கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலைக்கலி

Page 1


Page 2

பாலைக்கலி
இக்கட்டுரைகள் *தினகரன்' வார இதழில் வெளிவந்தவை.
மறு பதிப்பு.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்.
வெளியிடுவோர்:
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம்
மட்டக்களப்பு. w

Page 3
புலவர்மணி பெரியதம்பிப்பின்னே நினைவுப்பணி மன்ற வெளியீடு: 04.
நூலின் விபரம்
தஃப்பு ஆசிரியர் மொழி பிரசுரத் திகதி
ਨi பிரதிகள் வெளியீடு
முகவரி
அச்சகம்
:
அட்டை அமைப்பு:
பாலக்கலி,
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளே. தமிழ்.
1991 நவம்பர் 02.
viii -- 95.
1 () []Ա
புலவர்மனி பெரியதம்பிப்பின்ஃள நினவுப்பணி மன்றம், மட்டக்களப்பு. 37. தி சவீரசிங்கம் சதுக்கம், எல்லே வீதி, மட்டக்களப்பு, சிறிலங்கா. புனித வனனுர் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு. ஓவியர் திரு. K. S. பவான், அமிர்தகழி. மட்டக்களப்பு.
பதிப்புரிமை புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளே
நினேவுப்பணி மன்றும், மட்டக்களப்பு.
LIT
R8 40.00
Bibiliographical Data
Title : PALAIKKALI. Author : Pulawarmany A. Periyatha Iimbipollai. Language : Ta Immil.
Dale of Publication : 1991 November O2.
Number of Pages : Number of Copies: Publishcrs
Address
Printers Cover Design
Copyright
Price
νίii -- 96.
1. O0.
Pulawarmany Periyathambipilai Memorial Society, Batticaloa. 37, Tissaveerasingam Square, B01Indary Road, B1 (ticaloa, Sri Lanka, St. Joseph's Catholic Press, Batticaloa,
Artist Mr. K. S. Bawan, Amirthakali, Balticaloa.
Pulavar many Periyat ha mbipillai MCIT1 Balticaloa.

பண்டூரும் முகிற்குலங்கள் எமதிறைவர்
மருகர் திருப்பதி யிதென்ன
விண்டுர மழைபொழியும் சிறப்பதஞல்
■ விளம் மலிந்து மிகுந்து தோன் றும் மண்டூரிலுறை முருகன் மலரடிக்கோர்
திருப்பதிகம் மரபிற் சொற்ருன் கண்டூருமினிய மொழிப் பெரிய தம்பிப் பிள்ளையென்னும் கலேவல்லோனே.
- சுவாமி விபுலானந்தர்.
கீதை கவிசெய்து இ ர்த்தி மிகப் பெற்ருன் ஏ பெரியதம்பி எனதன்பன்- ஒதக்கேள் பாட்டுக் கொரு புலவன் பாரதி யென்ருரொரு பாட்டுக் கிவனென்பன் பன்
வர்
- இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ஃ.
"இலக்கிய வித்த புலவர் மணி ஏ. uിuട്ടഥി ിങ്?!

Page 4

‘இலக்கிய வித்தகர்” புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை

Page 5

ஆசியுரை
யூறி இராமக்கிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் முன்னுள் உப தலைவரும், மட்டக்களப்பு ரீ இராமக்கிருஷ்ண மிஷன் தலைவருமான யூரீமத். சுவாமி ஜீவனுனந்தா அவர்கள்.
ழரீமத் சுவாமி விபுலானந்த அடிகளாரின் பிறந்த நூற் முண்டு விழாவினை எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழுகின்ருர் களோ - அங்கெல்லாம் அக்கறையோடு கொண்டாடப்படும் இவ் வேளையில், சுவாமிகளின் தலை மாணுக்கர்களில் ஒருவரும், நுண் மாண் நுழைபுலமிக்காரும், கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மை கொண்டவரும், திட்பம் வாய்ந்த கட்டுரையாளரும் ஆகிய புலவர்மணி, இலக்கிய வித்தகர் - பெரியதம்பிப்பிள்ளை அவர் களின் தினகரன் வார வெளியீட்டில் வெளிவந்த கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகைக் கட்டுரைகளைத் தொகுத்து 'பாலைக்கலி" என்ற பாங்கான நாமம் சூட்டி, நூல் வடிவில் வெளியிடும் இவ்வேளையில், இந்த அரும்பணியினை மேற்கொண்டுள்ள, புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றத்திற்கு - எமது நல்லாசிகளைச் சித்த சுத்தியோடு தெரிவிக்கின்ருேம்.
மேற்படி மன்றத்தினரின் அயராத முயற்சி புலவர்மணி யின் நீங்காத நினைவைத் தமிழ் பேசும் நல்லுலகில் சாசுவதமாகச் சாற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல பரம் பொருளைப் பிரார்த்திக்கின்ருேம்.
வாழ்க அவர் நாமம் - வளர்க தங்கள் பணிகள்.
്ച് ஜீவேைத,
இராமகிருஷ்ண மிஷன், இராமகிருஷ்ணபுரம், (கல்லடி-உப்போடை) மட்டக்களப்பு. 12-10-91.

Page 6
அணிந்துரை
இலக்கியச் செம்மல், மகாவித்துவான் F. X. C. நடராசா அவர்கள்.
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
சிலப் காடு காண் 64-66. முல்லை திரிந்ததை மென்பாலை என்றும், குறிஞ்சி திரிந்ததை
வன்பாலை என்றும் வழங்குவர்.
பாட்டாற்ருெக்கது கலித்தொகை. கற்றறிந்தார் ஏத்துங் கலி, கல்வி வல்லார் கண்ட கலி எனப் பலவாறு போற்றப் பெற்ற கலித்தொகை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய் தல் என்ற முறைமையிற் கோக்கப்பட்டுள்ள து. சங்கச் சான்றேர் செய்த இலக்கிய நூல்களிலும், பதினெண்கீழ்க் கணக்கு நூல் களிலும், இலக்கண நூல்களிலும், வேறுவேறு முறையிற் கோக் கப்பட்டுண்டு என்பது வெளிப்படை. நால்வகை நிலம்: ஐந்து வகைத் திணை. பாலைக்கு நிலமில்லை. திணையிலே பிரிதலும், பிரி தல் நிமித்தமும், சான்றுகளில் ஒன்ருக இருத்தல் கூடும்.
கலித்தொகை fi குறி. மரு. முல். நெய். ஐங்குறுநூறு மரு. நெய். குறி. பா. முல்.
ஐந்திணையைம்பது முல். குறி. மரு. பா. நெய்.
திணைமாலை நூற்றைம்பது குறி. நெய். பா. முல். மரு.
தினைமொழியைம்பது குறி. பா. முல். மரு. நெய். V− ஐந்திணையெழுபது குறி. முல். பா. மரு. நெய்.
கைந்நிலை குறி. பா. முல். மரு. நெய்.
மதுரைக்காஞ்சி மரு. முல். குறி. பா. நெய்.
பெருங்கதை மரு. முல். குறி. பா.
ஒதுல்காப்பியம் பொருளதிகாரம் - முல். குறி. மரு. நெய். பா.
இறையனரகப் பொருள் - உரை குறி. நெய். பா. முல், மரு.
நாற்கவிராயநம்பியகப் பொருள்-உரை குறி. பா. முல். மரு. நெய். வீரசோழியம் (upde. I (5 Iúil. I ld(5 - | tuir. நெய். மாறனகப் ப்ொருள் (515. Lint. முல். மரு. நெய். இலக்கண விளக்கம் Gö. Linr. முல். மரு. நெய். தமிழ் நெறி விளக்கம் குறி. பா. முல். மரு. நெய். தொன்னுரல் விளக்கம் குறி. பா. முல். மரு. நெப்.
இக்கணக்கீடு டாக்டர் உ வே சாமிநாதையர் பதிப்பித்த ஐங்குறு நூறு பதிப்பிலுள்ளது. கடைசி இரண்டும் மேலும் சேர்க்கப்பட்டன.

பெரும்பாலும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் முறைப்படி வருதல் நெறியுடைத்து. அன்பினைந்திணையும் ஒழுங்கு முறை அவ்வாறேதான்.
குறிஞ்சி - புணர்தல் புணர்தல் நிமித்தம் : புணர்தல் பாலை - பிரிதல் பிரிதல் நிமித்தம் போக்கு முல்லை - இருத்தல் இருத்தல் நிமித்தம் : இல்லிருக்கை மருதம் - ஊடல் ஊடல் நிமித்தம் : ஊடல் நெய்தல் - இரங்கல் இரங்கல் நிமித்தம் : இரங்கல்
இவையெல்லாம் உலக வழக்கு. எதிர்மாருக நாடக வழக்குச் செய்யினும் உலக வழக்கு மேலோங்கி நிற்குமென்பது சான்றேர் ւDց ւկ.
கலித்தொகை என்னும்போது ஒருவர் பாடினுரல்லர் என் பது தொனிக்கின்றது. பலர் பதிப்பித்தார்கள்.
ர். சி. வை. தாமோதரம்பிள்ளை - 1887
i. இ. வை. அனந்தராமையர் - 1925 - மூன்று பகுதிகள் i. தை. ஆ. கனகசபாபதி முதலியார் - 1937 : பாலைக்கலி iv. வெ. பெரி. பழ.மு.காசி விசுவநாதன் செட்டியார் - 1938
இவை செய்யுள் நூல்கள். வசன நூல்கள் மூவர் இயற்றி ஞர் என்று தெரிகின்றது.
i. கலித்தொகைச் சொற்பொழிவுகள் - 1940 i. டாக்டர் மா. இராசமாணிக்கணுர் - 1958
ii, புலியூர்க்கேசிகன் - ?
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை இத்தனை நூல்களை - செய்யுள், வசன நூல்களை வாசித்துத் தினகரன் கட்டுரைகளை எழுதின ரல்லர். முதற் பதிப்பாகிய சி. வை. தாமோதரம்பிள்ளை 7 கலித்தொகைப் பதிப்பினையே வாசித்தார். புலவர்மணி படித்த படிப்பித்த நூலினை எனக்குத் தெரியும்.
தினகரன் ஆசிரியர் V. K. P. நாதன். பண்டிதமணி சம யக் கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து எழுதினுர். சகபாடி யாகிய புலவர்மணி மட்டக்களப்பிலிருந்து எழுதினர். நோக்கம் தினகரன் பத்திரிகையினை அறிமுகப்படுத்தல்.
-- iii -

Page 7
இவ்வகையிலே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணி மன்றம் கலித்தொகைக் கட்டுரைகளைத் தேடி எடுத்து நூல் வடிவாக அமையத் தீர்மானஞ் செய்துள்ளது. புலவர்மணி யின் மாணுக்கராகிய என்னிடமிருந்து அணிந்துரையைப் பெற முயல்கின்றது. புலவர்மணி பின் தகைமை பாரியது; பெருமைக் குரியது. யாப்பருங்கலக்காரிகை, வில்லிபாரதம் போன்றவைக்கு மாணக்கன், மகன் என்று பாராது உரையும் சிறப்புப்பாயிரமுஞ் செய்தார்கள்.
அவைகளைப்போல அணிந்துரை கொடுத்தோம். கலித் தொகையினை மக்கள் காப்பியமாக வசனநடையில் எழுதினுற் முன் மக்கள் அறிந்துகொள்ள இலகுவாயிருக்குமென நினைத்து புலவர்மணி தினகரனுக்கு எழுதினர். தினகரன் ஆசிரியர் வேறு நினைத்தார்; புலவர்மணியின் எண்ணம் வேறு.
குரு சீடன் முறையிற் படித்தவர் புலவர்மணி. அந்தமுறை தலைகீழாக மாறியது. கலித்தொகையினை மக்கள் மத்தியில் உலாவ விடுதல் வேண்டுமென்ற எண்ணம். இருபத்து மூன்று கட்டுரை எழுதினுர். பாலைக்கலியிற் பதினறு செய்யுள்கள் விரித்துரைத் தாா.
சொற் சுருக்கம். பொருட் செறிவு. அச்சம் என்பது பயம். அது நாட்டு வழி. காலமோ முதுவேனில். வழி மயங்கிய காடு. நடக்கத் தொலையாத நீண்ட காடு. இவைபோன்ற வசனங்கள் செறிந்து விளங்கும், சுவாமி விபுலானந்தா எழுதிய யாழ்நூல் வசனம்போல்.
புலவர்மணியின் வசனங்களைத் தொடரவைக்கும் பான்மை யினைக் காட்டுதும்:-
“பழி இருவகைப்படும். ஒன்று அம்பல்; மற்றது அலர். இவை அகப்பொருள் வழக்கு. அம்பல் என்பது அரும்பல் என்பதன் சிதைவு சிலரறிந்த பழமொழியென்பது பொருள்."
புலவர்மணியின் வாக்கியங்கள் நாவலர்போல், நெடியன வாகச் செறிந்து மிளிரும். நாவலர் ஒருபுறம்; மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை ஒரு புறம். இவர்கள் வசனத்திற்கும் செய்யுள் நடைக்கும் எடுத்துக்காட்டு. சுவாமி விபுலானந்தா போல் புலவர்மணியும் செய்யுள், வசனம், நடைகள் கைவந்த வல்லாளர்.
- iv -

நாவலர் வசனநடையிற் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் எனும் பல நூல்களை எழுதினர். கலித்தொகை முற் றும் வசன நடையில் எழுதத் திட்டம் போட்டார்.
செய்யுள்கள், பொருள்கள் போன்ற சொற்களை செய்யுட் கள், பொருட்கள் என்று எழுதமாட்டார் புலவர்மணி. சுத்த மொழியை உபயோகித்து இயற்கையான விடயத்திலேயே எழுது смпrгї. ܗܝ
இவ்வாருக சீரும் சிறப்புமுடைக் கலித்தொகையிலே பாலை முதலாகத் தொகுத்தார், நல்லந்துவஞர். பெருங்கடுங்கோ பாலை பாடினர். கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியவர் நல்லந்துவ ஞர். இவ்வண்ணம் அமைந்த பாலையை உருட்டித்திரட்டி புல வர்மணி பெரியதம்பிப்பிள்ளை வசனநடையில் எழுதித் தந்தார். அதற்கு அணிந்துரை எதற்கு என்ற கேள்வியடையாளம் என் மனதில் எழுகின்றது.
“தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.”*
திருக்: அதி: மக்கட்பேறு செய்: 07 உள்ளதும் நல்லதும் பக்கம்: 1334
F. X. C. bLJ T3 m. 127, மத்திய வீதி, மட்டக்களப்பு, 0.2-1-1991.

Page 8
வெளியிட்டுரை
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் நாடறிந்த தமிழ் அறிஞர். மாபெரும் கவிஞர். அன்னர் சிந்தாமணி வார இதழில் 'உள்ளதும் நல்லதும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளைப் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம் நூலுருவில் வெளியிட்டது. அந்நூல், இந்து சமய கலா சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு 1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டி மாநகரில் நடாத்திய தேசிய தமிழ் சாகித்திய விழாவில் வாழ்க்கை வரலாறு துறைக்கான பரிசைப் பெற்றது. அத்துடன் நூலாசிரியரும் தேகாந்த நிலையில் விருது வழங்கி 'இலக்கியவித்தகர்' பட்டமுமளித்துக் கெளரவிக்கப்புட்டார்.
அன்னர் எழுதிய மற்ருெரு கட்டுரைத் தொடர் "கலித் தொகை"யில் இடம்பெறும் 'பாலைக்கலி', 'கலித்தொகை" இன் பச் சுவையைத் தலைமையாகக்கொண்ட பண்டைய நூல். சங்க காலத்திய எட்டுத்தொகை நூல்களுள் ஆருவதாகத் திகழ்வது. காதலித்தவரை மணந்து, நல்வழியில் பொருளிட்டி, அறநெறி யில் செலவு செய்து, இன்ப வாழ்வு வாழ்ந்தனர் தமிழர் என் பதை எடுத்துக்காட்டுவது.
இத்தகைய உயரிய இலக்கியத்தை அனைவரும் எளிய முறை யில் பெற்று படித்துய்யவேண்டுமென்ற பேரெண்ணத்தோடு புலவர்மணி அவர்கள் 1956 ஆவணி 5ஆம் திகதி தொடக்கம் 1957 தை 6ஆம் திகதி வரை தினகரன் வார இதழில் 'கற் றறிந்தாரேத்துங் கலித்தொகை" எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளைப் 'பாலைக்கலி' எனும் நூலாக வெளி யிடுவதன்மூலம் இலக்கிய ஆர்வலர்களுக்கு மீண்டுமொரு இலக் கியப் படைப்பினை வழங்குவதில் மன்றம் மகிழ்ச்சியடைகிறது. பாலைக்கலியில் உள்ள 36 பாடல்களில் முதல் 16 பாடல்களுக் கான கட்டுரைகள் மட்டுமே இந்நூலில் இடம்பெறுகின்றன.
இக்கட்டுரைகளைச் சேர்த்து நூலாக வெளியிட அனுமதித்த 'தினகரன்' ஆசிரிய பீடத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம். , í
—- -yi -—

இந்நூலுக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலை வர் பூரீமத் சுவாமி ஜீவனனந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை யும், புலவர்மணி ஐயாவின் அன்பார்ந்த மாணுக்கரும் எமது மன்றக் காப்பாளருள் ஒருவருமான இலக்கியச் செம்மல், மகா வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராசா அவர்கள் அணிந்துரை யும் வழங்கியுள்ளனர், அவர்களுக்கு மன்றத்தின் நன்றிகள்.
இக்கட்டுரைகள் நூலுருப் பெறுவதில் தமது உதவி, ஒத் தாசைகளை வழங்கிய நிருவாகக் குழுவினரின் சேவை குறிப்பிடத் தக்கது.
நூல் அச்சிடும்போது பிழை திருத்தங்களைச் சரியாகச் செய்துதவிய நிருவாகக் குழு உறுப்பினர்கள் திரு. சி. க. பொன்னம்பலம், செல்வி சா. தவமணிதேவி ஆகியோர் நன்றிக் குரியவர்கள்.
நூலின் அட்டைப்படத்தினை அழகாக வரைந்துதவியவர் ஒவியர் திரு. K. S. பவான், அழகாக அச்சிட்டு உதவிய புனித வளனர் கத்தோலிக்க அச்சகத்தார் ஆகியோருக்கும் மன்றத் தின் நன்றி உரியன.
كبير،
இதுபோல் புலவர்மணி ஐயா அவர்களின் ஆக்கங்களைத் தொடர்ந்து வெளிக்கொணரும் எண்ணம் மன்றத்திற்குண்டு. எங்களது இப்பணிக்குப் பெரிதும் உதவி வரும் கிராமோதய சபைகள், ப. நோ. கூ. சங்கங்கள், ஏனைய மன்றங்கள், தாப னங்களுக்கு, எங்கள் மனமார்ந்த பெருநன்றிகள்.
த. செல்வநாயகம்
செயலாளர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம். 37, திசவீரசிங்கம் சதுக்கம், எல்லை வீதி, மட்டக்களப்பு, 02 நவம்பர் 1991.
vil

Page 9

ஆசிரியர் உரை
சிங்கமென்னுஞ் சொல் எல்லாச் சங்கங்களையுங் குறிக்கும் பொதுப் பெயராயிருப்பினும், அது, முதல் இடை கடையென்னும் முத்தமிழ்ச் சங்கங்களுக்குமே சிறப்புப் பெயராய் வழங்குகின்றது. சங்கமென்பது ஒரு வட சொல்; கூடல் என்னுந் தனித் தமிழ்ச் சொல் லின் மொழிபெயர்ப்பாக அது வடமொழியில் வழங் கப்பெற்றுத் தமிழ்மொழியிலும் இடம்பெறுவதாயிற்று. மதுரைமாநகருக்குக் கூடல் எனப் பெயர் வந்ததும் காரணக் குறிபற்றியேயாம்.
சங்கப் புலவர்களைச் சான்ருேர் என வழங்குவர். சான்ருேர் என்னுஞ் சொல் சால் என்னும் அடியாகப் பிறந்து நிறைவுடையோர் என்னும் சீரிய பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சால்புடையோர் சான் ருேர், சால்பென்பது நிறைவு. நிறைவுக்குக் காரண மான குணங்களை அன்பு, நாண், ஒட புரவு, கண்ணுேட் டம், வாய்மை என ஐந்தாக வகுத்துக் கூறுகின்ருர் வள்ளுவப் பெருந்தகையார். சால், பண் என்பன ஒரு பொருட் பன்மொழிகளாகும். இவை விகுதி பெற்றுச் சால்பு, பண்பு என வழங்கப்படுகின்றன. நிறைந்த நரம்பினையுடைய இராகத்தைப் பண்ணென்று கூறும் இசைத் தமிழ் வழக்கும், பண்ணமைத்தல், பண்படுதல் என்னுஞ் சொற்களும் நிறைவையே குறித்து நிற்பன வாம். நிறைவென்பது மன நிறைவு. மன நிறைவே ஒருவர்க்குப் பெருஞ் செல்வமாகும். மன நிறைவு படைத்த சான்றேர் அல்லது பண்புடையோர் தம் உள்ளத்திலிருந்து தோன்றுஞ் செய்யுள்களும் நிறை வுடையனவேயாம். அந்நிறைவிலே திளைத்து விளையாடு தலால் நாமும் நிறைவு பெறுவோம்.
இத்தகைய மன நிறைவுவாய்ந்த சங்கச் சான்ருே ரியற்றிய செய்யுள்களெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபின்பும் புதுமையும் இளமையும் பொலிந்து, தமிழ் நலங் கனிந்து தெவிட்டாத இனிமையூட்டித் திகழ்கின்றன. காலவெள்ளத்தின் சுழியிலகப்படாத
一1一

Page 10
இக்கவின்பெறுகவிகள் இயற்கை நவிற்சியென்னும் இனிதாய அழகுவாய்ந்தவை; இயற்கையோடு இரண் டறக் கலந்த இயைபு அமைந்தவை; இயற்கையின் நிகழ்ச்சிகளை மக்களின் வாழ்க்கையோடிணைத்து இனிய உணர்ச்சியூட்டி மெய்ப்பாடு பிறப்பிக்கின்ற இக்கவிகளை இதயமொன்றுபட்டு அவற்றிலீடுபட்டுப் படிக்கும்போ தெல்லாம் நமக்கும் மன நிறைவும் பெரியதோர் இன்ப மும் உண்டாகின்றன. சங்ககாலத்து மக்கள் வாழ்க்கை யின் உண்மை நிலையினையும் நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்கின்றது. பண்டைத் தமிழ ரின் பண்பட்ட வாழ்வினை நாமுங் கடைப்பிடித்தல் வேண்டுமென நமது உள்ளம் நம்மைத் துண்டுகின்றது.
சங்கச் சான்றேர் செய்யுள்களுள்ளே அறமும் பொருளும்பற்றி வருகின்ற செய்யுள்களிலும் பார்க்க இன்பம்பற்றி வருகின்ற செய்யுள்களே மிகப்பலவா யிருத்தல் நம்மால் நோக்கத்தக்கது. காலந்தோறுந் தோன்றுகின்ற கவிஞர்கள் மக்கள் வாழ்க்கையிலே மிகுந்து தோன்றுகின்ற இயல்புகளையே பெரும்பாலுந் தங்கள் கவிதைகளிலே அமைத்துச் செல்வர். புலவர் பாடும் புகழுடைய தமிழ் மன்னரது ஆட்சிக் காலத் திலே தமிழ் நாடு பல்வகை நலனும் பல்கி, நல்லறமும் நற்பொருளும் பல்கி இன்ப வடிவாகத் திகழ்ந்தோங்கி யிருந்தது. இதனுல் வாழ்க்கை வசதி பெற்றுள்ள தமிழ் மக்களது உள்ளமும் இன்பத்தினையே நாடி அன்பு வாழ்க்கையிலே ஈடுபடலாயிற்று. புலவர்களின் கவிப் பெருக்கும் பெரும்பாலும் அன்பு கலந்த இன்பப் பொருள்களையே மக்களுக்கு வாரி வழங்குவதாயிற்று. அன்புப் பொருளை இன்பக் கவிகளால் அள்ளியள்ளி வழங்கிய சங்கச் சான்ருேருக்குத் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. சங்கச் செய்யுள்களைப் படிப்ப தால் அக்கடமை நிறைவுறும்.
நாட்டின் சூழ்நிலைக்கேற்ப நல்லோர் வகுத்த அன்புப் பாடல்களுள்ளே கலித்தொகையென்னுங் கவி தைப் பூங்கொத்து சிந்தைக்கினிய செந்தமிழ்த் தேனை நந்தாது சொரிந்து நல்விருந்தளிக்கின்றது. தமிழின் நடையழகும் தமிழனின் நடையழகும் கலித்தொகை யிலே கனிந்து தோன்றுகின்றன. கலி என்பது ஒரு வகைச் செய்யுள். அதற்குரியது துள்ளலோசை, தனித்
ー2ー

தமிழ்ச் சொற்கள்; சொற் சுருக்கம்; பொருட்செறிவு: தெளிவு முதலிய அழகுகள் பெற்று உவமை நயமும், இனிய ஓசையும் பொருந்தி உயிரையுந் தளிர்க்கச் செய்கின்ற உத்தமக் கவிகளைக் கலித்தொகையிலே காண்பார்; இன்பம் பூண் பார். இதனுலேதான் “கற் றறிந்தா ரேத்துங் கலி' என்னும் உயர்தனிச் சிறப்பும் இந்நூலுக்கு உளதாயிற்று.
இஃது ஒரு தொகைநூல். இதனை ஆசிரியர் நவ்வந்துவனர் என்பவர் தாமேயியற்றித் தொகுத்தார் என்பர் நச்சினர்க்கினியர் என்னும் நல்லாசிரியர். பலர் பலகாற் பல பொருள்பற்றிப் பாடிய பல பாட்டு களை நவ்வந்துவனர் தொகுத்து ஒரு நூல் செய்தார் என்றும் சிலர் கூறுவர். நவ்வந்துவஞர் என்னும் பெயரை நல்லந்துவனர் எனவும் வழங்குவர். அக்கால வழக்கத்தை இப்பெயரோடு பொருத்தியறியும்போது நக்கினர், நத்தத்தனர், நப்பூதனுர் என்பனபோல நவ்வந்துவஞர் எனக் கூறுவதே மரபாகும் எனத் தோன்றுகின்றது. சிறப்பினையுடைய அந்துவனுர் என்ப வரே கலித்தொகையை இயற்றினர் என்றே கொள் வோம். s
இந்நூல் அகம், புறம் என்னும் பொருட் பகுதி களுள் அகத்தைச் சார்ந்தது. கடைச்சங்க நூல்களுள் மேற்கணக்கைச் சேர்ந்த எட்டுத் தொகையுள் ஒன்ரு யமைந்துள்ளது. ஐந்திணையியல்புகளையும் அழகாகப் பாடுகின்ற செய்யுள்களின் வைப்பு முறை, தொல்காப் பியனுர் அடுக்கிய முறை யி னின் றும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனக் கூறது, பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என ஆசிரியர் நவ்வந்துவனர் வைத்துக் கூறிய முறை யும் நம்மால் நோக்கற்பா லதே. பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும்; குறிஞ்சிக்குப் புணாதலும் புணர் தல் நிமித்தமும்; மருதத்துக்கு ஊடலும் ஊடல் நிமித் தமும்; முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும்; நெய்தலுக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும் சிறப் புடைய ஒழுக்கங்களாக உரிமைபெற்றுள்ளன. இதனல் இவைகள் உரிப்பொருள் என வழங்கப்பெறும். பிரித லாகிய ஒழுக்கம் நான்கு நிலத்தினும் பொதுவாய் மயங்கிவரும் உரிமைபற்றி நவ்வந்துவனர் அதனை முத
س-3----

Page 11
லிடத்தில் வைத்தார்போலும். கூடலும், ஊடலும், இருத்தலும், இரங்கலுமாகிய ஒழுக்கங்கள் ஒன்ருே டொன்று காரண காரியத் தொடர்புகொண்டு நிகழ் வனவாதலின் அவற்றை அம்முறையே வைத்துக் கவி செய்தார்.
இந்நூலுக்கு உரைசெய்த பெருமை உச்சிமேற் புலவர் கொள் நச்சினர்க்கினியருக்கே உரியதாகும். *நச்சினர்க்கினியா னெச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்' என்னும் பொன்மொழியும் இவ்வாசிரியர் மீது நல்லறிவாளர் கொண்டுள்ள நயப்பினையும் வியப் பினையும் நன்கு விளக்கி நிற்கின்றது. நவ்வந்துவனுரது பேரறிவின் திறத்தினை நச்சினர்க்கினியர் பாராட்டும் நயமும் நாமறிந்துகொள்ளற்குரியதே. நெய்தற் கலி யின் கண்ணே இருபத்தைந்தாவது செய்யுளில் உரை யாசிரியர் நச்சினர்க்கினியர், நூலாசிரியர் நவ்வந்துவ ஞரைப் பேரறிவாளர் எனக் கூறுவதிற் பெருமித மடைகின்ருர்.
நவ்வந்துவனரியற்றி, நச்சினர்க்கினியர் நல்லுரை கண்ட தமிழ்ச் செல்வமாகிய கலித்தொகையை அச்சு வாகனமேற்றித் தமிழ் கூறும் நல்லுலகுக்கு விருந்தா யளித்த முதலுரிமை தமிழ் வளர்த்த தாமோதரனர் என்னும் தகைசால் வள்ளல் சி. வை. தாமோதரம் பிள்ளையென்பார்க்கே உரியதாகும். பிள்ளையவர்களின் நாமம் நீடுவாழ்க.
சங்கச் சான்ருேர் செய்துவைத்த செய்யுட் செல் வத்தை நாம் நன்முக அனுபவித்தல்வேண்டும். நமது அனுபவ இன்பத்தினைத் தமிழுலகுக்கும், தமிழுலகுக்கு அப்பாலுஞ் சென்று பயன்படுத்தவேண்டும். தமிழ் மக்கள் யாவருந் தமிழை நன்கு கற்றுத் தமிழைப் பாதுகாத்தல்வேண்டும். இந்நோக்கத்தை மனத்திற் கொண்டு கலித்தொகை படிப்பார்க்கு ஏற்ற முறையிற் சில கட்டுரைகளைத் தொடர்பாக எழுத முன்வந்துள் ளேன்.

கடவுள் வாழ்த்து
ஆசிரியர் நவ்வந்துவனர் கடவுளை முன்னிலை
யாக்கி வாழ்த்துக் கூறித் தமது நூலைத் தொடங்கு கின்ருர், கலித்தொகையிலே கடவுள் வாழ்த்தாகக் கூறிய செய்யுள், நுட்பமுந் திட்பமும் வாய்ந்தது; இறைவன் இறைவியோடு பிரிப்பில்லாது நின்று இயற்று கின்ற தொழில்களெல்லாந் திருவருட் குறிப்புடை யனவே என்னும் உண்மையினை உணர்த்துவது. இறை வன் ஊரும் பேரும் உருவும் முதலியன இல்லாதவன்; ஐம்புலக் காட்சிக்கப்பாலகன்றவன்; சிந்தையும் மொழி யுஞ் செல்லா நிலையினன் எ ன த் தோலாநாவின் மேலோர் கூறுவர். அங்ங்னங்கூறும் அவரே இறை வன் அன்புருவாகி அணுகி நிற்கும் இயல்பினையுமுடை யன் என அவனுக்கு வடிவுங் கூறுவர். இக்கொள்கை யினையும் இக்கடவுள் வாழ்த்து வலியுறுத்தி நிற்கின் றது. உண்மை வழியினையுணர்ந்த அந்தணருக்கு அருள்செய்தும்; யான் எனது என மக்கள் கொள்ளு கின்ற செருக்கினை யடக்கியும்; மும்மலங்களையும் நீக்கி யும் உயிர்களுக்கு இறைவன் அருள்புரிகின்ற இயல் பினை நன்கு விளக்குகின்ற இச்செய்யுளின் அமைதியை ஒருவாறு நோக்குவோம்.
மனம் வாக்குக் காயங்களுக்கு எட்டாது மறைந்து நிற்கின்ற, வடிவமற்ற இறைவன், ஆறறியந்தணர்க்கு அருட் குரு வடிவாகிவந்து அருமறை பல பகர்ந்தான் என்னுந் தொடர் மொழி, நல்லுயிர்த் தொகைகளுக்கு ஞானநெறியை விளக்கும் அருமையினைக் குறிப்பா லுணர்த்தி நிற்கின்றது. ஆறறியந்தணரென்போர் நல் லாற்ருல் நாடி அருளையே ஆளுகின்ற நடையினையுடை யார், அழகிய தண்ணளியுடையார். பொங்கியெழுந்த கங்கையின் செருக்கையடக்கிப் பொன்முடிச் சட்ையில் மறைத்த அருஞ்செயலானது யான், எனது என்னும் இரு செருக்கினையும் அடக்கி ஆன்ம கோடிகளைத் தன் னுடன் ஐக்கியப்படுத்துகின்ற இறைவனது காரணங் கருதாத கருணையைப் புலப்படுத்துகின்றது. தேறு நீர் என்பது தேறிய நீர்; தனது பெருக்கத்தினின்றுஞ்
-5-

Page 12
சுருங்கிய நீர். திரிபுரங்களையெரித்தல் ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களையும் நீக்கி ஆன்மாக் களுக்கு அருள் செய்தலேக் காட்டுகின்றது. திரிபுரம் என்பது முப்புரம் எனவும் திரிகின்ற புரங்கள் என வும் இரு பொருள் தரும். இயங்குகின்ற மாயக் கோட்டை களைத் தமக்கு அரணுகக்கொண்டு அசுர வாழ்வு வாழ்ந் தோரை அமர வாழ்வு வாழச் செய்த அருஞ் செய லாகிய திரிபுர தகனத்தின் உட்பொருளும் இக்கட வுள் வாழ்த்துச் செய்யுளிலே நம்மால் உணர்ந்து கொள்ளக் கிடக்கின்றது.
இச்செய்யுளிலே இறைவனுக்குரியனவாகக் கூறிய மூவகை வடிவங்களும் ஏனைய வடிவங்களுமெல்லாம் அவன் ஆன்மாக்கள்மீதுகொண்ட அளப்பரிய அருள் காரணமாகத் தானே தரத் தோற்றுகின்ற புனித முடையனவாம். இந்நூலாசிரியரும் இறைவனது வடி வங்களுள்ளே தாம் காதல்கொண்டதோர் வடிவத்தை முன்னிலையாக்கி வழுத்துகின்ருர். அவ்வடிவமோ மாறு பாடில்லாத கடுங் கூளிகளின் கொடும் போரையுடை யது; மணி மிடறும் எண்கையும் வாய்ந்தது. மாறு பாடில்லாத போரென்பது, உலகத்து ஏனையோர் ஒரு வரோடொருவர் பகை காரணமாகத் தம்முள் மாறு பட்டுப் புரியும் போர்போன்றதன்று; வெற்றி தோல்வி களில் நிச்சயமற்ற போருமன்று; அஃது அருள் காரண மாகப் புரியும் போராகும். மணி மிடறென்பது திரு நீலகண்டம்; அது நஞ்சனையமுதுசெய்து அமரர்களை வாழ்வித்தமைக்கு அடையாளமாகவுள்ளது; அதுவும் அருளின் திறத்தையே குறிக்கும். எட்டுத் திருக்கரங் களும் திருவருட் சின்னங்களையே தாங்கியிருப்பதால் அவையும் அருளையே பொருளாகவுடையனவாம்.
கடவுள் வாழ்த்திலே மூன்று திருக்கூத்துகள் கூறப்பட்டிருப்பதை இனி நோக்குவோம். அவை கொடு கொட்டி, பாண் டரங்கம், காபாலம் என்பன. கொடு கொட்டியென்பது திரிபுர மெரிதலால் வெந்து விழுந்த அவுணர்களின் வெண்சாம்பற் குவியல் பொருந்திய களத்தைத் தனக்கு அரங்காகக்கொண்டு உமையவள் ஒருபாலாக நின்று பாணி, தூக்கு, சீர் என்னுந் தாளங் களைப்போட இறைவன் வெற்றி மகிழ்ச்சியால் நின் ருடிய கூத்தாகும். திரிபுரமெரியக்கண்டு இரங்காது
---6-س-

கைகொட்டியாடியதால் இதற்குக் கொடுகொட்டி யென்பது பெயராயிற்று. கொடுங்கொட்டியென்பது கொடுகொட்டியென மருவி நின்றது. இது நின்ருடுங் கூத்துகள் ஆறுள் ஒன்ருகும்.
பாண்டரங்கமென்பது திரிபுர மெரித்தபின்னர் இறைவன் தன்முன்னின்ற பிரமன் காணுமாறு வானே ராகிய தேரில் நான்மறையாகிய குதிரைகள் பூட்டி, நெடும்புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முள் பிடித்து வெண்சாம்பரணிந்து ஆடிய கூத்து. வெண் சாம்பரணிந்து ஆடியமையாற் பாண்டரங்கம் எனப் பெயர் பெற்றது. பாண்டு அரங்கம் பாண்டரங்கம் எனக் கூடி நின்றது. பாண்டு வெண்மை; அரங்கம் கூத்து மேடை, வெண்மை நிறம் அந்நிறமுடைய சாம் பலுக்காயிற்று. இதுவும் நின்றடுங் கூத்து. வீழ்ந்தாடுங் கூத்துகளுமுண்டு. அவை ஐந்து.
காபாலமென்பது இறைவன் பிரம கபாலத் தைத் தனது அங்கையிலேந்தி நின்று ஆடிய கூத்தா கும். கபாலம் தலையோடு. காபாலம் தத்திதாந்தம். அயன், அரி முதலியோர்க்கும் இறைவன் முதல்வ னென்பது இத்திருக்கூத்தின் உட்பொருளாகும்.
இம்முத்திறத்து ஆடலையும் இறைவன் உமை யவள் ஒருபாலாக நின்று ஆடுவான். சங்கார காலத் திலே இவ்வாடல்களை நிகழ்த்துங்கால் இறையவனு டன் உமையவளேயன்றி ஒழிந்தோரொருவரும் இல ராவர். இந்த நுட்பத்தினை இனிது வி ள க் கு த ந் பொருட்டே, நுசுப்பினுள்கொண்ட சீர் தருவாளோ? கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ? முறுவலாள் முற்பாணி தருவாளோ? என்று ஆசிரியர் செய்யுள் செய்தார். ஆங்கே அவற்றைத் தருதற்கு வேறு பிறர் இல்லையே என்பது குறிப்பு.
சீர், தூக்கு, பாணி என்பன தாள நிகழ்ச்சி யைக் குறித்து நிற்குங் கலைச்சொற்கள். தா ள ம் காலத்தை அடிப்படையாகக்கொண்டு நிகழ்வது. சீர் என்பது தாளம் முடியுங்காலத்தைத் தன்னிடத்தே கொண்டது. தூக்கென்பது தாளம் நிகழுங் காலத் தைத் தன்னிடத்தே கொண்டது. பாணி தாளம்
-- 7--

Page 13
முதலெடுக்குங் காலத்தைத் தன்னிடத்தே கொண் டது. ஒரு தாளத்துக்கு இம்மூன்றும் உரியனவேனும் ஒவ்வொன்று ஒராடலில் மிகுந்துவருஞ் சிறப்புப்பற்றி ஒவ்வொன்று கூறினர். அழித்தலாகிய தொழிலைச் செய்கின்ற காலத்தே உமாதேவியின் தாளத்துக்கு ஆடுகின்ற இறைவனே காத்தலாகிய தொழிலைச் செய்கின்ற காலத்தே நீ என்னுடைய தாளத்துக்கும் ஆடுகின்ருய்போலும். அன்புருவாகிய இறைவியின் தாளத்துக்கு நீயாடுதல் வியப்பன்று; அன்பில்லாத எனது திருகுதாளத்துக்கும் நீயாடுதல் எனக்குப் பெரு வியப்பாயிருக்கின்றது. இதற்குக் காரணங் கூறுவா யாக என்று ஆசிரியர் முன்னிலையாக்கிக் கேட்பது இறைவன் மீது அவர் கொண்டுள்ள பேரன்பினலேயே என்பது நம்மால் அறிந்துகொள்ளத்தக்கது. ஆணபமில் பொருள் என்று ஆசிரியர் தம்மைக் குறிப்பிடுதலால் இறைவனது பெருமையையும், தமது சிறுமையையும் புலப்படுத்தி, அதன் வாயிலாக எல்லா ஆன்மாக்களுக் கும் அவன் அருள் செய்யும் வள்ளல் என்பதையும் நன்கு நிலைநாட்டுகின்ருர், ஆணம் என்பது நேயம்; நேயம் நேசம். ஒன்றுக்கும் பற்ருத என்னையும் ஒரு பொருளாக ஆண்டுகொண்ட இறைவனே உனது கருணைத்திறம் இருந்தபடியென்னை என்று ஆசிரியர் மருட்கையென்னும் மெய்ப்பாடுடையராய இறைவனே வாழ்த்துகின்ருர்,
ஆசிரியர் நவ்வந்துவனரின் சமயம் சைவமென் பதும், இறைவனுடைய வடிவங்களிலே மாதொரு பா கனகவமைந்துள்ள வடிவத்திலே அவருக்கு மனம் பதிந்துள்ளதென்பதும் இறைவனை வணங்கி வாழ்த்து வதேயன்றி வரங்கேட்கும் மனப்பான்மை அற்றவ ரென்பதும் அன்பு நெகிழ்ச்சியுடையவரென்பதும், பிறவும் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளாற் பெறப் படுகின்றன.

பாலைக்கலி:
செய்யுள் (1)
Uலையென்பது பிரிதலாகிய ஒழுக்கம். இஃது அன்பின் வழி நிகழ்வது. இவ்வொழுக்கம் நால்வகை நிலத்திலும் பொதுவாக மயங்கிவரும் இயல்பினை யுடையதாதலின், ஆசிரியர் தொல்காப்பியனுர் இதற் குத் தனி நிலங் கூருராயினர். பிரிதலாகிய ஒழுக்கம் இவ்வாறு மயங்கிவரும் உரிமையுடையதேனும், பெரும் பாலும் முல்லையிலுங் குறிஞ்சியிலும் அது பயின்று வரும் நிலைமையினை நோக்கிப்போலும், இளங்கோ வடிகள் போன்ற நல்லாசிரியர்கள் முல்லையுங் குறிஞ்சி யும் மயங்கிய ஒருநிலப் பகுப்பினை அதற்கு வகுத்துக் கூறுவாராயினர். சிலப்பதிகாரம் காடுகாண் காதை யிலே வருகின்ற,
*வேனலங் கிழவனுெடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”
என்னும் அடிகள் பாலைநிலந் தோன்றிய வரலாற்றைக் கூறுகின்றன.
பிரிவென்பது கருத்தொருமித்த காதலனுக்குங் காதலிக்குமிடையில் நிகழும் இடையீடு. தலைவனுக்கே யன்றித் தலைவிக்குப் பிரிவில்லை. தலைவி பிரிதல் பெருந் திணை; அது அன்பொழுக்கமாகாது. தலைவன் பிரியுங் கால் தனித்துப் பிரிதலே பெருவழக்காகும். கூட்டா கப் பிரிதலும் நிகழ்தலுண்டு. காதலென்பது பண் பாடுடையார் இருவர்க்கிடையே நிகழும் ஒருமைத் தன்மையுற்ற ஒழுக்கமாகும். நாகரிகததின் மணிமுடி போன்ற இவ்வொழுக்கம், கல்வி, அறிவு, ஒழுக்கம் என் பன வாய்க்கப்பெற்று, உருவமும் பருவமும் அமைந் தானுேர் ஆண்மகனுக்கும் அத்தகையாளோர் பெண்
--9۔

Page 14
மகளுக்குமிடையே நிகழ்வதாகும். கொடுப்பாரும் அடுப்பாருமில்லாத தனியிடத்தே மறைந்து நிகழும் இவ்வொழுக்கமானது, இயற்கைப் பொருள்களாகிய பூவும் மரமும், புள்ளும் புனலும் முதலிய சான்று களின் முன்னிலையில் நிறைவுறுகின்ற புனித நெறியா கும். நாகரிகமில்லாதவன் இக்காதலின் நுட்பத்தினை யறியான்; நாகரிகமில்லாதவளும் அறியாள். இருவரும் ஒருவரையொருவர் கலக்கிப் பின்பு கைவிடுவர். இது கண்கூடு. ஆதலின், காப்புக்குரிய சட்ட வரம்புக்குட் பட்ட மண முறையே இவர்களுக்கு ஏற்றதாகும். காதலமணமனறு.
காதலர் என்போர் தானும் அவளும் என்கின்ற இரண்டுபட்ட நிலைமாறித் தானேயவள்; அவளே தான் என்கின்ற ஒன்றுபட்ட நிலையினையடைந்தோராவர். இவர்களுக்குக் களவு, கற்பு என இருவகை ஒழுக்கங் களுண்டு. களவென்பது பிறரறியாத கூட்டம்; பிற ரறிய மணம் முடித்த பின்பு நிகழுங் கூட்டம் கற் பொழுக்கமாம். பிரிதலாகிய ஒழுக்கம் களவினும் நிக ழும்; கற்பினும் நிகழும். காதலன் தன் காதலியை உடன்கொண்டு பிரிந்து செல்வதுமுண்டு. பெற்ருர் முதலியவர்களால் தமது மணத்துக்கு இடையூறு நிகழ் வதுபோன்ற நிலைமைகள் உண்டானுல் இந்த உடன் போக்கு நிகழ்வதாகும். கல்வி கற்றற்கும், பொருளிட் டற்கும், தூது சொல்வதற்கும், நாடு காத்தற்கும், வேறு பிற காரணங்களுக்கும் தலைவன் பிரிந்து செல்வதுண்டு.
பாலைக் கலியின்கண் வந்துள்ள முதலாவது செய்யுள் கற்பொழுக்கத்தின்போது தலைமகன் பொருள் காரணமாகப் பிரிதலைப் பொருளாகவுடையது. ஒரு வன் எத்தகைய செல்வக் குமாரனேனும் தன் முயற் யாலீட்டிய நன்றியுள்ள செல்வத்தைக்கொண்டு இல் லறம் நடாத்துதலே அவனுக்குத் தக்கதாம் என்பது தமிழர் கொண்ட கொள்கையாகும். இங்கே மூன்று சிறந்த நோக்கங்கள் தலைமகன்மீது வைத்துப் புலவ ராற் பாடப்படுகின்றன. முன்பு செல்வராயிருந்து பிறர்க்கு உபகாரஞ்செய்தமையால் வறுமையுற்று இரந் தோர்க்கு ஈதல்; என்றும் வறுமையுளராய் வந்து இரந் தோர்க்கு ஈதல், தமது வதுவை முதலியன நடத்தற் குப் போதிய பொருள் கிடையாமையால் வந்து இரந்
-سی۔10-سے

தோர்க்கு ஈதல். இம்மூன்று சாராருக்கும் பொருளு தவி செய்து பற்றுக்கோடாக வாழாத இல்வாழ்வான் பழிப்புக்கு ஆளாவான் எனத் தலைவன் நினைந்து பொருள் தேடப் புறப்படுகின்ருன்.
*தொலைவாகி யிரந்தோர்க் கொன்றீயாமை யிளிவென, இல்லென இரந்தோர்க் கொன் றீயாமை யிளிவென இடனின்றி யிரந்தோர்க் கொன் றீயாமை யிளிவென” என்னும் அடிகள் இதனை விளக்குகின்றன. தொலைவு முன்புள்ளது தொலைதல். இல் என்றும இல்லாதிருத் தல். இடன் பொருள். இம்மூன்று சொற்களும் இங்கே நோக்கத்தக்கன.
பிரிவு தாங்கற்கரிய வெம்மையுடையது. இதனை ஒரு நூதனமான தீயென்கிருர் தெய்வப்புலவர்.
நீங்கில் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்ற விவள்”
என்பது திருக்குறள்.
தலைவன் செல்லக் கருதிய அரும்பாலையின் வெம் மையைப் புலப்படுத்த மனங்கொண்ட புலவருக்கு முப் புரமெரித்த நிகழ்ச்சி அவரது புலமைக் கண்முன்னே தோன்றுகின்றது பாலைநிலத்தின்மேலே நீலவானில் உருத்துகின்ற பரிதியஞ் செல்வனுக்குத் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளின் திருமுகத்தை உவமை கூறுகின் முர். வேனிற் காலமேயன்றி வேறுகாலமில்லாத பாலை நிலத்து வெங்கதிர் வேந்தனுக்கு முப்புரமெரித்த முதல் வனின் முகத்தை ஒப்புமை கூறிய பொருத்தம் நம்மா லறிந்துகொள்ளற்குரியதாம்.
“பரிதிவா னவனிலம் பசையறப் பருகுவான்
விருதுமேற் கொண்டெழும் வேனிலே யன்றிமற் றிருது வெர்ன்"
நில்லாத பாலை நிலம் அதனை நினைப்பாரது மனத்தையுஞ் சுடுமெனக் கம்பன் கூறிய நயமும் இங்கே ஒப்பவைத்து நோக்கத்தக்கது. நீரும் நிழலுமற்ற பாலை
-11

Page 15
நிலத்திலே மலைகள் பிளந்து வெந்து பொடிபட்டு விழும் கொடிய காட்சிக்கு இறைவனது புன்னகையால் முப் புரங்களும் வெந்து நீருகி விழும் பயங்கரக் காட்சியை உவமையாக்குகின்றர். புலவர்களின் மனப்பான்மைக் கேற்பவே உவமைகள் அமையும். இப்புலவர் பெரு மான் சிவபக்திமிகுந்தவராதலால் இவ்விரு உவமை களையும் இறைவனது திருவிளையாட்டோடு இணைத்துக் கூறினர்.
தலைவியைப் பிரிந்து இத்தகைய பாலைக்குள்ளா கிப் பொருள் தேட விரும்பி நிற்கின்ருன் தலைமகன். இந்நிலைமையிலே, தணிந்த நடையும் பணிந்த மொழியு முடையவளாய் ஒருத்தி வருகின்ருள். அவள் தலைவி யின் உயிர்த்தோழி. தலைவனை நோக்கிச் சில சொற் கூறுகின்ருள்.
ஐயனே! மறப்பரிய காதலமைந்த தலைவி பெரும் பிறிதாகுமாறு நீர் பொருள் தேடப் பிரிதற்கு நினைந் தீர். இதனை உமது குறிப்பாலறிந்த தலைவி தனது இயற்கை நலந் தொலைந்து வாடுகின்ருள். தலையாய அன்பினுற் பெற்ற நிலையாய கற்பினையுடைய தலைவி அருந்ததி போன்றவள்; காதலையே பொருளாகக் கொண்டவள். அவளது இயற்கை நலத்தினும் நீர் தேடக்கருதிய பொருள் நலமுடையதன்று. பொருளை ஒருகாற் பெறலாம்; உயிரைப் பெறல் ஒண்ணுது. ஆதலின், நீர் பிரியக் கருதியது அன்பன்று எனக் கூறி மறித்தாள். தலைவன் தோழியின் வேண்டுதலை முன்பு மறுத்துப் பின்பு, தலைவியின் இயற்கை நலந்தொலை தலுக்கு அஞ்சி உடன்பட்டுப் போகாதொழிந்தான்.
இந்தச் செய்தியை மீண்டு சென்று தோழி தலைவிக்குக் கூறுகின்ற நயம் தோழியின் சாதுரியத்தை யும் அவளது சொல்லின் மாதுரியத்தையும் காட்டு வதுடன் பழந்தமிழிசையின் நுட்பத்தினையும் நமக்குப் புலப்படுத்துகின்றது.
தோழி கூறுகின்ருள்: அம்மையே, நினது உயிர்த் தலைவரது பிரிவைக் குறிப்பாலறிந்து தொல்கவின் வாடி நின்ற நின்னிலையினைத் தலைவருக்கு எடுத்துரைக்க விரைந்த யான், தலைவரை நின்பொருட்டு எவ்வளவோ
ー12ー

இரந்தேன். அவர் தேடக் கருதும் பொருட் செல்வத் தினும் நினது காதற் செல்வமே சிறந்தது என்று கூறிக் குறையிரந்தேன். அவர் என் சொல்லைக் கொள்ள வில்லை. நினது இயற்கை நலந் தொலைதலைக் கூறி மறு கால் இரந்தேன்.
இரந்ததும், அங்குசத்துக்கும் அடங்காத மதங் கொண்டதோர் ஆண் யானை யாழோசைக்கு அடங்கி நின்றதுபோல எனது சொல்லில் வசப்பட்டுக் காத லர் செலவொழிந்தார் எனக் கூறித் தலைவியை ஆற்று வித்தாள் தோழி. இங்கே தோழிக்கு யாழையும், தோழியின் சொல்லுக்கு யாழோசையையும், தலைவ னுக்கு மதயானையையும் உவமை கூறிக் காதல் நுட் பத்தினையும், தமிழிசையின் மாண்பினையும் அழகாக அமைத்துக் கவி செய்த புலவர் பெருந்தகையின் மனப் பண்பும் தமிழ்ப்பற்றும் நமக்கு முன்மாதிரியாயமைந் துள்ளன.
*காழ்வரை நில்லாக் கடுங்களிற் ருெருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்குத் தாழ்புநின் தொல்கவின் தொலைத லஞ்சியென் சொல்வரைத் தங்கினர் காதலோரே”
என முடிகின்ற செய்யுளை முதலிலிருந்து படிக்கும்போது நமக்கு நமது வாழ்க்கைக்கு உறுதுணையான சில கொள் கைகளை நாம் அறிந்துகொள்கின்ருேம். இறைவழிபாடு, பிறர் குறை தவிர்த்தல், பழிக்கு அஞ்சுதல், கடமை உணர்ச்சி என்பன இங்கே குறிப்பிடத்தக்கன. தலை வனது அருளும், அது காரணமாகத் தலைவிக்குப் பிறந்த உவகையும் இச்செய்யுளின் உயிர்போன்றவை. நமது முன்னேர் தொகுததுவைத்த விழுநிதிக்குவைபோன்ற செந்தமிழ்ச் செல்வத்தைக் கூட்டுண்டு தெவிட்டாத இன்பமடைவோம்; செந்தமிழ் காப்போம்.
-13

Page 16
பாலைக்கலி :
செய்யுள் (2)
பொருளீட்டல் வினைவேட்டல் முதலிய தொழில் கள் மீது நாட்டங்கொண்டு, அவை காரணமாகத் தலைவியைப் பிரிதற்கு விரும்பிய தலைவன், தனது பிரி வைத் தலைவிக்குக் குறிப்பாலுணர்த்துகின்றவன், அத னைத் தோழிக்கு வெளிப்படையாயுணர்த்துகின்றன்; அவள் அச்செய்தியைத் தலைவிக்கு உணர்த்துகின்றள். இது முறை. இஃதறிந்த தலைவிக்குப் பெரியதோர் ஆற்ருமை பிறக்கின்றது. இதனை மீண்டுவந்து தலை வனுக்கு உணர்த்துகின்றுள் தோழி. தலைவனது உள் ளமோ தலைவியின் துன்ப நிலையை ஒரு பொருளெனக் கருதாது, வினையின் பொருட்டுப் பிரிந்து போதலையே பொருளெனக் கருதுகின்ற தனது கொள்கையில் நிலை பெற்று நிற்கின்றது. இதனையறிந்த தோழி உரிமை பற்றிச் சில சொற் கூறுகின்ருள். அவை இவை:
ஐயனே, யானுந் தலைவியும், போகாதீர் என இனி உம்மை விலக்கேம்; நீர் செல்லுங் கானமே சுற்றத்தார்போல உம்மை இடித்து விலக்கும் என்று கூறிய இச்சொற்கள் தலைவன் போகாது தவிர்தற்குக் காரணமாகின்றன.
“யாம்நிற் கூறவும் எம கொள்ளா யாயின;
ஆணு திவள்போ லருள்வந் தவைகாட்டி மேல்நின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங் கானந் தகைப்ப செலவு.”
என்பது இதை விளக்குஞ் செய்யுட் பகுதி. (ஆனது மேலும் மேலும், இவள்போல் தலைவியைப்போற் பொலி விழந்து கிடக்கும்; தர்கைப்ப தடுப்பன.) இயற்கை நிகழ்ச்சிகளை உலக நிகழ்ச்சிகளுக்கு உவமையாக அமைத் துக் கூறுகின்ற உண்மைப் புலமையுணர்ச்சியினை இச் செய்யுளில் நாம் கண்டு அனுபவிக்கும்போது நமக்குப்
-14

பல்வகை மெய்ப்பாடுகள் பிறக்கும். காண்டல் என்பது அகக்காட்சி; கண்ணென்னும் அடியாகப் பிறந்தது.
தலைவனது பிரிவைத் தனது உயிர்த்தோழி உணர்த்தக் கேட்ட தலைவிக்குக் கதை முடியுமுன்னேயே மெலிவும் நலிவும் பிறந்துவிட்டன. வளையல்கள் கழலு கின்றன; இது மெலிவு. கண்ணிர் பெருக வீழ்ந்து பின்னர் இமையளவில் நிறைந்து நிற்கின்றது; இது நலிவு.
இங்கே மெலிவுக்கும் நலிவுக்குமிடையே தலைவி யின் சாதுரியமும் பொலிவுற்று நிற்கின்றது. இஃதோர் பண்பு. தனது துன்பத்தைத் தலைவரறிந்தாற் தாமுங் கலங்குவாரே அவரது போக்குத் தடையுறுமே; அவர் கைக்கொண்ட நல்லறமும் இடையீடுபடுமே; அன்றி யும், பேணுகின்றவள் பெண்ணென்னும் பெண் குலத் தின் பெருந்தகைமையும் என்னுல் மாசடையுமே என் றெண்ணித் தலைவனறியாவண்ணம் தன் கண்ணிரை இமையளவில் நிற்கவைத்தாள் தலைவி. இது சாதுரி யம். ஆண்மகனுக்கு இது சிறப்பாகவுண்டு. கோவ லன் கண்ணகியை மதுரைமாநகரில் இடைக்குல மடந் தையிடம் அடைக்கலம் வைத்து விட்டுப்பிரிகின்ற சோகக் காட்சியை நமது அகக் கண்ணுல் நோக்கு வோம். சுரந்த கண்ணிர்த்துளிகளை இமையளவிலே கரந்துகொண்டு அவன் செல்கின்றன். தனது துன் பத்தையறிந்தாற் கண்ணகி கலங்குவாள் என்னும் எண்ணத்தால்
*வருபனி கரந்த கண்ணணுகி"ச்
செல்கின்றனென அடிகளார் கூறிய செய்யுளடியும் இங்கே நினைவுக்கு வருகின்றது. ஒரு வேறுபாடு: கண் னிர் சிந்திக் கரந்தாள் பெண்மகள்; சிந்தாது மறைத் தான் ஆண்மகன். இவை அவரவரியல்பு.
இன்னும், தாங்கலாகாக் காதல்நோய் காரண மாகத் தலைவியின் நுதல் பொலிவிழந்து தோன்றுகின் றது. முதலில் வளையல் கழன்று, பின்பு கண்ணிர்த் துளி மல்கி, அதன் பின்னர் நெற்றி பொலிவிழந்து நின்ருள் தலைவி. விழிப்புக் காலத்திலே ஆன்ம முயற் சிக்கு நெற்றியின் நடுவிடம் நிலைக்களமாதலின் நெற்றி
-س-15--

Page 17
பொலிவிழந்து தோன்றுகின்றது. இது கண்ட அயலார் நெஞ்சில் அறமின்றிப் பழிதூற்றுவரென்றெண்ணி அதற்கும் அஞ்சுகின்ருள் தலைவி.
பழி இருவகைப்படும். ஒன்று அம்பல்; மற்றது அலர். இவை அகப்பொருள் வழக்கு. அம்பல் என் பது அரும்பல் என்பதன் சிதைவு; சிலரறிந்த பழி மொழியென்பது பொருள். பழியானது அரும்புபோன்ற நிலையிலுள்ளதால் இப்பெயர் வந்தது. அலர் பல ரறிந்த பழிமொழி; அலர்போன்றது. இரண்டும் உவமையாகுபெயர். பழிமொழியென்பது இன்னளுக் கும் இன்னனுக்கும் பிறரறியாத கூட்டமுண்டென மக்கள் வெளியாகக் கூறுஞ் சொல்.
இத்தகைய பழிமொழிக்குப் பயந்தும், நீர் செல் லக் கருதிய வேனிற்காலத்து வெம்மையை நினைந்தும், காதல் வெற்றிக்குக் காரணமான தனது இயற்கை நலந் தொலைய நிற்கின்ருள் தலைவி. நீர் செய்யக்கரு திய வினையே, பிரிவினையே இவற்றுக்கெல்லாங் காலா யிற்று எனக் கூறுகின்ருள் தோழி. இது அவளது தொகுப்புரை.
*கானந் தகைப்ப செலவு”
என்பது அதைக் குறிக்குஞ் செய்யுட் பகுதியாகும்.
இனி, விரித்துரைக்கின்ருள்: ஐயனே, உம்மையே உயிராகவுடையவள் தலைவி. நீர் பிரிந்தால் அவள் உயிர் நீப்பாள். பிரியன், பிரியன் என்றும் நீர் பிரி கின்றீர். எமது சொற்களையுங் கொள்கின்றீரில்லை. உம் மைத் தடுத்தல் இனி எம்மாலியலாது. நீர் செல்லும் வழியே நில்லுமென உம்மைத் தடுக்கும் திரும்பிச் செல்லுமென உம்மை விடுக்கும். எவ்வாறெனிற் கேண் மின், 攀
நீர் மனங்கொண்டு செல்லும் வழியிடத்தே நீர்வற்றியவறுஞ் சுனைகளைக் காண்பீர் அச்சுனைகளி டத்தே இலைகளோடுகூடி வாடிக்கிடக்கும் மலர்களையுங் காண்பீர். இக்காட்சியைக் காணும் உமக்குப் பொலி வழிந்து கிடக்கும் எமது நினைவு வரும்; வரவே எம்
-16

மீது உமக்கு இரக்கமுண்டாகும். மேற்செல்லாது திரும்பிவிடுவீர். இங்கே வறுஞ் சுனை தலைவனைப் பிரிந் தமையாற் பொலிவிழந்த மனையையும், இலைகளோடு கூடி வாடிய மலர்கள், தானேயன்றிச் சுற்றமும் வாடக் கவின் வாடிக்கிடக்குந் தலைவியையுங் குறிப்பனவாம்.
“கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை
அகையொடு வாடிய வணிமலர் தகைப்பன” என்பது செய்யுள் (கடைஇய - நெஞ்சைச் செலுத் தின. அடை - இலை ) நீர்ப்பூக்கள் மருதத்துக்குரியன வேனும் பாலைக்கண்வந்தன. பூவும் புள்ளும் இவ்வாறு மயங்கி வருதலுமுண்டு.
இன்னுங் கேண்மின். தாம் படர்ந்து நின்ற மரம் வாட அம்மரத்திற் படர்தலைக் கைவட்டு வீழ்ந்து கிடக்கும் பூங்கொடிகளையுங் காண்பீர். கண்டால், தலைவிக்கு ஆதாரமாயமைந்த நீர் அவளைக் கைவிட்டுப் பிரிதலால், அவள் சோர்ந்து விழ, அவளைப் பற்றுக் கோடாகக்கொண்ட சுற்றமும் உடன் வீழ்ந்து கிடக் கும் சோகக் காட்சி உமது அகக்கண் முன்னே தோன் றும்; தோன்றவே எம்மீது இரக்கமும் உடன் தோன் றும். தலைவியின் தாங்கொணுத் துன்பந்துடைத்தற்கு மீண்டு விரைவீர். மரம் தலைவியையும் கொடிகள் சுற்றத்தையும் குறிப்பனவாம்.
*செல்லுநீ ளாற்றிடைச் சேர்ந்தெழுந்த மரம்வாடப்
புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன” என்பது செய்யுள். (புல்லு - புல்லுதல், படர்தல்.)
இன்னுங் கேட்பீர் நீர் செல்லும் வழியிடத்தே முன்பு கூறிய வாடிய மரத்தின் வதங்கிய தளிர்களை யுங் காண்பீர். கண்டால் அவை உம்மை மிக மிகத் தடுப்பனவாகும். முந்திய இரு வருணனைக்கும் இது முடிபோன்று திகழ்கின்றது. நீரும் மலரும், மரமுங் கொடியும்போலத் தலைவியுஞ் சுற்றமும் பற்றுக்கோடா யிருத்தல் மாத்திரமன்றி முதலுஞ் சினையும்போலப் பிரிப்பின்றி ஒன்றுபட்ட ஒருமைப்பாடுடையராயிருத் தலையும் விளக்குதற்கு மரமுந் தளிரும் எடுத்தாளப் பட்ட நுட்பம் அறிந்து மகிழ்தற்குரியது.
-17

Page 18
"துணிபுநீ செலக்கண்ட வாற்றிடை யம்மரத் தணிசெல வாடிய வந்தளிர் தகைப்பன” என்பது செய்யுள்.
ஒரு திணையின் அமைதியை விளக்குதற்கு முதல், கரு, உரி என முப்பொருள்கள் எடுத்தாளப்படும். நில மும் பொழுதும் முதற் பொருள்; தெய்வம் முதலிய பதினன்கும் இருப்பொருள்; புணர்தல் முதலிய நான் கும் உரிப்பொருள். இவை ஒன்ருேடொன்று தொடர் புடையன. இப்பொருள்களுக்கிடமாகச் செய்யுள்கள் தோன்றும்.
இச்செய்யுளிலே நீருஞ் சுனையும், இலையும் மல ரும், மரமுங் கொடியும், மரமுந் தளிருமாகிய கருப் பொருள்களைக் கருவியாகக்கொண்டு பாலையாகிய பிரி வொழுக்கம் இனிது புலப்படுமாறு பொருத்திக் கூறிய புலமை நுட்பம் நம்மாற் போற்றுதற்குரியதாகும். கருப்பொருளாற் கொள்ளக்கிடந்த தலைவன், தலைவி சுற்றம், இவர்களின் நிலை முதலியனவற்றுக்கு இறைச் சிப் பொருளென்று பொருளிலக்கணம் பெயர் கூறு கின்றது.
காதலின் அருமையும், தோழியின் உரிமையும் புலப்படுகின்ற இச்செய்யுளின் கண்ணே இயற்கை யோடியைந்த புலமை உணர்ச்சியும், புலவனது கரு யுள்ளமும், தமிழ் நடையும் பொலிந்து தோன்றி நமது உள்ளத்தைக் கொள்ளைகொள்ளுகின்றன. பிரிவுணர்த் தும் இச்செய்யுளிற் பிரியாமல் ஈடுபட்டு இன்பங்
காண்போம்.
*கானந் தகைப்ப செலவு."
-18

பாலக்கலி
செய்யுள் (3)
பிரிதலாகிய உரிப்பொருள்பற்றிய செய்திகளை வரம்பு கடவாது கூறுகின்ற பாலைக்கலியின் கண்ணே, சங்ககாலத் தமிழ் மக்கள் வாழ்ந்து காட்டிய அன்பு நெறியின் இன்ப இயல்புகள் இனிதாயமைந்துள்ளன. செய்யுள்களைப் படிக்குந்தோறும் செம்பொருள், குறிப் புப்பொருள், தொனிப்பொருள் என்னும் மூவகைப் பொருள்கள் வாயிலாக நாம் அவற்றை அறிந்து கொள்ளுதல்கூடும். பழைய வழக்கங்களையும், பா நில இயல்புகளையும், பாலைநில மாக்களின் போக்கு களையும் நாம் அறிதற்கும் இச்செய்யுள்கள் கருவியா கின்றன. நில இயல்புகளை வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சார்த்திக் கூறுகின்ற புலமையுணர்ச்சியும், இயற்கை நவிற்சியும் வாய்ந்த இச்செய்யுள்கள் ஏனைய செய் யுள்களுக்கெல்லாம் அணிகலன்போற் திகழ்கின்றன. நாநலங் கனிந்த நடையையும் இவற்றிற் கண்டு நல் லின்பமடையலாம்.
பொருள் தேடற்பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லற்கு விரும்பிய தலைமகனெருவன், தனது உள்ளக் கருத்தைத் தலைவிக்குக் குறிப்பாலுணர்த்து கின்றன். தலைமகளோ குறிப்பாற் குறிப்புணருங் கூரிய அறிவு படைத்தவளாதலின், தலைவன் கொண்ட குறிப் பினையறிந்து, பிரிவாற்ருமை காரணமாகப் பெரிய தோர் துன்பத்துக்குள்ளாகின்ருள். தலைவியின் துன்ப நிலையைத் தோழி தலைவனுக்கு எடுத்துக்கூறிப் பிரியா திருக்க வேண்டுகின்றவள் தலைவனேடு சொல்லாடு கின்ற முறைமையினைச் சற்றே நோக்குவோம்.
எம்பெருமானே, ஈதொன்று கேட்பீராக. பொருள் தேடற்பொருட்டு நீர் பிரிய மனங்கொண் டதை எம்பெருமாட்டி அறிந்துகொண்டாள்; நீர் மனத்திலே மறைவாக நினைத்த காரியத்தை உமது சில செயல்கள் அவளுக்கு வெளிப்படையாகக் கூறி
حسيد 19 سم

Page 19
விட்டன. அஃது ஒருபுறமிருக்கட்டும்; நீர் செல்லக் கருதிய வழியின் கொடுமையைச் சிறிது சொல்லு கின்றேன்:
எவ்வளவு கொடுமையுடைய அரிய வழியைக் கடப்பதற்கு நீர் விரும்பினிர்? அது மறவர்கள் ஆட் பார்த்திருக்கின்ற அபாயமுள்ள வழி. அங்குள்ள மற வர்களின் செய்தியைக் கேளும். அவர்கள் கட்டமைந்த வில்லுடையோர்; கடை சுருண்டு வளர்ந்த கூந்தலுடை யோர்; வல்லென்ற உடம்புடையோர்; புலிபோன்ற பார்வையுடையோர்; தறுகண்ணர், பிறரை வலிகின்ற உடல்வலி படைத்தோர். செய்யுளோவியத்தைப் பாருங்கள்.
*வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற்
சுற்றமை வில்லர்; சுரிவளர் பித்தையர்; அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்”
வலிமுன்பு (வழிப்போக்கரை) வலிகின்ற உடல்வலி, பித்தை - கூந்தல். அற்றம் - குற்றம். அல்கும் - இருக்கும்.
இம்மறவரைக் கல்லா மறவர் என்பது தமிழ் வழக்கு. மறத்தைக் கல்லாதவர்; அது அவர்களின் பரம்பரைச் சொத்து. ‘குலவித்தை கல்லாமற் பாதி' என்பது பழமொழி. வழிபறி கொள்ளையே இவர்களது வாழ்க்கைத் தொழிலாகும். அடிப்பட்ட பழக்கத்தால் இப்பொல்லா மறவர் இரக்கமற்ற கல்நெஞ்சராய் விட்டனர். வழிப்போக்கரின் பொருளைப் பறித்துக் கொண்டு புண்ணைப் பரிசாகக் கொடுக்கும் வன்கண்ண ராகிய இவர்களுக்குப் பொருள் வைத்திருப்போரும் ஒன்றுதான்; வெறுங்கையரும் ஒன்றுதான். வெறுங் கையராய்ச் செல்வோர்க்கும் தமது பொழுதுபோக்கின் பொருட்டுப் புண்ணைக் கொடுத்து மகிழும் புண்ணியர் இவர்கள்; தமது அம்புபட்டுப் பதைப்போரைக் கண் குளிரப்பார்த்து மனம் மகிழும்பொருட்டு அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று உயிரை வாங்குங் கொடுமையினலே பறவைகளும் பறக்காத தொலையாத தனிவழி. ஒருமுறை இவ்வழியாற் சென்ருேர் மறு முறை செல்லார். அறியாத புதியோரே இவர்களி
-20

டத்து அகப்பட்டுப் பதைப்பர். இவ்வழியாற் செல் வதைத் தலைவி நினைந்து நினைந்து வருந்துவாளே! இஃது உமக்கு இரக்கமோ?
*தாம்-கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை”
வம்பலர் - புதியோர். புலம்பு - தனிமை அல்லது துன் பம். ஆரிடை (நடக்க நடக்கத்) தொலையாத அரு வழி. நம்முள்ளும் மறவருளர். தமது வருவாய்க்காகப் பிறரை வருத்துவோரும்; வருவாயை அபகரித்துக் கொண்டு அவரைக் கைகழுவி விடுவோரும்; தமக்கோ ரூதியமும் கிடையாதேனும் பிறர் துன்பங் காண்ப தில் மனத்திருப்தி யடைவோரும் நமது நாட்டைப் பாலை நிலமாக்கிக்கொண்டு அன்பில்லாத வாழ்வு வாழ்ந்துவருகின்றர்கள். இவர்கள் இக்கால மறவரோ! ஆம்; நாகரிக மறவர். அஃதிருக்க.
வேனில் வேந்தனும் வெங்கதிர்ச் செல்வனும் தம்முட்கொண்ட நண்புகாரணமாக நிலம் வெந்து பாழ்பட்டதன்றி, அங்கு வாழ்வோரது தீச்செய்கை யால் அந்நிலத்து ஒழுக்கமும் பாழாயிற்று. ஒரு நிலத் தின் இயற்கை எவ்வாறிருப்பினும், அது அங்கு வாழும் நன்மக்களது நற்செய்கையால் வளம்பெறும்; கயவர் களின் தீச்செய்கையால் அது பாழ்படும் என்பது தமிழன் கண்ட உண்மையாகும். ஆருது கொதிக்கும் பா நிலத்தை வருணிக்கின்ற கவிச் செல்வன் கம்பனும்
‘வஞ்சர்தீ வினையினுல் மானமாம் அணியிழந்
தஞ்சினுர் நெஞ்சுபோ லென்றுமா ருதரோ" என்று உலக வாழ்க்கையோடு சார்த்தி உணர்ச்சி ததும்பக் கூறும் *செய்யுட் பகுதியும் இங்கே நோக்கத் தக்கது.
வழியினது கடுமை கூறுகின்ற தோழியின் மொழி
* களிலே தலைவனது வீரமும் கருணையும் குறிப்பாகப்
புலப்படுகின்றன. தலைவனது வலக்கையிலுள்ள வேலை வெள்வேல் எனக் கூறுகின்ருள். வெள்வேலுங் கரு
-21

Page 20
வேலுமுள்ள காட்டு வழியிற் செல்லக் கருதிய தலை வனுந் தன் கையில் வெள்வேல் ஏந்தி நிற்கின்றன். வெள்வேல் தோய்ந்து அராவிய வேல்; இரத்தந் தோயாத வேல். ஆட்பார்த்துழலுங் கடுங்கண் மறவ ரெதிர்ப்பட்டால், தனது கைவேலைச் சுழற்றுமளவிலே அவர்களை அஞ்சியோடச் செய்வதன்றி அவர்கள் செய் வதுபோற் புண்ணைக் கொடுத்து உயிரை வாங்காத கருணை வள்ளல்; ஆதலின் அவன் கையிலுள்ள வேல் வெள்வேல் எனக் கூறப்பட்டது.
இத்தகைய அரிய வழியிடத்தே பிரிந்து செல் லக் கருதிய தலைவனது உள்ளக் குறிப்பைத் தலைவி வெளிப்படையாய் அறிந்துகொள்ளற்குக் காரணமாகத் தலைவன் நிகழ்த்திய செயல்கள் எவையென்பதை இனி நோக்குவோம். தலைவன் ஒருபோது, தலைவியின் சோர்ந்துகிடந்த கூந்தலைக் கோலஞ்செய்தான்; இன் ணுெருகால், நிலைகுலைந்த அணிகலன்களைத் திருத்தி ஞன், பின்னெருநாள், நுதலிலரும்பிய வியர்வையைத் துடைத்தான். இம்மூன்று செயல்களையும் கருவியாகக் கொண்டு தலைவனது உள்ளக் கருத்தைத் தெள்ளிதி னறிந்த தலைவியின் மதிநுட்பமும் நூலறிவும் அக்காலத் தமிழ் மகளிரின் கலைப்பண்பை நன்கு விளக்குகின்றன.
"தாழ்கதுப் பணிகுவர் காதலர்; மற்றவர்
சூழ்வதை யெவன்கொல்? அறியே னென்னும்:” * ஒள்ளிழை திருத்துவர் காதலர்; மற்றவர்
உள்ளுவ தெவன்கொல்? அறியே னென்னும்:” “ஒண்ணுதல் நீவுவர் காதலர்; மற்றவர்
எண்ணுவ தெவன்கொல்? அறியே னென்னும்.” என்பது செய்யுட் பகுதி. கதுப்பு - கூந்தல். எவன்கொல்எத்தன்மையுடையதோ?.
கூந்தலைக் கோலஞ்செய்தும், அணிகலன்களைத் திருத்தியும், நெற்றி வியர்வையை நீவியும், தலைவன் தலைவிய்ைப் பாராட்டிக் கூறியது, அண்மையிற் பிரி வுண்டாமோ? என்னும் ஐயத்தைத் தலைவியின் உள் ளத்தே நிகழச் செய்தது. இதனற் தலைவிக்கு அச்ச மும், தலைமகனுக்கு இழிவும் உண்டாயின. இவற்றைப் பரிகரித்தல் தோழிக்குக் கடமையாயிற்று.
سس-22.

தோழி கூறுகின்ருள்: ஐயனே, கூந்தலைக் கோலஞ்
செய்தும், அணிகலன் திருத்தியும், வியர்வையைத் துடைத்தும் நீர் தலைவிமாட்டு நிகழ்த்திய மிக்க பெரிய தண்ணளியானது, அண்மையில் நீர் அவ
விட்டுப் பிரிதற்குரிய அறிகுறியென்றறிந்து நெஞ்சழிந்து கலங்கி வருந்துகின்ருள். அவள் நும்மிற் பிரியாள்; பிரியின் உயிர்கொண்டுதரியாள். அவள் வாழ்வாளோ! நீர் தேடக் கருதிய பொருளினும் தலைவியின் உயிர் பெரிது. பிரிவொழிக என வேண்டிக்கொள்கின்ருள்.
இச்செய்யுளிலே மறவரின் வடிவம் படம்பிடித் துக் காட்டியதுபோல் அமைந்துள்ளது. அன்னரது பாலைநிலச் செய்தியும், காதல் மணத்தின் பிரிப்பற்ற அன்பு நிலையும், தலைவனது வீரமுங் கருணையும், தலைவி யின் மதிநுட்பமும் நூலறிவும், தோழியின் உரிமை யும், கடமையும், திறமையும் தெளிவாகக் கூறப்பட் டுள்ளன.
--23س۔

Page 21
பாலைக்கலி :
செய்யுள் (4)
இச்செய்யுள் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப் பெயர் பெறும். ஒத்த தாழிசைகளையுடைய கலிப்பா என்பது பொருள். தாழிசையென்பது தாளம் பட்ட இசையுடையது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்பினலும் நடைபெற்று முடிந்து நிற்றல் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா வின் இலக்கணமாகும். தரவென்பது செய்யுளின் முத லுறுப்பாய் நின்று, புலவன் பாடக்கருதிய பொருள் முழுவதையுந் தொகுத்துத் தருவது. தருவதாற் தர வென்பது பெயராயிற்று. தரு எனவும் இது வழங் கும். தரவிற் தொகுத்துக் கூறியவற்றைத் தாழிசை கள் விரித்துக் கூறும். சுரிந்து முடிவதாற் சுரிதகம் எனப்பட்டது. சுரிதல் இசையின் சுழற்சியாகும். சுரி யென்பது சுழியெனவும் கூறப்படும். சுரிந்த முக முடைமையாற் சங்கு சுரிமுகச் சங்கமென வழங்கப் பெறும். தனிச்சொல் தாழிசைகளையும் சுரிதகத்தை யும் இணைத்து நிற்கும். கொளுவெனவும் இதற்குப் பெயருண்டு. சுரிதகம் செய்யுளின் முடிவுரை போன் றது. தரவு, தாழிசை, சுரிதகம் என்பவற்றுள் ஒவ் வொன்றும் வெவ்வேறு இசை கூட்டிப் பாடப்பெறும்.
பொருள் காரணமாகத்தான் தலைவியைப் பிரி கின்றேன் என்னுஞ் செய்தியைத் தலைவன் தோழிக் குணர்த்த அது கேட்ட தோழி, நீர் தேடக் கருதிய பொருளினும் பார்க்கத் தேடக் கிடையாத செல்வமாக நாங்கள் உமக்குக் கிடைத்துள்ளோம். இந்த அரு மையை நீரே அறிந்தீராயின் நாங்கள் உமக்குப் பல கூறியும் பயனென்ன? நாளும் புள்ளுமே இனி உம்மை விலக்க வல்லனவாகும். தலைவி உம்மைப் பிரிந்து உயிர்தரித்திருப்பாளொருத்தியல்லள். நீர் பிரியின் அவளுக்குக் கையாறு நிகழும். (கையாறு - சாக்காடு.) எனக் கூறக்கேட்ட தலைவன் செலவொழிந்தான்.
س--24-سے

செய்யுளின் முதலுறுப்பாகிய தரவின் கண்ணே, தோழி கூறுவதாக வழியினது கடுமை கூறப் புகுந்த புலவர், அதனேடு சார்த்திக் கப்பலோட்டியவன் தமி ழன் முயற்சியினுயர்ச்சியையுணர்ந்தவன் தமிழன்; காலக் கணிதத்திலும் சகுன நூல் வழக்கிலும் அவ னுக்கு நம்பிக்கையிருந்தது என்பவற்றையுங் குறிப் பாகத் தெரிவிக்கின்றர்.
யானைக் கூட்டங்களுடனே பிற விலங்கினீட்டங் களும், மறவரும் மயங்கித் திரிதலாலே தூறெல்லாம் அதர் பட்டுப் போவார்க்கு மயக்கத்தைச் செய்கின்ற காட்டுவழி. தூறுகளுள்ள இடங்களும் அதர்களாகி அவ்வதர்கள் பழைய வழிகளோடு சந்தித்துக்கிடப்ப தாற் போவாரை மயக்குங் கவலை வழிகளுள்ள சுர மென்ருர்; அதர்வழி - கவலை கவர்வழி. அதர் என் பது காட்டிடத்தேயுண்டாகிய ஒற்றடிப் பாதையைக் குறிக்குஞ் சொல்லாக நாட்டு வழக்கிலுங் காணப்படு கின்றது. அன்றியும் அதரென்பது சிறிய துவாரத்தை யுங் குறிக்கவரும்.
"மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்"
என்பது சிலப்பதிகாரம். மான்கண் போன்ற துவாரங் களையுடைய சாளரங்களமைந்துள்ள மாளிகைகளும் என்பது பொருள். காலதர் - சாளரம். கால் அதர் - கால் காற்று அதர் வழி - துவாரம். காற்றுப் புகுந்து புறப்படும் வழி.
பெருந்தகையீர், எம்மை நன்கறிந்த நீர், யாம் கூறிய காட்டு வழியிடத்தே பிரிந்துசெல்லக் கருதினிராயின், யாம் நெஞ்சழிந் திருப்பதல்லது உமக்கு எங்ங்ணம் பல வார்த்தைகளைக் கூறுவோம்! இது தோழி கூறியது. நெஞ்சழிந்திருப்பதை விளக்கு தற்குப் புலவர் எடுத்தாண்ட உவமை தமிழ்நாட்டுப் பழைய செய்தியொன்றை நமக்கு நினைவூட்டுகின்றது. தமிழன் ஆழ்கடல் நடுவே நெடுங்கலம் பல செலுத்தி வாணிகஞ் செய்து பெரும் பொருளிட்டிய செய்தியை நாமறிவது நமக்குப் புதியதோர் உணர்ச்சியைத் தரு கின்றது.
سس-25--

Page 22
*நீளிரு முந்நீர் வளிகலன் வெளவலின்
ஆள்வினைக் கழிந்தோர் போறல்'
என்பது இதனையறிவிக்குஞ் செய்யுட் பகுதியாகும்.
நீண்ட கரிய பெரிய கடலகத்தே, பண்டமேற் றிய மரக்கலம் பாய்விரித்தோடுகின்றது. ஒடும்போழ்து கப்பலுக்குத் துணையாக நின்று செலுத்திய காற்றே எதிர்காற்ருக மாறியடித்தலாற் சிதறுண்ட கப்பலிற் சரக்கேற்றிச் சென்ற தமிழ் மக்கள் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு இடையீடு நிகழ்ந்துவிட்டதே என்று நெஞ்சழிந்திருக்கின்ருர்கள். நெஞ்சழிதல் - ஊக் கங்கெடுதல். உயிருக்கு அஞ்சுவதன்று. நாங்களுங் கடல் நடுவே கலங் கவிழப்பெற்ருர்போல நெஞ்சழிந்திருப்ப தன்றி, உமக்குப் பலவற்றையுங் கூறிப் பயனென்ன? என்று தோழி கூறியதாக அமைந்துள்ள இவ்வுவமை சரித்திரப் பிரசித்தி பெற்றது. மரக்கலத்தால் வரும் மாண்புடைய செல்வத்தைப் பெறுதற்குத் தமிழ் மக் கள் வேற்றுநாடு சென்ற வரலாற்றை உவமை வாயி லாக நாம் அறிகின்ருேம். இங்கே இன்னென்று வரு கின்றது. மரக்கலத்தை மோதிய காற்றுப்போல நமது மனமும் அறிவை மோதுகின்றது.
அலைகின்ற ஐம்பொறிப்பின் ஆங்குவழிப் பட்டு நிலையின்றி யோடுமேல் நெஞ்சம் - அலைகடற்கண் வங்கத்தை மோதி வளியுடைத்தல் போலறிவை இங்கெற்றி மோது மெறிந்து.
இனிக், குறித்த பொருளிற் புகுவோம். ஐயனே, நாங்கள் பல கூரு திருப்பினும், நாளும் புள்ளும் உம்மை விலக்குமென்கின்ருள் தோழி. நாள் - நட்சத்திரம்; கோள்-சகுனப்புள், கிரகமெனவுங் கொள்ளலாம். நாள் விலக்கலாவது அண்மையிற் பயணத்துக்கு நல்ல நாள் வாராமையாற் பிரியாது தங்குதல் கோள் விலக்க லாவது சகுனப் புள்ளின் அமங்கலவொலியாற் பய ணந் தடைப்பட்டுப் போக்கொழிதல். இங்கே காலக் கணிதம் (சோதிடம்) பார்ப்பதிலும், சகுனப் புள்ளின் பாடுபார்த்திருப்பதிலும் பண்டைத் தமிழர் நம்பிக்கை கொண்டிருந்தமை தெரிகின்றது. பாடுஒலி. கனகுரற் பல்லியின் பாடுபார்த்திருப்பதுமுண்டு.
- 26

தலைவனது பிரிவு கேட்டுப் பொலிவழிந்துகிடந்த தலைவியின் நிலைமைக்கு மூன்று உவமைகள் கூறுகின் முர். அவற்றின் நுட்பத்தை நோக்குவோம்.
திருவிழா நடக்குமிடங்களை நாம் பலகாற் பார்த் திருக்கின்ருேம். பல்வகை மங்கலவொலிகளும , கண் ணும் மனமுங் கவரும் அற்புதக் காட்சிகளும் நிறைந்து இன்பந் தந்து திகழ்ந்த அவ்விடங்கள், விழா முடிந்த மற்றை நாளிலே பொலிவிழந்து தனித்துக் கிடப்பதை யும் பலகாற் கண்டிருக்கின்ருேம். கவிஞருங் காண் கின்ருர்கள். நமது உணர்ச்சி வேறு கவிஞரின் உணர்ச்சி வேறு. தலைவியின் பொலிவிழந்த நிலைமையை நினைந்த புலவருக்குத் திருவிழா முடிந்து அடுத்தநாட் பொலி விழந்து கிடந்த இடம் நல்லதோர் உவமையாகின்றது.
“கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற்
புல்லென்ற களம்போலப் புலம்புகொண்டமைவாளோ!”
எனப் பாட்டுக் கிளம்புகின்றது. எனினும், அவரது மனம் அமையவில்லை.
தலைவனைப் பிரிந்த தலைவியின் அழகுகெட்ட முகத்தை அகக் கண்ணுல் நோக்குகின்ருர், நாட்டை ஆளுகின்ற அரசர் அல்லது தலைவர், தாம் பின்பு கலங்குதற்குக் காரணமாக அவராற் கலக்கப்பெறும் நாடு பாழ்படும் என்னும் உண்மை அவருக்கு உதிக் கின்றது. அரசர்களுக்கும் இடித்துரைத்துப் புத்தி புகட்டும்வண்ணம் அழகாக உவமையை அமைக்கின்
முர். இந்தத் துணிவு இப்போதில்லை.
"ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோற்
பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண் டமைவாளோ!" எனக் கவி பிறக்கின்றது. இவ்வுவமையிலே, ஆளுகின்ற அரசர் முன்பு நாட்டைக் கலக்குவது, பின்பு தாம் பெரியதோர் கலக்கத்தையடைவதற்குக் காரணமாகும் எனக் கூறியிருக்கும் உண்மை தலைவர் களால் அறிந்துகொள்ளற்குரியது. அலைபெற்ற என் பதிலே பெற்ற என்பது செயப்பாட்டு வினைவிகுதி யாகிய பெறு என்பதினின்றும் பிறந்த பெயரெச்சம்.
-27

Page 23
பைதல்-துன்பம். இவ்விரண்டு உவமைகளும் புலவரது நாட்டுப்பற்றுக் காரணமாக அமைந்தவை. அமைந்து மென்ன? தலைவியின் உள்ளம் அமையவில்லை. பொலி விழந்த தலைவி தனித்திருந்து அமைவாளோ? அழகு கெட்ட முகத்தோடு வருத்தங்கொண்டு அமைவாளோ? என்று கூறிய புலவர், நீ நீப்பின் வாழ்வாளோ? என்று
அறுதியிடுகின்ருர்,
“ஓரிரா வைகலுட் தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ?” என்பது செய்யுட் பகுதி. பொய்கையினகத்தே ஓரிராப் பொழுது மட்டும் நீர் பெருதிருந்தும் வாடாது நின்ற தாமரை மலர் இங்கே உவமை கூறப்பட்டுள்ளது. இயற்கைப் பொருள்களில் ஈடுபட்டு நிற்கும் புலமை யுள்ளம் மாத்திரமே இவ்வாறு உவமை காணவல்லது.
இனி உவமைகளிலமைந்து கிடக்குங் குறிப்புப் பொருளை நோக்குவோம். பொலிவிழந்த களம் விழா வால் மீண்டும் பழைய பொலிவைப் பெறும்; பாழ் பட்ட நாடு அரசனுல் மீண்டும் அழகுபெறும்; நீர் பெருத தாமரை மலர் நீரால் மீண்டுஞ் செழிப்புறும்; தலைவியோ நீர் பிரியின் இன்னெருகால் நும்மால் மீண்டும் பொலிவடையாள்; உடனே இறந்துபடுவாள் என்பது குறிப்பு.
“பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எந்நாளோ நெடுந்தகாய் ! நீ செல்வது அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே.”
என்பது முடிவுரை.
-28ܚ-

பாலைக்கலி:
செய்யுள் (5)
“எம்மையும் அன்பறச் சூழாதே
யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு.”
பாலைத் திணையிலே தலைவன் தலைவியை உடன் கொண்டு செல்லும் பிரிவும் உண்டென்பது முன்பு கூறப்பட்டுள்ளது. அகப்பொருளில் இது உடன்போக் கென வழங்கும். இதற்குரிய காரணங்களும் உள. தலைவன் தன்னைப் பிரிந்து செல்லக் கருதிய குறிப்பினை யறிந்த தலைவி தலைவனை நோக்கித் தன்னையும் உடன் கொண்டு செல்லுமாறு வேண்டி நிற்கின்ருள். இது ஒரு தருமசங்கடம்.
தலைவிக்கு நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் பெண்மைக் குணங்கள் நான்கும் அமைந்துள் ளன. நாணமென்பது பெண்களுக்கு இயல்பாகவுள்ள தோர் அமைதித்தன்மை; மடம் என்பது கொண்டது விடாமை; அச்சம் என்பது பயம்; பயிர்ப்பு என்பது தமது கணவரல்லாத பிறரின் ஆடை, அவயவம் முத லியன தம்மேற் படுதலில் அருவருப்பு. இக்குணங் களுள்ளவளை எளிதாக விட்டு நீங்குதல் இயல்வதன்று. தலைவனுக்கு அறிவு, பொறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்னும் ஆண்மைக் குணங்கள் நான்கும் அமைந்துள் ளன. அறிவென்பது ஆவதறிதல்; பொறையென்பது பொறுக்கமுடியாத நிகழ்ச்சிகளில் அவற்தைத் தாங்கும் மனவலிமை; ஒர்ப்பு என்பது ஆராய்வு; கடைப்பிடி யென்பது எடுத்த கருமத்தைத் தொடுத்து முடித்தல். இத்தகைய குணங்கள் வாய்ந்த தலைவனும் தனது தொழிலிலே திறமையுள்ளவனுதல் வேண்டும். இரு வரையும் நோக்குவோம்.
உடன்கொண்டு செல்கவென வேண்டிய தலை வியைத் தலைவன் நோக்குகின்ருன். நோக்கென்பது
- 29-س--

Page 24
வெறும் பார்வையன்று. என்னுயிர்க் காதலியே, யான் சொல்லும் இதனைச் சற்றே கேள். யான் செல்லக் கருதிய வழி நாட்டு வழியன்று; அது காட்டு வழி. அதன் கடுமையை வாயாற் சொல்லவும் ஒண்ணுது. வானம் மழை மறத்தலால் முதுவேனிற் பருவம் தனது வெம்மை முறுகிக் கண் விழிக்கலாகாத காடு. ஏற்றிழி வுடைய மலைகள் குறுக்கிட்டுக்கிடந்து போவாரைத் தடுக்கின்ற தொலையாத வழி. அவ்வழியிடத்தே நீர் வேட்கையால் வாயுலர்ந்த பெண் மரைகள் நீர் கிடை யாமையால் மரல் என்னும் ஒருவகைச் செடியினைக் கடித்துத் தின்று தாகத்தை ஒருவாறு ஆற்றித் திரி கின்ற துன்பக் காட்சி ஆண் மரைகளைக் கலக்கத்துக்குள் ளாக்குகின்றது ஒருபுறம்; மறவரின் அம்புகள் வழிப் போக்கரின் உடலிற் பட்டு அழுந்தியதால் நெஞ்சு காய்ந்து நாவுலர்ந்துபோதலாலே அவர்கள் தமது கண்ணிராலே நாவை நனைத்துப் பதைக்கின்ற பரி தாபக் காட்சி மறுபுறம். நினைத்தாலும் நெஞ்சைச் சுடுகின்ற கடுவழியென்று கூறினன். இங்கே ஒரு நுட் பம் அமைந்துள்ளது. என்னையும் உடன் கொண்டு செல்வதை ஆராய்க எனக் கேளாமற் கேட்ட தலை விக்குத் தலைவனும் உடன்கொண்டு செல்லேனெனச் சொலலாமற் சொன்னன். தலைவி தானே தனது எண் ணத்தைக் கைவிடுவாள் என்பது தலைவனது குறிப்பு. அதற்கு மாருக,
“மரையா மரல் கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் கரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம் உண்ணிர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத் தண்ணிர் பெருஅத் தடுமாற்றருந்துயரங் கண்ணிர் நனைக்குங் கடுமைய காடென்றல்".
பெருந்தகையீர், அந்த வல்லென்ற காட்டு வழியே நடந்து செல்வதை என்னுடைய மெல்லென்ற சீறடிகள் தாங்கமாட்டா என்பது உமது கருத்தாயின், என் னைக் கூட்டிக்கொண்டு செல்வதில்லையென்பது உமது குறிப்பாயின், இது உமக்குத் தகாது. எனது மனவியல்பை நீர் நன்ருயறிவீர்; அறிந்திருந்தும் அறி யாதவர் போன்று இவ்வாறு சொல்லுதல் உமது
--30--س-

இயல்புக்குப் பொருந்துவதன்று. உமது மனவியல்பை யும் நானறிவேனென்பதும் உமக்குத் தெரியும். தானே யவள்; அவளேதான் என்னும் ஒருமைப்பாடமைந்த வாழ்வுடைய நீர் என்னை உடன்கொண்டு செல்லே னென மறுப்பது உமது பெருந்தகைமைக்கு அழகா காது எனத் தலைவி எதிர்மறுத்துரைத்தாள்.
தலைவன் ஆறு அடிகளிற் கூறிய விடைக்கு, ‘என்னி ரறியாதீர் போல விவை கூறின்
நின்னிர வல்ல நெடுந்தகாய்."
எனச் சுருக்கமும், தெளிவும், இனிமையும் உணர்ச்சியும் பொருந்த இரண்டடிகளிலே தடை கூறிய தலைவியின் மதிநுட்பம் நம்மால் அறிந்துகொள்ளத்தக்கது.
ஆவி நிகர்காதலால் அகமொன்றேயாகிய நமக் குப் பிரிவென்பதொன்றுண்டோ? பிரிப்பில்லாத நமக் குள் ஒருவர்க்கு வருகின்ற இன்ப துன்பங்கள் இரு வர்க்கும் சமமன்ருே? இன்பத்தில் இனிதாகித் துன் பத்திற் கசப்பாகும் வாழ்வும் ஒரு வாழ்வா? எனது மென்மைக்கு நீர் வருந்தாதீர். உமது துன்பத்தில் உமக் குத் துணையாதல் என் கடன். துன்பத்தில் துணையாதல் இன்பத்தின் முடியாகும். எம்மிடத்து அன்பு நீங்கப் பிரியாதீர். அந்த அரிய வழியில் நீர் காணுந் துன் பத்தை யானுங் காணல்வேண்டும். உமது துன்பத்தில் என்னையுந் துணையாகக் கொண்டுபோதல்வேண்டும். எனது இவ்விருப்பத்தை ஆராய்ந்து பார்ப்பீராக. காதலரின் துன்பத்தில் துணையாவதினும் பார்க்கக் காதலிகளுக்கு வேறு சிறந்த இன்பமும் உண்டோ? இவ்வாறு தலைவி கூறிய சொற்கள் தலைவனது உள் ளத்தை உருக்கிவிட்டன.
“எம்மையும் அன்பறச் சூழாதே
யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக
நாடி னது வல்ல தின்பமு முண்டோ வெமக்கு." என்னுஞ் செய்யுளடிகள் காதலின் நுட்பத்தைக் கவின் பெற விளக்கி நிற்கின்றன. காதற் கதைகளெல்லாம் இவ்வடிகளுள் அடங்கும்.
-31

Page 25
தலைவியின் வேண்டுகோளில் ஒரு பெருந்தகைமை தோன்றுகின்றது. யானும் உடன் வருவேன்; என் யுங் கொண்டு செல்கவெனக் கூருமல், உமது துன்பத் தில் உமக்குத் துணையாக என்னையும் உடன் கொண்டு போதல் கூடுமோ என்பதை ஆராய்ந்து பார்ப்பீராக என்னும் அன்பு மொழிகளிலே தலைவியின் மனப்பண்பு கனிந்து விளங்குகின்றது.
இனித் தலைவனை நோக்குவோம். அவன் தனக் குள்ளே சிந்திக்கலானன். பிரிப்பில்லாத அன்பு காரண மாகத் தலைவி இவ்வாறு வேண்டுகின்ருள். உலக ஒழுக்கமும் இதற்கு இடமளிக்கும். ஆயினும், இவளை உடன் கொண் டு செல்வோமாயின், தண்ணிர் பெருத அருந்துயரால் இவள் வாடுவாள். மரலைத் தின்று ஆற்று கின்ற பெண் மரையின் நிலை இவளுக்கும் வரும். மறவ ரெதிர்ப்பின் அவரை எவ்வாறு தடுப்பேன்! இவளை இடைச்சுரத்தில் எவ்வாறு காப்பேன்! அது கிடக்க. நமது பிரிவு அன்பு பெருகுதற்குக் காரணமானது. இதை அன்பு அறுதற்குக் காரணமென்று இவள் மாறு பட நினைக்கின்ருள். இந்நிலையில் இவளைக் கொண்டு செல்வதும் தகாது; விண்டு செல்வதுந் தகாது. ஆத லின், இவளைச் சில பகல் ஆற்றியிருந்து பின்பு பிரிவே னென முடிவுசெய்து இல்லகத்தே தங்கினன். உண் மைக் காதல் துன்பத்திலும் இன்பங்காணும் இயல் புடையது என்னும் உயர்ந்த பொருள் இச்செய்யுளால் இனிது புலப்படுகின்றது.
ー32ー

பாலைக்கலி :
செய்யுள் (6)
பொருளினும் உயிர் சிறந்தது. பொருளை ஒரு கால் இழந்தால் அதனை மீண்டும் பெறுதல்கூடும். உயிரையழந்தால் எவ்வகையாலும் அதனைப் பெறு தல்கூடாது. நீர் பெரிதெனக் கருதி எம்மைப் பிரிந்து சென்று தேடும் பொருள் இன்பத்தைத் தருதலே யன்றி இவளது இனிய உயிரையுந் தருமோ? இது தோழி தலைவனுக்குக் கூறியது.
“இன்னுயிர் தருதலு மாற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே’
தேஎம் - தேயம், தேசம், இடம்.
முயன்று தேடும் பொருளே இன்பந் தருவதர் கும்; முயலாது தேடும் பொருள் துன்பமே தரும். முயலாது தேடும் பொருள் இரக்கமற்ற வழிகளால் வருவது; பலர் வருந்த ஒருவன் அபகரித்துத் தொகுத் துக்கொள்வது. இது நன்றியில்லாத செல்வமாகும். பலரை ஏழைகளாக்கி ஒருவன் தான் மட்டும் செல்வ ஞக வாழ விரும்புங் கீழ்மைக் குணத்தினுல் அபகரித்த செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்ததுபோன்றது. நன்றியில் செல்வம் படைத்தோரைக் கயவர் என்று தமிழ் நூல்கள் கூறும். அறநெறியாற் பொருள் தேட வேண்டுமென்னும் எண்ணம் இவர்களுக்கில்லை; எல் லாரும் இன்புற்றிருக்க வேண்டுமென்னும் இனிய மன மும் இவர்களுக்கில்லை. இக்கயவர்களை மறைமுகமாக வழிநடத்துவதும், இவர்களிட்டும் பொருளிலே தாமும் பாகம்பெற்று வாழ்க்கை நடத்துவதும் இழிதொழில் களாகும். இவ்விரண்டு இழிதொழில்களையுஞ் செய்து கொண்டு தம்மை ஏழைகளின் நண்பர் எனக் கூறித் திரிவோர் கயவரினும் கடைப்பட்ட கயவராவர். நல் வழியில் முயன்று தேடும் பொருளே பொருளாகும்.
س-33-س

Page 26
இங்கே நமது தமிழ்த் தலைவனும் இந்த நன்றியுள்ள செல்வத்தையே தேட விரும்புகின்றன். W
நமது தலைவன் அண்மையிலேதான் மணஞ் செய்தவன். மணமுங் காதல் மணம். காலமும் பிரி வரிதாய காலம். இதனையறிந்த தோழிக்கு அவனைச் செல்லாது விலக்குதல் கடனுகும். இந்நிலையிலே தோழி தலைவனேடு சொல்லாட விரும்புகின்ருள். அவள் சொல் லாடும் முறையிலே ஒரு தனியழகு அமைந்துள்ளது. எம்பெருமானே, நீர் பொருளின் பொருட்டுப் பிரிந்து செல்லக் கருதுகின்றீர். உமது உள்ளக் கருத்தினை யான் சென்று தலைவிக்கு விள்ளக் கருதினுல் அவ ளுக்கு என்ன நிகழக்கூடும் என்பதனை உம்மோடு சிறிதே ஆராய்வது எனது விருப்பம்; அது உமக்கும் விருப்பமான செயலாகுமோ? என்று தலைவனைத் தோழி வினவுகின்ருள். உயர்ந்தாரோடு உரையாடும் இந்தப் பண்பட்ட முறையினைப் பண்டைக்காலத் தமிழ்ப் பெண்மணிகளும் நன்கறிந்திருந்தமை இதனுற் புலணு கின்றது. இதனை இக்காலத்துத் தமிழ் மக்கள் நன்கு கடைப்பிடித்தல் நன்னடையை நல்குவதாகும்.
"கானங் கடத்தி ரெனக்கேட்பின் யானுென்
றுசாவு கோவைய! சிறிது” என்பது செய்யுள். இதன் அமைதியை நோக்குவோம்.
ஐய, ஒன்று உசாவு கேன், என்றேனும் ஒன்று சிறிது உசாவுகேன் என்றேனுஞ் செய்யுள் செய்யாது; “ஒன்று சாவுகோ? ஐய! சிறிது’ எனச் செய்யுள் செய்திருக்கும் நுட்பம் அறிந்துகொள்ளற்குரியது.
வேனிலின் வெம்மையாற் கானகம் ஈரமற்றுக் கொதிக்கின்றது. இக்காட்டு வழியிலகப்பட்ட யானை கள் காட்டைவிட்டு நாட்டை நாடுகின்றன. உடல் தளர்ந்து, நாவுலர்ந்து தண்ணிர் தேடி ஊர்க்கரை களையடைந்த யானைகளுக்கு அங்கும் நீரில்லை. கார ணம்? அவ்வூர்களில் நல்லோரில்லாமையாற் கொடுமை பெருக மழை சுருங்கிவிட்டது. கானல் பறக்கின்றது. நீர்போற் பரக்கின்ற அப்பேய்த்தேருக்கு இந்நாட்டுப் போலித் தலைவர்களை உவமை கூறல் தகும். கான
س--34----

நீரென்றெண்ணி மயங்கிய யானைகள் வெகுதூரம் அலைந்துவிட்டன. இந்த யானைகளை நினைக்கும்போது பொய்யர்தம் பொய்யை மெய்யென நம்பி ஏமாற்ற மடைந்து தவிக்கும் நல்லோரின் நினைவு நமக்கு வரு கின்றது. t *வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு
வானிங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கவாங் கானம்” என்பது செய்யுள். வழங்காத்தேர் - செலுத்தப்படாத தேர்; பேய்த்தேர். அது கானல்.
இக்கொடிய காட்டு வழியிலே செல்லுதற்கு நீர் மனங்கொண்டு வில்லின் வலிய நாண் கயிற்றைக் கையாலே தடவுகின்றீர். இச்செயலால் உமது பிரிவுக் குறிப்பைத் தலைவி அறிந்துகொள்வாள். அறிந்தால் அவளது மறுவில்லாத மதிவட்ட முகத்திற் பசப்புப் பரக்குமே! இன்னும், நீர், தொடுத்தற்கேற்ற அம்பு களைத் தெரிகின்றீர். இதனல் அவளின் மையுண்ட கண்கள் மழையிலகப்பட்ட நீலமலர்கள் நீரைச் சொரி வதுபோலக் கண்ணிர் சொரியுமே! அன்றியும், சக்க ராயுதத்தின் வாயைத் துகள் போகத் துடைக்கின்றீர். இதைக்கண்டால் அவளுடைய கைவளையல்கள் உதிர்ந்து விழுங் கோடற் பூக்களைப்போலக் கழன்று விழுமே! இவற்றுக்குப் பரிகாரம் உம்மையன்றி வேறுண்டோ? எனத் தோழி கூறுகின்ருள். தலைவியின் முகத்திற் பசப்புப் பரத்தலுக்கு மறுவில்லாததொரு புதுமதியின் மீது மேகம்பரத்தலையும், மையுண்ட கண்கள் நீர் சொரிவதற்கு மழையில கப்பட்ட நீலமலர்கள் நீரைச் சொரிதலையும், வளையல்கள் கழன்று விழுவதற்குக் கோடற் பூக்கள் உதிர்ந்துவிழுவதையும் உவமை கூறிய நயம் அறிந்து இன்புறற்குரியது.
இங்கே குறிப்பாகக் கொள்ளுதற்குரிய செய்தி யொன்றுளது. வில்லின் நாணைத் தடவுதலும், அம்பு தெரிதலும், "திகிரியம் படையைத் துகளறத் துடைத் தலுமாகிய செயல்கள் பண்டைத் தமிழகத்திலே பொதுமக்களும் படைக்கலப் பயிற்சிபெற்றுத் தற்பாது காப்புக்கும், நாட்டுப் பாதுகாப்புக்கும் தகுதி பெற் றிருந்தார்கள் என்பதை விளக்கி நிற்கின்றன. நமது பழைய நிலையைப் பற்றுவோம்.
--35حسی

Page 27
பிரிவு காரணமாகத் தலைவியடையும் நோய் படிப்படியாக வளர்வதை இச்செய்யுள் விளக்குவதை யும் இங்கே நோக்குவோம். முன்பு பசலையுண்டாக, அதையடுத்துக் கண்ணிர் சொரிந்து, அதன் பின்பு மெலிவு பிறப்பதைக் கூறி இந்நோய்களைப் பரிகரியாது விடின் தலைவி இறந்துபடுவாள் என்னும் பொருளை இறுதியில் வலியுறுத்துகின்றது. பசலையென்பது பீர் எனவும் வழங்கும். பீர் - பீர்க்கம் பூ இங்கே பீர்க்கம் பூவின் நிறத்தைக் குறிக்கும். முகம் வெளுறிப் போவ தற்கு இது உவமையாக வந்தது.
"இன்னுயிர் தருதலு மாற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே."
இங்கே ஒரு குறிப்புத் தோன்றுகின்றது. நீர் இழக்கும் பொருள் இன்னுயிர். அது உமக்கு எளிதா கக் கிடைத்த பொருள். திருவருளால் இயல்பாகப் பெற்ற பொருள். எளிதாகக் கிடைத்த பொருளின் அருமையை உலகம் அறிந்துகொள்வதில்லை. இருந்த இடத்திலேயே எளிதாகக் கிடைத்த இனிய பொருளைக் கைவிட்டுத் தூரமான அரிய வழியிற் சென்று முயன்று தேடும் பொருளின்மீது ஆசைகொண்டீர். கையிற் கிடைத்த உயர்ந்த பொருளையிழந்துவிட்டுத் தூரத்தே யுள்ள இழிந்த பொருளை விரும்புவாரும் உளரோ என் னும் பொருளும் தொனிக்குமாறு செய்யுள் அமைந்து நிற்கின்றது.
)3 ۔

பாலைக்கலி:
செய்யுள் (7)
பொருள் தேடற்குப் பிரியக் கருதிய தலைவன் சொல்லாதும் பிரிதற்குரியன் சொல்லியும் பிரிதற் குரியன். சொல்லாது பிரிதல்பற்றி நிகழுஞ் செய்தி களைக் கூறுகின்றது இச்செய்யுள். தலைவன் பிரியக் கருதியதைக் குறிப்பாலறிந்துகொண்ட தோழி அவனை நோக்கிக் கூறியதாக அமைந்துள்ள இச்செய்யுள் உவமை நயம் வாய்ந்தது. அரசியல், அமைச்சியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பாலை நில நிகழ்ச்சிகளுக்கு உவமையாகப் பொருத்திக் காட்டுகின்ற அழகினை முதலில் நோக்குவோம்.
காலமோ முதுவேனில். வெங்கதிர் வேந்தன் பொங்கியெழுந்து சுடுகின்ற செங்கதிர்களைப் பரப்பிப் பாலை நிலத்தை ஆட்சிசெய்து நிற்கின்றன். இதனுலே நிலம் வெந்து பாழ்பட்டுக் கிடக்கின்றது. மலைகள் வெந்து பிளந்து வழிச் செல்வாரைத் தடுக்கின்றன. இதை மனக்கண்ணுல் நோக்கிய புலவருக்கு ஒரவாரஞ் சொல்லுகின்ற அமைச்சரின் சொற்கேட்டு நாட்டுக்குக் கேடு சூழ்கின்ற அரசனது கொடுங்கோலாட்சி நினை வுக்கு வருகின்றது. நல்லதோர் உவமை காண்கின்றர். நடுவு நிலையையிழந்த அமைச்சனையும், அவன் சொற் கேட்கும் அரசனையும் திருத்தும் வண்ணம்,
“நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடி தோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினந் தெறுதலின்" எனச் செய்யுள் பிறக்கின்றது. இது அறிவால் மாத் திரம் பிறந்ததன்று. உணர்ச்சிவயத்தாற் பிறந்த உண் மைக் கவி. புலவன் அரசர்களையும் உண்டாக்கவல்ல வன், இடித்துக்கூறும் உரிமையுமுள்ளவன்.
س-37--

Page 28
கொடுங்கோல் மன்னனது நாடுபோன்ற வெப் பம் மிகுந்த காட்டுவழியிலே, தாகத்தால் வாடிய யானைகள் மதம் புலர்ந்து, நாவுலர்ந்து சோர்ந்து இரு முன்னங்கால்களையும் மடக்கிக்கொண்டு, துதிக்கையை வேகா வண்ணம் மேலே உயர்த்திக், கொம்புகளை நிலத்தி லூன்றியபடியே வீழ்ந்துகிடக்கின்றன. இதைக் கண்ட புலவருக்கு, வேளாண்மைச் செய்கை நினைவுக்கு வரு கின்றது. மழையையெதிர்பார்த்திருந்த உழவர்கள், காலம் வந்தும் மழை வராமையால் வருந்தியவர்கள் காலங் கழிந்துவிடுமேயென்றெண்ணிக் கலப்பை கொண்டு கழனியுட் புகுகின்ருர்கள். எருதுகளைப் பூட்டி ஏரைச் செலுத்திப் பார்க்கன் ருர்கள். கலப்பைக் கொழு ஈரமற்ற நிலத்திலே ஏறுகின்றதில்லை. உழவன் வருந்து கின்றன். நிலத்திலே கலப்பை பிடியாத நிகழ்ச்சியை யானைகள் தளர்ந்து நிலத்தே கிடக்கின்ற பரிதாப நிகழ்ச்சிக்கு உவமையாக்குகின்ருர்,
*உறலுறு கமழ்கடாத் தொல்கிய வெழில்வேழம்
வறனுழு நாஞ்சில் போல் மருப்பூன்றி நிலஞ்சேர" என்று செய்யுள் பிறக்கின்றது. கடாம்-மதம். ஒல்குதல்தளர்தல், கெடுதல். வறன்-ஈரமற்ற நிலம். நாஞ்சில்கலப்பை. வெந்த நிலத்திலுான்றிய வேழத்தின் மருப் புக்கு ஈரமற்ற நிலத்தையுழுகின்ற கலப்பை உவமை கூறப்பட்டுள்ளது.
இத்தகைய காட்டுவழியே சென்று பொருளீட் டக் கருதுகின்றீர். இது பொருளன்று நிலையற்றது; நிலையில்லாத இப்பொருளையும் அறிவுடையோர் விரும்பு வாரோ? வரும்பார். இவ்வாறு பொருளது நிலையாமை கூறப்புகுந்த புலவர் மூன்று அழகிய உவமைகளால் அதை விளக்கும் திறம் மகிழ்ச்சிக்குரியதாகும். தானக் கோலால் வாசிக்கும்போது நரம்பறுந்த யாழும், செல் வரை இடையிலே விட்டு மாறுகின்ற திருமகளும், இரக்கமில்லாத அரசனும் நிலையில்லாத பொருளுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ள அமைதியை நோக்கு வோம்.
வாரியும், வடித்தும், உந்தியும் வாசிக்கின்ற யாழானது வாசிப்போனையுங் கேட்போரையும் இனிய இன்பத்தில் வசப்படுத்திக்கொண்டிருக்கையில், இடை
--38-سے

யிலுள்ள நரம்பு அறுந்துபோக, அவ்யாழே அதே நேரத் தில் அவர்களைத் துன்பத்திலாழ்த் திவிடுகின்ற நிகழ்ச்சி யைப் புலவர் அனுபவத்தில் அறிந்திருந்தார். அது அவரது மனத்தகத்தே பதிந்துகிடந்தது. இங்கே பொருள்பற்றிச் செய்யுள் செய்யும் மனநிலை அவருக்கு வந்தெய்தியபோது யாழனுந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகின்றது. புலமையுள்ளம் இனியதோர் உவமையை அமைத்துக்கொண்டு பின்வருமாறு பாடுகின்றது.
'விழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல்
ஏழுந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பறு உம் யாழினும் நிலையில்லாப் பொருளையும் நச்சுபவோ?
இடையில் நின்ற நரம்பறுதலால் யாழிசை இடையீடுபட அதனுல் வந்த துன்பம் எவ்வளவு தூரம் புலமையுள்ளத்தை வாட்டிவிட்டதென்பதையும், அவ் வாட்டம் எவ்வாறு உவமையாக உருமாறிப் பொரு ளது நிலையாமையையுணர்த்தி நிற்கின்றதென்பதை யும் நோக்க நோக்க நமது நோக்கம் ஓர் எல்லை காண் கின்றதில்லை. வீழுநர்-விரும்புவோர். இறைச்சி-நேயம், இனிமை.
மக்கள் பலர் ஒரளவு நல்ல நிலையிலிருப்பதும், திருமகளின் இனிய நோக்கால் அவர்களுட் சிலர் பெருஞ் செல்வராதலும், பின்னர் அவர்களுட் சிலர் வறுமை யடைந்து, செல்வராதற்கு முன்பிருந்த நிலையையும் இழந்துவிடுவதும் உலகத்தே என்றும் நிகழ்ந்துவரும் நிகழ்ச்சிகளாகும். இந்நிகழ்ச்சிகளைப் பலகால் நாம் கண்டிருக்கின்ருேம். நமக்கு உணர்ச்சி பிறப்பதில்லை. புலவன் இதைக்கண்டதும் அவனுக்குச் செய்யுள் கிளம்புகின்றது.
*மரீஇத்தாம் கொண்டாரைக் கொண்டக்காற் ப்ோலாது
பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறும் திருவினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ??
ん
செல்வரைப் பிரியும்போது செல்வராக முன்பு அவரிடத்து உள்ளதையுங் கெடுத்து மனம் மாறுகின்ற திருமகள் என்று வருந்துகின்ற புலமையுள்ளம் அத்திரு மகளினும் பார்க்க நிலையில்லாத செல்வத்தையும் அறி
- 20--

Page 29
வுடையார் விரும்புவாரோ கூறும் பொருளிலே திரு மகளுக்கும் செல்வத்துக்குமுள்ள தொடர்பு நன்கு சாதிக்கப்பட்டுள்ளது. புறம்மாறுதல் - முகத்தை மறு பக்கம் திருப்புதல்.
பண்டைக் காலத்தே சில மன்னர்கள் தமது சொந்தநன்மைக்காக மதி மந்திரிகளைக் கொலை செய்யுஞ் சம்பவங்களும் நிகழ்ந்திருத்தல் வேண்டும். மதி மந்திரி களை யோசனையின்றி உயிர்வாங்கும் அரசன்தானும் நிலைபெருன்; பொதுமக்களால் உயிரிழப்பான் என்னும் தமது அஞ்சாத நெஞ்சோடுகூடிய கொள்கையையும் இங்கே புலவர் நன்கு வலியுறுத்துகின்றர்.
*புரைதவப் பயனுேக்கார் தம்மாக்க முயல்வாரை
வரைவின்றிச் செறும் பொழுதிற் கண்ணுேடாதுயிர்வெளவும் அரைசினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ?"
இதனுலே, தலைவியை விட்டுச் சென்று பொருள் தேடக் கருதுதல் தக்கதன்று. மன்னவன் காப்ப, மனே யகத்தே வைகி வருவிருந்தோம்பி மகிழ்ந்து வாழ்வதே பொருளாகும். அன்பின் வழிவந்த அதுவே நிலைபெற்ற பொருளாகும். பெருமானே! போக்கொழிகவெனத் தலைவி வேண்டுகின்றள் விருந்தோம்பலாகிய நல்ல றம் இங்கே நன்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கண் ணுேட்டம் இரக்கம்.
*மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பித்
தன்னகர் விழையக் கூடின் இன்னுறல் வியன்மார்ப அதுமனும் பொருளே."
~~~~ 40--

பாலைக்கலி :
செய்யுள் (8)
பினமொத்த காதலரிருவர் தம்முட் கூடுங் கூட் டம் முன்பு அரும்புபோற் சிலரறிய வெளிப்பட்டுப் பின்பு அலர்போற்பலரறிய வெளிப்படும் நிலையினை யடையும். இந்நிலையில் மணம் நிகழ்தல் மரபாகும். மண நிகழ்ச்சிக்கு மாருகக் காதல் இடையீடு படுவது முண்டு. இரு முது குர வரும் தம்மகட்கு வேற்று மணம் பேசுதலும்; அவளைத் தலைவன் தலைப் பெய்யா வண்ணம் இல்லகத்தே வைத்துப் பாதுகாத்தலும் காதலிடையீட்டின் காரணங்களாகும். இந்நிலைமை எய்துமாயின் தலைமகன் தலைமகளை உடன் கொண்டு செல்வதற்கு விரும்புவான்; தலைமகளும் உடன்படு வாள்; தோழியும் இதற்கு உறுதுணையாவாள். இது சுரம்போக்கெனவும் வழங்கும். *小
“தாய்துயி லறிந்து மற்றைத் தமர்துயி லறிந்து துஞ்சா நாய்துயி லறிந்து மற்றை நமர்துயி லறிந்து வெய்ய பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுததனிற் பாங்கி வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுவந் துய்த்தாள்’
என்னும் கந்தபுராணச் செய்யுளும் இம் மரபுபற்றியதே.
நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய தலைவி யையுந் தலைவனையுந் தேடிச் செல்லும் உரிமை செவி லித் தாய்க்கும் உரியதாகும். தேடிச் செல்லுஞ் செவிலி இடைச் சுரத்தே எதிர்ப்பட்ட முக்கோற் பகவரைக் கண்டு, நிகழ்ந்தது சொல்லி வினவுவதாக இச்செய் யுள் அமைந்துள்ளது. முக்கோற் பகவராவார் அரன் அரி அயன் என்னும் மூவருமொருவராயுள்ளவரே கடவுள் என்னும் உண்மையினைக் குறிக்கின்ற மூன்று கோல்களை ஒன்ருகத் திரித்து அமைத்த தண்டத்தைக் கையிலேந்தியவர்கள். இவர்கள் திரிதண்ட சந்நியாசி கள் எனவும் வழங்கப்பெறுவர். இச்செய்யுளிலே இம் முக்கோற் பகவரது இயல்பு நன்கு கூறப்பட்டுள்ளது.
----41-سس

Page 30
'எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடைநீழல்
உறித் தாழ்ந்த காகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறேரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணிர்.”
என்பது செய்யுள். செங்கதிரின் வெம்மையைத் தாங் குங் குடையும், உறியிலே தங்குங் கமண்டலமும், முக் கோ லும் முனிவர்களுக்குரிய பொருள்களாகும். குடையை விரித்துத் தோளிலே சார்த்திப் பிடித்துக் கொண்டு செல்வர். சுவல்-தோள். வேருேரா நெஞ் சம்- மூவரையும் ஒருவராக வல்லது வேருக நினையாத நெஞ்சம். குறிப்பேவல் செய்தல் - ஐம்பொறிகளும் மனத்துக்குக் கட்டுப்பட்டு நிற்றல். குறிப்பு-ஐம்பொறி; ஆகுபெயர். பொறிகள் மனத்தின் வழிநிற்ப, மனம் புத்திக்கு உறுதுணையாகப், புத்தி ஆன்ம விடுதலைக்கு வழிகாட்ட வாழ்வோராதலின்,
“குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடையந்தனர்"
என்ருர், கொளை-கோட்பாடு, நடை-ஒழுக்கம். மாலைஇயல்பு.
இச்செய்யுளடிகளைப் படிக்கும்போது பரத்து வாச முனிவரின் படிவமும் நடையும் நமது நினைவுக்கு வருகின்றன. V
*குடையினன்; நிமிர்கோலன்; குண்டிகையினன்; மூரிச்
சரிையினன்; உரிமானின் சருமன்; நன்மரநாரின் உடையினன்; மயிர்நாலும் உருவினன்; நெறிபேணும் நடையினன்; மறைநாலும் நடநவில் தருநாவான்.” என்பது கம்பராமாயணம், நாலுதல் - தொங்குதல். நால்வாய் என்பது யானையின் கீழ் வாயைக் குறிப் பதும் இக்கருத்துப்பற்றியே.
செவிலி கூறுகின்ருள் வெப்பமாகிய காட்டு வழியே செல்வதை நீர் இயல்பாகவுடையீர்; அந்த ணிர்! உம்மை வினவுகின்றேன்; நீர் செல்லும் இடைச் சுரத்தினிடத்தே என் மகளொருத்தியும், வேருெருத் தியின் மகனெருவனும், பிறரறியாமற் தம்முளே கூடிய கூட்டமுடையோர்; இப்பொழுது பிறரறியக்கூடிச் சென்றுவிட்டார்கள்; அன்னரிருவரையுங் காணுதிருந்
-42

தீரோ? பெருமானே! என்று வினவினுள். காணுதிருந் தீரோ என்பது கட்டாயம் கண்டிருப்பீர் என்னும் பொருளுடையது. W
காணுதிருந்தே மல்லேம்; கண்டு அவ்வாறு செல்லுதல் அறமென்று கருதி விட்டுவந்தோம் என் னும் கருத்தினைக்
*காணே மல்லேம்; கண்டனஞ் சுரத்திடை”
எனச் சுருக்கமாகக் கூறிய அழகு நோக்குதற்குரியது. சுருக்கவிடையை மேலே விரித்துக்கூறுதற்கு எடுத் தாண்ட உவமைகள் கற்பனை நயம் கனிந்து சிந் தைக்கு நல்விருந்தாகின்றன. காதலின் வழிவந்த கற்பு நெறியின் மாண்பையும் உணர்த்துகின்றன. நறிய சந்தன மரங்கள் மலையிலே பிறந்தாலும், அவற்ருல் அம்மலைக்கு யாது பயன்? அரைத்துப் பூசிக்கொள் வார்க்கன்ருே அது பயணுவது?
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்?"
உயர்ந்த வெண்முத்தங்கள் கடலகத்தே பிறப் பினும் அக்கடலுக்கு அவற்ருல் யாது பயன்? அவற்றை மாலையாகத் தொடுத்து அணிவார்க்கன்ருே பயணுவது?
*சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்?”
ஏழிசைகளும் யாழிடத்தே பிறக்குமாயினும் அந்த யாழுக்கு அவ்விசைகளால் யாது பயன்? பாடி யுங் கேட்டும் இன்புறுவார்க்கன்ருே பயணுவது?
‘ஏழ் புணரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்?”
உமது மகள் பயன்படும் பருவத்துப் பயன்பட வேண்டிய காதலனுக்குப் பயன்பட்டாள். நறுஞ் சந் தனம் அரைத்துப் பூசிக்கொள்வார்க்கும், வெண்தர ளம் தொடுத்து அணிந்துகொள்வார்க்கும், யாழோசை
--43 سے

Page 31
பாடியுங் கேட்டும் மகிழ்ச்சிகொள்வார்க்கும் பயன் பட்டு இன்பந் தருதல்போல உம் மகளும் தக்கோனை வழிபட்டுப் பயன்பட்டாள். இது கற்பு நெறியாகும். இவ்வாறு அன்பின் வழியே வந்த கற்பு நெறியே சிறந்த இல்லறமாகும். இதுவே அறங்களுள் முதன்மை யான அறம். நல்லறத்தின் வழிச்சென்ற நங்கையை நலியாதீர். அவளே நயந்துகொள்ளுமின் என்று முக் கோற்பகவர் செவிலியைச் சாந்தி செய்தமையை இச்செய்யுள் விளக்கி நிற்கின்ற செவ்வி பழந்தமிழ்க் ஆாதலியல்பின் நுட்பத்தை நன்கு புலப்படுத்துகின்றது.
*சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் - அறந்தலை
பிரியா வாறுமற்றதுவே.”
---- 44ه س

பாலைக்கலி : செய்யுள் (9)
s
*செலவொழிந் தனனுற் செறிகநின் வளைே
பிரிவின் வெம்மையை யுணர்த்தக் கருதிய புல வர் பெருந்தகையார் பாலை நிலக் காட்சிகளைத் தமது அகக் கண்ணுல் நோக்குகின்ருர், நோக்கும்போது, வறிய இளைஞர்களின் நிலையும், தீமை செய்து கெடு கின்ற தீயோரின் நிலையும், கொடுங்கோல் வேந்தனற் பாழ்பட்டுப்போகின்ற நாட்டின் பரிதாப நிலையும் அவரது உள்ளத்தே தோன்றி நிற்கின்றன. உணர்ச்சி யில் ஆழ்ந்துவிடுகின்றர். பெரிது பெரிது; உணர்ச்சி பெரிது! பணிவும் இன்சொல்லுமுடைய சான்றேர்க் குத் துணிவும், ஓரளவு அமைதியின்மையும் பிறக் கின்றன. கருணை காரணமாகப் புலவர்களுக்கு அமைதி யின்மையும் உண்டாதல் இயல்பு. நாட்டு இளைஞரது வறுமை வாழ்க்கையையும், தீயன செய்து கெடுவோ ரின் தீமைக் குணத்தையும், மன்னனது கொடுங்கோ லாட்சியையும் திருத்தியமைக்கும் சீர்திருத்தவாதியாக் மாறுகின்றர். உணர்ச்சியும், உள்ள நெகிழ்ச்சியும், சீரிய நோக்கும், நேரிய போக்கும் மக்களுக்கு உண்டர் கும் வண்ணம் பாடுகின்றார். புலவருள்ளத்தில் நின் றும் புறப்படும் பாலைநில வருணனை வாடாத அழகு வாய்ந்தது. வறியவனது இளமையையும், கெட்ட குடியையும், கோடிய கோலையும், பட்டமரத்தில் வைத் துப் பாடிய பாட்டோவியத்தை நோக்குவோம். வாடிய மரத்தையும் வெந்த நிலத்தையும், வாடாத தீந்தமிழ்த் தொடையால் வனப்புறப் பாடிய வண்கவியானது படிக்குந்தோறும் மெய்ப்பாட்டைப் பிறப்பித்து நிற் கின்றது.
வெயிலின் வெம்மையால் ஈரமற்று வெந்துபோன நிலத்திலுள்ள மரங்களெல்லாம், முன்பு இளந்தளிர் கள் வதங்கிப் பின்பு கொம்பர்கள் வாடி நிற்கின்றன. வெயிலால் வருந்திச் சென்ற மக்கள் அங்கே நிழ லுக்கு ஒதுங்குகின்றனர். இலையுதிர்த்து வாடி நின்ற மரங்கள் தம்மைச் சேர்ந்தார்க்கு நிழல் கொடாது
س-45 س

Page 32
நிற்கின்றன. பொங்கியெழுந்த செங்கதிர் வேந்தனது
கொடுமைமிக்க வெயில் முறுகி வீழ்ந்து மேலும் மரங்
களைச் சுடுகின்றது. இதனல், அப மரங்கள் சினையே
யன்றி வேரும் வெந்துபட்டுப்போய்விட்டன. பாலை
நிலத்தே பட்ட மரங்கள் பட்டடாடுகள் இவை. இனி,
உலறிய தலைகளுடைய அம்மரங்களே வருணித்துப் பாடிய பாட்டையும் நோக்குவோம்.
*வறியவ ணிளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
வேரொடு மரம் வெம்ப விரிகதிர் தெறுதலின்" என்பது செய்யுள். வாடிய சினைகளுக்கு வறியனது இளமையையும், மர ங் கள் சேர்ந்தார்க்கு நிழல் கொடாது நிற்கும் நிலைமைக்கு மனஞ்சிறியவனுடைய செல்வத்தையும், வேரோடு பட்டுநிற்கும் மரங்களுக்கு, உலகத்தில் ஒழுக்கத்தைக் கைவிட்டுத் தீமை செய் கின்ற கீழ்மகன் தனது சுற்றத்தோடும் கெட்டழி வதையும் உவமை கூறிய புலவரை மக்கள் கவியென்று கூறுதல் மிகவும் பொருத்தமுடையதாகும். சங்கச் சான்ருேரின் கவிகளும் மக்கள் கவிகளேயாம். இகந்துஒழுக்கந்தவறி. தெறுதல்-சுடுதல்.
உலறிய தலைகளுடன் நிற்கும் உயர்ந்த மரங் களையுடைய பாழ்பட்ட காட்டை மனக் கண்ணுல் நோக்கிய புலவருக்கு அரசியல் நிகழ்ச்சிகள் சில நினை வுக்கு வருகின்றன. நல்ல செழிப்புள்ளதோர் நாடு; நாட்டு மந்திரிமாரோ சுயநலப் புலிகள் குடிமக்களின் உயர் வினை அடியோடு நினையாதவர்கள்; கொலைக்கு அஞ்சாதவர்கள்; அரசனுக்குத் துர்ப்புத்தி சொல் வதிலே நிபுணர்கள்; குடிகள் மீது முறைதவறி வரி விதித்து வரவு செலவுத் திட்டத்தைச் சமன் செய் யும் அவிவேகிகள், விதித்த வரியை வருத்தி வாங்கும் வன்கண்ணர்கள். நெறியல்லா நெறிகூறும் இத்துன் மந்திரிகளின் கெடுமொழிகளின் வசப்பட்ட அரசனது கொடுங்கோலாட்சியைத் தாங்கமுடியாது குடிகள் கூக் குரலிடுகின்றர்கள். அவனது கொடுமையால் நாடு செழிப்பற்றுப் பாழ்பட்டுக்கிடக்கின்றது. இத்தகைய கொடுங்கோலாட்சியிலகப்பட்டுப் பாழ்பட்டுக்கிடக்
--46ے

கின்ற நாட்டினைப் பாழ்பட்ட காட்டுக்கு உவமை கூறுகின்ருர் புலவர்.
“அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடியவ னிழல் உல குபோ லுலறிய உயர்மர வெஞ்சுரம்" என மனம் வருந்திப் பாடுகின்ற புலவர் அமைச்சர்க் கும், அரசர்க்கும் இடித்துரைக்குந் திறமும், குடிகள் மீது கொண்டுள்ள அருள் நோக்கும் சங்கச் சான் ருேரின் இயல்பை நன்கு விளக்குகின்றன.
இங்கே வேருெரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வரு கின்றது. ஒளவைப் பிராட்டியார் பாலையை வருணிக் கும் ஒரு சந்தர்ப்பம். பாலையின் கொதிப்பைக் கண்ட ஒளவையார் வறியவனது இளமையையும் நோக்கு கின்ருர். அவருக்கும் வயிறு கொதிக்கிறது. வறிய வனது இளமை பாலைநிலத்தின் கொதிப்பைக் காட்டி லுங் கடுமையாகக் கொதிப்பதை உணர்ந்த அவரது உள்ளத்தில் நின்றும் ஓர் உணர்ச்சிக் கவி வெள்ளம் போற் பாய்கின்றது. ஒப்புமைக் கூட்ட உவமையாக வமைந்துள்ள
“கற்றர் பிரிவும் கல்லாதாரிணக்கமும் கைப்பொருளொன்
றற்ற ரிளமையும் போலக் கொதிக்கு மருஞ்சுரமே”
என்னும் வருணனையும் இங்கே ஒப்புநோக்கி இன்புறற் குரியது.
இத்தன்மையுடைய காட்டு வழியின்கண்ணே தலைவன் பொருள் தேடச் செல்லுங் கருத்தினணுய் அதனைத் தோழிக்கு உணர்த்துகின்றன். அது கேட்ட தோழி, நான் சென்று இதனைத் தலைவிக்குக் கூறுவே ணுயின் அவள் உயிர் தரித்திருப்பாளோ? நீர் போக் கொழிதல் வேண்டுமெனக் குறையிரந்து நிற்கின்ருள். தலைவன் அருள் சேர்ந்த நெஞ்சினணுதலால் அவளின் வேண்டுகோளுக்கு இணங்கித் தனது எண்ணத்தைக் கைவிடலானன். இதனைத் தோழி சென்று தலைவிக்கு உரைக்கும் முறையினைச் சற்றே நோக்குவோம்.
தோழி தலைவிக்குக் கூறுகின்றள்: எம்பெரு மாட்டியே கேட்க, பொருளின் பொருட்டு நின்னைப்
-47

Page 33
பிரிந்து செல்லக் கருதிய தலைவருக்கு, முதலில் அவர் செல்லுங் காட்டின் கடுமை கூறி விலக்கினேன்; என் சொற் கேட்டாரில்லை. பின்பு, அவரது பிரிவின்கண் எம்பெருமாட்டிக்குக் கையாறு நிகழுமெனக் குறிப் பால் அவர்க்கு வரும் இழிவு கூறி விலக்கினேன். அஃது எவ்வாறெனின், நீர் பிரிவீரென்பதை எம் பெருமாட்டி அறிந்தால், நெஞ்சு கலங்கி, அழகொளி மங்கி வாழ்வா ளொருத்தியோ? நீர் நிறைந்த கண் களுடன் இமையோடு இமை கூடாமற் கிடந்து நெஞ்சு புண்ணுகி நொந்து ஆற்றியிருப்பா ளொருத்தியோ? கண்டார் மருளும் வண்ணம் அடியோடு அழகு கெட்டு மயக்கங்கொண்டு உயிர்தாங்கியிருப்பாளொருத்தியோ? நீர் பிரிய அவளது உயிரும் பிரியுமெனக் கூறினேன்.
*இடைகொண்டு பொருள்வயின் இறத்திநீ யெனக் கேட்பின்
உடைபுநெஞ் சுகவாங்கே ஒளியோடற் பாள்மன்ஞே?” *முனிவின்றி முயல்பொருட் கிறத்திநீ யெனக் கேட்பின்
பணியகண் படலொல்லா படர்கூர்கிற் பாள்மன்ணுே?” *பொருள் நோக்கிப் பிரிந்துநீ போகுதி யெனக் கேட்பின் மருள் நோக்க மடிந்தாங்கே மயல்கூர்கிற் பாள் மன்ணுே?” என்று இவ்வாறு யான் கூறக் கேட்ட தலைவர் பிரிவி ஞலே தமக்கு வரும் இழிவனையும், காதலின் உயர் வி ையும் நினைந்து, தாம் பிரிந்து செல்லும் எண்ணத் தைக் கைவிட்டார். நினது வளையல்கள் கழலாதிருப் பனவாக. இறத்திபோவாய். ஒளியோடற்பாள் மன்னேஒளி கெடுவாளோ? உயிர்கெடுவாள்.
"வினை வெஃகி நீசெலின் விடுமிவ ளுயிரெனப் புனையிழாய் நின்னிலை யான் கூறப் பையென நிலவுவேல் நெடுந்தகை நீளிடைச் செலவொழிந் தனனுற் செறிகநின் வளையே.*
தலைவனது பிரிவு காரணமாகத் தலைவிக்கு மெலி வும் நலிவும் பிறக்கும். அம்மெலிவைப் புலப்படுத்து தற்குக் கைவளையல்கள் கழன்று விழுமென்று கூறு தல் கவி மரபு. ۔۔۔۔۔
இச்செய்யுளில் வறியவனது இ ள  ைம மிகக் கொடிது. எல்லா இன்பங்களையும் அனுபவித்தற்குரிய

இளமைச் செல்வி வறுமையால் வாடக் காண்பது விசாலமான மனமுடையோர்க்கு மிக மிகத் துன் பந் தருவதாகும். சிறிய மனமுள்ள கயவனுக்கு இது இன் பந்தருங் காட்சியாகும். அவனது செல்வம் நன் யில்லாத செல்வம். அச்செல்வம் வறியவனது இள மைக்கு ஒரு சிறிதும் உதவாது. ஒழுக்கங் கெட்டவன் தீமை செய்பவன் விரைந்து கெடுவான். அவனது குடி யுங் கெடும் என வரும் பொருள்கள் சமூக சீர்திருத் தம்பற்றி யெழுந்தனவாம். துன் மந்திரிகளின் வழி நின்று குடிகளை வருத்தி வரி வாங்கும் நிலைமை அக் காலத்து வழக்கிலிருந்தமையால் அவ்வழக்கத்தை மிக வும் வன்மையாகக் கண்டிக்கின்ற புலவர் பெருந்தகை யார் அரசியல் சீர்திருத்தமும் செய்பவராகின்றர். காதல் வாழ்க்கையின் மாண்புபோன்று அரசியல் வாழ்வும், சமூக வாழ்வும் மாண் புடையனவாதல் வேண்டுமென்னும் உயர் குறிக்கோளும் இச்செய்யு ளகத்தே பொதிந்து கிடக்கன்றது.
سسس 49 --

Page 34
பாலைக்கலி :
செய்யுள் (10)
சிங்க காலத்துச் செந்தமிழ் நாட்டின்கண் ணுள்ளதோர் பேரூர் நமது மனக்கண் முன்னே காட்சி யளிக்கின்றது. கண்ணுக்கினிய மனைகள் பலவற்றை அங்கே காண்கின்ருேம். அவற்றுள்ளே நமது உள்ளத் தைக் கொள்ளை கொண்டு திகழ்கின்றது, ஒரு மனை. அதன் முற்றத்தின்கண்ணே பூங்கொடிப் பந்தர்கள் பூத்துப் பொலிந்து மிளிர்வதால் அம்மனை புதியதோர் அழகினைப் பெற்று விளங்குகின்றது. ஆயினும், அங் குள்ள முல்லைப் பூம்பந்தர்களின் கீழே பறிப்பாரின்மை யாற் சொரிந்து பரந்துகிடக்கும் மலர்களைக் காணும் போது நமக்குப் புதியதோர் ஆராய்ச்சி பிறக்கின்றது. இம்மண மலர்கள் பயன்படாது வறுநிலத்தே சிதறிக் கிடப்பதற்குக் காரணம் யாதோவென நமதுள்ளம்
வினவுகின்றது.
அந்த மாளிகையின் அந்தப்புரத்தில் மகளிர் இருவர் காணப்படுகின்றனர். இயற்கையழகுவாய்ந்த அம்மகளிரின் மேனியிலே அணிகலன்களைக் காணவில்லை. கோதி முடித்த கூந்தலிலே முல்லைப் பூங்கோதையு மில்லை. தமிழ்ப் பண்பாட்டின் வடிவம்போன்ற அம் மகளிர் தமக்குள்ளே தமிழிலேயே உரையாடுகின்றர் கள். உண்மையான தமிழ்ப் பாதுகாப்பாளர்கள் அவர் ó5GYT
தம்மை அலங்கரித்துக்கொள்ளாத அம்மகளிர் இருவரும் யாரோ? ஒருத்தி அவ்வில்லத்தின் தலைவி; மற்றவள் அவளின் உயிர்த் தோழி. இருவரும் உரை யாடும் அழகே அழகு. தமிழ்க் குரல்; தமிழோசை தமிழ்மொழி ஆகிய இம்மூன்றையும் அங்கே கேட் கின்ருேம்.
அன்பே வடிவான தனது தலைவனைப் பிரிந்த தமிழ்த் தலைவி தன்னை அலங்கரித்துக்கொள்வதில்லை; ஆடம்பரக் காட்சிகளின் பொருட்டு வெளியே செல்வது
ー50ー

மில்லை. பொருள் தேடச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றியிருக்கின்ருள். அதற்குரிய காரணததை அவள் தோழிக்குக் கூறுகின்ருள். அவளது முன்னுரை யிலே பழந்தமிழ் மக்களின் பொருளியற் கொள்கை நன்கு அமைந்துள்ளது. இக்கொள்கையினைத் தலைவி தோழிக்குச் செப்புவதுபோலச் செய்யுள் அமைந்து செல்கின்றது. பொருள் அறத்தையுந்தரும்; பொருளை யுந்தரும் இன்பத்தையுந்தரும். இவ்வாறு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையுந் தருகின்ற பொருளியற் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ் கின்ற நமது காதலர் வேற்று நாட்டுக்குப் பொருள் தேட நம்மைப் பிரிந்து சென்றிருக்கின்ருர், பிறர்மீது அவர் கொண்டுள்ள அருள் நம்மீது கொண்டுள்ள அன்பினின்றும் அவரைச் சற்றே நெகிழச் செய்து விட்டது. ஆயினும், காதலர் காலம் நீட்டியார்; விரை வில் வந்துவிடுவார். இவ்வாறு எனது மனம் துணிவு கொள்வதற்குக் காரணமுண்டு. அவற்றைக் கேள்.
*அரிதாய அற னெய்தி அருளியோர்க் களித்தலும், பெரிதாய பகை வென்று பேணுரைத் தெறுதலும், புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி."
என்பது செய்யுள். அரிதாய - பெறுதற்கரிய, அருளி யோர் - அருள் செய்தோர்; அந்தணர், முனிவர் முதலி யோர். பேணுர் பகைவர். புரிவு - இருவர்க்கும் மனம் பொருந்துதல். வலிப்பல் - மனந் துணிவேன்.
அந்தணர், முனிவர் முதலியோர் அறம் நிரம் பிய அருளொழுக்கம் வாய்ந்தவர்கள். அவர்களின் அறங்களைப் பாதுகாத்தல் இல் வாழ்வார் கடன். பொருளின்றி இது கைகூடாது. தீய பகைவரை வென்று அவரது நாட்டைக் கைப்பற்றிச் செங்கோலாட்சியின் கீழ்ச் செழிக்கச் செய்வதற்கும் பொருள்வேண்டும். பொருளின்றிப் படையில்லை; படையின்றி நாடில்லை; நாடின்றிப் பெரும் பொருளில்லை; பொருளின்றி இன்ப மில்லை. இப்பொருளியற் பாகுபாடுகளெல்லாம் தமிழ் மக்களறிந்தனவே.
-51

Page 35
*பொன்னி ஞகும் பொருபடை; அப்படை
தன்னி ஞகும் தரணி, தரணியிற் பின்னை யாகும் பெரும் பொருள்; அப்பொருள் துன்னுங் காலைத் துன் ணுதன வில்லையே." என்னுஞ் சீவக சிந்தாமணிச் செய்யுளும் இங்கே நினைவுகூரத்தக்கது.
பொருளியலின் சிறப்பினைக் கூறிய தலைவி, தலை வன் பிரிந்து சென்ற காட்டினியல்புங் கூறுகின்ருள். தலைவன் தனக்குக் கூறியதுபோலத் தலைவி கூறுகின்ற காட்டினியல்பு தமிழ் நாட்டிலுள்ள வீட்டினியல்பை நமக்குக் காட்டுகின்றது. அங்கு வாழ்ந்த தமிழ்க் குடும் பத்தின் அன்பு வாழ்க்கையினை யானைக் கன்றுகளும், டெண் யானைகளும், ஆண் யானைகளும் சேர்ந்த ஒரு கூட்டத்தின் மீது வைத்துக் குறிப்பாக விளக்குகின் ருள். தலைவன் தன் மீது வைத்துள்ள அன்பின் பெருக் கினையும் வெளியிடுகின்ருள். -
என்னுயிர்த் தோழி, யான் கூறும் இதனைக் கேட் பாயாக. காதலர் தாம் பிரிந்து செல்லுகையில் அவர் செல்லுங் காட்டினியல்பினையுங் கூறிச் சென்ருர், அதனை அப்போது அறிந்திலேன். இப்போதுதான் அவர் கூறிய பொருள் எனக்கு விளங்குகின்றது. தாம் செல்லுங் காடுகள் அடி தாங்க முடியாத அளவுகடந்த வெம்மை யுடையன என்று கூறியவர், நெருப்புப்போற் கொதிக் கின்ற அக்காட்டு வழியில், அவர் முன்பொருகாற் கண்டதோர் உருக்கமான காட்சியையும் எனக்குச் சொல்லிச் சென்ருர். அவர் கூறியது: நீர் கிடையாத அவ்வரிய காட்டு வழியில் ஒருநாள் நான் செல்கை யிலே தாயும் தந்தையுமாகிய யானைகள் தங்கள் கன்று களுடன் வருவதைக் கண்டேன். தாகத்தால் நீர் தேடி வருகின்ற தாயுந் தந்தையும் அவ்வழியிலே ஒரு நீர் நிலையை அரிதாகக் கண்டன. சூரிய வெப்பத்தால் வற்றிச் சேறுபட்டுப்போன அந்நீர் நிலையில் அற்ப நீரே கிட்ந்தது. தாய் தந்தையர் அந்நீர் நிலையில் நீருண்ண இறங்குமுன்னர், நீர் விளையாட்டை விரும் பிய யானைக் கன்றுகள் அதில் இறங்கிவிட்டன. பாலுண்டு மதர்த்த அக்கன்றுகளுக்குத் தாய் தந்தை யரின் வருத்தந் தெரியாது. நமது நாட்டிற் பல குடும்
-52

பங்களிலே தமது தாய் த்ந்தையர் படும் இன்னல் இடுக்கண்களைப்பற்றியறியாத இளைஞர்களைப்போன்ற யானைக் கன்றுகள், தமது தாய் தந்தையர் நீருண்ண வேண்டுமேயென்னும் எண்ணஞ் சிறிதுமின்றித் தம் முடைய உடுக்கைப் பறைபோன்ற அடிகளால் அங் குள்ள அற்ப நீரையுங் கலக்கிவிட்டன. தாய் தந்தை யருக்குக் கன்றுகள் மீதுள்ள அன்பு ஒருபுறம்; தாகத் தாலுண்டாகுந் தளர்ச்சி மறுபுறம், தாகந் தாங்க முடியாத நிலையிலுள்ள பெண் யானையைத் தண்ணிர் பருகுமாறு ஆண் யானை சைகை காட்டப் பெண் யானையோ மறு சைகை செய்து ஆண் யானையை முன்னுாட்டப்பார்க்கின்றது. இரண்டுக்குந் தருமசங் கடம். தளர்ந்த நிலையிலுள்ள பெண் யானையை நீருண் ணப்பண்ணி உயிர்வாழச் செய்யும் முயற்சியிலே ஈற் றில் ஆண் யானை வெற்றிபெற்ற நிகழ்ச்சியால் என் னுள்ளம் தளிர்த்தது. தமிழ்ப் பண்பாடுள்ள இல்லங் களிலே கணவன் மனைவியர்களுக்கிடையில் நிகழும் அன் பொழுக்கத்தின் சிறப்பினை யானைகளின் மீது வைத்துத் தலைவன் எனக்குணர்த்திய நுட்பத்தை நான் நன்கு தெளிந்துகொண்டேன். இந்நிகழ்ச்சியைப் பின்வரும் செய்யுட் பகுதி சித்தரித்துக் காட்டுகின்றது.
*அடிதாங்கு மளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கணங்குழாய் காடென்றர்; அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முறைத்தனரே.”
கனங்குழாய் - திரண்ட காதணியையுடையாய். துடி - உடுக்கைப் பறை. கயந்தலை-யானைக்கன்று. பிடி-பெண் யானை, களிறு - ஆண் யானை.
தனது வினை முடித்தற்பொருட்டுத் தலைவி யைப் பிரிந்துசெல்லக் கருதிய தலைவன் இருவர்க்கும் அன்பு பெருகுதற்குக் காரணமான சொற்களைக் கூறிப் பிரிந்து சென்ற பின்னர்த் தலைவியும் தலைவன் தன் மேலன்புறுதற்குக் காரணமான சொற்களைக் குறிஞ்சி நிலக் கருப்பொருளாகிய யானையின்மீது வைத்துக் கூறி அகக்கண் ஆற்றியிருந்தாள்.
-53

Page 36
கானகத்தே காதலர் கண்ட மூன்று காட்சி களும் தமிழ்நாட்டு இல்வாழ்க்கையின் ஓவியக் காட்சி களே. கலங்கற் சின்னிரைப் பிடியானையை முன்னுரட் டிக் களிற்று யானை பின்னுண்ட உருக்கமான காட் சியை முந்திய கட்டுரையிற் கண்டோம். இனிய உணவு கள் பலவற்றைப் படைத்துப் பலரோடு உண்ணுகின்ற பெருஞ் செல்வராயினும் மக்கட் பேறில்லாதவர் வறி யவரே; ஏழையராயினும் தாம் உண்ணுதற்குக் கிடைத்த சிறிய உணவினை மக்களொடு கூடி மகிழ்ந்துண்போர் செல்வரே. யானைக் கன்றுகள் கலக்கிய அற்ப நீரினைப் பிடியுங் களிறும் உண்ட நிகழ்ச்சி மக்கட் செல்வத்தின் மாண்பினை உணர்த்துகின்றது. சங்ககாலத்து வாழ்ந்த தமிழ் மக்களின் இல்லங்கள் நமது அகக்கண்ணுக்குத் தெரிகின்றன. ஒரில்லத்தில் அருமையான ஒரு காட்சி யைக் காணுகின்ருேம். வீட்டுத் தலைவன் உணவு உட் கொள்ளுகின்ற நேரம் அது. குறு குறுத்த நடையுடன் ஒரு குழந்தை நடந்துவந்து தனது சின்னக் கையினை நீட்டி, உண்கலத்திலுள்ள உணவிலிட்டு, நெய் கலந்த உணவைத் தோண்டி, அள்ளியுண்டு துழாவுகின்றது. தந்தையின் மெய்யில் உணவு சிதறுகின்றது. தந் தையோ தனது அறிவு செயல்களை மறந்து குழந்தை யின் அன்பிலே மயங்கிச் சில சொற்களைக் கூறுகின்ற உணர்ச்சிவசப்பட்ட காட்சி. யானைக் கன்றுகள் நீரைக் கலக்கிய பின் தாய் தந்தையர் நீருண்ட நிகழ்ச்சியும், குழந்தைகள் அளைந்து துழாவிய உணவைத் தாய் தந்தையர் உண்ட நிகழ்ச்சியும் புலவனுடைய உள் ளத்துக்கு ஒத்த சுவையுடைய உணவாகின்றன.
*படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கெளவியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைதாம் வாழும் நாளே”
இது ஒரு புலவன், வீட்டிற் கண்ட காட்சி; அது வேருெரு புலவன், காட்டிற் கண்ட காட்சி. மனப் பான்மை ஒன்றே.
-54

காதலர் காட்டிற் கண்ட இரண்டாங் காட்சியை னிக் காண்போம். காட்டிலுள்ள மரங்களின் இலை கள் வெயிலின் கடுமையாற் பசுமை கெட்டு வாடி வதங்கி உதிர்ந்துவிடுகின்றன. தமது இலைகளையிழந் தமையால் வாட்டமுற்ற கிளைகள்; நிழலில்லாத மரங் கள்; செல்வாரைத் துன்புறுத்துகின்ற காடு. வலை நிழல்போன்ற நிழலும் அங்கில்லை. சில புருக்கள் இட மறியாமல் அங்கு வந்து அகப்பட்டுக்கொண்டன. மரக் கிளைகளிலே மாறி மாறியிருந்து பார்க்கின்றன. மருந் துக்கும் நிழல் கொடாதமரக்கிளைகள். நிலமோ சாதி சமய அடிப்படையில் ஆட்சி நிகழும் நாடுபோலக் கொதிக்கின்றது. ஆகாயத்திலோ மேகத்தைக் காணுேம்; ஒழுக்கப் பிழையுள்ளவர்களின் உடல்களில் அவை புகுந்துவிட்டன. உள்ளும் புறமும் கொதிக்கும் வெம்மை தாங்கமுடியாத பெண் புருக்கள் உயிர்போகுந் துன் பத்தையடைகின்றன. அன்புகொண்ட பெடைப் புழுக் கள ஆற்ருது தவிப்பதை ஆற்ற வழிகாணுது மன மிரங்குகின்ற சேவற்புருக்கள் மெல்லிய சிறகுகளை விரித்து ஒதுக்கிடங்கொடுத்துத் தமது உயிரினுமினிய பெடைகளை ஆற்றுகின்றன. இல்வாழ்க்கையிலே அன்பு நெகிழ்ச்சிபெற்று வாழுகின்ற தலைவன் தலைவியர்கள் இன்ப நிகழ்ச்சியினும் பார்க்கத் துன்ப நிகழ்ச்சி யிலேயே ஒருவர்க்கொருவர் துணையாக வாழல் வேண்டு மென்னும் ஒழுக்க நெறி இக்காட்சியிலே அமைந்து கிடக்கின்றது. இது தமிழருக்குச் சிறப்பாகவுரியது.
“இன்பத்தி னிகந் தொரீஇ இலைதீந்த வுலவையாற்
துன்புறுஉந் தடைாமுவே காடென்ற ரக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே” என்பது செய்யுள். (தீந்த உலவை - சுடுபட்ட மரக் கிளைகள். அசைஇய - இளைத்த.) கடுமையும் இனிமை யுமுடைய காடு. காட்டில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கொண்டு கவிஞர் பெருமான் காதல் வாழ்வினைச் சித்திரிக்கின்றர்.
இனி மூன்றங் காட்சிக்குச் செல்வோம். ஒரு மலைக்காடு தோன்றுகின்றது. அங்குள்ள மூங்கில்கள்

Page 37
கடுங்கதிர் முறுகுதலாற் சுற்றத்தோடு வாடி நிற்கின் றன. நெல்லும் பொரியக் கூடிய வெப்பமுடைய நிலத் தில் வழிப்போக்கரொருவரும் போகார். சூதறியாத இரு மான்கள் அக்காட்டிலே தெரியாமல் வந்துவிட் டன. ஒன்று கலைமான்; மற்றது பிணைமான். தாங்க முடியாத கடும் வெப்பத்தாற் பிணைமான் தளர்கின் றது. தழலில் மிதிப்பதுபோன்ற வருத்தத்தால் நிழல் தேடுகின்றது. நிழலில்லை. நிழல் பெருது வருந்துகின்ற பிணைமானுக்குக் கலைமான் தனது நிழலைக் கொடுத்து வெம்மையைத் தணித்து நிற்கின்ற காட்சியையும் தலை வர் காண்கின்றார்.
*கன்மிசை வேய்வாடக் கனகதிர் தெறுதலாற்
துன்னரூஉந் தகையவே காடென்ற ரக்காட்டுள் இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவு முரைத்தனரே”
கலைமான் தன்னிழலைப் பிணைமானுக்குக் கொடுத்து ஆற்றுகின்ற அரிய காட்சியைக் காணும்போது, அக் காட்சி இன்னுமோர் அன்புக் காட்சியை நமக்கு நினை வூட்டுகின்றது. வேறும் இரண்டு மான்கள் வருகின்றன. ஒன்று கலை; மற்றது பிணை. இரண்டுக்குந் தாகம் அதிகம். நீர் தேடி அலைந்து திரிந்து வந்த அவைகள் ஒரு நீர் நிலையைக் கண்டன. நீரோ சிறிது; அவற் றின் நீர் வேட்கையோ பெரிது. இரண்டுமுண்ண நீர் போதாது. பிணைமானுக்குத் தளர்ச்சி அதிகமானதால் அதை நீருண்ணப்பண்ணுதற்குக் கலைமான் விரை கின்றது. கலையுண்ணமுன்பு தானுண்ண மறுத்து நிற் கின்றது பிணை. கலைமான் ஒரு தந்திரஞ் செய்தது. இருவரும் உண்போம்; வாராய் என்று பிணையை அழைக்கின்றது. பிணை இணங்குகின்றது. நீரில் இரண் டும் வாய் வைக்கின்றன. பெண்மான் நீரைக் குடிக்க ஆண்மான் பொய்யாக உறிஞ்சிக்கொண்டு நிற்கின் றது. பிணை தாகந்தணிந்து தளர்ச்சி நீங்கியது. இரண் டும் இனிது சென்றன. தமிழ்நாட்டுப் பெண்மணி களின் ஒழுக்கத்தையும், ஆண்மக்களின் அன்போடு கூடிய சமயோசித புத்தியையும் இச்செய்தி விளக்கு கின்றது.
-56

இந்நிகழ்ச்சியினைச்
*சுனைவாய்ச் சிறு நீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமாஅத் தானுண்ணல் வேண்டிக்-கலைமாத்தன் கள்ளத்தி னுச்சுஞ் சுரமென்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி”
என்னும் அழகிய வெண்பா நமக்கு உணர்த்துகின்றது.
மேற்காட்டிய மூன்று நிகழ்ச்சிகளையும் கவியோ வியத்திற் புனைந்து தமிழகத்து மனை வாழ்க்கையின் மாண்பினைப் புலவர் பெருமான் இனிது புலப்படுத் தும் அழகு சிந்தைக்கு நல்விருந்தாகும். மேல் நாட்டு முறைகளிற் கற்று, அந்நாட்டு நடைகளிற் பயின்று, தமிழுணர்ச்சியின்றி எல்லாவற்றிலுஞ் சமத்துவம் விரும்பி ஆண்களாகிவருகின்ற தமிழ்நாட்டு நவீன நளின நாகரீக நங்கைமார் இத்தமிழ்ச் செய்யுள்களைப் படித்தால் அவர்கள் உண்மையான பெண்களாவார் கள். பெண்மை உயர்க. களிறு, புரு, கலைமான் ஆகிய மூன்றையும் தமிழ்நாட்டு ஆடவர்கள் நோக்காரோ!
தலைவி தோழிக்குக் கூறுகின்ருள். தாம் செல் லும் வழியில் இத்தகைய நிகழ்ச்சிகளை நமது காதலர் கண்டால் நமது நினைவு அவருக்கு வரும்; நம்மீது அருளுண்டாகும். தாம் தொடங்கிய வினையை முடித் துக்கொண்டு விரைந்து வீடு வந்து சேர்வார். பல்லி யும் சொல்கிறது. அன்றியும் எனக்கு இடது கண்ணும் துடிக்கின்றது. நல்ல சகுனம்.
“இனநல முடைய கானஞ் சென்றேர்
புனைநலம் வாட்டுந ரல்லர்; மனைவயிற்
பல்லியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே.”
நீ காட்டின் கடுமைக்கு அஞ்சாதே ஆற்றியிரு எனத் தலைவி கூறத் தோழி ஆற்றியிருந்தாள். வினையும் முடித்து விரைந்தும் வருவார் என்பது செய்யுட் பொருளாகும்.
-س-57--

Page 38
பாலைக்கலி: செய்யுள் (11)
1ழந்தமிழ்ச் செய்யுள்களைப் படிக்கும்போது அக்காலத் தமிழகத்து முல்லை குறிஞ்சி முதலிய நில நிகழ்ச்சிகள் பலவற்றேடு இந்நாட்டுத் தமிழகத்து நில நிகழ்ச்சிகள் ஒற்றுமையுடையனவாகக் காணப்படுவதை அறிகின்ருேம். தலைவனது பிரிவையுணர்ந்த தோழி அவனுக்குச் சில செய்திகள் கூறிப் பிரியாதிருக்கும று வேண்டுகின்ருள். அவை புதியனவல்ல; முன்னெரு கால் அவனுல் அவளுக்குக் கூறப்பட்ட செய்திகளே. அவைகளை அவள் அவனுக்கே திருப்பிக் கூறிப் போகாது விலக்குகின்ருள். தன் சொற்களே தனக்கு எதிராகப் பிரயோகிக்குங் கருவிகளாக மாறிவிட்டதை அவன் உணருகின்றன். ஒரு சாதுரியமான பிரயோகம்; அவன் சொற்கொண்டே அவனை வெல்லுதல். சொல்லாடலில்
இதுவும் ஒரு விதி.
தலைவன் செல்லக் கருதிய காட்டுவழியோ அச் சம் மிகுந்தது. வில்லேந்திய வேடர்கள் தங்கள் நேர்மை யானவம்புகளாற் செய்யும் கொடுமை மலிந்த வழி. தமது அம்பாற் கொலையுண்ட வழிப்போக்கர்களின் உடல்களை நீளமாகக் குவித்து இலைகுழைகளால் மூடி வைக்கின்ருர்கள். வழிப்போக்கரைக் கொலைசெய்து புதைத்த குழிகளின் மீது தென்னம்பிள்ளை நடுவது போன்ற வழக்கமும் நினைவுக்கு வருகின்றது. பிணங் களை மூடிய இலைகுழைக் குவியல்கள் கட்டுமுள்ளா லிட்ட கொத்து வேலி போலக் காட்சியளிக்கின்றன். புன்செய் நிலங்களிலே சிறுதானியம் முதலிய பயிர் செய்வோர் காடுகளை வெட்டிச் சுட்டு நாற்புறமும் முட்கொத்துகளால் வேலியிடும் வழக்கம் முல்லையிலுங் குறிஞ்சியிலும் இன்றும் நிகழ்கின்றது. இந்நாட்டிலும் இது பெரு வழக்கு, கள்வரேருது தென்னகளுக்குக் கட்டும் முன் கட்டுமுள்ளென மட்டக்களப்பில் வழங்கப் படுகிறது. இது கூர்மையுங் கடுப்புமுள்ளது. பிணக் குவியலை மூடிய இலைக் குவியல் வெளிப்பார்வைக்குக்
-58

கொத்துவேலிபோலத் தோன்றுவதால் அதனைப் பிணக் குவியலென்று உடனே தெரிந்துகொள்ளுதல் அரிது.
*இடுமுள் நெடுவேலி போலக் கொலேவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவையார் ஆறு.”*
கொலைவர்-வேடர்; கொடு மரம்-வளைந்த மரம்; வில். இரண்டும் காரணப் பெயர்கள். தேய்த்தார்கொலையுண்டோர். பதுக்கை-இலைக் குவியல், நவைகுற்றம். ஆறு-வழி. தான் சென்ற வழியின் கொடுமை பற்றித் தலைவன் தோழிக்கு முன்பு கூறியது இது.
இத்தகைய காட்டுவழியிலே தாகத்தால் நீர் தேடி வருகின்ற யானைகள் அரிதாகக் கண்டதோர் சுனையைச் சூழ்ந்துகொண்டன. அது நீரற்ற சுனை யன்று; நாளுக்கு நாள் நீரறுகின்ற சுனை. உடல் தளர்ந்த யானைகள் அச்சுனையில் நீருண்பதற்குக் காலை மடக்கிக் கையைத் தாழ்த்திப் பதிந்துகிடந்து குடித் துப் பார்க்கின்றன. அவற்றின் துதிக்கைகள் சுடுபட்ட தன்றி நீருண்டபாடில்லை. சூடு தாங்கமுடியாமல் அவை ஒடுகின்றன. வரும்போது கூட்டமாய் வந்தவை போகும் போது கலைந்து ஒடுகின்றன. இது உலகத்தில் இயல்பு. காடு முழுதும் யானைகளின் காலடிகளால் உண்டாகிய புதுவழிகள்; அப்புதுவழிகள் பழைய வழிகளோடு சந் தித்து எங்கும் வழிகளாய்விட்டன. எது வழக்கமான வழி? எது புதுவழி? எது போகும் வழி? எது போக லாகாத வழி என்பது தெரியாது. வழி மயங்கிய காடு; நடக்கத் தொலையாத நீண்ட காடு; நான் முன் னெருகாற் தெரியாதுபோய்ப் பட்டபாடு பெரிது. இது முன்பு தலைவன் சொன்னது. கொடுமையுங் கடுமையுமுடைய காடு.
*.அறுசுனை முற்றி உடங்குநீர் வேட்ட
உடம்புயங்கு யானை கடுந்தாம் பதிபாங்குக் கை தெறப்பட்டு வெறிநிரை வேருகச் சாரச் சாரலோடி நெறிமயக் குற்ற நிரம்பா நீடத்தம்” முற்றி-சூழ்ந்து. உடங்கு நீர்-உண்ணும் நீர். உயங்கு -வருந்திய, வெறிநிரை-ஒழுங்குபட்ட கூட்டம், பதி பாங்கு-பதிந்து, அத்தம்-காடு.
--59-س-

Page 39
வேடர்களின் தொல்லை ஒருபுறம்; நீர் கிடை யாத கடுமை மறுபுறம், யானைகளின் அச்சம் மற் ருெருபுறம்; வழிதெரியாத மயக்கம் இன்னெருபுறம்; தொலையாத காடென்று நீர் முன்பு எனக்குச் சொன்ன தைத் தலைவிக்குக் கூறினேன். அவள் அஞ்சி நடுங்கு கின்ருள். சிறிது பொழுதேனும் உம்மைப் பிரிந்த அனுபவமறியாத தலைவியைவிட்டுப் பெருமானே நீர் பிரிதல் அறமாகாது.
“சிறுநணி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்”
இந்நிலையைச் சற்றே சிந்தித்தல் வேண்டும் என வேண் டிக் கொள்ளுகின்ருள் தோழி. அவளது சொல்லில் வாழ்க்கை நுட்பங்கள் பல அமைந்து கடக்கின்றன.
நீர் மனவூக்கமுடையீர்; செல்வப் பொருளால் இன்பம் துய்த்தலை விரும்பிச் செல்கின்றீர். பொரு ளால் வரும் இன்பத்தினும் பிரிவால் வரும் துன்பம் பெரிதாகும்.
“உரனுடை யுள்ளத்தை செய்பொருள் முற்றிய
வளமையானகும் பொருளிது வென்பாய்” உரன்-மனவூக்கம்.முற்றுதல்-தேடிமுடித்தல். வளமை --செல்வம். இது இன்பம். செல்வப் பொருளால் இன் பம் வருமென்பது ஒருவாறு பொருந்தும்; முழுதும் பொருந்தாது. மக்கள் வாழும் நாள் சில; போன காலம் வராது; இளமையும் நீடித்து நில்லாது; காம மும் நிலையாது; அன்றியும், இன்றைக்கிருந்தார் நாளைக் கிருப்பதும் நிச்சயமோ? இறக்கும் நாளை யறிந்தாரு மில்லை; இன்பம் அடைதற்குரிய இளமையை வீணே கழித்தல் பாவம். காமமும் ஒரு தருமமாகும். பொருள் தேடச் செல்லும் பெருமானே! இளந்தலைவியை நீர் பிரிந்து செல்வது தருமத்தின் மாறுபட்டது. “இள்மையுங் காமமும் நின்பாணி நில்லா இடைமுலைக் கோதை குழைய முயங்கும் முறைநாள் கழித லுறமைக் காண்டை கடைநா ளிதுவென் றறிந்தாரு மில்லை”
-60

பாணி-கை. முயங்கல்-கூடல். காண்டை-காண் பாய் அறிவாய். காமம்-காதலர் துய்க்கும் இன்பம்; காமம் காதலன்று. காதல் இன்பதுன்பம் இரண்டி னும் சமமான பற்று. பெருமானே, தருமத்துக்கு மாரு கச் செல்லாதீர். மரணத்தையும் மூப்பையும் மறந்து வாழ்கின்ற இல்வாழ்வார் அறிவிலாதோர். இதற்கு மாருக இவ்விரண்டு முண் டென்று எண்ணி, இல்லி லிருந்து காம தருமத்தைக் காப்போரே அறிவுடை யார். அவரே நன் மக்களாவார். அவர் செல்லும் அறவழியே உமக்கும் அமைவதாக.
*போற்றப் பெருமநீ, காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய் கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஒராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி.”
காமம்-காமதருமம். புகர்-குற்றம். வேற்றுமை-தரு மத்தில் நின்றும் வேறுபடுதல். ஒராங்கு ஒருநிலைப் பட்ட மாற்றுமை-மாறுபாடு; வேற்றுமை என்பது போல. மரணத்தையும் மூப்பையும் நினையாமல் பொருள் தேடுவதையே பெரிதாகக்கொண்டு இள மையை வீணுக்கிய அறிவில்லாதோருக்கு எதிர்மாறன நன்மக்கள் செல்லும் வழியையே நீர் பேணுவீராக. பெரும, மாற்றுமைக்கொண்ட வழி போற்ருய் எனச் செய்யுள் முடியும்.
இச்செய்யுளிலே பொருளிலக்கண வரம்புக்குட் பட்ட நுண்பொருள்கள் சில அமைந்துள்ளன. "கடை நாளிதுவென அறிந்தாருமில்லை"யென்பது நாளது சின்மை; 'இளமையுங் காமமும் நின்பாணி நில்லா" என்பது இளமைய தருமை; “உரனுடையுள்ளத்தை' என்பது தாளாண் பக்கம்; தாளாண்மை முயற்சி; **செய்பொருள் முற்றிய' என்பது தகுதிய தமைதி: தகுதி, நல்வழியாற் பொருள் தேடும் நடுவு நிலைமை; *சிறு நனி நீ துஞ்சி யேற்பினும் அஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்' என்பது அன்பின தகலம்; “இடைமுலைக் கோதை குழைய முயங்கும்முறைநாள் கழிதல் உருமைக் காண்டை’’ என்பது அகற்சிய தருமை; அகற்சி-பிரிவு; "செய் பொருள்
--61 سے

Page 40
முற்றிய-வளமையானகும் பொருளிது வென்பாய்”* என்பது செல்வத்தாற் பெற்ற உவகையின்பம். இப் பொருள்களெல்லாம் மக்களது இன்ப வாழ்வில் இனிது இயைந்து நிற்பனவாம். -
மக்கள் வாழ்க்கையிலே, நமது வாழ்நாள் நிலை யற்றது; இளமைப் பருவம் இன்பமனுபவித்தற்கு ஏற்ற பருவம்; அதனை வீணுக்குதல் ஆகாது; காமமும் ஒரு தருமமாகும்; ஊ க்க முடைமை உள்ளத்துக்குரிய இயல்பு; நல்வழியாற் பொருள் தேடுதலே தகுதியா கும்; அன்பிற்கு எல்லையில்லை; பிரிவினை மிக்க துன்பந் தருவதாகும்; செல்வம் பெற்ருேர் இன்பமனுபவித்தல் வேண்டும்; உடாதும், உண்ணுதும், கொடாதும் பொருளை மாத்திரம் தேடித் தொகுத்துவைத்துக் காப்போன் துன்பமடைவான் என்பன இச்செய்யுள் சுருக்கமாகக் கூறுகின்ற பொருள்களாகும்.
- 62

பாலைக்கலி:
செய்யுள் (12)
வேந்தர் இருவர்க்கிடையே போர் நிகழும்போது ஒருவர் மற்றவரின் நாட்டுக்குத் தீ மூட்டும் வழக்கம் பண்டைத் தமிழ் நாட்டில் வழக்கிலிருந்தது. இன் றும் அவ்வழக்கம் பல நாடுகளில் இருந்துவருகிறது. புறங்காட்டியோடும் படைகள் சிலவேளைகளிலே தாமே தமது பாதுகாப்பிடங்களைத் தீக்கிரையாக்குவதும் நிகழ்வதுண்டு. கைவிட்டுச் செல்லும் அரண்களையும், படைக்கலங்களையும், உணவுப் பொருள் முதலியவற்றை யும் பகைவர் பயன்படுத்தாது தடுத்தற்பொருட்டுப் படைவீரர் இவ்வாறு செய்வர். பகைவரது நாட்டைத் தீக்கிரையாக்குதலும், கழுதைகளைப் பூட்டி உழவு செய்தலும், பேயெள்ளு முதலியவற்றை விதைத்தலு மாகிய நிகழ்ச்சிகள் புறப்பொருட் செய்திகளிலே காணப்படுகின்றன. யுத்த காலத்திலே நாட்டுக்குத் தீயூட்டும் பயங்கர நிகழ்ச்சி நமது புலவர் பெருமா னின் உள்ளத்தே பெரியதோர் உணர்ச்சியை உண் டாக்கிவிட்டது. அவ்வுணர்ச்சிவாயிலாக நல்லதோர் உவமை காண்கின் ருர், செங்கதிர் வேந்தனது சீற்றத் தால் வெந்து பாழ்பட்ட பாலை நிலத்துக்குப் பகை யரசனது சினத்தீயால் எரிந்து பாழ்பட்ட நாட்டினை உவமை கூறுகின்ருர், கலைப் பண்பின்றி அதிகாரம் மட்டுந் தாண்டவமாடும் கலாசாலைகளையும் இப்பாலை நிலத்துக்கு உவமை கூறினும் அது பொருந்தும்.
மேகமும் மழையுமில்லாத பாலைநிலம் வெம்மை யின் வேகத்துக்கு இருப்பிடம். அங்கு நெல்லைப் போட் டாலும் பொரிந்துபோகும். நீரும் நிழலுமில்லாத கடுவெளிகளிலே காணலே பறக்கின்றது. அங்கே எறும் புக்கும் ஆர்பதமில்லை. நெற் பொரிகளைச் சிதறிவிட் டாற்போன்ற புள்ளிகளையுடைய பெண்மான்களும், மறவரது முறுக்கிவிட்ட மீசைபோன்ற திருகு கொம்பு களையுடைய கலைமான்களும் பசியுந் தாகமுந் தாங்க முடியாமல் அங்கே தவித்துத் திரிகின்றன. அவற்றின்
\ --63س--

Page 41
கண்களுக்குக் கானல் தோன்ற அக்கானலை நீரென் றெண்ணிக் காட்டுவழியிலே ஒடுகின்ற மான்கள் நெடுந் தூரம் அலைந்துவிட்டன. அலைந்தும் பயனென்ன? ஒடிய தொன்றுமே மிச்சம்.
“செரு மிகு சிணவேந்தன் சிவந்திறுத்த புலம்போல
எரிவந்த கரிவறல் வாய்புகுவ காணுவாய்ப் பொரி மலர்ந் தன்ன பொறிய மடமான் திரிமருப் பேறெடு தேரல் தேர்க் கோட.? என்பது செய்யுள். சிவந்து-கோபித்து. சிவப்புங் கறுப் புஞ் சினத்தைக் குறிக்கும் உரிச் சொற்கள்.
“கறுத்த மாமுனி கருத்தை யுன்னி" என்பதிலும்,
*சிவந்தனகண்; இருண்டனபோய்த் திசைக ளெல்லாம்” என்பதிலும் வந்துள்ள கறுப்பும் சிவப்பும் கோபத் தைக் குறித்து நிற்பதுங் காண்க. இறுத்தல் - வந்து தங்குதல். புலம்-நிலம். கரி-விறகுக் கரி. வறல்-வறண்ட நிலம். வாய்புகுவ-உண்ணும் உணவுகள். பொரி-நெற் பொரி. பொறி-புள்ளி. திரிமருப்பு-திருகுண்ட கொம்பு. ஏறு-கலைமான். தேரல்-தேர். தேரல்லாத தேர்; பேய்த் தேர்; கானல். தேரல்தேர் என்பது “நீரல் ஈரம்’ என்பதுபோல வந்தது. நீரல்லாத ஈரம்; மனிதன் சிறுநீர் விட்ட ஈரம்.
மான்கள் கானலை நோக்கி ஒடுகின்ற சுரத்தின் கண்ணே மலைகள் கொதித்தலால் அங்குள்ள மரங் களும் வாடிவிட்டன. தளிரும், பூவும், பிஞ்சும், காயும், பழமும் ஆகியவற்றுள் ஒன்றையும் உணவாகப் பெரு மல் மந்திகள் வருந்துகின்றன. உரல்போன்ற அடியினை யுடைய யானைகள் மதம்புலர்ந்து தாகம் மேலிட்டு, நீரற்ற சுனையிலுள்ள சேற்றின் ஈரத்தைச் சுவைத் துத் தமது போகும் உயிரைப் போகாது தாங்கி நிற் கின்றன. கொடுமையுங் கடுமையுமுடைய சுரம்.
“மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க உால்போ லடிய உடம் புயங்கு யானை ஊறுநீ ரடங்கலின் உண்கயங் காணுது சேறு சுவைத்துத் தம் செல்லுயிர் தாங்கும் புயல் துளி மாறிய போக்கரு வெஞ்சுரம்."
-64

மரல் என்பது பேய்க் கற்றழை. அது பாலை நிலத்தி லும் அதுபோன்ற வெப்பமுடைய பிற நிலங்களிலும் வளரும். ஊரிலும் நாட்டியுண்டாக்குவர். ஊரிலுள்ள கற்றழைகளிலும் இது வேறுபட்டது. மலைச் சரிவு களிலே கற்களினிடையே உண்டாவதாற் பேய்க்கற் முழை எனப் பெயர் பெற்றது. இதன் நடுத் தண்டி லிருந்து எடுக்கப்படும் நார் யாழ் வாசிக்கும் தானக் கோலுக்கு நரம்பாக உபயோகப்படுகின்றது. மரலும் வாடுமென்று கூறியமையால் ஏனைய தாவரங்களெல் லாம் முந்தியே கரிந்து பொரிந்துபோன காடு என்பது புலப்படுகின்றது.
த்தகைய கொடுமையுங் கடுமையுமுடைய காட்டு வழியிலே பொருள் தேடுதற்பொருட்டுத் தான் பிரிந்துசெல்லுகின்றேன் எனத் தலைவன் தலைவிக்குக் கூறுகின்றன்.தலைவி தன்னையும் உடன் கொண்டு செல்லு மாறு தலைவனை வேண்டி நிற்கின்ருள். தலைவன் பிரிந்து செல்லுகின்ற காட்டின் வெம்மையைக்காட்டிலும் பிரிவால் வருகின்ற வெம்மை தலைவிக்குத் தாங்க முடியாததாகின்றது. எத்தகைய இன்னல்வரினும் காதலரோடு உடன் செல்லுதல் மகளிர்க்கு உவப்பான செயலாகும். இந்திய நாட்டு மகளிர்க்கு இது சிறப்பு. நளன் நாடு துறந்து காடு சென்றபோதும், கோவலன் சோழநாட்டை விடுத்துப் பாண்டிநாடு புகுந்தபோதும், இராமபிரான் அரசைக் கைவிட்டு ஆரணியம் அடைந்த போதும் தமக்குரிய காதலிகளும் உடன் சென்ற செய்தி கள் நாமறிந்தனவே. பத்தினித் தெய்வமாகிய கண் ணகி தேவி காட்டுவழியே செல்கையில் தனது மென் மைக்கு வருந்தாது கணவன்பொருட்டு வருந்திய நிகழ்ச்சியும் உலகறிந்ததே.
சீதாபிராட்டி தனது கணவன் கூனியின் சூழ்ச்சி வலையிலகப்பட்டபோது நாடிழந்தமைக்காக அவள் அவலமடையவில்லை; இராமன் செல்லுங் காட்டினை அயோத்தியினும் மேலாக மதித்தாள். அரசியற் செல் வங்களைத் துறக்க நேர்ந்தமை குறித்து அவள் கவலை கொள்ளவுமில்லை; வனத்திலே தனது நாயகன் நடத் தும் எளிய வாழ்வை இன்ப வாழ்வாக மதித்தாள். மாமிமாரைப் பிரிந்து செல்வதை நினைத்தும் அவள்
-65

Page 42
பெருங் கவலையில் மூழ்கவில்லை. இராமனைப் பிரிந்து தனித்திருப்பதை நினைந்து நினைந்து நெஞ்சு கலங்கி ஞள். இராமனைப் பிரிந்து வீணே கழிக்கும் ஒரு பகலை ஒர் ஊழியாக நினைத்தாள். இராமனுேடு உடன் சென்று கானகத்திற் பதினன்கு வருடம் வாழ்வதை ஒரு பகலாக மதித்தாள். நீயிரு நான் போய்வரு கிறேன் என்று நாதன் கூறிய சொற்களை நினைக்க நினைக்க அவளுக்கு உயிர்போவதுபோன்ற துன்பம் மிகலாயிற்று. பிரிவென்பதன் பொருள் பிராட்டிக்குத் தெரியாது என்கின்றர் கம்பர்.
இராமபிரான நோக்கிப் பிராட்டி கூறிய சொற்களையும் இங்கே நோக்குதல் தகும். எம்பெரு மானே, இரக்கமற்ற நெஞ்சுடன் அன்பைக் கைவிட்டு என்னை நீங்கிச் செல்கின்றீர். உலக முடிவிலே தனது முழுக் கோபத்துடனும் வருகின்ற சூரியனேயுஞ் சுடும் நீர் செல்லுங் காடு என்னுஞ் சொல்லை யாரிடம் சொல்ல வந்தீர்? சீதையிடத்திலா? அந்தக் காடு உமது பிரிவைப் பார்க்கினுங் கடுமையாகச் சுடுமோ? என்று கூறி இராமபிரானது வாயையடக்கிவிட்டாள்.
*பரிவிகந்த மனத்தொடு பற்றிலா
தொருவு கின்றன; ஊழி அருக்கனும் எரியு மென்பது யாண்டைய தீண்டுநின் பிரிவி னுஞ்சுடுமோ பெருங்கா டென்ருள்.”
இக்கம்பராமாயணச் செய்யுளும் பிரிவின் வெம்மையை யுணர்த்தி நிற்கின்றது. பிரிவுக் காலங்களிலே மகளிர் தமது மென்மையையும் மறந்து மனத்துணிவினல்
வன் மைபெற்றுவிடுவர். தலைவி யின் வன்மையைக் கண்டு தலைவன் இரக்கமுற்றுக் கூறுவதை இனிக் கேட்போம்.
காதல் வாழ்க்கையிலே இது ஒரு விளையாட்டுக் காட்சி. தான் செய்தற்குரிய வினையின்பொருட்டுத் தலைவன் பிரிந்துசெல்லக் கருதுகின்றன். இதனை யுணர்ந்த தலைவி தன்னையும் உடன்கொண்டு செல்லு மாறு தலைவனை வேண்டி நிற்கின்ருள். அவளையும் உடன்கொண்டு சென்ருல் அவளது இயற்கையழகு கெடுமேயென்று எண்ணிய தலைவனுக்கு அவள்மீது
سته د 66سـد

அருள் பிறக்கின்றது. வாராய்; கொண்டு செல்கின் றேன் என்றுஞ் சொல்லாமல், வராதே; கொண்டு செல்லேன் என்றும் அவன் சொல்லாமல், சுரத்து வழியிலே நிகழக்கூடிய சில துன்பங்களை அவளுக்குக் கூறிக் குறிப்பாக மறுப்புத் தோன்றுமாறு மறுமொழி பகரும் பண்பு நாகரிகம் வாய்ந்தது.
ஒளிவிளங்கும் வளையல்களையுடையாய், கல்லும் முள்ளும் நிறைந்த வல்லென்ற காட்டு வழியிலே உனது மெல்லென்ற சிற்றடிகள் வழிநடத்தற்கு வல்லனவல்ல. அவ்வழியிடத்தே நீ என்னுடன் வருவாயேல், ஒன் பது சாண் நடப்பினும் ஒருகாத மென்றஞ்சும் உன் னுடைய மெல்லிய பாதங்கள்; அனிச்சம் பூவையும், அன்னத்தின் தூவியையும் நெருஞ்சிப் பழமென்று வருந் தும் பாதங்கள் வெயிலின் வெம்மையால் வெந்து போய்க் கிடக்கும் கல்லின்மீது பட்டால் இட்டவடி நோவ எடுத்தவடி கொப்புளிக்கச் சுறிரென்று சுட்டு விடுமே! சுட்டாற் கருகிக் கன்றிக் கறுத்துவிடுமே! செந்தாமரைப் பூவின் உள்ளிதழ்களிலே சாதிலிங்கம் பூசியதுபோல அவை இயற்கை நிறம் மாறிவிடுமே!
*எல்வளை! எம்மொடு நீவரின் யாழ நின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ! என்று தலைவன் இரங்கிக் கூறுகின்றன்.
எல்வளை-ஒளிவிளங்கும் வளையல்; இங்கே வளை யலையணிந்த தலைவியைக் குறித்து நின்றது. அண்மை விளி. யாழ-முன்னிலை யசைச்சொல். அரக்கு-இங்கு லிகம்; சாதிலிங்கம். அது கருஞ்சிவப்பு உடையதாத லால், செம்மை கருகிய உள்ளங்காலுக்கு உவமையாய் வந்தது. சீறடி-சிறிய அடிகள். நெற்றியும், அடியும் இடையுஞ் சிறுத்திருத்தல் மகளிர்க்கு அழகு.
இன்னுங் கூறுகின்றன்; ஒளி மிளிரும் நல்ல நெற்றியினையுடையாய், நீ என்னுடன் வந்தால், சிங் கத்தின் பொய்க்கால்கள் பொருத்திய துரங்கு மஞ்சத் திலே அன்னத்தின் தூவியாலமைந்த மெல்லிய படுக்
-67

Page 43
கையிலே இனிதாக உறங்குகின்ற நீ, மெய்யான சிங் கத்தின் குரலைக் கேட்பின் அஞ்சி நடுங்குவாயே!
“நலம் பெறு சுடர் நுதால் எம்மொடு நீ வரின்
இலங்கு மாண் அவிர் தூவி அன்னமென் சேக்கையுள் துலங்குமான் மேலூர்தித் துயிலேற்பாய் மற்றண்டை விலங்குமான் குரல் கேட்பின் வெருவுவை யல்லையோ!"
என்பது செய்யுள். நூதால்-நெற்றியையுடையவளே மாண்-மாட்சிமை; அவிர்தல்-விளங்குதல்; தூவி-மென் மையான இறகு; மார்பின்கண் உள்ளது; சேக்கைபடுக்கை மற்று - அதற்கு மாருக ஆண்டை-அவ்விடத் தில், துலங்குமான் மேலூர்தி-மான் மேற்துலங்கூர்தி; மான்-சிங்கம்; இங்கே சிங்கத்தின் கால்களைக் குறித்து நின்றது. துலங்கு ஊர்தி-தூங்கு கட்டில். விலங்குமான் - மிருகமாகிய சிங்கம்.
தலைவன் பின்னுங் கூறுகின்ருன் கிளியின் மொழி போன்ற மொழியினையுடையாய், நீ என்னுடன் வந் தால், காட்டுத்தீயோடு கலந்தடிக்கின்ற கடுங்காற்று உனது மேனியிற்படுமே! பட்டால், மழைத்துளி தங் கிய தளிர்போன்ற மென்மையும் அழகுமுடைய மேனி அழகு கெட்டுப்போகுமே!
“கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்,
தளி பொழி தளிரன்ன எழில் மேனி கவின்வாட முளி யரில் பொத்திய முழங்கழல் இடைபோழ்ந்த வளி யுறின் அவ்வெழில் வாடுவை யல்ல யோ!”
கிளி-கிளிமொழி; புரை-ஒப்பாகும்; கிளவி-சொல்; தளி-மழை, எழில், கவின்-அழகு முளி- காய்ந்த, அரில்-பற்றை; பொத்திய-மூடிய, இடை போழ்ந்தநெருப்பை ஊடுருவி வீசிய வளி-காற்று.
நீ என்னேடு வரின், உனது கால்கள் கறுக்குமே! சிங்கத்தின் குரல் கேட்டு நீ அஞ்சுவாயே! மேனி அழகு கெடுமே! என்று தலைவியின்மீது இரங்குவதாகக் கூறிய சொற்களால், தலைவிதானே உடன்போகாது தவிர்வாள் என்பது தலைவனது கருத்தாகும்.
س=68--

இவ்வாறு தலைவன் கூறக் கேட்ட தலைவி தான் பிரிந்து இல்லின்கண் இருக்கவும் முடியாது, காட்டு வழியில் உடன்போகவும் ஒண்ணுது தவிக்கின்ருள். இந்நிலையில் அவளது உயிர்த்தோழி அங்கு வருகின் ருள். இருவரும் பேசிய பேச்சுகளை அவதானித்துக் கொண்டிருந்த தலைவியின் நிலைமைக்கு இரங்கிச் சில சொற்கள் கூறுகின் ருள். தருணமறிந்து புத்தி கூறு வதிற் சாதுரியமுடைய அவள் தலைவியுடன் சொல் லாடும் முறையினையுங் காண்போம்.
அம்மையே! வருந்தற்க. தலைவர் உனது அழகு கெடும்படியான அச்சந்தரும் நிகழ்ச்சிகளைக் கூறின ரேனும், அவரது பிரிவால் உனக்கு நிகழும் பெருந் துன்பத்தை அவர் மறந்து அவ்வாறு கூறவில்லை. இரு வர்க்கும் ஒருயிராகப் பொருந்திய காதலர் உன்னைப் பிரிந்து செல்ல விரும்பார். ஆதலின், மனம் மாறு பட்டு அவர் உன்னைப் பிரிந்துசெல்வாரென்று வருந் தாதே. வளைந்த, கருமீன் வடிவமான காதணியை யுடையாய்! காடுகள் கடுமையுடையன; நடத்தற்கு அரியன என்று அவர் சொன்ன தெல்லாம் ஒரு வி யாட்டாகும். நீ எவ்வாறு பயப்படுகின் முய் என்பதைப் பார்க்கும் விருப்பமேயன்றிப், போகும் விருப்பம் அவ ருக்குக் கிடையாது. விளையாட்டை வினையென்றெண் ணுதே. அவர் அப்படிப்பட்டவரல்லர் என்று தோழி கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் தலைவரின் உள்ளக் கிடக்கையையறிந்தாள் தலைவி.
அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. பொருளிட்டிவரச் செல்லவிரும்பிய தலைவன் அழகு மிக்க மனைவியைப் பிரிந்துபோகுமுன் அவளையும் அவள் அழகையும் பலவகையாகப் பாராட்டி மகிழ்ந்துவிட் டுப் பிரியத்தொடங்கினன். அது சண்ட அவன் மனைவி, காதல் வாழ்வின் சிறப்பையும், பொருளின் சிறப்பற்ற தன்மையையும் சுட்டிக்காட்டி அவனைத் தடைசெய்யத் தொடங்கினள்.
-o-m

Page 44
பாலைக்கலி : செய்யுள் (13)
சங்ககாலத் தமிழர் வாழ்விலே பெண்கள் மிக வும் மதிப்புப் பெற்று விளங்கினர். ஆண்மையின் இயல்பையும், பெண்மையின் இயல்பையும் தமிழ் மக் கள் நன்குணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்துவந்தனர். பெண்கள் ஆண்களாகவும், ஆண்கள் பெண்களாகவும் மாறிவீழ்வதை அவர்கள் விரும்பவில்லை. தமிழ் மக் கள் பெண்மையைப் பெரிதாகப் பேணியமைக்குச் சங் கச் செய்யுள்களே சான்று. உலகியல் வாழ்விலே காத லன் தனது காதலியின் குணநலன்களைப் பாராட்டி மகிழ்ந்ததைச் சங்கச் செய்யுள்களிலே “கைவளர் நெல் லியங் கனியிற் காணலாம். தலைவன் தலைவியின் குண நலன்களைப் புனைந்துரைப்பதைக் களவொழுக் கத்தினுங் காணலாம்; கற்பொழுக்கத்தினுங் காண லாம். தனது அறிவு முதலியவற்றை மறந்து தலைவன் தலைவியின் நலத்தைப் புனைந்துரைப்பதை இலக்கியங் கள் இனிது கூறுகின்றன.
உலக வாழ்விற்குரிய இப்புனைந்துரை தெய்வீக வாழ்வுக்கும் ஒரு படிபோன்று அமைந்துள்ளது. காதலி யைப் புனைந்துரைத்தல், குழந்தைகளைப் புனைந்துரைத் தல், தெய்வத்தைப் புனைந்துரைத்தல் முதலிய செயல் கள் அன்பு நெறியாக அமைந்துள்ளன. அன்பே தமி ழன் கண்ட வாழ்வு. அன்பே அவன் கண்ட தெய் வம். அன்பும் பண்புங் கனிந்த காதலனுெருவன் மன. மொத்த காதலியொருத்தியை மணந்து மனையறம் நிகழ்த்திவருகின்றன். நாட்கள் இன்பமாகக் கழிகின் றன. ஒருநாள் அவன் தலைவியுடன் தனித்திருக்கும் நேரம்; தோழியும் அகலாதும் அணுகாதும் அங்கிருக் கின்ருள். அவர்களிருக்குமிடம் ஒரு நிலா முற்றமோ? அந்தப்புரமோ? தெரியவில்லை. தலைவன் தலைவியின் வடிவத்தை மனமாகிய படாத்திலே, உணர்ச்சியென் னும் மைகொண்டு, அன்பாகிய எழுதுகோலால் அழ கொழுக எழுதிப் பார்க்கின்றன். ஒருநாள் காலிமுக
-70

மைதானத்திலே மழையில் நனைந்த மகளிர் சிலரின் வடிவத்தையும் அழகொழுக நான் பார்த்திருக்கின் றேன். தலைவியின் இயற்கையழகு ஒழுகக் கண்டான் தலைவன்; செயற்கையழகு கரைந்தொழுகக் கண்டேன் யான். காட்சியும் வேறு; நோக்கமும் வேறு.
தலைவியின் உள்ளழகையும், புறவழகையும் அகத் தாலும் முகத்தாலும் பருகி மனமுருகி நின்ற தலை வன் அந்நிலைமைக்கேற்பத் தலைவியைப் புனைந்துரைக் கின்றன்.
*அனைமருள் இன்துயில் அம்பனைத் தட மென்தோள்;
துணை மலர் எழில் நீலத் தேந்தெழில் மலர் உண்கண்; மண மெளவல் முகையன்ன மாவீழ் வால் நிரை வெண்பல்; மணம் நாறும் நறுநுதல்; மாரி வீழ்இருங் கூந்தல்; அலர் முலை ஆகத் தாரெழிற் திதனிச், சிலநிரை வால் வளைச் செய்யாயோ"
எனத் தலைவன் பல பல புனைந்துரைகளாற் பாராட் டிய இனிய மொழிகளைக் கேட்ட தோழிக்குத் தலைவன் மீது ஒர் ஐயப்பாடு உண்டாயிற்று. பண்டெல்லாம் பாராட்டிக் கூறியதுபோலன்றி, இன்று சிறப்பாகப் பாராட்டியதால் வேறேதோ நோக்கமொன்று தல்ை வருக்கு இருத்தல் வேண்டுமென அவள் சிந்திக்கின்ருள்.
*எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்ப தறிவு.”
வாயால் இவர் அலங்காரமாகப் பேசுகின்றர். அதி கம் அலங்கரித்துக் கூறுவதால் இவர் மனத்திலே வேறெதுவோ ஒன்று இடம் பெற்றிருத்தல் வேண் டும். உலகத்தில் இவ்வாறு பேசுவோர் பலர். தலை வர் இங்கே வாயலங்காரமாகப் பேசுவது தலைவியை விட்டு நீங்குதற் பொருட்டேயாம் என்று தோழி துணி கின்ருள். உடனே தலைவனிடம் விரைந்து சென்று எம்பெருமானே,
*பல பல கட்டுரை பண்டையிற் பாராட்டி
இனிய சொல்லி இன்னுங்குப் பெயர்ப்பது இனியறிந்தே னது துணியாகுதலே' என்று தலைவன் புனைந்துரையிற் தான் கண்ட மெய்ப்
س7h-س-

Page 45
பொருளை வெளிப்படுத்திவிடுகின்ருள். இன்னங்கு-வருத் தம்; பொல்லாங்கு என்பதுபோல. துணி-(எம்மிடத்து) வெறுப்பு. அக்காலத்து மகளிர் பலர் கலையுணர்ச்சி நிரம்பியவர்கள்; குறிப்பறிவு என்பது ஒரு நுண்ணிய கலை; தமிழ் மகளிர்க்கு அது அலங்காரமாக அமைந் திருந்தது. இன்று மனக் குறிப்பையறியாது வாயலங் காரத்தில் மயங்கும் மகளிர் பலர். காரிகையார் கலித் தொகையைக் கல்லாரோ?
வாயால் மயக்கி எம்மை மனத்தால் வஞ்சித் துக் கூறுகின்றீர். இவ்வகைப்பட்ட போக்கு உமக்கு எவ்வகையால் உண்டாயிற்று? என்று தலைவனை நோக் கிக் கூறிய தோழியின் சொற்கள் குறிப்பறிவாகிய பொன்னுக்கு உரைகல் போன்று விளங்குகின்றன. அந் நாளிலே தமிழகத்தில் அரசனுக்கு மாத்திரமன்று; தனி மனிதனுக்கும் ஆலோசனையாளர் இருந்திருக் கின் ருர்கள். அரசனுக்கு அமைச்சன்; தலைவனுக்குத் தோழன்; தலைவிக்குத் தோழி. தனிக் குடும்ப வாழ் வும் ஓர் அரசியல் நிருவாகம் போன்றதே.
தலைவியின் நலம் புனைந்துரைத்த தலைவன் அவ ளது வடிவழகை வருணித்துக் கூறும் அமைதியை நோக்குவோம். அவளுடைய வேட்டார்க்கு வேட் டனவே போன்றினிய வேய் மென்தோள்கள்; நீல மலர் போன்ற கண்கள், முல்லையரும்புபோன்ற நிரையொத்த பற்கள்; அழகிய நெற்றி; கார்மேகமும் விரும்புங் கரிய கூந்தல்; பொன்னைத் தூவிவிட்டாற்போன்ற தேமல் பரந்த மார்பு ஆகிய இயற்கையழகினை முதல் வருணித்து அதுவும் பெரிய அளவில் வருணித்து; அதன் பின்பு செயற்கையழகை ஒரு சிறிதே வரு ணிக்கின்ருன். இயற்கையழகு கனிந்தவளே! செயற்கை யழகும் ஒரு சிறிது பெற்றவளே என்று புனைந்த பின்பு சிவப்பு நிறம் வாய்ந்தவளே என்று வருணனையை நிறைவு செய்கின்றன். ‘செய்யாய்' என்னும் சொல் லின் அமைதியையும் சிந்திப்போம்.
இயற்கையழகு இயையாதபோது நிறத்தால் ஒரு சிறப்புமில்லை என்னும் நுட்பம் இங்கே அமைந் துள்ளது. கறுப்பின்கண் உள்ளது அழகென்பர் சிலர்; சிவப்பின்கண் சிறந்துள்ளது அழகென்பர் சிலர். இவர்
مسي-72 مسسب

இருவரும் அழகறியார். வண்ணமும் வடிவமும் கூடும் போது அழகும் பிறக்கும்; அழகின்மையும் பிறக்கும். உச்சிமுதல் உள்ளங்கால் வரையுமுள்ள உறுப்புகள் அளவாக அமைவதால் அழகு பிறக்கின்றது. இவ் வுண்மையை அகத்துக்கொண்டே தலைவன் அவயவ அமைப்பினுற் பிறக்கும் அழகினை முதற்கூறிச் சிவப்பு நிறத்தை இறுதியிற் கூறினன். நிறம் வேறு; அழகு வேறு. நிறச் செருக்கு ஒழிக.
இனியவை சொல்லி எம்மைத் துன்பத்துட் புகுத்துவதை இனியறிந்துகொண்டேன்; இவ்வளவு நாளும் அறிந்திலேன் என்று தோழி தலைவனுக்குக் கூறுகின்ருள். மக்கள் வாழ்க்கையிலே இனியவை கூறி இன்னலுள் வீழ்த்துவோர் பலரை நாம் பலகாற் கண் டிருக்கின்ருேம்; அவரே இன்னற்பட்டதையும் பார்த் திருக்கின்ருேம். இவ்வுலக நிகழ்ச்சியைத் தோழி நன்கு விரித்துரைக்கின்ருள். வாயலங்காரத்துள் மறைந்து கிடக்கும் வஞ்சகம் கூரிய நோக்கமில்லாதோருக்கு அப்போது விளங்குவதில்லை; பிற்போதே புலப்படும். நயவஞ்சகர் சந்தர்ப்பவாதிகள்; இவர்களின் சேர்க்கை தீமையே தரும் என்னுங் குறிப்பும் இங்கே தோன்று. கின்றது.
காதல் வாழ்க்கையிலே இரண்டு கேள்விகள் எழுகின்றன. அவற்றைக் கிளப்புகின்ருள் தோழி? பெருந்தகையில் நன்கு மதிக்கப்படும் பொருள் அன்போ. செல்வமோ? என்னும் விளுக்களுக்கு விடை கூறுவதில் நீர் பிழைத்துவிட்டீர்; செல்வப் பொருளினுஞ் சிறந்த பொருள் வேறில்லையென உமது அறியாமை உம்மை மயக்கிவிட்டது. அதனல், எம்மீது கொண்டுள்ள நல் லன்பை மறந்தீர்போலும்! எனத் தலைவனை நோக்கிக் கூறுகின்ருள்.
*பொருளல்லாற் பொருளு முண்டோவென (யாழ) நின் மருளிகொள் மடநோக்கம் மயக்கப்பட் டயர்த்தாயோ,”
யாழ-அசைநிலை. பொருளை நினைத்து அன்பை மறத் தல் ஆகாது. அன்பு செய்தற்காகப் பொருளமைந்த தன்றிப் பொருளினல் அன்பை ஆச்குதல் அமையாது; அமைந்தாலும் நிலையாது என்னும் உண்மை தோழி

Page 46
யின் சொல்லாற் புலணுகின்றது. இதனை உலகம் உணர் த ல் வேண்டும்.
*பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்”
என்னுந் திருக்குறள் செல்வப் பொருளை மாத்திரம் தனித்துக் கூறுகின்றது. இங்கே அன்பும் செல்வமும் என்னும் இரண்டிலும் சிறந்ததெது? அன்போ? செல் வமோ? என்னும் வினவுக்கு அன்பே சிறந்தது என விடை கூறப்படுகின்றது. இது திருக்குறட் பொரு ளுக்கு மாருணதன்று.
அன்பினும் பொருள் சிறந்தது; பொருளிலார்க் கின்பமில்லை; புண்ணியதானமில்லை; கையிற் பொரு ளில்லாத காதலர் தம்மாற் காதல் செய்யப்பட் டோர்க்கு என்ன காரியத்தைச் செய்தல் முடியும்? கையிற் பொருளில்லாத காதலரையும் அவராற் காத லிக்கப்பட்டோர் விரும்பமாட்டார். 'இல்லான இல் லாளும் வேண்டாள்" என ஏதிலார் கூறுஞ் சொல்லை நீர் ஒரு பொருளாக மதித்து அன்பை மறந்தீரோ? என்று வினவுகின்ற தோழி அன்பினது அமைதியை யும் அதற்குப் பொருள் ஈடாகாமையையும் கூறுகின் ருள். உலகிலே அன்பினும் மேலாகப் பொருளை மதிக் கும் மனப்பான்மையை அவள் வெறுக்கின்ருள். அன் பினும் பொருள் சிறந்தது என்போரை ஏதிலார் என்று அவள் கூறுவதும் இங்கே அறிதற்குரியது.
ஏதிலார் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று கூறுவோர்; உறவுபோலிருந்து உருதன கூறுவோர்; உதவுவார்போன்று உதவாதன கூறுவோர். இவரது சொல்லை ஒரு பொருளாக மதித்தலாகாது; மதித்தால் இழிவுண்டாகும் என்னும் அனுபவத்தையும் இங்கே தோழி உள்ளடக்கிக் கூறினுள்.
*காதலா ரெவன் செய்ப பொருளில்லா தார்க்கென
ஏதிலார் கூறுஞ் சொல் பொருளாக மதித்தாயோ'
என்னுஞ் செய்யுளடிகள் என்றும் நினைவுகூரத் தக் கன. எவன்- என்ன செய்ப-செய்வர்.
-74

பொருளுக்குத் தன்னளவிலே ஒரு சிறப்பில்லை. நன்னெறியால் வாராத பொருள், நல்லோர் கைப் படாத பொருள், கள்ளப் பொருள்; கொள்ளைப் பொருள்; வட்டிக்கு வட்டி குட்டியாய் வாங்கும் மா யப் பொருள்; இவையெல்லாம் பொருளே ஆயினும், பொருளோ? இப்பொருள்களெல்லாம் தேடுவோருக்கு இம்மைக்கும் பகையே. மறுமைக்கும் பகையே. எல்லா மறிந்த நீர் இதனையறியீரோ? அறிந்தால் அன்பை மறந்து எம்மைப் பிரிய நினைப்பீரோ? என்று தலை வனை நோக்கிக் கேட்கின்ற தோழி தீய வழியாற் பொருளிட்டும் இரக்கமில்லாத மாக்களுக்கும் நல்ல புத்தியைப் புகட்டுகின்ருள். n
"செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவ தறியாயோ"
செம்மை- பொருள் தேடும் முறைமை, இகந்து-அம் முறையைக் கடந்து ஒருவுதல்-அப்பொருள் விட்டு நீங்குதல், முறைகேடாகப் பொருள் தேடுவோரை அப் பொருள் விட்டுச் செல்லும் என்பது இதன் கருத்து. இங்கே நமது தலைவன் நல்லவன் தீய பொருளை நாடாதவன். ஆயினும், அவனது பிரிவினலே தலைவி இறந்துபட அவன் சென்று பொருள் தேடக் கருதியது அவனுக்கு முறைகேடாயிற்று. முறைகேடும் பலவகை.
*சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் பசுமட்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று”
என்னுந் திருக்குறளும் இங்கே ஒப்புநோக்கத்தக்கது. சலம்-தீய வினைகள், ஏமார்த்தல்-பாதுகாத்தல்: பசு மட்கலம்-வேகவையாத மண் பாத்திரம்; இரீ இயற்றுபாதுகாத்து வைத்தல் போலாகும்.
பொருளைப் பெரிதென்று அன்பை மறந்தீரோ? உறவுபோன்று உறுதியல்லாதன கூறுவோரது சொல்லை மதித்தீரோ? முறைதவறத் தேடும் பொருள் இம்மை யும் மறுமையும் பகையாவதை அறியீரோ? எம்மை விட்டுப் பிரிவீரோ? என்று தோழி கூறத் தலைவனுக்கு இழிவு தோன்றிற்று. தோழி பின்னுங் கூறுகின்ருள்.
-- 75س-

Page 47
தலைவியின் நிலையையுணர்ந்து அவளது நிலைக் கேற்ப நான் இவ்வாறு கூறினேன். அன்பும் பொரு ளும் ஆகிய இரண்டும் வேண்டும். நீர் பொருள் தேடச் சென்ருல் அவள் உயிர்வாழமாட்டாள். பின்னை யார் பொருட்டுப் பொருள்? கையிற் கிடைத்த சிறந்த அன் புப் பொருளாகிய அவளைப் பாதுகாப்பது உமது முதற் கடனுகும். இந்நிலையில் இதுவே பொருள் பொருள் மாத்திரம் பொருளன்று. எம்மையும் பொருளாக மதிப்பீர்.
“எம்மையும் பொருளாக மதித்தித்தை; நம்முள் நாம்
கவவுக்கை விடப்பெறும் பொருட் திறத்து
அவவுக் கைவிடுதல் அதுமனும் பொருளே’ மதித்தீத்தை-மதிப்பாய்; கவவு-கூடல் கைவிடல்விட்டு நீங்குதல்; அவவு-அவா.
தலைவியைத் தலைவன் அளவு கடந்து பாராட்டி யமை கண்ட தோழிக்கு அவன்மீது ஐயமுண்டாயிற்று. அண்மையிற் பிரிவுண்டாமோ என்னும் ஐயம். நமது வாழ்க்கையிலும் நாம் அளவுபட வாழ்தல் வேண்டும். அளவுபடாத உணவு துயில்; உடை பேச்சு புகழ்ச்சி முதலியனவெல்லாம் நமது எண்ணத்துக்கு எதிரான பலனையே தரும்; சுவையற்றுப்போகும். நாடக அவி நயங்களும் இவ்வாறே, ஓர் அவிநயம் அளவு கடந் தால் அதன் சுவையும் நகையாய்விடும். அழுகை முத லியனபற்றிய அவிநயங்கள் நடிகர்களின் அளவுகடந்த செய்கையால் நகையாக மாறுவதை நாம் பலகாற் கண்டிருக்கின்ருேம். ஆதலின், நாம் எதிலும் அளவு பட நிற்பின் நமக்கும் பிறர்க்கும் நன்மை யுண்டா கும்; வாழ்க்கை ஒழுங்குபடும்.
தலைவனது அளவுகடந்த புகழ்ச்சி அவனுக்கு" இகழ்ச்சியாயிற்று. தோழி கூறிய சொற்கள் அவனுக்கு இழிவையுண்டாக்கினமையை அவன் உணர்கின்றன். ‘எல்லாம் பொருளிற் பிறந்துவிடும்,” தலைவியின் பெருந் துன்பத்தைப் பொருள்கொண்டு தணித்தல் முடியாது; பொருள் சிறப்புடையதாயினும், அன்பி னும் பொருளினும் அன்பே சிறந்தது தலைவியை ஆற்றி இல்லின்கண் சில நாள் இருந்து, பின் பொருள் தேடப் பிரிவதே நலமாகுமென்று துணிவுகொண்டான் தலை 616ð •
76--

பாலைக்கலி: செய்யுள் (14)
பொருளினும் 9(6T6b) Lמ அருமையுடையது. இழந்துபோன இளமையை ஈட்டிய பொருளால் மீண் டும் எய்தல் கூடாது என்பது இச்செய்யுளின் கருத் தாகும். செய்யுளின் தரவு தமிழ் நாட்டு மறவரின் இயல்பு கூறுகின்றது. இம்மறவர்கள் பண்டைக் காலத் திலே தமிழ் நாட்டு மன்னர்களின் படை வீரராகத் தொண்டுபூண்டோர். வீரம் இவர்களின் பரம்பரைச் செல்வம் இவர்களின் பரம்பரையினர் இன்றும் இயற்கை வீரம் அமைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். முறுக் கிய மீசையும் கூரிய கண்களுமுடைய இவர்கள் தன் மானம் மிக்கவர்கள்.
கல்லா மறவர், கண்ணஞ்சா மறவர், எனப் பேர்பெற்ற இவர்கள் ஓடாமறவர் என இங்கே சிறப் பித்துக் கூறப்படுகின்றர்கள். கல்லா மறவர்-இயற்கை யாகவே மறம் கைவரப் பெற்றவர்; மறம்-வீரம். "குலவித்தை கல்லாமற் பாதி' என்னும் பழமொழி யும் இக்கருத்தையே விளக்குகின்றது. கண்ணஞ்சா மறவர்-பகைவர் முன்னிலையிலே கண்ணை இமைத்து விழியாதோர். ஒடா மறவர்-படை முகத்தில் முதுகு காட்டி ஓடாத வீரர்; எதிரிகளை ஓடச்செய்து முதுகு காண்போர். தமிழ்நாட்டு மறவருக்கு வெற்றி அல் லது மரணமே வாழ்க்கை இலட்சியம். வெற்றிகர மாகப் பின்வாங்குதல் மேல்நாட்டு இறக்குமதிப் பொருளாகும்.
தமிழ்நாட்டு மறவரது தோற்றத்தைப் புலவர் புனைந்து கூறும் போக்கினை நோக்குவோம். மறவர் கள் கடிய பார்வையினையும், வலிய கழுத்தினையு முடைய கலைமானின் கீழ் நோக்கிய கொம்புபோலத் திருகி முறுக்குண்ட தாடியினை உடையோர்; கடுஞ் சினமுடையோர்; பின்காட்டி ஓடாத வீரமுடையோர்; சிலைமரத்தாற் செய்த வலிய வில்லேந்தியவர்கள். சிலை மரமென்பது வில் செய்தற்குரிய ஒரு வகை மரம். இத
ー77ー

Page 48
னற் சிலைமரமென்னும் பெயர் பெற்றது. இவ்வில் லேந்திய மறவர்கள் அரசர்க்குமஞ்சார்; அவரது படைக்குமஞ்சார். "எலியெலா மிப்படை அரவம் யான்' என்று குகன் கூறிய சொற்கள் இம்மறவரது மனப்பான்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.
படைக்கலமேந்திய பல படைகளை ஒருங்கு திரட்டிக் கொண்டுவந்து எதிர்க்கும் பார்வேந்தரைத் தமது நாணைத் தெறித்து அவ்வோசையாலேயே முதுகு காட்டி ஓடச்செய்யும் மனவலி வாய்ந்தவர்கள் தமிழ் மறவர்கள். அவர்களது வில்லின் நாணுெலி சிங்கநாதம் போன்றது. தோற்று ஒடுவோர் மீது முதுகில் அம்பு தொடுப்பதைத் தமக்கு அவமானமாகக் கருதுகின்ற இம்மறவர்கள் தமிழ் மன்னரின் படைக்கு அணிகல மாகத் திகழ்ந்தனர். இம்மறவரது சந்ததியார் தாம் வாழும் நாட்டிலே அஞ்சிப் பணிந்து அடிமைகளாய் வாழ்வரோ?
"அரிமான் இடித்தன்ன அஞ்சிலை வல்விற்
புரிநாண் புடையிற் புறங்காண்ட லல்லால், இணைப் படைத்தானை அரசோ டுறினும் கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பின் எருத்து வலிய எறுழ் நோக் கிரலை மருப்பிற் திரிந்து மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத் தோடா மறவர்.”
அரிமான்-சிங்கம்; புடை-தெறித்தல்; படை-படைக் கலம்; இணைத்தானை-பல சேனைகள் ஒன்ருய்க் கூடிய பெருஞ்சேனை ; கணை-அம்பு; தொடை-தொடுத்தல்; எருத்து- கழுத்து; ன்ருத்தமெனவும் வழங்கும்; “யானை யெருத்தம் பொலிய' என்பது நாலடியார். எருத் தாற் பாரமிழுக்கும் மாட்டை எருத்துமாடு என்பதும் இப்பொருள்பற்றியே. எறுழ் நோக்கு-வலிய பார்வை; தனது பிணைக்கு இடையூறு நிகழாது தடுக்க நோக் கும் நோக்கம். இரலை மருப்பு-மான் கொம்பு. திருகி முறுக்குண்ட மான் கொம்பு மறவரின் தாடிக்கு உவமை யாய் வந்தது. இலக்கணக் கவிகளல்லாத இயற்கைப் புலவர்கள் பொருள்களை வருணிக்கும்போது அவ்விடத்தி
=س-78-سے

லுள்ள பொருள்களையே உவமைகளாக அமைப்பர். இது மனவுணர்ச்சி.
திருக்காளத்தியப்பர்மீது கொண்ட பிரிப்பில்லாத அன்பினலே கண்ணப்ப நாயனர் மனமுருகி அப்பெரு மானைவிட்டுப் பிரியாமல் நின்ற நிலையை ‘வங்கினைப் பற்றி நாடா வல்லுடும் பென்ன நின்ருர்’ என்று சேக்கிழார் சுவாமிகள் வருணிக்கின்ருர். இடையர் குலத் தலைவனெருவன் தனது மகளை ஓர் ஆடவனுக்கு அறிமுகஞ்செய்துவைக்கும் ஒரு காட்சியும் இங்கே புலமை கருதி நினைவுக்கு வருகின்றது. தனது மகளை அவன் வருணிப்பதாகத் திருத்தக்கதேவர் பாடுகின் ருர்.
*வெண்ணெய் போன் றுாறினியள்; மேம்பால்போற்
தீஞ்சொல்லள்: உண்ண வுருக்கிய
ஆநெய்போல் மேனியள்.” என்னும் அடிகள் உண்மைப் புலமையின் உருவங்களே யாகும். ஊறினியள்-மேனியைத் தீண்டுதற்கு இனி யவள்; மே-விருப்பம்; தீஞ்சொல்-இனிய சொல். இங்கே இடைக்குல மங்கையின் மேனியைத் தீண்டு மின்பத்துக்கு வெண்ணெயைத் தீண்டுதலும், அவளது இனிய சொல்லுக்குப் பாலும், மேனியின் நிறத்துக்கு உருக்கிய நெய்யும் உவமை கூறப்பட்டுள்ள பொருத் தம் இனிமை தருவதாகும். உறைந்திருக்கும்போது நெய் வெண்ணிறமுடையதாயிருக்கும். உண்பதற்கு உருக்கும்போது அது பொன்னிறமடையும். அப்பொன் னிற நெய்யே மேனிக்கு உவமையாய் வந்தது.
இது நிற்க, இனி, மறவர் செய்தியை நோக்கு வோம். படைத் தொழில் செய்யாத ஏனைய மறவர் கள் பாலையிலேயே வாழ்க்கை நடத்துவர். மக்கள் தாம் வாழுகின்ற சூழ்நிலைக்கேற்ப மனம் மாறுபடும் இயல்புடையோர். வளஞ்சான்ற மருத நிலப் பரப் பில் வாழ்வோர்க்கு வயல் வளம்போன்று மனவளமும் அமைந்துவிடுகின்றது. இங்கே நீரும் நிழலுமில்லாத அரிய பாலை நிலத்தில் வாழ்கின்ற மறவருக்கு அப் பாலை நிலம்போல அவர்களது மனமும் கடுமையாகி
-79

Page 49
விட்டது. எவ்வளவு உயர்ந்த சம்பளங்கொடுத்தாலும் கைலஞ்சம் வாங்கும் பழக்கத்துக்குச் சிலர் அடிமை யாய்விடுகின்றனர். அது தொழிலால் வந்த நரகப் பழக்கம். பாலை நிலம் வளமற்றது; அங்கே பயிர் பச்சைகள் வளர்வதில்லை. இதனுல், அங்கு வாழ் வோர்க்கு வருமானமில்லை. களவும், கொள்ளையுமே அவர்களுக்குச் சிறந்த தொழிலாய் விட்டன. வழிபறி கொள்ளையாற் பெற்ற இரக்கமற்ற செல்வத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் வாய்ப்பும் இவர்களுக்கு வலியவந்ததே. பிரயாண வசதிகளின்மையால் வழிப் போக்கர்கள் பெரும்பாலும் நடந்தே செல்லவேண் யிருந்தது. இதனுற் பாலை நிலத்திற் தனிவழிச் செல் வோரை இவர்கள் பயப்படுத்திப் பொருள் பறித்துப் பழகிய பழக்கம் இவர்களுக்கு வழக்கமாக மாறிவிட் டது. பொருள் பறித்தல், புண் கொடுத்தல் ஆகிய தீச்செயல்கள் இவர்களுக்கு நற்செயல்களாகிவிட்டன. வாழ்க்கையிலே பழக்க மிகுதியால் தீய செயல்களுக்கு அடிமைப்பட்டுக் கீழ்நிலையடைவோரையும், பழக்க மிகுதியால் நல்ல செயல்களுக்கு அடிமைப்பட்டு உயர் நிலையடைவோரையும் நாம் அனுபவத்திற் காண்கின் ருேம்.
நல்லறிஞர் பலர் தாம் வாழுமிடம் பாலையா யினும், அதை வளஞ்சான்ற மருதமாக்கிவிடுகின்றனர். புல்லறிவோர் பலர் தாம் வாழுமிடம் மருதமாயினும், அதை வறண்ட பாலையாக்கிவிடுகின்றனர். மற்றவர் களின் கொடுந் தொழிலால் அன்பும் அருளும அப் பாலை நிலத்தைக் கைவிட்டுப்போயினமையால் அது பயங்கரமான இடமாயிற்று. மறவர்கள்
*பொருள் கொண்டு புண்செயி னல்லதை யன்போ
டருள் புறமாறிய ஆரிடை யத்தம்” புறம்மாறுதல்-கைவிட்டுப்போதல்; அத்தம்-காடு.
பொருளினும் இளமையருமையுடையது. இழந்து போன இளமையைப் பொருளாற் திரும்பவும் பெறு தல் முடியாது எனக் கூறத் தொடங்கிய தோழி காட் டின் கடுமையுங் கொடுமையும் முதலிற் கூறுமிடத்து மறவரின் இயல்பினையுந் தொகுத்துரைத்தாள். இனித் தான் கருதிய பொருளைக் கழறுகின்ருள்.
سس-80-سسه

எல்லாச் சொல்லும் பொருள் குறித்து வரு வனவேனும், இடவேறுபாடுபற்றி அவை வேறு வேருக வழங்கப்பெறும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் பாகுபாடும் இவ் வாறமைந்ததாகும். கல்வி,செல்வம் என்னும் இரண்டை யும் பொருளென வழங்குவதும் நாமறிந்ததே. கல்விப் பொருள் அழியாத இயல்பினையுடையது; எழுமையும் பயன் தருவது. செல்வப் பொருள் அழியுந் தன்மை tly63) - Lugil.
*ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து"
எனத் திருக்குறளுங் கூறுகின்றது.
மக்கள் பயிலுதற்குரிய கல்வியை உலகியற் கல்வி, அறிவியற்கல்வி என இரண்டாக வகுத்துக் கூறுவர் நல்லோர். உலகியற் கல்வியை மாத்திரம் கற்று அறி வியற் கல்வியைக் கல்லாதுவிடுவர் மிகப் பலர்; அறி வியற் கல்வியை மாத்திரம் பயின்று உலகியற் கல்வியை ஒதாது விடுவர் பலர். மேற்கு நாடுகள் முன்னைய வரிசையினும் கிழக்கு நாடுகள் பின்னைய வரிசையி னும் இடம்பெறுவனவாகும். உலகியலும், அறிவிய லுங் கற்ருேரே உண்மையான மனித வாழ்வு வாழும் வழியினையறிதற்குரியோர். அறிவியலென்பது சமய நூற் கல்வி.
உலகியற் கல்வியும் அறிவியற் கல்வியும் ஒன் முக இணைந்து வராதபோது மக்கள் வாழ்வு இகபரம் இரண்டிற்கும் ஏற்றதாகாது என்னும் உண்மையினை நமது முன்னேர் நன்கறிந்திருந்தனர். மாணி (பிரமச் சாரி) நிலை, இல்வாழ்க்கை நிலை, ஆரம்பத் துறவு (வானப்பிரத்தம்) நிலை, துறவு நிலை என்னும் நான்கு நிலைக்கும் பொருத்தமான கல்வியினை அவ்வக்காலத் துப் பயிலும் வழக்குத் தமிழ்நாட்டிலும் வடநாட்டி லும் நிலைபெற்றிருந்தமைக்குச் சங்க நூல்களும் சான்ரு கின்றன. பிரமச்சரிய நிலை, இல்வாழ்க்கை நிலை ஆகிய இரண்டுக்குமுரிய கல்வி மணம் செய்ய முன்பும், ஏனைய இரு நிலைகளுக்குமுரிய கல்வி மணஞ்செய்த பின்பும் கற்கப்படுவனவாகும். மணஞ்செய்த பின்பு கற்றற்குரிய
س۔81 سے

Page 50
இரு வகைக் கல்விகளும் இச்செய்யுளிற் குறிப்பிடப்படு கின்றன. இக்காலக் கல்வி முறையில் இந்தப் பாகு பாடு கிடையாது; எல்லாம் மயக்கம்.
தோழி கூறுகின்ருள்: நீர் புறப்பொருளை விரும்பி அகப்பொருளைக் கைவிட்டுப் போக நினைக்கின்றீர். இதனுல் அசோகந்தரின் அழகுபோன்ற தலைவியின் மேனியின் நிறம் பசலைகொள்ளும். கொள்ளவே பழைய அழகு கெடும். அவ்வாறு அழகு கெட்டால் அவ்வழகினைப் புதுவதாக நீர் தேடச் செல்லும் கல் விப் பொருளால் மீட்டல் முடியுமோ? கல்விப் பொரு ளென்றது ஆரம்பத் துறவு நிலைக்குரிய கல்வியை. வானப் பிரத்த நிலைக்குரிய கல்வியென்பதும் அதனையே.
*புரிபுநீ புறம் மாறிப் போக்கெண்ணிப் புதிதீண்டிப்
பெருகிய செல்வத்தாற் பெயர்த்தரல் ஒல்வதோ?
செயலையந் தளிரேய்க்கு மெழில்நலம்; அந்நலம்
பசலையா லுணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்." என்பது செய்யுள். புரிபு-விரும்பி; புறம்மாறுதல்கைவிட்டுப்போதல்; செல்வம்-வானப்பிரத்த நிலைக் குரிய கல்விப்பொருள்; பெயர்த்தரல்-மீட்டல்; ஒல் வதோ-ஒண்ணுமோ? செயலை-அசோகு.
மெய்ப்பொருளுணர்ந்தோரை வழிபட்டு உண் மைக் கல்வியைக் கற்றல் பண்டைக் காலத்து மர பாகும். வானப்பிரத்த நிலைக்குரிய, மாசறு கல்வி யைக் கற்றற்பொருட்டுத் தலைவன் பிரிந்து செல்லக் கருதுகின்றன். இக்கால மாணவர் பலர்க்கு ஆசிரியர் களைப் பார்க்கிலும் புத்தகங்களே சிறந்த வழிகாட்டி கள். மூலபாடங்களிலும் புத்தக விமரிசனங்களே சிறந்த நூல்கள். நமது பண்டைய காப்பியத் தலைவன் தகுதி யான ஆசிரியரை நாடி நிற்கின்றன். அத்தகைய நல் லாசிரியரை மெய்யுணர்ந்தோரென்று தோழி புகழ்ந் துரைக்கின்ருள். ஆயினும் ஒதற் பிரிவு காரணமாகத் தலைவியின் அணிவட்ட மதிமுகம் பசலை பரந்து கிர கண சந்திரன்போல ஒளி மழுங்கிக் கெடுமே எனவும் வருந்துகின்ருள்.
-82

இந்நிகழ்ச்சியினைப்,
*பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தால் மறுத்தரல் ஒல்வதோ? தீங்கதிர் மதியேய்க்குந் திருமுகம்; அம்முகம் பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால்," எனப் புலவர் வருணிக்கின்றர். புரையோர்-மெய்ப் பொருள் உணர்ந்த மேலோர்; படர்தல்-அவரை நாடிச் செல்லுதல். படிவம்-தவவிரதம்; மறுத்தரல்மீட்டல்.
நீர் தலைவியைப் பிரிகின்றீர். அதுவும் உயர்ந்த நோக்கத்துடன் தத்துவப் பொருளை உணர்ந்தோரைக் கூடுவதற்காகப் பிரிகின்றீர். ஆசையாகிய சங்கிலியை அறுத்து நிலையான தத்துவப் பொருளைப் பெற்று நீர் திரும்பி வருங்காலம் மட்டும் இவள் ஆற்றியிருப் பாளோ? முறுக் கவிழ்ந்த நீலமலர்போன்ற இவ ளுடைய கண்கள் விளக்குத் திரியிலிருந்து விழும் சுட ரெண்ணெய்த் துளிகள் போன்று நீர்த்துளிகளைச் சிந்தி அழகு கெடுமே! கெட்டால் துறவு நிலைக்குரிய கல்விப் பொருளால் அவ்வழகினை மீட்டல் கூடுமோ? திரியுமிழ் நெய்போல் என்னும் உவமை உணர்ச்சியூட்டி நிற் கின்றது.
“பின்னிய தொடர் நீவிப்பிறர்நாட்டுப் படர்ந்துநீ மன்னிய புணர்ச்சியால் மறுத்தரல் ஒல்வதோ? புரியவிழ் நறுநீலம புரையுண்கண் கலுழ்பாணுத் திரியுமிழ் நெய்யே போற் தெண்பனி யுறைக்குங்கால்,"
இச்செய்யுட் பகுதி துறவு நிலைக்குரிய கல்வி கூறுகின் றது. பின்னிய- பிணைத்த, நீவி - அறுத்துவிட்டு, மன் னிய புணர்ச்சி-இறவாப்புகழ்,புரிஅவிழ்-மலர்ந்த,தெண் பனி உறைத்தல்-தெளிந்த நீரைத் துளித்தல்; தலைவி யின் தண்ணுெளி வீசும் அணிவட்ட மதிமுகமும் மலர் போன்ற கண்களும் உமக்கு அவளது நன்மைகளை நினைப்பூட்டும். உமது இன்பத்துக்குக் காரணமான அவற்றைக் காப்பது உமது முதற் கடமையாகும். மற்றையவைகளைப் பின்னர் ஆராய்தலே தகும். கல்விச் செல்வத்தை இவ்விடத்திருந்தே நாடோறும் ஈட்டிக்கொள்ளலாம். தூரத்தே பிரிந்து சென்று தேடும்
-83

Page 51
கல்விச் செல்வம் இவளது இளமை போனபின்பு அவ் விளமையை மீட்கும் இயல்புடையத்ன்று. எம்மீதுள்ள அன்பைக் கைவிட்டுப் பிரிதல் தகுதியாகாது எனத் தோழி கூறிய சொற்களால் தலைவன் தனதெண்ணத் தைச் சோரவிட்டான் என்பது செய்யுட் பொருளா G95 Lfb.
*அனயவை போற்றி நினைஇயன நாடிக்காண்;
வளமையோ வைகலுஞ் செயலாகும்; மற்றிவள் முளைநிரை முறுவலார் ஆயத்து ளெடுத்தாய்ந்த, இளமையுந் தருவதோ இறந்த பின்னே.” அனயவை-நிறம், முகம், கண் என்பன நினைஇயனதேட நினைக்கின்ற கல்விப் பொருள்கள், வளமையோகல்விச் செல்வமோ? ஒகாரம்-இழிவுப்பொருள்; ஆயம்மகளிர் கூட்டம்; இளமையும் என்பதில் உம் உயர்வு குறித்தது. இறத்தல்-(இளமை) கழிதல்.
سیس84--س۔

பாலைக்கலி : செய்யுள் (15)
திமிழ் மக்கள் இயற்கையின் வடிவாக இறை வனைக் கண்டு வழிபாடு செய்தலில் மிகவும் ஈடுபட்டு வாழ்க்கை நடத்திய பழைமைவாய்ந்தவர்கள்; இயற் கைப் பொருள்களைக் காணும்போதெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு மனமுருகி மெய்மறந்து நிற்கும் ஒழுக்க முடையோர்; சூரியன், சந்திரன் முதலிய ஒளி வடி வங்களையெல்லாம் இறைவனது வடிவாகக் கண்டு இன் புறுவோர்; எல்லாப் பொருள்களையும் இறைவன் இயக்கி நிற்கின்ருன் என்னும் கொள்கையில் உறுதிப்பாடுடை யோர். தமிழனுக்குப் பூமியும் தெய்வம் கல்வியும் தெய்வம்; செல்வமும் தெய்வம், நோய்களையுமே அவன் தெய்வ வடிவிற் காண்பவன். பரம்பரை பரம்பரையாக வந்த இவ்வழக்கம் தமிழ்க்குலம் முழுவதையுமே தன் வசப்படுத்திவிட்டது. பேணுங் குணமுடைய பெண் களும் இவ்வழக்கத்தைத் தங்கள் குலவொழுக்கமாகக் கொள்வாராயினர்.
"குலஞ் சுரக்கு மொழக்கம் குடிக்கெலாம்"
என்று கம்பநாடரும் கூறுகின்ருர்,
தமிழ்நாட்டு மகளிர் மணம் முடிக்க முன்பு பிறைதொழுதல் முதலிய வழக்கங்களைக் கைக்கொண்டு வாழ்வர். மனும் பின்பு தங்கள் கணவன்
醬卷荔器器 பிறை தொழுதல் முதலிய ஒழுக்கங்களை மணம் முடித்த
பின்பு கைவிட்டுவிடுவர். இறைவனை வணங்கும்_வ
வாழ்வர். ஆடவரும் பெ த் தெய்வங்களாக 器 துப் ஆதிசேவகா
تنظ
தாளாண்மையாற் பெற்ற பொருளைக்கொண்டு வேளாண்மை செய்வதைத் தமிழ் மகன் நல்லறமாக மதித்தான். வேளாண்மையென்பது பரோபகாரம்,
--85ے

Page 52
தமிழ் நாட்டில் ஒரூரிலுள்ள தலைவன் அறம் செய் தற்காகப் பொருளிட்டச் சென்றுவிட்டான். இது பிரிவு; தலைவிக்குக் கடுந்துன்பந் தருவது. பிரிவின்கண்ணே தலைவி காதலன் சொன்ன கால எல்லை வரையும் ஒரு வாறு ஆற்றியிருந்தாள்; நாட் செல்லச்செல்ல அவ ளுக்கு ஆற்ருமை மேலிட்டுவிட்டது. தோழியை நோக்கி அவள் கூறுகின்ற சொற்களிலே தனது குலவொழுக் கத்தைப் பாதுகாப்பது உயிரினுஞ் சிறந்ததாகும் என் னுங் கொள்கையை அவள் வெளியிடுகின்ருள். தோழி! தலைவரின் பிரிவின் பின் கண்கள் இமைகூடாமையால் நித்திரையில்லை; ஒரிரவு ஒர் ஊழிபோலக் கழிகின்றது; கண்கள் மெலிவடைந்துவிட்டன; கண்களில் நீர் மல்க நிறம் வாடி அழகு கெடுகின்றது; நலிவும் மெலிவும் உண்டாகக் கை வளையல்கள் கழன்று விழுகின்றன. இவ்வாறு எனது அழகு அழிவதற்கு அஞ்சாது பிரிந்து சென்ற தலைவர் பொருட்டு நான் நினைக்கத் தகாத தொரு நினைப்பினை நினைக்கின்றேன் காண். நமது கற் பொழுக்கத்துச்குப் பொருந்தாத அந்நினைவை வாயாற் சொல்லவும் இயையுமோ? ‘வரன் முறை திறம்புதல் வழக்கோ" என்பது கம்பராமாயணம்.
“பாடின்றிப் பசந்த கண் பைதல் பனிமல்க
வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர
ஆடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி
நாடுங்கால் நினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான்” என்பது செய்யுள். பாடு-நித்திரை; பசப்பு- மெலிவு பைதல்-வருத்தம்; பனி-நீர்த்துளி; வாடுபு-வாடி வனப்போடல்-அழகு கெடுதல்; வணங்குஇறை-வளைந்த மணிக்கட்டு; ஆடு-வெற்றி; மன்-பயன்யாது?
வரன் முறைக்கு மாருன செயலைச் செய்யுமாறு என் மனம் பிழையாக என்னைத் தூண்டுகின்றது. அது பயனற்ற செயலாகும். காதலர் நமது இயற்கை நல முங் கெட்டு நாம் வருத்தத்திலே அழுந்தும்படி நம் மைக் கைவிட்டுச் சென்றுவிட்டார்; நம்மை நினைப் பது மிலர்; பொருள்மேல் அன்புவைத்தார்; நம்மீது அன்பைத் துறந்தார். அவர் செல்லுகின்ற காட்டு வழியிடத்தே வெப்பந் தணியுமாறு மழை பெய்கவென மழையின் அதிதேவதையான பரிதியஞ் செல்வனைப்
അ86

பரவுமாறு என் மனஞ் சொல்லுகின்றது; நான் அவ் வாறு செய்வேனுே?
*தொன்னலந் தொலைபீங்கியாம் துயருழப்பத் துறந்துள்ளார்
துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக் கன்மிசை யுருப்பிறக் கனது வி சிதறென இன்னிசை யெழிலியை இரப்பதும் இயைவதோ?”
தொன்னலம்-இயற்கையழகு தொலைபு-தொலைந்து; ஈங்கு-இங்கு உள்ளார்-நினையார் உருப்பு வெப்பம்; இற-நீங்க எழிலி-மேகத்துக்குக் காரணமான சூரியன்.
தோழி, இங்கே நாம் தனிமையாயிருக்கும்படி நம்மைவிட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு செல் கின்ற காதலர் போகுமிடமோ பகைவர் நாடு; அவர் அதையும் நினைத்தாரில்லை; காலமோ வழியிடத்தே மரங்கள் சினைவாடுகின்ற வேனிற்காலம்; காலத்தின் கடுமையையும் நினைத்தாரில்லை; நம்மையும் நினைத் தாரில்லை. அவர் செல்லுகின்ற வழியிடத்தே சினந் தணியுமாறு செங்கதிர் வேந்தனை வேண்டிக்கொள் வேனே? அது நமது கற்புக்குப் பொருந்துமோ?
'புனையிழாய் ஈங்குநாம் புலம் புறப் பொருள் வெஃகி
முனையெண்ணுர் காதலர் முன்னிய ஆற்றிடைச் சினைவாடச் சிறக்கு நின் சினந்தணிந் தீகெனக் கனை கதிர்க் கனலியைக காமுற லியைவதோ?’
புலம்பு-தனிமை, வெஃகுதல்-விரும்புதல்; முனை-பகைவர் நிலம்; சிறக்கும்-மிகும்; தணிந்தீக-தணிக கனலிசூரியன்.
தோழி! இவ்விடத்தேயிருந்து நாம் மிகவும் வருந்துமாறு தலைவர் நம்மைப் பிரிந்துசென்ருர் நம் மீது அன்பைத் துறந்தார்; பொருள்மீது ஆசைகொண் டார். அவர் செல்லுகின்ற வழியிடத்தே சிறு தூறு களும் உலர்ந்துபோயின. செங்கதிர்ச் செல்வனே, காத லர் செல்லுகின்ற கடுவழியில் அவ்வுலர்ந்த தூறுகளின் மீது தங்கிவந்த வெப்பமாறிச் செல்கவென்று ஞாயிற் றினை வாழ்த்துவேனே? அது நமது கற்புக்குப் பொருந் துவதொன்ருே?
سس-87-سه

Page 53
“ஒளியிழாய் ஈங்குநாம் துயர்கூரப் பொருள்வயின்
அளி ஒரீஇக் காதலர் அகன்றேகு மாரிடை முளிமுதல் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென வளிதருஞ் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?”
கூர-மிக அளி-அன்பு; ஒரீஇ-நீங்கி; முளிதல்-உலர் தல்; முதல்-சிறுதூறு உறுக-சேர்க.
தமிழ்நாட்டில் நிலவியல்புக்கேற்பத் தெய்வ வழிபாடு அமைந்திருந்தது. இங்கே கூறும் பொருள் களெல்லாம் நிகழுமிடம் பாலைநிலமாகும். பாலைக்குத் தெய்வம் பரிதியஞ் செல்வனும், திகிரியஞ் செல்வி (துர்க்கை)யுமாவர். பரிதியஞ் செல்வனுக்குரிய மூன்று இயல்புகள் இச்செய்யுளிற் கூறப்பட்டுள்ளன. கனலை யும், மழையையுங், காற்றையுந்தருகின்றவன் சூரியன் என்கின்ற உண்மையினைத் தமிழர்கள் நன்கு அறிந் திருந்தமை இச்செய்யுளாற் புலனுகின்றது. எழிலி, கனலி, வளிதருஞ் செல்வன் என்பன சூரியனைக் குறிக் குஞ் சொற்களாக அமைந்துள்ள நுட்பம் நம்மால் நோக்குதற்குரியது. சூரிய நமஸ்காரம் மணஞ் செய்த மகளிர்க்குக் குலவொழுக்கமாகாது என்பது செய்யுட் பொருள்.
பலதிறப்பட்ட தெய்வ வழிபாடுகள் பழந் தமிழ் நாட்டில் நிலைபெற்றிருந்தன. திருமுருகாற்றுப் படை முதலிய நூல்களிலே இச்செய்திகளைக் காணலாம். நிலவியல்புபற்றி வேறு வேறு தெய்வங்களை வழிபடு தல்; குலவியல்புபற்றி வெவ்வேறு தெய்வங்களைத் தொழுதல்; பொதுவியல்பு காரணமாகப் பிற தெய் வங்களை வணங்குதல்; இவையெல்லாவற்றுக்கும் அப் பாற் சென்று ஊரும்பேரும் உருவுங் கடந்த கட்டற்ற பொருளாக இறைவனைக் கண்டு வணங்குதல் முதலிய பலவகை வணக்கங்கள் மக்களின் மனவியல்புக்கேற்ப வரையறுக்கப்பட்டுள்ளன. உடற் பயிற்சிபோன்றதும், எல்லார்க்கும் ஒரேதன்மையாக அமைந்துள்ளதுமான தெய்வவழிபாட்டைத் தமிழ் மக்கள் கைக்கொள்ள வில்லை. அதில் மனம் ஒடுங்குவதில்லை.
மணஞ்செய்த மகளிர் தங்கள் குலதெய்வங்களை யும், ஒரே கடவுளாகிய இறைவனையும் வணங்கும்
-88

ஒழுக்கமுடையோர். பிற தெய்வங்களை அவர்கள் வழி படுவதில்லை. பிற தெய்வங்களாவன சூரியன், சந்தி ரன் முதலியன. தாய், தந்தை, தமையன், அரசன், குரு என்போரையும் தெய்வமாகப் பாவித்து வணங் கும் தன்மையுடையோர் தமிழர். மகளிர் தங்கள் கண வன்மாரையுந் தெய்வமாகப் பாவித்து வழிபாடு செய் யும் வழக்கமுடையோர். பின்வரும் நிகழ்ச்சி இதனை விளக்குகின்றது.
ஒரு தலைவன் பொருள் தேடுதற்காக வேற்று நாட்டுக்குச் சென்றுவிட்டான். தலைவி இல்லின்கண் தனித்திருக்கின்ருள். தலைவன் திரும்பிவரக் காலதாமத மாகின்றது. காரோவந்தது; காதலரேறிய தேரோ வந்திலது. இதனுற் தலைவிக்கு நலிவும் மெலிவும் உண் டாக அவள் தனது கற்பொழுக்கத்துக்கு மாருகச் சூரியனை வணங்குதற்கு நினைக்கின்ருள். தலைவர் பிரிந்து சென்ற வெப்பமான காட்டிலே மழை பெய்து தட்ப முண்டாக அருள் செய்ய வேண்டுமென்று செங்கதிர்ச் செல்வனை வழுத்த நினைக்கின்ருள் அத்தமிழ் மங்கை. அவளது நினைவுக்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று காதலர் செல்லும் வழி தண்ணென்றிருத்தல் வேண்டு மென்பது; மற்றது கார்வரவு கண்டால் தலைவர் வினை முடித்து விரைந்து மீள்வதற்கு அது ஏதுவாகுமென் பது. எனினும், தனது குலவொழுக்குக்கு இழுக்கா கும் இந்நினைவு தன்னுடைய நெஞ்சில் இடம்பெற் றது தகா தென்வும் நினைக்கின்ருள். தான்கொண்ட தகாத இவ்வெண்ணத்தைத் தனது உசாத்துணையாகிய தோழிக்கு வெளிப்படுத்த அவள் அதனை நோகாமல் மறுத்துக் கூறும் திறமை மிகவும் அழகுவாய்ந்ததாகும்.
இனிய மொழியினையுடையாய், தன் முயற்சி யால் ஈட்டும் பொருள் மிக்க மாண்பினையுடையது; அது அறமும், பொருளும், இன்பமுமாகிய மூன்றினை யும் ஒருங்கே தரும் இவ்வுண்மையை நன்கறிந்து பொருள் தேடச் சென்ற தலைவர்பொருட்டு நீ இவ் வாறு தெய்வங்களைப் பரவி வருந்துதல் வேண்டா; உன் பொருட்டுத் தெய்வங்கள்தாமே ஏவல்செய்யும்.
--89-س--

Page 54
*செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வர் மாட்டினையண தெய்வத்துத் திறனுேக்கித் தெருமரல் தேமொழி” என்று விடை கூறிய தோழி தெய்வங்களை வணங் காதே என்றும் கூருமல்; வணங்குதி என்றும் கூருமல்; அத்தெய்வங்களை வணங்கும் அவசியம் உனக்கு இல் லாமற் போய்விட்டது (தெருமரல்-மனஞ் சுழலாதே.) இதனைக் கேள் என்று கூறுகின்ருள்.
*வறணுேடின் வையகத்து வான் தருங்கற்பினுள்
நிறணுேடிப் பசப்பூர்த லுண்டென м.
அறனுேடி விலங்கின்று அவராள் வினைத்திறத்தே" எனச் சொல்லிச் சாதுரியமாகத் தலைவியின் நிலைமை யைச் சாந்திசெய்துவிட்டாள்.
உலகத்தே மழையின்றி நாடுகள் வறங்கூர்ந் தால் நாடு செழிக்க மழையைப் பெய்விக்கவல்ல கற்பினையுடைய உனது நிறங்கெட்டுப் பசலை பரக்குமென்று எண்ணிய அறக்கடவுள் உன்பொருட்டு இரங்கித் தலை வர் வினைசெய்யுமிடத்துக்கு விரைந்து சென்று அவரை அங்கே தங்குவதில் நின்றும் விலக்கிற்று. தலைவர் இன்னே வருவர்; நீ வருந்தற்க எனக் கூறித் தலைவியை ஆற்றி மெய்தளிர்க்கச் செய்தாள்.
“வறனுேடின் வையத்து வான்றருங் கற்பினுள்” என்னுந் தொடர் இங்கே ஆராயத்தக்கது. கற்புள்ள மகளிரின் ஆற்றல் இவ்வள வென்பதை இச்செய்யுளடி விளக்கி நிற்கின்றது. ‘மாதர் கற்புடை மங்கையர்க் கோர் மழை" என்பர் நல்லோர்.
‘தெய்வந் தொழாஅள் கொழுநற் தொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்னுந் திருக்குறளும் இப்பொருள்பற்றியதே. மணி மேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனரும் இத்திருக் குறட் சொல்லையும் பொருளையும் பொன்னேபோற் போற்றியிருப்பதும் உலகறிந்ததே. ‘வான் தருங்கற் பினுள்' என்பதும், “பெய்யெனப் பெய்யும் மழை" என்பதும் ஒப்பவைத்துப் பொருள்கொள்ளவேண்டிய தொடர்களாகும். கற்புடைய பெண் பெய்யெனப்
. س-90 سے

பெய்யும் மழைபோன்றவள் என்று இக்கால நவீனர் சிலர் கூறும் பொருள் இலக்கியத் தொடர்போடு பொருந்திவராத பொருளாகும். முன்பின் நோக்காது சமயோசிதமாகக் கூறும் பொருள்கள் நிலையில்லாதன வாம். கற்புள்ள பெண் வேண்டியபோது மழையையுந் தரும் ஆற்றலுள்ளவள் என்பது தமிழரின் தளராத ம்பிக்கையாகும். "வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது; நீணில வேந்தர் கொற்றஞ்சிதையாது; பத் திணிப் பெண்டிரிருந்த நாடு." தெயவந் தொழாஅள் என்பது மணஞ்செய்த பின்னர்ப் பிறைதொழுதல் முதலியன செய்யாதவள். இறைவனை வணங்காதவள் என்பது பொருளன்று. தொழுது எழுவாள் என்பது தொழுதுகொண்டு துயிலெழுவாள் எனப் பொருள் தருகின்றது. ஒருவன் நித்திரை செய்யப்போகும்போது எதனைப் பாவனைபண்ணிக்கொள்ளுகிருனே அப்பாவ னேயே அவன் துயிலெழும்புவதற்குங் காரணமாயிருக் கும். கணவனைத் தெய்வமாகப் பாவித்துக்கொண்டு துயில் செய்யச் சென்ற பெண்ணை அப்பாவனையே துயிலெழுப்பிவிடுகின்றது. "அடியினுலஞ்சு மைந்தன் அனந்தலைப் பயம் உணர்த்த' என்பதும் இது போன் றதே. கணவனைத் தெய்வமாகப் பாவிப்பவளை ‘வான் தருங் கற்பினுள்’ என்று போற்றினுர், r
محمد. 9. حسب

Page 55
பாலைக்கலி: செய்யுள் (16)
பிரிவு பல வகைப்படும். பொருளின்பொருட்டுப் பிரிதல், ஒதற்குப் பிரிதல், தூதிற் பிரிதல், துணை செய்யப் பிரிதல் முதலியன அவை. துணை செய்த லுள் நாடு காத்தலும் அடங்கும். சேர சோழ பாண் டிய மன்னர்களுக்குத் திறைகொடுத்து ஆண்ட நாடு களும் அந்நாளிற் பல உள்ளன. அவை எல்லாம் மிகப் பெரிய பரத கண்டத்தின் உள்நாடுகளேயாம். எத் துணைப் பெரும் படைகளிருந்தும் தமிழ் வேந்தர் மூவ ரும் பிற நாடுகளின் மீது கடல் கடந்து சென்று போர் தொடுத்ததுமில்லை; அவற்றை அடிமைப்படுத்தி ஆண் டதுமில்லை; திறைவாங்கியதுமில்லை. இது தமிழ் மன் னரது ஆட்சியின் தனிச் சிறப்பாகும். "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்பது தமிழ் முறை. தமிழ்நாட்டிலே அந்தணர் முதலிய எல்லா வகுப்பின ரும் படைக்கலப் பயிற்சிபெற்றுத் தமது நாட்டைப் பாதுகாக்கும் திறமைபெற்று விளங்கினர்கள். பேனை மாத்திரம் பிடித்து வாழ்ந்தவனல்லன் தமிழன்; அவன் மேழியும் பிடித்தான்; படைக்கலமும் பயின்ருன்; குதிரையேற்றத்திலும் அவன் மிக்க திறமை பெற் றிருந்தான்.
இத்தகைய தமிழ்ப் பரம்பரையிலுதித்த ஒரு தோன்றல், நாடு காத்தற்பொருட்டுத் தனது காதலியை விட்டுப் பிரியக் கருதுகின்றன். படைக்கலங்களைத் திருத்தியும், பிரிவுக்கு அடையாளமான படுக்கைகளிற் கிடந்தும், தலைவியின் தனிமைக்கு வருந்திப் பெரு மூச்சுவிட்டும் ஒரு நிலைப்படாமல் , அவதியுறுகின்ற
தலைவனை நோக்கிய தலைவி, காதலர் தன்னைவிட்டு நீங்
குங் கருத்துடையவர்போலும் என்று கவல்கின்ருள். அவளது வேறுபாட்டையுணர்ந்த தோழி தலைவியை நோக்கி நறுநுதால், தலைவரது எண்ணத்தில் நீ மன தைச் செலுத்தாதே; ஏங்கி நடுங்காதே. யான் முன் னின்று, தலைவர் நம்மைப் பிரியாமற் தடுக்கின்றேன் எனக் கூறித் தலைவியைத் தேற்றுகின்ருள்.
--92 س۔

“படைபண்ணிப் புனேயவும், பாமாண்ட பயிலனைப்
புடைபெயர்ந் தொடுங்கவும், புறஞ்சேர உயிர்ப்பவும்,
உடையதை யெவன்கொ லென்று ஊறளந்தவர்வயின்
நடைசெல்லா நனியேங்கி நடுங்கற்காண் நறுநுதால்" என்பது செய்யுள், பா-பாவுதல். அதாவது மென்மை யான பொருள்களைப் பரப்பிப் படுக்கையமைத்தல்; புடைபெயர்தல் -சற்றே நெகிழ்ந்திருத்தல்; ஊறு அளத் தல்-கூட்டம் இடையூறுபடுமென்று கருதுதல்; நடை செல்லா-ஒழுகாமல்,
தலைமகளைத் தேற்றுவித்த தோழி தலைமகனை யடைநது,
“தொல்லெழில் தொலைபிவள் துய ருழப்பத்துறந்துநீ
வல்வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை நீள்கதிர் அவிர்மதி நிறைவுபோல் நிலையாது நாளினும் நெகிழ்போடு நலனுடன் நிலையுமோ?” என வினவுகின்றன். w
தலைவியின் இயற்கை நலங்கெட்டு அவள் வருத் தத்தில் அழுந்துமாறு நீர் பகைவர் தந்த நாட்டைக் காப்பதற்குச் செல்ல மனந்துணிந்தீர். உமது துணிபை யுணர்ந்த தலைவியின் முகமானது நிறைமதி கலை குறைந்து தேய்வதுபோலத் தன்னழகு கெடுகின்றது; இளமையும் கழிகின்றது. இவ்விரண்டும், போனபின் வருவனவல்ல; இதனை உணர்வீராக. தொலைபுதொலைந்து; வல்வினை-நாடுகாத்தலாகிய வலி ய தொழில்; வயக்குதல்-விளக்குதல் அதாவது பகைவர் தந்த நாட்டை மேலாக விளங்கச் செய்தல். வலித்திதுணிகின்ருய்; நாளினும்-நாள்தோறும்; நெகிழ்புநிலைகுலைந்து; ஒடும்நலன்-கெடும் அழகு.
அன்றியும், காம நோய் மிகவும் வலியது; உமது பிரிவினல் அந்நோய் அவளை வருத்தும்; அவள் அழகு கெடுவாள். நீரோ பகைவர் தந்த நாட்டைக் காத்து அந்நாடு அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றினும் திறம்பெறும் இடமாகத் திகழ்ந்து விளங்குதற்காகச் சேவை செய்யச் செல்கின்றீர். இதனுற் தலைவியின் நிலைமை யாதாகும் என்பதையறியீரோ? பொய்கையி
-93 -

Page 56
லுள்ள தாமரை யரும்பின் மலர்ச்சியானது அவ்வரும் பிற்குக் கூற்றமாதலன்றிப் பின்னர் அம்மலர் இதழ் உதிர்த்திவிடும்போது அப்பொய்கையும் தன்னழகு கெட்டுக் குறைபாடடைகின்றது. இதுபோலத் தலைவி யின் புது மலர்ச்சியானது உமது பிரிவு காரணமாக வீணே கழிவதால் அவள் இளமையும் அழகுங் கெட்டுக் குறைபாடடைவாளே! கழிந்த நாளையும், இழந்த இளமையையும், நிலைகுலைந்த அழகையும் மீண்டும் பெறலாமோ? அவை இவளது மேனியில் நிலைநிற் குமோ? உடம்பு காலக்கழிவுக்கேற்ப நிலைமாறும் இயல் புடையதல்லவா?
“ஆற்றல்நோய் அட இவள் அணிவாட அகன்றுநீ
தோற்றஞ்சால் தொகுபொருள் முயறிமன்; முயல் வளவை
நாற்றஞ்சால் நளிபொய்கை யடைமுதிர் முகையிற்குக்
கூற்றம்போற் குறைபடுஉம் வாழ்நாளும் நிலையுமோ?” எனவும் வினவுகின்ருள்.
முயறி-முயல்கின்ருய்; தொகு பொருள்-அறம் பொருளின்பம்; நளி-விசாலம்; அடை-இலை.

பின்னுரை
இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கலித்தொகையில் உள்ள பாலைத் திணையினைப்பற்றிய பாடல்களை மட்டும் கொண்டது. பாலைத்திணையில் 35 பாடல்கள் உள்ளன என அறிகிருேம். இருப்பினும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் 16 பாடல்களுக்கான கட்டுரைகளை மட்டுமே எழுதியுள் ளார். இந்தக் கட்டுரைகள் 'தினகரன்’ பத்திரிகை யில் வெளிவந்த காலத்தில் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்களின் 'கம்பராமாயணக் காட்சிகள் தொடர் கட்டுரையொன்றும் வெளிவந்துகொண்டிருந் தது. பல்வேறு காரணங்களால் புலவர்மணி தனது கட்டுரைகளை 16 பாடல்களுடன் நிறைவு செய்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் பாலைத்திணைபற்றி ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்களை அறிந் திருத்தல் அவசியம். கலித்தொகை நூலை முதன்முத லில் பதிப்பித்து வெளியிட்டவர் திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள். அப்பதிப்பில் இந்நூலை யாத்தவர்கள்பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
*பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி, மருதனின் நாகன் மருதம் - அருஞ்சோழன் நல்லுத் திரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல் கல்விவலார் கண்ட கலி”.
இதிலிருந்து இந்நூலைப் பாடியவர்கள் பின்வரு வோர் என அறியக்கிடக்கிறது.
பாலைக்கலியைப் பாடியவர் - பெருங்கடுங்கோன் குறிஞ்சிக் கலியைப் பாடியவர் - கபிலர் மருதக் கலியைப் பாடியவர் - ம சூதன் இளநாகஞர் முல்லைக் கலியைப் பாடியவர் - சோழன் நல்லுருத்திரன் நெய்தற் கலியைப் பாடியவர் - நல்லுந்துவஞர்.
-95
AW

Page 57
எனினும், பின்னல் வந்த ஆய்வாளர்கள் கலித் தொகையைப் பாடியவர்கள் ஐவர் அல்ல எனவும், பலர் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எது எவ்வாருயிருப்பினும், புலவர்மணி அவர் களைக் கவர்ந்த பழம்தமிழ் நூல்களில் கலித்தொகை முக்கிய இடம்பெறுகிறது என்பதை ஒருவாறு ஊகிக் கலாம். இதற்குக் காரணம் இந்நூலிலுள்ள பாடல் கள் அகத்துணை சார்ந்தனவாகவும், அக்காலத்து மக் களுடைய வாழ்க்கை முறை, பண்பாடு முதலியவற்றை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதே. கலித் தொகை செய்யுள்களுக்கு உரை எழுதியவர் நச்சிர்ைக் கினியார் எனக் கூறுவர். இவர் கி. பி. 14ஆம் நூற் ருண்டில் வாழ்ந்தவர். எமது புலவர்மணி அவர்கள் இவ்வாறன உரைகளால் பாதிக்கப்படவில்லையென் பதும் இக்கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு விளங்கும். அவர்கள் தமது சுய சிந்தனையாலும் புலமையாலும் கலித்தொகைக் காட்சிகளை உள்ளார்ந்து நோக்கி அவற்றின் ஆன்மா வெளிப்படும் வகையில் தமது கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இந்த நூல் பல வருடங்களுக்கு முன் வெளி வந்திருக்கவேண்டும். இலங்கை முழுவதற்கும் பொது வான பிரசுரகள வசதியின்மையால் இவ்வெளியீடு தாமதமடைந்துள்ளது.
புலவர்மணி நினைவுப் பணிமன்றம் கடந்த காலங் களில் புலவர்மணி அவர்களின் ‘கவிதைத் தொகுதி, 'உள்ளதும் நல்லதும், விபுலானந்தர் மீட்சிப்பத்து' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது. ஏனைய கட்டுரை கள், கவிதைகள் முதலியவற்றை காலக் கிரமத்தில் வெளியிடவும் இம்மன்றம் எண்ணம் கொண்டுள்ளது. தமிழ்மக்கள் இதற்கான ஆதரவை வழங்கவேண்டும்.
இரா. நாகலிங்கம், தலைவர், புலவர்மணி நினைவுப்பணி மன்றம்,
மட்டக்களப்பு.
-ن-96-س-

ᎼᎣᎣᏐᎣᎣᎣᎣᏱᏱᏱ-Ꮌ-Ꮌ-ᏱᏱ-ᎼᎼᏱ-Ᏹ-ᎣᎼᏱᎣ-©Ꮌ Ꭹ ᎣᎼ•ᎹᎹ
қЖ. Kః இதுவரை வெளிவந்த *
புலவர்மணியின் நூல்கள்
* பகவத்கீதை வெண்பா :
பக்தி யோகம், - ஞான யோகம், * புலவர்மணி கவிதைகள்.
* உள்ளதும் நல்லதும்.
* விபுலானந்தர் மீட்சிப்பத்து,
қХа XKX Kisa Ks K2}} K> K :
கர்ம யோகம்,
ҳx
&&& XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXộộộộộộộộộộộộ.

Page 58
புலவர்மணி ஏ. பெரியத களப்புக்கு மாத்திரமல்ல, முழு அருந்தவப் புதல்வர்.
"புலவர்மணி ஒரு வைரம ப்ர் திரு. எஸ். டி. சிவநாயகம் பட்டவர். மட்டக்களப்புத் த கெளரவித்த "புலவர்மணி" என் றுக்கொண்டவர். " - வேதாந்தப் பொருளாகிய யாத்து, சித்தாந்தக் கருத்துத் புரை எழுதி வெளியிட்டவர். சு: மும், மகாவித்துவான் கணேசைய பிற் பழுத்த இரு கனிகள்' என யான இலக்கிய கலாநிதி பண்பு யுடன் இ&ணந்து கல்வி கற்றவர். களால் நெறிப்படுத்தப்பட்டவர். 1991ஆம் ஆண்டு மார்ச் சமய, இந்து கலாசார இராஜாங் திய தேசிய தமிழ் சாகித்திய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மாகிய 'உள்ளதும் நல்லதும்' "இலக்கியச் செம்மல்" என்ற பட்ட யில் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட இவர், மட்டக்களப்பு தில்லை வண்ணக்கர் அவர்களுக்கும் சி. கும் மகனுசுப் பிறந்தார். ஆரம்ப பெற்றது. 1917 தொடக்கம் 19 யில் கல்வி கற்றுத் தேறினூர். சு பி&னத் தொடர்ந்து 1946 ஆம் ஆன கல்லூரியில் ஆசிரியராஞர். இவ் தில் கோயில் திருப்பணி செய்துவ தம்பி மூத்ததம்பி வண்ணக்கருக் கும் மகளான நல்லம்மாவை திரு 1959ல் ஆசிரிய சேவையினி அவர்கள் பல சமய, சமூகப் பணி விளங்கி, பல பொதுநல மன்றங்க லும், ஆலோசஃனக் குழுக்களிலும் குருக்கள் மடத்தில் அமரராஜர்.
அவரின் நினைவுகளே நிலைநி பெரியதம்பிப்பிள்ளே நினைவுப்பணி ஆண்டுகளாகச் செயலாற்றி வருகி
சென். ஜோசப் கத்தோலிக்க

ம்பிப்பிள்ளே அவர்கள் மட்டக் இலங்கைக்கும் பொதுவான
ணிை" எனச் சிந்தாமணி ஆசிரி
அவர்களால் விதந்துரைக்கப் மிழ்க்கலே மன்றம் வழங்கிக் rற பட்டத்தையே உவந்தேழ்
பகவத் கீதையினே வெண்பாவில் தோன்றும்வண்ணம் பொழிப் ன்னே குமாரசுவாமிப் புலவரிட பரிடமும்," "ஒரு கொழுகொம் ாப் போற்றப்படும் ஒரு கணி டிதமணி சி. கணபதிப்பிள்ஃள
சுவாமி விபுலானந்தா அவர்
மாதம் 31ஆம் நாள் இந்து வக அமைச்சு கண்டியில் நடத் விழாவில் தாம் எழுதியதும் நிஜனவுப்பணி மன்ற வெளியீடு என்ற நூலுக்குப் பரிசும், -மும், விருதும் தேகாந்த நிலை வர். மண்டூர் சோ, ஏகாம்பரபிள்ளே சின்னத்தங்கம் அம்மையாருக் க் கல்வி உள்ளூரிலேயே இடம் 20 வரை காவிய பாடசாஃ வாமி விபுலானந்தரின் சந்திப் ண்டில் திருக்கோணமலே இந்துக் வாண்டிலேயே குருக்கள் மடத் ரும் திருக்குடும்பததில் வினுசித் கும் கந்தம்மை அம்மையாருக் மணஞ் செய்துகொண்டார். ன்றும் ஓய்வுபெற்ற புலவர்மணி களாற்றி, எழுத்துலகில் சிறந்து 1ளிலும், விசாரஃணக் குழுக்களி நற்பணி புரிந்து 1978-11-02ல்
றுத்தும் பணியில் புலவர்மணி மன்றம் கடந்த பதின்மூன்று கிறது.
அச்சகம், மட்டக்களப்பு.
-
-