கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாய்

Page 1


Page 2
محصحمحمحمحمحمحمحمحت
- கனப்பொருத்தமான
கண்ணுடிப் பாண்டங்கள்
* கண்ணுடித் தம்ளர்கள்
* மண்ணெய் அடுப்புப்
போத்தல்கள்
வெவ்வேறு திணிசுக்களில் உள்நாட்டுத் தேவைக்கென உற்பத்தி செய்யப்பட்டவை.
இலங்கைத் தயாரிப்பு
* லாம்புச் சிம்னிகள்
இப்பொழுது சந்தையில் வாங்கலாம். லங்கா கிளர்ஸ் பாக்டரி உப்புவெளி, திருகோணமலை.
Gumrair : 4 3 5
 

தாய்
தில்லைச்சிவன் கவிதைகள்
கவிஞர்
தில்ஜர்சிவன்

Page 3
முதற்பதிப்பு: டிசம்பர் 1969.
அன்பு வெளியீடு
உரிமை ஆசிரியருக்கு
THA
A collecTION OF TAMil. POEMs)
Altitor :
T. SVASAMY Thillaisiwan ]
Phili ser S ANPu vELYEEDU
AFFNA
First Edition: Dec. 196 price Rs. 21 =

09ith the lest
(ompliments
S. T. R. Salay Mohamed 8k Co.
245, Main Street
Colombo -
Grams: “PERDESH' Phone : 2536

Page 4
FOR KEEN SIGHT
consult the sight specialists
RAY BAN OPTICANS
Phone: 27 O3
 
 

CHEAPEST HOUSE
For
| Enamelware
Glassware
Exercise books
Sundry goods.
SAMEEM STORES
No. 86, 88, Prince Street
Colombo

Page 5
09ith the lest 0ompliments
Taylor & Mackay Ltd.
Ship Chandlers, Importers & Exporters
2nd Floor. Gaffoor Buildings
Colombo

Telegrams: “NAGMEER" Colombo Telephone: Nos. 23870, 25721
Nos. 347 32, 91 962 (Night)
A. M. NAGOOR MEERA SONS & CO. LTD.
ADMIRALTY CONTRACTORS SHIPCHANDLERS, STEVEDORES, IMPORTERS EXPORTERS, AND ANIMAL DEALERS.
LLOYDS BUILDING PRINCE STREET
FORT, COLOMBO-1.
Telephone: 23870, 25721 Telephone: 3870
Night: 91962 9 34782 (Night)
Telegrams: “MOHISH1PCO."
JohnHagenbeck&Collid. во во 2м sitoi, Ers, E.H. M. Mohideen & Co.
MPORTERS. Ship Chandlers & General
Merchants, Provisions of Every
LLOYDS BUILDING, Description & Fresh Water
PRINCE STREET Supplied at the Shortest Natice COLOMBO, CEYLON
LLOYDS BUILDING Telegrams: PRINCE STREET JOHNHAGEN-Colombo S FORT, COLOMBO

Page 6
ARGE OR SMALL BY AND OR SEA OR AR LET US SOLVE YOUR CLEARING AND FORWARDING PROBLEMS
THE WHARF DEPARTMENT
Colombo Agencies Ltd.
P. O. Box 93 159, Dhan mapala Mawatha Telephones: 25413-14
Colombo-7
989ith tho bost
0ompliments
ol
The Gulistan Hardware Stores
65, Third Cross Street
COLOMBO
Phone: 2O72O Grams: "ZANSTAN'
(4 Lines)

அன்பளிப்பு
8
அம்பிகை குமரன் ஸ்ரோர்ஸ் 238, காஸ் கொம்பனி வீதி கொழும்பு
N969ST ( N :
"CONTEX'-O-HANDOPERATEDCALCULATORS
“CONTEX” - 3 OX55 - ELECTRICALLY OPERA
TED CALGULATORS AND
'OPTIMA""-TYPEWRITERS
AGENTS: JAFFEREE BROTHERS
50, St. Joseph's Street Colombo-4
Telephone : 32051 (4 Lines)
k

Page 7
அன்பளிப்பு
எஸ். பி. சாமி அன் கோ. 68, 4-ம் குறுக்குத் தெரு கொழும்பு-11
Guy si : 226 40
SaOA 次(ベ
யூனைட்டெட் மேர்ச்சன் லிமிட்டட் 71, பழைய சோகை தெரு கொழும்பு-12
Gu Jጠrqis : 3 2 8 2 2

தவப்பயன்
பிறப்பினுக் கெல்லாம் பெரியதாம் மனிதப்
பிறப்பினை எடுத்ததுந் தவமே குறைப்படற் கின்றி நலனெலா மமையக்
கொண்டபே ரெழிலுமெந் தவமே நிறைப்படக் கல்வி ஞானமும் அறிவும்
நேர்ந்ததும் தவத்தது நிறைவே சிறப்புடைக் குறள் வாழ் செந்தமிழ்க் குலத்து
சேர்ந்த தெம் மாதவப் பயனே.

Page 8

வெளியிட்டுரை
" ஆளை யடிமை கொளும் அரசபணி வெறுத்தொதுக்
கும் ” சரவணையூர்க் கவிஞர் தில்லைச்சிவன் யாத்த கவிதைகளைத் ** தாய்' என்னும் நூலாக வெளியிடுவதில் மிக மகிழ்கின்ருேம்
சீர்திருத்த எண்ணமும், தமிழ்ப் பற்றும், வீறுடன் தன்னு ளடக்கிய கவி. ஏன் பேணு உணர்ச்சியை - தமிழ் உணர்ச்சியை - தனக்கே யுரித்கான தனித்தன்மையுடன் கவிகளாக்கியுள்ளன. நாலுவரி எழுதிவிட்டால் கவிதையெனத் தானே தன்னைக் கவிஞனுக்கி மகிழும் இக்கால கட்டத்தில், பல ஆண்டாய்ப் பல கவிதைகளை அமைதியாயிருந்தெழுதி தமிழ்த் தொண்டாற் றும் தில்லைச்சிவனை தமிழ் கூறும் நல்லுலகறியும் அன்ஞரின் கவிதைகளைப் படித்தோம். "தமிழ்க்கவிதை களைப் படித்த நிலையமைந்தது; . அதனல் வெளியிட்டிோம் -
தில்லைச்சிவன் பேணு வாழும்பேன ! ஏனெனில் அப்வேன வில் கவித்துவமை மட்டுமே ஊறுகின்றது.
இது உண்மைதாஞ ?.
இதோ ! *உங்கள் கரங்களில் "தாய்” . பாடுங்கள்; பின்பு " உண்மை உண்மை " எனக் குரல் கொடுப் լ մn a hir - **
550/7, கே. கே. எஸ். வீதி * அன்பு வெளியீடு”
யாழ்ப்பாணம் 23-0-69

Page 9
இரசிகமணி, கனக, செந்திநாதன்
அவர்கள் வழங்கிய
அணிந்துரை
கவிஞர் தில்லைச்சிவனின் இரண்டாவது கவிதைத் தொகுதி தாய். 1961 ஆம் ஆண்டில் கவிதைக்கன்னி என்ற கவிதைத் தொகுதியை இவர் அளித்துள்ளார். எட்டு வருடங்களின் பின் கன்னி " தாய் 2 ஆகத் தானே வேண்டும். எஸ். எஸ். ஸி. படித்துக்கொண் டிருக்கும்போதே பட்டனத்து மச்சினி எனற அழியாப் புகழ் பெற்ற கவிதை மூலம் எழுத்த லகுக்கு வந்தவர் தில்லைச்சிவன். " பட்டணத்து மச்சினி' யின் தரமறித்து தமது மறுமலர்ச்சிப் பத் திரிகையில் பவனிவரச் செய்த தி. ச. வரதராசன், கவிதைக் கன்னிக்கு முகவுரை எழுது கையில் ** தில்லைச்சிவன் கவிதைகள் அவ்வளவும் உயிருள்ள கவிதைகள், அவற்றில் கற்பனைகள் இனிக்கும்; காதல் துள்ளும்; உணர்ச்சி கிளுகிளுக்கும்; தமிழ் மணக்கும். ’ என எழுதியுள்ளார். தாய்" என்ற இத்தொகுதியில் மேற்படி அம்சங்கள் பண்பட்டு இன் னும் மெருகேறி ஒளிவீசுகின்றன என்பது உண்மை.
சிதறு பூப்போல் இத்தொகுதியில் பாடல்கள் - நாற்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் - அமைந்திருந் தாலும்; தேசம், தமிழ், அழகு, காதலும் குடும்பமும், பெ ரியோ ர் க ள், கதைப் பாடல் என்ற ஆறு பிரிவுகளில் இவற்றை அடக்கலாம். இந்த ஆறு பிரிவுகளில் காதலும் குடும்பமும் என்ற பகுதிதான் விஞ்சி நிற்கிறது. பதின் நான்கு தலைப்புகளில் - பல

கோணங்களில் - அவர் அதைப் பாடியுள்ளார். தில்லைச் சிவனின் காதற் பாட்டுகள் "வெறும் கொப்பி’க் கவிதை கள் அன்று. அவருக்கு உரித்தான ‘பாணி' ஒன்று இருக் கிறது. அதைச் சுருக்கமாகச் சொன்னல் பட்டணத்துத் தெருவில், பட மாளிகையில் படிக்கும் கல்லூரிகளில் தோன்றும் காதலல்ல அவர்கள் காதல், சின்னஞ்சிறு கிராமத்தில் இயற்கையான சூழ்நிலையில் முறையான காரணத்தோடு தோன்றும் காதல்தான் அவருடையது. அதைச் சொல்லும்விதமும் ஆபாசம் கலவாதது. இதனுல்தான் தில்லைச்சிவன் உயர்ந்துநிற்கிருரர்.
தில்லைச்சிவனின் காதல் துள்ளலை, உணர்ச்சிக் கிளுகிளுப்பை இந்தப் பதினன்கு தலைப்புக்கள் கொண்ட பாடல்களில் பல இடங்களில் காணலாம். ஆனல் இர ண் டு இடங்களை மட்டும் தொட்டுக் காட்ட விரும்புகிறேன். " சிறுமியாய் இருந்தபோது தன்னுடன் விளையாடிப் பொய்க் கோபங்கள் காட்டிய வள் இன்று பெரியவளாகித் தன்னைக் கண்டதும் ஒளித்துக்கொள்வது ஏன்?" என்று கேட்கிருர் கவிஞர். ஏதோ உன் உள்ளம் என்ற கவிதையில் அவர் பாடு வதைப் பாருங்கள் :-
"தொட்டில் அசைத்திடத் தூளிகை கேட்டாய்
தோரண மாய் ஆலின் விழுதை அமைத்தேன்
பட்டுத் துணியினல் சுற்றிய கற்சேய்
பள்ளிகொள் ளனனப் பாட்டும் இசைத்தேன்
வட்டில் என ஆலின் இலையை எடுத்து
வார்த்த பொய்க் கூழினை உண்டு களித்தேன்
மெட்டி ஒலிக்க அணை குவை இன் ருே
மெல்லெனப் போயின் றெளிக்குதல் நன்ருே”

Page 10
ஆலம் விழுதால் தூளிகை கட்டுவதும், கற்சேய் பள்ளி கொள்ளப் பாட்டுப் பாடுவதும், வட்டில் என ஆலின் இலையை எடுத்து வார்த்த பொய்க் கூழினை உண்டு களிப்பதும் அசற் கிராமத்துச் சிறுவர் விளையாட்டுகள், தில்லைச்சிவனின் ஆழ்ந்த அனுபவ உணர்ச்சி கவிதை யாகப் பீறிடுகிறது மனதைக் கிளுகிளுக்க வைக்கிறது.
அத்தானைக் காத்திருக்கும் கிராமத்து நங்கை தனக்கே உரித்தான 'கொச்சை மொழியிலே பேசு கிருள். கிர : மத்த மொழி தில்லைச்சிவனின் பாடல்களில் உயிர்ப்போடு விழுகிறது.
*" வெட்டிப் பிளவெடுத்து வெத்திலையும் காம்புநுள்ளிக் கட்டித்தூள் மணஞ்சேர்த்துக் கைநிறையக் கொண்டு வந்தேன் செட்டிமகன் இவ்வளவும் செய்வதென்ன? கொடு கொடுக்கக்
கொட்டும் பனிக்கூதல் கொஞ்சமும் தெரியல்லையா ?
எளிமை, அழகு, ஆழம், உண்மை, உணர்ச்சி என்றெல் லாம் கவிதை சஞக்கு இலக்கணம் கூறுகிருர்களே. தில் லைச்சிவனின் இந்தப் பாடலில் எதுதான் இல்லை.
வெறும் காதற் கவிதைகள் தானே என்று முகம் சுளிக்கும் அன்பர்களுக்கு வீரம் காத்திருக்கிறது. தரும யுத்தம் என்ற ஒரேயொரு கதைப் பாடலில் வீரம் கொப்புளிக்கிறது. கைமுனு எல்லாளனை வென்ற கதை தான் தருமயுத்தம். எல்லோருக்கும் தெரிந்த கதை தான். ஆனல் தில் லேச்சிவனின் விருத்தங்கள் ஆற் ருெழுக்காய் அமைந்து வாசிக்கத் தூண்டுகின்றன. இன்னெரு விசேடம் கைமுனுவையும் எல்லாளனையும் ஒரக்கண்பார்வை பாராமல்-தராசு முனையில் நிறுத்திப் பாடியுள்ளார். கைமுனு வீர சபதம் செய்வதைப் பாருங்கள் :-

" தாய்த்திரு நாட்டின் பூட்டைத்
தகர்த்துடைத் தெறியா தோய்ந்து போய்த் துயில் கொள்ளேன்; இன்பம்
புல்லிடேன்; அமுதைச் சேந்தேன் தோய்த்தெடுத் தடினும் உண்ணேன்
தோழரே ! இவை செய் வேணுல் தாய்ப்பிறப் பெடுத்துச் சூழும்
நர கெல்லாம் அலைவே ஞக !
இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்த்தபோது நமது பாடப் புத்தகங்களில் இவை பவனி வந்து மாண வர் வாயூற - மனங்குளிரப் படித்தால் என்ன ? என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. தாம் பிறந்த தேசத்தைப் பாடாத கவிஞர்கள் இல்லை. தாய்நாடு மகாவலி, ஈழம் புகழ்பாடல் எந்நாள், என் ஊர் என்ற தலைப்புகளில் இக்கவிஞரும் பாடியுள்ளார். சில மணி தருக்கு-ஏன் சில எழுத தாளருக்கே-நமது நாடு, நமது நாட்டு எழுத்தாளர்கள் - நமது கிராமங்கள் - நமது வாழ்க்கைமுறை ஒன்றுமே பிடிப்பதில்லை. கவிஞர் தில்லைச்சிவன் பாடியுள்ள "என் ஊர்” நிச்சயம் இவர் கள் கண்களைத் திறக்கும். "பட்டண வாசத்தில் இருந்து கொண்டு ‘கிராமத்து மண் வாசனை' தோன்ற எழுது கிருேம் என்று நடிப்பவர்களின் கண்களை இது நிச்சயம் திறக்கும்.
"ஆடு துலா மரம்மீது ஆணழகன் ஏறிநின்று புஓடிமிதித் து ைதத்த உடல்வாதை தான் மறக்கப் பாடிக் களித்துவிசில் பண்ணிக்கும் மாளமிட்டும் வேடிக்கை யோடுபயன் விளைக்கு மெங்கள்சரவணையூர்!
காதல் - வீரம் - சிற்றுார் இவைகளைப் பார்த்துவிட்டீர் களா? தில்லைச் சிவன் பாரதி, நாவலர், வன்னியசிங்கம், அறிஞர் அண்ணு முதலிய பெரியோர்களைக் காட்டி யுள்ளதையும் படித்துப்பாருங்கள். ஆனல் அவர் தமது அயலேச் சார்ந்த வேந்தனர், தில்லைநாதப் புலவர்,

Page 11
பொன் குமாரவேற்பிள்ளை முதலியோரைப் பாடியுள்ள லேதான் என் மனம் குளிர்கிறது. வேந்தனுரைப் பற்றிய பாடலில் அவரது ஆற்றலைச் சரியாகத் தொட்டுக் காட்டியுள்ளார் கவிஞர். ' சொந்தவொரு முயற்சியினுல் தமிழைக் கற்று
துலங்கு மருட் பெருங்குணத்தால் உலகிற் கெல்லாம் தந்த கவி 'அம்மா " இந் நாட்டின் செல்வத்
தமிழ்ச்சிறுவர் மழலை யெ லாந் தவழ வைத்தாய்” என்ற பாடல்தான் உண்யைான வேந்தனுரைக் காட்டு கிறது. ஆனல் 1930-1940-க்கு இடையில் புகழ்பெற்ற எழுத்தாளராகி, அமரரான பொன குமாரவேற்பிள்ளை அமுதசுரபி என்ற அழகான மாதப் பத்திரிகையை அக்கா லத்தில் நடாத தியதையும் அவர் பாடலில் தொட்டுக் காட்டியிருத்தல் வேண்டும்.
தில்லைச் சிவனின் தமிழ்ப் பற்றுப்பற்றி நான் சொல்லவேண்டியதில்லை. 'ஆரியத்தைக் கொஞ்சம் கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கும் பாடலில் இருந்தே நீங்கள் அதை அறிந்துகொள்ளலாம். அந்தநாள் - சதிர் என்ற பாடல்கள் கவிஞரின் வெற்றிகர :en ன பாடல்கள் அந்தநாள் என்ற கவிதை முதுகவிஞராய் இருந்து மறைந்த யாழ்ப்பாணனின் மாங்காய்க்குக் கல்லெறிந்து? என்ற பாடலகளை நினைவூட்டினலும் சில பாடல்களில் தனித்த முத்திரையைப் பொறித்திருககிருர் தில்லைச் சிவன், செம்மணற்றிக் காட்டில் செவ்விளநீர் பறித்தருந்திப் பொம்மன் கிணrறிலதைப்போட்டுவிட்டு அவன் வளவில் வெள்ளரியின் பிஞ்சையெலாம்வேண்டு மட்டும் நாம்பிடுங்கிப் வள்ளிவரப் பட்ட அடி பாடின் அந்நாள் வாராதோ? தில்லைச்சிவனின் பாடல்களைப்பற்றி இன்னும் எவ் வளவோ சொல்ல ஆசைதான், ஆனல் அவர் ‘ஐந்து பக்கங்கள்தான் உமக்கு’ என்று சொல்லிவிட்டாரே. சிவனின் கட்டளையை மீற நம்மால் மூடியுமா ?
தில்லைச்சிவனின் பாடல்களிற் சில நின்று நிலைக்கும் என்பது உறுதி.

என்னுரை
--ഷm=
கவிதை பாடத்தான் வேண்டும் - பாடாமல் இருக்க முடியாது. இப்படியொரு கட்டாயம்.
பாட்டு எழுதுவதில் ஏற்படும் மகிழ்ச்சி - படைப்பின் களிப்பு; இதற்காகப் பல பாடல்கள். நான் சுவைக்கும் கவி ஞர்களின் பாடல்களால் என்மன உணர்ச்சிகள் மோதியெழும் போதெல்லாம் அவற்றை வெட்டியும் ஒட்டியும் எழும் கவிதை கள் மிகப்பல. நண்பர்களின் நச்சரிப்புக்காகச் சில, இப்படிக் கவிதைகள் பாடிக் கொள்வது எனது ஒரு பகுதி” நேரத் தொழில்.
இந்தத் தொழிலுக்கேற்ற கருவிகள் என்னிடம் இல்லை. இக் கருவிகளைத் தேடிக்கொள்ளும்படி சில நண்பர்கள் கூறிய போதிலும், ஏனே எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்ல. எனவே, எனது கவிதைகள் வெறுஞ் சுண்ணமும் நீரும் கல் லும் மண்ணுங் கொண்டு, கருவிகளின் றிருக்கையாற் சமைத்த கட்டிடம் போன்று, ஒழுங்கு - அழுத்தம் என்பன அற்றதாய் இருக்கலாம். ஆஞல் திணிவுடைய இறுகிய உதாரமான கவிதைகளாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.
இவ்வெண்ணத்தின் தடிப்பு உங்கள் கையில் நூலான இருக்கின்றது.
இந்நூலில் உள்ள கவிதைகளிற் பல ஒவ்வோர் சமயத் தில் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்தனை தாம். இவற்றைத் தொகுத்து நூலாக்கித் தர உதவிய நண்பர்கள் பலர். அவர்களை சிான் நெஞ்சத்துள் நிறுத்ஓ வாழ்த்துவதுடன் அழகிய முகப்போவியம் வரைந்துதவிய ஒவிய அன்பர் ரமணி, முன்னுரை வழங்கிய இரசிகமணி அவர்கள், அச்சிட்டுதவிய விவேகானந்த அச்சக உரிமை யாளர்கள் - ஊழியர்கள் இந்நூலை வெளியிடமுன்வந்த அன்பு வெளியீட்டினர் எல்லோருக்கும் எனது அன்பின் வனக்கங்கள் சுவைஞர்களே !
உங்கள் கையிலிருக்கும் கவிதைகளைப் பாடுங்கள் - ஒன் றல்ல, இரண்டல்லப் பலமுறை பாடுங்கள்-உரத்துப் பாடுங்கள், உங்கள் உள்ளக் களிப்பு எனது உழைப்பின் துயன், வாழ்க தமிழ் * * đạt-đồ 9 சரவணை - வேலனை தில்லச்சிவன்
8-1 - 69

Page 12
படையல்
எழுத்தணி சொல் பொருள் யாப்பு
இன்னவென அறியா யான் பழுத்த பெரும் புலவர்களின்
பாடல்களைச் சுவைத்தவைபோல் தொடுத்த இவை “ கவிகளென ”த்
தோன்ருத துணையாகி எடுத்தெடுத்துத் தந்தவளை
எண்ணியிந் நூற் படைலிட்டேன்.

7.
8.
19.
20。
2.
22。
&5。
24.
25.
பொருளடக்கம்
areasedar-r
தாய்
தாய்நாடு
காலைக்கதிர்
if R
நர்த்தனம்
மகாவலி
தை
செங்கதிர் வசந்தவிழா
கவிதை
பாரதி நினைவு நாட்டுக் கொரு நாவலர் வன்னியசிங்கம் காலா உனக்கு ஐயோ ஈழம் எமது நாடு புகழ் பாடல் எந்நாள் ஆரியம் இளைஞர் பாட்டு அந்தநாள்
சதிர்
என் ஊர்
அத்தை கதை சொன்ன கவிதை தாபம்
ஏதோ உன் உள்ளம்
as a
8 s
A.
பக்கம்
2
4
I 5.
7
9
2
23
25
26
28
90
32
34
39
40
42
44
46
47
49
52

Page 13
26.
27.
28.
29.
30.
3I.
32.
3.
ó4。
35.
36.
37.
38.
கட்டியொரு முத்தமளியே முடிவு என்ன நெடுவழி வாழ்வரசி வந்தாள் Abdjijfaf TGsjir தில்லைநாதப்புலவர் வேந்தஞர் தமிழ் உயிர்ப்பதுவும் தலன் புனேவு பிரியாவிடை திருமண வாழ்த்து திரும யுத்தம் என்றுமுள தென்தமிழ்
Ludi gub
54
56
6.
63
65
72
74
76
ገ8
8.
83 84
05

தாய்
மலருள் நிறைந்து ‘மணம்' என்று புகழ்பரப்பி நிலவில் ஒளியாகி நெருப்பிடையே வெம்மையதாய்U பழகு தமிழ் இசையில் பாய்ந்தினிமை பயந்தழகு
மழலை மொழியில்'இன்ப மயக்கம்”என்ற பேருடையான்
வீரர்திருத் தோளில் வேளாளர் ஏர்முனையில் காரிற் ருெழிலாளர் கரங்களிலும் குடியிருப்பான் டாரு ஞயர்த்தநல்ல பண்பாளர் உள்ளத்தில் நேருக்கு நின்றுஅருள் நிர்மல னென் பாரவனை,
அறிந்தவர்க ளில்லை அனுபவியார் யாருமில்லை தெரித்தம்” என்பார் கண்டதில்லை சேர்நெறியொன் றில்லைநோய் வருத்திடும்போ தின் மருர் தாய் வர்கிடுவான் யான் தனித் து இருந்திடும்போ தென்செஞ்சில் இன்பவனு பவர் தருவான்.

Page 14
சண்ணன் என்பர் "கர்த்தர்" என்பர் கருணைதவழ் அல்லா விண்ணுலகை பஈளும் வேந்தன் என்பர் 'புத்தன்’ என்பர் எண்ணி லடங்காத எத்தனையா யிரம்பெயரால்
இன்னு முரைத் தழைத்தும் எவரவனைக் கண்டார்கள்?
காணு திருந்தெனது கடுகுளத்தில் அணுமின்னுய் வீணுசா ன ஞ் செய் வித்தகனே கண் கண்ட தெய்வம் என் தாய்மேல் தீந்தமிழ்நற் கவியெழுதி உயே நினைத்தேன் யான் உன்ன குளாம் கையளிப்பாய்
பாலிற் படுநெய்போல் பாவலர்தம் நெஞ்செழுந்த நூலிற் பொருளாய் நுகர்வோர் பெறு பயனே! ஆலித் துலையும் அலைசூழ் உலகிலருள் பாலித் தென தன்னைப் பாட்டுவரக் காத்தருள்வாய்!
"" அன்னை தனி லினியை "யென ஆயிரமாயிரம்பெயரால் நின்னை வழுத்தி நினைந்துருகிப் பாடுமென தன்னை தனதன் புக் காளாகி னேனதனைப் பன்னிக் கவிதை சில பாடவருள் தாராயோ?
"உத்தமனுள் பிள்ளை’யென ஊரார் சொலக்கேட்டுப் பெற்ற பெHழுதின் பெரிதுவக்கு மன்னதனை வைத்துக் 'கவியென்றென் வாய்குளற அதன் நிறைந்த சத்துப் பொருளாகித் தாங்குமிறை வாழியவே!
ஒ سك

பெற்றெடுத் துப் 'பிள்ளை'யெனப் பெரிதுவந்து தலைமோர் து மெத்தை பிட்டு மலர் பரப்பி மெல்லணையிற் ரூன் வளர்த்தி சித்தத் துணர்வையெல்லாஞ் சேர்த்துமுலைப் பாலூட்டி சத்திதருந் தாயின் தண்ணளியைப் பாடீரோ!
கத்தும்பேஈ தெழுந்து 'கண்ணேறு பட்ட”தென ச் சித்தம் துடித்துச் சில எடுத்துச் சிரசிலிட்டுப் பத்தியந்தா னுண்டுமுலைப் பாலால் உயிர் வளர்த்த உத்தமியெம் தாயாரை உயிர்த்த விசில் ஏற்றிரோ!
குந்தவைத்துச் "சப்பாணி கொட்டு"எனப் பாட்டிசைத்து பந்தெடுத்துத் தந்து பம்பரத்தை ஆட்டிவிட்டு எந்திரப் பொம்மைகளை எம்முன்னு லாட விட்டு சந்தத் தமிழ் இசைத்துத் தாலாட்டுச் சொன்னவள் தாய்
புத்தம் புதுஆடை பொன்னணிகள் பூட்டி மகிழ்
முத்தஞ் சொரிந்துதினம் முன்தூக்கிக் கண் ஒற்றி முத்துச் சிரிப்புதிர்க்க மோகித் தணைத்து நெஞ்சில் வைத்தூஞ்சல் ஆட்டி வாழ்த்திடுவாள் தாயவளே
வானத்து அம்புலியை வண்ணமயில் கிள்ளைமுயல் மே எனத்தெழிலையெல்லாம் முன்னழைத்துப் பின்ளை கட்கு ஊணைத் தருந்தா யாம் உத்தமியைச் சித்திரித்து ஞானக் கவிதைசெய்து யாம்பாட வேண்டாமோ?

Page 15
குத்திக் குளறிக் குறும்பு பலசெய்து தத்தித் தளர்நடையால் தள்ளாடிப் பாவிவர மெத்தமகிழ்ந் தெம்மை மேலெடுத்துத் தோள்மீது வைத்தாடு மன்னதனை வாழ்கவெனப் பாடோமோ?
பத்துத் தனித்திங்கள் பாடுபட்டுப் பெற்றெடுத்து கத்தும்போ தெல்லாம் கடவுளரைக் கைதொழுது சொத்தை அளித்துச் சுகமளித்துங் பல்கலையாம் வித்தை பெற வாழ்த்தி விரதம் இருந்தவள்தாய்
ஆடித் திரிந்தெங்கள் அழகுடலில் தூசுதொட்டு வாடிவரக் கண்டோடி வந்தனைத்து மூத்தமிட்டு ஆசையுடன் நீராட்டி அழுக்ககற்றி அழகு செய்யும் தாயைப் புகழ்ந்தேத்தித் தமிழ்செய்து பாடுவமே!
வீரன் அருச்சுனனும் வில்லாளன் கன்னனுஞ்செய் போரின் திறங்கூறிப் பொன்றிடினும் நன்றிகொல்லாத் தீரம் வியந்து செயற்கரிய செய்த மனுச் சோழன்" என எம்மைச் சொல்லிமகிழ் வாள் அன்னை.
பள்ளிக்கு வைத்தங்கு படித்த அம்மா’ப் பாட்டதனைச் சொல்லக்கேட் டோடிவந்து துரத்திப் பிடித்திதமாய் மெல்ல அணைத்த முத முத்தமழை சொரிந்து >. உள்ளங் களிகொள்ள உவந்திடுதாய் வாழியவே!
4

தாய் நாடு
என்னுடு + ஈழமணித் திருநாடு
என்றிடில் உள்ளத்தில் இன்பத்தே ஞறு பண்ணுேடு 1 இசைபாடிப் பாயுமப் போது
பாவினிற் போற்றிப் பரவல்தான் தோது விண்ணுட்டுத் தேவரும் விரும்புமிந் நாடு
விருந்தளித் தேதினம் உவத்திடும் நாடு பொன்னடு மாவலி யோடுபல் ஆறு
புரந்து வளந்தரும் ஈழநன் நாடு.
சிங்களஞ் செந்தமி ழா மிரு மொழிகள்
சேர்ந்து புஒளிதரத் திக்கெட்டுக் வாழ்த்த கொங்கலர் இன் மலர்ச் சோலைகள் தோறும்
குயில்க ளிசைத்திட மயில்கள் நடிக்க பங்கயச் செவ்விதழ்ப் பாவையர் எங்கும்
சங்கீன்ற வெண் முத்துப் போங்கு நலஞ்சேர்
சாகரஞ் சூழ்ஈழ நாடெங்கள் நாடே.

Page 16
புத்தன் அருளாலும் முப்புரஞ் செற்ற
புனிதன் அருளாலும் புகழுற்ற நாடு
முத்தும் அரிசியும் மற்றவர்க் கீய்ந்து
முன்னீர்த் திரைவந்த பல்பொருள் கொண்டு ܖ. •ܫܐ -܀• ܚܝܙ
வித்தை பல கற்று வீரர் செந் நீரால்
விழைவுற்ற சுதந்திரப் பயிர்கொள்ளும் நாடு
அத்தனும் அம்மையும் வாழ்ந்தெமை ஈன்றே
ஆனந்தங் கொண்டொளிர் ஈழத்தாய் நாடே

காலைக்கதிர்
மடல்வி ரித்து மலர்கள் இன்ப மணம்ப ரப்பி ஆடுது கடல்எ ழுந்து அலையெ றிந்து காலே இசை பாடுது.
கொக்க ரக்கோ என்று சேவல்
கூரை மேல கூவுது
தொக்கி நின்ற இருட்தி ரையைத்
தூக்கி வானம் வீசுது.
வெள்ளி யாறு ஒன்று வான
வீதி யெங்கும் ஓடுது
துள்ளிப் பாய்ந்து தங்கச் சேற்றுள்
தோய்ந்து சுளி போடுது.

Page 17
ஆனை மாடுபு ஒட்டை சிங்கம்
அண்டர் மேலுலா விப்பின்
பூனை யாகித் தேய்ந்தி றுந்து
போகும் விந்தை காண்மினே.
மேகப் பஞ்சுப் பொதியிற் பொன்னின்
மின்னற் கீற்றுப் பாயுது
காகம் கொம்பி லேறிக் குந்திக்
“ “assmrgsmar”? வென்று கரையுது.
வானம் கடலைக் கூடு மிடத்தில்
வந்து செந்தீ மூளுது
கானம் பாடிப் பட்சி ஜாலம்
ககன மீது- ஏறுது.
இருள் அ ரக்கன் உடல்கி Nத்து.
இருத யத்தைக் கொண்டுமேல்
வருதல் போல வான மூலை
வந்து பரிதி நோக்கினன்.
தங்கத் தட்டம் ஒன்று வானில்
'தகத கென்று'. ஒளியுடன்
தொங்கி டுதல் போலக் கீழ்வான் சூரியனும் தோன்றி னன்.

நீல வண்ணன் கையிற் சுற்றும் நித்தில வெண் சக்கரக் கோல மன்ன பரிதி விண்ணைக்
குலவி மேல வந்தனன்.
வர்ண ஜாலம் புரிந்த தூய
வானம் அந்த மருங்கேலாம்
மர்ம ஜாலம் புரிந்து அன்பில்
மலர்ந்த திந்த உலகெலாம்.

Page 18
0
வாடை
வடதிசை நின்று +ஒய்?யென வாடை
வந்திங்கு 8 வீசா தோ
கடல் எ முத்தலே ஒம் ஓம் என்று
கரைந்திடிற் கேளாதோ?
பரியலை யாயிரம் பாய்ந்து வரக்கடல்
பம்பி எழும்பாதோ
கரியென ஒட்டையென் றேமேகம் வானத்தைக்
காடாக்கிக் காட்டா தோ
‘கட்டக் கடபுட’ மேகம் குமுறிக்
கர்ச்சிக்கக் கூடாதோ
வெட்டி பிருளைப் பிளந்தொளி மின்னல்
வீசி படிக்காதோ

** கொடுகொடு” வென்று கூத லடிக்கக்
கூசி நடுங்கேனே
'சடசட' வென்ன மரங்கள் முறிந்திடும்
சத்தமா ராட்டாதோ
திகில்மி குத்த பயமகிழ் வொன்று
வென்னுளத்தில் سهاکی ق)
அகில்ம ணத்துடன் வாடை தருழந்த
ஆவணி வாராதோ
கூ’வேனச் சேனலை எங்ங்ணும் வாடை
கூவிக் களியாதோ
‘வா? வென் றழைக்க மாமழை யிங்கு
வந்து பொழியாதோ
*கததக்க கததக்க” தவளைகள் சொல்லும்
கதைகளைக் கேட்கேணுே
மதம் தப்பொடு அன்னை மடிக்குள் நான்
மண்டிக் கிடக்கேனே
1 I

Page 19
நர்த்தனம்
12
குளிர்ந்த காற்று முட்டி மோதிச்
சுழன்ற டிக் குது - கோடைக்
கொடுமை நீக்கி உலகம் முற்றும்
இருத்து
எங்கும்
கறுத்த
கான்ற
பருத்த
684 קj_
குதூக லிக்குது - காட்டில் மந்தைக் கூட்ட மோடி இல்லஞ் சேருது - வானம் வெள்ளிக் கீற்றில் சென்று மின்னல் பாயுது.
மேகம் வானம் முற்றும் மறைத்து மூடுது - கதிர் ஒளியி னிழைக ளங்கும் இங்குத் தேயுது - நன்கு மரத்தின் கிளைகள் தம்மைப் பட்சி சேருது - மலர் சோலை மழையை ஒல்லை
வரவ ழைக்குது.

வயிர வாள்சு ழற்றி வான
வீதி வந்தன ள் - அருள் வாணி யிடிமு ழக்கி வெற்றி
வாகை சூட்டினள் - புவிக்கு உயிர Oத்துச் சளச ளென் ன
உதிர்த்த நித்திலம் - இந்த உலகம் வாழ இயற்கைத் தேவி
புரிந்த தர்த்தனம்.
盈、

Page 20
மகாவலி
பாத பங்க யத் தி லூறிப் பாயுந் தேன ருவிகை வேத மத்ரம் பாடி விளை யாடும் விந்தை காண்மிசூே
மலைவளர்ந்த வேயின் முச்தும் மணியுங் கொண்டெறிந்துமே கலைகள் தேரும் புலவன் நெஞ்சில் கவிதை வீற ஒடுதே
திமு தி மென்று அலையெ றிந்து திசைகள் தோறும் ஒடு: குமுத முறுந் தேறல் அள்ளிக் குடித்துத் தேரை பாடுது
காவு ளோடிக் கழனி யாடிக் கடுகதிவெண் புரவி போல் வாவ லைகள் வீங்கிப் பாயும் வளமை வந்து காண்மினே
பொன்வி சித்த அகலக்க ரத்தில் பூக்கள் கொண்டு எல்லெழில் பெண்கள் சூட வைத்த கங்கை பெருமை பாடி பாதிவோம்
பூத்துகி லுடுத்தகங்கை பொன்னி லங்கை யெங்ங்ணும் பாய்ந்து நல்ல வளமை ஆற்றும் பான்மை காண எழுமினே
காடும் மேடும் மகா வலி கங்கை மேவி ஓடவே வாடல் இன்றி ஈழம் எங்கும் வாழ்த்துப் பாடி ஆடுமே
பொங்க ரின் நு ழைந்து வாவி புகுந்த ழிைத்து ஈழநல் மங்கை யுள்ளம் பொங்க ஓடும் மகாவலியும் வாழ்கவே
14

தை தோன்றுது
பொங்கும் இருட்திரை நீக்கியே - அருட் புத்தொளி எங்கும் தேக்கியே செங்கதிர் வானினைச் சேர்ந்தனன் - கவி செய்து பலரதைப் பாடினர்.
பொன்னின் ஒளிக்கீற்றுப் பொலிந்தது - கடல் பொங்கி ஒலித்தலை எறிந்தது “தண்’ணெனத் தென்றல் தவழ்ந்தது-பொய்கைத் தடங்களிற் ரூமரை மலர்ந்தது.
வண்டுகள் கின்னர வாழ்த்தொடு - புது மலர்களில் மதுவினைச் சேர்த்தன எண்ணிற் பலப்பல எழிற்சுவை உ வானில் ஏற்றி இரவி எழுந்தனன்,
5

Page 21
செந்நெற் கதிர்க்குலை சிரித்திட - அதைச் சென்று சிலட்சி கொறித்தன மண்ணின் பணமுணர் மறவர்தோள் - மகிழ்
மண்டிப் புடைத்து மலைத்தன.
I 6
கன்னியர் கைவளை கலங்கிட - செய்ய காலினிற் கிண்கிணி அலம்பிட வண்ணிய கூத்தினைப் பார்த்துமே -விண்ணிற் பருதி எழுத்துலா வந்தனன்.
மாயம் புரிந்தது வானகம் - அன்பின் மர்மம் புரிந்தது மண்ணகம் தோயும் ஒளிவெள்ளம் உலகெலாம் - தமிழ்த் தொன்மை விளக்கித்தை வந்தது.
 

செங்கதிர்
புத்தம் புதுமலர் புன்னகை தெய்திடப் பொங்கும் கடல் அலை சங்சம் முழங்கிடச் சித்தம் மகிழ்ந்த உழவர்கள் நாவெலாம் செங்கதி ரோன் வாழ்க வாழ்கென்று வாழ்த்திட,
தென்றல் பணித்துளி சிந்தி நடந்திட செந்தமிழ்ப் பாட்டுடன் மங்கையர் ஆடி டக் குன்றிற் குதித்த நதியோ டி ஒடையில் குமிழிட்டுச் சுழிபட்டுக் குலா விக் சழித் திட.
உந்தி யெழுந்துவான் ஒளிக்குளத் தாடியில் உலகினைத் தங்க முலாமிட்டுக் கூடியெம்
செங்கதிர் வானத்தில் ஏறினன் தைவரச் சிலிர்ந்தது நெற்கதிர் விழித்த துலகெலாம்.

Page 22
8
வானம் பொழிந்தது பூமி விழைந்தது மக்கள் உழைப்பு மகிழப் பொலிந்தது தானம் சிறந்தது வேய்யோன் வடதிசை தாவி நடந்தது தையும் பிறந்தது.
பட்டுப் புனைந்தவர் தம்மொடு ஆயிரம் பொட்டல்க ளோடாடை பூண்டவ்ர் தாமுமாய் ஒட்டு* யுறவாடிப் பொங்கலிட் டே நறும் மட்டவிழ் புது மலர் தூவி வணங்கினர்.
செங்கதிர் தந்தநல் நெல்லெடுத் துச்சுவைத் தேன்பழம் பால் கொண்டு படைய லிட்டு மங்கையர் சூழ்தரப் பெங்ச லிட்டே தமிழ்ச் சிங்கங்கள் வாழ்த்தினர் வாழ்க பொங்கல்!
 

வசந்த விழா
க்ரும்பனைக் காலின் மேல் மேகத்திரை போர்த்த கந்தர்வப் பந்தலிலே - எம்
மருங்கும் கமுகும் கதலிகளும் நட்டு
மாண்பொழில் பெய்தாச்சு.
மின்னற் சரட்டினைப் பின்னியே தோரணம்
மேலே அமைத் தாச்சு + எழில்
துன்னிடுந் துரவியும் தோகையுமே கொண்டு
சோடனை செய்தாச்சு.
புத்தம் புது2ணல் பரப்பி வசந்தனைப்
போற்றி அழைத்தாச்சு - வானில்
எத்திசை யும்ஒளி ஏற்றிடக் கோடி
எழில்மீன் விளக்காச்சு.
19

Page 23
20
மங்கலப் பொற்கும்பம் வானில் அமைத்திட
மதியை அழைத்தாச்சு - செய்தி
எங்கும் அறைந்திடப் பூங்குயிற் றுாதினை
ஏவி விடலாச்சு.
வெண்மலர்க் கிண்ணியில் மதுரசம் வார்த்து
விருந்து மகிழ்ந்திடவே - வண்டுக்
கன்னியர் சேர்ந்திசை பாடினர் ஆடினர் களிப்பில் அயர்ந்திடவே.
மாம்பழம் கொத்தி மகிழ்ந்திடும் கிள்ளையில்
மாரன் இவர்ந்து வந்தான் - நல்ல
வேம்பின் மலர்மண மாலை அணிந்திவன் f
வேனிலோன் வந்துவிட்டான்.
வள்ளைக் கொடியென மெல்ல அசைந்தன்ன
வசந்தி மலர்ச்சிரிப்பால் - அவன்
உள்ளம் பறித்தந்தக் கொள்ளையி லேயின்பம்
அள்ளி நடந்து வந்தாள்.
வசந்த சேனையை வேனிலோன் கூடி வந்த பூம் பந்தலிலே - நின்று
அசந்த துலகெலாம் இன்பக் களிப்பினில்
ஆனந்த மாடியவே.

கவிதைத் தெய்வம
பூவில் காவில் தேனில் . தீப்
பொறியில் பொய்யில் புலவன்
நாவில் கவிதைத் தேவி - நின்று
நடன மாடி மகிழ்வாள்.
அன்பு கொண்ட நல்லோர் - நெஞ்சை
அணைத்துக் காதல் புரிவாள்
வன்பு கண்ட போது - ஊழி
வாரி போல எழுவாள்,
தெளளத் தெளிந்த ஆற்றில் - ஒளி
திரண்ட முத்து மணிகள்
அள்ளிக் கொண்டு வருவாள் - வந்து
eyei u ருக்கு அருள்வாள்.
2盘

Page 24
தீயில் தோய்த்த போதும் - கோடிய
திருடர் கோண்ட போதும்
பாயும் வெள்ளத் தோடு - ஏட்டைப்
படர விட்ட போதும்.
தோயும் உள்ளம் எல்லாம் - கவிதை
துளித்தே ழுந்து விண்டு
பாயும் புதுமை இளமை - மிக்க
பண்பு எல்லாங் கொண்டே.
வாழி கவிதைத் தேவி - இந்த
வைய முள்ள மிட்டும் ஊழி ஊழி எல்லாம் - நல்லோர்
உள்ளம் நின்று ல8 வி.
நாத வின் மாவாள் - காற்றில்
நடந்து விண்னேச் சாடி
மோதி மின்னற் கீற்றில் - சென்று
முழங்கி இன் பஞ் செய்வாள்
பண்ணில் யாழின் ஒலியும் - துய்ய
படிக மல்  ைஉருவும்
கண்ணில் இன்பச் சுடரும் - ஏத்திக் கவிதைத் தேவி வருவாள்.
கவிதை எங்கள் தெய்வம் - அவள்
கருணை பெற்ற மனிதர்
புவியில் என்றும் பொன்ரு ப் - பெரும்
புகழி னேடு வாழ்வாள்.

பாரதி நினைவு
தீயினை வான வெளியினை அமுதைத்
தேனினிற் குழைத்தெடுத் தலகத் தாளினில் நிலவின் கதிரினைக் கோண்டு
தண்டமிழ்க் கவிதைகள் எழுதி தாழ்வினை நீக்கி இறப்பினை ெேவன்று
தமிழ்உள அளவு மிப் பூவில் வாழ்வினைக் கொண்ட பாரதி திருப்பேர்
வாழ்த்துதும் வாழ்வுநாம் உறவே.
சுவைபுதி தாளுஞ் சொல் நனி புதிதாய்
சோர்விலாக் கவித் தொழில் மேவி நவபொருள் கண்டு நாட்டினுக் குழைத்து நயமுறு தமிழினுக் குற்ற வசையற வற்ரு வளம் புதி தான
வஈன் கவி தந்தபா ரதிதன் இசைதனைப் போற்றி ஏத்துவம் நாமிங்(கு)
ஏற்றமுற் றிருந்திடு தற்கே.
逻、

Page 25
24
சுதந்திரம் அடிமைத் தொண்டிலா உலகம்
சோற்றினை யாவரும் பெறவும் விதந்திடு கல்வி கேள்விவித் தைகளால்
விஞ்சையர் ஆகவுஞ் சாந்தப் பதந்தரு தெறியில் உலகினுக் கெல்லாம்
பாரதக் வாழ்வினை அளித்துச் சுகந்தர உழைத்த பாரதி நினைவாய்
சுதந்திர பாரதம் எழுக.
 

நாட்டுக்கொரு நாவலர்
நாவலர் இன் தமிழ் நலனுகர் தென்றல், காவலர் சிவநெறிக் கருணையின் கொண்டல் - அவர் வாதினில் ஏதிலர் கோ வாரி வஞ்சச் சூதினர் முன்னர் சுடர்ப்பெருஞ் செந்தீ.
காதலி தமிழுடன் மோகம் விழைத்தார் கோதை யட் குவசன நடையை அளித்தார் . சைவம் பேசிட வோர் பல மேடை யமைத்தார்
ஆசிடும் அஞ்ஞான மாயை யழித்தார்.
இன் பத் தமிழ்ஏடு தேடி எடுத் தயிர் (ப்) பஞ்சால் துடைத் துப் படித்தக் களித்துப்பின் - அவை எங்கும் உலா வர எந்திரம் சேர்த்திசை விஞ்சை தழுவிட விளங்கினன் நாவலன்.
நாட்டுக் கொருநல்லை நாவலன் இல்லையேல் பாட்டுக்கும் சிவநெறிப் பண்பிற்கும் பிறப்பிலா. இன்ப வீட்டுக்கும் ஒளிக்கல்வி விளக்கிற்கும் தமிழ்க்கலைக் காட்டுக்கும் ஏங்கிக் கலங்குமிவ் வுலகமே
25

Page 26
வன்னியசிங்கம்
26
நடையினில் மான உடையினில் பேச்சில் நாயினுங் கடையராய் மெலிந்து மிடையராய் அயலார் பழித் திட மானம் இற்றுடல் வளர்த்துலட் சியமாய் படையெனில் ஒடுங்கிப் பசா செனப் பயந்து
பசப்பலே வழித்துணை பாக மடை யராய் இழிந்த தமிழர் தம் உணர்ச்சி
ッ மந்திரம் வன்னிய சிங்கம்.
வஞ்சகம் புரிந்து தமிழரை மடக்க
வாழ்வினில் தாம் வளங் காண நெஞ்சிடங் கொண்ட கயவரை ஒதுக்கி
நீதியை முன்னிலை நிறுத்தி அஞ்சுதல் ஒழிமின் தோழரே இனிநாம் ஆளுவோம் எம் திரு நாட்டைத் துஞ்சினும் பெறுவோம் சுதந்திரம் என்றே
சொன்னவன் வன்னியசிங்கம்.

கோட்டினைச் செல்லும் ருேட்டினை மக்கள்
கூடிடும் இடங்களை மற்றும் வீட்டினை எல்லாம் தமிழர் தம் வாழ்வு விளக்கிடும் மேடைக ளாக்கிப் பாட்டிலும் காசியப் பேச்சிலும் வீரப்
பண்ணிலும் சொல்லிலும் விளக்கி ஆட்சி பெற நுப்யப் பாசறை அமைத்த
அமரன் எம் வன்னிய சிங்கம்.
அச்சமிங் கொழித்து ஆண்மையை வளர்க்கும் ஆற்றலிற் சிறந்தது அவர் சொல் இச்சகம் முழுதும் தமிழர் வெம் குறைகள்
எடுத்துரை மொழிந்தது Cஅவர் வாய் கொச்சைகள் பேசி "இங்கெமக் கின்னும்
கொஞ்சமுந் தமிழ் வரா" தென்னும் பச்சைநற் றமிழர் வா யெலாம் தமிழைப்
வாலென வார்த்தது - அவர்கை.
வடக்கென ஈழக் கிழக்கென வேறு
வன்னியென் றின் ேைவற் றுமைகள் தமக்கித மாசு ஆக்கியோர் செயலைத்
தாக்கி அந் நோக்கினை நீற்றி இடக்கெனக் கிடந்த சாதிவேற் றுமைகள்
யாவுமிங் கிற் ருெழிந் தழியத் தொடக்கிய முதல்வன் வன்னிய சிங்கம்
தூயவன் நாமமே வாழ்க!

Page 27
காலா ! உனக்கு ஐயோ !
அண்ணு அறிவின் வைப்பே தேனர் அமுதச் சொல்லின் ஊற்றே ! இம்மா நிலத்தில் தமிழின் வாழ்வே இதயங் கொண்ட முகிலே ! உன்ன லன் ருே நாமுந் தமிழும்
உயர்வோம் என்று - இருந்தோம் என்னே கொடுமை ! என்னே கொடுமை !
எம்மை விட்டே சென் ருய்
சென்ருய் அண்ணு ! செயலொன் றின்றித்
திகைக்கும் எமக்கென் சொன்னுய் ! குன்றே அ%னய கொள்கை வைத்துக்
குலையா உறுதி யோடு . 'ஒன்றே குலமும் தெய்வமும்’ ஒல்காப் புகழ7 ல் வையம் கண்டே ஏத்த நின் ருய் ஐயோ ! கெளவிச் சென்ருன் காலன்,
என்ருய்
28

agmrer) tr ! உனக்கு ஐயோ! தமிழின்
கணித்தே னுயிரேன் கொண்டாய்? நாலா திசையும் நல்லோர் உயிரில் நாட்டம் உனக்கு இப்போ ஏலா தினி யுன் கொடுமை தாங்க
எங்கோன் இளம்பிறை யாளன் காலால் மீண்டோ குதைபட நேரும்
கருதிலை யோ அட கெடுவாய்?
29

Page 28
ஈழம் எமது நாடு
30
வாழ வகைசெய்ய வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கேல்லாம் ஆளும் உரிமையும் வேண்டும் - தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும்.
ஈழம் எமதுயர் நாடு - எந்தை
இருந்து மகிழ்ந்து மடிந்தமண் மேடு சூழுந் துயர்முடித் திங்கே - சுத்த சுதந்திர ராக மகிழ்ந்திடு வோமே.
பிறந்தபொன் நாடிது கண்டீர் - காதல் பேசி மகிழ்ந்து. அணைந்ததிந் நாடே இறந்தெம் உடல் எரு வாக்கி - இந்த ஏர்பெற்ற நாட்டிற்கெம் ரத்தநீர் வார்த்தோம்,

அந்நியர் என்றிட லாமோ - எமக்கு ஆளும் உரிமை மறுத்திடிற் போமோ பண்ணிய சூழ்ச்சிகள் எல்லாம் - தூள் பண்ணிடக் கூடுமோர் நாள்வரு மன்ருே.
ஒலமிட் டாவதொன் றில்லை - நித்தம் உதைபட்டு வாழ்வதுந் தொல்லை காலம் வருமந்த வேளை - எதிர் காத்திருந் தேயெடு வாளை.
3

Page 29
புகழ் பாடல் எந்நாள்
பாலாறு பாய்கின்ற நாடு - வீரர் பலர்கல் லில் நிலைபெற்ற தேசம் நூலோடு பயில்கின்ற மாதர் - நுண் இடையோடு எழில் பெற்று லா வ மேல்நாடு முழுது மென் நாட்டின்-உயர் விஞ்ஞானமே கண்டு வியக்க சேலோ டு பூவாடு பொய்கை - மிக்கு செழிப்போடு வளர்கின்ற தென்றும்,
'இல்லாமை என்பது மின்றி . உண்டு
எல்லாமென் றிருமாப்பு மின்றி எல்லாரு மெல்லாமும் பெற்று மிக்க ஏற்றம் அடைத்தார்கள்’’ என்றும்
'நல்லா ற ரைதிருக் குறளும் - மிக்க
நவீன விஞ் ஞானத்தின் முடிபும் வல்லார் பயில் கல்விச் சாலை - நனி வளர்கின்ற திங்'"கென்று கேட்டும்
32

பலர் கூடி வருகின்ருர் கல்வி - இங்கு பயில் தற்கு முறவாடு தற்கும் நிலவூடு மிதக்கின்ற நாடும் - எம் நிலை காணத் தூதொன்ற னுப்பி கலைஞானப் பரிவர்த்த னைக்கு - எம்மைக் கைகூப்பிக் கேட்டதென் ருேர் சொல் செவிகேட்க உளம்பூத்து விம்மி - மிக்க திறலோடெம் புகழ்பாட லெந்தாள்?
33

Page 30
ஆரியம்
கல்லெடுக்திக் கோயில் கட்டிக் காலமெல்லாங் கடவுள் புகழ் சொல்ல வைத்து வையமெலாம் சோறளித்த செந்தமிழர் இல்லையென்று வந்தோர்க்கு இல்லையென் னதுவக்கும் வள்ளல்களை யீன்று வளங்கொண்ட தமிழ்நாடு.
மார்புக் கவச மொடு மணிநெடுங்கை வேலேந்தி
போர்செய் விறல் மறவர் பொலிந்துயர்ந்த திருநாடு ஆர்வலர்தம் மிடிதீர்க்கும் அருளாளர் தம்முயர்ந்த சீர்பெருக வையமெலாஞ் சிறந்துயர்ந்த நாம்தமிழர்.
அல்லல் அடைந்தோம் அரசுரிமை தாம் இழந்தோம் பன்னூறு ஆண்டு பாழடைந்து சீரழிந்தோம் வெல்லமென நாங்கள் விரும்பிய கொள்கைசில கொல்லவரும் நா கமெனக் குறிபார்த் தெழுந்ததினுல்.
சாதிமத பேதச் சண்டைகளும் சஞ்சலமும்
வேதியன் என் ருேர்வஞ்சன் விதைத்தான்னம் மத்தியிலே வில்லெடுத்துக் காணுத வெற்றியையவ் வேதியனேர் புல்லெடுத்து எம்மினத்தைப் பூழ்திப் படுத்திவிட்டான்.
34

அண்ணனுக்கும் தம்பிக்கும் அடிதடியை மூட்டிவிட்டான் மண்ணுளும் வேந்தனையும் மக்களையும் பிரித்து வைத் இந்தாள் வரையுமந்த இரக்கமற்ற வேதியனல் (தான் எம்நாடும் நாமும் இயல்பழிந்து வாடுகின்ருேம்.
இரும்பெடுத்த வேள்மறவர் என்னே புதுமையிது துரும்பெடுத்த ஆரியர்க்குத் தொண்டடி மை யானுர்கள் கருங்கல்லிற் சிலைவடித்த கன்னித் தமிழ்ச்சிற்பி சுருங்குமுகக் கண்களில் நீர் சுரக்க இரந்துநின்றன்.
காடழித்து நாடாக்கிக் கழனிகண்டு கவின்விழைத்து மாடுபெற்ற வேள்மக்கள் மறையவனுக் கெளியவனப் வாடுபட்டும் பயனறியாப் பரதேசி யாயிழிந்து
ஒடுகொண்டு பிச்சையென ஊர்சுற்றி உலையவைத்தான்.
எங்கள் தமிழும் இனியகவின் கலையும் மங்கிடவே பார்ப்பானேர் மாயவலை விரித்தான் திங்கள் முடியழகர் சிவனரின் பெயர்சொல்லிப் பங்கம் புரிந்தெம்மைப் பலிகொண்டான் படுபாவி
* கூத்தாடி" என்றிழிவாய்க் கூறினன் நடிப்பவனை
**ஏத்தாதே இசையிலின்பம் ஏத்தினல் நரகடைவாய்' வேத்தார்கள் வேதியனின் வேண்டாத உரைகேட்டுத் தூர்த்தார்கள் கலையார்வம் தொடர்ச்தார்கள் ஆரியன் பின்
35

Page 31
உக்கிமடித் தோம் நாம் உடல் வளர்த்த பார்ப்பானின் துப்பற் பணிக்கத்தைத் தூக்கிச் சுமந்துநின் ருேம்
ஐந்தெழுத்தா லோர்பாடை ஆமோவென் றெந்த மிழை நிந்தித்தான் வடமொழிக்கு நிகர்வேறு இல்லையென்ருன்
"தீட்டுமொழி தமிழ்” என்ருன் தீண்டுதற்கு யாம் மறுத்து வீட்டுப்படி வரைக்கும் வேண்டினுேம் வடமொழியை பாட்டினிலும் ஏட்டினிலும் பரவினுேம் அதன் புகழை நாட்டி னேம்"தேவ நாகரிக பாடை யென,
சொந்தக் கலையிழந்து சுகந்தருசெந் தமிழ்மறந்து பந்த மறுத்துப் பரமபதம் அடைவதொலிறே சிந்தையினிற் கொண்டு சிவனரின் கோயில்புக வந்தானே யங்கும் வாயிலுக்கப் பாலென்றன்.
வேதத்தில் ஏதோ விளக்கங்கள் சொல்லியெமைப் பேதித் திட இணுைம் பேயாய் உழைக்கின்றன்
மே 7 தி மிதித்தவனின் முகத்தில் உமிழ்ந்து தமிழ்ச் சாதிக்குள் ளேபிறிதோர் சாதியில்லை என்றுசெய்வோம்
"தீண்டா தார் என்றின் பத் திராவிடரை யேயந்த வேண்டா தான் சொல்ல விட்டுவைத்துக் கேட்பதுவோ ஆண்டாண்டு தோறுமிவ் வாச்சகனல் பட்டது யா
மீண் டொரு கால் வாராமல் கோவிலெலாம் சாம் திறப்போம்
36

T
ஐபோ தமிழ்ச் சாதியே :
ஐயோ தமிழ்ச் ச4 தியே!
உனக்கே னிந்த அவலம்?
உய்வே இல்லையோ இந்த
உலகினில் உனக்கிடம் உண்டோ?
நண்பனை அறிந்திட அறியாய் - உன்னை
நம்பின பேர்களுக் கின்னல் செய் திடுவாய்
பண்பினைத் துறந்தனை மாற்ருர்
பாதங்கள் தாங்கியுள் உயிர்தனைக் காத்தாய்
சாதியில் நீஇழிந் தோணுய் - ஆளுஞ்
சதுரர்க ளடிதொழு தேதினம் வாழ்வாய்
தீதிலா உன்னயல் வீட்டான - தொட்டால்
தீட்டென்று வாதுகள் புரிவாய்.
கோயிலைப் பூட்டிவைக் கின்ருய் - உன்
கூடப் பிறந்தோரை யேயடிக் கின்ருய்
நாயினைப் போலுனை எண்ணி - மாற்ருர்
நகைப்பதை அறிதியோ நானெதைச் சொல்வேன்!

Page 32
வீட்டுக்குள் பேசுவை வீரம் - அண்டை வீட்டார்க்குள் நீபெருஞ் சாதி வாட்டிடும் அந்நியர் தமையே - தினம்
வழுத்திநீ வணங்குதல் வழக்கம்.
ஆங்கிலன் ஒருவன் வத் தற்ருல் - உன்றன்
ஆலயந் திறந்துள் அழைப்பாய்
ஒங்குபேர் அரசின் அமைச்சன் - எவன்
ஒருவனே அவனுக்குன் கோவில் திறப்பாய்.
தீங்கறி யாதநம் தோழர் - நெஞ்சத்
திடங்கொண்ட மறவர் பறையர்
ஈங்கிவர் கோவிலுள் வந்தால் - எமக்கு
ஈன மென் றேபெருங் கதவடைக் கின்முய்.
கோவில்கள் உன்னது சொத்தோ? - இந்தக்
கோபுரம் எழுப்பிட யார் உழைத் தார்கள்
பாவிகள் உங்கட்கு இங்கு - என்ன
பவிசுண்டு திறப்பினை எடடா !
ஆண்டவன் யாவர்க்கும் பொதுமை - நீ
அடைத்திடத் தானுண்டோ திறமை?
வேண்டுத லினுஞ்சில முறையே - இனி
விழைத்திடும் உன்னுடன் மறப்போர்.
38

இளைஞர் பாட்டு
காற்றிற் கடிய மணம்படைத்தோம் - பொய்மை
கண்டு கொதிக்கும் உளம்படைத்தோம்
கூற்றை எதிர்த்தறை கூவிடுவோம் - கொண்ட
கொள்கை வளர்த்திடப் போரிடுவேஈம்.
வாழ்வதற் கென்றிங்கே நாம் பிறந்தோம் - மாய வாழ்க்கை யிதென்று வருந்திநில்லோம் சூழ்துயர் ஒன்றினை நாமறியோம் - பிறர்
சொல்லுந் துயர்களை எள்ளிடுவோம்.
கற்பனைத் தேரினி லுலாவருவோம் - எதிர்
காலக் கனவுகள் கண்டிடுவோம்
அற்புதப் பண்ணிசை பாடிடுவோம் - கூடி ஆடித் திரிந்து அகம்மகிழ்வோம்.
காலம்எல் லாம் காதல் பேசிடுவோம் - காதற்
கன்னிமேற் கண்ணின் கணைவிடுவோம் கோலம் நவநவ மாய்வருவோம் - எங்கள்
கூட்டங் களிற்கொள்கை வாதிடுவோம்.
உலகம் எமக்கோரு நந்தவனம் - கைகள்
உண்டே ரண்டு எங்கள் மூலதனம் பழகும் உயிரெல்லாம் அன்புமயம் - காதற்
பாவையிட மன்ருே எம்மிதயம்.
39

Page 33
அந்தநாள்
தென்னங் குரும் பைத் தேர்கட்டிச் சாமிக்குப் புன்னம் பூச்சூடி பொற்சரிகைக் கோலமிட்டு அண்ணன் குழலூத அக்காள் தவிலடிக்க சந்நத்த மாடிச் சதிர் செய்நாள் பாடேனே?
முற்றத்து முல்லை முகையொலித்து மாலைகட்டிப் பக்கத்து வீட்டுப் பரிமளத்தின் தோள்சேர்த்துக் கொக்கட்டிச் சோலை கோயில்பனங் காடுஎனத் திக்கெட்டு முலாவருநாள் திரும்பிவரப் பாடேனே?
வேப்ப மரத்தடியில் வீடுகட்டி என்மனையாள் ஆப்பந் தருவாளென் றங்கிருக்க என்னையவள் மாப்பொன்னுற் ருலிகட்ட மாட்டாதா னென்றேசி ஆப்பையடி பட்டதாள் அதனைவரப் பாடேனே?
40

அள்ளிக் கொளுத்தி அடங்காத வெய்யிலிலே துள்ளிக் குதித்தென் தோழருடன் பள்ளிக்குச் செல்ல வழியனுப்பித் திரும்பிவர அனைத்தமுது அள்ளித் தருமன்னை அன்புவரப் பா டேனே?
கத்தும் தவளைகளைக் கையேந்தி நீர்நிலையில் மெத்தச் சிறியாமை மீன் இவற்றின் வேட்டையிலே சுற்றித் திரிந்து சுளியோடி நீச்சலிட்டு* சித்தம் மகிழ் அந்நாள் திரும்பிவரப் பாடே.னே
செம்மணற்றிக் காட்டில் செவ்விளநீர் பறித்தருந்திப் பொம்மன் கிணற்றிலதைப் போட்டுவிட்டு அவன்வளவில் வெள்ளரியின் பிஞ்சையெலாம் வேண்டுமட்டும் நாம்பிடுங்கிப் பள்ளிவரப் பட்ட அடி பாடின் அந்நாள் மீளாதோ?
புற்றுவெட்டி எலிபிடிக்கப் போனதுவும் நாதாளிப் வற்றைக்குள் ளேயிருந்து பாம்பொன்று சீறிஎழும் சத்தத்தைக் கேட்டயலில் தடுக்கிவிழுந் தெழுந்தோடி மெத்தக் களைத்தஅந்நாள் மீண்டுவரப் பாடேனுே?
பள்ளியிற் சோதனையில் பாஸ்*செய்தே னென்ரு சான் சொல்லியது மென்னை வத்து தோழரெல்லாம் சூழவங் கள்ளிவிழி யெறிந்து கருணைதவழ் ஒளிமுகத்தில் (கோர் மின்னலிட நின்றதனை மீண்டுவரப் பாடேனுே?
41

Page 34
சதிர்
42
குயிலைப் போலக் குரல் டைத்த
கோம ளாங்கி யாமவள்
மயிலைப் போல வந்து கோயில்
மண்ட பத்தில் ஆடினுள்.
நெட்டைக் கழுத்தை முன்னும் பின்னும்
நீட்டி நீட்டிக் கண்களை
வெட்டி வெட்டிக் கைக ளைமேல்
வீசி வீசி யாடினள்.
குந்தி யெழுந்து குதித்து மிதித்துக்
குலுக்கி நடனம் ஆடினுள்
முந்தி நின்ற மனிதர் கண்ணில்
மண்ணைக் காலாற் றுாவினுள்.
குறத்தி வேடம் போட்டு வந்து
குறிகள் சொல்லத் தேடினுள்
முறத்தி னலே புலிய டித்தேன்
முன்னர் என்று பாடினள்.

வண்ண வண்ணச் சேலை கட்டி வந்து நடன மாடினுள்
பண்ணிற் சில பாட்டுக் கேற்ற
பதம்பி டித்து ஆடினள்.
பம்ப ரம்போற் சுற்று வாள்தன் பளப ளக்கும் ஆடையில் ஒன்றி ரண்டைச் சுண்டு நேரத்
துரிந்து ரிந்து வீசுவாள்.
‘மாலை சூட வந்தேன் இந்த
மாத விப்பெண் என்றனள்
பானை சித்தும் முறுவல் காட்டிப்
பரவ சத்துள் ஆழ்த்தினுள்
பக்கப் பாட்டு வேணு கோபால்
பாட்டுப் பாட மத்தளம்
கொட்டும் வேகத் தோடு - அவளும்
குதித்துக் குதித்து ஆடினன்.
காலிற் கெச்சை கலக லென்னக்
கையிற் ருளம் போட்டவள் வேலன் கோயில் வீதி முற்றும் விடிய விடிய ஆடினள்.
காக்தி ருந்து களைத் துப் போன
கந்தன் கோவில் மூப்பனர் பார்த்து அசையா மணிய டிக்கப்
பாவை போடிப் போயினுள்.
43

Page 35
என் ஊர்
காரம் மணம் குணத்தால் கண்டோர்கள் கல்மனதைச் சோரங்கொண் டன்னுர் சொன்ன விலை கொண்டு மகிழ் சாரம் மிகுத்த தரச் சரவணைப் புகையிலையென்(று) ஈழம் முழுதும்பேர் இலங்குகின்ற என்னுாரே !
ஏர் பெற்ற செல்வர் எழில் பெற்ற கம்மாளர் சீர் பெற்ற கைவினைஞர் சீலைநெச வாளரெனப் பேர்பெற்ற தொழில் களெலாம் பேணிவளர் சரவணை பார்உற்ற அன்றே பண்புற்ற பழம் ஊரே ! (யூர்
காகம் கரைந்தெழுப்பக் கண்விழித்துக் காப்பியின்மேல் மோகம் கிறுக்க அவள் முன்னேடிக் குவளைதனை வேகத் தொடுவிழுங்கி விட்டுத்தம் தொழில்மேவிப் போகத் துடிப்போர்வாழ் பொற்பதியென் சரவணையே
44

கார்கண்டு விண்டுமனக் களிப்போடு வயல்களுக்கு ஏர் கொண்டு செல்இளைஞர் இட்ட அடி பின்தொடர்ந்து வார்கொண்டு விம்முமுலை வண்ண இடை பெண்மயிலாச் மோர்கொண்டு செல்காட்சி முத்துமெங்கள் சரவணையூர்
ஊரெல்லாங் கூவம் ஒன்றிரண் டேநன்னீரவ்
நீரள்ளுங் குடங்க ளிடை நீத்த அசைந் தொசியக் காரன்ன கூந்தல் தனைக் கைப்பிறையால் கோதிமயல் ஒரக் கடைவிழியால் உலகளப்பார் வாழ் ஊரே,
ஆடுதுலா மரம்மீது ஆணழகன் ஏறிநின்று 4
ஒடிமிதித் து ைதத்த உடல்வாதை தான்மறக்கப் பாடிக் களித்து விசில் பண்ணிக்கும் மாளமிட்டும் வேடிக்கை யோடுபயன் விளைக்குமெங்கள் சரவணையூர்
கல்விபயில் சாலைசில கடவுள்களின் கோயில் சில எல்லைவரு நல்லூர்கள் இயன்றபெரு வெளிவடக்கில் நல்லவிளை யுள் உடனே நண்ணினர்க்கு வாழ்வளித்து எல்லையிலாப் பெரும்புகழோ டிருப்பதுவும் எம்மூரே
தாழை மணம்பரப்பத் தண்கடற்புள் தாலாட்ட பாளை சிதறிப் பதனீர் குளிப்பாட்ட ஆளை யடிமைகொளும் அரசபணி வெறுத்தொதுக்கும் சீலத் திறல்மிகுந்த செந்தமிழர் வாழ்ஊரே !
45

Page 36
அத்தை
தோரணப் பூப்பந்தர் வாயிலிலே - நான் தோழ னுடன் உள் நுழைகையிலே - அங்கு ஆரணம் பாடுவோர் முன்னேவந்து - என்னை ஆவலுடன் அத்தை பாத்துநின்முள்.
மஞ்சம் மீதிருந்தென் மனைவியுடன் - சில மனம்விட்டுப் பேசி மகிழ்கையிலே - வந்த பிஞ்சுக் குழந்தையைப் பிடித்திழுத் தேயவள் பின்னுலெங் கோடி ஒழித்துவிட்டாள்?
‘தித்திப்பு'ப் பண்டங்கள் செய்துவைத்தே - தான் தின்னு மட்டும்மறை வாகநின்று - நெஞ்சில் மெத்த மகிழுமென் அத்தை முகத்தினில் - நின்று மின்னிடும் புன்னகை சொல்வதென்ன?
மங்கை /கரத்தினைப் பற்றிக்கொண்டு - இந்த மணவாளன் வீதியிற் போகையிலே - இன்பம் வொங்கும் விழிகளில் புத்தொளிக் கதிரெழ - மிக' பூரிக்கும் உள்ளம் புகல்வதென்னே?
46

கதை சொன்ன கவிதை
கன்னற் கவிதைக் கருவினைக்
காணக் கடலின் கரையொரு
புன்னை மரத்து நிழலிலே
பொழுது முற்றும் வாடினேன்.
வங்கம் நூறு வந்தது
வானும் மூடம் போட்டது கங்குல் வந்த போதிலும்
கவிதை காணவில்லையே.
அந்தி மாலைச் செக்கரில்
அல்லிக் குளம்ஏகினேன்
*"செந்தமிழுக் கென்பணி
செய்வ" தென்ற சிந்தையில்,
A7

Page 37
48
மந்த மாரு தந்தவழ்ந்து
மலரழைந்து வீசி. அந்தரத் தேயம்புலி
அசைந்தசைந்து ஒடிட
கந்தருவ கான ஹெங்கோ
காற்றில் வந்து மோதிடச்
சுத்தரக் கவிதை சொல்லத்
துடித்தேன் வரவில்லையே!
விண்ணும் மண்ணும் காரிருள்
வீங்கு கின்ற வேளையில்
என்னை நோக்கி நின்றிடும்
இல்லம் நோக்கிச் சென்றநான்.
கன்னற் கவிதை கண்டனே
கையுங் காலுங் கொண்டது
மின்னெற் பூவெனும் முகம்
மிருதுவான போன்னுடல்,
கையசைத்து என்னுடன்
கதையளந்த கவிதையே! உய்க நீடு நீள் புவி
உள்ளமட்டும் வாழ்கநீ!

தாபம்
அழகிற்குத் தமிழ்’ என்று
பெயர் வந்த தா? - இல்லை
அமுதிற்குதி ‘தமிழ்" என்று
பெயர் வந்த தா? இவளுக்குத் தமிழ் என்று
பெயர் சொன்ன தார் - இவள் இசை விற்கு 'அசை யென்று
எனைச் செய்த தேன்?
இருளுக்கு "உற' வென்று
குழல் சொன்ன தேன்? - இவள் இதழுக்குத் தாமரை
மலர் செய்த தென்? பொருதற்கு’ என ரண்டு
மலை நின்றதா? - இவள் புருவத்தில் இணை என்று
சிலே சொன்ன தா?
49

Page 38
50
மருளற்கு என இந்த
விழி நின்ற தா - என் மனதிற்குள் நோய் தந்து
அகல் கின்ற தேன்? தெரு வுற்று நடமாடுஞ்
சிலை யுள்ளதா? - அதன் சிரிப்புக்குள் மருதோன்றி
கமழ் கின்ற தா?
அழகென்ப திவள் தன்னல்
நிறை வுற்ற தா? - இவள் நிலவென்ருல் அழகிங்கு
நிலையுற்ற தேன்? மழை'என்றும்இ வளுக்குப்
பெயா உள்ளதோ ? - இவள் மருங்குற்ருள் மனதிற்குள்
குளிர் கின்ற தேன்?
பயில் கின்ற கவி இன்பம்
இவள் உண்டதா? - தளிர்ப்
பருவத்தின் கருவந்த
திரு' வென்பதா? அயிலுண்ட விழி ஒன்றே
என வெல்லுமே - இவள் அடிகொஞ்ச அயல் வந்து
துயர் செய்வதேன்?

நலிவுற்ற தென துள்ளம்
தளிர் கொள்ளுமோ? - இவள்
நகை மின்னும் முகம் என்றன்
அகல் தங்குமோ?
கலை பெற்ற வடி வின்ப
மலை உச்சியில் - உள்ளங்
களி கொண்டு பனிப் போர்க்கு
அறை கூவுமோ ?
5.

Page 39
ஏதோ உன் உள்ளம்
தென்றலிலே முல்லைமலர்ச் செழுந்தாது நாறத் தேன்மொழியுன் மெல்லிதயச் செழுமைமனத தூறும் குன்றினிலே பிறந்தோடும் குளிர் புனலின் ஒதை குறும்பொலியாய் என்னிதயத் தின் பவெறி யூட்டும் மன்றினிடை ஒயிலாக மயிலாடும் போது மானே நீ என்னேடு. உறவாடக் கண்டேன் மன்றலிலே மாலையிட்டு என்னை யுன தாக்க மாதரசே தாமதமேன் ஏதோ உன் உள்ளம்?
அந்நாளில் எந்நாளும் அருகாக நின்று
அத்தான்" எனக்கூவி ஆட்டங்கள் காட்டி பின்னல்நின் றென்கண்கள் பொத்தியென் கன்னம் பின்னக முன்வந்தென் நெஞ்சில் புதைப்பாய் கல்யாணம்’ எமக்கென்று பாட்டி சிரிப்பாள் கண்ணேயவ் வெண்ணம்என் உள்ளக் தகிக்க என்னுளும் ஏங்குகிறேன் உன்னை அணைக்க ஏனேடி தாமதம் ஏதோஉன் உள்ளம்?
52

படராலம் விழுததைத் தொடுத்துமே முடித்த பந்தரில் நீதந்த விளையாட்டுச் சோற்றை உதவாது என்று நான் உதைத்தெழ நீயும் "ஊதாரி' என்றெனை ஏசித் தொலைத் தும் இதமாக என்ன யல் வந்துநின் றிவித்தும் ‘இந்தாங்க கோபமா என்றல்லோ இரந்தாய் மதமாநான் இன்றுன்னை எண்ணி இளைத்தேன் மாதரசே தாமதமேன் ஏதோ உன் உள்ளம்
தொட்டில் அசைத்திடத் தூாளிகை கேட்டாய் தோரண மாய் ஆலின் விழுதை அமைத்தேன் பட்டுத் துணியினல் சுற்றிய கற்சேய் பள்ளி கொள்ள எனப் பாட்டு மிசைத்தேன் வட்டில் என ஆலின் இலையை எடுத்து வார்த்த பொய்க் கூழினை உண்டு கழித்தேன் மெட்டி யொலிக்க அணைகுவை யின் ருே மெல்லெனப் போயின் ருெழிக்குதல் நன்ருே?
S
%

Page 40
கட்டி பொரு முத்தமளியே!
சித்தி ரத்தில் அற்பு தத்தை வைத் தமைத்த பொற் சுருவம்
பெற் றெடுத்தாள் அத்தை அவளே - 'காம7ட்சி’ முத் தெடுக்க நின்ற கடலே.
முல்லை சூடி மெல்ல வரும் வள்ளை யிடைக் கிள்ளை மொழிக் கள்ளி யேநீ என் னுளத்தையே - கா மாட்சி கொள்ளை யிலே அள்ளிக் கொண்ட தேன்?
கஞ்ச முகம் பிஞ்சு உளம் , விஞ்சு முகிற் குஞ்சி எழில், பஞ்சின் அடி கெஞ்ச நடந்தாய் - காமாட்சி! நெஞ்சின் அலை கொஞ்ச வளர்ந்தாய்.
54

நெட்டைப் பனைக் காடு வேலி ஒற்றை யடிப் பாதை தோட்டம் அத்தனை யும் காத்து நின் நேனே - காமாட்சி சித்தரை யும் கேட்டு வந்தேனே,
""குத்தி நிமிர் கொம் பழுத்தி
முட்ட வரும் காளை தன்னைக் கட்டு வேன் நான்’ என்றுரைத் தனர் காமாட்சி கிட்ட அந்த நாளும் என்றனர்.
பொன்னுருக்கிக் கண்ணிய மாய் மன்ன வையிற் ருலி கட்டப் புண்ணிய நாள் கேட்டு வந்தேனே - காமாட்சி என்னை யுனக் காக்கி நின்றேனே.
பட்ட ணத்துக் குட்டி யைப்போல் பகட்டுக் காட்டிக் குலுக்கி விழி வெட்டி வரும் கட்ட ழகியே - காமாட்சி கட்டி யொரு முத்தமளியே.
Nee-2S

Page 41
முடிபு என்ன?
பள்ளியிலே எதிர்ப்பட்டாய் (கண்கள் நான்கும்
பழகிய அச் சிறுபொழுதில்Y முகத்திற் செம்!ை அள்ளியிட நாணுற்ருய் அகத்திற் பொங்கும்
ஆராத காதலினை அன்றே கண்டு விள்ளிடற்கு இயலாவோர் உணர்வி லுன்றன்
விந்தையெழில் கண்டுவகை கொண்ட நெஞ்சை கொள்ளையிட்ட வன்செயலை மறக்க வெண்ணி
மறப்பறியாத் தோற்றதனில் துணிவு பெற்றேன்.
நான் நோக்கா முன் என்னை நோக்கி நாணி
நகும் உனது - எழில் புகல ள்ன்ஞ லாமோ வான்நோக்கி மதிகொண்டு வந்து உற்ற
மறு நீக்கி இது அதேனில் வாடல் கண்டேன் கான் நோக்கி மான் கொண்டு வந்து நின்றன்
கண்ணுக்கு உறவென்று சொல்லல் ஈனம் மான்நோக்கில் மருட்சியுண்டுன் நோக்கி லென்றன் மயலுக்கு மருந்துண்டு என்று கண்டேன்
56

எப்போதோ! சென்றயே! மறப்ப தற்கா? தாங்கேனித் துயர் இனியும் உடலில் ஆவி
தரியாது. உடன் வந்து தாங்க வேண்டும்.
கட்டிலிலே என் அருகில் இருந்தாய் செய்ய
கைசேர்த்து இழுத்தணைக்க எண்ணி னேன? தெற்றென வெங் கேயோ நீ சென்ருய் பின்னர்
திரும்பிடவந் “தொரு முத்தம் தரவா’ என்ருங் வட்டிமிகக் கேட்பாயோ? என்றேன் நீயோ
வரி யிதலால் 'இச்சிட்டு நொள்ளை காட்டிச் செச்டாகச் சென்ற மின் விளக்கைப் போட்டுச்
சென்றிட்டாய் கனவென்று தெரிந்து நொந்தேன்.
நீளாதோ இக்கனவு நீவத் தென்றன்
நெஞ்சோடு கதைசொல்லிக் கொஞ்ச அந்த மீளாத இன் பத்தில் திளைத்துத் தேனர்
மெல்லியஇன் குமுதஇதழ் சுவைத்து வாழ்த்திப் பாடேனே தமிழ்க்கவிதை என்னைப் போன் ரூர்
பார் மீதில் கொடுத்துவைத்தார் என்றென்னுாரார் நாவாட வாழேனே என நி னந்து
"நாளோட்டி நலிகின்றேன் முடிபு என்ன?
57

Page 42
58
நிலவைப் பிடித்து எழிற் றுகிலை உடுத்த வொரு சிலையை நிகர்த்த வடிவாள் - அவள் கயலைப் பிடித்துக் கயம் பயில விடுத்த இரு மயலை வளர்க்கும் விழியாள்,
வில்லை வளைத்து அவள் கண்ணுங் கணை தொடுத்துக் கொல்ல விடுத்த தெவனே? - அவன் பொன்னைப் படைத்த கையால் மின்னைக் குழைத்து இந்தப் பெண்ணைப் படைத்தல் முறையோ?
வெண்ணெய் எடுத்துப் பூவின் செம்மைக் குழம்பிற் ருேய்த்துப் பெண்ணின் இதழ் அமைத்ததேன்?-அதை உண்ண உண்ணத் துடிக்கும் என்னை வருத்தி நாணப் பொன்னின் விலங் களித்ததேன்?

அத்தானைக் காத்திருப்பேன்
"கொக்குக் குருவி யினம்
கூட்டை யடையக் கடல் முட்டுத் திரை யணைத்து
வெண்ணிலவு முந்தி யெழ முற்றத்து முல்லை
முகிழ்த்து மணம் பரப்ப பத்து மணி யடிக்கப் x,8
பறந்தோடி வருவேன்' என்ருர்,
கொக்கும் உறங் கிடிச்சு
குளிர் மதியும் எழுந்திடிச்சு மொக்குள் அவிழ்ந்த முல்லை
மூக்கைத் துளைச் சிடிச்சு பத்து மணி யடிச்சு
பல நிமிடம் போயிடிச்சு அத்தை பெத்த ஆண் மகனுர்
அங்கு இன்னும் செய்வ தென்ன?
59

Page 43
60,
ஆட்காட்டிக் குருவி யூரை
அலட்டி எழுப்புகுது மேற்கால் இருந்து நாய்கள்
மேல்மேலுங் குரைக்கிறது ஊர்க்காவற் சேவகரும்
உறங்கும் இது நேரம் பார்த்த கண் பூத் திடிச்சு
பட்ச மகன் இன்னு மெங்கே?
வெட்டிப் பிள வெடுத்து
வெத்தி லையும் காம்பு நுள்ளிக் கட்டித் தூள் மணஞ் சேர்த்துக்
கை நிறையக் கொண்டு வந்தேன் செட்டி மகன் இவ்வளவும்
செய்வ தென்ன கொடுகொடுக்கக் கொட்டும் பனிக் கூதல்
கொஞ்சமும் தெரியல்லை யா?
பெற்ருள் விழித் தாளோ
பேய் பிசாசுக் கஞ்சி னனே?
அத்தான் எனக்காக
அல்லல் என்ன அடைந்தானே
பத்தென்ற மணி விடிஞ்சு
பகலாகிப் போனலும்
செத்தாலும் இவ் விடத்தென்
அத்தானைக் காத் திருப்பேன்.

நெடு வழி
செங்கனி போற்றிரள் கன்னத்தையும் - ஒளி
சிந்தும் முறுவலின் வண்ணத்தையும்
பொங்கு மிளமையின் பூரிப்பையும் - தாலி
﷽ጳ பூட்டிய போதோளிர் நாணத்தையும்
கொங்கை மலைமேவும் எண்ணத்தையும் - உன்னைக்
கூடி மகிழ்ந்த நாள் வண்ணத்தையும்
இங்கிருந் தேகணம் எண்ணிவிட்டால் மனம்
ஏறு ரயில் எனத் துள்ளுதடி !
முல்லைக் கொடிமலர் சிந்துதடி - அங்கு முத்து நிலவேன்னை முந்துதடி கொல்லைப் புறத்துக் கிணற்றடியில் - குயில்
கூவினதும் உனைத் தேடியதும் சொல்லிச் சிரித்திடக் கண் திறந்தேன் - வெகு
தூரத்தில் நீயிருந் தாயடியோ ! ! எல்லேயில் லாத்தாபம் மேவுதடி - இதோ
இன்றே றெயிலினில் ஏறிடுவேன்.
6.

Page 44
மாம்பிஞ்சு வெந்து மணம் பரப்ப - பனம்
மாவைக் கரைத்து உலையில் விட்டு காம்பு ஒடித்த இலையினைக் கோலி - என் கையினிற் றந்துநீ வார்த்த நற்கூழ் போம்புகை மூக்கில் உலாவுதடி - இதோ புகைவண்டி மீதினில் ஏறிவிட்டேன் தீம்பா லமுதே இத் தேசமெலாஞ் சுற்றி
திரியுமிவ் வண்டியென் செய்யுமடி?
எண்ணங்கள் கோடி சுமந்து கொண்டு - காதல் இதயத்தின் மூச்சினைப் போக்கிக் கொண்டு தென்றலைக் கனலாக்கிச் சீறிக் கொண்டு-விண்ணின்
சீத மதியைக் தீயாக்கிக் கொண்டு தோ ளொடு தோள்நின் றெல்லாரும் சமமெனத்
தோளர்க ளாகித் தூங்கிவிழ நாளொ டிர வெல்லாம் ஓடுதடி - ரெயில்
நாளே வரும் அதில் நான்வருவேன்.
தட்டுங் கரங்களைப் பிடித்திழுத்து - நெஞ்சில்
தாங்கி அணைத்து நின் திங்கமுகம் வெட்சிச் சிவப்புற முத்தமிட்டே - பதில் வேண்டி யிரந்து விளக்கணைத்து தொட்ட இடமெல்லாம் சுகந்தருமே அந்த
சொர்க்கத்தைக் காணத் துடித்துநின்றேன் பட்ட பொழுதிர விவ்வளவும் - ரெயில்
பாழடித் தோடும் நெடுவழியே.
62

வாழ்வரசி வந்தாள்
தொங்கிடும் இன்னலில் என்னுயிர் பின்னினை
சூட மலர் கொணர்ந்தேன் - உடன்
கங்குலிற் சென்றனை கைவிளக் கின்றி நான் காணத் தவித்து நின்றேன்.
ஒடையில் உன்முகச் சாடை தெரிந்திட
ஒடி யருகில் வந்தேன் - நீ
வாடை தெளித்து மணமுறத் தாமரை
வான் மல ருட்புகுந் தாய்.
சிந்துாரப் பெர்ட்டிட்டுநின் நுதற் செவ்வியைச்
சேவித்து வாழ்த்த நின்றேன் - நீ
அந்தரத் தேயோடிச் செம்பவ ளப்பிறை அம்புலி ஆகி விட்டாய்.
63

Page 45
மாமரச் சோலையில் ஆவலுடன் என
*வா? வெனக் கூவி நின்ருய் - “காதற்
பாபிலர் சூடி மகிழ்ந் திடலா’மெனப் பறந்த தேன் பூங்குயி லாய்?
கடலிற் குளித் துடல் காட்டிநின் ருயெழிற்
காவிய ஆடை யுடன் - நான் நடையி லயல்வர மெல்ல அடி வானில்
நழுவி ஒழித்து விட்டாய்.
கிட்ட நெருங் கிடில் எட்ட நடக்கும்
கிறுக்கினை நானறி வேன் - இனி வட்ட மிட வரேன் ஒட்டி உறவாட.
வந்தாளென் வாழ் வரசி,
64
 

LDid Tsir
காணுத போது கண்துஞ்சாள் கண்டவுடன் மானுக வோடி மறைவாள் தனியிடத்தே,
ஏணுேதான் வந்தே"னென்றெண்ணிடற்கு முன்செவியில் தேனகவோர்சொல் உருத் தெரியாமல் வார்த்திடுவாள்
கூடல் இழைப்பாள் நான் கூடும்நாள் பார்த்திடுவாள் தேடும் பொழுதெல்லாம் தெருவேலிக்கண் னெளிர்வாள் வாடும் முகங்காணில் வந்துசுகம் கேட்குமத்தைக்(கு) ஒதுஞ் சுகசேமம் ஒட்டிநின்று தானறிவாள்.
பூப்போல் பொலிவாள் இன் புன்னகையுட் கொப்புளிக்க பார்ப்பாள் என இல்லைப் பாராள்போற் பார்த்திடுவாள் வேர்ப்பால் தனித்திருந்தாள் விதிர்விதிர்ப்பாள் அச்தைதஜனக் கூப்பிட வாய்உன்னிக் கூவாமற் கொந்தளிப்பாள்.
む5

Page 46
எண்ணந் துடிக்கும் இதயங்கள் கொளவிவிழும் கன்னஞ் சிவக்கும் கண்கள் கவிந்தொளிரும் சின்ன இடைதுவஞஞ் சிற்றடிகள் நிலங்கீறும் "இன்னுஞ் சுணங்குவதேன்" என்றுமணஞ் சீறிடினும்
தொட்டிடற்கு நாணித் தூரநின்றேன் அவ்விடத்தை விட்டிடற்கு இன்றி விம்மியெழும் நெஞ்சகத்துள் தட்டு மிதயத்தைத் தாங்கித் துடித்தபடி இட்டம் அறியமனம் ஏங்கியது அந்நேரம்
கொட்டியன குவளைகள் நீர் குனிந்தபடி கண்டருகே சிட்டாகச் சென்றேன் சேர்த்தணைத்து அழுவதுமேன் கட்டுக் கரும்பேஎன் கற்பகமே கவியுலக வட்டக் கலைமதியே வான்சுடரின் முழுஒளியே?
என்ன நினைத்தோ எதற்கோ அழுதாய்நீ விண்ணின் நிலவெடுத்து விளையாட விரும்பினையோ பொன்னை மணியைப் பொலனணியைக் கேட்டனையோ அன்னை தடிந்தாளோ ஐயற்கு அஞ்சினையோ?
இன்பப் பெருஞ்சுனையே என்னுயிரின் பாவாய் துன்பம் உரைத்திடவை துகளாகு மிந்நொடியில் என்னவி ஈய்ந்தும் எதிர்த்துனது துன்பமெலாம் மண்ணுகச் செய்வேன் மணியே அழவேண்டாம்.
66

என்றணைத் தேன்கைகள் இறுக்க அவள் முகம் நிமிர்த்திக் கன்றிச் சிவந்த கனியிதழை மெலத்திறந்து − ** மன்றல் புரிய மாட்டாயேல் இப்பொழுதே கொன்றுவிடு' என்ருள் குயிலாள் திகைத்துவிட்டேன்.
கரும்பைச் சுவைப்பதற்கு கைக்கூலி கேட்பதுண்டோ? விரும்பிநின்றேன் மயிலேயுன் விருப்பம் அறிவநின்றேன் தரும்போதை வெறியடிநீ தந்தளிக்கும் கள்ளடிநான் இரும்பேநான் காந்தம் நீ! ஈருடற்கு மோருயிரே!
கண்டால் உயிர்தளிர்க்கும் கனிமொழியால் மெய்சிலிர்க் கொண்டால் விடுவேனே கோகிலமே சத்தியமாய் (கும் செண்டே மணப்வேன் என் செந்திருவை எனத்தேற்றி வண்டாடு கூந்தல் வார்குழலைத் தொட்டிழுத்து
பக்கத் திருந்தவொரு பாயெடுத்துப் போட்டிருத்தி செக்கச் சிவந்த அவள் செவ்விதழில் முத்தமிட்டேன் வெக்கத் துடனெழுத்து "" வேண்டாமிப் போது இது பக்கத்து ளார் எவரும் பார்த்துவிடு வார்கள்” என்ருள்
கானத் தெழில்மலரைக் கையிற் பறித்ததின் பின் மோனச் சுவைமணத்தை முகராமல் எறிவதுண்டோ? வானத் தமுதேவா வந்துவிடு நான்தரியேன்
ஈனமுமுண் டோநாங்கள் இருவருமொன் முகியபின்
67

Page 47
என்றெழுந்தே சென்றேன் இன்பச்சுனை விழுந்தே குன்றெழுந்த வாறு குமுறி எழுந்ததனம்
கண்டுவக்க நெஞ்சம் கைகள்யூம் பந்தாடக்" கெண்டைவிழி நீலம் கிளர்ந்து சிவப் பேறியதே
ஆருயிரே நாங்கள் அரியஉயிர் ஒன்ருனுேம் ஏது வரினும் இடர்கள்பல சூழ்ந்திடினும் மாது - எனக்கே மாலையிட வேற்றவொரு தேதி குறித்துத் தெரிவிப்பீர் என்றுரைத்தாள்.
ஆம்’ என்று சொல்லி அகன்றேனவ் விடத்தைவிட்டு போய்வாரும்’ என்று போகவிட்டுப் பார்த்துநின்ருள் தேனுண்ட வண்டு திரும்பவுமச் செம்மலரில் மாலுண்ட துண்டோ மனிதனுமவ் வாருமோ?
‘இன்று மட்டும் இன்று மட்டும்" என்ற சொல்லித் திங்கள் பல சென்று சென்று மாற அவள் சிறிதுருவில் மாறுபட்டா' மன்றலின் றி மணிவயிற்றில் மைத்தனுமே வந்துவிட்டா6 கண்டுவிட்டாள் அச்தை தன்கை கண்ணிாால் கழுவியின் முள்.
ஓடிவந்து எங்தை முன்னே ஒடுங்கிகின்று அச்சமுடன்
மோடியவள் வயிற்றிற்சேய் மூன்று கிங்க ளாச்சு தண்ணு! கேடினுக்கிங் கேதுசொல்வேன் கிருட்டினனின் லிலேயினுல் பாடெனக்கு வர்ததெனப் பதைபதைத் தாள் கையுதறி.
68

கிருட்டினனென் ருளுடனே கிளர்ந்தெழுந்து கின் நஎந்தை வெருட்டினர் " அடியேநீ வேசியடி என் சிறிசை மருட்டிப் பிடித்துவிட்டு மாய்மாலஞ் செய்யுமுன் றன் உருட்டுப் புரட்டுகளை உலகம் அறியாதோ?
நஞ்சை புஞ்சை ஒன்று மின்றி ைேகாட்டுச் தானுமின்றி பிஞ்சுக் குழந்தையை பிடித்துவிட நினைத்துவிட்டாய் வஞ்ச கியுன் குேடுறவு வைப்பதற்கு காங்களில்லை
கெஞ்சுதலில் லாபமில்லைக் கிட்டவும் கிற் காதே’யென்மூர்
போடிபோ என்னுடைய பொடியன் இனி அங்குவாாள்
தேடிப்பார்க் தார்க்கும் தெரியாமற் கட்டிவிடு”
ஒடிவிடு” என்றெழுந்தார் உதைப்பாரோ என்றிருந்தேன்
வாடி நடந் தாளெனையே வளர்த்த அத்தை வாட்டமுடன்
கேட்டேன் அழுதேன் கிளர்ந்தெழுந்த உணர்ச்சியுடன் ஓட்டம் நடையாக ஒடினேன் அவளிடம்போய்
* மாட்டேன் இனிப்போக மாட்டேன் என் தந்தைஎன்ன கேட்டாலும் போகேன் கேடுனக்கென் ஞல்வரவோ?
அத்தை” என்றேன் என்னவி ஆரத் தழுவிநின் ருள் “மெத்தெனவந் தென்கரத்தை மெல்லஇழுத்தாள்மனை இத்தனைநாளாயவட்கு இல்லையென்று நானிருந்த (யாள் இத் துணிவு தானிப்போ எங்கிருந்து வந்ததுவோ ?
69

Page 48
தாங்ாய் உழைப்பாள் தந்தையென கந்திரிப்புவாள் சேயாய் குழைவாள் சித்திரம்போல் வந்தணைவாள் நாய்போல் என்நிழலை நத்திப்பின் ஞல்வருவாள் ஆயாளாய் ஆரமுதம் அள்ளிபள்ளி ஊட்டிடுவாள்.
நல்லநல்ல தீன் பண்டம் நான் உணற்கு என்றுஎண்ணி பிள்ளைகளுக் கேயொழித்துப் பிரியமுடன் வைத் திருப்பாள் அல்லல் எனக் குற்றிடிலோ அதைத் தனதாய் ஆக்கியவை ஒல்லையினில் நீக்க உழைத்துள் மகிழ்ந்திடுவாள்.
அடிப்பேன் அழுவாள்கை அடித்ததினல் வலித்ததென்முல் துடித்தோடி வந்திடுவாள் சொஸ்தமுற அடித் தகையைப் பிடித்துநெஞ்சிற் புதைத்தழித்துப் பெருந்தனத்தால் ஒத்தமிட்டு வெடித்த இளம் முறு வலிலென் வேதனைகள் சிதறடிப்பாள்.
கடிப்பேனச் செங்கரும்பைக் கைமலர7 ல் கன்ன மெலாம் தொடிப்பாள் அமுதுசிக்தி நோய்தீர்க்கும் மருந்தாவாள் படித்த கல்வி ஒன்றுமில்லை பாசத்தாள் என்னுளத்தில் பிடித்த ஒரு சிறு இடத்தைப் பெரிதாக்கி அடிமைகொண்டாள்.
உடம்பை அலட்டாமல் ஊர்வம்பு பேசாமல் மடங்கள் மதகுகளில் மாற்ருரோ டாடாமல் விடங்கள் பழகிருட்டில் வீட்டைவிட்டுப் போகாமல் அடங்கண் முறைகளுடன் அடங்கி யிருக்கவைத்தாள்
70

கட்டுண்டு கிடக்கக் கடுகளவு மிஷ்ட மில்லை விட்டிடுவேன் அந்த விடயம் புரியவில்லை பட்டுடலால் மோதிப் பதைபதைக்கச் செய்திடுவாள் சுட்டுவிழி யாலென் சுதந்திரத்தைத் தானழிப்பாள்.
அன்பு மொழியாலும் அணைப்பாலு மென்னுடலின் துன்பங் கண்டுள்ளந் துடிக்கும் அருளாலும் ான்புருகக் கண்கள் இரண்டுகுக்கும் நீராலும் பண்போ டெனயடிமைப் படித்திவிட்டாள் எஜமானி
அந்நாளிற் காதலித்தோம் அவளோ முறைமச்சாள் சின் நாளில் நாங்கள் திருமணமுஞ் செய்துவிட்டோம் பின்நாளில் எனக்கோர் பெருந்துணையாய் அருகிருந்தாள் இந்நாளோ என்றன் எஜமாட்டி ஆகிவிட்டாள்.
7.

Page 49
புலவர் மணி சரவணையூர் தில்லைநாதப் புலவர் அவர்களைப் பாராட்டி வாழ்த்தியவை
தில்லைநா தப்புலவ! திருந்துநற் புலவ ரேறே !
ஒல்லைவா வருக வென்று உவந்துனை வரவேற் கின்ருேம் நல்லேநா வலரின் பண்பும் நவாலியூர்ப் புலவர் வீறும் தெள்ளிய அறிவுங் கொண்ட திருவினய் வருக வாழி!
பாண்டியன் சேரன் சோழன் பாரியின் றில்லை யெம்மை ஆண்டிட இருப்பா ரா கில் ஆனைமேல் உம்மை ஏற்றி வேண்டியதெல்லாந் தந்து விருந்தளித் துவக்குங் காட்சி ஈண்டி யாங் காண்ப தன் ருே இன் தமிழ்ப் புலவ வாழி !
மற்றவர் மகிழப் பாடி மகிழ்வுகண் டுளங்க ளித்துக் கற்றவர் வியக்கப் பேசிக் கவிதைகள் நயந்து காட்டி திக்கெலாம் புகழச் செவ்வேள் திருவடி வழுத்தி வாழ்த்தும் அற்புதக் கவிஞ பல்நூ ருண்டிவண் வாழி வாழி 1
72

குறையெனிற் கடிந்து கொர் துகுண மெனிற் புகழ்ந்த போற்றும் கிறைகுணம் எவற்கு மஞ்சி கின்றிடா தெ கிர்க்கு மாண்மை; மறைபொருள் அறிந்து துய்ப்போர் மகிழ்த் திட இனிய சொல்லால் முறையறிங் துரைக்கு மாற்றல் முனிவனே! புலவ! வாழி !!
பொன்னுடை போர்த்தும் கிற்குப் பொற் கிழி அளித்தும் கீர் விண் ணிடை நிலவு மேகத் திசையினை விஞ்சல் ஒக்கும் [த்தி *ன் னய உணர்ச்சி தாண்ட சாமிதைத் துணிந்தோம் அற்ப புன்மையைப் பொறுத்து ஏற்றுப் புலவt வாழி ஊழி!
தில்லேச் சிவனுக் கோர்பா திகழ்திரு நல்லைக் கோர்பா பள்ளம் புலத்து வேற்கோர் பாட்டெனப் பலநூ ருக்கி உள்ளம் உருகப் பாடி உலப்பிலா ஆன க் தத்தேன்
அள்ளிப் பருகுந் தில்லை நாதனே வாழி ஊழி!
பொற்கிழி அளிப்பின்போது பாடியது
(I V,
79

Page 50
செந்தமிழின் தேன் பொதிவாய் திணவெடுத்த
திண்தோள்கள் அகன்ற ம?ர்பு
சந்ததமும் தமிழ்வாழத் தலைப்பெய்து
பணிபுரியும் தகைமை உள்ளம்
முந்து மவைத் தமிழ்ப் பேச்சில் முன்னெவரு
மில்லாத முதல்வோய் வேந்த !
வெந்தழலும் தமிழ்ச்சுவையை விரும்பியுணக்
கொடுத்திங்கு வேகின் ருயோ?
Χ Χ. Χ.
'ஐந்தடுக்கு மாளிகையில் அமளி மீது
அரிவையர்கள் அடிவருட ஆடிப் பாடி இந்திரப்போ கஞ்சிலபேர் துய்க்க நாட்டில்
ஏழைகளாய் எச்சிலுக்காய் ஏங்கும் பல்லோர் இந்த வுல கிருக்கும் வரை இறைவ னுக்கிங்
கிடமே து?" என்று அறை கூவி நின்ற சுந்தரநற் கவியரசே ! வேந்த ! நின்நா
சுடருண்ண அமரருல குய்க்கின் ருயோ?
74

சொந்தவொரு முயற்சியினல் தமிழைக் கற்றுத்
துலங்குமருட் பெருங்குணத்தால் உலகிற் கெல்லாம் தந்த கவி 'அம்மா’’ இந் நாட்டின் செல்வத்
தமிழ்ச்சிறுவர் மழலையெலா ந் தவழ வைத்தாய் கொந்தளிக்கும் உணர்ச்சியினப் புலமை வீறு
கொண்டமகா கவியின் துத் தமிழ்சொல் மேடை வந்தபெரு நாவலனே நின் சீர் இந்த
வையமெலாம் பரவிநண வாழ்க! என்போம்.
Χ Χ X
செந்தமிழின் உயிர் மூச்சு தீம்புலவர்
திறலாய்த்து பேசுஞ் செந்நா கந்தனருட் கேங்கிநிதம் கவிபாடும் பேரிதயக் கருணை நெஞ்சு சுந்தரநல் லெழிலுருவம் தோன்றியநல்
நாட்டுயர்வில் தோய்ந்த அன்புப் பந்தமுள நாகேந்திரம் பிள்ளைனன்ற
பாவலன்க, வேந்தன்பேர் பரவுவோமே!
75

Page 51
தமிழ் உயிர்ப்பதுவும் போச்சோ?
எண்ணத்தின் பொற்சு ரங்கம்
எய்தினேர் தம்மைத் தன்னுள் வண்ணத்தால் வயப்ப டுத்தி
வாழ்வளித் தவகை கொள்ளும் திண்மைத்தோள் செம்மற் சேய்பொன
குமாரவேற் பிள்ளை சங்கம் முன்வைத்த தமிழ்மேற் காதல்
முற்றிய மூதறி ஞ்ஞன்.
தமிழ்மொழி வாழ்த்தும் நெஞ்சு
தமிழர்சால் புணர்த்தும் பண்பு புவிபொருள் கொடுத்தும் நூல்கள்
போற்றிடும் புலவன் மேதை கவினுற மண்டை தீவுக்
கந்தன் வாழ் கோட்டம் புக்கு அமிழ்துரை புகல் வான் தம்மை
அண்டினேர் தமக்கெந் நாளும்.

அகப்பொருட் டுறையும் agth
ஆண்மையென் றிவைம லிந்த புறப்பொருள் பலவுங் கற்றுத்
தமிழர் தம் பொற்கா லத்தை மறப்புரு வகையில் ஆய்ந்து
மாந்தியும் மற்ருேர்க் களித்தும் சிறப்புடன் வாழ்ந்தோன் எம்பொன்
குமாரவேற் பிள்ளை மன்னே!
தமிழ்க் திறம் சோல ஆ ளில்லை
தண்டமி ழறிஞர் இந்த இமிழ் திரை உலக ந் தன்னில்
எங்கிருந் தாலும் அன்னேர் புகழ் விரித் தே? தி நின்ற
பொன்கு மா ரோடு ஒன்றித்
*
தகவு ந இருந்த மும்மைத்
தமிழுயிர்ப் பதுவும் போச்சோ ?
77

Page 52
நலன் புனைவு
கொண்டல் அளித்த நீண்டகரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவந்தொளிர விண்ட புகழ்பேர் இமயவரை
விளக்காய் விளங்கி மிளிரநறுங் கண்டின் இனிய சுவைமொழியும்
கற்றேர் நட்பும், பலபொதுமைத் தொண்டும் திருவும் கொண்டநனி
துய்யன் நீதி ராசாவே
நிகர்முன் எவரும் உவமையிலா நீதி ராச ! நின் அன்பில்
உருகும் உள்ளோ டுனே ஏத்தி
உவந்து மகிழ்ந்து வரவேற்முேம்
பெருகும் கருணைக் கடலனையாய்
பெட்பார்ந் தியன்ற பேரறிஞ !
* வருக ! வருக ! வாழ்க!” என,
வாழ்த்தும் நல்வர வாகுகவே !
78

பணிவால் உலகைப் பணிவிக்கும்
பண்பால் உயர்ந்து நடுநிலைமைக் (கு) அணியாய் நீதி பதியாகி
அகிலம் போற்றும் இசையாள ! துணிபோ டேற்ற தொழில்கள் பல
தொடக்கிப் பொருளால் வரும் மிடிமைப் பிணிதீர் விறலோய் ! நின் ஆற்றல்
பேசிப் பரவிப் புகழ்வோமே !
நிலையங் காணில் அவையெல்லாம்
நீதி ராசாப் பெயர்நிற்கும், கலைகொள் அரங்கெல் லாம்நின்றன்
கைவண் ணத்தால் கவிஞரும் மழையொன் றிரண்டு கைவள்ளல !
மதிதோய் மாடம் பலநினைவாம், சிலையிற் காண்போம்; நினக்குஅது ഴ്ച
சிறிது; கீர்த்தி மிகப்பெரிதே !
ஊரார்க் குவந்து ஊருணி போல்
உற்ருர் மகிழ ‘வள்ளல்" எனும் பேராற் சிறந்து உலகெங்கும்
Gus ' B3 y Taf ' Qaysir (d) ஆராத் தமிழ்க்கா தலினுல்மேல்
அரச அவைக்கே ஒளிகூட்டி சீராற் பொலித்து பல்லூழி
சிறந்து வாழி சேமமுடன் !
ሃ9

Page 53
அன்பு தொண்டு அருள்ஆண்மை
அறிவு பொறையென் றிவை ஒன்றித் * தஞ்சம் ' எனவந் திடஅபயம்
தந்து தாங்கும் தடந்தோள! என்பும் பிறர்க்கு உவந்தீய்ந்து
இன்பங் காணும் நீயன்றே ! முன்புப் பொற்றேர் தனைவாடும்
முல்லைக் கீய்ந்தாய்! வாழிய நீ!
* பொய்யர் குகையாய் சூழ்ச்சிகட்குப்
புகல் நல் இடமாம்” அரசினியே உய்யும், தரும ! நின் வரவால்
உயரும் 'செனட்டர் ? எனும்பதவி மெய்யும் வாழும், நின் பேரில்
மேவிப் பிழைத்த துயர்நீதி, ஐய! வருக ! அறம் நின்னே
அணைந்து வாழப் வல்லூாழி !!
திரு. த, நீதிராசா Gණ பி. அவர்கட்கு சாவகச்சேரியில் நடந்த வரவேற்பில் பாடப்பட்டவை.
80

fift Gig) L
مکتعQقt seقیقی"طاھمصعحقسسی -----------------۔
கன்னித் தமிழால் உலகாளக்
கருத்துக் கொண்டு பொதுவுடமைக் கெண்ணித் துள்ளும் இளைஞர்களை
எய்திக் கொஞ்சும் வேலணையூர்க்(கு) அன்னை யொத்த கல்லூரிக் கதிபராகிக் கலைவானில் மின்னிச் சுடரும் கந்தைய !
மேலோய் வாழி வாழியவே !
அன்புத் தமிழ்போல் ஆங்கிலமூம்
அறிந்தார் விஞ்சும் வேலணையார் எங்குற் றிதனைக் கற்றனரோ
என்றே அயலார் பலர் ஏத்தும் பண்பைத் தந்தாய் கந்தைய !
படரும் நிலவே ! பாய்நதியே! முன்புச் செய்த தவந்தானே
முதல்வோய் நின்னை அடைந்ததுயாம்?
8

Page 54
முருகார் உள்ளப் பேரிசையால்
முனியா நெஞ்சால் செயல்முறையால் அருகார் நிற்பர் பனிசெய்தற் (கு)
அஞ்சா தொழுகும் கலைமணியே கருப8ா முகில்போல் எம்மோர்க்குக்
கனிந்து பெய்த கவிதை மழை பெருகா நிற்றல் கண்டும் உன்
பிரிவால் நெஞ்சம் உருகாதோ ?
பன்னி வகுத்த முறைப்படியே
பயிற்றி அன்பாய் மாணவரை எண்ணி யெண்ணி அவரவரை
ஏற்ற முறையிற் போதிக்கும் உன்னை யன்றி எம்மவரை
"உயர்த்த' என்று நினைத்தவரை இன்னும் நாங்கள் கண்டறியோம் இதமாய் வாழி கந்தைய!
ஊரார் உண்ணும் ஊருணிபோல்
உயர் வான் ஊரும் மாமதி பே7 ல் சார்வோர்க் களிசெய் தருநிழல் போல்
சமமாய் எவர்க்கும் தாயருள் செய் பாரோர் போற்றுங் கந்தைய
பணிவால் உலகைப் பணிவிக்கும் சீரோய் பிரிவால் திகைத் தனதால்
சிறந்து வாழி திசையெல்லாம்.
* மாணவனக இருந்த காலத்தில் வேலணை, மத்திய கல்லூரி அதிபராக இருந்து மாறிச் சென்ற அதிபர் திரு. ஏ. கே. கந்தையா அவர் கட்களித்த பிரியாவிடையின்போது பாடியவை.
8.

திருமண வாழ்த்து
பணிவு சனிவு அருளுடைமைப் பண்பு பண்டு செய்த தவத் ᏯiᏍᏛᎯᏣt , பொறைகீர்மை துரிதம் ஓங்கும் நடுகிலையாம் அணி கொள் ஆசான் தொழில் தனனை அறத்திற் காகத் தலைப் மனிதர்க் கொருவ மகாலிங்க மன்ன வாழி பல்லூழி! (பூண்ட
கற்புக் கிவளே கலைக்கிவளே காதற் கிவளே என மிக்க பொற்பார் புஷ்ப சத்தின மென் பூவை மகிழ வருகொழுக! மிக்கேர் பெற்றுச் செல்வமெலாம் மேவி வாழ்நர் தாம் உமதி கற் சீர் பற்ற மாதிரியாய் ஈனிவாழ் சனிவாழ் கனிவாழி:
தமிழை உயிராய்ப் பரிமாற்றி சன்னுற் றலினல் அதன் வாழ்வு பவிமேல் உயர முனைப்போடு போற்றும் நல்லாசிரியகினை அமிழ்தே பனையாள் துணையாக அடைந்தாள் வாழி பல்லூழி தமிழ்போல் இனிமை இளமையெனும் தகவெல் லாம் பெற் றளியுடனே!
இட்டுச் தொட்டும் அழைர் தாடி எச்சில் மிசைந்து பிசைந்த கசப் பட்டென் மேனி பூதூளி படரக் குறும்பு மொழித வழக் கட்டி முக்கம் பலசேர்க்கும் கா சற் சிறுவ சொடுபேறீர் எட்டும் பெற்று இல்லாண்டு இசையோ டென்றும் வாழியவே
நண்பர் ஒருவரின் திருமணத்தின் போது பாடியவை.
83

Page 55
84
தரும யுத்தம் நாடு
"பூமகள் மார்பிற் கொண்ட
புனைமணிப் பதக்கம்” என்றும் மா மகள் நுதலின் மின் செய்
மரகதத் திலக மென்றும் நாவலர் பலரும் போற்ற
நாவலந் தீவின் தென்பால் வாவலைக் கடலின் நாப்பண்
வளந்தரும் ஈழ நாடு.
பூ48லர் கயங்கள் அன்னப்
புள் மலிந் தழகு கூட்ட தேமது உண்டு வண்டு
செவ்வழி மிழற்ற எங்கும் காமிகுத் தழகு ஜாலக்
கவின் பல காட்டக் ஆண்டோர் காமமுற் 'ருகT ஈதே
கற்பக நாடெ"ன் ருேய்வார்.

வெண்திரை மோதி வீழும்
வீரமா நகரைத் தன்கை
கொண்டுமேல் வருடி இன்பம்
கொடுக்குமா வலியென் ஞறு
தந்ததற் செல்வந் தாங்கி
தருக்கிவாழ் ஈழம் பண்டே
வந்தவற் கெல்லாம் ஈய்த்து
வாழ்வளித் துவக்கும் நாடு, 3
நால்வகை நிலமும் குன்ற
நல்வளம் தான்கும் ஈய நால் மதப் பண்பும் ஒன்றி
நனிபயன் விளைக்க மக்கள் மேலவர் கீழ்என் றின்றி
விருந்தளித் துவந்து அட்ட சீலமும் சிறக்க இன் பாய்
சேர்ந்தொளிர் ஈழ நாடு. 4
மஞ்சுலாம் மலைகள் செந்தேன் மாந தி சுரக்கும் செல்வம் விஞ்சுபேர் தொழில்கள் ஆங்கு
விளங்கிட உழைக்கும் மிக்கள் கங்குலும் பகலுங் தங்கள்
கடFையில் வழுவா நிற்கும் பொங்கபேர் வலியால் வையப்
புகழ் கவர் ஈழ நாடு, 5
& 5

Page 56
86
வனமுள யானை முத்து
வளமுள கடல்கள்" மங்கை கனமுலை போலுங் குன்று)
கணக்கில நீண்ட சாரைக் கினமென நெளித்து ஒடும்
இந்நதிக் கிளைகள் எங்கும் மணமுறத் தென்றல் ஏவி
மதுகரம் அழைக்குஞ் சோலை,
வயலெலாஞ் செந்நெல் செய்யின்
வரப்பெலாம் கமுகுந் தெங்கும் கயலுலாஞ் சுனைகள் ஆம்பற்
கவின் மலர் அழகு காட்டும் செயலெலாம் அறத்தின் சாயல்
தேஜசும் திறமும் விஞ்சும் புயமெலாம் வீர மங்கை
புகலிட மாகக் கொண்டாள்.
தள்னர்கள் தொட்டுக் குன்ற மாதிரு வளர்த்து "ஈழம் பொன்னகர்? என்று வேற்ருர்
புகுந்திடப் புதுமை செய்யும் நல்லிசைக் குளங்கள்
நாடிவந் திருப்போர்க் கெல்லாம் இல்லையென் னது ஈய்ந்து
இன்னல் தீர் இசை கொள் ஈழம்.

Gau 17 S), DJ புகழால் வையம்
வாழ்த்தமின் தமிழும் கொம்புத் தேனுறு சுவையின் மிக்க
சிங்கள மொழியும் ஈழத் தாளிரு விழிக ளாகத்
தமிழர் சிங் களரெஸ் றெல்லேம் நாளிர வொன்றி இன்ப
நனிபயன் துங்க்கும் நாடு. 9
விண்ணுற ஓங்கி மேகம்
வீழ்ந்துற வாடப் பொன்னின் மின்னிறம் பிறங்குந் தூபி
டேன் நிலைத் தாபகங்கள் எண்ணில விகாரை கோவில்
எழில்மிகு சமாதி வல்க ! பொன்  ைழற் போதித் தேவன்
பூங்கழல் புனையும் நாடு. O
சிவன் கிசுப் பாதந் தாங்கி
சேணுயர்ந் தொளிருங் குன்றும் அவன் திருக் குமரன் ஆடும்
அருட்கதிர் காமத் தோடு நலத் திரு கோண ஈசன்
நண்ணிடும் பதியும் நன்செய்ப் புலம்பல பொலிந்த கேதீஸ்
வர முஞ்சேர் புனித ஈழம்.
37

Page 57
88
கைவண்ணத் திறத்தால் வஈனக்
கன்னியர் மலர்கோள் காட்சி மைவண்ணத் தாக்கிச் சிங்க
மலைக்குகை அமைத்து தங்கள் எவ்வண்ணம் வாழ்ந்தம் என்று - எள்ளிடு வோர்கள் நான இவ்வண்ணக் என்று காட்டும்
எழிலோ வியங்கொள் நாடு. 12
நகர்
அறிவினைப் போற்றும் புத்தன்
அருளினை வேண்டி ஞான நெறிபயில் அறவோர் வாழும்
நீள்நிலை விகாரை தோறும் வணபிரித் தோதும் ஒசை
வானுறுந் தானங் கொண்டு அனநடை மாதர் செல்லும்
அணிநடை வீதி பேங்கும் 3
பூம்புனல் புகுந்த ஆடும்
பூவை முன் சுழி புகுந்து தேம்பிடும் அவளை ஏய்த்துச்
சென்றுகால் பறிக்கும் காளை வீம்புகண் டொல்கி வேய்த்தோள்
விலகுபூந் துகிலே மென்கை தாங்கிடும் சரசக் காட்சி
சார்ந்தபல் சுனைகள் எங்கும் 14

குன்றுகள் நடத்தல் போலுங்
கொடிதுயர் வானில் மேகத் திண்டுகள் நிரையிற் சென்று
திணர்த்துதல் போலும் யானைக் கன்றுகள் கருங்கற் றுரனைக்
கையினற் ருங்கி நேர் நேர் சென்றிடுங் காட்சி ஈழத்
தெருவெலாந் தேங்கக் காண்போம், 15
கண்டியன் கூத்தும் பாட்டும்
கணித் தமிழ் இசையுங் கோட்டும் எண்டிசை முழுது மார்க்க
யானை பின் நூறு செல்லத் தொண்டருந் துறவு ளோரும்
தொடர்ந்து பின்வரச்சீர் புத்தன் கொண்ட பல்விழ வயர்ந்து
குதூகலம் அடையும் ஈழம், 6
அரசு
ஈழமென் றிலங்கும் இந்த
எழில் இடத் தன்னைப் பண்டு சோழன்எல் லாளன் என்ருேர்
சூரன் நல் லாட்சி செய்தான் வேளமென் வலியும் வெய்ய
வேங்கையின் வீறுங் கொண்டு நாளும்நல் லறத்தின் ஆட்சி
நடத்தினன் உலகக் ஒப்ப, 7
9

Page 58
90
புத்ததா பகங்கள் செய்தும்
புதுக்கிநன் கமைத்தும் நாட்டு மக்களின் கருத்தை ஆய்ந்து
மதித்தவர்க் கினிய செய்து பக்கம்நல் லறிஞர் சேர்த்து
பாலிக்குந் திறத்தில் உள்ள மக்களின் சபையுங் கூட்டி
மன்னர சாட்சி கொண்டான். Α: 3
வீதிகள் அமைத்தும் புத்த
விகாரைகள் எடுத்தும் வாழ நாதியற் றிருப்போர்க் கென்று நல்லுண்டிச் சாலை நட்டும் சாதியிற் பேதம் நீக்கிச்
சரிநிகர் சமான மாக. தீதில தான ஆட்சி
செய்நனன் இலங்கை முற்றும். I9
கன்றிறந் தழுத ஆதன்
கடைமணி வாயில் முட்டி நின்றதைக் கண்டு ஆங்கண்
நிகழ்த்ததை அறிந்து தன் சேய் ஒன்றெனத் தெரிந்துத் “தானும்
துறு துயர் அடைவன்" என்றே கொன்றிட மகனைத் தேர்க்கீழ்க்
குறித்தவன் அனைய கோலன். 20

மக்களின் குறைகள் காண
மாற்றுரு வெடுத்து நாட்டுப் பக்கமெல் லாமுஞ் சென்று
பலருடன் உறவு பூண்டு விக்கினம் அறிந்து நீக்கும்
வித்தகன் ஆட்சி கியன்ருல் இத்தகைத் தென்று மற்ளுேர்க்
கெடுத்துரை வகையில் செய்தான், " 2.
ஆடக அரங்கு தூய
அறிவுரை கேட்கும் மேடை தேடருங் கல்விச் சாலை
தேரர் வாழ் மனை அங் காடி நாடக மன்றஞ் சோலை
நறும்புன லாடும் பொய்கை யோடிவை அனைத்தும் மிக்கட்
குகந்ததென் ருேர்ந்து செய்தார். 22
வலியவர் மெலியர் தம்மை
வருத்துதல் இல்லை நாட்டில் புலிநிகர் வீரர் தாமும்
போர்விடுத் துழவு செய்து நலிவுறும் உலகிற் கெல்லாம்
நவமணி அளித்துக் காத்தார் கலிதவிர்த் திலங்கை இன்பம்
கண்டதக் காலந் தன்னில், 2@
9.

Page 59
92
வெள்ளொளி முத்தும் யானைதி தந்தமும் பஞ்சும் பாக்கும் நெல்மணிப் பொதியுங் கொண்டு
நிறைந்த பொற் குவை கொடுத்துச் செல்மரக் காயர் கூட்டம்
சேர்ந்துறை துறைகள் தோறும் செல்வதும் மீழ்வ தாகச்
செறிந்தபல் வங்கம் சூழும். 24
திறைவரு திருவும் நட்புச்
செய்திடத் தருஞ்செம் பொன்னும்
முறை வரு வரியுங் கொண்டு
முன்னவ ருவமை யின்றி
மறைதகு நெறியில் நின்று
மன்னன் எல்லாளன் மக்கள் குறை சொலற் கின்றிக் கொற்றற்
குடைநிழல் இனிது காத்தான். 25
புரட்சி உரை
இந்நிலை இலங்கை வேந்தன்
இருந்திடும் போது நாட்டின் பின்னணி ஒருவன் மக்கள்
பேதமை கண்டு சொல்வா ன் "என்னதான் செய்தும் என்ன ? இவன் பிற நாட்டு வந்த அன்னியன் எம்மை எல்லாம்
ஆள்வதோ அடிமை நாமோ ? 26

சிங்கள நாட்டுக் குள்ளோர்
சிறுநரிக் கூட்டம் வந்து மங்கள வாழ்த்தொ டாளும்
மன்னராய் ஆவ தென்னே ! எங்களை நாங்கள் ஆள்தல்
ஏற்றது. அன்றி மாற்றன் "தங்க மென் றதனுல் ஏற்றுத்
தலைபணிந் துய்ய லாமோ ? 27
ஆண்டிடத் தமிழர் நாமிங்
கடிகையோ பண்டெம் வீரம் மாண்டொழிந் ததுவோ வேங்கை
மானினைப் பணிதல் உண்டோ ? கூண்டினிற் கிளிபோல் எம்மை
கொண்டனர் தமிழர் (நாங்கள் வேண்டிய தெல்லாம் ஈய்ந்தும்
விடுத ைஈயார் கண்டீர் 28
வீங்குதோள் வீரர் தங்கை
வேல்முனை முறிந்தென் நாளோ? தாங்குதோல் உறைவஈள் மீசு
தடம்புரண் டுடைந்த தெப்போ ? ஈங்கினி அடிமை வாழ்வே
ஏற்றதென் றிருந்தீர் நன்றே மாண்புக்ழ்ப் போரில் முன்போய்
மடிந்தவர்க் கையோ 1 ஐயோ! ! 29
93

Page 60
94
ஆரியத் தலைவா! விண்ணே
ஆழுவாய் நீநா மிங்கே வீரியம் இழந்து நாய்போல்
வீணர்க ளானுேம் நின்றன் பேரினுக் கெம்மால் என்றும்
பெருங்கறை இலங்கை மக்கள் சீசினை அறிதி 1 மாற்ருன்
சேவகம் சிரமேற் கொண்டார். 80
மன்னனும் எந்தை இந்த
மறந்தமிழ் அரசற் கஞ்சி என்னை வாழ் கென்ருன் இஃது ஏற்குமோ ஆரியற்கு? பெண்ணையர் அவர்க்கென் கையால் பெண்ணுடை கச்சு கூந்தல் இன்னபல் அணிகள் சேர்த்து !.
ஏற்றதென் றனுப்பி வைத்தேன். 3
என்னையோர் துட்டன் என்று
ரசுதல் அறிவேன் வையம் அன்னியன் எந்தாய் நாட்டை
ஆள்வதைக் கண்டும் வாழ எண்ணியிங் கடிமை செய்து டி
இருந்திடேன் அடுபோர் கண்டென் புண்ணுடல் விழினும் பொன்றப்
புகழுடம் போடு வாழ்வேன்."" 32

என்றறை கூவித் தென்பால்
எழுந்தனன் கைமுனு வேந்தன் குன்றனை தோளன் சிங்கக்
குலப்புகழ் நிறுவுங் கேளன் நின்றிடு பகையை ஒட்டி
நீள்முடி தரித்து நாட்டை வென்றிடும் ஆவல் தூண்ட
வீரர்கள் பலரைச் சேர்த்தான், 3.
தாய்த்திரு நாட்டின் பூட்னி>த்
தகர்த்துடைத் தெறியா தோய்ந்து போய்த்துயில் கொள்ளேன் இன்பம்
புல்லிடேன் அமுதைச் செந்தேன் தோய்தெடுத் தடினும் உண்ணேன்
தோழரே! இவைசெய் வேனல் தாய்ப்பிறப் பெடுத்துச் குழம்
நர கெல் லாம் அலை வேணுவ ! 34
உறுருனை வேந்தன் பேச்சு
உலுக்கிடக் கிளர்ந்த நெஞ்சில் பெருவலி புரள ஈழப் பெரும் படை திரண்ட தாங்கே பொருதலுக் கமையுங் காலப்
பொழுதினைப் பார்த்துச் செல்வோர் ஒருசிலர் அல்லப் பல்லோர்
*உண்டினி வெற்றி” என்பார், 55
$5

Page 61
96
நல்லவன் ஆயின் என்ன
நம் உயர் இனத்தைத் தன்வாள். வல்லமை கொண்டு. ஆண்டு
வந்தவன் தமிழன் என்று சொல்லும் எம்சரிதம் என்ருன்
சுழித்த செம்முகங்க ளெல்லாம் வில்லொழிச் சூலம் ஈட்டி
வேலொடு களத்தில் கண்டான். 36
களங்காணல்
ஒடிவத்தொரு தளபதி கூறிஞன்
""உறுதனைப் படை எம் அரண் நோக்கியே
பாடி கொண்டனர்' செய்தியைக் கேட்டதும்
பதைத்த லின்றி எல் லாளன் பகருவான்
தேடிவந்த இச் செம்படை முன்னரே
செய்ய வேண்டிய போரினைச் செய்யவே நாடிவந்தது நல்லது நாமினி
நடத்துவோம் மறப்போர்” எனக் கூறினன். 37
அரனைக் கரத்திட வேற்படை புறமதில்
அகழி காத்திட விற்படை செல்லவும் புரவி வெம்படை நகர்வலம் காக்கவும்
போதகப் படை பகைவரைத் தாக்கவும் விரைக என்றபின் பர்வதம்” என்றதன்
வேளம் ஏறியப் போர்முனை நோக்கிஞன் முரச திர்ந்தது; இருதிறப் படைகளும்
முட்டி மோதிட எதிரெதிர் நின்றன. 38

“கந்துலன்” எனும் யானையில் ஏறியே
காளை காமினி முன்வந்து நின்றனன் ஐக்து பத்து அகவைக்கு மேலுள
அரசன் எல் லாளன் அவன் எதிர்வந்தனன் சிந்து பாடியங் கெதிர்வந்து ஆர்த்திடும்
செந்தமிழ்ப் படை கண்டனர் சிங்களர் நொந்து சாம்பி வெதும்பும் உளத் தொடு
நொடியிற் களம் விட்டு ஓடிட நின்றனர். 39
கண்டு காமினி கலங்கிட எல்லாளன்
கருணை பொங்கும் அருள் விழிநோக்கொடு *பொன்றிப் பல் இளம் வாலிபர் போன பின்
பூமியாள்வதில் புண்ணியம் என்னகாண் அன்ற சோகன் என்னுமோர் மெளரியன்
அமர் வெறுத்துநற் தர்மத்தை ஏற்றதால் இன்று நீரும் உன் கிளைகளும் புத்தனின்
இந்நிழற் பதம் இறைஞ்சுதல் ஓர்மினே 40
புத்தர் நல்லறம் போற்றுமிப் பூமியில்
போரில் பல்லுயிர் போக்குதல் ஏற்றமோ ? ஒத்த பாச உணர்வுள எம்மினம்
ஒருவர் மற்றவர்க் கூறு விளைப்பதோ ? தத்தம் செய்து இவ்வாட்சியை நின்வசம்
தானமாக்கின் நின் தகுதியும் ஆண்மையும் மற்றவர்க் கிழிவாய்ப் படும் என்றதால்
மன்ன சிந்தனை செய்கிறன் என்னுளே ! 41
97

Page 62
98
ஒன்று சொல்கிறேன் உன்னுடன் நான் தனி
ஒன்றிப் போர்செயின் உயிர் பிற சென்றி.ஈ இன்று வோர்செயின் என்னுயிர்த் தோழர்கள் எதிர்த்து நின் படை ஒறுத்துயிர் போக்குவர் சென்று தாளைவ உன் படை யோடிங்கு
சிறிய ஒர்படை கொண்டுனை மோதிநான் பொன்றின் ஆழுதி !" என்றனன காமினி
புரிந்திடா வகை ஏகின ன் பாசறை, 42
du Ti
முரச திர்ந்தது நகர்ப் புற வஈ சலில்
மூன்று நான்கு மெய்க் காவலரோ டொரு
இரவிபோல் ஒளி காலத்தன் யானைமேல்
இந்திரன் என எல்ல ? வான் வந்தனன் சதுரச் சேனைகள் சூழ்ந்து புடைவரச்
சமர்முனைந் தங்கு வந்தனம் காமினி எதுவுஞ் செய்திடல் இன்றி அம் மன்னவன்
எழிலைக் கண்டுபோர் எண்ணம் மறந்தனன், 13
காமினி உளம் கண்ட அக் காவலன்
கடுகிக் தன்கரி ஒட்டி அக் கந்துலன் அருகிற் சென்றடை வாளை உருவி 'யிங் (கு)
கமர் மலைந்திடவா? வெனக் கூவினன் பொருதற்கே மனம் பொருந்த மஜ த் துமென்
பொருதியே தீர வேண்டுமென் முனதால் உருவி வாளினைக் கொண்டு மலைந்தனன்
உலகம் ஒப்பில்ஒர் யுத்தத்தைக் கண்டது. 44

பொருவிற் கந்துலன் பர்வதம் தன்னை போர் புதரில் வீழ்த்திடக் காமினி வீசுவா ள் உதிரம் சோரநல் மன்னன் எல்லாளனின்
உயிர் எடுத்துயர் உம்பரிற் சேர்த்தது அதிரும் நேஞ்சோடு காமினி யோடிவந்
தரசன் பொன்னுடல் மெய்யொடு தாங்கிக்கண் பெருக நின்றனன் *மன்னவர் மன்னனே
பெரும நின் புகழ் பெரிதெனக் கூறியே 45
முடி புனைதல்
“என்னரும் உயிர்த் தோழரே இற்றைநாள்
எந்தன் வாழ்விலோர் துக்கநாள் ஈழமாம் பொன்னின் மாநகர் தன்னைப் பெறப்பல
போர் புரிந்தும் பெறல் எளிதாகுமா ? மன்னன் மற்றயிர் மாய்த்திட எண்ணிலன்
மனிதர்க் குள்ஒரு மா தெய்வம் ஆகினன் தன்னுயிர் தனைப் போக்கிஇந் நாட்டினைத்
தந்தனன் இது தருமம் என் றெண்ணியே.46
ஆய சேனைகள் அனைத்தையுங் கொண்டவள்
அமர் புரிந் திடில் ஆடியின் சூறையிற் போயொ துங்குஞ் சருகென எம்படை புகுமிடம் அறியாது புலம்புமே தாயவள் செய்த நற்றவத் தாலுஞ்சீர்
தமிழன் உள்ளொளி யூற்றத்தி னலுமே நாயெனக் இந்த ஆட்சியைச் தந்த செய்
நன்றி யைமற வாமுறை செய்குவேன.” 47
99

Page 63
16 O
என்று கூறிய காமினி நகரினுள்
எதிர்கொள் வார்களை விலக்கி அமைதியாய் சென்று . அங்குள்ள செந்தமிழ் மக்களைச்
சேர்ந்து துக்கம் தெரிவித்து இன்மொழி நன்று கூறி அவர்களின் நல்லுரை
நாடிப் பெற்று நாற் சந்தியில் ஓர் பொது மன்றில் எல்லாள மன்னனின் பொன்னுடல்
மண்ணுள் வைத்துப்பூ வலையங்கள் சூட்டினன் 48
நடுகல் வைத்தனன் 'அவ்வழிச் செல்லுவோர்
நல்ல எல்லாள மன்னனின் சால்பினைத் தொழுது செல்லுக' என் ருெ?ரு கட்டளை
தோமரம் அடித் தேபறை செய்தபின் பழுதில் ஆர்.சி புரிந்திடப் பொன் முடி பண்பினில் உயர் செந்தமி ழர் தர தெ7ழுது வாங்கி அரச பெருங் குரு
சூட்ட ஈழச் சுடா முடி தாங்கினன். 49

என்றுமுள தென்தமிழ்
8w
சேரனின் சிலம்பி னளைத் திருக்கு மட் கவசத் தாளை சீரணி மார்பிற் சிந்தா மணிதரு ஒளியி னளைப்
பரமே கலையைக் கம்பன் பண்ணுமா முடியைச் சூடித் தாரணி புரக்கும் செய்ய தமிழ்தனை வணங்கு கின்றேன்.
கற்றவர் கவிதை ஆய்வோர்
காழ்ப்புவப் பில்லோர் நண்பர் உற்றதற் கலைஞர் மாண்பில்
உயர்ந்தவர் முன் இச் சின்னன் தற்றவத் தமிழின் ஆற்றல்
நவிலுமிவ் நாய்ச்செ யல்தான் வெற்றுரைக் குரைப்பென் ருலும் தோக்கதற் காக ஏற்பீர்.
வேறு செந்தமிழீர் என்னுடைய அன்புத் தோழிர்
தெவிட்டாத தேன்றமிழின் ஆற்றல் கூட்ட வந்தணையும் பெரியோர்க்கொன் வணக்கம் கூறி
வானுறுசெத் தமிழினது இசையப் பாட எந்தனேயும் அழைத்தாரே அவரை வாழ்த்தி
இன் கவிதை பாடிடற்கு எழுந்தேன் ஐய! பந்த மெதோ உண்டதனல் பாடு கின்றேன்
பயன் எதுவோ அதனைஎதிர் பார்த்தேனல்லன்
10 I

Page 64
வழித்திட்டான் தமிழ்வீரம் பிறன்" என் றிட்டால்
பாய்வேங்கை எனவீறிப் பொருதிப் புன்மை
தீந்தமிழ்" என் ருனெருவன் தெவிட்டாத
இன் சுவையைத் தருத லஈலே மாந்தர் முதன் மொழிஎன்ருர் மற்றயவை
3தற்கிளமை யான தாலே சார்த்தமொழி பலகண்டும் சலிக்காது
இளமையொடு புதுமை எய்தி வாழ்ந்த மொழி தமிழ்என்று வாழ்த்தினன்
ஒரு புலவன் வண்ணத் தாலே
என்று முள தென்தமிழ் என் றியம்பினர்க் கனுதாபம் இறவாப் பண்பின்
நின்ற மொழி என்றிடுவோர் நீட்டிமுடக்
கிடுகுதலை நிறத்த வேண்டும்
கொன்றிடுமோர் குறிகொண்டே எம்மைஏய்க்கக் குளறுகிருர் எனும்நோக்கம் கொள்ளல் வேண்டும்
இன்றெடீது தமிழ்தனக்கு இழிவுதேட
எத்தனையோ பொறிகளெலாம் இயற்று கின்ருர்
ஒழித்திட்ட மறவீரம் ஒளிந்த பின்பும்
ஒன்னலரின் கூலிகளாய் நம்மில் பல்லோர்
விளித்தமுளி போடுலவி விஷத்தைத் தூவி
விபீஷணம்’ செய் கின்றதனைக் கண்டும் ஐய!
ஒழித்துவிட முடியாது தமிழை என்று
02
உளறுவதில் பயன்என்ன அர்த்தம் என்ன ?

"எதிர்ப்பார்கள் பின் இணங்கி வருவார் என்று
எம்நிலையை அறிந்தெதிர்க்கும் ஏதி லாரை துதிப்பாடி ஏவல் செய்து பருக்கைக் காகத்
துடிப்பவர்கள் வீரர்களாய் வாழும் நாட்டில் விதிப்பயன் என் றிருப்போமால் தமிழா வாழும்?
விறல் ஆண்மை வீரம் மறம் என்று . இன்ன அடுக்கு மொழி அகராதி விட்டு நீங்க
*அடிமை' என்ற பதம் ஒன்றே அடித்தி ருக்கும்.
விண்ணெட்டும் இமய மிசைக் கொடிகள் நாட்டி
விற்பொறித்த வீரரெலாம் லிக ளானர் மண் வெட்டும் கூலிகளாய் உலகம் எங்கும்
மண்ருடி இரந்தடிமை ஏற் கும் ஒன்றில் பண்பட்டுப் பயந்தஞ்சும் வாழ்வு கொண்டோம்
பயனில்லை தமிழ் வாழும் என்று சொல்லல் புண்பட்ட நெஞ்செல்லாம் புழுக்கள் தோன்ற
புகழ்கெட்ட தமிழரினல் தமிழா வாழும் 2.
அரிவாழ்ந்த குகைதனிலே நரியின் கூட்டம்
அழகார்ந்த பொழில் எல்லாம் புதரின் ஈட்டம் வரியூர்ந்து 'அமர்போந்த வீரர் எல்லாம் そ
படிதாழ்ந்த அடிதாங்கி வாழும் இந்நாள் முடிதாங்கி அரசோச்சும் மொழிகள் விண்டு
முள்ளோங்கித் தமிழ்கொள்ள முனைதல் கண்டோம் அடிவாங்கி அடிவாங்கித் தமிழர் சாக
அழகு தமிழ் வாழும் எனில் என்ன அர்த்தம்?
03

Page 65
வேறு
தாம்வாழும் வீடுகளில் தமிழ்வாழ
இடமளியாத் தமிழர் இன்னும் ஏன் வாழு கின் ருரோ யாம் அறியோம்
இந்நிலைக்கு இரங்கி நின்று
கூன் பாயும் உளத்தினர்முன கும் பிட்டுத்
தமிழினிலே எழுதல் பேசல் தான்நீதி என்றவரை தடிக்தோட்டும்
கயவர்களால் தமிழா. வாழும் ?
படையோடு சென்று நிறை பெற்று மீண்டு
பாராண்ட தமிழர்களின் மரபில் வந்தோர்
கடையோடு சென்றங்கு கலங்கி வாடிக்
கட்டழிதல் கண்டோம் நாம் கசங்கர வெள்ளை
உடையோடு தொழில் என்ற உத்தி யோகம்
104
உறுவாதை தந்ததையும் உற்று கோக்கி விடைதேடு இனிவாழ வேண்டும் என்ரு ல்
விறலோடு தமிழ்நாடு வேண்டி ஆடு.
பாண்டியஞர் இங்கில்லை பைங் தமிழ்மேல்
ஆர்வத்தை உற்சா சத்தைத் தூண்டிவிட இங்கொருவர் துணையுமில்லை
- ஆண்டுதோறும் சோம்ப லாக வேண்டுமட்டும் வாயளந்த வீணான்றி இங்கு தமிழ் விழைவா ரில்லை வேண்டுவரை போர்செய்ய விறல்விார் இங்கில்லைத் தமிழா வாழும்?

தன்னுட்சி பெற்றதொரு சிறு காடும் இன்றி தமிழ் வாழும் என்றிடுதல் சளக்கர்களின் பேச்சு விண்ணுடு. உற்றிடினும் தமிழர்களாம் சாங்கள் விறலோடு ஒருகாடு எமக்சேன்று கொள்வோம் அர்நாடு பொன்னடாய் உயர்க்தோங்க எங்கள் ஆவியுடல் பொருள் அனைத்தும் அளித்தேத்தி வைப்போம் என்ற முள தென்றமிழ்என் றியன்றதொரு வாக்கு இனிதுபெறத் தமிழுபர நாமுமிங்கு வாழ்வோம்.
ஏழாலைத் தமிழ் விழாவில் பாடியவை, 26-10-83
O 5

Page 66

09ith the best (ompliments of
AE AMED BROS,
07, 3rd Cross Street
Colombo
Telephone: 2 1342
அன்பளிப்பு
மா. சண்முகநாதன்
உரிமையாளர் .
ஜயந்தி பேக்கறி3
மல்லாவி

Page 67
அன்பளிப்பு
W விநாயகர் மரவேலை நிலையம் உரிமையாளர்: ந. வடிவேலு (இராசு)
நாரந்தனை ஊர்காவற்றுறை
l NGA M'S
யாழ்ப்பாணம் திறம் சுருட்டு, புகையிலே, கோடா சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் சாய்ப்புச் சாமான்களும் நியாய விலைக்குப் பெற்றுக்கொள்ளுமிடம் லிங்கம் ஸ்ரோர்ஸ்
உரிமை : ச. இராசையா
26, பிரதான வீதி - அளவை

Oilh the lest
0ompliments
Y
y
'
V
N/
RTHERN INDUSTRIES
TYRE RETREADERSS Sf 1 STANLY ROAD
• AFFNA

Page 68
அன்பளிப்பு
barй
ந்தா ஸ்
Tr GC O
20, பஜார்
வதுளை

விசேஷ வைபவங்களிற் கலந்து கொள்வதற்கேற்ற
உயர்ரகச்
* சூட்டிங்கு களுக்கு
எஸ். எச். ரெக்ஸ்ரையில்ஸ்
S.H.TEXTILES
24, Second Cross Street
Colombo.

Page 69
பீடிகளிலே ஒரு புதுமை !
பாவிப்பவர்களுக் கெல்லாம் பூரண திருப்தியை அளிப்பது
அருணு பிடி நீங்களும் இன்றுமுதல் எங்கள் அருணு பீடியைப் பாவித்துத் திருப்தியடையுங்கள்.
ARUNA BEED CO.
Prop: W. Arunagiri .
42, KANDY ROAD WARA KAPOLLA
Telephone: 532

நுகர்வோரின் திருப்தியே எமது லட்சியம்
எல்லா வகையான
புடவைகளுக்கும்
பெண்கள் ஆண்களின் தையல் வேலைகளுக்கும் மலிந்த விலயில் உள்ள
ஒரே இடம்
ப ஸ வில்
PAZHUVILDRAPERY STORES
582, Dematagoda Road Colombo-9

Page 70
dith the hest (Compliments of
W
The Maldivian National Trading Corp. (Ceylon) Ltd.
78, Reclamation Road
Colombo-ll


Page 71

ஈழத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்ப தலைச்சிறந்த சித்திரங்களை அளித்துவரும் சினிறாஸ் நிறுவனத்தினர் இவ்வருடம் அளிக்கவிருக்கும் சிறந்த சித்திரங்கள் சில
துணைவன் தில்லானு மோகனம்பாள் ஏ. வி. எம். ராசன் ( கலர் ) செளகார் ஜானகி சிவாஜி, பத்மினி
சிவந்த மண் திருவருட்செல்வர்
(கலர் ) (கலர்) ! . சிவாஜி, காஞ்சனு சிவாஜி, பத்மினி 米 米 6TS 5DS DT * ح؟ھ سے ہے - سہ ۔ • ' • எங்கள் தங்கம (கலர் )
எம். ஜி. ஆர், ஜெயலலிதா 米
来 அக்கா தங்கை ஜெய்சங்கர், கே. ஆர். விஜய" 米 காவல் தெய்வம் சிவாஜி, செளகார் ஜானகி
உயர்ந்த மனிதன் சிவாஜி, வாணியூரீ 米 குமரி கோட்டம் எம். ஜி. ஆர், ஜெயலலிதா 来
கண்ணன் என் காதலன்
s
癸 எம். ஜி. ஆர். ஜெயலலிதா மூன்றெழுத்து 。米 R (கலர்) நம் நாடு
எம். ஜி. ஆர். ஜெயலலிதா ?
R ரவிச்சந்திரன், ஜெயலலிதா
(கலர்) சிவாஜி, ஜெயலலிதா

Page 72
இன்பம் எளிமை இத கம்பர் கவியின் கருச் தில்லச் சிவனின் செ சொல்லத் தருமோ க்
அல்ஃப்பிட்டி
வெல்லச் சுவையினையும் தில்லைச் சிவனரின் தி செல்வரா சென்னும் மல்குங்கால் மாற்றும்
விவேகானந்த அச்
_
 
 

பந் தொடும்பொருண்மை சாபல் - அன்பனூர் மும்பாடல் போல்வேறு
க் .ெ ஆறுமுகம்
வெல்லத் தமிழ்செய்யும் 'ம்பாடல் - சில்லையூர்ச் சிறியேன் மனந்துயரில்
மருந்து.
சகம், யாழ்ப்பானம்