் தூக்கிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தோம். சிறைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு தனிக்கட்டிடத்தை (Quarantine Camp) அடையும் போது பிற்பகல் 3 மணியிருக்கும். 4-15 மணிக்கெல் லாம் இரவுச் சாப்பாடு வந்துவிட்டது. 20 நிமிஷத்திற் குள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டோம். கதவும் மூடிற்று. இருளும் சூழ்ந்துகொண்டது. ஒருவாறு அந்த இரவுப்பொழுதும் கழிந்தது. பொழுது விடிந்ததும் எங்கள் எல்லோருக்கும் பால் கட்டப்பட்டது. அதன் விளைவு மூன்று நாட்களாகச் சுரம்பிடித்துக் கஷ்டப் படுத்திற்று. நான்காவது நாள் மீண்டும் சிறைக்குள் அழைத்துச் சென்ருர்கள்
79

Page 59
இந்திய விடுதலைப் போரில்.
17ஆம் இலக்கக் கட்டிடம்:
அலிப்புரம் சிறை புறம்பான 20 கட்டிடங்களைக் (Block) கொண்ட பாசறை (Camp Jail). நாலாபக்கங் களும் இரும்பு முட்கம்பி வேலியால் அடைக்கப்பட் டிருந்தது. பாதுகாப்புக்காக இரும்பு முட்கம்பியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கும். பிரசங்கம் செய்யும் மண்டபம் போல இந்த 20 கட்டிடங்களும் அமைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டிடத்திலும் 300 கைதிகள் வசிக்கலாம். பதினேழாம் இலக்க அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் கட்டிடத்தி லுள்ள மற்றைய சகோதரக் கைதிகள் என்னை மகிழ்ச்சி யுடன் வரவேற்ருர்கள். இந்தப் பதினேழாம் எண் கட்டிடம் பிரசித்தமானது. ஒருகாலத்தில் உண்ணு விரதங்களும் சட்டமறுப்புக்களும் இங்கே சகஜமாக நடைபெற்றனவாம். பொதுவுடைமை வாதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் பெரும் சச்சரவுகள் நேர்ந்த தாகப் பலர் சொன்னர்கள். பொதுவுடைமை வாதிக ளுடன் ஊடாடுவதுபற்றி என்னை அனேகர் எச்சரிக்கை செய்திருந்தார்கள். அலிப்புரம் சிறைவாழ்க்கை கீழ்க் கண்டவாறு போய்க்கொண்டிருந்தது :-
காலை 6 மணிக்கு 4 அவுன்ஸ் நிறையுள்ள கஞ்சி விநியோகிப்பார்கள். 7-11 மணிவரை கம்பளம் நூற் றல் முதலிய வேலைகளில் ஈடுபடுவோம். 11-30 மணிக்கு 9 அவுன்ஸ் நிறையான சாதம், சாம்பார், மோர் தருவார்கள். 12-30-3-30 மீண்டும் கம்பளம் நூற்றல் நடைபெறும். மாலை 4 மணியானதும் 7 அவுன்ஸ் சாதமும் சாம்பாரும் கொடுக்கப்படும். மாலை 6 மணி வரைக்கும் சிறைக் காணிக்குள் உலாவித் திரிவதற்கு அநுமதிக்கப்பட்டிருந்தோம். ஆறு மணியானதும் எமக், குக் குறிக்கப்பட்டிருந்த மண்டபத்துக்குள் போய்விட வேண்டும். பின்னர் பொழுது விடியும்வரை ஒரே
80

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
"லொக்கப்". அலிப்புரம் சிறையில் மட்டும் அப்போது 700 அரசியற் கைதிகள்வரை வைக்கப்பட்டிருந்தனர்: இந்த 700 கைதிகளும் 15, 16, 17'எண்களுள்ள மூன்று கட்டிடங்களிலும் அடைக்கப்பட்டிருந்தார்கள். சமை யல் செய்வது, சுகாதார வசதிகள், தோட்டவேலைகள் முதலிய யாவும் எங்கள் பேரிலேயே சுமத்தப்பட்டன. எல்லாவற்றையும் நாங்கள் எங்களுக்குள்ளேயே நிர் வகித்துக் கொண்டோம்.
எனது பிரத்தியேக வேலை:
நான் இருந்த 17ஆம் கட்டிடத்தில் எனக்கு ஒரு பிரத்தியேகமான வேலை குறிக்கப்பட்டிருந்தது. இரவு 7 மணிக்கும் விடிய 5-30 மணிக்கும் ஆத்மீக கீதங்கள், தேசிய கீதங்கள் முதலியன பாடவேண்டும் இது என் னுடைய பொறுப்பாகிவிட்டது. நான் பாடும்பொழுது மற்றவர்களும் என்னத் தொடர்ந்து பாடுவார்கள். பிரார்த்தனை முடிந்ததும், மறுநாள் கால விடுதலை யாகும் சத்தியாக்கிரகக் கைதிகள் ஒவ்வொருவருக்கும் பிரியாவிடைக் கூட்டங்கள் நடைபெறும், அத்துடன் புதிதாக வந்த சத்தியாக்கிரகக் கைதிகளுக்கும் வர வேற்பு நடைபெறும் அதன்பின்னர் ஆந்திரா தேசத் தைச் சேர்ந்த பூரீ V. வெங்கடராவ் அவர்கள் அங்கு மிங்கும் சேகரித்த புதினங்களை ஆங்கிலத்தில் சொல்லு வார். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து யான் சொல்லவேண்டும்.
சில முக்கிய சிறை கண்பர்கள்:
சுவாமி வேதாசலத்தின் (மறைமலையடிகள்) மகன் திருமறை திருநாவுக்கரசு: தமிழ்ப் பெரியார். ஒட்டுப் பூச்சிகளுக்கு ஒரு வழிகாட்டி: நான் இலங்கை-திரு கோணமலையைச் சேந்தவன் என்பதை அறிந்து மிகவும் வணங்கி அன்புடன் உபசரித்தார்.
இ - 6 81

Page 60
இந்திய விடுதலைப் போரில்.
யூனி V. வேங்கடராவ்! நமது அலிப்புரம் "ரேடியோ" வயது 35 இருக்கும் பார்வைக்கு வினுேபா பாவேதான் பிரமச்சாரி பத்திரிகை ஆசிரியர். இவர் தெலுங்கு மனுஷர். எனக்குத் தெலுங்கு வராது. அவருக்குத் தமிழ் தெரியாது. ஆகவே இருவருக்கும் தெரிந்த ஆங்கிலத்தில் தான் பேசவேண்டியதாயிற்று. ஆத்மீக சம்பந்தமான நூல்களை நன்கு கற்றுணர்ந்தவர், அஹிம்சையே அவரது Aeluriping. -
யூரீ குப. சுப. கருப்பையா செட்டியார் : இவர் மதுரை ஜில்லா போர்ட் அங்கத்தவர். கொழும்பு இராஜாஜி கதர் வஸ்திராலயத்தின் உரிமையாளர். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவோம். எனக்குப் பெரிய உதவியாகவிருந்தவர். -
யூரீ. M. A. ஈஸ்வரம்பிள்ளை சமையல் பகுதிக்குத் தலைவர்; பலமுறை சிறைசென்ற காந்தீயவாதி. எங்கள் 17ஆம் கட்டிடத்திற்குத் தந்தைபோலிருந்தார். எங்க ளுக்குள் ஏதாவது சில்லறைக் குழப்பங்கள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளித்து நமக்கு நல்லவழி காட்டிவந் தார். இவருடைய ஊர் ஈரோடு.
றரீ V. சங்கரப்பிள்ளை; இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அபேதவாதிகளுக்கும் சத்தியாக்கிரகக் கைதிகளுக்குமிடையில் ஏதும் சச்சரவுகள் ஏற்படின் சாமர்த்தியமாக எல்லோரையும் சமாதானமாக்கி அமைதியை உண்டுபண்ணுவார்.
g5 B. B. Lauriassinsit 1 gali (Church of Christ) என்ற மிஷனைச் சேர்ந்தவர். "கிறிஸ்து பெருமானைக் காந்தியில் பார்க்கின்றேன்" என்று எல்லோருக்கும் சொல்லுவார்கள். விசாகபட்டணத்தைச் சேர்ந்தவர். எல்லோருக்கும் மதகுருவாக இருந்தார். சிறையிலும் இவரை நான் மறக்கமுடியாது. இவரது உறவு எனது வாழ்க்கையில் ஒரு முன்னேற்றப்படி. பைபிளிலுள்ள சில முக்கிய விஷயங்களை எனக்குச் சொல்லித் தந்தார் கள். அவிப்புரம் சிறை வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ பெரியவர்களின் நல்லுறவு எனக்குக் கிடைத்தது.
82

நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம்
விடுதலை அடைந்தேன் :
நான்குமாதத் தண்டனைக் காலத்தை முடித்துவிட்டு எனது உடல்நிலை குன்றியதன் காரணமாக எனது ஊர் வந்தேன். 30,000 பேர் சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத் துக்கொண்டு யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார்கள் அவர்களுக்குத் தண்டனை அல்லது பாதுகாவல் விதிக் கப்பட்டது; மாகாண சட்டசபைகளிலிருந்து சுமார் 400 பேரும், மத்திய சட்டசபையிலிருந்து 30 பேரும், காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தவர்கள் அனைவரும் இந்தச் சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்துக்கொண்டார் கள். இது “பிரதிநிதித்துவ சத்தியாக்கிரகம்”. காந்திஜி மட்டும் கைது செய்யப்படவில்லை. 1941ஆம் ஆண்டு கடைசியில் எல்லாத் தனிநபர்ச் சத்தியாக்கிரகிகளையம் ஒரு சமிக்ஞையாக அரசாங்கம் விடுதலை செய்தது. காங்கிரஸ் திரும்பவும் போராட்டத்தை ஆரம்பிக்க வில்லை. இந்தியாவின் எல்லையை ஜப்பான் நெருங்கி விட்டதால், சுயதேவைப் பூர்த்தி, தற்காப்பு என்ற பிரச்சனைகளில் காங்கிரஸ் கவனம் செலுத்தியது,
தேசத் தொண்டைப் பீடிகையாகக் கொண்டு நாள் அனுபவித்துள்ள கஷ்ட நஷ்டங்கள் இந்தியத் தாயின் விடுதலைக்கு மிக்வும் அற்பமாகத் தோன்றும். சேதுபந் தனத்துக்கு அணில் கூட உதவிசெய்யவில்லையா? ஆளுல் நான் செய்துள்ள-அநுபவித்துள்ள விஷயங்கள் யாவும் எனக்கு எவ்வளவோ நன்மைகளைத் தருவனவாகவிருக் கின்றன. ஒருவன் எல்லாவிதமாகவும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமாயின் இதுபோன்ற சிறை வாசங்கள் அவனுக்கு இன்றியமையாதவை. நான் எனது சத்தி யாக்கிரகத்தில் கண்டுள்ள முடிவு இதுதான்.
காரியதரிசியின் குறிப்பு:
அலிப்புரம் சிறையிலிருந்து விடுதலையடைந்ததும்
சென்னை போய்ச் சேர்ந்தேன், என்னிடமிருந்த தின சரிக் குறிப்புப் புத்தகத்தைப் பார்வையிட்ட பின்னர்
83

Page 61
இந்திய விடுதலைப் போரில்.
சென்னை ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசி குறிப்புப் புத்தகத்தில் பின்வருமாறு எழுதினர்கள் =
இலங்கை - திருகோணமலை திருவாளர் G. இராஜ கோபால் அவர்கள் 7-4-41 இல் நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகஞ் செய்து கைதுசெய்யப்பட்டு 10 நாட் கள் நாகைச் சிறையில் வைத்துப் பின்னர் விடுவிக்கப் பட்டார். மேலும் யுத்த எதிர்ப்புக் கோஷங்கள் செய்து கொண்டு கால் நடையாகச் சென்னைக்கு 26-7-41இல் வந்துசேர்ந்தார். 4-8-41இல் மீண்டும் சென்னை இராய புரத்தில் சத்தியாக்கிரகஞ் செய்து 4 மாதக் கடுங்காவல் தண்டனையடைந்து அலிப்புரம் சிறையில் காலங் கழித் தார். தண்டனை முழுதும் கழிந்து 21இல் விடுதலையாகி 22-11-41இல் சென்னை வந்து சேர்ந்தார்.
நிரு. இராஜகோபால் அவர்கள் 400 மைல்கள் கால் நடையாக நடந்து வழிநெடுகப் பிரசாரஞ் செய்து வந்தது அவரது மன உறுதியையும், குன்ருத தேச பக்தியையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. போதிய ஆங்கில ஞானமும் சிறந்த தமிழறிவும், சாதுர்யமான பிரசங்க வன்மையும் உள்ள இவரை அரசாங்கம் கைது செய்யாது விடுத்ததன் மூலம் அது எதிர்பார்த்ததற்கு மாருகச் சத்தியாக்கிரக இயக்கத்திற்குப் பேராதரவு அளித்துவிட்டது. அரசாங்கமே! உனக்கு எனது நன்றி. திரு. இராஜகோபால் அவர்களின் சலியாத உழைப் புக்கு எனது வாழ்த்துக்கள்! வாழ்க உமது வீரம்!
இப்படிக்கு ம. பொ. சிவஞானம் 21/A, பிள்ளையார் கோயில் தெரு
தண்டையார் பேட்டை சென்னை,
84

ஜப்பான் குண்டுமாரி
1940ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆந் திகதி வார் தாவில் வினேபா பாவே யுத்த எதிர்ப்புச் சொற்பொழிவு ஆற்றித் தார்மீக எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தார். அன்றிலிருந்து 1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இயக்கம் தொடர்ந்து நடந்தது. ஏறக்குறைய 30,000 சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட் டிருந்தனர். ஈற்றில் தலைவர்களைத் தவிர்த்து ஏனையோர் மீது அக்கறை காட்டாதிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசினருக்கு ஏற்பட்டது. யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் வெற்றியீட்டினர். இயக்கமும் நிறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தினிடையே முக்கியமான ஒரு நிகழ்ச்சி. கொள்கை வேறுபாட்டிஞல் 1936ஆம் ஆண்டு மே மாதம் 29ஆந் திகதி காங்கிரஸ் தலைமைப் பதவியி லிருந்து விலகிய பூரீ சுபாஷ் சந்திர போஸ் ஏகாதிபத்திய தீவிர எதிர்ப்பு வேலையைத் தொடங்கி "தேசிய முன்னணி" என்ற புதிய கட்சியை நிறுவினர்; மானிலம் முழுதும் சுற்றுப்பிரயாணம் செய்து அதற்குக் கிளைகளும் அமைத்தார். தனிப்பட்ட செல்வாக்கினல், கல்கத்தாவில் 1857ஆம் ஆண்டில் நடைபெற்ற அடக்கு முறையின் சின்னமாய் இருந்த ஒரு வெள்ளையரின் சிலையை அப்புறப்படுத்த அவர் அந்த இயக்கத்தைத் தொடங்கி நடத்தினர். இது காரணமாக அதிகாரிகள் சுபாஷ் பாபுவைச் சிறைப்படுத்தி விசாரணையின்றி எல்லையில்லாத காவற் கைதியாக்கினர். இந்நிலைமையி லும் ஒரு துணைத்தேர்தலில் அவரை மத்திய சட்டமன் றத்திற்குப் போட்டியில்லாமல் தேர்ந்தெடுத்துப் பெரு மைப் படுத்தினர். எனினும் அரசினர் அவரைச் சிறையி லிருந்து விடுதலை செய்யவில்லை. தம் குடியுரிமை கோரி சுபாஷ் பாபு சாகும்வரை உண்ணுவிரதம் இருக்கத்
85

Page 62
இந்திய விடுதலைப் போரில்.
துணிந்தார். அவர் துணிச்சலை நன்கறிந்திருந்த அரசினர் அவரை விடுதலை செய்து அவர் வீட்டிலேயே காவற் கண்காணிப்பில் வைத்தனர்; வெள்ளையரின் சூழ்ச்சிகளை வெல்ல சுபாஷ் துணிகரத் திட்டங்களை வகுத்தார். விரதமிருப்பதாகக் கூறி இரகசியமாக வேறு திட்டங் களை வகுத்தார்; அவற்றின் பயனக 1941ஆம் ஆண்டு ஜனவரி 26ஆந் திகதி அவர் திடீரெனக் காண மற் போனதாகத் தெரியவந்தது. பிரிட்டிஷாரின் துப்பறியும் திறன் அத்தனையும் அவர் தப்பிய வகையை அறிந்து கொள்ளப் பயன்படவில்லை. அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜேர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டாரென் பது இரண்டோராண்டுகளின் பின்பே அதிகாரிகளுக்குப் புலப்பட்டது. பின்னர் ஜப்பானின் உதவியுடன் சுபாஷ் பாபு - நேதாஜி போஸ் இந்தியாமீது தாக்கும் படை யின் தலைமை தாங்கியுள்ளார் என்ற செய்தியும் எட்டியது.
நேத்தாஜியின் காந்திபக்தி: ஜெயமணி சுப்பிரமணியம்
*அகில உலகமும் போற்றும் உத்தமரான காந்திஜி யைப் பற்றியும் அந்த அவதார புருஷரின் கொள்கைகள் பற்றியும் எத்தனையோ பெரியோர்கள் பேசியும் எழுதி யும் இருக்கின்றனர்; எத்தனையோ அரிய நூல்களும் வெளியாகியிருக்கின்றன. எனவே, நான் அவ்விஷய மாகப் புதிதாய் எழுதுவதற்கு என்ன இருக்கிறது! எனினும் மலாய் நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மாத்திரம் குறிப்பிட விரும்பு கின்றேன். சென்ற மகா யுத்தத்தின் போது மலாய் நாட்டிலும் மற்றக் கிழக்காசிய நாடுகளிலும் ஜப்பா னின் ஆதிக்கம் ஏற்பட்டதும், அப்போது அந்த நாடுக ளில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் உருவாகி, பாரத நாட்டின்
86

ஜப்பான் குண்டுமாரி
வடகோடியில் பல நகரங்களைக் கைப்பற்றியதும் யாவரும் அறிந்ததாகும். அப்போது நேத்தாஜி போஸை முதன் முதலாகக் கோலாலம்பூருக்கு வரவேற்கும் பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். கோலாலம்பூரில் உள்ள இந்திய சுதந்திர சங்கக் கட்டிடத்தின் வாயிற் படிக்கு மேலே நேத்தாஜியின் பெரிய உருவப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதை உற்றுப் பார்த்தவண்ணம் நேத்தாஜி கட்டிடத்திற்குட் சென்ருர். பல அறைகளை யும் பார்வையிட்டார். அவர் கட்டிடத்தைப் பார்வை யிடுவதாக எல்லோரும் கருதினர் கடைசியில் கட்டிட மண்டபத்தில் அவர் வந்து, அவருக்காக அமைக்கப்பட் டிருந்த ஆசனத்தில் அமர்ந்ததும் நாங்களும் உட்கார்த் தோம் பதினுயிரக்கணக்கான இந்திய மக்கள் கட் டிடத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். உள்ளே மண்டபத்தில் நேத்தாஜியுடன் எங்களில் சுமார் பத்துப் பேர்களே இருந்தனர். நேத்தாஜி என்ன சொல்லப் போகிருரோ என்று மிக்க ஆர்வத்துடன் உணர்ச்சி பொங்க எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். நேத்தாஜி பேச ஆரம்பித்தார்
* முதலில் வாயிற்படிக்கு மேலே உள்ள படத்தை அப்புறப்படுத்துங்கள் " என்ருர், அஞ்சா தெஞ்சம் படைத்த நேத்தாஜி அவ்விதம் கூறியபோது அவருக்கு நா தழுதழுத்தது: கண்கள் கலங்கின. அவர் மேலும் பேசத்தொடங்கினர்: * இந்த இயக்கத்துக்கு நான் தலைவன் என்ருலும், நம் எல்லோருக்கும் பாரத நாடு முழுவதற்கும் தலைவர், தந்தை மகாத்மா காந்திதான்கு ஆகையால் அவர் படத்தை அங்கு வைப்பதுதான் நமக்குப் பெருமை. இனி எந்த இடத்திலும் காந்திஜிக் குத்தான் - காந்திஜியின் படத்துக்குத்தாள் அக்ர ஸ்தானம் அளிக்கவேண்டும். அந்த மகான் நம் நாட்டுக் காக இவ்வளவுதூரம் உழைத்திராவிட்டால் நாம் இன்று இந்த மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்திருக்க
ቋ7

Page 63
இந்திய விடுதலைப் போரில்.
முடியுமா? இன்று நமக்கு வல்லரசுகளான ஜப்பானும் ஜேர்மனியும் இதர நாடுகளும் மதிப்பு அளிப்பதற்குக் காரணம் மகாத்மா காந்தியின் அறிவும் ஆற்றலும், ஒழுக்கமும் உயர்வுந்தான். எனவே அந்த மகானின் மானசிகமான ஆசியிருந்தால்தான் நாம் இந்த இயக் கத்தில் வெற்றிகாண முடியும்."
இவ்விதம் நேத்தாஜி கூறியதைக் கேட்ட பிறகு தான் அங்கு இருந்தவர்களின் கண்கள் திறந்தன. நேத்தாஜிக்கும் காந்திஜிக்கும் ஏற்பட்ட வேற்றுமையை மனத்திற்கொண்டு சங்க அதிகாரி ஒருவர் அத்தவறு செய்து விட்டார். நேத்தாஜிக்கு "மகிழ்ச்கி"யைக் கொடுக்கும் விஷயம் என்று அவர் எண்ணியது, கடைசி யில் மேற்கூறிய விதம் விபரீதமாக முடிந்தது. ஆயினும் என்ன? காந்திஜிமீது நேத்தாஜிக்கு இருந்த மதிப்பும் பக்தியும் நம்பிக்கையும் வெளியாவதற்கு அச்சம்பவம் காரணமாக இருந்தது அல்லவா ?"
(ஆதாரம்-கிராம ராஜ்யம் 29-1-60)
1942ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆந் திகதி கொழும்பிலும், 6ஆந் திகதி இந்தியாவில் விசாகப் பட்டணம், காக்கிநாடாவிலும், 9ஆந் திகதி திரு கோணமலையிலும் ஜப்பானிய விமானங்கள் குண்டு போட்டன. "ஜப்பானியர் முன்னேறி வருவதன் மூலம் இந்திய விவ்காரங்களில் ஏற்றட்டுள்ள நெருக்கடியினல் படையெடுப்பாளரின் அபாயத்திலிருந்து தங்கள் நாட் டைக் காத்துக்கொள்வதற்கு இந்தியர்களின் சகல சக்திகளையும் திரட்டவேண்டுமென பிரிட்டின் முடிவு செய்திருக்கிறது." இவ்வாறு பிரிட்டிஷ் பிரதமமந்திரி சர்ச் சில் அவர்கள் கூறியிருந்தார். கிரிப்ஸ் தூதுக் கோஷ்டி இந்தியா வந்து கட்சித் தலைவர்களைப் பேட்டி கண்டது. கிரிப்ஸை, காந்திஜி -டில்லியில் சந்தித்தார்;
88

ஜப்பான் குண்டுமாரி
கிரிப்ஸ் தெரிவித்த யோசனைகளை "பின் தேதியிடப் பட்ட செக்" என்று காந்திஜி வர்ணித்தார். கிரிப்ஸ் தமது யோசனைகளை வெளியிட்டு "எல்லாக் கட்சிகளும் விரும்பினலும் இந்தியாவின் பாதுகாப்புப் பொறுப்பு இந்தியர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது" என்ருர், வெவ்வேறு காரணங்களுக்காக எல்லாக் கட்சிகளும் கிரிப்ஸின் திட்டத்தை நிராகரித்துவிட்டன. பிரிட்டிஷ் திட்டம் எடுத்த எடுப்பிலேயே கேலிக்கூத்தாக இருக்கிற தென்றும் எந்த இடத்திலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் காந்திஜி கூறிஞர்கள். வெகு விரைவில் நெருக்கடி மூண்டது. கிரிப்ஸ் தூதும் தோல்வி அடைந்துவிட்டது. இந்தியா ஒரு யுத்த அரங்காக ஆக்கப்படலாம் என்ற அபாயமானது காந்திஜியையும் காங்கிரசையும் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்கத் தூண்டி யது. சுதந்திரத்துக்காகக் காத்துக் காத்து அலுத்துப் போன தேசம் இனியும் காத்திருக்கத் தயாராயில்லை. 1942ஆம் ஆண்டு மே மாதம் "இந்தியாவைவிட்டு வெளி யேறு" இயக்கத்தை காந்திஜி உருவாக்கினர்.
அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் காந்திஜியைப்
பேட்டி கண்டார்கள். காந்திஜி கூறியதாவது - "இந்தி யாவைக் கடவுளின் கையில் ஒப்படைத்து விடுங்கள். நவீன பாஷையில் சொன்னல் அராஜக நிலையில் விட்டு விடுங்கள். அதிலிருந்து ஓர் உண்மையான இந்தியா உருவாகும். இப்போது நாம் காணும் பொய்யான இந்தியா மறையும்."
இந்தியாவைவிட்டு வெளியேறு:
ஆகஸ்டு 8ஆம் திகதி பம்பாயில் கூடிய இந்திய காங்கிரஸ் மகாசபையில் “இந்தியாவை விட்டு வெளி யேறு" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்ட வட்டமான நடவடிக்கையை எடுப்பதற்குமுன் வைசி
89

Page 64
இந்திய விடுதலைப் போரில்.
ராய்க்குக் கடிதம் எழுதப் போவதாகக் காந்திஜி கூறி ஞர்கள். 'காங்கிரஸ் சவால் விடுத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்றும்" எனக் கவர்னர் ஜெனரலும் ஆலோ சனைக் குழுவினரும் தீர்மானம் செய்தனர். ஆகஸ்ட் 9ஆந் திகதியன்று பொழுது விடிவதற்கு முன்பாகவே காந்திஜி யும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்களும் ஊழி யர்களும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்பட்டார்கள். காந்திஜி கைதாகிச் சிறைக்குப் போகும்போது மக்களுக்கு விடுத்த செய்தி "செயலில் இறங்கு அன்றேல் செத்துமடி" என்பது!
1942ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 9ஆந் திகதி அதி கால ஜப்பானியர், விமானமூலம் திருக்கோணமலையில் குண்டுமாரி பொழிந்தனர். திருக்கோணமலையில் அமைக் கப்பட்டிருந்த இராணுவத் தளங்களைக் குறிவைத்துக் குண்டுபோட்டார்கள். திருக்கோணமலை நகரத்தில்சமவெளியில் தாக்குதல் நடைபெறவில்லை. வெள்ளிநிற விமானங்கள் பல பறந்து செல்வதை நாள் பார்க்கக் கூடியதாக இருந்தது. இராணுவத் தளங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் பலர் குண்டுக்கு இரையானர் கள் திருக்கோணமலை அன்று மயானம்போல் காட்சி தந்தது. இராணுவத்தவரைத் தவிர ஏனைய குடிமக்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். ஜூலை மாதம் பிற்பகுதியில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகபட்டினம் சென்றிருந்தேன். ஆகஸ்டு மாதம் 2ஆந் திகதி நாகபட்டினத்தில் லோக மான்ய பாலகங்காதர திலகர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் பங்கு பற்றினேன். இது மக்களின் யுத்தம் என்று பறை சாற்றித் திரிந்தவர்களுக்குக் குறிப்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியார், முஸ்லிம் லீக், திராவிடக் கழகம் முதல்ான “ கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பதில் சொல்லும் முக மாக, திருக்கோணமலையில் நடந்த குண்டு வீச் சில்
90

ஜப்பான் குண்டுமாரி
மாண்டுபோன மக்களைப்பற்றியும் அவர்களின் குடும் பங்கள் எந்தவித உதவியுமின்றி நடுத்தெருவில் ஏங்கிக் கிடந்ததையும் எடுத்துக் கூறி, "இது மக்களின் யுத்த மல்ல, ஏகாதிபத்திய வெறியர்களின் யுத்தம்" என்றேன். இந்தியாவிலிருந்து மாத்திரமல்ல, இலங்கையிலிருந்தும் வெள்ளையர்கள் வெளியேற வேண்டுமென்று பேசினேன். எனது பேச்சு முழுவதையும் இரகசியப் பொலீசார் குறித்துக் கொண்டனர் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது. நாகைப் பொலீசார் குறித்தவற்றைத் தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார்கள். தஞ்சாவூரிலிருந்து அக்குறிப்பு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது செப்டம்பர் மாதம் 2ஆந் திகதி நாகபட்டினத்தில் என்னேக் கைது செய்து சிறையில் வைத்தனர். சில நாட்கள் கழித்து நாகைக்கோட்டில் நீதிபதி வழக்கை விசாரித்துக் குற்றப் பத்திரிகையை வாசித்தார். அது பின்வருமாறு:-
1. வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
2. பிரிட்டிஷார் இருக்கும்வரை வகுப்பு ஒற்றுமை கான முடியாது.
3. சுபாஷ் சந்திரபோஸின் உதவிகொண்டு வெள்ளை யரை வெளியேற்ற நாம் தயாராக இருக்கவேண்டும்.
இங்ஙனம் கருத்துப்பட நீங்கள் பேசியது உண்மை தானு? என் ருர், அதற்கு யான் கூறியதாவது "நான் காந்தி அடிகளால் தெரிவு செய்யப்பட்ட சத்தியாக்கிரகி. பலாத்கார செய்கைகளில் நம்பிக்கை இல்லாதவன். அந்த வகையில் சுபாஷ் போஸைப்பற்றி நான் ஒன்றும் பேசவில்லை. வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டுமெனப் பேசியதை ஒப்புக் கொள்ளுகிறேன்." நீதிபதி ஓர் இளம் முஸ்லிம்; அவர் என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு மேடைக்கு
91

Page 65
இந்திய விடுதலைப் போரில்...
வரும்படி சொன்னர். போனேன். என் மீது சுமத்தப் பெற்ற மூன்ருவது குற்றத்தை நீக்கியிருப்பதாகத் தெரி வித்தார். அப் பத்திரத்தை எனக்குக் காண்பித்தார்: பிரச்சினைக்குள்ள மூன்ருவது குற்றத்தை மையினுல் கீறி கையொப்பம் இட்டிருப்பதைப் பார்த்தேன். ஐந்து நிமிஷத்துக்குள் தீர்ப்புக் கூறிவிட்டார். ஒருவருடம் கடுங்காவல் தண்டனை மீண்டும் அலிப்புரம் சிறைக்குக் கொண்டுபோஞர்கள் (சுபாஷ் போஸை அதில் சம்பந் தப்பட வைத்தால் நான் அதிகாரிகளின் பார்வையில் ஐந்தாம்படை ஆளாகக் கணிக்கப்பட்டு அந்தமான் தீவுக்குக் கைதியாக அனுப்பியிருப்பார்கள் இதனைப் பின்னர் அறிந்தேன்.)
சிறையில் பாரதிவிழா :
செப்டம்பர் 10ஆந் திகதி அலிப்புரம் சிறையை அடைந்தேன். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் தீர்மானத்தை ஒட்டி சென்னை மாகாணத்திலுள்ள பல பாகங்களில் இருந்தும் தேசபக்தர் அலிப்புரம் சிறையிற் குவிந்த வண்ணமாயிருந்தார்கள். செப்டம்பர் 11ஆந் திகதியை தமிழ் மக்கள் திருநாளாக, பாரதிவிழாவைக் கொண் டாடுவது வழக்கம். தேசபக்தர்கள் எங்கிருந்தாலென்ன? பாரதி விழாவை அலிப்புரம் சிறையிற் கொண்டாடு வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. பாரதி விழாவுக்குத் தலைமைதாங்கும் பொறுப்பு எனக்கு விடப்பட்டிருந்தது" பகல் 10 மணிக்கு விழா ஆரம்பமானது. எனது தலைமை யுரையில் பேசியதின் சாராம்சம் வருமாறு:-
தமிழ்ப் பெரியார் காரைக்குடி உயர்திரு சா. கணேசன் அவர்கள் பாரதியாரோடு பழகியவர். அன்னர் சென்ற ஆண்டு இதே சிறையில் "பாரதியார் ஏன் மீசை வைத் தார்" என்னும் வரலாற்றை நமக்குச் சொல்லிவைத்த ஞாபகம் வந்தது பாரதியார் ஒரு காலத்தில் காரைக் குடிக்கு வந்திருக்கிருர். பாரதியாரின் நண்பர்கள் அவரை
92

ஜப்பான் குண்டுமாரி
உபசரிக்கச் சூழ்ந்து நிற்கின்றனர். அப்போது பாரதியார் கம்பீரமான தாடிமீசையோடு காட்சியளிக்கிருர் அங் கிருந்த ஒருவர்க்குச் சொல்லுகிருர்; 'அப்பா யான் இன்று சவரம் செய்துகொள்ளவேண்டும். யாரையாவது கூப்பிடுங்கள்." உடனே ஆள் வந்துவிட்டார். சவரம் நடக்கிறது. முதல் தாடியை நீக்கியாய் விட்டது. மீசை யில் கத்தி வைத்த உடனே கர்ஜித்தார் பாரதியார் "அப்பா, பாண்டியா, நிறுத்து. சவரம் செய்யாதே, நான் இப்போது வீரத்தமிழன் என்பதை அறிந்துகொண்
டேன். தமிழனுக்குக் கண்டிப்பாக மீசை வேண்டும். மீசை துடிக்கும் உணர்ச்சியோடு போரில் மாழவேண்டும் நான் தமிழன் அடிமைகொள்ளும் ஆட்சியை வெறுக்கும் தமிழன் வேல்பிடிக்கும் தமிழன்; அடிமை ஆக்குபவரை
வேரோடு அறுக்கும் தமிழன் தமிழன் ! தமிழன் 11 அப்பா, ராஜா, பாண்டியா, நீ போய்வா." சவரம் செய்தவர் போய்விட்டார். அடுத்ததாக பாரதியார் நண்பர் ஒருவரைப் பார்த்துச் சொல்லுகிருர்: "எனக்கு இன்று வீரப்பலகாரம் கொண்டுவா, நான் வீரத்தமிழன் பல் நறு நறுக்க, மீசை துடிதுடிக்கச் சாப்பிடவேண்டும்." நண்பருக்குப் பாரதியார் சொன்னது புரியவில்லை. சும்மா நட்டமரம்போல் விறைத்துப்போய் நிற்கிருர். பாரதி யாருக்குக் கோபம் வந்துவிட்டது. ஏன் நிற்கிருய். வீரப் பலகாரம் தெரியாதா? கொண்டுவா முறுக்கு (தன் மீசையைத் தொட்டுக்காட்டி) இதோ வீரத்தமிழன் இந்த மீசையை முறுக்கி முறுக்கைச் சாப்பிட்டு, முறுக் கேற்றிக் காட்டுகிறேன்.
இவ்வாருகப் பாரதியாரின் மீசைவைத்த கதையைச் சொல்லிமுடித்தேன். நாம் குழுமியிருந்த மண்டபத்தின் வாசற்பக்கமாக டக், டக் என்ற சப்தம் கேட்டது. திரும்பினேன், சிறைச்சாலை ஜெயிலரும் சில வாடர்க ளும் என்னை நோக்கி வருகிருர்கள். கூட்டத்தில் அமைதி. ஜெயிலர் என்னிடம் சொல்லுகிருர் "யார் உங்களைக்.
93

Page 66
இந்திய விடுதலைப் போரில்.
கூட்டம் வைக்கச்சொன்னது. வந்தேமாதரக் கோஷங்கள் இங்கே முடியாது. அதை வெளியில் பார்த்துக்கொள் ளுங்கள்," ஜெயிலர் போய்விட்டார், கூட்டத்தைத் தொட்ர்ச்சியாக நடத்தினுேம். பலர் பேசினர். தேசியக் கீதங்கள் பாடிய பின்னர் விழா இனிது முடிந்தது. அடுத்தநாட் காலையில் ஜெயிலின் அபாயமணி ஒன்று அடிக்கும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து வாடர்களுடைய ஊதுகுழல் வீறிட்டது. கைதிகளாகிய நாங்கள் இந்த அபாய அறிவித்தலுக்கு எங்களுடைய படுக்கைகளிலேயே உட்கார்ந்துகொள்ள வேண்டுமென் பது ஜெயிலிலுள்ள கட்டளை. அதன்படி நாங்கள் ayapra iases sa lu படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டோமோ இல்லையோ, குண்டாந்தடி சகிதமாக அதிகாரிகள் புடைசூழ்ந்து எங்கள் எல்லோரையும் நன்ருக நையப் புடைத்துவிட்டனர். சிலரின் கால்கள் முறிந்தன கைகள் மழுங்கின: பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. சத்தியாக்கிரகிகளின் மூலமந்திரமாகிய, 'வந்தே மாதரம்", "காந்திஜிக்கு ஜே!" என்ற இரு வாக்கியங்களையும் நாம் கோஷமிட்டுக் கொண்டிருந் தோம் 'வந்தே மாதரம்" என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் - முடிதாழ்த்துவோம் என்று சேர்ந்து எல்லோரும் பாடினுேம் பாரதியாரின் விழாவைக் கொண்டாடினதற்குப் பலனும் கண்முன்னே கிடைத்தது.
காயம் அடைந்த வர்களை ச் சிறையிலிருக்கும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ருர்கள். இந்தக் குண்டாந்தடி தர்பார் சிறையில் நடைபெற்றபொழுது மதுரை திரு. ஏ. வைத்தியநாதையர், ஆந்திரதேசத் தலைவர் திரு. பி. கோபாலரெட்டி அவர்கள் போன்ற பெரியார்கள் அதே சிறையில் பிறிதொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள். அடுத்த நாள் எம்மை வைத்தியசாலையில் பார்க்க வந்தார்கள். திரு. ஐயர் எங்களைப் பார்த்தவுடன் வாய்விட்டு அழுதார்கள்.
94

ஜப்பான் குண்டுமாரி
கம்மிய குரலில் "ஏனப்பா உங்களை அடித்தார்கள். இது என்ன அநியாயம்’ என்ருர்கள். திரு. கோபாலரெட்டி அவர்கள் கண் கலங்கியபடி எமக்கு ஆறுதல் சொன் ஞர்கள். இந்தத் தாக்குதலினல் கை, கால் வழங்காத தேச பக்தர்கள் இன்னும் இருக்கின்றர்கள்.
காந்திஜியின் உண்ணுவிரதம் :
1943ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆந் திகதி மத்தியானம் பூஞவிலிருக்கும் ஆகாகான் மாளிகையில் சிறை வைக் கப்பட்டிருந்த காந்திஜி அரசாங்கத்திலிருந்து கடவுள் வரை நீதிகோரி மூன்று வாரம் உண்ணுவிரதத்தைத் தொடங்கினர். நாட்டில் நடந்துவரும் குழப்பங்க ளுக்கு யார் பொறுப்பாளி என்பது பற்றிக் காந்திஜிக்கும் வைஸ்ரோய் லின்லித்கோவுக்கும் உள்நாட்டுக் காரிய தரிசிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துக்கள் இந்திய அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்டன. அரசினர்தான் பொறுப்பாளி என்பதை காந்திஜி தம் கடிதங்களில் வற் புறுத்திக் கூறியிருந்தார். வைஸ்ரோய் இதை மறுத்துக் காங்கிரசையும் அதன் தலைவர்களையுமே குற்றம் சாட்டி ஞர். காந்திஜி உண்ணுவிரதமிருக்கையில் உலகெங்கிலு மிருந்து கண்டனக்குரல் எழுப்பினர்கள் பல ஞானிகளும் பெரியவர்களும். அதில் பிரிட்டனைச் சேர்ந்த தத்துவ ஞானி பெர்னட் ஷா அவர்கள் அறிக்கைவிட்டார்கள். “It was due to the mental disorder of the British Cabinet that Gandhi and the Congress Leaders were arrested. Release Gandhi you will have peace in the World.”-*பிரிட்டிஷ் மந்திரிகளுக்கு ஏற்பட்ட மூளைக் கோளாறின் காரணமாக, காந்தியும் காங்கிரஸ் தலைவர் களும் கைது செய்யப்பட்டிருக்கிருர்கள். காந்தியை விடு தலை செய்யுங்கள் உலகத்திலே சமாதானம் நிலவும்."
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியை யும், இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவருமான திருமதி பேர்ள்ஸ் பெக் அவர்கள் அமெரிக்காவில்,
95

Page 67
இந்திய விடுதலைப் போரில்.
காந்திஜியின் உயர்ந்த தத்துவங்களை விளக்கிப் பிரிட்டி ஷார் போக்கைக் கண்டித்திருக்கின்ருர்கள். இந்தியாவில் சேர்ச்சுகள், கோயில்கள், மடங்கள் முதலான இடங்க ளில் காந்திஜியின் உயிர் காப்பாற்றப்படவேண்டும். அவர் உண்ணுவிரதத்தை வெற்றியுடன் முடித்துக்கொள்ள வேண்டுமென்று பிரார்த்தனைகள் நடைபெற்றன. மக்க ளின் பிரார்த்தனை பலித்தது. அரசினரின் குற்றச்சாட் டுக்கு மதிப்பில்லை. காந்திஜியின் 21 நாட்கள் உண்ணு விரதமும் முடிவுற்றது. காந்திஜி உண்ணுவிரதம் இருந்த பொழுது அலிப்புரம் சிறையில் ஒரு நாள் முழுதும் உப வாசம் இருந்து பிரார்த்தனை செய்தோம், அரசியல் கைதிகளாகிய நாம்
எங்களோடு கண்டசாலா :
இதே சிறையில் பிராத்தனைக் கூட்டங்கள் நடப்ப தற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பும் எனக்கு அளிக்கப் பட்டிருந்தது. அத்தோடு புதிய "வேலை ஒன்றை மேற் பார்வையிட எனக்குத் தந்தார்கள். மூவாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறையில் சேர்ந்துவிட் டார்கள். சிறைக்குப் பசும்பால் வரும், அதைக் காய்ச்சி ஒரு பகுதியைச் சிறையிவிருக்கும் வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டும். மிகுதிப் பாலுக்கு உறைபோட வேண்டும். தயிரை மோராக்கி சிறைமுழுதும் பிரமாணப் படி கைதிகளுக்கு மதிய உணவுடன் விநியோகிக்க வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு எனக்குப் பத்துப் பேர் உதவியாக இருந்தனர்.
வழக்கம்போல மாலை ஆறரை மணிக்குப் பிரார்த் தனக் கூட்டம் நடைபெறும்-நாட்டு வணக்கப் பாடல் கள் பாடுவதற்கு கண்டசாலா வெங்கட்ட ராவ் (பிரபல சினிமாப் பின்னணிப் பாடகர்) அவர்களும் எம்முடன் சேர்ந்துகொண்டனர். பிரார்த்தனைக்கு எல்லோரும் எழுந்து நிற்போம். ரிஷி பங்கிம் சந்திர சட்டார்ஜி
96

ஜப்பான் குண்டுமாரி
யாரின் "வந்தே மாதரம் கீதத்தைக் கண்டசாலா கம்பீர மான குரலில் பாடுவார்கள். நாம் சேர்ந்து பாடுவோம்.
அலிப்புரம் சிறையில் இம்முறை சத்தியாக்கிரகக் கைதிகளுடன் கம்யூனிஸ்ட் தோழர்களும் இருந்தார்கள் இடைக்கிடை எங்களுக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மிடையில் வாக்குவாதங்கள் வந்ததுண்டு. இதைக் குறித்துத் தனியே ஒரு கட்டுரையாகத் தருகின்றேன். சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு விடுதலை tunr(Bearsor:
இந்திய சுதந்திரப் போராட்டங்களிற் பங்கு கொண் டமையினுல் நான் பல அனுபவங்களைப் பெற்றேன். இந்தியாவில் இந்திய சுதந்திர இயக்கத்தை நடத்திய பெரியவர்கள் மத்தியில் அந்த இயக்கத்துக்கு மாழுக வெள்ளையருடன் சேர்ந்து தங்கள் கட்சிகளைப் பலப்படுத்த முயன்றனர். 1939இல் இருந்து 1946வரை சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரையில் நீதிக் கட்சி (பின்னர் பெயர் மாற்றப்பட்டு திராவிடக்கழகம்-திரா விட முன்னேற்றக் கழகம்), முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் நடந்துகொண்டபோக்கே விசித்திர மானது. யார் ஐந்தாம்படைவேலை செய்தார்களென்று பாரத மக்கள் நன்கு அறிவார்கள். "வெள்ளையனே வெளியேறு" என்ற இயக்கத்தின்போது மகாத்மாஜியும், மற்றத் தலைவர்களும் மக்களுக்கு வழிகாட்ட முடி யாமல் தி டீ ரென்று கைது செய்யப்பட்டபோது தேசீய உணர்ச்சி பெற்றிருந்த கோடிக்கணக்கான மக்களிற் சிலர் இன்னது செய்வதென்று தெரியாமல் பிரிட்டிஷ் ஆட்சிமீது இருந்த வெறுப்பைக் காட்டுவ தற்காகப் பலவிதமான காரியங்களிலும் ஈடுபட்டார்கள். ரணபேரிகை கொட்டினர்கள். நாட்டுக்கு நல்லறப் பணி செய்ய விடுதலையும் கிடைத்தது. பாரதம் தலைநிமிர்ந்து நிற்கிறது. வையம் புகழ்கிறது. காந்தியின் தவத்தை
இ - 7 97

Page 68
இந்திய விடுதலைப் போரில்.
நினைத்து "காந்தி சொற்கேட்டார் விடுதலை காண்பார்" என்ற பாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்தது
98
வந்தே மாதரம்-ஜய ஜய பாரத ! எண்ணரிய தேசபக்தர் உயிரை ஈந்து எத்தனையோ துன்பமெல்லாம் சகித்த தாலே மண்ணுலகில் வேறெவரும் அறியா நல்ல மார்க்கத்தால் விடுதலையை மலரச் செய்தோன் புண்ணியநல் அறநெறிசேர் அரசு நாட்டிப் புவியெங்கும் சாந்தவழி போதம் காட்ட அண்ணல்எங்கள் காந்திமகான் திரு5ா மத்தை அனுதினமும் போற்றிசெய்ய அருள்வாய் தேவா !
ஆஸ்தானக் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை

எனது கதர்த் திருமணம்
இவருடைய திருமணம் - தேசியத் திருமணம் - கதர்த் திருமணம். பாடல் பெற்ற தலமான நாகை பட்டணத்தில் 7-2-44ஆம் திகதி நாகை - காங்கிரஸ் சபையார் அனுசரணையில் நடைபெற்றது; இவ்விழாவுக் கென்றே சிறப்பாகச் சென்னையிலிருந்து வருகைதந்த காங்கிரஸ் தலைவர் திரு. பி. ஆர். கே. சர்மா அவர்கள் தலைமையில், மணமகளுன தியாகி இராஜகோபால், மணமகளான காந்திமதியம்மையாருக்குத் தாமே நூற்ற நூலினை நாணுக்கி அதிலே தாலியைக் கோத்து திருமாங்கலியஞ் சூட்டித் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். அவ்வேளையில் அவர் மணமகளுக் களித்த கூறையோ பன்னிரண்டு ரூபா பெறுமதியான கதர்ச்சேலை! இத்தகையதொரு எளிமையான கதர்த் திருமணம் ஈழத்தவர்க்கு ஒரு புதுமையான செய்தி! சீதனப் பேச்சுக்கே இடமில்லாது அமைந்திருந்தது கதர்-தேசியத் திருமணம்.
இவருடைய திருமணச் செய்தியைக் கேள்வியுற்ற சுவாமி சுத்தானந்தபாரதியார் அவர்கள் பின்வரும் செய்தியை அவருக்கு அனுப்பியிருக்கின்ருர்,
** அன்புத் திரு வாளர் காந்திமதி - இராஜ கோபால் மங்கல மணம் புரிந்து இல்லறமாகிய நல்லறத்தில் இனிது செழித்தோங்குக." s எங்கள் ஆவேசக்கவி நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை இனிய தமிழில் தம்பதிகளை வாழ்த்துகின்ருர்
'சத்திய நிலையமாய்ச் சாந்த ஜோதியாய்
வீரருள் வீரனுய் தீரருள் தீரனுய் கொல்லா விரதக் கொள்கையின் கோயிலாய் உலகுக்கு ஒருவனும் உத்தமன் காந்தியின்
99

Page 69
இந்திய விடுதலைப் போரில்.
உபதே சத்தையே ஒழுக்கமாகக் கொண்டு தேச சேவையே திருப்பணி யாக நல்லறம் நடத்திய ராஜகோ பாலா! இல்லறம் துவங்க இசைந்தனை கேட்டு மகிழ்ந்தேன் மிகவும் மங்களம் உமக்கே மகாத்து மாவை மறவா திருக்கவே நேர்ந்தது என்றே நினைக்கும் படியாய் காந்தி மதிப்பேர் வாய்த்தகற் கன்னிகை உத்தமப் பெண்ணுடன் உடலும் உயிரென வையகம் போற்ற வாழ்ந்திட வேண்டி அமலனைத் தொழுது ஆசீர் வதிக்கிறேன்.”
இவர்களோடு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் பிரமுகர் களும் தியாகி ராஜகோபாலின் தியாகச் செய்திகளை வியந்து பாராட்டி, மணவாழ்வில் அவர் காந்தி யடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நாட்டுப் பணியாற்றுவார் என வாழ்த்தினர். அவர்களோடு, ஈழகேசரியும் தன் அன்புத் தொண்டனுக்கு மங்கல வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
- Fp Gosf, 13-2-'44
100.

கட்டுரைகள்

Page 70

யாா ஐநதாம படை
1942ஆம் ஆண்டில் நடந்தவை குறித்து நான் மிகவும் பெருமிதங் கொள்கிறேன். பிரிட்டிஷ் அரசின ருக்கு அடங்கி மக்கள் பணிந்து போயிருந்தால் நான் உண்மையில் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். அவ்வாறு செய்வது கோழைத்தனத்தின் அறிகுறி. பல ஆண்டுக ளாக நாம் செய்துவந்த வேலை எல்லாம் அக் கோழைத் தனத்தாற் பயனற்றுப் போயிருக்கும். 88 வருடங் களுக்கு முன் 1857இல் நடந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்தியப் புரட்சிக்கே 1942 நிகழ்ச்சிகளை ஒப்பிட வேண்டும். துணையற்ற மக்கள் கதிகலங்கிப் போன போதும், தலைவர், வேலைத்திட்டம், ஆயுத பலம் ஒன்று மில்லாதபோதும் உணர்ச்சியுற்று எழுச்சி கொண்டது மகத்தானதாகும். துணிவுட னும் தீரத்துடனும் அவர்கள் பல தியாகங்களைச் செய்தனர்; பல கஷ்டங் களை அனுபவித்தனர். ஆயினும் அந்த நிகழ்ச்சிகுறித்து, பழித்து மக்களுக்குத் தவருன வழி காட்டியவர்கள் கோழைகள் என்று நமது மாபெரும் தலைவர் நேருஜி லாகூர் புகையிரத நிலையத்தில் தம்மை வரவேற்கக் கூடி யிருந்த கூட்டத்தின்முன் பேசினர். இம் மணிபோன்ற வாசகங்களை நம் தேசத்திற்கு அர்ப்பணம் செய்வோம்.
காங்கிரஸின் ஓகஸ்ற் தீர்மானத்தைப் பற்றியோ, அந்தக் கலவரங் களிற் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியோ பேசுவதுகூட அபாயகரமானது என்று பிரசாரம் செய்துகொண்டிருக்கும் "தேச பக்தர்கள்" சிலர் இருக்கிறர்கள். பகிரங்கமாக இல்லாவிட்டாலும் இரகசியமாகச் சில தலைவர்கள் இந்த ஓகஸ்ற் வீரர்களை மிகவும் கேவலமாகத் தாக்கிப் பேசியிருப்பதை நாம் அறிவோம். அதிகாரிகள் ஏதாவது சொல்லிவிடுவார் களோ என்று பயந்து பலர் இந்தக் "குசுகுசு கண்டனத் தைப் பொறுத்துக்கொண்டிருந்தார்கள். ஓகஸ்ற் சம்ப வங்களிற் கலந்துகொண்டவர்களுக்குத் தனது வனக்
103

Page 71
இந்திய விடுதலைப் GLurrfl6) ..... be
கத்தைத் தெரிவித்து நேருஜி செய்த பிரசங்கம் இந்த நவீன தேசபக்தர்’களின் வாயை அடைத்துவிடுமென் பதிற் சந்தேகமில்லை பொதுவுடைமைத் தோழர்கள் தான் முக்கியமாக இந்தத் தியாகிகளை 'ஐந்தாம் படை யினர்" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். 1940இல் மகாத்மாஜியின் தலைமையில் யுத்தத்தை எதிர்த்துத் தனிப்பட்டவர் சட்டமறுப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், இதைப் பொதுஜன போராட்டமாக்கு" என்று சில தோழர்கள் கதறிஞர் கள். சிலர் "போராட்டத்திற் கலந்து கொள்ளுகிருேம், தளபதியின் சொற்படி நடக்கிருேம்" என்று கைச்சாத் திட்டுக் காந்திஜியினிடம் கொடுத்தார்கள். 'கைது செய்யப்படாத சத்தியாக்கிரகிகள் கால்நடையாக யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்துகொண்டு டில்லிப் பட்ட ணத்தை நோக்கிப் போங்கள்" என்பது தளபதியின் கட்டளை. ஆஞற் சேர்ந்த தோழர்கள் "டில்லியாவது கால்நடையாவது, அது நம்மால் முடியாத காரியம்" என்று சொன்னது போதாதென்று காங்கிரஸ் கொள் கைக்கு நேர்மாறன பிரசாரம் செய்தார்கள். வேறு சில தோழர்கள் தெருத்தெருவாய்ப் பாட்டுப் பாடினர்கள் அதில் ஒரு அடி -
"போகாதே போகாதே யுத்தத்திற்கே
போவதினுல் லாபம் ஏதுநமக்கே ஏகாதி பத்திய யுத்தமடா இந்தியர்க்கு அதிலென்ன சித்தமடா..?
இவ்வாறு பாடித் திரிந்த தோழர்கள், ரசியா யுத்தத் தில் சேர்ந்தவுடன், "இது ஜனங்களின் யுத்தம்" என்ற சுலோகத்தைக் கிளப்பித் "தாம் சர்வதேச ரீதியில் இந்த யுத்தத்தைக் கவனிப்போம்” என்ருர்கள். "காற்
யுடன், காங்கிரஸ்வாதிகள் சிறைப்பட்டிருக்கும் சமயம்
O4

யார் ஐந்தாம்படை
பார்த்துத் தொழிற்சங்கங்களே நமது தோழர்கள் கைப்பற்றிஞர்கள். தொழிலாளர் சங்கங்கள் "விலைவாசி அலவன்ஸையே முக்கியமாக மதித்துத் தேசத்தின் சுதந்திரக் கோரிக்கையை மறந்தார்கள். தேசம் எக்கேடு கெட்டுப்போனலும் சரி, சுதந்திரப் போர் என்னகதி யாளுலும் சரி அதைப்பற்றி அக்கறையில்லை. எங்க ளுக்கு "டியர்னஸ் அலவன்ஸ்" கொடுத்தாற் போதும் என்ற மனப்பான்மையுடன் தொழிற்சங்கங்கள் நடந்து வந்ததன் மூலம் தேசத்திற்குப் பெருந்தீங்கை ஏற்படுத் தினர்கள். தேசிய வளர்ச்சிக்கு உலை வைத்தார்கள் சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத் தில், தேசத்தின் நலன்களுக்கு விரோதமாக ஏகாதி பத்தியக் கோஷ்டியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த தோழர்களா அல்லது மற்றவர்களா ஐந்தாம் படை யினர்? என்பதைப்பற்றிச் சரித்திரம் தீர்ப்புச் சொல் லும். இதற்கிடையே மொஸ்கோ பக்தர்கள் செய்து வந்த பிரசாரத்தை நேருஜி ஒரே அடியில் வீழ்த்தி விட்டதைக் கண்டு பாரத மக்கள் சந்தோஷப்படுகிருர் கள். ஒகஸ்ட் சம்பவங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் பொறுப்பாளிகளா? இல்லையா வென்பது பிரச்சனை யல்ல. அதில் சம்பந்தப்பட்டவர்கள் தேசபக்தர்களா என்பதுதான் கேள்வி. அவர்கள் தேசபக்தர்கள்தான். அவர்களுடைய வீரத்திற்குத் தலை வணங்குகிறேன், சிறையிலுள்ள ஆயிரக்கணக்கான இந்த வீரர்களைத் தேசம் மறந்துவிடவில்லை. நேருஜி சொன்னதுபோல் அவர்களுடைய தைரியத்தைக் கண்டு இந்தியா பெருமை அடைகிறது. ஆனல் பொதுவுடைமைத் தோழர்களின் பச்சோந்தி வேஷத்தைக்கண்டு. அவர்களை ஒட்டவிடாது புதிய காங்கிரஸ் சங்கங்களை அமைத்து நிர்மானத் திட்டத்திலே தேச மக்களின் கவனத்தை இழுத்துத் தேசத்திற்கு வழிகாட்டிய காந்தியடியார்கள் வாழ்க வென்று, முரசுகொட்டுவோம்.
105

Page 72
வெளியேறுக!
29-7-45இல் வெளிவந்த ஈழகேசரியில் * யார் ஐந்தாம்படை" என்ற தலையங்கத்துடன் தான் எழுதிய கடிதத்திற்கு திரு. எஸ். கே. கந்தையா அவர்கள் "வீண் பழி எதற்கு" என்ற தலைப்பில் எழுதிய பதிலை 19-8-45 இல் வெளிவந்த ‘ஈழகேசரி’யிற் பார்த்தேன், "இந்தியப் பொதுவுடைமைக் கட்சியார் 1942ஆம் ஆண்டின் சம்ப வங்களில் பங்குபற்றிய தியாகிகளை ஐந்தாம் படையினர் என்று ஒருபோதும் சொல்லவில்லை . இந்தத் தியாகி களைத் தேசாபிமானிகள் என்றே அவர்கள் குறிப்பிட் டார்கள்." என்று கந்தையா அவர்கள் ஆட்சேபிக் கிருர்கள். 1942ஆம்ஆண்டு ஒகஸ்ற் கலவரங்களை ஒட்டி அலிப்புரம் சிறையில் ராஜியக் கைதிகள் சுமார் இரண் டாயிரத்துக்கு மேற் குவிந்துவிட்டனர். இதில் பொது வுடைமைத் தலைவராகிய திரு. ஏ. எஸ். கே. ஐயங்கார் அவர்கள் உட்பட 65 பேர்கள் பொதுவுடைமைக் கட்சி யைச் சேர்ந்தவர்கள். " இது ஜனங்களின் யுத்தம்", பாஸிஸ், நாஸிஸப் பிசாசுகளை முறியடிக்க முன் வாருங்கள்" என்று கோஷமிட்ட குற்றத்திற்காக இப் பொதுவுடைமைக்காரர்கள் இச்சிறையில் வைக்கப்பட் டிருந்தனர். ஏகாதிபத்தியக் கோஷ்டியாருடன் ஒத் துழைக்க முன்வந்த பாஸிஸ் எதிர்ப்பாளர்களை ஏன் அதிகாரவர்க்கம் சிறையிற் தள்ளியதோ நாம் அறி Guruh. w
நிற்க, சில தோழர்கள் அலிப்புரம் சிறையில் காங் கிரஸ்காரரிடை சிலகாலம் பிரசாரம் செய்தார்களாம். இதன்பயணுகக் காங்கிரஸ்வாதிகள் அநேகம் பேர்கள் தம்பக்கம் வந்தவண்ணமாக இருக்கின்றனர் என்றும், சில குறிப்பிட்ட தலைவர்கள் ஐந்தாம்படை வேலையைச் சிறையிலும் செய்துகொண்டிருக்கிருர்களென்றும்
106

வெளியேறுக !
f’LÜL 96îr 6ñv aurríř (People’s War) arcir p QLu Luc LGðir Lubumr யிலிருந்து 1943ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வெளி யான பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகையில் மேற் குறிப்பிட்ட செய்தி காணப்பட்டது. இச்செய்தி ஆதார மற்றது. இது சுத்தப் பொய்யென்று சென்னையிலிருந்து வெளியான தேசீயப் பத்திரிகைகள் மறுத்தான் கொடுத் ததை யாரும் மறந்துவிடவில்லை. இச் செய்தியைச் சிறைக்கு வெளியே அனுப்பிவைத்த தோழர்களையும் நாம் அறிவோம். தோழர்களின் இக் குறும்புத்தன மான செய்கையைக் கண்டித்துச் சிறையில் இவர்களை இரண்டாயிரம் காங்கிரஸ்வாதிகள் சமூகப் பகிஷ்காரம் செய்துவைத்தார்கள். அலிப்புரம் சிறையில், திருே கந்தையா அக்காலத்தில் இருந்திருந்தால் அவர் நேரே பார்த்திருப்பார். அன்னவருக்குக் கொடுத்துவைக்க வில்லையே. சென்னையிற் சத்தியாக்கிரகம் செய்து அதே சிறைபுகுந்த தென்னிந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. திரவியம் உட்படப் பல மாணவர்கள் ஐந்தாம் படைக்காரரே சிறையை விட்டு வெளியேறுங்கள்" என்று கோஷித்து ஆந்திர கம்யூனிஸ்ட் தலைவர் திரு. ஏ. எஸ். கே. ஐயங்காரைத் தீண்டப்படாதவரென்று ஒதுக்கி வைத்ததையும் திரு. கந்தையா அறிந்திருக்கமாட்டார் கள் என நினைக்கிறேன். -
இந்திய கம்யூனிஸ்டுகளைக் குறித்து லாகூரிலும், பம்பாயிலும் நடந்த பத்திரிகை நிருபர்கள் மகாநாடுக ளில் நேருஜி கூறுகிருர்கள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது கம்யூனிஸ்டுகள் எதிர்க்கட்சியில் சேர்ந்திருந்தார்கள். தங்கள் செய்கைகளால் அவர்கள் தங்களுக்கும் தேசிய உணர்ச்சிக்குமிடையே ஒரு அகழி தோண்டிவிட்டனர். அடிப்படையாகவே கம்யூனிஸ்ட் கட்சி எங்கு வேலைசெய்து வருகிறதோ, அந்நாட்டின் நோக்கத்தை ஒட்டிக் கொள்கையைப் பின்பற்றுவதில்லை ஆளுல் ரஷ்யாவின் அயல்நாட்டுக் கொள்கைப்படிதான்
107

Page 73
இந்திய விடுதலைப் போரில் ...
நடக்கிறது. ரஷ்யாவிடம் எனக்குப் பூரண அனுதாப மும் உண்டு. அதன் அபாரமான முன்னேற்றத்தையும் போற்றுகிறேன். ஆணுல், ஒரு தேசத்தின் கொள்கை ரஷ்யா வின் அயல்நாட்டுக் கொள்கைக்குக் கட்டுப்பட்டிருக்க முடியாது. தேசியக் கொள்கையும் சர்வதேசியக் கொள்கையும் முரண்படும் போதெல்லாம் தேசியக்கொள் கைதான் வெற்றிபெறுகிறது. பெரிய சுதந்திர நாடுகளின் விஷ யத்தில் அது உண்மையாயிருக்கும்போது இந்தியா போன்ற அடிமை நாட்டு விஷயத்தில் ofs as Osire)D அதிகமாகப் பொருந்தும்.
பட்டாளத்திற்கு ஆள்சேர்க்கும் கங்காணிகளாக நாம் யுத்தத்தில் கலந்துகொள்ள மாட்டோம். கூலிக்கு மாரடிக்கும் அடிமைகளாக நாம் இறக்கத் தயாரா யில்லை யென்று சென்ற 1942இல் தன்னைக் கைது செய்யுமுன் பேசிய நேருஜியின் வீர கர்ஜனைக்கேற்பவே காங்கிரஸ்காரர்கள் நடந்துகொண்டார்கள். ரஷ்யா புத் தத்திற் கலந்துகொண்டதற்காக கூலிக்காரப் பட்டாளத்தினரைப் போல் கண்மூடித்தனமாக நாம் யுத்தப்போக்கை ஆதரிக்க முடியாது. காந்திஜிக்கும் கம்யூனிஸ்டுக் கட்சிக் காரியதரிசி திரு. பி. ஸி. யோகிக் கும் இடையில் கடிதப் போக்குவரத்து நடந்ததிலிருந்து மக்கள் யுத்தம் என்று கூறும் கம்யூனிஸ்டுக் கொள்கை யைக் காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை யென்று பத்திரிகை களும் விளம்பரம் செய்தாகிவிட்டது
கேருக்கடியான சமயத்தில் காலைத் தட்டிவிடுவார்கள்
ஐக்கிய மாகாணத்தில் பொதுவுடைமைத் தோழர் களுக்கு ஆதரவளித்துவந்த ஐக்கிய மாகாண முன்னுள் மந்திரி ரபி அஹமத் கித்வாய் அவர்கள் இப்பொழுது பொதுவுடைமைத்தோழர்களைக்குறித்துப்பேசியதாவது காங்கிரஸில் பொதுவுடைமைத் தோழர்கள் இடம்பற்றி
108

வெளியேறுக !
அபிப்பிராயபேதம் இருக்கமுடியாது. அயலார் அதி காரத்திற்குக் கட்டுப்பட்டிருப்பவர்களையும் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் காங்கிரஸின் தீர்மானங்களின்படி நடக்கத் தவறுவதோடல்லாமல் அவற்றை எதிர்த்தவர் களையும் காங்கிரஸில் சேர்த்துக்கொள்ள முடியாதென் பதையும் 1942ஆம் ஆண்டு அனுபவத்திற்குப் பின்னுவது நாம் உணர்ந்திருப்போம். ஏதாவது பொது நடவடிக்கை களில் அவர்களுடன் ஒத்துழைக்கலாம். ஆஞல், அவர் களைக் கவுன்சில்களுக்குள் அனுமதித்தாலோ, நமது தீர்மானங்களைப் பாதிக்க அவர்களுக்கு இடங்கொடுத் தாலோ நெருக்கடியான நேரத்தில் அவர்கள் நமக்கே விரோதமாக நடந்துகொண்டு நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்த இடம் கொடுத்து ஸ்தாபனத்தின் தற் கொலைக்கு வழிதேடியவர்களாவோம்.
கடந்த 1945ஆம் ஆண்டு தை மாதம் நடந்த மாணவர் காங்கிரஸின் மகாநாட்டில் தலைமை தாங்கிய பேராசிரியர் என். ஜி. ரெங்கா அவர்கள் பேசியதைச் சுருக்கமாகத் தருகிறேன். "தம் கட்சியில் சேரும்படி பொதுவுடைமைத் தோழர்கள் நம்மை அறைகூவி அழைக் கின்றனர். அவர்கள் ஏகாதிபத்தியத்தோடு சேர்ந்து விட்டதால் நாம் அவர்களுடன் சேர முடியாது என்று சொல்லுகிருேம். இந்த யுத்தம் மக்களின் யுத்தம் என்ற சுலோகத்தை விட்டுவிட்டாலும் கூட நாம் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், காங்கிரஸ் இலட்சியத்துக்கும் அவர்களுடைய இலட் சியத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாச மிருக்கிறது. தோழர்கள் தனிப்பட்ட கட்சியைப் பின் பற்றுகிறர்கள். எதேச்சாதிகாரத்தில் நம்பிக்கை உள்ள வர்களாக இருக்கின்ருர்கள். 1942ஆம் வருடம் அவர்க ளுடன் ஏன் ஒத்துழைத்தீர்கள் என்று என்னைச் சிலர் கேட்கின்றனர். சமீப காலத்தில் அவர்கள் செய்திருக் கும் காரியத்தைக் கண்டு அவர்களோடு ஒத்துழைக்கக்
109

Page 74
இந்திய விடுதலைப் போரில்.
கூடாதென்று நான் தீர்மானம் செய்தேன். நாம் கஷ்ட நிலையில் இருந்த பொழுதும் நம்முடைய தல்ை வர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுதும் அவர்கள் நமக்கு உதவி புரியவில்லை. நம்மீது அவதூறு கூறினர். நம்மை இகழ்ந்தனர். எல்லாக் கட்சிகளும் காங்கிரஸில் இருக்க ஏன் இடந்தரக்கூடாதென்று சிலர் கேட்கின்றனர். காங்கிரஸ் ஓர் சர்க்காரல்ல. அது செத்த மிருகக்காட்சிச் சாலையல்ல - எல்லாக் கட்சிகளும் காங்கிரஸில் வந்தால் சண்டையில்தான் முடியும். மாண வர்கள் காங்கிரஸில் சேர்ந்து நிர்மாணத் திட்டங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்ருர் பேராசிரியர் ரெங்கா.
அகில இந்தியத் தொழிலாளருக்கிடையில் மிகவும் செல்வாக்குடைய சென்னை மாஜி மந்திரி வீ. வி. கிரி அவர்கள் பொதுவுடைமைத் தோழர்களின் போக்கைப் பல பல சந்தர்ப்பங்களில் கண்டித்திருக்கிருர். இம் மாதம் 12ஆம் திகதி தென்ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் ஊழியர்கள் மகாநாடு மஞ்சக் குப்பம் பெண்ணை ஆற்றங் கரையில் திரு. சி. என். முத்துரங்க முதலியார் அவர்கள் தலைமையில் நடந்தது. சுமார் 5000 ஜனங்களிடையே தமிழ் மகாநாடு ராஷ்டிரபதி கே. காமராஜ அவர்கள் அச் சமயம் தேசியக் கொடியை ஏற்றி வைத்துக் கூறியதாவது : பொதுவுடைமைக் கட்சியினர் ஆரம்பத் தில் மகாநாட்டிற்குத் தாங்கள் வருவது பற்றிச் சச் சரவுகள் எழுப்பினர்கள். அக் கட்சியினர் மகாநாட்டில் கலந்துகொண்டு விஷயங்களைக் கேட்கலாம். தங்கள் அபிப்பிராயங்களை அக் கட்சியினர் தனிமேடைகளில் தெரிவிப்பதுதான் உத்தமம் காங்கிரஸின் பெயரால் சிலர் வேறு கொடிகளை நாட்டப் பார்க்கின்றனர்; இது சகிக்கத்தக்கதல்ல. தேசியக் கொடியின்கீழ் மகா நாடு நடந்தால்தான் தேசீயப் பற்றுக்கு அறிகுறியாகி றது. "ஏகாதிபத்தியம் ஒழிக" என்ருல் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டும் ஒழிக என்ருல் அர்த்தமில்லை. ஏனெனில், ரஷ்ய ஏகாதி பத்தியமும் ஏகாதிபத்தியம்தான்.
110

வெளியேறுக!
மேலே குறிப்பிட்ட உதாரணங்களில் இருந்து பொது வுடைமைத் தோழர்களின் வெளிவேஷம் கலைக்கப்பட்டு விட்டது. அவர்களை நம்பி ஆற்றிற் குதிக்காதே. ரபி அஹமத் கித்வாய் அவர்கள் சொல்லுவதுபோல நெருக் கடியான சமயத்தில் காலைத் தட்டிவிடுவார்கள். நேருஜி, கித்வாய்ஜி, பேராசிரியர் ரெங்கா, ஐக்கிய மாகாண சட்டசபைத் தலைவர் பாபு தாண்டன் காமராஜ் போன்ற வர்களிடமிருந்து தோழர்கள் எழுதி அறிந்துகொள் ளுங்கள். இப் பெரியவர்களைப் பாஸிஸ்- பிற்போக்கு உளறுதலை ஏன் உளறுகின்றீர்கள் என்று தோழர்களே! கேளுங்கள். கைப்புண்ணுக்குக் கண்ணுடி வேண்டிய தில்லை. இத் தலைவர்களின் மேற்குறித்த பேச்சுக்களையே வாசித்து அறிந்துகொள்ளுங்கள். அஹிம்சையே எமது உயிர்நாடி. உண்மையே எமது திறவுகோல். சிறையி லிருந்து வெளிவருவதற்காக எதையும் சொல்லி அதி காரிகளிடம் பணிந்துபோகும் கூட்டத்தாரை நாம் சேரமாட்டோம். சென்ற இரண்டு வருடங்களிற் பொது வுடைமைத் தோழர்கள் எந்தெந்தக் காரியங்களில் சர்க் காருக்கு உதவியளித்தனரென்பதை மக்கள் நன்கு அறி வார்கள். நமது மாபெரும் தலைவர்கள் நேருஜி, படேல்ஜி போன்றவர்கள் சொல்லியதுபோல் ஓகஸ்ற் தீர்மானத்தின் ஒரு எழுத்தையும் அசைக்கமுடியாது; ஒரு தேசத்தின் கொள்கை ரஷ்யாவின் அயல்நாட்டுக் கொள்கைக்குக் கட்டுப்பட்டிருக்கமுடியாது. நமது நாட்டுக் கலாசாரம், நாகரீகம், நடை உடை பாவனைக்கேற்ப ஒரு சமதர்ம ராஜ்யத்தை வகுப்போம். இதற்கு மாறுபட்டவர்கள் தேசீய ஸ்தாபனங்களில் நுழைந்து ஐந்தாம்படை வேலை செய்யவேண்டாம். தனிப்பட்டவர் சட்ட மறுப்புப் போராட்டத்திற்கு மாருகவும் ஒகஸ்ட் தீர்மானத்திற்கு மாருகவும் வேலை செய்தவர்கள் யாரோ அவர்கள் வெளியேறுக!
11

Page 75
போய்வருக!
இது இப்படியிருக்க, காங்கிரஸ் ஸ்தாபனத்தில் படர்ந்துவிட்ட பாசி மாசு அனைத்தையும் நாம் களைந் தெறியவேண்டும். பொதுவுடைமை வேஷத்தில் மறைந் திருந்த காளான்களைக் களைந்தெறியவேண்டு மென்று இந்தியாவெங்கும் கிளர்ச்சி செய்து காங்கிரஸ் தலைவர் மெளலான அபுல்கலாம் ஆஸாத் அவர்களிடம் முறை யிட்டனர். இதற்கிணங்க, அகில இந்திய காங்கிரஸ் காரிய சபையார் இத்தோழர்கள்மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தவுடனே, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்காரியதரிசி பி. சி. ஜோஷ அவர்கள் ஒர் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் காங்கிரஸ் நாலணு அங்கத்தவர்களாக விருந்து, சிறைக்குள் அகப் பட்டிருப்பதுபோல், காங்கிரஸில் அடைபட்டுக் கிடப்ப திலும் பார்க்க தோழர்கள் காங்கிரஸிலிருந்து விலகி வெளியிலிருந்து சுதந்திரமாக வேலை செய்தல் நலம். ஆகவே, தோழர்கள் எல்லோரும் காங்கிரஸிலிருந்து விலகிவிடுவதே நல்லது என்றும் ஜோஷ அவர்களின் உத்தரவு இருந்தது; இவ்வுத்தரவுப்படி பலபல தோழர் கள் காங்கிரஸிலிருந்து தங்களை வெளியேற்று முன் தாங்களாகவே புத்திசாலித்தனமாகவும், சாமர்த்திய மாகவும் பிறர்க்கு இடைஞ்சல் கொடுக்காது தங்கள் SôL*L—tü ruluq- வெற்றிகரமாக வெளியேறிவிட்டதை நினைத்து எந்தப் புத்திசாலிதான் சந்தோஷப்படாமல் இருக்கமுடியும்? தங்களுக்கு வழியனுப்புக் கூறமுன் ஒன்று சொல்லுகிருேம். 1942இல் ஏற்பட்ட இந்த ஒகஸ்டு எழுச்சி தேச கெளரவத்திற்கே மிகவும் இகழ்ச்சியைத் தந்துவிட்டதென்று கூருதீர்கள் அதில் கலந்துகொள் ளாததற்காகப் பெருமைப்படுகிருேமென்று சொல்லா தீர்கள். தோழர்களே சந்தோஷமாகப் போய்வருக !
112

போய்வருக !
சர்ந்தர்ப்பவாதிகள் : கே. அருணுசலம்
சென்னே மாகாணத்திலுள்ள சில சிறைக்ளில், கம்யூனிஸ்டுகள் செய்த அட்டூழியங்களை விசாரித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. “ “ asmråváGiproñv வாதிகள் காந்திக் குல்லாய் அணிந்துகொள்வதைக்கூட கம்யூனிஸ்டுகள் ஆட்சேபித்தனர். மற்றும் பிரிட்டிஷ் ஏகாதியபத்தியம் ஒழிக. காந்திஜீக்கு ஜே! என்ற கோஷங்களைப் போடக்கூடாதென்றும் அவர்கள் தடை செய்தனர். பொலிசாரிடமும் புகார் செய்தனர். சிறைக்கு வெளியிலும் கம்யூனிஸ்டுகள் பல அட்டூழியங் களைச் செய்திருக்கின்றனர். அவர்கள் சிலசமயம் முத லாளிகளுடனும், சில சமயம் நீதிக்கட்சி-திராவிடக் கழகக்காரர்களுடனும், சிலசமயம் பொலிஸாருடனும் சேர்ந்துகொண்டு காடைத்தனத்தில் இறங்கியிருக்கின் றனர். இந்திய கம்யூனிஸ்டுகளை நம்புவதற்கில்லை. தேசபக்தர்களைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தரகர் களுக்குக் காட்டிக்கொடுக்கவே அவர்கள் ஏற்பட்டிருக் கின்றனர்" என அதிற் கண்டிருக்கிறது. இவ்வறிக்கை கடத்த வாரம் வெளியாயிற்று,
('பாரததேவியில் 1944ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது)
இ.8 113

Page 76
காட்டிக்கொடுத்த தோழர்கள் நாட்டில் இவர்களுக்கு என்ன வேலை ?
உலக சரித்திரத்திலே 1942ஆம் வருஷம் கொற் தளிப்பான காலம். பல தேசங்களிலும் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பறி போகாமல் காப்பாற்றிக்கொள்ளவும், இழந்த சுதந் திரத்தை மறுபடியும் அடையவும் மகத்தான போராட் டத்தை நடத்தினர். அந்தச் சுதந்திர அனலானது அடிமை இந்தியாவைத் தாக்கியது. அந்நிலையிற்ருன் சரித்திரப் பிரசித்திபெற்ற ஓகஸ்ட் புரட்சி ஏற்பட்டது. மக்கள் எழுந்தனர். அரசாங்கத்தின் அடக்குமுறை தாண்டவமாடிற்று. காந்திஜி, நேரு, ஆஸாத் போன்ற தலைவர்கள் உட்படப் பல்லாயிரக் கணக்கான தேச பக்தர்களை இந்திய பாதுகாப்பு" என்ற பெயரினல் அரசாங்கம் சிறைப்படுத்தியது. இந்திய சுதந்திரத்திற் காகத் தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து வேள்வித் தீயில் வெந்துபோய்க் கிடந்த காலத்தில் பிரிட்டிஷா ருக்குக் கையாளாகக் கொம்யூனிஸ்ட்" தோழர்கள் இருந்து வந்தனர் என்பதை உலகம் நன்கு அறியும். காந்திஜியையும் நிரந்தரமாக எதிர்த்து நாசவேலை செய்து வந்திருக்கின்றனர். இத்தோழர்கள் தற்காலத் திற் பிற்போக்குச் சக்திகளுடன் போரிடத் தயாரில்லை. அவர்கள் நேருஜி, ஜெயப்பிரகாஷ் பேரில்தான் போர் தொடுத்திருக்கின்றனர்:
பொறுக்கமுடியாது:
சென்ற ஏப்பிரல் மாதம் மன்னர்குடிப் பகுதியில், காங்கிரஸ் பிரசாரம் செய்யச் சென்ற தஞ்சைப்பகுதிக் காங்கிரஸ் தலைவர் திரு. டி. கே. சீனிவாசன் அவர் களையும், உப்புச் சத்தியாக்கிரகப் போர்வீரர் சர்தார்
114

காட்டிக்கொடுத்த தோழர்கள்
வேதரத்தினம்பிள்ளை அவர்களையும், இந்த மொஸ்கோ பக்தர்கள் நன்முகத் தாக்கி அன்னவர்கள் எலும்புகள் நொருங்கப் புடைத்திருக்கிற செய்தியைத் தமிழ்மக்கள் அறிவார்கள். திரு. டி. கே. சீனிவாசன் அவர்களை யான் நன்கு அறிவேன். 1942ஆம் வருஷம் அலிப்புரம் சிறையில் அன்னவருடன் நெருங்கிப் பழகி வந்திருக் கிறேன். உத்தம காந்தீயவாதி, ஓகஸ்டு இயக்கத்திற் கலந்துகொண்ட குற்றத்திற்காகக் கும் பகோணம் பொலிஸ் ஸ்டேசனுக்கு திரு. டி. கே. சீனிவாசனை அதிகாரிகள் அழைத்து வந்து அன்னவர் மயக்கமுற்றுக் கீழே விழும் வரைக்கும் அன்னவரின் (திரு. டி. கே.) செருப்பைக் கழற்றி அவருக்கே தாராளமாகச் செருப் பால் அடித்தனர். அடிக்கும்போதெல்லாம், "காங்கிரஸ் A5a) arodies ggs (T6ir Qaig, Log' (This is the prize for a Congress Leader) Graig Gafnt divosé Gafnt dives gigs தனர். அதற்கும் அஞ்சாது மெளனமாக திரு. டி. கே. சி; இருந்தார்கள். கடைசியாகக் கொடுங்கோலர்கள் திரு. டி. கே. சி. யை அலிப்புரம் சிறையில் அடைத்து வைத் தனர். இவ்வித காந்தி பக்தரைத் தயவு தாட்சணை யின்றி மொஸ்கோ கூலிகள் எலும்புகள் நொருங்க அடித்ததற்காகத் திறமையான காடையர்கள் என்ற பெயரை வாங்கியிருப்பதைத் தமிழ்நாடு நன்கு அறியும்.
மலபாரிற் கொள்ளை :
மலபார் கிராமங்களில் கொம்யூனிஸ்டுகள் வீடு புகுந்து கொள்ளையடிக்கின்றனர் என்றும், காங்கிரஸ் காரர்களைத் தாக்குகின்றனர் என்றும் செய்தி இப்போது கிடைத்திருக்கின்றது. "இந்திய கொம்யூனிஸ்டுக் கட்சி யின் கொள்கை சமீபத்திற் புரட்சிகரமாக மாறியிருக் கிறது. ஒரு கட்சி விரும்பியபோதெல்லாம் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளச் சகல உரிமையுமுண்டு. முன்புகூடக் கொம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கையில்
115

Page 77
இந்திய விடுதலைப் போரில்.
பல திடீர் மாறுதல்கள் ஏற்பட்டது உண்டு. ஒரேநாளில் தங்கள் கொள்கையைத் தலைகீழாக அவர்கள் அடிக்கடி மாற்றியிருக்கிருர்கள். *
ஆனல், இந்தத் தடவை அவர்களது கொள்கை மாறியதால் இந்தியாவின் பந்தோபஸ்துச் சேவை களுக்கு அபாயம் ஏற்பட்டுவிட்டது. தொழிலாளர் கிளர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது: தொழிற்சால் களில் வேலைநிறுத்தம் நடக்கின்றது. ஆயுதங்கள் ஏராள து சேகரிக்கப்பட்டன. பலாத்காரமுறையில் சிர சாங்கத்தைக் கவிழ்க்க ஆயத்தங்கள் நடந்திருக்கின்றன. பந்தோபஸ்துச் சேவைகளில் நாசவேலை நடக்கும் என்ற அபாயம் தோன்றியது. இதையெல்லாம் நிரூபிக்க மேற்குவங்காள அரசாங்கத்திடம் சாட்சியம் இருக் கிறைது. அதனல் கொம்யூனிஸ்டுக் கட்சிக்கே த.ை விதிக்கும் தீவிர நடவடிக்கையை மேற்குவங்காள அர சாங்கம் எடுக்க நேர்ந்தது. பந்தோபஸ்துச் சேவ்ை களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல் தேசத்தின் வாழ்வு முழுவதற்குமே ஆபத்து ஏற்படும். பொதுஜன அரசாங்கத்துக்கு எதிராகப் பலாத்கார நடவடிக்கைக்குத் திட்டம் GunrGGunT SUPUT அரசாங்கம் கைது செய்யத்தான் வேண்டும" என்று நேருஜி கொம்யூனிஸ்டுகள மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதன் காரணத்தை மேலே விளக்கியுள்ளார்.
தேசத்துரோகம்:
இதை அப்படியே தேசம் ஆமோதிக்கிறது. அதற் கிணங்க ஆங்காங்கு பலப்பல கொம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு வருகிருர்கள். இவர்கள் செய்யும் தேசத் துரோகக் காரியங்களைப்பற்றித் தேசபக்தியுள்ள ஒவ் வொரு இந்தியனும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களோ எவ்வளவு காலமானலும் சிறையில்
116

காட்டிக்கொடுத்த தோழர்கள்
இருக்கத் தயங்கமாட்டார்கள். அவர்கள் தலைமறைவாக இருந்து காரியங்களைச் செய்து அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிப்பார்கள். அவர்களை நாட்டைவிட்டுத் துரத்த முன்வாருங்கள். "முள்ளுக் கிரீடம் தரித்துத் தேசத் திற்குத் தலைமைதாங்கி நிற்கும் நேருஜிக்குப் பக்கபல மாக விருந்து உதவிசெய்ய இந்திய மக்கள் கடமைப் பட்டிருக்கின்ருர்கள். கிடைத்த சுதந்திரத் தைக் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்ற காந்திஜியின் மணிவாசகங்களைச் சிந்தித்து நடப்போம்.
"பெற்றதன் தாய்ார் பிச்சைக்கு அலைய
மற்றவர்க் கறத்தின் மாண்பினைப் பற்றி உலகம் ககைக்க உரைப்பவர் போல எங்களை மேலும் ஏய்த்திட எண்ணித் தங்கொடி விடுத்துச் செங்கொடி பிடித்தாய் ஆதிக்க வெறியரின் அக்கிரமச் சண்டையை மக்கள் போர்எனப் பேர்மாற்றிக் கூறினுய் கடவுளை மறுத்தாய் கலைகளை வெறுத்தாய் உன்னைநாம் அறிவோம் உன்னுடைக் கட்சி முன்கடந் திட்ட முறைமையும் அறிவோம் தன்னுணர் வுள்ள தமிழர்கள் நாங்கள் இன்னமும் எம்மை ஏய்த்திட நினைப்பா?
பின்னகர் வீணில் பேச்சுஏன் தோழா ! மனிதருள் சிறந்த மார்க்ஸினை அறிவோம் ஏழைபங் காளன் இலெனினையும் அறிவோம் ஆயினும் அவர்க்காய் அக்கிரமஞ் செய்து தாயினும் சிறந்த தன்திரு நாட்டைக் காட்டிக் கொடுத்த கம்யூனிஸ்ட் தோழா ! விபீஷணர் களால் வீழ்ந்தது போதும் சுக்கிரீ வத்துச் சூட்சியில் சிக்க தண்டமிழ் மக்கள் ‘மண்டுகள் அல்லர் போதும்உன் உறவு போய்வா தோழா !”
117

Page 78
66 பாரதியை விபுலாநந்தரில் கண்டோம்”
எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். "அருண் மிகு விபுலாநந்த அடிகளார் வரப்போகிருர் பாரதியின் திருவுருவப் படத்தைத் திறந்துவைக்கப்போகிருர்: பாரதியைப்பற்றி ஒரு அரிய சொற்பொழிவைக் கேட்கப் போகிருேம்" என்று நாங்கள் குதூகலித்துக் கொண் டிருந்தோம் . 1938ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆந் திகதி நெருங்கிவந்துகொண்டிருந்தது. ஆனல். . .
வந்தது தந்தி. அதில் "உடல்நிலை சரியாயில்லை. திறப்பு விழாவுக்கு வரமுடியாதிருக்கிறதற்கு வருந்து கிறேன்" என்று காணப்பட்டது. நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் திகைத்தோம்.
தந்தி கிடைத்த இரவே கொழும்பு சென்று அப் போது வித்தியா கந்தோரில் கடமை பார்த்துவந்த திருக்கோணமலை இந்துக்கல்லூரி மாஜி தலைமை ஆசிரியர் உயர்திரு. கே. எஸ். இராமசாமி ஐயர் அவர்களை அழைத்து வந்து விழா வை ஒருவாறு முடித்துக் கொண்டோம்.
விழா நடைபெற்ற அடுத்த வாரத்தில் விபுலாநந்த சுவாமிகள் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்தார்கள். வந்ததும் வராததுமாகச் சுவாமிகள் என்னைப் பார்த்து "தம்பி, பாரதியாரின் திருவுருவப் படத்தை எங்கே திறந்து வைத்திருக்கின்றீர்கள்?" என்று கேட்டார்கள்.
வைத்த கண் வைத்தபடி சுவாமிகள் பாரதியின் படத்தைப் பரவசத்தோடு பார்த்துக்கொண்டு நின் ருர்கள். ஏற்கனவே அவர் இட்ட கட்டளையின்படி அடியேன் "வீரசுதந்திரம் வேண்டிநின்றர் பின்பு வேறென்று கொள்வாரோ" என்ற பாடலைப் பாடிக்
118

'பாரதியை விபுலாநந்தரில் கண்டோம்'
கொண்டிருந்தேன். அப்போது திருக்கோணமலையில் மிக வும் செல்வாக்குள்ள ஒரு பிரமுகர் அங்கு பிரவேசித் தார். மேலும் சில பாட்டுக்கள் பாடினேன். சுவாமிகள் பாரதியின் பாடல்களிற் செறிந்துகிடந்த பொருள் நயங் கள் சிலவற்றைக் கூறிமுடித்தார்கள். ーな
வந்த பிரமுகர் பாரதியின் படத்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "தலைப்பாகை அணிந்திருக்கும் இவர் um ti? '' Grøörg Gast"-l-mif.
பிரமுகர் காற்சட்டை அணிந்து மேல்நாட்டு நாகரி கத்தில் மூழ்கியவராகக் காணப்பட்டார். ஆங்கிலநாட்டுச் சரித்திரத்தையும் ஆங்குள்ள கவிஞர்களையும் பற்றி அவர் விழுந்து விழுந்து படித்திருப்பார். ஆனல், தமிழ் நாட்டைப்பற்றியும் இங்குள்ள கவிஞர்களைப் பற்றியும் அவர் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அறிந்தாலும் உடனே அதை மறந்துவிட அவர் மறந்துவிடவில்லை. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாரதி படத்திறப்பு விழாவுக்கு அவர் வந்திருந்தார். பாரதி யைப் பற்றிக் காதாரக் கேட்டார். ஆனல் அது ஞாபகத் தில் வைக்கவேண்டிய ஒரு விஷயமாக அவருக்கு த் தோன்றவில்லை. ஆகவே, மறந்துவிட்டு, இன்று "இந்த தலப்பா கட்டி யார்?" என்று கேட்டார். இப்படியிருத் தது படித்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் அந்தக்கால நிலை.
பாரதியை அறியாத ஒரு தமிழ்மகன் இருப்பதைக் காணச் சுவாமிகளுக்குச் சகிக்கவில்லை. "யாரிந்தப் பேதை?" என்று அவர் பாரதியின் பாஷையிலேயே எண்ணியிருக்க வேண்டும். துறவியாயிருத்தும் அவர் முகத்தில் கோபத்தின் ரேகைகள் சற்றுத் தோன்றத்தான் செய்தன. அனுதாபத்தினல் ஏற்பட்ட கோபம் அது
"அவர்தான் கவியரசர் பாரதி; தமிழகத்தை உய் விக்க வந்த தெய்வம்" என்று சற்றுக் கடுகடுத்த குரலிற்
19

Page 79
இந்திய விடுதலைப் போரில்.
கூறிஞர். இதைச் சொன்னபோது சுவாமிகளின் கன் களேப் பார்க்கவேண்டும். அவை பாரதியின் கண்களேப் போலவே பிரகாசித்தன. ஆம், அங்கு கூடியிருந்த எங்களுக்குச் சுவாமிகள் பாரதியாராகவே தென் பட்டார். நாங்கள் எல்லோரும் அன்று பாரதியை விபுலா நந்தரில் கண்டோம்.
இவ்வளவிற்கும் காரணம் சுவாமிகள் பாரதியார் மேல் வைத்த வற்ருத காதல். கவியின் உள்ளத்தைக் கவிதானே அறியமுடியும். வீரனின் வீரத்தை ஒரு வீரன் தான் புகழவேண்டும். தேசபக்தனின் உணர்ச்சியை இன்னுெரு தேசபக்தன்தான் உணர முடியும்,
பாரதியின் பாடல்களே ஈழ நாட்டிற் பரவச்செய்த பெருமை சுவாமிகளேயே சாரும் ஏன், தமிழ்நாட்டிலும் சர்க்கார் அடக்கு முறைக்கும் அஞ்சாது பலப்பல இடங் களில் பாரதி விழாக்களுக்குச் சுவாமிகள் தலேமைவகித் திருக்கின்ருர்கள். பாரதியின் காவியத்திலே, எழுத்திலே யுள்ள சுவையை எத்தனேயோ விதங்களில் சுவாமிகள் நமக்கு ஊட்டியிருக்கின்றர்கள். பாரதி பாடல்களே மேடைகளிற் பாட அடியேன் வழிகாட்டி வைத்தவர் சுவாமிகளே. எனது வாழ்க்கை அத்தனேக்கும் வழி கோவித் தந்த எனது குரு, எம்மை விட்டுப் பிரிந்த அருண் மிகு விபுலாநந்த அடிகளுக்குத் தாள்பணிந்து அஞ்சலி செய்கிறேன்.
குரு வாழ்க! குருவே துண்
20
 

* ஈழகேசரி" அதிபர் திரு. கா. போன்னேயா அவர்கள்

Page 80

வீரப்பணி ஆற்றிய வள்ளல்
சாதி, சமயம், மொழி, இனம், நாடு என்ற எல்லைக்குள் மட்டும் நிற்காமல், உலகத்துள்ள மக்கள் யாவரும் ஒரு குடும்பத்தினர் போல் வாழவேண்டு மென்று, உயர்ந்த விரிவான அறிவுரைகளை உலக மேடையில் வாரி இறைத்தவன் தமிழன். தேசபக்தி என்பது தமிழனுக்குப் புதிதல்ல. தேச நல்த்துக்காகக் கொள்கை பிறழாது ஆண்மையுடன் போராடிச் சிறை யிலே செக்கிழுத்து மாண்டவன் தமிழன். அத்தகைய சீரிய கொள்கைகளை அடிப்படையாக லைத்துக்கொண்டு "ஈழகேசரி" என்னும் தேசீய வெளியீட்டை இற்றைக்கு 21 வருடங்களாக நடாத்திவந்த எமது அன்பிற்குரிய அதிபர் திரு. நா. பொன்னையா அவர்கள் சென்ற 30-3-51 திகதி இறைவனடி எய்தியதைக் கேட்டு மிகவும் வருந்தினேன்.
உலகநிலை கலக நிலையாக விருக்கிறது: மதத் துவேஷம், இனத்துவேஷம், நாட்டுத்துவேஷம் இவை கள் மலிந்துகிடக்கும் இந்நாளில், அதிலும் இலங்கையில் உயர்திரு நா. பொன்னையா அவர்களைப் போன்ற திடங்கொண்ட ஆசிரியர்களைப் பார்ப்பது அரிதே தேசீயத்தை வளர்த்த யாழ்ப்பாணம், வாலிப மகா நாட்டை உருவாக்கிய யாழ்ப்பாணம், காந்தியடிகளை இலங்கைக்கு வரவழைத்து அன்னவரின் உபதேசங்களைக் கேட்டு, அவ்வழியினின்று கடஞற்ற முன்வந்த யாழ்ப் பாணம், நேருஜியின் கருத்துப்படி உழைக்கச் சபதம் கொண்ட யாழ்ப்பாணம், இப்போது தட்டுத்தடுமாறிப் பிளவுபட்டு நிற்குமென்று யாரும் நினைத்திருக்கவில்லை; தேசீயத்துக்கு வகுப்புவாதம் முரண்பட்டவைதான் வகுப்புத் துவேஷத்தைக் கிளப்பி நாட்டிற் செல்வாக்குப் பெற்ற தமிழர்களை ‘ஈழகேசரி' என்றென்றும் எதிர்த்தே போராடிக்கொண்டிருப்பான்.
121

Page 81
இந்திய விடுதலைப் போரில்.
பிளவுபட்ட தமிழன், தமிழ் மொழியை வளர்த்தல் முடியாதகாரியமாகுமென்று பலப்பல தமிழ்வாணர்கள் கூறிக்கொண்டே இருக்கின்ருர் சுள். தமிழன் மற்றெல் லாச் சாகியத்தாரையும் விட உலகத்தோடு ஒத்து வாழக்கூடிய பழங்குடியானவன். இந் தி யர் அனை வரும் ஒரே இனம்; இந்தியா முழுவதும் ஒரே நாடு என்ற ஒற்றுமைக் குரலை எழுப்பியவர் அண்ணல் காந்திஜியே. அடிகளும் தலைசிறந்த தமிழன்தான். வகுப்பு ஒற்றுமையை எப்படி வளர்க்கலாம் என்று பிரபல தேசீய முஸ்லீம் திரு. முகமது பேக் அவர்கள் கேட்டதற்கு காந்திஜி பின்வருமாறு கூறினர். "நீங்கள் உண்மையாக முஸ்லீம் மக்களுக்காக உழைக்கவேண்டு மென்று கருதினுல், வகுப்புவாத ஸ்தாபனங்களி லிருந்து தயவுசெய்து விலகிக்கொள்ளுங்கள். இதுதான் எனது உபதேசம்". காந்திஜியின் மணிவாசகங்களை மனதில் வைத்தே திரு. நா. பொன்னையா அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். தேசீயத்தின் உயர்வைப் போதித்துவரும் "ஈழகேசரியை வாங்காதீர்கள்" என்று ஒரு காலத்தில் பிரசாரம் செய்ததையும் நாம் அறி வோம். மகாகவி பாரதியார் அவதரித்துத் தமிழ் மக்க ளின் தேசீய உணர்ச்சிக்குப் புத்துயிரூட்டினர். அவரைப் பின்பற்றியே யோகி சுத்தானந்தபாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ஆஸ்தானக் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை முதலான கவிஞர்கள் தேசீயத்தின் அவசியத்தைப்பற்றி வலியுறுத்திப் பாடுகின்றனர். அக்கவிஞர்கள் பாடிய தேசீயப்பாடல்களை வகுப்புவாத மேடைகளிற் பாடித் தங்கள் கட்சிக்குப் பலந்தேடின காலத்திலும் ஈழகேசரி வாயிலாக அதற்கெல்லாம் சரியான சாட்டைகொடுத்து அப்பாடல்களைத் துர்ப் பிரயோகஞ் செய்யவிடாது தடுத்துப் போராடியிருக் கின்றர்கள் திரு. நா. பொ. அவர்கள். அதற்காகத் "தமிழனின் துரோகி யென்ற பட்டத்தை வகுப்பு வாதிகள் திரு. நா. பொ. வுக்குச் சூட்டினர்களே! கலைக்ஞானர் மெளலான அபுல் கலாம் ஆஸாத்தையும் "முஸ்லீம்களின் ஜென்ம விரோதியென்றும், காந்திஜியின்
22

வீரப்பணி ஆற்றிய வள்ளல்
கைப்பொம்மையென்றும் அன்று வசை புராணம் பாடி ஞர்களே முஸ்லீம் சங்கத்தினர்". அதைவிட இங்குள்ள வகுப்புவாதிகள் பெரிய காரியத்தைச் சாதித்துவிட வில்லைத்தான். எதற்கும் அஞ்சாத நெஞ்சுடன், அசை பாத ஞானத்துடன், ஆடாத கொள்கையுடன், ஓடாத உறுதியுடன் காந்தீயத்தைப் பரப்ப அன்ருடு ஈழகேசரி யில் எழுதிய தலையங்கங்களை நாம் பார்த்திருக்கிருேம்
தாழ்வுற்றுக் கிடந்த பாரதநாட்டை அந்நியர் கையினின்று மீட்க அரும்பாடு பட்டுப் போராடிய காலத்தில், பத்திரிகைக்கு வாய்ப்பூட்டுப்போட்ட காலத் தில், பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட காலத்தில் கத ராடை தரித்தவர்களைக் கண்டால் அதிகாரிகள் அன்ன வர்களைப் பிடித்து நையப்புடைத்துச் சிறைக்குள் தள் ளிய காலத்தில் "யாழ்ப்பாண வாலிப மகாநாட்டுக்கு உறுதுணையாக விருந்து பணியாற்றிய பிரபல வழக் கறிஞர் டி. என். சுப்பையா அவர்களின் குழாத்துடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இராஜத் துவேஷப் பிரசுரங் கள் அச்சிட்டுத் தமிழ்நாட்டில் விநியோகிப்பதற்குத் திரு. நா. பொ, உழைத்ததை என்னைப் போன்றேர் ஒருநாளும் மறக்கமாட்டோம். கோழைத்தனமாக ஒதுக்கிப் பதுங்கி வ்ாழாது வீரத்தனமாக வாழ்ந்து காட்டிய எமது அருமை அதிபரை நாம் மறப்போ மல்லோம். சாதாரணமான வாழ்க்கையை ஆரம்பித்துச் சுயமுயற்சியினுலும் விடா உழைப்பினலும் பொருளிட்டி அப்பொருளைக் கல்விக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தாராளமாக உதவி, தமிழ் அறிஞர்களை உபசரித்தும் காந்திவழிநின்று சமுதாயத்திலே உயர்ந்த நிலையடைந்த அவரது வாழ்க்கை இந்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். வெற்றிபெறும்வரை இலட்சியத் திலே தளராது வீரப்பணி செய்த வீரர் நமது அதிபர் உயர்திரு. நா. பொன்னையா, அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிருேம். அன்ஞரின் ஆத்மா சாந்தியடையப் u9prmontá58áša Gapub.
ஓம் சாந்தி !
123

Page 82
யார் சத்தியாக்கிரகி? அறப் போரின் தத்துவ ம்
காந்திஜி தென் ஆபிரிக்காவிலே தமது அறப் போரை ஆரம்பித்தபோது அதற்குச் "சாத்வீக எதிர்ப்பு" (Passive Resistance) GT60T Quuri (5 ge) it. gas fibes நல்ல பெயரைத் தருவோருக்குப் பரிசு அளிப்பதாக அறி வித்திருந்தார். "சத்தியாக்ரஹம்" என்ற பெயரை (ஸ்த் - உண்மையை, ஆக்ரஹம் - மேற்கொள்ளல்), பூரி மகன்லால் காந்தி கொடுத்துப் பரிசு பெற்ருர். உண்மை அன்பு இரண்டின் செயற்கையாற் பிறந்த இந்தச் கோட் மாட்டிற்குச் சத்தியாக்கிரகம் என்ற பெயர் வைப்பதே தகுந்ததெனக் கருதி அவ்வாறே காந்திஜி அதை ஏற்றுக் Gassmrstår Limtrř.
காந்திஜி அறப்போர்:
மகாத்மா காந்தி தமது வாழ்நாளில் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கின்ருர், தென் ஆபிரிக் காவிலேதான் முதன்முதலாக அவர் தமது அறப்போ ரைத் தொடங்கினர். இலட்சியம் சிறந்ததாக விருந்தால் மட்டும் போதாது அதனை அடையக் கையாளும் வழி முறைகளும் உயர்ந்தனவாக இருக்கவேண்டும் என்பது அவருடைய அடிப்படையான எண்ணம். நெறிமுறைக்கு வெற்றி நிச்சயம் என்பது அவரது துணிபு, அஹிம்சையே அவரது ஆயுதம், சத்தியமே அதனை இயக்கும் சாதனம், இவற்றை மனப்பூர்வமாக வரித்துக்கொண்டு செயற் படுவதுதான் சத்தியாக்கிரகம். இவ்வழியிற் சென்று காந்திஜி சம்பாதித்த வெற்றிகள் எண்ணற்றவை.
தென்னுபிரிக்காவிலிருந்து காந்திஜி இந்தியாவுக்கு 1914ஆம் ஆண்டில் திரும்பிஞர், சத்தியாக்கிரகத்தின்
124

umrtř சத்தியாக்கிரகி p
சக்தியில் அனுபவபூர்வமான முழு நம்பிக்கை ஏற்பட்ட தன் காரணமாகக் காந்திஜி அதைத் தமது உறுதுணை யாக்கிக்கொண்டார். அக்கிரமத்தை எதிரிப்பது முதலா கத் தேசீயப் போராட்டம்வரை எல்லாவற்றிலுமே சத்தியாக்கிரகம் தாராளமாக விளங்கியது;
ஆத்ம சக்தி:
பலாத்காரத்தைவிட எவ்வளவோ உயர் ந் த து அஹிம்சை, தண்டிப்பதைவிடத் தீரமானது மன்னிப்பு. ஆனல் ,தண்டிக்கும் சக்தியுள்ளவன் அளிக்கும் மன்னிப்பே உண்மையான மன்னிப்பு, பெலமில்லாதவன் மன்னிப் பதில் அர்த்தமேயில்லை. தேகக்கட்டினுற் பலம் ஏற்படுவ தில்லை. மன உறுதியே உண்மையான வலிமை; பலாத் காரம் மிருகசுபாவமாகும். அஹிம்சையே மனித சுபா வம். அஹிம்சையென்ருல் தீங்கு செய்பவனின் செய்கைக் குப் பலவீனமாக உட்படுவதென்பதல்ல. அந்தக் கொடிய வணின் தீச்செயலுக்கு எதிராகத் தன் முழு ஆத்ம பலத் தையும் உபயோகிப்பதே அஹிம்சையாகும். தன் இனத் திற்கு உரியதான இந்த நியதியுடன் தனிமனிதன் தன் கெளரவம், தன் மதம், தன் ஆத்மா, இவற்றைக் காப் பாற்ற ஓர் அநீதியான ஏகாதிபத்தியத்தையே எதிர்க்க முடியும் என்று காந்தியடிகள் உபதேசித்தார்கள்.
சமாதானத்துக்கான வழியே சத்தியாக்கிரகத்திற் கும் உரிய வழியாகும். "உலகம் முழுவதற்குமாகவே நான் சிந்திக்க விரும்புகின்றேன். மனித சமூகம் அனைத் துக்கும் உயர்ந்த நலனைக் கருதுவதே என் தேசபக்தி: எனவே, நான் இந்தியாவுக்குச் செய்யும் விழியம் மனித சமூகத்திற்கே செய்வதாகும்" என்று பல சந்தர்ப்பங்க ளில் காந்திஜி கூறியிருக்கின்ருர்கள்.
"இன்னுசெய் தார்க்கு மினியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.’
125

Page 83
இந்திய விடுதலைப் ப்ோரில்.
என்ற வள்ளுவரின் வாக்குப்படி காந்திஜி நமக்கு வாழ்ந்து காட்டினர், அஹிம்சை நெறியை அன்புடன் எடுத்துக் காட்டிய அடிகள், தீமையை வெறு. ஆனல் தீமை செய்வதனை வெறுக்காதே என்ருர்கள். அந்த வாக்குக் காந்தி நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களில் எவ்வாறு பலித்ததென்பதைச் சத்தியாக்கிரகிகளே விரை வில் அறிந்துகொள்ள முடிந்தது. சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்வாறு இந்தியாவில் நடக்கப்போகிற தென்பதைத் தீர்க்கதரிசனமாகக் கவிக்குயில் பாரதியார் கூறிவைத்தார்.
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய் புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே ~நன்னெஞ்சே பூமியிற் கண்டோமே பகை நடுவினில் அன்புரு வானகம்
பரமன் வாழ்கின்றன் நன்னெஞ்சே பாமன் வாழ்கின்றன்.
தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே.
புரட்சி எத்தன்மையது?
தின்ன வரும் புலி என்ற வரிகளைக் கூர்ந்து கவனித் தாற் பாரதியார் வேண்டிநின்ற புரட்சி எத்தன்மையது என்று விளங்கும். பகைவனுக்கருள்வாய் என்று பராசக் தியை வேண்டி நிற்கும் வீரரைப்போல் ஒருவரை இந்த ஜன்மத்திலே பார்க்க முடியாது.
126

யார் சத்தியாக்கிரகி?
சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் காந்திஜி எப்படி நடத்துவாரென்பது ‘காந்தி பஞ்சகத்தைப் படித்தால் நன்கு விளங்கும்.
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ யறிந்தாய்: நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை
நெறியினுல் இந்தியா விற்கு வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்கநல் லறத்தே.
சூது, வாது, பொய், கொலை, பொருமை நிறைந்த அரசியலிற் பகை ஒழிப்பு, அஹிம்சை ஆகிய நல்’ இயல் புகள் இன்றியமையாதவைகள் என்றும் இவ்விதம் அஹிம்சையை உலகுக்கு எடுத்துக் காட்டும் காந்தியைப் போற்றவேண்டும் என்ருர்கள். தின்ன வரும் புலியி னிடத்து அன்னை பராசக்தி உள்ளமையை அறிந்து அவ ளைக் கும்பிடுவாய் என்று பாரதியார் சொல்லும்போது பகைவனிடத்து, தனது கொள்கைக்கு மாறுபட்டவ னிடத்து, எப்படிக் காந்திஜி நடந்துகொண்டார் என் பதை நாம் கண்ணுரப் பார்த்தோம் ; காதாரக் கேட் டோம். அப்படி உயர்ந்த கலைப்பண்புடைய சத்தியாக் கிரகப் போராட்டத்தில் தளபதியாகவிருந்து நாட்டை அறவழிச் செலுத்தி நமக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த சிற்பியின் சத்தியாக்கிரகமே சத்தியாக்கிரகம். இங்ங்ணம் சத்தியாக்கிரக சரித்திரத்தைப் படித்த நாம், இலங்கை சத்தியாக்கிரகமாம், உண்ணுவிரதமாம் என்றெல் லாம் இப்போது கேள்விப்படுகின்ருேம்:
127

Page 84
இந்திய விடுதலைப் போரில்.
அநீதியை எதிர்ப்பது ஒவ்வொருவரினதுங் கடமை, கொடுமை செய்தவனின் மனம் மாற உண்ணுவிரத மிருப்பதுவும் சாலச் சிறந்ததொன்றே ஆளுல், சத்தி யாக்கிரகத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் எவ்வளவு மன அடக்கமாகவும் சகிப்புத்தன்மையோடும் காரியத்தைச் சாதிக்கவேண்டும். ஒருவனைப் பார்த்து நீ துரோகி மானங்கெட்டவன் காட்டிக்கொடுத்தவன் "" என் றெல்லாம் சத்தியாக்கிரகி சொல்லவே மாட்டான். உரிமைக்காகப் போராடுகின்றவன் எப்பொழுதுமே சமாதானத்தை விரும்புவான். பிடிவாதகாரருக்குச் சத்தியாக்கிரகத்தில் இடமேயில்லை. நல்ல குணமே மனி தப் பண்பின் சாராம்சம். அதுவே வீரரின் அஹிம்சையு மாகும் பிறரின் எண்ணத்தை உணர்ந்து, விட்டுக் கொடுக்கும் தன்மையுடையவனே சத்தியாக்கிரகி உண்ணுவிரதமிருந்த மறுநாளே வசைமாரி பொழிந்து நாட்டில் இனவேற்றுமையையும் துவேஷங்களையும் கிளப்புபவன் சத்தியாக்கிரகியாகான். பகைவனுடைய பலிபீடத்தில் தன் தலையைத் தயங்காது வைப்பவனே சத்தியாக்கிரகி; வகுப்புவாத அடிப்படையில் சத்தியாக்கிரகம் கூடாது:
வகுப்புவாத அடிப்படையில் சத்தியாக்கிரக இயக் கத்தை ஒருபோதும் நடத்தமுடியாது என்று 1957ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்துள்ள மகாத்மா காந்தியின் சீடரும், வார்தா கல்வித்திட்டப் பொதுக்காரியதரிசியும், வட்டுக்கோட்டையைப் பிறப் பிடமாகக் கொண்டவருமாகிய திரு. ஈ. டபிள்யூ. அரிய நாயகம் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன் றிற் கூனறிர். அதைச் சுருக்கித் தருகின்றேன்: "நீதி, அஹிம்சை ஆகிய கொள்கைகளை ஏற்று, அந்தக் கொள்கை லட்சியங்களுக்காகத் தங்களை அர்ப்பணித்த தலைவர்கள் எவரும் இந்நாட்டில் இல்லை. சத்தியாக்கிரக இயக்கமெதற்கும் வலிமையை உண்டாக்க அத்தகைய தலைவர்கள் அவசியம். இந்நாட்டிற் பலாத்காரத்தின்
128

யார் சத்தியாக்கிரகி?
சாயல் படிந்துள்ளது. பெரிய வகுப்புவாதக் கலகங்களும் ஏற்பட்டு வந்திருக்கின்றன. ஒரு வகுப்புவாத அடிப்படை யில் சத்தியாக்கிரக இயக்கமெதையும் நடத்தமுடியாது. சத்தியாக்கிரகமும், வகுப்புவாதமும் சமமாக நிலவ முடியாது; இப்போது இலங்கையில், இந்தியாவில் நடந்தது போன்ற சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மகாத்மா காந்தி ஆபிரிக்காவில் தீவிர சத்தியாக் கிரக இயக்கங்களை நடத்தியபின் இந்தியாவுக்கு வந்தார். அவருக்குச் சத்தியாக்கிரகத்தின் இ லட்சியங்களும் கொள்கைகளும் அபரிமிதமான அனுபவத்தைக் கொடுத் திருந்தன. ஆனல், இந்தியாவுக்கு வந்ததும் அவரது அரசியல் குருவான கோகலே காந்தியடிகளை அரசியல் விவகாரங்களைப்பற்றி ஒரு வருட காலத்திற்கு வாயைத் திறக்கக்கூடாதென்று கூறியதோடு காந்தியடிகள்ை இந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணஞ் செய்து மக்க ளுக்கு அவசியமான முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந் தறியுமாறு கூறினர்கள். காந்தியடிகள் ஆபிரிக்காவில் இருந்தபோது " போனக்ஸில் ' தனக்கு ஒரு ஆச்சிர மத்தை ஏற்படுத்தியிருந்தார். அதைப்போன்றே இந்தியாவிலும் சபர்மதி என்ற பெயரோடு ஒரு ஆச்சிர மத்தைக் காந்தியடிகள் திறந்தார். இந்தச் சபர்மதி ஆச் சிரமந்தான் உண்மையான தேச பக்தர்களையும் தியாகி களையும் காந்தியடிகளின் பரந்த ஞானத்தோடு உருவாக் கியது. சபர்மதி ஆச்சிரமம் ஆத்மீக அடிப்படையில் அமைந்ததாகவும், ஆத்மீக சிந்தனைகள் நிறைந்ததாகவும் இருந்தது. அங்கு நடைபெறும் சகல வேலைகளும் மேலான இலட்சியங்களுடனும் கொள்கைகளுடனும் நிலவுமாறு செய்யப்பட்டுவந்தன. இவைகளுக்கெல்லாம் காந்தி யடிகளே இயக்குவிக்கும் கருவியாக அமைந்தார். அதற்கு அவரது வாழ்க்கையே இன்று நமக்கு ஒளிவிட்டுப்
இ-9 129

Page 85
இந்திய விடுதலைப் போரில். .
பிரகாசிக்கும் ஒரு பெரும் உதாரணமாக விளங்குகிறது. காந்தியடிகள் தமக்குச் சொந்தமான சகல உடைமை களையும், குடும்பப் பந்தத்தையும் நாட்டிற்காக, நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, மக்களின் புனர் வாழ்விற்காகவும் பரிபூரண சுதந்திரத்திற்காகவும் விடுதலை இயக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அவரைப்பின்பற்றிச் சபர்மதி ஆச்சிரமத்திலுள்ள அனை வரும் விடுதலைப் போராட்டத்திற் பங்குபற்றினர்கள்
மாகாத்மாஜி தொடங்கிய விடுதலைப் போராட்டம் சத்தியம், அஹிம்சை என்ற இருபெரும் இலட்சியங்களின் அடிப்படையில்தான் தொடங்கியது. இந்தப் போராட் டத்தில் கலந்துகொள்பவர் யாராயிருந்தாலும் சத்தியம், அஹிம்சை ஆகிய பெரும் கொள்கைகளுக்குக் கட்டுப் பட்டவர்களாகவும், அந்தக் கொள்கைகளையே தமது தினசரி வாழ்க்கையில் அனுசரிப்பவர்களாகவும் இருந் தார்கள். இந்தியாவில் காந்தியடிகளால் தொடங்கப் பட்ட இந்தச் சத்தியாக்கிரகம்தான் கடைசியாக வெள்ளையர் ஆட்சியை நாட்டைவிட்டே கிளப்பி விட்டது. ஆனல், இலங்கையில் சத்தியாக்கிரக இயக்கத் திற்கு வேண்டிய அடிப்படை இலட்சியங்களையும் கொள்கைகளையும் கடைசிவரையிலும் காப்பாற்றி வழி நடாத்திச் செல்லும் துணிவுடைய தலைவர்கள் இல்லை. ஏற்கனவே இந்நாட்டில் பலாத்காரம் தலைதுாக்கியிருக் கிறது. வகுப்புவாதப் போராட்டங்கள் தலைவிரித்தாடி யிருக்கின்றன. ஒவ்வொரு பிரஜையும் தான் ஒரு இலங்கைப்பிரஜை என்ற உணர்ச்சியுடையராக இருக்க வேண்டும். சத்தியாக்கிரகம் சத்தியம், அஹிம்சை என்ற கொள்கையிலிருந்து மாறி ஒழுங்கற்றதும், ஒற்றுமை யற்றதுமான நிலையில் ஆரம்பிக்கப்படுவதாஞல் அது சத்தியாக்கிரகமாகாது சர்வதேச உலகில் வகுப்பு வாதத்திற்கும், வகுப்புவாதப் போராட்டத்திற்கும் ஆதரவு கிடையாது. A
30

பாரத மணிக்கொடி தேசமக்களின் அஞ்சலி
வாசகர்களை 1932ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல் கின்றேன்; சென்னையிற் சட்டமறுப்புப் போராட்டம் அப்போது நடைபெறுகின்றது, இம்மென்ருல் இதயம் வெடிக்கக் குத்துவர். உம்மென்ருல் சிறைக்குள் தள்ளு வர். இன்றுபோல் தேசத் தொண்டரைப் பாவிப்போர் மிகக் குறைவு. நண்பர்களாக விருந்தாலும் அடக்கு முறைக்குப் பயந்து தெரியாத வரைப்போற் போய்விடு வார்கள். நாட்டின் புகழைப் பாடிக்கொண்டிருப்ப வரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருப்பதற்கும் பயம் அப்படியிருந்தும் தங்கள் உடல், பொருள், ஆவி, புகழ் அத்தனையையும் தாய்நாட்டின் விடுதலை வேள்விக்கே அர்ப்பணஞ் செய்த மனித குலத்தைச் சேர்ந்த செம் மணிகள் அன்றும் இருக்கத்தான் செய்தார்கள் தமக் கென ஒரு சிறு தொகையையுஞ் சேமித்து வைக்காமல் அன்ருடம் வரும் பொருளைத் தேசத் தொண்டர்களுக்கு வழங்கிய வள்ளல்கள் சென்னையிலும் உளர். இந்த அபிமானமுள்ள ஒரு திருக்கூட்டத்தார் காங்கிரஸ் தொண்டர் முகாமைச் சென்னை நகரிலிருக்கும் ஒட்டேரி யென்னும் குறிச்சியில் நடாத்திக்கொண்டு வந்தார்கள். அத்தொண்டர் படையில் யானும் சேர்ந்துகொண்டேன்; ஒரு மாதமாக அம் முகாமிற் பயிற்சி. ஒரு நாள் இரவு 9 மணிக்கு முகாமின் தலைவர் திரு. எம். கே. பாண்டு ரங்கம் அவர்கள் என்னைப் பார்த்துச் சொல்லுகின்ருர்: "பஞ்சாப் படுகொலைத் தினத்தைத் தேசீய தினமாக ஒரு வாரம் கொண்டாட ஒழுங்குகள் செய்திருக்கிருேம் பொது மைதானங்கள், கட்டிடங்கள் எல்லாவற்றிலும் பொலிஸ் காவல் கடுமையாக விருக்கிறது. என்ருலும் எப்படியோ அதிகாலையில் சூளை என்னும் மயானத்தில்
13

Page 86
இந்திய விடுதலைப் போரில்.
கொடியேற்று விழா நடக்கவேண்டும். விழாவிற்குரிய தேசீய மூவர்ணக் கொடி முதலியவற்றைத் தருகின் றேன். உங்களின் தலைமையிற் பத்துத் தொண்டர்கள் கொடி வணக்கத்தை ஜோராக முடித்துவிட வேண்டும்: தாயின் மணிக்கொடி பாரீர்" என்ற பாரதியாரின் பாடலை நன்முகப் பாடவேண்டும். கொடியைப் பறக்க விடுவதற்குச் சென்னைச் சர்வாதிகாரி டாக்டர் நட ராஜன் அவர்கள் அங்கு வந்து சேருவார்கள்" என்று கூறித் தலைவர் சென்றுவிட்டார்.
அணிவகுத்து நிற்கின்ருேம்:
இந்த இயக்கத்திற்கு யான் புதியவன். எனக்கு இரவு முழுவதும் நித்திரை வரவில்லை. எப்படியோ மனத்தைத் தேற்றிக்கொண்டேன். ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு முகாமிலிருந்து சூளை மயானத்தை அடைந்தோம். நாலு ஐந்து பிணங்கள் வரிசையாக எரிந்துகொண்டிருக்கின்றன. கொடிக் கம்பத்தை நாட்டி ஆயத்தமாக இருந்தோம். சரியாகக் காலை 6 மணிக்கு டாக்டர் நடராஜன் அவர்கள் வந்தார்கள். தொண்டர்களாகிய நாம் கொடிக்கம்பத்தை வலம் வந்து, அணிவகுத்து நிற்கின்ருேம். தேசீயக் கொடி யைப் பறக்கவிட்டு, அதற்கு மரியாதை செய்து நிற் கின்ருர் சர்வாதிகாரி. "தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்" என்ற Lung Sunrfair un Lä umair un gauayL6är, Fifants காரி உரத்த குரலில் 'வந்தே மாதரம் 1 மகாத்மா காந்திக்கு ஜே !" என்று முழங்கினர். இதன் பின்னர், தேசீயக் கொடியைத் தாங்கிக்கொண்டு சர்வாதிகாரி முன்னே செல்ல, தொண்டர்களாகிய நாம் அவரைத் தொடர்ந்து, ஊர்வலமாக, பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டு, சென்னை ஜோர்ஜ் டவுணை நோக்கி நடக்கின்ருேம். திடீரென்று ஒரு பஸ் எங்களை வழி
132

பாரத மணிக்கொடி
மறித்து நின்றது. படபடவென்று பஸ்ஸிலிருந்து குண்டா ந் த டி யுடன் பொலிஸார் குதித்தார்கள் சர்வாதிகாரியை நோக்கிப் பொலிஸ் இன் ஸ்பெக்டர் சொல்லுகிருர் 'சார் ! உங்களை அரஸ்ட் செய்திருக் கிறேன். நீங்கள் பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள். பஸ் தளபதியை ஏற்றிக்கொண்டு போய்விட்டது. குண்டாந் தடியுடன் தோன்றிய அந்தக் கனவான்கள் எங்களுக்கு நல்ல கொழுக்கட்டை தந்தார்கள். சில தொண்டர்களை ரோட்டிலே இழுத்தார்கள். இப்படி எங்களைச் சேர விடாது பிரித்துவிட்டார்கள். பல கோணத்திலிருந்தும் மீண்டும் எமது முகாமிற்கு வந்து சேர்ந்தோம். பலருக்கு இரத்தக் காயங்கள். சில நாட்கள் ஒய்வெடுத்துக் கொண் டோம். இப்படி நாங்கள் பெற்ற அனுபவங்கள் பல.
தேசீயக் கோடியின் வரலாறு:
உலகத்திற் சுதந்திரமாய் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் தேசியக்கொடி உயரப் பறப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின் ருர்கள். அதற்கு அஞ்சலி செய்கிருர்கள் அப்படித் தங்கள் தேசியகீதம் பாடும் போது மரியாதையாக எழுந்து நிற்கின்றர்கள். சுதந் திரமாயுள்ளது எதுவோ, உயர்ந்ததொரு இலட்சியத் தைக் கைக்கொண்டுளது எதுவோ, நாகரிகச் செழுமை யுடன் கூடியிருப்பது எதுவோ, அதுதான் உண்மையான நாடு. கொடியானது சுதந்திரத்தின் அடையாளமாக மட்டுமில்லை; அந்தச் சுதந்திரத்தை அடைவதற்கான வழிகாட்டியாகவும் இருக்கிறது. தங்களை அடக்கி ஒடுக்கி வந்த சக்திகளோடு போராடிய காலத்தில், கொடியையே முன்னிலைப்படுத்திப் போராடி வந்திருக் கிருர்கள். இந்தியாவிற்கென்று சொற்தமாக ஒரு தேசியக்கொடி இருக்கவேண்டுமென்ற எண்ணம் சுய ஆட்சிக் கிளர்ச்சியோடு உதயமானது. வங்காளப் பிரிவினை காலத்தில் இந்தக் கிளர்ச்சி வலுப்பெற்றது.
133

Page 87
இந்திய விடுதலைப் போரில்.
இந்தச் சுயாட்சிக் கிளர்ச்சியை உரமிட்டு வளர்த்த வர்கள் பலர் இவர்களில் லோகமான்ய திலகர், அன்னி பெஸன்ட் அம்மையார், லாலா லஜபதிராய், விபினச் சந்திரபாலர், தமிழ்நாட்டிலே சுப்பிரமணிய பாரதி யார், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணியசிவம், வ. வெ. சு. ஐயர் ஆகியவர்கள். இந்தியாவில் பாரததேவியின் மணிக்கொடி வணக்கம் பாடிய முதற்கவி பாரதியாரே.
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் ! ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல்'வந்தே மாதரம்” என்றே பாங்கி னெழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
அடக்குமுறை, இடிபுயல் தடியடி எதற்கு மஞ்சாது நமது மணிக்கொடி கம்பீரமாக வானளாவிப் பறக்கிறது.
தாயின் மணிக்கொடியைச் சூழ்ந்து நிற்கும் காட்சி யைப் பாரதியார் காண்கின்ருர். செந்தமிழர், சிந்தை துணிந்த தெலுங்கர், கன்னடர், வீரமராட்டர், சேரன் தன் வீரர், பொற்புடையார், இந்துஸ்தானத்து மல்லர், கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர், பஞ்சநதிப் பிறந்தோர், துஞ்சும் பொழுதிலும் தாயின் தொண்டினை நினைத்திடும் வங்காளிகள், இவர்கள் அத்தனை பேர்களும் சேர்ந்து அம் மணிக்கொடியைத் தன்னுயிர் ஈந்தும் காப்பாற்றி நிற்கின்றர்கள். பாஞ்சாலசிங்கம் லாலா லஜபதிராய் நாடுகடத்தப்பட்டபோது சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பாரதியார் பாடிக் கண்ணிர் விட்டார்கள் திலகர் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைபூண்ட காலம் அது. திலகரை வீராவேசத்துடன் Gun blóG9ff கவியரசராகிய பாரதி. 1921ஆம் ஆண்டு காந்தி
134

பாரத மணிக்கொடி
மகாத்மா இந்திய அரசியலில் முக்கிய பங்கெடுக்கத் தொடங்கினர். அன்றுதொட்டு இந்தியாவின் அரசியற் போக்கு வேறு வழியிற் திரும்பியது. இந்தத் திருப்பம் இந்திய கலாசாரத்தைப் பின்பற்றி, உடை, நடை பேச்சு, கையாளும் முறை எல்லாவற்றிலும் இந்தியர்க ளாகவே நினைக்கவும், வாழவும் முற்பட்டார்கள்: வீராவேசக் கனலை எழுப்பிய பாரதியார் காந்தியடி களைப் பார்த்ததும்,
புவிக்குள்ளே முதன்மை பெற்ருய் கொடிய நாகபாசத்தை மாற்ற மூலிகை கொண்டு வந்தாய், பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மாநீ வாழ்க! என்று பொருந்தக் கூறிவிட்டார்.
பாரத இரத்தினம் :
பாரதி கண்ட பாரத இரத்தினம் காந்தியடிகள். காந்தியடிகள் நடத்திய அஹிம்சைப் போராட்டங்கள் பல. இந்தப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே காந்தியடிகள் தேசியக் கொடியின் அவசியத்தை நன்கு உணர்ந்தார்கள். அவர் எழுதுகிருர் கொடியானது எல்லா நாடுகளுக்கும் இன்றியமையாதது. இலட்சக் கணக்கான பேரி அதற்காக உயிர் துறந்திருக்கின்றர்கள். ஒரு விக்கிரகத்தை வழிபடுவது போலத்தான் அது என் பதில் சந்தேகமில்லை. அதனை அழிப்பது மிகவும் பாவ மாகும். ஏனென்ருல், ஒரு கொடியானது ஓர் இலட்சி யத்தைப் பிரதிபலித்துக் காட்டுகிறது. காந்தி மகாத் மாவின் முயற்சியின் பேரில் மூவர்ணக்கொடி தயாரிக்கப் பட்டிருந்தது. நாகபுரி கொடிச் சத்தியாக்கிரகத்தின் விக்ாவாகத் தேசியக்கொடிக்கு அபரிமிதமான செல்
135

Page 88
இந்திய விடுதலைப் போரில்.
வாக்கு உண்டாயிற்று. கொடியில் அமைந்திருந்த கைராட்டினத்துக்கு அவ்வளவு மதிப்பு: திருப்பூர் குமரன்
காத்த கொடியின் மகிமையே மகிமை. கடைசியாக 1947ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அரசியல் நிர்ணய சபை யில் நேருஜி தாயின் மணிக்கொடியின் தத்துவத்தை விளக்கினர். ஒன்றன் கீழ் ஒன்ருக வரிசைக்கிரமத்தில் கசாயம், வெள்ளை, பச்சை நிறங்கள் அமைந்துள்ளன. வெண் நிறத்தில் நீலநிறச் சக்கரம். கசாய நிறம் தியா னத்தையும், தீரத்தையும் குறிக்கிறது வெள்ளை நிறம் சத்தியம், அமைதி என்பனவற்றையும், பச்சை நிறம் சிரத்தை, எளியரைக் காத்தல் என்ற கொள்கையையும் காட்டுகிறது நீலநிற அசோகச் சக்கரம் அசோகச் சக்கரவர்த்தியின் தர்மத்தைக் காட்டும் சின்னமாக விளங்குகின்றது. நேருஜி கொடியைக் குறித்துச் சமர்ப் பித்த தீர்மானத்தையும், கொடியையும் சபைமுன் சமர்ப்பித்தார். அதைக் கண்ட சட்டசபை அங்கத் தவர்கள் அனைவரும் எழுந்து நின்று தங்கள் முதல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சாதி, சமயம், மொழி, இனம், நாடு என்ற எல்லைக் குள் மட்டும் நிற்காமல் உலகத்துள்ள மக்கள் யாவரும் ஒரு குடும்பத்தினர் போல வாழவேண்டுமென்று. உயர்ந்த, விரிவான அறிவுரைகளைக் கவிச்சுடராகத் தெற்கே வாரி இறைத்தார் பாரதியார். வடக்கே அறிவுக்களஞ்சியமாகத் தனது இனிய சொற்களால் அற்புதமான கருத்துக்களை வெளிப்படுத்திப் பாரத மக்களுக்கு விடுதலை வாங்கித்தந்த தாத்தா நம் காந்தி யடிகள் பாரதியும் காந்தியும் பாரதத்தின் இரு கண்கள். இப் பெரியார்களின் ஆத்ம சக்தியினல் இன்று பாரதம் உலகத்து நாடுகளுடன் சமத்துவமாக முன் னேறிச் செல்கிறது, புரட்சிகரமான மாறுதல்கள் அங்கே.
136

பாரத மணிக்கொடி
முப்பதுமைல் தூரத்திலிருக்கும் இலங்கையில் பிற் போக்குச் சக்திகள் அதிகரித்துவிட்டன. சாதி, மதம், இனம், நிறம், மொழி இவற்றின் பெயரால் மக்களைப் பிரித்து வைக்கும் ஏமாற்று வித்தைகள் மலிந்து கொண்டே போகின்றன. இனவெறிப் போராட்டம், தாய்மொழிப் போராட்டம் என்ற கூச்சல், இந்த அழகில் காந்தியடிகள் பெயரை இழுத்துச் சத்தியத்தை நிலைநாட்டப்போகும் வாய்ப்பந்தல்,
தகிடுதத்தங்கள்:
காந்திமகாத்மாவின் ஜெயந்தி விழாவில் வகுப்பு வாதப் பேச்சு பாரதி தினத்தில் தமிழனுக்குத் தனிக் கொடி வேண்டுமென்ற தகிடுதத்தங்கள் இப்படி எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவது? "கெட்டிக் காரன் புளுகு எட்டு நாள் வரைக்கும்" என்று சொல்வார் களே. காந்தியடிகள்மீது தயவுசெய்து கைவைக்க வேண்டாம். இந்து முஸ்லிம் ஒற்றுமையை எப்படி வளர்க்கமுடியும் என்று பிரபல தேசிய முஸ்லிம் ஜஞப் முகம்மது பேக் கேட்டதற்குக் காந்தியடிகள் கூறுகிருர்: "நீங்கள் உண்மையாக முஸ்லிம் மக்களுக்கு உழைக்க, வேண்டுமென்று கருதினுல், வகுப்புவாத ஸ்தாபனங்களி லிருந்து தயவுசெய்து விலகிக்கொள்ளுங்கள் இதுதான் எனது உபதேசம்." இந்த அரிய மொழிகளை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றர்கள். அடிகளின் கருத்துக்கு நேர்மாருக வகுப்புவாத ஸ்தாபனங்களை வளர்த்து வருபவர்கள் எவர்களோ, அவர்கள் அண்ணலின் பெய ரைக் காட்டி எடுத்ததற்கெல்லாம் சத்தியாக்கிரகம் சாத் வீகப் போராட்டம் என்றெல்லாம் பேசுவதற்கே உரிமை உடையவர்கள் அல்லர் :
யாழ்ப்பாணத்தில் தவஞானி ஒருவர் வாழ்கின்ருர்: அம்மகானே ஒரு முறை சந்தித்தேன். அவர் சொன்னர்,
137

Page 89
இந்திய விடுதலைப் Gunrido... on
'தம்பி! உலகமென்பது பெரிய யாத்திரைத் தலம் (The world is sacred and secret). assiggir Got Luprld prés Suth இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியிலே புத்தபகவான் தோன்றினர். இவ்வுலகிலேயே பயிற்சி பெற்றுக் கொண்டு போய்விட்டார். யேசு பெருமானும் அவ் வாறே. காந்தியடிகளும் அவதரித்தார்கள். அவரும் பயிற்சி பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். தம்பி காந்தியடிகள் சத்தியாக்கிரகம் செய்தார். அன்ஞரின் உள்ளத்திலிருந்து உதயமான சோதியின் வடிவம்தான் சத்தியாக்கிரகம். சத்தியாக்கிரகத்தின் பீடத்திலே தவவலி பெற்றதே சத்தியாக்கிரகம். காந்தியடிகள் சத்தியாக்கிரகம் செய்தாரென்று இங்குள்ளவர்களும் செய்யப் பார்க்கிருர்கள். என்ன ஆச்சரியம்!" என்ருர் அப் பெரியார்.
திரு. வி. க. கூற்று :
தமிழர் பண்பாட்டின் வழிகாட்டியும், முதுபெரும் புலவரும், ஒழுக்கசீலரும், காந்தீய முனிவருமாகிய திருடு வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களிடம் ஒருவர் கேட்கின்றர்: "ஐயா தாங்கள் எந்தக்குடி என்று? அடக்க மான வசனத்தில் காந்தீய முனிவர் பதில் தருகின்ருர், "அப்பா! பாரத நாட்டிற்குக் குருநாதன் எங்கள் காந்தி யடிகள். அடிகள் சொன்னதைத்தான் நானும் சொல்ல முடியும். நான், முதல் உலகப்பிரசை இரண்டாவது இந்தியன் மூன்ருவதுதான் தமிழன். தமிழன் சிறகு படைத்தவன்; உலகமெல்லாம் பறந்து செந்நெறியை நன்னெறியைப் பரப்புவதற்கு ஆற்றல் வாய்ந்தவன், வேலி போடுவது தமிழன் பண்பாடல்ல அப்பா ! நிற்க, சென்னையிலே 1952ஆம் ஆண்டு நடந்த ஐந்தாவது தமிழ் விழாவில் தலைமை வகித்துப் பேசிய இக் காந்தீய முனிவர் கூறுகின்ருர் : "முதல் உலகம் இரண்டாவது இந்தியா; மூன்ருவது தமிழன். இப்படிச் சொன்னல் உற்சாகம்
138

Lintus LD60shdioantig
எழாது. உலகம் உடல் இந்தியா உள்ளம் தமிழ் நாடு உயிர் போன்றதென்ருல் ஆர்வம் எழும், உயிர் வாழ உடல் வாழ வேண்டாமா? உள்ளம் வாழ வேண் டாமா? உலகம், பாரதம், தமிழ் இப்பண்பாடு விளங்கி வளர்ந்தோங்க வேண்டுகின்றேன்.""
ஆகவே தயவுகூர்ந்து காந்தியடிகளை விட்டு விடுங்கள் - என்று யானும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின் றேன். பாரதியாரை மொழிக் கிளர்ச்சியிற் சேர்ப்பது தமிழுக்கு இழுக்குத் தேடுவதாகும். பாரதியார் தமிழ ருக்கு ஒரு கொடி, தெலுங்கருக்கு இன்னுெரு கொடி, மராட்டியருக்கு வேருெரு கொடி வேண்டுமென்று பாட வில்லை. அவர் வகுத்த கொடி 'வந்தேமாதரம் !" என்ற தாரக மந்திரத்தோ டிணைந்தது. தேசபக்திக் கவிஞன், தெய்வபக்திக் கவிஞன், மொழிப்பக்திக் கவிஞன் என்று தனித்தனியாகப் பாரதியாரைத் துண்டாக்கிப் பார்க்க வேண்டாமென்று கைகூப்பிக் கேட்கின்றேன். பாரதி கண்ட பாரத மணிக்கொடியை வணங்கி நிற்போருக்கு ஒருபோதும் அச்சமில்லை சாத்வீகப் போராட்டம். தெரிந்தோருக்கு ஆத்திரமில்லை கோபமில்லை தாப மில்லை. யாண்டும் பரவுக பாரதி கண்ட சமதர்ம சமு தாயம் வந்தே மாதரம் !
139

Page 90
மாவீரர் மெளலானு அபுல்கலாம் ஆஸாத்
சுதந்திரச் சிற்பிகள் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய முன்னணித் தலைவர்களில் மெளலானு அபுல் கலாம் ஆளாத் ஒரு பெரிய புள்ளி. இந்திய விடுதலே இயக்கத்திற் காந்தியடிகளுக்கு உறுதுணேயாக நின்று அவர் அளித்த ஆதரவு மகத்தானது. 1920ஆம் ஆண்டு முதல் முதலாக டில்லியிற் காந்திஜியைச் சந்தித்தார். அவ்வாண்டிலேதான் மெளலானு ஆஸாத்தின் தலைமை யில் கல்கத்தாவில் நடைபெற்ற கிலாபத் மகாநாட்டிற் காந்திஜியின் ஒத்துழையாமைத் திட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டனர். 1930ஆம் ஆண்டு உப்புச் சத்தியாக் கிரகம் நடைபெற்ற காலத்தில் காந்திஜி ஒர் இடத்தில் தமது கருத்துக்களேத் தெரிவித்துத் தம்மை ஏகாதி பத்திய எதிர்ப்பாளர் என்று பிரகடனம் செய்தார்கள். இதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னரே மெளலாணு ஆளாத் அவர்கள் அசல் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகிவிட் டார். ஆஸாத் ஆதியில் பல்ாத்காரத்தில் நம்பிக்கை உள்ளவராதலால், முதல் உலக யுத்த காலத்தில் 1915 - 1919 வரை நான்கு ஆண்டுகளுக்கு இவரை அரசாங் கத்தார் காவலில் வைத்திருந்தனர்,
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் தொடங் கியதும் அதில் தீவிர பங்குகொண்டார். பல சிறை களே ஆளப்ாத் அவர்கள் பார்த்திருக்கிருர்கள். இந்துக் கள், முஸ்லிம்கள் என்று பிரிவினைச் சூழ்ச்சிகளிற் சிக்கிக் கொண்டு வெள்ளேயர்களுக்குத் துதிபாடும் முஸ்லிம் கஃளக் கண்டு ஆஸாத் அவர்கள் வருந்தினுர்கள். அஞ்சா நெஞ்சத்தோடு அதை எதிர்த்துப் பேச்சுவன்மையாலும், எழுத்துவன்மையாலும், செயலாலும் பிரசாரம் செய் தார். அதற்காகப் பாஞ்சாலம், ஐக்கிய மாகாணம்,
140
 

மெளலான அபுல்கலாம் ஆஸாத் அவர்கள்

Page 91

மாவீரர் மெளலானு அபுல்கலாம் ஆஸாத்
சென்னை போன்ற மாகாணங்களுள் காலெடுத்து வைக்கக்கூடாதென்று தடைஉத்தரவு போட்டதுமன்றி வங்காள மாகாணத்தை விட்டு வெளியேற்றி றஞ்சி என்ற இடத்திற் கைதியாக்கினர் அரசினர். இவ்வாறு பல சிறைகளை ஆஸாத் அவர்கள் பார்த்திருக்கிருர்கள். கடைசியாக 1942ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளி யேறு' என்ற போராட்ட காலத்தில் ஆஸாத் அவர்கள் சிறைப்பட்டார்கள். அப்பொழுது அன்னரின் மனைவி யார் காலமானர். மனைவியின் சடலத்தைப் பார்க்கப் போவதாஞல் நிபந்தனையின்பேரில் போய்வர ஆஸாத் திற்கு, அதிகாரிகள் அனுமதி தருவதாகக் கூறினர்கள் நிபந்தனைக்குப் பணிந்துபோய் மனைவியின் சடலத்தைப் பார்க்க ஆஸாத் மறுத்துவிட்டார்.
போராட்ட காலங்களில் காங்கிரசின் தலைவராக இருந்தார். இப்படித் தலைமை வகிக்கையில் பூரீ ஜின்ன அவர்களுக்கு இவர் கொடுத்த தந்திக்கு அவர், 'காங் கிரஸின் கையாள் " என இவரை ஏளனம் செய்தார். நாட்டுப்பற்றும் இறைப்பணியுந்தான் ஆஸாத்தின் இரு கண்கள். மெக்காவிற் பிறந்தவர். திருக் குர்ஆனை நன்ருகக் கற்றிருந்தவர். கெய்ருேவில் உயர்தரக் கல்வி பயின்று மனம் விரிவடைந்தவர். இஸ்லாமிய சம்பிர தாயங்களிற் சிறந்த ஈடுபாடு உள்ளவர். அரபு, பார் சீகம், வங்காளி, உருது, ஆங்கிலம் ஆகிய பல மொழி களில் மெளலானுவுக்கு நல்ல புலமை உண்டு. பல வேறு இலக்கியங்களின் நல்லறிவால் பண்பட்ட அவரது மனம் குறுகிய அபிமானங்களை வெறுத்தது. ஆகையினுற்ருன் மகாத்மா காந்தி, நேருஜி போன்ற பேரறிஞர்களின் மதிப்பையும் அவர் பெற்றிருந்தார். முஸ்லிம் பெரும் பான்மைத் தலைவர்களுடன் அரசியற் கருத்து வேற்றுமை கண்டபோதும், முஸ்லிம் பெருமக்களின் கடும் கோபத் துக்கு இலக்கானபோதும் மலைபோன்ற எதிர்ப்பை அவர் சமாளித்தார். அப்போதெல்லாம் பொறுமையின் சிகர மாக விளங்கினரே அன்றி விரோதிகளைப்பற்றி ஒரு வார்த்தையேனும் கடுமையாகப் பேசியதில்லை.
14

Page 92
இந்திய விடுதலைப் போரில்.
அளவற்ற தன்னம்பிக்கை படைத்தவர் மெளலான ஆஸாத் , மனிதருக்குள் மன்னராக விளங்கிஞர். ஆனல் ஏதுமற்ற பக்கிரிபோல் வாழ்ந்தார். சுயப்பிரசாரத்தை அவர்போல் வெறுத்தவர்கள் வேறு யாருமில்லை. ஏழை எளிய மக்களிடம் அவர் மிகுந்த மதிப்பும் அன்பும் வைத் திருந்தார். உணவுப் பொருட்களில் கள்ள வர்த்தகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய பணக்காரர் ஒரு சமயம், தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகராக நிற்க விரும்பினர். அவருக்கு அனுமதி அளிக்க மெளலான ஆஸாத் கண்டிப்பாக மறுத்துவிட்டார். "வேறு எந்தக் குற்றத்தையும் பாவத்தையும் வேண்டுமானுல் நான் மன்னித்துவிடுவேன். ஆனல் ஏழைகளின் துன்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கொள்ளை லாபம் அடிப்பதை மட்டும் மன்னிக்க முடியாது ' என்று அவர் சொன்னர். சாதாரண மக்களிடம் அவர் வைத்திருந்த அன்பிற்கு மற்றேர் உதாரணம் கூறலாம் 1918இல் ஒருநாள் அவர் மசூதியில் பிரார்த்தனை நடத்திவிட்டு வீடு திரும்பும் போது யாரோ ஒருவர் அவரைத் தொடர்ந்து வந்தார். அவர் வரலாற்றை ஆஸாத் விசாரித்தார் திருக் குர் ஆனைப்பற்றி ஆஸாத்திடம் விளக்கம் கேட்பதற்காகத் தாம் எல்லைப்புறத்திலிருந்து நடந்து வந்திருப்பதாக அவர் சொன்ஞர். அவரை ஆஸாத் சில தினங்கள் தம்முடனேயே வைத்திருந்து அவர் கேட்ட விஷயங்களை உபதேசித்தார். வந்தவர் பிறகு ஆஸாத்திடம் சொல் லிக்கொள்ளாமல் போய்விட்டார். போகும்போது சொன்னல் ஆஸாத் பணம் கொடுக்கப் போகிருரே என்ற கவலை அவருக்கு இந்தச் சம்பவம் நடந்து 13 வருடங்களுக்குப் பின்னல் திருக் குர்ஆனுக்கு ஆஸாத் வியாக்கியானம் எழுதினர். தம்மிடம் பாடம்கேட்ட, அந்தப் பெயர் தெரியாத நபருக்கு அதைச் சமர்ப்பணம் செய்தார்கள்.
142

மாவீரர் மெளலான அபுல்கலாம் ஆஸ்ாத்
பாரதமக்களிடையே அன்பையும், நேசத்தையும், தேசபக்தியையும் ஒருங்கே வளர்த்து விடுதலைக்கு எல் லோரும் சேர்ந்து உழைக்கச் செய்வதற்கு அவர் தம் மைப் பணித்துக்கொண்டார். அந்த அறப்பாதையில் மக்களை வழிநடத்திச் சென்ற கல்விக் களஞ்சியம், நந்தா விளக்கு மாவீரர் மெளலான அபுல்கலாம் ஆஸாத் 22-2-58இல் வாழ்க்கை முடிவெய்தியது. தான் கண் டதை விடச் சிறந்த நிலைக்குச் சமுதாயம் உயரச் செய்வ தற்குத் துணைபுரிபவர் மகாபுருஷர்கள். அம்மகாபுருஷரீ இறப்பதற்குச் சற்றுமுன்னர் தமக்கு ஊசிபோட்ட டாக்டரைப் பார்த்து "இனி அல்லாவிடம் விட்டு விடுங்கள் " என்ருர்கள். ஆஸாத் அவர்களின் உயிர் பிரிந்த பின்னர் சவ அடக்கத் தொழுகையைச் செய்து வைத்து ஜமியத் உல்-உலேமாத் தலைவர் மெளலான ஆமத்சயத் அவர்கள் கடைசியாகக்கூறிய வார்த்தைகள்: "அஸ்-ஸ்லாம்-ஆலே-கும்" (போய்வாருங்கள்), நாமும் அவ்வாறே இன்றும் அம் மாவீரரை நினைத்துக் கூறுகின் ருேம் "போய்வாருங்கள்" என்று. பழைய யுகம் புதிய யுகம் இரண்டின் நற்பண்புகளும் கலந்த ஒரு மகா புருஷராய் மெளலான விளங்கினர்கள். அவரது உயர்ந்த கருத்துக்கள் எக்காலத்துக்கும் உரியன.
இந்த இடத்தில் ஒன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. மெளலானவைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் பிரபல தேசிய முஸ்லிமான பூரீ விரு எம். உபயத்துல்லா அவர்கள், சிறுவயதிலிருந்தே தீவிர காங்கிரஸ்காரரா யிருந்து பலமுறை சிறைசென்றவர். பெரிய தியாகங்கள் புரிந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக விருந்தவர். நாகபட்டினத்தில் சத்தியாக்கிரகம் செய்வ தற்குக் காந்திமகாத்மாவிடமிருந்து எனக்கு அனுமதி பெற்றுத்தந்தவர். இப்படியெல்லாம் பெருமைபெற்ற பூரீ உபயத்துல்லா அவர்கள் இறைவனடி சேர்ந்த நாளும் 22-2-58 திகதியே: அன்னவரையும் நினைத்து ஆண்டவ னைப் பிரார்த்திக்கின்றேன்.
43

Page 93
தியாகிகள் மகாநாட்டில்
ஈழத்துப் பிரதிநிதி
அகில இந்திய விடுதலைப் போராட்டத்திற் கலந்து அளவிடற்கரிய இன்னல்களுக்குட்பட்டு, தமது தியாகத் தினுல் விடுதலை இயக்கத்துக்கு வீறும் வெற்றியும் பெற் றுத்தந்த தியாகிகள் மகாநாடு கோயம்புத்தூரில் காங் கிரஸ் தியாகிகள் சங்கக் காரியதரிசி திரு. ஜி. பி. வேலன் தலைமையில் 20-3-66இல் நடைபெற்றது. மகாநாட்டுக் குழுவினரின் அழைப்பை ஏற்று ஈழத்திலிருந்து சென்று கலந்துகொண்டவர் திரு. கோ. இராஜகோபால் ஆவர்.
ஈழத்து இராஜகோபால் 1932ஆம் ஆண்டிலேயே அகிம்சாமூர்த்தி காந்திஜியின் ஆணைப்படி நடந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டவர். 1941ஆம் ஆண்டில் காந்திஜியின் கட்டளைப் பிரகாரம் தனிப்பட்ட யுத்த எதிர்ப்பியக்கத்தில் பங்குகொண்டதன் காரண மாகச் சிறைசென்றிருக்கிருர். 1942இல் இந்தியாவை விட்டு "வெள்ளையனே வெளியேறு " என்ற இயக்கத்தில் ஈடுபட்டதஞல் இந்திய அரசாங்கத்தினுல் கைதுசெய்யப் பட்டுத் தண்டனை அடைந்து செக்கிழுத்தார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்டு மொத்தம் நாலு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற தியாகிகள் மகா நாட்டில் ஈழத்திலிருந்து தனியொருவராகக் கலந்து கொண்ட இராஜகோபாலின் தியாகச் செயல்களைத் தலைவர் சவிஸ்தாரமாகச் சபையினருக்கு எடுத்துக் கூறிப் பாராட்டியதோடு, "அகில இந்திய காங்கிரஸ் அரசியல் தியாகி" என்ற சான்றிதழ் ஒன்றையும் வ்ழங் கிஞர். இச்சான்றிதழில் அகில இந்திய காங்கிரஸ்
144

தியாகிகள் மகாநாட்டில்.பிரதிநிதி
தலைவர் திரு. காமராஜர் கைச்சாத்திட்டுள்ளார். மகா நாட்டின் பின்னர் திரு.இராஜகோபால் மகாநாட்டுக் குழுவினரால் கோயம்புத்தூர் சிறைச்சாலைக்கு அழைத் துச் செல்லப்பட்டார். அங்கே கப்பலோட்டிய தமிழன் பாபு சிதம்பரம்பிள்ளையவர்கள் தண்டனைக் காலத்தில் துன்பப்பட்டிழுத்த செக்குப் பார்வைக்கு வைக்கப்பட் டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் மத்தியில் இந்திய விடுதலை இயக்கத் தியாகிகள் பற்றிய சொற்பொழி வொன்றையும் திரு இராஜகோபால் நிகழ்த்தினர்.
ஊர் திரும்பும் மார்க்கத்தில் வேதாரணியத்தில் சர்தார் வேதரத்தினம் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட கஸ்தூரிபா குருகுலத்தையும் தரிசித்து, அங்கும் தியாகி கள் பற்றிப் பேசினர். திரு. இராஜகோபால் திருக்கோன மலையைச் சேர்ந்த உப்புவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவயது முதற்கொண்டே காந்திக் கொள்கைகளில் பற்றுக்கொண்ட இவர் பல போராட் டங்களில் கலந்து கடமைசெய்தவர். இன்றைக்கும் இவர் மேனியைக் காந்தியத்தைக் காட்டும் கதராடை களே அணிசெய்கின்றன. இலங்கையில் பால் விநியோக நிலையங்களின் மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இப்பெரியார் தற்போது மட்டக்களப்பில் வசித்துவருகிருர். அருள்திரு. விபுலானந்த அடிகளின் அன்புக்குப் பாத்திரமான மாளுக்கர்களில் ஒருவரான திரு. இராஜகோபால் திருக்கோணமலை இந்துக் கல்லூரி யின் பழைய மாணவர் ஆவர்.
“FlppnrG ''' - 29-4-1966
- 10 145

Page 94
மட்டக்களப்பில் பாராட்டு விழா
* பாரதியார் தன் பாட்டுத் திறனுல் தமிழ்நாட் டைத் தட்டியெழுப்பினர். ஆனல் இன்று நம்முன்னே ஒரு பாரதியே தோன்றியுள்ளார். இவர் பாரதியாரின் பாடல்களைப் பாடும்போது நம்முன் பாரதியாரே தோன்றுவதைப்போல் நாம் உணருகின்ருேம். மகாத்மா வுடன் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சிறைசென்ற இவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவரி திரு. காமராஜ் ' தியாகி " எனப் பட்டம் சூட்டி நற் சாட்சிப்பத்திரம் வழங்கியது ஈழத்து மக்களுக்கெல் லாம் பேருவகை யூட்டுகின்றது."
இவ்வாறு சுவாமி ஜீவானந்தா அருள் நெறிக் கழகத் தினரால் நடாத்தப்பெற்ற பாரதிவிழாவில் தலைமை தாங்கி, தியாகி கோ. இராஜகோபாலைப் பாராட்டிப் Gusrønsuld Spillul-trff.
அருள்நெறிக் கூட்டத் தலைவர் பண்டிதர் செ. பூபால் பிள்ளை பாராட்டுப் பத்திரம் ஒன்றைத் தியாகிக்குப் பாடிக் கொடுத்தார். விழாவில் திருமதி கமலபூசணி, மெளலவி செய்யது அகமது முத்துவாப்பா ஆலிம், சிவா னந்த வித்தியாலய அதிபர் திரு. கணபதிப்பிள்ளை ஆகி யோரும் பேசினர்.
இறுதியில் தியாகி இராஜகோபால் நன்றி தெரி வித்துப் பேசுகையில், "எனது முதற்குரு விபுலானந்த அடிகள். அரசியற்குரு மகாத்மா காந்தி. பாரதியாரே என்னைச் செயலில் ஊக்கியவர் " எனக் குறிப்பிட்டார்;
சங்கீதபூஷணம் திரு. இராஜ"வின் இசைக்கச்சேரி
யும் நடைபெற்றது.
(16-9-1986 'வீரகேசரி’யில் பார்க்கவும்]
46

காந்திச் சந்நியாசி நம்மைக் காக்கும் நல்ல சுதேசி
வழக்கம்போல் காலையில் சென்னை வானெலியைக் கேட்பதற்குக் குமிழியைத் திருகினேன், அன்று காந்தி அஞ்சலி தமிழில் நடந்தது. பஜனையை அடுத்து பகவத் கீதை, பைபிள், குர் - ஆன் முதலிய நூல்களில் இருந்து சில கீதங்கள் இசைக்கப்பட்டன. பின் காந்தியடிகள் பல சந்தர்ப்பங்களில் கூறிய மணிமொழிகள் எடுத்துச் சொல்லப்பட்டன.
இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பல மொழிகளில் காந்தி அஞ்சலி இந்திய வானெலிகளில் ஒலிபரப்பப்படுகிறது. காந்திஜியின் பொன்மொழிகள், உயர்ந்த கருத்துக்கள் என்ற பலவற்றைக் கோடானு கோடி மக்கள் உலகம் முழுவதும் கேட்டுக்கொண் டிருக்கிருர்கள்.
காந்தி அடிகள் நீண்டகாலம் தென்னபிரிக்காவில் தங்கிப் பின்னர் தாய்நாடாகிய இந்தியா திரும்பிய போது, அவரை வரவேற்று நன்றி தெரிவிக்கக் கூடிய கூட்டங்கள் பல. அக்கூட்டங்களில் பெரிதும் தலைவர்கள் நாவில் ஆங்கிலந்தான். வரவேற்புரைகளும் பிறவும் ஆங்கில மயமாக இருந்தன. நீண்ட நாட்கள் வேறு நாட்டில் வாழ்ந்து திரும்பிய காந்தியடிகள், தாய் மொழியிலேயே விடையளித்தார். முதன்முதல் நிகழ்ந்த வரவேற்பில் ஆங்கிலத்தில் பேசினர்கள். இதைக் காந்திஜி மறுத்துத் தன் தாய்மொழியாகிய குஜராத்தி மொழியில் நன்றி கூறினர்கள்.
தமிழ்நாட்டில் மாயவரம் என்னும் நகருக்குக் காந்தியடிகள் முதன்முதல் எழுந்தருளியபோது, அவ ருக்கு அளிக்கப்பெற்ற நன்றி தெரிவிக்கும் அறிக்கை பற்றித் தமது விடையில், ' வரவேற்பு ஆங்கில
147

Page 95
இந்திய விடுதலைப் போரில். e O 9
மொழியில் பொறிக்கப்பட்டு இருத்தல் காண்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸில் சுதேசித் தீர்மானம் நிறை வேறி இருக்கிறது. நீங்கள் சுதேசிகள் என்று கருதிக் கொண்டு இவ்வறிக்கையை ஆங்கில மொழியில் அச்சிட் டதினுல் நான் சுதேசியல்லன். ஆங்கிலமொழிக்கு மாருக ஒன்றும் யான் சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் நாட்டு மொழிகளைக் கொன்று, அவற்றின் சமாதிமீது ஆங்கி லத்தை நிலவச் செய்வீர்களாயின், நீங்கள் நன்னெறி யில் சுதேசியத்தை வளர்ப்பவர்களாகமாட்டீர்க ளென்று சொல்வேன். (கேளுங்கள் கேளுங்கள்) எனக்குத் தமிழ்மொழி தெரியாதென்று நீங்கள் உணர்ந் தால், அம்மொழியை எனக்குக் கற்பிக்கவும் அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் அறிக்கையை அளித்து, அதை மொழி பெயர்த்து உணர்த்தி இருப்பீர்களாயின், உங்கள் கடனை ஒருவாறு ஆற்றினவராவீர்கள்". (பிற்காலத் தில் தமிழ்மொழியில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார் காந்திஜி.)
சுதந்திரம் பெற்றபின் இந்தியாவை நிர்மாணிப்ப தற்கு 1920ஆம் ஆண்டிலேயே காந்தி அடிகள் பல திட் டங்கள் வகுத்தார்கள். ஆங்கிலமோகம் இந்திய நாட் டிற்கு உதவாதென்ற முடிவை எப்போதோ அடிகள் கூறிவிட்டார். கதர், தீண்டாமை, மதுவிலக்கு முதலிய நிர்மாணத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இந்தியாவெங்கும் பிரயாணஞ் செய்தார். ஒத்துழை யாமை இயக்கத்தை நடத்துவதற்கு மக்களைத் தயார் செய்தார். பல கிராமங்களில் எலும்புக்கூடான மணி தர்கள் கண்கூடான காட்சி அளித்தார்கள். இந்தியா வின் வடகோடியில் இருந்து தென்கோடி வரை சுற்றுப் பிரயாணஞ் செய்து அந்நிய துணி பகிஷ்காரத்தை வற் புறுத்திப் பேசினர்கள். அதிற் சபதமும் செய்தார்கள். தன்னுடைய தொப்பியையும் அரைக்கோட்டையும்
148

காந்திச் சந்நியாசி.நல்ல சுதேசி
களைந்துவிட்டு, இடுப்பில் ஒரு துணியை மட்டும் சுற்றிக் கொள்வதாகவும் உடம்பைப் போர்த்திக்கொள்ளவேண் டிய அவசியம் ஏற்படும் சமயத்தில், மேலும் ஒரு நீளத் துண்டை மட்டும் போட்டுக்கொள்ளப் போவதாகவும் கூறினர்கள். ** இத்துறவு எனக்கு ஒரு துக்க அடை யாளம் என்ற முறையிலும் தேவைப்படுகிறது. வெறுந் தலையும் வெற்றுடம்பும் என்னுடைய ஊர்ப்பகுதிகளில் துக்க சின்னங்களாக இருந்துவருகின்றன. நாம் மேலும் மேலும் துயரநிலையில் இருந்துவருகிருேம் என்பது எனக் குப் புலஞகிவருகிறது" என்ற கருத்தைப் பல கூட்டங் களில் எடுத்துச் சொன்ஞர்கள்.
1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆந் திகதி பன்று காந்திஜி மதுரையில் இருந்தார். காரில் பிர யாணம் செய்யவேண்டும். ஆதலால் அதிகாலை எழுந் தார்; உடைகளை மாற்றிக்கொள்ளப் போளுர், தம் முடைய தொப்பியையும் அரைக்கோட்டையும் ஒதுக்கித் தள்ளிஞர் ஒரு சிறு கதர்ப்பையைத் தயாரித்தார்; தம்முடைய கோட்டுப் பையில் வைத்துக்கொள்ளும் பொருள்கள் அனைத்தையும் கதர்ப்பைக்குள் வைத்தார். அதன்பின் ஒருமுழ அகலமுள்ள கதர்த்துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டார். காந்திஜி இப்படிப்பட்ட உடை அணிவதை நண்பர்கள் தடுக்க முயன்ருர்கள். சந்நியாசியாகிவிடும் உத்தேசம் நமக்கு இல்லையென அவர்களுக்கு உறுதி கூறிய இம்மகான், தாம் உடுக்கும் புதிய முறை உடையானது தென்னிந்திய மக்களுக்குப் புதிதல்ல என்று கூறி அத்துணியைக் கட்டிக்கொண்டார்.
தென்பாண்டி நாட்டிலே உதயமான தேசிய துறவுக் குப் பின் காந்தியடிகள் தமது வாழ்நாள் முழுவதிலும் இந்த உடையிலேயே சுதேசியத் தமிழனுகக் காட்சி யளித்தார். இந்த அரை நிர்வாணப் பக்கிரி அன்று சொல்லிவிட்டுப் போனதை நாம் கேட்டோமா!
49

Page 96
இந்திய விடுதலைப் போரில்.
தேசியம் என்பது மிக ஆழ்ந்த பொருள் உடையதாக இருக்கிறது. அதைச் சமயவாழ்வில், அரசியல் வாழ்வில், பொருளாதார வாழ்வில் பொருத்தி வாழக் கூறுகின்ருர் அடிகளார். தேசிய உடைகள் அணிவது இயற்கை யானது; இந்தியணுதற்குரியது. ஐரோப்பியரைப் பின் பற்றி அவர்களது உடை அணிவது நமது ஈனத்திற்கும் மானக்கேட்டிற்கும் பலக்குறைவிற்கும் அறிகுறியாகும்: எளிமைக்கும் விலைக் குறைவிற்கும் சுகத்திற்கும் உரிய நாட்டுடையை ஆதரிப்பது சிறந்த தேசியமாகும் என்று எங்கும் எடுத்துக் கூறிஞர் காந்திமகான். இந்தியன் என்று ஒரே குரல் எழுப்புங்கள். பிரித்துப் பேசுவதனல் நமக்கு ஒரு நன்மையும் கிட்டாது என்று அடிக்கடி காந்திஜி சொல்லுவார்கள். பேச்சிலும், மூச்சிலும், உடையிலும் பரிபூரண சுதேசியாக மகாத்மா வாழ்ந்து காட்டிப் போயிருக்கின்றர்கள். வரலாற்று வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட மு டி யா த காந்திஜி, நூறு இருத்தல்கூட எடை இல்லாத ஓர் ஒல்லியான மனிதர். ஆனல் பிரிட்டிஷ் பேரரசையே உடைத்து எறிந்தார். மனித ஆன்மாவின் ஐக்கிய சக்தி, அவருடைய சாதனையின் அளவை யாரும் மதிப்பிட முடியாது. அவர்தான் 20ஆம் நூற்ருண்டை உருவாக்கிய மனிதர்; அவர்தான் மனித சமுதாய எதிர்காலத்தின் சின்னம். அவர் நாமம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
மதவெறிகள் மாச்சரியம் மறைந்தா லன்றி
மாநிலத்தில் உயிர்வாழ மாட்டேன் என்னும் இதயமுறும் சத்தியத்தை இசைந்தார் காந்தி
இஷ்டம்போல் உயிர்அதற்கே ஈந்தார் எம்மான் உதயமுற நம்மனதில் உணர்ச்சி உண்டேல்
உலகமெல்லாம் கலகமிலா துய்ய வேண்டின் மதவெறியும் இனவெறியும் மறைய வேண்டும்
மற்றும்ஒன்று மொழிவெறியும் மாற வேண்டும்.
-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை
150

காந்தி மகாத்மா யுகசக்தியின் புது மலர்
இது யுகசக்தி. காந்தி இதன் புதுமலர்: அவர் வாழ்கிருர், நாம் பார்த்துக்கொண் டிருக்கிருேம்: அனுபவ சமுத்திரம், உறுதி மலை, மனிதத் தன்மையின் நிறைவு. இவர்தான் கர்மவீரர் காந்தி
சேவைக்குச் சேவகர், பிச்சைக்காரரல்லாத பிச்சைக் காரர், மகுடம் தரியாத மன்னன். பழைமையின் பிரதிநிதி, புதுமையின் சங்கநாதம், இயற்கையின் தொண்டர், செயற்கையின் எஜமானர், தாழ்ந்தவர் களுக்குச் சுமைதாங்கி, வாழ்கிறவர்களுக்குக் கலங் கரை விளக்கம். இலர்தான் காந்தி மகாத்மா
காந்தியடிகளின் 99ஆவது பிறந்த நாளே இன்று மனித சமூகமே கொண்டாடுகிறது. வையகம் வாழத் தோன்றிய மகாத்மா அல்லவா? இந்தியாவின் சுதந் திரத்திற்கு அவர் உழைத்து, முதன்மையாக அதன் ஆன்மீக அடிமைத்தனம் நீங்குவதற்காகத்தான் அஹிம் சையின் வழியினல் தீமையை வென்ருர், உண்மையே” வெற்றிதருமென முழங்கினர். பகைவனுக்கு அருள்வாய் என்று பரம்பொருளை வேண்டினர். நம்பிக்கையும் வழி பாடும் இல்லாது செய்கிற வேலைகள் வாசனையில்லாத செயற்கைப் பூவை ஒக்கும். அன்புவழி நின்ருல்தான் வையகம் வாழும் என்றது காந்தீயக் குரல்.
பட்டாடை உடுத்தி முத்தாரம் போட்டுக் காந்தி வரவில்லை. இடுப்பில் ஒரு துண்டை வரிந்து கட்டிக் கொண்டு ** அரை நிர்வானப் பக்கிரி" யாக வந்தார் ஆளுல், அடிகளின் திருமேனியிலிருந்து தெறித்த ஒளி யானது இருள் சூழ்ந்த குடிசைகளுக்குள் கூனிக் குறுகிப்
15

Page 97
இந்திய விடுதலைப் போரில்.
புழுக்களைப் போல் நெளிந்துகொண்டிருந்த மக்களின் உடம்பிலும் உள்ளத்திலும் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிமிர்ந்து எழுந்தார்கள். ஒட்டிய வயிறும் உலர்ந்த மேனியும் மாருவிட்டாலும் ஊக்கத்துடன் காந்தி பின்னல் கொடிகளை உயர்த்தி வந்தேமாதரத்தை முழங்கினர்கள்.
உலக வரலாற்றிலே காந்தியடிகளைப் போன்று ஒரு வரை நாங்கள் அறிந்ததில்லை. எந்தத் தேசத்தையும் காந்திஜி ஆளமுதல் குமரிவரை மக்கள்மீது காந்தி போன்று ஆதிக்கம் செலுத்திய அசோகன் யார்? அந்த அவதார புருஷர் தம் வாழ்நாளில் கோடிக்கணக்கான மக்களின் அஞ்சலியைப் பெறவில்லை யென்றலும்: இமயம் பெற முடிந்தது. இந்திய மக்களெல்லாம் நேருவை எதிர்பார்த்தார்கள். நேரு காந்தியடிகளை எதிர்பார்த்தார். அடிகளோம் ஆண்டவனை எதிர்பார்த் தார். மகாத்மா காந்திதான் ஆண்டவனின் திருக் குமாரன். மகாத்மா அமர்ந்த இடமெல்லாம் ஆலய மாகியது. நூறு இருத்தல் எடையில்லாத அந்த ஒல்லி யான உடலுக்கு அவ்வளவு பெரிய உயிரைத் தாங்க எங்கிருந்துதான் சக்தி வந்ததோ? இந்தியாவின் கிராமங் களில் உள்ள சந்து பொந்துகளிலெல்லாம் அடிகளின் பாதங்கள் பட்டன. பாவக்கறை நீங்கி விடுதலை என் னும் மோட்சம் கிடைத்தது:
இந்திய தேசிய சரித்திரம் எழுதப்பட்டுக்கொண் டிருக்கிறது. அதில் காந்திமகாத்மா ஒரு தேசிய வீரராக" மட்டும் போற்றப்படமாட்டார். யுக சரித்திரத்தில் அவருடைய பெயர் புனித ஞாபகத்துடன் போற்றப் படும். மேனுட்டார் மறந்துவிட்ட அல்லது புறக்கணித்து விட்ட யேசுநாதரின் உபதேசத்தை மீண்டும் அவர் புதுப் பித்துக் கொணர்ந்திருக்கிருர். மானிட சமுதாயத்தின் முனிவர்கள், சாதுக்கள் முதலியோருடைய வரிசையில்
152

காந்தி மகாத்மா யுகசக்தியின் புது மலர்
அவர் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது. உலகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அவருடைய ஒளி வீசுகிறது: வரப்போகிற மானிட சமுதாயம் எப்படியிருக்கவேண்டு மென்பதைத் தமது மனத்தினுல் நினைத்தும், செயலாற் காட்டியும் வாழ்ந்த காந்தியடிகளைப்பற்றி அமெரிக்கா நாட்டில் வாழ்ந்த பூஜ்யர் ஜான் ஹேன்ஸ் ஹோம்ஸ், "எனது காந்தி " என்ற நூலொன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறுவதாவது: "இரண்டாவது பிறவி அல்லது புனர்ஜென்மம் என்பதில் நம்பிக்கை இருப்ப வர்களுக்குச் சொல்லுவேன் அன்று சிலுவை ஏந்தி மரித்த யேசுநாதரேதான் இன்று மகாத்மா காந்தியாக உருவாகியிருக்கிருர், மகாத்மா காந்தி, புராதன காலத்து மகான்களைக் காட்டிலும் சிறந்தவர். சாத்வீக எதிர்ப்புமுறையைக் கையாண்டவர். அன்புக்கு என்றும் தோல்வியில்லை என்று நிரூபித்தவர் என்ற வகையில் அவர், பிரான்ஸிஸ் முனிவர், தோரோ, டால்ஸ்டாய் ஆகியோருக்கு நிகரானவர். எக்காலத்திலும் நிரந்தர மாக விளங்குபவர்களான புத்தர், யேசுநாதர், ஜொராஸ்டர், லாவோட்ஸே ஆகியவர்கள் வரிசை யைச் சேர்ந்தவர் காந்தியடிகள். ஆஞல் இவையெல்லா வற்றையும் விட அவர் ஒரு மனிதர் 1 சத்தியத்திலும் அன்பிலும் பரிணமித்துள்ள தெய்வீகசத்தி ஒன்றுதான் காந்தியடிகளைப் பூரணமாக ஆட்கொண்டிருக்கிறது"
சரித்திர சம்பவங்களால் எழும் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவர்கள் தேசிய வீரர்களும் போர்வீரர்களும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆவேசங்களை மூட்டு வார்கள். ஒரு கோஷ்டியின் மதிப்பைப் பெறுவார்கள்: திடீரெனப் பிரகாசித்து மறைந்துபோவார்கள். ஆளுல் ரிஷிகளும், ஞானிகளும் நாம் எந்நாட்டவரைச் சேர்ந்த வராக இருப்பினும், நம் உள்ளங்களை ஆட்கொள்ளும் சக்தி படைத்தவர்கள். பெருமைக்கு நமக்குரிய தகுதியை அவர்கள் நமக்கு அளித்தவர்கள் உண்மையான சமயப்
153

Page 98
இந்திய விடுதலைப் ப்ோரில்.
பற்றுள்ள பெரியவர்கள் புரட்சியைத் தங்கள் உள்ளத் திலே ஆரம்பித்தவர்கள். அவர்கள் செயல்களெல்லாம் சகோதர பாசத்தால் தூண்டப்பட்டதாகும். அந்த அமரர்களின் குழுவையே காந்திஜியும் சேர்ந்தவர். ஒரு நாட்டை மாத்திரம் சார்ந்தவர்களல்ல பெரியோர். மனித வர்க்கம் முழுமைக்குமே உரியவர்கள் அவர்கள். அதஞல் காந்திஜியின் நூற்ருண்டு விழாவை உலகமே கொண்டாடுகிறது.
வள்ளுவப் பெருந்தகை வழிநின்று வாழ்ந்துகாட்டிய காந்தி அண்ணலுக்கு நாம் எவ்வளவோ கடமைப்பட் டிருக்கிருேம். உலகத்திலே முதன்முதல் கதர் உடுத் தியவர் வள்ளுவப் பெருந்தகை. அதைப் பின்பற்றியவர் காந்தியடிகள், கலைமறந்த குடிசைகளுக்குள்ளேயே கதர் இயக்கத்தைப் புகுத்திய அண்ணலைப் போற்று Gaunruh.
154.

மகாத்மாகாந்தி நூற்ருண்டுவிழா திருக்கோணமலை மாவட்டசபை அறிக்கை
உலகிலுள்ள பல நாடுகள் மகாத்மா காந்தியின் நூற்றண்டு விழாவை ஆர்வத்துடனும் உற்சாகத்துட னும் கொண்டாடியதை நாம் அறிந்தோம். "இந்தியா வைத் தவிர வேறு எந்த நாடோ, இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமோ காந்தியடிகளை உலகிற்கு அளித்திருக்க முடியாது" என்று "லண்டன் டைம்ஸ்” பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஆகையினுல்தான் காந்தி யடிகள் நமக்குச் சொந்தமானவர் என்று பிரத்தியேக உரிமை கொண்டாடுகிருேம். நமது நாட்டிற்கும் உலக முழுவதற்கும் அவர் பல்வேறு வழிகளில் பணியாற்றி யுள்ளார். அவர் ஒரு சிறந்த தேசியத்தலைவர். அடிமைப் பட்டுக்கிட்டந்த மனித சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தவர். என்றும் தோல்வியுருது அன்பின் தத்துவத்தை அவர் போதித்தார். பிறரைத் திருத்துவதற்கு முன் தம்மைத் தாமே திருத் திக் கொண்ட மாமேதை. இவ்வாறு காந்தியடிகள் பலவழிகளில் நமக்கு உதவிபுரிந் திருக்கிருர். ஆகையினுல்தான் உலகிற்குத் தந்த காந்தி மகாத்மாவை எல்லோரும் போற்றுகிருேம். மகாத்மாஜி யின் நூற்றண்டு விழாவைத் தகுந்தமுறையில் கொண் டாட 3-11-68ஆம் திகதி திருக்கோணமலை அரசாங்க அதிபர் திரு. சோமபால குணதீர, இ. நி.சே. அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு மாவட்டசபை அமைக்கப் பட்டது. அச்சபை திட்டங்கள் பலவற்றை வகுத்தது.
இந்த விழாவின் ஆரம்பச் செயல்முறையாகத் திருக் கோணமலை நகரசபைக்கு எதிரேயிருக்கும் ஒரு இடத்தில்
28-11-68ஆம் திகதி அரசாங்க அதிபரும், விழாத்தலைவரு மான திரு. சோமபால குணதீர அவர்கள் நிழல்மரம்
155

Page 99
இந்திய விடுதலைப் போரில்.
ஒன்று நாட்டி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள்.
1-1-69ஆம் திகதி “மகாத்மா காந்தி நிலையம்" என்ற
பெயருடன் குடிசைக் கைத்தொழிற் பயிற்சி முகாம்
கட்டிடத்தைத் திருக்கோணமலை காரியாதிகாரி அலுவ
லக வளவில் திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். எம். மாணிக்கராஜா அவர்கள் திறந்து வைத்தார்கள். அக்கட்டிட மண்டபத்தில் காந்தியடிக ளின் படம் ஒன்றைத் திருக்கோணமலை நகரசபைத் தலைவர் டாக்டர் செ. சிவானந்தம் அவர்கள் திரை நீக்கம் செய்தார்கள்.
காந்தி நூற்ருண்டுவிழா சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த தமிழ்நாட்டிலிருந்து இதற்கென்றே அருட்பா அரசு கீதா போதகர் உயர்திரு நா. கிரிதாரி பிரசாத், B. A., B. L., P. P. A. (Dip.) sysuitasaruth, as misgu நிர்மானப் பணியில் உழைப்பவரும் சென்னை இராம லிங்க மிஷனின் தலைவருமாகிய உயர்திரு நா. மகா லிங்கம், B.Sc., M. 1. E. அவர்களையும் வரவழைத்தோம். திருக்கோணமலை முதற்கொண்டு, மூதூர், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், குரும்பசிட்டி, நாயன்மார்கட்டு பண்ணுகம், மாதகல், கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, வெள்ளவத்தை கொழும்பு முதலான ஊர்களுக்கு அழைத்துச்சென்று காந்திஜியின் சிரார்த்ததினத்தை முன்னிட்டுச் சிறப்புச் சொற்பொழிவுகள் செய்து கொடுத்த பெருமை திருக்கோணமலை காத்தி நூற்ருண்டு விழாச் சபையாரைச் சாரும். இந்த நிகழ்ச்சிகள் 30-1-69ஆம் திகதியிலிருந்து 10-2-69ஆம் திகதிவரை யும் நடைபெற்றது.
மாணவ மாணவிகளும், கல்வி நிலையங்களும் நூற் முண்டு விழாவிற் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்பட்டது. காந்திஜி மக்களை நேசித்தார். மக்களின் பிரதிநிதியாகத் தம்மைக் கூறிக்கொண்டார். காந்திஜியைப்பற்றி நன்கு
156

மகாத்மாகாந்தி நூற்ருண்டுவிழா
அறிந்து கொள்வதற்குப் பொருத்தமான வகையில் காந்திஜியின் கருத்துக்களை ஒவ்வொரு இல்லத்திற்கும் எடுத்துச்செல்ல மாணவர்களின் பணி இன்றியமை யாதது. மகாத்மாவின் செய்தி மிகவும் எளிமையானது. இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரத் திருக்கோன மலைப் பகுதியிலுள்ள மாணவர்களையும் கல்வி நிலையங் களையும் பங்குபெறுமாறு சபையார் அழைத்தோம் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி தமிழிலும், சிங்களத் திலும், ஆங்கிலத்திலும் நடைபெற்றது. தமிழில் காந்தீயப் பாடல்கள் போட்டியும் நடைபெற்றது. இந்தப் போட்டிகளைத் திறம்பட நடத்தி வைத்தவர் திருக்கோணமலை பிரதான கல்வியதிகாரி திரு. அ. சந்திரசேகரம் அவர்கள். 2-10 - 69ஆம் திகதி சபை யின் சார்பில் திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், தலைமைதாங்கிப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிருக்குத் திருக்கோணமலை உதவி அரசாங்க அதிபர் உயர்திரு செ. சிவஞானம், இ. நி. சே. அவர்கள் பரிசில்கள் வழங்கினர்கள். காந்தி நூற்ருண்டு விழாவுக்காகத் திருக் கோணமலையைச் சேர்ந்த இளைஞர் செல்வன் மா. சண்முகராஜி அவர்கள் ஆறு அடி உயரமுள்ள காந்தி மகாத்மாவின் முழுஉருவப் படத்தைப் பல வர்ணங்க ளால் அழகு ஓவியமாக வரைந்து தந்தார்கள். கவர்ச்சி மிக்க இவ்வுருவப் படத்தை அலங்கரித்துப் பல காந்தி விழாக்களின்போது காட்சிக்கு வைத்துள்ளார்கள்: ஓவியம் தீட்டிய இளம் கலைஞர் திரு. மா. சண்முக ராஜியை, உதவிஅரசாங்க அதிபர் அவர்கள் மலர்மாலை சூட்டிக் கதர் ஆடை போர்த்திப் பாராட்டி வாழ்த்தி ஞர்கள். இதையடுத்து யாழ்ப்பாணம் இலக்கிய வட்டத் தலைவர் கவிஞர் வி. கந்தவனம், B. A. அவர்கள் தைைமயில் ஓர் கவியரங்கம் நடைபெற்றது. காந்திஜி யின் கொள்கைகளை அடிப்படையாக வைத்துக் கவிஞர் செ. சுந்தரம்பிள்ளை, B.A. அவர்கள், கவிஞர் வே. ஐயாத்
157

Page 100
இந்திய விடுதலைப் போரில்.
துரை அவர்கள், கவிஞர் எம். எஸ்: எம். சாலிஹ் (அண் ணல்) அவர்கள், பண்டிதர், சைவப்புலவர் இ. வடிவேல் அவர்கள் முதலானேர்கள் கவிபாடிச் சபையோரை மகிழவைத்தார்கள். இத்தனை கவிஞர்களும் கவியரங்கத் திற் கலந்துகொண்டது மிகவும் கலகலப்பாகவிருந்தது.
மகாத்மாவின் நினைவுநாள் 30-1-70ஆம் திகதி சபையின் சார்பில் திருக்கோணமலை பூரீ சண்முக வித்தி யாலயத்தில், வித்தியாலய அதிபர் செல்வி இ. விஸ்வ லிங்கம், B. A. அவர்கள் தலைமையில் கொண்டாடப் வட்டது. மகாத்மா காந்தி நூற்ருண்டு விழா அகில இலங்கை மாணவ ஆசிரியர் தமிழ்ப் பேச்சுப்போட்டி யில் வெள்ளிப்பதக்கம் பெற்று இந்திய ஜனதிபதி பூரீ வி. வி. கிரி அவர்களாற் பாராட்டப்பட்டவரான திரு. ஏ. ஆர். எம். பரீத் அவர்களும், சைவப்புலவர், பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் அக் கொண்டாட்டத்திற் கலந்து சிறப்புச் சொற்பொழிவுகள் செய்தார்கள்,
மகாத்மாகாந்தி நூற்ருண்டுவிழா - உள்ளூராட்சி வாரவிழா சார்பாக பூரீ சண்முக வித்தியாலயத்திலும் சிவயோக சமாஜத்திலும் 8-2-70ஆந் திகதி நடந்த விழாக்களில் மதுரை அகிம்சைக் கல்லூரி அதிபர் திரு, ஏ. என். ராஜன் அவர்கள் கலந்துகொண்டு பேச்சு நிகழ்த்திஞர்கள். சம்பூர், கிளிவெட்டி. தம்பலகாமம், சாம்பல்தீவு முதலான இடங்களிலும் விழா நடை பெற்றது. திருக்கோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற காந்தி விழாக்கள் அனைத்திலும், யாழ்ப்பாணம், குரும்பசிட்டி, பலாலி, கோப்பாய் முதலான இடங் களில் நடைபெற்ற விழாக்களிலும் பங்குபற்றிக் காந்தி அஞ்சலிப் பாடல்களைக் கனிவோடு, பக்தியோடு எடுப் பான குரலில் தாமே வயலின் வாசித்துக்கொண்டு பாடித் தன் காணிக்கையைச் செலுத்தியவர் பண்
158

மகாத்மாகாந்தி நூற்ருண்டுவிழா
னிசைப் புலவர் வே. சிவஞானம் அவர்கள்: ஒரு வருடத்திற்கு மேலாகப் பல நிகழ்ச்சிகளாகக் காந்தி படிகளுக்கு விழாக்கள் எடுத்திருக்கின்ருேம். 'உண்மை யாகவிரு, உண்மையே கடவுள், அகிம்சையே சிறந்த அறம், மக்கள் தொண்டே இறைப்பணி" என்ற அடிக ளாரின் மணிமொழிகளை மக்களுக்கு எடுத்துச்சொல்ல இவ்விழாக்கள் வழிகளைத் திறந்து தந்தன. பெருமக்கள் பணஉதவி, சரீர உதவி தந்து விழாக்களைச் சிறப்புறச் செய்தமைக்காக அன்பர்கள் அனைவருக்கும் நாம் உள்ளம் கலந்த நன்றி செலுத்துகிருேம். பல நிகழ்ச்சி களிற் காந்தீயக் கருத்துரை வழங்கிய திரு. பொ: கந்தையா அவர்களுக்கும், எழுத்து வேலை, தட்டச்சு வேலை முதலான பணிகளாற்றி எனக்குப் பக்கத் துணையாகவிருந்து உதவிசெய்த திருக்கோணமலை கச்சேரியைச் சேர்ந்த சுருக்கெழுத்தாளர் திரு. வி. ஏகாம்பரம் அவர்களுக்கும் கடப்பாடுடையோம்.
காந்தி நாமம் வாழ்க!
தியாகி கோ. இராஜகோபால் பொதுச்செயலாளர்
159

Page 101
சர்வோதயம் என்பது w நிர்மாணப்பணி அரசியலுக்கு அதில் இடிமில்லை
காந்தி மகாத்மா உள்ள காலத்திலிருந்தே இந்துஸ் தான் தாமிலி சங்கம், காந்தி சேவா சங்கம், சர்க்கா சங்கம் போன்ற சங்கங்களின் (தற்போது சர்வோதய இயக்கங்கள் என்று அழைக்கப்படுவது) நிர்மாண ஊழி யர்கள் (Constructive Workers) வேலைசெய்துவந்திருக் கிருர்கள். நிர்மாண ஊழிய சபையாருடன் 1947ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதற்பகுதியில் காந்திஜி தொடர்ந்து பலதடவை பேச்சுவார்த்தைகள் நடத் தினர். இதிற் கலந்துகொண்டவர்களுட் பலர், காந்திஜி கடந்த முப்பது வருடங்களாக நடத்திய பல அஹிம் சைப் போர்களிலும் பங்குபற்றி அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களிற் சிலர் காந்திஜி இந்தியாவில் அரசியல் வாழ்க்கை தொடங்கியதுமுதல் அவருடன் இருந்தவர்கள். இவற்றைத் தம் கூட்டாளிகளுடன் அவர் நடத்திய விபரமான இறுதிப் பேச்சுக்கள் எனலாம். ஆகையால் அவ்வறிவுரைகளுக்கு மற்ற எதற்கும் இல்லாத தனிமதிப்புண்டு. அவை அவர் கற்பனைசெய்திருந்த சுதந்திர இந்தியாவின் நிர்மாண வேலைகள் எவ்வாறு நடைபெறவேண்டுமென்பதையும், அதற்கும் அரசிய லுக்கும் இருக்கவேண்டிய தொடர்பைப் பற்றியும், அவ ருடைய மனதில் இருந்த கருத்துக்களையும் விளக்கி *நிர்மாணத் திட்டத்தின் எதிர்காலம்பற்றிக் காந்திஜி என்ற தலையங்கத்தில் 1949ஆம் ஆண்டு வைகாசி மாதம் வெளியான 'ஹரிஜன்" பத்திரிகையிற் காந்திஜி யின் காரியதரிசியான திரு. பியாரேரால் அவர்கள் எழுதியிருந்தார்கள், அதில் காந்தி சேவா சங்கங்கள்
160

சர்வோதயம் என்பது நிர்மாணப்பணி
எவ்விதம் நடந்துகொள்ளவேண்டு மென்று காந்திஜி விரும்பினர் என்றும் குறிப்பாகக் காட்டியிருந்தார்கள். சுருக்கம் வருமாறு :-
காந்தி சேவா சங்கங்கள்:
ஊழியர்கள் அனைவரும் ஒரே அடிமரத்திலிருந்து கிளைக்கும் பல கிளைகளைப் போல வேலைசெய்து வரலா மென்று ஓர் ஆலோசனை கூறப்பட்டு அதற்கு எடுத்துக் காட்டாக ஒருகாலத்திற் காந்தி சேவாசங்கம் பல சேவை முயற்சிகளுக்கு ஆதாரமாயிருந்தமை குறிப் பிடப்பட்டது. ஆனல் காந்திஜி அதில் ஆபத்தைக் கண்டார். நிர்மான ஊழியர்களின் சங்கங்கள் அதிகார அரசியலிற் புகுந்து காங்கிரசுடனே அரசாங்கத்துடனே அரசியல் அதிகார போட்டியிற் கலந்துகொள்வதை அவர் விரும்பவில்லை. "அந்தச் சங்கம் இப்பொழுது இருக்கவில்லை. அது நிர்மான ஊழியர்கள் அனைவரை யும் ஒரே சங்கத்தின்கீழ் ஒன்று சேர்க்கவும் முயன்ற தில்லை; அது நாட்டின் அரசியலிற் புகுந்து அதைத் தூய்மைப்படுத்துவதற்குச் செய்த முயற்சி அற்ப ஆயு ளுடன் தள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய தாயிற்று" என்ருர் காந்தி.
ஆதாரக் கல்வியின் காவலரும், இந்தியக் குடியரசு ஜனதிபதியாக விருந்தவருமான டாக்டர் சாகீர் உசேன் தொடர்ந்து விவாதித்தார். "பல்வேறு சங்கங்களும் குறிப்பிட்ட தனித்தனி வேலைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக சபை போன்றவை. அவை எல்லாவற்றையும் ஒன்ருக இணைப்போமானுல் அதிகார அரசியல் அதை அணுகாமல் அகற்றுவது சாத்தியமா பிராது".
காந்திஜி-நிர்மான ஊழியர்களின் ஐக்கிய சங் கங்கள் அதிகார அரசியலிற் புக முயலுமானல் அம் முயற்சியே அதன் அழிவை விளைவிக்கும். இப்பொழுதோ
இ - 11 161

Page 102
இந்திய விடுதலைப் போரில்.
அரசியலிற் சூதும் வாதும் நிறைந்துவிட்டன; அதிற் புகுவோர் எவரும் அந்த நோயினின்று தப்புவதில்லை நாம் அதிலிருந்து அறவே விலகியிருப்போம். அதன் மூலமாக நமது செல்வாக்கு வளரும். நமது உள்ளத் தூய்மை வளர வளர சுயமுயற்சி எதுவுமில்லாமலேயே மக்களின்மீது நமது செல்வாக்குப் பெருகும்."
இதற்கு எடுத்துக்காட்டாக, பூமிதான முனிவர் வினுேபாஜி இப்பொழுது நம்முன்னே வாழ்ந்துகொண் டிருக்கிருர்கள், சர்வோதயம் கடையனுக்கும் கடைத் தேற்றம் என்ற இயக்கம் வினுேபாஜியின் கருத்துப்படி அகில இந்தியாவிலும் எப்படி நடைபெற்றுக்கொண் டிருக்கிறதென்பதை இப்பொழுதும் பார்த்துக்கொண் டிருக்கிருேம். 1965ஆம் ஆண்டு தை மாதம் தென்னகத் தில் இந்தியை எதிர்த்துப் போரிக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியை விட்டுக் கிளம்பிஞர்கள். முற்றிலும் அரசியற் கலப்புடைய அந்த எதிர்ப்பு இயக்கத்திற் தீய சக்தி களும் சேர்ந்து பல இடங்களில் தீ வைத்தார்கள்: பொதுக் கட்டிடங்களுக்குச் சேதம் விளைவித்தார்கள். அதில் தாக்கப்பட்ட ஒன்று திருத்தணியிலுள்ள பொது நூல் நிலையம். தனக்குச் சொந்தமான இடத்தைப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்த நூல் நிலை யத்தை அமைத்துக் கொடுத்தார்கள், உலகத் தத்துவ ஞானியும் இந்தியக் குடியரசு ஜஞதிபதியாகவுமிருந்த சர்பவள்ளி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள். இப்படி அராஜகச் செயல்கள் நாட்டில் தலைதூக்கி யிருப் பதைப் பார்த்து வேதனைப்பட்டார்கள் வினுேபாஜி அவர்கள். விளக்கக் குறைவிஞல் தமிழ்நாட்டில் இந்த விபரீதம் நடக்கிறதே என்று மிகவும் நொந்தார்கள் பாவே அவர்கள். அந்தராத்மாவின் அழைப்பின் பேரில் பலாத்கார சம்பவங்களை எதிர்த்து வினுேபாஜி கால வரையறையின்றி மாசி மாதம் 12ஆம் திகதி உண்ணு விரதம் தொடங்கிஞர்கள், இது தேசத்தைத் துக்கத்தில்
162

சர்வோதயம் என்பது நிர்மாணப்பணி
ஆழ்த்தியது. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் உட்படத் தலைவர்கள் பலர் உண்ணுவிரதத்தை விடும்படி வினுேபாஜியை வேண்டிக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் சற்று அமைதி நிலவ ஆரம்பித்த பிறகு நான்காம் நாள் வினேபாஜி உண்ணவிரதத்தை நிறுத்திஞர்கள். எல்லோருக்கும் ஆறுதல் அளித்தது. இவ்வளவு கொடு மைகள் நடந்தும் அரசியற் தலைவர்களின் வாலைப் பிடித்து நிற்காது தனித்துநின்று பரிசுத்தமான வீரத்தி ஞல் எப்படிக் காரியத்தை வினேவாஜி சாதித்தார் என் பதை நாம் உணர்ந்திருக்கின்முேம்.
* நிர்மாணப்பணி - சர்வோதயம் என்பது ஓர் அரசியல் தந்திரமோ போரின் முறையோ வல்ல. அது ஒரு வாழ்க்கை முறையையே கூறியிருக்கிறது. அதை ஏற்றவர்களாலேயே அறிவினல் உள்ளத்திஞல் பூரண மாக அதை நிறைவேற்ற முடியும் " என்று காந்திஜி கூறியிருக்கின்றர்கள், ஒரு பெரிய ஞானியின் வாழ்க்கை யையும் உபதேசங்களையும் சில சூத்திரங்களாக வகுக்க நாம் முனையும்போது அவை அந்த ஞானியே கருதாத சில விஷயங்களையும் அவற்றை அவர் கேட்டால் நடுங் கிப்போய்விடக் கூடியனவாயும் மாறிப்போய்விடுவது இயற்கை. அவைகளை அறியாமலே அந்த ஞானியின் சிறந்த சீடர்கள் தமது குருவின் தத்துவங்களை மிக நகைப்பிற்கிடமான ஒன்ருக ஆக்கிவிட வேண்டாமென்று தாழ்பணிந்து கேட்டுக்கொள்ளுகின்றேன். சர்வோதய இயக்கத்துக்கு முன்னணியுமில்லை. பின்னணியுமில்லை அரசியற் கலப்பில்லாத ஒரே அணியில் நின்று கடை யனையும் கடைத்தேற்றப் பணி செய்வோமாக,
163

Page 103
தியாகி இராஜகோபால் அவர்களின்
60ஆம் ஆண்டு நிறைவுவிழா
திருக்கோணமலையின் தவப்புதல்வர் தியாகி கோ. இராஜகோபால் அவர்களின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவைத் திருக்கோணமலே அன்பர்கள், உதவி அர சாங்க அதிபர் உயர்திரு. செ. சிவஞானம், இ. நி. சே அவர்கள் தலைமையில் 30-6-70ஆம் திகதி பிற்பகல் 6-30 மணிக்குக் கோகுலத்திற் கொண்டாடிஞர்கள். தியாகி இராஜகோபால் அவர்களுக்கும் அவர் மண்வி திருமதி காந்திமதிக்கும் மலர்மாலே அணிவித்ததுடன் விழா ஆரம்பமானது. பண்ணிசைப்புலவர் வே. சிவ ஞானமும் அவர்களின் குழுவினரும் காந்திபஜனே செய்து எல்லோரையும் பக்தி வெள்ளத்தில் சேர்த்துவிட்டார் கள். விழாவிற்குத் தலேமைவகித்த திரு. செ. சிவஞானம் அவர்கள் தியாகி கோ. இராஜகோபால் அவர்களேப் பற்றிப் பேசும்பொழுது ஈழத்துச் சேயின் இனேயற்ற சேவையைப் புகழ்ந்தார்கள். "நான்கு வருடத்திற்கு மேலாக இந்தியச்சிறையில் அரசியற் கைதியாக இருந் தமையினுலும் காந்திபக்தராகப் பல்லாண்டு சலியாது பணிபுரிந்து வருவதனுலும் எமக்கு-குறிப்பாக ஈழத்து மக்களுக்கே பெருமையைத் தேடித்தந்திருக்கின்ருர்கள். தியாகி அவர்கள் காந்திமகான் காட்டிய பரந்த, சிறந்த, உயர்ந்த கொள்கைகளாகிய சத்தியம், அன்பு, கருனே
இருப்பதை நாம் பார்க்கின்றுேம்.இப்படிப்பட்ட பெரியா ருக்கு எடுக்கும் விழாவில் யான் தலேமைதாங்குவது எனக் குக் கிடைத்த பெரும் பேறு என்றே நினைக்கின்றேன்" என்று தலைமையுரையிற் கூறினுர்கள். அடுத்த நிகழ்ச்சியா சுத் திருக்கோணமலே அன்பர்களின் சார்பில் வாழ்த்துப் பாக்களேப் பண்ணிசைப்புலவர் வே. சிவஞானம் அவர்கள் இசைத்து இனிய குரல் எழுப்பி ஓசை ஒலிக்கப் பாடிக்
164
 

皇

Page 104

தியாகி இராஜகோபால்..நிறைவுவிழா
கொடுத்தார்கள் தியாகிக்கு குரும்பசிட்டி சன்மார்க்க சபையார் அனுப்பிய வாழ்த்துப் பாமாலையைச் சைவப் புலவர் பண்டிதர் இ. வடிவேல் அவர்கள் அவரது பாணி
இந்துக் கல்லூரியில் தியாகிக்கு அப்போது பாடம் சொல்லிக்கொடுத்த பேராசிரியர் உயர்திரு. மா. பீதாம் பரம் அவர்கள் இயற்றிய வெண்பாவைக் கழகப் புலவர் பெ. பொ. சிவசேகரம் அவர்கள் வாசித்தார்கள். ஆசிரியை செல்வி செல்வமணி வடிவேல், B. Sc. தியாகி யைப் பாராட்டிப் பேசும்போது "தியாகி இராஜ கோபால் அவர்களைப் பார்க்கும்பொழுது காந்திமகா னின் தோற்றம் தென்படுகிறது. ஆனல் அவர் உள்ளத் திற் பாரதி மயமாகவே இருப்பதை அன்னவர் பேச்சில் நாம் எப்பொழுதும் உணர்கின்ருேம். பாரதியார், நாமக்கல் கவிஞர் பாடல்களைத் தியாகி பாடுவதே ஒரு அலாதியானது. அவ்வளவு உணர்ச்சி வேகம். தன்னை மறந்தே பொருள் செறிக்க, இனிக்க, முரசொலிக்க இன்றும் பாடிக்கொண்டே இருக்கின்ருர்கள் தியாகி கோ. இராஜகோபால் அவர்கள். அன்னவர் தொண்டு விலைமதிக்க முடியாதது. அவரும் அவர் மனைவி காந்தி மதியும் எம்மிடையே பல்லாண்டுகாலம் வாழவேண்டு மென்று கோணேஸ்வரப் பெருமான வேண்டுகின்றேன்" என்று பேசினர்கள்;
புலவர் வை. சோமாஸ்கந்தர் தியாகியைப் பற்றிப் பேசும்பொழுது "திருக்கோணமலையிற் பிறந்த திரு இராஜகோபால் அவர்கள் அளப்பரிய தியாகம் செய்திருக் கின்ருர்கள். இந்திய விடுதலைப் போராட்டத்திற் பங்கு பற்றிஞர். காந்தியடிகளின் அத்தாட்சிபெற்ற சத்தி யாக்கிரகி ஒருவரே இலங்கையிலிருக்கின்ருர். அவர் தான் திரு. இராஜகோபால் அவர்கள். சிறையிலே செக்கிழுத் திருக்கின்ருர்கள். சிறையிலே அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டிருக்கின்ருர்கள். இவர் செய்த தியாகத்தினுல்
165

Page 105
இந்திய விடுதலைப் போரில்.
ஐந்து வருடத்திற்கு முன்னர் இந்தியாவில் தியாகிகள் வரிசையில் வைத்துக் கெளரவிக்கப்பட்டார். 1952ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்விழாவில் கொடியேற்று வைபவம் நடைபெற்றது. அதில் கொடி வணக்கப் பாடல்கள் பாடினர். அங்குமிங்கும் ஓடி உழைத்தார்கள். தியாகியின் சேவையை, ஆற்றலை மெச்சிப் புகழ்ந்து "கல்கி"யும், "நாடோடி"யும் இலங்கை வீரத்தமிழர் என்ற பட்டத்தைச் சூட்டித் தங்கள் பத் திரிகைகளில் எழுதிவிட்டார்கள் தியாகியைப்பற்றி. இதைவிடப் பெருமை வேண்டுமா? அப்படிப்பட்ட வீரத்தொண்டரை வாயார மனமார வாழ்த்திக் கொண்டே யிருப்போம் " என்ருர் . தியாகி அவர்க ளுக்குப் பொற்கிழி ஒன்றைத் திரு. குமாரசுந்தரம் திருக் கோணமலை மக்களின் சார்பில் வழங்கினர்கள். தியாகி இராஜகோபால் தனது சார்பிலும், மனைவி காந்தி மதி யின் சார்பிலும் அனைவருக்கும் நன்றிசெலுத்தி ஒரு உருக்கமான பதிலைக் கூறினர்கள். விழாக் காரியதரிசி ஆசிரியர் பொ. கந்தையா அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிது நிறைவெய்தியது.
166

கவிக்குயில் பாரதி

Page 106

*தமிழா தெய்வத்தை நம்பு!
பயப்படாதே!”
இற்றைக்கு 49 வருடங்களுக்கு முன்னரி 11-9-1921ஆந் திகதி பாரதியார் அமரத்துவம் அடைந்த நாள். அமரராகிவிட்டதால் கண்ணுக்குத் தோன்ற விட்டாலும் நம்முடைய கருத்தில் நின்று காட்சியளிக்கும் தேசிய மகாகவிக்கு நாமனவரும் அஞ்சலி செய்வோம். பாரதியை நாம் மறந்துவிடாமல் அவர் பாடித்தந்த அறவொழுக்கங்களை வாழ்க்கையில் மேற்கொள்ள நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே பாரதிக்கு விழா எடுக் கின்ருேம்.
பாரதி எதற்காகத் தோன்றினர் ? என்ன செய் தார் ? அவர் பாடித்தந்த பாட்டுக்களின் குறிக்கோள் என்ன ? இப்போதுள்ள சூழ்நிலையில் அவருடைய பாடல்கள் நமக்கு எவ்வளவு பயனளிக்கக்கூடியவை ? என்பனவற்றைச் சிறிது சிந்தனைசெய்வோம். அடிமைத் தனத்தால் நமக்குள் வளர்ந்திருந்த அன்னிய மோகங் களால், மங்கிக்கிடந்த தமிழ்மொழிக்கு மறுமலர்ச்சி தந்தவன் பாரதிப்புலவன். தமிழ்மொழியின் சிறப்பை யும் தமிழ்ப் பண்புகளின் தன்மைகளையும் முற்றிலும் மறந்துகிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பிப் புத் துயிர் கொடுத்துப் பழந்தமிழில் நிறைந்துகிடக்கும் நல் லறிவுகளுக்குப் புது மெருகு கொடுத்தவர் கவிக்குயில் பாரதி. தனக்கும் தன்னைப்போலவே எல்லா மனிதர் களுக்கும் நல்ல உணவு, நல்ல உடை, நல்ல இருப்பிடம் முதலியன கிடைக்கவேண்டுமென்று தெய்வத்தை வேண்டிப் பாடிஞர். மொத்தத்தில் தமிழ்நாட்டின் தேசியப் பரம்பரையான நல்ல பண்புகளுக்கெல்லாம் புதுவாழ்வு காட்டினவர் பாரதி மெய்ப்புலவன்.
167

Page 107
இந்திய விடுதலைப் போரில்.
** இல்லறத்திலே வீடுபெறலாம் என்பது தமிழ் வழக்கு. மக்கள் மேற்கொள்ளவேண்டியது இல்லறம் தான் என்பது மரபு. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமே இவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங் களை மன்ருடிக் கேட்கவேண்டும். எல்லாத் தெய்வங் களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றி லும் தெய்வ ஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால், நான்காம் நிலையாகிய வீடு (மோக்ஷம்) தானே கிடைக்கும்." இது பாரதியிள் வாக்கு.
இப்படித் தமிழ்மொழிக்கும் தமிழ்ப் பண்புகளுக்கும் உள்ள தனிச்சிறப்புக்களை மிகுந்த ஆர்வத்தோடு பாடி யிருக்கின்றர். என்ருலும் வடமொழியையும் அது தந்த மெய்ஞ்ஞானத்தையும் தமிழருக்கும் சொந்தமானவைக ளாகவே சொல்லுகின்ருர். இந்தியநாடு முழுவதும் ஒரே கலாசாரமுள்ள ஒரு குடும்பம் என்றே போற்று கின்றர். தமிழ்நாட்டையும், தமிழையும் தனிப்படப் போற்றும்போதும் இந்தியா முழுவதும் ஒன்று என்பதை அவர் மறந்துவிடுவதில்லை. இதை அவருடைய பாடல்க ளில் பல இடங்களில் பார்க்கலாம். "" வேதம் உடையது இந்த நாடு" என்பதால் வடமொழி மெய்ஞ்ஞானம் நம்முடையது என்கிறர். இமயம் முதல் குமரிவரைக்கும் உள்ளது நம்முடைய நாடு என்கிருர், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடச் சொன்ன பாரதி, 'ஹிந்துஸ்தானத் தெய்வ மென்று கும்பிடச் சொல்லுகிருர். இந்த உபமானங்க ளின் சிறப்பை ஊன்றிப் பார்த்து உட்பொருளை உணர வேண்டும் என்கிருர் . இனவெறியாலும் மொழிவெறி' பாலும் இந்திய மக்களின் ஒற்றுமை சீரழியக்கூடாது என்று எத்தனையோ பாக்களில் நமக்கு உணர்த்துகிருர்,
168

st தமிழா தெய்வத்தை p5 bill... e. ...
சென்ற 2-1-68ஆம் திகதி சென்னையில் இரண்டா
வது உலகத் தமிழ் மகாநாடு நடைபெற்றது. அன்று பல. பெரியார்களுக்குச் சிலைகள் எடுத்தார்கள். அடுத்தநாள் 3-1-68ஆம் திகதி உலகத்தமிழ்மகாநாட்டைத்தொடக்கி வைத்துப் பேகிய முன்னைநாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஸாகீர் உசேன் அவர்கள் "இந்த உலகத் தமிழ் மகாநாட்டில் கலந்துகொள்வதை நான் ஒருபெரும் பேருகக் கருதுகின்றேன். இந்த மகாநாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அத்துடன் நமது கலாசாரத்தின் பல தரப்பட்ட அம்சங்களையும் அதனூடே இழையும் ஒற் றுமையையும் பற்றிய என்னுடைய சொந்த அறிவை ஆழ்ந்ததாக்குவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப் பட்டதாக நான் கருதுகின்றேன். நமது மொழிகளி டையே தமிழ் மாண்புமிக்கதொரு இடத்தை வகிக்கி றது. வடக்குக்கும் தெற்குக்குமிடையே உள்ள முக்கிய தொடர்புகளை அது இணைக்கிறது." எனக் கூறிஞர்கள்: தமிழ் மொழியின் தொன்மை, பண்பாட்டைப் பற்றி யெல்லாம் சிலாகித்துப் பேசிவிட்டுப் பாரதியாரைப் பற்றிப் பேசும்போது " கவிஞர்கள் கதாசிரியர்களின் பட்டியலில் சுப்பிரமணிய பாரதியாரின் பெயர் குறிப் பிடத்தக்கது. நமது நாட்டு விடுதலைப் போராட்டக் கவியான அவர் புதியதொரு சுதந்திர சகாப்தத்தை முன்னரே அறிவிக்கக்கூடிய தீர்க்க தரிசனத்தைப் பெற்றிருந்தார். வருங்கால பாரதம் பற்றிக் கவிதை வடித்த கவி பாரதி குறுகிய எண்ணங்களற்ற மொழி, பிராந்தியத் தடைகளற்ற இந்தியாவைப்பற்றிக் கனவு saw Litt.
ஒயுதல் செய்யோம்-தலை
சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம்-பல
வண்மைகள் செய்வோம். என்று பாரதி கூறினர். நம்மிடையே பாரதி இப்போது வாழ்ந்திருந்தால் அவர் என்ன எண்ணியிருக்கக்கூடும்?
169

Page 108
இந்திய விடுதலைப் போரில்.
மனக்கசப்பு அடைந்திருப்பாரா ? ஆழ்ந்த வருத்தத்தி ஞல் கண்ணீர் சிந்தியிருப்பாரா? மனிதத் தன்மை யுடனும் பரந்த நோக்குடனும் கூடிய தங்களுடைய சிறந்த மரபை மறக்கும்படி அவர் தமிழர்களைக் கேட்டுக் கொண்டிருப்பாரா? அல்லது அமைதியையும் நம்பிக்கை யையும் ஏற்படுத்தி, பொய்த் தோற்றங்களை நீக்கத் தமிழ் மரபின் நற்சக்தியை உபயோகித்திருப்பாரா? குறுகிய மனப்பான்மையுடன் வாழும்படி தமிழர்களை அவர் கேட்டுக்கொண்டிருப்பாரா? அல்லது எல்லா இந்திய மக்களின் மேன்மையே தங்களுடைய மேன்மை எனக் கருதி அந்த லட்சியத்திற்காகப் பாடுபட அழைப்பு விடுத்திருப்பாரா? இந்தப் பரந்த மனப்பான்மையும், அனைவரையும் அனைத்துச் செல்லும் உள்ளப்பாங்கும் கொண்ட தமிழர்கள், தொன்மை புகழ் கொண்ட தங்கள் மரபிற்கும் மாண்பிற்கும் ஒத்தவாறே இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள் என்றே நான் கருதுகின்றேன்" என்று மதிப்பிற்குரிய மாமேதை டாக்டர் ஸாகீர் உசேன் அவர்கள் பேசினர்கள்.
பாரதியாருக்கு எங்கெங்கு விழா எடுக்கின்ருர் களோ அங்கெல்லாம் மேலே குறிப்பிட்ட பாரதியாரின் உயர்ந்த லட்சியங்கள் கைகூட நாம் உழைக்க வேண்டும். இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தருவார் காந்தி Das nrjuo nr G TGörgy Lunt prgu u rriff unrg zu as mjög Lu GF és iš தில் நாம் காண்கின்ருேம். " காந்தி சொற்கேட்டார் காண்பார் விடுதலை" என்று அன்று பாரதியப்பன் சொல்லிப்போனர்கள். பாரதி வாக்குப் பலித்தது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல்." இவ் வுழைப்பில் இமைப்பொழுதும் சோராமல் உணர்ச்சிக் கடலான தமது உள்ளத்தால் அதை ஏந்திவந்த கூரிய சீரிய தமிழ்ச் சொல்லால் நாட்டின் மனத்தை விடுதலைப் பாசறையாக உருவாக்கிய பெரும் புலவர் பாரதியார்.
170,

** தமிழா தெய்வத்தை நம்பு 1.
இதை இன்று நன்றியோடு நினைந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
"" தமிழா தெய்வத்தை நம்பு பயப்படாதே ! உனக்கு நல்லகாலம் வருகின்றது. உனது சாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கின்ருர்கள். தெய்வம் கண்ட கவிதைகள், அற்புதமான சங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார். பல மணிகள் தோன்றுகின்றனர். அச்சமில் லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது சாதியிலே தலைவர்கள் மனிதர்களாக அவதரிக்கிருர்கள். உலகத்தி லுள்ள மதபேதங்களையெல்லாம் வேருடன் களைந்து சர்வசமய சமரசக் கொள்கையை நிலைநாட்டவேண்டுமா ஞல் அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலகம் முழு வதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உய்விக்கும்படி செய்யவல்ல மகான்கள் இப் போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிருர்கள்" என்று பாரதியார் எழுதிய கட்டுரையிற் காணப்படுகின்றது.
171

Page 109
காந்திஜி கண்ணிர்விட்டழுத இரு சம்பவங்கள்
குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்
இரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி
நாற்புறமும் பலர்உதைத்து கலியத் திட்ட
அத்தனையும் நான்பொறுத்தே அஹிம்சை காத்தும்
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்தமுகம் மலர்ந்(து) உதட்டில் சிரிப்பி னுேடும்
உயிர்துறந்தால் அதுவேளன் உயர்ந்த ஆசை.
காந்திஜியின் உயர்ந்த ஆசையை விளக்கி நமது காந்தியுகக் கவிஞர் வே. இராமலிங்கம்பிள்ளை அவர்கள் இந்தப் பாட்டிலே தருகின்ருர்கள். அலைமறந்த குணக் கடலாகிய காந்திமகாத்மா இருதடவைகள் கண்ணிர் மல்க அழுதிருக்கின்ருர்கள். விபரம் இதுதான்:
1924ஆம் வருஷத்தில் மகாத்மாகாந்தி சிறையி லிருந்து வெளிவந்தபிறகு ஆமதாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகசபையின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் காந்திஜி பொதுமேடையில் கண்ணிர்விட்டு அழுத ஓர் உருக்கமான சம்பவம் நடை பெற்றது. காந்திஜியின் கொள்கையோ அஹிம்சை, தேசத்தில் நடக்கும் பலாத்காரச் செயல்களை அவர் மனது எப்படி ஒப்பக்கூடும் ? அந்தச் சமயத்தில் பூரீ கோபிநாத் சஹா என்ற இளைஞன் மிஸ்டர் எர்னஸ்ட்டே என்ற வெள்ளைக்கார கலெக்டரைச் சுட்டுக் கொன்றுவிட்டான். இந்த ராஜியக் கொலை யைக் கண்டித்து அந்தக் கூட்டத்தில் காந்திஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். தேசபந்து சித்தரஞ்சன
172 .

காந்திஜி. .இரு சம்பவங்கள்
தாஸ் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தார். தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டது. காந்திஜியின் சகாக்கள் சிலர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். தமது உத்தமத் தோழர்களில் பலரின் இந்தச் செய்கை காந்திஜி யின் மனதைப் புண்படுத்திவிட்டது. வருத்தம் தாங்க முடியாமல் குழந்தைபோற் கண்ணிர்விட்டு அழுது விட்டார் சபைமுன்னே. இது ஒரு சம்பவம்.
1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆந் திகதி சுயராஜ்யம் எய்தியதற்காகப் பாரதமக்கள் அனைவரும் பரமானந்தமடைந்தனர் தேசபிதாவாகிய காந்தி மகாத்மாவோ அன்று இருபத்துநான்குமணி நேரமும் உண்ணு நோன்பு கொண்டார். பச்சைத்தண்ணிர் பல் லிலே படவில்லை. ஏன் ? சுதந்திர வெற்றி குறித்து ஆசிச்செய்தி தரவேண்டுமென நேரு, படேல் உட்பட அனைவருமவரை வேண்டிநின்றனர்; இரந்தும் கேட் டனர். மகாத்மாஜி மறுத்துவிட்டார். ஏன் ? பாரத தேசம் இரு துண்டான துயரம் ஒருபுறம். இரத்த வெள்ளம் பெருக்கெடுக்க, சவமலைகள் குவிந்துகிடக்க அவ்விரண்டின் இடையே சுதந்திரம் வந்தது ஒருபுறம். அஹிம்சை என்பது காற்றிலே பறந்துவிட்டதே என்பது ஒரு புறம். அவற்றினுக்குப் பிராயச்சித்தமாகப் பட்டினி கிடவாமல் பரம்பொருளை எண்ணி வருந்தாமல் அப் பெரியார் எங்ஙனம் இருக்க இயலும்? மனவேதனை, மனக்கசப்பு முதலியன எல்லாம் தமது வாழ்விலே அவர் பார்த்திருந்தாலும் கண்ணிர் வடித்தது மிக அபூர்வம்.
* பித்தனது குண்டுக்கு ஆளாகி நான் மரிப்பேஞயின் ஒரு சொட்டுக் கண்ணிர் விடாதே" என்று ராஜகுமாரி அமிர்தகெளரியை வேண்டிக்கொண்டவர் கண்ணிர் வடிக்கிருர், கருத்தழிகிருர், கர்த்தனே உனது உதவி ஒர் அலாதி என்று கடவுளைப் போற்றுகிருர், விபரம் இதுதான். அந்த ஆகஸ்ட் மாதம் பிறக்கு முன்பே பஞ்சநதிப் பிரதேசத்தில் பகைத்தீ, காட்டுத்தீயிலும்
173

Page 110
இந்திய விடுதலைப் போரில்.
கோரமாக எங்கும் பரவுகின்றது. வகுப்பு வெறியாட்டம் என்பது தலைவிரி கோலமாகத் தாண்டவமாடுகின்றது. மனிதர் என்போர் கொடிய வனவிலங்குகளே போல் கொலையை நாடித் திரிகின்றனர்; ஆகஸ்ட்மாத ஆரம்பம். பஞ்சாப்பிலே சீக்கியரே நிரம்பிய ஒரு கிராமத்தைப் பகைக் கும்பல் வந்து சூழ்ந்து கொள்கிறது. வீடுக ளுக்குத் தீ வைக்கிறது. சீக்கியரின் தலைவரான சர்தார் பிரதாபசிங் என்பார் தனது துணைவர்களைச் சேர்த்துக் கொண்டு அக் கும்பலுடன் போராடுகிருர் . மூன்றுநாள் இரு திறத்தாருக்கும் இடையே மிகக் கொடிய போராட் டம் நடைபெறுகிறது. நான்காவது நாளிலே ஆயுதங் களும், தோட்டாக்களும், கைவெடிகளும் தீர்ந்து போயின. பிரதாபகிங் யாது செய்வார்? தமது தோழர்க ளுடன் அக்கும்பலிடம் சரணுகதி ஆகினர் விதியின்றி.
மதங்கெடுக்க :
அவ்வளவுதான், அக்கும்பலுக்குக் கும்மாளம் பிறந்து விட்டது. பழிவாங்குவோம் என்று கூத்தாடுகிறது. எல்லாரையும் மதங்கெடுக்கச் செய்வோம் என்று கொக் கரிக்கிறது. இதற்கிடையிலே கத்தரிக்கோலுடன் சிலர் முன்வருகின்றனர். சீக்கியரின் நீண்ட தலைமயிரையும், தாடியையும் கத்தரித்துத் தள்ளிச் சின்னமாக்குவதற் காக அக்கிராமத்திலே மங்கையரும் மா தரு மாக மொத்தம் எழுபத்துநான்கு பெண்கள் இருந்தனர், அம் மாதர் மணிகளையும் மதங்கெடுக்க வேண்டும். எனவே, பெண்கள் எல்லோரையும் ஓர் இடத்தில் அக் கும்பல் திரட்டியது. சீக்கிய மாதரிடம் வடிவழகு நிரம்பி நிற்கும். தவிர அம் மாதரிலே பலரும் மடந்தைப் பருவத்தினர். வயது இருபத்தைந்துக் குட்பட்டிருக்கும். அம் மாதரில் வனப்பு மிக்கவளை யார் எடுத்துக்கொள்லது என்று அக் கும்பலுக்குள்ளேயே போட்டி. முடிவிலே ஒரு விதத்தில் தீர்மானம். ஏனைய மாதரையும் மத
174

காந்திஜி.இரு சம்ப்வங்கள்
மாற்றஞ் செய்து மணந்து கொள்வதே அக் கும்பலின் உறுதிப்பாடு. மரியாதையாக வாருங்கள், மதம் மாறுங் கள், என்று அக்கும்பலின் தலைவன் கர்ச்சனை புரிகிருன் கிராம ஆடவரிலே மூன்றுநாள் சண்டையில் இறந் தோர் சிலர், காயமுற்ருேர் சிலர், உயிருடன் எஞ்சிய வர்கள் வெகு சிலரே. இச் சிலரும், அக் கும்பலிடம் சரணுகதி அடைந்து சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். ஆடவர் எவரும் ஆறுதலோ தேறுதலோ உரைக்க வகையில்லை. அம் மாதரின் நிலை எப்படியிருக்கும் ? * வாருங்கள், உங்களையும் எங்கள் மதத்தவர் ஆக்குகி ருேம்” என்று அக்கும்பல் தாண்டவம் ஆடுகையில் மாதர் யாது செய்வர் ? அப் பெண்மணிகளில் சற்றே வயது மிகுந்தவள் ஒருத்தி தைரியம் கொண்டாள். கும்பலின் தலைவனை நோக்கிக் கூறினுள் "* அப்பா, நாங்கள் சரண் அடையத் தயார். ஆணுலும் அதற்கு முன்னதாக ஆண்டவனைக் குறித்துக் கடைசி முறையாகப் பிரார்த்தனை செய்ய விரும்புகின்ருேம். அருகே புதிய கிணறு இருக்கிறது. அதில் நீராடி நிமலனைத் தொழுது வருகின்ருேம் " என்பதே, எழுபத்துநான்கு மாதரும் ஈசனை எண்ணியவண்ணம் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். அருகே யிருந்த புதிய கிணறு சேர்ந்தனர். கிணறு உள்ள இடத்தைச் சுற்றி நான்கு பக்கமும் பெரிய சுவர்கள் இருந்தன. கிணற்றைக் குறுகியதுதான் தாமதம். எல்லோரும் முறைப்படி நீராடினர். ஆடியதும் அம்மாதர் வேறு ஆடை தரித்தனர் எல்லாம்வல்ல ஈசனைக் குறித்துத் தொழுதனர். "ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கமாட்டான்" என்பது பழமொழி. அக்கும்பலோ " என்ன இத்தனை நேரம்? சீக்கிரம் வெளிவாருங்கள் " என்று குதிக்கின்றது. "ஏன் ஆத்திரப்படுகின்றீர்கள்? அவசரம் வேண்டாம்" என்ருள் ஒரு பெண்மணி, கும்பலின் கூச்சல் ஓயவில்லை: முடிவில் "துணிவிருந்தால் உள்ளே வரலாம். எங்களில்
175

Page 111
இந்திய விடுதலைப் போரில்.
எவரையும் உயிருடன் நீங்கள் தொடமுடியாது" என்று கூறினுள். கும்பல் உடனே பிரமித்தது. கூச்சலையும் நிறுத்திக்கொண்டனர். பின்னர் பல நிமிடங்கள் பறந்தன; கிணற்றின் அருகே யாதொரு சந்தடியு மில்லை. பெண்களின் நடமாட்டமும் தென்படவில்லை. காமவெறியும் பகைவெறியும் பிடித்த அக்கும்பல் சும்மா இருத்தல் எங்ங்ணம்?
மரம்போல நின்றது கும்பல் :
கடைசியிலே அக்கும்பல் சுவரேறிக் குதித்து அக் கிணற்றின் அருகே சென்றது. ஒரு மாதரைக்கூடக் காணுேம். எல்லாரும் இறக்கை கொண்டு பறந்துவிட் டனர் போலும் என்ருன் ஒருவன். ஈதென்ன அதிசயம் எள்முன் இன்னுெருவன். அந்நிலைமையில் கிணற்றி னுாடே நோக்கினன் ஒருவன். "அடே அடே" என்று கூவினன். 'எல்லா மாதரும் கிணற்றுக்குள்ளே குதித்து விட்டனரே" என்று கூறினன். கும்பல் முழுவதும் கிணற்றை உற்று நோக்கியது. மாதரின் உடலைக் கண் டதும் மரம்போல் அசைவற்று நின்றனர். பின்னர் அக் கும்பலிடம் மனித உணர்ச்சி தலையெடுத்தது எனல் வேண்டும். மனம் ஒடிந்து மனம் கசிந்து சிறிது நேரம் நின்றபின்னர் கும் பலிலே ஒவ்வொருவராகத் தலை யிறக்கம் கொண்டனர். கைகளிலிருந்த ஆயுதங்களைக் கீழே வீசி எறிந்தனர். வாய்மூடி மெளனிகளாகி ஒவ் வொருவராக அகன்றுவிட்டனர். அகலவே சிறைப்பட் டிருந்த ஆடவருக்கு விடுதலை கிடைத்தது. அவ்விதம் விடுதலை பெற்றேர் அக்கிணற்றிலிருந்து ஒவ்வொரு சவமாக வெளியே எடுத்தனர். பதினேழு வயதுக் குமரி ஒருத்தி மட்டும் குற்றுயிராய்க் கிடந்தாள். சவங்கள் அனைத்தையும் அடக்கம் செய்தனர் விதிப்படி குற் றுயிராய்க் கிடந்த மங்கையை வைத்தியசாலைக்கு அகதி களாய் வந்து முகாமில் சேர்த்தனர். காந்திமகான்
76

காந்திஜி.இரு சம்பவங்கள்
கட்டளைப்படி அம்முகாமிற்கு ஆறுதலும் தேறுதலும் சொல்ல நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் சுசிலா தக்க சிகிச்சை செய்தார்கள். அப்பெண்ணும் உயிர் பெற்ருர், அப்பால் டாக்டர் சுசிலா காந்திஜியைக் கண்டார்கள்.
கண்ணிர் தழும்பிற்று :
கண்டபோது அம்மகானிடம் நடந்தவற்றைச் சொன் ஞர்கள். அந்நிகழ்ச்சிகளைக் கேட்டதுதான் தாமதம், காந்திஜி யின் கண்களிலே நீர் தளும் பியது. அப்போது காந்தி மகா ன் கூறியது இதுதான். " அகிம்சை வழியில் உதிக்கும் தைரியம் எந்நாளும் தவருது. மனிதனல் சமாளிக்க முடியாத சூழ்நிலை நேரும்போது யாவரும் எதிர்பாராத விதத்திலே கடவுள் வந்து உதவுகிருர், ஆபத்துக் காலத்திலே மான பங்கம் நேருமெனத் தோன்றினல், கோழைமணம் கொள்ளாமல் மானத்துக்குப் பங்கம் இல்லாமல் மாதர் வீரமுடன் மரித்தல் வேண்டும். இஃதே அகிம்சையின் வழி" என்று காந்தி மகாத்மா கூறியுள்ளார்கள். அந்த எழுபத்துநான்கு மாதரும் மானபங்கம் நேருமெனத் தோன்றியதும், அகிம்சை வழியில் உயிரை விடுத்தனர். அவர்களைக் காக்க ஆடவர் இல்லாது போயினர். எதிர் பாராதவழியில் தெய்வம் வந்து உதவியது என்று கருதியே காந்திஜியின் கண்களில் நீர் தளும்பியது. பகை வரின் கையிற் சிக்கிக் கற்பினை இழப்பதைவிட அக்கினி குண்டத்தில் குதித்தும், வாள்கொண்டு வெட்டிக் கொண்டும் பதினுயிரக் கணக்கில் ராஜபுத்திர மாதர் மாண்டு மடிந்ததாகச் சரித்திரம் பேசும். அதனை மெய்ப்பிக்கவே அந்த நிகழ்ச்கி நேர்ந்ததுபோலும்
இ-12 177

Page 112
பாரதத்தின் சொத்து
பாவலர் இர ாமலிங்கம்பிள்ளை
பாரதநாட்டை 1920ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்கள் மூன்று மூர்த்திகள். அவர்கள்தான் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், வங்கம் தந்த கேசரி விபின சந்திரபாலர், மகாராஷ்டிரத்தின் இருஷி லோகமான்ய பாலகங்காதர திலகர். இவர்களின் சிந்தனையிலே புரட்சிகரமான கவிகளை நாட்டுக்குத் தந்தவரி பாரதியார். 1921ஆம் ஆண்டு காந்தி மகாத்மா இந்திய அரசியலில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டார். அன்றுதொட்டு இந்தியா வின் அரசியற் போக்கு வேறுவழியில் திரும்பியது. "காந்திசொற் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தி னுள்ளே' என்பது பாரதியார் வாக்கு.
பாரதியாரை இராமலிங்கப் பாவலர் நேரிற்கண்டு பழகியிருக்கிருர். பாரதியாரின் வாயாலே அவருடைய பாட்டைப் பாடக் கேட்டிருக்கிறர். ஒரு சமயம் இவர் பாரதியாரைப் பார்க்கப் போயிருக்கின்றர். பாரதியார், " ஒரு பாட்டுப்பாடு கேட்போம்" என்ருர், கவிஞர் தட்டிக் கழிக்க முடியாமல், நாணப்பட்டுக் கொண்டே நடுங்கின குரலில் ' தம்மரசைப் பிறர்ஆள விட்டு விட்டுத் தாம்வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்" என்று கிட்டப்பா நாடகத்துக்காகத் தாம் எழுதிக்கொடுத்த இராமபிரான் சோகப்பாட்டைப் பாடத் தொடங்கினர். முதல் அடியைச் சொல்லி முடிப்பதற்குள்ளே பாரதி யார் துள்ளியெழுந்தார். கழுத்தை நீட்டி, காதைக் காட்டி கவனத்தோடு Lumtu *GODL & Gas Lmtif. Lu mr L " GUD L- (puņš SmrGpurnir இல்லையோ,
178

ஆஸ்தானக் கவிஞர் நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை அவர்கள்

Page 113

பாரதத்தின்.இராமலிங்கம்பிள்ளை
'பலே பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன் ஐயமில்லை!
பிள்ளைவாள்! நீர் நம்மை ஒவியத்தில் தீட்டும். தாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்." பாரதியாரைப் பற்றிய நம் நாமக்கல் கவிஞரின் இனிய பாடல்கள் இன்றைக்கெல்லாம் படித்துக்கொண்டேயிருக்கலாம். நமது கவிஞர் காந்திமகாத்மா விஷயத்தில் அசையாது அன்புகொண்டவர் என்பதையும் இவருடைய பாடல்கள் நன்கு விளக்குகின்றன.
உள்ளம் உருகுது கள்ளம் கருகுது உத்தமன் காந்தியை நினைந்துவிட்டால் வெள்ளம் பெருகிடக் கண்ணிர் வருகுது வேர்க்குது இன்பம் தேக்குதடா !
என்று பாடுகிருர் காந்தீயக் கவிஞரி. காந்தியடிகளின் பெருமையைக் கவியாகப் பாடுவதற்குக் கம்பன் இல்லை யென்றும், கற்பித்துரைப்பதற்குக் காளிதாசன் இல்லை என்றும், கீர்தனையாகப் பாடுவதற்குத் தியாகையர் இல்லை என்றும், தேசிய பாரதிபோலப் பாடுவதற்குத் தமக்குத் திறம் இல்லை என்றும் அடக்கத்தோடு கூறுகிருர் நாமக்கல் கவிஞர். காந்தியடிகள் மறைந்த பின்பு கவிஞர் உள்ளம் உருகப் பாடிய பாக்கள் பல இவர் காந்தி மகாத்மாவைப் பற்றிப் பாடியதுபோல இதுவரை வேறு எவரும் இத்தனே பாடல்களால் எப் பெரியாரையும் எந்நாட்டிலும் எம் மொழியிலும் பாடிய தில்லை என்று பல பெரியார்கள் கூறுகின்றர்கள். எனவே, உலகமெல்லாம் போற்றும் உத்தமராகிய காந்தியடிகளை உள்ளங்கனிந்து காந்தியெனும் பேரொளியே கருணை பொழி வான்முகிலே! சாந்திநிறை பாத்திரமே சள் மார்க்க சாத்திரமே! மண்கண்ட மாதவமே மறைகண்ட சாதகமே கண்கண்ட தெய்வமே! என்றெல்லாம் பாடிக்
179

Page 114
இந்திய விடுதலைப் போரில்.
காந்திக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்ருர்கள். பிறர் குற்றங்களுக்காகத் தாம் வருந்தும் குணம் காந்தியடிக ளிடத்தில் நிறைந்திருந்தது என்பதை உலகம் அறியும்: அவர்வழிச் சென்ற நம் கவிஞரும் அக்குணத்தோடு விளங்கினுர்கள்.
கவிஞர் திலகம் இலங்கை விஜயம் :
கவிஞரின் கவிதா சக்தியை உணர்ந்த தமிழ் மக்கள் 1945ஆம் ஆண்டு இராஜாஜியின் தலைமையில் கவிஞ ருக்குச் சென்னையில் நிதி அளிப்பு வைபவம் நடாத்தி ஞர்கள். ரூ. 10,000/- கொண்ட ஒரு பொற்கிழியைக் கவிஞருக்கு இராஜாஜி வழங்கிஞர். இதை அறிந்த என்போன்ற நண்பர்களுக்குக் கவிஞரை இலங்கைக்கு அழைத்து அப்படி ஒரு வைபவத்தை நடாத்திப் பண முடிப்பு ஒன்றை இலங்கை மக்களின் பேரால் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பிறந்தது. எனவே 1947ஆம் ஆண்டு ஆடி மாதம் கவிஞர் இலங்கைக்கு விஜயம் செய்த போது நாடெங்கணும் சிறப்புமிக்க விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன. ஆங்காங்கு பணமுடிப்பு வழங்கிப் பாராட்டினர்கள். மொத்தமாக ரூ. 13,315/- கவிஞருக்கு இங்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு கவிஞ ருக்கு ரூ. 10,000/- நிதியளிப்புச் செய்தது. ஆனல் சேய் நாடாகிய ஈழம் ரூ. 13,315/- நிதியளிப்புச் செய்தது. தமிழ் நாட்டையே ஈழம் வென்றுவிட்டது.
180

லங்கையிற் பிறந்த கவிகள் ற பிறநத
கவிஞர் அவர்கள் இலங்கையில் பிரயாணம் செய்த காலை அப்போது "கல்கி" கிருஷ்ணமூர்த்தி அவர்களிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்புவிழா வின்போது திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடுவதற்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பும்படி கேட்டிருந் தார்கள். கவிஞரின் இலங்கைப் பிரயாணத்தின்போது அன்னவருக்கு யான் மெய்காப்பாளராகவும் காரிய தரிசியாகவும் கடமையாற்றிக்கொண்டிருந்தமையால் அக்கடிதத்தையும் யான் வைத்திருந்தேன். இலங்கையி லுள்ள மலைப்பிரதேசத்தின் எழில்மிகு வனப்புக்கள் ஆங்காங்கு சுற்றிவளைத்து ஒடுகின்ற ஆறுகள், தேயிலைத் தோட்டங்கள் இவைகளினூடே பலப்பல இடங்க ளுக்குப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் எங்கேயோ தூரத்தில் அருவி ஒன்று மலையின் உச்சியி லிருந்து பாய்ந்து பள்ளத்தில் விழுகிறது. அருமையான காட்சியைப் பார்த்துவிட்டார் கவிஞர் அவர்கள். சில விஞடிகளில் கவிஞர் என்னைப்பார்த்து 'இராஜ கோபாலன், பாட்டு வந்துவிட்டது. எழுதிக்கொன். ளுங்கள்". பாட்டு இதுதான்
பூநீ சுப்பிரமணிய பாரதி:
பல்லவி சுதந்திர ஞானத்தின் சுடரொளி தீபம் சுபபூரீ சுப்ரமணிய பாரதி நாமம்
அநுபல்லவி நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம் நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம்
181

Page 115
இந்திய விடுதலைப் போரில்.
gT6. To அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு கொடுமையை எதிர்த்திடக் கூறிய மறுப்பு!
தெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத் தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து வையம் முழுதும் அதை வணங்கிடச் செய்யும் வாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன் ! பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை பேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம் உத்தம தத்துவங்கள் ஒலித்திடும் கீதம் !
பாட்டை எழுதிக்கொண்டேன். பின்னர் பண்டார வளை யென்ற ஊரை அடைந்தோம். அன்று பிற்பகல் கவிஞருக்கு அங்கு வரவேற்பு விழா சிறப்பாக நடை பெற்றது. இலங்கையில் பிறந்த இப்பாட்டை 'கல்கி" ஆசிரியருக்கு அனுப்பிவைத்தோம். இங்ங்ணம் பலவித மான வியக்கத்தக்க வரவேற்புகளை முடித்துக்கொண்டு தாய்நாடு செல்லத் தலைமன்னர் புகையிரதத்தை, பொல் காவலையில் 14-8-47இல் காத்துக்கொண்டிருந்தோம். அடுத்தநாள் 15-8-47இல் விடுதலைநாள். Golausičnturř கள் ஆட்சியை இந்திய மக்களிடம் ஒப்படைத்த நன்னுள். பொன்நாள். பொல்காவலை புகையிரத நிலையத்தில் வைத்து கவிஞர் சொல்லுகிருர், 'யான் நாளைக்குப் பள்ளத்தூரில் சுதந்தரதின விழாவிற் கலந்துகொள்ளப் போகிறேன். பாட்டும் வந்துவிட்டது. எழுதிக்கொள் ளுங்கள். இப்பாட்டை யான் பள்ளத்தூரில் பாடுகின் றேன். நீங்கள் திருக்கோணமலையில் பாடுங்கள்.” என்று.
182

இலங்கையிற் பிறந்த கவிகள்
சுதந்தர தினம்
விடுதலை அடைந்துவிட்டோம் - உலகம் வியந்திடும் படிக்கொரு நயந்திகழ் விதத்தினில்
அநுபல்லவி நடுநிலை தாங்கிடும் நம்மா சோங்கிட நானிலம் முழுதுக்கும் ஞானப் பணிபுரிய
1 சரணம் பாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்ததென பண்டுகம் தாதாபாய் கண்ட கனவிதென தீரன் திலகரிஷி த்யாகம் திகழ்ந்திடவும் தெய்விக காந்திதவம் வையம் புகழ்ந்திடவும் அந்நியப் பிடிப்புகள் அகன்றத னுல்மட்டும் ஆனந்த சுதந்தரம் அடைவது வெகுகஷ்டம் உன்னத லட்சியங்கள் ஓங்கிட வேண்டும்.அதில் உத்தமன் காந்திவழி தாங்கிட வேண்டும்இனி கிடைத்த விடுதலையைக் கெடுத்து விடாதபடி கீழான ஆசைகட்குக் கொடுத்து விடாமல்இடம் அடுத்திடும் யாவரையும் அன்பின் வழிமதித்தே அகிலம் முழுதும்காந்தி அருளைப் பரப்புதற்கே. பாட்டை எழுதி முடித்தபின்னர் நாட்டை ராகத்தில் விடுதலைப்பாட்டைப் பாடியும் விட்டேன் கவிஞருக்கு முன்னுல். கவிஞர் என்னை ஆசீர்வதித்து விட்டார்கள். சிலநேரம் சென்றபின்னர் தலைமன்னர் வண்டியும் வந்தது. வண்டியில் ஏறிக்கொண்டோம். கவிஞர் பெருமான் தமிழ்நாடு சென்றுவிட்டார்கள். யான் அடுத்தநாட் காலை திருக்கோணமலையை அடைந்தேன். கவிஞரின் ஆக்ஞைப்படிக்குத் திருக்கோணமலையில் நடந்த சுதந்தர தின விழாவில் விடுதலைப்பாட்டுப் பாடினேன்,
183

Page 116
இந்திய விடுதலைப் போரில்.
தமிழ்நாட்டில் நான் கவிஞரைச் சந்திக்கும்போதெல் லாம் அடியேனைத் தமது பாடல்கள் சிலவற்றைப் பாடும்படி சொல்லுவார். யான் பாடுவதைக்கேட்டு மகிழ்ச்சி அடைவார். 1949ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் திகதி இந்திய சுதந்திரத் திருநாள் அன்று தமிழ்நாட்டின் ஆஸ்தானக் கவிஞர் என்ற அரிய பட்டத்தைச் சூட்டி அரசியலார் சென்னையில் இராமலிங்கப் பாவலரைக் கெளரவித்தார்கள். அந்த விழாவுக்கு இராஜாஜி சிறப்புச்செய்தி அனுப்பியிருந் தார்கள். அதில் "அன்பு நிறைந்த தொண்டிலும், பல கலைகளிலும், புதிய நூல்களிலும் தன் நன்மக்கள் வாயிலாக நமது அருமைத்தாய் விளங்கி வருகிருள்? தமிழ்த்தாய் பெற்ற நன் மக்களுள் ஒருவராகிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளையின் பாடல்கள் சிற்சில சமயங்களிற் தேசியக் கவிச் சக்கர வர்த்தி பூரீ சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களைக் காட்டி லும் சிறந்து விளங்குகின்றன. அவருடைய பாடல்களைத் தமிழ் மக்கள் உள்ளம் உருகிப் பாடவேண்டும்" என்று எழுதியிருந்தார்கள்:
சீனக்காரன் இந்திய வட எல்லையைத் தாக்கிய போது கவிஞர், "வீறுகொண்டு சீனரை வெருட்டியே விரட்டுவோம்" என்று பாடியதைத் தருகின்றேன்.
வீறுகொண்டு சீனரை வெருட்டியே விரட்டுவோம்
(நாமக்கல் கவிஞர்) (*கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற மெட்டில்) தொன்றுதொட்டு என்றுமெங்கள் சொந்தமான நாட்டிலே நன்றிகெட்ட சீனர்வந்து வம்புச்சண்டை மூட்டினர் ஒன்றுபட்டு நமதுநாட்டின் சக்தியைத் திரட்டிநாம் வென்றுஇந்த நாட்டைவிட்டுச் சீனரை விரட்டுவோம்
184

இலங்கையிற் பிறந்த கவிகள்
சத்தியத்தைக் கைவிடாத சாந்தநாடு திண்ணமாய் யுத்தஞ்செய்ய அஞ்சும்என்ற பித்துக்கொண்ட எண்ணமா ! ஒத்துக்கொண்ட பஞ்சசீலம் உதறிச்சண்டை மூட்டினுர்! மொத்திமோதிச் சீனர்தம்மை முறியடித்து ஒட்டுவோம். வேறுநாட்டைத் துன்புறுத்தும் வீணரல்லர் இந்தியர் கூறும்எந்த நாட்டினுேடும் குலவிவாழும் சிந்தையர் ; கூறுகெட்டுச் சீனர்நம்மை மாறுபட்டு எண்ணினர் வீறுகொண் டெழுந்துவென்று உண்மைகாணப் பண்ணுவோம். வீரருக்குள் வீரர்வாழ்ந்து வெற்றிகண்ட பாரதம் ; தீரருக்குள் தீரர்காந்தி தியாகம்கற்ற பாரதம்; சோரருக்குள் சோரரான சீனருக்கு அஞ்சுமா ! ஊரைவிட்டு ஒட்டநம்முள் வீரருக்குப் பஞ்சமா ! சமயபேதம் கட்சிபேதம் சாதிபேதம் இன்றியே இமயம்தொட்டுக் குமரிமட்டும் இன்றுமக்கள் ஒன்றினுேம் நமதுநாட்டின் ஜிவசக்தி நாலுபத்துக் கோடிமேல் சமதையான பக்தியோடு சீனர்ஓடச் சாடுவோம். உடலுழைத்து நிதிகொடுத்து உயிர்துறக்க நேரினும் கடனறிந்து போருக்கான காரியத்திற் சேருவோம்; துடிதுடிக்கச் செய்துஅந்தச் சீனரைத் துரத்துவோம், கொடிஉயர்த்தி முரசொலிக்க நீதியை நிறுத்துவோம்.
சுதந்தரப் போராட்ட காலங்களில் கவிஞரின் காந்தீயத் தத்துவங்கள் பொதிந்த பாடல்களை யான் பாடியிருக்கின்றேன். சிறப்பாக " கத்தியின்றி ரத்த மின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர் " என்று பாடும்போது எமக்கு எப்படி வீரம், ஆவேசம் பொங்கி எழுந்தது என்பதைத் தொண்டர்களாகிய நாம் அனுபவித்திருக் கிருேம் 1972ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் திகதி நான் சென்னை போய்ச் சேர்ந்தேன். இரு நாட்களின் 96ir கவிஞரைப் பார்க்க எண்ணியிருந்தேன்.
185

Page 117
இந்திய விடுதலைப் போரில்.
ஆனல், நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேருென்று நினைத்துவிடுகிறது!" "நாமக்கல் கவிஞர் இறைவனடி சேர்ந்தார்" என்ற செய்தி 25-8-72ஆந் திகதி சென் னைப் பத்திரிகைகளில் வெளியாயிற்று. ஆழ்வார்ப் பேட்டை சீத்தாம்மா காலணியில் உள்ள கவிஞரின் வீட்டுக்குச் சென்று கவிஞருக்கு எனது அஞ்சலியைச் செலுத்தினேன்.
இற்றைத் தமிழன் இதயத் துடிப்பினை இச்
சொற்றரு சித்திரத்தில் தோன்ற வைத்தான்
கற்றறிந்த ஒவிய நற்கலைஞன் ஒதுபுகழ்
நாமக்கல் பாவலன் ராமலிங்கம் பார் ! என்ற தேசிக விநாயகம்பிள்ளை அவர்களின் பாடல் உள்ளத்தில் உதித்தது.
சுதந்தர வெள்ளிவிழாவை ஒட்டி நாமக்கல் கவிஞர்
எழுதிய கவிதை தமிழக அரசு வெளியிடும் "" தமிழரசு " பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இறப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாகத் தன் உடல்நிலை மோசமாகி விட்டதை உணர்ந்த கவிஞர் அந்தப் பத்திரிகையைக் கொண்டுவருமாறு கூறிஞர். அதன்படி கொண்டுவந்து கொடுத்தார்கள். அடிமைவாழ்வை நீக்கிநாம் அரசரான நாளிது; அங்கியர்க்கு அஞ்சிவாழ்ந்த அவதிவிட்ட நாளிது! கடமையோடு கண்ணியம் கட்டுப்பாடு மூன்றையும் கண்ணைப்போலக் காப்போமென்று கையடித்த நாளிது விடுதலைநாள் கொண்டாடும் வெள்ளிவிழா நாளிதில் வியப்புமிக்க சாந்தசத்திய விரதம்பூண்ட வேள்வியில் கடுமையான தவமியற்றிக் கட்டவிழ்த்து விட்டநாம் காந்தியண்ணல் நினைவுகொண்டு கைகுவித்து வணங்குவோம்!
இப்பாடலைப் பாடியவாறு நாமக்கல் கவிஞர் பெருமான் இவ்வுலகை நீத்தார். 'பாரத நாடு என் பாட்டனின் சொத்து" என்ருர் கவிஞர். நாமக்கல் கவிஞர் பாரதத்தின் சொத்து என்று நாம் பெருமை யோடு பேசுவோம்.
186

காந்தி நெறியில் காமராஜர்
காந்தி மகாத்மாவினல் தெரிவு செய்யப்பட்ட முதல் சத்தியாக்கிரகி பூமிதான முனிவர் விஞேபாஜி அவர்கள். முனிவர், உயர்திரு. கு. காமராஜ் அவர்களைப் பற்றிப் பாராட்டுகையில் கூறுகின்ருர்: "ஜனநாயக சோஷலிசத்தில் முழு நம்பிக்கை யுள்ளவர் என்ற முறையில் அவர் சர்வோதயத்தின் கெழுதகை நண்ப ராவார். சென்னையில் என்னுடைய பிரதிநிதியாகத் திரு காமராஜ் அவர்கள் இருக்கிருர்." அனுபவம் என்னும் கல்வியை ஆழ்ந்து பயின்றவர்; அறிஞர்கள் பலரைவிட அரசியல் மேதை எளிய வாழ்க்கையில் இன்பங் கொள்பவர் நேருஜிக்குப்பின் ஜனநாயக சோஷலிசத்தின் ஊன்றுகோலாகத் திகழ்பவர்; ஊழியர் களுக்கு ஒரு உதாரணம். அடக்கம் அன்பு ஆகிய பண்புகளின் உருவமாக விளங்கியவர். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் ஒருமைப்பாட்டில் அசையாது நம்பிக்கை கொண்டவர். இப்படிப்பட்ட குணுதிசயங் களையுடைய கர்ம வீரர் காமராஜ் அவர்களின் தலைமை யிற் பழைய காங்கிரஸ் தமிழ்நாடு முழுவதிலும் சென்ற 3-10-73ஆந் திகதியிலிருந்து ஒருவாரகாலம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, நேர்மைக் குறைவான நிருவாகம், பூரண மதுவிலக்குப் போன்ற முக்கியமான குறைகளை வலியுறுத்துவதற்காக நடத்திய சாத்வீகப் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அந்தக் காலத்தில் யான் தமிழ்நாட்டில் இருந்தமையினுற் பெருமைதந்த இப் போராட்டத்தின் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு வாய்ப்பாக எனக்கு இருந்தது.
சாத்வீகப் போராட்டங்களையும், ஒத்துழையாமை இயக்கங்களையும் முன்னின்று நடத்தி நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்த மகாத்மாஜி, உலகமே கண்டிராத தனிப்
187

Page 118
இந்திய விடுதலைபி போரில்.
பெருந் தலைவர். அவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டு. உயிரையும் பணயம் வைத்துச் செயற்பட்ட சத்தியாக் கிரகிகள் சரித்திர நாயகர்கள். நாடு விடுதலை பெற்ற தோடு அந்தத் தியாகப் பாரம்பரியம் மறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்; காந்திஜிக்குப் பின்னர் பல இடைவெளிகள். இந்தநிலையில் அரசியற் கட்சிகளின் நாகரிகமற்ற போராட்டங்களுக்கிடையே, ஆளும் கட்சியினரின் இதயமற்ற அடக்குமுறைகளுக்கு நடுவே இப்படியொரு சாத்வீகப்போரை நடத்துவது முடியாத காரியம் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்த பொழுது பெருந்தலைவர் உயர்திரு. காமராஜ் அவர்கள் இதனைப் பொய்யாக்கிவிட்டார். மாற்ருர் வியந்திட மக்கள் மகிழ்ந்திட அண்ணல் காந்திஜியின் வழியில் 50,000 தொண்டர்கள் போராட்டத்திற் குதித்தார்கள், சிறை சென்ருர்கள். பழைய காங்கிரசைப் பொறுத்தமட்டில் இந்த ஒருவாரகால சாத்வீகப் போராட்டம் அதனுடைய கெளரவத்தையும் செல்வாக்கையும் மிகவும் உயர்த்தி விட்டது. மக்களிடையே அதனுடைய மதிப்பும் மேலோங்கியுள்ளது. ஒருவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவிடாது தொண்டர்கள் கட்டுப்பாடாக மறியல் செய்து தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகளை நிரப்பி யிருந்தது காமராஜ் அவர்களின் தலைமைக்குக் கிடைத்த
மாபெரும் வெற்றியாகும்.
பழைய காங்கிரஸ் அமைதியான கிளர்ச்சிக்குத் தமிழக முதல்வர் பாராட்டு:
"தற்போது நடைபெறும் மறியல் இயக்கத்திற் கைது செய்யப்பட்டுள்ள பழைய காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் அரசியற் கைதிகளாக நடத்தப்படுவார்கள். தலைவர்களையும் தொண்டர்களையும் ஈடுபடுத்திப் பழைய காங்கிரஸ் கட்சி சாத்வீக முறையில் அமைதியாகக் கிளர்ச்சி நடத்திவந்ததைப் பாராட்டுகின்றேன். சில
188.

காந்தி நெறியில் காமராஜர்
கட்சிகள் கிளர்ச்சி நடத்தும்போது அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பங்குகொள்ளாமல் மக்களையும் சமூக விரோத சக்திகளையும் தூண்டிவிடுகின்ருர்கள் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு. கருளுநிதி அவர்கள் கூறிஞர்கள்:
அறப்போரைப் பற்றிய விபரங்கள் அறிய டில்லியிலிருந்து குழு:
தமிழ் நாட்டில் தலைவ்ர் காமராஜ் அவர்கள் காட்டிய வழியில் நடந்த அறப்போராட்டம் பற்றி ஆராய டில்லி காந்தி அமைதி நிறுவனத்தைச் சேர்ந்த (Delhi, Gandhi Peace Foundation) ஒரு குழுவினர் செள்னை வந்து திரு. காமராஜ் அவர்களைச் சந்தித்து உரையாடினர். பல தலைவர்களையும் பார்த்துப் பேசினர்கள். திரு. காமராஜ் நடாத்திய அறப்போரை அகில இந்தியாவே பாராட்டி யது. அதன் எதிரொலியாக அகில இந்திய காந்தி சமாதானக் குழுவினர் சென்னை வந்து விபரங்களைச் சேகரித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். புதுடில்லி மத்திய அலுவலகத்திற் பணியாற்றும் டாக்டர் விஜயம் அவர்கள் தமிழ்நாட்டில் நடந்த அறப்போரைப்பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கின்றர்கள்.
முன்னுள் நிதிமந்திரி திரு. டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் கருத்துக்கள் :
இந்த அக்டோபர் மாதம் மூன்ருவது வாரத்தில் ஸ்தாபன காங்கிரஸ் தலைவரான திரு. காமராஜ் அவர் களையும் அருகில் வைத்துக்கொண்டு முன்னுள் மத்திய நிதியமைச்சர் திரு. டி. டி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் பத்திரிகைக்குக் கூறிய கருத்துக்கள் மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படு கின்றன. அந்தக் கருத்துக்கள் நாட்டு நலனில் அக்கறை யுள்ள அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றன 'காங்கிரஸ் பிரிந்துவிட்டது என்று கூறிக்கொண்டிருந்
189

Page 119
இந்திய விடுதலைப் போரில்.
தாலும், மிகுந்த பலத்தோடும், நம்பிக்கையோடும் இருக்கிற ஒரே அமைப்பாக மக்கள் இன்னும் அதைத் தான் நம்பிக்கொண்டிருக்கின்றர்கள். பெரும்பான்மை யான காங்கிரஸ்காரர்கள் அப்படியே நினைக்கிருர்கள். மகாத்மாகாந்தி உருவாக்கிய இந்திய தேசிய காங்கிரஸை யாரும் பிரித்துவிடமுடியாது. அழித்துவிடவும் முடியாது. இரண்டு காங்கிரஸ் கட்சிகளின் கொள்கையும் இலட் சியமும் ஒன்றுதான். சில தலைவர்களிடையேதான் வேறுபாடு இருக்கிறது. இளம் தலைமுறையினர் ஒன்று சேர்ந்து கிளர்ந்து எழுந்து எதிரெதிராக இருக்கக்கூடிய தலைவர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி வைப்பார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரஸ் நடத்திய அறப்போராட்டம் மிகவும் அமைதியான முறையிற் காந்திய வழியில் சிறப்பாக நடைபெற்றிருக் கிறது. காந்தீயத்தின் ஒரே வாரிசான காமராஜரின் தொண்டர்கள் எல்லோரும் காந்திக்குல்லாய் அணிந்து கொண்டும் ராட்டைச்சின்னமுள்ள மூவர்ணக் கொடியை ஏந்திக்கொண்டும் நடத்திய அமைதிப்போர் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளியான என்னையே உத்வேகத்தோடும், ஆர்வத்தோடும் செயல்படத் தூண்டிவிட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இப்போது நடைபெற்றது போன்ற சத்தியாக்கிரகப்போர் நாடு முழுவதும் நல்ல காரியங்களுக்காக நடத்தப்பட வேண்டும் " என்று உயர்திரு டி. டி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் மனம் திறந்து பேசியிருக்கின்ருர்கள்.
இப்படியெல்லாம் நம் அரசியல் வாழ்வில் காந்தி நெறிகளை மீண்டும் புகுத்திய "காலாகாந்தி" (கறுப்புக் காந்தியென்று வடநாட்டிற் காமராஜரை அன்பாக அழைப்பார்கள்) காமராஜர் அவர்களுக்கு நாடு பெரி தும் கடமைப்பட்டுள்ளது. காந்தீயம் இன்னும் உயிரோ டிருக்கிறது என்று நிரூபித்துவிட்டார். காந்தி நெறியில்
190,

காந்தி நெறியில் காமராஜர்
காமராஜ் வாழ்ந்துகொண்டிருப்பது தொண்டர்களுக்குக் கலங்கரை விளக்கமாக விருக்கிறதுரு காந்திபக்தர்கள் அம்மேதையைப் போற்றி நிற்கின்ருேம்.
ஒருவருக்கும் பொல்லாங்கு எண்ணு கெஞ்சன்
உரிமையுள்ள யாவருக்கும் உதவும் பண்பன் அருவருக்கும் வாதுகளில் அலையாச் சொல்லன்
அமைதியுடன் பணிபுரியும் அன்புத் தொண்டன் திருவிருக்கும் காந்திமகான் கொள்கை தாங்கும்
தேசபக்தன் உழைப்பாலே உயர்ந்த செம்மல் ! மறுவிருக்கும் ஆசைகளால் மனம் கெடாத
மாதலைவன் காமராஜர் மகிழ்ந்து வாழ்க!
- ஆஸ்தான கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை
19

Page 120
இந்தியாவின் ஒருமைப்பாடு
எதிரா நீ இந்தியணுகப் பிறந்ததை அதிக கெளரவ மாக நினை, நான் இந்தியன் இந்தியன் ஒவ்வொருவ னும் என் சகோதரன் மூதறிவுடைய இந்தியனும் என் சகோதரன் லட்சாதிபதியான இந்தியனும் என் சகோதரன் பிட்சாதிபதியான இந்தியனும் என் சகோதரன் ; முதற்சாதியான பிராமணனும் என் சகோதரன் கீழ்ச்சாதியான பறையனும் இந்தியனஞல் என் சகோதரன், என்று பெருமையுடன் சொல்லிக் கொள்". இது சுவாமி விவேகானந்தர் ஒவ்வொரு இந்தியனுக்கும் போதித்த "சகோதர அறம் ".
இருபதாம் நூற்முண்டில் மாபெரும் விடுதலைப் புரட்சிக்குத் தலைமைதாங்கிய காந்தியடிகள், வள்ள லார் இராமலிங்க சுவாமிகளின் அரசியல் நெறிக்கு வாரி சாக விளங்கினர். ஆண்டவன் ஒருவனே அரசன், அவனுடைய அருளாட்சியே உலகம் முழுதும் நடை பெறவேண்டு மென்பது காந்தியடிகளின் விருப்பம். போர்வெறியை அறவே ஒழித்த புதுவுலகமே நம் வள்ள லார் விரும்பிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையுலகம். இதனை மறுத்தல் கூடாது. வள்ளம்பெருமான் காட்டிய அறநெறிகளையும், விவேகானந்த சுவாமிகள் நிலை நாட்டிய சகோதர அறத்தையும் முன்வைத்தே காந்தி யடிகள் தம் வாழ்நாளெல்லாம் ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமைக்கு உழைத்தார்கள்.
இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கல வரங்களில் எத்தனையோ ஆயிரக்கணக்கில் மக்கள் கொலை செய்யப்பட்டிருக் கிருர்கள். வெறியர்களின் வேட்டையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரக் காந்திஜி படாதபாடெல்லாம் பட்டார்.
192

இந்தியாவின் ஒருமைப்பாடு
கொலைக்களத்துக்கு நடுவே காந்திஜி மக்களுக்கு ஆறுதல் கூறிஞர். கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த நோவா காலிக்குப் போனுர். கொடுமைக்கு அஞ்கிக் கோழைகள் ஆகிவிடுவதோ, கிழக்கு வங்காளத்திலிருந்து வெளி யேறுவதோ கூடாது என்றும், அகிம்சை வழியில் எதிர்த்து நிற்கத்தான் வேண்டுமென்றும், இப்போது நடக்கும் அக்கிரமங்களுக்காக இந்துக்கள் வெட்கப்படவேண்டு மென்றும், இஸ்லாத்துக்கு இது அவமானத்தை உண்டு பண்ணுகிறது என்றும் காந்திஜி கூறினர்கள். நோவா காலியில் முஸ்லிம்கள் செய்யும் அக்கிரமச் செயல்களுக் காக பீகாரில் இந்துக்கள் பழிவாங்குவது கோழைத் தனமான காரியம் என்றும் சொன்னர்கள். லக்ஸம் என்ற ஊரில் அகதிகள் முகாம் ஒன்று இருந்தது. அங்கு கூடியிருந்த மக்களை நோக்கிக் காந்தியடிகள் பேசியபோது *பிரசாரம் செய்வதற்காகப் புயல்வேகத்திற் பிரயாணம் செய்ய நான் வரவில்லை. உங்களோடு தங்கியிருக்க, உங்களில் ஒருவனுக இருக்கவே நான் வந்திருக்கின்றேன். என்னிடத்தில் மாகாண உணர்ச்சி எதுவும் கிடையாது. நான் ஓர் இந்தியன். குஜராத்தியாக இருப்பதைப்போல ஒரு வங்காளியாகவும் நான் இருக்கிறேன். இங்கே தங்கியிருக்கவும், அவசியமானுல் இங்கே உயிரைவிடவும் நான் பிரதிக்ஞை செய்துகொண்டிருக்கிறேன். கொடுஞ் செயல்கள் யாவும் இறுதியாகக் குழிதோண்டிப் புதைக்கப் படும்வரையில், ஒரு இந்துப் பெண் தனி  ைம யில் முஸ்லிம்களிடையே தா ரா ள மா க உலாவுவதற்கு அஞ்சாதிருக்கும்வரையில் நான் வங்காளத்தைவிட்டுப் போகமாட்டேன். எனக்கு நீங்கள் செய்யக்கூடிய மாபெரும் உதவி, உங்கள் உள்ளத்திலிருந்து பயத்தைப் போக்குவதே ". இன்னெரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது " ஒரு கிளாஸ் தண்ணிர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணிர் கொடுப்பதிற் பெருமையில்லை. தீமை செய்தவனுக்கு நன்மை செய்வதே பெருமை.
g-1 193

Page 121
இந்திய விடுதலைப் போரில்.
அதைத்தான் சிறந்த பழிக்குப்பழியாக நான் கருது கிறேன்" என்ருர்.
இன்னுசெய் தாரை யொறுத்த லவர்காண
கன்னயஞ் செய்து விடல். என்ற குறள்வழி வாழ்ந்து காட்டியவர் காந்தியடிகள். நோவாகாலி போன்ற இடங்களில் அமைதியை நிலை நாட்ட காந்திஜி கையாண்ட முறைகளிலெல்லாம் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை நாம் பார்க் கிருேம்; உணர்கிருேம்.
இந்திய குடியரசுத் தலைவராகத் தம்மைத் தெரிவு செய்தபோது வார்தா கல்வித்திட்டத்திற்குப் பேராசா ஞக விருந்த உயர்திரு டாக்டர் ஸ்கீர் உசேன் அவர்கள் தேசத்துக்கு நன்றி செலுத்துகையில், "இந்தியா எனது வீடு, அதில் வாழுகின்றவர்கள் அனைவரும் எனது மக்கள்" என்று கூறிஞர்கள். காந்திஜியே பேசிஞர்கள் என்ற உணர்வு நமக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை.
தி. மு. க. வின் பிரிவினைப்போக்கு:
இந்திய ஜனதிபதியாகவிருந்த உயர்திரு டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னை விஜயத் தின்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தேசிய ஒருமைப்பாடு பற்றிக் கூறுகையில், "சீ யூகோள, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார ஒற்றுமை நம்மிடம் உள்ளது. இந்த உண்மைபற்றி நமது மனதி அலும், இதயத்திலும் உணரவேண்டும். இதுவே நமது இன்றைய தேவை" என்று குறிப்பிட்டார்கள்.
தேசிய கலாசாரம், தேசிய ஒருமைப்பாடு என்பன தர்க்கவாதமல்ல. புத்தி பூர்வமாக அலசித் தெளிவ தல்ல. நமது மனதிலும் இதயத்திலும் உணரவேண்டிய ஒன்ருகும். இதைத் தெளிவுபண்ணிய நமது ஜனதிபதி
194

இந்தியாவின் ஒருமைப்பாடு
அவர்களுக்கு வந்தனம், வந்தனம் தேசப்பிரிவினைபற்றி தி.மு.க. நண்பர்கள் திரும்பத் திரும்பப் பேசுகின்ருர்கள். முரசுகொட்டுகிற பாவனேயில் மேடைப்பிரசங்கம் செய் கிருர்கள். புள்ளிவிபரங்களை எடுத்து அலசுகிருர்கள். ஆயினும், மேலீடான புத்தியோடு மோதுவதைத் தவிர உணர்ச்சிக்கும் இதயத்திற்கும் அவை ஒப்பவில்லை. ஏனெனில், நமது பாரதப் பண்பாடும் கலாசாரமும் நமது இதயத்தில் வேதகாலந்தொட்டு வேரூன்றி யிருப் பதை அவர்கள் அகற்றிவிட முடியாது. வேதகாலந் தொட்டுப் பாரததேசம் பண்பாலும் கலாசாரத்தாலும் இணைந்து வருகிறது. சிவனும் சக்தியும் திருநடம் புரிந்த இமயம் எங்களது அல்ல என்று தமிழன் கூறுவாளு? வேதகால இதிகாச இரி ஷி கள் வாழ்ந்து சிந்தித்த சிந்துநதி, கங்கை நதி தீரங்கள் யாருடையவை ? கண்ணன் வாழ்ந்த துவாரகை குஜராத்திகளுக்கு மாத் திரம் சொந்தமானதா? அது நம்முடையதில்லையா? இதுபோல இராமேஸ்வரத்தையும், தனுஷ்கோடியையும் நம்முடைய புண்ணிய ஸ்தலங்கள் என்று இதய பூர்வ மாக நினைக்காத வட இந்தியர் இருக்கமுடியாது. கன்னியாகுமரிமுனை எமது நாட்டின் பகுதி என்று எண்ணுத இந்தியன் யார்? பாரததேசம் முழுவதும் ஊடுருவிப் பிரகாசிக்கும் இந்தப் பக்தி நமது இதயத்தில் இடம் பெற்றிருக்கிறது. நாட்டைப் பிரிக்கத் துணிபவர் இகழ்ச்சிக்குரியவர்களே ஆவார்கள்
அரசியல் ஆதிக்கமும் அதிகார ஆசையும் கொண்ட வர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாட்டுப் பிரிவினைக் கோஷத்தை ஒரு மாற்றுவழியாக மேற்கொண்டிருக்கிருர்கள். திராவிடநாட்டுப் பிரிவினை இயக்கம் நகர அரசியல் வாதிகளின் பொழுதுபோக்கு சினிமா நாகரிகத்தின் புதுப்பாணி. இந்திய கலா சாரத்திற்கு முரண்பட்ட ஒரு ஊடுருவல்; அரசியல் ஆதிக்கப் போட்டியை அடிப்படையாகக் கொண்ட தொரு சுயநலவாதம்
195

Page 122
இந்திய விடுதலைப் போரில்.
வினுேபாவின் சாட்சி:
பாரத தேசத்தின் மூலைமுடுக்கிலுள்ள கிராமங்களை ஊடுருவி மக்களின் இதயத்தைத் தொட்டுப்பார்த்த எவரேனும் ஒருவர் இருப்பாரேயானல் அவர் வினுேபா அடிகளைத்தவிர வேறு எவருமாக இருக்கமுடியாது; அவர் கூறுவதென்ன?
முப்பது கோடி முகமுடையாள்-உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்பும் மொழிபதி னெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள். என்ற பாரதியார் வாக்குக்கு நான் சாட்சி என்று கூறுவ தைக் கேளுங்கள். இப்போது இந்த நாட்டின் ஜனத் தொகை நாற்பது கோடியென மதிப்பிடப்படுவதால்,
நாற்பது கோடி முகமுடையாள் - உயிர் நலமிக்க ஒன்றுடையாள் - இவள் ஏற்கும் மொழிபதி னெட்டுடையாள், எனில் எண்ணுதல் ஒன்றுடையாள். என்று காந்தியுகக் கவிஞர் வெ இராமலிங்கம்பிள்ளை பொருத்தமாக நமக்குப் பாடித் தந்திருக்கின்ருர்கள்: இந்தியக் கிராமவாசிகளின் இதயத்தைப் பிரதிபலிக்கும் இந்தச் சாட்சிக்கு எதிர்ச்சாட்சி கூறுவதற்குப் பிரிவினை கோருபவர்களில் எவருக்கும் தகுதியில்லை.
தேசியப் போராட்டத்தில் வெள்ளையருக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இயன்றவரை முட்டுக்கட்டை போட்டுப்பார்த்த திராவிடக் கட்சியினர், காங்கிரஸின் பகீரத முயற்சிகளாலும் தியாகங்களினலும் கிடைத்த சுதந்திரத்தில் பாகிஸ்தான்போலத் தாங்களும் பங்கு கொண்டு தென்னிந்தியாவிலே தமிழ்நாடு, கேரளம், ஆந்திர நாடு, கன்னட நாடு ஆகிய நான்கு மாகாணங் களையும் சேர்த்துப் பரிபூரண சுதந்திரக் கொடி பறக்கும்
196

இந்தியாவின் ஒருமைப்பாடு
ஒரு திராவிட மகாராஜ்யம் ஆக்கப் பார்த்தார்கள். ஆளுல் ஆந்திரராவது, மலையாளிகளாவது, கர்ணுடக ராவது இந்த அறைகூவலுக்குச் செவிசாய்க்கவில்லை. தற்கால அரசியலில் இனப் போராட்டத்திற்கு இடமே கிடையாது; அம்முயற்சி ஹிட்லருடன் தகனமாகி விட்டது என்பதை இவர்கள் அனுபவத்திலாவது அறிந்துகொண்டிருப்பது தேசத்துக்கு நன்மையே. முன்னர், பெரியார் திரு. ஈ. வி. இராமசாமி நாயக்கர் அவர்களைத் தலைவராகக் கொண்ட சுயமரியாதைக் கட்சி யினர், மதங்களையும், மத உணர்ச்சிகளையும் அறவே வெறுக்கின்ருர்கள். எனினும், மதாவேசக் கட்சியான பாகிஸ்தான ஆதரித்தார்கள் மதாவேசம் போன்ற ஆவேசத்துடன் சைவ வைஷ்ணவங்களை வெறுப்பதோடு, இம்மதங்களின் சார்பில் தோன்றித் தமிழுக்கு உயிர் நிலையாயிருக்கும் கம்பராமாயணம், பெரியபுராணம் முத லான இலக்கியங்களையும் சுட்டெரிக்க விரும்புகிருர்கள்.
பிரிவினை இட்ட தீ அங்கும் இங்கும் பற்றி எரியும் போது, ‘ ஆருக்கினல் ஆற்றும் ஓர் அஞ்சன மேக " மாக அரசியல் வானில் காட்சியளிக்கிருர் மகாத்மா. பாரதியின் கவியுள்ளமும் காந்தியடிகளின் ஒருமையும். ஒருமையுணர்வும் தம் உள்ளொளியால் கண்டு வகுப்புத் தீயைப் பரவவிடாமல் அவித்துவிட முயன்ருர்கள். ** இந்தியாவை அடிமைப்படுத்திய அன்னியர்களையும் கொல்லலாகாது அன்பால் வெல்ல வேண்டும் " என்று காந்தியடிகள் போதித்தார்கள். பிரிவினைக் காய்ச்சலைப் போக்க ஒருமையையும் ஒற்றுமையையும் குமரிமுதல் இமயம்வரை நிலைநிறுத்துவதற்குக் காந்தியமே இன்று நாம் பின்பற்றத்தக்க வழியென்று தேசம் அறிந்து கொண்டது. காந்தி வைத்தியமே காலங்கண்ட இந்திய ஒருமை உணர்விலே இந்திய மேதை ஒன்ருகக் கண்ட யோகக் காட்சியிலே, தோய்ந்து வருகிறது; எனினும் புதுமையானது. இது இந்தியாவுக்கும் தேவை; குறிப்பாக இலங்கைக்கும் தேவை உலகத்திற்கும் தேவைதான்.
இ ー14 197

Page 123
இந்திய விடுதலைப் போரில்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திற்குமுன் பல நூற்ருண்டு காலமாகச் சிறுகச் சிறுக உருவாகி வந்த இந்திய தேசிய ஒருமைப்பாட்டுணர்வு போராட்ட காலத்தில் உறுதியாயிற்று. இமயம் முதல் குமரிவரை ஒரே நாடு என்ற பாவனை தெளிவாயிற்று. மதத்தின் பெயரால் நாடு இரண்டு துண்டான போதும் அந்த உணர்ச்சியைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு ஒருமைப் பாட்டுணர்வு வலுப்பெற்றிருந்தது. இங்குள்ள சகல மதத்தினரும், இனத்தவரும் இந்தியாவைத் தாய் நாடாக ஏற்கும் பாவனை வளர்ந்திருக்கிறது. அந்த நாள்முதல் பிரிவினை கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அதனைக் கைவிட்டு ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். பாக்கிஸ்தான் பிரிவினைக்கு ஆதர வளித்த இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் தமது தவறை உணர்ந்து இந்தியாவிடம் விசுவாசம் காட்டுகின்றனர். பிரிவினைவாதிகளும் விரும்பியோ, விரும்பாமலோ தங்கள் தவறினை விட்டு, தேசிய ஒருமைப்பாட்டினை மனமுவந்து ஏற்கும் அளவிற்கு இந்தக் காலகட்டம் தெளிவுபடுத்தியிருப்பது ஒரு மகிழ்ச்சிக் குறிப்பாகும்.
இந்த ஒருமைப்பாட்டுணர்வை மதிக்குமுகத்தான் நாம் மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண் டிருக்கிருேம். டாக்டர் ஜாகீர் உசேன் போன்ற ஒரு முஸ்லிம் பெரியார் இந்த நாட்டின் ஜனதிபதியாகப் பதவி வகிக்கும் அளவிற்கு நமது மதச்சார்பற்ற கொள்கை உயர்ந்தது சமீப நாட்களில் மதச்சார்புள்ள அரசியலமைப்பைக் கொண்ட பாக்கிஸ்தான் வங்கா ளத்தை இழந்ததும், புதிய பங்களாதேஷ் உருவாகி யிருப்பதும் நமது மதச்சார்பற்ற அரசியல் கொள்கைக்கு மிகப் பெரிய வெற்றியாகும்.
யாழ்ப்பாணம் வாலிப மகாநாட்டுத் (Jaffna Youth Congress) தலைவராக விருந்த மதிப்பிற்குரிய பெரியார் எஸ். எச். பேரின்பநாயகம் அவர்களின் அழைப்பிற்கிணங்க,
98

யாழ்ப்பாணம் வாலிப மகாநாட்டுத் தலைவர் திரு. எஸ். எச். பேரின்பாகாயகம் அவர்கள்

Page 124

இந்தியாவின் ஒருமைப்பாடு
1927ஆம் ஆண்டு காந்தி மகாத்மா இலங்கைக்கு வருகை தந்தார்கள். கொழும்பில் வைத்து இலங்கை தேசிய காங்கிரஸின் சார்பில், காங்கிரஸ் தலைவர் காந்திஜிக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்தார்கள். அவ் வரவேற்புக்கு காந்திஜி பதில் கூறும்போது, "இங்குள்ள மக்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பெளத் தர்கள், இந்துக்கள், ஐரோப்பியர்கள், சிங்களவர்கள், தமிழர்கள், மலாயாக்காரர்கள் என்று பிரித்துக் குரல் எழுப்பாமல் நீங்கள் அனைவரும் ஒரே தேசிய இனத் தைச் சேர்ந்தவர்கள் என்று ஒருமித்துக் குரல் எழுப் பினுல்தான் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கும். இன் றேல் அது கிடைக்காது. இந்தியாவிலே மாகாணப் பித்து, குலவம்சப் பித்து, சமயப் பித்து இவைகளை ஒழிக்க நாம் பாடுபடுகின்ருேம். பூரணமான தேசியம் என்று தெளிவாய்ச் சொல்லுகின்ருேம் ' என்ருர்கள். யாழ்ப் பாணத்திலும் இன்னும் பல இடங்களிலும் காந்திஜி உயர்ந்த சீரிய கருத்துக்களை எடுத்துச் சொன்னர்கள், அம்மகான் வழிகாட்டிய ஒளிக்கு, முன்னும், பின்னும், மேலும், கீழும் வணக்கம் செய்வோம்.
ஆனல், தற்போது இலங்கை மக்களாகிய நாம் எங்கிருக்கின்ருேம், எங்கே போகின்ருேம் என்று ஒவ் வொருவருடைய மனதையும் தொட்டுப்பாருங்கள். 1948ஆம் ஆண்டு காந்தி மகாத்மாவின் ஆஸ்தி யாழ்ப் பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கீரிமலை புண்ணிய தீர்த்தத்தில் அண்ணலின் ஆஸ்தி இந்துமத ஆசாரத்திற் கேற்பக் கரைக்கப்பட்டது. இப் புண்ணிய வைபவத்தை ஒரு சில வகுப்புவாத அரசியல் வாதிகள் எவ்வளவு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத்திஞர்கள் என் பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கின்ருர்கள்.
199

Page 125
இந்திய விடுதல்ைப் போரில்.
இப்போது வகுப்புத்துவேஷப் பிரசாரம் உச்சநிலையில் இங்கு நடைபெறுகிறது. காந்திஜி உயிருடன் இருந் திருந்தால் எம்மைப்பற்றி என்ன நினைத்திருப்பார். குறுகிய மனப்பான்மையுடன் வாழும் மக்களைப் பார்த்து மனம் நொந்திருப்பார்கள். ஆனல் நிச்சயமாக அவர்களை மன்னித்திருப்பார்கள். ஐயமில்லை!
1932ஆம் ஆண்டு திருக்கோணமலை இந்துக்கல்லூரியை விட்டுப் புறப்பட்டு, தமிழ்நாடு சென்று இந்திய சுதந் திரப் போராட்டத்திற் கலந்து பணியாற்றிய நாள் தொடக்கம் இன்று வரைக்கும் அதாவது சரியாக 42 வருடங்களாகக் காந்தீய சேவை செய்துகொண்டிருக் இன்றேன் என் பாணியில்.
திருக்கோணமலை காந்தி சேவா சங்கத்தின் பணி :
"என்னுடைய நண்பர்கள் என்னை உண்மையாகவே பெருமைப்படுத்த வேண்டுமென நினைப்பார்களேயானல், என்னுடைய திட்டங்களைத் தங்களுடைய அன்ருட வாழ்க்கையில் நிறைவேற்றிக் காட்டவேண்டும் அவற் றில் நம்பிக்கையில்லையாளுல் என்ன முழுமூச்சுடன் எதிர்க்கவேண்டும்". இப்படிக் காந்திஜி கூறியவற்றை இலட்சியமாக வைத்து 1984ஆம் ஆண்டு காந்தி சேவா சங்கம் என்ற பெயருடன் திருக்கோ ணமலையில் ஒருசங்கம் நிறுவப்பட்டது; சத்தியம் அஹிம்சை, தீண்டாமை, மதுவிலக்கு குடிசைக் கைத்தொழில் விருத்தி முதலிய வற்றைக் கைக்கொண்டு பிரசுரங்களினுலும், பிரசங்கங் களிஞலும் இச்சங்கம் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக் கிறது. சங்கத்தின் விடாமுயற்சியினலும், பொது மக்க ளின் ஆதரவுடனும் இங்குள்ள இந்துக்கோயில்கள் அனைத் தும் 1956-ஆனி உத்தரத்தன்று ஹரிஜனங்களுக்குத்
200

இந்தியாவின் ஒருமைப்பாடு
திறந்துவிடப்பட்டுள்ளன. இதற்குப் பேராதரவுதந்த பூீரீமத் சுவாமி சச்சிதானந்த யோகிராஜ், முன்னுள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. ந. இராஜவரோ தயம், திரு. த. ஏகாம்பரம் முதலானவர்களை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது. கோயில்களிற் பலியிடுவது இவ்வட்டாரத்தில் ஒழிந்தது. காந்தி, பாரதி போன்ற பெரியவர்களின் விழாக்கள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. காந்தி சேவா சங்கத்தில் முக்கிய மாக உழைத்தவர்கள், பண்டிதர் ஐ. சரவணமுத்து, டாக்டர் ஆ. சின்னத்துரை, திருவாளர்கள் த. ஆசைத் தம்பி, எம். எல். வல்தாரிஸ், த. பொன்னம்பலம் ஆசிரியர் பொ. கந்தையா முதலானவர்கள். இச்சங்கம் தொடர்ச்சியாகத் தற்போது அடியேனது தலைமையில் காந்தீயப்பணி - சர்வோதயப்பணி ஆற்றிக்கொண் டிருக்கிறது,
* மலை குலைந்தாலும் தமிழா மனம் குலையாதே" என்றபடி மனம் குலையாது காந்திவழித் தொண்டன யிருக்கின்றேன். இதற்குச் சாட்சி மக்கள்தான் இலங்கையில் நடக்கின்ற அரசியல் குதர்க்கங்கள் சமுதாய சீர்கேடுகள், சமயப்போர்வையில் வறட்டுத் தன்மையான வோக்கைக் கடைப்பிடித்தல், மொழி வெறியைக் கிளப்புதல் இவையெல்லாவற்றையும் அடியேன் பார்க்கும்பொழுது மிக வேதனை படைந்து கொண்டிருக்கின்றேன். *" காந்திசொற் கேட்டார் காண்பார் விடுதலை " என்றுதானே பாரதியார் நம்மைப் பார்த்துப் பாடித்தந்திருக்கின்றர்கள். காந்திக்கு, பாரதிக்கு சிலை எடுக்கின்ருேம். " படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் " என்றல்லவா ஆகிவிட்டது. பாரதியார் வழிவந்த ஆஸ்தானக் கவிஞர் வெ. இராம லிங்கம்பிள்ளை அவர்கள் காந்திவழி வாழவேண்டுமென்று பாடுகின்ருர்,
201

Page 126
இந்திய விடுதலைப் போரில்.
* கல்லாலும் செம்பாலும் கடவு ளாக்கிக்
கற்பூரம் காட்டிவிட்டால் போதும் என்றே எல்லாரும் நினைத்துவிடச் செய்து நித்தம்
தெய்வத்தை ஏமாற்றி வாழ்ந்தோம் என்று சொல்லாலும் செயலாலும் எண்ணத் தாலும் சுத்தமுள்ள பக்திநெறி சொல்லித் தந்து கல்லாத எளியவர்க்கும் கடவுள் தம்மைக்
கண்ணுரக் காட்டுமெங்கள் காந்தி வாழ்க்கை”. காந்தியடிகள் தீர்க்கதரிசியானத்ற்குக் காந்திவழியே காரணம். எனது அநுபவத்திற் கண்ட உண்மையும் அதுவே. காந்திவழி நடக்கும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள நமக்கு எல்லாம் வல்ல ஆண்டவன் துணை செய்ய வேண்டுமென்று பிரார்த்திப்போம்:
வந்தே மாதரம்:
202

அநுபந்தம் தியாகி கோ. இராஜகோபால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட
உபசார வாழ்த்துக்கள்
மட்டக்களப்பு அருள்நெறித் திருக்கூட்டத்தார் 11-9-66இல் விபுலாநந்த மணி மண்டபத்தில் அளித்த
g) L 9FT J'i LI T
திருநிறை செல்வச் சீருடன் விளங்கும் அருள்நிறை கோணேசர் அமர்ந்த நற்பதி உலகெலாம் போற்றும் உத்தமச் சோழ மன்னவர் தோன்றல் மங்காப் புகழுறுங் குளக்கோட் டன்திருக் கோயில் அமைத்துச் சிவநெறி வளர்த்த சீரிய நற்பதி திருமுறை சார்ந்து திகழு கின்ற குன்றப் புகழுறுங் கோண மாமலை, அம்மலை தன்னில் அறம்நிலை பெறவே கோவிந்த சாமி குறைவிலாத் தவத்தால் பொன்னம் மாள்புரி புண்ணிய வசத்தால் மன்னு புகழுடன் வந்தே உதித்த இராஜ கோமால் என்னும் ஏந்தால்!
203

Page 127
204
முத்தமிழ் முனிவரர் மூதறி வாளர் விபுலா நந்தரை மேவிப் பலகலை பயின்று பொதுநலம் பரவும் வண்ணம் தேச சேவை செய்திடும் மேலோய்! ஈழத் துதித்த இணையிலாத் தியாகி பாரதத் தடிமை பறக்கும் வண்ணம் உலகம் போற்றும் உத்தமர் காந்தி மகாத்மா காட்டிய வழியினில் நின்றே உப்புநல் எதிர்ப்பில் உழைத்த தோடே உயுத்த எதிர்ப்பிலும் உழைத்தனை உத்தம 1 * வெள்ளைய னேநீ வெளியே செல்லு" என்ற கோசம் எழுப்பி எழுப்பிச் சிறைச்சாலை புகுந்து செக்கை இழுத்தே பாரதர் மனமது பதறப் பதற அறச்சாலை யாக்கிய அறவோய் நீயே அறிவுரை கூறி அறத்தை வளர்த்தனே பலியிடல் நீக்கிப் பண்பினை ஆக்கின கருத்துரை வழங்கிக் கவர்ந்தே மனத்தைப் un pr6) urt L-åout un lq-la Luntug. உலகெலாம் மெச்சி உவக்கும் வண்ணம் சுதந்திரக் கனலைத் தூண்டினை மேலோய் காந்தி மதியினைக் கரத்திற் பற்றின் இன்பம் ஆக இல்லறம் நடாத்தினை இராமக் கிருஷ்ண இனிய சங்கத் துறவி களுக்குத் துணையாய் நின்றன பாற்பங் கீடு பாங்காய் நடைபெறப் பார்த்தனை மேற்பார்வை பக்குவ மாக இலங்கையில் உதித்தே இந்தியத் தாயின் விலங்கை அறுக்க விழிப்பாய் உழைத்தோய்! ஈழ மக்கள் இசையினைப் பெற்றனம் காம ராச்சி காங்கிறஸ் தலைவர் உவப்புடன் உதவும் உத்தமச் சான்றிதழ்

தியாகி ' என்ற சீருடைச் சான்றிதழ் பெற்றனை ஐயநாம் பெரும்புகழ் உறவே அற்புதப் புகழிதழ் அடைந்தமை குறித்துப் பெருமை தரும் இதழ் பெற்றமை குறித்தே அருள்நெறி யாளர் அகமிக மகிழ்ந்தனம் தியாகியைப் போற்றித் தினமும் புகழ்தல் அறத்துறை யாளர்க் கழகே யாதலால் ஈழக் கிழக்கினில் இருக்கும் மக்கள் மங்கா வளனுடை மட்டுக் களப்பார் வாழ்த்துதும் உம்மை வாழ்த்துதும் உம்மை மணமலர் தூவி மாலை சூட்டிப் பன்னீர் தெளித்துப் பார்த்தோர் மகிழ வாழ்த்துதும் உம்மை வாழ்த்துதும் உம்மை மனமகா ரோடு வாழ்கபல் லாண்டென
வாழ்த்துதும் உம்மை வாழ்த்துதும் உம்மை
இமயம் பொதியம் இயைய இன்புடன் இனிது வாழிய எனவே.
இயற்றியவர்:
பண்டிதர் செ. பூபாலபிள்ளை
205

Page 128
யாழ்ப்பாணம், மதுரகவி இ. நாகராஜன் அவர்கள் 11-9-66இல் அனுப்பிவைத்த
வாழ்த்துப் பா
மண்ணிடை மாந்த ருக்குள் மாசிலாத் தெய்வமான அண்ணலாம் காந்தி கண்ட அன்பமை கொள்கை பற்றி எண்ணமும் செயலும் ஒன்றி என்றுமே உழைத்து யர்ந்த திண்ணிய இராஜ கோபால் தியாகிநின் கீர்த்தி வாழி!
பாரினில்ே ஓங்கிநின்ற பரத நாடு
பண்பிழந்து அந்நியரால் பலபா டுற்றுச் சீரழிந்து சிறுமையுற்ற நிலையைக் கண்டு
திலகருடன் காந்திமகான் போன்ற தீரர் சீரமையச் சேர்ந்தமைத்த இயக்கந் தன்னில்
சேர்ந்துதாய் நாடதனின் சிறையை மீட்கத் திரமுடன் தியாகங்கள் செய்த தாலே
செம்மைபெற்ற ஈழத்தாய் ஈன்ற சேயே!
திரைவந்து கரைமோதிச் சிதறிச் சிந்தித்
திக்கெட்டும் கேட்டிடவே சிவநாமத்தை உரைசெய்யும் திருகோண மலையைச் சேர்ந்த
உப்புவெளி உதித்தவுயர் குணத்தோய் உன்றன் வரைசெய்ய இயலாத தியாகி உள்ளம்
வடக்கெழுந்த விடுதலைப்போர் முழக்கம் கேட்டுக் கரைகடந்து காதலுடன் சென்றே முன்னுள்
காந்திநெறிக் கட்சியின்போர்த் தொண்ட ஞனய்.
206

காந்திமகான் நேருவங்க நாடு தந்த
காளை சுபாஸ் போசுபடேல் தென்ன கத்தின் ஏந்தல்சத்ய மூர்த்தியுடன் ராஜா ஜியின்
இணையற்ற தொடர்புற்றே பரத நாட்டில் சாந்திவழி சமத்துவமே காட்ட அன்று w தளராது காலாலே ஊர்கள் சுற்றிக் காந்திவழி வந்தவுயர் கொள்கை ஓங்கக்
காலமெல்லாம் தொண்டுசெய்த சீலோன் நீயே
இன்றுநேற் றல்லகொள்கை பழுது நிற்க
ஏறெனவே முப்பத்தி யிரண்டாம் ஆண்டில் குன்ருத குணக்குன்ருய்க் காந்தி அண்ணல்
குதித்தவுப்புச் சத்தியாக் கிரகந் தன்னில் ஒன்றுமுளத் தோடேநீர் பங்கு கொண்டாய்
உலகயுத்த எதிர்ப்பியக்கம் நடந்த காலை குன்ருத ஆர்வத்தால் குதித்தே பொல்லாக்
கொடியவரால் சிறைவாசம் கொண்டாய் அன்று
வெள்ளையனே வெளியேறு நமது நாட்டை
மேலாக ஆளவழி அறிவோம்’ என்றே உள்ளத்தால் குமுறியன்று உரைத்தோர் முன்னுல்
ஊக்கமுடன் நின்றெதிர்த்தார் உனைப்பிடித்துத் தள்ளிவிட்டார் சிறையினிலே செக்கி முத்தும்
தளராத காந்தீயத் தியாகி ஆன உள்ளத்தின் உயர்வொன்றே இன்றும் உன்றன் உடல்பூணும் காந்தீய உடைய தாமே!
அரசியலில் அறிவியலில் இலக்கி யத்தில்
ஆர்வமுடன் பணியாற்றி அறிவால் ஓங்கித் திரமான இதயத்தில் தேச சேவை
செய்தென்றும் கொள்கையது குன்ரு உள்ள உரமுடைய உன் பண்பு இன்றை நாளில்
ஊரிலுள்ள இளைஞர்கட்கே உதவும் ஐய நிரையமைந்த உன்ருெண்டு நீடு நின்றே
நேரியமா பாதைகளை வகுக்க நன்றே.
207

Page 129
208
ai një அறிவும் பண்பும் அமைந்துயர
அன்னுள் தொடங்கி இன்றுவரை குறியில் பிசகாக் குணக்குன்ருய்க்
கூர்மை மதியால் காந்தியத்தின் நெறியிற் பழுத்த நேர்மையுள
நெஞ்சவா கொண்ட அன்பவுன்றன் நிறைவார் மனைவி மக்களுடன்
நித்தம் சிறக்க வாழியவே!

தியாகி கோ. இராஜகோபால் அவர்களின்
அறுபதாண்டு நிறைவு விழா வாழ்த்து ★
நாமக்கல், அரசவைக் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை அவர்கள் வழங்கிய
வாழ்த்து
திருகோண மலைவாழும் திருராஜ கோபால் ஒருபோதும் நீங்காதென் உளம்கொண்ட ஒருவன்
திருகாந்தி பெரும்பக்தன் சிறை சென்ற தியாகி மருவேதும் இல்லாத மனமொத்த நண்பன்.
தென்னிலங்கை தன்னைக் காண என்னைக்கூட்டிச் சென்று மன்னனுக என்னை அங்கு மக்கள்போற்றச் செய்து சின்னச்சின்ன ஊரிலும் திரண்டுமக்கள் கூடிப் பொன்கொடுத்துப் புகழ்படிக்கச் செய்துவைத்த பூமான்.
அன்புமிக்க நண்பஞய் அடிபணியும் தொண்டஞய் துன்பகற்றும் தோதனய், தூதுசெல்லும் தாதனய் இன்பநாத கீதமாய் இசைபாடும் கலைஞஞய் தென்பளித்த விராஜகோ பால்எனக்குச் செல்வமே.
காந்திவழித் தொண்டனுய்க் கணக்கற்ற துன்பமுற்றேன் சாந்தசத்தி யாக்ருகத்தில் சலியாது சிறைபுகுந்தோன் தேர்ந்தெடுத்த சொற்களுடன் தெளிவாகப் பேசவல்லோன் கூர்ந்தமதிநலம்படைத்த குணவானெம் மிராஜகோபால், ஆறுபத்து ஆண்டுகண்ட அன்பன் இராஜகோபால் வேறுபத்து ஆருண்டும் சுகமாக வாழவேண்டும்
பேறுதயா னந்தனுடன் காந்திமதி பாரியொடு கூறுமெந்தக் குறையுமின்றி நெடுங்காலம் குலவிவாழ்க.
30-6-70
209

Page 130
IV குரும்பசிட்டி சன்மார்க்க சபையினர் உவந்தளித்த
வாழ்த்துப் பாமாலை
விருத்தம் அருமலை முத்து மாலை அணிதிரு மலையி ஞலைத் திருவருட் சோதி யோங்கிச் செறிதரு முயிர்கள் வாழப் புரிநடக் தாங்கும் மேன்மைப் புகழ்பதி வாழுந் தொண்டன் அருமகன் இராஜகோபால் ஆறுபத் தடைந்தான் வாழி!
தவநல இந்தி யாவைத் தாங்கிட வுதித்த செம்மல் கவியமை காந்தி அண்ணல் கருத்தினில் ஊறித் தேறி அவர்வழி நின்று சேவை யாற்றிய மேன்மை நோக்கித் திவிமலர் பார தத்தின் தியாகியு மானுய் வாழ்க!
விருந்துகள் ஓம்பி வீட்டு விளக்கினைத் தூண்டி நாளும் திருந்துகல் லறங்க ளாற்றிச் சிறப்புடன் மனையைத் தாங்கும் அருந்துணை அன்புக் காந்தி மதியுடன் அறுப தென்ன இருந்துபல் லாண்டு வாழ இறையருள் கூடும் வாழ்க! தந்தையின் முயற்சிக் கெல்லாம் தாங்கிடும் கொள்கைக் (a) sebeuntuh முந்திநின் றுழைக்க வாய்த்த முத்தமிழ்ப் பண்பு மிக்க மைந்தனுந் தயா னந்தன் மாட்சியும் ஓங்க வாழ்க சிந்தையில் இனியோய் ஆன்ற சிறப்புடன் வாழ்க வாழ்க!
கவர்ந்திடுஞ் சிரிப்பு வாழ்க கதைகளுங் கருத்தும் வாழ்க உவந்திடும் உடையும் நோக்கும் ஊக்கமும் உழைப்பும் வாழ்க இவர்ந்தெழுங் காந்திக் கொள்கை இலங்கையில்
V துலங்கச் செய்ய நிவர்ந்தெழும் இராஜகோபால் நிறைவுடன் நீடு வாழ்க!
எல்லவர் தமையு மீர்க்கும் இளநல நெஞ்சம் வாழ்க
சொல்லமை அடக்கம் பண்பு தூயநல் வாழ்க்கை வாழ்க தொல்புகழ்க் குரும்ப சிட்டித் தொடர்புகள் தொடர்ந்து வாழ்க வல்லசன் மார்க்க நண்பர் வாழ்த்திட இனிது வாழ்க ! ,
இயற்றியவர் : 30-6- 70 கவிஞர் வி. கந்தவனம்
210,

V திருக்கோணமலை அன்பர்கள் மனமுவந்து பாடி அளித்த
வாழ்த்துப் பாக்கள்
காந்தியப் பாதை எனது கருத்தினுக் கினிய பாதை ஆய்ந்திடின் அதுவே உலகை அருண்மயமாக்கும் பாதை சாந்துணைப் போதும் இந்தச் சத்திய நெறியை மக்கட் கோய்ந்திடா துரைப்பே னென்ற உத்தமத் தியாகி வாழ்க.
மாணவருலகம் காந்தி மகானருள் வார்த்தை கேட்டுக் கோணமலை நீக்கித் தங்கள் குறைகளை உணர்ந்து வைரத் தூணென நிமிர்ந்து நின்று தொண்டினை வாழ்விற் கொண்டு பேணிடச் செய்த எங்கள் பெருந்தவத் தியாகி வாழ்க.
மில்லினில் நெசவு செய்த மெல்லிய ஆடை நீக்கிச் செல்வரும் ஏழை மக்கள் செய்கதர் ஆடை கட்டப் பல்பெரும் இயக்கங் கண்ட பாரதச் செம்மல் போற்றும் நல்லுடை தரித்து வாழும் நற்றவத் தியாகி வாழ்க,
ஏழைக்கே இதயம் ஈந்த இனியநற் கருணை யாளன் ஈழத்து இராஜ கோடால் என்றுனைப் போற்று வார்கள் கோழைக்கும் உன்னைக் கண்டால் குதித்தெழும் வீரம்; ஆகா! ஆழிக்கும் அஞ்சா வீரன் அரசியல் தியாகி வாழ்க.
பெறலருங்கீர்த்தி, செல்வம், பெரியவர் நட்பு, மேன்மை, அறநெறி வாழ்வு,மற்றும் அரும்பெருங் குணங்கள் யாவும் நிறைவுறப் பெற்று மக்கள் நினைந்திடப் பணிகள் ஆற்றி அறுபதின் நிறைவு கண்ட அரசியல் தியாகி வாழ்க.
211

Page 131
மாயவன் வாழ்க காந்தி மதியெனும் மளையாள் வாழ்க தாயினுக் கினிய ஞன தயானந்தச் செல்வன் வாழ்க ஆயிரம் ஆண்டு தந்தை அரும்பணி நிலைக்கச் செய்யும் சேயினைப் பெற்ற செல்வத் தியாகிநீ வாழ்க: வாழ்க:
ஆருமே மறக்க மாட்டார் அன்றுநீ செய்த தொண்டை ஊரெலாம் உன்னைப் போற்றி உவந்தநாள் தன்னை இன்று நேருற நினைக்கும் போது நின்னரும் பணியின் மாண்பு சீருறக் கண்டோம்; அருமைத் தியாகிநீ வாழ்க வாழ்க.
இயற்றியவர்: கழகப்புலவர் பே பொ. சிவசேகரம் 30- 6-70
V திருக்கோணமலை பேராசிரியர் மா. பீதாம்பரம் அவர்கள் அளித்த வாழ்த்து வெண்பா
தியாகி எனவுலகம் செப்பவருஞ் செல்வன் தயாநிதி காந்தியடி சார்ந்தான்-நியாயச் சிறையிருந்து நாலாண்டு சிந்தித்தான் என்றும் மறையிருந்த கீதை மகிழ்ந்து. ஈழத் திருந்துசென்ற எம்மவனுந் தொண்டாற்றி வாழக் கடல்சூழ் வளநாட்டில்-தோழஞய் வந்தனனே முப்பானிர் வருட நிறைவுகண்டான் தந்தனரே வாழ்த்துக்கள் தாம். வாழ்கசிறீ லங்கா வளர்கமகாத் மாமரபு சூழ்க அவர் கண்ட தூயநெறி-தாழ்மையுடன் அன்பஹம்சை ஆர்வம் அறமோங்க ஆரணமே இன்பளிக்க என்றும் இயைந்து.
30-6-70.
212 திருமகள் அழுத்தகம், கன்னு


Page 132


Page 133
சுன்னுகம் திருமகள் அழுத்த பாரத்தினம் அவர்களால் அச்சி.
ಡಾ.
 
 

விலே ரூபா 8-50
த்தில், குரும்பசிட்டி திரு முத்தையா =ப்பெற்று, குரும்பசிட்டி சன்மார்க்க |미 1만75