கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேயிலை தேசம்
Page 1
Page 2
F BIി
ஆங்கில மூலம், சி.வி.வேலுப்பிள்ளை தமிழில்: மு.சிவலிங்கம்
85, இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை. கொழும்பு - 13 தொலைபேசி - 331596
20/A/9. கோபால கிருஷணா தெரு,
தியாகராய நகர், சென்னை - 17
Page 3
First Edition
Title
Language
Copy right
Pages
Publisher
ISBN NO.
Price
Type Setting by
Printers
February 2003
Theyilai thesam
Tami
Author
150+-ΧΧΙ
Duravi Publication 85 Ratnasothi Saravanamuthu Mw.
Colombo - 13
955-8854-00-3
RS: 200/=
S.Chitrangani
U.K. Printers 98A, Vivekananda Hill
Colombo - 13
T.P-344046 - O74-614153
பதிப்புரை
துரைவி பதிப்பகத்தின் பதின்மூன்றாவது நூல் இது.
தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழ் எழுத்தாளர்கள் மீதும் தனக்கிருந்த மதிப்பையும் ஈடுபாட்டையும் அடையாளப் படுத்தவே இந்தப் பதிப்பகத்தைத் தான் தொடங்கியதாக எங்களது முதல் நூலின் பதிப்புரையில் எனது தந்தையார் அமரர் துரை விஸ்வநாதன் அவர்கள் கூறியிருப்பதை (28-02-97) நினைவு படுத்திப் பார்க்கின்றேன்.
நூல் வெளியீட்டுத் துறை என்பது போடும் முதலை லாபத்துடன் மீட்டுக் கொண்டு வரும் ஒரு வியாபாரத்துறையாக இலங்கையில் இன்னும் விருத்தியடைய வில்லை என்பதனையும் நினைவில் இருத்திக் கொண்டுள்ளேன்.
1998- டிசம்பரில் அய்யா அமரர் ஆனதன் பின் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருந்த இவ் விலக்கியப் பணியினை எனது வயதுக்கும், அனுபவத்துக்கும் சக்திக்கும் ஏற்பவும் மீறியும் தொடர நினைத்தேன்.
அந்த நினைவின் முதல் நிகழ்வே தெளிவத்தை ஜோசப் அவர்களின் மலையகச் சிறுகதை வரலாறு' என்னும் நூல்.
இந்த நூலுக்கு அந்த ஆண்டின் (1999) அரச சாகித்திய விருதும், யாழ்ப்பாணத்திலிருந்து சம்பந்தன் விருதும், மலையகத்தில் இருந்து புதிய பண்பாடு அமைப்பின் என்.எஸ்.எம்.ராமையா நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.
Page 4
அய்யாவின் மரணத்தின் பின் நான் வெளியிட்ட முதல் நூல் இதுவென்றாலும் இந்த நூல் வெளி வரவேண்டும் என்னும் அய்யாவினுடைய ஆவலை நிறைவேற்றி வைக்கும் ஒரு பணியினையே நான் மேற்கொண்டேன்.
அடுத்து நான் வெளியிட்ட நூல் அல் அஸ"மத் அவர்களின் * வெள்ளைமரம்' என்னும் சிறுகதை நூல்.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கும் அந்த ஆண்டின் (2001) அரச சாகித்திய விருதும், சிரித்திரன் சுந்தர் நினைவு இலக்கிய விருதும் வழங்கப்பட்டன.
துரைவி பதிப்பகம் உருவாவதற்கு முன்பிருந்தே அல்அஸ"மத்தின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான ஒத்துழைப்புக்களை நல்கியவர் எனது தந்தையார். ஆயினும் அம் முயற்சிகள் எப்படியோ கைகூடாமற் போய்விட்டன.
வெள்ளை மரம் நூல் வெளியீட்டின் மூலமாகவும் அய்யாவின் ஆவலைப் பூர்த்தி செய்யும் ஒரு பணியினையே நான் செய்திருக்கின்றேன்.
துரைவியின் வெளியீடுகளுக்கான விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் ஐயா உயிருடன் இருக்கும் போதே கிடைக்கவில்லையே என்னும் ஆதங்கம் எங்களது அடிமனதை உறுதி தினாலும் துரை வியின் இலக் கியப் பணிக் கும் பயணத்துக்குமான ஒரு உற்சாகமூட்டலாகவும், உந்து சக்தியாகவும் இவைகளைக் கருதி மகிழ்வு கொள்கின்றேன்.
அய்யாவின் நுால் வெளியீட்டுப் பணியின் தொடர்ச்சியில் எனது முதல் பங்களிப்பாக இந்த மொழிபெயர்ப்பு நூலையே நான் கொள்ளுகின்றேன்.
சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஒரு மறக்கப்பட முடியாத மகத்தான மனிதர்.
மக்கள் கவிமணி என்றும் இலங்கைத் தேசத்தின் தாகூர்,
M
என்றும் போற்றப்பட்ட மலையக எழுத்துலகின் ஒரு முன்னோடிச் சிந்தனையாளர். ஆங்கிலத்தில் எழுதியதன் மூலம் பெரும்பாலான வாசகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்றிருந்தவர் என்பதுடன் தான் சார்ந்த மலையக மக்களின் சோகம் மிகுந்த வாழ்வின் உண்மைகளைத் தமிழின் எல்லைகளுக்கப்பாலும் எடுத்துச் சென்று அறிமுகப்படுத்திய ஒரு தலைமகன்.
ஒரு தொழிற்சங்கவாதியாகக் கிளம்பி, அரசியல் வாதியாகப் பரிணமித்து மனிதநேயப் படைப்பாளியாக உயர்ந்து நிற்கும் இலக்கியவாதி.
BORN TO LABOUR 61660).jLD 96 (560Lu (EIT6)g55T6) அழியாத ஆங்கில மலையகப் படைப்புக்களைத் தமிழில் தொகுத் துத் தருவதை ஒரு பெருமையாக, பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன்.
இம் மலையக வாழ்வின் நிதர்சனங்களைத் "தமிழில் மொழிபெயர்த்திருக்கும் மு.சிவலிங்கம் அவர்கள் ஒரு நாடறிந்த எழுத்தாளர். மலையகத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவர்.
துரைவி தினகரனுடன் இணைந்து நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு - மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியுடன் இணைந்து நடத்திய மலையகச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உட்பட பல பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
மலைகளின் மக்கள் என்னும் தன்னுடைய சிறுகதை நூலுக்கு அரச சாகித்திய விருது பெற்ற பெருமைக்குரியவர். தொழிற் சங்கவாதியாகி இம் மலையக மக்களுக்குப் பணியாற்றத் தொடங்கி அரசியல்வாதியாக உயர்ந்துள்ள ஒரு மனித நேயப் படைப்பாளி.
‘நான் முதலில் ஒரு இலக்கியவாதி. பிறகு தான் அரசியல்வாதி' என்னும் அவருடைய கூற்றில் தொனிப்பது அவருடைய இலக்கிய மனம். மூத்த எழுத்தாளர் சி.வி.யின்
V
Page 5
எழுத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் இவர். அந்த ஈடுபாடும், இலக்கியக் கரிசனையுமே சி.வி யின் இவ்வாங்கிலப் படைப்புக்களைத் தமிழில் மொழி பெயர்த்துத் தரும் இவ் உந்துதல்.
சிறுகதை, குறுநாவல், கட்டுரை, நடைச்சித்திரம், வரலாறு என்னும் எங்களது பன்முக நூல் வெளியீட்டுப் பணிகளில் இந்த மொழி பெயர்ப்பு நூல் ஒரு முதல் முயற்சியே.
எங்களது வெளியீடுகள் அனைத்துக்கும் உற்சாகமான ஆதரவளித்து வரும் உங்கள் அனைவரினதும் ஏகோபித்த ஒத்துழைப்பும் ஆதரவும் இந்த நூலுக்கும் கிடைக்கும் என நிச்சயமாகவே எதிர்பார்க்கிறேன்.
ஒரு இலக்கிய கெளரவத்துடன் வெளிவந்திருக்கும் இந்த நூலின் வரவிற்காக சகல வழிகளிலும் பணியாற்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து இலக்கிய நெஞ்சங்களுக்கும் எனது " உளமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிகமகிழ்வு கொள்ளுகிறேன்.
கொழும்பு துரைவி. ராஜ் பிரசாத் 21-12-2002.
முன்னுரை
(stiaodoui (sit "Lificou (In Ceylon's Tea Gardens 1954) என்னும் ஆங்கிலக் கவிதை நூலைத் தந்ததன் மூலம் மலையக இலக்கியம் என்னும் ஒரு மரபிற்கு வித்திட்ட பெருமைக்குரிய மலையகப் பெருமகன் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் Born To Labour(1970) என்னும் ஆங்கில உரை நடை நூலின் ஆக்கங்களின் மொழி பெயர்ப்புக்களே "தேயிலைத் தேசம்'என்னும் இந்த நூல்.
Born To Labour என்றதும் 'உழைக்கப் பிறந்தவர்கள்' என்னும் தமிழ்ப் பதமே நம் முன் எழுந்து நிற்கிறது.
இதில் உள்ள உழைப்பு அல்லது உழைக்க என்னும் தமிழ்ச் சொற்பதங்கள் Labour என்னும் அந்த ஆங்கிலச் சொல்லின் முழு அர்த்தத்தையும் வெளிக் கொண்டு வரும் சக்தி கொண்டதாகத் தெரியவில்லை.
ஒரு தாயின் பிரசவ வேதனையே உலகின் சகல விதமான வேதனைகளிலும் மிகக் கொடுரமான வேதனையாகக் கொள்ளப்படுகின்றது. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்காகத் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொண்டு, ஆவலும், ஆர்வமும், மகிழ்வும் பொங்க அதற்காகக் காத்திருந்து அதை வரவேற்றுத் துடிக்கும் பெண்மையே மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் என்று போற்றப்படுகின்றது.
ஒரு தாயின் பிரசவ வேதனையை Labour Pain என்றே ஆங்கிலத்தில் குறிக்கின்றனர். "பிரசவத்துக்காக வலி தோன்றிய கணத்திலிருந்து குழந்தை
vii
Page 6
பிறப்பது வரையிலான ஒரு மூன்று மணிநேர வேதனையுடனான உழைப்பு yy என்றும், Labour என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுகின்றது - சொற்களைத் தேடுதல் என்னும் ஆங்கில ஒக்ஸ்போர்ட் அகராதி.
மூன்று மணித்தியாலங்கள் மட்டுமல்ல முழு வாழ்வுமே சொல்லிலடங்கா வேதனையுடனான உழைப்பு மாத்திரம் தான் என்பதையே குறியீடாகக் கொண்டு எழுந்தவை சி.வி யின் இந்த Born To Labour என்னும்
விவரணச் சித்திரங்கள்.
ஆகவே உழைக்கப் பிறந்தவர்கள் என்னும் மேலோட்டமான, தலைப்பைக் கூடுமான வரை தவிர்த்துக் கொள்ளவே முயன்றோம்.
சி.வி யின் சிறுகதைகள் என்று தலைப்பிட்டுக் கொள்ளலாம் என்னும்
யோசனைகளும் முன் வைக்கப் பட்டன.
சிறுகதை என்பது எந்த ஒரு இலக்கண விதிகளுக்குள்ளும் கட்டுப்படாத ஒன்றுதான் என்றாலும் ஒரு நல்ல சிறுகதையே சிறுகதைகளுக்கான இலக்கணமாகவும் செயற்படும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
உழைக்கும் மக்களைப் பற்றிய படைப்புக்கள் என்பதாலும், புறக்கணிக்கப் பட்டதும் ஒடுக்கப் பட்டதுமான மக்களின் அவல நிலைகளை கவித்துவத்துடனும் எதார்த்தத்துடனும் காட்டுகின்றன என்பதனாலும், ஒவ்வொரு படைப்பும் ஒரேயொரு குறிப்பிட்ட விஷயம் பற்றியே பேசுகின்றன என்பதனாலும் இப்படைப்புக்களுக்கு சிறுகதைகள் என நாமமிட்டுக் கொள்வதுவும் அத்தனை உடன்பாடானதாக இருக்கவில்லை.
ஊனையும் உதிரத்தையும் உயிரையும் ஈந்து இம்மலையக மண்ணை உயிர்ப்பித்த இம் மக்களை தேயிலை மக்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய இந்த மணிணைத் தேயிலைத் தேசம் என்றும் நிறைய இடங்களில் குறிப்பிடுகின்றார் இந்த மக்கள் கவிஞர்.
இந்த மண்ணை உருவாக்கி உயிர்ப்பித்த இந்த மக்களின் பல்வேறு வகைப் பட்ட வாழ்வியற் காட்சிகளை உயிரோவியங்களாகத் தீட்டிக் காட்டும் இப்படைப்புக்களுக்குத் தேயிலைத் தேசம் என்று பெயரிட்டுக் கொண்டால்.
என்னும் எண்ணம் அபிப்பிராய பேதமின்றி ஏற்றுக் கொள்ளப் பட்டது.
நவீனத்துவத்தில் நம்பிக்கையும் நாட்டமும் கொண்டவரான வெளியீட்டாளர்
Viii
ராஜ் பிரசாத் அவர்களுக்கும் இந்தப் பெயர் ஏகமாய்ப் பிடித்துக் கொண்டது.
துரைவியின் பதின் மூன்றாவது நூலாக மலையகத்தின் மாபெரும் கவிஞனும், இலங்கையின் தாகூர் என்று இந்திய ஏடுகளினால் புகழப்பட்டவருமான, சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் "போர்ன் டு லேபர்” என்னும் படைப்புக்களின் தமிழாக்கம் தேயிலைத் தேசமாக இதோ உங்கள்
கரங்களில் திகழ்கின்றது.
நாடறிந்த நல்ல எழுத்தாளரான மு.சிவலிங்கம் அவர்களின் இந்த Born To Labour மொழி பெயர்ப்பு மூன்றாவது முயற்சியாகும்.
ஆங்கிலத்தில் எழுதப் பட்ட இந்த விவரணச் சித்திரங்களில் சிலவற்றை அவை ஒரு நூலாகத் தொகுக்கப்படுவதற்கு முன்னரே சி.வி தானே தமிழ்படுத்தி வீரகேசரி, தினகரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்.
சி.வியின் மரணத்துக்குப் பின் 1985ல் சி.வி யின் தொழிற் சங்க ஏடான மாவலியில் பி.ஏ செபஸ்டியன் தொடர்ந்து சிலவற்றைத் தமிழ்ப்படுத்தி வந்தார்.
மூன்றாவது முயற்சியான மு.சிவலிங்கத்தின் இம் மொழி பெயர்ப்புக்கள் இப்போது துரைவியினால் ஒரு நூலாகத் தொகுக்கப் பட்டுப் பெருமைப் படுத்தப்படுகின்றன.
மலையக மக்களுக்குக் கல்வியே காட்டப் படாத - பாடசாலைகளே கட்டப்படாத முப்பதுகளில் ஆங்கிலத்தில் பாட்டெழுதி அதை நூலாகவும் வெளியிட்டவர் இந்த மலையகக் கவிஞர். விளப்மாஜினி(1931) என்னும் இந்த ஆங்கிலக் கவிதை நூலை அப்போது ஈழம் வந்திருந்த கவிஞர் தாகூரிடம் பக்தியுடன் கையளித்து ஆசி பெற்று மகிழ்ந்தவர் இவர். அப்போது இவருக்குப் பதினேழு வயது.
புதுமை இலக்கியம் என்னும் தலைப்பில் தான் வெளியிட்ட மாவலி என்னும் சஞ்சிகையில் மலையக இலக்கியம் பற்றி சி.வி பின்வருமாறு எழுதுகின்றார்.
"மலை நாட்டில் உள்ளவர்கள் எழுத்தறிவற்றவர்கள் என்றாலும் வசதி படைத்த பெரிய வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்குச் சென்று ஆங்கிலம் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள். தமிழ் நாட்டில் இருந்து வரும் புலவர்களும் கவிஞர்களும் இந்தப் பெரிய வீடுகளுக்குச் சென்று, தங்கியிருந்து உரையாடிச் செல்வார்கள். தாகூர், சரோஜினி போன்ற இந்தியக் கவிஞர்களின்
Page 7
படைப்புக்களும், மொர்டன் றிவியூ இண்டியன் றிவியூ போன்ற சஞ்சிகைகளின் வருகையும் இந்தப் பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒரு இலக்கிய ஆர்வத்தையும் உணர்வையும் கொடுத்தன. சி.வி வேலுப்பிள்ளை, கே. கணேஷ் போன்ற ஒரிருவர் எழுத்துலகில் பிரவேசித்தனர்."
அப்படியான ஒரு பெரிய வீட்டுப் பிள்ளைதான் ஒரு சகாப்தத்தின் குரல் என மலையகத்தில் ஒலித்த அமரர் சி.வி.வேலுப்பிள்ளை என்பது நமக்குச் சுலபமாகப் புரிகிறது.
புறக்கணிக்கப் பட்ட இம் மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வினை தமிழின் எல்லைகளுக்கப்பாலும் எடுத்துச் செல்லும் பணியினை இவருடைய ஆங்கில எழுத்துக்கள் மிக அற்புதமாகச் செய்து வந்தன.
தேயிலைத் தோட்டத்திலே என்னும் ஆங்கிலக் கவிதை நூலும் Born To Labour என்னும் விவரணக் கட்டுரைகளடங்கிய ஆங்கில நூலும் மலையகத் தோட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வஞ்சிக்கப் பட்ட வாழ்வினை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்து காட்டின.
கடல் கடந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இம்மக்கள் மலைகள் சூழ்ந்த இப் பிரதேசத்தின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும், அடர்ந்து வளர்ந்து நிற்கும் தேயிலைச் செடிகளின் இருட்டுக்குள்ளும் எப்படி எப்படி அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் - ஒடுக்கி வைக்கப் பட்டிருந்தனர் - என்பதைச் சின்னச் சின்னச் சம்பவங்கள் மூலம் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் ஒரு வரலாற்றுத் தொடர்போல் கூறிவைக்கின்றன இக் காட்சிகள்.
சண்டே டைம்ஸ், மெட்ராஸ் மெயில், சன்டே ஒப்சேவர் போன்ற ஆங்கில
ஏடுகளில் இப்படைப்புக்கள் வெளிவந்தமையும் இவைகளுக்கு ஒரு தனியான கெளரவத்திற்கும் கவனிப்பிற்கும் இடமளித்துள்ளன.
இலங்கை, இந்தியா போன்ற கீழைத் தேச நாடுகளில் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலமே அரசமொழியாக, உலக மொழியாக, இலக்கிய மொழியாகக் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலம் தெரிந்தவர்களே உயர்ந்தவர்களாகவும் ஆங்கிலம் கற்றவர்களே அறிஞர்களாகவும், கல்வி மான்களாகவும் கருதப்பட்ட, கணிக்கப் பட்ட காலம் அது. அந்தக் காலத்தின் பண்பும், ஆங்கில மோகமும் கூட சி.வியின் எழுத்துக்களுக்கு ஒரு உயர்வினைக் கொண்டு வந்திருக்கலாம். ஒரு பரவலான பிரபல்யத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்று எண்ணவும் இடமிருக்கிறது.
X
ஆனாலும் ஆங்கில ஆதிக்கம் மிகுந்திருந்த அந்தக் காலங்கள் கடந்து விட்ட பிறகும், ஆங்கில மோகங்கள் கலைந்துவிட்ட பிறகும் சி.வியின் எழுத்துக்கள் அதே உயரத்துடனும், உயிர்ப்புடனும் இருக்கின்றமைக்கான காரணம் அவைகளின் அடித்தளம் அவைகள் வேர்விட்டுத் தளைக்கத் தொடங்கிய தேயிலைத் தேசத்து மண்ணும் அந்த மண்ணின் உண்மையான மக்களும் அவைகளை எழுதிக் காட்ட தொடங்கிய அந்த மனித மனதின் நோவும், மனிதநேயமும் ஆகியவைகளே.
'என்னே மனிதர் இவர் இறந்தார்க்கு இங்கோர் கல்லறை இல்லை! நினைவு நாள் பகருவோர் இல்லை! புதைகுழி மேட்டின் மேல் ஒரு பூவைப் பறித்துப் போடுவார் இல்லை.
ஆனாலும் ஆழப் புதைத்த அப்பனின் சிதைமேல் ஏழைமகனும் ஏறிநின்று எவரெவர் வாழவோ தன்னுழைப்பையும் உயிரையும் தருவான்." என்றெல்லாம் ஏங்கும் மனங்கெர்ண்வராக இருந்தார் சி.வி. அந்த மனதின் நோவை இந்த மலையகம் எப்படி மறக்கும்.
UntouchableS எழுதிய உலகப் பிரசித்தி பெற்ற இந்திய ழுேத்தாளர் முல்க்கராஜ் ஆனந்திடம் காந்திஜி கேட்டாராம் "ஏன் ஆங்கிலத்தில் எழுதினாய்! உன் தாய் மொழியிலேயே எழுதியிருக்கலாமே" என்று.
நவீன சிங்கள இலக்கியத்தின் பிதாமகர் எனப் போற்றப்படும் அமரர் மார்டின் விக்ரமசிங்க இந்தப் படைப்புக்கள் அந்த ஏழை மக்களின் மொழியிலேயே எழுதப்பட்டிருந்தால்.? என்னும் ஏக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அந்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் மு.சிவலிங்கத்தின் இந்தத் தமிழாக்கத்தின் மூலம் நிவர்த்தி செய்யப் பட்டிருக்கிறது, நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்தத் தேயிலைத் தேசத்தின் மண்ணையும் அதன் மனிதர்களையும் உளமார நேசிக்கும் மனம் கொண்டவர் இந்த மு.சி.
ஒரு விதத்தில் இந்தத் தேயிலைத் தேசத்தின் மக்களும் தீண்டத் தகாதவர்களாகவே வைக்கப் பட்டிருந்தவர்கள் தான். தலித்துக்களின் உழைப்பால் உருவான தேசம் தான் இந்தத் தேயிலைத் தேசம்.
காடழிக்கவும், மலைகளைக் குடைந்து பாதைகளைப் போடவும், கோப்பி,
xi
Page 8
தேயிலை, ரப்பர் தோட்டங்கள் திறக்கவும் என்று வெள்ளைக் காரர்களால் கொண்டுவரப்பட்ட இம் மனிதக் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் தீண்டப் படாதவர்களாகக் கணிக்கப் பட்டவர்களே, என்பது ஒருபுறமிருக்க: கூலிகள் என்றும், தமிழர்கள் என்றும், அன்னியர்கள் என்றும், படிப்பறிவில்லாதவர்களென்றும், பொருளாதார வளர்ச்சிகளற்றவர்களென்றும், குடியுரிமை அற்றவர்களென்றும் நாடற்றவர்களென்றும் இந்த நாட்டின் பல்வேறு ஆதிக்க சக்திகளால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தவர்களே இந்த மலையக மக்கள்.
நூறு வருடங்களுக்கு மேலாக அடர்ந்து வளர்ந்திருக்கும் இந்தச் செடிகளின் அடியில் இவர்கள் கடனாளியாகவே வைக்கப் பட்டிருந்தனர். அட்டைகள் ரத்தம் குடிப்பது இயற்கை. ஆனால் இவர்களையோ - பெரிதான வெள்ளை அட்டைகள், கங்காணி அட்டைகள், வட்டிக்காசு அட்டைகள், அரசியல் அட்டைகள், கடைக்கார அட்டைகள், பாஸ்போட், விசா அட்டைகள், பிரஜா உரிமை அட்டைகள் என்று இத்தனை அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சினால், அவன் கடனாளியாகாமல் என்ன செய்வான் என்று கேட்கிறார் சி.வி. இப் படைப்புக்களில்.
இலங்கையைத் தங்களது தாய் நாடாக நேசிக்கும் சகல மக்களுக்கும் நெருங்கிய உறவினர்களாகவே இந்தத் தோட்டத்து மக்களும் இருக்கின்றனர் என்பதை வேலுப்பிள்ளையின் இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு வரும் உணரவே செய்வர், என்று எழுதுகிறார் மார்ட்டின் விக்ரமசிங்க அவர்கள். Thoes. Who read Velupillai's Born to labour will begin to feel that estate labourers are kith and kin. Of all Common
people who treat Ceylon as their mother Country - Martin Wickramasinghe
மார்ட்டின் விக்ரமசிங்க அவர்களின் இந்தக் கூற்றை எத்தனை பேர் உணர்ந்து கொண்டிருக்கின்றனர் - புரிந்துகொண்டிருக்கின்றனர்.
அந்தப் புரிதல் நடந்திருக்குமானால் அரசப் பேரினவாத அடக்கு முறைகளும் அதன் விளைவாகக் கிட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள், உடைமை அழிப்புக்கள், உயிர்ப்பலிகள், குடியுரிமைப் பறிப்பு, நாடு கடத்தல் நடவடிக்கைகள் என்று தொடரும் இந்த இன அழிப்புச் சங்காரங்கள் இடம் பெற்றிருக்க முடியுமா.
xii
ஆதிக்க மனங்கொணிட அரசுகளால் பலமற்ற சிறு தேசங்கள் அனுபவிக்கும் அடக்கு முறைகள், கொடுமைகள் ஆகிய அனைத்தையும் இந்தத் தேயிலைத் தேச மக்களும் அனுபவித்தே வந்துள்ளார்கள் - அனுபவித்தே வருகின்றார்கள்.
இவர்களைப் பரம்பரை எதிரிகளாகவே கருதி இவர்களது நலம் நாடாப் பிரிவினர்கள் ஒரு புறமும் இவர்களது நலம் நாடுவோராகவே தங்களைக் காட்டிக் கொண்டு, இவர்களது பலத்தால் தங்களை அசைக்க முடியாத அளவுக்கு ஸ்தாபித்துக் கொண்டுள்ள பிரிவினர் மறு புறமுமாக இவர்களை அடித்தடித்தே அடிமைகளாக்கி விட்டனர். தனிமைப் படுத்தி விட்டனர்.
இந்தத் தனிமைப் படுத்தலில் இருந்தும், அடிமைத் தளைகளில் இருந்தும் இவர்கள் விடுபட வேண்டுமாயின் இவர்களது வஞ்சிக்கப்பட்ட நிலைமைகளும், வாழ்க்கைப் பிரச்சினைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்.
அந்த வெளிக் கொண்டுவரப் படுதலின் முதல் முயற்சியினை முன்னோடி முயற்சியினை செய்ததன் மூலமே சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பெருமைக்குரியவர் ஆகின்றார்.
கலைகள் யாவற்றிலும் அவை உருவாகிய காலத்து வரலாறு முத்திரையாகப் பொறிக்கப் பட்டிருக்கும். காலத்துக்குக் கட்டுப் பட்டும், காலத்தைக் கடந்தும் இயங்கும் பண்புகள் கொண்டவையே இலக்கியங்களாகக் கொள்ளப் படுகின்றன. இலக்கியம் சமுதாயத்தின் ஒரு பிரிக்கமுடியாத அம்சம். அது சமுதாயத்தின் ஆழமான விஷயங்களைத் தேடி இணைத்து ஒன்று படுத்தி உருவமும் கொடுக்கிறது. இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்குமுள்ள இப்பிணைப்பினை நன்கு உணர்ந்து உள் வாங்கிக் கொண்டதன் மூலமே ஒரு இலக்கியவாதியாகக் கிளம்பிய சி.வி. ஒரு சமுதாய சீர்திருத்தக்காரராகவும் பரிணமித்துக் கொண்டுள்ளார்.
பள்ளி ஆசிரியர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், இலங்கையின் முதல் பாராளுமன்றத்தில் தலவாக்கலைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான அரசியல் வாதி, பத்திரிகை ஆசிரியர் என்று எத்தனை பரிமாணங்கள்.
மலையக எழுத்துக்களும் இலக்கியங்களும் வேதனை மிகுந்த இம்மக்களின் வரலாற்றை நூறாண்டுகால சோகம் நிறைந்த வாழ்வினை உண்மையுடனும் வரலாற்று ரீதியாகவும் பதிவு செய்யும் பண்பினையே
xiii
Page 9
கொண்டுள்ளன. ஆனாலும் ஒரு நூறு வருடங்களின் பின்னான 1930களில் சி.வி.காட்டுகின்ற மலையகத்தின் நிலைமைகளிலும் அதற்குப் பிந்திய எழுபது வருடங்களின் பின்னான 2000-மாம் ஆண்டுகளில் இருக்கின்ற மலையகத்தின் நிலமைகளிலும் உள்ள மாற்றங்கள், முன்னேற்றங்களை சற்றே கவனத்தில் கொண்டோமானால். தேயிலைத் தேசத்தின் பிரச்சினைகள் போதுமான அளவுக்கு வெளிக் கொண்டுவரப் படவில்லையோ என்றும் தோன்றுகிறது எழுதுவதாலும், பதிவு செய்து வெளிக் கொணர்வதாலும் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விடுமா என்றால் ஆம் என்பதைத் திடமாகவே
நம்பிகிறவன் நான்.
ஆனால் இன்றெழுதி நாளை அல்லது நாளை மறுநாள் தீர்த்துக் கொள்ளப் படுவதல்ல ஒரு சமூகத்தின் பிரச்சினைகள். ஆனாலும் நூறு வருடத் தூக்கத்தின் பின் ஏற்பட்ட விழிப்பு சற்றே எழுந்து ஒரு சோம்பல் முறித்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டதோ என்கின்ற பயம் கலந்த சந்தேகம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு நூற்றி எழுபது வருடங்கள் என்பது சாமான்யமான காரியமா!
இலங்கையில் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. தமிழர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றனர், எதிர்க்கட்சியில் இருக்கின்றனர், அரச உயர் பதவிகளில் இருக்கின்றனர் அவர்களை நாங்கள் எப்படி வைத்திருக்கின்றோம் என்றெல்லாம் கூறித்திரியும் செவிட்டுக் காதுகள் மலையகத்து மக்கள் சுவர்க்க வாழ்வு வாழ்கின்றனர். அவர்களுடைய பிரதி நிதிகளைக் கேட்டுப் பாருங்கள் என்றும் தொடருவார்கள்.
அந்தச் செவிட்டுக் காதுகளில் கூட ஈழத்தவர்கள் இடைவிடாது ஊதிய சங்கொலிகள் ஏறியிருக்கின்றனவே.
ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி முழு உலகுமே அறிந்து கொண்டதனால் தான் அது தீர்த்துவைக்கப் படவேண்டும் என்னும் அழுத்தங்கள் உருவாகின.
இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி அறிந்திருப்போரில் எத்தனை வீதமானோர் மலையக மக்களின் பிரச்சினை பற்றி அறிந்துள்ளனர் என்ற ஒன்றைப் பற்றி மட்டும் நாம் சற்றே சிந்தித்தால் போதும்.
ஒப்பீட்டளவிலான அந்தச் சிந்தனை எழுவதற்கான ஒரு உணர்வை இந்தத் தேயிலைத் தேசம் நூல் ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியமானது.
XIV
அன்று சி.வி. மிகுந்த துயரத்துடன் காட்டிய அந்த மலையக மக்களும் அவர் தம் வாழ்வும் இன்று எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ள அவைகளைத் தமிழாக்கித் தந்துள்ளார் மு.சிவலிங்கம்.
1956 ன் பின் ஆங்கிலம் வேண்டாம் என்று அரசே துாக்கி எறிந்த பின், அரசகரும மொழி, கல்வி மொழி என்பவை போன்ற அந்தஸ்துகளும் பறிக்கப்பட்டதன் பின், கல்வி மூலம் ஆங்கில அறிவு படைத்தோர் எண்ணிக்கையில் குறைந்து, குறைந்து, பூஜ்யம் என்றாகிவிட்ட நிலையில் சி.வியின் ஆங்கில நூலை தமிழில் தர முன்வந்த துரைவியின் இலக்கியப்பணி போற்றுதலுக்குரியது.
இதைத் தமிழ்ப் படுத்தியுள்ள மு.சிவலிங்கம் அவர்கள் வேதனை நிறைந்த இம் மக்களின் வாழ்வை ஒரு எள்ளலுடனும், எரிச்சலுடனும், கலைப்பாங்குடனும் வெற்றிகரமாக எழுதிக்காட்டுகிறவர். மலையகத்தின்
சிறுகதையாளர்களில் முக்கியமானவர்.
இவருடைய முதல் சிறுகதையான "பேப்பர் பிரஜை' 1963ல் வீரகேசரியில் சுமைதாங்கி என்னும் பெயரில் வெளிவந்தது.
ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் படித்துப் பாஸாகிச் சப்பாத்து கால்ச்சட்டை போட்டு கொழும்புத்துறைமுகத்தில் வேலைக்காகப் போகிறான்.
'இது அரசாங்க உத்தியோகம். இந்த நாட்டுப் பிரஜைக்குத்தான் கொடுக்க முடியும். உங்களை இந்த நாட்டுப் பிரஜை என்று நிரூபிக்கப் போதிய சான்றுகள் இல்லை." என்று அனுப்பிவிடுகிறார்கள்.
நான் மாத்திரம் ஏன் ஏனைய பிரஜைகள் போல் இல்லை. எனக்கு மாத்திரம் ஏன் பேப்பரைக் கொடுத்துப் பிரஜையாக்கினார்கள். என்றெல்லாம் மனம் குழம்புகிறான் அவன்.
ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த நவீன சட்டம் என்னும் சிவலிங்கத்தின் ஆத்திரம் ஆழமானது.
காணிப்பகிர்வு, தோட்டச் சுவீகரிப்பு, தோட்டங்களைத் தேசிய மயப்படுத்தல் என்று எத்தனையோ அரச அட்டூழியங்கள் இந்த மக்கள் மேல் திணிக்கப்படுகின்றன. அவற்றை எதிர்த்து நிற்கும் தோட்டத்து மக்களின் போராட்டங்கள் அரசின் ஆயுத பலத்தால் தோற்கடிக்கப்படுவதைக் காட்டும்
இனி எங்கே
Page 10
ஸ்ட்றைக் அடிக்கணும் அப்படி இப்படி என்று சவப் பெட்டிக்குக் காசு கேட்டுப் போராடி, கிடைத்த காசில் நன்றாகக் குடித்து விட்டு ஆஸ்பத்திரியில் இருந்து பிழையான பிணத்தைத் தூக்கிக் கொண்டுவரும் தோட்டத் தலைவரின் அசட்டுத்தனம்.
மலையகத்தைச் சாராயத்தால் மயக்கி வைத்துக் கொள்ள நினைக்கும் சூழ்ச்சி அரசியலைக் காட்டும் 'சாராய புரம்" மலையகக் கல்விக்குள் அடாவடித்தனம் புரியும் அரசியல், தொழிற்சங்க ஆக்கிரமிப்புக்களைக் காட்டும் "ஒரு விதை நெல்..' என்று மலையக வாழ்வின் பல்வேறு முகங்களைத் தனது படைப்பாற்றல் மூலம் காலத்தால் அழியாப் பாத்திரங்களாக்கிக் காட்டுகிறவர் இவர்.
உழைத்துக் கொடுக்கும் ஒரு இனமாகவே சகல துறைகளிலும் பின் தள்ளப் பட்டு விட்ட இந்தத் தேயிலைத் தேசத்து மக்களின் விழிப்பிற்காகவே தனது எழுத்தைப் பயன்படுத்தும் இவர், தொழிற்சங்கம், தொழிற் சங்கப் பத்திரிகைகளின் ஆசிரியர், அரசியல் பிரவேசம், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்று படிப்படியாக வளர்கின்றவர்.
நான் முதலில் ஒரு இலக்கியவாதி. பிறகு தான் மற்றவைகள் எல்லாம் என்று கூறும் இவர் சி.வியின் எழுத்துக்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த ஈடுபாடு தான் இந்தத் தமிழாக்க முயற்சி.
தேயிலைத் தேசம் என்னும் இந்த நூலின் வரவு ஈழத்து இலக்கியச் செழுமையினை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு வரவாகவே அமையும் என்பது திணிணம். மெதுவாகவும் அமைதியாகவும் இலக்கியப் பணியாற்றிவரும் துரைவிக்கும் அதன் இன்றைய ஆளுனர் திரு. ராஜ் பிரசாத் அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் தெளிவத்தை ஜோசப். 11. Thimbirigasyaya CrOSS Road. Hendala, Wattala,
21, 12, 2002
ஆசிரியர் உரை
இலங்க்ையில் புதிய இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலத்திலேயே மலையக இலக்கியமும் அரும்பி மணம் வீசியது.
1930 களில் தென்னாட்டுத் தமிழர்கள் இங்கே வாழ்வைத் தேடி வதை பட்டு உழன்று கொண்டிருந்த காலப் பகுதி. இந்தச் சூழ்நிலையிலும் வேலுப்பிள்ளை என்ற ஓர் இளைஞன் ஆங்கிலம் கற்று, அம் மொழியில் பாண்டித்தியம் பெற்று, கவிதைகள் - கவிதை நாடகங்கள் எழுதி உயர்ந்திருந்தார் என்றால் அது எத்துணை சாதனை நிறைந்த விடயம்?
இந்த நாட்டுக்கு ஒப்பந்தக் கூலிகளாய்க் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள் அடைந்த இன்னல்களை - துயரங்கள், கொடுமைகள் நிறைந்த அவலச் சரித்திரத்தை அறிந்திருக்கக் குறிப்புகள் எழுத்துருவில் இருக்கவில்லை.
அந்தப் பாமர மக்களின் வாய் மொழிப் பாடல்கள் மூலமே அவர்கள் வரலாற்றைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் பட்ட துயரங்களைப் பாடி நினைத்தார்கள். அந்தப் பாடல்களின் சேகரிப்புக்களும். எழுத்து வெளியீடுகளுமே மலையக இலக்கியத்தின் முதல் நுழைவாசலாக அமைந்திருந்தது.
சி.வி. அவர்கள். இந்த மக்களின் வாய்மொழி இலக்கியங்களை முதன் முதல் வெளிக் கொணர்ந்தார். ஆங்கிலப் புலமையின் மூலம் இந்த மக்களின் வாழ்க்கையைப் பிரச்சார வடிவில் அந்நிய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் எழுதினார்.
சி.வி யின் இலக்கிய எண்ணங்களில் இந்த மக்களின் சடங்கு சம்பிரதாய வாழ்க்கையை, பண்பாட்டு, கலாசார பாரம்பரியங்களை அழகு மிளிரத் தன் கதை மாந்தர்கள் மூலமாகச் சித்திரித்துக் காட்டியுள்ளார்.
அன்று ஒரு தப்பெண்ணம் இருந்தது. தோட்டத்து மக்கள் ஒரு சமூகம் அல்ல. அவர்கள் வாழ்வியல் சிறப்புக்கள் அற்ற ஒரு கூலிப்
xvii
Page 11
பட்டாளம் என்று இழிவுபடுத்திய ஒரு காலம் அது. சி.வி அந்தக் களங்கத்தைத் தனது ஆரம்ப சிருஷ்டிகளிலிருந்தே துடைத்து
வநதுளளாா.
s 6p3535 D556. Israb6f(Born to labour) 616 D (ogsst(glia) 28 ஆக்கங்கள் இருக்கின்றன. இந்த 28 ஆக்கங்களிலும் மலையகத் தமிழர்களின் கலாசார - பாரம்பரிய - பண்பாட்டு விழுமியங்களையும் அவர்களின் தொழில் சார்ந்த பெருந்தோட்ட வாழ்க் கைப் பிரச்சினைகளையும், அந்தச் சமூகத்தில் வாழுகின்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் விவரணமாகவும், நடைச் சித்திரங்களாகவும், எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்தப் படைப்புக்களின் தமிழாக்கத்தின் போது. क.6 ul6ी கவித்துவம் நிறைந்த ஆங்கில உரைநடையுடன் எனது அறிவை ஈடு கொடுக்க முடியாமல் திணறியதும் உண்டு!
நிச்சயமாக ஒன்று சொல்வேன்.சி.வி யின் சிருஷ்டிகளைத் தமிழாக்கம் செய்ய ஒருவர் முன்வருவாரேயானால், அவர் சி.வி யைப் போலவே அதே சமூகச் சூழலில் வாழ்ந்தவராகவே இருக்க வேண்டும். இன்றேல், அவரது மொழியாக்கம் திரிக்கப்பட்டுவிடும். ஒர் இலக்கியத்தினுடைய இனத்தோடும், சமூகத்தோடும் சம்பந்தப்படாதவர்கள் மொழி பெயர்ப்புகள் செய்ததன் காரணமாக எத்தனையோ உலக இலக்கியங்கள் சேதமாக்கப் பட்டிருக்கின்றன.
சி.வி வாழ்ந்த அதே சூழலில் நான் பிறந்து வாழ்ந்தவன் என்பதால், அவர் தன் எழுத்தில் என்ன சொல்ல நினைத்தார் என்பதை என்னால் கண்டு பிடிக்க முடிந்தது.
அவரது எண்ணக் கரு எந்தச் சந்தர்ப்பத்திலும் வழுவாமல், சிதையாமல், முரண்பட்டுவிடாமல், மிகைபடுத்திவிடாமல் மிக நிதானமாக மொழியாக்கம் செய்துள்ளேன். ஆனாலும். கதையோட்டத்துக்காக எனது சொந்த நடையும் வார்த்தைகளும் இடைச்செருகல் இல்லாமல் உட்சென்றிருக்கும். மொழியாக்கப்படைப்புகளில் இவை தவிர்க்க
முடியாதவை.
சி.வி யின் ஆங்கிலப் படைப்புக்களையும் தமிழாக்கத்துடன் ஒரே தொகுப்பில் வெளியிட வேண்டும் என்று எனக்கு ஒர் ஆசை இருந்தது. சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் சி.வி யின் Born to labour என்ற ஆங்கிலத் தொகுதியை இந்தத் தமிழாக்கம் வெளிவரும் சமகாலத்திலேயே மறு பிரசுரம் செய்வதற்கு முயற்சிகள் செய்து வருகின்றேன்.
xviii
சி.வியின் ஆக்கங்கள் யாவும் சுவாரஸ்யமான கலா ரசனை கொண்டவை. அழகு மிகுந்த கவித்துவம் நிறைந்தவை. நகைச்சுவை (Humorous) மிளிர எழுதும் நடை கொணி ட சி.வி ஒரு நகைச்சுவையாளராகவும், (Humorist) அதே வேளை நையாண்டி (Satirist) செய்பவராகவும் அடையாளம் காணப்படுகிறார்.
சுபாவத்தில் மென்மையும் சாந்தமும் நிறைந்த சி.வி காந்தீயம், சாத்வீகம் என்ற கோட்பாடுகளுக்குள் இயங்கி வந்த இலங்கை இந்தியக் காங்கிரஸ் ஸ்தாபனத்தில் இணைந்து செயல்பட்டவர்.
அந்தச் சாத்வீக. காந்திய தாக்கங்கள் அவரது எழுத்திலும் படிந்தன.
ஆரம்பத்தில் இந்த மக்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை அவலங்களை ஆழ்ந்த சோகத்தோடே எழுதினார். அவற்றில் மனித நேயம் பரிணமித்தது. பிற்காலத்தில் அவரது ஆழ்ந்த சோகத்தில் தோய்ந்த எழுத்துக்கள். ஆத்திரம் கலந்த சிருஷ்டிகளாக உருமாறின. அவரது எழுத்துக்களில் புரட்சி எண்ணங்களோ, போர்க் குணங்களோ தென்படவில்லைதான். ፍቀ
ஆனால் பெருந்தோட்ட நிர்வாகத்தின் ஆதிக் கத்தில் ஒடுக்கப்பட்டிருந்த இந்த மக்கள் சுயமாக விழிப்படைந்து தங்களது சுதந்திர வாழ்க்கையைத் தேடும் அவர்களது விழிப்புணர்வுகளைப் பல கதைகளில் வலியுறுத்திக் காட்டியுள்ளார். அவை ஒரு புதிய ஆயுதம். காத்தான் முதல் பத்மநாதன் வரை. மனம் இன்னும் ஒயவில்லை. நல்லடக்கம். போன்ற கதைகளாகும்.
மலையக சமுதாய விழிப்பையும், எழுச்சியையும் ஏறிட்டுப் பார்த்தால் படைப் பிலக்கியத் தலைமைகள் தான் அவைகளுக்குப் பங்காற்றியிருக்கின்றன என்பது புலப்படுகின்றது.
இந்தச் சமூகத்தின், அரசியல் தலைமைகளை விட இலக்கியத் தலைமைகள் தான் இவர்களின் சிந்தனை மாற்றங்களில் புதிய திருப்பங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளன.
அறுபதுக ளில் ஓர் ஆதி திரப் பரம்பரையினர் சமூக அநீதிகளுக்கெதிராக வீறு கொண்டு எழுந்தனர். அவர்கள் அத்தனை பேரும் கலை இலக்கியவாதிகளாகவே காணப்பட்டனர்.
அந்தப் பெருமைகளுக்குரியவர்களோடு இணைந்து வாழ்ந்தவன் என்ற பெருமையோடு இந்தச் சிறு கைங்கர்யத்தைச் செய்துள்ளேன் என்று இங்கு நான் பெருமையடைகின்றேன்!.
XIX
Page 12
சி.வி யின் கதைகளில் பிரதான பாத்திரம் வகிக்கும் பழனி மாமனைப் போன்றவர் தான் நமது தெளிவத்தை அவர்கள்.!
தனது சகாக்களின் நலனிலும், வளர்ச்சியிலும் மிகவும் அக்கறை கொண்டவர். அவர்களின் காரியங்களில் மிக உரிமையோடு தலையிட்டு வழி நடத்துபவர்.
சென்ற ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னால் அவசரமாக தொலைபேசியில் பேசினார். இவ்வாண்டு துரைவி வெளியீட்டில் ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கத்தை வெளியிட திரு.ராஜ் பிரசாத் விரும்புகின்றார். அதற்காக உங்கள் படைப்புக்களை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். உடனே இருக்கிற கதைகளை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு வாருங்கள் என்றார்.
பின்னர் ஏனைய எட்டுக் கதைகளை அவசர அவசரமாக மொழி பெயர்த்து திரு.ராஜ் பிரசாத் அவர்களிடம் கையளித்தேன்.
மலையகத் தமிழர்களின் சமூகப்பெருமையை அவர்கள் படைக்கும் இலக்கியங்கள் மூலம் வெளிக்காட்டி வருகின்ற பணியைத் தொடரும் துரைவி வெளியீட்டகத்துக்கும். அதன் பொறுப்பாளர் திரு.ராஜ் பிரசாத் அவர்களுக்கும் என்னைப் போலவே சி.வி யின் ஆங்கிலப் படைப்புக்களை தமிழில் கொண்டு வர வேண்டும் என ஆதங்கப்பட்ட திரு.தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாக வேண்டும்.
எனது ‘அழகான கையெழுத்துக்களைப் புரிந்து கணினியில் பதித்த எனது புதல்வர்கள் பிரதாப் துஷயந்த், அர்ஜூன் பிரியானந்த், சங்கித் சுதானந்த் இவர்களுக்குத் துணை நின்ற எனது மனைவி தமயந்தி சியாமளாவுக்கும் எனது நன்றிகள் எந்த நாளும் எங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்!
இந்நூல் சிறப்புற அச்சமைப்பு அமைவதற்கு மூத்த எழுத்தாளர் திரு.டொமினிக் ஜீவா அவர்களின் பங்களிப்பு பெருமைக்குரியது.
அத்தோடு இந்நுாலை அழகுற அச்சிட்டு உதவிய அச்சக நண்பர்களுக்கும் ஒவியருக்கும். எனது மனம் நிறைந்த நன்றிகள்.
மு.சிவலிங்கம், 56,ரொசிட்டா வீடமைப்புத்திட்டம், கொட்டகலை.
சமர்ப்பணம்
offer to the men and women of the past, present and future of the Tea country
-C.VVelupillai
தேயிலைத் தேசத்து ஆண்களும் பெண்களுமாய். அன்று வாழ்ந்தவர்களுக்கும் இன்று வாழ்பவர்களுக்கும் நாளை வாழப் போகிறவர்களுக்கும்.
-ஸி.வி.வேலுப்பிள்ளை
அத்தோடு.
ஒப்பந்தக் கூலிகளாய் Indentured Labour அடிமைக் கூலிகளாய் Bonded Labour சிறைப்பட்ட கூலிகளாய் Captive Labour ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பு முறையிலான பெருந் தோட்டத் தொழிலில் பிடிபட்டு உழலும் தொழிலைத் துறந்து புதிய தொழிலைப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்ற தொழிலாளிக்கு இத் தமிழாக்கம் சமர்ப்பணம்.
-மு.சிவலிங்கம்.
Xoxi
Page 13
10.
1.
12.
13.
14.
15.
16.
17.
18.
பொருளடக்கம்
தாலாட்டு
தங்கத் தோடுகள்.
வசந்த காலங்கள்
வைகுந்த அம்மானை
ஒரு புதிய ஆயுதம்
The new weapon
உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்
மனம் இன்னும் ஒயவில்லை
நிலவும் அவளும் நாடுமில்லை. நாயுமில்லை
பார்வதி
காத்தான் முதல் பத்மநாதன் வரை
நயினப்பன் அக்கரைக்குப் போகிறான்
திருவாளர் தண்டபாணி
நல்லடக்கம்
பெரிய கங்காணி
லேடீஸ் டெய்லர் வீரப்பன் காதலே ஜெயம் r
தேயிலை தேசத்து ராஜா
மொழிபெயர்ப்பு ஆசிரியர் பற்றிய குறிப்பு.
A child is born................................. 01
Golden earrings...............................07 Happytidings. 13
When death comes.........................20
The new weapon............................ 29
In English......................................... 36 One of the many.............................. 40
The pensioner.................................. 46
Mother of the Creche.................... 55
No State. No dog.......................... 62
Time for healing.............................. 72
Habitation and a Name .................. 78
Nainappen goes to coast..............88
In the right Direction...................... 94 Manikkam Saves a situation....... 101
The Head Kangany ..................... 109 Veerappen the Ladies Tailor. 117 ' Manikkam fosters love . 24
Periya Dorai.................................... 33
SLLC CCCCCC CC CCCC CSCC CCC L CCCLCCLL LLLCLLLLCCCLL0LL0LL0LLSLLSLSLLSLSLSLL LLL L0L 0LSLLSSLSLLSL0LLLSL0LLLSL 148
XXi
g5(6) IL (6.........
() ) I)
த்திய மலைகளின் அடிவாரத்திலிருந்து ஊவா மேட்டு நிலங்கள் LD வரை தேயிலைத் தேசம் நீண்டு படர்ந்து தொடர்கின்றது.
அதன் பச்சை படர்ந்த பசுமையின் சித்திரங்கள்தான் பல இலட்சப் பெருந்தோட்ட மக்களின் வீடும் உலகமுமாகப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.
அவர்கள் லயன்களில் வசிக்கின்றார்கள். லயத்து வீடுகள் கிராம நகர வீடுகளை விட மிக மிக வேறுபட்டவைகளாகும்.
இலைகள் படர்ந்த பச்சைக்காடுகளில் கவ்வாத்தும் கொழுந்தும் என்ற போர்வையிலேயே தங்களை மூடிக்கொண்டு வெளி உலகத்தை "இழந்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
நகரங்களில் கிராமங்களில் வாழுகின்ற அண்டை அயலவர்கள் கூட இவர்கள் வீடுகளோடு நெருங்காமல் இருந்தார்கள்.
இந்த வரம்புக்குள் வாழப் பழகிக் கொண்டாலும் அவர்களது ஏழ்மை வாழ்க்கையில் இன்பமும் இனிமையும் மணம் வீசத் தொடங்கின. அவர்களது மனதின் எழுச்சிகளும் மகிழ்ச்சிகளும் சுகமும் துக்கமும் வெளிச் சமும் இருட்டும் அவர்களது சமூக, கலாசார சமய நடவடிக்கைகளோடு பின்னிக்கிடந்தன.
Ol
Page 14
அந்த ஏழைக் கூட்டங்களில் சமூகச் சம்பிரதாயப் பண்பாட்டு வழக்கங்கள் இந்து மதத்தை தழுவி இருந்தாலும் மட்டகளப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணக் கிராமங்களில் வாழும் இந்துக்களின் வழமைகளோடு மாறுபட்டவைகளாக இருந்தன. இருந்தாலும் இவர்களுக்குள்ளேயும் வேறுபாடுகள் இருந்தன. இந்தியாவில் இவர்கள் வாழ்ந்த கிராமங்களுக்கும் சாதிகளுக்கும் ஒப்பவே தோட்டங்களிலும் சம்பிரதாயங்கள் மாறுபட்டிருந்தன.
பிறந்தாலும். இறந்தாலும். காதுகுத்தினாலும். கலியாணம் செய்தாலும், வயசுக்கு வந்தாலும் வழிபாட்டு பூசைகள் நடந்தாலும் எல்லாவற்றுக்கும் அந்தந்தச் சடங்குகளைப் பாதுகாத்து வந்தார்கள்.
பத்துக்கு பன்னிரண்டு அடி அகலமான ஓர் அறையில். அம்மா. அப்பா. இரண்டு சின்னஞ் சிறுசுகளோடு வயசுக்கு வந்த மகள் என்று முழு குடும்பமுமே முடங்கிக் கிடந்தன. அந்த பெறுமதியான பரப்புக்குள்ளேதான் எல்லாமே நடக்கும். சாவும். சடங்கும். கொண்டாட்டமும். குமுறலும். அந்தப் பத்தடிக் குச்சிக்குள்ளேதான் பரவிக்கிடந்தன. ஆமாம். ! அந்த பத்தடிக் குச்சிக்குள்ளே முடங்கிக்கிடந்து கொண்டுதான் ‘எட்டடிக் குச்சிக்குள்ளே கந்தையா எப்படி நீ இருந்தே?.’ என்று இறைவனை இவர்கள கேட்டார்கள். இவர்கள் கடவுள் மேல். கவலைக் கொண்ட மக்கள்!!.
米米米
'ஏய் முத்தம்மா! என்னாடி பாஞ்சாலி முழுகாம இருக்கான்னு கேள்விப்பட்டேன் நெசமா?. என்று மீனா கேட்டாள். கர்பம் தரிப்பதைக் குழந்தை பிறப்பதை ஒரு புனித நிகழ்வாக அவர்கள் பூஜித்தார்கள். தாயின் கருவறையில் கர்பம் கட்டிவிட்டால்போதும், ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் செய்தி பரவிவிடும்
பீலிக்கரையில், பைப்படியில் பெண்கள் கூடும் இடமெல்லாம் வாயில் அவல் கிடைத்த வம்பு வளரும்.
‘அர்ச்சுனன் சம்சாரம் பாஞ்சாலி முழுகாமல் இருக்கிறாள். பாவம். இதுதான் இவளுக்கு தலைச்சன். நல்லபடியாகட்டும் என்று ஊர் வாழ்த்தியது. பாஞ்சாலியின் புருஷன் அர்ச்சுனன் தாடி வளர்க்கத் தொடங்கினான்.
02
இது ஒரு நேர்த்திக்கடன். தோட்டத்து இந்துக்கள் மனைவி கர்ப்பவதியாகிவிட்டால் கணவன் தாடி வளர்ப்பதும் பயபக்தியாக விரதம் இருப்பதிலும் கவனமாக இருப்பார்கள். கதிர்காமம் போன்று கோயில் குளங்களுக்குப் போயும் இந்த சம்பிரதாயத்தை கடைபிடிப்பார்கள்.
ஆண்கள் அர்ச்சுனனுக்கு வாழ்த்து கூறினார்கள். நையாண்டி செய்தார்கள்.
ஒய். மச்சி! நல்ல சேதி கேள்விபட்டோம்! தங்கச்சி எப்பயிலயிருந்து முழுகாம இருக்கு?
“ஐப்பசியிலிருந்து. இப்ப ரெண்டு மாசம்!”
பாஞ்சாலி வயதான பெண்களிடமிருந்து நிறைய புத்திமதி கேட்டுக்கொண்டாள்.
‘வெள்ளரிக்கா, பாவக்கா வெட்டக்கூடாது. துணி தைக்கக்கூடாது!’
இப்படியெல்லாம் செய்தால் குழந்தைக்கு உதடு 'முயல் உதடுகளாக கிழிந்து பிறக்கலாம் காது முறுக்கியவாறு ஒட்டிப் பிறக்கலாம் என்ற ஐதீகம். அதில் உண்மையும் இருக்க்லாம்.
மூன்றாவது மாதத் தரிலிருந்து பாஞ் சாலி தோட்டத்து மருத்துவச்சியோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
இருந்தாலும். பாஞ்சாலி மாரியம்மன் கோவிலுக்குப் போய் வருவதை விரும்பினாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அந்தியானதும் குளித்துவிட்டு ஈர உடையோடு விளக்குப் பொருத்திவிட்டு வருவாள்.
பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் தங்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தின் சட்டம் இருந்தும் பாஞ்சாலியின் சொந்தக்காரர்கள் வீட்டில்தான் பிரசவம் நடக்க வேண்டும் என தீர்மானித்தனர்.
>*<>*<>*く
பாஞ்சாலிக்கு வலி வந்துவிட்டது. பிரசவ அறிகுறி தென்பட்டது. அர்ச்சுனன் ஆஸ்பத்திரியிலிருந்து மருதுவச்சியை வீட்டுக்கு அழைத்து வந்தான். வீடு நிறைய பிள்ளை பெற்ற தாய்மார்கள். சொந்தக்காரர்கள். குழுமியிருந்தார்கள். சின்னஞ்சிறுசுகளும் மொய்த்துக் கொண்டிருந்தனர்.
03 -
Page 15
மருத்துவச்சி எல்லோரையும் அப்புறப்படுத்தி நிலைமையைத் தன்னோடு கட்டுப்படுத்திக் கொண்டாள்.
& 4 w & a ஒர் இயற்கைப் போராட்டம்.
அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அடி என்ற பரப்பில் ஒர் ஐந்துக்குப் பன்னிரண்டு அடி என்ற மறைவிடத்தில் ஒரு புதிய உயிர் இந்த பூமியில் பிறந்தது.
டிஸ்பென்சரும் மருத்துவச்சியும் என்னதான் மருந்து கிருந்து என்று இங்கிலிஸ் முறையில் கொடுத்தாலும் அந்த விசேஷ குடி வகை பழைய சாராயமும். கைமருந்து என்னும் (காயம்) காய உருண்டைகளையும் கொடுத்து பிள்ளைக்காரியை ‘தேத்துவார்கள். பிரசவத்திற்கு பிறகு ‘பச்சை உடம்புக்காரிக்கு அவைதான் அருமருந்து
பாஞ்சாலியும் சிசுவும் ஒர் மூலையில் கம்பளியால் சுற்றிய நிலையில் அலங்கோலமாகக் கிடந்தன. அந்தக் குளிரை கட்டுப்படுத்துவற்கு ஒரு சட்டியில் நெருப்பு கணத்துக் கொண்டிருந்தது. இடைக்கிடையே சாம்பிராணியைத் தூவி நறுமணம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பழைய கத்தி. கிழிந்த செருப்பு. ஒரு இரும்புத்துண்டும் பாஞ்சாலியின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்தன.!
பிரசவமும் ஒரு வகைத் தீட்டு. பேய் பிசாசு அங்கே ‘அண்ட கூடாதென்பதற்காக அவைகள் அங்கே முக்கிய பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன.
குழந்தை பிறந்தவுடனே தகப்பன் வழி மாமன் முறையான ஒருவர் நுழைவாசலில் விளை மாங்கொத்துக் கட்ட வேண்டும். நடேசன் ஒரு பெரிய மாங்கொத்தை வாசல் கூரையில் செருகினான்.
மாங்குழை வாசலில் செருகுவது இது கொழந்த பொறந்த ஊடு என்ற தகவலை காட்டுவதற்காகவே வாசல் கூரையில் மாங்குழை செருகுவார்கள்.
மாவிலை மங்களகரமான நிகழ்ச்சிகளின் சின்னமாகும்.
அர்ச்சுனன் அறிவுபூர்வமான விசயங்கள் தெரிந்தவன்.
சுகப் பிரசவ நிகழ்ச்சியை கொண்டாட விரும்பினான். நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்திருந்தான். குடும்பங்களில் நிகழும் நல்லது கெட்டது என்ற காரியங்களுக்குப் பொது மனிதராகச் சம்பந்தப்படுபவர் 'பழனி மாமன் என்பவரே ஆகும். இவர் ஒரு நடுத்தர
04
மனிதர். மிகமிக நெருக்கமாகவும் சொந்தமாகவும் எல்லாக் காரியங்களிலும் ஈடுபடுகின்றவர். அந்தச் சமூகத்தின் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயம் போன்ற சகல நிகழ்ச்சிகளுக்கும் அவரே அதிபதி.
பழனி மாமன் வழி காட்டலில். அர்ச்சுனன் வந்திருந்தவர்களுக்குக் கற்கண்டும் சர்க்கரையும் வழங்கினான்
இந்த வழமையை இனிப்பு வழங்கும் வைபவமாக கருதினார்கள்.
அக்கம் பக்கத்தவர்கள் கடந்த ஏழு நாட்கள் வரை அந்த வீட்டுப் பக்கம் நடமாடவில்லை. 'கொழந்த பொறந்த தீட்டு' என்று அவர்கள் ஒதுங்கியிருந்தார்கள்.
சொந்தக்காரர்கள் மட்டுமே அந்த வீட்டில் புழங்கினார்கள். மற்றவர்கள் அந்த வீட்டில் தண்ணிர் குடிக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள்.
ஏழாம் நாள். மாவிலை மறைப்பு கட்டியிருந்தார்கள். பாஞ்சாலி குளியாட்டப் பட்டாள். பிரசவத்திற்குப் பிறகு முதற் குளியல் ! ஆடாதோடை. அஞ்சலை நொச்சி. பவத்தக்குலை என்று மூலிகை இலைகளை அவித்து நீரில் ஸ்நானம் செய்தாள். *
ஏழாம் நாள் முடிய மாவிலை மறைப்புகள் அகற்றப்பட்டன.
米米米
குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. குடும்பத்தில் உடனடியாகப் பெயர் வைக்க மாட்டார்கள். ஆனால் டிஸ்பென்சர் பிறப்பைப் பதிவு செய்வதற்காக அவர் விரும்பிய எந்தப் பெயரையும் வைத்துவிடுவார். தகப்பனார் ஏழாவது நாளில்தான் பெயர் கொடுப்பார்.
டிஸ்பென்சர் வைத்த பெயரும் தகப்பன் வைத்த பெயரும் இரண்டாகச் சேர்ந்து சட்ட நிர்வாக வேலைகளை சீர்குலைத்தன. இரு பெயர் கொண்டான் இலங்கை பிரஜா உரிமைச் சட்டத்தில் பெரும் பிரச்சனைக்குள்ளாகின்றான்.
>*<>*く>*<
முப்பது நாள் முடிந்தது.
முப்பது கும்பிட ஏற்பாடு நடந்தது.
05
Page 16
வீட்டிலுள்ள சட்டி பானைகள் தலையணிை, பாய்கள் சாக்குகள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டன. தீட்டுச் சாமான்கள் என அவைகள் கழிக்கப்பட்டுப் புதிய சாமான்களை அர்ச்சுனன் வாங்கி வந்தான். வீட்டுக்கு வெள்ளையடித்தனர். சாணத்தால் வீட்டை மெழுகினார்கள்.
உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடினார்கள். ஒரு கொண்டாட்டம் நடந்தது.
இந்த இனிய நிகழ்ச்சிக்குப் பிறகு பழனி மாமன் புறப்பட ஆயத்தமானார்.
எல்லோருடைய நன்மைக்காகவும் அவர் பேசத் தொடங்கினார்.
‘இன்னயிலயிருந்து அக்கம்பக்கத்துக்காரவங்க ஒங்க ஊட்டுல வந்து உப்பு கேப்பாங்க. அவங்கள வரவேற்க ரெடியா இருக்கனும் என்றார்.
>*<>*<>*<
பாஞ்சாலியின் - அண்ணண் நடேசன் அட்டல் மரத்தில் கயிற்றை செறுகி உறுதியான சேலையில் தொட்டில் கட்டிக் கொடுத்தான்.
யாருமே எதிர்ப்பார்க்காத வேளையில். அந்தச் சின்ன. வாண்டு குரல் கொடுத்தது.
குவா. (866).JTT....... குவ்ா. ! பாஞ்சாலி இதயம் படபடக்க. மிக பவ்வியமாக குழந்தையை தூக்கி. தொட்டிலில் இட்டாள். மெதுவாக ஆட்டினாள்.
வெட்கம் மேலிட நடுங்கும் குரலில் சுப முகூர்த்தத்தில் கட்டிய தொட்டில் பாடலை பாடினாள்.
ஆரி ரர ரர ரா ரா ரோ! ராரி ரர ரர ரா ரா ரோ! தொட்டிலை நானும் ஆட்டிய போது துானெல்லாம் ராகம் பாடுதையா. எங்க நல்லுதம்பி ஓங்க கண்ணு ரெண்டும் தூக்கக்கெரக்கத்திலேதொவலுதையா.
அவர்களின் வாழ்க்கை வறுமையில் கிடந்தாலும் அந்தத்தாலாட்டுக் கோடி இன்பத்தைக் கொண்டேயிருந்தது.
米米米 O
06
தங்கத் தோடுகள்.
O
(3 லிக்கும் கிண்டலுக்குமென்றே தோட்டங்களில் போ எடுத்துக் CB கொண்டவர்கள் மச்சான் மாமன் முறைக் காரர்கள் தான்!&
இதில் பழனி மாமன் தான் ஆகப் பிரசித்தி பெற்ற மனிதர்.
ஒரு நாள் அந்தி நேரம்.
பழனி மாமன் அர்ச்சுனன் வீட்டுக்குள் நுழைந்து அவரது பாணியிலேயே கதையைத் தொடங்கினார்.
‘ஏண்டா அர்ச்சுனா. ? என்னமோ எனக்கு விருந்து போட போறேன்னு கேள்வி பட்டேன். d. 60560)LDuUIT....... ? ஒன் ஊட்டுல சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி என்றார்.
பழனி மாமன் அர்த்தமில்லாமல் எதையும் கதைக்க மாட்டார் என்று அர்ச்சுனனுக்குத் தெரியும். அவர் கஷ்டவாதியாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்வதற்கு முன் நிற்பார்.
‘இந்த கலி காலத்துல நம்ம சனங்க. எவ்வளவோ நடத்த வேண்டிய காரியங்களயெல்லாம் மறந்து போறாங்க. சம்பிரதாய சமாச்சாரங்கள கூட அவங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு ஏம்பா. அர்ச்சுனா. ! ஒம் பொண்ணுக்கு காது குத்தினா என்னா இப்போ வயசு சரிதானே..? என்றார்.
07
Page 17
ஆமாங்க மாமு. 1 ஆமாங்க மாமு. புள்ளக்கி இப்போ வயசு ஆறு முடிஞ்சிரிச்சி. சம்பளம் போட்டதும் காரியத்த ஒடனே நடத்திவிடுவோம்' என்றான் அர்ச்சுனன்.
‘அப்படி செய்யக்கூடாது மொதலாவது பண்டாரத்த சந்திச்சி ஒரு நல்ல நாள பாத்திட்டு அப்புறம் தேதி வைய்யி. !’ என்றார்.
米米米
அந்த இரவு. அர்ச்சுனனும் பாஞ்சாலியும் அடுப்பங்கரையில் திட்டம் தீட்டினார்கள். குடும்பத்தில் இதுதான் முதல் காரியம். பாஞ்சாலி ஆடம்பரமாகக் காது குத்துக் கல்யாணம் செய்ய விரும்பினாள். அர்ச்சுனன் சிக்கனமாகச் சாதாரண நிகழ்ச்சியாக நடத்த விரும்பினான்.
இருவரும் முரண்படாமல் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். முழுக் காரியத்தையும் முடிப்பதற்கு முந்நூறு ரூபாய் பட்ஜெட்’ போட்டார்கள். பாதிக் காசை. கங்காணியிடம் கடன் கேட்கும் நிலையில் இருந்தார்கள். جمہ
நவம்பர் 16ம் திகதி நல்ல முகூர்த்தம் என்று பண்டாரம் திகதி குறித்துக் கொடுத்தார். அர்ச்சுனன் பழைய முறையிலும் காலத்திற் கேற்றபடியும் அழைப்பிதழ்களை ஏற்பாடு செய்தான்.
சொந்தக் காரர்களுக்கும் - தோட்டத்துக்குள்ளேயிருக்கும் நண்பர்களுக்கும் - தெரிந்தவர்களுக்கும் பழைய சம்பிரதாயப்படி 'வெத்தல பாக்கு வைப்பதற்கு தன் மச்சானை அனுப்பினான்.
தூரத்துத் தோட்டங்களுக்கும் வேறு இடங்களுக்கும் அச்சுக் கந்தோரில் ‘காட்’ அடித்து அனுப்பினான்.
காரியம் நடப்பதற்கு முன்பே வீட்டைச் சுத்தம் செய்வதற்கு முனைந்தான். எல்லா சுவர்களுக்கும் 'வெள்ள மண்ணு' 'தீத்தினார்கள். வீடு வெளிச்சமாகப் பளபளத்தது. சுவர்களில் சிவப்பு, மஞ்சள், மண் நிறத்தில் வகை வகையாக கோலங்கள் வரைந்தார்கள்.
லயத்து வாசலில்”மீனா புல்லிலும் பச்சைக் குழைகளிலும் பந்தல் கட்டி அலங்காரம் செய்தனர். பந்தலின் நான்கு மூலைகளிலும் குலை வாழை மரங்கள் நாட்டி பந்தலைச் சுற்றி மாவிலைத் தோரணங்கள் கட்டினார்கள்.
08
பந்தலின் நடுவில். சடங்கு செய்வதற்கு மண் திண்ணை போட்டு வைத்தார்கள்.
சாங்கியம் செய்யும் அந்த முதல் நாள் காலையில் வண்ணான் சேலை பல நிறங்களில் வந்தது. சேலைகளைக் கட்டி பந்தலை அலங்கரித்தனர். வருகின்ற விருந்தினர்கள் அமர்வதற்கு டோபி 'மாத்து விரித்தான்.
ஆசாரியும் பரியாரியும் வந்திருந்தார்கள். பந்தலின் ஒரு புறத்தில். மேளம் அடிப்பவர் உறுமிகாரர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், ஆர்மோனியம், தப்லா, பஜா கோஷ்டி யாவரும் ரெடியாக அமர்ந்திருந்தார்கள்.
திண்ணைக்குப் பின்புறத்தில் பளபளக்கும் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பழம், பாக்கு, வெற்றிலை நிறைந்த பித்தளைத்தட்டுக்கள். குவிந்திருந்தன. ஒரு கிண்ணத்தில் விளக்குக்கு அருகில். சந்தனம் குங்குமம் குழைத்து வைத்திருந்தார்கள்.
அர்ச்சுனன், அவனது மச்சான் நடேசன், நடேசனின் சகேரதரங்கள் யாவரும் வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றனர்.
ஜானகிக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மூன்று கொத்து அரிசியும். மரக்கறிகளும். புது துணிகளும் கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த பரிசில்கள் யாவும் "சீர் வரிசை என்று வர்ணிக்கப்பட்டது.
சீர்வரிசை கொண்டு வந்தவர்களின் பெயர், விலாசம், சீர் விபரங்கள் யாவற்றையும் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார்.
அவர்கள் வீடுகளில் இப்படியான நிகழ்வுகள் நடை பெறும்போது கைம்மாறாக அர்ச்சுனன் அவர்களுக்கு இரட்டிப்பாகச் செய்வான்.
>*<>*<>来
இப்போது. சடங்கு நடைபெறுவதற்கு முகூர்த்தம் நெறுங்கியது. ஆண்கள் கூட்டமாக குவிந்து அந்தச் சின்னப் பிள்ளையிடம் கேலி பேசினார்கள். பிள்ளையின் மச்சான் முறைப் பையன்கள். பல்லைக் காட்டிக் கிண்டல் பண்ணினார்கள்.
பழனி மாமன். நிகழ்ச்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொணி டுவந்தார். அவரவர் காரியங்களைச் செய்வதற்குக் கட்டளையிட்டார்.
Page 18
பழனி மாமனுக்கு பெண்கள் மத்தியில் அலாதிக் கெளரவம்
இருந்தது. அவர் வயதில் கிட்டத் தட்ட நூறு கலியாணங்களை முடித்து வைத்துள்ளார் என்று பெருமை பேசினார்கள்.
அவர் சொல்படிதான் நிகழ்ச்சி இப்போது ஆரம்பமாகவிருக்கின்றது.
‘மேளம் அடிப்பவர்களைப் பார்த்து மொழக்கு வாசிக்கச் சொன்னார்.
அடுத்து உறுமியும். தமுறும். ஒன்றாகச் சேர்ந்து காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தன.
அந்தச் சிறுமி. ஜானகியை அவளது தகப்பன் திண்ணையருகே அழைத்து வந்தான். அருகில் நின்ற பாஞ்சாலி 'மெல்ல. UT$gs என்று பவ்வியமாக மகளிடம் கூறித் தன் கலங்கிய கண்களைத் துடைத்தாள்.
‘என்னா புள்ள. ! சிணுங்குற. ? ஒம் புள்ள கல்கண்டா கரஞ்சி போரதுக்கு. ? இந்த நேரத்துல கண்ண தேக்காத.!’ என்று அதட்டிய பழனிமாமன். ஆண்களின் பக்கம் திரும்பி. 'ஏய் இங்க பாரு. தாய் மாமன் நடேசா..! என்னடா மாப்புள மாதிரி நாணி கோணிக்கிட்டு நிக்காதே. புள்ளய திண்ணயில ஒக்கார வைய்யி? விவுதி பூசி கெழக்கு பக்கம் திருப்பு.! அப்புரம் ஒன் "ஜோலிய கவனி ஏய் பண்டாரம். 1 ஒன் வேலைய ‘ரெடி' பண்ணு.
பண்டாரம் வேலையைக் கவனித்தார்.
வெற்றிலை, பாக்கு, பழம், சூடம், சாம்பிராணி, பத்தி யாவற்றையும் ஒழுங்காக வைத்தார்.
தேங்காய் உடைத்து விபூதி தட்டில் சூடத்தைக் கொளுத்தினார்.
மணியடித்துக் கற்பூரம் காட்டினார். இந்த நேரத்தில். பழனி நடேசனுக்குச் சைகை காட்டினார். ! அர்ச்சுனனும் மச்சானும் ஜானகி கைகளை தமாஷாக பிடித்தார்கள். ! ஒரு நொடிக்குள் நடேசன்
‘நறுக்' என்று காதைக் குத்தி நகையை மாட்டினான். மறு காதிற்கும் அப்படியே செய்தான்.
y
‘ஐயோ அம்மா." அந்த சின்னப் பொண்ணு வீறிட்டு கத்தினாள்.
'ஏய் சின்ன வாண்டு "ஐயோ’ன்னு சொல்லாதே. பழனி அதட்டினார். "ஏய் மேளம், நாதஸ்வரம். ! எங்க. 6 TU பாக்கிறீங்க. ? வாசிங்கடா. ! வாசி.
திடீரென்று இசை முழங்கியது.
ஆர்மோனியம். தப்லா. என்று பஜா கோஷ்டி கைவரிசையைக் காட்டியது.
சின்னவள் வேடிக்கைப் பார்த்து அழுகையை மறந்தாள்.
மச்சான்மார்கள் கைதட்டிச் சிரித்தார்கள்.
பஞ்சாலி ஆனந்தக் கண்ணிரோடு ஜானகிக் குட்டியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
‘அர்ச்சுனா சாப்பாட்ட ரெடி பண்ணு. !' பழனி அவசரப்பட்டார். இஸ்தோப்பு சுவரோரமாக பாயை விரித்துப் போட்டார்கள். ஆண்கள் கொஞ்சம். தொண்டையை நனைத்துக் கொள்வதற்கு உள்ளே போய் ஒரு 'பெக் போட்டு வந்தார்கள்.!
மீண்டும் பழனி மாமனின் உரத்தக் குரல் கேட்டது.
‘சம்பந்தி பங்காளி வுட்டு ஆம்பிளைங்கள். அதாவது மச்சான். tDTLD6ðÍ....... 3F85list lg....... எல்லாரும் வந்து ஒக்காரு. !” சாஸ்திரம் சம்பிரதாயம் பாத்துக்கிட்டு நிக்காத. இது ஒங்க வுடு. al
உறவு முறைகள்படி எல்லாரும் வரிசையாக வந்து அமர்ந்தார்கள். ஒருவன் இலை விரித்தான். மற்றொருவன் கறி வகைகள் வைக்கச் சோறு பரிமாறப்பட்டது.
விருந்து ஒரு மணித்தியாலம் வரை நடந்து முடிந்தது.
பண்டாரம், ஆசாரி, டோபி, பாபர் எல்லோரும் தங்களுடைய பணத்தையும் ஏனைய பொருட்களையும் பெற்றுக் கொண்டார்கள்.
>*<>*<>*<
சாப்பாட்டுக்குப் பிறகு ஆண்கள் பந்தலில் ஒன்று கூடினார்கள்.
அன்பளிப்பு என்னும் மொய் பிடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது. பழனி மாமன் மொய் மணக்குது. மொய் மணக்குது. ’ என்று நிகழ்ச்சிக்கு உரமூட்டினார். சம்பந்தியும் பங்காளியும் குறைந்தது 51 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை வழங்க வேண்டும்.
பழனி அந்த அறிவித்தலை எல்லோரும் விளங்கிக் கொள்ளும்படியாக ராகம் போட்டு சொன்னார்.
| 11
Page 19
சம்பிரதாய ஒழுங்கு முறைகளில் ஏதாவது குழறுபடிகள் நடந்துவிட்டால் பாதிக் கப்பட்ட உறவினர்கள் போர்க் குரல் எழுப்பிவிடுவார்க்ள்.
ஏதோ. எங்கோ தவறு நடந்துவிட்டது!
தம்பி உங்களையெல்லாம் கவனமாகத்தான் கவனிச்சேன். எப்படியோ ஒரு சின்னத் தவறு. இந்தச் சின்னப்பொண்ணு காரியத்துல நடந்துப்போச்சு. ! இத மனசுக்கு எடுத்துக்காதீங்க..! இது நீங்களும் நாங்களும் சேர்ந்து செஞ்ச காரியம். இது நம்ம காரியம். என்றார் பழனி. அவர் மீண்டும் தன் பிழையைத் திருத்தி ‘பங்காளி ராமையா மொய் 11 ரூவா. பங்காளி ராமையா மொய் 11 ரூவா. ’ என்றார்.
அன்பளிப்புகள் உறவினர்களின் முறைப்படி வரவேண்டும். அன்பளிப்பு வழங்கியவர்களின் விபரங்கள் வழமைப்போல் எழுதப்பட்டன.
பழனி மாமன் நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். வெற்றிலைத் தாம்பூலம் வலம் வந்து கொண்டிருந்தது.
காதுக் குத்துக் கலியாணத்துக்கு வந்த விருந்தினர்கள் கலைந்து போகும் போது நடுச் சாமம் முடிந்தது.
பழனிமாமன் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு பெருமையோடு வீட்டக்குத் திரும்பினார்.
米米米
வசந்த காலங்கள்
() ) I
1
왕gl னகி பெரிய மனுசியாகி ஐந்து வருஷங்கள் முடிந்துவிட்டன. - அவள் வாலிப வனப்பு நிறைந்த. குமரியாகக் காட்சி தந்தாள்.
இப்போதெல்லாம் அர்ச்சுனன் அவளிடம் நெருங்கிப் பேசுவதற்குக்
கொஞ்சம் கூச்சப்பட்டான். மிக அபூர்வமாகவே அவளிடம் பேசுவான். இந்த. ஒதுங்கிய இடைவெளி. அவர்களது பாசத்தையும் புரிந்துணர்வுகளையும் இறுக்கமாக்கின. அர்ச்சுனன் ஜானகியை "சின்னத் தாயாகவே நினைத்தான். பாஞ்சாலியும் அவளைத் தன் ‘தங்கச்சியாக நினைத்தாள். அவளை ‘மக”. என்று வாயார அழைப்பாள். −
“பொம்புளப் புள்ளகள வளக்கணுமுன்னா. உள்ளங்கைக்குள்ள
மடிச்சி வச்சிக் கிட்டுத்தான் வளக்கணும்' என்று “பெரிசுகள் சொல்லுவது வழக்கம்.
ஜானகி வயசுக்கு வந்ததிலிருந்து பாஞ்சாலி கணினிலே வெண்ணையை தடவிக்கிட்டுக் கவனித்தாள். ஜானகி வீட்டிலும் வெளியிலும். எப்படி நடமாடுகிறாள் என்பதை உன்னிப்பாகக் கவனித்து வந்தாள். -
l3上プ
Page 20
ஒரு நாள் மாலை நேரம்.
நடேசன் மச்சானும் தங்கச்சி அமிர்தமும் பழனி மாமாவோடு அர்ச்சுனன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
என்ன திடீர் விஜயம். ? அர்ச்சுனன் வாசலுக்கு அப்பால் போய் அவர்களை வரவேற்றான்.
יין
“பழனி மாமு!. மச்சான். தங்கச்சி.1 வாங்க வாங்க..! வாஞ்சையோடு வரவேற்றவன் பாஞ்சாலியைக் கூப்பிட்டான்.
‘பாஞ்சாலி. ! ஒங்கண்ணனும் அண்ணியும் பழனி மாமானும் வந்திருக்காங்க!” என்றான். பாஞ்சாலி எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து அமிர்தத்தை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். ஆண்கள் மூவரும் இஸ்தோப்பில் உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
பழனி இருமி. தொண்டையைக் கனைத்தார். அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்று மரியாதை தவள நடேசனும் அர்ச்சுனனும் எதிர்பார்த்தார்கள்.
2
‘அர்ச்சுனா. ஒம் மருமவன் அழகேசன் எளந்தாரியாகிட்டாள் அவன இனிமே. கண்ட மாதிரி ஊர் சுத்த உட முடியாது. மாமன் ராமு சொன்ன மாதிரி இனி அவன கட்டிப் போடணும் என்றார். h
uD& & T 6si ....... ! ஒங்க ஊட்டுக் குப் பொண்ணு கேக்க வந்திருக்கோம்.” என்று நேரடியாக உடைத்துச் சொன்னான் நடேசன்.
“ஆமாண்ணே. ! அதுக்குத் தான் வந்திருக்கோம். ! ராமு
தம்பியும் வரச் சொன்னான். ’ என்றாள் அமிர்தம்.
‘அடேங்கப்பா..! என்னா சம்பிரதாயம் கெட்டுப் போச்சு! இந்தப்
பொண்ணு ஒங்க ஊட்டுக்குத் தானே. ’ என்றான் அர்ச்சுனன்.
‘இன்னைக்கே கூட்டிட்டுப் போங்களேன்.” என்றாள் பாஞ்சாலி. "அப்படி சாதாரண சங்கதியில்ல இது. இன்னைக்குப் பரிசம்
போடுறதுக்கு நாளு குறிக்க மட்டும் தான் வந்திருக்காங்க..! நாளைக்குத்தான் நல்ல நாளாம்.!’ என்றார் பழனி.
4
‘‘அப்படியே செய்ங்க பழனி மாமு. ! ஜானகி.. எங்க போகனுமோ. அங்கயே போகட்டும்.!
வெற்றிலை போட்டுக் கொண்டு நடேசனும் அமிர்தமும் புறப்பட்டார்கள்.
அர்ச்சுனனிடமும் பாஞ்சாலியிடமும். ஏதோ ‘அறிவுரை சொல்லணும் என்ற பழனி மாமன் கொஞ்சம் நின்றார். ኣ
&
‘அர்ச்சுனா. ரொம்ப சந்தோசம். நீ நல்லா பேசினே...! ாளக்கி அவுங்க நல்ல நேரம் பாத்து வருவாங்க. நல்லா சமச்சி வய்யி. அமிர்தத்துக்கு ஒரு நல்ல சேல வாங்கி குடுக்கணும். அதையும் வாங்கி வைய்யி. அமிர்தத்த நல்லா கவனிக்கும்படி ஜானகி
கிட்டே சொல்லி வைய்யி. வெளங்கிச்சா பாஞ்சாலி?” என்றார்.
**நல்லதுங்க மாமா..!’ என்றாள் பாஞ்சாலி.
“நடேசனும் எனக்கிட்டே சொன்னான். கல்யாண செலவுல பாதி ஏத்துக்கிறானாம். நீ என்னா சொல்றே.!” என்று அர்ச்சுனனிடமும்
ഴ്സ്
பழனி மாமன் கேட்டார்.
'முடியாது மாமா! அது முடியவே முடியாது! நான் பிச்சக்காரனர் இருந்தாலும் அத செய்ய வுட மாட்டேன்..” என்றான் அர்ச்சுனன்.
3
* எம் புள்ளைக்கு எங்கண்ணன் செலவு செஞ்சா என்னா. jசாலி குறுக்கிட்டாள்.
LT
'ஏய் மனுவழி. அர்ச்சுனன் அதட்டினான். 'நீ யாரு வுட்டப் பேசுறே. ஒங்கப்பன் வூட்டப்பாத்தியா..? எங்கப்பன் வூட்டப்
LDTLDT. ! இந்த மாதிரி விசயத்துல எப்ப பேசினாலும் இந்த ன் மனசு நோகுற மாதிரி தான் பேசுறது. ! எம் புள்ளைக்கு எங்ண்ணன் செலவு செஞ்சா என்னா. ? பாஞ்சாலி ரொம்பவும் வருத்தப் பட்டாள்.
ーマ 5
Page 21
“இங்க. இங்க. நிப்பாட். ரெண்டு பேரும். அந்த
காலத்துல நம்ம பழயவங்க. இப்படித்தான் தீர்மானிச்சாங்க. É இந்த ஊட்டு உரிமைகள, கெளரவத்தப் பாதுகாக்க வந்திருக்க. அர்ச்சுனன். அன்னிக்கு ஒங்கப்பன் வுபூட்டுல வாங்கியத. இப்ப அவன் செய்யப் போறான்..!’ என்றார் பழனி.
நேரம் சென்றது.
அர்ச்சுனனும் பழனி மாமனும் நாளைக்கு வேண்டிய சாமான்கன்ள வாங்குவதற்கு கடைப் பக்கம் புறப்பட்டார்கள்.
மறுநாள் பின்னேரம் பழனி மாமனை விசேஷமாக அழைத்திருந்தான் அர்ச்சுனன். நடேசன் குடும்பத்தினரும் மற்றவர்களும் வருவதிைப் பழனியும் அர்ச்சுனனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
CK Ck>k
-இன்று
பாஞ்சாலி குத்துவிளக்கு ஏற்றினாள். அந்த விளக்கு அவள் தகப்பன் வீட்டிலிருந்து கொண்டு வந்தது! அந்த ‘பத்து பன்னிரண்டு வி விளக்கேற்றியதும் வெளிச்சத்தைக் கண்டது.!
ஜானகி மஞ்சள் சேலை உடுத்தி சிவப்பு ரவிக்கை அணிந்திருந்தாள்.
சூரியன் இறங்குவதற்கு முன்பு. நடேசன். அவன் மன்னவி அமிர்தம். அவளுடைய தம்பி ராமு. இன்னுமொரு சிறுமி மெத்தம் நான்கு பேர் வந்தார்கள். சாஸ்திரப்படி நல்ல காரியங்களுக்கு மூன்று பேர் போகக் கூடாது. அதற்காகப் பிள்ளை ஒன்றைச் சேர்த்துக் கொண்டார்கள்.!
4
அமிர்தம் குடும்பத்தினர் பரிசத்தட்டு கொண்டு வந்திருந்தாகள். வெள்ளைச் சேலை ஒன்று. அது கூறைச் சேலையாகும். ஐந்நூறு வெற்றிலை. பாக்கு. ஒன்பது தேங்காய். வாழைப்பழங்கள்
தாய் மாமன் ராமு முதலில் பழனி மாமனை வணங்கினான். மற்றவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டனர்.
l6
பாஞ்சாலி அமிர்தத்தை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
குத்து விளக்கு ஜெகஜோதியாக அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்தது.
ஜானகி, அத்தீை அமிர்தத்தின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள்.
இரவுச் சரிப்பாட்டுக்குப் பிறகு பழனி மாமன் ஏற்பாட்டின் படி பரிசம் போடுவதற்கு எல்லோரும் விளக்கின் முன்னால் கூடினார்கள். தட்டில் சாம்பிராணி புகைந்தது.
ஜானகியை விளக்கின் முன்னால் சம்மணம் போட்டு உட்காரும் படி செய்தார்கள். அவளுக்குத் திருநீர் பூசிய நடேசன். ‘இவ அழகேசன் பொண்ணு' என்ற நாமம் சூட்டினான். பின்னால் நின்ற ஜானகியின் பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
“நடேசா. கலியாணத்துக்கு நேரங்காலம் பாத்திட்டியா..?” என்றார் பழனி.
<
‘அடுத்த ரெண்டு மாசத்துக்கு உள்ளுக்கு. ஜனவரி பதினோராம் தேதி ஒண்ணு தான் நல்ல நாளு.” என்றான் ராமு. *
“பொருத்தம் கிருத்தம் எல்லாம் பாத்திட்டியா..?” பழனி கேட்டார்.
é é.
ஆமா. பொருத்தமெல்லாம் சரி. அவ அவனுக்கு. அவன் அவளுக்குன்னு இருக்கு. ! தாயப் மாமன் செய்ய வேண்டிய காரியமெல்லாம் ஒழுங்காச் செஞ்சிட்டேன். இனி எல்லாம் ஓங்கல பொறுத்தது. மத்தவங்கள வழி நடத்த வேண்டியது எல்லாம் பெரியவங்க பொறுப்பு.’ என்றான் ராமு.
“நல்லது. ஜனவரி மாசம் 11ம் தேதி முகூர்த்தம் எல்லாரும் ஏத்துக்கிட்டீங்களா..?’ பழனி மாமன் கேட்டார்.
‘ஆமா ஆமா! எல்லாரும் ஏத்துக்கிட்டோம்.” என்றார்கள்.
“கல்யாண கர்ர்டுகள ரொம்ப வெள்ளண அனுப்பணும்.! எல்லா காரியங்களையும் செய்றதுக்கு நெறய நேரங் காலம் இருக்கு. எல்லாம் சரி. எட வசதிதான் பத்தாது.
5
மூணு பரம்பர கலியாணத்தையும் இந்த பத்துக்குப் பன்னெண்டு
17
Page 22
எலி பொந்துல தான் நடத்தியிருக்கோம். நல்லது. டக்டருகிட்ட பேசி உத்தரவு வாங்கி. பெரிய பந்தல் ஒண்ணு வாசல்ல கட்டுவோம்.! என்றார் பழனி மாமன்.
6 é.
lfDT(LJD......... நாங்க இருட்டுக்கு முந்திக் கெளம்பணும்.! என்றார்கள் நடேசன் குடும்பத்தினர். -
‘ஆமா..! நீங்க பொறப்புடலாம். ஜானகி இங்க வா..! மாமனா மாமியாவ வழியனுப்பி வை. இன்னயிலயிருந்து அவுக தான் ஒனக்கு தாயும் தகப்பனும். புரியுதா..?’ என்றார் பழனி. ஒரு தட்டில் வெற்றிலை பாக்கோடு ஒரு சேலையை வைத்து அமிர்தம் மாமியிடம் கொடுத்து ஜானகி வணங்கினாள்.
பரிசை வாங்கிக் கொண்ட அமிர்தம் ஜானகிக்கு திருநீர் பூசி ஆசீர்வதித்தாள்.
‘பதனாறும் பெத்து பெரு வாழ்வு வாழனும்.!” என்றாள்.
‘நலுங்கு கிலுங்கு எல்லாம் எப்ப வைக்கப் போறிங்க..?” என்று பழனி அங்கு நின்ற பெண்களிடம் கேட்டார்.
'ரெண்டு வீட்டு தாய் மாமனுங்களும் சொந்த காரவுங்களுக்கு சொல்லாம்.” என்றான் ராமு.
அவர்கள் எல்லோரும் குத்துவிளக்கை வணங்கிவிட்டுப் புறப்பட்டார்கள். *
>*<>*<>*<
கலியாணத்துக்கு முன்பதாக. அந்த இளம் தம்பதிகளுக்கு பத்துக்கு மேலாக நலங்கு விருந்து வைத்தார்கள்.
அழகேசனும் ஜானகியும் அவர்களது உறவினர் வீடுகளுக்கும் தகப்பன் வழி வீடுகளுக்கும் சென்று வந்தார்கள்.
பாஞ்சாலியும் அர்ச்சுனனும் இஸ்தோப்பில் அமர்ந்திருந்தார்கள். எதிர்த்த லயத்து பக்கம் அழகேசனை நலுங்கு செய்ய அழைத்துச் சென்றார்கள். பாஞ்சாலி ஜானகியை ஜாடை காட்டினாள்.
‘வெளியே வராதே. நலுங்குக்கு “யாரையோ கூட்டிக் கிட்டுப் போறாங்க..” என்று சிரித்தாள்.
18
பழனி மாமனின் தம்பியும் தோட்டத்திலே பெரிய தமாஷ பேர்வளி முத்தையாவும் சேர்ந்து பழைய பாட்டு ஒன்றை எடுத்து விட்டார்கள்.
6
காளைன்னா கறுப்புக்காளை...! கண்ணாடி மினுங்கும் இளந்தாரிக் காளை புது சூடு போட்ட காளை புது தழும்பு ஏற்ற காளை பட்டப் பகலிலும். பக்கமெல்லாம் சுற்றும் காளை...!
லயன் முழுவதும் பாட்டைக் கேட்டுச் சிரிப்பொலி பிறந்தது. அர்ச் சுனன் எதையும் அறியாதவனாயப்ப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.
‘பாவம் அந்தத் தம்பி.! பாஞ்சாலி மாத்திரம் பெருமித்த்தோடு மருமகனுக்காகப் பரிந்து பேசினாள்.
ஜானகி. அமைதியாகச் சிரித்தாள்.
19
Page 23
வைகுந்த அம்மானை
O O
ர் அந்தி நேரம்.
இன்றைக்குக் கொஞ்சம் பணியோடு சேர்ந்த குளிர்.
பழனி மாமன் தாழ்வாரத்தில் (இஸ்தோப்பு) உட்கார்ந்திருந்தார். அவர் சமீபத்தில் நடந்த பல சம்பவங்களை அசை போட்டுக் கொண்டிருந்தார்.
சிதம்பரம் கங்காணி லயத்துக் காம்பராவிலிருந்து தோட்டத்து டிஸ்பென்ஸர் வந்து கொண்டிருந்தார். டிஸ்பென்ஸர் முகம் வாடியிருந்தது. ஏதோ குழப்ப நிலையில், கவலையோடு வருவது தெரிந்தது. பழனி மாமன் அருகில் சென்றார்.
"சலாம் தொரே. ஒங்களால முடிஞ்சதயெல்லாம் செஞ்சி. நம்ம சிதம்பரம் கங்காணிய நீங்க தான் சொகமாக்கணும்.! என்று தயவோடு கேட்டார் பழனி மாமன்.
*சிலோன்ல இருக்கிற எந்த டக்டராலேயும் இனிமே சிதம்பரத்த காப்பாத்த முடியாது பழனி.” என்றார் டிஸ்பென்ஸர்.
‘அப்படி சொல்லாதிங்க ஐயாவு. ! அவருக்கும் என் வயசு தானுங்களே..! அவருக்கு கல்யாணமாகாத ஒரு மகளும் வீட்ல இருக்குதுங்க..!” என்றார்.
20
“எனக்கும் அது தெரியும் பழனி. இருந்தாலும் இந்த மாதிரி விசயத்துல யாரால என்ன செய்ய முடியும். ?’ டிஸ்பென்ஸர் புறப்பட்டார்.
பழனி மாமன். சிதம்பரம் கங்காணி லயத்தை நோக்கிச் சென்றார். கங்காணியின் மகள் சிந்தாமணி தலைவிரி கோலமாக நின்றாள். வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆங்காரமாகக் கதறி அழுதாள். மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிப் புலம்பினாள்.
‘அப்பாத.! அப்பா. ! ஏம்பா என்னைய வுட்டுட்டுப் போறிங்க..? இந்த ஒலகத்துல எல்லாமே எனக்கு நீங்கதானப்பா..! நீங்க இல்லாட்டி போனா இனிமே நா யார அப்பான்னு கூப்பிடுவேன்.? இனிமே எங்க தான் போவேன்.? என்னாத்த செய்வேன்."
அவளின் பரிதாப நிலையைப் பார்க்க சகிக்காதவராய், பழனி மாமன் வீட்டுக்குள்ளே நுழைந்தார்.
சிதம்பரம் கங்காணி படங்குக் கட்டிலில் கிடந்தார். கழுத்துவரை கம்பளியால் போர்த்தியிருந்தார்கள்.
அவர் முகம் சுருங்கி வெளிறிப்போயிருந்தது. நெற்றி ஒடுங்கி கண்கள் மங்கிப் போயிருந்தன. அவர் மிகக் கஷ்டமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
மனைவி ராக்கி, தரையில் உட்கார்ந்திருந்தாள். கலங்கிய கண்களையும், மூக்கையும் துடைத்துக் கொண்டு, தொண்டையைக் கரகரத்துக் கொண்டிருந்தாள்.
பழனி மாமனுக்கு நன்றாகத் தெரியும். SF6)6 நெருங்குவது அடை மழையில் சுருட்டிப் படுத்துக் க்ொண்டு தூங்குவது போன்றதல்ல, அது இடியைப் போல ஒரு நொடியில் தாக்கி விட்டுப் போய்விடும்.!
இந்த நேரத்தில். சொந்தக்காரர்கள் தயாராக இருப்பது நல்லது. நடக்கப் போகும் துயரச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
பழனி மாமன் சிதம்பரத்தின் மகன் ஆறுமுகத்தை ஒரு பக்கமாக அழைத்துப் பேசினார்.
‘ஆர்மோம். ! நா எதுவும் சொல்லத் தேவையில்ல, ஒனக்கு எல்லாம் தெரியும்.”
2
Page 24
‘ஆமாங்க. மாமா..! எனக்கு எல்லாம் வெளங்குது. இருந்தாலும் எனக்கு நம்ப முடியல்ல. எங்கப்பாவுக்கு இன்னும் வயசு இருக்குதே.?
‘இனி. நம்பிக்கை இல்லே. நா சொல்றது புரியுதா மகனே.?”
''
’’SALDTib LDTLDT.
"தைரியமா இரு. ஆம்பளைங்க அழுது பொலம்பறது கிடையாது.! எல்லாத்துக்கும் மொகம் குடுக்கணும். நீ தான் குடும்பத்துல மூத்த மகன். நீ.1 ஓங்கடன நீ ஒழுங்கா செய்யணும்.!
மூணு தேங்கா ஒடைச்சி தலமாட்டுல வைய்யி. குத்து வெளக்க பொருத்தி. மூணு திரி எரியிறமாதிரி. தலமாட்டுல வைய்யி. வெளக்கு விடிய விடிய எரியணும். முத்துசாமிய கூப்புட்டு வைகுந்த அம்மானை. பாடச் சொல்லு.
கொஞ்ச நேரத்துக்குள்ளே இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடிந்தன. முத்துசாமி வைகுந்த அம்மானையில் இரண்டு வரியைப் பாடத் தொடங்கினான்.
ராக்கி மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள், 'அய்யோ சாமி அய்யோ சாமி. ! ஏந்தான் எவ்வாயில மண்ண போட்டீங்களோ..!
இஸ்தோப்பில் உறவினர் யாவரும் நிற்கின்றனர். ஒடிப்போய் ஆறுமுகத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்.
“ஐயோ மகனே. ஐயோ மகனே..! அப்பாவுக்கு என்னா நடக்குது F5?'
‘அழுவாதிங்கம்மா அழுவுற சத்தம் அப்பாவுக்கு கேக்கக் கூடாது.”
‘நா அழுதா இந்த தோட்டமே கொள்ளாது! ம.க. னே இந்த தோட்டமே கொள்.ளா.து ம.க.னே.”
பழனி மாமன் மெதுவாக வந்தார். ஆத்திரம் தாங்காமல் எரிச்சலோடு பார்த்தார்.
“பொலட்டுப் பொம்பளை. கொஞ்ச நேரத்துக்கு பொறுத்துக்கோ..! அப்புறம் வேண்டிய மாதிரி நீ கத்தலாம். யாரும் ஒன்னைய நிப்பாட்ட மாட்டாங்க. இப்ப நிப்பாட்டு மூச்.!” என்றார் பழனி மாமன்.
“ஆமாங்க எசமான். நான் பொலட்டுக்காரி தான். நான் பொலட்டு பொம்பளை தான்.' ராக்கி மூக்கைச் சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
22
யாரோ திடீரென்று பழனி மாமனைக் கூப்பிட்டார்கள்.
“பழனி மாமோவ். வாங்க சுருக்கா. பழனி விட்டுக்குள் ஓடினார். சிதம்பரம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்.
பழனி அசந்து நின்றார் A A
“என்னா மாதிரி மனுஷன் நீ. எவ்வளவு பெறுமதியான ஆள். இப்படி ஒரு நெல ஒனக்கு வரணுமா..? என்ன செய்யிறது. கடவுள் வுட்ட வழி. எல்லாரும் நீ போற வழியிலேதான் போகணும்.! நல்லது. நீ முன்னுக்கு போ..! நாங்க பின்னால வர்ரோம். புள்ளைகளா. ஆர்மோம். 1 ராக்கி. ! எல்லாரும் அப்பா கிட்டத்துல வாங்க. உசுரு போரதுக்கு முன்ன கொஞ்சம் கொஞ்சமா.
பால ஊத்துங்க..!
ஆறுமுகமும், சிந்தாமணியும் பாலைப் பருக்கினார்கள். சிதம்பரம் கங்காணி கண்களைத் திறந்து ஆர்வமாக மகளைப் பார்த்தார். ரொம்பவும் கஷ்டப்பட்டுத் தன் கையை உயர்த்திச் சிந்தாமணியின் கையைப் பிடித்து ஆறுமுகத்தின் கையில் வைத்தார். ராக்கி இந்தக் காட்சியைப் பார்த்து செயலற்று நின்றாள்.
‘ராக்கி. எம்புள்ளைகளா..! பழனி அண்ணே. எம் புள்.ளை.க.ளா?” அவர் குரல் கம்மியது. அவர் கண்கள் மூடிக் கொண்டன. மூடிய கண்களிலிருந்து கண்ணிர் கசிந்தது.
பெண்கள் எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழுதார்கள். ஒப்பாரிச் சத்தம் வீட்டை அதிர வைத்தது.
பழனி மாமன் அங்கு. பலரையும் வழி நடத்திக் கொண்டிருந்தார். சொந்தக்காரர்களைக் கூப்பிட்டு மஞ்சளும். வெற்றிலையும் அரைத்து சாந்து பண்ணி. சிதம்பரத்தின் கண்களிலும். வாயிலும் வைத்து வெள்ளைத்துணியால் கட்டும்படி சொன்னார்.
சொந்தக்காரர்களுக்கும். நண்பர்களுக்கும். கேதம் சொல்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்தார். கேதம் சொல்லப் போகின்றவன். தலைப்பாகை கட்டக்கூடாது. துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.
சாவுத்தப்பு நடுச்சாமம் வரை அலறியது. தப்புக்காரர்களில் ஒருவன் நவரத்தின ஒப்பாரி வைத்துப் பாடினான்.
23
Page 25
சாவு வீட்டில் சமையலோ. சாப்பாடோ கிடையாது. வெற்றிலை மட்டுமே பரிமாறினார்கள்.
வெறுங்கைகளை நீட்டி நிற்க. துக்கம் விசாரிப்பவர்கள் அவர்களின் கைகளைத் தொட்டு மெளனமாக நகர்ந்து செல்வார்கள்.
சொந்தக்காரப் பெண்கள் கோடித்துணியும், அரிசியும், ஒரு பித்தளைத் தட்டில் எண்ணெயும் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கே ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் பெண்களோடு சேர்ந்து கொண்டார்கள். பழனி மாமன் சுறுசுறுப்பாக அங்கேயும். இங்கேயும். ஒடிக்கொண்டிருந்தார். சொந்தக்காரர்களையும் வண்ணானையும் கூப்பிட்டு தேரு இல்லாட்டிப் போனா பாடை கட்டணும்!” என்றார்.
பிணப்பெட்டியை சுமந்து செல்வதற்கு ஒரு பல்லக்கு. மூங்கினால் செய்து வணிணக் கடதாசிகளாலும் . பூக்களினாலும் . அலங்கரித்திருந்தார்கள்.
சிதம்பரத்தைக் குளிப்பாட்டி. அவரது கல்யாண உடைகளை உடுத்தினார்கள். இறுதி யாத்திரை தயாராகியது. எல்லாப் பெண்களும் வெளியே வந்து ஒப்பாரி வைத்தார்கள். இப்போது தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழ வேண்டும். அவர்கள் 'மாரடித்து ஒலமிட்டார்கள்...!
‘தூக்கிட்டுப் போற நேரம் பொம்பளைங்க கத்தக் கூடாது! எல்லாப் பொம்பளையும் நிப்பாட்!” பழனி மாமன். ஆக்ரோஷமாகக் கண்டித்தார்.
‘ஆர்மோம்! நீ தலப்பக்கம் தூக்கு1. ஒறவுக்காரவங்க. கால்மாட்டுப் பக்கம் நின்னு கால்களைத் தூக்கி மெதுவா. பணிச்சி. பொட்டிக்குள்ள வைய்யிங்க..! எல்லாரும் சரியா. ? பொட்டிய மூடுறதுக்கு முன்ன. கடைசியா எல்லாரும் ஒருதரம் பாத்துக்க..! என்றார் பழனி மாமன்.
சிந்தாமணி பெட்டி மேலே வந்து விழுந்தாள். ராக்கி பைத்தியக்காரியைப் போல கைகளை விரித்துக் கொண்டு ‘அப்பாவ.
ஏண்டாசாமி தூக்கிட்டுப் போறிங்க..! என்று மகனைக் கட்டிப்பிடித்தாள்.
பழனி மாமன் கடுமையாகினார். ‘அங்க யாரு...? பொட்டிய மூடு
மன்ஷன். ஆர்மோம்.! ஒங்கம்மாவ வுட்டு உள்ளுக்கு கூட்டிக்கிட்டு போ. இப்ப தெரைய மூடு. தூக்கு. நடயை கட்டு. சுருக்கா சுருக்கா..!” என்றார்.
24
தப்புச் சத்தம் ஓங்காரமாகியது. சிதம்பரம் கங்காணியின் உடல் சுடுகாட்டை நோக்கியது. ஆண்களும் பெண்களும் நிறைந்த மரண ஊர்வலத்தை, தப்புக்காரர்கள் வழி நடத்தி முன்னே சென்றார்கள்.
பாதை நெடுக ஒருவன் பொரி இறைத்துக் கொண்டு சென்றான்.
மரண ஊர்வலம் பாதி வழி சென்று கொண்டிருந்தது. வீட்டுக்கும் மயானத்துக்கும் இடைப்பட்ட பாதையில் ஒரு முச்சந்தி வரும். அதற்குப் பெயர் 'பாடை மாத்தி அங்கே. கொள்ளிக் குடம் உடைத்து. ராக்கிக்கு முக்காடு போர்த்தி, மறைத்து, அவளைத் திரும்பிப்பார்க்க விடாமல் வீட்டுக்குத் தள்ளிக் கொண்டு சென்றார்கள், அவளோடு வந்த பெண்கள்.
பழனி மாமன் எல்லாப் பெண்களையும். இந்த முச்சந்தி பாடை மாத்திக்கு அப்பால் வரவேண்டாம். என்று அனுப்பிவிட்டார்.
பாடை மாற்றியில் பாடையை மறுபக்கம் மாற்றிச் சுமந்து சென்றார்கள். பாடை மாற்றி வரை, வீதியைப் பார்த்தபடியும் அங்கிருந்து காட்டைப் பார்த்தபடியும் பினத்தைச் சுமந்து செல்வார்கள். அந்த ஊர்வலத்தில். இப்போது ஆண்கள் மட்டுமே சென்றார்கள்.
ஊர்வலம் சுடுகாட்டைச் சென்றடைந்தது. பாடையை இறக்கினார்கள். பழனிமாமன் சுடுகாட்டின் கிழக்குப் பக்கமாய் நின்று கொண்டு அவர்களை இயக்கினார்.
“பொணத்துக்குச் சொந்தக்காரன்க. முன்னுக்கு வா! சுருக்கா. தேருலயிருந்து பொட்டிய எறக்கு எங்கடா..? வண்ணான். பரியாரி.? வந்து வேலையைக் கவனி.!
தேரிலிருந்து பினப் பெட்டியை இறக்கினார்கள். வண்ணான். சிதம்பரத்தின் உடைகளை மாற்றினான். பரியாரி. கங்காணியின் காதுகளிலிருந்த கடுக்கன்களையும். மோதிரம். இடது கையிலிருந்த
வளையல், இடையிலிருந்த வெள்ளி அரைஞாண் கொடி.
(அருணாக்கொடி) எல்லாவற்றையும் கழற்றினான்.
மயானத்துச் சடங்குகள் முடிந்தன. பெட்டியைக் குழிக்குள் இறக்கினார்கள். மூத்த மகன் ஆறுமுகம் முதலாவதாகப் பிடி மண் தள்ளினான். மற்றவர்கள் அவனைத் தொடர்ந்தார்கள்.
‘ஆர்மோம்! மொட்டையடிச்சிட்டு ஒரு கலயம் தண்ணியோட வரணும். இங்க. குழிமேட்ட சுத்தி கொள்ளிக்குடம் ஒடைக்கணும். கட்டளையிட்டார் பழனி மாமன்.
25—A-aseA(Pec
Page 26
ஒரு சில நிமிடங்களுக்குள் மொட்டையடித்துக் கொண்டு தண்ணிர் கலயத்தோடு ஆறுமுகம் வந்து நின்றான். குழி மேட்டைச் சுற்றி நீர் கலயத்தோடு ஆறுமுகம் செல்ல. பரியாரி அவன் பின்னால் கலயத்தை ஒரு சுற்றுக்கு ஒரு கொத்துக் கொத்தி. தண்ணிர் பீலியாய் வடிய. மூன்று முறை சிதம்பரத்தின் குழி மேட்டை வலம் வந்தார்கள்.
மயானச் சடங்குகள் முடிந்தன
‘米米
வழமையாகக் கட்டமொயப் பிடிக்கும் சந்திப்புப் பாதையில் வண்ணான் 'வெள்ள மாத்து விரித்தான். எல்லோரும் உறவு முறைப்படி வந்து உட்கார்ந்தார்கள். 'இப்ப கட்ட மொயப் புடிக்கிறோம்! சொனங்கக்கூடாது!’ என்றார் பழனி மாமன். ' கட்டமொய்க்காக” ஒவ்வொருவரும் இருபத்தைந்து சதம் வழங்க வேண்டும். பாபர் சம்பளம். டோபி சம்பளம். தப்படித்தவர் சம்பளம். குழி வெட்டியவர் சம்பளம். என்று இந்த மொய்க் காசிலிருந்து பகிர்ந்து கொடுக்கப் படும்.
கட்ட மொய் மூலம் திரட்டிய பணத்திலிருந்து எல்லோருக்கும் சம்பளம் வழங்கினார்கள்.
கூட்டம் அவசரமாகக் கலைந்து வீட்டை நோக்கியது.
அவசர அவசரமாகக் குளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்.
ஆறுமுகத்தை பாதுகாவலாக பழனி மாமன் கூட்டிச் சென்றார்.
米米冰
மரண வீட்டு வாசலில் ஒரு தட்டில். ஒரு பிடி சாமபலும ஒரு செம்பு நிறைய தண்ணிரும் வைத்திருந்தார்கள்.
காட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வந்தவர்கள் அந்தச் சாம்பலைத் தொட்டுத் தண்ணில் கலந்து தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்குள் போனார்கள்.
区一
ஆறுமுகத்தின் தாயும். தங்கையும் சிந்தாமணியும். கொஞ்சம் நேரம் அழுதார்கள்.
米米米
கருமாதி.
முப்பதாம் நாள் கருமாதி வைத்திருந்தார்கள். சட்டி, பானை. தட்டு முட்டு சாமான்கள். எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் புதிய பாத்திரங்கள் வாங்கி வந்தார்கள்.
பாய் தலையணை எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி எரித்தார்கள். வெள்ளையடித்து வீட்டைத் தூய்மைப் படுத்தினார்கள்.
அந்த வீடு. முற்றாகத் தோஷம் கலைந்த ஒரு புதிய வீடாக மாறியது.
வந்திருந்த சொந்தக்காரர்கள் யாவரும் இஸ்தோப்பில் கூடினார்கள். பழனி மாமனும். கணக்காக நேரம் பார்த்து வந்தார். அவருக்கென்று ஒதுக்கியிருந்த அந்த மரியாதைக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார்.
‘பங்காளிவுபூட்டு சனங்க எல்லாம் ஒக்காருங்க.1 மொதலாவது எண்ணெய் தலைக்கு பூசிக்குவோம்.!” என்றார் பழனி மாமன். தாய்வழி, தகப்பன் வழி, மாமன், மச்சான்மார்கள் வரிசையாக வந்து அமர்ந்தார்கள். ஆறுமுகம், ஒரு துண்டை இடையில் கட்டிக் கொண்டு வந்தமர்ந்தான். எல்லோரும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டார்கள். குளித்துவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு திரும்பவும் வந்து உட்கார்ந்தார்கள்.
சாயங்காலம்.
விளக்கு வைக்கும் நேரம்.
படைத்தல் ஆரம்பமாகியது. சிதம்பரத்தின் ஆன்ம சாந்திக்காக படையல் வைத்தார்கள்.
சிதம்பரத்தின் உடைகள், அவர் உபயோகித்த பொருட்களைப் படையலின் அருகில் வைத்திருந்தார்கள். சோறு, கறி வகைகள், திறந்து வைக்கப் பட்ட ஒரு போத்தல் சாராயம் யாவும் அவர் கடைசியாக உயிர் விட்ட இடத்தில் வைக்கப் பட்டிருந்தன.
- 27
Page 27
ராக்கியும், சிந்தாமணியும், ஆறுமுகமும் குத்து விளக்கேற்றி வணங்கினார்கள்.
இரவு ஒன்பது மணியளவில். சாராயம், கோழிக்கறியோடு விருந்து JejJlbULDľTálugbl.
சாப்பாடு முடிந்த பின்னர் தலைப் பாகைகட்டும் சடங்கு ஆரம்பமாகியது.
மச்சினன் மார்களும், மச்சான்மார்களும் ஆறுமுகத்துக்குத் தலைப்பாகைக் கட்டினார்கள். மச்சான் மார்கள் சம்மந்தி வீட்டுக்காரர்களுக்கு தலைப்பாகை கட்டினார்கள்.
இனி. இன்னும் ஒரு வருசத்துக்கு அந்த வீட்டில். கலியாணம், களியாட்டங்கள் எதுவும் நடைபெறாது. பொங்கல், தீபாவளி, திருவிழா எந்த பண்டிகையும் அந்த வீட்டில் நடக்கக் கூடாது.
பழனி மாமனுக்கு நியதிகளில் நம்பிக்கை உண்டு. வாழ்க்கை என்பது. மரணத்தோடு பின்னிப் பிணைக்கப் பட்டிருக்கின்றது. மரணத்திலிருந்து. வாழ்க்கையைப் பிரிக்க முடியாது. வாழ்க்கையிலிருந்து மரணத்தைப் பிரிக்க முடியாது. மரணத்துக்குப் பிறகும் மீண்டும் வாழ்க்கை உண்டு.
அவர் அந்த வீட்டை விட்டு புறப்படுமுன் சிந்தாமணி அன்று அழுத வார்த்தைகளை நினைவூட்டிப் பார்த்தார்.
‘இனி யாரை அப்பான்னு கூப்பிடுவேன். ၇း
அவளது வேதனை மிகுந்த முகம் அவர் முன்னால் தெரிந்தது. அவர் ஒரு கணம் நின்று. அவளிடம் ஆதரவாகப் பேசினார்.
'மகளே.! கடவுள் ஒன்னை காப்பாத்துறதுக்கு இருக்கார். இப்ப. என்னாலே எதுவும் சொல்ல முடியாது. அடுத்த வருசம் நிச்சயம் இந்த வுட்டுல நல்லது நடக்கும்.”
அவர் உணர்ச்சி வசப் பட்டவராய், சிந்தாமணியின் தலையைத் தடவிவிட்டு, வேகமாக நடந்தார்:
ஒரு புதிய ஆயுதம்
ந்தக் கைதி சாப்பிட மறுத்தான். தரங்கெட்டுப் போன உணவை
வழங்கும் அந்த சிறைச்சாலை நிருவாகத்துக்கெதிராக
உண்ணாவிரதம் இருந்தான். அவர்களின் சமூகவிரோதச் செயல்களை கண்டித்துப் போராட்டம் நடத்துகிறேன் என்று விளக்கம் காட்டினான். இன்னொரு தொழிலாளி தனக்குச் சம்பளம் குறைத்து வழங்கப் பட்டதாகக் குற்றஞ் சாட்டி மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டான். ‘பிரதமமந்திரி வந்து அவனது பிரச்சினையைத் தீர்க்கும் வரை மரத்திலிருந்து இறங்கமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தானி , மற்றொருவனோ. தனது துயரங்களுக்கு சக மனிதர்களிடமிருந்து பரிகாரம் கிடைக்க மறுத்தால். கடிதம் எழுதிவைத்துவிட்டு அந்த உயர்ந்த மாடிக் கட்டிடத்தில் ஏறிக் கொண்டான். இந்தச் சமூகத்தின் இழி நிலையை உலகம் அறியவேண்டுமென்று அங்கிருந்து குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
இவ்வாறு தங்கள் மேல் சுமத்தப் படும் சமூக அநீதிகளுக்காக அந்தச் சமுதாயத்தையே பழிவாங்க வேண்டுமென்று - தங்களையே தண்டித்துக் கொள்ளும் மனத்தவிப்புக்கள் இருக்கத் தான் செய்கின்றன. இந்தப் போராட்ட வடிவங்கள் நகரப் புறங்களில் தோன்றுவதைக் காணுகின்றோம். ஆனால், இவர்களையொத்த இன்னொருவன் தோட்டப்புறத்தில் மிக வித்தியாசமான ஒரு போராட்ட முறையைத் தொடங்குகின்றான். அது ஒர் அறிவு பூர்வமான அணுகு முறையாக. ஒரு புதிய வடிவம் எடுக்கின்றது. அவனது அந்தப் போராட்டம் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்று பெயர் எடுத்தது.
Page 28
மிடில்டன் தோட்டம் தமிழில் பெரிய மல்லிகைப் பூத் தோட்டம் என்பார்கள். அந்தத் தோட்டத் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தான் ராமையா தலைவர். அந்த மக்களின் நல்லது கெட்டதுகளுக்கும். அவர்களின் முன்னேற்றத்துக்கும், உழைப்பதே ராமையா தலைவரின் கடமை என்று ஒரு பொறுப்பு அவர் மேல் சுமத்தப் பட்டிருக்கிறது. அவர் அந்தப் பொறுப்புக்களில் தன்னை முழுமையாக ஏற்படுத்திக் கொண்டார். ராமையா தலைவர் பழமை, புதுமை வாதங்களோடு ஒத்துக் போகக் கூடியவர். தொழிலாளர்களின் குறைகளைத் தோட்ட நிருவாகியிடம் எடுத்துக் கூறி உடனே நிவாரணம் கேட்பார். தோட்ட நிருவாகி உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாறாக ராமையா தலைவரின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தார்.
இதனால் தலைவர் சங்கத்தின் மாவட்டக் காரியாலயத்துக்குப் பிரச்சினைகளைக் கொடுத்தார். அங்கேயும் இழுபறி. மந்த கதியாகியது! தொழிலாளர்களின் பிரச்சினைகள் யாவும் வெறும் 'டைப் அடிக்கும் கடிதத் தொடர்புகளில் தங்கியிருப்பதாலேயே இந்த இழுபறி. ஏற்படுகின்றது.
‘எப்படியாவது சரி. இந்தப் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்த்துக் கொள்ளணும்!” என்ற தீவிர எண்ணத்தோடு ஒரு "இளஞ்சுடர் முன்வந்த போது. அந்த ஆவேசம். கணக்கப்பிள்ளையை அடித்து நொறுக்கியதில் போய் நின்றது! விளைவு..?
அடிபட்டவர் பொலிஸ"க்கு ஓடினார். இந்தச் சம்பவத்துக்குக் கொஞ்சம் கூட, சம்பந்தமில்லாத ஒரு அரை டசன் பொடியன்களின் பெயர்களைச் சொல்லிச் புகார் கொடுத்தார். பொலிஸ் ஓடிவந்தது. அந்த துரதிஷ்டசாலிகளைக் கவ்வியது. அவர்கள் கூட்டுக்குள் தள்ளப் பட்டார்கள். பின்னர். பிணையில் விடப்பட்டார்கள்.
பொலிஸ் பார்வையில். அவர்கள் சட்டத்தை மீறி ஒன்று கூடினார்கள். அச்சுறுத்தலில் இறங்கினார்கள். தாக்குதல் நடத்தினார்கள்’ என்ற குற்றங்களுக்குள்ளானார்கள்.
நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும்வ்ரை தோட்ட நிருவாகி அவர்களை வேலை நீக்கம் செய்தார். ராமையா தலைவர் ஆதங்கப் பட்டார். ஒரு பக்கம் பொலிஸ் மூலம் வழக்கு. மறுபக்கம் தோட்டத்தில் வேலை நீக்கம். ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை வழங்கியது அநீதியான செயல் என்று குமுறினார்.
30
அன்று முதல் தோட்டத்தில் நடைபெற்று வரும் அநீதியான செயல்களையெல்லாம் வெளியில் காட்டுவதற்கு முனைந்தார். அதில் தீவிரமாக ஈடுபட்டார்.
அந்தப் புதிய பாதையில் புறப்பட்ட அவர் தனக்குள்ளே ஒரு தீர்மானத்தையும் எடுத்துக் கொண்டார்.
அந்தத் தீர்மானம்.? ‘இனிமே சவரம். செய்வதில்லை!’
ஆமாம்! அவர் தோட்டத்துப் பாபரிடம் முகச் சவரம் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த விஷயத்தைத் தன் மனைவியிடமோ தோட்டக் கமிட்டியிடமோ சொல் லிக் கொள்ள வேணி டிய அவசியமில்லை என்று அவர் மெளனமாக இருந்தார்.
முதல் மூன்று வாரங்கள் அந்த ரகசியம் எவரதும் கவனத்தையும் ஈர்க்கவில்லை! நான்காவது வாரத்தில் மெல்லிய தாடி அவர் முகத்தில் அரும்பியிருந்தது! அவரது நடவடிக்கைகளிலும் இப்போதெல்லாம் ஒரு வித்தியாசம் தெரிந்தது. தனது சாப்பாட்டை எவரிடமும் கேட்பதில்லை. கொடுக்கின்ற போது வாங்கிச் சாப்பிடுவார். மனைவியிடம் கடுமையாகப் பேசுவதோ. குழந்தைகளிடம் செல்லமாகப் பழகுவதோ கிடையாது. வீட்டிலும் வேலைத் தலத்திலும் கோவிலில் கூடும் கூட்டங்களிலும் அவர் தன்னை ஒரு துயரம் பீடித்துக் கொண்டது போல் காட்டிக் கொண்டார்.
அவரது தாடி இடி முழங்கும் கருமேகமாய். பயங்காட்டி. வளர்ந்து வந்தது.
தோட்ட மக்கள் அவரது தாடியைப் பற்றிப் பேசதி தொடங்கினார்கள். அவரது மனைவி, மக்கள் அவரிடம் ஒரு பயபக்தியோடு நடந்து கொண்டார்கள். வீட்டுச் சூழ்நிலை. களையிழந்து காணப்பட்டது.
‘எங்களது வழக்குமுடியும் வரை. நாங்கள் வெற்றியடையும் வரை........ எங்கள் தலைவர் தாடி எடுக்கமாட்டார்!’ என்று வேலைநீக்கம் செய்யப் பட்டிருக்கும் இளைஞர்கள் வீரக் குரல் எழுப்பினார்கள். இந்த விஷயம் தோட்ட நிருவாகியின் காதுகளை எட்டியது!
ʻ(86uoLuñr G3Lʼ
Page 29
தொழிலாளர் பேச்சுவார்த்தை நாளன்று ராமையா தலைவர் தோட்டக் காரியாலயத்துக்குச் சென்றிருந்தார். ராமையாவைப் பார்த்த சுப்பிரண்டன் புருவத்தை நெரித்தார்.
9üG3u JT60)LDuuT....... என்னோட. 'பைட் பண்ண வாறது.?”
‘அப்படி ஒனன்னும் இல்லீங்க..! தொரையோட நான் எப்படி ". பைட் பண்ண முடியும்?”
‘அப்போ. ஏன் தாடி. வளர்க்கிறது. ၇••
ஒரு வேதனைக்குரிய அமைதி ராமையா தலைவரிடமிருந்து வெளிப்படுகிறது. அவர் மெளனமாக நிற்கின்றார்.
“ரொம்ப நல்லம்..! அப்ப நீ என்னோட 'பைட் பண்ணிப்பார்! ஒன் தாடியைப் பத்தி. ஐ டோன்ட் கெயார்! இன்னையிலேயிருந்து ஒன் மூஞ்சி பார்க்கமாட்டேன்!” தோட்ட நிருவாகி ராமையா தலைவரின் முகத்தில் அறைவது போல ஆபீஸ் ஜன்னலை இழுத்து அடைத்தார்.
தோட்ட நிருவாகி தன் தாடிமேல் கொண்ட கோபத்தையறிந்து ராமையா தலைவர் இறுமாப்போடு வீட்டுக்குத் திரும்பினார்.
இந்தச் சம்பவம் காட்டுத் தி போலப் பரவியது.
தோட்டப் பெண்கள் பீலிக்கரையிலும் பிரட்டுக்களத்திலும் கொழுந்துக்காட்டிலும் ராமையா தலைவரின் தாடியைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். தலைவரின் மனைவியைக் கண்டதும் பாசத்தோடு மரியாதை ததும்பப் பார்த்தார்கள். ஆனால், சின்னஞ்சிறுசுகளோ. அவரின் தாடியைக் கொஞ்சங்கூட ‘கணக்கு எடுப்பதில்லை. அவரைக் கண்டதும் ராகம் பாடினார்கள்!
‘குருவிக் கூடு தொங்குது. ! குருவிக் கூடு தொங்குது!!”
வழக்கு ராமையா தலைவரின் தாடியைப் போலவே நீண்டு கொண்டிருந்தது. இதற்கிடையில் உதவித் தொழில் கமிஷனர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியுமா என்பதை அறிந்து கொள்ள ஒரு 'கொன்பரன்ஸ்' ஏற்பாடு செய்திருந்தார். யூனியன் பிரதிநிதி, துரைமார் சங்கப் பிரதிநிதி, ராமையா தலைவர் பலரும் வந்திருந்தனர்.
ராமையாவின் தாடியைப் பார்த்த கமிஷனர் யூனியன் பிரதிநிதியிடம் கேட்டார். “ஜனங்கள் தாடிய இன்னமும் மதிக்கிறதா?”
32
** (88Fir!... (88FiT....!"
பிரதிநிதியிடம் கேட்ட கேள்விக்கு துரைமார் சங்கப் பிரதிநிதி பதில் சொல்ல அவரசப் பட்டார். இந்தத் தாடி நம்மட தொரமாருக்கு செலன்ஞ் பண்ணுறமாதிரி இருக்குது. இந்த ஆள். வழக்கிலே ஜெயிக்கிறவரைக்கும் தாடி வெட்டுறதில்லேன்னு தோட்டம் பூராப் பிரசாரம் செஞ்சிருக்கிறது. ! என்று ஆத்திரமாகச் சொன்னார். இதைக் கேட்ட கமிஷனர் யூனியன் பிரதிநிதியின் முகத்தைப் பார்த்தார் ‘அப்போ. வழக்கில் தோல்வி அடைஞ்சிட்டா என்னா செய்யப் போறது. ?’ என்றார்.
"அங்கதான் சேர். விஷயமே இருக்கு" என்ற யூனியன் பிரதிநிதி தொடர்ந்தார். ‘இவுங்க கதகட்டுறமாதிரி. இந்த தாடி விவகாரத்துல சவால் கிவால்ன்னு அப்படி ஒண்ணும் கெடையாது! அந்த தாடி வளர்ப்பு. ஒரு தார்மீகப் பகிஷ்கரிப்பு சட்டப்படியோ நியதிப் படியோ பார்க்காம. எது உண்மை, எது நியாயம் எது தர்மமோ அதன் அடிப்படையிலே போராடும் ஒரு சித்தாந்தம்! ஒரு கொள்கை முறை. இட் இஸ் ஏ மோரல் புரொடெஸ்ட்! வழக்கிலே வெற்றியோ தோல்வியோ. அவர் கடைசியில் தாடிய வழிச்சிடுவாரு!’ என்று யூனியன் பிரதிநிதி உருக்கமாகவும் மிக உணர்ச்சியோடும் விளக்கினார்.
'Q..... ஐ. ஸி. இட் இஸ் ஏ. மோரல் புரொடெஸ்ட்!” (ஒரு தார்மீக எதிர்ப்பு...!)கமிஷனர் அந்தத் தலைவனின் தாடியில் பொதிந்துள்ள அர்த்தத்தைப் புரிந்து வியப்படைந்தார்.
'ஆனா. அது எங்க மனச வருத்துது இட் எனொய்ஸ் அஸ்!” என்று துரைமார் சங்கப் பிரதிநிதி கமிஷனரிடம் குற்றஞ் சாட்டினார்.
‘'எனொய்ஸ். ? வருத்துதா. ? ஒரு தொழிலாளி தாடி வைக்கிறதுக்கு உரிம இல்லேன்னு நீங்க சொல்ல வாறது?”
கமிஷனர் கொஞ்சம் கடுமையாகத் துரைமார் சங்கப் பிரதிநிதியை நோக்கினார். அவர் தொடர்ந்து பேசினார். ‘சுப்பிரண்டனை இந்தத் தலைவர் சந்திக்க போனப்போ அவர்ட மூஞ்சிக்கு அடிக்கிற மாதிரி ஜன்னல சாத்தியிருக்கார். இட்இஸ் வெரி பேட்!” என்று முடித்தார். துரைமார் பிரதிநிதி விட்ட பாடில்லை. அவர் மீண்டும் எழும்பினார்.
‘வட் கேன் வி. டு. சேர்.? நாங்க என்ன சேர். செய்யிறது. இந்த தலைவர் தாடி வளர்க்கிறது எங்கள பழி வாங்குறதுக்குத் தான்! இது இந்த தோட்டம் பூரா. தெரியும்!” என்று சொன்னவர் ராமையா தலைவரின் கண்கள் காந்த சக்தி கொண்டவை. ஒளிவீசும்
33H
Page 30
பார்வை கொண்டவை. (Bright-Eyed Leader.) என்று வர்ணித்து ஒருவித பயத்துக்குள்ளானர். அவர் அத்தோடு நிற்கவில்லை.
தலைவரின் தாடியைச் சுட்டிக்காட்டி. ‘இந்த தாடி. 69(5 கெட்ட ஆயுதம்!. ஒரு ஆபத்தான ஆயுதம்! இட் இஸ் ஏ நாஸ்டி வெப்பன்!” என்று ஆக்ரோசப்பட்டார். யூனியன் பிரதிநிதிக்குக் கோபம் வந்துவிட்டது! நாற்காலியைப் பின்னால் இழுத்துவிட்டுப் படீரென எழும்பினார்.
‘நோ! சேர்! கெடையவே கெடையாது! இங்க. இருக்கிற நண்பர்களுக்கு இந்தத் தாடியின் மகிமையைப் பத்தி. ஒண்ணுமே தெரியாது போலிருக்கு இந்தத் தாடி. இந்தத் தோட்டத்தில் நடக்கிற அநியாயங்களையும் மோசமான சங்கதிகளையும் வெளியே எடுத்துக்காட்டிக்கிட்டு வருது. 'இற் கிவ்ஸ் எட்டென்சன் ஒன் த நாஸ்டி திங்ஸ் வட் தே டு ஒன் த எஸ்டேட், Nasty என்ற வார்த்தையை இவரும் உபயோகித்தார்.
“அத. நீங்க ப்ருவ் பண்ண முடியுமா. ?’ சுப்பிரிண்டன் அலறினான்.
“நிச்சயமா முடியும்! அதுக்குத் தான் நாங்க இங்க இருக்கோம்!" பிரதிநிதி நிமிர்ந்து நின்றார்.
‘அப்போ. இவ்வளவு நாளா. ஏன் சும்மா இருந்தது. ၇၈
“நாங்க சும்மா இருக்கல்ல! ராமையா தலைவர் ஒங்க ஆப்பீஸ"க்கு வந்தப்போ. பிரதி நிதி பேச்சை முடிக்கு முன்பே துரைமார் பிரதிநிதி இடைமறித்தார்.
‘ஓங்கட ராமையா ஆபீஸ்"க்கு வந்தது. அவனன்ட தாடிய காட்டுறதுக்காக!' என்றார்.
“என்னடாப்பா! தொழிலாளி தாடிகூட வளர்க்கக் கூடாதா? சே! இந்த நாடு எங்க போயிக்கிட்டு இருக்கு. ?’ என்று ஏளனமாகச் சிரித்தார் யூனியன் பிரதிநிதி.
துரைமார் சங்கப் பிரதிநிதி மீண்டும் எழும்பினார். “சேர்! விளக்கமா சொல்றேன். கேளுங்கள். ! அந்தக் காலத்தில்
தோட்டத் தொரைமார்கள் மூச்சுவிட்டா. போச்சு உடனே தலைவர் தாடி வளர்ப்பார்!
‘'தோட்டத்தொர மூச்சு நிப்பாட்டுற வரைக்கும் தாடி வெட்ட மாட்டேன்’னு ஜனங்களுக்கு பிரசாரம் பண்ணிடுவார்.!
ஆனா. ஜென்டில்மென். நீங்க இத. போயி ஒரு தொழில் பிரச்சினை. என்று சொல்றிங்க. 1 மை காட்! என்ன உலகம். இது.? ரொம்பவும் அவர் நொந்து கொண்டார்.
எல்லோரும் சிறிது மெளனமாக இருந்தார்கள்.
கொன்பரன்ஸ் எதுவித முடிவுமின்றி ஒரு மணித்தியாலம் நடந்து முடிந்தது.
தாடியைப் பற்றியே வாதம். பிரதிவாதம் தாக்கம்.
ஆயிரம் வார்த்தைகள் சாதிக்க முடியாததைத் தன்னுடைய தாடி சாதித்துவிட்டது என்ற மன நிறைவோடு ராமையா தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார்.
அவருக்கும் உள்ளுர மகிழ்ச்சி. அந்தத் துரைமார் சங்கக்காரன் சொன்னது போல தனது தாடியும் ஒரு ஆயுதம்!
-35
Page 31
THEEU) UDEAPO
He punished himself to avenge society for the in-justice it inflicted on him or his followers, The methods he employed had something of the moralist and martyr meant to hit the headlines in the newspapers or attract large crowds to the venue of his penance.
Over the question of ill-cooked food in the prisons he went on hunger strike and demonstrated to the world put side that he was fighting anti-social acts. If he was under-paid in the working place he got on a tree top and refused to come down until the Prime Minister came there to assure him relief.
If he was not sure of any redress by human hand or heart, with a letter on his person, he went up the tallest building and leapt to his doom and thus exposed the rotteness in society.
These methods belong to the man in the city. But his counterpart in the plantation employed a more subtle yet telling weapon.
Ramiah was the elected leader of the workers on middleton Estate. It was his duty to look after their well-being and further their advancement. He was too conscious of his responsibilities and wished to do away with the old and usher in the ‘new’.
From time to time he brought to the notice of the superintendent the grievances of the people for early redress. The superintendent did not take prompt action as was expected of him. So Ramiah referred the matter to the District office of his Sangam. There too he met with undue delay because the matter was under correspondence.
-36
However, a young spark on the estate chose to settle the dispute by direct action which resulted in the alleged assault of the kanakapulle. The names of half a dozen young fellows’ unconnected with the episode were given to the Police by the victim. The “unfortunate men were taken into police custody immediately put into shape and later released on bail. The police charged them for “intimidation, assault and unlawful assembly and the Superintendent suspended them from work pending the decision of the court.
According to Ramiah dual punishment for the same offence was a case of gross injustice.
It was at this stage that he decided to focus attention on the injustice' prevaling on the estate. After very careful consideration, without a word of reference to his committee or his wife, he denied himself the services of the estate barber.
The first three weeks passed by unnoticed. In the fourth week there was the beginning of a beard. With it he developed a new code of conduct. He never asked for his food. He ate when it was given to him. He never spoke a harsh word to his wife nor did he pet his children. In the house where he lived, in the fields where he worked and in the temple where he conducted his meeting, he remained in agonised reserve. And his beard grew on like a menacing thunder cloud.
The people on the estate began to talk about his beard. His wife and children treated him with awesome respect. And the atmosphere at home grew tense.
Our leader will not shave his beard until and unless our case is won, said the young men who were suspended from work. This news reached the ears of the superintendent.
On the labour day, when Ramiah went to the estate office, the superintendent frowned at him:
So, Ramiah, you want to fight me?”
No aiyah, How can I fight dorai?
- 37
Page 32
Then why are you growing a beard?”
There was a painful silence.
Very well, said the dorai, you can fight me. I don't care two hoots for your beard. From today I’ll not look at your face,
The superintendent shut the window with a bang and ended the Interview. Ramiah went home highly elated.
The incident spread like wild fire. The young women on the estate began to talk with respect about Ramiah's beard in the plucking field, the muster and spout . If the leaders wife came round they would hush their talk and look at her with solicitude. But the children. on the estate were no respecters of persons. Whenever they saw Ramiah they sang out:
Birds nest birds nest
The court case was lengthening and so was Ramiah's beard. In the meanwhile the Assistant Commissioner of Labour, summoned a conference to explore the posibilities of a settlement. He noticed Ramiah's beard and asked the union representative.
Do people still favour the beard?”
Sir, said the legal adviser to the management, it is a challenge to my client. This man has proclaimed to the whole estate that he would not shave his beard until he wins the court case.
If he loses the case? interposed the Assistant Commissioner of Labour.
That is the point. Sir, said the union representative. It is no challenge as is made out. It is a moral protest. Whether the case is won or lost at the endwofit all he would shave it off.
"Oh, I see. It is meant to exert moral pressure.”
But it annoys, sir, added the legal adviser.
Annoys? Do you mean to suggest that a worker has no right to
38
have a beard? The last occasion Ramiah went to see the Superintendent, he shut the window in his face.
“What can we do, sir? The whole estate knows that this brighteyed leader is growing his beard to spite us, replied the legal adviser.
“A nasty weapon, commented the legal adviser.
“No, sir, retorted the union representative. “Our friends here cannot see its significance. It focusses attention on the nasty things they do on the estate.”
“Can you prove it?” thundered the Superintendent.
“Of course... we can. That's why we are here?
Why did you wait all these days?
s
“We never waited. When Ramiah came to your office......
“Ramiah came to the office to exhibit his beard. said the legal adviser.
“A worker cant grow his beard What is this country coming to?’
Pecisely, sir, retorted the legal adviser, those days a Superintendent can't breathe. The moment he does. the leader grows a beard and proclaims to the entire labour force that he will not shave it till the dorai stops breathing.
And you, gentlemen, call it an industrial dispute. By Gad! What a state of affairs.
The conference concluded after an hour's discussion without a settlement.
Ramiah went home with the satisfaction that his beard had accomplished what a hundred speeches could not do.
39
Page 33
உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்
O
.ந்தக் கிழவன் சாலையோரத்தில் உட்கார்ந்திருந்தான் إ2ى முதுமையின் இலக்கணமாய்க் கூன் விழுந்து. உடல் தளர்ந்து சிறுத்துப் போன சின்ன உருவமாய் அவன் காட்சி தந்தான்.
அவனருகில் பிச்சை' வாங்குவதற்கான ஒரு தகரக் குவளையும் துணைக்கு ஒரு ஊன்று கோலும் கிடந்தன. எதிர்ப்புறத்தில் ஒர் அழகிய சிற்றாறு நளினமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அவனுக்குப் பின்னால். துரத்தில் தேயிலைச் செடிகளின் பசுமை. அந்த மலைக் குன்றுகளின் மேல பச்சையால்அள்ளிப் பூசப்பட்டிருக்கிறது.
அந்த ஏகாந்த சூழலில் அவனும் ஒருவனாய் இரண்டறக் கலந்திருந்தான்.
அந்த மனிதனின் முன்னைய வாழ்க்கை அவனது பூர்வீகம் எப்படியிருந்திருக்கும் என்று நான் யோசிக்கிறேன்.
இளமைக் காலத்தில் அவன் எப்படி இருந்திருப்பான்.? அவனுக்குச் சொந்தம் - சுற்றம் என்று ஒரு குடும்பப் பிணைப்பு இருந்திருக்குமா? குறைந்த பட்சம் இரவில் படுத்து எழும்புவதற்கு ஒரு இஸ்தோப்பு அறையாவது இருந்திருக்குமா..?
ஆம், அவன் எல்லாவற்றையும் இழந்தவனாகவே காணப்படுகின்றான்.
40
எதிர்காலமும் அவனை அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக ஒரு தாக்கமும் அவனுள் தெரிகிறது.
அந்த மலைக்கும், ஆற்றுக்கும் இடையில். அந்தப் ாதையோரத்தில் உருவழிந்து கிடக்கும் ஒரு சிதைந்த வீட்டைப் போல அவன் இன்னும் சமைந்திருந்தான்! நான் ‘அலுவலகம் நோக்கிச் செல்கின்றேன். அந்த நிர்க்கதியான உருவம். படமாய் என் மனதில் பதிந்து விட்டது. அது அலுவலகம் வரை என்னுள் தொடர்ந்து வருகிறது.
இளங்காலைப் பொழுது முடிந்து பகல் புழுக்கம் ஆரம்பம். எனது வேலைப் பளு உக்கிரமடைகிறது. ஜனங்களின் சந்தடி ஜன்னலருகே நடமாட்டம். அவர்களின் நிழல்கள் எனது அறையில் விழுந்து விரைகின்றன.
ஒரு நிழல் மட்டும் நிலைத்து நிற்பதாய் நான் உணர்கிறேன். நான் வெளியில் எட்டிப் பார்க்கிறேன். அந்தக் கிழவன் அந்தப் பெரிய மனுஷன். பிச்சைக்காரனைப் போன்ற அவன் கையேந்திக் கொண்டு நிற்கிறான். அவனை “ஒரு பிச்சைக்காரன்’ என்ற சொல்லுக்கு ஆளாக்க என்னால் முடியவில்லை. அவன் ஒரு பரம்பரைப் பிச்சைக்காரன் அல்ல! அந்த பதத்துக்கே இடமளிக்க முடியவில்லை.
அவனது முகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சாந்தமான பார்வை ஆயிரம் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நான் ஒரு ஐந்து சத நாணயத்தைக் கொடுத்தேன்.
நீங்க. நல்லா. இருக்கணும்! அந்தப் பெரிய மனுசன் என்னை ஆசீர்வதித்தான். பின் என்னைத் தொடர்ந்து பலர் சில்லறைகளைக் கொடுத்தனர். இந்தச் செயல் அந்த மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீங்க எல்லாரும் சிரஞ்சீவியா வாழனும். அவன் திரும்பத் திரும்பச் சொன்னான்.
‘இன்னும் ரெண்டு நாளைக்கு அலைஞ்சித்திரியாம அக்கடான்னு இருப்பேன்!” நொண் டி. நொண்டி பிச்சை கேட்டு அலையும் நிலையிலிருந்து இரண்டு நாட்கள் ஒய்வாக இருக்கப் போகிறேன் என்ற சந்தோசம் அவனது வார்த்தைகளிலிருந்து விழுந்தது. நான் மகிழ்ந்து போனேன்.
சில நாட்கள் பெய்த மழைக்குப் பிறகு வெளியே வெய்யில் பிரகாசமாய் அடித்தது. எனக்கு 'ஆப்பீஸ்' உள்ளே இருக்க முடியவில்லை. வெளி முற்றத்திற்கு வந்துவிட்டேன்.
4
Page 34
சுவரில் சாய்ந்திருந்தான். முதுமை தோய்ந்த அவனது முகத்தில் ஏக்கமும் ஒருவித கடுமையும் படர்ந்திருந்தது. சுவரில் சாய்ந்தபடி இன்னும் அப்படியே உட்கார்ந்திருக்கின்றான். அவனுக்கு முன்னால் ஒரு குப்பைவாளி இருந்தது. வாளிக்குள்ளே சாப்பிட்டு எறிந்த வாழை இலைகள் சிதறிக் கிடந்தன. அழுகிய உணவின் துர்நாற்றம் காற்றோடு கலந்து வந்தது. வீச்சம் நிறைந்த குப்பைவாளியில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. நாய்கள் சில. குப்பை வாளியைக் கிண்டுவதில் போர்க்கொடி தூக்கின. ஒன்றையொன்று எதிர்க்கின்ற உறுமல். பிச்சைக்காரனும் இப்படி. உணவுக்காக குப்பைவாளியில் கையைப் போட்டு துளாவுவதையும் 'மனிதனுக்காக நாய்கள் விட்டுக் கொடுப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால். இங்கே. இந்த இடத்தில் இந்தக் கிழவன் இந்த நிலையில் எல்லாவற்றுக்கும் அப்பால் உயர்ந்து நிற்கின்றான். (Even in this respect... the Oldman Was unique) 96.1615) (Up55516) 905 விசித்திரப் புன்னகை இழையோடுகிறது. அந்த தளர்ந்துபோன உடலில் ஒர் ஆத்ம கெளரவம் கம்பீரத்தோடு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“அ.வ.ன்” இல்லை அவர் மேல் எனக்கு ஒரு மரியாதை படர்ந்து நான் பேச்சுக் கொடுத்தேன்.
‘நீங்க ஏதாச்சும் சாப்பிடல்லையா. ၇)
“ஹி. ஹி. பசி இல்லிங்க ஐயாவு! கால சாப்பாட்ட கொஞ்சம் சொணங்கி சாப்பிட்டேன். ஹி..ஹி..” அவரது சிரிப்பில் கோடிக்கணக்கான மரியாதை தவழ்ந்தது.
“நீங்க தோட்டத்துல. இருக்கிறீங்களோ. ၇%
‘ஆமாங்க ஐயாவு!” ‘அப்ப சொந்தக்காரங்க நிச்சயமா இருப்பாங்கள்?”
‘ஆமாங்க ஐயாவு! எல்லாரும் இருக்காங்க. எனக்கு ரெண்டு மவன்மாருங்க. ஒரு மவ பேரப்புள்ளங்க எல்லாரும் இருக்காங்க!”
‘அப்ப அவங்களோட நீங்க இருக்கலாந் தானே?”
‘நா. ஏன் அவங்கள்ல தங்கி இருக்கணும்?” இதுக்கு முன்ன நா. அப்படி இருந்ததுமில்ல. இனிமேலேயும் அப்பிடி இருக்கப் போறதுமில்ல! மற்றவர்களின் அனுசரணையுடன் வாழ விரும்பாத தன்மான உணர்வு அவரின் சூடான பதிலில் தெரிந்தது.
- 42
*' என்னா இருந்தாலும் இந்த வயசான காலத்துல நீங்க அண்டியிருக்கிறதுக்கு. ஒங்களுக்கின்னு ஒரு எடம் இருக்கணுமில்லே?” என் அபிப்பிராயத்தைக் கூறினேன்.
“எம்மவன்மார்களும், மவளும் ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்காங்க ஐயாவு! எங்க தோட்டம் வந்து. சின்னத் தோட்டம் பகல் நேரத்துல இப்படி ஊரசுத்திட்டு வருவேன். ராத்திரியில மாரியம்மன் கோயிலுக்கு வந்திடுவேன்.”
“சின்னத் தோட்டத்துல எவ்வளவு காலமா இருக்கீங்க?"
“பொறந்ததிலிருந்து இருக்கேன்! தேயிலக் கன்னு போடுறதுக்கு இந்த மலையலுக்கெல்லாம் எங்கப்பருதான் கூனி அடிச்சாரு! நாந் தான் இந்தத் தோட்டத்துக்கு தேயிலைக் கன்னு நட்டு வளர்த்தவன்! இங்க இருக்கிற ஒவ்வொரு தேயிலக் கன்னும் எனக்குத் தெரியும்! ஒவ்வொரு மரமும் தெரியும் ஒவ்வொரு கானுக்கட்டையும் தெரியும்!” கிழவனார் மிகப்பெருமையோடு வார்த்தைகளை உதிர்த்தனர்.
உழைப்பின் மகத்துவம் உழைப்பாளிக்குத் தான் தெரியும். "அப்ப நீங்க இந்தத் தோட்டத்துல தான் பென்சன் வாங்குறிங்கன்னு நெனைக்கிறேன்!” நான் பேச்சை இழுத்தேன்.
‘ஆமாங்க ஐயாவு! நம்ம தொர. மாசம் பதினஞ்சி ரூவ்வா குடுக்குறாரு.”
‘இன்னும் கொஞ்சம் கூட்டிக் கேட்டிருக்கலாந்தானே?”
‘கேட்டேன் கூட்டிக் குடுத்தா தோட்டம் கட்டுப் படியாகாதாம்! தொர சொல்லிட்டாரு’ அவர் உதடுகள் ஏளனமாக நகைத்தன.
‘அப்படியோ?” நான் வருத்தப் பட்டேன். “ஆமாங்க ஐயாவு. சீவியம் பூராவும் இந்தத் தோட்டத்துக்காகப் பாடுபட்டேன். எனக்கு முந்தி எங்க அப்பாரு மழ வெய்யில்ன்னு பார்க்காம. ராவு பகல்ன்னு நெனைக்காம ஒழைச்சாரு. மாய்ஞ்சி, மாய்ஞ்சி இந்தத் தோட்டத்துக்கே ஒழைச்சி மாண்டுபோனாரு தோட்டத்துல ஒரு தம்பிடிகூட அவனுங்க அவருக்கு குடுக்கல்ல! அதுதான் என்னமோ சொல்லுவாங்ககளாம்' வெள்ளைக்காரன் தயவு செவுத்துல ஒட்டின சுண்ணாம்பு மாதிரி. அது எந்த நேரமோ உதுந்து கொட்டிப் போயிரும்’
அவர் மெளனமானார்.
匣
Page 35
&
மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். ‘ஒ. இந்தத் தோட்டத்துக்காக நானு எவ்வளவு ஒழைச்சி குடுத்திருப்பேன்! நானு நேர்மையான மனுசன் - நேர்மையான வேலைக்காரன்’னு அவுஹ சொன்னாஹ! நானு வயசாகி ஒடம்பு தளந்துபோனதும் அவுஹ புழிஞ்ச சக்கையைத் தூர வீசுறமாதிரி என்னைய வீசிப்புட்டாங்க.”
'ஒங்க சம்சாரத்தப் பத்தி ஏதாவது. ? அவுங்களும் சின்னத் தோட்டத்துல தான் இருக்காங்களா? நான் தயங்கியபடி கேட்டேன். அவர் முகத்தில் கருமை படர்ந்தது. அவர் மெளனமானார்.
‘‘அவ மாண்டு மடிஞ்சிட்டாளுங்க சாமீ! அவ உசுரோட இருந்திருந்தா. நா இப்படி பிச்ச எடுக்கிற அளவுக்கு வந்திருக்க மாட்டேன்.”
“அவுங்க இளம் வயசிலேயே எறந்திட்டாங்களா?”
‘இல்லீங்க ராசா! அவ கொஞ்சம் வயசுபோயித் தான் செத்தா. நல்லோரு மவராசி! பாசமுள்ள பொம்பள! எங்க சீவியத்துல நாங்க ரெண்டு பேரும் சண்ட புடிச்சதே கெடையாதுங்க! அவ ஒரு போதும் என்னையத் தவிர வேற எந்த ஆம்பள மொகத்த பார்த்ததேயில்ல! அதே மாதிரி நானும் ஒரு பொம்பள மொகத்தப் பார்த்தது கெடையாது!
‘அப்போ நீங்க ரெண்டுபேரும் ஒரு சந்தோசமான ஜோடின்னு சொல்லுங்க!” என்று கிண்டலாகச் சிரித்தேன்.
“ஆமாங்க ஐயாவு’ அவர் முகத்தில் ஒர் இன்ப மலர்ச்சி தவழ்ந்தது. நான் அவரை விட வில்லை. பேச்சைத் தொடர்ந்தேன்.
“அவுங்க ஓங்களுக்கு சொந்தமோ. ၇ား
“மொறப்பொண்ணுங்க ஐயாவு! எங்க அப்பாவூட்டு தங்கச்சி மவ! சொந்த அத்த மவ! பேரு பூங்காவனம்!”
“பூங்.கா.வ.ன.ம்” அவர் கண்களை மூடிக் கொண்டு துயரம் தோய்ந்த குரலில் மீண்டும் மீண்டும் அந்தப் பெயரை உச்சரித்தார்.
"அவ என்ன வுட்டுட்டுப் போனதோட எனக்கு கெட்டகாலம் தொடங்கிருச்சி” அவர் நா தளர்ந்தது. அவர் துயரப்படுவதை நான் விரும்பவில்லை. பேச்சை மாற்றிக் கொண்டேன்.
“ஒங்க பேரு என்னாங்க பெரியவரே?”
44
“சிவசாமி ஐயாவு!”
‘நல்லது சிவசாமி. நீங்க இந்தியாவுக்குப் போற நோக்கம் எதுவும் இருக்குதா?”
“இந்தியாவுல எனக்கு என்னாங்க சாமி இருக்கு? ஒரு புது ஊர்ல போயி இனிமே என்னால என்னாங்க செய்ய முடியும்?”
‘அப்போ சின்னத் தோட்டத்திலேயே நீங்க கடைசிக்காலம் வரைக்கும் இருக்கப் போறிங்களா. ၇•
‘ஆமாங்க! எங்க தாய், தகப்பன் இங்கேயே வாந்துமடிஞ்சி போனாங்க. நானும் இங்கேயே பொறந்து, வளந்து கண்ணாலமும் கட்டினேன்! இங்கதான் எம்புள்ளக் குட்டிகளும் பொறந்து வளந்ததுஹ! எம்பொஞ்சாதியையும் அந்தத் தேயிலத்துார்ல தான் அள்ளிவச்சேன். அந்த ஏழாம் நம்பர் மலையில எங்காயி கப்பன் பக்கத்துலத்தான் பூங்காவனமும் படுத்திருக்கா. என்னைக்காவது ஒரு நாளு நானும் கண்ண மூடிட்டா எம்மவன்மாருங்க அவுங்க பக்கத்துல என்னையும் கொண்டுபோயி வச்சிருவாங்க. நானும் ஒஞ்சிப் போய்ட்டேன். ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டன்’ து?
சிவசாமி கிழவனாரின் குரல் தழுதழுத்தது. என் மனமும் நெகிழ்ந்து வேதனைப் பட்டது.
கடைசிக் காலத்தில் சிவசாமிக்கு அவரைப் போன்ற எல்லா உழைப்பாளிகளுக்கும் இங்கே இது தான் விதியும், கதியும் என்று என் மனம் உறுத்தியது. இவரைப் போன்ற எத்தனை உழைப்பாளிகள் இப்படி வீதியில் இழுத்து வீசப் பட்டிருக்கிறார்கள்? உழைப்பு சூறையாடப் பட்ட இன்னும் எத்தனைபேர் இப்படித் தெருவுக்கு வரவிருக்கிறார்கள்? ஆமாம். ஆமாம். இங்கே வருந்தி உழலும் இந்த ஆண்களும், பெண்களும், உழைக்க மட்டுமே பிறந்திருக்கிறார்க்ள. (Yes. the men and women born to abour)
45
Page 36
மனம் இன்னும் ஓயவில்லை
O
அவர் தோட்டத்தில் பென்சன் வாங்கிக் கொண்டு வீட்டில்
இருக்கிறவர். கட்டுமஸ்தான உடல் அறுபது வயதின் நடுப் பகுதியில் இருக்கிறார். மானிறமானவர். அவரது தொங்கு மீசையைப் போல அந்த நரைத்த தாடியிலும் கறுப்பு மயிர்கள் கோடு கோடுகளாய் தொங்கின. அவர் கட்டியிருக்கும் அந்தப் பழைய வேட்டி. தூசியும் அழுக்கும் நிறைந்து செம்பட்டையாய் காட்சி தந்தது. மேலுடம்பைப் போர்வையால் போர்த்தியிருந்தார். பச்சைக் கறுப்பு நிறங்களில் பட்டை போட்ட அந்தப் போர்வை முழுக் கறுப்பாகவே இருந்தது.
இ ஸ்தோப்புச் சுவரில் சாய்ந்தபடி கந்தசாமி உட்கார்ந்திருந்தார்.
அவரது வாழ்க்கையில் இன்று, இன்னொரு பொழுதும் புலர்ந்தது. காலத்தின் சுமை அவரை ரணமாய் வருத்தியது. லயத்தில் ஆடும். சின்னஞ்சிறுசுகளின் கூச்சலும் கும்மாளமும் பீறிட்டுப் பாயும் பீலித் தண்ணிரின் இரைச்சலும் அவரது ‘நிஷ்டையைக் குலைக்க முடியவில்லை! அவர் ஆழ்ந்த மெளனத்தில் குந்தியிருந்தார். ஆடிக் குதிக்கும் அந்தச் சிறுசுகளின் மத்தியில் அவர் ஒரு தூசு!
பாதி மூடிய கணி களால் அங்கே கும் மாள மடிக் கும் ‘கொலவாரிகளை நோட்டமிட்டார். அற்பசிவன்கள்! என்ன. புதிய தலைமுறை. "பொறந்து. வளந்து. தலயெழுத்து. அப்புறம் அடுத்தவனுக்கு ஊழியஞ் செஞ்சி. கடைசியில் மண்டையப் போடுற
- 46
கூட்டம். ஒரு பொறவி!” அவர் எண்ணத்தில் இப்படியொரு தத்துவம் அந்தத் தோட்டச் சிறுசுகளின் தலைவிதியைச் சாடுகிறது!
米米米
வாசக்கூட்டி முத்தான் சரியாக பத்து மணிக்கெல்லாம் 'லயத்து ரவுண்டு வந்து விட்டான். லயத்தின் ஒரு தொங்கலிலிருந்து வேலையை ஆரம்பிக்கின்றான். கந்தசாமியின் லயத்துக்கு வந்ததும் வழக்கம் போல கதையில் இறங்கிடுவான்.
“பெரியவரே! இன்னக்கி எப்படி..? ஒடம்பு தேவலாங்கலா. ၇၈
‘ என்னாத்த தேவலாம்.? ஒடம்பு நேத்தவுட மோசமாத்தான் இருக்கு. ராத்திரி நேரத்துலத் தான் மூட்டு வலி ரொம்ப வருத்தம் குடுக்குது. ஆ. ஆ. சாமி சாமி இறுமல் வேற தொந்தரவு குடுக்குது. இதுனால மத்தவங்களுக்கும் தொந்தரவும். எரிச்சலும்! என்னா பண்றது.?”
கிழவனார் முத்தானிடம் சலித்துக் கொண்டார். முத்தான் விங்த்தியம் சொன்னான்.
“படுக்கப் போறதுக்கு முன்னுக்குக் கொஞ்சம் கருப்பந் தைலத்த எடுத்து தடவுங்க. மூட்டுக்கு. (UPLG..... நல். ல். ல். லா . பெல.ம்..ம். LD...... மா. சூடு பறக்கத் தேய்ங்க..! அப்புறம் சொல்லி வச்ச மாதிரி வடவா. பயவுட்டு வலி கிலியெல்லாம் பறந்து போயிரும் இறுமலுக்கு நம்ம மருந்துக் காரங்க கிட்ட ஏதாவது வாங்கிட்டு வந்து தர்றேன்.” முத்தான் ஆறுதல் சொன்னான்.
கந்தசாமிக்கு மெல்லிய சிரிப்பு இழையோடியது.
"ஆமாம்பா! சரியா சொன்னே. மருந்துக் காரணப் பத்தி! மருந்துக்காரன் பேரச் சொன்ன.
“எல்லா எழவும் ஞாவகத்துக்கு வருது அவென் எல்லா விசாதிக்கும் ஒரே மஞ்சக்கலர் 'தண்ணி' வச்சிருப்பான்! நாங்க சின்ன வயசுல அந்தத் தண்ணிய ‘சர்வ சஞ்சீவின்னு கிண்டல் பண்ணுவோம்! இந்தக் காலத்துப் பசங்க. அத 'சுடு தண்ணி மருந்துன்னு சொல்றாங்க! எந்தம்பி முத்து! இனிமே எனக்கு என்னாத்துக்கு மருந்து..? எனக்கு வயசு போய்க் கிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் இனிமே மருந்து கெடையாது!”
47
Page 37
‘' அப் படியெல் லாம் சொல் லா தங்க பெரியவரே ! வெள்ளக்காரன்களுக்கு வயசு போற கதையே கெடையாது! அவன் எழுவது வயசுல்ல கல்யாணங் கட்டுறான்!”
“அது அவென் திங்கிற தினி. வாழ்ற வாழ்க்கயப் பொறுத்தது! நா. என். னாத்த சாப்புடுறேன்.? காலையில பகலைக்கு. ராத்திரிக்கு. ஒரே காஞ்ச அரிசியும் கோசாக் கீரையும்” முகத்தைக் கோணிக் காட்டினார் கந்தசாமி.
“நீங்க சொல்றதும் உண்மைதான்! இருந்தாலும் ஒங்க ஒடம்பக் கொஞ்சம் ஒழுங்கா வச்சிருக்கிறதுக்கு ஏதாச்சும் சத்த்ான சாப்பாடு சாப்புடத்தான் வேணும்!”
‘பன்னெண்டு ரூபாவுல ஒருத்தன் என்னாத்த சாப்புட முடியும்?"
அவர்களின் சம்பாஷணை இடையில் முறிந்தது. பெரிய துரை 'லயத்து விஜயம் செய்ய வருகிறார்.1 முத்தான் பெரியதுரையை விட்டு மெல்ல நழுவினான்.
மேட்டு லயத்தில நாய்கள் குறைக்கின்றன. குப்பை மேட்டில் கிடந்த நாய்களெல்லாம் தங்கள் ‘வேலைகளை அப்படியப்படியே போட்டு விட்டு லயத்தைச் சுற்றி ஓடுகின்றன.
பிள்ளைகள் சந்து பொந்துகளில் நுழைந்து ஓடுகின்றனர்.
ஓட்டத்திலும் ஓட்டமாய் பாட்டோடு ஓடுகின்றனர்!
"தொரே தொரே தொரே!”
லயங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக பெரிய துரை சின்னத்துரையோடு ராஜநடை நடந்து வருகிறார்.
வாட்டசாட்டமான உயர்ந்த உருவம். அறுவது வயதைத் தாண்டிய மனிதர்.
கந்தசாமியீார் வாசலுக்கு வந்ததும் 'சலாம்' வைக்கிறார். ‘சலாங்க பெரியதுரே!’
"சலாம் கந்தசாமி! எப்படி? ஒனக்கு இப்போ வயசாச்சு இல்லையா..?”
‘ஆமாங்க தொரே! வேலவெட்டி இல்லாமலே எனக்கு வயசு போய்க்கிட்டு இருக்கு!”
48
“ஒனக்கு வேல செய்ய முடியாதுன்னு டொக்டர் சொல்றது தானே?”
"தொரே! இந்தக் கை ரெண்டுக்கும் இன்னமும் சக்தி இருக்குது. வேல குடுத்துப் பாருங்க தொரே!” w
“அது முடியாது கந்தசாமி. நீ மூளைக்கு மிஸ்டேக் பண்ணிக்கிட்டு இருக்குது. இல்லாட்டிப் போனா யாருசரி ஒங்கட தலையை மாத்தரியிருக் குது! இப்போ ரொம்ப ரொம்ப புள்ளைகள் பொடியன்மார்கள். வளந்து வாறதுதானே? அவங்களுக்கு நான் வேல பாத்துக் குடுக்க வேணுந்தானே? நீ மாதிரி வயசாள்கள் சின்ன ஆள்களுக்கு இடம் குடுக்க வேணும்!”
'அது சரிங்க தொரே! ஆனா. என்னவுட வயசுல கூடின. ஆளுக வேல செய்றாங்களே..?”
‘அப்படி ஒண்ணும் இல்லே! நான் செக் பண்ணிப் பாத்தது!”
"தொரே! என் சீவியக் காலம் முழுவதும் ஒழைச்சிக் குடுத்தேன். இந்தத் தோட்டத்துல மத்தவங்களவுட நான் நல்ல முறையில கவ்வாத்து வெட்டியிருக்கேன்.
* கானு வெட்டியிருக்கேன். முள்ளு குத்தியிருக்கேன். இப்பூ என் நெலமையப் பாருங்க. நா வேல செஞ்சி ஒரு வருசத்துக்கு மேலாச்சு. எங்கையில காப்பு காச்சிருக்கிறதப் பாருங்க! இன்னமும்
அப்படியே இருக்கு..! வயித்துப் பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். . சீவியத்த ஒட்டுறதுக்காவது ஏதாவது கொஞ்சம் குடுங்க! நீங்க குடுக்கிற. பென்சன் காசு. பன்னெண்டு ரூவாவ்ல என்னாப் பண்ண முடியும் தொரே?”
"ஒன் மகனும் மகளும் இப்போ. ஒன்னை கவனிக்க வேணும்! நீ அவங்கள நல்ல மாதிரி வளத்ததுதானே?”
6
ஒங்களுக்கு ஒழைச் சிக் குடுக் கத்தானை அவங்கள வளத்தெடுத்தேன்! எந்தொழில அவங்களுக்கு பாரம் குடுத்தேன்! இனிமே ஒருநாளும் அவங்களுக்கு சொமையா நா இருக்க மாட்டேன். தொரே”
'கந்தசாமிக்கு. கடையில ஏதாவது வேல தேடிக் கொள்ள முடியாதா?’ பெரிய துரை கேட்டார்.
'பெரிய தொரே! என் சீவியம் முழுக்க வெள்ளைக்காரன் தோட்டத்துல வேல செஞ்சிட்டு இப்பப் போய் கடைசி காலத்துல. கடையில வேல செய்ய முடியுங்களா? ஒரு நாளும் கடகாட்டு
49
Page 38
வேலைக்குப் போக மாட்டேன்’ கந்தசாமி தன் உயரத்துக்கேற்ப நிமிர்ந்து நின்றார்.
பெரியவரும் சின்னத் துரையும் வியப்போடு அவரைப் பார்த்தார்கள். “கிழட்டுப் பிசாசுக்கு வீராப்பு! இன்னம் இவன் உடம்புல இரத்தம் இருக்கு! பெரியதுரை முணுமுணுத்தார். 'யெஸ் சார்! பழைய மனுசன்கள்ல இவன் ஒரு ஆள் தான் பாக்கி ஹி ஸ் த லாஸ்ட்’ சின்னத்துரை சொன்னார். ஐ யேம். கிளேட்! இந்த பொந்தில் ஒருத்தனாவது மிஞ்சியிருக்கானே” பெரிய துரை தொடர்ந்து கதைத்தார். 'நல்லது. கந்தசாமி ஒன்பென்ஷன் பத்தி கம்பெனிக்கு எழுதி. சீக்கிரம் பதில் சொல்றேன்’
‘'நீங்க தான் எனக்கு தொரே! ஒங்களுக்குத் தான் ஒழைச்சிக் குடுத்தேன்!”
‘ஆமா அது பத்தி எனக்கு சந்தோஷம்’ ஆனா. லண்டன்ல ஒரு தொரே இருக்கார் நான் அவருக்கு எழுதி உத்தரவு வாங்க வேணும்” என்றவர் சின்னத்துரையோடு கிளம்பினார்.
அவர்கள் சென்று மறையும் வரை கந்தசாமி வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“லண்டன்ல. ஒரு தொரை இருக்கானாம்! ஹம் லண்டன்ல.! பெரிய துரையின் புதுக் கதை அவர் மனதை நெருடியது. புலம்பிக் கொண்டு இஸ்தோப்புக்கு வருகிறார். கோழிக் குடாப்பின் மேல் சாய்ந்து படுத்துக் கொள்கிறார்.
பெரிய துரையுடன் சரிக்குச் சரியாக நேர் நின்று கதைத்ததில் மனம் கொஞ்சம் சங்கடப் பட்டது. இருந்தாலும் இன்று அவரிடம் மனம் திறந்து கதைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டார். நீண்ட காலமாக அவர் மனதை வருத்திக் கொண்டிருந்த சுமையை இன்று கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டதாய் உணர்ந்தார். ஆனாலும் என்ன பிரயோசனம், ஓர் ஆறுதலுக்காவது அவரிடமிருந்து ஒரு உறுதியான வார்த்தையைப் பெறமுடியாமல் போய்விட்டதே!
மெனேஜர் துர்ை நினைத்தால். அவரால் செய்ய முடியாதது ஒன்னுமில்லை.
“அவரு அப்படி ஏன் சொல்லணும்? அவரும் நானும் லண்டன்ல இருக்கிற தொரைக்கிட்ட வேல செய்ற மாதிரி. பேசினாரே. 9. கந்தசாமி தலையைப் போட்டுக் குடைந்து கொண்டார்.
-50
இவ்வளவு காலமாய் அவர் தனக்குத் தெரிந்த ஒரு துரையிடமே வேலை செய்து வந்திருக்கிறார். ஆனால் இப்போது? முன்பின் தெரியாத ஒருவனுக் குத் தனி வாழ் நாள் முழுவதையும் வீணாக்கியிருக்கின்றோம் என்று கேள்விப்படுகிறார்! இதை இவரால் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை.
அவருக்கே அவர் மேல் ஒரு பரிவும் பச்சாதாபமும். விரக்தியும் ஏற்பட்டது.
கந்தசாமியைப் போன்ற ஓர் உழைத்துக் கொடுத்தவன் கலங்கக்
ding.......
ஜிவியத்திலேயே இப்படியானவொரு நிர்க்கதியான நிலைமைக்கு அவர் தள்ளப் படவில்லை. அவர் மனம் தளர்ந்தது. வெறுமை ஆட்கொண்டது.
அந்தக் கோழிக் குடாப்பின் மேலே அவர் தூங்கியும் தூங்காமலும் வதைப்பட்டுக் கிடந்தார்.
மாலை நேரம் ஆறு மணி.
வேலை முடிந்து பெண்கள் வெறுங் கூடைகளோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் உழைப்புக்காக காடு மேடுகள் ஏறி. இறங்கிச் சுமை சுமையாய் முதுகில் ஏந்திய கொழுந்துகளைக் கொட்டி நிறுத்து விட்டு. வெற்றுக் கூடைகளை நடைக்கேற்ப அசைய விட்டு. ஒய்யாரமாய். வீடு திரும்பும் பெண்களின் லாவணியம் கவித்துவமானது.!
கந்தசாமியின் மகளும் மருமகளும் ஸ்தோப்புக்குள் நுழைகிறார்கள்.
ه
‘அப்பா பகலைக்கு சாப்பிட்டீங்களா?” மகள் கேட்கிறாள். இல்லம்மா’ பெரியவர் மெதுவாகப் பதில் சொல்கிறார்.
வேலை விட்டு வந்த நேரம். பெண்களின் சுறுசுறுப்பு இரவுச் சாப்பாட்டுக்குக் குடும்ப வேலைகள் ஆரம்பம். அந்தி நேரத்து லயன்கள் ஆரவாரமாக இருக்கின்றன. எங்குமே துடிப்பான செயற்பாடுகள்.
பீலிக்கரையில் பெண்களின் கலகலப்பு. ‘கை கால்' கழுவிக் கொண்டும் தேய்த்துக் கொண்டும் பிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொண்டும். அலை மோதும் வேளை. 1 ஆண்கள் வெறும் மேலோடு
இஸ்தோப்புனுள் நுழைவதும் வெளியே போவதுமாக. ஆர்ப்பரிக்கும் அந்தி நேரம்.
5
Page 39
நாய்களும் கோழிகளும் வீடு திரும்பித் தங்கள் மூலைகளில் அடங்குகின்றன.
இரவின் அணைப்பில் விளக்குகள் சிரிக்கின்றன. வரிசையாய் இருக்கும் லயன் வீடுகளில் கதகதப்பும். வெதுவெதுப்பும் இதம் தருகின்றன.
இஸ்தோப்பின் இரு பக்கங்களிலும் தொங்கும் சாக்குத் திரைகளைக் கீழே இறக்கி விடுகிறாள் கந்தசாமியின் மகள். காற்றும் மழையும் தாக்காதபடி பெரியவரைக் காக்கும் மறைப்பாக அந்தப் படங்குத் திரைகள் தொங்குகின்றன.
சாக்கை இறக்கி விட்டவள் போத்தல் லாம்பைக் கொண்டு வந்து சுவரில் மாட்டுகிறாள். உலர்ந்த கம்பளியை கோழிக் குாடப்பின்மேல் விரித்துப் பெரியவருக்கு படுக்கை ஒழுங்கு செய்கிறாள்.
ck Ck>k
இரவு எட்டு மணி. "இஸ்டோர் வேலை முடிந்து மகன் வருகிறான். காம்பிராவுக்குள் நுழையமுன்னே. இஸ்தோப்பு சாக்குத் திரையை நீக்கி, எட்டிப் பார்க்கிறான்.
‘அப்பா!'
“மகென்! ஏம்பா. இவ்வளவு சொணக்கம்..?”
“கடைசி சாக்கு. ரொம்ப சொணங்கி வந்திச்சுப்பா!’
“நல்லது. சாமீ. போயி. சாப்பாட்டக் கவனி!”
கந்தசாமியின் சாப்பாடு வழக்கம் போல இஸ்தோப்பில் வைக்கப் பட்டிருக்கிறது.
அவர் மெல்ல. மெல்ல சோற்றை உருட்டி ஒவ்வொரு பிடிக்கும்
ஒருதரம் நின்று. நின்று. விழுங்கினார். சாப்பிட்டு முடிந்தது. வெற்றிலை போட்டுக் கொண்டார்.
லயங்கள். மரண அமைதியில் மூழ்கின்றன. அவர் படுக்கையில் சாயப்கிறார். காற்றுப் பலமாக வீசுகிறது. சாக்குத் திரைகள் போராடுகின்றன. தகரக் கூரையில் மழை மேளம் கொட்டுகிறது.
- 52
மழையின் இரைச்சலும் நனைந்த மண்ணின் சேற்று நெடியும் அவரின் மனத்துயரை மேலும் கிளறின. பழைய ஞாபகங்கள் நிழலாடின. அந்த நடுநிசியில் கடந்த காலங்கள் படம் கீறுகின்றன. முப்பது வருசங்களுக்கு முன்னால். அவர் தன்னையே பார்க்கிறார்!
காக்கி கால்சட்டை வெள்ளை பனியன். இடுப்பைச் சுற்றிச் சிவப்பு நிறத்தில் இடைவார் கட்டியிருக்கும், ஒரு இளம் கவ்வாத்துக்காரன்! மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் இரு நூற்றைம்பது மரம் கவ்வாத்து வெட்டி விடுவான். 'கணக்கு முடிந்ததும் நேரே கொழுந்து மடுவத்தை நோக்கி சம்சாரத்தைப் பார்க்கப் போயிடுவான்.
அங்கே கருங்குதிரைக் குட்டியைப் போல மதாளித்து வுளர்ந்த இளமைச் செழிப்போடு கமலம் காத்திருப்பாள்!
‘'நீ இன்னமும் வுட்டுக்குப் போகல்லியா..?”
“இப்ப கொஞ்சத்துக்கு முன்ன தான். கொழுந்து நிறுத்தேன்!”
*“ g-f....... வுட்டுக்குப் போவோம். நீ நேரத்தோட மலைக்கும் போகணுமில்லியா. ၇း ஜீ
இருவரும் புதிதாகக் கல்யாணம் முடித்த ஜோடிகளைப் போல நடந்து கொள்வார்கள். கரகரத்த குரலில் இனிக்க இனிக்க கதை பேசிக் கொண்டு பாதை நெடுக பவனி வருவார்கள்! வீட்டுக்கு வந்ததும் உடல் அலம்பிக் கொண்டு. அடுப்பங்கரையில் 'பலவாக்கட்டையில் நெருக்கி உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவார்கள்! ஒருவரையொருவர் ஒட்டிக் கொண்ட உடல் சூட்டில் கந்தசாமி குளிர் காய்வான். இறுக்கமான அன்பின் பிணைப்பில் அவன் இன்பம் காண்பான்.
அது தான் வாழ்க்கை! ‘காதல் என்பது நிலவைப் போன்றது. தென்றலைப் போன்றது. அது மாளிகைக்கு மட்டுமல்ல மண் குடிசைக்கும் வரும்’ என்ற உண்மை அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு நித்தியமாயிருக்கிறது.
கமலமும் கந்தசாமியும் குழந்தை குட்டிகளைக் கண்டார்கள். அவர்கள் பாசம் பகிர்ந்து கொள்ளப் பட்டன.
கமலம் குடும்பத் தலைவியானாள். குடும்பப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டாள். பெயரளவில் தந்தையான கந்தசாமி தாயாய் தாரமாய் இருந்து செயல்படும் அவளுக்கு பெருந்துணையாக நின்றான். மனைவி, பிள்ளைகள் என்ற குட்டி உலகத்துக்குள் தன்னைச் சிறை வைத்துக் கொண்டான். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால். இரவு
- 53
Page 40
நித்திரைக்குப் போகும் வரை மனைவி, பிள்ளைகளைச் சுற்றி வருவான். ஞாயிற்றுக் கிழமை ஒய்வு நாளிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாள். வெளி உலகம் அவனுக்குப் பூஜ்யம், குடும்ப வாழ்க்கை அத்துணை இன்பமயமாகியது! வாழ்க்கையில் வசந்தம் எப்போதும் வீசுவதில்லை. அங்கே துயரமும் ஒரு அத்தியாயமாகும் என்பதை மனிதன் ஏனோ மறந்து விடுகிறான்.
பத்து வருசத்துக்கு முன்பு இனம் புரியாத ஒரு பயங்கரக் காய்ச்சல் அந்தத் தோட்டத்தை உலுக்கியது. அந்த துரதிஷ்டம் நடந்தது. கந்தசாமியின் மகனும் மகளும் அடுத்தடுத்து காய்ச்சலில் விழுந்தார்கள். ‘தண்ணி வெண்ணி ஓய்வு ஒழிச்சல் என்று எதுவுமே பாராமல் அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலேயே உழன்று போனாள். பிள்ளைகள் குணமாகியதும் அவள் படுக்கையில் வீழ்ந்தாள். காய்ச்சல் அவளை ஜெயித்தது.
米米米
அந்த மங்கலான ஒளியில் கமலத்தின் முகம் தோன்றியது. கந்தசாமியின் இளமைக் காலத்து கமலம். சிறுமியாய்க் - குமரியாய் - மங்கையாய்ப் பொலிந்த வதனம்..!
தன்னைக் கொல்லும் அந்தச் சித்திரத்தைப் பார்க்க முடியாமல் மறுபக்கம் புரண்டு படுத்தார்.
அந்த இரவு அவருக்கு ஒரு நாளுமில்லாம மனச் சோர்வை கொடுத்தது. தூரத்தே. தொழிற்சாலை காவல்காரன் தட்டும் மணியோசை கேட்கிறது. கண்கள் சோர்ந்து விட்டன. தூக்கம் அவரை அரைவணைக்கிறது.
இரவும் நித்திரை கலைந்தது. வைகறைப் பொழுதில் அரும்பிய அமைதி ‘பிரட்டுத்தப்பு சத்தத்தோடு மெல்ல அகன்றது.
பெரியவர் துள்ளி எழும்புகிறார். ஹம்! பிரட்டுக் களத்துக்குப் போய் அவரால் "ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதை உணர்கின்றார்.
அவரது வாழ்க்கையில் இன்று இன்னொரு பொழுதும் புலர்ந்தது.
54
நிலவும் அவளும்
O
லைநாடு குளிர்ந்து போயிருக்கின்றது. பனி தோயப்ந்த மலைகளும், மரங்களும், புல் பூண்டுகளும் பசுமையாகி இருக்கின்றன.
மலைகளும், மேகங்களும் காதல் செய்கின்றன. மலைகள் ஆண்களாகவும், முகில்கள் பெண்களாகவும். ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்கின்றன.
தேயிலைக் காடுகளில் கற்பாறைகள் குகைகளாகவும் வீடுகளாகவும், மன்னர் காலத்துக் கோட்டைகளாகவும், தென்பட்டு - மாமல்ல புரத்துச் சூழலை நினைவூட்டிக் கொண்டிருக்கும்.
அந்தக் கல் இடுக்களில் இன்பக் கதைகள் பேசி. அவரோடு எச்சில் படுத்தி அலுவா’ சாப்பிட்ட காதல் நினைவுகளை ராமாயி கிழவி ஒருதடவை நினைத்து நெஞ்சு இனிக்க எச்சிலை விழுங்கினாள். துயரங்களைத் தோளிலும், நெஞ்சிலும், மடியிலும் சுமந்த அவளுக்குள்ளே காதலும் சுவையூட்டிய காலங்கள் இருந்திருக்கின்றன
米米米
55
Page 41
அந்த மலையுச்சியில் தான் ராமாயி வசிக்கும் பிள்ளைமடுவம் இருக்கின்றது.
தொழிலாளர் குடியிருக்கும் வீடுகளுக்கெல்லாம்.அப்பால். தூரத்தில். அந்தப் பிள்ளை மடுவம் இருக்கிறது. ஒரு கூடாரத்தின் எஞ்சிய பகுதியாக அரைகுறை நிர்மாணத்தோடு. இரு பொந்துகளைக் கொண்டிருக்கிறது. அந்தப் பிள்ளை மடுவம்.
உடைக்கப் பட்ட ஒரு பழைய லயத்தில் கழற்றிய ஒட்டைத் தகரக் கூரைகளால் மீண்டும் ஒரு கூடாரமாக அந்தப் பிள்ளை மடுவம் உருவாகியிருந்தது. எந்த நேரத்திலும் இது இடிந்து விழப்போகும் *சாய்ந்த கோபுரமாக காட்சி கொடுத்தது. கடலில் மூழ்காது கரை ஓங்கிக் கிடக்கும் கப்பலைப் போல!
குட்டிச் சுவருக்குக் கூரை மாட்டியிருக்கும் அலங்காரச் சின்னமாக அந்தப் பிள்ளை மடுவத்திற்கு ராமாயி பாஷையில் 'புள்ளக்காம்பரா' (Creche) என்ற பெயரும் உண்டு.
அந்தக் கூடாரத்தில் ஒரு நாள். ராமாயி குடியேறினாள்.
-சின்னஞ்சிறிய அறை. -சிலந்திகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த குகை.
அவளது பஞ்சை - பராரியான தட்டுமுட்டுச் சாமான்களை அள்ளி வந்திருந்தாள். எல்லாமே மட்பாண்டங்கள். ஒரு சின்னத் தகட்டுப் பெட்டி. அதை ரேங்குப் பொட்டி’ என்று செல்லமாகச் சொல்லுவாள். மற்றைவையெல்லாம் மண்சட்டிகள். நெளிந்த கிண்ணங்கள். ஒரு பழைய பாய். ஒரு போத்தல் லாம்பு. ராமாயி தகரப் பெட்டியை அந்த மூலையில் வைத்தாள். மற்றச் சொத்துக்களை எதிர்த்த மூலையில் அடுககினாள். ஜன்னல் பக்கத்தில் அடுப்பைப் போட்டாள்.
அவளது அந்திய காலத்தில். அந்த முதுமை படர்ந்த முகத்தில் ஒரு மகிழ்ச்சியிலும் எதையோ சாதித்துக் கொண்ட பெருமிதமும், நிம்மதியும் தவழ்ந்தன. ஒரு காலத்தில். ‘தென்காஞ்சி நகைகளைச் சுமந்து ‘ஆட்டிய காதுகள், இன்று வெறும் தோலாகத் தொங்கினாலும் அவைகள் அழகாகத் தொங்கின! அவளது குழிவிழுந்த கண்கள் குப்பி விளக்கின் சுடரொளியாய்ப் பிரகாசித்தன.
கூன் விழுந்து மேனி தளர்ந்து போனாலும், அந்த மூதாட்டி தனிக்காட்டு ராணியாகத் தனக்கென்று ஒரு தனிவீட்டில் சொந்தமாக வாழப் போகும் ஓர் உற்சாக உணர்வில் திளைத்துப் போயிருந்தாள்.
56
அன்றைய பொழுது மிகவேகமாகக் கழிந்தது. கொஞ்ச நேரத்திற்குள் சமையல் முடிந்தது. சோறும் கறியும் ஏழ்மையாகவிருந்தாலும். சமையல் மணம் வீசியது. அடுப்பங் கரையில் குளிர் காய்ந்து கொண்டு அமைதியாகச் சாப்பிட்டாள்.
மழையிலும், குளிரிலுமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு கூடாரம் கிடைத்திருந்தாலும். ஆள் அரவம் இல்லாமல். ஒரு குழந்தைச் சத்தமோ, குழந்தையை ஆறுதல் படுத்தும் ஒரு தாயின் குரலோ இல்லாமல். மனிதவாடையே அற்ற ஒரு ஏகாந்தச் சூழலில். அந்த இரவில் அவள் தன்னந்தனியாக இருந்தாள்.
இருள் கவ்வியதும் பிள்ளை மடுவம் சூனியமாகியது. இருட்டில் ஆவிகள் நடமாடுவது போன்ற பிரமை. கூரைக்குள் புகுந்த குளிர் காற்று உறுமல் சத்தமிட்டது. ராமாயிக் கிழவி கண்களை மூடிக் கொண்டு செத்துப் போன தன் கணவனை - தாயை - தகப்பனை - குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.
தைரியம் வந்தது. அந்தக் கிழிந்த பாயில் சாய்ந்தாள். வாழையடி வாழையாகச் சொந்த பந்தங்களோடு - இரத்த உறவுகளோடு பல பரம்பரைகளைக் கண்ட அவள். இன்று ஒண்டிக்கட்டையாக ஒதுக்கப் பட்டு விட்டாள். எந்த உறவுகளும் வயசான காலத்தில் நிராகரிக்கிப் படுவது உண்மை,
ராமாயி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சுகமாகத் தூங்கினாள்.
米米米
வைகறை புலர்ந்தது. தேயிலைச் சிட்டுக்கள் பாடின. ராமாயிக் கிழவி உச்சிமலை வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். கிழக்குச் சூரியனைக் கும்பிட்டாள்.
வேலைக்குப் புறப்படும் நேரம்.
பிள்ளைக் காரிகள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மடுவத்திற்கு வந்தார்கள். ’பட்டாபலியாக - 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்ற அவசரக் கோலத்தில் ராமாயியிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வேலைத் தலத்திற்கு ஓடினார்கள்.
-பிள்ளை மடுவத்தில் பல வகையறாக்கள்.
57
Page 42
குப்புறப் படுப்பவை, தவழுகின்றவை, நிற்பவை, நடப்பவை கிழவி ராமாயி நிற்பவைகளை நடப்பவைகளை நிலத்தில் விட்டு விட்டு, மற்றதுகளை தொட்டிலிலிட்டு ஆட்டினாள்.
- குளிர் வாடை - ஊதல் காற்று.
ராமாயி தகரக் கதவைச் சாத்தினாள்.
அவள் வயதுக்குப் பிள்ளை பராமரிக்கும் ஆயாவேலை மிகமிகக் கஷ்டமான வேலை. அழுகின்ற குழந்தைகளை ஒவ்வொரு தொட்டிலாக எவ்வளவு நேரம் நின்று கொண்டு ஆட்டுவாள். ? ராமாயிக்கு மூட்டுக்கள் வலியெடுத்தன. முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் உட்கார்ந்தவள், தொட்டில்களைக் கையால் தள்ளிக் கொண்டிருந்தாள்.
-தொட்டில்கள் ஆடின.
குழந்தைகள் தூங்குவதற்காக அவள் தாலாட்டுப் பாடினாள். அவள் தாலாட்டுப் பாடி எத்தனை காலங்கள். பழைய நினைவுகள். உணர்வுகள் குமிழிட்டன. அவள் உணர்ச்சிவசப் பட்டாள். ஒரு வெளிக்கொணர முடியாத துயரம் ததும்பியது. அவளது இளமைக் காலங்களில் - இல்லறச் சம்போகத்தில். எத்தனை கர்ப்பங்கள் - எத்தனை சிசுக்கள் - எத்தனை தடவை பால் சுரந்து உடைக்கும் மார்பகங்கள். அவள் அழுகை ஊமையாக நின்றது. அவள் தாலாட்டுப் பாடினாள்.
அந்தச் சோகத்தின் இனிமை கூடாரத்துக்குள் எதிரொலித்தது. அந்த வெறிச்சிட்டுக் கிடந்த கூடாரத்திற்கும், அந்த முதுமைத் தாயின் வெறுமை மனத்திற்கும் எத்துணை ஒற்றுமைகள்!
- தொட்டிலரில குழந்தைகள் துTங் கிவிட்டன. அவள் களைப்படைந்தாள். தரையில் விளையாடிய ‘பெருசுகள் ஆடின.
Q960T.......... ஒன்றையொன்று கட்டிப் பிடித்து. விழுந்து. எழும்பி. .L.25J. . . . . . . நீராடி. குளம்கட்டி. தரைமெழுகி. கூக்குரலிட்டன)||9تک அவைகளையும் சாந்தப் படுத்தினாள். JITLDTui.
பகல் சாப்பாட்டு நேரம் தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்க வந்தார்கள். ராமாயி அந்த இடை வெளி நேரத்திற்குள் ‘சட்டுப்புட்டுன்னு தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டாள். ஒரு கோப்பை சாயத் தண்ணியையும் தயாரித்துக் கொண்டாள்! சாப்பாடு. ராமாயிக் கிழவிக்கு கருவாடு என்றால், 'உசுரு' 'அலுவா’ சாப்பிடக் கொள்ளை
58
ஆசை ஒரு கோப்பைச் சோற்றைக் குழம்புக் கூட்டு இல்லாமல் வெறுமனே சாப்பிட்டு விடுவாள். கிளான் - கெளுத்தி - பால்சுறா - மாசிக் கருவாடு...!
இப்போதெல்லாம் அவைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட அவளுக்குத் தகுதி கிடையாது. அந்த மாதிரித் தினியையெல்லாம் யாரிடமும் கேட்பதற்கு அவளுக்கு வெட்கமாகவிருந்தது. நாக்கு "செத்துப் போனாலும் அந்தக் காலத்தில் சாப்பிட்ட ருசி. ‘வெறி' இருந்தாலும் தனது தரித்திரமான நிலையில் இன்று இப்போது யாரிடமும் கேட்க முடியுமா? எவ்வளவு மரியாதைக் குறைவான விசயம். ‘சாவப்போற வயசுக்கு ஆச என்னாத்துக்கு?
தன்மானம் அந்தத் தள்ளாத வயதுக்குள்ளும் இருந்தது.
தாய்மார்கள் வேலை முடிந்து குழந்தைகளை வீட்டுக்குத் தூக்கிச் செல்வதற்கு வந்தார்கள்.
ஆய். ஊய் என்ற குதுகலத்தோடு ராமாயிப் பாட்டியிடம் சிரித்துக் கேலி பேசிவிட்டுப் பிள்ளைகளைத் தூக்கிச் சென்றார்கள்.
பிள்ளை மடுவம் மீண்டும் மயான அமதி கொண்டது. ராமாயிக்கு அந்த மரண அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரவு சூழ்ந்தது. மனிதக் குரலைக் கேட்பதற்கு அவள் ஏங்கினாள்.
அபூர்வமாக. என்றைக்காவது இரவு நேரங்களில் அவளது பேரண் மார்கள் பிள்ளை மடுவத்தைக் கடந்து போவதுண்டு. அப்போதெல்லாம் ‘பாட்டி. ?" என்று ஒரு சத்தம் செய்துவிட்டுப் போவார்கள்.
அவள் ஏங்கினாள்.
தன் சொந்தப் பேரக்குழந்தைகள். பாசத்தோடு தன் வீட்டுக்குள் நுழைவார்கள். தன்னை விசாரிப் பார்கள். அடுப் படியில் உட்காருவார்கள். ' என்னா பாட்டி சாப்பாடு? என்று சட்டியைத் திறந்து பார்ப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தாள்.
அவை ஒன்றும் நடந்ததில்லை. அந்த நேரங்களிலெல்லாம் வேதனைச் சுமை நெஞ்சை அழுத்தும். இப்போது அவள் எவருக்குமே வேண்டப் படாதவள்.
米米米
59 - no
Page 43
ஒரு இரவு சுவற்றில் போத்தல் லாம்பு மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் இன்னும் மூடவில்லை. ராமாயி இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வெற்றிலை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
அது பெளர்ணமி இரவு. ஜன்னல் வழியாகப் பூரண நிலவு அவள் முகத்தைப் பாசத்தோடு பார்த்தது. காற்று தென்றலாக மடுவத்தை மோதிச் சென்றது. நிலவைப் பார்த்தவள். பெருமூச்செறிந்து முணுமுணுத்தாள்.
4.
ஆ. அப்பனே!
அவள் யாரை 'அப்பனே' என்றாள்?
தன்னைப் பெற்ற தகப்பனையா. ? மகனையா..? படைத்த கடவுளையா..?
இவரைத் தான். என்று எவரையுமே சொல்ல முடியாது! அவர்கள் எவருமே இப்போது அவளோடு இல்லை. எல்லோரும் எங்கோ வெகுதூரத்தில். கடவுள் கூட அப்படித்தான் அவளுக்கு
அவள் மனம் பின்னோக்கியது.
இளமைக் காலத்தில் அவள் எத்தனை முறை இப்படி நிலாவைப் பார்த்திருப்பாள்? ஐம்பது வருசங்களுக்கு முன்பு. காதல் அரும்பி மலர்ந்த காலத்தில் தனது கணவனுடன் அந்த முதல் வீட்டில் - அந்த முதல் நாளில் - அந்த இஸ்தோப்புத் திண்ணையில் அவரின்மேல் சாய்ந்த படி. புன்னகை செய்த புதுநிலவைப் பார்த்துச் சிரித்தகாலம்..! அந்த இன்ப நிலவோடு பழகிச் சிரித்த ஒர் ஆண்டுக்குப் பின்னர். ஒரு குழந்தையைப் பெற்றுக் கரங்களில் ஏந்திய அதே நிலவை மீண்டும் பார்த்து மகிழ்ந்த காலம். அந்தக் காலங்கள் முதிர்ந்து. பேரக் குழந்தைகள் அதே பெரு நிலவைப் பார்த்து விளையாடுவதில் லயித்து மகிழ்ந்த காலம்.
இன்று இங்கே. அதே நிலவைப் பார்ப்பதில் அவள் மனம் வலியெடுத்தது. மூச்சு தொண்டையை அடைக்க அவள் திணறினாள்.
தன்னைத் தவிக்கவிட்டுச் சென்ற கணவனை நினைவிலிருந்து மறக்க முயன்றாள். தங்கள் திருமணங்களுக்குப் பிறகு தன்னை நிர்க்கதியாக விட்டுச் சென்ற பிள்ளைகளை மறக்க முயன்றாள். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது பேரப்பிள்ளைகளை தன் கழுத்தைச் சுற்றியிருந்த அவர்களது பிஞ்சுக் குளிர்ந்த கரங்களை மறக்க முயன்றாள்.
60
இந்த ஜன்னலில் தன்னை எட்டிப் பார்க்கும் நிலாவைத் தவிர, இந்த உலகத்தில் எல்லாரையும் எல்லாவற்றையும் மறக்கத் துடித்தாள்.
கடைசியாக அவள் மெதுவாக எழும்பி ஜன்னலருகே சென்றாள். அவளது குமரிப் பருவத்துக் குறுஞ்சிரிப்போடு நிலவைப் பார்த்தாள். அங்கே தன் இன்பத்தையும், துயரத்தையும் இரண்டறக் கலந்து சுவைத்தாள். த
நிலவோடு ரகசியம் பேசுவது போல் தலையை ஆட்டினாள். நடுங்கும் தன் சூம்பிய கரங்களைக் கூப்பி. எல்லையற்ற அண்டவெளியில் மிதக்கும் அந்தத் தங்கத் தாம்பூலத்தைக் கும்பிட்டாள்.
உடல் தள்ளாடியது. மெல்ல ஜன்னலை இழுத்துச் சாத்தினாள்.
முகம் கண்ணிரில் நனைந்தது.
சுவரில் தொங்கிய போத்தல் லாம்பு தூங்கி வழிந்து கெண்டிருந்தது.
ராமாயி அந்த மூலையில் கிடந்த பாயில் போய் சுருண்டு கொண்டாள்.
ஊதல் காற்று வெளியே பெருமூச்சு விட்டது.
6
Page 44
நாடுமில்லை.
நாயுமில்லை.
O
யிலைத் தொழிற்சாலையின் சல்லடைக் காம்பிராவில் அவன் (8 நிற்கிறான். அந்த ஒரு நாள் தான் அவனது கடைசி நாளாக
இருந்தது.
அந்த கணப்பொழுதில் முத்தையாவைப் பொறுத்தளவில் எல்லாமே நடந்து முடிந்து விட்டன. இனிமேல். என்றுமே திரும்பிவர முடியாத. இந்த ஊரைவிட்டே போகவேண்டிய ஒரு நிலமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அவன் ஒருபோதும் இனி. இங்கே வரமாட்டான்.
இனி எதுவும் நடக்குமென்று நினைத்துக் கூட பார்க்க முடியாது! அந்தச் சல்லடைக்காம்பிராவில் உருளும் சக்கரங்களின் சுழற்சியிலேயே அவனது பதினைந்து ஆண்டுகால இளமை வாழ்வு எண்ணி முடிந்தது! எந்த நாளும். சதா. அவனது கைகள் பட்டு. பட்டு அந்தச் சல்லடைக்காம்பிராவின் கதவுப் பிடி தேய்ந்து போயிருந்தது.
முத்தையா அந்தச் சல்லடைக்காம்பிரா வேலைக்கு பதினைந்து வயதில் வந்தான். அன்று தொடக்கம் இன்று வரை அவனது வாழ்வும் உலகமும் அதே தொழிற்சாலைதான்!
கொஞ்ச நாளாய் அந்த தொழில். அவனுக்கு ஒருவித வெறுப்பும் கசப்பும் ஏற்படத் தொடங்கின. ஒரு விரக்தியான நிலையில் இருந்தான். இப்படியொரு நிலை மூன்று மாதங்களுக்கு முன்பு.
62
அதாவது அவன் மதுரைக்கு யாத்திரை போவதற்கு முன்பே ஏற்படத் தொடங்கியது.
எந்தநேரமும் சுழன்று கொண்டிருக்கும் சக்கரங்களின் ஒலமும். ஆடிக் கொண்டேயிருக்கும் சல்லடையந்திரத்தின் அதே சத்தமும் அவனைச் சலிப்படையச் செய்தன. -
ஆனால் இன்று அந்த நிலைமை வித்தியாசமாக மாறியிருந்தது! அவனிடம் ஒரு திடீர் மாற்றம் காணப்பட்டது. அங்கே இரைச்சலிடும் யந்திரங்களெல்லாம் அவனை வசப்படுத்தின! படக் படக்கென அடித்துக் கொண்டிருக்கும் அவனது நாடித் துடிப்புகளோடு அவைகளும் சேர்ந்து கொண்டன!
வேலை முடிந்து ஆண்களும் பெண்களும் தொழிற்சாலையை விட்டுப் போகும் வரை. அவன் தயங்கியபடி அங்கே நின்றான். கடைசியாக ஒரு தடவை அந்தச் சல்லடைக் காம்பிராவைப் பார்த்துவிட்டுப் போக ஆசைப்பட்டான். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவருமில்லை.
வெறிச்சோடிக் கிடந்த சல்லடைக் காம்பிராவுக்குத் திடீரென ஜீவன் வந்தது! தேயிலைத் தூளின் வாசமும், இரும்புக் கழியில் பூதங்களால் உறங்கிக் கிடந்த சக்கரங்களின் சக்தியும் வெறிகொண்டு எழுந்தன.! அவன் உடலுக்குள் அந்த ஆவேசங்கள் புகுந்தன. 1 முத்தையாவின் மனமும் உடலும் இயந்திர மயமாகி இயங்கத் துடித்தன.
அவனது பதினைந்து ஆண்டுகால வாழ்க்கை கொழுந்துகள் வாட்டமாகும் பச் சிலைத் தட்டுக்களிலும் . துTள் சலிக்கும் சல்லடைகளிலும் ஒலமிட்டுக் கொண்டிருக்கும் இயந்திர சத்தங்களிலும் இரண்டறக் கலந்து கிடந்தது.
“நாளைக்கு. இந்த நேரம்.?” மனம் குமைந்தது.
நா போய்ட்டா. எனக்குப் பதிலா. எவனாவது வருவான். வழமையா சல்லடகாம்பரா வேல நடக்கிறமாதிரி நடந்துக்கிட்டுத்தான் இருக்கும். இங்கே இருக்கிற சாமான்களெல்லாம் இருந்த மாதிரித்தான் இருக்கும். நான் மட்டும் தான் இருக்க மாட்டேன்!. இதுதான். வாழ்க்க!. ஒருத்தன் போனா. இன்னொருத்தன் வருவான்.”
அவன் மனம் நியாயப் படுத்திக் கொண்டது. ஆமாம். முத்தையா போய்விட்டால் மாத்திரம் எதுவுமே குடைசாய்ந்து போய்விடாது! இந்த உலகத்தில் ஈடு இணையற்றவர் என்று எவரும் கிடையாது.
என்ன இருந்தாலும் அந்தத் தோட்டத்தில் முத்தையா சக
- 63 -
MA .
Page 45
தொழிலாளர்களால் கைவிடப்பட்டவனாகக் கருதி வேதனைப் பட்டான். அவன் நாடி தளர்ந்தவனாய் . தொங்கிய உடலோடு தொழிற்சாலைவிட்டு திறந்த நெடுஞ்சாலை. பாதைதான் இங்கு வெட்ட வெளியாகத் திறந்து கிடக்கிறது! நாளை என்ற ஒரு நம்பிக்கையும் எதிர்காலமும் இல்லாத பாதை..!
வேலை முடிந்து வீட்டை நோக்கும் தொழிலாளர்களோடு கலந்து அவனும் நடந்தான். அவர்களின் உறவும் நெருக்கமும் இன்றோடு ஒதுங்கி விட்டதாக உணர்ந்தான். வழமையாக அவன் கண்களில் எதிர்ப்படும் காட்சிகளெல்லாம் இன்று வெறும் சூனியமாகவே தெரிந்தன. நடந்து முடிந்த பழைய நினைவுகள் அவன் மனதில் பளிச்சிட்டு மறைந்தன. ஊருக்குப் போகும் பிரயாணப் பத்திரங்களை வாங்குவதற்கு அவன் கொழும்புக்குப் போய் வந்த அந்த முதல் நாளை நினைத்துப் பார்த்தான். இமிக்கிரேசன் டிப்பாட்மென்ட் ஆப்பீஸில் நடந்த விசாரணை அவன் நினைவில் ஆடியது.
அந்த அதிகாரி. அந்த முரட்டு மனிதன். முதுகும் பிடரியும் ஒரேயளவாக ஊதிப்புடைத்திருக்கும். அந்த மனிதன் கண்களில் தீப்பிழம்பு கக்க முத்தையாவின் முன்னால் நின்றான். முத்தையாவின் பார்வையில் அந்த ஆபீசர். வலையில் சிக்கிய ஒரு காட்டுமிருகமாகவே காட்சி தந்தான்.
g56Ölgii lạ.e,ĩ.ứì60)uu (TempOfary ReSIdent PaSSpOrt) L{g}Iủ lĩì355 முத்தையா அவனிடம் போயிருந்தான். கொழும்பில் அது நடந்தது. அந்த அதிகாரி முத்தையாவைப் பார்த்ததும் பயங்கரமாகக் கர்ஜித்தான். அந்தக் கர்ஜனையைக் கண்டு அங்கு வந்திருந்த ஏனைய தொழிலாளர்கள் கூனிக் குறுகிப் போய் நின்றார்கள்.
முத்தையா தனது பத்திரங்களை அந்த அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நின்றான்.
“ஒன்ட டி. ஆர். பி.யை புதுப்பிக்க முடியாது! ஒடிப் போ!' அந்த மனிதன் உறுமினான்.
''
‘ஐயா!' முத்தையா திக்கித் திணறினான். “கோயில் கொளத்தச் சுத்திப் பாக்குறதுக்காகத் தான். நா. மதுரைக்குப் போயிட்டு வந்தேன். நா. சிலோன்ல தாங்க - இங்க தாங்க - தோட்டத்துல தாங்க பொறந்து வளர்ந்தவன்..!’ கொஞ்சம் தைரியமாக முத்தையா சொன்னான்.
‘ஆமாண்டா! ஒவ்வொரு பிச்சைக்காரனும் இனிமே சிலோன்
64
காரன் தான்! இல்லையா. ? உனக்கு இங்க செயப்றதுக்கு ஒன்னுமில்லேன்னா. வுட்ல போய் செய்யடா!” எவ்வளவு கீழ்த்தரமான பாஷையிலே. இவன் பேசுறான். ! இந்த அதிகாரியெல்லாம் ஏன் இப்பிடி கொடுரமா நடந்துக்கிறாங்க.? அந்தப் பிரஜாவுரிமை அதிகாரியும் இவனப் போலத்தான் ரொம்ப ராங்கித்தனமா. நடந்துக்கிட்டான். எங்கப்பாவ எங்க அம்மா கல்யாணம் கட்டிக்கிட்டாங்களான்னு கேட்டான்.
‘இதெல்லாம் ஒரு கேள்வியா.?”
அந்தக் கசப்பான - வெறுப்பான சம்பவங்களெல்லாம் அவன் நெஞ்சுக்குள் நுழைந்து ஓடின.
>*<>*<>*<
முத்தையாவுக்கு தன் தாயின் நினைவு வந்தது. பாசம் வடியும்
அந்தக் கருணைமுகம் அவன் முன்னால் தோன்றியது. கண்ணிர் நிறைந்த கருவிழிகள். அதில் துயரத்தோடு இழையூோடும் ஓர் 6Jp60o LDU JITGOT..... பாமரப் புன்னகை காட்சி தந்தது. வார்த்தையால்
வடிக்க முடியாத ஒரு வலி அவன் இதயத்தைத் துளைத்தது. அந்த் வேதனை அங்கே முழுதும் மின்சாரமாய் பாய்ந்தது.
அவள் ஆவிபிரிந்த அந்த நாளை இன்னும் அவன் எவ்வளவு தெளிவாக நினைவில் வைத்திருக்கிறான்.? கண்கள் வறண்டு போகும் வரை அவன் எப்படி அன்று கதறி கதறி அழுதான்.? அவன் தன் கடைசி மூச்சை உள்ளே இழுத்து விடமுடியாத வேதனையிலும் எவ்வளவு தெம்பாக - தெளிவாகப் பேசினாள்.?
‘மவனே! என்னைய நெனைச்சி ஒன் வாழ்க்கைய அழிச்சிக்காத. கண்ணு! நா. எப்பவும் ஒன்னோடத்தான் இருப்பேன் சாமி!...” அவள் கொஞ்சம் மெளனமாகிதி. தொடர்ந்தாள். ஒடம்ப நல்லாக் கவனிச்சுக்கோணும் என் ராசா. சூட்டிய நல்லாப் பார்த்துக்கணும். ஒங்கப்பாரு தான் இந்த நாய்க்குட்டிய வுட்டுக்கு கொண்டாந்தாரு. " அந்த நாய்க்குட்டி சின்னதில் மொழு மொழுவென்றிருக்கும். உடலில் அப்பி முளைத்திருக்கும் பஞ்சு முடி. சில்க் துணியைப் போல பளபளக்கும். காதுகளை மடக்கிப் பின்னால் விழுந்து. உடலை நெளித்து நெளித்து வ்ாலை ஆட்டிக் கொண்டு நிற்கும் அந்த அழகிய
காட்சி இன்னும் அவன் நினைவில் இருக்கிறது.
任萨夺向
65 Chess(St. 5Lتنبازی
Page 46
தாயின் மரணத்துக்குப் பின் முத்தையாவை விட்டு, சூட்டி பிரிவதில்லை. அவனோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டது. கந்தல் துணியில் மிஞ்சிய துண்டாய் அந்தச் சின்ன உயிர். தாயின் பிரிவிலே கிடைத்த ஒரு ஞாபகப் பரிசு!. ஓர் ஆறுதல் சொத்து! என்று முத்தையா நினைத்தான்.
சின்னாயி. சித்தப்பா எல்லாரையும் விட சூட்டியையும் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ‘எப்பிடி சூட்டிய விட்டுப் போறது.? அவன் நெஞ்சறை நிர்மூலமாக்கப் பட்ட குடிசையாய் உருவிழந்து கிடந்தது. அவனது உறவாய். உயிரால் இருந்த சூட்டியை யாரிடம் கொடுத்துவிட்டுப் போவது?
“சின்னாயி பாசமே இல்லாதது. 905. . . . . பிறவி. அவ சூட்டிய விரும்ப மாட்டா.”
பெக்டரி வொச்சர் ராமனிடம் கொடுத்துவிட்டுப் போகத் தீர்மானித்தான். இருந்தும். அவள் மனதை அறிய,
‘ராமன் நாய்க்குட்டிய கேக்கிறான்!” என்று ஜாடையாகச் சொன்னான்.
அவள் கொஞ்சங்கூட அவன் பேச்சைக் கவனிக்கவில்லை. அந்த அலட்சியத்தை. பிறகு அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வீடு வந்து விட்டது.
வாசலில் போய் நின்றான். பிறந்ததும். வளர்ந்ததும். வாழ்ந்ததுமான அந்த லயத்துக் காம்பிராவை. அந்தப் புறாக்கூட்டை விட்டு அவன் வெளியேறிவிட வேண்டும்.
முத்தையா வீட்டுக்கு வந்ததும் பயணத்துக்குரிய எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. சித்தப்பாவும் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். சின்னாயி ஒரு துணிப்பையில் அவனது சாமான்களை யெல்லாம் மூட்டை கட்டி காம்பிரா மூலையில் வைத்திருந்தாள்.
முத்தையா வழமையாக எவரிடமும் அதிகமாகக் கதைக்க மாட்டான். அது அவனது சுபாவமும் கூட. அன்றைய தினம் அவனது நாக்கு பின்னிக் கிடந்தது.
அந்த நிலையில் பரஸ்பரம் அவர்களது மனவுணர்வுகள் மெளனமாக அழுதன. சங்கடமான அந்தச் சூழலில் சித்தப்பா பேசினார்.
‘முத்தையா...! அந்த வார்த்தையில் வேதனைச் சுமை நிறைந்திருந்தது.
66
'ஒங்க பாட்டன் காலத்துலத்தான் நாங்க கிராமத்துவுட்டு சிலோனுக்கு வந்தோம். இப்ப ஏதோ தூரத்துச் சொந்தமுன்னு யாராவது அங்க இருப்பாங்க நா யாரக் கண்டேன்..? எவரக் கண்டேன்..? எல்லாப்
பாரத்தையும் கடவுள் மேல போடு. 1 திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தான். தொனை காயிதம் கன்னிகள. B66TDT. வச்சிக்க..!” என்று நா தளு தளுத்தார்.
அவரால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
சரிங்க சித்தப்பா. சரிங்க சித்தப்பா. ! என்று பலதடவை முத்தையா, சொல்லிக் கொண்டான்.
அந்த இரண்டு வார்த்தைகளில் அவன் என்ன வெல்லாமோ சொல்ல நினைக்தானோ அதில் அத்தனையும் அடங்கியிருந்தன.
பலவீனப்பட்டுப் போன மனிதர்கள் எளிய பூச்சிகளாய் இருக்கும் வரை வலிமை நிறைந்தவர்கள் மிதித்துக் கொண்டு தான் இருப்பர்.
பிரியும் நேரம் வந்தது.
முத்தையா துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு மறுகையில் சூட்டியை அணைத்தபடி மெளனமாக விடை பெற்று நடந்தான்.
பெக்டரி வொச்சர் ராமன் வீட்டை நோக்கி அந்தத் தேயிலைக் காட்டு வழியாக அவனது கால்கள் பின்னிப் பின்னி நகர்ந்தன.
பலவந்தமாக அவனை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் அந்தப் பயணத் தைப் பற்றியே தொழிலாளர்களெல் லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்தையாவைப் பலிபீடத்துக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் துயரப் பட்டார்கள்.
முத்தையா சூட்டியை இறுக அணைத்த படியே நடந்தான். சூட்டி அவன் முகத்தை அடிக்கடி முகர்ந்து பார்த்துக் கொண்டது. அதுதான் அவனோடு சேர்ந்து போகும் கடைசிப் பயணம் என்று அதுக்குத் தெரியாது.
“ஏன் நாய்க. பிரஜாவுரிம கடுதாசு வச்சிருக்கணு முன்னு அவசியப் படல்ல.? ஹாம். சில நேரம் அதுகளுக்கும் ஏதாவது ஒரு மாதிரியான கடுதாசு இருக்கும். 1 இல்லாட்டிப் போனா அதுக வாழ்க்கைக்கும் ஆபத்து வந்திரும். அப்படியான ஒரு ஆபத்து சூட்டிக்கு வந்திரக் கூடாது!” ــــــــ
Page 47
(He wondered Why dogs Were not required to get Citizenship papers. Perhaps they too had SOme kind Of paper. Other wise their life would be in danger. He hopes that Such a tragedy WOuld not befal SOOty) என்று வேண்டிக் கொண்டான். அவன் மனம் பேதலித்திருந்தது.
ராமன் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை முத்தையா கவனித்தான். இன்னும் சொற்ப நேரமே இருக்கிறது. அதற்குள் இருவரும் ஏதாவது கதைத்துக் கொள்ள வேண்டும்.
‘அந்தச் சின்ன அறையில் போட்டு அடைச்சி வச்சிருக்கிறேன்” என்று ராமன் குசுனிப்பக்கமிருந்த ஒரு அறையைக் காட்டினான்.
“அது கொஞ்ச நாளையில் பழகிவரும். நீ கவலப்படாத நா. கவனிச்சுக்குவேன்.” என்று முத்தையாவுக்கு ஆறுதல் கூறினான்.
‘'நீ நல்லா கவனிச்சுக்குவேன்னு. எனக்குத் தெரியும் ராமு!” என்றான் முத்தையா.
அவன் மெதுவாக கதவருகே சென்றான். சூட்டி அவன் உடலோடு உடலாய் ஒட்டிக் கொண்டது. அதை கீழே இறக்கிவிட்டு அந்த புறைக் குள் கூப்பிட்டான். சூட்டி நகர வில் லை! அவன் டித்துவிடுவானோ என்ற பயத்தோடு அவனை ஏக்கத்தோடு பார்த்தது. த்தையா அதைத் தடவினான். அதன் பஞ்சு மயிர்களைத் தன் க்கோடு உரசினான். அன்பாகத் தட்டிக் கொடுத்து. தூக்கி. அந்த றைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தினான். சூட்டி கதவைப் பிராண்டியது.
ளியே வருவதற்காக அலைமோதியது. கத்தியது. முனகியது.
இருவரும் மெளனமாக ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். திசாயும் நேரம் இருள் மெல்லப் படர்ந்தது.
சூட்டியின் 'அழுகுரல் தூரத்திலிருந்து கேட்கிறது. கொஞ்சம். காஞ்சமாக அந்தச் சத்தம் இப்போது. மங்கி. மறைகிறது. எங்கோ நடுராத்திரியில் அழுது ஒயும் குழந்தையின் சத்தத்தைப் போல...!
அந்தப் புலம்பல் தன் தாயின் கல்லறையிலிருந்து வருவதாய் முத்தையா கலங்கினான்.
ஆம்! சுடுகாட்டில். தேயிலைச் செடியின் அடியில். தாயின் குழிமேட்டிலிருந்து. ஒரு பிடி. மண் அவனை அழைக்கிறது.
ரயில் நிலையம்
வழமையான சந்தடி. நடமாட்டம் முத்தையா திருச்சி சந்திக்கு ஒரு டிக்கட் வாங்கினான். கடைசி மணி ஒலித்தது.
‘உள்ளுக்கு. போ. முத்தையா. கவலப் படாத.!’ ராமனின் நாக்கு தடுமாறியது. முத்தையாவைப் போலவே அவனுக்கும் ஒரே வயது. சமமாக நசுக்கப் படும் நிலை. சமமாகத் துயரப்படும் வாழ்க்கை. அந்த ஏழை நண்பனின் ஈரலும் பிடுங்கப் பட்ட நிலையில். அந்த ரயில்வே கேட்டுக்கு வெளியே சிலையாக நின்றான்.
முத்தையா‘கேட் வழியாக உள்ளே நுழைகிறான். ரயில் வந்து நிற்கிறது. பட்டாபரியா' எழும்பிய கூட்டம் ‘குய்யோ முறையோ' வென்று கூவியது. ஒரே புலம்பல். ஒரே குமுறல். ஒரே விம்மல். கட்டியணைத்துப் பிரிய முடியாமல் பிரியும் அவலம்.
ஆனால். முத்தையாவுக்காக அழுவதற்கு அங்கு யாருமில்லை. அவன் தனித்துப் போய் விட்ட ஒரு நடைப் பிணம்.
கோச்சிப் பெட்டிக்குள் ஏறினான். ஜன்னல் ஒரமாய் உட்கார்ந்தான். பக்கத்தில் இரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். மனங் குழம்பி ஜீவனற்ற ஜடமாக எதையுமே புரிந்து கொள்ளும் திரானியற்றவனாக சமைந்திருந்தான் அவன்.
ரயில் நகர்ந்தது. கிரீச்சிட்டு. கடகட. சத்தம் ராமன் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு ‘கேட்டிலே சாய்ந்தபடி நிற்கிறான். முத்தையா அவனையே பார்க்கறான். இருவரும் பரஸ்பரம் கைகளை அசைத்துக் கொள்ளவில்லை. வண்டி வேகத்தில் திமிர் எடுத்தது. சம தரை பாதையில் தடதடவென கடுரமான ராகத்தை இசைத்து ஓடியது. அந்த வண்டிச் சக்கரங்களின் ஒலம் அவனை வதைத்து அவன் வாழ்க்கையும் சக்கரமாகியதோ..?
கடைசி. ஒரு தடவையாக. ஜன்னலில் தலையை நீட்டி.
அவன் வேலை செய்த தொழிற்சாலையின் மின்சார வெளிச்சங்களைப் பார்க்கிறான்.
தொழிற்சாலையின் வெளிச்சம். ரயில் நிலையத்தில் பிரிவால் துடித்த பெண்களின் கூக்குரல். குட்டி நாயின் முனகல். எல்லாம் ஒன்று கூடி அவன் மூளையைச் சம்மட்டியால் சிதறடித்தன.
இருளின் அந்தகாரத்தில் அந்த இமிக்ரேசன் ஆப்பீசர்.! பற்களை இளித்துக் கொண்டு முத்தையா முன்தோன்றி மறைந்தான்.
“அவங்கிட்ட உண்மையைத்தான் சொன்னேன். நான் புண்ணிய
69
Page 48
யாத்திரைக்குப் போய்ட்டு வந்தேன்னு. ! இன்னைக்கு? என் வாழ்க்கையில. ஒரு நீண்ட யாத்திர ஏற்பட்டுப் போச்சு. அவன் மீண்டும் வெதும்பினான்.
ரயில் வேகமாய் ஓடியது. அவன் மீண்டும் ஜன்னல் வெளியே பார்த்தான்.
இரவு வானத்தில். விசி எறியப்பட்ட பொரியாய் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தான். அவை கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
அவன். இப்படி நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று ஒரு போதும் நினைத்தது கிடையாது. ஆனால். இன்று இந்த இரவில் அவைகளை ஏன் அப்படி ரசித்துப் பார்க்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.
மின்னி மின்னிச் சிரிக்கும் அந்த நட்சத்திரங்களிடையே அவனுடைய குட்டி நாய் சூட்டி புலம்பிக் கொண்டு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்க்கிறது! அதன் முனகல் அவனுள் எதிரொலிக்கிறது.
அந்த நேரம். அந்த இளம் பெண் . அவனருகில் அமர்ந்திருந்தவள். அவனை நெருங்கினாள்! அவளது உரசல். உடலின் கொதிப்பு. ஸ்பரிசமாக. முத்தையா திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அந்தக் கணப்பொழுதில். அவன் லயித்துக் கிடந்த
நினைவோட்டங்களெல்லாம் கலைந்து போயின.
வண்டியின் கடுர ஓட்டம்.!
சக்கரங்களின் பேரொலி.!
சல்லடைக் காம்பிரா.!
மறுநாள் விடிந்தது. சூட்டி பழைய வீட்டுக்கே ஓடிவந்துவிட்டது. சேற்றில் புரண்டு நனைந்து. அகோரமாகியிருந்தது. சின்னாயி சத்தமிட்டாள். சூட்டி பாசத்தோடு தன் சின்னப் பாதங்களை நீட்டி அவளின் மேல் தாவியது.
“சீ. ஒடு நாயே!' அவள் சீறினாள். சூட்டியின் முகம் வாடியது. இஸ்தோப்புக்கு ஓடி வந்தது. அது படுக்கும் மூலையைத் தேடியது. அந்த மூலையில் கோழிக் குடாப்பு வைக்கப் பட்டிருந்தது.
சின்னாயி சூட்டியை விரட்டினாள்- ‘தூத்தேறி ஓடு தொலைஞ்சி!” அவள் அதட்டினாள். V
சூட்டி கோழிக் குடாப்பின் அருகே வந்து படுத்துக் கொண்டது. அதன் கண்கள் அகல விரிந்து முத்தையாவைத் தேடின.
முத்தையா ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று சூட்டிக்கு இன்னும் புரியவில்லை. க்ாலைப் பொழுது உச்சியைத் தொட்டது. மலையிலிருந்தும் ஸ்டோரிலிருந்தும் பகல் சாப்பாட்டுக்காகத் தொழிலாளர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
சூட்டி இஸ்தோப்புத் திண்ணையிலிருந்தபடி றோட்டையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆவல் நிறைந்த அதன் விழிகள் அகல விரிந்திருந்தன.
முத்தையாவின் சித்தப்பா வீட்டுக்கு வந்தார். சூட்டி அவரிடம் ஒடியது. அவர் பாதங்களை முகர்ந்து வாலை ஆட்டியது. அவர் கவலையோடு சூட்டியைப் பார்த்துவிட்டு போனார். சூட்டியின் முகம் வாடியது. அந்த முனகல் மனிதப் பாஷையில் தாளாத வேதனையின் அழுகையாகும்.
அன்றைய பொழுதும் சாய்ந்தது. இருளும் படர்ந்தது.
சூட்டி வாசலில் உட்கார்ந்து அந்த நெடுஞ்சாலையையே பார்த்துக் கொண்டிருந்தது.
முத்தையா இன்னும் வரவில்லை...!
7
Page 49
பார்வதி
Lu ருவக்காற்று வீசுகின்றது.
அடைமழை தொடங்கிவிட்டது. காலை. பகல். இரவு என்று ஓயாது கொட்டுகின்றது. நனைந்த இலை குழைகளின் மணம் ஈரமண்ணின் நெடி அவன் மூக்கைத் துளைத்தன. பருவ மழையின் ‘ஓ’வென்ற இரைச்சல் அவனை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. யூனியன் அலுவலக வேலைகள் யாவும் சில நாட்களாய் அப்படி. அப்படியே. தேங்கிக் கிடக்கின்றன. ஒரே சோம்பல். எங்கும் சோகச் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த ‘நசநசத்த மழை இன்னும் தொலைந்த பாடில்லை.
ராஜன் ஜன்னல் வெளியே எட்டிப் பார்க்கிறான். வானம் இன்னும் மப்பும் மந்தாரமுமாய் இருள் கவ்விக் கிடக்கிறது. இராட்சதச் சிலந்தி வலைகளைப் போல மேகக் கூட்டங்கள் மலையிடுக்குகளில் தேங்கிக் கிடக்கின்றன எல்லாமே ஒரு துயரம் தோய்ந்த காட்சி! வானத்தில் மீண்டும் ஒரு கீறல்! இன்னொரு தடவை மழை சீறிப் பெய்கிறது.
米米米
[万]
மாவட்டக் காரியாலயம். யூனியன் அலுவலகம். அந்த ஆபிஸ் கிளார்க் முன்னறையில் இருந்தபடி ராஜனை நோக்கிச் சத்தமிட்டுச் சொன்னான்.
‘ஓங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க. சேர்!’ ராசாத் தோட்டம் நூவலையிலிருந்து வந்திருக்கேன் ஐயா ஒரு சாந்தமான பதில் கெஞ்சும் குரலில் தவழ்ந்து வந்தது. ஒரு பெண். அங்கு நின்றாள். அவளது அந்தக் குரல் அவளது வயதைக் கூறியது. சுமார் இருபது வயது இருக்குமென்று ராஜன் ஊகித்தான். அந்தக் குரலில் இனிமை இழையோடினாலும் அதில் வேதனை கலந்திருந்தது. தயங்கி நின்று கொண்டிருக்கும் அவனைப் பார்த்துக் கிளாக் உத்தியோகத் தோரணையில் கேள்வி கேட்டான்.
“ஒங்க தோட்டக் கமிட்டி தலவருக்கிட்டேயிருந்து காயிதம் கொண்டு வந்தீங்களா..?
'இது எனக்கு தெரியாதுங்கையா. மாவட்ட ஆப்பீஸ்"க்குப் போயி ஐயாவ சந்திக்கச் சொன்னாங்க. அது தான் வந்தேன். நீங்க ஒரு காயிதம் வாங்கிட்டு வந்திருக்கணுமில்லையா..? கிளாக்கரின் குரலில் கொஞ்சம் கடுமை வெளிவந்தது.
“எனக்கு அது தெரியாதுங்க! அவள் குரல் நடுங்கியது.
‘கடவுளே!. நான் எங்கப் போனாலும் துரதிஷ்டம் தொடர்ந்து கிட்டே வருதே.! அவள் வாய்க்குள்ளே வார்த்தைகளை மென்றாள். அவளது முனகல் எங்கோ நடுநிசியில் யாரோ அபயக் குரல் எழுப்புவது போல் இருந்தது.
‘அந்த ஆள உள்ளுக்கு அனுப்பு' ராஜன் கிளாக்கரைப் பார்த்து உத்தரவிட்டான்.
ஒரு நடுத்தர உயரம். தலையிலிருந்து கால்வரை கம்பளி போட்டிருந்தாள். மெதுவாக அவள் ஆபீஸ"க்குள் நுழைந்தாள். வார்த்தெடுத்த வடிவமாய். உருவம். வெளிறிப் போன முகம். நேர்த்தியான மூக்கு. கலங்கிய குளமாய்க் கருவிழிப் பார்வை. அவளுக்குள்ளே குமையும் வேதனை வெளியே தெரிந்தது.
'இப்படியொரு இளம்பெண். இந்த வயதில் இவளுக்கென்ன நடந்திருக்கும்.? சில வேளை புருஷனை இழந்திருப்பாளோ..? ஏதாவது குடும்பத்தில் துயரமான சம்பவம் நடந்திருக்கலாமோ ராஜன் குழம்பிப் போனான்.
匠丁
Page 50
அவள் கொட்டும் மழையோடு வந்து நிற்கின்றாள். மழைநீர் கம்பளி வழியாக சொட்டுச் சொட்டென வடிகிறது. அவள் நனைந்த உடைகளோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
* கம்பளி கழட்டிட்டு ஒக்காருங்க. ராஜன் சொன்னான். அவள் முகத்தில் அதே சோகம். அவள் பேசினாள்.
‘சோத்துக் கையிலே ஒன்னுஞ் செய்ய முடியாதுங்க சேர். அது வெந்து போயிருக்கு. பென்டேஜ் கட்டிய வருத்ததை கையைக் கம்பளிக் கொங்காணிக்குள் மூடியிருந்தாள். மிகவும் சிரமப்பட்டுக் கம்பளியைக் கழற்றி - பழைய வெள்ளைத் துணியினால் ஒழுங்கில்லாமல் சுற்றியிருந்தாள். தீப்புண். ரோசா நிறத்தில் சிவந்து போயிருந்தது.
“அவள் விரல்களையெல்லாம் இழந்திருக்கலாம் ராஜன் அவளது பரிதாப நிலை கண்டு ஸ்தம்பித்து நின்றான். அவனது வலது கை ஒரு கணம் மரத்துப் போய் நின்றது. அவன் வாழ்நாளில் இப்படியொரு மனதை உருக்கிய சம்பவத்தைக் கண்டதில்லை. அவளது வெந்துபோன கையின் நரக வேதனையைப் போன்ற ஒரு காட்சியை அவன் இதுவரை பார்த்ததே கிடையாது!
மழை மீண்டும் கடுமையாகியது. பெருங்காற்று அவனது ஆபீஸ"க்கு பின்னாலிருக்கும் மரங்களைப் பேயாட்டம் போடச் செய்தது. காற்றில் உதிரும் இலைகள் ஜன்னலுக்கூடாக அறைக்குள் விசிறிப் பாய்கின்றன. நனைந்த ஈரமண்ணின் நெடி. சோகமே உருவான அவளது துயரக் கண்கள். அவளை மேலும் அங்கே நிறுத்தி வைக்க ராஜன் விரும்பவில்லை. யூனியன் முறைப்பாட்டுப் புத்தகத்தைத் திறந்தான். அவளது முறைப்பாடுகளை எழுத ஆரம்பித்தான். அவள் சுருக்கமாகச் சொன்னாள்.
‘எம்பேரு பார்வதி. நூவல தோட்டத்தில அம்மாவோட இருக்கேன். அப்பா செத்துப் போயிட்டாரு. கம்மனாட்டி வாழ்க்கையில அம்மா கஷ்டப்பட்டாங்க. எனக்கு பக்கத்து தோட்டத்துல மாப்பிள பேசி கல்யாணம் முடிஞ்சி. அவரு பேரு ராமன். குடும்பத்துல ஆம்பளத் தொணை இல்லாதனால எங்க அம்மா அவர 'வீட்டுக்கு மாப்பிள்ளையா’ கூட்டிக்கிட்டு வந்தாங்க. நான் அவரு. எங்கம்மா. தங்கச்சி. எல்லாரும் ஒரே வீட்டுலத்தான் குடியிருந்தோம். அவள் இப்படி சொல்லும் போது வார்த்தைகள் தடுமாறின. மென்று மென்று பேசினாள்!
“எனக்கு கொழந்த கிடைச்சப் பொறகு. நோயில விழுந்திட்டேன். அம்மா லயத்துல என்னைய தனியா வுட்டுட்டு வேலைக்குப் போயிட்டாங்க. ரொம்ப கூதல். நான் அடுப்பங்கரையில படுத்திருந்தேன். களைச்சி போயி அப்படியே தூங்கிட்டேன். பிளங்கட்டுல நெருப்பு புடிச்சி. சோத்துக் கையி நல்லா வெந்துப் போயிருச்சி. எந்த சாமிப் புண்ணியமோ. அந்த நேரம் பார்த்து அம்மா வந்து உயிர காப்பாத்திருச்சி. ஒரு கையில வேலை செய்யமுடியாதுன் னு தோட்டத் தொரையும் வேல குடுக்க மறுத்துட்டாரு. வயது போன காலத்துல எனக்கு சோறு போட அம்மாவுக்கு முடியாது. அம்மாவுக்கு கஷ்டம் குடுக்க என்னாலேயும் முடியல. அவளின் கதையை கவனமாக கேட்ட ராஜன் குறுக்கிட்டான்.
'ஒங்க வீட்டுக்காரரு இருக்கார் தானே?’ பார்வதி தலை குனிந்தாள். நனைந்த தரையில் கண்ணிர் கொட்டியது. அவள் விம்மினாள். சேலை முந்தானையால் மூக்கைத் துடைத்தாள். அவளது கணவன் இறந்திருப்பான், என்று ராஜன் எண்ணினான். ‘ஏதாவது அவருக்கு ஆபத்து? என்று பேச்சை இழுத்தான்.
‘அப்படி ஒன்னுமில்லிங்க சாமி. ! அவரு எந் தகேச்சிய கூட்டிக்கிட்டு ஒடிப் போயிட்டாரு. நாங்க எல்லாரும் ஒரே காம்புராவிலே தான் சீவிக்கணும். ஒன்னாமண்ணா கிடக்கிறது தான் எங்க வாழ்க்க. நெருப்பும் பஞ்சும் ஒன்னா இருக்க முடியுங்களா? எப்படியோ அவுங்க ரெண்டு பேரும் நல்லாயிருந்தாப் போதும். எனக்கு இப்ப எங்க அம்மாவ காப்பாத்த தோட்டத்துல வேலை வாங்கி குடுத்தாப் போதும் சாமி” என்றாள் பார்வதி.
‘எப்படியாவது ஒங்களுக்கு உதவி செய்யப் பார்க்கிறேன். இப்ப நீங்க வீட்டுக்குப் போங்க. இருட்டுற நேரமாச்சு.” ராஜன் ஆறுதல் கூறினான். பார்வதி ஆபீஸை விட்டு அகன்றாள்.
பார்வதியின் குரலில் தொனித்த வேதனை அவளது துயரம் தோய்ந்த விழிகள். முறிந்து போன வாழ்க்கை. இளமையை ஏந்திக் கொண்டு இரண்டாங்கெட்டான் நிலையில் இவளுமொரு கம்மணாட்டியாயப் மாறிவிட்ட நிலை. இவையாவும் சேர்ந்து ராஜனின் மூளையைக் குடைந்தன.
அந்த இரவின் அடைமழை பிரளயம் எடுத்தது. எங்கும் வெள்ளப் பெருக்கு.
Page 51
ராஜன் திடீரெனப் போர்வையை உதறித் தள்ளி விட்டுப் படுக்கையில் எழும்பி உட்கார்ந்தான். அந்தக் கம்பளி கொங்காணிக்குள் இருக்கும் தீயில் எரிந்து போன பார்வதியின் ஊனமுற்ற கை முன்னே தெரிந்தது.
இரண்டு வருஷங்களுக்குப் பின்.
ஒரு தேர்தல் நாளில்.
நோர்வூட் ராசா தோட்டத்து வாக்களிப்பு நிலையம் களைகட்டி ஜொலித்தது. ராஜன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தான். யூனியன் தலைவர்கள் தேர்தலில் குதிக்கின்றார்கள் என்றால். ஜில்லாப் பிரதிநிதிகள் சாக வேண்டியது தான். அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டியது பிரதிநிதிமார்களின் தலையாய கடமையாகும்.
ஒரு பெரிய மக்கள் பட்டாளம் அந்த நீண்ட நெடுவீதியை நிறைத்து வைத்துக் கொண்டிருந்தது. அந்த தேர்தல் தினம் ஒரு திருவிழாவாக காட்சி கொடுத்தது.
அந்தப் பெருங்கூட்டத்துக்குள்ளே ராஜன் ஆச்சரியமாக யாரையோ நோக்கினான். அது பார்வதி அவள் தோளிலே ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். குறுகுறுவென விழித்துக் கொண்டிருக்கும் ஒர் அழகிய குழந்தைக் கூட்டத்தைப் பார்த்துக் கொணடிருந்தது. ராஜனை அடையாளம் கண்டு கொண்ட பார்வதி நமஸ்காரம் செய்வதற்கு கைகளைக் கூப்பினாள். அவள் முகம் மகிழ்ச்சியால் பூரித்திருந்தது.
துன்பமும் தொல்லையும் தூர விலகி விட்ட களிப்பால் அவள் மனம் மலர்ச்சியடைந்திருந்தது. அவள் வாழ்க்கை மீண்டும் மலர்வதற்கு - அவளது துயரக் கண்கள் மீண்டும் பிரகாசிப்பதற்கு இரண்டு வருஷங்கள் முடிவடைந்திருக்கின்றன.
“இது ஒங்க கொழந்தையா பார்வதி? அவளது புதிய நிலைமையை விளங்கிக் கொள்ளும் ஆர்வத்தில் வினவினான்.
“இது தங்கச்சி பெத்த புள்ளைங்க சேர்.!” அவள் பேச்சை உடனே திருத்திக் கொண்டாள். ‘இது எங்க குழந்தைங்க சேர் நானும் அவரும் இவ மேல உசுரையே வச்சிருக்கோம்! என்றாள்.
புயலுக்குப் பின் தென்றலாய் அவள் வாழ்க்கையில் புது வசந்தம் வீசுகிறது. ராஜன் மகிழ்ந்து போனான்.
‘நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் பார்வதி குடும்பத்துல எல்லாரும் ராசியா போயிட்டீங்க போல இருக்கு. ! இப்ப நீங்க ஒட்டு போடவா வந்தீங்க?"
76
‘ஆமாங்க சேர்! நம்ம சங்கத்துக்குத் தான் ஒட்டுப் போட்டேன். இதுக்காகத் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு ராசா தோட்டத்துக்கு வந்தேன்.” அவள் பூரித்துப் போனாள். சங்கத்துக்கு வாக்களித்ததில் அவளுக்கிருந்த சந்தோஷம் அளவற்றது! அவளது பெருமிதம் அவளது கண்களில் தோன்றிய பிரகாசம் சிறிது நேரம் அவளது ஊனக்கையையும் தோளில் கிடந்த குழந்தையையும் மறக்கச் செய்தது.
ஆடாது ஆசையாது நின்ற ராஜனின் உள்மனம் உரத்துப் பேசியது. ‘பாமர இதயங்கள். அவர்களது உடல் உள்ளம், வாழ்க்கை எல்லாமே ஊனமாக இருந்தாலும் அந்த மக்களின் மனிதத்துவம், அவர்களின் மனித வாஞ்சை, எவ்வளவு ஆழமாக வேரூன்றிப் போயிருக்கின்றது!”
அவளது தீப்பட்ட தழும்பு ஒரு சேதியை ராஜனுக்கு கூறியது. பார்வதி வாழ்க்கையில் வேதனை வருவதற்கும் ஒரு காலம் வந்தது. அது விலகுவதற்கும் ஒரு காலம் வந்தது.
மழை வந்து போய்விட்டது. அது போல ஒரு தேர்தலும் வந்து போய் விட்டது.1
அந்த ஒரு அந்தி நேரம். பார்வதி அடுப்பங்கரையில் அமர்ந்தபடி எரியும் ஜுவாலையை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் பின்னோக்கிச் சென்றது.
“ஏன் இந்த தடவை யாரும் நம்ம சங்கத்துலேயிருந்து ஒட்டு கேக்க வரல?” உடல் பொருள், ஆவியாக அவள் சங்கத்தின் மேல் வைத்திருக்கும் ஆசையைப் போல அந்தச் சங்கத்திலே அவளுக்கு நிகராக உண்மை மனிதர்கள். அங்கே காணப்படவில்லை! அவள் முகத்தில் ஒளிபடரச் செய்யக் கூடிய ஒன்றுமே அங்கே கிடையாது.
அடை மழையில் ஊறிய மண்ணின் நெடி அவள் நாசியைத் துளைத்தது. அவளது லயத்துக்குப் பின்னால் இருந்த மரங்களின் ஊடாகக் காற்று புலம்பியது.
பார்வதி மெளனமாக அடுப்பங்கரையில் அமர்ந்திருந்தாள். வெளியே நிகழும் அதே மழை. அதே காற்று. அதே வாடை அவளைச் சோர்வடையச் செய்கிறது.
அது மொன்சூன் காலம். பருவ மழை பருவக் காற்று.
77
Page 52
காத்தான் முதல் பத்மநாதன் வரை
باقي Gar
5 LSLS SSS SSS 0SL S qAAS SLLL
தொழிற் திணைக்களம் - லேபர் டிபார்ட்மெண்டு
மக்கள் சபை மண்டபம் விசாலமானதாக இருக்கிறது. அந்தச் சபை மண்டபத்துக்கு பிரபல்யமான பெயர் தான் கொன்பரன்ஸ் ஹோல்.
அந்த விசாலமான மண்டபத்தின் சுவர்களில் மூன்று படங்கள் வரிசைக் கிரமத்தில் மாட்டப் பட்டிருந்தன.
அவை ஒவியன் தீட்டிய சித்திரங்கள் அல்ல, புகைப்படக் கருவியால் பிடிக்கப்பட்ட படங்கள். முதலாவது படம். புற்களால் கூரை வேயப்பட்ட ஒரு மண் குடிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது படம். தகரக் கூரையுடன் செப்பனிடப்படாத கருங்கற்களால் எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம். மூன்றாவது. கொஞ்சம் நளினத்தை காட்டும் கொட்டேஜ் லயன் வீடு. مصیبر
இந்தப் படங்கள் என்ன நோக்கத்துக்காக அந்தக் கொன்பரன்ஸ் மண்டபத்தில் தொங்க விடப்பட்டிருக்கின்றன?. ஒரு பிரச்சார பின்னணி. ஒரு விளம்பர நோக்கம் ஏதோ வளர்ச்சியைக் காட்டும் விளக்கம். என்று யூகித்துக் கொள்ளலாம்.
78
தோட்டத் தொழிலாளர்களின் வசிப்பிடங்களின் பரிணாம வளர்ச்சிகளையும் , தோட்ட நிர்வாகத் திணி வீடமைப்புச் சீர்திருத்தங்களையும் அந்தப் படங்கள் காட்டிக் கொண்டிருந்தன.
மண் குடிசை. கருங்கல் கட்டிடம். கொட்டேஜ் லயன் வீடு. இந்த வளர்ச்சி மாற்றங்களினால் அங்கே வசிக்கின்ற மக்களின் வாழ்க் கையிலும் சிறிய முன்னேற்ற அடையாளங் களை காணக்கூடியதாகவிருந்தது.
米米米
பழைய கறுப்பனின் முதல் பரம்பரை.
பழைய கறுப்பனின் மகன் தான் காத்தான். அவன் தன் குடும்பத்துடன் ஒரு மண் குடிசையில் தான் வசித்து வந்தான். காத்தான் சுத்த கர்நாடகம்! பட்டிக்காட்டு மனுசன்! முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் முக்கால் உயரத்தில் வேட்டி கட்டியிருப்பான்! வேட்டி என்றால் பட்டு வேட்டியல்ல. காரிக்கன் துண்டு. s
தோட்டத்துரைக்கும் கங்காணிக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த மனிதர்கள் தங்கள் உடைகளைக் கூட அரை குறையாக, அலங்கோலமாக உடுத்த வேண்டும் என்பது ஒரு ஏகாதிபத்தியக் கட்டளை! பிரிட்டிஷ் வெள்ளைக்காரன்களின் ஏவல் நாய்களாகவிருந்த கங்காணி சக்திகள் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு அழகான பெயர் வைப்பதற்குக் கூட விடுவதில்லை. அழகாக உடுத்த விடுவதில்லை. தொழிலாளி அழகாகவே இருக்கக்கூடாது! காத்தான் சட்டை உடுத்துவதில்லை. வெறும் மேலோடு தான் இருப்பான் சிவப்புக் கரை போட்ட ஜரிகைத் துணியில் தலைப்பாகை கட்டியிருப்பான். அதற்கு கம்பிச் சால்வை என்றும் இன்னொரு பெயர். துரையிடமோ கங்காணியிடமோ கதைக்கும் போது. காத்தானைப் பார்க்க வேண்டும்! தலைப்பாகையைக் கழற்றிச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொள்வான்!
காத்தான் தன் பாட்டன் காலத்துக் கதையை இப்போது கேட்டாலும் பயப்படுகின்றான். பாட்டன் பெயர் பழைய கறுப்பன். பழைய கருப்பன் ஒரு நாள் துரையிடம் சத்தம் போட்டுக் கதைத்தான் என்பதற்காக துரை அவனை முகத்தில் அறைந்து தூக்கிப் போட்டு மிதித்து பூட்சுக் காலால் உதை உதை என்று உதைத்த சம்பவத்தைப் பல முறை பழைய கருப்பன் காத்தானிடம் கூறியிருக்கிறான். துரையின் முன்னால்
79 - -தமிம்
Page 53
எப்படி நிற்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் ‘புத்திமதி கூறிய நாட்களைக் காத்தான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
காத்தான் இன்னமும் கங் காணியின் உடைமையாகவே இருக்கின்றான். வெள்ளைக்காரனின் துண்டுமுறை (Thundu System) எப்பவோ ஒழிக்கப் பட்டிருந்தாலும் அவன் சுதந்திர மனிதனாக இன்று வரை நிமிர முடியவில்லை. அவனின் சொந்த விவகாரங்களில் கூட, சுயமாக சிந்திக்கவோ, செயல்படவோ முடியவில்லை. அவன் மனதாலும் உடலாலும் சிறைப்பிடிக்கப் பட்ட கூலியாகவே உயிர் வாழ்ந்தான் (Kathan was still the property of the head Kangany.... Although the System was abolishd sometime ago he had no mind of his own affairs. His head Kangany thought for him) abstg5 Tg) disast 355 d5s,135T606f(3u சகலமுமாகின்றான். கங்காணி அவனுக்காக உணர்கின்றான். அவனுக்காக சிந்திக்கின்றான். காத்தானுக்கு எது நல்லது எது கெட்டது என்பதைக் கங்காணியே தீர்மானிக்கின்றான். கங்காணியின் நிர்ணயமே காத்தானின் வாழ்க்கை.
கங்காணி தனது சிறிய கடையிலிருந்து ‘நல்ல சாமான்களை காத்தானுக்கு விற்கின்றான். பாஸ் புத்தகத்தில் கடன் எழுதப் படுகின்றது. கங்காணி போட்டது தான் கணக்கு வேதனையே வாழ்க்கையின் அனுபவமாகக் கொண்ட தொழிலாளியின் இதயத்திலிருந்து வெடித்து எழும்பிய ஒரு பழமொழியும் உண்டு. கங்காணி என்ற பூதத்தின் சக்தி தங்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை அந்தப் பழமொழி பறைசாற்றுகின்றது. 'கம்பளி ரெண்டு ரூபா கறுப்பு கம்பளி நாலு ரூபா கம்பளியே கறுப்பு நிறமானது அதற்கு இரண்டு விதத்தில் விலை எழுதினான், கங்காணி.
தோட்டத் துரைக்கு காத்தானின் மேல் ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. காத்தானை அவன் எப்போதும் பாராட்டியே பேசுவான் ‘காத்தான் ஒரு நல்ல கூலி என்று புகழுவான். ஒரு காளை மாட்டின் வலிமையும் ஜல்லிக் கட்டு மாட்டுடன் சண்டையிடும் நெஞ்சுரமும் கொண்டவன் காத்தான்.
கவ்வாத்து மலையில் காத்தான் ஒரு இயந்திர மனிதன். நாள் சம்பளத்துக்கு முந் நூற்றைம்பது தேயிலைச் செடிகளுக்கு குறைவில்லாமல் வெட்டிச் சாய்த்து விடுவான்.
வெள்ளைக்காரர்கள் மகாவலிக் காட்டில் வேட்டையாடுவது வழக்கம். கொலைக்கருவிகளோடு உயிர்களைக் கொல்லுவது அவர்களின் இன்பப் பொழுதுபோக்கு. துரை வேட்டையாடச் சென்றால் காத்தானும் கூடச் செல்வான். தோட்டத் துரையின் குறியில் தப்பிய காட்டெருமையைச்
*一首 ---- 80
காத்தான் விடுவானா? காட்டெருமையை விரட்டி வெறுங் கைகளினாலேயே மடக்கிப் பிடித்துவிடுவான்!
米米米
காலங்கள் கடந்தன. காத்தான் வீட்டை நினைத்தான்.
அவனுக்கு அக்கரைக்குப் போக ஆசை வந்தது. ஊருக்குப் போய் வருவதற்கு தீர்மானித்தான்.
பயண ஏற்பாடுகளைச் செய்து முடித்தவன், இங்குள்ளவர்களைப் பிரிந்து போக முடியாமல் மனம் கலங்கினான். அந்நிய மண்ணில் அவர்களோடு துணைக்குத் துணையாக நெருங்கி வாழ்ந்த உறவுகளை விட்டுப்பிரிய முடியாமல் மனம் தவித்தது. தோட்டத்து வாக்குப்படி “அக்கரைக்கு போனவன் திரும்பி வருவான்னு ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!” போனவன் போனவன் தான். வந்தவன் வந்தவன் தான். ஒப்பந்தக் கூலிகளின் விதியை நிர்ணயிப்பது வெள்ளைக்காரனும் ஏவல் கங்காணிகளுமே ஆவர்.
காத்தான் அக்கரைக்குப் போக முடிவெடுத்த நாள் முதல் மனத் திடத்தை இழந்தான். கங்காணியிடம் போய் மண்டியிட்டான். ‘சாமி நான் இந்தியா. போய் வர வரைக்கும் எங்கூடாரத்த சாமித்தான் பாதுகாத்து வச்சிருக்கணும்” என்றான். உடம்பு நரம்புகள் எல்லாம் சுருங்கி மடிந்தன.
米米米
காத்தான் அக்கரைக்குப் பயணமானான். காத்தான் ஊருக்குப் போனதும் அவனது தம்பி மகன் ராமசாமி அந்தக் கல் கூடாரத்துக்குள் குடி புகுந்தான். அந்தக் கல் கூடாரம் பத்தடி நீளம் பன்னிரெண்டு அடி அகலம் ஆகும். அவன் சுதந்திரமாக நடமாடி வாழ்வதற்கு மிக மிக விசாலமான வீட்டறை தான் அந்தப் பத்துக்கு பன்னிரெண்டு (10'X12)அறை!
ராமசாமியோடு. பொஞ்சாதி மீனாச்சியும் அந்த கல்வீட்டில்
குடித்தனம் நடத்த வந்ததில் பெருமையடைந்தாள். இப்படி ஒரு விடு கிடைத்தது அவளைப் பொறுத்தமட்டில் கடவுள் கொடுத்த வரமாகும்!
-81
Page 54
மீனாச்சி ராமசாமிக்கு ராத்திரிக்கு நெல்லு சோறு சமைத்தாள். காலையில் கட்டியான தேயிலைச் சாயம் தேநீராக கிடைத்தது.
பலசரக்கு சாமான்களைப் பாஸ் புத்தகம் போட்டு முதலாளி கடையில் வாங்கினாலும் பெரிய கங்காணியோடு ராமசாமி மிக நெருக்கமாக இருந்தான்.
வீட்டுத் தோட்டத்தில் உண்டாக்கும் எந்த மரக்கறியானாலும் காய்கனிகளானாலும் முதல் படையலாக ‘பெரியாணி என்ற பெரிய கங்காணிக்குத் தான் பூஜிக்கப்படும். அதன் பிறகுதான் வீட்டுத் தேவைக்கு உபயோகிப்பான். அவனது வாடி வழக்கத்தில் மகள் பெரிய மனுசியாகி விட்டாலும் சரி மகன் கலியாணம் முடித்தாலும் சரி பெரிய கங்காணியே முதன் முதற் கடவுளாக அவர் வீடு சென்று வணங்கி வரவேண்டும். இது ஒரு கட்டாய வழிபாடு!
என்ன. இருந்தாலும் பெரியப்பன் காத்தான் மாதிரி இல்லாமல் ராமசாமி கொஞ்சம் வித்தியாசமாக வாழ விரும்பினான். அவனது நடை உடை பாவனைகளில் மாறுதல்கள் தெரிந்தன. ட்ரில் துணியில். சட்டை. காதுகளில் தங்க கடுக்கன். இடது கையில் ஒரு மெல்லிய வெள்ளி வளையல் சில சந்தர்ப்பங்களில் கறுப்பு கோட்டும், கக்கத்தில் பழைய குடையுமாக தோற்றமளிப்பான்.
ராமசாமியின் முக்கிய பொழுதுபோக்கு நாடகம் பார்ப்பதற்கு தூரப் பயணம் போவதாகும்! அந்தக் காலத்தில் ஊர் ஊராகச் ‘சபாக்காரர்கள’ நாடகம் போடுவார்கள். நடமாடும் அந்த நாடக சபையினர் மேடையேற்றும் நாடகங்களைப் பார்ப்பதில் ராமசாமி ஒன்றையும் விட்டு வைக்கமாட்டான்.
நண்பர்களோடு பல மைல் தூரம் பயணம் செய்து நாடகத்தில் ‘நெசம் பொம்பளை நடிப்பதை பார்ப்பதில் அத்துணை ஆவல் அவனுக்கு! ஆம்பளைகள் பெண் வேசம் கட்டி நடிப்பதை பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு ரஞ்சிப்பு கிடையாது!
திருநாள் பெருநாள் காலங்களில் தோட்டங்களில் கூத்து காட்டுவார்கள். ராமசாமி நிறைய நாடகங்களைத் திருவிழாக் காலங்களில் மேடையேற்றியிருக்கின்றான். மதுரைவிரன். அரிச்சந்திரா, கோவலன். ஒட்டநாடகம் போன்ற பாரம்பரிய கூத்துக்களையெல்லாம் மேடையேற்றியதில் ராமசாமி பேர் வாங்கினான்.
இங்கே கூட நாடகத்துக்குத் தலைமை தாங்குவது "பெரியாணி
82.
என்ற பெரிய கங்காணி தான். சர்வமும் நிறைந்த இரட்சகரான பெரியகங்காணி சொந்தமாக ஒரு சங்கத்தை உண்டாக்கினார். ராமசாமியும் அந்தச் சங்கத்தின் ஒரு அங்கமாகவிருந்தான்.
இந்தச் சூழ்நிலையில் "மொக்குத்தனமாகக் கண்டியிலிருக்கும் இந்தியன் ஏஜன்டுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான் ராமசாமி.
தனது குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இந்தியன் ஏஜனி டுக்கு கடிதம் அனுப்பியதன் காரணத்தால் அவன் தோட்டத்திலிருந்து விரட்டப் பட்டான். அவனது குறைகளெல்லாம் அவனைத் தோட்டத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதோடு தீர்ந்து போயின. இந்தச் சந்தர்ப்பத்தில் அவனைப் போன்றவர்களை ரட்சிப்பதற்கு தேவதூதனாக நடேச ஐயர் என்னும் 'சுவாமி வந்துதித்தார். அவர் தோட்ட நிர்வாகிக்கும் பெரியங் கங்காணிக்கும் சிம்ம சொப்பனமாகத் தோன்றினார். கங்காணியின், துரையின் நடவடிக்கைகளுக்கெதிரான மோதலில் அவர் சவால் விட்டு நின்றார். 'ராமசாமி உங்களின் கூலிக்காரன் அல்ல! அவன் ஒரு தொழிலாளி - அவனுக்குத் தொழிற் சங்கம் வைத்துக் கொள்வதற்கு உரிமையுண்டு!” என்று முழக்கமிட்டார்.
அவர் பெரியங்கங்காணியை ஒரு பயங்கரமான புலி என்றும் கொடுரமான சுரண்டல்வாதி என்றும் வர்ணித்தார். கங்காணிக்குடி வழங்கப்படும் பென்ஸ் காசைக் கொடுக்காமல் அவனுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கும்படி ராமசாமியைத் தூண்டினார். ராமசாமியை அவனது ‘கங்காணி எஜமான்’ மாதிரியே உடுத்தி ஒப்பனை செய்தார்! ராமசாமிக்கு தலைப்பாகையைக் கட்டிவிட்டு. ஒரு கறுப்புக் கோட்டையும் மாட்டி, கையில் கைக்கம்பையும் ஒரு குடையையும் கொடுத்தார். இப்பொழுது ராமசாமி சாட்சாத் ஒரு பெரியங்கங்காணியாகவே காட்சியளித்தான்! ‘சாமி” நடேசஐயர் கங்காணியென்னும் அந்த "ஆண்டவனை சம்ஹாரம் செய்வதற்கு சூரனாக ராமசாமியை அனுப்பினார். ராமசாமியும் ஐயர் சொல்வது போலவே நடந்தான். அவனது ஆபத்பாந்தவனிடம் இன்று ஜென்ம விரோதியாக மாறினான். இனி னமும் கூட ராமசாமி ஒரு பாதி மனிதனி தானி . பெரியங்கங்காணிக்கும் இவன் சேர்ந்திருக்கும் சங்கத்துக்கும் இடையில் கடிகாரப் பென்டுலம் போல அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தான்.
>*<>*<>*く
ராமசாமிக்கு இன்னொரு தம்பியும் இருந்தான். அந்த தம்பி மகனுக்கு
83
Page 55
இரண்டு பெயர்கள் வைத்திருந்தார்கள். செக்ரோல் பெயர் நாகமுத்து. கூப்பிடுகிற பெயர் நாகலிங்கம். ஆனால் கணக்கப்பிள்ளை மட்டும் நாகமுத்து என்கின்ற நாகலிங்கத்தை நாகன் என்று தான் கூப்பிடுவார். இந்த அதிகாரிகளின் ஆணவத்தையும் மமதையையும் நாகலிங்கம் நன்றாகவே அறிந்திருந்தான். தொழிலாளிகள் சொல்வது போல ‘கூலிக்காரனுக்கு பொண்டாட்டி எதுக்கு? அவமானத்துக்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அவர்களின் விரக்தியில் வெடித்த இந்த வார்த்தையிலும் எவ்வளவு உண்மை இருக்கின்றது. அதைப் போலவே தான் கூலிக்காரனுக்கு அழகான பெயர் வைத்துக் கொள்வதற்கு கூட யோக்கியதை கிடையாது என்பதை நாகமுத்து உணர்ந்தான்.
அது ஆடை அணியும் காலம்.
நாகலிங்கம் நீண்ட கதர் ஜிப்பாவை அணியத் தொடங்கினான். பாதங்களை மறைக்கும் அளவுக்கு கதர் வேட்டியைக் கட்டிக் கொண்டான். கொண்டை கட்டும் பழக்கத்தை மாற்றினான். கொண்டையை அறுத்தான். அழகாக (சேக் வெட்டு) முடி வெட்டிக் கொண்டான். பாதங்கள் வரை வேட்டி கட்டிக் கொண்டான். சாதுரியமாக செருப்பையும் அணிந்து கொண்டான்! நாகலிங்கம் யானை மார்க் சிகரட் பாவிக்கத் தொடங்கினான். கடையில் கணக்குத் திறந்து டீ குடிக்கும் பழக்கத்தையும் உண்டு பண்ணிக் கொண்டான்.
சிரமப்பட்டு நகர பாபர் சலூனுக்குப் போய் நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்வதற்கு செய்தி பத்திரிகைகளை வாசிக்க ஆர்வம் கொண்டான்.
பாபர் சலூன் - பாபர் சலூன் தான் அரசியல் சமாசாரங்களை பேசுவதற்கும் உலக விவகாரங்களை அறிந்து கொள்வதற்கும் 'சொல்லி வைச்ச இடமாகும்!
-நாகலிங்கம்.
தோட்டங்களுக்கு அப்பால் வெளியிலும் ஒர் உலகம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு கைதித் தொழிலாளியான அவன் எவ்வளவு ஆவேசத்தோடு ஆசைப்படுகின்றான்! நாகலிங்கத்தின் மனவோட்டம் சமூகப் பார்வையை நோக்கி விசாலித்தது.
பத்தாம் திகதிஇது ஒரு திருநாள் நாகலிங்கத்துக்கு குஷியான நன்நாள் பத்தாம் திகதியில் தான், தொழிலாளருக்கு தோட்ட முதலாளி சம்பளம்
84
கொடுப்பான். அன்று ‘சம்பள வாசல் கலகலக்கும். சம்பளம் போட்டதும் நாகலிங்கம் ‘பயிஸ்கோப்' (சினிமாப்படம்) பார்க்க ஓடிடுவான்.
கிட்டப்பா, பாகவதரின் பாடல்களை அவரது குரலில் அப்படியே பாடுவான்! ரவிக்கை அணிந்து 'டோரியா சாரிகட்டி கருவிழிகளை மேயவிடும் அவனது கொழுந்தியாமார்களின் முன்னால் பாகவதராய் பாடி நிற்பதில் ஒர் எல்லையற்ற மயக்கம் அவனுக்கு வரும் இருபதைத்து வருஷங்களுக்கு முன்பு முதன் முதலாக தோட்டங்களுக்கு வந்த மிக மிருதுவான சாரிதான் 'டோரியா சாரியாகும். இந்த டோரியா சாரிதான் தோட்டங்களில் அப்போது மிகப் பிரபல்யமான கவர்ச்சியை உண்டாக்கியது!
米米米
பசுமை நிறைந்த மலைக் காடுகளைத் தென்றல் தழுவிச் சென்றது. இயற்கை அமைப்பில் மட்டும் தான் மலைநாடு ரம்பியமானது.
கற்குகை போன்ற லயன் கூடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மருவி நவீனம் கலந்த ‘கொட்டேஜ் வீடுகளாகத் தோன்றின.
இப்போதெல்லாம் நாகலிங்கம் கொஞ்சம் பெரிய மனுசனாக முதிர்ச்சியடைந்து விட்டான்.
அவனது மகன் பத்மநாதன் தகப்பனை விட ஒரு படி உயர்ந்து நின்றான். ஆமாம். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்! அவனது பழக்கவழக்கங்கள் நடவடிக்கைகள் எல்லாமே நாகலிங்கத்தை விட வித்தியாசமானவை.
>*<>米米
பத்மநாதன்
பத்மநாதன் வேலைக்காட்டுக்கு காக்கி காற்சட்டை உடுத்திச் செல்வான். முன்னைய தொழிலாளி மாதிரி தலையில் கம்பளி கொங்கானி போடுவதை வெறுத்தான். இது கம்பளி போடாத காலம். பல நிறங்களில் கொங்கானியாக பிளாஸ்டிக் ரெட்டு பாவிக்கின்றார்கள். பத்மநாதன் கம்பளிக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரெட்டை பாவிக்கின்றான். அவன் இன்று நாகரீகம் அடைந்த ஓர் அழகான இளைஞன். உடலுக்கேற்றபடி அளவு கொடுத்து டெயிலரிடம் சட்டை தைக்கக்
- 85
Page 56
கொடுத்து உடுத்துகிறான். பழைய ஜிப்பா உடைகள் எல்லாம் காலத்தால் கழிக்கப்பட்டு விட்டன. சேர்ட்'. மெல்லிய வேட்டி அல்லது சாரம் கட்டுகிறான். கையில் கைக்குட்டை சேப்பில் பவுண்டன் பேனா, கைக்கடிகாரம் புதிய மோஸ்தரில் செருப்பு. இப்படியொரு வசீகரமான வளர்ச்சியில் பத்மநாதன் தோட்ட வாழ்க்கையில் ஒரு புதிய பார்வையைக் காட்டுகின்றான்.
தினசரி செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலித் தகவல்கள் போன்ற ஊடகங்களில் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு முழு மனிதனாக அவன் நிறைவு பெற்று வளர்ந்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் போட்டார்கள். பெரிய தலைவர் வருகிறாராம். அவரைப் பார்ப்பதற்கும், அவரின் பேச்சைக் கேட்பதற்கும், பத்மநாதன் ஆர்வத்தோடு கூட்டத்துக்குச் சென்றான்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தின் செய்திகள் புதன்கிழமை பத்திரிகையில் வெளிவந்திருந்தன. கூட்டத்தில் பேசியது ஒன்று. வந்திருந்தது ஒன்று. ’ பத்திரிகைச் செய்திகள் ஏறுக்கு மாறாக வந்திருந்ததால், மனதுக்குள்ளே அவன் கோபமாக நகைத்துக் கொண்டான்.
பத்மநாதன் இன்னும் தோட்டத்தின் சுவர்களுக்கு அப்பால் வெளியில் வந்தது போதாது இன்னும் வெகு தூரம் அவன் வெளி உலகத்தை நோக்கி வர வேண்டும். இருந்தாலும்.
அந்தத் தொழிலாளியின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. வியப்புக்குரியது. பகுத்தறிவுப் பாதையில் அவன் அவனது வயதை விட கணிசமான தூரத்தைக் கடந்து வந்திருக்கின்றான்.
மூட நம்பிக்கைகளைப் பத்மநாதன் முறியடித்தான். சம்பிரதாயக் கலியானங்கள், சடங்குகளை மிருகங்களை பலிகொடுக்கும் சமய நம்பிக்கைகளை அடியோடு வெறுத்தான். தனக்கென ஒரு தனி 6) Gouj வகுத்துக் கொண்டான். தகப்பனின் கதர் உடை, தோட்டத்துரை, தோட்ட உத்தியொகத்தர்கள், சங்கத் தலைவர்கள், இவர்களுக்கெல்லாம் அப்பால் விலகி நின்றான். தன்னை எவரும் பழி சொல்லும் அளவுக்கு தனது பண்புகளை தாழ்த்திக் கொள்ளவில்லை. தோட்டத் துரைக்கோ அல்லது அங்கேயுள்ள அதிகாரம் படைத்த கும்பல்களுக்கோ சலாம் வைக்கும் பழக்கங்களையெல்லாம் பத்மநாதன் தவிடு பொடியாக்கினான்! அடுத்தவனுக்குச் சலாம் வைக்கும் புத்தியை அடியோடு அழித்தான். மாவட்ட யூனியன் காரியாலயத்து பிரதிநிதி, தலைவரைக் கூட, சந்திப்பதில் அவன் நாட்டம் கொண்டிருக்கவில்லை.
86
உலக இயக்கங்கள் எல்லாம் மாற்றம் கொண்டவை. 6T6) ஒட்டங்களால் மனித சிந்தனைகளும் செயற்பாடுகளும் மாறுதல் அடைந்து வருகின்றன.
米米米
பத்மநாதனும் அவனது நண்பர்களும் தோட்டத்தில் ஒரு நாடகம் போட்டார்கள். அந்த நாடகத்தின் பெயர் நாடற்றவர்’ தெருவெல்லாம் விளம்பரம் எழுதிப் பிரச்சாரம் செய்து கூட்டத்தைச் சேர்த்தார்கள். நாடற்றவர்’ என்ற நாடகம் முதன் முதலாகத் தோட்டப் புறத்தில் மேடையேற்றப் பட்டிருக்கும் ஒரு அரசியல் நையாண்டி நாடகமாகும். இந்த நாடகம் தோட்டத்தின் சமூக அமைப்பு முறையை விமர்சனம் செய்து காட்டியது. ‘நாடற்றவர் நாடகம் குடியுரிமைச் சட்டத்தை இகழ்ந்து காட்டியது.
வறுமையிலும் நிர்வாக ஆதிக்கத்திலும் தங்கள் ஆன்மா நெரிக்கப்பட்ட மக்களின் இருண்ட உலகத்தில் ஒரு சிறிய ஒளிக்கிற்றுப் படர்ந்து பிரகாசித்தது. இந்தப் பாமர உலகத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.
இந்தப் புதிய ஆரம்பம். ஒரு மண்குடிசையிலிருந்து ஒரு வீடு என்ற மனித வாசஸ்தலத்தை அடையும் வரை. ஒரு அரசியல் நையாண்டி நாடகத்தை அரங்கேற்றும் வரை அவர்களது சிந்தனை மலர்வதற்கு. அவர்கள் கடந்து வந்த பாதை தான் எவ்வளவு g|TULDITGOTg....! (Indeed it has been a very long way from the mud hut to the Cottage type line and a political Satire)
87
Page 57
நயினப்பன் அக்கரைக்கு (SLIIIdép T6ór () )
து ரொம்பவும் பழைய காலத்து லயம், ஒரு வரிசையில் பத்து
‘காம்பிராவும் ஒரு நீண்ட பொதுவான இஸ்தோப்பும் (Werandah)
கட்டப்பட்டிருந்தன. கூரைத் தகரத்தில் 'தார்’ (Tar) பூசப்பட்டு கன்னங்கரேலென்று காட்சி தந்தது. செப்பனிடாத கற்களால் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. பின்புறச் சுவரில் ஒவ்வொரு அறைக்கும் சிறு சிறு ஜன்னல்கள் இருந்தன. துயரத்தைப் பிரதிபலிக்கும் ஒர் மங்கலான பழுப்பு நிறத்தில் அந்த லயத்து அறைகள் காட்சி அளித்தன.
சிலர் அவைகள் பேய்கள் நடமாட்டமுள்ள இடங்கள் என்றார்கள்! அங்கு குடியிருப்போர் எல்லோரும் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ‘கோடங்கி காவல்காரன் கூடை பின்னுகிறவன்’ நயினப்பன் கங்காணி ஆகியோர் அவர்களில் குறிப்பிடக் கூடியவர்கள்.
கூடைக்காரனைத் தவிர மற்ற எல்லோரும் அதிகாலையில் வேலைக்குப்போய் அந்திக் கருக்கலில்தான் வீட்டுக்கு வருவார்கள்.
அவர்கள் எல்லோரும் கடுகதி ரயில் பயணம் செய்யும் பிரயாணிகளைப் போல பட்டாப்பரியாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் வேண்டா வெறுப்பாக சக மனிதரோடு நெருங்காமல் 'ஒட்டி உறவாடாமல பழக்கமின்றித் தனித்தனியே வாசம் செய்தார்கள்.
- கூடைக்காரன்
8
அந்த லயத்து வாசலில் உட்கார்ந்து கூடை பின்னிக் கொண்டிருந்தான். ‘லைசன் கல் பாவிய வாசல் முற்றம் ‘நீர்’ குப்பைக் கூழங்கள் நிறைந்த கானின் வீச்சம், துர்நாற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாத கூடைக்காரன் மூக்கினால் ஒரு பழங்காலத்துப் பாடலை ங்ொய், ங்ொய், என்று முனகிக்கொண்டிருந்தான். அவனது மனமும் ஆத்மாவும் அவன் பின்னிக் கொண்டிருக்கும் வெற்றுக் கூடையில் லயித்திருந்தன.
தொழிற்சாலைக் காவல்காரன் 5 மணி வரை அந்தப் படங்குக் கட்டிலில் குறட்டை விட்டுக் கொண்டிருப்பான். கோடங்கிக்காரன் ராத்திரி நேரத்தில் தான் தனது ஒய்வு நேரத்தை உபயோகிப்பான். உடுக்கை எடுத்தவன் காத்தவராயன் கதைப்பாடலை ஓங்காரமான குரலில் பாடிப்பாடி உடுக்கை அடிப்பான்.
இந்த விசித்திரமான சனங்கள் மத்தியில் நயினப்பன் கொஞ்சம் தனித்துவமாக விளங்கினான். அவன் அவனுக்காகவும் தன் மனைவிக்காகவும் என்று வாழப்பழகிக் கொண்டவன். நயினப்பனுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும்.
பழுப்பு நிற ராணுவ கோட்டை உடுத்தியிருப்பான். சிவப்புத் தலைப்பாகை வாடி வதங்கித் தொங்கும் மெல்லிய கிருதா மீசை' காதில் மங்கிய சிவப்பு நிறக் கல் பதித்த ஒரு ஜோடி கடுக்கன் இத்தியாதியாக நயினப்பன் தோற்றமளிப்பான். கணுக்கால்களுக்கு மேலே *வேட்டித்துண்டு அது எந்தக் கவலையுமின்றி அக்கடாவென்று அவன் உடம்போடு ஒட்டிக்கிடக்கும். அது வெள்ளை நிற வேட்டியா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
நயினப்பன் மனைவி கருப்பாயிக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். ஒல்லியும் நெட்டையுமானவள். மூர்க்க குணமுள்ளவள். சிவப்பு நிறச் சேலையில் அதிக நாட்டம் கொண்டவள்.
நயினப்பன், வேலைக் காட்டிலும் சரி வீட்டிலும் சரி யாருடனும் தர்க்கத்துக்கோ சண்டைக்கோ போனது கிடையாது. தானுண்டு தன் வேலை உண்டு என்று ‘சிவனே' என்றிருப்பவன். சண்டை சச்சரவுகளில் இருந்து எப்படி ஒதுங்கியிருக்க வேண்டும் என்று அறிந்திருப்பவன். வீட்டில் மனைவியோடு ஏதாவது சண்டை சச்சரவு மூண்டுவிட்டால் *சும்மாப் போடீ ஒன்னுக்கும் உதவாத பொம்பளை' என்று அவன். வேலையோடு ஒதுங்கி நின்றுகொள்வான்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொந்தரப்பு காட்டுக்கு புல்லு வெட்டப் போய்விடுவான். ஐந்தாறு பையன்களைச் 'சும்மா ஒதவிக்கு வாங்கடா என்று புல்லு வெட்டுக் காட்டுக்கு கூட்டிக்கொண்டு யோவான்.
89
Page 58
கொந்தரப்பு காட்டில் 'அஞ்சஞ்சி ரஸ்க் விஸ்கோத்தும் காட்டுத் தண்ணிரும் தான் பகல் சாப்பாடு ஐந்து மணிக்கெல்லாம் கொந்தரப்பு காட்டு வேலை முடிந்து வந்ததும் ஆளுக்கு ஐந்து பத்துச் சதக் குத்திகளைக் கொடுப்பான். ஐந்து எண் அவனது அதிர்ஷ்ட எண்ணாகும்!
நயினப்பன் வீட்டுக்கு ஒரு நாள் அவனது மகளும் மருமகனும் ‘விருந்தாளி'யாக வந்திருந்தார்கள்.
இவர்கள் இரண்டு நாட்களுக்கு மேலாகத் தங்கிவிட்டால் ‘குடும்ப பட்ஜட் ஏறிப்போகுமே என்று நயினப்பன் யோசித்தான்.
உடனே மருமகனை கொந்தரப்பு காட்டுக்கு ‘சும்மா வாங்க மாப்பிள்ள காட்ட சுத்திப்பாத்திட்டு வருவோம்' என்று கபடமாக இழுத்துச் சென்று புல்லு வெட்டு வேலையை முடித்துக்கொள்ள திட்டமிட்டான்.
நயினப்பன் புல்லு வெட்டும் சொரண்டிகளை சுனைப்பாகத் தீட்டி எடுப்பதற்குப் புறப்பட்டான். ஒரு துண்டு கோச்சு ரோட்டு இரும்பு அவனிடம் இருக்கிறது. அந்த இரும்புத்துண்டு மேலே சுரண்டியை வைத்து இருப்பக்க ஒரங்களை சுத்தியலால் ஓங்கி ஓங்கி தட்டினான். * கிளிங் கிளிங்' என்று தாள இசைகளோடு சுரண்டிகள் கூர்மையாகின.
சுரண்டியைத் தட்டிக் கொண்டே வீடடுக்குள்ளே இருக்கும். வெற்றிலைப் பெட்டியை நினைத்தான். அந்தச் சிறிய தகரப்பெட்டிக்குள் வெற்றிலைகள் இருந்தன. நேற்று ராதி திரி ஒரேயொரு வெற்றிலையைத்தான் போட்டான். இவ்வளவு நேரத்துக்குள் கருப்பாயி, மகள், மருமகன், மூன்று பேரும் சேர்ந்து பன்னிரண்டு வெற்றிலைகளை முடித்திருப்பார்கள். வெற்றிலையை நினைத்தவனுக்கு திடீரெனச் சுருட்டுக் கட்டு ஞாபகம் வந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே ஒரு கட்டுச் சுருட்டு வாங்கி வைத்திருந்தான்.
அவன் தினசரி சுருட்டுக் குடிக்கமாட்டான். அவசர தேவைக்காக மட்டுமே மிக மிக அபூர்வமாக எடுப்பான். இப்போது. மருமகன் வந்ததிலிருந்து கொஞ்சம் பயம்.
கொந்தரப்பு காட்டுக்கு போவதற்கு நேரம் ஆகிவிட்டது. சகல மரியாதையுடன் மருமகனை கூப்பிட்டான். 'தம்பி கொந்தரப்பு காட்டுக்கு போயிட்டு வருவங்களா? என்றான்.
மருமகன் புறப்பட்டான் மகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
முழு நாள் வேலை முடிந்தது. அந்தியில் வந்த நயினப்பன் ரொம்புவும் சந்தோஷப்பட்டான். 'என்னா இருந்தாலும் சொந்த பந்தங்க
90
வந்துப்போகணும். கொஞ்சம் வெத்தல. செலவு போறது பெரிய காரியமில்ல!’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டான்.
அவர்கள் எல்லோரும் அந்திக்கு ஆறு மணிக்குத்தான் பகல் சாப்பாட்டை முடித்தார்கள். ராத்திரிச் சாப்பாடு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும். பொழுது போய்விடும். அங்கேயும் சிக்கனம்தான்!
நயினப்பன் கருவாடு துண்டுகளைக் கவனித்தான். அவைகள் சரி சீராக வெட்டப்படாமல் பெரிசும் சிறுசுமாக வெட்டப்பட்டிருந்தன. இது மாபெரும். குற்றம். வீண் விரயம். செலவு. என்று முணுமுணுத்தான். அவன் பாஷையிலேயே பொஞ்சாதியைக் கூப்பிட்டு புரிய வைத்தான்.
‘என்ன பொம்பளை கருவாடு. துண்டெல்லாம் வாயைவிட பெரிசா இருக்கு!’
அப்பனின் கஞ்சத்தனத்தைப் பற்றி தாயைவிட மகளுக்கு நன்றாகத் தெரியும்.
‘யம்மோவ்! அப்பாவுக்கு பெரியத்துண்டை குடுக்கலாமா? அவருக்கு பல்லெல்லாம் ஆட்டம் கண்டிருச்சி. மருமகனுக்கு பெரியத்துண்ட போடு' என்றாள்.
நயினப்பன் மனதுக்குள் எரிந்து சாம்பலானான். அவனது தத்துவம் திடீரென்று பேசியது. அதுதான் சொல்லுவாங்க. அளவுக்கு மீறினா, அமிழ்தமும் நஞ்சு. தெரியுமா? என்றான் ஆத்திரத்தோடு.
முடிந்த மாதம் வீட்டுக்கு ‘செலவு எடுத்து வந்தபோது. கருவாடும் வாங்கி வந்திருந்தான். முழு கருவாட்டையும் வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்து பார்த்தான். கருவாட்டின் பரப்பளவு, சதைத்துண்டின் தடிப்பம் எல்லாவற்றையும் எடைப்போட்டான்.
அவனுக்கு நன்றாகத் தெரியும். அதில் எத்தனை துண்டுகள் வெட்டலாம் என்று மனக்கணக்கு வைத்திருந்தான். அந்த முழு கருவாடு ஒரு மாதம் வரை தாக்குப்பிடித்திருக்கும்!
இவ்வாறு நயினப்பன் கருவாட்டுத் துண்டுகள் மூலம் வாழ்க்கையைக் கணக்கிட்டு. பல ஆயிரங்களை சேமித்து வைத்திருந்தான். கருமியாக இருந்துகொணி டு அவன் தன்னையும் தன் மனைவியையும் கொள்ளையடிக்கின்றான் என்று அவன் ஒரு போதும் நினைக்கவில்லை தன்னுடைய சேமிப்புக்கு எந்தவித பங்கமும் நடந்து விடக்கூடாதென்று மிகமிகக் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
9. sg 二女エ安 المعوقيير
Page 59
அவன் யாரிடமும் நட்பும் சகவாசமும் செய்து கொண்டது கிடையாது. இவையெல்லாம் வீண்செலவுக்குச் காரணமாகும். அவன் யாத்திரை போனது கிடையாது. சொந்த பந்தங்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பிட்டது கிடையாது. தேனீர் கூட அருந்தியதில்லை.
பச்சைக் கருமியாகவே வாழ்க்கையைத் தள்ளினான்.
காலம் கடந்தது.
நயினப்பனுக்கு அறுபது வயது முடிந்துவிட்டது தோட்ட நிர்வாகம் அவனை ஒய்வு பெற வேண்டுமென்று வேலையிலிருந்து நிறுத்திவிட்டது.
பென்சன் பணத்தை அக்கரைக்குப் போய் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை செய்து கொடுத்து அவன் பணத்தை பத்திரமாக சொந்த கிராமத்தில் போய் சேர்ந்துக் கொள்வதற்கு வழியை ஏற்படுத்தி கொடுத்தது.
நயினப்பன் தன்னுடைய உடைமைப் பொருட்களையெல்லாம் ஒரு பழைய தகரப் பெட்டியில் அடைத்துக் கொண்டான்.
நயினப் பனை வழியனுப்புவதற்கு அவனது சகபாடிகளில் ஒருவராவது ரயில் நிலையத்துக்கு செல்லவில்லை.
அவனை வாழ்த்தி ஆசீர்வதிப்பதற்குக் கூட எவரும் முன்வரவில்லை. நயினப்பன் கவலையில் ஆழ்ந்தான். அவனது மனைவி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கோ அவளது துக்கத்தை பகிர்ந்துகொள்வதற்கோ யார் முன்வந்தார்கள்?
அவர்கள் அந்த லயத்து அறையில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்கள். அவர்களது பிரிவு. தாங்கிக்கொள்ள முடியாதது.
நயினப்பன் அக்கரைக்குப் போய் ஒரு மாதம் முடிந்துவிட்டது.
ஒருநாள். அந்திநேரம்.
அடுத்த தோட்டத்திலிருந்து நயினப்பனின் மகள் தலைவிரிகோலமாக ஒடி வந்தாள். மார்பில் அடித்துக் கொண்டு பூட்டிக் கிடந்த வீட்டுக்கதவில் தலையை இடித்துக் கொண்டு கதறினாள்.
"இடி வந்து விழுந்ததென்ன - எங்க அப்பனாரு வாசலிலே
இடி வந்து விழுந்ததென்ன. காத்தோடு போன தொங்க மூச்சு - அத
92
கைக்கோத்து புடிக்க
முடியலியே சாமீ!
பேசுங்க அப்பாவே!
என் ராசாவே!
நீங்க குடி போன
வீட்டுக்குள்ளே இருந்து
பேசுங்க ராசாவே..!"
அவள் மூடிக் கிடந்த வீட்டுக் கதவை கைகளால் அடித்துத் தலையால் முட்டி மோதிப் புலம்பினாள்.
அவளுக்கும் அங்கே ஆறுதல் சொல்வதற்கு எவரும் இல்லை.
பாவம். அக்கரைக்குப் போன நயினப்பன் தன் சொந்தக் கிராமத்தில் இறந்துவிட்டான் என்று தகவல் வந்திருந்தது.
米米米
Page 60
திருவாளர் தண்டபாணி
நம்பிக்கையும் வளர்ந்திருந்தது. அவர் அப்படியேதான் நினைத்தார். இந்தச் சமுதாயம் அவரை மதிக்க வேண்டும். அவரைத் தாங்க வேண்டும். ! என்று.
gf ருவாளர் தண்டபாணிக்கு ஒரு அசாத்தியமான தைரியமும்
அவர் இல்லாமல் இந்தச் சமுதாயம் ஒரு காலமும் நேர் வழியில்
போக முடியாது. அதற்காகத் தண்டபாணி என்ன செய்தார் தெரியுமா. ? கதிர்காமத்தில் ஒரு மடம் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார். அவரது. தந்திர மூளை வேகமாகச் சுழன்றது.
அவர் மத்திய மலைநாட்டிலும் ஊவா மாகாணத்திலும் உள்ள ‘பசையுள்ள பல கங்காணிமார்களைத் தனது அனுசரணையாளர்களாகப பிடித்துக் கொண்டார்.
தண்டபாணி கங்காணிமார்களின் வீடுகளைத் தனது உல்லாச விடுதியாகப் பாவித்தார். அவர்களின் சம்பாத்தியத்தில் ஒரு பங்கு கட்டிட நிதிக்காகச் சென்றடைந்தது.
தண்டபாணி தான் செய்யும் தொழிலுக்கு மாறான உடைகளை உடுத்தினார். அவர் ஊர் விஜயம் செய்வதற்குத் தகுந்த படி முடி
94.
வெட்டி தலை அலங்காரம் செய்து கொண்டார். அழுக்குத் தூசிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய காவி நிறத்தில் ஒரு கதர் 'ஜிப்பா’ அவரது கரடுமுரடான பயணத்திற்கேற்றவாறு பாரமான செருப்பு. 69(5 (3560) ..... ‘சூட்கேஸாக ஒரு சிறிய தகரப்பெட்டி அவரது முழுத் தோற்றத்தையும் பூரணப்படுத்திக் கொள்வதற்குப் பச்சை நிறத்தில் ஒரு சால்வையையும் தோளிலே போட்டுக்கொண்டார்.
இவர் யார். ? இவரது பூர்வீகம் என்ன என்று எவராலும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஒரு மர்மம் நிறைந்த புத்தகம். ! பணம் புழங்கும் சில முக்கிய பருவ காலங்களை மிக
அவதானமாக அறிந்து வைத்திருந்தார்
கதிர்காமம், சிவனொளிபாதமலை யாத்திரைக் காலங்கள். தோட்டங்களில் சாமி கும்பிடும். திருவிழா காலங்கள். கொழுந்து காலங்கள். இப்படியான காலங்கள் அவருக்கு வசூல்களைச் சேகரித்துக் கொடுத்தன.
- ஒரு மத்தியானம்.
தண்டபாணி பகல் சாப்பாட்டிற்காக தனது கங்கானி நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். கங்காணி தண்டபாணியை வழமை போல வரவேற்றார்.
தண்டபாணி கதிர்காமத்திற்குப் போகிற வழியில் வந்தவரா. கட்டிட வேலைகள் எல்லாம் எப்படி நடக்கின்றன. ? என்று வினவினார்.
‘கட்டிட வேலை முடிவதற்கு இன்னும் இரண்டு வருசங்களாகும். திறப்புவிழாவிற்கு இந்தியாவுக்கான ஏஜன்ட்டை அழைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார். இந்த வருசம். நிறையக் கதிர்காமப் பாடல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் புத்தக விற்பனையில் கிடைக்கும் காசெல்லாம் கட்டிட நிதிக்காகவே சேர்க்கப்படும் என்றார்.
வேலைக்காரன் சாப்பாடு ரெடி என்றான். ‘நெய் கொஞ்சம் கெடக்சா. வயித்துக்கு ரொம்ப நல்லா இருக்கும். !’ என்று வேலைக்காரனைக் கேட்டார் தண்டபாணி.
நெய் மட்டுமல்ல. தயிர், மோர். பருப்பு, ஊறுகாய், மிளகு, ரசம். ஆட்டுக் கறியெல்லாம் இருக்கிறது என்று வேலைக்காரன் விவரித்தான். தண்டபாணி வேண்டிய மட்டும் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தார்.
95
Page 61
ஒரு ஏப்பத்தோடு முன்வாசலில் அமர்ந்து சுருட்டைப் பொருத்தி ருசியாக இழுத்தார்.
'அவசரமாக. எங்கேயும் போகவேண்டியிருக்கா. ? கங்காணி தண்டபாணியை கேட்டார்.
"கொஞ்சம். அவசரந்தான் சார். பரவாயில்ல. நான் இருக்கேன். ஒங்களுக்கு செரமம் கொடுக்க விரும்பல்ல. நீங்க ஜோலிய கவனிச்சிட்டு வாங்க. !’ என்றார் தண்டபாணி.
‘அப்ப. ராத்திரிக்கு ஒங்க பாடல்கள கேட்கலாம்.!’ என்றார் கங்காணி.
கங்காணியார் வேலைதலத்திற்கு ஆயத்தமானார். தண்டபாணி புகழாரம் சூட்டுவதற்காக கொஞ்சம் வார்த்தைகளை. உதிர்த்தார்.
* வெள்ளைக் கார எஜமானி கள் ஒங் களுக்கு தங் கதி த " அள்ளிக்கொடுக்கணும் சார். ! ஒங்க மாதிரி ஆளுக இல்லாட்டிபோனா பரந்து கிடக்கும் இந்த தோட்டங்கள யார் நடத்துவாங்க..? முடிவில்லாத இந்த பச் ச செடிகளப் பார்க் கிறபோது இந்த அழகான தோட்டங்களையெல்லாம் உண்டாக்கி கொடுக்கும்படி மகான் பூர் ராமர் தான் ஒங்கள இங்க அனுப்பி வச்சிருக்காருன்னு நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு. அற்புதம். 1 ஆஹா! என்ன அற்புதம்..!" என்றார் தண்டபாணி. 翰。 ܡܝ
தண்டபாணியைக் கவனித்துக் கொள்ளும்படி வேலைக்காரப் பையனிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
>KI>KI>K
அந்தி நேரம் ஆறு மணி.
தண்டபாணி குளித்து. முழுகிப் புது உடைகள் அணிந்து மாப்பிள்ளை மாதிரி ரெடியாக இருந்தார். தண்டபாணியின் பாடல்களைப் கேட்பதற்கு பெரியங்கங்காணியாரும் வீட்டிலுள்ள ஆள்களெல்லாரும் ஆப்பிஸ் முன் அறையில் கூடினார்கள். மழை, வெயில் என்று சகல சுவாத்தியங்களுக்கும் ஈடுகொடுக்கும் அந்தத் தகரப்பெட்டியிலிருந்து மிகவும் பெருமையோடு பாடல் குறிப்பேடுகளை எடுத்தார் தண்டபாணி.
96
சோபாவில் செளகரியமாக அமர்ந்து கொண்டு பாடலை அடித் தொண்டையிலிருந்து எடுத்தார்.
சிறிது நேரத்திற்குள் கோப்பி பரிமாறப்பட்டது. கோப்பியை மெதுவாக உறிஞ்சி குடித்துவிட்டு. பாடலை மீண்டும் தொடங்கினார்.
இரவு சாப்பாட்டு நேரம் வரை பாடல் தொடர்ந்தது.
மிகத்திருப்தியான உணவுக்கும் நிம்மதியான நித்திரைக்கும் பின்னர் மறுநாள் காலை சுகமாக எழும்பினார் தண்டபாணி.
- காலை உணவு. மேசையில் நிறைந்திருந்தது. பெறுமதியான ஆகாரம்.
*காய்ந்த மாடு கம்பிலே பாய்ந்த மாதிரி’ இரண்டு தட்டு உணவுகளை ஒரு ‘பிடி’ பிடித்து. ஒரு டம்ளர் பால் காப்பியையும் அருந்தி பதினைந்து ரூபாய் அன்பளிப்போடு கிளம்பினார்.
தண்டபாணி இன்னும் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் பக்கத்து தோட்டத்துக்கு பகல் சாப்பாட்டுக்கு நேரத்தோடு செல்ல வேண்டும். இவ்வாறு இவரது வாழ்க்கை அமைதியான ஒடையாக நகர்ந்தது.
என்றோ ஒரு நாள். தொழிற்சங்க பலத்தால் தோட்டங்கள் ஆட்டம் காணும் வரை. இந்த கதாநாயகர்களின் வாழ்க்கை நிர்மலமான ஒடையாகத்தான் ஒடிக்கொண்டிருக்கும்.
- 1940 கதிர்காமம், சிவனொளி பாதமலை கடவுளர்கள் இப்போது இடம் மாறிவிட்டார்கள்.
அவர்களைத் தொழிற்சங்கக் காரியாலயங்களில் தண்டபாணி பார்த்தார்!.
தண்டபாணி தோட்டங்களை பற்றி தோட்டத்தில் உள்ளவர்களை பற்றி பரந்த அறிவு பெற்றிருப்பதை மாவட்டத்தலைவர் அறிந்தார்.
இவர் ரொம்பவும் பிரயோஜனமானவர் என்பதை உணர்ந்தார். இவருக்குள்ள திறமைக்கு பிரச்சார வேலைகளுக்குப் பொருத்தமாக இருப்பார். எவரையும் புகழ்ந்து பாடக்கூடியவர், கவர்ச்சியாகப் பேசக்கூடியவர்.
வளர வேண்டிய ஒரு தலைவனுக்கு இவரைப்போன்ற பிரச்சார பீரங்கிகள் » M N N O KO NO அவசியம் தேவை. ! என்று நினைத்தார்.
97.
Page 62
கொழும்பிலிருந்து பெரிய தலைவர் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தபோது தண்டபாணியும் அவர்களோடு இணைந்து கொண்டார்.
தண்டபாணி பிரச்சாரவேலைகளுக்கு ஒரு சிறந்த மனிதர் என்று மாவட்ட முக்கியஸ் தர்கள் பெருந்தலைவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
பெருந்தலைவர் பேசுவதற்கு எழும்பினார். வானதிரப் பரவசக் கூச்சல். கரகோசம். மகிழ்ச்சி ஆரவாரம். t பெருமை மிகுந்த பேரொலிகள் இத்யாதி தலைவர் பெருமானை வரவேற்றன.
பெருந்தலைவர் ஒரு கணம் பெருமிதத்தில் மிதந்து நின்றார். தலைவர் பேசுவதற்கு முன்பதாக பாடுவதற்கு தண்டபாணி உத்தரவு கேட்டார். பொது மக்கள் மத்தியில் தண்டபாணி ஒரு சிறந்த பாடகர்.! பாட்டாளி மக்களின் சேவகன் என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.
மாவட்டத் தலைவர்மார்கள் வியப்படைய. பெருந்தலைவர் " மகிழ்ச்சியில் திகழ. தண்டபாணி பாட்டை எடுத்துவிட்டார்.
'இது வெற்றி முரசு கொட்டும் சங்கம். எங்கள் தலைவர். வீரம் நிறைந்த ஒரு சிங்கம் - திரம் நிறைந்த ஒரு சிறுத்தை. சூரன் என்ற மலை சிறுத்தை. வெற்றி முரசு கொட்டும் சங்கம்.
பாட்டு முடிந்ததும் பாராட்டுக் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தன.
பெருந்தலைவர் அசையாது ஆசனத்தில் இருந்து கொண்டு ஆனந்தமாகக் கை தட்டினார்.
米米米
பொதுக்கூட்டம் முடிந்து திரும்பும்போது. தண்டபாணியைத் தொழிற்சங்கத்தில் ஒரு வேலையை பாரமெடுக்கமுடியுமா என்று கேட்டார்கள்.
ஒரு நடமாடும் பிரதிநிதியாக. ஒரு வரையறுக்கப்பட்ட வேதனமின்றி. செயற்பட விருப்பமில்லாமலே தண்டபாணி சம்மதம் தெரிவித்தார்.
98
தண்டபாணி தொழிற்சங்கத்தில் கடமையேற்றார்.
அவர் ஒரு இடத்தில் அமர்ந்து எந்தவித கடினமான வேலையையும்
செய்தது கிடையாது. ஒரே வகையான வேலையை அவர் விரும்பவில்லை.
இன்றைக்கு ஒரு மாவட்டம். நாளைக்கு ஒரு மாவட்டம்.
என்று போய்விடுவார். ஒரு மாற்றத்துக்காக சில பெரிய தலைவர்களுக்கு சிறு தொண்டு செய்வார்.
கூடுமான வரையில் தண்டபாணி மாவட்ட தலைவர் வீட்டில் காலை, பகல், இரவு சாப்பாட்டை வைத்துக்கொள்வார்.
சாப்பாட்டுக்கு கொஞ்ச நேரம் பிந்திவிட்டாலும் கடிந்து கொள்வர்.
* சார்! நீங்க உண்மையிலே மக்களுக்கு சேவை செய்ய
வேணுமுன்னா. ஒங்க ஒடம்ப கவனிச்சுக்கனும்! எல்லா விசயங்களுக்கும் ஒரு நேரம் இருக்கு. சாப்பாட்டை மட்டும் அசட்டை செய்யக்கூடாது.
ஞாயிற்றுக் கிழமை நாட்களில் சங்கக் காரியாலியத்தில் அங்கத்தவர்கள் அதிகமாக வந்துவிட்டால். அவர்களுக்கு அறிவுரை. கூறுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார்.
ஒரே மூச்சில். மூன்று ‘கேஸ்களை கவனித்துக்கொள்வார்.
'இது களவு கேஸ்! நம்ம சங்கத்த ஒடைக்கிறதுக்கு அந்த ராஸ்கல் பழனியாண்டி கங்காணி சோடிச்ச கேஸ்! அவன எனக்கு தெரியாதா'! அவன் தோட்டத்துல கடை ஒன்னு வச்சிகிட்டு பொய் கணக்கு எழுதி ஏழை தொழிலாளர்களை சொரண்டிகிட்டு இருக்கிறான்.
ஆப்பிஸ் க்ளாக்கர் பக்கம் திரும்பி "போலிசுக்கு கோல் எடு' என்பார்.
அடுத்த பிரச்சனையை பார்த்துவிட்டு,
‘இது பத்துச்சீட்டு கேஸ்' 'கிளாக்! இந்த முழுக் கதையையும் கேட்டு எழுது. நம்ம தலைவர் இந்தக் கேஸை கவனிப்பார். 拳 அவர் தீர்த்துவைக்காத கேஸ்ணு எங்கேயும் இருக்கா. y
தண்டபாணி கடைசி கேஸ் பக்கம் வருவார். இது குடும்பப் பிரச்சனை. தோட்டத்துக்கு போய்தான் கவனிக்கணும். 'இங்க
- 99)
Page 63
LIT ( 5 JIT60). DuJIT........ ! நாங்க அடுத்த கெழம வர்ரோம். நம்ம தலவர கூட்டிக்கிட்டு வர்ரேன். கார் அயர் காச நிதான் கட்டணும். !’ என்பார்.
பக்கத்துத் தோட்டத்தில் அங்கத்துவப் பெருக்கம் நாளில் முழு நேரமும் இருப்பார்.
மாவட்டத் தலைவருடன் தனது கங்காணி நண்பர் வீட்டுக்கு ஒரு நாள் சென்றார்.
கங்காணி நண்பர் தண்டபாணியைக் கண்டு அதிர்ந்து போனார்.
ஒரு சமூக சேவகன். இப்படி தொழிற்சங்கவாதி உடையில் வந்து நிற்கிறார்.
9b........ ! இப்ப நீங்க சங்கத்துல இருக்கிறீங்களா. ၇၊ك "
ஆமாம் சார். ! நீங்க எப்போதும் என்னை நல்லவனா தான் பாப்பீங்க.
தனது யூனியனுக்கு அங்கத்துவம் சேகரிக்கும் வேலையில் கங்காணியிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் பரஸ்பர நன்மையைக் கருதி இரவுச் சாப்பாட்டையும் கங்காணி வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொண்டார். இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்ட தண்டபாணி கங்காணியிடம் நயந்து பேசி இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொண்டார்.
படுக்கைக்குப் போகுமுன் கங்காணி நண்பரிடம் உறுதியளித்தார். எந்த சந்தர்ப்பத்திலும் கங்காணி பெரட்டு ஆட்களை தோட்ட பெரட்டுக்கு மாற்றிவிட மாட்டோம் என்றார்.
மறு நாள் காலையில் கங்காணியிடமிருந்து பரிசுப்பொருட்கள். 858........ மற்றும் பல சாமான்களோடு புறப்பட்டார்.
தொழிற்சங்கச் செயற்பாடுகள் தோட்ட நிர்வாகங்களை ஆட்டி வைத்தாலும் இவரைப் போன்றவர்களை இன்னும் ஆட்டம் காண வைக்க முடியவில்லை.
திருவாளர் தண்டபாணியின் வாழ்க்கை பொங்கி வழியும், கரை காணாத ஆறாகத்தான் ஒடிக் கொண்டிருக்கிறது.
Ck>k>k
00
நல்லடக்கம்.
ந்தவிதக் கலகலப்பும் சலசலப்பும் இல்லாமல் அந்த லயம் 6. பாழடைந்து கிடந்தது. அந்த லயத்தில் வசிக்கும் மாணிக்கம்
ஒரு கெட்ட சகுனம் தென்படுவதாக யூகித்தான் அது அவனது ஆறறிவுக்கு எப்படியோ எட்டியது.
இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஏதோ கூடாததொன்று நடக்கப் போகிறது என்று திடமாக நினைத்தான்.
- உண்மையிலேயே அதுவும் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியிருக்கும். மாணிக்கம் வீட்டுக்கு இடது பக்கம். அந்த இரட்டை லயம் இருக்கின்றது. இரட்டை லயத்துக்குப் பின்னால் இருந்து தான் அந்த அலறல் சத்தம் கேட்டது. வயதான பெண்களின் சத்தம் தான் அதிகமாகக் கேட்டது.
வழமை போலவே மாணிக் கம் அவசரப் படவில் லை. இஸ்தோப்பிலேயே நின்றுக் கொண்டிருந்தான்.
இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் கற்பனையில் கூட நினைக்காத படி வேகமாக ஓட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆண்களும் பெண்களும் மற்ற லயன்களில் இருந்து இரட்டை லயத்தை நோக்கி ஓடிக் குவிந்தனர். கூக்குரல் இடும் சத்தத்தைக் Ol
Page 64
கூர்ந்து கவனித்த மாணிக்கத்துக்கு இரண்டு வார்த்தைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
“முருகன் தாத்தா. முருகன் தாத்தா. '
அடடா..! அவரு போயிட்டாரா? மாணிக்கம் முணுமுணுத்தான்.
முருகனுக்கு எழுபது வயது. உடல் இளைத்துப் போன பெருசு.
இரட்டை லயத்தின் பின்பக்கம்தான் 'கிழவாடி மகனோட இருந்தாா. கொஞ்ச காலமாகச் சுகயினமாகத்தான் இருந்தார். தோட்ட மருந்துக்காரன் எல்லா மருந்துகள் கலந்து கலர் மிக்சரைத்தான் கொடுத்திருக்கிறான்! அதனால் தான் பெரிய மனுசன் போயிட்டான் என்று மாணிக்கம் நினைத்ததிலும் தவறில்லை.
நோயில் கிடந்து சித்திரவதைப்படுவதைவிட சாவு வருவது
நல்லதுதானே. ? பிறகு ஏன் இந்தச் சனங்களுக்கு இப்படிக் கொந்தளிப்பு. ? மாணிக்கம் மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
தோட்டங்களில் சும்மா சுற்றித் திரியும் சில ஊதாரி இளைஞர்கள் மாணிக்கத்திடம் ஓடி வந்து,
‘அன்ைனே! அண்னே! கெழவனுக்குச் சோறு திங்கிற நேரந்தான் உயிரு போயிருக்கு!’ என்றார்கள்.
‘என்னா மடத்தனம். எப்படி சாப்பாடு நஞ்சாகும்? அவன் அதிர்ச்சி அடைந்தான்.
அப்படின்னா. அவரு தான் சாந்தியடைஞ்சியிருக்காரு! நமக்குத்தான் நரகம்.
- ஆமாம். அந்த காலத்தில் திடீர் சாவு. மக்கள் மத்தியில் ஒரு பீதியை உருவாக்கியிருந்தது. அந்த பயம் இன்னும் கூட மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
திடீர் சாவு. என்பது ஒரு பூமி அதிர்ச்சி மாதிரி..!
முருகனின் திடீர் சாவை அறிந்த பெண்களும் பிள்ளைகளும் வீட்டுக்குள்ளே போய்க் கதவுகளைச் சாத்திக் கொண்டார்கள். அவர்கள் பல கதைகளைக் கேட்டிருக்கிறார்கள்.
இறந்த மனிதனின் ஆவி. பட்டப் பகலில் கூடக் காலை எட்டி எட்டி வைத்து மிகக் கர்வமாக நடந்து வருமாம். ! சில சமயங்களில் பதுங்கிப் பதுங்கி வருமாம்.
102
அதோட. செத்தவங்களை வெட்டிப் பார்ப்பாங்களாம்.
இப்படி உயிரோட இருக்கிறவர்கள் கதை கட்டிக்கொண்டு இருப்பார்கள்.
அவர்களுக்கு தொடர்ந்து இன்னும் பல தொல்லைகள் இந்த சாவினால் உண்டு.
வயதானவர்கள் நடுச்சாமம் வரை தூக்கம் மறந்து தேவாரப் புத்தகங்களை விரித்து வைத்துக் கொண்டு தெய்வப்பாடல்களைப் பாடிக்கொண்டு இருக்க வேணி டுமாம். இப்படிச் செய்வதால் சித்திரவதைக்குள்ளான மனித ஆவிகளை நடமாடவிடாமல் தடை செய்யலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.
இந்த மனக் குழப்பங்களையெல்லாம் தொடரவிடாமல் மாணிக்கம் ஆகவேண்டிய வேலைகளில் இறங்கினான்.
தோட்டத்துப் பரியாரியையும் சில பெரியாட்களையும் அழைத்து இந்தத் துக்கச் செய்தியை பெரியங்கங்காணியிடம் போய் அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெரியலூர் தான் முன் நிற்க வேண்டியவர்.
பெரியவர் தன்னிடம் வந்த கோஷ்டி மூலம் எல்லா விசயங்களையும் விளங்கிக் கொண்டார்.
‘நல்லது. 1 போய். மாணிக்கத்தை ஒடனே அனுப்புங்க. ' என்றார் கங்காணி.
15 நிமிடத்துக்குள் பெரியவர் முன்னால் மாணிக்கம் வந்து நின்றான். மாணிக்கம் கைகளைக் கட்டிக் கொண்டு. தலையை ஒரு மாதிரிச் சரித்துக் கொண்டு பெரியவர் என்ன சொல்லப் போகிறார் என்று விறைத்து நின்றான்.
அப்பு. கூப்பிட்டீங்களாமே..? ஆமா! லயத்துல என்னா நடந்திருக்குன்னு ஒனக்கு தெரியுமா..?
ஆமாங்க அப்பு.!
'நீங்கெல்லாம் என்னா செய்ய போறிங்க. ၇)
பொதைக்கலாமுன்னு இருக்கோம்.!
103
Page 65
* அது அவ்வளவு லேசான காரியமில லே...! 9}ւ L பொதைச்சீங்கனா விசயம் வெளியே போயிரும். அப்புறம். பொதைச்ச பொணத்த திரும்பவும் தோண்டனும்”
6. y
அப்பு. ! அப்படீனா. டக்டர்கிட்டே என்னய அனுப்புங்க.
“டாக்டர்கிட்ட போயி என்னா சொல்லப்போற. ၇'
அவர இங்க கூட்டிக்கிட்டு வாரேன். அப்பு
“ரொம்ப நல்லம். ஒன் நாக்கு பத்தரம். ! கண்டத கிண்டத ஒலறிப்புடாத. ! அப்புறம் முருகன வெட்டிக் கொத்தி திரும்பவும் பொதைக்கனும். ! வெளங்கிச்சா. y
பெரியவரின் ஆசீர்வாதத்தோடு டிஸ்பென்சரிக்கு ஓடினான் மாணிக்கம்.
லயத்து ரவுண்டை முடித்துவிட்டு வந்த டிஸ்பென்சர். மருந்து கலக்கிக் கொண்டிருந்தார். மாணிக்கத்தின் நிழல் டிஸ்பென்சரி ரூமுக்குள் விழுந்தது. டிஸ்பென்சர் ஏறிட்டுப் பார்த்தார்.
‘என்னா மாணிக்கம். ၇'
மாணிக்கம் உடனே பதில் சொல்லவில்லை முகத்தைச் சுடுக்கிக் கொண்டு தலையைப் பலமாகச் சொறிந்தான்.
‘நல்லது. ! மாணிக்கம். என்ன வேணும். ၇)
‘தொர! எங்கத் தாத்தாவுக்கு என்ன மருந்து குடுத்திங்க. y
‘ஏன் மாணிக்கம் ஒன் தாத்தா யாரு..?
‘வயசாலி. முருகன். '
"ஏன் அத பத்தி தெரிஞ்சிக்கனும்.?
"ஐயோ சாமீ. மருந்துக்காரன்கிட்ட மருந்து வாங்கி குடிச்ச பொறவுத்தான் எங்க தாத்தாவுக்கு விக்கல் வந்து. செத்திருக்காரு
‘கேலி பேசுறதுக்கு நேரமில்ல. நடந்த உண்மய சொல்லு.
‘நானு. உம்மைய தான் சொல்லுறேன் சாமி. அவரு கொஞ்ச நாளா சொகமில்லாம இருந்தாரு மருந்துக்காரன் கிட்டத்தான் கலர்
மருந்து வாங்கி குடிச்சாரு. அதுனாலத்தான் விக்கல் வந்திச்சு...! கலர் மருந்து தான் சாவுக்கு காரணம்!
04.
ஐய்யாவு.! தயவு செஞ்சி சொல்லுங்க. ரொம்ப வயசாகிப்போன
ஒரு மனுசனுக்கு மருந்து தேவையா..? அவன. அப்பிடியே. ‘அனுப்பனுங்கற'. நோக்கமா. ? நான். அதுக்கு மேல பேசமாட்டேன். 1’ என்றான் மாணிக்கம்.
அவன் பேச்சை நிறுத்திவிட்டு தலையை மீண்டும் சொறிந்தான்.
மாணிக்கம் கதையை எங்கே கொண்டு போகிறான் என்று டிஸ்பென்சர் புரிந்து கொண்டார்.
குருட்டுதனமா கதைக்க வானாம் மாணிக்கம்..!" என்றார். லயத்தில் கதைகள் எப்படி திரிக்கப்படுகிறது என்பதை விளங்கிக்கொண்ட அவர் குழப்பமடைந்தார்.
“முருகன். ரொம்ப வயசு போன. ஆளா..? ஆமாங்க தொரே! எழுவதுக்கு மேல இருக்கும்! "எழுவது வயசுல ஒரு மனுசன் சாக வேணும் மாணிக்கம்!
அதுக்காக மருந்து குடிச்சப்பொறகு சாகனுமுன்னு இல்ல தொரே..! சாவுக்கு காரணம் என்னாணு தெரிஞ்சுக்கனும்.'
‘அப்படின்னா வெட்டிப் பாக்கணுமா?
*ஆமாங்க தொர!’ ‘அது என்வேல மாணிக்கம். ஆளப்பாப்போம்!”
米米米
- மரணவீடு.
முருகனைத் தரையில் கிடத்தி கிழிந்த போர்வையால் மூடி வைத்திருந்தனர்.
வயதான பெண்களெல்லாம் சுற்றி உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்.
டிஸ்பென்சரைக் கண்டவுடன் அழுகை ஒப்பாரியெல்லாம் ஒரு நொடியில் நின்றது. பிணத்தைச் சோதித்த டிஸ் பெண் சர் பெரியங்கங்காணியின் வீட்டுக்குப் புறப்பட்டார்.
-105
Page 66
பெரியவர் டிஸ்பென்சரை ஆழ்ந்த அமைதியோடு வரவேற்றார்.
‘நான் முருகன எழந்துட்டேன் டாக்டர். ! மிக சோகத்துடன் கூறினார்.
அங்குள்ள நிலைமைகளைக் கவனித்தபோது. எந்த வித
அபிப்பிராயங்களும் தென்படவில்லை. இருந்தாலும். மிக்சருக்குப் பிறகுதான் முருகன் இறந்திருக்கலாம் என்று டிஸ்பென்சர் யூகித்தார்.
“முருகனுக்கு வயசு சரிங்க சீப் (Chief)
ஆனா. தெம்பும் தைரியுமா நேத்து இருந்தாருன்னு எல்லாரும் சொல்றாங்களே..?? கங்காணியார் சொன்னார்.
‘வயசு போன காலத்தில் திடீரென்று அப்படி இருப்பாங்க..! ஆனா மாணிக்கம் வேடிக்கையான ஒரு கருத்த சொல்றான். அது அவ்வளவு நல்லதல்ல சீப்.! '''
பெரியங்கங்காணி டிஸ்பென்சரின் விளக்கத்துக்குப் பிறகு அந்த கதையை விட்டுவிட்டார். ஆனால் மாணிக்கம் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் எப்படி நடந்து கொண்டான் என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியாமல் போனது.
மாணிக்கம் ஜன்னலுக்கப்பால் கடுமையான யோசனையில் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.
‘டேய். ! மாணிக்கம். t
"வாடா இங்க" தொரைக்கிட்ட என்னடா சொன்ன?
'வந்து. வந்து. நான் கேள்விப்பட்டிருக்கேன் சாமீ. டாக்டர் மாருங்க வயசுபோன நோயாளிங்கள கொணமாக்க முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டா. 9(b. . . . . . . ஜாதி மருந்து. குடுப்பாங்களாம்.'
"மாணிக்கம் நீ எவ்வளவு பெரிய மடையன. ஒன் இடிஞ்சிப்போன தலவுள்ளுக்கு ஏதாவது இருக்குமுன்னு நானும் நெனச்சேன். ஒன்னும்
கெடையாது. இந்த மாதிரியெல்லாம் இனிமே பேசிக்கிட்டுத் திரியாத.!"
* அப்பு...! நான் தான் என் சம்சாரத்துக் கிட்ட இப்படி
9
நடந்திருக்குமானு கேட்டேன்.
- 06
‘வாய் மூடு. மூச்சுக்காட்டாத.
‘நல்லதுங்க அப்பூ.!"
*இது ரொம்ப ஆபத்தான பேச்சு. ' f....... 1 யாராவது கதைய கட்டிவுட்டுட்டா. எல்லாருக்கும் தொந்தரவுதான். டிஸ்பென்சர் ஆதங்கப்பட்டார்.
'உண்மதான். ரொம்ப வயசாலி செத்துட்டா. ஏன் கவலப்படனும்?
‘அப்ப. பொதைக்க ஏற்பாடு செய்யட்டுங்களா அப்பு.
மாணிக்கம் குழைந்தான்.
el LDT. ! SALDIT....... ! பொதைச்சிப்போடு. அப்புறம் லயத்துல வேற கத இருக்கக் கூடாது' என்றார் டிஸ்பென்சர்.
“மாணிக்கம். வாய மூடிக்கிட்டு. டாக்டர் தொர சொன்னத செய்யனும்!’ என்றார் கங்காணி.
மாணிக்கம் லயத்தை நோக்கி ஓடினான்.
‘நாம இப்படி செஞ்சிக் கிட்டது தான் நல்லது. இல்லாட்டிப் போனா நீங்க சொன்ன மாதிரி சனங்க கலர் மருந்துதான் காரணமுன்னு
பேசிக்கிட்டு இருப்பாங்க..!’ கங்காணி கூறினார்.
ஆமாங்க 'சீப். '! மனுசன வெட்டிக் கொத்துறது. சாதாரண காரியமில்ல. எல்லா விசயமும் அப்புறம் தலைகீழா போய்டும். ‘அப்புறம் பழி நம்ம ரெண்டுபேரு மேலதான் வுழும். கங்காணி கூறினார்.
"மாணிக்கம் ஒரு வாயாடி இல்லீங்களா சீப்.? டிஸ்பென்சர் கேட்டார்.
“அவன நான் கவனிச்சிக்கிறேன். !' கங்காணி ஆறுதலாக சொன்னார்.
பெரியங்கங்காணி தனக்குக் கொடுத்த ஆறுதல் வார்த்தையாலும் உறுதிமொழியாலும் திருப்தி அடைந்த டிஸ்பென்சர் நிம்மதியோடு வீட்டுக்குத் திரும்பினார்.
米米米
107
Page 67
சோகத் தப்பு முருகன் வீட்டு வாசலில் முழங்கியது. 955ھگl. . . . . . .
சாவுத் தப்பு. அழுகைச் சத்தம். புலம்பல். ஒப்பாரி. ஓங்காரமாகின. சங்கு. சேகண்டி. பொரி. தீச்சட்டி. s தயாராகியது.
அலங்கரிக்கப்பட்ட பாடையில் முருகனைச் சுமந்து சென்றார்கள். அந்த கடைசிப் பயணம் தேயிலைச் செடிகளை நோக்கிச் சென்றது.
>k>iki>K
அடுப்பங்கரையில் மாணிக்கம் மனைவியோடு நெருக்கமாக உட்கார்ந்து கூதல் காய்ந்து கொண்டிருந்தான்.
கங்காணி ஆள் அனுப்பியிருந்தார். 'தம்பி. எனக்கு ரொம்ப சொகமில்லன்னு ஐயா கிட்ட சொல்லு.
விடியக் காலையில வந்துர்றேன். ’ என்றான் மாணிக்கம்.
‘ என்னண்ணே. ! நீங்க நல்லாத்தானே இருக்கீங்க. பொறப்படுங்க. !" என்றான் வந்தவன்.
‘இந்தா தம்பி. ! நான் கொஞ்சம் ‘தண்ணி பாவிச்சிருக்கேன். எனக்கு சொகமில்லன்னு சொல்லு. பெரியவருக்கு புரியும்.!’ என்றான் மாணிக்கம்.
வந்தவன் சென்றான். மாணிக்கம். அடுப்பங்கரையில் லேசாக மனைவியைப் பார்த்துச்
சிரித்தான்.
>*く>*<>*く
108
பெரிய கங்காணி
O
“எங்கப்பன் பெரியங் கங்காணி. எங்கப்பனுக் கப்பனும் ஏட்டு (Head) கங்காணி!”
ருந்தோட்டங்களில் அந்தக் காலத்திலேயே பெரியங்கங்காணி
குடும்பங்கள் மூன்று பரம்பரைகளைக் கொண்டவர்கள் என்று இந்த பாமரப் பாடல் சேதி சொல்கிறது.
தோட்டத் தொழில் துறையில் காவிய நாயகனாகப் பெரியங்கங்காணிகள்தான் பிரதம பாத்திரத்தை வகித்து வந்துள்ளார்கள்.
பெரியங் கங்காணிதான் சகலமும். பிரம்மனைப்போல படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாப் பொறுப்பும் கங்காணியிடமே இருந்தது. அவனின்றி ஓர் அணுவும் அந்த தோட்டத்தில் அசைந்தது கிடையாது!
அவர்தான் தோட்டத்துரையின் வலது கையாக இருந்தார். தொழிலாளிகளுக்கு தலையாகவும். தலைக் கிரீடமுமாகவும், குற்றம் சுமத்துபவாராகவும். வாதாடுகிறவராகவும் நீதி வழங்குபவராகவும். சர்வமும் பெரியங்கங்காணியே என்ற அமைப்பு பாரம்பரியமாக வளர்ந்து வந்தது.
-09
Page 68
பெரியங் கங்காணிகளுக்கும் உப கங்காணிகளும் இருந்தார்கள். இவர்கள். பண்ணையில் மேயும் நோஞ்சான் குதிரைகளைப் போலவும் பந்தயத்தில் ஜெயிக்கும் பலசாலிக் குதிரைகளாகவும் இருந்தார்கள்! இவர்கள் ஒரு போதும் ஓர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கவில்லை. ஒரு சாதியைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள்!
பெரியங்கங்காணி என்பவர் ஆயிரத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்குத் தலைவனாக இருப்பார்.
வீட்டுக்குரிய அத்தனை உடைமைப் பொருட்களோடும் தளபாடங்களோடும் சகல வசதிகளும் கொண்ட வீட்டில் வசித்தார். அவரது வீட்டை வட அமெரிக்கர் வசிக்கும் சொகுசுக் கூடாரம் என்றும்
கூறுவார்கள்! அவரது வீட்டுக்குள் சபா மண்டபம. காரியாலயம். பூஜை ஸ்தலம். படுக் கையறைகள், சமையலறைகள், குளியலறைகள். பெண்கள் தங்கும் அந்தப்புரம்' என்றெல்லாம்
வசதிகள் அமைந்திருந்தன.
அவரது சபா மணி டபத்தில் வெள்ளைத் தலைப் பாகை கணக்குபிள்ளைமார்களும் கருப்புக் கோட்டுக் கங்காணிமார்களும். தொங்கு மீசைக் கிழடுகளும் குவிந்திருந்தனர்.
கங்காணியார் அவர்களையெல்லாம் ‘யாமிருக்க பயமேன்' என்பது போல் கையசைத்தே வரவேற்பார். அரச சபையைப் போலக் கவிஞர்களும், பாடகர்களும் , ஆட்டக்காரர்களும் , செப்படி வித்தைக்காரர்களும் தங்கள் கை வரிசைகளைக் காட்டி கங்காணியை மகிழ்வித்து கெளரவித்தார்கள்.
அந்தக் காலத்தில் செய்தி தகவல் பரப்புவதற்கு பத்திரிக்கை இல்லாத படியால் அவரது பெயரைப் பட்டி தொட்டியெல்லாம் பரப்புவதற்கு நிறையப் பணம் கொடுத்து இவர்களைப் பாவித்தார்.
ஒரு நாள். ஒரு குளிர் இரவில். பெரியங்கங்காணி தன்னுடைய கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு மனநிலையிலிருந்தார். தனக்குக் கீழ் வேலை செய்தவர்களைப் பற்றி அவர்கள் பெற்ற நலன்களைப் பற்றி, அன்றைய சுரண்டல்களைப் பற்றி அசைப்போட்டுப் பார்த்தார். மண் மேகமாய்த் தூசிப்பறக்கும் கட்டாந்தரைப் பாதையில் ஒடிய மாட்டு வண்டிகளின் ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இப்படியான எல்லாத் தீரச்செயல்களுக்கும் அன்று துரை மகன் தான் முன்நிற்பார். கங்காணி தனக்குள் நகைத்துக் கொண்டார். அவையெல்லாம் அற்புதமான காலங்கள்! துரை மார்களெல் லாம் கடினமாக
- 10
உழைத்தார்கள். உண்மை பேசுவதில் உருக்கைப் போன்று உறுதியானவர்கள்.
மனம் அலைந்து திரிந்து ஓய்ந்தது.
米米米
கங்காணியின் கடமைகள் பலவாறாக இருந்தன. அவர் தொழிலாளருக்கு லயக் காம்பிராக்களை ஒதுக்கிக் கொடுப்பார். அவர்களுக்கு அரிசி விநியோகித்தார். அவர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதைக் கவனித்தார். பிரட்டுக் கலைப்பதற்கு (Muster Brake) செல்வார். வேலைத் தலங்களுக்கு வேலைகளைக் கவனிக்கச் செல்வார். சம்பள வாசலில் துரையிடம் சம்பளத்தை வாங்கி தொழிலாளிகளிடம் கையளிப்பார். தொழிலாளிகள் சுகயினமாகிவிட்டால் அவர்களைக் கவனிப் பார் . தோட்டங்களில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளுக்கும் தலைமை வகிப்பார்.
தொழிலாளர்களைத் தனது டிவிசனுக்குள்ளேயே.*. தனது எல்லைக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் அவர் சமர்த்தர். தனது கூலி. ஆள் வெளி ஆட்களுடன் உறவு வைத்துக்கொள்ளவோ. ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளவோ. பொலிஸ்காரர்கள் பிடித்துச் செல்லவோ விடமாட்டார்.
கங்காணி, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் சாணக்கியம் அறிந்தவர்.
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை பின்னேரம். சம்பளம் போட்ட பிறகு நடந்த சம்பவம். ".
காத்தானுக்கும் முத்தானுக்கும் லயத்தில் மோசமான சண்டை நிகழ்ந்தது.
சண்டை நடந்துக்கொண்டிருக்கும் போதே தோட்டத்துப் பரியாரி நடந்த விசயங்களையெல்லாம் முழு விபரங்களோடு சுடச் சுட கங்காணியிடம் போய்ச் சொல்லிவிட்டான். பரியாரி தோட்டத்தில் முடி வெட்டுவது மட்டுமல்ல தகவல் பொறுப்பாளியாகவும் சேவகம் செய்ய வேண்டும்.
Page 69
இரவு பத்து மணிக்கு முன்பு இது சம்பந்தமாக லயத்திலிருந்து ஒரு குழு கங்காணியைச் சந்திக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சபைக் கூடத்தின் கதவருகில் முறைப்பாட்டோடு காத்தான் வந்து நினி றாணி பெரியவர் கணக் குப் பிள்ளைமார் களுக்கும் கங்காணிமார்களுக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். கவ்வாத்து காட்டிலும் மட்டத்து மலையிலும் ஒழுங்கில்லாமல் நடந்த வேலைகளைப் பற்றி கூறிக் கடுமையாகத் திட்டிக் கொண்டிருந்தார்.
காத்தான் அவரது கடுகடுத்த முகத்தைக் கண்டு நம்பிக்கை இழந்தான். “பெரியவரை இன்னைக்கு சந்திக்க முடியாது’ என்று நழுவ முயன்றான்.
‘தெய்வம் கர்ஜித்தது. ‘டேய்! குசுனிக்கு போய் (குசுனி - சமையல்கட்டு) சாப்பிட்டுட்டு பண்டாரத்த கூட்டிக்கிட்டு வா! ஒடு!’ என்றார்.
காத்தானுக்கு நல்ல நேரம்! இரவு சாப்பாட்டை ரசித்து ருசித்து மெல்ல மெல்லச் சாப்பிட்டான். முத்தான் தன்னைப் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான். நல்ல சாப்பாடு. சண்டையைப் பற்றிய கோபாவேசத்தை மேலும் உக்கிரப்படுத்தியது.
பண்டாரத்திடம் கங்காணியார் சொன்ன தகவலைச் சொல்வதற்கு ஓடினான்.
வரும் வழியில் லயத்தில் நடந்த எல்லா விசயங்களையும் பண்டாரத்திடம் கூறிப் பெரியவரிடம் நல்ல முறையாக எடுத்துச் சொல்லுமாறு கெஞ்சினான்.
பண்டாரம் தன்னால் முடிந்ததை செய்வதாக உறுதி கூறினார். காத்தான் திருப்தியோடு வீட்டுக்குச் சென்றான்.
米米米
ஒரு வாரம் வரை எதுவும் நடக்கவில்லை.
ஒரு நாள் காத்தான் திரும்பவும் சபைக்கூடத்துக்கு அருகே வந்தப்போது பெரியவர் நல்ல மனநிலையில் சந்தோசமாக இருப்பதைக்
112
கண்டான். பெரியவர் அவனைப் பாயில் உட்காரும்படி சொன்னார். வேலைக் காரப் பையனைக் கூப்பிட்டு மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமான வனவாசம் புத்தகத்தைக் காத்தானிடம் கொடுக்கும்படி சொன்னார்.
காத்தான் ராக லயத்தோடு நடுச்சாமம் வரை கதையைப் படித்தான்.
லயத்துச் சண்டையைப் பற்றி காத்தான் வாயைத் திறப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் கொடுக்கவில்லை.
வாரங்கள். மாதங்களெனக் கழிந்தன.
நல்ல நேரம். வந்தது.
ஒரு பெருநாளில் காத்தானும் முத்தானும் சந்தித்தார்கள். ஒரு போத்தலோடு அவர்களுக்குள்ள முரண்பாடுகள் முடிவடைந்தன. நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுவோம் என்று எழும்பினார்கள்.
அன்றைக்கே அந்தியில் பெரியவர் இரண்டு பேரையும் 'வீட்டுக்கு வரும்படி அழைத்திருந்தார்.
அவர்கள் இருவரும் ஒருவருக்குப்பின் ஒருவராய்த் தலையைச் சொறிந்து கொண்டு கங்காணியை நோக்கி நகர்ந்தார்கள்.
‘நல்லம்! இடி போல் பெரியவர் முழங்கினார்.
'லயத்துல பெரிய சண்டை நடந்ததாக கேள்விப்பட்டேன்.?
‘அது. கொஞ்ச நாளைக்கு முன்னே. சாமி!. காத்தாண் மறைக்காமல் சொன்னான்.
ங்ொப்பனாலத்தாண்டா. இந்த நாசமா போன எடத்துல நான் இருக்கேன். எல்லா கர்மமும் எனக்கிட்ட சொல்லியாகணும்டா.
‘நான் இதுப்பத்தி சொல்றதுக்கு ஐயாகிட்ட வந்தேனுங்க." அருவருப்பாக பல்லைக் காட்டினான் முத்தான்.
'நீ எப்படா வந்த.?
‘பாம்ப பாம்பு கடிச்சா வெஷம் இருக்காதுன்று பெரியவங்க சொல்லுவாங்க.
Page 70
‘எங்கடா பாம்பு கடிக்குது..?
'லயத்துல எந்த கருமாதியும் நடக்கக் கூடாது! வெளங்குதா. மடையன். ? கங்காணி நற நறவென்று பற்களைக் கடித்தார். பின்னர் சாந்தமாகினார். சொந்தக்காரனுங்க இப்படி நடந்துக்கலாமா? ஒடுங்கடா!'
இரண்டு பேரும் தலையைச் சொறிந்துக் கொண்டு செல்லமாக ஓடினார்கள்.
>k>KI>K
இன்னொரு நாள் இன்னொரு சம்பவம் நடந்தது.
பழனியாண்டி தொழிற்சாலையில் ஒரு பிடித் தூளை திருடிவிட்டான். இந்த சங்கதி துரை வரை எட்டிவிட்டது.
கங்காணி பழனியாண்டியை ஆப்பிசில் கொண்டுவந்து நிறுத்தினார். தோட்டத் துரை சிவப்பேறிய முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.
பழனியாண்டி மரத்தடியில் நடுங்கிக்கொண்டு நின்றான்.
அவனுக்கு இன்று கெட்ட நாள்.
‘இன்னையோட பழனியாணி டி சரி தொரை பத்துச் சீட்டு குடுத்துடுவாரு’ என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள்.
திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. துரையையும் நாற்காலியிலிருந்து தூக்கிவாரிப்போட்டது.
துரை அதிர்ச்சி அடைந்தார்.
'நீ பண்டீ. நீ ஊத்தப் பண்டீ! எப்படி ஒனக்கு நம்ம தூளை தொடுறதுக்கு துணிச்சல் வந்திச்சு? பெரியங்கங்காணி கைத் தடியால் ஓங்கி ஓங்கி அடித்தார்.
‘நல்லா வாங்கிக்கோ திருட்டு நாயே!”
நீண்ட கைத்தடி மேலும் கீழும் பல தடவை சுழன்றது. பழனியாண்டியின் தலை பல தடைவ தப்பித் தப்பிப் பிழைத்தது.
"ஐயோ சாமீ. ! ஐயோ சாமீ. 1’ என்று கூக்குரலிட்டுப் பழனியாண்டி அங்குமிங்கும் பாய்ந்தான்.
114
துரை திருப்தி அடைந்தார். இருந்தாலும் அடிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பழனியாண்டியை விட்டு விட்டு உள்ளே வரும்படி கங்காணியைக் கூப்பிட்டார்.
கங்காணி பெரு மூச்சோடு ஆப்பிசுக்குள் நுழைந்தார்.
‘தொரை மகன் தோட்டத்துல எனக்கு இப்படியொரு களவாணிப்பயல் வேண்டியதில்லை சார்.’
‘இது போதும்.
கிளாக் அவனைப் போகச் சொல்லு
பழனியாண்டிக்கு அடி விழுந்த சங்கதி ஒரு மாதத்துக்கு மேலாகச் சவரம் பண்ணும் பாபர் மடுவத்தில் கதைப் பரப்பப்பட்டது. இதுவும் ஒரு வகை ஆபத்தான சவரம் தான்! பி.பி.சீ வானொலிக்கு முன்னமே இந்த மாதிரி வானொலி ஒலிப்பரப்பைக் கண்டுப்பிடித்த கங்காணி பெருமைக்குரியவர்தான்!
米米米
ஒரு நாள் ஒரு சம்பள தினத்தில் கங்காணியார் ஒரு குட்டிச்சாக்கு நிறைய மடமடப்பான நோட்டுக்கட்டுக்களோடும் வெள்ளிக் காசுகளோடும் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அவரது வீட்டருகே பத்துப் பன்னிரண்டு பேர் கடன் வாங்குவதற்காகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுள் மாயாண்டியும் ஒருத்தன். சுத்த சோம்பேறியான அவரும் கடன் வாங்க வந்திருந்தார்! பெரியவர் அவனை முறைத்துப் பார்த்தார்! அவ்வளவுதான். அவன் அப்படியே உருகிப்போனான். இருந்தும் மாயாண்டி லேசில் எதையும் விடமாட்டான். அவன் கடன் வாங்குவதில் உறுதியாக இருந்தான். ஆனால் கங்காணி அவனை அலட்சியம் செய்தார்.
தொடர்ந்து சில நாட்கள் சரியான நேரத்தோடு கங்காணி வீட்டில் வந்து நிற்பான். w
‘ஏன்டா மாயாண்டி காத்திக்கிட்டு இருக்கே’
‘ஐயா எனக்கு கடன் வேணுங்க. ၇
5
Page 71
பெரியவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவும் இல்லை. ஒழுங்கான பதிலும் சொல்லவில்லை. மரக்கறித் தோட்டத்தில் போய்த் தோட்டக்காரனுக்குக் கை உதவி செய் என்று அனுப்பிவிட்டார். தொடர்ந்து சில நாட்கள் மரக்கறி தோட்டத்தில் மாயாண்டிக்கு வேலை!
ஒரு நாள் பெரியவர் மாயாண்டியைக் கூப்பிட்டுப் பல விசயங்களைக் கதைத்தார். மரக்கறி தோட்டத்தில் நன்றாக வேலை செய்ததற்காகப் பாராட்டினார்.
கடைசியில் மாயாண்டி கடனைப் பற்றி அவர் ஒன்றும் கதைக்கவில்லை.
d y
ՔԶեւ IT....... எனக்கு நூத்தி அம்பது ரூவா கடன் வேணுங்க. உடனேயே பெரியவர் ஒரு துண்டு கொடுத்தார். போற வழியிலேயே அந்தத் துண்டைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தான். துண்டிலே 150 ரூபாய் எழுதப்பட்டிருந்ததை வாசித்துத் திருப்தி அடைந்தான். ஆனால் அந்த முதலாளி 45 ரூபாய் மட்டுமே கொடுத்து இடத்தைக் காலி பண்ணும்படி சொல்லிவிட்டான்.
‘இன்னும் 25 ரூபா தாங்க!' என்று தயவாய்க் கேட்டான்.
நீண்ட நேரக் கரைச்சலுக்குப் பிறகு முதலாளி ஐந்து ரூபாவைக் கொடுத்து இந்தப் பக்கம் இன்னொரு தடவை தலைக் காட்ட வேண்டாம் என்று விரட்டினான்.
யார் கண்டது. ! கங்காணிக்கும் கடைக்கார முதலாளிக்கும் ஏதாவது இருக்கும். ! எப்படியோ வாங்கிய கடனை மாயாண்டி ஒரு போதும் கட்டியதே கிடையாது.
அந்தத் தோட்டத்தில் பெரியங்கங்காணிதான் முதலாவது சங்கத் தலைவர். சகலமும் சர்வமும் அவர்தான். இருந்தாலும் அவரது காலத்துக்கு முன்னால் சாதியை மட்டும் கடைசி வரை அழிக்க முடியாமல் போய்விட்டது.
16
லேடீஸ் டெய்லர் வ்ரப்பன்
O
(3 ட்டக் காரியாலயம். தோட்டதுரை தனது மேசையின் முன் 95T அமர்ந்திருக்கிறார். பெரிய கிளாக்கர் அவரின் பின்னால் நெருங்கியவாறு நிற்கிறார். தங்களது குறைபாடுகளுக்கு
நிவாரணம் தேடிச் சுமார் ஒரு டசன் தொழிலாளர்கள் அந்தத் திறந்த ஜன்னலுக்கு வெளியே குழுமியிருந்தார்கள்.
சாத்தப்பன். கொஞ்சம் நடுத்தரமான மனிதன்.
துரையை அணுகினான்.
‘சலாங்க. தொரைகளே!’
"சலாம் என்ன வேணும் சாத்தப்பன்? திரும்பவும் ஒன் பழைய கதையோட வந்திருக்கியா. ၇၈
‘ஆமாங்க தொரைகளே! வேற என்னங்க செய்யிறது?. எனக்கு இன்னும் சாப்பாட்டுக்கு மூணு வாயுள்ள சீவன்க. இருக்குதுங்களே. ஒரு வளர்ர எளந்தாரிய சும்மா லயத்துல வச்சிக்கிட்டு இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லிங்க தொரைகளே. y
அதெல்லாம் எனக்குத் தெரியும் சாத்தப்பன்! ஒனக்குத் தான் நான் முன்னுக்கே சொல்லியிருக்கேனே. இன்னும் ஆறு மாசத்துக்கு எந்த வேலையும் கெடையாதுன்னு.? இந்தத் தோட்டமே எழுநூறு ஏக்கர்
7
Page 72
தான். ஆனா . . . . . . ஆயிரத்துக் குமேல தொழிலாளிங்க இருக்காங்க. எதுவுமே இப்பக்கி செய்ய முடியாது!”
""GG-fr! GLITGot LDTGuib. இருவத்தஞ்சி, யங் பேர்சன்ஸ் (வாலிபர்கள்) பேர் பதிஞ்சியிருக்கோம். ஒரு சங்கத்துல பன்னிரண்டு பேரும். இன்னொரு சங்கத்துல பதிமூனு பேரும்!”
பெரிய கிளாக்கர் மிக பவ்வியமாக சுப்பிரண்டனிடம் கூறுகிறார்.
“தட் ஸ் த பொயிண்ட்! அது தான் விசயம்! சாத்தப்பன், என்னால எதுவுமே செய்ய முடியாது! ஒன் மவனுக்கு வேல குடுத்திட்டா போச்சி! இன்னொரு யூனியன்லயிருந்து ஒரு பிசாசு கூட்டமே வரிசையிலே வந்து நிக்கும்!”
“யாருமே வந்து. அப்படி கேக்க மாட்டாங்க. தொர. "
சாத்தப்பன் கெஞ்சினான்.
“ஓ! நீ அப்படி சொல்லாத. ஒங்கட யூனியன் தொரமார்கள் அப்புறம் எனக்கு “ஊத்தக்கடதாசி எழுதுவாங்க. ஒன் மவனுக்கு வேற எங்கேயாவது வேல தேடிக்கோ!.
"ஐயோ சாமி! அவனுக்கு பிரஜாவுரிமை கெடையாதுங்க. அவனுக்கு வெளியில எங்கேயும் வேல தேடிக்க முடியாதுங்க!”
6
'அவன் இங்க பொறந்தவன் தானே..?
"ஆமாங்க தொரைகளே!”
உடனே கிளாக்கர் குறுக்கிடுகிறார். “சேர், இந்த மனுசனின் மவன் வீரப்பன். லயத்துல ஏதோ ஒரு மாதிரி. டெய்லர். வேல செய்யிறான்..!
“ஹோ! பொம்பள டெய்லர்! லேடீஸ் டெய்லர்!’ குட்டி சோக்குக் காரன்! இல்லியா. ?” கொஞ்சம் பேச்சை நிறுத்திய துரை மீண்டும் தொடர்கிறார்.
“எனக்கு ஒரு டெய்லரைப் பத்தி ஏதோ ஞாபகத்துக்கு வருது அது வாயிலேயே இருக்குது. யாருன்னு ஒங்களுக்கு ஞாபகமிருக்குதா கிளாக்?’
துரை கிளாக்கரைப் பார்க்கிறார்.
18
ஆமா சேர்' சன்னாசி ஒரு கொம்லயின்ட் கொண்டு வந்தான். அவன் மகள் சமுத்திரம் ரவிக்க (ஜெக்கட்) வாங்க போனப்போ. வீரப் பணி அவளைப் பார்த்து ஒரு மாதிரியா என்னவோ சொல்லிப்புட்டானாம்!”
தைக் கேட்ட துரை ஆத்திரமடைந்தார்.
'ஆமா ஆமா! அந்த சங்கதி எனக்கு இப்பத் தெரியும்! சாத்தப்பன்! ஒன் மகன் என்லயத்துல ஒக்காந்து கிட்டு எனக்கு வேல வச்சிக்கிட்டு இருக்கான். இந்த மாதிரி பொறுக்கிப் பசங்களால எனக்கு நிம்மதியே சுெடையாது. இது ஒரு பெரிய தொல்ல! இதுக்கு அப்புறம் ஒன் மகன் சன்னாசி மகளோட சேட்ட கிட்ட காட்டினா ஒன்னைய தோட்டத்தவுட்டே தள்ளிப்புடுவேன்! நீ இந்த தோட்டத்துல எவ்வளவு காலம் இருந்தாலும்
க்கு கவலையில்ல. நீ ஒடிப்போ!. ஹ"ம்! அடுத்தாள். 6uп!” ###ဂိ၏ கர்ஜனை கர்ண கடுரமாயிருந்தது.
சாத்தப்பன் அதிர்ச்சியில் புலம்பினான். ‘நான் எவனுக்கும் கெட்டது செஞ்சது கெடையாது. ஏன் ஏ வாயில மண்ணப் போடுறாங்களோ தெரியல்ல.!” சாத்தப்பன் பெரிய கிளாக்கரை திரும்பிப் பார்க்காமலேயே சத்தமாகச் சொல்லிக் கொண்டு போனான்.
* வாயப்பத்தி என்னமோ சொல்லிக்கிட்டுப் போறான் போல இருக்கு. ?’ துரை வினாவினார்.
‘ஆமா சேர்! அவன் வாயப்பத்தி சொல்லிக் கிட்டுப் போறான்!”
'ஏனாம். அவன் வாயி நாறிப்போயி கெடக்குதா.
துரை இடக்குக் காட்டுகிறார்.
米米米
பத்தாம் நம்பர் லயம். தொங்க காம்பிரா. இஸ்தோப்பு. வீரப்பன் என்ற இருபது வயது இளைஞன். கோடு போட்ட சாரம் கட்டி. ஸ்திரீ செய்யப்பட்ட சட்டை அணிந்து, கழுத்து கொலரைச் சுற்றிக் கைலேஞ்சு செருகி. தையல் மெஷினில் அமர்ந்திருக்கின்றான்.
அவன் காலிலே மிதிபடும் மெஷின் முணுமுணுக்கிறது.
19
Page 73
“TT....... ர்ர். இர்ரம்.
ஆமாம்! அந்த இயந்திரச் சக்கரம் ஒவ்வெரு முறையும் சுழன்று நிற்கும் போது "இர்ர்ரம்' என்ற சப்தத்தோடு தான் ನಿ... was a 8 அது அவளைத்தான். ‘சமுத்திரம்' என்ற அவளது பெயரைத் தான் அப்படி உச்சரிக்கின்றது. ‘சமுத்திரம். அவள புரிஞ்சி கொள்ள முடியல்லயே! “அவ எப்படியானவ.' வீரப்பன் திரும்பத் திரும்ப அவனுக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான்.
என்னைய. எப்படி. அவ. கைவிட்டா..? இப்பவும் இலதாய்ல வந்து அரைவாசி நேரத்தப் போக்கி. கொஞ்சிக்கிட்டு இருக்காளே.. இதுமட்டும் ஏனாம்.?
அவன் அவளையே பார்க்கிறான். சமுத்திரம் இஸ்தோப்பு வாச சாய்ந்தபடி அவன் பக்கம் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறாள்.
அவன் நெஞ்சுக் له سه
** உருண்டு திரணிட உடல் ..! நினைக்கிறான்.
“அவள் என்னைக் காணாத மாதிரி. என் மெஷின் சத்தத்தைக் கேட்காத மாதிரி பாசாங்கு காட்டுகிறாள்.”
சமுத்திரமும் தான் நினைக்கிறாள். அவனது நினைவு அந்த இயந்திரத்தின் முனகலோடு கலக்கிறது. “வேலையில்லாம. டெய்லர். 4."
இந்த நேரம் பார்த்து வீரப்பனின் தாய் வருகிறாள். ஒரு சட்டி நிறையத் தண்ணிர் கொண்டு வந்து வெளியே தெறிக்கும் படி வீசுகிறாள். அங்கே. சமுத்திரம் நிற்பதைப் பார்த்தவள்,
‘தூத்தேறி!” என்று பலமாகக் காறித் துப்புகிறாள்.
ஏதோ ஒரு விதத்தில் அடிவாங்கிய உணர்வாய்ச் 'சடக்கென வீட்டுக்குள் நுழைகிறாள் சமுத்திரம்.
米米米
சாத்தப்பனும் அவனது சம்சாரம் பழனியாயியும் வீட்டுக்குள்ளே அடித்தொண்டையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
20
‘தொர மோசமில்ல! அந்த கெளாக்கரய்யா தான் எல்லாத்தையும் கெடுத்துப்புட்டாரு...! இதுக்கப்புறமும் சன்னாசி மவளப்பத்தி பிராது இருந் தா தொர . . . . . . . நம் மல. . . . . . தோட்டதி தவுட் டே தொரத்திப் புடுவேன் னுட் டாரு. இதப் பத்தி நீ என்னா நெனைக்கிற.?’சாத்தப்பன் பழனியாயிடம் கேட்டான்.
“எம்மவன். காடக் கடப்புளி இல்லை! இதுக்கெல்லாம் அந்தச் சிறுக்கி தான் காரணம்! இப்ப அவ. இஸ்தோப்புல லாத்திக்கிட்டு இருந்தத நான் பார்த்தேன்! அவளுக லச்சணம் நமக்குத் தெரியாதா..?” பழனியாயி பொரிந்தாள்.
“நாங்க நம்ம ஜோலியோட இருந்துக் கணும்!” சாத்தப்பன்.
‘அப்படீன்னா. எம்மவனா அவுங்க வுட்டுக்குள்ள போயி. நொழைஞ்சான்.?” பழனியாயி
வீரப்பன் மெஷின் சத்தத்தைக் குறைத்து பேச்சைக் கவனித்தான்.
‘'நீ ஓம்மவன் குத்தமில்லன்னு சொல்ற. ஆனா தொரை கிட்ட போன பிராது எல்லாத்தையும் தலைகீழா கொழப்பியிருக்கு”
“இதுக்.கெல்லாம் அந்த சிறுக்கி தான் காரணம். அவதான் எம்மவன் மேல ‘கண்ணு' வச்சிக்கிட்டு இருக்கா!'
‘நான் இந்த உருப்படாதப் பயல்கிட்ட சொல்லியிருக்கேன். இந்த மாதிரி போக்கிரி வேல செய்யாதேன்னு. yo
‘அப்ப வேற வேல என்னா தேடி வச்சிருக்கீங்க. பெரிசா பேசுறீங்களே?”
“பெரிசா ஒண்ணும் பேசல்ல மனுவழி!. இப்ப தொரையே
கண்டுக்கிட்டாரு. ஒம்மவன் லயத்துல பண்ணுற குறும்ப.!
‘ஆமா! இந்த தோட்டத்துல இருக்கிற எளந்தாரிபசங்கள வுட எம்புள்ள அப்படி ஒண்ணும் மோசமில்ல!”
“தயவு செஞ்சி பெலமா கத்தாதடி.! இந்த லயத்தையே எழுப்புற மாதிரி!”
米米米
". .
τη -- . .
Page 74
வீரப்பன் மெதுவாக மெஷினை மூடிவைத்து விட்டு கோவிலுக்குப் புறப்பட்டான். அந்தி நேரங்களில் கோவிலில் கூடிப் பேசிக் கொண்டிருக்கும் இளைஞர்களோடு கலந்தான்.
வீரப்பன் சிவலிங்கம் என்ற இன்னொரு டெய்லரைச் சந்தித்தான். அவன் அவர்களின் பேச்சுகளுக்கிடையே யூனியன் காரர் ஒருவர் சொன்ன விசயத்தையும் கூறினான்.
‘எல்லாத் தோட்டத்திலேயும் ஒவ்வொரு ஆயிரம் தொழிலாளிக்கு நூத்தயம்பது பேரு பேர் பதியப்படாம இருக்காங்க. அடுத்த சில வருஷங்கள்ள நெலம இன்னமும் மோசமாப் போகும்.”
‘அப்ப நாம என்னா செய்யனும். y
‘நாம எல்லாரும் டெய்லர்களா போவோம்!”
‘வீடு கட்டுற மேசனுக்கு மணல் இழுப்போம்!”
‘அப்புறம் ஞாயித்துக்கெழம நாள்ள பாதிசம்பளத்துக்கு ‘கொந்தரப்பு புல்லு வெட்டுவோம்!”
“நாங்க எங்கேயாவது வேல தேடி போக வேணும்” ஒரு இளைஞன்.
‘ஆமா!’ என் தோழரே. வேல குடுக்கிறதுக்கு. ரெண்டு கையையும் விரிச்சிக்கிட்டு ஒங்கள அழைச்சிக்கிட்டுப் போக காத்துக் கிட்டு இருக்காங்க!” இன்னொருவன்.
கோவிலை விட்டு எல்லா இளைஞர்களும் கலைந்தனர்.
>*<>*<>*
அது நள்ளிரவு நேரம்.
ரயில் நிலையம்.
டிக்கட் வாங்குவதற்காக எல்லோரும் ஜன்னலருகே காத்துக் கொண்டிருக்கிறார்கள். "
அன்று காலையில் தோட்டக் காரியாலயத்துக்கு வந்திருந்த பழனியாண்டி கங்காணி வீரப்பனை ரயில் நிலையத்தில் பார்த்துவிட்டார்.
அவர் அந்த இளைஞனின் மனோ நிலையைப் புரிந்து கொண்டார்.
122
“வீரப்பா! நீ எங்கே போகப் போற. ၇၈
அமைதி
‘'நீ வுட்டவுட்டுப் போறேன்னு எனக்கு தெரியுது! நீ என்னா காரணத்துனால போறேன்னும் தெரியுது. நீ ஒரு நல்ல பையன். நல்ல தாய் தகப்பனுக்குப் பொறந்த புள்ள. இப்படி நீ செய்றது புத்திசாலித்தனம் இல்ல. நம்ம தோட்டத்தவுட்டு வெளியே போனா. நீ காணாம போயிடுவ! பொலிஸ்காரங்க ஒன்ன கள்ளத் தோனின்னு புடிச்சு ஜெயில்ல போட்டுருவாங்க! இல்லாட்டிப் போனா நாடு கடத்திப்புடுவாங்க! அது சரி நீவுட்டவுட்டு போறது. ஒங்க அப்பனுக்கு தெரியுமா..?
‘இ.ல்.ல” பேச்சற்ற வீரப்பன் நாவெழ முடியாமல் இழுத்தான்.
‘'நீ வுட்டுக்குப் போறது தான் நல்லது. அது தான் உனக்கு பாதுகாப்பான எடம். ! அந்தப் புள்ளையப் பத்தி மத்தவங்க பேசுறத மனசுக்கு எடுத்துக்காத.
* யாரும் உத்தமர் இல்ல! நெலத்த உத்துப் பார்க்காத. இந்த பெரிய மனுசன் புத்திமதியக் கேட்டுப் பேசாம வுட்டுக்குப் போ..!”தலை குனிந்து நிற்கும் வீரப்பனிடம் கங்காணி சொன்னார்.
அந்தச் சூழ்நிலை அந்தப் பொழுது. வீரப்பனுக்கு ஒரு நம்பிக்கையற்றதாகவிருந்தது. அவன் தன் விதியை நொந்து கொண்டான்.
* தோட்டமும் என னைய ஏத துக் கொள்ளாது. . . . . . . வெளியுலகத்திலும். எங்கேயும் போக எனக்கு எடமும் இல்ல.
''
என்னா வாழ்க்க...!
அலைக்கழிக்கப் பட்ட மிருகமாய். அந்த இருட்டில் தன் தந்தையின் வீட்டை நோக்கி அவன் சென்று கொண்டிருகுகிறான்.
123 s
Page 75
காதலே ஜெயம்
() ) I)
6) லிப வனப்பில் ராகவன் அழகின் சிகரமாகத் திகழ்ந்தான்.
அவனைச் சுற்றி வதந்திகள் மொய்த்துக் கொண்டிருந்தன.
ராகவன். அவனது அத்தை மகள் பார்வதியைக் காதலிக்கின்றான் என்று தோட்டமே குசுகுசுத்தது.
மாணிக்கம் இந்த விசயத்தை முளையிலேயே அறிந்தவன். மாணிக்கம் வாழும் இந்தக் காலத்தில் தோட்டங்களில் காதல் என்பது ஒரு பாரதூரமான விசயம். ஒரு திட்டு. ! ஒரு கெட்ட விவகாரம் என்றெல்லாம் தடை செய்யப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம். இந்தக் கட்டுப்பாட்டை மீறி எந்த இளைஞனும் ‘காதல் கீதல்' என்று விவகாரம் நடத்தினால் பிறகு காரியம் தொலைந்தது! அந்த முழுத்தோட்டமுமே பஞ்சாயத்து விசாரணைக்கு கட்டுப்பட வேண்டி வரும்.
பஞ்சாயத்துக்காரர்கள் காதல் விவகாரத்தை வேரோடு அழித்துவிடுவதில் இம்மியளவும் , பின் நின்றதில்லை.
இந்தக் கட்டுப்பாட்டையும் கடுமையான தண்டனையையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளாது மாட்டிக் கொண்டவர்கள் மட்டுமல்ல. அவர்களைச் சேர்ந்த முழுக் குடும்பங்களுமே பஞ்சாயத்து விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும்.
124
இந்தச் சம்பிரதாயப் போக்குக்கு ஒர் உதாரணம்தான் வீரக்குமரன் மகன் ராகவன் பார்வதி காதல்.
ராகவன் இருபத்தொரு வயது நிரம்பிய கட்டிளங்காளை. அவன் காதல் மோகங் கொண்டு வலைவீசியதெல்லாம் அவனது சொந்த அத்தை மகள் மேல்தான். இந்தக் காதல் கல்யாணத்தில் முடியும் ஒரு சுபகாரியம் என்று மாணிக்கம் மட்டுமல்ல முழு தோட்ட சனங்களுமே எதிர் பார்த்திருந்தனர்.
ராகவனின் பெற்றோர்களும் முழு நம்பிக்கையோடு இருந்தார்கள். ‘என்றைக்காவது ஒரு நாளு பார்வதி நம்ம வுட்டுக்குத்தான் வருவா. எங்க பேரப்புள்ளய பெத்துத் தருவா.
ஆனால். பார்வதியின் ‘அப்பங்காரன்” சின்னப்பழனியின் யோசனையெல்லாம் மாறாக இருந்தது. ரொம்பவும் ரகசியமாகப் பக்கத்துத் தோட்டத்தில் ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான்.
பக்கத்துத் தோட்டத்தில் ஒரு இளவட்டம் இரண்டாவது கணக்கப்பிள்ளையாகத் தொழில் செய்கின்றான். அந்த இளைஞனை ஒரு நாள் அந்தி நேரம் சின்னப் பழனி வீட்டுக்கு அழைத்திருந்தான். இந்த நோக்கம் ராகவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விளங்க வேண்டும். பார்வதிக்குக் கணக்கப்பிள்ளையை 'பேசுவதாக அவர்கள் புரிந்துக் கொண்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னப்பழனி எதிர்பார்த்தான்.
米米米
அது ஒரு விதிவசமான மாலை நேரம். மாணிக்கம் ராகவனை சந்திக்க
நேர்ந்தது. அவன் சாடையாகக் கதையை விட்டான். 'தம்பீ ராகவா!
இந்தப்பக்கம் ஒரு வெள்ளைக்காள மேயுது. ஒன். கன்னி பசு
கவனம். !’ என்றான்.
ராகவன் ஒரே யோசனையில் வீட்டுக்கு வந்தான். அங்கே
அம்மாவும் அப்பாவும் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். ‘ராகவா! அந்தப்பயல் வுட்டுக்குள்ள இன்னொரு நாளைக்கு காலடி வைக்க வானாம் ஜாக்ரத!’ வீரக்குமரன் ராகவனை எச்சரித்தான். அப்படி நீங்க சொல்ல ஏலாது. ! "எம்மவன் எங்க அண்ணன் வூட்டுக்கு போவ உரும இருக்கு ராகவனின் தாய்க்காரி உரிமை பிரச்சினையைக் கிளப்பினாள்.
25
Page 76
“வாய மூடு மனுசி! ஒங்கனினன் ஒரு கழுத்தருத்தப் பயல்! என்னைக்கு அவன் அப்பன் வீட்டுல பொண்ணெடுத்தேனோ! அன்னையிலேயிருந்து நானு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்'
‘நீங்க ரெண்டுப் பேரும் சண்டப் போட்டுக்காதீங்க. நான் அந்தப் பக்கம் போக மாட்டேன்’ என்ற ராகவன் மாணிக்கத்தின் வீட்டுக்குப் போனான். மாணிக்கம் அவனுக்கொரு வழிகாட்டி!
- மறுநாள் விடிந்தது. கிழக்குச் சிரித்துக் கொண்டிருந்தது. ராகவனைக் காணவில்லை. ! தாய்க்காரி 'குய்யோ’ முறையோ என்று கதறினாள். நெருப்பில் வீழ்ந்தவளாய்த் துடி துடித்தாள்.
‘ஐயோ ராகவா! எஞ்சாமி ராகவா அவள் கூக் குரலிட்டாள்.
'அவன் தொலைஞ்சிப் போனா மயிராச்சி பொம்பளை.!’ என்றான் வீரக்குமரன்.
‘ஐயோ கடவுளே! எம் மவன கெடுத்தவன் தலையில இடி வுழுக..! அவன் குட்டிச்சுவரா போவ. ! அவன் கொள்ளையில போவ...!
‘அடிப்பாவி வாசாப்பு உடாதடி' பெண்டாட்டியின் மேல் வீரக்குமரன் பாய்ந்தான்.
இப்பொழுதுதான் பார்வதியும் காணாமல் போன விசயம் சின்னப்பழனி வீட்டுக்கும் எட்டியது. அவர்கள் குழம்பிப் போனார்கள்.
எல்லோருக்குமே இப்பொழுதுதான் விசயம் விளங்கியது. பார்வதியும் ராகவனும் ஓடிப் போய்விட்டார்கள். 1’ என்று.
மாணிக்கம் இஸ்தோப்பில் ஜாலியாக உட்கார்ந்து பாட்டு பாடிக் கொண்டிருந்தான்.
r வாசமுள்ள சந்தனப்பொட்டு பொன்னம்மா!-அடி
வாசமுள்ள சந்தனப்பொட்டு பொன்னம்மா அந்த வழிப் பாதையும் - பொதுப் பாதைதான் பொன்னம்மா! நீ போக வேணும் பயணமுன்னா பொன்னம்மா! போயி ஏற வேணும் ரயிலு வண்டி பொன்னம்மா.
அந்த வெற்றிப் பாடலில் ஒரு விசயம் இருப்பதை அவன் பொடி வைத்து மெட்டெடுத்து பாடினான். அந்த பாடல் தோட்டத்து எல்லா இளைஞர்களையும் சொக்கி இழுத்தது.
126
சந்து, பொந்து, மூலை, முடுக்கெல்லாம் ராகவன் பார்வதி பேச்சுத்தான்.
ராகவனும் பார்வதியும் ஓடிப்போனதைப் பற்றி பேசினார்கள். ஓடிப்போனதற்கு என்ன காரணம் என்பதை பற்றியும் பேசினார்கள்.
பார்வதி வீட்டிலும் ராகவன் வீட்டிலும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
சின்னப்பழனி, கையில் பளபளக்கும் கவ்வாத்துக் கத்தியோடு லயத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தான். அவன் முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆடியது.
மாணிக்கம் இஸ்தோப்புத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு திரும்பத் திரும்ப அதே பாடலைப் பாடிக்கொண்டிருந்தான். அந்த வீரப்பாடல் இனிமையாக போய்க் கொண்டிருந்தது. மாணிக்கத்தின் வாசலில் சின்னப்பழனி போய்க்கொணடிருந்தான்.
பாட்டை நிறுத்திய மாணிக்கம் "ஒய் கங்காணி மச்சான். ! தூக்கு மேடைக்கு போகாத" என்றான். ‹ቋ”
‘பேசாத ஒய். ! நான் பைத்தியம் புடிச்சிப்போயிருக்கேன்.
ஆமா ஒய்! நீ கொஞ்ச நாளா பைத்தியம் புடிச்சிபோயிதான் இருக்கே! ஒனக்கு ஒன்னு சொல்லுறேன் கேளு. பேசாம நேரா நம்ம பெரியாளுக்கிட்டப் போ (பெரியாளு - பெரிய கங்காணி) தோட்டத்துல பஞ்சாயம் இருக்குது. நீ. நல்லா நெனைச்சுக்கோ. ஒம்மவ என்னா காரியம் செஞ்சிருக்கானு! நீ நம்ம தோட்டத்துக்கு அவமானத்த கொண்டு வந்திருக்கே இப்படியெல்லாம் செஞ்சுப்புட்டு. இப்போ கத்திய தூக்கிக் கிட்டு கூத்தாடுறே! மாணிக்கம் சின்னப்பழனியை பயமுறுத்துவதுபோல் பேசினான்.
சின்னப்பழனி குறுகிப் போனான். கவ்வாத்துக் கத்தி கை நழுவியது.
தலை குனிந்தவனாய்ப் பெரியங்கங்காணியின் வீட்டுக்குப் புறப்பட்டான்.
தலையைக் கவிழ்த்துக் கொண்டே பெரியங்கங்காணியிடம் நடந்த விசயத்தைக் கூறிப் புலம்பினான்.
"ஒன் மகளையும் கூட்டிக்கிட்டு வா. !" என்று பெரியங்கங்காணி கட்டளையிட்டார்.
27
Page 77
சின்னபழனி கங்காணியை சந்தித்துவிட்டுப் போன பிறகு. ராகவனின் தகப்பன் வீரகுமரனும் அவன் பெஞ்சாதியும் கங்காணியிடம் வந்தார்கள்.
"நீ ரெண்டு பேரும் போயி. மகளையும் மருமகனையும் கூட்டிக்கிட்டு வா!' என்றார் கங்காணி.
அவர்கள் பயத்துடன் வீடு திரும்பினார்கள்.
பனி படர்ந்த இரவு முடிந்து. வெது வெதுப்பான சூரிய கதிர் புலர்ந்தது.
நல்ல வெய்யில். நல்ல சூடு. நல்ல பொழுது.
- அந்தி நேரமும் வந்தது. மாணிக்கத்துக்கும் பொன் மாலைப் பொழுது அனுதினமும் வந்து போகும். ,''
நாட்டுப் பக்கம் போய் (நாடு - கிராமம்) நன்றாகக் கள்ளு குடித்துவிட்டு வந்தான். வாய் நிறையப் பாடல் வழிந்தது.!
போன மச்சான் திரும்பி வந்தான்.
பூ மணத்தோட. அப்படி போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட!.
அவன் மிக ஆணவத்தோடு இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டு வந்தான். படிக்கட்டுகளை இரண்டாய் மூன்றாய்த் தாண்டி. பற்களைக் கொட்டிக் கொள்ளாமல் பெரியாளு. வீட்டு வாசலில் போய் நின்றான்.
‘என்னடா மாணிக்கம்? கங்காணி நகைப்போடு கேட்டார்.
‘அப்பு அவுஹல கொண்டாந்துட்டேன்! எங்க அப்பூ!
‘என்னத்தடா கொண்டாந்திருக்கே?
‘அப்பூ. ! அவுஹ நாட்டுப் பக்கம் செட்டித் தோட்டத்துல இருந்தாஹ. இன்னைக்கு ராத்திரிக்கு வர்றாஹ அப்பூ. y
"நீ பெரிய பிசாசுன்னு எனக்குத் தெரியுண்டா!'
"பஞ்சாயத்த கூட்டுன்னா என்னாங்க அப்பு?
"அவசரப்படாதே! மொதலாவது வந்து சேரட்டும்!
- 128
மாணிக்கம் பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினான். இஸ்தோப்பில் வந்து உட்கார்ந்தான். இனி நடக்கப் போகும் விசயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு ஏழு மணி இருக்கும். ராகவன் முக்காடு போட்டுக் கொண்டு பதுங்கிப் பதுங்கி படியில் இறங்கி வந்தான். வந்தவன் மாணிக்கத்தின் காலில் விழுந்து வணங்கினான்.
வாவா! தம்பீ! இவ்வளவு நாளா. எனக்கே தெரியாமே எங்க போயி இருந்த. ? எப்படி செளக்கியம்? பின்னால் திரும்பி, ஏய். யாரு வந்திருக்கானு. பாரு!’ என்று மனைவியிடம் பெருமைப் பட்டுக் கொண்டான். ‘நெறைய பாலு ஊத்தி சீனிபோட்டு தம்பிக்கு 'திக்கா’ தேத்தள்ைனி கொண்டு வா. !’ என்று அமர்க்களப்பட்டான்.
‘ராகு! நீ ஒக்காந்து தேத்தண்ணிய குடி ஒன் மாமன்கிட்ட ஒரு வார்த்த சொல்லிப்புட்டு ஒரே ஒட்டத்துல வந்துர்றேன்!” என்று எழும்பி வாசல் படியைத் தாண்டு முன்னே. சின்னப்பழனி ஓடிவந்தான். ஒய். மச்சி! ‘ஒம் மருமக வந்துட்டா ஒய்" சின்னப்பழனி மகிழ்ச்சியோடு கூவினான்.
‘வெரி குட்...! இனி பஞ்சாயத்த கூட்ட வேண்டியதுதான். நீ தோட்டத்த கேவலப்படுத்திட்டே! எல்லாரையும் அவமானப்படுத்திட்டே!
‘ஐயோ மச்சான் மாணிக்கம் நடந்தது நடந்திருச்சி' என் முட்டாள் தனத்துல ரொம்ப கஸ்டப்பட்டுப் போனேன்.
'அடிப்போடீ! அதெல்லாம் முடியாது. ! இப்போ. ஒன் மடத்தனத்துக்கு நீ தண்டன வாங்கித்தான் ஆகணும் அந்த எளிய சொத்து. ஒம்மவ. இந்த பாவி ராகவனுக்குத்தான் சொந்தமானது. இவுஹ ரெண்டுப் பேரும் கலியானங் கட்டிக்க போறாஹன்னு ஊருக்கே தெரியும். அதுக்குள்ளே இவன் ஏன் அவள கூட்டிக்கிட்டு ஒட வேண்டிய நெலம வந்திச்சு. ? இப்ப நீ எதையும் மழுப்பாதே! நீ பெரிய பெரிய ஆளுகளோட சகவாசம் கொண்டவரு ஒம்மக சக்கர கட்டிக்கு இந்த ஏழப் பயல் பொருத்தமில்ல! இல் லீயா?. மாணிக்கம் சின்னப்பழனியைச் சொற்களால் நையப்புடைத்துக் கொண்டிருந்தான்.
‘ஐயோ போதும். மச்சி. ! இப்ப அவுங்களுக்கு கல்யாணத்த கட்டி வைப்போம். அட. வா ஒய். ! எந்தங்கச்சிய பாத்திட்டு வருவோம்!” சின்னப் பழனி மாணிக்கத்திடம் ‘சரண் டராகி அவசரப்பட்டான்.
29
Page 78
அப்படியா சங்கதி! வாடீ வழிக்கு. ! இப்ப ஊசிப்போன .......9؟' சோத்துல ஒய்யாரம் காட்டப் போற. ! இனி பஞ்சாயந்தான் தீர்மானிக்கனும்! பஞ்சாயத்துல ஆயிரந்தடவ அவுஹ ரெண்டு பேரு காலுல்ல நீ வுழந்து வுழந்து எழும்பணும். நீ இப்ப கருப்பு கோட்டு. கொடையோட நிக்குற. ஒனக்கு கணக்குப்புள்ள மருமகனா கேக்குது. ? நீ சகோதரங்களோடு சேர்ந்து பொறக்கல்லியா? சொல்லு ஒய்? இப்ப எங்க. இந்த பயல கூட்டிக் கிட்டு ஓடிப்போன ஒன் சக்கரக்கட்டி.
'வுட்ல இருக்கா.
‘நல்லா இருக்கு மச்சான் ஒன் கத ரொம்ப நல்லா இருக்கு!’ இப்ப ஒன் மருமகன ஒன் சக்கரக்கட்டிக்கிட்ட கூட்டிக்கிட்டுப்போ! தம்பி ராகவா! வா! வா. ! இனிமே இங்க யாரு வாடையும் என் வூட்ல வீசக்கூடாது. G3L u IT! G3L_JT....... ஒம் மாமனோட போ.
'மறுப்பேச்சு இல்லாம சின்னப்பழனி மருமகன் ராகவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.
米米米
ஒரு வாரத்துக்குப் பின்னர், மாணிக்கம் சின்னப்பழனியோடு பெரியங்கங்காணியிடம் போய் நின்றான்.
‘ஐயாவு மகளும் மருமகனும் திரும்பி வந்துட்டாங்க. வார்த்தை தடுமாறப் பேசினான் சின்னப்பழனி.
ஆமா! பழனி! இப்ப என்ன வேணும்? கங்காணி பழனியிடம் ராஜ பார்வையை உதிர்த்தார்.
"பஞ்சாயம் அப்பு. ? மாணிக்கம் குறுக்கிட்டான்.
9
‘ஐயோ சாமி. எம்மக ராகவனுக்குத்தான் வாக்கப்பட்டவ. பழனி கூனிக் குறுகிக் கெஞ்சினான்.
‘அப்ப ஏன் தோட்டத்தவுட்டு ர்ெண்டு பேரும் ஓடிப் போனாங்க..? கங்காணி கேட்டார்.
அப்பூ பழனி மக. கணக்கப்புள்ளைய விரும்புலிங்க. அப்பு. மீண்டும் மாணிக்கம் குறுக்கிட்டான். -
130
இப்ப. எம் மகளும். மருமகனும் புருஷன் பொண்டாட்டியா
9
ஆகிட்டாங்க. 23UJIT....... பழனி மீண்டும் வளைந்தான்.
‘அப்ப பொண்ணு கழுத்துல தாலிய காட்டு மச்சான்? மாணிக்கம் திரும்பவும் குறுக்கிட்டான்.
“மாணிக்கம் கேட்டது சரி' கங்காணி தொடர்ந்தார். "எவனும் எவளோட ஒடிப்போய் புருசன் பொண்டாட்டியா திரும்பி வரலாம். இனிமே இந்த மாதிரி தொந்தரவுக்கெல்லாம் முடிவு கட்டியே ஆகவேணும் கங்காணி கடிந்து பேசினார்.
'நீங்கதான் எங்க தகப்பன. ! எம்மகளுக்கு தாலி செய்ய தர்மம் குடுக்கணும்!”
ஆமாங்க அப்பூ. சின்னஞ்சிறுசுக மொறையோட இருக்கணும். மாணிக்கம் நியாயப்படுத்தினான்.
'ഥ5. ! பார்வதி. ! தம்பி. ! ரெண்டு பேரும் ஐயா கால்ல வுழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கங்க! பழனி இருவரையும் கூப்பிட்டான். வேலிக்குப் பின்னால் நின்ற கூட்டத்திலிருந்து இரண்டு உருவங்கள் முக்காடு போட்டுக் கொண்டு வந்து கங்காணி முன்னால் நின்றன.
‘வாங்க. வாங்க. சிட்டுகளா! சக்கர கட்டிகளா. ! வந்து அப்பூ கால்ல வுழுந்து தாலி தர்மம் கேளுங்களா. ! மாணிக்கம் முழங்கினான். ノ
‘என் கால்ல வுழ வேண்டிய அவசியமில்ல! மூட ஜன்மங்களா! ஒங்க ஓங்க லயத்துக்குப் போய்ச் சேருங்க! பஞ்சாயத்த லேசுல வுடமாட்டேன்! இந்த தோட்டத்துல எனக்கு ஒழுங்கு அவசியம். நான் சொல்றது புரியுதா பழனி?
ஆமாங்க சாமீ! எங்க தாத்தாவும் ஒங்க அப்பாக்கிட்ட கடனாளாத்தான் (கடன் ஆள். Indentured labOUlfer) 6 usb5T(b....... நல்ல வார்த்த சொல்லி அனுப்புங்க ஐயாவு! எங்க குடும்பம் ஒரு நாளும் பஞ்சாயத்துக்கு வந்தது கெடையாது சாமி
‘நல்லது சின்னப்பழனி! எப்ப கல்யாணத்த வச்சிருக்க.
‘அடுத்த மாசங்க ஐயாவு?
“இப்ப நீ போகலாம் சின்னப் பழனி!
டேய் மாணிக்கம்! அவுங்கள கூட்டிக்கிட்டு போ!'
31
Page 79
‘அப்பூ!
‘நான் சொல்றேன். ! அவுங்கள அனுப்பு!’ இடிபோல் கர்ஜித்தார் கங்காணி,
ஆகட்டும் அப்பூ!
கூட்டம் கலைந்தது.
நன்றாக இருட்டிவிட்டது. மாணிக்கம் ஒரு பெரிய டோர்ச்சும் கையுமாக அந்தக் கூட்டத்துக்கு தலைமை கொடுத்து பெரு மகிழ்ச்சியோடு நடந்தான். அவனுக்கு இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் திரும்பவும் பாட்டு வந்தது. பாடிக் கொண்டே சென்றான்.
போன மச்சான் திரும்பி வந்தான்.
பூ மணத்தோட.! SÐÜLuç போன மச்சான் திரும்பி வந்தான் கோவணத்தோட!
米米米
132
தேயிலை தேசத்து ராஜா
ட்டத்து அகராதியில் 'PD' என்று சொன்னால் அது பெரிய துரையைக் குறிக்கும். பி.டிதான் சக்தியின் சின்னம்..
அவர்தான் தோட்ட ராஜ்ஜியத்தின் இளவரசன். பதவிக்கும் அதிகாரத்துக்கும் வைக்கப் பட்ட பெயர் தான் பி.டி.
பி.டி. ஆட்சி அதிகாரத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டவராக இருந்தார், அந்தக் காலத்து ராஜாக்களைப் போல!.
அவர்தான் சட்டம். அவர்தான் நீதிமன்றம். அவர் வலிமை எங்கும் வியாபித்திருந்தது. அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் பெயர் மட்டும் ஆட்சி செய்யும்.!
பி.டி.ஏனைய மனிதர்கள் போலல்லாது வித்தியாசமாகவே வாழ்வார். வித்தியாசமாகவே மூச்சு விடுவார். 6iggu IIT3FLDIT35036) பேசுவார். வித்தியாசமாகவே நடப்பார். துரைமார் வர்க்கங்கள் தோட்டத்தில் வாழும் சராசரி மனிதர்களைப் போல் வாழ மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கை செயற்கையாகவும் ஆணவம் நிறைந்ததாகவும் இருக்கும். இப்படி எத்தனையோ பி.டி.க்கள் வாழ்ந்து விட்டார்கள். நூறு பி.டி.க்கள் வாழ்ந்த அதே வாழ்க்கையைப் பாரம்பரியம் கெடாமல் ஒவ்வொரு பி.டி.யும் வாழ்ந்து காட்டுவார்கள்.
அவர்களுடைய எதிர்காலச் சந்ததியினரும். துரைமார் மரபு
133
Page 80
வழுவாது அதே ராஜ வாழ்க்கையை, அதிகாரத் தனத்தைப் பின்பற்றி பாதுகாக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பி.டி.யினதும் ஆழ்ந்து பதிந்த எண்ணமாகும்.
அவரது ஆட்சியின் எல்லைகள் டிவிசன்களாக இருந்ததால் ஒவ்வொரு டிவிசனிலும் சிற்றரசர்களாக 'SD ' எஸ்.டி. மார்கள். சின்ன துரைமார்களும், கண்டக்டர்மார்களும் பொறுப்பாக இருப்பார்கள். அந்த ராஜ்ஜியம் குளறுபடி நிறைந்த ஒரு ராஜ்ஜியமாகும்.
தலைமைக் காரியாலயம். ஒரு தோட்டத்திலும், டிவிசன் காரியாலயங்கள். வெவ்வேறு தோட்டங்களிலும் அங்கங்கே தொழிற்சாலைகள். மருந்துச் சாலைகள். மின்சாரம் உண்டாக்கும் வீடுகள் (Power House) அரிசிக் காம்பராக்கள். கன்றுத் தவறணைகள். போக்குவரத்துப் பிரிவுகள். கட்டிட நிர்மானங்கள் இவைகளைப் பேணி பாதுகாக்கும் பணிகள். இப்படி எல்லா வேலைகளும் ஆங்காங்கு அனுபவசாலிகளிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தன. கொழுந்து மலையில் கங்காணி கூட அப்படியேதான் பேசுவார். ‘யாரங்கே. ? தொரவுட்டு வேலைய கெடுத்துப் புடாதே. வெரட்டிப் புடுவேன் லயத்துக்கு...! ரொம்ப கவனம்!”
கவ்வாத்துக் காட்டில் இன்னும் மோசமாகக் கங்காணிமார்கள்
பேசுவார்கள். ‘‘மனுசன் மாதிரி வேல செய்ய சொல்லி தொர D616t..... ஒடர் போட்டிருக்காரு. கேட்டுக்கிட்டியா. சோம்பேறிப் பண்டிகளா..! y
தோட்டங்களில் சின்னதுரைமார்களும் கங்காணி கண்டக்டர்மார்களும் ஒரு விதமாக பேசுவார்கள். ஆனால் மொழியும் அதன் அர்த்தங்களும் ஒன்றாகத்தான் இருக்கும். ! ஒரு செயற்கைப் பாஷையில் அதிகாரத் தொனியை வெளிக் கொணர்வதற்காக அப்படிப் பேசப்படுகிறது. ‘அப்படி செய்யவாரா?. இப்படிச் செய்யறது. யாரது இப்படிப் போறது. பெரிய தொர நாளைக்கு மல ரவுண்டு வர்றாரு. வேல சரியில்லாட்டி தொலஞ்சே. !" பெரிய துரை வாரத்தில். குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வேலை பார்க்க வருவார்.
அவர் வேலையைப் பார்க்க வரப்போகும் டிவிசனில் அவர் உபயோகிக்கும் பிரத்தியேகப் பாதையை ஒரு வயதான தொழிலாளி புல், பூண்டு, தூசி, துப்பு இல்லாமல் துப்பரவு செய்து வைத்திருப்பான். அந்தப் பாதையில் வேறு எவரும் நடக்க முடியாது. அது தொரை பாதை துரை மட்டுமே நாய்கள் சகிதம் குதிரை சவாரி செய்து வருவார்.
பெரிய துரை மலை ரவுண்டு வருகிறார் என்றால் தகவல் அறிவிக்க
134
வேண்டிய அவசியமேயில்லை. இயற்கையே அவர் வருகையைக் கூறிவிடும்.
காலைக் காற்றிலே. அவர் பாவிக்கும் சுங்கான் புகையிலையின் நறுமணம் மலையெல்லாம் பரவிவிடும். காற்றோடு கலந்த அந்த வாசனையைச் சுவாசிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பான்.
வாசத்தை மோப்பம் பிடித்த கங்காணி சும்மா சரி. சத்தம் போடத் தொடங்கிவிடுவான். ‘ஏய். யாரங்கே?. என்னா செய்யறே நீங்களெல்லாம். ஒன் வேலய ஒம்பாட்டுக்கு செய்! நல்லம். காது
கேக்கிறதா. ၇)း
கண்டக்டரும் சின்னத் துரையும் பேயறைந்தவர்களாக விறைத்துப் போயிருந்தார்கள். அவர்கள் வேலையைப் பார்ப்பதில் மும்முரமாகினர்.
நாய்கள் கூட்டம் வேகமாக ஓடி வந்தன. பளபளக்கும் நாக்குகளை நீட்டிக் கொண்டு வெள்ளைக் கருப்பு நிறத்தில் பெரிய பெரிய நாய்கள் கூட்டம். பெரிய துரையின் பாதையின் முன்னால் பவனியாக ஓடிவந்தன. ரொம்ப தூரத்தில் குதிரையின் "டொக்கு டொக்கு என்ற சத்தத்துடன் குதிரை வந்தது. شده
குதிரைக்காரச் சவரிமுத்துவும் ஓடிவந்தான். அவன் பெரிய துரிை கொடுத்த காற்சட்டையும் வேட்டைக்கார கோட்டையும் மாட்டிக் கொண்டு சிவப்பு தலைப்பாகையோடு காட்சி தந்தான்.
மலைக் காடுகளில் ஓடி வரும் குதிரைக்கும் நாய்களுக்கும் நன்றாகத் தெரியும், துரை வந்து எங்கே நிற்பார் என்று. கவ்வாத்துக் காடாக இருந்தாலும் சரி. கொழுந்து பறிக்கும் மலைகளாக இருந்தாலும் சரி. துரைக்காக பாதுகாக்கப்படும் அந்த பாதையில் அகலமான ஒவ்வொரு இடத்திலும் அவர் நின்று வேலை பார்ப்பதற்கான விதத்தில் இடம் அமைக்கப் பட்டிருக்கும்.
அந்த இடத்திலும் நாய்களும் குதிரைகளும் வந்து நிற்கும். துரை அந்த இடத்தில் நின்று கொண்டு வேலைகள் ஒழுங்காகச் செய்யப் பட்டிருக்கிறதா? என்று நோட்டமிடுவார். சின்னத் துரை, கண்டக்டர், கணக்கப்பிள்ளை மூவரும் துரையின் அருகில் பக்தியோடு சென்று "குட்மோனிங் சேர்’ என்றார்கள்.
‘மோனிங்..!’ ‘ஹவ் இஸ் யுவர் வேர்க்? என்றார்., துரை.
* வெரி வெல் சேர்!’ என்றார்கள் மூவருமாக. எஸ் ட்டி மேட்டுக்குள்ளேயே (Estimate) வேல நடக்குதா. y
35
Page 81
*வெரிவெல் சேர்!’
‘ரவுண்ட்ஸ் ஒழுங்காப் போகுதா.
‘வெரி வெல்சேர்!’
இந்த ‘வெரிவெல் சேர் பாஷை ஒடுக்கப் பட்ட தாக்கத்தின் ஒரு வெளிப்பாடு தோட்டத் துரை அப்புவைப் பார்த்து 'உதைப்பேன் ராஸ்க்கல்' என்றாலும் 'வெரிவெல் சேர்’ போடுவான் அப்பு!
வேலைக்காடு.
பெரிய துரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். நாய்கள் கூட்டம் தேயிலைச் செடிகளுக்குள் நிற்கின்றன. மலைக்கு வந்திருந்த கணக்கப்பிள்ளையின் பெரிய நாய், ‘இது எஜமான் வீட்டு நாய்கள் என்ற அதிகார சக்திக்குப் பயந்து வாலைச் சுருட்டிக் கொண்டு எங்கோ ஒடி மறைந்தது!
பெரிய துரை அந்த நாயைப் பார்த்து விட்டார். அவர் முகத்தில் அருவருப்புத் தெரிந்தது. தனனுடைய நாய் கீழ்ச்சாதி நாய்களுடன் பழகி விடும் என்று மிக ஜாக்கிரதையாக இருந்தார்.
அவர் பெரிய துரைக்கே உரிய. அவரது மூதாதையருக்கே உரிய தொனியில் அடித் தொண்டையில் சத்தமிட்டார். ‘வா நாய்களே!. கம் எலோங் டோக்ஸ்! இது நூறு வருஷத்து பெரியதுரைமார் பாஷை!
நாய்களை அதட்டி அழைத்த குரலும். துரை புறப்படுவதற்கு ஆயத்தமாகிவிட்டார் என்பதைக் காட்டியது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் வேலைத் தலங்களில் எதையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.
நாய்கள் கணக்காக வந்து கூடின. குதிரையும் திசை திரும்பி நின்றது. வேலைத் தலத்திலிருந்து துரை போகப் போகிறார் என்ற ஒரு மீட்சி தென்பட்டது. இந்தச் சோதனை மிகுந்த நேரத்தில் கண்டக்டரும் பெரிய கணக்கப் பிள்ளையும் துரையிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்று துடித்தனர். துரையிடம் இவர்கள் பேசுவதை தொழிலாளர்கள் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசையும் பெருமையும் அவர்களிடம் இருந்தது.
136
உருக்கின் பிரகாசத்தைப் போன்ற அவரது சாம்பல் நிறக் கண்கள். தொப்பிக்கு அடியிலிருந்து அவர்களை ஏளனமாகப் பார்த்தன.
தனக்கு கீழ் பணிபுரியும் அவர்களின் மேல் ஓர் ஆதரவான பார்வை கூட அவரிடமிருந்து விழவில்லை.
அடுத்த மலைக்கு அவர் கிளம்பினார். நாய்களும் குதிரையும். முன்னால் பவனி. கணக்கப்பிள்ளையும் கண்டக்டரும் அசடுவழிய குழம்பிப் போய் நின்றார்கள். நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைப் புறங்கையால் ஒருவர் துடைத்துக் கொண்டார்.
டிவிசனிலுள்ள எல்லா மலைகளிலும் ஏறி வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரு தேவை பெரிய துரைக்குக் கிடையாது. அவை எல்லாம் ஓர் வேண்டாத வேலையாகவே அவர் தீர்மானித்துக் கொண்டவர்.
அவர் ஒர் ஆதிக்கப் பரம்பரை! அவருக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய வருகை ஒரு ‘வேலைக்காட்டுக்கு தெரிந்து விட்டால் போதுமானது. ஏனைய எல்லா வேலைக் காடுகளிலும் மும்முரமாகவே வேலை நடைபெறும்.
ஆகையால் அவர் திடீரென்று தனது நிகழ்ச்சி நிரலை ந்ேதரத்தோடு சுருக்கிக் கொண்டு தொழிற்சாலைக்குத் திரும்பினார்.
தோட்டத்திலுள்ள எவருமே பெரிய துரைக்கு ஒதுககிய பாதையில் அடி எடுத்து வைத்தது கூட கிடையாது! அது ஒரு நேர் பாதை. துரையின் குதிரை ஓடி வருவதற்காக உருவாக்கப் பட்ட பாதை.
பெரிய துரை நேராகத்தான் சவாரி செய்வார். கிறிஸ்துவின் கடைசி விருந்துக் கிண்ணத்தைத் தேடிச் சென்ற கலகப் பிரிவைப் போல.
கடைகளுக்குச் சென்று வருபவர்கள் - தொழிற்சாலையிலிருந்து மலைகளிலிருந்து திரும்புபவர்கள் - துரையைக் கண்டதும் போச்சு கானுக்குள்ள இறங்கிவிடுவார்கள்.
நூற்றுக்கு இருநூறு வீதம் நிச்சயம். அந்த இறுமாப்பிலும் மமதையிலும் வரும் பெரிய துரை தொழிலாளர்களை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை!
37
Page 82
நாலாயிரம் பேர்களுக்கு மத்தியில் என்னவெல்லாமோ நடக்கலாம். யார் எதைக் கண்டது என்று வாழா விருப்பார்.
எவனாவது ஒருத்தன் ஒரு றாத்தல் தேயிலையை களவெடுக்கலாம். பலகை மடுவத்திலிருந்து பலகைகளைத் திருடலாம். திருடிய பலகையை கானுக்குள் பதுக்கி வைக்கலாம். அவைகளைப் பற்றி எல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டது கிடையாது. தன் பார்வையை அலைய விட்டதில்லை. அவரது மேம்போக்கும் எதையும் பார்த்து அறிய விரும்பாத தன்மையுமே அவரது கெளரவத்தைக் காப்பாற்றி வந்தன.
பெரிய துரையின் கார் வண்டி தொழிற்சாலையை வந்தடைந்தது. ஸ்டோருக்கு இன்றைக்குப் பெரிய துரை வரவேண்டிய நாளே அல்ல. இருந்தாலும் டீமேக்கருக்குத் துப்பு வந்துவிட்டது. ஸ்டோரின் நான்காம் மாடியில் நிற்கும் கழுகுக் கண்ணன் வாட்டக்காரன். பெரிய துரை கார் ஸ்டோர் ரோட்டில் வருவதைக் கண்டு டீமேக் கருக்குச் சொல்லிவிட்டான்.
திடீரெனத் தொழிற்சாலை விளக்குகள் எரிந்தன.இயந்திரங்கள் உறுமின. எஞ்சின் காம்பரா, றோல் காம்பரா எல்லாம் உயிர் பெற்று விழித்தன.
-தொழிற்சாலை
சவரிமுத்து பெருமிதத்தோடு குதிரையிலிருந்து இறங்கி நின்றான். காரை நிறுத்திய டிரைவர் டக்கென்று இறங்கி நின்றான். அவனைச் சுற்றிய நாய்கள் காருக்குள் ஏற்றும்படி முனகின.
குதிரையும் கனைத்துக் கொண்டு காரை நெருங்கியது. சவரிமுத்து குதிரையை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.
காருக்குள்ளேயிருந்து குதித்த துரை நேராக ஸ்டோர் ஆபிஸை நோக்கி விரைந்தார்.
டீமேக்கர். காக்கி கிட்டில்’ இருந்தார். சட்டைக் கைகளை முழங்கை வரை சுருட்டி எந்த நேரமும் 'பிஸியாகவே தோன்றுவார்.
"குட்மோனிங் சேர்!”
‘மோனிங் டீமேக்கர்!’
‘‘கொட் த சாம்பல்?”
**வெரி வெல் சேர்’
அந்த நீட்ட மேசையில் தேனீர் கோப்பைகள் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன. ஆரஞ்சு நிறத்திலும் தங்க நிறத்திலும் தேனீர் தயாரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு ரகத் தேயிலையும் ஒவ்வொரு கோப்பையில் வைக்கப் பட்டிருந்தது. அந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப் பட்ட தேயிலையின் தரத்தையும் சுவையையும் அறிவதற்குப் பெரிய துரை ஒவ்வொரு கோப்பைத் தேனிரையும் உற்று நோக்கினார்.
ஒரு காலைத் தூக்கி நாற்காலியில் வைத்தார். ஒரு கப் தேனிரைச் கையில் எடுத்தார். துரையின் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு டீமேக்கர் ஒடுங்கி நின்றார்.
துரை இப்போது. தேயிலையை ருசிக்கத் தொடங்கினார். 9(5 கோப்பையை எடுத்து உதடுகளில் வைத்து. லேசாகச் சப்பி. சப்பிச் சுவைத்தார். பிறகு கொஞ்சம் நிறுத்திச் சப்பினார். பிறகு உறிஞ்சி ருசி பார்த்தார்.
அங்குள்ள அத்தனைக் கோப்பை தேனீரையும் சப்பி. சப்பி.
உறிஞ்சி உறிஞ்சி. ருசி பார்த்து முடிவதற்கு இருபது நிமிடங்கள் பிடித்தன. தேயிலையை ருசி பார்த்த அவர் அந்த நிமிடங்களில் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. அவரது உன்னிப்பான
கவனமும் நிதானமும் நிசப்தத்தைக் கொடுத்தன.
டீமேக்கர் பூமியதிர்ச்சியை எதிர்ப்பார்த்தவராய், ‘ஆட்டம் கண்டு கொண்டிருந்தார்.
கடைசியாகவே. வார்த்தைகள் வந்தன.
P.D. Gulfot Isr.
‘பி.ஒ.பி. இஸ் நொட். டு. (5' (B.O.P. is not too good). வாட் இஸ் ரோங் தெயர். ?
‘பி.ஒ.பி. கொஞ்சம் கொலிட்டீ குறைவு. என்று தட்டுத் தடுமாறி இரண்டொரு வார்த்தைகளை உளறினார். டீமேக்கர்.
பி.டி.கண்களை அரைவாசி மூடிக் கொண்டு டீமேக்கரைப் பார்த்தார். “ரைட் யூ ஆர்’ என்றார்.
டீ.மேக்கர் தூக்கி வீசப்பட்டவராய்த் துடி துடித்து நின்றார்.
‘கொழுந்து வாட்டம் எங்க நடக்குது. ၇) 'மூன்றாம் தட்டிலும் நாலாம் தட்டிலும். (3σή
139
Page 83
‘வெல். கம் எலோங்'
ஐந்து நிமிடத்துக்குள் பெரிய துரை மூன்றாவது தட்டில் ஏறி விட்டார். 'டீமேக்கர். யுவர் எஸிஸ்டன்ட்..?
ஒரு காக்கி சட்டை இளைஞன் இருபது அடிக்குப் பின்னால் நின்றான். கூராகச் சீவிய பென்ஸில் ஒன்றை இடது காதிலே செருகியிருந்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டடி முன்னால் வந்து நின்றான்.
அவனிடம் பெரிய துரை பேசினார். எதுவுமே புரியாத படி என்னமோ சொன்னார். அவர் வார்த்தைகள் அவனது காதுகளில் நுழையவில்லை. ஒன்று மட்டும் விளங்கியது. ‘எஸிஸ்டன்ட். பீல்ட் கிளாஸ்!’ என்று தொலை நோக்கியைக் கேட்டார்.
அன்றைய மலை ரவுண்டில் அவர் பார்க்காத மலைகளையெல்லாம் துருவித் துருவிப் பார்த்தார்.
அங்கே. அவரது கண்டக்டரை. கணக்கப்பிள்ளையை வேலை செய்த தொழிலாளர்களைக் கண்டு பிடித்தார்!
அவர்கள் அவரின் கண்ணெதிரே நின்றார்கள். அவருக்கு இன்று எல்லாம் திருப்தி.
“எஸிஸ்டன்ட்” தொலை நோக்கியை இரண்டாவது டீ மேக்கரிடம் கொடுத்துவிட்டு படிகளில் இறங்கினார்.
அவரிடம் பின்னால் திரும்பிப் பார்க்கும் பழக்கமே கிடையாது. எதையாவது அவர் விட்டுவிட்டுச் சென்றால் அது அவர் பின்னால் வந்துவிடும்!
ரெடியாக நின்ற காரில் PD. ஏறினார். வெள்ளைச் சீனியாய் பரவிக் கிடக்கும் சரளைப் பாதையில் கார் ஓடியது. தேயிலை மலையிலிருந்து பங்களாவுக்கு மூன்று மைல் தூரம்.
米米米
பறந்தோடும் காரின் ஜன்னலினுாடாகப் பார்வையை மேயவிட்டுக் கொண்டே சென்றார். அவருடைய கார் ஆசனம் வசதிக்கேற்றபடி அமைக்கப் பட்டிருந்தது.
40
அவரது அதிகாரப் பார்வை. பள்ளம் மேடுகளில். U360)3F பசேலென்ற மலைத் தொடர்களில். அங்கே வாசம் செய்யும் அத்தனை ஜீவராசிகளின் மேலும் ஆட்கொண்டிருந்தது.
பெரிய துரை கூலிகள் வசிக்கும் சூழலுக்கு அப்பால் வெகு தூரம் ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.
அவரது பங்களா. அவரைப் போல அந்தஸ்திலும் கெளரவத்திலும் உயர்ந்து நின்றது. மலை உச்சியில் ஏனைய மனிதர்கள் வசிக்கும் உறைவிடங்களை விட மிக உயரமான நிலையில் குடிகொண்டிருந்தது. அந்த மாளிகையின் சூழலும், சுற்றுப்புறமும், மண்ணும் கூட இங்கிலாந்து தேசத்தின் ஓர் பகுதியாகவே காட்சி தந்தது!
அழகான மரங்கள். அரச அணிவகுப்பாக நிமிர்ந்து நின்றன. அந்த மாளிகையைச் சுற்றி கம்பளம் விரித்தது போல் பசுமை நிறைந்த நீல நிறப் புற்கள் படர்ந்திருந்தன.
டென்னிஸ் கோர்ட் அருகே மஞ்சள் நிற மூங்கில்கள் அடர்த்தியாக குவிந்திருந்தன. மலைப் பாறைகளும் வகை வகையான மீனாச் செடிகள்
நிறைந்த தோட்டமும். நீச்சல் தடாகத்தின் அருகில் இருந்தன.
கோடைக்கால குடிசைகளில் (Summer House) மலர்க்கொடிகள் தோரணங்களாகத் தொங்கின. ஜன்னல்களின் அருகில்.
கூடைகளில் வளர்ந்துள்ள ஒகிட் மலர்க்கொத்துக்கள் கொள்ளை
அழகைக் கொட்டிக் கொண்டிருந்தன.
அந்த இன்பச் சூழல் ஜொலிக்கும் கனவு உலகத்தைக் காட்டி
மனதை மயக்கிக் கொண்டிருந்தது.
பெரிய துரையின் மாளிகை எத்தனையோ அறைகளைக் கொண்டது! அந்த மாளிகை. இயற்கை எழிலால் ஆகர்ஷிக்கப் பட்ட ஒர் ஏகாந்தமான சூழலில் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. மாளிகை என்னும் அந்தப் பெரிய பங்களாவில் தான் பெரிய துரையின் வாழ்க்கை நிறைந்திருந்தது. ஏகாந்தமான அந்த மாளிகையின் அரசியாகத் தான் துரையின் மனைவி ‘துரைசாணி இருந்தாள். அவளின் கட்டுப்பாட்டிலும் காவலிலும் தான் பெரிய துரை வாழப்பட்டார் என்றும் ஒரு குசு குசு கதையும் இருந்தது!
துரைசாணி
அவள் ஆம்பளையை விட ஒருபடி உயர்ந்தவள் என்றும், அந்த அரண்மனையைச் சுற்றிப் பட்டுக் கயிற்றினால் வேலி கட்டிப் பெரிய துரையை அடைத்து வழி நடத்தும் சாதுரியம் நிறைந்தவள் என்றும் பேசிக் கொண்டார்கள்!
*争
14
Page 84
அந்த அரண்மனைச் சேவகர்களை ஊசிமுனையில். அல்ல ஈட்டி முனையில் வைத்திருந்தாள். அவளுடைய ஏவலாளிகளாக. பட்லர் என்ற பெரிய வேலைக்காரனும், கோக்கி அப்பு என்ற சமைல்காரனும். இரண்டாவது அப்பு என்ற உதவியாளனும், ஹவுஸ் கூலி என்னும் வீட்டைச் சுத்தம் செயப்பவனும் . இன்னும் தோட்டக்காரன், குதிரைக்காரன், மாட்டுக்காரன், நாய்க்காரன், இறைச்சி பெட்டிக்காரன், டிரைவர், கிளினர் என்று விதத்தால் ஒருவர் வேலையில் இருந்தார்கள். இவர்கள் யாவரும் துரைசாணியின் நேரடிக் கணட்காணிப்பில் தான் சேவகம் செய்ய வேண்டும்.
இந்த இன்ப ராஜ்ஜியத்துக்குள் எந்த வித குறைவும் இன்றிப் பெரிய துரையின் வாழ்க்கை மிதந்தது.
பெரிய துரைக்குச் சில விசேஷ தினங்களை துரைசாணியே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள். ஒய்வு நேரங்களைப் போக்குவதற்கான நாட்கள். பறவைகள், மிருகங்கள், பிராணிகளோடு கொஞ்சுவதற்குச் சில நாட்கள் ஒதுக்கப் பட்டிருந்தன. ஒரு நாளில் இரண்டு முறை குழ நீ தை களைப் பார்ப் பதற்கு அவருகி கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ! குழந்தைகளின் கன்னத்தைத் தட்டிக் கொஞ்சவோ. அவர்கள் ஊஞ்சலில் ஆடுவதை. போனி சவாரி செய்வதை தூரத்தில் இருந்தே இரசிப்பதற்கு. அவருக்கு நேரம் ஒதுக்கியிருந்தாள்.
அவர் குடும்ப விவகாரங்களில் அதிகமாக நாட்டம் வைத்துக் கொள்வதற்கு உரிமையற்று இருந்தார்.
米米米
பெரிய துரையின் காரியாலயத்தைப் பற்றியும் அதன் காரியங்கள் பற்றியும் நிறையச் சொல்லலாம். காரியாலயம் பங்களாவின் அருகிலேயே கட்டப் பட்டிருக்கும். பங்களாவுக் கும் காரியாலயத்துக்கும் ஒரு சாலை இணைக்கப் பட்டிருக்கும். அந்த வழியே பெரிய துரையின் காரியாலயப் பாதையாகும். அவருடைய காரியாலய அறை பெரிய கிளாக்கரின் அறையோடு திறந்து இணைக்கப் பட்டிருக்கும். அதன் பின்னால் தான் பொதுக்காரியாலய வேலைகள் இயங்கிக் கொண்டிருக்கும். -
அந்தக் காரியாலயம் தான் அந்தத் தோட்டத்தின் உயிர் நாடி.
- 142
அந்த முழுத் தோட்டத்தின் வேலைகள் யாவுமே பெரிய கிளாக்கர் எனும் இயக்குனரால் இயக்கப்படும். பெரிய கிளாக்கர் தோட்டத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதில் கவனமுள்ளவர். ஒரு தகவல் களஞ்சியம்.! ஈவு இரக்கமற்ற பேர்வழி. பெரிய துரைக்கு உண்மையை காட்டும் ஒரு கணித இயந்திரம்!
-(36)ur (3L
மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தொழிலாளர் சந்திப்புக்கள் நடக்கும். தொழிலாளர் தினம் இந்திய வழக்கப் படி தர்பார் என்ற ராஜ சபையாக பெயர் பெற்றிருக்கும்!
சிற்றரசர்களான சின்ன துரைகள், உத்தியோகத்தர்கள், பெரிய கங்காணிமார்கள் என்று இரு பிரிவுகளாக ஆஜர் ஆகியிருப்பார்கள்.!
சின்ன துரைமார்களுக்கே அந்த ராஜ சபையில் முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கும். உத்தியோகத்தர்களும் பெரிய கங்காணிமார்களும் ஒழுங்கு விதிப்படி கவனிக்கப் படுவார்கள். தோட்டத்துக்குள்ளே உருவாகிய இந்த உள்ளூர் முக்கியஸ்தர்கள், பெரிய துரையை வசியப்படுத்திக் கொள்வதற்கு மந்திரம் செய்து வைத்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். இவர்கள் எல்லோரும் இடுப்பில் தாயத்து கட்டியிருப்பார்கள்.
பெரிய துரையின் மனதைக் கவர்ந்து கொள்வதற்கு இப்படிப் பல மனோவசிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அவர்களுடையதை விடப் பெரிய கிளாக்கருடைய தாயத்து, எதையும் சாதித்துக் கொள்ளும் சர்வ வல்லமை பெற்றது என்று பேசிக் கொள்வார்கள்.
வழமைபோல தர்பார் முடிவதற்கு ஒரு மணித்தியாலம் எடுத்தது. அந்த அறுபது நிமிடத்துக்குள் எல்லாமே நடந்து முடிந்தன. மழைக் காலத்துக்கு கம்பளி வாங்குவது, புடவைகள், உணவுத் தானியங்கள், கைக்காசு வேலை, கொந்தராத்து வேலை என பல விசயங்களும் துரையின் சம்மதத்துக்கு கொண்டுவரப்பட்டு அவைகளை குறித்த நேரத்துக்குள் நடைமுறைப்படுத்துவதற்குப் பெரிய கிளாக்கரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டன.
-வனாந்தர வேட்டை!
ஆறுமாதத்துக்கு ஒருமுறை காடுகளுக்குப் போய் வேட்டையாடுகது என்பது தோட்ட வழக்கமாக இருந்தது.
Page 85
வேட்டைக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து ஒருவரிடம் பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கும். அப்பு, சமையல்க்காரன், காட்டு வழி காட்டுகிறவன், நாய்க்காரன், வேட்டைக் கோஷ்டிகள் எல்லோரும் பெரிய துரைக்கு முன்பதாகவே காட்டுக்குச் சென்று விடுவார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பெரிய துரை தனது சக பீ.டீ.மார்களுடன் வேட்டை நாய்களோடு புறப்படுவார். பெரிய துரைசாணி துரையைக் கட்டியனைத்து, முத்தம் கொடுத்து, கொஞ்சி, ‘ஹேவ் எ குட் டைம்.
99.
60)....... 60)....... என்று வாழ்த்தி அனுப்பினாள்.
பெரிய துரை கையசைத்து விட்டு வாகனத்தில் ஏறினார்.
பெரிய துரைமார்கள் யால காட்டிலும் மகாவலி காட்டிலும் மிருகங்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள்.
பெரிய துரைசாணிமார்கள் தோட்டத்துக் கிளப்புக்குச் செல்வார்கள். தங்கள் கணவன் மார்களின் களியாட்ட விபரங்களைச் சோதிப்பார்கள். இந்தப் பரிசோதனை ஒவ்வொரு மூன்று மாதமும் நடைபெறும்.
துரைசாணி புது வருசப் பிறப்பை ஆடம்பரமாகக் கொண்டாடுவாள். தோட்ட பங்களாவைக் களியாட்ட கூடமாகவோ. கண்டி குயின்ஸ் ஒட்டலாகவோ மாற்றி அமைப்பாள்...!
கிறிஸ்மஸ் முடிந்தவுடனேயே துரைசாணி தனது சினேகிதிகளுக்கும் பெரிய துரை மட்டத்திலான நண்பர்களுக்கும் சின்னதுரை, பெரிய கங்காணிமார், கணக்கப்பிள்ளை, கண்டக்டர் என்று சகலருக்கும் அழைப்புகள் அனுப்பி விடுவாள்.
பங்களா அறைகளிலுள்ள U 60) p ULI பொருட்கள் அப்புறப்படுத்தப்படும். பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
அங்கேயுள்ள அத்தனை அறைகளிலும் உணவுப் பெட்டிகளும் குடிவகைகளும் விசேஷமாக வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட வான் கோழிகளும் நிறைந்து கொண்டிருக்கும். துரைசாணி பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பாள். அவளது அதிகாரத் தொனிகளும் கட்டளைக் கணைகளும் திச் சுவாலையாக எரிந்து கொண்டிருக்கும்.
"அதை அங்கே வை. ! இதை இங்கே வை. இதை அங்கே கொண்டு போ..! ஏய். ஹோய்...!
விதவிதமான உணவுகள் தயாராகின. சமையலின் நறுமணம் காற்றோடு கலந்து பங்களாவைச் சுற்றி மிதந்தன. துரைசாணி இளம் சின்ன துரைமார்களை ஒடும்பிள்ளையாக வைத்திருந்தாள். ‘டு திஸ் என்ட் தட்!! என்று அவர்கள் கால்கள் நொண்டியாக்கும் வரை வேலை
-144
வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனைய சின்னத்துரைகள் தாங்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.
அங்கே எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைத் தன் கைக்குள் வைத்திருந்தாள் துரைசாணி. பெரிய துரையும் பங்களா வேலையாட்களும் வேர்த்து விறுவிறுத்துப் போனார்கள். அவர்கள் வேலைகளும் அப்பழுக்கில்லாமல் நடந்தன.
இரவு ஏழு மணி. விருந்து ஆரம்பமாகின. பெரிய துரைகள், பெரிய துரைசாணிகள் வந்தமர்ந்தனர். சின்னதுரை. சின்னதுரைசாணிகள் வந்தனர்.
உணவுகளும் குடி வகைகளும் மேசைகளை அலங்கரித்தன. அவர்கள் ஆடி. குடித்து. பழைய வருசத்தை அனுப்பினார்கள். சாப்பிடவும் வீசவும் உணவுகள் குவிக்கப் பட்டிருந்தன.
குடிக்கவும் கொட்டவும் குடி வகைகள் நிறைந்திருந்தன. சின்னதுரைமார்கள் பதமானார்கள். அவர்கள் பாடி ஆடினார்கள்.
“யூ ஆர் எ ஜொலிஹ"ட் பெல்லோ.” “யு ஆர் எ ஜொலிஹ"ட் பெல்லோ.”
வான் கோழியின் வறுவல் வாசம் புதுவருசத்தை வரவேற்றது.! ஆட்டமும். பாட்டமும். நடனமும். கூச்சலும். கும்மாளமும் ஆடி அடங்கின.
கொண்டாட்டத்தில் குளித்து மூழ்கிய சின்னதுரை ஒருவன். கரெஜ் கூரையின் மேல் படுத்திக் கிடந்தான். விருந்து முடிந்தது.
பரிசில்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும் நடைபெற்றன.
தோட்டத்துப் பெரிய மனிதர்களும். உத்தியோகத்தர்களில் குறிப்பிடக்கூடியவர்களும். பெரிய கங்காணி மார்களும். பரிசில்கள் வழங்கி. வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம். அவர்களுக்கென்று ஒழுங்கு செய்யப் பட்டிருந்த வழியாக வந்து. முகப்பு மண்டபத்தில் வீற்றிருக்கும் துரைசாணியை வாழ்த்திக் கெளரவிக்க அவர்கள் வந்தார்கள். பெரிய துரை. மகாராணியின் அருகில் கணவராக. அரசகுமாரனாக. நிகழ்ச்சிகள் முடியும் வரை துரைசாணியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.
米米米
45
Page 86
பி.டி. பல விஷயங்கள் அறிந்த ஒரு பண்டிதன்..!
மனதையும் உடலையும் கொஞ்சம் ஆறுதலாக வைத்துக் கொள்வதற்கு பி.டீ நுவரெலியாவிற்கு போவார். அங்கே அந்த அமைதியான குளத்திலே மீன் பிடிப்பார். துரையும் துரைசாணியோடு இவ்வாறு மீன்பிடிக்கச் சென்று விட்டால் அவரது சிரேஷ்ட சின்ன துரை ஆட்சிபீடம் ஏறுவார்!
அவர் ஒரு ‘ட’ப் மேன். ஹார்ட் நட்” என்று பேசப்பட்டார்.
கூடுமான வரை. பெரிய கிளாக்கரும் மற்றவர்களும் அவரிடம் அகப்படாமல் தங்கள் வேலைகளில் நிதானமாக நடந்துகொள்ள முயற்சித்தார்கள்.
இருந்தாலும் அந்தத் தற்காலிக சக்கரவர்த்தி அவர்களைப் பிடித்து எண்ணெய் இல்லாமலேயே பொரித்து எடுத்தான்.
பி.டீ, அவர்களைக் காப்பாற்றுவதற்கு நேரத்தோட வந்து விட்டார். பருவக்காலங்கள் வந்து போயின. பீ.டீ.யும் அவைகளைப் போல ஒரு திருப்பத்தை சந்திக்க வேண்டும்.
அவர் கம்பெனி காரியாலயத்துக்குப் பதவி உயர்வைப் பெற்று கொழும்புக்குச் செல்ல வேண்டும். அல்லது பெரிய தோட்டம் ஒன்றுக்கு இடமாற்றம் பெறவேண்டும். ஒரு மாயமான சைகை இந்த மாற்றத்தை முன்கூட்டியே காட்டும் அறிகுறியாக ஆகாயத்தில் தெரிந்தது.
ஒரு செங்குத்தான மலைப்பாறையின் மேல் தனித்து வளர்ந்திருக்கும் ஒரு ஒற்றை மரத்தில் உட்கார்ந்துகொண்டு, அந்த 'உத்தியா குருவி" அந்த நடுநிசியில் ரெண்டும் கெட்ட நேரத்தில் அந்தச் சகுனத்தை முன்கூட்டிச் சொல்லிச் சொல்லிக் கத்தியது . பேய்கள் உறங்கும் அந்தப் பயங்கரமான நேரத்தில் குருவி சத்தம் கேட்டு குதிரைக்காரனின் நாய் ஊளையிட்டது. இவையெல்லாம் நல்ல சகுனமாகவே தென்படவில்லை.
இறுதியாக விசயம் வெளிவரத் தொடங்கியது. பெரிய துரை என்னும் பி.டி. கம்பனி காரியாலயத்திற்கு. கொழும்புக்கு செல்லவிருக்கிறார் என்ற செய்தி முழுத்தேட்டத்தையுமே உலுக்கியது.
பெரிய கிளாக்கர், பெரிய டீமேக்கர், பெரிய கங்காணி யாவரும் சோகத்துடன் தங்கள் வேலைகளைக் கவனித்தார்கள்.
சிலர் தங்கள் எஜமானைப் பிரியப் போகிறோம் என்ற துயரத்தில்
146
கண்ணிர் விட்டார்கள். பிடீ. வழமைபோல இதையெல்லாம் கவனத்துக்குக் கூட எடுத்துக்கொள்ளவில்லை.
>*<>+<>*<
தோட்டத்துத் தொழிற்சாலை மைதானத்தில் துரை போவதற்கு முன்பதாக ஒரு பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது
சின்ன துரை மார்கள், உத்தியோகத்தர்கள், பெரிய கங்காணிமார்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பெரிய துரைக்கு நன்றி கூறினார்கள். இவ்வளவு காலம் தங்களையெல்லாம் பாதுகாத்தமைக்காகத் தங்கள் நன்றிக்கடனை வெளிக்காட்டினர்.
பிரமாண்டமான கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பல பேச்சாளர்கள் பேசினார்கள். பலர் வாழ்த்து மடல்களை வாசித்தார்கள். பெரிய கிளாக்கர் பரிசு வழங்கினார்.
பெரிய துரையும் பெரிய துரைசாணியும் கழுத்து நிறைய மாலைகள் அணிவிக்கப் பட்டு எல்லோருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள. எல்லோரும் உள்ளடக்கிய பெரிய புகைப்படம் பிடித்தார்கள். AA
-பெரிய துரை - பீ.டீ. சென்று விட்டார். இன்னுமொரு பெரிய துரை வந்துவிட்டார்.
‘அந்த ராஜாவின் காலம் முடிந்தது..!"
''
‘ராஜா நீடுழி வாழ்க..!
ஆமாம். அந்த துரைமார் இராச்சியத்தை ஆளுவதற்குப் பெரிய துரை என்பவன் பிற்நதே வருகிறான். இந்தத் தேயிலைத் தேசத்தில் அந்த ராஜாக்கள் வாழ்ந்த தடையங்கள் எண்ணத்திலும் எழுத்திலுமிருந்து ஒருபோதும் அழியாது.! p
TE}-
Page 87
மு.சிவலிங்கம்
மலையக இலக்கியத்தின் ஒரு மறுமலர்ச்சி யுகமான 1960களில் எழுத்துலகப் பிரவேசம் செய்தவர் மு.சிவலிங்கம்.
வீரகேசரியில் பிரசுரமான 'சுமைதாங்கி ' (10021963) என்னும் சிறுகதை மூலம் ஒரு சிறு கதை எழுத்தாளராக மலையக இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர் தன்னை ஒரு தரமான சிறுகதைப் படைப்பாளியாக ஸ்திரப்படுத்திக் கொண்டவர்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியுடன் இணைந்து நடத்திய மூன்றாவது சிறுகதைப் போட்டியில்(1966) இதுவும் ஒரு கதை ' என்னும் தன்னுடைய சிறுகதைக்காக முதற் பரிசினைப் பெற்றவர்.
துரைவி - தினகரன் சிறுகதைப் போட்டியில் (1998) இவருடைய நிலைமை கொஞ்சம் உயரும் போது' என்னும் சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றது.
1991ல் மாத்தளை கார்த்திகேசுவின் குறிஞ்சி வெளியீட்டின் மூலம் வெளியிடப் பட்ட மலைகளின் மக்கள்' என்னும் சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினையும், விபவி சுதந்திர இலக்கிய அமைப்பின் பரிசினையும் பெற்றுக் கொண்டது.
கலையொளி முத்தையாபிள்ளைஞாபகாத்த சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இனி எங்கே’ என்னும் சிறுகதை லண்டனில் இருந்து வெளிவரும் தாகம் இலக்கிய சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா இவருடைய 'என்னைப் பெத்த ஆத்தா' என்னும் சிறுகதையை மறுபிரசுரம் செய்துள்ளது.
48
தேயிலையுடன் தேயிலையாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் தனது சமூகத்தின் விடிவுக்காகவே தன்னுடைய எழுத்தையும், அனுபவத்தையும், ஆற்றலையம் பயன்படுத்தும் ஒரு மனித நேயம் மிக்க மனிதர் இவர்.
பல்கேரிய நாட்டின் ஜோர்ஜ், திமத்ரோவ் சர்வ கலாசாலையில் ஓராண்டுகாலம் தொழிலாளர் கல்விப் பயிற்சி பெற்றவர்.
வீரகேசரியின் ஆசிரியர் குழுவில் இணைந்து கொண்டதன் மூலம் 1960களில் தனது தொழிற்றுறை அனுபவங்களை ஆரம்பித்தவர். தோட்டத்துக் கிளார்க், பள்ளிக கூட ஆசிரியர், தொழிற்சங்கப் பத்திரிகைகளின் ஆசிரியர் (ஜன நாயகத் தொழிலாளி. முன்னணி) தொழிற்சங்கவாதி. திரைப்பட நடிப்பு என்று பலவிதமான தொழிற்றுறை அனுபவம் பெற்றவர்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், முன்னணியின் செயலாளராகவும் பணியாற்றி மத்திய மாகாண சபையின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக நுவரெலியாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் இந்த எழுத்தாளர்.
மக்களை நேசிக்கும் மனம், எழுத்து, இலக்கியம், பத்திரிகைத்துறை அனுபவம், தொழிற் சங்கப் பணிகள். நாடாளுமன்றப் பிரதிநிதிதுத்துவம் என்று மலையகத்தின் முன்னோடிக் கலைஞர் சி.வி வேலுப்பிள்ளையை நினைவுபடுத்தும் இலக்கியவாதி இந்த மு.சிவலிங்கம்.
சி.வியிடம் இவருக்கு ஈடுபாடு அதிகம் என்பதை சி.வியின் BORN TO LABOUR படைப்புக்களை தமிழில் மொழிபெயர்த்து வரும் அண்மைக்காலப் பணிகள் நிரூபிக்கின்றன. இம் மொழி பெயர்ப்புக்கள் ஒரு நூலாக வேண்டும் என்னும் இவருடைய ஆவல் துரைவியின் இந்த வெளியீடு மூலம் நிறைவேறியிருக்கிறது.
தலவாக்கலை பெரிய மல்லிகைப் பூ தோட்டத்தின் முத்து முருகன், அழகன் கண்ணம்மாள் தம்பதிகளின் நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவலிங்கம்.
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் அரசியல் காரணங்களுக்காக இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப் பட்டவர் எண் பதும் குறிப்பிடக் கூடியதே. *
-தெளிவத்தை ஜோசப்
- 49
Page 88
துரைவி வெளியீடுகள்
. மலையகச் சிறுகதைகள்
33 மலையக எழுத்தாளர்களின் கதைகள்.
. உழைக்கப் பிறந்தவர்கள்
55 எழுத்தாளர்களின் கதைகள்
. LuTGosTuf
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்கள் . மலையகம் வளர்த்த தமிழ்
சாரல் நாடனின் கட்டுரைகள்
. சக்தி பாலையாவின் கவிதைகள்
சக்தி பாலையா
. ஒரு வித்தியாசமான விளம்பரம்
சின்னஞ் சிறுகதைகள் - ரூபராணி ஜோசப்
. மலையக மாணிக்கங்கள்
மலையக முன்னோடிகள் பன்னிருவரைப் பற்றிய நூல் - அந்தனி ஜீவா
8. தோட்டத்து கதாநாயகர்கள்
நடைச்சித்திரம் - கே.கோவிந்தராஜ்
. பரிசு பெற்ற சிறுகதைகள் 1998
துரைவி - தினகரன் சிறுகதைப் போட்டி
10.மலையகச் சிறுகதை வரலாறு
தெளிவத்தை ஜேசப் (யூரி லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி)
11 ஆரைவி நினைவலைகள்
அமரர்.துரை விஸ்வநாதன் பற்றிய கட்டுரைகள்
12.வெள்ளை மரம்
சிறுகதைகள் - அல்.அஸ"மத் (யூரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி)
--r 150
Page 89
சி.வி.யின் இளமைக் கால தோற்றம்
சி.வி. வேலு இலக்கிய உலகில் சி.வி. என்று அன்பாக
சி.வி.வேலுப்பிள்ளை.
கண்ணப்பன் வேல்சிங்கம் வேலுப்பிள்ை நிலைத்துவிட்ட பெயர் ஈழத்தில் உருவப்பி R களிலேயே எழுதத் தொடங்கியவர் சி.வி.' நாடக நூல் 1931ல் வெளியிடப்பட்டுள்ளது வசன கவிதைநூல் (WAYIAIRER) அடுத்
1947க்கு முன்னரே இவ்விரு கவிதை நூல் பெற்ற இலங்கையின் முதல் பாராளுமன்ற பகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் சட்டம் அமுல் செய்யப்பட்டுமலையக மக்க இதுதான்.
1954st IN CEYLONS TEAGARDEN: சி.வி.க்கு ஒரு இலக்கிய அந்தஸ்தையும், பா பெற்றுக் கொடுத்த கவிதை நூல் இது. ே தமிழ் மொழி பெயர்ப்பு: 1969ல் வெளியிடப் பாலையா இந்த ஆங்கில நூல் பற்றிய ம என்று எழுதியதுகல்கி,
இந்த மூன்று கவிதைநூல்களுக்குப்பிறகு (ஆங்கிலம்) வீடற்றவன்(தமிழ் பார்வதி (தமி நாவல்களையும் சி.வி.எழுதியுள்ளார்.
Born to Labour GTsirgh LD506)LIE, LD5. குணசேன பதிப்பகத்தினரால் வெளியிடப்ட இது மிக முக்கியமானநூல்.
ஆங்கிலத்தில் தனது படைப்புகளைச் செய் மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வினை சென்ற பெருமை இவருக்குண்டு.
14-9-1914ல் பூண்டுலோயா மடக்கும் புறவி அமரர்ஆனார்.
UNHA
V
மு. சிவலிங்கம்
லுப்பிள்ளை
வும், உரிமையுடனும் அழைக்கப்படுகிறவர்
s
ள என்பது முழுப் பெயர். சி.வி. என்பது க்ஞையுடன் சிறுகதைகள் தோன்றிய 1930 பிஸ்மாஜினி என்னும் இவருடைய கவிதை (VISMAJAN) வழிப்போக்கன் என்னும் துவெளிவந்துள்ளது.
களை வெளியிட்ட சி.வி.1948ல் சுதந்திரம் த் தேர்தலில் போட்டியிட்டு தலவாக்கலைப் தெரிவுசெய்யப்பட்டார். பிரஜா உரிமைச் ளின் வாக்குரிமையபறிக்கப்பட்ட ஆண்டும்
S என்னும் கவிதை நூல் வெளிவந்தது. ாராட்டுதல்களையும், ஏகோபித்த புகழையும் தேயிலைத் தோட்டத்திலே என்னும் இதன் பட்டது. மொழி பெயர்த்தவர் கவிஞர் சக்தி திப்புரையில் இலங்கையின் தாகூர் சி.வி.
எல்லைப்புற (ஆங்கிலம்) வாழ்வற்ற வாழ்வு ழ்)இனிப்படமாட்டேன்(தமிழ்) ஆகிய ஐந்து
களின் வாழ்வுக் காட்சிகள் 1970ல் எம்.டி. ட்டது.இவருக்குப்புகழ்சேர்த்தநூல்களில்
ததன் மூலம் தான் சார்ந்த இந்த மலையக தமிழின் எல்லைகளுக்கிப்பாலும் எடுத்த
ல் பிறந்த இவர் 19-11-1984ல் கொழும்பில்