கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணுரிமை கண்காணிப்பு ஆண்டறிக்கை 1999

Page 1
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு 1998 முதலாவது
காலாண்டு
பெண்ணுரிமைகள் 三 /) -# 5ாணிப்பு 1998 மூன்றாவது
காலாண்டு )பண1
52 1ዎk..
 
 
 
 

பெண்ணுரிமைகள் கண்காணிப்பு 1998 இரண்டாவது
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு 1998 நான்காவது
காலாண்டு

Page 2

பெண்ணுரிமைகள் கண்காணிப்பு
ஆண்டறிக்கை 1999
தயாரிப்பு : குமுதினி சாமுவேல்
(1998 ஜனவரி முதல் டிசெம்பர் வரையான சம்பவங்கள்)
1998 இல் குமுதினி சாமுவேல் வகுத்துக் தொகுத்து வெளியிட்ட பெண்ணுரிமைகள் கண்காணிப்பு காலாண்டு அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட தரவுகளினதும் தகவல்களினதும் தொகுப்பு
வெளியீட்டாளர்கள்
பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு
12 1/1, அஸ்கொட் ஒழுங்கை, கொழும்பு - 05.

Page 3
பதிப்புரிமை : குமுதினி சாமுவேல்
பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு
ISBN 955 - 9078 - O2 - X
வெளியீட்டாளர்கள்:
பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு
12 1/1, அஸ்கொட் ஒழுங்கை, கொழும்பு - 05.
தொலைபேசி : 597738, 595224
தொலை நகலி: 595224
66ö760766F6io : Womedia @ sri. lanka . net
கனணி அமைப்பு: A.N.F Centre
அச்சகம்:
பிறிண்ட் இன், 66/4, ருரீதர்மாராம மாவத்தை இரத்மலானை
அட்டைப்படம் சந்தகுப்த தேனுவர
நிதியுதவி
சூக்திபால்நிலை சமத்துவக் கருத்திட்டம் கனேடிய சர்வதேச மேம்பாட்டு முகவரகம், 12. அமர்சேகர LDIT63560 g5, கீோழும்பு 05.

உள்ளடக்கம்
அறிமுகம்
1.
2, 1
2.2
2.3
2.4
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உரிமைகள் சம்பந்தமான கட்டமைப்பு பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் இடம்பெறுதல் குற்றவியல் நீதி முறைமை
சட்டத்தை வலியுறுத்துதல்
சேவைகளை வழங்குதல்
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக அறிக்கையிடப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் வீட்டு வன்முறைச் சம்பவங்கள். வீட்டு வன்முறைச் செயல்கள் பற்றி 1998 இல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் தண்டனைத் தீர்ப்புகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. கொலைகள்
முறையில்லாப் புணர்ச்சி
முறையில்லாப் புணர்ச்சி வீட்டு வன்முறைகளும் தற்பாதுகாப்பும் பெண்களின் வாழ்க்கை மீதான வீட்டு வன்முறையின் தாக்கம் வீட்டுப் பணிப்பெண்களுக்கெதிரான வன்முறைகள் வீட்டு வன்முறைகள் சம்பந்தப்பட்ட சட்டம் பாலியல் ரீதியான தொந்தரவுகள்
பாலியல் தொந்தரவுகள் சம்பந்தமாக ஏற்புடைய சட்டம்
பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் வயது குறைந்தவர்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் வயது வந்த பெண்கள் மீது புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள் பாலியல் வல்லுறவு சம்பந்தமான சட்டம் ஆயுதப் படையினரால் புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள் கிருசாந்தி குமாரசாமி - பாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்யப்பட்டமை
கருக்கலைத்தல்
05
07
08
13
15
17
18
20
20
21
22
22
23
24
26
27
29
31
35
38
39
39
42
44
49
51
52

Page 4
கருக்கலைப்பு சம்பந்தமான சட்டம்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் ஆட்கடத்தலும்
பெண்களும், வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற பெண்களும் வன்முறைச் சம்பவங்கள்
வைத்திய பரிசோதனை
பலவந்தமான கருத்தடை
சட்டரீதியான வரையறைகள்
பெண்களும் இனப்பிரச்சினையும் கண்டியிலும் கொழும்பிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தேடுதல் நடவடிக்கைகளும் பெண்களும் யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெண்களும் தேர்தலும் யாழ் மேயர் திருமதி சரோஜினி யோகெஸ்வரன் படுகொலை நிலக்கண்ணி வெடிகள்
வடக்கில் காணாமல் போதல் செம்மணி புதைகுழிகள் ஆயுதப் போராட்டமும் சிறார்களும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் எல்லைப்புறக் கிராமங்கள் இருப்பிடம் இல்லாதழிதலும் மீளக் குடியமர்த்தலும் மீளக் குடியமர்த்தல் மற்றும் உணவைப் பெற்றுக்கொள்ளல் பற்றிய பிரச்சினை இடம்பெயர்வதற்கான சுதந்திரம் மரணங்களும் காயங்களும் யுத்த வலயத்தில் பொது மக்கள் மீது புரியப்பட்ட தாக்குதல்களுள்சில சிறைவைக்கப்பட்டுள்ள பெண்கள் யுத்தத்தின் போது காணாமல் போன படைவீரர்களும் யுத்தம் காரணமான விதவைகளும் யுத்தச் செலவினங்கள்.
வெகுசன தொடர்பு ஊடகங்களின் பொறுப்பு
54
56
57
58
63
64
66
67
68
70
7
71
72
73
74
75
76
77
78
8O
80
82
82
83
84
85
88
88

அறிமுகம்
பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பால் 1998ஆம் ஆண்டில் நான்கு பெண்ணுரிமைகள் கண்காணிப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பெண்களுக்கு எதிராக பெண்ணுரிமைகள் மீறப்படுகின்ற சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள. வாறு அவற்றைத் தொகுத்து ஆய்வு செய்வதற்காகவே இவ்வறிக்கையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகளை மேற்பார்வை செய்து அதனூடாகத் தெரிவு செய்யப்பட்ட செய்திகளை இதில் உள்ளடக்கிய தகவல்களுக்கு அடிப்படையானதாக அமைகிறது. இதில் மிகவும் விரிவான பரப்பெல்லையில் வியாபித்திருக்கத்தக்க பெண்ணுரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலமாக வெளிவருகின்ற 30 செய்திப்பத்திரிகைகள் எமது ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலம் கவனஞ் செலுத்தப்பட்ட விடயங்களாவன:
பெண்களுக்கெதிரான வன்முறைகள்
இனப் பெருக்கச் சுகாதாரப் பிரச்சினைகள்
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற பெண்கள்
:
அரசியல் மற்றும் மோதல்கள் சார்ந்த வன்முறைகளும் உரிமை மீறல்களும்
* பெண்களும் தொழிலும்
மேற்படி விடயங்களுடன் சம்பந்தப்பட்ட வகையில் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் பற்றிய செய்தித் தரவுகள் முதலில் திரட்டப்பட்டன. அதன்பின், தகவல்களைச் சுருக்கமாக சமர்ப்பிப்பதற்காக தரவுகள் வகுத்துத் தொகுத்தமைக்கப்பட்டன. வன்முறைச் சம்பவங்கள் சம்பந்தமான அறிக்கைகள் நாள் வரிசைக்கிரமப்படி பட்டியலிடப்பட்டதோடு பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவை மேலதிகமாக இணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. ஏதேனும் சம்பவம் பற்றி விசாரணை நடைபெறுகின்ற வேளையில் இயலுமானவரை அதன் தற்போதைய நிலை பற்றிய தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது வழக்கு விசாரிக்கப்படுகின்றநிதிமன்றம், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொலிஸ்
'சிங்களம்: தினமின, திவயின், லங்காதீப, சிலுமின, ஞாயிறு லங்காதீப, ஞாயிறு திவயின,
ராவய, யுக்திய, றெஜின, பிரிந்த, சிறிகத்த, நவலிய
தமிழ்: தினகரன், வீரகேசரி, தினக்குரல், ஞாயிறு வீரகேசரி, ஞாயிறு தினகரன், ஞாயிறு
தினக்குரல், தினமுரசு, நவமணி, சரிநிகர்
ஆங்கிலம்: டெய்லி நியூஸ், ஐலணர்ட், மிட்விக்மிரர், சணர்டே ஒப்சேவர், சணர்டே டைம்ஸ்,
சண்டே ஐலணர்ட், சன்டேலீடர், வீக்லன்ட் எக்ளப்பிரஸ், லங்காவுமன்,

Page 5
நிலையம் முதலிய விபரங்களுடன் தற்போதைய நிலையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது தாக்குதல், கொலை, வயது வந்த பெண்கள் மீது புரியப்பட்ட பாலியல் தொந்தரவுகள், வயது குறைந்த சிறுமிகளுக்கெதிரான பாலியல் தொந்தரவுகள் என்பன அவையாகும்.
இங்கு கொடுத்திருக்கும் தகவல்கள் பத்திரிகைச் செய்திகளிலிருந்து மாத்திரமே பெறப்பட்டவை என்பதையும் எந்த நிருபர் எங்கிருந்து தகவல்களைக் கொடுத்தார் என்பதையும் மட்டுமே பொறுத்திருக்கின்றதென்பதையும் கவனத்திற் கொள்தல் வேண்டும். இத்தகைய செய்தியிடல் அந்தந்த பத்திரிகை நிருபர்களின் விருப்பத்தின்போதும் சம்பந்தப்பட்ட சம்பவம் நேர்ந்த பகுதிகளில் பத்திரிகைநிருபர்கள் உள்ளனராவென்பதின் அடிப்படையிலுமே தீர்மானிக்கப்படுகின்றன. இதற்கிணங்க இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்செயல்கள் யாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையாக அமையமாட்டாது.
செய்தியிடப்பட்ட சம்பவங்கள் பற்றிய பகுப்ாய்வொன்றும் தரப்பட்டுள்ளது. இப்பகுப்பாய்வின் மூலமாக எமது ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறைகளில் காணப்பட்ட அடிப்படைப் போக்குகள் சுருக்கமாக எடுத்துக்காட்டப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்புடையதாக வெளிவந்த செய்திகளின் அடிப்படைச் சுருக்கமாகும். அதைப்போன்றே பெண்கள் உரிமைகளின் பல்வேறு தோற்றங்களும் முக்கிய சம்பவங்களும் நிலைமைகளும் தொடர்பில் அரசாங்கத்தால் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகள் அல்லது பெண்கள் உரிமைகள் சம்பந்தமாக செயலாற்றிவருகின்ற அமைப்புகள் அல்லது சமூகத்தாபனங்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மூலமாக விசேட தீர்வுகள் காணப்படவேண்டிய தேவைக்காக கவனத்தை ஈர்க்கத்தக்க வகையிலான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால், இது ஓர் உரியமுறையின் வடிவத்தைப் பெறுகின்றது.
பெண்கள் உரிமைகள் கண்காணிப்பின் ஆண்டறிக்கை 1998 ஆம் ஆண்டில் பத்திரிகைகளில் செய்தியிடப்பட்டதன் பிரகாரம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் மாறுபட்ட வடிவங்கள் அல்லது தோற்றங்கள் பற்றிய விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது. இங்கு 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காலாண்டு அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள் மீது கவனஞ் செலுத்தப்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பற்றியும் நிலவுகின்ற சட்டமுறைமை மற்றும் கொள்கைகள் சம்பந்தமாகவும் மீளாய்வொன்றினைச் சமர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்படுகின்ற இடங்களில் மிகவும் விபரமான தகவல்களும் தரப்பட்டுள்ளன.
இங்கு காட்டப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக அக்கறையுள்ள குழுக்களுக்கும் தனிநபர்களுக்கும் இத்தகவல்கள் பயனளிக்குமென நாம் கருதுவதோடு அவை தமது பணிகளின் போது நடைமுறைச் சாத்தியமான வகையில் பயனுக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
6

1. பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பெண்களுக்கு எதிராக மிக அதிகமான எண்ணிக்கையுள்ள வன்முறைக் குற்றச் செயல்கள் நாள்தோறும் பத்திரிகைகளில் செய்தியிடப்பட்டு வருவதுடன் பொலீஸ் நிலையங்களிலும் பதியப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கான மூலகாரணங்களையும் விளைவுகளையும் ஆய்வு செய்வதற்காக கொள்கைகள் மற்றும் சட்டச்சீர்திருத்த உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டுதலோ இத்தகவல்களும் தரவுகளும் முறையாக சேகரித்து வைக்கப்படுதலோ இவை சம்பந்தமான ஆராய்ச்சிகள் அல்லது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதலோ காணக்கூடியதாக ജൂൺങ്ങബ.
பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டதன் விளைவாக தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் ஒருசில வடிவங்களை பொதுமக்கள் காணக்கூடியதாக உள்ளது. இது பாராட்டப்படவேண்டிய அதேவேளையில் ஒருசில பத்திரிகைகள் தமது பத்திரிகைகளுக்குச் செய்திரீதியான பெறுமதியைப் பெற்றுக் கொடுக்கத்தக்க உணர்வுகளை மேலோங்கச் செய்யக்கூடிய வகையில் இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இந்நிலைமையின் காரணமாக பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றச் செயல்களில் வளர்ச்சிப் போக்கு நிலவுகின்றதா இன்றேல் அவை வெறுமனே அடிக்கடி வெளியிடப்படுகின்ற செய்திகளாக மாத்திரமே அமைகின்றனவா என்பது பற்றித் திட்டவட்டமாக ஊகித்துக்கொள்ள முடிவதில்லை. ஆயினும் சிறுமிகள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாக்கப்படுகின்ற பாலியல் வன்முறைச் செயல்களும், வயதுவந்த பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்ற செய்திகளும், வீட்டு வன்முறைகள் மற்றும் கொலைகள்
* 1995 ஆம் ஆண்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களாக பெலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை 51,431 ஆகும். துஷ்பிரயோகம், அவமதித்தல், தாக்குதல், காயமேற்படுத்துதல், குற்றவியல் பலாத்காரங்களும் மற்றும் ஏனைய தவறுகளே இவற்றில் அடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக கொலைகள், கொலை முயற்சி, கடுங்காயத்திற்குள்லாக்குல், கடத்திச்செல்லல் மற்றும் பாலியல் வன்முறைகள் போன்ற 877 பாரதூரமான குற்றச் செல்கள் செய்தியிடப்பட்டுள்ளன. (556-65 - Diportment of Police in changing role of women in Sri Lanka rublisted by the Department of Ceusus and Stalisties. Ministry of Finance and Uornning, 1997) -
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு 1997 மற்றும் 1998 இதழ்களை வாசிக்கவும்.

Page 6
எண்ணிக்கை ரீதியாக அதிகரித்து வருகின்றமையும் தீவிரமாக கவனஞ் செலுத்தப்படவேண்டிய விடயமாக அமைந்துள்ளது. 3. வீட்டு வன்முறைகள், முறையிலாப் புணர்ச்சி மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பற்றிய செய்திகள் வெளிவருகின்ற வேகம் அதிகரித்துள்ளது. இச் சம்பவங்கள் கடந்த காலங்களில் பெரும்பாலும் கட்புலனாகாத வகையில் நிகழ்ந்து கொண்டிருந்தன. செய்தி வெளியிடப்படுவதில் அதிகரிப்பு காணப்படுகின்ற நிலை பெரும்பாலும் உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியாக பெண்கள் செயற்பாடுகளிலான விருத்தியினதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளினதும் தண்டனைச் சட்டக் கோவையின் 1995 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட் திருத்தங்களினதும் காரணமாக கருதப்பட முடியும், தண்டனைச் சட்டக் கோவைக்கான திருத்தங்களின் மூலமாக கூட்டிவிடுதல், பாலியல் தொந்தரவுகள் மற்றும் முறையிலாப் புணர்ச்சி போன்றவை குற்றவியல் தவறுகளாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளன.
உரிமைகள் சம்பந்தமான கட்டமைப்பு
பொதுவாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் விசேடமாக பாலியல் தொந்தரவுகள் மற்றும் வீட்டு வன்முறைச் செயல்களும் பெண்களின் உரிமை மீறப்படலாக தற்போது கருதப்படுகின்றது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் பிரயோகங்களின் கீழ் இவ்வுரிமைகளால் பாதுகாக்கும் கடப்பாட்டினை அரசுகள் கொண்டிருக்கின்றன. சர்வதேச மனித உரிமைகள் பற்றிய பல உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இதற்கிணங்க அவற்றின் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களைப் பாதுகாக்க இலங்கை கட்டுப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பற்றி அனைத்துலக சாசனத்தினதும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை ஒழித்துக் கட்டுவதற்கான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திலும் விதிக்கப்பட்டுள்ள நியமங்களை மதித்துச் செயலாற்ற இலங்கையும் கட்டுப்பட்டுள்ளது. இங்கு பிறிதொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகடனம் 1993 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டதாக அமைவதோடு இது பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட முதலாவது இயந்திர அமைப்பாகவும் விளங்குகின்றது. இது விசேடமாக குடும்பத்திலும்

சமூகத்திலும் அரசாங்கத்தாலும் இயங்கிவருகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், இவ்வறிக்கை மூலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள வன்முறைச் செயல்கள் அனைத்தும் - அதாவது பாலியல் தொந்தரவுகள், ஆட்கொலை, தாக்குதல், வீட்டு வன்முறைச் செயல்கள், பாலியல் ரீதியான சித்திரவதைகள்
இப் பிரகடனத்தில் விடயப்பரப்பில் உள்ளடங்குகின்றன. இப்பிரகடனம் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறையானது கீழே குறிப்பிடப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கத்தக்கதாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.
"பொதுவாழ்க்கையிலோ தனிப்பட்ட வாழ்க்கையிலோ பாலியலை அடிப்படையாகக் கொண்ட உடல்ரீதியான, பாலியல் ரீதியான, அல்லது உளரீதியான பாதிப்பினை ஏற்படுத்துகின்ற, அல்லது ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல், அல்லது அத்தகைய செயலொன்றின் மூலமாக பெண்ணுக்கு துன்பம் விளைவிக்கின்ற, அல்லது பலாத்காரம் புரியப்படுகின்ற, அல்லது தன்விருப்பப்படி பெண்ணின் சுதந்திரத்தை இழக்கச்செய்கின்ற எந்தவொரு வன்முறைச் செயலும்"
பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாரபட்சம் காட்டப்படுதலையும் ஒழித்துக் கட்டுவதற்கான உடன்படிக்கை 1979இல் சர்வதேச சமுகத்தவரால் ஏற்றங்கீகரிக்கப்பட்டதோடு அது பெண்ணுரிமை தொடர்பில் எடுத்துவைக்கப்பட்ட முன்னேற்றகரமான ஒரு முயற்சியாகவும் அமைந்தது. ஆயினும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் சம்பந்தமான பிரச்சினை இவ்வுடன்படிக்கையில் விசேடமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கவில்லை. 1992 இல் பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாரபட்சம் காட்டப்படுதலை ஒழித்துக்கட்டுவதற்கான உடன்படிக்கையின் கீழுள்ள குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 19வது விதப்புரை மூலமாக பெண்களுக்கெதிரான வன்முறை என்பது பெண்களுக்கு பாரபட்சம் காட்டுகின்ற பிரச்சினையின் மற்றுமொரு வடிவமே என இனங்காணப்பட்டிருந்தது. இதற்கிணங்க இப்பிரச்சினை பெண்களுக்கான உடன்படிக்கையின் மூலமாக வெளிக்கொணரப்படுகின்ற விடயத்துரையின் கீழ் அடங்குகின்றதெனக் காட்டப்பட்டிருந்தது.
பெணிகளுக் கெதிரான வன்முறைச் செயல்களை பூணர்டோடு ஒழித்துக்கட்டுதல் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 1ஆம் வாசகம்.

Page 7
பென்களுக்கெதிரான வன்முறைச் செயலைப் புரிகின்ற நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் தண்டனை வழங்கவும், அத்தகைய வன்முறைச் செயல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் இவ்வுடன்படிக்கையினூடாக காட்டப்பட்டுள்ள அரசுகளால் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வரசுகளால் இவ்விடயத் தோடு ஏற்புடைய வகையில் குற்றச் செயல்களுக்கான நீதிவழங்குகின்ற முறைமையை கூறுணர்வு மிக்கதாகவும் துன்பங்களுக்கு ஆளான மக்களுக்கு நிவாரணச் சேவைகளை வழங்கி, இத்தகைய வன்முறைச் செயல்கள் சம்பவங்கள் சம்பந்தமான தகவல்கள் திரட்டப்பட வேண்டுமெனவும் காட்டப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளில் பெண்களின் மனித உரிமைகள் என்பதை வெற்றிகரமான வகையில் சர்வதேச சட்ட வரையறைக்குள்ளேயும் பிரயோகத்திலும் உள்ளடக்குவதற்கான ஆற்றலைச் சர்வதேச மகளிர் இயக்கம் பெற்றுக்கொண்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் சம்பந்தமாக பெண்ணிலைவாத இலக்கத்தால் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தின் விளைவாக இப்பிரச்சினையானது மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சம்மேளனத்தின்போது சர்வதேச சமூகத்தினரது கவனத்திற்குக் Gas Toir(66).JLULg). Global Compain for Womens Human Rights எனப்படுகின்ற அமைப்பினால் மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சம்மேளனத்தின்போது சமர்ப்பிக்கப்பட்ட "பெண்களின் தேவையாது? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மகாநாட்டின் இலக்கு" னும் தலைப்பின்கீழ் முன்வைக்கப்பட்ட பிரகடனத்தின்மூலம் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட அனைத்துவிதமான மீறல்களிலிருந்தும் சுதந்திரமானதாக பெண்கள் உரிமையை ஏற்றுக்கொள்ளுமாறும், அவ்வுரிமைகளுக்கு உலகம் முழுவதும் உத்திரவாதமளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுமே வேண்டுகோள் விடுக் கப்பட்டது. பாலியல் தொந்தரவு, தாக்குதல், சிசுக்களினதும் பெண்களினதும் படுகொலை, பாலியல் உல்லாசப் பயணத் தொழில், சீதனக் கொடுமை, பாலியல் உறுப்புகளை உருக்குலைத்தல்,
5. பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் பற்றி பரிசீலனை செய்கின்ற ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியான திருமதி ராதிகா குமாரசுவாமி அவர்களால் 1996 பெப்ரவரி 5 ஆற் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய ஆணைக்குழுவில் 52வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
1 O

பாலியல் அடிமைத்தனம், கட்டாய பல்லினப் பாலியல் தன்மை, பலவந்தமான கர்ப்பமுறச்செய்தல், சட்ட நிலைமைகளதும் கல்வி நிலைமைகளினதும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுதல் போன்ற நிலைமைகளினதும் பெண்கள் மீது பாரபட்சம் காட்டப்படுதல் மற்றும் ஏனைய மீறல்கள் என்ற வரைவிலக்கணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான மூலக்காரணங்களை இனங்கண்டு இவ்வமைப்பினது பால்நிலைவாதம் உலகில் அரைவாசியினரான பெண்களைப் பொறுத்தமட்டில் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றியதொரு விடயமே என அறிவித்துள்ளது. இப்பால்நிலைவாதம் காரணமாக பிறப்பதற்கு முன்னராகவே மரணம் விளைவிக்கப்படுகின்றது.(இனங்காணலுக்கேற்ப பெண்கருவாயின் அழித்தல்), பிறந்த பின்னர் மரணம் விளைவித்தல் (பெண் சிசுக்கொலை) பிள்ளைப் பருவத்தில் மரணம் விளைவிக்கப்படுகின்றது. (உணவு வழங்கள், மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்றவை சம்பந்தமாக கவனியாமல் விடுதல்) வயது வந்த பின் மரணம் விளைவிக்கப்படுகின்றது (பாலியல் உறுப்புகளை உருக்குலையச் செய்தல், சட்ட விரோதமாக கருக்கலைப்பு, தாக்குதல், தொந்தரவு செய்தல் மற்றும் சீதனம் தொடர்பான மரணம்) மற்றும் வயது முதிர்ந்த பின் மரணம் விளைவிக்கப்படுகின்றது. (கைவிடுதல், கவனியாமல் விடுதல் மற்றும் வறுமை) ?
மகாநாட்டின்போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கியமான கூற்றின் மூலமாக பெண்ணுரிமைகளை மனித உரிமைகளாக மதிப்பதோடு பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் தொடர்பில் செயலாற்றுவதற்கேதுவான உடன்படிக்கைகளைத் தயாரிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பாக 1993 டிசெம்பர் மாதத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்களை ஒழித்துக்கட்டுவதற்கான பிரகடனம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதோடு 1994 மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் பெண்களுக்கெதிராக புரியப்படுகின்ற வன்முறைச் செயல்களை விசாரணைசெய்வதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட நிருபர் (பெண்) நியமிக்கப்பட்டார். 1995இல் நான்காவது மகளிர் சம்மேளனம் பீஜிங் நகரத்தில் நடத்தப்பட்டதோடு, அதன் பிரகடனம் மற்றும் செயற்திட்டம் மூலமாகவும்
"A Global Statdgy, women's Voice in Human Rights, the new Consenss United Nations High Commissioner for refugees, Regency Press, London 1994.
11

Page 8
பெண்களுக்கு எதிராக புரியப்படுகின்ற வன்முறைச் செயல்கள் பற்றி கவனஞ் செலுத்தப்பட்டது.
1993 மார்ச் மாதத்தில் மகளிர் சாசனம் உருவாக்கப்பட்டதோடு பெண்கள் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது. அதுமாத்திரமின்றி மேலும் முன்னேறிச் சென்று பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பெண்களுக்கு உள்ள உரிமை சம்பந்தமான விசேட ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரகடனத்தில் இப்பிரிவு சம்பந்தமான முகவுரையும் ஏற்பாடுகளும் கீழே தரப்பட்டுள்ளது. '
"சமூகத்திலும் கடமை நிலையத்திலும் குடும்பத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக புரியப்படுகின்ற பாதகச் செயல்கள் விசேடமாக, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, முறையில்லாப்புணர்ச்சி, பாலியல் ரீதியான தாக்குதல், உடல் மற்றும் உளரீதியான துஷ்ப்பிரயோகம், சித்திரவதைகள் மற்றும் கொடுரமானதும் மனிதாபிமானமற்றதுமான அவமதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற செயல்களைத் தடுப்பதற்கான சகலவிதமான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கீழ்காணும் விடயங்களும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
தாக்குதலுக்கு இலக்காகின்ற பெண்களின் உரிமைகள் பற்றித் தெளிவாகக் காட்டுகின்ற வளமான சட்டங்கள் மட்டுமன்றி, அவற்றைத் தடுப்பதற்கும் தண்டனை வழங்குவதற்குமான வழிமுறைகள் தொடர்பிலும், சட்டபூர்வமான சீர்திருத்தங்களுக்கு ஒத்தாசை புரிதல்,
பெண்களுக்கெதிராக புரியப்படுகின்ற பாதகமான குற்றச்செயல்கள் சம்பந்தமாக அதிகாரம் வாய்ந்தவர்களால் செயலாற்றக் கூடிய ஆற்றலுக்கு வலுவூட்டக்கூடியவாறு சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை விருத்தி செய்தலும் அமுலாக்குகின்ற அதிகாரிகளுக்கு அறிவூட்டுதலும்,
யுத்த மோதல்கள் மற்றும பொதுமக்கள் கிளர்ச்சி உட்பட தாக்குதலுக்கு
7. மகளிர் சாசனம் (இலங்கை) 16 ஆம் வாசகம்
12

இலக்கான பெண்களுக்கு உதவிகளையும் மதியுரைச் சேவைகளையும் வழங்குகின்ற, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சமூகத்தாயனங்களுக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவற்றிற்கும் ஒத்தாசை புரிதல்"
மகளிர் சாசனத்தில் இனங்காணப்பட்ட ஒருசில சிக்கல் நிறைந்த துறைகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்காக அரசாங்கத்தில் 1996 இல் செயற்றிட்டமொன்று வகுக்கப்பட்டதோடு இது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்ட குறுங்கால மற்றும் நீண்ட கால உபாயமுறைகளுக்கான தெளிவான விதப்புரைகளையும் உள்ளடக்கியுள்ளது.
எவ்வாறாயினும் ராதிகா குமாரசுவாமி அவர்களால் அவதானிக்கப்பட்டதன் பிரகாரம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் எனும் விடயம் சம்பந்தமாக செயலாற்றுவதற்காக 1990 ஆம் ஆண்டுகளில் சட்டமாக்கல், ஆலோசனை வழங்கள் வேறு அமைப்புகளைத் தாபித்தல் முதலியவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. நிலவுகின்ற கட்டமைப்பை மாற்றுவதற்கான செயற்பாட்டினைக் காணக்கூடியதாக இருந்தபோதிலும் இச்சட்டங்களையும் அறிவுறுத்தல் கோவைகளையும் அமுலாக்குவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறைகள் சம்பந்தமான பிரச்சினையைக் கருத்தில் கொண்டு காணப்படுகின்ற சர்வதேச உடன்படிக்கைகளைப் படிப்படியாக இலங்கையின் சட்டக்கட்டமைப்பில் அறிமுகஞ்செய்தல் நடைபெற்று வருகின்றதோடு அவற்றை அமுலாக்குகின்ற நிறுவனமுறைமைகள் இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. *
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் இடம்பெறுதல்
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள், அதாவது அமைப்புரீதியான வன்முறைச் செயல்களன்றி நேரடியான வன்முறைச் செயல்கள் மனக்கவலை தரக்கூடியவகையில் இலங்கையில் பரவலாக நடைபெறுகின்றது. 1998 ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான பன்னிரண்டு மாதங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பெண்ணுரிமைகள் கண்காணிப்பு
''. Violence Against women in Sri Lanka in Solidarity, the Sarrc women's journal (fifth issue) on
ciolence Against women, Colombo 1998.
பெண்ணுரிமைகள் கணர்காணிப்பு 1998 இல் வெளியிடப்பட்ட நான்கு இதழ்களையும் பார்க்க.
13

Page 9
மூலமாக வெளிக்கொணரப்பட்ட வகையில் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் 1106 இவ்வாண்டில் செய்தியிடப்பட்டிருந்தன. 9 இச்சம்பவங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளின் எண்ணிக்கையை மாத்திரமே உள்ளடக்கியுள்ளன.
பெண்களுக்கெதிரான புரியப்படுகின்ற வன்முறைச் செயல்கள் எண்ணிக்கையில் கூடியனவாக செய்தியிடப்பட்டிருந்த போதிலும் பொலிஸாரினதும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களினதும் கருத்தின்படி இத்தகைய செய்திகள் குறைவாகவே வெளியிடப்படுகின்றன.
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக அறிக்கையிடப்பட் பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்களின் வகைப்படுத்தல் பின்வருமாறு அமையும். கொலை (வீடுகளிலும் பொதுவாகவும்)
கொலை முயற்றி
தாக்குதல் (வீடுகளிலும் பொதுவாகவும்) பாலியல் வல்லுறவு (வயது வந்தோரும் வயது குறைந்தோரும்) பாலியல் வல்லுறவின் பின் கொலை
பாலியல் வல்லுறவு முயற்சி ஆயதப்படையினரால் புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொந்தரவுகள்
பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள்
வன்முறைச் செயலின் தன்மை வீட்டில் பொதுவாக மொத்தம் பாலியல் வல்லுறவு-குறைந்த வயதுடையோர் 45 184 229 கொலை - பொது 171 171 பாலியல் வல்லுறவு - வயதுவந்த பெண்கள் 11 134 145 கொலை - வீட்டில் 129 29
தாக்குதல் - வீட்டில்லாத --- 06 O6
தாக்குதல் வீட்டில் 85 -- 85 பாலியல் வல்லுறவு முயற்சி 05 64 69 பாலியல் தொந்தரவுகள் 04 50 54 பாலியல் பலாத்காரம் O3 26 29 பாலியல் வல்லுறவின் பின் கொலை 03 25 28 கொலை முயற்சி O5 09 14
மொத்தம் 291 805 1096
14

குற்றவியல் நீதிமுறைமை
பெண்களுக்கெதிரான வன்செயல்களைத் தடுத்தல் சம்பந்தமாக மிகமுக்கியமான பணிகளை நாட்டில் நிலவுகின்ற குற்றவியல் நீதி முறைமையே ஈடேற்றி வருகின்றது. வன்முறைச் செயல் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் முதலாவதாகத் தனது முறைப்பாட்டினை மேற்கொள்ளச் செல்லும் அரச நிறுவனமாக பொலீஸ் நிலையமே அமைகின்றது. அவரது முறைப்பாட்டினைச் செவிமடுத்தல், அறிக்கையாகப் பதிதல், விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் நீதிமன்றத்தின் முன்நிறுத்துதல் சம்பந்தமான பொறுப்பு பொலீஸாருக்கே உரியது. சட்டத்தையும் ஒழுக்கையும் நிலைநாட்டுதல் சம்பந்தமான அடிப்படைப் பொறுப்பும் பொலிஸாருக்கு உரியதே. சட்டத்தை அமுலாக்குவதிலும், சட்டம் மீறப்படுதலைத் தடுப்பதிலும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும் இவர்கள் தலையீடு செய்ய நேரிடுகிறது.
பொலீஸ் நிலையமொன்றில் மகளிருக்கும் பிள்ளைகளுக்குமான பணியகம் இலங்கையில் முதன் முதலாக பொரல்லை பொலீஸ் நிலையங்களில் இக் கூறுகள் தாபிக்கப்பட்டுள்ளமை அறிக்கை செய்யப்பட்டிருந்தது. 1997இல் இவ்வாறான பொலீஸ் மகளிர் கூறுகளில் 263 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது. இவற்றுள் 60% மேற்படி கூறுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையீட்டின் மூலமாக தீர்க்கப்பட்டிருந்தது. 19 வன்முறைச் செயல்கள் தொடர்பாக பெண்கள் கொண்டுவருகின்ற முறைப்பாடுகள் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முன்வைக்குமாறு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தல் அறிமுகஞ் செய்யப்பட்டள்ள ஒரு வழிமுறையாக இத்தகைய கூறுகள் தாபிக்கப்பட்டுள்ளமையைக் கூறலாம்.
எவ்வாறாயினும் இதுவரை ஒருசில பொலீஸ் நிலையங்களில் மாத்திரமே மகளிர் கூறுகள் நிறுவப்பட்டள்ளன. தற்போது உள்ள கூறுகள் 24 மணி நேரமும் இயங்குவது கிடையாது. பணியாற்றுவதற்குப் போதுமான உத்தியோ
10. பெண்ணுரிமைகள் கண்காணிப்பு - 1998 முதலாவது காலாணர்டு
15

Page 10
கத்தர்கள் இக்கூறுகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிராததோடு பொலீஸ் நிலையத்தின் முழுமையான செயற்பாடுகளுக்கிடையில் இக்கூறு பெயரளவில் மாத்திரமே இயங்கும் நிலை காணப்படுகின்றது.
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் குறிப்பாக வீடுகளில் இடம்பெறுகின்ற வன்முறைச் செயல்கள் இரவு நேரங்களிலேயே நடைபெறுகின்றன. இக் கூறுகள் தாபிக்கப்பட்டமைக்கான நோக்கம் பெண்களுக்கெதிராக வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்ற வேளையில் அது சம்பந்தமான முறைப்பாடுகளைச் செய்யும்படி ஊக்குவிப்பதற்காகவெனில் அத்தகைய கூறுகள் இரவு வேலைகளிலும் திறந்து வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
முறைப்பாடுகளில் பெரும்பாலானவை விசேட மகளிர் கூறுகள் நிறுவப்பட்டிராத பொலீஸ் நிலையங்களிலேயே செய்ப்பட்டுள்ளன. அதைப் போலவே வெளிப்பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பொலீஸ் நிலையங்களில் இத்தகைய முறைப்பாடுகளால் பதிவதற்கான பெண் பொலீஸ் உத்தியோகத்தர்களும் இல்லை. இதன் காரணமாக வாக்குமூலத்தை ஆண் உத்தியோகத்தர்களே பதியவேண்டியுள்ளது.
மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முறைப்பாட்டினைச் செய்வதற்காக பெண்களைப் பொலீஸ் நிலையத்திற்கு வரவழைத்துக் கொள்ளத் தூண்டக்கூடிய பெண்கள் மீது நட்புறவு எண்ணம்கொண்ட சூழ்நிலை பொலீஸ் நிலையங்களில் நிலவுவதில்லையென இது சம்பந்தமாகக் கருத்துரைக்கின்ற பெண்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. பொலீஸ் உத்தியோகத்தரின் ஆதிக்கவாதத் தன்மையும் முறைப்பாடுசெய்பவரது தனிப்பட்ட அந்தஸ்து சம்பந்தமாக குறைந்த கவனஞ் செலுத்தப்படுவதுமே பெண்கள் பொலீஸ் நிலையங்களுக்குச் செல்வதைத் தடுக்கக்கூடிய காரணியாக நிலவுகின்றது.
பொலிஸ் நிலையங்களில் பெண்களுக்கான கூறுகள் தாபிக்கப்படுவது மிகச் சிறந்த நடவடிக்கையாகக் கருதப்படுகின்ற அதேவேளையில் 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய சேவையைப் பேணிவருவதற்காக நிலையங்களைத் தாபிப்பதற்கு பெருமளவு வளங்கள் ஒதுக்கப்படவேண்டுமென மகளிர் அமைப்புகள் வலியுறுத்திக் கூறியுள்ளன. இக் கூறுகளுக்குக் கிடைக்கின்ற முறைப்பாடுகளை ஆண் - பெண் பால்நிலை சம்பந்தமான கூறுணர்வுமிக்க வகையில் நிர்வகிக்கும் பொருட்டு பொலிஸில் உள்ள ஆண் - பெண் இருபாலாருக்கும் (அவர்கள் பெண் கூறுகளுடன் இணைக்கப்பட்டள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல்)
6

முறையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது. அதேவேளையில் பெண்களுக்கே தனித்துவமான ஒருசில நிலைமைகள் சம்பந்தமாக செயலாற்றுவுதற்காக ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் குறைந்தபட்சம் ஒரு பெண் பொலீஸ் உத்தியோத்தராவது கடமையிலிடுபடுத்தப்படவேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயமாகும். அத்துடன் பொலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கேற்ற வகையில் இன மற்றும் மொழி ரீதியான சமநிலை பேணத்தக்கவகையில் பொலீஸ் உத்தியோகத்தர்களைக் கடமையிலிருத்த வேண்டியுள்ளது.
பொலீஸ் உத்தியோகத்தர்களுக்குப் புறம்பாக, பாலியல் வல்லுறவு, முறையில்லாப் புணர்ச்சி, வீட்டு வன்முறைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் போன்ற பிரச்சினைகள் சம்பந்தமாக செயலாற்றி வருகின்ற சட்ட, நீதிமன்ற மற்றும் மருத்துவ அதிகாரிகளும் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்களும் ஆண் - பெண் பால்நிலை சம்பந்தமாக கூறுணர்வுடன் செயற்படவேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறான கூறுணர்வு குறைவடைதலோ பெண்கள் மீது பக்கச்சார்பு இன்மை போன்ற காரணிகளோ பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் செய்தியிடப்படாதிருக்கவும் தவறாளிகளுக்கெதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதிருக்கவும் காரணமாக எடுத்துக் காட்டப் படமுடியும். சம்பவங்கள் செய்தியிடப்படாமைக்கான மற்றுமொரு காரணம். அத்தகைய முறைப்பாடுகள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும்வரைஅல்லது வழக்கு முடிவுக்கு வரும்வரை பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடமொன்றைத் தேடிக்கொள்ள இயலாதவர்கள் மீண்டும் தான் வன்முறைக்கு இலக்கான இடத்திற்கே திரும்பிவரவேண்டிய நிலையேற்படுகின்றது. எந்தவிதமான பாதுகாப்பும் அற்ற நிலையில் அவள் தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாகின்ற நிலையே உருவாகும்.
சட்டத்தை வலியுறுத்தல்
சட்டத்தை வலியுறுத்தி அமுலாக்குவதம் பெண்ணுரிமைகளைப் பாதுகாப்பதும் வெறுமனே சட்டங்களை உருவாக்குவதனுடாக மாத்திரமே ஈடேறப்போவதில்லை. இதில் தாக்கத்தை ஏற்படுத்துகிற பல காரணிகள் நிலவுகின்றன. அதாவது, கொள்கை வகுப்பர்களினதும், சட்டமன்ற உறுப்பினர்களினதும், சட்டத்தை வலியுறுத்தி அமுலாக்குகின்ற உறுப்பினர்க
17

Page 11
எளினதும், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் கல்விமான்களினதும் வெகுசன தொடர்பு ஊடகங்கள்மற்றும் பொது மக்களினதும் (விசேடமாகப் பெண்களின்) தீவிரமான ஒத்துழைப்பின் அடிப்படையிலும் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தை வலியுறுத்தி அமுலாக்குதல் ஆகியவை தங்கியுள்ளன. இத்தகைய மூலகாரணிகள் அனைத்தும் வெற்றிகரமாகவும், பயனுதிமிக்க வகையிலும் இயங்கவேண்டுமானின் இதற்குப் போதுமான அளவு வளங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதைப்போலவே குற்றவியல் நீதிமுறைமை கூறுணர்வு மிக்கதாக மாற்றப்படவேண்டியதும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களும் தரவுகளும் திரட்டப்படவேண்டியதும் அரசாங்கள் ஈட்டற்றப்பட்ட வேண்டிய கருமங்களாகும்.
சட்டத்தை வலியுறுத்தி அமுலாக்கும் அதிகாாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களம் அத்துடன் நீதிவழங்கப்படுகின்ற முறைமைக்கும் இடையில் முறையான தொடர்பு பேணப்படவேண்டும். முறைப்பாடுகளைச் சரியான முறையில் பதிந்து கொள்ளவும், முறையான விசாரணைகளை மேற்கொள்ளவும், சட்டத்திற்கிணங்க குற்றச்சாட்டுக்களை கோவைப்படுத்தும், பொருத்தமான நபர்கள் மூலமாக வழக்கை முன்வைக்கவும், பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு சாதகமான சூழலை நீதிமன்றங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் உறுதிப்படுத்தவும், துரிதமாக நீதிவழங்கப்படவும், பால்நிலைப் பாரபட்சம் காட்டப்படாத நீதிமன்றம் நிலவுவதற்கும் ஏற்புடையவாறு முறையான தொடர்புகள் பேணப்படவேண்டும். உரியவகையிலான பயிற்றுவித்தலும் உதவிச் சேவைகளும் தனிநபர் குழுக்களின் தீவிரச் செயற்பாடுகளும் காணப்பட்டால் மாத்திரமே இவையனைத்தையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.
சேவைகளை வழங்குதல்
வன்முறைச் சூழலிலிருந்து விடுதலைபெற்று வாழவேண்டிய தேவை நிலவுகின்ற பெண்களுக்கு அத்தகைய பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் இலங்கையில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. ஒரு சில சமூகத்தாபனங்களும், மதநிறுவனங்களும் இக் குறைபாபட்டினை நிவர்த்தி செய்ய ஒரளவுக்கேனும் முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் அத்தகைய பாதுகாப்பு நிலையங்களை
18

வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும். அத்துடன் இத்தகைய வன்முறைச் சூழலில் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையேற். படுகின்ற பட்சத்தில் ஆலோசனைச் சேவைகள், மருந்துச் சேவைகள் உட்பட ஏற்புடைய ஏனைய சேவைகளை வழங்குவதற்கதான முயற்சியையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
சட்டத்தை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளவும் சட்டத்தை அமுலாக்குவதற்காகவும், பொலிஸ், சுகாதார சேவைகள், நீதிமன்ற முறைமை, மகளிர் அமைப்புகள் மற்றும் சமூகத்தாபனங்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். இதனூடாக பெண்ணுரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுதல் சம்பந்தமான போராட்டத்தின்போது சட்டமானது மிக முக்கியமான ஆயுதமாக மாறும்.
சட்டரீதியலான சீர்திருத்தங்களின் அவசியம்பற்றிக் கவனஞ்செலுத்துகையில் இத்தகைய சீர்திருத்தங்களில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்போது ஆண் பெண் பால்நிலை சம்பந்தமான விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டியதன் தேவை மேலோங்கியுள்ளது. இதன்மூலமாக கல்வி, மற்றும், சுகாதாரம் கொள்கைகளில் பெண்களின் திட்டவட்டமான தேவைகளையும் உள்ளடக்கக் கூடியதாக அமையும். பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் சம்பந்தமாகச் செலாற்றும்போது அதனைச் சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகயாகவும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் கருதிச் செயலாற்றுவதற்காக கல்வியையும், சுகாதார சேவைகளையும் பயன்படுத்த வேண்டும்.
19

Page 12
2. பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்களின் வகையில் பெண்ணுரிமைகளிர் கண்காணிப்பு மூலமாக மேற்கொள்ளப்பட்ட அறிக்கையிடல்.
21 வீட்டு வண்முறைச் சம்பவங்கள்
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்களை ஆராய்ந்து வருகின்ற ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியால் மாதிரி யாப்புக் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டு வீட்டுவன்முறைகள் கீழே காட்டப்பட்டவாறு வரைவிலக் கைப்படுத்தப்பட்டுள்ளது. '
"ஆண் - பெண் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட உடல், உள மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பெண்களுக்கெதிராக குடும்பங் அங்கத்தவர்களால் தாக்குதல் வடிவத்திலோ, அல்லது கடத்திச் செல்லலாகவோ அல்லது அச்சுறுலாகவோ அல்லது பலாத்காரம் புரிவதாகவோ அல்லது இழிவுபடுத்தக் கூடிய சொற்பிரயோகமாகவோ அல்லது சட்டவிரோதமான முறைதகாத உட்பிரவேசித்தலாகவோ அல்லது உடமைகளுக்குச் சேதம் விளைவிப்பதாகவோ அல்லது விவாகரீதியாலான பாலியல் வல்லுறவு அல்லது மணமகளின் விலைநிர்ணயம் சம்பந்தமான வன்முறை மூலமாவோ அல்லது பெண்ணின் பாலியல் உறுப்புகளை உருக்குலைப்பதன் மூலமாகவோ அல்லது விபாசாரத் தொழில் ஈடுபடுத்துவதன் மூலமான சுரண்டலாகவோ அல்லது வீட்டுப்பணிப் பெண்களுக்கெதிராக வன்முறைப் பிரயோகம் மூலமாகவோ மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளோ அல்லது அத்தகைய செயலைப்புரிய முயற்சிசெய்வதோ வீட்டுவன்முறை என்பதில் உள்ளடக்கப்படுகின்றது"
இவ்வறிக்கையின் நோக்கங்களுக்காக பத்திரிகைகளில் செய்தியிடப்பட்டதன் பிரகாரம் பெண்ணுரிமைகளின் கண்காணிப்பு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட வீட்டுவன்முறைகள் என்பது குடும்பத்தில் பெண்களுக்கெதிராக குடும்ப அங்கத்தவரால் உடல், அல்லது உளரீதியாக துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுதல் ஆகும். இச்செயல்களில் சிறிய தாக்குதல் முதல்
EACN.4/996/53/Add.2
2O

கடுமையாக துன்புறுத்தல், தாக்குதல், மற்றும் ஆட்கொலை வரையான சம்பவங்கள் உள்ளடக்குகின்றன. அதேவேளையில் கடத்திச்செல்லல், அச்சுறுத்தல், மிரட்டல்கள், வலுக்கட்டாயபட்படுத்தல், இழிச்சொல்மூலம் கேவலப்படுத்தல், வலுக்கட்டாயமான உட்பிரவேசம், தீவைத்தல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் அத்துடன் சீதனம் தொடர்பான வன்முறைசார்ந்த நடத்தை முதலியன செயல்கள் சம்பந்தமான ஒரு சில மூல அம்சங்களும் ஒரு சில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இச்செயல்கள் நாம் மிகவும் சாதாரணமாக காணக்கூடிய செயல்கன்று. பிரதானமான வன்முறைச் செயல்களாக கைத்தாக்குதல், தாக்குதல், கொலை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களே அறிக்கையிடப்பட்டுள்ளன. பாலியல் உறுப்புகளை வெட்டிக்காயப்படுத்தல் போன்ற சம்பவங்கள் பற்றிய எவ்விதமான பத்திரிகைச் செய்தியும் 1998ஆம் அண்டில் வெளியிடப்பட்டு பெண்ணுரிமைகள் கண்காணிப்பு அறிக்கையில் காணப்படவில்லை. ஆயினும், இச்செயலானது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில பிரிவினரிடையே பயன்பாட்டில் உள்ளதென்பது பிரசித்திபெற்ற ஒரு விடயமாகும்.
வீட்கு வன்முறைச் செயல்கள் பற்றி 1998இல் பத்திரிகைகளில் செய்தியிடப்பட்ட சம்பவங்கள்.
1998இல் வெளியிடப்பட்ட் பெண்ணுரிமைகள் கண்காணிப்பு அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை சுருக்கமாக ஆய்வுசெய்தால் செய்தி வெளியிடப்பட்டுள்ள மொத்த வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கு இருபத்தாறு சதவீதமானவை பெண்களுக்கெதிராக புரியப்பட்ட வன்முறைக் குற்றங்களேயாகும். எண்ணிக்கை ரீதியாக இது 291 சம்பவங்களாகும். இச்சம்பவங்களாவன தாக்குதல், கைகத்தாக்குதல், கொலை செய்தல், பாலியல் வல்லுவுறவு மற்றும் முறையில்லாதப் புணர்ச்சி, தாக்குதல் முயற்சி, பாலியல் வல்லுறவின் பின் கொலை என்பவனவாகும்.
O வீட்டில் 129 கொலைகள் புரியப்பட்டுள்ளதாக செய்தியிடப்பட்டுள்ளதோடு இவற்றுள் 83 சம்பவங்களுக்கு அதாவது நூற்றுக்கு 65 வீதத்திற்கு கணவன்மார்களே குற்றஞ்சாட்பட்டுள்ளனர்.
O தனிப்பட்ட இடங்களில் 85 தாக்குதல் சம்பவங்கள் நேர்ந்துள்ளதாக செய்தியிடப்பட்டுள்ளதோடு, இவற்றுள் 46 சம்பவங்களுக்கு அதாவது 54 சதவீதமானவை தொடர்பில் கணவன்மார்களே குற்றஞ்சாட்டப் பட்டுள்ளனணர்.
21

Page 13
O குடும்ப அங்கத்தவர்களால் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் புரியப்பட்ட
பாலியல் வல்லுறவுச்சம்பவங்கள் 57 ஆக அமைந்துள்ளன.
பெண்களுக்கெதிரான 291 வன்முறைக் குற்றச்சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் வெளியிடப்பட்டிருந்து போதிலும், நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட 11 சம்பவங்கள் மாத்திரமே செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருந்தன இத்தகை தண்டனைகள் 7 கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும், 2தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் 2 முறையில்லாப்புணர்ச்சி தொடர்பிலுமே வழங்கப்பட்டிருந்தன.
தண்டனைத் தீர்ப்புகள் பின்வருமாறு வழங்கப்பட்டிருந்தன.
6lᏧ5/ᎢᏍᎧ6uᏧᏏ6ij
* 1993 ஏப்ரல் 17ஆம் திகதியன்று 30 வயதுடைய தன் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்தமைக்காக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட கணவனுக்கு 4 ஆண்டுகால கடுழியச் சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டனது. (லங்காதிப - 98.01.12)
* பொல்லால் தாக்கி 36 வயதுடைய மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக கொழும்பு உயர் நீதிமன்றம் கணவனுக்கு மரண தண்டனை விதித்தது. (லங்காதிப - 98.05.14)
* 30 வயதுடைய தன் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட கணவராக பிரித்தானியருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. (ஜலன்ட் - 98.04.05)
* 1993 ஜூலை மாதம் 16ம் திகதியன்று தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமை ஆட்கொலையாகவன்றி கைமோசக் கொலையென குற்றவாளியாகக் காணப்பட்ட கணவனுக்கு மூன்றாண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனை நீர்கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (லங்காதிப - 98.05.28)
* 1997 பெப்ரவரி 03ம் திகதியன்று 30வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தமை ஆட்கொலையாகவன்றி கைமோசக்
22

கொலையென குற்றவாளியாகக் காணப்பட்ட கணவனுக்கு 8 வருட காலக் கடுழியச் சிறைத்தண்டனை நீர்கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (திவயின - 98.09.17)
1995 ஜூன் 18ம் திகதியன்று 70 வயதுடைய மாமியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தமைக்காக குற்றஞ்சாட்டப்டபட மருமகனுக்கு ஆட்கொலையாவன்றி கைமோசக் கொலையெனக் கருதப்பட்டு இரண்டு ஆண்டுகால கடுழியச் சிறைத்தண்டனையும், ரூ. 2000 அபராதமும் களுத்துறை மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (லங்காதிப-98.11.16)
50 வயதுடைய மனைவியைக் கொலைசெய்தமைக் காக குற்றஞ்சாட்டப்பட்ட கணவனுக்கு கண்டி மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. (டெய்லிநியூஸ் - 98.11.16)
தாக்குதல்
s
மருமகனால் மாமியார் தாக்கப்பட்டுள்ளார். பத்தேகம நீதவான் குற்றஞ்சாட்டப்பட்டு மகனுக்கு ரூ.1000 அபராதம் விதித்து திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரும்படி பணித்தார். (98.05.30)
மகள் தகப்பனால் தாக்கப்பட்டுள்ளார். ரூ.20,000 நட்டஈடு செலுத்துமாறு உடுகம நீதவான் தகப்பனைப் பணித்துள்ளார். (லங்காதீப - 98.11.10)
முறையில்லாப் புணர்ச்சி
峰
12 வயதுடைய மகள்மீது பாலியல் வல்லுறவு புரிந்து நான்கு மாதக் கருவைக் கலைத்த தகப்பனுக்கு அனுராதபுரம் மேல்நீதிமன்றம் 19 ஆண்டுக்கால கடுழியச் சிறைத்தண்டனையையும், ரூ. 5000 அபராதத்தையும் விதித்தது. (திவயின - 98.01.06)
11 வயதுடைய மகள்மீது பாலியல் வல்லுறவு புரிந்த சிறிய தகப்பனுக்கு அனுராதபுரம் மேல்நீதிமன்றம் 15 ஆண்டுக்கால கடுழியச் சிறைத்தண்டனையும், ரூ. 25,000 அபராதத்தையும் விதித்தது. (திவயின - 98.01.06)
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குற்றச்செயல் புரியப்பட்ட திகதியைப் பத்திரிகைகள் மூலமாக வெளியிடப்படாமமையால் சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து விசாரணைகளை மேற்கொள்ளல், வழக்குத் தொடருதல்
23

Page 14
மற்றும் தீர்ப்பு வழங்கப்படுதல் போன்ற நடைமுறைகளுக்கு எவ்வளவு காலம் சென்றதென்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்வது சிரமமான காரியமாகும். அதைப்போலவே ஒவ்வொரு குற்றச்செயல் சம்பந்தமாகவும், விசாரணைகள் நிறைவுபெறும் வரை தொடர்ச்சியான தகவல்கள் பத்திரிகை மூலமாக வெளியிடப்படாமையால் வழக்குத்தீர்ப்பு மூலமாக நிறைபெற்ற எத்தனைச் சம்பவங்கள் உள்ளனவென்பதையும், திட்டவட்டமாக அறிந்துகொள்ளவது சிரமமானதே. எவ்வாறாயினும், செய்தியிடப்பட்ட வழக்குத் தீர்ப்புகளை நோக்கும்போது இத்தீர்ப்புகளுக்கிடையில் ஒத்தமை நிலவுகின்றமை புலனாகின்றது. அதைப்போலவே ஆட்கொலையைப் பார்க்கிலும் குறைந்த குற்றமாக கருதப்படுகின்ற கைமோசக் கொலை சம்பந்தமாக தண்டனை வழங்கப்படுகையில் எத்தனை சந்தர்ப்பங்கள் நிலவின என்பதையும் இங்கு தீர்ப்பு வழங்கப்படுகையில் கவனத்திற்கொள்ளப்பட்ட காரணிகள் யாவை என்பதையும் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுதலும் Llug)/60)LuJ5Tati 960)LDualpTib.
முறையில்லாப் புணர்ச்சி
வீட்டு வன்முறையின் மற்றுமொருவடிவம் முறையில்லாப் புணர்ச்சியாகும். 1998 ஆம் ஆண்டில் இத்தகைய 58 சம்பவங்கள் பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன. தகப்பன் மற்றும் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களாக பாட்டன், சிறியதந்தை, மாமா, மகன், மற்றும் உறவினர் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளித் தரப்பினராக பத்திரிகைச் செய்திகள் மூலம் காட்டப்பட்டிருந்தனர்.04 வயதுடைய சிறுமிக்கு எதிராகவும், 65 வயதுடைய தாய்க்கு எதிராகவும் இத்தகைய தவறுபுரியப்பட்டிருந்த இரண்டு சம்பவங்கள் பற்றி பெண்ணுரிமைகள் கண்காணிப்பு 1998 முதலாம் காலாண்டிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
குடும்பத்தவர் மத்தியில் நிலவுகின்ற நம்பிக்கையைச் சீர்குலைக்க காரணமாக அமைவதாலும், விசேசமாக தான் வசிக்கின்ற சமூகச் சூழ்நிலைபற்றி எந்த விதமான அறிவுமற்ற அதேவேளையில் அதன் மீது தம்மால் கட்டுப்பாட்டினை மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ள பிள்ளைகள் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்பவர்களினது கோரப்பிடியில் சிக்கவேண்டிய நிலை காணப்படுவதாலும் முறையில்லாப் புணர்ச்சியானது மிகவும் கொடுரமான குற்றமாக அமைகிறது.
24

அதைப்போலவே முறையில்லாப் புணர்ச்சியானது வீட்டு வன்முறையில் காணப்படுகின்ற தண்டனை வழங்குகின்ற முறையை மிகவும் சிக்கலாக்குகின்ற குற்றநிழ் கவாகவே அமைகின்றது. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவள் குடும்பத்தில் தீர்மானம் மேற்கொள்வதில் எவ்விதமான அதிகாரமும் அற்றவராக இருப்பதோடு அதன் விளைவாக இவளுக்குப் பாதுகாப்பு கிடைப்பதில்லை. இத்தகைய நிலைமையின் கீழ் குற்றத்தை வெளிக்கொணராமல் மூடிமறைக்கின் தன்மை குடும்பங்களில் காணப்படுகின்றது. எனவே இத்தகைய சம்பவம் பற்றிய வெளிக்கொணரப்படுதலானது மிகவும் அரிதாகவே நிகழ்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களின் போதும் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ச்சியான குறுக்கு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டபின் பெரும்பாலும் வழக்கின் விதிமுறைகளில் நிலவுகின்ற தவறுகளின் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டுக்களிருந்து விடுவிக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. மேலும் இத்தகைய வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் வழக்கு விசாரணை முடிவடையும்வரை பாதிக்கப்பட்ட சிறுமி பொருத்தமான பாதுகாப்புமிக்க இடத்தில் தடுத்து வைக்கப்படவேண்டியது காணக்கூடியதாக இருக்க வேண்டிய அம்சமாகும். இலங்கையில் இது நன்னடத்தைப் பாதுகாவல் நிலையமாக அமைய வேண்டும். பிள்ளையைத் தனது வழைைமயான அகற்றிவைப்பதன் மூலமோ பிள்ளைக்குத் தேவையனவற்றைப் பெற்றுக் கொடுப்பதன் மூலமோ பிள்ளையின் நன்மைக்காக நல்ல தீர்வாக அமையாதென்பதோடு இத்தகைய நிலைமையின் கீழ் பிள்ளையானது மென்மேலும் பாதிப்பிற்கு ஆளாக்கக்கூடும்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக பாதுகாப்பு நிறைந்ததும், பிள்ளைகளுடன் தோழமை பேணத் கதக்துமான சூழலைக் கொண்ட இடங்களைத் தாபிக்க வேண்டிய பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது. முறையில்லாப் புணர்ச்சி சம்பந்தமான குற்றச்சாட்டின்போது பிரதானமான சிக்கலாக அமைவது சாட்சியங்கள் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினையே. பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுடன் ஒரே வீட்டில் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுடன் பொறுப்பில் வசிப்பதால் சான்றுகளை மூடிமறைப்தற்கு வாய்ப்பு பாதுகாவலர்களுக்கு கிடைப்பதுடன் இதன்மூலமாகக் குற்றச்சாட்டுக்கள் தோல்வியுறச் செய்யப்படும். இத்தகைய வழக்குகளின்போது ஒருவரது சார்பில் வேறொருவர் தோற்றாமல் இரகசியமான முறையில் சாட்சியங்கள் பெறப்படவேண்டுமென ஒரு சிலர் கருதுகின்றனர். அத்தகைய சந்தர்ப்பங்களில்
25

Page 15
குறைந்த அளவிலான முறைசார்ந்த வகையில் விசாரணக் - குட்படுத்தப்படுவதாலும் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினருடன் நேரடியான விவாதத்தில் கலந்துகொள்வதில்லையென்பதாலும், நீதிமன்ற நடைமுறைகள் சம்பந்தமான எந்தவிதமான அசெளகரியங்களுமின்றி விசாரணைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பு பிள்ளைக்குக் கிடைக்கும். இந்நிலையை உறுதிசெய்யவதற்காக சான்றுகள் கட்டளைச் சட்டம் திருத்தப்படவேண்டி கடந்த காலங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. இதைப்போலவே முன்கூட்டியே பதியப்பட்ட சான்றுகள் நீதிமன்றத்தில் பிரயோகித்தல் சம்பந்தமாகவும் ஒரு சில வழக்கு விசாரணைகளின்போது கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகளின்போது சட்டரீதியாக குறுக்கீடு செய்தவன் மூலமாக இப்பிரச்சினைக்கான குறுங்காலத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் தடுக்கும் நோக்கத்திற்காக இப்பிரச்சினைக்கான மூலகாரணங்களைத் தேடி தீர்வுகளை முன்வைத்தல் கட்டயாமானதொரு விடயமாகக் காணப்பட்டுகின்றது.
வீட்டு வண்முறைகளும் தற்பாதுகாப்பும்
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் விசேசட பிரதிநிதி பொருள் கூறுவதன் பிரகாரம் தனிப்பட்டவளவில் அல்லது அதிகார எல்லைக்குள் வசிக்கின்றவரும் சட்டத்தினால் அல்லது உறவுமுறையிால் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள நபர்களுக்கிடையில் நேருகின்ற வன்முறைச் செயல்கள் வீட்டு வன்முறைகளெனக் கருதப்படமுடியும்.' சொற்பிரயோகத்தில் வெளிப்படையான நடுநிலைமை காணப்பட்டாலும் இச்செயலானது எல்லாவேளைகளிலும் கால்நிலை வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கெதிராாக ஆண்களால் புரியப்படுகின்ற வன்முறையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிர்மறையான செயல் நடைபெற்றால் அதாவது பெண் துணைத்தாக்கினால், அத்தகைய செயல் பால்நிலை வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட செயலாகுமென்ற விதத்தில் புள்ளிவிபரங்களில் மிகக் குறைந்த கவனமே செலுத்தப்படுகின்றது. இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் ஆண்தரப்பின் தாக்குதலிலிருந்து தன்னால்
12. E/CN.4 / 1996/53
26

பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு பெண் உடல் ரீதியான முயற்சியில் ஈடுபட முயற்சி செய்கின்ற சந்தர்ப்பங்களிலேயே நிகழும். இவ்வாறு தற்பாதுகாப்பின் நிமித்தம் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியாக பெண்கள் தமது ஆண்தரப்பை சேர்ந்தவர்களாகத் தாக்கிய சந்தர்ப்பங்கள் பற்றிப் பத்திரிகைச் செய்திகள் மூலமாக வெளிக்கொணரப்பட்ட வழக்குகளின்போது வெளிப்படுத்தப்பட்டிருந்தன. "
இவ்வாறு எந்தவொரு வழக்கு சம்பந்தமான தொடர்நடவடிக்கைகளும் எந்தவொரு பத்திரிகைகளாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதன்காரணமாக அத்தகைய வழக்குகளின்இறுதிவிளைவு பற்றி விபரங்கள் எம்மால் பெற்றுக்கொள்ள இயலாமல் உள்ளது. இருந்தபோதிலும் ஒரு வழக்கின்போது தனது தற்பாதுகாப்பிற்காக கணவனைக்கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஈராண்டு காலத்திற்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் ரூ. 8000 அபராதமும் மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சிராணி திலகவர்த்தன அவர்களால் வழங்கப்பட்ட சம்பவம் நேர்ந்துள்ளது. கோணவல பிரதேசத்தில் வசிக்கும் இப்பெண் கைமோசக் கொலைக்கான குற்றவாளியென நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். தான் விவாகம் முடிந்திருந்ததை கடந்த ஏழு ஆண்டுகாலமாகத் தானும் தனது பிள்ளைகளும், தகப்பனும் தனது கணவனால் தாக்கப்பட்டு வந்ததாக இவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேற்படி நிலைமையின் கீழ் தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்கான மேற்முறையீடு இவர் சார்பாக நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதெனும் செய்தி 98.02.16 ஆம் திகதி லங்காதிப பத்திரிகையின் வெளியிடப்பட்டுள்ளது.
பெனர்களின் வாழ்க்கை மீதான வீட்ரு வன்முறையினர் தாக்கம்
பெண்களுக்கெதிரான பெரும்பாலான வன்முறைச் செயல்கள் தமது வீடுகளிலேயே இடம்பெறுகின்றன. தகப்பன், சகோதரன், மாமன், கணவன், அல்லது மகன் இத்தகைய வன்முறை மோதல்களிரல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும். இத்தகைய வன்முறை உடல், பால், அல்லது உளரீதியான பாதிப்பாக அமையலாம். இச்சம்பவம் பெண்ணின் வகுப்பு, குலம், தேசியத்துவம், மற்றும் மதம் சம்பந்தமான எந்தவிதமான பேதமுமின்றி பெண்மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
1 98/02/16 லங்காதீப, 98/02/17 திவயின, 98/03/27 திவயின, 98/04/18 தினமின பத்திரிகைகளைப் பார்க்கவும்
27

Page 16
இத்தகைய வீட்டுவன்முறைச் செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவதனால் பல்வேறு காரணிகளின் விளைவாக இடம்பெறாதிருப்பதோடு, இத்தகைய காரணங்களின் விளைவாக இவை பற்றிய செய்திகள் வெளியிடப்படாமலும், மூடிமறைக்கப்பட்டும் காணப்படுகின்றன. இதனால் வீட்டுவன்முறைச் செயல்களின் உண்மையான எண்ணிக்கை ஒரு போதுமே வெளிவராமல் நிலவும்.
வீட்டுவன்முறைகள் செய்தியாக வெளிவராமைக்கு பல காரணங்கள் துணைபுரிகின்றன. இவற்றுக்கிடையில் பொருளாதார ரீதியாக தங்கிவாழும் நிலை, தனதும், தனது பிள்ளைகளினதும், உயிர்மீதான பயம், வெட்கம், அறிவினம், பொலிசாரால் கவனிக்கப்படுகின்ற விதமும் இவர்களது மனோபாவம் சம்பந்தமாக நிலவுகின்ற அச்சம் போன்ற காரணங்களை எடுத்தக்காட்ட முடியும். தனது மனைவி மீது தனக்குப் பூரணமான உரிமையுண்டென கணவன் கருதுவதால் இத்தகைய மனோபாவம் காரணமாக பெண்களைத் தாக்கவும் அவரை அவருக்கு உரிய இடத்தில் வைப்பதற்குமான உரிமை தனக்கு உண்டெனும் எடுகோளின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர்.
சமூக மரபுமுறைகள் மூலமாக வீட்டுவன்முறைச் செயல்களைப் பொறுத்துக்கொள்ளும் நிலை காணப்படுவதோடு அவற்றைக் குற்றச்செயலாகக் கருதாமல் திருமண வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கருதும் நிலை காணப்படுகின்து. இத்தகைய கோரமான நியாயப்படுத்தலானது வீட்டு வன்முறைச் செயல்கள் உயர்ந்த எண்ணிக்கை கொண்டனவாக அமைவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப் பிணக்குகளின் காரணமாக பாரதூரமான விளைவுகள், தொடர்ச்சியான அச்சம், பாதுகாப்பின்மை. சித்திரவதைக்கு ஆளாதல் அல்லது சிலவேளைகளில் மரணம்கூட சம்பவிக்கின்ற நிலைமை உருவாகியபோதிலும் முன்கூறிய காரணத்தின் விளைவாக வீட்டுவன்முறைகள் மீது மிகவும் குறைந்த அளவிலான கவனமே செலுத்தப்படுகின்றது.
வீட்டுவன்முறைகள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களாக நிகழ்வதில்லை. உடல்ரீதியான கொடுரத்தையும் உளரீதியான சித்தரவதைகளையும் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறாள். இதன் விளைவாக கடுமையான வாழ்க்கை வடுக்களையும் அளவிடமுடியாத வேதனைகளையும் பீதியுற்றநிலைமையையும் அவளால் சுமந்து வாழ வேண்டிய நிலை உருவாகின்றது. மேற்படி வன்முறைச் செயல்கள் காரணமாக பெண் தொடர்ந்தும், குடும்ப வாழ்க்கையில் அடக்கி ஒடுக்கப்படுகின்ற நிலை
28

உருவாவதுடன் சமூக, அரசியல், மற்றும் பொருளாதார ரீதியாக பாரபட்சம் காட்டப்படுகின்ற நிலையானது தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.
இலங்கைச் சட்டத்திற்கிணங்க விவாகம் மூலமான பாலியல் வல்லுறவுகள் குற்றச்செயலாகக் கருதப்படுவது கிடையாது. இதற்கான காரணம் மனைவியின் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமல் அவளோடு பாலியல் நடத்தையில் ஈடுபட விவாகம் மூலம் கணவன் மார்கள் அனைவருக்கும் அனுமதி கிடைத்துள்ளதென பல்வேறு கலாசாரங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுளமையேயாகும். இதன்காரணமாக மனைவி கணவனுக்குச் சொந்தமான ஒரு பண்டமாக அமைவதோடு அவனது விருப்பத்திற்கிணங்க அவனால் பாவனைக்கு எடுக்கவோ, முறைதகாத பாவனைக்கு உட்படுத்தவோ கணவனால் இயலுமென்ற முடிவுக்கு மனிதன்வந்துள்ளான்.
வீட்குப் பணிப்பெண்களுக்கெதிரான வன்முறைகள்
வீட்டுப் பணிப்பெண்களுக்கெதிரான வன்முறைகள் வீட்டுவன்முறைகள் மற்றுமோர் அங்கமாக அமைகின்றது. இலங்கை வீட்டுப் பணிப்பெண்களுக்கெதிராக மத்தியக் கிழக்கு நாடுகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றமை பற்றிய செய்திகளால் பரவலாகக் காணக்கூடியதாக இருந்தது. வெளிநாடுகளுச் சென்ற பணிப்பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பல கோரிக்கைகள் தொழில் அமைச்சிடமும் வெளியுறவு அமைச்சிடமும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புப் பணியகத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்து. இவ்விபரங்கள் இடம்பெயர்ந்த பெண்கள் எனும் தலைப்பின் கீழ் இவ்வறிகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் உள்ளுரில் வீடுகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் குறைவானதென்பதைக் குறிப்பிடவேண்டும். பெண்ணுரிமைகள் கண்காணிப்பு 1998இல் அறிக்கையிட்டதன் பிரகாரம் உள்நாட்டுப்பணிப்பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயல்களில் 30 சம்பவங்கள் தாக்குதல்களாகவும், 10 பாலியல் வல்லுறவுகளாகவும், பாலியல் ரீதியான வல்லுறவு முயற்சியொன்றும், அத்துடன் ஒரு பாலியல் ரீதியான தொந்தரவுமாக செய்தியிடப்பட்டுள்ளது. இத்தகைய வன்முறைச் செயல்கள் யாவும் பிள்ளைப்
29

Page 17
பருவத்தில் உள்ளவர்களுக்கு எதிராகப் புரியப்பட்டனவாகும். செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது 08 வயதுடைய பெண் குழந்தைக்கு எதிராக வன்முறைச் செயல் புரிந்தமை சம்பந்தமாக சிறுமிக்கு ரூ.50,000வும், சிறுமியின் தகப்பனுக்கு ரூ. 2500வும் நட்ட ஈடாகச் செலுத்தப்படவேண்டுமென வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்றத்தால் இளைப்பாறிய ஆசிரியரொருவருக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. (திவயின - 98.07.20) வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுதல் பற்றிய பல குற்றச்சாட்டுக்களுக்காக தற்போது தண்டனைச் சட்டக்கோவையின் 308 அ பிரிவில் மூலமாக வழக்குத் தொடரப்பட முடியும். இத்தகைய வாய்ப்பு 1995 ஆண் ஆண்டில் 22 ஆம் இலக்க தண்டப்பணமாக சட்டக்கோவை (திருத்தம்) சட்டத்தின் மூலமே கிடைத்தது. இத்தகைய குற்றச் செயலானது பிள்ளைகளுக்கெதிராக கொடுரம் விளைவிக்கப்படுதல் என அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றத்திற்காக ஈராண்டு காலப்பகுதிக்குக் குறையாத பத்தாண்டு காலப்பகுதியை மிஞ்சாத இரண்டிலொரு மறியற் தண்டனையும் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுகின்றவாறான அபராதத் தொகையும் அத்துடன் நட்டஈடும் தண்டனையாக வழங்கப்பட முடியும்,
1998இல் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் மூலமாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரமொன்று அரசாங்கத்தால் தாபிக்கப்பட்டது. திட்டவட்டமாக துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்ற சிறார்கள் பாதுகாப்பிற்காகவும் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைகளின்போது கருமமாற்றுவற்காகவுமே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறுவர் உழைப்பு மற்றும சிறார்களுக்கெதிரான வன்முறைகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்காக பொலிஸ் திணைக்களத்தினால் மிகவும் வெற்றிகரமான வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தின் 444444 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இத்தகைய சம்பவங்கள் பற்றி மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
வீட்டுப்பணிப்பெண் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் எதிர்நோக்குகின்ற தொந்தரவுகள் மற்றும் தொல்லைகள் மீது எந்தவிதமான கவனமும் செலுத்தப்படவில்லையென கூறப்பட முடியுமென்பதோடு, தாக்குதல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டமை சம்பந்தமான ஒரு சில வழக்குகள் வயது வந்த பெண்களால் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. அதே வேளையில் இத்தகைய பெண்களால் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை
30

வழங்குகின்றன அல்லது இவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற சட்டரீதியான கட்டமைப்பும் கிடையாது. அதைப்போலவே வீட்டுப்பணிப்பெண் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை ஒழுங்மைக்கவும் இவர்கள் பலவிதமான துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் எந்தவிதமான தொழிற்சங்கமும் முன்வராமை கவலைக்கிடமான விடயமாகும்.
வீட்கு வன்முறைகள் சம்பந்தப்பட்ட சட்டம்
வீட்டுவன்முறைச் செயல்கள் தொடர்பில் செயலாற்றுவதற்னெ விசேட சட்டமொன்று கிடையாது. அண்மையில் திருத்தம் கொண்டுவரப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையிலுள்ள ஏற்படுகளுக்கிணங்க கருமமாற்றி கொலை தாக்குதல், கடுங்காயமேற்படுத்தல் முதலியவை சம்பந்தமாக நீதிமன்றத்தின் உதவியை நாடுவது மாத்திரமே பாதிக்கப்பட்ட பெண்ணால் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே நிவாரணமாக அமைந்துள்ளது. 1995ஆம் ஆண்டில் இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை திருத்தப்படவேளையில் கடுங்காயமேற்படுத்ததுதல் என்பது பின்வரும் விடயங்களையும் உள்ளடக்கியதாக வரைவிலக்க்படுத்தப்பட்டுள்ளது.
d எலும்பு கசியிழையம் அல்லது பல்வெட்டப்படுதல் அல்லது முறிவு, அல்லது
எலும்பு மூட்டு அல்லது பல்லில் இடப்பெயர்வு, அல்லது தளர்வு,
உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய ஊறு அல்லது எந்த ஊறின் விளைவாக இருதய வயிற்றில் அல்லது மண்டையோட்டு அறைகள் திறக்கப்படவேண்டிய சத்திரசிகிச்சையொன்று புரியப்படுகின்றதோ, அந்த ஏதேனும்
267).
காயப்பட்டவர்களுக்கு ஊன்றின் காரணமாக அல்லது ஊறினால் அவசியப்படுத்தப்பட்ட ஏதேனும் சத்திர சிகிச்சையால் இருபது நாட்களைக்கொண்டவாறு காலப்பகுதிக்கு கடுமையான உடல் நோவை ஏற்படுத்துகின்ற அல்லது அவரது வழமையான அலுவல்களை செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகின்ற ஏதேனும் ஊறு. "
எவ்வாறாயினும், தண்டனைச் சட்டக் கோவையில் அடக்கப்பட்டுள்ள இத்தகைய குற்றங்கள் ஆண் - பெண் பால் நிலைக்கிணங்க தீர்மானிக்கப்படுகின்றவையாக அல்லாமல் இருசாரரும் சமமானவகையில்
* தணர்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டம் இலக்கம் 22, 1995
3

Page 18
ஏற்புடையனவாகும், வீட்டில் இருக்கின்ற பெண்ணுக் கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் ஆண் - பெண் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டு புரியப்படுவதோடு சமநிலையற்ற அதிகாரத் தொடர்புகள் மற்றும் சமூகமயமாக்கல் முதலிய காரணங்களின் மூலமாகவே அவை தீர்மானிக்கப்படுகின்றன. இவ்விரு காரணங்களும் பெண்களுக்கெதிராக பாரபட்சம் காட்டப்பட்ட வழிகோலுவதாக அமைந்துள்ளன. பாதிப்பிற்குள்ளான பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமாகவும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதறகாக்கவும் நிலவுகின்ற பெரும்பாலும் வழிமுறைகளால் பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பெண்கள் இழந்துள்ளரென்பதைக் காணக் கூடியதாக உள்ளது. வீட்டுவன்முறைகள் சம்பந்தப்பட்ட திட்டவட்டமான சட்டமொன்று அமுலாக்கப்படுமாயின் இத்தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இயலுமானதாக அமையும். சிவில் மற்றும் குற்றவியல் சார்ந்த விடயங்கள் சம்பந்தமான தீர்வுகளை உள்ளடக்கிய வீட்டுவன்முறைகள் தொடர்பான சட்டமொன்று நிலவுமாயின், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் திட்டவட்டமாகத் தனது தேவைகளுக்கிணங்கவும் தான் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளுக்கிணங்கவும் தீர்வுகளால் பெற்றுக்கொள்ள முடியும்.
1995ஆம் ஆண்டுவரை முறையில்லாப்புணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விவாகதத்துடன் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மூலமாகவே பரிசீலிக்கப்பட்டன. ஆயினும், இதற்கான தண்டனை மிகவும் தளர்த்தப்பட்டதாக அமைவதோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளைப் பார்க்கிலும் இங்கு பெரும்பாலும் குடும்ப ஒற்றுமை, தூய்மை போன்ற விடயங்களைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாக இருந்தது. 1995ஆம் ஆண்டின் திருத்தத்தின்படி தண்டனைச் சட்டக் கோவையின் 364(அ) வாசகத்தின் கீழ் முறையில்லாப் புணர்ச்சி என்பது ஒரு குற்றவியல் தவறாக வரைவிலக்கப்படுத்தப்பட்டது. இத்தவறின் காரணங்களாப் பாதிக்கப்பட்ட சிறுமியின் சம்மதம் நிலவுகின்றயைமானது எதிர்பார்ப்பாக முன்வைக்கப்பட முடியாதென்பதும் காட்டப்பட்டுள்ளது. முறையில்லாப் புணர்ச்சி சம்பந்தமாக தனிப்பட்ட வழக்கு தொடரப்பட வேண்டுமெனில் இதற்கான அனுமதியை சட்டமா அதிபரிடமிருந்தோ உதவிப் பொலிஸ் அத்தியட்சகரொருவரிடமிருந்து எழுத்துமூலம் பெற்றுக் கொள்ள வேண்டும். வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் பேணிவரப்பட்ட வேண்டுமெனின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் எழுத்திலான வலுவளிப்பு கட்டாயமாக இருத்தல் வேண்டும். இத்தகைய தவறுக்காக குறைந்த பட்ச 7 ஆண்டுகாலச் சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 20 ஆண்டுகாலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படமுடியும்.
32

வீட்டு வன்முறைச் செயல்கள் சம்பந்தமாக செயலாற்றத்தக்க வகையில் தனவேறான சட்டமொன்று நிலவவேண்டியதன் அவசியம் பற்றி ஒரு சில சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப் பட்டுள்ளது. இது சம்பந்தமான கலந்துரையாடல்களிலிருந்து இரண்டுவிதமான நிலைப்பாடுகள் தோன்றின. நிலவுகின்ற சட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் பிரயோகிப்பது முதலாவது நிலைப்பாடாகும். தனிவேறான சட்டமொன்று அவசியமென்பது இரண்டாவதுநிலைப்பாடாக அமைந்தது. தனிவேறான சட்டமொன்று அவசியம் என்பதற்காக முன்வைக்கப்பட்ட விவாதமானது வீட்டுவன்முறையென்பது ஆண்
பெண் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டதாக அமைவதில் இப்பிரச்சினை ஆண் - பெண் பால்நிலை சம்பந்தமாப்பட்ட விடயமாகக் கருத்திற்கொள்ளப்பட்டு தீர்வுகாணப்பட வேண்டுமென்பதாக அமைந்தது. தண்டனைச் சட்டக்கோவையின் மூலமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் ஆண் - பெண் இருபாலாருக்கும் திறந்த நிலையில் அமைவதோடு அத்தகைய தீர்வுகள் விட்டினுள்ளேயும் வீட்டுக்கு வெளியேயும் நேர்ந்த குற்றங்களுக்கு ஏற்புடையது. ஆயினும், வீட்டுவன்முறையானது குடும்ப அங்கத்தவர்களுக்ககிடையில் நிலவுகின்ற அதிகாரத் தொடர் மற்றும் சமமின்மை எனும் சூழல் பொருத்தத்திற்கு அமையவே கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. இத்தகைய சூழல் பொருத்தத்தின் கீழ் பெண்ணானவள் தெளிவாகவே கீழ்ப்பட்ட நிலையிலேயே இருக்கின்றாள். தனித்தனியான சிவில் மற்றும் குற்றவியல் தவறுகளுக்கான தீர்வுகளை ஒருங்கிணைத்து பெண்ணுக்கு ஒரே நிறுவன அமைப்பின்கீழ் தீர்வுகளைத் தேடிக் கொள்வதற்கான ஆற்றல் கிடைக்கும். இதற்கு மேலதிகமாக அத்தகைய ஒன்றின் மூலமாக பாதுகாப்பும், தடையுத்தரவு பிறப்பிக்கின்ற அதிகாரமும் மிகவும் தீவிரமான முறையில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் ஆற்றலும் கிடைக்கும். அதேவேளையில் பாதுகாப்பு மிக்க வீடும் இருப்பிடமும், மருத்துவ, சட்ட மற்றும், மதியுரைச் சேவைகள் போன்ற அவசர சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் வழங்கக் கூடியதாக அமையும். மேலும் சட்டத்தை அமுல்படுத்துகின்ற அதிகாரிகள் மற்றும் மருத்துவ, சட்டத்துறைத் தொழில்வல்லுநனர்கள் மத்தியில் ஆண் - பெண் சமூகநிலை சம்பந்தமான கூறுணர்வினை ஏற்படுத்துவற்காக பயிற்சியளித்தல்களை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகளையும் உள்ளடக்கத்தக்கதாக அமையும். வீட்டுவன்முறைகள் சம்பந்தமான புறம்பான சட்டம் இருப்பின் தண்டனைச் சட்டக்கோவையின் ஏற்பாடுகளுடன் கூட்டாக வெற்றியளிக்கத்தக்க வகையில் நடைமுறைக்கு கொண்டு வரமுடியுமெனக் கருதலாம். இதற்கு எதிரான முன்வைப்பவர்களது கருத்து யாதெனில், நிலவுகின்ற சட்டத்தைப் பயன்மிக்கவகையில் பிரயோசனப் படுத்துவதில்லை
33

Page 19
என்பதே வீட்டுவன்முறை பற்றிய வரைவிலக்கணத்தின் காரணமாக பொருள் தேடல் சம்பந்தமான முரண்பாடு தோன்றியுளள்மை இதன் மூலம் தெளிவாகின்றது. சட்டத்தை அமுலாக்குகின்ற அதிகாரிகள் தண்டனைச் சட்டக் கோவையைப் போல் வீட்டுவன்முறை சம்பந்தமான புறம்பான சட்டமொன்று நிலவுவதை கடுமையான கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாவிட்டால் வீட்டுவன்முறை தொடர்பான பிரச்சினையும், இக்குற்றச்செயலைப் பொருட்படுத்தாத நிலைமையும் தொடர்ச்சியாக நிலவும். ஆயினும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உள்ளடக்கியதாக தீர்வுகளைக் கொண்டமைந்த தற்போதைய சட்டம் நெகிழ்வுத்தன்மை மிக்கதாக பிரயோகிக்கப்படுமாயின் அத்துடன் மிகுந்த ஆராய்ச்சிகளை முதன்மையாகக் கொண்ட வழக்குத் தொடரும் முறைகள் சமர்ப்பிக்கப்படுமாயின் வீட்டுவன்முறைகள் பற்றி மிகவும் கடுமையான கவனம் ஈர்க்கப்படுமென ஒருசிலர் வாதிட்டுவருகின்றனர்.
வீட்டுவன்முறையானது பெண்கள் திட்டமிட்ட அடிப்படையில் படிப்படியாக அடக்கியாளும் நிலைமையை உருவாக்குகின்றது. இதனால் வீட்டுவன்முறை என்பது உள்ளார்ந்த ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையாக மாறியுள்ளது. பெண்களுக்கெதிராக ஆணாதிக்கநிலையைப் பேணிவருவாற்கதாகவும், அரசியல், சமூக மற்றும் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலிருந்து பெண்களைத் தடுத்துவைப்பதற்காகவும் வீட்டுவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன எனும் வாதத்தை முன்வைக்கலாம். இதன்காணரமாக வீட்டுவன்முறையிலிருந்து பெண்களால் பாதுகாக்கின்ற அத்துடன் இவ்வன்முறைக்கு முடிவுகட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் எனக் குறிப்பிடவேண்டும்.
வீட்டுவன்முறையானது அதன் வடிவத்திற்கேற்றவாறு பெண்களுக்கு எதிராக இயங்கிவருகின்றதொன்றாகும். பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பெண்களுக்கு உள்ள உரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். வீட்டுவன்முறைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட் வேண்டுமாயின் தற்போது நிலவுகின்றன வழிமுறைகளால் பார்க்கிலும் கடுமையான வழிமுறைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
34

22 பாலியல் ரீதியான தொந்தரவுகள்
1998 ஆம் ஆண்டில் பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக வெளியிடப்பட்டதன் பிரகாரம் இவ்வாண்டில் 54 பாலியல் ரீதியான தொந்தரவுச் சம்பவங்கள் செய்திடப்பட்டுள்ளன. இவற்றுள் 19 சம்பவங்கள் பாலியல் தொந்தரவுகளல்லாத மானபங்கப்படுத்தல்களாகக் கருதப்படுகின்றன. செய்தியிடப்பட்ட சம்பவங்களுள் 8 சம்பவங்கள் தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்புவழங்கப்பட்டவையாகும்.
பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்களைப் போல் ஆண்களும் ஆளாகக் கூடிய நிலைமை இருந்தபோதிலும் அவற்றுள் பெரும்பாலானப் பெண்களைச் சார்ந்தவையாகும். பஸ்வண்டிகள், நெடுஞ்சாலைகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் குறிப்பாக இந்நிலைமையைக் காணக் கூடியதாக உள்ளது. பெண்களே இத்தகைய இடங்களில் அடிக்கடி தொந்தரவு செய்யப்படுகிறார்கள். பாடசாலை மற்றும் தொழிலகங்களிலும் இந்நிலைமை பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பான ஒருபெண் குறைந்த தரமுடைய பதவிவகித்தால் உயர்பதவிவகிப்போரதும் அதிகாரிகளினதும் தொந்தரவுகளுக்கு இலக்காகின்றமையைக் காணலாம். எந்தவயதைச் சேர்ந்த ஆண்களினதும் சிறுவர்களினதும் கேலிக்கூத்துக்கு இலக்காகின்ற பொதுப் பண்டமாகவே பெண் கருதப்படுகின்றாள். இந்நிலைமையின் கீழ் பெண்ணானவள் தனது பால்நிலை காரணமாகவே இத்தகைய தொந்தரவுகளுக்கு ஆளாகின்றாள் என்பது பேருண்மையாக மாறியுள்ளது. தொந்தரவுகள் பலவடிவங்களில் புரியப்படுகின்றன. இது கேலிபேச்சு முதல் இழிவுபடுத்தும் நிலை வரையும், பலவந்தம் புரிவது முதல் ஒருசில முறைதகாத பயன்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் தேவையின் அடிப்படையில் அவமானப்படுத்துவதற்கான அச்சுறுத்தல் வரையும் பல வடிவங்களைப் பெறுகின்றது.
பெண்களின் தொழில் சார்ந்த அந்தஸ்து அப்படிப்பட்டதாக இருந்த போதிலும் கடமை நிலையங்களில் பெரும்பாலான பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றார்கள். இது குற்றச்செயலாக அமைந்த போதிலும் இவை பற்றிய செய்திகள் மிகவும் குறைவாகவே வெளிருகின்றன. 1998 இல் செய்திகள் வெளியிடப்பட்டவற்றில் ஒரேயொரு சம்பவம் மாத்திரமே கடமை நிலையத்தில் புரியப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது வைத்தியசாலையில் இடம் பெற்றது. இத்தகைய சம்பவங்களுக்கெதிராக சட்டரீதியான நிவாரணங்கள் பெண்களுக்கு இருக்கின்ற போதிலும் பதவி இல்லாமல்
35

Page 20
போய்விடும் எனும் பயம் அல்லது நம்பமாட்டார்கள் எனும் இடர்வரவுச் சாத்தியம் அல்லது, தண்டனைக்கோ அவமதிப்பிற்கோ ஆளாகக் கூடிய இடர்வரவுச் சாத்தியம் அல்லது இழிவுபடுத்தப்படுவதற்கான இடர்வரவுச் சாத்தியம் அல்லது, குற்றச் சாட்டு நிராகரிக்கப்படுவதற்கான இடர்வரவுச் சாத்தியம் போன்ற காரணங்களினால் பெரும்பாலான பெண்கள் மெளனமாகவே இருந்துவிடுகிறார்கள். நிறுவனமொன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அதிகாரம் மிக்க நபர்கள் இருப்பின் அந்நிறுவனத்திலிருந்து எளிதாக அகற்றப்படக் கூடிய அத்துடன் கீழு தரங்களைச் சேர்ந்த பெண்கள் மீது வரையறையற்ற அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர்.
கடமை நிலையங்களில் இடம்பெறுகின்ற பாலியல் தொந்தரவுகள் பலவடிவங்களைக் கொண்டவையாகும். பெண்மீது காட்டப்படுவதில் பங்கமேது ஏற்படாதெனக் கருதப்படக்கூடிய பால்நிலைசார்ந்த சொற்பிரயோகம் அல்லது கேலிப்பேச்சுகள் அநாவசியமான முறையில் தடவுதல், பொருத்தமற்ற அல்லது சிலேடை அர்த்தம் தரக்கூய வார்த்தைப் பிரயோகம் அல்லது, பொருத்தமற்ற பாவனைகளை வெளிக்காட்டுதல், பால்நிலைமை மேலோங்கிக் காட்டக்கூடிய உரையாடல்கள், ஆக்கிரமிப்புமிக்க மொழிப் பிரயோகம் அத்துடன் மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களின்போது நேரடியான பாலியல்ரீதியான தாக்குதல்கள் போன்றவற்றைக் கடமை நிலையங்களில் இடம் பெறுகின்ற பாலியல் தொந்தரவுகளென எடுத்துக்காட்டலாம். மேலும் ஆணாதிக்கம் நிலவுகின்ற கடமை நிலையங்களில் கடமைபுரிகின்ற பெண்களின் தொழில்சார் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக அவளது திறமைகள் மற்றும் ஆற்றல்கள் போன்ற விடயங்களுக்கு மேலாக பாலியல் ரீதியான அனுசரணை வழங்குவதே மாறியுள்ளது. பாலியல் ரீதியான தொந்தரவுகள் புரியப்படுவதற்கு மேலாக பாலியல் ரீதியான தொந்தரவுகள் புரியப்படுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன் வராமல் இருக்கும் வரை எந்தவிதமான பாதிப்புக்களுமின்றி தனது செயல்களைப் புரிய அத்தகைய நபர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தண்டனையாக அபராதம் விதிக்கப்படுவதை எடுத்துக் காட்டலாம். இதன்மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கம்பெனிகளும் பெண்களின் சுயகெளரவம் தொடர்பில் நிலவுகின்ற கேள்வி மீது கவனஞ்செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இத்தகைய விடயங்கள் சம்பந்தமான கொள்கை ரீதியான பிரகடனமொன்றை வகுத்துக்கொள்ளுமாறு கம்பெனிகளையும் நிறுவனங்களையும் ஊக்குவிக்க முடியும். இதன் மூலமாக நிறுவனங்களில் பாலியல்
36

தொந்தரவுகள் புரியப்படுவதைத் தடைசெய்ய இயலுமென்பதோடு அத்தகைய
முறைப்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பயிற்றப்பட்ட உத்தியோகத் தர்களை நியமிப்பதற்கான ஆற்றலும் நிலவுகின்றது.
கடமை நிலையங்களில் இடம்பெறுகின்ற பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் நிறுவனத்தில் நிலவுகின்ற தனிப்பட்ட அதிகார எல்லைகளுக்குள்ளே வரையறுக் கப்பட்டவையாக அமைகின்றன. பாதகமான பிரச்சாரம் வழங்கப்பட்டுவிடுமென்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாடு சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் நிறுவனங்கள் தோல்வி காண்கின்றன. ஒருசில சந்தர்ப்பங்களில் நிறுவனங்களின் நிலவுகின்ற இத்தகைய பிரச்சினைகள் சம்பந்தமாக நடவக் கைகளை மேற்கொள்வதற்காக முறைசாராத கட்டமைப்புகள் வகுக் கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக உள்ளது. ஆயினும் இத்தகைய செயற்பாடானது வெறுமனே தலையீடுசெய்கின்ற செயற்பாடாக மாத்திரமே அமைவதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரச்சினை சம்பந்தமாக அக்கறை காட்டுகின்ற அல்லது பொறுப்புக் கூறவேண்டிய நபர்களைப் பொறுப்புக் கூறவைக்கின்ற செயற்பாடாக அமைவதில்லை. இது வெறுமனே சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக சுருக்கிக் கொள்வதாக அமைகின்றதோடு பெண்ணின் தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்கின்றதும் அங்கீகரிக்கப்படமுடியாத பகிரங்கக் குற்றமாகக் கருதப்படுவதைத் தடுக்கின்ற வழிமுறையாகவும் அமைகின்றது. இத்தகைய சம்பவங்களை வெளிக் கொணரத்தக்க நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெண்களுக்கு கிடைக்க வேண்டியது அவசியமானதாகும். தவறு நிறுவனத்திலோ கம்பனியிலோ பணியாற்றுகின்றவர்களுக்கு அதிகார கிடைக்கின்ற முறைப்பாடுகள் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அத்தகைய நபர்கள் பொறுப்புக் கூறக்கூடிய வகையிலான நீதிமன்றத் தத்துவங்களையும் பெண்களுக்காக தாபிக்க வேண்டும்.
37

Page 21
பாலியல் தொந்தரவுகள் சம்பந்தமாக தற்புடைய சட்டம்
1995 ஆம் ஆண்டில் தண்டனைச் சட்டக்கோவையில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாக பாலியல் தொந்தரவு குற்றச் செயலாக இனங்காணப்பட்டுள்ளது. அதுவரை நிலவிய காலங்கடந்த பொருள்தேடல் உதறித்தள்ளப்பட்டு தண்டனைச் சட்டக் கோவையின் 345 ஆம் வாசகம் மூலமாக பாலியல் தொந்தரவு பற்றிய வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. 345 ஆம் வாசகத்தின் விளக்கத்தின்படி வேலை செய்யுமிடத்தில் அல்லது வேறுவகையில் அதிகாரத்தில் உள்ள ஆளொருவரினால் சொற்கள் மூலம் அல்லது செயல்மூலம் பயன்படுத்தப்படும் வரவேற்கத்தகாத அணுகல்கள் பாலியல் தொந்தரவுத் தவறாக அமைதல் வேண்டும்.
புதிய சட்டத்திற்கிணங்க, எவரேனுமோர் ஆண் தாக்குதல் மூலம் அல்லது பலாத்காரத்தை உபயோகிப்பதன் மூலம் இன்னோர் ஆளுக்கு பாலியல் தொந்தரவைக் கொடுக்கின்ற அல்லது வார்த்தைகளை அல்லது செய்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய இன்னோர் ஆளுக்குப் பாலியல் தொந்தரவை அல்லது தொல்லையைக் கொடுக்கின்ற அவரும் பாலியல் தொந்தரவைக் கொடுத்த வராகக் கருதப்படுவார். அத்தகைய ஆளுக்குப் பாலியல் தொந்தரவை அல்லது தொல்லையைக் கொடுக்கின்ற எவரும் பாலியல் தொந்தரவைக் கொடுத்தவராகக் கருதப்படுவார். அத்தகைய ஆளுக்கு எதிராக குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது அத்தகைய தண்டனைகள் இரண்டினாலும் தண்டிக்கப்படக் கட்டளையிடப்படலாம். இதற்கு மேலதிகமாக நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவாறான தொகையொன்றை நட்டஈடாக செலுத்துமாறும் குறிப்பிட்ட ஆட்களுக்கெதிராகக் கட்டளையிடப்படலாம்.
இச்சட்டம் கொண்டுவரப்பட்டமை பாராட்டப்பட வேண்டுமென்பதோடு 1995 முதல் இச்சட்டத்தின் கீழ் பல வழக்குத் தீர்ப்புகள் வழங்கப்பட்டும் உள்ளன. ஆயினும் பாலியல் தொந்தரவுக் புரியப்படுதல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குப்பரிகாரமாக சட்டம் மாத்திரமே போதுமானதாக அமையமாட்டாது. புதிய சட்டமொன்று உள்ளமை பற்றி பரவலான பிரச்சாரம் வழங்கப்படவேண்டும்; பொலிஸ். சட்ட மற்றும் நீதிமன்ற அலுவலர்களின் மனோபாவம் காரணமாக அத்தகைய முறைப்பாட்டினைப் பொருட்படுத்தாமல் இருக்கின்ற நிலையைத் தடுப்பதற்கு உத்தரவாதமளிப்பதற்காக இச்சட்டம் அமுலாக்கப்படுகின்ற விதத்தை மேற்பார்வை செய்தல் வேண்டும். மக்களை அறிவூட்டுவதற்கான இயக்கமொன்றைப் பேணிவர வேண்டும். எவ்வடிவத்தில் புரியப்பட்டாலும்
38

பாலியல் தொந்தரவுகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தொன்றல்ல வென்பதையும் அது தண்டிக்கப்படவேண்டிய குற்றமென்பதையும் உணரச் செய்வதற்காக அறிவூட்டுகின்ற இயக்கமொன்று இயங்கிவர வேண்டும்.
பாலியல் தொந்தரவினைத் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுவதானது. பொது இடங்களில் பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த உபாயமுறையாகக் குறிப்பிடலாம். ஆயினும் கடமை நிலையங்களில் இடம்பெறுகின்ற தொந்தரவுகள் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இதனைப் பயன்படுத்துவது சில நேரங்ளில் பாதகமானதாக அமையக்கூடும். உதாரணமாக சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முன்வருகின்ற பெண்ணின் முறைப்பாட்டினை பொலீசாரிடம் முன்வைக்குமாறு நிறுவன அதிகாரிகள் கூறக்கூடும். இதன்மூலமாக இத்தகைய சம்பவங்கள் தொர்பில் நிறுவன மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பினது தொழில்தருநரிடமிருந்து விலக்கப்படுவதுடன் பெண் தனக்கு நேர்ந்த தொந்தரவு சம்பந்தமாக தனியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பினை வகிக்க வேண்டிய நிலை உருவாகும். சட்டத்தை வெற்றி. கரமானமுறையில் நடைமுறைப்படுத்துகின்ற நிலைக்கு கொண்டுவர வேண்டுமாயின் கடமை நிலையங்களில் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றிய ஒழுக்க நெறி முறையையொன்று வகுக் கப்பட்டு அமுலாக் கப் படவேண்டும். அப்போது கடமைநிலையங்களில் நேரிடக்கூடிய பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கக் கூடியதாக அமைவதோடு அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முகாமைத்துவமானது பொறுப்புமிக்க வகையில் நிறுவனரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாகவும் அமையும். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக அமுலாக்கப்படுகின்றனவாவென மேற்பார்வை செய்வதற்காக தொழிற்சங்கங்களும் முன்வந்து கருமமாற்ற வேண்டியுள்ளது.
23 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்
வயது குறைந்தவர்கள் மீதான பாலியல் வல்லுறவுகள்
1998 ஆம் ஆண்டில் பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக அறிக்கையிடப்பட்டிருந்த 17 வயதிலும் குறைந்த நிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கை 229 ஆகும். இவற்றுள் 45 சம்பவங்களின்போது குடும்ப அங்கத்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டது.
39

Page 22
அத்தகைய சம்பவங்கள் பற்றி முறையில்லாப் புணர்ச்சி எனும் தலைப்பின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது. 1998 இல் செய்திவெளியிடப்பட்டிருந்த பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களுள் நூற்றுக்கு இருபத்தொரு சதவீதமானவை சிறுமிகளுக்கு எதிராகப் புரியப்பட்ட பாலியல் வல்லுறவுச் சம்வங்கள். 04 வயதுவரையான மிகக் குறைந்த வயதுடைய பிள்ளைகளும் பாலியல் வல்லுறவிற்கு ஆளாகி இருந்ததோடு குற்றச்சாட்டப்பட்ட நபர்களுள் தகப்பன், சிறிய தந்தை, பாட்டன், மாமா மற்றும் மைத்துனன் போன்ற நெருங்கிய உறவினர்களும் இடங்குகின்றனர்.
1998இல் அறிக்கையிடப்பட்ட 229 சம்பவங்க்ளுள் 12 சம்பவங்கள் பற்றி வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 04 ஆண்டு முதல் 17 ஆண்டுகாலம் வரையான சிறைத்தண்டனைகள் இத்தீர்ப்புகள் மத்தியில் காணப்பட்டன. இரண்டு வழக்குகளின்போது 17 வயதிற்குக் குறைந்த நிறுமிகள் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தப்பட்டமை சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் இருவருக்கும் எதிராகவுேலு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இவ்விரு சம்பவங்களும் முறையில்லாப் புணர்ச்சி என்பதன் கீழ் காட்டப்பட்டுள்ளன.
பருவமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியமைக்கான நீதிமன்றத் தண்டனைகள்.
* 1998.06.29 ஆற் திகதியன்று 17 வயதுடைய பாடசாலை மாணவிமீது பாலியல் வல்லுறவு புரிந்தமைக்காக குற்றவாளியாக்கப்பட்ட நபருக்கு காலி மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகால கடுழியச் சிறைத்தண்டனை விதித்தது. அதன்பின் குற்றஞ்சாட்டப்பட்டவரால் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டபின் தண்டனை 06 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. (தினமின 98.01.05)
* வயது 14 நிரம்பிய ஊனமுற்ற சிறுமி மீது 1996.08.10 ஆம் திகதி பாலியல் வல்லுறவு புரிந்தமைக்காக தவறாளியாகக் காணப்பட்ட நபருக்கு 17 ஆண்டுகால கடுழியச் சிறைத் தண்டனையும் ரூ 10,000 அபராதமும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (லங்காதீப98.01.17)
* தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 13 வயதுச் சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்த நபருக்கு 7 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத் தண்டனையை ஊவா மேல் நீதிமன்றம் விதித்தது. (லங்காதிப98.01.21)
4 O

s
9வயதுடைய சிறுமி மீது அவளது சகோதரனின் முன்னிலையில் வைத்து 1992.09.18 ஆற் திகதியன்று பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 12 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையும் ரூ 10,000 அபராதமும் சிலாபம் மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (தினமின 98.02.05)
12 வயதுடைய ஊனமுற்ற சிறுமிக்கு 1996.07.21 ஆம் திகதியன்று பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்திற்குத் தவறாளியாக்கப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையும் ரூ 10,000 அபராதமும் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (திவயின 98.05.03)
09 வயதுடைய சிறுமியைப் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியமை சம்பந்தமாக குற்றவாளியாக்கப்பட்டவருக்கு 12 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையும் ரூ 25,000 அபராதமும் ஊவா மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (லங்காதிப98.06.22)
14 வயதுடைய தன் காதலி மீது பாலியல் வல்லுறவு புரிந்தமை சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அச்சிறுமியை விவாகம் புரிய புத்தளம் மாவட்ட நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். (திவயின 98.07.15)
15 வயதுடைய சிறுமியை 1995.07.10 ஆற்திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை சம்பந்தமாக குற்றவாளியாக்கப்பட்ட நபர்கள் இருவருக்கு 04 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையும் ரூ 20,000 அபராதமும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. (திவயின 98.08.01)
13 வயதுடைய சிறுமி மீது 1995.08.15ஆற் திகதியன்று பாலியல் வல்லுறவு புரிந்தமைக்காக குற்றவாளியாக்கப்பட்ட நபருக்கு 05 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையும் ரூ 2000 அபராதமும் குருநாகல் மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. (லங்காதிப98.08.10)
07 வயதுடைய சிறுமியை 1995.12.08 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை சம்பந்தமாக குற்றவாளியாக்கப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டணையும் ரூ 10,000 அபராதமும் விதிக்கப்பட்டதோடு சிறுமிக்கு ரூ 25,000 நட்டஈடாகச் செலுத்தப்படவேண்டுமெனவும் களுத்துறை மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (லங்காதீப98.821)
03 வயதுடைய சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்தமை சம்பந்தமாக
41

Page 23
குற்றஞ்சாட்டப்பட்டுநிரூபிக்கப்பட்ட நபருக்கு 12 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையை நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்துள்ளது. (லங்காதிப98.09.09)
* 08 வயது நிரம்பிய சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமைக்கு குற்றவாளியாக்கப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகாலக் கடுழியச் சிறைத்தண்டனையையும் ரூ25,000 அபராதத் தொகையையும் காலி மேல் நீதிமன்றம் விதித்தது. (லங்காதிப98.11.28)
இவ்வழக்குத் தீர்ப்புகளை நோக்கும்போது அவை பெரும்பாலும் 1995ஆம் ஆண்டில் தண்டனைச் சட்டக் கோவையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க வழங்கப்பட்டுள்ளமை புலனாகின்றது. தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்புரியப்பட்ட குற்றச் செயல்கள் சம்பந்தமாக குற்றவாளிகளாகக் காணப்பட்ட நபர்களுக்கு தண்டனையாக 04 அல்லது 05 ஆண்டுகால குறைவான சிறைத்தண்டனையே வழங்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டின் இறுதியாகும்போது 06 குற்றச்சாட்டுகள் சம்பந்தமான குற்றப்பகர்வு மேல் நீதிமன்றத்தில் கோவையிடப்பட்டிருந்ததோடு 152 குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக நீதவான்நீதிமன்றங்களிலும் 06குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மாவட்ட நீதிமன்றங்களிலும் ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எஞ்சியவற்றுள் 05 சம்பவங்கள் பத்திரிகைகளில் செய்தியிடப்பட்டிருந்த போதிலும் அவை சம்பந்தமான தொடர்நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இவற்றுக்கு மேலதிகமாக 06 சம்பவங்கள் பற்றிய பொலீஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
வயது வந்த பெனர்கள் மீது புரியப்பட்ட பாலில் வல்லுறவுகள்
1998 ஆம் ஆண்டில் வயதுவந்த பெண்கள் மீது புரியப்பட்ட 145 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலம் செய்திவெளியிடப்பட்டிருந்தது. இவ்வாண்டில் செய்தியிடப்பட்டிருந்த மொத்த வன்முறைச் சம்பவங்களில் வயதுவந்த பெண்கள் மீது புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள் நூற்றுக்கு பதின்மூன்று சதவீதமாக அமைந்தது. செய்தியிடப்பட்ட சம்பவங்களில் 13 வழக்குத் தீர்ப்புகள் சம்பந்தப்பட்டவையாகும். 71 சம்பவங்கள் தொடர்பில் நீதவான் நீதிமன்றங்களில் ஆரம்ப விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மூன்று வழக்கு விசாரணைகள் மேல்
42

நீதிமன்றத்திலும் ஒன்று மாவட்ட நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது. 54 முறைப்பாடுகள் சம்பந்தமாக பொலீஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததோடு 06 சம்பவங்களின் தொடர்நடவடிக்கைகள் பற்றிய எந்தவொரு தகவலும் எந்தவிதமான பத்திரிகைகளாலும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
தண்டனை வழங்கப்படுவதில் ஒருவிதமான ஒத்ததன்மை காணப்பட்டபோதும் மிகவும் முறைசார்ந்த வகையில் சட்டத்தைப் பதிலீடு செய்தல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டவட்டமான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டியதன் அவசியம் தொடர்ந்தும் நிலவுகின்றதென்பதையும் குறிப்பிடவேண்டியுள்ளது.
பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மிகவும் குறைவாகவே செய்தியிடப்படுகின்றன. இவை செய்தியிடப்படாமைக்கும் குறைந்த அளவில் செய்தி. யிடப்பட்டதற்கும் பெரும்பாலும் பயம், வெட்கம் சமூக விழுமியங்களே காரணமாகக் காட்டப்படுகின்றன. இது சம்பந்தப்பட்ட ஏனைய காரணங்கள் செய்திவெளியிடலுடன் தொடர்பாக நிலவுகின்ற காரணங்களாகக் காட்டப்படலாம். அக்காரணங்களாவன
* முறைப்பாடுகளை பதிந்து கொள்வதானது பெரும்பாலும் முறைப்பாட்டினைப் பதிவு செய்கின்ற உத்தியோகத்தரின் மனோபாவத்திலும் இரக்கமின்மையிலுமே தங்கியுள்ளது.
* மிகவும் மந்தகதியிலும் சிக்கலான சட்டமற்றும் நீதிமன்ற நடைமுறைகளினூடாக முறைப்பாடுசெய்கின்ற பெண் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியநிலையேற்படுதலும் அந்நிலைமையில் கூட அவள் சட்ட மற்றும் நீதிமன்ற அதிகாரிகளின் தப்பான எண்ணத்திற்கு இலக்காக வேண்டிய நிலையேற்படுதலும்.
* பாலியல் வல்லுறவு சம்பந்தமான வழக்கின் காரணமாக முறைபாடு
செய்கின்ற பெண் பகிரங்கப்படுத்தப்படும் நிலைதோன்றுதல்.
* சான்றுகளை முன்வைப்பதற்காக அவளுக்கு மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்றவேண்டிய நிலையேற்பட்ட போதிலும் அது அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதற்கான காரணம் இத்தகைய நிலைக்குள்ளான பெண் பெரும்பாலும் மருத்துவப் பரிசோதனைக்கு தோற்ற விரும்பாமையாகும்.
43

Page 24
* முறைப்பாடு செய்ய முன்வராமைக்குப் பெண்ணின் வயதும் காரணமாக
அமையக்கூடும்.
* முறைப்பாட்டினைச் செய்வதன்மூலமாகப் பெண் மேலும் தாக்கத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகவேண்டிய நிலையேற்படும் என்ற அச்சமும் விவாகத்தின்போது தோன்றக்கூடிய சிக்கல்களும் முறைப்பாட்டினைச் செய்வதில் தடையேற்படுத்தக்கூடிய காரணியாக அமையும்,
இவ்விடயங்கள் அனைத்தையும் கருத்தி கொள்ளும்போது பாலியல்வல்லுறவு சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் கருமமாற்றுவதற்காக கூறுணர்வுமிக்க வைத்திய மற்றும் சட்ட நடவடிக்கை முறைமை பற்றி உத்தரவாதமளிக்கப்பட வேண்டியது அவசியம். பாலியல் வல்லுறவு இடம்பெறுவதைத் தடுக்கும்பொருட்டு வல்லுறவு புரிபவர்களிடமிருந்த தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெண்களால் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமான விசேட வேலைத்திட்டங்களை உருவாக்க சமுகத்தாபனங்களும் பாடசாலைகளும் வெகுசனத்தொடர்பு ஊடகங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளையில் பாலியல் வல்லுறவு புரியப்படுமிடத்து தம்மால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாக பெண்களும் சிறுமிகளும் அறிவூட்டப்படவேண்டியதும் அவசியமே. செய்திவெளியிடல் தொடர்பில் ஊடகங்களின் பொறுப்பு பற்றியும், தொடர் நடவடிக்கைகள் பற்றியும், அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் எதிராக பெண்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டுமென்பதைப் பற்றியும் சமூகத்திற்கு அழுத்தம் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் அறிவூட்டப்படல்வேண்டும்.
பாலியல் வல்லுறவு சம்பந்தமான சட்டம்
தண்டனைச் சட்டக்கோவையில் குறிப்பிடத்தக்க அளவில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன் பாலியல் வல்லுறவு என்பது, பெண்ணின் சம்மதத்திற்கு எதிராகவுோ அவளது சம்மதமின்றியோ ஒர் ஆண் பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுதல் என்ககூறப்பட்டிருந்தது. உறுதிசெய்யத்தக்க சான்றுகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தவறாளியாகக் காணப்படக்கூடிய ஆற்றல்நிலவியபோதிலும் சம்மதமின்மை எனும் விடயத்தை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு பெண்ணையே சார்ந்திருந்தது. பெண்ணின் கடந்தகால பாலியல் நடத்தையையும் இழிவான நடத்தைகொண்டவன்
44

எனக் கூறி அவரை அவமதிப்பதையும் குற்றஞ்சாட்டப்படவர் தனது பாதுகாப்புக்கருதி முன்வைக்கும் பொதுவான காரணங்களாக அமைகின்றன. இக் காரணங்கள் பெண்ணுக்குப் பாதகமேற்படுத்தக் கூடியவகையில் பயன்படுத்தப்படுகின்றன. சட்டத்தின் பிரகாரம் பாலியல் வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்பது 12 வயதிற்குக் குறைந்த சிறுமிகள் சம்பந்தப்பட்டதாகவே காணப்பட்டது. விவாகரீதியான பாலியல் வல்லுறவு சட் டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணக்கருவாக அமையவில்லை. பொறுப்புக் கூறுகின்ற பாதுகாப்பின் கட்டுப்பாட்டில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு பற்றியும் போதியளவு கவனத்திற் கொள்ளப்படவில்லை.
1995இல் தண்டனைச் சட்டக்கோவையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களின் போது இதுவரை காலமும் நிலவிய ஏற்பாடுகளைத் திருத்துவதற்காக 363ஆம் வாசகத்தில் மாற்றங்களின் கொண்டுவரப்பட்டன. இதன்மூலமாக சம்மதமின்மை மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் பற்றிய பெளத்தச் சான்றுகள் முன்வைக்கப்படவேண்டியதன் தேவை நீக்கப்பட்டுள்ளது. சம்மமின்மையை நிரூபிக்கத்தக்க பெளத்த ரீதியான எதிர்ப்பைக் காட்டுதல் சம்பந்தமான சான்றுகள் முன்வைக்கப்படவேண்டியதன் கட்டாயமின்மை பற்றிய புதிய திருத்தம் தண்டனைச் சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. * திருமதி தாரா விஜேதிலக்கவின் விளக்கத்திற்கிணங்க, உண்மையிலேயே சம்மதமின்மை நிலவியதெனும் முறைப்பாட்டளரது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக கேட்கப்படத்தக்க விடயங்கள் பற்றி புதிய விளக்கத்தின் பிரகாரம் காட்டப்பட்டுள்ள போதிலும், அனைத்துவிதமான பாலியல் தவறுககள் சம்பந்தமாகவும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் தேவை நிலவுகின்றதாவென நியதிமுறைச் சட்டத்தில் விபரிக்கப்படவில்லை. இவ்விடயம் சம்பந்தமாகத் திட்டவட்டமான ஏற்பாடு காணப்படாமையால் இப்பிரச்சினையானது தொடர்ந்தும் உணர்வு மற்றும் நீதிமொழிவுக்களைஅடிப்படையாகக் கொண்டதாகவே அமையும்.
அதைப் போலவே இத்திருத்தத்தின் மூலம் பாதுகாவலர் பொறுப்பில் நேரிடுகின்ற பாலியல் வல்லுறவுகளும், நபர்கள் கூட்டமாகப் புரிகின்ற பாலியல் வல்லுறவுகளும், பாலியல் ரீதியான தவறுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் புரியப்படுகின்ற பாலியல் வல்லுறவுகளுக்காக அதிகபட்சமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5. Dhara Wijetilake, Abuse of Woman and Children Recent Amendments to the Law in Sri Lanka to meet the situtuon - The Bar Association Law Journal Vol. V Part | 1996.
45

Page 25
அதைப்போலவே பாலியல் வல்லுறவு குற்றச் செயலாகக் கருதப்பட்ட அதுவரை நிலவிய வயதெல்லையான 12 வருடங்கள் புதிய திருத்தத்தின் மூலமாக 16 வருடங்கள் அதிகரிக்கப்பட்டது. இங்கு ஒரு சில விதிவிலக்குகளுக்குக் கட்டுப்பட்டதாக பெண் 16 வயதிலும் குறைந்தவளாக இருப்பின் சம்மதம் இருந்ததா இல்லையா என்ற வியடம் ஏற்புடையதாக அமையாது. அவள் சட்டபூர்வமான கணவனிமிருந்து பிரிந்துவாழும் மனைவியாக இல்லாவிட்டால் மாத்திரமே விதிவிலக்கானது ஏற்புடையதாக அமையும். திருத்தத்திற்கு முன் விவாகத்திற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டபூர்வமான வயது 12 வருடங்களாக அமைந்த போதிலும் 16 வயதுக்கு குறைந்த சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற விவாகங்களும் காணப்பட்டன.
சட்டப்படி விலகிவாழும் சந்தர்ப்பத்தில் கணவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுதலும், புதிய திருத்தத்தின்படி குற்றச்செயலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இத்தகைய விவாக ரீதியான பாலியல் வல்லுறவு சம்பந்தப்பட்ட குற்றம் அறிமுகஞ் செய்யபட்டதோடு அவ்வேளையில் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தீவிரமான எதிர்ப்பு காரணமாக அத்திருத்தத்தை மேலும் மாற்றியமைக்க வேண்டிய நிலையேற்பட்டது. 363ஆம் வாசகத்திற்கு சேர்க்கப்பட்ட திருத்தத்தின் மூலம் அதன் (அ) உட்பிரிவின் கீழ் பெண் தனது மனைவியாக உள்ள வேளையிலும், சட்டபூர்வமாக விலகி வாழ்கின்ற சந்தர்ப்பத்திலும் அவளது சம்மதமின்றி உடலுறவு கொண்டால் அவர் தவறு புரிந்தவறாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது.
மனைவி 16 வயதிற்கு குறைந்தவராக அல்லாதவிடத்தும் அவள் 12 முதல் 16வயதிற்கு இடைப்பட்டவராக உள்ளபோதிலும் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதலானது பாலியல் வல்லுறவாக கருதப்பட்டது. ஆயினும் முஸ்லிமகள் சம்பந்தமாக இது ஏற்புடையதன்று " ஆயினும், அவளது வயது 12 வருடங்களால் பார்க்கிலும் குறைந்ததாக அமையின் அவர் தனது மனைவியாக இருந்தாலும் கூட உடலுறவு கொள்ளுதலானது முற்றிலுமே தடைசெய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பாலியல் வல்லுறவு சம்பந்தமான வழக்கைத் தொடுத்து பேணி வருவதும் சான்றுகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மூலமாக கட்டுப்படுத்தப்படுகின்றது. தண்டனைச்
1995 ஆம் ஆணர்டின் 18ஆம் இலக்க விவாகப் பதிவு (திருத்தம் சட்டமும்) 1995 ஆம் ஆணர்டின் 19ஆம் இலக்க கணர்டிய விவாக மணநீக்க (திருத்தம்) சட்டமும்
46

சட்டக்கோவைக்கு ஏற்ற வகையில் சான்றுகள் கட்டளைச் சட்டமானது திருத்தியமைக்கப்படவில்லை. பாதுகாவலரது பொறுப்பின் கீழ் இடம்பெற்ற பாலியல் வல்லுறவின்போது சம்மதமின்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அத்தகைய பெண்ணுக்கும், முறைப்பாட்டளர் தரப்பிரனருக்கும் உரியதாக அமைவதோடு குற்றஞ்சாட்டப்பட்டவரால் எதிர்வாதமாக இருந்தகால பாலியல் நடத்தைகளை முன்வைக்கும் ஆற்றல் நிலவுகின்றது. எவ்வாறாயினும், குற்றவாளியாக்கப்பட்ட நிரூபிக்கப்படவேண்டிய சான்றுகள் முன்வைக்கப்படவேண்டியது அவசியமில்லை என அண்மையில் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்பானது எதிர்கால நீதிமன்ற நடைமுறைகளை மாற்றுவதற்கான வழிசமைப்பதாக உள்ளது.
பாலியல் வல்லுறவானது நபர்களின் கூட்டத்தால் புரியப்பட்டிருப்பின் அல்லது பாதுகாவலரது பொறுப்பில் இருக்கும்போது புரியப்பட்டிருப்பின் தவறானது பாராயமடையதவர் மீது புரியப்பட்டிருந்தால் அல்லது கர்ப்பமுற்றவள்மீது புரியப்பட்டிருப்பின் அத்தகைய சந்தர்ப்பங்களில் வழங்கப்படவேண்டிய தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலியல் வல்லுறவு தொடர்பில் வழங்கபப்டக்கூடிய குறைந்த பட்சக் கட்டாயத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதோடு இடைநிறுத்தப்பட்ட தண்டனை வழங்கப்படுவது தடுக்கப்பட்டும் உள்ளது.
அதிகரிக்கப்பட்ட தண்டனை பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
票 S சிறைத் தண்டனை
256) S. S அபராதம் பாதிப்பிற்கான
雲誌 | 豊リ நட்டஈடு リ お 8 "ܨ 就当
བྱི་བ་
364(1) பாலியல் வல்லுறவு 07 20 d5L-L-ITUILDIT60Igl கட்டாயமானதாக
அமைவதோடு நீதிமன்றத் தீர்மானத்தின் பிரகாரம் 364(2) பாரதூரமான O 2O கட்டாயமானது விதிக்கபப்டும்
பாலியல் வல்லுறவு
364(3) சட்டபூர்வமான 15 2O கட்டாயமானது இல்லை
நிலைமைகளில் முறையில்லாப் புணர்ச்சி
364(அ) முறையில்லாப் O7 2O கட்டாயமானது இல்லை
புணர்ச்சி
47

Page 26
* பாரதூரமான பாலியல் வல்லுறவு என்பது நபர்கள் கூட்டமாகவோ, பாதுகாவலரது பொறுப்பில் உள்ள வேளையிலோ பராயமடையாதவர் மீது தவறுபுரியப்பட்டிருப்பின் அல்லது கர்ப்பிணிக்கு எதிராகப் புரியப்பட்டிருப்பின் அத்தகைய தவறானது பாரதூரமானது பாலியல் வல்லுறவாக அறிமுகஞ்செய்யப்பட்டுள்ளது.
சட்டபூர்வமான பாலியல் வல்லுறவின் போது அதாவது 16வயதிலும் குறைந்த சிறுமி சம்பந்தப்பட்ட வேளையில் சம்மதம் பற்றிய பிரச்சினை கவனிக்கப்படாமலேயே அத்தகைய செயல் தவறாகக் கருதப்படும். இவ்வேளையில் தவறு புரிந்தவர் 18 வயதிலும் குறைந்தவராக உள்ள போதும் அத்துடன் சிறுமி தனது சம்மதத்தை தெரிவித்துள்ளபோதும் செயலைப் புரிந்த நபருக்கு குறைந்த தண்டனையை நீதிமன்றம் தனது குற்றணியின்படி வழங்கலாம்.
இத்திருத்தத்திற்கிணங்க செயலாற்றுவதற்காக குற்றவியல் சட்டக்கோவை திருத்தப்பட்டுள்ளது. '
1995 இல் சட்டரீதியான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டபோது ஒருசில மரபுரீதியான அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. சட்டங்களுக்கிடையில் இணக்கம் தோன்ற வேண்டுமாயின் ஏனைய சட்டங்களும் இவ்வாறு புதியவகையில் மாற்றப்படவேண்டியுள்ளது. உதாரணமாக பாலியல் வல்லுறவு எனப்படுகின்ற தவறின் கீழ் சாகப்படுத்திக் கொள்ளும் போது சம்மதம் தெரிவிக்க வேண்டியவளது வயது 16 வருடங்கள் வரை அதிகரிக்கப்பட்ட வேளையில் விவாகம் புரிவதற்கான குறைந்தப்பட்ச வயதையும் பொதுச் சட்டத்திலும் மரபுரீதியான சட்டத்திலும் 16 வயதுவரை அல்லது அதனை மிஞ்சிய வயதினைவிதிக்க வேண்டி இருந்தது. மற்றுமொரு விடயம் யாதெனில் பாலியல் வல்லுறவு அல்லது முறையில்லாப் புணர்ச்சி நிலைமையின் போது இடம்பெறுகின்ற கருக்கலைப்பு சட்டபூர்மானதென கருதப்படக்கூடியவகையில் கருக்கலைப்பு சம்பந்தமான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை.
' 1995 ஆம் ஆணர்டின் 20 ஆம் இலக்கத் தணர்டனைச் சட்டக் கோவை (திருத்தம்) சட்டத்தைப்
பார்க்கவும்
48

ஆயுதப்படையினரால் புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள்
ஆயுதப்படையினரால் புரியப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றிய பல செய்திகள் 1998 ஆம் ஆண்டில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தன. இச்சம்பவங்களை இருவகை. களாகக் காட்டமுடியும். இவற்றுள் முதலாவது வகையைச் சேர்ந்தவை ஆயுதப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களால் புரியப்பட்ட செயல்களாகவும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவை ஆயுதப்படைச் சேவையைக் கைவிட்டோடியவர்களால் புரியப்பட்ட செயல்களாகவும் அமைகின்றன. செய்தியிடப்பட்ட சம்பவங்களுள் பெரும்பாலானவை தொடர்பில் ஆயுதப்படையில் பணியாற்றி வருகின்றவர்களே பொறுப்புடையவர்களாக காட்டப்பட்டுள்ளது. ஆயினும் ஆயுதப்படையிலிருந்து இடைநடுவில் கைவிட்டுச் சென்றவர்களாலும் புரியப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பலசம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
1998 ஆம் ஆண்டில் பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக அறிக்கையிடப்பட்டவாறு ஆயுதப்படை அங்கத்தவர்களால் புரியப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 37 ஆகும். இவற்றுள் 08சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் 22 சம்பவங்கள் பற்றிய ஆரம்ப வழக்கு விசாரணைகள் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இரண்டு சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட நீதிமன்றத்திலும் மேலும் இரு சம்பவங்கள் தொடர்பில் மேல்நீதிமன்றத்திலும் வழக்கு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மூன்று சம்பவங்கள் தொடர்பில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. 18 சம்பவங்கள் யுத்தம் நடைபெறுகின்ற வட - கிழக்கில் பகுதிகளிலிருந்தும் 19 சம்பவங்கள் ஏனைய பகுதிகளிலிருந்தும் செய்தியிடப்பட்டவையாகும்.
பொலீஸ் மற்றும் ஆயுதப்படை அங்கத்தவர்களுள் ஒருசிலர் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு வேறு சிலரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 1998இல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அல்லது வழக்கு விசாரணைக்காக முன்வைக்கப்பட்ட ஒருசில சம்பவங்கள் சம்பந்தமான தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
1. மணிருர் பாலியல் வல்லுறவு வழக்கு
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது கணவனுக்கு உணவு கொண்டு சென்ற பெண்மீது மண்டுர் இராணுவக் காவலரணைச் சேர்ந்த
49

Page 27
படைவீரர் இருவர் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர். இச்சம்பவம் 1996 டிசெம்பர் மாதம் 16ஆம் திகதியே இடம்பெற்றது. இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில மார்ச் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றுக்கொண்டிருந்தது. போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக அன்றைய தினம் சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்குச் சமூகமளியாததோடு வசதியான நீதிமன்றமொன்றுக்கு வழக்கை மாற்றித்தரும்படி குற்றச்சாட்டப்பட்டவர்களின் சட்டத் தரணிகள் கேட்டுக்கொண்டனர்.
2 அரியாலை பாலியல் வல்லுறவு வழக்கு
1997 ஜூலை 07 ஆம் திகதி இராணுவ வீரர்கள் இருவரால் பாடசாலை மாணவி மீது பாலியல் வல்லுறவு புரியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய வீரர்கள் இருவரும் வளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரதிவாதியின் சட்டத்தரணிகள் சமூகமளிக்காமையினால் வழக்கு விசாரணை ஜூன் 15ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
3 அம்பலாங்கொடை பாலியல் வல்லுறவு வழக்கு
மே மாதம் 27ஆம் திகதியன்று அம்பலங்கொடையில் வைத்து படையிலிருந்து கைவிட்டுச்சென்ற ஒருவரும் அவரது உதவிக்கு வந்தவரும் ஜேர்மனியப் பெண்மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் கூறப்படும் சம்பம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 நிட்டம்புவ பாலியல் வல்லுறவு வழக்கு
நான்கு வயதுடைய சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட சந்தேக நபருக்கு அத்தனகல்ல நீதவான் ரூ 7,500 ரொக்கப் பிணையும் ரூ 10,000 சரீரப்பிணையும் விதித்துள்ளார். மேலும் சந்தேக நபர் தினந்தோறும் நிட்டம்புவ பொலீஸ் நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளார். வைத்திய அறிக்கையின்படி சிறுமிக்கு உள்ளக் காயங்கள் ஏற்பட்டள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பிலுள்ள வைத்திய நிபணரிடம் அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது.
50

5 திஸ்ஸமஹாராம பாலியல் வல்லுறவு வழக்கு
பன்சலைக்குச் சென்று திரும்பிவந்துகொண்டிருந்த 65 வயதுடைய பெண்ணை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியதாகக் கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பாக படையிலிருந்து இடைநடுவில் கைவிட்டுச்சென்ற 24 வயதுடைய ஒருவரை திஸ்ஸமஹாராம பொலீஸார் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
6. ராஜன் வேலாயுதபிள்ளை பாலியல் வல்லுறவு வழக்கு
1996 செப்டெம்பர் 30 ஆம் திகதி ஆணைக்கோட்டையில் வைத்து ராஜினி வேலாயுதபிள்ளை எனும் பெண் பாலியல் வல்லுறவு புரியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளர். அவரைக் காலை ஏழு மணியளவில் கோண்டாவில் பஸ் டிப்போ காவலரணில் இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்தனர். சம்பவம் தெடர்பில் இராணுவ கோப்ரல் ஒருவரும் மூன்று படைவீரர்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணையின் பொருட்டு 1998 ஜுன் 19 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. சான்றுகளாக முன்வைக்கப்பட்ட பொருட்களினதும் ஆவணங்களினதும் எண்ணிக்கை 22 ஆகும். குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தவறாளிகளாக நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயுதப்படையினர் பொறுப்புக் கூறுவதிலிருந்து விலகிச் செல்லும் நிலை இதனால் ஒழிக்கப்படுவதோடு நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையும் உருவாகியுள்ளது.
கிரீசாந்திகுமாரசாமிபாலியல் வல்லுறவு புரிந்து கொலை செய்யப்பட்டமை,
இவ்வாண்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் மிகமுக்கியமான வழக்குத் தீர்ப்பாக கருதப்படவேண்டியது 17 வயதுடைய பாடசாலை மாணவியான கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை வழக்குத் தீர்ப்பு ஆகும். சம்பவம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தோன்றிய எதிர்ப்பு மற்றும் பெண்ணிலைவாதக் குழுக்களால் கொழும்பில் நடாத்தப்பட் சத்தியாக்கிரகம் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதெனக் கூறலாம். மக்களின் தீவிர கவனத்தை ஈர்த்த இவ்வழக்குத் தீர்ப்பு 20 மாதமளவிலான குறுகிய
51

Page 28
காலப்பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 08 இராணுவ வீரர்களுக்கும் ஒரு பொலிஸ் கொஸ்தாப்புக்கும் கொலை செய்த குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு, பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டப்பட்ட 05 பேர்களுக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனையும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தாக்குதல், பாலியல் வல்லுறவு மற்றும் கொலை போன்ற குற்றச்செயல்கள் சம்பந்தமாக இராணுவத்திலிருந்து இடைநடுவில் கைவிட்டுச் சென்ற படையினருக்கும் ஊர்காவல் படையினருக்கும் எதிராக பல செய்திகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தன.
24 கருக்கலைத்தல்
சட்டவிரோதமான கருக்கலைப்பு மற்றும் அதன்பின் தோன்றிய ஒருசில பாதகவிளைவுகள் பற்றிய செய்திகள் கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தன. அவ்வறிக்கைகளைப் பின்வருமாறு சுருக்கமாக்க காட்டலாம்.
* கருக்கலைப்பின் விளைவாக பாணந்துறையில் இருபிள்ளைகளின் தாயான 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் மிகையான குருதிப்பெருக்கே, தல்முருவ என்ற பிரதேசத்திலேயே கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. கருக்கலைப்பு செய்தவருக்க ரூ 1400 கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இந்நபர் அதன்பின் பொலீஸில் சரணடைந்துள்ளார். பாணந்துறை பதில் கடமையாற்றும் நீதவான் இவரை விளக்கமறியலில் வைத்துள்ளார். (சண்டே டைம்ஸ் ஜனவரி 25)
* உரிய வகையில் கருக்கலைப்பு செய்யாததால் நிக்கதலுபொத்த எனும் இடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரும் அவரது காதலனும் மேற்படி கருக் லைப்பைச் செய்துகொள்வதற்காக பக்மீகொல்ல பகுதியைச் சேர்ந்த மருத்துவரொருவதுக்கு ரூ 8000 பணத்தைச் செலுத்தியுள்ளர். நிலைமை மோசமடைந்ததால் இப்பெண் மருந்தகமொன்றுக்கும் அதன்பின் குருநாகல் அரசாங்க வைத்தியசாலைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சட்டளையிட்டுள்ளார்.
52

**
* யாழ்ப்பாணத்தில் வைத்து சூத்தலைத்துக் "தெரண்ட நடுத்தரவயதுடைய ஒரு பெண் பருத் திறநீதவான் ன்ே நிறுத்தப்பட்டபின் ஈராண்டு காலப்பகுதிக்கு இன்நிறுத்தப்பட் ஈராண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கந்கிக்லைப்பைச் செய்தவருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது. கருக்கலைப்பின் விளைவாக கோளாறு காரணமாக இவர் மானிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் கருக்கலைப்பு சம்பந்தமான தகவல்களை பெறப்பட்டன. தனது மகளும் கர்ப்பமுற்றிருக்கின்ற நிலையில் இப்பெண்ணும் கர்ப்பமுற்றுதால் வெட்கம் காரணமாக கருக்கலைத்துக் கொள்ள இவர் முயற்சிசெய்ததாக இதுபற்றி செய்தி வெளிவந்துள்ளது. (சண்டே ஒப்சேவர், மார்ச், 30)
இலங்கையில் அதிகளவில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுதல் சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் குடித் தொகை பற்றிய சம்மேளனப் பிரதிநிதிகள் உட்பட முன்னணி மருத்துவ தொழில்வல்லுனர்கள் தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்கள். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் குடித்தொகை பற்றிய அலுவலகம் சுட்டுக்காட்டுவதற்கிணங்க இலங்கையில் நாள்தோறும்' முறைசாரா வகையில் மேற்கொள்ளப்படுகின்ற கருக்கலைப்பின் விளைவாக தாய்மார்களின் மரணமும், மிகக் கூடிய அளவில் இடம்பெறுகின்றனவென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பு சட்டவிரோதமானதாக பிரகடனஞ் செய்யப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகளிலும், பாதுகாப்பான கருக்கலைப்பு சம்பந்தமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்பாலான நாடுகளிலும் இந்நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. சட்டவிரோத கருக்கலைப்பின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் குடித்தொகைபற்றிய சம்மேளனத்தால் பாதுகாப்பான தாய்மாருக்கான பிரச்சார இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
மிகவும் விசேசமான சந்தர்ப்பங்களிலின்றி கருக்கலைப்பானது சட்டவிரோதமானதாக அமைந்தபோதிலும் கருக்கலைப்பிற்கான தேவை மற்றும் அதற்காக நிலவுகின்ற கேள்வி சம்பந்தமாக உத்தியோகபூர்வமற்ற அங்கீகாரங்களும் காணப்படுகின்றது. குடும்பத்திட்ட அமைப்புகள் மூலமாக குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தமாக பெற்றுக்கொள்ளக்கூடிய மருந்துவகை
* பெண்ணுரிமைகள் கணர்காணிப்பு 1998 - 3வது காலாண்டு
53

Page 29
பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதோடு தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான நேரடி தொலைபேசி வசதிகளும், வழங்கப்பட்டுள்ளன. பல குடும்பத்திட்ட மருத்துவப் பிணிச் சேவை நிலையங்களால் "மாதவிடாய் ஒழுங்கு முறைப்படுத்தல்" தொடர்பான சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது கருக்கலைப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ள பொருத்தமான ஊடகமாகக் கூறப்படுகின்றது. கருப்பிலுள்ள பொருட்களை வேதனையின்றி வெளியே இழுத்துக்கொள்ளும் முறையொன்று இங்கு அமுலாக்கப்படும். இதற்காக ரூ. 750ரூபா அறவிடப்படும். நிதிவசதிபடைத்த எந்தவொரு பெண்ணுக்கும் அநாவசியமான கர்ப்பத்தை அகற்றிக்கொள்ளவேண்டுமாயின் மிகச்சிறந்த ஆரோக்கிய நிலைமையின் கீழ் பல தனியார் வைத்திய சாலைகளில் இதனைச் செய்துகொள்ள முடியும். இதற்கான செலவு ஆயிரம் ரூபாவை விஞ்சியதாக அமையக்கூடும்.
இதற்கு மேலதிகமாக சிசுக்கொலையும் இலங்கையில் உயர்ந்தளவில் நடைபெற்றுவருவதாக செய்தி வெளியிடப்பட்டோ, கண்டுபிடிக்கப்பட்டோ உள்ளது. பிள்ளைகளை கை கைவிட்டுச் செல்கின்ற அதிகளவிலான சம்பவங்கள் பொலிசாராலும், நன்னடத்தைச் சிறுவர் பாதுகாவல் திணைக் களத்தாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அநாவசியமான பாலகர்களை விற்பனை செய்கின்ற அல்லது கொள்வன செய்யக்கூடிய மூலமாக இலங்கையானது உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் பிரசித்திப்பெற்றுள்ளது.
இவ்வணைத்து விடயங்கள் மூலமாக இலங்கையின் கருக்கலைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டியதன் தேவையும் நிலவுகின்றதெனவும் தெரிவுசெய்கின்ற சுதந்திரம் பெண்ணுக்கு இருக்கவேண்டுமெனவும், பாதுகாப்பான கருக்கலைப்பு வாய்ப்புக்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதுவுமே சுட்டிக்காட்டப்படுகின்றது.
கருக்கலைப்பு சம்பந்தமான சட்டம்
தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கிணங்க ஒரு தாயின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்திற்காக மாத்திரமே கருக்கலைக்க அனுமதியுண்டு. ஏனைய சந்தர்ப்பங்களில் அத்தகைய கருக்கலைப்பைச் செய்தவர் 07 ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுவதுடன், அத்தகைய கருக்கலைப்பு காரணமாக பெண் உயிரிழந்தால் கருக்கத்தவர் 20
54

ஆண்டுகாலக சிறைத்தண்டனை விதிக்கப்படக் கட்டுப்பட்டவராவார். பாலியல் வல்லுறவு அல்லது முறையில்லாப் புணர்ச்சியின் காரணமாக பெண் கருத்தரித்திருந்த வேளையில் கருக்கலைத்தலானது சட்டவிரோதமான செயலாகவே கருதப்படுகின்றது. அதேவேளையில் கருக்கலைத்துக்கொண்ட பெண்ணும் குற்றவியல் தவறு புரிந்தவராகவே கருதப்படுவார். அதைப் போலவே கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட கருவை வெளியேற்றப்பட்ட கரு உயிருள்ளநிலையில் காணப்படட்டதாக உறுதிசெய்யப்பட்டால் சிசுக்கொலை எனும் தவறைப் புரிந்தமைக்காக அதற்கான கடுந்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலையும் உருவாகும். தற்போதுநடைமுறையிலுள்ள சட்டத்தின்படி கருக்கலைத்தலுக்கான அனுமதியானது தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாத்திரம் மருத்துவ ரீதியான காரணங்களின் நிமித்தம் வழங்கப்படுகின்றது. இது தவிர்ந்த ஏனைய எல்லா நிலைமைகளின் போதும் அதாவது பாலியல் வல்லுறவு முறையில்லாப் புணர்ச்சி உருக்குலைவு பற்றிய இடர்வரவுச் சாத்தியம் போன்ற எந்தவொரு நிலைமையிலாயினும் கருக்கலைத்தல் சட்டவிரோதமான செயலாகவே அமையும்.
இலங்கைச் சட்டத்தில் கருக்கலைத்தலானது இருநூறு ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட உரோமன், டச்சு, மற்றும், ஆங்கிலேயப் பொதுச்சட்டத்தின் சித்தாந்தங்களுக்கமையவே வலுவிலுள்ளது. ஆங்கிலேயர்களும், ஒல்லாந்தர்களும் சமூகமாற்றதோடு தமது சட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது பொருத்தமானதென கருதிய போதிலும் இலங்கையில் சட்டங்களை உருவாக்குவதில் (குறிப்பாக கருக்கலைத்தல் சம்பந்தமாக) தற்போதும் தயக்கம் காட்டி வருகின்றனர். 1995 இல் தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களின் கீழ் பாலியல் வல்லுறவுமுறையில்லாப் புணர்ச்சி மற்றும் கரு உருக்குலைந்து காணப்படுதல் பற்றிய வைத்திய ரீதியான சான்றுகள் முன்வைக்கப்படுகையில் கருக்கலைப்பிற்கான அனுமதி வழங்கப்படுதல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டபோது முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக, கருக்கலைத்தல் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட சட்டத்திருத்தத்தை வாபஸ்பெற வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு உள்ளது.
ஆயினும், இத்திருத்தங்களை மீண்டும் சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் அங்கு குறிப்பிட்டபோதிலும் அவ்வாக்குறுதிக்கிணங்க மேற்படி திருத்தமானது இற்றைவரை மீண்டும் பாராளுமன்றத்தில்ட சமர்ப்பிக்கப்படவில்லை.
55

Page 30
சிறுவர் பாலியல் துவர்பிரயோகம்,
1995 இல் தண்டனைச் சட்க்கோவையின் 360 (அ) வாசகத்தில் மேற்கொண்ட திருத்தத்தின் மூலம் பாலியல் துஷ்பிரயோகமும் சிறுவர் வியாபாரமும் குற்றச்செயல்களாக அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய திருத்தம் கொண்டுவரப்படக் காரணமாக அமைந்தது யாதெனில், குறிப்பாக பாலியல் கருமங்களுக்காக சிறுவர்களை (ஆண்) ஆற்றுப்படுத்துகின்ற பிரச்சினைமீது தீவிர கவனஞ் செலுத்தப்பட்டுள்ளமையே. இத் திருத்தம் மூலமாக எவரேனுமொருவர் பணத்திற்காக அல்லது வேறு ஏதேனும் ஒரு கைமாற்றுக்காக வேறொருவருக்கு விற்பனை செய்கின்ற அல்லது வேறோருவரால் கொள்வனவு செய்யப்படுகின்ற அல்லது பரிமாற்றஞ் செய்யப்படுகின்ற நிலைமையைத் தடைசெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இத்திருத்தின் கீழ் விலைமாதர்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதும், குற்றவியல் தவறாக வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திருத்தம் மூலமாக கூட்டியிடுதல் தொடர்பாகவன்றி விலைமாதர் சம்பந்தமாகவே கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. இத்திருத்த்தின் கீழ் விபச்சார நிலையங்கள் சுற்றிவளைக்கப்படுதல், மற்றும், வலதுவந்த நபர்கள் கைது செய்யப்படுதலும் சம்பந்தமான பல செய்திகள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தன. இத்திருத்தின் மூலமாக வயதுவந்தவர்களுக்கிடையில் இடம்பெறுகின்ற பாலியல் நடவடிக்கைகளும் வேறாகுமென்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் அறிமுகஞ்செய்யப்பட்ட தெருச்சுற்றி மற்றும் வேசியக கட்டளைச் சட்டமானது இன்னமும் நம்நாட்டில் விலைமாதர் சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்டமாகக் காணப்படுகின்றது. அதைப்போலவே பாலியல் சேவையில் ஈடுபடுகின்ற பெண்களால் வணிகரீதியான அடிப்படையின் கீழ் தமது சுயவிருப்பத்துடன் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் இச்சட்டத்தின் கீழ் அதைனையும் சட்டவிரோதமானதாக்க இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. தெருச்சுற்றி கட்டளைச் சட்டத்தில் கீழ் விபச்சாரியாக கருதப்படுகின்ற அல்லது தெருவிலே சுற்றித்திரிபவராக கருதப்படுகின்ற பெண்ணை நீதிமன்றப் பிடியாணையின்றி கைது செய்வதற்கான அதிகாரம் பொலிசாருக்கு இருக்கிறதோடு, அத்தகைய ஒரு பெண்ணை 14 நாட்கள் சிறையில் வைக்கவும், நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. விபச்சாரியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபரையோ அவரை வழங்கியவரையோ இதே சட்டத்தின் கீழ் கைது செய்ய இயலுமென்பதுடன், சிறிய அபராதமொன்றை விதிப்பதன் மூலம் விடுதலை செய்யப்படவும் முடியும், வேசியக் கட்டளைச் சட்டத்தின் கீழ்
56

விபச்சாரியோடு பாலுறவு கொண்டவரையோ வழங்கல் தொழில் ஈடுபட்டவரையோ கைது செய்ய இயலாது.
பெண்களைப் பாதுகாக்கவோ அவர்களது உரிமைகள் சம்பந்தமாகவோ 1995இல் அறிமுகஞ் செய்யப்பட்ட திருத்தங்கள் போதுமானதாக அமையவில்லை. சமூகமும் குற்றவியல் நீதிமுறையும் இதுவரையும் விலைமாதர்களுக்கெதிராக செயற்பட்டு வருவதுடன் சமூகமுறையானது அவர்களைச் சதாகாலமும் இழிவுபடுத்தியும், வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தாம் சுரண்டப்படுவதைத் தடுக்கவோ, தம்மீது பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்கவோ இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண்களைக் கூட்டியிடுதல் சம்பந்தமான பிரச்சினைக்கும் இத்திருத்தங்கள் மூலமாகத் திட்டவட்டமான முறையில் பொருள் கூறப்பட்டு இப்பிரச்சினை மிகவும் திட்டவட்டமான முறையில் பொருள் கூறப்பட்டு தீர்க்கப்படவேண்டும். நம்நாட்டில் நிலவுகின்ற யுத்தச் சூழ்நிலையின் கீழ் எல்லைப்புறக் கிராமங்களிலும், இராணுவ முகாம்களுக்கு அருகாமையிலும் விபச்சாரம் மற்றும் பாலியல் சேவைகள் வளர்ச்சியடைந்துள்ளமை பற்றிய செய்திகள் பரவலாக யுக்திய மற்றும் ராவய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இப்பிரச்சினைகள் வெளிவராமலோ கட்புலகானாத வண்ணமோ காணப்படுவதோடு, இந்நிலையானது யுத்தச் சூழ்நிலையில் கீழ் அவசியமான அம்சமாக மாறியுள்ளதென சகித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையும் காணக்கூடியதாக உள்ளது. இங்கும் கூட பெண்ணுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் நிலவுவதில்லை. அத்துடன் அனைத்துவிதமான பாலியல் சுரண்டல்களுக்கும் பாதுகாப்பற்ற பாலியல் சேவையின் அபாயரகமான விளைவுகளுக்கும் இப்பெண்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
3 பெண்களும் வெளிநாருகளில் பணியாற்றுகின்ற பெண்களும்
தொழிலுக்காக இந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையருள் பெரும்பாலானவர்கள் பெண்களாக அமைவதோடு இவற்றுள் பயிற்றப்படாத அல்லது பகுதியளவில் பயிற்றப்பட்ட ஊழியர்களாகவே உள்ளனர். பெண்கள் ஈடுபடுகின்ற தொழில்களாக வீட்டுவேலைகள், ஆலைத்தொழில்கள், மற்றும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தாதிமார் மற்றும் ஆசிரியர் சேவை முதலியவற்றைக் குறிப்பிடலாம். பெரும்பலானவர்கள் மேற்கு ஆசிய நாடுகளில் பணியாற்றி வருவதோடு மற்றும் சிலர் கிழக்காசிய நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக தோன்றிய
57

Page 31
பொருளாதாரத்தைச் சீர்குலைவு காரணமாக இந்நாடுகளிலுள்ள தொழிற்சந்தை சுருங்கியுள்ளது. ஒரு சில நாடுகள் ஒரு சில பாதுகாப்புக் கொள்களைக் கடைபிடித்து ஒரு சில துறையைச் ஊழியர்களைத் தமது நாடுகளிலிருந்து வெளியேற்றியதோடு சட்டவிரோதமாக தொழிலுக்காக தமது நாடுகளில் தங்கி இருப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் முயற்சி செய்துள்ளன. இத்தகைய உழைப்பாளிகளுள் பெரும்பாலானவர்கள் பெண்களாக அமைவதோடு இவர்கள் தீவிரமாக சுரண்டப்படுவதற்கும், துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதற்குமான இடர்வரவுக் சாத்தியங்கள் நிலவுகின்றன.
1998இல் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் நூற்றுக்கு 74 சதவீதமானவர்கள் பெண்களாக அமைவதோடு இவ்வாண்டில் இலங்கை ஈட்டிய மொத்த செலவாணி 64,585.00 மில்லியன் ரூபாய்களாக அமைந்தது. ? இது அந்நிய செலாவாணியை ஈட்டித்தருகின்ற மூலங்களுள் இரண்டாமிடத்தை வகித்தது.
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களது நலனோம்பல் பற்றிய பொறுப்பான வகிக்கின்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தவகல்களின் பிரகாரம் 1998ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் பல்வேறு மனக்குறைகளுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாமை சம்பந்தமாக இவர்களுக்குச் செலுத்தப்பட்ட நட்டஈடானது 57.7 மில்லியன் ரூபாய்களாக அமைந்தது. 4660 நபர்களுக்காகவே இத்தகைய நட்டஈடு செலுத்ப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கு 70 சதவீதமானோர் பெண்களாக அமைவதோடு, இவர்கள் மீறப்பட்டவை முதலியனவாக அமைந்ததோடு ஒரு சில சந்தர்ப்பங்களில் கடமையிலீடுபட்டிருந்தபோது உயிரிழந்தமைக்காக குடும்ப அங்கத்தவர்களுக்கு நட்டஈடு செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
வண்முறைச் சம்பவங்கள்
1998இல் பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக அறிக்கையிடப் பட்டதன் பிரகாரம் பத்திரிகைச் செய்திகளுக்கிணங்க வெளிநாடுகளுக்குச் சென்ற
பெண்களுக்கெதிராக புரியப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களுக்கிடையில் தாக்குதல், பாலியல் வன்முறைகள், உடல், உளரீதியான துன்புறுத்தல்கள்,
'Sri Lanka Economic indicators - Daily News 28th June 1999
58

கொலைகள் முதலியன அடங்குகின்றன. துவஷ்பிரயோகம் காரணமாக தற்கொலை புரிந்த சம்பவங்களும் நேர்ந்துள்ளன.
பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலம் அறிக்கையிடப்பட்டதன் பிரகாரம் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற பெண்களுக்கெதிராக புரியப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பற்றிய சில உதாரணங்கள் கிழே காட்டப்பட்டுள்ளன:
O இரண்டு ஆண்டுகளாக குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக சேவையாற்றிய கே. டபிள்யூ. கீதா (வயது 29) என்பவரது மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3ஆம் திகதி உயிரிழந்துள்ளதோடு ஜூலை 27ஆம் திகதி இவரது பூதவூடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. மரண பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியரான பி.பி.பி. பெரேரா அவர்கள் இவரது மூளையும், இதயமும், சிறுநீரகமும் காணாமல் போயுள்ளதென நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இதனால், இவரது உடலின் ஒரு சில பகுதிகள் சட்டவைத்தியபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
O ஈரானில் பணியாற்றவந்த சீகிரியவை வதிவிடமாகக் கொண்ட எச்.எம். பிரேமவதி (41) என்பவர் மரணமடைந்துள்ளதாக ஜூலை 27ஆம் திகதியன்று கட்டுநாயக்கா பொலிசார் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு அறிவித்துள்ளனர். இவரது பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டாக்டர் பீ.த. எஸ். நுவன்புர அவர்கள் தெகரானிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட மரண அறிக்கை பூரணமற்றதெனவும், சட்டவைத்திய பரிசோதனைக்கு ஆற்றுப்படுத்துவதற்காக அவரது குருதி சமர்ப்பிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். நஞ்சு உடலில் கலந்ததால் மரணம் நேர்ந்துள்ளதாக அவர் சந்தேகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
O அபுதாபியில் வைத்தியசாலையில் பணிப்பெண்ணாக பணியாற்றிய களனியைச் சேர்ந்த எச்.எப். சந்ரகாந்தி ஹேரத் (35) என்பவர் மாரடைப்பால் மே மாதம் 26ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பிரோத பரிசோதனையின் மூலம் மரணத்திற்கான காரணம் மின்தாக்கமே என வெளியாகியுள்ளது.
59

Page 32
O சவூதிஅரேபியாவில் பணியாற்றிவந்த ஆர்.என். ரன்மெனிக்கா (41) என்பவரது சடலம் செப்டம்பர் 06ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவர் மார்ச் மாதம் 27ஆம் திகதி இறந்ததாகவே இவரது குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. திடீர் மரண விசாரணை அதிகாரியின் முன் சாட்சியமளித்த அவரது கணவனான திரு. ஆர்.எம்.எம். ஹின்பண்டா இவர் 1995 டிசெம்பர் 25ஆம் திகதியன்று இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றதாகக் குறிப்பிட்டார். கடந்த 09 மாதங்களாக இவரைப் பற்றிய எந்தவிதமான தகவலும் குடும்ப அங்கத்தவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர் சிரமங்களை அனுபவித்து வருவதாக தனது தொழில் முகவர் மூலமாக குடும்பத்தவருக்கு கடிமொன்றை அனுப்பிவைத்துள்ளார் அதன் பின் மீண்டுமொரு கடிதத்தை ஒரு மாத காலத்தின் பின் அனுப்பி வைத்திருந்த இவர் தான் வேறொரு இடத்தில் தொழில் தேடிக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். 1997 ஜூலை 27ஆம் திகதி இவரது வீட்டாருக்கு கிடைத்த தந்திச் செய்தியின் மூலம் அவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை இவரைப்பற்றிய எந்தவிதமான தகவலையும் குடும்ப அங்கத்தவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டாக்டர் டீ.ஐ.எல். ரத்நாயக்கா அவர்கள் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் முள்ளந்தண்டு முறிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து மேலதிக விபரங்கள் கிடைக்கும்வரை பரிசோதனை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பணியகத்தின் ஒத்துழைப்பானது சட்டபூர்வமான முறையில் அங்கீகரிக்கபடட்ட தொழில் முகவர் நிலையங்களுடாக தொழில் பெற்றுக்கொண்டவரும், பணியகத்தில் பதிவுசெய்யப்பட்வர்களுமான நபர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மாத்திரமே வழங்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. ஆயினும், நபர்கள் அனைவருமே இப்பணியகத்தில் பதிவு செய்துளொள்வதில்லை என்பதை பணியகமானது ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தகைய கட்டாயப்பதிவுச் சட்டம் அறிமுகஞ் செய்யப்படுவதற்கு முன்னராக வெளிநாடுகளில் தொழில்களைத் தேடிக்கொண்ட பல நபர்கள் இருப்பதோடு இவர்களுக்கும் பணியகத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தொழில்
60

அனுமதிப்பத்திரம் அல்லது தொழிலின்றி லெபனானில் உதவுவரின்றி வாடுகின்ற பெண்கள் பற்றிய அறிக்கையொன்றில் செப்டம்பர் 11 ஆம்திகதி திவயின பத்திரிகையில் வெளியான கட்டுரை மூலமாக அங்கிருந்து வந்திருந்த இரண்டு இலங்கையரால் விபரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள பெண்கள் மீண்டும் வீட்டுக்கு வருவதற்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொள்வதற்காக பெய்ரூட் நகர வீதிகளில் அலைந்து திரிவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது வீசா காலம் முடிவடைந்தபின் அந்நாட்டில் தங்கி இருப்பவர்களும் தொழில் அனுபமதிப் பத்திரமின்றி தங்கி இருப்பவர்களும் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் சிறைவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் சவச்சாலைகளில் இனங்காணப்படாத இலங்கையரது சடலங்கள் எவரது கவனமும் செலுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும் இவர்களுக்கிடையில் இயற்கை காரணிகள் மூலமாகவும் திடீர் விபத்துக்கள் மற்றும் தற்கொலை மூலமாகவும் மரணமடைந்தவர்களது சடலங்களும் இருப்பதாக இவர்கள் மேலும் அறிவித்துள்ளனர். இத்தகைய தவறுகள் பற்றி முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததோடு இவைபற்றிய செய்திகளும் மிகவும் குறைவாகவே வெளியாகின்றன. அத்தகைய குற்றச்செயல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்வதும் மிகவும் சிரமமான காரியமாகும். அதேவேளையில் இவ்வாறான இன்னல்களை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்காக எத்தகைய பாதுகாப்பு வழங்கப்படமுடியுமென்ற முடிவுக்கு வரவதும் மிகவும் கஷ்டமான காரியமாகும்.
வெளிநாட்டுத் தொழில்களைப் பெற்றுக்கொடுக்கும் அரசுகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உடன்படிக்கைகளில் கைச் சாத்திட்டுள்ள போதிலும் பெண்களுக்கு நேரிடக்கூடிய இன்னல்கள் சம்பந்தமாக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கத்தால் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்ட வேளைகளில் மீண்டும் அவரை இலங்கைக்கு வரவழைத்துக் கொள்ளவும் அவருக்கு நட்டஈடு வழங்கவும் ஆற்றலுடைய செயற்பாடொன்றை அமுலாக்க பணியகத்தால் இயலாமல் போயுள்ளது. அநீதியோ மீறல்களோ இடம்பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவோ குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ஆற்றலுடையதாக பணியகம் காணப்படுவதில்லை. எனவே எதிர்காலத்திலும் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய நிறுவன அமைப்பு கிடையாதென்பது காணக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.
6

Page 33
மேலும், வெளிநாடுகளிலுள்ள தொழில் தருநர்களால் மாத்திரமன்றி அந்நாடுகளில் சட்டத்தை அமுலாக்குகின்ற அதிகாரிகள், வேறு வெளிநாட்டு நபர்கள், தொழில் முகவர் நிலையங்கள் அத்துடன் சில வேளைகளில் இலங்கைத் தூதரக உத்தியோகத்தர்களாலும் புரியப்பட்ட பலவிதமான மீறல்கள் பற்றியும் செய்திகள் வெளியாகின்றது.
வெளிநாடுகளில் தொழில் தேடிச் செல்கின்ற நபர்கள் பற்றி ஏதேனும் கட்டுப்பாட்டினை விதிக்க அரசாங்கம் முயற்சி செய்துள்ளது. இதற்காக கடைப்பிடிக்கப்படுகின்ற ஏற்பாடுகளுள் கட்டாயம் பதிவும் ஒன்றாகக் காட்டப்படலாம். அதைப் போலவே போலியற்ற தொழில் முகவர் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குகின்ற ஏற்பாடுகளையும் வகுத்துள்ளது. அத்தகைய முகவர் நிலையங்களைத் தூர இடங்களில் நிறுவதுண்டுதல் அளிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் உபநிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பணியகம் உள்ளது. இத்தகைய உபநிறுவனங்கள் அனுமதிபெற்ற முகவர் நிறுவனங்களின் பின்னால் மறைந்திருந்தே இயங்கி வருகின்றன. அதேவேளையில் பதிவுசெய்தல் கட்டணத்தைச் செலுத்திய பணியாளர்களுக்காக வேலைவாய்ப்புப் பணியகம் காப்புறுதித்திட்டமொன்றையும் அறிமுகஞ்செய்துள்ளது. இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் தொழில்புரிகின்ற நபர் இறக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது, இயலாமை நிலையுறும் வேளையில் அல்லது திசைமாறித் தவித்து மீண்டும் இந்நாட்டுக்குத திரும்பிவர பிரயாண அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ள அல்லது, சுகாதாரக் காப்புறுதியைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லது, மரணச் செலவுகளுக்காக பணம் வழங்கக்கூடிய வகையில் காப்பீடு வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் பணியகத்தில் பதிவு செய்து கொண்ட பணியாளர்களால் மாத்திரமே இத்தகைய சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பணியகத்தில் ஏற்பாடுகளைப் பொருட்படுத்தாது வெளிநாடுகளில் வேலை தேடிக்கொண்டுள்ள பலர் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவ்வாறு சென்றுள்ளவர்களும், பதிவுசெய்து செய்துள்ள ஏனைய நபர்களைப் போலவே வெளிநாடுகளில் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளரென்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தற்போது ஒரு சில ஏற்பாடுகள் நிலவியபோதும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு தீர்வுகளால் பெற்றுக் கொடுக்கக் கூடிய நிறுவன அமைப்பொன்றினைத் தாபிக்க வேண்டியதும் அவசியமானதொரு
62

விடயமாக நிலவுகின்றதென்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்றபின் எதிர்நோக்கவேண்டிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கா மேலதிக அமைப்பொன்று வகுக்கப்பட்டுள்ளது. தொழில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதே அதுவாகும். இங்கு தொழில்வாய்ப்பு முகவர் நிலையத்துடனோ, தொழில் தருனருடனோ பணியாளர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டும். இவ்வுடன்படிக்கைகள் பற்றி உத்தரவாதம் அளிக்க வேண்டியதும் அவற்றை அமுலாக்குவதை மேற்பார்வை செய்ய வேண்டியதும் அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களின் பொறுப்பாக அமையும். ஆயினும், இருநாடுகளுக்குமிடையில் நிலவுகின்ற இருதரப்பு பாடுகளுடன் இவ்வுடன் படிக்கைகள் ஒருங்கிணைந்து காணப்படுவதில்லை. உடன்படிக்கை மீறல் சம்பந்தமாகவோ இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றமை சம்பந்தமாகவோ செயலாற்றுவதற்குப் போதுமான அதிகாரம் இலங்கை வெளிநாட்டுத் தூதரங்களைச் சேர்ந்த நலன்புரி உத்தியோகத்தர்களுக்குக் கிடையாது. எவ்வாறாயினும் முதலாம் கட்ட முயற்சியாக இத்தகைய தொழில் உடன்படிக்கைகள் 1998ஆம் ஆண்டில் சுமார் 10 நாடுகளில் அமுலாக் காணப்பட்டது. குவைத், சவூதி அரேபியா, ஒமான், சைய்ரஸ் மற்றும் சிங்கபூர் முதலியனவே அத்தகைய நாடுகளாகும்.
வைத்திய ப் பரிசோதனை
காப்புறுதிக் காப்பீடு மற்றும் வைத்தியப் பரிசோதனை சம்பந்தமாக ஒரு சில தெளிவற்ற தன்மைகள் தோன்றியுள்ளன. வைத்திய பரிசோதனையானது பணியகத்தின் அங்கீகாரம் பெற்ற வைத்தியரால் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும் காப்புறுதிக்குத் தேவையான வைத்திய பரிசோதனை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருக்கின்றமையும் காணக் கூடியதாவுள்ளது. ஆயினும், ஒரு சில வெளிநாடுகள் ஒரு சில திட்டவட்டமான வைத்திய பரிசோதனை அறிக்கைகளைக் கோருவதோடு இத்தகைய பரிசோதனைகள் அனைத்தும் இந்நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னராக பெறப்பட்டுள்னவா என உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை பணியகத்திற்கு நிலவுகின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அனைத்துவிதமான பரிசோதனைகளையும் நிறைகின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அனைத்துவிதமான பரிசோதனைகளையும் நிறைவு செய்ததான் காரணமாக ஒரு சில பணியாளர் மீண்டும் இந்நாட்டுக்கு வருகின்றநிலை ஏற்பட்டுள்ளது.
63

Page 34
98.06.27ஆம் திகதி வீக்கென்ட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டதன் பிரகாரம் குவைத் நோக்கி செல்கின்ற அனைவரும் கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தால் நடாத்தப்படுகின்ற வைத்திய சோதனைக்கு ஆளாக வேண்டும். இவ்வைத்திய பரிசோதனை கொழும்பில் நடாத்தப்படுவதால் தூரப் பிரதேசங்களிலிருந்து வருகின்ற பெண்கள் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்குவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தூதரகம் வீசா அனுதிப் பத்திரத்தை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து ரூ. 1700 அறவிடுகின்றது. வெளிநாட்டுத் தூதரகமொன்று மூலமாக வீசா வழங்குவதற்காக மேற்கொண்டுவருகின்ற ஏற்பாடுகளை மாற்றியமைக்கக் கூடியவகையில் தலையீடு செய்யும் அதிகாரம் தமக்கில்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பும் பணியகம் கூறுகின்றது. பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர்களிடமிருந்து வைத்திய சான்றிதழைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வீசா வழங்கப்படமாட்டாது. வைத்திய சான்றிதழ் இல்லாத சந்தர்ப்பங்களில் அவர்கள் மீண்டும் குவைத்திலிருந்து இந்நாட்டுக்கு திருப்பி அனுபப்பப்படுவதாக அறிக்கைகளில் குறிப்பிட்டள்ளன எனவே இப்பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. புதிய சட்டங்களின் மூலமாக தகைமையுடைய பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பணியகத்தின் கடமையாகும். ஒரே நிறுவனத்தின் மூலமாக வீசா மற்றும் வைத்திய சான்றிதழ் தொடர்பான ஏற்பாடுகளை வகுக்க வேண்டுமென்பதோடு அத்தகைய ஏற்பாடுகள் பற்றி சம்பந்தப்படட நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இறுதித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவும் வேண்டும்.
பலவந்தமான கருத்தடை
98.06.13 ஆம் திகதி வீக் கென்ட் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்த வகையில் சவூதி அரேபியா நோக்கிப் பயணம் செய்ய எதிர்பார்த்திருந்த ஒரு பெண் பலவந்தமான வைத்திய பரிசோதனைக்கு ஆளாகவேண்டி இருந்ததெனவும் இதற்காக eb. 1200 பணம் செலவாகியதெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பரிசோதனையை மேற்கொள்வதற்கான அனுமதி ஆறு வைத்தியர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக இவருக்கு அறிவிக்கப்பட்டதோடு இவரை கிரான்பாஸ் பகுதியிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க குவைத் குருதிப் பரிசோதனையொன்றைச் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதோடு இவருக்கு தடுப்பு மருந்தொன்றினை
64

ஏற்றுவதற்காக மாதவிடாய் இடம்பெறுகின்ற தினத்தில் மீண்டும் வருமாறு அறிவித்துள்ளார்கள். அனுராதபுரத்தை வதிவிடமாகக் கொண்ட இவர் 10 நாட்களுக்குப்பின் மீண்டும் வந்ததாகவும் அங்கு இவருக்கான வைத்திய சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன் அவரது சம்மதமின்றி அங்கு இவருக்கான கருத்தடைக்கான தடுப்பூசி ஏற்றப்பட்டதாகவும், அவர் நிருபருக்கு அறிவித்துள்ளார். இது நிச்சயமாகவே ஒரு பெண்ணுக்குத் தனது உடல் சம்பந்தமாக உள்ள உரிமையையும் தனது உடலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் கருவளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் உள்ள உரிமையையும் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவேண்டும். இந்நிலைமை காரணமாக ஒரு பெண் வெளிநாட்டில் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு முன் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளை மேற்பார்வை செய்யவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தால் ஏற்கப்படவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வெளிநாட்டுத் தொழில்களுக்காக செல்கின்றவர்களுக்கான வைத்திய சான்றிதழ் அரசாங்க வைத்தியசாலைமூலம் பெறப்பட வேண்டுமென விதிக்குமாறு அதிகாரம் பெற்ற வெளிநாட்டுத் தொழில் முகவர் நிறுவனங்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான காரணம் யாதெனில், தொழில் உடன்படிக்கையின் கீழ் தேவைப்படுகின்ற வைத்திய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது ஒரு சில பெண்களின் சம்மதத்துடனோ சம்மதமின்றியோ கருத்தடை தடுப்பூசி ஏற்றப்பாடுள்ளதாக முறைப்பாடுகள கிடைத்துள்ளமையே. அதிகாரம் பெற்ற வெளிநாட்டுத் தொழில் முகவர் நிறுவனங்களுக்குச் செய்தியொன்றை வெளிநாட்டு ஒரு சில தனியார் மருத்துவ நிலையங்கள் வைத்திய பரிசோதனைக்காக பெண்களிடமிருந்து ரூ. 4000 வரையான அதிகளவு பணத்தை அறவிட்டுள்ளதாகவும் இதற்கான பற்றுச்சீட்டுக்களேனும் இந்நிலையங்களால் வழங்கப்பட்டுவதில்லையெனவும் கூறியுள்ளார்.
செம்டம்பர் மாதம் 01 ஆம்திகதியிலிருந்து அமுலாக்கக் கூடியவாறு மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காகச் செல்கின்ற இலங்கையர் அனைவரும் விசேட வைத்திய பரிசோதனைக்கு ஆளாகவேண்டும இவ்வைத்திய பரிசோதனையானது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்படுகின்ற வைத்தியர்களைக் கொண்ட குழுவினாலேயே நடாதத்தபடும். வைத்திய பரிசோனைக்குச் சமூகமளித்தககத் தவறுபவர்களினது பதிவு இல்லாதொழிக்கப்பட்டு பதிவுக் கட்டணம் மீளச் செலுத்தப்படுமென வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
65

Page 35
சட்டரீதியான வரையறைகள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைக்காக தயாரிக்கப்பட்ட பலவிதிகள் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரிலும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களினதும், உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்பாடு மூலமாக அறிமுகஞ் செய்யபட்பட்டுள்ளது. ஆயினும், இவ்வுடன்படிக்கையில் தற்போது இலங்கை உட்பட 10 நாடுகளைப் பார்க்கிலும் குறைந்த எண்ணிக்கையுள்ள நாடுகளே கைச் சாத்திட்டுள்ளன. இடம்பெயர் பணியாளர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்ற எந்தவொரு அரசும் இவ்வுடன் படிக்கையில் கைச்சாத்திட்டிராததோடு, இந்நிலையின் கீழ் உடன்படிக்கையானது இதுவரை அமுலுக்கு கொண்டுவரப்படாமலேயே இருக்கின்றது.
உடன்பாடின் 16வது வாசகத்தின்படி அரச அலுவலர்களால் அல்லது தனிநபர்களால் அல்லது குழுக்கள் அல்லது, நிறவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைச் செயல்கள், உடல் ரீதியான ஊறு விளைவித்தல், மிரட்டல்கள் மற்றும் பயமுறுத்தல்களிலிருந்து இடம்பெயர்ந்து தொழில் புரிகின்ற பெண்களைப் பாதுகாப்பதற்காக அரச மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் குறப்பிடப்பட்டள்ளது. 10வது வாசகம் மூலமாக, ஏனைய வற்றிறுக் கிடையில், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிரான சித்திரவதைகள் புரியபப்டுவது தடைசெய்யப்படுள்ளதோடு அடிமைத்தனத்திலிருந்தும், பலவந்தமான கட்டாயச் சேவையிலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. (11வாசகம்) அதைப்போலவே இடம்பெயர் பணியாட்களுக்கான ஆகக் குறைந்த சேவை நிபந்தனைகள், கொடுப்பனவுகள், மருத்துவ வசதிகள் மற்றும் சமுகப்பாதுகாப்பு நிலவுவதற்கான ஆகக் குறைந்த நியமங்களும் இவ்வுடன்படிக்கை மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (245 - 30 ஆம் வாகம்) மேலும், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது பொருளாதார, சமூக, கலாசார, மற்றும் ஏனைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவகையில் ஒன்று சேர்வதற்கான உரிமை இவ்வுடன்படிக்கை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. (வாசகம் - 40) அரச கல்வியும் சகாதார சேவைகளையும் பெற்றுக்கொள்வதில் சமமான சிறப்புரிமைகளால் பெற்றுக்கொள்வதற்கான உரிமை இவ்வுடன்படிக்கையின் 41வது வாசகம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய எந்தவிதமான பாதுகாப்பும் இற்றைவரை இடம்பெயர் தொழிலாளர்களுக்கு
66

கிடைக்கவில்லையென்பதோடு அவ்வுடன்படிக்கையின் நிபந்தனைகளை அமுலாக்குமாறு பேரம் பேசுவதற்கான எந்தவித ஆற்றலும் தொழிலாளர்களை எற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இல்லை என்பது தெளிவாகின்றது.
தொழிலாளர் வருகைக்கு வாய்ப்பளித்துள்ள அரசுகள் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லையென்பதோடு தொழிலாளர்களின் குடியகழ்விற்கு இடமளித்துள்ள அரசுகளுடன் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கேனும் விருப்பம் காட்டாலைக் காணக்கூடியதாக உள்ளது. இதுவும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், உழைப்புச் சுரண்டல், பாரபட்சம் காட்டப்படுதல் மற்றும் எல்லாவிதமான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கதாக மேற்கொள்ளக்கூடிய சாதகமான வழிமுறையாகும்.
4 பெண்களும் இனப்பிரச்சினையும்
வடக்கு - கிழக்கு நடைபெறுகின்ற யுத்தத்தின் தாக்கமானது பெண்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருவகையில் இடம்பெறுகிறது. 1998இல் இடம்பெற்ற பல சம்பவங்களின் விளைவாக பெண்ணின் வாழ்க்கைமீதும், பல்வேறு பாதகமான தாக்கங்களை பிறப்பித்துள்ளது. இதன்தாக்கமானது வடக்கு - கிழக்குப் பகுதியிலும் எல்லைப்புறக் கிராமங்களிலும் வசிக்கின்ற மக்கள்மீதும் தென்பகுதியில் வசிக்கின்ற மக்கள் மீதும் பல்வேறு மடடங்களில் உருவாகியுள்ளது.
ஆயினும், அரச அல்லது அரசதுறையற்ற அல்லது எதிர்க்கட்சியினர் அல்லது இப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் இந்த மோதலைத் தீர்ப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஈடுபட்டிராமை அனைவருக்கும் கவலையைத் தரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது. அதேவேளையில் இம்மோதல் பேணிவரப்படுகையிலும் கூட மனித உரிமைகள் மற்றும், மனித நேயமுள்ள சிந்தாதங்களுக்கு இணங்கவும் மோதலில் சிக்கித்தவிக்கும் ஏனைய பிரஜைகளின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பேணிவருதல் தொடர்பாகவும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரான அரசாங்கமும், எல்.ரீ.ரீ.ஈ இயக்கமும் அக்கறை காட்டுவது கிடையாது.
1998 இல் இடம்பெற்ற ஒருசில சம்பவங்கள் பெண்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றிய சிலவிடயங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
67

Page 36
கணிடியிலும் கொழும்பிலும் நிகழ்ந்த குணர்கு வெடிப்புகள்
இனப்பிரச்சினை மீது தாக்கத்தை ஏற்படுத்திய முக்கியமான ஒருசில சம்பவங்களை 1998 ஆம் ஆண்டில் காணக்கூடியதாக இருந்தது. இவற்றுள் மிகமுக்கியமான சம்பவமாக கருதப்படக்கூடியது சுதந்திரப் பொன்விழா வைபவம் கொண்டாடப்பட சில நாட்களுக்கு முன் ஜனவரி 25ம் திகதியன்று கண்டி தலதாமாளிமைமீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலே. இதன் விளைவாக தலதா மாளிகைக்கு சேதம் ஏற்பட்டதோடு 17 பேர் மரணம் அடைந்தனர். குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பல தீவைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது சம்பவம் தற்கொலைக் குண்டுதாரியான ஒரு பெண்ணால் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி கொழும்பு விமானப்படைக் காவலரண்மீது புரியப்பட் தாக்குதலாகும். இத்தாக்குதலின் போது மூன்று பொதுமக்கள் ஒட்பட 9 நபர்கள் மரணமடைந்ததோடு சம்பவத்தின் பின் அரசாங்கத்தால் கொழும்பு நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.
மார்ச் மாதம் 16ஆம் திகதியன்ற குண்டு பொருத்தப்பட்ட வான் கொழும்பு மருதானையில் வெடித்ததால் 32 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 235 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலின் பின் அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தியது. இதனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலிருந்து தென்பிரதேசங்களை நோக்கிப் பயணஞ்செய்கின்ற மற்றும் தென் பகுதியில் வசிக்கின்ற தமிழர்களுமே காவலரண்களும் தேடுதல் நடவடிக்கைகளும் பாலப்படுத்தப்பட்டதோடு அத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வதிவிடம் பற்றிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. சந்தேகிக்கப்படுகின்ற நபர்கள் பொலீஸ் நிலையங்களில் 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரையும் அல்லது, 6 நாட்கள் அல்லது, சிலவேளைகளில் மூன்று மாதங்கள் வரை தடுத்துவைக்கப்படுகின்ற நிலைமையும் உருவாகியது. இவ்வாறு தடுத்து வைத்தமைக்கான காரணம் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேயுள்ள பிரதேசங்களில் வசிக்கும் சந்தேக நபர்களது வதிவிடம் பற்றிய ஆவணங்களையும் அவர்களது அடையாளத்தையும் பரிசீலித்துப் பார்ப்பதற்கே ஆகும். இதன்விளைவாக தமிழ் மக்களிடையே நிலையற்ற தன்மை, பாதுகாப்பின்மை மற்றும் அச்சம் பற்றிய உணர்வுகள்
68

வளர்ச்சியடைந்ததோடு இதன் காரணமாக நிலவுகின்ற சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொண்டது. மனிதாபிமானமற்ற மற்றும் கீழ்த்தரமான கைது செய்தல் மூலமாகவும் கேட் விக்குட்படுத்துவதன் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு முழுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது. இந்நிலைமை சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்தே அவர்களைச் சந்தித்ததோடு, தமிழ்மக்கள் கைது செய்யப்படுதல் மற்றும் பரிசோதிக்கப்படுதல் பற்றி மீளாய்வு செய்வதாக பிரதியமைச்சர் தமக்கு உத்திரவாதமளித்ததாக இது சம்பந்தமாக அவர்கள் செய்தி வெளியிட்டார்கள். தமிழ் மக்கள் தொந்தரவு செய்யப்படுகின்ற விதமாக குறிப்பிடுகின்றபோது பாரபட்சம் காட்டப்படுகின்ற விதமான கேள்விகளைக் கேட்டல், இரவு நேரச் சுற்றிவளைப்புகளும் நீண்ட காலம் பொலீஸ் நிலையங்களில் தடுத்து வைத்தல்களும், கேள்விக்குட்படுத்துவதற்காக பெண்களைத் தமது இரவுநேர படுக்கை அறை உடைகளுடன் வரவழைத்தல், புகைப்படம் பிடித்தல், அடிக்கடி கைது செய்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் இழிவாக நடாத்தப்படுதல் முதலியவற்றைக் குறிப்பிடமுடியும். பெண்களை இரவு நேரங்களில் கைதுசெய்து பொலீஸ் நிலையங்களிலோ வேறு இடங்களிலோ தடுத்துவைக்க வேண்டாமெனவும் அவர்களிடம் அவசியமான ஆவணங்கள் இருப்பின் ஒருசில மணிநேரங்களில் அவர்களை விடுதலைசெய்யுமாறும் பிரதியமைச்சரைச் சந்திக்கச் சென்ற பிரதிநிதிகள் முழு அமைச்சரைக் கேட்டுக்கொண்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் இப்பிரச்சினை சம்பந்தமாக த.வி.கூ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். அதே வேளையில் இந்நிலைமையை ஆராயும்பொருட்டு கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயலாற்றிவருகின்ற இராணுவ மற்றும் பொலீஸ் ஒன்றுகூடல் சட்டமா அதிபர் சரத் சில்வா அவர்களால் கூட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
முறைபாடுகள் பாய்ந்து வருகின்ற வேகம் அதிகரித்ததுடன் இது சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பாராளுமன்ற உறுப்பினர்களையும் 3 அமைச்சர்களையும் உள்ளடக்கிய கைதுசெய்தல் சம்பந்தமாக ஆராயும் குழு கடந்த ஜுலை மாதத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது
69

Page 37
செய்யப்படுகின்ற நபர்கள் பற்றி இக்குழு ஆய்வுகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பொலீஸ் திணைக்களத்தில் புறம்பான கூறு நிறுவப்படவேண்டுமென இக்குழு தீர்மானித்துள்ளது. பிரதிப் பொலீஸ் மா அதிபரொருவர் இக்கூறுக்குத் தலைமை வகிப்பதோடு கைது செய்யப்ட்ட நபருடன் அவரது குடும்ப அங்கத்தவர்களுடனும் இணைப்புச் செயற்பாடுகளைப் பேணிவரவேண்டிய பொறுப்பு இக்கூறு மூலம் ஈடேற்றப்படும். சட்டவிரோமான கைது இடம்பெறாமைக்கு உத்தரவாதமளித்தலும் தொந்தரவு செய்வதாக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவண செய்வதையும் இக்குழு மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற கருமங்களெனக் கூறலாம்.
தேருதல் நடபடிக்கைகளும் பெண்களும்
தற்கொலைப் படையாளிகளாக பெரும்பாலான பெண்கள் காணப்படுவதால் தமிழ்ப் பெண்கள் மீது விசேட சந்தேகம் நிலவுவதோடு பரிசோதனைக்கும் இலக் காகி வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டும் வருகின்றனர். பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்ய வேண்டியநிலையேற்படுவதும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தேடுதல் நடவடிக்கைகளுக்கு இலக்காக வேண்டிய நிலையேற்படுவதனாலும் பெண்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கும் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடவேண்டிய விடயமாகும். இதன் காரணமாக பெண்கள் தனிமையாக வாழவோ அல்லது இளம்வயதுடைய பிள்ளைகளுடன் வாழவோ பயம் தெரிவிக்கும் நிலை காணப்படுகின்றது. சந்தேகம் அதிகரித்துள்ளதாலும் வீட்டுச் சொந்தக்காரர்கள் மத்தியில் நிலவுகின்ற அச்சம் காரணமாகவும் தமிழ் மக்களைத் தமது வீடுகளில் வாடகைக்கு வைக்க தயக்கம் காட்டுகின்றனர். ஒரு தமிழ்ப்பெண் தனியாக வாழ நகரத்தில் வதிவிடமொன்றைத் தேடிக் கொள்வது மிகவும் சிரமமான விட்யமாக மாறியுள்ளது.
தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வேளையில் அக் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவ மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கூறுணர்வு மிக்கவர்களாக கருமமாற்றத் தக்கவகையில் அறிவூட்டப்படக் கூடியவாறான போதியளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அத்தியவசியமானதாக அமைந்துள்ளது. அப்போதுதான் எந்த இனத்தைச்
7 O

சேர்ந்தவராயினும் பிரஜைகளின் உரிமைகள் மீறப்படாதிருக்கும். அவ்வாறே இரவு நேரத் தேடுதல்கள் , தடுத்து வைத்தல்கள் மற்றும் விசாரணைகளின்றி கைது செய்யப்படுதல் இடைநிறுத்தப்படும். பிரயோசனமற்ற வகையிலும் எதிர்த்தாக்கங்களைக் காட்டக் கூடியதுமான அமைந்துள்ள எழுமாற்று ரீதியான கைதுசெய்யப்படுதல்கள். தடுத்து வைத்தல்கள் மற்றும் தொந்தரவு புரிதல்களுக்குப்பதிலாக இரகசியமாக தகவல்களைத் திரட்டுதல், விழிப்புடன் இருத்தல் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைசார்ந்ததும் வெற்றிகரமானதுமான முறைகள் அறிமுகஞ் செய்யப்படவேண்டும்.
யாழ்ப்பானத்தின் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்
1998ஆம் ஆண்டில் நிகழ்ந்த மற்றுமொரு முக்கியமான சம்பவம் 17 உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக யாப்பாணத்தில் உள்ளஞராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றமையாகும். ஜனவரி 29 ஆம் திகதி நடைபெற்ற இத்தேர்தலில் ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கா போட்டியிட்டன.
பெரும்பாலான வாக்களர்கள் இத் தேர்தல் மீது அக்கறைக் காட்டாதிருந்ததோடு அவர்கள் எந்தவோர் அரசியல் கட்சி பகிரங்கக் தொடர்புகளைப் பேணிவருகிற தயக்கம் காட்யடிதைக் காணக்கூடியதாக இருந்தது. தெளிவான குறைபாடுகள், தெரிவுசெய்து காலம் பொருந்தாமை, அறிமுகமில்லாத அபேட்சகர்கள், இறந்த காலத்தில் ஆயுமேந்தியவர்கள் வேட்பாளர்களாக இருந்தமை பெரும்பாலான இளம் வாக்களர்கள் பதிவுசெய்யப்பட்டிராமை, புலம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கமை போன்ற பல்வேறு குறைபாடுகள் நிலவியபோதும், கணிசமான அளவு வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்தனர் 571,480 பதியப்பட்ட வாக்காளர்களில் அவ்வேளையில் யாழ் குடாநாட்டில் 50 சதவீதமானவர்களே வசித்தனர். இறுதிக் கணக்குகெடுப்பின்போது வாக்களிக்க வருகை தந்திருந்தோர் அவ்வொண்ணிக்கையின் அரைவாசியினரென்பதே வெளியாகியது.
பெண்களும், தேர்தலும்
இத் தேர்தலின் போது பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வருகை தந்திருந்ததாக அவாதானிப்போர் கூறினார்கள். த.வி.கூட்டணியை பிரதிநிதித்துவம் செய்த திருமதி சரோஜினி யோகேஸ்வரன் யாழ் மேயராக
71

Page 38
நியமிக்கப்பட்டார். ஆயினும், உள்ளுராட்சி நிறுவனங்களின் நிருவாகத்தில் போதுமான அளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிராமையின் காரணமாக பெரும்பாலான உள்ளுராட்சி நிறுவனங்களின் பணிகள் மார்ச் மாதமளவிலேயே ஆரம்பிக்கப்படவேண்டிய நிலையேற்றப்பட்டது.
யாழ் மேயர் திருமதிசரோஜினியோகேஸ்வரனர் பகுகொலை
யாழப்பாணத்தின் முதலாவது பெண் மேயரான திருமதி சரோஜினி யோகேஸ்வரன் மே மாதம் 17ஆம்திகதி தனது வீட்டில்வைத்துசுட்டுக்கொலை செய்யப்பட்டார். 60 வயதுடைய திருமதி யோகேஸ்வரன் தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படைவீரர்களைச் சேவையிலிடுபடுத்துவதையும் நிராகரித்திருந்தார். வடக்கில் வன்முறையற்ற ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுகின்ற வாக்குறுதியின் அடிப்படையில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் பட்டியல் மூலமாக தேர்தல் களத்தில் பிரவேசித்தார். மிகச் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரங்களின் பின் அவர் யாழ் மேயராகத் தெரிவுசெய்யப்பட்டார். மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குறைந்தளவு உதவிகளுடனும், வினைத்திறமையற்ற உத்தியோகத்தர் வாதக் குழுக்களின் செயற்பாடுகளுக்கும் மத்தியில் யாழ்ப்பாணத்தில் நிவாரணச் சேவைகளும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் மாநாகர சபையூடாக புத்துயிரளிக்க அவர் பதவிவகித்த குறுகிய மூன்று காலப்பகுதிக்குள் முயற்சி செய்தார். சிவில் நிர்வாகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டுமென்ற அவரது இயக்கத்தின் காரணமாக அவர் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்ததோடு இதற்கான ஒத்தழைப்பும் இவருக்கு கிடைத்தது.
இவரது படுகொலை சம்பந்தமாக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துடன் இணைந்த குழுவாக நம்பப்படுகின்ற சங்கிலியன் படை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்நிலைமையின் கீழ் மீண்டும் இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்தினதும், எல்.ரீ ரீஈ. இயக்கத்தினதும், அரசியல் விருப்பம்பற்றிய பிரச்சினை மேலோங்கியுள்ளது. திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் படுகொலையின் பின் த.வி.கூட்டணி சட்டத்தரணியான பி. சிவபாலன் அவர்களை நியமித்தது. ஆயினும் ஆண்டிறுதியின்போது அவரும் படுகொலை செய்யப்பட்டார்.
72

நிலக்கணிணிவெடிகள்
வடபகுதியில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் காரணமாக தொடர்ச்சியாக அப்பகுதியிலுள்ள குடிமக்கள் மரணமடைகின்ற உடல் ஊனமுறுகின்றநிலை தோன்றியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், சிறுவர்களுமே, விளையாடுவதற்காக இச்சிறார்கள் பாதுகாப்பற்ற அல்லது விடுவிக்கப்படாத பிரதேசங்களில் உட்புகுவதனாலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகவோ பெண்கள் இப்பிரதேசங்களில் உட்புகுவதனாலும் பெண்களும், சிறார்களும் நிலக்கண்ணிவெடிகளுக்கு இலக்காகினர். நிலக்கண்ணிவெடிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கொள்ள எந்தவிதமான சான்றுகளும் இல்லாமையால் பெரும்பாலும் இவற்றைத் தேடிக் கொள்வது சிரமமான காரியமாக அமைகின்றது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் பத்திரிகை அறிவித்தலொன்றினை வெளியிட்டு யாழ் குடாநாட்டில் நிலக் கண்ணிவெடிச் செயற்பாட்டுக் கருத்திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு தமது அமைவிடம் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இக்கருத்திட்டமானது பின்வரும் அங்களை உள்ளடக்கியதாக அமையும்.
நிலக்கண்ணிவெடி செயற்பாட்டு நிலையமொன்றை யாழ்ப்பாணத்தில் தாபித்தல்.
நிலக்கண்ணிவெடிகள் சம்பந்தமாக யாழ் மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் பலப்படுத்துவதும்,
உடனடித் தீர்வுகள் தேவையான பிரதேசங்களை இனங்காணுதலும் அதற்கு முன்னுரிமை அளித்தலும்.
பாரிய அளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் அளவில் நிர்ணயித்தல்.
நிலக்கண்ணிவெடிகள் இல்லாத காணிகளை மக்களின் பாவனைக்காக பிரயோகித்தல்.
நிலக்கண்ணிவெடிகளை அழித்தலும், செயழிலக்கச் செய்தலும்,
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி வழங்குவதற்காக தற்போது
73

Page 39
நிலவுகின்ற வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதும் பலப்படுத்துவதும்.
நிலக்கண்ணிவெடிகள் சம்பந்தமாக சர்வதேச ரீதியான அனுபவம் வாய்ந்த ஒருவரது ஒத்துழைப்புடன் இக்கருத்திட்டம் மே மாதத்தல் ஆரம்பிக்கப்பட்ட உத்தேகிக்கபட்டிருந்தது.
ஆயினும், கருத்திட்ட இணைப்பாளரான திரு டேவிட் ரேலர் அவசியமான உபகரணங்களின் பற்றாக் குறை காரணமாக கருத்திட்டம் அமுலாக்கப்படுவதில் தாதமேற்பட்டதெனக் கூறினார். அத்தியாவசியமான றேடியோ கருவியகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கருத்திட்டத்திற்கு ஆண்டிறுதியின் போதே கிடைத்தது, இதற்கிணங்க கருத்திட்டம் 9 Géflb Lii மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட உத்தேசிக்கப்பட்டிருந்ததோடு திட்டமிட்டிருந்த காலப்பகுதியைவிட ஆறு மாதம் தாமதமாகியது.
இவ்வேலைத்திட்டம் மூலமாக நடாத்தப்பட்ட மதிப்பீட்டுக் கிணங்க கடந்த ஆறுவருடக் காலப்பகுதியில் நிலக்கண்ணிகள் காரணமாக கால்களை இழந்தோர் எண்ணிக்கை 1,800 ஆகும். இவ்விபரத்தை எதிர்நோக்கிய எண்ணிக்கையில் 1,448 பேர் 30 வயதினைவிடக் குறைந்தவர்களாவர். அதேவேளை நிலக்கண்ணிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினைத் தடை செய்வதற்கான ஒஸ்லோ உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் மறுத்துள்ளமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத் திட்டத்தை யாழ் குடாநாட்டில் மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்திலும், வன்னி, மற்றும் எல்லைப்புரக் கிராமங்களைச் சார்ந்த வகையிலும், பேணிவரவேண்டியதும், முன்னுரிமையளிக்கப்பட வேண்டியவிடயமாகும். அதைப் போலவே பாதிக்கப்பட்ட்டவர்களுக்கு சிகிச்சையளித்தலும், அவர்களுக்குப் புனர்வாழ்வளித்தலும் அவர்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணக் கூடியவகையில் விசேசமாக பெண்கள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களுக்கு உதவி வழங்கவேண்டியதும் அவசியமானதாகும்.
வடக்கில் காணமல் போதல்
யாழப்பாண அன்னையர் முன்னணி மற்றும் காணமல் போன அல்லது கைதுசெய்யப்பட்ட அல்லது தேடிக் கண்டுபிடிக்க இயலாதவர்களது
74

பாதுகாவலர்களின் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தபின் அவர்களது மனக்குறைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி யவர்கள் குழுவொன்றை நியமித்தார். கடந்த ஈராண்டு காலப்பகுதியில் 632 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முதலாவது கட்டத்தின்போது மேற்கொண்ட விசாரணைகளின்போது காணமல் போனவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 854 பேர்களில் 150 பேர்களைக் கண்டுபிடிப்பதில் குழுவெற்றிக் கண்டது. பெரும்பாலான முறைப்பாடுகள் பெண்களாலும் பெற்றோர்களாலுமே முன்வைக்கப்பட்டடிருந்ததோடு இத்தகைய காணமல் போனவர்களின் விளைவாக பெண்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் காணமல் போனவர்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள். வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் பிரசாகரம் ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் பின் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுள் 16 பேர் கைதாகியுள்ள வேளையில் இறந்துள்ளனர். இவ்விவாரணைக் குழுவிற்கு 765 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இவற்றுள் 134 பேர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள இயலாமல் போயிற்று. 201 பேர்களது தவகல்களைத் தேடிக்கொள்ள முடிந்தது. 25 நபர்கள் காணமல் போகச் செய்யப்பட்டமைக்கான பொறுப்பாளிகள் பற்றிய தகவல்களை இவ்விசாரணையின் போது திரட்டிக் கொள்ள முடிந்ததோடு இவர்கள் சம்பந்தமாக இக்குழுவானது பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 05ஆம் திகதி நியமிக்கப்பட்ட இக்குழுவின் பந்துல குலதுங்க, மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.த சில்வா, றியர் அட்மிரல் எஸ்.சீ.ஏ. திசேறா, எயார் வைஸ் மார்ஷல், கே.ஜி.ஏ. பீரிஸ், மற்றும் உப பொலிஸ் மா அதிபர் பி.பீ. ஏக்கநாயக்க ஆகியோர் அங்கம் வகித்தனர். யாழ்ப்பாணத்திலும் பலாலியிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. (லங்காதிப - 98.04.24)
செம்மணி புதைகுழிகள்
செம்மணி புதைகுழிகள் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. கிரிஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முதலாவது குற்றவாளியான கோப்ரல் ராஜபக்ஷ என்பவரே இப்புதைகுழிகள் பற்றிய வியடங்களை வெளியிட்டார். நீதிபதி ரீ சுந்தலிங்கம் அவர்களது கூற்றின்படி வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
75

Page 40
அங்கத்தவர்கள் கோப்ரல் ராஜபக்ஷவிடம் இது பற்றி விசாரித்துள்ளதோடு மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுசம்பநதமாதன விசாரணைகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதோடு இதனைத் துரிதப்படுத்த எந்தவொரு வெற்றிகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட நபர்களது பாதுகாவலர்களின் அமைப்பும், யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களும் இத்தாமதம் பற்றி தமது கவலையை உள்நாட்டு மற்றும் சர்வதேச தாபனங்களிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்திருந்தன. விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி குடும்ப அங்கத்தவர்கள் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் சத்தியக்கிரகம் செய்தார்கள். விசாரணைகளை மேற்கொள்வதற்காக காணாமல் போனவரது குடும்ப அங்கத்தவரே சட்டமா அதிபர் சார்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களமோ யாழ் நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பிக்கவேண்டுமென இறுதியாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தது. இதன் பிரதிபலிப்பாக தி. பி. செல்வராசா முதலாவது ஹபயாஸ் போபுஸ் வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திரு செல்வராசாவின் மகனான எஸ். பிரபாகரன் 1996 ஜூலை 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் செம்மணி காவலணில் வைத்து இவ்விசாரணை சம்பந்தமாக தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படின் அவற்றை வழங்க தாம் தயாராக இருப்பதாக மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் நாயக அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
ஆயுதப்போராட்டமும், சிறார்களும்
1995 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சிறார்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் பற்றிய விசாரணைகளை மேற்கொள்கின்ற ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியான திரு. ஒலாரா ஒட்டுனு இலங்கைக்கு வருகை தந்தார். இவர் யாழ்ப்பாணம், மடு, மன்னார், மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். அவர் இங்கு தங்கியிருந்த 10 நாட்களுக்குள் எல்.ரீ.ரீ.ஈ. கட்டுப்பாட்டின் கீழுள்ள வன்னிப் பகுதிக்கு சென்றதோடு எல்.ரீ.ரீ.ஈ. பிரதிநிதிகளான அன்ரன் பாலசிங்கம், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரையும் சந்தித்தார். இவ்விஜயம் மேற்கொள்ளப்ட்ட காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தற்காலிகமான யுத்தநிறுத்தமொன்றை
76

பிரகடனஞ் செய்திருந்தது. ஒட்டுனு அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. தலைவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போது யுத்தம் காரணமாக பாதிக்கப்படுகின்ற சிறார்களைப் பாதுகாப்பது பற்றியும் சிறுவர் உரிமை மற்றும் நலனோம்பல் பற்றியும் கலந்துரையாடியதாக செய்திகள் வெளிவந்திருந்தன.
சிறுவர் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்கு மதிப்பளிப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் செயலாற்றவேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஒட்டுனு அவர்கள் வலியுறுத்திக் கூறியதுடன் இவ்வுடன்படிக்கையின் சித்தாந்தங்களை மதிப்பது சம்பந்தமாக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் பகிரங்கள அறிவித்தலொன்றை விடுக்க வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டார். இது சம்பந்தமாக தமது உபாய முறையை மறுபரீசிலனை செய்வதாக எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு வாக்குறுதி அளித்தது.
ஒட்டுனு தனது விஜயத்தின்போது அமைச்சர்கள், அரச உத்தியோகத்தர்கள், மற்றும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்களையும் சந்தித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணச் சேவைகளை வழங்கும் பொருட்டு பொருத்தமான சூழ்நிலையைக் கட்டியெழுப்புவதற்குச் சாதகமான அரசியல் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். ஆயுதப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் பெண்களினதும், சிறார்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடமும், ஏனைய நிறுவனங்களிடமும், தாபனங்ளிடமும் வேண்டுகோள் விடுவித்தார்.
நடவடிக்கை எருக்குமாறு வேணர்ருகோள்
ஒட்டுனு அவர்களின் விஜயத்தின் இறுதிநாளன்று இலங்கையின் பல்வேறு அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்து இலங்கையில் ஆயுதப் போராட்டத்தால் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற தாக்கங்கள் சம்பந்தமாக பணியாற்றிவருகின்ற பிரதிநிதிகளைச் சந்தித்தார். யுத்தத்தின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள சிறுவர்களின் பாதுகாப்புக்காக அனைவரும் கூட்டாகவும் தனித்தனியாகவும் தமது பொறுப்புகளை ஈடேற்றுமாறு கோரி அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த "நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்" எனப்படுகின்ற அறிக்கை திரு. ஒட்டுனு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
77

Page 41
இவ்வறிக்கைமூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளதன் பிரகாரம் வட-கிழக்கு யுத்தம் காரணமாக நேரடியான தாக்கத்திற்கு இலக்காகியுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 900,000 பேர் ஆகும். 380,000 சிறுவர்களின் இருப்பிடம் இல்லாதொழிந்ததுடன் சுமார் 250,000 பேர் தமது இருப்பிடங்களை இழந்ததன் காரணமாக இற்றைவனா நாட்டில் பலபகுதிகளில் வசித்து வருகிறார்கள். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலும் சுகாதார சேவைகளையும் பாடசாலைகளையும் பேணிவருதல் செயலிழந்துள்ளதுடன் மலேரியா போன்ற தொற்றுநோய்கள் மிக வேகமாக பரவிவருவதாகவும் அறிக்கை மூலமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நோய்கள் பரவுதல், இருப்பிடங்களை இழந்துள்ளமை மற்றும் பொதுவான உணவு வழங்கல் செயலிழந்து காணப்படுகின்றமை முதலியவற்றின் காரணமாக இப்குதி மக்களின் போஷாக்கின்மை துரிதகதியில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
தற்போது பேணிவரப்படுகின்ற பாடசாலைளில் கூட மிகையான மாணவர்கள் இருப்பதோடு அதற்கு ஏற்றவகையிலான ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பெருந்தட்டுப்பாடு நிலவுவதாக இவ்வறிக்கை கூறுகின்றது. பாடசாலையில் சேர்ந்துள்ள மாணவர்களுள் 40 வீதம் பாடசாலைக்குச் செல்வதில்லையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு தமது பெற்றோர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாதநிலை காணப்படுகின்றது. பெரும்பாலான பிள்ளைகள் வன்முறைகளை நேரடியாக கண்டுள்ளதோடு திகில் மற்றும் நிலையாமையின் அனுவத்தைப் பெற்றுள்ளார்கள். பெரும்பாலான பகுதிகளிலுள்ள சிறார்கள் யுத்தத்தினதும் இனமோதல்களினதும் உண்மையான நிலைமையின் கீழ் பிறந்து வளர்ந்துள்ளதோடு, யுத்தம் நிறைந்த உலகைத் தவிர வேறு எந்தவிதமான அறிவும் இவர்களுக்குக் கிடையாது. பெரும்பாலான சிறார்கள் இந்த மோதலின் தீவிரமான பங்காளிகளாகவும் மாறியுள்ளனர்.
6165600sultimai airinidiriassif
எல்லைப்புறக் கிராமங்களாகக் கருதப்படுகின்ற வட-கிழக்கு மற்றும் வட மத்திய மகாணங்களைச் சேர்ந்த கிராமங்ளில் வசிக்கின்ற குடிமக்களின் பாதுகாப்பின்மை பற்றிய பிரச்சினை 1998 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய பிரதானமான பிரச்சினையாகும். வெலிகந்தை பிரதேசத்திலுள்ள குடாபொக்குன கிராமத்திலுள்ள கிராமவாசிகள் தமது கிராமத்தை விட்டு
78

வெளியேறியதுடன் இப்பிரச்சினை மீண்டும் மேலோங்கியது. மார்ச் 28ஆம் திகதி இக் கிராமத்தின் பொலீஸ் நிலையத்தை எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினர் தாக்கியதோடு அதன்பின் பொலீஸார் அங்கிருந்து அகன்றுசென்றனர் இதன்பின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக மக்கள் இப்பிரதேசத்தைக் கைவிட்டுச் சென்றார்கள். இக்கிராமம் 2000 முஸ்லிம் குடும்பங்களினதும் 40 தமிழ்க் குடும்பங்களினதும் வதிவிடமாக அமைந்தது. முதலில் 40 குடும்பங்கள் கிராமத்திலிருந்து வெளியேறியதுடன் அதன்பின் ஏனையோரும் வெளியேறத் தொடங்கினர். இதற்கு முன்னரும் குடாபொக்குண கிராமம் மீது தாக்குதல் இடம்பெற்றது. 1990 ஆகஸ்ட் மாதத்தில் பொலீஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 5பேர் உயிரிழந்தனர். 1997 இல் நிலக்கண்ணிவெடியின் காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட 6பேர் உயிரிழந்தனர்.
அடிக்கடி தாக்குதலுகு இலக் காதல், இருப்பிடம் இல்லாதொழிதல், மீளக் குடியமர்த்தல், மீண்டும் இருப்பிடம் அற்றுப்போதல் முதலியவை பொதுவாக இப்பகுதிவாழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் தொடராக அமைந்துவிட்டது. தாக்குதல் மற்றும் பதில்தாக்குதல் காரணமாக இவ்வலயங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மிகவும் சிரமமான காரியமாக மாறியுள்ளதோடு ஊர்காவல் படையினரைக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளமையும் பிரச்சினைக்காக தீர்வாக அமையவில்லை. அரசாங்கத்தைப் போலவே எல். ரீ.ரீ.ஈ அமைப்பும் யுத்தத்தை மேற்கொள்கையில் சர்வதேச மனிதாபிமான சித்தாந்தங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதும் சாதாரண மக்களுக்கு சேதம் விளைவிக்காமல் இருக்க வேண்டியதும் கட்டாயமான தேவையாக நிலவுகின்றது.
அதேவேளையில் கிட்டத்தட்ட 09 மாதங்களாக அகதி முகாம்களில் தங்கி இருந்த அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கெபித்திகொல்லேவ பகுதிவாழ் 4000 குடும்பங்கள் மீண்டும் தமது கிராமங்களை நோக்கிவருகை தந்தனர். இவ்வளவு பெருந்தொகையான மக்கள் மீண்டும் எல்லைப் புறக் கிராமங்களை நோக்கி வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென கெபித்திகொல்லேவ பிரதேச செயலாளர் அறிவித்ததாக செய்தியிடப்பட்டிருந்தது. இவ்வாறு திரும்பிவந்தவர்கள் நிக்கவெவ, கணுகஹ வெவ, ஹல்மில்லவெட்டிய, யக்காவெவ, கொன்கொல்வேவ, குறுஹல்மில்வேவ மற்றும் கான்ந்துறுவெவ ஆகிய கிராமங்களில் வசித்தவர்களேயாவர்.
79

Page 42
இருப்பிடம் இல்லாதொழிதலும் மீளக்குடியமர்த்தலும்
மாங்குளம் மற்றும் கிளிநொச்சியில் எல். ரீ. ரீ. ஈ கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களிலிருந்து 18,028 குடிமக்கள் ஜயசிக்குறு நடவடிக்கையின் பின் மார்ச் மாத இறுதியின்போது யாழ்ப்பாணப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சரத் முனசிங்க அவர்கள் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு புலம்பெயர்ந்த சுமார் 4000 பேர்களுள் 2000 பேர்வரை மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிவர ஆரம்பித்தார்கள். சிவில் மக்களையும் புலம்பெயர்ந்த ஏனையோரையும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிக் கெண்டு செல்ல கடற்படையினரால் ஏப்ரல் புத்தாண்டு மாதத்திலிருந்து இரண்டு கடற்படைப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
புலம்பெயர்ந்தவர்கள் பெருந்தொகையினராக செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நோக்கிச்செல்ல திருகோணமலையிலிருந்து லங்கா முதித்த கப்பல் மூலம் பயணஞ்செய்ததாக அறிவிக்கப்பட்டது. செப்டெம்பர் 3.4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் 3,550 பேர் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் சென்றுள்ளதாக அறிக்கைகள் கூட்டிக்காட்டுகின்றன.
மீளக் குடியமர்த்தல் மற்றும் உணவைப் பெற்றுக்கொள்ளல் பற்றிய பிரச்சினை.
ஆகஸ்ட் மாதத்தில் முல்லைத்தீவுக்கு அருகாமையிலுள்ள கடலில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ அமைப்பானது வடபகுதிக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்ற பிரின்சஸ் கேஸ் கப்பலையும் அதன் சிப்பந்திகளையும் கைது செய்து அதில் காணப்பட்ட பொருட்கள் அனைத்தையம் எல்.ரீ.ரீ.ஈ இலக்கத்தினர் அபகரித்துக் கொண்டனர். அதன்பின் இலங்கை விமானப்படையினர் இக்கலம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொண்டு அழித்துவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. வடபகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்காக கொழும்பிலுள்ள வர்த்தகர்களால் வாடகைக்கு அமர்த்தப்படிருந்த இக்கப்பலில் மோட்டார் வாகனம் போன்ற தடைவிதிக்கப்பட்ட பொருட்களும் கொண்டு செல்லப்பட்டதாக பின்பு மேற்கொண்ட விசாரணைகளின்போது புலனாகியது. இக்கப்பலில் இருந்த சிப்பந்திகளில் ஒருசிலர் இந்தியர்களாகக் காணப்பட்டதோடு எல்.ரி.ரி.ஈ அமைப்பு பின்பு இந்தியர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தது.
80

அதன்பின் அவர்கள் விசாரணைக்காக இலங்கை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டதாக கூறப்பட்டது. வடபகுதிக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் கலங்களுக்கு எதிராக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் இது புதியதொன்றாக மாறியது. இத்தகைய சம்பவங்களின் காரணமாக யாழ்குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வது முற்றிலும் செயலிழந்த நிலையுற்றுள்ளதோடு பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களையும் ஏனைய பொருட்களையும் வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. போக்குவரத்து ஊடகமென்ற வகையில் தற்போது பேணிவரத்தக்கதாக இருந்த ஒரே வழிமுறை கடல் மார்க்கப் போக்குவரத்தாக அமைந்த நிலையில் அதற்கு எதிரான இத்தகைய தடைகள் ஏற்படுத்தப்படுவதால் பொதுமக்களை கடும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்படுவது கவலைக்குரிய விடயமாகும். அதேவேளையில் யாழ்ப்பாணத்திற்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்களும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதைப்போன்றே வன்னிப் பகுதியில் நிலவுகின்ற உணவுத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டமொன்று இன்மை ஆகிய விடயங்கள் சம்பந்தமாக மக்கள் விசனம் தெரிவித்தனர். அதேவேளையில் யுத்த நிலைமை தலைதுாக்கியதால் வன்னிப்பகுதியைக் கைவிட்டு சுமார் 24,000 பேர் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
வன்னிப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுகின்ற உணவுப் பங்கீட்டின் அளவு குறைக்கப்படுதல் பற்றிய செய்தி கிடைத்ததும் பிள்ளைகளைப் பாடசாலையைக் கைவிட்டு செல்லுமாறு நிர்ப்பந்தித்தல் தொடர்பான செய்திகள் வெளியானதுடன் எதற்கு எதிராக ஆகஸ்ட் 16ஆம் திகதியன்று வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெற்றது. எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருந்த வரையறையை நீக்குமாறு விடுத்த கோரிக்கை அவர்களின் பிரதான கோரிக்கையான அமைந்தது. வவுனியாவிலிருந்து எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டின் கீழுள்ள வன்னிப் பகுதிகளுக்கு எரிபொருள் அனுப்பப்பட்டதாகக் கூறி இராணுவத்தினரால் எரிபொருள் மீதான தடைவிதிக்கப்பட்டது. இவ்வாண்டில் எல்.ரி.ரி.ஈ அமைப்பைச் சேர்ந்தவர்கள் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலுள்ள பல மின்மாற்றிகளைத் தகர்த்து பொதுமக்களை இருளில் மூழ்கடித்து வசதியீனங்களை ஏற்படுத்தினார்கள்.
81

Page 43
இடம்பெயர்வதற்கான சுதந்திரம்
வன்னிப் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகின்ற தமிழ் மக்களது எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக யூலை மாதத்தில் புதிய பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அறிமுகஞ்செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்கு மேல் தங்கி இருக்க எதிர்பார்த்துள்ளவர்கள் வவுனியாவிலுள்ள பாதுகாப்புப் பிரிவிடமிருந்து விசேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தேவையின் காரணமாக பொதுமக்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுகின்றதென மனித உரிமைகள் மற்றும் சமூகத்தாபனங்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வனுமதிப் பத்திரத்தை தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொள்வதற்காகவும் மிகவும் கடுமையான ஏற்பாடுகளே காணப்படுகின்றன. இதன்விளைவாக மக்களுக்கு ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குப் போய்வருவதற்கான சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதோடு அவர்கள் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்படுகின்ற நிலைமையும் இதன்மூலம் உருவாக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் குடியமர எதிர்பார்த்துள்ள குடிமக்கள் அதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருப்பது அத்தியாவசியமானதாக அமைவதைப் போலவே வவுனியாவில் குடியிருப்பவர்கள் தென்பகுதியை நோக்கிப் பயணஞ்செய்யவும் அனுமதிப் பத்திரத்தைப் பெற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
வவுனியா பிரதேசத்தில் வசிக்கின்ற குடிமக்களுக்காக விடுவிக்கப்படுகின்ற பணம் தொடர்பாகவும் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள செய்திகளின்படி வன்னி மாவட்டத்திலுள்ள வங்கிகளால் தமது வாடிக் கையாளருக்கு ஒரு வாரத்திற்கு விடுவிக்கின்ற உச்ச பணத் தொகையானது சுமார் இரண்டாயிரம் ரூபாய்களாக அமைகின்றது. இந்நிலைமை காரணமாக கடந்த ஜுலை மாதத்தில் இக்கணக்குடையோர் பாரதூரமான திரவத்தன்மை பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தனர்.
மரணங்களும் காயங்களும்
மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில்பொதுமக்கள் மரணமடைகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன. கிளிநொச்சியிலுள்ள சுதந்திரபுரம் கிராமத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான விமானத் தாக்குதல் சம்பந்தமாக சாதாரண குடிமக்களால் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டிருந்ததோடு, மேற்படி தாக்குதலின் மூலமாக 25 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 50 பேர் வரை காயமுற்றதாக பாராளுமன்ற உறுப்பினரான
82

திரு. ஜோசப் பரராசசிங்கம் குறிப்பிட்டதாக ஜூன் மாதம் 21 ஆம் திகதிய யுக்திய பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மாணவர்களும் ஏனைய பொதுமக்களும் இவ்வெதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் யாழ்ப்பாண உதவி அரசாங்க அதிபரூடாக ஜனாதிபதி குமாரதுங்க அவர்களுக்கும் இந்திய மத்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் கொழும்பு அலுவலகம் ஆகியவற்றுக்கும் அனுப்பிவைப்பதற்கான மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார்கள். (யுக்திய 98.06.28)
இத்தகைய தாக்குதலின் விளைவாக பெண்களும் சிறுவர்களுமே அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். இன்றேல் இருதரப்பினரும் துப்பாக்கி வேட்டுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கவேண்டிய நிலை இவர்களுக்கு உருவாகின்றது. இதன்மூலமாக வலியுறுத்தப்படுகின்ற விடயம் யாதெனில் யுத்தம் புரியப்படுகின்ற வேளையில் மனிதாபிமான நியமங்களை மதித்து நடக்க இருதரப்பினருக்கும் தேவை நிலவவேண்டுமென்பதோடு அங்கு பொதுமக்களது உரிமைகளும் உயிர்களும் பாதுகாக்கப்படுவதற்கு உத்தரவாதமளிக்கப்படவேண்டும் என்பதேயாகும்.
யுத்த வலயத்தில் பொதுமக்கள் மீது புரியப்பட்ட தாக்குதல்களுள் சில
* கடந்த ஜூலை மாதம் கிண்ணியா கடல் நீரேரியில் மீன்பிடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நால்வர் இராணுவத்தினரால் சுடப்பட்டு மரணடைந்தனர். அதன்பின் இவர்களது சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
* ஜூலை 16ஆம் திகதியன்று நீர்கொழும்பு குட்டிதுவ பிரதேசத்தில் வெடித்த ஜொனி குண்டு காரணமாக இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் மரணமடைந்தனர்.
* ஆகஸ்ட் மாதத்தில் இராணுவக் காவலரண்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் காரணமாக மூன்று பிள்ளைகள் மரணமடைந்தனர்.
* ஆகஸ்ட் 17ஆம் திகதி மட்டக்களப்பு நகரத்தின் மத்தியில் மோட்டார் சைக் கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததன் காரணமாக 17 பொது மக்களும் 04 பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.
83

Page 44
* ஆகஸ்ட் மாதத்தில் பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பகுதிகளில் இராணுவத்தினருக்கும் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினருக்கும் இடையில் மோதல் நிலைமைகளைக் காணக் கூடியதாக இருந்தது. இந்நிலைமை காரணமாக தமது பயிர்ச் செய்கை உற்பத்திகளை நகரத்திற்கு கொண்டுசெல்ல தயாராக இருந்த பொதுமக்களே பாதிக்கப்பட்டனர்.
* யூலை 19ஆம் திகதியன்று நிட்டம்புவ நகரத்தில் இரண்டு குண்டுகள்
வெடித்ததால்பொதுமக்கள் கடுமையாக பீதியடைந்தனர்.
சிறைவைக்கப்பட்டுள்ள பெண்கள்
மகளிர் அலுவல்கள் அமைச்சர் சிறைவாசம் அனுபவிக்கின்ற பெண்களைப் பற்றி விசாரித்தறிய கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்ற வேளையில் அங்கிருந்த தமிழ்ப் பெண்களின் நிலைமையைக் கண்கூடாகக் காணக் கூடியதாக இருந்தது. உணவுப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் சிறைக்கைதிகளுக்கு வழங்கும்போது தமிழ் சிறைக்கைதிகளுக்கு இறுதியாகவே வழங்கப்படுவதாக அங்கிருந்த தமிழ் பெண்ணொருத்தி அமைச்சரிடம் கூறியதாக அமைச்சருடன் அங்கு சென்ற பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஒருவர் செய்தியிட்டிருந்தார். மேலும் சிறைச்சாலைகள் அதிகளவான கைதிகளால் நிரம்பிவழிகின்றதால் படுக்கக்கூட போதியளவு வசதிகள் நிலவுவதில்லையென அறிவிக்கப்பட்ருந்தது. தடுத்துவைக்கப்பட்டிருந்த பொரும்பாலான பெண்களுக்கு தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் எவையென்றோ தமக்கு எதிரான வழக்கு பிரிக்கப்படுகின்ற திகதிபற்றியோ எவ்விதமான அறிவும் கிடையாத நிலையில் காணப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ்ப் பெண் தங்களையும் பொதுவாக எல்.ரி.ரி.ஈ அங்கத்தவர்களென்ற வகையிலேயே கருதிவருகிறார்களெனக் கூறினார். இதன் காரணமாக தமக்கு தொல்லைகள் ஏற்படுவதாகவும் தமக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றதெனவும் இப்பெண் கூறியதாக குறிப்பிடப்பட்டள்ளது. அதைப்போலவே இரவு நேரங்களில் தமது சிறைக் கூங்களிலுள்ள சிங்களப் பெண்களால் தாக்கப்பட்டு வருவதாகவும் அவற்றைத் தடுப்தற்கான எவ்விதமான வழிமுறைகளும் இல்லையெனவும தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் கூறியுள்ளார்கள். (யுக்திய98.08.18)
1998 ஏப்ரல் மாதத்தில் யுக்திய மற்றும் சரிநிகர் பத்திரிகைகளில் வெலிக்கடை
84

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டள்ள தமிழ்ப் பெண்கள் பற்றிய விசேட அறிக்கைகள் சில வெளிவந்தன. மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, அக்கரைப்பற்று மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்ட இவர்கள் பொலிஸாரும் இராணுவத்தினரும் தம்மைக் கொடுரமான சித் திரவதைகளுக்கு உள்ளாக்கினார்களெனவும் தமது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிந்து கொள்வதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் வெற்றுத் தாள்களில் கையொப்பங்ளைப் பெற்றனரெனவும் கூறினார்கள். இப்பெண்கள் பி.வீ.சி குழாய்கள் மற்றும் இரும்புக் குழாய்கள் மூலமாகவும் இடைப்பட்டி மற்றும் சப்பாத்துக்கள் மூலமாகவும் தாக்கப்பட்டுள்ளதோடு பெற்றோலை சுவாசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டள்ளார்களெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் வெற்றுத்தாள்களில் தமது கையொப்பங்கள் பெறப்பட்டதாக இப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். அங்கிருந்த ஒருபெண் கைது செய்யப்பட்ட வேளையில் கர்ப்பவதியாக இருந்ததாகவும் அவருக்கு உரிய வைத்திய சிகிச்சையோ, உணவோ நீரோ கிடைக்கவில்லை . இதைவிடக் கூடியளவு வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறைச்சாலையொன்றுக்குத் தம்மை இடமாற்றம் செய்யுமாறு அப்பெண் கோரிக்கை விடுத்திருந்தார். இப்பெண்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
யுத்தத்தின்போது காணாமல்போன படைவீரர்களும் யுத்தம் காரணமான விதவைகளும்,
எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கெதிரான யுத்தத்தில் இலங்கைப் படையினர் சந்தித்த படுமோசமான தோல்வியை செப்டெம்பர் மாதத்தில் இடம் பெற்றது. செம்டெம்பர் 26-29 வரை நடைபெற்ற கடுஞ்சமரில் எல்.ரி.ரி.ஈ அமைப்பினர் மீண்டும் கிளிநொச்சிநகரத்தைக் கைப்பற்றினர். யாழ்ப்பாண்தையும் தென்பகுதியையும் இணைக்கின்ற பிரதான நகர நிலையமாக கிளிநொச்சியே விளங்கியது. வடக்கிற்கு பொருட்களைக் கொண்டுசெல்கின்ற பிரதான வழங்கல் மார்க்கமான கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்த்துடன் 1997 ஆண்டில் இராணுவத்தினர் ஜயசிக் குறு நடவடிக்கையை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்தில் இராணுவப் பலத்தை தொடர்ச்சியாக நிலைநாட்ட இவ்வழங்கல் மார்க்கத்தைக் கைப்பற்ற வேண்டியது அத்தியாவசியமான காரணியென இராணுவம் நம்பியது. செப்டெம்பர் மாதத்தில் இடம்பெற்ற
85

Page 45
இக் கடும் மோதலின் விளைவாக இருதரப்பினையும் சேர்ந்த பெருந்தொகையானனோர் கடுங்காயமுற்றனர்.
ஜூன் மாதம் 05 ஆம் திகதி முதல் அரசாங்கம் யுத்தச் செய்திகள் மீதான தீவிரமான தணிக்கையை அமுலாக்கியது. ஜயசிக்குறுநடவடிக்கையின்போது இறந்த அல்லது காயமடைந்த படைவீரர்களின் எண்ணிக்கை சம்பந்தமான செய்திகளே இங்கு தீவிரமான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது. யுத்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான செய்திகளைத் தேடிக்கொள்ள முடியாமல் போயினும் அரசாங்கத்தின் அறிக்கைகள் ஜயசிக் குறு நடவடிக்கை மூலமாக 663 படைவீரர்கள் மரணமடைந்ததாக குறிப்பிடடன.
அதேவேளையில் மல்லாவியில்வைத்து தாம் 6000 படைவீரர்களின் சடலங்ளைப் பொறுப்பேற்றதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு உறுதிப்படுத்தியது. இச்சடலங்கள் அநுராதபுரத்திற்கு கொண்டுவரப்ட்டதோடு படுமோசமாக உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட பெருந்தொகையான சடலங்கள் அநுராதபுரத்தில் புதைக்கப்பட்டன. மிகவும் மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்ட சடலங்களைத் தாம் மீள ஒப்படைக்கவில்லையென எல்.ரி.ரி.ஈ விடுத்த செய்தியில்குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சடலங்கள் பூரணமான இராணுவ மரியாதையுடன் பரந்தனில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவர்கள் அறிவித்தார்கள். ஆயினும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள், வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்த படையினரது எண்ணிக்கை மற்றும் பின்னர் ஒப்படைக்கப்பட்ட சடலங்களையும் கவனத்திற்கொள்ளும்போது இந்நடவடிக்கை மூலமாக மரணமடைந்தோரது எண்ணிக்கை 600 பேர்களைவிட மிகவும் அதிகமானதென்பது தெளிவாகின்ற விடயமாகும். அதைப்போலவே காணாமல் போன படைவீரர்கள் பற்றியும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இவ்வாறு காணாமல் போகின்ற படைவீரர்களின் எண்ணிக்கையும் யுத்தம் தீவிரமடைகின்ற வேகத்தில் படிப்படியாக அதிகரித்துள்ளது. மரணமடைந்தவர்களால் ஏற்பட்ட தாக்கம் பற்றி எந்தவிதமான மதிப்பீடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற வீரர்களும் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறுகின்ற தொழிலாளர், விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களென்பது வெளிப்படையான ஒருவிடயமாகும். எனவே யுத்தத்தின் காரணமாக இறக்கின்ற படைவீரர்களால் பெருமளவு பாதிப்பு இக்குடும்பங்களுக்கே ஏற்படுகின்றது. காணாமல் போன
86

படை வீரர்களையும் யுத்தக்கைதிகளையும தேடிக் குடுமப் அங்கத்தவர்களும் குறிப்பாக இளம் மனைவிமார்களும், வயது முதிர்ந்த பெற்றோர்களும் தம்மால் இயன்ற எல்லா இடங்களுக்கும் சென்று விசாரணை செய்து வருவதை தொடர்ந்தும் காணக்கூடியதாக உள்ளது. யுத்தத்தின்போது காணாமல்போன படைவீரர்களின் உறவினர்களது அமைப்பின்மூலம் அறிவிக்கப்பட்டதன்படி இவ்வமைப்பின் அங்கத்தவர்களது எண்ணிக்கை கிட்டத்தட்ட 1400 ஆகும். யுத்தத்தின் காரணமாக காயமடைகின்ற, உடல் ஊனமுறுகின்ற படைவீரர் பற்றிய விடயமும் இதன் மற்றுமோர் அங்கமாகும். அவர்களது உடல் மற்றும் உளரீதியான சூழலை நல்லமுறையில் பேணிவரவுேண்டிய பொறுப்பும் அதன்பின் குடும்ப அங்கத்தவர்களையே சாரும், இதிலும் பெண்களுக்கு தனித்துவமான பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தாக்குதலின் பின் பரந்தன் தாக்குதலும் அதன்பின் மாங்குளம் தாக்குதலும் இடம்பெற்றது. நேர்ந்த அழிவுடன் மேலும் அழிவைச் சேர்க்கக்கூடிய வகையில் வடபகுதி வானில் 48 பொதுமக்களுடனும் 6 பணியாட்களுடனும் பறந்து கொண்டிருந்த விமானமொன்று எல்.ரி.ரி.ஈ தாக்குதல் மூலம் காணாமல் போயிற்று.
யுத்தத்தின் மற்றுமொரு விளைவு யாதெனில், பொதுமக்களில் பெருந்தொகையானோர் யுத்தவிதவைகளாக மாறுகின்றமையே, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லைப்புறக்கிராம ஆணைக்குழுவால் சடத்தப்பட் சாட்சிவிசாரணையின் போது யுத்தத்தின் காரணமாக விதவைகளாக்கப்ட்ட (இறந்த, காணாமல் போன, கடத்திச் சென்ற அல்லது கொலைசெய்யப்பட்ட) பெருந்தொகையான பெண்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. இந்த யுத்தச் சூழ்நிலை காரணமாக இறந்த தமது கணவன்மார்க் தொடர்பில் நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்ற பெண்கள் பற்றிய விபரங்களை ஒருசில அரசாங்க நிறுவனங்களும் பிரதேச செயலகங்களும் பதிந்து வைத்துள்ளன. எவ்வாறாயினும் யுத்தம் காரணமாக விதவைகளாக மாறிய பெண்கள் சம்பந்தமாகவோ பெண்ணைப் பிரதான குடியிருப்பாளராகக் கொண்ட குடும்பங்களைப் பற்றியோ முழுமையான தரவுகள் திரட்ட்பட்டிராததோடு, இத்தகைய குடும்பங்கள் அல்லது பெண்கள் எதிர்நோக்குகின்ற தனித்தன்மைவாய்ந்த பிரச்சினைகள் தொடர்பில் செயலாற்றுவதற்கான வேலைத் திட்டமொன்றை உருவாக்குவதற்காக கவனத்திற்கொள்ளத்தக்க கொள்கை ரீதியான முக்கியத்துவம் அளித்து எவருமே செயற்படவில்லை.
87

Page 46
யுத்தச் செலவினங்கள்
செப்டெம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக செலவுத் தலைப்பையும் உள்ளடக்கியதாக யுத்தச் செலவினங்கள் 51 பில்லியன் ரூபா வரைஅதிகரித்திருந்தது. எல்லா தரப்பினரும் நேரடியாகவோ மறைமுகமாகவுோ இந்த யுத்த்தை நடத்திச் செல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றார்களென்பது இதன்மூலம் தெளிவாகிறது. இந்த யுத்த வரவு - செலவின் அளவானது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகள் ஆகிய துறைகளின் மொத்த வரவு செலவுப் பெறுமானங்களைவிட மிகவும் உயர்ந்துள்ளது. உயிர்களையும் உடைமைகளையும் அழிக்கின்ற யுத்தத்திற்காக இவ்வளவு பெருந்தொகையான பணத்தைச் செலவிட எம்நாட்டுக்கு ஆற்றல் கிடையாது. வறுமை மட்டத்திலுள்ள பலஇலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களையும் பொருளாதார தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதை அர்ப்பணித்துமே இப் பணத்தொகை செலவிடப்படுகின்றது.
வெகுசனத் தொடர்பு ஊடகங்களின் பொறுப்பு
பெண்ணுரிமைகளைப் பாதுகாக்கவும் விருத்தி செய்வதற்குமான உரிய ஊக்குவிப்பைக் காட்டுதல் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்ப்ைப போலவுே ஓடகங்கள் முதலிய சமூகத்தாபனங்களுக்கும் குழுக்களுக்கும் அதையொத்த பொறுபே நிலவுகின்றது.
பெண்ணுக்கெதிரான வன்முறை பற்றி செய்திவெளியிடலானது விருப்பத்திற்கிணங்கவேநடைபெற்றுவருகின்றது. பாலியல் வல்லுறவு அல்லது, வயதுமுதிர்ந்தவர்களாலோ உறவினராலோ சிறுமிகளுக்கு எதிராக வல்லுறவு புரியப்படுதல் அல்லது, மனைவி தாக்கப்படுதல் அல்லது, பாலியல் தொந்தரவு புரியப்படுதல் போன்ற விடயங்கள் பற்றிய செய்தி வெளியிடப்படுதலானது பெரும்பாலும் ஏளனம்மிக்க வகையில் அல்லது வியப்பு உணர்ச்சியைத் தரக்கூடிய வகையில் வெளியிடப்படுவதை பரவலாகக் காணக்கூடியதாக உள்ளது.
அத்தகைய சம்பவங்கள் சம்பந்தமான செய்திகளைக் கவர்ச்சிகரமான வகையில் வெளியிட முயற்சி செய்வதனூடாக சம்பவத்துடன் தொடர்புடைய
88

உண்மை நிலைமைகள் தவிர்க்கப்படுதல் அல்லது மறைக்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. பெரும்பாலும் ஊகிக்கப்படுகின்ற விதத்திலேயே செய்தி வெளியீடுகள் அமைகின்றன.
பிரதான சிங்களப்பத்திரிகைகளில் உள்ள "தெய்யோ சாக்கி" "ஒவத் வெடத?" போன்ற நிரல்களின் கீழ் அத்தகைய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் பிரசுரிக்கப்படுகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறையானது உணர்ச்சி. யூட்டத்தக்க, ஏனையத்திற்குட்படுத்துகின்ற அல்லது முக்கியத்துவம் வகிக்காத விடயமெனும் நிலை இத்தகைய பத்திரிகைச் செய்திகள் மூலம் உருவாக்கப்பட்டள்ளது.
முக்கியமானவரெனக் கருதப்படுகின்ற நபர்கள் அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள் நீங்கலாக சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வுகளும் பற்றி பத்திரிகைகள் முறையான தொடர் நடவடிக்கைகளை பெரும்பாலும் மேற்கொள்வதில்லை. அத்தகைய சம்பவங்கள் பற்றிய சமூகரீதியான பொறுப்பு வாய்ந்த கருத்துரைகளையேனும் இத்தகைய பத்திரிகைகள் வெளியிடுவது கிடையாது.
பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்களுக்கான ஏதுக்கள் பற்றியோ அதன் விளைவுகள் பற்றியோ கலந்துரையாடல்களை உருவாக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்வதுகூட மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றது. வன்முறைச் சம்பவங்களுக்கு ஏற்புடைத்தான சட்டம் அல்லது சட்டத்தை அமுலாக்குதல் பற்றியோ அரச கொள்கைகள் பற்றியோ கருத்துக்களை முன்வைப்பதுகூட போதிய அளவில் பத்திரிகைமூலமாக வெளியிடப்படுவதைக் ாணமுடியாதுள்ளது.
பத்திரிகைச் செய்திகள் தொடர்பாக நிலவுகின்ற மற்றுமொரு விமர்சனம் யாதெனில் வன்முறையின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைமீது எந்தவிதமாக அக்கறையும் காட்டப்படுவதில்லையென்பதாகும். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடுதல், இறந்தகால பாலியல் வாழ்க்கை அல்லது வாழ்க்கை அமைத்துக்கொள்ளப்பட் விதம் மற்றும் ஊகங்களை வெளியிடுதல் சமநிலையற்ற அறிக்கைகளை வெளியிடுதல் முதலியவை பத்திரிகைச் செய்திகளின் காணக்கூடிய பண்புகளாகும். சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தைக் கூட பத்திரிகைகளில் பிரசுரித்தமையைக் கடந்தகாலங்களில் காணக்கூடியதாக இருந்தது. உதாரணமாக கமல் அத்தர ஆராச்சிக்கு எதிரான வழக்கை குறிப்பிடலாம். சம்பவம் பற்றி கதையை வெளியிட வேண்டி இருப்பினும் அவ்வாறு
89

Page 47
வெளியிடப்படுகின்ற விதம் காரணமாக அத்தகைய சம்பவம் பற்றி முறைப்பாடுசெய்ய முன்வருபவர்களை தடுக்கக்கூடிய நிலை உருவாகக் கூடுமென பத்திரிகை நிருபர்கள் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியம். எனவுே பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் பாதுகாக்கப படக் கூடியவகையிலும் பெண்மீதான பரிவுடன் செய்தி வெளியிடுதல் சம்பந்தமாகவும் மிகக் கூடியளவில் கவனஞ் செலுத்தவேண்டுமென்பதையும் இங்கு சுட்டிகக் காட்டவேண்டும்.
சுட்டிக் காட்டப்படவேண்டிய பிறிதொரு விடயம் யாதெனில் வன்முறை தொடர்பான செய்திகளில் பெரும்பாலானவை ஆண் நிருபர்களாலேயே வெளியிடப்பட்டள்ளமையும் பரபரப்பான விடயங்கள் சம்பந்தமான கட்டுரைகளும ஆண் எழுத்தாளர்களாலேயே வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே தீர்மானம் மேற்கொள்வதிலும் கொள்கை வகுப்பதிலும் ஈடுபட்டுள்ள ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களைப் போன்றே செய்திகளையும் கட்டுரைகளையும் வழங்குபவர்களும் ஆண்பெண் சமூகநிலை நம்பந்தமான பயிற்சி பெறவேண்டியது, அது சம்பந்தமான கூறுணர்வு படைத்தவர்களாக இருக்கவேண்டுமென்பதும் அத்தியவசியமானதென விதப்புரை செய்யப்படுகின்றது. வன்முறை சம்பந்தப்பட்ட செய்திகளை வழங்குவதற்காகவும் விசேட கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் அதிகளவில் பெண்களை ஈடுபடுத்த வேண்டுமென இத்தால் பிரேரணை முன்வைக்கிறோம்.
9 O


Page 48
பெண்கள் தொடர்பு
666լիայն
பெண்கள் தொடர்
12 1/1 அஸ்கொட்
இல
தொலைே தொலை மின்னஞ்சல் von
 

டகக் கூட்டமைப்பு
_T6所56前
பூடகக் கூட்டமைப்பு
ஒழுங்கை கொழும்பு 05
吊s@5。
a 5973 発」ーチ 59522。 mediaOSrilanka.net