கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூதத்தம்பி

Page 1
| | | | | | |-
 


Page 2
வணக்கம்
‘பூதத்தம்பி - அறிவுக்களஞ்சிய நூலி வரிசையில் முன்றாவதாக வந்திருக்க வேண்டிய நூல். எதிர்பாராத தாமதத்தினாலி நான்காவது இதழாக வந்திருக்கிறது.
தம்பியின் கதை அனேகருக்கும் தெரிந்த கதைதான். பவளக்கொடிகதை', நல்ல தங்காள் கதை' - என்பவற்றைப்போல இதையும் ஒரு “கதையாகப் படித்து வந்திருக்கிறோம். 'பூதத்தம்பி விலாசம்’ நாடகம் போட்டவர்களுக்கும், நாடகத்தின் சுவைக்காக சில காட்சிகளை சேர்த்திருக்கக் கூடும்.
ஆனால் - பூதத்தம்பி வெறும் கற்பனைக் கதாபாத்திர மல்லனர். யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆணர்ட காத்தில், இராசவாசல் முதலியாராக, மிகுந்த செலவாக்கோடு வாழ்ந்த ஒரு சுயமதிப்புள்ள தலைவன். ஒல்லாந்த அரசை துரத்த முயற்சித்து தோலிவி கனடதாலி, கோடரியாலி நெஞசு பிளக்கப்பட்டு, தலை துண்டாக்கப்பட்டு கோரமாகக் கொலை செய்யப்பட்டவன்.
பூதத்தம்பியின் கதையையும் வரலாற்றையும் மிக விளக்கமாக ஆதாரங்களுடன் தந்திருக்கிறார் கலாநிதி க.குணராசா - செங்கை ஆழியான்.
யாழ்ப்பாண வரலாற்று நிகழ்வுகளை ஆதாரங்க ளுடன் சரிவரத்தந்துவரும் ஆசிரியருக்கு யாழ்ப்பான தேசம் நன்றியுடையது.
84/3, மானிப்பாய்ச் சாலை, அன்புடன், யாழ்ப்பாணம், - வரதா.

(அறிவுத் á@báUരീബിതá-- 4)
பூதத்தம்பி
செங்கை ஆதிதான்"

Page 3
நூல்
ஆசிரியர்
முதற்பதிப்பு
பதிப்புரிமை
அச்சிடுவித்து G66fu (3LIf
மேலட்டைப்படம்:
விலை
பூதத்தம்பி
செங்கை ஆழியான்
ஒகஸ்ட் - 2006
ஆசிரியருக்கு
வரதர் வெளியீடு
84/3, மானிப்பாய்ச்சாலை, யாழ்ப்பாணம். தொ.பே. :2226164
யாழ்ப்பாணத்தின் பிரபல நாடகநடிகள் தா.லோகநாதன்
ரூபா 30/-

பூதத்தம்பி
நாடறிந்த ஒரு நாட்டுக் கூத்து பூதத்தம்பி விலாசமாகும். கற்பனைச்செறிவும் கவியழகும் நிறைந்ததொரு கூத்தாக வடமாநிலம் முழுவதும் ஆடப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தரின் ஆட்சி அதிகாரம் நிலவிய ஒரு காலகட்டத்தில் இராசவாசல் முதலியார்களில் ஒருவனாக விளங்கிய பூதத்தம்பி என்பானின் சோகநாடகமாக இது ஆடப்பட்டு வருகின்றது. நாட்டார் வழக்காற்றில் கதைக்குரிய கதாநாயகனாகப் பூதத்தம்பி அமைந்ததால், பூதத்தம்பி என்ற பாத்திரம் கற்பனையாக உருவாக்கப்பட்டதென ஒரு சாரார் கருதிவருகின்றனர். பூதத்தம்பிவிலாசம் தெரிவிக்கின்ற கதை வேறுபட்டிருந்தாலும் பூதத்தம்பியின் உண்மை வரலாறு வித்தியாசமானது.
பூதத்தம்பி யாழ்ப்பாணத்தில் சதையும் குருதியுமாக வாழ்ந்த ஒரு தலைவன். வரலாற்றில் உயிரோடு நடமாடியவன். யாழ்ப்பாணத்தினை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சிசெய்த காலத்தில் ஓர் அதிகாரியாக வாழ்ந்த பூதத்தம்பி என்பானின் கதை இதுவாகும். இதனைக் கற்பனை கலந்தும் கலவாதும் பலர் தமது வரலாற்றுப் பனுவல்களில் சித்திரித்துள்ளனர். யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றினை விபரிக்கும் முதல் நூலான மயில்வாகனப்புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை, ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம், செ.இராசநாயகத்தின் யாழ்ப் பாணச் சரித்திரம் , க.வேலுப்பிள்ளளையின் யாழ்ப்பாண வைபவ கெளமுதி, ஒல்லாந்துப்படையுடன் கூடவே வந்த பாதிரியார் பால்தேயஸ 6TQg5usion “A True and Exact Description of the Great Island of Ceylon', என்ற நூலிலும் தரப்பட்ட தகவல்களின்
3

Page 4
C பூதத்தம்பி D
அடிப்படையில் பூதத்தம்பி வரலாறு இதுவரை காலமும் விபரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றினைப் பின்பற்றி ஜோன் 6Jé. LDrfl'L966 g560Tg5 "Notes on Jaffna 6T6öp (b)T65g)b, அதன் பின்னர் வேறு பலரும் தமது நூல்களில் பூதத்தம்பி வரலாற்றினைத் தம் கருத்துப்படி விபரித்துள்ளனர். அனைத்துக்கும் மூலம் மயில்வாகனப்புலவரின் யாழ்ப்பாண 60)6L6LDIT606) 95b.
வைபவமாலை கூறும் பூத்தம்பி கதை
'கைலாயவன்னியனின் சகோதரியை விவாகஞ் செய்திருந்த பூதத்தம்பி, மனுவலந்திராசி என்பவர்கள் உலாந்தேச அரசாட்சியாருக்குக் அரசிறை, நிருப முதலி மாரானார்கள். (ஒல்லாந்த) தேசாதிபதி அந்திராசிக்கு அதிக நண்பனாயும் தேசாதிபதியின் தம்பி பூதத்தம்பிக்கு அதிக நண்பனாயுமிருந்தார்கள். ஒருநாள் பூதத்தம்பி அந்திராசியைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்திட, அவன் பூதத்தம்பியின் மனைவியின் பேரழகினால் மயங்கி, மிகுந்த விகாரத்தோடு வீட்டிற்குச் சென்று, ஒரு தூதனுப்பி, "நீர் என்னுடன் இணங்கிச் சினேகமாய் இருக்கச் சம்மதித்தால் உமக்கு வேண்டிய திரவியங்களும் மற்றும் எவ்வித பொருள்களும் தருவேன்” என்று கேட்பிக்க, அவள் அந்திராசியை வைது, தூதுவனைத் துடைப்பத்தால் அடித்துத் துரத்திவிட்டாள்.
இது காரியத்தினால் இருவருக்கும் பகை நேரிடுங் காலத்தில், ஒரு நாள் அந்திராசி அரசாட்சினரின் வேலைக்கு மரங்கள் அழைப்பிக்கக் கச்சாய்த்துறைக்குக் கட்டளை அனுப்ப வேண்டுமென்று வெள்ளைக் கடதாசியிற் பூதத் தம்பியைக் கொண்டு கையொப்பமிடுவித்து, அதிலே, 'கோட்டையைப் பிடிக்க இன்ன இன்ன உதவிசெய்வேனென்று பறங்கிகளுக்கு (போர்த்துக்கேயருக்கு) பூதத்தம்பி எழுதிக
4.

C செங்கை ஆழியான்
கொடுத்தனுப்பக் கொண்டு போனவனிடத்திற் கண்டு பறித்தேன்' எனறு அந்திராசி தேசாதிபதி கையிற் கொடுக்கத் தேசாதிபதி அதைப் பொய்க்குற்றச் சாட்டென்று அறிந்தும், அந்திராசியின் வேண்டுதலுக்காகப் பூதத்தம்பியைக் கொலை செய்வித்தான்.
அவ்வேளையில் தேசாதிபதியின் தம்பி ஊர்காவற்றுறையில் கடற்கோட்டை கட்டுவித்துக்கொண்டு அங்கிருந்தமையால் தன் சினேகனுக்கு உதவிசெய்ய முடியாதவனாக இருந்தான். இது குறித் துப் பூததத்மி பியின் மைத் துனனாகிய கைலாயவன்னியன் கொழும்பேறி வழக்குப் பேசினபோது, தேசாதிபதியையும் அந்திராசியையும் அங்கு வரும்படிகட்டளை வர, இருவரும் புறப்பட்டுப்போகும்போது, தேசாதிபதி கடலில் வீழ்ந்தும், அந்திராசி ஆனை இடறியுமிறந்தார்கள். - இது வைபவமாலை கூறும் பூதத்தம்பி கதையாகும்.
இக்கதையை மூலமாகக் கொண்டு ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை வழக்காற்றில் இருந்த வாய்மொழிக் கதையையும் கூத்தாக ஆடப்பட்ட விலாசத்த்ையும் அடிப்படையாகக் கொண்டு பூதத்தம்பி கதையை விபரித்துள்ளார்.
முத்துத்தம்பிப்பிள்ளை கூறும் பூதத்தம்பி கதை
'ஒல்லாந்தர் அரசு செய்யத் தொடங்கிய காலத்தில் அரசிறைப் பகுதிக்கு அதிகாரியாக வேளாண் தலைவனாகிய பூதத்தம்பிமுதலியையும், நிருபப்பகுதிக்கு அதிகாரியாகக் கரையார் தலைவன் (குருகுலத்தலைவன்) ஆகிய மனுவல் அந்திராசியையும் நியமித்து அவர்களுக்குப் பறங்கிக்காரர் போல முதலிப்பட்டமளித்தார்கள். இருவரையும் ஒல்லாந்தர் மந்திரியராகப் பாவித்து அவர்களை வினாவியே அரசு செய்து

Page 5
C կե22:5լճւն
வந்தார்கள்.
பூதத்தம்பிமுதலியும் அந்திராசியும் பெருநட்புடையவராய்த் தத்தம் பகுதி அதிகாரத்தைச் செய்திருக்கும்போது, ஒரு நாள் பூதத்தம்பி தனது மாளிகையில் நடந்த விருந்திற்கு அந்திராசியையும் அழைத்தான். அந்திராசி செல்லுதலும் அ>பனைப் பூதத்தம்பி உபசரித்துத் தனிமையான ஓரறையில் போசனம் படைப்பித்து அவனுண்ணும் வரையும் பக்கத்தில் நின்று பணி செய்யுமாறு இரண்டு ஏவலரையும் வைத்து, மற்ற விருந்தினரை உபசரிக்குமாறு சென்றான். பூதத்தம்பி மனைவி (அழகவல்லி) பந்திமேல் விசாரணை செய்து கொண்டு நிற்கும்போது அந்திராசி இருந்துண்ணும் அறை சென்று பரிசாரகர்களை அழைத்து, வேண்டிய குடிவகைகளைக் குறைவின்றிப் படையுங்கள் எனத் தூண்டிப்போனாள். அந்திராசி பிறர் மனைவியரைப் பெற்ற தாயென மதிக்கும் விரதம் இல்லாதவனாதலின் அவள் முகத்தழகைக் கண்டான். அவள் நடையழகையும் நோக்கினான். அவன் நோக்கோடு உள்ளமும் அவள் பாற் செல்லப் பெற்றான். தணியாப் பெருங்காதல் மூளப்பெற்றான். அவன் அருந்திய விருந்தெல் லாம் வேம்பாயிற்று. பரிசாரகள் வினாவுக்கு அவன் யாதும் கூறாது மரமாகவிருந்தான். பலகாற் கேட்ட பின்னர் அவன் உணர்வு வந்து, போதுமெனக் கூறி எழுந்து வாய் சுத்திசெய்து கொண்டுபோய் ஆசாரமண்டபத்திலிருந்து, பூதத்தம்பியோடு பேசிக் கருத்தொருபாலிருக்கத் தாம்பூலந் தரித்து விடை பெற்று வீட்டிற்கு வந்தான்.
அவன் வீடு போய்சசேர்ந்தவுடன், தங்கக்காசுகளும், வாசனைத்திரவியமும், ஒரு பட்டாடையும் ஒரு சந்தனப் பெட்டியிலிட்டு, இதனைக் கொண்டுபோய் பூதத்தம்பியின் மனைவி அழகவல்லி கையில் யாருமறியா வகை கொடுத்து, யான் வந்து கொண்டாடுவதற்கு ஏற்ற காலம் யாது? என்று
6

செங்கை ஆழியான் )
கேட்டு வா’ என ஒரு தூதனிடம் கொடுத்து அவனை அனுப்பினான். அவன் சென்று பூதத்தம்பி இல்லாத சமயம் பார்த்து அவள் கையில் கொடுத்துத் தன் தூதைச் சொன்னான். அ.து அவள் செவியில் உருகிய ஈயநீர் போலப் பாய்ந்தது. அவள் கொடுஞ்சினம் கொண்டு ஒரு செருப்பை எடுத்து அப்பெட்டி மீது வைத்துக் கட்டுவித்து இதனைக் கொண்டுபோய் அப்பாதகன் கையில் கொடுத்திடுக என்று அத்துாதனையும் கண்டித்து அனுப்பினாள். தூதன் நடந்ததை அந்திராசியிடம் சொல்லிப் பெட்டியையும் கொடுத்தான். அந்திராசி உலகமெல்லாம் என்அடி வணங்க அழகவல்லிக்கு மாத்திரம் மதிப்பில்லாதவனானேன். என் தூதனும் என்னை மதிக்க மாட்டானே? என வெட்கமும் துக்கமும் மானமுந் தூண்ட ஆறாக்கோபமுடையவனாகி, இவள் செருக்கை அடக்குவேனெச் சமயம் பார்த்திருந்தான். அழகவல்லி அச்செய்தியை உடனே தன் நாயகனுக்குச் சொல்லின் பெரும் பகை விளையுமென்றஞ்சிச் சாந்தமான காலம் பார்த்து அறிவிக்க எண்ணியிருந்தாள்.
இரண்டு மூன்று தினங்களில் அந்திராசி, பூத்தம்பியிடம் சென்று ஒரு வெள்ளைக் காகிதத்தைக் காட்டி, 'கச்சாய்த்துறைக்குச் சில மரங்களுக்குக் கட்டளை யனுப்ப வேண்டும். மரம் இன்னதென்று கணக்குப் பார்த்து வாசகம் எழுதிக்கொள்வேன். பின்பு எமக்குச் சாவகாச மிருக்காது. இதிற் கையெழுத்திட்டுத் தாரும்' என்றான். பூதத்தம்பி அதனைச் சாதகமென்றெண்ணிக் கையெழுத் திட்டுக் கொடுத்தான். அந்திராசி தன் எண்ணம் முடிந்ததென்று மகிழ்ந்து கொண்டு போய், மறுகரலிகிதத்தில் உடல் வாசகத்தைப் பறங்கித் தலைவனுக்கு ஒல்லாந்தரை வெல்லத் துணைபுரிவதாகவெழுதி ஒரு தூதனிடமனுப்பிய பாவனை செய்து, அதனைத்தான் ஐயுற்றுப்பிடித்தான் போல

Page 6
C பூதத்தம்பி D
நடித்து ஒல்லாந்தத் தேசாதிபதிக்குக் காட்டினான். தேசாதிபதி அதனுண்மையை ஆராய்ந்து பொய்யெனக் கண்டு அதனைத் தள்ளினான். அந்திராசி அவ்வுண்மையை நானறிவேன். இது செய்த பூதத்தம்பியைத் தப்பவிட்டால் ஒல்லாந்தவரசுக்குப் பழுதுண்டாம். என் உயிரும் தப்பாதென்றான். அதற்குத் தேசாதிபதியிணங்கிக் கொலைத் தீர்ப்பிட்டான். ஊர்காவற் றுறையில் கடற்கோட்டை கட்டுவித்துக் கொண்டிருந்த தேசாதிபதி தம்பி பூதத்தம்பிக்குற்ற நட்பினனாதலின் அவனறியின் இத்தீர்ப்பு நிறைவேறாதென எண்ணி, அந்திராசி காலதாமதஞ் செய்யாது, அவ்விரவிற்றானே அநியாயமாகப் பூதத்தம்பியைக் கொல்லுவித்தான். உடனே அழகவல்லியும் உயிர்விட்டாள். பூதத்தம்பி மைத்துனனாகிய கைலாய வன்னியன் அதனை அறிந்து கொழும்புக்குச் சென்று பெரிய தேசாதிபதிக்கு நடந்தவற்றைக் கூறினான். உடனே அவன் யாழ்ப்பாணத் தேசாதிபதியையும் அந்திராசியையும் பிடித்து வருமாறு சேவகரை அனுப்ப, அவர்கள் தேசாதிபதியைக் கப்பல் மார்க்கமாகவும், அந்திராசியைக் கரை மார்க்கமாகவும் கொண்டு சென்றார்கள். செல்லும்போது தேசாதிபதி கடலிற் பாய்ந்துயிர்விட்டான். அந்திராசி பண்டாரத்தார் தோப்பென முசலிக்குச் சமீபத்திலுள்ள காட்டில் யானையால் அடித்தரைத்துக் கொல்லப்பட்டான்.
பூதத்தம்பி கதையின் மெய்ம்மை
பூதத்தம்பி பற்றிய கதை அல்லது தகவல்களைத் தருகின்ற நூல்களில் பெரும்பாலானவற்றின் ஆசிரியர்கள் யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மயில்வாகனப்புலவரின் கூற்றினையே தழுவித் தம் கருத்துக்களைத் தந்துள்ளனர். யாழ்ப்பாணச் சரித்திர நூலின் ஆசிரியர் ஆமுத்துத்தம்பிப்பிள்ளை,
8.

C செங்கை ஆழியான்
பூதத்தம்பி கதையை கற்பனாரீதியான புனைகதையாக விபரித்துள்ளார் என ஜோன் ஏச்.மார்டின் கருதுகிறார். 1736 அளவில் எழுதப்பட்ட யாழ்ப்பாணவைபமாலை, 1658, ஜூன், 22 ஆந்திகதி கொலை யுண்டிறந்த பூதத்தம்பியின் வரலாற்றினை விபரிக்கின்றது. சரியாக 78 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவத்தினை சரிவரச் சித்திரிக்கவியலாது திணறியுள்ளது. 1882 ஆம் ஆண்டு எஸ்.ஜோன் என்பவர் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம்' என்ற நூலிலும், 1905ஆம் ஆண்டு எஸ். கார்த்திகேசு என்பவர் 6(gg5u 'A Hand Book to the Jaffna Peninsula 6T6örgo நூலிலும், 1912 ஆம் ஆண்டு ஆ.முத்தத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம்' என்ற நூலிலும், 1933 இல் செ.இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம்' என்ற நூலிலும் விபரிக்கப்படுகின்ற பூதத்தம்பி வரலாறு, மயில்வாகனப் புலவரின் கருத்துக்களின் மறு வடிவங்களாக வுள்ளன. ஆனால், பூதத் தம்பி கொலையுண்ட காலவேளையில் 14 ஆண்டுகளின் பின்னர் 1672 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒல்லாந்தப் பாதிரியார் பால்தேயஸ் என்பாரின் குறிப்புக்களும், 1849 இல் வெளிவந்த The Ceylon Almanac and Commendium of Useful Information for the Year (55 Lab(615b, Phillip Canjamanadan 6T(pgĵuu “The Vinea Taprapaneca” 6T6ÖTAB (bsT666Jub பூதத்தம்பி பற்றிய நம்பகமான குறிப்புக்கள் உள்ளன. அவற்றினை ஆராயுமுன்னர் பூதத்தம்பி குறித்து முன்னர் கூறாதுவிட்ட சில தகவல்களை நோக்குவோம். 1830 ஆம் ஆண்டு சுண்டுக்குழியில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான பரிமளம் என்பவர் பூதத்தம்பி கதையை ஒரு நாடகமாக எழுதியதாக அறியப்படுகின்றது. பரிமளத்தின்
9

Page 7
C பூதத்தம்பி
பரம்பரையினர் பூநகரியில் வாழ்வதாக ஜோன் ஏச் மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் மன்னாரைச் சேர்ந்த சுவான் கொஸ்தான் தாவீது என்பவர்பூதத்தம்பி விலாசம் என்ற இசைப்பாடல்களும் உரையும் சேர்ந்ததான கூத்தினை எழுதியுள்ளார். இக்கூத்தினையே காலங் காலமாக முழுமையாகவும் கூட்டியும் குறைத்தும் புதுக்கியும் கிராமங்கள் தோறும் இசைநாடகமாக மேடையேற்றி வருகின்றனர். இந்நாடகத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:
1. இந்நாடகம் சைவ சமயக் கடவுளர் துதிகளையும் சைவசமயப் போற்றுதல்களையும் கொண்டுள்ளது.
2. கிறிஸ்தவமதத்தினைப் போற்றாமலும், இரண்டு சாதிகளுக்கிடையிலான (வெள்ளாளன், குருகுலத்தவன்) உணவு, உடை, நடத்தைகளைப் பாடும்போது ஒன்றை உயர்த்தியும் மற்றையதை இழிவு படுத்தியும் பேசுகின்றது. (அதனால் இந்த நாடகத்தினை எழுதிய தாவீது கிறிஸ்தவன் அல்லன் என்பாருளர்.) அப்பகுதிகள் இன்று மேடை யேற்றப்படும் பூதத்தம்பி கூத்தில் இடம் பெறாது நீக்கப் பட்டுவிட்டன.
3. அந்திராடோ (Andrado) என்ற வரலாற்றுப் பாத்திரம் நாடகத்தில் அந்திராசி என அழைக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் ஒல்லாந்தக் கொமுசாறியான (தேசாதிபதி) றைக்ளோப் வன் ஹஜன்ஸ் (வன்கோயன்) என்பானை பெரிய ஒல்லாந்தேசு எனவும், பூதத்தம்பியின் நண்பனாகச் சித்திரிக் கப்படும் யாழ்ப்பாணக் கமாண்டர் றுத்தாஸ் என்பானைச் சின்ன ஒல்லாந்தேசு எனவும் இந்நாடகம் குறிப்பிடுகின்றது. 4. விருந்து நடந்தபோது திரைக்கு அப்பால் நடமாடிய
10

C செங்கை ஆழியான் )
அழகவல்லியின் பாதங்களை மட்டுமே அந்திராசி கண்ட தாகவும் அவற்றிலிருந்து அழகவல்லியின் செளந்தரியத்தினை பாதாதி கேசமாக அவன் அளவிட்டதாகவும் நாடகம் விபரிக்கின்றது.
5. "வெட்டறா மூலிகை ஒன்றினைப் பூதத்தம்பி தன் கொண்டையில் முடிந்து வைத்திருந்ததாகவும், அதனை அறிந்திருந்த அந்திராசி, அதனை எடுத்துவிட்டு பூதத்தம்பியின் சிரசைக் கொய்யுமாறு பணித்ததாகவும் நாடகம் புலம்பும்.
மயில்வாகனப்புலவர் தனது யாழ்ப்பாண வைபவமாலை யில் விபரிக்கும் பூதத்தம்பி வரலாறு நம்பகத்தன்மையானதல்ல என்பது ஜோன் ஏச் மார்ட்டின் என்பாரது கருத்தாகும். சம்பவம் V நடந்து 78 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப்புலவர் தான் செவி வழி கேள்விப்பட்டவற்றினையும் இணைத்துப் பூதத்தம்பியின் கதையை விபரித்துள்ளார். ஆனால் பூதத்தம்பியின் மரணத்தின் சாட்சியாக விளங்கிய பால்தேயஸ் பாதிரியாரின் குறிப்புக்கள் நம்பகத்தன்மையானவையாகும். அக் குறிப்பின் படி ஒல்லாந்தருக்கெதிராக யாழப்பாணக்கோட்டையில் சதி ஒன்று நடந்தது. டொன் லூயிஸ் பூதத்தம்பியும் மன்னாரைச் சேர்ந்த ஒருவனும், ஐந்து போர்த்துக்கேயரும் ஒருங்கிணைந்து இச்சதியினைச் செய்தனர். பிடிபட்டுக் கொடுர தண்டனைக் குள்ளாகினர் என்று அறிய முடிகின்றது.
இலங்கை அரசினால் 1849 இல் வெளியிடப்பட்ட நிர்வாக அறிக்கையில் விபரிக்கப்பட்டிருக்கும் கால ஒழுங்குச் சம்பவங்களில், 1658 , செப்டம்பர் மாதம், ஒல்லாந்தருக் கெதிராக யாழ்ப்பாணத்தில் ஒரு பெரும் அரசியல் சதி நடந்தது. அதில் "டொன் லூயிஸ் பூதத்தம்பியும் சில போர்த்துக்கேயரும் சம்பந்தப்பட்டிருந்தார்கள். அவர்களை டொன் மனுவல் அந்திராடோ (அந்திராசி) முதலியார்
11

Page 8
C பூதத்தம்பி
கண்டுபிடித்தார். சதிகாரர்கள் கொல்லப்பட்டார்கள்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. பிலிப் கன்ஜமனாடன் என்பாரின் The Vinea Taprobanea என்ற நூலில், எழுதப்பட்டுள்ளதாக பிறிற்ரோவின் குறிப்பிலிருந்து, டொன் லூயிஸ் பூதத்தம்பிக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையிலான இரகசியத் தொடர்புகளை அறிந்திருந்தும் அவற்றினைத் தெரிவிக்காது மறைத்து வைத்திருந்தமைக்காக, 1658 இல் கல்தேறா பாதிரியாரின் தலை துண்டிக்கப்பட்டது என அறிய முடிகின்றது.
வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து பின்வரும் முடிவுகளைப் பெற முடிகின்றது:
1. பூதத்தம்பி முதலியார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த, வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கிய அதிகாரி.
2. ஒல்லாந்தரால் துரோகியாகக் குறிப்பிடப்படும் பூதத் தம்பி அந்நியரை இந்த மண்ணிலிருந்து துரத்திவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அவமாகப் பிடிபட்டு வீரமரண மடைந்தவன்.
3. இந்த மண்ணிலிருந்து போர்த்துக்கேய அந்நிய ஆதிக்கத்தினை அகற்றுவதற்காகப் போராடிய முதல் புரட்சியாளன் சங்கிலி செகராசசேகரனாவான். அதனை அடுத்து ஒல்லாந்த அந்நிய ஆதிக்கத்தினை யாழ்ப்பாண மண்ணி லிருந்து அகற்றுவதற்கான புரட்சியாளனாகச் செயற்பட்டவன் பூதத்தம்பி முதலியாவான்.
4. யாழ்ப்பாண மக்கள் பூதத்தம்பியைப் போற்றினர் என்பது அவனைப் போற்றிய பல வேறு வாயப் மொழிக் கதைகளிலிருந்தும் அவனது கதையைக் கூத்தாக ஆடியதி லிருந்தும் அறிய முடிகின்றது.
12

C செங்கை ஆழியான் D
பூதத்தம்பி விலாசம்
பூதத்தம்பி நாடகத்தினைத் தனது கருத்திற்கு ஆதாரமாகக் கொள்ளும் யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'பூதத்தம்பி நாடகம் செய்த மாதோட்டத்துச் சுவான் கொஸ்தான் மகன் தாவீது என்பவன் இச்சம்பவத் திற்குச் சமிபகாலத்தவனாதலால் அவன் உண்மையை ஆராய்ந்தே பாடியிருக்கவேண்டுமென்பதும், பாடியவன் தானும் கிறிஸ்தவனாதலால் கிறிஸ்தவனாகிய அந்திராசி மேல் அபவாதஞ்சுமத்த மனம் பொருந்தானென்பதும், உண்மை ஒரு பக்கமும் பழியொரு பக்கமுமாக அரிய சம்பவம் எக்காலத்தும் எவ்விடத்திலும் நிகழ்வது இயல்பேயென்பதும் துணியப்படும். என்கிறார்.
அக்காலத்தில் பூதத்தம்பி நாடகம் குறித்துப் பலவாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன. முத்துத்தம்பிப் பிள்ளையின் கூற்றினை சத்தியவேத பாதுகாவலன் கடுமையாகச் சாடியுள்ளது. சாடலின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. தாவீது கிறிஸ்தவன் என்பது நிச்சயமல்ல. ஏனெனில்,
ஒரு சைவனைப் போல கடவுள் வணக்கம் செய்கிறார்.
2. அந்திராடோவை (அந்திராசி) ஒரு தமிழ்க் குருகுலத்தவன் என்பதுந் தவறு. அவன் ஒரு சிங்களவனெனப் பல்டேயஸ் பாதிரியார் காட்டியிருக்கிறார்.
3. அந்திராடோ மட்டுமல்ல, பூதத்தம்பியும் கிறிஸ்தவன் தான். (கிறிஸ்துவ மதத்தினைத் தழுவிய படியால்தான் ஒல்லாந்த அரசுப்பணியில் கடமையாற்ற முடிந்தது. டொன் லூயிஸ் பூதத்தம்பி அவனது பெயர். பெயரளவில்
13

Page 9
பூதத்தம்பி
கிறிஸ்தவனாகவும் உள்ளத்தளவில் சைவனாகவும் வாழ்ந்துள்ளான். நல்லூர்ாக்கந்தசுவாமி கோயிலை மீண்டும் எடுப்பித்தவர் டொன் ஜூவான் மாப்பாண முதலியார் ஆவார். காரியத்திற்காக மத வேஷமிட்டவர்கள்.)
4. அந்திரேடோவைக் கரையான் என்று இகழ்ந்து பூதத்தம்பி நாடகக்காரர் தாவீது பாடியது வீண். அதற்காக யாழ்ப்பாணத்துக் குருகுலமக்கள் கொந்தளித்ததும் வீண். ஏனெனில்,அந்திரேடோ யாழ்ப்பாணத்தவரல்லர். ஒரு சிங்களவர்.
பூதத்தம்பி
நம்பகத்தன்மையான வரலாறு
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் நல்லூரில் வாழ்ந்த பெருமகன் புவிநாயகமுதலியார் ஆவார். அவர் நல்லூர்ப் பிரதேசத்திற்கு மட்டுமன்றி யாழ்ப்பாணம் முழுவதற்கும் முதலியாராக விளங்கியமையால் 'இராசவாசல் முதலியார்’ எனப்பட்டார். யாழ்ப்பாணக் கோட்டை போர்த்துக்கேயரின் நிர்வாக மையமாக விளங்கியது. அதனால் யாழ்ப்பாணக் கோட்டை இராசவாசல் எனப்பட்டது. அவருடைய மகன் பூதத்தம்பி ஆவான். அவன் கச்சாய் வன்னிமை கயிலாய பிள்ளையின் சகோதரியை மணந்திருந்தான்.
புவிநாயகமுதலியாரின் மரணத்திற்குப் பின்னர் போர்த்துக்கேயர் காலத்திலேயே யாழ்ப்பாணத்தின் இராசவாசல் முதலியாராகப் பூதத்தம்பி விளங்கியிருக்க வேண்டும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அரசுப் பொறுப்பினை ஏற்ற போது பூதத்தம்பி அரசிறைக்குப் பொறுப்பான முதலியாராகப் பணியாற்றியுள்ளார்.
14

( செங்கை ஆழியான்
போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழிருந்த யாழ்ப்பாண அரசினைக் கைப்பற்றும் அவாவுடன் 1658 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆந்திகதி ஒல்லாந்தத் தளபதி றைக்கிளோப் பான்ஸ் கூன்ஸ் தனது படையுடன் யாழப்பாணக் கோட்டையை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஜூன் மாதம் 21 ஆந்திகதி வரை 107 நாட்கள் நீடித்தது. கோட்டைக்குள்ளிருந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்ததும் போர்த்துக்கேயர் கோட்டையை ஒல்லாந்தரிடம் கையளித்துச் சரணடைந்தனர். சரணடைந்த போர்த்துக்கேயர்களைக் கப்பல்களில் ஏற்றிக் கோவாவிற்கும் பத்தேயாவிற்கும் அனுப்பி வைத்தனர். போர்த்துக்கேயக் கன்னிகளையும் விதவைகளையும் தடுத்துத் தம் மனைவியராக்கிக் கொண்டனர். போர்த்துக்கேயப் படையில் வேலை செய்த பலர் ஒல்லாந்தருக்கு விசுவாசமாக இருக்க ஒத்துக்கொண்டனர். மலபார் வீரர்ாகளில் பலரும் போர்த்துக்கேயப் பறங்கிகளில் சிலரும் அவ்வாறு சேவையில் தொடர்ந்திருக்க ஒப்புக் கொண்டனர். போர்த்துக்கேயர் அரசின் யாழ்ப்பாண சுதேச முதலியார்களும் மாற்றமின்றி ஒல்லாந்தர் அரசிலும் தொடர்ந்து சேவையாற்றினர். அதற்காகக் கிறிஸ்தவ மதத்தையும் ஏற்றுத் தம் பெயர்களுடன் கிறிஸ்தவ நாமத்தையும் இணைத்துக் கொண்டனர். பூதத்தம்பி முதலியாரும் தன் பெயருடன் அரசுப் பணிக்காக டொன் லூயிஸ் என்ற நாமத்தினை இணைத்துக்கொண்டான்.
அவனுக்கு யாழ்ப்பாணம் மாறிமாறி அந்நியர் வசமாவதும் அவர்களால் அடக்கி ஆளப்படுவதும் பிடித்த மாகவில்லை. போர்த்துக்கேயராட்சியை சிறுவனாகவிருந்த போது ஏற்ற அவனால் இளைஞனான நிலையில் ஏற்க முடியவில்லை. போர்த்துக்கேயரைத் துரத்திவிட்டு ஒல்லாந்தர் யாழ்ப்பாண அரசினைப் பொறுப்பேற்றதும் அவன் சுதந்திரம்
15

Page 10
C_ பூதத்தம்பி
இழந்த நிலையை எண்ணித் துயரப்பட்டான். ஒல்லாந்தரின் ஆட்சியை விரைவில் முடிவிற்குக் கொண்டு வரவிரும்பினான். அதற்குக் கல்தேறா என்ற சுதேச கத்தோலிக்கப்பாதிரியார் உதவிக்கு வந்தார்.
ஒல்லாந்தப்படை வீரர்களுடன் கூடவே வந்திருந்த பால்தேயஸ் பாதிரியார், யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி யாழ்ப்பாணக்கோட்டைக்குள் புகுந்ததும் ஆற்றிய முதல் காரியம், போர்த்துக்கேயரின் கத்தோலிக்க தேவாலயத் தினைப் புரட்டஸ்தாந்து தேவாலயமாகச் சமயச் சுத்திகரிப்பு செய்து முதலாவது நன்றிப்பிரார்த்தனையை நடாத்தியதாகும். கத்தோலிக்கர்களும் கத்தோலிக்க பாதிரிமாரும் தமது சமயத்தினைக் கைக்கொள்ளப் பெருந் தடை வந்திருப்பதை உணர்ந்தனர். படிப்படியாகக் கத்தோலிக்க தேவாலயங்கள் புரட்டஸ்தாந்துச் சமயத் தேவாலயமாகச் சமயச் சுத்திகரிப் பின் பின் மாற்றப்படவிருப்பதைப் புரிந்து கொண்டனர். ஆரம்பத்திலேயே ஒல்லாந்தரின் இறுக்கமான கத்தோலிக்கத் தடை கல்தேறா போன்ற கத்தோலிக்க குருமாரை ஒல்லாந்தருக்கு எதிராக வெறுப்படைய வைத்திருந்தது. ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து சமயத்தை இங்கு பரப்புவதற் காகக் கத்தோலிக்க தேவாலயங்களைத் தம் பொறுப்பில் பறி முதல் செய்தும், கத்தோலிக்கள்களை நெருக்குவாரப் படுத்தியும் வந்ததால், கத்தோலிக்கரான கல்தேறா மனவேதனை அடைந்திருந்தார். அதனால் டொன் லூயிஸ் பூதத்தம்பியுடன் அவர் ஒல்லாந்தரை யாழ்ப்பாணத்திலிருந்து கலைப்பதற்கான சதியில் ஒன்று சேர்ந்தார். மன்னாரைச் சேர்ந்த ஒரு கோயிற்பற்றுத் தலைவனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். ஒல்லாந்தரின் சேவையிலிருந்த போர்த்துக்கேயர் ஐவரும் இச்சதியில் இணைந்து கொள்ளமுன் வந்தனர்.
16

U செங்கை ஆழியான் )
நல்லூரில் இன்று எஞ்சியுள்ள பூதத்தம்பி மாளிகையின் நுழைவாயில்
17

Page 11
Σα
r
ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டை நிலவரைபு (வில்சன் என்பாரின் வரைபு)
18
 

TET
qimaoLimoĝo) ĝisöisto sosisse sogaeqiilqeņ9&
, , sąNoĒĶntrolē Įs@F-109-IIaegypțiurn ETTE,『페테페*锯眶驻藏匿影|-is-sis:戈isor
19

Page 12
C பூதத்தம்பி
ஒல்லாந்தப் பால்தேயஸ் பாதிரியார் தனது "ATrue
and Exact Description of the Great Island of Ceylon 6T6örgo நூலில் பின் வருமாறு விபரிக்கிறார்:
"சோழமண்டலக்கரையிலுள்ள நாகபட்டினத்தினை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றிய கையோடு 6T LDg இராணுவம் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கு அனுப்பப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத்தில் எண்ணிக்கையில் குறைவான வீரர்களே இருந்தனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் யாழ்ப்பாணக் கோட்டை கைப்பற்றப்பட்டபோது ஒல்லாந்தக் கம்பனியின் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விருப்புத் தெரிவித்து எம்முடன் இணைந்து கொண்ட போர்த்துக்கேய வீரர்களாவர். அத்துடன் யாழ்ப்பாணக் கோட்டைச்சிறையில் ஏராளமான யுத்தக்கைதிகளாகப் போர்த்துக்கேயர் இருந்தனர்.
இவர்களில் பலர் சுதேசிகள் சிலருடன் ஒன்றிணைந்து எமக்கு எதிராகப் பெரும் சதி முயற்சியொன்றில் ஈடுபட்டனர். நான் கோட்டைக்கு வெளியே நகரத்தில் சமயப்பிரார்த் தணையில் ஈடுபட்டிருக்கும் போது, கோடடையுள் சமயப் பிரார்த்தணையில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து ஒல்லாந்த உயர் அதிகாரிகளையும் கொலை செய்வதாகும். அதன் பின்னர் கோட்டைக் காவலர்களையும் அழித்து யாழ்ப்பாணக் கோட்டையைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாகவும் இருந்தனர். சர்வ வல்லமை படைத்த இறைவன் அவர்களின் சதித்திட்டத்தை முறியடிக்க விருப்புக் கொண்டிருக்காவிடில் அச்சதித்திட்டம் இலகுவில் நிறைவேறி இருக்கும்.
அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லாது போய்விட்டது. ஒல்லாந்தரின் சேவையில் முதலியாராக இருப்பவனும், ஒரு படை அணிக்குக் கப்ரினாக விளங்குபவனும், சிங்கள
20

( செங்கை ஆழியான்
வீரனுமான டொன் மனுவல் அந்திராடோ என்பான் பதினேழு அல்லது பதினெட்டு வீரர்களுடன் அவ்வேளையில் யாழ்ப்பாணக்கோட்டையில் வந்து தங்கியிருந்தான். அவன் முன் அறிவிப்பின்றி வந்திருந்தமையால், அன்றைய பிரார் தினையின் போது கோட்டைக் குள்ளிருந்த தேவாலயத்தினுள் பிரவேசிக்கவிரும்பாது, தன் ஆட்களுடன் தேவாலயத்திற்கு வெளியே நின்று உள்ளே நிகழ்ந்த சமயப்பிரசங்கத்தினைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வேளை அவனைச்சுற்றியும் தேவாலயத்தினுள்ளும் போர்த்துக்கேய வீரர்கள் நிற்பதைக் கண்டான். அவர்கள் இடித்துப்பாக்கிகளை இயக்கும் நிலையில் வைத்திருந்தனர். என்கிறார் பால்தேயஸ்பாதிரியார்.
ஒல்லாந்தப் படையில் பெரும் பகுதி நாகபட்டினத்தற்குச் சென்றது. அதற்கு கொமுசாறி றைக்கிளோப் பான்ஸ்கூன்ஸ் தலைமை வகித்துச் சென்றான். கோட்டையின் பதில் கமாண்டர் ஜாக்கோப் வன் றீவ் ஒரு சிறிய படையுடன் பருத்தித்துறைக்குச் சென்றிருந்த வேளையை டொன் லூயிஸ் பூதத்தம்பியும் ஏனையோரும் தமது புரட்சிக்கு ஏற்றதருணமாக எடுத்துக் கொண்டனர். ஞாயிறு தேவாலயத்தினுள் ஒருங்கே உயர் அதிகாரிகள பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களைத்தாக்கி ஒருங்கே அழிப்பதாகவும், அதேவேளை கோட்டைக் காவலரண்களில் நிற்கும் வீரர்களை அவர்களோடு கலந்து நிற்கும் போர்த்துக்கேய வீரர்கள் தாக்கி அழிப்பதாகவும் முடிவாகியது.
தேவாலயத்தினுள் பிரார்த்தனை ஆரம்பமாகியது. தேவாலயத்தினை நோக்கி அவர்கள் நகர்ந்தனர். பிரார்த்த னைக்குச் செல்பவர்களைப்போல நடந்து கொண்டனர். தேவாலயத்தை நெருங்கியபோது அவர்கள் நடையில் சிறிது
21

Page 13
C பூதத்தம்பி D
தயக்கம் குடி கொண்டது. சிங்கள முதலியார் மனுவல் அந்திராடோ தனது வீரர்களுடன் தேவாலயத்தின் முன் முழந்தாழிட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பான் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
புரட்சிக்காரர்களின் தயக்கம் ஒரு கணத்தில் நீங்கியது. அவர்கள் வேகமாக ஆயுதங்களைக் கரங்களில் எடுத்துக் கொண்டு பாய்ந்தனர்.தேவாலயத்தின் வெளியே பிரார்த்த னையில் ஈடுபட்டிருந்த சிங்கள வீரர்கள் திடுக்குற்று எழுந்தனர். வாள்களுடனும் துப்பாக்கிகளுடனும் பாய்ந்து வரும் வீரர்களைக் கண்டதும் அவர்கள் தங்களைத் தாக்கத்தான் வருகிறார்கள் எனத்தப்பாகப் புரிந்து கொண்டு வேகமாகத் தம் அரைகளிலிருந்து வாள்களை உருவிக் கொண்டனர்.
பூதத்தம்பியும் புரட்சிக்காரர்களும் அப்படியான எதிர்ப்பொன்றினை எதிர்பார்க்கவில்லை. தேவாலயத்தின் முன் தொடங்கிய யுத்தத்தின் எதிரொலி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை விழிப்படையச் செய்தது. அதனால் தேவாலயத்தினுள் நுழைந்தவர்களை உடனடியாக அவர்களும் எதிர்த்து நிறுத்தத் தம்மைத் தயார் செய்து கொள்ள முடிந்தது. எனினும் தேவாலயத்தினுள் ஒல்லாந்தர் பலர் படுகொலையுற நேர்ந்தது. w சிங்கள முதலியாரின் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள். அவர்களாலும் ஒல்லாந்த வீரர்களாலும் புரட்சிக்காரர்களைச் சிலபொழுதுகள் தாக்குப் பிடிக்க முடிந்தது. பூதத்தம்பி, கோட்டையின் ஏனைய பகுதிகளில் எதிர்பர்த்தபடி தாக்குதல் நிகழாதிருப்பதைக் கண்டான். மனதில் கலக்கமும் வியப்பும் ஏற்பட்டது. கோட்டை மதில்களில் இருந்த வீரர்கள் தயக்கத்துடன் கோட்டைக்கு வெளியில் பர்ாப்பதைக் கண்டான். அவர்கள் தயக்கத்திறகுக் காரணம் விரைவில் புரிந்தது.
22

C செங்கை ஆழியான் )
காலையில் கோட்டையிலிருந்து வெளியேறிய பதில் கமாண்டர் ஜாக்கோப் வன் றிவ், பருத்தித்துறைக்குச் செல்லவில்லை. இடைநடுவில் தன்பயணத்தை முறித்துக் கொண்டு வேகமாகக் கோட்டைக்குத் திரும்பி வந்து கொண்டி ருந்தான். கோட்டைக்குள் அவன் படையுடன் வேகமாகப் புகுந்தான். தேவாலயத்தின் உள்ளும் வெளியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரச் சண்டையைக் கண்டான்.
சிலநிமிடங்களில் சண்டை ஓய்ந்தது. பூதத்தம்பியின் பக்க்த்தில் பலர் படுகொலையுண்டனர். ஒல்லாந்தர் பக்கத்திலும் சிங்கள முதலியார் அன்ரோமிடோ பக்கத்திலும் பலர் இறந்திருந்தனர். பூதத்தம்பி உட்பட புரட்சிக்காரர்கள் பதினொரு பேர் கைது செயய்ப்பட்டார்கள். அவர்கள் பதினொருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மயங்கி விழும் வரை அடித்து உதைக்கப்பட்டனர். இறந்தவர்களும் கைதானவர்களும் தாம் இந்தச் சதிக்கும் கலவரத்திற்கும் காரணமானவர்கள் என கமாண்டர் கருதியமையால் உடந்தையாக மாறவிருந்த ஏனையோர் தப்பிக்க முடிந்தது. பால்தேயஸ் பாதிரியார் புரட்சியாளாக்குக் கிடைத்த தண்டனையைத் தன் நூலிற் பின் வருமாறு விபரிக்கிறார்:
'இச்சதித்திட்டத்தின் பின்னணி மிகக் கவனமாக ஆராயப்பட்டது. அவர்களின் வாய்களினாலேயே உண்மைகள் வெளிவந்தன. அவர்களில் சிலரைத் தூக்கிலிடுமாறும், சிலரின் சிரசுகளைத் துண்டிக்குமாறும், சிலரைச் சிலுவைகளில் அறையுமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இச்சதிக்குக் காரண மான டொன் லூயிஸ் பூதத்தம்பியும், மன்னாரைச் சேர்ந்த சுதேசி ஒரவனும், ஐந்து போர்த்துக்கேயர்களும் இவ்வாறான தண்டனைகளைப் பெற்றனர். அவர்கள் முதலில் சிலுவை ஒன்றில் இறுகப் பிணைக்கப்பட்டனர். அவர்களின் கழுத்துக்கள் துண்டிக்கப்பட்டன. பின்னர் அவர்களின்
23

Page 14
C பூதத்தம்பி )
மார்புகள் பிளக்கப்பட்டு இருதயங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. அவை அத்துரோகிகளின் முகங்களில் வைக்கப்பட்டன. மலாக்காவில் பிறந்த கலாதேறா என்ற பாதிரியின் தலை துண்டிக்கப்பட்டது. இப்பாதிரி தனது சுகயினத்தைக் காட்டி குருமனையிலிருந்து வெளிவர மறுத்தார். ஆனாலும் அவர் தனக்குரிய தண்டனையை அடைந்தார். இந்த வெட்கங்கெட்ட சதி வேலையில் இவருக்கும் சிறு பங்குண்டு. தண்டனை பெற்ற துரோகிகளால் இவருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருக் கின்றது. தமது ஆத்மாவின் தந்தை என விழித்துத் தம் நோக்கங்களை விளக்கி அவருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவர் மனது குற்றத்தை ஒப்புக்கொள்ள வில்லை. தனது நாட்டுச் சதிகாரர்களைக் காட்டிக்கொடுக்க அவர் மனம் இடந்தர வில்லை. ஆனால் அவருடைய மெளனமே அவர் மரணத்தைக் கொண்டு வந்தது. சதிகாரர்களின் சடலங்கள் பருந்துகளின் இரைக்காக மரங்களில் தொங்கவிடப்பட்டன. சதிகாரத் தலைவர்களின் தலைகள் கழிகளில் குத்தப்பட்டு சந்தை கூடும் இடங்களில் பார்வைக்கு நாட்டப்பட்டன.
ஒல்லாந்தரின் கொடுரமான தண்டனைகளுக்குப் பூதத்தம்பி பலியானான்.
பூதத்தம்பி பற்றிய வாய் மொழிக்கதை
பூதத்தம்பியின் மனைவி அழகவல்லி, அவன் அரசிறைக்குப் பொறுப்பான முதலியார் பதவி. நிருபத் துறைக்கு முதலியாராக மனுவல் அந்திராசி, பூதத்தம்பி யின் இட்ட நண்பன் சின்ன ஒல்லாந்தேசு. விருந்திற்கு அழைக்கப்பட்டஅந்திராசி அழகவல்லியைக் காணல், தூதனுப்பல், அவமானப்படல், பழி வாங்கும் நோக்குடன் வெற்றுக்காகிதத்தில் பூதத்தம்பியின் ஒப்பம் பெறல், அதனைப்
24

( செங்கை ஆழியான்
பயன்படுத்தி அவனுக்கும் போர்த்துக்கேயருக்கும் தொடர்பிருப்பதாகக் கூறிப் பெரிய ஒல்லாந்தேசு மூலம் பூதத்தம்பியைக் கொல்வித்தல் ஆகியவை வழக்கிலுள்ள கதையாகும். இத்தகவல்களை அல்லது கதையை முதன் முதல் எழுத்திலிட்டு மக்கள் அறிய வைத்தவர் யாழ்ப்பாண வைபவமாலையின் ஆசிரியர் மயில்வாகனப்புலவராவார். பூத்தம்பியின் கதை நிகழ்ந்ததன் பின்னர் (1658) முக்கால் நூற்றாண்டின் பின்னர் (1736) இவர் எழுதிய வரலாற்றில் கற்பனை நிறைந்துவிட்டதென ஜோன் ஏச்.மார்ட்டின் வாதிடுகிறார். சமகாலத்தில் பூதத்தம்பியுடன் வாழ நேர்ந்த பால்தேயஸ் பாதிரியார் எழுதிய குறிப்புகள் நம்பகமானவை என அவர் குறிப்பிடுகின்றார். மயில்வாகனப்புலவருக்கும் பால்தேயஸ்சை முதன்மைப்படுத்தும் மார்ட்டினுக்கும் முரண்பாடு வருகின்ற இடம் மனுவல் அந்திராடோவும் மனுவல் அந்திராசியும் ஆவர்.
மாாட்டினைப் பொறுத்தளவில் மனுவல் அந்திராடோ ஒரு சிங்களப் பிரதானி. ஒரு படை அணிக்குக் கப்ரின். முதலியார் அந்தஸ்து உள்ளவன். அவனுக்கும் பூதத்தம் பிக்கும் இடையில் நெருங்கிய உறவுகள் இருக்க வாய்ப் பில்லை. பூதத்தம்பியின் விருந்திற்குச் செல்லவும் வாய்ப் பில்லை. தமிழ் மக்களின் பின்கட்டில் வாழ்கின்ற பெண்களில் ஒருத்தியான அழகவல்லியைச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. யாழ்ப்பாணக் கோட்டையில் தன் பயணப்பாதையில் சில நாட்கள் தங்க நேர்ந்த அந்திராடோ பற்றிப் பூதத்தம்பி கதையோடு இணைத்து மயில்வாகனப் புலவர் தரும் தகவல் கள் பொய்யானவை என்கிறார்.
பால்தேயஸ் குறிப்பிடும் அந்திராடோவும் மயில் வாகனப் புலவர் குறிப்பிடுகின்ற அந்திராசியும் வேவ்வேறானவர்கள். ஒல்லாந்தரால் பிரிக்கப்பட்டு நிர்வகிக்
25

Page 15
( կե22:5ւ5ւն
கப்பட்ட கோயில் பற்றுகளை அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்காலும் நாட்டாண்மையாலும் முதன்மை பெற்ற பிரதானிகள் நிர்வகித்தனர். இந்த முதலியார்களைத் தவிர, இராசவாசலில் (கோட்டையில்) குடிசார் நிர்வாகத்திறகுப் பொறுப்பாக இருவள் இருந்துள்ளனர். 'நல்லூரைச் சேர்ந்த பூதத்தம்பி என்ற வெள்ளாளன் அரசிறைப்பகுதியின் முதலியாராகப் பதவிவகித்தான். கரையூரைச் சேர்ந்த அந்திராசி என்ற குருகுலத்தவன் கடிதங்கள் எழுதும் (நிருபம்) பகுதிக்கு முதலியாராக நியமிக்கப்பட்டான். இவ்வாறான முடிவிற்கு வந்தால் பூதத்தம்பி கதையில் சிக்கலில்லை.
எவ்வாறாயினும் பூதத்தம்பியின் வரலாறு சோக LDITGOTg5T(35tb.
26

செங்கை ஆழியான்
27

Page 16
பூதத்தம்பி
9un因翻了Q9的
28
 

C செங்கை ஆழியான்
அழகவல்லியின் பேரெழில்
பூதத்தம்பி விலாசத்தில் (நாடகத்தில்) பூதத்தம்பியின் மனைவியும் இரணவீரசிங்கனின் மகளுமான அழகவல்லியின் எழில் அற்புதமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. மனுவேல் அந்திராசி தகாத மோகம் கொண்டமையை நியாயப்படுத்து வதுபோல அவள் அழகு இருந்துள்ளது. பிராமணப்பெண்ணின் நிறமும் சூத்திரப்பெண்ணின் கவர்ச்சியும் அழகவல்லியிடம் குடிகொண்டிருந்தன. சிவந்த அவள் நிறமும் ஒடுங்கிய அவள் இடையும் அவள் எழிலை அதிகப்படுத்தின. விம்மிப்பூரித்த அவள் மார்பகங்கள் கலசங்களாகக் காண்போர் சிந்தையைக் கவ்வின. இடைக்குக் கீழ் தாழத்தொங்கும் கூந்தலின் கருமையும் அடர்த்தியும் நெளிவும் கார்மேகத்தின் திரட்சியை நினைவு படுத்தின. நாடகத்தில் பூதத்தம்பி தன் மனைவியின் அழகை வருணிப்பான்: "இருண்டமேகமே வந்து மருண்டு கிடக்கின்றதோ எழில் மிகும் இவள் கொண்டை. இளநீா ‘போலத் திரண்ட கொங்கைப் பாரத்தால் மருங்கும் ஒடியுமென்று தெரிந்து புலம்பும் தண்டை. ஆலைக்கரும்போடு பாலைப் பழிக்கச் சொல்லும் அதரம் பவளத் துண்டோ? இவளிரண்டு காலைக் கும்பிட்டேனும் லீலைக்கிழுக்கச் செய்யும் காமனின்
y
605.
விருந்தாக பூதத்தம்பி இல்லத்திற்கு வந்த அந்திராசி வினையாகினான். 'உங்கள் மனைவியையும் அழைத்து வந்திருக்கலாமே? என்று பூதத்தம்பி வரவேற்றபோது, "அவள் வரமாட்டாள் நண்பனே. நீங்கள் சாதி ஆசாரம் பார்ப்பது போல அவள் தகுதி ஆசாரம் பார்ப்பவள்’ என்கிறான் அந்திராசி. ஏனைய விருந்தினர்களுடன் அந்திராசியை அமர்த்தி விருந்துபசாரம் செய்யவில்லை. தனி அறையில் இருத்தி அவனுக்கு உபசாரம் நடந்தது.
'இவள்தான் என் மனைவி' என பூதத்தம்பி
29

Page 17
( பூதத்தம்பி D
அழகவல்லியை அறிமுகப்படுத்துகிறான். அவளைப் பார்த்த அந்திராசி அப்படியே இமைக்க மறந்து நின்றுவிட்டான். அப்படியொரு அழகியை அவன் எங்கும் கண்டதில்லை. அந்த அலங்கார மண்டபத்தின் சிலைகளில் ஒன்றாக அவள் நின்றிருந்தாள். தேவலோகத்தின் அழகு இவளோ என வியந்து நின்றான்.ஆண்டவனுக்குக் கண்ணே இல்லை. இப்படி ஒரு மகத்தான அழகியை பூதத்தம்பியுடன் இணைத்திருக்கும் கடவுளுக்கு இரசனையே கிடையாது. அன்றலர்ந்த ரோஜா மலரென இருக்கும் அழகவல்லி எங்கே? சேற்றில் உழக்கிய உடல் நிறங்கொண்ட பூதத்தம்பி எங்கே?
அவளைக் கண்களால் விருந்துண்ட அந்திராசி அடங்கா மோகத்துடன் தன் இல்லம் வருகிறான். பரிசுப் பொருட் களுடன் தூது அனுப்பி மீள் பரிசாக விளக்குமாற்றையும் செருப்பையும் பெறுவதால் அடங்காக் கோபம் கொண்டு சதி வலையில் பூதத்தம்பியைச் சிக்க வைத்து கொல்விக்கின்றான். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் பலநாட்கள் கழியுமுன்பே , அவர்களை இங்கிருந்து வேரறுத்துத் துரத்தும் எண்ணம் யாழ்ப்பாணத்தாரிடம் இருந்ததென யாழப்பாணச் சரித்திரத்தின் ஆசிரியர் செ.இராசநாயகம் குறிப்பிடுகிறார். அந்த அந்தரங்கச் சூழ்ச்சியை மனுவல் அந்திராடோ முதலி எனும் சிங்கள முதலி கண்டு வெளிப்படுத்தினான். இச்சூழ்ச்சிக்கு டொன் லூயிஸ் பூதத்தம்பி முதலி தலைமை வகித்துள்ளான். அவனோடு அரச விரோதிகளல்லேம் எனச் சத்தியம் செய்து கொடுத்த பறங்கிகள் ஐவரும், மன்னார்த் தலைவன் ஒருவனும், கல்தேறா எனும் கத்தோலிக்கக் குருவும் அடங்கினர். அவர்கள் பெற்ற தண்டனைகள் பார்த்தோர் நடுநடுங்கும் படியானதாகும். & இச்சதியாலோசனையில் பூதத்தம்பியின் பெயரைக் கபடமாக மனுசல் அந்திராசி, நுழைத்து அநியாயமாகப் பூதத்தம்பியைக் கொலை செய்வித்தான் என இராசநாயகம்
30

C செங்கை ஆழியான் )
கருதுகிறார். பறங்கிகள் செய்த சதி ஆலோசனை வெளிவந்தபோது, பூதத்தம்பி அதில் பிரவேசியாதிருந்தாலும தருணம் பார்த்திருந்த அந்திராசி பூதத்தம்பியை இதனுள் சிக்கவைத்தான் என இராசநாயகம் கருதுகிறார். ஒல்லாந்தரை வேரறத் தொலைக்க வேண்டுமென்ற ஒர்அந்தரங்கச் சூழ்ச்சி யாழ்ப்பாணத்தாரிடம் இருப்பதாக சிங்கள முதலி அந்திராடோ வெளிப்படுத்தினான். அந்த யாழ்ப்பாணத்தார் யார்?
பால்தேயஸின்குறிப்புகள் (1658), பிலிப் கன்ஜமானாடனின் குறிப்புக்கள(1855), இலங்கை நிர்வாக அறிக்கை 1849 என்பனவற்றிலுள்ள வரலாற்று ஆதாரங்களிலிருந்து பூதத்தம்பியே அவ்வாறான சூழ்ச்சிக்கு அல்லது புரட்சிக்குத் தலைமை வகித்தான் என்பதை அறிய முடிகின்றது. இந்த மூன்று வரலாற்றுக் குறிப்புகளும் ஐரோப்பிய ஆசிரியர்களுடையவை. அவர்கள் எந்தவோரிடத்திலும் டொன் லூயிஸ் பூதுத்தம்பியை முதலியார் என்று குறிப்பிடவில்லை. அதனால் உண்மையில் பூதத்தம்பி ஒரு முதலியாரா? என்ற ஐயத்தினை மார்ட்டின் எழுப்பியுள்ளார். தமக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாலும் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட தாலும், அவனைத் துரோகி என்றே ஐரோப்பிய ஆசிரியர்கள் குறித்துள்ளனர். அதனால் அவன் வகித்த பதவிப் பெயரை இயல்பாகவே நீக்கிவிட்டனர் எனத் துணியலாம்.
எவ்வாறாயினும் பூதத்தம்பி அந்நியருக்கு எதிராகக் கிளர்ந்து எழ முயன்றவன். அவன் புரட்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டது. ஆனாலும் அவன் என்றும் நினைவு கூரப்படுவான்.
31

Page 18
C பூதத்தம்பி )
ஆயப்வுக்குரியநூல்கள்
1. Belamy,C.V., The Fort of Jaffna. 2. Fernao de Queyroz.S.J., Temporal and Spirtual
Conquest of Ceylon-1930 3. Phliphus Baldeus, ATrue and Exact Description of
the Great Island of Ceylon. 4. Martyn, John H., Notes on Jaffna-1923 5. இராசநாயகம் .செ., யாழ்ப்பாணச் சரித்திரம் 1933 6. மயில்வாகனப்புலவர், யாழ்ப்பாண வைபவமாலை. 7. வேலுப்பிள்ளை, க., யாழ்ப்பாண வைபவ கெளமுதி 8. குணராசா, கலாநிதி க., யாழ்ப்பான கோட்டை
வரலாறு. 1995 9. குணராசா, கலாநிதி.க, ஈழத்தவர்வரலாறு 10. செங்கை ஆழியான், கடல் கோட்டை-1985.
32.

(அறிவுக்களஞ்சிய நூல் வரிசை)
இல, யாழ்ப்பானதேசம் - செங்கை ஆழியானர் யாழ்ப்பான நாட்டின் வரலாறு - ஆதிகாலம் தொட்டு இன்றுவரை முழுமையாக, சரிவர இச் சிறு நூலில் எழுதப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல். Ga5L/mt 30/=
இல2. கிறனர்பேடி -எஸ்.பி.கிருஷ்ணன் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியினாலும் மன உறுதியினாலும் இந்திய காவல் துறையில் உயர்பதவி வகித்து உலகமே வியக்கும் வண்ணம் சாதனைகளைப் புரிந்த வீரப்பெண்ணின் கதை. 65 Luuri 30/=
இல3 மனிதர்களின் தேவைகள் - சாமிஜி 'மனிதர்களினி தேவைகளே அவர்களினர் வாழ்க்கையை நெறிப்படுத்துகின்றன’ என்ற உளவியல் உண்மையை, ஐந்து படிமுறைகளில் வைத்து விளக்கந் தருகிறார் ஆசிரியர். படித்து உங்கள் வாழ்க்கையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். ரூபா 30/= இல4 பூதத்தம்பி - செங்கை ஆழியான் பூதத்தம்பி விலாசம்’ நாடகம் பிரபலமானது. அதில் வரும் பூதத்தம்பி, ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இராசவாசல் முதலியாராக மிகவும் செல்வாக்குடன் இருந்து, பின்னர் ஒல்லாந்தரின் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து, மிகக் கொடூரமாக மரணதணர்டனைக்கு ஆளானவன். இவனுடைய வரலாறு, வரலாற்று ஆதாரங் களுடன் சரியாக தரப்படுகின்றது இந் நூலில்.
இன்னும் பல துறைகளிலும் பலவிதநூல்கள் அழகிய பதிப்புக்களாக வந்து கொண்டேயிருக்கும்!
வரதர் வெளியீடு 84/3, மாணிப்பாய்ச் சாலை, யாழ்ப்பாணம்.
لبر ܥܠ

Page 19
கடந்த நூற்றாண்டின் தொடக்க காலங்களில் பூதத் தம்பி நாடகம் யாழ்ப்பாணத் தில் மிகப்பிரபலமானது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத் தின் போது இராசவாசல் | முதலியாராக இருந து கொடிகட்டிப் பறந்த பூதத் தம்பி, பின்னர் அந்த ஒல் லாந்தராலேயே கொடுரமாக கோடாரியால் நெஞ்சைப் பிழந்து கொலை செய்யப் பட்ட கதை. இது - வெறும் கதையல்ல. வரலாறு !
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் இளைஞர்களால் மறக்கப்பட்டுக் கொண்டிருக் கும் பூதத்தம்பியின்
வரலாற்றை சுவைப் பட தந்திருக்கிறார் ஈழத்தின் தலை சிறந்த எழுத்தாளர் "செங்கை ஆழியான்"