கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓவியமாமணி "வீ கே"

Page 1
பொன்விராச்
19 - OE
 


Page 2

محم:
பதிப்ப
st
பொன்விழாச் சிறப்பு வெளியீடு 19-8-1990
விழா அரங்கம் :
கொள்ளுப்பிட்டி, சசக்காவ மண்டபம், கொழும்பு - 3.

Page 3
ஒவியமா மணி
; ofi Ꮹ35Ꮙة ،
(வி. கனகலிங்கம்)
வெளியீடு
தாய்நாடு பதிப்பகம்
19 - 8 - 1990
அட்டை ஓவியம் கண்ணன்
அன்பளிப்பு திரு. எஸ். பி. சாமி
அவர்கள்
அச்சுப்பதிப்பு
யுனைட்டெட் மேர்ச்சன்ஸ் லிமிட்டட்
71, பழைய சோனகத் தெரு, கொழும்பு - 12.
இலவச வெளியீடு

மனம் திறந்து.
ஒவியமாமணி **விகே" அவர்களுக்கு இப்போது வயது எழுபது ஆகிறது ஆகவே அவர் வாழ்கையில் மணிவிழாவையும் கண்டுவிட்டார்.
*ஒவியமன்னர்”, “வர்ணவாரிதி’, ‘ஓவியமாமணி” இத் தகைய பட்டங்களை அவருக்கு வழங்குவதற்குக் காரணமாக இருந்த ஒவியக் கலையின் வாழ்க்கைக்குத்தான் இந்த 'பொன் 69prr'.
தமிழ் இனத்திற்கு, ஏன் மனித இனத்திற்கே இன்று சவால்விடும் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு கெளரவிப்பு விழா? என்று கேட்டவர்களுக்கு எனது விளக்கத்தின் விளைவு, இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு ‘பொன் விழா”* அவருக்கு எடுக்கத்தான் வேண்டும், சிறப்பாகச் செய்யுங்கள் எங்களின் பங்களிப்பு தாராளமாக உண்டு எனக் கூறி அனு மதியளித்தவர்கள் பலர்.
எனது விருப்பத்தை முதன் முதலில் திரு. திருமதி
யோகா பாலச்சந்திரன் அவர்களுக்கும் திரு. திருமதி சில்லையூர் செல்வராசன், கமலினி ஆகியோருக்கும், திரு. எஸ். பி. சாமி அவர்களுக்கும் தெரிவித் து அவர்களின் ஒத்துழைப்புக் கிடைத்தது போலவே, திரு. திருமதி “வீகே” அவர்களின் நீண்டகாலக் குடும்ப நண்பரும், சிந்தாமணி, தினபதி ஏடுகளின் ஆசிரியருமான திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களும் மகிழ் வுடன் தனது ஆதரவினை வழங்கினர்.
வீரகேசரி, நிருவனத்தின் பணிப்பாளர் திரு. M. G. வென்சஸ்லாஸ் அவர்கள், பிரதம ஆசிரியர், ஆ. சிவநேசச் செல்வன் அவர்கள் கேசரி ஞாயிறு வெளியீடு ஆசிரியர், திரு. இராசகோபால் அவர் கள். திருமதி அன்னலெட்சுமி இராசதுரை அவர்கள், விளம்பரப் பகுதி திரு. கந்தசாமி ஆகியோரின் ஆதரவு மனதில் நிலைக்கத்தக்கவை.

Page 4
இம்மலரை அன்பளிப்பாகச் செய்து ‘உதவ் முன்வந்தது மல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் அக்கறையுடன் அழகாகச் செய்து உதவிய திரு. எஸ். பி. சாமி அவர்களின் பணி காலத்தால் மறக்க முடியாதது.
தலைநகரில் ஒரு விழா எடுக்கவேண்டி இருந்தால் அதற்கு திரு. கதிர்காமத்தம்பி அவர்களை அணுகாமல் யாரும் இருக்க முடியாது. எமக்கும் அவர் விழாச் சிறப்புக்கான ஆதரவைத் தந்தார்.
வசீகர விளம்பர நிறுவன அதிபர் திரு. காவலூர் இராச துரை அவர்கள், திரு. எஸ். எஸ். கணேசபிள்ளை (வரணி யூரான்) அவர்கள், எம் ஜி எம் அச்சக அதிபர் திரு. மா. கணபதிப்பிள்ளை அவர்கள். கே. எஸ். பி. டூர்ஸ் நிர்வாக அதிபர் கே. எஸ். செல்வராசா அவர்கள், தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்கள், முன்னணி விமர்சகர் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள், நண்பர். கலைஞர் கம்பளைதாசன் அவர்கள், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பலதரப்பட்ட ஆதரவுகளை வழங்கினர்கள்.
இக்கால சூழ்நிலைகளினுல் மிகக் குறுகிய கால ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற இருந்ததால் திரு. "வீகே” அவர்களின் எல்லா நண்பர்களுக்கும், எமது நண்பர்கள் அனை வருக்கும் 'பொன்விழா” அழைப்பு கொடுபடாமல் விட்டிருக் கலாம் அதைப்பெருமனதுடன் மன்னிப்பீர்கள் என நம்புகிருேம்.
சிரமங்களைப் பொருட்படுத்தாது எமது அழைப்பை ஏற்று. பொன்விழாவில் கலந்து 'ஓவியமாமணி” திருவாளர் ‘வீகே” தம்பதிகளை வாழ்த்தி மகிழ்வித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கமும் வாழ்த்தும் நன்றியும்.
நலம், நட்பு விரும்பும் - வேலனை வீரசிங்கம்

ஒவிய மன்னர் வி. கே.
எஸ். டி. சிவநாயகம் (பிரதம ஆசிரியர் : தினபதி - சிந்தாமணி)
சிறு வயதிலே ஒரு கதை படித்தேன். ஆயிரத்தொரு
அராபிய இரவுகள் என்ற புத்தகத்திலோ அல்லது மதன காமராஜன் கதையிலோ என்று ஞாபகம் இல்லை. அந்தக் கதையில் வரும் சமஸ்தான ஒவியரின் திறமைக்கு சற்றும் குறைந்தது அல்ல, நண்பர் வி. கே.யின் ஒவியத் திறன் என்று நான் அடிக்கடி எண்ணியதுண்டு.
ஒர் அரசன் குளிப்பதற்கு தினமும் ஆற்றுக்குப் போவது வழக்கம். அரசன் எல்லோரையும்போல் ஆற்றுக்குப் போய்க் குளிப்பானா ? ஏன் அவனுடைய அரண்மனையில் குளியல் தடாகம் இல்லையா என்று கேட்டுவிடக்கூடாது. அவனுக்கு ஒரு நோய் இருந்து, அது தீர்வதற்கு, அவன் தினமும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று அரச வைத்தியர் கூறியிருக் கலாம் அல்லவா?
ஒரு நாள் அவன் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, ஒடும் நீரோட்டத்தில், எங்கிருந்தோ வந்த ஒரு தலைமுடி அவன் விரல்களில் சிக்கிக்கொண்டது. அந்த மயிரைத் தன் விரல்களி லிருந்து விடுவிக்க முயன்றபோது, அதன் நீளத்தையும், கண் ணைப் பறிக்கும் கருமையான அழகினையும், அலையலையான நெளிவுகளையும், மிருதுத்தன்மையையும் அவன் ஆச்சரியத் தோடு ரசிக்கலானான். ".
இந்த ரோமமே இவ்வளவு சிறப்பாக இருந்தால் இதற்கு உரிய அந்தப் பெண்மணி எவ்வளவு அழகாக இருப்பாள் ? அவன் கற்பனை சிறகடித்துப் பறந்தது.
அவன் மனக்கண்ணில் ஒர் அற்புதமான ரூபசுந்தரி தோன்றி னாள். ஆஹா, இந்த அழகி எனக்குக் கிடைத்தால், அவளை நான் மனைவியாக அடைந்தால். என்று ஏங்கினான் அரசன்.

Page 5
நேராக அரண்மனைக்கு வந்தான். மந்திரியை வரவழைத் தான். 'அமைச்சரே, இந்த தலைமயிரைப் பாருங்கள். எவ் வளவு அழகாக இருக்கிறது? ஒரு ரோமமே இவ்வளவு அழகாக இருந்தால் இந்தப் பெண்தான் எவ்வளவு அழகாக இருப்பாள்? இந்தப் பெண்ணை நான் பட்டத்து ராணியாக அடைய வேண் டும், அமைச்சரே, வழி செய்யுங்கள்" என்றான்.
அமைச்சர் என்ன செய்வார்? மயிரைக் கொண்டு அதற்கு உடைய பெண்ணை எப்படித் தேடுவார் ? மண்டையைப் போட்டு உடைத்தார். இரவிரவாக விழித்திருந்து சிந்தித்தார். அதிகாலையில் அவருக்கு ஒரு "ஐடியா" தோன்றியது.
அரசவை ஒவியரை அழைத்தார். 'அருமை ஓவியரே, இந்த ரோமத்தைப் பாருங்கள். இதை வைத்துக்கொண்டு, இதற்கு உடையவளான அந்த அழகி எப்படியிருப்பாள் என்று உம்மால் ஒர் ஒவியம் தீட்ட முடியுமா? உமது கற்பனை ஒவியத்தை வைத்துக்கொண்டு, ஐம்பத்தாறு தேசங்களிலும் நான் சல்லடை போட்டு அரித்து அந்த அழகியைத் தேடி விடுவேன். சரியான ஒவியத்தை நீர் தீட்டவில்லை என்றால், உமது தலை மட்டுமல்ல, என் தலையையும் கொய்துவிடுவான் அரசன்' எச்சரிக்கை என்றார் அமைச்சர்.
'இது என்ன பிரமாதம் அமைச்சரே, நான் அந்தப் பெண் எப்படியிருப்பாள் என்பதை இந்த தலை மயிரை வைத்தே
கற்பனையில் படைத்து விடுகிறேன். அப்புறம் பாருங்கள்’ என் றான் அந்த ஒவிப்பிரம்மா !
சமஸ்தான ஒவியர் படத்தைத் தீட்டினார். அது ஓர் அமர ஒவியமாக அமைந்தது. அதை அரசனுக்கு காட்டியபோது, **இவளேதான் ! இவளேதான்! இந்த அதி ரூப சுந்தரியையே நானும் என் மனக் கண்ணில் கண்டேன். இவளை எப்படியும் தேடிக் கண்டுபிடித்து விடுங்கள்!" மந்திரியாரே” என்றான் அரசன்.
4

அமைச்சர் ஆறு ஓடிவந்த திசையில் தமது ஆட்களை அனுப் பினார். இரண்டே தினங்களில் அந்த அழகி கிடைத்தாள். அரசன் அவளைத் திருமணம் செய்துகொண்டு இன்பமாக வாழ்க்கை நடத்தினான் என்பது கதை.
இந்தக் கதையில் வந்த ஒவியரைப் போன்றவர்தான் நண்பர் வி. கே. யும். ஒரு ஓவியம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று மனதில் திட்டமிட்டு, அந்த "ஐடியா'வை நாம் ஒரு வரி யில், ஒரு சொல்லில், சொல்லிவிட்டால் போதும். நமது கற் பனையில் உதித்த அந்தப் படத்தை ஒரே நொடியில் உயிர் ஒவிய மாகத் தீட்டிவிடுவார் நண்பர் வி. கே. அவருடைய பேனாவும், தூரிகையும் அத்தகைய மாயா சக்தி படைத்தவை. இந்த வகை யில் அவர் ஒர் ஒவிய மன்னர் !
ஓவியர் வி. கனகலிங்கம் அவர்களை நான் அரை நூற்றாண் டாக - அதாவது சரியாக 43 ஆண்டுகளாக - அறிவேன். அப் போது அவர் திருமணமாகாத ஒர் இளைஞராக 'வீரகேசரி’ பத்திரிகையில் ஒவியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அத்தோடு ** திருவாதிரை’ என்ற புனை பெயரில் சிறந்த சிறு கதைகளும், கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தார்.
நான் 'உதயம்’ என்ற ஒரு மாத இதழை வெளியிட்டுகி கொண்டிருந்த காலம் அது. அதை அச்சிடுவதற்காக கொழும் புக்கு வந்திருந்தேன். அப்போது தட்டா தெரு என்று அழைக் கப்பட்ட, இப்போதைய பண்டாரநாயக மாவத்தையில் திரு. கதிர்காமத்தம்பி என்ற ஒரு 'கொமேர்ஷல் ஆர்ட்டிஸ்ட் **கதிர்’ என்ற புனை பெயரில் படங்கள் வரைந்துகொண்டிருந் தார். அவர் இப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு போட்டோ ஸ்டூடியோ நிறுவி நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அறிகிறேன். இந்த கதிர்தான் எனக்கு வி. கே.யை அறிமுகம் செய்து வைத்தவராவர்.
சிறிது நேரம் பழகியவுடனேயே வி. கே.யின் "சின்சியரான’ பேச்சிலும், பணிவான பண்பிலும் என் மனம் பதிந்தது. நீண்ட தொடர்பு வைத்துக்கொள்வதற்கு ஏற்ற நண்பர் அவர் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

Page 6
பின்னர் இரண்டொரு வருடம் கழித்துத்தான் வி. கே.க்கு யாழ்ப்பாண்த்தில் திருமணம் நடைபெற்றது. மனைவியின் தமையனார் கொழும்பு முகத்துவாரத் தெருவில், முகத்துவாரம் கோயிலுக்கு சமீபமாக வாசம் செய்தார். அந்த வீட்டில்தான் வி. கே. தமது மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்து குடி யேறி வாழ்க்கையை ஆரம்பித்தார்.
ஒரு நாள் அவரைப் பார்க்கச் சென்றேன். மனைவியையும் கூப்பிட்டு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. அழகான பெண் களைக் கற்பனையில் கண்டு அழகான ஒவியங்களாகத் தீட்டிய என் நண்பருக்கு, அவர் தீட்டிய ஓவியங்களைப் போலவே ஒர் அழகான மனைவியும் கிடைத்துவிட்டார் என்பதே நான். அடைந்த மகிழ்ச்சிக்கும் மனத்திருப்திக்கும் காரணமாகும்.
அப்போது, திருமதி இரத்தினேஸ்வரி கனகலிங்கம் உண்மை யிலேயே ஓர் அழகுச் சிலை போன்ற ரூபலாவண்ணியத்துடன், முல்லைக் கொடிபோலக் காணப்பட்டார். அவருடைய பொன், மயமான கண்கள் அவருக்கு ஒரு தனி சோபையை அளித்தன. இதமான பேச்சும், இனிமையான குணமும் படைத்தவராக அவர் விளங்கினார். ஒரு கலைஞனுக்கு ஏற்ற கலாமதிதான் திருமதி இரத்தினேஸ்வரி கனகலிங்கம் என்று நான் எண்ணிக் கொண்டேன்.
1959 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். வீரகேசரியில் ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டது. அந்த வேலை நிறுத்தத்தில் வி. கே. யும் பங்குகொண்டார். அதன் விளைவாக அவருடைய வேலையும் பறிபோயிற்று. அதைத் தொடர்ந்து அவர் கொட் டாஞ்சேனையில் நான் வசித்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வந்து குடியேறி, அயல் வீட்டுக்காரர் ஆனார். பல வருடங்கள் இந்த தொடர்பு எங்களுக்குள் நீடித்தது. அப்போது வி. கே. யின் திறமைகளையும், பண்புகளையும், உயர்வுகளையும், நட் பின் சிறப்பையும் மேலும் உணரலானேன்.
அந்தக் காலகட்டத்தில் ‘தமிழின்பம்" என்ற ஒரு மாத
சஞ்சிகையின் ஆசிரியராக நான் பணியாற்றினேன். இந்த இலக் கிய இதழை வெளியிட்டவர் மெய்கண்டான் ஸ்தாபனத்தின்
6

அதிபர் திரு. நா. இரத்தினசபாபதி அவர்களாவார். தமிழின் பம் இதழுக்கு அட்டைப் படங்களை வரைந்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார் வி. கே. எல்லாம் வண்ணப் படங்களாக அவர் வரைந்து கொடுத்தார். உள் படங்களையும், தலைப்பு எழுத்துக்களையும் அவரே தீட்டினார்.
சாமிப் படங்களையும், சமயப் படங்களையும் வரைவதில் இலங்கையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தெய்வீக ஓவி யர் வி. கே. அதே போல் இலக்கிய காலத்துப் பெண்களை யும். சரித்திர காலத்து ராஜா - ராணிகளையும் வண்ண ஒவியங் களாகவும், இந்தியன் - இங்க் சித்திரங்களாகவும் வடிப்பதில் ஈடிணையற்றவர் அவர்.
அவர் தீட்டும் ஒவியங்களுக்கு முதல் விமர்சகராக விளங்கு பவர் அவருடைய மனைவி திருமதி இரத்தினேஸ்வரிதான். அவரும் கலை உணர்ச்சி உடையவராகையால் குற்றங் குறை களைக் கூசாமல் சொல்லிவிடுவார். அவருடைய விமர்சனங் களுக்கு ஏற்றபடி திருத்தங்களைச் செய்வார் வி. கே.
திருமணத்தின் பின்னர்தான் அவருடைய ஒவியங்கள் பெரு மளவில் நிறைவுபெற்று விளங்கின. "மச்சூரிட்டி அடைந்தன என்றும் சொல்லலாம். அவருடைய வளர்ச்சியை ஆண்டாண்* டாக அவதானித்து வந்தவன் நான். வெற்றிச் சாதனைகள் படைக்கும் எந்த ஒரு ஆடவனுக்கும் பின்னால் ஒரு பெண் இருப் பாள் என்பது ஒர் ஆங்கில மொழி வாக்கு. வி. கே.யின் திறமை பாராட்டும்படி விகCத்தமைக்கு திருமதி இரத்தினேஸ்வரி தக்க துணையாக நின்று உதவியுள்ளார் என்று கூறுவது பொருத்தமே ιμπΘδιο.
நான், வீரகேசரி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பதவியை விட்டு விலகி, தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளை ஆரம்பித்து அவற்றின் பிரதம ஆசிரியரானபோது, வீட்டிலிருந்த வி. கே.யை அழைத்து, தினபதி - சிந்தாமணி இதழ்களின் சிரேஷ்ட ஒவிய ராகப் பணிபுரியும்படி அன்புடன் கேட்டுக்கொண்டேன். அதன் படி அங்கு பல வருட காலங்கள் பணியாற்றினார் வி. கே. அப்போது அவர் அனைவராலும் விரும்பப்பட்ட, அனைவரா லும் மதிக்கப்பட்ட ஓர் ஒவியராக விளங்கினார். பின்னர், அவர்
7.

Page 7
யாழ்ப்பாணத்துக்கே சென்று குடியேறும்படியாக நாட்டு நிலை உருவாகியது. யாழ்ப்பாணத்தில் அவர் உதயன், சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளின் ஒவியரானார்.
புத்தகங்கள், மலர்கள் - இவற்றிற்கான அட்டைகள் வரை வதிலும் வல்லவர் வி. கே. கண்ணைக் கவரும்படியான பாராட் டுப் பத்திரங்களையும் தீட்டுவார். விளம்பரங்களுக்கான ஆர்ட் வேலைகளையும், ஸ்லைடுகளையும் அற்புதமாகச் செய்வார். பிரமுகர்களின் எண்ணெய் வண்ணப் படங்களையும் உயிர் ஒற் றுமை பிசகாமல் வரையும் திறமை வி. கே.க்கு உண்டு.
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் அவதரித்த திரு. வி. கனகலிங்கம் மிக நீண்ட காலம் கொழும் பில் தான் வாழ்ந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் அவருக்கு குழந்தைப் பேறுகள் கிடைத்தன. இரண்டு ஆண்கள், ஒரு பெண். மூத்த மகன் புகழேந்தி. பிரிண்ட் - ஆர்ட் ஒவியராக துபாயில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன் ரவீந்திரன் கனடாவில் என்ஜினியராக இருக்கிறார் மகள் கெளரி திருமணம் முடித்து சவுதியில் கணவருடன் வாழ்கிருர், வி. கே. வரையும் லசுஷ்மி, சரஸ்வதி ஒவியங்களைப் போன்ற அழகு படைத்தவள் கெளரி. அவளும் தாயைப் போன்ற கண்ணழகி. பிள்ளைகள் எல்லோரும் ஓவியரின் கற்பனைப் படைப்புகள் போன்றவர்களே. குணத்திலும் இனிமையானவர்கள்.
சமீபகாலமாக வி. கே. நோய்க்கு ஆளாகிச் சற்று தளர்ந்து விட்டார். எனினும் அவர் மனதில் இளமை சிறிதும் குன்ற வில்லை. அவருடைய மனது களிப்புறும் வண்ணம் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என விழைந்தார், ஒவியருக்கும் எனக்கும் இளமைக்கால நண்பராக விளங்கிய வர்த்தகப் பிரமுகர் வேலணை வீரசிங்கம், அதன் பேறாகவே இந்தப் பாராட்டு மலரும் வெளிவருகிறது. இந்த மலருக்கு ஒரு கட்டுரை எழுதித்தர வேண்டும் என்று நண்பர் வீரசிங்கம் கேட்டுக்கொண்டார்.
நண்பர் வி. கே. ஒரு சாதனையாளர். இலங்கை பெரு மைப்படக்கூடிய ஓர் ஓவியர். பிறவிக் கலைஞர். அப்படி ஒரு ஒவியர், கலைஞர், சிறப்பதற்கு நானும் ஒரளவு துணையாக இருந்தவன் என்ற வகையில் பெருமைப்படுகிறேன். glauri பாராட்டப்படுவதையும், அவருக்கு விழா எடுப்பதையும் மனப் பூர்வமாக வரவேற்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க வி. கே. வளர்க அவர் கலைப் பணி.
8

ஒப்பற்ற கலைஞன் "ஓவியமாமணி” வீ. கே.
யோகா பாலச்சந்திரன்
தமிழை எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழகிய நாள்தொட்டு எனக்கு அறிமுகமான பத்திரிகை வீரகேசரி. பத்து வயதுச் சிறுமி யாக ஐந்து சதத்திற்கு வீரகேசரி வாங்கி குந்தளப் பிரேமா" தொடர் கதை படித்த காலந்தொட்டு பழக்கமான பெயர் வி. கே., வி. கே. என்ருல் ‘வீரகேசரி’ என்பதன் சுருக்கமே என அன்று நான் கருதினேன். நாளடைவில் வி. கே. என்பது அப் பத்திரிகையில் ஒவியராகப் பணி புரியும் திரு. வி. கனகலிங்கத் தினைக் குறிக்கிறது என்று உணர்ந்துகொண்டபோது, அவர் ரவி வர்மாவுக்கு நிகரான ஒவியர் என்ற மதிப்பீடு மனதில் விழுந்து விட்டது. அந்தக் காலத்தில் கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களைப் பார்த்து, அவற்றில் மனதைப் பறிகொடுத்த இலயிப்பில் தான் கதைகளைப் பலரும் வாசிப்பதுண்டு. அதனல் தான் கல்பன, மணியம், மாலி ஆகிய ஓவியர்களும் சினிமா நட்சத்திரங்களைப்போல மக்களின் அபார ஆராதனையை, அபி மானத்தை பெற்றிருந்தனர். அந்த வரிசையில் நம் நாட்டில் அன்று மட்டுமல்ல, இன்றும்கூட, தென்னிந்திய ஒவியர்களைப் போல இயல்பான காவிய நயமும் நளினமும் இணைந்த ஒவியங் களைப் படைப்பதில் வி. கே எனும் திரு. வி. கனகலிங்கத்திற்கு இணையாக இதுவரை ஒருவருமே தலைதுாக்கவில்லை. ரமணி ஹ"ணு, செள, பெனடிக், மார்க் எனச் சில தரமான ஒவியர்கள் தமது தனித்துவமான முத்திரையை இங்கு ஒவியத்துறையில் இப்போது பதித்துள்ளமையை மறுக்க முடியாதுதான். எனி னும் வி. கே.யின் படைப்புகளில், பண்டையகால சிந்துவெளி நாகரீக பண்புகள், இந்து கலாச்சார எடுப்புகள் மேலோங்கி நிற்பதால், அவை ஒருவித கெய்வீக மெருகு பெற்றவை என் பது வி. கே.யின் ஒவியங்களை பார்க்கிறவர்களுக்கு புரியாமல் போகாது. is .
கலை, இலக்கிய படைப்பாளிகள் பிறப்பிலேயே சிருஷ்டித்
தன்மைக்கான சுயம்புவான ஆற்றலோடு பிறக்கிருர்கள் என்ப
9

Page 8
தும் ஒரு கலைஞனையோ, இலக்கிய படைப்பாளியையோ. சாதா ரணமான ஒருவனிலிருந்து உருவாக்க முடியாது என்பதும், எனது ஆணித்தரமான நம்பிக்கை. வி. கே. போன்ற பிறவிக் கலை ஞர்களை நேரில் கண்டு அறிந்து பழகியவர்களைக் கேட்டால், மேற்படி கூற்றில் நூற்றுக்கு நூறு விகிதம் உண்மையுண்டு என்று தெரியவரும் ஒரு ஓவியத்தை வரையத் தொடங்கினல், கடைசி நிமிடம் வரை அதை மெருகிட்டவண்ணமே இருப்பார் வி. கே. எவ்வளவு அழகாகக் கீறி முடித்தாலும், மேலும் மேலும் அதை எப்படியெப்படி எல்லாம் சீர்மைப்படுத்தலாம் என்று யோசித்து யோசித்து தூரிகையை அங்குமிங்கும் ஒடவிட்டுக் கொண்டேயிருக்கும் வி. கே. தெய்வப் படங்களை கீறத் தொடங்கிவிட்டால், தன்னையே மறந்து ஒவியத்தில் ஒன்றித்து விடுவார். அது ஒருவகை தெய்வ உபாசனை போன்ற இலயிப்பு. இதுதான் வர்த்தக ரீதியான சித்திரக்காரனுக்கும் பிறவிக் கலைஞனன ஒவியனுக்குமுள்ள வித்தியாசம், இந்த அற்புதமான கலைஞனுக்கு இப்போது எழுபது வயதாகிவிட்டது. 1920ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ந் திகதி யாழ்ப்பாணம் ஆனைக் கோட்டையில் திரு. விஸ்வலிங்கம், திருமதி பொன்னம்மாள் விஸ்வலிங்கம் ஆகியோருக்கு மகஞய் பிறந்த திரு. கனகலிங்கம் அவர்கள் ஏறக்குறைய ஐம்பதாண்டுகளை ஒவியத்துறைக்கு அர்ப்பணித்து இன்று பொன்விழாக் காண்கிருர், இந்நாட்டின் தமிழ் ஓவியர்களில் முதன்மையான ஸ்தானத்தை சுவீகரித்து **ஒவியமாமணி" எனும் புகழுக்கும் உரியவராகிவிட்டார்.
வீரகேசரி பத்திரிகையில் முதலில் (1942) ஒப்புநோக்காள ராகச் சேர்ந்து, படிப்படியாக பிரதம ஒவியராக தானும் உயர்ந்து, வீரகேசரி பத்திரிகையின் மதிப்பினையும் செல்வாக்கினை யும் உயர்த்தினர் என்பது மிகையான கூற்றல்ல என்பதை அக் காலகட்ட வெகுசன ஊடக வளர்ச்சிப் பாங்கினை அறிந்தோர் அறிவர்.
திருநெல்வேலி முத்துததம்பி வித்தியாசாலையில் கல்வி கற்ற திரு. கனகலிங்கத்திற்கு பாடங்கள் படிப்பதைவிட படம் கீறு வதில்தான் அலாதி பிரியம். பிரபல தமிழக ஓவியர்களான கோபுலு, மணியம், மாதவன் ஆகியோரை வெகுவாக ரசிக்கும் திரு. கனகு, நம் நாட்டின் புகழ்பூத்த சித்திரக் கலைஞர்களான
10

ஜி. எஸ். பெர்ஞன் சீபின்வதுசிங்க, G3.N. 68urTri ஏ. ஸி. ஜி. எஸ்ஆசேதத-ஆகியூேரர்மீதும் அமோகபூற்றுதல்
மிக்கவர். மா ### மீது நீர்க்கவும்
if భ్కౌస్ట్రో மாலிபற்றி க ள்ே:ஐஞராக 岁 ஈரு. கனகு எழுதியிருக்கிருக்ஷ் lang)
licroon
சுயாதீன பத்திரிகா சமாஜ 襟_r。 தினபதி, சிந்தா LDGOof பத்திரிகளிலும் இரு வி. கே. சிலகாலம் பணியாற்றிய தோடு, இந்தீநீடில்&கவலை தமிழ் சஞ்சி கைகள், பத்திரிகைகளுக்கும் முகப்பு டை ஓவியங்கள் வரைந்த பெருமைக்குரியவர். இப் டிக் கூறும்போது இந்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சியோடும் அவர் இணைந்திருப்பது புரியும். அத்துடன் வி. கே. ஒரு ஓவியன் மட்டுமல்ல, சிறுகதைகள் பல படைத்த இலக்கியகாரனும்கூட. என்பது இன்று பலருக்கு தெரி யாத விபரம். திருவாதிரை, நிலா, கனகு. வி. கே. என்ற புனை பெயர்களில் இவர் அக்காலத்தில் கதைசள் எழுதினர். இலக்கிய நேயம் கொண்டவராதலால்தான், கதைகள்: நாவல்களை படித்து அவற்றின் உள்ளார்ந்த கருவூலங்களை சரிவரப் புரிந்துகொண்டு அவற்றிற்கமைய ஓவியங்சளை அப்படைப்புகளுக்கு பல்முகப் பரிமாணம் அளிக்கும் வகையில் வி. கே.யால் தீட்ட முடிந்தது. ஒவியங்களைப் பார்த்து அக்கால மக்கள் கதைகளைப் படிக்கத் தூண்டப்பட்டனர். கதை புரியாமல், குருட்டாம்போக்கில் அரைகுறை அம்மணப் படம் போடும் அவலநிலை, அன்று, வி. கே காலத்தில் இருக்கவில்லை.
இன்று நல்லூரில் நிறுவப்பட்டிருக்கும் பூரீலபூரீ ஆறுமு 5 நாவலரின் சிலைக்கான மூலப் படத்தை தினபதி, சிந்தாமணி பத்திரிகைகள்தான் முதன் முதலாக வெளியிட்டன. அதனைக் கீறியவர் வி. கே. மறைமலையடிகள், யோகி சுத்தானந்த பாரதி யார் போன்றவர்களின் ஒவியங்களையும் இவர் கீறியிருக்கிருர், ஏராளமான ஆலய திரைச்சீலைகள், மத சம்பந்தமான நூல்களுக் கான முகப்பு படங்கள், பாராட்டுப் பத்திரங்கள், சான்றிதழ்களை வரைந்திருக்கும் வி. கே., இந்த நாட்டு மக்களின் அப்பழுக்கற்ற நன்றியறிதலுக்குரித்தானவர் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
1949ம் ஆண்டு திருமதி இரத்தினேசுவரியை திருமணம் செய்து இரு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் ஈன்றெடுத்து
11

Page 9
நற்பிரஜைகளாக்கிய வி. கே., நிறையான வாழ்க்கை வாழ்ந்து தானும் செம்மையாய், தான் கொண்ட கலைக்கும் சீரிளமையூட்டி செந்திருமகளின் பூரண கடாட்சம் பெற்ற, களங்கமற்ற நல்ல மனிதர். சதா வாயில் குதப்பிய வெற்றிலைக் காவி படர்ந்த பற்கள் தெரிய, மனதால் ஒளிரும் அன்புச் சிரிப்போடு திகழும் வி. கே., நோய்வாய்ப்படுமுன் கீறியது அம்மன் படம் என்கிருர் திருமதி கனகலிங்கம். அந்த பராசக்தி அம்மாளின் அருளால் ஒவியமாமணி கனகலிங்கம் பூரண உடல் நலத்தோடும், பொங் கும் மனப்பூரிப்போடும், நெஞ்சார்ந்த நிம்மதியோடும். நீங்காத இறையருள் நிரம்பப் பெற்று, பல்லாண்டு வாழ பகவான் அருள் பாலிப்பாராக.
இக்கட்டத்தில் ஒவியமாமணி வி. கே. கனகலிங்கம் பற்றிய இச்சிறு நூல் உருவாவதற்கு மூலகர்த்தாவாக இயங்கிய, மற்ருேர் அன்பும் அருமையுமிக்க நெஞ்சத்தைப்பற்றி இங்கு குறிப்பிடுதல், வரலாற்று அடிப்படையிலான கடப்பாடு என நினைக்கிறேன். கலை, இலக்கியங்களோ, அவற்றின் படைப்பாளிகளோ உயிர் வாழவும், அவர்களின் நாமங்கள் அமரத்துவம் காணவும், அன் றும் இன்றும் பெருமனதுகொண்ட வள்ளல்கள் பலரும் காரண மாயிருந்திருக்கின்றனர். இப்படிப்பட்டோரின் வரிசையில் வைத்தெண்ணப்படக்கூடியவர்தான் திரு. வேலணை வீரசிங்கம் அவர்கள், கலை, இலக்கிய ஈடுபாடுமிக்க திரு. வீரசிங்சம் பகுத் தறிவுப் பாசறையில் வளர்ந்தாலும், வரட்டு தர்க்கங்களில் காலத்தை விரையம் செய்யாது, கடும் உழைப்பினுல் உயர்ந்த நல்ல மனிதர் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் மட்டும் உயர்ந்ததால் அவர் குறிப்பிடத்தக்கவராகி விடவில்லை. கால, தேச, வர்த்தமான தேவைகளையுணர்ந்து, பல கலை, இலக்கிய காரர்களுக்கு, மிக அடக்கமாக அநாவசிய ஆரவாரமின்றி ஏராளமாக உதவியிருக்கும் திரு. வீரசிங்கமே, ஒவியமாமணி வி. கே.யை கெளரவிக்கும் இன்றைய நிகழ்ச்சிக்கு வித்திட்டவர்.
இந்த நாட்டின் ஒவியத்துறைக்கு அளப்பரும் சேவை செய் துள்ள வி. கே.யை கெளரவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற யோசனையோடு திரு. வீரசிங்கம் தனது
12

துணைவியார் சகிதம் எம்மில்லம் வந்தபோது, நானும் எனது கணவரும் மிகவும் மகிழ்க்சியடைந்தோம் குறிப்பாக கடந்த முப்பதாண்டுகளாக இந்நாட்டின் பல்வேறு கலை, இலக்கியகாரர் களை பாராட்டி கெளரவித்து, "வாழும்போது கலை, இலக்கிய படைப்பாளிகள் கெளரவிக்கப்பட வேண்டும்" என்ற கருத்தினை இலங்கையில் பரவலாக்கிய எனது கணவர் கே, ப்ால்ச்சந்திரன். நாட்டின் அமைதியற்ற சூழலால் சில காலம் ஒன்றுமே செய்ய முடியாமலிருந்தமை குறித்து, மிக மனக்குறையுற்றிருத்தார். ஆகவே திரு. வேலணை வீரசிங்கத்தின் யோசனையைக் கேட்டு அவர் மிக மிகக் குதூகலமுற்ருர். அது மட்டுமன்றி வி. கே.யும் உண்மையாக தேசிய ரீதியிலான பாராட்டுக்குரிய பெருந் தகை என்பதில், எமது மகிழ்ச்சி பன்மடங்காகியது. திரு. வேலணை வீரசிங்கம் தம்பதிகள் தமது பல்வேறு தொழில்களுக் கிடையே, இச்சிறப்பு நிகழ்ச்சிக்காக எடுத்துக்கொண்ட சிரமங்
கள் பல பல.
அவருடைய அடக்கமான, அப்பழுக்கற்ற கலை, இலக்கிய பணி, இமயமாய் காலத்தால் உயர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இலங்கையின் தேசிய கலைஞர்கள், இலக்கிய மேதைகள் பலரை பாராட்டி கெளரவித்த எமது கொழும்பு கலைச் சங்கமும், ஒவியமாமணி வி. கே.யின் இப்பாராட்டு விழாவில் தன்னையும் இணைத்துக்கொண்டதில் மேலும் ஒருபடி பூரித்து நிற்கின்றது.
எல்லாம் இறையருளே !
ᎠᎦᏴ

Page 10
அன்புள்ளமும் தன்னடக்கமும் கொண்ட ஒவிய மன்னர் வி. கே. திருமதி அன்னலட்சுமி இராஜதுரை
ஆயகலைகள் அறுபத்தி நான்கினுக்கும் அன்னையாகிய கலைவாணியின் அருள் சித்தித்திருக்க, மனிதனுக்கு சில கலைகள் அபூர்வமாய் வந்து வாய்த்து விடுகின்றன ! அதனால் அவன் வேறு எத்திசையில் முயன்றாலும் எம்முயற்சியில் ஈடுபட்டாலும், கைவந்த கலைக்கு ஆட்பட்டு, அதுவே அவனாகி, அவனே அதுவாகி சங்கமமாகின்றான் ! ஆம் ! இதுவும் அன்னை, தன் அதி அற்புதமான எழிலை பிரத்தி யட்சமாக்கிக் கொள்ள மேற்கொள்ளும் சித்திவிளையாட்டுத் தான் !
ஒவியக்கலைஞர் வி. கே. அவர்களைப்பற்றிச் சிந்திக்கின்ற போது, மேற்குறிப்பிட்டவாறு ஒரு சிந்தனை தோன்றியதென் றால், அவர் நிச்சயமாக ஒரு பிறவிக்கலைஞரே! நமக் கெல்லாம் 'பேனா' வைப்பற்றித் தெரியாத காலத்திலேயே * வீரகேசரி’ப்பத்திரிகைமூலம் புகழ்பெற்றுவிட்டவர். ஆதலின் இவரது ஆற்றல் தனித்திறன் பெற்றது என்று கூறுவதில் மிகை ஏதுமில்லை.
1940 ம் ஆண்டுத் தசாப்தம், 1950 ம் ஆண்டுத் தசாப் ம் ஆகியன தமிழ்நாட்டுச் சஞ்சிகைகள் வளர்ச்சியின் பொற் காலம் என்றே கூறலாம் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், கலைமகள், அமுதசுரபி, போன்ற வாரசஞ்சிகைகளின் மகத் தான வளர்ச்சிக்கு, அவற்றில் வெளியான புகழ் பெற்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகள் மட்டுமல்ல, அவற்றிற்கு உயிரூட்டிய ஓவியங்களும் பெரும் பங்கினை வகித்தன என்பது வெளிப்படை.
"கல்கி"யின் சரித்திரத்தொடர்கதைகளுக்கு மணியனின் ஒவியவண்ணம்களை சேர்த்ததுபோல், வர்ணம், வினு, சுப்பு,
கோபுலு, லதா, போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள், தத்தமக் கென்று ஒவ்வொரு தனிப்பாணியைக்கொண்டு, ஏனைய
ᏞᎩᎪᎥ.

பத்திரிகைகளை வாசகர்களிடையே பெரும் செல்வாக்குப்பெற உதவியவர்கள் அதனால் தாமும் பெயர்பெற்றார்கள். அத் தகையதொரு காலகட்டத்திலே, நமது நாட்டிலும் வாரப் பத்திரிகைகள், வாசகர்களின் இதயங்களில் இடம்பிடிக்க முனைந்துகொண்டிருந்த வேளையில் *வி. கே. வீரகேசரி ஞாயிறு பதிப்புகளின் மூலம் தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், சிறப்புப் பெருநாள் பதிப்புகள் போன்றவற்றிக்கு உயிரோட்டமான ஒவியங்களை வரைந்து அரும்பணியாற்றி 6tfit.
தொடர்கதைகள் எனக் குறிப்பிடும்போது 40 ம், 50 ம் ஆண்டுத் தசாப்தத்தில், அக் காலத்தில் தொடர்கதை மன்ன னாகப் பெயர்பெற்றிருந்த ரஜனி'யின் கதைகளுக்கு இவர் வரைந்த ஒவியங்களை இங்கு சிறப்பாகக் குறிப்பிடமுடியும், தமிழ்நாட்டு ஓவியர்களைப்போல், இவரும் தனக்கென ஒரு தனிப்பாணியைக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதே. அதுவுமன்றி கலைத்துவமும், கற்பனை வளமும் பண்பாட்டுக் கோலமும், கவர்ச்சியும் அழுத்தமும் இவரது ஓவியங்களில் மிளிர்ந்தன.
1940 ம் ஆண்டுத் தசாப்தத்தின் ஆரம்ப காலகட்டத்தில்
எஸ். எஸ். ஸி. சித்தியெய்திய ஒருவருக்கு, அரசாங்கத்தில் வேலை கிடைப்பது மிகவும் சுலபமான காரியம். மிகக் குறைந்த கல்வித் தராதரம் உள்ளவர்கள் கூட அந்தக்காலத்தில் நல்ல வேலைகளைப் பெற்றுக்கொள்ளமுடிந்த வேளையில் *வி. கே." அவர்கள் ஓவியம் வரைவதையே துணிந்து தமது ஜீவனோபாய மாகக் கொண்டுவிட்டார் என்றால், இம்மனிதரின் ஓவியக்கலை ஈடுபாட்டுக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
"வி. கே." என்று தமது பெயரைச் சுருக்கிக்கொண்டு புகழ் பெற்ற ஓவியக்கலைஞரான திரு. வி. கனகலிங்கத்தின் கைவண்ணத்தினை நான் மாணவியாக இருந்த காலத்தில் வீரகேசரிப் பத்திரிகையில் பார்த்து மகிழ்ந்ததுண்டு. ஆனால் நான் வீரகேசரியில் பணியாற்றப்போவதோ, எமது பத்திரி கைத் தொழில் மூலமாக *வி. கே.” யுடன் பரிச்சயம் ஏற்
15

Page 11
படப்போவதோ நான் அப்போது கனவிலும் கண்டிருக்க முடியாத விஷயங்கள் !
1973 ம் ஆண்டுக்குப் பின்னர் எமது காரியாலயத்தின் சகோதரப்பத்திரிகையான மித்திரனின் வாரப்பத்திரிகையான மித்திரன் வாரமலரினை நான் பொறுப்பேற்றுச் செய்த காலகட்டத்தில், வி. கே. அவர்கள் அதன் முகப்போவியங் களை வரையும் பொறுப்பிணை ஏற்றுச் செய்துகொண்டி ருந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் அவருடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.
ஒவ்வொரு வாரமும் முகப்போவியத்தை வரைந்து என் னிடம் தந்து, அதைப் பார்த்து என்முகம் மலரும் வரை மிக ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டுநிற்கும் ஒரு பிறவி ஒவியக் கலைஞனின் முகம் இப்போதும் என் கண்முன் தெரிகிறது. எந்தக் கலைஞனும் தனது படைப்புக்கு ஒரு "சபாஷ் கிடைக் கும்போது ஒரு குழந்தையைப் போலத்தான் குதூகலிக் கின்றான். வி. கே. யும் அதற்கு விதிவிலக்காக முடியாதல்லவா?
பல வருடங்கள் வீரகேசரியில் பிரதம ஒவியராகக் கடமை புரிந்த அவருக்கு "கேசரி' மீது தனிப்பற்றும் பிரேமையும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. தான் கடமையாற்றிய காலத்து வீரகேசரிச் சரித்திரத்தை, எம்மைப்போன்றவர்க ளுக்கு எடுத்துக் கூறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதை அவ தானித்திருக்கின்றேன். சித்தார்த்தன், நிலா, லிங்கம், கனகு போன்ற பல்வேறு புனைபெயர்களால் பத்திரிகை ஒவியங் களைத் தவிர அட்டைப்பட ஒவியங்கள் சஞ்சிகைகளின் முகப் புப்பட ஒவியங்கள் ஆகியவற்றினை சிறப்புடன் வரைந்து பெயர்பெற்றதோடு இல்லாமல், கவிஞராகவும், எழுத்தா ளராகவும் தம் ஆற்றல்களைக் காட்டிய போதும், மிக அடக் கத்தோடு நடந்துகொள்ளும் பண்பு இவருக்குரியது.
அதிலும் தன்னில் வயது குறைந்தோரிடமும் அதே அடக் கத்தினைக் காட்டும் பண்பு இவருடைய சிறந்த குணமாகும்.
I6

எனது குடும்ப விபரங்களை அன்புடனும் அக்கறையுடனும் கேட்டு விசாரித்துக்கொள்ளும் இவர், தனது குடும்ப விவகா ரங்களை என்னிடம் சொல்லும் இவர், கடந்தகால வீரகேசரி யில் தனது பொற்காலத்தைப் பற்றிக் கூறி புளகாங்கிதம் அடைந்த இவர், வீரகேசரியில் தனது எழுத்துமுயற்சிகளைப் பற்றி என்னிடம் கூறாமல் விடுத்தது தன்னடக்கத்தின் பாற் பட்டது என்றே கருதுகிறேன்.
கேசரியில் பணியாற்றிய பின், இவர் சிலகாலம் தினபதி, சிந்தாமணிப் பத்திரிகைகளிலும் ஒவியராகப்பணியாற்றி தமது கலைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார். அதன் பின் யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன், சஞ்சீவியிலும் இவரின் ஒவியங்கள் இடம் பெற்றன. இதுவுமன்றி இலங்கையில் வெளிவந்த சில சஞ்சிகைகளும் நூல்களும், இவரது வர்ண முகப்போவியங்களுடன் வெளிவந்திருக்கின்றன.
வீரகேசரி மாதமொரு நாவலை வெளியிடும் காலத்தில் இவரது அழகிய முகப்போவியங்களுடன் பலநூல்கள் வெளி யாகின என்பதனையும் குறிப்பிடலாம்.
நேபாள மன்னர், மதுரை திருஞானசம்பந்தீர் ஆதீன மகாசன்னிதானம் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் குன்றக்குடி அடிகளார், கி. வா. ஜகந்நாதன், சுத்தாநந்த பாரதியார் போன்ற அறிஞர்கள் இலங்கை வந்தபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரங்கள், இலங்கை தியாகராஜ கான சமாஜம் ஆண்டு தோறும் கலைஞர் களுக்கு வழங்கிவந்த கெளரவ விருதுப்பட்டங்கள் ஆகிய வற்றினையும் இவர் வரைந்திருக்கிறார் என்பது குறிப்பி டத்தக்கது.
கலைஞன் வாழும் காலத்தில் கெளரவிக்கபடவேண்டும் என்ற கருத்திற்கொப்ப வி. கே."யும் கடந்த காலங்களில் கெளரவிக்கப்பட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விடய மாகும்.
கொழும்பு விவேகானந்த சபையில் 09 - 12 - 65 இல் புலவர் கருணாலய பாண்டியனார் தலைமையில் நடைபெற்ற
17

Page 12
திரு. அ. பொ. செல்லையா அவர்களின் காலத்தின் விதி, என்ற நூல் வெளியீட்டுவிழாவில் திரு. வி. கே. அவர்களுக்கு *ஒவியமன்னர்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. அத் துடன் 1973 ம் ஆண்டு மே மாதம் 6 ந் திகதி வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற பூரீ தியாகராஜ சுவாமிகளின் மூன்றுநாள் உற்சவத்தின் இறுதி நாளன்று, ஏனைய மூன்று இசைக் கலைஞர்களுடன் இந்த ஒவியமன்னரும் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட் டார் என்பது மகிழ்ச்சியுடன் நினைவு கூறத்தக்கதாகும்.
விசுவலிங்கம் கனகலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட் இவர் ஆனைக்கோட்டையில் 28 - 09 - 1920 ல் பிறந்தவர். 45 வருடங்களுக்கு மேலாக ஒவியக் கலையைத் தொழிலாக வும். பணியாகவும் சேவையாகவும் கொண்டு உழைத்த இவர் தற்போது சுகவீனமுற்ற நிலையில் ஒய்வெடுத்துக்கொண் டிருக்கின்றார்.
எல்லாம் வல்ல இறைவன் அன்புள்ளம் கொண்ட இந்த
ஒவியமன்னனுக்கு தேகாரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்கப் பிரார்த்திக்கின்றேன்.
站巡巡

66 சுமதி 99.
எழுதியவர்: ' லிங்கம்
y
*சுமதி’ எனும் இக்கதை ஒவிய மாமணி *வீ.கே.” அவர்கள் வீரகேசரி நிறுவனத்தில் கட்மை ஆற்றியபோது 19 - 11 - 1944 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் வெளிவந்தது. இக்கால கட்டத்தில் "லிங்கம்’, ‘திருவாதிரை' ஆகிய புனைப் பெயர்களில் அனேக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.
'ஓடி வாடா கண்ணு 1 எங்கே ஒரு முத்தம் கொடு" என்று எதிரே வரும் குழந்தையை நோக்கி இரண்டு கைகளையும் நீட் டிஞள் சுமதி.
‘களுக்' என்று சிரித்துக்கொண்டு கைக்கு அகப்படாமல் குழந்தை மணி திரும்பி ஓடிவிட்டான்.
*சரி, நீ என்கிட்ட வரவேண்டாம் என்று சொல்லி முகத்தை மறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
மணிக்கு அவள் கோபித்துக் கொண்டது புரிந்துவிட்டது. மெதுவாக அடிமேல் அடிவைத்து வந்து கொண்டு இருந்தான் அதை கடைக்கண்ணுல் கவனித்துக் கொண்டிருந்தாள் சுமதி.
**அம்மா, அம்மா’ என்று கையைப் பிடித்து இழுத்தான்
"நான் கூப்பிட ஒடிப் போனுய் அல்லவா ? உன்னை நான் தூக்கவேமாட்டேன் போ" என்று கையைத் தட்டினுள்.
I9

Page 13
அவ்வளவுதான், மணியின் கருவிழிகள் இரண்டிலும் எங் கிருந்தோ கண்ணீர் வந்து நிரம்பிவிட்டது.
சுமதிக்கு பொறுக்க முடியவில்லை. மணியை வாரி எடுத்து மடிமீது வைத்துக்கொண்டாள்.
"நான் சும்மா விளையாட்டிற்குச் சொன்னேன், என் கண் ணல்லவா ? அழாதேடா" என்று முன்ருணையால் குழந்தையின் கண்ணிரைத் துடைத்தாள்.
மணியின் முகத்தில் இளநகை மலர்ந்தது. "எங்கே - இனி கொஞ்சடா இல்லாட்டா. '' என்று முகத்தைக் கிட்டக் கொண்டுபோனள். அப்பொழுது யாரோ வெளிக் கதவை தட் டும் சத்தம் கேட்கவே, ‘மணி இறங்கடா, கதவை திறந்துவிட்டு வருகிறேன்' என்று மணியை கீழே இறக்கிவிட்டு கதவைத் திறக்கப் போனுள். உடனே மணி அலறத் தொடங்கிவிட் டான். கணவன் கொடுத்த இரண்டு பார்சல்களையும் வாங்கிக் கொண்டு, “ஏன்டா மணி இப்படி அழுகிருய்? நான் எங்கும் போகவில்லையே!' என்று ஒடிவந்து குழந்தையை தூக்கிக்கொண் டாள். மணியின் அழுகை மாறிவிட்டது.
“அவன் அழுதா என்ன கரைந்து விடுவாஞ? சும்மா தூக்கிப் பழக்காதேயுங்கள். பின் உங்களை ஒரு வேலையுமே செய்ய விட மாட்டான்! என்று மணியின் தாயார் நீலா கூறினுள் சுமதியிடம்.
‘என்ன அக்கா அப்படிச் சொல்லுகிறீர்கள் மணி நல்ல பிள்ளை அல்லவா ? அம்மாவிடம் பால் குடித்துவிட்டு வாடா, நான் மாமாவிற்கு காப்பி கொடுக்க வேணும்! என்று சொல்லி மணியை கீழே இறக்க முயற்சித்தாள். மணி இன்னும் இறுக சுமதியின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
"பார்த்தீர்களா ! நான் சொன்னேனே, நீங்க பழக்கின பழக்கந்தான். தெரியாமலா குழந்தைப் பிள்ளைக்கும், குட்டி நாய்க்கும் இடம் கொடுக்கக் கூடாதென்று சொல்லி வைத்தார் கள். இறங்கடா கீழே. உன்னை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தா வேறு வேலை இல்லையா அந்த அம்மாவிற்கு?’ என்று கூறியபடி கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் நீலா.
20

"அதோ அம்மா உன்னை அடிக்கப் போரு. நீ மாமா விடம் போ” என்று புருஷனிடம் நீட்டினுள் சுமதி.
அப்படியே தனபாலனின் கைக்குள் பாய்ந்துகொண்டு தாயைப் பார்த்து சிரித்தான் மணி.
குழந்தையின் விஷமத்தனத்தைப் பார்த்து நீலா சிரிக்காமல் என்ன செய்ய முடியும் ? சுமதி குழந்தையை வாங்கிக்கொண்டு காப்பியை கணவனிடம் கொடுத்தாள். மணியின் சின்ன வயிற்றைத் தடவியபடி, ‘என்னடா ராஜா ! பசிக்கிறதா? இந்தா" என்று பாலில் நனைத்த பிஸ்கோத்தை நசிந்து, நசித்துத் தீத்தினுள். அப்பொழுது அங்குமிங்குமாக அரும்பிய இரண்டு மூன்று பற்களைக்கொண்டு குழந்தை மணி மென்று மென்று சாப்பிடும் அழகைப் பார்க்கும்போது, சுமதியின் உள்ளம் ஒருவித இன்ப உணர்ச்சியால் பூரிப்படையும்.
*ராஜாவின் ஐயா எங்கேயடா?’ என்று மணியைச் சுமதி கேட்டாள். விளையாட்டாக குழந்தை மணி தனது குறுகுறுத்த விழிகளை சுழற்றி தனது தாயை, மாமனை, சுமதியை, தனபா லனை, பாட்டியை எல்லோரையும் பார்த்தான். கடைசியில் தனபாலனைத்தான் ஐயா என்று சுட்டிக் காண்பித்தான். உடனே எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குழந்தை மணியின் செவ்விய அதரங்களில் புன்னகை ஒடியது. ஆனல் நீலாவின் உள்ளம் மாண்ட கணவனை நினைத்தும், துக்கத் திரை யினல் மறைபட்டது.
குழந்தை மணியுடன் கொஞ்சிக் குலாவுவதில் அளவுமிக்க ஆனந்தத்தை அடைந்தாள் சுமதி.
‘குழந்தைகளில் இவளுக்கு இவ்வளவு பிரேமையா ? அட தெய்வமே ! அதை பூர்த்தி செய்வதற்கு உனது திருவுள்ளம் இரங்கமாட்டாதா? பிள்ளைக்காக அவள் அனுட்டிக்கும் விரதங் கள்தான் எத்தனை ? என்றெல்லாம் தனபாலன் உள்ளத்தில் எண்ண அலைகள் கொந்தளித்தன.
米 泰 来
தனபாலனும் நீலாவின் அண்ணனும் ஒரே ஆபிசில் உத் தியோகம் பார்த்து வந்ததினல், இருவரும் நல்ல தோழர்கள்
21

Page 14
ஆகிவிட்டார்கள்; தனபாலன் முன் குடியிருந்த வீட்டில் பல அசெளகரியங்களும் ஏற்பட அதை காலி செய்துகொண்டு, நீலா குடியிருந்த வீட்டில் வந்து குடியேறினன். இப்படி ஒண்டுக் குடித்தனம் செய்யத் தொடங்கி ஆறு மாதங்கள் தான் இருக்கும். பிள்ளை, பிள்ளை என்று அங்கலாய்த்த சுமதியின் அவாவை ஓரளவுக்கு மணி சாந்தப்படுத்தினன். இந்த இளம் பிராயத்திலேயே மணி தகப்பன் இல்லா குழந்தையாய் விட்டானே என்று எண்ணும்பொழுது சுமதியின் விஸ்வாசம் இன் னும் பன்மடங்கு அதிகரிக்கும்.
ஒராண்டு உருண்டது. இப்பொழுது சுமதி ஐந்து மாதக் கர்ப்பவதி. தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப்பற்றி அவள் எண்ணத்தில் எத்தனை எத்தனை கற்பனைகள் ! குழந் தைக்காக சேகரித்த சட்டைகள், தொப்பிகள், தலையணைகள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் திணித்து சுமதி தனது பீரோவை நிரப்பி விட்டாள். சில சட்டைகளை எடுத்து மணிக்கு போட்டு அழகுபார்ப்பாள்.
*ராஜாவோடு விளையாட ஒரு தம்பி பெற்றுத் தருவேனடா! இந்தச் சட்டைகள் விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் அவனுக் குத்தான் !” என்று சொல்லி மணியின் கன்னத்தை தனது கன் னத்தில் புதைத்துக்கொள்வாள். நெற்றியில் சதா கிடந்து புரளும் சுருள் கேசத்தை தனது பூக்கரத்தால் பிடித்து இழுத்த படி மணி குதலை மொழியில் ஏதோ கன்ன பின்ன என்று கதைப்பான். அதை சுமதி புரிந்துகொள்ள முடியும் ?
米 米 冰
அன்று இரவு எட்டு மணி. பிரசவ ஆஸ்பத்திரி. சுமதி தங்க விக்கிரகம் போன்ற ஒர் ஆண் குழந்தையைப் பெற்ருள். தன பாலன் மகிழ்ச்சியைக் கேட்கவா வேண்டும். ஆனல் நாளடை வில் சுமதியின் சுகவீனத்தசையில் டாக்டரின் திருப்திகரமற்ற பதிலும் தனபாலனின் இதயத்தை ஒரு கலக்குக் கலக்கியது. சுமதி கிழித்துப்போட்ட நார் போல படுக்கையுடன் ஒட்டிப் போய் கிடந்தாள். பக்கத்தில் இருந்து சுமதிக்கு ஆகவேண்டிய காரியங்கள் எல்லாம் பார்ப்பது நீலாதான்.
22

தீனஸ்வரத்தில் 'என்னல் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் அக்கா",
"எனக்கு என்ன கஷ்டம் ? சீக்கிரத்தில் குணமாகிவிடும், கவலைப்படாதே சுமதி.”
“இல்லை, நான் இனி பிழைக்கமாட்டேன்” என்று சொல்லும் போது தனபாலன் உள்ளே வந்தான்,
நீலா எழுந்து நின்ருள்,
*"வீணுக்கு மனசைப் போட்டு ஏன் குழப்புகிருய்? இன் னும் நாலு ஐந்து நாட்களில் பத்தியம் கொடுக்கலாம் என்று டாக்டர் கூறியிருக்கிருர்’ என்று தேறுதல் வார்த்தைகள் கூறினன்.
* 'இல்லை. எனது..."
அணையப்போகும் சமயத்தில் பிரகாசிக்கும் விளக்னகப்போல் திடீரென்று சுமதியின் வதனத்தில் ஒருவித முறுவல் ஸ்வலித்தது: அதை தனபாலன் கூர்ந்து கவனித்தான். தனது எலும்பும் தோலுமான கரத்தைத் தூக்கி தன்னருகே உக்காரும்படி சமிக்சை செய்தாள் சுமதி. 'நீங்கள் என் மரணத்தைக் குறித்து வருந்த வேண்டாம்” என்ருள்.
பின்பு ** அக்கா எனது குழந்தையையும் கணவனையும் ஏற் றுக்கொள்கிறீர்களா ?" என்ருள்.
அடுத்த நொடியில் கணவனைப் பார்த்து, 'நான் உங்கள் உள்ளத்தில் இத்தனை நாளும் வகித்த ஸ்தானத்தை அக்கா நீலா விற்கு அளிப்பீர்களா? என்று கேட்டாள்.
சிறிது நேரம் அமைதி - உள் ள ங் களு க் கி  ைட யி ல் போராட்டம்.
23

Page 15
"என்ன யோசிக்கிறீர்கள், சமூகத்திற்காக பயப்படுகிறீர் களா? அஞ்ச வேண்டாம். என் வேண்டுகோளை ஒப்புக்கொண் டதாகக் கூறுங்கள். இல்லையேல் எனது ஆத்மா சாந்தியடைய மாட்டாது” என்ருள்.
நீலாவும் தனபாலனும் அந்த மகத்தான கட்டளைக்கு தலை சாய்த்து "ஆம்" என்ருர்கள். நீலாவின் மனத்தை சுமதி முன்பே நன்ருக தெரிந்துகொண்டுவிட்டாள். திருப்தியுடன், இனி நான் சாகலாம் அக்கா...நீங்கள்...? என்று ஏதோ சொல்ல வாய் எடுத்தாள். சொல்ல முடியவில்லை. அவ்வளவு தான் சுமதிக்கு வாழ்வினின்று விடுதலை !
நீலாவின் வாழ்வில் அணைந்த தீபம் இன்று சுமதியால் ஏற்றி
வைக்கப்பட்டது.
(கதையில் வரும் பெயர்கள் எல்லாம் கற்பனை பெயர்கள் அவை யாரையும் குறிப்பிடுகிறவைகள் அல்ல.)
兴、
2委

**ஒவிய மாமணி" **ஒவிய மன்னர்'
* வர்ண வாரிதி' வீ. கே. என்னும் வி. கனகலிங்கம் அவர்களின் பொன் விழா
வைபவ வாழ்த்து
k sk sk
ஒவிய மாமணி எங்கள் ‘வீ. கே.’ என்ருல்
ஊர் அறியும் , இனம் அறியும் ; தேசம் முற்றும் மேவி உள்ள பிற இனத்தார் அறிவர்; மற்றும்
மேல் நாட்டுக் கலை நிபுணர் போற்றி செய்வர்! காவியத்தின் நலம் புனைந்து காட்டும் வல்ல
கரம் பலித்த கலைப் படைப்பின் ஆற்றல் மிக்க மா வியப்புக் குரித்தான மகிமையாளன்
'வர்ண வாரிதிக்குப்” பொன் விழா வாழ்த்துக்கள்!
★ ★ ★
கண்களை, நம் கற்பனையைக் கருத்தைக் கவ்வும் காட்சிகளைக் கிளர்த்தும் நின தாழம் மிக்க நுண் கலைச் சித் திரங்களினல் வசப் பட்டோம் ஓர்
நூற்றண்டின் அரைப் பகுதிக் காலம் ! 'ஊன்றி எண்" என்னும் ஒரு படம் , மற்முென்ருே “பொங்கி
எழுந்திடடா" எனத் தூண்டும் ; “எழிலின் சாற்றை உண்" என்னும் இன்னென்று ! நீ கிழிக்கும்
ஒரு கோட்டின் விவித நயம் கோடி கோடி !
贪 ★,★
25・

Page 16
கலைப் புலவர் நவரத்தி னத்தின் முற்றக் காவினிலே கனக மலராக, அன்னர் தலை மகன் போல் மருமகனய் முகிழ்த்துப் பூத்துத் தாரணியில் அவர் புகழும் ஓங்கக் காத்து, விலை மதிப்பில்லாக் கீர்த்தி ஈழம் வாழும்
வியன் தமிழர்க் கீந்தவனே! “வீ. கே."! உன்னைச் சிலை எழுப்பிப் போற்ற வழி இன்றில்லாத
சிறுமையினுல் விழா மட்டும் செய்கின்ருேம் "நாம் !
YAr yr Ar
பொன் வைக்கத் தகும் தட்டில் பூ வைக்கின்ருேம் !
புலரும் ஒரு நாள் எமக்கு புகழின் உச்சி மின்னும் ஒரு மலை போல் ஒர் காட்சிக் கூடம்
மேன்மையுற "வீ. கே.” ஞாபகமாய்க் கட்டி பன்னரிய ஓவியங்கள் படைக்கும் சீடர்
பணி மனையாய் நிறுவிடுவோம் ! பல்லாண் டின்னும் நின் அரிய கலைப் பணிகள் தொடர்க! என்றும் நிலைத்திடுக நின் கீர்த்தி ! நீடு வாழ்க !
கொழும்பு கலைச் சங்கம் யாழ். கலை அரங்கம்
கே. பாலச்சந்திரன் வேலணை வீரசிங்கம் செயலர் செயலர்
ஈழம் வாழ் மக்கள் சார்பாக, 1990 ஆவணி 19-5 தேதி கொள்ளுப்பிட்டி, சசக்காவ மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
uuri : சில்லையூர் செல்வராசன்
26

ஒவிய உலகில் ‘ஓர் துருபதன்' ஆ. சிவநேசச்செல்வன் (பிரதம ஆசிரியர் வீரகேசரி)
உள்ளமெனும் பொற்பாயில் உதிக்கும் கோடானுகோடி எண்ணக்கருக்களை வகைப்படுத்தி, அவற்றுக்குத் தம் கை வண் ணத்தால் உயிரூட்டும் ஒவியர்கள் உண்மையிலேயே பிரம்ம தேவ னின் அற்புதச் சிருஷ்டிகளே.
கலைகளையும் அதன் மென்மையான உணர்வுகளையும் துல் லியமாகப் புலப்படுத்தும் கலையம்சங்கள் யாவருக்கும் எளிதில் கைவருவதிலில்லை. அக்கடாட்சம் கிட்டியோர் மிகச் சிலரே யாவர். லியனடோடார்வின்சி, பிக்காஸோ, ரவிவர்மா போன்ற உல கப் புகழ்பெற்ற ஓவியர்களைப்பற்றி நாம் அறிந்துள்ளோம் ஆனல் நம் உள்நாட்டிலும், இந்தியத் துணைக்கண்டத்திலும் ஒவியக்கலையினல் உன்னதப் புகழ்பெற்று விளங்கும் ஒவியர்களை யும் நாம் மறந்துவிடலாகாது. தென்னகத்திலிருந்து வரும் சஞ்சிகைகளில் வினு, மணியன் போன்றேரின் ஒவியங்கள் எமக்குப் பரிச்சயமானவைதான். மூர்த்தி, சபா, ரமணி, செள, ராஜ0 போன்ருேர் வரிசையில் கடந்த ஐந்து தசாப்தங்களாக எமது வீரகேசரி, தினபதி போன்ற தேசிய பத்திரிகைகள் மூலம் வாசகர்களுக்கு தம் ஒவியத்தினல் மகிழ்வித்த, கருத்தைப் புலப்படுத்திய, மனங்களினல் கருத்துக்களை அழுத்திப்பதித்த ஒவிய மன்னர் வீ. கே.ஐ மறந்துவிடலாகாது. அவர் மறப்பதற்கு உரியவரும் அல்ல. இலங்கையிலிருந்து வெளியாகும் நாவல்கள், சிறுகதைகள், பத்திரிகைகள் போன்றவற்றுக்கெல்லாம் ஓவியங் கள் வரைந் " பாராட்டுப் பெற்றவர் வி. கனகலிங்கம். குறிப் பிட்ட காலத்தில் அவரது படைப்புக்சளைத் தாங்கி வராத ஏடு களே அரிது எனலாம்.
இலங்கையின் வட "புலத்திலுள்ள ஆனக்கோட்டையில் 28 - 9 - 1920இல் பிறந்த வி. கனகலிங்கம் ஒர் கலைக் குடும்பத்தில்
27

Page 17
பிறந்தவர். பேரன் ஓர் அண்ணுவியார். மாமனர் கலைப்புலவர் க. நவரத்தினம். மீன் குஞ்சுக்கு நீந்துவதற்குக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமல்ல. இயல்பாகவே கலை உணர்வு இவரை ஆக்கிரமித்தது. பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர் வீ. கே. வேலை தேட எத்தனிக்கவில்லை. ஒவியத்திற்கே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டார்.
1942ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகள் வீரகேசரியில் பிரதம ஒவியராக பணியாற்றிய பின்னர் சிந்தாமணி, தினபதி போன்ற பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார். பின்னர் சுயேட்சையாகவே கலைப்பணியோடு தம்மை ஈடுபடுத்தினர்.
'நாவலருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சிந்தையில் எழ முன்னரே தம் கற்பனையால் சிலை வடித்தவர் வீ. கே. இவரின் ஒவியத் திறமையால் வர்ண வாரிதி" என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது.
வீ. கே. , கனகு, சித்தார்த்தன், நிலா போன்ற பல புனை பெயர்களால் வாசகர் மனங்களை வீ. கே. கொள்ளை கொண் டவர். தனியாக தமிழ் ஏடுகளில் மாத்திரம் தம்மை வரம் பிட்டு விடாமல் சிங்கள ஏடுகளிலும், சஞ்சிகைகளிலும் தம் படைப்புக்களை வீ. கே. வியாபகப்படுத்தியவர்.
ஓவிய உலகு இன்று பரந்துவிட்டது. ஆயினும் அதில் துருவ நட்சத்திரமாகப் பிரகாசிப்பவர்கள் மிகச் சிலரே. அவ்வரிசை யில் வீ. கே. பாராட்டப்படுகிறர். கலைஞர்கள் எப்பொழுதுமே பாராட்டப்பட வேண்டியவர்கள். பொன்விழாக் காணும் வீ. கே. சுகவாழ்வு பெறவேண்டும் என்றும், அவர் சிறப்புற வேண்டும் எனவும் வாழ்த்துகின்ருேம்.
எல்லாம் வல்ல ஆடல் வல்லானின் பேரருள் அவருக்கு கிட்டுவதாக.
28

எப்படி ஒவியரானேன்?
1942 வீரகேசரியில் புறுாவ் றீடராக சேர்ந்தேன். ஆசிரி யர்களின் கையெழுத்துக்கள் ஆரம்பத்தில் படிப்பதற்கு சிரம மாகவிருந்தது. அதிலும் நியூஸ் ஆசிரியராகவிருந்த திரு. K. V. S. வாஸ் அவர்களின் கையெழுத்தோ வெகு சிரமமாக இருந்தது. பழகப்பழக எல்லாம் சரிவந்துவிட்டது.
6 மாதத்தில் பிரதம புறுாவ் நீடராக்கினர்கள். எனினும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த புறூவ்வை படித்துத் திருத் திக்கொண்டிருப்பது என்ற அலுப்பும், முயற்சி செய்தால் ஏன் முன்னுக்கு வர முடியாது என்ற நம்பிக்கையும் உண்டானது.
"புறூவ் றீடேர்ஸ், ஓவர்ரைம் புக்’’ அன்று புதிதாக மேஜையில் கிடந்தது. எனக்கும் அன்று பொழுது போகவில்லை. அதில் ஓர் அழகான சூரியோதயக் காட்சியை பேணுவாலேயே வரைந்து முடித்தேன். பார்ந்தவர்கள் எல்லோரும் வெகுவாகச்.
ক্ষেত্র
ஒவியமாமணி வி. கனகலிங்கம் து
சிலாகித்தார்கள். எனக்கும் அந்தச் சித்திரம் பூரண திருப் தியைத் தந்தது.
சிறிது நேரத்தில் பயம் கலந்த யோசனைக்குள்ளானேன். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் M. D.யின் (திரு. ஈஸ்வர ஐயர்) றுாமுக்கு போய் வருவதால் அன்று 3 மணி - பியோன் வந்து உங்களை M. D. சேர் கூப்பிடுகிருர் என்ருன். போனேன். உள்ளே நுளையவில்லை, உதவி மனேஜர் பேசிக்கொண்டிருந்தார். அதனல், அவர் கூப்பிட்ட பின் மெதுவாக உள்ளே சென்றேன். M. D.யின் கையில் நான் போட்ட படத்துடன் கூடிய புத்தகம் இருந்தது.
நான் பயந்த அளவுக்கு ஒன்றும் இல்லை. **இந்தப் படம் யார் வரைந்தது?"
'நான்தான்” என்றேன்.
29

Page 18
'உனக்கு நன்முக சித்திரம் போட வருமா?" என்றர்.
"ஆம், சேர்” என்றேன்.
'வெகு சீக்கிரத்தில் புளொக்குகளை நாமே தயாரிக்கவுள் ளோம். அதற்கான ஒழுங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின் றன, அதன் பின் நீ ஆர்டிஸ்ட்டாக வேலை செய்யலாம். அது வரைவும் நமது பத்திரிகைக்கு தேவைப்படும் (Map) படங்களை வரைந்து கொடு”.
““gr, (8ř.** இனிப்பான செய்தியுடன் வெளியே வந்தேன்.
எனக்கு வீரகேசரி வாழ்க்கையில் இது ஒரு நல்ல நிகழ்ச்சியா யும், நெஞ்சைவிட்டு நீங்காததுமாகிவிட்டது.
来源 料
ஆர்ட்டிஸ்டாக வேலை பார்க்கத் தொடங்கியபின் நெருங்கிய தொடர்பு திரு. லோகநாதனுடன் ஏற்பட்டது. ஏற்கனவே நல்ல மதிப்பு வைத்திருந்த எனக்கு கேட்கவா வேண்டும்? அவர்தான் வீரகேசரி வாரப் பதிப்பு ஆசிரியர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் இவற்றுக்கெல்லாம் சித்திரம் போட வேண்டும். சிறுகதைகள், கவிதைகள் இவற்றை என்னிடமே படிக்கத் தருவார்கள். அதில் சித்திரம் தீட்டக்கூடிய காட்சி களை குறித்து வைத்துக்கொண்டு, கொடுத்து விடுவேன். ஒரு நாள் நான் எழுதிய கதையொன்றை லோகநாதனிடம் கொடுத்து, பிரசுரிக்கத் தகுதியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன்.
உள்ளூர எனக்குச் சந்தேகம். ஒரு வாரத்தின் பின் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, இந்தக் கதை நன்ருக இல்லை. இன்னும் ஒன்று எழுதும்படி சொன்னர். அப்படியே எழுதிக் கொடுத் தேன். அதற்கும் முந்திய கதையின் கதிதான். எதற்கும் மனதை சோரவிடக் கூடாது. திரும்பவும் முயலுங்கள் என்று கூறிக்கொண்டே என்னிடம் 2 புத்தகங்கள் தந்தார். ஒன்று சக்கரவர்த்தி ஸி. ராஜகோபாலாச்சாரியாருடையது. மற்றது
30

கு. ப. ராஜகோபாலன் எழுதியது இரண்டும் சிறுகதை எழுது வது எப்படி? என்பதுதான் 4 -ر.
இரண்டு புத்தகங்களையும் வெகு மரியாதையாக வாங்கி னேன், உள்ளத்தில் குருவாக அமர்த்திக்கொண்டேன். அக்கறை யோடு அந்த இரண்டு புத்தகங்களையும் நன்(?கப் படித்துவிட்டு ஒரு சிறுகதை எழுதினேன்.
அதைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்தேன். அந்தக் - கதை பிரசுரத்திற்குத் தகுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பப் டது. எனது மகிழ்ச்சியைக் கேட் வா வேண்டும்?
இரண்டு ஆண்டுகள் உயர்தர வர்ணச் சித்திரப் படிப்பை கொழும்பு கலைக் கல்லூரியில் வாரத்தில் 2 நாட்கள் படிக்க வீரகேசரி எனக்கு அனுமதி அளித்தது. அதற்குப் பதிலாக சனிக் கிழமை முழு நாளும் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டேன்.
J ". . . . . .
திரு. K. V. S. வாஸ் அவர்கள் மகன் மோகன் கதம்பம் என்ற மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தார். அதன் முழு வேலை யையும் நான்தான். பொறுப்பேற்றேன்.
1959ம் ஆண்டு வீரகேசரி யூனியன் விஷயமாக வுேலை நிறுத்* தத்தில் இறங்கியது.
அதிலிருந்து நானும் சொந்தத்தில் சித்திர் வேலையை ஆரம் பித்தேன். வேலைகள் நிறைய வரத் தொடங்கின.
事 拳
நண்பர் திரு. சிவநாயகம் டெலிபோனில் என்ன அழைத் தார். நான் அடுத்த மாதத்திலிருந்து சுதந்திரன் பத்திரிகாலயத்
துக்கு ஆசிரியராக வரப்போகிறேன் என்ருர். எனக்கென்னவோ அது மகிழ்ச்சி தரும் செய்தியாகப் படவில்லை
உடனே சேட்டேன். லேக்ஹவுஸ் பெரிய ஸ்தாபனமாச்சே அதை விட்டுவிட்டு இந்தச் சின்ன ஸ்தாபனத்துக்கு வரத் தீர் மானித்துவிட்டீர்களே! என்றேன்.

Page 19
அத ர் சுவர்க்கத்தில் ஒருவன் அடிமையாய் இருப்பதை விட, நரகத்தில் அவன் ராஜாவாக இருப்பது மேலல்லவா? என்று கூறிச் சிரித்தார். நானும் சேர்ந்து சிரித்தேன்.
இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், கலைஞர்கள் எல்லோரையும் தேடிப் பிடித்து அறிமுகம் என்ற தலைப்பின் கீழ் "அற்புதம்' என்று பாராட்டக்கூடிய அளவுக்கு சுருக்க மாகவும் சுவை குன்ருமலும் எழுதிவந்தார். பத்தொன்பதா வது ஆளாகத் “தியாகி'யின் பேணுவுக்குள் நானும் அகப்பட் டுக்கொண்டேன். பின் கேட்கவா வேண்டும். 'உயிர் ஓவியர் வீ. கனகலிங்கம்" என்ற தலைப்பு-1955ம் ஆண்டு என்ற ஞாபகம்.
எம். டி. குணசேன ஸ்தாபனம் நடத்திவரும் பத்திரிகை ஆபீஸில் தினபதி என்ற தினப் பத்திரிகையும், சிந்தாமணி என்ற வாரப் பத்திரிகையும் வெளியிடப்போகிருர்கள். அதற்குத் தலைப்பும் உள்ளுக்குப் போடுவதற்கு பெரியவர்கள், அறிஞர்கள், ஞானிகள் போன்றவர்களின் படங்களும் தேவை என்ருர், எல்லாம் செய்துகொடுத்து அவற்றுக்குரிய பணத்தையும் வாங்கிக் கொண்டேன். தினபதி, சிந்தாமணி பத்திரிகை தொடங்க நானும் ஒவியராகக் கடமையாற்றத் தொடங்கி னேன். 1970ல் வேலை நிறுத்தம் ஒன்று ஏற்பட்டது.
திரும்பவும் சொந்தத்தில் வேலை செய்யத் தொடங்கினேன்.
1980ம் ஆண்டே வீட்டு வேலைகள் காரணமாக யாழ்ப்பாணம் போகவேண்டி வந்தது.
1986 ல் யாழ்ப்பாணத்தில் உதயன், சஞ்சீவி தினசரி-வாரப் பதிப்பு இரண்டு பத்திரிகைகளையும் தொடங்கினர்கள். ஸப்ரா நிறுவனத்தின் ஆதரவோடு நடைபெறுகிறது. அவற்றுக்குரிய தலைப்புக்கள் முக்கியமான படங்கள் எல்லாவற்றையும் நானே செய்து கொடுத்துவந்தேன்.
சுகக்குறைவு காரணமாக நான் வீட்டிலிருந்தே எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து வந்தேன். திரு. சரவண பவான் M. D , ஆசிரியர் திரு. கானமயில்நாதன், திரு. S. வித்தியாபரன், திரு. வரதசுந்தரம் மாஸ்டர், திரு. குருநாதர் எல்லோரும் என் நினைவைவிட்டு நீங்காதவர்கள்.
33


Page 20
H Phiarra
OL.E. A.I' 'I
==
量。|-
* ,|-|-|-|
 

R25 YEARS
A IAFCF.3 = T EachihT&T - it is