கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டைய ஈழம் 1

Page 1


Page 2


Page 3

16) (). El D.
粤、Tú Hs

Page 4

பண்டைய ஈழம்
(திருத்திய இரண்டாம் பதிப்பு)
உயர் வகுப்புகளுக்கான வரலக்றினுண்
முதலாம் பாகம் ( அனுராதபுர காலம் )
(க. பொ. த. உயர்நிலை, சாதாரணத் தேர்வு வினத்தாள்கள், பயிற்சிகள் அடங்கியது)
வே. க. நடராசா பி. ஏ. (இலங்கை) (மு ன்னுள் யாழ். வரலாற்றுக் கழக இணைச் செயலாளர் )
கேவளை : கரவெட்டி தை, 1969

Page 5
திருத்திய இரண்டாம் பதிப்பு தை, 1969
எல்லா உரிமைகளும் சேது நூலகத்தாருக்கே
அச்சுப்பதிவு:
தமிழ்ப் பூங்கா அச்சகம் நெல்லியடி - கரவெட்டி

நூானமுகம
-ooooo
‘பண்டைய ஈழம் பாடப்புத்தக அமைப்பில் இரண்டு பாகங் களாக, விரிவான முறையில் வெளிவருகின்றது. பாடப்புத்தக உருவில் வெளிவர வேண்டும் எனப் பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்தனர். இவர்கள் கருத்தை அனுசரித்தே, இந்நூல் முற்ருகத் திருப்பியெழுதப்பட்டது. நாட்டுப்படங்கள், விளக்கப்படங்கள், பயிற்சிகள் முதலானவையும் நிறையச் சேர்க்கப்பட்டு, ஒர் எடுத்துக் காட்டான பாடநூலாக இது வெளியிடப்படுகின்றது. இப்பதிப்பு வெளிவந்ததும், உயர் கலை வகுப்புகளுக்குப் பத்தாண்டுகளுக்குமேல் ஒரு வரலாற்றுப் பாடநூல் இல்லாத குறை நீங்கிவிடும் என எதிர் பார்க்கப்படுகின்றது. க. பொ. த. (சாதாரண) வகுப்புகளுக்குரிய வரலாறு 1 பாடத்திட்டத்தையும் கருத்திற்கொண்டே, இந் நூ ல் முற்ருகத் திருப்பியமைக்கப்பட்டுளது. இப்பாடத்திட்டத்துக்கு அமை விTன பாடநூல் ஏதும் இன்றி இடர்ப்பட்ட ஆசிரியர்க்கும், மாண வர்க்கும் இப்பதிப்பு உதவியாகவிருக்கும்.
இவ் வரலாற்று நூல் ஒரு பாட நூலாதலின், வரலாற்றறிஞரி டையே பொதுவான உடன்பாட்டைப் பெருத கருத்துகளுக்கோ, கொள்கைகளுக்கோ இதில் இடமில்லை. பொதுவாக ஏற்றுக்கொள் ளப்பட்ட முடிபுகளே, குறிப்பாக இலங்கைப் பல்கலைக்கழக வெளி usGé56Traor '' A History of Ceylon Vol. I', 'A Concise History of Ceylon” என்பவற்றில் வெளிவந்த முடிபுகளைத் தழுவியே இந்நூலில் வருஞ் செய்திகள் உள்ளன. மூல நூல்களையும், பிற ஆதாரங்களை யும் நூலாசிரியர் ஆய்ந்து, புதிய செய்திகள் சிலவற்றையும் ஒரோ விடங்களிற் சேர்த்துள்ளார். இந்நூல் எழுதுதற்கு உதவிய நூல்' களின் விபரம் பிறிதோரிடத்தில் தரப்படும். அந்நூல்களின் வெளி யீட்டாளருக்கும் ஆசிரியர்க்கும் இந்நூலாசிரியரின் கடப்பாடு உரியது. அத்தியாயங்களின் அமைப்பிலும் ஒரு திட்டமுறை கையாளப்பட்டுள் ளதைக் காணலாம். அத்தியாயத் தொடக்கத்தில், அத்தியாயத்தில் கூறப்படும் முக்கிய செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டபின், அத்தியா யத்திற் கூறப்படும் காலப்பகுதியில் இலங்கையைப் பாதித்த அயல் நாட்டு விரு த் தி க ள் தரப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்று நிகழ்ச்சிகள் அல்லது விருத்திகளில் முக்கியமானவை சற்று விரிவாக வும், முக்கியங்குறைந்தவை சுருக்கமாகவும் கூறப்பட்டபின், அயல் நாட்டுத் தொடர்புகளின் பாதிப் புத் தெளிவாக்கப்பட்டுள்ளது. அத்தியாய முடிவில் தரப்பட்டுள்ள பயிற்சிகள், புதிய அறிவைப்

Page 6
W
பதிக்கவும் விருத்தி செய்யவும் உதவுவன. வகுப்பின் நிலைக்கேற்ப, இவற்றில் மாறுதல்கள் செய்யப்படலாம். இக்காலக்கல்வி முறையில் கூட்டு அல்லது குழுவேலை முக்கிய இடம்பெறுவதால் அ த ற் கு ம் பயிற்சிகளில் போதிய இடமளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றை விளங்க உதவும் புவியியற் பின்னணியும் இக்காலத்தில் வலியுறுத்தப்பெறுவ தால், பட வேலையும் அடிக்கடி பயிற்சிகளில் இடம் பெற்றுள்ளது. வரலாற்று (நாட்டு)ப் படத் தொகுதி இலங்கை வரலாற்றுக்குதவும் வகையில் இன்னும் வெளியாகவில்லை. இந்திய் வரலாற்றுக்குள்ள ஒரு படத்தொகுதியை வேண்டிய இடங்க ளிற் பயன்படுத்தலாம். நூலில் வெளியாகும் சில படங்கள் சிறப்பாக இலங்கை வரலாற் றுக்கு உதவுவனவாக இருக்கும். ஆசிரியர் மேற்பார்வையில் மேலும் (நாட்டுப்) படங்களைத் தயார்செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நூலிற் கையாளப்பட்டுள்ள கலைச் சொற்கள் அரச கரும மொழித் திணைக்களக் களத்துச் சொற்ருெ குதிகளிலிருந்து எடுக்கப் பட்டவை. இடப்பெயர்கள், பிற நாட்டார் பெயர்கள் முத 6) ITGST66 பிறமொழியுருவஞ்சிதை யாது தரப்பட்டுள்ளன.ஹர்ஷனை, ‘கரிசன்’ ‘அரிழன்’ ‘அரிசன்’ என்றெழுதுவதைக் காட்டிலும், மூல உருவத்தில் தருவதே மாணவர் க்கு உதவியாகவிருக்கும். மன்னர் பெயர்கள் இலங்கைக் காலவேடுகளிலுள்ள வடிவத்தில் தரப்பட்ட போதும், பொது வழக்கிலுள்ள பெயர்களும் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. சில பாலிப் பெயர்கள் சமஸ்கிருத வழி பாகத் தமிழ் உருவம் பெற்றிருக்கின்றன. பாலி முதலான பிற மொழிச் சொற்களை ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்க்கும் போது விசியாளப்படும் (Transliteration Marks) குறியீடுக்ளை அவதானி யாது, பழைய இடங்கள், குளர்கள், மன்னர்களின் பெயர்கள் பாடநூல்களில் இடம்பெற்று வந்துள்ளன. இவ் வகையிலான தவ ருன உருவங்கள் பல களையப்கிபற்று, பாலி அல்லது வடமொழி தழுவிய உருவங்களே கொடுக்கப்பட்டுள்ளன. பழைய (பிழையான) உருவங்களுக்குப் பழக்கப்பட்டோருக்கு இவை புதிதாகவும், (பிழை யாகவும்!) படலாம். பொதுத் தேர்வுகளின் வினத்தாள்களைத் தமிழிற் பெயர்ப்பவர்களும் இக்குறியீடுகளைச் சரிவர அவதானிப் பதாகத் தெரியவில்லை. த வருன பெயர்ப்புக்களால் மாணவர் அடையும் சஞ்சலமும் குழப்பமும் சொல்லுந்தரமன்று.
இந்நூல் வெளியாதற்கு உதவியாக இருந்த பலருள், ஒரு சில ரையே இங்கு குறிப்பிட முடிகின்றது. நூலின் சிறப்புக்கு ஒரு காரணமாகவிருக்கும் (நாட்டுப்)படங்களை ஊக்கத்துடன் வரைந்து தவிய "யோகன் (செ. யோகராசா) அவர்களும், கையெழுத்துப் பிரதியை வாசித்து வழுக்களை நீக்கி, பின் அச்சுப்படிகளைத் திருத்து

வதிலும் உதவிபுரிந்த வே. சு. மணியம் அவர்களுக்கும் ஆசிரியர் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்ருர், அட்டவணையைத் தயாரிக்க உதவிய க. கோபாலன் அவர்களுக்கும், நூலில் வெளிவரும் பழைய கட்டிட, சிற்ப, ஒவியங்களின் படங்களைத் தொல்பொருள் அகழ்வுப் பகுதியில் தெரிவு செய்து சேகரித்துத் தந்த சி. செல்வரத்தினம் அவர்களுக்கும் இந் நூலாசிரியரும், பதிப்பகத்தாரும் நன்றி தெரிவிக் கின்றனர். நூலைச் சிறந்த முறையில் அச்சேற்றி, விரைவாக அது வெளிவரவேண்டும் என்பதிற் சிரத்தையுடன் உழைத்த ‘தமிழ்ப் பூங்கா உறுப்பினர் அனைவர்க்கும், சிறப்பாக அதிபர் சிவகுரு அவர் களுக்கும் ஆசிரியர் நன்றியறிதலுடையவராக விருக்கின்ருர்,
நூலின் இறுதியில் (பாகம் 11ல்) வெளியாகும் தேர்வு வினத் தாள்களைப் பிரசுரித்தற்கு இசைவுதந்த பரீட்சைப்பகுதித் தலவர்க்கும், படங்களையுதவி நூலில் வெளியிட அனுமதி தந்த த்ொல்பொருள் அகழ்வுப் பகுதித் தலைவர்க்கும் நன்றி தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யாக, முதற்பதிப்பை வரவேற்று ஊக்கிய பாடசாலைகளுக்கும், மாணவர்க்கும், ஆசிரிய நண்பர்க்கும் இந்நூலாசிரியர் மிகவும் கடமைப்பட்டுள்ளார். அவர்கள் காட்டிய ஆதரவே, இப்பதிப்பை நல்லமுறையில் வெளியிடத் தூண்டுதலாக அமைந்தது. அவர்களின் அன்பு இப்பதிப்புக்கும் கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கை அவருக்கு உண்டு.
1968, ஐப்பசி நூலாசிரியன்
பதிப்பாளர் குறிப்பு
**பண்டைய ஈழம்" இப்போது இரண்டு பாகங்களாக வெளி வருகின்றது. மாணவருடைய வசதியைக் கருதியே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. எமக்குள்ள குறைந்த வசதிகளுக் கிடையேயும், தரமான ஒரு நூலாகப் ‘பண்டைய ஈழத்தை வெளியிட முயற்சி செய்துள்ளோம். YM *
முதற் பதிப்புக்குக் கிடைத்ததிலும் பன்மடங்கு ஆதரவு இப் பதிப்புக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கின்ருேம்.
உரிமையாளர், சேது நூலகம்.

Page 7
பொருளடக்கம் அத. பக். 1/இலங்கை வரலாற்று மூலங்கள் 1. i. பொது i. வரலாற்று மூலங்கள் i, பிற நாட்டு நூல்களில் இலங்கை iv. மகாவம்சம் பற்றிய ஆய்வு. 2. இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி 14 i. புவியியலும் வரலாறும் i, நிலையமும் வரலாறும் i. பெளதிக உறுப்புக்களின் பாதிப்பு iv. வரலாற்றுக் காலத்துக்கு முந்திய இலங்கை. 3. இலங்கைக்கு ஆரியர் வருகையும், அவர்களது
குடியேற்றங்களும் − 22 1. சிந்துவெளி நாகரிகம் i. இந்தியாவில் ஆரியர் i. ஆரியர் பண்பாடு iv. ஆரியர் இலங்கை வருகை ா. இலங்கையில் ஆரியரின் செல்வாக்கு.
பெளத்தம் பரவுமுன் இலங்கை :
அனுராதபுரத்தின் எழுச்சி 38 1. அரசியல் வரலாறு (விஜயன் - முடசிவன்)
i. சமய நிலை. 5. பெளத்தத்தின் தோற்றமும், வளர்ச்சியும்:
இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 45 1. பெளத்தத்தின் தோற்றம் i.< பெளத்தக் கழகங்கள்
i. அசோகன் iv x பெளத்தம் இலங்கைக்குப் பரவியமை 7. மெளரியப் பண்பாடும் இலங்கையும் 6. துட்டகா மணியும், இலங்கையின் விடுதலையும் 64 1. பண்டைத் தமிழகம் i. தமிழர் படையெடுப்பு: எல்லாளன் ஆட்சி i. உருகுணையின் எழுச்சி iv. துட்டகாமணி அரசனதல் 7. காமணியின் விடு தலைப் போரும், சமயப் பணிகளும்.
7. துட்டகா மணியின் பின்னுேரும்,
சமய விருத்திகளும் 85 i. அரசியல் வரலாறு (சத்தாதிசன் - சபா) i. சமய
விருத்திகள். 8. முதலாம் இலம்பகண்ண மரபினரின் ஆட்சி:
மகாயான பெளத்தம் பரவுதல் 95 குப்தர் எழுச்சிக்கு முன் இந்தியா i. இந்தியாவில் மகாயான பெளத்தம் iii இலம்பகண்ண அரசர்கள் (வசபன் - மகாசேனன்) iy சமய வளர்ச்சி :
இலங்கையில் மகாயான பெளத்தம் பரவுதல்.

vii
9. சிறிமேகவண்ணனும் பின்னேரும்:
குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு
i. சூளவம்ச மன்னர்கள் i குப்தப்பேரரசு i. சிறீமேக
வண்ணன் iv. குப்தப் பண்பாட்டின் இலங்கைச் செல்வாக்கு.
10. மோரிய மரபினர் :
தாதுசேனனும் காசியப்பனும் i. தமிழ்ப் படையெடுப்பு i. தாதுசேனன் i. காசியப்
பன்-மோரிய மரபு முடிவெய்தல். 11. இலம்பகண்ணரும் மோரியரும்:
ஒரு நூற்றண்டுக்கால அமைதி 1. ஹர்ஷப் பெருமன்னன் i. சிலாகாலனும் பின்னேரும்
i. மீண்டும் மோரிய மரபினர் ஆதிக்கம் பெறல்.
113
129
138
12. அரசுரிமைப் போட்டிகளும், உள்நாட்டுப் போர்களும்:
தமிழர் செல்வாக்குப் பரவுதல் i, தென்னக அரசியல்-பல்லவரின் எழுச்சி i. உள்நாட்டுப் போர்கள் 618-684 i. மானவர்மன் iy. பல்லவப்
பண்பாடும் அதன் செல்வாக்கும்.
13. மாணவர்மன் மரபினரின் ஆட்சி:
* பாண்டியத் தொடர்புகள்
i. முதலாம் பாண்டியப் பேரரசு i. மானவர்மன் மரபின ரின் ஆட்சி i. பாண்டியத் தொடர்புகள் படை யெடுப்புக்கள்.
14. சோழரின் எழுச்சியும்,
அனுராதபுரத்தின் வீழ்ச்சியும்
1. சோழப் பேரரசின் எழுச்சி i. சோழர் படையெடுப்பு
i. அனுராதபுரத்தின் சரிவு.
15. அனுராதபுரகாலப் பண்பாடு 1:
v அரசியல், சமூக, பொருளியல் நிலைமைகள்
1. அரசியல் முறை i. சமூக நிலைமை i. பொருளியல்
வளர்ச்சி. 16. அனுராதபுரகாலப் பண்பாடு 11:
சமய, இலக்கிய, கலை வளர்ச்சிகள் 1. சமய விருத்தி i. இலக்கிய வளர்ச்சி i.கேட்டிட,
சிற்ப, ஒவிய வளர்ச்சிகள்)
148
162
170~
184
208

Page 8
படங்களின் அட்டவணை (பாகம் 1)
நாட்டுப் படங்கள்
பக் 1. பண்டைய ஈழம் முன் 1 2. இலங்கை-இயற்கையமைப்பு , , 17 3. ஆரியர் குடியேற்றம் 34 4. அசோகனது பேரரசு 53 5. துட்டகா மணியின் படைசென்ற பாதை 81 6. அனுராதபுர கால நீர்ப்பாசனம் 146 7. தென்னிந்தியா-7ம், 8ம் நூற்றண்டுகள் 49 8. தென்னிந்தியா-9ம், 10ம் நூற்றண்டுகள் 72 9. அனுராதபுர கால இலங்கை-பிரிவுகள் 189 10 1 98
. அனுராதபுர கால நீர்ப்பாசனம்
புகைப் படங்கள்:
(இங்கு வெளியாகும் படங்கள் அனைத்தும் தொல்பொருள் அகழ்வுப்பகுதித் தலைவரின் இசைவு பெற்றவை.)
அட்டைப் படம்- ரூவன்வலிசாய, அனுராதபுரம் தகடு - அ. தூபாராம தாகபம்
ஆ. அபயகிரி தாகபம் இ. இசுருமுனியா: ஆணும் பெண்ணும்' (சிற்பம்)
ஈ. அனுராதபுரம்- சந்திரவட்டப் படிக்கல் தகடு I அ. சீகிரி-சிங்கவாயில் ஆ. சீகிரி-சுவரோவம் இ. அனுராத்புரம்-துவாரபாலர் ܗܝ ஈ. மாயாதேவியின் கனவு (அமராவதிச் சிற்பம்) 55 55G6 III 9I. இசுருமுனியா-மனிதனும் குதிரையின் கலையும்
ஆ. நாலந்தா-கெடிகே.

80'
美 g btq& East -¶: LIGæðraoLuu
Ο a CS །ངན་ Ah
Fg
go ¬ܛܠ
#teErrorp?6ు t eyrreguirrito
øygrrrësiso E. } n . لمسح حصص
t ـــــــــــسیح
'S r 敬” V7 I 耸
് 器 விக்ரியல் 6. Taလငဏ်ဈ:9rsoဂျီ႔ --! FSHsfrgste கச்சகதிர்த்தம் \
|#ီဖea.ချ திம்புலாக2ல ...ital. _ఆస్ట్రీ" is...ital).
* corro | ኘ*
தளுத்தறை
G“
80' 81

Page 9

அத்தியாயம் ஒன்று இலங்கை வரலாற்று மூலங்கள்
i பொது: நூலின் நோக்கம் முதலியன i வரலாற்று மூலங்கள்: இலக்கிய ஆதாரங்கள், தொல்பொருள் அகழ்வுகள், பொறிப்புக்கள், நாணயங்கள். i பிறநாட்டு நூல்களில் இலங்கை. iv மகாவம்சம் பற்றிய ஆய்வு.
t. பொது
Tெமது நாட்டின் பழைய கால வரலாற்றை யறிவதால், நம் மூதாதையர் விட்டுச் சென்றுள்ள அருங் கலை நிதியங்களை நாம் தெரிந்து கொள்கின்ருேம். இன்றுள்ள நிலைமைகள், பிரச்சினைகள் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்டால் அவற்றைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டாகின்றது. எமது நாடான இலங்கைக்கு ஏறத்தாழ 2,500 ஆண்டுகளாகத் தொடர்பான வரலாறு உண்டு. இவ்வளவு நீண்டகால வர லாற்றையுடைய பெருமை உலகில் பல நாடுகளுக்கில்லை. இலங் கைக்கு முதன் முதலில் நாகரிகத்தைப் புகுத்திய ஆரியர் வருகை யிலிருந்து, சிங்களரின் நாகரிகம் வளர்ச்சியுற்றுப் பெருமைதேடி, பின் 13ம் நூற்றண்டளவில் தேய்வுநிலை எய்தி, இறுதியில் 16ம் நூற் ருண்டளவில் மேனுட்டாரான போர்த்துக்கேயர் வந்தபோது பெரி தும் தாழ்வுற்றிருந்தது. இந் நீண்டகால வரலாற்றைச் (கி. மு. 500-கி.பி. 1505) சுருக்கமாகக் கூறுவதையே இந்நூல் மேற்கொண் டிருக்கின்றது. இவ்வளவு பரந்த ஒரு காலப்பகுதியின் வரலாற் றைச் சுருக்கமான முறையிற் கூறும்போது, வரலாற்றை அதிக மாகப் பாதித்த முக்கிய நிகழ்ச்சிகளே இதில் இடம்பெறும் தகைமை பெற்றுள்ளன. ஏனையவை தவிர்க்கப்பட்டும், தொடர்பு குன்றதிருப்பதற்கு மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுமுள்ளன.
ஒரு நாட்டின் வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணிகளில் அந்நாடு கொண்ட பிறநாட்டுத் தொடர்புகளும் முக்கியமானவை. இது எக்காலத்துக்கும், எந்நாட்டுக்கும் பொருந்தும் பொது வுண்மையாகும். இலங்கையைப் பொறுத்த மட்டில், நாகரிக நிலை யில் மிகவும் பின்தங்கியிருந்த மிக ஆதிகாலத்திலிருந்தே, பிற நாட்டுத் தொடர்புகளும், தாக்கங்களும் வரலாற்றைப் பாதித்து வந்திருக்கின்றன. இந்நூலில், இப் பிறநாட்டுத் தொடர்புகளும், அவற்றின் செல்வாக்கும் ஆங்காங்கே தெளிவாகக் கூறப்பட்டிருத் தலைக் காணலாம். வெளிப்படையாகக் கூறப்படாதவிடத்தும்,

Page 10
2 பண்டைய ஈழம்
மாணவர் பிறநாட்டுச் செல்வாக்கு இருக்கும் இடங்களே அவ தானிக்கத் தவறக்கூடாது. புவியியற் காரணிகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில் முக்கியமானவையென அடுத்துள்ள அத்தியாயம் ஒன்றில் கூறப்பட்டு, இலங்கை வரலாற்றிலிருந்து உதாரணங் களும் தரப்படும். அவற்றுடன் மட்டும் திருப்திபெருது, ஒவ் வோர் அத்தியாயத்தைப் படிக்கும் போதும், அதில் கூறப்பட்ட நிகழ்ச்சிகளும் விருத்திகளும் எவ்வகையில் புவியியல் போன்ற பிற காரணிகளால் உருவாக்கப்பட்டன என்பதை அறிய முயலல் வேண்டும். இவ்வகையில், மாணவர் விவேகமான முறையில் வரலாற்றை விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதையே இந்நூல் எதிர்பார்க்கின்றது. ஒவ்வோர் அத்தியாயத்திலும் உள்ளவற்றை விளங்கிக்கொள்ள உதவியாக (நாட்டுப்) படங்கள் சில தரப்பட் டுள்ளன. இவற்றுடன் மட்டும் திருப்தி பெருது, மாணவர் தாமே படங்களை ஆக்கியும், பிற படங்களின் துணையைப் பெற்றும் நல்ல விளக்கத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
i வரலாற்று மூலங்கள்
வரலாறு என்ற கட்டிடத்தை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்களே வரலாற்று மூலங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகும். இம்மூலங்கள் என்ற சாளரங்களினூடாக, பழைய காலத்தை இக்கால மக்கள் பார்வையிடுகின்றனர் எனப்படுகின்றது. வர லாற்றில் வரும் கூற்றுக்கள் யாவும் ஆதாரமுடையனவாக இரு த் தல் வேண்டும். தக்க ஆதாரமில்லாத விடத்து அவை ஊகங் கள் அல்லது கொள்கைகள் எனப்படும்.
அ. இலக்கிய ஆதாரங்கள்: ஆதிகால இலங்கை வரலாற்றைப் பொறுத்த வரையில், இலக்கிய ஆதாரங்கள் எனப்படும் பழைய கால நூல்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சமய அல் லது இலக்கிய நூல்களாக அவையிருப்பினும், அவற்றில் கூறப் படும் செய்திகளைக் கொண்டு நாம் தொடர்பான வரலாற்றை எழுத முடிகின்றது. பழைய நூல்களிலிருந்து பெறப்படும் செய் திகளை நாம் பிற ஆதாரங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து வர லாற்றை எழுதலாம். இலங்கைக்குப் பெளத்த மதம் பரவிய காலத்திலிருந்து, இலங்கையில் இருந்த முக்கிய விகாரைகளில் பல மரபுகள் பேணப்பட்டு வரலாயின. அம் மரபுகளில், வர லாற்றுச் செய்திகள் அடங்கியிருந்தன. அவற்றைப் பின்பற்றி தீபவம்சம், மகாவம்சம் போன்ற நூல்களைப் பெளத்த குருமார் கள் எழுதலாயினர். மகாவிகாரை போன்ற விகாரைகளில் பேணப் பட்டு வந்த மரபுகளில், இந்தியாவில் பெளத்தம் தோன்றி வளர்ந் த மை பற்றிய மரபும், பெளத்தம் பரவுமுன் இலங்கையிருக்க

e
இலங்கை வரலாற்று மூலங்கள் ej
நிலை பற்றிய மரபும் முக்கியமானவை. பின்னர், பெளத்தம் பர விய பின் இலங்கையில் அது வளர்ச்சியடைந்த வரலாறும் சேர்க் கப்படலாயிற்று. இவ்வாறு பேணப்பட்ட மரபுகள் 'அட்டக தா" எனப்பட்டன. ‘அட்டகதா"க்களில், மேலே கூறப்பட்ட் மரபுகள் 'அட்டகதா-மகாவம்சம்’ என்பதில் அடங்கியிருந்தன. இந்த 'அட்டகதா - மகாவம் க’த்தைத் தழுவியே கி. பி. 4ம் நூற்ருண் டளவில் ‘தீபவம்சம் எழுதப்பட்டு முடிக்கப்பட்டது. இந்நூலே, இலங்கையில் எழுதப்பட்ட முதல் பாலி நூலாகும். இதைப் பல ஆசிரியர்கள், வெவ்வேறு காலத்தில் எழுதியிருக்க வேண்டும் எனக் கூறலாமே தவிர, இதன் ஆசிரியர் யார் என்று கூறமுடியாது. பெளத்தம் இந்தியாவில் தோன்றி, வளர்ந்து இலங்கைக்குப் பர விய வரலாறும், மிக ஆதி காலந் தொடங்கி மகாசேனன் ஆட்சிக் காலம் வரையுள்ள இலங்கை வரலாற்றுச் செய்திகளும் தீபவம் சத்தில் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. நல்ல செய்யுள் அமைப் , பையோ, வடிவத்தையோ, அழகையோ தீபவம்சம் கொண்டிராத போதும், வரலாற்றுக்கு இந்நூல் பெரும் உதவியாக உள்ளது.
தீபவம்சம் எழுதப்பட்டதிலிருந்து, மேலும் இரு நூற்றண்டு களுக்குப் பின் (அதாவது 6ம் நூற்றண்டளவில்), "மகாவம்சம்’ என்ற பிறிதொரு பாலி நூல் எழுந்தது. இலங்கை வரலாற்றுக் குரிய இலக்கிய ஆதாரங்களில் முதன்மை பெற்றது மகாவம்சம், (பாலியில், "மகா வங்ஸ’ என உச்சரிக்கப்படுதல் கவனிக்கத்தக்கது) இந்நூலும், முந்திய மரபுகளை (குறிப்பாக, அட்டகதா- மகாவங்ஸ் வை)ப் பின்பற்றியே எழுதப்பட்டது. இதை எழுதியவர் மகா நாமதேரர் என்ற ஒரு பிக்கு எனத் தெரிகிறது. தீபவம்சத்தில் கூறப்பட்ட அதே காலப்பகுதியையும் (மகாசேனன் வரை), அதே நிகழ்ச்சிகளையுமே மகாவம்சம் கூறுகின்றதாயினும், தீபவம்சத் திலும் பார்க்க, திருத்தமான செய்யுளமைப்பிலும், விரிவாகவும், காவிய அழகுடனும் அது பாடப்பட்டது. தீபவம்சத்தின் குறை பாடுகள் இடம்பெரு வண்ணம், சீரிய முறையில் மகாவம் சம் பாடப்பட்டிருப்பதை நாம் உணரலாம். மகாவம்சத்தில் 37 அத்தி யாயங்கள் உள்ளன. அதன் தொடர்ச்சியாகப் பாட்ட்பெற்ற "சூளவம்சம்" (3 பகுதிகளாக உள்ளது) என்ற நூலையும் "மகாவம்சம்" என்ற பொதுப்பெயரால் அழைப்பதுண்டு. இவற்றைவிட இலங் கையில் எழுதப்பட்ட வேறும் பல பாலி நூல்கள் இலங்கை வர லாற்றுக்குரிய இலக்கிய ஆதாரங்களாகவிருப்பினும், இங்கு அவற். றுள் ஒன்றிரண்டையே குறிப்பிடமுடியும். புத்தகோசர் எழுதிய சமந்த பாசாதிகா என்ற நூலுக்கு அவர் எழுதிய வரலாற்று முன்னுரையும், மகாவம்சம், தீபவம்சம் கூறியுள்ள வகையில், பெளத்த மதம் இலங்கையில் புகுத்தப்பட்ட வ ர லா ற்  ைற க் கூறுகின்றது.

Page 11
4 பண்டைய ஈழம்
சிங்களத்தில் எழுதப்பட்ட நூல்களில், பெளத்த சாசன (சமய) வரலாற்றைக் கூறும் நிகாய சங்கிரஹ, ராஜாவலி, பூஜாவலி என்பன முக்கியமானவை. கம்பளை கடலாதெணி விகாரையைச் சேர்ந்த் ஜயபாகு தேவரக்கிதர் எழுதியது நிகாய சங்கிரஹ. புத்தர் பரிநிர்வாண மெய்தியதிலிருந்து, இலங்கைக்குப் பெளத் தம் பரவி வளர்ந்த வரலாற்றைக் கம்பளை 5ம் புவனேகபாகு காலம் வரை கூறுகின்றது நிகாய சங்கிரஹ. இலங்கையின் ஆதிகால வரலாற்றில் சங்க(ம்) (பெளத்த குருமார்களைக் குறிப்பது) வகித்த பங்கையும், மாறுபாடான சமய இயக்கங்கள் அடக்கப்பட்ட வகையினையும் காட்டுவதிலேயே நிகாய சங்கிரஹ முக்கியமாகக் கவனம் செலுத்துகின்றது. பூஜாவலியை இயற்றிய மயூரபாத மதாதோர் 13ம் நூற்ருண்டில் விர்ழ்ந்தவர். பரிநிர்வாண்ம் எயது வதற்கு முன்னும் பின்னும் புத்தருக்குச் செய்யப்பட்ட காணிக்கை களையே இந்நூல் விவரிக்கின்றது. இந்த நூலின் கடைசி இரு அத்தியாயங்களில், புத்த மதம் பரவும்வரையுள்ள இலங்கையின் வரலாறும், இந்தியாவில் பெளத்தம் வளர்ந்த வரலாறும் கூறப் படுவதுடன், இலங்கை மன்னர்கள் சங்கத்துக்கும், சாசனத்துக் கும் வழங்கிய பல நன்கொடைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவ் விரு அத்தியாயங்களுமே இந்த நூலில், எமது தேவைக்கு அதிக மாகப் பயன்படுபவை. (இ)ராஜாவுலீ என்பதும் ஒரு பிற்கால சிங்களக் காலவே டாகும். இதில் கோட்டை இராச்சிய காலத் துக்கு முந்திய இலங்கை மன்ன்ர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ள போதும், கோட்டை இராச்சியத்தின் வரலாற்றை அறிவதற்கே இந்நூல் மிகவும் துணையாகவுள்ளது.
ஆ. தொல்பொருள் அகழ்வுகள் : இலக்கிய ஆதாரங்கள் ஆதி கால வரலாற்றுக்கான கட்டுக் கோப்பை அளிக்கின்றன எனக் கூறி னல், தொல்பொருள் அகழ்வுகள் மூலம் பெறப்படும் கட்டிடச்சிதை வுகள், நினைவுச் சின்னங்கள், சிலைகள் முதலானவை, (வரலாறு என்ற) கட்டிடத்துக்கு உறுதியையும் பலத்தையும் அளிக்கின்றன எனலாம். ஒரு நூற்ருண்டுக்கு மேலாக இலங்கையில் தொல்பொரு ளாராய்ச்சிப் பகுதியினர் அனுராதபுரம், பொலன்னறுவை முத லான பழம் பெருநகர்களில் அகழ்வுகள் நடாத்தி, எவ்வளவோ பய னுள்ள சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். (தமிழ்ப்பிரதேசங் களில் மாதோட்டம், நல்லூர், வல்லிபுரம் முதலான இடங்களில் சரி யான முறையில் ஆராய்ச்சிகள் நடாத்தப்படவில்லை.) கந்தரோடை யில் நடைபெற்றுவரும் அகழ்வுகளால், பெரும் பயனுள்ளதும் ஆவ லைத் தூண்டுவதுமான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்று மூலங்கள் i5
தொல்பொருள் ஆய்வுகளால், வரலாறே புரட்சிகர மாறுத லடையும் " என்ற உண்மைக்கு கந்தரோடை அக்ழ்வுகள் சரன்முக உள்ளன. தொல்பொருளாராய்ச்சியின் பயனுக, பழைய கால நாகரிக வளர்ச்சி, கலைவளர்ச்சி, கலை மரபுகளில் ஏற்பட்ட மாறு தல்கள், பிற நாடுகளின் அல்லது நாகரிகங்களின் தாக்கங்கள் முத லான பல விடயங்கள் தெரியவரும். இலக்கிய ஆதாரங்களால் அறியப்படும் செய்திகளை உண்மைப்படுத்தும் சான்றுகளாகப் பெரும் பாலும் இத் தொல்பொருள் அகழ்வுகளால் பெறப்படும் சின்னங்கள் அமையும். w
இ. பொறிப்புக்கள் (கல்வெட்டுக்கள்) : தொல்பொருளாராய்ச்சி யின் விளைவாகக் கிடைத்துள்ளவற்றுள், கல்வெட்டுக்கள் எனப்படும் பொறிப்புக்கள் முக்கியமானவை. இலங்கையின் ஆதிகால வரலாற்றுக் குப் பெருந்தொகையான பொறிப்புக்கள் கிடைத்துள்ளமை, வரலாற் றுக்குத் தெளிவையும், உண்மையையும் ஊட்டுகின்றது. கல்வெட்டுக் கள் அதிகமாக அவை குறிக்கும் நிகழ்ச்சிகளுடன் சமகாலத்தவையாக இருக்கும். இதனலும், கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் அழியாத தன்மைபெற்றிருப்பதாலும், சுருக்கமாகவும் நேரடியாகவும் சொல்ல வந்ததைக் கூறுவதாலும் இந்த வகை ஆதாரங்கள் மிகுந்த முக்கியத்து வம் பெறுகின்றன. முதலில் குகை முகடுகளிலும், பின்னர் தற்பாறை களிலும், தூண்களிலும், கற்சுவர்க ம், கற்றளிகளிலும் கல்வெட் டுக்கள் இலங்கையில் பொறிக்கப்பட்டன. ஒரு சில.பொறிப்புக்கள் செப்பேடுகளிலும், பொற்றதடுதளிலும் (வல்லிபுரக் கோவிலைச் சேர்ந் தது) உள. கிறிஸ்துவுக்கு முன் முதல் மூன்று நூற்ருண்டுகளைச் சேர்ந்த பிராமி (வரிவடிவ)க் கல்வெட்டுக்களே இலங்கையில் கிடைக் கும் கல்வெட்டுக்களில் மிகவும் பழையவை. பெரும்பாலான கல் வெட்டுக்கள் ஆராயப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஆதிகாலக் கல் வெட்டுக்கள் அதிகமாகச் சமயத் தொடர்புடையவை. அரசனுே, அவன் குடும்பத்தவரோ, அதிகாரிகளோ, உள்ளூர் அலுவலர்களோ, பொது மக்களோ செய்துள்ள நன்கொடைகள் அக்கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அரச நன்கொடைகளைப் பதிவு செய்த கல் வெட்டுக்கள், அரசனது மரபைக்கூறி அவன் புகழ் இயம்பும் வாக்கி யத்துடன் தொடங்கும். மன்னர்களின் மரபு வழிகள், பட்டப் பெயர்கள், ஆட்சிக்காலம், ஆட்சிப் பரப்பு அல்லது எல்லைகள் முத லியவற்றை அறிவதற்குப் பொறிப்புக்கள் பெரிதும் துணை செய்கின் றன. இவையன்றி நாட்டின் நிருவாக ஒழுங்குகள், வரிமுறை முத லான பிற விவரங்களும் இப்பொறிப்புக்கள் வாயிலாகப் பெறப் படுகின்றன, இலக்கிய ஆதாரங்களில் கூறப்படாது விடப்பட்ட பல வற்றைத் தந்து வரலாற்றைப் பூரணமாக்குவதோடு, அந்த ஆதா

Page 12
6 பண்டைய ஈழம்
ரங்களில் வரும் செய்திகளின் உண்மையைப் பரிசீலனை செய்யவும் இப் பொறிப்புக்கள் துணைநிற்கின்றன. பொறிப்புக்கள் தரும் செய்திகள், இலக்கிய ஆதாரங்களால் பெறப்பட்டவற்றை உறுதி செய்யவும், சில சமயங்களில் அவற்றைத் தள்ளவும் உதவுகின் றன. இதனலேயே பொறிப்புக்களை இலக்கிய ஆதாரங்களின் உரைகல் என அழைப்பர்.
ஈ. நாணயங்கள் : நாணயங்களும், பொறிப்புக்களைப்போலவே, தொல்பொருள் அகழ்வுகளாலேயே பெறப்பட்டவை யானலும், அவற்றின் முக்கியம் கருதித் தனியாகக் கூறப்படுகின்றது. நான யங்கள் இலங்கையில் அத்துணை பெருந்தொகையாகக் கண்டெடுக் கப்படாவிடினும், இதுவரை பெறப்பட்டவை பல முக்கிய உண்மை களைத் தீர்மானிக்க உதவியுள்ளன. நாணயங்கள் கண்டெடுக்கப் பட்ட இடங்கள், அவற்றைச் செய்வதற்குப் பயன்பட்ட உலோ கத்தின் தன்மை நிறை என்பன, நாணயங்களில் பொறிக்கப் பட்ட எழுத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டு பல உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொதுவான பொருளி யல் நிலையும், வணிகம் இருந்த நிலையும், அது நடைபெற்ற இடங்களும் நாணயங்கள் வாயிலாகத் தெரியவரும். வெளி நாட்டு வணிகம்பற்றியும், அதில் ஈடுபட்ட நாடுகள், ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்ற துறைமுகங்கள் முதலான விபரங்கள அறிய இலங்கையில் கிடைத்துள்ள பிறநாட்டு நாணயங்கள் உத வும். இலங்கையில் உரோம, இந்திய, சீன, அரபு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக் காசுகளும் இந்தியாவில் தமிழ்நாட்டில் "ஈழக்காசு" என அழைக்கப்பட்டு, அங்கு உப யோகத்தில் இருந்திருக்கின்றன,
iii பிறநாட்டு நூல்களில் இலங்கை பற்றிய குறிப்புக்கள்:
மேலே தரப்பட்ட ஆதாரங்கள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்த பின், நாம் இலங்கையின் ஆதிகால வரலாற்றை எழுதலாம். இந்த உள்நாட்டு ஆதாரங்களுக்குத் துணையாகப் பிறநாட்டு ஏடு களில் வரும் குறிப்புக்கள் அமைந்துள்ளன. மிகப் பழைய காலந் தொட்டு, ஒரு வணிக நாடாக இலங்கை புகழீட்டியிருந்தது. அக் காலத்திலிருந்த முக்கிய கடற்பாதைகளில் இலங்கை ஒரு கேந்திர (மையமான) நிலையையும் வகித்தது. எனவே, இலங் கையைப் பற்றிய விவரங்கள் பிற நாடுகளுக்கு அதிகமாக எட்டி யிருந்ததில் வியப்பிருக்காது. கிரேக்க வியாபாரிகள் இலங்கை வந்து சென்றமையால், அவர்களிடம் பெறப்பட்ட செய்திகள்

இலங்கை வரலாற்று மூலங்கள் 7
கிரேக்க நூல்களிலும், ஏடுகளிலும் இடம்பெற்றுவிட்டன. அலெக் சாந்தரின் படையிற்பணியாற்றிய ஒருமாலுமியான ஒனிஸிகிறிட்டஸ், இலங்கை சென்று மீண்ட இந்தியரிடம் இத்தீவுபற்றியற்ந்த செய்தி களைத் தன் நூலில் கூறுகின் முன். மெளரிய அரசவையில் கிரேக் கத் தூதுவனுக விளங்கிய மெகஸ்தனிஸ் என்பவனும், தன் குறிப் புக்களில் இலங்கை பற்றியும் கூறியுள்ளான். இவற்றை விட, * எரித்திரியக் கடலின் பெரிப்பிளஸ்' (இதன் ஆசிரியர் யார் என்பது தெரியாது) என்ற நூலிலும் இலங்கை பற்றிய சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பிளினி என்பவனும், தனது நூலில் இலங்கை பற்றிய சில முக்கிய விவரங்களைத் தந்துள்ளான். உரோமர்களுடைய விரக்கல மொன்று, பலத்த காற்றிற்சிக்கி அராபியக் கடலிலிருந்து இலங் கைக்குக் கொண்டுவரப்பட்டதெனவும், இவ்வாறு வந்த அந்நி யரை இலங்கை வேந்தன் தனது நாட்டில் தங்கியிருக்க அணு மதித்து அவர்களை உபசரித்ததாகவும், பின்னர் அவர்களுடன் ஒரு தூதுக்குழுவை உரோமப் பேரரசனிடம் அனுப்பிவைத்ததாகவும் பிளினி கூறியுள்ளான். இச் செய்தியில் வரும். சில விவரங்கள் தவரு கவிருப்பினும், இலங்கையிலிருந்து முதலாம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் ஒரு தூதுக்குழு உரோமப் பேரரசின் அவைக் களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதை மகாவம்சமும், எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டும் உறுதிசெய்கின்றன.
விவரங்களைச் சேர்த்து புவியியல் (Geographia) என்ற தமது நூலில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளான் . 2ம் நூற்ருண்டைச் சேர்ந்த இந் நூலில் இலங்கை பற்றிய தகவல்கள் நிறைய இடம்பெற்றுள்ள தால், வணிகத் தொடர்பு காரணமாக மேனுட்டவர் இலங்கையைப் பற்றி எவ்வளவுக்கு அறிந்திருந்தனர் என்பதை நாம் உணரலாம்.
சீனவுக்கும் இலங்கைக்கும் நெடுங்காலமாக வணிக உறவும் சமயத் தொடர்பும் இருந்து வந்துள்ளன. இதன் விளைவாக, இரு நாடுகளுக்குமிடையே கப்பற் போக்குவரத்து நடைபெற்று வந் தது. சீன யாத்திரீகர்கள் இலங்கைக்கு வந்து இங்குள்ள புண் ணிய தலங்களைத் தரிசித்து, பின்னர் தமது யாத்திரைக் குறிப் புக்களில் இலங்கையில் தாம் கண்டவற்றை எழுதிவைத்தனர். இலங்கை வந்த சீன யாத்திரீகர்களில் குறிப்பிடத்தக்கவர் பாகியன் என்பவராவர். இவர் கி. பி. 5ம் நூற்றண்டுத் தொடக் கத்தில் (411ல்) இலங்கைக்கு வந்து அனுராதபுரம் போன்ற இடங் களில் தங்கி, சீனுவுக்குப் பயணமாஞர். பாகியன் விட்டுச்சென்றுள்ள

Page 13
பண்டைய ஈழம்
பிரயாண நினைவுகளில், இலங்கையைப் பற்றி விரிவாக எழுதி யுள்ளார். இதன் வாயிலாக, அக்காலத்தில் இலங்கையின் சமய நிலை பற்றிப் பொதுவாகவும், அபயகிரி, மகாவிகாரை போன்ற முக்கிய விகாரைகளின் நிலைபற்றி விரிவாகவும் அறியப்பட்டுள்ளது.
கொஸ்மஸ் இண்டிகோபிளியூஸ்டஸ் என்பவர் (உரோமானியர்) எழுதிய “கிறிஸ்தவ இடங்களின் விவரணை" (Topographie Christiana) 6ம் நூற்ருண்டு இலங்கையின் நிலை  ைம க ளைக் கூறுகின்றது. மாந்தை என்ற மகாதீர்த்தம் போன்ற இலங்கைத் துறைமுகங் கள் இந்திய, சீன, அண்மைக் கிழக்கு நாடுகளின் வணிகப் பரி வர்த்தனை நிலையங்களாக அக்காலத்தில் விளங்கியதை அந்நூல் தெளிவுபடுத்துகின்றது. 7ம் நூற்ருண்டுக்குப் பின், அராபிய வர்த் தகரின் செல்வாக்கிலேயே இலங்கையின் மேலைநாட்டு வணிகம் நடைபெற்றது. இவர் களு  ைடய தொடர்பாலேயே பின் னர் கொழும்பு ஒரு பெருந் துறைமுகமாகியது.
13ம் , 14ம் நூற்றண்டுகளில் இலங்கைக்கு உலகப்புகழ்பெற்ற இரு யாத்திரீகர்கள் வரலாயினர். சீன அரசவைக்குச் சென்று தங்கிய மார்க்கோ போலோ 1293 அளவில் இலங்கை வந்து சென்றன். தாங்கியரைச் சேர்ந்த இபின் பட்டூட்டா என்ற யாத்தி ரீகன் 1344ல் இலங்கைக்கு வந்து, சிவைெளிபாத மலையை (ஆதா மின் சிகரத்தை)த் தரிசித்தான். யாழ்ப்பாணத்தை ஆண்ட செகராசசேகரன் அவன வரவேற்று உபசரித்ததாகக் கூறப்பட் டுள்ளது. இவ்விரு யாத்திரீகர்களின் நினைவுக்குறிப்புக்களால், இடைக்கால இலங்கையின் நிலைமையை நாம் ஒரளவுக்கு அறிய முடிகின்றது.
iw மகாவம்சம் : ஒரு வரலாற்று ஆதாரநூல்
பாலி மொழியில் பாடப்பட்ட பழைய காலவேடுகளில், முதன்மை பெற்றது ‘மகாவம்சம்' ஆகும். இலங்கையிற் கிடைத் துள்ன இலக்கிய ஆதாரங்கள் அனைத்துள்ளும் அதி மு க் கி யம் வாய்ந்ததும் இதுவே. மகாவம்சம் எனும்போது, உண்மையில் சூளவம்சம் எனக் குறிப்பிடப்படும் அதன் தொடர்ச்சியும் அதில் அடங்குமாயினும், இங்கு நாம் (பொது வழக்கில் மகாவம்சம் எனும்போது கருதப்படும்) 1-37 அத்தியாயங்களைக் கொண்ட முதற் பகுதியையே கவனத்திற்கெடுத்துக் கொள்வோம். இன்னி மகாவம்சம் பற்றிச் சிறிது விரிவாக ஆராய்வோம்.

இலங்கை வரலாற்று மூலங்கள் 9
தீகசந்தசேனபதி - ப்ரிவெணவைச் சேர்ந்த மகாநாம தேர ராலேயே மகாவம்சம் எழுதப்பட்டதென், மகாவம்சத்தின் விளக்கவுரையான வம்சத்தப்பகாசினி'யின் பாயிரம் கூறுகின்றது. இதை ஏற்றுக்கொண்டாலும், மகாவம்சத்தின் காலம் இலகுவாக நிர்ணயிக்கப்படக் கூடியதல்ல. சூளவம்சத்தில் வரும் சில கூற் றுக்களைக் கொண்டு, மகாவம்ச ஆசிரியர் காலத்தைத் தீர் மானிக்க முயல்கின்றனர். தாதுசேனன் (459-477) ஆட்சிக்கு வருமுன், தன் இளமைக்காலத்தில் ஒரு பிக்குவான g5 Gör LD nr lo னுடன் இதே விகாரையில் வாழ்ந்து, உப சம்பத வைபவத்தில் ஒருங்கே கலந்துகொண்டனர் எனச் சூளவம்சம் கூறுகின்றது. 1ம் மொகல்லானன் ஆட்சி செய்த போது(495-512), ஒரு மகா நாம தேரர் வாழ்ந்ததாகவும் அதே நூல் குறிப்பிடுகின்றது" இவையிரண்டும் மகாவம்ச ஆசிரியரையே குறிப்பதாகக் கொள் வர். இந்தியாவில் புத்தகயாவில் உள்ள கல்வெட்டொன்று மகா நாம(ர்) என்ற இலங்கைப் பிக்கு பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்த மகாநாமதேரரும், “சத்தம்மப்பகாசினி'யின் ஆசிரியரும் ஒருவரே யெனச் சிலர் கொள்வர். இப் பிந்திய நூல் 515 அளவில் எழு தப்பட்டதாகத் தெரிகின்றது. எனவே, மகாவம்ச ஆசிரியர் 5ம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும், 6ம் நூற்ருண்டின் முற்பாகத் திலும் வாழ்ந்திருத்தல் கூடும் எனலாம். ஆனல் இம்முடிபு உறுதி வாய்ந்ததல்ல என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கது.
மகாவம்சம் எவ்வாறு எழுதப்பட்டதென்பதை யறிந்த வர்க்கே, அந்நூலின் தன்மை சரிவரப் புலப்படும். ஏற்கெனவே பேணப்பட்டு வந்த மரபுகளை யொட்டியே மகாவம்சம் எழுதப் பட்டதென்பதை நாம் உணரவேண்டும். (பெளத்தம் இலங்கையிற் புகுத்தப்பட்ட காலந்தொட்டு, பெளத்த பிக்குகள் புத்தரைப் பற்றியும் தம் மதத்தைப் பற்றியும் சில உண்மைகளை மரபுக் கதைகளாகப் பேணி வரலாயினர். இலங்கையில் பெளத்தம் பர வியபின், இம்முக்கிய நிகழ்ச்சியுடன் தெர்டர்புடைய மூன்மும் பெளத்த மாநாடு, மகிந்தரின் தூதுக்குழு, மகாவிகாரை நிறு வப்பட்ட்மை முதலான சில நிகழ்ச்சிகள் பற்றிய மரபுகளையும் சேர்த்துப் பேணலாயினர். பெளத்த மதக் கோட்பாட்டு நூல் களுக்கு உரை விளக்கங்கள் சிங்களத்தில் தோன்றியபோது, இம் மரபுகள் அனைத்தையும் ஒன்ருக்கி ஒரு வரலாற்று முன்னுரை போலச் சேர்த்துக்கொண்டனர். இவ்வாறு ஒன்றுசேர்க்கப்பட்ட வரலாற்று மரபுகளுக்கே "அட்டகதா - மகாவம்ச(ம்) என்ற பெயர் உண்டாயிற்று. இம் மரபுகளுடன், இலங்கையில் பெளத் தம் அடைந்த வளர்ச்சியும், தேவானம்பியதிசன் காலம்வரை இலங்
2

Page 14
10 பண்டைய ஈழம்
கையின் பூர்விக வரலாறும் இணைக்கப்படலாயின. தேவானம்பிய திசனுக்குப் பிந்திய மன்னர்களின் வரலாறும் பின்னர் சேர்க் கப்பட்டது. இவ்வாறு சேர்க்கப்பட்ட மரபுகள் யாவும் ஒருங்கே யமைந்தபோது, ஒரு காலவேட்டின் உருவத்தை அவை பெற்றன. வட்டகாமணி கால்ம்(கி.மு.முதல் நூற்ருண்டு) வரை, இம் மரபுகள் எழுதப்படாமலே பிக்குகளால் செவிவழி மரபாகப் பாராயணஞ் செய்யப்பட்டு வந்தன. வட்டகா மணி காலத்தில் இவை எழுத்து வடிவம் பெற்றபின்னரும், அடிக்கடி புதிய கதைகளும், மரபு களும் கூட்டப்பட்டன. இவ்வாறிருந்த அட்டகதா - மகாவம் சத்தைப் பின்பற்றி யெழுந்த முதல் பாலி நூல் தீபவம்ச ம்ாகும். பாலிச் செய்யுள் வடிவம் குரு மார்களுக்குப் புதிய தாக்ைய்ால், தீபவம்சம் கலையழகு குறைந்து காணப்பட்டது. தீபவம்சத்தைவிடத் திருத்தமான, (அழகிய செய்யுளில், இலக் கிய நயம், செறியப் பாடப்பட்டதே மகா வம்சமாகும்.) தீப வம்சம், மகாவம்சம் ஆகிய இரண்டின் ஆசிரியர்களும், பழைய மரபுகளைத் தழுவியே எழுதியதால், ஒரே காலப்பகுதியின் கதை யையே பொருளாகக் கொண்டிருந்தனர், அட்டகதா - மகா வம்சத்தில் உள்ள மரபுகளுக்கே, மகாவம்ச "ஆசிரியர் தமது இலக்கிய வன்மையைக் கொண்டும், புதிய உத்திமுறைகளைக் கையாண்டும் காவிய மணங்கமழும் இலக்கிய வடிவங்கொடுத்தார்.
மகாவம்சத்தை ஆராய்ந்து படித்த அறிஞர்கள், அதற்குப் பல அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர். சிலர் அதை ஒரு 'புராணமாகக் குறிப்பிட்டு, மகாவிகாரையின் வரலாற்றையே அது சிறப்பித்துக் கூறுவதாகக் கருதினர். தேரவாதப் பிரிவைச் சார்ந்த பெளத்தத்துக்கு இலங்கையில் நிலைக்களனக விளங்கிய மகாவிகாரை, வைதிக மதத்தைப் பிற பிரிவுகள் பாதிக்காத வாறு தடுப்பதில் முன்னின்றது (மகா விகாரைக்குச் சிறப்புத் தந்த မှီးနှီ ஏத்தியும், ஏனையோரைப் புறக்கணித்தும் மகாவம் சம் பாkuப்பட்டுள்ளதென்பதைக் காணலாம்; இதற்கான எடுத்துக் காட்டுக்கள் பின்னர் விரிவாகக் கூறப்படும். (மகாவிகாரைக்குப் பெருமை தேடித்தந்த தேவானம்பியதிசன், துட்டகா மணி ஆகி யோருக்கு அளிக்கப்பட்ட முதன்மை வட்டகாமணி, மகாசேனன் போன்றேர்க்குக் கிடைக்காததை இங்கு எடுத்துக்காட்டலாம். இவ்வாறு மகாவிகார்ையைச் சார்ந்த மகாநாமதேரர், தமது விகாரைக்குச் சார்புடைய வகையில் அதன் வ ர ல |ா ற்  ைற அமைத்துள்ளார். இந்த ஒருதலைச்சார்பு மகாவம்சத்தின் நடுவி! நிலையைப் பெரிதும் பாதித்துள்ளமை கண்கூடு.
மகாவம்சத்தில் உள்ள முப்பத்தேழு அத்தியாயங்களையும்
நாம் சிறிது உற்றுநோக்கினல், சில முக்கிய உண்மைகள் தெளி

இலங்கை வரலாற்று மூலங்கள் 11
வாகும், புத்த பிரான் இலங்கைக்கு மும்முறை வருகைதந்தார் என்ற கதையைக் கூறு வது டன் மகா வம் சம் தொடங்கி (புத்தரின் மரபு, பெளத்தத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி யில் மூன்று மாநாடுகள் செய்த பணியென்பன முதல் ஐந்து அத்தியாயங்களில் கூறப்படுகின்றன. அடுத்த ஆறு அத் தி யாயங்களிலும், தேவானம்பியதிசன் ஆட்சிக்காலம்வரை இலங் கையின் ஆதி வரலாறு கூறப்படுகின்றது, விஜயனது வருகை யில் தொடங்கி, பண்டுவாசுதேவன், பண்டுகாபயன் முதலான அரசர்களின் வரலாறு இவ்வத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளது. இப் பகுதியில் கட்டுக்கதைகளே அதிகமாகவுண்டு. வரலாற்றுக் குப் பயன்படும் உண்மைகள் மிகக்குறைவு. ஒருசில உண்மை களே வைத்துப் புனையப்பட்ட கதைகளாகவே இப் பிரிவைக் கொள்ளவேண்டும். ( அடுத்த பத்து அத்தியாயங்களைக் கொண்ட மூன்ருவது பிரிவில், இலங்கைக்குப் பெளத்தம் பரவி நிலைபெற் றமை விவரிக்கப்படுகின்றது (அத். 12-21). இலங்கைக் குரு மார்கள் மிகவும் அக்கறையுடன் பேணிய மரபுகள் இத் தீவுக் குப் பெளத்தம் பரவியமை பற்றியதாகவே யிருக்குமாதலால், இவ்வத்தியாயங்களில் வரலாற்றுண்மைகள் பல விருத்தல் நியா யமே. எனினும், இந்நிகழ்ச்சிகளுக்கு உயர்வு கற்பிக்கும் நாசி குடன், சில புன்ைகதைகளை அல்லது மெருகு வேலைகளைப் பக்தியுடன் செய்திருப்பர் எனக் கூறலாம். இதனலேயே, சில அற்புதத் தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
மகாவம்சத்தில் ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளத்தக்க பகுதி காமணியின் (துட்டகெமுனு) வீர வரலாற்றைக் கூறும் அடுத்த பதினெரு அத்தியாயங்களாகும். (22-32 அத்.). துட்டகாமண்ணி யின் காவியம்) எனச் சிலர் மகாவம்சத்தை யழைப்பதற்கும் இதுவே காரணம். தேவானம்பியதிசன் உட்பட, மற்றெந்த இலங்கையரசனுக்கும் அளிக்கப்படாத அளவு முக்கியம், துட்ட காமணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு சில செய் யுள்களில் கூறப்பட்ட துட்டகாமணி வரலாறு, மகாவம்சத்தில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியை நிரப்புவதைக் காண்கிருேம். (பொதுமக்களால் போற்றப்படும் விடுதலை வீரஞக மட்டும் காமணியிருக்கவில்லை; அதிலும் மேலாக, மகாவிகாரைக்கும், பொதுவாக பெளத்தத்துக்கும் பெருமை தந்த மகாதூபம் எனப்படும் ரூவன் வெலிச யாவையும், பிற தாக பங்களையும் நிறு விப் பெளத்தத்தின் நிலையை நிகரற்றதாக்கினன்) இதனலேயே, மகாவம்ச ஆசிரியர் துட்டகா மணியின் பணிகளை விரிவாகப் பாடியுள்ளார். அரசியல் நிகழ்ச்சிகளைக் கூறுவதிலும், சம ய நிகழ்ச்சிகளைக் கூறுவதற்கே அவர் அதிக கவனஞ்செலுத்தினர்

Page 15
12 பண்டைய ஈழம்
என்பது, துட்டகாமணியின் வரலாற்றை அவர் பாடியதைக் கவனித்தால் விளங்கும். (காமணியின் பிறப்பு முதல், தமிழரை வெற்றிகொண்ட அரசியில் நிகழ்ச்சிகள் யாவும் நான்கு அத்தி யாயங்களில் (22-25) கூறிமுடிந்துவிட, ஏனைய ஏழு அத்தி யாயங்களும் (26 - 32 அத்.) அவனது சமயப் பணிகளையே விவ ரித்துக் கூறுகின்றன. இவற்றுள்ளும், மகாதூபம் நிறுவப்பட்ட தைக் கூறுதற்கு நான்கு அத்தியாயங்க்ள்” ஒதுக்கப்பட்டுள்ளன (28 - 32 அத்.). எனவ்ே, காமணியின் அரசியற் பணியைக் காட்டிலும், அவனது சமயப் பணிகளே மகாவம்ச ஆசிரியரைக் கவர்ந்துள்ளன என்பது தெளிவு. மகாவம்ச ஆசிரியரின் இலக் கிய வன்மையும், சங்கத இலக்கியப் பயிற்சியும் இப்பகுதியைப் பTடுவதிலேயே புலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. வடமொழிக் காவிய இலக்கணங்கள், அலங்காரங்கள் காமணி யின் வரலாற்றுக் காவியத்தைப் பாடப் பயன்படுத்தப்பட் டுள்ளன என்பர்.
இறுதியாக உள்ள ஐந்து அத்தியாயங்களுமே (33-37 அத்.), மகாவம்சத்தில் மிகவும் நம்பிக்கை வாய்ந்ததும், வரலாற் றுண்மைகள் செறிந்துள்ளதுமான பிரிவு எனக்கூறுவர். கால ஏடு (Chronicle) எழுதப்படுதற்கு முன்மாதிரியாகவும் இவ் வைந்து அத்தியாயங்களைக் குறிப்பிடுவர். நிகழ்ச்சிகள் நேரடி யாகவும், தேவையற்ற வர்ணனைகளின்றியும் இந்த அத்தியாயங் களில் கூறப்படுகின்றன. மேலும், நூலாசிரியர் வாழ்ந்த காலத் துக்கு மிகக் கிட்டிய காலத்து மன்னர்களே இப்பிரிவில் இடம் பெற்றதால், அவர்களைப்பற்றி அதிகம் புனை வு க ள் இ ட ம் பெறுதல் இயலாது.
மகாவம்சம் பற்றிய ஒரு பருவரையான ஆய்வு மேலே தரப் பட்டது. மாணவர் தாமே மகாவம்ச (தமிழ்) மொழிபெயர்ப்பை வாசித்து, மேலே கூறியவற்றை அவதானிப்பதுடன், மேலும் பலவற்றைத் தாமாகவே கண்டுகொள்ளலாம். மேலே கூறியவற் ரு ல், மகாவம்சத்தை முழுமையாக நம்பிக்கையானதென்ருே, புனைகதையென்ருே கூறிவிடல் சாலாது. அதை நன்கு ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கே, அதிலுள்ள உண்மைகளும், உண்மைகளை விளக்க எழுந்த கதைகளையும் கண்டுகொள்ள முடியும். மேலும் பரம்பரை பரம்பரையாக விகாரைகளில் பேணப்பட்ட மரபு களைப் பெரிதும் பின்பற்றியே மகாவம்சம் பாடப்பட்டதால், அதன் ஆசிரியர் எதையும் தாணுகக் கற்பனை செய்து கொண்டு பாடவில்லை யென்பதை நாம் உணர்தல் வேண்டும். மகாவம் சத்தை நன்கு ஆராய்ந்து, அதில் கொள்ளத்தக்கவற்றைக் கொண்டும், தள்ளவேண்டியவற்றைத் தள்ளியும் பயிலுதல் நல்ல

இலங்கை வரலாற்று மூலங்கள் 13
வரலாற்று அனுபவத்தை யளிக்கும். இந்திய மரபுகள், கல் வெட்டுக்கள் முதலான பிற ஆதாரங்களுடன் மகாவம்சக் கூற் றுக்களை ஒப்பு நோக்கி, அவற்றின் உண்மையை நாம் நிதா னித்துக் கொள்ளலாம். பொதுவாகப் பார்க்குமிடத்து, ஆதி கால வரலாற்றை யெழுதப் பயன்படும் மிகவும் உபயோக மான ஆதாரநூல் மகாவம்சம் என்ற கருத்து வலுப்பெறும்.
மேலே கூறப்பட்ட சமய நோக்கால், மகாவம்ச ஆசிரியர் தாம் விரும்பியவற்றைச் சேர்த்தும், விரித்தும், சுருக்கியும், தவிர்த்தும் உள்ளார். நாம் இன்று எதிர்பார்க்கும் பல தக வல்கள் அவருடைய நோக்குக்கு உடன்பாடின்மையால், அவற் றைக் கூருது விடுத்தார். பொருளியல் நிலை, சமூக வளர்ச்சிகள் முத லான பல விஷயங்களை அவர் கவனமெடுத்துக் கூருதுவிட்டார். ‘‘கூறப்பட்டதில் அல்ல, கூரு தொழிந்தவையே தீர்வுகாண முடி யாத பிரச்சினையாகவுள்ளது' என மகாவும்சம் டற்றி கைகர் என்ற ஜேர்மன் அறிஞர் (மகாவம்ச மொழிபெயர்ப்பாளர்) கூறி 4ள்ளமை இங்கு மனங்கொளத் தக்கது. மகாவம்சத்தில் கூறப் படாதவற்றை நாம், கல்வெட்டுக்கள், தொல் பொருட் சான்று கள் முதலியவற்றைக் கொண்டு நிரப்பலாம். பயிற்சி: 1. சுதந்திர இலங்கையின் (1948 - 1968) வரலாற்றை எழுதுவதற்
குள்ள ஆதாரங்களைக் குறிப்பிடுக. 2. மகாவம்சத்தின் முதல் அத்தியாயத்தைப் படித்தபின், வரலாற்
றுக்கு அது எவ்வகையில் உதவுமெனக் கூறுக. 3. இலங்கையில் தொல்பொருளாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
எவை? இலங்கைப் படத்தில் அவற்றைக் குறித்துக் காட்டுக. கூட்டுவேலைக்கு கூ
தொல்பொருளாராய்ச்சி நடைபெற்ற ஓரிடத்துக்குச் (அல்லது அயலிலுள்ள அரும்பொருளகத்துக்கு) சென்று, அங்கு நீங்கள் பார்வையிட்டவற்றை வகைப்படுத்திக் கூறுக. தேர்வு வினுக்கள்: 1. இலக்கிய ஆதாரங்கள், பொறிப்புக்கள் ஆகிய இரண்டும் வரலாற்
றுக்குத் துனே செயும் வகையினை விளக்குக. 2. ஆதிகால இலங்கை வரலாற்றுக்கான இலக்கிய ஆதாரங்களின்
முக்கிய தன்மைகளையும், குறைபாடுகளையும் ஆராய்க. 3, மகாவம்சம், "மகாவிகாரையின் புராணம்" என அழைக்கப்படுதல்
ஏன்? 4. ஆதிகால இலங்கைபற்றி, பிறநாட்டிலக்கியங்களில் உள்ள குறிப்
புக்களேச் சுருக்கித் தருக.

Page 16
அத்தியாயம் இரண்டு இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி
1. புவியியலும் வரலாறும். i. இலங்கையின் நிலையமும் வரலாறும். i. பெளதிக உறுப்புக்கள் வரலாற்றைப் பாதித்தமை. tv, வரலாற் றுக் காலத்துக்கு முந்திய இலங்கை.
1. புவியியலும், வரலாறும்.
*வரலாறு காலத்திலும் இடத்திலும் நிகழ்வது" எனக் கூறுவர். ஒரு நாட்டின் வரலாற்றுக்கும், அதன் புவியியல் அமைப்புக்கும். நெருங்கிய தொடர்புண்டு. உண்மையில், வரலாற்றுப் போக் கைத் தீர்மானிக்கும் காரணிகளில், புவியியல் தொடர்பான கார ணிைகள் மிகவும் முக்கியமானவையாகும். புவியியற் காரணிகளுள் முதலில் ஒரு நாட்டின் நிலையம் அந்நாட்டைப் பாதித்த பிற நாடுகளின் செல்வாக்கைத் தீர்மானிப்பதாகும். மேலும், அந் நாட்டின் பெளதிக உறுப்புக்கள் - காலநிலை, மழைவீழ்ச்சி, தரைத்தோற்றம், நீர்வளம், நிலவளம் முதலானவை - அதன் நிலையத்துடன் தொடர்புடையவையாகவே இருக்கும். இப் பெளதிக உறுப்புக்களும் உள்நாட்டு வரலாற்றின் விருத்திகளைப் பாதிக்கும் இயல்புடையவை. இலங்கையின் ஆதிகால வரலாற் றில், இத்தகைய புவியியற் காரணிகள் கொண்டிருந்த செல்வாக் கைப் புலப்படுத்தப் பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. இவ் வத்தி யாயத்தில், அவ்வாறு பாதித்த முக்கிய காரணிகளும், ஒரு சில முக்கிய எடுத்துக்காட்டுக்களும் தரப்படுகின்றன. இங்கு கூறப் படுவதை அவதானித்த பின், இலங்கை வரலாற்றில் புவியியற் காரணிகள் வகித்த பங்கை அறிந்துகொள்ளுதல் இ லகு வாக விருக்கும். i. இலங்கையின் நிலையமும், வரலாறும்.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில், இந்தியாவுக் கண்மையில் அமைந்துள்ள ஒரு சிறு தீவாகும். வடக்கு அகலக் கோடுகள் 5 பாகை 54 செக்கனுக்கும் 9 பாகை 52 செக்கனுக்கும் இடையேயும், கிழக்கு உச்ச நெடுங்கோடுகள் 79 பாகை 39 செக்க னுக்கும் 81 பாகை 53 செக்கனுக்கும் இடையேயும் இலங்கை அமைந்திருப்பதைப் புவியியற் பாடத்தில் அறிந்திருக்கின்ருேம். இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரையில், அதன் நிலையத் தின் முக்கிய தன்மைகள் சில வரலாற்றைப் பாதித்துள்ளன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஆசியாவின் படத்தை நாம் நோக்கும் போது, இலங்கை ஒரு மையமான, கேந்திர நிலையில் அமைந்துள்ளதை நாம் அறிவோம். இதல்ை( ஆசிய நாடுக

இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி 15
ளுடன் நடைபெற்ற வணிகம் முதலாய கடல்வழித் தொடர்பு களில், இலங்கை தனது நிலையம் காரணமாக முக்கிய பங்கை வகித்தது. இரண்டாவதாக, இந்திய உபகண்டத்துக்கு மிக அண்` மையில், அதன் தென்கோடியில் இலங்கையிருக்கின்றது. இத னல் பர்மா, மலாயா, கம்போடியா, சீயம், யாவா முதலான பிற அயல் நாடுகளைக் காட்டிலும், இந்தியாவுடனேயே இலங்கை அதிக தொடர்புகளை வைத்திருந்தது. மலாக்கா நீரிணையூடாகச் சீனவும் இலங்கையும் கடல்வழித் தொடர்புகள் கொள்ள வாய்ப் అతిత్తి மூன்ருவதாக, இந்தியாவுடன் நெருங்கிய தொடர் பிருக்கும் வகையில் இலங்கை அமைந்திருப்பினும், இந்தியாவி னின்றும் இலங்கையைப் பிரித்துவைக்கும், பாக்கு நீரிணை, இலங் கையை ஒரு தனி நாடாக்க உதவியது.) இதனல், ஒரளவுக்கு இலங்கை தனித்த போக்குடன் இயங்க இந் நீரிணையுதவி யுள்ளது.
இத்தன்மைகள் ஒவ்வொன்றும் இலங்கையின் வரலாற்றில் பெரும் மாறுதல்களை விளைவித்ததை இனிச் சுருக்கமாகக் கூறு வோம். இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கையமைந்திருந்த தால், பழைய காலத்தில் ஆசிய நாடுகளுடன் நடைபெற்ற வணி கத்தில், மாதோட்டம் போன்ற இலங்கைத் துறைமுகங்கள் முக் கிய பங்கை வகித்தன. இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உரோம, சீன, அராபிய நாணயங்கள் இலங்கை பிறநாடுகளுடன் கொண் டிருந்த வணிகத் தொடர்புகளை வலியுறுத்துகின்றன) மகாதீர்த் தம் போன்ற துறைமுகங்களில் பிறநாட்டு வண்கர் தமது பொருட்களைப் பரிவர்த்தனை செய்தனர். இவ்வாறு வணிகத் தொடர்புகளில் இலங்கை ஈடுபட்டிருந்தமையினலேயே, கிரேக்க உரோம ஆசிரியர்களும், புவியியலாளரும் இலங்கையைப் பற்றி அறிந்து, தமது நூல்களில் இலங்கையைப் பற்றிக் குறிப்பிட் டிருந்தனர் என முன்னர் கண்டோம்.
போர்த்துக்கேயர் வருகைக்கு முந்திய இலங்கை வரலாற்றில் செல்வாக்குப் பெற்ற அயல் நாடுகளில், இந்தியாவுக்குத் தனி யிடம் உண்டு. இவ்வாறு தனியிடத்தை இந்தியா பெறக்காரண மாக விருந்தது இலங்கையின் நிலையமே. இலங்கையின் வரலாறு மட்டுமன்றி, அதன் புவியியலைப் பாதிக்கும் பல அம்சங்கள் கூட இந்தியாவுடன் தொடர்புடையனவாக வுள்ளன. ஒரு காலத்தில், இலங்கை இந்தியத் தீபகற்பத்தின் ஒரு பகுதியாக, நிலப்பரப் பால் இணைக்கப்பட்டிருந்ததாகச் சில ஆராய்ச்சியாளர் கொள்கின் றனர். எனினும்,. நமது வரலாறு தொடங்கும் காலத்திற்குப் பல நூற்ருண்டுகளுக்கு முன்பாகவே, இலங்கை இந்தியாவினின் றும் பிரிந்து விட்டது.( இலங்கைக்கு மிக அண்மையிலிருந்த பெரும் உபகண்டமாக இந்தியா விளங்கியதால், இந்திய வ ர லா ற் று

Page 17
16 பண்டைய ஈழம்
நிகழ்ச்சிகளும், வளர்ச்சிகளும், இயக்கங்களும், போர்களும் இலங் கையைப் பாதிக்கலாயின. ஆரியர் வருகை, பெளத்தம் பரவல், மெளரிய, குப்த, பல்லவ, சோழ, விஜய நகர. அரசுகளின் பண் பாட்டுத் தாக்கங்கள் சமுதாய் பண்பாட்டுத்துறைகளில் மிகுந்த ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன இலங்கைக் குடிகளில் பெருந் தொகையினர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களின் வழி வந்தவர்களே. இந் தி யா வி ல் உ ரு வா ன ச ம ய ங் க ள் (பெளத்தம், சைவம், வைஷ்ணவம்) இலங்கைக்குப் பரவியது மல்லாது அங்கு உண்டான சமய இயக்கங்களும் (எ-டு: மகா யானப் பிரிவு) இலங்கையைப் பாதிக்கவே செய்தன. சமஸ் கிருதம், தமிழ் ஆகிய" மொழிகளில் ஏற்பட்ட இலக்கிய இலக் கண வளர்ச்சிகளும் இலங்கையில் எழுதப்பட்ட நூல்களைப் பாதித்துள்ளன அரசியல் துறையில் ஏற்பட்ட மாறுதல்கள் அனைத்தும் இலங்கையைப் பாதிக்காவிடினும், தென்னிந்தியாவில் ஏற்பட்ட முக்கிய அரசுகள் அடிக்கடி இலங்கையைத் தாக்கி வரலாயின. பிந்திய அனுராதபுர காலத்தில் இத் தாக்குதல்கள் அதிகரித்து, ஈற்றில் சோழரின் பேரரசுக்குட்பட்ட பகுதியாக இலங்கை அமர்ந்தது இவ்வாறு, தென்னிந்திய அரசியல் வளர்ச்சிகள் இலங்கையை அடிக்கடி பாதித்து வரலாயின. வட இந்தியா அரசியல் துறையில் நேரடியாக இலங்கையைப் பாதிக்காதிருக்க, தென்னிந்தியா அதிகமாகப் பாதித்தமைக்கும் இலங்கையின் நிலையமே காரணமாகும்.\ட் இந்தியாவைவிட பர்மா, சீயம், கம்போடியா, பூரீவிஜயராச்சியம் (மலாயாத் தீபகற்பத் தில் விளங்கிய பேரரசு) சீன முதலான நாடுகளும் கலாசார, சமய, வணிக உறவுகளை இலங்கையுடன் வைத்திருந்ததோடு இடையிடையே இலங்கையின் அரசியலையும் பாதித்தனர் சந்திர பானு, மாகன் ஆகியோரின் படையெடுப்புக்கள் பொலன்னறு வைக் கால இலங்கையில் புதிய விருத்திகளேற்படக் காரணமா யிருந்தன. இதேபோல, 15ம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற செங்-ஹோவின் (சீனப்) படையெடுப்புக்களும் அந் நேரத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விருந்தன. இவ்வாறு, தொலைவில் உள்ள நாடுகளும் இலங்கையின் அரசி யற் போக்கைச் சில வேளைகளில் மாற்றியுள்ளதைக் காண்கின்ருேம்.
இறுதியாக, இந்தியாவினின்றும் இலங்கை ஒரு சிறு நீர்ப் பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால், இலங்கை தன் தனித்தன்மை யைப் பேணி, தனக்கென ஒரு பண்பாட்டையும் வரலாற்றையும் வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. சமயத்துறையில், பெளத்தம் தோன்றிய இந்தியாவிலேயே காலப்போக்கில் அது அரு கி மறைந்து போக, இலங்கையில் தேரவாத பெளத்தம் தன்

o లో 94% S్వత
- *FK
5GC ඊO(20 CO - 100)
Lప్00 ఈyత5శత్య
:*.
动 パイ
露娜)《-

Page 18

இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி 17
தூய்மைகெடாது இன்றுவரை பேணப்பட்டுவந்துள்ளது. அரசியல் துறையிலும் இந்தியாவிலேற்பட்ட எல்லா இயக்கங்களாலும், உள்நாட்டுப் போர்களாலும் குழப்பங்களாலும் இலங்கை பாதிக் கப்படாது, ஒதுங்கிவாழ முடிந்துள்ளது. கலைத் துறைகளில் ஒரு தனித் தன்மையைப் பெற்றும், தனக்கென ஒரு தனிப்பட்ட வரலாற்றுடனும், இலங்கை விளங்க உதவியது அச் சிறு நீரிணையே ஆகும். இவ்வாருக, இலங்கையின் நிலையத்தின் ஒவ்வொரு தன் மையும் இலங்கையைப் பல வழிகளில் பாதித்துள்ளதை நாம் &5 ft 6007 aftb.
i. இலங்கையின் பெளதிக இயல்புகள்
வரலாற்றைப் பாதித்தமை.
இலங்கையின் நிலையத்தின் தன்மைகள் இலங்கையைப் பாதித்த வெளிநாட்டுத் தாக்கங்களைத் தீர்மானித்தன என்று கூறினல், வரலாற்றைப் பாதித்த உள்நாட்டுச் சக்திகளாக நாட்டின் பெளதிக உறுப்புக்களைக் குறிப்பிடலாம். இலங்கையின் ஆதிகால வரலாற்றில், நாட்டின் பெளதிக உறுப்புக்கள் பல - தரைத் தோற்றம், காலநிலை, மழைவீழ்ச்சி, நீர்வளம், நிலவளம், கணிப் பொருட்கள் செயற்பட்டு, அவ்வரலாற்றைப் பாதித்துள்ளதை அறிகின்ருேம். இங்கு அவற்றுள் முக்கியமானவை சில எடுத் துக்காட்டுக்களாகக் கூறப்பட்டபோதும், வரலாறு முழுவதையும் படித்த பின்னரே, வரலாற்றிலுள்ள புவியியல் தாக்கங்கள் சரி வரப் புலப்படும்.
இலங்கையில் நிறுவப்பட்ட ஆதிக்குடியேற்றங்கள் தரைத் தோற்றம், காலநிலை, நிலவளம் முதலான காரணிகளாலேயே தீர்மானிக்கப்பட்டன. ஆரியரின் ஆதிக் குடியேற்றங்களில் முக்கிய மானவை, வறட்சி வலயத்திலுள்ள வடக்குச் சமநிலம், தென் கிழக்குச் சமநிலம் ஆகியவற்றிலேயே அமைந்தன. ஆறுகளை யடுத்த வளம்பெற்ற நிலத்தையும், அடர்த்தி குறைந்த காடு களையும், குறைந்த மழைவீழ்ச்சியையும் உடைய நிலப்பகுதிகளே அவர்களின் தேவைக்கு உகந்தனவாக இருந்தன. கடல் மட்டத் திலிருந்து 1000 அடிக்கு உயரமான பகுதிகளில் சிறிது பின்னரே குடியேற்றங்கள் நடைபெறத் தொடங்கின. 2,500 அடிக்கும் உயரமான மலைநாட்டுப் பகுதிகளில் 9ம் நூற்ருண்டுக்குப் பின்பே மக்கள் குடியேறினர். பொலன்னறுவை அரசின் வீழ்ச்சியின் பின்னரே (13ம் நூற்ருண்டில்) மக்கள் ப்ெருந்தொகையாக மலை " நாட்டிற் குடியேறுவாராயினர். அதிக செழிப்பு, இரு பருவக்காற்
3.

Page 19
8 பண்டைய ஈழம்
றுக்களின் போது மழைவீழ்ச்சி என்பவற்றைத் தாழ்பூமிக் குளிர் வலயம் (தென்மேற்குச் சமநிலம்) பெற்றிருந்தும், தொடக்க காலத்தில் களனிப் பகுதியில் ஒரு சிறு குடியேற்றமே யிருந்து வந் தது. இப் பகுதியும் 13ம் நூற்றண்டளவிலேயே முக்கிய குடி யேற்றமுடைய பகுதியாக மாறியது.
பொருளியல் வளர்ச்சியிலும் இப் புவியியற் காரணிகள் முக் கிய பங்கை வகித்தன. பயிர்ச் செய்கைக்கு முதலில் இயற்கை வளமும் ஆண்டுதோறும் பெய்யும் மழையும் போதுமானவை யாக இருந்தன. உணவுத் தேவை கூட, நீர்த்தேக்கங்களை நிறுவி வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டிய் தேவையும் எழுந்தது) இந் நீர்த்தேக்கங்கள் (குளங்கள்) தரைத்தோற்ற வியல்புகளைப் பயன்படுத்தித் தொழில்நுட்பத் திறமையுடன் அமைக்கப் பட்டன. இதைத் தவிர, 'பிறநாடுகளுடன் நடைபெற்ற வணி கத்தில் இடம்பெற்ற இரத்தினக்கற்கள், முத்துக்கள், வாசனைத் திரவியங்கள் ஆதியன இலங்கையின் இயற்கை வளங்கள் வாயி லாகப் பெறப்பட்டவையே இவற்றைப் போலவே, மக்கள் மேற் கொண்ட பிற பொருளியல் முயற்சிகளையும் புவியியற் காரணிகள்
பாதிக்கலாயின.
இலங்கையின் அரசியலிலும், ஆட்சிமுறையிலும் இப் பெளதிக உறுப்புக்கள் தொழிற்பட்டன. ஆதிகால இலங்கையின் அரசியல் நிருவாகப் பிரிவுகள், இயற் கை யமைப்பைப் பின் பற்றி யே அண்மந்தன.\ இராஜரட்டை என்ற முக்கிய பிரிவுக்கு மலைநாடும், மகாவலிகங்கையும் தென்கிழக்கு எல்லைகளாக விளங்கின. மத் திய மலைநாட்டுப் பிரதேசத்தைக் கொண்டது மலையரட்டை யென வும், மகாவலிக்கு மேற்கேயும், மலையரட்டை கலுகங்கை இரண் டுக்கும் தெற்கேயும் அமைந்த தென்னிலங்கைப் பகுதி உருகுனே" அல்லது "உரோகணம்' என்றும் அழைக்கப்பட்டன. இப் பெரும் பிரிவுகளிடையே ஏற்படுத்தப்பட்ட உட்பிரிவுகளும், அதிகமாக இயற்கை யெல்லைகளைப் பயன்படுத்தியிருந்தன. Uதலைநகர்கள் தெரிவுசெய்யப்பட்ட போதும் இப் பெளதிகக் காரணிகள் கருத் திற் கொள்ளப்பட்டனர் மல்வத்து ஓயாவில் அனுராதபுரமும் மகாவலிகங்கைக்கு மிக அண்மையில் பொலன்னறுவையும் அமைந் துள்ளன. சில இடைக்காலத் தலைநகர்களும், அரச பீடங்களும் குன்றுகளிலும், பாறைகளிலும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சிகிரியா, யாப்பாகு, தம்பதெனி, குருனுகலை, வரகிரிகலை என்பன இவ்
வகையில் முக்கியம் வாய்ந்தவையாகும்.

இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி I9
ஆதிகால இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் களின் போதும், அந்நியப் படையெழுச்சிகள் நிகழ்ந்தபோதும், நாட்டின் தரைத்தோற்ற வியல்புகள், ஆறுகள் முதலானவை பயன்படுத்தப்பட்டன. அனுராதபுரத்திலிருந்து உருகுணைக்குப் படைகள் அனுப்பப்பட்டு வந்தபோதும், உருகுணயிலிருந்து அனுராதபுரத்தை நோக்கிப் படைகள் அணிவகுத்துச் சென்ற போதும், மாகந்தோட்டையிலிருந்து மகியங்கணை வரை மகாவலி கங்கையின் கிழக்குப் புறமாகவிருந்த பாதை உபயோகிக்கப் பட் டது. துட்டகா மணியின் படைகள் உருகுணையிலிருந்து முன்னேறி இதே பாதையாற் சென்று மாகந்தோட்டையில் ஆற்றைக்கடந்து அனுராதபுரம் வரை சென்றன. தென்னிந்தியாவிலிருந்து அடிக் கடி படையெடுப்புக்கள் நடாத்தப்பட்டபோது, அந்நியப் படை யினர் மாந்தையில் இறங்கி, மல்வத்து ஒயா க் கரையாக அனு ராதபுரத்தை அடைந்தனர். அனுராதபுரத்திலிருந்து தப்பியோ டிய அரசர்களும் தெற்கேயிருந்த காடுகளிலும், மலையகத்திலும் தலைமறைவாக வாழ்ந்து பின்னர் படைகளைத்திரட்டி மீண்டு அரசைப் பெற்றனர்.
7 (; ö ( i (c :
இயற்கையமைவு காரணமாகவே, அரசியல் முக்கியம் வாய்ந்த பகுதியாக உருகுணை அக்காலத்தில் விளங்கியது. அனுராதபுர ஆட்சியாளருக்கெதிராகக் கலகஞ் செய்தவர்கள் உருகுணையைத் தமது புகலிடமாகக் கொண்டனர். மத்திய மலைத் தொடரும், காடுகளும் இராசரட்டை ஆட்சியாளரை உருகுணையைச் சரிவர அடக்கவியலாதவாறு செய்தன. இதனல், கலகக்காரரும், விடுதலை வீரரும் உருகுணையிலிருந்து போதிய ஆயத்தங்கள் செய்து பின் அனுராதபுரத்துக்குப் படையெடுத்துச் சென்றனர். துட்டகாமணி, விஜயபாகு போன்றவர்கள் தம் விடுதலைப் போரை உருகுணையி லிருந்தே ஆரம்பித்தனர். வலிமைமிக்க சோழராலும், உருகுணை நன்கு அடக்கப்படவில்லை. மகாவலிகங்கைக் கடவைகளைக் காவல் செய்வதன் மூலம் உருகுணைப் படைகளை முன்னேறவிடாது தடுப்பதற்கான வழிவகைகள் அக்காலப் போர்முறைகளில் கைக் கொள்ளப்பட்டன. உள்நாட்டு வணிகத்துக்கும் போக்குவரத்துக் கும் பயன்பட்ட பாதைகள் பெரும்பாலும் இயற்கை யமைவுடன் தொடர்புபட்டவையாக விருந்தன.
இவ்வாறக, மக்களின் குடியேற்றங்கள், பயிர்ச்செய்தை முத லான பொருளியல் முயற்சிகள், அரசியற் பிரிவுகள், தலைநகர் களின் தெரிவு, போர்கள், படையெழுச்சிகள் என்ற பலதிறப் பட்ட தேவைகளுக்கும் நாட்டின் இயற்கை அமைப்புப் பயன்பட் டுள்ளது. நூலில் இனிவரும் அத்தியாயங்களில் இவ்வுண்மைகள் மேலும் தெளிவாக்கப்படும்.

Page 20
20 பண்டைய ஈழம் iy. வரலாற்றுக் காலத்துக்கு முந்திய இலங்கை.
இலங்கையின் வரலாற்றுக் காலம் ஆரியர் இலங்கைக்கு வந்த தோடு தொடங்குகின்றது. அவ்வாறு ஆரியர் இலங்கைக்கு முத லில் வந்தமை கி. மு. 500 அளவில் என்பர், ஆரியர் வருகைக்கு முன்னரும் இலங்கையில் மக்கள் வாழ்ந்தனரெனினும், அவர் களைப் பற்றிய வரலாற்றை விரிவாகவும் தொடர்பாகவும் கூறு தற்குப் போதிய சான்றுகள் இல்லை.(மற்றைய நாடுகளைப் போலவே, இலங்கையிலும் பழைய கற்காலம், புதிய கற்காலம் என்ற காலப் பகுதிகள் இருந்தமைக்கு அக்காலச் சின்னங்களும், கருவிகளும் ஆதாரங்களாகவுள்ளன. இலக்கிய ஆதாரங்களிலும், ஆரிய ர் வந்த காலத்தில் இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றிச் சில குறிப்புக்கள் வருகின்றன. (மகாவம்சம், இ ரா மா ய ண ம் போன்ற நூல்களில் நாகரிக நிலையிற் குறைந்த இயக்கர், நாகர், இராக்கதர் (அரக்கர்) பற்றிய சில செய்திகள் உண்டு) ஆனல், இவற்றில் உள்ள உண்மைகளைச் சரிவரத் தீர்மானித்தல் எளி தன்று. (நாகர் என்பது திராவிட இனத்தவரையே குறிப்பதாக ஒரு சாரார் கருதுவர்.) (இக்காலத்திலும் இலங்கையின் சில பாகங்களில் வாழ்ந்துவரும் வேடர், இலங்கையின் ஆதிக்குடிகளின் வழிவந்தவராகக் கருதப்படுகின்றனர்) வேடரைப் பற்றியும், இலங் கையின் கற்காலங்கள் பற்றியும் சில ஆராய்ச்சிகள் நடைபெற் றுள்ளபோதும், இவற்றைக் கொண்டு நாம் விரிவான வரலாற்றை எழுதவியலாது.
பொதுவாகக் கூறுமிடத்து.( இலங்கையில் வாழ்ந்த கற்கால மாந்தருக்கும், இந்தியா போன்ற பிற நாடுகளில் வாழ்ந்த ஆதிக் குடிகளுக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தன) உண்மையில், இலங்கை இந்தியாவினின்றும் நீர்ப்பரப்பால் பிரிக்கப்படாதிருந்த மிகப் பழைய காலத்தில் இவ்விரு நாடுகளிலும் வாழ்ந்த மக்க ளிடையே தொடர்புகள் இருந்தன என ஊகிக்க இடமுண்டு. எவ் வாருயினும், (ஆரியர் 'வருகைக்குமுன் இலங்கையில் வாழ்ந்த மக்கள் நாகரிக நிலையில் மிகவும் குறைந்தவர்களாகவே யிருந்தனர். ஆரி யர் வருகையாலேயே, இலங்கை நாகரிக வளர்ச்சியெய்தலாயிற்று. ஆரியர் இலங்கைக்கு வந்து குடியேறியமை பற்றி அடுத்த அத்தி யாயத்தில் விரிவாகப் படிப்போம்.

இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி 2I
பயிற்சி:
1.
இலங்கையின் இயற்கை அமைப்பைக் காட்டும் படம் ஒன்றை வரைந்து ஆறுகளைக் குறிப்பிடுக.
2. தரைத்தோற்றம், மழைவீழ்ச்சி, காலநிலை என்பவற்றைக்கொண்டு இலங்கையைப் பிரிக்கக்கூடிய பகுதிகள் எவையெனக் கூறி, அவை வரலாற்றைப் பாதித்தமையை விளக்குக.
3. இலங்கையில் ஆதிகாலத்தில் நிலவிய அரசியற் பிரிவுகளைப் படத் தில் குறித்துக் காட்டுக. இப் பிரிவுகள் இயற்கையமைப்பைத் தழு விய வகையைக் கூறுக.
கூட்டுவேலைக்கு:
密 ஆசியாப் படமொன்றைப் பெரிதாக வரைந்து, ஆதிகாலத்தில் இலங்
கையுடன் தொடர்புகொண்ட நாடுகளுக்குப் பெயரிடுக. (இப் படத்தை வகுப்பறைச் சுவரில் மாட்டிவைக்கலாம்.)
தேர்வுவினுக்கள்:
1. ஆதிகால வரலாற்றில் (1215 வரை) மல்வத்து ஒயா, மகாவலிகங்கை
வகித்த பங்கை விளக்குக.
2. ஆதிகால வரலாற்றில் உருகுனை பெற்ற முக்கியத்துக்குக் கார
னங்கள் எவை?
3. இலங்கையில் ஆரியர் வருகைக்குமுன் வாழ்ந்த மக்கள் பற்றி,
லக்கிய ாரங்களும், தொல்பொருளாராய்ச்சிகளும் அறியத்
呜5 ளு 莎 தரும் உண்மைகளைக் கூறுக.

Page 21
அத்தியாயம் மூன்று இலங்கைக்கு ஆரியர் வருகையும், அவர்களது குடியேற்றங்களும்.
i. சிந்துப்பள்ளத்தாக்கு நாகரிகம் i. இந்தியாவில் ஆரியர் i. ஆரியர் பண்பாடு iv. ஆரியரின் இலங்கை வருகை W. இலங்க்ையில் ஆரியரின் செல்வாக்கு
இலங்கையின் வரலாற்றில் ஆரியர் வருகை அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நாட்டின் நாகரிக வளர்ச்சியில், சில முக்கிய மாறுதல்களையும் முன்னேற்றங்களையும் அது புகுத்தி யது. எனவே, இலங்கைக்கு ஆரியர் வந்து குடியேற்றங்களை நிறு விய வரலாற்றை இவ்வத்தியாயத்திற் கூறுவோம். இலங்கைக்கு வந்த ஆரிய மக்கள் இந்தியாவிலிருந்தே வந்தமையினல், இந்தி யாவில் அவர்களது நடவடிக்கைகளை முதலில் சுருக்கமாகக் கூறு வோம். ஆரியர் வருமுன்னரே, இந்தியாவில் சிந்துநதிப் பள்ளத் தாக்கில் பிறிதொரு நாகரிகம் நிலவியது. எனவே, அச் சிந்துப் பள்ளத்தாக்கு நாகரிகம் பற்றியும் சில செய்திகள் தரப்படும்.
1. சிந்துப் பள்ளத்தாக்கு நாகரிகம்.
(அல்லது மொஹஞ்சதரோ - ஹரப்பா நாகரிகம்) ஆரியர் வருகையுடனேயே, இந்தியாவிலும் முதன் முதலாக நாகரிக வளர்ச்சியேற்பட்டதாகவும், இன்றுள்ள இந்தியப் பண் பாட்டின் முக்கிய அம்சங்கள் ஆரியருடையவையென்றும் அண் மைக் காலம்வரை கருதப்பட்டுவந்தது. ஆனல், அரை நூற்றண் டுக்கு முன் மொஹஞ்சதரோவிலும் சிந்துவிலும், பஞ்சாபிலுள்ள ஹரப்பா முதலான இடங்களிலும் நடாத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வுகள் மூலம் மேலே கூறப்பட்ட கருத்துக்கள் தவருனவை யென நிறுவப்பட்டன. (ஆரியர் வருகைக்குப் பல நூற்முண்டு களுக்கு முன்பே, ஒரு டழம் பெரு நாகரிகம் அப் பகுதிகளில் ளிலவியதற்கான சான்றுகள் நிறையக் காணப்பட்டன. ஆரியரின் வTாகரிகத்தினின்றும் வேறுபட்டதும், சில வகைகளில் மேம்பட் நாகமான அம்சங்களைக் கொண்ட நாகரிகம் மொஹஞ்ச தரோ, யர் ப்பா ஆகிய இடங்களில் நிலவியதாக அறியப்பட்டுள்ளது. ஆரியகாலத்தில் சுமேரியா, மெசொப்பத்தேமியா ஆகியவற்றில் எப்பட்ட நாகரிகத்துக்கும், மொஹஞ்ச தரோ - ஹரப்பா
"*ரிகத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எகிப்து, அசீரியா,

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 23
பாபிலோனியா ஆகிய நாடுகளில் ஆதிகால நாகரிகங்கள் விளங் கிய அதே காலத்தில், இந்தியாவில் சிந்துப் பள்ளத்தாக்கு நாக ரிகமும் சிறப்புடன் நிலவியது. ஏறத்தாழ கி. மு. 3000 ஆண் டுக்கு முன்னரே அந்த நாகரிகம் இருந்ததெனலாம். எனவே, இன்றுள்ள இந்தியப் பண்பாடு, தனியே ஆரியரின் பண்பாட்டு அம்சங்களைக் கொண்டிராது, அவர்களுக்கு முந்திய சிந்துப் பள் ளத்தாக்கு நாகரிகத்தின் தன்மைகளையும் சேர்த்துள்ளதென்றே கூறல் வேண்டும்.
மொஹஞ்ச தரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடை பெற்ற அகழ்வுகளால் இந்திய வரலாறு புரட்சிகர மாறுதலை யடைந்துவிட்டது. ஆனலும், இவ்வாதாரங்களால் இந்த நாக ரிகத்துக்குரிய மக்களின் இனம் தெளிவாகவில்லை. இவர் கள் திராவிடர்களே எனக் கருதுவோர் பல ஆதாரங்களைக் காட்டுவர். இக் கருத்து அண்மைக்காலத்தில் வலுப்பெற்றுவரினும், இது பற்றிக் கருத்தொருமைப்பாடு இன்னும் ஏற்படவில்லை (சுமேரியா, மெசொப்பத்தேமியா என்பவற்றைச் சேர்ந்த பழைய நாகரிகத் துடன் சிந்துப் பள்ளத்தாக்கு நாகரிகம் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் எனக்கூற, இவை யிரண்டுக்குமிடையே யுள்ள ஒற்றுமைகள் சான்ரு க உள்ளன. ஆயின், சுமேரியருடைய நாகரிகமே இந்தியாவுக்குப் பரவியது எனக் கூறுதற்குச் சான் றுகள் போதவில்லை. மொஹஞ்சதரோ மக்களின் மதம் பற்றியும் அதிக தெளிவு ஏற்படவில்லை. பிற்காலச் சிவ வழிபாட்டுடனும், சக்தி வழிபாட்டுடனும் தொடர்புடையதாக இவர்களுடைய மதம் காணப்படுகின்றது. சைவ சமயத்தில் இன்றுள்ள பண்புகள் சில மொஹஞ்சதரோ மதத்திலும் வழிபாட்டு முறைகளிலும் காணப் படுகின்றன. ஆவி வழிபாடு வழக்கிலிருந்ததைக் காட்டும் சான்றுகள் உள்ளன.
இம் மக்களின் அரசியல் வரலாற்றைப் பற்றி நாம் ஏதும் " கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆட்சிமுறையில் குருத்துவபிரபுத்துவ ஆதிக்கம் நிலவியதை மட்டும் சில சான்றுகள் அறி வுறுத்துகின்றன. வணிகத்தால் பெற்ற செல்வச் செழிப்புடன் மொஹஞ்சதரோ மக்கள் விளங்கியுள்ளனர். அரண்கள் அதிக மாகப் பயன்படுத்தப்பட்டமையைக் காட்டச் சிதைவுகள் கிடைத் துள்ளதால், மத்திய வல்லாட்சி முறை யிருந்திருத்தல் கூடும் என ஊகிக்கப்படுகின்றது. மொஹஞ்சதரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் (Seals) உள்ள குறியீடுகளை அல்லது எழுத்துக் களை விளங்கிக் கொண்டால் மேலும் பல விவரங்கள் தெரியவரலாம்.
இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் சிறந்த நாகரிகத்தின் நிலைக்களஞக விளங்கிய ஒரு நகரே. "இறந்தோர் மேடு"

Page 22
24 பண்டைய ஈழம்
(மொஹஞ்சதரோ) என வழங்கப்பட்ட ஒரு மேட்டினுள் மறைந் திருந்தது. சேர், ஜோன் மார்ஷல் முதலானேரால் மேற்கொள் ளப்பட்ட தொல்பொருளகழ்வுகள் மறைந்த நகரின் சிறப்புக்களை எல்லோரின் கவனத்துக்கும் வியப்புக்கும் உரியவையாக்கின. நன்கு நிரு மாணிக்கப்பட்ட அழகிய கட்டிடங்களைக் கொண்ட நகர் ஒன்று மறைந்திருந்தமை தெரிய வந்தது. சுமார் 30 அடி அகல முடைய வீதிகளையும், திறமையுடன் அமைக்கப்பட்ட வடிகால் திட்டத்தையும் உடைய ஒரு சிறந்த நகராக அது தென்பட்டது. காற்ருேட்ட வசதியும், முற்றம், பாவிய நிலத்தளம், குளிப்பறை என்பவற்றையுமுடைய, சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவீடுகள் வீதிகளின் இருமருங்கும் வரிசையாகக் காட்சி தந்தன. நகரிலுள்ள கட்டிடங்களுள் மிகமுக்கியமானதுபெருந்தொட்டி(Great Bath) எனப் படும் ஒருவித கேணியாகும். 180அடி)நீளம் 108 அடி அகலமுடைய பரந்த வெளியைக் கொண்ட உள்முற்றமும், முற்றத்தின் நடு வில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் ஆகியவற்றை யுடைய நீச்சல்கேணியும், இதைச் சுற்றிவரப் படியடுக்கும் அறை களும் காணப்படுகின்றன. இக் கட்டிடத்தின் உறுதியும் அழகும் இன்றும் எம் வியப்பைப் பெற வல்லவை. இக் கட்டிட அமைப் புக்களின் சிறப்பும் நிருமாணத் திறமையும் துப்புரவு விருப்பும் மொஹஞ்சதரோ நகரின் தனிச் சிறப்புக்களாகும். இவற்ருல், இந்நகரில் செல்வச் செழிப்புடைய வணிக மக்களே வாழ்ந்திருத் த ல் கூடும் எனவும்திறமையுடைய நகராண்மைக் கழகம் நகரின் ஆட்சி யைக் கவனித்திருக்கும் எனவும் ஊகிக்கப்பட்டுள்ளன.
சூளைகளில் செங்கற்களைச் சுடுதல் போன்ற தொழில் நுட்பங் களேயும், கட்டிட அமைப்பு, தொழில்வகைகள் வணிகம் யாவற்றை யும் அறிந்து தேர்ச்சி பெற்றவர்களாக மொஹஞ்சதரோ மக்கள் விளங்கினர். பொதுவாகக் கூறுமிடத்து, நகர்களை மையமாகக் கொண்டு எழுந்த ஒரு நாகரிகமாக இந்த நாகரிகம் விளங்கி யது. இந்த நாகரிகத்தின் அம்சங்கள் பின்னர் வந்த, ஆரியரால் கைக்கொள்ளப்பட்டு, ஆரியரின் பண்பாட்டுடன் கலந்துவிட்டன. இலிங்க வழிபாடு, யோகமார்க்கம், பக்தி மார்க்கம், ஆவி வழி பாடு இவ்விரு நாகரிகங்களின் பொதுத் தன்மைகளாகும். எனவே, இந்த அம்சங்களை ஆரியர், சிந்துப் பள்ளத்தாக்கு மக்களிடமே பெற்றிருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகின்றது)
ii இந்தியாவில் ஆரியர்
இலங்கையிற் குடியேறிய ஆரியர் இந்தியாவிலிருந்தே வந்
தனர் என முன்னர் கூறினுேம். ஆனல், இந்தியாவும் அவர்
களது தாயக மன்று. இந்தியாவுக்கும் அவர்கள் ஒரு காலத்தில்

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 25
குடியேறிகளாக வந்தவர்களே. இலங்கைக்கு அவர்கள் வந்த காலத்துக்கும் (கி. மு. 500 அளவில்) Չ քՖՖ TԱ), ஆயிரம் ஆண்டு களுக்கு முன், அவர்கள் வட இந்தியாவிற் குடியீேறலாயினர்" வட இந்தியாவில் இன்று வாழும் பெரும்பாலான மக்கள் அவ் வாறு குடியேறிய ஆரியக் கூட்டத்தினரின் வழிவந்தவர்களே.
‘ஆரியர்" என்ற சொல் ஓர் இனத்தைக் (race) குறிப்பதாகப் பொது வழக்கில் உபயோகிக்கப்படினும், உண்மையில் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளைப் பேசும் மக் களைக் குறிக்கவே இன்று பயன்படுகின்றது. ” இந்தியாவுக்கு ஆரி யச் வருவதற்குப் பல நூற்றண்டுகளுக்கு முன் ஒரு பொதுத் தாயகத்திலிருந்து (ஹங்கேரி, தெற்கு ரஷ்யா, மத்திய ஆசியா என்பவற்றுள் ஒன்று) புறப்பட்ட ஆரியக் கூட்டத்தவர் மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் இரு பிரிவுகளாகப் புலம் பெயர்ந்து செல்லலாயினர். கிழக்கு நோக்கிய பிரிவினரே இந்தியா வினுள், கி.மு. 2,500க்கும் 1,500க்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் புகுந்து, குடியேற்றங்களை நிறுவலாயினர். மேற்கு நோக்கிச் சென்றவர்கள் கிரேக்கம் முதலான பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் இம்
نامه متماعاهان همهٔ نوسان، هم در
மக்கள் பரந்து குடியேறியதால், இவர்களை இந்து ஐரோப்பியர் என அழைப்பர். இந்தியாவுக்கு வந்த பின்னரே, தம்மை எதிர் கொண்ட சுதேச மக்களை 'தாஸ்யு'க்கள் (அடிமைகள்) எனவும் , தங்களை 'ஆரியர் (உயர்ந்தோர்) எனவும் தாங்களே அழைக்க லாயினர். (இன்று சமஸ்கிருதம் (வடமொழி), பாரசீகம்; கிரேக் கம், இலத்தீன், கொதிக் போன்ற மொழிகளையோ, அன்றி இவற் றின் வழிப்பிறந்த ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், வங்காளி, குஜராத்தி, ஹிந்தி, சிங்களம் போன்ற மொழிகளையோ பேசும் மக்களைத் தொகுத்து ‘ஆரியர்' என அழைப்பர்./ எனவே, இலங் கையில் உள்ள சிங்களர் , ஆரிய இனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுதல் பொருந்தாது./ ஆரிய மொழிக் குடும்பத்தினரில் சிங்க ளரையும் சேர்த்துக்கொள்ளலாமேயன்றி, இன அடிப்படையில் அவர்களில் பல கலப்புக்கள் உண்டு,/(உண்மையில், இனத்தூய்மை இன்று விஞ்ஞானரீதியாக இல்லையென நிறுவப்பட்டுள்ளது.)
இந்தியாவுக்கு வந்த ஆரியர் வடமேற்கெல்லையிலுள்ள மலைத்
தொடர்களைப் போலன், கைபர் முதலான கணவாய்களினூடாகக்
கடந்து, இந்துச் சமவெளியிற் குடியேறலாயினர். மொஹஞ்ச
தரோ, ஹரப்பா ஆகிய இடங்களுக்கும் மேலேயுள்ள சமவெளியி
லேயே ஆரியரின் முதற் குடியேற்றம் அமைந்தது. இவ்வாறு
4 -

Page 23
26 பண்டைய ஈழம்
குடியேறிய காலம் கி. மு. 1500க்கு முன்னரேயெனக் கணக்கிடப் பட்டுள்ளது. மேற்காசியாவில் போகஸ் கீ (Bogaz Keai) போன்ற இடங்களில் காணப்பட்ட கி. மு. 14ம் நூற்றண்டைச் சேர்ந்த சில பொறிப்புக்களில் ஆரியப் பெயர்களும், (இந்திரன், மித்திரன், வருணன் போன்ற) ஆரியக் கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் இருப்பதைக் கொண்டே, ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தை ஒரளவுக்குக் கூற முடிகின்றது இருக்கு வேத காலத்தில், ஆரியக் கூட்டத்தினர் காபுல் முதல் கங்கை வரை பரந்து வாழ்ந்தனர்) முதலில் தோன்றிய சிறிய அரசுகள் படிப்படியாக வளர்ச்சி பெற்று, அயலிலுள்ள அரசுகளைத் தோற்கடித்து, விசாலமடைந் தன. இதே வேளையில், C ஆரியரின் அரசியல், கலை ஆதிக்க மானது, தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் விரிவடைய லாயிற்று.) வேத கால இறுதிக்குள், யமுனை, கங்கை; ராப்தி ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட சமவெளிகளில் அவர்களின் அரசுகள் வியாபித்திருந்தன, ஒரு சில கூட்டங்கள் விந்தியமலைச் சாரலி லுள்ள காடுகளைக் கடந்து, தக்கணத்துட் புகுந்து, அங்கும் தோதாவரியாற்றுக்கு வடக்கே சில அரசுகளை நிறுவின, (மத்திய பகுதியில் கெளரவர், பாஞ்சாலர் முதலான (ஆரியர்) குழுக்கள் ஆதிக்க் ம் செலுத்தின. கோசலர், விதேகர், விதர்ப்பர் முதலான குழுக்கள் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள பகுதிகளில் அரசுகளை நிறுவின.) இவ்வரசுகள் அக் குழுக்களின் பெயரையே பெற்றன. (எ-டு: கோசலர் நிறுவிய அரசு கோசலம் எனப்பட்டது,) எனவே, ஆரியர் படிப்படியாக வடஇந்தியா முழுவதையும் தக்கணத்தில் ஒரு சில பகுதிகளையும் தமதாதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்த னர். இவ்வாறு அவர்களின் ஆதிக்கம் முழு வடஇந்தியாவிலும் பரவச் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை சென்றன, ஆரியர் இவ் வாறு தமது ஆதிக்கத்தை விரிவுபெறச் செய்துவந்த காலத்தி லேயே, இலங்கைக்கும் அவர்கள் வர நேர்ந்தனர். அதைக் கூறு முன், ஆரியரின் பண்பாட்டின் சில முக்கிய அம் சங்க ளை க் கவனிப்போம்.
iii. -9, stuift LI GoöTLIFT (6
ஆரியருடைய வரலாற்றையும், பண்பாட்டையும் பற்றி நாம் பெரும்பாலும் இலக்கிய ஆதாரங்களிலிருந்தே அறிகின்ருேம். வேதங்கள், பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள், காவி யங்கள் ஆகியவற்றில் இடையிடையே வரும் குறிப்புக்களைக் கொண்டு ஆரியர் பண்பாட்டு அம்சங்கள் பலவற்றை யறிந்து கொள்கின்ருேம். வேதங்களுள், காலத்தால் முற்பட்டது இருக்கு வேதமே. இந்நூலில் கூறப்பட்டவற்றைக் கொண்டு அறியப்ப்டும் காலத்தை இருக்கு வேத காலம் எனவும், மற்றைய வேதங்கள்

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 27
(யசுர், சாம, அதர்வம்) பிந்திய கால நிலைம்ைகளைக் குறிப்ப தால் பிந்திய வேத காலம் எனவும் பிரித்துக் கூறுலுர். இங்கு நாம் ஆரியர் பண்பாட்டின் சில முக்கிய அம்சங்களைச் சுருக்கிக் கூறுவோம்.
அரசியல் முறை: தொடக்கத்திலிருந்து, மன்னராட்சியே நடை பெற்று வந்திருக்கின்றது. மன்னர்கள் முதலில் தெரிவுசெய்யப் பட்டிருந்தாலும், காலப்போக்கில் பெரம்பரை முடியாட்சியே நிலை பெற்றுவிட்டது. அரசர்கள் பெரும்பாலும் சுஷத்திரிய குலத்த வர்களாகவே யிருந்தனர்.) "நாட்டு மக்களினதும் சட்டங்களினதும் காவலர்" என்ற வகையில், மன்னர்கள் மட்டற்ற வலுக்களுடை யவர்களாக விளங்கினர். ர அரசுகளின் எல்லைகளும் விரிவடையவே மன்னர்களின் அதிகாரமும் வளர்ந்தது ராஜசூய(ம்), வாஜபெய. அஸ்வமேத(ம்) முதலான யாகங்களை நடத்துவதில் அரசர்கள் அதிக அக்கறை காட்டினர். இவற்றுள் ராஜசூய(ம்) என்ற முடிசூட்டு வைபவத்தில், அபிஷேக(ம்) எனும் சடங்கும் இடம்பெறும் இவ் வகைக் கொண்டாட்டங்கள் அதிகமானபோது, பிராமணர்களின் செல்வாக்கும் அதிகரித்து வந்தது.) முரோகிதர் என்ற பதவியை அரசவையில் வகித்த பிராமணர், மன்னனுக்கு ஆலோசனைகளை வழங்கியதோடு, இவ் விழாக்களை நடத்துவதற்கும் ஒழுங்குகள் செய்தார். (சேணுனி எனப்பட்ட படைத்தலைவன் மற்ருெரு முக் கிய அதிகாரியாவான். கிராமணி என்ற அதிகாரி, கிராமத் தலைவ னக விளங்கி, )அதன் பாலனத்துக்கும், பாதுகாப்புக்கும் பொறுப் பாக விருந்தான். அரசனது அதிகாரங்களை ஒரளவுக்குக் கட்டுப் படுத்தியவை, அக்காலத்தில் நடைமுறையில் அவனுக்கு ஆலோ சனை வழங்கிய சபைகளே.( சமிதி, சபா என இருவகைக் சபைக ளிருந்ததை நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுள் சபா என்பது மூத்தோர் கழகமாகச் செயற்பட்டது. / (நிருவாகம், நீதித்துறை களில் இவை முக்கிய பங்கு கொண்டதாகத் தெரிகின்றது. கிராம அலுவல்களில் கிராமணீ முதலான அதிகாரிகளுக்கு உதவியாக கிராமச் சபைகளும் இருந்தன.) இச் சபைகளின் விருப்பங்களை மன் னன் பெரும்பாலும் ஏற்று நடப்பான். நீதி வழங்குவதில் மன் னன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தான்.
சமுதாய அமைப்பு: சமூக அமைப்பின் அலகாகக் குடும்பம் விளங்கியது. இச் சமூகத்தில் ஆண்களுக்கே முதன்மை யளிக்கப் பட்டிருந்தது. பெண்களுக்குக் குறைந்த இடமளிக்கப்பட்ட . போதும், கல்வி வாய்ப்புக்கள் அவர்களுக்கும் அளிக்கப்பட்டன. விவாகம் புனிதமுடையதும், மீற முடியாததுமான ஒப்பந்தமாக மதிக்கப்பட்டது. விதவைகள் மறுமணஞ்செய்தல் வழக்கிலிருந்

Page 24
28 பண்டைய ஈழம்
தது. குடும்பங்கள் இணைந்து, உருவான பெரிய அலகுகள்
வர்ணங்கள் அல்லது சாதிகளாகும். ஆரியர் வந்த காலத்தி லிருந்து, "இருண்ட நிறமுடைய மக்களான இந்தியச் சுதேச மக்கள் 'தாஸ்யு'க்கள் என அழைக்கப்பட்டனர். ஆரியரிடையே
யும் கூடித்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் நிலவின. முதலில் இப் பாகுபாடு தளர்ச்சியுடைய தாயும், கலப்பு மணத்தை ஏற்கும் தன்மை கொண்டதாகவும் இருந்தது. பின்னர், ஒரு சாதி அல்லது வர்ணத்துக்கும் பிற சாதிகளுக்குமிடையே சமூக உறவுகள் இருக்கமுடியாத அளவுக்கு, சாதி முறை இறுக்கமடைந்தது. க்ஷத்திரியரும், - பிராமணரும் பல சலுகைகளைத் தாம் அனுபவித்ததுமன்றி, மற்றைய இரு வகுப் பினரைத் துன்புறுத்தவும் செய்தனர். இதனல், சாதிகளிடையே பகைமை யுணர்வு வளரலாயிற்று.
பொருளியல் நிலைமைகள்: ஆரியரின் பொருளியல் ஒழுங்குகளில் கிராமமே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது."இரழன்”ள்ன்ற் அதி காரியே, அதன் பாலன, பாதுகாப்பு அலுவல்களுக்குப் பொறுப் பாக விருந்தான். பயிர்ச்செய்கையே கிராம மக்களின் முக்கிய தொழிலாகவிருந்தது. வயல் நிலங்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குக் கால் வாய்களை அமைத்திருந்தனர். கால்நடை வளர்ப்பிலும் அதிக கவனத்தை அவர்கள் செலுத்தினர், வணிகம், கைத்தொழில்கள் (நெசவு, தோலைப்பதனிடுதல் முதலானவை முக்கிய தொழில்கள்) ஓரளவுக்கு விருத்திபெற்றிருந்தன. நாணயப் புழக்கம் அதிக மின்றி, பண்டமாற்று முறையே நடைமுறையிலிருந்தது. வாணிஜ(ர்) என்ற ஒரு பரம்பரைப் பிரிவினர் பிந்திய வேதகாலத்தில் வணி கத்தில் ஈடுபட்டதாகத் தெரிகின்றது.
சமயம்: இருக்கு வேத காலத்து மக்கள், இயற்கைச் சக்தி களுக்கு கடவுள் உருவங் கொடுத்து வழிபட்டனர் ஆகாயக் கடவு ளான வருணன், இடியின் கடவுளான இந்திரன், சூரியனது நன் மைச் சக்தியின் உருவமான மித்திரன் முந்திய வேத காலத்துக் கடவுள்களில் முக்கியமானவர்கள். முதலில் வருணனும் பின்னர் இந்திரனும் முதன்மைபெற்று விளங்கினர். யாகங்கள் வாயிலாக அக்கினிக் கடவுளும் ஒரளவு முக்கியம் பெற்ருர். கடவுள் பலர் இருப்பினும், ஒரே கடவுட் கொள்கையே முந்திய வேத காலத்தில் வலியுறுத்தப்பட்டது. "ஒன்ரு யுள்ள்வனுக்குப் புலவர்கள் பல பெயர்களைச் சூட்டுகின்றனர்' என்ற கருத்து இருக்குவேதப் Luft L-Gv SGifl6v இடையிடையிே எதிரொலிக்கின்றது. கடவுள்களி லும், ஆண் கடவுள்களே முக்கியம் பெற்றுள்ளதைக் காணலாம். பிந்திய வேதகாலத்தில், பல புதிய விருத்திகளும், மாறுதல்களும்

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 29
சமயத் துறையிலேற்பட்டன. ஒரே கடவுட் கொள்கையை வற் புறுத்தியோர், "ஆன்மாக்களின் தலைவனன பிரஜாபதியை வழி படலாயினர். பொதுமக்கள் வழிபாட்டில், உருத்திரன் பெரிதும் முக்கியத்தைப் பெற்ருர், அது போலவே, விஷ்ணுவும் பிந்திய வேத காலத்திலேயே அதிக செல்வாக்குப் பெறக் காண்கிருேம். உருத் திரனை மகாதேவனுகவும், பசுபதியாகவும் வழிபட்டனர். விஷ்ணு வும் வாசுதேவராக மதிக்கப்படலானர். இருக்குவேத காலச் சடங்குகளில் இடம்பெற்ற வேள்விகள், பிந்திய காலத்தில் அதி முக்கியம் பெற்று விரிவடையலாயின. இவற்றை நடத்துவதற் கான ஒழுங்கு விதிகளைப் பிராமணர்கள் வகுத்துக் கொடுத்தனர். உருவ வழிபாட்டுமுறை இக் காலத்தில் அதிகம் இடம்பெற்ற தாகத் தெரியவில்லை.
கலைகள்:- இருக்கு வேத காலத்திலும், பின்னரும் கவிதைக்கலை நன்னிலை யெய்தியிருந்தமைக்கு இருக்கு வேதப் பாடல்களே சான்று பகரும். இலக்கியத்தில் மட்டுமன்றி, இலக்கணம், ஒலியியல், சொற் பிறப்பியல், கணிதம் முதலான பல கலைகளிலும் அக்கால அறி ஞர் நாட்டங்கொண்டிருந்தனர். எழுதும் வித்தையை மொஹஞ்ச தரோ மக்கள் அறிந்துள்ளமைக்குச் சான்றுகள் கிடைத்த அள வுக்கு, ஆரியர் அதைப் பயின்றமைக்கு ஆதாரங்கள் இல்லை. ஆரியரின் ஆதிகால இலக்கியங்கள் வாய்மொழியாகவே பேணப் டட்டு வந்தன. வைத்தியக் கலை, கட்டிடக் கலை, வானநூல் முத லானவையும் ஒரளவு வளர்ச்சி பெற்றிருந்தன.
ஆரியரின் பண்பாடு பற்றி மேலே தரப்பட்ட சுருக்கமான விவரணையிலிருந்தே, இன்றைய இந்தியா இவர்களுக்கு எவ்வளவுக் குக் கடமைப்பட்டுள்ளதென்பதை யுணரலாம். ஆரியர் இலங் கைக்கு வந்தமையால், அவர்களின் பண்பாட்டு அம்சங்கள் இலங் கையையும் பாதித்தது. இதையறியுமுன், ஆரியர் இலங்கைக்கு வந்தமை பற்றி முதலில் அறிந்துகொள்வோம். − V
iv. ஆரியரின் இலங்கை வருகையும், குடியேற்றங்களும்
இருவகை மரபுகள்-இலங்கை: வடஇந்தியா முழுவதையும், தமது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வந்த ஆரியரிற் சில பிரிவினர் இலங்கைக்கும் வந்து குடியேறினர். அவ்வாறு குடியேறியவர் களின் வழிவந்தவர்களே, இன்று இலங்கையின் பெரும்பான்மை யினத்தவரான சிங்களர் ஆவர். ஆரியரின் இலங்கை வருகை பற் றிப் பல மரபுக் கதைகள் எழுந்துள்ளன. அவற்றை நாம் இரு வகைப்படுத்தலாம். இலங்கையிற் பேணப்பட்டு வந்த மரபுக் கதைகள் தீபவம்சம், மகாவம்சம் போன்ற காலவேடுகளிற் பதிவு

Page 25
30 பண்டைய ஈழம்
செய்யப்பட்டுள்ளன. மகாவம்சத்தில் வரும் 'விஜயனது வருகை' என்ற ஆரும் அத்தியாயமும் அதைத் தொடர்ந்து வரும் சில அத்தியாயங்களும் (அத். wii -- ix), ஆரியரின் இலங்கைக் குடி யேற்றத்தை விளக்க எழுந்த மரபுக் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே. இம் மரபுகள், பெளத்தம் பரவுமுன் உள்ள நிலைமைகளைக் கூறுவதாலும், ஆயிரம் ஆண்டுகளாக வாய்மொழி யாகப் பேணப்பட்ட பின்னரே எழுத்துருவம் பெற்றதாலும், இம் மரபுகளில் அதிக நம்பிக்கையை வைக்க இயலாது. இருப்பினும், இம் மரபுகளில் பொதிந்துள்ள அடிப்படை யுண்மைகளை ஆராய்ந்து அவை மூலம் ஆரியர் வருகை பற்றிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படுகிறது.
இந்திய மரபுகள்: வடஇந்தியாவிலும், குறிப்பாகப் பெளத் தத்தைத் தழுவிய வணிக மக்களிடையே, ஆரியரின் இலங்கைக் குடியேற்றம் பற்றிய மரபுகள் பேணப்பட்டன. இம் மரபுகள் திவ்வியாவதான, வலாஹஸ்ஸ ஜாதக போன்ற நூல்களிலும், பாஹியன், ஹ"வான் சாங் ஆகிய இரு சீன யாத்திரீகர்கள் எழுதிவைத்த நினைவுக் குறிப்புக்களிலும், அம் மரபுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், (விஜயனுக்குப் பதில்) சிங்ஹல(ன்) என்பவனே, இரத் தின்த்துவீபம் எனப்பட்ட இலங்கையில் சிங்கள அரசை நிறுவிய தாகக் கூறப்படுகின்றது. ஹ"வான் சாங் கூறும் மரபுக் கதைகளில் இரண்டாவது கதை, இரத்தினத்துவீபத்தில் வாழ்ந்த இராக்க தப் பெண்கள், வணிக நோக்குடன் வந்த சிங்ஹலவின் 500 தோழரை வஞ்சித்துத் தங்கள் நாட்டில் வைத்திருக்க, தனது நாடு மீண்ட சிங்ஹலவைத் தேட வந்த இராக்கத அரசியின் சூழ்ச்சி களுக்கு சிங்ஹல தப்பிவிட, அந்த நாட்டு மன்னன் அவளுக்கு அடிமையானன் எனவும், இது கண்ட அந்நாட்டு மக்கள் தம் மன் னனை நீக்கிச் சிங்ஹலனை யரசனுக்கியதும், அவன் இரத்தினத் துவீபம் சென்று அங்குள்ள இராட்சசிகளை வென்று, தன் தோழர் களையும் மீட்டு, அங்கேயே அரசனனன் எனவும் கூறுகின்றது. வடஇந்திய மரபுகளின்படி, வணிகஞ் செய்த மக்களே இலங்கை யுடன் உறவு வைத்துப் பின் இலங்கையின் இயற்கை வளத்தின் சிறப்புக் கண்டு, இங்கே குடியேறினர். ஆரியர் குடியேற்றம் பற்றி எழுந்த இக் கதையைப் பொருத்தமான விளக்கமாகச் சிலர் கொள்கின்றனர்.
முதற் குடியேறிகளின் தாயகம்: வட இந்தியாவிலிருந்தே ஆரியர் இலங்கைக்கு வந்தனர் என்பதும், கடல் வழியாகவே இலங்கையை அடைந்தனர் என்பதும் தெளிவாகவுள்ள உண்மையாகும். ஆனல் இலங்கைக்குச் சிங்களம் அல்லது சிங்களதுவிபம் என்ற பெயரும்,

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 31
இலங்கையிலுள்ள பெரும்பான்மை மக்களுக்குச் சிங்களர் என்ற பெயரும் வரக் காரணமாகவிருந்த முதற் குடியேறிகளான ஆரி யர் இந்தியாவின் எப்பகுதியிலிருந்து வந்தனர் என்பதைத் தீர் மானிப்பது எளிதன்று. மகாவம்சத்திற் கூறப்படும் விஜயனது கதையில் வரும் இடப்பெயர்களைக் கொண்டு, முதற் குடியேறி களின் தாயகத்தை அறுதியிட்டுக் கூறவியலாது. சுப்பாரக, பாருகச்ச என்ற இடங்களிருப்பதைக் கொண்டு, இந்தியாவின் மேற் குப் பகுதியிலிருந்து ஆரியர் வந்தனர் எனக் கூறலாமெனின், வங்கம், கலிங்கம், மகதம் என்பன கிழக்கிலே யுள்ளதால், கிழக்குப் பகுதியிலேயே இலங்கை ஆரியரின் தாயகம் இருந்தது எனக் காட்டலாம். விஜயன் பிறந்த நாடான லாள (லாட்)வும், அதன் தலைநகரான சிங்கபுரமும், இரு பகுதிகளுக்கும் பொருந்தும் பெயர் களாகும். இடப்பெயர்களை விட்டு, மொழியொற்றுமைகளை நோக்கினலும், சிங்களத்துக்கும், மேற்குப் பகுதியைச் சேர்ந்த மராட்டிய மொழிக்கும் அதிக ஒற்றுமைகள் இருப்பது போலவே, கிழக்கு மொழிகளில் ஒன்றன வங்காளியும், சிங்களமும் சில பொது வியல்புகளைக் கொண்டன என நிறுவப்பட்டுள்ளது. மொழி யாராய்ச்சி முடிவான பலனைத் தரத் தவறியதுபோல, இலங்கை யின் மிகப் பழைய கல்வெட்டுக்களில் உள்ள மொழியையும் அதே கால இந்தியக் கிளைமொழிகளையும் ஒப்பீட்டு முறையில் ஆய்ந்த வர்களும், மொழியின் சொற்பொருள் மாறுபாடுகளை உற்று நோக் கியவர்களும் ஒன்று க் கொன்று முரணுன சான் று களை த் தந்து, பிரச்சினையைத் தீர்க்கத் தவறியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் முதற் குடியேறிகளை மேற்குடன் தொடர்பு படுத்தும் வகையில் ஒரு புதிய கொள்கையைப் பரண விதான (நீண்ட காலம் தொல்பொருளாராய்ச்சித்துறைத் தலைவ் ராக் விருந்து, ஓய்வுபெற்ற அறிஞர்) நிறுவியுள்ளார். லாட எனப் பட்ட இப்போதைய குஜராத் மாகாணத்திலிருந்தே ஆரியர் முதன் முதலில் இலங்கைக்கு வரலாயினர் என்ற முடிவுக்கு வரும் இவ் வாசிரியர், காதியாவாரிலுள்ள சிகோர் என்பதே, மகாவம்சத் தில் குறிப்பிடப்படும் சிங்கபுரமாகலாம் என்கின்றர். இப்பகுதிக்கு வடக்கே சிந்துவின் கழிமுகத்தில் ஹிங்கூர் என்ற மற்றேரிடமுண்டு. இப்பகுதியும் ஒரு காலத்தில் லாடவில் அடங்கியிருப்பின், ஹிங்கூர் பழைய சிங்கபுரமாதல் கூடுமென மேலும் அவர் ஊகிக்கின் ருர், தமது கொள்கைக்கு ஆதாரமாக, தொடக்க கால பிராமிக் கல் வெட்டுக்களில், கம்போஜர்களைப் பற்றி வரும் குறிப்புக்களைப் பயன் படுத்தியுள்ளார். சிந்து நதிக்கு வடக்கேயுள்ள கந்தார என்ற பகுதிக்கு அண்மையில் வாழ்ந்ததாகக் கூறப்படும் யோனர், கம் போஜர் ஆகிய இரு கூட்டத்தவரும் ஆதிக் குடியேறிகளான

Page 26
32 பண்டைய ஈழம்
சிங்களரைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்திருத்தல் கூடும். கம் போஜப் பகுதி வடமேற்கிலிருந்தமையால், ஆதிச் சிங்களக் குடி யேறிகள் அப்பகுதிக் கண்மையிலிருந்தே வந்திருக்க வேண்டும் எனப்படுகின்றது. சிங்களரின் மூதாதையர் முதலில் கம்போஜவை யடுத்துள்ள பகுதிகளில் வாழ்ந்து, பின்னர் அங்கிருந்து குடி பெயர்ந்து லாடவில் தங்கியிருக்க முடியும். இவ்வாறு லாடவில் தங்கியிருந்த போதே, அவர்கள் இலங்கை வந்திருக்கி வேண்டு மென முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இக் கொள்கையை ஏற் பதால்ை, மகாவம்சக் கதையில் வரும் கிழக்குப் பகுதிகளின் பெயர்கள் (வங்கம், கலிங்கம், மகதம்) தடையாக விருக்கும் என் பதால், இதை நீக்குவதற்கு "வங்கம்’ என்பது வடமேற்கிலிருந்த ஒரு பகுதியெனக் காட்டி, பிற்காலத்தில் இப்போதைய வங்காளத் தைக் குறிப்பதாகத் தவறுதலாக நம்பப்பட்டதெனவும், அந் நேரத்தில் வங்காளத்துக் கண்மையிலுள்ள மகதம், கலிங்கம் என் பன சேர்க்கப்பட்டு விட்டனவெனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இலங்கையிற் குடியேறிய ஆரியருள் முதலில் வந்த கூட்டத்தினர் வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கொள்ளப் பல சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. இக் கொள்கை சரிவர ஏற்கப் படும்வரை, நாம் இதைக் கொள்கையாகவே கருதவேண்டும்.
கிழக்கிலிருந்தும் குடியேறியமை: இலங்கைக்கு முதலில் வந்த ஆரியக் கூட்டத்தவர் மேற்கிலிருந்து வந்திருப்பினும், பின்னர் வந்த குடியேறிகள் மேற்கு - கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலி ருந்து அலையலையாக வந்து குடியேறினர் எனலாம். கிழக்குப் பகுதி களுக்குரிய மொழியம்சங்கள் முதலானவையும் சிங்களத்திற் காணப் படுதல்ால், கிழக்கிலிருந்தும் குடியேற்றங்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டும். இது பற்றிய சில குறிப்புக்களை ' காலவேடுகளிலும், வேறு ஆதாரங்களிலும் இடையிடையே காண்கின்ருேம். கங்கைப் பள்ளத்தாக்கு மக்கள் இலங்கையில் குடியேறியதைக் குறிக்கும் மரபுகள் மகாவம்சத்தில் உள்ளன. மகதத்தை யாண்ட நந்தர் களின் அரசவைக்குச் சிங்களத் தூதுவர்கள் சென்றதாக வட மொழி யிலக்கியங்கள் கூறும். இலங்கைக்குப் பெளத்தம் பரவிய காலத்தில், வட இலங்கையிலுள்ள துறைமுகமொன்றுக்கும், வங் காளத்திலுள்ள தாமிரலிப்திக்குமிடையே கடல் வழி வணிகத் தொடர்புகள் இருந்தன. பெளத்தம் இலங்கைக்குப் பரவிய போதும், மகத நாட்டு உயர் குடும்பங்கள் பல இலங்கையில் வந்து குடியேறின. இவ்வாரு க, கிழக்குப் பகுதியிலிருந்தும் குடியேற் றங்கள் நடைபெற்றுச் சிங்கள இனத்தினதும், பண்பாட்டினதும் வளர்ச்சிக்கு உதவியுள்ளன.

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 33
காலம்: ஆரியரின் முதற் குடியேற்றம் நிகழ்ந்த காலத்தைத் தீர்மானிப்பதற்கு மகாவம்சம் எமக்கு உதவிபுரிகின்றது. விஜய னது வருகையைக் கூறும் ஆரும் அத்தியாயத்து 47வது செய்யுள் பின்வருமாறு அமைந்துள்ளது: “நிர்வாணத்தை எய்துவதற்காக இரு சால மரங்களிடையே ததாகத (ர்) படுத்திருந்த அதே நாளில் லங்காவில் தம்பபண்ணிப் பகுதியில், வலிமிக்க விஜய(ன்) என்ற இளவரசன் (வந்து) இறங்கினன். ' புத்தர் பரிநிர்வாணம் எய்தி யதையும், விஜயன் இலங்கைக்கு வந்ததையும் ஒரே நாளில் நிகழ்ந் ததாகக் கூறுவதால், பிந்திய நிகழ்ச்சிக்குப் புனிதங்கொடுக்கும் நோக்கம் செயற்பட்டுள்ளதை நாம் எளிதிற் கண்டு கொள்ளலாம். ஆனலும், புத்தர் பரிநிர்வாண மெய்திய காலத்திற்கும் (கி. மு. 483), ஆரியரின் முதல் வருகைக்கும் அதிக இடைவெளியிருக்காதென விரைவிற் காண்போம். இலங்கையிற் கிடைத்துள்ள மிக ஆதிகால (பிராமி)க் கல்வெட்டுக்கள், கி. மு. 3ம் நூற்றண்டைச் சேர்ந் தவை. எனவே, ஆரியர் இலங்கையிற் குடியேறி நிலை கொண்ட பின்னரே கல்வெட்டுக்களைப் பொறித்திருப்பர். ஆகவே கி. மு. 6ம் அல்லது 5ம் நூற்ருண்டளவில் ஆரியர் இலங்கைக்கு முதலில் வந்திருப்பரெனக் கொள்வது நியாயமானது. மேலும், ஆரியர் வடமேற்கு இந்தியாவில் கி. மு. 1500 அளவிற் குடியேறி, சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கி யும் வடஇந்தியாவில் தமது ஆதிக்கத்தைப் பரப்பி வரலாயினர். எனவே, இதன் பின்னர் இலங்கைக்கு வரலாயினர் எனக் கருது வதற்கும் 6ம் நூற்றண்டில் ஆரியர் இலங்கைக்கு வரத் தொடங் கினர் என்று கொள்ளுதல் வசதியாகவுள்ளது.
முக்கிய குடியேற்றங்கள்: இலங்கையில் ஆரியர் நிறுவிய குடி யேற்றங்கள், ஏற்கெனவே நாம் கவனித்தபடி, புவியியற் காரணி களை யொட்டியே அமைந்தன. விஜயன் வந்திறங்கியதாகக் கூறப் படும் தம்பபண்ணி (புத்தளத்தை யடுத்துள்ளது) யில் அவன் தங்கி, அரசை நடத்தியதாக மகாவம்சம் கூறுகின்றது. அனுராதகாம, உபதிசகாம, உஜ்ஜேனி, உறுவெலா, விஜிதபுரம் முதலான குடியேற் றங்களை அவனது அமைச்சர்கள் அமைத்ததாகவும் அதே நூல் குறிப்பிடுகின்றது. இலங்கையின் ஆதிக் குடிகளை முதலில் வந்த ஆரிய கூட்டத்தினர் புறங்கண்டு, பின் விளங்க வைத்துவிட்டு மல் வத்து ஓயாவுக்கு அண்மையிலுள்ள பிரதேசத்தில் தமது முக்கிய குடியேற்றத்தை நிறுவலாயினர் என்பதையே விஜயன்-குவெணி கதை புலப்படுத்துவதாகக் கூறுவர். இவ்வாறு நிறுவப்பட்ட குடியேற்றம் பயிர்ச் செய்கைக்குரிய நிலவளம், மழைவீழ்ச்சி, . காலநிலை, நிலஅமைப்பு முதலான அம்சங்களைக் கருத்திற்கொண்டே நடைபெற்றுள்ளது. மழைவீழ்ச்சி குறைவாக இருந்தமையால்,
5

Page 27
34 பண்டைய ஈழம்
காடுகள் அடர்த்தி குறைந்திருக்குமாதலால், அவற்றை யழித் துப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். ஆயி ரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலம், இப்பகுதி இலங்கையின் பொருளியல், அரசியல் துறைகளில் முதன்மை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தென்கிழக்கு இலங்கையிலுள்ள வளவை கங்கை, கிரிண்டி ஒயா, மாணிக்க கங்கை, கும்புக்கன் ஒயா, ஆகிய நதி
མ་ལོ་ངོ་འཛིན་སེམས་། eifufcbgGLIJ & Bi
ܓ`
களால் வளம்படுத்தப்பட்ட பகுதியிலேயே, ஆரியரின் அடுத்த முக்கிய குடியேற்றம் அமைந்தது. இப் பகுதியே உருகுணேயென அழைக்கப்படலாயிற்று. இதுவும், பயிர்ச் செய்கைக்கு ஏற்ற பெளதிக உறுப்புக்களைக் கொண்ட வறண்ட வலயப் பகுதியாகவே யிருந்தது. இதன் முக்கிய நகரமாகப் பின்னர் விளங்கியது
 
 

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும். 35
மகாகாம(ம்) ஆகும். இவ்விரண்டு முக்கிய குடியேற்றங்களே நெடுங் காலம் குடிசனச்செறிவு மிக்க பகுதிகளாக விளங்கலாயின.இவற்றை விட, களனியை அடுத்தும் ஒரு சிறு குடியேற்றம் ஆதிகாலத்தி லேயே அமைந்திருந்ததை அறிகின்ருேம். இப்பகுதி ஈரலிப்பு வல யத்தில் இருந்த போதும், இங்கும் பயிர்ச் செய்கையே மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கிழக்கிலங்கையில் அமைந்த உலகப் புகழ்வாய்ந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலை வழியாக அயல் நாட்டுத் தொடர்புகள் நடைபெற்றன. விரை வில் இப்பகுதியிலும் ஒரு குடியேற்றம் அமையலாயிற்று. இவ் வாறு ஆரியர் இலங்கைக்கு வந்த இரு நூற்ருண்டுகளில், இலங் கையின் நாலா பக்கங்களிலும் தம்குடியேற்றங்களை நிறுவித் தமது எதிர்கால சுபீட்சத்துக்கு அடிகோலிக் கொண்டனர்.
w. இலங்கையில் ஆரியரின் செல்வாக்கு
ஆரியர் இலங்கைக்கு வந்த காலத்தில், இலங்கையில் வாழ்ந்த மக்கள் புதிய கற்காலத்தின் இறுதிக்காலத்திலிருந்தனர் எனலாம். இரும்பின் உபயோகத்தை அறிந்தவர்களாகவோ, பயிர்ச் செய் கையை மேற்கொண்டவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. இத்தகைய நிலையிலிருந்த இலங்கையின் ஆதிக் குடிகளை, பண்பாட் டில் எவ்வளவோ மேம்பட்ட நிலையிலிருந்த ஆரியர் எளிதிற் புறங் கண்டு, தமது வாழ்க்கை முறையையும் சமுதாய ஒழுங்கு களையும் இங்கு புகுத்தினர். இதனுல், இலங்கையின் நாகரிக வளர்ச்சியில் ஆரியரின் வருகை திடீரெனப் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. 'கற்காலத்தை யடுத்து, செப்புக் காலம், வெண் கலக் காலம் என்ற பருவங்களைக் கடந்தே இரும்புக் காலத்திற் பல நாடுகள் பிரவேசித்துள்ளன. ஆனல், இலங்கை இவ்விடைப் பருவங்களை யடையாது, திடீரென இரும்புக் காலத்தினுட் பிர வேசித்தது. இரும்பினுல் ஆயுதங்களைச் செய்து உபயோகிக்கும் முறையை ஆரியர் இலங்கையிற் புகுத்தியமையே இதற்கு உதவியாக இருந் தது. மனித இனத்தின் வளர்ச்சியில் இரும்பின் உபயோகமானது எவ்வளவோ முன்னேற்றத்தை யளித்தது. அதை இலங்கைக்குக் கொண்டுவந்தவர்கள் ஆரியரே. そ
தொழில் முறையிலும்பயிர்ச் செய்கையை மேற்கொண்ட பின் னரே மனிதனது வளர்ச்சி துரித மெய்தியது. பயிர்ச் செய்கையினல் மக்கள் பெறும் நிலையானதும் நிம்மதியுடையதுமான வாழ்வும், ஒய்வும் அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவின. புதிய கருவி கள், முறைகள் என்பவற்றைச் சிந்தித்து ஆக்குந்திறன், இந்த ஒய்வு மூலமே செயற்படும். எனவே, இலங்கையின் நாகரிக வளர்ச் சியிலும், ஆரியர் பயிர்ச் செய்கையைப் புகுத்தியமையால், திடீரெனப் பெரும் முன்னேற்றமும், பண்பாட்டு வளர்ச்சியும் ஏற்படலாயின.

Page 28
36 பண்டைய ஈழம்
உணவுக்காக அலைந்து அதைச் சேகரிக்கும் நிலையில் வாழ்ந்த இலங்கை மக்கள், ஆரியர் வருகைக்குப் பின் ஒரு சில மாத உழைப் பைக் கொண்டு ஆண்டு முழுவதும் இடரின்றி உணவருந்தக்கூடிய நிலையை அடைந்தனர். பயிர்ச் செய்கையின் அடிப்படையில் நாடெய்திய செழிப்பே, கலை வளர்ச்சிக்கும், சமய மேன்மைக் கும் அடிப்படையாக விளங்கியது. ஆரியர் ஏற்கெனவே அறிந் திருந்த முறைகளை இலங்கையின் தன்மைகளுக்கேற்ப மேலும் விருத்திசெய்து, நாட்டின் வளத்தைப் பெருக்கி வரலாயினர்.
பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்த ஆரியக் குடியேறிகள் ஆறுகளை யடுத்த பிரதேசங்களில் சிறு கிராமங்களாகவே தமது குடியேற்றங்களை யமைத்தனர். இக் கிராமங்களைப் பாதுகாக்கவும் பரிபாலிக்கவும், ஒழுங்கு அமைதி ஆகியவற்றைப் பேணவும் சில அதிகாரிகள் இருந்தனர். கிராமனி அல்லது காமிக என்ற அதிகாரி கிராமத் தலைவனுக விளங்கி இக் கடமைகளை யாற்றினன். ஆதி கால பிராமிக் கல்வெட்டுக்களில், பருமகர்கள் (பிரமுகர்கள்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களே, காட்டை அழித்துக் குடியேற்றங்களை நிறுவும் பணியில் முக்கிய பங்கை வகித்த ஒரு வகுப்பினராவர், கிராம நிரூவாகத்தை நடத்துவதிலும், பொதுப்பணிகளை நிறை வேற்றுவதிலும் கிராமச் சபைகள் முக்கியமானவை. (கிராம சபா அல்லது காமசபா என்பதே கன்சபா எனச் சிங்களத்தில் வழங்கப் படுகின்றது.) நெடுங்காலமாக இலங்கைக் கிராமங்கள் நல்லமுறை யில் இயங்குவதற்கு உறுதுணையாக விளங்கியவை இச் சபைகளே. ஒழுங்கான சமுதாய அமைப்புக்கான உயிர்நாடிகளான இந்த அம்சங்களை - குறிப்பாக கிராமச்சபைகளை - ஏற்படுத்தியதன் மூலம் இலங்கை எவ்வளவோ பயனடைந்துள்ளது.
இலங்கைக்கு அதன் பெயரையே (சிங்ஹல, சிங்ஹலதுவிபம்) கொடுத்து, அதன் பெரும்பான்மையினமாகவும் விளங்கி வந்த சிங்களர் என்ற இனம் உருவாக உதவியது ஆரியர் வருகையே. ஒரு காலத்தில் (400 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்) ஆரியா குடியேறியிருந்த மற்றெந்தப் பகுதியைக் காட்டிலும் கூடுதலாகத் தெற்கேயுள்ள ஆரியர் வாழும் நாடென்ற பெருமை இலங்கைக் கிருந்தது. இலங்கையின் அரசகரும மொழியான சிங்கள ந் தோன்ற இவ்வாரியர் வருகையே வழிவகுத்தது. இலங்கைக்குக் குடியேறிய ஆரியரின் சமயம் பற்றிய விவரங்கள் சரிவரத் தெரி யாவிடினும், அக் காலத்தில் வடஇந்தியாவில் ஆரியர் பின்பற்றிய இந்து மதத்தையே இங்கும் தழுவியிருப்பர் என ஊகிக்க இட முண்டு. இலங்கையிற் பெளத்தம் பரவிய பின்னும், மக்களிடையே நிலவிய முந்திய சமய நம்பிக்கைகள் அடிக்கடி அவர்களின் மத வழிபாடுகளைப் பாதிக்கலாயின. இவ்வாறு, ஆரியரின் பண்பாட்டு

இலங்கைக்கு ஆரியர் வருகையும், குடியேற்றங்களும் 37
அம்சங்கள் இலங்கையின் பொருளாதாரம், சமுதாய அமைப்பு, மொழி, மதம் முதலான பலதுறைகளைப் பாதித்து, இலங்கையை நாகரிகப் பாதையில் பல படிகள் முன்னேறச் செய்தன.
பயிற்சி: a
1. வடஇந்தியாப் படமொன்றை வரைந்து, அதிற் சிந்து நதியையும் அதன் கிளையாறுகளேயுங் குறித்து, மொஹஞ்சதரோ - ஹரப்பா நாகரிகம், ஆரியர் நிறுவிய தொடக்க காலக் குடியேற்றங்கள் நில விய பகுதிகளைக் குறித்துப் பெயரிடுக.
2. ஆரியர் பண்பாட்டை, சிந்துப்பள்ளத்தாக்குப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு
விளக்குக.
3. மகாவம்சத்தில் 6ம், 7ம் அத்தியாயங்களப் படித்து, அவற்றிலுள்ள
வரலாற்றுண்மைகளேத் தெளிவுபடுத்துக.
கூட்டுவே லேக்கு:
இலங்கையில் ஆரியர் குடியேறிய பகுதிகளைக் காட்டும் படமொன் றைப் பெரிதாக (பிறிஸ்டல் போர்ட்டில்) வரைந்து, இடப் பெயர்களை யும் ஆறுகளையும் குறிக்கவும். இங்கு தொழிற்பட்ட புவியியற் கார ணிகளை ஆராய்க.
தேர்வு வினுக்கள்: 1. சிந்துப் பள்ளத்தாக்குப் பண்பாடு பற்றிய ஒரு குறிப்பு வரைக.
2. ஆரியர் இலங்கையில் நிறுவிய குடியேற்றங்கள் பற்றிய மரபுக்
கதைகளை ஆராய்க.
3. ‘இலங்கை வரலாற்றினதும், நாகரிகத்தினதும் உண்மைத் தொடக்க
நிகழ்ச்சி ஆரியர் வருகையே" தெளிவாக்குக.
4. குறிப்புக்கள் எழுதுக: அ. கிராமணி ஆ. பருமக(ர்) இ. கன் சபா ஈ. ஜாதகக் கதைகள் உ. பிராமிக் - கல் வெட்டுக்கள் ஊ. மொஹஞ்சதரோ.
5. இலங்கைப் படமொன்றில் குறிக்கவும்: மல்வத்து ஒயா, தம்பபண்ணி,
உறுவெல, உபதிசகாம, விஜிதகாம, மகாகாம, உரோகண, தீகாயு, கோணகமக்க (திருகோணமலை), அனுராதபுர(ம்), மகாதீர்த்தம்.

Page 29
அத்தியாயம் நான்கு பெளத்தம் பரவுமுன் இலங்கை: அனுராதபுரத்தின் எழுச்சி 1. அரசியல் வரலாறு: விஜயன் முதல் முடசிவன் வரை i. சமயநில
ஆரியர் வருகைக்குப் பின், இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற அடுத்த முக்கிய நிகழ்ச்சி பெளத்தம் இந்நாட்டில் பரவியமையே. இந்நிகழ்ச்சி கி. மு. மூன்ரும் நூற்ருண்டின் நடுப்பகுதியில் (247 அள வில்) நடந்தது. எனவே, இவ்விரு முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் இடைப்பட்ட இரண்டரை நூற்றண்டுக் காலத்தை, பிந்திய நிகழ்ச்சி களுக்கான ஆயத்த காலமாகக் கொள்ளலாம். இக்காலப் பகுதி பில், ஆரியரின் குடியேற்றங்கள் மேலும் பெருகி, ஒழுங்கான ஆட்சி முறையும் உருவாகி வந்தது. இவ்விடைக் காலத்தில் ஏற்பட்டமுக்கிய நிகழ்ச்சி அனுராதபுரம் தலைநகராக்கப்பட்டமையே. இவ் வாறு அனுராதபுரத்தைத் தலைநகராக்கி, அதன் பெருமைக்கு அ? கோலிய மன்னனன பண்டுகாபயனே இக்காலப் பகுதியின் முக்கிய மன்னனவான். இதனல், இவனையொரு தலைவனுகவும் வீரகைவும் காட்டுவதற்கு இவனைப் பற்றிச் சில அதிசய நிகழ்ச்சிகள் சேர்க்கப் பட்டுள்ளன. பெளத்தம் பரவுமுன் இலங்கையின் அரசியல் வரலாற் நின் முக்கிய விருத்திகளையும் அக்காலப் பகுதியில் நிலவிய சமய நிலைமைகளையும் நம்பிக்கைகளையும் சுருக்கமாக இவ்வத்தியாயத்திற் காண்போம்.
1. அரசியல் வரலாறு: விஜயன் முதல் முடசிவன் வரை
எமது வரலாற்றுக்குள்ள மிக முக்கிய ஆதாரமான மகாவம் சத்தில் பெளத்தம் பரவுமுன்னருள்ள இலங்கையின் வரலாற்றைக் கூறும்பகுதி (அத். wi-x)யின் சில தன்மைகளை முதலில் நோக்குவோம். பெளத்தக் குருமார்கள் இலங்கைக்கு வருமுன் நடைபெற்ற இலங்கை வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றி மக்களிடையே வழங்கிய கதை களையே அவர்கள் தாம் பேணிய மரபுகளுடன் சேர்த்துக் கொண் டனர். பெளத்தத்துடன் நேரடித் தொடர்பு பெருத இந் நிகழ்ச்சி களைப் பற்றிய மரபுகளைப் பேணுவதில், விகாரைகளில் வாழ்ந்த குருமார்கள் அதிக அக்கறை கொண்டிருக்கமாட்டார்கள். மேலும், நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலத்துக்கும், அவை பற்றிய மரபுகள் எழுத்து வடிவம் பெற்ற காலத்துக்கும் நீண்டகால இடைவெளி யிருந்ததால், பிற்காலச் சேர்க்கைகள் பல இடம்பெறுதல் இயல் பானதே. மரபுகள் வாயிலாகப் பெற்ற முக்கிய செய்திகளுடன்,

அனுராதபுரத்தின் எழுச்சி 39
ஜாதகக் கதைகள் முதலான பழைய கதைகளிலுள்ள புனைவுகளும் உண்மை நிகழ்ச்சிகளுடன் சேர்க்கப்பட்டன. எனவே, இக் காலப் பகுதியைக் கூறும் அத்தியாயங்களில் வரும் பல கதை நிகழ்ச்சிகள் ஜாதகக் கதைகளிலிருந்து , எடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மன்னர்களின் ஆட்சிகால வரையறைகளும், பெரும்பாலும் செயற் கைத்தன்மை கொண்டிருத்தல் கண்கூடு. எடுத்துக்காட்டாக, பண்டுகாபயன் முப்பத்தேழாவது வயதில் ஆட்சியைப் பெற்று 70 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகவும், அவனுக்குப் பின் அவனது மகனை முடசிவன் தந்தையைத் தொடர்ந்து 60 ஆண்டுகள் அரச கை விளங்கியதாகவும், இதற்குப் பின் முடசிவனது மக்கள் தமக் கிடையே 80 ஆண்டுகள் ஆட்சியைக் கவனித்ததாகவும் வருகின் றது. இச் செயற்கைக் காலவரையறைகள் புகுத்தப்பட்டமைக்கு, புத்தர் பரிநிர்வாணமெய்திய காலத்துடன் ஆரியர் வருகையைத் தொடர்பு படுத்த வேண்டும் என்ற விருப்பமே காரணமென்பர். இவ்வாரு க, இக்காலப் பகுதியின் வரலாற்றில், காலவேடுகளில் உள்ள விவரங்களிற் பலவற்றை நாம் கட்டுக் கதைகளாகவே கொள்ளவேண்டியிருக்கின்றது. ஆட்சிக்கால எல்லையையும், சில வேளைகளில் சில நிகழ்ச்சிகளையும், மன்னர்களின் பெயர்களையும், செயல்களையும் எச்சரிக்கையுடனேயே எடுத்துக்கொள்ள வேண் டும். இங்கு நாம் மிகச் சுருக்கமாக, அரசியல் வரலாற்றை நோக்குவோம். w
விஜயன்: மரபுக் கதைகளின்படி, இலங்கையின் முதல் அரசனுக விஜயன் மதிக்கப்படினும், விஜயனை ஒரு வ்ரலாற்று மனிதனுகக் கொள்வது குறைவு. இலங்கையின் முதற் குடியேற்ற நிகழ்ச்சி யைப் புலப்படுத்த எழுந்த கதையின் பாத்திரமாகவே இவனைக் கருதுவர். (வேறு மரபுகளில், இவனது பெயரை ‘சிங்ஹல" என்றே வழங்குவர்.) தம்பபண்ணியைத் தன் தலைமைப் பீடமாகக்கொண்டு 38 ஆண்டுகள் ஆட்சி புரிந்தபின், தன் பாண்டிய இராணி வாயி லாகப் பிள்ளைகள் இல்லாமையால், அரசை வந்து ஏற்குமாறு அவன் தன் தம்பிக்கு அழைப்பை அனுப்பினன். அவனது தம்பி சுமித்த னுக்குப் பதில், அவனது இளைய மகனுன பண்டுவாசுதேவன் இலங்கை வந்து ஆட்சியை ஏற்ருன், உபதிசகாம(ம்) அரசிருக்கை யாக இப்போது விளங்கியது. பண்டுவாசுதேவனுக்கும் அவனது முப்பத்திரண்டு தோழர்களுக்கும், விரைவில் பத்தகச்சானுவும் அவளது பணிப்பெண்கள் முப்பத்திரண்டு பேரும் கங்கைக்கரையி லிருந்து கப்பலேறி வந்து பெண்களாக வாய்த்தனர். பத்தகச் சாளுவின் சகோதரர்கள் அறுவர் இலங்கை வந்து, தம் பெயர் க ளால் ராமகொண, உறுவெல, அனுராதகாம, விஜிதகாம, தீகாயு, ரோகண(ம்) முதலான குடியேற்றங்களை நிறுவினர். இதன்மூலம், கிழக்கிலிருந்தும் குடியேற்றங்கள் நடைபெற்றன என்ற கருத்து வலுப்பெறுகின்றது.

Page 30
40 பண்டைய ஈழம்
பண்டுகாபயன்: விஜயனுக்குப் பின் பண்டுகாபயனது வரலாறே
சுவையுடையதும், முக்கியமானதுமாகும். அதைக் கூறுவதற்கேற்ற வகையிலேயே அவனுக்கு முந்தியகால நிகழ்ச்சிகளும் அமைக்கப் பட்டுள்ளன. பத்தகச்சானவுக்குப் பிறந்த மகளான உம்மாத சித்தா வுக்குப் பிறக்கவிருந்த மகளுல் (பண்டுகாபயனல்), சித்தாவின் சகோதரர்கள் பதின்மர் ஆபத்தை யெதிர்நோக்கியிருப்பதாக முன்னரே யறிந்திருந்து, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டனர். இருந்தும், சித்தா ஒர் ஆண் மகவைப் பெற்று, ஒரு பணிப்பெண்ணிடம் இரகசியமாக அம்மகவைக் கொடுத்து, அதைத் தலைமறைவாக வளரச் செய்தாள். பண்டுகாபயன் என்ற அம் மகவு அதிசயமான முறையில், மாமன் மார் தன்னைக் கொல் லச் செய்த சதி முயற்சிகளிலிருந்து, உயிர்தப்பி வளர்ந்து, இறுதி யில் பண்டுல(ன்) என்ற பிராமணனிடம் கல்வி பயின்று வத்தான். பிராமணன் அளித்த பண உதவியுடன் போர் வீரரைத் திரட்டித் தன் மாமன் மாருடன் போர் தொடுத்து, நீண்டகாலப் போர்களின் பின் அவர்களை வென்று, ஈற்றில் அரசைப் பெற்ருன் என்பதே மகாவம்சக் கதையின் சுருக்கமாகும். சேத்திய என்ற பெண்குதிரை உருவில் வந்த ஒரு இயக்கிணியின் உதவியாலேயே போர்களில் பண்டுகாபயன் வெற்றியீட்ட முடிந்ததென்பதாகவும் இக் கதை யில் கூறப்பட்டுள்ளது. இவ்விதமாகப் பல அதிசய நிகழ்ச்சிகள் கலந்திருப்பதால், பண்டுகாபயன் கதையை முற்ருகவே புனை கதையாக ஒதுக்கி விடவும் சில வரலாற்ரு சிரியர்கள் துணிகின்ற னர். ஆனல், பண்டுகாபயன் ஒரு வரலாற்று மனிதன் எனக் கொண்டு, கதையில் வரும் அதிசய நிகழ்ச்சிகளை நீக்கி, ஏனைய வற்றை உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பனவாகச் சிலர் கொள்வர். பண்டுகாபயன் நிகழ்த்திய போர்களில் சடுதியாக வெற்றிபெறது, பல ஆண்டுகள் வரை அவன் வெற்றியெய்தாதிருந்தமையை, இது உண்மை வரலாறு எனக் கொள்வதற்குச் சான்ற கும் என்பர். எப்படியாயினும், பண்டுகாபயன் அரசனுன பின், அவன் மேற் கொண்ட நடவடிக்கைகளில் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன வென்பது தெளிவு.
அனுராதபுரம் தலைநகராதல்: பிண்டுகாபயன் அரசனனதும், அனுராத காமவுக்குச் சென்று, அங்கே அனுராதபுரம் என்ற நகரை நிறுவி, அதைத் தன் தலைநகராக்கினன். தனக்கு உதவியாகவிருந்த மாமனன அபயனை "நகரகுத்திக' என்ற நகர காவலன் பதவிக் கும், தன் மனைவி சுவர்ணபாலியின் தந்தையான கிரிகண்டசிவனை கிரிகண்டப் பகுதியின் ஆட்சியாளனகவும் பண்டுகாபயன் நியமித் தான். தனக்கு உதவியாகவிருந்த காளவெல முதலான இயக்கர் களை நகரின் வெவ்வேறு பகுதிகளில் காவலுக்கு அமர்த்தினன்.

அனுராதபுரத்தின் எழுச்சி 4 I
r、ヘ
நகருக்கருகாமையில் துணைநகர்கள் நான்கையுஃபயவாவியையும் அவன் நிறுவினன். ந்கரின் நிரூமாணத்தில் கவனஞ் செலுத்திய மன்னன், அதன் துப்புரவுக்கும் ஒழுங்குகள் செய்தான்*சண்டாளர்' என்ற குலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானேரை நகரசுத்தி யாளராக நியமித்து, அவர்களுக்கு உறைவிடங்களையும் அளித் தான். வெவ்வேறு சமயப் பிரிவினர்க்கும் உறைவிடங்களையும், வழிபாட்டிடங்களையும் நிறுவிக்கொடுத்தான். இலங்கை முழுவ தற்கும் உரிய கிராமங்களின் எல்லைகளையும் பண்டுகாபயனே தன் பத்தாவது ஆட்சியாண்டில் வகுத்து வைத்தான் எனப்படுகின்றது. பண்டுகாபயனது ஆட்சிக்காலச் செயல்கள் பற்றிக் கூறப்பட்டவை யனேத்தும் அவனுடைய காலத்தில்தான் நடந்தன எனக் கொள் வதற்கு உறுதியான துணையாதாரங்கள் இல்லாவிடினும், அனுராத புரத்தைத் தலைநகராக்கியமையாலேயே அவன் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கவேண்டுமெனக் கொள்ளலாம்.
மு.சிவன்: பண்டுகாபயனது ஆட்சி முடிவுற்றபின், அவனுக் குச் சுவர்ணபாலி வாயிலாகப் பிறந்த மகனன முடசிவன் ஆட் சிக்கு வந்தான். இவன் ஆட்சி செய்ததாகக் கூறப்படும் அறுபது ஆண்டுகளில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி அனுராத புரத்தில் மஹாமேகவனம் என்ற தோட்டம் அமைக்கப்பட்ட தாகும். இவனுடைய புதல்வர்களில் ஐவர் வெவ்வேறு காலங் களில் ஆட்சி செய்ததாக அறிகின்ருேம். முடசிவனது ஆட்சி கி. மு. 247ல் முடிவெய்த, அவனது இரண்டாவது புத்ல்வனன தேவானம்பிய திசன் அரசைப் பெற்றன்.
தேவானம்பிய திசனுக்கு முந்தியகால இலங்கையின் அரசியல் வரலாறு காலவேடுகளிலுள்ள செய்திகளை யொட்டி, மேலே சுருக் கித் தரப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கள் முதலான பிற ஆதாரங் களால் இவ் விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை யென்பது மனங் கொளத்தக்கது. உண்மையில், தேவானம்பிய திசனுடைய காலத் திலிருந்தே பிறநாட்டு ஆதாரங்களும், கல்வெட்டுக்களும் இலங் கைக் காலவேடுகளில் வரும் வரலாற்றுச் செய்திகளை உறுதிப் படுத்தவும், மறுக்கவும், இடைவெளிகளை நிரப்பவும் உதவுகின்றன. அதிக உண்மையைக் கொண்டிராத மரபுக் கதைகளுடன், ஜாதகக் கதைகள், மகாபாரதம் முதலானவற்றில் எடுக்கப்பட்ட கதை நிகழ்ச்சிகள் உருமாற்றப்பட்டுச் சேர்க்கப்பட்டே இக்காலப்பகுதி யின் வரலாறு அமைந்துள்ளதெனலாம். குறிப்பாக, பண்டுகாப யன் கதையில் வரும் நிகழ்ச்சிகள் பல, இந்தியக் கதைப் பாடல் களில் (மகாபாரதம், ஹரிவம்சம்) உள்ள கதை நிகழ்ச்சிகளை
6

Page 31
42 பண்டைய ஈழம்
நினைவுக்குக் கொண்டுவருகின்றன. எனவே, ஆதிகாலத்தில் அதிக சிறப்புடைய தலைநகராகவும், பெளத்த மதத்துக்குரிய விகாரைகள் நிறுவப்பட்டிருந்த புனித நகராகவும் விளங்கிய அனுராதபுரத்தை நிறுவிய பெருமையை மரபுகள் பண்டுகாபயனுக்கு அளித்துள்ளதே இப் பகுதியில் குறிப்பிடும் தகைமையுடைய விடயமாகும். இது பெரும்பாலும் உண்மை மரபாகவேயிருக்கும் எனக் கருதலாம்.
iiy 3F Lduug5 2av):
பெளத்தம் இலங்கைக்குப் பரவுமுன் இலங்கையிலிருந்த சமய நிலையை அறிவதனல், அம்மதம் இலங்கையில் அதிக எதிர்ப்பின் றிப் பரவ முடிந்தமையையும், முந்திய சமய நம்பிக்கைகளும் வழி பாட்டுமுறைகளும் இலங்கையிற் பெளத்தத்தின் வளர்ச்சியைப் பாதித்த வகையினையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆனல் அக்காலச் சமயநிலை பற்றி யெமக்குத் தெரிந்த விவரங்கள் குறை வாதலால், அது பற்றி இங்கு மிகச் சுருக்கமாகவே கூறலாம். பொதுவாகக் கூறினல், ஆரியர் இலங்கைக்கு வந்தபோது இலங் கையிலிருந்த சில வழிபாட்டு முறைகளுடன் ஆரியரின் சமய முறைகளும் கலந்த ஒரு தெளிவற்ற நிலையிலேயே அக்காலச் சமய நில் விளங்கியதெனலாம். சமயம் ஓர் ஒழுங்கையோ, நிறுவன அமைப்பையோ பெற்றிருக்கவில்லை யென்பதும் நோக்கத்தக்க தாகு ம .
இந்துமதம்: ஆரியர் இலங்கைக்கு வந்த தொடக்க காலத்தில், இந்தியாவிலேயே பெளத்தம் பரவியிருக்கவில்லை. குறிப்பாக, இலங்கை வந்த ஆரியக் குடியேறிகள் மேற்குப் பகுதியிலிருந்து இலங்கை வந்திருப்பின், அவர்கள் அப்பகுதியில் நிலவிய சமயக் கோட்பாடுகளையே இலங்கைக்கும் கொண்டுவந்திருப்பர் என ஊகிப் பதில் தவறிருக்காது. வடஇந்தியாவில், குறிப்பாக உயர் குடியின ரால் பின்பற்றப்பட்ட சமயத்தில் பிரமா, இந்திரன், வருணன், பேரன், யமன் முதலான கடவுள்களே முக்கிய இடத்தைப் பெற் ருந்தனர். இக் கடவுள்களை இலங்கை வந்த பின் அவர்கள் வழி பட்டனர் என்பதை இலக்கிய ஆதாரங்களில் வரும் குறிப்புக்க ளால் அறியலாம். இலங்கையின் காவல். தெய்வங்களாக கருதப் பட்ட இந்திரன், யமன், வருணன், குபேரன் ஆகிய கடவுளர், சில வேளைகளில் வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இந் திரனை சக்க என்ற கடவுளாகவும், விஷ்ணுவை உபுல வண்ணவாக வும் மக்கள் வழிப்ட்டதை மகாவம்சத்திலிருந்து அறியலாம். கல் வெட்டுக்களில் வரும் சில பெயர்களைக்கொண்டு, பலதேவன், இரா மன்,கர்ணன், வாசுதேவர், சிவன் முதலான தெய்வங்களும் வழி படப்பட்டனவெனத் தெரிகின்றது. வழிபாட்டுக்குரிய தெய்வங்கள்

அனுராதபுரத்தின் எழுச்சி 43
பிராமணியத்துக்குரியவையாக விருந்ததாலும் ஆட்சிமுறையிலும் பொதுவாழ்விலும் இடம்பெற்ற சடங்குகள் காரணமாகவும் பிரா மணர்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர். புரோகிதர்க ளாகவும், பதில் அரசர்களாகவும் (எ-டு: உபதி ச என்ற பிராமணன்) பிராமணர்கள் விளங்கியுள்ளனர்.
பிற மதங்கள் பிராமணீயம் அல்லது இந்து மதம் அல்லாத பிற Pதங்களேச் சேர்ந்தவர்களும் அக்காலத்தில் வாழ்ந்ததைக் கால வேடுகள் அறியத்தருகின்றன. பண்டுகாபயன் ஆட்சியைப் பற் மிக் கூறும்போது, நிகண்டர்கள் எனப்பட்ட சமணத்துறவிகள் வசிப்பதற்கெனத் தலைநகரின் ஒரு பகுதி யொதுக்கப்பட்டிருந்ததை மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆஜீவகர்கள் எனப்பட்ட ஒரு சமயப் பிரிவினருக்கும், மற்றும் “பரசமயத்தவர்க்கும் வெவ்வேறு உறைவிடங்கள் பண்டுகாபயனல் நிறுவப்பட்டிருந்ததையும் அந் திTவி குறிப்பிடுகின்றது. இக் குறிப்புக்களால், இலங்கையில் பெளத் தம் பரவுமுன், சமணசமயம் ஒரளவுக்கு ஆதரவுபெற்றிருந்ததாகக் கூறலாம். தேவானம்பிய திசன் ‘காலத்துக்கு முன்னதாகவே, பெளத்தத்தைத் தழுவிய அல்லது அம்மதத்தைப் பற்றியறிந்த ஒரு சிலராவது இலங்கைக்கு வந்திருக்க வேண்டுமெனவும் கூறப் படுகின்றது.
இயக்கர் வழிபாடு முதலியவை: பெளத்தம் பரவுமுன் இலங்கையி லிருந்த சமய நம்பிக்கைகளில் இயக்கத் தெய்வங்களின் வழிபாடு, இயற்கை வழிபாடு என்பவை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன வென்பது உறுதி. பண்டுகாபயன் காளவெல, சித்தராஜா என்ற இயக்கர்களுக்கு நகரின் வெவ்வேறு எல்லைகளில் கோவில்களை அமைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. அவனுக்கு மிகவும் உதவிய பெண்குதிரை உருவில் இருந்த 'செதிய" என்ற இயக்கி ணிக்கு மாளிகையின் எல்லைக்குள்ளேயே மன்னன் இடமளித்தான் எனவும் அதுகூறும். ஆவிகள் அல்லது புத்தேளுருக்களும் அக்கால மக்களின் வழிபாட்டில் இடம்பெற்றன. நீர்த்தேவதைகளான நாகர்களும் அவ்வாறே வழிபடப்பட்டன. மேற்கு இராணி என்ற தேவதைக்கும், தலைநகரின் காவல் தெய்வத்துக்கும் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆல்மரம் போன்ற மரங்களும் இயற்கை வழிபாட்டு முறையில் இடம்பெற்றிருந்தன. இவ்வாருன வழிபாட்டு முறைகளை ஆரியர் இலங்கை வந்த பின்னர், இங்கிருந்த ஆதிக் குடிகளிலிருந்தே பெரும்பாலும் கைக்கொண்டனர் எனலாம். இவ் வழிபாட்டு முறைகளும், சமய நம்பிக்கைகளும், பெளத்தம் பரவிய பின்னரும் தமதாதிக்கத்தைச் செலுத்தத் தவறவில்லை.

Page 32
44 பண்டைய ஈழம்
இதுவரையும், பெளத்தம் பரவுமுன்னிருந்த சமய நிலை பற்றி ஒரளவு அறிந்து கொண்டோம். இனி, இந்தியாவில் பெளத்தம் தோன்றிப் பரவிய வரலாற்றை அடுத்த அத்தியாயத்தில் நோக்கு வோம்.
பயிற்சி:
1. மகாவம்சத்தில் பண்டுகாபயன் வரலாற்றைக் கூறும் 9ம் 10ம் அத் தியாயங்களைப் படித்து, அவனுடைய ஆட்சிபற்றியுள்ள முக்கிய செய்தி களைக் கூறுக.
2. மேற்படி நூலின் 10ம் அத்தியாயத்தில் 84 - 102 செய்யுள்களில் உள்ளவற்றை ஊன்றிப்படித்து, அக்காலச் சமயநிலயை விளங்க
அது உதவுவதைக் காண்க.
தேர்வு விணக்கள்:
1. தேவானம்பிய திசன் அரசெய்தும்வரை, இலங்கை அரசியல் வர
லாற்றின் போக்கினச் சுருக்கமாகக் கூறுக.
2. பெளத்தம் பரவுமுன், இலங்கையிலிருந்த சமயநிலை பற்றி யறியப்
பட்டவற்றைக் கூறுக.

அத்தியாயம் ஐந்து பெளத்தத்தின் தோற்றமும், வளர்ச்சியும்: இலங்கைக்குப் பெளத்தம் பரவல்
1. பெளத்தத்தின் தோற்றம் i. பெளத்தக் கழகங்களும், பெளத்தத்தின் வளர்ச்சியும் i, மெளரியப் பேரரசன் அசோகன் iv. பெளத்தம் இலங்கைக்குப் பரவியமை w. மெளரியப் பண்
பாடும், இலங்கையும்
இலங்கையின் ஆதிகால வரலாற்றில், பெளத்தம் பரவியமைக்கு நிகராக வேருெரு நிகழ்ச்சியைக் குறிப்பிடவியலாது. இத்தீவின் பண்பாட்டிலும், மக்களின் வாழ்க்கையிலும் அத்தகைய முக்கிய இடத்தைப் பெளத்தம் பெற்றுள்ளது. பெளத்த மதத்துடன் தொடர்புடைய மரபுகளிலிருந்தே ஆதிகால இலங்கை வரலாற் றுக்குரிய செய்திகள் பெறப்படுவதால், அம் மதம் பரவிய கால மாகிய தேவானம்பிய திசனது ஆட்சிக் காலத்திலிருந்தே இலங்கை யின் நம்பகமான வரலாறும் தொடங்குகின்றது. கி. மு. 3ம் நூற் ருண்டிலிருந்து இற்றைவரை, பெளத்தத்தின் வளர்ச்சியில் இலங்கை யில் பல ஏற்றத்தாழ்வுகள் இடம்பெற்றுள்ளபோதும், இலங்கை யில் அம்மதம் பேணப்பட்டுவந்துள்ள அளவுக்கு வேறெந்த நாட்டி அலும் அது பேணப்படவில்லை. எனவே, இத்தகு பெருமைகொண்ட நிகழ்ச்சியான இலங்கைக்குப் பெளத்தம் பரவியதை அறிதலே இந்த அத்தியாயத்தில் எமது முக்கிய நோக்கமாகும். இதை யறி தற்கு, இந்தியாவில் இப்பெருமை மிகு மதம் தோன்றிய வரலாற்றை யும், அசோகன் காலம்வரை அது எய்திய வளர்ச்சியையும், பின் னர் அப் பெரு மன்னன் அதன் வளர்ச்சிக்குழைத்து இலங்கைக்குப் பெளத்தம் பரவ உதவியதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். மெளரியப் பேரரசனன அசோகன் காலத்தில், இலங்கைக்கும் அவனது பேரரசுக்குமிடையே யிருந்த தொடர்புகளால் இலங்கை பாதிக்கப்பட்ட வகையினையும், நாம் ஓரளவு விளங்கிக்கொள்ள் முயல்வோம். முதலில், பெளத்தம் தோன்றிய சூழ்நிலையையும், வாலாற்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
i. பெளத்தத்தின் தோற்றம்:
இந்தியாவிற் குடியேறி வாழ்ந்த ஆரியர் பின்பற்றிய சமயத் தைப் பற்றி முன்னர் ஒரளவு அறிந்திருக்கின்ருேம். வேதகாலச் சமயத்திலும் பார்க்க, பிந்திய காலமான காவியகால இந்து மதத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாகியிருந்தது. இதனல், அக்கால இந்து மதத்தை பிராமணீயம் என அழைப்பர். உபநிடதங்களில் தத்துவ விசாரங்கள் இடம்பெற்று வந்தன. அதே வேளையில், மிரு கங்களைப் பலிசெய்யும் வேள்விகளும், கருத்தற்ற கிரியைகளும்

Page 33
46 பண்டைய ஈழம்
பெருகிவந்தன. தெய்வங்கள் மனிதர்களைப் போன்ற உருவ அமைப் புக்களையும், உடை, பேச்சு ஆகியவற்றையும் பெற்றது மன்றி, அவற் றின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டு, வழிபடும் முறையும் அதிகமாக வழக்கிலிருந்தது. கோவில்களும் அக்காலத்திலேயே அதிகமாக நிறுவப்பட்டன. இவை யெல்லாவற்றலும், பிராமணர்களின் செல் வாக்கு எல்லையற்றதாக வளர்ந்து வந்தது. இவ்வகையான சமய விருத்திகளுக்கு மாருன இயக்கம் கி. மு. 6ம் நூற்றண்டளவில் தோன்றலாயிற்று. சமயத் தத்துவங்கள் சாதாரண மக்களால் விளங்கமுடியாத அளவு சிக்கலுடையனவாகி யிருந்தன. தமது வாழ்க்கைக்கு நேரடியாகப் பயன்படாத ஒன்ருக மதம் மாறிவந்த தைக் கண்டனர். மிருகப்பலிகள் பெருகிவந்ததை இரக்க சிந்தை கொண்ட மனிதர்கள் வெறுத்தனர். உருவச்சிலைகளின் வழிபாடு அதிகரித்து, கிரியை முறைகள் பெருகி, பிராமணர்களின் செல் வாக்கு வளர்ந்து வந்ததை கூடித்திரியர்கள் உட்படப் பலர் எதிர்த் தனர். இவ்வாறு, நடைமுறையிலிருந்த பிராமணியத்தின் குறை பாடுகளுக்கெதிராகத் தோன்றிய எதிர்ப்பியக்கமே, ஏறக்குறைய ஒரே காலத்தில் இரு புதிய மதங்களைத் தோற்றுவித்தது. வர்த்தமான மகாவீரர் என்ற தீர்த்தங்கரருடன் தொடர்புடைய சமண மதம் (அல்லது ஜைன மதம்), கெளதம புத்தரால் நிறுவப்பட்ட பெளத்த மதம் ஆகிய இரண்டும் ஏறத்தாழ ஒரே காலத்தில், ஒரே சூழ்நிலை யிலிருந்து, ஒரே நோக்குடன் தோன்றியவையே. இவையிரண்டுமே கூத்திரிய குலத்தவர்களால் தோற்றுவிக்கப்பட்டன என்பது மனங் கொளத்தக்கது.
வட பீகாரில் வைசாலிக்கு அண்மையிலுள்ள குண்டபுரத்தைச் சேர்ந்த ஞாத்திரிய என்ற ஒரு க்ஷத்திரிய குலத்தில், சித்தார்த்தர் என்பவருக்கு மகனுகப் பிறந்தவரே மகாவீரர். இல்லற வாழ்க் கையை மேற்கொண்டு சிறிது காலம் சென்றபின்னரே, அவ் வாழ்க்கையைத் துறந்து, கிழக்கு இந்தியாவிலுள்ள பகுதிகளில் அலைந்து திரிந்து, கடுந்தவங்களை மேற்கொண்டு, பன்னீராண்டுகளின் முடிவில் ஞானத்தைப் பெற்ருர். இவ்வாறு ஞானத்தைப் பெற்ற பின்னரே, அவருக்கு மகாவீரர் அல்லது ஜீனர் (வெற்றிகொண்டவர்) என்ற பெயர்கள் ஏற்பட்டன. அவர் நிறுவிய சமயப்பிரிவினர், நிர்க்கிரந்தர்கள் (தளைகளின் நீங்கியோர்) எனப் பெயர் பெற்றனர். ஜீனரைப் பின்பற்றியமையால் அவர்களுக்கு ஜைனர் அல்லது சம னர் என்றும், அவர்களின் மதத்துக்கு ஜைனம் அல்லது சமணம் என்றும் பெயர்கள் ஏற்படலாயின. சமணர்கள் ஐந்து விரதங்களை அனுசரிக்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளனர்; அவையாவன, கொல் லாமைவாய்மை, கள்ளாமை, பற்றின்மை, பிரம சரியம் என்பன. மூன்று செம்மையான வழிகளைக் கடைப்பிடித்து, ஆன்மாக்களுக்கு விடுதலையை அளிக்கலாமென அவர்கள் கருதுவர். பரம்பொருள்

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 47
என்ற ஒன்றுக்கு சமணம் இடமளிக்கவில்லை. சம ண ரி லு ம் ஸ்வெதாம்பரர், திகம்பரர் என்ற இரு பிரிவுகள் உண்டு.
மகாவீரர் வாழ்ந்த அதே காலத்தில், நேபாள தரையில் கபில வஸ்து என்னுமிடத்தைச் சேர்ந்த சாக்கிய குலத்தில் தோன்றிய சித்தார்த்த கெளதமரும், 'உண்மை தேடி அலைந்துவந்தார். ரும்மிண்டீ என்பதற்கு அண்மையிலுள்ள லும்பினி என்பதே இவர் பிறந்த கிர்ாமமாகும். இவர் பிறந்த ஆண்டை கி. மு. 563 எனக் கொள்கின்றனர். கபில வஸ்துவின் ஆட்சியாளராக விருந்த சுத்தோ தனருக்கும், அவர் மனைவி மாயாவுக்கும் மகனகவே சித்தார்த்தர் பிறந்தார். இளமையிலேயே தாயை இழந்த சித்தார்த்தர், தன் பதினருவது வயதில் யசோதரை என்பவளை மணஞ்செய்து கொண் டார். கவலைகளே அணுகாத அரண்மனைச் சூழலிலும், சித்தார்த் தரை விரைவிற் பல கவலைகள் ஆட்கொண்டன. மூப்பு, பிணி, சாக்காடு என்ற வாழ்வின் துன்பங்களை நேரிற் கண்டறிந்த அவர், இவற்றுக்கு முடிவுகட்ட உறுதிபூண்டு, இல் வாழ்க்கையைத் தமது இருபத்தொன்பதாவது வயதில் துறந்து, காட் டு க் கே கிஞ் ர். ராகுல(ன்) என்ற குழந்தை சித்தார்த்தருக்குப் பிறந்தமையே அவரை இவ்வாறு செய்யத் தூண்டியதென்பர். துறவியாக மாறிய சித்தார்த்தர் ஆறு ஆண்டுகளாக "உண்மை தேடி யலைவாராயினர். சமயக் குருமார்களிடம் போதனை பெற்றும், கடுந்தவங்களை மேற் கொண்டும், அவர் அடைய வெண்ணிய இலக்கு எட்டிக் கொண்டே சென்றது. அவரை வருத்திய கேள்விகளுக்கு அவர் விடைகாணு தவராகவே யிருந்தார். ஈற்றில் நைரஞ்சன ஆற்றினருகில் புத்த கயா என்ற இடத்திலுள்ள ஓர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து நிட்டை யிலிருந்தபோது, அவருக்கு "ஞான ஒளி' உதயமாயிற்று. அன்றே அவர் புத்தர் (ஞான ஒளி பெற்றவர்) ஆனர், ததாகதர் (உண் மையை அடைந்தவர்) என்பதும், புத்தரையே குறிக்கும். சாக்கிய குலத்தைச் சேர்ந்த ஞானியென்பதால், "சாக்கிய முனி யெனவும் புத்தர் அழைக்கப்படுவார்.
ஞான ஒளி பெற்றபின், மன்னுயிரிடத்துள்ள பரிவால் தமக்கு வெளிச்சமான உண்மைகளை உலகோர்க்குரைக்க வெண்ணிய புத்தர் காசிக் கண்மையிலுள்ள சார்நாத்தில் அமைந்த மான் பூங்காவில் தமது முதல் அறவுரையை நிகழ்த்தினர். இவ்வறவுரை கேட்ட ஐவர் புத்தரின் சீடர்களாயினர். இவ்வாறே, துறவிகளின் கூட்டுக் குழு வான பெளத்த சங்க(ம்) தொடங்கியது. பெளத்தத் துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை இக்காலத்திலேயே புத்தர் வகுத் தார். இவற்றை 'விநய விதிகள் என்பர். அயோத்தி, பீகார் முதலான பகுதிகளுக்குச் சென்று. ஓரிடத்திலேனும் தரித்திராது; தம் அறவுரைகளை மன்னருக்கும் மக்களுக்கும் நிகழ்த்தி வரலானர்.

Page 34
48 பண்டைய ஈழம்
இவ்வாறு ஞானஒளி பெற்றபின் பரிநிர்வாணம் எய்தும்வரை அவர் வாழ்ந்த நாற்பத்தைந்தாண்டுகளையும் அறவாழி'யை இயக்கு வதிலேயே செலவிட்டார். ததாகதரின் அறவுரை கேட்ட ஆயிரக் கணக்கானேர், புத்தரின் நெறிநின் ருெழுகலாயினர். பெளத்தம் ஒரு மதமாக வளரத்தொடங்கியது. இதனிடையே, புத்தர் தமது எண்பதாவது வயதில் (கி. மு. 483ல்), குவலிநகரம் (குஸிநாரா) எனுமிடத்தில் பரிநிர்வாண மெய்தினர். (பரிநிர்வாணம் என்பது பிறப்பை அல்லது பிறப்புக்குக் காரணமான ஆசையை ஒழித்துப் பிறவா யாக்கை நிலையைப் பெறுதல் ஆகும்.) புத்தரின் பரிநிர் வாணத்துக்குப் பின் (பாலியில், பரிநிப்பாண-Parinibbana) பெளத் தம் வளர்ச்சி பெற்று, அனைத்துலக சமயமாக விளங்கிவந்துள்ளது. இவ் வளர்ச்சியைப் பற்றி இனிக் கவனிப்போம்.
i. பெளத்த மாநாடுகளும், பெளத்தத்தின் வளர்ச்சியும்
பெளத்த மதம்: பிராமணீயத்தின் உலகியற் சார்பை வெறுத்த போதும், சமணத்தின் கடுமையை பெளத்தம் கொண்டிருக்கவில்லை" பெளத்த மதத் துறவிகள் மிக முக்கிய தேவைகளை-உணவு, உடை, ஒதுக்கிடம் என்பவற்றை - தமது உடல்வலி குன்ரு திருக்க வேண் டிய அளவு பெற அனுமதிக்கப்பட்டனர். பெளத்தத்தின் மிக முக்கிய கோட்பாடுகள் "உயர்ந்த நான்கு உண்மைகள்’ என்ப வையே. துக்கம் அல்லது துன்பம் உலகமுழுவதும் வியாபித் துள்ள தெனவும், இதற்குக் காரணம் ஆசை; இவ்வாசையே மறு பிறப்புக்கும் துன்பத்துக்கும் காரணமாகின்றது எனவும், ஆசையை ஒழித்தாலே மீட்சியுண்டு; பற்றின்மையுடைய மன நிலையைப் பெறுதல் மூலமே ஆசையை ஒழிக்கலாமெனவும், இந்நிலையைப் பெறுதற்கு செவ்விய நெறியான எட்டங்கப்பாதையைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும், இந்த நான்கு உயர்வான உண்மைகள் கூறின. புத்தர் போதித்த **செவ்விய எட்டங்கப்பாதை'யில் அவர் குறிப்பிட்டவை வருமாறு: "செவ்விய எண்ணங்கள், நல்ல அவாக்கள், நன்மொழி, நன்னடத்தை, செம்மையான வாழ்க்கைத் தொழில், நல்ல முயற்சி, செவ்விய உளப் போக்கு, நற்சிந்தனை. இவ்வழியைக் கடைப்பிடிப்பதால், துன்பச் சுழலிலிருந்து விடுதலை பெற்று, பிறவித் துயர்நீங்கி, ஆசையினின்றும் தம்மை அகற்றி மிக மேலான நிர்வாணத்தை யெய்தலாம் :) கடவுள் (பரமாத்மா) ஒருவர் உலகைப் படைத்து அதை இயக்குகின்ருர் என்பதைப் புத்தர் ஏற்கவில்லை. பெளத்த மதத்தில் புத்தரே மிக முக்கிய கடவுளாகப் பின்னர் மதிக்கப்படலானர். பெளத்த மதக் கோட் பாடுகள், முந்திய பிராமணியத்தினின்று பல வகைகளில் வேறு பட்டுள்ளன. சமணத்துக்கும் பெளத்தத்துக்கும் சில ஒற்றுமைகள் இருந்த போதும், முக்கிய வேறுபாடுகளும் அவற்றினிடையே யிருக்கக் காணலாம்.

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 49
முதற் பெளத்தக் கழகம்: பெளத்தத்தின் வளர்ச்சியில், இடை யிடையே கூட்டப்பட்ட பெளத்த மாநாடுகள் முக்கியமானவை. சமயக் கொள்கையில் திரிபுகள் அல்லது முரண்கள் இருப்பின் அவற்றைய கற்றி, புத்தரின் கோட்பாடுகளின் தூய்மையைப் பாது காத்த மை இம் மாநாடுகள் செய்த ஒரு முக்கிய பணியாகும்.32 சம யக் கோட்பாடுகளைத் தெளிவாக்கியதுமன்றி, 2 ஒழுக்க விதிகளை மீறிய பிக்குகளைச் சங்கத்தினின்று நீக்கி, சங்கத்தின் நற்பெயரை அவை காப்பாற்றியும் இருக்கின்றன. இத்தகைய மாநாடுகளில் f முதலாவது மாநாடு புத்தரின் மறைவு ஏற்பட்ட ஒரு சில நாட் களில் நடைபெற்றதாக மரபுகள் கூறுகின்றன. மகதத்தின் தலை நகராகவிருந்த இராஜக்கிருகத்திலேயே இம் முதற் பெளத்தப் பேரவை கூடிற்று. 500 தேரர்கள் கூடிய இப்பேரவைக்கு, மகாகாசியப்ப தேரர் தலைமை தாங்கினர். புத்தர் நிகழ்த்திய அறவுரைகள் ஒதப்பட்டு, பின்னர் தர்மம், விநயம் என்ற இரு பிரிவுகளாக அவை தொகுக்கப்பட்டன. இவற்றுள் தர்மம் என்பதே, பெளத்த மதக் கோட்பாடுகளைக் குறிப்பதாகும்; விநய(ம்) என்பது, பெளத்த பிக்குகளுக்குரிய ஒழுக்க விதிகளைக் குறிக்கும் பகுதியாகும். தர்ம அறவுரைகள் ஐந்து பகுதிகளாகவும், விநய அறவுரைகள் ஒரு பகுதியாகவும் பாராயணஞ் செய்யப்பட்டு, பிற்காலத் தலைமுறை களுக்கு அளிக்கப்பட்டன. இதைவிட முக்கியமானது, இம்மாநாட் டிலேயே திரிபிடகம் எனப்படும் பெளத்த வேதம் தொகுக்கப்பட்ட தாகும். புத்தரின் போதனைகளையும் பொன் மொழிகளையும், சுத்த-பிடக(ம்), விநய-பிடக(ம்), அபிதர்ம-பிடக(ம்) என்கின்ற முப் பிரிவுகளாக (பிடக: கூடை) அல்லது தொகுப்புக்களாக அவை வகுக்கப்பட்டதே. இவ்வாறு, இறுதி வடிவத்தைப் பெற்ற பெளத்தக் கோட்பாடுகள் தேரவாதப் பிரிவினரின் வேதமாக மதிக்கப்பட்டு வரலாயின.
இரண்டாம் பெளத்தக் கழகம்: புத்தர் பரிநிர்வாண மெய்தியதி லிருந்து, மேலும் நூருண்டுக் காலம் கழிந்தபின், பெளத்த சங் கத்தில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டதால், அதன் ஒற்றுமை பாதிக்கப்பட்டது. வைசாலி என்ற இட்த்தைச் சேர்ந்த கிழக்குப் பகுதிக் குருமார்கள், விநய விதிகள் பத்தைத் தளர்த்துமாறு: கிளர்ச்சி செய்ததைத் தொடர்ந்தே, இதை வரவேற்காத மேற் குப் பகுதிக் (அவந்தி) குருமார்களால், மகத மன்னன் காலாசோகன் காலத்தில் இரண்டாவது பெளத்தக் கழகம் கூட்டப்பட்டது. எழு நூறு தேரர்கள் கூடி நடத்திய மாநாட்டுக்கு ரேவத-தேரர் தலைமை தாங்கியதாக இலங்கைக் காலவேடுகள் கூறும். மாநாடு விதி களேத் தளர்த்துவதைக் கண்டித்து முடிவுசெய்யவே, அம்முடிவை யேற்காத வஜ்ஜி-பிரிவைச் சேர்ந்த வைசாலிப் பிக்குகள் தேர
7 - - -

Page 35
岳门 பண்டைய ஈழம்
வாதப்பிரிவினின்றும் வெளியேறி, மஹாரங்கிகாப் பிரிவை அமைத் துக் கொண்டனர். இவ்வாறே, சங்கத்தில் முதன்முதலாகப் பிளவு உண்டாயிற்று. இவ்விரண்டாம் பெளத்தக் கழகம், சமயக் கோட்
பாட்டு நூல்களே மீண்டும் ஆய்ந்து, சுத்த-பிடகத்திற்கு இறுதி
உருவத்தைக் கொடுத்தது.
மூன்றும், நான்காம் கழகங்கள்: இதன் பின்னர் மூன்றும் பெளத்தக் கழகம் அசோகப் பெருமன்னன் காலத்தில் பாடலிபுரத்தில் கூட்டப்பெற்றது. இலங்கைக்குப் பெளத்தம் பரவியமைக்கும், அம்மாநாட்டுக்கும் நேரடியான தொடர்புண்டு. எனவே அது பற்றியும், அசோகப் பெரு மன்னன் ஆட்சி பற்றியும் சிறிது விரி வாசு அடுத்த பகுதியிற் படிப்போம். அசோகப் பேரரசன் காலத் திலேயே, பெளத்தம் உலகச் சமயங்களுள் ஒன்றுக மாறியது என் பதை இப்போது அறிந்தாற் போதும், கனிஷ்க மன்னன் காலத்தில் பெஷாவாரில் நான்காம் மாநாடு நடைபெற்றது. இதற்கும், இலங் கையில் மகாயானப் பிரிவைச் சேர்ந்த பெளத்தம் பரவியதற்கும் தொடர்பு இருப்பதால், இது பற்றியும் மீண்டும் சிறிது விவர மாகப் படிப்போம். இப் பெளத்த மாநாடுகள், சங்கத்தில் திரி வுகள் வளராமல் தடுத்து, மதக் கோட்பாடுகளேயும், குருமாருக் குரிய விநய விதிகளையும் வரையறுத்து வந்ததோடு, பிற நாடு" ளூக்குத் தூதுக்குழுக்களே அனுப்ப முடிவுசெய்து பெளத்தத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதைக் கானiாம்,
i. மெளரியப் பேரரசன் அசோகன்
மகதப் பேரரசின் எழுச்சி மகதப் பேரரசின் ஆட்சியாளராக விளங்கிய மெளரியர்' மரபில் வந்தவனே அசோகன திவால் 'சி' அரசின் எழுச்சி பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேத கால முடிவிற் பல சிறிய அரசுகஃன்க் கொண்டிருந்த வட இந்தி பாவில், கி. மு. 6ம் நூற்ருண்டில் ஒரு புதிய அரசியல் விருத்தி ஏற்பட்டது. வலிமிக்க அரசுகள் தோன்றி. அயலிலுள்ள சிறிய அரசுகளேத் தம்முடன் இண்ேக்கலாயின. "மகாஜனபத' என அழைக்கப்பட்ட பதினறு பெரிய அரசுகள் அந்த காற்ருண்டில் ஏற்படலாயின. காசி, கோசலம், அவந்தி, அங்கம், வஜ்ஜிக்கூட் டனிை, மகதம் GTIGTIGHT இம் "மகாஜன பத"க்களில் முக்கிய மானவை. இவற்றுள், கங்கைக்குச் சிறிது தெற்கே அமைந்திருத்த மகதம், சிறிது சிறிதாகத் தன்வலியைப் பெருக்கி, வடஇந்தியா வின் பெரும் பகுதியில் மேலாஃண செலுத்த முற்பட்டது. பிம்பிசார என்பவனுடைய ஆட்சியின்போது (கி. மு. 540-490) வங்கம் முத லான அயல் நாடுகள் மகதத்துடன் இனேக்கப்பட்டதால், மகத அரசின் எல்ஃகள் விரிவடைந்தன. இம் மன்னனின் காலத்தில்
 

இலங்கைக்குப் பெளத்தம் பரவல்
இராஜக்கிருகம் தலைநகராக்கப்பட்டது. மகாவீரர், புத்தர் ஆகிய இருவருமே, இவன் காலத்தில் வாழ்ந்து, தம் மதபோதனைகளே நிகழ்த்தினரெனப் படுகின்றது. பிம்பிசாரன் மகனுன அஜாதசத்துரு வின் காலத்தில் (கி. மு. 490-459) வடக்கே கங்கை வரையும் கிழக்கே கந்தகி வரையும் மகதப் பேரரசு விரிவடைந்தது. இவ ஃன்த் தொடர்ந்து ஆட்சி செய்தவர்களும், குறிப்பாக சிசு நாகன், காலாசோகன் ஆகியோர் விரிவாக்கற் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரலாயினர். இவர்களில் ஒருவனுடைய காலத்தி வேயே, பாடலிபுரம் (இப்போதைய பாட்ணு) என்ற நகர், (ங்கை யுடன் சொன நதி இஃணயுமிடத்தில் உள்ளது) தஃலநகராக்கப் !ட்டது. இம் மன்னர்களுக்குப் பின், மகாபத்மன் முதலான நந்தர்கள் மகத அரசர்களாக விளங்கினர். இவர்களுடைய ஆட்சி நடைபெற்ற போதே, கிரேக்கப் பேரரசனுண் மகா அலெக்சாந்தபின் இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்தது. வடமேற்கிந்தியாவில் பெற்ற வெற்றியுடன் முன்னேறிய அலெக்சாந்தர் மேலே கங்கைப் பள் விளக்காக்கிற் புகாதவாறு மகாபத்ம நந்தனின் விவியும், அலெக் சாந்தரின் படையில் உண்டான குழப்பமும் தடைசெய்தன. விருப்ப மின்றி அலெக்சாந்தர் பின்வாங்கியபோது, இந்தியாவில் தான் கைப்பற்றிய பகுதிகஃளச் சில சத்திராப்பிகள் (SATRAPYS) என்ற மாகாணங்களாகப் பிரித்து, அவற்றைப் பாரசீக, மசிடோ விய ஆட்சியாளரிடம் ஒப்படைத்து மீண்டான்.
'மெளரியப் பேரரசு: அலெக்சாந்தரின் படையெடுப்பு மறை ாாக மெளரியப் பேரரசின் எழுச்சிக்குத் துனே செப்தது. வட மேற்கிந்தியாவில் இராச்சியங்கள் வலியிழந்து, பிளவுபட்டு வந்து தைத் தடைசெய்து, மெளரியரின் கீழ் முழு வட்இந்தியாவும் ஒன்றுபட அது வழி திறந்தது. 'மெளரியர் அரச மரபின் முதல் மன்னனும், மெளரியப் பேரரசின் தாபகனுமான சந்திரகுப்த மெளரியன், முதவில் நந்தன் ஒருவனுக்குக் கீழ்ப் பணியாற்றிப் பின்னர் அவனுடைய சேஃனத் தஃலவனுக விளங்கினுன் , அலெக் சாந்தர் இந்தியாவினின்றும் வெளியேறியபோது இருந்த நிஃபைச் சந்திரகுப்தன் உடன் பயன்படுத்தினுன் சானக்கியன் (கென்டில் பயன்-இவனே அர்த்த சாஸ்திரம் என்பதை எழுதினுள்.) என்று அரசியல் மதியூகியின் துணையுடன் ஒரு பெரும் படையைத் திரட்டி முதலில் அலெக்சாந்தரின் அதிகாரிகளேத் (தஃலமைப்பணியாளர்களே) தோற்கடித்து, பஞ்சாப் பகுதியைத் தனதாக்கினுன் பின்னர், மக தத்துக்கெதிரே போர் தொடுத்து, அதன் அரசனுக விளங்கிய ஒரு நந்தனேப் புறங்கண்ட சந்திரகுப்தன், மகதப் பேரரசை இஃணத் துக் கொண்டான். சந்திரகுப்தனது அதிகாரம் ஓங்குவதை அலெக் சாந்தரின் கீழைப் பேரரசின் ஆட்சியாளனுக விளங்கிய செலியூக் கஸ் நிகேற்றர் பொறுக்காது போர் தொடுக்க ஆயத்தமானுன், சந்திர

Page 36
52 பண்டைய ஈழம்
குப்தனுக்கும் இவனுக்குமிடையே நடைபெற்ற போரின் முடிவில், செலியூக்கஸ் தனது ஆளுகையின் கீழிருந்த மேற்கிந்தியாவின் பகுதிகளைச் சந்திரகுப்தனுக்குக் கையளித்துவிட்டான். சந்திரகுப் தன் ஆட்சியின்போது (கி. மு. 322-298), மெளரியப் பேரரசு மேற்கே காபுல் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே கங்கைக் கழிமுகம் வரை வியாபித்திருந்தது. சந்திரகுப்த மெளரியனுல் எழுப்பப் பட்ட பேரரசு, பிந்துசாரன் என்ற அவனது மகன் காலத்தில் (கி. மு. 298-273) மேலும் விரிவடைந்தது. குறிப்பாக, தக்கணம் என்ற நிலப்பகுதி இவனுலேயே இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அசோகன்: இத்தகைய ஒரு பெரும் சாம்ராச்சியத்தின் ஆட்சி யுரிமையையே கி. மு. 274ல் அசோகன் பெற்ருன். தந்தை பிந்து சாரனின் கீழ் உச்சயினியில் அரசப்பதிலாளனுகக் கடமையாற்றிய பின், தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து பேரரசைப் பெற் ரு ன். இருப்பினும், கி. மு. 269 லேயே இவனது முடிசூட்டு வைப வம் நடைபெற்றதாகத் தெரிகின்றது. இடையேயுள்ள நான்காண் டுகள், அரசுரிமை குறித்துச் சகோதரரிடையே எழுந்த தகராறுகளைத் தீர்ப்பதில் கழிந்திருக்கவேண்டுமெனக் கருதப்படுகின்றது. தனது உரிமையை நிலைநாட்டிய பின், தன் முன்னேரின் கொள்கையைப் பின்பற்றி, பேரரசின் வலிமையைப் பெருக்குவதிலேயே, ஆட்சி யின் தொடக்க காலத்தைச் செலவிட்டான். பட்டமெய்திய ஒன்ப தாவது ஆண்டில், இதுவரை பேரரசுக்குட்படாதிருந்த கலிங்கம் மீது அசோகன் போர் தொடுத்தான். கலிங்கப் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானேர் கொலை வாளுக்கிரையாகினர்; மற்றும் பலர் கைதிகளாக்கப்பட்டனர். அசோகன் இப்போரில் எய்திய வெற்றி யின் பயணுக, கலிங்கம் மெளரியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இவ்வாரு க, மெளரியப் பேரரசு தன் வளர்ச்சியில் உச்ச கட்டத்தை அசோகன் காலத்தில் அடைந்தது. தென்னிந்தியாவில் வட பெண்ணையாற்றுக்குத் தெற்கேயுள்ள தமிழ்நாட்டையும், வடமேற் கிந்தியாவில் ஆப்கானிஸ்தானத்தின் பெரும் பகுதியையும் தவிர்ந்த இந்தியா முழுவதும் அவனது ஆணையை ஏற்றது. இவனது ஆட் சிப் பரப்பின் எல்லைகளை இலக்கிய ஆதாரங்களைவிட நாடு முழுவ தும் பரந்து காணப்படும் அவனது ஆணைகள் தாங்கிய கற்பாறை களையும் கற்றுாண்களையும் கொண்டு நிதானிக்கலாம். இப் பரந்த சாம்ராச்சியத்தை நல்லமுறையில் நிருவகிப்பதற்கு ஏற்ற ஒழுங்கு களைச் செய்தமையால் அசோகனுடைய ஆட்சியின்போது குழப் பங்கள் அதிகம் ஏற்படாது அமைதியே நிலவியது.
. . . برجعفر .
கலிங்கப்போரின் விளைவுகள்: கலிங்கப் போர் அசோகனது அர சியல் வாழ்விலும் இந்திய வரலாற்றிலும் ஒரு பெருந் திருப்பமாக விளங்கியது. போரில் நடைபெற்ற படுகொலைகள், களத்தில் பாய்ந்த

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 53
*“
அசோகனது பேரரசு
குருதிவெள்ளம், அங்கவீனப்படுத்தப்பட்டோர் பட்ட வேதனை, தம் குடும்பங்களினின்றும் பிரிக்கப்பட்டோரின் ஆருத துயர் என் பனவெல்லாம் அசோகனது மனச்சான்றை உறுத்திய கோர நிகழ்ச்சிகளாகும். பெருங் கழிவிரக்கம் அவனை ஆட்கொண்டது. படுகொலைகளையும் உயிர்ச் சேதத்தையும் நாடுகடத்தலையும் உண்டு பண்ணும் போர்களை, நாடு கைப்பற்றுவதற்காக இனி மேற்கொள்வ தில்லையென்ற முடிவுக்கு வந்தான். தன் அதிகாரத்தின் உச்ச நிலையிலிருந்து கொண்டு இந்த முடிவுக்கு வந்தமையே, அவனது பெருமைக்குச் சான்ரு கும். வரலாறு கண்ட பெருமன்னர்களுள் இவனுக்குத் தனியிடம் அளிக்கப்படக் காரணம் இதுவே. போரின் முடிவில் இவனுக்கிருந்த மனநிலையில், உபகுப்தரென்ற பெளத்த

Page 37
54 பண்டைய ஈழம்
பிக்குவின் தொடர்பு கிட்டியது. புத்தரின் அறநெறி அசோகனக் கவர்ந்தது. விரைவில் அம்மதத்தை அசோகன் தழுவிக்கொண் டான். இது பெளத்தத்தின் வரலாற்றில் அதிமுக்கியம் வாய்ந்த நிகழ்ச்சியென்பதை விரைவிற் காண்போம் 'தர்மத்தில் அவன் கொண்ட பற்றுதலால், அதைப் போதிப்பதிலும், அதன்படி ஒழு குவதிலுமே அதிக கவனத்தைச் செலுத்தினன். முந்திய மகத மன் னர்களின் திக்-விஜயங்களுக்குப் பதில், தர்ம-விஜயங்களையே, கலிங் கப் போருக்குப்பின் அசோகன் மேற்கொள்ளலானன். மறத்தொழில் விடுத்து, அறவாழி தரும் உண்மை வெற்றிகளையே நாடலானன். யுத்தபேரிகையின் முழக்கங்களுக்குப் பதில், தர்ம முழக்கங்களே ஒலிக்கலாயின. மகத மன்னர்களின் மரபு வழிக் கொள்கையான ஆக்கிரமிப்புக் கொள்கை அறவே கைவிடப்பட்டு, புது நெறி கடைப்பிடிக்கப்பட்டது.
அவனது ஆட்சி: அசோகனது பாலனத்தின் சிறந்த டண் பு யாதெனில், தருமநெறியைப் போதிப்பதோடு அசோகன் நில்லாது, நாளாந்த பாலன, நீதி அலுவல்களிலும் அதைப் பின்பற்றி யொழுகி ய்மையாகும். அரச குடும்பத்தினர் வன விலங்குகளை வேட்டை யாடுதலை நிறுத்திவைக்கவும் அவற்றின் பாதுகாப்புக்கெனச் சில காலங்களில் வேட்டையாடுதலை அறவே தடுத்துவைக்கவும் செய் தான். வேள்விகளில் மிருகங்கள் பலியிடப்படுவதையும் நிறுத்தக் கட்டளை பிறப்பித்ததோடு, மனிதருக்கும் மிருகங்களுக்கும் வைத்தி யத்துக்குப் பயன்படக்கூடிய மூலிவகைகளைக் கிடைக்கச் செய்வ தற்கும் ஒழுங்குகள் செய்தான். மருத்துவ மனைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. பிரயாணிகளின் வசதிகளைக் கருத்திற் கொண்டு, பெருந்தெருக்களின் இரு மருங்கிலும் நிழல் தரு மரங்களை நாட்டுவித்த துமன்றி, ஆங்காங்கே மடங்களையும் கிணறுகளையும் கட்டச்செய்திருந்தான். நிருவாகம் தண்ணளியுடையதாகவும், நீதிமுறை காருண்யத்தைக் காட்டுவதாகவும் மாற்றியமைக்கப்பட் டன. தொலைவிலுள்ள மாகாணங்களில் குடிகளை அதிகாரிகள் வருத்தாது பார்ப்பதற்குத் தலைநகரிலிருந்து விசேட அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். சகல மதப் பிரிவினருக்கும் தாராளமாக நன் கொடைகளை மன்னனும், அரச குடும்பத்தவரும் அடிக்கடி செய்து வந்தனர். ஏற்கெனவே யிருந்த அரசாங்க அதிகாரிகளுடன், 'தர்ம மகாமாத்திரர்’ என்ற அதிகாரிகளைப் புதிதாக நியமித்து, ஒழுக்கம் பற்றிய போதனைகளையும் அறவுரைகளையும் மக்களுக்குத் தவருது செய்வித்தான். அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றி 'அரசனுக்குச் செய்திகொடுக்க அறிக்கையாளர் போன்ற அதிகாரிகள் கடமையாற்றி வந்தனர். மனித அக்கறையுடன் கூடிய பரிவு, அன்பு முதலான பண்புகளைக் கொண்ட இப் பெருமன்னனது ஆட்சியில் மக்கள் மட்டுமன்றி, விலங்குகளும், பறவைகளும் தண்ணளியைப் பெற்றன.

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 55
அசோகனது ஆணைகளும் அவனது தருமமும்: அசோகனது ஆட் சியைப் பற்றி, குறிப்பாக அசோகன் போதித்த தருமத்தைப்பற்றி யறிய அவன் விட்டுச்சென்ற ஏராளமான கல்வெட்டுக்கள் உதவு கின்றன. இக் கல்வெட்டுக்கள் கற்பாறைகளிலும், தனிக்கற்றுாண் களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. 'தர்ம ஸ்தம்பங்கள்’ என்ற அாண்கள் விசேடமாக நாட்டப்பட்டு, அவற்றில் குடிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்ட ஆணைகள், அறவுரைகள் முதலானவை பொறிக்கப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் காணப்பட்ட இடங்களைக் கொண்டு, அசோகனது ஆட்சி பரந்திருந்த பகுதியின் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அவன் பெளத்தத்தைத் தழுவியிருந்தும், தன் குடிகளுக்கு அவன் போதித்துவந்த தருமம் பெளத்தத்துக்குச் சிறப்பானதாகவிராது, ஏனைய மதங்களுக்கும் ஏற்புடைய ஒரு பொதுவான தருமமாகவிருத்தலை நாம் காணலாம். புத்தர் வற் புறுத்திய அஹிம்சை, மைத்திரேய (நடுவழி) என்பவையே அசோ **ஆ தருமத்தின் அடிப்படைகளாகும், அன்பு, அருளாட்சி, திTராண்மை, பரிவு, கீழ்ப்படிவு முதலான பண்புகள் வலியுறுத்தப் பட்டன. உயிரினங்களைக் கொல்லாமை, உண்மை பேசுதல், பெற் ருேர்க்கும் மூத்தோர்க்கும் கீழ்ப்படிதல், பிராமணர்களுக்கும் துறவி களுக்கும் உரிய மரியாதைகளைச் செலுத்தல் முதலான நல்லொழுக் கங்கள் போற்றப்பட்டன. அடிமைகள், பணியாளர் என்பவர்க ளிடம் அன்பைக் காட்டுமாறும் அசோகன் அறிவுறுத்தியுள்ளான், தன் குடிகளின் ஒழுக்க மேம்பாட்டில் அசோகன் காட்டிய அக்கறைக் கும், அதைச் செயற்படுத்த அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் திறனுக்கும் நிகராக வேறெந்த மன்னனும் அக்கறையோ, செயல் திறனே கொண்டிருந்தானெனக் கூறவியலாது.
சமயக் கொள்கை: அசோகன் பெளத்த மதத்தைத் தழுவி, அதன் கோட்பாடுகளை ஆர்வத்துடன் பயின்றதோடு, அறிவுசான்ற குருமார்களைச் சார்ந்து விளக்கமும் பெற்ருன் . தேவானம்பிரிய, பிரியதர்சன போன்ற அடைமொழிகள் அவனுக்கிருந்தமையும் பெளத்தத்தில் அவனுக்கிருந்த பற்றைக்காட்டும். விகாரயாத்திரை களுக்குப் (மகிழ்வுலாக்கள்) பதில் 'தர்ம யாத்திரை’களையே அவன் மேற்கொண்டான். அப்படி அவன் சென்ற வேளைகளில், புத்தரு டன் தொடர்புடைய புனித இடங்களுக்குச் சென்று, புத்தரை வழிபாடுசெய்து வரலானன். மரபுகளின் படி, அவன் நிறுவிய பெளத்த விகாரைகள், கோவில்கள், தாகபங்கள் எண்ணிலடங் காதவை. துறவோரகங்களை நடத்தப் பொன் முதலானவற்றைத் தானங்களாக வழங்கினன். பெளத்த தர்மத்தைப் பிறருக்கு விளக்கினலே, அது நிலைக்கும் என்ற கருத்தைக் கொண்டவன் அவன்; இப் பணியைக் குருமார்கள் மேற்கொள்வதற்கு உதவியாகச் சில உத்தியோகத்தரை அசோகன் நியமித்தான் சங்கத்தில் பிளவுகள்

Page 38
56 பண்டைய ஈழம்
தோன்ருவண்ணம் சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தான். பெளத்த மத உபாசகனுக்குரிய தன்மைகளுடன் இறுதிவரை வாழ்ந்தான். அதே வேளையில், சமணம், இந்துமதம் முதலான சமயப் பிரிவினர்க்கும், துறவிகளுக்கும் சகல வசதிகளையும் அளித்து, தன் பரந்த உளப்போக்கை அறியப்படுத்தினன். இத்தகைய பரந்த சமய நெறியை அசோகன் அக்காலத்திற் கைக்கொண்டது அசோகனது பெருமைக்குரிய காரணங்களில் முக்கியமானதாகும்.
3ம் பெளத்தக் கழகம்: இவனுடைய சமயப் பணிகளில், இவன் காலத்தில் நடைபெற்ற பெளத்தக் கழகத்தைப் பற்றி இறுதியாகக் கூறுவோம். அசோகன் வழங்கிய சமய மானியங்களால் கவரப் பட்ட பலர் சங்கத்தில் சேர்ந்து, அதன் புனிதத்துக்கும் நற்பெய ருக்கும் மாசு கற்பித்தனர். எனவே, போலிக் குருமார்களை அகற் நிறவும், தேரவாதக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்தவும் ஒரு மாநாடு பாடலிபுரத்தில் அசோகனது ஒன்பதாவது ஆட்சியாண்டில் கூட்டப்பட்டது. அசோகனது நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் பாத் திரமான மொகலிபுத்ர திச தேரர் இம் மூன்ரும் பெளத்த மாநாட் டுக்குத் தலைமை தாங்கினர். (வடஇந்திய பெளத்த மரபுகள் குறிப் பிடும் உபகுப்தர் இவராகவிருக்கலாம்.) மொக லிபுத்த திசதேரர் ஆலோசனைப்படி போலிக் கொள்கையாளர் பலர் சங்கத்தினின்றும் வெளியேற்றப்பட்டனர். ஏழாண்டுகளாக நடைபெரு திருந்த ‘உபோசத' வைபவம் முதலான வழமையான சமய நிகழ்ச்சிகள் இதன்பின் நடைபெறலாயின. பாலியில் உள்ள (தேரவாத) பெளத் தக் கோட்பாடுகளும் இம் மாநாட்டிலேயே இறுதி உருவத்தைப் பெற்றன. இம்மாநாட்டில் சங்கத்தினின்றும் வெளியேற்றப்பட்ட பிக்குகள், மகாசங்கிகப் பிரிவு முதலான தேரவாதமல்லாத பிரிவு களைச் சேர்ந்து கொண்டனரெனப்படுகின்றது. மாநாட்டின் இறுதி யிற் செய்யப்பட்ட மற்ருெரு முக்கியமான முடிவின் படி, மெளரி யப் பேரரசின் எல்லைப்புற மாகாணங்களுக்கும், வெளியேயுள்ள நாடுகளுக்கும் சமயப் பரப்புக் குழுக்களையனுப்பி, பெளத்தத்தைப் பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காஷ்மீரம், கந்தாரம், மைசூர் முதலான எல்லைப்புற நாடுகளுக்கும், பர்மா (ஸ்வர்ணபூமி) கிரேக் கம் முதலான வெளிநாடுகளுக்கும் இக் குழுக்கள் அனுப்பப்பட்ட தாகக் கூறப்படுகின்றது. ஒரு முக்கிய தேரரைத் தலைவராகவும் அவருடன் நான்கு பிக்குகள் சேர்ந்து ஒரு குழுவிற் சென்று, அது சென்ற நாடுகளில், சங்கத்தில் புதிய பிக்குகளைச் சேர்த்துக் கொண்டது. இவ்வாறு அனுப்பப்பட்ட குழுக்களில், இலங்கைக்கு வந்த குழுவுக்கு மகிந்த தேரர் (அசோகனது மகன் எனக் கருதப் படுபவர்) தலைவராக விளங்கினர். இக் குழுக்கள் அனைத்துள்ளும் இலங்கை வந்த குழுவே பெரும் வெற்றிபெற்றதாகத் தெரிகின்றது. மகிந்தரின் குழு இலங்கை வந்த வரலாற்றை அடுத்த பகுதியிற்

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 57
சிறிது விரிவாகக் கவனிப்போம். அசோகன் காலத்தில் மொகலி புத்த திசரின் தலைமையில் நடைபெற்ற பாடலிபுர மாநாடு மேற் கொண்ட நடவடிக்கைகளாலேயே, பெளத்தம் இந்தியாவின் பல பாகங்களுக்கும் அயல் நாடுகளுக்கும் பரவி, அதிக செல்வாக் கெய்தியது எனலாம். い
அசோகன் உலகையாண்ட பெருமன்னர்களின் நிரலில் ஒரு தனி யிடத்தைப் பெற்றுள்ளான். இதற்கு அவன் ஈட்டிய இராணுவ வெற்றியோ, அன்றி அவன் ஆட்சிசெய்த பேரரசின் பரப்போ காரணமாகாது. தனது நீண்டகால ஆட்சியின்போது (கி. மு. 274232), அவன் கடைப்பிடித்த ஆட்சிக்கொள்கைகளும், குடிகளின் ஒழுக்க மேம்பாட்டுக்காக அவன் போதித்த "தருமமும், மக்களின் ஆத்மீக வளர்ச்சியில் அவன் காட்டிய ஈடுபாடும் அவனுக்குத் தனி யிடத்தை யளித்துள்ளன. அவன் பெளத்தத்தைத் தழுவி அதன் வளர்ச்சிக் குதவியதால், அவனுடைய அரசியல் வாழ்வும், அதே வேளையில் இந்திய வரலாறுமே பெரும் மாறுதல்களுக்குள்ளாயின. பெளத்தத்தால் “பேரரசரின் புகழ் ஓங்கிற்று; பேரரசரின் முயற் சியால் அம்மதம் ப்ரவிற்று" என வரலாற்ருசிரியர் ஒருவர் இவ் வுண்மையை அழகுபடக் கூறியிருக்கின் ருர். உலக வரலாற்றை எழுதிய வெல்ஸ் என் பாரும், ‘உலக வரலாறு சண்ட மன்னர்களில் அசோ கனே சிறந்த வன்' என அசோகனைப் பாராட்டியமைக்கும், அவனது ஆட்சியின் தனிப் பண்புகளே காரணமாகும்.
iy. பெளத்தம் இலங்கைக்குப் பரவியமை
தேவானம்பிய திசன்* காலத்துக்கு முன்பே, இலங்கையில் பெளத்தத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் இருந்திருத்தல் கூடும்; பெளத்தத்தைப் பின்பற்றியவர்களும் ஆங்காங்கே வாழ்ந்திருக்க லாம்; இருப்பினும், பெளத்தம் புகுத்தப்பட்டதை இம்மன்னன் காலத்தில் (கி.மு. 3ம் நூற்.) நிகழ்ந்ததாகவே கண்க்கிடுவர். மெளரி யப் பேரரசன் அசோகனும், இலங்கை மன்னன் தேவானம்பிய திசனும் சம காலத்தவர்களாக விளங்கி, தமக்கிடையே நல்லுறவை வளர்த்து வந்தமை, பாடலிபுரத்திற் கூடிய மூன்ரும் பெளத்தக் கழகத்தைத் தொடர்ந்து இலங்கைக்குப் பெளத்தம் பரவியமை என்பவை பற்றிய மரபுகளை வைத்தே இப்பகுதியில் வரும் நிகழ்ச் சிகளைக் கூறவேண்டியுளது. இலங்கைக் காலவேடுகளிற் பதிவு * ‘தேவானங் பிய" என்பதற்கு "கடவுளுக்கு விருப்பமான? என் பதே பொருளெனத் தெரிந்துகொண்டால், மாறுபாடான வகை யில் இதை எழுத நேரிடாது. வடமொழியில், "தேவானம் ப்ரிய என வருதல் காண்க.
SR

Page 39
58 பண்டைய ஈழம்
பெற்ற இம் மரபுகள், வடஇந்திய மரபுகளில் இடம்பெறவில்லை. இலங்கைக்கு வந்த தேரவாதப் பிரிவைச் சேர்ந்த பெளத்தம் எய் திய வளர்ச்சிகளை இலங்கைக் குருமார்களே அக்கறையுடன் பேண வேண்டியவர்களாகவிருந்தனர். எனவே, இந்நிகழ்ச்சி பற்றி இலங்கைக் காலவேடுகளில் வரும் முக்கிய செய்திகள் பெரும்பாலும் உண்மைச் செய்திகளே என்பர்; இந் நிகழ்ச்சியையும், இதனுடன் தொடர்புடைய மகிந்ததேரர் போன்ருேரையும் மேன்மையுடன் நோக்கியதன் விளைவாக, இயல்பாகவே சில அதிசய நிகழ்ச்சிகள் இவ்வுண்மைச் செய்திகளுடன் கலந்துவிட்டன எனவுங்கூறுவர். எனினும் இவ்வுண்மைச் செய்திகளைப் பிரித்தெடுப்பதில் தொல்லை யெதுவுமில்லை. இச் செய்திகள், ஒரோவிடத்து இந்தியப் பொறிப் புக்களால் உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளன. va
இலங்கைக்கு மகிந்த தேரர் தலைமையில் பெளத்தமதப் பரப் புக் குழு வருமுன், அம்மதம் பரவுவதற்கேற்ற சூழ்நிலை அசோகன்"திசன் உறவால் ஏற்பட்டிருந்த தென்பர். தேவானம்பிய திசன் தான் அரசெய்தியவுடன், பேரரசன் அசோகனுக்கு, விலையுயர்ந்த வெகுமதிகள் பலவற்றுடன், ஒரு தூதுக்குழுவை அனுப்பிவைத் தான். இவ்வாறு சென்ற தூதுவர்களுக்குத் தலைவனுக, திசனது நெருங்கிய உறவினனன (மருமகன்) அரிட்டன் விளங்கினன். இலங் கையின் வடகரையிலுள்ள ஜம்புகோலவிற் கப்பலேறி, இந்தியாவின் கீழைக்கரையோரமாகச் சென்று, கங்கைக் கரையிலுள்ள தாமிர லிப்தித் துறையை அடைந்து, அங்கிருந்து பாடலிபுரத்தை இக் குழு அடைந்தது. குழுவினர் கொடுத்த வெகுமதிகளை நன்றியறித லுடன் அசோகன் பெற்றுக்கொண்டு, அக்குழுவினரைத் தக்கவாறு உபசரித்து, உயர் பட்டங்களையும் அவர்களுக்கு வழங்கினன் . "சேனைத்தலைவன்’ பட்டத்தை அரிட்டன் பெற்றன். குழுவினர் இலங்கைக்குத் திரும்பியபோது, திசனது முடிசூட்டு விழாவுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் அசோகன் அனுப்பிவைத்தான். இதனுடன், பின்வரும் செய்தியையும் அவர் களிடம் இலங்கை மன்னனுக்கு அசோகன் அனுப்பிவைத்தான்: “புத்தரிடத்தும், அவர் தர்மத்திலும், சங்கத்திலும் நான் சா ணடைந்துள்ளேன்; சாக்கியன் மகனது சமயத்தில் உபாசிகளுக என்னைத் தெரியப்படுத்தியுள்ளேன். மனிதருட் சிறந்தவனே, உன் மனதையும் நம்பிக்கையுடன் மாற்றி, மணிகளுட் சிறந்தனவான இவற்றில் (மும் மணி அல்லது திரிரத்தினம்: புத்தர், தர்மம், சங்கம்) நீயும் புகலடைவாயாக!' திசன் தனது தூதுவர் கொணர்ந்த அணிகலன்களுடன் விரைவில் முடிசூடிக் கொண்டான்; முடிசூடிய ஒரு மாத காலத்தில் மகிந்தரின் தூதுக்குழு இலங்கையை அடைந் தது. மகாவம்சத்திற் கூறப்படும் மரபுக் கதையில் அடங்கிய செய் தியே மேலே சுருக்கித் தரப்பட்டுள்ளது. அசோகனது பொறிப்

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் i59
புக்களில் இலங்கையிலிருந்து சென்ற தூதுக்குழு பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இருந்தும், இலங்கை மரபு குறிக்கும் செய்தி உண்மைச் செய்தியாகவே யிருக்குமெனக் கொள்வர். இஃதுண்மை யாயின், திசனுக்கும் அசோகனுக்குமிடையே யிருந்த உறவுகள் பெளத்தம் பரவ உதவின எனக்கொள்வதில் தவறிருக்காதெனலாம்.
இலங்கைக்குப் பெளத்தத்தைப் பரப்பிய தூதுக்குழுவின் தலைவ் ரான மகிந்த தேரர், இலங்கைப் பெளத்தர்களால், புத்தருக்கு அடுத்தபடியாக உயர்வாக மதிக்கப்படுபவர். இலங்கை மரபுகள் அவரை அசோகனது மகனகக் கொள்கின்றன. (வேறு மரபுகளின் படி, அவர் அசோகனின் தாய்வழிச் சகோதரராகக் கொள்ளப் படுவார்.) பாடலிபுர பெளத்த மாநாடு இயற்றிய முடிவின்படி , பிற நாடுகளுக்குப் பெளத்தத்தைப் பரப்பக் கருதியபோது, இலங் கைக் குழுவுக்கு மகிந்தரே நியமிக்கப்பட்டார். பேரரசனது நெருங் கிய உறவினரொருவரைத் தலைமை தாங்க வைத்தமை இக்குழு வுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்தைக் காட்டுமென்பர். மகிந்தரின் இரு உறவினரும் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெற்றனர். (சுமன என்ற சாமணேரரும், பண்டுக என்ற உபாசகருமே அவ் விருவராவர்.) மகிந்தரை விட, வேறு நான்கு பிக்குகளும் குழுவில் இருந்ததால், புதிய குருமார்களைச் சங்கத்திற் சேர்க்க ஏதுவாக இருந்தது. இலங்கைக் குழுவுக்குத் தலைமைதாங்கு மாறு மகிந்தர் நியமிக்கப்பட்டபோது, அவருக்கு முப்டத்திரண்டு வயது நிறைந் திருந்தது; உயர் குருவாக அபிஷேகம் பெற்றுப் பன்னிராண்டுகள் கழிந்திருந்தன. மகிந்தர் g2.-L.- 3JT Lq. tLurT dj5 இலங்கை க்குப் புறப் படாது, விதிசா சென்று தன் தாயைச் சந்தித்து, பின் விதி சகிரி விகாரையில் (சாஞ்சியிலுள்ளது) தங்கியிருந்தார். இலங்கையில் முடசிவன் இறந்து, திசன் அரசெய்தியதை யறிந்ததும் இலங்கைக் குப் புறப்பட்டார். முடசிவன் மூப்பெய்தியிருந்தமையும், இளவய தினனன திசன் பெளத்தக் கோட்பாடுகளை விளங்கி அவற்றை நிலைபெறச் செய்யும் ஆற்றல் கொண்டவன்’ என்பதுமே மகிந்தர் தன் வருகையைச் சிறிதுகாலம் பின்போடக் காரணமென்டர்.
'மிசாக பர்வதம்’ எனப்பட்ட மிகிந்தலையிலேயே மகிந்த தேர ரும் திசனும் முதலிற் சந்தித்ததாகக்"காலவேடுகள் குறிப்பிடுகின் றன. இவ்வரலாற்றிற் கலந்துள்ள அற்புத நிகழ்ச்சிகளை நீக்கி நாம் நோக்கும்போதும், இம் முதற் சந்திப்பு வரலாற்று முக்கியம் பெற்றதென்பது புலப்படும். மகிந்தருக்கும் திசனுக்கும் நிகழ்ந்த உரையாடலில் தி சனது அறிவுப் பக்குவம் மகிந்தருக்குப் புலப் பட்டது. இதன் பின் பெளத்த தருமத்தின் ஒரு பகுதியை (சூல ஹத்திப தூபம-சுத்த என்பதை) மகிந்தர் போதித்தார். இதன்

Page 40
60 பண்டைய ஈழம்
மூலம் பெளத்தக் கோட்பாடுகளில் முக்கியமான சிலவற்றைத் திசன் அறிந்து கொண்டான். இதன் பின் திசனும், அவனது பரி வாரத்தினரும் பெளத்தத்தைத் தழுவிக் கொண்டனர். பெளத் தத்தைப் பரப்புவதற்கான முதன் முயற்சி பெருவெற்றியைத் தந்ததெனலாம். மன்னன் பெளத்தத்தைப் பின்பற்றியதனுல், அம்மதம் நாட்டிற் பரவுதல் இலகுவாயிற்று.
திசன் விடுத்த அழைப்புக்கிணங்க மகிந்தர் மறுநாள் தலைநகர் சென்று, அரச குடும்பத்தவரை முக்கியமாகக் கொண்ட பெருங் கூட்டமொன்றில், பெளத்த மதப் போதனைகளை நிகழ்த்தினர். தலைநகரிலுள்ள மகாமேகவனத்தில் த ங் கி யி ரு ந் த மகிந்தர் தொடர்ந்து சில நாட்களாக அங்கு குழுமிய ஆயிரக் கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதனைகளை நிகழ்த்தி அவர்களைப் பெளத்தத்தைத் தழுவச் செய்தார். மகிந்தர் சங்கத்தில் பலரைச் சேர்த்துக்கொண்டார். சங்கத்துக்கென மன்னனுல் வழங்கப்பட்ட மகாமேகவனத்தை ஏற்ற மகிந்தர், அங்கே மகாவிகாரையின் உறுப்புக்களாகப் பின்னர் விளங்கிய பல கட்டிடங்களை நிறுவுதற் குரிய இடங்களைக் குறித்தார். இவ்வாறு தோன்றிய மகா விகாரையே, இலங்கையில் தேரவாத பெளத்தப் பிரிவினர்க்குரிய நிலைக்களஞக வும், ஒரு பெருங் கல்வி நிலையமாகவும் நெடுங்காலம் விளங்கியது. மழைக்காலத்தைக் கழிப்பதற்காக, மகிந்தரும் மற்றைய குருமாரும் மிகிந்தலிைக்கேகினர். மகிந்தர் மிகிந்தலை க்குச் சென்ற அதே நாளில் அரிட்டன் என்ற அமைச்சனும், மற்றும் ஐம்பத்தைந்து பேரும் "சங்க”த்திற் சேர்ந்தனர். இவ்வாறு "சங்கம்" நிறுவப்படவே, பெளத்த “சாசன‘வும் இலங்கையில் நிலைபெறலாயிற்று. இந்த மகா அரிட்ட தேரரே, மகிந்தருக்குப் பின் இலங்கைச் ‘சங்கத்” திற்குத் தலைவரானர்.
மழைக்காலம் முடிவுற்றதும், மகிந்தர் தலைநகர் மீண்டு, பொதுமக்களின் வழிபாட்டுக்குரிய சின்னங்கள் இன்மையைத் திச னிடம் குறிப்பிட்டார். மகிந்தரின் ஆலோசனைப்படி சுமன என்ற சாமணேரர் அசோகனிடம் சென்று, புத்தரின் தாடை யெலும் பு பிற எலும்புகள், அவருடைய ஐயக்கலம் (பிச்சா பாத்திரம்) ஆகிய தாதுக்களைப் பெற்றுவந்தார். இவற்றுள், தாடை யெலும்பை வைத்து நிறுவப்பட்ட தாகபமே* தூபாராம சேத்திய வாகும். இதுவே இலங்கையில் நிறுவப்பட்ட முதல் தாகபமாகும். தாதுக்
* தாது + கர்ப்ப(ம்) என்பதே தாகப(ம்) என வந்தது. தாது கோபம் எனவும் இது தவருக அழைக்கப்படுகின்றது. தாகப என் பது சேத்திய அல்லது (ஸ்)துாப(ம்) எனவும் வழங்கப்படும்.
விகாரை என்பதற்கே ஆராம என்ற சொல் வழங்கப்படும்.

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 61
களை முதலில் மிசாக மலையில் (மிகிந்தலையில்) வைத்திருந்தே பின் னர் அனுராதபுரத்திற்குக் கொண்டுவரப்பட்டதால், அம்மலே க்கு சேத்திய கிரி என்ற பெயர் ஏற்பட்டது. -
இவற்றுக்கு முன்பாக, அனுலா என்ற இளவரசியும் மற்றும் பெண்களும், சங்கத்திற் (பிக்குணிகளாகச்) சேர்வதற்கு விருப்பந் தெரிவித்தனர். இவர்களின் விருப்பத்தை மகிந்த தேரர் தம்மால் நிறைவேற்ற முடியாது கண்டு, இந்தியாவிலிருந்து தன் சகோதரி யான சங்கமித்திரை என்ற தேரியை வருவிக்க, திசனது தூதுவர் களை அசோகனிடம் அனுப்பச் செய்தார். இம்முறையும் அரிட் டனே இந்தியா சென்ற குழுவுக்குத் தலைமைதாங்கிச் சென்ருன். சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பவும், போதி மரத்தின் கிளே யொன்றைக் கொடுத்தனுப்பவும் இசைந்த அசோகன், தானே நேரிற் சென்று போதி ம ரத் தி னி ன் று கிளையை வெட்டுதலை மேற்பார்வை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சங்கமித்தையுட *னும், பிற பிக்குணிகளுடனும் போதி மரக் கிளே யுடனும் ஜம்புக்கோலவை யடைந்த இலங்கைக் குழுவைத் திசன் துறைமுகத் துக்கே சென்று வரவேற்ருன் எனப்படுகின்றது. தலைநகர் வரை, மிகவும் சிறப்பான முறையில் ஊர்வலத்திற் கொண்டு செல்லப்பட்ட போதி மரக் கிளையானது, அங்கே அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நாட்டப்பட்டது. இந்த வைபவத்துக்கு நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்தவர்களும் சமுகம் கொடுத்திருந்தனர். கதிர் காமத்தையும், சந்தண காமத்தையும் சேர்ந்த கடித்திரியரும், வட பகுதியைச் சேர்ந்த திவக்க என்ற பிராமணரும், அசோகன் அனுப்பியிருந்த உயர்குடியின்ரும் இவ் வைபவத்திற் கலந்து கொண் டனர். போதி மரம் நாட்டப்பெற்றமையும், இலங்கையிற் பெளத் தம் நிலைபெற்று வந்தமைக்கு மிகவும் உதவிய மற்ருெரு நிகழ்ச்சி யாகும். இலங்கைப் பெளத்தர்களின் வழிபாட்டு முறைகளில் இன்றுவரை இது முக்கிய இடத்தைப் பெற்றுவந்துள்ளது.
தேரி சங்கமித்தை விரைவில், அனுலாவையும், மற்றும் டெண் களையும் சங்கத்திற் சேர்த்து, பிக்குணிகளுக்கு உரிய சங்கப்பிரிவை நிறுவினர். ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த உபாசக விகாரையி லேயே இப் பிக்குணிகள் வாழ்ந்து வந்தனர். பின்னர், அவர்களுக் கென ஹத்தாள்ஹக விகாரை நிறுவிக் கொடுக்கப்பட்டது. இவ் வாறு இலங்கையிற் பெளத்தம் நிலைபெறுவதற்கான எல்லா அம் சங்களும் இடம்பெறலாயின. “ مہ
சங்கத்திற் சேர்ந்தவர்கள் தொகை பெருகவே, மகாவிகாரை, சேதியபர் வத விகாரை (மிகிந்தலையிலிருந்தது) என்பவற்றுட்ன் திருப்தி கொள்ளாது புதிய விகாரைகளைத் திசன் நிறுவியதாகக்

Page 41
62 பண்டைய ஈழம்
கூறப்படுகின்றது. இசர சமணக, வெசகிரி முதலான விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டன. சங்கத்தினரின் பொதுப் போசன சாலையாக 'மகாபாலி யென்ற கட்டிடத்தை அனுராதபுரத்தில் நிறுவினன். ஜம்புக்கோலப் பட்டினத்தில் ஒரு விகாரையையும், (மகாகமையில்) திசமகாராமவையும், பாசினுராமவையும் இவனே அமைத்ததாகக் கூறப்படும். இவ்வாருக, தேவானம்பிய திசனது ஆட்சி முடிவெய்துவதற்கிடையில், இத்தீவில் பெளத்தம் நிலை கொண்டுவிட்டதாகக் கூறலாம். பிக்குகள், பிக்குணிகளுக்குரிய சங்கமும், இவர்களுக்குரிய மகாவிகாரை போன்ற விகாரைகளும், பொதுமக்களின் வழிபாட்டுக்குரிய தாகபங்களும், போதி மரமும், திசன் ஆட்சியிலேயே இடம்பெற்றுவிட்டன. எல்லாவற்றிலும் மேலாக, சமயவளர்ச்சிக்கு வேண்டிய ஆதரவை அளிக்கும் ஆர்வ முடையவர்களாக விளங்கலாயினர். பெளத்தத்தின் வளர்ச்சிக்கு இந்த ஆதரவு உறுதுணையாக விளங்கியது.
பெளத்தம் இலங்கைக்குப் பரவியதன் விளைவுகளை நாம் ஆதி கால இலங்கை வரலாற்றிற் பரக்கக் காணலாம். இன்றுவரை, பெரும்பான்மை மக்களின் மதமாக விளங்கும் பெளத்தம், மக்க ளின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுப் பல மாறுதல் களைக் கொணர்ந்தது. ஆதிகாலக் கலை, இலக்கிய வளர்ச்சிகள் யாவும் பெளத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. பெளத் தத்துடன் பெளத்த இலக்கியங்கள், பாலிமொழி, விகாரைகளில் கல்வி விளக்கைப் பேணும் முறை முதலானவை இலங்கைக்கு வரலா யின. சிங்கள மொழியும், இலக்கியமும் வளர்ச்சி பெற பெளத்தமும் பெளத்த இலக்கியங்களுமே உதவின. அரசர்களின் சமய ஆர்வத் தின் சின்னங்களாக இன்றும் காட்சிதரும் பாரிய கட்டிடங்களான தாகபங்களும், மற்றும் கட்டிட அமைப்புக்களும் சமய உந்துத லால் ஏற்பட்ட கலைவடிவங்களே. அரசியலிலும், பொது வாழ் விலும் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும் பெளத்தக் கேர்ட் பாடுகளாற் பெரிதும் பாதிக்கப்பட்டவையாகும். எனவே, இலங் கையின் ஆதிகால வரலாற்றின் பல துறைகளிலும் பெளத்தம் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்தது.
இறுதியாக, பெளத்தம் இலகுவில் இலங்கையிற் பரவியதற் குரிய காரணங்களைக் கவனிப்போம், முதலில், பெளத்தம் பரவு முன்னிருந்த சமயநிலையே இம்மதம் பரவத் துணைநின்றதென லாம். பிராமண மதம் ஒரளவுக்குக் கைக்கொள்ளப்பட்டிருந்ததை யும், ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு முதலானவை பின்பற்றப் பட்டதையும் முன்னரே கவனித்தோம். சமணத்தைப் பின்பற்றிய ஒரு சிலர் தலைநகரிலிருந்திருக்கலாம். இத்தகைய சமய நிலையில் நிறுவன ரீதியான ஒழுங்கும் கட்டுப்பாடும் சமயத்தில் இருக்க

o
இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 63
வில்லை. இதனல், பெளத்தம் போன்ற ஒரு மதம் பரவுவதை முந்திய சமயநிலை தடைசெய்திருக்கமாட்டாது. இரண்டாவதாக, பெளத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எச்சமயத்தார்க்கும் உடன்பாடான வாழ்க்கை நெறியைக் கூறுவதாக விருந்ததால், இலங்கை மக்களை அவை பெரிதும் கவர்ந்திருக்குமெனக் கூறலாம். * மைத்திரேய’ என்ற நடுவழியை அது போதித்தமை, துறவி களாகச் சேர்ந்து அம்மதக் கோட்பாடுகளைப் பின்பற்ற விரும்பி யவர்களுக்கும், துறவிகளாக இல்லாது இல்லறத்திலிருந்து கொண்டே அம்மதத்தைப் பின்பற்றும் ‘உபாசிகர்களுக்கு மேற்ற வகையில் பெளத்த ஒழுக்கங்கள் கூறப்பட்டமை போன்ற தன்மை களும் இம் மதத்துக்கு இலங்கையில் வரவேற்புக் கிடைக்கக் காரணமாயின. மகதத்தின் கிளைமொழியாகக் கூறப்படும் பிராகிரு தத்துக்கும் (சமஸ்கிருதம் என்பது உயர்ந்தோர் மட்டிலும், இலக் கிய வழக்கிலும் வழங்கப்பட்டுவர, பாமரர் வழக்கிலிருந்த ம்ொழி பிராகிருதம் எனப்பட்டது. இதுவே, இலங்கையில் பின்னர் பாலி ஆயிற்று.) இலங்கையில் அக்கால மக்கள் பேசிய ஆதிச் சிங்கள மொழிக்கும் அதிக வேறுபாடில்லாததால், மகிந்தர் நிகழ்த்திய போதனைகளை மக்கள் இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்தது. எனவே, பெளத்தம் பரவுதற்கு மொழி தடையாக இருக்கவில்லை யெனலாம். எல்லாவற்றிலும் மேலாக, இலங்கை மன்னனன திசன் பெளத்தத்தைத் தழுவியமை அம்மதம் இலங்கையில் வேக மாகப் பரவி வெற்றிபெறத் துணைநின்றது. மன்னனும், அரச குடும்பத்தவரும், அதிகாரிகளும் ஒரு மதத்தைத் தழுவியபின் மக்கள் அம் மதத்தைத் தழுவுதல் தவிர்க்கமுடியாததாகும். மேலும் பெளத்தத்தின் வளர்ச்சியில் மன்னர்களின் ஆதரவு இன்றியமை யாத ஒன்முக இருந்து வந்துள்ளது. இதனலேயே, இலங்கையில் அது நிலைபெற்று வந்துள்ளது; ஆனல், இம் மதம் தோன்றிய நாடான இந்தியாவில் அது மன்னர்களின் ஆதரவையிழந்தமை யால், அது அருகி மறைந்துவிட்டது.
w. மெளரியப் பண்பாடும் இலங்கையும்
கி. மு. 4ம், 3ம் நூற்ருண்டுகளில் மெளரியப் பேரரசு அதி காரம் பெற்று விளங்கிய போது, வடஇந்தியா பண்பாட்டுத் துறைகளில் பல சிறப்புக்களைக் கண்டது. வடஇந்தியாவில் தோன் றிய முதற் பேரரசான அது, கலை, இலக்கியம், சமயத் துறைகளி லும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளை யெய்தியது. 'இந்தியக் கலை யானது, பண்டைய உலகம், ஒரு வேளை அதென்சைத் தவிர்த்து அது வரை காலத்தும் அறியாத ஒப்புயர்வற்ற கலையியற் செம்' மையை மெளரியர் காலத்திலும் அதற்குப் பிந்திய காலத்திலும் அடைந்தது.’ இவ்வாறு உரோலின்சனுல் சிறப்பித்துக் கூறப்பட்ட

Page 42
64 - பண்டைய ஈழம்
மெளரியர் பண்பாட்டு அம்சங்கள் சில இலங்கையையும் பாதிக்க லாயின. அரசியற் ருெடர்புகளின் அடிப்படையிலேயே கலாசார உறவுகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. எனவே, இலங்கைக்கும் மெளரியர் கால இந்தியாவுக்குமிடையே நிலவிய அரசியல், வணி கத் தொடர்புகளை முதலில் நோக்குவோம். م. مختخفيفة لم تدفعهم **ෂිංඤෝරිංඥ.
மெளரிய மன்னன் சுந்திரகுப்தன் அரசவையில் கிரேக்க தூது வனக விளங்கிய மெகஸ்தனிஸ் எழுதிவைத்த குறிப்புக்களில் இலங்கை பற்றியும் குறிப்பிட்டிருத்தலை முன்னரே யறிந்துள்ளோம். மேலும், மெளரியர் காலத்தில் பிருகுகச்ச, சொபாரா என்பன மேற்குப் பகுதி யிலும், தாமிர லிப்தி கிழக்கிலும் பிறநாடுகளுடன் வணிகஞ்செய் யப் பயன்பட்ட துறைமுகங்களாகும். இப் பிறநாட்டு வணிகத் தில் இலங்கையும் இடம்பெற்றதாகக் கொள்ளலாம். வட இலங் கையிலுள்ள ஜம்புக்கோலத் துறைக்கும், தாமிரலிப்திக்கு மிடையே இருந்த கடற்பாதையைப் ப்யன்படுத்தியே அரிட்டன் பாடலிபுரத் துக்குத் தூது சென்றதைப் பார்த்தோம். மெளரியப் பேரரசு அசோகன் காலத்தில் அதியுன்னத நிலையைப் பெற்றபோதே, தேவானம்பிய திசன் அப்பேரரசுடன் உறவுகொண்டான். வெகு மதிகளை அசோகனுக்கு அனுப்பியதைக்கொண்டு, தேவானம்பிய திசன் மெளரிய அரசனுக்குத் திறை செலுத்தியதாகச் சிலர் கருது வர். சோழர், சேரர், சந்தியபுத்திரர், பாண்டியர் ஆகியோரை (அதாவது அப்போதைய தமிழகத்தை)ச் சுதந்திர அரசுகளாக அசோகன் ஒரு கல்வெட்டிற் குறிப்பிடுவதைக் கொண்டு, இவற் றுக்குத் தெற்கே விளங்கிய இலங்கை திறை செலுத்தியிருந்தால் பொருந்தாதென இதை மறுக்கலாம். இருப்பினும், அதிக வலிமை கெர்ண்ட பேரரசுடன் நல்லுறவை ஏற்படுத்தியிருத்தலை அரசியற் சாதுரியமாகக் கொண்டு, திசன் வெகுமதிகளை அனுப்பிவைத்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். ( அசோகன் குடிய பட்டங் களில் ஒன்றன தேவானம்பிய" என்பதைத் திசன் சூடிக்கொண்ட தையும், அசோகன் அனுப்பிவைத்த பொருட்களுடன் முடிசூட்டு விழாவைத் திசன் நடத்தியதையும் இவ்விரு மன்னர்களிடையே நிலவிய நல்லுறவுக்கு அறிகுறிகளாகக் கொள்ளலாம். திசனுக்கும் அசோகனுக்குமிடையே நிலவிய அரசியலுறவுகளே சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றின் செல்வாக்கு ஏற்படக் காரணமாயின.
மெளரியப் பேரரசின் காலத்துக்கு முன்னரே பெளத்தம் தோன்றிய போதும், பேரரசன் அசோகன் ஆட்சிக் காலத்தி லேயே அது மகதத்துக்கு அப்பால் பல நாடுகளிலும் பரவி, ஓர் உலகச் சமயமாயிற்று. பேரரசின் அமைப்பும் விசாலமும் பெளத் தத்தின் வளர்ச்சிக்கு உதவின. அசோகனது நீண்டகால ஆட்சி யின்போது நிலவிய அமைதியும் இதற்குச் சாதகமாயது. எனவே,

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 6 5
இலங்கைக்குப் பெளத்தம் பரவியமை மெளரியப் பேரரசின் செல் வாக்கில் முக்கியமானதாகும். அது எத்துணை முக்கிய நிகழ்ச்சி யென்பதை முன்னரே அறிந்துள்ளோம். பெளத்தம் பர்வியதால் இங்குப் புகுந்த பிற பண்பாட்டம்சங்களையே இப் பகுதியிற் குறிப்பிடுவோம்.
மெளரியப் பண்பாட்டின் தலைசிறந்த தன்மை கட்டிடத்துறை யில் 'தூபி (ஸ்துர்ப) என்ற முறை ஏற்பட்டதே. அரசரின் புதை நிலங்களாகத் தொடங்கிய இம்முறை, அரச குலத்தவரான புத் தரின் சின்னங்களை வைத்து அழியாப் பொருட்களாற் பாரிய கட்டிடங்களை நிறுவ உதவியது. மெளரியர் காலத்தில் சாஞ்சி யிலும், பாரூட்டிலும் அவ்விதத் தூபிகளமைக்கப் பெற்றிருந்தன. பெளத்தம் பரவியபோது, இலங்கைக்கு இக் கட்டிடமுறையும் பரவியது. புத்தரின் தாதுக்களை அல்லது சின்னங்களை உள்ளடக் கிய பெருங் கட்டிடங்களான இவை, தாகபங்கள் என இலங்கை யில் அழைக்கப்பட்டன. சிற்பக்கலை முதலான பிற கலைகளும் அங்: கிருந்து இலங்கைக்குப் பரவித் தாகபங்களை அணி செயவும், தனிக்
கலையுருவங்களை ஆக்கவும் பயன்பட்டன.
வேதகாலத்தில் அதிகம் பயிலப்பட்ட வடமொழி பிராமணர், அரசவையினர் மத்தியில் மட்டும் வழக்கிலிருக்க, பாமரர் வழக்கி லிருந்த் பிராகிருதம் (மகதக் கிளைமொழி யென்பர்) என்ற மொழி யிலேயே பெளத்தமதக் கோட்பாடுகள் எழுதப்படலாயின. அசோக னது பெரும்பாலான கல்வெட்டுக்களும் பிராகிருதத்திலேயே (பிராமி என்ற எழுத்தில் அல்லது வரி வடிவத்தில்) பொறிக்கப்பட்டன. இலங்கை வந்த பெளத்தக் குருமார்களும் இப் பிராகிருதக் கிளை மொழியையே கையாண்டிருப்பரெனக் கொள்ளப்படுகின்றது. இலங் கையில் இம் மொழி பாலி யென அழைக்கப்பட்டது. இப் புதிய மொழி பரவியதனல், சிங்கள மொழி ஆக்கமும் வளர்ச்சியும் பெற உதவியாகவிருந்தது. s
மெளரியர் காலத்தில் சமயச்சார்புடைய நூல்களும், சமயச்
சார்பில்லாத நூல்களும் குறிப்பிடத்தக்க அளவு எழுதப்பட்டன.
சந்திரகுப்தர் கால அமைச்சரான கெளடில்யர் (அல்லது சாணக்
கியர்) எழுதியதாகக் கூறப்படும் அர்த்த சாஸ்திரம் என்பது ஆட்சிக்
9

Page 43
66 பண்டைய ஈழம்
கலை பற்றிய பல அரிய கருத்துக்களைக் கொண்டதாகும். இந் நூலின் செல்வாக்கு மிகுதியாக இருந்ததை மகாவம்ச விவரங்கள் தெளிவாக்குகின்றன. "கதாவத்து முதலான பெளத்த மத நூல் களும் இக்காலத்திலேயே எழுதப்பட்டன. பெளத்தம் இலங் கைக்குப் பரவியபோது, அம்மதத்துக்குரிய கோட்பாட்டு நூல் களுடன் ஜாதகக் கதைகள் முதலானவையும் இலங்கைக்குக் கொண்டுவரப்படலாயின. இவை பெளத்தக் குருமார்களாற் பயிலப்பட்டு வந்ததை அவர்கள் பின்னர் எழுதிய நூல்களிலிருந்தே அறியலாம். பெளத்தக் குருமார்களே இலங்கையில் கல்வி விளக்கை நெடுங்காலம் அணையாது பேணிக்காத்தனர் என்பது மனங்கொளத் தக்கது. இந்தியாவில் தக்ஷசீலம் முதலான இடங்களில் விளங் கிய பல்கலைக்கழகங்களைப் போன்ற கல்விநிலையங்கள் மகாவிகாரை முதலான முக்கிய விகாரைகளை மையமாகக்கொண்டு இயங்கின. எனவே, மெளரியப் பேரரசின் அரசியற் செல்வாக்குப் பற்றி நாம் தெளிவாகக் சுறவியலாத போதும், சமய, கலைத் தொடர் புகள் இலங்கையில் நிலையான மாறுதல்களை யுண்டு பண்ணியுள்ள தைக் காணலாம். பெளத்தம் பரவியதால், பெளத்தத்துடன் தொடர்புடைய கட்டிட, சிற்பக் கலைகளும், பாலி மொழியும், பெ ள த் த இலக்கியங்களும் இ ல ங் கை க் கு வந்து ஆட்சி செலுத்தலாயின.
பயிற்சி:
1. மெளரியப் பேரரசின் எழுச்சியில் சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோருக்குரிய பங்கைத் தெளிவாக்குக. இவர்களுடைய காலத்தில் இருந்த பேரரசின் எல்லேகளைப் படத்திற் குறித்து வேறுபடுத்துக.
2. புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி வாசித்து, அதில் கபிலவஸ்து, புத்தகயா, சார்நாத், குசிநகர முதலான இடங்களின் முக்கியத் தைக் கூறுக.
3. புத்தரின் முக்கிய போதனைகளைப் பிற நூல்களில் வாசித்து அறிக.
இவையடங்கிய நூல்களைக் குறிப்பிடுக.
4. அசோகனது ஆணைகளில் அடங்கிய தூண்கள், பாறைகள் உள்ள
இடங்களை இந்தியப்படமொன்றிற் குறிக்க,

இலங்கைக்குப் பெளத்தம் பரவல் 67
கூட்டுவேலைக்கு:
காலம் (கி.மு.) இந்தியா இலங்கை
500 - புத்தர் ஆரியரின் இலங்கை
400 பரிநிர்வாணமெய்தல் வருகை
----- மெளரிய அரசின் அனுராதபுரம் سے 400
300 தோற்றம் தலைநகராதல்
தேவானம்பிய திசனது .-سس-0 0 3
அசோகனது ஆட்சி ஆட்சி, மகிந்தரின் மதப்
200 3ம் பெளத்த மாநாடு பரப்புக்குழு இலங்கை வரல்
மேலேயுள்ளதை மாதிரியர்கவைத்து, இதுவரை படித்தவற்றுள் முக்கியமான நிகழ்ச்சிகளைக் கொண்டு ஒரு கால அட்டவணை தயாரிக்கவும். இதைப் பின்னர் மாணவர் தமது பயிற்சிப் புத்தகங்களிலும் எழுதி
வைக்கலாம்.
தேர்வு வினுக்கள்: 1. அசோகப் பேரரசன் வரலாறு கண்ட பெருமன்னனுக” மதிக்கப்
படுதற்குக் காரணங்கள் யாவை?
2. பெளத்த சமயத்தின் வளர்ச்சியில், பெளத்தக் கழகங்கள் வகித்த
பங்கை விளக்குக.
3. தேவானம்பிய திசனது ஆட்சிக்காலம் இலங்கைக் கலாசார வர
லாற்றில் முக்கியம் பெற்றமைக்குக் காரணங்கள் யாவை?
4. மெளரியர் பண்பாடு இலங்கையைப் பாதித்த வகையினக் கூறுக.
莎莎 g

Page 44
- அத்தியாயம் ஆறு துட்டகாமணியும்,இலங்கையின் விடுதலையும்
1. பண்டைத் தமிழகம் i. தமிழர் படையெடுப்புக்கள்: எல்லாளன் ஆட்சி i. உருகுனேயின் எழுச்சி iv. துட்டகாமணி உருகுனேக் கரசனுதல் W. காமணியின் விடுதலைப்போரும், சமயப் பணிகளும்
தேவானம்பிய திசனுக்குப் பின், இலங்கை வரலாற்றில் எமது கவனத்தைப் பெறும் அடுத்துள்ள முக்கிய மன்னன் துட்டகாமணி ஆவான்.(துட்டுகெமுனு என்பதே இவனுக்குச் சிங்களவழக்கில் உள்ள பெயர்)ஆதிகால இலங்கை மன்னர்களுள் சிறப்பான இடத்தை இவன் பெற்றுள்ளான். இவனுடைய ஆட்சிக்காலம் கி. மு. 161-137. தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த தமிழரின் ஆட்சி யிலிருந்த இலங்கைக்கு விடுதலை யளித்த மையும், பெளத் தத்துக்கு உயர்வு தந்த பல கட்டிடங்களை நிறுவியமையும் இவனது பெருமைக் குரிய முக்கிய காரணங்களாகும். அரசியற் பணியால் குடி களி னதும், மதப்பணிகளால் குரு மார்களினதும் நன்மதிப்பைப் பெற்ற துட்டகாமணியின் புகழ் நெடுங்காலம் நிலைத்து வந்துள்ளது. இவ் வத்தியாயத்தில், துட்டகா மணியின் அரசியற் சாதனைகளும், சமயப்பணிகளும் முக்கிய இடத்தைப்பெறும். இவற்றைக் கூறுமுன் துட்டகா மணிக்கு முந்திய கால அரசியல் நிலையை, குறிப்பாகத் தமிழர் ஆட்சியேற்பட்ட வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவோம். தென்னகத் தமிழர் இலங்கையுடன் அடிக்கடி அரசியற் ருெடர் புகள் கொண்டமையால், அவர்களுடைய ஆதி கால வரலாற்றை அறிய முதலில் முற்படுவோம்.
1. பண்டைத் தமிழகம்
வடபெண்ணையாற்றுக்குத் தெற்கேயுள்ள தென்னிந்தியாவே, தமிழகம் அல்லது தமிழ்நாடு எனப் பெயர்பெறும். "வடவேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ளதாக அக்காலத் தமிழ் கூறு நல்லுலக எல்லைசள் கூறப்பட்டுள்ளன. இறையனர் அகப்பொருளுரை என்ற நூலிலும், வேறு பழைய நூல்களிலும் கூறப்பட்டுள்ள மரபுகளின் படி, பாண்டிய மன்னர்களின் ஆதரவில் முச்சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்தன எனவும், தென் மதுரை, கபாடபுரம் என்ற இடங்களிற் கூடிய முதற்சங்கம், இடைச்சங்கம் ஆகிய இரு சங் கங்களின் காலத்து நூல்கள் மறைந்தொழிந்ததாகவும், மதுரை யிற் கூடிய கடைச்சங்கத்துக்குரிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலானவையே எமக்குக் கிடைத்த சங்ககால நூல்கள் எனவும் அறிகின்ருேம். இச் சங்கங்கள் இருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்து, நூல்களை யியற்றி

துட்டகாமணியும் இலங்கையின் விடுதலையும் 69
யதாகக் கூறப்படும். இக்கால ஆராய்ச்சியாளர், இம் மரபுகளிற் குறிப் பிடப்படும் முதலிரு சங்கங்களிருந்தமைக்குச் சான்றுகள் போதா வெனக்கூறி, "கடைச்சங்கம் என்பதையே உண்மையானதாகக் கொண்டு, இது கூடிய காலத்தையே சங்ககாலம் என்பர். அகநானூறு, புறநானூறு முதலான (எட்டுத்) தொகை நூல்களும், முல்லைப் பாட்டு, பதிற்றுப்பத்து முதலான பத்துப்பாட்டு நூல்களுமே உண்மை யாகச் சங்ககாலத்துக்குரியவையாகக் கொள்வர். திருக்குறள், நாலடி யார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம்-மணி மேகலை என்ற இரு காப்பியங்கள் சங்ககாலத்துக்குச் சிறிது பிற்பட்ட (சங்கமருவிய) காலத்துக்குரியவை யென்பர். எனவே, மேலே கூறிய நூல்களும், தொகை நூல்களில் இடம்பெற்ற பாடல்களும் ஆக்கப் பட்ட காலத்தை நாம் சங்ககாலம் என்ற பொதுப் பெயரில் அடக்கிக் கூறலாம்.
சங்ககாலம் குறிக்கும் காலப்பகுதியைத் தீர்மானிப்பதிலும் அறிஞ ரிடையே ஒருமைப்பாடான கருத்தில்லாத போதும், சில பொதுவான எல்லைகளைக் குறிப்பிடலாம். கண்ணகியாகிய பத்தினித்தேவிக்குக் கோயில் நிறுவி, விழாவெடுத்த சேரன் செங்குட்டுவனும், அவ் விழா விற் கலந்துகொண்டு பின்னர் இலங்கைக்குப் பத்தினித்தெய்வ வழி பாட்டைக் கொண்டுவந்த முதலாம் கயவாகு மன்னனும் ஒரே காலத் தவர் என்பதைக் கொண்டு, செங்குட்டுவனின் தம்பியான இளங்கோ வடிகளாற் பாடப்பெற்ற சிலப்பதிகாரம் கி. பி. 2ம் நூற்ருண்டைச் சேர்த்ததென முடிவுசெய்யப்பட்டுள்ளது. திருக்குறட் பாக்களை மேற் கோளாகச் சிலப்பதிகாரம் ஆண்டுள்ளமையால், திருக்குறளின் காலம் சிலப்பதிகாரத்துக்கு முற்பட்டதெனக் கூறலாம். திருக்குறளினின்றும் வேறுபட்ட (முற்பட்ட) செய்யுளமைப்பையும், சொல்லாட்சியையும் கொண்டவையாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் இருப் பதால், அவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்துவுக்கு முந்திய சில நூற்றண்டுகளைச் சேர்ந்தவை யென்பது புலனகும். மேலும், மாமூல னர் என்ற சங்கப் புலவர் 'வம்ப மோரியர்' என மெளரியப் படை யெடுப்புக்களைக் குறித்துள்ளமையைக் கொண்டும், அசோகரின் கல் வெட்டொன்றில் அவரால் வெற்றிகொள்ளப்படாத சுதந்திர அரசு களாகச் சேரர், சோழர், பாண்டியர், சத்திய புத்திரர் என்போர் குறிப்பிடப்பட்டிருத்தலைக் கொண்டும், மெளரியர் காலத்திலேயே (கி. மு. 4ம், 3ம் நூற்.) தமிழ்நாட்டில் சங்ககாலம் நிலவியதாகக் கொள்ளலாம். சங்ககாலத் தமிழகத்தைப் பற்றியறிய மேலே குறித் துள்ள நூல்களை விட, தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உரோமானிய நாணயங்களும், பெரிப்பிளஸ் என்ற நூலும், பிற கிரேக்க ஆதாரங்களும், கலிங்கத்தைச் சேர்ந்த காரவேலரின் ஹாதி கும்பாக் கல்வெட்டும் (கி.மு. 165க்குரியது) உதவுகின்றன.

Page 45
70 பண்டைய ஈழம்
பண்டைத் தமிழகமானது சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்ற முப்பெரும் பிரிவுகளையும், வேளிர் முதலான் சிற்றரசர்களின் ஆணிலங்களையும் கொண்டு விளங்கியது. ஆதிகாலத்தைக் காட்டும் தென்னிந்தியாப் படத்தை நாம் பார்த்தால் இவ் வரசுகளின் எல்லை களை விளங்கிக் கொள்ளலாம். பாண்டிநாடே இம் மூன்று நாடு களுள்ளும் தொன்மையும், அதிக சிறப்புமுடையதாக மரபுகள் கூறும். "செந்தமிழ்’ எனும்போது பாண்டியன் தமிழையே குறிக்குமென்டர் முச்சங்கங்களும் பாண்டி நாட்டிலேயே கூடினவாம். வைகை, பொருநை , தாமிர பரணி ஆறுகளையும், கொற்கை என்ற துறைமுகப் பட்டினத் தையும் கொண்ட பாண்டிநாட்டின் தலைநகரான மதுரை, வைகை யாற்றின் கரையில் அமைந்திருந்தது. மதுரையின் பெருமையை மாங்குடி மருதனர் பாடிய மதுரைக்காஞ்சி முதலான நூல்கள் விரி வாகக் கூறும். மதுரையில் நெய்யப்பெற்ற ஆடைகள், கொற்கையில் பெற்ற முத்துக்கள் அக்காலத்தில் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்ட முக்கிய பொருள்களாகும். குமரிமுனையும் வெள்ளாறுமே இதன் தெற்கு-வடக்கு எல்லைகளாக விருந்தன. இலங்கைக்கு மிக அண்மை யில் பாண்டிநாடு அமைந்துள்ளமை படத்தைப் பார்க்கும்போது தெளிவாகும். குறிப்பாக மன்னர் இலங்கையில் அமைந்துள்ள பகு திக்கும், தென்னிந்தியாவில் இராமேஸ்வரம் எனப்படும் சேதுவுக்கு மிடையே நெருங்கிய தொடர்பு இயற்கையாகவே இருக்கக்கூடிய வகையில் இப் பகுதிகள் இருப்பதைக் காணலாம். இது போலவே, வடபெண்ணையாற்றுக்கும் வெள்ளாறுக்கும் இடைப்பட்ட சோழநாடும் இலங்கையின் வடகரைக்கு அண்மையிலே அமைந்துள்ளது. பாண்டி நாட்டுக்கும் ஈழத்துக்கும் வடக்கே, கிழக்குக்கரையை அடுத்த ப்குதியே சோழநாடாகும். பிற்காலத்துத் தொண்டை மண்டலம்’ என்ற பிரி வும் சோணுட்டில் அடங்கியிருந்ததென்பதைப் பழைய செய்யுள் ஒன்று குறிக்கின்றது. * 'வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி' யெனச் சிறப்பிக்கப்படும் காவிரியாற்றினல் வளம்படுத்தப் பட்டதே சோழநாடு. பழைய காலத்தில் உறையூர் என்பதும், காவிரிப்பூம் பட்டினமென்ற புகாரும் இதன் தலைநகர்களாக விளங்கின. இயற்கை வளமிக்க நாடாக இருந்தமையாலே, ‘சோழவளநாடு சோறுடைத்து என்ற புகழுக்கு அது உரியதாயிற்று. புகார்ப் பட்டினம் நெடுங் காலம் சிறந்த துறைமுகமாக விளங்கியதால், அங்கு பிறநாட்டு வணி கம் செழிப்புற நடைபெற்றது. பட்டினப்பாலே முதலான சங்க நூல் களில் வரும் விவரணைகள் புகாரின் சிறப்பையும், அங்கு நடைபெற்ற
கடல் கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையும் - வடதிசையில் ஏணுட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம் சோணுட்டுக்கு எல்லையெனச் சொல்.

துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும் 71
வணிகத்தையும் தெளிவாக்குகின்றன. இவ்விரு நாடுகளுக்கும் மேற்கே, இப்போதைய கேரளத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக விளங்கியதே சேரநாடு. வடக்கே பழனியும், கிழக்கே செங்கோட்டை யும் மேற்கே கோழிக்கூடும் தெற்கே கடலும் எல்லைகளாக விளங்கின என்பது ஒரு பழைய செய்யுளால் அறியப்படுவது. மலைவளம் மிக்க இப் பகுதி நெடுங்காலமாகவே மிளகு முதலான பொருட்களை யேற்று மதி செய்தது. சேரநாட்டின் தலைநகராக விளங்கியது வஞ்சி யென்ப தாகும். இது இப்போதைய கரூர் ஆகலாம். மேலைக்கரையில் இருந்த தொண்டி, முசிறி என்பன சிறந்த துறைமுகங்களாக விளங்கலாயின. பாண்டியனுக்கு மீன்கொடியும், சோழனுக்குப் புலிக்கொடியும், சேர னுக்கு விற்கொடியும் கொடிகளாக விருந்தன.
சங்ககாலத் தமிழக அரசியல் வரலாற்றைத் தொடர்பாகவும் தெளிவாகவும் கூறும் வகையில் சங்ககால நூல்களில் வரும் குறிப் புக்கள் அமையவில்லை. மிகப் பழைய காலத்திலிருந்தே இம் மூவரசு களும் இருந்து வந்தன வென்பர். முன்னர் குறிப்பிடப்பட்ட கார வேலரின் ஹாதீகும்பாக் கல்வெட்டு தமிழ் அரசுகள் ஒரு நூற்ருண் டாக ஒற்றுமை பூண்டிருந்ததைக் குறிப்பிட்டுள்ளது. தமிழரசர்கள் வடநாடு சென்று வெற்றியீட்டி வந்தமை பற்றியும் சங்க இலக்கி யங்கள் குறிப்பிடுகின்றன. ஆனல் பெரும்பாலான சங்கப் பாடல் களில், மூவேந்தரும் தமக்குட் சண்டையிட்டு, ஆதிக்கத்தைப் பெருக்க முற்பட்டமை பற்றிய குறிப்புக்களே அதிகமாகவுள்ளன. மூவேந்த ரிடையே நடைபெற்ற சண்டைகளில், எல்லைப் புறங்களில் வாழ்ந்த பிரதானிகள் முக்கிய பங்கை வகித்தனர். இவர்களிற் சிலர் இலங் கைக்கும் படையெடுத்து வந்தனரெனலாம். சங்ககால மன்னர்களுள் ஒருசிலர் தமிழகம் முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ்க்கொணர்ந்து ஒற்றுமை கண்டனர். இப் புகழுக்குரிய பெருமன்னர் பற்றிச் சில ஆதாரமற்ற செய்திகள் மரபுகளுடன் சேர்க்கப்பட்டிருப்பினும், கரிகாற் பெருவளத்தான் என்ற கரிகாலன் (சோழன்), தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (பாண்டியன்), சேரன் செங்குட்டுவன் ஆகியேர்ர் உண்மையிலேயே பெருமைக் குரியவர்கள். (இவர்கள் வரலாற்ை இங்குச் சுருக்கமாகவேனும் கூறவியலாதாகை யால், இதையறிய மாணவர் வேறு நூல்களைப் படிக்க வேண்டும்.)
சங்ககாலத் தமிழரின் பண்பாடு, தமிழனின் நாகரிக வளர்ச்சி யின் ஒரு முக்கிய காலப்பகுதிக்குரியதாகும். இப் பண்பாட்டின் அம் சங்களைப் பற்றிய அறிவு இந்நூலைப் படிக்கும் மாணவர்களுக்கு ஓரளவு இருக்குமாதலால், இங்கு அது பற்றி விரித்துக்கூறவேண்டியதில்லை. தாம் வாழ்ந்த நிலத்தை ஐந்தினேகளாகப் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) பிரித்து, அவற்றுக்கு அகம், புறம் என்ற இருபிரிவு

Page 46
72 பணடைய ஈழம களுக்குமுரிய ஒழுக்கங்களை மரபாகக் கொண்டனர். இம் மரபு வெறும் கவிதை மரபாக மட்டும் கொள்வதற்கில்லை. தொடக்கத்திலிருந்த தமிழகத்தின் நாகரிக நிலையிலிருந்து தோன்றியதாகவே இம்மரபைக் கொள்ளவேண்டும். புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில், அக்கால ஆட்சிமுறையின் சிறப்புக்கள் புலப்படும். அக் காலப் பொருளியல் நிலையை-அதுவும் வணிக நிலையைச் சங்கப் பாடல் களால் மட்டுமன்றி, பெரிப்பிளஸ் வாயிலாகவும், தலமி, பிளினி ஆகியோரின் நூல்கள் வாயிலாகவும் அறியலாம். * பாபிலோனியா, கிரேக்கம், உரோம அரசு முதலான மேலைநாடுகளுடன் புகார், விகாற்கை, கன்னியாகுமரி, தொண்டி, முசிறி முதலான துறைகள் வாயிலாக மிகச் செழிப்பான வணிகம் நடைபெற்றது. அழகுக் கலை களான இசை, கூத்து முதலானவையும் நல்ல வளர்ச்சி யெய்தியிருந் தன. பாணர் கூட்டங்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று இசை விருந்தளித்து பரிசில்கள் பெற்றன. பொதுவாகக்கூறுமிடத்து, முழு இந்தியாவிலும் சங்ககாலத் தமிழ்நாட்டிலேயே, அந்நியப் பண்பாட் டுக் கலப்பு அதிகமில்லாத அளவு பண்பாடு வளர்ச்சிபெற்றிருந்தது. சங்ககாலத்தின் பிந்திய நூற்றண்டுகளில், ஆரியர் செல்வாக்குத் தமிழ் நாட்டில் அதிகரித்து வரலாயிற்று.
i. தமிழர் படையெடுப்புக்கள்! எல்லாளன்
தேவானம்பிய திசனைத் தொடர்ந்து, அவனது இளவல்கள் உத் திய(ன்), மகாசிவ(ன்), சூரதிச(ன்) என்போர் ஒவ்வொருவரும் முறையே பத்தாண்டுகள் ஆட்சி செய்ததாகக் காலவேடுகள் கூறுகின் றன. இவர்களில் சூரதிசன் ஆட்சியின் முடிவில், ஒரு தமிழ்ப் படை யெடுப்பு நிகழ்ந்தது. தென்னகத்தைச் சேர்ந்த தமிழரின் படை யெடுப்புக்கள் இலங்கை மீது ஆதிகாலத்தில் அடிக்கடி நிகழ்ந்ததால், இலங்கையின் ஆதிகால அரசியல் வரலாறு பெரிதும் பாதிக்கப்பட்டது. அவ்வாறு நடைபெற்ற இரு படையெடுப்புக்களே இப் பகுதியில் கூறப் படும். தென்னகத்துக்கு மிக அண்மையில் இலங்கை அமைந்துள்ள தால், இவ்விரு பகுதிகளுக்குமிடையே ஏற்பட்ட அரசியலுறவுகள் பெரும்பாலும் இத்தன்மையவாக விருந்தன. இலங்கையில் ஆட்சி யாளர் பலமற்றவர்களாக இருந்தமை, தமிழகத்தில் வலிமை படைத்த அரசர்களை அல்லது சிற்றரசர்களை இலங்கை அரசியலில் தலையிடுமாறு செய்ததெனலாம். இங்கு நாம் குறிப்பிடும் முதலிரு படையெடுப்புக் களும், தேவானம்பிய திசனுக்குப் பின் நிலவிய அரசியல் நிலைமையைப் பயன்படுத்தின. மேலும், இந்தியாவில் மெளரியப் பேரரசு வீழ்ச்சி
* வி. கனகசபைப்பிள்ளையின் '1800 ஆண்டுகட்கு முற்பட்டதமிழர்” (கழக வெளியீடு) என்ற நூலில் இப்பகுதியிற் கூறப்பட்ட விடயங்கள் பற்றிய விவரங்களை அறியலாம்.

துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும் 73
யுற்றதைத் தொடர்ந்து, தமிழக ஆட்சியாளரும், பிரதானிகளும் தம் வலியைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர் எனலாம்.
முதல் தமிழ்ப் படையெடுப்பை நிகழ்த்திய சேன, குத்தக என்ற இருவரும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாகக் கூறப்பட் டுள்ளது. இவர்கள் அரச மரபினராக இல்லாததால், படைப்பல முடைய பிரதானிகளாகலாம் என்பர். இவ்விருவரும் சூரதிசனைக் கலைத்து, அனுராதபுரத்தில் 22 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இவ் விவரங்கள் உண்மையாயின், அக்கால இலங்கையின் அரசியல் நிலை மையே அவர்களுக்குச் சாதகமாகவிருந்ததென்பது தெளிவு. இவர் களது ஆட்சி நீதி திறம்பாததாகவும், பெளத்தத்துக்குத் தீங்கு விளை யாததாகவும் இருந்தது. இறுதியில் தேவானம்பிய திசனது மற்ருெரு தம்பியான அசேலனே இவர்களைப் புறங்கண்டு, தனது ஆட்சியை நிறுவினன். அசேலன் பத்தாண்டுகள் ஆட்சி நடாத்திய பின், மீண் டும் ஒரு தமிழ்ப் படையெடுப்பு நிகழ்ந்தது.
இரண்டாவது தமிழ்ப் படையெடுப்பை நிகழ்த்தியவன் இலங்கை வரலாற்று மாணவர்கள் நன்கறிந்த எல்லாளன் என்பவனே. இவனை ஒரு சோழப் பிரதானியாகக் கொள்வர். அசேலனக் கலைத்துவிட்டு வடபகுதியில் தனது ஆட்சியை நிறுவிக் கொண்ட எல்லாளன் (பாலி யில், எளார) பற்றிப் பல கதைகள் உண்டு. குறிப்பாக அவனது நெறிதவரு, நீதிவழுவா ஆட்சிபற்றியே அவை எழுந்துள்ளன. மனுநீதி கண்ட சோழன் பற்றிய கதைகளை இவை எமக்கு நினைவூட்டுகின்றன. தன் மகனல் தவறுதலாகக் கொல்லப்பட்ட பசுக்கன்றின் தாய்க்கும், பாம்பொன்றுக்கு இரையான குஞ்சை யிழந்த தாய்ப் பறவைக்கும், பருவந் தப்பிப் பெய்த மழையால் இடருற்ற ஒரு முதிய பெண்ணுக் கும் எல்லாளன் நீதி வழங்கியதாகக் கூறப்படும் மகாவம்சக் கதைகளை நாம் உண்மை நிகழ்ச்சிகளாகக் கொள்ளமுடியாது. இவையாவும் அவனது செங்கோலாட்சியைப் புலப்படுத்த எழுந்தவை யென்பது தெளிவு. சமயத்துறையில், பெளத்தத்துக்கு அவன் பகைமை காட்டா திருந்தமையைப் புலப்படுத்தவும் ஒரு கதை கூறப்படுகின்றது. தான் சென்ற இரதத்தினல் தவறுதலாகச் சேதமுற்ற ஒரு தாகபத்தைத் திருத்த 15 000 கஹாபணங்களைச் செலவிட்டான் என ஒரு கதை யுள்ளது. இவ்வாருக, "பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கிய எல்லாளனது ஆட்சி நாற்பத்து நான்கு ஆண்டுகள் நீடித்தது. சிங்க, ளரின் காலவேடுகளாலேயே போற்றப்பட்ட பெருமைக்குரிய எல்லா ளனது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தவனே துட்டகாமணி. இந்தத் துட்டகாமணியின் வரலாற்றைக் கூற இனி முற்படுவோம். தென்னிலங்கையிலுள்ள உருகுணையிலிருந்தே துட்டகாமணி தன் போராட்டத்தை நடத்தினனதலால், உருகுணையின் எழுச்சியை அடுத்துக் கூறுவோம்.
0

Page 47
74 பண்டைய ஈழம்
i, உருகுணையின் எழுச்சி:
ஆரியருடைய தொடக்க காலக் குடியேற்றங்களில் ஒன்றன உருகுணே, துட்டகா மணியின் வரலாற்றுடனேயே முதன்முதலாக அரசியல் முக்கியம் பெற்றுள்ளது. காமணியின் தந்தையான (காகவண்ண) திசன், பல சிற்றரசுகளைக் கொண்ட உருகுணையை ஒரு குடைக் கீழ்க் , கொணர்ந்து, அதன் அரசியல் ஒற்றுமையை நிலைநாட்டினன். மகாவலி கங்கைக்கு அப்பால் ஆட்சிசெய்த தமி ழரை எதிர்க்கும் சக்திகளிடையே இருந்த பிரிவினைகளையகற்றி அவர்களுடன் போர் செய்தற்கான ஆயத்தங்களைச் செய்தான். இவ்வாறு உருகுணையில் தோன்றிய விடுதலையியக்கம், துட்ட காமணியின் காலத்தில் வெற்றியைப் பெற்றது. இலங்கையின் வரலாற்றில் உருகுணை யாட்சியாளர் நாட்டின் விடுதலைக்கான இயக்கங்களை உருவாக்க உருகுணை பயன்பட்டமைக்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.
உருகுணையின் தொடக்க கால வரலாற்றைத் தனியே கால வேடுகளாற் கூறிவிடமுடியாது. உருகுனையின் பல்வேறு பகுதி களிற் காணப்படும் கல்வெட்டுக்களாலும் சில செய்திகள் பெறப் பட்டுள்ளன. கதிர்காமத்தில் இருந்த ஒரு கஷ்த்திரிய மரபினர் அப் பகுதியில் அதிகாரம் பெற்றிருந்தனர். தேவானம்பிய தி சனது அழைப்புக்கிணங்க, போதிமர நாட்டு விழாவுக்கு அவர்கள் வந் திருந்தமையை மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. இதைக் கொண்டும், பிற செய்திகளைக் கொண்டும், உருகுணையின் சில பகுதிகளில், அனுராதபுர ஆட்சியாளரின் மேலாணயை ஏற்காத சில பிரதா னிகள் ஆட்சி நடத்தியதாகக் கொள்ள்ப்படுகின்றது. தேவானம் பிய திசனுடைய இளவலான மகாநாக(ன்) என்பானுக்கு எதிராக ஒரு சூழ்ச்சியை இராணி மேற்கொண்டு, அது விபரீதத்தில் முடி வுற்ற கதையொன்று மகாவம்சத்திலுள்ளது. தன் மகனுக்கு ஆட்சி யுரிமையைப் பெற்றுவிட உறுதிகொண்ட (திசனின்) இராணி, மகாநாகனுக்கு மாங்கனிகொண்ட தட்டொன்றை யனுப்பிவைத் தாள். சூதேதும் அறியாத மகாநாகன், நஞ்சு கலந்திருந்த மேற் கனியை திசனது மகனிடம் கொடுக்கவே, அதை யருந்திய சிறு வன் இறந்தான். இதன் பின், தலைநகரிலிருக்க விரும்பாத மகா நாகன், தன் மனைவியுடன் உருகுணைக்குத் தப்பியோடினன். உரு குணையில், கிரிண்டி ஓயாவுக்கு அருகாமையில் மகாகாமத்தை (மகா கமை - இப்போதைய திசமகாராமை) நிறுவினன். இவ்வாறு மகாகமையை நிறுவிய மகாநாகன் வழித்தோன்றலே துட்டகாமணி யாவான். விஜயன் மரபில் வந்த தேவானம்பிய திசன் போன்ற அனுராதபுர ஆட்சியாளருடன், துட்டகா மணியின் மரபு இவ்வாறு தொடர்பு படுத்தப்பட்டுள்ளமை புலப்படும்.

துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும் 75
மகாகமை யாட்சியாளருக்கும், கதிர்காம கூடித்திரியர்களுக்கும் (பத்துச் சோதர அரசர்கள்) விரைவில் தகராறு மூண்டு, பின்னவர் கொலையுண்டனரெனவும் ஓர் இலக்கிய மரபுவழிச் செய்தியுண்டு. இதைப் போவத்தகலையிலுள்ள ஒரு கல்வெட்டும் உறுதிப்படுத்து கின்றது. இருந்தும், கல்வெட்டுக்கள் இவ்விரு மரபினருக்கும் விவாகத் தொடர்புகளும் ஏற்பட்டிருந்ததாக அறியவைக்கின்றன. மகாநாகனது மகனன (அல்லது பேரனுன) கொடாபயன் மகனே காகவண்ண"திசன் ஆவான். காகவண்ண திசனுக்கும், விகார தேவிக்கும் பிறந்த இரு புதல்வர்களே (துட்ட)காமணியும், (சத்தா) திசனுமாவர். விகாரதேவி என்பாள், களனியை (கல்யாணி) ஆண்ட திசனின் மகள் எனப்படுகின்றது. இந்தக் களனித்திசன், கதிர்காம கூர்த்திரியர்களுடன் தொடர்புடையவனுகக் காணப்படுகின்றன். இத் தொடர்புகள் தெளிவாகப் புலப்படாதபோதும், காகவண்ண திசன் ஆட்சியைப் பெற்றபோது, கல்யாணி என்ற களனியிலும், சேருவிலும் (சேருவில தாகபம் உள்ள பிரசித்திபெற்ற இடம் திருகோணமலைக்கு அண்மையில் இருந்தது), கிரிநுவரை முதலான பிறவிடங்களிலும் பல சிற்றரசுகள் விளங்கின.
காகவண்ண திசன் பிளவுபட்டிருந்த உருகுணையின் ஒற்றுமையை நிலநாட்டிய பெருமைக்குரியவன். தன் மகன் (துட்டகாமணி) Hகழால், தன் புகழ் துலங்காது போன துர்ப்பாக்கியசாலி. பல சிற்றரசுகளாகச் சிதறிக்கிடந்த உருகுணையை ஒன்றுபடுத்தினலே, வடஇலங்கையின் ஆட்சியாளரான தமிழரை வெல்லமுடியும் என்ற உறுதியுடன் அவன் செயலாற்றினன். போர்களை மட்டுமே ஆயுக மாகக் கொள்ளாது, நட்பு, உறவுமுறை, மதியூகம் என்ற பல வழிகளைக் கடைப்பிடித்தே இவ் வொற்றுமையை நிலை நாட்டினன்க காகவண்ணன் தங்கையான சோமாதேவி களனி யாட்சியாளனு விருந்த சிவனது தம்பி அபயனுக்கு மணமுடித்து வைக்கப்பட்ட தால், முன்னரே நிலவிய உறவு வலுப்படுத்தப்பட்டது. சேருச் சிற்றரசை வெல்ல ஓர் உபாயம் கடைப்பிடிக்கப்பட்டது. காக வண்ணனிடமுள்ள ஒரு புத்த தாது சேருவில் நிறுவப்படவிருந்த தூபியில் வைத்துக் கட்டப்படுமென ஒரு வருவதுமொழிதலை, மதிப் புக்குரிய ஒரு பெளத்த குரு வாயிலாக சேருவில் தெரியப்படுத்தி ஞன் காகவண்ண திசன். இதன் பின், காகவண்ணன் தன் படை யுடன் சேருவுக்குச் சென்றபோது, சமய நம்பிக்கையுடைய சேரு ஆட்சியாளன் காகவண்ணனை வரவேற்று, மறைமுகமாக அவனது மேலாணயை ஒப்புக்கொள்ள வேண்டியவனைன். சமய நம்பிக்கை மேலிட்டவர்கள் அரசியற் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ள ம்ாட் டார்கள் என்பதையும், சமயம் அரசியலதிகாரத்தைப் பெற உதவு மாற்றையும் இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டும். -

Page 48
76 பண்டைய ஈழம்
காகவண்ண திசன் ஒருவாருக உருகுணையின் அரசிய்லொற் றுமையை நிலைநாட்டிக்கொண்ட பின், பயனுடைய பல ஆக்சி! பணிகளை மேற்கொண்டான். உண்மையில், துட்டகாமணியின் வெற்றிக்குரிய அத்திவாரத்தைத் தந்தை காகவண்ணனே நிறுவி ன்ை. உருகுணையின் வளங்களை விருத்தி செய்து, தன் மகன் திசனைத் தீகவாபியிலிருத்தி அவனது மேற்பார்வையில் அப்பகுதியில் நெல்விளைச்சலைப் பெருக்கும்படி செய்தான்.பொருள்வளம் பெருக்கு தலுடன், படைப்பலப் பெருக்கமும் மேற்கொள்ளப்பட்ட-து: படைக்கலங்களை ஆக்கும் சாலைகள் இயக்கப்பட்டனி)ேபடைப் பயிற்சியும் பலருக்கு அளிக்கப்பட்டது. இவையெல்லாம் துட்காமணியின் பணியைப் பின்னர் எளிதாக்கி வைத்தனவெனலாம். உருகுணையின் பாதுகாப்பையே நோக்காகக் கொணி- காகவண் ணன், அதன் எல்லையில் மகாவலிகங்கைக் கரையில் பல காவல் அரண்களை நிறுவினன் இவ்வாறு நிறுவப்பட்ட சிடு முக்கிய அரணுக்கே, தீகாபயன் என்ற இளவரசன் ஒருவன் (அர* குலத் தைச் சேராத ஒருபெண் வாயிலாகப் பிறந்தவன்) தலைமை தாங்கி னன். (இவன் பின்னர் துட்டகாமணியின் படையெடுப்பு நிகழ்ந்த போது, மாற்ருர் பக்கஞ் சேர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.) பாதுகாப்புக் கொள்கையுடன் திருப்தியுற்ற காகவண்ணனைப் போலன்றி, எதிர்த் தாக்குதலை மேற்கொண்ட- துட்டகாமணியின் வரலாற்றை இனிக் கவனிப்போம்.
iv. துட்டகா மணி உருகுணைக் கரசனுதல்:
மகாவம்சத்தின் பாட்டுடைத் தலைவன்: துட்டகாமணியின் வீர வரலாற்றை நாம் அறிதற்கு உதவும் பிரதான ஆதி" நூல் மகா வம்சமே. மகாவம்சத்தின் பாட்டுடைத்தலே வகை விளங்குபவன் துட்டகாமணி யென்பதில் ஐயமில்லை. மற்றைய அரசர்கள் எல் லோரிலும் (தேவானம்பிய திசன் உட்பட) மிகச் சிறப்பான இடத் தைத் துட்டகாமணியே பெற்றுள்ளான். மகாவம்ச ஆசிரியர் இவ்வாறு துட்டகாமணியில் ஈடுபாடு காட்டியமைக்கு, அவனுடைய அரசியற் சாதனையிலும் பார்க்க அவனுடைய சமயப் பணிகளே முக்கிய காரணமென்பதை நாம் உணரலாம். தமிழர் ஆட்சியில் போதிய அளவு வளர்க்கப்படாது, தன் பெருமையைச் சிறிது இழந்திருந்த பெளத்தத்தை அது முன்னெப்போதும் அடைந்திராத அளவுக்குச் சிறப்பெய்த வைத்தவன் துட்டகாமணி. இதனிலும் மேலாக, மகாவிகாரைக்குத் தனிச்சிறப்பை யளித்த மகாதூபமான ரூவன்வலிதாகபத்தையும், பிற கட்டிடங்களையும் நிறுவித் திேரவாத ப்ெளத்தத்துக்கு அரும்பணியாற்றினன். இவ்வாருன சமயக் கார ணங்களாலேயே, துட்டகாமணியை ஒரு காவியத் தலைவனக்க் மகாநாமதேரர் முனைந்துள்ளா ரெனலாம்.

துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும் 77
துட்டகாமணியின் வரலாற்றைக் கூறும் மகாவம்ச அத்தி யாயங்களை (3) 5. iiii-xxii). நோக்குவோர்க்கு, மேலே கூறப் பட்ட உண்மை தெளிவாகும். காமணியின் பிறப்பு இளமை, உருகுணைக் கரசனதல், தமிழருடன் நிகழ்த்திய போராட்டம் ஆகிய வற்றைக் கொண்ட அவனது அரசியல் வாழ்வைக்கூற நான்கு அத்தியாயங்களை யொதுக்கிய மகாவம்ச ஆசிரியர், அவனுடைய மதப்பணிகளை இயம்ப மீதியான ஏழு அத்தியாயங்களையும் பயன் படுத்தியுள்ளார். அவற்றுள்ளும் மகாதூபத்தை நிறுவிய வரலாறு நான்கு அத்தியாயங்களிற் கூறப்பட்டுள்ளமை, மேலே கூறிய உண் மையை வலியுறுத்தும். அரசியற் காரணங்களால் மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்று விடுதலை வீரஞகக் காட்சியளித்த காமணியை, ! சமய நோக்குடன் பார்த்த மகாவம்ச ஆசிரியர் ஒப்பற்ற காவியத் தலைவனுக்க முற்பட்டுள்ளார். இதனலேயே, காமணியிடத்துக் காணப்பட்ட குறைகளை நாம் காணுதவாறு செய்யவும், சில சந்தர்ப் பங்களில் அவற்றுக்குச் சமாதானங் கூறவும் முயன்றிருக்கின்ருர், தன்னேரில்லாத் தகைமை காவியத்தலைவனிடம் இருக்கவேண்டு மென்பதால், காமணியின் பிறப்பு, இளமை, அவன் நிகழ்த்தும் போர்கள் முதலானவற்றைக் கூறும்போது பல அதிசயச் செய்தி களையும் செயற்கையாகச் சேர்த்துள்ளார். மகாவம்ச ஆசிரியரின் நோக்கங்களை யறிந்துகொண்ட பின் அவர் கூறும் வரலாற்றினைச் சரிவரப் புரிந்து கொள்ளலாம்,
பிறப்பும் இளமையும்: காமணியின் பிறப்பைப் பற்றிக் கூறும் அத்தியாயம் முழுவதுமே, காவியத் தலைவனுக்கேற்றதாக ஆக்கப் பட்டுள்ளது. காமணியின் தாய் விகாரதேவி அவனைக் கருவுற் றமை, அவள் கர்ப்பிணியாயிருக்கும் போது அவளுக்குண்டான ஆசைகள், காமணி பிறந்தபோது தென்பட்ட நற்சகுனங்கள் முதலானவற்றை விபரிக்கும்போது, காமணி ஒரு வீரனுகவும், மதப்பற்று மிக்கவணுகவும் வளர்வானென்பதை அடிக்கடி நினை வூட்ட ஆசிரியர் எத்தனிக்கின்ருர். எடுத்துக் காட்டாக, காமணி பிறந்த அன்றே பல இன மணிகள் (இரத்தினங்கள்) நிரம்பிய ஏழு கப்பல்கள் கரையை வந்தடைந்தன என்றும், “சத்தந்த யானைக் கன்றை (ஆறு தந்தங்களையுடையதாகக் கூறப்படும் உயர் ரக யானை ) கண்டுலன் என்ற மீனவன் தான்கண்டதாக அரசனுக்குக் கூறினதாகவும், பொன்னலான பாத்திரங்கள் நிறைந்துள்ள கப்ப லொன்று வந்திருந்ததை அரசனுக்கு அறிவித்ததாகவும் பல நற் சகுனங்கள் தோன்றியமை கூறப்பட்டுள்ளது. காமணியின் பெயர் சூட்டுவிழாவிலும் இவை போலவே, இவன் பிற்காலத்தில் இலங்கை முழுவதற்கும் அரசனுகி, புத்தரின் தர்மத்தை ஒளிவிடச் செய் வான் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த அறிகுறிகள்

Page 49
78 பண்டைய ஈழம்
அனைத்தையும் கண்டு அகமகிழ்ந்த தந்தை, அங்கு கூடியிருந்: பன்னிராயிரம் குருமார்க்கும் அமுது வழங்கச்செய்து, காமணி அபய(ன்) என்ற பெயரையும் அவனுக்குச் சூட்டினன். காமனி, திசன் ஆகிய இரு சகோதரருக்கும் முதன் முதல் உணவு (சோறு) ஊட்டப்பட்ட போதும் புத்தரின் தருமத்தைக் கைவிடக்கூடா தெனத் தந்தையால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறு தொடக்கத்திலிருந்தே காமணியின் வரலாற்றை காவியச்சுவை மிளிரும் வகையில் மகாவம்ச ஆசிரியர் அமைத்துள்ளதைக் காண லாம். இத்தகைய செய்திகளிலோ அல்லது கதைகளிலோ அதிக உண்மையிருக்கும் என நம்பி நாம் மலைவடைதல் கூடாது.
தந்தையுடன் காமணி முரண்படுதல்: சிறுவணுக இருந்தபோதே, காமணியின் விடுதலையார்வத்தையும் நாட்டுப்பற்றையும் புலப் படுத்த மகாவம்சத்தில் சில கதைகள் கூறப்பட்டுள்ளன. காமணி யையும் திசனையும் தந்தை காகவண்ணன் மூன்று வாக்குறுதிகளைத் தருமாறு கேட்டான். இரு சகோதரர்களும் ஒரு போதும் தமக்குள் சண்டையிடக்கூடாது எனவும், சங்கத்தினர்க்கு எப்போதும் பணி es இருக்கவேண்டுமெனவும், தமிழர்களுடன் போருக்குப் போகக் கூடாதெனவும் மூன்று வாக்குறுதிகளை யளிக்குமாறு தந்தை வேண் டியபோது, மூன்முவது வாக்குறுதியை அளிக்க மறுத்த காமணி, தன் கால்களை முடக்கிக்கொண்டு படுத்திருந்தான். இதைக் கண்ட தாய் விகாரதேவி, காமணியை அவ்வாறு படுத்திருந்தமைக்குக் காரணத்தை விசாரித்தபோது, ஒருபுறம் சமுத்திரமும் மறுபுறம் தமிழரும் தனக்கு முட்டுக்கட்டைகளாக விருக்க, கால்களே எவ் வாறு நீட்டுவதெனக் காமணி வினவியதாக உள்ள கதை அனை வர்க்கும் தெரிந்ததே. இக் கதையை நாம் அப்படியே உண்மை யாகக் கொள்வதற்கில்லை. இது போலவே, படை வீரர்களைத் திரட்டிவந்த காமணி தமிழருக்கு எதிராகப் படையெடுக்கத் தந்தையை அனுமதி கேட்டபோது, அதற்குத் தந்தை மறுக்கவே சீற்றங்கொண்ட காமணி, தன் தந்தையை அவமானப்படுத்த எண்ணிப் பெண்களுக்குரிய ஆபரணங்களை அனுப்பிவைத்துவிட்டு மலையகத்துக்கு ஓடினன் என வரும் கதையும் காமணியின் வீரத்தையும், அளவற்ற விடுதலை வேட்கையையும் புலப்படுத்த எழுந்ததே. காமணியின் வீரத்தைக் காட்டுதற்குக் காகவண்ணன் பேடியாகக் காட்டப்பட்டுள்ளர்னேயன்றி, உண்மையில் காக வண்ணனே பின்னர் ஏற்பட்ட காமணியின் புகழுக்கு உரிய ஆக்க வேலைகளைச் செய்திருந்தான் என்பதை தாம் உணரவேண்டும். உருகுணையில் காகவண்ணன் காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமையின் பலமே, பின்னர் முழு இலங்கையையும் ஒன்றுபட வைத்த தென்பது தெளிவு.

துட்ட காமணியும், இலங்கையின் விடுதலையும் 79
சகோதரரிடையே போரும் அமைதியும்: காமணி மலையகம் சென்று சில ஆண்டுகள் கழியுமுன், காகவண்ணன் இறந்துவிட்டான். தீக வாபியில் இருந்த திசன் இச்செய்திகேட்டு மகா கனிம சென்று பட்டத்து யானையையும், தாய் விகாரதேவியையும் அழைத்துக் கொண்டு தீகவாபிக்கு மீண்டான். இது சகோதரரிடையே பகை மையைக் கொண்டுவரக்கூடிய செயலாகவிருந்தது. இதனிடையே துட்டகா மணியும் தந்தையிறந்த செய்தியை அவனது அமைச் சர்கள் கூறக்கேட்டு மகாக மைக்கு விரைந்தான். அங்கே தன்ஃ அரசனுகப் பிரகடனப் படுத்திவிட்டு, தன் தம்பி திசன் கொண் சென்ற பட்டத்து யானையைத் திருப்பித் தருமாறும், தாய் விகார தேவியை அனுப்பி வைக்குமாறும் அவனுக்கு வேண்டுகோள் அனுப் பிஞன். இதற்குத் திசன் இணங்காது போகவே, இருவருக்கும் போர் மூண்டது. உருகுணப் ப்டையினர், காகவண்ணன் முன் னரே வேண்டியிருந்தபடி, எப்பக்கமும் சாராதிருந்தனர். எனவே இரு சகோதரர்களும் தமது சொந்தப் படைகளைக்கொண்டே போர் புரியவேண்டியிருந்தனர். சகோதரர்களிடையே நடைபெற்ற முதற் சண்டையில் (சுளங்கணிய-பிட்டி எனுமிடத்தில் நடை பெற்றது) திசனே வெற்றிகொண்டான் எனப்படுகின்றது. புதிய படைகளைத் திரட்டி மீண்டும் சண்டையைத் தொடர்ந்து, இரண் டாவது சண்டையில் தன் குதிரையைச் செலுத்திய திறமை காரண மாக வெற்றியீட்டினன். இவ் வெற்றியின் பலஞக, பட்டத்து யானை ( கண் டு ல ) காமணி வசமாயிற்று. விகாரதேவியும் காமணியுடன் மகாகமைக்குச் சென்று வாழ்ந்து வரலாள்ை. சகோதரரிடையே நடந்த போரின் முடிவில் சங்கத்தினர் தலையிட்டு இருவர்க்கு மிடையே சந்து செய்து வைத்தனர். திசன் மீண்டும் தீகவா பிக்கே சென்று, உணவுற்பத்தி வேலைகளைக் கவனிக்கலானன். எனவே, உருகுணையின் அரசுரிமையைத் தன் தம்பியுடன் போரிட்டு நிலைநாட்டிக் கொண்ட பின், தன் வாழ்க்கைப் பணியாகக் கருதிய இலங்கைக்கு விடுதலை பெறல் என்பதைத் தொடங்குவதற்கு ஆயத்தமானன்.
V. கா மணியின் விடுதலைப்போரும், சமயப் பணிகளும்
தன் இளமைக்காலக் கனவை நனவாக்கும் வாய்ப்புக் கிடைத் ததும், காமணி தான் நிகழ்த்தவிருந்த பெரும்போருக்கான ஆயத் தங்களைப் பூர்த்தி செய்தான். புடைவீரர் ஆயிரக்கணக்கில் திரட் டப்பெற்று பயிற்சியளிக்கப்படலாயினர். போர் முறையின் நுட் பங்கள் அவர்களுக்குப் புகட்டப்பெற்றன. வேண்டிய படைக்கலங் களும் தயாராக்கப்பட்டன. படைக்கு வேண்டிய உணவைத் தீக வர்பிப் பகுதியில் பெறுதற்கு இளவரசன் திசன் மேற்பார்வையில் ஒழுங்குகள் செய்யப்பட்டன. இவ்வாரு ன ஆயத்தங்கள் யாவும்

Page 50
80 பண்டைய ஈழம்
பூர்த்தியாகிவிடவே, தன் வாழ்வின் பெரும்பணியை நிறைவேற்றக் காமணி புறப்பட்டான். தான் மேற்கொண்ட போரின் தன்மை யைக் காமணி இவ்வாறு கூறினன்: ' இறைமை தரும் இன்பத்துக் காகவன்று இப்பணியை யான் மேற்கொண்டிருப்பது; சம்புத்தரின் தருமத்தை நிலை நிறுத்தவே என்றைக்கும் என் உழைப்பு இருந்து வந்துள்ளது. ’’ ( மகா. அத். x*y செய். 17) வெறும் அரசியல் வெற்றிக்காகவோ, அதிகார ஆசைக்காகவோ தான் போரை நடத்த வில்லையென அவன் தன் வீரர்களுக்கு அறிவுறுத்தினன். பெளத் தத்தை மேனிலைப்படுத்தவே இவ் விடுதலைப்போரை மேற்கொண்ட தாக அவன் விளக்கங் கொடுத்தான். இவ்வாருன கருத்தை அவன் உண்மையில் கொண்டிருந்தானே வென்பது தெளிவில்லை. ஆனல், மகாவம்ச ஆசிரியர் தமது பாட்டுடைத் தலைவனை, மதத்துக்கே முத லிடத்தை யளிக்கச் செய்ததன் மூலம், காமணியைக் காவியத்தலைவ ஞக்க எண்ணினர் என்பது மட்டும் உறுதி. தனியே தேசிய அல் லது இன விடுதலை வீரனுகக் கொள்ளாது, மதப்பற்றின் அடிப்படை யிற் செயலாற்றிய தேசிய வீரனுகக் காட்டுவதிலேயே மகாநாமதேரர் அக்கறை காட்டினர். எனவேதான், காமணி தன் படையெடுப்பைத் தொடங்குமுன், திசமகராமை (விகாரை) க்குச் சென்று, ஐந்நூறு பிக்குகளைத் தன் படையுடன் வருமாறு அழைத்துச் சென்ரு ன். துறவிகளின் தோற்றம் தம் படையினர்க்கு "ஆசீர்வாதமும் ஆதரவும்’ தரும் எனக் கூறினன். காமணியுடன் தாய் விகாரதேவியும் உடன் சென்று, வேண்டிய இடத்து உற்சாகத்தையும் ஆலோசனைகளையும் வழங்கினுள். இதனல், விகாரமகாதேவியும் சிங்கள் இனத்தின் பெரு மதிப்புக்குரிய தலைவியானள்.
காமணி தொடர்ந்த "புனிதப் போரின் நிகழ்ச்சிகளில் வரும் இடப் பெயர்களையும், படைத் தளபதிகளின் பெயர்களையும் பெரும் பாலும் உண்மை (வரலாற்று)ப் பெயர்களாகவே ஆராய்ச்சியாளர் கொள்கின்றனர். இடப்பெயர்களில் ஒரு சில இன்னும் அடையாளங் கண்டுகொள்ளப்படவில்லை, ஆணுலும், அவை மகாவலிகங்கையின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தனவாதல் வேண்டும். இவற்றிற் பல இன்று காடுகளால் மூடப்பட்டுவிட்ட்ன வென்பர். இடப் பெயர்களைப் போலவே, துட்டகாமணியின் பத்துத் தளபதிகளின் பெயர்களிற் சில (நந்திமித்த-அபயன், புஸ்ஸதேவ) கல்வெட்டுக்களால் உறுதிப் படுத்தப்பட்டதைக் கொண்டு, இப்பெயர்கள் அனைத்துமே உண்மை மாந்தரின் பெயர்களெனக் கொள்கின்றனர். இனி நாம் காமணி யினது படையின் செலவைக் கவனிப்போம். மகாகமையிலிருந்தே இப் பெரும் படை புறப்பட்டது. மகாகமையிலிருந்து வடக்கு நேரக் கிச் சென்ற படையானது, மகாவலிகங்கைக் கரையிலுள்ள மகியங் கணையை அடையுமுன் களுவெல, குட்டஹால (புட்டளை), கிரிகமை

துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும் 81
முதலான பல இடங்களில் தங்கிச் சென்றது. தமிழரின் படை யரண்கள் மகாவலிக்கு அருகாமையிலே பெரும்பாலும் நிறுவப்பட் டிருந்தன. மகியங்கனையிலேயே முதன்முதலாகத் தமிழ்ப் படையி னர்க்கும் காமணியின் படைக்கும் சண்டை நிகழ்ந்தது. சத்த*ன்
نتیجه آ| კმ) (*
లెక్కడికగా 5 7.ததிரத்தம் {{ "Grgä g
i sefonss i assists
Տ
இகமாறும w அம்பூதிர்த்தம் `ëချဲ மகியங்கை சதீகவாதி
کس سسچٹھہرے
காமணியின் படை சென்ற பாதை
* தமிழ்ப் படைத் தளபதிகளின் பெயர்கள் அடைந்துள்ள மாறுதல் களால், அவை தமிழ்ப் பெயர்களோ வென்ற ஐயம் ஏற்படுகின்றது. இவற்றின் தமிழ் உருவங்களை மீட்க ஆராய்ச்சியாளர் முன்வருதல் வரவேற்கப்படும்.

Page 51
82 பண்டைய ஈழம்
என்ற தளபதியின் தஃலமையிலிருந்த படையை மகியங்கஃனயில் வென்று முன்னேறிய காமணியின் படையானது, அடுத்து அம்பதிர்த்த
என்ற இடத்தில் மீண்டும் தமிழரின் எதிர்ப்பைப் பெற்றது. நான்கு மாதங்கள் நீடித்த போருக்குப் பின், தித்தம்பன் என்ற தமிழ்த் தளபதியைக் காமணி சூழ்ச்சியைக் கொண்டு வென்ருன் எனப்படு கின்றது. மகாவவிகங்கையின் வலதுபுறக் கரையால் மேலும் முன் னேறிய விடுதலேப் படை அந்தரசொப்ப, நாளிசொப்ப, கச்சதீர்த்தம் கொட்டநகரம், நந்திக்கிராமம் முதலான பல இடங்களிற் சண்டை செய்தது. மகாவலிகங்கையை (கச்சதீர்த்தம் என்ற) மாகந்தோட்டைக்கு அண்மையிலுள்ள ஓரிடத்திற் கடந்து, விஜிதபுரம் என்ற அரண்க் கீைப்பற்றுவதற்குக் கடும்போர் செய்தது. விஜிதபுரம் என்பது இப் போது பொலன்னறுவையுள்ள இடத்தில் அல்லது அதற்கு அண்மை யில் அமைந்திருக்கவேண்டும். இங்கிருந்த அரண் உறுதியான மதிற் #வர்களேயும் இரும்பாலான கதவுகளேயுங் கொண்டிருந்ததாலும், தமிழ்ப் படைகள் தம்முழுப் பலத்துடன் இவ்வரனேக் காத்து நின்ற மையாலும் இந்த அரனேக் காமணியின் படை வெல்வதற்கெடுத்த பல முயற்சிகள் தோல்விகண்டன. இறுதியில் அரஃணத் தகர்த்துத் தமிழ்ப்படையினர்க்கும் பல அழிவுகளே யுண்டாக்கி அப்படை அணு ராதபுரத்தை நோக்கிச் சென்றது. இடையே கிரிலக மகிளநகரம் என்ற இடங்களில் தோன்றிய எதிர்ப்பை வென்ற பின்னரும், காமணியின் படை அனுராதபுரத்துக்குச் செல்லாது, அதற்குத் தென்கிழக்கே பதினெட்டு மைல் தொஃலவிலுள்ள காசபர்வதம் (கஹகல கம) என்ற இடத்தில் சிறிது காலம் தங்கியிருந்தது. மகாசுமையிலிருந்து புறப் பட்டு ஓராண்டுக்கு மேலாகியிருந்தமையாலும், படையிற் பலத்த அழிவுகள் ஏற்பட்டிருந்தமையாலும் காமணி தன் படைக்கு ஆறுத வளிக்க எண்ணியே இவ்வாறு காசபர்வதத்தில் தங்கினுன் என்பர் உருகுணேயிலிருந்து உதவிப் படைகளேயும் உணவையும் பெற்று இறுதித் தாக்குதலுக்கு எல்லா ஆயத்தங்களையும் செய்யப் போதிய அவகாசத்தைக் காமணி பெற்றிருப்பான்.
காசடர்வதத்திற் பல மாதங்கள் தரித்திருந்த சிங்களப் படையை எல்லாளனது படையினர் தாக்க முற்பட்டனர். எல்லாளானது படை பின் முக்கிய தளபதியான தீகஜந்து தீவிரமாகப் போர் செய்து, காமணியின் உருவங்களே வெவ்வேறு இடங்களில் தாக்கி ஏமாந்தா னெனப்படுகின்றது. இறுதியில் சூரநிமிலன் என்ற சிங்களத் தளபதி பால் தாக்கப்பட்டு அவன் கொலேயுண்டபின், தமிழ்ப் படைகள் அனுராதபுரத்துக்குப் பின்வாங்கவாயின. காமனியின் வீரர்கள் தமிழ்ப் பட்ைகளேப் பின்தொடர்ந்து தாக்கித் தமிழ்வீரர் பல்ரைக் கொன்றனர். அனுராதபுரத்தை யடையுமுன் எல்லாளனது பட்ையைத் தாக்கி முறியடிக்கக் காமணியின் பன். திட்டமிட்டிருந்தது. .ר' חיוביום זה
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துட்டகாமணியும், இலங்கையின் விடுதலையும் 8,
ள*னத் தான்ே பொருது வெல்லவேண்டுமென அறியப்படுத்தி
காமணி, தமிழ் வேந்தனைத் தனிச் சமருக்கழைத்தான். அன.
கூவலே ஏற்ற எல்லாளனுக்கும் காமணிக்கும் அனுராதபுரத்தில் நகரின் தெற்கு வாயிலுக்கு அண்மையில் கடுஞ்சமர் நிகழ்ந்தது சமரின் முடிவில் எல்லாளன் கொலேயுண்டு மடிந்தான். மகாவம் விவரங்களின்படி, போர் இவ்வாறு முடிவுற்றபின், இறத்துபட்ட தன் பகைவனது சடலத்தை உரிய மரியாதைகளுடன் அடக்கள் செய்வித்து, அவன் கொலையுண்ட இடத்தில் அவனது நினேவுச் சின்னமொன்றைக் காமணி எழுப்புவித்தான். இச் 'சைத்திய'த் துக்கு அருகாமையில் வரும் பவனிகள் வாத்திய ஒலியை நிறுத்திச் செல்ல வேண்டும் என அவனுல் இயற்றப்பட்ட கட்டளே நெடுங் காலம் பின்பற்றப்பட்டதாகத் தெரிகின்றது. துட்டகாமணி தான் அடைந்த வெற்றியின் பின் தலைநகருட் பிரவேசித்த ஒரு சில நாட் களில் எல்லாளனுக்குதவியாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்த
படையொன்றைக் கொலம்பகாலக என்ற இடத்தில் முறியடித்
தான். இதன்பின் இலங்கை முழுமைக்கும் துட்டகாமணி முடி சூடிக்கொண்டு, இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினுன்.
ΜΕΣ R துட்டகாமினி தனது ஆட்சிக் காலத்தில், மதப்பணிகளுக்கு முதன்மை பளித்தான் என்பதை முன்னே கூறினுேம். அப்
பணிகளே இனிச் சுருக்கமாகக் கவனிப்போம் துட்டகாமனி நிறு விய முதலாவது சமயக் கட்டிடம் மிரிாவட்டி தாகபமாகும். இது திசவாவிக்கண்மையில் நிறுவப்பட்டிருந்தது. ஒன்பது மாடிகளை யுடைய உபோசத மண்டபமொன்றை மகாவிகாரைக்கு நிறுவிக் கொடுத்தான். இதுவே லோவமகாபாய (லோகபாசாத) வாகும்.
இவையெல்லாவற்றையும் விட, மிகுந்த செலவில் மிகப் பெரிய
அளவில் கட்டப்பட்டதே ரூவன் வலிரயா வெனப்படும் மகாதூப மாகும். இது போன்ற டாரிய கட்டிடம் இதற்கு முன் இலங்கை பில் இருந்ததில்ஃல. அக்கால இந்திய ஸ்தூபங்களும் ரூவன்
வலிசயாவைப் போன்ற அளவு பெரிதாக இருக்கவில்லே, பிற்
காலத்தில் இந்தத் தாகபமே வழிபாட்டுக்குரிய மிக முக்கிய இட மாக விளங்கியதாலும், மகாவிகாரைக்குரிய ஸ்துTடங்களில் இது முதன்மை பெற்றதாலும் இதை நிறுவியதால் துட்டகா மணிக்கு அளவற்ற பெருமை யுண்டாயிற்று. விகாரைகளுக்கு அவன் வழங் கிய நன்கொடைகளாலும், அவன் ஆற்றிய பிற பணிகளாலும், காமணி பெளத்தத்தை மக்களின் பெருமைக்குரிய மதமாக்கின்ை.
சமயத்துறையில் அவனது மிகப் பெரிய சாதனையான மகாது பம் முற்றுப்பெறுமுன், துட்டகா மணி காலமானுன் துட்டகா மணி நாட்டுக்கும் இனத்துக்கும் மதத்துக்கும் ஆற்றிய பெரும் பணி

Page 52
84 பண்டைய ஈழம்
களால் இலங்கையை ஆண்ட பெருமன்னர்களுள் : முன்னணியில் வைத்தெண்ணப்படுகின்றன். காமணியின் புகழ்மிகு வரலாற்றை மகாவம்சம் போன்ற காலவேடுகள் இன்றுவரையும் பேணிக் காத்து வந்துள்ளன.
பயிற்சி:
1. தென்னிந்தியாப் படமொன்றை வரைந்து, அதில் தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகள், மலைகள், துறைமுகங்கள் முதலானவற்றையும் சங்ககால அரசுகளின் எல்லைகளையும் தலைநகர்களையும் குறித்துப்
பெயரிடுக.
2. மகாவம்சத்தில் துட்டகாமணியின் வரலாற்றைக் கூறும் அத்தி யாயங்களை (சிறப்பாக 22ம் அத். தொடக்கம் 25 அத். வரை ) படித்து, இவை பற்றிய உங்கள் மதிப்பீட்டைத் தருக.
3. தேவானம்பிய திசன், துட்டகாமணி ஆகிய இருவருள் சிறந்த மன் னன் யார் என்பதை இரு குழுக்களாக வகுப்புப் பிரிந்து ஆராய்ந்து வரும் முடிவுக்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.
கூட்டுவேலைக்கு:
இலங்கைப் படமொன்றைப் (பிறிஸ்டல் போர்ட்டில்) பெரிதாக வரைந்து, துட்டகாமணியின் போர்ப் பாதையைக் குறித்துக்காட்டுக. சண்டை நிகழ்ந்த முக்கிய இடங்களை விசேட அடையாளங்கள் கொண்டு 56 mills) Tid.
தேர்வு விஞக்கள்:
1. துட்டகாமணி அரசனுகும் வரை, உருகுனேயின் அரசியல் வரலாற்
றைச் சுருக்கமாகக் கூறுக.
2. சங்க காலத் தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைச் சுருக்கமாகக் கூறி, அதற்கும் இலங்கைக்குமிடையே நிலவிய அரசியற் ருெடர் புகளைக் கூறுக.
3. ட்டகாமணியின் முக்கிய சாதனைகளை விளக்கிக் கூறுக. (அல்லது துட்டகாமணியைத் தலைசிறந்த இலங்கை மன்னனுகப் போற்றுதற் குரிய காரணங்களை விளக்குக.)

அத்தியாயம் ஏழு துட்டகாமணியின் பின்னுேரும்,
சமய விருத்திகளும்
1. அரசியல் வரலாறு - சத்தா திசன் முதல் சபா வரை i. சமய விருத்திகள்
விஜயனுடைய அரசமரபில் வந்தவர்களாகக் கொள்ளப்படும் மன்னர்கள், துட்டகாமணிக்குப் பின்னர் மேலும் இரு நூற்றண்டுகள் வரையில் ஆட்சி செலுத்தினர். யசலாலக திசன் ஆட்சியுடன் இம் மரபு கி. பி. 59 அளவில் முடிவெய்தியது. சபா என்பவனல் அப கரிக்கப்பட்ட ஆட்சியை, இலம்பகண்ண மரபைச் சேர்ந்த வசபன் என்பவன் கி. பி. 65ல் கைப்பற்றிய பின், அம்மரபு மேலும் சில நூற்றண்டுகள் அரசு செலுத்தியது. துட்டகாமணிக்குப் பின் சுமார் பத்தொன்பது மன்னர்கள் இரு நூற்ருண்டுகளாக ஆட்சி செய்தனர். துட்டகாமணியுடன் ஒப்பிடும்போது, இவர்களிற் பெரும்பாலானவர் களுடைய ஆட்சிக் காலங்கள் அவ்வளவு சிறப்புடையவையாக இருக்க வில்லை. வட்டகாமணி ஒருவனே இவர்களுள் ஒரளவு சிறப்புடைய ஆட்சியை யுடையவனவான். ஏனைய அரசர்கள் பற்றி நாம் மிகச் சுருக்கமாகத் தெரிந்துகொண்டாற் போதுமானது. இவ்வத்தியா யத்தில், துட்டகாமணிக்குப் பின் அரசைப் பெற்ற சத்தா திசன் முதல் சபா என்பவனது காலம் வரையுள்ள அரசியல் வரலாற்றின் போக்கு முதலிற் சுருக்கமாகக் கூறப்படும். இதன்பின், பெளத்த மதத்தில் ஏற்பட்ட சில விருத்திகளை யறிவோம். இக்காலப் பகுதியின் முக்கிய அம்சமும் இதுவேயாதலால், இதை மாணவர்கள் சிறப்பாகக் கவனித் தல் வேண்டும். சமயத் துறையில் ஏற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கும், அரசியல் வரலாற்றுக்குமிடையே நிலவிய தொடர்புகளையும் அவ தானித்துக் கொள்ளுதல் வேண்டும்.
i. அரசியல் வரலாறு-சத்தா திசன் முதல் சபா வரை
( கி. மு. 137 - கி. பி. 65 )
துட்டகாமணியின் மிகப் பெரிய அரசியற் சாதனை நாட்டுக்கு விடுதலையளித்து, ஒற்றுமையை நாட்டியமையே என முந்திய அத்தி யாயத்திற் படித்தோம். இவ்வொற்றுமையானது, பின் வந்த அர சர்களின் காலத்தில் போதிய அளவுக்குப் பேணப்படவில்லை. அடிக்கடி அரசியற் குழப்பங்களும், சச்சரவுகளும் ஏற்பட்டு இந்த ஒற்றுமையைச் சிதறச் செய்தன. உரிமையுடையவர்கள் பலவீனமுள்ளவர்களாக இருந்தமையும், தன்னலங்கொண்டவர்களின் வேட்கைக்கு இந்நிலைமை வாய்ப்பளித்தமையும், இதன் விளைவாக அந்நியர் தலையீடு ஏற்பட்

Page 53
86 . . . . பண்ட்ைய் ஈழம்
டமையும் இக்கால அரசியற் போக்கில் அடிக்கடி காணப்பட்ட சில தன்மைகளாகும். அரசியல் தகராறுகள் மலிந்திருந்ததால் நாட்டில் அமைதி குலைந்திருந்தது; சமயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மன்னர்கள் இப்பொதுவான அரசியற் போக்குக்கு விலக்காகவும் இருந்தனர். திறமையும், நாட்டுப்பற்றும், குடிகளின் நலனில் நாட் டமும், சமய முன்னேற்றத்தில் அக்கறையும் உடையவர்களாக இருந்து, நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, முன் னேற்றத்தை உறுதிப்படுத்தினர். இவர்களின் பணிகள், ஏனைய மன் னர்களின் ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற குழப்பங்களால் பயனற் றவையாக்கப்பட்டன. இப் பகுதியில், நாம் இம்மன்னர்கள் பற்றிய சில முக்கிய செய்திகளைக் கவனிப்போம். (அத்தியாய முடிவில் தரப் படும் மன்னர்களின் மரபு வரிசையைக் காட்டும் நிரலைப் பார்க்கவும்.)
சத்தா திசன்: துட்டகாமணியின் பணிகளைப் பல வகைகளில் நிறைவுபெறச் செய்தவன், அவனது தம்பி சத்தா திசன் ஆவான். பெளத்த மதப்பற்று மிக்கவனன இவன் சமயப்பணிகளிலேயே தனது அமைதி நிறைந்த பதினெட்டாண்டு ஆட்சியைச் செலவிட்டான். சத்தா திசனுக்குப் பின், ஆட்சியுரிமை பற்றிய தகராறு தோன்றியது. இவனது புதல்வர்களில் மூத்தவனன லஞ்ச திசன் புறக்கணிக்கப்பட்டு தூலத்தனன் என்ற இளவல் அமைச்சர்கள் சிலராலும் சங்கத்தின் ராலும் அரசனுக்கப்பட்டான். உருகுணையிலிருந்த லஞ்ச திசன், தலை நகர்க்கு விரைந்து தனதுரிமையை நிலைநாட்டிக் கொண்டான். லஞ்ச திசனது ஆட்சி முடிவெய்திய போது, அவனது மற்ருெரு தம்பியான கல்லாட நாகன் ஆட்சியைப் பெற்றன். இவனுடைய ஆட்சியை அப கரிக்க, மூன்று இளவரசர்கள் சூழ்ச்சிசெய்து தோல்வி கண்டனர். ஆட்சிக் கெதிரே நடைபெற்ற சதிகளால், நாடு அமைதியை இழந்து நின்றது. மகாரத்தகன் என்ற படைத்தளபதி யொருவன் கல்லாட நாகனை வென்று அரசைக் கைப்பற்றினன். இந் நிலையிலேயே, சத்தா திசனது புதல்வர்களில் ஆக இளையவனன வட்டகாமணி போலியாள னைத் தோற்கடித்து, அரசைப் பெற்றுக்கொண்டான்.
வட்டகாமணி: வட்டகாமணி அபயனது ஆட்சி அரசியல், சமயம் ஆகிய இருதுறைகளிலும் முக்கியம் வாய்ந்தது. அவனது ஆட்சி தொடங்கிய போது, அரசியற் முெல்லைகள் மிகுந்து காணப்பட்டன. இவற்ருல், தொடக்கத்திலேயே அவனுடைய ஆட்சிக்கு ஆபத்து நேரிட்டது. உருகுணையைச் சேர்ந்த திச(ன்) என்ற பிராமணன் கலகத்தைத் தொடக்கி வைத்தான். இதே வேளையில், ஒரு தென் னிந்தியப் படையெடுப்பும் இலங்கை மீது நடைபெற்றது. இலங்கையின் அரசியலில் அண்மையில் ஏற்பட்ட சீர்கேடுகள், ஏழு தமிழ்ப் பிர தானிகள் தலைமையில் ஒரு படையெடுப்பு நடைபெறத் தூண்டுதல்

துட்டகாமணியின் பின்னேரும், சமய விருத்திகளும் 87
அளித்தன. இப் பிரதானிகள் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின்றது. புலஹத்தன், பாகியன், பனையமாறன், பிளைய மாறன், தாடிகன் முதலான பெயர்களை அவர்கள் தொண்டிருந்த தாகக் கூறப்படுகின்றது. மதாதீர்த்தத்தில் தமிழ்ப் படிை இறங்கி யதைக் கேள்வியுற்ற வட்டகாமணி, தன்னை எதிர்நோக்கிய இரு ஆபத்துக்களையும் சமாளிக்க வகைதெரியாது தவித்தான். தமிழரைத் தோற்கடித்தால் அரசைத் திசனிடம் ஒப்படைப்பதாகக் கூறவே, திசன் தமிழரை எதிர்த்துத் தோல்வியெய்தினன். விரைவில் அனு ராதபுரத்தை நோக்கி முன்னேறிய தமிழ்ப் படைக்கும், வட்டகாமணி யின் படைக்கும் (அனுராதபுரத்துக் கண்மையிலுள்ள) கொலம்பகாலக விற் சண்டை நிகழ்ந்தது. வட்டகாமணியின் படை தோல்வியெய்தவே களத்தினின்றும் அவன் தப்பியோடினன். நகர்க்குள் விரைந்து தன் குடும்பத்தவருடன் ஒர் இரதத்தில் நகரைவிட்டு வெளியேறினன் களத்தினின்றும் தப்பியோடியதைப் பார்த்து, "பெரிய கருஞ்சிங்* தப்பியோடுகின்றதே!’ எனக் கிரி யென்ற ஒரு சமணத்துறவி பரி கசித்தாராம். இதைக்கேட்ட வட்டகாமணி கிரியின் பள்ளியிருக்கு மிடத்தில் பெளத்த விகாரையை நிறுவ உறுதிசெய்தானெனப்படும். வட்டகாமணியின் இராணியான சோழரதேவி தமிழ்ப் பிரதானி ஒருவனிடம் சிக்கினள். மற்ருெருவன் புத்தரின் ஐயக்கலத்தை அப கரித்துக் கொண்டான். இந்த இரு பிரதானிகளும் இந்தியா மீண் டனர். ஏனைய ஐவரும் (மேலே பெயர்கள் தரப்பட்டவர்கள்) அணு ராதபுரத்தில் ஆட்சியை நடத்தி வந்தனர். இவர்களிடையேயும் ஒற் றுமை யில்லாததால், ஒருவனைக் கொன்றே மற்றவன் ஆட்சிசெய்த தாகக் கூறப்படுகின்றது. ஐவரும் பதினன்கு ஆண்டுகள் ஏழு மாதங் களாக ஆட்சி செய்யலாயினர். இதன் முடிவிலேயே மீண்டும் வட்ட காமனி படைதிரட்டி வந்து, தாடிகன் என்ற இறுதித் தமிழ் அர சனத் தோற்கடித்து, அரசை மீண்டும் பெற்றுக் கொண்டான். வட்டகாமணி அரசையிழந்து, அனுராதபுரத்துக்குத் தெற்கே யிருந்த காடுகளிலும், மலையகத்திலும், பின்னர் உருகுணையிலும் சஞ்சரித்த பதினன்கு ஆண்டுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அவனது சமயப்பற்றை விளக்கவே உதவுபவை. உரு குணையிலுள்ள ஆகாச சேதிய எனுமிடத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யால், வட்டகாமணிக்கும், அவனது அமைச்சர்களுக்கும் பெரும் முரண் பாடு தோன்றிய போது, பெளத்த சங்கத்தைச் சேர்ந்த குருமார் களே தலையிட்டு இவர்களை ஒன்றுபட வைத்தனர். உருகுணையிலிருந்தே ஒரு படையைத் திரட்டிச் சென்று தமிழருடன் பொருதி அரச்ை மீட்டுக்கொண்டான். இவனுடைய தளபதிகள் எழுவரும் பல தீரச் செயல்களை இச் சண்டையின் போது புரிந்ததாக நம்பப்படுகின்றது. ஆட்சியை மீண்டும் பெற்ற வட்டகாமணி, பன்னீராண்டுகள் வரை பில் ஆட்சி செய்யலானன். சமயப் பணிகளிலேயே அவன் முக்கிய

Page 54
88 பண்டைய ஈழம்
மாக ஈடுபட்டிருந்தான். இவற்றை நாம் அடுத்த பகுதியிற் காண் போம். அந்நியராட்சி நடைபெற்றபோது, பல சீர்கேடுகள் நாட்டில் ஏற்பட்டன. இவற்றுள் மிகக் கோரமான உணவுப் பஞ்சம் (பிராமண திசன்-பஞ்சம்) ஒன்று நாட்டில் தாண்டவமாடியதாகச் சில நூல்கள் கூறும். இதனல் பல இன்னல்களை மக்களும், மதகுருமார்களும் அடைந்ததாகத் தெரிகின்றது. (மகாவம்சம் இப் பிராமண-திசன் பஞ்சம் பற்றியெதுவும் கூறவில்லை யென்பது நோக்கத்தக்கது.)
அனுளா: வட்டகாமணிக்குப் பின் அரசெய்திய மகாசூளி மகா திசன் காலத்தில், குறிப்பாக அவனது ஆட்சியின் பிற்பகுதியில் குழப் பம் ஏற்படலாயிற்று. இதற்குக் காரணமாக இருந்த சோரநாகன், அரச மரபைச் சேர்ந்தவனுவான். கலகக்காரணுகவும், கொள்ளைக்கார னகவும் வாழ்ந்து பல அழிவுகளை இவன் நாட்டிற் செய்தான். சோரநாகன் அரசைப் பெற்ற பின்னரும், தனக்கு முன்னர் புகலிடம் அளிக்காத விகாரைகளைத் தரைமட்டமாக்கினன். இவனுடைய ஆட் சியை முடிவுக்குக் கொண்டுவந்த அனுளா, திசன் என்பவனை அரச னக்கிப் பின்னர் அவனையும் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டுத் தானே அரசையேற்று நடத்தினுள். இலங்கையின் வரலாற்றில் முதல் இராணி யாக விளங்கிய பெருமைக்குரியவளான இவளது நடவடிக்கைகள் யாவும் பெண் குலத்துக்கே மாசு கற்பிப்பவையாக இருந்தன.
அமைதியும் முன்னேற்றமும்; இவளைக் கொன்று ஆட்சியைப் பெற்ற குடகண்ண அபயன் (அல்லது திசன்) முன்னர் பெளத்தத் துறவியாக இருந்தவன். இவனுடைய ஆட்சியுடன், முன்னர் நிலவிய கொந்தளிப்பு அடங்கி, நாடு நீண்டகாலம் அமைதியை அனுபவிக்க லாயிற்று. இவனும், இவனுக்குப் பின் அரசைப் பெற்ற பாதிக அபயன், மகாதாடிக மகாநாகன், ஆமண்ட காமணி அபயன் ஆகியோரும் ஆட்சி செய்த சுமார் தொண்ணுரருண்டுக் காலத்தில் நாடு அமைதியையும் முன்னேற்றத்தையும் கண்டது. நாட்டுக்கு மிகவும் தேவைப்ப்ட்ட நல்லாட்சியை இவர்கள் தொடர்ந்து நல்கினர். சமயப் பணிகளில் இவர்களும் அதிக நாட்டங்கொண்டு உழைத்தனர். பாதிக அபயன் காலத்திலேயே உரோமப் பேரரசுக்குத் தன் தூதுவர்களை யனுப்பி அங்கிருந்து பெற்ற பவளத்தை மகாதூபத்தை அணிசெய்யப் பயன் படுத்தினன்.
இளநாகன் - இலம்பகண்ணர் முரண்: தன் தமையன் ஆமண்ட காமணியைக் கொன்று அரசைப் பெற்ற கணிரஜானு என்பானைபும் அத்தகைய ஒரு கதியே காத்திருந்ததாயினும், அவன் அதிலிருந்து தப்பிக் கொண்டான். இவனுக்குப் பின், இவன் தம்பி சூளாபயன் ஓராண்டும், சீவலீ என்ற தங்கை ஒரு சில மாதங்களும் ஆட்சிசெய்த பின் ஆமண்டகாமணியின் மருமகளுன இளநாகன் அரசைப் பெற்ருன்.

துட்டகாமணியின் பின்னேரும், சமய விருத்திகளும் 89
இவனுடைய ஆட்சியின் போதே இலம்பகண்ண* மரபினர் பற்றி முதன் முதலாகக் கேள்விப்படுகின்ருேம். இம் மரபைச் சேர்ந்த வர்கள் பலர் தொடர்ச்சியாக இலங்கையை அனுராதபுர காலத் திலிருந்து ஆட்சி செய்துள்ளனர். இம் மரபின் ஆதி வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. ஆதிச் சிங்களரிடையே விளங்கிய குழுக்களுக்குரிய இலச்சினைகள் மூலம் பெறப்பட்ட பெயர்களில் "லம்பகண்ண" (நீண்டகாது - ஆடு) என்பதும் ஒன்று எனக் கொண்டு இலம்பகண்ணர் அவ்வகையான ஆதிமரபினர் என்பது ஒரு சாரார் கருத்தாகும். தேவானம்பிய திசன் காலத்தில் இலங்கைக்குக் கொண்டுவ்ரப்பட்ட வெள்ளரசுக் கிளை யுடன் இலங்கை வந்த அரச மரபினரிலிருந்தே இலம்பகண்ணர் தோன்றினர் என்ற கருத்தை வேறு சிலர் கொள்வர். இன்னும் சிலர், எழுத்தர் என்ற பொரு ளுடைய "லேகக” என்பதற்குள்ள சிங்கள வடிவம் "லமணி'யாத லால், இவர்கள் முதலில் அரசவையிற் பணியாற்றிய எழுத்த ராகவே யிருந்தனர் என்பர். இவர்களின் வரலாறு எத்தகைய தாக இருப்பினும், ஆதிகால இலங்கை அரசியலில் இவர்கள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன ரென்பதை நாம் உணர்தல் வேண்டும். இளநாகனுக்கும் இலம்பகண்ணருக்கும் ஏற்பட்ட தக ராறுக்கு, முடிசூட்டுவிழா ஊர்வலத்தில் இலம்பகண்ணர் தமக் குரிய இடத்தில் நின்று மரியாதை செலுத்தத் தவறியது காரண மாயது. இளநாகன் இலம்பகண்ணரைத் தண்டிப்பதற்காக அவர் களை சண்டாளரின் கீழ் வேலை செய்ய வைத்தான். இந்த அவ மானத்தைப் பொறுக்காத இலம்பகண்ணர்கள், அரசனுக் கெதி ராகக் கலகஞ் செய்து, ஆட்சியைப் பெற்று, இளநாகனச் சிறை யில் வைத்தனர். இளநாகன் இந்தியாவுக்குத் தப்பியோடி, அங்கு உதவிப் படைகளைப் பெற்றுவந்து. இழந்த தன் அரசை மீட்டுக் கொண்டான். இலம்பகண்ணர் மீது பழிவாங்க எண்ணி அவர் களின் தலைகளைக் கொய்துவிடக் கட்டளையிட்டான். பின்னர் தாயின் தலையீட்டால், அதை நிறைவேற்ருது, அவர்களை அவமானப் படுத்துவதுடன் திருப்தி பெற்றன். இளநாகன் இலம்ப கண்ணரை வெற்றி பெற்ற போதும், விரைவில் அவர்களுக்கு நிலைமைகள் சாதகமாயின.
விஜயன் மரபு அற்றுப்போதல்: இந்தியாவிலிருந்து மீண்டு அரசைப் பெற்று ஆறு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இளநாகன் இறந்துபோக, சந்தமுக சிவன் என்ற அவனது மகன் அரசைப் பெற் முன். ‘சந்தமுக (சந்திரன் முகம்) என்ற அடைமொழி வேறு நூல்களில் தி சன் என்பவனுக்கு உள்ளதால், இவன் பெயர் தி சன கவும் இருக்கலாம். இவனைக் கொன்று அரசனன இவன் தம்பி யசலாலக திசனே இவனது Tமரபின் (விஜயன் மரபின்) இறுதி
2

Page 55
90 பண்டைய ஈழம்
மன்னனவான். இம் மன்னன் தன் வாயில் காப்போனன சபா என்பவனுடன் உடை மாற்றம் செய்து வேடிக்கை பார்த்தான் எனவும், இவ் விளையாட்டு வினையாக முடிந்தது எனவும் கூறப் படுகின்றது. போதி மரத்துடன் தொடர்புடைய ஒரு விழாவிலேயே இத்தகைய விளையாட்டில் மன்னன் ஈடுபட்டிருக்கவேண்டும். தத்த என்பவன் மகனன சபாவுக்குக் காலவேடுகளில் சுபா என்ற பெயரே யுண்டு. கல்வெட்டுக்கள் இவனைச் சபா என அழைக்கின்றன. இவனுடைய மரபைப் பற்றி எவ்வித விவரமும் எமக்குத் தெரியாது. சேடா ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்யுமுன், இலம்பகண்ண மரபைச் சேர்ந்த வசபன் அவனை வென்று, புதிய மரபின் ஆட்சியை நிறுவி ஞன். இம் மரபினர் பற்றி அடுத்த அத்தியாயத்திற் கவனிப்போம்
i. சமய விருத்திகள்:
துட்டகா மணியின் ஆட்சியின் முடிவில், மேனிலை யெய்தியிருந்த பெளத்தம் அவன் பின்னேர் காலத்தில் அத்துணைச் சிறப்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பெரும்பாலான மன்னர்கள் பெளத் தத்துக்கு ஆதரவை யளித்திருந்த போதும், அரசியலில் அடிக்கடி தோன்றிய சச்சரவுகளும், அமைதியின்மையும் பெளத்தத்தின் நிலையைப் பாதிக்கவே செய்தன. துட்டகாமணியின் தம்பி சத்தா திசன், சமய வளர்ச்சியில் தன் தமையனுக்குக் குறையாத ஆர்வங் கொண்டு பணியாற்றினன். துட்டகா மணி காலத்தில் முடிவு ? திருந்த மகாதூபத்தை இவனே கட்டி முடித்தான். தக்கிண விகாரை போன்ற பல புதிய விகாரைகளையும் இவன் நிறுவி, மதவளர்ச்சிக் குப் பல பணிகளை யாற்றினன். ஆனல், சத்தா திசன் மகனன லஞ்ச திசன் அரசைப் பெறுதற்குத் தடையாக விருந்த சங்கத் தினர் மீது வெறுப்புற்ற அம் மன்னன், தன் முதல் மூன்றுண்டு ஆட்சியின் போது பெளத்தத்தைப் புறக்கணித்தான். இவனைத் தொடர்ந்து அரசியலில் உண்டான குழப்பங்கள் பெளத்த வளர்ச் சியை மேலும் பாதித்தன. இதன்பின், வட்டகாமணியின் காலத் தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளே இக்காலத்துச் சமய வளர்ச்சியில் மிக முக்கியமானவை. இவ ற்றை ச் சிறிது விரிவாக இனி க் கவனிப்போம்.
வட்டகாமணி காலத்தில் நடைபெற்ற தமிழர் படையெடுப் பின் விளைவாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சத்தின் பயனுகவும், அனுராதபுரத்திலும் மிகிந்தலையிலும் உள்ள விகாரை களினின்றும் பிக்குகள் வெளியேறித் தென்னிலங்கைக்கும் இந்தி யாவுக்கும் சென்றனர். உணவு கிடையாமையால் பலர் இறந்து போயினர். இந்நிலையில், அதுவரை வாய்மொழி மரபாக இருந்து வந்த திரிபிடக என்ற பெளத்தக் கோட்பாட்டு நூல்களை எழுத்திற்

துட்ட காமணியின் பின்னேரும், சமய விருத்திகளும் 91
பொறித்திருக்க வேண்டியதன் அவசியம் புலப்பட்டது. மாத்தளை யிலுள்ள அலுவிகாரையில் கூடிய பிக்குகள் அந் நூல்களை எழுத்திற் பொறித்தனர். புத்தரின் போதனைகள் இவ்வாறு * பிற்காலத் தவர்க்குப் பேணப்பட்டுக் காக்கப்பட்டதால் பெளத்தத்தின் வளர்ச் சிக்குப் பேருதவியாக இது அமைந்தது. வட்டகாமணி அரசை மீட்டுக்கொண்ட பின், அவுனும் அவனது அதிகாரிகளும் பல விகாரைகளைச் சங்கத்தினர்க் நிறுவிக் கொடுத்தனர். கிரியின் சமணப் பள்ளி தரைமட்டமாக்கப்பட்டு, அது இருந்த விட்த்தில் அபயகிரி விகாரையை அவன் நிறுவினன். இது அனுராதபுரத்தில் ஒரு முக்கிய விகாரையாக விளங்கியது. மகாவிகாரை தேரவாத மதக் கோட்பாடுகளைப் பேணுவதில் தலைசிறந்து விளங்கியதைப் போல, அபயகிரி விகாரை புதுமைக் கருத்துக்களையும் மாறுதல் களையும் வரவேற்பதில் முக்கியமாகக் கவனமெடுத்து வந்தது. இவ் விகாரையை வட்டகாமணி, தனக்கு முன்னர் இடுக்கண் ஏற்பட்ட போது உதவிய மகாதிச தேரருக்கு வழங்கினன். இவ்வாறே, தள பதிகளால் நிறுவப்பட்ட விகாரைகள் திச என்ற தேரருக்கு வழங் கப்பட்டன. இவ்வாறு மன்னனும், அதிகாரிகளும் தம் நன்றிக் கடனைத் தமக்குதவிய இரு தேரர்களுக்கும் செலுத்தினர்.
மகாதிச தேரர் முன்னர் தலை நகர்க்கு வெகு தொலைவில் வாழ்ந்து, வட்டகாமணியின் அழைப்பின் பேரில் தலைநகர் வந்து வாழ்ந்து வரலானர். இவ்வாறு மகாதிச தேரருக்கு அரசன் முக் கிய மளித்ததை அவ் விகாரையினர் விரும்பியிருக்க மாட்டார்க ளெனவும், இதனல் அவர் மீது விரைவில் குறை காண அவர்கள் முற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. காரணமெதுவாயினும், சாதா ரண மக்களின் இல்லங்களுக்குச் சென்று வந்ததாக அப் பிக்கு குற்றஞ்சாட்டப்பட்டு ம க |ா விகா ரை யி னின் றும் வெளியேற் றப்பட்டார். இத் தண்டனையை விரும்பாத அவரது சீடராக விளங் கிய மற்ருெரு பிக்குவான 'பகல மசு" (நீண்ட தாடியுடைய) திச தேரரும், அவரது ஆதரவாளர் சிலரும் மகாவிகாரையினின்று வெளியேறி, அபயகிரிக்குச் சென்று ஒரு தனிப் பிரிவாக வாழ்ந் தனர். இவ்வாறு வட்டகாமணி அபயன் காலத்தில் இலங்கைப் பெளத்த சங்க த்தி னரி  ைடயே தோன் றிய முதற் பிளவு கொள்கை வேறுபாடுகளைக் கொண்டு ஏற்படாது, ஒழுக்க விதிகள் பற்றியதாக இருந்தமை கவனிக்கற்பாலது. ஆனல், விரைவிேல் இந்தியாவில் வஜ்ஜிபுத்ர பிரிவைச் சேர்ந்த தர்மருசி என்பாரின் சீடர்களான பிக்குகள் இலங்கை வந்த போது, அவர்கள் அபயகிரி விகாரையினரால் வரவேற்கப்பட்டனர். அதன்பின் அபயகிரிக் குருமார்கள் தர்மருசிப் பிரிவினர் என அழைக்கப்படலாயினர். இவ்வாறன சமய விருத்திகளால், வட்டகாமணியின் ஆட்சிக்காலம்

Page 56
92 பண்டைய ஈழம்
பெளத்த மத வரலாற்றில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்று விட்டது. இவன் ஆற்றிய மதப்பணிகளால் பொதுமக்களிடையே இவனுக்குண்டான செல்வாக்கு அளப்பரியது. தன் அரசியல் வாழ்வில் இவன் அடைந்த இடர்களின் போதும், மத வளர்ச்சியிலே நாட்டம் மிக்கவணுக இருந்து, பின்னர் தான் நினைத்தவற்றைச் செயற்படுத்தி யதாகக் கூறப்படுகின்றது. இதனலேயே, தம்புளை முதலான பல இடங்களிலுள்ள குகைகள் இவனுல் விகாரங்களாக்கப்பட்டன என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே வலுத்து வந்துவிட்டது.
வட்டகாமணியின் மகனன சோரநாகன் கலகக்காரணுக விளங்கிய காலத்தில் தனக்குப் புகலிடமளிக்காத விகாரைகள் பதினெட்டை, அரசனுன பின் அழித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர், பாதிக அபயன், மகாதாடிக மகாநாகன், ஆமண்ட காமணி ஆகிய மன்னர்கள் பெளத்த வளர்ச்சிக்கு உழைத்தமையால், சமய நூல்களால் பாராட்டப்பட்டுள்ளனர். மகாதூபத்தினை நன்னிலைப் படுத்தவும் அழகு படுத்தவும் பாதிக அபயன் பாடுபட்டதாகத் தெரிகின்றது. பிக்குகள் நூல்களைப் பயில்வதற்கான வசதிகளையும் இம் மன்னன் அளித்தான் என மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது. துட்டகாமணியின் முன்மாதிரி யைப் பின்பற்றி, இருபத்தெட்டு வெசாக் பண்டிகைகளை இவன் நடத்தி வைத்ததாகவும் அதே நூல் அறியத்தருகின்றது. மகா நாக னும் மிக்க சமயப் பற்றுடையவனக விளங்கி, பெளத்த நெறியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்தான். இவன் காலத்திலும் சமய விழாக்கள் பல இடம்பெற்றன. ஆமண்டகாமணி யென்பானும், புத்த ரின் போதனைகளில் ஈடுபட்டு அவற்றின்படி யொழுகியவன். மாகாத" எனப்படும் உயிர்வதைத் தடையை இவன் விதித்தமையால், இவன் அசோகன் வழியைப் பின்பற்றியிருக்கலாம் என்பர். இம் மூவரின் ஆட்சிக்காலங்கள் வட்டகாமணிக்குப் பின் பெளத்தத்தின் வளர்ச் சிக்குப் பெரிதும் உதவினவென்பது தெளிவு.
கணிரஜானு திசன் என்பவன் காலத்தில், மிகிந்தலை (சேதிய பர்வத) விகாரையில் வசித்த குருமார்களிடையே ஏற்பட்ட ஒரு தகராறைத் தீர்க்க அரசன் அங்கு நேரிற் சென்று, விசாரணையை நடத்திய பின் முறைப்படி தீர்ப்பு வழங்கினன். அரசன் முடிவை யேற்காத குரு மார்கள் சிலர் அரசனைச் சிறைப்பிடித்துக் கொல்ல முயன்றதாகவும் ஒருவாறு உயிர் பிழைத்த மன்னன் பின்னர் அவ்வாறு நடந்துகொண்ட குருமார்கள் அறுபதின்மரை கணிரா என்ற செங்குத்தான பாறை யினின்றும் வீழ்த்திக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது. (மன்னன் பெயரிலுள்ள கணிரஜானு என்பது இந்நிகழ்ச்சியாலேயே ஏற்பட்டது.) குருமார்களிற் சிலர் நடத்தை கெட்டவர்களாகவும், சங்கத்தின் நற் பெயருக்கு இழுக்குத் தருபவர்களாகவும் இருந்தனர் என்பது இதல்ை

துட்ட காமணியின் பின்னேரும், சமய விருத்திகளும் 93
புலப்படும். கணிரஜானு திசனுக்குப் பின், பெளத்தமத வளர்ச்சிக்கு உழைத்த மன்னன் வசபனே யாவன். இவனே, இலம்பகண்ண மர பின் முதல் மன்னனென முன்னர் அறிந்தோம். எனவே, இவனது மதப்பணிகள் பற்றி அடுத்த அத்தியாயத்திற் படிப்போம் இணைப்பு:
மன்னர் மரபு வரிசை
( சத்தா திசன் - யசலாலக திசன் ) குறிப்பு: பாதிக அபயன் வரை உள்ள ஆட்சிக்காலங்கள் கி. மு. எனவும் அவனுக்குப் பிந்தியவை கி. பி. எனவும் கவனித்துக்கொள்க.
காகவண்ண திசன்
-
துட்டகாமணி (கி.மு. 161-137) சத்தா திசன் (137-119)
லஞ்ச திசன் தூலத்தனன் 119 கல்லாட நாகன் *வட்டகாமணி
9- 09 1 09-103 03 89-77
மகாகுளி மகாதிசன் சோர நாகன்
76. 62 62- 50
வி. அனுளா 47-42
திசன் 50-47 குடகண்ண திசன் 41-19
-
| o பாதிக அபய ன் மகாதாடிக மகாநாகன கி. மு. 19 - கி. பி. 9 G. L. 9-2 1
ஆமண்ட காமணி 22-31 கணிரஜானு திசன் 31-34
--
சூளாபயன் 34-35 இவேலீ 35
(மருமகன்) இளநாகன் 35-44
v சந்தமுக சிவன் 44-52 யசலாலக திசன் 52-59
சபா (இந்த மரபைச் சேராதவன்) 59-65
* வட்டகாமணி ஆட்சியேற்ற சில மாதங்களில் அரசை இழந்து போக 102-89 வரை ஆட்சி செய்தவர்கள் புலஹத்தன், பாகியன், பனைய மாறன், பிளைய மாறன், தாடிகன் என்ற ஐந்து தமிழராவர். (பஞ்ச திராவிடர்).

Page 57
94 Lu GðsTGO) Lulu ஈழம்
பயிற்சி:
1. இவ் வத்தியாயத்தில் வரும் மன்னர்களுள் வட்டகாமணிக்கு முக்கி
யத்துவம் அளிக்கப்படக் காரணங்கள் யாவை?
2. வட்டகாமணி தவிர்ந்த ஏனைய மன்னருள், நீர் தெரிவு செய்யும் இரண்டு அல்லது மூன்று முக்கியமான மன்னர்கள் யார்? உமது தெரிவுக்குக் காரணங்கள் கூறுக.
3. மகாவம்சத்தில் வட்டகாமணியின் வரலாறு உள்ள 33ம் அத்தி யாயத்தைப் படித்து, இதை அபயகிரி விகாரைப் பிக்கு ஒருவர் எழுதி யிருப்பின் அவ் வரலாறு எப்படி யமைந்திருக்குமெனக் கூறுக.
கூட்டுவேலைக்கு:
இணைப்பில் தரப்பட்ட மன்னர் மரபுவரிசையை மாணவர் தாமும் எழுதி, மன்னர்களுக்கிடையே உள்ள உறவு முறையைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இவ் வத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் முக்கியமானவற்றைக் கொண்டு ஒரு கால அட்டவணையை ஆக்கவும்.
தேர்வு வினுக்கள்:
1. வட்டகாமணியின் ஆட்சி இலங்கை வரலாற்றில் முக்கியம் பெற்றுள்
ளமைக்குக் காரணங்கள் தருக. 2. துட்டகாமணிக்குப் பின் (வசபன் அரசெய்து முன்) பெளத்த மத
வளர்ச்சியில் இடம்பெற்ற முக்கிய விருத்திகளைக் கூறுக. 3. சிறுகுறிப்புக்கள் எழுதுக: பாதிக அபயன்; ஆமண்ட காமணி;
கணிரஜானு திசன்; இலம்பகண்ணர்; அபயகிரி விகாரை.

அத்தியாயம் எட்டு முதலாம் இலம்பகண்ண மரபினரின் ஆட்சி: மகாயான பெளத்தம் பரவுதல்
i. குப்தர் எழுச்சிக்கு முன் இந்தியா i. இந்தியாவில் மகாயான பெளத்தம் i. இலம்பகண்ண அரசர்கள் - வசபன் முதல் மகா சேனன் வரை அரசியல் வரலாறு iv. சமய வளர்ச்சி: மகாயான பெளத்தம் இலங்கையிற் பரவல்
விஜயன் மரபினரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த சபா என்பான வசபன் வென்று இலம்பகண்ண மரபின் ஆட்சியைத் தொடக்கி வைத்தான். வசபனுடன் தொடங்கிய முதலாவது இலம்ப கண்ண மரபு ஏறத்தாழ மூன்றரை நூற்ருண்டுகள் வரையில் அரசு செலுத்தியது. இவ் வத்தியாயத்தில், மகாசேனன் வரையுள்ள இலம்ப கண்ண மன்னர்களின் காலத்து வரலாறே (கி. பி. 65-303) கூறப் படும். ஆனல், மகாசேனனுக்குப் பின்னரும் இலம்பகண்ண மரபு நீடித்திருந்தமை மனங்கொளவேண்டியது. இக்காலப் பகுதியின் அரசியல் வரலாறும், முக்கிய சமய விருத்தியான மகாயான பெளத் தம் பரவுதலும் இதில் இடம்பெறுகின்றன. இவற்றைக் கூறுமுன், இந்திய வரலாற்றுப் பின்னணி தரப்படும். மெளரியப் பேரரசு சீர் குலைந்ததிலிருந்து குப்தப் பேரரசு எழுச்சியுற்றது வரையுள்ள ஐந்து நூற்ருண்டுகளின் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க விருத்திகள் மட்டுமே கூறப்படும். அரசியல் வரலாற்றின் பொதுவான போக்கை மாணவர் அறிந்துகொண்டாற் போதுமானது. மகாயான பெளத்தம் இலங்கையிற் பரவத் தலைப்பட்டதே இக்கால எல்லையின் முக்கிய நிகழ்ச்சியாதலால், இதை விளக்குவதற்குத் துணையாக இந்தியாவில் மகாயான பெளத்தம் வளர்ச்சியுற்றமையும் கூறப்படும்.
i. குப்தர் எழுச்சிக்கு முன் இந்தியா
பேரரசன் அசோகனுக்குப் பின், மெளரியப் பேரரசானது மிக விரைவாகச் சீர்குலைந்து விட்டது. கடைசி மன்னனன பிரகத்ரதனை புஷ்ய மித்திரன் என்ற அவனது படைத் தலைவன் கி. மு. 188 அளவிற் கொன்று, ஒரு புதிய மரபின் ஆடசியைத் தொடக்கி வைத்தான். மெளரியப் பேரரசு, அசோகனுக்குப் பின் நிலைக்காது போனமைக்கு, அவனது பின் தோன்றல்கள் பலவீனர்களாக விருந்தமையும், அசோ! கனது அஹிம்சைக் கொள்கை படைகளின் பலத்தைப் பாதித்தமை யும் முக்கிய காரணங்களாகும். மெளரியப் பேரரசுக்குப் பின், அதற்கு நிகரான விரிவான பேரரசு குப்தர் காலத்திலேயே கி. பி. 4ம் நூற் முண்டளவில் தோன்றியது. இடைப்பட்ட சுமார் ஐந்நூறு ஆண்டுகள்
*

Page 58
9.6 பண்டைய ஈழம்
வரை, வட இந்தியாவிலும், தக்கணத்திலும் சிறியவும் பெரியவுமான பல அரசுகள் தோன்றி மறைந்தன. இவை யனைத்தையும் பற்றி, இலங்கை வரலாற்று மாணவர் அறிந்திருக்க வேண்டிய தேவையில்லை யாதலால், இலங்கை வரலாற்றுடனும் பெளத்தத்தின் வளர்ச்சியுட னும் தொடர்புடைய குஷானர், சாதவாகனர் போன்ற சில அரசு களினது வரலாற்றின் சில அம்சங்கள் மட்டுமே இங்கு கூறப்படும். புஷ்யமித்திரர் நிறுவிய வம்சமான சுங்க மரபானது ஒரு நூற்ருண் டுக் காலமாக மகதத்தை ஆட்சிசெய்த பின், கண்வர்கள் என்ற மற் ருெரு மரபு ஆட்சியைக் கைப்பற்றி மேலும் அரை நூற்ருண்டுக் காலம் ஆட்சி செய்தது. இவர்களுடன் மகதம், குப்தரின் எழுச்சி வரை, தன் முக்கியத்தை இழந்திருந்தது.
சுங்கர்கள் பாடலிபுரத்தில் ஆட்சி நடத்தியபொழுது, வடமேற் கிந்தியா கிரேக்கர்களின் படையெடுப்புக்களுக்கு ஆளாகியது. செலி யூக்கஸ் நிகேட்டரின் சிரியப் பேரரசு கி. மு. மூன்ரும் நூற்ருண்டில் அழிவுற்றதைத் தொடர்ந்து, பாக்டிரியாவில் மற்ருெரு கிரேக்கப் பேரரசு வளர்ச்சியுற்று டெமெட்ரியோஸ் என்பவன் காலத்தில் வட மேற்கிந்தியாவின் ஒரு பகுதியையும் தன்னுள் அடக்கிக் கொண்டது. அவனுக்குப் பின், மினுண்டர், அபல்லடோரஸ் என்ற அவனது படைத் தலைவர்கள் வட இந்தியாவில் மேலும் பல பகுதிகளை வென்று இந்தி யாவில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். கி. மு. 2ம் நூற்ருண்டின் நடுப்பகுதியில், மினுண்டர் வடமேற்கிந்தியாவில் ஒரு பேரரசராகத் திகழ்ந்து, காந்தாரத்திலிருந்து மதுரா வரை ஆட்சி செய்தார். மினண்டர் மரபினர் காலத்திலும், இவர்களுக்குப் பின் ஆட்சியைப் பெற்ற சாகர்கள் காலத்திலும் கிரேக்கப் பண்பாட்டு முறைகள் இந்தி யாவிற் பரவி, நிலையான மாறுதல்களை யுண்டுபண்ணின.
சாகர்களின் ஒரு கிளை வகுப்பினரான குஷானர்கள் நாளடைவில் வடமேற்கிந்தியாவில் ஒரு பேரரசை அமைத்து ஆட்சி நடத்தலாயினர். 1ம் கட்பீசஸ் என்பவனல் மத்திய ஆசியாவில் நிறுவப்பட்ட குஷான் அரசு, அவன் காலத்திலும், 2ம் கட்பீசஸ் காலத்திலும் வட இந்தி யாவில் காசிவரை பரவி வளர்ந்தது. இவர்களுக்குப் பின் அரசனன கனிஷ்கன் காலத்தில், அப் பேரரசு மத்திய ஆசியாவிலிருந்து கிழக்கே புத்தகயா வரை வியாபித்திருந்தது. காஷ்மீரமும், மேற்குச் சீனவின் ஒரு சிறு பகுதியும் அம்மன்னனது ஆளுகைக்குட்பட்டிருந்தன. குஷானப் பெரு மன்னர்களில் தலைசிறந்தவனகப் போற்றப்படும் கனிஷ் கன் புருஷபுரம் எனப்பட்ட இப்போதைய பெஷாவாரைத் தலைநகராகக் கொண்டிருந்தான். இவனலேயே சக-அப்தம் (கி. பி. 78ல்) தொடக் கப்பெற்றதாகக் கொள்வர். இவனுடைய ஆட்சிக்காலம் (கி. பி. 78-120) பலவகைச் சிறப்புக்களையுடையவை. இந்தியாவின் கிழக்குப்

முதலாம் இலம்ப கண்ண மரபினர் 97
பகுதிகள் சிலவற்றையும், சீனுவின் ஒரு பகுதியையும் கனிஷ்கன் வெற்றி கொண்டதால், அவனது போர் வெற்றிகளை யறியலாம். ஆயின், அவன் புகழ் போர்க்கள வெற்றிகளால் மட்டும் உண்டான தன்று. பெளத்த மதத்தவராக அவன் இருந்தும், இந்து சமயத்தை வெறுக்காது அதன்பால் பற்றுதல் கொண்டிருந்தான். பெளத்த மத வளர்ச்சியில், கனிஷ்கனது ஆட்சி தனியிடம் பெறவல்லது. அம் மதத்தில் - சங்கத்தில் - தோன்றியிருந்த பிளவுகளை அகற்றி, ஒற்று மையை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவன் காலத்திலேயே பெளத்த மாநாடுகளில் நான்காவது கூடியது. இதன் நடவடிக்கைகள் அடுத்த பகுதியிற் கூறப்படும். அஸ்வகோஷர், நாகார்ஜ"னர், வசுமித் திரர் முதலான பல பெளத்த அறிஞர்கள் இவராற் போற்றப் பட் டனர். இக் காரணங்களால், பெளத்தத்தை வளர்த்த மன்னர்களில் அசோகனுக்கு அடுத்த நிலையில் கனிஷ்கன் வைத்து மதிக்கப்படுகின் முன். மேலும், கனிஷ் கனது (குஷானரின்) ஆட்சியால், இந்தியா வுடன் கிரேக்க-உரோமக் கலைத் தொடர்புகள் வளரலாயின. இவ் வகைத் தொடர்புகளால் காந்தாரக் கலை மரபு என்ற புது மரபு வளர்ச்சி யுற்றது. கனிஷ்கனைத் தொடர்ந்து ஆட்சி செய்த வாசுதேவர் என்ற பெயரைச் சூடிய ஹ"விஷ்கன் காலத்திலிருந்து குஷானப் பேரரசு வீழ்ச்சி எய்தத் தொடங்கி, 3ம் நூற்றண்டில் முற்முகச் சிதறிவிட்டது.
குஷானப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, வடஇந்திய அரசி யலில் நிலவிவந்த குழப்ப நிலைமைகளைச் சுருக்கமாகவேனும் இங்கு கூற இடமில்லை. ஒரு பேரரசின் மறைவுக்குப் பின் மாகாண ஆட்சி யாளர் தனியரசுகளை நிறுவும் நியதிக்கேற்ப, கூடித்திரபர் என்ற மாகாணத் தலைவர்கள் நாஸிக்கையும், உஜ்ஜயினியையுந் தலைநகர்க ளாகக் கொண்டு தனியாக ஆட்சி நடத்தினர். உஜ்ஜயினியில் ஆட்சி நடத்திய மேலைச் கூடித்திரபர்களில் ருத்திரதாமன் புகழ்பெற்றவன்; இவனுக்குப் பின்னரும் பல கூடித்திரபர்கள் ஆட்சிசெய்து வந்தனர். ஈற்றில், குப்தப் பேரரசு எழுச்சியுற்றபோது, இவர்களின் ஆணிலங் களும் அப்பேரரசில் அடங்கலாயின. r
இவ் விடைப்பட்ட காலத்தில் தக்கணத்தில் முக்கிய அரசாக விளங் கியது சாதவாகனர் என்ற ஆந்திர குலத்தவர்களின் அரசாகும். இம் மன்னர்கள் சாதகர்ணிகள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. சீமுகர் என்ற முதல் சாதவாகன மன்னர் கி. மு. 235 அளவில் சுதந்திர ஆட்சியாளராகத் தொடங்கியிருக்கலாம். இவ் வாண்டுக்குப் பின், சுமார் 450 ஆண்டுகள் வரை சாதவாகனர் ஆட்சி நீடித்ததாகப் புராணங்கள் கூறும். கெளதமிபுத்திர சாதகர்ணி என்ற மன்னன் காலத்தில், சாதவாகன அரசு மிகவும் விரிவெய்தி, உச்ச நிலையை
3.

Page 59
98 பண்டைய ஈழம்
அடையலாயிற்று. சுங்கர்கள், கண்வர்கள் போன்ற அரச மரபினரைச் சாதவாகன மன்னர்கள் முறியடித்துத் தமது ஆதிக்கத்தை நிறுவினர். கெளதமிபுத்திர சாதகர்ணி சாகர்களையும் வென்றமையாலேயே, ‘சாகாரி யென அழைக்கப்பட்டானென்பர். புலுமாயி என்ற அவ னது பேரன் மேலைச் கூடித்திரப மன்னனுன ருத்திரதாமனுல் தோற் கடிக்கப்பட்டான். இதனுல் சாதவாகன அரசின் மேற்குப் பகுதிகள் சில பாதிக்கப்பட்டிருத்தல் கூடும். யக்ஞழரீ சாதகர்ணி என்பவனே, இறுதிக்கால சாதவாகன மன்னர்களில் பெருமன்னனுக மதிக்கப்படு பவன். இவனுக்குப் பின், கி. பி. 3ம் நூற்ருண்டின் முடிவில் அவ்வரசு படிப்படியாகச் சீர்குலைந்து சிதறியது. இதைப் பயன்படுத்தி இகஷ்வாகு முதலான சிற்றரசர் குலங்கள் தனியாட்சி நடத்தலாயின. தமிழ் நாட்டை ஆட்சிசெய்த பல்லவர்களும் இவ்வாறு சாதவாகனர்களின் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தவர்களாகலாம்.
குப்தர் எழுச்சிக்கு முந்திய இந்தியாவில், குறிப்பாக வட இந்தி யாவில், சைவமும் வைணவமும் மீண்டும் நன்னிலையை எய்தலாயின. பல அரசர்கள் இம் மதங்களைப் போற்றினர். பிற நாடுகளிலிருந்து வந்து ஆட்சிசெய்த பிறநாட்டு மன்னர்கள், சிறப்பாக மினண்டர், கனிஷ்கர் போன்ருேர், பெளத்தத்துக்கு ஆதரவு தந்தனர். இக் காலத் துக் கட்டிட, சிற்ப முறைகளில், கிரேக்க - உரோமத் தொடர்புகள் ஒரு புதிய கலை மரபைத் தோற்றுவித்ததை முன்னரே கூறினுேம், காந்தாரச் சிற்பக் கலை என இப்புது மரபு அழைக்கப்படும். இம் மர பின் மூலம், கிரேக்கச் செல்வாக்கு சிற்பத் துறையில் இந்தியாவுக்குப் பரவியது. ஜ"ன்னர், நாஸிக், அஜந்தா, கார்லே, கன்ஹேரி முத லான இடங்களில் பாறைகள் குடையப்பட்டு, பெளத்தச் சைத்தி யங்கள் நிறுவப்பட்டன. இவற்றின் அமைப்புத் திறனையும், கலை யெழிலையும் போற்ருதாரில்லை. கிருஷ்ணு, கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட ஆந்திர தேசத்தின் சில பகுதிகளில் - சிறப்பாக அமரா வதி, நாகார்ஜுனக்கொண்டா முதலான இடங்களில் - பெளத்தக் கட் டிடக்கலையும், சிற்பக் கலை பும் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெற் றிருந்ததை, அங்குள்ள இடிபாடுகள் காட்டுகின்றன. அமராவதீச் சிற்பங்கள் புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், வழிபாட்டுக் காட்சி களையும் மிகவும் சீரிய முறையில் கல்லிற் சித்தரித்துக் காட்டுகின்றன. இவற்றில் உரோமச் சிற்பத்தின் செல்வாக்கிருப்பதாகச் சிலர் கூறுவர். இலங்கையில் ஏற்பட்ட சிற்பக்கலை வளர்ச்சியும் அமராவதீக் கலை மரபால் பாதிக்கப்பட்டதென்பதைப் பின்னர் காண்போம். i. இந்தியாவில் மகாயான பெளத்தம்
அசோகன் காலத்தில் பெளத்தம் இந்தியாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளுக்கும் பிற நாடுகளுக்கும் பரவியமை பற்றி முன்னர் (அத். 5) படித்துள்ளோம். அவ்வாறு பல இன மக்கள் இம் மதத்தைக்

முதலாம் இலம்ப கண்ண மரபினர் 99
கைக்கொண்டதால், பெளத்தத்திற் பல புதிய கருத்துக்களும், மாறுதல்களும் புகுந்தன. கி. பி, முதல் நூற்றண்டளவில், பழைய வைதீகப் பிரிவான தேரவாதத்தை விட, மகாயான பெளத்தம் என்ற தனிப்பிரிவும் தோன்றிவிட்டது தேரவாதம் முதலான டழைய பிரிவுகளனைத்தையும், மகாயானத்திலிருந்து வேறுபடுத்து வதற்கு, "ஸ்ராவக யானம்" என்ற பொதுப் பெயரை அவற்றுக்கு மகாயானத்தவர் சூட்டியுள்ளனர். மகாயான பெளத்தத்தை வடக் குத் திருச்சபை எனவும், தேரவாதப் பிரிவைத் தெற்குத் திருச் சபை எனவும் அழைப்பதுண்டு. தேரவாதக் கோட்பாட்டு நூல்கள் பாலியில் எழுதப்பட்டிருப்பதைப் போல, மகாயான நூல்கள் சமஸ் கிருதத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன. மகாயானக் கோட் பாடுகள் கி. பி. முதல் நூற்ருண்டுக்கு முன்னரே தோன்றியிருக்கக் கூடுமாயினும், அந் நூற்றண்டிலேயே அவை நூல்கள் மூலம் இறுதி யுருவம் பெற்றன வென்பர்.
மகாயான பெளத்தமானது, பழைய தேரவாதப் பிரிவிலும் விருத்தியடைந்த நிலையிலுள்ள மதக் கோட்பாடுகளையுடையது. தேரவாதம் உட்பட வுள்ள பழைய ஸ்ராவக யானப் பிரிவுகள் அனைத்தும் சங்கத்தினர்க்கு அவர்கள் அடையக்கூடிய மிக உயர்ந்த இலக்காக ‘அர்ஹத் என்ற நிலையையே குறிப்பிட்டன. "ஸ்ராவக எனப்படும் பிக்குவின் வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிப்பதன் மூலம் "அர்ஹத்’ நிலையை ஒருவர் அடையலாம். இதற்குப் புத்த ரின் போதனைகளை ஒரு குரு வாயிலாகக் கேட்பதும், அவர் விதித்த ஒழுக்க விதிகளின்படி கண்டிப்பாக ஒழுகுவதும் அவசியம். இவற் றைச் செய்வதால் ஒருவர் ஸ்ராவகயான (ஸ்ராவக நெறி) விற் செல்வதாகக் கூறப்படும். மகாயான பெளத்தத்தில் போதிசத்துவ வழிபாடு மிக முக்கிய இடத்தைப் பெறும். புத்தரின் நிலையை எய்து தற்கு முந்திய நிலையிலுள்ளவர்களே போதிசத்துவர்கள் எனப் படுபவர். போதிசத்துவரான பின், உலகை உய்விப்பதற்கான பணிகளைச் செய்வதற்காக நிர்வாண நிலையை அடையாது இவர்கள் இருப்பதாகக் கூறப்படும். மகாயானர்கள் தனியே "அர்ஹத்* நிலையை அடைவதுடன் திருப்தி பெருது, புத்தரின் நிலையை அடை யவும் எண்ணினர். நிர்வாணத்தை யடைவதைப் பின் போட்டு, மனிதகுல மீட்சிக்காக உழைக்கக்கூடிய போதிசத்துவர்களாக அவர்கள் மாற வேண்டும் எனக் கூறுவர். கெளதம புத்தரின் வாழ்க்கையிலும் பரிநிர்வாணமெய்துதற்கு முன் அவர் போதி சத்துவராகவே வாழ்ந்தாரென்பர். ஜாதகக் கதைகளில் புத்தர் தமது நிர்வாணத்தைப் பின்போட்டு உலகோர்க்கு உய்ய வழி காட்டி நின்றமையே பெரும்பாலும் கூறப்படும். இவ்வாறு புத்தரின் நிலையை அடைதல் எவர்க்கும் இயல்வது என்ற கருத்து

Page 60
OO பண்டைய ஈழம்
மகாயானர் க்கு உடன்பாடானதாகும். கெளதம புத்த ருக்கும் முன்ன் தாகப் பல புத்தர்கள் இருந்துள்ளதாகவும், அவர்களுள் ஒருவரே கெளதம புத்தர் என்பதும் இவர்கள் கருத்தாகும். மைத்திரேயர் என்ற புத்தர் இனி வரவிருப்பதாகவும் இவர்கள் கொள்வர். அவலோகிதேஸ்வரர், மஞ்சுழரீ, மைத்திரேயர் போன்ற போதிசத்து வர்கள். பிரபல்யம் அடைந்தவர்கள். எனவே, மகாயான பெளத் தத்தில் கெளதம புத்தர் மட்டுமன்றி, பிற (தியானி) புத்தர் களும், போதிசத்துவர்களும் வழிபாட்டுக்குரியவர்களாவர்.
புத்தரின் போதனைகளில் கடவுள் வழிபாடோ, உருவ வழி பாடோ இடம்பெறவில்லை. காலப்போக்கில் புத்தரையே கடவு ளாக வழிபடும் முறை உண்டாயிற்று. மகாயான பெளத்தத்தில் இவ் வுருவ வழிபாடு முக்கிய இடம்பெற்றது. புத்தர்களும், போதி சத்துவர்களும் இவ்வுருவ வழிபாட்டில் இடம் பெற்றனர். ஏறக் குறைய 500 பெளத்தக் "கடவுளர் படிமங்களாக வழிபடப் பட் டனர் எனப்படுகின்றது. மகாயான பெளத்தத்தின் பிற கோட் பாடுகளில் முக்கியமானவை: பரிவர்த்தக் கோட்பாடு - தமது நற் செயல்களால் அடையும் புண்ணியத்தை மற்றவர்க்குச் சேரச் செய்யலாம் என்பது; வினைக் கொள்கையை (கர்மக் கோட்பாடு) மேலும் விரிவாக்கி, பண்புகளும் பிறவிகளில் ஒருவரைத் தொடர்ந்து வருமெணல்; சூனியவாதம் - புறவுலகில் யாதொன்றும் உண்மை யற்றது என்பது, அல்லது புறவுலக வுண்மைக்கும், அடிப்படை யாகவுள்ள உண்மைக்கும் வேறுபாடு காணல்; இவை போன்ற இன்னும் பல கோட்பாடுகள் மகாயானத்துக்குரியவை. தேரவாத பெளத்தம் முதலில் சமயமாக விராது வாழ்க்கையை நடத்துவதற் கான நெறியைக் கூறுவதாக இருந்தது. மகாயான பெளத்தம் ஒரு சமயத்துக்குரிய எல்லா அம்சங்களையும் கொண்டு விளங்கியது. இதனல், பிற நாடுகளில் இது அதிக ஆதரவைப் பெற்றதில் வியப்பில்லை. தேரவாத பெளத்தம் புத்தரின் போதனைகளை வழு வாது பேணியதாகப் பெருமை கொள்கின்றது. ஆனல், மகாயான பெளத்தம் புதிய சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வளர்ச்சி பெற்ற மதமாகக் கொள்ளப்படும். இந்து சமயம் போன்ற மதங் களிலுள்ள தன்மைகள் இம் மதத்தில் புகுந்துவிட்டதாகவும் கூறப்படும். போதிசத்துவக் கோட்பாடும், வழிபாடும் இம் மதத் தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றதெனலாம்,
இனி நாம் மகாயான பெளத்தத்தின் வளர்ச்சியைச் சிறிது நோக்குவோம். புத்தரின் பரிநிர்வாணத்திலிருந்து நூறு ஆண்டு களின் பின் வைசாலியில் நடைபெற்ற இரண்டாம் பெளத்த மாநாட்டின் பின், அம் மாநாட்டு முடிவையேற்காத கிழக்குப்

முதலாம் இலம்பகண்ண மரபினர் 101
பகுதிக் குருமார்கள் "மகாசாங்கிக”ப் பிரிவாகத் தம்மை அமைத் துக் கொண்டதை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். வைதீகப் பிரி வினரான தேரவாதிகள் அல்லது ஸ்தவிரவாதிகள் எனப்பட்டவர் களிடையேயும், மகாசாங்கிகரிடையேயும் காலப்போக்கில் மேலும் 1 1 Ꭷu) கிளைப்பிரிவுகள் ஏற்படலாயின. அசோகன் காலத்தில், தேர வாதப் பிரிவைவிட, பதினேழு பிரிவுகள் உண்டாகியிருந்தன. அசோகன் காலத்தில் நடைபெற்ற மூன்ரும் பெளத்தக் கழகம் இப் பிரிவினைகளை யகற்ற முற்பட்ட தெனினும், இம் மாநாட் டுக்குப் பின்னரும் புதிய கருத்துக்கள் வளரவே செய்தன. கிறிஸ் துவுக்கு முந்திய முதல் நூற்ருண்டளவில், மகாயானக் கோட் பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன எனலாம். மகாயானத்தை எந்த ஒரு ஆசிரியரும் நிறுவியதாகக் கூறமுடியாது. முன்னரே யிருந்து வந்த கோட்பாடுகள், காலப்போக்கில் புதிய உருவத்தை யும் விளக்கத்தையும் பெற்று வரலாயின. கெளதம புத்த ருக்கு முன்னரும் பல "புத்தர்கள் இருந்தனர் என்ற நம்பிக்கை அசோ கன் காலத்திலேயே நிலவியதென்பதற்கு அவனது கல்வெட்டொன்று சான்று பகரும். போதிசத்துவ வழிபாடு குஷானர் காலத்தில் இருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. எனவே, கனிஷ்கன் காலத் தில் நடைபெற்ற நான்காம் பெளத்தக் கழகத்தின் காலத்துக்கு முன்பாகவே மகாயானக் கோட்பாடுகள் பலவும் தோன்றிவிட்டன வென்பது தெளிவு.
தக்கணத்தைச் சேர்ந்த நாகார்ஜ"னரே, மகாயானத்தை நிறு வியதாகப் பொதுவாகக் கூறப்படும். தக்கணத்திலுள்ள அமராவதீ. தான்யகடகம், நாகார்ஜானக் கொண்டா போன்ற இடங்களில் "மகா சாங்கிக”ப் பிரிவு பரவி வளர்ச்சியுற்றிருந்தது. இப் பகுதியிலேயே மகாயானக் கோட்பாடுகள் முதன் முதலாக வரையறை செய்யப் பட்டு நிறுவப்பட்டனவாதல் கூடும். நாகார்ஜுனர் எழுதிய மாத்திய மகாகாரிகா என்ற நூலும், பிரஞ்ஞாபாரமிதாவுக்கு எழுதிய விளக்கவுரையும் மகாயானக் கோட்பாடுகளை முதன் முதலாக வரையறை செய்து கூறிய நூல்களாகும். (மகாயானத்தின் ஒரு பிரிவான 'மாத்தியமிகப் பிரிவுக் கருத்துக்களையே இவை கூறு கின்றன.) இதனல், நாகார்ஜ"னரை மகாயானத்தை நிறுவிய தாகக் கூறும் மரபை நாம் இந்த அளவில் உண்மையாகக் கொள்ள லாம். இலங்கை மன்னன் ஒருவனது மகனுகக் கருதப்படும் ஒருவர் பெளத்த சங்கத்திற் சேர்ந்து, நாகார்ஜுனரின் சீடராக விளங் கினர். ஆரியதே வர் என்ற இந்தச் சீடர், மாத்திய மகாகாரிகாவுக்கு உரை விளக்கமெழுதியும், சது சதக(ம்) போன்ற நூல்களை யெழுதி யும் மகாயானத் தத்துவங்களை விளக்கமும் விரிவும்பெற வைத்தார்.

Page 61
102 பண்டைய ஈழம்
குஷானப் பேரரசன் கனிஷ்க(ன்), பெளத்த மத வளர்ச்சிக்குப் பல முக்கிய பணிகளை யாற்றியவன். இவனது தலைநகரான புருஷ புரம் என்ற பெஷாவாரில் ஒரு பெரும் ஸ்தூபத்தையும் மகா விகாரை யெனப்பட்ட ஒரு முக்கிய விகாரையையும் நிறுவினன். மகதத்தை இவன் கைப்பற்றச் சென்றபோது அங்கிருந்து அஸ்வ கோஷர் என்ற அறிஞரை உடனழைத்துச் சென்ற ன் எனப்படும். இந்தப் பெளத்த அறிஞரே, புத்தசரிதம் என்ற சிறந்த காவியத்தை யும் மற்றும் பல நூல்களையும் எழுதியவர். வசுமித்திரர், பார்சுவர் போன்ற பிற (பெளத்த) அறிஞர்களும் கனிஷ் கனல் போற்றப்பட்ட வர்களே. பெளத்தத்தில் தோன்றியிருந்த பிளவுகளை நீக்கவும், பெளத்தக் கோட்பாட்டு நூல்களுக்கு விளக்கங்களைச் செய்யவும் கனிஷ்கன் ஒரு பெளத்தக் கழகத்தைக் கூட்டினன் என்பர். இவ்வாறு பூரீநகருக்கண்மையில் குண்டலவனத்தில் கூடிய நான்காம் பெளத்த மாநாடு முக்கியம் வாய்ந்தது. வசுமித்திரர் தலைமையிற் கூடிய இப் பேரவையானது கூறிய விளக்கங்களே பின்னர் "விபாஷா சாஸ்திரங்கள்" எனப்படும் (திரிபிட்க) விளக்கவுரைகளுக்கு ஆதாரமாக விளங்கின. இம் மாநாடு கூடிய ஆண்டு கி. பி. 100 எனப் பொதுவாகக் கூறப் படும். இம் மாநாட்டுக்கும் மகாயான வளர்ச்சிக்கும் அதிக தொடர் பில்லாத போதும், ஏறக்குறைய இதே காலத்திலேயே மகாயானக் கோட்பாடுகள் இறுதி வடிவத்தை நூல்களிற் பெற்றன வெனலாம். முன்னரே உருவாகியிருந்த மகாயானக் கோட்பாடுகளை நல்ல முறை யில் நூல்களில் வெளியிட்ட நாகார்ஜ"னர் போன்ற அறிஞர்கள் இதே காலத்தில் வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. தக்கணத்தையாண்ட சாதவாகன மன்னர்கள் சிலர் மகாயானத்துக்கு ஆதரவு தந்த்தாகச் சில மரபுகள் கூறும். இவர்களில் ஒருவனன கெளதமி புத்திர சாத கர்ணி என்பவன் நாகார்ஜ"னரின் நண்பனுக விளங்கியமை பற்றி யும் ஒரு மரபுண்டு. இம் மரபுகளில் உண்மையிருக்குமாயின், மகா யானம் தெற்கே உருவாகி வளர்ந்ததென்பது உறுதியாகின்றது.
i. இலம்பகண்ண மன்னர்கள்:
வசபன் முதல் மகாசேனன் வரை அரசியல் வரலாறு வசபன் (65-109): இலம்பகண்ண அரச மரபின் முதல் மன்ன ணுக விளங்கிய வசபன், அனுராதபுர கால அரசியல் வரலாற்றில் முக் கிய இடத்தைப் பல காரணங்களாற் பெற்றுள்ளான். சபா என்ப வனைத் தோற்கடித்து வசடின் அரசைப் பெற்றமை பற்றி யொரு கதை மகாவம்சத்தில் உண்டு வசபன் என்ற பெயரைத் தாங்கிய ஒருவ ஞல் சபா கொல்லப்படுவானெனக் குறிகாரர் வருவதுரைத்தமையைக் கேட்டு மனமுடைந்த சபா, அப் பெயரையுடைய அனைவரையும் கொன்றுவிடும்படி கட்டளையிட்டதாகவும், படைத் தலைவனுக விளங்

முதலாம் இலம்பகண்ண மரபினர் 103.
கிய இ லம் ப கண் ண ன் ஒருவனுடன் வாழ்ந்த தனது மரு மகனன வசபனையும் அரசனிடம் ஒப்புவிக்க எண்ணங்கொண்ட அவன், வசபனை யழைத்துச் சென்றபோது படைத் தலைவனது மனைவியின் சூழ்ச்சியால் வசிபன் தப்பிச் சென்றதாகவும், பின் னர் படைகளைத் திரட்டி வந்து சபாவைக் கொன்று அரசைப் பெற்றதாகவும் இக் கதை கூறுகின்றது.) வசபன் அரசனன பின், போரில் மடிந்துபோன தன் மாமனன படைத் தலைவனது மனைவி பொத்தாவை, அவளுக்குத் தன் நன்றியைச் செலுத்தும் வகை யில், இராணியாக்கினன். வசபன் தப்பியோடிய போது மகா விகாரைக் குருமார்கள் உதவியதாகவும், பின்னர் உருகுணையிலேயே அவன் படை திரட்டிக்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வசபன் அரசனன போது, குறிகாரர் அவனது ஆயுள் மேலும் பன்னிராண்டுகளுடன் முடிவெய்தும் எனக் கூறியதாகவும், நீண்ட ஆயுளைப் பெறுதற்கு மதப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற சங்கத்தினரின் அறிவுரையைத் தனது ஆட்சிக்காலத்திற் செயற் படுத்தி நீண்ட ஆயுளைப் பெற்றதாகவும் ஒரு கதையுண்டு. அவ னுடைய ஆட்சி 44 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. இத் துணை நீண்ட ஆட்சிக்காலம்Uஅமைதியைப் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. புதிய மரபைச் சேர்ந்தவனக வசபன் இருந்தும், அவனது ஆட்சி நாட்டின் எல்லாப் பாகங்களாலும் ஏற்கப்பட்டிருந்தது. வடக்கே வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொறிப்பும், உரு குணையில் உள்ள கல்வெட்டுக்கள் சிலவும் இவன் காலத்தவையாக இருந்தமையால் இது உண்மையென நிறுவப்பட்டுள்ளது. அமைதி நிறைந்த தனது ஆட்சிக்காலத்தை வசபன்மதப் பணிகளிலும், குடிகளின் நன்மை கருதிய பொருளியற் பணிகளிலும் செலவிட்டு, நன்மதிப்பைப் பெற்ருன். இப் பணிகள் பற்றிப் பின்னர் (அனுராத புர காலப் பண்பாட்டைக் கூறும்போது) விரிவாகக் கூறப்படும். நீர்ப்பாசனத் துறையில் இவனுடைய ஆட்சிக்காலம் முக்கிய இடத் தைப் பெறும் என்பதையும் பின்னர் காண்போம். இங்கு அவனது மற்றைய பொதுப் பணிகள் சிலவற்றைக் கவனிப்போம். தலை நகரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சுவரை முன்னிருந்ததிலும் உயரக் கட்டுவித்ததுமன்றி, வேறு வகைகளிலும் தலைநகரின் பாது' காப்பைப் பலப்படுத்தினன். இதனல், வசபன் அந்நேரத்தில் வலு வடைந்து வந்த சோழருக்கஞ்சியே இவ்வாறு பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டான் என ஊகிக்கப்படுகின்றது. வங்க நாசிக திசன் என்ற இவனது மகன் காலத்தில் இத்தகைய ஒரு படையெடுப்பு நிகழ்ந்ததாகப் பிற்கால ஆதாரங்கள் குறிப்பிடு கின்றன. இந்தச் சோழப் படையெடுப்பை நடத்திய சோழ மன் னன் கரிகாலன் ஆகலாம். இது எவ்வாறயினும், வசபனுடைய

Page 62
104 பண்டைய ஈழம்
ஆட்சி முழுவதும் உள்நாட்டுக் குழப்பத்தினலோ, அயல் நாட்டுப் படையெடுப்பாலோ அமைதியை இழக்கவில்லை யென்பது குறிப் பிடத்தக்கது. v
கஜபாகு 1 (112-134): வசபனுக்குப் பின், வங்க நாசிக திசன் என்ற அவனது மகன் அனுராதபுரத்தில் அரசு செலுத்திய போதும், அவனுடைய தம்பிமார் இருவர் உருகுணையிலும் மாயரட்டை யிலும் ஆட்சி செலுத்தியதாகத் தெரிகிறது. இவ்வாறு ஏற்பட்ட
பிளவு, கஜபாகுவின் ஆட்சியின் போது நீங்கி, நாடு மீண்டும் ஒற்று
மையைப் பெற்றது. வங்க நாசிகன் காலத்தில் நிலவிய ஒற்றுமை யின்மையே சோழப் படையெடுப்பு நிகழத் தூண்டுதல் அளித் திருக்க வேண்டுமென்பர். இராஜாவலி, பூஜாவலி என்ற நூல்களி லும், பிற சிங்களக் கதைகளிலும் பாடல்களிலும், கஜபாகு ஒரு படையெடுப்பைத் தென்னிந்தியாவுக்கு மேற்கொண்டு தன் தந்தை யின் காலத்தில் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிங்களக் கைதிகளை மீட்டு வந்ததோடு, மேலும் பல தமிழ்க் கைதிகளை
அங்கிருந்து கொண்டுவந்ததாகவும் கூறப்படுகின்றது. இக் கதை
களில் வரும் விவரங்களில் வரலாற்றுண்மைகள் ஏதும் இருப்பதாக வரலாற்ருசிரியர்கள் கொள்ளமாட்டார்கள். கஜபாகுவுக்கும் சேர மன்னன் செங்குட்டுவனுக்கும் தொடர்பிருந்ததாக மரபுகள் கூறு வதால், அம் மன்னனது பகைவனுன சோழ அரசனுடன் கஜபாகு வும் பகைமை பூண்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. தண்ண கிக்கு (பத்தினித் தெய்வத்துக்கு)ச் சேரன் செங்குட்டுவன் கோவில் எழுப்பி விழாவெடுத்த போது, அவ் விழாவுக்கு வந்திருந்தவர் களில் 'இலங்கைக் கயவாகு வேந்தனையும் ஒருவனுகச் சிலப்பதி காரம் கூறுகின்றது. இராஜாவலியும், சிங்கள நாட்டுப் பாடல் களும் கஜபாகுவைக் கண்ணகியின் சிலம்புடன் திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளன. இது எவ்வாறிருப்பினும், கஜபாகுவே இலங் கையிற் பத்தினி வழிபாடு பரவக் காரணமாக விருந்தான் எனக் கூறும் மரபுகளை உண்மையாகக் கொள்ளலாம். சிங்கள மக்களின் வழிபாட்டு முறைகளில் பத்தினித் தெய்வத்திற்கு ஒரு சிறப்பான இடம் இன்றும் உண்டு. இவன் அபயகிரிவிகாரைக்குப் பெரிதும் சார்புடையவனக விளங்கி, அதற்கே தன் வள்ளன்மையை அதிக மாக ஈட்டினன். அபயகிரி தாகபத்தை இவன் விசாலித்துக் கட் டியதாகவும், இதனல் "மகாவிகாரையின் புராண"மான மகாவம்சம் கஜபாகுவின் புகழை அதிகம் கூருது விட்டதாகவும் கூறுவர். பிற் கால நூல்களும், மரபுக் கதைகளை யொட்டிய பாடல்களும் இவ னது புகழைப் பேணி வந்துள்ளன.

முதலாம் இலம்ப கண்ண மரபினர் I 05
வொகாரிக திசன் (214-236): கஜபாகுவைத் தொடர்ந்து ஆட்சி செய்தவர்களில், எமது கவனத்தை அடுத்துப் பெறவேண்டியவன் வொகாரிக (நீதிகண்ட) திசன் ஆவான். இடைப்பட்ட, சுமார் 80 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களில் மகல்லக நாக்(ன்), பாதிக திச(ன்), கனிட்ட திச(ன்) ஆகிய மூவரும் சுமார் ஐம்பது ஆண்டுக் காலத் துக்கு அமைதியை நாட்டுக்களித்தனர். இவர்களுக்குப் பின், @摩罗 நாகன், குஞ்ச நாகன் முதலானேர் காலத்தில் நாடு அமைதியை இழந்தது. படைத்தலைவன் பதவியில் நியமிக்கப்பட்டிருந்த பூரீநாகன் என்ற இளவரசன் ஆட்சிஷ்யக் கைப்பற்றி, மீண்டும் அமைதியையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தினன். 1ம் மரீநாகன் எனப்படும் இம் மன்னன், மக்களை வருத்திய வரியொன்றைக் குறைத்து உதவி னன். பூரீநாகன் (195-214) இறந்தபின், அவனது மகனன திசன் ஆட்சியைப் பெற்றன். உடலை வருத்தும் தண்டனைகளை நீதிமுறையி " லிருந்து நீக்க இவன் சட்டமியற்றியதனலேயே, "வொகாரிக' என்ற அடைமொழி இவனுக்குண்டாயிற்று. சமய வளர்ச்சிக்கு இவன் பல தொண்டுகளை யாற்றினன். சமய விளக்கஞ் செய்த குருமார்க்குப் பல நன்கொடைகளை வழங்கியும், விகாரங்களையும், தாகபங்களையும் திருத்துவதற்கு தாராளமாகச் செலவு செய்தும், புதியவற்றை நிறுவி யும் பல பணிகளை யாற்றினன். மகாயான பெளத்தம் இலங்கையில் முதன் முதலிற் பரவ முற்பட்டதும் இவன் காலத்திலேயே என அடுத்த பகுதியிற் காண்போம். இருபத்திரண்டாண்டுகள் இவன் ஆட்சி செய்யுமுன், இவனுடைய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, இவ னுடைய தம்பியும் (அபய நாகனும்) இராணியுட்பட வேறு சிலரும் சூழ்ச்சிகள் செய்தனர். தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவந்த படை யுடன் அபய நாகன் ஆட்சியைக் கைப்பற்றிப் பதினெட்டாண்டுகள் ஆட்சி புரிந்தான்.
சிறீசங்கபோ (தி) (251 - 253): அபய நாகனுக்குப்பின் விரைவில் (கி. பி. 247ல்) மஹியங்கணையைச் சேர்ந்த மூன்று இலம்பகண்ண இள வரசர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்களின் பூர்விகமோ, அனுராதபுர அரச மரபுக்கும், இவர்களுக்கும் இருந்த தொடர்போ எமக்குத் தெரியாது. முதலில் அரசைப் பெற்றவன் சங்கதிச(ன்) ஆவன். இவனுக்குப் பின், சிறீசங்கபோ(தி) என்ற இரண்டாம் இள வர்சன் அரசனுக்கப்பட்டான். மூன்ரும் இளவரசனுன கொடாபயன், மன்னனது திறைசேரிப் பொருளாளனுக்கப் பெற்றன். சிறீசங்கபோ திக்குச் சிங்கள மக்களிடையே இன்றுவரை பெருமதிப்பு இருந்து வரு கின்றது. இவனுக்குண்டான நற்பெயருக்கு இவனது சாதனைகளாகப் போர்த்துறையிலோ, பொதுப்பணியிலோ எதையும் குறிப்பிட முடி யாது. தரும வீரனுக இவன் திகழ்ந்து, ஆட்சி முறையிலும் பெளத்த
14

Page 63
106 பண்டைய ஈழம்
மத ஒழுக்கக் கோட்பாடுகளை அனுசரித் தொழுகினன். 'பஞ்ச சீலங் களில் ஒன்ருண கொல்லாமையைக் கடைப்பிடித்து, ஆட்சி முறையி லும் நீதித் துறையிலும் மக்களுக்குத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடாதொழிந்தான். இத்தகைய கொள்கையை அவன் கடைப்பிடித்தும், தொடாபயன் தான் ஆட்சியைப் பெறுதற்கு அவ சரப்பட்டு சிறீசங்கப்ோதிக்"கெதிரே கலகத்தைத் தொடங்கினன். கொடாபயனை யெதிர்ப்பதால் வீணே உயிர்க்கொலைகள் நிகழுமென அஞ்சி, அரசைத் துறந்து, துறவறம் மேற்கொண்டு, காட்டுக்கேகி ஞன். கொடர்பயன் உடனே அரசைப் பெற்று முடிசூடியதுமன்றி, சிறீசங்கபோதி மீண்டும் அரசைப் பெருவண்ணஞ் செய்வதற்காக, அவனது தலையைக் கொய்து தருபவர்க்கு வெகுமதி யளிப்பதாக அறி வித்தான். இதைச் சிறீசங்கபோதி கேள்வியுற்ற போது, தானகவே தன் தலையைத் துண்டித்து, அச் செய்தியைக் கூறிய உழவனிடமே கொடுத்து வெகுமதியைப் பெறும்படி கூறியதாகக் கதை வழங்கி வருகின்றது. இத் தலையாய தியாகமும், மிகச் சிறந்த கொடையும் நடைபெற்ற இடமான அத்தனகலேயில் பின்னர் ஒரு கோவில் நிறுவப் பட்டு, நெடுங்காலமாக வழிபடப்பட்டு வருகின்றது. பிற்காலத் அவர்கள் சிறீசங்கபோதியின் தியாகத்தைப் போற்றி, பெளத்த மத ஆட்சியாளனுக்கு எடுத்துக்காட்டாக அவனை மதித்து வரலாயினர்.
கொடாபயன் (253 - 266): மேகவண்ண அபயன் என்ற பெயரும் இவனுக்கிருந்தது. கல்வெட்டுக்களிலும் இப் பெயரே அவனுக்கு வழங் கப்பட்டிருந்தது. இவன் 2ம் பூரீநாகன் என்பவனது மகனகலாம் எனக் கல்வெட்டுக்களில் உள்ள குறிப்புக்கள் ஊகிக்க வைக்கின்றன. அரசை ஒருவாறு பெற்றுத் தன் எண்ணத்தை அடைந்த பின், பெளத்த மத வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகளில் இவன் ஈடுபட்டான். மகாயான பெளத்தம் இவன் காலத்தில் மீண்டும் தலையெடுக்க முற் பட்டுத் தோல்வி கண்டது. இவனது இரு புதல்வர்களில் மூத்தவனுன ஜெட்ட திசன் அரசனுவதற்கு எதிர்ப்பு இருந்ததை இளவரசன் உணர்ந்து எதிர்ப்புக்குக் காரணர்களாக விருந்த அமைச்சர்களையும் பிரதானி களையும் தன் தந்தையின் இறுதி யூர்வலத்தின் போது கொன்றதாகக் கூறப்படுகின்றது. ஜெட்டதிசனும் மதப்பணிகளிலே அதிகமாக ஈடு பட்டிருந்தான். மகாவிகாரைக்குச் சார்பாகவே இம் மன்னனும் நடந்து கொண்டான். இவனுடைய ஆட்சி (266-276) முடிவெய்தியதும், இவன் தம்பியான மக்ாசேனன் அரசைப் பெற்ரு ன்.
மகாசேனன் (276 - 303); அனுராதபுர கால மன்னர்களுள் தனிச் சிறப்புப் பெற்ற ஒரு சிலரில் மகாசேனனும் ஒருவன். அவன் ஆற்றிய பொருளியற் பணிகள் நெடுங்காலம் நிலைத்து, நீர்ப்பாசனத் துறையில் அவன் நிறுவிய மின்னேரி முதலான பெருங் குளங்கள் அவ

முதலாம் இலம்பகண்ண மரபினர் 1 07
னைத் தெய்வமாகவும் மக்கள் போற்றும்படி வைத்தன. அனுராத புரத்தில் விளங்கிய முப்பெரும் விகாரைகளில் ஒன்றை (ஜெதவனு ராமனுவ நிறுவியதால், சமயத் துறையிலும் அவன் புகழ் "நிலை பெற்றுவிட்டது. மகாயான பெளத்தத்துக்கு அங்கீகாரமளித்து, முதன் முதல் அப்பிரிவைத் தழுவி, அதை ஆதரித்தமையினலும் வரலாற்றில் அவன் புகழ் பெற்றுள்ளான். இவை தவிர, மகா வம்ச(முதற் பகுதியில்)த்தில் இறுதி மன்னனுகவும் இவனே இடம் பெற்றுள்ளான். மகாயான பெளத்தத்துக்கு ஆதரவளித்து, மகா விகாரைக்குப் பாதகமான செயல்களில் அவன் ஈடுபட்டமையால், மகாவம்சம் முதலான காலவேடுகள் அவனது பெருமையை எமக் குச் சரிவர அறியத்தரவில்லை. எனவே, மகாவிகாரையைச் சேராத ஒரு பிக்குவால் அல்லது சமயச் சார்பற்ற ஒருவரால் மகாசேனனது வரலாறு எழுதப்பட்டிருப்பின், அது முற்றிலும் வேறுபட்ட வகை யில் அமைந்திருக்கும் என்பதை நாம் உணர்தல் வேண்டும். மகா சேனனது செயல்களாற் பாதிக்கப்பட்ட மகாவிகாரையைச் சார்ந்த மிகாநாமதேரர் பாடிய மகாவம்சத்தில் (37ம் அத்.) உள்ள விவ ரங்கள் மகாசேனன் பணிகளையோ, புகழையோ முழுவதாக அறி வதற்குப் பயன்படா என்பதைக் கூறவேண்டியதில்லை.
மகாசேனனது இளமைக்காலக் குருவாக விளங்கிய சங்கமித்திரர் என்ற தென்னக பிக்கு, மகாசேனன் அரசனன செய்தி கேட்ட்தும் இலங்கைக்கு விரைந்து வந்து, தாமே அவனது முடிசூட்டு விழாவை நடத்திவைத்தார் என மகாவம்சம் கூறியுள்ளது. இப் பிக்கு மகா யானப் பிரிவைச் சார்ந்த அறிஞராகத் திகழ்ந்தவர் என்பதை அடுத்த பகுதியிற் காண்போம். இவர் மீது கொண்ட ஆத்திரத் தைப் புலப்படுத்த 'மதிகெட்ட 'சட்டத்தை மீறிய' என்ற அடை மொழிகள் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பெளத்தத்தைச் சேர்ந்த இருபிரிவுகளுக்கிடையே எத்துணைத் துவேஷம் நிலவிய தென்பதைக் காட்ட இந்த எடுத்துக்காட்டே போதும். இப் பிக்கு வின் ‘சூழ்ச்சி'களாலேயே, மகாசேனன் மகாவிகாரைக் கெதிரான செயல்களில் ஈடுபடும்படி செய்யப்பட்டான் எனவும், பின்னர் அவன் மனம் மாறி, தன் ‘தவறு"க்காக வருந்தி, மகாவிகாரையை மீண் டும் ஆதரித்தான் எனவும் மகாவம்சம் அறியத் தருகின்றது. மன்னன் மகாவிகாரைக்கு எதிரே மேற்கொண்ட நடவடிக்கைகள், நாட்டில் அரசனுக்கெதிரே கலகத்தைத் தோற்றுவிக்கவும் காரணமாயின. இந் நிலைமை ஏற்பட்டமையும், கலகத்துக்குத் தலைமை தாங்கிய ஒர் அமைச்சன் (மேகவண்ணன்) அரசனிடத்து நடந்துகொண்ட முறையும் மகாசேனனைத் தன் தவறை உணர வைத்து, அவனை மனம் மாற வைத்தன எனப்படுகின்றது. இது எவ்வாரு யினும், சமயங் காரணமாக ஏற்பட்ட இப் பூசலைத் தவிர, மகாசேனனது இருபத்தெட்டாண்டுகள் கொண்ட ஆட்சிக்காலம் அமைதி நிறைந்த தாகவே காணப்பட்டது.

Page 64
108 பண்டைய ஈழம்
மகாசேனனது சமயப் பணிகள் பிறிதோரிடத்தில் இடம்பெறு மாதலால், இங்கு அவற்றைக் கூறத்தேவையில்லை. இவன் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் குப்தப் பேரரசு வளர்ச்சி பெற்று வந்தது. இவனது புகழ் இந்தியாவரை எட்டியிருந்ததாகவும், புத்த ரின் த ந் த தாது பாதுகாப்புக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட தாகவும், அது இலங்கையை அடையுமுன் மகாசேனன் இறந்துவிட்ட தாகவும் ஒரு நூல் (தாடாவங்ஸ்) அறியத்தருகின்றது. மகாசேன னுக்கு இறவாப் புகழைத் தந்த நீர்ப்பாசனப் பணிகள், மகாவம்சத் தில் நான்கு செய்யுள்களில் (அத், 37, செய். 47-50) கூறப்ப்ட் டுள்ளன. இவை பற்றியும், அனுராதபுர காலப் பொருளியல் வளர்ச் சியைக் கூறும்போது விரிவாகக் கூறப்படும். மின்னேரியை இவன் நிறுவியதனலேயே இவன் பெருமதிப்புக்காளாகிப் பிற்காலத்தவரால் தெய்வமாகவும் (மின்னேரித் தெய்வம்) வழிபடப்பட்டான். இவ்வாறு, மதம், பொருளியல் ஆகிய இரு துறைகளிலும் பெரும்பணி செய்த பெருமன்னன் 303ல் காலமெய்த அவன் மகன் சிறீமேகவண்ணன் அரசெய்தலானன்.
iv. சமய வளர்ச்சி: மகாயான பெளத்தம் இலங்கையிற் பரவல்
இந்தியாவில் மகாயான பெளத்தம் தோன்றி வளர்ந்தமை பற்றி இவ் வத்தியாயத் தொடக்கத்திற் படித்துள்ளோம். கி. பி. முதலாம் நூற்ருண்டின் முடிவில் அங்கு மகாயான பெளத்தம் வளர்ச்சி பெற்று விட்டது. மகாயான பெளத்தக் கொள்கைகள் இலங்கைக்கும் விரை விற் பரவலாயின மகிந்த தேரரால் இலங்கையிற் புகுத்தப்பட்ட தேரவாதப் பிரிவைச் சேர்ந்த பெளத்தமானது, அசோகன் காலத் தில் இருந்த பதினெட்டுப் பிரிவுகளுள், புத்தரின் போதனைகளை மாற்றமேதுமின்றிப் பேணியதாகக் கொள்ளப்படும். இவ் வைதீக மதப் பிரிவின் தலைமைப் பீடமாக இலங்கையில் விளங்கிய மதுர விகாரை, தேரவரதக் கோட்பாடுகளுக்கு முரணுன கருத்துக்களை இங்கு பரவாது"தடுப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தது. மன்னர் களும் பெரும்பாலும் மகாவிகாரைக்கு ஆதரவாக விருந்து வந்தனர். இருந்தும், இந்தியாவில் மகாயானக் கருத்துக்கள் செல்வாக்கெய்திய காலங்களில் இலங்கையையும் அவை பாதிக்கவே செய்தன. மகா சேனன் வரையுள்ள இலம்பகண்ண ஆட்சியாளரின் காலத்தில் மகா யான பெளத்தம் இலங்கையிற் பரவ முற்பட்டதை இப் பகுதியிற் கவனிப்போம். இக்காலச் சமய வளர்ச்சியில், மகாயான பெளத்தம் இலங்கையிற் பரவியமையே முக்கிய விருத்தி எனலாம்.

முதலாம் இலம்ப கண்ண மரபினர் 109
முந்திய அத்தியாயத்தில் வட்டகாமணியின் காலச் சமய விருத்திகள் கூறப்பட்டன. இவை பிற்காலத்தில் மகாயானம் போன்ற புதுமைக் கருத்துக்கள் பரவத் துணைநின்றன எனலாம். அபயகிரி விகாரையை அம் மன்னன் நிறுவிய பின், மகாவிகாரையின் ஆதிக்கம் சிறிது தளர்ந் தது. பெளத்த சங்கத்தில் அவன் காலத்திற் ருே ன்றிய முதற்பிளவும் இவ்வத்தியாயத்திற் கூறப்படவிருக்கும் விருத்திகளுக்கு முன்னேடியாக அமைந்தது. இலம்பகண்ண மரபின் முதல் மன்னனன வசபன், எல்லா விகாரைகளையும் வேற்றுமையின்றி ஆதரித்துச் சமயப் பணிகள் பலவற்றை யாற்றினன். வசபனுக்குப் பின் சுமார் ஒரு நூற்ருண் டுக்குப் பின் ஆட்சிசெய்த வொகாரிக திசன் (214-236) காலத்தி லேயே முதன் முதல் வைதுல்ய வாதம் (பாலியில், வெதுல்ல வாதம்) என்ற ஒரு புதுச் சமயப் பிரிவு தலையெடுத்தமை பற்றிய குறிப்பு வரு ன்றது. வைதுல்ய வாதம் என்பது மகாயானத்துக்குரிய ஒரு ப்ெய ராகும். மகாயானக் கோட்பாடுகள் கொண்ட நூலான 'வைபுல்ய சூத்திரம்’ என்பதிலுள்ள வைபுல்ய வே வைதுல்ய வாக மருவியது எனப்படுகின்றது. "வைதுல்ய சூத்திரம்’ என்ற பெயர், கஷ்கரில் கண்டெடுக்கப்பட்ட சத்தர்மபுண்டரீகச் சுவடியில் வழங்கப்பட்டிருத் தலைக் காணலாம். மாறுபட்ட கருத்துக்களை வன்மையாக எதிர்த்து முறியடிக்கும், அதே வேளையில் சொந்தக் கருத்தெதையும் நிறுவாது விடும் ஒரு வகை வாதம், விதண்டா வாதழ்’ எனப்படும். தீபவம் சத்தில், மகாயானக் கருத்துக்களை யுட்ையவர்கள் விதண்டா வாதிகள் எனவே அழைக்கப்பட்டுள்ளனர். நாகார்ஜசனர், ஆரியதேவர் போன்ற மகாயான அறிஞர்கள் 'மாத்தியமிக" அல்லது “சூன்யவாதக் கோட் பாடுகளை நிறுவியவர்களாகக் கொள்ளப்படுவதாலும், விதண்டா வாதிகள் என்ற பெயர் இவர்களுக்குப் பொருந்தும். அசங்க, வசுபந்து என்ற வேறு அறிஞர்கள் நிறுவிய மகாயானக் கோட்பாடுகள், "யோகாசாரப் பிரிவைச் சார்ந்தவை. இவற்றில் அதிகமாக மந்திரங் களின் சக்தியும், யோக முறைகளும் இடம் பெற்றிருக்கும். இலங் கைக்குப் பின்னர் வந்த சங்கமித்திர தேரர், மகாயானத்தில் “யோகா சார'ப் பிரிவைச் சார்ந்தவர் எனத் தெரிகின்றது.
வொகாரிக திசன் காலத்துக்கு முன்னரே இலங்கைக்கு மகாயானக் கருத்துக்கள் பரவியிருத்தல் கூடுமெனினும், அம் மன்னன் காலத்தி லேயே அபயகிரியில் வாழ்ந்த தர்மருசிப் பிரிவினர் வைதுல்யக் கோட் பாடுகளைப் புத்தரின் உண்மையான போதனைகளெனக் கூறிவரலாயி னர். மகாவிகாரையினர் இவற்றை வைதீகக் கருத்துகளுக்கு முரண னவையென மறுத்துக் கூறினர். இதல்ை உண்டான தகராறைத் தீர்க்குமாறு கல்வி கேள்விகளிற் சிறந்த கபிலன் என்ற அமைச்சனை வொகாரிக திசன் நியமித்தான். கபிலன் இக் கொள்கைகள் புத்தரின் போதனைகளுக்கு மாமுனவையெனக் கூறவே, மன்னன் *வை துல்ய

Page 65
1 1 0 பண்டைய ஈழம்
நூல்களைத் தீக்கிரையாக்கினன். மாறுபட்ட கருத்துக்கள் இவ்வாறு அடக்கப்பட்ட பின், சுமார் நாற்பதாண்டுகள் வரை இவர்களின் நடவடிக்கைகள் குறைந்திருந்தன.
நாற்பதாண்டுகளின் பின், கொடாபயன் (253-266) அரசனுக விருந்தபோது, அபயகிரி விகாரையிலிருந்த தர்ம ருசிக் குருமார்கள் மீண்டும் வை துல்யவாதமே புத்தரின் உண்மைப் போதனைகளைக் கொண்டதென்ற கருத்தை வெளியிட்டனர். வொ காரிக திசன் காலத்தில் வைதுல்ய வாதிகளுக்கு நேர்ந்தது தமக்கும் நேராத வாறு காப்பதற்காக, உசிலிய திச தேரரும், மற்றும் முந்நூறு பிக்குகளும் அபய கிரி விகாரையிலிருந்து வெளியேறி, தக்கின விகாரத்துக்குச் சென்று வாழலாயினர். (இவர்கள் பின்னர் தம்முள் ஒருவரான சாகல என்பாரது போதனைகளைக் கேட்டொழுகியமை யால், "சாகலியர்" என அழைக்கப்பட்டனர். இவர்களே பின்னர் மகாசேனன் நிறுவிய ஜெதவனுராமவுக்குச் சென்று வாழ்ந்தனர்.) கொடாபயன் மகாவிகாரையின் ஆதரவாளனுக விருந்தமையால், வைதுல்யவாதத்தை அடக்கக் கடும் நடவடிக்கைகளை மேற் கொண் டான். அம்மதக் கோட்பாட்டு நூல்களை எரித்தது மன்றி, அபய கிரிக் குருமார்களில் இக் கருத்துக்களையுடைய அறுபதின் மருக்கும் குறிசுட்டு, நாடு கடத்தினன். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட பிக்குகள் தென்னிந்தியாவில் சோழநாட்டில் காவிரிப்பூம்பட்டினத் திலுள்ள விகாரமொன்றில் தங்கியிருந்தனர். இவ்வாறு கொடா பயன் காலத்திலும் மகாவிகாரை மகாயானக் கருத்துக்களுக்குத் தடைவிதிப்பதில் வெற்றி பெற்றுக் கொண்டது.
இலங்கையிலிருந்து சென்று காவிரிப் பட்டினத்தில் தங்கிய பிக்குகளில் ஒருவரது சீடராக விளங்கியவரே சங்கழித்திர தேரர் என்பவராவர். சிறந்த அறிஞரான இத் தென்னகப் பிக்குவுக்கு இலங்கைப் பிக்குகளுக்கு நேர்ந்த இன்னல்கள் தெரியவந்ததும், இவற்றுக்குக் காரணமாகவிருந்த மகாவிகாரையினர் மீது பழி வாங்க உறுதிபூண்டு இலங்கைக்கு அவர் வந்தார். இலங்கையில் மன்னனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் நடந்து, அவ னுடைய புதல்வர்களின் கல்விக்குப் பொறுப்பான குருவாக அமர்ந் தார். ஜெட்டதிசன் என்ற மூத்த புதல்வன் சங்கமித்திரரின் மகா யானக் கருத்துக்களை வரவேற்காதவனுகக் காணப்பட்டான். இளை யவனன மகாசேனன் மிகுந்த ஆர்வத்துடன் மகாயானப் போதனை களுக்குச் செவிசிர்ய்த்து வந்தான். இதனிடையே கொடாபயன் இறந்து போக, ஜெட்ட திசன் அரசனஞன். சங்கமித்திரர், ஜெட்ட திசன் ஆட்சியில் இலங்கையிலிருக்க விரும்பாது இந்தியா திரும் பினர். பத்தாண்டுகளில் அவனது ஆட்சி முடிவெய்தி, மகாசேனன் அரசைப் பெற்றதும் சங்கமித்திர தேரர் தாமதிக்காது, இலங்கைக்கு Lif GioT L Ir i .

முதலாம் இலம்ப கண்ண மரபினர் I I I
மகா சேனனது ஆட்சிக்காலத்தில் (276-303) சமயவளர்ச்சியில் சில புரட்சிகர நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சங்கமித்திரர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தாராதலால், (முடிசூட்டு விழாவை நடத் தும் முறை போன்ற) எல்லா அலுவல்களிலும் அவருடைய ஆலோ சனைப்படியே மகாசேனன் நடந்துவந்தான். வை துல்ய வாதமே! புத்தரின் உண்மைக் கோட்பாடாகும் என்ற கருத்தை மகாசேனன் ஏற்றுக்கொண்டு, இக் கொள்கையை ஏற்காதிருந்த மகாவிகாரை யினரை இதையேற்குமாறு பணித்தான். இதற்கு அவர்கள் மறுக் கவே, அவர்களுக்குத் தானங்களை வழங்க வொட்டாது தன் குடி களுக்குத் தடைவிதித்தான். இதனற் பாதிக்கப்பட்ட மகாவிகாரை மிகிந்தலைப் பிக்குகள் தம் விகாரைகளை விட்டு வெளியேறி, மலை, யகத்துக்கும் உருகுணைக்கும் சென்று தங்கலாயினர். இதனுல் சுமார் ஒன்பதாண்டுகளாக மகாவிகாரை சஞ்சாரமற்றுக் கிடந்தது. ” அபய கிரியைச் சேர்ந்த தர்மருசிப் பிக்குகள் மிகிந்தலை விகாரத் துக்குச் சென்று வாழ்ந்தனர். மகாவிகாரைக் கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டு, அங்கு பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு அபயகிரிக் கட்டிடங்கள் அழகு படுத்தப்பட்டன. லோகபா சாத என்ற கட்டிடமும் இடிக்கப்பெற்றது. இந்த அழிவு வேலைகளைச் செய்வதில் சொண என்ற அமைச்சன் முக்கிய பங்கை வகித்தான் எனப்படுகின்றது. இவ்வாறகச் சில ஆண்டுகள், அபயகிரி விகாரை யும் மகாயான பெளத்தப் பிரிவும் இலங்கையில் மேனிலை யெய்த லாயின. - -
ஆனல், காலவோட்டத்தில், அபயகிரி விகாரைக்கும் அதன் மூலம் மகாசேனனுக்கும் எதிரான இயக்கம் வலுப்பெறலாயிற்று. மேகவண்ண அபயன் என்ற அமைச்சனே மகாவிகாரைக்குச் சார் பான இயக்கத்தின் தலைவனுக விளங்கி, ஒரு படையைத் திரட் டிக் கலகத்துக்கு ஆயத்தமானன். விரைவில் ஒர் உள்நாட்டுப் போர் தோன்றும் நிலைமை உண்டாயிற்று. ஆணுல், இப் போர்
ஒருவாரு கத் தவிர்க்கப்பட்டது. மேகவண்ண அபயன், போர் தொடங்குமுன், மன்னனை நேரிற்கண்டு மனம்விட்டுப் பேசியதைத் தொடர்ந்து, மன்னன் மனம்மாறி, மகாவிகாரைக்கு நேர்ந்த
சேதங்களை நிவர்த்தி செய்வதாக வா க் களி த் தா ன். மக்கள் கருத்தை அலட்சியம் செய்ய விரும்பாத மகாசேனன் இவ்வாறு மனம் மாறியிருக்க வேண்டுமென்பர். இதனிடையே, மகாவிகாரை ஆதரவாளர்களால் (மன்னனது அபிமானத்துக்குரிய இராணியொ ருத்தி இவர்களில் முக்கியமானவள்), சங்கமித்திரரும், சொண என்ற அமைச்சனும் கொல்லப்பட்டனர். மகா விகாரையின் இடிந்த கட்டிடங்களைப் பழையபடி நன்னிலைக்குக் கொண்டு வருவதில் மேக வண்ண அபயன் முன்னின்று பணியாற்றினன். மகாசேனன் உண் மையில் மகாவிகாரையை மீண்டும் ஆதரித்தானு என்பது ஐயத்துக்

Page 66
112 பண்டைய ஈழம்
கிடமானது. மகாசேனன் ஒரு புதிய விகாரையை(ஜெதவனுராமவை) நிறுவி, அதைத் திச தேரர் என்பார்க்குக் கொடுத்தான். (இவ் விகா ரையில் 'சா கலியர்" என்ற பிரிவினர் தக்கிணு விகாரையிலிருந்து வந்து தங்கலாயினர்.) இந்தத் திச தேரர் மீது, பின்னர் மகா சேனனது நீதியமைச்சர் ஒரு குற்றத்தைக் கண்டு அரசன் சொல் லேயும் பொருட்படுத்தாது தண்டனை வழங்கினர். எனவே, மகா விகாரையின் ஆதரவாளர் மகாசேனனது ஆட்சியின் முடிவில் மீண் டும் ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்பது புலப்படும்.
எனவே, மகாசேனன் காலத்திலேயே முதன்முதலாக அரச அங்கீகாரம் பெற்ற மதமாக (ஒரு சில ஆண்டுகளாயினும்) Lod, it யான பெளத்தம் விளங்கியது. அவனுடைய ஆட்சியின் முடிவில் மகாயானக் கோட்பாடுகளுக் கெதிரான இயக்கம் வலுப்பெற்ற தாயினும், மகாயானப் பிரிவுக்குரிய நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் இலங்கையில் நிலைபெற்றுவிட்டன வென்பதை, மகா சேனனுக்குப் பிந்திய கால வரலாறு தெளிவாக்குகின்றது. நாட் டில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த மகாவிகாரையை எதிர்க்க முற்பட்டமையே, மகாசேனனது துணிச்சலையும், மனுே பலத்தை யும் காட்டுவதாகும். மகாசேனனுக்குப் பின், மகாயானம் அடைந்த வளர்ச்சியை இனிவரும் அத்தியாயங்களிற் காண்போம்.
பயிற்சி: 1. குஷானர் பேரரசு நிலவிய காலத்து இந்திய அரசியல் நிலையை இந்தியப் படமொன்றில் விளக்கிக் காட்டுக. (இந்திய வரலாற்று Tsii) 52Tuio, Collin Davies: An Historical Atlas of the Indian Peninsula என்பதிலுள்ள 6 வது படத்தையும் துணையாகக் கொள்ளலாம். 2. வட்டகாமணி காலத்திலிருந்து மகாசேனன் காலம் வரை, பெளத்த சங்கத்திலேற்பட்ட பிளவுகளை ஒர் அட்டவணைகொண்டு தெளிவாக்குக. 3. முதலாம் இலம்பகண்ண மரபைச் சேர்ந்த மன்னர்களுள் மகா சேனனே தலைசிறந்தவன்" என்ற கூற்றை ஏற்பீரா? காரணங் கூறுக. 4. மகாவம்சம் 37ம் அத்தியாயத்தைப் படித்து, அதை அபயகிரிப்
பிக்கு ஒருவர் எழுதுவதாகக் கற்பனை செய்து, திருப்பியெழுதுக.
தேர்வு வினுக்கள்: - 1. இந்தியாவில் மகாயான பெளத்தம் தோன்றிய வரலாற்றைச் சுருக்க மாகக் கூறி, அது இலங்கையில் (மகாசேனன் காலம் வரை) ஏற் படுத்திய செல்வாக்கைக் கூறுக. 2. பின்வருவனவற்றுக்குச் சிறு குறிப்புக்கள் எழுதுக:
வசபன்; சிறீசங்கபோதி; வைதுல்யவாதம்; சங்கமித்திர தேரர். 3, மகாசேனனது ஆட்சிக் காலத்தின் வரலாற்று முக்கியத்தை விளக்குக.

அத்தியாயம் ஒன்பது சிறீமேகவண்ணனும் அவனது பின்னேரும்: குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு
i. சூளவம்ச மன்னர்கள் i. குப்தப் பேரரசும், பண்பாடும் i. சிறிமேகவண்ணன்: முதலாம் இலம்பகண்ண மரபின் இறுதி மன்னர்கள் iv. குப்தப் பண்பாட்டின் இலங்கைச் செல்வாக்கு.
மகாசேனன் மகனன சிறீமேகவண்ணனுடைய ஆட்சிக்காலம், இலங்கைப் பெளத்த மத வரலாற்றிலும், பண்பாட்டு வளர்ச்சி யிலும் குறிப்பிடத்தக்கதொரு காலப்பகுதியாக விளங்கியது. நெடுங் காலம் இலங்கைப் பெளத்தர்களின் வழிபாட்டுக்குரிய புத்த சின்ன மாக இருந்து வந்துள்ள தந்ததாது இவன் காலத்தில் இலங்கைக் குக் கொண்டுவரப்பட்டதால், இவனது ஆட்சி பெருமைக்குரிய தாயிற்று. ரகுப்தப் பேரரசனன சமுத்திரகுப்தனது சமகால இலங்கை வேந்தனக'சிறீமேகவண்ணன் விளங்கி, அம் மன்னனுடன் நட் புறவு பூண்டு, இலங்கைக்கும் அப் பேரரசுக்குமிடையே பண்பாட் டுத் தொடர்புகள் வளரக் காரணமாக விருந்தமையாலும், இவ னுடைய ஆட்சி மேலும் சிறப்புப் பெற்றுள்ளது./ இவ் வத்தியாயத் தில், முதலாம் இலம்பகண்ண மரபில், மகாசேனனுக்குப் பிந்திய ஆட்சியாளர் காலத்து முக்கிய நிகழ்ச்சிகளும், விருத்திகளும் கூறப் படும். இவற்றுள், சிறீமேகவண்ணன் ஆட்சிக்கால நிகழ்ச்சிகளும் , குப்தப் பண்பாட்டினல், இலங்கை எய்திய முக்கிய மாறுதல்களும் சிறப்பான இடத்தைப் பெறும். இம் மன்னன் காலத்தில் விளங்கிய இந்தியப் பேரரசான குப்தப் பேரரசினதும், அதன் பண்பாட்டினதும் சில அம்சங்கள், இவ் வத்தியாயத்திற் கூறப்படுகின்ற இலங்கை வர லாற்றுக்குப் பின்னணியாகத் தரப்படும்.
i. சூளவம்ச மன்னர்கள்
மகாசேனனுடன் மகாவம்சத்தின் முதற்பகுதி முடிவுற்றதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். (உண்மையில், மகாவம்சத்தின் 37ம் அத்தியாயம், ஏனைய அத்தியாயங்களைப் போல முடிவு பெற வில்லை. அவ்வத்தியாயத்துக்குப் பின் சூளவம்சம் என்ற நூல் மகா வம்ச வரலாற்றைத் தொடர்ந்து கூறுகின்றது, மகாசேனனுக்குப் பின், சிறீமேகவண்ணன் முதலான மன்னர்களுடைய வரலாற்றை, மகாவம்சத் தொடர்ச்சியாக அது தொடர்ந்து கூறுகின்றது. முன் னரே குறிப்பிட்டவாறு, இச் சூளவம்சமும், மகாவம்சம் என்ற
15

Page 67
14 பண்டைய ஈழம்
பெயரினுள் அடங்கும். மகாசேனனுடன் முடிவுற்ற முதற்பகுதிக்கு மகாவம்சம் எனவும், அதன் தொடர்ச்சிக்குச் சூளவம்சம் என வும் பெயர் வந்தமைக்குக் காரணம் தெளிவில்லை. (சூள + வங்ஸ் - குறைந்த வம்சம் அல்லது மரபு என நேர்ப்பொருள் கொள்ளு தல் தவருகும்.) மகாவம்சம் முதற் பகுதிக்கு பெருமதிப்பும் செல் வாக்கும் ஏற்பட்டிருந்தமையால், பிந்திய பகுதிக்குச் சூளவம்சம் எனப் பெயர் ஏற்பட்டிருத்தல் கூடுமென்பர். மகா சேனனுடன் அம் மரபு அற்றுவிடாது, அவன் மகன் சிறிமேகவண்ணன் மூலம் அது தொடர்ந்து நிலவி வந்ததாலும், மகாசேனனுடன் முடிவுற்ற அரச மரபையே "மகாவம்சம்' என்ற பெயர் சிறப்பித்துக் கூறு கின்றது என்ற கருத்துக்கிடமேயில்லை.
இனி, "சூளவம்சம்" என்பதும் உண்மையில் ஒரு தனி நூலன்று. அதுவும் மூன்று பாகங்களைக் கொண்டது. வெவ்வேறு காலப் பகுதிகளின் வரலாற்றை, வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த ஆசிரி யர்கள் இம் மூன்று பாகங்களாகப் பாடியுள்ளனர். இவற்றுள், முதற்பாகத்தைப் பாடியவர் தர்மகீர்த்தி தேரர் எனச் சிங்கள மரபுகள் கொள்கின்றன. கி.பி. 4ம் நூற்ருண்டு தொடங்கி 12ம் நூற் ருண்டு வரையிலான எட்டு நூற்றண்டுகளின் வரலாற்றை இம் முதற்பாகத்திலுள்ள 42 அத்தியாயங்கள் கூறுகின்றன. இதை எழுது வதற்கு, ஆசிரியர் பலவக்ை யாதாரங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவற்றுள், அரசர்களின் நற்பணிகளை (புண்ணியச் செயல்களை)க் கூறும் அக்கால்ப் பதிவேடுகள் (புஞ்ஞ பொத்தகானி-புண்ணியப் புத்தகங்கள்), விகாரைகளிற் ப்ேணப்பட்ட ஏடுகள், மரபுகள், தாடா வம்சம், கேசதாதுவம்சம் போன்ற நூல்கள் முக் கியமானவையாகும். எனவே, சூளவம்ச விவரங்கள் பெரும்பாலும் உண்மை விவரங்களாதல் தெளிவு. இலங்கையிலுள்ள கல்வெட் டுக்கள் முதலான பிற ஆதாரங்களும், இந்தியா போன்ற பிற நாட்டுச் சான்றுகளும் சூளவம்சச் செய்திகளை உறுதிப்படுத்தியுள் ளன. சூளவம்சத்தின் முதற் பாகத்தில், 1ம் விஜயபாகுவுக்கு முந்திய கால வரலாற்றைக் கூறும் அத்தியாயங்கள், மகாவம்சத் தின் இறுதி ஐந்து அத்தியாயங்களின் போக்கைப் பெரும்பாலும் ஒத்துள்ளன. 1ம் விஜயபாகு, 1ம் பராக்கிரமபாகு ஆகியோரின் வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ள்ன. இவற்றில், மகாபராக்கிரம பாகுவின் வரலாற்றைக் கூறும் பகுதி, மகாவம்சத்தில் துட்ட காமணியின் வரலாற்றைப் போன்று, காவிய அமைப்பில் பாடப் பட்டிருத்தல் பற்றிப் பின்னர் காண்போம்.
சூளவம்சத்தின் 2ம் பாகம், 8uம் அத்தியாயம் தொடக்கம் 90ம் அத்தியாயம் வரையுள்ள பகுதியாகும். 2ம் விஜயபாகு முதல் 4ம் பராக்கிரமபாகு காலம் வரையுள்ள சுமார் ஒன்றரை நூற்

சிறீ மேகவண்ணனும் அவனது பின்னேரும் 115
ருண்டுக் கால வரலாறு இதிற் கூறப்பட்டுள்ளது. இப் பாகத்தின் ஆக்கியோன் பற்றிய விவரம் எமக்குக் கிட்டவில்லை. இப் பாகத் தின் நாயகனக 2ம் பராக்கிரமபாகு விளங்கியுள்ளான். கீர்த்
சிறீ ராஜசிங்கன் காலத்திற் (18ம் நூற்.) பாடப்பட்ட சூளவ
சம் 3ம் பாகம், மேலும் பத்து அத்தியாயங்களில் அதன் ஆசிரியரான திபொட்டுவாவ சித்தார்த்த புத்தரக்கித தேரர் வாழ்ந்த காலம் வரை வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கூறுகின்றது. சூளவம்சம் 2ம் 3 ம் பாகங்கள் இலங்கை வரலாற்றுக்கு அவ்வளவு இன்றியமையாத ஆதாரங்கள் அல்ல. இவற்றைவிட, வரலாற்றுக் குதவும் பயனுள்ள ஆதாரங்கள் வேறு உள.
" ..
i. குப்தப் பேரரசும், பண்பாடும்.
பேரரசின் தோற்றம்: கி. பி. 4 ம் நூற்றண்டில், "குப்தர்கள்’ என்ற மரபினரால் ஒரு பேரரசு நிறுவப்பட்டு எழுச்சி பெறுமுன் இருந்த இந்திய அரசியல் நிலையை முன்னர் சுருக்கமாக அறிந்துள் ளோம். சில நூற்றண்டுகளாக வலுவையிழந்திருந்த மகதம், குப் தர்கள் 'காலத்தில் மீண்டும் செல்வாக்கைப் பெற்றது. மெளரியர் காலத்திலிருந்து, பெளத்தச் சார்புடைய அரசுகள் பல தோன்றி வந்தமையால், இந்து மதம் ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது. குப்தர்கள் இந்துக்களாகவும், இத்து மதத்தைப் போற்றுபவர்க ளாகவும் இருந்தமையால், இவர்களின் ஆட்சியில் இந்து மதம் மீண்டும் நன்னிலை யெய்தியது. கலை, இலக்கியம், விஞ்ஞானம் முத லானவை போற்றப்பட்டு வளர்க்கப்பட்டமையின், இத் துறைகளில் பெருவளர்ச்சி யுண்டாயிற்று. இவற்றுக்காகவே, குப்தர் ஆட்சிக் காலத்தை இந்திய வரலாற்றின் "பொற்காலம்" என அழைக்கப் படும். குப்தர் மரபின் தொடக்ககால மன்னர்கள் பற்றிய சில செய்திகள் இருப்பினும், 1ம் சந்திரகுப்தன் என்ற மன்னனே, குப் தப் பேரரசை நிறுவிய முதற் பெருமன்னனுகப் போற்றப்படுவான். முந்திய மன்னர்கள் "மகாராஜாக்கள்" என அழைக்கப்பட்டும், சந் திரகுப்தன் மகாராஜாதிராஜன் என அழைக்கப்பட்டும் இருத்தல் குறிப்பிடத்தக்கது. இவன் பட்டமெய்திய காலம் கி. பி. 320 அள வில் எனப்படுகின்றது. இவன் ஈட்டிய வெற்றிகளின் பயனக, மகத அரசு அயோத்தி முதலான பிற அரசுகளையும் உள்ளடக்கி, விசாலமெய்திற்று. அந்நேரத்தில் வடபகுதியில் ஒரு முக்கிய ஆட்சி யாளராக விளங்கிய லிச்சாவி குடும்பத்துடன் உறவுபூண்டு, அதன் இளவரசி யொருத்தியை (குமாரதேவி) மணமுடித்து, மேலும் ப்ல பகுதிகளைத் தனது அரசிற் சேர்த்துக்கொண்டான். தான் இறக்கு முன், அரசவையைக் கூட்டி, சமுத்திரகுப்தன் என்ற இளவரசனைப் பேரரசைப் பெறுதற்கு உரியவனுக நியமித்தான்.

Page 68
" الޘު
116 பண்டைய ஈழம்
சமுத்திரகுப்தன்; சமுத்திரகுப்தனே,குப்த மன்னர்களுள் எல்லாம் தலையாயவன்; இந்திய மன்னர்கள் அனைவரிலும், தனிப் பெருமைக் குரிய ஒரு சிலருள் இவனும் இடம்பெறுவான். இவன் 320க்குப் பின், சிறிது காலத்தில் பட்டமெய்தி 380க்கு முன்பாக இறந்தான். அலகபாத் என்ற இடத்தில் உள்ள அசோகர் தூண் ஒன்றில் பொறிக் கப்பட்ட கல்வெட்டு, சமுத்திர குப்தரின் -சாதனைகளையும், அவனது மரபையும் மற்றும் குப்தர்கள் பற்றிய செய்திகளையும் கூறுவதால், மிகவும் சிறப்பு வாய்ந்த சான்முக இது மதிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் 'ஹரிசேனர்" என்ற சேனைத் தலைவர் எனப்படுகின்றது. இக் கல்வெட்டில் சமுத்திர குப்தர் பலவாறு புகழப்பெற்ற போதும், இதில் உள்ள விவரங்கள் பெரும்பாலும் வரலாற்றுச் செய்திகளே எனக் கொள்வர். இவன் பல போர்களை மேற்கொண்டு வெற்றிகளை யீட்டி, தந்தை விட்டுச்சென்ற ஆணிலங்களுடன் மேலும் பல பகுதி களைச் சேர்த்துப் பேரரசை விரிவுபெற வைத்தான். ரோகில்கண்ட், கங்கை-யமுனை இடைநிலம், கீழை மாளவத்தின் ஒரு பகுதி, வங் காளத்தின் சில மாவட்டங்கள் இவ் வெற்றிகளால், பேரரசுடன் இணைக்கப்பட்ட பகுதிகளாக விருக்கலாம். நேரடியான ஆட்சியிலிருக் காது, சமுத்திரகுப்தனது மேலாணை பரவியிருந்த பகுதிகளாக இப் போதைய கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், கிழக்கு-மத் திய பஞ்சாப், மாளவம், மேற்கிந்தியா முதலானவற்றைக் குறிப்பிட லாம் தக்கணத்துக்கு ஒரு 'திக்விஜய'த்தை மேற்கொண்டு, பன் னிரு மன்னர்களைப் புறங்கண்டு, பின் அவர்களுக்கே அந்நாடுகளை ஒப்படைத்து மீண்டதாகவும் அலகபாத் கல்வெட்டு கூறுகின்றது. சமுத்திரகுப்தன் காஞ்சி வரை திக்விஜயத்தை மேற்கொண்டு மீண் டான் எனப் பொதுவாகக் கொள்ளப்படும். இதன் முடிவில் "சாம்ராட் என்ற பேரரசுப் பட்டத்தைச் சமுத்திரகுப்தன் சூடிக்கொண்டான். இலங்கையைச் சேர்ந்த சிறீமேகவண்ணன், சமுத்திரகுப்தனுக்குத் தன் தூதுவரை யனுப்பி, புத்தகயாவிற் பெளத்த விகாரையொன்றை நிறுவுதற்கு அனுமதி பெற்ருன் என்பதால், இவ் விருவரும் சம கால ஆட்சியாளராக விளங்கியமை புலப்படும். சமுத்திரகுப்தன் ஒரு பெரும் புலவராகவும், இசை வல்லுனராகவும் விளங்கியதாகக் குறிப் பிடப் பெற்றுள்ளது. இதை நிறுவப் பிற சான்றுகள் இல்லாதவிடத் தும், சமுத்திரகுப்தனல் கவிஞர்களும், பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் போற்றப்பட்டனர் என்பது உறுதி. சமயத்தைப் பொறுத்த மட்டில், சமுத்திரகுப்தன் தாமும் ஒரு சிறந்த வைதீக இந்துவாக விருந்து, இந்து மதத்தைப் போற்றி வளர்த்து, அதன் மறுமலர்ச்சிக்கு ஊக்கமளித்தான். ஆனலும், பெளத்த மத அறிஞர் களையும் இவன் ஆதரித்தமையால், பிற மதங்களையும் பரந்த நோக் குடன் பேணி வளர்த்தமை புலணுகும். இங்கு கூறியவற்றல், சமுத் திரகுப்தன் அவனது மரபின் மிக முக்கிய மன்னன் என்பதையறியலாம்.

இ 8 » T""نه نه ؟
றிமேகவண்ணனும் அவலிரவில் ஒருழ், **
2ம் சந்திரகுப்தன்; சமுத்திரகுப்தனைத் தொடர்ந்து ஆட்சி-செய்க அவனது மகனன 2ம் சந்திரகுப்தனது ஆட்சிக் காலத்திலும் (380-412), பேரரசு மேலும் விரிவுபெற்று நன்னிலையில் இருந்தது. மேற் கிந்தியாவில் பல வெற்றிகளையீட்டி, மேலைக்கடல் வரை பேரரசின் எல்லையை விரிவாக்கியமையின், விக்கிரமாதித்தன்” (வெற்றிகொண்ட பரிதி) என்ற பெயரைச் சூட்டிக்கொண்டான். இவனே உஜ்ஜயினி யிலும் ஒரு தலைநகரை நிறுவி, அங்குப் பலமுறை சென்று தங்கினன். உஜ்ஜயினி கலாசாரத் தலைநகராக விளங்கியதாகக் கூறலாம். இவன் காலத்திலேயே பாகியன் என்ற சீன யாத்திரீகர் இந்தியா வந்து பெளத்தத் தலங்களைத் தரிசித்துப் பின் இலங்கை வந்தார்.
பேரரசின் வீழ்ச்சி: 2ம் சந்திரகுப்தனை யடுத்து ஆட்சி செய்த குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் போன்ற மன்னர்களின் காலத்தில் பேரரசு, பெரும்பாலும் அமைதியுடனும், பெருமையுடனும் திகழ்ந்தது. குமார குப்தர் காலத்தில் நாலந்தாவில் ஒரு பெருங் கல்விக்கழகம் நிறுவப் பட்டது. 5ம் நூற்ருண்டு முடியுமுன்பே, பேரரசின் சீர்குலைவு தொடங்கிவிட்டது. புஷ்யமித்திரர் என்ற சாதியாரின் தாக்குதல் களும், பின்னர் நடைபெற்ற ஹ9ணர் படையெடுப்புக்களும், ஸ்கந்த குப்தரின் பின் ஆட்சிக்கு வந்தோரின் திறமைக் குறைவும் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.
குப்தர் காலப் பண்பாடு - சமயம்: குப்தப் பேரரசு சிறப்புடன் விளங்கிய 4ம், 5ம் நூற்ருண்டுகளில், வடஇந்தியா பெரும்பாலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் பெற்றிருந்தது. ஆட்சி முறை யில் இடம்பெற்ற சட்டங்களும், தண்டனைகளும் முந்திய மெளரியப் பேரரசுக் காலத்தைப் பார்க்கிலும், தண்ணளியுடையனவாக இருந் தன. பொருளியல் நிலை மக்களுக்குச் சுபீட்சத்தையும் திருப்தியையும் அளிப்பதாக விருந்தது. பல கைத்தொழில்களும், வணிகமும் அவர் களின் செல்வ நிலையை மேம்படுத்துவனவாக விருந்தன. 5ம் நூற். ருண்டுத் தொடக்கத்தில் இந்தியா வந்த பாகியன், மக்கள் பெரிதும் மகிழ்வுடன் வாழக்கண்டார். குப்தர்கள் காலத்தில், வைதீக மத மான இந்து மதமும், வைணவ மதமும் மறுமலர்ச்சி பெற்று விளங்கின. இதனல், முன்னர் நன்னிலை யெய்தியிருந்த பெளத்தமும், சமணமும் பாதிக்கப்பட்டன. குப்த மன்னர்கள் சைவ, வைணவ மதங்களுக்கே தமது ஆதரவை அதிகம் தந்ததால், அவை தழைத்தோங்கலாயின. இந்து மதத்தில் மீண்டும் வேள்விகளும் சடங்குகளும் முக்கிய இடத் தைப் பெறலாயின. பக்தியியக்கமும், உருவவழிபாடும் இக் காலச் சமயத்தின் முக்கிய இயல்புகளாயின. புராணங்களும், பக்திப்பாடல் களும், உருவங்கள் வைக்கப்பட்டு நிறுவப்பட்ட கோவில்களும் இச் சமய மலர்ச்சிக்குத் துணைநின்றன. சில பகுதிகளில் பெளத்தமும்,

Page 69
18 பண்டைய ஈழம்
சமணமும் பின்பற்றப்பட்ட போதும், இந்துமதப் புத்துயிர்ப்பு இம் மதங்களின் செல்வாக்கை எவ்வளவோ குறைத்துவிட்டது. குப்தர் களின் காலம் இவ்வாறு அனைத்து இந்திய இந்துப் ப்ண்பாடு உருவாதற்கு வழிவகுத்த தெனலாம்.
இலக்கியம்: கலைத்துறைகள் எல்லாமே செழித்தோங்கி, ஏராள மான (கலை) அறுவடைகள் செய்யப்பட்டன. நாட்டின் சுபீட்சமும் மன்னர்களின் கலையார்வமும் இவ்வாழுகக் கலைமுயற்சிகள் பெருகி வந்தமைக்கு முக்கிய காரணங்களாகும். கலைத்துறைகள் அனைத்துப் கண்ட பெருவளர்ச்சியே, குப்தர் காலத்தை "இந்திய வரலாற்றின் பொற்காலம்’ என அழைக்கப்படக் காரணமாயது. இலக்கிய முயற்சி களுக்கு மிகவும் ஏற்றதான வடமொழி (சமஸ்கிருதம்), குப்தர் காலச் சமய மலர்ச்சியால், மீண்டும் முதன்மை பெறலாயிற்று. அரசர்களும் அதைப் பயின்று, அம்மொழியிற் கவிகளாகத் திகழ்ந்தனர். பல சிறந்த கவிகள் வாழ்ந்து, கலைவாணிக்குக் கவிமலர்கள் சூட்டினர். உலக மகாகவிகளில் ஒருவரும், வடமொழிப் புலவர்களில் தலையானவருமான காளிதாசன் 5ம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தானெனக் கொள் வர். இவன் இயற்றிய சாகுந்தலம் போன்ற நாடகங்களும், மேகதூதம் என்ற ஒரு வகை (தூது இலக்கியம்) இலக்கியமும், ரகுவம்சம், குமார சம்பவம் முதலான காவியங்களும் சமஸ்கிருதத்திலும், பிற மொழி களிலும் பெருஞ் செல்வாக்குப் பெற்ற சிறந்த நூல்களாகும். 'இலக் கியத்தில் ஒரு சொற்ப அக்கறையேனும் மனித இனம் கொண்டிருக் கும் வரை, காளிதாசனது பெயரும் மறக்கப்படாது நினைவுகூரப்படும்' என்கிருர் மஜும்தார். 2ம் சந்திரகுப்தனது அரசவையில் ‘நவமணிகள் என அழைக்கப்பட்ட ஒன்பது புலவர்கள் கூடியிருந்தமை பற்றிய ஒரு மரபு உண்டு. சமுத்திரகுப்தனும் ஹரிசேனர் என்ற புலவரைப் போற்றி னர். 'கவிராஜன்’ என்ற பட்டத்தை அவன் சூடிக்கொள்வதிற் பெருமை கொண்டான் எனப்படும். காளிதாசனுக்கு நிகராகக் கொள் ளக் கூடிய பாரவி என்ற பெருங் கவிஞனும் குப்தர் கால இறுதியில் வாழ்ந்தான். இவன் இயற்றிய பெருங்காப்பியம் “கிராதார்ஜ"னியம்' என்பதாகும். "முத்திரா ராட்சஸம்" "தேவீசந்திரகுப்தம்’ போன்ற (அரசியல்) நாடகங்களின் ஆசிரியரான விசாகதத்தரும், "மிருச்சடிக’ நாடகத்தின் ஆசிரியரான சூத்திரகரும், வேறும் பல புலவர்களும் இக்காலத்தில் வாழ்ந்தனர். தண்டி, சுபந்து என்ற வசனநடை வல் லாளரும் இக் காலத்தவர்களே. தசகுமார சரிதம் என்பது முன்னவர் இயற்றிய (வசன) இலக்கியமாகும். ‘வாசவதத்த’ என்பதே சுபந்து வின் நூலாகும். தண்டியின் யாப்பிலக்கண நூலான "காவிய தர்சம்' என்பதும் பெருஞ் செல்வாக்கைப் பெற்றது. பஞ்சதந்திரக் கதை களும் குப்தர் காலத்திலேயே தொகுக்கப்பட்டன. பெரும்பாலான புராணங்களும் குப்தர் காலத்திலேயே இறுதி வடிவைப் பெற்றன. பெளத்த மத நூல்கள் சிலவும் அக்காலத்தில் எழுதப்பட்டன.

சிறீமேகவண்ணனும் அவனது பின்னேரும் Il 9
கட்டிட, சிற்பக்கலைகள்: இந்துசமய மறுமலர்ச்சியின் விளைவாக, கடவுளரின் அழகிய சிலைகளை வைத்துக் கட்டப்பட்ட கோவில்கள் இக்காலக் கட்டிடக்கலையின் முக்கியபண்பாக இருந்தன.அழிந்து போ காத பொருட்களால் (செங்கல், கல்) கட்டப்பெற்ற உறுதி வாய்ந்த கட்டிடங்களாக அவை விளங்கின. சிவன், விஷ்ணு முதலான கட வுளரின் விக்கிரகங்கள் இக் கோவில்களில் இடம்பெற்றன. புத்த ரின் உருவங்களும் கல்லிற் செதுக்கப்பெற்று, பெளத்த வழிபாட்டு நிலையங்களில் இடம் பெற்றன. சாரநாத் முதலான இடங்களில் காணப்பட்ட பெளத்தச் சிற்பங்கள், சிற்பக் கலையின் அதியுன்னத வளர்ச்சியைக் காட்டுபவையாக விளங்கின. உருவ அழகின் உன் னதமும், ஆத்மீக உணர்ச்சியின் வெளியீடும் இவற்றில் கலையழகு மிளிரும் வகையில் ஒன்று சேர்ந்து காணப்பட்டன என்பர். முழுமை யான வடிவத்தின் வனப்பை மாசுபடுத்தக்கூடிய வகையில் எந்த ஒரு தனிப் பகுதியோ, கூறுகளோ அளவுக்கு மிஞ்சிய கவனத்தைப் பெருது, ஒரளவு எளிமையும் கலைத் தூய்மையும் கலந்து அவை எழில் பெற்றுள்ளன. குப்தர் கால ஒவியங்களின் எடுத்துக்காட்டுக் களாக இன்னும் அஜந்தாவிலும், பாகிலும் உள்ள குகைகளின் உட்புறத்தை அலங்கரிக்கும் சுவரோ வங்களும், அத்துறையின் வளர்ச்சியில் ஏற்பட்ட உன்னத நிலையிற் ருேன்றியவையாகும்.
விஞ்ஞானம் முதலியன; விஞ்ஞானத்துறை போன்ற பிற துறை களிலும் குப்தர் காலம், குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கண்டது. இந்தியர்கள் விஞ்ஞானத்துறை வளர்ச்சிக்கு ஆதி காலத்தில் ஆற்றிய பணிகள் பலரால் அறியப்படாதவை. அத்தகைய சாதனைகளில், குப்தர் காலக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. ஆர்யபட்டர், வராக மிஹிரர் முதலான விஞ்ஞானிகள் இயற்றிய சாதனைகள் இவற்றுள் தனியிடத்தைப் பெறுபவை. கணிதத்துறை யில் தசம முறையைப் புகுத்திப் பெரும் மாறுதலையுண்டாக்கிய ஆர்யபட்டர் 5ம் நூற்றண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இதே விஞ்ஞானி, உலகம் ஒரு கோளம் என்ற உண்மையையும், கிரக ணங்களின் உண்மைக் காரணங்களையும் நிறுவியவர். வராஹமிஹிரர் என்ற விஞ்ஞானியும் ஏறக்குறைய இதே காலத்தில் வாழ்ந்து கணி தம்,வானநூல் முதலான பலதுறைகளில் முன்னணியில் திகழ்ந்தவர். பஞ்ச சித்தாந்திகை , பிருகத்சம்ஹிதை முதலான நூல்கள் இவரால் இயற்றப் பெற்றவை. வாக்பட்டர் என்ற மற்ருேர் அறிஞர் மருத் துவக் கலையில் அதுவரை ஏற்பட்ட ஆராய்ச்சிகளை “அஷ்டாங்க சங் கிரகம்’ என்பதன் மூலம் வெளியிட்டார். தொழில்நுட்பத் திற னும், உலோகத் தொழில் வன்மையும் நன்னிலையில் இருந்தமைக் குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது புது டில் லியில், குத்ப் மினர் என்பதற்கு அயலிற் காணப்படும் அக்கால இரும்புத் தூணு

Page 70
I 20 பண்டைய ஈழம்
கும். குப்தர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பல துறைகளிலும் உண் டான வளர்ச்சிகளால், இலங்கை யுட்படவுள்ள அயல் நாடுகள் பாதிக்கப்பட்டன. இவ் வத்தியாய முடிவில், குப்தர் பண்பாட்டு வளர்ச்சி இலங்கையிற் பெற்ற செல்வாக்கைக் கவனிப்போம். இதற்கு வழிகோலிய சிறீமேகவண்ணன் முதலான இலங்கை மன் னர்கள் பற்றி இப்போது கவனிக்கத் தொடங்குவோம்.
i. சிறிமேகவண்ணன் - முதலாம் இலம்பகண்ண மரபின் இறுதி மன்னர்கள்
சூளவம்சத்தின் முதல் மன்னனன சிறிமேகவண்ணன் (கீர்த்தி சிறீமேவன்) ஆட்சியின் முக்கியத்துவம் பற்றி முன்னரே குறிப்பிட் டிருந்தோம். பெளத்த மத வளர்ச்சியில் இடம்பெற்ற சில முக் கிய நிகழ்ச்சிகள் இவன் காலத்தவையாக விருப்பதும், குப்தப் பேரரசன் சமுத்திரகுப் தனது சமகால மன்னனுக விளங்கியமையும், அப் பேரரசுடன் இலங்கை கலாசார உறவுகள் கொண்டமையும் இவனுடைய ஆட்சிக் காலத்துக்கு முக்கியமளித்துள்ளன. மகா வம்சத்தில் நிறைவுபெருத 37ம் அத்தியாயத்தின் தொடர்ச்சியே சூளவம்சத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. இதில் சிறீமே க வண்ணனது வரலாறே முதலில் இடம்பெறுகின்றது. 4ம் நூற் முண்டின் தொடக்கத்தில் சிறீமேகவண்ணன் ஆட்சி செய்ததாக (303-331) இப்போது கணக்கிடப்பட்டுள்ளது.
சமுத்திரகுப்தனுக்கும், சிறீமேகவண்ணனுக்குமிடையே ஏற் பட்ட தொடர்புகள் பற்றி ஒரு சீன ஆதாரமே குறிப்பிட்டுள்ளது. அதில் வரும் ஒரு கதையின்படி, இலங்கையிலிருந்து சிறீமேக வண்ணன் காலத்தில் இந்தியாவுக்கு யாத்திரைசென்ற இரு பிக்குகள் இலங்கை மீண்டபின், இந்தியாவில் புத்த கயாவில் போதி மரம் உள்ள இடத்துக்கண்மையில் யாத்திரீகர்கள் தங்குவதற்கேற்ற இடமின்மையை மன்னனுக்கு அறிவித்தனர். உடனே, சிறீமேக வண்ணன் பல வெகுமதிகளுடன் ஒரு தூதுக்குழுவைச் சமுத்திர குப்தனிடம் அனுப்பி, புத்த கயாவில் ஒரு விகாரையை நிறுவுதற்கு அனுமதி வேண்டினன். குப்தப் பேரரசன் இதற்கு இசையவே, அங்கு ஒரு விகாரை நிறுவப்பட்டது. இவ் விகாரையானது, ஏழாம் நூற்ருண்டில் ஹ"வான் சாங் என்ற சீன யாத்திரீகர் வந்த போதும் நன்னிலையிலிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவ் விகாரையிருந்த இடத்திற் காணப்பட்ட ஒரு வடமொழிக் கல்வெட்டில் வரும் விபரங்களைக் கொண்டும், அவ் விகாரை சிறீமேகவண்ணனல் நிறு வப்பட்டதென. உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், இவ்விகாTை நிறுவப்பட்டமை பற்றி எவ்வித குறிப்பும் சூளவம்சத்திலோ, பி ) இலங்கை ஆதாரங்களிலோ இடம்பெறவில்லை. சமுத்திரகுப்தனது

சிறீமேகவண்ணனும் அவனது பின்னேரும் 21
அலகபாத் தூண் கல்வெட்டில், அப் பேரரசனுக்குத் திறைகொடுத் தவர்களில் சிங்களரும் சேர்க்கப்பட்டிருத்தலால், சிறீமேகவண்ணன் அனுப்பிய தூதுக்குழுவை இது குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
சிறிமேகவண்ணன் இலங்கையில் ஆற்றிய சமயப்பணிகளே குளவம்சத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தன் தந்தை மகா சேனன் மகாவிகாரைக்கு இழைத்த தீங்குகளுக்கு நிவர்த்தி செய் யும் வகையில் லோகபாசாத முதலான கட்டிடங்களை அவன் திருப்பிக் கட்டியதாகவும், அம்பத்தல சேத்தியத்தில் பொன்ன லான மகிந்தர் சிலையொன்றை வைத்துப் பெருவிழா நடத்திய தாகவும், தானே பதினெட்டு விகாரைகளைப் புதிதாக நிறுவிய தாகவும் கூறப்பட்டுள்ளது. இவனுடைய ஆட்சிக்காலத்தின் முக் கிய நிகழ்ச்சியாக, புத்தரின் தந்ததாது இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதைக் கூறுவர். சிறீமேகவண்ணன் ஆட்சிக்கு வந்த ஒன் பதாம் ஆண்டில் இது நிகழ்ந்தது. கலிங்க இளவரசி யொருத்தி பிராமணப் பெண்ணுக வேடம்பூண்டு, தந்தபுரத்திலிருந்து புத்த ரின் புனித சின்னத்தை இங்குக் கொணர்ந்தாள். அதைத் தக்க மரியாதைகளுடன் வரவேற்ற மன்னன், அதற்கென ஒரு கோவி லேத் தலைநகரில் அரசமாளிகைக்கு அணித்தாக நிறுவினுன். இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு அபய கிரி விகாரையினரிடம் ஒப்படைக் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் அவ்விகாரைக் குத் தந்ததா துவை ஊர்வலத்தில் எடுத்துச்சென்று, அபயகிரியில் வைத்துப் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டது. (இதுவே இன்று “பெரஹெர வாகக் கொண்டாடப்படுவது.) சிறீமேகவண் ண ன் காலத்திலிருந்து ஒரு முக்கிய வழிபாட்டுச் சின்னமாக அது இருந்து வந்துள்ளது.
சிறீமேகவண்ணனைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்றவன் அவன் , தம்பியான 2ம் ஜெட்டதிசனவான். யானைத் தந்தங்களிற் சிற்பங்கள் செதுக்குவதில் இவன் கைதேர்ந்தவனுகப் புகழ் பெற்றிருந்தான். இவனுடைய ஆட்சி பற்றிக் குறிப்பிடும்போதே முதன் முதல் ‘போதிசத்த’ பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளதைக் கொண்டு, இவன் காலத்துக்கு(331-339)ச் சற்று முன்பாகவே போதிசத்துவ வழிபாடு இலங்கைக்குப் பரவியதாகக் கொள்வர். இவனைப் போலவே, இவன் மகன் புத்ததாசன் ‘நல்லியல்புகளின் சுரங்கமாக விளங் கினன். போதிசத்துவர்களின் வாழ்க்கையை இவன் மக்களுக்கு வாழ்ந்து காட்டினன் எனப்பட்டுள்ளது. மருத்துவக் கலையில் தேர்ச்சி பெற்றவனுக விளங்கிய இவன், தன் குடிகளையும் மற்றும் உயிரி னங்களையும் அணுகிய நோய்களிலிருந்து அவர்களைக் குணமண்டயச்
16

Page 71
122 பண்டைய ஈழம்
செய்தான். மருத்துவ நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்தெ(பு தியதாகவும், மருத்துவ மனைகளை நாடு முழுவதும் ஏற்படுத்திய தாகவும் இவனது பல நற்பணிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. புத்த தர்மத்தைப் போதிப்பதற்கு வெவ்வேறு பாகங்களில் ஒழுங் குகள் செய்வித்து, மக்களின் 'ஆத்மீக நோயையும் மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டான். மகாவிகாரைக்கு “மொர பரி வென போன்ற கட்டிடங்களை அமைத்து உதவினன். இவன் காலத்தில் பெளத்த "சுத்த நூல்கள் சிங்களத்திற்கு மொழி டெயர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நற்பணிகளைத் தன் ஆட்சிக்காலம் (29 ஆண்டுகள்) முழுவதும் செய்த பின் 368 அள விற் காலமானன்.
1ம் உபதிசன், தன் தந்தை புத்ததாசனைப் போலவே, நல்லி யல்புகள் வாய்க்கப்பெற்றவணுகவும் குடிகளின் நலனில் மட்டற்ற நாட்டமுள்ளவனுகவும் விளங்கினன். 'போதிசத்துவக் கோட்பாடு அக்காலத்தில் வலுப்பெற்றிருந்ததை, இம் மன்னர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளாகச் சூளவம்சத்திற்கூறப்படுபவை காட்டுகின்றன. அவன் நிறுவியதாகக் கூறப்படும் எண்ணற்ற சமயக் கட்டிடங்களையோ, பல குளங்களையோ நாம் சரிவர இனங் கண்டுகொள்ள முடியாது. தோபவாவியை இவனே நிறுவினன் எனப் பொதுவாகக் கொள் ளப்படும். இவனுடைய நீண்ட் ஆட்சிக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவரக் காரணமாக விருந்தவள் இவனது இராணியே எனப் படுகின்றது. மன்னன் தம்பியும், பிக்குவின் வாழ்க்கையை மேற் கொண்டவனுமான மகாநாமனுடன் இரகசிய உறவைக் கொண் டிருந்த இராணி, அவனை அரசனுக்க எண்ணியே உபதிசனைக் கொன்றதாகத் தெரிகின்றது.
மகாநாமன் (410-432), தன் தந்தையும், தமையனும் மேற் கொண்டிருந்த பொதுநலப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வர லானன். சமயத்துறையிலேயே இவனது நாட்டம் இருந்தமையால் புதிய விகாரைகள் பலவற்றை நிறுவினன். இவனது ஆட்சி வர லாற்று முக்கியம் பெறக் காரணம், புத்தகோசர் என்ற இந்திய அறிஞர் இலங்கை வந்து, சிங்கள மொழியில் உருவாகிவந்திருத்த அட்டகதாக்கள் என்ற திரிபிடது.விளக்க நூல்களைப் பாலி மொழிக் குப் பெயர்த்துக் கொண்டமையாகும். புத்தகயாவிற் பிராமண ராகப் பிறந்த புத்தகோசர், பின்னர் பெளத்தத்தைத் தழுவி,
அதன் முக்கிய ஆசாரியர்களில், ஒருவராகத் திகழ்ந்தவர். இலங்கை
யில் இருந்த பெளத்த விளக்க நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டு செல்ல வந்த புத்தகோசர், இலங்கையிற் றங்கியிருந்த காலத்தில், தாமும் பல நூல்களை எழுதி இலங்கையில் பெளத்த - இலக்கிய

சிறீமேகவண்ணனும் அவனது பின்னேரும் 123
வளர்ச்சிக்கு அரும்பணி யாற்றினர். மகாநாமன் ஆட்சியின் போதே, சீன யாத்திரீகரான பாகியனும் இலங்கை வந்து ஈராண்டுகள் தங் கிச் சென்ருர். இவர்”எழுதியுள்ள பிரயாணக் குறிப்புக்களில், இலங்கையின் நிலைமைகள் பற்றி, சிறப்பாக அனுராதபுரத்தின் சமய நிலைபற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம். வசபன் வழி வந்த இலம்பகண்ண மரபு இவனுடன் ஏறக்குறைய முற்றுப்பெறு கின்றது. மகாநாமன் இறந்த போது, நாடு ஒரு நூற்ருண்டுக்கு மேலாகப் பெற்றிருந்த அமைதியையும் இழக்கலாயிற்று. இத்த கைய ஒரு நீண்டகால அமைதியானது, சமயத்துறையிலும், பொரு ளியற் றுறையிலும் எவ்வளவோ முன்னேற்றத்தை யளித்தது என் பதை நாம் உணர்தல் வேண்டும். மகாநா மனது ஆட்சியின் இறுதிப் பகுதியிலேயே, பின்னர் ஏற்பட்ட கலவர நிலைமைகளுக்கான சில தன்மைகள் தோன்றிவிட்டன் என்பதை, புத்தகோசரின் ஒரு குறிப்பைக் கொண்டு உணரலாம். விசுத்தி மார்க்கம் என்ற தமது நூலை, ‘கலவரங்கள் சூழ்ந்த உலகில்' தாம் ஒராண்டில் எழுதி முடித்ததாக அவர் கூறுவதைக் கொண்டு, மகாநாமனது ஆட்சி யின் போதே கலவரங்கள் உருவாகி விட்டதை ஊகிக்கலாம். மகா நாமன் 332ல் இறந்ததும், அரசியலிற் குழப்பங்கள் மிகுந்து காணப் பட்டன. அவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவன் (சொத்திசேன) இளவரசி சங்காவாற் கொல்லப்பட்டு, அவள் கணவன் (சத்தகாஹக) அரசனக்கப்பட்டான். இவனும் விரைவில் மித்தசேனன் என்பா ஞற் ருேற்கடிக்கப்பட்டு அரசிழந்தான். இவ்வாறு, வசபன் நிறு விய இலம்பகண்ண மரபு மூன்று நூற்ருண்டுகளின் பின் முடிவுக்கு வந்தது. மித்தசேனன் காலத்தில் ஒரு தமிழ்ப் படையெடுப்பு நிகழ்ந்தது. இலங்கை அரசியலில் மேலும் பல மாறுதல்களை அது கொண்டுவந்தது இவற்றை நாம் அடுத்த அத்தியாயத்திற் படிப்போம்.
iv. குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு
சிறீமேகவண்ணனது ஆட்சிக் காலத்தில் குப்தப் பேரரசுடன் ஏற்பட்ட உறவுகளின் அடிப்படையில், இலங்கைக்கும் குப்தர்கால இந்தியாவுக்குமிடையே கலாசார உறவுகள் வளர்ந்து, குப்தப் பண் பாடு இலங்கையிற் சில நிலையான மாறுதல்களை யுண்டுபண்ணின. சமயத் துறையில், இந்துமதம் எய்திய புத்துயிர்ப்பின் விளைவாக, கடவுளரின் உருவச்சிலைகளை வழிபடும் முறையும் , அவற்றை வைத் துக் கோவில்களை நிறுவும் முறையும் இந்தியாவில் வளர்ச்சி பெற் றன. புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாகக் கொண்டு வழிபட் டனர். உருவ வழிபாட்டு முறை பெளத்தத்திற் புகுதற்கு மகா யான பெளத்தப் பிரிவின் வளர்ச்சியே முக்கிய ஊடகமாக விருந் தது. இலங்கையில் மகாயான பெளத்தம் செல்வாக்கெய்தியபோது,

Page 72
l24 பண்டைய ஈழம்
இந்துமதச் செல்வாக்கும் அதன் வழி இலங்கைக்குப் பரவியதாகக் கொள்ளலாம். வழிபாட்டு முறையிற் புகுந்த கிரியை முறைகளும் இந்துமதச் செல்வாக்கைக் காட்டுவன. புத்தரின் புனிதத் தந்தச் சின்னமும் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு அதற்கென ஒரு கோவில் நிறுவப்பட்டதும் சிறீமேகவண்ணன் காலத்திலேயே நிகழ்ந்தது என் பது கவனிக்கத்தக்கது.
குப்தர் காலச் சமய வளர்ச்சியானது, சமஸ் கிருத ம் வளம் பெற்று வளர ஊக்கமளித்தது. காப்பியங்கள், நாடகங்கள், புரா ணங்கள் முதலான இலக்கியங்கள் அளவிலும் தரத்திலும் அதிக்மாக அம் மொழியிற் ருேன்றலாயின. வடமொழி பெற்ற வளர்ச்சியானது இலங்கையையும் பாதிக்கலாயிற்று. பெளத்தக் குருமார்கள் வடமொழியைப் பயின்று, அதன் கண்ணே யுள்ள இலக்கியங்களையும் படித்துச் சுவைத்தனர். காளிதாசனது காவியங்கள் அவர்களைப் பெரி தும் கவரவே, காவியத் தன்மைகள் கொண்ட நூல்களைத் தாமும் எழுதலாயினர். மகாவம்சம், சூளவம்சம், மகாபோதிவம்சம் போன்ற நூல்கள், பாலியிற் பாடப்பெற்ற போதும் வடமொழியிலக்கியங்களின் செல்வாக்கை நிறையக் கொண்டுள்ளதை ஆராய்ச்சியாளர் நிறுவிக் காட்டியுள்ளனர். காளிதாசனது ரகுவம்சம்' என்ற காவியத்தைத் தழுவி இலங்கையில் "எழுந்த”நூல் ஜானகி ஹரணம்’ என்பதாகும், அதே புலவனது மேகதூதழ், சிங்களத்திற் பின்னர் *சந்தேசய இலக் கிய வகையைத் தோற்றுவிக்கக் காரணமாகவிருந்தது. இவ்வாறு இலங்கையிற் பாலி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சி, குப்தர் காலத்தில் ஏற்பட்ட இலக்கியங் களாலும், இலக்கண முறைகளாலும் பாதிக்கப்பட்டன. மகாயான பெளத்த நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டிருந்தமையும், அம் மொழியை இலங்கைப் பிக்குகள் பயிலத் தூண்டுதலாக அமைந்தது.
கட்டிட, சிற்பத் துறைகளிலும் குப்தப் பண்பாடு இலங்கையில் தனது செல்வாக்கை யேற்படுத்தியதெனலாம். குப்தர் காலக் கட்டி டங்களை அணிசெய்த சிற்பங்களே அவற்றின் முக்கிய பகுதிகளாக விருந்தன. பல அழகிய உருவங்கள் செதுக்கப்பட்ட புடைப் போவங்கள் கொண்ட படல்கள் இக் கட்டிடங்களை அணிசெய்தன. இவ்வுருவங் களின் “பொதுமையிகந்த எடுப்பும், அதே அமையத்தில் அவை காட் டும் அமைதியுடன் மாட்சிமை கொண்ட பெருமையும் அடக்கமும் மிக மனங்கவர் இயல்புடையன’’ என உரோலின்சன் குப்தச் சிற் பங்களின் தன்மையைக் குறிப்பிட்டுள்ளார். இச் சிற்ப முறையைப் பின்பற்றி இலங்கையிற் செதுக்கப்பட்டவற்றுள் முக்கியமானது இசர சமணவில் (இசுருமுனியாவில்) உள்ள கட்டிடத்தில் உள்ள ஆணும் பெண்ணுமாகவுள்ள உருவமாகும். இப் புடைப்போவம் (காதலர் சோடி

சிறீமேகவண்ணனும் அவனது பின்னேரும் I25
யெனவும் வழங்கப்படுவது) மேலே குறிப்பிட்டுள்ள உரோலின்சன் புகழுரையைப் பெறுதற்கு அருகதை பெற்றது. அனுராதபுர கரலக் கட்டிடங்களிலுள்ள வாயிற் படிகளில் பதிக்கப்பெற்ற சந்திரவட்டக்கற் களிற் சிலவும், குப்தர் கலை மரபைப் பின்பற்றியவை: இராணி மாளிகை என்பதன் வாயிலில் உள்ளது இம்மரபைச் சார்ந்த சிற்ப மாகக் கருதப்படும்.
ஒவியத்துறையிலும், குப்தர் காலக் கலைமரபின் சாயல் இலங்கை யின் மிகப் புகழ்பெற்ற கலைச் செல்வங்களான சீகிரியாச் சுவரோவங் களிற் காணப்படுகின்றது. அஜந்தாக் குகைகளில் உள்ள சுவர்ச் சித் திரங்கள் சில குப்தர்காலத்தவை யென்பதை முன்னர் குறிப்பிட் டிருந்தோம். அஜந்தாக் கலைமரபைத் தழுவியவையாகவே சீகிரியாச் சுவரோவங்கள் இருப்பதாகக் கருதப்படும். பேரரசுகள் எவ்வளவு பெரியவையாயினும் அவை சுவடுகளேயின்றி மறைந்து போதல் நியதி. ஆனல், அவற்றின் பண்பாட்டுத்துறைச் சாதனைகள் என்றும் நினைவு கூரப்படும் வகையில் நிலைபேறு பெற்றுவிடுகின்றன. குப்தர் காலப் பண்பாடும், இதே நியதிக்கமைய இந்தியாவிலும் இலங்கையிலும் வேறும்பல அயல் நாடுகளிலும்,அதன் சாதனைகளை நினைவுக்குக்கொண்டு வரும் வகையில் தனது செல்வாக்கை நிறுவியுள்ளது.
பயிற்சி:
1. குப்தப் பேரரசின் வளர்ச்சிக்கு சந்திரகுப்தன், சமுத்திரகுப்தன் ஆகி
யோர் ஆற்றிய பணிகளே அளவிடுக.
2. சூளவம்சம் (முதற்பாகம்) பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு எழுதுக.
கூட்டு வேலைக்கு:
குப்தர் காலப் பண்பாட்டினை, சமயம், இலக்கியம், சிற்பம், ஒவியம் என்ற நான்கு பிரிவுகளில் (நான்கு குழுக்களாக வகுப்புப் பிரிந்து) ஆராயலாம். இவை இலங்கையில் ஏற்படுத்திய செல்வாக்கையும் தெளிவு படுத்த வேண்டும். இவற்றை விளக்க உதவும் நூல்கள், படங்கள் முத லானவற்றையும் மாணவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேர்வு வினுக்கள்: 1. சிறீமேகவண்ணன் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கும் குப்தப் பேர ரசுக்குமிடையே நிலவிய உறவுகளின் தன்மையைக் கூறி, அவற் றின் விளைவுகளைக் கூறுக. 2. சிறீமேகவண்ணனது ஆட்சிக் காலம் இலங்கை வரலாற்றில் முக்கி
யம் பெறக் காரணங்கள் என்ன? 3. வரலாற்றுச் சிறுகுறிப்புக்கள் எழுதுக:
மகாநாமன்; பாகியன்; சமுத்திரகுப்தன்; சந்திரகுப்தன் 11; புத்த கோசர்; தர்மகிர்த்தி தேரர்; காளிதாசன்; புத்ததாசன்.

Page 73
126
பண்டைய ஈழம்
இணைப்பு I:
கால அட்டவணை
முந்திய அனுராதபுர காலம் கி. மு. 250 - கி. பி. 450
காலம் இந்தியா இலங்கை
கி. மு. சாஞ்சி, பாரூட்டில் ஸ்தூபங் தேரவாத பெளத்தம் பரவ 250- கள்- அசோகனது மறைவு;|(மகிந்தர்), போதிமரக்கி% மெளரியப் பேரரசின் வீழ்ச்சி நாட்டப்படல்; மகாவிகாரை 201 யின் தொடக்கம். தூபாராம நிறுவப்படல்
200. புஷ் ய மித் தி ர ன் (சுங்கர்) தமிழரின் முதற்படையெடுப்
கடைசி மெளரியரைக் கொலை .
எல்லாளன் ஆட்சி செய்தல்
துட்டகாமணியின் வெற்றி காரவேலரின் ஹாதிகும்பாக் கல்வெட்டு மகாதூபம் (ரூவன்வலிசயா பாக்டிரிய- கிரேக்க அரசு(மின 965) LD&585 LIL-6) ண்டர்) வளர்ச்சி பெறல் u o
தமிழ்க் குறுநில மன்னர் ப.ை சாகர்கள் ஆட்சித் தொடக்கம்
. 1யெடுப்பு: வட்டகாமணி அ DESfTLfs T60,T6B5 கொள்கைகள் 101 உருவாதல் சையிழத்தல்
100. (கடைச்) சங்ககாலம் (தமிழ்|பிராமண திசன் பஞ்சம்
நாட்டில்) பெளத்த சங்கத்திற் பிரிவினை
கள் அதிகரித்தமை
திரிபிடகம் எழுதப்படல் அபயகிரி விகாரையின் தோ றம் - சங்கத்தில் முதற் பிள உரோமுக்கு இலங்கைத் தூது குழு செல்லல்

T)
காலம்
இந்தியா
இலங்கை
கி.பி.
lar
1 00
குஷானப் பேரரசு(கனிஷ்கன்) வலிமை பெறல்; சக-அப்தத் தொடக்கம் அஸ்வகோஷர்,நாகார்ஜ"னர் பெளத்த நூல்களை யெழுதல் 4ம் பெளத்த மாநாடுமகாயானக் கோட்பாடுகள்
இறுதி வடிவத்தைப் பெறுதல்
இலம்பகண்ண மரபின் முதல் மன்னன் அரசைப் பெறல் எருவாவி நிறுவப்படல்
கெளதமிபுத்ர சாதகர்ணி:
1 01 - கரிகாலன் படையெடுப்பு(?) நாகார்ஜுனரின் நண்பன் கஜபாகு தென்னிந்தியா செல் கரிகாலன் தமிழகத்தை ஒன்று லல் படுத்தல் பத்தினி வழிபாடு பரவுதல் சேரன் செங்குட்டுவன் கண் 200 | ண கிக்கு விழாவெடுத்தல்
201- யக்ஞ பூரீசாதகர்ணி- மகாயானநூல்களை வொகாரிக
சாதவாகன அரசின் சீர்குலை திசன் தீக்கிரையாக்கல் வுத் தொடக்கம் சிறீசங்கபோதியின் மகத்தான
தியாகம் கொடாபயன் மகாயானக் குரு மார்களை நாடுகடத்தல் சங்கமித்திரர் தூண்டுதலால் மகாவிகாரை யிடிக்கப்படல் 300 ஜெதவனுராமவின் தோற்றம்
301- குப்தப் பேரரசு - இலங்கைத் தூதுக்குழு இந் சமுத்திரகுப்தனது திக்விஜயம் தியா செல்லல்; புத்தகயாவில் இலங்கைவிகாரைநிறுவப்படல் காளிதாசர் முதலான புலவர் தந்ததாது வருகை 400 கள் வாழ்ந்தமை தீபவம்சம் எழுதப்படல்
Ꮞ 0 1 -- பாகியன் வருகை புத்தகோசர் சமய நூல்க
சந்திரகுப்தன் 11ன் ஆட்சியின் ஞக்கு விளக்கங்கள் எழுதல் (Լpւգ-6վ பாகியன் வருகை 450 தூதுக்குழு சீன செல்லல்
ஸ்கந்தகுப்தர் ஆட்சி

Page 74
128 பண்டைய ஈழம்
g?sIMOTůL III:
முதலாம் இலம்பகண்ண மரபு
வசபன் கி. பி. 65-109
வங்கநாசிக திசன் 109-112
கஜபாகு 112-134
(மைத்துனன்) மகல்லக நாகன் 134-140
பாதிக திசன் 140-164 கனிட்டதிசன் 164-192
சிறீநாகன் 1 195-214
குஜ்ஜநாகன் 192-194 குஞ்சநாகன் 194-191
வொகாரிக திசன் 214-236 அபயநாகன் 236-244
சிறீநாகன் I 244-246 மஹியங்கணை இளவரசர்கள்:
சங்கதிசன் 1 247-251 சிறீசங்கபோதி 251-253 கொடாபயன் 253-266
ஜெட்டதிசன் 1 266-276 மகாசேனன் 276-303
சிறீமேகவண்ணன் 308-331 ஜெட்டதிசன் 11 331-34
புத்ததாசன் 340-368
உபதிசன் 1 368-410 மகாநாமன் 410-43
மஹியங்கணை இளவரசர்கள் இலம்பகண்ண மரபைச் சேர்ந்தவர்
ளாயினும் முந்திய அரசர்களுக்கும் அவர்களுக்குமுள்ள உறவுமுை தெரியாது.

அத்தியாயம் பத்து மோரிய மரபினர்:
தாதுசேனனும் காசியப்பனும்
1. தமிழ்ப் படையெடுப்பு i. தாதுசேனன்: மோரியர் மரபு அர சைப் பெறல் i. காசியப்பன் - மோரியர் மரபு முடிவெய்தல்
பண்டுகாபயனல் அனுராதபுரம் தலைநகராக்கப்பட்டதிலிருந்து *PTர் பதின்மூன்று நூற்ருண்டுகள் வரை (10ம் நூற்றண்டின் முடி வில் சோழர் படையெடுப்பின் பின், பொலன்னறுவை இராசதானி யாக்கப்படும் வரை) தொடர்ச்சியாக அது இராசதானியாக விளங் கிய காலம் அனுராதபுர காலம் எனக் குறிக்கப்படும். இத்துணை நீண்டகாலமாக, மற்றெந்த நகரமும் இலங்கையின் இராசதானி யாக இருந்ததில்லை. அனுராதபுரகாலம் ஆதிகால இலங்கை வர லாற்றில், குறிப்பாகச் சிங்கள மக்களின் வரலாற்றில் மிகுந்த பெருமைக்குரிய காலமாக விளங்கியது. இதனை, வசதி நோக்கி, முந்திய அனுராதபுரகாலம், பிந்திய அனுராதபுரகாலம் என இரண்டு பிரிவுகளாக வரலாற்ருசிரியர் பிரிப்பர். இவ்வாறு பிரிப்பதற்கு உண்மையில் எவ்வித உறுதியான அடிப்படையும் இல்லையெனினும் கி. பி. 5ம் நூற்றண்டுக்குப் பிந்திய காலத்தை (தாதுசேனன் ஆட் சியிலிருந்து) பிந்திய அனுராதபுர காலமாகக் கொள்வர். பிந்திய அனுராதபுர காலத்தில் மிகுதியும் அரசியற் குழப்பங்கள் காணப் பட்டமையாலும், முந்திய காலத்துப் பொருளியற் பணிகளின் அடிப்படையிலேயே பிந்திய அனுராதபுர காலம் பொருளியற் சிறப்பைப் பெற்றதாலும், பிந்திய காலப்பகுதி ஓரளவுக்குச் சிறப் புக் குறைந்த காலமாகக் காணப்படுகின்றது. பிந்திய அனுராதபுர சிால இறுதியில், அரசியற் குழப்பங்கள் மலிந்து, நாடு நலிவுற்று முடிவில் அந்நியராட்சியில் அது அமரலாயிற்று. முந்திய காலத்தை வட-இந்தியச் செல்வாக்கு மிகுதியும் உள்ள காலமாகக் கூறலா மெனின், பிந்திய அனுராதபுர காலத்தில் தென்னிந்தியாவின் செல்வாக்கே அரசியல், கலைத்துறைகளிற் காணப்பட்டது எனக் கூறவேண்டும். இவ்வத்தியாயத்திலிருந்து, பிந்திய அனுராதபுர கால வரலாற்றைக் கூறுவோம். இப் பகுதியின் முடிவில், அனுராத புர காலப் பண்பாட்டைக் கூறும்போது, முந்திய அனுராதபுரகாலத் தின் வளர்ச்சிகளும் சேர்த்துக் கூறப்படும். இவ்விரு பிரிவுகளுக்கு முள்ள சிறப்பான தன்மைகள் வேண்டிய இடங்களிற் சுட்டிக் காட்டப்படும்.
17

Page 75
130 பண்டைய ஈழம் i. தமிழர் படையெடுப்பும், தமிழர் ஆட்சியும்
பிந்திய அனுராதபுர காலம், தென்னிந்தியச் செல்வர்க்கை அதிகமாகக் கொண்டிருந்ததெனக் குறிப்பிடலாம் என்பதற்கமைய, தொடக்கத்திலேயே ஒரு தென்னிந்தியத் தமிழ்ப் படையெடுப்பு நிகழ்ந்ததைக் காண்கின்ருேம். தென்னிந்தியாவில், சங்ககாலத் தமிழகத்தின் நிலைமைகளை முன்னர் சுருக்கமாகக் கவனித்தோம். கி. பி. 3ம் நூற்றண்டின் முடிவில், தமிழ்நாட்டை, இனந் தெரி யாத ஒரு சாதியினர் வென்று ஆட்சி செய்தனர். இதன் பின் சுமார் மூன்று நூற்ருண்டுகள் வரையில் தமிழ்நாட்டில் இருள் சூழ்ந்திருந்தது. நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுவது போல, சங்க காலத்தைத் தொடர்ந்து, ‘ஒரு நீண்ட வரலாற்று இரவு ஏற் பட்டது. இவ்வாறு தமிழ்வேந்தர்களைத் தோற்கடித்துச் சிறைப் படுத்தி தமிழ்ப் பண்பாட்டினை அழித்தவர்களைக் களப்பிரர் எனப் பிற்கால நூல்கள் குறிப்பிட்டுள்ளனவேயன்றி அவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறவில்லை. களப்பிரர் குலத்தைச் சேர்ந்த அச்சுதர் என்பவர் பெளத்தத்துக்கு ஆதரவு தந்ததாகச் சில பெளத்த நூல்கள் கூறுதலால், அவர்கள் பெளத்தர்களாகலாம் எனக் கருதுவர். களப் பிரர் ஆட்சியின் போது தமிழ்நாட்டில் பெளத்தமும் சமணமும் நன்கு வளர்ச்சி பெற்றதாகவே தெரிகின்றது. இக்காலத்தைச் சேர்ந்த தமிழ் நூல்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பல, இம் மதங்களைச் சேர்ந்த புலவர்களாலேயே பாடப்பட்டிருத்தலைக் காண லாம். களப்பிரர் ஆட்சியின் போது, சேர்ழ, பாண்டிய அரசர்கள் உரிமையிழந்ததுமன்றி, அவர்கள் குலங்கள் அற்றும் போய் விட்டன. பின்னர், வடக்கே தொண்டைமண்டலத்தில் பல்லவரும், தெற்கே பாண்டியரும் எழுச்சி பெற்றுக் களப்பிரரைத் தோற்கடித்து, மீண்டும் தமிழ்ப் பண்பாட்டுக்கு விடிவையும், மலர்ச்சியையும் அளித்தனர்.
களப்பிரர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்த வேளையிலேயே, இலங்கைக்கும் ஒரு தமிழ்ப் படையெடுப்பு நிகழ்ந்தது. மகாநாம னுக்குப் பின், அரசுரிமையைப் பெறுதற்கு அவனுடைய நேர் வாரிசு எவனும் இருக்கவில்லை. அம் மன்னனது தமிழ் மனைவி யொருத்தியின் மகன் (சொத்திசேனன் அல்லது செங்கோடன்) ஆட்சியைப் பெற்ரு ஞயினும், அதை அவன் பேணமுடியாதவனனன். பட்டத்தரசியின் மகள் அவனைக் கொன்று, தன் கணவனை அரசனுக்கினுள். ஆனல், மித்தசேனன் என்பவனை அரசனுக்கி அவன் மூலம் தான் அதிகாரத் தைச் செலுத்த ஓர் அமைச்சன் முற்பட்டான். இவ்வாருன குழப்ப நிலைமைகளே தமிழ்நாட்டுத் துணிசெயலாளர்க்கு ஏற்ற விளைநில மாயின. பாண்டு என்பானது தலைமையில் ஒரு படையெடுப்பு நடை பெற்றதன் விளைவாக, மித்தசேனன் அரசிழந்தபோது, தமிழராட்சி

மோரிய மரபினர்; தாது சேனனும், காசியப்பனும் 131
சுமார் ஐந்து நூற்ருண்டுகளின் பின் மீண்டும் இலங்கையில் ஏற் படலாயிற்று. இப் படையெடுப்பை நடத்திய தலைவனது பெயரைக் (பாண்டு) கொண்டு, படையெடுப்பை நடத்தியவர்கள் பாண்டி நாட்டவர் எனச் சிலர் கூறுவர். இராஜாவலி, பூஜாவலி ஆகிய சிங்கள ஆதாரங்கள் அவர்களைச் சோழநாட்டிலிருந்து வந்தவர்க ளாகக் குறிப்பிட்டுள்ளன. களப்பிரர் ஆட்சியின் போது தோன்றிய குழப்ப நிலையே, இப் படையெடுப்பை நடைபெறச் செய்திருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.
பாண்டுவின் படையெடுப்பைத் தொடர்ந்து, இலங்கையில் தமிழர் ஆட்சி ஒரு கால் நூற்ருண்டுக் காலம் வரையில் நடை பெற்றது. பாண்டுவும் அவனது புதல்வர்களான பாரிந்தன்(பாரித தேவன்), குட்டபாரிந்தன் என்ற இருவரும் ஒருவர் பின்னுெருவராக ஆட்சிசெய்த பின், திரீதரன்,தாடியன்,பீடியன் என்போர் தொடர்ந்து ஆளலாயினர். இறுதித் தமிழனன பீடியூனையே தாதுசேனன் வென்று, நாட்டுக்கு விடுதலையை அளித்தான். இவர்களிற் சில ருடைய ஆட்சியானது, உருகுணே வரை (இலங்கை முழுவதும்) பரவியிருந்ததென்பதற்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட் டுக்கள் ஆதாரமாகவுள்ளன. தமிழரின் ஆட்சி பொதுவாக அமைதி யற்றதாகவும், போர்கள் நிறைந்ததாகவும் காணப்பட்டதால், நாட்டின் முன்னேற்றந் தடைப்பட்டது. கல்வெட்டுக்களில் வரும் குறிப்புக்களைக் கொண்டு, இவர்கள் பெளத்த விகாரைகளை யாதரித் தனர் என்பதைக் கூறலாம். தமிழ்நாட்டில் பெளத்தம் இக்காலத் தில் நன்னிலையை எய்தியிருந்ததை மேலே குறிப்பிட்டோம்; எனவே, இவர்கள் பெளத்தர்களாக இருந்திருத்தல் கூடும். அங்ங்ணமில்லா விடின், அரசியலாதரவைப் பெறுதற்குப் பெளத்தத்தை இவர்கள் ஆதரித்திருக்க வேண்டும். தமிழரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த தாதுசேனனது வரலாற்றை இனிக் கவனிப்போம்,
i. தாதுசேனன்: மோரிய மரபினர் அரசைப் பெறல்
தாதுசேனன் என்பவன் மோரிய மரபைச் சேர்ந்த இளவரசன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மோரியர் என்ற மரபினரின் பூர்விக வர லாறு தெளிவாக அறியப்படவில்லை. சபா என்பவன் யசலா லக திசனிடம் அரசைக் கைப்பற்றிய போது, தலைநகரில் மோரியர்கள் தங்கியிருக்க அஞ்சி, உருகுணைக்குச் சென்று வாழ்ந்ததாகக் கூறப் பட்டுள்ளது. உருகுணையில் "அங்கும் இங்கு ’மாகப் பரந்து குடி யேறியிருந்த மோரியர்களின் வழிவந்த வனகத் தாதுசேனன் குறிப் பிடப்பட்டுள்ளான். தாதுசேனனது தந்தையின் பெயர் தாடநாமன் என்பதாகவும், தாடநா மனது தந்தை நந்திவாபிகாமத்தைச் சேர்ந்த ஒரு ‘குடும்பிகன் (இல்வாழ்வான்) என்பதாகவும் சூள

Page 76
132 பண்டைய ஈழம்
வம்சம் அறியத்தருகின்றது. இம் மோரிய குலத்தவர்களை, பிற்கால மரபுகள் போதிமரக் கிளையுடன் இலங்கை வந்த சாக்கிய குலத் தின் வழிவந்தவர்களாகக் கருதவைக்கின்றன. சிங்களரிடையே மிக ஆதிகாலத்தில் மரபு இலச்சினைகளைக் கொண்ட கூட்டங்களில் ஒன்ருக (மயூரம்-மயில்) மோரியர் இருந்திருத்தல் கூடும் என ஒரு சாரார் கருதுவர். மோரியர் குலத்தின் பூர்விகம் எதுவானலும், இலம்பகண்ணர்களும், மோரியர்களும் ஆதிகால இலங்கையின் ஆட்சியாளராகப் பல நூற்ருண்டுகள் விளங்கியுள்ளனரென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாதுசேனனது இளமைக்கால விவரங்களை நோக்கும் போது, அனுராதபுரத்தில் மகா விகாரையைச் சேர்ந்த தீகசந்த பரிவெணுவில் வாழ்ந்து வந்த ஒரு "பிக்கு, தாதுசேனனது இளமைக்கால வழி காட்டியாகவும் பாதுகாவலராகவும். விளங்கியுள்ளதை யறிகின் ருேம். தாதுசேனனது தாய்வழி மாமனுன அப் பிக்கு அரசஞ) வதற்கு உரிய அறிகுறிகளைத் தன் மருமகனிடம் இருக்கக் கண்டு தாதுசேனனைப் பகைவரிடமிருந்து பேணுவதிலும், இலங்கை க்கு விடுதலையை அளிப்பதற்கான முறையில் அவனை உருவாக்குவதி லும் தமது கவனத்தைச் செலுத்தி வந்தார். சூளவம்சக் கதை யின் படி, மாமனுடனே தீகசந்த பரிவெணுவில் ‘சாமணேர‘வாகி வாழ்ந்து வந்த தாதுசேனன் தலைநகரில் வாழ்வதால் அவனுக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சிய மாமன், அவனையும் அழைத்துக் கொண்டு தலைநகரை விட்டு வெளியேறி, காலஓயாவுக்கு அப்பா லுள்ள ஒரு விகாரையில் (கொனிசா விகாரை) தங்கினர். ஆட்சி யாளர்க்கு விரைவில் தாதுசேனனைப் பற்றிய செய்திகள் எட்டவே, அவனைக் கைப்பற்ற முயன்றனர். தாதுசேனனைக் கைப்பற்றுதற்கு அனுராதபுரத்திலிருந்து ஆட்கள் வருமுன்னரே தாதுசேனன்(மாம னது முன்னறிவால்) உருகுணத்குச் சென்று விட்டான்.
நாட்டின் விடுதலையியக்கங்கள் உருவாதற்கு ஊக்கத்தை எப் போதும் அளித்து வந்த உருகுணையில், தாதுசேனன் என்ற இள வரசன் விடுதலையியக்கத்துக்குத் தலைமைதாங்குவதற்கு ஏற்றவகைக் காணப்பட்டதில் அங்குள்ள சிங்களப் பிரதானிகள் மகிழ்வெய்தி, அவனுக்குத் தமது ஆதரவை அளித்தனர். படைகளைத் திரட்டிய தாதுசேனன் விரைவில் அந்நிய ஆட்சியாளரான தமிழருடன் போர் தொடுத்தான். இப் போர் இருபதாண்டுகள் வரை நீடித் தது. அவனை யெதிர்த்த தமிழ் ஆட்சியாளர் ஒருவர் பின் ஒருவ ராக மடிந்ததாகச் சூளவம்சம் எம்மை நம்பச் செய்தாலும், தாது சேனன் ஆட்சியைப் பெறுதற்கு 459வரை காத்திருக்கவேண்டியவ ணுஞன். தமிழ் ஆட்சியாளர் பெளத்தர்களாக இருந்திருக்கல

மோரிய மரபினர். தாது சேனனும், காசியப்பனும் 133
மாதலாலும், பெளத்த மதப் பணிகளை யியற்றியவர்களாக விருத்த தாலும், சிங்களப் பிரதானிகள் சிலர் அவர்களை யண்டி ஆதரித்த தாலும் அவர்களை இலகுவில் முறியடிக்கவியலாது போயிருக்கலாம். பீடியன் என்ற இறுதித் தமிழ் ஆட்சியாளனைத் தோற்க்டித்த பின், தாதுசேனன் 459ல் பட்டமெய்தினுன். அந்நியராட்சியிலிருந்து இலங்கையை மீட்ட விடுதலை வீரர் வரிசையில் தாதுசேனனும் இடம் பெற இவ்வெற்றி அவனுக்கு உதவியது.
இனி, தாதுசேனன் தனது ஆட்சிக் காலத்தில் (459-477)
ஆற்றிய முக்கிய பணிகளைக் கூறுவோம். பிந்திய அனுராதபுர fo) மன்னர்களில், நீர்ப்பாசனத் துறையிற் சிறந்த பணிகளாற்றிய மன்னர்களில் தாதுசேனனும் ஒருவன். ? காலஓயாவை மறித்து ‘காலவாவி’ என்ற பெருங்குளத்தை நிறுவி, ஒரு புதிய பிரதேசத் தில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள உதவினன். , ஜயகங்கை என்ற ஒரு கால்வாயை வெட்டி இக் குளத்தையும், அனுராதபுரத் திலுள்ள திசவாவியையும் இணைத்தான். இவனது பாசனப் பணி களில் முக்கியமானவை இவை. இவன் நிறுவியதாகக் கூறப்படும் பதினெட்டுக் குளங்களில் மற்ருெ ன்று இப்போதைய இராட்சதக் குளம் (மான மடு) ஆகலாம். அந்நியராட்சியின் போது புறக் கணிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனங்களும் பழுதுபார்க்கப்பட்டு, நன்னிலையெய்தின.
தாதுசேனனது மதப்பணிகளே சூளவம்சத்தில் விரிவாகக் கூறப் பட்டுள்ளன. தலைநகரிலிருந்த முப்பெரும் விகாரைகளும் அவனது ஆதரவைப் பெற்று, வளர்ச்சியடைந்தன. போதிமரத்துக்கு “போதி கர" என்ற கட்டிடத்தையும், போதிசத்துவர்களின் சிலைகள் வைக் கப்பட்ட கோவில்களையும்,; பதினெட்டுப் புதிய விகாரைகளையும் இவன் நிறுவியதாகச் சூளவம்சத்திற் கூறப்பட்டுள்ளது. மிகிந்தலை யில் அவன் நிறுவிய அம்புத்தல விகாரையை, அபயகிரியில் வாழ்ந்த தர்மருசிப் பிக்குகளுக்கு வழங்கினன். சமயக் கட்டிடங்கள் பல வற்றைப் புதுக்கி, அவற்றிற்கு அணி செய்யும் புதிய அம்சங்களையும் சேர்த்தான். தீபவம்சத்தைப் பிக்குகள் வாசித்து விளச்கஞ் செய் வதற்கென அவர்களுக்குப் பணம் வழங்கியும், தன் பன்னிரண்டா வது ஆட்சியாண்டில் போதி மர விழா நடத்தியும். மேலும் மதப் பணிகள் பலவற்றை ஆற்றி, அந்நியராட்சிக்கு முன்னிருந்த நிலை யிலும் மதத்தை மேம்பாடு பெற வைத்தான். இவனுடைய ஆட் சிக் காலத்தில் சீனவுக்கு ஒரு மதத்தூதுக் குழு அனுப்பப்பட்ட தாகவும் தெரிகின்றது.
இலங்கையை ஆண்ட பெருமன்னர்களில் ஒருவனுக மதிக்கப் படுதற்கு தாதுசேனன் எவ்வகையிலும் அருகதை பெற்றுள்ளான். அந்நியராட்சியிலிருந்த நாட்டுக்கு விடுதலையைப் பெற அவன்.

Page 77
134 பண்டைய ஈழம்
நிகழ்த்திய போர்களாலும், குடிகளின் வாழ்வை வளமாக்க அவன் நிறுவிய நீர்ப்பாசனங்களாலும், மதத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவன் ஆற்றிய பலதரப்பட்ட பணிகளாலும், பதினெட் டாண்டுகள் கொண்ட தனது ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் அமைதியையும் உறுதியான பாதுகாப்பையும் தனது நாட்டுக்கு அவன் அளித்தமையாலும், தாதுசேனனை நாம் உயர்வாகவே மதிக்க வேண்டும். பிந்திய அனுராதபுர காலத்தின் தலைசிறந்த மன்னனக இவனைக் கொள்ளலாம். ஆயின், இவனது முடிவு பரி தாபகரமானது. இவனது சேனைத்தலைவனும் மருமகனுமான மிகாரன் சூழ்ச்சியால் இவன் கொலையுண்டான் எனப்படுகின்றது. மிகாரனது தாயை அரசன் தண்டித்தமைக்குப் பழிவாங்கவே, உயர் குலத்தைச் சேராத ஒரு பெண்ணின் வாயிலாகத் தாதுசேனனுக் குப் பிறந்த காசியப்பனுடன் மிகாரன் சேர்ந்து, அவனை ஆட்சியை அபகரிக்கச் செய்து தாதுசேனனைச் சிறையிலிடவைத்து, பின்னர் சுரங்க அறையின் சுவர் ஒன்றில் வைத்துக் கட்டிக் , கொல்ல வைத் தான். உரிமையுடைய இளவரசனுன மொகல்லானன் (முகலன்) இந்தியாவுக் கோடினன். தாதுசேனன் 477ல் இறந்தானெனக் கணக்கிடப்பட்டுள்ளது.
i. சீகிரி காசியப்பன்- மோரிய மரபு முடிவெய்தல்
காசியப்பன் (477-495) அரசைப் பெற்ற வகையினை மேலே சுருக்கமாகக் கூறினேம். சூளவம்சத்திலும், சிங்களக் காலவேடு களிலும் இவனுக்கு முக்கியமளிக்கப்படாது, ஒரு சில செய்யுள் களில் இவன் சரிதம் முற்றுப்பெற்று விடுகின்றது. சமயத்துக்கும், அதனல் ஒழுக்கத்துக்கும் முக்கியமளிக்கும் காலவேடுகளில், இவ னது பாவச் செயல் (தந்தையைக் கொன்றமை) பற்றியே மிகுதி யாகக் கூறப்படுகின்றது. அவன் சமயப் பணிகளை மேற்கொண்ட மைக்கும், தன் பாவத்தைப் போக்குவதே நோக்கமாகக் குறிப் பிடப்பட்டிருக்கின்றது. மகாவிகாரைப் பிக்குகள் இவன்வழங்கிய சம யக் கொடைகளை ஏற்க மறுத்ததாகவும் சூளவம்சம் அறியத் தரு கின்றது. இந்தச் சமய, ஒழுக்கப் பார்வையால், காசிய்ப்பன் போன்ற மன்னர்களின் வரலாறு முழுவதையும் நாம் அறியமுடியாதவர் களாகின்ருேம், குறிப்பாக, காசியப்பனுக்கு வரலாற்றில் இடத் தைத் தந்துள்ள சீகிரியா பற்றிய முழு விபரங்களையும் நாம் அறிய முடியாது, ஊகங்களையும் மனம் போனவாறு கூறப்படும் கருத் துக்களையும் கேட்கும் நிலையில் இருக்கின்ருேம். .
காசியப்பனுக்கு வரலாற்றுப் புகழை நிலைக்க வைத்துள்ள சீகிரியாவை, அவன் தலைநகராகத் தெரிவு செய்து, அதன் உச்சி யில் மாளிகையை நிறுவ எண்ணியமைக்கு வழமையாகக் கூறப்

மோரிய மரபினர்: தாது சேனனும், காசியப்பனும் 135
படும் காரணத்தைப் பரணவிதான அண்மையில் மறுத்து, புதிய காரணங்களைக் கூறும் ஒரு கொள்கையை நிறுவியுள்ளார். சீகிரிக் குத் தலைநகர் மாற்றப்பட்டமைக்கு மொகல்லானஞல் வரக்கூடிய ஆபத்துப் பற்றிய அச்சம் காரணமென்பதே வழமையாகக் கூறப் பட்ட காரணமாகும். பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டதாகக் கூறுவதிலும், ஒரு குறிப்பிட்ட இலட்சிய அல்லது கலை நோக்குக் கொண்டு நிறுவப்பட்டதாகவே சீகிரியில் உள்ள கட்டிட அமைப் புக்கள் உள்ளன. சீகிரியில் உள்ள கட்டிட அமைப்புக்களைப் பார்வை யிடுபவர்க்கு, அவை அச்சத்தால் உண்டாகும் அவசரத்தில் நிறு வப்பட்டவையல்ல என்பதும் புலப்படும். எனவே, பாதுகாப்பு நோக்கைப் புலப்படுத்த சீகிரிக் கட்டிடங்கள் தவறியுள்ளன. மேலும், தனது உரிமையை நிலைநாட்டப் போதிய ஆதரவு இங்கு இல்லாமலே, மொகல்லானன் இந்தியாவுக்கு ஒடினன் எனக் கூறப் படுதலால், மொகல்லானனல் உடனடியான ஆபத்து "ஏற்படுமெனக் காசியப்பன் அஞ்சியிருக்கவும் முடியாது.
பரணவிதான நிறுவிய புதுக் கொள்கையும் சூளவம்சத்தில் உள்ள ஒரு வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டதே. ‘மனி தர்களால் ஏறிக்கொள்வதற்குக் கடினமான சீஹகிரியை அவன் (காசியப்பன்) அச்சத்தினல் அடைந்தான்.அங்கு மற்ருேர் ஆலக மந்தா எனத்தக்க ஓர் அழகான மாளிகையை, காட்சிக்கு விருந் தாக, அவன் நிறுவி, குபேரக் கடவுளென அங்கு வாழ்ந்தான். .' (அத், 39 செய். 3, 6) ஆலக மந்தா (அளகாபுரி) யென்ற குபேரக்' கடவுளின் அரண்மனையைப் போலவே, தனது மாளிகையும் விளங்க வேண்டுமெனக் காசியப்பன் உண்மையிலேயே எண்ணினன் என் றும், மனிதர்கள் தன்னை எளிதில் அடையமுடியாதபடி தான் *உயரத்தில் வாழவேண்டும் என அவ ன் கருதியிருத்தல் கூடு மெனவும், இதனலேயே மனிதர்கள் இலகுவில் அடைய முடியாத உயரமான குன்றில் தன் மாளிகையை நிறுவினன் எனப் பரண விதான தம் கொள்கையை வெளியிட்டுள்ளார். அறிஞர்கள் இது பற்றி யெந்த முடிவுக்கு வரினும், காசியப்பன் இவ்விதமான துணி கரமுள்ள, புதுமையான முறையில் தன் மாளிகையை அமைக்க எண்ணியமைக்கும், சீகிரியின் அமைப்பைப் பயன்படுத்திக் கலை யெழில் மிக்க சிற்பவடிவங்களையும் அதன் மேற்குப்புறப் பாறைச் சுவரில் அருமையான வண்ண ஒவியங்களையும் ஏற்படுத்தச் செய் தமைக்காக, அவனது கலையுள்ளத்தையும், துணிகரப் போக்கையும் நாம் போற்றவே வேண்டும். சீகிரியா ஒன்றே அவனது புகழ், அங்குள்ள அழியா ஒவியங்களைப் போல், மங்காதிருக்கப் போது மானது.

Page 78
136 பண்டைய ஈழம்
காசியப்பன் மேற்கொண்ட சமயப் பணிகளில் இசரசமண விகா ரையை (இசுருமுனியா) நன்னிலைக்குக் கொண்டுவந்ததைக் குறிப் பிடலாம். வெசகிரியில் உள்ள பிற்காலக் கல்வெட்டொன்று கால வேடுகளில் வரும் இச் செய்தியை உறுதிப்படுத்துகின்றது. திருத் தப் பெற்ற விகாரைக்கு தன் பெயரையும், தன் இரு (பெண்) மக்களின் பெயரையும் சேர்த்துப் (இசுரமெணு-போ-கசுப் கிரி விகாரை) பெயர் சூட்டினன். சமய விழாக்களை நடத்தச் செய்தும், தானசாலைகளை நிறுவியும் மேலும் பல பணிகளைச் சமயத்துக்கு ஆற்றினன். இவை யனைத்தையுஞ் செய்தும், அவன் 'மறுவுலகு பற்றியும், மொகல்லானன் பற்றியும் அச்சத்துடனேயே வாழ்ந் தான்' என்கிறது சூளவம்சம்.
காசியப்பனது பதினெட்டாவது ஆட்சியாண்டில்(495ல்)மொகல் லானன் இந்தியாவிலிருந்து படைகளுடன் மீண்டு, தன் உரிமை யைப் பெற்றுக் கொண்டான். காசியப்பன், தன் வீரர்கள் தவறு த லான அறிகுறியைக் கண்டு புறமுதுகிட்டதைத் தாங்காது, தற் கொலை செய்துகொண்டான். காசியப்பனுடைய பதினெட்டாண்டு ஆட்சியில், மிகப் பெரியதும் வியப்புக்கும் உரியதான சாதனையான சீகிரி வண்ண ஒவியங்களால் நிலைபேருன புகழைப் பெற்றுள்ளான்.
தாதுசேனன் நிறுவிய மோரிய மரபு காசியப்பனுக்குப் பின், விரைவில் அரசுரிமையை இழந்துவிடுகின்றது. காசியப்பனது உடன் பிறந்தானுன மொகல்லானன் 1 (495-512) பதினெட்டாண்டுகள், அமைதியுடன் ஆட்சி நடத்தினன். இவனுடைய சமயப் பணிகளை விட, இவனது ஆட்சியின் போது இடம்பெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியொன்று உண்டு. புத்தரின் கேசதாது எனப்படும் மயிர்ச் சின்னம் இந்தியாவிலிருந்து மொகல்லானனது உறவினன் ஒருவனல் கொண்டுவரப் பட்டது. இதைக் கொண்டுவந்த சிலாகாலன் என் பவன் பின்னர் அரசியலில் முக்கிய பங்கை வகித்ததை விரைவில் அறிவோம். கேசதாதுவுக்கு உரிய மரியாதைகளை மொகல்லான ன் அளித்து அதற்கென ஒரு தனிக் கட்டிடத்தை நிறுவிக் கொடுத் தான். சிலாகாலன் "அசிக்காஹக' (வாளேந்தி)ப் பதவியில் அமர்த் தப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான். மொகல்லானன் காலத்தில் கரை யோரப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், தென்னிந்தியாவிலிருந்து ஒரு படையெடுப்பு நிகழக் கூடும் என்ற அச்சம் அப்போது இருந்திருக்க வேண்டும். மொகல் லானனைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற அவன் மகன் குமார தாதுசேனன் (512-521) குமாரதாசன் எனவும் பொது வழக்கில் அழைக்கப்படுபவன். மகாகவி காளிதாசனது நண்பனுக இவனைக் கூறும் மரபுகளைத் தவிர, இவனது ஆட்சியிற் சிறப்பேதுமில்லை.

மோரிய மரபினர்: தாதுசேனனும், காசியப்பனும் 137
இவனுக்குப் பின் அரசைப் பெற்ற கீர்த்திசேனனை, ஒன்பது மாதங் களுக்குள்ளாகக் கொன்று அரசைப் பெற்ற அவனது மாமன் 'சிவனும் விரைவில் அரசை இழந்தான். இவனைக் கொன்று அர சைப் பெற்றவன் இலம்ப கண்ண மரபைச் சேர்ந்தவனுவான். இவனை 2ம் உபதிசன் என வரலாறு அழைக்கும். தாதுசேனனல் நிறுவப் பெற்ற மோரிய மரபு மூன்று தலைமுறைகளுக்குள்ளாக உரிமை யிழக்கலாயிற்று. இருப்பினும், தாதுசேனனையும், காசியப்பனேயும் இம் மரபு குறுகிய காலப்பகுதியில் தந்ததால், பல நிலையான சாதனைகளை அவர்கள் நிறுவியுள்ளனர்.
பயிற்சி:
"பிந்திய அனுராதபுர காலம்’ என்பதனுற் குறிக்கப்படும் காலப் பகுதி யின் முக்கிய தன்மைகளைக் கூறுக.
2. சிகிரியாவைத் தலைநகராகக் காசியப்பன் கொண்டதற்குக் கூறப்
படும் காரணங்களை யாராய்க.
3. சிகிரியா-அன்றும் இன்றும் என ஒரு கட்டுரை எழுதுதற்கு வேண் டிய விவரங்களை வேறு நூல்களிலிருந்தும், வெளியீடுகளிலிருந்தும் திரட்டுக.
கூட்டுவேலைக்கு:
‘சிங்ககிரிக் காவலன்' போன்ற நாடகங்களில் ஒன்றைத் தெரிவு செய்து நடிக்கலாம்.
தேர்வு வினுக்கள்:
1. தாதுசேனனே ஆதிகால மன்னர்களுள் முக்கியமான ஒருவனுகக்
கொள்வதற்குக் காரணங்கள் யாவை?
2. சிகிரிக் காசியப்பனது ஆட்சிக்காலம் இலங்கை வரலாற்றில் ஏன்
முக்கியமானது?
3. சிறுகுறிப்புக்கள் எழுதுக:
மோரியர்; கேசதாது; 1ம் மொகல்லானன்; அசிக்காஹக.
8

Page 79
அத்தியாயம் பதினுென்று இலம்பகண்ணரும் மோரியரும்: ஒரு நூற்றண்டுக்கால அமைதி
i. ஹர்ஷப் பெருமன்னன் i. இலம்பகண்ணர்கள்: சிலாகாலனும் அவனது பின்னுேரும் i. மோரிய மரபினர் மீண்டுஷ் ஆதிக் கம் பெறல்.
பிந்திய அனுராதபுர காலத்தின் அரசியல் வரலாற்றில், தாது சேனன் நிறுவிய அரசமரபினரின் (சுமார் 60 ஆண்டுகள்) ஆட்சி பற்றி முந்திய அத்தியாயத்திற் படித்தோம். இலம்பகண்ண மரபினர் மீண்டும் 522ல் ஆட்சியைப் பெற்று, அரை நூற்ருண்டு வரை ஆட்சி செயுமுன், மீண்டும் மோரிய் மரபினர் கைக்கே ஆட்சி மாறியது. இவ்விரு மரபுகளையும் சேர்ந்த அரசர்கள் மேலும் ஒரு நூர் ற்ருண்டுக் காலம் வரை (618 வரை) நாட்டுக்கு அரசியல் அமைதியையும் , பொரு ளியல் முன்னேற்றத்தையும், சமய வளர்ச்சியையும் உறுதிப்படுத் தினர். 618க்குப் பின், அதாவது இரண்டாம் அக்கிரபோதியின் ஆட்சி முடிவுற்றபின், நாடு அடிக்கடி உள்நாட்டுப் போர்களிலும் அர சியல் தகராறுகளிலும் அமிழ்ந்தியது. இவற்றின் போக்கையும் விளைவு களையும் அடுத்த அத்தியாயத்திற் படிப்போம். இந்த அத்தியாயத் தில், பெரும்பாலும் அமைதியைக் கொண்ட ஆரும் நூற்றண்டின் (சிலாகாலன் தொடக்கம் 2ம் அக்கிரபோதி வரையுள்ள மன்னர் களின்) வரலாற்றையே கவனிப்போம். இக் காலப்பகுதியில் சிலா காலனை விட, 2ம் மொகல்லானன், 1ம் அக்கிரபோதி, 2ம் அக்கிர போதி ஆகியோர் தலைசிறந்த அமைதிக்கால ஆட்சியாளர்களாக விளங்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கான பணிகளையாற்றினர். உள் நாட்டுப் போர்கள் அதிகமாகிய காலத்தில் தென்னகத் தமிழரின் ஆதிக்கமும் இலங்கையில் வலுப்பெற்றதால், அங்கு பாண்டிய, பல் லவ அரசுகள் எழுச்சியுற்றதைப் பற்றி அடுத்த அத்தியாயத்திற் கூறு வோம். இதே காலத்தில் வடஇந்தியாவில் விளங்கிய வர்த்தனப் பேரரசனன ஹர்ஷனது ஆட்சிச் சிறப்புப் பற்றியிங்குக் கூறுவோம். வட இந்தியாவில் பெளத்தத்தை ஆதரித்த இறுதிப் பெருமன்னன் ஹர்ஷன் என்பதையும், இவனுடைய காலத்தில் பெளத்தக் கலைக் கழகமான நாலந்தாப் பல்கலைக்கழகம் சிறப்புடன் விளங்கியது என் பதையும், ஹவான் சுவாங் என்ற சீனப் பேரறிஞர் இந்தியாவுக்கு வந்து இவனைப் பற்றிய குறிப்புக்களை எழுதினரென்பதையும் அறிந்தோ மானல், ஹர்ஷ ன் பற்றி இலங்கை வரலாற்று மாணவர்கள் அறிய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.

இலம்ப கண்ணரும் மோரியரும் 139 i. ஹர்ஷப் பெருமன்னன்:
வடஇந்தியாவின் அரசியல் நிலை (6ம், 7ம் நூற்.)
குப்தப் பேரரசின் வீழ்ச்சியின் பின் வட இந்தியாவில் ஒரு நூற்
ருண்டு வரை குழப்ப நிலைமைகளே காணப்பட்டன. மாளவத்தைச் சேர்ந்த சில மன்னர்களும் கனேஜைச் சேர்ந்த மெளக்கரிகளும், வாகாடகர்களும் ஒரளவுக்குத் தமது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றனர். இவர்களில் மெளக்கரிகள் என் போர் கனேஜிலிருந்து 6ம் நூற்றண்டின் பிற் பகுதியிலிருந்து சுமார் ஒரு நூற்ருண்டு வரை, விந்திய மலைக்கு வடக்கே பஞ்சாபுக்கும் வங்காளத்துக்கு மிடையே உள்ள பெருநிலத்தை ஆண்டவர்கள். இவர்களுள் ஈசானவர்மன், சர்வவர்மன் என்போர் தலை சிறந்தவர்கள். இம் மரபில் வந்த கிருகவர்மன் என்பானே, ஹர்ஷனது உடன் பிறந்தாளான ராஜ்ய பூரீயை கி. பி. 602 அளவில் மணந்தான். இம் மன்னன் விரை வில் ம்கத மன்னனன தேவகுப்தனுற் கொல்லப் பட்டான். இவனு க்குப் பின் இவ்வரசும் ஹர்ஷனது பேரரசின் ஒரு பகுதியாயிற்று. இதன் தலைநகரான கனுேஜே, ஹர்ஷனது பேரரசின் தலை நகராகவும் விளங்கலாயது.
ஹர்ஷனது மரபினரான "வர்த்தனர்’களில் முதல் மன்னன் புஷ்ய பூதி என்பானே. இவர்கள் தானேஸ்வர் என்பதைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். முதன் முதல் பெருமன்னனுக விளங்கிய பிரபாகர வர்த்தனன் ஹஜூணர்களை யெதிர்த்துப் போரிட் டான் எனப்படும். பிரபாகர வர்த்தனனின் மக்களே ராஜ்யவர்த்த னன், ஹர்ஷ வர்த்தனன், ராஜ்யபூரீ என்ற மூவரும் ஆவர். ராஜ்ய வர்த்தனன் அரசைப் பெற்ற சிறிது காலத்தில், ராஜ்யபூரீயை மண முடித்திருந்த கிருகவுர்மனைக் கொலை செய்தமைக்காக, மாளவ மன் னர் மீதும், கெளடரான சசாங்கன் மீதும் வஞ்சந்தீர்க்கப் புறப்பட் டான். இப் போரில், வ்ர்த்தனன் வெற்றி பெற்ருனயினும், உயிரை யிழந்ததாகக் கூறப் படுகின்றது. எனவே, இவ்வாருண் இடைஞ்சல் கள் மிகுந்து காணப்பட்ட ஒரு சூழ்நிலையிலேயே ஹர்ஷ ன் அரசை 606ல் பெற்ருன். (ஹர்ஷ ன் தொடக்கிய அப்த்மும் 606லேயே தொடங்கிற்று.) ஒரு புறம் தன் மைத்துனரைக் கொன்றவர்களைப் பழிவாங்கவும் தன் உடன் பிறந்தாளான ராஜ்யறுரீயை மீட்கவும் வேண்டிய பொறுப்பு அவனைச் சார்ந்திருந்தது; மறுபுறம் தன் மூத் தோனன ராஜ்ய வர்த்தனனின் மரணத்துக்கு சூழ்ச்சி செய்த கெளட சசாங்கனைத் தண்டிக்கும் பணியும் அவனுக்குண்டு. மெளக்கரிகளின் அரசும் வர்த்தனரின் அரசையும் ஒருங்கே பெற்ற ஹர்ஷன், தான் பெற்ற போர் வெற்றிகளால், அதை மேலும் விரிவாக்கினன்.

Page 80
140 LI GðÕTGð Lu u ஈழம்
ஹர்ஷ ன் தனது நிலையைப் பலப் படுத்த எண்ணி, தன் பெரும் பகைவனன கெளட அரசனது அயலில் உள்ள காமரூபத்தின் (அஸ் ஸாம்) மன்னன் பாஸ்கரவர்மனுடன் நட்புறவு பூண்டான். இறு தியில் கெளட மன்னன் சசாங்கன் பாஸ்கரவர்மனற் ருேற்கடிக்கப் பட்டானயினும், தன் ஆட்சிக்காலம் முழுவதும் அவன் 'மகாரா ஜாதிராஜன்’ என்ற பட்டத்தைச் சூடி வந்தான் என்பது கவனிக் கத் தக்கது. ஹர்ஷனுடைய வரலாற்றையறிய உதவும் ஆதாரங் கள் (பாணவின் ஹர்ஷசரிதம், ஹாவான் சுவாங்கின் குறிப்புக்கள் முதலானவை) ஹர்ஷனுக்குச்சார்பான முறையில் அவன் செய்த போர்களைப் பற்றிக் கூறியுள்ளன. ஆறு ஆண்டுகள் இடையரு த போர்களை நடத்தி, மகாராஷ்டிர மன்னனைத் தவிர ஏனைய மன்னர் களை யவன் வென்முன் என அவை கூறுகின்றன. (போர்களை மேற் கொள்ளுமுன், தன் இளையாள் ராஜ்யபூரீயை மீட்டுக் கொண் டான்.) நர்மதையாறு வரை தெற்கு நோக்கி ஒரு படை யெடுப்பை அவன் மேற் கொண்டபோது, அதற்கு மேல் அவன் செல்லாதவாறு தடுக்கப் பட்டான். மேலைச் சாளுக்கிய மன்ன னும் சிறந்த போர்வீரனுமான 2ம் புலிகேசியே ஹர்ஷனை அவ் வாறு தோற்கடித்து, பின்வாங்க வைத்தவன். புலிகேசியின் மறைவுக்குப் பின் ஹர்ஷன் மீண்டும் ஒரு படையெடுப்பை கஞ்சாம் என்ற இடம் வரை மேற் கொண்டான். இப் படை யெடுப்பு நடைபெற்ற சில ஆண்டுகளுக்குள் ஹர்ஷன் மரண மாஞன். ஹர்ஷன் பெற்ற வெற்றிகளின் டயணுக, வட இந்தியா வின் பெரும்பரப்பு அவனது பேரரசில் அடங்கி யிருந்தது. முன் னைய மெளரிய, குப்தப் பேரரசுகளை விட இது எவ்வளவோ சிறியது; நர்மதையாற்றுக்கு வடக்கே வங்காளம், அஸ்ஸாம், ராஜபுத்தானம், பஞ்சாப், சிந்து ஆகியவை தவிர்ந்த பகுதிகளே இவனது பேரரசில் அடங்கிய பகுதிகளாகும்.
ஹர்ஷனது முன்னேர்கள் இந்துக்களாக விருந்த போதும், ஹர்ஷனும் அவனது சகோதரரும் பெளத்தத்தையே தழுவினர். * சீலாதித்தியர்' "ராஜபுத்ர" என்ற பெயர்களாலும் ஹர்ஷ ன் அழைக்கப்படுவான். அசோகனப் பின்பற்றிப் போலும், ஹர்ஷ னும் மாமிச உணவை உட்கொள்வதையும், விலங்கினங்களைக் கொல்வதையும் தடுத்து வைத்தான். வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கான மடங்களையும், துறவோரகங்களையும் நிறுவிய துடன், தானங்களை வரையாது வழங்கியும் பல அறப் பணிகளே மேற் கொண்டான். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சமயப் பேரவையைக் (மகாமோ கூழ் பரிஷத்) கூட்டினன். 643ல் கனே ஜிம் கூடிய சமயப் பேரவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக் கூட்ட த்தில் ஹ"வான் சுவாங்கும் கலந்து கொண்டார். இதே யாண்டில்

இலம்பகண்ணரும் மோரியரும் 4 I
பிரயாகை (அலகபாத்)யிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் இராச் வியத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து கூடிப் பேரரசரின் கொடைகளைப் பெற்று மீண்டனர். ஹர்ஷ ன் மகாயானபெளத்தத் தையே ஆதரித்தவர் என்பதும், இவன் காலத்தில் மகாயான பெளத்தம் நன்னிலையிலிருந்த தென்பதும் குறிப்பிடத்தக்கவை. இவனது சமயக் கொள்கைக்கும் அசோகனது கொள்கைக்குமிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அ சோ கன் பிற மதத்த்வர் களேச் சகித்தது மன்றி, அவர்களுக்கு ஆதரவும் அளித்தான்; ஹர்ஷனே, பெளத்தம் அல்லாத மதத்தவர்களைச் சில வேளைகளில் தண்டித்துள்ளான். பின்னல் இந்தியர்வை ஆண்ட அக்பரிலும், சமயப் பொறையில் இவன் குறைந்தே காணப்படுகின்ரு ன்.
ஹர்ஷனுடைய நிர்வாகத்தில் தான் எவ்வளவோ அக்கறை காட்டி, குடிகளின் குறைகளையறிய அடிக்கடி சுற்றுலாக்களை மேற் கொண்டானெனினும், நிர்வாகத்திலும் நீதிமுறையிலும் குப்தர் காலத்தில் இருந்த தண்ணளியிருக்கவில்லை. உறுப்புக் குறைத்தல், சித்திரவதை போன்ற தண்டனைகள் இடம் பெற்றிருந்தன. இருப் பினும். மக்கள் வாணிபத்தையும் பிற தொழில்களையும் மேற் கொண்டு, மிகுந்த சுபிட்சமாக வாழ்ந்து வந்தனர். வரிகள் மக்களை வருத்துவனவாக இருக்கவில்லை. பொதுவாக, மக்கள் ஆட்சியில் திருப்தி கொண்டவர்களாகவே விளங்கினர்.
ஹர்ஷன் தாமே சில நூல்களை யியற்றிஞன் எனப்படும். பல அறிஞர்களையும், புலவர்களையும் அவன் போற்றினன். ஹர்ஷன் இயற்றியதாகக் கூறப்படும் "நாகானந்தம் பெளத்தக் கருத்துக் களை நாடகவாயிலாக மக்களுக்குப் புகட்ட எத் தனிப்பது. ஹர்ஷராற் போற்றப்பட்டு, அவரது அவைக்களத்திலிருந்த முக்கிய புலவர் பாண(ன்) என்பவனே. இவன் எழுதிய 'ஹர்ஷ சரிதம் என்பது, ஹர்ஷனது வரலாற்றை அறிய உதவும் ஒரு முக்கிய ஆதாரமாகும். இவனே "காதம்பரி" என்ற உரைநடை நூலையும் இயற்றியவன். திவாகரர், பர்த்ருஹரி போன்ற பெரும் புலவர் களும் இவனது காலத்தவர்களே.
பெளத்த சமய ஆராய்ச்சியை நோக்காகக் கொண்டு எழுந்த கலைக்கழகங்கள், ஹர்ஷன் காலத்தில் மிக நல்ல நிலையில் இயங்கின. நாலந்தாவில் விளங்கிய கலைக் கழகமானது, 5ம் நூற்றண்டிலேயே நிறுவப்பட்டிருப்பினும் ஹர்ஷன் ஆட்சியின் போதே மிக்க புக ழுடன் விளங்கிற்று. பெளத்த மத ஆராய்ச்சியை விட, மருத்துவம், சட்டம் போன்ற பிற துறைகளையும் அது வளர்த்து வந்தது. பிற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் இங்கு கூடி, அறிவைப் பெற்றனர். இவ்வாறு வந்த , பிற நாட்டு நல்லறிஞர்களில் முக்கியமானவர்

Page 81
142 பண்டைய ஈழம்
ஹாவான் சுவாங் என்ற சீன (பெளத்த) அறிஞராவர். இவர் பெளத்த தத்துவங்களை அறியும் அவாவுடன் இந்தியாவுக்குச் சென்று, நாலந்தாப் பல்கலைக்கழகத்திலேயே தங்கி, பெளத்த நூல் களைப் பயின்று தேர்ச்சி பெற்ருர். 629ல் இந்தியாவுக்கு வந்து சுமார் பதினறு ஆண்டுகள் அங்கே செலவு செய்தார். நாலந்தா விற் கல்விபெற்ற பின் பல பெளத்தத் தலங்களைத் தரிசித்து தென் னிந்தியாவிற் காஞ்சி வரை வந்தார். இவர் பின்னர் சீனவுக்குத் திரும்பியதும், இந்தியாவில் தாம் சென்றிருந்த இடங்களில் அறிந் தவற்றை யெல்லாம் குறித்து வைத்தார். இவரது குறிப்புக்கள் இந்திய வரலாற்றுக்கு மட்டுமன்றி இலங்கையின் வரலாற்றுக் கும் உதவுவன என்பது பற்றி முன்னரே கண்டுள்ளோம். ஹர்ஷ னது வரலாற்றை அறிய உதவும் இலக்கிய ஆதாரங்களில், இவரது பயணக் குறிப்புக்கள் முக்கியமானவை.
ஹர்ஷப் பெருமன்னன், குப்தர் காலத்துக்குப்பின் வட இந்தி யாவை யாண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரி யவன் என்பதில் ஐயமில்லை. அவனுடைய பேரரசு வடஇந்தியா விற் பெரும் பகுதியைக் கொண்டிருந்தது. போர்த்திறமையில் சிறந்து விளங்கியதோடு, நிர்வாகம், சமயம், இலக்கியம் என்ற பல துறைகளிலும் நேரடியாகப் பங்குகொண்டு உழைத்தவன். ஹர்ஷனுக்குப் பின் பெளத்தம் இந்தியாவில் நெடுங்காலம் நிலைக் காது மறைந்து போயிற்று. 647ல் அவன் இறந்துபோக, வர்த்த னர் பேரரசும் விரைவில் மறைந்து விட்டது.
i. சிலாகாலனும் அவனது பின்னுேரும்.
சிலாகாலன் 522-535: மொகல்லான ன் 1 க்குப் பின் இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் சிலாகாலன் அரசைப் பெறுதற்குத் துணைநின்றன. காசியப்பன் காலத்தில், அவனது சேவையில் அமர்ந்த அவனது தூர உறவினனும், இலம்பகண்ண மரபைச் சேர்ந்தவனுமான தாடாபழதி என்பவனது மகனே சிலாகாலன். மொகல்லானனுடன் பின்னர் இந்தியாவுக் கோடிய சிலாகாலன் அங்கு புத்த கயாவிலுள்ள ஒரு முக்கிய விகாரையில் (போதிமண்ட விகாரை) அபிஷேகம் பெற்றன். இதன் பிறகே சிலாகாலனுக்கு ‘அம்பசாமணேர' என்ற பெயர் நிலைத்தது. இவ் வாறு புத்த கயாவில் தங்கியிருந்த போதே, புத்தரின் கேசதாதுவைச் சிலாகாலன் பெற்றுக் கொண்டான். கேசதாதுவுடன் இலங்கை வந்தபோது, அப்போது ஆட்சியைப் பெற்றிருந்த மொகல்லா னன் அப்புனித சின்னத்துக்கு ஏற்ற மரியாதைகளைச் செய்தமை பற்றி முந்திய அத்தியாயத்திற் கூறினேம். அதன் பாதுகாவலா ளராகச் சி லா கால ன் நியமிக்கப்பட்டதுமன்றி, அசிக்காஹப்

இலம்ப கண்ணரும் மோரியரும் 1 4 3
பதவியிலும் அமர்த்தப் பட்டான். ஏற்கெனவே பிக்குவின் உடை களைக் களைந்து விட்ட சிலாகாலன், மொகல்லானன் தங்கையை மனைவியாகப் பெற்று மேலும் செல்வாக்குப் பெற்றிருந் தான். மொகல்லானன் இறந்த பின் உண்டான அரசியற் போட்டிகளில் சிலா காலன் ஈடுபடாதிருந்தானயினும், அவன் அளவற்ற செல்வாக் கெய்தியிருந்தான். 2ம் உபதிசன் அரசைப் பெற்றதும், தன்னுரி மையை நிலைநாட்டச் சிலாகாலன் முற்பட்டான். மலையகத்துக்குச் சென்ற சிலா காலன், அங்கு படையினைத் திரட்டி, எல்லைப்புறத்திற் பல அழிவுகளை யுண்டுபண்ணினன். தந்தை உப திசன் சார்பிற் போரை நடத்திய காசியப்பன் முதலில் வெற்றி பெற்றனயினும், இறுதியில் காசியப்பன் அடிபணிய வேண்டியவனுனன். மூப்பெய்தி யிருந்த உபதிசனையும், அரச திரவியங்களையுங் கொண்டு தப்பி யோட முனைந்த காசியப்பனது முயற்சி பலிக்காது போகவே, அவன் தற்கொலை செய்து கொண்டான். தந்தை உபதிசனும் விரைவில் இறந்து போனன் . சிலாகாலன் அரசைப்பெற்று, பதின் மூன்ருண்டுகளாக, மக்கள் நலன் கருதிய நெறிதிறம்பா ஆட்சி நடத்தலானன். இக்காலத்தில் மகாயான பெளத்தம் இந்தியாவில் நன்னிலை எய்திருந்ததால், அங்கு முன்னர் சென்றிருந்த சிலாகாலன் மகாயானக் கருத்துக்களாற் கவரப்பட்டிருந்தா னெனப் படுகின் றது. இவனது டன்னிரண்டாவது ஆட்சியாண்டில், “தர்மதாது” என்ற மகாயான நூல் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு மிகுந்த மரியாதையைச் செலுத்தி வரவேற்றன். இதனல் இலங்கையில் மீண்டும் மகாயான பெளத்தம் தலையெடுக்கலாயிற்று என்பர். தன் இராச்சியத்தின் இரு மாகாணங்களைத் தனது புதல் வர்களை நிருவகிக்குமாறு விட்டிருந்தான். தலைநகருக்குக் கிழக்கே யுள்ள மாகாணத்தை (புரத்திமதேச) மொகல்லானன் என்ற மூத் தவனுக்கும், தக்கிணதேசத்தை தாடாபழதி என்ற இளையவனுக்கும் கொடுத்தான். ஆக இளையவனுன உபதிசன் தலைநகரிலேயே தங்கி யிருந்தான். மோரிய மரபைச் சேர்ந்த மகாநாகன் என்பவனை உருகுணையின் வரி அறவிடுவோனக முதலில் நியமித்துப் பின்னர் "அந்தசேனபதியாக உயர்த்தினன். பின்னர், இவன் தன்னை உருகுணையின் ஆட்சியாளனுகப் பிரகடனப் படுத்தினன். மகா நாகனை அடக்குமுன், சிலா காலன் 535ல் காலமானன்.
மொகல்லானன் 11 (535-555); சிலாகாலன் இறந்ததும், அவ னது மூன்று புதல்வர்களுக்கிடையே அரசுரிமைத் தகராறுகள் மூண்டன. "மலையராஜா'வான இரண்டாவது மகன் (தாடாபழதி) ஆட்சியைக் கைப்பற்றித் தன் தம்பி உபதிசனையும் கொன்ரு ன். இதையறிந்த மூத்தவனன மொகல்லானன் அனுராதபுரத்துக்குச் சென்று, தனது உரிமையை நிலைநாட்டிக் கொண்டான். இதனி டையே உருகுணையில் தனி அரசை நிறுவியிருந்த மகாநாகன்

Page 82
144 பண்டைய ஈழம்
உடன்பிறந்தாரிடையே நிகழ்ந்த சண்டையைப் பயன்படுத்தி, அரசுரி மையைத் தனக்குப் பெறுவதற்குத் தலைநகர் நோக்கிப் படையுடன் சென்றன். ஆனல், மொகல்லானன் அரசைப் பெற்று விட்டதால், அவனை யெதிர்க்கத் தயங்கி உருகுணைக்குத் திரும்பினன். மொகல் லானனது இருபதாண்டுக் கால ஆட்சியில், அவன் மக்களின் நன் மதிப்புக்காளாகும் வகையில் நல்லாட்சி புரிந்தான். நீர்ப்பாசனங்கள் அமைப்பதில், இவன் பெரிதும் புகழீட்டியவன். தனவாவி(பதவியா) என்ற மிகப் பெரிய குளத்தையும், நாச்சதூவவையும், மற்ருெரு குளத்தையும் நிறுவி, இத்துறையிற் பணியாற்றிய பிந்திய அணு ராதபுர கால மன்னர்களுள் தாதுசேனனுக்கு அடுத்தபடியான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளான். சமயப் பணிகளிலும் தன் கவனத்தைச் செலுத்திய இம் மன்னன், பெளத்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டினன். பெளத்த சங்கத்தினர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களைக் கனம்பண்ணியும், திரி பிடகங்களையும், அவற்றின் விளக்கங்களையும் ஒதச்செய்து பின்னர் எழுதுவித்தும் பல நற்பணிகளை ஆற்றினன். தானே புலமை நிறைந் தவனுகவும் விளங்கி, புலவர்களையும் அறிஞர்களையும் கெளரவித் தும் வந்தான்.
கீர்த்திசிறீமேகன்-இலம்பகண்ணர் தோல்வி: 2ம் மொகல்லா னனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவன் மகன் கீர்த்தி சிறிமேகன், "தாய் சொல்லைக் கேட்டுத் தரணியிழந்தவன்" ஆவான். தன் மக னது உரிமையை உறுதிப்படுத்த, மொகல்லானன் வாழ்ந்தபோதே அவனது நெருங்கிய உறவினர் பலரைக் கொல்வதற்குக் காரண மாகவிருந்த இராணி, கீர்த்திசிறீமேகன் அரசனன பின்னரும் ஆட்சி யலுவல்களில் தலையிட்டு வரலாஞள். இதன் விளைவு நாட்டில் சீர்கேடுகளும் ஒழுங்கீனமும் வலுத்தமையே. நிருவாக ஊழல்கள் மலிந்து, கலகம் உண்டாவதைத் தவிர்க்க முடியாதபடி செய்தன. ஏற்ற வாய்ப்புக்காகக் காத்திருந்த மகாநாகன் அனுராதபுரத்துக்கு விரைந்து 573ல் ஆட்சியைக் கைப்பற்றினன். மகாநாகன் மோரி யர் குலத்தைச் சேர்ந்தவனுக விருந்ததால், சிலாகாலனுடன் அதி காரத்துக்கு வந்த இலம்பகண்ண மரபினர் மீண்டும் (53 ஆண்டு களின் பின்) அரசுரிமையை இழக்கலாயினர்.
i. மோரிய மரபினர் மீண்டும் ஆதிக்கம் பெறுதல்
மகாநாகன் அரசைப் பெற்றதால், மீண்டும் அரசியலாதிக்கம் பெற்ற மோரிய மரபினர், ஒரு நூற்ருண்டுக்கும் அதிகமான காலத்துக்கு இலங்கை மன்னர்களாக விளங்கினர். இவர்களில், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவாறு, தொடக்கத்தில் ஆட்சி நடத்தியவர்களாலேயே, நாட்டை உள்நாட்டுப் போர்களின்றி

இலம்பகண்ணரும் மோரியரும் 145
அமைதியுடன் ஆளமுடிந்தது. இப் பகுதியில் நாம் சிறப்பாக முத லாம் அக்கிரபோதியினதும், இரண்டாம் அக்கிரபோதியினதும் ஆட்சிக்காலங்கள் பற்றியே கவனிப்போம். மகாநாகன் அரசெய் தியபோது மிகவும் மூப்படை ந்திருந்தமையால், அவனுடைய ஆட்சி மூன்ருண்டுகளுக்குமேல் நடைபெறவில்லை. மோரிய மரபை மீண் டும் அரசைப்பெற வைத்த தைவிட, இவனுடைய ஆட்சி எவ்வித சிறப்பையும் பெற்றிருக்கவில்லை.
அக்கிரபோதி 1 575-608: மகாநாகனைத் தொடர்ந்து அரசைப் பெற்ற அக்கிரபோதியை, எல்லாவகை நற்பண்புகளும் வாய்க்கப் பெற்ற இலட்சிய மன்னனுகச் சூளவம்சம் புகழ்ந்துள்ளது. ‘செல் வத்தில் குபேரனகவும், நீதியில் வசிஷ்டனகவும், துணிச்சலில் சிங்கமாகவும், அரசப் பண்புகளில் உலகை யாள்பவனகவும், தயா ளத்தில் வெசந்தரவாகவும். இவ்வாறே அவனை அவனது குடிகள் அறிந்திருந்தனர்' எனப் போற்றுகின்றது சூளவம்சம். அக்கிர போதியின் நீண்ட ஆட்சிக்காலம் (34ஆண்டுகள்) அமைதியையும், பெருஞ் சிறப்பையும் கொண்டு விளங்கியது. \ தனது குடிகளாலும், அதிகாரிகளாலும் பெரிதும் போற்றப்பட்ட நற்பண்புகள், அவனி டம் இருந்தன. அமைதிக்காலச் சாதனைகளைக் கொண்ட அவனது ஆட்சியின் போது, சமயம் பெருவளர்ச்சியும் ஊக்கமும் பெற்றது. சிறீசங்கபோதிப் பரிவெணு, மகாசிவ பரிவென, குருந்த விகாரை போன்ற பல கட்டிடங்களை அவன் நிறுவிச் சங்கத்தினர்க்கு வழங் கினன். தாடாசிவ தேரரின் ஆலோசனையைப் பெரிதும் கேட்டு, அதை மதித்து நடந்தான். ஜோதிபால என்ற ஒரு மகாதேரருடன் வை துல்யப் பிரிவினர் சமய வாதம் நிகழ்த்தித் தோற்றதாகவும், இதனல் அக்கிரபோதி பெருமகிழ்ச்சி யடைந்து அவருக்கு மரி யாதைகள் செலுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனல், இம் மன்னன் வைதிக சமயத்தவரையே (தேரவாதிகளை) ஆதரித்தமை புலணுகும். பொருளியல் வளர்ச்சியிலும் இவன் நிகழ்த்திய சாத னைகள் குறிப்பிடத்தக்கவை. குருந்தவாவியையும், தண்ணிமுறிப்புக் குளத்தையும், மணிமேகலை அணைக்கட்டையும் (மினிப்பே அணை), மின்னேரியிலிருந்து கந்தளாய் வரை சென்ற கால்வாயையும் இவனே நிறுவினன். பல புலவர்கள் (சிங்களக் காலவேடுகளில் பன்னிரு புலவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன) வாழ்ந்து, சிங் கள மொழியிற் பல நூல்களை யியற்றினர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனல், அக்காலத்தில் இயற்றப்பட்ட நூலே தும் இப்போது கிட்ட வில்லை. இவ்வாறு, பலதுறைகளிலும் முன்னேற்றத்தைத் தந்த முதலாம் அக்கிரபோதியின் ஆட்சி 608ல் முடிவுற்றது.
19

Page 83
146 பண்டைய ஈழம்
*- ر( s ८
கருந்தவாறே دست به مسابقه ک
Ա) ՀՀ
பதவியாக் குளம் துே w
S7
so A* 荔 ཆོ༅ན་ வோன் s
ps
மீற்லிேரியற்க்குளம்
கிறித்தளங்ாவி
لئے کر39 &父 r 狄丁夕 a 窓子* 》
S
இத்தோடிய કાર્ટી அனுராதபுரகால
t 5iigub stadsbeueressor پسر حسا い
அக்கிரபோதி II 608-618: 1ம் அக்கிரபோதியைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற அவனது மருமகனும் “மகாதிபாத’ப் பதவியி லிருந்தவனுமான (2ம்) அக்கிரபோதி தன் முன்னேனது அமைதிக் காலப் பணிகளை நிறைவேற்றி வைத்தான். ஆட்சிக்காலம் குறு கியதாக விருந்ததால், இவன் தொடங்கிய பணிகள் சில முற்றுப் பெருது போயின. இருப்பினும், இக் குறுகிய பத்தாண்டு ஆட்சி யில் இவன், நிகழ்த்திய சாதனைகள் போற்றுதற்குரியவை. சமயக் கட்டிடங்கள் பலவற்றையும், சில பெருங் குளங்களையும் இவன் நிறுவினன். இவனது சமயப் பணிகளில், தூபா ராம தாகபத்தை முற்ருகத் திருத்திக் கட்டியமையே மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
 

இலம்ப கண்ணரும் மோரியரும் 1 4 7
ஜோதிபால மகாதேரர் இம் மன்னன் காலத்திலும் வாழ்ந்து, சம யத் துறையில் அரசனுக்கு ஆலோசனைகள் வழங்கினர். புதிய விகா ரைகள் ஆறு இவனல் நிறுவப்பட்டதாகவும், அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் (நாகதீபத்தில்) அமைக்கப்பட்ட தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாசனத்துறையில் கந்தளாய் எனப்படும் கங்காத ட வாவியையும், கிரித்தளை, வலாஹச வாவிகளை யும் இவன் நிறுவினன். இவற்றுள் வலாஹச வாவியை இப்போது இனங்கண்டுகொள்ள முடியவில்லை. இவற்றை அமைத்ததன் மூலம் இவனுடைய ஆட்சியின் முடிவில் இலங்கையின் பொருளியல் நிலை மிகவும் செழிப்புற்றிருந்ததாகக் கருதலாம் இவனுடைய காலத் தில் நடைபெற்றதாக மற்ருெ?ரு நிகழ்ச்சியும் சூளவம்சத்திற் குறிப் பிடப்பட்டுள்ளது, (அத். 42 செய். 44-49) கலிங்க நாட்டை ஆண்ட அரசனெருவன் அங்கு நடைபெற்ற யுத்தத்தின் போது மாண்ட வர்களைக் கண்ணுற்று மனக் குழப்பமடைந்து எமது தீவுக்கு வந்து, ஜோதிபால தேரர் தலைமையில் நடந்த உபசம்பத வைபவத்தின் பின் பிக்குவாகச் சேர்ந்து கொண்டான். இவனைப் போலவே, இவ னது இராணியும் அமைச்சனும் சங்கத்திற் சேர்ந்து கொண்டனர். இவர்களுக்கு இலங்கை மன்னனும் அவனது குடும்பத்தினரும் வேண்டிய வசதிகளை அமைத்து உதவினர்.* இக் காலத்தில் பெரு வெற்றிகளை யீட்டிவந்த சாளுக்கிய மன்னன் 2ம் புலிகேசி கலிங் கத்தையும் வெற்றிகொண்டதால், இவனது படையெடுப்பின் பின் னரே கலிங்க அரசன் இலங்கை வந்திருக்க வேண்டுமென்பர். 2ம் அக்கிரபோதியுடன் அமைதி நிறைந்ததும் சுபீட்சமுடையது மான ஒரு காலப்பகுதி முடிவுறுகின்றது எனலாம்.
பயிற்சி: , 1. ஹர்ஷன் கால இந்தியாவைக் காட்டும் படமொன்றை வரைக. (An Historical Atlas of the lindian Peninsula – LLüb 9) 2. இந்த அத்தியாயத்தில் இடம்பெற்ற மன்னர்களுடைய ஆட்சிக்காலங்
களில் நீர் கவனித்த முக்கிய பண்புகள் எவை? தேர்வு வினுக்கள்: 1. ஹர்ஷப் பெருமன்னனது சாதனைகளை விளக்குக 2. சிலாகாலன், 2ம் மொகல்லானன், 1ம் அக்கிரபோதி ஆகிய மன்னர்
களில் இருவரின் ஆட்சிக்காலங்களின் சிறப்புக்களைக் கூறுக. 3. தீர்ப்பாசனத்துறையில் தாதுசேனன், 1ம் உபதிசன், 2ம் மொகல் லானன், 1ம் அக்கிரபோதி, 2ம் அக்கிரபோதி (பிந்திய அனுராதபுர கால மன்னர்கள்) ஆற்றிய பணிகளைத் தொகுத்துக் கூறுக. 4. சிறுகுறிப்புக்கள் எழுதுக:- தர்மதாது; நாலந்தாக் கலைக்கழகம்;
ஹ"வான் சுவாங்,; தக்கிண தேச(ம்).
* இந்நிகழ்ச்சி மொகல்லானன்ா காலத்தில் நடைபெற்றதாக A Con-cise History of Ceylon குறிப்பிடுவதற்குக் காரணம் புலப்படவில்லை.

Page 84
அத்தியாயம் பன்னிரண்டு
அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போர்களும்: தமிழர் செல்வாக்குப் பரவுதல்
1. தென்னக அரசியல் நிலைமைகள்: பல்லவ அரசின் எழுச்சி i. உள்நாட்டுப் போர்கள் 618-684 i. மானவர்மனது ஆட்சி iv. பல்லவப் பண்பாடும் அதன் செல்வாக்கும்
இரண்டாம் அக்கிரபோதியின் ஆட்சி முடிவுற்றதும், அரசுரிமை வரை முடிவுக்கு வரவில்லை. 7ம் நூற்ருண்டை அமைதியைக் காணத நூற்ருண்டு" எனக் குறிப்பிட்டால், அது முற்றிலும் பொருந்தும். அக்கிரபோதி விட்டுச்சென்ற அரசைப் பெற மூவர் போட்டியிட்டனர். 2ம் அக்கிரபோதியின் உறவினர்களேயன்றி, இவர்கள் நேரடியான உரிமை பெற்றிருக்கவில்லை. சங்கதிசன், மொகல்லானன், சிலாமேக வண்ணன் என்ற மூவரில், மொகல்லானனது குடும்பத்தினரைத் தவிர, மற்றைய இருவரின் வழித்தோன்றல்கள் தொடர்ந்து பல ஆண்டு களாக இப் போட்டியை நடத்தி வந்தனர். இப் போட்டிகளினல் மூண்ட உள்நாட்டுப் போர்கள் நாட்டின் வளங்களைப் பாதித்ததுமன்றி, குடி களையும், சமய வளர்ச்சியையும் எவ்வளவோ தடைப்படுத்தின. ஈற் றில் மாணவர்மன் தனதுரிமையை நிலைநாட்டி, அரசைப் பெற்றபின் இக்குழப்ப நிலைமைகள் முடிவுக்கு வந்தன. மாணவர்மனது ஆட்சிக் காலத்திலேயே, குடிகளும் சமயமும் எய்திய தாழ்வு நீங்கி, மீண்டும் சுபீட்ச நிலையுண்டாயிற்று. உள்நாட்டுப் போர்களில் ஈடுபட்டவர் களிற் பலர் இந்தியா சென்று, அங்கிருந்து அடிக்கடி தமிழ்ப்படை வீரரைத் தமக்குதவ இங்கு அழைத்து வந்தனர். அங்ங்ணம் காலத் துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட தமிழ் வீரர்கள் இலங்கையின் அரசியலில் தமக்குள்ள செல்வாக்கைக் கண்டு, அதைத் தமது எண் ணத்துக்கு ஏற்பக் கட்டுப்படுத்தவும் முற்பட்டனர். ஒரு கால கட் டத்தில், சிங்கள அரசர்களைப் பொம்மைகளாக வைத்துத் தாமே அரசியலையும் நடத்தலாயினர். தமிழர் பெற்றிருந்த செல்வாக்கையும் மாணவர்மனே நீக்குவதில் வெற்றிகண்டான். மாணவர்மன் பல்லவப் பேரரசனன நரசிங்கவர்மனது போர்களில் (இந்தியாவிற்) பங்கு கொண்டு பின்னர் அவனுடைய படையுதவி கொண்டே இலங்கை வந்து தனது உரிமையை நிலைநாட்டினன். இவ்வாறு பல்லவ அரசு டன் கொண்ட தொடர்புகள், இலங்கையிற் சில நிலையான பண்

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 149
பாட்டு மாறுதல்களைக் கொண்டுவந்தன. இவ்வகையான தன்மை களைக் கொண்ட ஒரு நூற்ருண்டுக்கால இலங்கை வரலாற்றையே (618-718) இவ்வத்தியாயத்திற் கவனிப்போம். இதைக் கூறுமுன், இக்காலப் பகுதியில், குறிப்பாக 7ம் நூற்றண்டில் த்ென்னகத்தில் நிலவிய அரசியல் நிலைமைகளை முதலிற் கூறுவோம்.
i. தென்னக அரசியல் நிலைமைகள்: பல்லவ அரசின் எழுச்சி
களப்பிரர் ஆட்சியின் முடிவு: தமிழ்நாட்டில், சங்ககாலத்தைத் தொடர்ந்து 4ம் நூற்றண்டிலிருந்து ' களப்பிரர்’ என்ற சாதியினர்
s för TEEst.JPg60ST)
bbrolfrस59
தென்னிந்தியா 7ம், 8ம் நூற்றண்டுகள் தமது ஆட்சியை நிறுவியமை பற்றி முந்திய அத்தியாயமொன்றிற் (10ம் அத்.) குறிப்பிட்டிருந்தோம். இவர்களுடைய ஆட்சி 6ம் நூற் ருண்டு வரை நீடித்திருத்தல் வேண்டும். 7ம் நூற்ருண்டில் தமிழ்

Page 85
150 பண்டைய ஈழம்
நாட்டை ஆண்ட பல மன்னர்கள் களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவர்களில் முக் கியமானவர்கள் சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னனும், கடுங்கோன் என்ற பாண்டியனுமாவர். இவர்கள் தமக்குள் ஒரு கூட்டுறவாக இயங் கிக் களப்பிரரைத் தோற்கடித்தனரா என்பதைக் கூற எமக்கு ஆதா ரம் இல்லை. களப்பிரர் ஆட்சி முடிவுக்கு வந்ததால், தெற்கே பாண் டிய அரசும், வடக்கே பல்லவ அரசும் வலிமை பெற்று, தென்னக அரசியலில் பெரும்பங்கு கொள்ளலாயின. இவ் வத்தியாயத்தில், நாம் பல்லவ அரசு பற்றியே சிறிது விரிவாகக் கவனிப்போம். அதற்கு முன்பாகப் பாண்டிய அரசின் தோற்றம் பற்றியும், சாளுக்கியர் பற்றியும் சுருக்கமாகக் கவனிப்போம்.
பாண்டியர் - முதலாம் பாண்டிய மரபு: டாண்டிநாட்டில் நிலவிய களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த கடுங்கோன் என் பவனே, முதற் பாண்டிய மரபு என்பதைத் தொடக்கி வைத்தவன். இவனது பெயரனன பாண்டியன் சேந்தன் சேரரை வென்று ‘வான வன்' எனத் தன்னை யழைத்தான். இவன் ஆட்சிசெய்த போது, ஹ"வான் சுவாங் காஞ்சிக்கு வந்து, பின்னர் பாண்டிநாட்டுக்கும் செல்ல எண்ணியிருந்ததாகவும், மன்னன் அதற்கிடையில் இறந்து விட்டதால் செல்லாது விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேந்தனுக்குச் சடையவர்மன் என்ற பெயரும் இருந்தது. சேந்த னுடைய புதல்வனுன அரிகேசரி பராங்குச மாறவர்மன் (670-700) பல்லவருடன் போர் செய்து (திரு)நெல்வேலியில் வெற்றி பெற்றவன். பெரியபுராணத்திற் குறிப்பிடப்படும் கூன் பாண்டியனும் இவனே . போராற்றல் மிக்க இப் பாண்டியன் சேரரையும், சில குறுநில மன் னரையும், சோழரையும் வென்றதாகச் சில ஆதாரங்கள் (வேள்விக் குடிச் செப்பேடுகள்) குறிப்பிடுகின்றன. இவ்வாறு எழுச்சி பெற்ற பாண்டிய அரசு 8ம் 9ம் நூற்ருண்டுகளில் எய்திய வளர்ச்சி பற்றிப் பின்னர் காண்போம். *
சாளுக்கியர்: தெற்கே பாண்டிய அரசு வளர்ச்சி பெற்றமை பல்லவப் பேரரசு வளர்வதற்குத் தடையாகவிருந்தது போலவே, வடமேற்கே இதே காலத்தில் எழுச்சி பெற்ற சாளுக்கியர்களின் பேரர சும் பல்லவ அரசுடன் அடிக்கடி மோதலாயிற்று. பல்லவ-சாளுக் கியப் போர்கள்’ 7ம் 8ம் நூற்ருண்டுத் தென்னக வரலாற்றில் முக் கிய இடத்தைப் பெறுபவை. ஹர்ஷன் எய்திய ஒரு தோல்வியும் சாளுக்கிய மன்னனிடமேயென முன்னர் படித்தோம். கிருஷ்ணு நதியின் ஒரு கிளையாரு?ன மலபிரபாவுக் கண்மையில் உள்ள வாதாபி (பாதாமி) என்பதைத் தலைநகராகக் கொண்டு 6ம் நூற்றண்டில் எழுச்சி பெற்றதே சாளுக்கியர் அரசாகும். பின்னர், இச் சாளுக்

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 151
கியரின் கிளை மரபொன்று வெங்கியைத் தலைநகராகக் கொண்டு கிழக்கே ஒர் அரசை நடத்தியதால் அவர்களைக் கீழைச் சாளுக்கியர் எனவும், வாதாபியைச் சேர்ந்தவர்களை மேலைச் சாளுக்கியர் எனவும் அழைப்பர்.
1ம் புலிகேசி (543-566) என்பவனே சாளுக்கிய மரபின் முதல் மன்னனும், சாளுக்கிய அரசை நிறுவியவனும் ஆவன். புலிகேசியின் மகன் கீர்த்திவர்மன் 1 (566-598) சாளுக்கிய அரசை விரிவுபடுத்தச் சில போர்களை மேற்கொண்டு வெற்றிபெற்ரு ன். இவன் இறந்த போது, இவன் மகன் (2ம் புலிகேசி) சிறுவயதினனுக விருந்தமை யினல், புலிகேசியின் மாமன் மங்களேசன் என்பவன் சிறிது காலத் துக்கு அரசை நடத்தி, சில போர் வெற்றிகளையும் ஈட்டினன். 11ம் புலிகேசி (609- 642) அரசைப் பெறுதற்குத் தன் மாமனுடன் சண்டை செய்ய வேண்டி நேர்ந்தது. தன் மரபின் தலை சிறந்த மன்னனக மட்டுமன்றி, தான் வாழ்ந்த காலத்தின் தனிச் சிறப்புப் பெற்ற வீரனுகவும் விளங்கினன். கதம்பர்கள், ஆலுபர்கள் (கன்ன டர்கள்), மைசூரைச் சேர்ந்த கங்கர்கள் போன்ற அயலிலுள்ள அரச குலங்கள் இவனது மேலாணையை ஏற்கலாயின. வட இந்தியா வைச் சேர்ந்த லாடர், மாளவர், கூர்ஜரர் முதலானேரும் புலிகே சிக்குப் பணியலாயினர். மஹி நதிவரை, சாளுக்கிய அரசு வடக்கே பரந்தது. இந்நிலையிலேயே தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்த ஹர்ஷனை நர்மதை யாற்றின் தீரத்தில் எதிர்கொண்ட புலிகேசி, அவனைப் படுதோல்வி காணவைத்தான். புலிகேசியின் போர் வெற்றி கள் இனிக் கிழக்குத் தக்கணத்தில் ஏற்பட்டன. தெற்குக் கோசலம், கலிங்கம் முதலில் அடிபணியும் படி செய்யப் பட்டன. தொடர்ந்து, பிஷ்டபுரம், விஷ்ணுகுண்டர் அவனல் வெற்றி கொள்ளப் பட்ட பின், தெற்கே பல்லவரின் வலியை அடக்க முனைந்தான். மகேந்திரவர்மன் ஆட்சி நடத்தும் போது, பல்லவர் அரசைத் தாக்கிய புலிகேசி, புள்ளலுார் வரை தன் படைகளுடன் முன்னேறினன். அங்கு நடை பெற்ற கடும் போரின் பின், பல்லவ அரசின் வடக்குப் பிரதே சங்கள் சாளுக்கிய அரசுடன் இணைக்கப்பட்டன. மேலும் வெற்றி களை யீட்ட எண்ணிய புலிகேசி, பல்லவருக் கெதிரே மீண்டும் ஒரு படையெடுப்பை நடத்தினன். மகேந்திரவர்மனது மகன் நரசிங் கவர்மனே இப்போது பல்லவ அரசனுக விளங்கினன். பல்லவரின் திறையாளரான பாணரை, முதலில் தாக்கி விட்டு, மீண்டும் பல்லவர் பிரதேசத்தைத் தாக்கி, அவர்களின் தலைநகருக்குமே (காஞ்சி) ஆபத் தை விளைவிக்கும் அச்சத்தை யுண்டு பண்ணினன். நரசிங்கவர்மன் சாளுக்கியரை யெதிர்த்துப் பல சண்டைகளில் வெற்றி யீட்டி, சாளுக் கியப் படைகளைப் பின்வாங்கச் செய்தான். (இச் சண்டைகளின் போது, நரசிங்கவர்மனுக்கு உதவியாக இருந்த சிங்கள இளவரசனன மாணவர்மனைப் பற்றி இவ் வத்தியாயத்திற் பின்னர் படிப்போம்.)

Page 86
152 பண்டைய ஈழம்
நரசிங்கவர்மன் பின்னர் சாளுக்கியத் தலைநகர் வரை, தான் ஒரு படை யெடுப்பை மேற்கொண்டு அங்கு பல அழிவுகளைச் செய்து மீண் டான். இச் சண்டைகளில் 2ம் புலிகேசி உயிரிழந்திருக்க வேண்டும். இவன் மரணமானதைத் தொடர்ந்து சாளுக்கிய அரசில் பெரும் நெருக்கடி தோன்றியது. அவ்வேளையில், அவனது மகனன 1ம் விக் கிரமாதித்தன் பேரரசின் சீர்குலைவைத் தடுத்தும், பல்லவருடன் போர் தொடுத்து வெற்றி பெற்றும் தந்தையின் பணியை நிறைவு பெறச் செய்தான். இவனுக்குப் பின் ஆட்சி செய்த வினயாதித்தன், விஜயாதித்தன் ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் பெரும்பாலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் அளித்தவை.2ம் விக்கிரமாதித்தன் (733-744) என்ற சாளுக்கியன் பல்லவத் தலைநகர்மீது மூன்று தாக்குதல்களை நிகழ்த்தி, முன்னர் நரசிங்கவர்மன் நிகழ்த்திய படை யெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தான். இதன் பின், ராஷ்டிரகூடர் எழுச்சி பெற்றபோது, (மேலைச்) சாளுக்கிய அரசும் அவர்களின் அரசில் அடங்கி மறையலாயிற்று. வாதாபிச் சாளுக்கி யரில் இறுதி மன்னன் 2ம் கீர்த்திவர்மன் ஆவான்.
பல்லவர்கள்: களப்பிரர் ஆட்சியில் தமிழகம் இருந்த காலத்தில் தமிழகத்தின்வடக்கே தொண்டை மண்டலம் என்ற பகுதியில் பல்லவர் என்ற ஒருபுதியமரபினர் தமதாட்சியை நிறுவி வரலாயினர்.இவர்களின் தொடக்க கால வரலாறு தெளிவற்றதாகவும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிப்பதாகவும் உள்ளது. கி. பி. 4ம் நூற்ருண்டளவில் இவர் களுடைய ஆட்சி தொடங்கி யிருக்கலாம். தொடக்கத்திலிருந்தே காஞ்சியே (அல்லது காஞ்சீபுரம்) இவர்களின் தலைநகராக விளங்கி வந்தது. காஞ்சியைச் சேர்ந்த விஷ்ணுகோப(ன்) என்பானைச் சமுத் திரகுப்தன் புறங்கண்டதாக அவனுடைய அலகபாத் தூண் கல் வெட்டுக் குறித்துள்ளது. நாம் இங்கு, சிம்ம விஷ்ணுவின் வழிவந்த பல்லவர்களின் வரலாற்றையே (6ம் நூற்ருண்டிலிருந்து) கவனிப் போம். * சிம்மவிஷ்ணு (575-600)வின் காலத்திலிருந்தே பல்லவர் வரலாறு தெளிவும் தொடர்பும் பெறுகின்றது. களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தோரில் இவ னு ம் முக்கியமானவன் என்பதை முன்னரே கூறினேம். சோழர், பாண்டியர், மழவர் முதலான அரச மரபினரையும் இவன் வெற்றிகொண்டான் என காசக்குடிப் பட்டயத்தால் அறியப்படுகின்றது. இவனுடைய காலத் தில், வடமொழிப் புலவனுன பாரவி காஞ்சிக்கு வந்து மன்னனது ஆதரவில் சிறிது காலம் தங்கிச் சென்ருன் எனப்படுகின்றது. * மா. இராசமணிக்கம்: பல்லவர் வரலாறு உட்படப் பல நூல்கள் இப்பகுதியில் உள்ளவற்றை மாணவர் ஆவ லை த் துர ண் டு ம் வகை யில் எழுதப் பட்டுள்ளன. இவற்றை மாணவர் தேடி வாசித்தல் விரும்பத்தக்கது.

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 153
சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் 1 ( 6 0 0 - 6 3 0 ) அரசாண்ட காலத்தில் 2ம் புலிகேசி நிகழ்த்திய படையெடுப்புப் பற்றியும், அதனுல் காஞ்சிக்கு வடக்கே யிருந்த பல்லவ அரசின் பிரதேசங்கள் சாளுக்கிய அரசுக்கு மாற்றப் பட்டதை முன்னரே கூறினேம். புள்ள லூர்ச் சண்டையில் தாமே வெற்றி பெற்றதாக மகேந்திரவர்மனது கல்வெட்டுக் கூறும். எப்படியும் தலைநகரான காஞ்சியைப் பாதுகாத்தமை இம் மன்னரின் சாதனை யெனலாம். மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவர் ஆட்சி தெற்கே திருச்சிவரை பரவியிருந்தது. மகேந்திரவர்மனது புதல்வனுன நரசிங்கவர்மன் 1 (மாமல்லன்) பல்லவ மன்னர்களிற் றலைசிறந்தவன் என்பதில் ஐய மில்லை. இவன் காலத்தில் ( 630-668) பல்லவர் ஆட்சிப் பரப்பு மிகவும் விரிவடைந்து, பல்லவ ஆதிக்கம் உச்ச நிலையை அடைந்தது. இவன் காலத்திலும் படையெடுத்து வந்த 2ம் புலிகேசியுடன் மணி மங்கலம் முதலான இடங்களிற் சண்டை செய்து அவனைப் புறங்கண் டது மன்றிப் பின்னர் வாதாபி வரை நரசிம்மவர்மன் படை யெடுத்துச் சென்று சாளுக்கியரைத் தோற்கடித்து வந்தமை இவனது போர்த்திறமையைக் காட்டும். இவ் வெற்றியின் பின் "வாதாபி கொண்ட நரசிம்மன்’ என இவன் அழைக்கப்பட்டான். இப் போர்களில் தனக்குதவிய இலங்கை யிளவரசனன மாணவர்மனுக்கு, நர சிம்மவர்மன் படையுதவியளித்து இலங்கை யரசைப் பெற உதவிஞன். ஹர்ஷன், 2ம் புலிகேசி, நரசிம்மவர்மன் ஆகிய மூவரும் ஒரே காலத் தில் வாழ்ந்தவர்கள் என்பதும், இவர்கள் அனைவருமே போர்த். திறமை மிக்கவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கதே. ஹர்ஷனைத் தோற்கடித்த 2ம் புலிகேசியை நரசிம்மவர்மன் தோற்கடித்தான் என்பதைக் கொண்டு, நரசிம்மவர்மனே இவர்களுள் தலைசிறந்த போர் வீரன் எனக் கொள்வர். ஹ"வான் சுவாங் காஞ்சிக்கு வந்தபோது, இவனே அரசாண்டு கொண்டிருந்தான்.
நரசிம்மவர்மனுக்குப் பின் ஆட்சி செய்தவர்களில் இராஜசிம்மன் எனப்பட்ட 2ம் நரசிம்மவர்மன் (680-700) மிகவும் புகழ் படைத் தவன் ஆவன். தண்டி என்ற வடமொழி இலக்கண நூலாசிரியன் இவனது அவைக்களத்தை அலங்கரித்ததாகத் தெரிகின்றது. 8ம் நூற் ருண்டில் பாண்டியப் பேரரசு விரிவடைந்தபோது, பல்லவ அரசுக்கும் அதற்குமிடையே அடிக்கடி போர்கள் நிகழலாயின. இப்போர்களில் பல்லவ மன்னர்கள் சில வெற்றிகளை ஈட்டி வந்தனரேனும், பல்லவ அரசின் வலிமையும் குன்றி வரலாயிற்று. ஈற்றில், ஆதித்த சோழர் கடைசிப் பல்லவ மன்னனன அபராஜிதனைத் தோற்கடித்து (893ல்) பல்லவ அரசுக்கு முடிவு கட்டினன். பல்லவர் காலத்து நிலவிய தமிழகப் பண்பாட்டையும் அதன் செல்வாக்கையும் அத்தியாய முடிவிற் கூறுவோம்.
20

Page 87
154 பண்டைய ஈழம்
i. உள்நாட்டுப் போர்கள் 618-684
2ம் அக்கிரபோதியின் மரணத்தைத் தொடர்ந்து, அரசுரிமைத் தகராறுகள் அடிக்கடியேற்பட்டு, உள்நாட்டுப் போர்களை யுண்டுபண் ணின. 618லிருந்து 684ல் மாணவர்மன் அரசைப் பெறும்வரை நில விய குழப்பமான அரசியல் நிலையையே இப்பகுதியிற் சுருக்கமாகக் கவனிப்போம். எந்தவொரு ஆட்சியாளனும் இக்காலப் பகுதியில் அன்மதியுடனே, நீண்டகாலமாகவோ ஆண்டதில்லை. பன்னிரு மன் னர்கள் வரையில் 66 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்; அவர்களின் பெயர்களும் ஆட்சிக்காலங்களும் கீழே தரப்படுகின்றன:
2ம் சங்கதிசன் 618 2ம் காசியப்பன் 650-659 3ம் மொகல்லானன் 618-623 1ம் தப்புலன் 659 சிலாமேகவண்ணன் 623-632 ஹத்ததாடன் 659-667 3ம் அக்கிரபோதி 632 4ம் அக்கிரபோதி 667-683 3ம் ஜெட்டதிசன் 632 தத்தன் 683-684 3ம் அக்கிரபோதி 633-643 2ம் ஹத்ததாடன் 684
1ம் தாடோபதிசன் 6荃3-650 இந் நிரலை நோக்கும் போதே, இக்காலப் பகுதியின் சீர்கேடுகள் புலப் படும். ஒரேயொரு ஆட்சியாளன் (4ம் அக்கிரபோதி) மட்டுமே ஒர ளவு நீண்டகாலம் (16 ஆண்டுகள்) ஆட்சி செய்துள்ளான். ஆட்சியி லிருந்தவர்கள் பலவீனராக விருந்தமையும், உரிமை பாராட்டி யவர்கள் பலர் இருந்தமையும் இக்குழப்ப நிலைமையை உண்டுபண் ணின எனலாம். காரணம் எதுவாயினும், ஏழாம் நூற்றண்டு எமது தீவின் அரசியலில் இருள் நிறைந்த காலமாக விளங்கி, நாட்டின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித்தது.
2ம் அக்கிரபோதிக்குப் பின், அவனது இராணியின் உறவினன் சங்கதிசன் அரசைப் பெற்றன். 2ம் அக்கிரபோதியின் காலத்தில் சேனைத்தலைவனுக விளங்கிய மொகல்லானன் சங்கதிசனை யெதிர்த்துக் கலகம் நிகழ்த்தி, ஈற்றில் சங்கதிசனின் சேனைத்தலைவன் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றினன். மொகல்லானன் அரசனுனதும், சங்க திசனது குடும்பத்தினரைப் பூண்டோடு அழித்துவிட முயன்ரு ன். ஜெட்ட திசன் என்ற பெயரையுடைய இளவரசன் தப்பியோடிப் பின்னர் அரசைக் கைப்பற்ற முயன்றன். மொகல்லானனல் முதலில் மலைய ராஜாவாகக் கெளரவிக்கப்பட்டுப் பின்னர் வஞ்சிக்கப்பட்ட முந்திய சேஞபதியின் மகன் (அசிக்காஹப் பதவியில் நியமிக்கப்பட்டவன்) ஜெட்டதிசனுடன் சேர்ந்து மொகல்லானனை வென்று சிலாமேகவண் ணன் என்றி பெயருடன் அரசனணுன். ஜெட்டதிசன், மன்னன் விரித்த வலையிற் சிக்காது தப்பி, அவனுக்கு எதிராகக் கலகம் நிகழ்த்தி ஞன். தென்னிந்தியா சென்ற ஜெட்டதிசனது மாமன் தமிழ்ப் படை யுடன் திரும்பி வந்து மன்னனை யெதிர்த்துத் தோல்வியெய்தினன்.

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 155
சிலாமேகவண்ணனது மகன் 3ம் அக்கிரபோதி அரசஞன போது, ஜெட்டதி சன் கலகத்தை மீண்டும் நடத்தினன். ஜெட்டதிசனும் அவனது அமைச்சனன தாடாசிவனும் படைகளுடன் அனுராத புரத்தை யடைந்து அரசைக் கைப்பற்றுவதில் வெற்றியடைந்தனர். அக்கிரபோதி இந்தியாவுக்குத் தப்பியோடி, தமிழ்ப் படைகளுடன் : மீண்டு ஜெட்டதிசனைத் தாக்கி அவனைத் தோற்கடித்தான். ஜெட்ட திசன் போர்க்களத்திலேயே தற்கொலை செய்து மடிந்து போக, அவனது அமைச்சன் தாடா சிவன் இந்தியா சென்று தமிழ் வீரர் களுடன் மீண்டு, 3ம் அக்கிரபோதியுடன் போர் தொடுத்து, வெற்றி பெற்ருன். இவன் தாடோ பதிசனென்ற பெயருடன் அரசனனன். இவ்விரு வருமே, தமிழ்ப் படைவீரரின் உதவியுடன் அடிக்கடி போர் நிகழ்த்தி, நாட்டைப் பாழ்படுத்தினர். முடிவில், 1ம் தாடோப திசனே வெற்றிபெறலானன். அக்கிரபோதியின் மகன் காசியப்பன் உருகுணேயிலிருந்து அனுராதபுரத்துக்குச் சென்று தாடோபதி சனைக் கலேத்துவிட்டு ஆட்சியை நடத்திய போது, மீண்டும் படைகளைத் தென்னிந்தியாவிலிருந்து திரட்டி வந்த தாடோபதிசன் காசியப்ப ஜூேற் ருேற் கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். இதனுடன் நாட் 4ல் ஏற்பட்டிருந்த பெருங் குழப்ப நிலைமை முடிவுக்கு வந்ததெனி இனும், உள்நாட்டுப் போர்கள் தொடரலாயின.
இதுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்களில், சிங்கள அரசர்கள் தமது உரிமையை நிலைநாட்டவும், அதைப் பாதுகாக்க வும் தமிழ்ப் படைவீரர்களின் துணைய்ை எவ்வளவுக்கு நம்பியிருந் தனரோ, அவ்வளவுக்குத் தமிழரின் செல்வாக்கு அரசியலிலும் இராணுவத்திலும் வளர்ந்திருந்தது. காசியப்பன் உருகுணையிலிருந்து வருவித்த இளவரசனன மான(ன்) என்பவன், உருகுணையின் ஆட்சி யாளனக விருந்த தன் தந்தை தப்புலன யரசனுக்கி, ஓங்கி வந்த தமிழர் செல்வாக்கைக் குறைக்க முயற்சிகளெடுத்தான். தாடோட திசனது மருகனன ஹத்ததாடன் தமிழ்ப் படையுடன் இந்தியாவி லிருந்து மீண்ட போது, மானனுக்கும் தப்புலனுக்கு மெதிராக விருந்த தமிழ் வீரர்கள் ஹத்ததாடனை ஆதரித்து அவனை வெற்றி பெற வைத்தனர். 2ம் தாருேமுதிசன் என்ற பெயருடன் பட்டத் துக்கு வந்த ஹத்ததாடன் காலத்திலே, தமிழரின் செல்வாக்கு மேலும் வளர்ச்சி பெறலாயிற்று. கீழ்மாகாணத்துக்குத் தப்பி யோடிய மானன் மீண்டும் அரசைப்பெறச் செய்த முயற்சி படு தோல்வியில் முடிந்தது. 2ம் தாடோபதி சனுக்குப் பின் அவனது தம்பி 4ம் அக்கிரபோதியென்ற பட்டப் பெயருடன் முடிசூடிக் கொண் டான். இவன் காலத்திலும் தமிழரின் ஆதிக்கமே அரசியலில் வலுத்து வந்தது. படைத் தலைவனும், இரு முக்கிய அமைச்சர் களும் தமிழர்களாக விளங்கினர். ஆயின், அவர்களும் பெளத்த

Page 88
15 6 பண்டைய ஈழம்
மத வளர்ச்சிக்கான மானியங்களை வழங்கி வந்தனர். இம் மன் னனே முதன் முதலாகப் பொலன்னறுவையை அரசனது உறைவிட மாகச் சிறிது காலத்துக்கு வைத்திருந்தவன். இவன் இறந்த போது, பிரதான அமைச்சனக விருந்த பொத்தகுட்டன் என்ற தமிழனே அதிகாரத்தைப் பெற்று, உபராஜாவாக விருந்த சிங்கள இளவர சனேச் சிறையிலிட்டு, தத்த(ன்) என்ற பிறிதோரிளவலை அரசனுக் கினன். தத்தன் ஈராண்டுகளில் இறந்து போக, ஹத்ததாடன் என்ற மற்ருெருவனை அரசனுக்கினன். இவனும் ஆறுமாத காலமே ஆட்சி செய்ய முடிந்தது. இதன் பிறகு அரசனன மானவர் மனே, பல் லவ உதவி பெற்று இலங்கையில் தனது அரசுரிமையை நிலை நாட் டியவன். இவனது வரலாற்றைச் சற்று விரிவாக அடுத்த பகுதி யிற் காண்போம். மானவர்மன் அரசனுனதும் நீண்டகாலமாக நிலவிய குழப்பங்கள் முடிவுக்கு வந்ததோடு, தமிழர் பெற்றிருந்த செல்வாக்கும் மட்டுப்படுத்தப்பட்டது.
இப்பகுதி வர்லாற்றை நாம் முடிக்குமுன், உருகுனே இக் காலப் 11குதியில் வகித்துள்ள பங்கை அறிதல் பயனுள்ளது. சிலாகாலன் காலத்திலும், பின்னரும் மகாநாகன் என்ற இளவரசன் உருகுணை யில் புரட்சியாளனுக விளங்கிப் பின்னர் அதனைச் சுதந்திர அரசாக ஏற்படுத்தினன். மகர்நாகன் அனுராதபுரத்தில் ஆட்சியைப் பெற்ற பின்னர் சில ஆண்டுகள் உருகுண தனியரசாக வில்லாது, அனு ராதபுர அரசுடன் இணைந்திருந்தது. ஆனல் 2ம் அக்கிரபோதியின் ஆட்சிக்குப் பின், உருகுண மீண்டும் தனி அரசாகவே விளங்கி வந்தது. 3ம் மொகல்லானனது ஆட்சி தொடங்கிய சிறிது காலத் தின் பின்னரே, உருகுணை மீண்டும் தனியாக இயங்கத் தொடங் கியது. இதன் பின், இக்காலப்பகுதி முழுவதும் அது தனியரசாகவே விளங்கியது.
iii. DFT GOT 5 Lo 6öI (684 — 718)
2ம் காசியப்பனது (650-659) மகனன மானவர்மன், தன் மனைவி யுடன் வடமாகாணத்திற் சிலகாலந் தங்கிவிட்டு, அரசுரிமை பற்றி நடைபெற்ற தகராறுகளில் தனக்குப் போதிய ஆதரவின்மை கண்டு இந்தியாவுக்குச் சென்று, பல்லவப் பேரரசனன நரசிம்மவர்மன் (630-668) போர்ச் சேவையில் சேர்ந்து கொண்டான். இவனது போர்த் திறமையைக் கண்டு, தனது படைப் பிரிவொன்றுக்குத் தளபதியாக இவன்ை மாமல்லன் நியமித்தான். சாளுக்கியருடன் நரசிம்மவர்மன் நடத்திய சண்டைகளில் தன் போர்த் திறமையை யும் துணிவையும் உறுதியையும் இவன் வெளிக்காட்டினன். தனது சேவையில் நீண்டகாலம் உண்மையுடன் உழைத்த சிங்கள இள வரசனுக்கு இலங்கை யரசுரிமையைப் பெறுவதற்கு உதவி செய்ய

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 157
முடிவு செய்த பல்லவன், மிகப் பெரிய படையொன்றினை மானவர் மனுடன் அனுப்பிவைத்தான். மகாதீர்த்தத்தில் வந்திறங்கிய பல்லவப் படை அனுராதபுரத்தை நோக்கி விரைந்தது. மன்னனக விருந்த 2ம் தாடோபதிசன் என்ற ஹத்ததாடன் (659-667) இப் படையை எதிர்க்கத் துணியாது, தெற்கே யோடினன். அனுராத புரத்தைக் கைப்பற்றிக் கொண்ட மாணவர்மன், பகைவனைப் பின் தொடர்ந்து சிறைப்பிடிக்கப் படையை அனுப்பினன். ஆனல் இத் தறுவாயில், பல்லவப் படையினர் தம்நாடு திரும்பவேண்டி நேர்ந் தது. அரசன் நோய்வாய்ப்பட்டுள்ளான் எ ன் ற செய்தியைக் கேட்டே அவர்கள் இவ்வாறு செய்தனர். மாணவர்மன் ஒரு சிறு படையுடன் தங்கியிருந்தானுயினும், தாடோ பதிசன் பெரும் படை யைத் திரட்டி வந்தபோது, அவனுடன் போர் தொடுக்க விரும் பாது மீண்டும் இந்தியா சென் முன். இருபதாண்டுகளின் பின் (684ல்) அவன் மேற்கொண்ட இரண்டாவது முயற்சியிலேயே மாணவர்மன் வெற்றி பெற்ருன், 2ம் நரசிம்மவர் மனது காலத்தில், அவன் உத விய பெருஞ் சேனையுடன் மாணவர்மன் இலங்கை மீண்டு, முதலில் வடபகுதியை அடக்கி அதை வென்றபின், அனுராதபுரத்துக்கு முன்னேறினன். அனுராதபுரத்தில் அப்போது ஆட்சி செய்த ஹத்த தாடன், பொட்டகுத் தன் என்ற தமிழ் அமைச்சனது செல்வாக்கில் இருந்தவன். இவர்களுடைய சேனைகளைப் பல்லவப் படைகள் தோற்கடித்து மானவர் மனை அரசனுக்க உதவின. ஹத்ததாடன் போரிலேயே மடிந்தான் எனவும், பொத்த குட்டன் மலையகஞ் சென்று நஞ்சுண்டிறந்தானென்றும் கூறப்பட்டுள்ளது.
மான வர்மன் நடுவயதினனுக விருந்தபோதே ஆட்சியைப் பெற்ரு ஞயினும், முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதா கத் தெரிகின்றது. இத்தகைய நீண்ட ஆட்சியை அவன் நடத்தி ! யிருப்பின்,* அது குறிப்பிடத்தக்க சாதனையே. அறுபதாண்டுக! ளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர்களுக்கும் குழப்பங்களுக்கும் பின், அமைதியும் ஒழுங்கும் மீண்டும் இவன் காலத்தில் உறுதி! யாக நிலைநாட்டப்பட்டன. சமயத்துறையிலும், நீர்ப்பாசனத்துறை யிலும் அளவற்ற புனரமைப்பு வேலைகள் இவனைக் காத்திருந்தன. இவற்றை அவன் ஆற்றியிருப்பானெனினும், சூளவம்சத்தில் இவ் விவ ரங்கள் இல்லை. (இவனது வரலாற்றைக் கூறும் 47ம் அத்தியாயம், 66வது செய்யுளிலிருந்து அத்தியாய முடிவுவரை கிடைக்கவில்லை.)
* கைகர் (Geiger) மானவர்மன் இந்தியாவிற்றங்கிய காலத்தையும் சேர்த்தே முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சிசெய்தான் என உறுதி யுடன் கூறுகின்ருர். (சூள, பாகம் 1 பக். 109) 1ம் நரசிம்ம வர்மன் காலத்திலேயே இரண்டாவது படையெடுப்பு மேற் கொள்ளப்பட்டு வெற்றிதந்ததாக கசக்குடிச் செப்பேடுகள் கூறும்.

Page 89
158 பண்டைய ஈழம்
சிங்களக் காலவேடுகள் (இராஜாவலி, பூஜா வலீ ஆகியன) இவனது பணிகளாக தேவிநுவரை விகாரை நிறைவேற்றப்பட்டமை, ஏழு பிரிவெனக்களை நிறுவியமை, எட்டுக் குளங்களை அமைத்தமை ஆகிய வற்றைக் குறிப்பிட்டுள்ளன. இவனது ஆட்சிக்காலத்தின் மற்றொரு சாதனை, தமிழ்ப்படைத் தலைவர்களும், அதிகாரிகளும் இலங்கை அரசியலிற் பெற்றிருந்த ஆதிக்கம் அருகியமையே. இவனுடைய காலத்தில் உண்டான பல்லவத் தொடர்புகள், இவனது புதல்வர் களினதும், பின்னேர்களினதும் ஆட்சிக் காலங்களிலும் நீடித்து, இவற்றின் விளைவாகப் பல்லவர்காலத் தமிழகப் பண்பாட்டு அம் சங்கள் இலங்கையிற் புகுந்தன. இவை பற்றியினிக் கூறுவோம்.
iv. பல்லவர் பண்பாடு: அதன் இலங்கைச் செல்வாக்கு.
சங்ககாலத் தமிழகத்தின் பண்பாட்டினின்றும் பல முக்கிய அடிப்படைகளில் வேறுபட்டும், பல புதிய அம்சங்களைக் கொண் டதுமான பல்லவர்காலத் தமிழ்ப் பண்பாடு பற்றி நாம் இங்கு ஒரு சில விடயங்களை அறிந்து கொண்டாற்போதும், பல்லவ மன்னர்கள் தமிழராக விருப்பினும், அவர்கள் வட மொழியைப் பெரிதும் போற்றி வரலாயினர். மகேந்திரவர்மன் வட மொழியில் (மத்தவிலாஸப் பிரஹஸனம் உட்பட) பல. இலக்கியங்களை யியற்றியது மன்றி, அம்மொழிப் புலவர்களையும் ஆதரித்தான். பாரவி. தண்டி, தர்மபாலர் போன்ற வட மொழிப் புலவர்கள் காஞ்சி அவைக்களத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழி லக்கியத்தில், தேவாரங்கள் பாசுரங்கள் ஆகிய பக்திப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இக் காலத்திலே இயற்றப்பட்டன. இறை யனுர் அகப்பொருள் உரையும் இக் காலத்திலேயே தோன்றிய தென்பர். சமயத்துறையில், முன்னர் நன்னிலை யடைந்திருந்த பெளத்தமும், சமணமும், சைவ, வைஷ்ணவ மதங்கள் எய்திய புத்துயிர்ப்பால் தமிழ் நாட்டில் அருகலாயின. மகேந்திரவர்மன் முதலிற் சமணராகவிருந்து சைவராக மாறியதாகவும், அப்பர் சுவாமிகளே மத மாறியவர் என்பதும் அக்காலத்துச் சமயப் போக்கைக் காட்டுவன. சைவ - வைஷ்ணவ மறுமலர்ச்சி யியக் கத்தைத் தோற்றுவித்து வளர்த்த நாயன்மார்களிலும், ஆழ்வார் களிலும், பெரும்பாலானவர்கள் பல்லவர் காலத்திலேயே வாழ்ந்து சமயப் பணியாற்றினர்.
கட்டிடக்கலை முதலான துறைகளிலேயே, பல்லவர் காலம் இந்தியா முழுமைக்கும் பெருமைதரும் சாதனைகள் இயற்றப்பட்டன. முன்னர் அழிந்து விடக்கூடிய மரம், சுதை, செங்கல் முதலான பொருட்களைக் கொண்டே கோவில்கள் அமைக்கப் பட்டிருந்தன. பல்லவர் காலத்தியே, இலகுவாக அழிந்து போகாத உறுதியான கற்கோவில்கள் எழுப்பப்பட்டன. முதலில் (மகேந்திரவர்மன்

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 159
காலத்தில்), கல்லைக்குடைந்து கட்டிடங்கள் நிறுவப்பட்டன. தொடக்ககாலக் கற்கோவில்கள் தனிப்பாறைகளிலிருந்தும், தனிக் கல்லிலும் செதுக்கப் பட்டவையாக விளங்கின. இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவன, மாமல்லபுரத்தில் உள்ள "பஞ்சபாண்டவர் ரதங்கள்" எனப் பொதுவழக்கில் கூறப்படும் கற்கோவில்களாகும். இந்த ரதங்களை விட, தூண்களைக் கொண்ட மண்டபங்கள் எனக்கூறப்படும் கட்டிட வகையும் இத் தொடக்க காலத்துக்குரியவை. இவற்றிற்சில, பெளத்த விகாரைகளின் அமைப்பைப் பின்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தொடக்க காலப் பல்லவர் கோவில்கள் மகேந்திரவர்மன் காலத்திலும், நரசிங்கவர்மன் (மாமல்லன்) காலத்திலும் மண்டகப்பட்டு, திருச் சிராப்பள்ளி, உந்த வல்லி, திருப்பரங்குன்றம் முதலான பல இடங் களிலும் அமைக்கப்பட்டுள்ள போதும், மா மல்லபுரத்தில் நிறுவப் பட்டவையே மிகவும் புகழ் பெற்றுள்ளன. பல்லவர் காலக் கட்டிடக்கலையின் இரண்டாவது நிலையைக் காட்டுங் கோவில்கள் இராஜசிம்மன், நந்தி வர்மன் காலத்தவையாகவுள்ளன. மாமல்ல புரத்தில் உள்ள கடற்கரைக்கோவிலும் காஞ்சியிலுள்ள கைலாச நாத, வைகுண்டப் பெருமாள் கோவில்களும், கோவிற்கட்டிட வளர்ச்சியின் இரண்டாவது நிலையிலுள்ளவை. இவை கட்டப்பட்ட (கட்டுக்) கோவில்களாக விருப்பதும், விமானங்கள், கோபுரங்கள் என்பவற்றின் தொடக்க நிலையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. பல்லவர் கட்டிடக் கலையின் மிகவும் வளர்ச்சிபெற்ற முறையைக் கையாண்டு கட்டப்பெற்றது காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலாகும். கற்பாறைகளிற் கோயில்கள் குடையப் பெற்றதும், கருங்கல்லைக்கொண்டு கோவில்கள் கட்டும் முறை விருத்தி பெற்றதும் சிற்பக்கலை வளர்ச்சிக்குப் பெருந்துணையாயின. தனிக் கற்களில் அல்லது பாறைகளிற் செதுக்கப்பட்ட சிற்பங்களில், *கங்கையின் வருகை" என்ற மாமல்லபுரச் சிற்பம் அதியுன்னத சிற்பக் கலைச்சாதனையாகப் போற்றப் பட்டுள்ளது. மாமல்லபுரத் திலும், காஞ்சீபுரத்திலும் பிற இடங்களிலும் உள்ள பல்லவர்காலக் கோவில்களில் இடம் பெற்ற புடைப்பகழ்வுச் சிற்பங்கள் அக்கோவில் களை அணிசெயப் பயன்பட்டுள்ளன. இச் சிற்பங்களின் எளிமையும் இயற்கையோடியைந்த அமைப்பும் இவற்றின் சிறப்புக்கு முக்கிய காரணங்களாம். பல்லவர்களின் காலத்தில் ஒவியக்கலை, இசைக்கலை யென்பனவும் சிறந்து விளங்கின என்பதற்கு சித்தன்னவாசல் குகைக்கோவில் ஒவியங்களும், குடுமியாமலே இசைக் கல்வெட்டும் முறையே சான்றுகளாகவுள்ளன.
r xi
பல்லவர் காலத் தமிழகப் பண்பாடு பற்றி மேலே மிகச்சுருக்க மாகக் கூறினேம். இனி, இப் பண்பாடானது இலங்கையிற் பரவி, அதனுலுண்டான சில நிலையான மாறுதல்களைக் கூறுவோம். மான

Page 90
I 60 பண்ட்ைய ஈழம்
வர்மன் தன் குடும்பத்துடன் நீண்டகாலம் பல்லவர் தலைநகரில் தங்கியிருந்ததால், பல்லவர்க்ாலச் சமூகக்கருத்துக்களையும், கலை மரபுகளையும் அறியும் வாய்ப்பும் அனுபவமும் அவர்களுக்கு ஏற் பட்டிருக்கும். மர்ன்வர்மனும், பின்னர் அவனைத் தொடர்ந்து அவனது புதல்வர்கள் சிலரும் (5ம் அக்கிரபோதி, 3ம் காசியப்பன் போன்றேர்) ஆட்சி செய்தமையால், பல்லவ அரசுடன் நல்லுறவு கள். மேலும் வளர்ச்சி பெற்று வந்திருந்தல் கூடும். அரசியல் துறையில் இலங்கை பெரும்பாலும் பல்லவர்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளதைப் பின்னர்க் காண்போம். இவ் வரசியலுறவுகளின் அடிப்படையில் ஏற்பட்ட பண்பாட்டுத் தாக்கங்களை இங்கு கவனிப் போம். தமிழ் நாட்டில் சைவ சமயம் நன்னிலை பெற்றிருந்த மையால், வடஇலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு, அங்குள்ள கோவில்களும் பெரும்புகழ் ஈட்டியிருந்தல் வேண்டும், தேவாரப் பதிகங்கள் திருக்கேதீஸ்வரம் மீதும், திருக்கோணேஸ்வரம் மீதும் ( சம்பந்தர், அப்பர் ) நாயன்மார்களாற் பாடப்பட்டதிலிருந்து, இலங்கையின் சமய நிலையை யுணரலாம். 7ம் நூற்றண்டில் இடம் பெற்ற உள்நாட்டுப் போர்களின் போது இங்குக் குடியேறிய தமிழர்கள் வட பகுதியில் (உத்தர தேசத்தில்) பெருந்தொகை யினராக விருந்தமையும், அரசியற் செல்வாக்குப் பெற்றமையும் முன்னரே குறிப்பிடப் பட்டுள்ளன. இவர்கள் சைவசமயத்தைப் பின்பற்றியவர்களாக விருந்தமை, அம் மதம் நன்னிலை பெற்ற மைக்குக் காரணமாகலாம். எவ்வாருயினும், 7ம் 8ம் நூற்ருண்டு களில் வட பகுதியிற் சைவம். நன்னிலை பெற்றிருந்தமை உறுதி.
கட்டிட சிற்பத் துறைகளிலேயே, பல்லவர் கலைமரபு இலங் கையிற் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு இன்றும் சான் றுகள் கிடைக்கின்றன. அனுராதபுரத்துக்குத் தெற்கே இசுரு முனியா எனப்படும் இடத்தில் (இசர சமண) காணப்படும் சிற்பங் களிற் சில பல்லவர் காலச்சிற்பங்களை நினைவு படுத்துவனவாக வுள்ளன. அங்குள்ள ஒரு கற்பாறையில் யானேகளின் உருவங்கள், மனிதனும் குதிரையின் தலையும் புடைப்பகழ்வுமுறையில் செதுக்கப் பட்டுள்ளன. இ  ைவ மேலே குறிக்கப்பட்ட *கங்கையின் வருகை'யை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளன. நாலந்தாவில் உள்ள ‘கெடிகே என்ற கட்டிடமும் இலங்கையில் பல்லவர் கட்டிட முறையைப் பின்பற்றியமைக்குச் சான்ரு கவுள்ளது. இதுவும்

அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போரும் 161
பல்லவர் காலக் கட்டிடங்களைப் போலவே, தனியே கல்லாலானது. தேவுந்தரவில் உள்ள உபுல்வன் கோவிலும் தமிழ்நாட்டுக் கட்டிட முறையையே அனுசரித்துத் தனியே கல்லாற் கட்டப்பட்டுள்ளது.
பல்லவ மன்னர்கள் வடமொழியை அதிகமாக ஆதரித்து, அதன் வளர்ச்சிக்குதவியவர்களாதலின், பல்லவ அரசுடன் தொடர்பு கொண்ட இலங்கையிலும் வடமொழி மேலும் செல்வாக்குப் பெற்றிருத்தல் கூடும். குப்தர் செல்வாக்கைத் தொடர்ந்து ஏற் பட்ட பல்லவர் செல்வாக்கால், இலங்கையில் சமஸ்கிருத மொழி மேலும் அதிகமாகப் பயிலப்பட்டு வரலாயிற்று எனலாம்
பயிற்சி:
1. தென்னிந்தியாப் படமொன்றில், 7ம் நூற்றண்டில் இருந்த
பிரதான அரசுகளையும் தலேநகர்களையும் குறிக்க.
2, மாணவர்மன் கதையைச் சூளவம்சத்திலுள்ளவாறு சுருக்கி
யெழுதுக.
3. காஞ்சி, மாமல்லபுரம், சித்தன்னவாசல் ஆகியவற்றின் வரலாற்று முக்கியம் பற்றி மேலும் விபரங்களையும், அங்குள்ள கோவில்கள், சிற்பங்கள், ஒவியங்கள் ஆகியவற்றின் படங்களையுஞ் சேர்க்க
கூட்டு வேலைக்கு:
1ம் நரசிங்கவர்மனை, 2ம் புலிகேசியுடனும், ஹர்ஷவர்த்தன னுடனும் ஒப்பிட்டு, ஒப்புமை வேறுபாடுகளைத் தெளிவாக்குக.
தேர்வு விஞக்கள்:
1. மாணவர்மன் அரசனுகுமுன், இலங்கையில் நிலவிய குழப்ப
நிலைமைகளுக்கான காரணங்கள் எவை?
2. 7ம் 8ம் நூற்றண்டுத் தென்னிந்திய நிலைமைகளைச் சுருக்கமாகக் கூறி, அவை யிலங்கையைப் பாதித்த வகையின ஆராய்க.
3. இலங்கைக்கும் பல்லவ அரசுக்கு மிடையே ஏற்பட்ட தொடர்புகளைச் சுருக்கிக்கூறி, அவற்றின் பண்பாட்டுத்துறை விளைவுகளைக் குறிப்பிடுக.
21

Page 91
அத்தியாயம் பதின்மூன்று மாணவர்மன் மரபினரின் ஆட்சி: பாண்டியத் தொடர்புகள்
i. முதலாம் பாண்டியப் பேரரசு i. மாணவர்மன் மரபினரின் ஆட்சி iii. பாண்டியத் தொடர்புகள்: படையெடுப்புக்கள்.
மானவர் மனது ஆட்சியுடன் இலங்கை வரலாற்றிற் சில திருப் பங்கள் ஏற்படுகின்றன. முன்னர் ஒரு வழமையான இயல்பாகி யிருந்த உள்நாட்டுப் போர்கள், மாணவர்மனுக்குப் பின் இடம் பெருது அமைதியே பெரிதும் நிலவியமை குறிப்பிடத்தக்கது. அயல் நர்ட் டாரின் தாக்குதல்கள் மட்டுமே நாட்டின் அமைதியைக் குலைத்து, முன்னேற்றத்தைத் தடைப்படுத்தின. ஆயினும், இவ்வத்தியாயத்திற் கூறப்படும் வரலாற்றில் (2ம் உதயனது ஆட்சிவரை, அதாவது 9ம் நூற்ருண்டு முடியும் வரையுள்ள காலப் பகுதியில்) அரசுரிமை முறைப்படியே உரியவர்களுக்குச் (அவர்கள் பலவீனர்களாக விருப் பினும்) சேர்ந்ததால், குழப்பங்கள் ஏற்படாது தவிர்க்கப்பட்டன. மானவர்மனுடன் தொடங்கும் மரபும் இலம்பகண்ண மரபாதலால், இதை ‘இரண்டாம் இலம்பகண்ண மரபு' என அழைப்பர். இம் மரபு அனுராதபுரத்தின் வீழ்ச்சிவரை ஆட்சியிலிருந்ததால், மூன்று நூற் ருண்டுகளுக்கு மேல் அது ஆட்சி செய்ய முடிந்தது. 1ம் சேனனுக்கு முந்திய மன்னர்களின் காலத்திற் பெரும்பாலும் அமைதி நிலவிய தாலும், வழமையான சில சமயக் கொடைகளையும் விழாக்களையும் தவிர, அவர்களுடைய ஆட்சியிற் குறிப்பிடும் தன்மையவான செய்தி கள் ஏதுமில்லை. எனவே அவர்களுடைய ஆட்சி பற்றி நாம் அதிகம் கூறவேண்டியதில்லை. உருகுனே இக் காலப்பகுதியிலும் தொடர்ந்து ஒரு தனியரசாக விளங்கியது; அதற்கு ஒரு புறம்பான அரச மரபும் இருந்தது. உருகுணை அரச மரபினர்க்கும் அனுராதபுர மரபினர்க்கும் இக் காலப்பகுதியில் ஏற்படும் உறவுகள், பின்னர் உருகுணை அரசி யலில் பிந்திய மரபினரைத் தலையிடுமாறு வைத்தன. இக் காலப்பகுதி யின் மிக முக்கிய தன்மை அயல் நாடான பாண்டிய அரசுடன் இருந்த தொடர்புகளே. பல்லவர்களுடன் ஏற்பட்ட நல்லுறவுடன் ஆரம்பிக்கும் இக் காலப்பகுதியில், அவர்களோடு அடிக்கடி சண்டை யிட்ட பாண்டியருடன் சிங்கள மன்னர்கள் முதலிற் பகைமை பாராட்டி வரலாயினர். 9ம் நூற்றண்டின் நடுப்பகுதியில் ஒரு முக்கிய பாண்டியப் படையெடுப்பு இலங்கை மீது நடைபெற்றது. இதனல் இலங்கை யடைந்த அவமானத்தைப் போக்க, (2ம் சேனனல்) பாண்டி நாடு மீதும் ஒரு படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு

மாணவர்மன் மரபினரின் ஆட்சி I 63
ஒன்பதாம் நூற்ருண்டு முடியும்வரை இலங்கை பாண்டியருடன் பகை மையே பாராட்டி வந்தது. 10ம் நூற்றண்டில் இவ்விரு நாட்ட வர்க்கும் நட்புறவே அதிகமாக நிலவியது. இவ்வாருகக் கொள்கை மாற்றம் எய்தியதை யறியத் தென்னிந்திய அரசியலாதிக்கத்துக்காக அங்கு நடைபெற்ற போட்டியை நாம் அறிந்திருத்தல் அவசிய மாகின்றது. எனவே, எட்டாம் ஒன்பதாம் நூற்ருண்டுகளில் பாண்டிய அரசின் வளர்ச்சி-தேய்வு பற்றிக் கவனிப்போம்.
முதற் பாண்டியப் பேரரசு
தென்னக அரசியல் நிலைமைகள் (8ம், 9ம் நூற்.)
முதலாம் பாண்டிய மரபைச் சேர்ந்த சில மன்னர்களின் வரலாறு முன்னரே குறிப்பிடப்பட்டு விட்டது. 149ம் பக்கத்திலுள்ள தென் னிந்தியாப் படத்தைப் பார்வையிட்டால், பல்லவ அரசு வடகிழக்குத் தமிழகத்தைச் சேர்ந்த தொண்டை மண்டலத்தை மையமாகக் கொண் டெழுந்தது என்பதும், பாண்டிய அரசோ, தெற்குத் தமிழகத்தில் மேற்குப் புறமாக அமைந்தது என்பதும் புலனகும். இவ்விரண்டு அரசுகளும் ஏறத்தாழ ஒரே காலத்தில் விரிவடைந்து வந்ததால், இவற்றுக்கிடையே பகைமை யேற்படல் தவிர்க்க முடியாததே. 7ம் நூற்ருண்டின் இறுதிக் காலத்தில் சாளுக்கிய மன்னன் 1ம் விக்கிர மாதித்தன் தலைமையில் பல் ல வ அரசுமீது ஒரு தாக்குதல் மேற் கொள்ளப்பட்ட போது, பாண்டிய அரசனக விருந்த அரிகேசரி பராங்குச மாறவர்மன் சாளுக்கியனுடன் ஒத்துழைத்தான் என்பது கவனிக்கத் தக்கது. 2ம் நரசிம்மவர்மனுக்குப் (ராஜசிம்மன்) பின் ஆட்சி செய்த 2ம் பரமேஸ்வரவர்மன் இறந்த போது பல்லவத் தலைநகரில் ஏற்பட்ட அரசுரிமைத் தகராறில், சித்திரமாயன் என் பானும் அரசைப் பெறப் போட்டி யிட்டான். பாண்டிய மன்னனுக அப்போது விளங்கிய 1ம் மாறவர்மன் இராஜசிம்மன் (730-765), சித்திரமாயனை யாதசித்து பல்லவப் படைகளைப் பல விடங்களில் தோற்கடித்து நந்திக்கிராமத்தில் அவற்றை முற்றுகை செய்தான். ஈற்றில், உதயச்சந்திரன் என்ற பல்லவத் தளபதி பல்லவர்க்கு வெற்றி யை ஈ ட் டி க் கொடுத்தது மன்றி சித்திரமாயனைக் கைப்பற்றிச் சிரச்சேதம் செய்தான். இருந்தும், இம் மன்னன் (மாறவர்மன்) காலத்தில் பாண்டிய அரசு விரிவுபெற்று வந்தது. காவேரியைக் கடந்து, தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையிலுள்ள மழகொங்கத்தைக் கைப்பற்றிப் பின்னர் சாளுக்கிய வேந்தனையும் அவனது திறை யாளனன கங்க நாட்டு ஆட்சியாளனையும் தோற்கடித்து மீண்டான். இவனது மகஞன ஜடில பராந்தக நெடுஞ்சடையன் அல்லது 1ம் வரகுண மகாராஜா என்பவனே முதலாம் பாண்டிய மரபின் மிகச் சிறந்த மன்னனுகக் கருதப்படுபவன். இவனுடைய ஆட்சிக்

Page 92
G. பண்டைய ஈழம்
காலம் 758-815. இதே காலப்பகுதியில், இராஷ்டிரகூடர் மேஃ சாளுக்கியரை வென்று, தமது ஆதிக்கத்தைத் தக்கணத்தில் நிறு லாயினர். தந்திதுர்க்கன், 2ம் கோவிந்தன் போன்ற இராஷ்டிரகூ மன்னர்கள் தமது அரசை விரிவுபடுத்துவதற்குப் பல்லவர் ந பைப் பயன்படுத்தினர். அதே வேளேயில் வளர்ந்து வந்த பார் டிய அரசைத் தகர்ப்பதற்கும் 2ம் நந்திவர்மன் என்ற பல்வ மன்னன் கொங்கு, சேர, தகடுர் ஆட்சியாளர்களே ஒன்று சேர்த் ஒரு கூட்டுறவை யமைத்தான். ஆணுல், வரகுண பாண்டியன் பல் வப் படைகளேப் பெண்ணுகடத்தில் முறியடித்து, கூட்டுறவின் ஏனே ஆட்சியாளரையும் புறங்கண்டான். தொண்டைமண்டலத்திலுள் பெண்ணுறுவரை, பல்லவர் பிரதேசத்தினுள்ளும் அவன் பன யெடுத்துச் சென்று மீண்டான். இவன் காலத்தில் சேரநாட்டி பெரும் பகுதியும் பாண்டியப் பேரரசுடன் இஃணக்கப்பட்டதா பாண்டியப் பேரரசு தனது எல்லேயில் மிகவும் விரிவடையலாயிற். இதே காலத்திலேயே இலங்கை மீதும் (1ம் சேனன் காலத்தில்) ஒ படையெடுப்பை வரகுணன் மேற்கொண்டான். வருகுணனது மகே பூரிமாற பூவல்லபன் ஆவன்.
(815-862) காலத்திலும், அதற்கு முன்பு பாண்டிய அரசடைந்த விரிவால் நிலங்களே இழந்த பல்லவ அரசு சுள் (தந்திவர்மன், 3ம் நந்திவர்பன்) பண்டியருக்கெதிரே மீண்டு கூட்டுறவுகளே ஏற்படுத்தலாயினர். 3 ம் நந்திவர்மன் தெள்ளாறு போரில் பாண்டியப் படைகளேத் தோற்கடித்தான். கங்கர்கள் சோழர், இராஷ்டிரகூடர் ஆகியோருடன் நட்புறவை ஏற்படுத்தி பின்னரே இவ்வாறு பாண்டியருடன் சண்டை செய்து வெற் யீட்டினன் என்பது கவனிக்கத் தக்கது. பூரீமாறன் இத் தோல் யால் அதிகம் சளிப்படையாது மீண்டும் வலுப்பெற்று, நந்தின் மனேயும் அவனது கூட்டணியினரையும் தோல்வி கானவைத்தார் இவ்வாருகப் பாண்டிய அரசின் வளர்ச்சியைத் தடைப்படுத் எண்ணியே, மீண்டும் ஒரு கூட்டுறவு ஏற்படுத்தப் பட்டது. பச் வருடன் ஒருங்கு சேர்ந்து இலங்கை மன்னனும் (சிங்கள அரசஞ 2ம் சேனனும்) தமது ஆதரவை நாடிய
Fண்டிய இளவரச ஒருவனே ஆதரித்து அவனே அரசனுக்கினர். இவர்கள் உதவியா அரசைப் பெற்ற 2ம் வரகுணன் பல்லவ அரசன் நிருபதுங்கனுக்கு திறைசெலுத்தி ஆட்சிசெய்து, பின் தனது சுதந்திரத்தை நீ நாட்ட முற்பட்டபோது ஒரு பெருங் கூட்டு டன் போர் பு வேண்டிய நிலக்குள்ளானுன். 880ல் திருப்புறம்பியம் என்ற இடத் நடைபெற்ற கடுஞ்சமரில், வரகுணன் படுதோல்வி எய்தினு இதுவே முதலாவது பாண்டியப் பேரரசினே முடிவுக்குக் கொன் வந்த முக்கியம் வாய்ந்த சண்டையாகும். போரில் பல்லவர் வெ. பெற்றனராயினும், இவ் வெற்றி யுண்மையிற் சோழப்பேரரச் எழுச்சிக்கு வழிகோலிய தென்பதை அடுத் த அத்தியாயத் படிப்போம்.
 
 
 
 
 

மானவர்மன் மரபினரின் ஆட்சி 1门岛
i. மானவர்மன் மரபினரின் ஆட்சி.
மானவர்மன் நிறுவிய அரச மரபு (இரண்டாம் இலம்பகண்ணை மரபு) நாட்டுக்குப் பெரும்பாலும் அமைதியை அளித்ததெனினும், பெருமையை அது அளித்ததெனக் கூறவியலாது. சிறப்பான அம்சங்கள் அதிகமின்றி அம்மரபினரின் ஆட்சியிருந்ததால், இவ் வத்தியாயத்தில் அம்மரபைச் சேர்ந்த ஒரளவு முக்கியம் வாய்ந்த மன்னர்களேயே கவனத்துக் கெடுத்துக் கொள்வோம். (இவர் ளுேடைய பெயர்களேயும்,ஆட்சிக்காலங்களையும் 14ம் அத்தியாய முடி விற் பார்க்கவும்.) மானவர் மனுடைய புதல்வர்களே (5ம் அக்கிரபோதி, ம்ே காசியப்பன், 1ம் மகிந்தன்) அவஃனத் தொடர்ந்து ஆட்சி நடத்தியவர்களாவர். மாணவர்மனுடையதைப் போன்றே இவர்களுடைய ஆட்சிக் காலங்களும் அமைதி பெற்று விளங்கின. தென்னிந்தியாவிலேயே இவர்களும் தமது இளமைக் காலத்தைக் கழித்தவர்களாதலால், பல்லவர் பண்பாடு இவர்களின் ஆட்சியின் போது இலங்கையிற் பரவ ஏதுவாக விருந்தது.
மானவர்மனது புதல்வர்களின் ஆட்சி முடிவெய்திய பின் ஆட்சி செய்தவர்களுள், 2ம் மகிந்தன் (777-797) ஓரளவு முக்கியம் வாய்ந்த ஆட்சியாளனுவான். இவனேப் பற்றிய விவரங்கள் சூளவம்
சத்தில் நிறைய விருப்பதால், இவனது ஆட்சிக் காலத்தைப் பற்றி
விரிவாக எழுதப்படக் கூடியதாகவும். இவனுடைய குணவியல்புகள் பற்றி நன்கறியக் கூடியதாகவும் இருக்கின்றது. ம்ே அக்கிரபோதி யென்ற மன்னன் மகனுக மகிந்தன் இருந்தபோதும், ஆட்சிய்ைப் பெறுதற்கு இவனுக்கு ஏதோ தடையிருந்தமை இவன் காலத்தில் உண்டான கலகங்களால் உணரப்படும் 7ம் அக்கிரபோதிப்பிறந்த போது, மகாதீர்த்தத்தில் கரையோரக் காவிலுக்குப் பொறுப்பாகத் தங்கியிருந்த மகிந்தன் தலைநகர்க்கு விரைந்து அரசை யேற்ருன். ஆனல், அவன் முடிசூட முடியாதபடி நாட்டின் பல பாகங்களிலும் கலகங்கள் தோன்றலாயின. 7ம் ஆக்கிரபோதி தன் இறுதிக் காலத்தில் தங்கியிருந்த பொலன்னறுவையிலேயே, அவனது இராணி பிருந்து மகிந்தனுக்கெதிரான சதிகளுக்கு உடந்தையாக விளங் கினுள் முதலில் இவளேச் சிறையிலிட்டு, இவளுடைய ஆதரவாளர் களே மகிந்தன் விரட்டி விட்டான். வடபகுதியில், பிரதானிகள் தலைமையில், கலவரங்கள் ஏற்பட்டன. மகிந்தனது உறவினனும், இளவரசனும்ான தப்புலன், மகிந்தனது உரிமையை மறுத்து பெரும் படையுடன் தளர்வின்றிப் போர்தொடுத்த வண்ணமிருந்தான். இவனுக்கு உருகுணேயைச் சேர்ந்த இரு இளவரசர்களும், அக்கிர போதியின் இராணியும் உதவியளித்து வந்தனர். முதல் காலவாவிப் பகுதியிலிருந்தும், பின்னர் கீழ் மாகாணத்திலிருந்தும் (பசினதேச), முடிவில் உருகுனேயிலிருந்தும் தனது எதிர்ப்பு அணிகளே தப்புலன்

Page 93
66 பண்டைய ஈழம்
திரட்டி வந்தான். சங்க காமத்திலும், அனுராதபுரத்திலும், பின் னர் கீழ் மாகாணத்திலும் (கொவிளாரகாம என்ற கிராமத்தில்) இரு தரப்பினருக்குமிடையே கடும் போர்கள் நடைபெற்றன. இவற்றில் எல்லாம் மகிந்தனே வெற்றி பெற்றதாகக் கூறப்படு கின்றது. தப்புலன் இறுதியில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, மகிந்தனுக்குத் தண்டமளித்து, ஒரு பொருத்தனையைச் செய்து கொண்டான். இதன்படி, உருகுணயின் எல்லை (மகாவலிக்குப் பதில்) கல் ஓயாவாக மாற்றப்பட்டது. 7ம் அக்கிரபோதியின் இரா னியையே, மகிந்தன் தனது இராணியாக்கி முடிசூடிக் கொண் டான். இம் மணவினைக்கும் அரசியல் யுக்தியே முக்கிய காரண மாகும். அவளை விடுதலை செய்யவோ, கொல்லவோ முடியாத நிலை யில், வேறு வழியின்றி அவளை மணந்தானெனப்படுகின்றது. மகிந் தன் தப்புலனை யடக்குவதில் ஈடுபட்டிருந்த வேளைகளில், அந் நிலை மையைப் பயன்படுத்தி வடபகுதித் தலைவர்கள் கலவரங்களை நடத் தியதுமன்றி, ஒரு சந்தர்ப்பத்தில் அனுராதபுரத்தையே கைப் பற்றவும் முன் வந்தனர். இவ்வாறு பல பாகங்களிலும் உண்டான கலகங்களை யடக்குவதில் மகிந்தன் காட்டிய போர்த்திறமை மட்டு மன்றி, அவன் கையாண்ட பொறுமையும், சூழ்ச்சியும், தந்திரமும் அவனுக்கு உயர்வைத் தருவன. மகிந்தனது ஆட்சியின் பிற்பகுதி யில் அமைதி நிலவியதால் சமயப் பணிகள் முதலான பொதுப் பணிகளில் அவன் ஈடுபட முடிந்தது. அவனது சமயப் பணிகளில் குறிப்பிடத்தக்கது, இரத்தினபாசாதவை (அபய கிரியின் உபோசத வீடு) நிறுவியமையாகும். பொலன்னறுவையில் இரு விகாரைகள் நிறுவியமை உட்பட மேலும் பல சமயப் பணிகளை யாற்றினன். காலவாவியின் அணைக்கட்டைப் பலப்படுத்தி, அதன் நீர் வசதியைக் கூட்டினன். தமிழர்களைத் திருப்தியடையச் செய்வதற்காகப் போலும், பாழெய்திய சைவக் கோவில்களைப் புதுக்கியதோடு, பிராமணர்களுக்கும், தமிழர்க்கும் வெகுமதிகளை வழங்கினன். மகிந்தனுடைய இருபதாண்டுக் கால ஆட்சி 797ல் முடிவுற்றது .
2ம் மகிந்தனைத் தொடர்ந்து அவனது மகன் 1ம் உதயன் ஐந் தாண்டுகள் ஆட்சி செய்தான். இவன் தனது ஆதரவை நாடிவந்த உருகுணை அரசகுமாரனெருவனுக்கு (மகிந்தன்) படைத் துணை யளித்து அவனை உருகுணையின் அரசைப் பெற வைத்தான். 1ம் உதய னது மகளை மகிந்தன் மணம் முடித்திருந்ததால், அனுராதபுரத் திலும் உருகுணையிலும் ஆட்சி செய்த மரபினர்க்கிடையே நெருங் கிய உறவு ஏற்படலாயிற்று. 1ம் உதயனுக்குப் பின் அவனது மூன்று புதல்வர்கள் (3ம் மகிந்தன், 8ம் அக்கிரபோதி, 2 ம் தப்புலன்) க்மார் முப்பதாண்டுகள் வரை யாண்டனர். உருகுணையில் ஆட்சியை நடத்திய மகிந்தன் தனது புதல்வர்களைக் கலைத்துவிட அவர்கள்

மானவர்மன் மரபினரின் ஆட்சி 16 7
அனுராதபுர ஆட்சியாளனன 2ம் தப்புலனிடம் வந்து புகலிடம் பெற்றனர். பின்னர் மகிந்தன் இறந்த போது, உருகுண இள வரசர்களில் மூத்தவனன கித்தக்கிரபோதி, தப்புலன் உதவிய படை களுடன் அங்கு சென்று அரசைப் பெற்றன். இவ்வாறு உருகுணை யின் விவகாரங்களில் அனுராதபுர ஆட்சியாளர் த லை யி ட் டு ரெலாயினர்.
i. பாண்டியத் தொடர்புகள் படையெடுப்புக்கள்
சேனன் 1 833-853: அத்தியாயத்தின் முதற் பகுதியில் நாம் கண்டவாறு, பாண்டியப் பேரரசு எட்டாம் நூற்றண்டிலும், ஒன்ப தாம் நூற்றண்டிலும் மாறவர்மன் இராஜசிங்கன், முதலாம் வரகுணன், சீமாற சீவல்லபன் போன்ற பெருமன்னர்களின் முயற்சியால் விரி வெய்தி வந்தது. இவ் விரிவாக்கற் கொள்கையானது வடக்கே பல்லவ அரசைப் பாதித்ததைப் போல, தெற்கேயுள்ள இலங்கைத்தீவையும் பாதிக்கலாயிற்று. 1ம் சேனன் (833-853) ஆட்சிசெய்த போது ஒரு பெ ரும் படையெடுப்பு நிகழலாயிற்று. 9ம் அக்கிரபோதியைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ற அவனது தம்பி சேனன், தனது ஆட் சித் தொடக்கத்தில், இந்தியாவுக்கு முன்னர் தப்பியோடிய கலகக் கார இளவரசனன மகிந்தனல் தனக்கு ஆபத்து வரலாமென அஞ்சி, அவனைக் கொல்வதற்கு ஆட்களை அனுப்பித் தனது எண்ணத்தை நிறைவேற்றினன். இவ்வளவு முன்னறிவுடன் செயலாற்றிய சேனன், தனக்குப் பாண்டியரால் வரவிருந்த ஆபத்தைச் சமாளிக்க எவ்வித ஏற்பாடும் செய்யாதிருந்தான். சேனன் ஆட்சியைப் பெற்ற சில ஆண்டுகளில், சீமாற சீவல்லபன் (பூரீமாற பூரீவல்லபன்) ஒரு பெரும் படையுடன் வடபகுதியில் வந்திறங்கினன். இச் செய்தியைக் கேட்ட தும், சேனன் ஒரு படையை அனுப்பி வைத்தானுயினும், படைத் தலை வரிடையே முரண்பாடு நிலவியதால், பாண்டியப் படையை அது விரட்டத் தவறியது. உத்தரதேசத்திற் பல அழிவுகளைச் செய்து முன் னேறிய பாண்டியப் படை, மகாதாலிதகாமத்தில் தங்கியிருந்தது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்த தமிழர் சீமாறனது படையைச் சார்ந்து நிற்கலாயினர். பாண்டியப் படையை எதிர்க்கச் சென்ற சிங்களப்படை சிதறடிக்கப்பட்டமைக்கு, படைக்கு ஆர்வமூட்டும் வகையில் படைத் தலைவர்கள் இன்மையே காரணமாகக் கூறப்பட் டுள்ளது. காரணமெதுவாயினும், சிங்களப்படை நாலாபக்கமும் ஒட் டம் பிடித்தது. சேனன் மலையகத்துக்கு அரச திரவியங்களுடன் தப்பி யோடினன். யுவராஜனுக விருந்த மகிந்தன் வீரத்துடன் போர் புரிந்தும், தோல்வியுறுதியெனக் கண்டதும் உயிர் துறந்தான். இதைத் தொடர்ந்து தலைநகருக்கு அண்மையிற் காட்டப்பட்ட எதிர்ப்புக்குத் தலைமை தாங்கிய இளவரசன் (ஆதிபாத) காசியப்பனும், பாண்டியப் படையின் பெருவலியைத் தடுக்கமுடியாது, களத்தினின்றும் தப்பி

Page 94
I 68 பண்டைய ஈழம்
யோடினன். அனுராதபுரம் பாண்டியப் படையின் வசமாகவே, விகாரைகளும் நகரமும் கொள்ளையிடப்பட்டன. "இயக்கர்களினல் குறையாடப்பட்டதோ வெனத்தக்க நிலையை நகரம் அடைந்ததாகச் சூளவம்சம் வர்ணிக்கின்றது. "இரு நதிகள் சேருமிடத்தில் (தாஸ் தோட்டைக்கு அண்மையில்) சேனன் தங்கியிருக்கும்போது, பாண் டிய மன்னன் தூதுவர்களை யனுப்பி, அமைதிப் பொருத்தனையைச் செய்து கொண்டான். தூதுவர்கள் வேண்டிய வெகுமதிகளை விருப் புடன் அளித்து, உடன்படிக்கை செய்துகொண்டான். பாண்டிய மன்னன், தான் பெற்ற அரசதிரவியங்களுடனும், கொள்ளைப் பொருட் களுடனும் இந்தியாவுக்குத் திரும்பினன். தலைநகர் மீண்ட சேனன், அந்நியர் நிகழ்த்திய படையெடுப்பின் போது உண்டாக்கப்பட்ட சேதங்களை நீக்குவதிலும், புனரமைப்பைச் செய்வதிலும் ஈடுபட்டான். இதன்பின், ஆட்சிக் காலத்தின் எஞ்சிய ஆண்டுகளைச் சமயப் பணி களிலேயே பெரிதும் செலவு செய்தான். உருகுணையிலிருந்து வந்த காசியப்பன் முதலான இளவரசர்களுக்கும் சேனன் அவர்களுக்குச் சேரவேண்டிய அரசுரிமையைப் பெறப் படைகளை க் கொடுத் து உதவிஞன்.
சேனன் 11 853-887 முதலாம் சேனனுக்குப் பின், ஆதிபாத காசியப்பனது மூத்த புதல்வனும், யுவராஜனுமான சேனன் அரசைப் பெற்ருன். பாண்டி நாடு மீது இவன் ஒரு படையெடுப்பை மேற் கொண்டு வெற்றிபெற்றதால், இவன் வரலாற்றுப்புகழ் அடைந்துள் ளான். முன்னர் இலங்கையைத் தாக்கிச் சென்ற சீமாற சீவல்லப னது மகனன வரகுணன் என்ற இளவரசன், தந்தைக் கெதிராகக் கலகஞ்செய்து, இலங்கைக்குப் புகலிடம் தேடிவந்தான். வரகுணனை யாதரித்து அவனுக்கு உதவச் சேனன் முன்வந்தான். இதன் மூலம், தன் குடும்பமும், நாடும் முன்னர் அடைந்த அவமானத்தைத் துடைக் கலாமெனவும் அவன் நம்பினன். சேனன் படைகளைத் திரட்டி, குட்டகன் என்ற தளபதியின் தலைமையில் மகாதீர்த்தத்திலிருந்து அனுப்பிவைத்தான். சிங்களப்படை பாண்டிநாட்டை அடைந்த வேளை யில், பாண்டிய மன்னன் பல்லவப் படையுடன் போர் செய்து, அரிசில் போர்க் களத்தில் தோல்வியெய்தினன். எதிர்ப்பேது மில்லாத தால், மதுரையை நோக்கி முன்னேறிய சிங்களப் படையானது தலை நகரை முற்றுகையிட்டு வெற்றிகொண்டது. தலைநகர்ரைக் காப்பாற் றச் சென்ற பாண்டிய மன்னன், காயமடைந்து பின்னர் மடிந்தான். சிங்களத் தளபதியால், வரகுணன் (2ம் வரகுணவர்மன் என்ற பட் டப் பெயருடன்) அரசனுக்கப்பட்டான். முன்னர் இலங்கையிலிருந்து அபகரித்துச் செல்லப்பட்ட திரவியங்களை மீட்டதோடு, பாண்டியரின் அரச திரவியங்களையும் பெற்று, குட்டகனது தலைமையிற் சென்ற படை திரும்பியபோது, அதற்கு இலங்கையில் நல்ல வரவேற்பு அளிக்

மானவர்மன் மரபினரின் ஆட்சி 169
கப்பட்டது. 2ம் சேனன் காலத்தில் ஏற்பட்ட பெருவெற்றியால், அவனுக்கு மதுரா-துணு முதலான பட்டங்கள் அவனது கல்வெட்டுக் களில் அளிக்கப்பட்டுள்ளன. மதுரையை வென்றமையே இவனது நீண்ட ஆட்சிக்காலத்தின் முக்கிய நிகழ்ச்சியெனினும், பல அமைதிக் காலப் பணிகளும் அதில் இடம்பெற்றன என்பதை நாம் அறிதல் வேண்டும். இரத்தினபாசாதவின் சிலையை மீண்டும் அங்கே நிறுவியது முதலான சமயப்பணிகளை அவன் ஆற்றினன். பாசனத்துறையில், மினிப்பேத் திட்டத்தை விரிவுபடுத்தியதுடன், மகாகணதராவக் குளத் தையும் பழைய நிலைக்குக் கொணர்ந்தான். தனது ஆட்சிக் காலத் தின் பெரும் பகுதியை இவ்வாறு நற்பணிகளாற்றப் பயன் படுத்திய 2ம் சேனனது ஆட்சியும் 887ல் முடிவுற்றது. மாணவர்மன் மரபில் வந்த முக்கிய மன்னர்களில் இவனும் ஒருவனென்பது உறுதி. 2ம் உதயன் என்பவனே 2ம் சேனனைத் தொடர்ந்து ஆட்சியைப் பெற்ருன். இவ னுடைய ஆட்சியுடன், ஒன்பதாம் நூற்ருண்டு ஏறத்தாழ முடிவுறு கின்றது. அடுத்த நூற்ருண்டின் இலங்கை வரலாற்றை - இலங்கை சோழரால் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டமை வரை - அடுத்த அத் தியாயத்திற் காண்போம். அடுத்த நூற்றண்டிலும் இலங்கை மன் னர்களுக்கும் பாண்டியருக்கும் தொடர்புகள் இருந்தனவாயினும், அவை நட்புறவு அடிப்படையில் இருந்ததைக் காணலாம். இவ்வாறு தொடர்புகள் அமையக் காரணமாகவிருந்தது சோழர்களின் எழுச் சியே. எனவே இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் 10ம் நூற் ருண்டு சோழருக்குரிய தென்பதை அடுத்த அத் தி யாயத் திற் காண்போம்.
பயிற்சி:
1) பல்லவ, பாண்டிய, சாளுக்கிய மன்னர்களில் முக்கியமானவர்களைத் தெரிவுசெய்து, அவர்களுடைய ஆட்சிக் காலங்கள், சாதனைகள் ஆகிய வற்றைக் குறிப்பிடுக.
2. 7ம் நூற்றண்டு, 8ம் நூற்றண்டுகள் இலங்கை வரலாற்றில் என்ன முக்கிய தன்மைகளைக் கொண்டிருந்தன? இவற்றேடு 9ம் நூற் றண்டை ஒப்பிட்டு வேறுபாடுகளைக் கூறுக.
தேர்வு விளுக்கள்:
1. 7ம், 8ம், 9ம் நூற்றண்டுகளில் தென்னிந்தியாவில் நிலவிய அர சியல் நிலைமைகளைச் சுருக்கமாகக் கூறி, இலங்கைக்கும் தென்னிந் தியாவுக்குமிடையே அக்காலத்தில் நிலவிய அரசியற் ருெடர்புகளை விளக்குக.
2. சிறுகுறிப்புக்கள் எழுதுக: 1ம் வரகுணன், மாமல்லன்; 2ம் மகிந்
தன்; 2ம் சேனன்; சீமாற சீவல்லபன்.
22

Page 95
அத்தியாயம் பதினுன்கு சோழரின் எழுச்சியும், அனுராதபுரத்தின் வீழ்ச்சியும்
1. சோழப் பேரரசின் எழுச்சி i. சோழர் தாக்குதல்கள் i. அனுராதபுர அரசின் சரிவு
அனுராதபுர காலத்தின் இறுதி நூற்ருண்டின் (10ம் நூற்.) வரலாற்றையே நாம் இவ்வத்தியாயத்திற் கூறவிருக்கின்ருேம். அந் நூற்ருண்டைச் சேர்ந்த இலங்கை மன்னர்களின் ஆட்சி பெரும் பாலும் அரசியற் சிறப்பைப் பெற்றிருக்கவில்லை. அவர்களுள் 5ம் காசி யப்பன், 4ம் மகிந்தன் ஆகியோர், ஏனையோரை விடச் சிறிது மேம் பட்டு நிற்பதால், அவர்களுடைய ஆட்சிக்கால நிகழ்ச்சிகள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும். 10ம் நூற்றண்டின் அரசியற் போக்கை நாம் நோக்கும்போது, இலங்கை அரசியலில் ஒரு தேய்வுநிலை உண் டாவதை அவதானிக்கலாம். (பலவீனர்களான மன்னர்கள் பலர் ஆட்சி செய்ததை, ஆட்சியலுவல்களில் மன்னர் அதிக அக்கறை கொள்ளாமை, உயர் அதிகாரிகள் அரசியலில் அதிக பங்கு கொண் டமை போன்ற பல காரணங்களால்) இத்தேய்வு நிலையுருவானது. இதன் விளைவாக, அரசியற் சீர்கேடுகளும், ஒழுங்கீனங்களும் மலிந் திருந்தன. இவ்வாறு, குழப்பநிலைகள் முற்றி, "நன்கு பழுத்த கனி யாக அனுராதபுரம் (இலங்கை) இருந்தமையால், அது தானகவே சோழர் கையினுள் வீழ்ந்தது’ எனக் கூறப்படுகின்றது. சோழர் இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டமைக்கு அவர்களுடைய ஆக்கிரமிப்பு அல்லது விரிவாக்கற் கொள்கை, இலங்கையின் அரசியல் நிலை சாதகமாகவிருந்தமை என்பன மட்டுங் காரணமாகவிருந்தன எனக் கொள்ளவியலாது. 10ம் நூற்ருண்டில் இலங்கை மன்னர்கள் கடைப்பிடித்த அயல் நாட்டுக் கொள்கை சோழரைப் பகைப்பதாகவே அமைந்ததால், அதன் பலனைப் பின்னர் இலங்கை அனுபவித்தது. சோழப் பேரரசு வளர்ச்சியெய்திய போது அதனை எதிர்த்த கூட்டுற வில் இலங்கையும் சேர்ந்து கொண்டதனுல், இலங்கையையும் சோழர் தாக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை மன்னர்களின் கொள்கை உருவாக்கியது. எனவே, இவ் வத்தியாயத்தில், சோழப் பேரரசு அடைந்த வளர்ச்சியையும், அதன்பால் இலங்கை மன்னர்கள் கடைப் பிடித்த கொள்கையையும், அதன் விளைவாக இலங்கைமீது மேற் கொள்ளப்பட்ட சோழர் தாக்குதல்களையும் அனுராதபுர அரசின் வீழ்ச்சியையும் தொடர்ச்சியாகக் கவனிப்போம்.

சோழர் எழுச்சியும், அனுராதபுரத்தின் வீழ்ச்சியும் 171
i. சோழப் பேரரசின் எழுச்சி
சங்க காலத்தில் தமிழ்நாட்டில் சுதந்திரத்துடன் திகழ்ந்த சோழ அரசு, களப்பிரர் ஆட்சியின்போது தன் சுதந்திரத்தை முற்ருக இழந்திருந்தது. களப்பிரர் ஆட்சியின் முடிவில், தமிழ்நாட்டின் வட் பகுதியிற் பல்லவஞ்ம், தெற்கில் பாண்டியரும் தமது பேரரசுகளை நிறுவியபோது, சோழர் தொடர்ந்து சிற்றரசர்களாகவே உறை யூர்க்கு அருகில் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சுமார் ஆறு நூற் ருண்டுகளுக்கு மேல் அரசியல் முக்கியத்துவம் இழந்திருந்தி சோழர், ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து, மிகக் குறுகிய காலத் தில் வியக்கத்தக்க வகையில் ஒரு பேரரசை அமைத்துக் கொண்ட னர். இப் பேரரசு வளர்ச்சிபெற்ற போது, முதலிற் பல்லவரினதும், பின்னர் பாண்டியரினதும் அரசுகள் அதில் மறையலாயின. தென் னகம் முழுவதையும் அடக்கிய சோழப்பேரரசு ராஜராஜன், ராஜேந்திரன் என்ற பெருமன்னர் காலத்தில் இந்தியாவுக்கு வெளியேயும் விரிவு பெற்று இந்தியாவில் இடம்பெற்ற பேரரசுகளில் தனிப்பெருமை 4டையதாக விளங்கியது. சோழப் பேரரசு இவ்வாறு அரசியலாதிக் கத்தில் உச்சநிலை பெற்ற காலத்தில், தமிழரின் வரலாற்றிலும் உச்ச நிலையேற்பட்டது; தமிழிலக்கியமும், பண்பாடும் சோழப் பேரரசின் காலத்திலேயே மிகச் சிறப்புடன் திகழலாயின.
இப் பேரரசை நிறுவிய சோழர், விஜயாலயன் வழிவந்த சோழ ரெனப்படுவர். பாண்டியப் பேரரசு நிலவிய காலத்தில் பாண்டிய ரின் திறையரசராக விளங்கிய முத்தரையரிடம், அவர்களின் ஆட்சி யைக் கவர்ந்து, சோழ அரசைத் தஞ்சாவூரில் நிறுவியவனே விஜயாலயன். இவ்வாறு விஜயாலயன் சோழ அரசை மீண்டும் உயிர்பெற வைத்தது 9ம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலாகும். விஜயாலயன் உண்மையில் பல்லவரின் சிற்றரசனகவே தொடங்கினனெனினும், காலப்போக்கில் அவன் தனியரசன் போல நடந்து, பட்டங்கள் சூடியும், தன் பெய ரில் பொறிப்புக்கள் செய்தும் வரலானன். இவனது மகஞன முத லாம் ஆதித்தன் (871-907) என்பானே, சோழப் பேரரசின் பெரு மைக்கு அடிகோலியவனுவன். பல்லவர்க்கும் பாண்டியர்க்குமிடையே மூண்ட போரில், பல்லவர் சார்பிற் போர் செய்து அபாராஜித பல்ல வனுக்குத் திருப்புறம்பியத்தில் (880) வெற்றி கிட்ைக்க வைத்தான். பல்லவரின் திறையரசர்களில் முக்கியமானவனக விளங்கிய ஆதித்த சோழன், விரைவில் அபராஜித பல்லவனைக் காஞ்சிக்கருகில் வென்று, பல்லவர் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டித் தொண்டைமண்டலத்தை இணைத்துக் கொண்டான். பாண்டியருடனும் போரை நடத்திக் கொங்கு நாட்டை வென்றன். இவ்வாறு ஆதித்தன் பெற்ற வெற்றி களால், சோழ அரசு மிகவும் பரந்து விளங்கலாயிற்று.

Page 96
72 பண்டைய ஈழம்
ஆதித்தசோழனது சேர ராணிக்குப் பிறந்த 1ம் பாராந்தக சோழன் (907-955), தன் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியிற் பெரும் வெற்றி களை யீட்டிச் சிறப்புப் பெற்றிருந்தும், ஆட்சி முடிவில் இராஷ்டிரகூட ரிடம் அவனெய்திய தோல்வி சோழ அரசில் இருள் நிறைந்த ஒரு காலப் பகுதியைத் தொடக்கிவைத்தது. பாண்டியர்களுக் கெதிரே அவன் முதலில் வெற்றியீட்டி, "மதுரை கொண்ட" எனப் பட்டஞ்சூட்டி ஞன். சில ஆண்டுகளின் பின் மீண்டும் ஒரு படையெடுப்பை பாண் டிய மன்னன் 2ம் இராஜசிம்மனுக்கு எதிரே நடத்தி அவனை மதுரை
9ம், 10ம் நூற். தென்னிந்தியா
யினின்றும் கலைத்து விட்டான். பாண்டியருக்கு எதிரே நடந்த சண்டை யில், அவர்களுக்கு உதவிக்கு வந்த (5ம் காசியப்பன் அனுப்பிய) ஈழப் படையையும் வென்றதால், “மதுரையும் ஈழமுங் கொண்ட எனத் தன் பட்டத்தை நீட்டினன். இலங்கைக்கு ஓடிய பாண்டியன்(இராஜ சிம்மன்) அங்கு விட்டுச் சென்ற முடியையும் அணிகலன்களையும் பெறப் பின்னர் பராந்தகன் இலங்கைமீது மேற்கொண்ட படையெடுப்பு
 

சோழர் எழுச்சியும், அனுராதபுரத்தின் வீழ்ச்சியும் 173
வெற்றி தராததைப் பின்னர் அறிவோம். இலங்கையில் படை யெடுப்பை மேற்கொண்டிருந்த சமயத்திலேயே, 3ம் கிருஷ்ணன் என்ற இராஷ்டிரகூட மன்னனது படையெடுப்பு சோழப் பேரரசுக்கெதிராக நடைபெற்றது. முன்னர், தனது பெயரன் கன்னரதேவ்னது அர சுரிமை குறித்து ஒரு படையெடுப்பை மேற்கொண்ட 2ம் கிருஷ்ணன் திருவல்லத்தில் பராந்தகனுல் தோற்கடிக்கப்பட்டான். ஆன ல், 3ம் கிருஷ்ணன் படையெடுத்து வந்தபோது, பராந்தகன் பல தொல்லை *ளிடையே அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். அவனுக் கெதிராகக் கங்கர், வைதும்பர் முதலான சிற்றரசர்கள் இராஷ்டிரகூடருடன் சேர்ந்து கொண்டனர். தொண்டை மண்டலம் மீது படையெடுத்து வந்த 3ம் கிருஷ்ணன் அதை வெற்றிகொண்டதால், சோழப் )$t_תוgr சின் வடபகுதியைச் சில ஆண்டுகள் அவன் ஆட்சிசெய்தான். தெற்கே யும் இராமேஸ்வரம் வரை பல தாக்குதல்களை நிகழ்த்தி, கலகங்கள் ஏற்பட ஊக்கமளித்தான். பராந்தகனது ஆட்சியின் முடிவில் ஏற். 'ட்'- தாழ்வும் இருளும் சுமார் முப்பது ஆண்டுகள் வரை நீடித்தன.
இராஜராஜன் (985-1014) அரசனன போது, இராஷ்டிரகூடர் ஆட்சியினின்றும் தொண்டைமண்டலம் விடுவிக்கப்பட்டு, சோழப் பேரரசு ஓரளவு தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டது. இராஜ ராஜனுடன், ஒரு நூற்றண்டுக் காலம் புகழ்மிகு வரலாறு தொடங் கியது. தனது ஆட்சிக்கால நிகழ்ச்சிகளை (குறிப்பாக போர் வெற்றி களே)க் கூறும் "பிரஸஸ்தி"களைப் பொறித்து வைத்துச் சென்றதால், அவற்றைச் சுருக்கமாகக் கூறினும் அது விரிவாகவேபடும், ஆட்சித் , தொடக்கத்தில், ஒரு முக்கோணக் கூட்டுறவை (பாண்டிய-சேர-சிங் களக் கூட்டுறவை)த் தகர்த்து, நீலகிரி வரையுள்ள மேலை மலை (குடகு) நாட்டைப் பேரரசில் இடம்பெற வைத்தான். இலங்கையின் வட பகுதியை (இராஜரட்டையை) வென்று, அங்கும் சோழராட்சியை நிறுவினன். மைசூர்ப் பகுதியில், கங்கபாடியை வென்று, மேலைச் சாளுக்கிய (கல்யாணியைச் சேர்ந்தவர்கள்) அரசனன சத்தியாசிரய னுடன் பொருது, அவனைத் தோற்கடித்தான். துங்கபத்திரை யாற் றுக்குத் தெற்கேயுள்ள தென்னகம் முழுவதும் பேரரசன் இராஜராஜ னது ஆட்சியில் அமர்ந்தது. கீழைச் சாளுக்கியர் (வேங்கியைச் சேர்ந் தவர்கள்) இராஜராஜனது உதவிபெற்று அரசை மீட்டுக்கொண்ட தால், இராஜராஜனது மேலாணையை ஏற்றிருந்தனர். இவர்களுடன் உண்டான மணவுறவு, இரு அரசுகளையும் பின்னர் ஒரே மன்னனுக் குக் கீழ்க் கொண்டுவர உதவியது. இராஜராஜனது கடற்படை வலிமை யால், சேரரையும், இலங்கையையும் மட்டுமன்றி, மாலைதீவுகளையும் அவன் வெல்ல முடிந்தது. போர்த்திறமையும், நிருவாக ஆற்றலும் மட்டுந்தான் இவனைப் பேரரசனுக்கக் காரணங்கள் அல்ல. அவன் சமயத்துக்கும், வணிகத்துக்கும், கலைவளர்ச்சிக்கும் செய்த தொண்டு களும் குறிப்பிடத்தக்கவை. தஞ்சாவூரில் வானளாவி நிற்கும் பெருங் கோயில் இன்றுவரை அவன் புகழை நிலைநாட்டி வந்துள்ளது.

Page 97
174 பண்டைய ஈழம்
இராஜராஜனது மகனன இராஜேந்திரன் (1014-1044), தந்தையை விஞ்சிய போராற்றலும், புகழுமுடையவன். இவனும் (கல்யாணி) மேலைச் சாளுக்கியருடன் போரைத் தொடர்ந்து, வன வாசி, கொள்ளிபாக்கை, மானியகேட (மால்கேது) போன்ற இடங் களேத் தாக்கி வெற்றி கொண்டான். சேரமன்னனுக்கும், பாண்டி யருக்கும் எதிரே போர் தொடுத்து வெற்றி பெற்றதும், தென் னிந்தியா முழுவதும் இராஜேந்திரனுக்குப் பணியலாயிற்று எனலாம். வேங்கியில் தனது உறவினனுடைய உரிமையை மறுக்க நடை பெற்ற முயற்சியை முறியடிக்கச் சென்ற இராஜேந்திரன் அது முடிந்ததும், தன் படையுடன் மேலும் வடக்கே செல்ல லானு ன். அவனது படை கங்கைவரை வெற்றியுடன் சென்று, அந்நதியைக் கடந்து, அப்பகுதியின் ஆட்சியாளனை (1ம் மகிபாலனை)யும், மற்றும் மூன்று மன்னர்களையும் தோற்கடித்து, மீண்டது. கங்கை வரை தன் படையை வெற்றியுடன் கொண்டு சென்று மீண்ட சாதனையை நினைவுபடுத்த கங்கை கொண்ட என்ற விருதைச் சூடியதுடன், ஒரு நகரை அமைத்து அதைத் தன் தலைநகராகக் கொண்டு, அதற்குக் கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயரிட்டான். பூரீவிஜயராச்சியத்துடன் முதலில் சுமுக உறவுகள் நிலவியபோதும், இராஜேந்திரனது கடலாதிக்கக் கொள்கை, கடல் வலிமையுடைய அப்பேரரசுடன் அவனைமோ த வைத்தது. எனவே, இவனுடைய காலத்தில் நடைபெற்ற பெருங் கடற்படையெடுப்பு, பூறிவிஜயப் பேரரசுக்கு எதிரே (1025) மேற்கொள்ளப்பட்டு, பெருவெற்றியில் முடிவுற்றது. கடாரம், ழரீவிஜய முதலான பல நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்டன. அதன் அரசனுன விஜயோத்துங்கவர்மன் கைதி யாகக் கொண்டு செல்லப்பட்டான். எனினும், அவ் விராச்சியத் தையோ அதன் பகுதிகளையோ இராஜேந்திரன் ஆண்டான் எனக் கருதமுடியாது. இப் படையெடுப்புக்கு முன்னரே இலங்கை மீதும் ஒரு படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு இலங்கை முழுவதும் சோழப் பேரரசிற் சேர்க்கப்பட்டது. இராஜேந்திரனது ஆட்சிக் காலத்தின் போது, குறிப்பாகக் கடைசிப் பத்தாண்டுகளாக, சோழப் பேரரசு மட்டற்ற பெருமையுடன் விளங்கியது. இவ்வாறு எழுச்சி பெற்று வந்த சோழப்பேரரசுடன் இலங்கை மன்னர்கள் கொண்ட உறவுகளை அடுத்த பகுதியிற் காண்போம். சோழப் பேரரசின் தேய்வு, பண்பாடு பற்றிப் பின்வரும் அத்தியாயங்களிற் படிப்போம்.
i சோழர் படையெடுப்புக்கள்: (10றுாற். இலங்கை)
தென்னிந்திய அரசியல் வரலாற்று நிகழ்ச்சிகளுடன் இலங்கை
அரசிய்லும் பின்னிப் பிணைந்திருந்தமையே 10ம் நூற்றண்டு இலங்கை வரலாற்றின் முக்கிய தன்மையாகக் காணப்படுகின்றது.

சோழர் எழுச்சியும், அனுராதபுரத்தின் வீழ்ச்சியும் 175
இந்திய வரலாற்று நிகழ்ச்சிகள் இலங்கையை நேரடியாகப் பாதிக்கு மளவுக்கு இலங்கையின் அரசியற் போக்கும் அயல் நாட்டுக் கொள் கையும் அமைந்திருந்தன. உள்நாட்டுப் பாலன்த்தில் முன்னர் குறிப்பிடப்பட்ட தேய்வு நிலையும் சீர்கேடுகளுமே காணப்பட்டன. அரசர்களின் கட்டுப்பாட்டை மீறும் அளவுக்கு அதிகாரிகள் செல் வாக்குடையவர்களாக விளங்கினர். இத்தன்மை பத்தாம் நூற் ருண்டின் முதலாட்சியாளனுன 4ம் காசியப்டன் காலத்திலேயே இருந்ததாகக் கூறலாம். சேனபதிகள் இருவர் (இளநாகன், ரக்கன்) அவன் காலத்தில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தனர்.
* . . ." , , , , , މި . . . . : " { • 1 : ; ; !! :"l ; ; 5ம் காசியப்பன் (914-923), 10ம் நூற்றண்டுத் தொடக்கத்தில் ஆட்சிசெய்த ஒரு முக்கிய மன்னனுவான். 2ம் சேனனது மகளுறன இக் காசியப்பன், முதுமை யெய்திய காலத்திலேயே ஆட்சியைப் பெற்றன். கல்வியிற் றேர்ச்சி பெற்ற இம் மன்னன், சிங்களச் சொற்ருெகுதி யொன்றை(தம்பிய-அடுவ-கடபத)இயற்றிப் பெருமை தேடினன். பெளத்தக் கோட்பரடுகளையும் நன்கு கற்று அறிவு பெற்றவகை விளங்கியதால், குருமார்களுக்கே அவற்றை ஓதினன் எனப்படுகின்றது. சமயப்பணிகள் பலவற்றை இவன் மேற்கொண் டிருந்தான். இருப்பினும், இவனுக்கு வரலாற்று முக்கியந்தரும் நிகழ்ச்சி, சோழருக் கெதிராகச் சண்டைசெய்ய ஒரு படையை இந்தியாவுக்கு அனுப்பியமையே ஆகும். பராந்தகன் பாண்டிநாடு மீது போர் தொடுத்து அதன் அரசனன 2ம் மாறவர்மன் இராஜ சிம்மனைக் கலைத்துவிடவே அவன் இலங்கை மன்னனிடம் படை யுதவி கோரினன். இதற்கமையவே, சக்கசேனுபதியின் தலைமையில் ஒரு படையைக் காசியப்பன் அனுப்பி வைத்தான். 915ல் ந-ை பெற்ற வெள்ளூர்ச் சண்டையில், பராந்தகனது படை பாண்டிய சிங்களப் படைகளைத் தோற்கடித்து விடவே, சிங்களப் படை இலங்கை மீண்டது. சிங்களப் படைத் தலைவன் போரில் மாண்டிருத் தல் வேண்டும். காசியப்பன் பாண்டியருக்குச் சார்பாகப் படை யுதவியனுப்பியமையால், 10ம் நூற்ருண்டில் இலங்கை கடைப் பிடித்த அயல்நாட்டுக் கொள்கையை உருவாக்கிய பெருமை அவனைச் சார்ந்தது. வளர்ந்து வந்த சோழரின் வலியை அடக்கு தற்குப் பாண்டியருடன் சி ங் க ள மன்னர்கள் ஒத்துழைத்ததால், பாண்டியரைச் சோழர் வென்றபின் இலங்கையையும் அவர்கள் தாக்கலாயினர். 5ம் காசியப்பனுக்குப்பின், ஆட்சியிலிருந்த 4ம் தப் புலன் (924-935) காலத்தில் பாண்டிய மன்னன் 2-ம் இராஜசிம்மன் சோழர்ால் விரட்டப்பட்டு இலங்கைக்குப் புகலிடம் தேடிவந்தான். தப்புலன் படையுதவியை அளிக்கவிரும்பியும், இராணுவத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இதற்கிசைய மறுத்தனர். பாண்டிய மன்னன் தொடர்ந்து இலங்கையில் இருப்பதையும் அவர்கள்

Page 98
176 பண்டைய ஈழம்
விரும்பாததால், தனது முடியையும் அரச திரவியங்களையும் இலங்கை யிலேயே விட்டு, தனது தாயின் நாடான சேரநாட்டுக்கு ஓடினன். இலங்கைக்கும் பாண்டியருக்கும் இடையே இருந்த இராணுவக் கூட்டுறவு இப்போது செயற்படாதிருந்த போதும், அரசியற் கூட்டுறவு இன்னும் குலையாதிருந்தது.
தப்புலனுக்குப் பின் ஆட்சி செய்த மன்னர்கள் நிருவாகத் திறமை குறைந்தவர்களாகவே விளங்கினர். 4ம் உயதன் (946-954) காலத்தில் நிருவாகச் சீர்கேடுகளும், ஊழல்களுமே மலிந்து காணப் பட்டன. பராந்தக சோழன் தன் வலிமையை நன்கு வளர்த்த பின், மதுரையில் பாண்டிய அரசனக முடிசூட எண்ணி, இலங்கை யில் முன்னர் பாண்டிய மன்னன் (இராஜசிம்மன்) விட்டுச் சென்ற முடியையும் அணிகலன்களையும் அனுப்பி வைக்குமாறு தூதுவர்களே இலங்கைக்கு அனுப்பினன். பராந்கதனது கோரிக்கைக்கு உதயன் மறுக்கவே இலங்கை மீது ஒரு படையெடுப்பு மேற் கொள்ளப் பட்டது. பராந்தகன் அனுப்பிய படைகளை யெதிர்க்கச் சென்ற சிங்களப் படை தோல்வி யெய்தவே, உதயன் அரச அணிகலன் களுடன் உருகுணைக்கு ஓடினன். இதே காலத்தில் 3ம் கிருஷ்ணன் (இராஷ்டிரகூடன்) சோழப் பேரரசைத் தாக்கியதால் தாம் வந்த நோக்கம் நிறைவேருமலே சோழப் படைகள் தமது நாட்டுக்கு மீளலாயின.
3ம் கிருஷ்ணனது படையெடுப்பைத் தொடர்ந்து சோழப் பேரரசில் மூண்ட குழப்ப நிலையிலிருந்து மீண்டும் பழையநிலைக்கு அதைக் கொண்டு வர, சுதந்திரம் பெற்று விட்ட பாண்டியரை அடக்குதல் அவசியமாயிற்று. இச் சூழ்நிலையிலும், பாண்டி யர்க்குச் சார்பாகவும் சோழருக் கெதிராகவுமே இலங்கை மன்னர் கள் தமது கொள்கையை மாற்ருது கடைப் பிடித்து வந்தனர். சுந்தரசோழன் என்ற 2ம் பராந்தகன் ஆட்சியின் போது (956-973) சோழப் பட்ைகள் பாண்டியரைச் சேவூரில் வென்று, வீரபாண்டி யனை(மன்னனை)க் கலைத்து விட்டன. இவ் வெற்றியின் தொடர்ச்சி யாகவே, கொடும்பாளூரைச் சேர்ந்த சிறியவேளார் என்ற சோழத் தளபதி இலங்கை மீதும் ஒரு படையெடுப்பை மேற் கொண்டான். இப் படையெடுப்பு நிகழ்ந்த போது இலங்கையை ஆண்டவன் 4ம் மகிந்தன் ஆவான். 4ம் மகிந்தனும் (956-972) 2ம் பராந்த கனும் சமகாலத்தவர்கள். கலிங்கத்தைச் சேர்ந்த இளவரசி யையே தனது முக்கிய இராணி யாக்கினன். இக்கலிங்க த்தை இந்திய்ாவிலுள்ளதாகக் கொள்ளாது, பூரீவிஜயராச்சியத்தை (மலேசியா)ச் சேர்ந்ததாக் கூறும் ஒரு புதிய கருத்தும் அண்மை யில் வெளியிடப் பட்டுள்ளது. இது எவ்வாறிருப்பினும், அரச வையில் கலிங்கக் குழுவினர் செல்வாக்குப் பெற்றமைக்கு இம்

சோழர் எழுச்சியும், அனுராதபுரத்தின் வீழ்ச்சியும் 177
மணவினை மேலும் உதவியது. இவனது ஆட்சிக் காலத்தில் நடை பெற்றதாகச் சூளவம்சம் குறிப்பிடும் வல்லப அரசனது படை யெடுப்பு சோழப் படையெடுப்பைக் குறிப்பதாகச் சிலர் கொண்ட போதும், 3ம் கிருஷ்ணனது இராஷ்டிரகூடப் படையெடுப்பையே குறிக்கும் எனக் கொள்ளுதல் முறையாகும். இராமேஸ்வரம் வரை தனது தாக்குதல்களைக் கிருஷ்ணன் நிகழ்த்தினனென முன்னரே கூறியுள்ளோம். அவ்வேளையில் இலங்கையின் வடபகுதிக்கும் (நாக தீபம்) ஒரு பட்ையை அவன் அனுப்பியிருத்தல் கூடும். இப்படை யை எதிர்த்த சிங்களப் படை வெற்றிகண்டது. மகிந்தனது ஒன்பதாம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்றில், *இந்திய மன்னர்கள் அனைவரையும் சேனபதி சேனன் புறங்கண்டதாகக் கூறுவதை நோக்கும் போது, சிங்களப் படை வெற்றி பெற்றிருக்க வேண்டுமெனப் படுகின்றது. அதே வேளையில், 3ம் கிருஷ்ணன் தனது கல்வெட்டொன்றில் இலங்கையிலிருந்தும் திறைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளான். இராஷ்டிரகூடப் படையெடுப்பை யடுத்தே, சோழப் படையெடுப்பு நடைபெற்றிருக்கவேண்டும். இப் படை யெடுப்பும் வெற்றிபெறத் தவறியது. படைத்தலைவன் சிறிய வேளார் களத்தில் மடிந்ததாகவே நம்பப்படுகின்றது. 4ம் மகிந்த னது ஆட்சியின்போது, சங்கத்தினரின் நலனைப் பேணுதற்குப் பல நடிவடிக்கைகளை அவன் மேற்கொண்டதை, குறிப்பாகத் தலை நகரிலுள்ள முக்கிய விகாரைகளின் பாலனம் பற்றிய ஒழுங்கு விதிகளை அவன் வகுத்ததை, அவனது பொறிப்புக்களால் அறிய முடிகின்றது. சூளவம்சத்தில் மகிந்தனது அறப்பணிகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றுள், "பங்சுகூளிகர்' என்ற பிரிவுக் குரு மார்களின் நலனில் அதிக அக்கறையை அவன் கொண்டு, அவர் களுக்குப் பல வசதிகளை அமைத்துக் கொடுத்தான். நீர்ப்பாசன வசதிகளையும் அவன் பெரும்பாலும் நன்னிலைக்குக் கொணர்வதற்கு முயன்று வெற்றிகண்டான். அவனது ஆட்சி தண்ணளி நிறைந்த தாக விருந்ததால், ஏழ்மை, நோய் என்பவற்ருல் வருந்தியவர் களின் கவலையை அவனது வண்மை போக்கியது. 4ம் மகிந்தன் அனுராதபுரத்தில் ஆட்சிசெய்த இறுதிப் பெருமன்னன் எனக் கொள்ளல் ஏற்புடையதே.
i. அனுராதபுரத்தின் சரிவு
நான்காம் மகிந்தனுக்குப் பின், இலங்கையின் அரசியல் நிலை! மைகள் மிக விரைவாகச் சீர்கேடடைந்து வந்தன. கலிங்க இராணிக் குப் பிறந்த அவன் மகனுன 5ம் சேனன் (972-982), தன் பன்னி ரண்டாவது பராயத்தில் அரசைப் பெற்றுப் பத்தாண்டுகளின் பின் இறந்தான். மன்னனுக்கும் சேனபதி சேனனுக்கும் ஏற்பட்ட முரண்
23

Page 99
78 பண்டைய ஈழம்
பாடு காரணமாக, உதயன் என்ற அரசவை அதிகாரி அப் பதவிக்கு நியமிக்கப்பட்டான். இதன் பயனுக, சேனைத்தலைவன் சேனன் பை யுடன் வந்து, மன்னனை உருகுணைக்குக் கலைத்துவிட்டு, நிருவாகத்தைச் கவனித்தான். மகிந்தனது கலிங்கராணியும், இளவரசியும், யுவரா, னும் சேனைத் தலைவனையே ஆதரித்தனர். கலிங்க-சிங்களப் போட்டி யாகவே இப் புரட்சியைக் குறிப்பிடுவர். அரசன் மீண்டும் ஆட்சி யைப் பெற்றபோது, சேனைத்தலைவன் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டான். ஆட்சியாளனது பலவீனத் தையும், அரசியல் நிலைமையையும் பயன்படுத்தி, இராணுவத்தினர் கொள்ளையிலும் சூறையாடலிலும் ஈடுபட்டனர். அரசன் கூடா நடத்தையாளருடன் நட்பு வைத்திருந்தமையும், குடிப் பழக்கத்துக்கு அடிமையாக விருந்தமையும் நிர்வாகச் சீர்கேடுகள் அதிகமாதற்குக் காரணமாயின. இந் நிலையிலேயே, அனுராதபுரகால இறுதி மன்னன் 5ம் மகிந்தன் 982ல் அரசனுனன்.
5ம் மகிந்தன் (982-1029), முந்திய மன்னனன சேனனது தம்பி யாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், அவனது தாயான சங்கா கலிங்க இளவரசியோ வென்பது தெளிவில்லை. அனுராதபுரத்திற்குச் சென்று அவன் முடிசூடிக் கொண்டபோதும், அங்கு அவனுக்கு நிம்மதி கிடைக்க வில்லை. சேனபதி சேனனுற் கொண்டுவரப்பட்ட அந்நியரும், கூலிப் படையினரும் கட்டுக்கடங்காது குடிகளை வருத்தி வந்தனர். அரசனும் ஆட்சி அனுபவமற்றவனுக விருந்தமையும் இச் சீர்கேடுகள் மிகக் காரணமாயிற்று. இந் நிலைமையைப் பயன்படுத்திய குடிகள், வரிகளைக் கொடாது விட்டனர். அவர்களை அடக்கித் தனது அதிகாரத்தை நிலை நாட்ட முடியாதவனுகவும் மகிந்தன் இருந்தான். படையினர்க்கு நீண்டகாலம் வேதனம் வழங்காததால், அவர்களே கலகஞ்செய்யும் நிலைமையில் இருந்தனர். முடிவில், அவனது அரண்மனையை அவர்கள் முற்றுகை செய்து, தமது பணத்தைப் பெற முயன்றனர். மகிந்தன் சுரங்கப்பாதை யொன்ருல் தப்பியோடி, உருகுணைக்குச் சென்று அங்கு தனது ஆட்சியைத் தொடர்ந்து நடத்திவரலானன். பொருள் வேட்கை பிடித்த படையினரின் இச்சைகளைத் திருப்திப்படுத்தத் தலைநகர் கைவிடப்பட்டது. சிங்களப் படையினரும், அந்நியக் கூலிப் படையினரும் (சேரர், கன்னடர்) தம் மனம் போனவாறு கொள்ளையி லீடுபட்டனர். இவ்வாழுன அவல நிலையில் நாடும், தலைநகரும் இருந்த போதே, சோழரின் பெரும் படையெடுப்பு நடைபெற்றது. இராஜ ராஜன் காலத்திலும், பின்னர் இராஜேந்திரன் காலத்திலும் இரு படையெடுப்புக்கள் நடைபெற்றதன் விளைவாக, இலங்கை சோழராட்சி யின் கீழ்க் கொண்டுவரப்பட்டது; ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் தலைநகராகவிருந்த அனுராதபுரமும் அப் பெருமையைப் பொலன் னறுவைக்கு அளித்துப் பாழெய்தியது. (சூளவம்சம் ஒரு படையெடுப்பை மட்டுமே குறிப்பிட்ட போதும், இரு படையெடுப்புக்கள் நடைபெற் றதைச் சோழக் கல்வெட்டுக்கள் தெளிவாக்குகின்றன.)

சோழர் எழுச்சியும், அனுராதபுரத்தின் வீழ்ச்சியும் 179
இராஜராஜனது படையெடுப்பு 1993ல் (அல்லது முன்பாக) நடை பெற்றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகளில், கப்பல்களில் இலங்கை வந்த பெரும்படை இலங்கை அரசனை எரித்துவிட்டதெனக் கூறுவதைக் கொண்டு, இது கடற்படையெடுப்பு என்பது உறுதியாகின்றது. மேலே கூறப்பட்ட அவல நிலையில் இலங்கை யிருந்தமையினல், அவையிலகு வில் வடஇலங்கையை (இராசரட்டையை)க் கைப்பற்றிக் கொண்டன. வடஇலங்கை மும்முடிச் சோழமண்டலம்' என்ற பெயருடன், சோழப் பேரரசில் ஒரு புதிய மாகாணமாகச் சேர்க்கப்பட்டது. அனுராதபுரம் அழிக்கப்பட்டு, அங்குள்ள விகாரைகளில் இருந்த செல்வம் சூறை யாடப்பட்டது. தலைநகரம் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டது. அதற்கு "ஜனநாத மங்களம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. ஏற் கெனவே, சில அனுராதபுர அரசர்களால் தமது இராணுவ நிலை யமாக வும், தற்காலிக அரச பீடமாகவும் ஆக்கப்பட்டிருந்த பொலன்னறுவையைச் சோழர் தலைநகராக்கியமைக்கு அவர்கள் (UPCup இலங்கையையும் அடக்குதற்கு எண்ணங்கொண்டதே முக்கிய காரண மாகும். உருகுணையைக் கைப்பற்றப் பொலன்னறுவையே, அதிகமான கேந்திர நிலையத்திலிருந்தது. இராஜராஜனுல் தொடக்கப்பட்ட பேரரசுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சம், வங்காள விரிகுடாவைக் கட்டுப்படுத்தி அதை ஒரு ‘சோழ வாவி’’ ஆக்குவதாகும். இதைக் கைகூடச் செய்வதற்கு இலங்கை முழுவதையுங் கைப்பற்றி ஆளும் இ ரா ஜரா ஜனது எண்ணம் அவனது ம க ன் இராஜேந்திரனல் நிறைவேற்றப்பட்டது. 1017ல் இலங்கை மீது படையெடுத்து வந்த சோழவீரர் முதலில் ம கி ந் தனது இராணியையும் அரச அணி கலன்கள் முதலான பல பொருட்களையும் கைப்பற்றினர். உருகுணைக்கு ஒடிய மகிந்தனையும், ஒரு பொருத்தனையைச் செய்வதற்கெனக் கூறி ஏமாற்றிச் சிறைப்பிடித்துக் கொண்டு சென்றனர். எனவே 1017 முதல் இலங்கை முழுவதும் சோழர் ஆட்சியில் அமர்ந்தது. இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மகிந்தன் அங்கே 1029ல் இறந்தான். பண்டு காபயனல் தோற்றுவிக்கப்பட்டு, தேவானம்பிய திசன், துட்டகாமணி முதலான பல மன்னர்களாற் சிறப்பிக்கப்பட்ட அனுராதபுரம் மீட் சியேயில்லாத வகையில் பாழெய்திற்று. ‘அனுராதபுரகாலம்’ என அழைக்கப்படும் வரலாற்றுக் காலப்பகுதியும் இதனுடன்முடிவடைந்தது.
பயிற்சி: 1. சோழப் பேரரசின் வளர்ச்சியினைச் சில படிகளாகப் பிரித்துக் கூறுக.
இதனைக் காட்ட ஒரு விளக்கப்படம் வரைக. 2. சோழர் இலங்கையைக் கைப்பற்றிய காலத்துக்கு முந்திய அரசியல்
நிலைமைகளைச் சுருக்கிக் கூறுக. 3. சோழர் ஆட்சிமுறை, சோழர்காலப் பண்பாடு என்பன பற்றி எழுது
தற்குச் செய்திகளைத் (வேறு நூல்களில்) திரட்டுக.

Page 100
180 பண்டைய ஈழம்
4. **10ம் நூற்றண்டு இலங்கை மன்னர்களில் 5ம் காசியப்பன், 4ம் மகிந்தன் ஆகிய இருவருமே சிறப்புடையவர்கள்’ காரணம் கூறுக.
கூட்டுவேலைக்கு:
(இணைப்பிலுள்ள கால அட்டவனையைப் பார்க்குமுன்) பிந்திய அணு ராதபுர காலத்துக்கு ஒரு கால அட்டவணையைத் தயாரிக்கவும்.
தேர்வு வினுக்கள்:
1. இலங்கை சோழராற் கைப்பற்றப்படும் வரை, சோழப் பேரரசுக்கும்
இலங்கைக்குமிடையே நிலவிய தொடர்புகளைக் கூறுக.
2. இலங்கைப் படத்தில் கீழ்க் காண்பவற்றைக் குறித்துப் பெயரிடுக;-
பொலன்னறுவை; ஊராத்தோட்ட, மும்முடிச் சோழ மண்டலம் நாலந்தா; இசுருமுனியா; காலவாவி; நாகதீபம்.
இணைப்பு I:
மாணவர்மன் மரபினர்
(இரண்டாவது இலம்ப கண்ண அரச மரபு)
மாணவர்மன் 684一7丑& 2ம் சேனன் 853 - 887 5ம் அக்கிரபோதி 71 8-724 2ம் உதயன் 887-898 3ம் காசியப்பன் 724.730 4ம் காசியப்பன் 898-914 1ம் மகிந்தன் 73 0-733 5ம் காசியப்பன் 9 14-923 6ம் அக்கிரபோதி 733-772 3ம் தப்புலன் 92.3-924 7ம் அக்கிரபோதி 772-777 4ம் தப்புலன் 924- 935 2ம் மகிந்தன் 777-797 3ம் உதயன் 935-938 1ம் உதயன் 797-801 3ம் சேனன் 938-94.6 3ம் மகிந்தன் 801-804 4ம் உதயன் 94 6- 9 54 8ம் அக்கிரபோதி 804-815 4ம் சேனன் 954-956 2ம் தப்புலன் 81 5-8.31 4ம் மகிந்தன் 956-972 9ம் அக்கிரபோதி 831-833 5ம் சேனன் 9 72-982
1 ub G34687 Gör 833-853 5ம் மகிந்தன் 982-1029

இணைப்பு II
1 8 ፤
கால அட்டவணை
பிந்திய அனுராதபுர காலம் (451-1000)
இந்தியா
இலங்கை
குப்தர்ஆட்சியின் மறைவு
தாதுசேனன் த மி ழ  ைரத்
தமிழ்நாட்டில் களப்பிரர் தோற்கடித்து அரசனுதல் ஆட்சி|கால வாவி நிறுவப்படல் ஹஜூணர் படையெடுப்புக்கள் சீகிரியா தலைநகராதல் - சுவ 500 ரோவங்கள் தீட்டப்படல்
501- வாதாபியில் சாளுக்கிய அரகேசதாது வருகை (சிலா சின் தோற்றம் காலன்), பதவியா, நாச்ச 550 தூவ நிறுவப்படல்
99 - சிம்மவிஷ்ணு (பல்லவன்), | உருகுணை தனியரசாதல்
கடுங்கோன் (பாண்டியன்) மினிப்பே அணைக்கட்டு களப்பிரர் ஆட்சியை முடிவு அமைக்கப்படல் 600 கட்டல்
601- ஹர்ஷன் 2ம் புலிகேசியிடம் கந்தளாய் நிறுவப்பட்டமை
தோல்வியுறல்; தீவிர உள்நாட்டுப் போர்கள் வாதாபியை நரசிங்கவர்மன் மாணவர்மன் இந்தியாவுக் அழித்தல் கோடுதல்|ஹ"வான் சுவாங் வருகை |பல்லவர்படைத்துணைபெற்று
(நாலந்தா - காஞ்சி.) "பஞ்ச அரசைப் பெற முயலல் பாண்டவர் ரதங்கள்" முடி 650 |வுறல் 651- 12ம் நரசிம்மவர்மன் (இராஜ மாணவர்மன் அரசஞ்றதல்
சிம்மன்) கடற்கரைக் கோ பல்லவர் செல்வாக்குப் பரவு விலை மாமல்லபுரத்தில் நிறுதல்; தமிழர் செல்வாக்குக் 700 வுதல் -
குறைதல்

Page 101
182
காலம்
இந்தியா
இலங்கை
701
750
س 571 7
800
1ம் மாறவர்மன் இராஜசிம் மன் பாண்டிய அரசு விரிவு பெறல் 2ம் விக்கிரமாதித்தன்(சாளுக் கியன்) காஞ்சிமீது படை யெடுத்தல் வாதாபி மறைதல்
சாளுக்கிய அரசு
இராஷ்டிரகூட அரசின் தோ ந்றம், எல்லோராவில் கை லாசர் கோவிலின் தோற்றம் வரகுணன் 1 (பாண்டியன்) பல்லவ, கொங்கு, சேர மன் னர்களைப் புறங்காணல்
வைகுண்டப் பெருமாள் கோ விலை நந்திவர்மன் கட்டுதல்
இரத்தினபாசாத நிறுவப்
பட்டமை
80 -
850
சீமாற சீவல்லபனை 3ம் நந்தி வர்மன் தெள்ளாறில் வெல் லுதல்
தஞ்சாவூரை வெல்லுதல்
விஜயாலயன்
சீமாற சீவல்லபனது (பாண் டியப்) படையெடுப்பு
851 -
900
நிருபதுங்கன் சீமாற சீவல்ல
பனை அரிசில் களத்தில் வெல் லுதல்- 2ம் சேனன் மதுரை யை முற்றுகையிடல்
திருப்புறம்பியம் சமரில் பா ண்டியர் தோல்விபெற்றமைசோழர் எழுச்சிக்கு அது வழி கோலியமை.
பல்லவ ஆட்சியின் முடிவு
2ம் சேனன் ஆட்சி செய்தல் பாண்டிநாட்டுக்குச் சென்ற படை வெற்றி பெற்று மீளல்

183
காலம்
இந்தியா
இலங்கை
90
950
951
1 000
1ம் பராந்தகன் பா ன் டி யரை வெல்லுதல்; 2ம் கிருஷ்
ணன் தோல்விபெறல்.
வெள்ளூர்ச் சண்டை யி ல் பாண்டிய - சிங்களப் படை
தோல்வி காணல்.
3ம் கிருஷ்ணன் படையெடுப் பும் சோழப் பேரரசின் நலி வும் (தக்கோலம் சமர் 849)
சோழப் பேரரசு மட்டின்றி விரிவடைதல் (இராஜராஜன்
பேரரசனுக விளங்குதல்.)
தஞ்சைப் பெருங் கோவில்
அமைக்கப்படல்.
5ம் காசியப்பன் பாண்டிய ருக்குதவப் படையை அனுப் புதல் பாண்டிய மன்னன் (இராஜ சிம்மன்) புகலிடம் தேடி
வரல்
பராந்தகனது படையெடுப்பு
3ம் கிருஷ்ணனது(இராஷ்டிர கூடப்) படையெடுப்பு
993ல் இராஜராஜன் இராச ரட்டையைக் கைப்பற்றல்.
|பொலன்னறுவை த லை ந க
ராக்கப்பட்டமை.

Page 102
அத்தியாயம் பதினைந்து
அனுராதபுரகாலப் பண்பாடு 1: அரசியல், சமூக, பொருளியல் நிலைமைகள்
i, அரசியல் முறை i, சமூக நிலைமைகள் i, பொருளியல் வளர்ச்சி
அனுராதபுரம் இலங்கையின் தலைநகராக விளங்கிய நீண் 1
காலப் பகுதியில், இலங்கையில் நிலவிய அரசியல் முறை, சமூக, நிலைமை, பொருளியல் வளர்ச்சி போன்ற அம்சங்களையே இந்த அத்தியாயத்தில் சுருக்கமாகக் கவனிப்போம். இது ஒரு நீண்ட காலப்பகுதி யாதலின், தொடக்கத்திற் காணப்பட்ட நிலைமைகள் காலப்போக்கிற் சில முக்கிய மாற்றங்களை யடைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம். முந்திய அனுராதபுர காலத்திலிருந்த நிலைமை களிலும், பிந்திய அனுராதபுர காலத்தின் முறைகள் மாற்றமடைந் துள்ளன. இம் மாற்றங்களை நாம் ஆங்காங்கே சுட்டிக்காட்டுவோம். நாம் வாழும் காலத்துக்கு ஆயிரம் அல்லது ஈராயிரம் ஆண்டு களுக்கு முந்திய கால இலங்கையின் பண்பாட்டு நிலையை இவை காட்டுகின்றன என்பதை நாம் மனதிற் பதித்து, இத்துணைப் பழைய காலத்தில் இலங்கை மக்களின் அரசியல் வளர்ச்சி பொரு ளியல், கலைத்துறைச் சாதனைகள் என்பவற்றை நாம்" போற்றவும் மதிப்பீடு செய்யவும் வேண்டும். எமது தீவின் பழைமை மிகு வர லாற்றின் புகழ்பூத்த ஒரு காலப்பகுதி அனுராதபுர காலம் என்பதைக் கருத்திற் கொண்டு, நமது முன்னேரின் சாதனைகளை நாம் சரிவர அறிந்து பெருமைகொள்ளல் வேண்டும்.
i. அரசியல் முறை
முடியாட்சி; நமது வரலாற்றின் தொடக்க காலத்தில், இலங் கையில் நிலவிய ஆட்சிமுறை, இந்தியாவில் ஆரியரிடையே வழங், கிய முறையுடன் பெரிதும் ஒற்றுமையுடையதாக விளங்கியதில் வியப்பில்லை. ஆட்சிமுறையின் மிக முக்கிய அம்சம் முடியாட்சியாகவே இருந்தது. முதலில் மன்னர்கள் செல்வாக்குள்ள மக்கள் தலைவர் களாக விளங்கினர் பின், பரம்பரை முடியாட்சி உருவாகியிருத்தல் கூடும்; முழு நிருவாகத் தினதும் அச்சாணியாக மன்னனே விளங் கினுனென்பதும், அவனது தனிப்பட்ட திறமையைப் பொறுத்தே ஆட்சி சிறப்பெய்தியது என்பதும் கவனிக்கத்தக்கவை. அக்காலச் சமுதாய அமைப்புக்கேற்ப, கூடித்திரிய குலத்தவர்களாக மன்னர்கள் இருத்தல் அவசியமாகக் கருதப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த

அனுராதபுர காலப் பண்பாடு 1: I S
ஆண்களுக்கே சாதாரணமாக அரசுரிமை சென்ற தெனினும், இடை யிடையே ஒரு சில பெண்களும் ஆட்சியைப் பெற்றிருத்தலை நாம் கண்டுள்ளோம். மன்னனது மூத்த மகனுக்கே அரசுரிமை செல்ல வேண்டுமாயினும், மன்னனது தம்பிமார் இருப்பின், அவர்களுக்கே அது முதலில் சேர்தல் நியதியாகியது. அரசுரிமை நியதிகள் பெரும் பாலும் பின்பற்றப்பட்டதாயினும், அவ்வுரிமையை நிலைநாட்ட எழுந்த சண்டைகள் பலவற்றை நாம் அறிந்திருக்கின்ருேம். உரிமை தெளி வில்லாதவிடத்தும், உரியவர்கள் இளவயதினராக இருந்த காலத் திலும் இவ்வித சண்டைகள் அதிகமாக இடம்பெறலாயின. தந்தை வழியில் மட்டுமன்றி, தாய் வழியிலும் அரசமரபைச் சேர்ந்திருந் தாலே, ஒருவர்க்கு அரசுரிமை சேர்தல் உறுதியாகும். பிந்திய அனு ராதபுர காலத்தில், இது முக்கியமாகக் கவனிக்கப்பட்டது. காசி யப்பனை விட மொகல்லானன் கூடிய உரிமையுள்ளவனுகக் கருதப் பட்டமைக்கு இதுவே காரணமாகும். “காமணி’ ‘மகாராஜா” என்ற பட்டங்களோடு, அசோகன் சூடிய ‘தேவானம்பிய என்ற பட்டத் தையும் அவனது சமகாலத்தவனுன திசனும் அவனுக்குப் பின் ஆண்ட இலங்கை வேந்தர்களும் சூடியதைப் பொறிப்புக்கள் தெளிவாக்கு கின்றன. முன்னரே நாம் குறிப்பிட்டவாறு, மெளரியச் செல்வாக்கை இது புலப்படுத்தும். பிந்திய அனுராதபுர காலத்தில் "தேவானம் பிய' என்பதற்குப் பதில், ‘புத்ததாஸ்' என்பதையும், பின்னர் "சிறீ சங்கபோதி’ ‘சிலாமேகவண்ண முதலான பட்டங்களையுமே அதிக மாக மன்னர்கள் சூடினர். மேலும், அரசர்கள் தெய்வ உறவுடை யவர்கள் எனவும், சாதாரண மக்களைவிட மேம்பட்ட நிலையில் உள்ள வர்கள் எனவும் அவர்கள் கருதியிருந்த போதும், பிந்திய அனுராத புர காலத்திலேயே காசியப்பன் போன்ற மன்னர்களால் இக் கருத் துக்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டன. தெய்வவழியுரிமை பாராட்டி, தமது கொடுங்கோன்மைக்கும் அநீதிக்கும் சமாதானம் கண்ட சில இக்கால ஐரோப்பிய மன்னர்களுடன் ஒப்பிடும்போது, அனுராதபுரகால மன்னர்கள் குடிகள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்களாகவும், தண்ணளியுடையவர்களாகவும் எவ்வளவோ மேம்பட்டு நிற்றலைக் காணலாம். பெரும்பாலானவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமய வளர்ச்சிக்கும், பொருளியல் சுபீட்சத்துக் கும் உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதே.க
அபிஷேகம் என்ற முடிசூட்டு வைபவமும், தொடக்கத்திலிருந்தே இந்திய முறையைப் பின்பற்றி நடாத்தப்பட்ட தாயினும், இலங்கை யிற் பின்பற்றப்பட்ட முறைக்கும் பிராமணர்களின் நூல்களில் விதிக் கப்பட்டதற்கும் சில வேறுபாடுகள் இருந்தன. ஆட்சித் தொடக் கத்தில் மட்டுமன்றி, ஆண்டுதோறும் இது நடைபெற்றதாகக் கூறப்
24

Page 103
1 86 பண்டைய ஈழம்
படுகின்றது. மன்னர்களின் "அபிஷேக" வைபவத்தின் பின்னரே, அவர்களின் ஆட்சியாண்டுகள் கல்வெட்டுக்களிற் கணக்கிடப்பட்டுள் ளன. மெளரியர் (அசோகன்) தொடர்புக்குப் பின்னரே, இலங்கை மன்னர்கள் முறைப்படி முடிசூடினர் என்பதை முன்னர் குறிப்பிட் டுள்ளோம். அரசன் தன்னேடொத்த (கூடித்திரிய) குலத்து இராணி யுடன் (மகிஷி) அபிஷேக வைபவத்திற் கலந்துகொள்ளவேண்டி யிருந்தது. கங்கையிலிருந் தெடுக்கப்பட்ட நீரை வலம்புரிச் சங்கிலி ருந்து வார்த்து அபிஷேகம் செய்தவர்கள், முதலில் கூடித்திரிய குலக் கன்னியும், பின்னர் ஒரு பிராமணரும், இறுதியில் வைசியர் தலைவ ரான "செட்டியும் ஆவர்) க்ஷத்திரியர், பிராமணர், வைசியர் என்ற மூன்று சாதியினரும் சேர்ந்தே மன்னனை ஆளும்படி தெரிவு செய் துள்ளனரென்பதை அவனுக்கு ஒவ்வொரு தடவையும் நினைவூட்டிய பின், நெடுநாளைய சட்டம் வழமை என்பவற்றுக்கு அமைய அவன் ஆட்சிசெய்யத் தவறினல் அவனது தலை ஏழு துண்டுகளாகச் சித றுண்டு போகுமென அவன் மேலும் அச்சுறுத்தப்பட்டான். ஆரிய ரின் தொடக்ககாலச் சமுதாய, அரசியல் அமைப்பை இவ் வைபவம் நினைவூட்டுவதாக இருப்பதுடன், மன்னன் ஆற்ற வேண்டிய பணி களையும் அவனுடைய அதிகாரங்களையும் இவ்வபிஷேகம் புலப்படுத்து வதாகவுளது. அரசன் பண்டைய வழமைகளையும் சட்டங்களையும் நிறுவனங்களையும் பேணும் பொறுப்புடையவனுக விருந்தான். குடிகள் எவ்வகை அச்சங்களாலும் துன்புழுதவண்ணம் அமைதியைப் பேணு தலே அவனது தலையாய பணி. அமைதிக்குக் கெடுதியை விளைக்கும் சக்திகளைக் களைவதுடன்ஃ வெளிநாட்டிலிருந்து வரும் படையெடுப் பாளரையும் புறங்காணவேண்டியவனுக மன்னன் இருந்தான். தன் படைகளுக்குச் சில வேளைகளில் தானே தலைமைதாங்கிச் சென்று போர்க்களத்தில் அவற்றை வெற்றிப்பாதையில் நெறிப்படுத்துவதும் உண்டு. அனுராதபுரகால மன்னர்கள் பொருளியல், சமயப்பணிகளை யாற்றுவதில் தலைசிறந்து விளங்கினர் குளங்கள், கால்வாய்கள் நிறு விப் பயிர்ச் செய்கையை விருத்திபெறச் செய்வதில் அவர்கள் மட் டற்ற வெற்றியெய்தினர். தேவானம்பிய திசனது காலம் முதல், பெளத்தமத வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வந்தவர்களும் மன்னர் களே. பெருந்தொகையான தாகபங்கள் முதலான சமயக் கட்டி டங்களை நிறுவியதுடன், விகாரைகளுக்கு மானியங்களை வழங்கியும் பிற வகைகளிலும் பெளத்தம் நன்னிலைபெறக் காரணமானவர்கள் அவர்களே. நீதியின் ஊற்ருக விளங்கிய மன்னர்கள், நாட்டில் நீதி வழுவாது ஆட்சி நடைபெறுதற்குப் பொறுப்பாக விருந்ததோடு, தமக்கு வரும் முறையீடுகளையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர். ஆட்சி சிறப்புறவும், நாடு நலம்பெறவும் நீர் விழா முதலான விழாக் களையும், சமயப் பண்டிகைகளையும் மன்னர்கள் நடத்தி வந்தனர். சுருங்கக் கூறின், நாட்டின் காவலர் என்ற நிலையை எல்லா வகை

அனுராதபுர காலப் பண்பாடு 1: 87
களிலும் காப்பாற்றுவது மன்னர்களின் பொறுப்பாக விருந்தது. மன்னர்களின் அதிகாரத்துக்கு எல்லையே இல்லையெனினும், நடை முறையில் அவர்கள் பொதுமக்கள் கருத்து, தருமக் கோட்பாடுகள், பண்டைய வழமைகள் என்பவற்றை மதித்தே நடந்து வந்தனர். இவ் வாறு நடக்கத் தவறியவர்கள் தமது ஆட்சியை இழந்தமைக்கு எடுத்துக்காட்டுகள் உண்டு.
யுவராஜனும், அதிகாரிகளும்; அரசனை யடுத்து, அரசியல் முக்கி யத்துவம் பெற்று விளங்கிய இளவரசன் உபராஜா அல்லது யுவராஜா வென அழைக்கப்பட்டான். மன்னன் அரசையேற்றபின், உபராஜா அல்லது யுவராஜா என்ற பதவிக்கு இளவரசர்களில் ஒருவனை நிய மிப்பான். இவனே மன்னனுக்குப் பின் அரசுரிமையைப் பெறும் உரி மையைப் பெற்றிருந்தான். பிந்திய அனுராதபுர காலத்தில், யுவ ராஜா என்பதற்குச் சமமான பதமாக மஹாதிபாத என்பது பாலி யிலும், மாபா அல்லது "மஹயா என்பது சிங்களத்திலும் (கல்வெட் டுக்களில்) கையாளப்பட்டது. உருகுனேயின் நிருவாகத்துக்குப் பொறுப் பானவனக முந்திய அனுராதபுர காலத்தில் யுவராஜன் விளங்கினன். பிந்திய அனுராதபுர காலத்தில் அவனுக்குரிய பகுதியாக தக்கிணதேசம் (இப்போதைய வடமேல், மேல் மாகாணங்களில் சில பகுதிகளைக் கொண்டது) என்பதே வழமையாக இருந்து வந்தது. யுவராஜர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் செ ன் று அவற்றை நிர்வகித்தார்களெனக் கொள்ள இடமில்லை. தலைநகரில் இருந்து கொண்டே தமது மாகாண நிர்வாகத்தை நடத்தி, அவசியமேற்படும் போது அங்கு சென்று வந்தனர். ஆபா(பாலியில் ஆதிபாத) என்ற பட்டத்தையுடைய இளவரசர்களும் சில நிருவாகக் கடமைகளை ஆற் றினர்கள். இவ்வாறு முதலில் 'ஆபா' வாகவும், மாபாவாகவும் இருந் தவர்களே பின்னர் அரசைப் பெறக் கூடியதாகப் பிந்திய அனுராத புர காலத்தில் இருந்தது. 9ம் 10ம் நூற்றண்டுகளில், அனுராதபுர அரசின் (இராஜரட்டையின்) தெற்குப் பிரதேசங்களை மாபா என்ற யுவராஜனும், ஆபா என்ற அடுத்த உரிமையாளன் உருகுணையையும் ஆளும் வழக்க மிருந்தது. இவ்வாறு மாபாவுக்கு (அல்லது மாயாவுக்கு) உரிய பகுதியே பின்னர் மாயாரட்டை யெனப்பட்டது.
அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இளவரசர்களாக மட்டு மன்றி, உயர்தர நிருவாக, இராணுவப் பதவிகளையும் பெற்று, அரசப் பணியாற்றினர். சேனுபதிப் பதவியை முன்னர் பருமகர்கள் என்ற பிரபு குடும்பத்தவர்கள் வகித்து வந்த போதும், முந்திய அனுராதபுர காலமுடிவில் அரசனது நெருங்கிய உறவினரே அதைப் பெரும்பாலும்

Page 104
88 பண்டைய ஈழம்
வகித்து வரலாயினர். குஞ்சநாகனது காலத்திலும், தாதுழ்ேனன் காலத்திலும் சேனபதிகளாக விளங்கியவர்கள், அவ்வரசர்களின் நெருங்கிய உறவினர் என்பதை யறிவோம். முந்திய அனுராதபுர காலத்தில் இருந்த பிற முக்கிய பதவிகளில் ‘பண்டகாரிகா' என்ற பொருளாளர், புரோகிதர், கணகர், மகாமாத்திரர் என்போர் குறிப் பிடத்தக்கவராவர். புரோகிதர்ப் பதவியை வகித்த பிராமணர், அரச குடும்பத்தில் வரும் முக்கிய சடங்குகளையும், வைபவங்களையும் முறைப் படி நடத்த உதவியும், சில சமயங்களில் தம் அறிவுப் புலமையால் முக் கிய தகராறுகள் எழும்போது தீர்ப்புக்கள் வழங்கியும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். கல்வெட்டுக்களிலும், காலவேடுகளிலும் அமைச்சர் களெனக் குறிப்பிடப்படுவோர் வேத்தவையாளராகவிருந்து, அரசன் வேண்டியபோது ஆலோசனை வழங்கினர் எனலாம். முக்கிய பிரச்சினை கள் எழும்போது அரசவையை மட்டுமன்றி உயர் பிரதானிகளையும், சங்கத்துச் சான்றேர்களையும் மன்னன் கலந்தாலோசித்தான்.
> பிந்திய அனுராதபுரகாலத்தில், சில முக்கிய பதவிகளும், பொறுப் புக்களும் புதிதாகத் தோன்றின. சத் த - கா ஹ க (குடையேந்தி), அசிக்காஹக (வாளேந்தி ) என்ற பதவிகள் இக்காலத்தவையே. இவை யிரண்டும் கெளரவப் பதவிகளாக இருந்தனவேயன்றி எவ்வித அரசியற் பொறுப்புகளும் இவற்றை வகித்தோர்க்கிருக்கவில்லை. இவ்விரு பத விகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும் மன்னனது உறவினராகவேயிருந் தனர். இவர்கள் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. மகாநாமனுக்குப் பின் அவனது மகளை மணஞ் செய்திருந்த சத்தகாஹக, பின்னர் ஒராண்டு ஆட்சியை நடத்தினன். Tம் மொகல் லானன் காலத்தில், அசிக்காஹப் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிலா காலன், பின்னர் அரசனுக விளங்கியதையும் நாம் முன்னர் படித் துள்ளோம். மகாலே(கக) என்ற பதவியை வகித்தவனே, அரச ஆணைகளைப் பிரகடனப்படுத்துவதிலும் செயற்படுத்துவதிலும் முக் கிய (சேனபதிக்கு நிகரான) பங்கு கொண்டிருந்தான். பரிபாலனத் தலைமை யதிகாரியாக இவனைக் குறிப்பிடலாம். சபா, சபாபதி என்ற பெயர்களும் பிந்திய அனுராதபுர காலக் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. சபா'வின் உறுப்பினர்கள் சேர்ந்து'அரச ஆணைகளைப் பிரகடனப் படுத்தியிருக்கின்றனர். "சபா'வின் ஒரு பிரிவு "லேகம்-கே" (எழுத்தர் மனை) என அழைக்கப்பட்டது.
மாகாணங்களும், நிருவாகமும்; அனுராதபுரத்தில் ஆட்சி செய்த மன்னர்களினது நேரடியான பாலனத்தில் அமைந்த முக் கிய அரசான இராஜரட்டை நாட்டின் பெரும்பகுதியைக் கொண் டிருந்தது. அனுராதபுர காலத்தில் இராஜரட்டை பெற்ற பெரு

அனுராதபுர காலப் பண்பாடு 1: 89
மைக்கும் சிறப்புக்கும் நிகராக மற்றெந்தக் காலப்பகுதியையும் குறிப்பிடவியலாது. துட்டகாமணி காலத்திலிருந்து உருகுணை, மலேயரட்டை முதலான எல்லாப் பகுதிகளும் அனுராதபுர ஆட்சி
அனுராதபுர கால இலங்கை யாளரின் கீழமர்ந்தன. உருகுணே (உரோஹணம்) என்பது, இராஜ ரட்டைக்கு அடுத்து முக்கியம் பெற்றிருந்ததுமன்றி, அங்கே யாட்சி செய்தவர்கள் சில காலங்களில் தனியரசை நிறுவியும் வர லாயினர். மகாவலி கங்கையின் கிழக்கேயுள்ள பெரும் பகுதியை அது கொண்டிருந்தது.) உருகுணையைப் பாலிக்கும் பொறுப்பு முந்

Page 105
19 0. ۔ பண்டைய ஈழம்
திய அனுராதபுர காலத்தில் “யுவராஜா' விடம் விடப்பட்டிருந் ததை முன்னரே கூறியுள்ளோம். இளவரசன் அல்லர்த் ஒருவன் (அமைச்சன்) இதற்கு நியமிக்கப்படின்) ரோகண-போஜக எனவும், இளவரசனுகவிருப்பின் "ரோகணிக ளினவும் அழைக்கப்பட்டான். உருகுணையின் எல்லை பிந்திய அனுராதபுர காலத்தில் 2-ம் மகிந் தன் (777-797) காலத்திலிருந்து கல்லோயா வாக்கப்பட்டமை யும் குறிப்பிடத்தக்கது. மலேய அல்லது மலையரட்டை என்பது மத்திய மலைநாட்டையும் அதன் அடிக்குன்றுகளையும் கொண்டிருந் தது. இதனது பாலனத்துக்கும் ஒர் இளவரசன் பிந்திய அனு ராதபுர காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தான். இவனை "மலேயராஜா' என அழைத்தனர். சிலாகாலனது ஆட்சிக்காலத்திலேயே, முதன் முதலாக இப்பதவியேற்பட்டதாகத் தெரிகின்றது. அம்மன்னன் தனது இரண்டாவது மகனை இப்பதவிக்கு நியமித்து மலையரட்டை யையும், தக்கிணதேசத்தையும் நிர்வகிக்கும்படி விட்டான். (பிந்திய அனுராதபுர காலத்திலேயே தக்கிணதேசம் யுவராஜனது பாலனப் பிரிவாகியது என முன்னர் கண்டோம்.) சிலாகாலனுக்குப் பின் அரசுக்கு வந்த 1ம் அக்கிரபோதி முதலான மன்னர்களுடைய காலத்திலும்(10றுாற். முடிவுவரை) 'மலேயராஜா' என ஒர் இளவரசன் அல்லது அமைச்சன் (3ம் சேனன் காலத்தில்) இருந்ததை அறி கின்ருேம். வடபகுதியில் நாகதீபம் (யாழ்ப்பாணக் குடாநாடு) தீபராஜா என்ற ஆட்சியாளனது பொறுப்பில் இருந்தது. வசபன் காலப் பொறிப்பு ஒன்றிலிருந்து, அவன் காலத்தில் ஓர் அமைச்சன் அல்லது பிரதானியே அதன் பாலனத்தை நடத்தியதாகத் தெரி கின்றது. நாகதீபத்தைப் போலவே, களனி முதலான வேறு சில பகுதிகளையும் இளவரசர்கள் அல்லது குறுநில மன்னர்கள் அனு ராதபுர காலத் தொடக்கத்தில் ஆட்சிசெய்தனர்.
நான்கு பெரும் பிரிவுகளாக அல்லது به هماهناarrayr) மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. உத்தரரட்டை, பாசினதேச, தக்கிணதேச, பச்சிமதேச என்பவை முறையே, இராஜரட்டையின் வட, கீழ், தென், மேல் மாகாணங்களாகும். அனுராதபுரத்தை
மையமாகக் கொண்டே இப்பிரிவினை செய்யப்பட்டது. இவற் றின் நிருவாகத்துக்குப் பொறுப்புடைய மாகாண ஆட்சியாளர் ‘பஸ்லது' என அழைக்கப்பட்டனர். (மாகாணங்கள் என்ற
பொருளில் வழங்கப்படும் பஸ்ஸவின் அதிகாரிகள் பஸ்லது எனப் பட்டனர்.) மாவட்டங்கள் என த்தக்க ரட்டைகள், மாகாணங்களி லிருந்த உபபிரிவுகளாம். இவற்றை "ரடிய” அல்லது "ரடிக" என்ற பெயருடைய அதிகாரிகள் நிருவகித்தனர். இவர்கள் பிந்திப அலு: ராதபுர காலத்தில் "ரட்-லது’ எனப்பட்டனர். இராணுவ அதிகாரி களும் (தண்ட-நாயகர்) சில பிரிவுகளை (கலகக் காலங்களிற் போலும்) நிருவகித்தனர்.

அனுராதபுர காலப் பண்பாடு 1 191
கிராம ஆட்சி: கிராமமே அக்காலப் பொருளாதார, சமுதாய அமைப்பிலும், அரசியல் அமைப்பிலும் முக்கிய அலகாக விளங் கியது. கிராமத் தலைவன் ‘காமிக" என அழைக்கப்பட்டான். இந் தியாவில் கிராமணிகள் வகித்த நிலையில் இலங்கையில் களமிக என்ற கிராம ஆட்சியாளர் இருந்தனர். இவர்களின் நிலை மிகவும் உயர்ந்த தாக இருந்தமை கவனிக்கத்தக்கது. வட்டகா மணியின் அமைச்சர் களில் ஒருவன் ‘காமிகவாக இருந்தானென்பதைக் குறிப்பிடலாம். கிராமச்சபைகளும் திறமையாக இயங்கியமை பற்றிச் சில கல்வெட்டுக் கள் குறிப்பிட்டுள்ளன. அரச அதிகாரிகள் பார்வை யிடுதற்கென கிராம ம்ன்றுகளின் கூட்ட நடவடிக்கைகள் பொறிக்கப் பட்டி ருந்தன வென்றும், கிராமச் சபைகள் வெவ்வேறு கடமைகளை பாற்றத் தமக்குள் சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளதையும் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம்.
தலைநகரைப் பாலிப்பதற்கென வும் ஒரு விசேஷ அதிகாரி யிருந்து வந்தான். "நகரகுத்திக" என்ற இப்பதவி, பண்டுகாபயன லேயே முதன்முதல் ஏற்படுத்தப்பட்டதாக மகாவம்சம் தெரிவிக் கின்றது. தலைநகரின் பாலனந் தொடர்பான எல்லா அலுவல் களையும் நகர குத்திகனே கவனித்து வந்தான். பிந்திய அனுராதபுர காலத்தில், நுவர-லத்தா என்ற பெயர் அவனுக்கிருந்தது. குறிப் பாக 9ம், 10ம் நூற்ருண்டுக் கல்வெட்டுக்களில் இப்பெயரே இவனுக்கிருந்ததைக் காணலாம். இவ்வாறு, அனுராதபுரகால அரசியல் அமைப்பில் மத்திய அரசாங்கமும், மாகாண, உள்ளூர் ஆட்சியும் சிறப்புற அமைந்திருந்ததால், இந்நீண்ட காலப்பகுதி பெரும்பாலும் அமைதியைப் பெற்று, எவ்வளவோ முன்னேற்றம் அடையக் கூடியதாக விருந்தது.
அரசிறை: இறுதியாக, அக்காலத்தில் அரசன் மேற்கொண்ட பொதுப்பணிகளுக்கும் பிற செலவுகளுக்கும் வேண்டிய பணத்தைப் பெற்ற வழிவகைகளைச் சுருக்கமாகக் கவனிப்போம். 'நில வருவாயின் ஒரு பங்கு (ஆறில் ஒன்று) அரசனுக்குக் கொடுக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் தன் வருமானத்தில் பெரும் பகுதியைப் பெற்றது. இவ் வரி "போஜக-பதி யெனக் கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் மானியங்களாக விகாரைகளுக்கு வழங்கிய கிராமங்களின் வருவாய் அவ்விகாரைகளுக்கே சென்றது. பாசனஞ் செய்யப்பட்ட வயல்களின் உரிமையாளர் ஒரு விகிதத்தை (தக-பதி என்ற வரியை)ச் செலுத்தி வந்தனர். தனிப்பட்டவர்கள் பலர் குளங்களை நிறுவி யிருந்ததால், அவர்களுக்கும் இவ்வரி சென்றது. குளங்களிலும், பாசன வாய்க்கால்களிலும் பிடிக்கப்பட்ட மீனிலும் ஒரு பங்கு வரி யாகச் செலுத்தப்பட்டது. மேலே குறிக்கப்பட்ட நிலவரிக்கு மேலாக என்ற பிறிதொரு வரியும் வயல்களிலிருந்து சில காலங்

Page 106
192 பண்டைய ஈழம்
களில் அறவாக்கப்பட்டது. துறைமுகங்களில் விதிக்கப்பட்ட தீர்வை களும், மன்றுகளில் அறவாக்கப்பட்ட குற்றப்பணங்களும் அர சிறையை மேலும் பெருக்கின. 'இராஜ காரியம்’ என்ற கூலிபெரு த அரச சேவையும் அக்காலத்திலிருந்தது. நீர்த்தேக்கங்களையும் சம யக்கட்டிடங்களையும் மன்னர்கள் நிறுவியபோது, இராஜ காரியத் தைப் பயன்படுத்தியே மன்னர்கள் அவற்றை இலகுவில் நிறைவேற் றினர். துட்டகாமணி மகாதூபத்தை இலவச ஊழியம் பெருது கட்டி முடித்தானெனப்படுகின்றது. எனவே, பொருளியற்றுறையி லும் சமயத்துறையிலும் அனுராதபுர காலமன்னர்கள் பெருஞ் சாத னைகள் இயற்ற உதவியவற்றில் அக்கால அரசிறை முறையுமொன்று எனலாம் ii சமூக நிலமைகள் V−
பருமகர்கள்: இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆரியர் குடியேற் றங்கள் நடைபெற்ற தொடக்க காலத்தில், அக்குடியேற்றங்களை நிறுவுவதில் முக்கிய பங்கு கொண்டதாகக் கருதப்படும் ஒரு பிரி வினர், தொடக்ககால இலங்கைச் சமுதாயத்தில் மிக முக்கிய இடத் தைப் பெற்றிருந்தனர். நிலப்பிரபுக்கள் எனக்கூறத்தக்க இப்பிரிவி னர்க்கு பருமகர் (சமஸ்கிருதத்தில், பிரமுகர்) என்ற பெயர் வழங் கப்பட்டிருந்தது, இவர்களுக்கிருந்த செல்வாக்கு அளவிடற்கரியது. அரசர்களுடன் 'மணவுறவுகள் கொள்ளத்தக்கவர்களாக இவர்கள் கருதப்பட்டனர். பெரும்பாலான உயர் பதவிகளை அரசாங்கத்தில் வகித்தவர்களும் இப்பிரிவை அல்லது வகுப்பைச் சேர்ந்தவர்களே. பின்னர் அரச உறவினர்களால் வகிக்கப்பட்ட சேனுபதி, பண்ட காரிகர் (பொருளாளர்) முதலான பதவிகளை இவர்களே தொடக்க காலத்தில் வகித்தனர். இவர்கள் சில கிராமங்களின் வருவாயை அனுபவித்தனர். பதவிகளை வகிக்காத நிலப் பிரபுக்களும் (பருமகர்) இருந்தனர். இவர்களின் சமூக நிலை (அந்தஸ்து), “காமிக' என்ற கிராமத் தலைவர்களினுடையதிற்கு நிகராக விருந்ததாகக் கூறப்படும். மன்னர்களுக்குத் தொடக்கத்தில் இருந்த பட்டப்பெயர்களில், காமணி என்பதைப் போன்று, மகா பருமக(ர்) என்பதும் ஒன்றக இருந்ததை முன்னரே கூறினுேம், தொடக்க காலத்தில் இலங்கை வந்த ஆரிய கூட்டங்களின் தலைவர்களே இப் பருமகர்கள் எனக்கொள்ளலாமாயின், பருமகர்களில் முக்கியமானவன் அரசனுக மதிக்கப்பட்டான் எனக் கொள்வதில் தவறிருக்காது. பருமகர்களைப் பற்றிய குறிப்புக்கள் தொடக்க கால (பிராமி)க் கல்வெட்டுக்களிலேயே காணப்படுவதால், இப் பிரிவினர் முந்திய அனுராதபுர காலத்திலேயே அதிகமாகச் செல்வாக்குப் பெற்றிருந்தன ரெனலாம்.
சாதிமுறை: ஆரியர் சமுதாயத்தில் இந்தியாவிலிருந்த சாதி (வர்ண) முறையும் இங்கு பின் பற்றப்பட்டமைக்குச் சான்றுகள் உள. இலங்கை யில் ஆட்சிசெய்த அரச மரபினர் இந்திய கடித்திரியகுலத்துக்கு நிகரான

அனுராதபுர காலப் பண்பாடு. சமூகம் 193
வர்களாக இருந்தனர்.புரோகிதராக மட்டுமன்றி, செல்வமும் செல்வாக் கும் உடையவர்களாகப் பிராமணர் விளங்கியதால் இவர்களும் சமூகத் தில் மிக உயர்வான நிலையிலிருந்தனர். "கஹபதி (க்ருஹபதி - இல்லத் தலைவன்) எனும் பெயர் கொண்ட பலர் இருந்தமையால், வைசிய வர்ணத்தவரும் இலங்கையில் இருந்ததாகக் கொள்ளப்படும். இவர் கள் பயிர்ச்செய்கை, மந்தை வளர்த்தல், வ ணி க ம் முதலான தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். சூத்திரர்க்குரிய தொழில்களாக இந்தியாவில் கருதப்பட்ட மணிஇழைத்தல் முதலானவை, இலங்கையில் வைசியர்க்கு உரியவையாகக் கொள்ளப்பட்டன. வைசியர்களின் தலை வனன "செட்டி'யே, முடிசூட்டு விழாவில் அவ்வருணத்தவர் சார்பில் கலந்து கொள்வான். "குடும்பிகர்' என்ற பெயரும் "கஹபதிகளையே குறித்தது. முந்திய அனுராதபுர காலத்திற் பின்பற்றப்பட்ட தொழில் களில் நெசவு, கொல், தச்சு, சித்திர, வைத்தியத் தொழில்கள் குறிப்பிடத்தக்கவை, தாச'ர்கள் என்ற அடிமைகள் இருந்தமை பற்றி 4ம் கல்வெட்டுக்கள் குறிப்பிட்டுள்ளன. சண்டாள(ர்) என்ற மற்முெரு வகுப்பினரும் ஒதுக்கப்பட்டவர்களாக, நகரசுத்தி முதலான தொழில் களில் ஈடுபட்டிருந்தன்ர். .
பிந்திய அனுராதபுரகால நிலைமைகள்: இலங்கைச் சமூகத்தில் இருந்த சாதிகளிடையே உள்ள வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வு களையும் குறைவாக்கி, சமூக ஒற்றுமைக்கு வழிகோலியமை பெளத் தம் இலங்கையிற் பரவியதால் ஏற்பட்ட விளைவுகளில், முக்கியமான தாகும். எனவே பிந்திய அனுராதபுர காலத்தில், முன்னர் நிலவிய சாதிப்பிரிவினைகள் குறைந்து காணப்பட்டன. சமுதாயம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்த தெனலாம். "சம்-தரு’ என அழைக்கட் பட்ட வகுப்பினர் ஓரளவு சலுகை படைத்த வகுப்பினராக விளங் கினர். இவர்களை நிலப்பிரபுக்கள்’ எனக்கொள்ளலாம். முந்திய அனு ராதபுர காலத்தில் இருந்த பருமகர்கள் என்ற பிரிவினர் இவ்வகுப் பினருள் அடங்குவர். இவர்களுக் கெனவுள்ள நிலங்களின் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டனர். அரச சேவையின் முக்கிய பதவிகளுக்கும், மாகாணங்கள் முதலானவற்றின் நிருவாகப் பதவி களுக்கும் இவர்களிலிருந்தே நியமனங்கள் செய்யப் பட்டன. இரண் டாவது வகுப்பினரான சாதாரண மக்கள் (குடிகள் அல்லது கம்வாசி கள்) ‘ஹஸ்-கரு” எனவும் அழைக்கப் பட்டனர். நாட்டிலுள்ள பெரும்பான்மையினரான இவர்களே உண்மையில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட நாட்டு உழவர் எனலாம். எனவே, ஆரியரின் சமுதாய அமைப்பு இலங்கையில், முக்கியமாக பெளத்தத்தின் செல்வாக்கால் சில மாறுதல்களை யடைந்ததை உணரலாம்.
25

Page 107
194 பண்டைய ஈழம்
i. பொருளியல் வளர்ச்சி
அ. பயிர்ச் செய்கை
அனுராதபுரகாலத் தொடக்கத்திலேயே, இத் தீ வில் பயிர்ச் செய்கையை இங்கு குடியேறிய முதற் சிங்களர் புகுத்தினர். இக் காலப்பகுதி முடிவெய்துவதற்கிடையில், பயிர்ச் செய்கையானது மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து, பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பயிர்ச் செய்கையின் அடிப்படை யில் நாடு எய்திய செழிப் பும் முன்னேற்றமுமே அனுராதபுர காலத்தின் பெருமைக்கும் புகழுக்கும் வழிகோலியது. “ ஈழத்துணவு தமிழ்நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகியது. சமய வளர்ச்சி, கலைவளர்ச்சி என்பனவும் பயிர்ச் செய்கையால் நாடெய்திய சுபீட்சத்திலேயே தங்கின என்பதால், அனுராதபுர காலத்தின் பெரும் பகுதியில் உண்டான செழிப்பும் சுபீட்சமும் அத்துறைகளில் பெரு வளர்ச்சி காணவைத்தன. இன்று காடுகளாக உள் ள நிலங்களை விளைநிலங்களாக்கும் பெருமுயற்சி நடைபெறுவதைப் பார்க்கும் போது, அனுராதபுர கால மன்னர்களினதும், மக்களினதும் சாதனை களே நாம் போற்றவே செய்வோம்.
பயிர்ச் செய்கை பிரதான தொழிலாக விருந்ததாலும், போக்கு வரத்து. வசதிகள் அக்காலத்தில் குறைவாக விருந்ததாலும் கிராம அடிப்படையிலே அக்காலச் சமுதாயம் இயங்கியது. ஒவ்வொரு கிராமமும் ஏறக்குறைய தன்னிறைவுடையதான ஒரு சமூகமாகக் காணப்பட்டது. தொடக்க காலக் குடியேறிகள் தாம் குடியேறிய பகுதிகளில் இருந்த காடுகளை யழித்து, அந் நிலங்களில் பருவகால மழையின் உதவியோடு பயிர்செய்து வந்திருப்பர். ஆனல், இம் முறையிற் பயிர் செய்வதால் அதிகமாக மழையை நம்பியிருக்க வேண்டி நேரும். இதிலேயுள்ள குறைபாடுகளை யுணர்ந்து, தமது அனுபவத்தையொட்டி, வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சும் முறையை மேற் கொண்டனர். (நீர்ப்பாசனங்களின் வளர்ச்சி பற்றி வேருக இதைத் தொடர்ந்து கூறுவோம்.) நீர்ப்பாசனங்கள் அமைக்கப்பட்டதன லேயே, அனுராதபுர காலத்தில் பயிர்ச்செய்கை மேலே குறிப்பிட்ட செல்வச் செழிப்பை நாட்டுக்கு அளிக்க முடிந்தது.
நெல்லே பிரதான விளைபொருளாக விருந்தாலும், பிற தானி யங்களைப் பயிரிடுவதிலும் அக்கால உழவர்கள் அக்கறை காட்டினர். அவரை, பருப்பு வகைகளும் அக்காலத்தில் பயிரிடப்பட்டதை யறிகின்ருேம். (இப் பயிர்கள் பெரும்பாலும் பாசனம் செய்யப் படாத மேட்டு நிலங்களிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.) எள்நெய் (நல்லெண்ணெய்) ஓர் உணவுப் பொருளாகவிருந்தது.

அனுராதபுர கால பண்பாடு-பொருளியல் 195
வெல்லப்பாகு பற்றியும், கரும்பு ஆலைகள் பற்றியும் குறிப்புக்கள் வருவதால், கரும்பும் அக்காலத்தில் பயிரிடப்பட்டதாக ஊகிக்கப் படுகின்றது. பருத்தியும் விளைந்தமை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பழந்தரு மரங்களும் (வீட்டுத்) தோட்டங்களில் வளர்க்கப்பட்டன. தென்னந்தோப்புக்கள் இருந்ததாக மகாவம்சத்திலும், கல்வெட் டுக்களிலும் குறிப்பு உண்டு. கால்நடை வளர்ப்பும் தொடக்கத்தி லிருந்தே நடைபெற்றுவந்தது. மலையகத்தில் வாசனைத் திரவியங்கள் இஞ்சி, மிளகு முதலான பொருட்கள் பெறப்பட்டன. மீன் பிடித் தலும் அக்காலத்தில் ஒரு முக்கிய தொழிலாக விருந்தது. கால் வாய்களிலும், குளங்களிலும் மீன்பிடித்தோர் செலுத்தவேண்டி யிருந்த வரி பற்றி முந்திய பகுதியிற் குறிப்பிட்டிருந்தோம்.
பிந்திய அனுராதபுர காலத்தில் இந் நிலைமைகளில் அநேக மாறு தல்கள் உண்டாகவில்லை. செய்கை பண்ணப்பட்ட பயிர்களிலோ, முறைகளிலோ அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை. ஏற்கெனவே கூறப்பட்டவாறு, நிலங்களைப் பயிரிட்ட உழவர்கள், வருவாயில் ஒரு பங்கை அரசனது அதிகாரிகளுக்கோ, அரசனல் மானியங்கள் வழங்கப்பட்ட மத நிறுவனங்களுக்கோ கொடுத்தனர். பயிரிடப் பட்ட நிலங்கள் அதிகரித்தமையினலும், நீர்ப்பாசனங்கள் பெருகி, யமையினலும் அரசாங்கமும் அதிக வருவாயைப் பெற்று வந்ததால் மன்னர்களுக்கு மேலும் பொதுப்பணிகளை ஆற்றும் ஊக்கம் வளர்ந் தது. பெரும் நீர்த்தேக்கங்கள் நிறுவுதற்கென ஒரு திணைக்களமே (தொளஸ்-மகா-வாத ன்-பன்னிரு பெருந் தேக்கங்களின் அலுவ லகம்) ஏற்பட்டிருந்ததாகத் தெரிகின்றது. நீர்ப்பாசனக் கண் காணிப்பாளர் முதலான அதிகாரிகள், தண்ணிர் வழங்குதலை மேற் பார்வை செய்தனர். கிராமக் குளங்களைப் பேணுதல், நீர் வழங் குதல் முதலானவற்றை ஆற்றும் பொறுப்பு அந்தந்தக் கிராமச் சமூகங்களின் (கிராமச் சபைகளின்) பொறுப்பாகவே யிருந்தது. அக்காலத்தில் நீர் வழங்குதலைக் கட்டுப்படுத்திய விதிகளைப் புத்த கோசர் எழுதிய சமந்த பாசாதிகா” என்ற நூலில் வரும் சில விவ ரங்கள் காட்டும். இன்றும் கிராமங்களில் அவ் விதிகளிற் சில, காய்கறித் தோட்டப் பயிர்ச்செய்கையில் பின்பற்றப்படுவதைக் காணலாம். இவ் விதிகள் ஒற்றுமையும் பொதுநோக்கும் கொண்ட ஒரு காலத்துச் சமுதாயத்தைக் காட்டுகின்றன. விதிகள் சமுதா யத் தேவையை யொட்டியே எழுந்ததால், அதன் பொதுத் தேவை கள் நிறைவேறவும், இலட்சியங்கள் வெற்றி பெறவும் அவை யுத வின. 9 ம், 10ம் நூற்ருண்டுகளில், செய்கையிலிருந்த பயிர்கள் ஒரளவு திட்டமிடப்பட்டு நடைபெற்றதாகவும், இதனுற் சில கட் டுப்பாடுகள் ஏற்பட்டதாகவும் தெரிகின்றது.

Page 108
196 பண்டைய ஈழம்
ஆ. நீர்ப்பாசனம்:
இலங்கையிற் குடியேறிய காலத்திலேயே, ஆரியர் நீர்ப்பாசன முறைகளை யறிந்தவர்களாக விருந்தனர் எனக்கொள்ளலாம். இலக் கியங்களில் (வேதங்களில்) வரும் குறிப்புக்களைக் கொண்டு, வட இந்தியாவில் அதே காலத்திலிருந்த ஆரியர் சிறிய அளவில் நீர்ப் பாசனங்களை அமைக்கத் தெரிந்திருந்தனரெனக் கொள்வர். எனி னும், ஆரியர் வழிவந்த சிங்களர், நுட்பமும் சிக்கலும் நிறைந்த பாரிய நீர்த்தேக்கங்களையும், பல மைல்களுக்குச் செல்லும் கால் வாய்களையும் பின்னரே இலங்கையில் விருத்தி செய்தனர். நீர்ப் பாசனங்களின் வளர்ச்சியை நோக்கும் போது மூ ன் று அல்லது நான்கு முக்கிய கட்டங்களை அவதானிக்கலாம். ۔
முந்திய அனுராதபுர காலம்: குடியேற்றங்களின் அமைவு, குடி சனத் தொகையின் பெருக்கம், பயிர்ச் செய்கையின் விருத்தி முத லானவையும், நீர்ப்பாசன முறைகளின் வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. கி. பி. முதல் நூற்ருண்டு வரை, நீர்ப் பாசன வளர்ச்சியின் முதற் கட்டம் அல்லது பருவம் நீடித்த து எனக் கூறலாம். ஆரியர் "முதலிற் குடியேறிய சில பகுதிகளில் (34ம் பக். பார்க்க) அவர்களுக்கு இயற்கையாகவே நீர் வசதி கிடைத் தது. எமது வரலாற்றுத் தொடக்க காலத்திலிருந்தே, ஆட்சியாள ரும் அரச உறவினரும் பயிர்ச் செய்கை வேலைகளையும், பாசனங்களை யமைப்பதையும் தமது முக்கிய கடமையாகக் கொண்டிருந்தனர். தேவானம்பிய திசன் நிறுவியதாகக் கருதப்படும் திசவாவி எமது காலப்பகுதியின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட குளங்களில் ஒன்ருகும். ஆனல், இது இன்றுள்ள அளவு விசாலமாக அப்போது இருக்கவில்லை. ஒரு சிறு குளமாகவே அது இருந்திருத்தல் வேண்டும். கி. மு. 2ம் நூற்ருண்டைச் சேர்ந்த சில குளங்களின் பெயர்களும் காலவேடு களிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையும் சிறிய அளவிலேயே நிறுவப்பட்டன. கி. மு. முதல் நூற்ருண்டிலும் குளங்கள், கால் வாய்கள் நிறுவப்பட்டமைக்குப் பொறிப்புக்களில் நிறையக் குறிப் புக்கள் உண்டு. அக் கால் வாய்கள் அமைக்கப்பட்ட அடையாளங் கள் இப்போதின்மையால், அவற்றை அமைக்கப் பயன்பட்ட முறை பற்றி ஈாம் எதுவும் கூறவியலாது. ஆனலும், கல்வெட்டுக்களிலும், காலவேடுகளிலும் வரும் செய்திகளால், இக் கால்வாய்கள் நிறுவப் பெற்றிருந்தன என்பதை உறுதியுடன் கூறலாம். கிராமங்களின் விவசாயத் தேவைகளை நிறைவுசெய்ய அமைக்கப்பட்ட கிராமக்குளம் இக் காலகட்டத்தின் மிக முக்கியமானதும் தனித்தன்மையுடையது மான அம்சமாகியிருந்தது. இக் கிராமக்குளங்களிலிருந்து அவற் றைச் சுற்றிப் பதிவாக அமைந்த வயல்களுக்கு நீர் பாய்ச் சப்பட்டது. இவற்றிற் பல தனியுடைமைகளாகவும் இருந்தன.

அனுராதபுர காலப் பண்பாடு-பொருளியல் 97
கி. மு. முதலாம் நூற்றண்டளவில் குடியேற்றங்கள் பரவி, மலை நாட்டிலும் ஈர வலயத்திலும் மக்கள் குடியேறத் தொடங்கியிருந் தனர். அடுத்த நூற்ருண்டில் (கி. பி. 1ம் நூற்.) குடிசனப் பரம் பலில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. வரட்சி வலயத்திலுள்ள குடி சனத் தொகையின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கலாயிற்று. ஈரலிப்பு வலயத்தில் வாழ்ந்த மக்களும் வறட்சி வலயத்துக்குச் சென்று வாழத் தொடங்கியதாகவும் நம்பப்படுகின்றது. இவ்வாறு குடிசனப் பெருக்கம் உண்டாகவே, அந் நூற்ரு5ண்டில் நீர்ப்பாசன முறையின் விருத்தியில் மற்ருெரு கட்டந் தொடங்குகின்றது. கிரா மக்குளம், சிறியகுளங்கள்" என்ட்iேற்றையடுத்துப் பெருங் குளங்கள் நிறுவும் முறை தொடங்கியது. இதைத் தொடக்கிவைத்த மன்னன் வசபன் (கி. பி. 65-109) ஆவான். இவனுடைய ஆட்சி மிக நீண்ட தும், அமைதி நிறைந்ததுமாக விளங்கியதென முன்னரே படித்
துள்ளோம். இம் மன்னன் நிறுவியதாகக் கூறப்படும் பதினுெரு குளங்களில், , , வாவியே மிகப் பெரியது. அதன் சுற்றளவு ஏறத் தாழ மூன்று 1ை ல் கள் வரையில் இருந்திருக்குமெனக் கூறப்படு
*skraw
கின்றது." இக் குளங்கள், கிராமக்குளங்களைவிடப் பன்மடங்கு பெரி யவையாயினும் பின்னர் ஏற்பட்ட பெருங்குளங்களுக்கு நிகரானவை யல்ல. பன்னிரு கால்வாய்களும் வசபன் காலத்தில் நிறுவப்பட்ட தாகக் கூறப்பட்டுளது. இவற்றுள் ஆளிசார கால்வாய் குறிப்பிடத் தக்கது. இது அம்பன் கங்கையில் அமைக்கப்பட்ட"அணையிலிருந்து தொடங்கியது. இதுவே பின்னர் மகாசேனன் காலத்தில் பெருப் பிக்கப்பட்டு மின்னேரிக்கு நீர் வசதியளிக்கப் பயன்பட்டது. வசப னுக்குப் பின்னரும் சுமார் இரு நூற்ருண்டுகளாகக் குளங்கள் நிறுவப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளபோதும், அவை பற்றிய விவரங்கள் அதிகம் எமக்குக் கிட்டவில்லை. கிராமக் குளங்களையும் தொடர்ந்து அமைத்து அதிகரித்துவந்த சனத் தொகை யின் உணவுத் தேவையைச் சமாளித்து வந்தனர்.
மகாசேனனுடைய ஆட்சியுடன் (கி.பி. 276-303) நீர்ப்பாசனங் களின் வளர்ச்சியில் மற்ருெரு முக்கிய கட்டம் தொடங்குகின்றது. வசபஞல் நிறுவப்பட்ட மிகப்பெரிய குளமும், மகாசேனனது பெருங் குளங்களுடன் ஒப்பிடப்படும்போது மிகவும் சிறியதாகவே காணப் படும். ஏனெனில், மகா சேனன் நிறுவிய சில குளங்கள் அவனது காலம் வரை காணப்படாத அத்துணைப் பெரியவையாக விளங்கின. எனவே, இவற்றைப் பெருங்குளங்கள் என்று கூருது பாரிய (பிரம் மாண்டமான)குளங்கள் என வழைப்பர். இவன் காலத்தில் நிறுவப் பட்டதாகக் கூறப்படும் பதினறு குளங்களில் மின்னேரி, கவுடுலு வாவி, ஹாருளுவாவி, மகாகணதராவாவி, மகாகல் கடவளை என்பன மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள் என்பதில் ஐயமில்லை. இவன் நிறுவி

Page 109
1 98 பண்டைய ஈழம்
á ཅི།།
பதவியாக்தளம் * šį
ஆராதபுரகல
நீர்ப்பாசனம் _.
- Tణాభజిన్యా ஐரTதர% M" ** * ^*? ۔ ہم ؟****~" سعیس۔. یہ-جونچھ யதாகக் குறிப்பிடப்படும் 16 குளங்களும் இவனது காலத்திலேயே தொடங்கி முடிக்கப்பட்டன என்பதை உறுதியாகக் கூறுவதற் கில்லை. இருப்பினும், முந்திய அனுராதபுரகால மன்னர்களுள் நீர்ப்பாசனப் பணிகளை யாற்றியவர்களுள் இவனுக்கு இணையானேர் எவருமில்லை; பிந்திய அனுராதபுர கால மன்னர்களும் இவனது சாதனைகளை விஞ்சியதாகக் கூறமுடியாது. இவனது மகத்தான சாதனை மின்னேரியாகும். ‘மணிஹிரவாபி என்பதே இதற்குக் கால வேடுகளில் உள்ள பெயராகும். முன்னரே (வசபனல்) நிறுவப்பட் டிருந்த ஆளிசார (அளஹர)க் கால்வாயே இத்திட்டத்துக்கு அடிப் படையாக விளங்கியது. அம்பன் கங்கையில் ஆளிசார அணையிலிருந்து
 

அனுராதபுர காலப் பண்பாடு-பொருளியல் 199
தொடங்கிய இக்கால்வாய் மேலும் விசாலிக்கப்பட்டும் நீட்டப்பட் டும், இப் புதிய நீர்த்தேக்கத்துக்கு வேண்டிய நீர்வசதி பெறப்பட்டது. சுமார் ஐயாயிரம் ஏக்கர் (4,670 ஏக்கர்) நிலத்தைக் கொண்டுள்ள மின்னேரி, நாலாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் வயல்களுக்கு இப் போது நீரையளிக்கின்றது. கவுடுலுவாவியும் மின்னேரியளவு விசால முடைய ஒரு பெருந் தேக்கமாகும் கவுடுலு ஓயாவை மறித்துக் கட் டப்பெற்ற இந்நீர்த் தேக்கத்துக்கு மேலும் நீர் கொடுப்பதற்காக மின்னேரியுடன் இது ஒரு சிறு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டது. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட அளஹர-மின்னேரி-கவுடுலு திட்டம் இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு பெருந் திருப்பத்தை யுண்டுபண்ணிய நிகழ்ச்சியாக சிறப்பிக்கப்படுவதில் தவறில்லை. மகா சேனன் நிறுவிய பப்பதந்தக் கால்வாய் என்பது, மகாவலிகங்கையில் தொடங்கித் திம்புலாகலைக் கணித்தாக சுமார் 20மைல்களுக்குக் கிழக்கு நோக்கிப் பாய்ந்தது. மகாசேனனது புகழ் நிலைக்கவும், அவனே நெடுங் காலம் 'மின்னேரி தெய்வமாக மக்கள் வழிபடவும் காரணமாக இருந் தவை இந்தச் சாதனைகளே. அவனுக்குப் பின் முந்திய அனுராதபுர காலத்தில் குறிப்பிடத்தக்க பாசனப் பணிகளில் ஒரளவு சிறந்து விளங் கிய மன்னன் 1ம் உபதிசன் (கி. பி. 368-410) ஆவன். இவன் நிறு வியதாகக் கூறப்படும் ஆறு (6) குளங்களில், மூன்றை மட்டுமே இவன் புதிதாகக் கட்டினன் என்பர். இவனது குளங்களில் ஒன்று தோப்பூ வாவி என்பதாகும். இதுவே பின்னர் பராக்கிரம சமுத்திரம் அமைக் கப்பட்டபோது அதில் இணைக்கப்பட்டதாகும். முந்திய அனுராதபுர காலத்தில் குறிப்பாக வட்டகாமணியின் காலத்துக்குப் பின், நெடுங் காலம் அமைதி நிலவியதால், பொருளியல்-நீர்ப்பாசனத் துறைகளில் பெரு முன்னேற்றம் ஏற்படலாயிற்று.
பிந்திய அனுராதபுர காலம்
இக்காலப்பகுதியில் தாதுசேனன், 2ம் மொகல்லானன், 1ம் அக்கிர போதி, 2ம் அக்கிரபோதி போன்ற தலைசிறந்த ஆட்சியாளர்கள் மகா சேனனது மகத்தான பணிகளைத் தொடர்ந்து பெரும் நீர்த்தேக்கங்களை நிறுவி, பிந்திய அனுராதபுர காலத்தையும் பொருளியல் வளத்தில்மேம் பட வைத்தனர். இவர்கள் ஆட்சிசெய்த காலப்பகுதி 7ம் நூற்ருண்டுத் தொடக்கத்துடன் முடிவெய்துவதால் அதற்குப் பின்னர் சுமார் இரண்டு அல்லது மூன்று நூற்ருண்டுகளாக, முன்னர் நிறுவப்பட் டிருந்த குளங்களை நன்னிலையில் வைத்திருப்பதிலேயே முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது, இக்காலப்பகுதியிலும் நாம் முன்னர் கவனித்த உள்நாட்டுப் போர்களும் தென்னிந்தியாவிலிருந்து நடை பெற்ற படையெடுப்புக்களும் நாட்டின் அமைதியைக் குலைப்பதற்குக் காரணங்களாக இருந்ததோடு நீர்த்தேக்கங்களையும் கால்வாய்களையும் அவை சிதைந்து போகச் செய்தன. இருப்பினும் முழுமையாகப்

Page 110
200 பண்டைய ஈழம்
பார்க்குமிடத்தில், பிந்திய அனுராதபுரகாலம் நீர்ப்பாசனத்துறை வளர்ச்சியில் முந்திய காலப்பகுதிக்கு எவ்வகையிலும் குறையாது விளங்கியதென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தாதுசேனன் (459-477) தமிழரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, தனது இருபத்தாறு ஆண்டுகள் ஆட்சியின் போது பல நீர்ப் பாசனப் பணிகளை அவன் மேற்கொண்டதை முன்னரே (133 ம் பக்.) சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம். இவன் நிறுவியதாகக் கூறப்படும் பதினெட்டுக் குளங்களில் இவனுடைய பெரும் சாதனையாக மதிக்கப் படுவது காலவாவியாகும். இம் மாபெரும் நீர்த்தேக்கமானது ஆருயி ரத்துக்குமதிகமான (8, 380) ஏக்கர் பரப்புடைய நிலத்தை உள்ள டக்கியது) இதனல் நீர் பாய்ச்சப்படும் வயல் நிலங்கள் ஏழாயிரம் ஏக்கருக்கும் அதிகமானதென்றல், தாதுசேனனே"அது பற்றிப் பெருமை கொள்ள நியாயமிருந்தது.N வடமேற்கு இலங்கையில் உள்ள கால ஒயாவின் நீரை இவ்வாறு ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தில் நெல் விளைச்சலுக்கு உபயோகப்படுத்தியமை தாது சேனனது ஒரு பெருஞ்சேவை எனலாம். இவனுலேயே காலவாவியி லிருந்து அனுராதபுரத்திலுள்ள திசவாவிவரை சென்ற 54மைல் நீள முள்ள ஜயகங்கை என்ற கால்வாய் வெட்டப்பட்டதென்பர். தலை நகருக்கு வேண்டிய நீர் வசதியைப் பெருக்குதற்காகவே இக் கால்வாய் வெட்டப்பட்டிருக்கலாம். இதனல் இடையேயுள்ள பிரதேசத்திலும் நீர்ப்பாசனம் நடைபெற ஏதுவாயிருந்தது. இவன் நிறுவிய பிற குளங்களைப் பற்றித் தெளிவாகக் கூறமுடியாது. இவனது மானுமடு என்ற குளம் இராட்சதக் குளமாக இருக்கலாம். இக் குளத்திற்கு மல்வத்து ஒயாவிலிருந்து 17மைல் நீளமுள்ள ஒரு கால்வாய் மூலம் நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மகாசேனனது டப்பதந்தக் கால் வாயை இவன் விரிவுபடுத்தி இருக்கலாம். - - - -
குளந்தொட்டு வளம் பெருக்கிய பெருமன்னர் நிரலில் அடுத்து இடம்பெறுபவன் 2ழ் மொகல்லானன் (535-555) ஆவன். ஏற்கெனவே நாம் கூறிய வண்ணம், நீர்ப்பாசனத் துறைக்குழைத்த அனுராதபுர கால மன்னர்களில் தாதுசேனனுக்கும் மகாசேனனுக்கும் அடுத்தபடி யான இடத்தை இம் மன்னன் பெற்றுள்ளான். இவன் நிறு வி ய மூன்று குளங்கள் மல்வத்துஒயாவில் கட்டப்பட்ட அணைகள் மூலம் நீரைப் பெற்றன. இவற்றுள் ஒன்றன நாச்சதூவ (பத்தபாசாணவாவி) அனுராதபுரத்துக்கு தென்கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந் துள்ளது. இதனல் பாசனம் செய்யப்பட்ட நிலம் நாலாயிரம் ஏக்க ருக்கும் அதிகமானது. ஜயகங்கையிலிருந்து ஒரு கால்வாய் இதனேடு இணைக்கப்பட்டதால் இதனது நீர்வளம் குன்ருது பேணப்பட்டது. பின்னர் நாச்சதூவ நுவரவாவியுடனும், மகாகல்கடவளேயுடனும் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவனுடைய மற்ருெரு முக்

அனுராதபுர காலப் பண்பாடு-பொருளியல் 201
கிய சாதனை பதவியா என அழைக்கப்படும் பதிவாவி என்பதை நிறு வியமையாகும். அனுராதபுரகால நீர்ப்பாசனங்களில் மிகப் பெரிய தாக இது அமைந்ததென்பர்.
6ம் நூற்றண்டில் ஆட்சி செய்த மற்ருெரு மன்னனன 1ம் அக் கிரபோதி (575-608) தனது நீர்ப்பாசனப் பணிகளால் பெரும் புகழ் ஈட்டியவன். இவனது குளங்களில் முக்கியமானது குருந்தவாவி எனப் பட்ட தண்ணிமுறிப்புக்குளமாகும். இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தனூர் என்ற பழைய இடத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு பெருங்குளமாகும். இவனே மகாவலி கங்கையில் நிறுவப்பட்ட மினிப்பேத் திட்டத்தைத் தொடக்கியவனவன். மினிப்பே(மணிமேகலை) அணைக்கட்டை நிறுவியதுடன் மின்னேரியாக் குளத்தைக் கந்தளா யுடன் இணைக்கும் ஒரு கால்வாயையும் வெட்டினன். இவன் கட்டிய மினிப்பே அணையிலிருந்தே பின்னர் மினிப்பேக் கால்வாய் ஏற்பட்டு ஒரு பெரும் நீர்ப்பாசனத் திட்டம் உருவாகியது.
2ம் அக்கிரபோதி (608-618) தனது முன்னேனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றியதுமன்றிப் புதியவை சிலவற்றையும் மேற்கொண்டு தன் நீர்ப்பாசனங்கள் மூலம் நிலைபேருண் புகழைச் சம்பாதித்துள் ளான். இவன் நிறுவிய புதிய குளங்களில் மிக முக்கியமானது கந்த ளாய்க் குளமாகும். இந் நீர்த்தேக்கத்துக்கு வேண்டிய நீரைக் கொடுத்த 29 மைல் நீளக் கால்வாய் முன்னதாகவே 1ம் அக்கிரபோதியால் மின்னேரியிலிருந்து வெட்டப்பட்டிருந்தது. இதனல் பாசனம் செய் யப்பட்ட நிலப்பரப்பு 5000 ஏக்கருக்குச் சற்றுக் குறைவானதாகும். இதற்கு அமைக்கப்பட்ட கால்வாய் முடிவுற்றபோது அம்பன் கங்கை யிலுள்ள ஆளிசார அணையிலிருந்து சுமார் 55மைல் வரை அக்கால் வாய் நீட்டப்பட்டிருந்ததை உணரலாம். இவனல் நிறுவப்பட்ட கிரித்தளைக் குளத்திற்கு ஆளிசாரக் கால்வாயிலிருந்து ஒரு கிளைக் கால் வாய் வெட்டப்பட்டது. அம்பன் கங்கையின் முக்கிய கிளையாரு?ன கலுகங்கையில் ஹத்தோட்ட-அமுண என்ற அணை கட்டப்பட்டு அதி லிருந்து சுமார் 28 மைல் நீளமுள்ள ஒரு கால்வாய் (ஹத்தோட்டக் கால்வாய்) ஆளிசார அணைவரை அக்கிளையாற்றின் நீரைக் கொண்டு சென்றது. இவ்வாறு 2ம் அக்கிரபோதியின் ஆட்சி முடிவில் நிறை வேறிய பெருந் திட்டங்கள் எல்லாம் நல்ல முறையில் இயங்கிய பொழுது நாட்டின் சுபீட்சமும் ஒரு போதும் கண்டிராத உயர்நிலையை எய்தியதெனலாம்.
ஏழாம் நூற்ருண்டில் சுமார் 60 ஆண்டுகள் வரை நீடித்த உள்
நாட்டுப் போர்களால் மேலே கூறப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள்
அளித்த சுபீட்ச நிலை அற்று, மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.
26

Page 111
202 பண்டைய ஈழம்
பல நூற்ருண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பெருங் குளங்களாலும் கால்வாய்களாலும் நாடு எய்திய பொருளியற் சிறப்பு ஒரு சில ஆண்டு களில் தன்னலங்கொண்ட, பதவிப்பித்துப் பிடித்த சிலரால் நாசம் செய்யப்பட்டது. அரசியல் நிலைக்கும் பொருளியல் வளர்ச்சிக்கு மிடையே உள்ள தொடர்பைக் காட்ட இதைவிடச் சிறந்த எடுத் துக்காட்டு இருக்கமுடியாது. மானவர் மனத் தொடர்ந்து எட்டாம் நூற்ருண்டில் ஏற்பட்ட அமைதியும் ஒழுங்கும் அடுத்த இரு நூற் ருண்டுகளின் பெரும்பகுதியில் நிலவியதால் உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்த காலத்திலேற்பட்ட சேதங்களும் நலிவுகளும் நிவர்த்தி செய்யப்பட்டு நாடு மீண்டும் பொருளியற் சிறப்புடன் விளங்க முடிந்தது. அந்நியர் படையெடுப்புக்கள் இக்காலங்களில் இடை யிடையே நடைபெற்றதெனினும் அவற்றல் அதிக சேதங்கள் உண் டானதாகத் தெரியவில்லை. 2ம் மகிந்தன், 2ம் சேனன், 2ம் உதயன், 3ம் சேனன் போன்ற சில ஆட்சியாளர் நீர்ப்பாசனங்களை நன் னிலை யில் வைத்திருக்கப் பாடுபட்டனர். இவர்களுடைய பணிகள் பெரும் பாலும் பழையவற்றை நன்னிலைக்குக் கொணர்வதும் விரிவுபடுத் து வதுமாகவே இருந்தன. ஆறு (6) பெருந் திட்டங்கள் மட்டு1ே0 8ம், 9ம், 10ம் நூற்ருண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன எ ன த் தெரிகிறது. எனவே, அம்மூன்று நூற்றண்டுகளிலும் பாசனத் துறையில் ஒரு தேய்வுநிலை ஏற்பட்டிருந்ததாகக் கூறலாம். 2ம் அக் கிரபோதிக்குப் பின் அது தொடங்கிப் 10ம் நூற்ருண்டுடன் முடி வுற்றது. 10ம் நூற்ருண்டின் இறுதியில் ஏற்பட்ட சோழர் படை யெடுப்பின் போதும், சோழர் ஆட்சியின் போதும், அவர்களை எதிர்த்து நடந்த விடுதலைப் போரின் போதும் 12ம் நூற்றண்டில் நடைபெற்ற உள்நாட்டுப்போர்களின் போதும் இந்நீர்ப்பாசனங்கள் வேண்டுமென்று பாழ்படுத்தப்பட்டன.
இ. வணிகம்
பிறநாட்டு வணிகம்
இலங்கையின் நிலையமும் இலங்கையிற் பெறக்கூடியதாக விருந்த வணிகப் பொருட்களின் சிறப்புமே, இலங்கைக்குத் தொலை நாடு களிலிருந்து வணிகரை நெடுங்காலம் வரச்செய்தன. இலங்கையின் புகழும் அந்நாடுகளுக்குப் பரவ ஏதுவாயிருந்தவையும் இவையே. மேற்கே உரோம அரசு, கிரேக்கம் முதல் கிழக்கே சீன வரை பிற நாடுகள் பல்”இலங்கையுடன் தொடர்புகொண்டிருந்தன். இவ் வணிகத் தொடர் பினல், இலங்கையின் பொருளியல் நிலை சிறப் பெய்தியதுமன்றி, பிற நாடுகளி ன்பண்பாடுகள் இலங்கையில் பரவவும் வழியுண்டாயிற்று.இலங்கையுடன்மேலைநாட்டார் தொடர்புகொள்ளு முன்னரே இலங்கையைப் பற்றி யவர்கள் கேள்விப்பட்டதுமன்றி, இலங்கைப் பண்டங்களைத் தென்னிந்தியத் துறைகளில் பெற்றுங் கொண்டனர். ஹிப்பலுஸ் என்ற கிரேக்கன் கி. மு. 1ம் நூற்ருண்டில் பருவப் பெயர்ச்சிக் காற்றுகளின் துணைகொண்டு, ஆழ்கடலிற் கப் பல்களைச் செலுத்தும் முறையைக் கண்டுபிடித்த பின், (கி. பி. 1 ம்

அனுராதபுர காலப் பண்பாடு-வணிகம் 203
நூற்றண்டிலிருந்து) கிரேக்க, உரோம வணிகர்கள் இலங்கைக்கு அடிக்கடி வந்து வணிகஞ் செய்யலாயினர். பாதிக அபயன் (கி.மு. 19 - கி. பி. 9) உரோமப்பேரரசன் ஒகஸ்தஸ் சீசருக்கு ஒரு தூதுக் குழுவை யனுப்பி, மகாதூபத்துக்கு வேண்டிய பவளங்களைப் பெற்ற தாக மகாவம்சத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கர்ம் நூற் முண்டளவில், அக்சுமைற்றுச் சாதியினர் இந்தியக் கடல் வணிகத் தில் ஆதிக்கஞ் செலுத்தியதால், உரோமர் அவர்களிடமே இலங்கை வணிகப் பொருட்களைப் பெற்றனர். 4ம் நூற்ருண்டிலும் இலங்கைத் தூதுக்குழு உரோம அரசுக்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இலங்கை-உரோம வர்த்தகம், உரோமப் பேரரசின் ஆதிக்கம் குன்றியதோடு அருகிவிட, முன்னர் தரகர்களாக விருந்த வேறு நாட்டவர் அவ்வணிகத்தை அபகரித் துக் கொண்டனர். உரோமருடன் நடைபெற்ற வணிகத்தை, இலங் கையில் சிகிரியா முதலான பல பகுதிகளிற் கண்டெடுக்கப்பட்ட உரோம நாணயங்கள் நினைவூட்டுகின்றன.
இந்தியாவுடன் நிலவிய வணிகத் தொடர்புகள் ஆரியர் குடி யேற்றங்கள் தொடங்கு முன்பே யிருந்ததாகக் கூறுவர். வடபகுதி யிலுள்ள துறைமுகங்களுக்கு வணிகஞ் செய்ய வந்தவர்களே, பின் இலங்கையில் குடியேறினர் என்ற ஒரு கருத்து உண்டு. இலங்கை யிலிருந்து பெறப்பட்ட இரத்தினங்கள் அங்கு பெற்ற மதிப்பால், இலங்கைக்கே இரத்தினத் துவீபம் என்ற பெயர் இந்தியஇலக்கியங்களில் ஏற்பட்டது. பெளத்தம் பரவியபின் இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையே இருந்த உறவுகள் அதிகரித்தன.
Nasazanma surgesegresygna ぎ凌/ r بہا!!! ܐܶܕܶ. tܛܢ . ང་ད་དང་སྡེ ད་ནི་ : ܕܪܵ نیشنل ーダ* 。 - - v
*S - Kryma gళి
-
%
W J ,v
N
'S Yኳ
", '*R q v \Bğ ‰ሩ'ዩ
Ayavuvi
鲇川 ' ' ...
இலங்கையும்
அதன்அயல்நாடுகளும்

Page 112
204 பண்டைய ஈழம்
碳。
சீனுவுக்கும் இலங்கைக்கும் இடையேயும் கி. பி. முதலாம், இரண் டாம் நூற்ருண்டுகளிலிருந்தே வணிக உறவுகளும் கலாசாரத் தொடர் புகளும் நிலவி வந்தன. இலங்கை மன்னர்கள் அனுப்பிய தூதுக் குழுக்கள் சீன அரசவைக்கு வெகுமதிகளுடன் சென்று திரும்பலாயின. இவ்வகைத் தொடர்புகள் 4ம் நூற்ரு: ண்டுக்குப் பின் அதிகமாகி வந் தன. சுவண்ணபூமி (மலாயா அல்லது சுமத்திரா) க்கும் இலங்கையில் (மகாதீர்த்தத்துக்கும்) இடையே கப்பற் போக்குவரத்து நடைபெற் றதை சமந்தபாசாதிகா குறிப்பிடுகின்றது. முந்திய அனுராதபுர காலத்தில் இவ்வாறு பல நாடுகளுடன் இலங்கை வணிகத் தொடர் புகள் கொண்டிருந்தது. இரசவாகினி போன்ற நூல்களில் வருகின்ற சில கதைகளைக் கொண்டும், பிராமிக் கல்வெட்டுக்களிலுள்ள சில குறிப்புக்களைக் கொண்டும், சிங்களர் கடற்ருெழில், வணிகத் தொழில் களில் ஈடுபட்டதை நாம் உணரலாம். எனவே, பிறநாட்டவர் இலங்கை வந்ததைப் போலவே, இலங்கை வணிகரும் இந்தியா முதலான பிற நாடுகளுக்குச் சென்று வணிகம் நடத்தி வந்தனர் எனலாம்.
பிந்திய அனுராதபுரகாலத்தில் இலங்கையுடன் வணிகம் செய்த நா டு களி ல் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பாரசீகத்தையும், பைசாந்தைன் பேரரசையும் (கிழக்கு உரோமப் பேரரசு) சேர்ந்த வணிகர் இலங்கைத் துறைகளுக்கு அடிக்கடி வந்ததையறிவோம். ஆரும் நூற்ருண்டிலிருந்து, இலங்கைத் துறைகள், குறிப்பாக மகா தீர்த்தம் சர்வதேச வணிகப் பரிவர்த்தனை நிலையமாக விளங்கி வர லாயிற்று. சீனவிலிருந்தும் பிற கீழை நாடுகளிலிருந்தும் வந்த கப் பல்கள் தாம் கொண்டுவந்த பொருட்களைப் பாரசீகருக்கும், அக்சு மைற்றுகளுக்கும் விற்றுவிட்டு, மேலைநாடுகளிலிருந்து கொண்டுவரப் பட்ட பொருட்களைக் கொண்டு சென்றன. இலங்கை, இந்தியப் பொருட்களையும் இப் பிறநாட்டுக் கப்பல்கள் அவ்வேளைகளிற் பெற்றுச் செல்லும். 8ம் நூற்ருண்டுக்குப் பின் பூரீ விஜயப் பேரரசும், அதைத் தொடர்ந்து சோழ, பாண்டியப் பேரரசுகளும் இந்து சமுத்திரத்திற் கடலாதிக்கஞ் செலுத்தியதால், தூரகிழக்கு நாடுகளின் இலங்கைத் தொடர்பு சில நூற்ருண்டுகள் தடைப்பட்டது. இலங்கை இவ்வாறு ஒரு சர்வதேசப் பரிவர்த்தனை நிலையமாக விளங்கியமை பற்றிக் கொஸ்மஸ் இண்டிகோபிளியூஸ்தஸ் எழுதிய "கிறிஸ்தவ இடவிளக்க வியல்" என்ற நூலில் சில விவரங்கள் உள்ளன. பிந்கிய அனுராத புர காலத்திலேயே, 7ம் நூற்ருண்டிலிருந்து அராபியர் மேலைக்கடலில் *ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கியதிலிருந்து, "இலங்கைக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகம் அவர்கள் கைக்கு மாறியது. 10ம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலேயே கொழும்பில் தமது ஆதிக்கத் தைச் செலுத்தத் தொடங்கி, விரைவில் இலங்கையின் ஏற்றுமதி வணி கம் முழுவதையும் அராபிய வணிகரே கட்டுப்படுத்தினர். இது பற்றிப் பின்னர் கவனிப்போம்.

அனுராதபுர காலப் பண்பாடு- வணிகம் 2 O 5
இலங்கையின் பிறநாட்டு வணிகம் நடைபெற்ற முக்கிய துறை கள் யாவும் வடஇலங்கையிலேயே அமைந்தன. இவற்றுள் தனி யிடத்தைப் பெற்ற மகாதீர்த்தம் (மாதோட்டம் அல்லது மாந்தை) பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். ஊராத்தோ கட்ட என்ற ஊர்காவற்றுறை, தம்பபண்ணி, மகண, உறுவெலா, திரு கோணமலை (கோகண்ண) என்பனவும் அக்காலத்தில் சிறப்புடன் விளங்கிய துறைகளே. வங்காளத்திலுள்ள தாமிரலிப்திக்கும், இலங் கையின் வடபகுதியிலுள்ள ஜம்புக்கோலவுக்குமிடையே முந்திய அணு ராதபுர காலத்தில் அடிக்கடி கடற்றெடர்புகள் இருந்தமை பற்றி முன்னர் அறிந்துள்ளோம். பிந்திய அனுராதபுர காலத்தில், மகா தீர்த்தத்துக்கும் தென்னகத்தில் நாகபட்டினம், மாமல்லபுரம் போன்ற துறைகளுக்கும் இடையேயும், கலிங்கத்திலுள்ள துறை யொன்றுக்கும் திருக்கோணமலைக்கும் இடையேயும் ஒழுங்காக வணி கம் நடைபெற்று வந்தது. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டவாறு, இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் முக்கியமானவை இரத் தினக் கற்களாகும். தென்னிலங்கையில் உள்ள மலையகப் பகுதிகளில் பெறப்பட்ட இக் கற்களுக்குப் பிறநாடுகளில் (இன்றுபோல அன்றும்) பெரும் கிராக்கியிருந்தது. முத்துக்கள், சங்குகள், யானைத்தந்தங்கள் என்பனவும் இலங்கையிலிருந்து ஏற்றுமதியான பிற பொருட்க ளாகும். வெண்துகில் (மஸ்லின்), ஆமையோடுகள், சில வேளைகளில் யானைகள் ஆதியனவும் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. பிந்திய அனுராதபுர காலத்திலும், இரத்தினக்கற்கள், முத்துக்கள் முதலானவையே இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக விளங்கின. இவ்வேற்றுமதிப் பொருட்களுக்கு ஈடாகப் பொன், வெள்ளி, பவளம், செப்பு, கண்ணுடி, உயர்தர மட்பாண்டங்கள், குதிரைகள் முதலானவற்றை இலங்கை இறக்குமதி செய்தது.
ஆதிகால பிராமிக் கல்வெட்டுக்களில் "புக" அல்லது "புகிய" என்ற சொல் (சமஸ்கிருதத்தில் உள்ள பூக என்பதின் திரிபு) இருப் பதைக் கொண்டு, பிரதான துறைகளிலும் இராசதானியிலும் வியாபாரக் குழுமங்கள் அல்லது தொகுப்பகங்கள் இயங்கி, பிறநாட்டு வணிகருடன் தொடர்புகளை நடத்தின என நம்பப்படுகின்றது. இத் தொகுப்பகத் தலைவனன செட்டி அரசாங்கத்தில் முக்கிய அலு வலஞக விளங்கினன். இத் தலைவனுெருவன், அசோகனிடம் சென்ற தூதுக்குழுவிற் சென்றதால் இக் குழு நடத்திய பேச்சுவார்த்தை களில் வணிக அலுவல்களும் இடம்பெற்றிருக்கக்கூடும். முந்திய அனுராதபுர காலத்தில் அனுராதபுரத்திலும், மகாதீர்த்தத்திலும் தமிழ் வணிகர்கள் குடியிருந்தமை கவனிக்கத்தக்கது. பிந்திய அனுராதபுர காலத்தில் பிறநாட்டு வணிகர் கூட்டங்கள் முக்கிய துறைமுகங்களிற் குடியேறியிருந்ததாக அறிகின்ருேம். இவர்களி லும் இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாட்டவரே முக்கியமானவர்ர்க்

Page 113
206 பண்டைய ஈழம்
இருந்தனர். வேறு சில பகுதிகளில் நெஸ்டோரிய வகுப்பைச் சேர்ந்த பாரசீகர் குடியேறியிருந்தனர். இவ் விவரங்கள் பலவற்றைக் குறிப் பிடும் கொஸ்மஸ், துறைமுகங்களில் கடமையாற்றும் அரச அலுவ லர் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். மகாபுடு-லத்தன் எனப்பட்ட அதிகாரிகளே அவ்வாறு துறைமுகங்களிற் பணிபுரிந்து, வெளிநாட்டு வணிகரின் அலுவல்களைக் கவனித்திருத்தல் கூடும். எனவே, அணு ராதபுர காலம் முழுவதும் இலங்கை தொடர்ச்சியாக வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்டு வந்ததை யுணரலாம். பல நாட்டவர் இலங் கையுடன் வணிக உறவு கொண்டபோதும் இதனுல் இலங்கையின் அரசியற் சுதந்திரம் பாதிக்கப்படாது, பொருளியல், பண்பாட்டு நிலைகள் சிறப்பெய்தின.
உள்நாட்டு வணிகம்
காலவேடுகளிலும் இலக்கியங்களிலும் முந்திய அனுராதபுர காலத்தில் உள்நாட்டு வியாபாரம் பற்றிய குறிப்புக்கள் வருகின் றன. வணிகர்கள் மாட்டு வண்டிகளில் மலைநாடு சென்று மஞ்சள், இஞ்சி முதலான பொருட்களைப் பெற்று வந்து அனுராதபுரம் பான்ற இடங்களில் விற்றமை பற்றிச் செய்திகள் உள்ளன. சந் தைகள் தலைநகரிலும், வேறு இடங்களிலும் இருந்தன. தீபவம்சம் உபதிசகாமத்து ‘மத்திய சந்தை” (அந்த ராபண) பற்றிக் குறிப் பிடுவதால், அத்தகைய சந்தை ஒன்று தலைநகரிலும் இருந்திருக்க வேண்டும். தலைநகரின் நான்கு வாயில்களிலும் வணிக நிலையங்கள் (நியமக்கள்) இருந்தன. தன்னிறைவுடைய கிராமங்களே அதிகம் இருந்தமையினல், அங்கு அதிக வணிகம் நடைபெற்றிருக்க முடி யாது. பிந்திய அனுராதபுர காலத்தில் உள்நாட்டு வணிகம் உள் ளூர்த் தொகுப்பகங்களின் பொறுப்பிலிருந்ததாகத் தெரிகின்றது. நெல் முதலிய தானியங்களை வைப்புத் தொகையாக இவை பெற்று அவற்றுக்கு வட்டியும் செலுத்தின. அக்காலத்திலுள்ள (நாணயங் களையும்) பணத்தையும் வைப்புத் தொகையாகப் பெற்றுள்ளன. வணிகர் தொகுப்பகங்கள் அனுராதபுரகால முடிவுவரை இயங்கி வந்துள்ளன என்பது, 4ம் உதயன் காலத்துக் கல்வெட்டால் தெளி வாகின்றது. அக்கல்வெட்டில், மஹியங்கணைக்கு அயலிலுள்ள ஒரு *வணிக்கிராம’ (தொகுப்பகம்) பற்றிச் சில விதிகள் கூறப்பட்டுள் ளன. இக் கல்வெட்டால், வேறும் சில செய்திகள் எமக்குக் கிடைத் துள்ளன. ஓரிடத்திலிருந்து மற்ருே ரிடத்துக்குக் கொண்டுசெல்லப் படும் பொருட்களில் அரசாங்கம் தீர்வைகளை விதித்தமை பற்றி நாம் அறிய முடிகின்றது. இதனுல் சில குறிப்பிடப்பட்ட இடங் களிலேயே பண்டங்கள் விற்கவேண்டிய கட்டுப்பாடு இருந்தது. நிறைகளும் அளவைகளும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட் டிருந்தன. தலைநகருக்குள் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் மீதும் வரிகள் செலுத்த வேண்டியிருந்தன.

அனுராதபுர காலப் பண்பாடு 207
பயிற்சி:
1.
இலங்கைப் படமொன்றை வரைந்து, அனுராதபுர காலத்தில் இலங் கையில் இருந்த அரசியற் பிரிவுகளைக் குறித்துக் காட்டுக.
2. இன்றைய சமுதாய அமைப்பில் காணப்படும் முக்கிய தன்மைகளை அனுராதபுரகால இலங்கைச் சமுதாயத்துடன் ஒப்பிட்டு வேறுபாடு களைக் குறிப்பிடுக. 3. இலங்கை பண்டைக் காலத்தில் நெல்லே யேற்றுமதி செய்யக்கூடிய தாக இருந்தமைக்கும், இக்காலத்தில் இறக்குமதி செய்யவேண்டி யிருப்பதற்கும் காரணங்களைக் கூறுக.
கூட்டுவேலைக்கு:
10ம் நூற்றண்டு வரை இலங்கையின் பிறநாட்டு வணிகத்தை விளக்க
ஒர் ஆசியாப் படத்தைப் பெரிதாக வரைந்து இலங்கையுடன் தொடர்பு கொண்ட நாடுகளையும், இலங்கையில் இருந்த முக்கிய துறைகளையும் குறித்துப் பெயரிடுக. இவற்றின் பழைய பெயர்களையும் அடைப்புக் குறி களுக்குள் எழுதுக.
தேர்வு வினுக்கள்:
1.
பிந்திய அனுராதபுரகால இலங்கையின் மத்திய, உள்ளூர் ஆட்சி முறையை விளக்குக. நீர்ப்பாசனத் துறைக்கு வசபன், மகாசேனன், தாதுசேனன், 2ம் மொகல்லானன், 2ம் அக்கிரபோதி ஆற்றிய பணிகளை (விளக்கப் படத்தின் துணையுடன்) தெளிவாக எழுதுக.
மகாவலிகங்கை, மல்வத்துஒயா ஆகிய ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அனுராதபுரகாலத்தில் எழுந்த நீர்ப்பாசனத் திட்டங்களை ஒரு படத்தில் குறித்துக் காட்டுக. சிறுகுறிப்புக்கள் வரைக:- பருமகர்கள்; ஆளிசாரக் கால்வாய், மகாதீர்த்தம்; அபிஷேக(ம்); மாபா; தக்கிணதேசம், அசிக்காஹக ஜயகங்கை; காமணி; காமிக.

Page 114
அத்தியாயம் பதினுறு அனுராதபுர காலப் பண்பாடு I : சமய, இலக்கிய, கலை வளர்ச்சிகள்
(i) சமய விருத்திகள் i. இலக்கிய வளர்ச்சி- பாலி, சிங்களம் முதலியன
i. கலைவளர்ச்சி: கட்டிடக்கலை - சிற்பங்கள் - ஓவியம்
மக்களின் புறவாழ்வைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குகளைக் கவனிக் கும் அரசியல் முறை பற்றியும், அவர்களின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கும் சமுதாய, பொருளியல் முறைகளைப் பற்றியும் முந்திய அத்தியாயத்திற் படித்துள்ளோம். ஒரு மனிதன் எந்நேரமும் சஞ்சல மடைந்து கொண்டு அமைதியிழந்து, தன் 'சீவன"த்தை நடத்த வகை தெரியாதிருப்பின், கலையோ, சமயமோ அவனுக்கு எவ்வித பயனு முடையதாகத் தோன்ருது. ஆனல், அனுராதபுர காலத்தின் அரசியல், பொருளியல் நிலைகள் மக்கள் கவலைகளைத் தவிர்த்துப் பொரும்பாலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் அனுபவிக்க உதவின. இத் தகைய நிலைமைகளையுடைய அனுராதபுர காலத்தில், மக்களின் அக வாழ்வை மலரவைக்கும் சமயம், கலை என்பன பெருவளர்ச்சியடைந் ததில் வியப்பில்லை. இலங்கையின் கலை வளர்ச்சியை - குறிப்பாகப் பண்டைய ஈழ காலத்து வளர்ச்சியை - நோக்குவோர்க்கு, அவ்வளர்ச் சிகள் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தமை புல ணுகும். அனுராதபுர காலத்தில் கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியம் சிறந்திருந்தன வென்றல், அதனல் அக்காலத்தில் கைதேர்ந்த கட்டிடச் சிற்பிகள். ஒவியர்கள் வாழ்ந்தனர் என்பது மட்டும் புலனுகின்றது என்பதில்லை. அழகியற் கலைகளை அனுபவிக்கவும் ஊக்கவும் வல்ல ஆதரவாளர்கள், காப்பாளர்கள் இருந்தனர் என்பதும், சமய, கலைச் சாதனைகளை நிகழ்த்துவதில் ஈடுபடக்கூடிய அரசியல் அமைதியும் பொருளியற் செழிப்பும் நாட்டில் நிலவின என்பதும் எமக்குப் புலனுக வேண்டும். எனவே, அனுராதபுர காலத்தை “புகழ்பூத்த ஒரு காலப் பகுதி" யாகக் கொள்ளவேண்டும் என்ற கூற்று மேலும் வலுப் பெறுகின்றதைக் காணலாம்.
i. சமய விருத்திகள்
பெளத்தம் இந் நாட்டுக்குப் பரவியமை எத்துணை முக்கிய நிகழ்ச்சி யென்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இவ்வத்தியாயத் தில் நாம் கூறவிருக்கும் இலக்கிய வளர்ச்சியும் கலை வளர்ச்சியும் உண்மையில் பெளத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த

அனுராதபுர காலப் பண்பாடு - சமயம் 209
தென்பதை நாம் உணர்தல் வேண்டும். பெளத்தம் இலங்கையில் எய்திய வளர்ச்சியின் அம்சமாகவே இவற்றை நாம் நோக்க வேண்டும். பெளத்த பிக்குகளால், பெளத்த மத விடயங்கள் பற்றி எழுதப் பட்டனவாகவே அனுராதபுர கால இலக்கியங்கள் இருத்தலைப் பின் னர் காண்போம். கட்டிட, சிற்பக்கலைகளின் வளர்ச்சியும் பெளத்த மதத் தொடர்புடையதாகவே பெரும்பாலும் அமைந்தமை கவனிக்கத் தக்கது. இவ்வித சிறப்பையுடைய பெளத் தம் இலங்கையில் அடைந்த வளர்ச்சியின் சில முக்கிய அம்சங்களையே நாம் இப்பகுதியிற் படிப்போம். •
மன்னர்களும், பெளத்தமும்: இலங்கையை அனுராதபுர காலத் தில் ஆட்சிசெய்த மன்னர்கள் பெரும்பாலும் பெளத்தர்களாகவே யிருந்தனர். தமிழர் இடையிடையே ஆட்சியைப் பெற்றபோதும், பெளத்த மத வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, தாதுசேனனுக்கு முன் ஆட்சி செய்த தமிழர் பெளத்தர் களாகவே யிருந்திருக்கவேண்டும் என்பது, அவர்கள் அம்மத வளர்ச் சிக்காகச் செய்த நன்கொடைகளிலிருந்து புலனுகின்றது. மன்னர்கள் செய்த சமயப் பணிகளையே காலவேடுகளும், கல்வெட்டுக்களும் மிகுதியாகக் கூறுகின்றன. குருமார்களின் அத்தியாவசிய நான்கு தேவைகளையும் குறைவிலாது வழங்குதல், வருவாய் தரும் கிராமங்களை விகாரைகளுக்கு மானியமாக அளித்தல், பல்வகைச் சமயக் கட்டி டங்களை அவற்றுக்கு நிறுவுதல், பழைய கட்டிடங்களைப் புதுக்கி மெரு கூட்டுதல் போன்ற பணிகளை அக்கால மன்னர்கள் வெகு சிரத்தை யுடன் ஆற்றினர். சங்கத்தினரிடையே தூய்மையையும் ஒழுக்கத்தை யும் பேணுவதற்காக, மன்னர்கள் இடையிடையே தூய்மை குறைந் தோரைச் சங்கத்தினின்றும் நீக்கியுள்ளனர். சங்கத்தில் பிளவுகள் தோன்றிய போது பிளவுகளை அகற்றவும், பெளத்தக் கோட்பாடுகள் பற்றிய கருத்து வேறுபாடுகள் எழும்போது உண்மைக் கோட்பாடுகள் எவையென்பதைத் தீர்மானிக்கவும் அவர்கள் முயன்றுள்ளனர். இவ் வாறு அனுராதபுரகால மன்னர்கள் பெளத்தத்தைத் தழுவி யாத ரித்து, அதன் வளர்ச்சியிற் பெரும் பங்கு கொண்டமையினலேயே பெளத்தமும் மிகவும் சிறப்பெய்தி வளரலாயிற்று என்பது கவனிக்கத் தக்கது. உண்மையில், பெளத்தம் நன்னிலை பெறப் பல வகைகளில் அரசாங்க ஆதரவும் தலையீடும் வேண்டப்படுதல் அதனுடைய ஒரு தனிப் பண்பு என்றே கூறலாம். -
சங்கத்திற் பிளவுகள்: மகாயான பெளத்தத்தின் வளர்ச்சி மகா சேனன் வரை பெளத்த சங்கத்தில் தோன்றிய பிளவுகள் பற்றியும், மகாயானப் பிரிவு இலங்கையில் அடைந்த வளர்ச்சி பற்றியும் முன்
27

Page 115
2 Ι 0 பண்டைய ஈழம்
னெரு அத்தியாயத்தில் (8ம் அத்.) கூறியுள்ளோம். முந்திய அனுராத புர கால முடிவில், மகாவிகாரை, அபயகிரிவிகாரை, ஜெதவனுராம என்ற முப்பெரும் விகாரைகள் தலைநகரில் உன்னத நிலையில் இருந் தன. மகிந்தரால் இலங்கையிற் புகுத்தப்பட்ட தேரவாத பெளத்தக் கோட்பாடுகளைச் சிறிதும் மாற்றமின்றிப் பேணும் ஒரு வைதிகப் போக்கு மகாவிகாரையினுடையதாக விருந்தது, அபயகிரிப் பிரிவினர், கொள்கை வேறுபாடுகள் அதிகமில்லாதவர்களாகத் தொடக்கத்திலிருந்து, காலப் போக்கில் இந்தியாவில் மகாயான பெளத்தம் வளர்ச்சி யெய்திய காலங்களில் அதன் செல்வாக்கால், அப் பிரிவுக்குரிய கோட்பாடுகளையும் பின்பற்றுவாராயினர். மகா விகாரையைப் போலவே, இவ் விகா  ைர யும் புறம்பா ன விளக்கநூல்களையும், சமயநூல்களில் வேருண பாடபேதங்களுள்ள பிரதிகளையும் கொண்டிருந்தது. புதுமைக் கருத்துக்களை வரவேற் பவர்களாக அவர்கள் இருந்தமையினலேயே, மகாயானத்தின்ஆதர வாளராகவும் மாறினர். மகாவிகாரையின் எல்லைக்குள்ளாக மகா சேனனல் நிறுவப்பட்ட ஜெதவன விகாரை, சாகாலியப் பிரிவைச் சேர்ந்த ஒரு குருவுக்கே கொடுக்கப்பட்டதென முன்னர் அறிந்துள் ளோம். இப்புதிய விகா  ைர மகாவிகாரையின் கட்டுப்பாட்டை யேற்காது, தனியாக இயங்கி வரலாயிற்று. இவ்வாறு அனுராத புரத்தில் இருந்த முப்பெரும் விகாரைகளும் மூன்று பெளத்தப் பிரிவுகளுக்குரியனவாக, மகாபராக்கிரமபாகு காலம் (12ம் நூற்.) வரை தனித்தியங்கி வரலாயின. பிந்திய அனுராதபுர காலத் திலும், இடையிடையே மகாயானத்தின் செல்வாக்கு இலங்கையிற் பரவலாயிற்று. சிலாகாலனது ஆட்சியின் போது (6ம் நூற்.)இந்தியா சென்ற பூர்ண என்ற வணிகன் அங்கிருந்து தர்மதாது என்ற மகா யான நூலைக் கொணர்ந்தமை பற்றியும் முன்னர் குறிப்பிட்டிருந் தோம். இந் நூலானது, வழிபாட்டுக்குரிய ஒன்ருக மகாயானப் பிரிவினரால் மதிக்கப்பட்டதெனத் தெரிகின்றது. இந்நூலை வெகு மரியாதையுடன் வரவேற்ற சிலாகாலன், ஆண்டு தோறும் அதற்கு விழா வெடுத்து, ஜெதவன விகாரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு கள் செய்தான். (தர்மதாது என்பதால் சத்தர்ம புண்டரிக என்ற மகாயான நூல் குறிக்கப் படுவதாகக் கருதுவர்.) அதே நூற் ருண்டில், 1ம் அக்கிரபோதியின் காலத்திலும் (575-608), மகாயான பெளத்தம் பரவியிருந்ததைக் கண்டு, மகாவிகாரையின் சார்பாகச் சிறந்த இந்திய அறிஞரான ஜோதிபால தேரர், வைதுல்ய வாதிகளைப் பகிரங்க விவாதத்துக்கு அழைத்துத் தோல்வி காண வைத்தார் எனப்படுகின்றது. தாடாபழதி என்ற இளவரசனே, மகாயானர் களின் கட்சியை ஆதரித்து உதவிசெய்தான் என்பர். இருப்பினும் மன்னன் மகாவிகாரையை ஆதரித்தமையினல், அவ்விகாரையே இறுதியில் வெற்றிகண்டது. சிலாமேகவண்ணன் (623-632) ஆட்சி செய்தபோது, அபயகிரி விகாரையில் ஒழுக்கங் குறைந்தவர்களைத்

அனுராதபுர காலப் பண்பாடு - சமயம் 21 1
தண்டித்து நாடு கடத்திய பின், சங்கத்தில் இருந்த பிரிவினையை அகற்ற அவன் ஒரு முயற்சியை மேற்கொண்டும் அது பயனற்ற தாயிற்று. மகாவிகாரைப் பிக்குகளே இவனது முயற்சிக்குத் தடை / / f T 555 விருந்தனர். இந்தியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மகாயான அறிஞர்கள் சிலர் இக் காலப்பகுதியில் இலங்கை வந்து, அபயகிரி விகாரையில் மகாயான பெளத்தப் பிரிவுக்கு ஊக்கமளித்தனர். அவ்வாறு வருகை தந்த அறிஞர்களில் காஷ்மீர் அரச குடும்பத்தைச் சேர்ந்த குணவர்மன், சீனவுக்குப் பின்னர் சென்ற வஜ்ரபோதி என்போர் குறிப்பிடத் தக்கவர்கள். சாகாலியப் பிரிவுக்குரிய அறி ஞர்கள் சிலரும் "விநய பற்றி நூல்கள் எழுதினர். வாஜிரிய வாதப் பிரிவு என்ற புதுப்பிரிவொன்று 9ம் நூற்ருண்டில் இலங்கையிற் பரவியதாகத் தெரிகின்றது. 1ம் சேனன் என்ற மன்னனே இப் பிரிவை ஆதரித்ததாகவும் கூறப்படுகின்றது. ‘பங்சுகூளிகர்’ என்ற ஒரு புதுப்பிரிவும் 9ம் நூற்றண்டிலேயே அபயகிரி விகாரை யிலிருந்து பிரிந்து கொண்டது. வெலிகமையிலும், புதுருவெகலை யிலும் உள்ள மகாயான உருவச்சிலைகள், நாகரி வரிவடிவத்தில் உள்ள இதே காலக் கல்வெட்டுக்களும் பிந்திய அனுராதபுர காலத் தில் மகாயானம் முதலான பிற பெளத்தப் பிரிவுகள், இலங்கையிற் பரவியிருந்ததை மேலும் உறுதிப்படுத்துவனவாக வுள்ளன.
சீன யாத்திரீகர்களும் இலங்கையும்: 5 ம் நூற்ருண்டின் முற்பகுதி யில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பாஹியன், 7ம் நூற் ருண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பல தலங்களுக்கு வருகை தந்த ஹ"வான் சுவாங் ஆகிய இரு சீன யாத்திரீகர்களும் இலங்கை யிற் பெளத்தத்தின் நிலை பற்றிய சில முக்கிய விவரங்களைத் தமது குறிப்புக்களிற் சேர்த்துள்ளனர். (117, 123, 142ம் பக். பார்க் கவும்.) இலங்கை வந்த பாஹியன் அனுராதபுரத்தில் அபயகிரி விகாரையிலேயே தங்கியிருந்தார். அனுராதபுரத்தில் இருந்த மிக முக்கிய மத நிறுவகம் என அவ் விகாரையைச் சிறப்பித்துக் கூறி யுள்ளார். அபயகிரி தாகபம் புத்தரின் பாதங்களின் சுவடுகள் மீது எழுப்பப் பெற்றதாக ஒரு நம்பிக்கை யிருந்ததையும், அபயகிரி விகாரைக் கண்மையில் போதி மரத்தின் பிறிதொரு கிளை நாட்டப் பட்டிருந்ததையும் அவர் குறித்துள்ளார். அபயகிரியில் 5,000 பிக்குகள் வரையிலும், மகாவிகாரையில் 3,000 பிக்குகளுமே வாழ்ந்ததாக அவர் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. இலங்கையின் புனித இடங்களை வழிபடப் பல நாட்டுத் தலஞ்சுற்றிகள் (யாத் திரீகர்) இங்கு வந்ததையும் பாஹியன் அறியத்தருகின்றர். தேரவாத அல்லாத பிற பிரிவுகளின் திருநூல்களும் இலங்கையிற் கிடைத்ததையும் அவர் எடுத்துரைத்துள்ளார். தந்த தாதுவின் விழா பற்றியும் மற்றும் எவ்வளவோ பயனுள்ள விவரங்களையும் பாஹிய்னுடைய குறிப்புக்கள் கொண்டிருத்தலால் அவை எமது

Page 116
212 பண்டைய ஈழம்
காலப்பகுதியின் சமயநிலையை அறியப் பெரிதும் துணைநிற்கின்றன. பிற நாட்டவர் என்ற முறையில் அவருக்கேற்பட்ட ஆவலுடன் அவர் இக்குறிப்புக்களை யெழுதியுள்ளார் என்பது தெளிவு. ஹவான் சுவாங் தென்னிந்தியாவில் (காஞ்சியில்) இருக்கும் போது அங்கு எட்டிய செய்திகளையே இலங்கை பற்றிக் குறித் திருக்கின்ருர், இவருடைய குறிப்புக்கள் அத்துணை பயனுள்ளவையாக இல்லா விடினும், இரு நூற்றண்டுகளுக்குப் பின்னரும் அபயகிரி விகாரை மிக்க புகழொடு விளங்கியதை அவருடைய குறிப்புக்கள் தெளிவு படுத்துகின்றன. -
சமய வழிபாடும், விழாக்களும்: பெளத்தம் புகுத்தப் பட்ட காலத்தில் இல்லாத வழிபாட்டுமுறைகளும், சடங்குகளும், விழாக் களும் அம்மதத்தில் இங்கு இடம் பெறலாயின. இவை புத்தரின் போதனைகளுக்கோ, கொள்கைகளுக்கோ உடன்பாடில்லாமல் இருக் கலாம்; ஆனல் இவையின்றி, பெளத்தம் ஒரு சமயமாகப் பொது மக்களாற் பின்பற்றப் பட்டிருக்கவும் முடியாது. இந்தியாவிலேயே ஏற்பட்டிருந்த 'ஸ்தூப (தா கபம்) வழிபாடு இவ்வித நோக்கத் தாலேயே எழுந்தது.Tதிருநூல்களிலிருந்து சில பகுதிகளை ஒதுதல் மூலம் (பரித்த அல்லது "பிரித்’ ஒதல்) தீமையணுகா வாறு செய்ய லாம் என்ற நம்பிக்கையால், அம்முறை முந்திய அனுராதபுர காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வந்தது. போதிமர வழிபாடும், ஸ்தூப வழிபாட்டைப் போலவே, தொடக்கத்திலிருந்து பின்பற்றப் பட்டு வரலாயிற்று. இவற்றுக்குச் சில விழாக்களை மன்னர்களே ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். போதி மரத்துக்கு நடத்தப் பட்ட ஒரு விழா ‘ஸ்நானபூஜா எனக் குறிப்பிடப் பட்டது. மன்னர்களின் சமயப் பணிகளில் இவ்விழாக் களை நடத்துதல், போதி மரத்துக்கான கட்டிடத்தை (போதிகர) நிறுவுதல் முதலானவை சிறப்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. பிந் திய அனுராதபுர காலத்தில், தந்ததாது வுக்கான விழாக்களே அதிக முக்கியத்திைப் பெற்றிருந்தன. தள அல்லது தாடா(பல்) என்ற தொடக்கத்தையுடைய பெயர்களை இக் காலப்பகுதியில் மன்னர்கள் பலர் சூடியமையும் இதை வலியுறுத்தும். தந்ததாது வின் புகழ் பிற பெளத்த நாடுகளுக்கும் பரவியிருந்தது. மகிந் தரின் மறைவை நினைவுபடுத்தும் போசன் பண்டிகையும், புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வெசாக் முதலான விழாக்களும் ஒழுங்காகக் கொண்டாடப்பட்டன. இவ்வாறு 6) TптотLDт 6or go LDLudo சடங்குகளும் விழாக்களும் பெளத்தர்களின் வழிபாட்டு முறைகளில் இடம் பெற்று, பெளத்தம் இலங்கையில் வளர்ச்சி பெறலாயிற்று.

அனுராதபுர காலப் பண்பாடு - இலக்கியம் 2星3
பிற சமயங்கள்: இந்துமதம்
பெளத்தம் பரவியபின்னரும், இலங்கையின் சில பகுதிகளில் (பிராமண) இந்துக் கோவில்கள் நன்னிலையில் இருந்துவந்தமை பற்றி அறியமுடிகின்றது. வடபகுதியில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், குறிப்பாகப் பிந்திய அனுராதபுர காலத்தில் மிகவும் சிறப்புட்ன் விளங்கின. தென்னிலங்கையிலும் சைவ, வைஷ்ணவக் கோவில்கள் முக்கியமாகத் துறைகளையடுத்து விளங் கின. தேவுந்தர அல்லது தேவநகரம் (இப்போதைய தொந்திரா முனை) என்ற இடத்தில் நெடுங்காலம் ஒரு விஷ்ணு ஆலயமும், கதிர்காமத்தில் முருகனது கோவிலும் இருந்து வந்தமை நாம் நன்கு அறிந்ததே. உருகுணையிலும், கோ கண்ண (திருகோணமலை)விலும் இருந்த பிராமணக் கோவில்களை மகாசேனன் தரைமட்டமாக்கி ணுன் எனப்படுவதால், அக்காலத்தில் தென்னிலங்கையில் சைவ வழிபாடு நடைபெற்றதை உணரலாம். அனுராதபுரத்துக்கு வடக் கேயும் சில சைவக் கோவில்களின் அழிவுகள் காணப்படுவதைக் கொண்டு, தலைநகரில் வாழ்ந்த இந்துக்களின் தேவைகளுக்காகக் கட்டப்பெற்றன எனக் கூறலாம். 1ம் சேனன் (833-853), சைவ சமயத்துக்கு மாற்றப்பட்டதாக நிகாய சங்கிராஹவ என்ற சிங்கள நூல் குறிப்பிடுகின்றது. மாணிக்கவாசகரே, இவ்வாறு சேனனை மதம் மாறச் செய்திருக்கலாம் எனச் சிலர் கருதுவர். 2ம் சேனன் (853-887), முத்துக்கள் நிறையவுள்ள ஆயிரஞ் சாடிகளைப் பிரா மணர்களுக்குத் தானம் வழங்கியதாகக் கூறப்படுவதாலும், பிற செய்திகளாலும் பித்திய அனுராதபுர காலம் முடியும் வரை பிரா மணர்கள் மிக்க செல்வாக்குடையவர்களாக விளங்கினரெனலாம்.
ii இலக்கிய வளர்ச்சி - பாலி, சிங்களம் முதலியன
பெளத்தமும், கலை வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு கொண்ட வையாகப் பண்டைய ஈழத்திலிருந்தமை பற்றி இவ் வத்தியாயத் தொடக்கத்திற் குறிப்பிட்டிருந்தோம். இலக்கியத் துறையில் உண் டான வளர்ச்சிகள் இவ்வுண்மையை நன்கு எடுத்துக் காட்டுகின் றன. அனுராதபுர காலத்தில் இலக்கியத் துறையில் முன்னின்று உழைத்தவர்கள் பெளத்த குருமார்களே. கல்வி பயிலும் வாய்ப்பும், நூல்களை எழுதும் நாட்டமும் அவகாசமும் அவர்களுக்கே யிருந்தன. பெளத்தத்துடன் தொடர்புடைய நூல்களையே அவர்கள் எழுதினர். விருத்தியடையாத நிலையிலேயே சிங்கள மொழி இன்னும் இருந்த தால், நூல்கள் பாலி மொழியிலேயே எழுதப்பட்டன. குப்தா காலத்தில் இந்தியர்வில் ஏற்பட்ட சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சியுட் இலங்கையைப் பாதித்ததால், அம்மொழியிலும் ஒரு சில இலக்கி முயற்சிகள் நடைபெற்றன. இக் காலத்தில் எழுதப்பட்ட நூல்க !

Page 117
214 பண்டைய ஈழம்
பெரும்பாலும் திருநூல்களுக்கு எழுதப்பட்ட விளக்கங்களாகவோ, சமயக் கருவையுடைய புதிய முயற்சிகளாகவோ இருந்தன.
பாலி எழுதும் வித்தையைப் பெளத்த குரு மார்கள் இலங்கை யிற் புகுத்தியிருந்த போதும், திரிபிடகம் முதலான திருநூல்கள் எழுதாமறைகளாக இருந்து வந்தன. வட்டகாமணியினது ஆட்சிக் காலத்திலேயே அவை எழுதப்பட்டதும், இலக்கிய முயற்சிகள் நடைபெறக் கூடிய சூழ்நிலைகள் இலங்கையில் ஏற்படத் தொடங் கின. சமய நூல்களை யொட்டி வியாக்கியானங்களும், சமய வளர்ச்சி பற்றிய மரபுகளும் வளர்ந்து வரலாயின. இவற்றி னிடையே வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய கதைகளும் சேர்ந்திருந் தன. இவற்றை மகாவிகாரை போன்ற விகாரைகள் பேணி வந்தன. இவ்வித மரபுக் கதைகளையொட்டியே, தீபவம்சம் எழுதப்படலா யிற்று. பாலிமொழியில் எமது நாட்டில் எழுதப்பட்ட மிகப் பழைய நூலாக இதைக் கருதலாம்.
இந்தியப் பேரறிஞரும், பெளத்த மதகுருவுமான புத்த கோசரது வருகையால் ஈழத்து இலக்கிய வளர்ச்சி புதியதோர் ஊக்கத்தைப் பெற்றது. பெளத்த நூல்களுக்கு வியாக்கியானங்கள் அல்லது விளக்கங்கள் எழுதியவர்களுள் தலையானவர் புத்தகோசர் . இவர் இலங்கையில் பெளத்த இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும் பணிகளால், இவரது வாழ்க்கை பற்றிப் பல ஐதிகங்கள் ஏற்பட்டதில் வியப்பில்லை. பாலியில் திருநூல்களுக்கு வியாக்கி யானங்களை எழுதவும், புத்தரின் போதனைகளைத் தூய்மை கெடாத வாறு பேணவுமே இவர் அவதரித்தார் எனக் கூறப்பட்டது. பாலி யில் எழுதப்பட்ட வியாக்கியானங்களில் அரைப் பங்குக்கு மேல் இவரே எழுதினர் எனப்படுகின்றது. மகாநாமன் ஆட்சி செய்த போது (கி. பி. 409-431) இலங்கைக்கு வந்த புத்தகோசருக்குப் புதிய நூல்களை யெழுதும் அவா இருந்ததில்லை; ஏற்கெனவே, இலங் கையிலிருந்த பல்வேறு சிங்கள விளக்க நூல்களின் உட்பொருளைப் பாலியில் ஒழுங்குபட நல்லமுறையில் எழுதுவதையே தமது நோக்க மாகக் கொண்டிருந்தார். அவரது செயல் திறமையும், அயரா உழைப்பும் பாராட்டுக்குரியவை. விசுத்தி மார்க்கம் என்ற நூல் வாயிலாக, புத்தரின் போதனைகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அவர் கொடுத்தருளினர். "விநய-பிடகவின் விளக்க நூலாக ‘சமந்தபாசாதிகா” என்பதை எழுதினர். புத்தகோசர் எழுதிய பெரும்பாலான நூல்களில் அக்கால அரசியல், சமய, சமூக வர லாற்றைப் பிரதிபலிக்கும் குறிப்புக்களும் உள. இவர் எழுதிய வியாக்கியானங்கள் முற்றுப்பெறுமுன், புத்தகோசர் இந்தியா மீண்டமைக்கு இலங்கையில் தோன்றிய கலவர நிலைமைகளே காரண மென்பர்.

அனுராதபுரகாலப் பண்பாடு-இலக்கியம் 215
பிந்திய அனுராதபுர காலத்தில் தோன்றிய நூல்களில் சமஸ்கிருத மொழியின் செல்வாக்கை மிகுதியாகக் காணலாம். முன்னர் நாம் படித்துள்ளவாறு, சமஸ்கிருதச் செல்வாக்கேற்பட, L f)d5fT TGÖT பெளத்தம் பரவியமையும், குப்தப் பேரரசுடன் நிலவிய தொடர்பு களும் முக்கிய காரணங்களாம். இக்காரணங்களால் 'வடமொழி யிலக்கியங்களை இலங்கைக் குருமார்கள் பயின்று வந்தனர். சமயக் கருத்துக்களைக் கொண்ட நூல்களை எழுதவேண்டி யிருந்த பிக்குகள் வடமொழி இலக்கியங்களில் தாம் நயந்த பகுதிகளைத் தாம் எழுதிய நூல்களில் புகுத்தினர். இதனலேயே, மகாவம்சம் போன்ற பிந்திய அனுராதபுர கால நூல்களில் வடமொழி இலக்கியச் சாயல்கள் அதிகமாகக் காணப்படலாயின. முன்னர் தீபவம்சத்திலுள்ள வர லாற்றையே மகாவம்சம் கூறினும், அது விரிவாகவும் அழகான இலக்கிய அமைப்பிலும் எழுதப்பட்டதை முன்னர் கூறியுள்ளோம். புத்தகோசரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் சில நூல்கள் உண் மையில் கி. பி. 5ம் நூற்ருண்டுக்குப் பின் எழுதப்பட்டனவாகச் சிலர் கருதுவர். பாலி மொழியில் இலக்கிய முயற்சிகளை யாதரித்த பிந்திய கால மன்னர்களுள் 5ம் காசியப்பன் (175 பக்.) குறிப்பிடத் தக்கவன். அனுராதபுரத்திலுள்ள போதி மரத்தின் வரலாற்றைக் கூறும் மகாபோதிவம்சம் என்ற மற்ருெரு காவியம் அலங்கார நடை யில் 10ம் நூற்ருண்டில் எழுதப்பட்டது. அபயகிரி விகாரையில் எழுதப்பட்ட ‘சத்தம்மோபாயன" என்ற கவிதை நூல், பெளத்தக் கொள்கைகள் பற்றிப் பொதுவாகக் கூறும். இந்த ஒன்றைத் தவிர அவ் விகாரையைச் சேர்ந்த பிற நூல் எதுவும் எமக்குக் கிட்டாமை
குறிப்பிடத்தக்கது. *ဂဲ 酶°
சமஸ்கிருதம்: 7ம், 8ம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த சில பொறிப் புக்கள் வடமொழியிலேயே எழுதப்பட்டன. இதனல், இலங்கையில் அம்மொழியின் செல்வாக்குப் பரவியிருந்தமை புலணுகும். ஆனலும், குறிப்பிடத் தக்கதான ஒரு நூல் மட்டுமே, அம்மொழியில் எழுதப் பட்டு எமக்குக் கிட்டியுள்ளது. குமாரதாசன் எழுதிய ஜானகீஹரண என்பது, காளிதாசனது இரகுவம்சத்தை யடியொற்றி எழுதப் பட்டது. 6ம் நூற்ருண்டில் ஆட்சி செய்த குமார தாதுசேனன் (512-520) என்பானே, இந்நூலின் ஆசிரியர் என முன்னர் கருதினர். 7ம் நூற்றண்டில் வாழ்ந்த மான(ன்) என்பவனது மகனே இக் குமாரதாசன் என இப்போது சிலர் கருதுவர். •
சிங்களம்: பழைய சிங்கள மொழியான ‘எளு பாசா வேத காலச் சமஸ்கிருதத்தைப் போன்று மிகக் கடினமான உருவத்தைக் கொண் டது. கல்வெட்டுக்களை அம் மொழியிலேயே கி. பி. 3ம் நூற்ருண்டி லிருந்து சில நூற்ருண்டுகளாகப் பொறித்து வந்தனர். ஆதிச் சிங்கள மொழியில் மிகக் குறைவாகவே இலக்கிய முயற்சிகள் நடைபெற்றன.

Page 118
2I 6 பண்டைய ஈழம்
கவிதைகள் சில அம்மொழியில் எழுதப்பெற்றன என்பர். தந்த தாது பற்றியொரு கவிதைநூல் சிறிமேகவண்ணனது காலத்தில் எழுந்தது. பாலி மொழியிலுள்ள சில நூல்களுக்கு ஆதிச் சிங்கள மொழியிலேயே ஆதார நூல்கள் இருந்தன. வேறும் சில வசன இலக்கியங்களும் ஆதிச் சிங்களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனல் அவற்றில் பெரும் பாலானவை எமக்குக் கிட்டவில்லை. சாலமேவன் என்ற 4ம் சேனன் எழுதிய சியபஸ்லகர என்பது மட்டுமே எமக்குக் கிடைத்த ஒரே நூலாகும். 5ம் காசியப்பனுல் இயற்றப்பட்ட ஓர் அரும்பத விளக்கம் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம். சீகிரியாச் சுவரொன்றில் 8ம், 9ம், 10ம் நூற்ருண்டுகளில் பொறிக்கப்பட்ட (சிங்கள)கவிதைகள், அக்காலக் கவிதையமைப்புப் பற்றியும், வரிவடிவ வளர்ச்சி பற்றியும் அறிய உதவும் கருவூலங்களாக அறிஞர் அவற்றைப் போற்றுகின் றனர்.
அனுராதபுர கால இலக்கிய வளர்ச்சி அத்துணை வேகமோ, செழிப்போ கொண்டதாகக் கூறுவதற்கில்லை. சமயக் கொள்கைகளும், பாலிமொழியும் இவ்விலக்கிய வளர்ச்சிக்குத் தடையாகவிருந்தன வெனலாம். இருப்பினும், அனுராதபுர காலத்தில் ஏற்பட்ட வளர்ச் சிக்கு, மன்னர்கள் அளித்த ஆதரவும் காட்டிய அக்கறையும் முக்கிய மாக ஊக்கமளித்தன எனல் வேண்டும். சில மன்னர்கள் தாமே கல்விமான்களாகவும் விளங்கி, இ லக் கி ய விற்பன்னர்களுக்கும், புலவர்களுக்கும் தம் வண்மையைக் காட்டினர். அறிஞர்களைப் போற் றும் நாடே உண்மையில் பண்பாடுடைய நாடெனக் கூறுவர். அவ் வகையில், அனுராதபுர கால இலங்கையும் அறிஞர்களைப் போற்றி சிறந்த பண்பாட்டுடன் திகழ்ந்தது.
i. கலை வளர்ச்சி
அ. கட்டிடக் கலை;
மதசச்ார்பிலாக் கட்டிடங்கள்: அனுராதபுர காலக் கட்டிடங்களில் இன்றுள்ள இடிபாடுகள் அல்லது சிதைவுகள் பெரும்பாலும் சமயத் தேவைகளுக்குப் பயன்பட்டவையாகும். எனவே இங்கு கூறப்படும் கட்டிடக்கலை வளர்ச்சியும் உண்மையில் சமயக் கட்டிடக்கலை வளர்ச்சி யாகவே யிருக்கும். முதலில், சமயச் சார்பிலாக் கட்டிடங்களாக விருந்த ஒரு சிலவற்றைப் பற்றிக் கூறியதும், சமயக் கட்டிடங்களின் வளர்ச்சி பற்றிக் கூறுவோம். அனுராதபுரத்திலிருந்த அரச மாளிகை சுவடேயின்றி மறைந்துவிட்டது. சோழப் படையெடுப்பின் போது அது எரியூட்டப்பட்டிருக்க வேண்டுமென்பர். சீகிரியாவிலும், மாளி கையின் சுவடுகள் மறைந்துவிட்டன. சீகிரியாவில் இன்று கிடைத் துள்ள பிற இடிபாடுகள், அதன் கட்டிட அமைப்புக்கள் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டமையைக் காட்டுகின்றன.

அனுராதபுர காலப் பண்பாடு-கலை வளர்ச்சி 217
ஒரு பெருங்கற்பாறையை நகராக்கத் திட்டமிட்டு, அதன் வெவ்வேறு பகுதிகளை அப்பாறையிலேயே குடைந்து செதுக்கி முடித்தமையே அசாதாரணத் திறமையையும், கலை நுட்பத்தையும் காட்டுவதாகும். உச்சிப் பாகத்தின் அமைப்பிலும், உதிரிக்கற்பாறைகளைப் வயன்படுத்தி உருவங்கள் முதலானவற்றைச் செதுக்கிய வகையிலும், அகழி, மதிற் சுவர் என்பவற்றை நிறுவிய வகையிலும் மிகுதியான கலை நுட்பத்தை யும் திட்டமிடும் திறனையும் காணலாம். படிக்கற்கள் உச்சிவரைக்கும் செல்லும் பாதைக்கு அமைக்கப் பட்டிருத்தலையும், குன்றின் உச்சிப் பாகத்தைத் தொடர்ச்சியாக உயர்ந்து செல்லும் மேடைகளாக வகுத்த அமைப்புத் திட்டத்தையும் நாம் போற்றவே செய்வோம். கீழேயுள்ள மேடைகள் பூங்காக்களாகவும், ஆக மேலேயுள்ள மேடை பார்வை யாளருக்குரிய தாகவும் பயன்படும் முறையில் அமைக்கப்பட்டிருத் தலைக் காணலாம். (சீகிரி) நகருக்கு மேற்குப் புறமாக நிறுவப்பெற்ற அரசப் பூங்காவின் அமைப்புக்கு இணையாக அக் காலத்தில் ஏதும் அமைக்கப் பட்டிருந்ததாகத் தெரியவில்லை. "கண்ணுடிச் சுவர்" என மிகப் பொருத்தமாக அழைக்கப்படும் சுவரை அவ்வளவு அழுத்தமும் பிரகாசமும் பெறவைத்த தொழிலாளர்களின் திறமையைப் பாராட் டவே வேண்டும். உலக ப் புகழ் பெற்ற வண்ண ஒவியங்கள்(இவை பற்றி விரைவிற் கவனிப்போம்) அங்கு தீட்டப்பட்டிராவிடினும், சீகிரியா_'ஒரு மகத்தான சாதனை' யெனவும், 'ஆதிகாலச் சிங் களரின் வியத்தகு பொறியியல் வெற்றி", "திட்டத்தில் புதுமை, கருத்தில் துணிச்சல், செயலில் தீரம்' என்வும் அது போற்றப்படவே செய்யும். அனுராதபுரத்திலுள்ள திசவாவிக்கு அருகாமையிலுள்ள (ரன்-மசு-உயான எனப்பட்ட) ஒர் அரசப் பூங்காவும், அரசக் கேணி களும், அலங்கார மண்டபங்களும் மதச் சார்பிலாக் கட்டிடங்களுக்குப் பிற எடுத்துக்காட்டுக்களாகும். பிந்திய அனுராதபுர காலத்தைச் சேர்ந்த ஒரு மாளிகையின் அடித்தள அமைப்புத் திட்டம் (மனைபடம்) பசவக்குளத்துக் கண்மையிற் காணப்பட்டது.
மதச்சார்புடைய கட்டிடங்கள் - விகாரைகள்: பெளத்தம் பரவிய பின்னரே, இலங்கையில் அழியாத தன்மை கொண்ட கட்டிடங்கள் தோன்றலாயின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனல் இவையும் முற் றிலும் கல்லாலானவையாக விருப்பதில்லை. மேற்கோப்புப் பெரும் பாலும் மரம் போன்ற அழியும் பொருட்களாலானவையாகவே யிருந் தன. எனவேதான், பெரும்பாலான சமயக் கட்டிடங்கள் முழுமை யாகப் பேணப்படாது, சிதைவடைந்து போயின. பெளத்தம் பரவிய போது, இரண்டு நோக்கங்களைக் கொண்ட சமயக் கட்டிடங்கள் எழுந் தன3) பெளத்த குருமார்களுக்கு வேண்டிய உறைவிடங்கள்; சங்கக் கருமங்கள் ஆற்றுதல் முதலானவற்றுக்கு வேண்டிய கட்டிடங்கள்
28

Page 119
218 பண்டைய ஈழம்
ஒரு வகையாகும். இவை பெரும்பாலும் விகாரைகள் அல்லது ஆராமங்கள் எனப்படும். மிகிந்தலை முதலான இடங்களிற் காணப்படும் குகைகளே முதன்முதலில் பிக்குகளின் உறைவிடங்களாகப் பயன் படுத்தப்பட்டன. இயற்கையாகவே, பாறைகளில் உண்டான குகை களுக்கு, தண்ணீர் உள்ளே புகாவண்ணம் பாறையில் ஒரு வரியை முன்தள்ளும் வகையில் அமைத்துத் துறவோரகங்களாக அவை மாற்றப் பட்டன.(இக்குகைகளைச் செப்பனிட்டு வழங்கியோர் பொறித்த பிராமிக் கல்வெட்டுக்களால், இவை மேலும் முக்கியம் பெற்றுள்ளன.) ஆனல், தேவானம்பிய திசன் காலத்திலேயே, விகாரைகள் (மகாவிகாரை முத லானவை) நிறுவப்படலாயின. இவற்றின் கட்டிட அமைப்புப் பற்றி நாம் ஏதும் கூறமுடியாதிருக்கின்ருேம். தொடர்ச்சியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தேவானம்பியதிசனது காலத்து விகாரைகள், காலாகாலங்களில் ஏற்பட்ட மாறுதல்களுடன், பெளத்த பிக்குகளின் உறைவிடங்களாக விளங்கி வந்துள்ளதால், அவை பழைய கட்டிட அமைப்பைக் கொண்டிருத்தல் இயலாது. இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் வருங் குறிப்புக்களால், ஒரு சில செய்திகளை *அறிய முடிந்துள்ளது. மகிந்தர் போன்ற தேரர்கள் வாழ்வதற்கு வழங்கப்பட்ட கட்டிடங்கள் பிராசாதங்கள் எனப்பட்டன. சங்கத்தில் பிக்குகளைப் புதிதாகச் சேர்ப்பதற்கான உபசம்பத என்ற சடங்கு நடை பெற்ற இடம் ‘மாளக' எனப்பட்டது. உபோசத க்ர என்ற கட்டிடத் தில், குற்றங்களை ஒப்புக்கொள்ளல் போன்ற சடங்கும், பிற சங்கக் கருமங்களும் நடைபெறும், துட்டகாமணி நிறுவிய லோகபாசாத இத்தகைய கட்டிடமாகும். பிந்திய அனுராதபுர காலத்தில், புதான-கர (தியான மண்டபம்), சன்னிபாத-சால (குருமார்கள் குழுமிப் பொது வைபவங்களை நடாத்தும் இடம்), மஹாபாலீ (காலையிலும், நண் பகலிலும் உணவுட்கொள்ள அவர்கள் கூடும் இடம்) முதலான சமயக் கட்டிடங்கள் விகாரைகளின் உறுப்புக்களாக அமைந்து, பிக்குகளின் வெவ்வேறு தேவைகளை நிறைவு செய்தன. கட்டிடம் நிறைவாக்கும் தேவையைப் பொறுத்தே அதன் மனைபடம் (அடித்தள அமைப்பு) இருக்கும். ஒவ்வொரு விகாரையிலும், தனிப்பட்ட குருமார்களின் உறைவிடங்கள், தாகபங்கள் முதலான வழிபாட்டிடங்களைச் சுற்றி ஒழுங்காக அமைக்கப் பெற்றிருந்தன.
வழிபாட்டு நிலையங்கள்-தாகபங்கள்: பெளத்தப் பொதுமக்களின் பக்தியைத் தூண்டவல்ல புனித சின்னக் கோயில்கள், பக்தியுணர்வை எழச்செய்து நிலைபெறவைக்கக் கூடிய வழிபாட்டு நிலையங்கள் என் ப்னவே, பெளத்தம் பரவியதனல் நிறுவப்பட்ட இரண்டாவது வகைக் கட்டிடங்களாகும். இக் கட்டிடங்களுள் முக்கியமானதை ஸ்தூப(ம்) எனவும், திாகபம் எனவும் அழைப்பர். தூபி என இதைத் தமிழிற் சிலர் வழங்குவர். புத்தருடைய காலத்துக்கு முன்பே, அரசர்கள்

அனுராதபுர காலப் பண்பாடு - கலை வளர்ச்சி 2 19
முதலான உயர் குடும்பத்தவர்களின் உடற் சின்னங்களை வைத்து, அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பும் வழக்கமிருந்தது. இவ் வாறு முன்னரே ஏற்பட்டிருந்த வழக்கத்தைப் பின்பற்றியே, பெளத் தர்கள் தமது மதவழிபாட்டுக்குரிய ஸ்தூபத்தை அமைக்கலாயினர். புத்தருடைய உடல் தாதுக்களை (சின்னங்களை) வைத்து, அசோகன் காலத்தில் சாஞ்சி, பாரூட் முதலான இடங்களில் எண்ணற்ற ஸ்தூ பங்கள் எழுந்தமை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்தியா விலிருந்து இலங்கைக்குப் பெளத்தம் பரவவே அங்குள்ள ஸ்தூபங் களைப் பின்பற்றி இங்கும் தாகபங்கள் கட்டப்பெற்றன. மெளரியப் பண்பாட்டின் தாக்கத்துக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும். த்ாகபங்களின் அமைப்பில், மூன்று பகுதிகள் அல்லது கூறுகள் முக் கியமானவை; அவையாவன:- 1. அடித்தளம் i. அண்டம் அல்லது வில்மாடம் i, மேற்கோப்பு (தூபி). அடித்தள்த்தில், ஒன்றின் மேல் ஒன்முக உயர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மேடைகள் அல்லது அலங்கார வரிசைகள் (ferraces) இருந்தன. அடித்தளத்தின் மேலேயுள்ள வில்மாடம் என்ற பகுதி (அண்டம்) குமிழி அல்லது நெற் போர் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதையே தாகபத்தின் முக்கிய பாகம் என்பர். இதன் வெளிப்பக்கம் செங்கற்கள் பதிக்கப்பட்டு, பின் சுண்ணும்பு பூசப்பட்டிருந்தது.வில்மாடத்துக்கு மேலுள்ள மேற்கோப்பு ஐந்து பகுதிகளைக் கொண்டது. இவை முறைய்ே, ஹதரஸ் - கொட்டுவ (சதுரகோட்டம்), தேவதா கொட்டுவ, கோட்ட், சத்த (குடை), கறல்லு (முடி) என்ற பெயர்களைக் கொண்டவை. அடித்தள அமைப் பும், மேற்கோப்புமே காலத்துக்குக் காலம் மாறுதல்கள் அடைந்து வந்தன. தொடக்க காலத்துத் தாகபங்களில் ஒன்றேனும், அதன் உருவ அமைப்பு எவ்வித மாறுதலும் அடையாது இன்றுவரை பேணப் படவில்லை. சாஞ்சி ஸ்தூபங்களின் அடித்தளங்கள் தனி மேடை (மேதி) அல்லது அலங்கார வரிசையைக் கொண்டிருந்தன. ஆனல், இலங்கைத் தாகபங்கள் மூன்றடுக்குடைய அடித்தளங்களைக் கொண்டி ருந்தன என மேலே கூறினுேம், வில்மாடத்துக்கு மேலேயும், அடித் தளத்தைச் சுற்றியும் மரத்தாலான அளிச்சல்கள் அல்லது வேதிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை பின்னர் செங்கல், கல் ஆகியவற்றல் அமைக்கப்படலாயின. மரத்தாலான அளிச்சல்கள் அழிந்துபோய் விட்டன. சாஞ்சித் தாகபங்களுக்குரிய அடித்தளத்தின் சுற்றுப் புறங் களில் குறிப்பாக நான்கு வாயில்களிலும், அலங்கார வேலையுடன் கூடிய தோரணங்கள் எனப்பட்ட அமைப்புக்கள் இடம் பெற்றிருந் தன. இலங்கையில், “வாகல்கடக்கள் என்ற அமைப்புக்களே இடம் பெற்றதை அறிகின்றேம். (தோரணங்கள் இருந்திருப்பினும், அவற் றின் சிதைவுகள்தாமும் எமக்குக் கிட்டவில்லை.) இவை சிற்பவேலைப் பாடுகளுக்கு இடமளித்தன எனப் பின்னர் காண்போம். இவ்'வாகல் கட’க்கள் தாகபத்தினைச் சுற்றியுள்ள நான்கு முக்கிய திசைகளிலும்

Page 120
220 பண்டைய ஈழம்
அமைக்கப்பட்டன. தாகபங்களின் நான்கு புறங்களிலும் மேடைக்கு ஏறிவருவதற்கெனக் கட்டப்பட்ட வாயில்களும் உண்டு. இவ்வாயில் களும் சிற்பக்கலையின் வளர்ச்சிக்குதவிய பல அங்கங்களைக் கொண்டு விளங்கின. இவ்வாறு, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இக் கட்டிட முறை சில வேறுபாடுகளுடன் இலங்கையில் மேலும் வளர்ச்சிபெற்று வரலாயிற்று. அனுராதபுரம், மிகிந்தலை, மகாகமை முதலான இடங்களில் இன்றும் அனுராதபுர காலத்தைச் சேர்ந்த தாகபங்களைக் காணலாம்.
இனி, அனுராதபுர காலத்தில் கட்டப்பெற்ற சில முக்கிய திாக பங்கள் பற்றிக் கவனிப்போம். மன்னர்களின் வரலாறு, சமய வளர்ச்சி என்பவற்றைக் கூறும் போதே இவை பற்றி கூறப்பட்டுள்ள போதும், அவற்றை இங்கே தொகுத்துத் தருகின்ருேம். தேவனம் பிய திசன் (கி. மு. 250-210) காலத்திலேயே முதன்முதலாகத் தாக பங்கள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட தூபாராம தாகபமே இலங்கையில் தோன்றிய முதல் தாகபமாகும். ஆனல் இன்று காணப்படுவது, பன்முறை செய்யப்பட்ட திருத்தங்களின் பின்னர் ஏற்பட்ட உருவமே. மஹியங்கனையிலும் இவனல் நிறுவப் பட்டதாகக் கூறப்படும் ஒரு தாகபம் இருந்தது. இசரசமண, வெச கிரி என்பவையும் இவன் காலத்தில் ஏற்பட்டவையே. ஏறத்தாழ இதே காலத்தில், மகாகமையில் திசமகாசேத்திய(ம்) நிறுவப்பட்டது. தூாபாராம இன்றுள்ள நிலையிலும், அதன் அடித்தளத்தின் விட்டம் 60 அடிக்கு மேலிராது. துட்டகாமணி (கி. மு. 161-137) பாரிய தாகபங்கள் சிலவற்றை நிறுவி, அவற்றின் வளர்ச்சியில் திருப் பத்தையுண்டு பண்ணினன். இவன் நிறுவிய மிரிசவட்டி தாகபமே, அடிப்பாகத்தில் 168 அடி விட்டத்தைக் கொண்டுள்ளது. இதை விடப் பன்மடங்கு பெரியது, காமணியின் தலையாய சாதனையான மகாதூப(ம்) எனப்பட்ட ரூவன்வலிசய ஆகும். இதன் அடித்தள விட்டம் 294 அடியாகவும், உயரம் சுமார் 300 அடியாகவும் இருந் தன. துட்டகாமணியின் இவ்விரு பாரிய தாகபங்களைத் தொடர்ந்து, ஸ்ட்டகாமணியும் (கி. மு. 89-77) சில முக்கிய தாகபங்களை நிறு வினன். தலைநகரில் அபயகிரி தாகபம் (உத்தர-சேத்தியம் எனவே இது பொது வழக்கில் அழைக்கப்படும்), தக்கிண தூபம் என்ற இரண்டையும் நிறுவினன். இவ்விரு தாகபங்களும், பின்னர் முறை யே கஜபாகுவாலும், கனிட்டதிசனலும் விசாலிக்கப்பட்டமையால் இவை பழைய நிலையில் இப்போது இல்லை. திருத்தப்பட்ட நிலையில், அபயகிரி தாகபம் (325 அடி விட்டம்), மகாதூபத்தையும் விஞ்சி நின்றது மிகிந்தலையில் மகாதாடிக மகா நாகனல் மகாதூபமும், மற்ருெரு மன்னனுல் கண்டக சேத்தியமும் கட்டப்பட்டன. பெளத்த "உலகின் மிகப்பெரிய தாகபமான ஜெதவன தாகபம் மகாசேனனல்

அனுராதபுர காலப் பண்பாடு - கலைவளர்ச்சி 221
(கி. பி. 276-303) நிறுவப்பட்டது. இதன் அடிப் பாக விட்டம் 367 அடியாகவுள்ளது. இதன் உயரம் 400 அடிவரையில் இருந் 3 திருக்கவேண்டும் எனப்படுகின்றது. லஞ்சதிசன் காலத்தில் ரூவன் வலியிலும், கண்டக சேத்தியத்திலும் "அடித்தள அலங்கார வரிசை கள் சுண்ணும்புக் கற்கள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பெற்றன. ‘வாகல்கடக்கள் என்ற முகப்புக்கள் அல்லது விமானங்கள் 2ம் நூற் ருண்டளவிலேயே தாகப்ங்கள் சிலவற்றுக்கு அமைக்கப்பட்டன. சில சிறிய ஸ்தூபங்களை உள்ளடக்கிப் பின்னர் வட்டவடிவின தான கட்டிடங்கள் எழுந்தன. முதலில் மரத்தாலான தூண்கள், வில் மாட அமைப்பில் உள்ள முகட்டைத் தாங்கும் வகையில் இவை அமைக்கப்பட்டன. தூபா ராம சேத்தியத்துக்கு இவ்வாறன கோ யிலை வசபன் கட்டினன். மரத்தூண்களுக்குப் பதிலாகப் பிந்திய அனுராதபுர காலத்தில் (8ம் நூற்.) கல்லாலான தூண்கள் நாட்டப் பெற்றன.
பிந்திய அனுராதபுர காலத்திலும், தாகபங்கள் முக்கிய வழி பாட்டு நிலையங்களாக விளங்கி வந்தபோதும், முந்திய அனுராத புர காலத்தில் நிறுவப்பட்ட பாரிய தாகபங்களுக்கிணையான பெரிய தாகபங்கள் கட்டப்படவில்லை. தாகபங்களின் அமைப்பில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக வில் மாடத்துக்கு மேலு ள்ள மேற்கோப்பில் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டன. அடித் தளமும் முன்னர் வட்டவடிவினதாகவிருந்தது; இப்போது சதுர வடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பழைய தாகபங்களில் திருத் தங்கள் செய்யப்பட்டபோது, அவையும் இப்புதிய போக்கை அணு சரித்துத் திருத்தப்பட்டன. மேடையைத் தாங்கி நிற்கும் சுவர் களும் இப்போது அலங்கரிக்கப்பெற்றன. ரூவன் வலியை முன்பக்க யானையின் உருவங்கள் அலங்கரித்தன. 8ம், 9ம் நூற்றண்டுகளில் கட்டப்பட்ட சிறிய தாகபங்கள் சில புதிய கட்டிட அம்சங்களைக் கொண்டிருந்தன. வில் மாடம் சற்று நீளங்கூடியதாகவும், அடி யிலிருந்து சுமார் இரண்டடிக்குக் கற்கள் பதிக்கப்பட்டும் இருந்தது. இவ்வகைக் கட்டிடத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு மிகிந்தலையில் மகாயானத்தவர் கட்டிடமாக விளங்கிய இந்திகடுசாய என்பதாகும். பிந்திய காலப்பகுதியில் சிறந்து விளங்கிய மற்ருெரு கட்டிட வகை வட்டதாகே அல்லது சேத்திய-கர. இதற்கான சிறந்த எடுத்துக் காட்டுக்கள் மதிரிகிரியிலும்," திரியாயிலும் அனுராதபுரத்தில் துரபாராமவிலும், லங்கா ராமவிலும் உள்ளவையாகும். பொலன் னறுவையிலுள்ள வட்டதாகேயும் இதே காலப் பகுதிக்குரியதாக லாம். இக் கட்டிடங்களில் உள்ள தூண்கள் முன்னர் தாங்கி நின்ற மரத்தாலான மேற்கோப்பு இன்று அழிந்துவிட்டது. தூண்களில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளும், அவற்றின் தோற்றமும் அவற்.

Page 121
222 பண்டைய ஈழம்
றுக்கு வனப்பைக் கெர்டுக்கின்றன. இவ்வகைக் கட்டிடம் இந்திய முன்மாதிரியொன்றையொட்டி, இலங்கையிலேயே பின்னர் உரு வாகியதெனலாம்.
பிற பெளத்த வழிபாட்டு நிலையங்கள்: தாகபங்கள், வட்டதாகே என்பன அல்லாத பிற வழிபாட்டு நிலையங்கள் பற்றி நாம் மிகச் சுருக்கமாக இனிக் கூறுவோம். தொடக்கத்திலிருந்தே பெளத்தர் களின் வழிபாட்டுக்குரியவற்றுள், போதி மரமும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. போதி-கர என்ற சமயக் கட்டிடம் ஒரு காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் பெருவழக்கில் இருந்த கட்டிடமாயினும், இன்று நில்லக்காமத்தில் (குருணுகலைப் பகுதியிலுள்ளது) மட்டுமே ஒரு போதிகரவின் சிதைவுகள் குறிப்பிடத் தக்க அளவு இன்று வரை பேணப்பட்டுள்ளன. இக்கட்டித்தில் இரு மேடைகள் உண்டு. உயரமான மேடையிலேயே போதிமரம் உண்டு. பதிவான இரண்டாவது மேடையைச் சுற்றி 7 அடி உயர முடைய ஒரு கற்சுவர் சுற்றிவரக் கட்டப்பட்டுள்ளது. கீழ் மேடையில் இருந்த கற்றுாண்கள், முன்னர் போதி மரத்துக்குப் பாதுகாப்பளித்த கூடாரத்தைத் தாங்கிநின்றன. கயாவிலுள்ள போதி மரத்தின் கீழ் புத்தர் இருந்த 'வஜ்ராசன" என்பதனை நினைவுக்குக் கொண்டுவரும் முறையில், ஆசன அல்லது பீடவழி Luft(Blb அனுராதபுரகாலத்திலிருந்து வந்தது. ஆசனங்களைக் கொண்டு நிறுவப்பட்ட தனிக்கோவில்கள் எழுந்தன. இவ்வாறு எழுந்த கோவில்களில், நீள்சதுர வடிவுடைய செதுக்கப்பெற்ற கற்கள் உயரத்தில் வைக்கப்பட்டு வழிபடப்பட்டன. இத்தகைய கோவில்கள் ஆசனகர எனப்பட்டன. உருவ வீடு" "கெடிகே போன்ற பிற கட்டிட வகைகளும் அனுராதபுர் காலத்திலிருந்தன.
அனுராதபுர காலக் கட்டிடங்களில், முழுவதும் கல்லாலான கட்டிடங்கள் மிகக்குறைவு. செங்கல்.சுண்ணும்புக்கல், மரம் முதலானவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. தூண்கள் முதலில் மரத்தால் ஆக்கப்பட்டன; பின்னரே, கல்லில் குடைந்தெடுக்கப் பட்ட் தூண்கள் உபயோகிக்கப்பட்டன. பிந்திய அனுராதபுர காலத்தில் அதிகமாகக் கல்லைப் பயன்படுத்தலாயினர். பல்லவர் முறையைப் பின்பற்றி நாலந்தாவில் அமைக்கப்பட்ட கெடிகே தனியே கல்லால் அமைக்கப்பட்டது. இவ்வாருக, அனுராதபுர காலத்தில் சமயத் தொடர்பான கட்டிடங்களே மிகுதியும் காணப் பட்டன. கட்டிடங்களின் சில பகுதிகள் மட்டுமே அழியாத பொருள் களாலானமையால், அவை முழுமையாக இன்றுவரை பேணப் படவில்லை. இருப்பினும், பழைய அனுராதபுரம் முதலான இடங் களில் காணப்படும் கட்டிடச் சிதைவுகள் அனுராதபுர காலத்தின் கலையெழிலை நினைவூட்டுவனவாகவுள்ளன.

அனுராதபுர காலப் பண்பாடு - கலைவளர்ச்சி 223
ஆ. சிற்பக்கலை வளர்ச்சி
முந்திய அனுராதபுர காலம்: சமயக் கட்டிடங்களின் சில பாகங்: களே அழகுபடுத்தவே, சிற்பங்கள் பெரும்பாலும் உதவியுள்ளன. புத்தரின் சில திருவடிவங்கள் தனியாகச் செதுக்கப்பட்டிருப்பினும், அவை பெரும்பாலும் பிந்திய அனுராதபுர காலத்தவையாகவே கொள்ளப்படுகின்றன. இலங்கைக் கட்டிடக் கலையில் மெளரியர் செல்வாக்கும், பின்னர் ஆந்திரர் (சாதவாகன) செல்வாக்கும் ஏற் பட்டதுபோலவே, சிற்ப வளர்ச்சியும் இந்தியக் கலை வளர்ச்சியின் செல்வாக்கைப் பெற்றதை நாம் காண்கின்றேம். முந்திய அனுராத புர காலத்தில் மெளரிய, ஆந்திரக் கலை மரபுகளே சிற்பத் துறை யிலும் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆலுைம், இலங்கைச் சிற்பிகள் இந்த நாட்டு நிலைமைகளுக்கேற்ப ஓரளவு தனித்தன்மை யுடைய சில மரபுகளை வளர்த்து வரலாயினர். அக்காலத்தில் சிற்ப வேலைகளைப் பெரும்பாலும் கருங்கல், தீப்பாறைக் கல் போன்ற கடினமான கற்களிலும், சுண்ணும்புக் கல்லிலும் செய்தனர். சில வேளைகளில் யானைத்தந்தம், செப்பு, வெண்கலம் போன்ற பொருட் களும் நுட்பம் வாய்ந்த சிற்பவேலைகளுக்குப் பயன்பட்டன.
தாகபங்களின் அடித்தளத்துடன் இணைந்த வாகல் கடக்களில் இடம் பெற்ற சிற்பத்தூண்கள், பல வகைச் சிற்ப வேலைகள் கொண் டவை. தூண்களின் முகப்புப் பாகங்கள் சில பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் யானை, அலங்கரிப்பட்ட சாடி, மயில் முதலானவற்றின் உருவங்கள், (புடைப்போவ முறையில்) செதுக்கப் பட்டுள்ளன. இச்சிற்ப உருவங்கள், தாகபத்துக்குத் தாகபம் வேறு படும். பூச்சாடியிலிருந்து வெளிவரும் மலர்க் கொடிகள் சிலவற்றை அலங்கரிக்கின்றன. மிகிந்தலையிலுள்ள கண்டக சேத்தியத்திலும், அனுராதபுரத்தில் அபயகிரி, ஜெதவன தாகபங்களிலும் உள்ள வாகல் கடக்களில் உள்ள சிற்பத்தூண்கள் இவ்வகைச் சிற்பவேலைகள் அமைந்தவையாகும். இச்சிற்பங்கள் சாஞ்சியிலும், அமராவதியிலும் உள்ள சிற்பங்களை நினைவுபடுத்துபவையாதலால் அங்குள்ள கலை மரபுகள் இலங்கைக்குப் பரவியிருத்தல் புலனுகும். அமராவதி யிலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்கற் சிற்பங்கள் (மாயா தேவியின் கனவு போன்றவை) இதை மேலும் வலியுறுத்தி நிற்கின் றன. அமராவதிக் கலைமரபுக்குரிய சலவைக்கற் புத்தர் சிலையொன்று (சுமார் ஆறடி உயரமுடையது) மகா இலுப்பலாமையிற் கண் டெடுக்கப்பட்டுள்ளது. அக் கலை மரபைச் சேர்ந்த நின்ற புத்தரின் ! சிலைகளுக்குரிய சிறப்பியல்புகள் இதற்கும் உண்டு. இதுவும் ஆந்திர தேசத்திலேயே செதுக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். சுண்ணும்புக் கல்லில் செதுக்கப்பட்ட சில புத்தர் திரு வடிவங்கள், ரூவன் வலி தாகபம் முதலான இடங்களில் காணப்

Page 122
224 பண்டைய ஈழம்
பட்டன. இதே காலப்பகுதியைச் சேர்ந்த செப்பு உருவங்களும், யானைத்தந்த உருவமும் ஆராய்ச்சியாளர்க்குக் கிட்டியுள்ளன. மட்பாண்டத் தொழில், பொற் கொல்லனது தொழில் ஆதியனவும் நல்ல வளர்ச்சி எய்தியிருந்ததை, சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் உணரக்கூடியதாகவுள்ளது.
பிந்திய அனுராதபுர காலம்: இக் காலப்பகுதியில், கருங்கல்லிற் சிற்பவேலை செய்வதில் இலங்கைச் சிற்பிகள் தேர்ச்சி பெற்றிருந் தனர். புடைப்போவங்கள், உருவச்சிலைகள் ஆகிய இருவகைச் சிற்பவேலைகளிலும் அவர்கள் தமது திறமையை வெளிக்காட்டினர். குப்தர் பண்பாட்டின் செல்வாக்கு இலங்கையிற் பரவியமையால் சிற்ப வடிவங்களும் குப்தக் கலை மரபில் உருவாக்கப்பட்டன. உரு வங்களின் கூறுகள் திருந்திய முறையிலும், அமைதியும் வனப்பும் வெளித்தோன்றும் வகையிலும் செதுக்கப்பட்டிருத்தலால், இசுரு முனியில் உள்ள புகழ்பெற்ற காதலர் சோடிச் சிற்பம் போன்றவை குப்தக் கலை மரபின் தனிப் பண்புகளைக் கொண்டிருத்தல் தெளிவு. இசுருமுனியாவிலுள்ள மற்றெரு சிற்பம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றதாகும். 7ம் நூற்ருண்டுப் பல்லவக் கலை மரபின் தாக்கம் இச் சிற்பத்திலிருப்பதாகக் கூறுவர். புடைப்போவ முறையில் அமைக்கப்பட்ட இருக்கும் மனிதனது உருவமும், அவனுக்குப் பின் ல்ை பாறையினுள்ளிருந்து வெளிவருவது போன்ற ஒரு குதிரையின் தலையும் பல்லவ மரபின் சாயலைக் கொண்டுள்ளன என்பது தெளிவு. முக்கியமாக, மனிதனது உருவத்தைச் செதுக்குவதில் கையாளப் பட்டுள்ள கட்டுப்பாடு, அணிகலன்களின்மையால் மனிதனது சொந்த உருவ இலட்சணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருத்தல், கை, கால்கள் நெடிதாகக் காட்டப்படல் பல்லவச் சிற்பங்களுக்கும் இதற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளாம். இதேயிடத்திற் காணப்படும் யானைகளின் உருவங்கள் கங்கையின் வருகை யென்ற மாமல்லபுரச் சிற்பத்தை நினைவுக்குக் கொண்டுவரும். (பக் 158-161 பார்க்க.) சித்துல் பவுவவில் உள்ள ஒரு போதிசத்துவ சிலையும் பல் லவர் மரபையே பின்பற்றியதாகக் கூறுவர்.
பிந்திய அனுராதபுர காலக் கட்டிடங்களின் வாயில்கள் பல சிற்ப வேலைகளால் அணிசெய்யப்பட்டன. சந்திர வட்டப்படிக்கல், நாக துவார பாலர்கள், வேலைப்பாடமைந்த படிக்கட்டு, கைப்பிடி வரிசை என்பன இவ்வாயில்களில் இடம்பெற்ற சிற்ப அமைப்புக்களாகும். திரியாயில் உள்ள் வட்ட தாகேயின் வாயிலிலுள்ள துவார பாலர்கள் பல்லவ முறையையும், அனுராதபுரத்தில் இரத்தின பாசாதவின் வாயிலிற் காணப்படும் நாகராசன் வடஇந்தியாவைச் சேர்ந்த பால மரபையும் தழுவியதாகக் கொள்வர். சந்திரவட்டப் படிக் கற்களி லேயே அனுராதபுர காலச்சிற்பிகள் தமது முழுத்திறமையையும் காட்டியுள்ளனர். இவற்றின் நடுவில் ஒரு தாமரையின் உருவமும்,

அனுராதபுர காலப் பண்பாடு-கலைவளர்ச்சி 225
இதைச்.சுற்றிவர ஒழுங்காக வளைந்து செல்லும் கோடுகளிடையே பல்வகை மிருகங்களின் உருவங்களும் வரிசை வரிசையாகச் செதுக்கப் பட்டுள்ளன. இச் சிற்பத்தின் பகுதிகள் ஒன்முக இணைவதில் ஒரு முழு மையும் எழிலும் பெறுவதைக் காணலாம். மேலும் இவற்றிலுள்ள யானைகள் முதலான உருவங்கள் உயிர்த்துடிப்புள்ள வகையில் அமைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டிடங்களின் பகுதிகளாக அமையாது, தனிச் சிற்பங்களாக வுள்ள புத்தர் உருவங்கள், காலப்போக்கில் மிகவும் பிரமாண்ட உருவில் செதுக்கப்படலாயின. புட்டளவுக்கண்மையில் உள்ள மாலி காவெலவில் உள்ள சுண்ணும்புக் கல்ல்ாலான புத்தர் உருவம் 34 அடி உயரமுடையது. இதன் காலம் 7ம் நூற்ருண்டாகலாம். அவுக்கானவில் உள்ள புத்தர்சிலை இதை விடப்பெரியது. புதுருவெகலேயில் (ஊவா மாகாணத்தில்) உள்ள புத்தர் சிலை பாறையிலேயே செதுக்கப் பட்டுள்ளது. இதன் உயரம் ஐம்பது அடிக்குமேல் வரும். இச்சிலையின் இருமருங்கிலும் போதிசத்துவர் (அவலோகிதேஸ்வரர், மஞ்சுபூரீ) உரு வங்களுள்ளன. இவ்வுருவங்கள் மகாயானர்க்குரியவை என்பது கவனிக் கற்பாலது. 7ம் நூற்ருண்டுக்குப் பிற்பட்டவையாக இவை இருத்தல் கூடும். அவலோகிதேஸ்வரரின் மற்ருெரு தனியுருவம் வெலிகமையில் உள்ளது. வெண்கலத்திலும், மகாயானர்களுக்குரிய பல உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அனுராதபுரத்திலும், பங்குளி, மதிரிகிரி போன்ற பிற இடங்களிலும் உள்ள இருக்கும் புத்தர் சிலைகளும் பிந்திய அனுராதபுர காலத்தைச் சேர்ந்தவையே. இச்சிலைகளும் ஓரளவு பெரிய சிலைகள் என்றே கூறவேண்டும். இவற்றுள் அனுராதபுரத்தில் அபயகிரிக் கண்மையிலும் பங்குளியிலும் உள்ள புத்தர் சிலைகள், மிகவும் பிரசித்தி பெற்றவை. பிந்திய அனுராதபுர காலத்தைச் சேர்ந்த வெண்கலச் சிலைகள் சில, கொழும்பு அரும்பொருளகத்தில் வைக்கப் பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை மகாயானச் சார்புடை யவை. இவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது மைத்திரேய போதி சத்துவர் சிலையாகும். ஒன்றரை அடி உயரமுள்ள இச்சிலை தூபாராம தாகபத்துக்கு அண்மையிற் கண்டெடுக்கப்பட்டது. திருகோணமலைக் கண்மையிற் கண்டெடுக்கப்பட்டு இப்போது இலண்டன் அரும் பொருளகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வெண்கலச்சிலை பத்தினித் தெய்வத்தினுடையதாகக் கருதப்பட்டது. தாரா என்ற (மகாயான) தேவதையின் பெயரே இப்பொது அதற்குரியதாகக் கொள்ளப்
படுகின்றது.
இ. ஒவியம் ஒஇ ஓவியங்கள்: காலவேடுகளிலும், பாலி வியாக்கியானங் களிலும் ஓவியக்கலை பற்றியும், ஒவியர்கள் பற்றியும் குறிப்புக்கள்
29

Page 123
226 பண்டைய ஈழம்
வரினும் முந்திய அனுராதபுர காலத்து ஒவியத்தின் நிலை பற்றி எதுவும் கூறும் நிலையில் நாம் இல்லை. அக்காலத்து ஒவியங்கள் ஒன் றேனும் எமக்குக் கிட்டாது போனமையே இதற்குக் காரண்மாகும். 5ம் நூற்ருண்டைச் சேர்ந்த சீகிரி ஒவியங்களே எமக்குக் கிடைத்த மிகப் பழைய ஓவியங்களாகும். சீகிரியைத் தலைநகராக்கிய காசியப்பன், குன்றினது மேற்குப் புறத்தின் பெரும் பகுதியை அழுத்தமாக்கி அதன் மேல் சுண்ணச் சாந்தைப் பூசியபின், நூற்றுக்கும் அதிகமான அணங்குகளின் ஒவியங்களைத் தீட்டுவித்தான். இவற்றுள், இருபத் தொரு உருவங்கள் மட்டுமே இன்று வரை பேணப்பட்டுள்ளன. (சென்ற ஆண்டு 93 நாசவேலைக்காரரால் இவற்றையும் பாழ்படுத்த நடைபெற்ற முயற்சியிலிருந்து அவை இப்போது மீட்கப்பட்டுள்ளன.) இவை ஒரு பாறை யொதுக்கில், 1500 ஆண்டுகளுக்கு மேல் இயற் கையால் ஏற்படும் அழிவுகளைத் தாங்கித் தம் பொலிவோ, வனப்போ குன்ருது இக்காலம் வரை தப்பி வந்துள்ளன. இச் சுவரோவங் களில் தீட்டப்பட்டிருக்கும் அணங்குகளில், சிலர் சோடிகளாகவும் வேறு சிலர் தனியாகவும் உள்ளனர். முகில்களில் மிதப்பது போல, அரைக்கு மேலுள்ள இவர்களின் வண்ண எழில் தோற்றங்கள் உள்ளன. சிலர் அரைக்குக் கீழே மட்டும் உடை தரித்துள்ளனர்.பெரும்பாலானவர் மலர்களைக் கையில் தாங்கிய வண்ணமும், ஒரு சிலர் மலர்த்தட்டுக் களை ஏந்திய வண்ணமும் காட்சியளிக்கின்றனர். இச் சுவரோவங் களிலுள்ள பெண்களைக் காசியப்பனது அந்தப்புர மகளிராகவும், தேவகன்னியராகவும் பலவாழுக அறிஞர் குறிப்பிடுவர். இவர்கள் யாராகவிருந்தாலும், உலகக் கலைப்பண்பறிஞர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்ற சுவரோவங்கள் இவை என்பதை நாம் குறிப் பிடவேண்டும். ஏறக்குறைய இதே காலத்தில் இந்தியாவில் அஜந் தாவில் உள்ள குகைகளில் வரையப்பட்ட வண்ண ஒவியங்களும் இதே கலைமரபில் அமைந்தமை ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுவிட்டது. சீகிரியாவிலுள்ள ஒவியச் செல்வங்களை, இயற்கையின் கோரங்களி னின்றும் அங்குள்ள கற்பாறை பேணியதைப் போல, நமது சமுதாயத் தின் விரோதிகளான கலை அழிவுக்காரரிலிருந்தும் இவற்றைப் பேணு தல் அவசியமாகிவிட்டது. சீகிரிச் சுவரோவங்கள் வரையப்பட்ட காலத்தில் கண்டிக்கு அண்மையில் ஹிந்தகலையில் உள்ள குகையொன் றிலும் இவை போன்ற சுவரோவங்கள் தீட்டப்பெற்றுள்ளன. சக் க க் கடவுள் (இந்திரன்) புத் த ரிடம் வருகை தந்த கதையைக் கூறுவ தாகத் தொடர்ச்சியாக இவை அமைந்திருக்கின்றன. இவ்வகையில் இவற்றுக்கும் அஜந்தாக் குகையோவியங்களுக்கும் ஒற்றுமையுண்டு. ஸ்தூபங்களில் உள்ள சின்ன(தாது) அறைகளிலும் நிறைவுபெரு ஓவியங் கள் காணப்படினும், இவை அத்துணை முக்கியம் வாய்ந்தவையல்ல.

அனுராதபுர காலப் பண்பாடு-கலை வளர்ச்சி 227
சுமார் ஆயிரத்தைஞ்லூறு ஆண்டுகளின் இலங்கை வரலாற்றை இதுவரை இந்தப் பாகத்திற் சுருக்கமாகக் கூறினுேம், அனுராதபுரம் தலைநகராக விளங்கிய இந்த நீண்ட காலப் பகுதியில், இலங்கையின் பெருமையும் புகழும் மேலோங்கி நின்றன. ஆரியர் வருகையுடனேயே இலங்கையின் வரலாற்றுக் காலம் தொடங்கியதெனினும், பெளத்தம் பரவிய பின்னரே இலங்கையின் பண்பாடு சிறப்பெய்தலாயிற்று. தனிப் பட்ட சில மன்னர்களின் சாதனைகள் அனுராதபுர காலத்துக்குப் பெருமை தந்ததைக் கண்டோம். அவர்களுள் தேவானம்பிய திசன், துட்டகாமணி, வட்டகாமணி, வசபன், மகாசேனன், தாதுசேனன், காசியப்பன், 2ம் அக்கிரபோதி, 2ம் சேனன் போன்றவர்கள் பல திறப்பட்ட சிறப்புக்களை யுடையவர்கள். இவர்களுடைய பணிகள் நாட்டுக்குப் பல துறைகளில் உயர் வைத் தந்தன. அரசியல் ஒற்று மையையும் அமைதியையும் நாட்டுக்குத் தந்து, பொருளியல், சமய, கலை, வளர்ச்சிகளுக்கும் தமது ஆதரவையளித்து, தமது ஆட்சிக் காலங்களில் அதைப்”பெருமை பெற வைத்தனர். ஒரு பக்கத்தில் அரசனது நிருவாக அதிகாரிகளும் மாகாண ஆட்சியாளரும், மறு பக்கத்தில் கிராமி”ஆட்சியாளரும் சபையினரும் நாட்டின் நிருவாகத் தைத் திறமையுடன் இயங்கவைத்தனர். பாரிய நீர்த்தேக்கங்கள், கால் வாய்கள், தாகபங்கள் முதலான பலவற்றை நிறுவுவதில் பொறி யியலாளர், கட்டிடச் சிற்பிகள், அரச அதிகாரிகள், பொது மக்கள் ஆகிய பலர் பெருவிருப்புடன் ஈடுபட்டுத் தம் தாயகத்துக்குப் பெருமை தேடலாயினர். மகாதீர்த்தம் முதலான துறைமுகங்கள் இறக்குமதி ஏற்றுமதி வணிக நிலையங்களாக, எந்நேரமும் துரிதமாகத் தொழிற் பட்ட வண்ண மிருந்தன. இவற்றில், பிறநாட்டாரின் நடமாட்டம் காணப்பட்டது. இந்தியச் செல்வாக்கு இலங்கையைப் பெரிதும் பாதித்தது. மெளரியர், குப்தர், வர்த்தனர் (ஹர்ஷன்) பேரரசுகள் வடஇந்தியாவிலும், பாண்டியர், பல்லவர், சோழர் பேரரசுகள் தென் னிந்தியாவிலும், சாதவாகனர் பேரரசு தக்கணத்திலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் விளங்கிய போது, சில வேளைகளில் அரசியற்றுறை யிலும், பண்பாட்டுத் துறைகளிலும் எமது தீவு அவற்றின் செல் வாக்கில் அமர்ந்தது. இருப்பினும், இந்தத் தாக்கங்களினிடையேயும், இலங்கைப் பண்பாடு ஒன்று உருவாகி வந்தது. இவ் வகையிலேயே, இலங்கையின் புவியியல் அமைப்பு இலங்கைக்கு உதவியது. பொது வாக நோக்குமிடத்து, இலங்கை வரலாற்றில், சிறப்பாகச் சிங்களரின தும், பெளத்தத்தினதும் வரலாற்றில் அனுராதபுர காலம் பெருஞ் சிறப்பு வாய்ந்த காலமாகத் திகழ்ந்ததென்பது தெளிவு.

Page 124
盛2岛 பண்டைய ஈழம்
பயிற்சி:
1. மகாசேனனது ஆட்சிக்குப் பின் இலங்கையில் அனுராதபுர கால முடிவுவரை மகாயான பெளத்தம் அடைந்தவளர்ச்சியைச் சுருக்க
மாகத் தருக.
2. 'ஸ்தூப்' என்ற கட்டிடவகை இலங்கையில் அடைந்த வளர்ச்சியைக்
File:]] lets,
3. சிகிரியா அனுராதபுர முக்கிய இடத்தைப்
பெற்றமைக்குக் காரணங்கள் தருக.
கூட்டுவேலேக்கு:
அனுராதபுர காலத்துக்குரிய கட்டிடங்களே சிற்பங்கள் விளக்கும்
படங்களேச் சேகரித்து, சில பிரிவுகளாக்கி வைத்துக் கொள்ளலாம்.
குறைந்தபட்சம் அனுராதபுரத்துக்காவது ஒரு சுற்றுலாச் சென்று,
இவற்றை நேரிற்பார்வையிட்டு விளக்கம் பெறலாம்:
தேர்வு வினுக்கள்:
1. அனுராதபுர காலத்தில் பாலி, சிங்களம் ஆகிய இருமொழிகளில்
நடைபெற்ற இலக்கிய முயற்சிகளேத் தருக.
2. கட்டிட சிற்பத்துறைகளில் அனுராதபுர காலத்தில் ஏற்பட்ட முக்கிய
வளர்ச்சிகளேக் குறிப்பிடுக. N
3. சிறு குறிப்புக்கன் வரைக்-புத்தகோசர் சிகிரியாச் சுவரோவங்கள்
வாகல்கடங்கள் போதிகர; புதுருவெகலே வட்டதாகோ நாக துவாரபாலர்கள் இசுருமுனியா சந்திரவட்டப் படிக்கல் அமராவதி சிற்பமுறை
 

|..
|॥।॥
l,

Page 125
#్మ
இரு
| || =
வட்டப் படிக்கல்
ருமுனியா ஆணும் பெண்ணும் (சிற்பம்)
 
 
 
 
 
 
 
 

-|-|-|- |-|-No
)
|- No, ()No.:
· sae----
i
II
雷子)一品
비
.
S S S S
i TTT FILII
s) – T. 11
구 구
=

Page 126
- இ
)ே
{_تيتاً
宝
F
ཕྱི་
背 難
 
 
 
 

2 29
மீட்டற் பயிற்சிகள். ü5@、。
தரப்பட்டுள்ள் இலங்கைப் படத்தில் பின்வருவனவற்றைக் குறித்துப்பெயரிடுக;- ஜம்புகோல கோகண்ண (திருகோண )ே: சுச்சகதிர்த்தம்:றுவெலா தீகவாபிகளனி தேவுந் தர:மகாதீர்த்தம் மஹியங்கணே:சீகிரி
இவற்றுள் ஐந்துக்குச் சிறு குறிப்புக்கள் எழுதுக:
2. ஓர் இலங்கைப் Li Liiiiiiiiiiiiĝi; வரைந்து, பின்வருவனவற்றைச் சரிவரக் குறித்துக் காட்டுக: உருகுண்ே தக்கிண்தேசம் நாக
தீபம் மலேயரட்டை மல்வத்து ஒயா கிரிண்டி ஒயா அணு
ராதபுரம் மஹியங்கண்ே மகாகம்ை:
3. மகாவவி கங்கை மல்வத்து ஓயா கால ஒயா குறிக்கப்பட்ட இலங்கைப் படத்தில், பின்வருவனவற்றைக் குறித்துப் பெயரிடுக அம்பன் கங்கை; ஆளிசாரக் (அளஹர) கால்வாய் ஐயசுங்கை மணிவiரவாபி நாச்சதூவ தண்ணிமுறிப்புக் 'குளம்:ஹத்தோட்ட அமுண(அஃண்); மகாகன்தராவ்
விளாய் மினிப்பேக் கால்வாய்,
。上
'இவற்றுள் ஐந்தினப்பற்றிச் சிறுகுறிப்புக்கள்
T கிபின்வருவன நிறுவப்பட்ட கால ஒழுங்கில் அவற்றைத் திருப்பி 1எழுதுக: ஒவ்வொன்றையும் நிறுவிய மன்னன்துபெயரையும்,
காலத்தையும் குறிப்பிடுக: ஜெதவன் விகாரை இரத்தின் பாசாதமகாவிகாரைக்அபயகிரிதாகபம்:அம்புத்த விகாரை
* ■
*、 5'பின்வரும் பெளத்த நிகழ்ச்சிகளைக் கால ஒழுங்கில் திருப்பி யெழுதுக: திரிபிடகம் அலுவிகாரையில் எழுதப்பட்டமை; கேசதாதுவின் (இலங்கை வருகை பாடலிபுர பெளத்த மாநாடு புத்தகோசரின் இலங்கை வருகை புத்தரின் பரிநிர் வானம் போதிமரக் அனுராதபுரத்தில் நாட்டப் பட்டமை; தந்ததாதுவின் இலங்கை வருகை
6. மகாயான பெளத்த வரலாற்றில், பின்வரும் திகழ்ச்சிகளின் காலங்களேக் குறிப்பிடுக- குண்டலவன (ஹிநகர்) பெளத்த மாநாடு அபயகிரி விகாரை நிறுவப்பட்டமை சங்கமித்திர தேரரின் இலங்கை வருகை; கேசதாதுவின் lII allt. தர்ம தாதுவின் வருகை வஜ்ரபோதியின் வருகை
麗 雞

Page 127
23 O
10.
பண்டைய ஈழம்
இந்தியாவில் பின்வருவோர் ஆட்சி செய்த காலங்களில் இலங் கையை ஆட்சி செய்த மன்னர்கள் யார், யார் எனக்குறிப் பிடுக; தர்மாசோகன்; சமுத்திர குப்தன் ; கனிஷ் கன்; ஹர் ஷன் நரசிம்மவர்மன், சீமாற சீவல்லபன்; 3ம் கிருஷ்ணன்; இராஜராஜன். பின்வரும் இந்தியக் கலை மரபுகளின் பாதிப்பைப் பெற்ற இலங் கைக் கட்டிடங்களின் அல்லது சிற்பங்களின் பெயர்களைக் கூறுக: மெளரியர் குப்தர்; சாதவாகனர் (அமராவதி); பல்லவர்.
இலங்கை பின்வரும் நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு களின் தன்மையினையும், காலத்தையும், விளைவுகளையும் கூறுக: சீன; இந்தியா அராபியா, கிரேக்கம்.
பின்வருவோர் ஆட்சிமுறையில் வகித்த பங்கினைக் கூறுக:- சேனபதி, புரோகிதர்; செட்டி; மகாலேகக; மாபா; பஸ் லத்தன், அசிக்காஹக.
பகுதி ஆ.
l .
12.
13.
14.
I 5.
6.
மகாவம்சத்தில் துட்டகாமணியின் வரலாறும், மகாச்ேனனது வரலாறும் கூறப்படும் முறைகளை ஒப்பிட்டுக் கூறுக வேறு பாடுகளுக்குக் காரணந் தருக.
தேவானம்பிய திசன், துட்டகாமணி, வட்டகாமணி, OST சேனன், சிறிமேகவண்ணன் ஆகியோருள் இருவரைத் தெரிவு செய்து, அவர்களின் பணிகளை ஒப்பிட்டுக் கூறுக.
அனுராதபுர கால இலங்கை வரலாற்றில், பின்வருவன வகித்த பங்கைக் கூறுக-உருகுணை, மகாவலிகங்கை, மல்வத்து ஓயா; தக்கின்தேசம்: உத்தர ரட்டை,
இலங்கைப் பெளத்தத்தின் வரலாற்றில் பின்வரும் மன்னர் களின் ஆட்சிக் காலங்களின் முக்கியத்தைக் கூறுக:- வட்ட காமணி, வொகாரிக திசன், மகாசேனன், சிறிமேகவண்ணன், 1ம் மொகல்லான ன், சிலாகாலன்.
பல்லவ அரசுடன் இலங்கை கொண்டிருந்த உறவுகளின் தன்மைகளைக் கூறி, அவற்றின் விளைவுகளைக் கூறுக.
8ம், 9ம், 10ம் நூற்ருண்டுகளின் தென்னிந்திய அரசியற் போக்கைச் சுருக்கமாகக் கூறி, அதில் இலங்கை வகித்த பங்கை ஆராய்க.

17.
8.
9.
20.
231
பின்வரும் இடங்களின் கலைமுக்கியத்தை விளக்குக: அவுக்கான; இசுருமுனியா; நாலந்தா, சீகிரியா மதிரிகிரி, புதுருவெகலை,
"ஸ்தூப என்ற கட்டிடமுறை அனுராதபுர காலத்தில் அடைந்த வளர்ச்சியை, எடுத்துக்காட்டுக்களுடன் சுருக்க மாகத் தருக.
பின்வருவன பற்றிக் குறிப்புக்கள் எழுதுக: வட்டதாகே; நாக துவாரபாலர்; சந்திர வட்டப் படிக்கற்கள்; வில் மாடம்; போதி-கர ‘வாகல்கட’க்கள்.
சிறு குறிப்புக்கள் வரைக: விசுத்தி மார்க்கம்; தீபவம்சம்; மகாபோதி வம்சம்; ஜான கீஹரண; சியபஸ் லகர, அட்டகதா.

Page 128
திருத்தம் (பாகம் 1)
பக். வரி பிழை - திருத்தம்
66 கடைசிக்கு முதல் - ஆணைகளில் - ஆணைகள் 75 2ம் பந்தி - 8 - நாட்சினுன்க - நாட்டினன்.
3 9 9 - யாட்சியாளன- யாட்சியாளனுக 123 18 – 3 3 2 6) - 4326)
170 O - செய்ததை - செய்தமை 176 3ம் பந்தி 17 - சேர்ந்ததாக் - சேர்ந்ததாகக் 183 9 - 849 - 949
216 3ம் பந்தி 1 - மதசச்ார்பிலாக்- மதச் சார்பிலாக்


Page 129
  

Page 130


Page 131