கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டையகால மதமும் கலையும்

Page 1
HI ||||||||||||||TTTTTTTTT! III
I
I
I
 

I
حص المجلس
I . I
|6)IJLGI
க இல்லம்

Page 2

தொல்லியல் நோக்கில்
ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பரமு புஷ்யரட்ணம்
முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
குமரன் புத்தக இல்லம் கொழும்பு - சென்னை
2OO2

Page 3
s
se
தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
ஆசிரியர்
பரமூ புஷ்பரட்னம்
பதிப்பு
முதல் பதிப்பு 2002
குமரன் புத்தக இல்லம்
201, டாம் விதி, Gaѣт(цgütц 12.
3, மெய்கை விநாயன் தெரு, குமரன் காலனி,
தொபேரி 4218.1 சென்னை 600 026.
Religion and Arts Among Sri Lankan Tamils
in the Ancient Resiod. An Archaeological Viewpoint
AUTOR Parammu, Pushparrarumann (GD)
DON
First Edition 2002
PE)
Kumaran Book House
201, Dan Street, 3, Megi Winayagar Street, Colombo 12. Kunaran (Collkory Wadkapallarii, T. Phone : 42388 Chennai - 600 (026.

சமர்ப்பணம்
கடந்த தZற்பது ஆowடுகளுக்கு மேல7கத் தனது பல்கலைக்கழக ஆசிரியர் தொழிலில் விசுவாசம் மிக்க நிலையான M/622782/ Z/7ZZz/62/762// el-CAA//a2z/a/CAA. A/ழ் பல்கலைக்கழக பொருளியல் அதுறைத் தலைவராக Aடாதிபதியாக, பதில் துணை வேந்தராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினி முதல்வராக (/sfžu/ Avav ZeaafisarzŽzý எல்லோரி மத்தியிலும் என்றும் தல்ல மனிதனாக மதிக்கப்படும் பொழுதனியல் அறிஞர் பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் அவர்களினி அழ2/Zைத்தைந்தாவது அகவைக்கு A2A/raj (ZO/zz/62272.

Page 4
பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றிச் சில வரிகள்
சு. சுசீந்திரராஜா வாழ்நாள் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இன்றுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக ஆரம்பிக்கப்பெற்றபோது அங்கு பெரும்பாலான துறைகளில் ஆற்றலும் அனுபவ முதிர்ச்சியும் வாய்ந்த, புகழ்பெற்ற அறிஞர்கள் வந்து சேர்ந்தனர். இவர்கள் நம்நாட்டு அறிஞர் மத்தியில் பெற்றிருந்த கற்பெயரே நாளடைவில் பல்கலைக்கழகத்தின் கற்பெயராக மாறியது.
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பெற்ற வளாகம் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக - பெரும் கலைக்கோயிலாக - திகழும் என அனைவரும் எதிர்பார்த்தனர்; குதூகலித்தனர். அன்று அதன் வருங்கால வளர்ச்சிக்குச் சில அறிகுறிகள் தென்பட்டன. சிறந்த அறிஞர்களைப் பிற இடங்களில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் ஈர்த்துக் கொள்வதற்கு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நல்ல அறிஞரன்றோ பல்கலைக்கழகத்திற்குப் புகழ் தேடித் தருபவர்! ஆரம்பத்தில் கலைப்பீடத்தை வளர்த்தவர்கள் எனக் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். ஒருவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள்; மற்றவர் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்கள். இருவரும் தத்தம் துறையில் நாடறிந்த பேரறிஞர்; உயர் கல்வியின் தரத்தைப் பேணியவர்; தொலை கோக்குடையவர். இவர்களே யான் களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்வதற்குத் தூண்டுதலாக இருந்தவர்கள். சுமார் பத்து ஆண்டுகள் கழிந்தன. எவரும் எதிர்பாராதவகையில் பல்கலைக்கழகத்தின் கோலம் மாறத்தொடங்கியது. அது எதிர்பார்த்ததற்கு

மாறாகப் படிப்படியாக மாறியது. 1984 ஆம் ஆண்டளவில் பல்கலைக் கழகத்திற்கு இடர்ப்பாடுகள் மிகுந்த கெருக்கடிகள் பல தோன்றின. பேராசிரியர் கைலாசபதி கொடிய கோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். காலம் சிறிது கழிய பேராசிரியர் இந்திரபாலா பல்கலைக்கழகத்தை விட்டு விலகலானார். இவர்களைப் போல இனிக் கலைப்பிடத்தை வழிநடத்தக் கூடிய பிபாதிபதியாராக யார் இருக்க முடியும் என்று கலைப்பீட வளர்ச்சியில் ஆர்வங்கொண்ட சிலர் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது கலைப்பீடத்தினர் அந்தப் பொறுப்பை நா. பாலகிருஷ்ணன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அப்பொழுது பாலகிருஷ்ணன் அவர்கள் பொருளியல் துறைத் தலைவர்; சிரேஷ்ட விரிவுரையாளர். யாழ்ப்பாணம் வருவதற்கு முன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 18 ஆண்டுகள் பணியாற்றி கல்ல அனுபவம் பெற்றவர். பண்புகொள் கல்லறிஞருடன் கூடிப் பழகிய அறிஞர். தமது கருத்துக்களைச் செம்மையான ஆங்கிலத்தில், தமிழில் பேச்சிலும் எழுத்திலும் தெளிவாக, திட்டவட்டமாக வெளியிடக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தவர். பேச்சிலும், எழுத்திலும், நடத்தையிலும் கிதானத்தை இயன்றளவு பேணுபவர். உயர் கல்வியின் தரத்தை தளர விடக்கூடாது, விட்டால் உயர்கல்வி கேலிக்கூத்தாகிவிடும் என உறுதியாக நம்புபவர். அறிஞரின் அறிவை அறிந்து மதிக்கும் ஆற்றல் படைத்தவர். கல்லாசிரியர். மாணவர்களின் மதிப்பையும் பெற்றவர். இத்தகைய ஒருவர் இருக்கும் போது கைலாசபதி, இந்திரபாலாவுக்குப் பின் பீடாதிபதியாகப் பிறர் ஒருவர் எதற்கு என்று கலைப்பிடத்தினர் முடிவு கட்டினர் போலும்,
பாலகிருஷ்ணன் அவர்கள் பீடாதிபதி ஆகிவிட்டார். 1984 ஆம் ஆண்டு தொடக்கம் 1991 ஆம் ஆண்டு வரை கலைப்பிபாதிபதியாக இருந்தார். பீடாதிபதிப் பதவியில் கண்வைத்துக் கொண்டிருந்த ஒரிரு பேராசிரியர்களும் இருந்தனர் என்பதையும் மறைக்காது இங்கு சொல்லிவிட வேண்டும்.
அன்று காலமோ, கல்விச் சூழ்நிலையோ பாதுகாப்பற்றதாக மாறத் தொடங்கிவிட்டது. கொடுரமாகும் அறிகுறிகள் தோன்றின. பல்கலைக்கழகத்தில் வசதிகள், வாய்ப்புக்கள் குறைந்து கொண்டு வந்தன. ஏனைய பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த அறிஞர்கள் தத்தம் பீடத்தை விட்டு விலகி வெளிநாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். பாடங்களில் விசேட பயிற்சி பெற்ற ஆசிரியருக்குப் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது. எல்லா விஷயங்களிலும் இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் பேராசிரியர் பாலகிருஷ்ணன் கலைப்பீடத்தில் ஆற்றிய பெரும் சேவை யாதெனின் உயர் கல்வியின் தரத்தைப் பொன்னே போற் போற்றிப் பேணியமையே. அன்று வழங்கப்பெற்ற கலைப்பட்டங்களைப் பற்றியோ கலைப் பரீட்சைகளின் தரத்தைப் பற்றியோ யாரும் குறைகூறியதாக அறிந்திலேன். பேராசிரியர்கள் கைலாசபதி, இந்திரபாலா காலத்தில்

Page 5
wi
അക്ഷത്ര മത്രി, തെങ്ങെള ഉള്ള മരുമ് Calai aldald -
@അില് അിരൂരങ്ങൽ രീഅർജ്യങ്ങളിൽ കൃിരിൽ மூக்கியத்துவத்தை உணர்ந்தவராய் இனம் அறிஞர் ஆய்விலே வனர கல்ல
கல்விசார் ஆய்வரங்கு (ACண்ஸ்ரியைா) என ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
LTTTLMTMTTMLLSLLMMMLMMTT TTLLML LLLLSMMLM MMMLSSTMMLLLLL
கட்டுரையை கலாநிதி சுரேஷ் கனகராசன விமர்சித்து எழுதியதற்கு யான்
காரணம் என்ன எனச் சிந்தித்தல் வேண்டும். புதிய பாடல்களைத் Urusišlikoa ால் அதற்குக் காரணம் உயர் கல்வியின் தரத்தைப் பேணுதல்"என்பதேயாகும். பாலகிருஷ்ணன் தாம் பேராசிரியர் எச். ஏ. டி. അീ. ത്രങ്ങGജ് Gജിപ്തി கற்றதைப் பெருமையாகக் கூறுவர்.
* Ꭳ8 ;?2ᎩᎯg ,' ;ᎯᏋᎩ;Ꭹ:Ꭼ] | lll:,* ;it ] ]
അീജിത്ര ♔ ആൽരൂ. ♔ള പ്രLഅജി, അണ്ണിജിൽ ജി.ആർ கல்வி போன்றதன்று புதிய யாபங்களை விசேட பயிற்சியின்றிக் கற்பிப்பதற்கு துணிந்து முன்வருபவர்களை ஏனைய பல்கலைக்கழகங்கள் மதித்தல் TMTMT LL LMLL LL LLLLLS MTTL0 LTTTMTTTLMLT LMLMLS LLLLLLMMMLL வஞ்சிப்பது கன்றன்று அல்லவா?
பாலகிருஷ்ணன் எனது கண்பர்களுள் ஒருவர் இருபது வருடங்களுக்கு மேல் பழகிவிட்டோம் அவர் தாமாகப் ugeSies epit.Siousehet taturit. LTTTMTTTT LLTLT TTL SYLTTLLLS TTLTLLTTLTLLL SLT LLLLMLLLLS ZTM SLTMMLMLM MLMTMML TL TLLT TLLLMLMM LLMLTTTLM LT Gള മീരൂിള.
 
 
 
 
 
 

ஆசியுரை
இலங்கை வரலாற்றுத் துறையை தமது ஆய்களமாகக் கொண்ட வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் கலாநிதி பரமு புஷ்பரட்ணம் ஒரு புது வருகையாவார். இலங்கையின் பழைய நாணயங்கள் பற்றிய தமது நூலாலும், பண்டைய இலங்கையில் தமிழும் தமிழர்கள் போன்ற ஆய்வுகள் மூலமும் இலங்கை வரலாற்றுத்துறை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திரு. புஷ்பரட்ணம் வளமான ஒரு கற்றறி புலமைப் பின்புலத்தைக் கொண்டவர்.
இந்திய வரலாற்றறிஞர்களுள் மறுதலிக்கப்பட முடியாத ஓரிடத்தைப் பெற்றுள்ள பேராசிரியர் சுப்பராயலு அவர்களிடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பயின்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து மேற்கிளம்பியுள்ள புதிய வரலாற்றாய்வாளர்களின் நண்பர். இத்தொடர்புகள் காரணமாக இந்திய வரலாற்றுத் துறையில் ஏற்பட்டு வரும் அண்மைக்கால வளர்ச்சிகளை நன்கறிந்தவர்.
இத்தகைய ஒருவரிடமிருந்து இலங்கையின் பண்டைய வரலாறு பற்றி குறிப்பாக பண்டைய இலங்கையின் தமிழ்த் தொடர்புகள், உறவுகள் பற்றி நிறைய எதிர்பார்ப்பதற்கான தூண்டுதலை இதுவரை வெளிவந்த தமது ஆய்வுகள் மூலம் ஏற்படுத்தியுள்ளார்.
வரலாற்றுத் துறையில் சில அடிப்படையான கற்றறி புலமைப் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக பண்டைய காலங்களைப் பொறுத்த வரையில் கிடைக்கும் தரவுகளிலும் பார்க்க அத்தரவுகள் நோக்கப்படும் முறைமை முக்கியமானதாகும். அதாவது பண்டைய வரலாற்றை எவ்வாறு நோக்கல் வேண்டுமென்பது ஓர் அடிப்படைப் பிரச்சினை. எத்தகைய அறிவைப் பெறுவதற்காக, எத்தகைய எடுகோள்களை உய்தறிந்து கொள்வதற்காக இந்த வரலாற்றுத் தரவுகளை ஒழுங்கமைக்கப் போகிறோம் என்பது முக்கியமானதாகும். இந்தப் பிரச்சினை அண்மைக் காலத்தில் இந்தியாவின் பண்டைய வரலாறு சம்பந்தமாக மிகமிக வன்மையான கருத்து வேறுபாடுகட்கு இடம்கொடுத்துள்ளது. குறிப்பாக சிந்துநதி நாகரிக வரலாற்று இயல்பு பற்றிய பிரச்சினையில் இது தெரியவந்துள்ளது.

Page 6
இலங்கையின் பண்டைய வரலாறு ஏற்கனவே சிக்கலானது. மகாவம்சவழிப் பார்வைக்குப் புறம்பான பார்வை நிலை கொண்டு பார்ப்பதற்கு உதவுகின்ற சான்றுகள் முன்னிலைப்படுத்தப்படாமல் இன்றும் உள்ளன. இதனால் தொல்லியல்வழி வரும் பண்டைய வரலாறு இலங்கை மாணவர்களுக்கு இன்னும் சமச்சீருடன் வழங்கப்படவில்லையென்றே கூறலாம்.
இன்னொரு நிலையில் இது இனக்குழுமப் போரின் இன்னொரு
சமூக விஞ்ஞான சங்கத்துக்கென எழுதியுள்ள சிற்றாய்வு நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனது பயம் என்னவென்றால் என் இளம் நண்பர் பரமு புஸ்பரட்ணம் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுகின்ற கூட்டத்திற்குள் விழுந்து விடக்கூடாது என்பதுதான். அவருடைய ஆய்வு மரபும் ஆய்வுப் பரப்பும் அவரை இலங்கை வரலாற்றாய்வின் மையப்புள்ளிக்கு கொண்டு செல்லல் வேண்டுமென்பதே எனது விருப்பம். இதனை ஈட்டுவதற்கு அவர் தமது ஆய்வினை இன, மொழி கடந்த இலங்கையின் பண்டை வரலாற்றாய்வாளர்களில் ஒருவராக நின்று அங்கிலை வழிவரும் நன்மதிப்பைப் பெற்று தமது ஆய்வினை மேற்கொண்டு செல்லல் வேண்டுமென்பது எனது விருப்பம்.
இலங்கையின் பண்டைய வரலாறு பற்றிய ஆய்வு பண்டைய தமிழகம் பற்றிய ஆய்வோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்ற உண்மையை இன்று நாம் அறிவோம். காய்தல் உவத்தலற்ற வரலாற்றாசிரியர்கள், தொல்லியலாளர்கள் மத்தியில் இது ஒரு முக்கிய தரவாக உள்ளது. ஒல்ட்சின் தம்பதிகள் முதல் சுதர்ஸன் செனிவிரட்ண வரை, சேனக பண்டாரநாயக்க முதல் றான்புறுாஃப் வரை இது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உண்மையாகும். புஸ்பரட்ணம் அந்தப் பெருவட்டத்துக்குள் கிற்க வேண்டும், உலாவ வேண்டும், தொழிற்பட வேண்டும். இதுவே எனது வேணவா. இவ்வகையில் இவருடைய
ஒவ்வொன்றையும் படிக்கற்களாக அமைத்து இன்று தமது எனக் கூறத்தக்க ஒரு ஆராய்ச்சிப் பாதையைச் சமைத்துள்ளவர். s
பண்டைய இலங்கை வரலாற்றுச் சூழலில் இது ஒரு சிரமமான பணி. இருந்தும் அந்தச் சிரமமான பணியை புஸ்பரட்ணம் மேற்கொள்ளல் வேண்டும். ஆர்னல்ட் ரொயின்பியைப் பற்றி அடிக்கடி கூறப்படும் ஒரு தகவல் அவர் தன்னுடைய AStudy ofHistoryயை ஏறத்தாழ இருபத்தைந்து வருட ஆய்வின் பின்னர் வெளிக்கொணர்ந்து வரலாறு எழுதுபோக்கை சிலிர்க்க வைத்தார் என்பதாகும். நமது இளந்தலைமுறையினர் அந்த உச்சிகளைக் கிட்ட வேண்டுமென்பது எனது அவா. படிப்படியாக தமது ஆய்வுகளை வெளிக்
அந்த வளர்ச்சிகளைப் பார்க்கின்ற புலமை நோக்கியும் வளர்த்துக் கொள்ளல் வேண்டும். திறமான புலமையெனில் வெளிகாட்டார் அதை வணக்கஞ் செய்தல்
8ഖങ്ങQb.

தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும் கலையும்" என்ற இந்த நூல் பல்துறை ஆய்வுகள் சங்கமிக்கும் ஒரு முனையாகும். இவர் தருகின்ற தரவுகள் நமது புலமைப் பசியை எதிர்பார்ப்பதைவிட அதிகமாக்குகின்றன.
அறிவுத்துறை நூல்களை வாசிக்கும் பொழுது அவை தரும் தரவுகள் அளவு அல்லது அந்த அளவுக்கு மேல் முக்கியமானது அவை வாசிப்பவர் மனதிலே கிளப்புகின்ற வினாக்களும் தூண்டல்களுமாகும். புஸ்பரட்ணத்தின் எதிர்கால ஆய்வுகள் இவற்றை நிறைவு செய்வதாக.
கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 7
வாழ்த்துரை
தென்னாசியாவின் புராதன காலம்பற்றிய மிக நம்பகரமான வரலாற்று மூலங்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. புராதன கிரேக்க வரலாற்றினை எடுத்துக் கூறிய ஹெரோட்டஸ் போன்றோர் இப்பிராந்தியத்தில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. இப்பிராந்திய வரலாற்று மூலங்களாகக் கொள்ளப்படும் இலக்கியங்களும் வரலாற்று இயல்பு குறைந்தனவாக உள்ளன. இதனால் இப்பிராந்திய வரலாற்றினை மீளக் கூறுவதில் தொல்லியற் சின்னங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுட் பலவும் கால வெள்ளத்தால் அழிங் துவிட்டன. அல்லது மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்றன. கடந்த சுமார் ஒரு நூற்றாண்டாக தொல்லியல் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுப் புதிய தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால் காலம் தோறும் புதிய ஆய்வுகள், கண்டுபிடிப்புக்கள் நடைபெற்று வருவதால் வரலாறு பற்றிய புதிய கருத்துக்களால் புராதன தென்னாசியா பற்றிய கருத்துக்களும் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இக்கருத்து தென்னாசிய நாடுகளில் ஒன்றான இலங்கைக்கும் பொருத்தமானதே.
இலங்கையிலே நீண்ட காலமாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் வரலாறு பொறுத்தமட்டிலே சிங்கள மக்களின் வரலாறு பல ஆய்வுகள் மூலம் கன்கு துலக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் வரலாறு இன்னும் நன்கு துலக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிச் சென்ற நூற்றாண்டிலே முதலியார். செ. இராசநாயகம், வண. பிதா சுவாமி ஞானப்பிரகாசர், க. நவரத்தினம், பேராசிரியர்களன சி. அரசரத்தினம், கா. இந்திரபாலா, சி. பத்மநாதன், சி.க. சிற்றம்பலம், பொ. இரகுபதி போன்ற அறிஞர்கள் கிடைக்கக்கூடிய பல வரலாற்று மூலங்களையும் துருவி ஆராய்ந்தே புதிய தகவல்களையும், விளக்கங்களையும் அளித்து வந்துள்ளனர், வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களும் இவ்விடயம் குறித்து மேலும் புதிய தரவுகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட வரலாற்றிற்கு மேலும் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த

கனகிதி பரழு புஷ்பரட்னம் தம் யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாட்டில் சிறிது അരൂർ G കൃിരപ്പുങ്ങി പ്രൽരൂളി ഭൂരിൽ അിൽ M LTMLMTM LTMMLLLLLLLL LLLLLL TT TM MTMM TMMM TMMT MT MTMTT
്വരഗ്ഗത്തമല്ലൂർ (ത്രത്തമി ( ക്ലിgിൽ അമൃ Rg് ക്ലിgിൽ അഞ്ച്
இவரின் கருத்துக்கள் புலப்படுத்தப்பட்டுள் Nók um kasan TTTMMTMLMTu gM LTLMMM LTMT L0L TT TTLML LLMLL TTLL
ളീഴ്ത്തിയി ിത്ര ജ്യത്തു (ആജ് - ിങ്ങG தமிழரோதத்தம் மதிநுட்பத்திற்கு ஏற்ப திருத்தியோ, ம்ெமைப்படுத்தியோ
w
፩ a REMogu::252)Ux olyokJ! »
ി.ീ18ഷ്യർ സ്ത്രിത്ര രൂൽ@, ♔ിൽഴ്ത്തി കൃത്തില്പുത്രി ആള. ശ്രീ ിൽ അ അൽ (gl@ (അജിൽ ക്ലിgത്ത് ജീരള ജി குறிப்பாக வடபுலத்திலே கிலவிவந்துள்ளது என்பதாகும். இதற்குச் சான்றுகனகப் பல காணயங்களைச் சுட்டிக் காட்டித்தலது கருத்தினை வலியுறுத்திബ്രുടിഞ്ഞ് ത്രിൽ ബ്രിട്ടiആജ്ഞ അഞ്ചി അതിജന്ദ്രർ (,
TTeSYTLLYYLMS LTLSLLLTTTTM T LMTTMS LMLLLLLLLL0L TSMLTT TTMM ஆம் நூற்றாண்டனவிலே தோன்றியதாகக் கருதினர்கள். அவ்வாறு கொள்வதற்கு சான்றாதாரங்கள் இல்லையென வரலாற்றாய்வாளர்கள் LMTMMMLMLMLMLMTSqL LLTLTuTMMM LMMLL LLTMTLMLTT MMLTTLLL L LLL

Page 8
கிலவிய யாழ்ப்பான அரசுக்கு முன்பே தமிழரசு அல்லது தமிழரசுகள் வடஇலங்கையில் நிலவியுள்ளன என்ற கருத்தினைச் சான்றுகளுடன் முன் வைத்துள்ளார். பூநகரியில் இவர் சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகளும், பிறவும் இவர் கருத்திற்குத் துணையாக உள்ளன. புராதன பிராமிக் கல்வெட்டுக்கள் புராதன சிங்கள மொழியில் உள்ளதென்றே இதுவரை சாசனவியலாளர்கள் கருதிவந்துள்ளனர். இவர் அவற்றிலே தமிழ்ச் சொற்கள், தமிழ்ப் பிராமிக்குரிய எழுத்துவடிவங்கள் உள்ளதாகவும் கருதுகிறார். இங்தவகையிலும் இச்சாசனங்கள் மேலும் மீளாய்வு செய்யப்படவேண்டியவையாகும். இவரின் கருத்து சாசனவியலாளரால் ஏற்றுக்கொள்ளப்படின் பண்டைய இலங்கைத் தமிழரின் வரலாறு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.
இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு தொட்டே இந்து சமயம் நிலவி வந்ததாக இவர் எடுத்துக் கூறியுள்ளார். இது குறித்து கருத்து வேறுபாடுகள் பொதுவாக இல்லை. இந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவமும், வைணவமும் இங்கு நெடுங்காலமாக நிலவி வந்துள்ளன. அவை தனிப்பட்ட மதங்களாக மட்டுமன்றி, பெளத்த மதத்துடனும் ஏதோ ஒரு வகையில் இணைந்தும் நிலவி வந்துள்ளன.
கட்டிடக் கலை மரபைப் பொறுத்த வரையில் தமிழகத்திலே கி.பி. 6ஆம் நூற்றாண்டிலேயே இம்மரபு ஏற்பட்டிருக்கலாம் எனக் கொள்ளப்படுகிறது. இந் நூலாசிரியர் கி.பி.முதலாம் நூற்றாண்டளவிலே இம்மரபு அநுராதபுரத்தில் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார். அத்துடன் இசுறுமுனியாவில் உள்ள இரு கோமுகிகள் வேறிடங்களில் உள்ளவற்றிலிருந்து வேறுபட்டவை. இத்தகைய கலைமரபு தனித்துவமானதென ஆசிரியர் கருதுகிறார்.
பொதுவாக யாழ்ப்பான மன்னர்கள் "சேது" வாசகம் பொறித்த பலவகையான நாணயங்களையே வெளியிட்டனர் என வரலாற்றாசிரியர்கள் கருதிவந்துள்ளனர். இவ்வகையினைவிட கந்தனைக் குறிக்கும் "கங்" என்ற பெயர் பொறித்த நாணயங்களையும், ஆரியச்சக்கரவர்த்தி அல்லது ஆறுமுகனைக் குறிக்கும் "ஆ" என்ற பெயர் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என நூலாசிரியர் நன்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தைப் போன்று இங்கும் தமிழ் அரசுகள் கிறிஸ்துவுக்கு சற்று முன் பின்னாக தோன்றியதாகக் கருதும் இந்நூலாசிரியர் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் வடஇலங்கையில் தோன்றிய யாழ்ப்பாண அரசை கி.பி.17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளும்வரை இலங்கையில் ஆட்சியிலிருந்த தமிழ் மன்னர்கள் பல்வேறு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர் எனக் கருதுகிறார்.

xiii
மேலும் தமிழகத்தைப் போன்று இலங்கையின் பழைய காலத்தில் தமிழர் மத்தியில் பெளத்தமும், சமணமும் நிலவியதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறிலர். மேலும் இங்கு புராதன இலங்கைத் தமிழர் மத்தியில் நிலவிய கிராமிய வழிபாடுகள் பற்றியும் சிறிதளவு ஆசிரியர் கூறியுள்ளார். இவர் கூறியுள்ள புதிய கருத்துக்கள் வரலாற்றாசிரியர் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுமிடத்தில் இது புராதன இலங்கைத் தமிழர் வரலாற்றில் மட்டுமன்றி இலங்கை வரலாற்றிலேயே புதிய பரிணாமத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் கூறும் கருத்தினை தொகுத்து நோக்கும்போது புராதன இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிக் குறிப்பிடத்தக்க புதிய வெளிச்சத்தினை ஆசிரியர் பாய்ச்சியுள்ளார் எனலாம். தொல்லியல் பற்றிய நூலாயினும் வாசித்து எளிதில் புரிந்து கொள்ளத்தக்க நடையில் அமைந்துள்ளது. இவ்வகையில் ஆசிரியரின் முயற்சிகள் நன்கு பாராட்டுக்குரியவை. இத்தகைய ஆய்வுகளை மேலும் முன்னெடுத்து, இந்நூலாசிரியர் ஈழத் தமிழர் வரலாறு மேலும் கன்கு துலங்கும் வகையில் செயல்பட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராசிரியர் வி. சிவசாமி திருநெல்வேலி.
10. 01, 2002

Page 9
நன்றியுரை
10.10.2001 அன்று புத்தூர் பூரீசோமாஸ்கந்தக் கல்லூரியில் அதிபர் திரு. வ. ஆறுமுகம் தலைமையில் ஆற்றிய அமரர் மழவராயர் கங்தையா நினைவுப் பேருரை இன்று விரிவான ஒரு நூலாக வெளிவருவதையிட்டு மிக்க மகிழ்சியுறுகிறேன். இச்சிறிய பேருரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தேசிய நாளிதழான வலம்புரிபத்திரிகையில் பதினொரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டபோது சமய அபிமானிகள் பலரும் அதனைத் தனியொரு நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர். இவ்விருப்பத்தை எனது ஆசிரியரும், கொழும்புத் தமிழ்ச் சங்க காப்பாளருமான தகைசார் ஒய்வுகிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களிடமும், குமரன் நூல் வெளியீட்டு இயக்குனர் நண்பர் திரு. க. குமரன் அவர்களிடமும் கூறியபோது அதைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஊடாக வெளியிட முன்வந்ததுடன், பேராசிரியர் அவர்களே நூலுக்கான அணிந்துரையும் கல்கியுள்ளார். இது எனக்கு கிடைத்த பெயர் பெற்ற புலமையாளரின் அங்கீகாரமாகும். பேராசிரியருக்கும், கண்பர் குமரன் அவர்களுக்கும் என்றும் என் நன்றிகள்.
கடந்த காலங்களில் வெளிவந்த எனது ஆக்கங்கள் பலவற்றிற்குப் பல நிலைகளில் பக்கத் துணையாக இருந்த இலக்கியக் கலாநிதி பேராசிரியர் வினாயகமூர்த்தி சிவசாமி அவர்களும் இந்நூல் குறுகிய காலத்தில் வெளிவரக் காரண கர்த்தாவாக இருந்தார் என்பதை கன்றியுணர்வோடு இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். பழமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் என்றுமே உறுதியான கருத்துடைய பேராசிரியர் அவர்கள், பழமைக்குப் பெருமை சேர்க்கும் புதிய சான்றுகள் கிடைக்கும்போது பழமை பற்றிய பாரம்பரிய பார்வையிலும் கருத்து மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்பதில் அறிவு நேர்மையுடன் செயற்படுபவர். ஈழத்து மதம், கலை தொடர்பான இந்நூலை முன்னைய ஆய்வுகள் பலவற்றில் இருந்து சற்று வேறுபட்ட பார்வையில் எழுதியபோது ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைத்ததுடன்

ΧW.
TLMLLTTTLLLLLL TMTLTLLLLLT TTTL LTLMMMTTTM TMMsL TDMM LgLTTMMTTTT TTLTLuLMLMLL SLMLMTS TTLiiLLLLLLL SLLMLgML
Silesegitea erabili
குறை கிறைகளையும் சுட்டிக்காட்டி பொருத்தமான எனது கருத்துக்கனை தமது நூல்களில் மூக்கியப்படுத்திக் கூறி எனது ஆய்வு தொடர்ந்தும் வரை உந்து சக்தியாக இருந்த எனது ஆசிரியர்கன பேராசிரியர், சி. பத்மனாதன், பேராசிரியர் சி.க, சிற்றம்பலம், கலைப்பீடாதிபதி பேராசிரியர் ப. கோபாலகிருஸ்ண ஐயர், பேராசிரியர் யொ, இரகுபதி, திரு. செ.கிருஷ்ணராஜா ஆகியோரையும், பல்கலைக்கழக மண்ணவ நிலையில் இருந்து இன்றுவரை என் ஆய்வுகள் பலவற்றை ஆரம்ப நிலையிலேயே பார்வையிட்டு நல்ல பல ஆலோசனைகள் வழங்கிவரும் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் சுவாமினதன் சுசீந்திரராஜா அவர்களையும் இவ்விடத்தில் நன்றியோடு கினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்நூலில் பயன்படுத்தப்பட்ட பெரும் Gørdiscuro álssonoras வட இலங்கையில் நாம் மேற்கொண்ட கணவாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டவையாகும். அத்தொல்லியல் சின்னங்கள் ற்றை பொகக் ù usonasửLLà எடுத்ததுடன், தனது தொல்லியல் கனவாய்வின் போது கிடைத்த சில அரிய சான்துகனையும் தந்துதவி இந்நூல் மூழுமைபெற உதவிய எமது ജൂഞ്ഞുങ്ങ് അി ഷൂിധിജിൽ ഭൂരൂഖഅരൂളിഞ്ഞ രിപ്പുഞ്ഞുണ്ട്രീ திரு. செ. கிருஷ்ணராஜா அவர்களுக்கும், நூலில் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழையின்றி நூல் முழுமைபெறப் பெரிதும் காரணக இருந்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி சிவலிங்கராஜா அவர்களுக்கும் கன்றியுடையவனாவேன்.
இந்நூலில் ஈழத்துக் கட்டிட சிற்பக்கலை தொடர்பாகப் புதிய சில கருத்துக்கனை முன்வைக்கக் காரணக இருந்தவர்கள் தமிழகத்து அறிஞர்கள். அவர்களுள் தமிழ்ப் பல்கலைக்கழக சிற்பத்துறைப் பேராசிரியர் இராசு காளிதாஸ், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துண்கலைத்துறைப் பேராசிரியர் என். சேதுராமன், தமிழ்நாடு தொல்லியல்துறை முதுநிலைக் கல்வெட்பாய்வானர் கணநிதி க. இராசனேயால், கலாநிதி வேதாசலம், தமிழ்நாடு இராசாணிக்கனர் வரலாற்று ஆய்வுறைய இயக்குனர் பாக்டர்
வழங்கிய ஆணேசனைகளும் கருத்துக்களும் என்றும் ஈன்றியோரு கிணைவு

Page 10
xvi
ஈழத்தில் பண்டைய காலத்து தமிழர் தொடர்பாகக் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை இங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு அங்கீகாரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய எனது கலாநிதிப்பட்ட ஆய்வு வழிகாட்டியாக இருந்த தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களையும், தொல்லியல் இணைப் பேராசிரியர் கா.இராசன் அவர்களையும், அத்தகைய ஒரு வாய்பைத் தமிழகத்தில் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்த எமது துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களையும் இந்நூால் வெளிவரும் கிலையில் கன்றியோடு கினைத்துப் பார்க்கிறேன்.
வரலாற்றுத்துறை பரமு புஷ்பரட்னம் யாழ் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி
18. 11, 2002

பொருளடக்கம்
ஆசியுரை
வாழ்த்துரை
நன்றியுரை
இயல் ஒன்று
ஈழத்தமிழரின் பழமையும் பெருமையும்
இயல் இரண்டு
ஈழத்தமிழரின் கலை மரபு
இயல் மூன்று
ஈழத்தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள்
இயல் நான்கு
ஈழத்தமிழரும் பெளத்த, சமணமதங்களும்
உசாத்துணைநூற்பட்டியல்
சுட்டிகள்
xvii
24
97
154
163
173

Page 11
xviii

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும்
அறிமுகம்
பல நாடுகளில் இன்று தமிழ் மக்கள் شمهيم-29 வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் ஈழத்திலிருந்து புலம்பெயர்வதற்கு முன்னால், ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் தமிழ் காட்டிலிருந்து தொழில் தேடும் நிமித்தம் அங்காடுகளுக்குச் சென்று குடியேறியவர்களாவர். ஈழத் தமிழரைப் பொறுத்தவரை அவர்களின் மூதாதையினரும் முன்பொரு காலத்தில் சிங்கள மக்களின் மூதாதையினரைப் போல் தென்னிந்தியாவின் தென்பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்தாலும், அவர்களுக்கு இங்காட்டு மண்ணோடொட்டிய 2300 ஆண்டுகளுக்கு குறையாத தொண்மையான, தொடர்ச்சியான பாரம்பரிய வரலாறு உண்டு. தமிழ் நாட்டில் அங்காட்டு மக்களது பண்டைய காலத்து எழுத்து, மொழி, மதம், கலை, பண்பாடு தொடர்பான நம்பகத்தன்மை வாய்ந்த தொல்பொருட் சான்றுகள் எக்காலத்திலிருந்து கிடைக்கின்றனவோ, ஏறத்தாழ அதே காலகட்டத்திலிருந்து ஈழத் தமிழர் தொடர்பான சான்றுகளும் இலங்கையில் கிடைக்கின்றன.

Page 12
2 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கண்டுபிடிக்கப்பட்டு, விரிவாக ஆராயப்பட்ட அளவிற்கு ஈழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டதெனக் கூறமுடியாது. கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்ட சான்றுகள் கூட சிங்கள மக்களுக்குச் சார்பான பாளி இலக்கியங்களின் தாக்கத்தாற் போலும் தமிழக வரலாற்றுப் பின்னணியில் அவற்றின் காலம், அரச வம்சம், மன்னன், வட்டாரம் என்ற அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டு தமிழகத்தில் கிடைத்த சான்றுகளுடன் ஒப்பிட்டே பெரும்பாலும் நோக்கப்பட்டன. ஒப்பிட முடியாத சான்றுகளை ஈழத் தமிழரோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்காது, தமிழ் நாட்டுத் தமிழருக்குரிய சான்றுகளாக இருக்கலாம் என நியாயம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஆய்வுப் போக்கு இலங்கை மீதான தமிழகச் செல்வாக்கை பெருமையாகப் பேச உதவிய அளவிற்கு, இங்காட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழருக்கு உரிய தனித்துவமான வரலாற்றுப் போக்கை அடையாளம் காண சிறிதளவும் உதவவில்லை. இப்பாரம்பரிய வரலாற்று அணுகுமுறையில் இருந்து விடுபட்டு நடுகிலையோடு வரலாற்று மூலாதாரங்களை அணுகும்போது தான் ஈழத்தமிழரின் தனித்துவம் என்ன என்பதும்? அதில் தமிழ் நாட்டுத் தமிழருக்குரிய பங்கு என்ன என்பதும்? தெளிவு பெறும்.
வரலாற்றாய்வில் ஈழத் தமிழர்
ஈழத்தின் பண்டைய கால மதம், கலை தொடர்பான சான்றுகளை ஈழத் தமிழருடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு முன்னால் அத்தமிழ் மக்களுக்கு இங்காட்டு வரலாற்றில் இருக்கக் கூடிய பங்கைச் சரியாக விளங்கிக் கொள்வது அவசியமாகும். பொதுவாக ஈழத் தமிழருக்குத் தமிழ் நாட்டுத் தமிழரைப் போல் 2000ஆண்டுகளுக்கு குறையாத தொடர்ச்சியான பாரம்பரிய வரலாறு உண்டு எனப் பெருமையாகப் பேசும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆயினும் சிங்கள மக்களது வரலாற்றுடன் ஒப்பிடுகையில் அவர்களது பண்டைய கால வரலாற்றின் பல பரிமாணங்கள் இற்றைவரை ஒரு தெளிவற்ற நிலையிலேயே கூறப்பட்டு வருகின்றன. இதற்கு பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர் தொடர்பான சான்றுகள் இல்லை என்பதைவிட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஒரு காரணமாக இருப்பினும், கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளை ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்ட அணுகுமுறையில் உள்ள தவறுகளும் காரணம் எனக் கருத இடமுண்டு.
இலங்கையின் பண்பாட்டு வரலாறு பாரதத்தின் பரந்த நிலப்பரப்புடன் தொடர்பு கொண்டு வளர்ந்தாலும், அதன் அரசியல் வரலாறு பெருமளவுக்குத் தமிழகத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட நிலையிலே வளர்ச்சியடைந்தது. காலத்திற்குக் காலம் இலங்கையில் ஏற்பட்ட தமிழர் ஆட்சியும்

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 3
தமிழகத்துடனான அரசியல் தொடர்புகளும், படையெடுப்புக்களும் அரசியல் ரீதியாக மட்டுமன்றி பண்பாட்டு ரீதியாகவும் தேரவாத பெளத்த மதத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. இது புத்தருக்குப் பின் பெளத்தமதம் தழைத்தோங்கும் புனித பூமியாக இலங்கையைக் காட்ட வேண்டும் என்ற கருப்பொருளில் பாளி இலக்கியங்களை எழுதிய பெளத்த குருமாருக்கு ஒட்டு மொத்த தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டின் மீதும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இதன் விளைவால் பெளத்த மதத்திற்குச் சார்பான மன்னர்களையும், மக்களையும் இங்காட்டுக்குரியவர்களாகவும், ஏனையோரை அன்னியர்களாகவும், இங்காட்டிற்கு எதிரானவர்களாகவும் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உருவானதே வடஇந்தியக் குடியேற்றம் பற்றிய விஜயன் கதையாகும். இக்கதையில் விஜயன் தலைமையில் வந்த 700 தோழர்களும், பின் வந்து குடியேறியோரும் காலப் போக்கில் பெளத்தர்களாக மாறி இங்காட்டுக்குரிய மக்களாக வாழ்ந்ததாகவும், அவர்கள் வழிவந்தவர்களே தற்காலப் பெளத்த சிங்கள மக்கள் எனவும், தமிழர்கள் அவ்வப்போது வர்த்தகர், பண்டயெடுப்பாளர் என வந்து சென்ற அன்னியர்களாகவும் கூறப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் இக்கதைகளை ஆராய்ந்த தமிழ், சிங்கள வரலாற்றாசிரியர்கள் பலரும் தற்காலத்தில் சிங்கள மக்களே பெளத்தர்களாக இருப்பதால் பாளி இலக்கியங்கள் கூறும் பெளத்தர்கள் சிங்களவர்கள் எனவும், அவர்களின் மூதாதையர் வடஇந்தியாவிலிருந்து வந்த ஆரியரின் (விஜயன் வழிவந்தோர்) வழித்தோன்றல்கள் எனவும், தமிழர்கள் பிற்காலத்தில் வந்துபோன அன்னியர்கள் எனவும் நியாயப்படுத்தினர். இன்று விஜயன் கதையைப் பலர் கட்டுக் கதையென ஏற்றுக் கொண்டாலும் சிங்கள மக்களின் மூதாதையினர் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு விஜயன் கதையைச் சான்றாகக் கொள்ளத் தயங்கமாட்டார்கள் (Silva 1981). ஆனால் அதே விஜயன் கதையில் அவனுக்கும், அவனது தோழர்களுக்கும் 700 மணப் பெண்களும், 18 தொழில் தெரிந்த 1000 குடும்பங்களும் (விஜயனோடு வந்தவர்களை விட அதிகம்) தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறியதாக அதே பாளி நூல்கள் கூறுவதை தமிழர்களும் இங்காட்டின் பூர்விக குடிகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு உரிய சான்றாகக் கூறிக் கொள்வதில்லை. தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் பெளத்த மதம் பரவிய போது கூடவே அம் மதம் தொடர்பான வரலாற்றைப் பேணும் மரபும் அறிமுகமாகியதே காரணமாகும். ஆரம்ப கால வரலாற்று மரபில் பெளத்தமத வளர்ச்சியின் வரலாறு முக்கியப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டாலும், காலப்போக்கில் அம்மத வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய மன்னர்களின் மதப்பணியோரு, அரசியல், பொருளாதாரப் பணிகளும் பேணப்பட்டன. இவ்வரலாற்றுப் பணிகளுக்கு தமிழ் மன்னர்களும், மக்களும்

Page 13
4 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
விதிவிலக்கல்ல. ஆனால் சிங் க்களின் அதிஷ்டம் பிற்காலத்தில் பெளத்தம் சிங்கள மக்களுக்குரிய மதமாக இருப்பதால் இவ்வரலாற்று மரபை அடியொற்றித் தோன்றிய தீபவம்சம், மகாவம்சம், தளவம்சம் முதலான பாளி இலக்கியங்கள் கூறும் வரலாறு பண்டு தொட்டு சிங்கள மக்களுக்குரிய வரலாறாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால் இவ்விலக்கியங்களை அடிப்படை மூலாதாரமாகக் கொண்டெழுந்த வரலாற்று நூல்களிலும் சிங்கள மக்களின் வரலாறே முக்கியப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
பெளத்த மதத்திற்கிருந்த வரலாற்றைப் பேணும் மரபு சமகாலத்தில் பிற மதங்களுக்கு, குறிப்பாக இந்து மதத்திற்கு இருக்கவில்லை. இன்று இந்திய நாகரிகத்தின் தொட்டில் என வருணிக்கப்படும் தமிழ் நாட்டுத் தமிழருக்குக் கூட கி.பி.14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு தொடர்ச்சியான வரலாற்று மரபு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் அந்த காட்டு மக்களின் பழமையையும், பெருமையையும் வெளிக்கொணர உதவியுள்ளவை போன்ற ஆய்வுகள் இலங்கைத் தமிழரை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறமுடியாது. அதே வேளை பெளத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுத்து, மொழி, கலை, பண்பாடு தொடர்பான சான்றுகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கெறிப்படுத்தப்பட்ட தென்னிலங்கைத் தொல்லியல் ஆய்வுகளில் தமிழர் தொடர்பான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன எனக் கூறமுடியாது. உட்படுத்தப்பட்டவையும் தமிழ் நாட்டுச் சான்றுகளுடன் ஒப்பிட்டு அவை தமிழ் நாட்டவரது அரசியல், வர்த்தக, பண்பாட்டுத் தொடர்பால் வந்தவை என நியாயம் கற்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இலங்கைத் தமிழரின் மொழி, எழுத்து, இலக்கியம், கலை, மதம், அரசியல், பண்பாடு என்பன பற்றி ஆராய்ந்த பலரும் அதற்குச் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகர காலம், நாயக்கர் காலம் எனப் பெயரிட்டுத் தமிழகத்தின் பின்னணியிலேயே ஆராய்ந்துள்ளனர்.
இக்காலப்பகுதியில் தமிழகப் பண்பாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் சமகால இலங்கைத் தமிழர் பண்பாட்டையும் பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எல்லாக் காலத்திலும் அவை சமமான தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தியதாகக் கூறமுடியாது. அதேவேளை தமிழ் நாட்டவர் இங்கு வந்து குடியேறியதால் அல்லது தமிழ் நாட்டவரின் மேலாதிக்கம் இங்கு நிலவியதால் மட்டும் அவர்களது பண்பாடு பரவியதெனவும் வாதிடமுடியாது. இலங்கை, தென்னிந்திய நாகரிகத்தின் தோற்றுவாயாகக் கருதப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டின் (MegalithicCulture) பல்வேறு அம்சங்கள் இன்று கிழக்காசியா, தென்கிழக்காசியா போன்ற நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கும் யப்பானுக்குமிடையே நெருங்கிய ஒற்றுமை

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 5
அடையாளம் காணப்பட்டுள்ள 300 குறியீடுகளில் 270 குறியீடுகள் யப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பண்பாட்டு ஒற்றுமை இரு ‘நாட்டு இலக்கியத்திலும் தொடர்வதாகக் கூறப்படுகின்றன (சண்முகதாஸ் 1993 39-49). இதற்கு தமிழகத்திலிருந்து யப்பானுக்கு மக்கள் காலத்திற்குக்காலம் புலம்பெயர்ந்தார்கள் எனக் கூறுவதற்கு எந்தச் சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் ஐரோப்பியராலும், மஜூம்தார் போன்ற இந்திய வரலாற்றாசிரியர்களாலும் இந்துக் குடியேற்ற நாடுகள் என வருணிக்கப்பட்ட தென்கிழக்காசியாவில் உள்ள தாய்லாந்து (Spricave, NonNot - Tha), யாவா, சுமத்திரா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் இருந்து இந்தியாவை காட்டிலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் மனிதப் பரிணாமமும், சுதேச பண்பாடும் தோன்றியதற்கான சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இச்சான்றுகள் தென்கிழக்காசியாவின் பண்டைய காலப் பண்பாடும், மக்களும் இந்தியாவிலிருந்தே சென்றன என்ற பாரம்பரிய கருத்தை மாற்றியமைத்துள்ளதுடன், ஆதிகாலம் தொட்டு இரு நாடுகளுக்கும் இடையேயிருந்த இருபக்க வர்த்தக உறவால் ஒரு நாட்டின் பண்பாடு இன்னொரு நாட்டின் மீது செல்வாக்குச் செலுத்தியுமிருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றிலிருந்து பண்டைய ஈழத்தில் தமிழர் தொடர்பாகக் கிடைத்த சான்றுகளை அவ்வக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து ஏற்பட்ட மக்கள் புலப் பெயர்வுடன் மட்டும் ஏற்பட்டதாகக் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை.
ஏனெனில் தமிழ் நாட்டவர் படையெடுப்பாளர், வர்த்தகர் என வந்த காலங்களில் மட்டும் தமிழரின் அரசியல், பண்பாடு இங்கு வேரூன்றியதாகக் கூறமுடியாது. மாறாக தமிழ் காட்டவரின் தொடர்பற்ற காலத்தில் கூட இலங்கையில் தமிழர், ஆட்சி பண்பாட்டு வளர்ச்சி தொடர்பான சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ் காட்டின் இருண்ட காலம் எனக் கூறப்படும் களப்பிரர் காலத்தில் (கி.பி.3-6) இலங்கையில் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். குறிப்பாக மித்தசேன மன்னன் அநுராதபுரத்தில் ஆட்சிசெய்து கொண்டிருந்த போது படையெடுத்து வந்த தமிழர்கள் அநுராதபுர அரசைக் கைப்பற்றி அவ்வரசை 27 ஆண்டுகள் பண்டு, பரிந்த, குட்ட பரிந்த, திரிதரன், தாடிகன் ஆகிய தமிழர் மன்னர்கள் மாறிமாறி ஆட்சி புரிந்ததாக சூளவம்சம் என்ற பாளி நூல் கூறுகிறது (Culavamsa V:4250). இவர்களின் ஆட்சி தென்னிலங்கை வரை பரவியிருந்ததை கதிர்காமம், அறகம ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன (EZI:111-115). இங்கிலை பிற்பட்ட பல்லவர், சோழர், பாண்டியர் ஆகியோரது ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது. இலங்கையில் இந்து மதமும், அவை தொடர்பான கலைகளும் தமிழ் காட்டவர் இங்கு வந்து

Page 14
6 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் எண்டைய கால மதமும், கலையும்
செல்லும் காலங்களுடன் தொடர்புபடுத்தி ஆராயப்படுகின்றன. ஆனால் புதிய ஆலயங்களை அமைப்பதற்கும், பழையவற்றைப் புதிப்பிப்பதற்கும் தமிழ் நாட்டவரின் தொடர்பற்ற காலத்தில் சிங்கள மன்னர்களும் தொண்டாற்றியதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு மூன்றாம் கசபன் (கி.பி. 717-24), இரண்டாம் மகிந்தன் (கி.பி.772-92), முதலாம் சேனன் (கி.பி.831-51), முதலாம் விஜயபாகு (கி.பி. 1077-111), முதலாம் பராக்கிரமபாகு, இரண்டாம் கஜபாகு (1132-1193) போன்ற மன்னர்கள் இந்து மதத்திற்கு ஆற்றிய பணிகள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும் (Culavamsa48:143-4). இவை தொடர்பான கல்வெட்டுக்கள் சில தமிழில் வெளியிடப்பட்டுள்ளன (பத்மநாதன் 197172:13-36). இப்பணிகள் ஈழத்தில் வாழ்ந்த தமிழர்களுக்காகச் சிங்கள மன்னர்கள் ஆற்றிய பணிகளாகக் கருத இடமுண்டு.
ஈழத் தமிழரின் பழமை
ஆசியாவில் பல இன, மத, மொழி, பாண்பாடுடைய மக்கள் வாழும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இவர்களுள் தமிழ், சிங்கள மொழி பேசும் மக்களுக்கே மிகத் தொன்மையான பாரம்பரிய வரலாறு உண்டு. இவர்களது மூதாதையினரின் பூர்விகத்தையிட்டு காலத்திற்கு காலம் பல கருத்துக்கள் கூறப்பட்டு வந்தாலும் இன அடிப்படையில் இரு மக்களது மூதாதையினரும் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய (MegalithicCulture) திராவிட மக்களின் சந்ததியினர் என்பது அண்மைக்காலத் தொல்லியல், மானிடவியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ள உண்மையாகும் (Sitrampalam 1980. Deraniyagala 1990, Seneviratne 1984, Ragupathy 1987). இப்பண்பாடு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.மு. 1000முதல் கி.பி.1ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் நிலவியதற்கான சான்றுகள் பரவலாகக் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. தென்னிங்தியாவில் எவ்வாறு பெருங்கற்காலப் பண்பாட்டின் பின்னணியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனத் திராவிட மொழிவழிப் பண்பாடு தோன்றியதோ அவ்வாறே இலங்கையிலும் தமிழ், சிங்கள மொழிவழிப் பண்பாடு தோன்றியதென்ற வலுவான கருத்து பல ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது (Strampalam 1980). ஆயினும் மொழியடிப்படையில் தமிழ், சிங்கள மொழியைக் காட்டிலும் பல நூற்றாண்டுகள் இலங்கையில் பழமை வாய்ந்தது என்பதைக் கல்வெட்டுக்களும், நாணயங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இதற்கு உதாரணமாகச் சில சான்றுகளை எடுத்துக்காட்டலாம்.
தென்னாசியாவில் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல கிளை மொழிகள் பண்டைய வடஇந்தியாவில் பேச்சுவழக்கிலிருந்த போதும் முதலில் கல்வெட்டு மொழியாக இருந்த பெருமை பிராகிருதத்திற்கே உரியதாகும்.

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 7
அதேபோல் தென்னிந்தியாவில் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பல கிளை மொழிகள் புழக்கத்திருந்த போதும் முதலில் கல்வெட்டு மொழியாக இருந்த சிறப்பு தமிழ் மொழிக்கு உரியதாகும். தமிழ் நாட்டில் பெளத்த, சமண மதங்களின் செல்வாக்கால் சில பிராகிருதச் சொற்கள் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டன (Mahadevan 1969). ஆந்திராவிலும், கள்காடகத்திலும் திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம் மக்களின் பேச்சு மொழியாக இருந்த போதும் பெளத்த மதத்தின் செல்வாக்கால் அங்கு கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை இங்கு கிடைத்த அனைத்துப் பிராமிக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றில் தமிழ் மொழியின் செல்வாக்கையும் காணமுடிகிறது (Veluppillai 1980. Sitrampalam 1980, Ragupathy 1991, Pushparatnam 2001). gpluras இது வரை கண்டுபிடிக்கப்பட்ட 1234 பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் அவற்றில் ஐம்பது வீதமான கல்வெட்டுக்களில் ஆட்பெயர் (உ-ம் : உதிரன், பூதன், அபயன், மல்லன், சுமணன்) உறவுப்பெயர் (உ-ம் : மகள், முகள், மருமகன், மருமான், மருக, சகலன்) வம்சப்பெயர் (உ-ம் ஆய், பரதவர்), பட்டப்பெயர் (உ-ம் : வேள், பருமகன், பருமக, பருமகள், குடும்பிகன், கபதிகன்), இடப்பெயர்கள் என்பவற்றில் தமிழ் மொழியின் செல்வாக்கைக் காணமுடிகிறது (புஷ்பரட்ணம் 2001 அ). இந்த அம்சத்தை தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய திராவிட மாகிலங்களில் உள்ள சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் காணமுடியவில்லை.
தென்னாசியாவில் இன்று வழக்கிலுள்ள பெரும்பான்மையான எழுத்து வரிவடிவங்கள் ஏறத்தாழ கி.மு. 3ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்த பிராமிபியிலிருந்து தோன்றியவையாகும். இந்தியாவில் தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய வட்டாரங்களில் வழக்கிலிருந்த வரிவடிவம் வடபிராமி அல்லது அசோக பிராமி என அழைக்கப்பட்டது. இவை பெரும்பாலும் பிராகிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. சமகாலத்தில் இதையொத்த எழுத்துக்கள் பல தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்டாலும் அங்கு தமிழ் மொழிக்கே சிறப்பான "ற", "ன", "ள", "ழ" போன்ற எழுத்துக்களும், தமிழ் நாட்டுப் பிராமிக்கே தனித்துவமான "இ" அல்லது "ஈ", "ம" போன்ற எழுத்து வடிவங்களும் பயன்படுத்தப்பட்டன (Mahadevan 1966,புஷ்பரட்ணம் 2001 அ). இச்சான்றாதாரங்கள் பிராகிருத மொழிக்குச் சமமான நிலையில் தமிழ் மொழி தமிழ் நாட்டில் பயன்பாட்டிலிருந்ததைக் காட்டுகிறது. இதில் சிறப்பாக கவனத்தில் கொள்ளத்தக்க இன்னொரு அம்சம் தமிழ் நாட்டிற்கே சிறப்பான இத்தமிழ் எழுத்துக்களும், எழுத்துவடிவங்களும் தமிழ் நாட்டிற்கு வெளியே சமகாலத்தில் SAGAOIńSDaSusilio LULGönGDġ35'L'ISOLEBTSio (Karunaratne 1960. Veluppillai

Page 15
8 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
1980, புஷ்பரட்ணம் 2001 அ). வடஇந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டும் அங்கு மட்பாண்டங்களில் இவ்வெழுத்துப் பொறித்ததற்கான சான்றுகள் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் இவ்வெழுத்து தோன்றியதை அப்பண்பாட்டு மட்பாண்டங்களில் பெறப்பட்ட சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன (Mahadevan 1994:1-26, Subbarayalu1991, Rajan 1994:82). இவற்றில் வரும் பெயர்கள் பெரும்பாலும் சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை ஒத்த வகையில் "அன்" என்ற விகுதியுடன் முடிவடைகின்றன. இதற்கு கண்ணன், ஆதன் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். அண்மையில் அழகன் குளத்தில் சங்க காலச் சோழமன்னனான கிள்ளிவளவனை நினைவுபடுத்தும் பெயர் ஒன்று பெறப்பட்டுள்ளது. சமகாலத்தில் இம்மரபு ஈழத்திலும் இருந்ததை அநுராதபுரம், பூநகரி, கங்தரோடை ஆகிய இடங்களில் உள்ள பெருங்கற்கால மட்பாண்டங்களில் பெறப்பட்ட சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதில் பூநகரியில் கிடைத்த மட்பாண்டங்களில் வரும் பெயர்கள் தமிழக மட்பாண்டச் சாசனங்களைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 1993:43) இச்சான்றுகளில் இருந்து பிராகிருத மொழிக்குச் சமமாக தமிழகத்தில் மட்டுமல்ல ஈழத்திலும் இற்றைக்கு 2300 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மொழி பயன்பாட்டிலிருந்தமை உறுதியாகத் தெரிகிறது.
தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சுதேச மொழிகள் இருந்தும் பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்ததற்கு அது பெளத்த, சமண மதத்திற்கு உரிய மொழியாக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதே காரணமாகும். தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பிராமிக் கல்வெட்டுக்களும் சமண மதம் சார்ந்தவையாக இருப்பதால் அங்குள்ள சில கல்வெட்டுக்களில் பிராகிருத மொழிச் செல்வாக்கைக் காணமுடிகிறது (Mahadevan 1966, வேங்கடசாமி 1983:37-91). இதனால் கல்வெட்டு மொழியாக இருந்த பிராகிருதமே அக்கால மக்களின் தொடர்பு மொழியாக இருந்ததெனக் கூறமுடியாது. தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பிராகிருத மொழிக்குரிய சில எழுத்துக்கள் காணப்பட்டாலும், சமகாலத்தில் சங்ககால மூவேந்தரும், குறுநில மன்னர்கள் தாம் வெளியிட்ட அனைத்து நாணயங்களிலும் தூய தமிழ்ப் பெயர்களையே பொறித்தனர். அதே காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்தால் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் நாணயங்களில் தூய தமிழில் பொறிக்கப்பட்டிருப்பதுடன், பிராகிருத மொழிக்குரிய சில பெயர்கள் தமிழருக்கும் பொதுவாக இருந்ததால் அவை தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் நாணயங்களில் பொறிக்கப்பட்டன. இதற்கு உதிரன் கஜபண், மகாசாத்தன், தஜபியன், கபதிகள், காக, ணாகராசன்,

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 9
பரத போன்ற பெயர் பொறித்த நாணயங்கள் சிறந்த சான்றாகும் (Bopearachchi 1999. Pushparatnam 20001:1-12, புஷ்பரட்ணம் 2001). மேற்கூறப்பட்ட கல்வெட்டுக்களும், எழுத்துப் பொறித்த தமிழ் நாணயங்களும் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருங்து புழக்கத்திற்கு வந்தவையாகும். ஒரு மொழி தோன்றிப் பல ஆண்டுகளின் பின்னரே அம்மொழிக்குரிய எழுத்துக்கள் தோன்றின என்பது வரலாற்றுரீதியாக அறியப்பட்ட உண்மையாகும். சில மொழிகளுக்கு எழுத்துக்கள் தோன்றாமலே
உரிய எழுத்துக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படுவதால் இக்காலத்திற்கு முன்னரே இவ்விருநாடுகளிலும் தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடிகிறது.
இந்திய இலக்கியங்களிலும், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுக்களிலும் தமிழரோடு தொடர்புடைய ஒரு இடமாகத் தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது. அதே வேளை சமகாலச் சங்க இலக்கியத்திலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் தமிழகத்திற்கு வெளியே தமிழர் வாழும் ஒரு இடமாக இலங்கை குறிப்பிடப்படுகிறது (Mahadeva 1966). இதை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களும், பாளி இலக்கியங்களும் o mgilij Ludožgjalsi psor (Paranavithana 1970:nos 94. 356-7, MahavasamX). திராவிட மொழிகளில் முதலில் வளமான இலக்கிய மரபைத் தோற்றுவித்த பெருமை தமிழ் நாட்டுத் தமிழருக்கு உண்டு. இதற்குச் சங்க இலக்கியம் சிறந்த சான்றாகும். இச்சங்க இலக்கியத்தை தமிழ் நாட்டுப் புலவர்கள் மட்டுல்ல ஈழத்துப் புலவர்களும் பாடியுள்ளனர். அவர்களுள் ஈழத்துப் பூதங்தேவனார் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். இவர் சங்க இலக்கியத்தில் குறுந்தொகை (93,43), அகநானூறு (88) ஆகிய இருசெய்யுட்களைப் பாடியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் (வேலுப்பிள்ளை 1986:13). இவரைத் தவிர தொல்காப்பியர், முரஞ்சியூர் முடிநாகராயர், அம்மூவனார் ஆகிய புலவர்களும் ஈழத்தைச் சேர்ந்தவர்களாகக் கொள்ளும் மரபுண்டு (வேலுப்பிள்ளை 1986:8). இவர்களுள் ஈழத்துப் பூதந்தேவனார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை. பண்டைய காலத்தில் இலங்கை ஈழம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதற்கு இலங்கை, தமிழகப் பிராமிக் 566lacá56ñgo (Paranavithana 1970:no.94, Mahadevan 1966), siás இலக்கியத்திலும் சான்றுகள் காணப்படுகின்றன. அண்மையில் பூநகரியில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய இரு மட்பாண்டங்களில் ஈழம் என்ற காட்டுப்பெயரைக் குறிக்கும் ஈழ, ஈல என்ற சொற்கள் பெறப்பட்டன (புஷ்பரட்ணம் 1993:43). இவை ஈழம் என்ற நாட்டுப் பெயரைக் குறிப்பவையாகும். இவற்றிலிருந்து ஈழம் என்ற பெயர் முழு இலங்கையை அல்லது இலங்கையின் ஒரு பாகத்தைக் குறித்திருக்கலாம்.ஈரத்துங்

Page 16
10 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இடமளிக்கிறது. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தனிநபர் பெயர்களில் கணிசமானவை பூத, பூதி என்ற பெயரைப் பெற்றுள்ளன. இவை பூத வழிபாட்டை அடியொற்றித் தோன்றியிருக்கலாம். இதன் மூலமொழி வடமொழி எனக் கூறப்பட்டாலும் சமகாலத்தில் தமிழகப் புலவர்கள் சிலர் பூதன் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். அதேபோல் இலங்கையில் உள்ள கி.மு. 2ஆம், 1 ஆம் நூற்றாண்டுக்குரிய நான்கு பிராமிக் கல்வெட்டுக்களில் பூதன் என்ற பெயர் காணப்படுகிறது (புஷ்பரட்ணம் 2001 அ). இப்பெயர் "அன்" என்ற விகுதியில் முடிவதால் இது தமிழில் ஆண்மகனைக் குறித்த பெயர் என்பதில் ஐயமில்லை. எனவே இலங்கையில் தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழர் தொடர்பாக கிடைத்த தொன்மையான சான்றுகளின் பின்னணியில் வைத்து ஈழம், பூதன் தொடர்பான பெயர்களை நோக்கும் போது சமகாலத்தில் சங்க இலக்கியம் பாடிய புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதங்தேவனார் இலங்கையைச் சேர்ந்தவர் எனக் கொள்வதில் தவறில்லை. இங்கே ஈழத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழகம் சென்று சங்க இலக்கியத்தைப் பாடுமளவுக்குப் புலமை பெற்றிருந்தார் எனக் கூறும்போது தமிழகத்தை அடுத்து சமகாலத்தில் இலங்கையிலும் தமிழ் மொழி நன்கு வளம் பெற்றிருந்ததே காரணம் எனக் கூறிக் கொள்ளலாம்.
தமிழகத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் புழக்கத்தில் இருந்த 200 க்கு மேற்பட்ட இடப்பெயர்கள் சங்க இலக்கியத்திலும், சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. அப்பெயர்கள் அதே பெயரில் தொடர்ந்தும் வழக்கிலிருந்ததாகக் கூறமுடியாது. அவை அரசியல், பண்பாட்டு மாறுதலாலும், மொழிவழக்காலும் மாறுதல் அடைந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அவ்விடப்பெயர்களின் பொதுவிகுதி, சிறப்புவிகுதி தொடர்ந்தும் இடப்பெயர்களில் நிலைபெற்றதைப் பிற்காலக் கல்வெட்டுகள், இலக்கியங்களில் வரும் இடப்பெயர்களில் இருந்து அறியப்பட்டுள்ளது (Subbarayalu and Vethasalam 1986: 137-2). 985 (BUITGö Saorákosuíîb கி.பி.3ஆம் நூற்றாண்டுக்கு முன் புழக்கத்திலிருந்த பல இடப்பெயர்கள் பாளி இலக்கியங்களிலும், சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. இதில் கணிசமான இடப்பெயர்கள் தமிழர் இடப்பெயர்களுடன் தொடர்புடையவையாகும். இதற்கு உதாரணமாக அடி, குடி, கோட்டை, மடை, ஆவி, வாவி, மடு, பாடி, பட்டி, பிட்டி, திட்டி, வயல், பாய், நாடு, காடு, தொடுவாய், குடா, கரை, கடவை, ஊர், பள்ளி, கல், கம், காமம், மலை, தலை, நகர், பட்டினம், வில், என முடியும் இடப்பெயர்களின் பொது, சிறப்பு விகுதியைக் குறிப்பிடலாம் (புஷ்பரட்ணம் 2001 அ). இவற்றுள் பெரும்பாலானவை சங்க இலக்கியத்தில் வரும் இடப்பெயர்களின் பொது, சிறப்பு விகுதியை ஒத்தவையாகும். இதில் காமம், கம், புரம், வில் என்ற பொதுவிகுதியில் முடியும் பல பெயர்கள் பிற்காலத்தில் சிங்கள இடப்

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 11
பெயர்களின் (உ-ம் காம, கமுவ, புர, வில) பொதுவிகுதியாகப் பயன்படுத்த முன்னரே ஈழத்தில் தமிழரின் இடப்பெயர்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் சில சமகால தென்னிந்திய இடப்பெயர்களிலும் காணப்படுகின்றன (உ-ம் பிட்டுகாமம், நந்திகாமம், கபிலபுரம்). இவை பிராகிருதத்தில் இருந்து தமிழ் கடன்வாங்கிய சொற்களாக இருக்கலாம். இப்பெயர்கள் பிற்காலத்திலும் ஈழத்தமிழரின் இடப்பெயர்களாக இருந்ததை கி.பி. 7ஆம், 8ஆம் நூற்றாண்டுக்குரிய சிகிரியா கல்வெட்டுக்கள், இடைக்காலத் தமிழ், சிங்கள கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் என்பவற்றில் வரும் இடப்பெயர்கள் உறுதிப்படுத்துகின்றன. இவ்விடப்பெயர்கள் பண்டு தொட்டு இலங்கையில் பரவலான தமிழர் குடியிருப்புக்கள் இருந்து வந்தமையினைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன.
ஈழத் தமிழரின் தனித்துவம்
இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றை ஆராய்ந்த பலரும் யாழ்ப்பாணத்தில் கல்லூரைத் தலைநகராகக் கொணட அரசு ஒன்று தோன்றுவதற்கு முற்பட்ட கால வரலாற்றை பெருமளவுக்கு தமிழகப் பின்னணியில் அங்காட்டு அரச வம்சங்களின் எழுச்சி, வீழ்ச்சியோடு தொடர்புபடுத்திப் பார்த்துள்ளனர். இப்பார்வை இக்காலத்திற்கு முன்னர் தமிழர் இலங்கையில் வாழவில்லை என்பதையும். அப்படி வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கென எந்தத் தனித்துவமான வரலாற்றுப் பங்கும் இல்லை என்ற கருத்தையும் ஏற்படுத்துகிறது. பண்டு தொட்டு இலங்கையில் தமிழ் நாட்டவர் போல் வடஇந்தியா, தென்னிந்தியா மற்றும் கிரேக்க, உரோம, அரேபிய, சீனா எனப் பல காட்டைச் சேர்ந்தவர்களும் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கும், அவர்களது பண்பாடு இலங்கைப் பண்பாட்டுடன் கலந்ததற்கும் சான்றுகள் உண்டு. ஆயினும் அவர்கள் அனைவரும் இலங்கையின் பண்டைய கால வரலாற்றுடன் இணைந்து கொண்ட மக்கள் கூட்டமாக வரலாற்றில் கூறப்பட்டதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் தமிழரைப் பொறுத்தவரை இலங்கை வரலாற்றில் அதிலும் அரசியல் வரலாற்றில் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதில் சிங்கள மக்களுக்குச் சமமாக ஈழத்தில் அரசு உருவாகிய காலம் தொட்டு போரிட்ட சம்பவங்கள் வரலாற்றிலக்கியங்களில் பல இடங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் இவர்களுக்கிடையிலான அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்ட வரலாறே பண்டைய கால அரசியல் வரலாறாகவும் இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் தமிழர்கள் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இலங்கையிலும் வாழ்ந்தார்கள் என்பதை மேலே கூறப்பட்ட சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இங்கிலையில் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த

Page 17
12 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
தமிழர்களுக்கென தனித்துவமான பாரம்பரிய வரலாறு இல்லாதிருக்கும் எனக் கருதமுடியும்?
சங்ககாலத் தமிழக மக்களது பண்பாடு அதன் புவியியல் தன்மைக்கு ஏற்ப முல்லை, மருதம், பாலை, குறிஞ்சி, கெய்தல் என வேறுபடுத்திப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த கில வேறுபாடு புவியியல் அடிப்படையில் மட்டுமன்றி அங்கிலப் பகுதியில் வாழ்ந்த மக்களது தொழில், மதம், கலை, வணங்கும் தெய்வம், இலக்கியம் என்ற அடிப்படையிலும் வேறுபட்டுள்ளது (சிவத்தம்பி, சண்முகதாஸ் 2001: 490-502). வேற்றுமையில் ஒற்றுமை காணும் பரந்த பாரதத்தின் பண்பாட்டு வரலாறு கூட அங்காட்டின் இயற்கை எல்லைக்குள் வட்டாரம், பிரதேசம், வம்சம், இனம், காலம் என்ற அடிப்படையில் அவற்றின் தனித்துவம் இனம் காணப்பட்டுள்ளது. இங்கிலையில் இலங்கையின் பண்பாட்டு வரலாறு பாரதத்துடன் இணைந்த கிலையில் வளர்ச்சியடைந்தாலும், பெளதீக அடிப்படையில் இலங்கை தனிப்பிராந்தியமாக இருப்பதால், அதன் பாண்பாட்டில் பல தனித்துவமான அம்சங்கள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் இன்று நிலைத்திருக்கும் பெளத்த, சிங்களப் பண்பாட்டின் அடிப்படையான பல ஊற்றுக்கள் தொடக்க காலத்தில் பாரதத்திலிருந்து புத்தாக்கம் பெற்று வந்திருந்தாலும், காலப்போக்கில் அது இலங்கைக்கேயுரிய தனித்துவமான பண்பாடாக மலர்ந்ததை வரலாற்று ரீதியில் இனம் காணமுடிகிறது. மொழி அடிப்படையில் தனித்து அடையாளம் காணப்படும் சிங்கள மக்களுக்கு முன்னோடியாகத் தமிழ் மொழியும், அதைப்பேசியோரும் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்ததற்கு நம்பகரமான பல தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன (புஷ்பரட்ணம் 2000, 2001). இச்சான்றுகள் பண்டுதொட்டு ஈழத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாடு தோன்றி வளர்ந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றன. ஆயினும் அந்த நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால வரலாறு ஆராய்ந்து பார்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாகத் தமிழகத்தின் பிரதியாகவே பார்க்கப்பட்டன. இன்று ஈழத் தமிழரின் பேச்சுமொழி, காட்டார் பாடல்கள், நாட்டுக் கூத்து, கோயில் வழிபாடு என்பனவற்றின் தனித்துவம் மட்டக்களப்பு, வன்னி, மன்னார், யாழ்ப்பாணம், மலையகம் என வட்டார அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் அளவிற்கு அவற்றிடையே தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சில வழக்கொழிந்து அவற்றின் எச்சங்கள் கிராமப்புறங்களில் மட்டும் பேணப்படுவதாகக் கூறப்படுகிறது (சுசீந்திரராஜா 1999: 1 62-67, Sanmugadas 2001:595-14, 637-67). Si go இலங்கைக்குள்ளேயே வட்டார அடிப்படையில் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் உண்டு என்பதை ஏற்கும் நாம் பண்டைய காலத்தில் இலங்கை தனியொரு நாடு என்ற வகையிலாவது ஒட்டுமொத்த தமிழரின் பண்பாட்டில் சில தனித்துவமான அம்சங்கள் இருந்திருக்கும் எனக் கூறிக் கொள்வதில்

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 13
எந்த தயக்கமும் இல்லை. அதற்குச் சில சான்றுகளை உதாரணமாகக் காட்டலாம்.
தற்காலத் தமிழ், சிங்கள மக்களின் மூதாதையினர் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய திராவிட மக்கள் என்பது அண்மைக்காலத் தொல்லியல், மானிடவியல் ஆய்வின் முடிவாகும். இவர்களோடு இலங்கையில் முன்புவாழ்ந்த நுண்கற்கால (Mesolithic Period) ஆதி ஒஸ்ரலோயிட் இன மக்களும் கலந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பெருங்கற்காலப் பண்பாடும், அதற்குரிய திராவிட மக்களும் தென்னிந்தியா சிறப்பாக தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்திருக்கலாம் என்பதை இரு பிராந்தியத்திலும் கிடைத்த இப்பண்பாட்டுச் சான்றுகளுக்கிடையிலான ஒற்றுமையில் இருந்து புலனாகிறது. ஆயினும் காலப்போக்கில் இங்கு குடியேறிய மக்களிடையே சில தனித்துவமான அம்சங்கள் தோன்றியதையும் அவதானிக்க முடிகிறது. இதற்கு மட்பாண்டங்களில் வரும் குறியீடுகளை ஒரு சான்றாக எடுத்துக்காட்டலாம். இக்குறியீடுகள் எதைக் குறிக்கின்றன என்பதையிட்டு ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், அவற்றுள் பல இனக்குழு, மதம் தொடர்பானவை என்ற விளக்கத்தில் பொதுவான கருத்தொற்றுமையுண்டு. இவை பிற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்ததை கல்வெட்டுக்கள், நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவற்றுள் மீன், சுவஸ்திகா குறியீடுகள் சிறப்பாக குறிப்பிடத்தக்கன. மீன் சின்னம் பண்டுதொட்டு பாண்டியரின் குலச் சின்னமாக சங்க இலக்கியம், நாணயங்கள், கல்வெட்டுகள் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கி.மு.3ஆம், 2ஆம் நூற்றாண்டுக்குரிய பத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் மீன் சின்னம் காணப்படுகிறது. இதற்குரியவர்கள் மீன் அரசன் எனக் கல்வெட்டில் பிராகிருத மொழியில் (I08ậìu)ựm 82 m) ST (g 5ủ Lut’’ (PGiĩ GT gối (Paranavithana 1970:406). இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்த மென்டிஸ், மயிலை சீனி வேங்கடசாமி போன்றோர் அக்கல்வெட்டுக்களுக்குரியவர்களைப் பாண்டிய வம்சத்துடன் தொடர்புபடுத்தி இவர்கள் சிங்கள மன்னர்களுக்கு கட்டுப்படாமல் அக்காலத்தில் இலங்கையில் சுதந்திரமாக ஆட்சி புரிந்த சிற்றரசர்கள் என விளக்கம் கொடுத்துள்ளனர் (வேங்கடசாமி 1983). ஆனால் கல்வெட்டில் வரும் மீன் குறியீட்டுச் சின்னத்திற்கும் சமகாலத்தில் தமிழகத்தில் பாண்டியர் பயன்படுத்திய மீன் சின்னத்திற்கும் இடையே வடிவமைப்பில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. தமிழகத்தில் இச்சின்னம் கோட்டுருவ வடிவில் ஒரு குறியீடாகவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அது மீன் வடிவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது (படம்-1).

Page 18
14 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
○○
<>4
(படம் - 1) தமிழ் நாடு இலங்கை
இந்த வேறுபாடு இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தாம் முன்பொரு காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து வந்து குடியேறியதை நினைவுபடுத்த தமது முதாதையினரின் குலச் சின்னமான மீனைப் பயன்படுத்திய போதும், அச்சின்னத்தை வடிவமைப்பதில் தமக்கென தனியானதொரு கலை மரபை இலங்கையில் பின்பற்றியிருந்தனர் என்பதைக் காட்டுவதாகக் எடுத்துக் கொள்ளலாம்.
தொடக்க காலத்தில் இந்து மதத்திற்கும் காலப்போக்கில் பெளத்த, சமண மதங்களுக்கும் பொதுவாக உள்ள சுவஸ்திகா குறியீட்டின் தொடக்கம் சிந்துவெளி முத்திரைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் இதன் பயன்பாடு இலங்கை, தென்னிந்திய பெருங்கற்கால மட்பாண்டங்களில் ugajamasä 5ITGOTuospg| (Seneviratne 1984, Rajan 1994). SSTTcö இலங்கைப் பெருங்கற்கால மட்பாண்டங்களில் இக்குறியீட்டுடன் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா குறியீடும் காணப்படுகிறது (படம்-2). இவை பின்னர் பிராமிக் கல்வெட்டுக்களிலும், நாணயங்களிலும் காணப்படுகின்றன (Paranavithana 1970:nos.549, 550, 557, 562).
击 匣 武
(படம்-2) நாணயங்களில் பிராமிக் கல்வெட்டில்
 

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 15
இதில் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா குறியீடு இலங்கையைத் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. இதில் சிறப்பாகக் கவனிக்கத்தக்க அம்சம் ஆரம்ப காலகட்டங்களில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இக்குறியீடு பெரும்பாலும் மீன் சின்னத்துடன் இணைந்து வருவதாகும் (படம்-3).
(படம் - 3) இலங்கை
இவற்றிலிருந்து இக்குறியீடு தொடக்க காலத்தில் இந்து மதத்துடனும், குறிப்பிட்ட ஒரு தமிழ் குலத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருத இடமிருக்கிறது (புஷ்பரட்ணம் 2001:130-3).
தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிச்சி நிலையில் பிராமி எழுத்தின் தோற்றத்தைக் காணமுடிகிறது. அதையுறுதிப்படுத்தும் வகையில் இலங்கையிலும், தமிழகத்திலும் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு நிற மட்டாண்டங்களில் பிராமி எழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. தென்னாசியாவில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து பிராமிக் கல்வெட்டுக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் மட்டும்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தமிழ் மொழிக்கே சிறப்பான பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளதுடன், அவற்றில் வரும் பெரும்பாலான பெயர்கள் சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை ஒத்தவையாக உள்ளன. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் கே. வி. இராமன் சில ஆதாரங்கள் காட்டி இலங்கையில் இருந்தே பிராமி எழுத்து தமிழகம் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார் (இராமன் 1977). ஆனால் நீண்ட காலமாக கவனத்தில் கொள்ளப்படாத அவரது கருத்து அண்மைக்காலத்தில் மீண்டும் மைசூர் தொல்லியல் ஆய்வு மையத்தால்

Page 19
16 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
புத்துயிர் பெறத்தொடங்கியுள்ளது. அக்கருத்து சரிவர உறுதிப்படுத்தப்படுமானால் தமிழ் பிராமியின் தோற்றம் முதலில் இலங்கையில் தோன்றியது என்ற முடிவும் வரலாம். ஆயினும் காலத்தால் முந்திய பிராமி எழுத்து இலங்கைத் தமிழக வட்டாரங்களில் இருந்து தோன்றியதென்ற கருத்து வலுப்பட்டு வருவது இலங்கையில் தமிழ் மொழியின் தொன்மையை மேலும் முன்னெடுத்துச் செல்வதாக அமைகிறது.
தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்த போது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது. இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும் (புஷ்பரட்ணம் 2001 அ). இதற்கு உதாரணமாக நாக(நாஹ), நகர் (கஹர), பூசை(பூஜா), விகாரை (விஹார), குடும் பிகன் (குடும் பிஹ), அபயன் (அபய), கபதிகன்(ஹபதிஹ), உதிரன்(உதிய), பூதன்(புதந), ராச (ராஜா), சிவ (ஸிவ) ஆசிரிய (ஆஸிரிய) போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம் (புஷ்பரட்ணம் 2001 அ). இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம் மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும்,
எழுத முற்பட்டமை காரணம் எனலாம்.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் சில பெயர்கள் சமகால சங்க இலக்கியத்தில் வரும் பெயர்களை ஒத்திருந்தாலும், இலங்கையில் பிராகிருத மொழியின் செல்வாக்கால் தமிழர்களும் வடமொழிப் பெயர்களை அக்காலத்திலும் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு சுமன், அபயன், தீசன், விஸாக, சமண, கபதிகன், குடும்பிகன் போன்ற பெயர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். சங்க இலக்கியத்தில் வரும் சில உறவுப் பெயர்கள் சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் வருகின்றன. ஆயினும் தமிழகத்தில் பிற்காலத்தில் அறியப்படும் சில உறவுப்பெயர்கள் இலங்கையில் பண்டு தொட்டுப் புழக்கத்தில் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. உதாரணமாக மருமகன் என்ற உறவுமுறை தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் பின்னரே அறியப்படுகிறது. ஆனால் இலங்கையில் அவ்வுறவுமுறை கி.மு.3ஆம், 2ஆம் நுாற்றாண்டிலேயே பயன்பாட்டிலிருந்துள்ளது. தமிழகத்தில் சங்ககால இறுதியில் அறியப்படும் மகள் என்ற உறவு முறை இலங்கையில் வரலாற்றின் தொடக்கத்திலேயே பயன்பாட்டிலிருந்துள்ளது. அத்துடன் மகள் என்ற உறவு முறை சில இடங்களில் முகள் என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 7
இலங்கைத் தமிழரிடையே மகளை மோள் என அழைக்கும் மரபு $2 -Gà(ბ. இது பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட முகள் என்ற உறவு முறையில் இருந்து வளர்ந்ததாக கருத இடமுண்டு (புஷ்பரட்ணம் 2001 அ). சங்க காலத்தில் புழக்கத்திலிருந்த பல இடப்பெயர்களின் பொது சிறப்பு விகுதிகள் சமகால இலங்கை இடப்பெயர்களில் காணப்பட்டாலும், தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் இடப்பெயர்களின் பொது சிறப்பு விகுதிகள்
இடப்பெயர்களில் பெரிதும் பயன்பாட்டிலுள்ள பொது சிறப்பு விகுதிகள் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக இலங்கைத் தமிழர் இடப்பெயர்களில் பண்டு தொட்டு பயன்பாட்டிலுள்ள மடு குடா, தொடுவாய் என முடியும் பொது விகுதி தமிழகத்தில் செல்வாக்குப் பெறவில்லை. அதேவேளை தமிழக இடப்பெயர்களில் செல்வாக்குப் பெற்றுள்ள பட்டி பாடி என முடியும் இடப்பெயர்களின் பொது விகுதி இலங்கையில் செல்வாக்குப் பெற்றதாகத் தெரியவில்லை. இவை அவ்வவ் காடுகளின் தனித்தன்மையைப் பிரதிபலிக்கின்றன எனலாம் (புஷ்பரட்ணம் 2001 அ).
இத்தனித்துவம் ஈழத் தமிழரிடையே அரசியல் ரீதியாகவும் காணப்படுகிறது. பண்டைய இலங்கையில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட அரசை தமிழ் சிங்கள மன்னர்கள் மாறிமாறி ஆட்சிபுரிந்த வரலாற்றைப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. இதில் கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட முதல் இருநூறு ஆண்டு காலத்தில் இருபது மன்னர்கள் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்ததாகவும், அவர்களுள் பத்து தமிழ் மன்னர்கள் எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நடத்தியதாகவும் அந்நூல்கள் மேலும் கூறுகின்றன. இதில் சிங்கள மன்னர்களை இங்காட்டுக்குரியவர்களாகவும், தமிழர்களை அவ்வப்போது தமிழ்நாட்டிலிருந்து படையெடுப்பாளர், வர்த்தகர் என வந்து போன அன்னியர்கள் எனவும் பாளி நூல்கள் கூறுகின்றன. பாளி இலக்கியம் கூறும் சிங்கள மக்களின் மூதாதையினரின் குடியேற்றம் தொடர்பான கதையைக் கட்டுக்கதை எனத் தொல்லியல் சான்றுகள் காட்டி ஆணித்தரமாக மறுதலிக்கும் வரலாற்றாசிரியர்களில் சிலர் கி.மு. 1000ஆண்டிலிருந்து இலங்கையில் செந்தமிழும், எழு என்ற கொடுந்தமிழும் வழக்கிலிருந்ததாகவும், இந்த கொடுந்தமிழான எழு மொழியில் இருந்தே சிங்கள மொழி தோன்றியதாகவும் வாதிடுகின்றனர். இதில் தமிழ், சிங்கள மொழிக்கு முற்பட்டதெனக் கூறுவதிலிருந்து இலங்கையில் தமிழ்க் குடியிருப்புக்களின் தொன்மை புலனாகிறது. ஆயினும் பண்டைய தமிழர் ஆட்சி பற்றி வரும்போது பாளி இலக்கியங்களுக்குச் சார்பாக அவர்களைத் தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கு சமகால ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் சமகால தமிழ் காட்டு வரலாற்று மூலங்களில்

Page 20
18 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
அங்காட்டிலிருந்து தமிழர்கள் படையெடுத்து வந்து ஆட்சிபுரிந்ததற்கு எந்தச் சான்றும் காணப்படவில்லை. மாறாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்களிடையே சுதேச தமிழ் அரச மரபு தோன்றியதற்கும், அதன் தலைவர்கள் வடஇலங்கை, தென்னிலங்கை மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் சிற்றரசர்களாக, குறுநிலத்தலைவர்களாக ஆட்சிபுரிந்ததற்கும், தமது பெயரில் நாணயங்கள் வெளியிட்டதற்கும் உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம் 2000, 2001). இந்த இடத்தில் இப்புதிய சான்றுகள், கருத்துக்கள் தொடர்பாக நாம்,எழுதிய தமிழும் தமிழரும் என்ற நூலுக்கு இலங்கையின் தலைசிறந்த வரலாற்றறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் பத்மநாதன் எழுதிய வாழ்த்துரையை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
"முன்பொரு காலத்தில் சிலர் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையில் பரவலாகத் தமிழரின் குடியிருப்புக்கள் அமைந்திருக்கவில்லை எனக் கட்டியம் கூறியுள்ளனர்.ஆனால் ஆதிகால இலங்கையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இனக்குழுக்கள் வாழ்ந்தன என்பதும், அவர்களிடையே தமிழர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பதும், தேசத்தின் பல பகுதிகளிலும் குடியிருந்தனர் என்பதும், ஆங்காங்கே அதிகாரம் செலுத்தினர் என்பதும் இப்போது இவரது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பழைய சிங்தனைகள் வலுவற்றுப் போகின்றன, வரலாற்றாராய்ச்சியிலும் புதிய பார்வையும், புதிய சிந்தனையும், புதிய உத்தியும் அழுத்தம் பெறப்போகின்றன என்பதை எண்ணுமிடத்து இங்த நூற்றாண்டு ஒரு மங்களகரமான முன்னேற்றத்தை நாடிச் செல்வதாக அமைதி கொள்ளலாம்."
இக்கூற்று அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களை தமிழகத்தோடு மட்டும் தொடர்புபடுத்துவதை விட சமகாலத்தில் இலங்கையில் தோன்றி சுதேச தமிழ் அரச மரபிலிருந்து வந்த தமிழ் மன்னர்களுடன் தொடர்புபடுத்துவதே பெருமளவுக்குப் பொருத்தம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது. பாளி இலக்கியங்கள் அநுராதபுரத்தைப் பலமிக்க அரசாகக் கூறினாலும் சமகாலக் கல்வெட்டுக்கள் நாட்டின் பல பாகங்களிலும் சிற்றரசர்களின் ஆட்சி நடைபெற்றதை உறுதிபடக் கூறுகின்றன. இதில் தமிழர்களும் சிற்றரசர்களாக இருந்திருக்கலாம் என்பதற்குக் கல்வெட்டுக்களில் வரும் பருமகன், பருமக, பருமகள், வேள் போன்ற பட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். மகாவம்சம் கூட அநுராதபுரத்தில் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஆட்சிபுரிந்தபோது அவனுக்குச் சார்பாகத் தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த முப்பத்தியிரண்டு தமிழ் மன்னர்கள்

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 19
துட்டகாமினி என்ற சிங்கள மன்னனை எதிர்த்துப் போரிட்டதாகக் கூறுகிறது (Mahavamsa XXl:75). இதை உறுதிப்படுத்தும் வகையில் தென்னிலங்கையில் இருந்து அண்மையில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழர் பெயர் பொறித்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Pushparatnam 2001:1- 12, Bopearachchi 1999). அவற்றில் ஒன்றில் திஸபுரத்தைச் சேர்ந்த சடணாகராசன் என்ற மன்னன் பற்றிக் கூறப்பட்டுள்ளது (புஷ்பரட்ணம் 2001) (ULib-4).
(படம்-4) 2000 வருடங்களுக்கு முற்பட்ட சடணாகராசன் என்ற பெயர் பொறித்த நாணயம்
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் சமகால சங்க இலக்கியத்தில் ஒரு இடத்தில் வடமொழியில் ராஜ என அழைக்கப்பட்டதற்குப் பதிலாக அரசன் என்று தமிழில் குறிப்பிடப்பட்டாலும் சமகாலக் கல்வெட்டுக்களிலோ அல்லது நாணயங்களிலோ அரசன் அல்லது ராசன் எனக் குறிப்பிடப்படவில்லை. சமகாலத்தில் சாதவாகனர் வெளியிட்ட இரு மொழி நாணயங்களில் ராசன் என்ற பெயருடன் வடமொழிக்குரிய ராஜ்ஞோ என்ற பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலையில் ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயத்தில் தமிழில் ராசன் என எழுதப்பட்டுள்ளமை இங்கு தமிழ் மொழி பெற்ற முக்கியத்துவத்திற்குச் சிறந்த சான்றாகும். இதைச் சமகாலப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் ராசா, ராசே போன்ற பெயர்களும் சான்றுபகர்கின்றன (புஷ்பரட்ணம் 2001 அ).
பொதுவாக சிங்கள மன்னர்கள் தென்னிலங்கையில் சிற்றரசர்களாக இருந்தே பின்னர் அநுராதபுர மன்னர்களாக வந்ததாகப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. தற்போது தென்னிலங்கையில் தமிழ்ச் சிற்றரசர்களும் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்திருப்பதால் இச்சிற்றரசர்களில் சிலர் காலப்போக்கில் அநுராதபுர மன்னர்களாக வந்திருப்பார்கள் எனக் கூறுவதில் தவறில்லை.

Page 21
20 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பண்டு தொட்டு பாளி மொழியில் நாகதீபம்), தமிழில் நாக நாடு என அழைக்கப்பட்ட வடஇலங்கையுடன் அநுராதபுர அரசிற்கிருந்த அரசியல் உறவு பற்றி பாளி இலக்கியங்களில் கி.பி 7ஆம் நூற்றாண்டு வரை எந்த செய்தியும் காணப்படவில்லை. இவற்றை கோக்கும் போது இக்காலத்தில் அநுராதபுர அரசியல் வட்டத்திற்குள் வடஇலங்கை உட்படவில்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதேவேளை தென்னிலங்கையைப் போல் இங்கும் சிற்றரசர்களின் ஆட்சி இருந்திருக்கலாம் என்பதைக் கல்வெட்டுக்கள் மட்டுமன்றி கந்தரோடையில் கிடைத்த தமிழர் பெயர் பொறித்த நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன(புஷ்பரட்ணம் 2001). இதில் உடுத்துறையில் கிடைத்த கி.பி.1ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் நாக மரபில் வந்த தமிழ் மன்னர் ஆட்சி இங்கிருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது (படம்-5).
(படம்-5) நாக என்ற பெயர் பொறித்த நாணயம்
அநுராதபுரத்தில் கி.பி.3ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் காக என்ற பெயரில் ஏழு மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் நாக என்ற பெயரில் உள்ள மன்னர்கள் மாறி மாறி ஆட்சி செய்ததை நோக்கும் போது இவர்களை நாக அரசமரபில் வந்தவர்களாகக் கருத இடமளிக்கிறது. இந்த காக மரபு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வடஇலங்கையில் நல்லுாரைத் தலைநகராகக் கொண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசு தோன்றும் வரை தொடர்ந்து நிலைத்ததற்கும் சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் பாளி இலக்கியங்கள் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த சில தமிழ் மன்னர்களை அக்கரையில் இருந்து வந்ததாகக் கூறுவது காக நாட்டு மன்னர்களாக இருக்கலாம் என ஆராய்ந்து பார்க்க இடமுண்டு. எவ்வாறாயினும் சங்ககாலத் தமிழகத்தைப் போல் சமகாலத்தில் இலங்கைத் தமிழரிடையேயும் சுதேச அரச மரபு தோன்றியதென்பதில் சந்தேகமில்லை. இதற்கு தமிழகத்துடனான தொடர்பும், செல்வாக்கும் காரணமாக இருந்திருக்கலாம்.
 

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 21
ஈழத் தமிழரும் சங்ககாலத் தமிழ்நாடும்
வரலாற்றறிஞர்களிடையே இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான
பாரம்பரியத் தொடர்பு ஆரம்ப காலங்களில் ஒரு பக்க உறவாகவே இருந்ததென்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதிலும் வரலாற்றுத் தொடக்க காலத்தில் தமிழகத்தில் இருந்து பண்பாடு இலங்கைக்குப் பரவியதே தவிர, இலங்கையில் இருந்து எதுவும் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் அண்மைக்காலத் தமிழகத் தொல்லியல் கண்டுபிடிப்புக்களை நோக்கும்போது வரலாற்றுத் தொடக்க காலத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் இரு பக்க உறவு இருந்ததுடன் அந்த உறவில் தமிழர்களே முக்கிய பங்கு வகித்தனர் என்பதையும் அடையாளம் காணமுடிகிறது.
இலங்கை கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து நீண்ட காலமாகத் தம்பபண்ணி, தாம்ரபர்ணி என்ற பெயரால் அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், அயல்நாட்டவரது குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் இப்பெயர் வடமேற்கிலங்கையில் உள்ள ஓர் இடத்தையும், காலப்போக்கில் முழு இலங்கையையும் குறித்தது. இப்பெயருக்கும் தமிழ் நாட்டில் பாண்டி நாட்டிலுள்ள தாமரபர்ணி என்ற ஆற்றுப் பெயருக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதால் ஆதியில் பாண்டி காட்டிலிருங்து மக்கள் புலம்பெயர்ந்தபோது இப்பெயர் எதிர்த் திசையில் அமைந்துள்ள வடமேற்கிலங்கையில் உள்ள ஓர் இடத்தின் பெயராக வந்திருக்க வேண்டும் எனக் காரணம் காட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆற்றின் பெயர் இன்னொரு காட்டின் அல்லது அந்த நாட்டில் உள்ள ஒர் முக்கிய இடத்தின் பெயராக வந்ததென்றால் அந்த ஆறும், அதன் பெயரும் வரலாற்றில் சிறப்பித்துப் பேசப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தென்னிந்தியாவிலுள்ள பண்டைய காலத்திற்குரிய பல ஆறுகளும், கதிகளும் தமிழ் வரலாற்று மூலங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழக வரலாற்று மூலங்களில் தாமரபரணி ஆறு பற்றி குறிப்பிடப்பட்டதற்கு எந்தச் சான்றும் இல்லை. இதனால் பண்டு தொட்டு இலங்கைக்குரியதர்க இருந்த பெயரே தமிழகம் இலங்கையுடன் கொண்ட பண்பாட்டுத் தொடர்பால் பாண்டி நாட்டிலுள்ள ஆறு இப்பெயரைப் பெற்றதெனக் கூறுவது பொருத்தமாகத் தெரிகிறது. இது பெருமளவுக்குப் பொருத்தம் என்பது தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் சுப்பராயலு அவர்களின் கருத்தாகும். 岑
இலங்கையில் பெளத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னர் சமண மதம் பரவியதற்கும், அம்மதத்தை இலங்கையில் இருந்த தமிழர்கள் பின்பற்றியிருக்கலாம் என்பதற்கும் மகாவம்சத்தில் சில குறிப்புக்கள் உள்ளன.

Page 22
22 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இலங்கையில் வடபிராமி எழுத்துக்கு முன்னர் தமிழகப் பிராமி எழுத்து பயன்பாட்டிலிருந்ததற்கு சமண மதமே காரணம் என ஆரிய அபயசிங்கா குறிப்பிடுகிறார் (Abayasinhe1975). தமிழ்நாடு திருப்பரங்குன்றத்தில் உள்ள கி.மு. 2-1 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஈழத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவன் (ஈழக் குடும்பிகன்) அங்கு வாழ்ந்த சமணத்துறவிக்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகக் கூறுகிறது. இதேபோல் முத்துப்பட்டி, அழகர்மலை ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களும் ஈழத்தவர்கள் தமிழகத்தில் வாழ்ந்த சமணத் துறவிகளுக்கு அளித்த தானங்கள் பற்றிக் sigálsip6r (Mahadevan 1966).
வரலாற்றுத் தொடக்க காலங்களில் தமிழ் காட்டிலிருந்து வந்த தமிழர்களே வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பாளி இலக்கியங்களும், வரலாற்றாசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் கிடைத்து வரும் ஆதாரங்களை நோக்கும் போது இங்கிருந்தும் தமிழ் வணிகர்கள் தமிழ் நாடு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டமை தெரிகிறது. அண்மையில் தென் தமிழ்நாட்டில் அழகன்குளம் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய இரு மட்பாண்ட ஒடுகளில் சமுத சமுதஹ என்ற பெயர் பெறப்பட்டுள்ளது. இவை இலங்கையுடனான வணிகத்தொடர்பால் இங்கு வந்ததாக தமிழ் நாட்டின் முதன்மைக் கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுகிறார் (Mahadevan 1994:4-5). srpg5 6T6šřLug ajLGLomplulo (Sanskrit-Samudra, PaliSamudda. Tamil- Samudram) Sapg gilug 60)Sé Sgólé eflpS. இப்பெயருக்குரியவன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டதால் இச்சிறப்பு பெயரைப் பெற்றிருக்கலாம். வடஇலங்கையில் வெடிகினாமலையில் உள்ள கல்வெட்டில் மகாசமுதஹ என்ற பெயர் காணப்படுகிறது. இது பெரிய சமுத்திரத்திற்கு உரியவன் என்ற பொருளில் அமைந்துள்ளது. இப்பெயர்கள் சங்க காலத்தில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவர்கள் கடலன் என்ற பெயரால் அழைக்கப்பட்டதற்குச் சமமாகும். தமிழ் நாடு மாங்குளம் கல்வெட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சார்பாகக் சமணத்துறவிக்கு குகை அமைத்துக் கொடுத்தவன் கடலன்வழுதி எனக் குறிப்பிடுகிறது (Mahadevan 1966). இலங்கையில் கி.மு.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஏழு கல்வெட்டுக்களில் சமுத என்ற பெயர் காணப்படுகிறது. சில கல்வெட்டுக்களில் பரதவ சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பதசமுத எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பத, பரத என்ற பெயர் சங்க இலக்கியத்தில் வரும் பரதவரை ஒத்த தமிழ்ப் பெயர் என்பது மலோனி, சுதர்சன் செனிவிரட்ணா போன்றவர்களின் கருத்தாகும் (Seneviratne 1985:49-1). இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் வட வடமேற்கிலங்கையில் கிடைத்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இப்பெயருக்குரியவர்கள் கல்வெட்டுக்களில் கப்பலோட்டி, கப்பல் தலைவன்,

ஈழத் தமிழரின் பழமையும் பெருமையும் 23
வணிகன், அரசதுர்துவன் ஆகிய கடல் சார் தொழிலோடு ஈடுபட்டதாகக் கூறுகின்றன. பொலநறுவையில் கிடைத்த கல்வெட்டில் இப்பெயருக்கு முன்னால் கப்பல் உருவம் வரையப்பட்டுள்ளது (Paramavithana1970mo.270). தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயத்தில் இப்பெயருடன் மீன் சின்னமும் வரையப்பட்டுள்ளது (Bopearachchi 1999).
வடஇலங்கையில் பெரியபுளியங்குளத்தில் கிடைத்த இரு கல்வெட்டுக்களில் தமிழ் வணிகனின் பெயர் விஸாகே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (Paramavithana1970.nos.356-7). அண்மையில் தமிழ் நாடு கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்த கி.மு.2-1 ஆம் நூற்றாண்டுக்குரிய கறுப்பு-சிவப்பு கிற மட்பாண்ட ஒட்டில் விஸாகி என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (Rajan 1994: 82). இப்பெயருக்கும் பெரியபுளியங்குளக் கல்வெட்டில் வரும் பெயருக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமை அக்காலப் பகுதி வர்த்தகத்தில் இரு நாட்டுத் தமிழர்களும் முக்கிய பங்கு வகித்தமை தெரிகிறது. அண்மையில் தமிழ் நாட்டில் சங்ககாலச் சேரரின் தலைநகரான கரூரில் இருந்து இலங்கைக்கேயுரிய பெண் தெய்வ உருவம் பொறித்த நீள்சதுர நாணயங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன(Nagaswamy 1980). கி.மு.3க்கும் கி.பி. 5க்கும் இடைப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இருந்த இங்ாகாணயங்கள் இலங்கைத் தமிழரால் வெளியிடப்பட்டன என்பதற்குப் பொருத்தமான சான்றுகள் உண்டு. இங்கிலையில் இங்காணயங்கள் தமிழகத்தில் கிடைத்திருப்பது தமிழ் காட்டு வர்த்தகத்தில் இலங்கைத் தமிழர் ஈடுபட்டமையை மேலும் உறுதியாக்கிறது.
தமிழ் நாட்டின் மூத்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான மயிலை சீனிவேங்கடசாமி தமிழ் நாட்டில் அழகர்மலை என்ற இடத்தில் கிடைத்த கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப் பிராமிக் கல்வெட்டொன்று கப்பலோட்டும் தொழிலில் ஈடுபட்ட ஈழநாட்டு வாவிராயன் பற்றிக் கூறுவதாகத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் (1983:35). மேலும் இக்கல்வெட்டில் வரும் அரையன், வாவிராயன் போன்ற பெயர்களைக் கொண்டு இக்கப்பலோட்டி ஈழநாட்டு மன்னனாக இருக்க வேண்டும் என்பது அவர் கருத்தாகும். இதில் வரும் பெயர்கள் தமிழாக இருப்பதால் இவன் ஈழத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் என்பதில் சந்தேகமில்லை. இக்கல்வெட்டு வாசகம் சரியாக இருக்குமானால் இலங்கைத் தமிழ் மன்னன் தமிழகம் சென்று அங்கு வாழ்ந்த சமணத் துறவிகளுக்கு தானம் அளித்தான் என்பதை உறுதியாகக் கூறமுடியும். இச்சான்றாதாரங்களின் பின்னணியில் வைத்து ஈழத்துப் பூதங்தேவனார் தமிழகம் சென்று சங்கப் பாடல்கள் பாடியதாக வரும் செய்திகளை நோக்கும் போது இரு நாட்டுத் தமிழரிடையே பண்பாட்டடிப்படையில் பண்டு தொட்டு இருந்துவந்த இருபக்க உறவின் உண்மைத் தன்மையும், சிறப்பும், நாடுகளுக்கிடையிலான தமிழரின் பாரம்பரிய வரலாற்றுத் தனித்துவமும் துலக்கம் பெறுகின்றன.

Page 23
ஈழத் தமிழரின் கலை மரபு
ஈழத்து மதங்கள்
மனிதன் தோன்றிய காலம் தொட்டு மதமும், மத கம்பிக்கைகளும் அவனது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்தன. நாடோடிகளாகக் காடு, மலைகளில் தங்கி வாழ்ந்த மனிதன் காலங் தப்பாத இயற்கையின் செயற்பாடுகளைக் கண்டு தமக்கு மேல் ஒரு சக்தியிருப்பதாக உணரத் தொடங்கினான். அதன் வெளிப்பாடே கடவுள் நம்பிக்கையாகும். நாடோடிகளாக வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்த போது ஏற்பட்ட மிகை உற்பத்தியும், ஒய்வும் அவனை நாகரிக வாழ்வுக்கு இட்டுச் சென்றன. தொடக்கத்தில் நாளாந்த உணவையும், உறைவிடத்தையும் பற்றிச் சிந்தித்த மனிதனுக்கு காலப்போக்கில் கிடைத்த ஓய்வு தன்னைச் சுற்றியிருக்கும் மக்களையும், சூழலையும் சிந்திக்கத் துாண்டியது. இதன் காரணமாக மனிதனது வாழ்க்கையின் சிந்தனையிலும், அறிவு வளர்ச்சியிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. பல மகான்களும், தத்துவஞானிகளும் தோன்றி மக்களுக்குப் புது வழிகாட்டப் புறப்பட்டனர். காலப்போக்கில் இவர்களது கம்பிக்கைகளும், சிந்தனைகளும் தத்துவங்களும், வாழ்க்கை
நெறிகளுமே இந்தியாவில் இந்து, பெளத்தம், சமணம், ஆஜீவகம்
 

ஈழத் தமிழரின் கலை மரபு 25
என்ற பெயரில் மதங்கள் தோற்றம் பெறக் காரணமாயின. இலங்கையைப் பொறுத்தவரை இங்காட்டுக்குரிய ஆதிகால மக்களும், பண்பாடும் தென்னிந்தியாவின் தென்பகுதியிலிருந்து காலத்திற்கு காலம் புலம் பெயர்ந்து வந்ததினால், கூடவே இந்திய மதங்களும், மத நம்பிக்கைகளும் இங்கு பரவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் தொடக்ககால வரலாற்றிலக்கியங்களிலும் மற்றும் அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகளிலும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.
இலங்கையில் இன்று இந்து, பெளத்தம், கிறிஸ்தவம், இஸ்லாமியம் என்ற மதங்களும், பல மதப் பிரிவுகளும், பலவகை மத நம்பிக்கைகளும் வழக்கிலுள்ளன. இவற்றுள் இந்து, பெளத்த மதங்களைத் தவிர ஏனைய மதங்கள் காலத்தால் பிற்பட்டவையாகும். அதேவேளை காலத்தால் முற்பட்ட சமணம், ஆஜீவகம் போன்ற மதங்கள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன. ஆயினும் நீண்ட கால வரலாறுடைய இந்து, பெளத்த மதங்கள் இன்றும் செல்வாக்குடைய மதங்களாக இலங்கையில் விளங்குகின்றன. அவற்றுள் சிங்கள மக்களில் பெரும்பான்மையோரது மதமாகப் பெளத்தமும், தமிழர்களில் பெரும்பான்மையோரது மதமாக இந்து மதமும் விளங்குகின்றன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டு தொட்டுச் சிங்கள மக்கள் பெளத்தர்களாகவும், தமிழர்கள் இந்துக்களாகவும் இருந்தனர் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இம்மதங்களின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் குறிப்பிட்ட ஒரு மதம் குறிபிட்ட ஒரு இனம் அல்லது மொழி பேசிய மக்களுக்கு மட்டும் உரியதாக இல்லாது பல இன, மொழி பேசிய மக்களுக்கும் உரிய மதங்களக ஆதியில் இருந்ததற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதில் தமிழர்கள் இந்து மதத்தை மட்டுமன்றி பெளத்தம், சமணம் போன்ற மதங்களையும், சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெளத்த மதத்தோடு தமது முன்னைய இந்து வழிபாட்டு மரபுகளையும் தொடர்ந்து பின்பற்றியதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் பெளத்த மதத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று மரபு பெளத்த மதத்தின் வரலாற்றை முதன்மைப்படுத்தும் நோக்கில் அம்மதம் சார்ந்த செய்திகளைப் பேணிப் பாதுகாத்ததினால் இவ்வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் எழுந்த பாளி நூல்களில் பெளத்த மத வரலாறு தெளிவாகக் கூறப்பட்ட அளவிற்கு ஏனைய மதங்களின் வரலாறு குறைந்த அளவிற்குத்தானும் கூறப்படவில்லை. மேலும் தற்காலத்தில் இலங்கையில் சிங்கள மொழி பேசும் மக்களின் மதமாகப் பெளத்தம் இருப்பதினால் இப்பாளி இலக்கியங்களில் கூறப்பட்ட பண்டைய காலப் பெளத்த மதத்தின் வரலாறும், பெளத்த சின்னங்கள் காணப்படும் இடங்களின் வரலாறும் சிங்கள மக்களின் வரலாற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. இப்பார்வை ஆதிகாலம் தொட்டு இங்கு வாழ்ந்து வரும் தமிழரின் வரலாற்றை ஒப்பீட்டளவில் தெளிவற்றதாக்கியுள்ளது.

Page 24
26 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இங்ங்லையில் இலங்கையின் பண்டையகால மதங்களையும், அதில் தமிழ் மக்களுக்குள்ள பங்கையும் சரிவரத்தெரிந்துகொள்ளப் பாளி இலக்கியங்களைக் காட்டிலும் சமகாலத் தொல்லியற் சின்னங்களையே அதிகமாக நம்பியிருக்கவேண்டியுள்ளது.
தொல்லியல் சான்றுகளின் முக்கியத்துவம்
ஈழத்தின் பண்டைய கால மதங்களையும், அம்மதங்களுக்குரிய மக்களையும் அடையாளம் காண்பதில் தொல்லியற் சான்றுகள் (Archaeological Evidences) முக்கிய பங்கு வகிக்கின்றன. அச்சான்றுகளுள் மதம் சார்ந்த கட்டிட, சிற்ப, ஒவியக் கலைகள், நாணயங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் புராதன குடியிருப்புகளுக்குரிய தொல்பொருட் சின்னங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை இலக்கியங்களைப் போல் விரிவான தகவல்களைத் தராவிட்டாலும், பெரும்பாலும் சம்பவம் நடந்த காலப்பகுதியுடன் தொடர்புடைய சான்றுகளாக இருப்பதால் அவற்றால் அறியப்படும் செய்திகள் பெருமளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தவையாகும். மேலும் காலம் கடந்து எழுதப்பட்ட இலக்கியங்களில் வரும் நூலாசிரியரின் விருப்பு வெறுப்பு, இன மத உணர்வுகள், பக்கச்சார்பு, கட்டுக்கதைகள், உயர்வுநவிற்சி, மிகைப்படுத்தல் போன்ற செய்திகள் இவற்றில் இடம்பெற அதிகம் வாய்ப்பில்லாது போய்விடுகிறது. மேலும் வரலாற்று ஆய்வில் காலம் பற்றிய கணிப்பு இன்றியமையாத ஒன்று. இலக்கியங்களைக் காட்டிலும் தொல்லியற் சின்னங்களால் அளவிடப்படும் காலம் பெருமளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை (சுப்பராயலு 199141-8). இதனால் ஈழத்துப் பாளி இலக்கியங்கள் கூறும் பண்டைய கால மதங்களின் வரலாற்றைக் காட்டிலும் தொல்லியற் சின்னங்களால் அறியப்படும் வரலாறு கால அடிப்படையில் பெருமளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.
கட்டிட, சிற்பக் கலைகள்
மதம் பற்றிய ஆய்வில் அம்மதம் தொடர்பாகப் படைக்கப்பட்ட கலைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆரம்பத்தில் இயற்கைப் பொருட்களை கடவுளுக்குரிய சின்னங்களாக வழிபட்ட மனிதன் காலம் செல்லச் செல்ல அவ்வியற்கைப் பொருட்களுடன் கடவுளுக்கென்றே சிலைகள், சிற்பங்கள், ஒவியங்கள் போன்ற நுண்கலை வடிவங்களை உருவாக்கி அவற்றை ஆலயங்களில் வைத்து வழிபட்ட போது அந்த ஆலயங்களே அம்மதத்திற்குரிய மக்களின் நாகரிக வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழ்ந்தன. மேலும் தென்னாசியாவின் பண்டையகாலப் படைப்புக்கள் எல்லாம் மேற்கத்தேயக்

ஈழத் தமிழரின் கலை மரபு 27
கலைகளைப் போல் அல்லாது சமய நோக்கோடு படைக்கப்பட்டவையாகும். இது பற்றி முல்க்ராஜ் ஆனந்த் (Mulk RajAnand1933) கூறிய கருத்தை இவ்விடத்தில் நோக்கலாம்.
"இந்தியக் கலையின் கண்ணே மாறுதலடையாத சமய நோக்கு உண்டு. மனித வாழ்க்கையின் எல்லாத் தன்மைகளுக்கும் தெய்வீகக் கருத்தே கொள்ளப்படுகிறது. கலைப் பொருட்களாகக் காட்டப்படும் உருவங்கள், மலர்கள், பறவைகள் என்ற யாவும் இயற்கைத் தோற்றத்தில் இருந்தே எடுக்கப்படுகின்றனவாயினும் அவை விண்ணுலக வாழ்வின் இயல்பினைக் காட்டும் தன்மையுள்ளனவாகவே அமைக்கப்படுகின்றன. ஒரு ஓவியத்திலாயினும், சிலையிலாயினும், மட்குடமாயினும், பொறிக்கப்படும் சித்திரத்திலாயினும் மனிதன் கடவுளை எப்பொருளினும் காண்கின்றான் என்னும் உண்மையை உருவகப்படுத்துவதேயன்றி, கடவுள் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு தெய்வீக இயல்பினை அளித்திருக்கிறான் என்னும் செய்தியையும் மனிதனுக்கு அறிவிப்பதாகின்றது. இந்தியக் கலையானது எல்லாப் பொருட்களையும் பேரின்பக் காதலால் நோக்குகின்றமையால் அதன் கண்ணே ஐரோப்பியரால் நிகழ்த்தப்படும் பிரகிருதிவாதம் என்பதற்கு இடமில்லை எனக் கொள்க".
ஈழத்துக் கலைகளின் தோற்றம், வளர்ச்சி ஆதிகாலம் தொட்டு இந்தியத் தொடர்பு கொண்டு வளர்ந்ததினால் இந்தியக் கலை பற்றிய முல்க்ராஜ் ஆனந்த்தின் கூற்று ஈழத்துக் கலைகளுக்கும் பொருந்தும்.
ஈழத்தின் மிகத் தொன்மையான மதமாக இந்து மதம் (புராண வழிபாட்டு மரபு) காணப்படுகிறது. இதனால் இம்மதத்திற்குரிய கலை வடிவங்களே ஈழத்தில் மிகப் பழமை வாய்ந்தவை எனக்கூறலாம். ஆயினும் பெரும் கலைப்படைப்புக்கள் என்ற வகையில் காலத்தால் முந்தியவை பெளத்த மதம் சார்ந்த கட்டிட, சிற்பக் கலைகளாகும். இதற்குரிய ஆரம்ப காலக் கலைமரபுகள் இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் இலங்கைக்கேயுரிய தனித்துவமான அம்சங்கள் பல புதிதாகச் சேர்க்கப்பட்டு அவை இலங்கைக்கேயுரிய கலைமரபாக பரிணமித்துள்ளது. இதற்கு சிலையகம் போன்ற கட்டிடங்களும், சந்திரவட்டக்கல் போன்ற சிற்பக் கலைகளும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றில் ஈழத்துச் சிற்பக்கலையின் உன்னத கலைப் படைப்பாகக் கூறப்படும் சந்திரவட்டக்கல்லின் தோற்றத்தைப் பேராசிரியர் சேனக பண்டாரநாயக்கா ஈழத்தில் பண்டைய காலத்தில் வாழ்ந்த குடியிருப்பின் வாசல்பகுதில் அமைந்த படிக்கற்களோடு தொடர்புபடுத்திக் கூறுகிறார். (Bandaranayake 1974).

Page 25
28 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
ஈழத்துப் பெளத்த கலைமரபில் காணப்படும் இந்தியக் கலைமரபின் செல்வாக்கு, வேறுபாடு, தனித்துவம் போன்ற காரணங்களால் அதன் வரலாற்றை ஆராய்ந்தவர்களிடையே வேறுபட்ட பல கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு சில ஆய்வாளர்கள் இலங்கையிலே வரலாற்றுக் காலத்தில் வளர்ந்த கட்டிட சிற்பக்கலை மரபானது முழுமையாக அன்னிய அடித்தளத்திலிருந்து வளர்ந்த மரபு என்றும், வேறு சிலர் இலங்கையின் பெளத்த கலையானது எந்தவித தனித்துவமான அபிவிருத்தியும் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாக்கப்பட்ட கலை எனவும் கூறுகின்றனர் (Wickramasinghe 1958; 7). ஆயினும் இலங்கையின் இரு பெரும் அறிஞர்களான கலாயோகி ஆனந்த குமாரசாமி, பேராசிரியர் பரணவிதான போன்றோர் இந்தியக் கட்டிட சிற்பக்கலை மரபானது இங்கு புகுத்தப்பட்ட பின் அதிலிருந்து உருவான சுதேச கலை மரபு இங்குள்ளதாகவும் வாதிட்டுள்ளனர் (Paramavithana 1957:8-9). அண்மையில் புராதன சிங்களக் கலைமரபு பற்றி ஆராய்ந்த நந்தா விஜயசேகர இந்தியக் கலைமரபு இங்கு புகுத்தப்பட முன்னரே சுதேசக் கலைமரபு இங்கிருந்ததெனவும், அது திடீர்தோற்றமாக இராது பாரிய அழகிய கலைப்படைப்புக்களைத் தோற்றுவிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது எனவும் கூறுகிறார். இவற்றில் இந்தியக் கலைமரபு கலந்தபோது அவை புறக்கணிக்கப்படாது இலங்கைக் கலைமரபில் கலந்து கொண்டன (Wijesekara1962:126-9). இவை இருபக்க உறவாக இருப்பினும் இந்தியக் கலையின் தாக்கமே கூடுதலாகக் காணப்பட்டதென்பது இவர் கருத்தாகும். மாட்டின் விக்கிரமசிங்க ஒரு நாட்டின் பரவல் என்பதும், ஒன்றன் பிரதி என்பதும் வெவ்வேறானவை. இலங்கைக் கலை இந்தியாவிலிருந்து பல அம்சங்களைப் பெற்றாலும் காலப்போக்கில் அதன் அடிப்படையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கைக்கேயுரிய தனித்துவத்துடன் இது வளர்ந்ததெனக் கூறுகிறார் (Wickramasinghe 1958; 10).
இலங்கைப் பெளத்தக் கலைமரபின் தோற்றத்தைப் பெருங்கற்கால ஈமச்சின்ன அமைப்புக்களோடு தொடர்புபடுத்தும் சேனக பண்டாரனாயக்கா உள்நாட்டுக் கட்டிடக் கலை மரபே சிங்களக் கட்டிடக் கலை மரபிற்கு ஊற்றாக அமைந்ததென வாதிடுகிறார். இவர் இந்தியக் கலை மரபு இலங்கைக் கலைமரபு வளர உதவியதென்பதை ஏற்றாலும், அதனால் இலங்கைக் கலைமரபு தனது உங்து சக்தியை இழக்காது, வெளியிலிருங்து கொண்டுவரப்பட்ட சில பண்புகளை அடக்கி, வேறுசில பண்புகளை தனக்குத் தேவையான முறையில் மாற்றி, இன்னும் சில பண்புகளை ஏற்காது வளர்ந்ததென்றார் (Bandaranayake 1974; 11). மேற்கூறப்பட்ட பெளத்த
என்ற அடிப்படையில் நோக்கப்பட்டாலும் அவற்றில் ஈழத் தமிழர் கலைமரபும் கலந்துள்ளதென்பதை யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

ாழத் தமிழரின் கலை மரபு 29
ஈழத்தில் இன்று பெளத்த மதம் சார்ந்த புராதன கலைமரபுக்குரிய சின்னங்கள் தமிழர் பிரதேசங்களில் கண்டெடுக்கப்படும்போது அதையொரு மதத்தின் பண்பாட்டுச் சின்னமாகப் பார்க்கப்படாது, முன்பொருகாலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்து சென்றதன் வரலாற்று எச்சமாக நோக்கப்படுகிறது. இதற்கு தற்காலத்தில் பெளத்த மதம் சிங்களவருக்குரிய மதமாக இருப்பதைப் போல் பண்டைய காலத்திலும் இருந்ததென்ற நம்பிக்கையே காரணமாகும் (Kannangara1984). ஆனால் ஈழத்தில் இவற்றின் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்த்தால் இம்மதத்தை இனம், மதம், மொழி கடந்த நிலையில் பலரும் பின்பற்றியதற்கும், ஆதரித்ததற்கும் பல சான்றுகள் காணப்படுகின்றன. இதில் ஒரு பகுதி தமிழர்கள், தமிழ் மன்னர்கள் பெளத்த மதத்தவராக அம்மதத்தை ஆதரித்தவர்களாக வாழ்ந்துள்ளமை தெரியவருகிறது. பாளி இலக்கியங்கள் எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்கள் பெளத்த வழிபாட்டிடங்களைத் திருத்தி அமைத்தது பற்றியும், சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழ் வர்த்தகர்கள் பெளத்த துறவிகளுக்கு இருப்பிடங்கள் அமைத்துக் கொடுத்தது பற்றியும் MgássörgpSOT (Mahavamsa XXI, Paranavithana 1970:nos 356-7) (Sg5 Lf6 இறுதி அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது). இதில் சிறப்பாகச் சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய அம்சம் புத்தர், போதிசத்துவர், பெளத்த ஜாதகக் கதைகள் என்பவற்றை சிலைகளாகவும், சிற்பங்களாகவும் வடிவமைக்கக் காரணமாக இருந்த மஹாயான பெளத்த மதம் ஈழத்தில் தோன்றிவளர தமிழ் நாடும், தமிழ்ப் பெளத்தருமே முக்கிய காரணமாக இருந்துள்ளனர் என்பதைப் பாளி இலக்கியங்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றன. கலை வரலாற்றாசிரியர்கள் பலரும் ஈழத்திற்குரிய பெளத்த கலைமரபு தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் அது சிங்கள மக்களுக்கேயுரிய தனித்துவமான கலைமரபாக வளர்ந்ததென்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதே போல் தமிழர்களில் ஒரு பிரிவினர் பெளத்தர்களாக இருந்து அம்மதம், அதிலும் சிறப்பாக பெளத்த கலைமரபு வளர்ச்சிபெறக் காரணமான மஹாயான பெளத்த மதத்தை வளர்க்க காரணமாக இருந்துள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றனர். அப்படியாயின் எப்படி சிங்கள மக்களிடையே தோன்றிவளர்ந்த பெளத்த கலைமரபு ஈழத் தமிழரிடையே தோன்றாமல் இருந்திருக்க முடியும்? இதன் தாக்கம் எப்படி ஈழத்திற்கு உள்ளேயே பண்டு தொட்டு வளர்ந்த இந்துக் கலைமரபில் செல்வாக்குச் செலுத்தாமல் இருந்திருக்க முடியும்?

Page 26
3G தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இந்துக் கலை மரபு
ஈழத்து இந்துக் கலைமரபு பற்றி ஆராய்ந்த பலரும் அவற்றைத் தமிழகப் பின்னணியில் நோக்கியுள்ளனர். அதில் கூட அவற்றை ஈழத்துத் தமிழருக்குரிய கலையாகப் பார்க்காது தமிழகத்தில் இருந்து வந்து போன தமிழருக்குரிய கலையாகப் பார்க்கப்பட்டுள்ளது. இது பற்றிப் பேராசிரியர் இந்திரபாலா கூறிய கருத்து நோக்கத்தக்கது (1970:2).
"இலங்கை வரலாற்றின் ஆரம்ப கட்டத்திலே தென்னிந்தியத் திராவிடர் இந்நாட்டுடன் கொண்ட தொடர்புகளைப் பற்றி நமக்கு கிடைத்துள்ள மூலாதாரங்களை நோக்கினால் அவர்கள் இங்கு பெரும்பாலும் வர்த்தகத்தின் பொருட்டு வந்திருந்தமையினை அறியலாம். இப்படி வந்த திராவிடருட் பலர் இலங்கையின் துறைமுகப் பகுதிகளிலும், முக்கிய நகரங்களிலும் குடியேறி அவ்விடங்களில் தமது பண்பாட்டை மெதுவாகப் பரப்பத் தொடங்கியிருக்க வேண்டும். அவர்கள் கட்டிய கட்டிடங்களும், செதுக்கிய சிற்பங்களும் இப்படியான இடங்களில்தான் காணப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய ஊகம் சரியானதென்பதை நிரூபிக்கும் வகையில் இலங்கையில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழைய திராவிடக் கட்டிடங்கள், சிற்ப வேலைப்பாடுகள் ஆகியவற்றின் அழிபாடுகள் பெரும்பாலும் பிரதான நகரங்களிலும், துறைமுகப்பட்டினங்களிலுமே கிடைத்துள்ளன. அத்துடன் இவை பெருமளவிற்குத் திராவிட வர்த்தகர்களாலே அமைக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன".
இவ்வாறான ஒரு கருத்து முன்வைக்கப்பட்ட காலத்தில் தொல்லியற் சான்றுகள் அதிகம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இலங்கை வரலாற்றில் தமிழருக்குரிய தொன்மையும், தொடர்பும் பாளி இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கப்பட்டதே காரணம் என்பதை இலகுவாக உணரமுடிகிறது. ஆனால் நம்பகத்தன்மை வாய்ந்த அண்மைக்காலத் தொல்லியற் சான்றுகளின் பின்னணியில் நோக்கும்போது இக்கருத்து பொருத்தப்பாடாக அமையவில்லை. இலங்கையில் மொழியடிப்படையில் சிங்கள மக்களுக்கில்லாத தொன்மையும், பெருமையும் தமிழ் மக்களுக்கு உண்டு என்பதற்கு அவர்களுக்குரிய தொன்மையான எழுத்தும், மொழியும் பெருங்கற்கால மட்பாண்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகும் (புஷ்பரட்ணம் 1993:43, Mahadeva 1994). இது ஈழத் தமிழர் வரலாற்றின் பல பரிமாணங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து ஆராயப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. இது ஈழத் தமிழர் கலைமரபுக்கும் பொருந்தும்.

*ழத் தமிழரின் கலை மரபு 3.
பெருங்கற்காலப் பண்பாடும் இந்துக் கலை மரபும்
இலங்கை இந்துக்கலை மரபின் தோற்றம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்திப்பார்க்க இடமுண்டு. இப்பண்பாட்டில் இறந்தோரை அடக்கம் செய்ய பெரிய கற்கள் கொண்டு ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இது பெருங்கற்காலப் பண்பாடு என்ற பெயரைப் பெற்றது. இவ்விமச் சின்னங்களில் இறந்த மனிதர்களது உடல்களோடு அவர்கள் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து அடக்கம் செய்ததன் மூலம் இப்பண்பாட்டு மக்களிடம் இருந்த கடவுள் வழிபாடும், மறுபிறப்புப் பற்றிய எண்ணக் கருத்தும் தெரிய வருகின்றன. இவற்றின் அடிப்படையில் இந்து ஆலயங்களும், ஆலய வழிபாடும் இப்பண்பாட்டுடன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதில் பெருங்கற்கால ஈமச்சின்னத்திற்கும் அப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற குளத்திற்கும் இடையிலான தொடர்பு இந்து மதத்தில் ஆலயத்திற்கும் கேணிக்கும் இடையிலான தொடர்போடு தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு(கோபாலகிருஷ்ண ஐயர் 1981).
பெருங்கற்காலப் பண்பாட்டில் அம்மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களை விட அவர்கள் இறந்தவர்களுக்காக கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஈமச் சின்னங்களே இன்றும் அழியாத நிலையில் காணப்படுகின்றன. இவ் வீமச் சின்னங்கள் அவற்றின் கட்டிட அமைப்புக்கு ஏற்ப கல்வட்டம் (Stone Circle), 56òGADGOgo (Dolmen and Cist), 5GD35Gò (Hero Stone), göğšgša56ö (Menhir), தொப்பிக்கல், குடைக்கல், குடைவரைக் குகை எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன. இவை இலங்கை தென்னிந்தியக் கட்டிடக் கலை மரபின் தொன்மையான சான்றுகள் எனக் கூறலாம். இவ்விமச் சின்னங்களின் சிலவகைக் கட்டிட அமைப்பையே சங்க இலக்கியத்தில் வரும் நடுகல், நெடுநிலை நடுகல், கல்பதுக்கை போன்ற குறிப்புக்கள் உணர்த்துகின்றன (புறநானூறு-3, அகங்ானூறு-157, தொல்காப்பியம் - 63)). தமிழகத்தைப் போல் இலங்கையிலும் இப்பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய சில மட்பாண்டங்களில் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ்ப் பெயர்களும் பெறப்பட்டுள்ளன (புஷ்பரட்ணம்1993:43). இவற்றிலிருந்து இப்பண்பாட்டு வழிவந்த மக்களில் ஒரு பிரிவினர் தமிழ்மொழி பேசினர் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதனால் இலங்கைத் தமிழரின் தொடக்க காலக் கட்டிடக் கலை மரபாக இப்பெருங்கற்கால ஈமச்சின்னங்களைக் குறிப்பிடலாம்.
இப்பண்பாடு தென்னிங் தியாவின் தென்பகுதியில் இருங்து இலங்கைக்குப் பரவியிருந்தாலும் இவ்வீமச்சின்னங்களின் அமைப்பு நாட்டின் பெளதிகத் தன்மைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் வேறுபட்டதாக உள்ளது. ஈமச்சின்னங்கள் அமைப்பதற்கு ஏற்ற கற்கள் அதிகமில்லாத வடஇலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தாழியும், புதை குழியுமே முக்கிய

Page 27
32 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
ஈமச்சின்னங்களாக இருந்துள்ளன. ஆனால் வவுனியா மாவட்டத்தில் கல்வட்டங்கள், கற்பதுக்கைகள் முக்கிய ஈமச்சின்னங்களாக இருந்துள்ளன (Sitrampalam 1980, Seneviratne 1984:237-307). (3)|LIsonLmůIsöt opásálu அம்சங்களில் அப்பண்பாட்டு மட்பாண்டங்களில் வரும் குறியீடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் இரு தலை, முத்தலைச் சூலங்கள், சுவஸ்திகா போன்ற குறியீடுகள் என்பன அக்கால மக்களின் சமய நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.
இலங்கைப் பெருங்கற்கால மட்பாண்டக் குறியீடுகள் பெரும்பாலும்
உரிய தனித்துவமான குறியீடுகளும் அப்பண்பாட்டில் தோன்றின. இதற்குப் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்குறியீடு இலங்கையைத் தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. இது இலங்கைக்குரிய இங்துக் கலைமரபில் தனித்துவமான அம்சங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுடனேயே தோன்றியதை எடுத்துக் காட்டுகிறது எனலாம் (படம்-1. இதற்குரிய படம் முதலாம் இயலில். பட இலக்கம் 2). இத்தனித்துவத்தை இப்பண்பாட்டுக்குரிய சுடுமண் சிற்பங்களிலும் காணமுடிகிறது.
இலங்கையில் புத்தள மாவட்டத்தில் உள்ள தல்கங்லேன, தப்போவ, மரதன் கடுவ, சிகிரியாவிற்கு அண்மையில் உள்ள இலுக்குவேவ, கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம், வவுனியாவிலுள்ள பல்சல்லேனே, மாத்தளைக்கு அருகில் உள்ள சுட்டிக்குளம், அநுராதபுரம், பொலநறுவை, பூநகரி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டில் சுடு மண்ணால் செய்யப்பட்ட ஆண், பெண் உருவங்கள், லிங்க வடிவங்கள், சிலைகள், மிருக உருவங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Deaniyagala 1953; 133-8, புஷ்பரட்ணம் 1993). இவற்றில் பல அப்பண்பாட்டு மக்களின் வழிபாட்டுச் சின்னங்களாகக் கூறப்படுகின்றன (படம்-2).
p V
(படம்-2) பூநகரியில் கிடைத்த சுடுமண் உருவங்கள்
 
 

ஈழத் தமிழரின் கலை மரபு 33
சிரான் தெரணியகல என்பவர் இப்பண்பாட்டில் கிடைத்த பெண் உருவங்களை இலங்கையின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொன்மையான சான்றுகள் எனக் குறிப்பிடுகிறார் (Deraniyagala 1953:133-8). இவை போன்ற சுடுமண் சிற்பங்கள் தமிழகத்தில் உறையூர், காவேரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு, கொற்கை போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன (குருமூர்த்தி 1974:37-40, Rajan 1994). இவை சங்க இலக்கியத்தில் வரும் சுருமண் பாவை, வண்டற்பாவை, மண்ணிடு என வரும் சான்றுகளை உறுதிப்படுத்துபவையாக உள்ளன. இவ்வாறான சுடுமண் சிற்பங்கள் சமகாலத்தில் இலங்கையிலும் வழக்கிலிருந்ததை மகாவம்சத்தில் வரும் சில செய்திகள் 2 gśćUGBögślsöp60T (Mahavamsa XXVI:9-13).
பெருங்கற்காலப் பண்பாட்டில் இரும்பு, செம்பு போன்ற உலோகங்களால் ஆக்கப்பட்ட பலவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில சமய வழிபாட்டுச் சின்னங்களாக உள்ளன. தமிழ் காட்டில் ஆதிச்ச கல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட வேலும், மயிலும் இப்பண்பாட்டுடன் முருக வழிபாடு தோன்றியதற்குச் சான்றாகக் காட்டப்படுகிறது. இவற்றுள் இரும்பினாலான வேல் சின்னம் இலங்கையில் பொம்பரிப்பு, அநுராதபுரம், பின்வேவ, கந்தரோடை, பூநகரி ஆகிய இடங்களில் உள்ள பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (சிற்றம்பலம் 1995:182, புஷ்பரட்ணம் 1991:38). இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய தென்னிலங்கை, வடகிழக்கிலங்கை மற்றும் நாட்டின் தென்கரையோரப் பகுதிகளில் இரும்புப் படிமங்கள் இருந்ததற்கும் அவற்றைப் பயன்படுத்தி அக்கால மக்கள் பலவகைப் பொருட்களை வடிவமைத்ததற்கும் சான்றுகள் காணப்படுகின்றன (Seneviratne 1985:129-179). இதனால் சமயச் சின்னங்களை இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களே வடிவமைத்திருப்பர் எனக் கருதலாம்.
ஆனால் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி விரிவாக ஆராய்ந்த சிலர் இப்பண்பாட்டுக்குரிய சுடுமண் சிற்பங்கள், உலோகத்தாலான சமயச் சின்னங்கள், மட்பாண்பங்கள், அவற்றில் வரும் குறியீடுகள் என்பவற்றைத்
வடிவங்கள் எல்லாம் இங்கு கொண்டு வரப்பட்டவையாகக் காரணம் காட்டுகின்றனர். இப்பண்பாட்டுக்குரிய மக்கள் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த போது தொடக்கத்தில் இக்கலை வடிவங்கள் சிலவற்றை இங்கு கொண்டுவந்திருக்கலாம் அல்லது அவற்றை வடிவமைக்கும் அனுபவத்தை இங்கும் புகுத்தியிருக்கலாம். அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பண்பாட்டு உறவால் இவற்றை வடிவமைக்கும் கலைமரபு பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கலாம். இதனால் ஈழத்துப் பெருங்கற்காலப் பண்பாட்டில் கிடைத்த அனைத்து கலைவடிவங்களும்

Page 28
34 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை எனக் கூறுவது பொருத்தமாக இல்லை. ஏனெனில் இக்கலைவடிவங்களை வடிவமைத்த மக்கள் சுதேசிகளாக இருந்தால் என்ன, இந்னொரு நாட்டிலிருந்து குடியேறியவர்களாக இருந்தால் என்ன அவர்கள் வாழ்ந்த இடமும், அதற்கான மூலப்பொருட்களும், கலைவடிவங்களுக்குரிய பெளதீகச் சூழலும் ஈழமாக இருப்பதால் அவர்களது கலை வடிவங்களைத் தீர்மானிப்பதில் அவை முக்கிய பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் ஈழத் தமிழரின் இந்துக் கலை மரபின் தனித்துவம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றியதெனக் கூறமுடியும்.
பெருங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து தமிழகத்தில் கற்களைக் கொண்டு கட்டிடங்கள், சிற்பங்கள், ஆலயங்கள் அமைக்கும் மரபு கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பின்னரே தோற்றம் பெறுகிறது. இதற்கு முற்பட்ட காலத்தில் கற்களால் ஆலயம் அமைக்கப்படாததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று பெருங்கற்காலப் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களுக்கு கற்கள் பயன்படுத்தப்பட்டதால் அவை போன்ற கற்களைப் பயன்படுத்தி இறைவனுக்கு ஆலயம் அமைக்க விரும்பவில்லை எனக் காரணம் காட்டப்படுகிறது. ஆயினும் இக்காலத்தில் ஆலயங்கள், தெய்வச்சிலைகள் இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் விரவிக் காணப்படுகின்றன (இராசமாணிக்கனார் 1955). இவை அழியக்கூடிய மண், மரம், சுதை போன்ற பொருட்களால் ஆக்கப்பட்டதால் அவை தொடர்பான சான்றுகள் தற்போது கிடைக்கவில்லை. இதையொத்த மரபு இலங்கை இந்துக்கலை மரபிலும் காணப்பட்டதாகக் கூறப்பட்டு வந்தாலும், அதிஷ்டவசமாக தமிழ் காட்டுத் தமிழருக்கு இல்லாத சிறப்பு இங்கு வாழ்ந்த தமிழருக்கு இருப்பதை அண்மைக்கால ஆய்வுகளில் இருந்து அறியமுடிகிறது. அவற்றில் ஒன்று அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குரிய கட்டிடத்தின் பாகமாகும். இக்கட்டிடத்தின் இருக்கையில் எழுதப்பட்ட சாசனத்தில் தமிழ் நாட்டு வணிகரும், ஈழத்துப் பரதவரும் ஒன்றுகூடி வணிகம் சம்பந்தமான ஆலோசனை கடத்ததுவதற்கு மண்டபம் ஒன்று அமைத்த செய்தி காணப்படுகிறது. அதில் வணிக அந்தஸ்தவர்களுக்குரிய இருக்கைகள் அவரவர் அந்தஸ்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு அதில் அவர்களுக்குரிய பெயர்கள் எழுதப்பட்டுள்ளன (Paranavithana1970:no.94). தற்போது இக்கட்டிடத்தின் அத்திவாரத்தையும், தூண்கள் அமைப்பதற்காகப் போடப்பட்ட துவாரங்களையும் தவிரப் பிற கட்டிட எச்சங்கள் காணப்படாவிட்டாலும் இருக்கின்ற சான்றைக் கொண்டு கி.மு. 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இலங்கைத் தமிழரிடையே கற்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை அமைக்கும் மரபு தோன்றியதை இச்சான்று உறுதிப்படுத்துகிறது. இதற்கு மேலும் ஒரு சான்றாக இவ்வட்டாரத்தில்

ஈழத் தமிழரின் கலை மரபு 35
கண்டுபிடிக்கப்பட்ட சிவ வழிபாட்டிற்குரிய ஆலயத்தின் எச்சங்களை எடுத்துக்காட்டலாம்.
அண்மையில் தென்னாசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் பற்றி ஆராய்ந்த டகி என்பவர் அதன் தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக இலங்கையில் உள்ள அநுராதபுரத்தைக் குறிப்பிடுகிறார். அதற்குச் சான்றாக அங்குள்ள புராதன பெளத்த, இந்து கட்டிட சிற்ப அழிபாடுகளிடையே கண்டுபிடித்த இரு மகர கோமுகிகளையும் (makarapramala), சிம்ம கோமுகியையும் குறிப்பிடுகிறார். இதில் முதலாவது மகர கோமுகி அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு தற்போது கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது (படம்-3).
(படம்-3) அநுராதபுரத்தில் கிடைத்த மகர கோமுகி
இக்கோமுகி அநுராதபுரத்தில் எந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டதென்பது குறிப்பிடப்படாவிட்டாலும் இதன் காலம் கி.பி 8ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதே காலத்திற்குரிய இன்னொரு கோமுகி பல்லவரின் ஒப்பற்ற கலைப்படைப்புக்களுக்குரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள இசுறுமுனியா விகாரையின் அடித்தளத்திற்கு மேலேயுள்ள ஜகதி கட்டிடப் பிரிவுடன் இணைந்து காணப்படுகிறது (படம்4). இவற்றின் வடிவமைப்பு, கலை மரபு பற்றி டகி குறிப்பிடுகையில் இவை சமகால இந்தியக் கலைமரபில் இருந்து மாறுபட்டிருப்பதையும், கால அடிப்படையில் தென்கிழக்காசியாவில் உள்ள கோமுகிகளில் இருந்து வேறுபட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் (Dhaky 1982:130-4).

Page 29
36 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-4) இசுறுமுனியாவில் உள்ள மகர கோமுகி
ஏனைய இரு சிம்ம கோமுகிகளும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவையிரண்டும் அநுராதபுரத்தில் உள்ள தூபராம விகாரையின் ஜகதி கட்டிடப் பகுதியில் காணப்படுகின்றன. கி.பி.2-3ஆம் நூற்றாண்டுக்குரிய இக்கோமுகிகளின் கலை மரபு பெளத்த விகாரைகளில் வரும் சிங்கத்தின் தோற்ற அமைப்பைப் பெரிதும் ஒத்தவையாக உள்ளன (படம்-5).
(படம்.-5) அநுராதபுரத்தில் கிடைத்த சிம்ம கோமுகிகள்
கோமுகிகள் பெரும்பர்லும் இந்து மதத்துடன் தொடர்புடைய ஒரு கட்டிடப்பகுதியாகும். இவை பெரும்பாலும் ஆலயத்தில் உள்ள கர்ப்பக்கிருகத்துடன் இணைந்து காணப்படும். மேற்குறிப்பிட்ட கோமுகிகள் கண்டெடுக்கப்பட்ட புராதன அநுராதபுரத்தில் பெளத்தமதம் செல்வாக்குடன் இருந்தபோதும், அங்கு இந்து மதமும் வளர்ச்சியுற்றிருந்தது. ஈழத்திற்குப் பெளத்த மதம் அறிமுகமாக முன்னரே கி.மு. 4ஆம் நூற்றாண்டில்
 
 

ஈழத் தமிழரின் கலை மரபு 37
அநுராதபுரத்தில் இருந்த சிவிகசாலா, சொத்திசாலா என்னும் இரு சிவ ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகிறது. தமிழருடனும், இந்துக் கடவுளருடனும் தொடர்பான பெயர்களை உடைய அதிக எண்ணிக்கையிலான புராதன கல்வெட்டுக்கள் கண்டெடுத்த இபங்களில் அநுராதபுரம் அதிக முக்கியத்துவம் உடையது (Paramavithana 1970), இங்கு ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களில் சிலர் பெளத்த மதத்தை ஆதரித்த போதிலும் அவர்கள் தமது பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை எனப் பாளி இலக்கியங்கள் கூறுவது அவர்கள் ஆட்சியில் இந்து மதமும் வளர்ந்ததைக் காட்டுகிறது. மேலும் இக்கோமுகிகள் காணப்படும் இடங்களில் ஒன்றான இசுறுமுனியா பண்டைய காலத்தில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த இருப்பிடங்களில் ஒன்றாக இருக்கவேண்டும். மகாவம்சம் என்ற பாளி நூல் எல்லாளன் துட்டகாமினி போராட்டத்தில் எல்லாளனுக்காகப் போரிட்ட தமிழர்களை வெற்றி கொண்ட இடங்களில் ஒன்றாக இசுறுமுனியாவைக் குறிப்பிடுகிறது (Mahavamsa XXV:11). கி.பி 2ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்து இ(ஈ?)ளங்ாகன் என்ற பெயருடைய மன்னனின் பட்டத்தரசியான தமிழாதேவி (தமிழ் அரசி) தன் கணவன் இசுறுமுனியாவில் உள்ள விகாரைக்குச் செய்த பணியைத் தொடர்ந்தும் செய்தாள் என இந்நூல் மேலும் கூறுகிறது (MahavamsaXXXV:45). இங்குள்ள பாறையில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க பல புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களுள் பெரும்பாலானவை இங்துக் கடவுளருக்கு உரியதென அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று ஐயனாருக்கும், ஏனைய இரண்டு சிற்பங்கள் சிவன் பார்வதிக்கும் உரியதாகும். வீரதுரியா என்ற வரலாற்றாய்வாளர் முன்பு இந்துத் தலமாக இருந்த இசுறுமுனியா என்ற இடமே பின்னர் பெளத்த தலமாக மாறியிருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் (Weerasuriya1953:41). ஈழத்தில் அதிக எண்ணிக்கையுடைய காலத்தால் முந்திய இந்து ஆலயங்களின் கட்டிட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் அநுராதபுரத்திற்குத் தனி முக்கியத்துவம் உண்டு(Bel1892). இவற்றின் அடிப்படையில் இவ்வட்டாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கோமுகிகளை இங்கிருந்த புராதன ஆலயங்களின் எச்சங்களாகக் கருதலாம். இவை தமிழகத்திற்கு முன்பாகவே ஈழத்தில் கற்களைப் பயன்படுத்தி இந்துக் கலைகளை ஆக்கும் மரபு தோன்றியதற்குச் சான்றாகும். பாளி இலக்கியங்களில் கி.பி.3-4ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே அநுராதபுரத்திற்கு வெளியே மாதோட்டம் (வடஇலங்கை), ஏரகாவில் (ஏறாவூர்), கோகர்ணம் (திருகோணமலை) பிராமண கலந்தனின் ஊர் (கிழக்கிலங்கையில்) ஆகிய இடங்களில் வழிபடப்பட்ட இந்து ஆலயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த ஆலயங்களை இடித்தே மாகாசேனன் காலத்தில் பெளத்த ஆலயங்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது

Page 30
38 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(MahavamsaXXXVI 14). இவற்றை நோக்கும் போது இவ்வாலயங்களும் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதாகக் கருத இடமுண்டு.
பெளத்த கலையின் செல்வாக்கு
ஈழத்து இந்து, பெளத்த சிற்பங்களை ஆராய்ந்தால் அவற்றின் கலைமரபில் ஒருவித ஒற்றுமையும், ஒன்றன் மீது இன்னொன்றின் செல்வாக்கும் பண்டு தொட்டு இருந்து வந்ததைக் காணமுடிகிறது. இதற்கு பௌத்த மதத்தை தழுவிய மக்களில் பெரும்பான்மையோர் முன்பு இந்துக்களாக இருந்தமையும், இந்துக்களாக இருந்த தமிழர்களில் குறிப்பிட்ட தொகையினர் பெளத்தர்களாகவும், பெளத்தத்தை ஆதரித்தவர்களாகவும் இருந்தமையும் முக்கிய காரணங்களாக இருக்கலாம். இவ்வொற்றுமை ஈழத்துக் கலைமரபில் மட்டுமன்றி பல மதங்களை உடைய நாடுகளில் தோன்றி வளர்ந்த கலை மரபுகளில் எல்லாம் காணக்கூடியு பொதுவான பண்பாகும். இந்த இடத்தில் ஈழத்து பெளத்த-இந்துக் கலைமரபு பற்றிப் பேராசிரியர் பிரேமதிலகா கூறிய கருத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும் (பிரேமதிலகா 1968).
"ஆதிகால விக்கிரகங்கள் பலவற்றை ஆராய்ந்தால் இந்துத் தெய்வங்களாகிய சிவன், சூரியன், விஷ்ணு, பிரம்மா ஆகிய தெய்வங்கள் மஹாயான போதிசத்துவருடன் இணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஒவ்வொரு போதிசத்துவரையும் அடையாளம் காண்பதற்கு அவரவர் முடியிலேயே காணப்படும் வெவ்வேறு தியானி புத்தருடைய உருவங்களும் அந்தந்த போதிசத்துவர் தம்கையிலேந்தியுள்ள சின்னங்களும் உதவி புரிகின்றன. சிவனும் லோகேஸ்வரனும் (அவலோகிதேஸ்வரரும்) இணைக்கப்படுமிடத்து விக்கிரக சிற்பி செய்வது என்னவெனில் சிவனுடைய விக்கிரகத்தைச் செதுக்கி அவ்விக்கிரகத்தின் சபாமகுடத்தில் தியானி புத்தராகிய அமித்தாருடைய உருவத்தைச் செதுக்குவதனால் முழு விக்கிரகத்தையும் அவலோகிதேஸ்வரர் விக்கிரகமாக மாற்றுவதே. இந்து தெய்வமாகிய சூரியன் பொதுவாக தன் இரு கரங்களிலும் பூரணமாக மலர்ந்த தாமரை மலர்களை ஏந்தியவனாக விக்கிரகங்களில் காணப்படுகின்றான். துரியனுடைய கரங்களில் தாமரை மலர்கள் காணப்பட்டது போலவே லோகேஸ்வரர் விக்கிரகத்தில் இரு கரங்களிலும் தாமரை காணப்படுகின்றன. ஆனால் அதில் காணப்படும் வேறுபாடு என்னவெனில் சூரியனுடைய முடியில் அமித்தாப புத்தருடைய சிறு உருவம் ஒன்று இருக்கின்றமையே.

ஈழத் தமிழரின் கலை மரபு 39
இதைப்போலவே மஹாயான சிற்பிகள் விஷ்ணு விக்கிரகத்தில் காணப்படும் சின்னங்களாகிய சங்கு, சக்கரம், கதாயுதம், பத்மபீடம் ஆகியவை செதுக்கப்படுகின்றன. ஆனால் அவ்விக்கிரகத்திற்கு லோகேஸ்வரருடைய பண்பினைக் கொடுப்பதற்காக அதன் முடியில் அமிதாப புத்தருடைய சிறு உருவம் ஒன்றைச் செதுக்கி விடுகின்றனர். இவ்வாறு காட்டப்பட்டவை இந்து-பெளத்த இணைப்புக்களில் இந்து மதத்திற்கே சிறப்பான அம்சங்கள் மேலோங்கி நிற்கின்றன".
இக்கூற்றினைப் பின்னணியாகக் கொண்டு ஈழத்து இந்துக் கலைகளில் ஏற்பட்ட வளர்ச்சியை நோக்கும் போது தமிழகத்தில் ஏற்படாத இந்த வளர்ச்சி இலங்கையில் ஏற்பட்டமைக்கு பெளத்த கலையின் செல்வாக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. தமிழகத்திற்குப் பெளத்த மதம் பரவிய அதே காலகட்டத்தில் தான் இலங்கைக்கும் அம்மதம் பரவியது. தமிழகத்தில் பத்தி இயக்கம் தோன்ற முன்னர் பெளத்த மதம் செல்வாக்குடன் இருந்ததை சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் எடுத்தியம்புகின்றன. அத்துடன் அங்குள்ள காவேரிபூம்பட்டினம், காஞ்சி, புத்தமங்கலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்த பெளத்த மையங்களுடன் கொண்ட தொடர்புதான் இலங்கையில் மஹாயான பெளத்த மதம் வளர முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது (வேங்கடசாமி 1950:27-8). அவற்றுள் பெளத்த கல்வியின் முக்கிய மையமான காவேரிபூம்பட்டனத்தை இலங்கைப் பாளி நூல்கள் கவீரபட்டனம், டமிள தேசம் எனக் குறிப்பிடுகின்றன (வேங்கடசாமி 1950; 38-9). ஆயினும் இலங்கையைப் போல் தமிழகத்தில் பெளத்த கட்டிட சிற்பக்கலை மரபு அக்காலத்தில் வளர்ந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் காவேரிப் பூம்பட்டினத்தில் அறியப்பட்ட புராதன பெளத்த தூபிக்குரிய கட்டிட எச்சங்களைத் தவிர தமிழ் நாட்டின் பிற இடங்களில் புராதன பெளத்த ஆலயங்கள் இருந்ததாகக் கூறமுடியவில்லை.
ஆனால் தமிழகத்தோடு ஒப்பிடும் போது ஈழத்தில் பெளத்த மதம் பரவிய காலம் தொட்டு அம்மதம் தொடர்பான ஆலயங்கள் பற்றிப் பல சான்றுகள் காணப்படுகின்றன. இங்கு கிடைத்த கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 1500க்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களில் பெரும்பாலனவை பெளத்த மதம் பற்றியும், அக்கால மன்னன் தொட்டுச் சாதாரண மக்கள் வரை பெளத்த துறவிகளுக்கு அமைத்துக் கொடுத்த குகை, கற்படுக்கை, இருக்கை, படிக்கட்டு போன்ற கட்டிடக் கலைகள் பற்றியுமே பெரிதும் கூறுகின்றன. ஆனால் சமகாலத்திற்குரிய தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்கள் எவையும் பெளத்த மதம் பற்றியோ, பெளத்த துறவிகளுக்கு அமைத்துக்

Page 31
40 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் பற்றியோ கூறவில்லை. ஈழத்தின் தொடக்ககாலப் பாளி இலக்கியங்கள் பெளத்த மதத்தின் பெருமையை வரலாற்று ரீதியாகக் கூறும் நோக்கில் எழுதப்பட்டிருப்பதுடன், அதில் வரும் கணிசமான செய்திகள் ஆட்சியாளராக இருந்தோர் பெளத்த மதத்திற்காக அமைத்துக் கொடுத்த ஆலயங்கள் பற்றியே கூறுகின்றன. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் (Sivathamby 1981:398-409) பெளத்த, சமண மதங்களின் செல்வாக்கால் தமிழக இசை, நடனம் போன்ற கலைகளில் ஏற்பட்ட மாற்றம், வளர்ச்சி பற்றி சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளார். இந்த மாற்றம் பெளத்த மதம் தமிழகத்திற்குப் பரவியபோது கட்டிட, சிற்பக் கலையில் ஏற்படுத்தியதாகக் கூறுவதற்கு தொல்லியற் சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை. அதேபோல் சமகாலத்திற்குரிய சங்க இலக்கியத்தில் கூடப் பெளத்த மதம், பெளத்த கலை தொடர்பான செய்திகள் வருவதாகத் தெரியவில்லை. ஈழத்தில் பெளத்த மதம் கலைகளில் மட்டுமன்றி இங்கிருந்த முன்னைய மதங்கள், மொழி, எழுத்து, இலக்கியம் போன்ற துறைகளிலும் பாரிய மாற்றத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்தியது. இவ்வாறான ஒரு மாற்றம் விரைவாகத் தமிழகத்தில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாகப் பிற்காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இரட்டைக் காப்பியங்களில்தான் பெளத்த மதம், பெளத்த பண்பாடு தொடர்பான சான்றுகள் விரிவாகக் காணப்படுகின்றன. இதனால் இம்மதத்தின் செல்வாக்கு இதற்கு முற்பட்டகாலத் தமிழகப் பண்பாட்டில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறலாம். இதற்குக் கட்டிட சிற்பக் கலைமரபும் விதிவிலக்கன்று.
அழியாப் பொருள் கொண்டு அம்மதம் சார்ந்த கட்டிட, சிற்பங்களை ஆக்கும் மரபு தோன்றிவிட்டது என்பதற்கு ஈழத்தின் பல வட்டாரங்களில் அவை தொடர்பான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈழத்திற்குப் பெளத்தம் புதிய மதமாக அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் கவர்ச்சித் தன்மையால் இந்து மதத்தைப் பின்பற்றி (புராண வழிபாட்டைக் கைக்கொண்டோர்) வாழ்ந்த மக்களில் ஒரு பிரிவினரே பெளத்த மதத்திற்கும் மாறினர். இதனால் அனைவரும் மதம் மாறினர் என்றோ அல்லது மதம் மாறிய அனைவரும் தமது முன்னைய வழிபாட்டு நெறியை முற்றாகக் கைவிட்டனர் என்றோ கூறமுடியாது. இன்றும் பெளத்த ஆலயங்களில் பெளத்த தெய்வங்களுடன் இந்து தெய்வங்களும் வைத்து வழிபடப்படுகிறது. இது பாரம்பரிய வரலாற்று நிகழ்வின் தொடர்ச்சியைக் காட்டுகிறது எனலாம். ஈழத்துப் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் தமிழ் மன்னர்கள் தமது இந்து மதநம்பிக்கைகளைக் கைவிடாத நிலையில் பெளத்த மதத்தை ஆதரித்ததற்கும், தீவிர பெளத்தர்களாக இருந்த சிங்கள மன்னர்கள் இந்து ஆலயங்கள், பிராமணர் இருப்பிடங்களைக்
கட்டியதற்கும், அவர்களது அரச சபையில் பிராமணர்கள் அமைச்சர்,

ஈழத் தமிழரின் கலை மரபு 41
ஆலோசகர், ஆசிரியர், வைத்தியர் முதலியோர் கடமைகள் புரிந்ததற்கும் பல சான்றுகள் உண்டு (சிற்றம்பலம் 1995, பத்மநாதன் 2000). இச்சான்றுகள் பெளத்த, இந்து மதங்களுக்கு இடையேயுள்ள இணக்கப்பாட்டையும், ஒன்றன் மீது மற்றொன்று ஏற்படுத்திய செல்வாக்கையும் காட்டுகின்றன. உதாரணமாக தமிழ், சிங்கள மன்னர்கள் புராதன காலத்தில் வெளியிட்ட நாணயங்களை ஒப்பிடும்போது அவற்றில் உள்ள சில சின்னங்கள் இன, மத தனித்துவத்தைச் சுட்டிக் காட்டிய போதும் மதம் சார்ந்த ஏனைய சின்னங்களை நோக்கும்போது அவற்றின் வடிவத்திலும், கலைமரபிலும் பொதுவான ஒற்றுமைத்தன்மை காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கைக்கே தனித்துவமான பீடத்துடன் கூடிய சுவஸ்திகா இரு மதத்திற்கும் பொதுவான சின்னமாக தமிழ், சிங்கள மன்னர்கள் தாம் வெளியிட்ட நாணயங்களில் பொறித்துள்ளனர் (புஷ்பரட்ணம் 2001:90-5). அதேபோல் இனத்தை அல்லது மதத்தைப் பிரதிபலிக்கும் சின்னங்களை நாணயங்களில் ப்ொறிக்கும்போது அவற்றை மூன்று கோடுகளால் வடிவமைக்கப்பட்ட பீடத்தின் மீது பொறிக்கும் மரபு ஈழத்தில் வெளியிடப்பட்ட காணயங்களுக்கு மட்டும் உரிய தனிப்பண்பாகும். இவ்வொற்றுமை அல்லது செல்வாக்கு ஈழத்து பெளத்த, இந்துக் கட்டிட, சிற்பக் கலைமரபிலும் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. .
இதில் அவதானிக்கக் கூடிய இன்னொரு முக்கிய அம்சம் ஈழத்தின் தொடக்ககாலப் பெளத்த கட்டிட, சிற்பங்களை ஆக்குவதில் தமிழ் கலைஞர்களுக்கிருந்த ஈடுபாடாகும். மகாவம்சம் விஜயன் காலத்தில் ஆயிரம் கலைஞர்கள் பாண்டிநாட்டிலிருந்து வந்ததாகவும், துட்டகாமினி காலத்தில் மகாதூபியைக் கட்டி முடிக்கும் பணியில் தென்னிந்தியாவிலிருந்து வந்த எண்ணாயிரம் கலைஞர்கள் பங்கு கொண்டதாகவும் கூறுகிறது (Mahavamsa.Vll:56-58, XXIX:42). Sä5.jp bsosi Lošg Lil GsisLITs இருப்பினும் இவற்றிலிருந்து பெளத்த கலைகளை ஆக்குவதில் தமிழருக்கிருந்த ஈடுபாடு ஓரளவுக்குத் தெரியவருகிறது.
தமிழகத்தில் அழியாப் பொருட்களைக் கொண்டு கட்டிட, சிற்பங்களை ஆக்கும் மரபு தோன்றியதற்கு ஒரு சாரார் கி.பி.5-6ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வடக்கிலிருந்து வந்த பல்லவ வம்சம் காரணம் எனவும், இன்னொரு சாரார் பாண்டிய வம்சம் காரணம் எனவும் வாதிட்டு வருகின்றனர். இதற்கு எந்த வம்சம் காரணமாக இருப்பினும் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த கலைமரபும் தமிழகத்திற்கு வடக்கிலிருந்து புகுந்த ஆந்திர நாட்டுப் பெளத்தக் கலைமரபும் இணைந்தே கி.பி. 5-6ஆம்நூற்றாண்டில் புதிய கலை மரபு தோன்றியதென்பதில் பொதுவான கருத்தொற்றுமை காணப்படுகிறது. இதில் கற்களைப் பயன்படுத்தி கட்டிட, சிற்பங்களை ஆக்கும் கலைமரபு தமிழகத்தில் தோற்றம்பெற பெளத்த கலைமரபின் செல்வாக்கே காரணமாக இருந்துள்ளது (Dubureuil 1917, Percy Brown 1959). GSO2, 2 gigsluG5gjib alsoa5uics

Page 32
42 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பல்லவர், பாண்டியர் காலச் சிற்பங்களில் ஆந்திராவுக்குரிய பெளத்த கலை மரபின் செல்வாக்கு காணப்படுகிறது (Rouland 1953), இங்கே அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் பெளத்த மதம் பரவிய காலத்தோடு ஆந்திராவில் தோன்றி வளர்ந்தது போன்ற பெளத்த கலைமரபு சமகாலத்தில் தமிழகத்திலும் தோன்றி வளர்ந்திருந்தால் அதன் செல்வாக்கால் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழகத்தில் அழியாப் பொருட்களைக் கொண்டு இந்துக் கட்டிட, சிற்பங்களை ஆக்கும் மரபு தோன்றியிருக்கும் என்பது தெரிகிறது. இங்கிலையில் பிற்காலத்தில் தமிழகத்திற்கு வடக்கிலிருந்து புகுந்த பெளத்த கலை மரபின் செல்வாக்கே அங்கு அழியாத கற்களைக்கொண்டு இந்து ஆலயங்கள், சிற்பங்கள் ஆக்கப்படக் காரணம் என்பதை ஏற்கும்போது, மிகச் சிறிய நாடான இலங்கைக்குள் தமிழகத்தைக் காட்டிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றி வளர்ந்த பெளத்த கலை மரபின் செல்வாக்கால் இங்கிருந்த இந்துக் கலைமரபிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கும் எனக் கூறுவது எந்த வகையிலும் முரண்பாடாகத் தெரியவில்லை.
ஆயினும் இலங்கை இந்துக் கலைமரபின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த பலரும் மேற்கூறப்பட்ட காரணங்களை அல்லது சான்றாதாரங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மாறாகத் தமிழகத்தில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் பின்னரே அழியாப் பொருட்களைக் கொண்டு கட்டிட, சிற்பங்களை ஆக்கும் மரபு தோன்றியதால் அக்காலத்தில் இருந்தே இலங்கையிலும் அக்கலை மரபு தோன்றி, வளர்ந்ததாகக் கூறுகின்றனர். அதில் கூட தமிழகத்தில் அவ்வக் காலத்தில் தோன்றி வளர்ந்த கலைமரபு இலங்கைத் தமிழரிடையே தோன்றி வளர்ந்த கலைமரபில் செல்வாக்குச் செலுத்தியது எனப் பார்க்கப்படவில்லை. மாறாக தமிழகத்தில் இருந்து அவ்வப்போது படையெடுப்பாளர், வர்த்தகர் என வந்த தமிழர்களே இலங்கையில் தமது வழிபாட்டிற்காக முக்கிய நகரங்களில், வர்த்தக மையங்களில் ஆலயங்களை அமைத்து அங்காட்டுக்குரிய கலை மரபை வளர்த்தெடுத்தனர் எனக் காரணம் காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பொருத்தமான வகையில் இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையிலான அரசியல், பண்பாட்டு உறவுக்குரிய சான்றாதாரங்கள் எடுத்துக்காட்டப்பட்டு, இலங்கையில் வளர்ந்த கலைமரபுக்கு பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கலைப் பாணி எனப் பெயரிடப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையின் ஆதிகால, இடைக்கால இந்துக்கலை மரபுஇங்காட்டுத் தமிழருக்குரியதாக நோக்கப்படாது, அவ்வப் போது தமிழகத்திலிருங்து வங்துபோன தமிழ் நாட்டுத் தமிழருக்குரியதாகப் பார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோக்கப்பட்டதற்கு பண்டைய காலத்தில் தமிழர்கள் இலங்கையில் செறிவாக வாழ்ந்ததற்கு சான்றுகள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது இருந்த சான்றுகள் சரிவர ஆராயப்படாமை முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் தற்காலத்தில்

ஈழத் தமிழரின் கலை மரபு 43
பண்டைய கால இலங்கைத் தமிழர் தொடர்பான சான்றுகள் பரவலாகக் கிடைத்து வரும் நிலையில் பழைய வரலாற்றுப் பார்வையைத் தொடர்ந்தும் நியாயப்படுத்த வேண்டுமா என எழுப்பப்படும் கேள்வி நியாயமானதாகவே தெரிகிறது.
இந்த இடத்தில் 1970இல் இலங்கையின் இந்துக் கட்டிடக்கலை பற்றி முதன் முதலில் தமிழில் விரிவான ஒரு நூலை எழுதிய பேராசிரியர் இந்திரபாலா கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன் ஈழத்தில் செறிவான தமிழர் குடியிருப்புக்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டி ஈழத்துப் பண்டைய கட்டிடக் கலையை பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்கர் பாணிக்குரிய கலையாகப் பார்த்தார். ஆனால் அதே நூல் இரண்டாவது பதிப்பாக 1999இல் வெளிவந்த போது தனது முன்னுரையை மாற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
"உலகில் இன்று வாழ்ந்து வரும் தமிழர்கள் அண்மைக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து சென்றதுபோல் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களும் தமிழ் நாட்டிலிருந்து அண்மைக் காலத்தில் சென்றதாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அங்கு பண்டுதொட்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ்ப் பெயர்களே சான்றாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ள இந்நூல் தமிழ்நாட்டில் வெளிவருவது பொருத்தமாகும்".
ஆசிரியரின் இந்தக் கருத்து மாற்றத்திற்கு 1970-இல் அவருக்கு கிடைக்காத ஈழத்தமிழர் தொடர்பான சான்றுகள் அந்நூலை இரண்டாவது பதிப்பாக 1999இல் வெளியிட்டபோது கிடைத்திருந்ததே காரணமாகும். இக்கருத்து மாற்றம் பண்டைய ஈழத்தமிழர் வரலாறு பற்றிய பழைய கருத்தில் மட்டுமன்றி அவர்களது மதம், கலை பற்றிய பார்வையிலும் ஏற்பட வேண்டும். அதன் மூலமே ஈழத்து மதம், கலை என்பவற்றில் தமிழ் நாட்டிற்குரிய பங்கையும், அதில் ஈழத் தமிழருக்குரிய தனித்துவத்தையும் அடையாளம் காணமுடியும். அப்போது தான் ஈழத்து இந்து மதம் பற்றிய ஆய்வை ஈழத்து தமிழர் வரலாற்றோடு இணைத்துப் பார்க்கமுடியும்.
ஈழத்தின் பண்டைய காலத்து மதம், கலை என்பவற்றில் உள்ள தமிழரின் தனித்துவம் என்பதன் அர்த்தம் தமிழ் நாட்டின் பங்களிப்பையும், செல்வாக்கையும் மறுதலிப்பதல்ல. இனம், மொழி, எழுத்து பண்பாடு என்பவற்றால் தமிழ் நாட்டுத் தமிழருடன் ஒன்றுபட்ட ஈழத் தமிழரின் பண்பாடு
உட்பட்டும் வளர்ந்ததற்குப் போதிய சான்றுகள் உண்டு. அதை ஈழத் தமிழர்

Page 33
44 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
மதத்திலும், கலையிலும் காணமுடிகிறது. ஈழத்தில் உள்ள புராதன ஆலயங்கள் சில தமிழ் நாட்டு அரசவம்சங்களால், வர்த்தகர்களால் தமிழ் நாட்டுக்குரிய கலை மரபு கொண்டு கட்டப்பட்டதற்கும், நிர்வகிக்கப்பட்டதற்கும் போதிய ஆதாரங்கள் உண்டு (கோபாலகிருஷ்ண ஐயர் 1981, பத்மநாதன் 2000, சிற்றம்பலம் 1984:108-141). அதனால் அவ்வக்காலப் பகுதிக்குரிய ஈழத்திலுள்ள அனைத்துக் கட்டிட, சிற்பக்கலை மரபுகளையும், ஆலயங்களையும் தமிழ் காட்டவருக்குரியதாகப் பார்ப்பதே பொருத்தமாகத் தெரியவில்லை. அவ்வாறு பார்ப்பது ஈழத்தில் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்தார்கள் என்று பெருமையோடு கூறிக்கொள்ளும் கருத்திற்கு முற்றிலும் முரணான வாதமாக அமையும்.
தேசியத் தன்மை கொண்ட தமிழகக் கலை மரபு அரச வம்சங்களின் அடிப்படையில் பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர, நாயக்க கலைப்பாணி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கலைப் பாணிகளில் பொதுவான ஒற்றுமை காணப்பட்டாலும் கால அடிப்படையிலும், வம்ச அடிப்படையிலும் சில தனித்துவமான பண்புகள் இருப்பதாலேயே இவற்றின் கலைப்பாணி வம்ச அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்படுகிறது. அதில் கூட குறிப்பிட்ட ஒரு அரச வம்சத்திற்குரிய கலைப்பாணி தமிழ் நாட்டில் எல்லாக் கோயில்களிலும், சிற்பங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததெனக் கூறமுடியாது. பல்லவக் கலைமரபுக்குரிய வட தமிழ்நாட்டிலுள்ள மண்டகப்பட்டுக் குகைக் கோயில் சிற்பங்களையும், தென்தமிழ் நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டிக் குகைக் கோயில் சிற்பங்களையும் ஆராய்ந்தால் அவற்றில் பல வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். அதே போல் சோழக் கலை மரபுக்குரிய கும்பகோணத்தில் உள்ள கோயில் சிற்பங்களையும், தஞ்சாவூர் கோயிலில் உள்ள சிற்பங்களையும் ஆராய்ந்தால் அவற்றில் கூடப் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய கலைமரபு ஊர், வட்டாரம், பிரதேசம் என வேறுபடுவதையும் காட்டுகின்றன. இதற்கு அவ்வவ் வட்டாரங்களில் வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, சமய நம்பிக்கை, கலைஞர்களின் தனித்தன்மை காரணம் என ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. இங்கு ஈழத்தின் பண்டைய காலக் கலைமரபு தமிழகத்தவரால்தான் வளர்க்கப்பட்டன என்று எடுத்துக் கொண்டாலும், அவை வளர்ந்த இடமும், அவற்றை வளர்த்தெடுத்த பெளதீகச் சூழலும் ஈழமாக இருக்கும் போது எப்படி அதை முழுக்க முழுக்க தமிழகக் கலை மரபின் பிரதியாகப் பார்க்க முடியும். இது தமிழகத்திற்கு உள்ளேயே வட்டார அடிப்படையில் தனித்துவமான கலைமரபு தோன்றி வளர்ந்ததென்ற கருத்திற்கு முற்றிலும் மாறுபாடான கருத்தாக அமைகிறது. இந்த இடத்தில் ஈழத்தமிழர் தொடர்பான சான்றுகள் அதிகம் கிடைக்காத காலகட்டத்தில் ஈழத்துச் சிற்பக்கலை மரபு பற்றி பேராசிரியர் சிவசாமி அவர்கள் (1978:100-112)

ஈழத் தமிழரின் கலை மரபு 45
பேராசிரியர் வானமாமலை அவர்களின் மணிவிழா மலரில் கூறிய கருத்து சிறப்பாக கவனிக்கத்தக்கது :
"இலங்கைச் சிற்பங்களில் முதல் காலகட்டத்தில் பெளத்தச் சிற்பக் கலை அம்சங்களும், இரண்டாவது கட்டத்தில் தமிழகச் சிற்பக்கலை அம்சங்களும் காணப்படினும், இலங்கையின் சிற்பக் கலை தனியான தேசிய மரபு கொண்டது. கி.பி. முதல் நூற்றாண்டுக்குபின் பெளத்த சைத்தியங்களின் கட்டிடக் கலை மரபும், 4ஆம் நூற்றாண்டுக்குப் பின் பல்லவக் கலை மரபும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் சோழக் கலை மரபும் இலங்கைக் கலைப்பாங்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்துக் கோவில் களும், இந்துத் தெய்வங்களும் தமிழகக் கலைப்பாங்கில் உருவாக்கப்பட்டன. இவை இலங்கையில் சிறு தொகையினவே. இலங்கையிலுள்ள சமயம் சார்பான சிற்பங்கள் பெருமளவுக்கு பெளத்தம் சார்ந்தவை. சமயம் சாராத கலைப்பாணி இலங்கை அரச பாணியாக உள்ளது. பண்பாட்டுக் கலப்புக் காரணமாகப் பெளத்தக் கலைப் பாங்கும், சைவக் கலைப்பாங்கும் சிற்சில அம்சங்களில் கூடிக் கலந்துள்ளன. ஆயினும் இலங்கையினி தேசிய மரபை இக்கலப்புக்கள் வளம்படுத்தவே உதவின".
பேராசிரியர் ஈழத்து இந்துக் கலைமரபு தோன்றி வளர தமிழகத் தொடர்பு காரணம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் அது இலங்கைக்குரிய தனியான தேசிய மரபு கொண்டது என்பதையும், அவற்றில் பெளத்த, இந்துச் சிற்பங்களுக்கிடையிலான கலப்பு உண்டு என்பதையும் குறிப்பிடத்தவறவில்லை. ஆயினும் அந்த நோக்கில் பிற்காலத்தில் யாரும் ஈழத்து இந்துக் கலை மரபு பற்றி ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு ஆராயப்படுமானால் ஈழத் தமிழரின் தனித்துவம் மேலும் துலக்கம் பெறும். இதற்கு உதாரணமாக ஈழத்தில் பல்லவர் காலத்திற்கு உரியதாகக் காட்டப்பட்டு வரும் கட்டிட, சிற்பக் கலைக்குரிய சில சான்றுகளை எடுத்து ஆராயலாம்,
தமிழகத்தில் கி.பி.6ஆம் நூற்றாண்டின் பின்னர் ஏற்பட்ட பத்தி இயக்கத்தின் தோற்றமும், வணிக கணங்களின் எழுச்சியும் தமிழகத்தில் பெளத்த, சமண மதங்கள் படிப்படியாக வீழ்ச்சியடையவும், இந்து மதம் எழுச்சியடையவும் காரணமாயின. இதன் தாக்கம் சமகாலத்தில் தென்னிந்தியாவில் மட்டுமன்றி இலங்கையையும் பாதிக்கச் செய்தது. இதன் விளைவால் இலங்கையில் இந்து மதம் புத்துயிர் பெற்றதுடன், தமிழகத்தில் புதிதாகத் தோன்றி வளர்ந்த திராவிடக் கலைமரபு இந்துக் கலைகளிலும், பெளத்த கலைகளிலும் செல்வாக்குச் செலுத்தியது (பத்மநாதன் 2000).

Page 34
46 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இதுவரை கிடைத்த சான்றுகளில் இருந்து அநுராதபுரத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திற்குரியதெனக் கருதப்படும் 14க்கும் மேற்பட்ட சைவக் கோயில்களின் கட்டிட அழிபாடுகளும், சிவன், விஷ்ணு, பார்வதி, விநாயகர், ஐயனார் மற்றும் பிற தெய்வங்களுக்குரிய சிலைகள், சிற்பங்கள், செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன(Bel1892), இவற்றைத் தவிர தென்னிலங்கையில் நாளந்தா (விநாயகர் கோயில்), தெவிநுவரை (விஷ்ணு கோயில்), வட இலங்கையில் மாதோட்டம் ( திருக்கேதீஸ்வரம்), பூநகரி (மண்ணித்தலைச் சிவாலயம்), கிழக்கிலங்கையில் திருகோணமலை (திருக்கேதீஸ்வரம்) ஆகிய இடங்களிலும் இந்து ஆலயங்கள் இருந்ததற்கான கட்டிட, சிற்ப அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மண்ணித்தலைச் சிவன் கோயில் தவிர்ந்த ஏனைய ஆலயங்கள் பல்லவக் கலைமரபுக்குரியதெனக் கூறப்படுகின்றன. இவற்றைத் தமிழ் காட்டு வணிகர்கள் ஈழத்தில் தமது வழிபாட்டிற்காகக் கட்டியதாகவும், அதனால் தான் இவை சமகாலத்தில் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட ஆலயங்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது (இந்திரபாலா 1970, சிற்றம்பலம் 1984). ஈழத்தின் இக்காலக் கோயில்கள் சில பல்லவக் கலைமரபையும் அடியொற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவது பொருத்தமாக இருப்பினும், இவையனைத்தும் முற்று முழுதாகப் பல்லவக் கலைமரபில், தமிழ் நாட்டு வணிகர்களுக்காக, தமிழ் நாட்டவரால் அமைக்கப்பட்டதெனக் கூறுவது இலங்கை - தமிழக வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்கும்போது பொருத்தமாகத் தெரியவில்லை.
பல்லவர் காலக் கலைமரபுக்குரிய ஆலயங்கள் பெரும்பாலும் இயற்கையான குகைகளைக் குடைந்தும், செதுக்கியும், கற்களை அறுத்தும் கட்டப்பட்டவையாகும். அதிலும் முற்பட்ட பல்லவ மன்னர்களின் பெரும்பாலான கோயில்கள் குகைகளைக் குடைந்தும், செதுக்கியும் கட்டப்பட்டவை (Rowland 1953,இந்திரபாலா 1970), இலங்கையில் தமிழகத்தை போல் இயற்கையான பல குகைகள் பல்லவர் காலக் கோயில்கள் என அடையாளம் காணப்பட்ட சுற்றாடலில் காணப்படுகின்றன. ஆயினும் தமிழகத்தை ஒத்த குகைக் கோயில்கள் எவையும் இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்லவர்களின் பிற்காலக் கலைமரபுக்குரிய கோயில்கள் அறுத்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டாலும், பல கோயில்களைக் கட்டுவதற்கு மரம், சுதை, செங்கல், ஒடு என்பவற்றைப் பயன்படுத்தாது அறுத்த கற்களையே முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஈழத்தில் உள்ள பல்லவர் காலக் கலைமரபுக்குரியதாகக் காட்டப்படும் பெரும்பாலான ஆலயங்களின் அத்திவாரம், துாண் என்பனவற்றைத் தவிர சுவர், கூரை, முகப்பு என்பன பெரும்பாலும் செங்கல், மரம், ஒடு என்பன கொண்டு கட்டப்பட்டவையாக

ஈழத் தமிழரின் கலை மரபு 47
உள்ளன. இந்த அம்சம் பல்லவக் கலைமரபை விடக் கேரளக் கலை மரபைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
பேராசிரியர் பத்மநாதன் இலங்கையிலுள்ள பல்லவர் காலத்திற்குரியதென அடையாளம் காட்டப்பட்ட கட்டிடக் கலை மரபுக்கும் கேரளக் கட்டிடக் கலை மரபுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை பற்றிக் கூறிய கருத்து இங்கு நோக்கத்தக்கது (2000:48).
"கேரளத்திலும் இலங்கையிலும் அமைந்த கட்டிடங்களிடையே பொதுப் பண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. அடித் தளங்களைக் கற்களால் அமைத்தல், அவற்றிற்கு மேலான பகுதிகளை செங்கற்களையும் மரத்தையும் கலந்து கட்டுதல், சதுரமாகவும், நாற்சதுரமாகவும் கட்டிடங்களை அமைத்தல் மரத்திலும் கல்லிலும் தூண்களை அமைத்தல் மரத்தில் அமைக்கப்பட்ட கூரைகளை ஒடுகளினால் வேய்தல் பொதுப் பண்பாகும்".
இக்கூற்று அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பல சைவக் கோயில் கட்டிடக் கலை மரபுக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்வாறான கட்டிடக் கலைமரபு அநுராதபுரத்தில் மட்டுமன்றி அண்மையில் வன்னிப் பிராந்தியத்தில் உள்ள மூங்குவில், செழியாவில், நீராவி, கோனாவில், கோயில்காடு, அரசபுரம் போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பத்திற்கு மேற்பட்ட கட்டிட அழிபாடுகளிலும் காணப்படுகின்றது. கருங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இக்கட்டிடங்களின் சுவர்கள் செங்கற்களாலும், கூரைப்பகுதி மரத்தினாலும் போடப்பட்டு அவை ஒடுகளால் வேயப்பட்டன என்பதை இக்கட்டிடப்பகுதியில் கிடைத்த பெருமளவு செங்கற்கள், கைவிரல் அடையாளம் பதித்த துவாரமிடப்பட்ட ஒடுகள் என்பனவற்றிலிருந்து உணரமுடிகிறது. இங்கு கிடைத்த கைவிரல் பதித்த ஒடுகள் தமிழகத்தில் கி.பி.7.ஆம் கி.பி. 10. ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதெனக் கணிப்பிடப்பட்டுள்ளதால் இக்காலப் பகுதியில் இக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டன எனக் கூறலாம். இதில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அம்சம் செழியாவிலில் உள்ள கட்டிட அழிபாடுகளிடையே கிடைத்த அம்மன் விக்கிரகம் ஒன்றில் சுவஸ்திழறி பார்வதி என்ற பெயர் கிரந்தத்திலும் (சுவஸ்திழறி), வட்டெழுத்திலும் (பார்வதி) எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் வட்டெழுத்தின் பயன்பாடு பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பாக மறைந்து போனதால் இவ்விக்கிரகமும், அதற்குரிய கோயிலும் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனக் கூறலாம். ஈழத்தில் பல்லவக் கலைமரபுக்குரிய ஆலயங்களைத் தமிழ் நாட்டு வணிகர்கள் வர்த்தகச் செழிப்பு மிக்க"அரச தலைநகரங்களிலும், துறைமுகங்களிலும் கட்டியதாகக் காரணம் காட்டப்படுகிறது (இந்திரபாலா 1970, சிற்றம்பலம் 1984). ஆனால் அதே கலை

Page 35
48 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
மரபுக்குரிய ஆலயங்கள் வன்னிப்பிராந்தியத்தில் கட்டப்பட்டிருக்கும் போது அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இக்கட்டிடக் கலைமரபில் பல்லவக் கலைமரபைவிட கேரளக் கலைமரபின் சாயல் கூடுதலாகக் காணப்படுகின்றது. கேரளத்துடன் (பழைய சேரநாடு) இலங்கைக்கிருந்த பாரம்பரிய வர்த்தக, பண்பாட்டு உறவு தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி செய்த காலத்தில் தொடர்ந்திருந்தாலும் அது ஒரு அரசியல் மேலாதிக்கமாக இருக்கவில்லை என்பது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.
தமிழகக் கோயில்களை அரச வம்சத்தவர், கோயிலில் நடனமாடும் தேவரடியார், வர்த்தகர்கள் போன்ற சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்களால் கட்டுவிக்கப்பட்டன என்பதற்கு பெரும்பாலும் கோயில்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அல்லது அக்கோயில்கள் தொடர்பான இலக்கியங்களில் சான்றுகள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் உள்ள பல்லவர் காலத்திற்குரியதென அடையாளம் காணப்பட்ட எந்தக் கோவில்களிலும் அவற்றைக் கட்டுவித்தவர்கள் பற்றிய கல்வெட்டு ஆதாரங்களே அல்லது இலக்கியச் சான்றுகளே காணப்படவில்லை. வணிக கணங்களின் எழுச்சி தமிழ் நாட்டில் பல்லவர் காலத்தோடு ஏற்பட்டாலும் அதன் உச்ச நிலையைச் சோழர் காலத்தில்தான் காணமுடிகிறது (பத்மநாதன் 1984). அக்காலத்தில் அரச வம்சத்தவரைப் போல் வணிகர்களும் கோவில்களைத் தமிழகத்திலும், இலங்கையிலும் அமைத்ததற்குக் கல்வெட்டுக்கள் சான்றாக உள்ளன (பத்மநாதன் 2000). ஆனால் பல்லவர் காலத்தில் தமிழகத்தில் வணிகர்கள் ஆலயங்களை அமைத்ததாகக் கூறுவதற்கு அதிக சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கிலையில் ஈழத்திலுள்ள பெரும்பாலான கோயில்களை எப்படிப் பல்லவர் கால வணிகர்களுடன் தொடர்புபடுத்தலாம் என்பது தெரியவில்லை.
இலங்கையில் அநுராதபுரத்தில் கிடைத்த கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குரிய இரு கல்வெட்டுக்கள் குமாரகணத்துப் பேருரைச் சேர்ந்த சேக்கிழான் சங்கன், சேக்கிழான் சென்னை ஆகிய இரு வணிகர்கள் இங்கிருந்த கோயிலுக்கு வழங்கிய தானம் பற்றிக் கூறுகின்றன (பத்மநாதன் 2000:4748). இவற்றின் அடிப்படையில் இவர்கள் கோவில்களையும் அமைத்திருக்கலாம் எனக் கூறப்படுவது பொருத்தமாகும். ஆனால் இதில் வரும் குமாரகணம் பற்றித் தமிழகக் கல்வெட்டுக்கள் எதிலும் சான்றுகள் இல்லை எனக் கூறும் தமிழகத் தொல்லியல் பேராசிரியர் சுப்பராயலு இக் குமாரகணம் என்பது ஒரு இடத்தின் பெயராக இருக்கலாம் எனக் கருதுகிறார் (பத்மநாதன் 2000:50). இவ்விடத்தில் இக்குமாரகணத்துக் கல்வெட்டுக்கள் பற்றிப் பேராசிரியர் பத்மநாதன் (2000:48) கூறியுள்ள கருத்து நோக்கத்தக்கது.

ஈழத் தமிழரின் கலை மரபு 49
"குமாரகணத்துப் பேரூர் என்பதில் உள்ள பேரூர் என்பது குடியிருப்புக்களைக் கொண்ட ஒரு பகுதியினையும், அதன் நிர்வாகத்திற்குப் பொறுப்பான ஒரு சபையினையும் குறிக்கும். பேரூர் என்ற சொல்லோடு இணைந்து அதற்கு முன்னிலையாக வரும் குமாரகணம் என்பது ஒரு இடத்தின் பெயராதல் வேண்டும் அது பெரும்பாலும் வணிகர்கள் வாழ்ந்த ஊராதல் வேண்டும். அது பேருர் என்று சொல்லப்படுவதால் அது ஒரு வணிக ககராதல் வேண்டும். இலங்கையிலேயே தமிழ் வணிகர்கள் அமைத்திருந்த நகரங்களிலே அதுவே மிகவும் பழைமையானது போலத் தெரிகிறது. அந்தப் பேருரில் உள்ளவர்கள் சைவ ஆலயங் அமைப்பதிலும் ற்றை ஆதரிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர்" எனலாம்.
இக்கல்வெட்டின் தொடக்கத்தில் சங்கபோதிவர்மன் என்ற பட்டப் பெயர் காணப்படுகிறது. இது அநுராதபுர மன்னர்கள் மாறிமாறிப் பயன்படுத்திய பட்டப்பெயராகும். குமாரகணம் என்னும் வணிகப்பேருர் இலங்கையில் இருந்த மிகப் பழைய வணிக நகராக இருக்க வேண்டும் எனப் பேராசிரியர் பத்மநாதன் கருதுகிறார். குமாரகணம் என்ற பெயரில் ஒரு வணிக கணம் தமிழகத்தில் இருந்ததற்கு இதுவரை சான்றுகள் இல்லை. மாறாக கணம் என்ற சொல் பெளத்த குருமார் ஒன்று கூடும் இடத்தை அல்லது சபையைக் குறித்திருக்கலாம் என்பதற்கு ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுக்களில் பல சான்றுகள் உண்டு (Paramavithana1970:no.202,p.106). இந்நிலையில் இவ்வணிக கணத்தைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ் நாட்டவரா அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களா என்பது ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டியுள்ளது. இவர்களை பல்லவர் காலத்து தமிழ் நாட்டு வணிகர்களாகக் கொண்டாலும் இங்தொரு கல்வெட்டாதாரத்தை மட்டும் வைத்து கி.பி. 7க்கும் கி.பி. 10க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிருந்த ஆலயங்கள் அனைத்தையும் பல்லவர் கால வணிகர்களோடு மட்டும் தொடர்புபடுத்தலாம் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. இலங்கையில் அரசுரிமை இழந்த மன்னர்கள் சிலர் பல்லவரிடம்
பெற்றதற்கும் சில சான்றுகள் உண்டு (Culavamsa 47:1-27). ஆயினும் பிற்காலத்தில் சோழர் ஏற்படுத்தியது போன்ற நேரடி ஆட்சியைப் பல்லவர் இலங்கையில் ஏற்படுத்தியிருக்கவில்லை. அப்படி ஏற்படுத்தும் அளவிற்கு அவர்கள் சோழரைப் போல் வலிமையான அரசாக தமிழ் நாட்டில் வளர்ந்திருக்கவுமில்லை. தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச வம்சங்களின் அரசியல், பொருளாதாரப், பண்பாட்டுச் செல்வாக்கு இன்னொரு நள்ட்டில் ஏற்பட்டதை எடுத்துக்காட்டும் சான்றுகளில் அவர்கள் வெளியிட்ட

Page 36
50 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பனவற்றிற்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தைப் பொறுத்தவரை பல்லவ வம்சம் தொடர்பான கல்வெட்டுக்கள் எவையும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. சோழரும், பாண்டியரும் இலங்கையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை ஈழத்து இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் மட்டுமன்றி இங்கு பரவலாகக் கிடைத்த நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பல்லவ மன்னர்கள் வகையிலும், தொகையிலும் அதிக எண்ணிக்கையுடைய நாணயங்களை வெளியிட்டதற்கான சான்றுகள் தமிழகத்தில் கிடைத்திருந்தும் அவ்வகை நாணயங்கள் எவையும் ஈழத்தில் கிடைத்ததாகத் தெரியவில்லை. சிலர் மாதோட்டம், திருகோணமலை போன்ற இடங்களில் கிடைத்த சில வகை நாணயங்களைப் புல்லவருக்குரியதாகக் கூறுகின்றனர் (Hettiaratchi 1950422, Mictchiner 1998). ஆனால் அவர்கள் குறிப்பிடுகின்ற நாணயங்கள் எவையும் தமிழகத்தில் கிடைத்ததாகத் தெரியவில்லை. மாறாக அவற்றை ஈழத்து மன்னர்கள் வெளியிட்டதாகக் கொள்வதற்குப் பொருத்தமான சான்றுகள் உண்டு (புஷ்பரட்ணம் 1999, 2001). பிற்காலப் பாண்டியரது ஆறு கல்வெட்டுக்கள் நான்கு தடவை பாண்டியர் ஈழத்தின் மீது படையெடுத்து தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் ஆட்சி புரிந்த மன்னர்களை அடிபணியச் செய்து அவர்களிடம் திறைபெற்றதாகக் கூறுகின்றன (Puthukod -dailnscriptions 239. no366). S605 Fg5g LTGingresselsh safe5LOTass தெரிவிக்கின்றன. சோழர் 77 ஆண்டுகள் ஈழத்தில் நேரடி ஆட்சிபுரிந்ததுடன், அவர்களது அரசியல், பண்பாட்டுச் செல்வாக்கு 200ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருந்ததற்கும் உறுதியான சான்றுகள் உண்டு (பத்மநாதன் 2000). இவ்வாறான நேரடி மேலாதிக்கம் ஈழத்தில் பல்லவர் காலத்தில் ஏற்பட்டதற்கு எந்தச் சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. இங்கிலையில் சோழர், பாண்டியரைக் காட்டிலும் பல்லவர் காலச் செல்வாக்கால் அதிக எண்ணிக்கையுடைய ஆலயங்கள் ஈழத்தில் அமைக்கப்பட்டன என்ற
காலத்தில் தோன்றி வளர்ந்த ஆலயங்களின் வரலாற்றையும், வளர்ச்சியையும், எண்ணிக்கையும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளன.
பத்தி இயக்கத்தின் செல்வாக்கால் படிப்படியாக இந்து மதத்திற்கு மதம் மாறியதைத் தொடர்ந்தே அரச ஆதரவுடன் தமிழ் நாட்டில் பல்லவக் கலை மரபுக்குரிய இந்துக் கோவில்கள் தோற்றம்பெறத் தொடங்கின. ஆனால் பல்லவர் தமிழ் காட்டில் ஆட்சியாளராக வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வடஇலங்கையில் திருக்கேதீஸ்வரமும், கிழக்கிலங்கையில் கோணேஸ்வரமும் புகழ்பெற்ற ஆலயங்களாகத் திகழ்ந்ததை ஈழத்துப் பாளிநூல்கள் கூறுகின்றன. குறிப்பாக கி.பி.3ஆம் நூற்றாண்டில் மகாசேன

ஈழத் தமிழரின் கலை மரபு 51
மன்னனால் கிழக்கிலங்கையில் இடிக்கப்பட்ட மூன்று சிவ ஆலயங்களில் 'ஒன்றான கோகர்ணம் திருக்கோணமலையில் இருந்த திருக்கோணேஸ்வரம் என அடையாளம் காட்டப்படுகிறது. இக்காலத்தில் வடஇலங்கையில் இருந்த மாதோட்டத் துறைமுகத்தின் பெருமை பற்றியும், அங்கிருந்த சைவ ஆலயம் பற்றியும் சமகாலப் பாளி இலக்கியங்களில் முக்கியப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. இவ்விரு ஆலயங்களும் பத்தி இயக்கம் தோன்றிய காலத்திலேயே அவ்வியக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய நாயன்மார் போற்றிப்பாடுமளவுக்கு தமிழ் நாட்டிலேயே இவை நன்கு பிரபலமாகியிருந்துள்ளன (கோபால கிருஷ்ணஐயர் 1981). தமிழகத்திற்கு வெளியே கேரளத்திலும், கர்நாடகத்திலும் இருந்த ஒவ்வொரு இந்து ஆலயங்களை மட்டும் போற்றிப் பாடிய நாயன்மார் தமிழகத்தை அடுத்து ஈழத்தில் உள்ள ஆலயங்களையே முக்கியப்படுத்திப்பாடியுள்ளமை இந்து மதத்தில் அக்காலத்தில் ஈழத்தவருக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
காலக் கலைமரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டவை என நியாயப்படுத்த முடியவில்லை. ஏனெனில் இக்காலத்தில் தமிழ் நாட்டைக் கடந்து இன்னொரு நாட்டில் புதிய ஆலயங்களை அல்லது ஏற்கனவே கட்டப்பட்டிருந்த ஆலயங்களின் கலைமரபில் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு தமிழகத்தில் கற்களைப் பயன்படுத்தி ஆலயங்கள் அமைக்கும் புதிய கலைமரபு கன்கு வளரவில்லை. ஓரளவு வளர்ந்திருந்தாலும் அக்கலை மரபு உடனடியாக ஈழத்திற்குப் பரவியிருக்கும் எனக் கூறும்போது வரலாற்று ரீதியாக முன்பு ஏற்பட்ட பண்பாட்டுப் பரவல்களை வைத்து நோக்கும் போது பொருத்தப்பாடாக இல்லை. அத்துடன் பல்லவரின் ஆரம்பகால ஆலயங்கள் பொதுவாக குகைகளைக் குடைந்தும், செதுக்கியும் கட்டப்பட்டவை. ஆனால் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் மட்டுமல்ல எந்த ஆலயங்களும் அவ்வாறு கட்டப்பட்டதெனக் கூறுவதற்கு எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை.
பல்லவர் காலத்தில் அழியாப் பொருட்களால் மட்டுமன்றி அழியக்கூடிய மண், மரம், சுதை போன்ற பொருட்களாலும் தமிழகத்தில் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டதற்கு நாயன்மார் பாடல்களில் சான்றுகள் உண்டு. ஆனால் கற்களால் அமைக்கப்பட்ட ஆலயங்கள் பலவற்றைப் போற்றிப் பாடிய நாயன்மார்கள் அழியும் பொருட்களால் அமைக்கப்பட்டிருந்த ஆலயங்களை முக்கியப்படுத்திப் பாடியதற்கு அதிக சான்றுகள் இல்லை. இங்கிலையில் ஈழத்தில் இருந்த திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் அழியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்ட ஆலயங்களக இருந்திருக்குமானால் அவற்றை முக்கியப்படுத்தி நாயன்மார் தமது பாடல்களில் பாடியிருப்பார்கள் எனவும்
வில்லை. இவற்றிலிருந்து பல்லவக் கலை மரபு ஈழத்தில் செல்வாக்குச்

Page 37
52 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
செலுத்த முன்னரே திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் போன்ற ஆலயங்கள் கற்களால் அமைக்கப்பட்டன எனக் கருதுவது பொருத்தமாகவே தெரிகிறது. ஆகவே ஈழத்தில் பல்லவக் கலை மரபுக்குரியதென அடையாளம் காணப்பட்டுள்ள ஆலயங்கள் அனைத்தையும் தமிழ் நாட்டுக் கலைமரபில், தமிழ் நாட்டவருக்காக அமைக்கப்பட்டதெனக் கூறமுடியாது. மாறாக இவற்றுள் பெரும்பாலானவை சமகாலத்தில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் தமது வழிபாட்டிற்கென சுதேச கலைமரபில் அமைத்த ஆலயங்கள் எனக் கூறுவது பொருத்தமாகும். காலப் போக்கில் இவற்றில் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்லவ மற்றும் கேரளக் கலை மரபுகளும் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். இக்கருத்தை மேலும் வலுப்படுத்த ஈழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் காலத்தை ஒத்த சிற்பங்கள், செப்புத்திருமேனிகள் சிலவற்றை உதாரணமாகக் காட்டலாம்.
கலை வரலாற்றாசிரியர்கள் பலரின் கவனத்தை ஈர்ந்த ஈழத்தின் உன்னத கலைப்படைப்புக்களில் ஒன்றாக இசுறுமுனியாவில் உள்ள பாறைச் சிற்பங்கள் விளங்குகின்றன. இவை பற்றித் தலைசிறந்த கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான லோறன்ஸ் பின்யன் (Laurence Binyon) sh பில் "வியக்கத்தக்க இச் (36 O ம் பார்த்தவர்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள்" எனவும், பெஞ்சமின் றோலன்ட் (Rowland1953: 216) என்பவர் " இச்சிற்பங்கள் இந்து மறுமலர்ச்சிக்கால கலைப்பாணிக்குரிய தொழில் நுட்பத்தைக் காட்டுகின்றன எனவும், இந்தியக் கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான சரஸ்வதி (Saraswati 1975) "பல்லவரின் ஒப்பற்ற கலைப்படைப்புக்களில் ஒன்றான மாமல்லபுரச் சிற்பங்களின் வெளிப்பாடே இசுறுமுனியாச் சிற்பங்கள்" எனவும் விமர்சனம் செய்துள்ளனர். இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள பாறையின் தோற்ற அமைப்பையும், இருபரிமாண, முப்பரிமாண நிலையில் செதுக்கப்பட்டுள்ள மனித, மிருக, தெய்வங்களுக்குரிய புடைப்புச் சிற்பங்களையும் மேலோட்டமாகப் பார்க்கும் போது பல்லவர் கால மாமல்லபுரச் சிற்பத்தொகுதிகளை நினைவுபடுத்துவதாக உள்ளன. ஆனால் இவற்றில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிற்பங்களையும் தனித்தனியே ஒப்பிட்டு ஆராய்ந்தால் சில ஒற்றுமைகளும், பல வேற்றுமைகளும் இருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. இதற்கு உதாரணமாக மனிதனும் குதிரைமுகமும் கொண்ட சிற்பம், காதலர் சிற்பம், வியாக்கியான மூர்த்தத்தில் உள்ள சிவனின் சிற்பம் எனக் கூறப்படுவனவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் கலைவரலாற்றாசிரியர்கள் பலரையும் கவர்ந்த கலைவடிவமாக மனிதனும் குதிரைமுகமும் கொண்ட சிற்பம் விளங்குகிறது. தட்டையான வெளிமீது செதுக்கப்பட்டுள்ளதைப்போல அமைந்த இச்சிற்பம் இடுப்பிலிருந்து தலைமுடிவரை 2அடி 7%அங்குல உயரமுடையது. மனித சிற்பத்தில் நெஞ்சுப் பாறையில் கிடையான அமைப்பில் இருப்பதால் இதன் ஆசனம்

ஈழத் தமிழரின் கலை மரபு 53
காணப்படவில்லை. ஆனால் மனிதனின் இடப்பக்கத்தோளுக்கு மேலே இவ்வாசனம் காணப்படுகிறது. மனிதனுடைய கால் மடித்த நிலையில் குகையின் விளிம்பில் காணப்படுகிறது. இடது பாதம் வலது தொடையைத் தொடும்படியாகச் செதுக்கப்பட்டுள்ளது. உயர்த்தி மடக்கப்பட்டுள்ள வலது காலின் மேல் வலதுகை நீட்டி வைக்கப்பட்டுள்ளது. இருகையின் மணிக்கட்டில் ஒன்று முதல் மூன்று கைவளையல்கள் காணப்படுகின்றன. இக்கையின் மேற்பாகத்தில் நாகாபரண அல்லது பாம்பை ஒத்த பட்டைக் கயிறு காணப்படுகிறது. ஆடையற்ற திறந்த மார்பின் மேல் முப்புரி நூலின் மங்கிய அடையாளம் காணப்படுகிறது. இதன் காதில் வட்டமான காதணியும், கணுக்காலில் வளையமும் காணப்படுகின்றன. கீழ் உடலை மறைத்து மெல்லிய துணியின் மடிப்புக்கள் இடையிலே காணப்படுகின்றன. இதன் கீழ்மடிப்பு உயர்த்தப்பட்ட வலக்காலின் கீழ் நிலத்தில் உள்ள இடக்காலின் கணுக்கால் வரை காணப்படுகிறது. மனிதனின் தலையில் கவசம் போன்ற ஒன்று பின்னோக்கி வளைந்து காணப்படுகிறது. இதில் உள்ள குதிரையின் தலை மனிதனின் கையின் பின்னுள்ள பாறையில் இருந்து வெளிப்படுவதாக உள்ளது. ஆனந்தக்குமாரசாமி "மகாராஜலீல நிலையில் இருக்கும் மனிதன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாறு கருத்தூன்றிய நிலையில் இருப்பதால் பக்கத்தில் இருக்கும் குதிரை அவன் பார்வையில் தெரியாதவாறு இருக்கிறது என்றார் (Comaraswamy 1910:132). ஆனால் வன்லொஹய்செல் டி லியூ என்பவர் மனிதனின் கையில் உள்ளது பாம்புவடிவத்தை ஒத்த கயிறு எனக் கூறுகிறார் (Van-Lohuizen-De-Leew 1979:330) (Li-6).
(படம்-6) R னியாவில் உள்ள சிற்பம் இசுறுமு Ap

Page 38
54 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையுட
ஆயினும் இச்சிற்பம் எந்த தெய்வத்தைப் பிரதிபலிக்கிறது என்பதையிட்டும், யாருடைய கலைமரபு என்பதையிட்டும் கலை வரலாற்றாசிரியர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கலாயோகி ஆனந்தகுமாரசாமி இந்தியக் கலைமரபின் உயர்ந்த செல்வாக்கைக்காட்டும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சிற்பம் இராமாயணத்தில் பாலகாண்டத்தில் வரும் கபில முனியின் உருவத்தைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார் (Coomaraswamy 1910:132). இக்கருத்தைப் பெஞ்சமின் றோலண்ட், சிமித் போன்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சிமித் இதன் காலத்தை கி.பி. 5ஆம் நூற்றாண்டு எனவும், வில்லியம் ஜோன் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனவும் கணித்துள்ளனர் (John 1922:131). பாக்கள் என்ற ஆங்கில நாட்டவர் இச்சிற்பம் கிறிஸ்துவுக்கு முற்பட்டதெனவும், இதன் கவர்ச்சித் தன்மையும், தலையில் இருந்து பின்னோக்கித் தொங்கும் குஞ்ச அமைப்பும் கிரேக்க சிற்பத்தை ஒத்ததெனவும் கூறுகிறார் (Parkar1909:542), பேராசிரியர் பரணவிதான இச்சிற்பத்தில் வரும் மனிதனை வேதக் கடவுளான பர்ஜனிஜவுடனும், குதிரையை அக்கினியுடனும் ஒப்பிட்டு கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குரிய இச்சிற்பத்தில் பல்லவ, சீயம் நாட்டுக் கலைமரபின் செல்வாக்கும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பெரேரா இச்சிற்பம் முழுக்க முழுக்க பெளத்த தெய்வமான அவலோகிதேஸ்வரர் கலைமரபை ஒத்ததென்பதற்கு ஆதாரமாக இலங்கை தென்னிந்தியச் சிற்பங்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார் (Paramavithana 1953 176-7). அண்மையில் இச்சிற்பம் பற்றி ஆராய்ந்தவர்-வொஹூம் சென் டி லியூ என்பர் இது ஐயனாருக்குரிய பல்லவர் காலக் கலைமரபுக்குரிய சிற்பம் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் காட்டி நிறுவியுள்ளபோதிலும் கலை மரபில் காணப்படும் வேறுபாட்டையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை (Van-LohuizenDe-Leew 1979:331).
இங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் கூடிய தொழில் நுட்பமும், அலங்காரத்தன்மையும் கொண்டது காதலர் என அழைக்கப்படும் சிற்பமாகும். இச்சிற்பம் இசுறுமுனியா ஆலயத்தில் கைப்பிடியுடன் கூடிய சுவரின் கீழ்ப்பாகத்தில் அலங்காரமற்ற ஆசனத்தின் மேல் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பது சென்ரிமீற்றர் உயரத்திற்குள் படைக்கப்பட்ட இப்புடைப்புச் சிற்பத்தில் உள்ள ஆணும், பெண்ணும் அருகருகே நாணத்துடன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். அதில் ஆணின் இடப்பக்க மடியில் அமர்ந்துள்ள பெண்ணின் உருவத்தை ஆணின் இடதுகை அணைத்தபடி காணப்படுகிறது. இவற்றின் அழகையும், கலைநுணுக்கத்தையும் சிறப்பாகச் சுட்டிக்காட்டிய கலைவரலாற்றாசிரியரான எலிசபெத் அவை அக்காலக் கலைஞர்களின் உயர்ந்த தொழில்நுட்பத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் எனக் ebLT (Elizabeth 1979:117)(Lib-7).

ஈழத் தமிழரின் கலை மரபு 55
(படம்-7) இசுறுமுனியாவில் உள்ள சிற்பம்
ஆயினும் இச்சிற்பம் பிரதிபலிக்கும் கருத்து, காலம், கலைமரபு என்பவைகளையிட்டு முன்னைய சிற்பத்தைப் போல் வேறுபட்ட கருத்துக்களே உள்ளன. ஆனந்தக் குமாரசாமி, கோகாட், எலிசபெத் போன்றவர்கள் இச் சிற்பத்தைக் குப்தக் கலைமரபுக்குரியதெனக் கூறி இது சுதந்திரமான காதலர்களைப் பிரதிபலிக்கின்றது என விளக்கம் கொடுத்துள்ளனர் (Paranavithana1953 176-7, Wickramasinghe 1958:49). 32beě airsöpTes 960TřigágomueTh அஜந்தாவில் உள்ள ஒவியத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறார். பரணவிதான இச்சிற்பம் குப்தக் கலைமரபுக்குரியது என்பதை ஏற்றுக்கொண்டாலும் ஆணின் அரசனுக்குரிய தோற்றமும், அவன் பின்னால் காணப்படும் கேடயமும் ஒரு போர் வீரனை நினைவுபடுத்துவதால் இது இலங்கையின் தேசிய வீரனான துட்டகாமினியின் மகன் சாலியாவையும், மருமகள் அசோகமாலாவையும் குறிக்கிறது எனக் கூறுகிறார். ஆனால் பசாம் என்ற அறிஞர் இச்சிற்பத்தைக் குப்தக் கலைமரபுடன் தொடர்புபடுத்துவதை விடப் பல்லவர் காலத்திற்குரிய மாமல்லபுரச் சிற்பக் கலைமரபுடன் ஒப்பிடுவதே பொருத்தம் எனக் கருதுகிறார்.

Page 39
56 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இங்குள்ள மூன்றாவது சிற்பத்தில் ஆண் காலுக்கு மேல் கால் போட்டு தன் இடைக்கையை அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணின் மடியில் போட்டு ஏதோ கூறுவது போன்ற பாவனையில் உள்ளது. இப்பெண்ணுக்கு அருகில் இன்னொரு பெண் காணப்படுகிறாள். அவர்களுக்கு அருகில் கைகட்டிய நிலையில் ஆண் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவங்களுக்குப் பின்னால் மறைந்த நிலையில் குள்ளமான இரு உருவங்கள் காணப்படுகின்றன (ULib-8).
(படம்-8) இசுறுமுனியாவில் உள்ள சிற்பம்
தமிழகத்தில் உள்ள இந்துக் கலைமரபு பற்றி ஆராய்ந்த கலை வரலாற்றாசிரியர்கள் பலரும் கலைமரபுக்குரிய காலம், வம்சம், மன்னன், கலை மரபின் தனித்துவம், பிற நாட்டுக் கலைமரபின் தாக்கம் என்பவற்றையிட்டு சில சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவித்திருந்தாலும், அவை தமிழகத்திற்குரிய கலை மரபை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தவை என்பதில் பொதுப்பட்ட கருத்தொற்றுமை கொண்டுள்ளனர். ஆனால் ஈழத்து இந்துக் கலை மரபு பற்றி ஆராயும் போது மட்டும் கலைமரபுக்குரிய நாடு, அவை வெளிப்படுத்தும் கருத்து, காலம் என்பதைத் தீர்மானிப்பதிலேயே பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இத்தனைக்கும் இவை அன்னிய நாட்டுக்குரிய கலைமரபு எனக் கூறுவதில் பெரும்பாலாரிடையே பொதுவான கருத்தொற்றுமை காணப்படுகிறது. இதற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று இக்கலைமரபுக்குரிய மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் அக்காலத்தில் இங்காட்டில் பரந்த அளவில் நிரந்தரமாக வாழவில்லை என்ற அடிப்படை நம்பிக்கைதான். அவ்வாறு இல்லாதிருக்குமானால் இந்தியக் கலைமரபில் இடம், வட்டாரம், பிரதேசம் என்ற அடிப்படையில் தனித்துவமான
 

ஈழத் தமிழரின் கலை மரபு 57
அம்சங்கள் தோன்றியதை ஏற்றுக் கொண்ட கலைவரலாற்றாசிரியர்கள் இலங்கைக் கலைமரபிலும் அதை ஆராய முற்பட்டிருப்பார்கள். அவ்வாறு ஆராயப்பட்டிருந்தால் முரண்பட்ட ஏனைய கருத்துக்களுக்கு மத்தியில்
பாரம்பரிய வரலாற்றுத் தொடர்பால் அங்கு தோன்றி வளர்ந்த பண்பாடு சமகாலத்தில் இங்கும் பரவியிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இதனால் எல்லா அம்சங்களும் சம அளவில் பரவியதெனக் கூறமுடியாது. உதாரணமாக தமிழகத்தில் கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்குடன் இருந்த சமண மதம் ஈழத்தில் வளரவில்லை. அதேவேளை ஈழத்தில் பெளத்த மதம் வளர்ந்த அளவிற்குத் தமிழகத்தில் குறைந்த அளவில் தானும் கிலைத்து கிற்கவில்லை. இந்த சமனற்ற வளர்ச்சிக்குப் புவியியல் அடிப்படையில் இரண்டும் வேறுபட்ட நாடுகளாக இருப்பது முக்கிய காரணங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. கலை மரபைப் பொறுத்தவரையிலும் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த மதம் சார்ந்த கலைகளின் கருத்து, கலைப்பாணி, தொழிநுட்பம் என்பன சமகாலத்தில் அல்லது காலம் தாழ்த்திச் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம் எனக் கருதுவதில் தவறில்லை. அதற்காக சமகாலத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கலைப்படைப்புக்களையும் தமிழகக் கலையின் பிரதியாக எடுத்துக் கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. தமிழகக் கலைமரபு ஈழத்திற்குப் பரவிய போது அதைப் படைத்தவர்கள் சுதேச நாட்டுக் கலைஞர்களாக இருந்தால் என்ன? தமிழ் நாட்டுக் கலைஞர்களாக இருந்தால் என்ன? அதில் ஈழத்திற்குரிய தனித்துவமான அம்சங்களும் இருக்கும் என்பதை இந்தியக் கலைமரபில் வட்டார அடிப்படையில் காணப்படும் தனித்தன்மைகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேற்கூறப்பட்ட மூன்று சிற்பங்களின் கலைமரபைப் பொறுத்து வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் அவை பல்லவர் காலக் கலைமரபுக்குரிய சிற்பங்கள் என்ற கருத்தே மேலோங்கிக் காணப்படுகிறது. இதற்கு இச்சிற்பங்களைக் கொண்டுள்ள பாறையின் தோற்ற அமைப்பு மாமல்லபுர சிற்பத் தொகுதியின் பாறை அமைப்பை ஒத்திருப்பது முக்கிய காரணமாகும்.
வெளிப்பாடாக இருக்கலாம். இலங்கைக்குரிய பெளத்த மதமும், அம்மதத்திற்குரிய மொழியும், எழுத்தும் வடஇந்தியாவிலிருந்து பரவியிருந்தாலும் அவற்றை எழுதப்பயன்படுத்திய பெளத்த குகைகளின் தோற்ற அமைப்பு தமிழகத்தில் இருங்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒற்றுமையுடையன. அதற்காக அவற்றைப் படைத்த மக்களைத் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களாக யாரும் கூறிக்கொள்வதில்லை. ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதி, நாகார்ச்சுனகொண்டா, பட்டிப்புரோலு ஆகிய

Page 40
58 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இடங்களில் அமைக்கப்பட்ட பெளத்த தூபிகள், விகாரைகள் மற்றும் புத்தரது ஜாதகக் கதைகளைச் சித்திரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் என்பவற்றின் அமைப்பு சிற்பங்களின் தோற்ற அமைப்பு, அவை வெளிப்படுத்தும் கருத்து என்பன சமகால இலங்கையுடன் நெருங்கிய ஒற்றுமை உடையனவாகக் காணப்படுகின்றன. அதற்காக அவற்றைப் படைத்த மக்களை ஆந்திர நாட்டிற்குரியவராக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இசுறுமுனியாவில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள பாறையின் தோற்றம் தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்தின் அமைப்பை ஒத்திருப்பதைக் காரணம் காட்டி அதைப்படைத்தவர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் பாறையின் தோற்ற அமைப்பிலுள்ள ஒற்றுமையை மட்டும் காட்டி இவற்றைத் தமிழ் நாட்டவருக்குரியதாகக் கூறுவதற்கு வேறு எந்தச் சான்றுகளும் இப்பாறையில் காணப்படவில்லை. அதேவேளை இப்பாறைக்குள் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்குரிய கால வேறுபாடுகளை நோக்கும் போது இயற்கையாக அமைந்த இப்பாறையின் தோற்றம் மாமல்லபுரப் பாறையின் தோற்றத்தை ஒத்த வகையில் வடிவமைக் கப்பட்டதன் பின்னர் அவற்றுக்குள் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டனவா அல்லது சிற்பங்கள் செதுக்கப்பட்டதன் பின்னர் இப்பாறையின் தோற்றம் வடிவமைக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் சில சிற்பங்கள் இயற்கை அழிவாலும், வடிவமைப்பு முடிவுறாத நிலையிலும் காணப்பட்டாலும், பாறையின் பெரும்பகுதி சரிவர வடிவமைக்கப்படாது அரைகுறைாயகக் காணப்படுகிறது. அத்துடன் பல்லவக் கலைமரபில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, காலத்தால் பல்லவருக்கு முற்பட்ட கோமுகிகள் போன்ற சிற்பங்கள் இப்பாறையில் காணப்படுகின்றன. இவற்றை கோக்கும் போது முதலில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையையே பின்னர் மாமல்லபுரப் பாறையின் அமைப்பை ஒத்த வகையில் வடிவமைக்க முற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இங்கு காணப்படும் மனிதனும் குதிரை முகமும் பல்லவக் கலைமரபில் வடிவமைக்கப்பட்ட ஐயனார் எனக் கூறப்படுகிறது. இதில் மனித உருவம் குந்தியிருக்கும் பாவனை, இதன் ஆடை, அணிகலன்கள், பூநூல் என்பன தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிப்பதுடன் இதையொத்த வடிவங்களிலேயே தமிழகத்திலுள்ள ஐயனார் சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக தென்னிந்தியாவில் அலம்பூர் நூதனசாலை, காஞ்சி கைலசநாதர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களைக் குறிப்பிடலாம். இதனால் இசுறுமுனி யாவில் உள்ள மனிதனும் குதிரை முகமும் கொண்டசிற்பத்தை ஐயனாருக்கு உரியதெனக் கூறுவது பொருத்தமாகத் தெரிகிறது. ஆயினும் இதன் கலை மரபை அப்படியே பல்லவக் கலைமரபின் பிரதிபலிப்பாகக் கூறுவது பொருத்தப்பாடாகத் தெரியவில்லை. ஏனெனில் பொதுவாக தமிழக ஐயனார் சிற்பங்களில் ஐயனாருக்கு இடப்பக்கம் வரும் குதிரை இசுறுமுனியாச் சிற்பத்

ஈழத் தமிழரின் கலை மரபு 59
தில் வலப்புறமாகக் காணப்படுகிறது. மேலும் இச்சிற்பத்தில் உள்ள ஐயனா ரின் முகபாவம், கவர்ச்சித்தன்மை, தலைக்கவசம், குதிரையின் வடிவமைப்பு சமகாலத் தமிழக ஐயனார் சிற்பங்களில் காணமுடியவில்லை.
இரண்டாவது சிற்பத்தைப் பலரும் பல்லவர் அல்லது குப்தக் கலை மரபுக்குரிய காதலர் சிற்பம் எனக் கூறுகின்றனர். ஆனால் இச்சிற்பங்களில் காணப்படும் தெய்வீக ஒளி, இவை இருக்கும் பாவனை, தலையலங்காரம், ஆண் தரித்திருக்கும் தடித்த பூநூல், இவற்றின் பின்புறமாகக் காணப்படும் திருவாசி என்பன இவை மனிதவடிவங்கள் அல்ல என்பதைக் காட்டுகின்றன. கலைப்புலவர் நவரட்ணம் ஆணின் பின்புறத்தோளில் தொங்கும் அம்பு அருச்சுனனுக்குப் பாசுபதம் கொடுக்கும் சிவ வடிவத்தைக் காட்டுவதாகக் கூறியுள்ள கருத்து பொருத்தமாகவே தெரிகிறது (Navaratnam 1964:13). எவ்வாறாயினும் இவற்றின் கலைமரபை பல்லவருடன் அல்லது குப்தருடன் தொடர்புபடுத்தும் போது இச்சிற்பங்களில் காணப்படும் பெண்ணின் களினத்தன்மை, இச்சை தூண்டும் உதடு, பருத்த உடம்பின் தடித்த இடுப்பும் சமகால இந்தியச் சிற்பங்களில் காணப்படாத அம்சங்களாகும். மூன்றாவது சிற்பத்தில் ஆண் தரித்திருக்கும் தடித்த பூநூல், ஆடை அணிகலன்கள், மகுடம், பின்னாலிருந்து சாமரை வீசும் உருவங்கள் என்பன ஒரு தெய்வத்திற்கிருக்கும் தன்மையை அப்படியே காட்டுகின்றன. இறைவனின் இடப்புறத்தில் கால்கள் மடிக்கப்பட்ட நிலையில் பீடத்தில் அமர்ந்திருக்கும் பெண்ணின் முகபாவம், இடுப்பில் காணப்படும் மேகலை, கைவளையல்கள் என்பன ஒரு பெண்தெய்வத்திற்குரிய அம்சத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. இதனால் இச்சிற்பத்தை வியாக்கியான மூர்த்தத்தில் உள்ள சிவனாகக் கருதுவது பொருத்தமாக இருக்கிறது. ஆயினும் இதன் கலை மரபை பல்லவருடன் தொடர்புபடுத்தும் போது பல வேறுபாடுகள் தெரியவருகின்றன. குறிப்பாக தமிழகச் சிற்பங்களில் காலைத் தொங்கவிட்ட நிலையில் காணப்படும் தோற்றம் இதில் கால் மடித்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும் சிவனின் உடலுறுப்புக்கள், முகபாவம், பெண்ணின் மகுடம், காதணி, முகபாவம் என்பன பல்லவக் கலைமரபில் வரும் சிவன், அம்மன் தோற்ற அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. அதேவேளை இவ் ஆணின் தோற்றம் முதலாவது சிற்பத்தில் வரும் ஐயனாரையும், பெண்ணின் தோற்றம் இரண்டாவது சிற்பத்தில் வரும் உமையின் தோற்றத்தையும் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றன. அதேவேளை மறைந்திருக்கும் குள்ள உருவங்கள் பெளத்த ஆலயங்களை அலங்கரிக்கும் பூதகணங்களின் கலை மரபை நினைவுபடுத்துகின்றன.
இங்த இடத்தில் 1958இல் தேவேங் திர எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இசுறுமுனியாவில் உள்ள மேலும் இரு புடைப்புச் சிற்பங்கள் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமாகும் (Devendra 1958:Figure.no.67). இவையிரண்டும் இரு வேறு வடிவங்களில் ஆனால் ஒரே கலைமரபில்

Page 41
60 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
செதுக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது சிற்பத்தில் அமைதியான தோற்றத்தில் காணப்படும் ஆசனத்தில் அமர்ந்த நிலையில் காணப்படும் ஆணினின் தலை வலப்புறமாகச் சற்றுச் சரிந்து காணப்படுகிறது. இதன் வலதுகை குந்தியிருக்கும் தோற்றத்தில் வலது முழங்காலைத் தொடும்படியாக உள்ளது. இடதுகை ஏதோ ஒரு பொருளை ஏந்திய நிலையில் மேல் நோக்கி உயர்ந்து காணப்படுகிறது(படம்-9).
(படம்-9) இசுறுமுனியாவில் உள்ள சிற்பம்
மற்றைய சிற்பம் இதே தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அதில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. முதலாவது சிற்பத்தில் இடதுகை மேலே உயர்த்திக் காணப்பட இச்சிற்பத்தில் அது நிலத்தில் ஊன்றியவாறு காணப்படுகிறது. அத்துடன் முதலாவது சிற்பத்தில் குந்தியிருக்கும் நிலைக்குப் பதிலாக இதில் இரு கால்களும் வலப்புறமாக மடிக்கப்பட்டுக் காணப்படுகிறது இச்சிற்பங்களின் முகபாவம், பூநூல், கைவளையல்கள் என்பன முன்னைய சிற்பங்களைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஐயனார் தோற்றத்தோடு பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றன(படம்-10).
 

ஈழத் தமிழரின் கலை மரபு 61
(படம்-10) இசுறுமுனியாவில் உள்ள சிற்பம்
இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள பாறையின் வெளிப்புறத் தோற்ற அமைப்பு ஆலயங்களில் உள்ள மாடங்களை ஒத்த வடிவங்களாக இருப்பதுடன் சிற்பத்தில் காணப்படும் அமைதியான தோற்றம், மகுடம், கை, கால்களில் அணியப்பட்டுள்ள வளையல்கள், இடுப்புக் கச்சாணம், பூநூல் என்பன இவை சுகாசன நிலையில் உள்ள சிவனின் சிற்பங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. இது போன்ற பாவனையை தமிழகத்தில் உள்ள சோழர் காலச் சிற்பங்களிலும், அஜந்தா ஒவியங்களிலும் ஓரளவு காணமுடிகிறது. ஆனால் தமிழகச் சிற்பங்களில் தொங்கிய நிலையில் காணப்படும் கால்கள் இவற்றில் ஆசனத்தில் மடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆயினும் இதன் பல்வேறு அம்சங்கள் மேலே விபரிக்கப்பட்ட இசுறுமுனியாச் சிற்பங்களை ஒத்துள்ளன.
கோபாலகிருஷ்ண ஐயர் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது இவை தமிழகக் கலைமரபுடன் சுதேசக் கலைமரபும் கலந்து செதுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறியிருந்தார்.
ஆனால் மேற்கூறப்பட்ட இசுறுமுனியச் சிற்பங்களைப் பெரும்பாலான கலைவரலாற்றாசிரியர்கள் பல்லவர் காலக் கலைமரபின் பிரதியாக அல்லது தமிழ் நாட்டவரால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களாகவே பார்த்துள்ளனர். ஆனால் பல்லவர் காலக் கலைமரபை தென்னிந்தியாவின் ஏனைய வம்சங்களுக்குரிய கலைமரபில் இருந்து வேறுபடுத்தும் அம்சங்களான நீண்ட கண்கள், தடித்த உதடுகள், முகம் நீண்டு அகலமாக இருத்தல், கை, கால் கெடிதாகக் காட்டப்பட்டிருத்தல், அணிகலன்கள் அதிகமின்றி மனிதனின் சொந்த உருவ இலட்சணங்களை வெளிப்படுத்தியிருத்தல், அவற்றில் காணப்படும் எளிமை, மென்மை என்பன இசுறுமுனியாச் சிற்பங்களில் அப்படியே இருப்பதாகக்

Page 42
62 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கூறமுடியாதிருக்கிறது. அதேவேளை பல்லவக் கலைமரபில் மட்டுமன்றி தென்னிங்தியக் கலை மரபிலேயே அதிகம் காணமுடியாத தடித்த உடலுறுப்புக்கள், நீண்ட சடாமுடி, மகர குண்டலங்கள், அதிக எண்ணிக்கையி லான அணிகலன்கள் மேற்கூறப்பட்ட சிற்பங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் சில அம்சங்கள் குறிப்பாக அகன்ற முகபாவம், தடித்த உடலுறுப் புக்கள், ஆடை அலங்காரங்கள் சமகால இலங்கைப் பெளத்தக் கலைமரபை ஒத்தவையாக உள்ளன. இதனாலேயே கலை வரலாற்றாசிரியர்கள் சிலர் இச்சிற்பங்களில் சிலவற்றை இலங்கை, தென்கிழக்காசியப் பெளத்த சிற்பங்களுக்குரிய கலைமரபாகப் பார்க்கின்றனர். இச்சிற்பங்கள் சிலவற்றில் புத்தர் அல்லது போதிசத்துவருக்குரிய முடியை வைத்தால் அவை பெளத்த சிற்பங்கள் எனக் கூறுமளவுக்கு ஒற்றுமை உடையன.
எனவே மேற்கூறப்பட்ட சிற்பங்களில் வேறுபட்ட பிற கலைமரபுகளின் செல்வாக்கு அல்லது தாக்கம் காணப்பட்டாலும் அவற்றில் காணப்படும் தனித்துவமான அம்சங்களின் அடிப்படையில் அவற்றை ஈழத் தமிழருக்குரிய கலைமரபாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் ஆந்திரக் கலை மரபில் வடஇந்தியாவில் உள்ள பாருட், சாஞ்சி பெளத்த கலைமரபின் செல்வாக்கும், தொடர்ச்சியும் காணப்படுகின்றன. ஆயினும் கலைமரபில் ஆந்திரப் பிரதேசத்திற்குரிய சுதேச தனித்துவம் காரணமாக அது ஆந்திர அல்லது அமராவதிக் கலைமரபென்றே அழைக்கப்படுகிறது (Amita Ray 1983). தமிழ் நாட்டிலுள்ள பல்லவர் காலச் சிற்பங்கள் பலவற்றில் அமராவதி பெளத்த சிற்பக் கலைமரபின் தாக்கமும், உரோமர் காலக் கலைமரபின் செல்வாக்கும் கலந்து காணப்பட்டாலும் அவற்றில் உள்ள சுதேச கலைமரபின் தனித்தன்மையால் பொதுப்பட அவை தமிழ் நாட்டுக்குரிய திராவிடக் கலைமரபென்றே அழைக்கப்படுகின்றன (Roland1953). ஈழத்தின் தொடக்க காலப் பெளத்த சிற்பங்கள் பலவற்றில் இந்தியக் கலைமரபின் தாக்கமும், சிலவற்றில் தென்கிழக்காசியக் கலைமரபின் செல்வாக்கும் கலந்து காணப்பட்டாலும் காலப்போக்கில் அவற்றில் சுதேச மக்கள் ஏற்படுத்திய மாற்றத்தால் அவை பெளத்த, சிங்களக் கலை மரபென்றே அழைக்கப்LGBássốngp6oT (Coomaraswamy 1956, Wijeyasekara 1962, Bandaranayake 1974). அப்படியானால் சிங்கள மக்களைப் போல் தமிழர்களும் தொன்று தொட்டு இங்காட்டில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதற்கு அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை ஆதாரம் காட்டும் வரலாற்றாய்வாளர்கள் எவ்வாறு பல்லவக் கலைமரபில் இருந்து பல அம்சங்களில் வேறு படும் இசுறுமுனியாச் சிற்பங்களை தமிழ் நாட்டவருக்குரிய கலைமரபெனக் கூறமுடியும். இக்கலைமரபில் காணப்படும் தனித்தன்மைகளை இங்காட்டு வரலாற்றோடு தமிழருக்குள்ள தொடர்ச்சியான வரலாற்றின் பின்னணியில் வைத்து நோக்கும் போது அவற்றை ஈழத் தமிழருடன் தொடர்புபடுத்துவதே பொருத்தமாகும்.

ஈழத் தமிழரின் கலை மரபு 63
இதற்கு மேலும் சான்றாக அண்மைக் காலத்தில் அநுராதபுரத்திலும், பிற வட்டாரங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடங்கள், சிற்பங்கள் என்பவற்றில் காணப்படும் தனித்துவமான அம்சங்களைக் குறிப்பிடலாம்.
அண்மையில் பெருநிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் போது ஈழத் தமிழர் வரலாற்றிற்கு வெளிச்சமூட்டும் பல புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (புஷ்பரட்ணம் 1993). அவற்றுள் இந்து மதம் தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கட்டிட, சிற்ப அழிபாடுகள், சிலைகள், விக்கிரகங்கள் என்பன சிறப்பாக குறிப்பிடத்தக்கன. பொதுவாக தமிழருக் குரிய பண்டைய கால ஆலயங்கள் தலைநகரங்கள், துறைமுகங்கள், வர்த்தக மையங்களில் அமைக்கப்பட்டன என்ற கருத்து நீண்டகாலமாக இருந்து வருகி றது. இக்கருத்திற்கு மத்தியில் எந்த வகையிலும் பண்டைய கால வரலாறு பற்றிய ஆய்வில் இதுவரை அதிகம் முக்கியத்துவப்படுத்திக் கூறப்படாத பெரு நிலப்பரப்பில் (வன்னிப் பிராந்தியத்தில்) கற்களால் அமைக்கப்பட்ட ஆலயத்துடன், கல்லாலான சிலைகள், செப்புத் திருமேனிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஈழத் தமிழர் கலை வரலாறு பற்றிய ஆய்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அவற்றில் பூநகரி வட்டாரத்தில் மண்ணித் தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவாலயமும், பல்லவராயன்கட்டு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய சிற்பமும் குறிப்பிடத்தக்கன.
இவ்வாலயம் 1989 ஆண்டு மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத் தில் சிதைவுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது (படம்-11).
(படம்-11) மண்ணித்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட
சிவாலயம்

Page 43
64 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கற்களையும், செங்கற்களையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயம் 21 அடி நீளமும், 12 அடி அகலமும் உடைய மிகச் சிறிய ஆலயமாகும். மூன்று தளங்களைக் கொண்ட இவ்விமானத்தின் குதம், சாலை, பஞ்சரம் என்பன முற்பட்ட சோழக் கலை மரபில் கட்டப்பட்ட ஆலயம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இக்கருத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழக சிற்பத்துறைப் பேராசிரியர் இராசு காளிதாஸ் ஏற்றுக் கொண்டாலும் இவற்றிலுள்ள தேவ கோஷ்டங்கள், தூண்கள், கோமுகி என்பவற்றின் அமைப்பும், கலைப் பாணியும் தமிழகக் கலைமரபில் இருந்து வேறுபடுவதால் இவ்வாலயம் சோழ, சுதேச கலைமரபு கொண்டு அமைக்கப்பட்டதெனக் கூறுவதே பொருத்தம் என்றார்.
இவ்வாலயம் அமைந்த மண்ணித்தலைக்கு தெற்கே பல்லவராயன் கட்டு என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் பிற தேவைக்காக மண் அகழப்பட்ட போது கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிற்பத்தை அவ்வூர் மக்கள் ஐயனார் எனக் கருதி அதற்கென சம்புவெளி என்ற இடத்தில் ஆலயம் அமைத்து சம்பு வெளி ஐயனார் என்ற பெயரில் தற்போது வழிபட்டு வருகின்றனர். மூன்றே முக்கால் அடி உயரமும், ஒரு அடி அகலமும் (தோள்மூட்டுப் பகுதி) கொண்ட இத் தெய்வச் சிலை ஒருவகை வெண்மையான கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக (இரு பரிமாண) செதுக்கப்பட்டுள்ளது. தாமரைப் பீடத்தில் நிற்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலையின் சில பாகங்கள் சிதைவடைந்து காணப்பட்டாலும், முக்கியமான பல அம்சங்களைத் தெளிவாகக் காண முடிகிறது. இதில் இரு கரங்களும் தாமரைப்பூவைப் பிடித்தவாறு இருப்பதைக் கொண்டு இது துரியசிற்பம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.இதை ஒத்த வடிவத்திலான சிற்பங்கள் தமிழகத்தில் பல்லவர், சோழர் கால ஆலயங்களிலும் காணப்படுகின்றன. இச்சிற்பத்தின் முழங்கால் வரை நீண்ட வட்டமான ஆடையமைப்பு, தலையின் பின்புறத்தில் உள்ள ஒளிவட்டம் என்பன சோழக் கலைமரபின் சாயலை ஒத்துக் காணப்படுகின்றன. ஆனால் அதன் முகபாவம், தடித்த உடு, உயரமான திருமுடி, பெரிதான மகரகுண்டலம் என்பன சோழக் கலைமரபில் இருந்து வேறுபட்டுத் தனித்தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றன. பேராசிரியர் இராசு காளிதாஸ் இதன் உயரமான மகுடத்தின் அமைப்பு தமிழகக் கலைமரபுக்கு அன்னியமானது எனக் குறிப்பிடுகிறார். தலையில் உள்ள மகுடத்தைத் தவிர ஏனைய அம்சங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது அதில் போதிசத்துவர் சிலையின் சாயல் தெரிகிறது (படம்12).

ஈழத் தமிழரின் கலை மரபு 65
(படம்-12) பல்லவராயன்கட்டில் கிடைத்த சூரிய சிற்பம்
கிழக்கு மாகாணத்தில் குருக்கள்மடம் என்ற இடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் மிக விசித்திரமான சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தியான நிலையில் உள்ள இச்சிற்பத்தின் மகுடம் மிக உயர்ந்ததாகவும், அதன் இருகைகளும் வழக்கத்திற்கு மாறாக இருப்போடு இணைந்த நிலையிலும் காணப்படுகின்றன. மேலும் இது நான்கு கைகளுடன் கூடிய சிலையாக இருக்கலாம் என்பதைத் தோள்முட்டுப் பகுதியில் உள்ள அடையாளங்கள் சுட்டிக்காட்டுகின்றன(படம்-13).
(படம்-13)
குருக்கள்மடத்தில் கிடைத்த சிலை

Page 44
66 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இதைப் பல்லவக் கலைமரபுக்குரிய விஷ்ணு சிலை எனக் கூறும் கோகாட் இதன் காலத்தை கி.பி.10ஆம் நூற்றாண்டு எனவும், நந்ததேவா கி.பி. 8ஆம் நூற்றாண்டு எனவும் கணித்துள்ளனர். ஆனால் இச்சிலையை விஷ்ணுவாகக் கொள்வதற்கோ அல்லது பல்லவக் கலைமரபுக்குரியதெனக் கூறுவதற்கோ எந்தொரு தனித்துவமான அடையாளமும் இச்சிலையில் காணப் படவில்லை. ஏனெனில் இது வடிவமைக்கப்பட்டு முடிவுறாத நிலையில் உள்ள சிலை என்பதை அதன் ஒவ்வொரு உடற் கூறுகளும் சுட்டிக் காட்டுகின்றன். இது ஒரு தெய்வச்சிலையாக இருக்கலாம் என்பதற்கு அதன் மகுடத்த்ைத் தவிர வேறு எந்த அங்க அடையாளமும் அதில் காணப்படவில்லை.
பொதுவாக விஷ்ணு சிலைகளின் இரு கைகளில் காணப்படும் சங்கு, சக்கரத்திற்குப் பதிலாக இச்சிலையில் அதன் கைப்பாதங்கள் வெளியே காட்டப்படாது கைப்பாதம் தொடங்கும் இடம் இடுப்புடன் ஒட்டிக் காணப்படுகிறது. இவ்வாறான அமைப்பில் தமிழகத்தில் எந்தவொரு விஷ்ணு சிலையும் காணப் படவில்லை. மேலும் இதன் உயர்ந்த மகுடம் வழக்கமாகத் தமிழக விஷ்ணு சிலையில் காணப்படும் மகுடங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். அத்துடன் இடுப்பிற்குக் கீழ் உள்ள பாகம் ஒரு தெய்வத்திற்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை. மாறாக நாட்டார் கலைமரபை அப்படியே வெளிப்படுத்துகிறது. இதனால் இச்சிலையை சுதேச கலைமரபை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உள்ளூர் தெய்வமாகக் கொள்வதே முற்றிலும் பொருத்தமாகத் தெரிகிறது.
தமிழக இந்துச் சிற்பக் கலைமரபில் அதி உன்னத நிலையில் வைத்துப் போற்றப்படுபவை இறைவன், இறைவியரது செப்புத் திருமேனிகளாகும். இவை தமிழகக் கலைஞர்களின் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கும், கலை நுணுக்கத்திற்கும் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறப்படுகின்றன. ஈழத்தில் கிடைத்த பெரும்பாலான செப்புத் திருமேனிகள் இந்திய சிற்ப விதிகளுக்கு உட்பட்ட நிலையில் வார்க்கப்பட்டவையாகும். ஆயினும் இங்கு கிடைத்த அனைத்துச் செப்புத்திருமேனிகளும் இந்தியா, குறிப்பாகத் தமிழக கலைமரபை அடிப்படையாகக் கொண்டு வார்க்கப்பட்டவை எனக் கூறமுடியாது.
ஈழத்தில் கிடைத்த செப்புத் திருமேனிகள் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் ஒரு பிரிவினர் இவையனைத்தும் தமிழகத்திலிருங்து கொண்டு வரப்பட்டவையென வாதிடுகின்றனர். இன்னொரு சாரார் தமிழகக் கலைமரபை அடிப்படையாகக் கொண்டு தமிழகச் சிற்பிகளால் ஈழத்திலேயே வார்க்கப்பட்டதாகக் கூறுகின்றனர். வேறு சிலர் இவற்றில் காணப்படும் தனித்துவமான அம்சங்களைச் சுட்டிக் காட்டி அவற்றைத் தமிழகக் கலைமர பைக் கற்ற சிங்களக் கலைஞர்களே வடித்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். இன்னும் சிலர் பெளத்த கலைமரபை அடிப்படையாகக்
கொண்டு வார்க்கப்பட்ட சிலைகள் என நியாயப்படுத்துகின்றனர். மேற்கூறப்பட்ட

ஈழத் தமிழரின் கலை மரபு 67
கருத்துக்கள் பெருமளவுக்குப் பொருத்தப்பாடாக இருப்பினும் தமிழகக் கலைமரபைக் கற்ற சிங்களக் கலைஞர்கள் மட்டும் ஈழத்தில் அவற்றை வடித்ததாகக் கூறுவது பொருந்துமாறில்லை. ஏனெனில் அவர்களால் வடிக் கப்பட்டவை இந்து விக்கிரகங்களாக இருப்பதால் அவற்றைப் பெரும்பாலும் வழிபடக் காரணமாக இருந்த ஈழத்து தமிழ் கலைஞர்களும் அவற்றை வடிவமைக்கப் பழக்கப்பட்டிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளை கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்ப் பெயர்களுடன் கூடிய வார்ப்பு நாணயங்களை வெளியிடும் மரபு ஈழத்தமிழருக்கு இருந்து வந்ததற்குப் போதிய சான்றுகள் உண்டு. அத்துடன் தமிழகத்திற்கு முன்னோடியாக நாணயங்களில் பெண்தெய்வங்களை வார்க்கும் மரபு ஈழத்தவருக்கு உண்டு என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இங்கிலையில் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற விக்கிரகக்கலை வார்ப்பு முறை ஈழத் தழிழருக்கும் இருந்திருக்கும் எனக் கூறுவதில் தயங்கவேண்டியதில்லை.
ஈழத்தில் கிடைத்த செப்புத்திருமேனிகளைப் பொதுப்பட ஆராய்ந்தால் அவற்றில் நான்கு அம்சங்களை அவதானிக்க முடிகிறது. ஒன்று தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை அல்லது தமிழகக் கலைமரபை அடியொற்றி ஈழத்தில் வார்க்கப்பட்டவை. இரண்டு தமிழகக் கலைமரபுடன் சுதேச கலைமரபும் கலந்த நிலையில் வார்க்கப்பட்டவை. மூன்று பெரும்பாலும் சுதேச கலைமரபை அடிப்படையாகக் கொண்டு வார்க்கப்பட்டவை. நான்கு பெளத்த இந்து கலைமரபுகளுக்கிடையிலான செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வார்க்கப்பட்டவை. இதற்கு உதாரணமாகச் சில விக்கிரகங்களை எடுத்துக்
தமிழ் நாட்டுச் சிற்பக் கலையின் உன்னத கலைப்படைப்புக்களில் ஒன்று அர்த்தாகாரீஸ்வரர் செப்புத்திருமேனியாகும். இதில் வலப்பக்கத்தில் சிவனும், இடப்பக்கத்தில் பார்வதியும் ஒன்றாக இணைந்து காணப்படுவர். வலப்பக்கத்தில் உள்ள சிவனின் தலை மகுடத்துடன் காணப்படும். சந்திரப் பிறை அணிசெய்யும். வலது காதில் சிவனுக்குரிய மகரகுண்டலம், கர்ப்பக் குண்டலம், சாதாரண குண்டலம் அமைந்திருக்கும். இடது புறத்தில் காணப்படும் பார்வதியின் தலையில் கருண்ட மகுடம் அணிசெய்யும். கெற்றியில் சிவனது கெற்றிக் கண்ணின் தொடர்ச்சியாகத் திலகம் காணப்படும். இடது கண்ணில் மையூசப்பட்டு விளங்கும். இடது காதில் "வாளிகா" எனப்படும் குண்டலம் இடம்பெறும். இடது கரத்தை கேயூரம் கங்கணம் போன்ற அணிகலன் அணிசெய்யும். இடது பக்கத்தில் பெண்ணுக்குரிய மார்பகம், அத்துடன் பெண் அணிகலன், இடுப்பில் மேகலை, காலில் பாதச் சலங்கை என்பன காணப்படும் (3.arturrootsobasoor&ust 1981: 549).
ஆனால் இலங்கையில் பல்லவர், சோழர் காலக் கலைமரபுக்குரியதென அடையாளம் காணப்பட்ட அர்த்தகாரீஸ்வரர் செப்புத் திருமேனிகளில் சில

Page 45
68 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
தமிழக சிற்பக்கலை அம்சங்களில் இருந்து பலவகையிலும் வேறுபட்டவையாக உள்ளன. இவற்றில் அநுராதபுரத்தில் வெரகல என்ற இடத்தில் கண்டுபிடிக் கப்பட்ட செப்புத்திருமேனியின் உருவம் முழு அளவில் ஒருபுறத்தே ஆணையும் மறுபுறத்தில் பெண்ணையும் கொண்டதாகச் செதுக்கப்பட்டுள்ளது (Wijesekara1984; 105). அதாவது தமிழகச் செப்புத்திருமேனிகளில் சிவனின் வலப்பக்க முகம், கை, கால், உடம்பு என்பனவும் உமையின் இடப்பக்க முகம், கை, கால், உடம்பு என்பனவும் ஒன்றாக இணைந்து முழு உருவமாகக் காட்சியளிக்க இங்கே ஆண், பெண் வடிவங்கள் தனித்தனி உருவங்களாக முதுகுப் பக்கத்துடன் ஒன்றாக இணைந்து காணப்படுகின்றன. மேலும் இச் சிற்பத் திருமேனியில் ஆணின் வலது கையில் தாமரை போன்ற உருவமும், இடது கையில் நேரான தண்டும் காணப்படுகிறது. இந்த அம்சங்களே பெண்ணின் இடது, வலது கரங்களிலும் காணப்படுகின்றன (படம்-14).
(படம்-14) அநுராதபுரத்தில் (வெரகல) கிடைத்த செப்புத்திருமேனி
கலைப்புலவர் கவரட்ணம் இச்சிற்பத் திருமேனியை கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குரிய அர்த்தாகாரீஸ்வரர் விக்கிரகம் எனக் கூறுகிறார் (Nava ratnam 1964). ஆனால் இது போன்ற வடிவமைப்புடைய விக்கிரகங்கள் தமிழ் நாட்டிலோ அன்றி இந்தியாவிலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகத்திற்குரிய பல அம்சங்கள் இதில் காணப்படவில்லை. இதனால் இவற்றை அர்த்த நாரீஸ்வரர் விக்கிரகமாகக் கொள்ளலாமா என்ற சந்தேகம் கூட எழுகின்றது.
 

ஈழத் தமிழரின் கலை மரபு 69
இருப்பினும் ஒரே சிலையில் ஆண், பெண் ஒன்றாக இணைந்திருப்பதை நோக்கும் போது இதற்கான கருப்பொருளை அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்திலிருந்து பெற்று புதுமையான முறையில் அவற்றை ஆக்க இலங்கைச் சிற்பிகள் முயன்றதை இச்சிற்பம் எடுத்துக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. இதற்கு மேலும் ஒரு சான்றாக அநுராதபுரத்தில் கிடைத்த இன்னொரு செப்புத் திருமேனியைக் குறிப்பிடலாம்.
இச்செப்புத்திருமேனி 1982ஆண்டு அநுராதபுரத்தில் அபயகிரி விகாரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது பிற பெளத்த விக்கிரகங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகும். 12.3 சென்ரி மீற்றர் உயரமுடைய இவ்விக்கிரகம் தற்போது கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விக்கிரகத்தை ஆராய்ந்த விக்கிரமசிங்கா (Wickramasinhe), விஜயசேகர (Wijesekara 1984) Q)55jéFräIGes (Lakdusinhe1990), Qsp) ou météo (Hettiarachchi) போன்றோர் இவ்விக்கிரகத்தை இந்துக் கடவுளான அர்த்த நாரீஸ்வரர் எனக் குறிப்பிட்டுள்ளனர் (UIrich Von Schroeder1992:88-9). இதில் தமிழ் நாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் போல் ஒரே பக்கத்தில் ஆண் பெண் உருவங்கள் இணைந்து காணப்படுகின்றன. இதன் மேலுள்ள கரங்கள் சங்கு, நாகம் போன்ற சின்னங்களைத் தாங்கியவாறு உள்ளன. ஆனால் வரதஹஸ்தத்தைக் குறிக்கும் கீழ் நோக்கிய இடதுகை எதைக் குறிக்கிறது என்பதை அடையாளம் காணமுடியாதவாறு வளைந்து காணப்படுகிறது. கழுத்தில் முத்தால் பதிக்கப்பட்டது போன்ற அட்டியல் காணப்படுகிறது. பலரும் இவ்விக்கிரகத்தை அர்த்தநாரீஸ்வரர் எனக் குறிப்பிட்டாலும் இதையொத்த வடிவம் எவையும் இதுவரை தமிழகத்திலோ SksboS GDisurresorT &sOLéæcidos)Go (Ulrich Von Schroeder 1992:88). இவ்விக்கிரகத்தைத் தமிழகத்தில் கிடைத்த விக்கிரகங்களுடன் ஒப்பிடும் போது இதன் கலைமரபில் உள்ள பல்வேறு அம்சங்கள் தமிழக அர்த்த நாரீஸ்வரர் கலைமரபில் இருந்து வேறுபடுவதைக் காணலாம். நடனமாடும் நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் வலது பக்கத்தில் இருக்க வேண்டிய ஆண் இதில் இடது பக்கத்திலும், இடது பக்கத்தில் இருக்க வேண்டிய பெண் வலது பக்கத்திலும் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. பெண்ணின் கூந்தல் சுருட்டிக்கட்டப்பட்ட நிலையிலும், ஆணின் கூந்தல் தொங்கவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன. ஆணின் முகம் செம்மையற்றதாகவும், பெண்ணின் முகம் செம்மையானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் ஆடை முழங்காலுக்கு கீழே'பரந்து காணப்படுகிறது. ஆண், பெண் உருவத்தைப் பிரித்துக் காட்டும் வண்ணம் முன்பக்கத்தில் தெளிவான இடைவெளி காணப்படுகிறது. இதில் முக்கியமான அம்சம் அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகத்தில் நாகச் சின்னத்துடன் சங்கும் இடம்பெற்றிருப்பதாகும். சங்கு விஸ்ணுவோடு தொடர்புடைய சின்னம். இந்த அம்சம் தமிழகத்தில் கிடைத்த

Page 46
70 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
அர்த்தகாரீஸ்வரர் விக்கிரகங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் பெண்தெய்வத்தில் வரும் மார்புக் கச்சை ஆணின் மார்பையும் மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை தமிழகத்தில் கிடைத்த விக்கிரகங்களில் காணப்படவில்லை. இதனால் இவ்விக்கிரகம் சாமுண்டி அல்லது காளியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறாயினும் அண்மையில் இவ்விக்கிரகத்தைப் பல்வேறு காலக் கணிப்புக்கு உட்படுத்திய ஐரோப்பியக் கலைவரலாற்றாசிரியர்களால் இது கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்ட இலங்கைக்குரிய தனித்துவமான கலைமரபு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
(LL.b-15).
(படம்-15) அநுராதபுரத்தில் (அபயகிரி) கிடைத்த செப்புத்திருமேனி
பெருநிலப்பரப்பில் தொல்லியல் மேலாய்வில் ஈடுபட்டிருந்த போது முல்லைத் தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட செழியாவில் என்ற இடத்தில் உள்ள புராதன கட்டிட அழிபாடுகளிடையே சில செப்புத் திருமேனிகள் கிடைக்கப் பெற்று அவை துணுக்காயில் உள்ள வினாயகர் ஆலயத்தில் ஒப்படைக் கப்பட்டதாக அங்கு வேட்டையில் ஈடுபட்ட சில பெரியவர்கள் எம்மிடம் கூறினார்கள். அதை உறுதிப்படுத்த 1993 இல் அவ்வாலயத்திற்குச் சென்று விசாரித்த போது கோயில் நிர்வாகிகள் அச்செய்தி உண்மை என்பதை உறுதிப்படுத்திய போதும் அச்செப்புத் திருமேனிகளைக் காட்ட மறுத்து விட்டனர்.
 

ஈழத் தமிழரின் கலை மரபு 71
ஆயினும் அவை கண்டெடுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட போது மக்கள் குடியிருப்பு அற்ற அந்த அடர்ந்த காட்டின் மத்தியில் புராதன காலத்திற்குரிய மிகப் பெரிய கட்டிடங்களின் கருங்கற் தூண்களும், செங்கற்களும், கைவிரல் பதித்த ஒடுகளும் குவிந்த நிலையில் அவ்விடம் மிகப்பெரிய மண்மேடுகளாகக் காட்சியளித்தன. எனக்குத் தெரிந்தவரை இது வடஇலங்கையில் உள்ள மிகப் பெரிய புராதன கட்டிட அழிபாடுகள் நிறைந்த இடமாக இருக்கலாம். இம்மேடுகளின் ஒர் மையத்தில் அகழ்வாய்வினை மேற்கொண்டபோது மேற்படையில் புதையுண்ட நிலையில் தெய்வச்சிலைகள் வைப்பதற்குப் பயன்பட்டதாகக் கருதக்கூடிய தெய்வ உருவங்களும், சிங்க உருவங்களும் செதுக்கப்பட்ட கருங்கற் பீடத்தையும் (படம்-16), விமானந்தாங்கிப் பொம்மையையும், சுருமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்தது.
(படம்-16) செழியாவில் காட்டுப்பகுதியில் கிடைத்த பீடம்
மீண்டும் 1994ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகபடுவான் என்ற இடத்தில் இடம்பெயர்ந்து புதிதாகக் குடியேறிய மக்கள் காடுகளை அழித்து புதிய குடிசைகளை அமைத்த போது மண்ணுக்குள் புதையுண்டிருந்த செப்புத் திருமேனியுடன் பல தொல்லியல் சின்னங்களையும் கண்டெடுத்த செய்தி பூநகரி பலநோக்கு கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தரால் எமக்குத் தெரிவிக்கப்பட்டது. இவற்றைப் பார்வையிடச் சென்ற போது அச்செப்புத் திருமேனியுடன் செழியாவில் மண்மேட்டிலிருந்து முடியப்பு என்னும் வேட்டைக் காரரால் கண்டெடுக்கப்பட்ட மேலும் இரு செப்புத் திருமேனிகள் எமக்கு கிடைத்தன. இவ்விரு செப்புத் திருமேனிகளின் தொன்மையும், கலைமரபும் இங்கு சிறப்பாகச் சுட்டிக்காட்டத்தக்கன.

Page 47
72 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இதில் முதலாவது செப்புத்திருமேனி பார்வதிக்குரியதென்பதை அதன் அங்க இலட்சணங்கள் மட்டுமன்றிப், பீடத்தில் உள்ள சாசனமும் உறுதிப்படுத்துகிறது. ஏழரைச் சென்ரி மீற்றர் உயரமும், முன்னுாறு கிராம் எடையும் கொண்ட இப்பார்வதி விக்கிரகம் தாமரைப் பீடத்தின் மேல் நிற்கும் நிலையில் (துவிபாங்க நிலையில்)வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வலது கரம் தாமரை மொட்டைத் தாங்கிய நிலையிலும், இடது கரம் அபயஹஸ்த நிலையிலும் உள்ளன. இதன் முடி மூன்று வட்டங்களாலான கருண்ட மகுடமாகும். இதன் கூந்தல் பிரத்தியோகமான முறையில் தொங்கவிடப்பட்டுள்ளது. பதக்கங்களுடன் கூடிய இரண்டு கழுத்தாபரணங்கள் மிக அலங்காரத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் கழுத்தில் உள்ள தாலி வலதுபக்க மார்பை ஒட்டியவாறு காணப்படுகிறது. இதன் முப்புரிநூல் இடது பக்கத் தோளை ஒட்டியவாறு தெளிவாகக் காணப்படுகிறது. இருப்பிற்கு கீழே ஒழுங்கான மடிப்புடன் கூடிய பீதாம்பரம் காணப்படுகிறது. இரு கரங்களிலும் உள்ள வீரக்கழல் இவ்விக்கிரகத்தில் காணப்படும் தனித்துவமான
அம்சம் எனலாம் (படம்-17).
(படம்-17) செழியாவில் கிடைத்த செப்புத்திருமேனி
 

ஈழத் தமிழரின் கலை மரபு 73
முறையான சிற்பவிதிகளுக்கு உட்பட்டு வார்க்கப்பட்ட இச்சிற்பத் திருமேனி தமிழகக் கலைமரபைக் குறிப்பாக சோழர் கால நடராசர் சிற்பத்துடன் வரும் பார்வதியை நினைவுபடுத்துகிறது. ஆயினும் இதில் சில தனித்துவமான அம்சங்களும் காணப்படுகின்றன. சோழர் காலச் செப்புத் திருமேனியில் வரும் புலி அல்லது சிங்க மேகலை இதில் காணப்படவில்லை. அத்துடன் இச்சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனத்தில் வரும் ஸ்வஸ்தி பூரீ பார்வதி என்ற பெயரில் பார்வதி என்ற பெயர் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளமை தனித்தன்மை உடையதாக இருப்பதுடன் இச்சிற்பத்தை சோழர் காலத்திற்கு அதாவது பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருத இடமளிக்கிறது. பொதுவாகத் தமிழகச் செப்புத் திருமேனிகளில் சாசனம் பீடத்தின் முன்பக்கத்திலேயே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்திரு மேனியில் வழக்கத்திற்கு மாறாகப் பீடத்தின் உட்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருப்பது புதுமையாக உள்ளது. இச்சிற்பத்தின் உயர்ந்த மகுடம், கூந்தலின் வடிவமைப்பு அணிகலன்கள் என்பவற்றில் உள்ள தனித்தன்மையை என்னிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத்துறை பேராசிரியர் இராசு காளிதாஸ் அவர் கள் ஈழத்தில் உள்ள பிற இந்து விக்கிரகங்களுடன் இவற்றை ஒப்பிட்டு இவ்விக்கிரகத்தை ஈழத்திற்குரிய தனித்துவமான கலை மரபாக இருக்க வேண்டும் எனக் கூறிய கருத்து இங்கு சிறப்பாகச் சுட்டிக் காட்டத்தக்கது.
இரண்டாவது செப்புத் திருமேனி ஏழு சென்ரி மீற்றர் உயரமும், இருநூறு கிராம் எடையும் உடையது. இதன் பின்புறத்தில் தேவநாகரி எழுத்தில் உள்ள சாசனத்தில் பூரீ லசுஷ்மி என்ற பெயர் இருப்பதைக் கொண்டு இது லசுஷ்மிக்குரிய விக்கிரகம் என்பது தெரிகிறது. இதில் லசுஷ்மியின் உருவம் தாமரைப் பீடத்தின் மேல் நிற்கும் நிலையில் (துவிபங்க நிலையில்) வார்க்கப்பட்டுள்ளது. இதன் வலது கரம் ஏதோ ஒரு பொருளைத் தாங்கிய நிலையில் காணப்படுகிறது (அதன் உருவம் உடைந்துவிட்டதால் அப்பொருளை அடையாளம் காணமுடியவில்லை). இடது கரம் அபயஹஸ்த நிலையிலும் உள்ளது. வலது காதில் அழகான மகர குண்டலமும், இடது காதில் சாதாரண குண்டலமும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன (படம்-18).

Page 48
74. தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-18) செழியாவில் (வன்னி) கிடைத்த செப்புத்திருமேனி
ஆனால் இதன் கூந்தல் குடும்பி நிலையில் காணப்படுகிறது. இந்த வடிவத்தில் எந்த ஒரு செப்புத் திருமேனியும் தமிழகத்தில் காணப்படவில்லை. பொதுவாக அபயஹஸ்த நிலையில் உள்ள இடது கரம் தமிழகச் சிலைகளில் இடுப்பிலிருந்து சற்று விலகி கீழ்நோக்கிக் காணப்படும். ஆனால் இந்த விக்கிரகத்தில் அது தொங்கிய நிலையில் இருப்பை ஒட்டிக் காணப்படுகிறது. இடுப்பிற்கு கீழேயுள்ள ஆடையலங்காரம் தமிழகக் கலைமரபில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. தமிழகத்தில் கிடைத்த செப்புத்திருமேனிகளில் பெரும்பாலும் சாசனம் பீடத்தில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இவ்விக்கிரகத்தில் இடுப்பிற்கு கீழே அதன் பின்பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதுவும் மேலிருந்து கீழாக எழுதப்படாது கீழிருந்து மேலாக (தேவிழரீ) எழுதப்பட்டுள்ளது. இதில் தெளிவாக உள்ள மகர குண்டலம் போன்ற அம்சங்கள் இது பூரீதேவிக்குரிய விக்கிரகம் என்பதை உறுதிப்படுத்தினாலும், இதன் கூந்தல் மற்றும் ஆடையமைப்பு நாட்டார் கலைமரபுக்குரியதாகக் காணப்படுகிறது. இந்த அம்சங்கள் இவ்விக்கிரகம் சுதேச கலைமரபை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலேயே வடிவமைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
இதுவரை கூறப்பட்ட புடைப்புச் சிற்பங்கள், சிலைகள், செப்புத் திருமேனிகள் என்பவற்றிற்குரிய புகைப்படங்களை கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழகத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டிருந்த வேளையில் தமிழகத்தின்
பண்டைய காலக் கலைமரபு பற்றிய ஆய்வில் ஆழ்ந்த புலமையுடைய தமிழ்ப்
 

ஈழத் தமிழரின் கலை மரபு 75
பல்கலைக்கழகச் சிற்பத்துறைப் பேராசிரியர் இராசு காளிதாஸ், மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் ஜெ.சேதுராமன், இந்திய மத்திய, மாநிலத் தொல்லியல் துறை ஆய்வாளர்களான கலாநிதி சு. இராசகோபால், க. வேதாசலம், க.இராசவேலு மற்றும் தமிழகத்தின் தற்போதைய தலைசிறந்த கலைவரலாற்றாசிரியராகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தமிழ் நாடு இராசமாணிக்கனார், வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் ஆகியோருக்குக் காட்டி அவர்கள் கருத்தைக் கேட்ட போது அவர்கள் இவற்றில் ஒன்றைத் தானும் தமிழகக் கலைமரபின் பிரதியாகவோ அல்லது தமிழகத்தின் முழுமையான செல்வாக்கிற்கு உட்பட்ட கலை வடிவமாகவோ பார்க்கவில்லை. ஒரு சில சிற்பங்களில் தமிழகக் கலைமரபின் மேலோட்டமான சாயல் காணப்பட்டாலும், பல அம்சங்களில் தமிழகக் கலைமரபில் இருந்து வேறுபடுவதால் இவற்றை ஈழத் தமிழருக்குரிய தனித்துவமான இந்துக் கலைமரபாக எடுத்துக் கொள்வதே பொருத்தம் என்பது அவர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
இங்கே ஈழத்து ஆய்வாளர்கள் பலரும் இங்கு தோன்றி வளர்ந்த பண்டைய கால இந்துக் கலை மரபை முற்றும் முழுதாக தமிழ் நாட்டவருக்குரிய கலையாகப் பார்க்கும் போது, தமிழ் நாட்டுக் கலைவரலாற்றாசிரியர்கள் அவற்றில் உள்ள தனித்துவத்தைச் சுட்டிக் காட்டி அவற்றை ஈழத் தமிழருக்குரிய கலை மரபாகப் பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் ஈழத்து இந்துக் கலை மரபு இன்னும் சரிவர ஆராயப்படவில்லை என்பதை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன. தமிழக ஆய்வாளர்கள் ஈழத்தில் உள்ள கலைகளை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள சில கலைவடிவங்களையும் ஈழத் தமிழருக்குரிய கலைமரபாகவே பார்க்கின்றனர். இதற்கு உதாரணமாக தமிழகத்தில் வேதாரணியத்தில் உள்ள சில சிற்பங்களைக் குறிப்பிடலாம். இங்குள்ள ஆலயத்தில் ஈழத் தமிழருடன் தொடர்புடைய 16-18ஆம் நூற்றாண்டுக்குரிய சில கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றில் வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், யாழ்ப்பாணம் ஆகிய வட்டாரங்களுக்குரிய ஊர்ப் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அவ்வூரைச் சேர்ந்தவர்கள் அவ்வாலயத்திற்குச் செய்த திருப்பணி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில கல்வெட்டுக்கள் ஆலயத்தின் கட்டிட, சிற்பங்களை ஆக்கியோருடன் தொடர்புடையனவாக உள்ளன. தமிழகக் கலைவரலாற்றாசிரியர்கள் சிலர் இவ்வாலயத்தின் கலைமரபில் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி இவற்றைத் தமிழக, ஈழக் கலைமரபு என வேறுபடுத்தி ஆராய்ந்துள்ளனர். உதாரணமாக இங்குள்ள வீணையில்லாத சரஸ்வதி சிற்பம் ஒன்று ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைத் தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் காணமுடியவில்லை. இது ஈழத்தவருக்குரிய தனித்துவமான கலைமரபாகவே அவர்களால் கோக்கப்படுகிறது.

Page 49
76 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
ஈழத் தமிழருக்குரிய வரலாற்றின் பல பரிணாமங்களை கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து தொட்டுச் செல்லும் போக்கு ஆய்வாளர்கள் பலரிடையே காணப்படுகிறது. இதற்கு பாண்டியரின் படைத் தளபதிகளாக வந்த ஆரியச்சக்கரவர்த்திகள் தமிழகத்தில் பாண்டிய வம்சம் வலிமை குன்றிய போது அதைப்பயன்படுத்தி கி.பி.13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட தமிழ் அரசை அமைத்ததே காரணமாகும். இந்த அரசே கி.பி. 17ஆம் நூற்றாண்டுவரை வடஇலங்கையின் பெரும்பகுதியைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது. இந்த அரசு தனது அரச இலட்சனையாக காளையையும், சேது என்ற வாசகத்தையும் தமது கொடிகளிலும், கல்வெட்டுக்களிலும், அரச ஆவணங்களிலும் பயன்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாகத் தமிழ் நாட்டு வம்சங்கள் இன்னொரு காட்டை வென்று ஆட்சி அமைக்கும் போது தமது அரச இலட்சினையை அல்லது வெற்றி கொள்ளப்பட்ட நாட்டிற்குரிய இலட்சினையைத் தமது நாணயங்களில், கல்வெட்டுக்களில் பொறிப்பது வழக்கம். இங்கே அரசமைத்த ஆரியச் சக்கரவர்த்திகள் பாண்டியர் சார்பாகப் படையெடுத்து வந்து அரசமைத்த போதும் அவர்கள் சமகாலத்தில் பாண்டியர் தமிழகத்தில் பயன்படுத்திய மீனை அரச இலட்சினையாகப் பயன்படுத்தவில்லை. மாறாக காளையைத் தமது இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளனர். இதைக் கலிங்க வம்சத்திடமிருந்து பெற்றதாகக் கூறும் மரபு காணப்படுகிறது (இந்திரபாலா 1970). ஆனால் இவ்வரசு தோன்ற முன்னரே வடஇலங்கையில்
பொறிக்கப்பட்டிருப்பதால் அவ்வரசை வெற்றி கொண்டதன் நினைவாகவே ஆரியச்சக்கரவர்த்திகள் தமது நாணயங்களிலும் காளையைப் பொறித்தனர் எனக் கருதலாம் (புஷ்பரட்ணம் 2001). சமகாலத்தில் தென்னிந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்துக் கல்வெட்டுக்களிலும் "ஸ்வஸ்தி ழறி" அல்லது சித்தம் என்ற சொல் மங்கல மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்து மன்னர்கள் மட்டும் இதற்குப் புறநடையாகத் தாம் வெளியிட்ட கல்வெட்டுக்களில் "சேது" என்ற சொல்லை மங்கல வாக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். இவை ஈழத் தமிழர் பண்பாட்டில் தனித்துவமான போக்கு இருந்ததற்குச் சிறந்த சான்றுகளாகும். இத்தனித்துவம் இவ்வரசு காலக் கட்டிட, சிற்பக் கலைகளிலும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இக்காலத்திற்கு உரியதெனக் கருதப்படும் சிற்பக்கலைகள் பற்றி ஆராய்ந்த பலரும் அவை சோழ, பாண்டிய, விஜயநாயக்கர் காலக் கலை மரபுக்கு உரியவை என்ற முடிவுக்கே வந்துள்ளனர். பொதுவாகத் தமிழத்தில் தோன்றிவளர்ந்த கலைமரபு சமகாலத்தில் ஈழத்திலும் செல்வாக்குச் செலுத்திய தென்றே கூறப்பட்டு வருகிறது. அவற்றின் பின்னணியில் வைத்து யாழ்ப்பாண அரசு காலக் கலைமரபு பற்றிக் கூறிய கருத்தை நோக்கும்போது பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

ஈழத் தமிழரின் கலை மரபு 77
யாழ்ப்பாண அரசு காலத்தில் தமிழகத்தில் சோழ அரசு மறைந்து விட்டது. பாண்டிய அரசும் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் அவர்கள் காலக் கலைமரபு தொடர்ந்தும் செல்வாக்குப் பெற்றதெனக் கூறமுடியவில்லை. மாறாக இக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த விஜயநகரக் கலைப்பாணியே செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்டது. இதில் முற்பட்ட சோழ, பாண்டியக் கலைப்பாணியின் தொடர்ச்சி காணப்பட்டாலும் பல தனித்துவமான அம்சங்களும் உண்டு. அதனாலேயே அக்காலக் கலைமரபு விஜயநகரப் பாணி என அழைக்கப்படுகிறது. இங்கே யாழ்ப்பாண அரசு காலச் சிற்பங்களை சமகாலத்தில் அதிகம் பயன்பாட்டிலில்லாத சோழர், பாண்டியர் கலைமரபுக்குரியதெனக் கூறும் போது இக்கலைகளைப் படைத்த சிற்பிகள் தமிழ் காட்டிலிருந்து வந்தவர்களா அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் வடிவமைக்கப்பட்டனவா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தால் ஏன் சமகாலத்தில் அங்கு செல்வாக்குடன் இருந்த விஜயநகரக் கலைமரபை கைவிட்டு முற்பட்ட கலைமரபைப் பின்பற்றினார்கள் என்பது புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த சிற்பிகளே இவற்றைச் செதுக்கினார்கள் என்றால் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக இங்கு சோழ, பாண்டியக் கலைமரபில் கலைகளை வடிக்கும் மரபு வளர்ந்தற்கு உறுதியான சான்றுகள் உண்டா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதேவேளை இவை சோழர், பாண்டியர் கலைப்பாணிக்குரியதாக இருந்தால் அவை ஏற்கனவே இங்கிருந்த ஆலயங்களில் வைத்து வழிபடப்பட்ட சிலைகளே யாழ்ப்பாண அரசு காலத்திலும் ஆதரிக்கப்பட்டனவா என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியுள்ளது. இச்சங்தேகங்கள் தெளிவு பெறவேண்டுமாயின் யாழ்ப்பாண அரசு காலத்திற்குரியதாகக் கூறப்படும் அனைத்துச் சிற்பங்களுக்குமுரிய காலத்தைச் சரிவர உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் அவற்றின் கலைமரபை சமகாலத் தமிழகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும். அங்கிலையில் இச்சிற்பங்கள் பற்றிய முன்னைய கருத்துக்கள் மறுதலிக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
நாணயங்கள் காட்டும் கலைமரபு
ஒரு அரச வம்சத்தின் அல்லது அதன் ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களின்
O ம், மத நம்பிக் ம், அவை தொடர்பான e அறிய உதவும் நம்பகரமான வரலாற்று மூலாதாரங்களில் நாணயங்களுக்கு முக்கிய இடமுண்டு. நாணயங்களை வரலாற்றாய்வுக்குப் பயன்படுத்தும் மரபு ஐரோப்பியரிடையே பதினெட்டாம் நூற்றாண்டளவில் உணரப்பட்ட்ாலும், இந்தியாவில் அதிலும் குறிப்பாக இலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே ஓரளவு ஏற்பட்டதெனக் கூறலாம். ஒரு நாட்டில்

Page 50
78 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
அல்லது வட்டாரத்தில் சுதேச நாணயங்கள் மட்டுமன்றி, வணிகத்தொடர்பால் அயல் நாட்டு நாணயங்களும் புழக்கத்தில் இருந்து வருவதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. இதில் அயல் காட்டு நாணயங்கள் பெரும்பாலும் அவை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கும், அயல் நாடுகளுக்கும் இடையில் இருந்திருக்கக்கூடிய அரசியல், வர்த்தகத் தொடர்புகளை அறியவே பெரிதும் உதவுகின்றன. சுதேச நாணயங்கள் அவை கண்டெடுக்கப்பட்ட வட்டாரத்தின் அல்லது அந்த நாட்டில் வாழ்ந்த மக்களின் மொழி, எழுத்து, சமயங்கள், தெய்வங்கள், தெய்வவடிவங்கள், அவற்றின் கலை மரபுகள் போன்ற அம்சங்களைக் கால அடிப்படையில் எடுத்துக்கூறுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அண்மைக் காலத்தில் இலங்கைத் தமிழரின் மத வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் சிலர் இலங்கையில் கிடைத்த நாணயங்களையும் ஒரு சான்றாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆயினும் கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் புழக்கத்திலிருந்த அனைத்து தமிழ் நாணயங்களும் தமிழகத்தில் இருந்து வந்தவை என்ற கண்ணோட்டத்திலேயே அவற்றை ஈழத்து இந்துமத வரலாற்றுடன் இணைத்துப் பார்த்துள்ளனர். இவை நாணயங்கள் வெளியிட்ட அரசவம்சத்தின் அல்லது அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களின் சமய நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாமே தவிர, அவை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்த மக்களின் சமய நம்பிக்கையாகக் கொள்வது தப்பான முடிவையே தருவதாகும். இங்கிலையில் பண்டு தொட்டு இலங்கைத் தமிழர்கள் நாணயங்கள் வெளியிட்டு வந்ததற்கான சான்றுகள் அண்மைக்கால ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டிருப்பது அவை ஈழத் தமிழரின் மத வரலாற்றிற்கு மட்டுமன்றி, அவர்களின் பூர்வீக வரலாற்றுக்கு புது வெளிச்சம் ஊட்டும் சான்றுகளாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை (புஷ்பரட்ணம் 1998, 1999, 2000, 2001).
இந்தியாவில் நாணயங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வட்டாரத்தின், ஒரு அரசின் அல்லது ஒரு காலப்பகுதியின் சமய வரலாற்றை syTub (UTig rési LaTavioTasis asT6TUGbépgi (Sama 1990, Mansuhlal 1968, நாகசாமி 1992, சீதாராமன் 1998). இலங்கையைப் பொறுத்தவரை அதன் பொதுவான வரலாறு அல்லது அதன் சமய வரலாறு பற்றிய ஆய்வில் இங்கு கிடைத்த நாணயங்களையும் ஒரு சான்றாகப் பயன்படுத்தியுள்ளனர் (Parkar 1981:459-521, சிவசாமி 1975:32-37, பத்மநாதன் 1980, சிற்றம்பலம் 1995:398-408). இங்கிலையில் இலங்கைத் தமிழர் வெளியிட்ட நாணயங்களை வைத்து இலங்கைத் தமிழருக்குரிய மதத்தையும், கலையையும் பார்ப்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கம்பகத்தன்மை வாய்ந்த வரலாற்று ஆய்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஈழத் தமிழரின் கலை மரபு y
இந்திய நாணயங்கள் பற்றி ஆராய்ந்தோர் அவற்றில் முந்நூறுக்கு மேற்பட்ட சின்னங்கள், குறியீடுகள் இருப்பதாகக் கணித்துள்ளனர் (Mansu hlal 1968). அவற்றுள் பெரும்பாலானவற்றின் தொடக்கம் ஹரப்பா நாகரீக கால முத்திரைகளுடனும், இந்து சமயத்துடனும் தொடர்புடையவையாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுட் பல பிற்காலத்தில் பெளத்த, சமண மதங்களுக்குரிய சின்னங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன (Sama1990). வடஇந்திய, தென்னிந்திய நாணயங்களில் வரும் சமயச் சின்னங்கள் பற்றி ஆராய்ந்த மன்சுக்லால் பெளத்த, சமண, இந்து மதங்களுக்குப் பொதுவான பன்னிரண்டு சின்னங்கள் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு மதத்தில், குறிப்பிட்ட ஒரு தெய்வத்துடன் தொடர்புடைய சின்னம் பிற மதத்திற்குரிய தெய்வங்களுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது. இதனால் நாணயங்களில் உள்ள சின்னங்களை வைத்து தெய்வங்களை அடையாளம் காணும் போது அவற்றோடு தொடர்புடைய பிற சின்னங்களையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர் வெளியிட்ட நாணயங்களில் காணப்படும் சமயச் சின்னங்களுள் சிவலிங்கம், நந்திபாதம், நந்தி, காளை, திரிதலம், அம்பு, மழு, வேல், மயில், சேவல், பூறிவத்ஸ, லசுஷ்மி, தாமரை, யானை, ஆமை, மீன், குதிரை, சங்கு, சக்கரம், வேலியிடப்பட்ட மரம், சுவஸ்திகா, சந்திரன், துரியன் என்பவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை சைவ, வைஷ்ணவ சமயங்கள் இலங்கைத் தமிழர்களுடன் நன்கு வேரூன்றி இருந்ததைக் காட்டுகின்றன. இச்சின்னங்களுள் பெரும்பாலானவை சமகால இந்திய நாணயங்களில் குறிப்பாகத் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டே இதுவரை காலமும் ஈழத்தில் கிடைத்த கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் நாணயங்கள் அனைத்தையும் தமிழ் காட்டிலிருந்து வந்ததாக நியாயப்படுத்தினர். ஆனால்
அவற்றில் இடம்பெற்றுள்ள சமயச் சின்னங்களின் வடிவமைப்பு, நாணயங்களில் சமயச் சின்னங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவை வெளியிடப்பட்ட காலம் என்பவற்றில் உள்ள வேறுபாடுகளை நன்கு ஆராய்ந்தால் ஈழத்தமிழர் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து நாணயங்களை வெளியிடும் மரபைக் கைக்கொண்டிருந்தனர் என உறுதியாகக் கூறமுடிகிறது. இதில் ஈழத் தமிழர் நாணயங்களின் கலைமரபுக்கும், தமிழக நாணயங்களின் கலைமரபுக்கும் இடையிலான வேறுபாட்டிற்குச் சில சமயச் சின்னங்களை மட்டும் உதாரணமாக எடுத்து ஆராயலாம்.
குறிப்பிடத்தக்கது. இது சிவனின் வாகனமான நந்தியைக் குறிப்பதால் நாணயங்களில் இச்சின்னம் சிவ வழிபாட்டை முக்கியப்படுத்திக் காட்டுவதாகக்

Page 51
80 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கூறப்படுகிறது. இம்மரபு ஈழத் தமிழர் காணயங்களில் முதன் முதலாக கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு அரசமைத்த ஆரியச் சக்கரவர்த்தி மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டதென்ற கருத்து நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கு யாழ்ப்பாணத்தில் அரசமைத்த மன்னர்களுக்கும் காளையை அரச இலட்சினையாகப் பயன்படுத்திய கலிங்க வம்சத்து மன்னர்களுக்கும் இடையிலான தொடர்பே காரணம் என எடுத்துக் கூறப்பட்டது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே ஈழத் தமிழர் தாம் வெளியிட்ட நாணயங்களில் காளையை முக்கிய சின்னமாகப் பொறித்துள்ளனர் என்பதை சான்றாதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளன. கி.மு. 3-2ஆம் நூற்றாண்டில் இருந்து வெளியிடப்பட்ட தமிழர் பெயர் பொறித்த நாணயங்கள் பல தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலும், வடஇலங்கையில் கந்தரோடை, உடுத்துறை, பூநகரி போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன. இவ்வகை நாணயங்கள் சிலவற்றில் தமிழ்ப் பெயர்களுடன் காளை, நந்திபாதம், "சிவ" என்ற பெயர்களும் காணப்படுகின்றன (Bopearachchi 1999, Pushparatnam 2001: 1-12). Gayqa uSODLOČILSONLluu நாணயங்கள் சமகாலத்தில் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்ததற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. அதிக எண்ணிக்கையில் இவ்வகை நாணயங்கள் ஈழத்தில் கிடைத்திருப்பதை கோக்கும் போது இவை இலங்கைக்குரிய தனித்துவமான அம்சம் என உறுதியாகக் கூறலாம். இங்காணயங்களில் வரும் காளை உருவத்தை ஒத்த வடிவம் சமகாலத்தில் சங்ககால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் காணப்படுகிறது. ஆயினும் ஈழத்து நாணயங்களில் உள்ள காளை வடிவம் இந்நாட்டுத் தமிழருக்குரிய தனித்துவமான கலைமரபை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்ாகாணயங்களை வடிவமைக்கப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்களால் பதிக்கப்பட்ட உருவம் கொண்ட களிமண் தட்டுக்கள் ஈழத்திலேயே பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Bopearachchi 1999: 106-8, Plate. 23-4, Nos. K14-K31). (&oyo SHŘEBETao நாணயங்களில் காளை உருவம் பொறிக்கப்பட்டாலும் அவை பெரும்பாலும் நிற்கும் நிலையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன (Krishnamurthy 1997:Plate.1.-19. Nos. 1-253). GOTTGö SFLOGETTQo FF2ğšgfigir r5rGoTurfa5cficò இவை நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இவையும் ஈழத்திலேயே வார்க்கப்பட்டன என்பதை அவற்றிற்குரிய சுடுமண் அச்சுக்கள் இங்கு கிடைத்திருப்பதைக் கொண்டு 2 gigslucess gpiq&lpg) (Bopearachchi 1999: 106-8, Plate. 23-4, Nos. K14-K31).

ஈழத் தமிழரின் கலை மரபு 81
சங்க காலத்தில் சோழர், பாண்டியர், சேரர், மலையமான் ஆகிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளை பிற சின்னங்களுடன் இடம் பெற்றாலும் அதைவிட அம்மன்னர்களின் குலமரபுச் சின்னமே முக்கிய அம்சமாக நாணயங்களின் பின்புறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாண்டியருக்கு மீனும், சோழருக்குப் புலியும், சேரருக்கு அம்பும் வில்லும், மலையமானுக்கு ஆறும் குலமரபுச் சின்னமாக அவர்கள் வெளியிட்ட நாணயங்களை அலங்கரிக்கின்றன. ஆனால் ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களில் பிற சின்னங்களை விடக் காளையே முக்கிய சின்னமாக நாணயத்தின் முன்புறத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக நோக்கத்தக்க இன்னொரு அம்சம் இவ்வகை நாணயங்களை வெளியிடுவதில் சிங்கள மன்னர்களுக்கும், ஈழத்து தமிழ் மன்னர்களுக்கும் இடையே பொதுவான நாணய மரபு பின்பற்றப்பட்டிருப்பதாகும். குறிப்பாக நாணயத்தின் பின்புறத்தில் விளிம்பை ஒட்டியவாறு நான்கு கோடுகளும் அதற்குள் வட்டமும், வட்டத்திற்குள் நான்கு புள்ளிகளும் உள்ளன. இது ஈழத்து நாணயங்களுக்கு மட்டும் உரிய தனித்துவமான அம்சம். அதே வேளை நாணயத்தின் முன்புறத்தில் சிங்கள மன்னர் தம் இனத்தைக் குறிக்கச் சிங்கத்தையும் (படம்-19), தமிழர் தம் மத நம்பிக்கையைக் குறிக்க காளையையும் (படம்-20) வடிவமைத்துள்ளனர்.
(படம்-19) சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயம்

Page 52
82 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-20) தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயம்
சங்க காலத்தை அடுத்துத் தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் வெளியிட்ட நாணயங்களில் காளை பயன்படுத்தப்பட்டாலும், எல்லாக் காலத்திலும், எல்லா நாணயங்களிலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறமுடியாது. ஆனால் ஈழத் தமிழர் வெளியிட்ட, பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் உரிய நாணயங்களில் காளை உருவமே முக்கிய சின்னமாக இடம்பெற்றது. அவற்றுள் கி.பி.10-13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டதாகக் கணிப்பிடப்பட்ட நாணயங்களில் முப்பதுக்கு மேற்பட்ட தோற்றத்தில் காளை உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது (புஷ்பரட்ணம்1999). இதில் உள்ள காளையின் உயர்ந்த ஏரி, நீண்ட கழுத்து, சிறிய முகத்துடன் கூடிய நீண்ட கொம்புகள் என்பவை சமகாலத் தமிழக, இந்திய நாணயங்களில் வரும் காளைகளின் தோற்றத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை. இவற்றை ஈழத்தமிழருக்குரிய தனித்துவமான கலைவடிவமாகக் கொள்ளலாம். இதில் மேலும் சிறப்பாக கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் இக்காளை உருவங்கள் கிடையான மூன்று கோடுகளால் அமைக்கப்பட்ட பீடத்தின் மீது அமர்ந்திருப்பதாகும். இந்த அம்சத்தை ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களைத்
 

ஈழத் தமிழரின் கலை மரபு 83
ஈழத்தில் இதன் தொடக்கத்தை கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிடப்பட்ட லசுஷ்மி உருவம் பொறித்த நாணயங்களில் காணமுடிகிறது. இங்காணயங்களின் பின்புறத்தின் கீழ்ப் பாகத்தில் மூன்று கோடுகளும் அதற்கு மேல் பீடத்துடன் கூடிய சுவஸ்திகாச் சின்னமும் காணப்படுகின்றன. இது ஈழத் தமிழர் கலைமரபுக்குரிய இன்னொரு தனித்துவமான முத்திரை எனலாம். 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரின் படைத்தளபதிகளாக வந்து நல்லூரில் அரசமைத்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் கூடத் தமது நாணயங்களில் காளையைத் தமது அரச இலச்சினையாகப் பயன்படுத்தினர். இவர்கள் தாம் வெளியிட்ட நாணயங்களில், குறிப்பாக முற்பட்ட நாணயங்களில் காளைக்குக் கீழே வரும் பீடத்திற்குப் பதிலாக அந்த இடத்தில் சேது என்ற மொழியைப் பயன்படுத்திய போதும் சில நாணயங்களில் குறிப்பாக எட்டு இதழ் கொண்ட தாமரைப் பூவுடன் கூடிய நாணயங்களில் பீடத்தின் மேல் காளை அமர்ந்திருக்கும் வகையில் வெளியிட்டிருப்பதைக் காணமுடிகிறது. இந்த அம்சங்கள் முற்பட்ட நாணய மரபு ஆரியச்சக்கரவர்த்திகள் வெளியிட்ட நாணயங்களிலும் தொடர்ந்ததைக் காட்டுகின்றன.
6-10 ஆம் நூற்றாண்டு
0-13 dih நூற்றாண்டு

Page 53
84 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
13-16 ஆம் நூற்றாண்டு
(படம்-21) வடஇலங்கை தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்
ஈழத் தமிழர் கலைமரபை எடுத்துக் காட்டும் இன்னொரு முக்கியமான சான்றாக விளங்குவது நீள்சதுர நாணயங்களில் வடிவமைக்கப்பட்ட பெண் தெய்வங்களுக்குரிய வடிவங்களாகும். இவை பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் ஈழத்தின் பல வட்டாரங்களில் கிடைத்துள்ளன. இங்காணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள சின்னங்கள் பெரும்பாலும் தெய்வீகத்தன்மை பொருந்தியவை என்பதற்கு நாணயத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள "ஓம்" என்ற வேதமந்திரம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இற்றைக்கு நுாறு வருடங்களுக்கு முன்னர் இங்காணயங்களை ஆராய்ந்த பாக்கர் என்ற ஆங்கிலேயர் சில நாணயங்களில் இவ்வாசகம் எழுதப்பட்டிருப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்(Parkar 1909). ஆயினும் பிற்காலத்தில் இங்காணயங்களை ஆராய்ந்த பலரும் அவர் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு அவர் தனது நூலில் தெளிவான சான்றாதாரத்தைப் பயன்படுத்தாதுவிட்டமை காரணமாக இருக்கலாம். ஆனால் எமக்கு கிடைத்த சில நாணயங்களில் இவ்வாசகத்தை தெளிவாகக் காணமுடிகிறது. இவ்வாசகம் சில நாணயங்களில் ஓம்" என்றும், வேறு சில நாணயங்களில் "ஓம்கம" என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளன (படம்-22).
 

ஈழத் தமிழரின் கலை மரபு 85
(படம்-22) ஓம், ஓம்நம என்ற வாசகம் கொண்ட நாணயங்கள்
இப்பெயர் பொறித்த நாணயங்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதை நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்தமைதி கொண்டு உறுதிப்படுத்த முடிகிறது. இவற்றிலிருந்து இவ்வகை நாணயங்களை வெளியிடும் மரபு கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து நீண்ட காலத்திற்கு இருந்ததெனக் கருத இடமுண்டு. இவை வடஇலங்கையில் முல்லைத்தீவு, கந்தரோடை, நல்லூர், மாதோட்டம், வல்லிபுரம், ஆனைக் கோட்டை, பூநகரி, உடுத்துறை ஆகிய இடங்களிலும், வட இலங்கைக்கு
அக் குறுகொட ஆகிய இடங்களிலும் பல ஆயிரக் கணக்கில் a560örG5 59&esi'Luc'. G56ïGITSOI (Parkar 1981:463-82, Peris 1917. Codrington, 1924, சிவசாமி, 1974, கிருஸ்ணராஜா 1983, புஷ்பரட்ணம் 1998, Bopearachchi 1998, 1999). ஆயினும் தமிழகத்தில் சங்க காலச் சேரரின் தலைநகரான கரூரில் கிடைத்த ஓரிரு நாணயங்களைத் தவிர தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் வேறு இடங்களிலோ இதுவரை கிடைக்கவில்லை. மேலும் நீள்சதுரவடிவில் நாணயங்கள் வெளியிடும் மரபு இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. இவற்றிலிருந்து இவை ஈழத்தில் வெளியிடப்பட்டதென்பதில் சந்தேகமில்லை (புஷ்பரட்ணம் 2001). இங்கிலையில் இந்நாணயங்கள் சிலவற்றில் தமிழில் "ஓம்", "ஓம்நம" என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பது இவ்வகை நாணயங்களை ஈழத்தமிழரே வெளியிட்டனர் என்ற எமது முன்னைய கருத்தை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றன எனலாம்.
அதேபோல் இந்நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள பலவடிவிலமைந்த பெண் உருவங்கள், துலம், மயில், சேவல், காளை, சிவலிங்கம், சுவஸ்திகா, யானை போன்ற சின்னங்களும் ஈழத் தமிழரின் கலைமரபுக்குச் சிறந்த சான்றாக அமைகின்றன எனலாம். அவற்றுள் பலரின் கவனத்தை ஈர்ந்த அம்சமாகத்

Page 54
86 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
திகழ்வது நாணயத்தின் முன்புறத்தில் இடம்பெற்றுள்ள பெண் தெய்வத்திற்குரிய வடிவங்களகும். சமகாலத்தில் வடஇந்திய நாணயங்களில் குறிப்பாக குஷாணர், குப்தர் காலத்தில் வெளியிடப்பட்ட வட்டவடிவில் அமைந்த நாணயங்களில் இதுபோன்ற பெண் உருவங்களைப் பொறிக்கும் மரபு காணப்படுகின்றன (Gupta 1969). ஆனால் தமிழகத்தில் பலவகைச் சமயச் சின்னங்கள்
அதாவது சோழர் காலத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட நாணயங்களில் பெண் தெய்வத்தை பொறிக்கும் வழக்கமிருந்ததற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. சோழர்கால நாணயங்களில் கூட காரைக்கால் அம்மையார் போன்ற பெண் தெய்வங்கள் பொறிக்கப்பட்டாலும் அவை அரிதாகவே இதுவரை கிடைத்துள்ளன (எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டிலுள்ள நாணயவியலாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமனிடம் மட்டுமே பெண் தெய்வம் பொறித்த (காரைக்கால் அம்மையார்?) சோழர்கால நாணயம் ஒன்றைக் காணமுடிந்தது). இலங்கையில் குறிப்பாக வடஇலங்கையில் கி.பி.10-11 ஆம் நூற்றாண்டளவில் வெளியிடப்பட்ட நாணயங்களில் லசுஷ்மியின் உருவம் முழு அளவில் கலை நயம் பொருந்தியதாக பொறிக்கப்பட்டிருப்பதுடன் நாணயத்தின் ஒரு பக்கத்தில் "பூரி லசுஷ்மி" என்ற பெயரும் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கி.பி. 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட நாணயங்களில்தான் முருகனின் பல்வேறு வடிவங்கள் பொறிக்கப்பட்டன. ஆனால் ஈழத்தில் இதற்கு முன்னோடியாக யாழ்ப்பாண மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் இத்தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாதாரங்கள் அனைத்தும் தமிழகத்தைக் காட்டிலும் அழியாப் பொருட்களில் தெய்வ உருவங்களை ஆக்கும் மரபு ஈழத்தில் தொன்மையானது என்பதற்கு மேலும் ஒரு சான்றாகும். இதில் பெண் தெய்வத்தின் உருவம் கோட்டுருவ நிலையில் இருந்து எவ்வாறு வார்ப்பு நிலைக்கு வளர்ந்தது என்பதற்கு ஈழத்துப் பெருங்கற்கால மட்பாண்டங்கள், பிராமிக் கல்வெட்டுக்கள், நாணயங்கள் என்பவற்றில் வரும் ழரீவத்சாவுக்குரிய வடிவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவையிரண்டையும் ஆக்கப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்களால் பதிக்கப்பட்ட களிமண் தட்டுக்கள் பல இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Bopearachchi 1999). இவற்றில் இருந்து இத் தெய்வங்களை வடிவமைக்கும் கலைமரபு ஈழத்திலேயே தோன்றி வளர்ந்துள்ளமை தெளிவாகிறது.
பெண்தெய்வ உருவங்கள் பொறித்த நாணயங்கள் பலவற்றைக் கந்தரோடையில் சேகரித்த போல்பிரிஸ் என்பவர் அவற்றில் உள்ள பெண் வடிவங்களுக்கு முதன் முதலில் லசுக்மி எனப் பெயரிட்டு அழைத்தார். இதனால் இவற்றிற்கு லசுஷ்மி நாணயம் என்ற பெயர் உண்பாயிற்று. ஆயினும் நாணயத்தில்
வரும் பெண் உருவங்களிடையே பல வேறுபாடு காணப்படுகின்றன. சில

ஈழத் தமிழரின் கலை மரபு 87
நாணயங்களில் இவ்வுருவம் அதிகம் வளர்ச்சியடையாது ஆரம்ப நிலையில் காணப்படுகிறது. இது ழரீவத்சா கிலையில் இருந்து லசுடிமி உருவம் தோன்றும் நிலையைக் காட்டுகிறது எனலாம். சில நாணயங்களில் தாமரைத் தண்டிற்குப் பதிலாக பெண் உருவத்தோடு வேல், தலம், குத்து விளக்குப் போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வடிவம் தாய் தெய்வத்தைக் குறித்து நிற்கலாம். பெரும்பாலான நாணயங்களில் பெண் ஆடையற்ற நிலையில் சித்திரிக்கப்பட்டாலும், சில நாணயங்களில் ஆடையுடன் காணப்படுகிறாள். சில நாணயங்களில் திரண்ட மார்பும், ஒடுங்கிய இடையும், வேறு சில நாணயங்களில் தட்டையான மார்பும், அகன்ற இடையும் கொண்டு காணப்படுகின்றன. பல நாணயங்களில் நேராக நிற்கும் பெண் உருவம் சில நாணயங்களில் இடம் அல்லது வலப்பக்கம் திரும்பி இடக்கையால் முகத்தைத் தாங்கியவாறு காணப்படுகின்றது. சில பெண் உருவங்கள் காதணி, கைவளையல், காற்சலங்கை முதலான ஆபரணங்களுடன் காணப்பட, சில பெண் உருவங்கள் குறைந்த அல்லது ஆபரணமற்ற தன்மை கொண்டதாக காணப்படுகின்றன. பெரும்பாலான நாணயங்களில் தாமரை மலரில் நிற்கும் பெண்ணின் இரு கரங்களும் பாதத்திலிருந்து தோள்வரை செல்லும் தாமரைத் தண்டினைப் பிடித்தவாறு காணப்படுகின்றன. இதில் தாமரை மலரிலிருந்து இரு தண்டுகள் பெண்ணின் இரு பக்கங்களாலும் மேலெழுந்து தோள்வரை சென்று பூத்துக் காணப்படுகின்றன (புஷபரட்ணம் 1998). பூவின் மேல் உள்ள இரு யானைகள் தும்பிக்கையால் பெண்ணின் மேல் நீர் தெளித்து அபிஷேகம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது பூரீதக்தத்தில் கஜலட்சுமி பற்றி வரும் வர்ணனையைப் பெருமளவு ஒத்துள்ளது (சிவசாமி 1974:29)(படம்23).

Page 55
88 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-23) ஈழத் தமிழர் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள பெண் தெய்வ உருவங்கள்
கந்தரோடை, மாதோட்டம், அநுராதபுரம் போன்ற இடங்களில் கிடைத்த சில நாணயங்களில் தலைவிரி கோலமாகக் குந்தியிருக்கும் கிலையில் பெண் உருவம் காணப்படுகிறது (Seyon1998:47, Parkar 1981:463-82). இதில் இடதுகால் தொங்கவிடப்பட்டு வலதுகால் மடிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இடதுகை தோள்வரை உயர்ந்து தாமரை மலரைத் தாங்கியவாறு உள்ளது. இதில் வலதுகை மடிக்கப்பட்ட வலதுகாலைத் தொட்டு நிற்கிறது. தலைக்குப் பின்னால் திருவாசி போன்ற வடிவம் காணப்படுகிறது. வேறு சில நாணயங்களில் தொங்கவிடப்பட்ட கூந்தல் முன்பக்க மார்போடு ஒட்டியவாறு காணப்படுகிறது. இந்த வேறுபாடுகளை கோக்கும் போது இப்பெண் வடிவங்கள் துர்க்கை, காளி, கண்ணகி போன்ற பிற பெண் தெய்வங்களையும் குறித்ததெனக் கருதலாம் (புஷ்பரட்ணம் 1999:1-12)(படம்-24).
 

ஈழத் தமிழரின் கலை மரபு 89
(படம்-24) கண்ணகி, துர்க்கை, காளி
ஆகவே இங்காணயங்களில் வரும் அம்மன், லசுஷ்மி, காளி, கண்ணகி போன்ற பெண் தெய்வங்களும், அத்தெய்வங்களுடன் தொடர்புடைய தலம், மயில், சேவல், காளை, சிவலிங்கம், சுவஸ்திகா, யானை போன்ற சின்னங்களும், அவற்றின் கலைநயங்களும் ஈழத் தமிழரிடையே பெளத்த கலைமரபைப் போல் சுதேச இந்துக்கலை மரபும் பண்டு தொட்டுத் தோன்றி வளர்ந்ததைக் தெளிவாகக் காட்டுகின்றன.
ஈழத்தமிழர் வெளியிட்ட பெரும்பாலான நாணயங்களில் காளையைப் போல் மீனும் முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது. இவற்றின் தத்துரூபமான வடிவமைப்பும், அழகும் பண்டைய காலக் கலைமரபுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மீன் பாண்டியரின் குலமரபுச் சின்னமாக தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்களில் காணப்படுகிறது. இதனால் இலங்கையில் கிடைத்த மீன் சின்னம் பொறித்த அனைத்து நாணயங்களும் பாண்டிய மன்னரால் வெளியிடப்பட்டு தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் காரணம் காட்டப்படுகிறது. தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட பலவகை நாணயங்கள் வர்த்தக மற்றும் அரசியல் தொடர்பால் சமகாலத்தில் இலங்கைக்கு வந்ததற்குப் பல சான்றுகள் உண்டு(Codrington 1924). ஆனால் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் வரும் மீன் வடிவத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மீன் வடிவங்கள் கொண்ட நாணயங்களை ஈழத் தமிழர் வெளியிட்டதற்கு இலங்கையில் சிறப்பர்க வட இலங்கையில் உறுதியான பல சான்றுகள் கிடைத்துள்ளன. இவை பாண்டியத்

Page 56
90 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
நாணயங்களை வெளியிடாத கால கட்டங்களில் எல்லாம் மீன் சின்னம் பொறித்த நாணயங்கள் ஈழத்தில் வெளியிடப்பட்டதை முக்கிய சான்றாகக் காட்டலாம். தமிழகத்தில் கி.பி.3ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாண்டிய மன்னர்கள் நாணயங்கள் வெளியிட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் இக்காலத்தில் வட இலங்கையில் மீன் சின்னம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கி.பி.11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 13ஆம் நூற்றாண்டின்
ஏற்பட்டதற்குச் சான்றுகள் இல்லை. இக்காலத்தில் சோழருக்கு அடிபணிந்திருந்த பாண்டியர் தமிழ்நாட்டில் நாணயங்கள் வெளியிட்டதற்கும் சான்றுகள் இல்லை. ஆனால் சமகாலத்தில் வடஇலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்களின் முன்புறத்தில் காளையும் பின்புறத்தில் இரு மீன்களும் முக்கிய சின்னங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் உள்ள மீன் வடிவத்திற்கும் ஈழத்தமிழரால் வெளியிடப்பட்ட நாணயங்களில் உள்ள மீன் வடிவத்திற்கும் இடையே பல்வேறு அம்சங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஈழத் தமிழ் நாணயங்களில் உள்ள பெரும்பாலான மீன் வடிவங்கள் மிகத் தத்துருபமாகவும், அழகாகவும், கலைநயம் மிக்கதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களை தமிழக நாணயங்களில் மட்டுமன்றி இந்திய நாணயங்கள் எதிலுமே காணமுடியவில்லை. மேலும் தமிழகத்தில் சங்ககாலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் வரும் மீன் கோட்டுரு வடிவில் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் சமகாலத்தில் ஈழத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் மட்டுமன்றி, கல்வெட்டுக்களிலும் அவை முழு உருவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாண்டியர் 13 ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியைக் கைப்பற்றி ஆட்சி செய்ததன் பின்னரே தாம் வெளியிட்ட நாணயங்களில் இரு மீன் சின்னத்தைப் பொறித்தனர். அதைப் பாண்டியர் வெளியிட்ட கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் இலங்கையில் கூட இரு மீன் சின்னத்தையே பொறித்ததாகப் பாண்டிநாட்டிலுள்ள குடுமியாமலைக் கல்வெட்டுக் கூறுகிறது. ஆனால் ஈழத்தில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிடப்பட்ட நாணயங்களில் இரு மீன் சின்னமும், கி.பி.10ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிடப்பட்ட நாணயங்களில் இரண்டு முதல் ஐந்து வரையான மீன் உருவங்களை வெவ்வேறு வடிவங்களிலும் பொறித்துள்ளனர்.
தமிழகத்தில் சங்க காலத்தின் பின்னர் கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிடப்பட்ட நாணயங்களில் மன்னன் உருவத்தோடு அல்லது பிற சின்னங்களுடன் மீனும் ஒரு சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால்
ஈழத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களின் இரு புறத்திலும் அல்லது பின்புறத்தில்

ஈழத் தமிழரின் கலை மரபு I 91
இரு குத்துவிளக்கிற்கு இடையில் தனிச் சின்னமாக மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நாணயங்களில் அவதானிக்கக் கூடிய இன்னொரு சிறப்பம்சம் காளை உருவம் எப்படி கிடையான மூன்று கோடுகளால் காட்டப்பட்ட பீடத்தின் மீது பொறிக்கப்பட்டதோ அதேபோல் மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் ஈழத் தமிழருக்குரிய தனி முத்திரை என்பதில் சந்தேகமில்லை(படம்-25).
asmraoh Fgh · தமிழ் நாடு
&l.ւմl 3 ஆம் நூற்றாண்டு
க்கு முன்னர்
6-8 

Page 57
92
தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
நூற்றாண்டு
இதுவரை கிடைக்கவில்லை
 

ஈழத் தமிழரின் கலை மரபு 93
13 hک நூற்றாண்டு
(படம்-25) தமிழ் மன்னர்களின் (ஈழம், தமிழ் நாடு) மீன் சின்னம் பொறித்த நாணயங்கள்
பாண்டியர் மீனைத் தமது குலமரபுச் சின்னமாகவே நாணயங்களில் பொறித்துள்ளனர். இதைச் சமகால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் ஈழத் தமிழர் இங்காணயத்தை என்ன நோக்குடன் பயன்படுத்தினர் என்பதை உறுதிப்படுத்த உறுதியான பிற ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் வரும் மீன் சின்னத்தைக் காட்டிலும் ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களில் வரும் மீன் சின்னத்திற்கு கூடிய சமய முக்கியத்துவமும் உண்டு என்பதை உறுதியாகக் கூறலாம். இவர்களது நாணயங்களில் பெரும்பாலும் இரு குத்துவிளக்கிற்கு இடையில் அல்லது தாமரை போன்ற மலர்களுக்கிடையில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வம்சத்தை தமிழக நாணயங்களில் அதிகம் காணமுடியவில்லை. காளை எப்படி பீடத்தின் மீது அமர்ந்து காணப்படுகிறதோ அப்படியே மீன் சின்னங்களும் பீடத்தின் மீது காணப்படுகின்றன. இதில் பீடமும் குத்துவிளக்கைப் போல் சமய முக்கியத்துவம் வாய்ந்ததால் காளையைப் போல் மீனுக்கும் சமய முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. o
அதேவேளை தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2-1 ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயத்தின் ஒரு புறத்தில் இரு மீன் சின்னமும், மறுபுறத்தில்

Page 58
94 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பரத என்ற பெயரும் காணப்படுகிறது. இதில் பரத என்ற பெயர் சம காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த பரதவ சமூகத்தைக் குறிக்கும் தமிழ்ப் பெயராகும் (Seneviratne 1985:49-51). இதையொத்த பெயர் சமகாலத்திற்குரிய 21 பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது (Paramavithana 1970). அவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் வடக்கு மற்றும் வடமேற்கிலங்கையில் காணப்படுகின்றன. கல்வெட்டுக்களில் இப்பெயருக்குரிய சமூகம் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல் வர்த்தகர், கப்பலோட்டி, கப்பல் தலைவன், நாடுகளுக்கிடையிலான அரச தூதுவன் ஆகிய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றன (Seneviratne 19854951, புஷபரட்ணம் 2000). இவற்றிலிருந்து ஈழத்தில் வாழ்ந்த இச்சமூகம் இன்று போல் அன்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தெரிகிறது. இதனால் நாணயத்தில் பரத என்ற பெயருடன் வரும் மீன் சின்னம் அவர்களில் தொழில் நடவடிக்கையைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். ஜேம்ஸ் ஆர்னலின் என்பவர் நாக இன மக்களில் இருந்து வந்த சமூகப் பிரிவுகளில் ஒன்றாகப் பரதவரைக் குறிப்பிடுகிறார். பண்டைய நாளில் ஈழத்தில் வாழ்ந்த காக இன மக்கள் பற்றிக் கூறும் பாளி இலக்கியங்கள் வடஇலங்கையை நாகதீபம் எனவும், அங்கு ஆட்சியில் இருந்த மன்னர்களை நாகர் எனவும் கூறுகின்றன. இதை யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்தில் கிடைத்த கி.பி.3ஆம் நூற்றாண்டுக்குரிய பொற்சாசனமும் உறுதிப்படுத்துகிறது. இப்பெயர் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை வடஇலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதற்கு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் சான்றுகள் உண்டு.
தென்னிலங்கையில் கிடைத்த கி.பி.1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பத்துக் கல்வெட்டுக்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதுடன், அக்கல்வெட்டுக்களில் ஒன்றில் அதற்குரியவன் மீன் அரசன் எனவும் (பிராகிருத மொழியில் மஜிமராஜா) குறிப்பிடப்பட்டுள்ளது. இது மீன் சின்னத்திற்கும் அரசவம்சம் அல்லது குறிப்பிட்ட இனக் குழுவுக்கும் உள்ள தொடர்பாக இருக்கலாம். அண்மையில் இந்நூலாசிரியர் உடுத்துறை என்ற இடத்தில் கண்டுபிடித்த கி.பி.1ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயத்தில் இரு மீன் சின்னத்துடன் நாகஹ என்ற பெயரும் காணப்படுகிறது. இதில் வரும் நாக என்ற பெயர் நாக அரசவம்சத்தை, நாக காட்டை அல்லது காக இன மக்களைக் குறிக்கலாம். மேலும் ஆதிகாலம் தொட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை வடஇலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்களில் மீன் முக்கிய சின்னமாகப் பயன்படுத்தப்பட்டதற்கும் போதிய சான்றுகள் உண்டு (புஷ்பரட்ணம் 2001). பேராசிரியர் பத்மநாதன் (1985; 214) யாழ்ப்பாண அரச கால நாணயங்களில் பொறிக்கப்பட்ட சேது என்ற மொழியை ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்கள் தமது குலமரபுச் சின்னமாகப் பயன்படுத்திய அதே வேளை, அதற்கு கூடுதல் சமய முக்கியத்துவம் கொடுத்தனர் எனக் கூறுகிறார்.

ஈழத் தமிழரின் கலை மரபு 95
இவற்றையெல்லாம் ஒப்பிட்டு நோக்கும்போது மீன் சின்னம் நாக அரச மரபின் சின்னமாக இருந்திருக்கலாம் போல் தோன்றுகிறது. இருப்பினும் இது எதிர்காலத்தில் மேலும் விரிவாக ஆராயப்படவேண்டியுள்ளது.
கலை என்ற அடிப்படையில் இந்நாணயங்களில் வரும் மீன் சின்னங்களை நோக்கும் போது அதன் தனித்துவமான வடிவமைப்பு ஈழத் தமிழரிடையே ஆதிகாலம் தொட்டு சுதேச கலை மரபு இருந்ததென்பதற்கு மேலும் சான்றாக அமைகிறது. இத்தனித்துவம் மேற் கூறப்பட்ட நாணயங்களில் வரும் சின்னங்களில் மட்டுமன்றி ஏனைய சின்னங்களிலும் குறிப்பாக குத்துவிளக்கு, சுவஸ்திகா, ழரீவத்சா, மயில், தலம், சிவலிங்கம், சங்கு என்பனவற்றிலும் காணமுடிகிறது (புஷ்பரட்ணம் 2001).
எனவே ஈழத்தில் தோன்றி வளர்ந்த பெளத்த, இந்துக் கலைமரபில் இந்தியக் கலைமரபின் செல்வாக்கு, சுதேச தனித்துவம் என்பன இவற்றை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்த மக்களுக்கு இங்காட்டு வரலாற்றோடு உள்ள உறவு, தொடர்பு, தொன்மை என்பவற்றிற்குரிய அடிப்படையான சான்றுகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டியுள்ளது. பெருமளவுக்கு வரலாற்று நம்பகத்தன்மையற்ற பாளி இலக்கிய வரலாற்றுக் குறிப்புக்களின் அடிப்படையில் சிங்கள மக்களை இங்காட்டுக்குரிய பூர்விக குடிகளாகவும், தமிழர்களை அவ்வப்போது வர்த்தக, அரசியல் நோக்கில் வந்துபோன அன்னியராகவும் அசையாத நம்பிக்கையோடு தமிழரின் மதத்தையும், கலையையும் ஆராயும் போது அதைத் தமிழகக் கலையாக நோக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அப்படியிருந்தும் தமிழகத்தின் இயற்கை எல்லையைக் கடந்து அங்காட்டுக்குரிய கலை மரபு ஈழத்தில் வளரும் போது அதைத் தமிழகக் கலை மரபின் பிரதியாக கலைவரலாற்றாசிரியர்கள் வாதிப்பது வேற்றுமையில் ஒன்றுமை கொண்ட இந்தியக் கலைமரபு வட்டாரம், பிரதேசம், வம்சம் என்ற அடிப்படையில் சில தனித்தன்மையுடன் வளர்ந்தன என இந்திய மற்றும் மேற்கத்தேயக் கலைவரலாற்றாசிரியர்கள் கூறிவரும் கருத்திற்கு முற்றிலும் முரணான பார்வையாக உள்ளது.
தமிழர்கள் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிட்டு வந்த நாணயங்களில் தமக்கெனத் தனித்துவமான கலை வடிவங்களைப் பொறித்து வந்துள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவற்றில் இருந்து அவற்றை வெளியிடக் காரணமான மன்னர்களினதும், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட மக்களினதும் மதம் சார்ந்த கலைமரபு நன்கு தெரிகிறது. அப்படியிருக்கும் போது எப்படி தமிழ் நாட்டவரால் அவர்களின் வழிபாட்டிற்கென அங்காட்டுக்குரிய கலை மரபில் ஆலயங்கள் அமைக்கப்பட்டபோது இங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு மட்டும் அவை இல்லாதிருக்கும் எனக் கூறமுடியும்?. முன்பொரு காலத்தில் தமிழர்கள் பிற்காலத்தில் ஈழத்தில் வங்து குடியேறியவர்கள் என வாதிட்ட அறிஞர்களே அண்மைக்காலமாகக் கிடைத்து

Page 59
96 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
வரும் நம்பகத் தன்மை வாய்ந்த தொல்லியல் சின்னங்களைச் சான்றாகக் காட்டி தமிழ் நாட்டுத் தமிழர்களைப் போல் ஈழத்திலும் தமிழர்கள் பண்டு தொட்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இங்கிலையில் எப்படி ஈழத்தில் தோன்றி வளர்ந்த பண்டைய கால இந்துக் கலைமரபை முழுக்க முழுக்க தமிழகக் கலைமரபின் பிரதியெனக் கூறிச் சமாதானப்படுத்த முடியும்?

ஈழத் தமிழரின் சைவ வைஷ்ணவ மதங்கள்
ଗ ன்னாசியாவில் காலத்திற்கு காலம் தோன்றிய மதங்களும்; தத்துவங்களும், சமய கம்பிக்கைகளும் காலப்போக்கில் ஒன்றிணைந்து தோன்றியதே இந்து மதமாகும். இந்துமதம் என்ற பெயர் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களிலிருந்து இந்தியாவின் ஏனைய மதங்களை வேறுபடுத்திக்காட்ட பிரித்தானியர் பயன்படுத்திய சொல்லாகும். இதனால் இலங்கை உட்பட பண்டைய காலத்தில் வழக்கிலிருந்த புராண வழிபாட்டு மரபுகளை இந்துமதம் என்ற பெயரால் அழைப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயினும் இப்புராண வழிபாட்டுக்குரிய மரபுகள் இந்து மதத்திற்குரிய அம்சங்களைக் கொண்டிருப்பதாலும், பிரித்தானியரால் இந்துமதத்திற்குள் ஒன்றடக்கப்பட்ட பெளத்தம் தனியொரு மதத்திற்குரிய பெயராக வரலாற்றுரீதியில் பயன்படுத்தப்படுவதாலும் புராண வழிபாட்டு மரபுகளின் பொருள் விளக்கத்திற்காக அதை இந்துமதம் என்ற பெயரால் அழைத்துக் கொள்ளலாம். 伞
இலங்கை மதங்களுள் இங்து மதத்திற்கு மிகத் தொன்மையான வரலாறு உண்டு. இதன் தொடக்ககாலச் சான்றாகக் கி.மு. 800இல் இருந்து கிடைக்கும் திராவிட்

Page 60
98 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
Ipašateljaše, iflu. GluablЋlasjasтоlј ш60d штi“ () (Megalithic Culture) மட்பாண்டங்களில் பெறப்பட்ட குறியீடுகள், சுடுமண் பாவைகள், மனித, மிருக வடிவங்கள், உலோகச் சின்னங்கள் விளங்குகின்றன. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெளத்த மதத்தின் அறிமுகம் அம்மதம் அரச ஆதரவுடன் மிகக் குறுகிய காலத்தில் இலங்கையில் வளர்ச்சியடையக் காரணமாகியது. அதனால் இந்து மதம் தனது தனித்துவத்தை இழந்ததெனக் கூறமுடியாது. இந்து மதத்திற்கு எதிராகப் பெளத்த மத வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்கள் கூட இக்காலத்தில் இலங்கையில் இருந்த இந்து ஆலயங்கள் பற்றியும், அம்மதத்திற்கும் ஈழத்து மன்னர்களுக்கும் இடையிலான உறவு பற்றியும் சில இடங்களில் எடுத்துக் கூறுகின்றன (Mahavamsa. X:102, XIX:37, XXI:1-21, XXll:3-4). geoloiso5ưilsởĩ qpặcò வரலாற்றுப் பாளி இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் தேவநம்பிய தீஸன், துட்டகாமினி போன்ற சிங்கள மன்னர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்த பிராமணக் குடியிருப்புக்கள் பற்றியும், அவர்கள் அரச சபைகளிலும், அரச திருமணங்களிலும் புரோகிதராகக் கடமையாற்றியது பற்றியும், சிலர் ஆசிரியராக, வைத்தியராகத் தொழில் புரிந்தது பற்றியும் கூறுகிறது ((Mahavamsa. X:102, XIX:37, XXI:1-21, XXII:3-4, XXIll:24-26, XIX:37, XVX:102). இதைச் சமகாலத்திற்குரிய 21 பிராமிக் கல்வெட்டுக்களும் 2-glucts 5galoof psor (Paranavithana 1970:LXVIII-XIX). இச்சான்றாதாரங்கள் பெளத்தம் செல்வாக்குடைய மதமாக இலங்கையில் வளர்ந்து சென்ற காலகட்டத்தில் இந்துமதத்தைத் தமிழர்கள் மட்டுமன்றிப் பிறமதத்திற்குரியவர்களும் பின்பற்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. இப்பாளி இலக்கியச் சான்றாதாரங்களுடன் சமகாலக் கல்வெட்டாதாரங்களையும் ஒப்பிட்டு நோக்கும் போது இந்த உண்மை மேலும் தெளிவாகிறது. இலங்கையின் பண்டைய கால மதங்களை அறிவதில் காலத்தால் முந்திய பிராமிக் கல்வெட்டுக்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இதுவரை 2000க்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் இலங்கையின் பல வட்டாரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பான்மையானவை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். இவை அனைத்தும் பிராகிருத மொழியில் பெளத்த குருமாருக்கு அல்லது பெளத்த சங்கத்திற்கு மன்னன் தொட்டு சாதாரண மக்கள் வரை அளித்த தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இக்கல்வெட்டுக்கள் ஓரிரு வரிகளில் குறைந்தளவு வரலாற்றுச் செய்திகளைக் கொண்டிருந்தாலும், அவற்றில் தானமளித்தவரின் பட்டம், பதவி, தொழில், இருப்பிடம், தானமளித்தவரின் மத நம்பிக்கை, மொழி, எழுத்து போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் இக்கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வானது ஈழத்தின் குறிப்பிட்ட காலகட்டத்திற்குரிய பண்பாடு பற்றிய ஆய்வாக அமைகிறது.

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 99
இக்கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் பெளத்தம் தொடர்பான செய்திகளைக் குறிப்பிட்டாலும், தென்னாசியாவில் ஏனைய வட்டாரங்களுக்கில்லாத சிறப்பு ஈழத்திற்கு உண்டு. தென்னாசியாவில் தமிழ்நாடு தவிர்ந்த பெளத்த மதம் பரவிய அனைத்து வட்டாரங்களிலுள்ள கல்வெட்டு எழுத்து வட பிராமியாகவும், அதன் மொழி பிராகிருதமாவும் இருந்தது. இந்த அம்சம் ஈழத்துப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்பட்டாலும், அவற்றில் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ் மொழியின் செல்வாக்கும் விரவிக் காணப்படுகின்றன. இதனால் தமிழர் வரலாறு, மதம் பற்றி ஆராய முற்படுபவர்கள் அவர்களின் தொடக்க காலச் சான்றுகளில் ஒன்றாக இக்கல்வெட்டுக்களையும் பயன்படுத்தத் தவறுவதில்லை. இக்கல்வெட்டுக்களில் உள்ள பெளத்த சங்கத்திற்கு தானமளித்தவர்களது பெயர்களில் பல இந்துக் கடவுளரோடு தொடர்புடையதாக உள்ளன. இவை இந்து மதத்திற்கும், இம்மக்களுக்கும் இடையேயிருந்த தொடர்பைக் காட்டுகின்றன. எந்தவொரு சமுதாயத்திலும் பெயர்கள் சில அடிப்படைக் கோட்பாடுகளை வைத்துத்தான் இடப்படுகின்றன. அவை குறிப்பிட்ட ஆளின், பெற்றோரின் சமய நம்பிக்கை, குடிப்பெருமை முதலியவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பெயரிடப்படுவது மரபாகும் (சுப்பராயலு 199196), இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதான கல்வெட்டுக்களில் வரும் பெயர்களைப் பெளத்தம், இங்து என வேறுபடுத்தி இந்துக் கடவுளர்களோடு தொடர்புடைய பெயர்கள் ஆட்பெயர்களாகப் பெயரிடப்பட்டிருப்பதைச் சான்றாகச் சுட்டிக்காட்டியுள்ளார் (I.C.1970:CXXI). பேராசிரியர் பத்மநாதன் இப்பெயருக்குரிய அனைவரும் அக்காலத்தில் இந்துக்களாக இருந்தார்கள் எனக் கொள்ள முடியாவிட்டாலும், முன்பு இந்துக்களாக இருந்தவர்களின் சந்ததியில் வந்த பலர் தமது பழைய மத நம்பிக்கைகளை நினைவுபடுத்தும் வகையில் பெளத்தர்களாக மாறியதன் பின்னரும் இப்பெயர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கூறுகிறார். இதற்குப் பொருத்தமான விளக்கத்தைப் பிற்கால வரலாற்று ஆதாரங்களில் இருந்து எடுத்துக்காட்டுகிறார் (பத்மநாதன் 2002).
பிராமிக் கல்வெட்டுக்களைத் தொடர்ந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சிங்களக் கல்வெட்டுக்கள் காலத்தால் பிற்பட்டவையாகும். இவற்றில் எண்ணிக்கையில் அதிகமான கல்வெட்டுக்கள் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டவையாகும். இதில் தமிழ்க்கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கி. பி.9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையில் பொறிக்கப்பட்டதாக இதுவரை காலமும் கூறப்பட்டுவந்தது. ஆனால் அண்மையில் தமிழக, யப்பானிய ஆய்வாளர்களுடன் பேராசிரியர் பத்மநாதன் இணைந்து அநுராதபுரத்தில் மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தைப் போல் கி.பி. 8ஆம்

Page 61
100 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
நூற்றாண்டுக்கு முன்பாக தமிழ்க் கல்வெட்டுக்களைப் பொறிக்கும் வழக்கம் இங்கும் ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது (சுப்பராயலு 2000). இக்கல்வெட்டுக்கள் பிராமிக் கல்வெட்டுக்களைக் காட்டிலும் விரிவான செய்திகளைக் கொண்டிருப்பதால் இவை இடைக்கால ஈழத் தமிழரின் சமய நம்பிக்கைகளை அறிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் சங்ககால நடுகல் வழிபாடு
தமிழகத்தின் தொடக்க கால வழிபாட்டிற்குரிய சின்னங்களில் ஒன்றாக நடுகல் வழிபாடு கருதப்படுகிறது. இதன் தோற்றம் கி.மு. 1000ஆம் ஆண்டு தொன்மைவாய்ந்த பெருங்கற்காலப் பண்பாட்டு ஈமச் சின்னங்களில் காணப்படுகின்றது. இதற்குத் தமிழகத்தில் கொடுமணல் என்ற இடத்தில் கற்பதுக்கை என அழைக்கப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நெடிய கற்கள் சிறந்த சான்றாகும். இவற்றின் வளர்ச்சி நிலையையே சங்க இலக்கியத்தில் விபரிக்கப்படும் நெடுநிலை நடுகல்லு (menhir) எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர் (இராசன் :9-10). சங்க காலத்தில் போர்வீரர்கள், பொதுகன்மைத் தியாகிகள் இறந்தபோது அவர்களுக்கு நினைவுக் கற்கள் எழுப்பி அக்கற்களின் இறந்துபட்டவனின் உருவம் அமைத்து அவன் பெருமைகளை எழுதிவைக்கும் மரபு காணப்பட்டது. அத்துடன் அக்கற்கள் மரநிழலின் கீழ் வைத்துத் தெய்வங்களாகவும் வழிபடப்பட்டன. பேராசிரியர் சு. வித்தியானந்தன் இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் செல்வாக்குடன் காணப்படும் மதுரை வீரன், இருளன், கறுப்பன், கொண்டி, முதலான தெய்வங்கள் நடுகல் வழிபாட்டை ஒட்டித் தோன்றியதாகக் கூறுகிறார் (வித்தியானந்தன் 1954:112). இந்த நடுகல் வழிபாட்டிற்காக மக்கள் ஒன்று கூடும் இடமே காலப்போக்கில் காடு என்ற பெயர் ஏற்படக்காரணம் என்ற ஒரு கருத்தும் உண்டு. தமிழகத்தில் தற்காலத்தில் வழக்கில் உள்ள நடுகல் நாடு என்ற இடப்பெயரின் தோற்றம் இதன் அடிப்படையில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது (பூங்குன்றன் 2000). பொதுவாக இறந்த வீரனுக்கு மட்டுமே பண்டைய காலத்தில் நடுகல் அமைத்து வழிபடப்பட்டதாகக் கருதும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் தமிழகத்தில் உள்ள செங்கம், தருமபுரி மாவட்டங்களில் கிடைத்த கல்வெட்டு ஆதாரங்களில் இருந்து சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும், பலதரப்பட்ட தொழில் புரிந்தோருக்கும் நடுகல் அமைத்து வழிபட்டமை தெரியவந்துள்ளது. இதனால் இவற்றை வீரக்கல் (Hero Stone) 6Tsiig assogliusog oil rSlsosorasascis (Memorial Stone) என்று அழைப்பதே பொருத்தமாகத் தெரிகிறது.

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 101
பாக்கள் என்பவர் தமிழகத்துடனான பாரம்பரிய பண்பாட்டுத் தொடர்பால் நடுகல் அமைத்து வழிபாடும் மரபு ஈழத்தில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர், நாகர் ஆகிய இன மக்களிடையேயும் தோன்றியதாகக் கூறுகிறார் (Parkar 1909:313). தமிழகத்தில் இவ்வழிபாட்டின் தோற்றம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்டதென்பதற்கு உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. பொதுவாக இலங்கைக்குரிய அதிலும் சிறப்பாக வடஇலங்கைக்குரிய பெருங்கற்காலப் பண்பாடு தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியெனக் கூறும் அளவிற்கு நெருங்கிய ஒற்றுமை காணப்படுவதால் கூடவே நடுகல் வழிபாடும் பெருங்கற்காலப் பண்பாட்டு மரபும் இப்பண்பாட்டுடன் அறிமுகமாகியிருக்கும் எனக் கூறலாம். ஆயினும் அவை தொடர்பான சான்றுகள் தமிழகத்தோரு ஒப்பிடுகையில் இதுவரை கிடைக்கவில்லை அல்லது கிடைத்த சான்றுகள் அந்த நோக்கில் ஆராயப்படவில்லை எனக் கூறலாம். மகாவம்சம் என்ற பாளி நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் துட்டகாமினிக்கும் எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் அநுராதபுரக் கோட்டைப் பகுதியில் நடந்த போரில் எல்லாளன் கொல்லப்பட்ட போது துட்டகாமினி அவன் இறந்த இடத்தில் நினைவுச் சமாதி ஏற்படுத்தி அச்சமாதியை அவ்வழியால் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி வழிபாடு செய்யுமாறு துட்டகாமினி கட்டளையிட்டான் எனக் கூறுகிறது. அவ்வாறு வழிபடும் மரபு அண்மைக்காலம் வரை பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் அதன் தோற்ற அமைப்பு தமிழக நடுகல்லின் தோற்ற அமைப்பிலிருந்து வேறுபட்டுச் சமகாலத்தில் புத்தரின் நினைவுச் சின்னங்களுக்காக அமைக்கப்பட்ட பெளத்த தூபிகளின் தோற்ற அமைப்பை ஒத்ததாக உள்ளது. ஆனால் இங்நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதன் நோக்கம் தமிழக நடுகல் வழிபாட்டு மரபை ஒத்ததாக உள்ளது. இவ்வாறான நடுகல் வழிபாடு பிற்காலத்திலும் தொடர்ந்ததை அநுராதபுரத்தில் வேலனதமன என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட நடுகல் சிற்பம் உறுதிப்படுத்துகிறது (Paranavithana).
அண்மையில் இயற்றாலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில சான்றுகள் சங்க காலத் தமிழகத்தை ஒத்த நடுகல் வழிபாடு சமகாலத்தில் ஈழத்திலும் இருந்துள்ளதைக் கோடிட்டுக்காட்டுகின்றன. இவ்விடம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சிப் பிரிவில் உள்ள மந்துவில் என்ற கிராமத்தின் மேற்கெல்லையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண அரசு கால வரலாற்றோரு முதன் முறையாகத் தொடர்புபடுத்திக் கூறப்படும் இக்கிராமமும், இதற்கு தென்கிழக்கில் உள்ள வரணி, உடுத்துறை போன்ற கிராமங்களும் புராதன குடியிருப்புக்களைக் கொண்ட மையங்கள் என்பதை 1980 அளவில் கலாநிதி இரகுபதி மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வும், 1993-94 காலப்பகுதியில் வரலாற்றுத்துறை சிறப்புக்கலை மாணவர்களாக இருந்த திரு.கமலநாதன், திரு.சிவானந்தன், திரு.பிரகலநாதன் ஆகியோருடன் காம் மேற்கொண்ட

Page 62
102 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
தொல்லியல் மேலாய்வும் உறுதிப்படுத்துகின்றன. இங்கு கிடைத்த புராதன மட்பாண்டங்கள், இந்திய உரோம நாணயங்கள், உரோம, அராபிய மட்பாண்டங்கள் என்பவை இவ்வட்டாரம் குடாநாட்டின் புராதன தொல்லியல் மையங்களில் ஒன்று என்பதை உறுதிப்படுத்துகின்றன. இங்கு கிடைத்த தொல்லியல் சின்னங்களை இவ்விடங்களுக்கு வடக்கே நேரெதிரே உள்ள அம்பனை, குடத்தனை, வல்லிபுரம் போன்ற தொல்லியல் மையங்களில் கிடைத்த சான்றுகளோடு ஒப்பிடும் போது அவற்றை ஒத்த பழமை இக்கிராமங்களுக்கும் இருந்துள்ளமை மேலும் துலக்கம் பெறுகிறது.
இதில் நடுகல் வழிபாட்டிற்குரிய சான்றுகள் காணப்படும் இயற்றாலைக் கிராமத்தின் தொன்மைக்குரிய சான்றுகள் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கவை. இக்கிராமம் மேற்கே தொண்டமனாறு கடல்நீரேரிக்கும், வடக்கே பெருங் கடலுடன் தொடர்புடைய பரவைக்கடலுடனும் தொடர்பு கொள்ளக்கூடிய மையத்தில் அமைந்திருப்பதால் பண்டைய காலக் கடல்வழித் தொடர்பின் செல்வாக்கு இங்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதையே இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகளும் சுட்டிக் காட்டுகின்றன. இதில் நடுகற்கள் காணப்படும் மையத்தைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் புராதன கட்டிடங்கள் இருந்ததற்கான செங்கற்கள், பொளிந்த முருகைக்கற்கள் பரந்த அளவில் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்றன. இவை ஒரு கோட்டையின் அழிபாடாக இருக்கலாம் எனக் கருதி இவ்விடம் இயற்றாலைக் கோட்டை எனவும், இங்குள்ள ஆலயம் கோட்டைவாசல் பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மையம் ஏறக்குறைய இருபது ஏக்கர் நிலப்பரப்பின் மையத்தில் உயர்ந்த மேடாகக் காட்சியளிக்கிறது. தற்போது இதன் ஒரு பகுதி காடாகவும், இன்னொரு பகுதி பயிர்ச்செய்கை நிலமாகவும் உள்ளது. பயிர்ச் செய்கைக்காக இவ்விடம் திருத்தப்பட்டபோது அவ்விடங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான செங்கற்கள், பொழிந்த முருகைக்கற்கள், புராதன மட்பாண்ட ஒடுகள், ஒரு சில உரோம, சோழ மற்றும் பாண்டிய நாணயங்கள் என்பவற்றைச் சேகரிக்க முடிந்தது. அத்துடன் இங்குள்ள செங்கல் அத்திவாரத்தில் இருந்து மிக அலங்காரத் தன்மை கொண்ட மண்குடத்தோரு கண்டெடுக்கப்பட்ட எழுநூறு உரோம நாணயங்களையும் இந்நூலாசிரியரால் பெற முடிந்தது.
காடாக உள்ள மேற்குப் பகுதியில் வட்டமாக வளர்ந்துள்ள மரங்களுக்குக் கீழே செங்கல் மேடை அமைக்கப்பட்டு அதன் மேல் பதினான்கு கற்கள் நாட்டப்பட்டு ஐயனார் ஆலயம் என்ற பெயரில் வழிபடப்படுகிறது. சிலர் அதை நாச்சிமார் ஆலயம் எனவும் அழைத்துக் கொள்வதுண்டு. இங்குள்ள பதின்னான்கு கற்களும் நாச்சிமார், ஐயனார், விகாயகர், நாததம்பிரான், காளி, அண்ணமார், வைரவர், காளகண்டன், முனி, ஊத்தைக்குடியன்,
காளமுனி ஆகிய தெய்வங்களின் பெயரில் தற்போது வழிபடப்பட்டு வருகிறது.

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 103
ஆயினும் அவற்றுள் ஐயனார், அண்ணமார், நாச்சிமார் ஆகிய தெய்வங்களும், அவற்றைக் குறிக்கும் கற்களுமே வழிபாடுபாட்டில் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வழிபாட்டில் முக்கியப்படுத்தப்பட்டுள்ள அண்ணமார் பண்டைய காலத்தில் போர்வீரர்களாக இருந்தவர்கள். நாச்சிமார் என்பது ஏழு பெண்களைக் குறிப்பதாகும். தமது கணவர்மார் வீரத்துடன் இறந்த பின் உடன்கட்டை ஏறிய ஏழு பெண்களை வணங்குவதையே இவ்வழிபாடு குறிப்பதாகும். போர்க்கடவுளான இத்தெய்வங்கள் இங்கு ஒரு கோட்டை அல்லது துறைமுகப்பகுதி எனக் கருதக்கூடிய இடத்தில் அமைந்திருப்பதால் இவற்றைச் சங்க கால நடுகல் வழிபாட்டு மரபுடன் தொடர்புபடுத்தி ஆராயலாம் போல் தெரிகிறது.
பல்வேறு அளவுகளில், வடிவங்களில் அமைந்த இக்கற்களில் இரண்டு மனித தோற்றத்திலும், ஏனையவை சாதாரண கற்களுக்குரிய தோற்றத்திலும் உள்ளன. இதில் முதலாவது கல் ஒரு மனிதனுக்குரிய அமைப்பில் அதனை வடிவமைக்க முற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஆயினும் அதன் அனைத்து உடலுறுப்புக்களும் மனிதவடிவத்தைக் கொண்டிருப்பதாகக் கூறமுடியாது. இதன் இடுப்புக்கு கீழேயுள்ள பாகம் இயற்கையான கல்லாக காட்சியளிக்கும் போது, இடுப்புக்கு மேலேயுள்ள பாகம் சில செயற்கை வடிவங்களைப் பெற்றுள்ளது. ஆயினும் அதன் உடல் உறுப்புக்கள் செம்மைப்படுத்தப்படாது அவை குறியீடுகளாகவே காட்டப்பட்டுள்ளன. அதன் கைகள் மட்டும் தனியாகச் செதுக்கப்பட்டு அவை உடம்புடன் பொருத்தும் வகையில் தோள்மூட்டுப் பகுதியில் சதுரமான துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு தெய்வத்திற்கு அல்லது மனிதனுக்கு உரிய சிலையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது (படம்-1).
(படம்-1) மனித வடிவிலமைக்கப்பட்ட கல்லுருவம்

Page 63
104 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இரண்டாவது கல்லில் தெய்வம் அல்லது மனி க் குறிக்கும் g செயற்கையான எந்த மாற்றமும் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படவில்லை. ஆனால் அதன் தோற்ற அமைப்பில் மனித பாவனை காணப்படுவதோடு, அதன் வலது கை கீழே தொங்கவிடப்பட்டிருப்பது போன்ற பாணியில் காணப்படுகிறது. இது கல்லின் இயற்கையான அமைப்பாக இருக்கலாம். அல்லது கல்லில் செயற்கையாக ஏற்படுத்திய வடிவமைப்புக்கள் காற்று, மழை என்பன ஏற்படுத்திய தாக்கத்தால் அதன் ஆரம்ப செயற்கை வடிவங்கள் மறைந்திருக்கலாம் (படம்-2).
(படம்-2) மனித வடிவிலமைந்த கல்
ஏனைய கல் உருவங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக இயற்கையாகக் கிடைத்த கற்களைக் கொண்டு வந்து அவற்றிற்கு தெய்வ முக்கியத்துவம் கொடுத்து இங்கு நாட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் அவற்றுள் சில கற்கள் தோற்ற அமைப்பில் மிக உயரமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருப்பதுடன் அக்கற்களைச் சுற்றி அத்தெய்வங்களைக் குறிக்கும் சமயச் சின்னங்களும் காணப்படுகின்றன. சில கற்களில் தலம் போன்ற சின்னங்கள் கற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. வேறு சில உயரமான கற்களின் கீழ் சிறிய கற்கள் நாட்டப்பட்டு அவை சிறு தெய்வங்களாக வழிபடப்படுகின்றன. இவற்றிலிருந்து இக்கற்களுக்கு தெய்வ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தெரிகிறது. இங்கிருக்கும் அனைத்துக் கற்களின் தோற்ற அமைப்பு தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடுகற்களைப் போல் மிக உயரமாக வடிவமைக்கப்பட்டது எனக் கூறமுடியாது.
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 105
ஆயினும் ஒரு சில கற்களில் அந்த அம்சத்தைக் காணமுடிகிறது (படம்-3). மேலும் இக்கற்கள் மரநிழலின் கீழ் நாட்டப்பட்டு வழிபடப்படும் முறை, வழிபடும் தெய்வப் பெயர்கள், படையற் பொருட்கள், கிரிகை முறைகள் என்பன சங்க இலக்கியத்தில் வருணிக்கப்படும் நடுகல் வழிபாட்டையே கினைவுபடுத்துவதாக உள்ளன.
(படம்-3) சூலத்துடன் கூடிய கல்
கற்களை தெய்வங்களாகக் கருதி அவற்றை ஆலயங்களில் வைத்து வழிபடும் மரபு இயற்றாலையில் மட்டுமன்றி இன்றும் தென்மராட்சியின் ஏனைய இடங்களிலும், வடமராட்சி, தீவு, வன்னி எனப் பல வட்டாரங்களிலும் காணப்படுகின்றன. இதனால் அவற்றையெல்லாம் நடுகல் வழிபாட்டை ஒட்டித் தோன்றிய கற்களாகக் கூறமுடியாது. ஆனால் இயற்றாலையில் தற்காலத் திலும் தெய்வங்களாக வழிபடப்படும் கற்களுக்கு மிகத் தொன்மையான வரலாறு உண்டு என்பதற்கு மேலே கூறப்பட்ட தொல்லியல் சின்னங்கள் மட்டுமல்ல, காலத்தை வரையறுத்துக் கூறக்கூடிய கல்வெட்டு ஆதாரங்களும் இங்கு காணப்படுகின்றன.
இக்கற்கள் அனைத்தும் வட்டவடிவில் வளர்ந்துள்ள மரநிழலின் கீழ் அரைவட்ட வடிவில் காட்டப்பட்டு அதன் அடியில் செங்கற்களால் அமைக்கப்பட்ட சிறிய மேடைகள் காணப்படுகின்றன. இச்செங்கல் மேடைகள் முதலில் அமைக்கப்பட்டு பின்னர் தெய்வத்தைக் குறிக்கும் கற்கள் நாட்டப்பட்டதா அல்லது தெய்வத்தைக் குறிக்கும் கற்கள் நாட்டப்பட்டதன் பின்னர் இம்மேடைக்குரிய செங்கற்களை அயலிருந்து கொண்டுவந்து இம்மேடைகள் அமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால்

Page 64
106 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இம்மேடைகளில் உள்ள மூன்று செங்கற்களில் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்டதெனக் கூறக்கூடிய பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் 9x12 அங்குல நீள, அகலமுடைய இரு செங்கற்களில் முறையே இரு எழுத்துக்களும், 4x4 அங்குல நீள, அகலம் கொண்ட மூன்றாவது செங்கல்லில் ஒரு எழுத்தும் உள்ளன. முதலாவது செங்கல்லில் உள்ள எழுத்துக்களை மய அல்லது மாய எனவும், இரண்டாவது செங்கல்லில் உள்ள எழுத்தை தறா எனவும் வாசிக்க முடிகிறது. இச்சொற்கள் முழுச் சாசனத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். இதில் "மாய" அல்லது "மய" என வரும் சொல்லை மாயவன், மாயவள் என்ற பெயர் கொண்ட ஆண், பெண் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமுண்டு. மற்றைய செங்கல்லிலுள்ள சொல்லின் பொருள் விளங்கவில்லை. ஆனால் அதில் தமிழ்ப் பிராமிக்கேயுரிய "ற" என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பான அம்சமாகும். மூன்றாவது செங்கல்லில் "க" என்ற தனி எழுத்து மட்டும் காணப்படுகிறது. மேற்படி இடத்திலிருந்து மேலும் பிராமி எழுத்துப் பொறித்த செங்கல் ஒன்று எமது துறையைச் சேர்ந்த விரிவுரையாளர் திருமதி கிருஷ்ணகுமார் அவர்களால் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டமை மேலும் இங்கு பிராமி எழுத்துப் பொறித்த செங்கற்கள் இருக்கலாம் என்பதைச் சுட்டுகிறது.
காலத்தைக் குறிக்கும் இவ்வெழுத்துக்கள், ஆலயத்தின் அமைப்பு, சுற்றாடலில் பெறப்பட்ட புராதன காலத்திற்குரிய சான்றுகள் என்பவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி கோக்கும்போது இங்கிருக்கும் ஆலயம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் எனக் கருதுவதில் தவறில்லை. மேலும் இவ்வாலயம் அமைந்திருக்கும் இடத்தின் தன்மையை நோக்கும்போது ஆலயம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தினையும், அதன் பழமையையும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாலயம் தொடர்பாக இக்கிராமத்து மக்தளிடையே நிலவும் முக்கிய ஐதீகங்களில் ஒன்று இங்கு காணப்படும் அழிபாடுகள் பண்டைய காலத்திற்குரிய கோட்டை எனவும், அதிலிருந்து ஆட்சி புரிந்த மன்னர்களையும், போரில் ஈடுபட்ட வீரர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே போர்த் தெய்வங்களான நாச்சிமார், துர்க்கை, அண்ணமார் போன்ற தெய்வங்களுக்கு இக்கோட்டைக்குள்ளேயே ஆலயம் அமைக்கப்பட்டதெனவும் கருதுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் சிலர் இவற்றின் அழிபாடுகளையும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனோடு தொடர்புடைய இடப்பெயர்களையும் (சங்கிலியன் கோட்டை, சங்கிலியன் வெளி, சங்கிலியன் கிணத்தடி), அவன் போத்துக்கேயரிடம் தப்பி ஓடிவந்த இடங்களில் ஒன்றாக இவ்விடம் வரலாற்றிலக்கியங்களில் கூறப்படுவதையும் சான்றாகக்காட்டி இவற்றை யாழ்ப்பாண அரசு காலக் கோட்டையின் சிதைவுகள் எனக் கூறுகின்றனர்.

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 107
இங்கு காணப்படும் கட்டிடச் சிதைபாடுகள் மிகப் பழைய கட்டிடங்களின் எச்சம் என்பதில் சந்தேகமில்லை. தற்போது காணப்படும் எச்சங்களைவிடப் பல மடங்கு கட்டிட எச்சங்கள் காலத்திற்கு காலம் பிற தேவைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கிருக்கும் கோட்டைவாசல் பிள்ளையார் ஆலயத்திற்கு தேவையான பல கற்கள் இங்கிருந்தும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இற்றைக்கு 75 வருடங்களுக்கு முன்பாக யாழ்ப்பாண வரலாற்றை எழுதிய சுவாமி ஞானப்பிரகாசர் (1918) கூடத் தனது நூலில் இங்கிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் பிற இடங்களுக்கு ஏற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றை நோக்கும்போது வட இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்று இவ்விடத்தில் இருந்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. கலாநிதி இரகுபதி கி.பி.12 ஆம் நூற்றாண்டில் சோழர் வெற்றி கொண்ட இடங்களில் ஒன்றாகச் சோழக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மட்டுவில் என்ற இடம் இயற்றாலைக் கோட்டைக்குத் தெற்கே மிகக் கிட்டிய தூரத்தில் உள்ள தற்போதைய மட்டுவில் கிராமமாக இருக்கலாம் 6Tsorë &5q551éprTîr (Ragupathy 1987).
ஆயினும் இங்கிருக்கும் கட்டிட அழிபாடுகளை யாழ்ப்பாண அரசுடனும், அவற்றின் ஆரம்பத் தோற்றத்தை கோட்டையுடனும் தொடர்புபடுத்துவது பொருத்தப்பாடாக இல்லை. இக்கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில் இருந்து இங்கிருந்திருக்கக்கூடிய கட்டிடங்கள் சிலவாவது இற்றைக்கு 2000வருடங்களுக்கு முற்பட்டதென உறுதியாகக் கூறமுடியும். இக்காலத்தில் செங்கற்களைப் பயன்படுத்தி கோட்டைகள் அமைக்கும் மரபு தோன்றியதா என்பதை சமகால இலங்கை வரலாற்றின் பின்னணியில் வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது பொருத்தமாகத் தெரியவில்லை. மேலும் இக்கட்டிடப் பகுதிகளிலும், அதன் சுற்றாடலிலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட உரோம நாணயங்களுடன், சோழ, பாண்டிய நாணயங்களும் இந்திய, உரோம, அரேபிய மட்பாண்ட ஒடுகளும் கிடைத்துள்ளன. பொதுவாக இவ்வரலாற்றுச் சான்றுகள் ஒரு வர்த்தக மையத்தில் அல்லது துறைமுகப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதைப் போல் கோட்டைகள் இருந்த இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் இதன் ஆரம்ப தோற்றம் ஒரு துறைமுகமாக இருந்ததெனக் கூறுவது பொருத்தமாக இருக்கும். அதற்கு ஏற்றதாக இதன் அமைவிடம் கடல் வழித் தொடர்பின் மையத்தில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

Page 65
108 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-4) இயற்றாலைப் பகுதியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள்
ஆனால் துறைமுகங்கள் அமைந்திருந்த இடங்களில் காலப்போக்கில் கோட்டைகள் கட்டப்பட்டதற்கு ஈழத்திலும், தமிழகத்திலும் பல சான்றுகள் காணப்படுகின்றன. இதற்கு ஈழத்தில் மாதோட்டம், திருகோணமலை போன்ற துறைமுகப்பகுதிகளை அண்டிப் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளை உதாரணத்திற்குக் குறிப்பிடலாம். இவ்வாறான கோட்டை யாழ்ப்பாண அரசு காலத்தில் இயற்றாலையிலும் கட்டப்பட்டிருந்ததா என்பது ஆராய்ந்து கண்டறியப்படவேண்டிய விடயங்களில் ஒன்றாகும். ஈழத்தின் பண்டைய கால ஆலயங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் வர்த்தகத் துறைமுகங்களும் காணப்பட்டன. இதற்கு மாதோட்டத்தில் இருக்கும் திருக்கேதீஸ்வரம், திருகோணமலையில் (கோகர்ணம்) உள்ள திருக்கோணேஸ்வரம், யாழ்ப்பாணத்தில் ஜம்புக்கோளத் துறைமுகத்தில் இருந்த ஜம்புக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்களைக் குறிப்பிடலாம். இயற்றாலைக் கட்டிட அழிபாடுகளிடையே காணப்படும் பட்டை தீட்டப்பட்ட மிகப் பெரிய கற்கள் இடைக் காலத்தில் இங்கிருந்த ஆலயத்தைச் சேர்ந்ததெனக் கருத இடமளிக்கிறது. இங்கிருந்து எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டும் தற்காலத்திற்குரிய கோட்டைவாசல் பிள்ளையார் ஆலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றை நோக்கும் போது தற்போது இங்கு காணப்படும் மிகப் பெரிய கோட்டைவாசல் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னோடியாக இரு ஆலயங்கள் இங்கிருந்தன எனக் கூறலாம். இதன் ஆரம்ப தோற்றம் தற்போது மரநிழலில் வைத்து வழிபடப்படும் கற்களாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே தற்காலத்திலும் கோட்டை வாசல் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த உற்சவத்தின் போது அதற்கான படையலும், பூசைகளும் இக்கற்களை வைத்து நடாத்தப்படுகின்றது. இது பழைய ஆலயத்துடனான
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் O9
பாரம்பரியமான உறவு இன்னும் மறையவில்லை என்பதைக் காட்டுகின்றன. இதனால் மரநிழலின் கீழ் அமைந்த ஆலயத்தை கி.மு. 2000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததெனக் கூறுவதில் ஐயமில்லை. அதன் தோற்றத்திற்கு இங்கிருந்த துறைமுகம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். பண்டைய காலத்தில் போர்வீரர்கள் தங்கியிருந்த இடங்களில் ஒன்றாகத் துறைமுகங்கள் விளங்கியதைச் சங்க இலக்கியமும், ஈழத்துப் பாளி நூல்களும் கூறுகின்றன. சங்ககால நடுகல் வழிபாடு இறந்த போர்வீரர்களை மையமாக வைத்து தோன்றியது. அங்கடுகற்கள் காலப்போக்கில் போர் தெய்வங்களாக வழிபடப்பட்டதற்குச் சங்க இலக்கியத்திலும், சமகாலக் கல்வெட்டுக்களிலும் பல சான்றுகள் உள்ளன. இங்கே இயற்றாலைப் பகுதியில் உள்ள ஆலயத்தில் அண்ணமார், துர்க்கை, காளி, நாச்சிமார் ஆகிய தெய்வங்கள் போர்த் தெய்வங்களாக உள்ளன. இதனால் சங்க காலத்தைப் போல் இங்கும் போரின் போது இறந்த வீரர்களின் கினைவாக இத்துறைமுகப்பகுதியில் இவ்வாலயம் தோன்றியிருக்கலாம் எனக் கூறுவது கால அடிப்படையிலும், அதன் வழிபாட்டு முறையிலும் பொருத்தமாக உள்ளது.
சைவசமயம்
ஈழத் தமிழரிடையே இந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவ, வைஷ்ணவ வழிபாட்டு மரபு பண்டு தொட்டு இருந்து வந்ததற்கான தொல்லியல், இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றுள் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவ வழிபாடு மிகத் தொன்மையானது. இவ்வழிபாடு கி.மு.8-7ஆம் நூற்றாண்டிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டைப் பின்பற்றிய மக்களிடையே நிலவியிருக்கலாம் என்பதற்கு அப்பண்பாட்டு மக்களது கலைப் படைப்புக்களில் காணப்படும் சுடுமண்ணாலான இலிங்க வடிவங்கள், காளையின் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் இருதலை, முத்தலைச் தலங்கள் என்பன சான்றாக உள்ளன. பூநகரி, கந்தரோடை ஆகிய இடங்களில் கிடைத்த பெருங்கற்காலச் சின்னங்களிடையே நரை நிற மட்பாண்ட ஒடுகள் நாணயங்களுக்குரிய வடிவில் சிறு வட்டங்களாக வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் தலம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இது போன்ற வேறு சில மட்பாண்ட ஒடுகளின் மையத்தில் சிறிய துவாரம் ஒன்று காணப்படுகிறது. அதைத் தாயத்துப் போன்று அக்கால மக்கள் கழுத்தில் அணிந்திருக்கலாம். (படம்-5).

Page 66
110 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
剥
(படம்-3) சூலம் வரையப்பட்ட மட்பாண்ட ஒடுகள்
இப்பண்பாட்டு வழிவந்த மக்களில் ஒரு பிரிவினர் சிவ வழிபாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக அவர்கள் தமது பெயரோடு "சிவ" என்ற சொல்லையும் முதன்மைப்படுத்திக் கொண்டதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு ஆதிகால மன்னர்களும், சிற்றரசர்களும் விதிவிலக்கல்ல. அதிலும் சிறப்பாக கி. மு. 4-3 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த மன்னர்கள் சிலரின் பெயரில் "சிவ" என்ற பெயரே கூடுதலாக முதன்மைப்படுத்தப்பட்டுள் ளதைக் காணலாம். அவர்களுள் பாண்டு வாஸேைதவனின் குமாரர்களில் ஒருவன் "சிவ" என்னும் பெயரைப் பெற்றிருந்தான். கிரிகந்த சிவ என்பது பண்டுகாபய மன்னனின் மாமனின் பெயர். மஹாசிவ என்பது அசேல மன்னனின் சகோதரன் பெயர். முடசிவ என்பது தேவநம்பிய தீஸ மன்னனின் தந்தையின், GLurgib (Mahavamsa.X:29,XXl:1). 9rg abasarase uusõUGö5uu இப்பெயர் சமகாலத்தில் இங்கு வாழ்ந்த பல தரப்பட்ட மக்களிடையே நிலைத்திருந்ததை கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. குறிப்பாக 80க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் ஸிவ, காலஸிவ, குதளிவ, ஸிவ குத்த, லிவ பூதி, மகாஸிவ போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இரு கல்வெட்டுக்களில் வரும் பெயர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதான அவற்றிலுள்ள பெயர்களை ஸிவ5 என வாசித்துள்ளார் (Paramavithana 1970.nos.792, 808). ஆனால் இவற்றில் ஒரு கல்வெட்டில் தமிழ்ப் பிராமி எழுத்திற்கேயுரிய "ன்" என்ற எழுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் உள்ளது. அப்படியாயின் அப்பெயரைச் சிவன் என வாசிக்க முடியும். இரண்டாவது பெயர், கல்வெட்டிலுள்ள எழுத்தின் அடிப்படையில் ஸிவகே (சிவனே) என்று வாசித்திருக்க வேண்டும். பெயரின் இறுதியில் வரும் எழுத்து எதுவானாலும் தமிழில் சிவன் என அழைக்கப்படும் வகையில் அவை அமைந்துள்ளன.
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 111
பொதுவாக தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழுக்குரிய "ன்" என்ற எழுத்துப் பயன்படுத்தப்பட்டாலும் சில கல்வெட்டுக்களில் "ன்" என்ற எழுத்திற்குப் பதிலாக "ங்" என்ற எழுத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக சங்க இலக்கியத்தில் வரும் அதியன் என்ற பெயர் ஜம்பையில் கிடைத்த பிராமிக் கல்வெட்டில் அதியங் என்று எழுதப் பட்டுள்ளதையும், அதை அதியன் என பொருள் கொள்ளப்பட்டதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். இதனால் மேற்கூறப்பட்ட கல்வெட்டில் வரும் பெயர் "சிவகே" என்று இருந்தாலும் அது தமிழில் "சிவன்" என்ற பெயரில் எழுதப்பட்டதெனக் கொள்ளலாம். இப்பெயர்கள் தென்னாசியாவில் பிற்காலத்தில் பெரிதும் வழங்கிவரும் சிவன், சிவனே என்ற பெயர்களின் முன்னோடியான வடிவங்கள் ஈழத்தில் தோன்றியதைக் காட்டுகின்றன எனக் கூறலாம்.
சிவ வணக்கத்தின் தொன்மையை எடுத்துக் காட்டுவதில் தமிழர்கள் வெளியிட்ட பண்டைய கால காணயங்களுக்கு முக்கிய பங்குண்டு. இதற்கு வடஇலங்கையில் உடுத்துறை என்ற இடத்தில் கிடைத்த நாணயம் தனிச் சிறப்புடையது. இது 2.5x 1.4 சென்ரி மீற்றர் நீள, அகலமுடைய நீள் சதுர நாணயமாகும். செப்பும், ஈயமும் கலந்து வார்க்கப்பட்ட இந்நாணயத்தில் கிற்கும் நிலையில் ஒரு ஆணின் உருவம் காணப்படுகிறது.
இதே வடிவமைப்புடைய நாணயங்களில் பெண் உருவங்களைப் பொறிப்பது ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களுக்குரிய தனிப்பண்பாகும். ஆனால் இங் நாணயத்தில் பெண்ணுக்குப் பதிலாக ஆணின் உருவம் காணப்படுகிறது. இந் நாணயத்தின் பின்புறத்திலும் பெண் உருவம் கொண்ட நாணயங்களில் வருவது போல் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா பொறிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்குரிய சில அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இங்காணயம் ஈயம் கலந்து வார்க்கப்பட்டிருப்பதால் அவ்வடையாளங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இதன் வடிவமைப்பைக் கொண்டு இது பெண் உருவ நாணயங்கள் வெளியிடப்பட்ட காலத்திற்குரியவை என நிச்சயப்படுத்திக் கூறலாம். பெண் உருவ நாணயங்களில் சிவனுக்குரிய திரிதலம், நந்தி, லிங்கம் போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்நாணயத்தில் பெண் தெய்வத்திற்குப் பதிலாக ஆண் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதால் அவ்வுருவம் சிவனைக் குறித்ததெனக் கொள்வது பொருத்தமாகத் தெரிகிறது. மேலும் இது ஒரு தெய்வத்திற்குரிய உருவம் என்பதை நாணயத்தின் பின்புறத்தில் எழுதப்பட்டுள்ள "ஓம்" என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. இது போன்ற நாண்யங்கள் மேலும் கிடைக்கும் பட்சத்தில் இக்கருத்து மேலும் வலுப்பெறலாம் (படம்-6).

Page 67
112 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-6) உடுத்துறையில் கிடைத்த நாணயம்
அண்மையில் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கண்டு பிடிக்கப்பட்ட கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டதாகக் கணிப்பிடப்பட்டுள்ள ஈய நாணயங்கள் சிலவற்றில் "ஆட்" பெயர்களுடன் அவர்கள் பின்பற்றிய மதத்தின் சின்னங்களும் காணப்படுகின்றன. அவற்றுள் "சிவ" "சிவக" என்ற பெயர் பொறித்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இப்பெயர்கள் சமகாலக் கல்வெட்டுக்களைப் போல் சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கு மேலும் சான்றாகும். ஆனால் கல்வெட்டுக்களில் இப்பெயர்களைப் பலதரப்பட்ட சமூகம், தொழில் மதம், இனம் சார்ந்த மக்களும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாணயங்களில் வரும் பெயர்களை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இவை பெரும்பாலும் ஆட்சியில் இருந்த அரசர்கள், சிற்றரசர்கள், சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் ஆகியோரால் வெளியிடப்பட்டவையாகும். இதனால் இவற்றால் அறியப்படும் சமய நம்பிக்கைகள் நாணயங்களை வெளியிட்டவர்களை மட்டுமன்றி அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களின் அல்லது அவர்களைச் சார்ந்த சமூகத்தின் சமய நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் நாணயங்களில் வரும் பெயர் பெரும்பாலும் "சிவ" வழிபாட்டுடன் தொடர்புடையது என்பதற்கு தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த நாணயத்தில் "சிவ" என்ற பெயருடன், சிவனின் சின்னமான நந்திபாதமும் பொறிக்கப்பட்டுள்ளமை சான்றாகும் (Bopearachchi 1999:54, No13), இதே காலப்பகுதிக்குரிய "சிவ" என்ற பெயர் வெள்ளி நாணயம் ஒன்று அண்மையில் கந்தரோடையிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (கிருஷ்ணராஜா 1998).
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் ; 113
சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதில் அக்கடவுளரோடு தொடர்பான சின்னங்களுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள திரிதலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட முத்திரை நாணயங்களில் இச்சின்னம் பொறிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பிற்கால வார்ப்பு நாணயங்களில் இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன (Sama1990:13). இதற்குச் சங்க காலத்தில் பாண்டியர், மலையமான் போன்ற மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் வரும் திரிதலங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன (Krishnamurthy 1997). இம்மரபு பிற்காலத் தமிழ் நாட்டு நாணயங்களில் தொடர்ந்ததற்குப் பல சான்றுகள் உள்ளன.
கற்கால மட்பாண்டங்களில் குறியீடாகக் காணமுடிகிறது. காலப்போக்கில் இவற்றின் தொடர்ச்சியை தமிழர்கள் வெளியிட்ட, பல்வேறு காலகட்டத்திற்குரிய நாணயங்களிலும் காணமுடியும். தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றின் முன்புறத்தில் இடப்புறம் பார்த்து கிற்கும் மனிதனுக்கு முன்னால் திரிதலமும், பின்புறத்தில் மல்லக திஸ்ஹ என்ற பெயரும் காணப்படுகின்றன(Bopearachchi 1999:53, No11) (படம்-7)
(படம்-7) திரிசூலம் பொறித்த கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயங்கள்
இதில் வரும் மல்ல என்ற பெயர் சமகால இலங்கை, தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் மல்லன் என்று தமிழில் எழுதப்பட்டுள்ளதோடு, "திஸ" என்ற பெயர் சமகாலப் பாளி இலக்கியத்திலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் சில இடங்களில் தமிழருக்குரிய பெயராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது (Paranavithana 1970. Nos.94,202., Mahadevan 1966, Laulsorío 2001). இதனால் இங்காணயத்தை தமிழ் சிற்றரசன் அல்லது குறுகிலத் தலைவன் வெளியிட்டிருக்கலாம் எனக் கூறமுடியும். ஏறத்தாழ இதே காலகட்டத்திலிருந்து புழக்கத்திற்கு வந்த பெண் உருவம் பொறித்த நீள்சதுர நாணயங்கள்

Page 68
114 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
சிலவற்றின் முன்பக்கத்தில், நிற்கும் நிலையில் உள்ள பெண்ணின் இடப்புறத்தில் திரிதலம் காணப்படுகிறது (புஷ்பரட்ணம் 1999:1-12).
தமிழகத்தில் உரோம நாணயங்களைப் பின்பற்றி மன்னனின் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடும் மரபு சங்க காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது என்பதற்கு மாக்கோதை, குட்டுவன் கோதை, கொல்லிரும்பொறை, கொல்லிப் பொறை போன்ற பெயர் பொறித்த நாணயங்கள் சான்றாகும் (சீதாராமன் 1994, Krishnamurthy 1997). Quỏ InƯL RFg$ 5ướìgfìSoL&uugưi ஏற்பட்டிருக்கலாம் என்பதற்குப் பூநகரியில் சில சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த வட்டமான செப்பு நாணயத்தில் மன்னன் உருவமும், பின்புறத்தில் இரு மனித உருவங்களுக்கிடையில் கைப்பிடியுடன் கூடிய சூலமும் காணப்படுகின்றன (படம்-8).
(படம்-8) நாணயத்தில் பொறிக்கப்பட்ட கைப்பிடியுடன் சூடிய சூலம்
இங்ாகாணயம் ஈழத் தமிழரால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதற்கு மூன்று அம்சங்களை ஆதாரமாகக் காட்டலாம். ஒன்று இவ்வாறான தலை உருவம் பொறித்த காணயங்களுக்குரிய சுடுமண் அச்சுக்கள் அண்மையில் தென்னிலங்கையிலும், வடஇலங்கையில் பூநகரியிலும் கிடைத்துள்ளன (Bopea -rachchi 1999), இங்ாகாணயங்கள் இன்னொரு நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டால் அவற்றை வடிவமைப்பதற்குரிய அச்சுக்கள் இங்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு தமிழகத்திலும், வடஇந்தியாவிலும் வெளியிடப்பட்ட நாணயங்களில் தலத்தைப் பொறிக்கும் வழக்கம் இக்காலத்தில் இருந்தாலும் கைப்பிடியுடன் கூடிய தலங்கள் அதுவும் இரு மனித உருவங்களுக்கிடையில் பொறித்ததற்கு எந்தச் சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. மூன்று ஈழத்தில் தமிழ்ப் பெயர் பொறித்த சமகால நாணயங்களில் தலம் காணப்படுகிறது. இதனால் இங்காணயத்தை ஈழத் தமிழரே வெளியிட்டனர் என்பதில் சங்தேகமில்லை (புஷ்பரட்ணம் 2001). இதில் சிறப்பாகக் கவனிக்கத்தக்க அம்சம் இந்திய நாணயங்களில் வரும் தலத்திற்குக்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 115
கொடுக்கப்படாத முக்கியத்துவம் இச்சூலத்திற்கு கொடுக்கப்பட்டு அது நாணயத்தின் மையத்தில் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இதிலிருந்து இங்காணயத்தை வெளியிட்ட தமிழ் மன்னன் "சிவ" வழிபாட்டில் கொண்டிருந்த ஈடுபாடு கன்கு தெரிகிறது.
கி.பி.13ஆம் நூற்றாண்டிலிருந்து யாழ்ப்பாண அரசு காலத்தில் சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றதை அவர்கள் வெளியிட்ட நாணயங்களின் முன் பக்கத்தை அலங்கரித்த "நந்தி" உருவம் சான்று பகர்கின்றன. ஆயினும் சிறிய நந்தி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களிலும், மன்னன் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களிலும் திரிதலம் முக்கிய சின்னமாக இடம் பெற்றிருப்பதைக் காணலாம் (படம்-9).
-*- # شیمی مم جسٹسمیہ པོ་༤ ۔ سمص تقس مجھے جب
慈 razzi8 حيويمنعة. فوضعتنسية
~
莎,、
ང་རང་
(படம்-9) திரிசூலம் பொறிக்கப்பட்ட யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள்
பண்டைய ஈழத் தமிழர் நாணயங்களில் வரும் சிவனுக்குரிய சின்னங்களுள் சிவலிங்கமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இதுவே சிவவடிவங்களுள் மிகத் தொன்மையானதெனக் கூறப்படுகிறது. இது குணமும், குறியும் கடந்த பேரொளியாகிய சிவனை ஒரு குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் தோன்றிய குறியீடாகும் (சிவகுருநாதபிள்ளை 1991:4). இதன் தொடக்ககாலச் சான்றுகள் ஈழத்தில் உருத்திரபுரம், மாமடு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் சுடுமண்களாகப் பெறப்பட்டுள்ளன. மேலும் இச்சின்னத்தை கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புழக்கத்திலிருந்த பெண் உருவம் பொறித்த நீள்சதுர நாணயங்கள் சிலவற்றிலும் காணமுடிகிறது. இந்நாணயங்களின் பின்புறத்தில் சுவஸ்திகா சின்னமும், இதற்கு இடப்புறமாகக் காளையும், வலப்புறமாக ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 1998:1-12)(படம்-10).

Page 69
116 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-10) காளை உருவம் பொறிக்கப்பட்ட பெண்தெய்வ நாணயங்கள்
சில நாணயங்களில் சிவலிங்கத்திற்குப் பதிலாக பூரணகும்பமும் (Parkar 1981:480), வேறு சில நாணயங்களில் சிவனுக்குரிய திரிதலமும், மழுவும் காணப்படுகின்றன. இவையிரண்டும் சிவனுக்குரிய முக்கிய படைக்கலன்களாகும். புறநானூறு சிவபிரானை "ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங்கணிச்சி மணிமிடற்றேன்" என்றும், "சீற்றம் நிறைந்த கூற்றம் என்றும்", "ஒரே கணை கொண்டு முப்புரத்தை எரித்து அமரர்க்கு வெற்றி தந்த கறைமிடற்று அண்ணல்" என்றும் கூறுகிறது (புறம் 54-55). மேற்குறிப்பிட்ட நாணயத்தில் வரும் சிவலிங்கத்தைத் தவிர பிற்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழர் நாணயங்களில் இச்சின்னம் பொறிக்கப்பட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் பழமைவாய்ந்தவை எனக் கருதப்படும் இலிங்க வடிவங்கள் சிற்பமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றுள் காலத்தால் முந்திய கல்லில் வடிவமைக்கப்பட்ட ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் முதன் முதலில் மாதோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டு எனவும், இது பல்லவக் கலைமரபை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆயினும் இவ்வளவு பெரிய இலிங்க வடிவங்கள் தமிழகத்தில் உள்ள பல்லவர் கால ஆலயங்களில் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. பூநகரி அரசபுரத்திற்கு அண்மையில் உள்ள கோயிற்காடு என்ற இடத்திலிருந்து ஆவுடையுடன் கூடிய இலிங்கம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இச்சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப்பகுதி பல நூற்றாண்டுகள் மக்கள் வாழாத பகுதியாக இருப்பதுடன், கோயிற்காடு மற்றும் சாமத்தியமேடு போன்ற
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 117
இடங்களில் பண்டைய கால கட்டிட அழிபாட்டுக்குரிய சான்றுகள் பரந்த அளவில் இன்றும் காணப்படுகின்றன. இதனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் மிகப் பழமையானதெனக் கருத இடமுண்டு. தற்போது இச்சிவலிங்கம் வவுனியாவில் உள்ள ஒரு சிவன் கோயிலில் வைத்து வழிபடப்படுவதாக அறிகிறோம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நல்லூர் இராசதானி காலத்தில் இருந்த சிவ ஆலயங்கள் பற்றித் தமிழ் இலக்கியங்களில் சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. அதை அவ்வரசு காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட சிவவழிபாட்டுச் சின்னங்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஆயினும் நாணயங்களில் சிவலிங்கம் இடம்பெற்றதற்கு இதுவரை எந்தச் சான்றும் காணப்படவில்லை. அத்துடன் அவ்வரசு காலத்திற்குரியதென உறுதிப்படுத்தக் கூடிய இலிங்க வடிவங்கள் சிற்பமாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் சின்னங்களுள் சிவனின் வாகனமான நந்தி (காளை) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சிந்து வெளி நாகரிக கால முத்திரைகள் பலவற்றில் இவ்வுருவம் பொறிக்கப்பட்டிருப்பதை சான்றாகக்காட்டி அக்காலத்திலேயே சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றுவிட்டதாகப் பலரும் கூறுகின்றனர். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னாசியாவில் புழக்கத்திற்கு வந்த முத்திரை IsmeoTuriasei (Punch- Mark Coins) uQoQuppleó p5ré5 2-Q56ui Luo வடிவங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடுத்து கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து வெளியிடப்பட்ட இந்திய வார்ப்பு நாணயங்கள் பலவற்றில் தனித்தும், பிற சின்னங்களுடன் சேர்த்தும் காளை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சங்ககால மூவேந்தர் வெளியிட்ட நாணயங்கள் பலவற்றில் காளை முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது.
வரலாற்றாய்வாளர்கள் பலரும் ஈழத் தமிழரிடையே நாணயங்களும், நாணயங்களில் கந்தியைப் பொறிக்கும் மரபும் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பின்னரே ஏற்பட்டதெனக் கூறிவந்துள்ளனர். ஆனால் அண்மைக்கால ஆய்வு களில் இருந்து அவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து நாணயங்களை வெளியிட்டுவந்ததற்கும் அவற்றில் நந்தியைப் பொறித்ததற்கும் உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில் சிறப்பாக குறிப்பிடத்தக்க அம்சம் சமகாலத் தமிழக நாணயங்களில் குறிப்பாக சங்ககால நாணயங்களில் பெரும்பாலும் கிற்கும் நிலையில் காளையுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தில்
பொறிக்கப்பட்டுள்ளன. இந்த அம்சத்தை கி.பி.5ஆம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த நீள்சதுர நாணயங்களிலும் காணமுடியும். இங்காணயங்களின் முன்புறத்தில் அமர்ந்த அல்லது நிற்கும் நிலையில் பெண் உருவம் காணப்படுகிறது. நாணயத்தின் பின்புறத்தின் மத்தியில் பீடத்துடன் கூடிய

Page 70
118 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
சுவஸ்திகாவும் அதற்கு இடப்புறமாக அமர்ந்த நிலையில் மிகத் தத்துருபமாக வடிவமைக்கப்பட்ட நந்தியும் காணப்படுகிறது (Parkar 1909.Seyon1998). இங்காணயத்தில் வரும் பெண் உருவமும், நந்தியும் சிவ சக்தி வழிபாட்டைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள இடமுண்டு. மேலும் கி.மு.1ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள் வெளியிட்டதாகக் கருதப்படும் சதுரவடிவிலமைந்த செப்பு நாணயங்களின் முன் புறத்தில் பூரணகும்பம் அல்லது பலிபீடம் போன்ற சின்னத்திற்கு முன்னால் நிற்கும் நிலையில் காளை உருவம் காணப்படுகிறது (புஷ்பரட்ணம் 2001)(இதன் புகைப்படம் இரண்டாவது இயலில் உள்ளது. பட இலக்கம்20).
இதே வடிவிலமைந்த நாணயங்கள் சமகாலத்தில் சங்க காலப் பாண்டியராலும் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அங்காணயங்களின் பின்புறத்தில் அவர்களின் குலச் சின்னமான மீன் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஈழத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் மீனுக்குப் பதிலாக இரண்டு சதுரமும், அதற்குள் சிறு வட்டமும், வட்டத்திற்குள் மூன்று அல்லது நான்கு புள்ளிகளும் உள்ளன. சில நாணயங்களில் இவற்றிற்குப் பதிலாக சிறிய முக்கோணம் காணப்படுகிறது. இவை நாட்டைக் குறிக்கும் சின்னங்களாக இருக்கலாம்.
நாணயங்களில் சிவ சின்னங்களைப் பொறிக்கும் மரபை யாழ்ப்பாணத்தரசர்கள் ஒறிசாவில் உள்ள கலிங்க வம்சத்து மன்னர்களிடம் இருந்தே பெற்றனர் என்ற கருத்துண்டு. ஆனால் மேற்கூறப்பட்ட சான்றுகள் இம்மரபு ஈழத்திலேயே பண்டைய காலத்தில் தோன்றியதைக் காட்டுகின்றன. இதில் சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகள் 13ஆம் நூற்றாண்டில் நல்லூரில் அரசமைப்பதற்கு முன்னர் வடஇலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்களும் சிவனுக்குரிய நந்தியையே தமது நாணயங்களில் முக்கிய சின்னமாகப் பொறித்துள்ளனர் என்பதாகும். அதேவேளை யாழ்ப்பாணத்தரசர் நாணயங்களில் நந்தியின் முக்கியத்துவம் கூடிக் குறைந்து காணப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னர் வடஇலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்களில் நந்தியே முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது. இதில் கி.பி. 6-9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் சதுர காணயங்கள் சிலவற்றில் முன்புறம் அமர்ந்த அல்லது நிற்கும் நிலையில் காளை உருவமும், பின்புறத்தில் இரு குத்துவிளக்குகளுக்கிடையில் தனியொரு மீன் சின்னமும் காணப்படுகின்றன. சில நாணயங்களில் முன்புறம் காளையும் பின்புறம் யானையும், குதிரையும் காணப்படுகின்றன (படம்-11).

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 9
(படம்-11) கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்
தமிழ் நாணயங்களில் வரும் காளை, யானை, குதிரைச் சின்னங்கள்
கி.பி. 10-13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட வட்டநாணயங்களின் முன்புறத்தில் பீடத்தின் மேல் இடம் அல்லது வலப்புறம் பார்த்த நிலையில் அமர்ந்த காளையின் உருவமும், அதன் இருபுறமும் குத்து விளக்கும் காளைக்கு மேலே துரியனும், நாணயத்தின் பின்புறத்தில் பீடத்தின் மேல் இரண்டு அல்லது மூன்று மீன் சின்னமும் அவற்றிற்கு இருபுறமும் குத்து விளக்கும் காணப்படுகின்றன. இதில் முக்கிய சின்னமாக இடம்பெறும் காளையின் தோற்ற அமைப்பு நாணயத்திற்கு நாணயம் வேறுபட்டதாக உள்ளன (புஷ்பரட்ணம் 1999). இந்த வேறுபாடுகள் கால மாற்றத்தை அல்லது பல்வேறு மன்னர்களால் வெளியிட்டதைக் காட்டி நின்றாலும் அம்மன்னர்கள் அனைவரும் சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றன (இவற்றின் புகைப்படம் இரண்டாவது இயலில் உள்ளது. படஇலக்கம்-21).
கல்லூரில் தமிழ் இராசதானி தோற்றம் பெற முன்னர் வடஇலங்கையில் சாவகன் தலைமையில் தமிழரசு ஒன்று இருந்ததையும், அவ்வரசு சிங்கள அரசுக்கு எதிராகப் போரிட்டதையும், சிங்கள மன்னர்கள் அவ்வரசைத் தோற்கடிக்கப் பாண்டியரின் படை உதவியை நாடியதையும் சமகாலப் பாளி இலக்கியங்கள், பாண்டியக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. எமக்கு கிடைத்த சில நாணயங்களின் முன்புறத்தில் நந்தியும் பின்புறத்தில் தேவநாகரி எழுத்தில் பரிசாவக என்ற பெயரும் காணப்படுகிறது. இதில் பூரிசாவக என நாம் வாசித்ததைப் பேராசிரியர் பத்மநாதன் பூரிசாகவன் என வாசிக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இங்ாகாணயத்தில் காணக்கூடிய முக்கிய அம்சம் இவன் கால நாணயங்களிலும் நந்தியே முக்கிய சின்னமாகப் பொறிக்கப்பட்டிருப்பதாகும். இதிலிருந்து இவன் ஆட்சியிலும் வடஇலங்கையில் சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தமை தெரிகிறது (படம்-12).

Page 71
120 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
படம்-12) சாகவன் நாணயம் யாழ்ப்பாணத்தரசர் நாணயம்
ந p
நல்லூர் இராசதானி கால நாணயங்களில் ஏனைய சின்னங்களை விடக் காளையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்கு முற்பட்ட கால காணய மரபின் செல்வாக்கு, முக்கிய காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணத்தரசர் நாணயங்களில் பீடத்தின் மேல் இடம் அல்லது வலப் புறம் பார்த்த நிலையில் காளை அமர்ந்திருக்க இதன் இருபுறமும் குத்துவிளக்கும், மேலே துரியனும், பிறைச் சந்திரனும் காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் தனித்தனி தெய்வங்களாக வழிபடப்பட்ட துரியனும், சங்திரனும் இங்கு சிவ வழிபாட்டுடன் இணைங்து கொண்டதைக் காணமுடிகிறது. நல்லூர் இராசதானிக்கு முற்பட்ட கால நாணயங்களின் வரும் காளைக்கு கீழே அமைந்த பீடத்திற்குப் பதிலாக நல்லுார் இராசதானி கால நாணயங்கள் பலவற்றில் சேது என்ற மொழி பொறிக்கப்பட்டது. இதில் சேது வாசகத்திற்கும் பீடமாகக் காட்டப்பட்டுள்ள மூன்று கோடுகளுக்குமிடையிலான தொடர்பு ஆராய்ந்து பார்க்கக் கூடியது. சில நாணயங்களில் முன்புறத்தில் காளைக்குப் பதிலாக மன்னன் உருவமும் அதற்கு இடப்புறமாகச் சிறிய காளையும், அருகில் சிவனுக்குரிய திரிதலமும் காணப்படுகின்றன (படம்-13).
படம்-13) நல்லுர் இராசதானி கால நாணயங்களில் வரும்
89 நி @
சூலத்துடன் கூடிய காளை உருவம்
 
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 121
இக்கால மன்னர்கள் காளை உருவத்தை நாணயங்களில் மட்டுமன்றி அரச கொடிகளிலும், ஆவணங்களிலும் அரச இலட்சினையாகப் பயன்பருத்தியுள்ளனர். அத்துடன் இக்கால மன்னர்களுள் ஒருவனை தசுஷிணகைலாசபுராணம் "இடபவான் கொடி எழுதிய பெருமான்" என வருணிக்கின்றது. இதைச் சோதிட நுாலும் உறுதிப்படுத்துகிறது (Pathmanathan 1980: 412-413). இவை சிவ வழிபாட்டில் யாழ்ப்பாண மன்னர்களுக்கிருந்த மிகுந்த ஈடுபாட்டைக் காட்டுகின்றன.
அண்மையில் தென்மராட்சியில் உள்ள உடுத்துறை என்ற கிராமத்தில் கிணறு ஒன்று வெட்டும் போது நான்கடி ஆழத்தில் புதையுண்டிருந்த கந்தி விக்கிரகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 2அங்குல நீளமும், 2 அங்குல அகலமும் கொண்ட மிகச் சிறிய விக்கிரகமாகும். ஒரு வகை மாபிள் கல்லில் எடுப்பான தோற்றத்தில் மிக அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட இதன் தோற்றம் யாழ்ப்பாணத்தரசர் காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியது. இதன் உயர்ந்த ஏரி, முன்னங்காலை மடித்திருக்கும் பாணி, தலையில் காணப்படும் அலங்காரம், கழுத்து மாலை என்பன யாழ்ப்பாணத்தரசர் கால நாணயங்களில் வரும் நந்தியைப் பெருமளவுக்கு ஒத்தவையாக உள்ளன. இவ் விக்கிரகத்தை சிவ வழிபாட்டை மேற்கொண்ட அக்கால மக்கள் தம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தியதாகக் கருத இடமுண்டு(படம்-14).
(படம்-14) உடுத்துறையில் கிடைத்த நந்தி விக்கிரகம்
இவ்வரசு காலத்தில் இருந்த சிவவாலயங்கள் பற்றி இவ்வரசு தொடர் பாகப் பிற்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களிற் சில சான்றுகள்

Page 72
122 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் செய்தியைக் குறிப்பிடலாம் (சபாநாதன் 1949:9-10).
"சிங்களவர் நிழல் வசதிக்கும் தண்ணீர் வசதிக்குமாக அங்குள்ள சிவாலயங்களில் இறங்கி அக்கோயில் பிரகாரங்களில் மீனைக் காயப்போட்டும், திருக்குளங்களில் தண்ணீர் அள்ளவும் தொடங்கியதால் அங்கிருந்த பிராமணர்கள் கோயில்களைப் பூட்டிக் கொண்டு அப்புறத்தே ஒதுங்கி விட்டார்கள். கோயிலில் சில காலம் பூசையில்லாமலிருந்தது."
இக்கூற்றினை இவ்வரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இடங்களில் கிடைத்த ஒரு சில சிலைகளும், சிற்பங்களும் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் கல்லூர் பூதவராயர் குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தசுஜிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் கமால் வீட்டுப்பகுதியில் நிலத்திற்கடியில் புதையுண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சண்டேஸ்வரர் சிற்பங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன (சிவசாமி 1973:11-23, 1992:1-24). இவற்றின் காலம், அவை வெளிப்படுத்தும் கருத்து, கலைமரபு என்பதையிட்டு வரலாற்றாசிரியர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன (கிருஷ்ணராஜா 1998:76-100). இருப்பினும் பேராசிரியர் சிவசாமி இவை நல்லூர் இராசதானி காலத்து ஆலயங்களில் வைத்து வழிபடப்பட்டதாக இருக்கலாம் என்பதற்குக் காட்டியுள்ள காரணங்கள் பொருத்தப்பாடாக உள்ளன.
ஈழத்தின் மிகத் தொன்மையான வழிபாடுகளில் சக்தி வழிபாடும் ஒன்றாகும். இது சிவ வழிபாட்டுடன் இணைந்த ஒன்றாக இருப்பினும் புராதன காலத்தில் அது தனித்தன்மையுடன் வளர்ந்ததற்கு ஈழத்தில் சில சான்றுகள் காணப்படுகின்றன. பாளி இலக்கியங்களில் ஈழத்தின் புராதன வழிபாடுகளில் ஒன்றாக யக்ஷி வழிபாடு குறிப்பிடப்படுகிறது. இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஆரம்ப நிலை எனக் கூறப்படுகிறது (சிற்றம்பலம் 1995). ஆயினும் தொல்லியல் ஆதாரம் என்ற வகையில் எமக்கு கிடைக்கும் காலத்தால் முந்திய கலைவடிவங்கள் பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண்ணில் செய்யப்பட்ட பெண் உருவங்களாகும். இப்பண்பாட்டிற்கு முன்னர் பழைய கற்கால, இடைக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் ஈழத்தில் பல வட்டாரங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அம்மக்களுக்குரிய சமய நம்பிக்கைகளை அறிவதற்குரிய உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெருங்கற்காலப் பண்பாட்டில் அம்மக்கள் இறந்தவர்களுக்காக அமைத்த ஈமச்சின்னங்களே அவர்களது சமய நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பெண் உருவங்கள் பெண் தெய்வ வழிபாட்டில் கொண்டிருந்த ஈடுபாட்டையும், நம்பிக்கையையும் மேலும் எடுத்துக் காட்டுவதாக உள்ளன. சமூகவியலாளர்கள் விவசாய

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 123
உற்பத்தியில் ஈடுபடும் மக்கள் மத்தியில் தமது விவசாய உற்பத்தியின் விருத்தியை தாய்மையின் சிருஷ்டியாகக் கருதப்பட்டதாகக் கருதுகின்றனர். இதன் அடிப்படையிலேயே பெண்வழிச் சமூக அமைப்பே முதலில் தோன்றியதாகவும் வலியுறுத்துகின்றனர். இதுவரை கிடைத்த தொல்லியல் சான்றுகளில் இருந்து ஈழத்தின் மிகத் தொன்மையான விவசாய உற்பத்தி முறை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றியமை தெரிகிறது. இதை இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களுடன் காணப்படும் வயற்பரப்பு குளம், ஈமச் சின்னங்களில் படையற் பொருட்களாக இடப்பட்ட விவசாய உற்பத்திக்கு பயன்படுத்திய கருவிகள், தானிய விதைகள், மங்தை வளர்ப்புக்குரிய எச்சங்கள் போன்ற அம்சங்கள் உறுதிப்படுத்துகின்றன. இச்சான்றுகள் அனைத்தும் இப்பண்பாட்டைப் பின்பற்றிய திராவிட மக்களின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக நீர்ப்பாசன விவசாயம் இருந்ததைக் காட்டுகின்றன. இவற்றின் அடிப்படையில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய சுடுமண்ணாலான பெண் உருவங்களை அம்மக்கள் பொருள் விருத்தகங்குரிய பூமாதேவியெனச் சிருஷ்டித்து வழிபட்டனர் எனக் கூறலாம்.
இந்த இடத்தில் சுடுமண்ணாலான பெண் உருவங்கள் பெண் தெய்வங்களாக வழிபடப்பட்டிருக்கலாம் என்பதற்கு எமது தொல்லியல் மேலாய்வின் ஆய்வின் போது பூநகரி வட்டாரத்தில் கிடைத்த சில சுருமண் உருவங்களைச் சான்றாகச் சுட்டிக்காட்டலாம். இச்சுடுமண் உருவங்கள் இவ்வட்டாரத்தில் உள்ள மண்ணித்தலை, பரமன்கிராய், பல்லவராயன் போன்ற பெருங்கற்கால மையங்களில் இருந்து பெறப்பட்டவை. இவற்றில் சில பெண் உருவங்களின் தலைப் பகுதியும், மற்றவை அவற்றின் உடைந்த பாகங்களாகவும் கிடைத்துள்ளன. இவற்றின் கலையம்சங்களை ஆராய்ந்து பார்க்கும்போது அவற்றுள் சில உருவங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெய்வத்தன்மை கொண்டவை எனக் கூற முடிகிறது (படம்-15).
(படம்-15)
சுடுமண்ணால் செய்யப்பட்ட
தெய்வத் தன்மை கொண்ட உருவம்

Page 73
124 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
சில பெண் உருவங்களின் முத்துப் பதிக்கப்பட்டது போன்ற கழுத்தாபரணம், பெரிய திலகம், நீண்ட குண்டலம், தடித்த கை, கால்களில் அணியப்படும் வளையல் போன்ற அம்சங்கள் தெய்வத்தன்மை பொருந்தியவையாகக் காணப்படுகின்றன. சில பெண் உருவங்களுடன் நாய், சிங்கம் போன்ற மிருக உருவங்களும் கிடைத்துள்ளன. இன்னும் சில பெண் உருவங்களில் சாதாரண பெண்ணுக்குரிய தோற்ற அமைப்பிலிருந்து வேறுபட்டு அதன் உடலுறுப்புக்கள் பெரிதாகவும், எண்ணிக்கையில் அதிகமாகவும் உள்ளன. சில உருவங்கள் பெண் என்பதற்குரிய குறியீட்டுத் தன்மையைத் தவிர அவற்றில் வேறு எங்த அம்சங்களைக் காணமுடியவில்லை. இந்த வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவற்றில் உள்ள சில பெண் உருவங்களை அக்கால மக்கள் பெண் தெய்வங்களாகக் கருதி வழிபட்டிருப்பார்கள் எனக் கூறலாம்
பெருங்கற்காலப் பண்பாட்டை அடுத்துப் பெரும்பாலும் அப்பண்பாட்டு வழிவந்த மக்களால் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தனிநபருக்குரிய சில பெயர்கள் பெண் தெய்வங்களுடன் தொடர்புடையவை என எடுத்துக் காட்டப்பட்டுள்ளன (சிற்றம்பலம் 1995). இவை இப்பெயர்களுக்குரியவர்கள் அல்லது இவர்களது மூதாதையினர் தாய்த்தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதை காட்டுவதாகக் கொள்ள G_ാങ്ങി©.
பெண்தெய்வ வழிபாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் முக்கிய சான்றுகளில் ஒன்றாக கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த நீள்சதுர நாணயங்கள் காணப்படுகின்றன. இவற்றின் முன்புறத்தில் உள்ள பெண் வடிவத்தைப் பலரும் பரீ லவர்மிதேவி எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவற்றின் பல்வேறு தோற்றத்தையும், அவற்றுடன் காணப்படும் சமயச் சின்னங்களையும் (இரண்டாம் இயலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது) ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை சக்தி, கண்ணகி, துர்க்கை, காளி போன்ற பெண்தெய்வங்களை பிரதிபலிப்பதாக உள்ளன. அவற்றுள் சிவனுடன் இணைந்த சக்தி வழிபாடு தனித்தன்மையுடன் வளர்ந்து சென்றதற்கு இங்ாகாணயத்தில் சான்றிருப்பதாகப் பேராசிரியர் பத்மநாதன் கருதுகிறார் (பத்மங்ாதன் 2002). அவ்வாறு கருதுவது முற்றிலும் பொருத்தமாகவே தெரிகிறது. ஏனெனில் சில் நாணயங்களில் அதன் முன்புறத்தில் நிற்கும் நிலையில் பெண் உருவமும், அதற்கு இடப்புறமாக திரிதலம் காணப்படுகின்றது. அதே போல் நாணயத்தின் பின்புறத்தில் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா மத்தியில் காணப்பட இடப்புறமாக அமர்ந்த நந்தி காணப்படுகிறது. சில காணயங்களில் சுவஸ்திகாவுக்கு வலப்புறமாக
சிவலிங்கம் அல்லது பூரணகும்பம் காணப்படுகின்றன. இதில் நாம் முக்கியமாக

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் s 125
அவதானிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்று பெண் வடிவத்திற்கு அடுத்த கிலையில் முக்கியப்படுத்தப்படும் சுவஸ்திகா தொடக்க காலத்தில் சிந்துவெளி முத்திரைகளிலும், இந்து தெய்வங்களுடனும் காணப்பட்டாலும் காலப்போக்கில் அது பல மதத்திற்கும், தெய்வங்களுக்கும் பொதுவானதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்றைய சின்னங்களான திரிதலம், நந்தி,
என்பதில் சந்தேகமில்லை (இவற்றிற்குரிய புகைப்படம் இரண்டாம் இயலில் கொடுக்கப்பட்டுள்ளது. படஇலக்கம்-23). இத்தகைய சிவ சின்னங்கள் சிவனோடு சேர்ந்த சக்தியைத் தவிர லஷ்மியுடனோ வேறு பெண் தெய்வங்களோடு வந்திருக்க இடமில்லை. இதனால் மேற்கூறப்பட்ட சின்னங்களுடன் நாணயத்தில் வரும் பெண் வடிவம் சக்தியைக் குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பிற்காலக் கலைகளில் பெரும்பாலும் சிவன் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில் சக்தியும் இணைந்து காணப்படுகிறது. ஆனால் நாணயத்தில் சக்தியே முதன்மைப்படுத்தப்பட்டுக் காணப்படுகிறது. இதற்கு ஆதிகாலப் பெண் வழிச் சமூக அமைப்பில் பெண் தெய்வம் முதன்மைப்படுத்தப்பட்டதால் இங்காணயத்திலும் சக்தி முதன்மைப்படுத்தப்பட்டு சிவனுக்குப் பதிலாக அவனது சின்னங்கள் வடிவமைக்கப்பட்டன எனக் கருத இடமுண்டு.
இவ்வழிபாடு ஈழத்து தமிழரிடையே தொடர்ந்தும் செல்வாக்குப் பெற்றிருந்ததை எடுத்துக் காட்டும் சான்றுகளுள் கி.பி.8-13 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டகால கட்டிட, சிற்ப அழிபாடுகள் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன. 1892இல் பெல் என்ற ஆங்கிலேயரால் அநுராதபுரத்தில் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 20க்கு மேற்பட்ட சைவக் கோவில்களின் கட்டிட, சிற்ப அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த அழிபாடுகளிடையே தெய்வச் சிலைகளும் அடங்கும். அவற்றுள் சக்திக்குரிய சிலைகளும் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சைவ ஆலயங்களுக்குரிய அழிபாடுகளுள் சில சக்திக்குரிய ஆலயங்களாக இருக்கலாம் எனக் கருதலாம். இதனை மேலும் உறுதிப்படுத்துவதாகவே இசுறுமுனியாப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிவன்-சக்திக்குரிய புடைப்புச் சிற்பங்கள் விளங்குகின்றன. அண்மைக் காலங்களில் அநுராதபுரத்திலுள்ள அபயகிரிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது சக்திக்குரிய விக்கிரகங்கள் சில கிடைத்துள்ளன. இவற்றின் கலைமரபு சமகாலத் தமிழகக் கலைமரபில் இருந்து வேறுபட்டதாக உள்ளது. இவை ஈழத் தமிழரால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் வைத்து வழிபடுவதற்காக வடிவமைக்கப்பட்ட விக்கிரகங்கள் எனக் கூற இடமுண்டு.
சக்தி வழிபாடு இவ்வட்டாரத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டுகின்றன. இவ்வட்டாரத்தில் ஒரு மைல் சுற்றுவட்டத்திற்குள்

Page 74
126 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கண்டுபிடிக்கப்பட்ட பத்திற்கு மேற்பட்ட கட்டிட அழிபாடுகளில் சில ஆலயங்களாக இருக்கலாம் என்பதை அய்ற்றிடையே கிடைத்த இந்து விக்கிரகங்களுடன், விமானம் தாங்கிப் பொம்மை, விநாயகர் சிற்பம் போன்ற கலைவடிவங்களும் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் சத்திக்குரிய இரு விக்கிரகங்கள் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் ஒன்று கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்பதை அதிலுள்ள சாசனத்தை அடிப்படையாகக் கொண்டு கூறமுடிகிறது. தனிச் செம்பினால் வார்க்கப்பட்டுள்ள இவ்விக்கிரகம் (புகைப்படம் இரண்டாம் இயலில், இலக்கம்17) சமகால இந்திய சிற்ப விதிகளைப் பின்பற்றி வார்க்கப்பட்டிருந்தாலும், அதில் சுதேச கலை மரபுக்குரிய சில தனித்துவமான அம்சங்களும் காணப்படுகின்றன (படம்-16).
(படம்-16) வன்னியில் கிட்ைத்த விக்கிரகம்
இவ்விக்கிரகம் ஆலயத்திற்குரிய கட்டிட அழிபாடுகளிடையே கிடைத்திருப்பதால் இங்கிருக்கும் அழிபாடுகளில் சக்திக்குரிய ஆலயமும் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இரண்டாவது விக்கிரகம் ஈயமும், வெள்ளியும் கலங்த நிலையில் முப்பரிமாண நிலையை ஒத்தவாறு வார்க்கப்பட்டுள்ளது. பீடத்தின் மேலமைந்த ஐந்து சென்ரிமீற்றர் உயரமுடைய இவ்விக்கிரகத்தின் தலைப்பகுதி தற்போது காணப்படவில்லை. ஆயினும் இதன் தெளிவான கழுத்தாபரணம், கைவளையல்கள், இடுப்பிலிருந்து பாதம் வரை நீண்டிருக்கும் பீதாம்பரம் என்பன கி.பி.11-12ஆம் நூற்றாண்டுக்குரிய ஈழ, தமிழக சக்தி விக்கிரகங்களில் காணக்கூடிய அம்சங்களாகும். இவ்விக்கிரகத்தைப்போல் முப்பரிமாண கிலையைப் பிரதிபலிக்கும் வகையில் சிறிய விக்கிரகங்களை வார்க்கும் மரபு தமிழகத்தில் பல்லவர், சோழர்
ஆட்சியில் காணப்பட்டாலும் மேற்கூறப்பட்ட விக்கிரகத்தின் ஆடை வழக்கத்திற்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 127
மாறாக வலப்புறமார்பை மூடிய நிலையில் வலப்பக்கத் தோளின் மேலால் செல்வதும், அதன் மேற்பக்க ஆடை அமைப்பு சமகாலத் தமிழக விக்கிரகங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன. இந்த அம்சங்கள் ஈழத்து நாட்டார் வழக்கியலின் வெளிப்பாடெனக் கூற இடமுண்டு. இவ்விக்கிரகங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக வார்க்கப்பட்டிருக்கலாம். யாழ்ப்பாண அரசு காலத்தில் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருந்ததைச் சமகாலச் சான்றுகள் பலவும் எடுத்துக் காட்டுவதால் சத்தி வழிபாடும் சிறப்புப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண அரசின் ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் கிடைத்த அம்மன் சிலைகள் விளங்குகின்றன (சிவசாமி 1973: 11-23, கிருஷ்ணராஜா 1998).
சிவ வழிபாட்டைப் போல் முருக வழிபாடும் ஈழத் தமிழரிடையே மிகத் தொன்மையானதென்பதை அண்மைக்காலத்தில் கிடைத்த தொல்லியற் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வழிபாட்டை தமிழருக்குரிய தனித்துவமான வழிபாடுகளில் ஒன்றாகக் கொள்ளும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தில் வரும் "முருகு" (அகநானூறு : 22-11, புறநானூறு 56:11, நற்றிணை47:10) "செவ்வேள்" (மதுரைக் காஞ்சி 611, நற்றிணை 34, குறுந்தொகை 53:3), "மீசையன்" (திருமுருகாற்றுப்படை 210), "விரைமயில் மேல் ஞாயிறு" (பரிபாடல் 18:26) என்ற சொற்றொடர்கள் முருக வழிபாட்டுடன் தொடர்புடையன. இம் முருகவழிபாடே வடஇந்திய வழிபாட்டுடன் இணைந்து காலப்போக்கில் "குமரக்" கடவுள் வழிபாடாயிற்று.
தமிழகத்தில் முருக வழிபாட்டின் தொடக்க காலச் சான்றுகளாக ஆதிச்ச கல்லூர் பெருங்கற்காலப் பண்பாட்டில் பெறப்பட்ட வேல், சேவல் என்பவற்றிற்குரிய சின்னங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஈழத்திலும் பொம்பரிப்பு, அநுராதபுரம், பின்வேவ, கந்தரோடை, பூநகரி ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் முருக வழிபாட்டை நினைவுபடுத்தும் வேல் குறியீடாகவும், சின்னமாகவும் பெறப்பட்டுள்ளன (சிற்றம்பலம் 1995:182, புஷ்பரட்ணம் 1991:38)(படம்17).
(படம்-17) பூநகரி பெருங்கற்காலப் பண்பாட்டில் கிடைத்த வேற் சின்னங்கள்

Page 75
128 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பிராமிக் கல்வெட்டுக்களிலும், சமகாலப் பாளி இலக்கியங்களிலும் வரும் தனிநபர் பெயர்களில் சில முருக வழிபாட்டுடன் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டுவதாக உள்ளன. அவற்றுள் வேல, வேலா, வேலு போன்ற பெயர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன (Paramavithana 1970), சங்க காலத்தமிழ் இலக்கியத்தில் முருகனுடைய பூசாரி வேலன் என்று குறிப்பிடப்படுகிறான். மேலும் இது முருகனைக் குறிக்கும் பெயராக மதுரைக் காஞ்சி, அகநானூறு முதலான தமிழ் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. குறுந்தொகையில் (சுகசு:1-2) "மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெற்றியையுடைய முருகக் கடவுளால் வந்ததென்று வேலன் சொல்வான்" எனக் கூறப்பட்டுள்ளது. பட்டினப் பாலையில் (154-8) முருகன் செவ்வேள் என்று குறிப்பிடப்படுகிறான். சமகாலத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் வேள் என்ற சொல் பட்டப்பெயராகவும், தனிநபர் பெயராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் தனிநபருக்குரிய பெயர் முருகனுடன் தொடர்புடையதெனக் கருதப்படுகிறது. ஈழத்தில் கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 21 கல்வெட்டுக்களில் வேள் என்ற சொல் காணப்படுகிறது. அவற்றுள் பெரும்பாலான கல்வெட்டுக்களில் வரும் இச்சொல் வடமொழியில் "ராஜா" என்ற பட்டத்திற்குச் சமனாக கருத்தில் பயன்படுத்தப்பட்டாலும், சில கல்வெட்டுக்களில் இச்சொல் தனிநபருக்குரிய பெயராகக் குறிப்பிடப்படுகிறது. இதைச் சமகாலத்துப் பாளி இலக்கியங்களில் வரும் வேலு- சுமண போன்ற பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன. இவை சங்க இலக்கியத்தில் முருகனைக் குறிக்கும் வேலா, வேள் போன்ற பெயர்களுடன் ஒப்பிடத்தக்கன.
தமிழகத்திற்கும் வடஇந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டுக் கலப்பால்
தமிழ் கடவுளான முருகன் காலப்போக்கில் குமரன், கார்த்திகேயன் போன்ற
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷணவ பதங்கள |AY
பெயர்களைப் பெற்றான். அதேபோல் பெளத்த மதத்தின் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்ட இலங்கை, வடஇந்தியத் தொடர்பால் முருக வழிபாட்டிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் வரும் குமார, மகாசேனன், விசாக போன்ற பெயர்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் "விசாக" என்ற பெயர் தமிழ் வணிகர்களுக்குரிய பெயராக வடஇலங்கையில் பெரிய புளியங்குளம் என்ற இடத்தில் உள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய இரு கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது (Paramavithana1970:nos. 356-357), இதையொத்த பெயர் தமிழகத்தில் கொடுமணல் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்கால மட்பாண்டத்தில் பெறப்பட்டுள்ளது (Rajan 1994:82). பேராசிரியர் பரணவிதான இப்பெயருக்குரியவர்களை முருக (ஸ்கந்த)வழிபாட்டுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறுகிறார் (Paramavithana 1970:CXXII).
கல்வெட்டுக்களைப் போல் ஈழத் தமிழர் வெளியிட்ட நாணயங்களும் முருக வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதில் முக்கிய சான்றாக விளங்குகின்றன. புராதன காலத்தில் வெளியிடப்பட்ட இந்திய நாணயங்களில் குறிப்பாக வடஇந்திய நாணயங்களில் முருகனுக்குரிய சின்னங்களுடன் முருகனுக்குரிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன (Gupta 1969:187). இம்மரபு ஈழத்தில் வெளியிடப்பட்ட தமிழர் நாணயங்களிலும் உண்டு என்பதற்குரிய சான்றுகள் அண்மைக் காலத்தில் கிடைத்துள்ளன. தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாணயமொன்றின் முன்புறத்தில் மயில் சின்னமும், பின்புறத்தில் தமிழ்ப் பிராமி எழுத்தில் மகாசாத் தன் என்ற பெயரும் காணப்படுகின்றது (Bopearachchi 1999.54), இங்காணயம் இலங்கைத் தமிழரின் புராதன முருக வழிபாட்டுத்தலமான கதிர்காமக் கந்தன் ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது (படம்-18).
(படம்-18)
2000 வருடங்களுக்கு முற்பட்ட ஈழத் தமிழர் நாணயம் (அக்குறுகொட)
8) о " о тш,

Page 76
130 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
சமகாலத்தில் வடஇலங்கையிலும் இருந்திருக் ம் என்பதற்கு கந்தரோடையில் கிடைத்த (Seyon 1998) நாணயங்கள் சான்றாகும். கி.மு. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்ாகாணயத்தின் முன்புறத்தில் பூரீவத்ஸாவும், பின்புறத்தில் மயில் சின்னத்துடன் தமிழ்ப் பிராமி எழுத்தில் உதி(ஹ)பன் என்ற பெயரும் காணப்படுகின்றன (Pushparatnam2001) (படம்-19).
(படம்-19) 2000 வருடங்களுக்கு முற்பட்ட ஈழத் தமிழர் நாணயம் (கந்தரோடை)
வரலாற்று ரீதியாக தென்னாசியாவில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு காலப் பகுதிக்குமுரிய நாணயங்களிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சின்னமும் ஏதோ ஒரு கருத்தின் அடிப்படையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணமுடி கிறது. இதில் சமய முக்கியத்துவமே மேலோங்கியிருந்ததை நாணய ஆதாரங்களுடன் அவ்வக்காலகட்டத்திற்குரிய பிற ஆதாரங்களை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் அடையாளம் காணமுடிகிறது (Sarma). இதே போல் இந்திய நாணயங்களில் மயிலை ஒரு சின்னமாகப் பயன்படுத்தும் மரபு பண்டுதொட்டுக் காணப்படுகிறது. கி.மு. 4ஆம், 3ஆம், நூற்றாண்டில் வடஇந்தியாவில் மெளரிய மன்னர் வெளியிட்ட முத்திரை நாணயங்களில் மயிலும் ஒரு சின்னமாக இடம்பெற்றுள்ளது (Gupta 1969: 187), பிற்காலங்களில் குசாணரும், கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டில் குப்தரும் தாம் வெளியிட்ட நாணயங்களில் மயிலை ஒரு சின்னமாகப் பயன்படுத்தியுள்ளனர்(Gupta1969:201). குப்த வம்சத்தவர் மயிலோடு முருகனைக் குறிக்கும் வேலையும், முருகனைக் குறிக்கும் கார்த்திகேய, குமார போன்ற பெயர்களையும் பொறித்துள்ளனர். ஆயினும் வடஇந்தியாவின் பண்டைய நாணயங்களில் மயிற்சின்னம் அரசன், காளை, அம்மன் போன்ற பிற சின்னங்களுடன் சேர்ந்து வருகின்றதே தவிர தனியொரு சின்னமாக இடம் பெற்றதாகத் தெரியவில்லை.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய திராவிட மாநிலங்களில் மயிலை நாணயங்களில் பொறிக்கும் மரபு கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு 1098 இல்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 3
கல்யாணிச்சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் (திருபுவனமல்ல) வெளியிட்ட செப்புகாணயங்கள் சான்றாகும் (Girjapathy 1999:82-3). தமிழ் நாட்டில் சங்ககால மலையமான் மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் மயிலுக்குப் பதிலாக வேல் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் புராதன காலம் தொட்டு முருக வழிபாட்டில் முதன் பெற்ற இடமாக தமிழ் நாட்டிலுள்ள பாண்டி நாடு கொள்ளப்பட்டாலும் சங்க காலப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் முருக வழிபாட்டிற்குரிய சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகக் கூறுவதற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர் வெளியிட்ட நாணயங்களில் முன்புறம் காளையுருவமும், அதன் மேற்புறத்தில் பல்லவர் கால எழுத்தில் "தம்" என்ற சொல்லும், பின்புறத்தில் இடப்புறம் நோக்கி நிற்கும் மயில் சின்னமும் இடம் பெற்றுள்ளன.
இவற்றின் அடிப்படையில் ஈழத்தில் கிடைத்த மேற்கூறப்பட்ட நாணயங்களில் வரும் மயில் சின்னத்தை நோக்கும் போது அந்நாணயங்களை வெளியிடக் காரணமாக இருந்த தமிழ் சிற்றரசர்கள் அல்லது குறுநிலத் தலைவர்கள் முருக வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர் எனக் கூறுவதில் ஐயமில்லை. பண்டு தொட்டு மயில் முருகனுடைய வாகனங்களில் ஒன்றாக இருந்ததற்கு புறநானூறு (65:7-8), திருமுருகாற்றுப்படை (210), பரிபாடல் (18:26) கங்தபுராணம் (4:13,376-381) போன்ற தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. சங்க காலத்தில் மூவேந்தரும், மலையமான் போன்ற குறுநில மன்னர்களும் வெளியிட்ட நாணயங்களில் சமயச் சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் முருகனுக்குரிய சின்னங்களுக்கு அதிலும் குறிப்பாக மயில் சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. அதிலும் மலையமான் வெளியிட்ட நாணயத்தில் வரும் வேல் சின்னத்தைத் தவிர பிற சின்னங்கள் சங்க கால மன்னர் வெளியிட்ட நாணயங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்நிலையில் ஈழத் தமிழர் வெளியிட்ட சங்க காலத்தை ஒத்த நாணயங்களில் சிவனுக்குரிய சின்னங்களைப் போல், முருகனுக்குரிய வாகனமான மயிற் சின்னம் நாணயங்களில் முக்கிய சின்னமாக இடம்பெற்றிருப்பது பண்டைய ஈழத்தில் முருக வழிபாடு பெற்றிருந்த முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இதற்கு மேலும் சான்றாக கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்த நீள்சதுர நாணயங்களில் வரும் சின்னங்களை எடுத்துக் காட்டலாம். இங்காணயங்களில் பூரீவத்ஸம், யானை, தாமரை, துலம், காளை, சிவலிங்கம் போன்ற பிற தெய்வங்களுக்குரிய சின்னங்களுடன் முருகனுக்குரிய மயில், வேல், சேவல் போன்ற சின்னங்களும் இடம்பெற்றுள்ளன (Parkar 1981:461-482, Peries 1919:40-67. Bopearachchi 1999: Sitrampalam

Page 77
132 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
1992:151-158. சிவசாமி 1970:26-36, கிருஷ்ணராஜா 1983:71-84, புஷ்பரட்ணம் 2001:90-100). இதில் மயில் சின்னத்துடன் வரும் வேல், சேவற் போன்ற சின்னங்கள் ஈழத்தில் முருகவழிபாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை மேலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவற்றில் வரும் வேல் சின்னம் வெற்றிக் கடவுளான முருகனை "வடிவேலன்" (சிலப்பதிகாரம்1:2, 49-50), "வெல்வேலான்" (கலித் தொகை.மருதக்கலி 28:26), எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுவதை அப்படியே நினைவுபடுத்துகிறது. சேவலை முருகனுடன் தொடர்புபடுத்துவது ஆரியக் கலப்பால் ஏற்பட்ட ஒன்று என்ற கருத்துக் காணப்படுகிறது. ஆயினும் அது பண்ருதொட்டு முருக வழிபாட்டுக்குரிய அடையாளச் சின்னமாகப் பார்க்கப்படுகிறது (காந்திதாசன் 1988:120). சங்க இலக்கியத்தில் முருக வழிபாட்டுடன் இணைந்த ஒன்றாக கடம்பமர வழிபாடு கூறப்படுகிறது. இதன் காரணமாக முருகன் "கடம்பமர்ந்த செல்வன்" எனப் பரிபாடலில் (8:126) விழிக்கப்படுகிறான். மேற்கூறப்பட்ட நீள் சதுர நாணயங்களின் பின்புறத்தில் பெரும்பாலும் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா காணப்பட்டாலும், பூநகரி, கிந்தவூர் ஆகிய இடங்களில் கிடைத்த சில நாணயங்களின் பின்புறத்தில் சுவஸ்திகாவுக்குப்பதிலாக வேலியிடப்பட்ட மரம் காணப்படுகிறது. இம்மரத்தைச் சங்க இலக்கியத்தில் வரும் முருகனுக்குரிய கடம்ப மரத்துடன் தெடர்புபடுத்திப்
பார்க்கலாம்(படம்-20).
(படம்-20) வேலியிடப்பட்ட மரம் (கடம்பமரம்?)
கி.பி. 7க்கும் கி.பி.13க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈழத்தில் முருக வழிபாடு அடைந்த வளர்ச்சியை அறிவதற்குரிய தொல்லியற் சான்றுகள் அதிகம் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஈழத்துப் பாளி நூலான தளவம்சத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாணவர்மன் என்ற இளவரசன் திருகோணமலையில் உருத்திராக்க மாலை ஒன்றைக் கையிலேந்தி மந்திரம்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 133
ஒன்றை உச்சரித்ததாகவும், அப்போது ஸ்கந்தகுமாரன் மயிலேறி வந்து வரமளித்ததாகவும் கூறுகிறது (Culavamsa LVII:4-13). இச்செய்தி இக்காலத்தில் வழக்கிலிருந்த முருக வழிபாட்டுடன் தொடர்புடையதாகக் கருத இடமளிக்கிறது. வன்னியில் செழியாவில் காட்டுப்பகுதியில் இருந்து செம்பினால் வார்க்கப்பட்ட மயில் விக்கிரகம் ஒன்று கிடைத்துள்ளது. இது நான்கு அங்குல நீளமும், மூன்றங்குல உயரமும், நூறு கிராம் எடையும் உடையது (படம்-21). இவ்விக்கிரகம் பிற்காலத்திலும் முருக வழிபாடு தொடர்ந்து செல்வாக்குடன் இருந்ததற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
(படம்-21) செழியாவில் கிடைத்த மயில் விக்கிரகம்
யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குரிய முதலாம் இராசேந்திரசோழன் காலக் கல்வெட்டொன்று இங்கிருந்த ஆலயம் ஒன்றிற்குத் தானமளித்த செய்தியைக் கூறுகிறது (Indrapala 1971). இதில் ஆலயம் இருந்த இடத்தின் பெயருக்குரிய எழுத்துக்கள் சில அழிந்திருந்தாலும் பெயரின் இறுதியில் வரும் எழுத்துக்கள் "லூர்" என முடிவதால் இவ்விடம் கல்லூராக இருக்க வேண்டும் எனவும், அங்கிருந்த ஆலயம் தற்போதைய நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்னோடியாக அமைக்கப்பட்டிருந்த முருகன் ஆலயமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றன. கோட்டையில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் மட்டுமன்றி இதற்கு முற்பட்ட காலக் கல்வெட்டுக்களும் பிற தொல்பொருட் சின்னங்களும்
பத்தாம் நூற்றாண்டுக்குரிய கிரந்தக் கல்வெட்டின் பாகம் வெளியே தெரிவதாகத் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தில் கிடைத்த புராதன நாணயங்களில் சில இக்கோட்டைப் பகுதியில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு இக்கோட்டை ஐரோப்பியரால் தற்போதைய

Page 78
134 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
நிலையில் அமைக்கப்பட்ட போது அதற்குத் தேவையான மூலப்பொருட்கள் ஏற்கனவே பிறஇடங்களில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து கொண்டுவரப்பட்ட போது அவற்றுடன் வரலாற்றுச் சின்னங்களும் கொண்டுவரப்பட்டதே காரணமாகும். இதற்கு அக்கால இந்து ஆலயங்களும் விதிவிலக்கல்ல. அதன் விளைவே இங்கு சோழக் கல்வெட்டுக் கிடைத்தமைக்குக் காரணமாகும். இக்கல் வெட்டில் வரும் இடப்பெயர் "லூர்" என முடிவது உறுதிப்படுத்தப்படுமானால் அந்த இடத்தை கல்லூர் எனக் கொள்வதில் தவறில்லை. நல்லூர் என்ற இடப்பெயர் இடைக்காலத்தில் ஆலயத்திற்கு கிவேதனமாகக் கொடுக்கப்பட்ட இடத்திற்குரிய பெயராக அழைக்கப்படுவது பொது வழக்காக இருந்ததைத் தமிழகத்தில் கிடைத்த சோழக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. இதனால் கோட்டையில் கிடைத்த கல்வெட்டில் வரும் கல்லூர் என்ற இடம் தற்போதைய கல்லூரா அல்லது இவ்வட்டாரத்தில் சோழர் காலத்தில் நல்லூர் என்ற இன்னொரு இடம் இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் கி.பி.13 ஆம் நூற்றாண்டிலிருந்து தற்போதைய கல்லூர் என்ற இடம் வரலாற்று மூலங்களில் குறிக்கப்படுவதோடு, அங்கிருந்த முருகன் ஆலயமும் குறிப்பிடப்படுவதால் சோழக் கல்வெட்டில் வரும் இடத்தை தற்போதைய கல்லூராகவும், அங்கிருந்த ஆலயத்தை தற்போதைய முருகன் ஆலயத்திற்கு முன்னோடியாக இருந்த ஆலயமாகவும் கொள்வது பெருமளவுக்குப் பொருத்தமாகும். இக்கல்வெட்டில் இருந்து நாம் அறியக்கூடிய இன்னொரு முக்கிய செய்தி ஈழத்தில் சோழர் ஆட்சி ஏற்பட முன்னரே யாழ்ப்பாணத்தில் முருகன் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தமையாகும்.
யாழ்ப்பாண அரசு காலத்தில் சிவ வழிபாடு போல் முருக வழிபாடும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதை இவ்வரசு காலத்தை ஒட்டித் தோன்றிய தமிழர் இலக்கியங்களும், தொல்பொருட் சின்னங்களும் உறுதி செய்கின்றன. அவற்றுள் ஏனைய சான்றாதாரங்களைக் காட்டிலும் இக்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் வரும் பெயர்களும், சின்னங்களும் கூடிய அளவிற்கு கம்பகத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. இம்மன்னர்களால் வெளியிடப்பட்ட சிவனுக்குரிய நந்தி வாகனம் பொறித்த அனைத்து நாணயங்களையும் (எமக்கு கிடைத்தவை மட்டும்)தொகுத்து நோக்கும் போது அவற்றில் மூன்று அம்சங்களைச் சிறப்பாக அவதானிக்க முடிகிறது. முதலாவது வகை நாணயத்தில் முன்புறத்தில் நிற்கும் நிலையில் மன்னன் உருவமும், நாணயத்தின் பின்புறத்தில் வலப்புறம் பார்த்திருக்கும் கந்தியும் அதற்கு கீழே சேது என்ற வாசகமும் காணப்படுகிறது. இதில் அமர்ந்திருக்கும் கந்தியின் முகத்திற்கு முன்னால் வலப் புறமாக தண்டுடன் கூடிய விரிந்த தாமரை மலர் காணப்படுகிறது (படம்-22).

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 135
(படம்-22) தாமரை மலருடன் கூடிய நந்தி உருவம் பொறித்த நாணயம்
இரண்டாவது வகை நாணயத்தில் முன்புறத்தில் நிற்கும் நிலையில் மன்னன் உருவமும், நாணயத்தின் பின்புறத்தில் வலப்புறம் பார்த்திருக்கும் நந்தியும் அதற்கு கீழே சேது என்ற வாசகமும் காணப்படுகின்றன. இதில் அமர்ந்திருக்கும் நந்தியின் முகத்திற்கு முன்னால் தாமரை மலருக்குப் பதிலாக இடப்புறம் பார்த்த நிலையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மயில் உருவம் காணப்படுகிறது (படம்-23).இதில் காணக் கூடிய முக்கிய அம்சம் நந்தியின் வயிற்றுப் பகுதியில் வரையப்பட்டுள்ள கட்டிடம் ஒன்றின் புற உருவத் தோற்றமாகும். இது யாழ்ப்பாண அரசு காலத்தில் இருந்த ஆலயத்தின் தோற்றமாக கருத இடமுண்டு.
(படம்-23) மயில் சின்னத்துடன் கூடிய நந்தி உருவம் பொறித்த நாணயம்
மூன்றாவது வகை நாணயத்தில் முன்புறத்தின் கிற்கும் நிலையில் மன்னன் உருவமும், நாணயத்தின் பின்புறத்தில் வலப்புறம் பார்த்திருக்கும் ஈந்தியும் அதற்கு கீழே சேது என்ற வாசகமும் காணப்படுகின்றன. இதில் வலப்புறம் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் முகத்திற்கு முன்னால் மயில் சின்னத்திற்குப் பதிலாக இடப்புறமாகப் பார்க்கும் வகையில், நிற்கும் நிலையில் மனித உருவம் ஒன்று காணப்படுகிறது (படம்-24).

Page 79
136 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
(படம்-24) மயில் சின்னத்துடன் முருகனுக்குரிய உருவம் பொறித்த நாணயம்
இதில் நந்திக்கு முன்னால் பொறிக்கப்பட்டுள்ள தாமரை, மயில், மனித உருவம் ஆகிய சின்னங்களுள் தாமரை மலர் பொதுவாக பல தெய்வங்களுடன் வருவதால் இதில் எந்த தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக் கூறமுடியவில்லை. ஆனால் மற்றைய நாணயங்களில் தாமரைக்குப் பதிலாக மயில் இடம் பெறுவதால் தாமரை மலர் முருகனைக் குறித்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இதில் வரும் மயில் முருகனைக் குறித்ததென்பதில் சங்தேகமில்லை. ஏனெனில் இவ்வரசு காலத்தில் வெளியிடப்பட்ட சில நாணயங்களில் முருகனைக் குறிக்கும் பெயரோடு, மயில் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நந்திக்கு முன்னால் உள்ள மனித உருவத்தை முருகனின் வடிவமாகக் கருதலாம். ஏனெனில் இதில் மன்னனைக் குறிக்கும் உருவம் நாணயத்தின் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னனைக் குறிக்கும் உருவம் பொதுவாக இலங்கை, தமிழக நாணயங்களில் கோட்டுருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள மனித வடிவம் வார்ப்பு நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மனித உருவம் நந்தியுடன் இணைந்த நிலையில் காட்டப்பட்டிருப்பது அதன் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இம்மூன்று சின்னங்களையும் சிவனுக்குரிய கந்தியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இவை பண்டைய இலக்கியங்களில் சிவனுக்கும் முருகனுக்கும் இடையிலான தங்தை மகன் உறவு தொடர்பாக வரும் கதைகளை நினைவுபடுத்துவதாக உள்ளன. இதில் தமிழகத்திற்கு முன்னோடியாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் முருகன் உருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பாக நோக்கத்தக்கது.
யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் அவர்கள் சேது என்ற வாசகம் பொறித்த நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் எமது அண்மைக்கால ஆய்வில்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 137
இருந்து அவர்கள் கந்தன், ஆறுமுகன் அல்லது ஆரியச் சக்கரவர்த்தி ஆகிய பெயர்கள் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது (2001:147-159). இக்கருத்தை பேராசிரியர் பத்மநாதன் அவர்களும் ஏற்றுள்ளார். அவற்றின் முக்கிய விபரங்கள் வருமாறு:
முதலாவது வகை நாணயம்
இடம் மண்ணித்தலை உலோகம் : செப்பு
அளவு 0.56.
6T6 ; 2.0 கிராம் (படம்-23)
முன்புறம் : விளிம்பைச்சுற்றி இருவட்டங்கள். இருவட்டத்திற்குள்ளும் தடித்த புள்ளிகள். இரண்டாவது வட்டத்திற்குள் இடப்புறம் பார்த்த நிலையில் மயில் சின்னம். இதன் தோகைகள் சுருங்கிய நிலையில் அதன் கொண்டை மிக உயரமாக உள்ளது. ஏனைய நாணயங்களில் மயிலின் வாயில் பாம்புச் சின்னம் காணப்படுகிறது. ஆனால் இங்காணயத்தில் உள்ள சின்னம் பாம்பு உருவத்திலிருந்து சற்று வேறுபட்ட உருவமாக உள்ளது. மயிலுக்கு மேலே விளிம்பை ஒட்டியவாறு பிறைச்சந்திரன், சூரியன் என்பன காணப்படுகின்றன.
பின்புறம் : முன்புறம் போல் விளிம்பைச் சுற்றி இரு வட்டங்கள், வட்டத்திற்குள் தடித்த புள்ளிகள். இவை முத்தைக் குறிக்கும் சின்னங்களாகும். ஆனால் இவை விளிம்பிலிருந்து சற்று விலகி முடிவுறாத நிலையில் உள்ளன. இடப்புறமாக வேல். அதன் கீழ் பெட்டி வடிவில் சதுரக் கோடு. அதற்குள் "சக" அடையாளம். மையத்தில் மேற்புறமாக தமிழில் "கங்" என்ற பெயர் காணப்படுகிறது. இதன் கீழ் கால்களைக் குறிக்கும் இரு கோடுகள் காணப்படுகின்றன. இடப்புறமாக முக்கோண வடிவில் முடிவுறாத நிலையில் ஒரு வடிவம் உள்ளது. இது குறியீடாக இருக்கலாம். இச்சின்னங்களைச் சுற்றி வட்டமான சிறு புள்ளிகள் உள்ளன (படம்-25).
(படம்-25) கந்தன் பெயர் பொறித்த நாணயம்

Page 80
138 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இரண்டாவது வகை
இடம் வீரபாண்டியன்முனை உலோகம் : செப்பு
அளவு 1.3 செ.மீ
66 1 .9 கிராம்
முன்புறம் : முதலாவது நாணயத்தைப் போல் விளிம்பைச்சுற்றி இருவட்டங்கள். இருவட்டத்திற்குள்ளும் தடித்த புள்ளிகள். இதில் காணப்படும் மயில் உருவம் முதலாவது நாணயத்தில் காணப்படும் மயில் உருவத்தைப் பெருமளவு ஒத்திருந்தாலும் சில அம்சங்களில் வேறுபடுகின்றது. முதலாவது நாணயத்தில் இடப்புறம் பார்த்த நிலையில் உள்ள மயில் இங்ாகாணயத்தில் வலப்புறம் பார்த்த நிலையில் காணப்படுகிறது. அத்துடன் இதன் வாயில் காணப்படும் சின்னம் பாம்பு எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்நாணயத்தில் உள்ள பிறைச்சந்திரனும், சூரியனும் பெருமளவு தேய்வடைந்த நிலையில் உள்ளன.
பின்புறம் : முதலாவது நாணயத்தில் வருவது போன்ற வட்டம். இதில் வேல் சின்னம் காணப்படவில்லை. முதலாவது நாணயத்தில் "கங்" என எழுதப்பட்ட இடத்தில் இங்கு "ஆ" என்ற எழுத்துக் காணப்படுகிறது. இதனுடன் இணைந்த நிலையில் முதலாவது நாணயத்தில் வருவது போல் மனித வடிவில் அமைந்த கால் உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கு இடது, வலது புறமாக முதலாவது காணயத்தில் வரும் சின்னங்கள் காணப்படுகின்றன (படம்-26).
(படம்-28) ஆறுமுகன் பெயர் பொறித்த நாணயம்
மேற்குறிப்பிட்ட இரு நாணயங்களில் ஒன்றில் மயில், வேல் சின்னத்தோடு "கங்" என்ற பெயரும், மற்றையதில் இதே சின்னங்களுடன்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 139
"ஆ" என்ற எழுத்தும் இடம்பெற்றுள்ளன. இரு நாணயங்களிலும் உள்ள மயிலின் தோற்ற அமைப்பு, சின்னங்களிடையேயும் காணப்படும் ஒற்றுமைகள், நாணயங்களின் வடிவமைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இவை குறிப்பிட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு வம்சத்தால் அல்லது மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பது தெரிகிறது. இரு நாணயங்களிலும் மயில், வேல் ஆகியவை முக்கிய சின்னங்களாக இடம் பெற்றிருப்பதைக் கொண்டு இங்ாகாணயங்களை வெளியிட்ட மன்னர்களும் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட மக்களும் முருகவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. சேது மொழி பொறித்த நந்திக்கு முன்னால் சிறு உருவமாக வடிவமைக்கப்பட்ட மயில் இவ்விரு நாணயங்களிலும் முக்கிய சின்னமாக அலங்கரிப்பது அங்காணயங்களை வெளியிட்ட மன்னர்கள் முருகன் மீது அளவுகடந்த பத்தியுள்ளவர்களாக இருந்ததைக் காட்டுகிறது எனலாம். இது "கங்," "ஆ" என்ற பெயர்களை ஆராய்வதன் மூலம் மேலும் தெளிவாகிறது.
இடைக்காலத் தென்னிந்திய நாணயங்களை ஆராய்ந்தால் அவற்றுள் சில நாணயங்களில் இரு சிறப்பம்சங்களைக் காணலாம். ஒன்று மன்னன் பெயருக்குப் பதிலாக அவனது அல்லது அவனது வம்சத்தின் முதலெழுத்தை நாணயங்களில் பயன்படுத்தும் முறை காணப்பட்டது. இதற்கு சேரமன்னர் நாணயங்களில் பயன்படுத்தி "ச" என்ற எழுத்தையும் (Mitchiner1998:1601). மூன்றாம் வல்லாள மன்னன் தமிழகத்தில் கொங்கு நாட்டை ஆட்சி செய்தபோது (கி.பி.1292-1345) வெளியிட்ட நாணயங்களில் வரும் "ப" என்ற எழுத்தையும் குறிப்பிடலாம். இதேபோல் இக்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் மன்னனின் அல்லது வம்சத்தின் பெயருக்குரிய முதலெழுத்தை மன்னனின் தலையாகக் கொண்டு உடலின் கீழ்ப் பாகங்களை நாணயங்களில் பொறிக்கும் மரபு காணப்பட்டது. இதற்கு மூன்றாம் வல்லாளன் வெளியிட்ட நாணயங்களே சிறந்த சான்றாகும் (ஆறுமுக சீதாராமன் 1996: 89-7). இங்கே "ஆ" என்ற எழுத்திற்கும், "கங்" என்ற எழுத்திற்கும் கீழே நடுவில் உள்ள பகுதி மனிதனின் இருப்புடன் இணைங்த காற்பகுதியாகத் தோன்றுகிறது. இதை "ஆ" எழுத்துப் பொறித்த நாணயங்களில் தெளிவாகக் காணமுடிகிறது.
பேராசிரியர் பத்மநாதன் யாழ்ப்பாண மன்னர்கள் பயன்படுத்திய சேதுகாவலன் என்ற விருதுப் பெயரின் சுருக்கமே அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் வரும் "சேது" என்ற சொல்லின் வடிவம் எனக் குறிப்பிடுகிறார் (Pathmanathan 1980). அப்படியானால் நாணயத்தில் வரும் "கங்" என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பது முக்கிய கேள்வியாகும். செகராசசேகரமாலை எனும் நூல் யாழ்ப்பாண மன்னர்களில் ஒருவரான
செகராசசேகரனை கந்தமலையாரியர்கோன் என வருணிக்கிறது (பத்மநாதன்

Page 81
140 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
1992:317). கந்தமலை எனப்படுவது தென்னிந்தியாவின் தென்மூலையிலுள்ள கந்தமாதனம் என்பதாகும். சேது எனும் தலம் கந்தமாதனத்தில் உள்ளதாகச் சேதுபுராணம் கூறுகிறது. இது ஆரியச்சக்கரவர்த்திகளது பூர்விக இடங்களில் ஒன்று. எனவே சேதுகாவலன் என்ற விருதுப் பெயரின் சுருக்கமே நாணயங்களில் வரும் "சேது" எனக் கொண்டால், செகராசசேகரமாலையில் வரும் கந்தமலையாரியர்கோன் என்ற விருதுப்பெயரின் சுருக்கமாக நாணயங்களில் வரும் "கங்" என்ற பெயரைக் கொள்வது முற்றிலும் பொருத்தமாகும். ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் சேது எனும் சொல்லைக் குலச்சின்னமாக, அரச சின்னமாகப் பயன்படுத்திய அதேவேளை அச்சொல்லை மங்கல மொழியாகவும், தெய்வீக மொழியாகவும் நாணயங்களில் பயன்படுத்தியுள்ளனர் (Pathmanathan 1980). இதற்கு ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் சைவசமயத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாகும். அதேபோல் நாணயங்களில் வரும் "கங்" என்ற பெயரும் "கந்தமலையாரியர்கோன்" என்ற விருதுப் பெயரும் ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் முருகவழிபாட்டுடன் கொண்ட ஈடுபாட்டைக் காட்டுகிறது எனக் கூறலாம். இங்கே "கங்" என்ற பெயரின் விரிந்த வடிவமே இலக்கியத்தில் வரும் "கந்தமலையாரியர்கோனி" எனக் கொள்ளும்போது நாணயத்தில் வரும் "கங்" என்ற எழுத்திற்கு கீழேயுள்ள மனித உருவம் அப்பெயருக்குரிய மன்னனை அல்லது முருகனைக் குறித்ததெனக் கூறுவது மிகையன்று.
அப்படியானால் நாணயத்தில் வரும் "ஆ" என்ற எழுத்து எதைக் குறிக்கிறது என்பது அடுத்து எழும் முக்கிய கேள்வியாகும். தமிழ்ப் பேரகராதியில் "ஆ" என்பதற்கு இடபம் என்ற பொருள் உண்டு (TLV201). யாழ்ப்பாண மன்னர்கள் இடபத்தை (நந்தியை) அரச இலட்சினையாக நாணயங்களில் பயன்படுத்தியதால் அவ்வாறு கொள்ள இடமுண்டு. ஆனால் "ஆ" என்ற எழுத்திற்கு கீழே உள்ள பாகம் ஒரு மனிதனுக்குரிய இரு கால்களை மட்டும் சுட்டிக் காட்டுவதால் இதை இடபமாகக் கொள்ளமுடியவில்லை. மாறாக ஒரு மன்னனாக அல்லது தெய்வமாகக் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது. "ஆ" என்ற எழுத்தை ஒரு மன்னனுடன் அல்லது வம்சத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற வம்சப் பெயரால் இலக்கியத்தில் அழைக்கப்படுகின்றனர். இதனால் நாணயத்தில் உள்ள "ஆ" என்ற எழுத்து அவ்வம்சத்தைக்'குறிக்கும் முதலெழுத்தாக அமைய இடமுண்டு. அதேவேளை இவ்வெழுத்தைத் தெய்வப் பெயர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது முருகனை ஆறுமுகன், ஆறுமுகக் கந்தன் என அழைக்கும் மரபு சங்ககாலம் தொட்டு தமிழரிடையே வழக்கில் உள்ளது (காந்திதாசன் 1988:129-131). இதை கி.பி. 7ஆம் நூற்றாண்டில் எழுந்த ஞானசம்பந்தர் தேவாரமும் உறுதிப்படுத்துகிறது (ஞானசம்பந்தர் தேவாரம்1:19). இங்கே

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 141
நாணயத்தில் "ஆ" என்ற எழுத்துடன் முருகனுக்குரிய வேலும், மயிலும் இடம்பெற்றிருப்பதை நோக்கும் போது இந்த "ஆ" என்ற எழுத்து ஆறுமுகனைக் குறித்ததெனக் கூறுவதே பெருமளவிற்குப் பொருத்தமாகத் தெரிகிறது.
இந்த இடத்தில் யாழ்ப்பாண அரசு காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்ட
கந்தன் ஆலயம் தொடர்பாக கைலாயமாலையில் வரும் குறிப்பை மேற் கூறப்பட்ட நாணயங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இங்காணயங்களை வெளியிட்ட மன்னன் யார் என்பது ஒரளவுக்குத் தெரியவரலாம். கைலாயமாலையில் வரும் தனிச் செய்யுள் நல்லூரில் கந்தன் ஆலயத்தையும், யாழப்பாண நகரத்தையும் அமைத்தவன் புவனேகவாகு எனக் கூறுகிறது.
"இலக்கிய சகாப்த மெணனூற்
றெழுபதாமாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்ப
னாம்புவ னேக வாகு
கலம்மிகும் யாழ்ப்பாணத்து
நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக்
கோயிலும் கட்டுவித்தானே"
இச்செய்யுள் குறிக்கும் காலத்தைச் சகவருடம் எண்ணுாற்றெழுபதாக எடுத்துக் கொண்டு பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மந்திரி புவனேக பாகு காலத்தில் அரசும், கந்தன் ஆலயமும் தோன்றியதாகக் கூறுகின்றனர் (Rasanayagam 1928). ஆனால் இக்கூற்றை ஏற்கக் கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. இலங்கையில் புவனேகவாகு என்ற பெயரில் 7மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுள் 6ஆம் பராக்கிரமபாகு தென்னிலங்கையில் ஆட்சிசெய்த காலத்தில் அவன் வளர்ப்பு மகனாகிய சபுமால் குமர என்ற செண்பகப்பெருமாள் 1540 இல் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி 18ஆண்டுகள் புனேகவாகு என்ற பெயருடன் ஆட்சிபுரிந்துள்ளான். இதை யாழ்ப்பாணத்தில் கிடைத்த இவன் காலக் கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது (Indrapala 1971:29-31). இவனே மேற்படி செய்யுளில் வரும் புவனேகவாகு என்பதையும், அவனே ஏற்கனவே இருந்த கந்தன் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டினான் என்பதையும் பேராசிரியர்களான இந்திரபாலா, பத்மநாதன் போன்ற வரலாற்றறிஞர்கள் தக்கசான்றுகளுடன் கிறுவியுள்ளனர். இன்றும் கல்லூர் கட்டியத்தில் ஒதப்படும் சபுமால், பூரீசங்கபோதி, புவனேகவாகு போன்ற பெயர்கள் இவனையே குறிக்கிறது. இவன் கஜவல்லி, மகாவல்லி, சுப்பிரமணியர்(கந்தன்) போன்ற கடவுளடரிடம் மிகுந்த பக்தியுடையவன் என்று அக்கட்டியம் மேலும் கூறுகிறது(பத்மநாதன் 1972:57).

Page 82
142 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
ஆனால் நாணயங்களில் இடம்பெற்றுள்ள "கங்" என்ற பெயருக்கும், இராசதானியின் தலைநகர் நல்லூரில் கந்தன் ஆலயத்தை அமைத்த மன்னனுக்கும் மற்றும் "கந்தமலையாரியர்கோனி" என்ற விருதுப்பெயரைத் தாங்கிய மன்னனுக்குமிடையே ஒருவித தொடர்பு இருப்பது போலக் காணப்படுகிறது. இதுவரை வரலாற்றறிஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்திய ஆரியச்சக்கரவர்த்திகள் கால நாணயங்கள் அனைத்திலும் கந்தியும், சேது என்ற மொழியும் முக்கிய சின்னங்களாகக் காணப்பட்டுள்ளன. ஆனால் எல்லா நாணயங்களிலும் இவை ஒரே முக்கியத்துவத்தைப் பெற்றதாகக் கூறமுடியாது. சில நாணயங்களில் வழக்கமாக கந்தி பொறிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்த அல்லது நிற்கும் நிலையில் மன்னன் உருவமும், இதற்கு இடப்புறமாகப் பக்கவாட்டில் சிறிய நந்தி உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில நாணயங்களில் சேது மொழி பொறிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்த அல்லது நிற்கும் நிலையில் மன்னன் உருவமும், இதற்கு இடப்புறமாகப் பக்கவாட்டில் சேது மொழியும் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு நாணயங்கள் வெளியிடப்பட்ட காலம் அல்லது அவற்றை வெளியிட்ட மன்னர்களுக்கிடையிலான வேறுபாடு காரணமாக இருக்கலாம். இந்த வேறுபாடுகளின் இன்னொரு கட்டத்தைத்தான் கந்தன் வழிபாட்டுடன் தொடர்புடைய வேல், மயில் சின்னங்களுடன் "கங்" பெயர் பொறித்த காணயங்கள் குறித்து கிற்கின்றன எனக் கூறலாம். இது ஒருவகையில் இங்காணயங்களை வெளியிட்ட மன்னன் கந்தன் வழிபாட்டோடு தனக்குள்ள ஈடுபாட்டைக் காட்ட தான் வெளியிட்ட நாணயங்களிலும் அவற்றை வெளிப்படுத்தினான் எனக் கூறலாம். இதன் விளைவே ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்களுள் ஒருவன் கந்தமலையாரியர்கோன் என்ற விருதுப் பெயரைப் பெறக் காரணம் எனக் கருதலாம்.
செகராசசேகரமாலை என்ற நூல் "கந்தமலையாரியர்கோன்" என்ற விருதுப் பெயரைத்தாங்கியவன் செகராசசேகர மன்னன் எனக் கூறுகிறது. செகராசசேகரம், பரராசசேகரம் என்பது யாழ்ப்பாண மன்னர்கள் மாறிமாறிச் ஆடிக் கொண்ட சிம்மாசனப் பெயர்களாகும். இதில் கந்தமலையாரியர்கோன் என்ற விருதுப் பெயரைத் தாங்கிய செகராசசேகர மன்னன் யார் என்பது தெரியவில்லை. ஆனால் கந்தமலையாரியர்கோன் என்ற விருதுப் பெயர் பற்றிக் கூறும் செகராசசேகரமாலை என்ற நூல் 14ஆம் நூற்றாண்டில் வரோதய சிங்கையாரியன் காலத்தில் எழுதப்பட்டதாகும். இவன் செகராசசே கரன் என்ற சிம்மாசனப் பெயரைப் பெற்றிருந்தான். இதனால் இவனும் "கந்தமலையாரியர்கோன்" என்ற விருதுப்பெயரையும் பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இவன் ஆட்சியில்தான் யாழ்ப்பாண இராச்சியம் உன்னத நிலையில் இருந்ததை பல்வேறு வரலாற்று மூலங்களில் இருந்து
படையெடுப்பாளர்களை வடக்கர் எனக் கூறுவது மரப)

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 143
தென்னிலங்கை மன்னர்களிடம் திறைபெற்றமையும், முஸ்லிம் படையெடுப்பால் பலவீனமுற்ற பாண்டியப் பேரரசுக்கு ஆதரவாகப் பொன்னையும், யானைகளையும் கொடுத்தான் எனவும் வரலாற்றிலக்கியங்கள் கூறுவது இம்மன்னனின் ஆட்சிக்காலச் சிறப்பைக் காட்டுகிறது. இவன் தமிழையும் வடமொழியையும் வளர்க்க உள்ளூர் மற்றும் தமிழகத்திலிருந்து வந்த புலவர்களுக்குப் பொன்னாலான பல பொருட் களைப் பரிசாகக் கொடுத்தது பற்றி செகராசசேகரமாலை (1942:10) பின்வருமாறு கூறுகிறது
"மன்னர் மன்று செகராசசேகரன் மணவை யாரய வரோதயன் பண்னு செந்தமிழ் வளம் பெறற்குதவு
பரிசில கவர் சித்தியாம் பொனினின் மிசிய கெண்டிகை
பொல கலன் பிறவு மாம்பரிச் சின்னமுள்ள தொகை யாவுமிவ்
விதிசிறந்த றிந்துரை சேயிழாய்”
இக்கூற்றிலிருந்து இவன் ஆட்சிக்கால செல்வநிலையை உணரமுடி கிறது. இதற்கு முத்துக்குளித்தல் சர்வதேச வர்த்தகத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இம்மன்னன் முத்துக் குளிப்புக்குப் பெயர்போன முத்துச்சிலாபத்தை தன்கட்டுப்பாட்டில் வைத்திருப் பதற்காகத் தென்னிலங்கை மன்னர்களுடன் பகைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. மேற்கூறப்பட்ட இருவகை நாணயங்களிலும் முத்தைக் குறிக்கும் தடித்த புள்ளிகள் பொறிக்கப்பட்டுள்ளமை அக்கால வெளிநாட்டு வர்த்தகத் தில் முத்துப் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பேராசிரியர் பத்மநாதன் இம் மன்னன் பற்றி யாழ்ப்பாண அரசு கால இலக்கியங்கள் கூறுகின்ற வற்றைச் சிங்கள இலக்கியங்களுடனும், சமகால பாண்டிய, சிங்களக் கல்வெட்டுக்களுடனும் ஒப்பிட்டு இவனின் ஆட்சிக்காலம் 14ஆம் நூற்றாண்டெனக் கணித்துள்ளார் (1972:44-7). இங்கே "கங்" என்ற பெயர் பொறித்த நாணயம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வெளியிடப்பட்டது என்பதை அவற்றின் எழுத்தமைதி கொண்டு கணிப்பிடமுடிகிறது. இச் சான்றுகள் அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கந்தமலையாரியர்கோன் என்ற விருதுப்பெயர் பெற்ற வரோதய சிங்கையாரியன் காலத்திலேயே "கங்" "ஆ" என்ற பெயர் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டதெனக் கருத இடமுண்டு. ஆயினும் இவை மேலும் ஆர்ாய்ந்து பார்க்க வேண்டியவை.
ஈழத்தில் பண்டு தொட்டு வழிபடப்பட்ட முருகன் யாழ்ப்பாண அரசு

Page 83
144 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
காலத்திலும் செல்வாக்குப் பெற்றதை மேற்கூறப்பட்ட காணயங்களில் வரும் முருகவழிபாட்டுடன் தொடர்புடைய சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதை அவ்வரசு காலத்திற்குரியதென அடையாளம் காட்டப்பட்டுள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சிலைகளும் (சிவசாமி 1992:16) உறுதிப்படுத்துகின்றன. இம்முருக வழிபாடு இடத்திற்கு இடம் கந்தன், சுப்பிரமணியர், வேலாயுதர், முருகமூர்த்தி, முத்துக்குமாரசுவாமி, குமரன், தண்டாயுதபாணி, சண்முகசாமி, ஆறுமுகசாமி, சிவகுருநாதசுவாமி முதலான பெயர்களில் நடைபெற்று வருகிறது. இவற்றுள் கந்தன் வழிபாடே செல்வாக்குப் பெற்றுள்ளது. இன்று இலங்கையிலுள்ள முருக ஆலயங்களில் மூன்றில் ஒரு பங்கு கந்தன் ஆலயங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. தமிழ் காட்டில் வரலாற்றுப் பழமைவாய்ந்த முருகன் ஆலயங்கள் உள்ள பழனி, திருச்செந்துார் போன்ற இடங்கள் கந்தமலை என இலக்கியங்களில் அழைக்கப்பட்டாலும் நடைமுறையில் முருகன் ஆலயங்கள் என அழைக்கப்படும் மரபே பெரும்பாலும் காணப்படுகிறது. இலங்கையில் சிறப்பாக யாழ்ப்பாணத்தில் கந்தன் வழிபாடு சிறப்புப் பெற்றதற்குக் கந்தபுராணமே உதவியிருக்க வேண்டும் எனக் கூறும் பேராசிரியர் வேலுப்பிள்ளை கந்தபுராணம் அருணகிரிகாதர் காலத்திற்கு முன்பாக கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் காஞ்சியில் கச்சியப்ப சிவாச்சாரியரால் பாடப்பட்டது என்கிறார் (1985:231). கி.பி.15ஆம் நூற்றாண்டில் ஈழத்து முருக தலங்கள் பற்றிக் கூறும் அருணகிரிநாதரின் திருப்புகழில் கதிர்காமத்துடன் யாழ்ப்பாணமும் குறிப்பிடப்பட்டுள்ளமை அக்காலத்திலேயே கந்தன் ஆலயங்கள் சிறப்புற்றிருந்ததைக் காட்டுகிறது. இதை நிதர்சனமாகக் காட்டுவதில் மேற்கூறப்பட்ட நாணயங்களுக்கு மேலும் முக்கிய பங்குண்டு.
வைஷ்ணவ சமயம்
ஈழத்தமிழரிடையே சைவ சமயத்தைப் போல் விஷ்ணுவைப் பிரதான கடவுளாகக் கொண்ட வைஷ்ணவ சமயமும் புராதன காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருந்ததற்குப் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதன் தொடக்க காலச் சான்றாகப் பாளி நூல்களிலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் வரும் சில சான்றுகளைக் காட்டலாம். கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இரு பிராமிக் கல்வெட்டுக்களில் விணு 6T6gp Guuglh (Paranavithana 1970: Nos. 1217, 1218), (8ag fao seöGaJOäsase (TTuo (Paranavithana 1970:Nos.347,843), 6snuav (Paranavithana 1970: Nos. 1217 , 1218), sestruu (Paranavithana 1970:Nos.990) போன்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றுள் விணு என்ற பெயர் விஷ்ணுவையும், மற்றைய பெயர்கள் ராம, கோபால, காராயண

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 145
போன்ற விஷ்ணுவின் அவதாரங்களையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது (சிற்றம்பலம் 1995:339-340). சில கல்வெட்டுக்களில் விஷ்ணுவின் தேவியாரோடு வரும் லஷ்மியின் பெயர் காணப்படுகிறது. உதாரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்த பிராமிக் கல்வெட்டொன்றில் ல(ச்)சி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை வாசித்த பரணவிதான வடமொழியில் லஷ்மி என்ற கடவுள் பெயரே கல்வெட்டில் பிராகிருத மொழியில் ல(ச்)சி என எழுதப்பட்டிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளர் (Paramavithana 1970:No1179, p.94).
இதிகாசங்களில் கண்ணன் விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும், ஒரு போர்வீரனாகவும் காட்சியளிக்கிறான். இக்கண்ணனை ஆரிய மக்கள் திராவிடரிடம் இருந்து பெற்றதாகக் கூறும் மரபு தமிழர்களிடையே காணப்படுகிறது (வித்தியானந்தன் 1954: 123). தமிழகத்தில் கொடுமணல்
வரும் பெயர்களுள் கண்ணன் என்ற பெயரும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது (Rajan 1994:82). பேராசிரியர் பரணவிதான ஈழத்தில் அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களில் கண என எழுதப்பட்டுள்ள பெயரைக் கணிண என வாசித்து அதற்கும் இதிகாசங்களில் வரும் கண்ணனைப் போல் கடவுள், வீரன் எனப் பொருள் விளக்கம் கொடுத்துள்ளார் (Paramavithana 1970:105,415), இலக்கிய கடையில் இரட்டிக்கும் ஒற்றுக்கள் பிராமி வாசகங்களில் பெரும்பாலும் ஒற்றையாக வருவதால் கல்வெட்டில் வரும் கண என்ற பெயரை கண்ண என வாசித்தமை பொருத்தமாகும். தமிழில் கண்ணன் என்ற பெயரே பிராமிக் கல்வெட்டுக்களில் அதன் பிராகிருத மொழிக்கு ஏற்ப கணண என எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் சங்க காலத் தமிழகத்தைப் போல் சமகாலத்தில் ஈழத்திலும் கண்ணன் வழிபாடு இருந்ததற்குச் சான்றாகும். கந்தரோடையில் கிடைத்த கி.பி.4ஆம் நூற்றாண்டுக்குரிய காணேனியன் கல்மணி முத்திரை ஒன்றில் "விஷ்ணு பூதிஸய" என்ற வாசகம் காணப்படுகிறது (இந்திரபாலா 1972: 31). இது விஷ்ணு தெய்வத்துடன் தொடர்புடைய பெயர் எனக் கருதப்படுகிறது.
வைஷ்ணவ சமயத்தின் தொன்மையையும், ஈழத்தில் அம்மதம் பெற்ற முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதில் ஈழத்தமிழர் வெளியிட்ட பண்டைய கால நாணயங்கள் சிறப்பாக ஆராயத்தக்கன. ஆயினும் இங்காணயங்களில்
அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களிலும், கி.பி. 5-6ஆம் நூற்றாண்டுவரை புழக்கத்திலிருந்த நீள்சதுர வார்ப்பு நாணயங்களிலும்

Page 84
146 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பரீவத்ஸா முக்கிய சின்னமாகக் காணப்படுகிறது. இது வளம், விருத்தி, நீரின் சிறப்பு என்பவற்றைக் குறிக்கும் சின்னமாகக் கூறப்படுகிறது (Mansu -khla 1968). இதுவே லசுஷ்மியின் ஆரம்ப தோற்றமெனக் கூறப்படுகிறது. இந்தியாவில் இவ்வடிவத்தின் ஆரம்ப தோற்றம் செம்புக் கலாசாரத்திலும் (Chalcolithic Culture), தமிழ் நாட்டில் பெருங்கற்காலப் பண்பாட்டிலும் (Megalithic Culture) கல் உருவமாகக் கிடைத்துள்ளது. பிற்காலத்தில் இவ்வடிவம் இங்து, பெளத்த, சமண ஆலயங்களில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதன் ஆரம்பத் தோற்றம் பிராமிக் கல்வெட்டில் கோட்டுருவமாகக் காணப்படுகிறது (Paranavithana 1970:NO268). வட இலங்கையில் கங்தரோடையிலும் (Seyone 1998:84,No.3), தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலும் (Bopearachchi 1999:53, 67. Nos. A11, E17,18) filsDuš5 $.gp.1 Sh நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் நாணயங்களின் இவ்வடிவம் நாணயத்தின் முன்புறத்தில் வார்ப்பு நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது (படம்-19 பார்க்கவும்). இதே வடிவம் பெண் உருவம் பொறித்த நீள் சதுர நாணயங்களின் முன்புறத்தில் சற்று வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வடிவம் இலக்கியங்களில் வருணிக்கப்படுவது போல் எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து லஷ்மிக்குரிய முழுவடிவத்தையும் அடைந்ததென்பதை ஈழத்தின் பல வட்டாரங்களில் அதிக எண்ணிக்கையில் கிடைத்த பல்வேறுபட்ட வடிவில் உள்ள லசுஷ்மி நாணயங்களை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் கண்டு கொள்ளலாம் (புஷ்பரட்ணம் 2001). இதன் உன்னத வளர்ச்சியை கி.பி.1011ஆம் நூற்றாண்டில் வடஇலங்கையில் வெளியிடப்பட்ட பூரிலகர்மி என்ற பெயர் பொறித்த நாணயங்களில் மிகத் தெளிவாகக் காணலாம்.
மிகச் சிறிய நீள்சதுர நாணயங்கள் சிலவற்றின் முன்புறத்தில் எந்தச் சின்னங்களும் இன்றி கிற்கும் நிலையில் பெண் உருவமும் காணப்பட, நாணயத்தின் பின்புறத்தில் பீடத்துடன் கூடிய சுவஸ்திகா காணப்படுகிறது. ஆனால் வேறு சில காணயங்களில் இதே பெண்வடிவம் தாமரை மலர்மீது நிற்கும் நிலையில் இரு கரங்களிலும் தாமரைத் தண்டைப் பிடித்தவாறு காணப்படுகிறது. சற்றுப் பெரிய நீள்சதுர நாணயங்களில் இச்சின்னங்கள் மேலும் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தாமரை மீது நிற்கும் லக்ஷ்மியில் இருபக்கத்திலும் தாமரைக் கொடி உயர்ந்து செல்வதும், அதன் உச்சியில் அமர்ந்திருக்கும் இருபக்க தாமரைமலர் மீது அமர்ந்திருந்து இரு யானைகள் லகன்மி மீது நீர்சொரிவது போலவும் காட்டப்பட்டுள்ளன(படம்27). இந்த வடிவத்தைப் பேராசிரியர் சிவசாமி(1974) பூரீ தக்தத்தில் வரும் கஜலஷ்மி வடிவத்தை அப்படியே கினைவுபடுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.

47
(படம்-27) நாணயங்களில் வரும் கஜலக்ஷமி வடிவம்
லசுஷ்மி வடிவத்துடன் நாணயத்தில் வரும் பிற சின்னங்களும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இதில் வரும் யானைகள் இந்திரனுடைய ஐராவதத்தைக் குறிக்கின்றன எனக் கூறலாம். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் அரசன். அதேபோல் இங்ாகாணயத்தை வெளியிட்டவர்களும் தேவேந்திரன் என இவ்வுலகில் திகழ்வான் என்பது பொருள். பண்டைய கால மன்னர்கள் தங்களை "மகேந்திரபராக்கிரமன்" எனக் கூறிக் கொள்ளும் மரபுண்டு. அதை இங்காணயத்தில் வரும் யானைச் சின்னங்கள் நினைவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். நாணயத்தில் வரும் தாமரை பல மதங்களுக்குப் பொதுவாக இருப்பினும் அது லசுஷ்மி உருவத்தோடு வருவது சிறப்பாக நோக்கத்தக்கது. இங்காணயத்தில் வரும் மற்றொரு சின்னமான சுவஸ்திகாவின் தோற்றம் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது துரியனைப் பிரதிநிதிப்படுத்துவதாகவும், அதிட்டம், நீண்ட ஆயுளைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது (Sarma1990;72). ஆரம்ப காலங்களில் இந்து மதத்துடன் தொடர்புடைய இச்சின்னம் பிற்காலத்தில் பெளத்த, சமண மதங்களுக்கும் உரிய சின்னமாகக் காணப்படுகிறது. இந்திய நாணயங்கள் பலவற்றில்
கூடிய சுவஸ்திகா காணப்படுவது பற்றி ஏற்கனவே முதலாம் இயலில் விளக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழரால் லசுஷ்மி தெய்வத்தை நாணயங்களில் பொறிக்கும் மரபு பிற்காலத்திலும் தொடர்ந்ததற்கு கி.பி.10-11 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நாணயங்கள் சிறந்த சான்றுகளாகும். இங்ாகாணயத்தின் முன்புறத்தில் தலையை இடப்புறம் திருப்பிய நிலையில் ஒரு மனித உருவம் காணப்படுகிறது. இதன் வலதுகை மேலே உயர்த்தியவாறு பூரணகும்பம் போன்ற ஒரு பொருளைத் தாங்கியுள்ளது. இதற்கு கீழே குத்துவிளக்கு

Page 85
148 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
காணப்படுகிறது. தலைக்கு வலப்புறமாகச் சங்கு போன்ற உருவம் உள்ளது. இதன் வலதுகை கீழ்நோக்கியவாறு வச்சிராயுதம் போன்ற பொருளைப் பிடித்துள்ளது. நாணயத்தின் பின்புறத்தில் லகர்மி என்ற பெயரும், மேற்புற விளிம்பை யொட்டிச் சூரியனும் காணப்படுகின்றன. சில நாணயங்களில் சங்கும், சிறிய குற்றுக்களும் காணப்படுகின்றன. இச்சிறிய குற்றுக்கள் முத்தைக் குறிப்பதாக நாணயவியலாளர் கூறுகின்றனர். மிச்சனர் என்ற காணயவியலாளர் காணயத்தின் முன்புறத்தில் உள்ள உருவம் கிற்கும் நிலையிலுள்ள மன்னன் எனக் கூறுகிறார் (Mitchiner1998:137). ஆனால் இதன் இடது கால் மடிக்கப்பட்டு வலது காலைத் தொடுவதுடன், அமர்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. இதனால் இவ்வுருவத்தை அமர்ந்த நிலையில் உள்ள லசுஷ்மியாகக் கூறலாம். இதை நாணயத்தில் வரும் லசுஷ்மி என்ற பெயர் மேலும் உறுதிப்படுத்துகிறது (படம்-28).
(படம்-28) லக்ஷமி பெயர் பொறித்த நாணயம்
இவ்வகை நாணயங்கள் பெருமளவுக்கு வடஇலங்கையில் மாதோட்டம், அச்சுவேலி (Seyon 1998:32-4), கந்தரோடை போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. இவற்றைத்தவிர கொழும்பு, சென்னை அருங்காட்சியகங்களிலும் காணப்படுகின்றன (Mitchiner1998:137). ஆனால் தமிழ் நாட்டில் இவ்வகை நாணயங்கள் தமிழ் நாட்டு மன்னரால் வெளியிடப்பட்டதற்குச் எந்தச் சான்றும் இல்லை. மேலும் வடஇலங்கையில் பரவலாகக் கிடைத்து வரும் இங்ாகாணயங்கள் தமிழகத்தில் இதுவரை கிடைத்ததாகவும் தெரியவில்லை (புஷ்பரட்ணம் 2001). இதனால் இங்காணயங்கள் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பதில் சந்தேகமில்லை. இங்காணயங்கள் பெருமளவில் இலங்கையில் கிடைத்து வருவதால் இவற்றைச் சிங்கள மன்னர்கள் கி.பி 7ஆம், 8ஆம் நூற்றாண்டில் வெளியிட்டதாகவும் ஒரு கருத்துண்டு (Seyon 1998:14-1). ஆனால் நாணயத்தில் வரும் எழுத்தமைதியை அடிப்படையாகக் கொண்டு இவை கி.பி.10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 11 ஆம்
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் 149
நூற்றாண்டின் முற்பகுதியெனக் கணிப்பிடமுடிகிறது. மேலும் நாணயத்தில் வரும் பெரும்பாலான சின்னங்கள் வைஷ்ணவ மதத்திற்குரியவையாக இருப்பதால் இவற்றைச் சிங்கள மன்னர்களுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாக இல்லை. அத்துடன் இந்நாணயங்கள் வடஇலங்கையில் குறிப்பாக மாதோட்டப் பகுதியில் கிடைத்த அளவிற்கு சிங்கள இராசதானி இருந்த அநுராதபுரத்திலோ அல்லது பிற சிங்கள இராசதானிகள் இருந்த இடங்களிலோ கிடைத்ததாகத் தெரியவில்லை. இதனால் இவற்றை வடஇலங்கையில் ஆட்சி புரிந்த அரசால் வெளியிடப்பட்டதெனக் கூறுவதே பொருத்தமாகும் (புஷ்பரட்ணம் 2001). இங்காணயத்தில் வரும் சங்கு வைஷ்ண மதத்துடன் தொடர்புடையதாக இருப்பினும், அது வடஇலங்கை பொருளாதார நடவடிக்கையில் பெற்ற முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாகக் கருத இடமுண்டு. இதற்கு இங்ாகாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள முத்துக்குரிய வடிவம் மேலும் ஒரு சான்றாக அமைகிறது. லஷ்மி பொதுவாக பொருளாதார விருத்திக்குரிய தெய்வமாகவே வழிபடப்பட்டு வருகிறது. வடஇலங்கையின் பண்டைய காலப் பொருளாதாரத்தில் சங்கும், முத்தும் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகத் திகழ்ந்தன என்பதற்குப் பல சான்றுகள் உள. முத்தும், சங்கும் ஈழத்தின் பண்டைய ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் பெற்ற முக்கியத்துவம் பற்றி அண்மையில் வெளிவந்த நூல் ஒன்றில் பேராசிரியர் பத்மநாதன் மாதோட்டத் துறைமுகத்துடன் இணைத்துப் பல சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளார். இதனால் அப்பொருட்களையும், அதன் விருத்திக்கு உதவக்கூடிய லசுஷ்மி தெய்வத்தையும் ஈழத் தமிழர் தாம் வெளியிட்ட நாணயங்களில் பொறித்தனர் எனக் கூறுவது மிகையான கருத்தாக இருக்கமுடியாது.
சமகாலத்தில் இவ்வழிபாடு வடஇலங்கையில் செல்வாக்குப் பெற்றிருங்ததை வன்னிப்பிராங்தியத்தில் கிடைத்த சிற்பங்களும் உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் பூநகரி மட்டுவில் நாட்டில் கிடைத்த வெள்ளியிலான விக்கிரகம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இவ்விக்கிரகம் லசுஷ்மிக்குரியதென்பதை அதன் அங்க அடையாளங்கள் உறுதிசெய்கின்றன (படம்-29). இவ்வாறான விக்கிரகங்கள் கி.பி.10-11 ஆம் நூற்றாண்டளவில் ஈழத்திலும், தமிழகத்திலும் பயன்பாட்டிலிருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்கு மதுருகிரியாவில் கிடைத்த சோழர்கால விக்கிரகம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Page 86
150 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
ལམ་ 密 :* r", f
,"ތ ، } ? ... ؟ مجN F. f * *కో"
,懿“ نایی با
(படம்- 29 பூநகரி மட்டுவில் நாட்டில் கிடைத்த லக்ஷமி விக்கிரகம்)
லசுஷ்மி வழிபாட்டைப் போல் விஷ்ணு வழிபாடும் ஆதிகாலம் தொட்டு இருந்ததென்பதற்கு நாணயங்களில் வரும் சின்னங்களைச் சான்றாகக் காட்ட லாம். தென்னிலங்கையில் கிடைத்த கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சில நாணயங்களில் ஆமை முக்கிய சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது (Bopearachchi 1999:59-60). யாழ்ப்பாணத்தில் உருத்துறை என்ற இடத்தில் கிடைத்த கி.பி.1ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயத்தில் Bாக என்ற பெயருடன் இரு குத்துவிளக்கிற்கு இடையில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது (படம். முதலாவது இயலில், இலக்கம்). கி.பி. 7-9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டகாலத்தில் வடஇலங்கையில் இருந்த தமிழ் அரசால் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் சதுர நாணயங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் இரு குத்துவிளக்குகளுக்கிடையே மிகப் பெரிய அளவில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 10-13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட சில வட்டங்ாணயங்களின் முன்புறத்தில் தாமரைச் செண்டு, சங்கு என்பவற்றுடன் கூடிய இரு மீன் சின்னமும், பின்புறத்தில் மூன்று மீன் சின்னமும் காணப்படுகின்றன (படம்-30).
 
 
 

ஈழத் தமிழரின் சைவ, வைஷணவ மதங்கள் 151
(படம்-30) சங்கும். மீனும் பொறித்த நாணயம்
(&ag da) rift வ்களில் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் காளையும், சங்கும் பின்புறத்தில் குத்துவிளக்குடன் கூடிய மீன் சின்னமும் காணப்படுகின்றன. சிலவகை நாணயங்களில் காளைக்குப்பதிலாக நாணயத்தின் முன்புறத்தில் பலிபீடத்துடன் கூடிய குதிரையும், பின்புறத்தில் மூன்று மீன் சின்னமும் காணப்படுகின்றன. இதில் வரும் பலிபீடம் இந்நாணயத்தை வெளியிட்ட மன்னன் மேற்கொண்ட யாகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம் (படம்-31).
(படம்-31) குதிரையும் மீனும் பொறித்த நாணயம்
மேற்கூறப்பட்ட நாணயங்கள் அனைத்தும் வடஇலங்கையில் கிடைத்திருப்பதால் இவற்றை வடஇலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் வெளியிட்டனர் என்பதில் சந்தேகமில்லை (புஷ்பரட்ணம் 2001).
இங்காணயங்களில் வரும் மீன் சின்னங்கள் எதைக் குறித்து கிற்கின்றன என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனால் யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டு, மற்றும் நாணயங்களில் காணப்படும் சேது என்ற வாசகம் அவ்வரசை ஆட்சி செய்த ஆரியச்சக்கரவர்த்திகளின்

Page 87
152 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
குலமரபுச் சின்னமாகவும், அரச இலட்சினையாகவும், அதே வேளை சமயச் சின்னமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது (Pathmanathan 1980). இவற்றை நோக்கும்போது மேற்குறித்த நாணயத்தில் வரும் மீன் சின்னம் என்ன நோக்குடன் பொறிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு சமய முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதில் சங்தேகமில்லை. எவ்வாறு பீடத்தின் மேலமர்ந்த காளைக்கு இருபுறத்திலும் குத்து விளக்கும், அதற்கு மேலே துரியன், பிறைச் சந்திரன் போன்ற சின்னங்களும் காணப்படுகிறதோ, அவ்வாறே பெரும்பாலான நாணயங்களில் பீடத்தின் மேலமர்ந்த மீன் சின்னத்திற்கு இரு புறமும் குத்துவிளக்கும், மேலே பிறைச் சந்திரனும், துரியனும், சில நாணயங்களில் சங்கும் காணப்படுகின்றன. மீன் வைஷ்ணவ சமயத்தில் விஷ்ணுவின் மச்ச அவதாரமாகக் கொள்ளப்படுகிறது. இது பிற்கால வைஷ்ணவக் கோவில்களில் சிற்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளது (Mansukhla 1968). மேற்குறித்த நாணயங்களில் மீன் சின்னத்துடன் விஷ்ணுவைக் குறிக்கும் சங்கும் இடம்பெற்றுள்ளது. சங்கு விஷ்ணுவுக்குரிய இன்னொரு சின்னமாகும். இதனால் இங்காணயங்களை வெளியிட்ட ஈழத் தமிழ் மன்னர்கள் வைஷ்ணவ சமயத்தின் மீது அதிக பற்றுடையவர்களாக இருந்தனர் எனக்கூறலாம். பல நாணயங்களின் முன்புறத்தில் அமர்ந்த காளை உருவமும், பின்புறத்தில் இரு மீன் சின்னமும் காணப்படுகின்றன. வேறு சில நாணயங்களின் முன்புறத்தில் காளையும், பின்புறத்தில் யானையும் பொறிக்கப்பட்டுள்ளன.
இச்சின்னங்கள் இவற்றை வெளியிட்ட மன்னர்கள் அல்லது அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மக்களிடையே சைவ, வைஷ்ணவ வழிபாடுகள் நிலைபெற்றிருந்ததை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். இதை இக்காலத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிவன், விஷ்ணு, லசுஷ்மி சிற்பங்களும், சிலைகளும் உறுதிப்படுத்துகின்றன. இவற்றில் வைஷ்ணவ சமயம் கல்லூர் இராசதானி காலத்திலும் தொடர்ந்து நிலைத்ததை அக்காலத்திற்குரியதென அடையாளம் காணப்பட்டுள்ள வைஷ்ணவ சிற்பங்கள், சிலைகள், செப்புத்திருமேனிகள் என்பன மேலும் உறுதிப்படுத்துகின்றன (சிவசாமி 1973, கிருஷ்ணராஜா 1998).
மேற்கூறப்பட்ட தொல்லியல் சான்றுகளில் இருந்து பண்டு தொட்டு ஈழத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழரிடையே சைவ, வைஷ்ணவ மதங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காணமுடிகிறது. இம்மதங்கள் பண்டைய காலத்தில் இந்தியாவிலிருந்து பரவியது மட்டுமல்ல, பிற்காலத்தில் இந்தியத் தொடர்பு கொண்டும் வளர்ந்துள்ளன. அதற்காக அம் மதங்களுக்குரிய கலைவடிவங்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்து வந்தவை எனக் கூறுவது பொருத்தமாக இல்லை. இந்தியக் கலை மரபுக்குரிய ஆலயங்களும், சிற்பங்களும் ஈழத்தில் பல இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் அவ்வக் காலகட்டத்தில் ஈழத்தில் வாழ்ந்த

ஈழத் தமிழரின் சைவ, வைஷ்ணவ மதங்கள் M 153
தமிழரின் கலன் கருதி அமைக்கப்பட்டவை எனக் கூறி அவற்றை ஈழத் தமிழருக்குரிய கலையாகவும், மதமாகவும் உரிமை பாராட்ட முடியவில்லை. அதேவேளை தமிழக கலைப்பாணியில் இருந்து பல வகையிலும் வேறுபட்ட பண்டைய கால ஆலயங்கள், சிற்பங்கள், சிலைகள், செப்புத் திருமேனிகள் போன்ற சுதேச கலைவடிங்களுக்குரிய சான்றுகள் ஈழத்தில் கிடைத்து வரும்போது அவற்றை ஈழத் தமிழருக்குரியதாக உரிமை பாராட்டுவதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. தமிழகத்தில் காலத்திற்குக் காலம் வெளியிடப்பட்ட ஆதிகால, இடைக்கால நாணயங்கள் பல ஈழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வெளிப்படுத்துகின்ற கலைவடிவங்களும், கருத்துக்களும் சமகாலத் தமிழ் நாட்டு மக்களின் மத உணர்வின் வெளிப்பாட்டை ஈழத் தமிழருக்குரியதாக எடுத்துக் கொள்வது பொருத்தமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றன. அதேவேளை ஈழத்து தமிழரால் வெளியிடப்பட்ட நாணயங்களில் உள்ள கலைவடிவங்களையும், அவை சுட்டிக்காட்டும் சமயக் கருத்துக்களையும் ஈழத் தமிழருக்குரிய கலையாகவும், மதமாகவும் பார்ப்பதில் தவறிருக்க முடியாது.
மேலே ஈழத்தமிழருக்குரியதாக நாம் சுட்டிக்காட்டிய சிலவகை நாணயங்கள் பல வருடங்களுக்கு முன்னரே இலங்கை, இந்திய நாணயவியலாளரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை தமிழகத்தில் இருந்தே ஈழம் வந்ததாகக் கூறியுள்ளனர். அவ்வாறு கூறியவர்களில் தற்காலத்திலும் வாழ்ந்து வரும் சட்டோபாத்தியாய, முகர்ஜி போன்ற இந்திய நாணயவியலாளர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். அண்மையில் தமிழகத்தில் அவர்களிடம் நாணயவியல் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைத்த போது அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்திய சிலவகை நாணயங்கள் எமக்கு அதிக எண்ணிக்கையில் வட இலங்கையில் கிடைத்திருப்பதற்கான சான்றுகளைக் காட்டி விவாதித்தபோது அவற்றில் ஒன்றுதானும் தமிழகத்தில் தமக்குக் கிடைக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்ட அவர்கள், அவற்றை வடஇலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களே வெளியிட்டிருக்க வேண்டும் என்பதற்குத் தமக்குக் கிடைத்த காணயங்களும் வடஇலங்கையிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டன என்பதைச் சான்றாகச் சுட்டிக் காட்டினார்கள். பண்டைய இந்திய மதங்கள் பற்றி ஆராய்ந்த பலரும் நம்பகத்தன்மை வாய்ந்த தொல்லியல் சான்றுகள் என்ற வகையில் கல்வெட்டுக்களைப் போல் நாணயங்களையும் முக்கிய சான்றாகப் பயன்படுத்தத் தவறவில்லை. ஈழத் தமிழர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பெரும்பாலும் தொடர்ச்சியாக நாணயங்களை வெளியிட்டதற்கு உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம் 2001). இவை ஈழத் தமிழரின் மதம் பற்றிய ஆய்வுகளுக்கு மட்டுமன்றி தெளிவற்றிருக்கும் அவர்களின் பண்டைய கால வரலாற்றிற்கும் புதிய வெளிச்சமூட்டப் போகின்றன என்பதில் ஐயமில்லை.

Page 88
ஈழத் தமிழரும் பெளத்த, சமண மதங்களும்
பெளத் மதத்தின் அறிமுகம் இலங்கை வரலாற்றில் புதிய காலகட்டத்தின் தொடக்கம் எனலாம். இது புதிய மதத்தின் அறிமுகத்தை மட்டுமல்ல கூடவே புதிய மொழி, எழுத்து, கலை, இலக்கியம், வரலாற்று மரபு என்பவற்றின் தோற்றத்தையும் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது. குறுகிய காலத்தில் ஈழத்தின் பல வட்டாரங்களில் பல இன, மொழி பேசிய மக்களிடையே ஏற்படுத்திக் கொண்ட கவர்ச்சிகரமான செல்வாக்கே இம்மதம் அரச ஆதரவுடன் வளர்ச்சி பெற்றமைக்குக் காரணமாகும். இதனால் தான் பெளத்த மதம் தோன்றி வளர்ந்த இந்தியாவில் அம்மதம் இன்று வலுவிழந்து நிற்கையில் ஈழத்தில் அது செல்வாக்குடன் இருப்பதற்குக் காரணமாகும். இன்று சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் பெளத்தர்களாகவும், இந்துக்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாகவும் உள்ளனர். இங்கிலையே முற்காலத்திலும் இருந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் பெளத்த பண்பாட்டுச் சின்னங்கள் ஒரு மதத்தின் பண்பாட்டு எச்சமாகக் கருதப்படாது, சிங்கள இனத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் தற்காலத்தில் சிங்கள மக்கள் வாழாத இடங்களில் காணப்படும் பெளத்த பண்பாட்டு எச்சங்கள்

ஈழத் தமிழரும் பெளத்த, சமண மதங்களும் 155
கூட முன்பொரு காலத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்து விலகிய இடங்களாகக் கருதப்படுகின்றன (Kannangara1984). ஆனால் பெளத்த மதம் தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான பாரம்பரியத் தொடர்பையும், பெளத்த மதத்துடன் ஈழத் தமிழருக்கிருந்த உறவுகளுக்கான சான்றுகளையும் கோக்கும் போது இக்கருத்துப் பொருந்துமாறில்லை.
தேவநம்பியதீச மன்னன் அரசாண்ட காலத்தில் (கி.மு. 247) மெளரிய மன்னன் அசோகனது மகன் மகிந்தனும், மகள் சங்கமித்தையும் இலங்கைக்கு அனுப்பப்பட்டமையே பெளத்தமதம் இலங்கையில் பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது (MahavamsaXI:15). ஆனால் இக்காலத்திற்கு முன்னரே இம்மதம் பரவியதற்கான சான்றுகள் இருப்பதாகத் தொல்லியலாளர் நம்புகின்றனர். அசோகன் காலத்தில் வடஇந்தியாவிலிருந்து பரவியதெனக் கொண்டாலும், அது நேரடியாக வடஇந்தியாவிலிருந்து பரவியதா அல்லது தென்னிந்தியாவிற்குப் பரவி பின்னர் அங்கிருந்து இலங்கைக்குப் பரவியதா என்ற கேள்வி எழுகிறது. பாளி இலக்கியம் தவிர்ந்த பிற தொல்லியற் சான்றுகளை நோக்கும்போது ஏனைய பண்பாட்டு அம்சங்களைப் போல் பெளத்த மதமும் தென்னிந்தியா சிறப்பாக ஆந்திரம், தமிழ் நாடு ஊடாகப் பரவியது எனக் கூறுவதற்கே அதிக தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. வரலாற்றாசிரியர்கள் சிலர் முதலில் மகிந்தன் தமிழ் நாட்டில் பெளத்த மதத்தை அறிமுகப்படுத்திய பின்னரே இலங்கைக்குச் சென்றான் எனக் கூறுகின்றனர். இதற்குக் காவேரிபூம்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விகாரையின் அழிபாடுகளைச் சான்றாதாரமாகக் காட்டுகின்றனர்.
ஈழத்தில் பெளத்த மதம் தொடர்பாகக் கிடைக்கும் காலத்தால் முந்திய தொல்லியல் சான்றுகளில் பிராமிக் கல்வெட்டுக்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. சமகாலத்தில் இந்தியாவில் அசோகனால் வெளியிடப்பட்ட கல்வெட்டுக்கள் கற்பாறைகளிலும், கற்றுாண்களிலும் பல வரிசைகள் கொண்ட அமைப்பில் காணப்படுகின்றன. ஆனால் அந்த அமைப்புடைய கல்வெட்டுக்கள் எவையும் ஈழத்தில் காணப்படவில்லை. மாறாகப் பெர்னாங்தோ என்ற கல்வெட்டாய்வாளர் கூறுவது போல் ஈழமும், தமிழகமும் ஒரே பிராந்தியம் எனக் கூறும் அளவிற்கு ஒரிரு வரிகள் கொண்ட கல்வெட்டுக்களின் அமைப்பும், அவை பொறிக்கப்பட்ட பெளத்த குகையின் தோற்றமும் காணப்படுகின்றன. இக்காலத்தில் பெளத்த, சமண மதங்கள் நிலவிய நாடுகளில் எல்லாம் பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது.
கல்வெட்டுக்கள் எழுதப்பட்டிருந்தாலும் சமணமதம் தொடர்பான சொற்கள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பெரும்பாலும் அசோக பிராமி எழுத்தும், பிராகிருத மொழிச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈழத்தைப்

Page 89
156 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
பொறுத்தவரை கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஏனைய திராவிட மாநிலங்களில் (தமிழ் நாட்டைத் தவிர) காணப்படாத அளவிற்குத் தமிழ் மொழியினதும், தமிழ்ப் பிராமி எழுத்தினதும் செல்வாக்கு காணப்படுகின்றன. இதில் பல பெயர்கள் தமிழிலும், வேறு பல தமிழ்ப் பெயர்கள் பிராகிருதமயப்படுத்தப்பட்ட நிலையிலும் எழுதப்பட்டுள்ளன (இவை பற்றி முதலாம் இயலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன).
தமிழகத்தின் முக்கிய பெளத்த மையங்களாகக் காவேரிப்பூம்பட்டினம், காஞ்சி, புத்தமங்கலம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்கள் விளங்கின. அவற்றுள் முக்கிய பெளத்த கல்வி மையமாகக் காணப்பட்ட காவேரிப் பூம்பட்டினத்தை ஈழத்துப் பாளி நூல்கள் கவீரப்பட்டினம் எனவும், டமிலதேசம் எனவும் கூறுகின்றன. இங்கிருந்தே பிக்குகளும், பிக்குனிகளும் பெளத்த மதத்தைப் பரப்ப ஈழம் வந்திருக்கலாம் என்பதை சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சமணநீலகேசி, பெரியபுராணம், மேல்நாட்டார் குறிப்புக்கள் என்பவற்றில் இருந்து அறிய முடிகிறது. அவ்வாறு வந்தவர்களுள் சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்திரர், மற்றும் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்ததத்த, தர்மபாலா, புத்தகோஸர், பல்லவர் காலத்தில் வாழ்ந்த வஜ்ரபோதி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவற்றைச் சமகாலப் பாளி இலக்கியங்கள் உறுதிப்படுத்தியதோடு அவர்களுள் சோழ நாட்டைச்சேர்ந்த சங்கமித்திரரே ஈழத்தில் மகாசேனன் காலத்தில் மகாயான பெளத்தம் நிலை கொள்ளக் காரணம் என மேலும் கூறுகின்றன (Mahavamsa.XXXVI: 115123). தமிழகத்தில் இருந்து பெளத்த துறவிகள் ஈழம் வந்தது போல் ஈழத்தில் இருந்தும் பெளத்த துறவிகள் தமிழகம் சென்றதாகப் பாளி நூல்கள் கூறுகின்றன. உதாரணமாக வட்டகாமினி காலத்தில் (கி.மு.103) ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சங்கத்திற்கான ஆதரவு குறைந்தபோது அவர்கள் தமிழ் நாடு சென்று அங்குள்ள விகாரைகளில் தங்கியிருந்து பின்னர் இலங்கை திரும்பியதாக மகாவம்சம் கூறுகிறது. பெளத்த மதம் இந்தியாவிலிருந்து பரவியது போல் அதற்குரிய ஆரம்பகாலப் பெளத்தக் கலை மரபுகளும் அங்கிருந்தே அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. ஆயினும் இதுவரை ஈழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எந்த பெளத்த கலைவடிவங்களும் அப்படியே வடஇந்தியாவின் தொடக்க காலப் பெளத்த கலைகள் தோன்றிய பாருட், சாஞ்சி, புத்தகாய என்பனவற்றில் உள்ள பெளத்த கலைகளை ஒத்ததாகக் காணப்படவில்லை. மாறாக ஈழத்தில் கந்தரோடை, சுன்னாகம், புத்தூர், உருத்திரபுரம், அநுராதபுரம், மதவாச்சி, குச்சவெளி, கித்துள்கொட போன்ற இடங்களில் கிடைத்த புத்தர், போதிசத்துவர் சிலைகளும், ஐதீகக் கதைகளைச் சித்திரிக்கும் புடைப்புச் சிற்பங்களும் ஆந்திர காட்டிற்கேயுரிய ஒருவகைப் பளிங்கு கல்லில் வடிவமைக்கப்பட்டவையாக உள்ளன. இதையொத்த கலை வடிவங்களே தமிழகத்திலும் கிடைத்திருப்பதால் இவை ஆந்திராவிலிருந்தும்,

ஈழத் தமிழரும் பெளத்த, சமண மதங்களும் 157
தமிழ் நாட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்டவையாகக் கூறப்படுகின்றன. இச்சான்றாதாரங்களை வைத்து நோக்கும்போது தமிழகத்தைப் போல் ஈழத்திலும் குறிப்பிட்ட காலத்திற்குத் தமிழ்ப் பெளத்தம் இருந்ததெனக் கூறலாம். இதை ஈழத்திற்குரிய தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.
முன்னர் குறிப்பிட்டது போல் ஈழத்தமிழரில் ஒரு பிரிவினர் பெளத்தர் களாக இருந்ததை எடுத்துக் கூறும் வரலாற்று மூலாதாரங்களில் பிராமிக் கல்வெட்டுக்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றில் வரும் அபயன், பூதன், சுமணன், சுமன், பருமகன், பருமகள், குடும்பிகன், ஆய், வேள், மல்லன், பருமக, மாற, சோட, நாக, பரத போன்ற பெயர்கள் தமிழர்களும் பெளத்தர்களாக இருந்தனர் என்பதற்குச் சான்றாகும். (புஷ்பரட்ணம் 2001 அ). மேலும் இப்பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பிராகிருத மொழிக்குரிய பல தனிநபர் பெயர்களும், பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களும் தமிழருக்குரிய பெயர்களாகவும் இருந்தன என்பதற்குச் சமகாலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களில் வரும் உதிரன், சபிஜன், மகாசாத்தன், கபதிகன் போன்ற பெயர்கள் 9 gp6ůLUGDögléŝ6ðgp6oT (Mahadevan.2000. Pusparatnam 2001: 1-12, புஷ்பரட்ணம் 2001). இப்பெயர்கள் "அன்" என்ற விகுதியில் முடிவதால் இவை தமிழில் ஆண்மகனைக் குறித்ததென்பதில் சங்தேகமில்லை. வடஇலங்கையிலும், தென்னிலங்கையிலும் கிடைத்த கல்வெட்டுகள் தமிழ் வணிகர்கள் பெளத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகின்றன (Paramavithana.1970:356-357). இவற்றில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளத்தில் உள்ள இரு கல்வெட்டுக்களில் வரும் விசாகே என்ற பெயர் தமிழ் வணிகர்களுக்குரிய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சேருவில் என்ற இடத்தில் கிடைத்த கி.மு. 1 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு தமிழ்ச் சோழன் பெளத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது (Seneviratne 1985:50). அண்மையில் கந்தரோடையில் கிடைத்த பெருங்கற்கால மட்பாண்ட ஒரு ஒன்றில் "குணி" என முடியும் பெயரின் பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழில் பிக்குனி என்ற பெயரின் எச்சமாகக் கருதப்படுகிறது(கிருஷ்ணராஜா 1998). இச்சான்று ஈழத்தில் தமிழ்ப் பெண்களும் பிக்குணிகளாக இருந்ததற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
கி.மு.1-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் அநுராதபுரத்தில் பத்து தமிழ் மன்னர்கள் எண்பது ஆண்டுகளுக்குமேல் ஆட்சிபுரிந்ததாகக் கூறும் பாளி நூல்கள் சேன (சேனன்), குத்திக (குத்திகன்), எல்லார (எல்லாள்ன்) போன்ற தமிழ் மன்னர்களை பழைய மதத்தவர்(இந்து மதத்தவர்) எனக்

Page 90
158 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
கூறினாலும், அவர்களும் பெளத்த மதத்தை ஆதரித்ததாகக் கூறுகின்றன. அதேவேளை ஏனைய மன்னர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என இந்நூல்கள் கூறவில்லை. இவர்களில் சிலர் பெளத்தர்களாக இருக்கக்கூடும். கி.மு 1-ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தை வெற்றி கொண்ட 7 தமிழர்களுள் ஐவர் அநுராதபுரத்தில் ஆட்சிசெய்த போது அவர்களில் ஒருவன் பிச்சா பாத்திரத்துடன் தமிழகம் சென்றதாக மகாவம்சம் கூறுகிறது (Mahavamsa XXXII:55). இச்செய்தி பெளத்தமதத்தின் மீது தமிழ் மன்னனுக்கிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது எனலாம். இதே காலப்பகுதியில் ஆட்சிபுரிந்த நீலியன், வருகன் போன்ற தமிழ் மன்னர்கள் படையெடுப்பின்றி ஆட்சிக்கு வங்தவர்களாகக் கூறப்படுகின்றனர். இவர்கள் இருவரும் அனுலா என்பவளைப் பட்டத்து அரசியாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் (M.VXXXIV:1926). இவள் ஒரு பெளத்த அரசியாவாள். கி.பி.1-ஆம் நூற்றாண்டில் (கி. பி.33-43) ஆட்சிபுரிந்த இளEாக என்பவன் பெளத்தமதத்திற்குத் தொண்டாற்றிய ஒரு மன்னன் (M.VXXXIV:45). இவன் மனைவி தமிழாதேவி (தமிழ் அரசி) ஆவாள். இவள் கணவன் இறந்த பின் கணவன் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதனால் வடுகன், நீலியன், அனுலாதேவி ஆகிய தமிழர்கள் பெளத்தர்களாக இருக்கலாம். கி.பி.5- ஆம் நூற்றாண்டில் பண்டு தலைமையில் தமிழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தனர். இவர்களுள் பரிந்த குட்டபரிந்த ஆகிய தமிழ் மன்னர்கள் பெளத்த மதத்திற்கு ஆதரவாக ஆட்சிபுரிந்ததை அநுராதபுரம், கதிர்காமம், அறகம ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன (E.ZI:111-115). குட்டபரிந்தன் 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததைக் கூறும் அநுராதபுரக் கல்வெட்டு பெளத்தத்திற்கு ஆற்றிய தொண்டிற்காக அவனைப் பரிந்ததேவன், புத்ததாசன் எனப் புகழ்ந்து கூறுகிறது. பரிந்தனின் அறகமக் கல்வெட்டு பெளத்த மதத்திற்கு ஆற்றிய தொண்டை முக்கியப்படுத்திக் கூறுகிறது. அண்மையில் அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டொன்று அக்காலத்திலும் தமிழர்கள் பெளத்த மதத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகின்றது (சுப்பராயலு 2000). திருகோணமலையில் கிடைத்த கி.பி.1011 ஆம் நூற்றாண்டுக்குரிய சில தமிழ்க் கல்வெட்டுக்கள் அங்கிருந்த பெளத்த ஆலயங்கள் பற்றிக் கூறுகின்றன. ஆயினும் இக்கல்வெட்டுக்கள் காணப்பட்ட திருகோணமலை அக்காலத்தில் சர்வதேச வர்த்தக மையமாக இருந்ததினால் இவை பிறநாட்டுப் பெளத்த வணிகர்களின் வழிபாட்டிற்காகவே அமைக்கப்பட்டன என்ற கருத்துண்டு. எவ்வாறாயினும் இக்காலத்தின் பின்னர் தமிழ்ப் பெளத்தம் தொடர்பான சான்றுகள் அதிகம் இலங்கையில் கிடைத்ததாகத் தெரியவில்லை. மேற்கூறப்பட்டவற்றில் இருந்து பெளத்த மதம் அறிமுகமாகிய

ஈழத் தமிழரும் பெளத்த, சமண மதங்களும் 159
காலத்தில் இருந்து கி.பி.10-11 ஆம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்ந்த தமிழர்களில் சிலர் பெளத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பது தெரிகிறது.
ஆயினும் இம்மதம் தமிழ் மொழி பேசிய மக்களிடம் நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. வரலாற்றடிப்படையில் நோக்கும் போதுபண்டைய காலத்தில் இன, மொழி உணர்வை விட மத உணர்வே மேலோங்கிக் காணப்பட்டது. ஆட்சியாளர் எந்த இனத்தவராக, எந்த மொழி பேசுபவராக இருப்பினும் அவர்கள் தேரவாத பெளத்தத்திற்கு சார்பானவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முதன்மை பெற்றுக் காணப்பட்டது. தேவநம்பியதீசன், துட்டகாமினி போன்ற மன்னர்களின் வரலாறு பாளி இலக்கியங்களில் கூறப்பட்ட அளவிற்கு சமகாலத்தில் அவர்களுடன் ஆட்சியுரிமைக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற தமிழ் மன்னர்களின் வரலாறு மிகக் குறைந்த அளவில் தானும் முக்கியப்படுத்திக் கூறப்படவில்லை. இத்தனைக்கும் தேவநம்பிய தீசன், துட்டகாமினி காலத்தில் சிங்கள மொழி இலங்கையில் தோற்றம் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவர்கள் தேரவாத பெளத்த மதத்திற்கு தொண்டாற்றியதன் விளைவாக பிற்காலத்தில் பெளத்தம் சிங்கள மக்களுக்குரிய மதமாக இருப்பதைக் கொண்டு அவர்களை இங்காட்டுக்குரிய சிங்கள மன்னர்களாகக் கருதினார்கள். மின்னேரியத் தெய்வம் எனப் போற்றப்படும் மகாசேன மன்னன் சிங்கள மன்னனாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறான். இவன் துட்டகாமினியைக் காட்டிலும் பொருளாதார ரீதியில் நீர்ப்பாசனத்திற்குப் பெரும் தொண்டாற்றிய போதிலும் இவன் தேரவாத பெளத்த மதத்திற்கு எதிராக மகாயான பெளத்த மதத்திற்கு சோழ நாட்டு மகிந்தனுடன் சேர்ந்து ஆதரவு கொடுத்ததினால் தமிழ் மன்னர்களுடைய வரலாற்றைப் போல் அவன் வரலாறும் சமகாலப் பாளி இலக்கியங்களில் மிகச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இவனுடைய சில
சாதனைகளாகக் கூறப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ் மன்னர்களில் பலர் பெளத்த மதத்திற்கு ஆதரவு கொடுத்து ஆட்சி நடத்திய போதும் அவர்கள் பழைய மதங்ம்பிக்கையை (கைகர் என்ற வரலாற்று ஆசிரியர் பழைய மதநம்பிக்கை என்பது இந்து மதத்தைக் குறிப்பதாகக் கூறுகிறார்) கைவிடாத காரணத்தால் அவர்களை அன்னிய நாட்டுக்குரிய தமிழர்களாகப் பாளி நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதில் ஆட்சியாளரின் மொழியை விட அவர்கள் பின்பற்றிய மதம் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம்.
இவ்வாறான காலச் சூழ்நிலையில்தான் பல இன,பல மொழி பேசிய மக்களும் பின்பற்றிய பெளத்த மதத்திற்குரிய பாளி, பிராகிருத மொழிகளுக்குரிய பெருமளவு சொற்களை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் சிங்கள மொழி தோற்றம் பெற்றது. இம்மொழி காலப் போக்கில் பெளத்த மதத்துடன்

Page 91
160 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
இரண்டறக் கலந்தது. இதுவரை பெளத்த மதத்தில் பாளி, பிராகிருத மொழிகள் பெற்ற செல்வாக்கை இம்மொழியும் பெற்றது. இங்கிலையில் தமிழைப் பேச்சு மொழியாகவும், பாளி, பிராகிருத மொழிகளை பெளத்தத்திற்குரிய மொழியாகவும் கொண்டிருந்த தமிழர்களில் ஒரு பிரிவினர் மொழியை விட பெளத்த மதத்தை அதிகம் நேசித்ததினால் அவர்களும் காலப்போக்கில் சிங்கள மொழி பேசும் மக்களாக மாறியிருக்க வேண்டும். இது மொழியடிப்படையில் பிற்காலத்தில் சிங்கள மொழி பேசிய மக்களைப் பெளத்த மதத்துடன் தொடர்புபடுத்தியதைப் போல் தமிழ் மொழி பேசிய மக்களை தொடர்புபடுத்த முடியாமைக்கு காரணமாகும்.
இரண்டாவது தமிழரிடையே அதிலும் சிறப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் தற்போதைய பிராந்தியங்களில் பெளத்த மதம் நிறுவன ரீதியில் வள ராமை இன்னொரு காரணமாக இருந்திருக்க வேண்டும். உதாரணமாக வட இலங்கையில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுக்களை நாட்டின் ஏனைய வட்டாரங்களில் கிடைத்த கல்வெட்டுக்களுடன் ஒப்பிடுகின்ற போது அவற்றிடையே பிரதான வேறுபாடுகள் காணப்படுகின்றன. வடஇலங்கையில் உள்ள பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுக்கள் பெளத்த குருமாருக்கு கொடுத்த குகை அல்லது கற்படுக்கை பற்றியே அதிகம் பேசுகின்றன. ஆனால் ஏனைய வட்டாரங்களில் கிடைத்த ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் இந்த அம்சத்தைக் காணமுடிந்தாலும், பிற்பட்ட காலப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் தனிப்பட்ட பெளத்தகுருமாருக்குப் பதிலாக பெளத்த சங்கத்திற்கு, விகாரைக்கு நிலம், குளம், கால்வாய், கில வருவாய் போன்றவை தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றன. இதில் மக்கள் சொத்தான குளமும், நிலமும் படிப்படியாக மன்னன் சொத்தாக மாறும் கிலையையும், இவற்றை தானமாகப் பெற்ற பெளத்த சங்கங்கள் சொத்துடைய கிறுவனமாக மாறுவதையும் காணமுடிகிறது. இதனால் பொருளாதார ரீதியில் பெளத்த சங்கத்தின் கிலங்களையும், குளங்களையும் நம்பி பெருமளவு மக்கள் வாழும் சூழ்நிலை உருவாகியது. இவை அரசுக்கு சமனாக பெளத்த சங்கமும் வளரக் காரணமாகியது. அதேவேளை பெளத்த குருமாரும் சமயக் கடமைகளில் மட்டுமன்றி பல சமூகக் கடமைகளில் ஈடுபட்டு மக்களோடு இணைந்து வாழ முற்பட்டதைக் காணமுடிகிறது. இந்த வளர்ச்சிப் போக்கை வடஇலங்கையில் காணமுடியவில்லை. சமகாலப் பாளி இலக்கியங்கள் கூட கி.பி.5-ஆம் நூற்றாண்டின் பின்னர் காட்டின் ஏனைய பிராந்தியங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்கள் பற்றிக் கூறுமளவுக்கு வட இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்கள் பற்றி அதிகம் கூறவில்லை. இந்த வேறுபாடுகள் வடஇலங்கையில் பெளத்த மதம் நிறுவன ரீதியில் வளரவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் கூட பெளத்த மதம் வளராமைக்கு அம்மதம் நிறுவனரீதியாக வளராமை

ஈழத் தமிழரும் பெளத்த, சமண மதங்களும் 161
முக்கிய காரணமாகக் கூறப்படுவதுண்டு. இத்தகைய தழ்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பத்தி இயக்கத்தின் செல்வாக்கும், வணிக கணங்களின் எழுச்சியும், இலங்கை மீதான தமிழகப் படையெடுப்புக்கள் என்பன ஏற்கனவே ஈழத்தில் பலவீனப்பட்டுப் போன தமிழ்ப் பெளத்தத்தை மேலும் பலவீனமடையச் செய்திருக்க வேண்டும். இதன் விளைவால் ஆதிகாலம் தொட்டுப் புராண வழிபாட்டு மரபைப் பின்பற்றிய தமிழர்கள் தீவிர இந்துக்களாக மாறியிருக்க வாய்ப்புண்டு. அதேவேளை பெளத்த மதத்திற்கு மாறியிருந்த தமிழர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிச் செல்ல இன்னொரு பிரிவினர் தீவிர பெளத்தர்களாக தம்மை மாற்றிக் கொண்டிருக்கலாம். அவ்வாறு மாற்றிக் கொண்டவர்கள் மொழியாலும் தம்மைச் சிங்களவர்களாக மாற்றியிருக்க வேண்டும். இவ்வாறான மாற்றம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னரும் நீர்கொழும்பு போன்ற இடங்களில் ஏற்பட்டதை நாம் மறந்துவிடலாகாது.
சமணசமயம்
பண்டைய காலத்தில் ஈழத்தமிழரில் சிலர் சமண மதத்தைப்
பெளத்தமத வரலாற்றை விரிவாக எழுதிய அதிகாரம் என்பவர் அம்மதத்தைப் போல் சமணமும் வடஇந்தியாவிலிருந்தே பரவியதாகக் கூறுகிறார். ஆனால் தமிழகத்திற்கு வடஇந்தியாவிலிருந்து சமணம் பரவியதற்கான சான்றுகள் இருப்பது போல் இலங்கையில் காணப்படவில்லை. இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பாரம்பரிய உறவை கோக்கும்போது வட இந்தியாவை விட தமிழகத்திலிருந்தே இம்மதம் இலங்கைக்குப் பரவியதெனக் கூறலாம். தமிழகத்தில் பத்தி இயக்கம் தோன்றும் வரை பெளத்த மதத்தைப் போல் சமணமும் செல்வாக்குடைய மதமாக இருந்ததற்குப் பல சான்றுகள் உள. அங்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 120ற்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் சமணமதம் பற்றியே கூறுகின்றன. மேலும் மணிமேகலை, சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம், பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் முதலான நூல்களிலும் இம்மதம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இதைத் தமிழகத்தில் உள்ள சமணக் கோயில்களும், திருவுருவங்களும் உறுதிப்படுத்துகின்றன.
ஈழத்தைப் பொறுத்தவரை இம்மதம் பண்டைய காலத்தில் இருந்ததைப் பாளி இலக்கியங்கள் ஒரு சில இடங்களில் குறிப்பிடுகின்றன. கி.மு.4ஆம் நூற்றாண்டில் பண்டுகாபயமன்னன் தனது ஆட்சியில் அநுராதபுர நகரில் சோதியன், கிரி, கும்பன்டன் முதலான சமணக் குருமாருக்கு பள்ளி அமைத்துக் கொடுத்ததாகக் கூறுகிறது(MahavamsaXX90-102),வட்டகாமினி காலத்தில் இவன் தமிழருடன் கடத்திய போரில் இவன் தோல்வியடைந்து குதிரையில்

Page 92
162 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
தப்பியோரும் போது சமணப் பள்ளியில் தங்கியிருந்த கிரி என்பவன் அவனைப் பரிகசித்ததாகவும், வட்டகாமினி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அச்சமணப்பள்ளியை இடித்து அதைப் பெளத்த பள்ளியாக மாற்றியதாகவும் மகாவம்சம் கூறுகிறது (Mahavamsa XXXII:43-44). இவ்விகாரையே பிற்காலத்தில் அபயவிகாரை என்ற பெயரைப் பெற்றது. கசபணுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த மொகல்லன் இலங்கையில் இருந்த சமணரின் (நிகந்தர்களின்) செய்தி கேட்டு தமிழர் படையுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சூளவம்சம் கூறுகிறது. இச்சான்றுகளின் பின்னர் இம்மதம் படிப்படியாக 12ஆம் நூற்றாண்டுடன் மறைந்து போவதைப் பாளி சிங்கள இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.
மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் இச்சமணமதத்தை இங்கிருந்த தமிழர்களே பெரும்பாலும் பின்பற்றியிருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகின்றன. ஆரிய அபயசிங்கா என்ற சாசனவியலாளர் இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களுடன், தமிழுக்கேயுரிய பிராமி எழுத்துக்கள் பயன்பாட்டிலிருந்ததற்கு தமிழகத்திலிருந்து பரவிய சமணமதமே காரணம் என்றார். தமிழகப்பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் அதில் சமணமதத்திற்குரிய பல சொற்களைத் தனித்து இனம்காட்டியுள்ளார். அச்சொற் கள் சில சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன (புஷ்பரட்ணம் 2001). இவ்வாதாரங்கள் விரிவாக ஆராயப்படும் போது பண்டைய காலத்தில் வாழ்ந்த ஈழத் தமிழருக்கும் சமணமதத்திற்கும் இருந்த தொடர்பு மேலும் துலக்கம் பெறும்.

உசாத்துணை நூல்கள்
இந்திரபாலா, கா., 1969, "அமராவதிப் பாணியில் அமைந்த அரிய சிலைகள்" வீரகேசரி, வாரவெளியீடு(6.6.1969, 10.9.1969), கொழும்பு
இந்திரபாலா, கா., 1972, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், கண்டி இந்திரபாலா, கா., 1999, (இரண்டாம் பதிப்பு), இலங்கையில் திராவிடக் கட்டிடக் கலை, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை. இந்திரபாலா, கா., 1969, யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள், சிந்தனை, தொகுதி.2, இதழ்.4. பேராதனை.
இராசகோபால், சு. 1991, இலங்கை, தமிழக பிராமி எழுத்துக்கள்- ஓர் ஒப்பாய்வு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த சாசனவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. இராசவேலு, சு, 1995, நெகனூர்பட்டி தமிழ் பிராமிக் கல்வெட்டு, சித்தன்னவாசல் கள ஆய்வு, ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 67-2.
இராசவேலு, சு. 1999, பூம்புகாரில் சிங்களப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டத்துண்டு, ஆவணம், 9:154. இராசு, செ. 1983, தஞ்சை மராட்டியர் செப்பேடுகள், தஞ்சாவூர். இராசு, செ. 1991, கொங்கு நாட்டு ஆவணங்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
இராஜன், கா., 1994, கொடுமணல் அகழாய்வு ஒர் அறிமுகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர்.
சிலப்பதிகாரம், 1927, சாமிநாதையர், உ.வே. பதிப்பு, சென்னை.
செகராசசேகரம், 1932, (பதிப்பு), இரகுநாதையர், இ.சி. அச்சுவேலி.

Page 93
164
செகராசசேகர மாலை, 1942, (பதிப்பு) இரகுநாதையர், இ.சி. யாழ்ப்பாணம் பத்துப்பாட்டு, 1976, நச்சினார்க்கினியர் உரை, உ.வே.சா. பதிப்பு சென்னை, ஐந்தாம் பதிப்பு. மணிமேகல்ை, 1971, சோமசுந்தரனார், பொ.வே. சென்னை.
யாழப்பாணவைபவமாலை, 1953, சபாநாதன், குல (பதிப்பு), கொழும்பு.
பூரிதகதிண கைலாசபுராணம்1942, (பதிப்பு)இரகுநாதையர், இ.சி. யாழ்ப்பாணம் காசிநாதன், நடன. 1995, தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. காந்திதாசன், எம். 1988, தமிழ்நாட்டில் முருக வழிபாடு, மதுரை. குணசிங்கம், செ. 1070, கோணேஸ்வரம், பேராதனை.
கிருஷ்ணராசா, செ, 1983, யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள், சிந்தனை, 171-84.
கிருஷ்ணராசா, செ, 1998, தொல்லியலும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டுத் தொண்மையும், பிறைநிலா வெளியீடு, யாழ்ப்பாணம். கோபாலகிருஷ்ண ஐயர், ப. 1981, சிவாகமங்களும் சிற்ப நூல்களும் சித்திரிக்கும் சிவ விக்கிரவியல், கலாநிதிப் பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு. சண்முகதாஸ், அ., 1993, திராவிட மொழி ஆய்வில் இன்றைய நிலையில்
மிழ்-யப்பானிய ஒப்பீடு, தொடக்கப் ே ; யாழ்ப்பாணப் பல் e சிவகுருநாதன், மா., 1991, சிவ வடிவங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். சிவசாமி, வி. 1973, "காலத்தால் முந்திய நல்லூர்ச் சிலைகள்" கலைக்கண், மறுபிரசுரம், வட்டுக்கோட்டை. சிவசாமி, வி., 1974, யாழப்பாணக் காசுகள், நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் (ப.ஆ), வித்தியானந்தன், சு, அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை, கொழும்பு: 26-36. சிவசாமி, வி. 1975, யாழ்ப்பாணத்தில் இந்து சமயம்-சில வரலாற்றுக் குறிப்புக்கள், வசந்தம், கெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் ஆண்டு Loor; 32-37.

1 OJO
சிவசாமி, வி., 1978, இலங்கைச் சிற்பங்கள், பேராசிரியர் நா. வானமாமலை 60ஆவது ஆண்டு பாராட்டு மலர், பாளையங்கோட்டை (தமிழ்நாடு). 10012.
சிவசாமி. வி., 1979, "சிற்பக்கலை" ஈழத்துப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழ் மக்களின் பங்களிப்பு, வானொலி மஞ்சரி கொழும்பு. சிவசாமி, வி., 1994, தென்னாசியக் கலைவடிங்களில் நாட்டிய சாஸ்திர மரபு, திருநெல்வேலி.
சிற்றம்பலம், சி.க., 1996, ”ஈழமும் இந்து மதமும் அநுராதபுர காலம் சிந்தனை, தொகுதி II, இதழ். II யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு. 108-142.
சிற்றம்பலம், சி.க., 1993, யாழ்ப்பாணம் தொண்மை வரலாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி. சிற்றம்பலம், சி.க., 1996, ஈழத்து இந்து சமய வரலாறு, பாகம் 1, கி.பி. 500 வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, கொழும்பு. சீதாராமன், ஆறுமுக, 1998, கடவுள் பெயரில் தமிழ்க் காசு, Coins X98 Madras, Madras Coins Society, Madras. சீதாராமன், ஆறுமுக, 1994, தமிழகத் தொல்லியல் சான்றுகள் அண்மைக்காலக் கண்டு பிடிப்புகள், தொகுதி-1. தனலக்ஷ்மி பதிப்பகம், தஞ்சாவூர். சீதாராமன், ஆறுமுக, 1995, பல்லவர் காசுகள், Cons X95 Madras, Madras Coins Society, Madras.
சீதாராமன், ஆறுமுக, 1996, தஞ்சைமராட்டியர் காசுகள், ஆவணம் தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
சீதாராமன், ஆறுமுக, 1996ஆ தென்னிந்தியக் காசுகள் புதிய கண்டுபிடிப்புகள், வரலாறு ஆய்விதழ் 6:89-8. சீதாராமன், ஆறுமுக, 1989, மறவர் நாணயங்கள், 9.12.1989இல் சிவகங்கை வரலாற்றுப் பேரவையில் கடந்த வரலாற்றுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட
சீதாராமன், ஆறுமுக, 1989, இராஜராஜனின் ஈழக்காசுகள், தமிழ் நாடு காணயவியலி கருத்தரங்கிலி வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. சீதாராமன், ஆறுமுக, 1997, சேதுபதியின் தமிழ்க் காசுகள், தினமணி 14, 5, 1997.

Page 94
166
சுசீந்திரராசா, சு. 1999, நாட்டார் பாடல் மொழி, தமிழ் மொழியியற் சிந்தனை, (ப.ஆ) இராசாராம், சு, சுபதினி, ஆ. ரிஷபம் பதிப்பகம், சென்னை.
சுப்பராயலு, எ. சண்முகம், ப, 1998, இலங்கையில் ஐந்நூற்றுவர் கல்வெட்டுகள், ஆவணம், 9:32-34. K.
சுப்பராயலு, எ. சண்முகம், ப, 1999, அநுராதபுரத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு, ஆவணம், 10:11-13.
ஞானப்பிரகாசர், சுவாமி, 1928, யாழ்ப்பாண வைபவவிமர்சனம், அச்சுவேலி, பத்மநாதன் சி. 1992, ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் யாழ்ப்பாண இராச்சிம்டி (ப.ஆ) சிற்றம்பலம், சி.க. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
பத்மநாதன், சி. 1972, தமிழ்ச் சாசனங்களும் ஈழ வரலாற்றாராய்ச்சியும், இளங்தென்றல் கொழும்பு.
பத்மநாதன், சி. 1984, இலங்கையில் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி.பி.1000.1200), சிந்தனை, தொகுதி. 2. யாழ்ப்பாணம்.
பத்மநாதன், சி. 1985, இலங்கையில் இந்து மதம்- ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்(1250-1620), சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், தெல்லிப்பளை: 21-28.
பத்மநாதன், சி. 2000, இலங்கையில் இந்துக் கலாசாரம், இலங்கை இந்து கலாசாரத் திணைக்கள வெளியீடு. கொழும்பு.
புஷ்பரட்ணம், ப. 1988, இலங்கைச் சிற்பங்களில் தென்னிந்தியக் கலையின் செல்வாக்கு முதுகலைமானிப் பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு.
புஷ்பரட்ணம், ப. 1993, பூநகளி-தொல்பொருளய்வு: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
புஷ்பரட்ணம், ப. 1998, பூநகரியில் கிடைத்த அரிய சங்ககால நாணயங்கள், ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 9:114-119.
புஷ்பரட்ணம், ப. 1998, அண்மையில் வடஇலங்கையில் கிடைத்த லசுஷ்மி நாணயங்கள் - ஒரு மீள் பரிசீலனை, ஒன்பதாவது தமிழக தொல்லியல் கழக ஆய்வரங்கு புதுக்கோட்டை. 1-12.
புஷ்பரட்ணம், ப. 2001, இலங்கை பெருங்கற்கால மட்பாண்டங்களில் பீடத்துடன் கூடிய சுவஷ்திகா, ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், 12:130-133.

167
புஷ்பரட்ணம், ப. 1999ஆ, தென்னிலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களின் வரலாற்றுப் பின்னணி, நாவாவின் ஆராய்ச்சி ஜூலை 49: 55-70. . • புஷ்பரட்ணம், ப. 2000, தொல்லியல் கோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
புஷ்பரட்ணம், ப. 2001, இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள், பவானி பதிப்பகம், புத்துார். புஷ்பரட்ணம், ப. 2001 அ, பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும், கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு. பூங்குன்றன், ஆர்., 1999, பண்டைய தமிழகத்தில் அரச உருவாக்கம், முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். மகாதேவன், ஐ, 2000, தென்னிலங்கையில் பழந்தமிழ் நாணயங்கள், ஆவணம்
1 1:1 16-120.
வித்தியானந்தன், சு. 1954, தமிழர் சால்பு, பேராதனை.
வேலுப்பிள்ளை, ஆ, 1985, தமிழர் சமய வரலாறு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை.
வேலுப்பிள்ளை, ஆ. 1988, தொடக்க கால ஈழத்து இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும், தொடக்கப்பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
Adikaram, E.W., 1953, Early History of Buddhism in Ceylon, Colombo. Amita Ray., 1983, Life and Art of Andhradesa, Delhi.
Bandaranayake, Senaka., 1974, Sinhalese Monastic Architecture, The Vihara of Anurathapura, Leiden.
Bell, H.C.P., 1892 Annual Report of the Archaeological Survey of Ceylon for 1892, 1893. Colombo.
Biddulph, C.H. 1966, Coins of Pandyas, NNMno11 of the Numismatic Society of india.
Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, Ruhuna an Ancient Civillization Revisited, Nugegoda.
Brown, Percy, 1959, indian Architecture, I & II, Bombay.

Page 95
168
Codrington, H.W. 1924, Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A, No.3, Colombo.
Cohn, W., 1922, lindian Plastic, Berlin.
Coomaraswamy, Ananda, K., 1914, Bronzes from Ceylon Chiefly in the Colombo Museum, No., Colombo.
Coomaraswamy, Ananda, K., 1956, Medieval Sinhalese Art, New York.
Culavamsa, 1953, Geiger. W. E.d), Ceylon Government Information Department, Colombo.
Deraniyagala, P.E.P., 1953, Ferro-Lithic an Early Historic Terracotta and a Cist from Ceylon in Spolia Zeylanica, Colombo, 27.1:133-138.
Desikachari, T. 1933, South Indian Coins. Devendra, D.T., 1958, Clasical Sinhalese Sculpture 300 B.C. to A.D. 1000. Elliot, W. 1970, Coins of South India, Prithivi Prakasan, Varanasi.
Girijapthy, M. and Ganesh, K. 1999, Peacock Motif Coins of Kalyani Chalukyas in S.S. l. I, IX:82-3,
Gnanapragasar, S. The forgotten Coin age of the Kings of Jaffna, Ceylon Antiquary, 5.
Gupta, P.L., 1969, Coins, National Book Trust, India, New Delhi.
Havalaiah, N. 1999, Two Unpublished Copper Coins of Mysore Wandeyars in S.S.l.l., IX: 130-2.
Hettiaratchi, D.P.E., 1950, Numista Zeylanica on a Newly Discovered Type of Lakshmi Plaques in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Colombo, 1:04-22.
Hettiaratchi, D.P.E., 1955, A Note on an Unpublished Pallava Coin in Journal of the Ceylon Branch of the Royal Asiatic SocietyColombo, IV (1:7276.
Indrabala, K., 1969, Early Tamil Settlements in Ceylon in Journal of Royal Asiatic Society of Ceylon Branch, XII: 43-61.
Indrabala, K., 1971, A Cola Inscription from the Jaffna Fort in Epigraphia Tamilca, Jaffna Archaeological Society, Jaffna, 11:52-56.
James, E., 1887-88, Pandyan Coins in Southern India in Madras Journal of Literary and Science New Series, 138-144,
Kaldos, Raju, 1976, History and Culture of Tamil, Dindugal.

169
Kalidos, Raju., 1999, łconography of Skanda-Murukan:Flashes of Insight, Journal of the Institute of Asian Studies, Vol.XV:2:73-90.
Kannangara, K. T., 1984, Jaffna and the Sinha Heritage, Colombo.
Krishnamurthy, R., 1997, Sangam Age Tamil Coins, Garnet Publications, Madras.
Krishnamurthy, R., 1991, Oblong Coin With a Mother Goddess Symbol from Karur, Tamilnadu Journal of the Numismatic Society of India, 53:5961.
Loventhan, E., 1888, The Coins of Tinnevelly, Higginbotham & Co, MadraS.
Mahadevan, I., 1966, Corpus of the Tamil- Brahmi Inscriptions, Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology Government of Tamil Nadu, Madras.
Mahadevan, I., 1970, Some Rare Coins of Jaffna in Danilica,:111-120.
Mahadevan, ., 2000, Ancient Tamil Coins from Sri Lanka, To be published in the Journal of the Institute of Asian Studies, Madras.
Mictohiner, M 1998, The Coinage and History of Southern India, Hawkins Publication.
Mulk Raj Ananda., 1933, The Hindu View of Art, London.
Nagaswamy, R., 1981, Tamil Coins, Madras.
Nagaswamy, R., 1995, Roman Karur, Brahad Prakashan, Madras.
Navaratnam, C.S., A Short History of Hinduism in Ceylon, 1964, Jaffna.
Navaratnam, C.S., 1958, Tamils and Ceylon, Jaffna.
Paranavițana, S., 1928, Anuradhapura: Slab-Inscription of Khudda Parinda in Epigraphia Zeylanica, The Archaeological Department of Ceylon, ll: 111 - 14.
Paranavitana, S., 1970, inscription of Ceylon: Early Brahmi Inscriptions, The Department of Archaeology Ceylon, Colombo, l.
Paranavitana, S., 1983, inscription of Ceylon: Late Brahmi Inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa,ti (1).
Paranavitana, S., 1971, Art of Ancient Sinhalese, Colombo.
Parkar, H., 1981, Ancient Ceylon, Asian Educational Services, New Delhi.

Page 96
170
Pathmanathan, S., 1978, The Kingdom of Jaffna, Arul M.Rajendran, Colombo.
Pathmanathan, S., 1980, Coins of Medieval Sri Lanka: The Coins of the Kings of Jaffna, Spolia Zylanica, Vol. 35, part I and II : 409–417.
Peiris, P.E., 1922, Nagadipa and Buddhist Remains in Jaffna Part.I in journal of the Royal Asiatic Society Ceylon Branch, 11-20.
Peiris, P.E., 1925, Nagadipa and Buddhist Remains in Jaffna Part. II in Journal of the Royal Asiatic Society Ceylon Branch, 40-67.
Prensep's. 1858, Ceylon Coins, Essays on Indians Antiquities, London.
Pushparatnam, P. 2000, Tamil Coins From Southern Sri Lanka- A Historical Perspective in Madras Coins XII. 1-12.
Pushparatnam, P. 2001, Tamil Place Names as Gleaned from Sri Lankan Brahmi Inscriptions in Kaveri Professor Y Subarayalu Felicitation Volume (ed) Rajagopal, Panpattu Veliyittakam Chennai, pp.343-366.
Pushparatnam, P., 2001 Parathava Society as Gleaned from Sri Lankan Brahmi Inscriptions, in Studies in Indian Epigraphy, Mysore: 119-135.
Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna. An Archaeological Survey, Mrs.Thillimalar Ragupathy, Madras.
Rajan, K., 1994, Archaeology of Tamil Nadu.(Kongu Country.) Book India Publishing Co, Delhi.
Rasanayagam, C., 1926, Ancient Jaffna, A.S., Everyman's Publishers Ltd, Madras.
Roland Benjamin., 1953, The Art and Architecture of India, Maryland.
Sanmugadas, A., 2001, Papers on Tamil Linguistics, Literature and Culture, (e.d) Sivalingarajah, S., and Sivasubramaniyam, S., Department of Tamil, University of Jaffna.
Saraswati, S.K., 1975, A Survey of Indian Sculpture, New Delhi.
Seyon, K.N.V. 1998, Some Old Coins Found in Early Ceylon, Nawala. Sri Lanka.
Shanmugam, P., 1994, Two Coins of the Tamil Origin from Thailand in S.S. l. C., IV: 95-100.
Sharma, S., 1990, Early Indian Symbols-Numismatic Evidence, Aga Kala Prakashan, Delhi.

171
Singaravelu, S., 1966, Social Life of the Tamils -The Classical Period, University of Malaya, Kuala Lumpur.
Sircar, D.C., 1968, Studies in Indian Coins, Motilal Banarsidass, Delhi.
Sircar, D.C., 1971, e.d), Early Indian Indigenous Coins, Sri Sibendranath Kanjilal, Calcutta.
Sivasamy, V., 1985, Some Aspects of Early South Asian Epigraphy, Thirunelvely.
Sivathamby, K., 1981, Drama in Ancient Tamil Society, New century Book House, Madras.
Sitrampalam, S.K., 1992, A Note on the Lakshmi Plaques of Sri Lanka in S.S.I.C, Madras, ll: 151-158.
Sitrampalam, S.K., 1993, The Parumakas of the Sri Lankan Brahmi linscriptions in Kalvettu Tamil Nadu Archaeological Department, 29:19-28.
Smith, V.A., 1911, A History of Fine Arts in India and Ceylon, Oxford.
Subbarayalu,Y., Brahmi Graffiti on Potsherds from Kodumanal Excavation (unpublished article).
Tracey, J.E. 1889-94, Setupathi Coins in Madras Journal of Literature and Science.
Thaplyal, K.K., 1972, Studies in Ancient Indian Seals, Akhila Sharatiya Sanskrit Parishad, Lucknow.
Ulrich Von Schroeder, 1992, The Golden Age of Sculpture in Sri Lanka, Hong Hong.
Van Lohuizen De Leew, J.E., 1979, The rock-Cut
Veluppillai, A., 1980a, Epigraphical Evidences for Tamil Studies, Publisher International institute of Tamil Studies Madras.
Wijesekara, N., 1962, Early Sinhalese Sculpture, Colombo.
Zvelebil,V.Kamil., 1981, Tiru Murukan, Madras.

Page 97
172 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்

173
drLLq.
அக்குறுகொட 80, 85, 112, 129,
146
set(Barrast illumil 7, 155
அதியன் 111
அநுராதபுரம் 8, 32, 33, 35, 37,
46, 85, 88, 127, 158
அபயன் 7, 16, 157
அம்பு 59, 79
அமராவதி 57, 62
அரசபுரம் 47
அரிக்கமேரு 33
அருணகிரிநாதர் 144
அரேபியா 11, 107
அரையன் 23
அழகன்குளம் 22
அழகர்மலை 22, 23
அனுலா 158
அஜக்தா 55, 61
ஆதிச்ச நல்லூர் 33 ஆந்திரம் 155 ஆரியச்சக்கரவர்த்தி 94, 166 ஆமை 79, 150 ஆனந்தகுமாரசாமி 28, 53, 54, 55
ஆறுமுகசுவாமி 144 ஆனைக்கோட்டை 85
இசுறுமுனியா 35, 37, 52, 54, 55,
61
இந்தியா 4, 66 இந்திரபாலா 30, 43, 46, 47, இயற்றாலை 101, 108 இயற்றாலைக் கோட்டை 102 இரகுபதி 101; 107 இராசு காளிதாஸ் 64, 73, 75 இராசகோபால் 75, 163 இராசவேலு 75, 163 இருளன் 100 இலங்கை 2, 4, 9, 11, 12, 17,
21, 30, 31, 34, 42, 45, 46, 54, 62, 97, 107,113, 129, 136, 153, 154, 156,161, இலுக்குவேவ 32 இளநாகன் 37, 158
ஈழம் 9, 10, 91, 153, 156
உடுத்துறை 80, 85, 94, 101,
111, 121, 150
உதிரன் 7, 8, 16, 157
உருத்திரபுரம் 32, 156
உறையூர் 33
ஊர்காவற்றுறை ஊற்றுப்புலம் 174
எல்லாளன் 18, 29, 37, 101, 157 எலியட் 174

Page 98
174 தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
எலிசபெத் 54, 55
கண்ணகி 88, 89, 124
கதிர்காமம் 5, 158
கந்தன் ஆலயம் 129, 141, 144
கந்தபுராணம் 131, 144
கந்தமலை 139, 144
கந்தமலையாரியர்கோன் 140, 142,
143 கந்தரோடை 8, 33, 80, 85,86,
88, 109, 127, 148,
156, 157
கந்தளாய் 80, 85
கபதிகன் 7, 16, 157
கல்பதுக்கை 31
கல்முனை 174
கல்வட்டம் 31
கல்லறை 31
கறுப்பன் 100
கஜபன் 8
காஞ்சி 39, 58, 127, 128, 156
காவேரிப்பூம்பட்டினம், 33, 39
stഞ്ഞു. 76, 79, 80-83, 89, 93,
116-118, 120, 130, 131, 152
கிருஷ்ணமூர்த்தி 174 கிருஷ்ணராஜா 112, 122, 127,
132, 152, 157
குட்டபரிந்தன் குரும்பிகன் 157 குடைக்கல் 31 குடைவரைக்கல் 31 குத்துக்கல் 31 குத்திகன் 157 குதிரை 52, 53, 58,79
குமரன் 144 குமாரகணம் 48, 49
கெற்றி ஆராச்சி 69
கைலாயமாலை 85
கொங்குநாடு 67 கொடுமணல் 23 கொல்லிப்பாறை 147
கோகர்னம் 37
கோகாட் 66, 55
கோனாவில் 47
கோபால கிருஷ்ண ஐயர் 44, 51,
61
சக்கரம் 39, 79 சங்கு 79, 147, 150, 152 சங்கன் 48 சடனாகராசன் 19 சண்முகசாமி, 144 சந்திரன் 79, 137, 152 சந்திரவட்டக்கல் 27 சமணம் 24, 25, 161
885u6 119 சாஞ்சி 62, 156 afrtopsoirs 70
சிம்மகோமுகி 36
சிமித் 54
சில்வா 174
சிலப்பதிகாரம் 39, 40, 156, 161, 163
சிவ வழிபாடு 117
சிவன் 37, 38, 46, 59, 110,
111, 117, 125 சிவகுருகாதசுவாமி 144

FairTS 44, 78, 85, 87, 122,
127, 132, 133, 144, 164, 165 சிற்றம்பலம் 41, 44, 46, 47, 78, 1 22, 124, 127, 144, 165, 166
சீதாராமன் 78, 139, 165 சீனா 11
சுட்டிக்குளம் 32 சுடுமண் 32, 33, 71, 80, 86, 98,
114, 123 சுப்பராயலு 21, 48, 99, 100, 158, 166 சுவஸ்திகா 13, 14, 32,79, 85,
89, 95, 111, 115, 124, 125, 132,147
துரியன் 38, 79 துலம் 85, 87, 89, 95, 104, 109,
114, 131
செகராசசேகரமாலை 139, 142,
143 செழியாவில் 47, 70, 133 செனிவிரட்ணா
சேக்கிழான் சென்னை 48 சேதுகாவலன் 139, 140 சேதுராமன் 75
சேரநாடு 48 சேவல் 79, 85, 89, 127, 131 சேனன் 6, 157 சேனகபண்டாரநாயக்கா 27, 28
சோழநாடு 156, 159
175
சோழமண்டலம் 156
ஞானப்பிரகாசர் 166
தஞ்சாவூர் 164, 165 தண்டாயுத பாணி 144 தம்பபண்ணி 21 தமிழ்நாடு 9, 21, 22, 43,57, 86,
90, 99, 101, 164, 165 தமிழ்ப்பிராமி 31, 99, 110,
129, 130, 155, 156
தமிழாதேவி 37, 158
தாடிகன் 5
தாமரை 38, 72, 79, 87, 88, 93,
131, 134-136,146
தாமரபர்ணி 21
தாய்லாந்து 5
தாழி 31
திராவிட மொழி 164
திராவிடர் 7, 164
திரிதன் 114
திரிதலம் 79, 111, 113, 114, 115,
25
திருக்கோணேஸ்வரம் 51, 52, 108
திருக்கேதீஸ்வரம் 46, 50, 51, 52
தீவகம் 75
துட்டகாமினி 19, 37, 41, 98,
101, 159
துணுக்காய் 70
தெரனியகலா 33
தெவிநுவரை 46 தென்மராட்சி 75

Page 99
176 தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும், கலையும்
தேரவாதபெளத்தம் 10 தேவநம்பிய தீசன் 98, 159
தொப்பிக்கல் 31
நடுகல் 31, 100-105 நடுகல் வழிபாடு 100-103
105,109
நந்தி 79, 111; 112, 115, 117,
121, 124, 125, 134, 135, 142
நந்திபாதம் 79, 80
நல்லூர் 33, 76, 122, 27
நவரட்னம் 59, 68
stras 94, 157 நாக நாடு 20, 94 நாகபடுவான் 71 நாகதீப 20 நாகர்ச்சுனகெர்ண்டா 57 நாளந்தா 46
நிந்தவூர் 76 நினைவுக்கல் 100
Umre 47 நீலியன் 158
நெடுநிலை நடுகல் 31, 100 நெருகல் 31, 100
கொண்டி 100
பத்மநாதன் 6, 18, 41, 44 45, 47,
48-50, 78, 94, 99, 119, 124, 137, 139, 141, 143,149, 166
பரத 9, 22, 94, 157
பரமன்கிராய் 123
பரணவிதானா 28, 99 பராக்கிரமபாகு 6, 141
பல்லவர் 42, 61,62, 64, 82
பல்லவராயன்கட்டு 63
urrásasir 84 பாண்டியன்குளம் 41 பாண்டிநாடு 41, 90 பாருட் 62, 156
பிராகிருதமொழி 7, 98, 155, 160 பிரேமதிலகே 38
புத்தமங்கலம் 39, 156
பூதன் 7, 10, 16, 157
பூதந்தேவனார் 9, 10, 23
பூதி 10, 110, 145
பூநகரி 8,32,33, 46, 63,71,80,
85, 166
பெரிய புளியங்குளம் 129 பெருங்கற்காலம் 30, 31, 34 பெரேரா 54 Y பென்சமின் றோலன்ட் 54
பொம்பளிப்பு 33, 127
பெளத்த மதம் 158, 160
மகர கோமுகி 35, 36 மகாயான பெளத்தம் 29, 156 மகாதேவன் 22, 162, 167 மகாசேனன் 129, 156 மட்டக்களப்பு 12 மட்டுவில் 107 மட்டுவில் நாடு 149
மண்ணித்தலை 46, 63, 64, 123,
137

மணிமேகலை 39, 40, 156, 161, 164 மதுரை 39, 75, 100, 156, 164 மந்துவில் 101 ແouha% 79, 85 89 95, 129,
130-133, 135, 136-139, 142 மரதன்கருவ 32
(r 7, 113, 157 Ioancaouasió 1 2
மாக்கோதை 114 hargarlið 37, 50, 88, 1 08
மீள் 13, 15, 23, 89,90, 93,
118, 119, 150-152
முத்துக்குமாரசுவாமி 144 முருகமூர்த்தி 144, 177
முருகன் 128, 132, 133, 134, 136,
139,143,144
முருகவழிபாடு 132, 139, 140,143
மென்டின் 13
யாவா 5
யாழ்ப்பாணம் 12,75, 122,
164-166
லசுஷ்மி 73,79, 83, 86, 87, 89,
146-150, 152, 166
வடஇந்தியா 11 Quum 7, 16, 22, 99 வருகள் 158 agai 101 வல்லிபுரம் 85, 102
177
apagalfunr 32, 157 வன்லொஹய்செல் டி லியு 53 alairas 12, 74, 105
விக்கிரமசிங்கா 69 வில்லியம் ஜோன் 54 விஸ்ணு 38, 39, 46, 66 விஜயன் 3, 41
விரக்கல் 100
வேதாசலம் 75
வேல் 33, 79, 87, 127, 131, 132,
138, 139, 142
வேலனதமன 101
வேலுப்பிள்ளை 9, 144, 167
ஐம்புக்கோளம் 108

Page 100


Page 101
I
அபூப்படையி:
l 嘯
TAUTUMAI மது திரும் ஆகிய GAIVIU
இதுவத் தழிழருக்கென : rாட்டு மரபுகள் நிலவி வந்துள்
i
பர்தி பெற்றுக்ர்ெ முதுநி ைவிரிவுரையார் ஆய்வுகளையும் முப்பது நோபெரும் IEE) இலங்கைத் தமிழர் Պելե եւ , : | III (I, II SITÄTEKENIKE
ாகுமரன் புத்தக இல்லம்
 

*
நன்றின்
MARIANTAL
பார் சின்கம்
I I து இரா" * *
I 量* ர் நார் : நீர்
| * T) தொல்லியம் நோக்கி புதிர்பில் தமிழும் தமிழகும் (1)
ங் நான்பர் எ (21) " துர்கம் ਜ
-
|