கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாய்மொழி இலக்கியம்

Page 1
\,
། s
வாய்மொ
யாழ்ப்பானப் பிர காட்டுப்பாடல் ந வெளி
 

இலக்கியம்
历 རྡོ༔
B
-力cmeë
于
断心肌

Page 2

Geau GáfufG I.
வாய்மொழி இலக்கியம்
(நாட்டுப் பாடல்கள்)
யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம். நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு
வெளியீடு
★
சார்வரி, தைப்பூசம்
(31-1-61)

Page 3
முதற்பதிப்பு தை 196
சைவப்பிரகாச அச்சகம்,
யாழ்ப்பாணம்.
প্রোিফ

யாழ்ப்பாணம் பிரதேசக் கலைமன்றத் தலைவரும் யாழ் ப் பாண அதிபதி யு மா கி ய 505. Ld. Lmß 35Tbg5T C. C. S. O. B. E. அ வர் க ள் அளித்த
ஆசியுரை
கலைகளின் வளர்ச்சியிலேதான் ஒருநாட்டின் நிரந்தர T60 வளர்ச்சியைக் காணமுடியும். சொல்வளம் பொருள் வளம் உணர்ச்சி நிறைவு சிறந்து விளங்கும் நாட்டுப்பாடல் களும் நாட்டுக் கூத்துக்களும் எமது மூதாதையர் எமக்களித் துச் சென்ற பழந்தமிழ்ச் செல்வங்கள். ஆணுல் இவைக ளுட்பல அழிந்து சிதைந்துவிட்டன. இன்னும் மறைந்து வருகின்ற இந்த வாய்மொழி இலக்கியச் செல்வத்தைப் பேணிப் பாதுகாத்து நடப்பது நமது கடன்.
பிரதேசக் கலைமன்றத்தின் ஒரு பிரிவாகிய நாட்டுப்பாடல் b60 காடகக்குழு இப்பெருங் கலைப்பணியைத் திறம்படச்செய்து நாட்டுப்பாடல்களை அச்சுவாகனம் ஏற்றி யமை குறித்து பெருமகிழ்வடைகின்றேன். அத்தாப்னத் தாருக்கு என் கல்லாசியுரிமையாகுக.
இவர்களது முதல் வெளியீடாகிய “வாய்மொழி இலக் கியம்” என்னும் பிரசுரம் நாடெங்கும் பரவவேண்டு மென்று வாழ்த்துகிறேன். இவர்களது கலைப்பணி இன் னும் முன்னேறுவதற்கு தமிழ்மக்களின் ஒத்துழைப்புத் தேவை. கிராமங்களிற் கிடந்து புதைந்துவரும் இத்தகைய காடோடிப் பாடல்களைச் சேகரித்துதவினுல் இக்குழு இதைத் தொடர்ந்து இன்னும் பல பிரசுரங்கள் வெளியிட வாய்ப் UT (5LD.
தமிழ்க் கலைகள் வாழ்க! தமிழன்னை வாழ்க!! தமிழர் வாழ்வு வளம்பெற் றுயர்க!!!
யாழ்ப்பாணம்,
5- -6. ம. பூரீகாந்தா

Page 4
வாய்மொழி இலக்கியத்துக்கு வாழ்த் து
இசைப்புலவர் சி. செல்லத்துரை
பாவலரும் பண்டிதரும் பாடிப் போற்றும்
பான்மைதனிற் பாமரரின் உள்ளத் தூறி காவினுக்கும் மனத்தினுக்கு மின்ப மூட்டும்
நாட்டுப்பா டல்கொடுக்கும் நயம்போ லுண்டோ மேவுககை யுணர்ச்சிதுயர் வீரங் காதல்
வியப்புடன்பே ரச்சமிவை கானும் மக்கள் தாமுரைத்த உணர்ச்சியுள்ள கவிதை யாவும்
தமிழணங்கை வாழ்விக்கும் ஆக்க மன்றே!
பாமரரின் கவிதைகளின் பண்பு கேண்மின்
படித்துவக்குஞ் செய்யுணயம் பாங்கா யுண்டு தேமதுர ஓசைநயஞ் செய்யுட் கான
செப்புகவ ரசவுணர்ச்சிச் சிறப்பு முண்டு பூமணத்திற் சிறந்தமணம் இயல்பா யுண்டு
புகலுகின்ற சொல்லிலுயிர்ப் பொலிவு முண்டு காமவற்றை நன்கறியத் தேடி யீந்த
நாட்டுப்பா டற்குழுவை வாழ்த்து வோமே!
வயலருவி வெட்டுகின்றேர் துலாமி திப்போர்
வாரிதியிற் கப்பல்களை ஒட்டு கின்றேர் செயலரிய கடும்பணிகள் செய்வோர் தங்கள்
செய்தொழிலி லெழுமுணர்ச்சித் திறத்தி னுலே கயமொளிரப் பாடிவரும் பாட லோடு
நாரியரின் தாலாட்டும் இறந்தோர் மீது துயரொழுக அழவருமொப் பாரிப் பாட்டும்
துலங்கிவரு நூலினிது போற்று வோமே.
«sama M**r som

முன்னுரை
ஒரு தேசத்தின் பண்பும் கலாச்சாரமும் நாகரிகமும் அத்தேச மக்களின் ஆடல்பாடற் கலைகள் மூலம் விளங்குகின் றன. இன்று நாகரிக முன்னேற்றமடைந்துள்ள மேனுட்டார் கற்கால வாழ்வு வாழ்ந்தபோது தமிழர் உயர்ந்த வாழ்வின் உச்சியில் இருந்தனரென்று கரப்பா, மொகஞ்சதரோ ஆராய்ச்சிகள் கூறுவது யாவருமறிந்தது. வீணைக்கொடி எழுதி வாழ்ந்த இசைக்கலைஞன் இராவணனும் இதற்கோர் சான்றெனலாம்.
இவ்வாறு பழைமைசான்ற தமிழர் வாழ்வில் எழுந்த கலை கள் பல மறைந்தொழிக்ததுபோல அக்காலத்துக் கிராமக் கவிக்குயில்கள் இயற்றிப் பாடிவந்த தேன் சொட்டும் தீக் தமிழ் இலக்கியப் பாடல்களும் மெல்ல மெல்ல மறைந்து வரு கின்றன.
அருவிவெட்டிலே, ஏற்றமிறைப்பிலே, கப்பல் ஒட்டிலே வழிகடைகளிலே. ஊருணிகளிலே, சந்திகளிலே, திருமண வீட்டிலே, மரண காலங்களிலே சாதாரண மக்களின் வாயி லிருந்து இச்செந்தமிழ்ப் பாடல்கள் சுயமாக எழுந்தன. கன்ன பரம்பரையாக நிலைத்தன. அதனுற்றன் பழந்தமிழ் வாழ்வை விளக்கவந்த நாமக்கல் இராமலிங்கனுரும்,
"தமிழன் என்றெரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும்” என்று தமிழனையும் அவனது மொழியையும்பற்றிக் கூறிவிட்டு,
*உழவும் தொழிலும் இசைபாடும்
உண்மை சரிததிரம் அசைபோடும் இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு” என்று இந்தப் பண்டைத் தமிழ்ச் செல்வமாகிய ஈாடோடி இலக்கியததின் சிறப்பினை விளக்கினர். இலக்கிய நயமும் நகைச்சுவையும் விவேக ஞானமுங் கலந்த இந்த நாடோடி இலக்கியக் கருவூலங்களைக் காலவெள்ளத்திலே அமிழ்ந்து

Page 5
WI
போகாது பேணிக் காத்து வைத்தல் பெருந்தேசத் தொண் l.T(3th.
யாழ்ப்பாணப் பிரதேசக்கலை மன்றத்தின் "நாட்டுப் பாடல் நடன காடகக்குழு' இந்நாட்டுப் பாடல்களைப் புத்தக உருவில் ஆக்க முயன்றபோது கலாச்சார அமைச் சுப்பகுதி நிதியுதவி இம்முயற்சியை முற்றுப்பெறச் செய்தது. அரசினர்க்கெம்கன் றியுரியது. நாட்டில் உள்ள அன்பர்கள் பலர் தத்தம் பகுதிகளிலிருந்து பல பாடல்களைச் சேகரித் தெமக்குதவினர், சிறப்பாக நாடோடி இலக்கிய நயமும் த ர மு மு ன ர் ங் த கலைஞர் மு. இராமலிங்கம் அவர்கள் பல பாடல்களை எமக்குதவியது மாத்தி மன்றி இப்பாடல்க ளைப் பரிசீலனை செய்தும் ஒழுங்குமுறை செய்தும் தந்தார் கள். இக்கலைஞரின் நாடோடி இலக்கியப் பெரும்பணியை மதித்து அண்மையில் நிகழ்ந்த யாழ்பிரதேசக் கலைமன்றத் தின் கலைவிழாவிலே அவருக்குப் பொன்னுடை போர்த்துக் கெளரவித்தமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கலைஞரின் ஆலோசனை பெற்று இந் நூலினை வெளியிடுவது குறித்துப் பெருமையுறுகிறேம். கலைஞர் இராமலிங்கம் அவர்களுக்கும் பாடல்கள் தொகுத்துதவிய அன்பர்களுக்கும் எம்ாநன்றியுரியது,
இப்பாடல்களிற் பல செல்அரித்துச் சிதைந்த ஏடுகளி லிருந்து வந்தவை, பிழைகள் பல இருக்கக்கூடும். அவற் றைக்குறித்தனுப்பினுல் அடுத்த வெளியீட்டிற் சேர்க்கலாம்.
தமிழ்க்கலைகள் புத்துயிர்பெற்று வரும் இக்ாநாட்களில் கலையார்வம் கொண்ட தமிழ்ப்பெருமக்கள் இந்நூலை ஏற்று காட்டின் பல பகுதிகளிலும் புதையுண்டுவரும் இத்தகைய காட்டுபாடல்களைத் தேடிஎடுத்து எமக்கனுப்பி இப்பணியினை மேலும் ஆதர்க்கவேண்டுமென்று வேண்டுகின்றேம்.
இ. பொ. இராசையா
195, கே, கே. எஸ். வீதி தலைவர் *
யாழ்ப்பாண்ம் நாட்டுப்பாடல் நடன
31-1-61. காடகக்குழு
யாழ். பிரதேசக் கலைமன்றம்

PRADESHA KALAl MANRAM, JAFFNA
Patron: (Ex-Officio, The Hon'ble Mr. Maitripala Senanayake, (Minister of Industries. Home & Cultural Affairs)
President: (Ex-Officio) M. Sri Khanta, Esq., O. B. E.; C. C. S, (Govt. Agent, Jaffna Dt.)
Vice-President: (Ex-Officio) T. S. Durairajah, Esq., J. P. (Mayor of Jaffna)
Hon . General Secretary : Kalaipulavar K.Navaratnam, Vannarponnai, Jafna
Hon. Assistant Secretary : S. Satialingam, Esg. Nallur, Jaffna
Hon. Treasurer:
T. Balasanthiran, Esq., D. R. O. Jaffna

Page 6
Office-Bearers of The Standing Committee for Folk Songs, Folk Dance and Drama Chairman: Muhandiram E. P. Rasiah, J. P. S. B. St. J. Vannarponnai, Jaffna
Vice-Chairmen : Mr. K. P. Mutiah, Editor 'Samooka Thondan”,
- Chundikuli Mr. T. Thangarajah, Art Master, Uduvil
Joint Secretaries: Mr. W. C. Chanmugam, Investigating Officer
Local Govt. Dept. Jaffna. Mr. S. Paranjothi, Investigating Officer,
Local Govt. Dept. Jaffna.
Hony. Treasurer: Mrs. Pearl. Attanasiar, President W. R. D. S., Sillalai
Committee Members: Mr. C. Kanagasabai, B. A., Dip. in Education,
Central School, Welanai
Isaipulavar C. Selladurai, Kodikamam Mr. E. Mahadeva, Teacher, Hindu College, Jaffna Mr. W. N. Thevakadadcham, Jaffna College, Vaddukoddai
Mr. T. Ponnampalam, Music Teacher,
Jaffna College, Vaddukoddai Mrs. Ruthra Kandasamy, President W. R. D. S. Mathagal.
Mr. Ed. Navaratnasingam, Principal
Govt. College, Delft.

காட்டுப்பாடல் கடன

Page 7

Past and Present of Folk Songs
se om
'From times of remote antiquity to which our Tamil literature extends, folk-lore lyrics have oct cupied a unique place. Tholkappiam' our ancient Tamil Grammar, which may be safely ascribed to at least half a millennium before Christ, gives. such lyrics a place among the species of Com positions known to Tamil poetry. - It, therefore goes without saying, that folk-lore pieces formed an integral part of tamil literary productions even before the age of Tholkappiam- The earliest specimens of folk-lore compositions are to be. found in Silappathikaram, the most ancient indigenous Tamil epic-work worth its name.-this marvellous epic is a mirror reflecting the whole. Tamil national life and culture of that time.' Sohas stated a Tamil scholar.
Fearing that some of these ancient Folk-songs. and folk-lore were in the brink of extinction, theJaffna Pradesha Kalai Manram instituted a Standing Committee for Folk songs, Folk Dance and Drama and allotted it the task of inter alia:-

Page 8
Χ
(a) resucitating our ancient Folk dances and
Drama
(b) and salvaging the Folk songs and Folklore.
This Committee, after an year's spade-work, has pleasure in presenting this Booklet called 'Wai. Moli Lakkiam' containing the first fruits of its labours.
Search
Although we advertised in the 'Wirakesari' 'Eelanadu" and distributed a large number of handbills inviting the members of the public to send us, any folk-songs in their possession, yet the response was poor. The members of our Committee, therefore, had to make personal endeavours, scour the country, contact friends and collect these. A scholarly sub-committee 'examined the collections at several sittings, sifted the grain from the chaff, and then forwarded them to Mr M. Ramalingam, our Gold Medalist. He, as an acknowledged authority in the evaluation of Folk songs, was good enough to scrutinise, select and set his seal of approbation on these, as suitable for publication and also to give us some of his precious 'finds' "for inclusion in this.
Amateur Talents
With the establishment of the Jaffna Pradesha Kalai Manram, began the search for the cultural soul of Yalpanam, reputed to be a land won by

நாட்டுப்பாடல் கடன நாடகக்குழு

Page 9

XIII
the ministrel Yalpadi. It was found to throb not so much in the classical arts and music, as in the folk heritage found in the rural areas.
If Freedom meant, inter alia, an opportunity , to rural folks to exhibit their talents, a most poignant recognition of the principle came about on 20th October last, when the music festival or Kalai Vila organised by the Jaffna Pradesha Kalai Manram, was celebrated at the Jaffna Central College. Instead of the monopoly of professional talents to embellish such an occasion, amateur gems from the untapped regions of Jaffna came over and presented a rich variety - of their ancient heritage —a pageant of folk dan
ces, folk dramas with folk songs etc.
And when one by one, the items were presented before an assembly of distinguished visitors, opposite the improvised platform and later in the Open air theatre, the beauty of our ancient culture and the inherent talents of our amateur artistes came to light. The Pageant-on-wheels, an experiment in staging the folk dances and dramas to a city audience, proved a success, judging from the unprecedented large Crowds that flocked in and witnessed them. The pageant proved a joy to the eye and the music a pleasure to the ear. It was more-the discovery of a priceless legacy of dance and songs. A legacy that had its roots in the joi de vivre of a people, spontaneous in their gaiety, unspoilt

Page 10
XII
by the trammels of the so called civilisation and who had lived in close communion with Nature.
Folk Heritage
The festival also depicted the various other activities in which the Manram was interested The Folk songs, Kavady, Kolattam etc. will never go out of date, but keep step with time appearing new and vital to each succeeding generation, becoming a definite, if not a personal part of the life of every lover of art and music. Folk songs and dances were rooted in age-old national tradition. Their optimism and strong affinity to. the people of old, never failed to arouse a deep emotional response from lovers of folklore and folk songs of today. They not only gave the insight into the early socio-cultural life of the region, but also revealed to us the simple, yet lively and realistic literature of those times.
The miming gestures, the rythm, beautiful. movements and melodious but bold singing and dialogues all showed their unique pattern. In: their style and richness, they can be compared with the great lyrics and dances of any agesome of them, certainly, far surpassed the moderni compositions in technique, fluency and boldness.
Publication No. 1
This Booklet, the first of our publications. containing a varied assortment of folk songs,

XIII
should widen the horizon of our folk heritage. Thanks to the financial backing of the Cultural Department, we are able to bequeath to posterity a reorientated version of our ancient culture, intact in all its reality, beauty and truth. It is hoped that this publication will be found interesting, informative and instructive.
May we look up to the members of the public, admirers of art and music and lovers of folk songs to help us to continue this cultural service, by sending us materials in their possession for our next publication in the early part of 962.
E. P. Rasiah,
Chairman Jaffna, Standing Committee for 3-1-61. Folk Songs, Folk Dance & Drama.
WHICH ARE YOU 2
An Arabian proverb divides humanity into four 

Page 11
யாழ்ப்பாண பிரதேசக் கலைமன்றம்
saleaster
போஷகர்:- (கெளரவ நிர்வாகஸ்தர்)
கெளரவ மைத்திரிபாலா செனநாயக்கா, அவர்கள் உள்நாட்டலுவல், கைத்தொழில் கலாச்சார மந்திரி
தலைவர்:- (கெளரவ நிர்வாகஸ்தர்)
திரு: ம. பூரீகாக்தா அவர்கள் C. C. S. O, B. E.
அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம்.
உபதலைவர்- யாழ்ப்பாண மாநகராதிபதி
பொதுச்செயலாளர்-கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் வண்மேற்கு, யாழ்ப்பாணம்.
உதவிச் செயலாளர்:- சு. சத்தியலிங்கம் அவர்கள்
கல்லூர். யாழ்ப்பாணம்,
பொருளாளர்- ரி. பாலச்சந்திரன் அவர்கள்
காரியாதிகாரி, யாழ்ப்பாணம்.
காட்டுப்பாடல், கடன, காடகக் குழுவின் உத்தியோகத்தர்கள்
தலைவர்;- முகாந்திரம் இ. பொ. இராசையா அவர்கள்
U.P.S. B. St.T., வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம்.
உப தலைவர்கள்:- திரு. க. பே. முத்தையா அவர்கள்
ஆசிரியர், “சமூகத்தொண்டன்’ சுண்டிக்குளி.
திரு. ரி. தங்கராசா அவர்கள்
சித்திர ஆசிரியர் உடுவில்.
- (தொடர்ச்சி XVI)

2
10
12
13 14 15
6
17
8
9
20
2.
22
23
பொருளடக்கம்
கண்டீரோ கண்மணியை
என் செய்வாய் பெண்பனையே
திருக்கைக் கலியாணம் சீலாக் கலியாணம்
உடையார் உடைந்தார் அவல் இடித்தல் பறங்கியர் காலத்துப் பாடல்கள் காகமுந் தாகமும் காகமும் சகுனமும் காகத் தூது பட்சிகள்ை வினவுதல் பிரிவாற்றமை துணை தேடுதல் பிறந்த அகம் போன பெண் மைத்துனன் மைத்துணி மணம் புத்தி அறிதல் யானையின் அட்டுழியம் எண்ணெய்ச் சிந்து கப்பற் பாட்டு ஒரு கூட்டம் ஆண்களும் பெண்களும் ஒப்பாரி கொடும்பாவி இழுத்தல் அருவிவெட்டுப் பாடல்
6 NA
பக்கம்
10
13.
14
5.
6.
17
8.
20 a
2. 22 24
31
33
38
40.
42

Page 12
XVI
*(XIV.ம் பக்கத் தொடர்ச்சி
இணைச் செயலாளர்கள்:-திரு. வி. சி. சண்முகம் அவர்கள்
உள்ளூராட்சி விசாரணையாளர், யாழ்ப்பாணம்.
திரு. சு. பரஞ்சோதி அவர்கள்
உள்ளூராட்சி விசாரணையாளர், யாழ்ப்பாணம்.
பொருளாளர்-திருமதி. பேர்ள் அத்தனுசியார் அவர்கள்
தலைவி மாதர் மு. சங்கம் சில்லாலே.
அங்கததினர்
1 gi5. d. 5, GOT5560). 96) f56iT B.A., Dip. in Ed.
அரசினர் மத்தியகல்லூரி, வேலணை.
2 இசைப்புலவர் சி. செல்லத்துரை அவர்கள் கொடிகாமம்
3 திரு. இ. மகாதேவா அவர்கள்.
ஆசிரியர், இந்துக்கல்லூரி வண்ணுர்பண்ண்ை.
-4 திரு. எட்வேட் கவரத்தினசிங்கம் அவர்கள்
அதிபர், மத்தியகல்லூரி கெடுந்தீவு.
-5 திரு. உ. க. தேவகடாட்சம் அவர்கள்
ஆசிரியர் யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை,
6 திரு. தா. பொன்னம்பலம் அவர்கள்
சங்கீத ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டை.
"7 திருமதி. உருத்திரா கந்தசாமி அவர்கள்
-r தலைவி மாதர் மு. சங்கம் மாதகல்
فت سے ............

1 கண்டீரோ கண்மணியை
காதலுடன் சென்ற கன்னி ஒருத்தியைக் கண்டீரோ, என்று கேட்கிருள் செவிலித்தாய்.
1 கிண்ணிபோல் சந்திரரும்,
கிழக்கே பார்த்த துரியரும், பாதிமருக் கொழுங்தைப்
பாதையிலே பார்த்தீங்களா? 2 சிட்டுப்போல கடையழகி,
சிறுகுருவித் தலையழகி, பட்டுப்போல் மேனியா8ளப்
பாதையிலே பார்த்திங்களா?
3 கோரை மயிரழகி,
குருவிரத்தப் பொட்டழகி, பவளம்போல் பல்லழகி,
பாதையிலே பார்த்திங்களா? 4 பட்டம்போல் நெற்றி,
பவளம்போல் வாயழகி முத்துப்போல் பல்லழகி,
முன்னேபோகக் கண்டீரோ?
5 வாகை மரமேறி
வடக்கேதெற்கே பார்க்கும்போது, தோகை மயில்போலே V
தோகைய2ளக் கண்டீரோ ?
(இப்பாடல் தந்தவர் வெள்ளவத்தை மு. இராமலிங்கம்
அவர்கள்).


Page 13
2 என் செய்வாய் பெண் பனையே
கள்ளுக் குடித்து வெறிகொண்ட ஒருவன் ஒரு வடலியின்கீழ்நின்று அதனை வினவுகிருன்.
குடியனின் விணு V− வழிக்கரையே நிற்குமந்த வடலிமரப் பெண்ப2னயே! வாறவர்க்கும் போறவர்க்கும் என் செய்வாய் பெண்பனையே?
வடலியின் விடை இருக்கத் தடுக்காவேன் இட்டிருக்கப் பாயாவேன்; கொழிக்காகல்ல தங்கையர்க்கு கொழிசுளகு காணுவேன்; புடைக்காகல்ல தங்கையர்க்கு புடைசுளகு காணுவேன்; படிக்காகல்ல தம்பியர்க்கு பட்டோலே நானுவேன்; எழுதநல்ல தம்பியர்க்கு எழுத்தோலை காணுவேன்; தூரத்து வன்னிமைக்கு தூதோலை காணுவேன் வாசலில் வன்னிமைக்கு வழக்கோலை காணுவேன். குறிப்புரை: வன்னிமை - தலைமைக்காரன்; தூதோலை - செய்தி அனுப்பும் பத்திரம்; வழக்கோலை - முறையீட்டுப் பத்திரம்.
(இப் பாடலை உதவியவர் வட்டுக்கோட்டை, திருமதி வைத்தியலிங்கம் நாகரத்தினம் அம்மையார் அவர்கள்)
శశిర

3 திருக்கைக் கலியானம்
அஃறிணைப் பொருள்களுக்குக் கல்யாணஞ் செய்து
வைத்தல் சிறுவர் மரபும் வளர்ந்தவர் மரபுந்தாம். மக்
கள் தம்வழக்கத்தை வாய்பேசாத அஃறிணைப் பொருள்
களுக்கும் ஏற்றிக் கூறுவர். இது கெய்தல்நிலப் பாடல்.
கட்டுத் திருக்கைக்குக் கல்யாணம் என்றுசொல்லி, கயல்மீன்கள் எல்லாம் குமர்பேசிப் பெண்பேசி, ஆக்கி எடுத்து அயிரைமீன் கொண்டுவர,
பாயுங் தலைகணியும் பாலோராக் கொண்டுவர, கிண்ணியும் சந்தனமும் கிழக்கனேராக் கொண்டுவர, மண2லகள் எல்லாம் மத்தளங் தட்டிவர சல்லித் திரளியெல்லாம் சங்குகள் ஊதிவர, நகரைகள் எல்லாம்
காகசின்னம் வாசித்துவர
நாறல் கிளாத்தியெல்லாம் கான்தோழி என்றுவர,

Page 14
தூங்கல் கிளாத்தியெல்லாம் துரிதமா யோடிவர,
குட்டுறு வந்து குடியைக் கெடுத்ததுவே.
குண்டேறு என்னும் மீனின் பெயர் குட்டுறு என்று விகா ரப் பட்டது. மற்றை மீன்களைக் குட்டிக் கலைக்கக்கூடிய கொம்பு குட்டேற்றுக்கு உண்டென்பர்.
(இப்பாடலைச் சேகரித்து உதவியவர் நாரந்தனை அன்பர் N. அந்தோனிப்பிள்ளை அவர்கள்)
<<>
காட்டுப்பாடல் பற்றி 'மானுடப் பெண்கள் வளருமொரு காதலினுல்
ஊனுருகப் பாடுவதி லூறிடுங்தேன் வாரியிலும் ஏற்றரீர்ப் பாட்டி னிசையினிலும் நெல்லிடிக்கும் கோற்றெடியார் குக்குவெனக் கொஞ்சு மொழியினிலும் சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்னை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுவோர் கூட்டமுதப் பாட்டினிலும்"
என்று பாரதியார் பாடுகின்றர்.

4 சீலாக் கலியாணம்
இதுவும் கெய்தல்நிலப் பாடல்
கயல்மீனுர் கண்டிப்புடன் கல்யாணம் பேசிடவே
முரல்மீனுர் முன்னின்று முழுவதையும் முற்ருக்க;
ஒட்டியும் ஓராவும் ஒதுங்கிநின்று மாவிடிக்க
சூடை சூடாய்ப் பணியாரம் பண்ணிவைக்க;
பாலையும் பாரையும் பலமாய்ப் பங்தல்கட்ட
சள்ளைமீன் சடுதியாய்ச் சங்தனங் கொடுத்துதவ;
வெற்றிலையுங் தட்டமும் விளைமீனுர் கொண்டுவர;
மணலை மகிழ்ச்சியாய் மாப்பிள்ளையை அழைத்துவர
எறியால் எறிவெடியுடன் எழுங்து நின்றிடவே
திரளி திடுக்கிட்டுத் திரும்பி ஓடிடவே

Page 15
நெத்தலி நெருங்கிநின்று கன்ருய் இடங்கொடுக்க;
அயிரை ஐயராய் அருகில் நின்றிடவே;
சேதி பெண்ணைச் சேடியாய் அழைத்துவர;
மண்ணு மகிழ்வுடன் மங்திரம் ஓதிடவே
சீலா சிரிப்புடன் காலா கழுத்திலே;
மாலை இட்டான் மனம் மகிழ்ந்திடவே
(இச்செல்வத்தை எழுதியுதவியவர் திருக்கோணமலை அர்ச். மேரி கல்லூரி, செல்வி இந்திரவதி கங்தையா என்னும் மாணவி ஆவர்)
* காக்கிசை பயின்று யாப்பில்
தகுமொழி உருவிற்பூத்துத் தேக்கரும் அருளின் மாண்பு
மணப்பதே செய்யுள்'
என்பதற் கிணங்க உள்ளத்திற் றேன்றும் தடுத்தற் கரிய உணர்ச்சி சொல்லுருவம்பெற்று எதுகை மோனையுடன் காக்கிசை பயின்று பிரவாகித்ததே காட்டுப்பாடல் ஆகும்.

'ai séÖl't lfsf"S CYá
:* سیڑھیوتھ PIA )۴۰ ح۔ " ؛ به arY6( ރަހި تض"مخيص
as Coff. . . . .
ஒருத்ழ்கழுடுகால்வாக்க ஒருவன் இல்லாமல் உடையாரீஇவர் மனைவியும் திண்டாடினர்கள். அன்றுதான்
பொடியன் ஒருவன். வுந்துடிரிெபேன் என்றன்.
seNaKate' ' ܐܚܝ
Ᏹ . . . نینٹلخیمہ میں அன்றிரீஅவனுக்கு உணவளித்துக்கொண் டிருந்தாள் உடையார் மனையாள். கொஞ்சத் தூரத்திலே ஒரு வாங்கி லில் இருந்தார் உடையார். கொடுக்கக் கொடுக்க உண்டு கொண்டே இருந்தான் இடையன். இப்படி உண்டுகொண்டு போவானுயின் அவன் உழைப்பு அவனுக்கு உணவிடவே போதாதென உணர்ந்தார் உடையார். தன் மனைவியை எச்
சரிக்கை பேச விரும்பி,
மட்டுக்கு மட்டு டையோ டையோ
என்றர் உடையார்.
உடையார் சொன்னது அவர் மனைவிக்கு விளங்கிவிட் டது. இருந்தாலும் பொடியன் தங்களுடன் அணைவாகும் வரையில் வயிறுமுட்ட உண்ணக் கொடுப்போம். அதன் பின் மட்டு மட்டாக உணவளிக்கலாம் என்னுங் கருத்துடை யவள் உடையார் மனைவி. அவள் உடையாரை அடக்கும் நோக்கமாக,
மருவு மட்டும் டையோ டையோ என்று பதிலிறுத்தாள்.
உடையாரின் எச்சரிக்கையும் அவர் மனைவியின் பதிலும் பொடியனுக்கு விளங்கிவிட்டது. போதிய உணவு தனக்குத்
தினமும் கொடாவிட்டால் தான் மறுகாள் காலையே ஓடிவிடுவ தாக அச்சுறுத்த எண்ணி,

Page 16
கட்டின மாடு கட்டை யோடே காலைத் தாலைக்கு டையோ டையோ
என்ருன் பொடியன். உடையாருக்கும் மனைவிக்கும் அவன் சொன்னது புரிந்துவிட்டது.
டையோ என்பது ஒருவரோ டொருவர் கருத்து மாறு: பட்டு கிற்றலை உணர்த்துங் குறிப்புச்சொல். உடையார், உடையார் மனைவி, இடையன் மூவரும் கருத்து ஒத்து கில்லா மையால் மூவருமே டையோ டையோ என்றனர். ஒருமுறை சொல்லாது இருமுறை சொல்லியது கத்தம் துணிபு உணர்த் துவதற்காகவாம். இன்றும் இவ்வரலாற்றை நினைவூட்டவும் தக்தொழிலுக்குப் பெருமையுறவும்,
மட்டுக்கு மட்டு டையோ டையோ
மருவு மட்டும் டையோ டையோ கட்டின மாடு கட்டை யோடே
காலைத் தாலைக்கு டையோ டையோ என்று மாடுமேய்க்கும் பொடியன்கள் பாடி யாடி வருகின் றர்கள்.
(இப்பாடலை உதவியவர் வெள்ளவத்தை, இராசசிங்க வீதி, நண்பர் திரு. M. A. கடராஜா அவர்களாவர்)
காட்டுப் பாடல்களை
கல்லாதார் கலைகள், எழுத்தறியா இலக்கியம், மக்கள் இலக்கியம், கிராமியக்கவிகள், பழந்தமிழ்ச்செல்வம், புதை யுண்ட இலக்கியக்கருவூலம் வாய்மொழி இலக்கியம் .
என்று பலபடக் கூறுவர்.

6 அவல் இடித்தல்
கெல்லை அவலாக்கும் விதம் இப்பாடலிற் சொல்லப்படுகின்றது
அன்னம்மாளின் வீட்டுக்குப் போனேன் அங்கே கண்ட அதிசயங்கேள். உலையிற் போட்டாள் பொன்னம்மாள் உள்ளம் புழுங்கினுள் அன்னம்மாள். கூடையில் எடுத்தாள் பொன்னம்மாள் குமுறி அழுத ஸ் அன்னம்மாள். சட்டியில் தெளித்தாள் பொன்னம்மாள் சத்தம் போட்டாள் அன்னம்மாள். பதறிக் குதித்தாள் பொன்னம்மாள் பல்லை இளித்தாள் அன்னம்மாள்
பொன்னம்மாள் அன்னம்மாள் என்று கெல் பெண்ணுக உரு, வகப்படுத்தப்பட்டுள்ளது. கெல்மணி பெண்மணி. கெல்லை இலக்குமி என்று இன்றும் சொல்வார்கள். உள்ளம் புழுங்கு தல் மகளிர்க்குச் சொல்லுங்கால் மனம் வருந்துதல், கெல்: லுக்கு:- உள்ளிருக்கும் அரிசி வேகுதல். பல்லே இளித்தல் உமிநீங்கி உள்மணி துலங்குதல். இது சிலேடையணி.
அவித்து, கடகத்தில் கொட்டி, நீர்வடித்து, சட்டியில் இட்டு உலர்த்தி, உரலில் இட்டு உமிபோக்கி வருவதே அவல்.
(இப்பாடலைத் தந்துதவியவர் தலையாளி அன்பர் திரு. வ. கங்தையா அவர்கள்.)
<<>

Page 17
O
7 பறங்கியர் காலத்துப் பாடல்கள்
யாழ்ப்பாணத்தைப் பறங்கியர் ஆண்டது காற்ப தாண்டு வரையுள்ள சிறிய காலமாயினும், அவர்களின் பழக்கமும் வழக்கமும் பாஷையும் பரம்பரையும் இன்றும் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நிற்கின்றன. சிலபாடல்கள்!
1 தூரா தூரத்திலே-பறங்கி
துப்பட்டி விற்குதடா துப்பட்டி வாங்கித்தாடா-பறங்கி
தோளுக்கு மட்டம்பார்த்து.
2 துலுக்கன் சங்தையிலே-பறங்கி உலக்கை விற்குதடா உலக்கை வாங்கித்தாடா-பறங்கி
குலுக்கி மாவிடிக்க.
3 காலா காலத்திலே-பறங்கி
காலாழி விற்குதடா காலாழி வாங்கித்தாடா-பறங்கி காலிலே போட்டுக்கொள்ள,
将 狭 来源 黎
4 சுண்ணுகச் சங்தையிலே-பறங்கியர்
சுங்கா2னப் போட்டுவிட்டார்; பார்த்து எடுத்தவர்க்குப்-பறங்கியர்
பாதிச் சுங்கான் கொடுப்பார்.
泰 来 拳 谍

முந்திரிச் சாராயம்-பறங்கிக்கு
முந்நூறு கோழிமுட்டை கித்தங் கிடையாமல்-பறங்கிக்கு
சித்தங் தடுமாற்றம்.
மாட்டு இறைச்சியாம்-பறங்கிக்கு
மானும் இணங்காதாம்; சுட்ட கருவாடாம்-பறங்கிக்கு
சோறும் இணங்காதாம்.
张 豪 囊 泰
சிங்கிலிகோனு சிங்கிலிகோணு சீப்புக் கொண்டைக்காரி,
பார்த்தபேர்கள் ஆசைப்படும்
பந்துக் கொண்டைக்காரி.
来
காடை கெளதாரி மைன
வாங்கலையோ ஆயாளு?
கட்டிப் போட்டுத் தீனைப்போட்டால்
முட்டைபோடும் ஆயாளு.
சிறுக்கிதைக்கிற சின்னஊசி
வாங்கலையோ ஆயாளு ?
பிச்சுத்தைத்து மேலேபோட்டால்
கல்லாயிருக்கும் ஆயாளு.
来源 奉 棠

Page 18
2
10 பனை கறுத்திருக்கும்,
பனைமட்டை சிவங்திருக்கும், அதற்குள்ளிருக்குங் தண்ணிரைக்குடித்தால்
தலை கிறுகிறுக்கும்.
喙 来 崇
11 என்னபிடிக்கிருய் அங்தோனி-ாகானும்
எலிப்பிடிக்கிறேன் சிஞ்ஞோரே; பொத்திப் பொத்திப்பிடி அங்தோனி
பிட்டுப்போட்டோடுது சிஞ்ஞோரே.
* சிஞ்ஞோர்' என்றது ‘நயினுர்' என்றது போலக் கீழோர் மேலோரை மரியாதையோடு விளிக்கும் போர்த்துக் கீசச் சொல்.
(இப் பாடல்களுள் பெரும் பகுதியை எழுதியளித்தவர் முள்ளியவளை ஆசிரியை திருமதி செல்லம்மா முத்தையா அவர்கள்
δη
<><>
பாட்டி குழந்தையைத் தாலாட்டும்பொழுது
*பச்சை இலுப்பைவெட்டிப் பால்வடியத் தொட்டில்கட்டி தொட்டிலுமோ பொன்னலே தொடுகயிறே முத்தாலே முத்தளப்பன் செட்டி முடிதரிப்பன் ஆசாரி ஆசாரி வாசலிலே ஆனைவந்து நிற்குதடா'
to o என்று ஈற்றுச்சொல் முதலாக வர அந்தாதி
முறையிலே பாடுகிருள்.

13
8 காகமுங் தாகமும்
அண்டங்காகம் அவலச் சகுனத்தை உணர்த்தும். அரிசிக்காகம் தன் கிருவுதலால் கடித வரவையோ, பண வரவையோ, உற்றர் உறவினர் வரவையோ உணர்த் தும் என்பது சாதாரண நம்பிக்கை. விடியலில் கண வனின் வருகையை எண்ணிக்கொண்டு வெளியே வந்த ஒருத்தி கத்தும் காகத்தைக் கண்டாள். பாடுகிருள்.
1 கத்தாதே காகம், வாசலிலே
கதருதே காகம், எத்தாதே காகம், உனக்கு
எறிஞ்சிடுவேன் பொல்லாலே.
2 கத்தாதே காகம்
கதருதே என்வாசலிலே கரையாதே காகம் - உன்னேக்
கலேச்சிடுவேன் கல்லாலே.
3 கத்தாதே காகம்
கதருதே என் வாசலிலே ஏய்க்காதே காகம் - உனக்கு
எறிஞ்சிடுவன் கால்முறிய.
4 கத்தாதே காக்காய்
கதருதே என்வாசலிலே எத்தாதே காக்காய்என்
எசமான் வந்து சேர்ந்திடட்டும்.
[ மட்டக்களப்புப் பாடல்கள். தொகுத்து உதவியவர் வெள்ளவத்தை, மு, இராமலிங்கம் அவர்கள்

Page 19
4
9 காகமும் சகுனமும்
வேருேர் இல்லக்கிழத்திக்கு கேர்ர்ந்த அநுபவம் இது. ஒரு காகம் கத்த, பாடுகிருள்.
காகம், இருந்து
கால்கடுக்க ஏனழுதாய், மன்னன் விசளத்தை
மனங்குளிரச் சொல்லாமல். கணவனிடமிருந்து நற்செய்தி கிடைத்தது. அதன் பின் னர் ஒரு காகம் வந்திருந்து கத்த, கூறுகிருள்.
விடியவிடாய் காகம்
வேலியிலே தங்கிநின்று; சண்டாளக் காகம்,உன்ரை
சாத்திரமும் பொய்யாச்சே.
ஒருத்தி முன் ஏமாற்றப்பட்டதினுலும் அதன் குறும்புத் தன்மையினுலும் இப்படிப் பாடுகிருள்.
காக்காச்சி, மூக்காச்சி,
கறுத்தப் பெண்டாட்டி! காகிதம் வருமெண்டால், தெத்திக்காட்டு. இன்னுெருத்தி காகத்தினைத் தூது அனுப்புகிருள்.
ஒசெர கெடுப்பமில்2ல,
உசங்தமூக்கு, வெள்ளேங்றம், கடையிலிருப்பார்; அவரைக்
கண்டால்வரச் சொல், காகம்.
மட்டக்களப்புப் பாடல், உதவியவர் வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள்.)

15.
10 காகத் தூது
கட்டிளங்காளை ஒருவன் தன் கன்னியிடம் காகததைத் தூதனுப்புகிருன்
1 கத்திறியே காகம்என்
கண்மணியைக் கண்டாயோ? சங்தித்துக் கேட்டால், என்ரை
சரித்திரத்தைச் சொல்வாயோ?
2 ஊருக்குப் போவாயெண்டால், காகம்என்
ஊர்க்குருவியைக் கண்டுசொல்லு, கையெடுத்துக் கண்ணில்வைத்து கான் கடியசலாம் சொன்னேனெண்டு
3 ஆளோடு நிற்பாள் அதை
அங்கேரஞ் சொல்லாமல், தனியாகக் கண்டு,எங்தன்
தவிப்புநிலை சொல்,காகம்.
4 உள்ளதைக் காகம்
ஒளியாமல் சொன்னியெண்டால், காசு கொடுத்துங்ான்
கருவாடு வாங்கித்தாறேன்
கடியசலாம் - இஸ்லாமியர் வழக்கு.
(மன்னுர்ப் பாடல்கள். உதவியவர், வெள்ள வத்  ைத. மு. இராமலிங்கம் அவர்கள்.)
<

Page 20
is 6
11 பட்சிகளை வினவுதல்
நாட்டுப்பெண்ஒருத்தி தன் கணவனைப்ப்ற்றி நாக -ணவாய் முதலிய பட்சிகளிடம் விசாரிக்கின்ருள்.
1 *-யரப் பறக்கும்
ஒருகோடி நங்கணங்கர்ள்! ஊரைவிட்டுப் போனன்ன்ர்ை
தாங்கவண் டைக் கண்டியளோ?
2 உயரப் பறந்துவரும்
ஒருகோடி கங்கணங்காள்! தாழப் பறவிரோ - மன்னவரின்
சுக சேமங் கேட்டறிய. 3 உயரப் பறக்கும்
ஒருகோடி ரகங்கணங்காள்! தாழப் பறவுங்கோ - என்ரை
தன்மைகளைச் சொல்லியழ,
4 ஆகா சக் கொப்பில்
அறையறையாய்க் கூடுகட்டித் தங்கும் புருக்காள்என்
தங்கவண்டைக் கண்டீரோ? 5 மாடப் புருவே,
மலோகாட்டு காங்கணமே! கூடப் பறப்பேன் - உங்க
கூட்டாளிமார் செப்பமில்லை. 6 சோலைக் குயிலே,
தோகைமயில் கங்கனமே! கூவும்புருவே அவரைக்
கொண்டுவந்து சேர்த்திடுங்கோ. (மட்டக்களப்புப் பாடல்கள். உதவியர் வெள்ளவத்தை, மு. இராமலிங்கம் அவர்கள்.) -
శిశు

Η
f کے حیح گا ـ حصے ۔ ۔ ق @4&ಿàನಿ:ಯ್ತಿ பிணத்துக் dislgul ஆணும் பெண்ணும் பின் $ሾቼmቛዘ. e,96)JG)T பதிகிருள்:
வயதுவாகத புளியமரம் சொல்லாதோ எங்தன்
துரைசொன்ன உறுதிமொழி.
குறிப்புரை: புளியமரத்தின் கீழேயே களவுப்புணர்ச்சி நடத்தி வந்தார்கள். அப்புளியமரத்தினையே இப்போது சான்று பகரும்படி வேண்டிக்கொள்ளுகின்ருள்.
(மட்டக்களப்புப்பாடல். உதவியவர், வெள்ளவத்தை மூ. இராமலிங்கம்.)
<3:ဇ္ဇီပြွ<3>
மச்சாள் மச்சானுக்கு
உள்ளான் குருவியிடம் மச்சான் உள்ளிருக்கும் பீத்தெடுத்து சேர்த்து மருந்தரைத்து உன்னைச்
சேரவைப்பேன் காலடியில்
2 . . என்று வசியம் வைக்கிருள்

Page 21
18
13 துணை தேடுதல்
அகப் பொருளில் இரவுக் குறியினைத் தழுவியன இப்பாடல்கள். ஆயினும் இரவுக் குறியில் பெறப்படாச் சிறப்புக்கள் சிலவற்றை இவற்றிற் காணலாம். காதல னும் காதலியும் ஓரிடத்தை ஒழுங்கு செய்து இரவில்
islip. Sfg56) (Love Nest) gTGs (e.g5
1 கடலே இரையாதே;
கற்கிணறே பொங்காதே; நிலவே எறியாதே - என்ரை
நீலவண்டாள் போகுமட்டும்.
2 கடலே இரையாதே;
காற்றே நீவீசாதே; நிலவே எறியாதே - என்ரை
நீலவண்டாள் போகுமட்டும்.
3 காற்றே அடியாதே;
காணலேரீ விசாதே; நிலவே எறியாதே - என்ரை
நீலவண்டாள் போகுமட்டும்
4 உயரப் பறக்கும்
ஒருகோடி கங்கணங்காள் தாழப் பறந்திடுங்கோ - என்ரை
தாங்கவண்டாள் போகுமட்டும்
(மட்டக்களப்புப்பாடல்கள்; உதவியவர் வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள்.)
&<>

1)
14 பிறந்த அகம் போன பேண்
மனைவி தன் மாதா பிதா சகோதரர்களைக் காணப் போய்விட்டாள். அவள் திரும்ப, காலதாமதம் ஆகின் றது. கணவனுக்கோ ஊண் உறக்கமில்லை. அகத நிலை யில் முதலில் கிளிகளை விளிக்கின்றன்.
1 கூட்டாகச் சேர்ந்து
கூவையிட்டுச் செல்லுகின்ற சோட்டுக் கிளியினங்காள் - என்ரை
சுந்தரியாள் சேமமென்ன?
2 வில்லுக் கரத்தையிலே,
வெருட்சியான மாடுகட்டி, பாய்ச்சலிலே போன - என்ரை பசுங்கிளியைக் கண்டிரோ?
3 மாங்தோப்புக் குள்ளாலே
வங்துமின்னுஞ் சங்திரரே ஏந்தி2ளயாள் என்ம2னவி
என்னசொன்னுள் உங்களிடம்?
(மட்டக்களப்புப் பாடல்கள். உதவியவர், வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள்.)
மச்சான் மச்சாளுக்கு
ஆட்டின் பித்தெடுப்பேன் மச்சி -
அந்தரத்தில் மண்எடுப்பேன் - உன் கொண்டை மயிர்எடுப்பேன் உன்னைக் கொண்டுவர என் காலடிக்கு
என்று வசியம் வைக்கிருன்

Page 22
20 15 மைத்துனன் மைத்துணி மணம்
இலங்கையிலே இம்முறைக் கல்யாணம் பெருவழக்கு. இதுவே இங்கு வருவது. இது மணப்பெண்ணின் நற் ருய் கூற்று.
மாமாட்டப் போனிரென்ருல்,
மான்கன்றைக் கண்டீரென்றல், பூவிருந்து வாடுதென்று - என்ரை
பொற்கொடிக்குச் சொல்லிவிடும்.
குறிப்பு: மாமா இடம் என்பது மாமாட்டை என்றயிற்று.
• பொற்கோடி என்பது தன் மருமகனை.
(மட்டக்களப்புப் பாடல். உதவியவர், வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள்.)
<3>&မ့်ရွှီ>
பிந்தி வந்தவள்
வாடமுன்னம் வர்தனில்லை - உன் வன்னமுகம் காண்பதற்கு சோரமுன்னம் வந்தனில்லை - உன் சோதிமுகம் காண்பதற்கு
என்று ஒப்பாரி பாடுகிருள்

2
16 புத்தி அறிதல்
உலக வழக்கில் புத்தியறிதல், பக்குவப்படுதல், பிரா யப்படுதல் என்று வருவது செந்தமிழ் கடையில் "பூப்பு எய்துதல்’ எனப்படும். தன் மகள் பூப்பெய்திய கற்செய் தியைத் தன் கணவனுக்குத் தெரிவிக்கின்ருள் தாய்.
1 ஆதங்காக்கா, ஆதங்காக்கா
அவரைக்கண்டாற் சொல்லுடுங்கோ-ாகம்ம பூவரசம்பூக் கன்னி
பூமலர்ந்து போச்சுதென்று.
2 ஆதங்காக்கா, ஆதங்காக்கா!
அவரைக்கண்டாற் சொல்லிடுங்கோ-ாகம்ம மாதாளம் பூவு
மடல்விரிந்து போச்சு தென்று.
மங்கையர் ருதுவானதும் மாங்கல்யம் தரித்தேயாகல் வேண்டும் என்பதும், மாப்பிள்ளை அகப்படாமல் இருந்து விட்டால், அவளின் தாய் தனக்குக் காற்கட்டு உண்டு என்று நினைத்ததுமானகாலம் அது.
புத்தலுக்குப் போனயெண்டால் - என்
பொன்னிவண்டைக் கண்டாயெண்டால், இருகால் விலங்கோடே - சிறை
இருக்கேனெண்டு சொல்லிவிடு.
குறிப்புரை: புத்தல் ஒர் ஊரின் பெயர். அங்கே போகின்ற ஒருவனிடம் செய்தி அனுப்புகிருள் மனைவி தன் மகளுக்குக் கல்யாணம் விரைவில் ச்ெய்து வைத்தல் வேண்டுமென்று.
(மட்டக்களப்புப் பாடல். உதவியவர், வெள்ளவத்தை மு. இராமலிங்கம் அவர்கள்.)

Page 23
22
17 யானையின் அட்டுழியம்
கணவனை மன்னனிடம் அனுப்புகிருள் மனைவி. பாடு பட்டுப் பயிருக்கு நீர் இறைத்துவர, யானை வந்து பயிரை அழித்து வருதலைக் கண்டு மனம் புழுங்கிய மனைவி வேறு என்ன செய்வாள்?
ஏற்றலே வேளாண்மை
இறைப்பார் ஒருவரின்றி
மாட்டால் அழியுதென்று
மன்னரிடம் சொல்லிடுகா
மாடு - யானை, (உலகவழக்கு)
(மட்டக்களப்புப் பாடல். உதவியவர். வெள்ளவத்தை, மு. இராமலிங்கம் அவர்கள்.
கல்யாணம் ஆகிய அண்மைக் காலத்தில் மனைவியை விட்டுக் கணவன் தன் தொழிலுக்குச் சென்றுவிட்டான். இருவர்க்கும் தனிமை தாங்கமுடியாமலிருக்கிறது. கண வனுக்குத் தன் ஆற்றமையைச் சொல்லி யனுப்புவது போன்ற பாடல்கள் இவை.
1 எருக்கலம் பிட்டிக்கு
எருவுகொண்டு போறதம்பி! மச் சாஜனக் கண்டால் - உன்னை
மயில்வரட்டாம் என்றுசொல்லு.
2 பட்டியடிப் புட்டியிலே
பால்கறக்கும் தம்பிமாரே

23
மச் சாஜனக் கண்டால் - உன்
மயில்வரட்டாம் எண்டிடுங்கோ. 3 சில்லூறுச் சோலையிலே
சிறுவனத்தில் மாடுகட்டி, கண்டுகறப்பார்! அவரைக்
கண்டால்வரச் சொல்லிடுங்கோ.
(மன்னர்ப் பாடல்கள். உதவியவர், வெள்ள வத்  ைத மு. இராமலிங்கம் அவர்கள்.)
வயலிலே கதிர்பொறுக்கும் அழகி
membunuh முள்ளிப் பூப்போலே முற்பட்டுச் சேலையும் மூலைசாய்ந்த கடகமும் கொண்டு தள்ளித் தள்ளிக் கதிர்கள் பொறுக்கின்ற தாடங்கப்பள்ளி காடங்கக்காரி.
- கதிரையப்பர் பள்ளு
பாலர்கள் பாடும் காட்டுப் பாடல்
காக்காய்க் குஞ்சுக்குக் கலியாணம் காசுக்கு ரெண்டு பணியாரம் ஒட்டுக்கு மேலே சீதனமாம் கஞ்சி காய்ச்சடி குஞ்சி கரணம் போடடி சிங்கி வந்த மாப்பிளை கொண்டி வாசலைச் சாத்தடி தெண்டி.

Page 24
24
18 எண்ணெய்ச் சிந்து
பண்டைக் காலத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்க்குச் சம்பளமில்லை. அங்கு எரிப்பதற்குஆமணக் கெண்ணெய் தேங்காயெண்ணெய் புனலைக்கொட்டை யெண்ணெய் முதலிய எண்ணெய்களைச் சனிக்கிழமை களில் மாணவர் சேகரிப்பர். அதற்கென்று பாடும் பாடல் இது.
1 சீரார் சனிஎண்ணெய்ச் சிந்துதனை யான் பாட
காரானை மேனிக் கணபதியே முன்னடவாய். 2 முன்னுளில் ஆகமத்தில் மூதுணர்ந்தோர் சொன்னபடி
இந்நாளி லேசிறியேன் எண்ணெய்த் தமிழ் பாட 3 பாட அறியேன் பயனறியேன் இம்மொழியை
காடி உரைக்கலுற்றேன் கல்லகவி வாணர்முன்பு 4 வண்ணத் தமிழ்ப்புலவர் வரைந்துதள்ளிப் போடாமல்
பெண்ணை இடத்தில்வைத்த பிஞ்ஞகனுர் தாள்துணையே 5 சால நமஸ்கரித்தேன் சரஸ்வதியே உந்தனையும் வால சரஸ்வதியே வாக்கருள வேனுமம்மா. 6 பொன்னனைய மாதாவே போதரவாய்க் கேட்டருளும்
அன்னையொடு தந்தை அரிய தவமிருந்து.
7
தந்தையரும் நீரும் தயவுகொண்ட காளையிலே மைந்தரில்லா வாழ்வு மகிமைகுறை வென்றுணர்ந்து 8 ஆராய்ந்து வேதமதை ஐந்தெழுத்தை கெஞ்சிலுன்னி
நேராத கோயிலெல்லாம் நேர்ந்து தபசுபண்ணி. 9 சோகம் பெரிதாய் துயரடைந்தீ ராதலினுல்
தாகமுட னெங்கள் தம்பிரான் தன்னருளால் 10 எங்கள் ஜெனனம் எடுத்துரைக்கக் கேட்டருள்வீர் உங்கள் வயிற்றில் உற்பவித்தோம் மாதாவே

2
3
14
15
16
17
18
9
20
21.
22
23
24
25。
உற்பவித்த நாள்முதலாய் உங்கள் வருத்தமதை அற்பமென்று நாங்கள் அறைந்துவிட லாகாது. ஓராம்மா தத்தில் உதிரமது தான் திரண்டு ஈராம்மா தத்தில் இருவிழியும் வெண்ணிறமாய் மூன்றம்மா தத்தில் முறைமுறையே சோகமதாய் தோன்றும்வாய் கைப்பாய் துய்யபுளி மேலுவப்பாய் நாலாம்மா தத்தில் நஞ்சுண்ட கெண்டையைப்போல் மேலும் வெளுவெளுத்து வெள்ளோங்கா ளம்மிகவாய் ஐந்தாம்மா தத்தில் அதிகம் புளிவிரும்பி மிஞ்சுமுலை கறுத்து மேனியெல்லாம் பச்சுடம்பாய் ஆரும்மா தத்தில் அரைவயிறு சூலாகி கூறும் மொழிகளெல்லாம் கோபக் குணமாகி ஏழாம்மா தத்தில் எப்பிளைப்புத் திட்டுமுட்டாய் நாளு முறக்கமற்று நல்லோனே தஞ்சlென்று எட்டாம் மாதத்தில் இருக்தெழும்ப மாட். 111ல் கட்டுகள் விட்டு கடுப்புமிக வுண்டாகி ஒன்பதாம் மாதமதில் உருவம்பல வாய்மாறி இன்பமுலை பால்சுரந்து இடுப்புமிக வேகடுப்பாய் மாசமொரு பத்து வருந்தி நிறைந்தபின் பு வாசற் படிகடக்சு மாட்டாம லேயிருந்தீர் ஒடி மருத்துவிச்சி ஒண்டொடியைத் தானழைத்து) கூடி யுறவோர் குமரவேள் தஞ்சமென்று காலுக் கிருப்பாரும் கைதாங்கி கிற்பாரும் மேலுக்கு நிற்பாரும் வேதனையோ என்பாரும் கரிமுகவ னைப்போற்றி காளிதனைத் தோத்தரித்து பரிதாப மென்று பதைத்தே அழுவாரும் இந்தப் புடியே இவர்களெல்லாம் நிற்கையிலே தந்திரமாய்ப் பாலன் தரணிதனி லேயுதித்தான்

Page 25
26
“25
26
27
一28
29
30
.31
32
.33
.34
.35
36
37
38
பன்னீர்க் குடமுடைந்து பாலன் பிறந்திடவே கன்னிர்மை யாக நயந்துபுகழ்ந் தெல்லோரும் வீண்பிள்ளை யல்லஇது மேதினியி லெங்களுக்கு ஆண்பிள்ளை என்று அகமகிழ்ந்து கூரைதட்டி அம்மான் அடியளந்து ஆகக் குறிப்பெழுதி செம்மையுடன் உலக்கை சிரித்தே எறிந்திடுவார் வாயார வாழ்த்தி வரிசையுடன் தானேந்தி தாயார் மருத்துவிச்சி தவிடுகொண்டு தான் புரட்டி மஞ்சல்நீ ராட்டி மணிமூக்குத் தான்பிடித்து அஞ்சனம் தீட்டி அலங்காரப் பொட்டுமிட்டு உடுபிடவை தன்னலே உள்ளிரங் தான் துடைத்து சடுதியிலே ஏந்தித் தாலாட்டிச் சீராட்டி வேப்பிலை கொண்டு மிகுபுகையுந் தான்காட்டி காப்பணிந்து நன்மருங்கைக் கனசடங்கு செய்தீரே எங்கெங்கு மோடி இரவற்பால் வாங்கிவந்து சங்கதனு லுட்டித் தான் வளர்த்தீர் மாதாவே. கண்ணுறு நாவூறு காற்றணைவு வாராமல் வெண்ணி றதனுல் வினைதீர்த்தீர் மாதாவே பன்னிரண்டாம் நாளில் பண்பான தொட்டிலிலே என்னை வளர்த்தி இறையவனைப் போற்றிசெய்து ஒராட்டித் தாலாட்டி உற்றதொட்டில் தனையாட்டி சீராட்டி எந்தனையும் சிறப்பாய் வளர்த்தீரே சாணை யுதறித் தந்திரமாய்ப் பாய் போட்டு பேணி வளர்த்தீரே பேறுபெற வேண்டுமென்று காயம் மருந்து கடைச்சரக்குத் தானருந்தி ஈயெறும்பு தீண்டாம லெனை வளர்த்தீர் மாதாவே குப்புற வீழ்ந்து குலாவித் தவழ்ந்துவக் து செப்பம தாய்கடையும் தேர்ந்து பயின்றபின்பு

39
- 40
41
42
43
44
-45
-46
47
48
49
50
.51
2?
காப்பிட்டு காறையிட்டு காலில் சதங்கையிட்டு பூப்பட் டுடுத்துப் பொன்னரைஞாண் தான்பூட்டி அந்திசந்தி நாளும் ஆன பணி தானணிந்து மைக்த னழகுகண்டு மனமுருகி முத்தமிட்டு எண்ணெய் தடவி இருபெயரு மோர்மனதாய் கண்ணையிமை காப்பதுபோல் காத்தீரே காவலுடன் ஐந்து வயதில் அறிவுணர்த்க வேங்னைங்து தந்தையுடன் நீரும் தகைமையுடன் ஒர்மனதாய் பள்ளிக்கு வைக்கப் பருவமிது வென்றறிந்து வெள்ளிக் கிழமை விடிங்தைந்து நாழிகையில் ஒன்பது கோளும் உறவுசெய்யும் வேளைதனில் இன்பமுறு பூசைக் கிசைந்தபல மங்களமும் ஒலைதெட் சனைகளுடன் ஒதுவிக்கக் கல்விதரும் சாலைதனை நாடி சட்டம்பியா ரண்டைசென்று புத்திரர்க்குக் கல்வி புகட்டுவிக்க வேணுமையா பத்திரமாய்ப் பாருமையா பாலனிவன் தானுெருவன் புத்தி பொறுமை புகட்டுவீர் சற்குணங்கள் அத்தி முகவன் அருளா லிவர்தனையும் கள்ளணுய்ப் போகாமல் காவாலி யாகாமல் துள்ளி விளையாடி தூர்த்தணுய்ப் போகாமல் மாடாடு மேய்த்து மடையணுய்ப் போகாமல் காடோடி என்று நாட்டிலுள்ளோர் சொல்லாமல் சூதாட்ட மாடி சுணை கேட னுகாமல் வாதாடி வழக்காடி வகைகேட னுகாமல் அறிவிலி என்று ஆரும் நகையாமல் சிறிய வயதிலிந்தச் சிறுவனைச்சீ ராக்குமையா, என்றுசொல்லிக் கைகூப்பிஇரு தாளிறைஞ்சி நிற்க நன்றென்று மையர் கலமாய் விடையளித்து

Page 26
28
53
54
55
56
57
58
59
60
6.
62
63
64
65
66
வேழ முகத்து விநாயகனைப் பூசைசெய்து கோழை தெளிந்து கும்பிட்டுச் சரஸ்வதியை ஐயர்குரு ஒலைதனில் அரிவரியைத் தானெழுதி கையில்தங் தெங்களுக்குக் கற்பித்தார் கல்விதனை அன்றுதொட் டின்றளவும் அன்பான எங்கள்குரு என்று மொருநாட்போல் இனியமொழி புகட்டி தண்டித்த தண்டனைகள் சாற்ற முடியாது கண்டிப்பா யவற்றைக் கருத்துடனே சொல்லுகிறேம். எழுத்துப் பயின்று எழுதி முடிந்தபின்பு மொழிக்கு எழுத்து முறையாகக் கற்பித்து அரிச்சுவடி யும்பேரும் ஒளவையார் பாடல்களும் உரிச்சொல் நிகண்டும் உண்டான மூதுரையும் கர் த ரனுபூதி கந்தரலங் கார்முடன் அர்தாதி சதகம் அனைத்தும் பயின்றபின்பு புகன்ற பலநூல்கள் பொருளுடனே கற்றதன்றி அகன்றபல நூல்கள் ஆராய்ந் தறிவதற்கு வாசினை கணிதம் வாசக மிலக்கணமும் தேசக் கணக்கும் சிறப்பாய்ப் பயிற்றுவித்த நேசக்குரு அவர்கள் நித்தமு மெங்களுக்கு வாசித்துக் தந்தகடன் வைத்திருக் லாமோ அம்மா பூசித்துப் போற்றி பொற்பாதம் கூப்பிநின்ருேம் வாசித்தோம் தாருமம்மா வாத்தியார் தெட்சணையை அன்னையரே தந்தையரே அக்கையரே தங்கையரே என்னைப் பயிற்றுவித்த இளங்குருவின் சம்பளத்தை தெண்டனிட் டேன்தாரும் தெட்சணை யாய்க்கொண்டு வண்டமிழோதுவித்த வாத்தியார்முன்வைப்பதற்கு(சென்று நாட்டோர் நகைக்க நாட்கழித்துப் போடாதீர் கேட்டோர் புகழவேண்டும் கிருபையுள்ள மாதாவே.

2)
67 சனிஎண்ணெய்க் காகவந்தோம் தாயே சலியாதே
இனிஎண்ணெய் இல்லையென்று எது முரையாதே 68 வீட்டில் எண் னெய்தானும் விடுகாசு மில்லையெனில்
கேட்டுக் கடன் வாங்கிக் கிருபையுடள் தந்தனுப்பும் 69 நாடி நடந்து நலிந்தே துயாமுற்று
வாடி மிககொந்து வருந்துகிருேம் மாதாவே 70 கால்கள் கடுக்குதம்மா கமலமுகம் வாடுதம்மா மேல்கள் எரிந்து வெயிலில் உருகுதம்மா 71 உச்சி கருகுதம்மா உள்ளங்கால் வேகுதம்மா
மெச்சுமுங்கள் பிள்ளைகளின் மேனி வதங்குதம்மா 72 வேர்த்துச் சொரியுதம்மா வெந்நீர் குளித்தாற்போல்
பார்த்திருக்க லாமோ பாலர் படும் துயரம் 73 தண்ணீர் தவிக்குதம்மா தாகம் வருகுதம்மா
கண்ணீர் சொரியுதம்மா கண்ணனைய மாதாவே 74 மெத்தப் பசிக்குதம்மா வீண்பொழுது போகுதம்மா
பத்தினியோ நீங்களுந்தான் பார்த்து மிருப்பீரோ 75 ஈனு மலடிகளோ இரக்கமிலாத் தாய்மாரோ
ஆணுலும் தாயே அனுப்பிவிடு மெங்களையும் 76 ஒதுவித்த கூலி ஒருகாசு நின்றலும்
பாதிவித்தை தானும் பலியாது மாதாவே 77 பாக்கு வெற்றிலையும் பழமும்தேங் காயுமெங்கள்
சாக்கு நிறையத் தந்தனுப்பும் தாய்மாரே 78 எங்கள்குரு வானவர்தான் இம்மட்டும் பார்த்திருந்து
வெங்கண் சிவக்க வெகுகோபம் கொண்டிருப்பார் 79 பாடம் படித்துப் பழம்பாடம் ஒப்புவிக்க
ஓடிவரச் சொன்ன உபாத்தியார்க் கென்ன சொல்வோம் 80 விடிந்தைந்து நாழிகையில் வெளிப்படா தேயிருந்தால்
நெடிய பிரம்பெடுத்து நீட்டி யடித்திடுவார்

Page 27
3.
8.
82
83
84.
85
86
87
88
89
90
91
92
93
சட்டம்பி துட்டரவர் சற்று மிரக்கமிலாா கிட்ட வரச்சொல்லி கிள்ளிடுவார் காதினிலே நெற்றியிற் கல் வைத்து கேர்கதிரோன் முன்னிறுத்தி சுற்றி யடிப்பார் சுழன்றிடுவோம் தாய்மாரே கூட்டோடே பொல்லாக் கொடிய முயிறுதன்னை பாட்டுப் பிழைஎன்றல் பதைபதைக்கப் போட்டிடுவார் கோதண்டம் தன்னிலே கொண்டுபோய்த் தூக்குமென்பார் ஆதண்டம் போட்டு அநியாயம் செய்திடுவார் நாங்கள் படும் துயரம் நன்றியுள்ள மாதாவே நீங்கள் கண்டிருந்தால் நிலத்தில் விழுந்தழுவீர் பெற்றவர்க்கல் லோதெரியும் பிள்ளை வருத்தமது மற்ற மலடிஅந்த வருத்த மறிவாளோ தன்மம் மிகப்பெருகச் சந்ததிக ளிடேற கன்ம வினையகற்ற காளைகளாய் காம்பிறந்தோம் ஈதல்லால் உங்களுக்கு இன்னமொன்று சொல்லுகிறேம் பூதலத்தை கம்பிப் புகழ்ந்து மனமகிழ்ந்து தீதற்ற செல்வம் சிறப்பாய் மிகப்பெறினும் காதற்ற ஊசி கடைவழிக்கும் வாராது ஆகையால் நீங்கள் அறிவுடைய மாதாவே போகவழிதேடி புறப்பட் டிருக்கை கன்று சீரார் சனிஎண்ணெய்ச் சிந்து மிகவாழி ஆராய்வோர் கேட்போர் அறைவோர் மிகவாழி பாடினுேர் வாழி படிப்பித்தோர் தான் வாழி கூடினேர் வாழி குருபாதம் தான் வாழி ஆல்போற் றழைத்து அறுகதுபோல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் முகியாமல் வாழியவே.
(இக்தச் சிந்து கவாலியூர் உ. க. தேவகடாட்சம் அவர்
கள் உதவியது.)
X

3懿
19 கப்பற் பாட்டு
அஞ்சாமல் நின்றபனை மின்வருகு தோபார் ஆரைமீன் தன்குஞ்சை நாடிவருகு தோபார் மிஞ்சியே வாடையோ, கோடையோ வீசுது விஜயமலி ஆரூர்க் கரைகண்டு ஓடுது மஞ்சுதழ் தருவேத வதனமதோ தோன்றுது வயவிர கத்தியார்க் குடையடா தேங்காய் கஞ்சநிறை செந்தியம் பதியில்வக் ததுவே கப்பலின் பாயைண்டு தள்ளடாநங் கூரம் ஏலேலோ, ஏலலோ, ஏலேலோ . .
இராகமேற்றிவரும் கப்பலின் செய்யுள்
ாகாகரிக முள்ளதொரு காட்டை யலங்காரம் நயம்பெற்ற காம்போதி கனம்மெத்தப் பேசும் கன்னடா காபிநான் என்னடா சொல்வேன் நவறேஸ், சபை அலங் காரசா வேரி ஜாதக முள்ளசவு ராட்டிக முகாரி கெர்ச்சிக்கும் மேகம்போல் கேதார கௌளை ஆதார முள்ளதொரு பூபாள இராகம் கெடிமுழங்க ரவிபேசு தேசிக தோடி ஆர்க்குவெகு வாகவரு அசாவேரி இராகம் மானுபி மானமாய்த் தாளலயம் போட பத்திரச முண்டாகு மத்திமா பதியும் தாகமுள்ள பேர்க்குப்பசி தீர்க்குமோ கனமே சுத்தசா வேரிஇது சுத்தமுள்ள இராகம்

Page 28
32
சங்கரனைத் துதிசெய்யும் சங்கரா பரணம் காளிங்க நடனமொடு மோடியுடன் கூடி காக வராளி,புன் னுக வராளி சோக வராளி, சுத்தபந்து வராளி இந்தவித மாகவரு பஞ்ச வராளி இசைக்கவரு நயம்பேசு எதுகுலகாம் போதி, அடானு தனுசரி ஆரவி கெளளை இன்னும் சில அபூருவ இராகங்கள் ஏற்றி பின்னுலே சொன்னபடி வருகுதம்மா கப்பல் ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ, ஏலோம் .
இப்பாடல் சரவணையூர் முருகப்பர் சின்னையா அவர்கள்
உதவியது)
<<>
தன் துணைவனை இழந்த ஒருத்தி . .
கண்டியிலே காற்றடிக்க
கைவிளக்கோ நூந்ததென்ன
பால்காய்ச்சும் சட்டியிலே
பாசி படர்ந்ததென்ன.
பல்லுப் பவுண்பெறுமே-உன் பற்காவி பொன் பெறுமே.
eo e e qe e e என்று துயர்க்கவி பாடுகிருள்.

35 20 ஒரு கூட்டம் ஆண்களும் பேண்களும் ஆண்கள் தோட்டங்களிலே வேலைசெய்துகொண்டு கின்றனர். பெண்கள் வரிசையைக் கண்டதும் ஒரு ஆனந்தம் உள்ளுரக் கிளுகிளுத்தது.
வரிசையின் முதலில் ஒரு வாயாடிப்பெண் தனது மச்சானைக் கேலிசெய்யவேண்டும் என்று எண்ணினுள். மச்சான் கறுவல்தான். தானும் கறுப்பி என்பதைக் கூட அவள் மறந்து,
ாகாவற் பழம் போலே
ாகனேந்த தணல் போலே காக இறகுபோலே --மச் சான்
கடுங்கறுப்புக் கொண்டதென்ன? என்று பாட அவன்,
ஈச்சம் பழம் போலே
இடை சிறுத்த பெண்ணுளுக்கு காவற் பழம் போலே
கான் கறுவல் ஆகாதோ? என்றன். பின் இன்னுெருத்தி,
மாமி யட புள்ளே
மகிழம்பூ வாயுடையாள் பெருக்கப் பெருக்க என்ணுேடு பேசமனத் தாப மென்ன?
என்றள். வேறெருத்தி,
3

Page 29
பத்து வயது மச்சான், இப்போ பருவமில்லே உங்தனுக்கு
சித்தமானுல் வந்துமச்சான்
சேர்ந்திடுவாய் என்னுேடே
என்று பாடினுள்.
பொன்னும் இரும்பும்
பொதுவான வெண்கலமும்
எல்லாம் விலை போயிற்று - என்றன்
இளையாள் விலை போகவில்லை.
என்று தன் வீட்டு நடப்புகளை இழுத்துப் பாடினுள் ஒருத்தி. அவள் ஒருவன்மீது கண்வைத்திருந்தாள். புல்லும் பிடுங்கி யிருக்கு
புறவளவும் தூர்ந்திருக்கு கெல்லும் பொரிச்சிருக்கு - எங்தன் நின்றமச்சான் வருவ ரென்று.
இப்படி நாணிக் கோணிச் சொல்லிவிட்டு மெல்ல நகர்ந் தாள்.
விரல் நிறைய மோதிரங்களே அடுக் கிக் கொண்டு வேறெருத்தி வந்தாள். அவள் கொஞ்சம் பெரிய இடத்துப் பெண்; செல்வாக்குடையவள்.
காட்டில் கடுகுநாவல்
கண்ணிகட்டிப் பூத்ததுபோல்
கையிலுள்ள மோதிரங்கள்
கனத்தினுல் செப்பமில்லை.
என்ருன் அவளுடைய மச்சான். இதுகேட்டு, எள்ளுங் கொள்ளும் வெடிக்கும் அவள் முகத்திலிருந்து,

35
நெல்லுக் கதிரும் மச்சான்
நெருங்கி விளைஞ்சதுபோல் - உன்
கன்னத்து மீசையது
கனத்ததினுல் செப்பமில்லை,
என்று பதில் வந்தது.
விவாகம் பேசிப் பேசிக் குழம்பிக்கொண்டே யிருக்கும் ஒரு சோடி சந்தித்தார்கள். இவளைக் கண்டதும், அவன்,
சாமம் அடுத்துத்
தலைக்கோழி கூவையிலே
சங்திக்க கான்வந்தால்
சம்மதமா கண்மணியே என்றன் கலியாணத்தைக் குழப்பி வந்த அவளது மச் சான். அவள் கண்களில் கோபக்கனல் பறக்க, தன்னைத் தவிக்கச் செய்வதுமல்லாமல் கேலியுமோ என்று
வேட்டைக் கிடாவோ
வேலியில்லா ஒர்பயிரோ தருமக்கிணருே மச்சான் - உன்
சங்கதிக்கு நான்இணங்க என்று சுடச்சுடப் பதில் கொடுத்தாள். பெற்றேரிடை ஏற்பட்ட பெரும்பிளவு காரணமாக விவா
கம் நடவாது போயிற்று. மச்சாள் வேறெருவனை விவாகஞ் செய்துவிட்டாள். ஒருநாள் அவளைக்கண்ட மச்சான்,
ஐந்து வயதிலே
அறியாத கா8ளயிலே
கொஞ்சி வளர்த்த
குழங்தைபறி போனதடா

Page 30
36
கறுத்தக் கரும்பிலே
கண்போட்டு என்னசெய்ய-இனிச்
சப்பி எறிந்த
சக்கைதான் இன்பமில்லை.
கறுத்தக் கரும்பே
கருங்காலிப் பெட்டகமே-உன்னைக்
கொஞ்சாத வஞ்சம்என்
கெஞ்சைவிட்டுப் போகுதில்லை
என்கிறன். முன்னே அன்புடன் புழங்கிய தன் காதலி இப்போது தன்னைப் பாராது செல்வதைக்கண்ட ஒருவன் பாடுகிறன்.
கட்டிக் கறந்தாகா கு
கணுவடிக்கு வங்தாகாகு தட்டிச் சொறிந்தகாகு- அது
தலையெடுத்துப் பார்க்குதில்லை இரவில் வந்த தன் காதலனைக் கண்டதும் ஒருத்தி கேட் கிருள். அவன் விடைகூறுகிறன்.
ஆளை மதிக்கேன்என்ருே
அடியறிய மாட்டேனென்றே இரவுசரி சாமமெல்லாம்
என்கதவில் நீஅடித்தாய் அவன்,
காலால் கடந்துவங்து
கதவடியில் பதுங்கிநின்று
மண்ணுல் எறிங்தேனே - உன்ரை மனதறிய வேணுமென்று

8፳
என்று பாடினன். உடனே அவள்,
கல்லால் எறிந்துவிட்டால்
கண்டித்தான் போகுமென்று மண்ணுல் எறிஞ்சு,மச்சான்
மதனிமுறை கொண்டாயோ
என்ருள். அவன் அதற்கு விடையாக
தோலால் சதிரமென்று
நான் இருங்தேன் தோகையரே! பொன்னுல் சதிரமென்று,
ாகான் அறியேன் பூவையரே! என்று முற்றுப்புள்ளி பொறித்தான்.
(இப்பாடலை உதவியவர் அளவெட்டி ஆசிரியர் சி. பொன்னம்பலம் அவர்கள்.)
33-3)
தாலாட்டிலே
ஆச்சியம்மான் வாசலிலே
ஆனை வந்து நிற்குதையா ஆனைக்குஎய்ய அம்புக்கழுகிறீரோ
குட்டியம்மான் கொல்லையிலே
குதிரைவந்து நிற்குதையா குதிரைக்கடிக்கக் கோலுக்கழுகிறீரோ.
. . காட்டுப் பாடல்.

Page 31
38
21 ஒப்பாரி
பண்ணிசை தப்பாது பாடியழுகின்ற மரபு தமிழ்ப் பெண்கட்கேயுரிய சிறப்பு. ஒப்பாரிகளின் அழகிய தொகுப்பொன்று சிறந்த விளக்கத்துடன் காட்டுப்பாடற் கலைஞர் மு. இராமலிங்கம் அவர்கள் அண்மையில் வெளியிட்டார்கள். இன்னும் சில ஒப்பாரிக் கண்ணிகள் இதோ!
குதிரைமணி கேட்டவுடன் - உங்களுக்கு
குளிக்கவெங்கீர் வைத்திடுவேன்
ஆனைமணி கேட்டவுடன் - கான்
ஆக்கஉலே வைத்திடுவேன்.
பூத்த சுடலைஐயா - உங்களுக்கு புதுச்சுடலை தான்காவல்
அத்திச் சுடலைஐயா - உங்களுக்கு அருஞ்சுடலை தான் காவல்
போன வழியறியேன் - நீங்கள் போய்ப்புகுந்த காடறியேன்
பூமியெல்லாம் சுற்றவென்று போனிரோ என்துரையே
நித்தம் கடந்தவழி - இங்கு
கெருஞ்சி வளருதையா
பலாகாள் கடந்தவழி - இங்கு
பாசி படருதையா
நினைப்பேன் திடுக்கிடுவேன் - உங்கள்
நினைவுவங்த நேரமெல்லாம்

39
பாயில் படுக்கவில்லை - ஒரு
பத்துங்ாட் செல்லவில்லை
சீனச் சுருளோலை - உங்களுக்குச் சீக்கிரமாய் வந்ததென்ன?
வேலி அடைப்பதுயார் - இனி
வேளாண்மை செய்கிறதார்
வேளாண்மை செய்தாலும் - அது
வெண் சாவி வீசிடுமே
முத்துக் கிணற்றடியில் - நீங்கள்
முகங்கழுவப் போனடத்தில்
முத்துச் சறுக்கினதோ - உங்கள்
முகத்தினுெளி மங்கினதோ
கல்லுக் கிணற்றடியில் - நீங்கள்
காலலம்பப் போனடத்தில்
கல்லுச் சறுக்கினதோ - உங்கள் காலினுெளி மங்கினதோ
(காயன்மார்கட்டு கா. இரகுநாதன் அவர்கள் உதவியது
(33-3>
*பாட்டின் சுவையும் பழங்கலையின் பண்புமிவை
காட்டினுயி ரென்றே கவில்”

Page 32
49
22 கோடும்பாவி இழுத்தல்
வானம் வரண்டு மழை பொய்த்தால் ஊரிலே ஒரு கொடும்பாவிப்பெண் இருப்பதே காரணமென்று கிராம மக்கள் ஒரு பெண்ணுருச் செய்து இந்த ஒப்பாரியைப் பாடி சுடலையில் அதனை எரிப்பதைக் கொடும்பாவி கட்டியிழுப்பது என்பர். இது இன்றும் கிராமங்களில் இடையிடையே கடக்கின்றது.
*மாதர் கற்புடை மங்கையர்க்கோர்மழை"
என்றும், *கல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை”
என்றும், *தெய்வம் தொழாஅள் கொழுநற்
(ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை”
என்றும் வரும் செய்யுள்களை இதனுடன் ஒப்ப நோக்கு தல் பொருத்தமாகும்.
கொடும்பாவி சாகாளோ
கோடிமழை பெய்யாதோ
மாபாவி சாகாளோ
மாரிமழை பெய்யாதோ
வானம் கறுக்குதில்லை
மழையுமோ தானுமில்லை
வட்டிப் பணமெடுத்து
வயலை உழுதுவைத்தோம்

41,
சீரான மழையுமில்லை
செங்நெல் வி2ளவுமில்2ல புழுதிதான் போட்டல்லவோ
புழுங்கலாய்ப் போச்சுதென்று எட்டுத்திட்டை மாவிடித்து
பிட்டவிக்கத் தண்ணிரில்லை தெம்பல் உழக்கியல்லோ
சேருடி கெல்லுங்ட செழித்தமழை யில்லாமல் சேதம் பலவாச்சு காற்ருே அலசிங்ட
நல்லமழை தானுமில்லை க2ளயோ பிடுங்கவில்2ல
கால்மறைந்த தண்ணிரிலுே கெட்ட கொடும்பாவி
கேடுகெட்ட மாபாவி கொடும்பாவி சாகாளோ
கோடிமழை பெய்யாதோ
(கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் பா. ஞானபாஸ்கரன் உதவியது)
ఈశశి
*செங்தமிழர் தொன்மை சிதைந்த கலைகளினல்
வந்து விளங்கும் வளர்ந்து’

Page 33
-42
23 அருவி வேட்டுப் பாடல்
பன்றிப் பள்ளு
அருவி வெட்டுக் காலத்திலே ஒருவர் வரம்பிலே ன்ேறு அருவிவெட்டும் பாடலை இசையாகத் தாளத்துடன் பாட வேறெருவர் அதற்கேற்ப மிருதங்கம் முழக்க பலர் அரிவாளுடன்வயலிலோகின்று தாளத்துக்கேற்பப் பாய்ந்து பாய்ந்து விரைவாக அருவிவெட்டுவர்! இந்த வேகமான அருவிவெட்டினை 'பரத்தை” வெட்டென அழைப்பர். இந்தப் பாடல்களுள் இந்தப் பன்றிப் பள்ளும் ஒன்று. ஆரம்பத்திலே பரத்தை வெட்டுச் சிறப்பாக கடக்க வேண்டுமென்று தெய்வ வணக்கம் நிகழ்கிறது.
காப்பு சீரான பண்டிசுட் டானிலே உறையும் செல்வனே குளக்கட்டில் உய்யு மைங்கரனே பேராக வேயுமது பெருமைபுகழ் கூற பிழைபொறுத் தருளுவாய் பேழைவயி றேனே அம்பொற் தடங்கிரியில் பாரதங் தன்னை அழகுபெற வேஎழுதும் ஆனைமா முகனே உம்பர்க்கு மெட்டாத ஒருமருப் பவனே உலகுபதி ஞலையும் ஒன்றக நினைவாய் தம்பிக்கு வந்துதவும் தும்பிக்கை யோனே
பையரவ காதரே படைஐய ணுரே பாதாள வைரவ ருடன் பூத ராயரே துய்யபுக ழாளராம் வீரபத் திரரே பொங்குபுளி மரநிழலில் அன்புட னுறைந்த புதுமைசெறி யும்துல வயிரவரும் நீயே வற்றத வாவிதனில் வந்துறைக் தாயே வயிரவ சுவாமியென வருதம்பி ரானே சற்ருகு தல்தபசு தப்பாத நீயே

43,
தம்பட்டம் சல்லாரி தாளமுள்ள நீயே பூலோகம் வாழபுலோப் பழையுறைந் தாயே புதுமைசெறி தும்பளையில் வயிரவரும் நீயே மடக்கியே மனிதர்களை முறிப்பதுவும் நீயே மறைக்கிடாய் பலியெடுத் துண்பதுவும் நீயே ஆழிதழ் உலகுதனை ஆளுவதும் கீயே அண்டசுர னைப்பிளங் துண்பதுவும் நீயே காளியுட னேகணை தொடுப்பதுவும் நீயே கருத்தாக விற்பிடித் தாடுவதும் நீயே உள்ளறைப் பிணத்தைஉயி ராக்குவதும் நீயே உன்னையல் லாலுலகில் வேறெருவர் இல்லை தித்திமிதி திமிதிமியென் றடுவதும் நீயே கோட்டையடி தன்னிலே வந்துகின் ருயே கொடுமுடிகள் சிதறஅடி கொட்டிநின் றயே உற்சாக மாகவே குதிரைமேற் கொண்டு உலகுபதி னலையும் ஒன்றக்கி நின்றப் சட்டையிடு தொப்பியிடு காரரெல் லாரையும் தயங்காம லேபலி யெடுத்துவந் தாயே காட்டை வெட்டிக் கட்டையது புரட்டி கனத்ததோர் மண்வெட்டி கைதனில் எடுத்து மாடுவிட் டேர்உழுது வன்னெல் விதைவிதைத்து வருந்தியே மானுடர்கள் வயிறது வளர்க்க கேடு கெட்டபன்றி விளைவதைத் தானழிக்க கிருபை யோவலிய நரசிங்க நாயகமே காடுகெட் டாலது நல்லதோ உனக்கு காயனே வலியகர சிங்க நாயகமே கொத்தியொரு மண்வெட்டி யால்விதை விதைத்து குடில்களும் வைத்தங்கே காவலும் காத்து அத்திகரி வந்துபயிர் தன்னையு மழித்து ஆளையும் போடவென் றணுகிவரு கையிலே நித்திரையோ டாவென்று தட்டி யெழுப்பி கீபிழைத் தோடென்று கரைசேர விட்டாய்

Page 34
4.
அங்க நாமக்கடவை தங்குகண் ணகையே உய்யவரும் அன்னையே உலகமா தாவே உன்னையல் லாலுலகில் வேருெருவ ரீல்லை அங்காகா மக்கடவை தங்கிவங் ததும்மெய் அன்புசெறி கோவலர்க் கமுதளித் ததுவும்மெய் தேத்தா மரமாம் சிறுசோலை வாவியாம் சேயிழையே உந்த னடைக்கலம் தாயே பொன்னே மணியே புருட ராகமே பொதுவர்குல நாயகியே பொற்றெடித் தாயே அன்னையே தவமே அறத்தினது பயனே அடைந்தெனக் குதவியருள் ஆருயிர்த் துணையே மின்னுருன் இன்னிடைக் கண்ணகை யென்கின்ற மெல்லியலே உந்தன் அடைக்கலம் தாயே
பன்றிகளின் வருகை
அந்தியும் சந்தியு மறிந்தே-அதில் விர்தைகள் விந்தைகள் புரிந்தே பர்துகள் போலவே யுருண்ட-தனிப் பன்றியு மோடிவங் ததுவே
காலையும் மாலையும் பார்த்து-கரு மேகம்போ லேகிளை கூட்டி பாலரும் தாய்களு மாகத்-தனிப் பன்றியு மோடிவந் ததுவே
குட்டியும் தாய்களு மாகக்-குறங் கொள்ளிபோல் கால்களும் நோக ஒட்டி மறைந்துநின் றேதாம்-உல்லாசப் பன்றியு மோடிவந் ததுவே
காலுகால் சத்தமு மடக்கி-நாய்க் குட்டி போல் மேனியை ஒடுக்கி கூழைவால் கொள்ளியை மினுக்கி-பன்றி கூட்டத்தோ டோடிவங் ததுவே

45
மூன்று முழத்துக்குள் வைத்த-ஆமை முட்டையைச் சோதிக்கும் விந்தை தோண்டி யருந்திய சொத்தை-உடன் சூட்சமாய்ப் பன்றிவங் ததுவே
பீரங்கிச் சொத்தையைக் கொண்டே-மண்ணைப் பேர்த்திடும் வல்லமை கொணடு ஆரம்பி யாமலே கின்றே-ஆள் பார்த்துப் பன்றிவந் ததுவே ாகண்டுகள் குஞ்சுகள் போலே-கல்ல பெண்டுகள் பிள்ளைகள் கூட பண்டுள்ள பேர்களும் சூழத்-தனிப் பன்றியு மோடிவக் ததுவே பொத்திக்கட் டிப்போட்ட் பறிபோல்-பெரும் பூசணிக் காய்போல வயிறும் பத்துக்கட் டிப்போட்ட பொதிபோல்-தனிப் பன்றியு மோடி வந் ததுவே.
பன்றி தன் மனைவி கண்ட கனவை யுரைக்கின்றது. கனவின் பேருகவே கெல்லுத் தின்ன வருகின்றதாம் தன் குடும்பத்துடன்.
வனத்தை யறுத்து நெருப்பைக் கொழுத்தி
மரத்தில் தடிகள் பொறுக்கியே வளைத்து வேலி கிரைத்துக் கறுத்த
வளநெல் பயிர்கள் துரவியே புனத்தில் வளரும் கரிகன் றுடனே
புள்ளி மான் பல சாதிக்கும்
பிரித்துப் பிரித்துக் கொடுத்து மிஞ்சிய
பொருள்கொண் டேகும் மனிதரே

Page 35
45
இனத்தில் பெரிய சாதி காங்கள்
பொறுக்க வகையில் லாமலே எவர்க்கும் பெருமை கொடுக்கும் செங்கெல்
விளைவு தரைக்குள் ஏகினுேம் கனக்க விளைவிங் கிருக்கும் செய்தி
ஒருத்தரும் எமக் குரைத்திடார் கன்னி துயிலில் கண்ட கனவை
கழறக் கேளும் மனிதரே நானும் கம்ம பெண்டிலும் பிள்ளையும் நடு வனத்திலே திரியக்கே வானி லிருந்து மழைகள் பொழிய மாரி வெள்ளம் பாயவும் வாழைக் கனியும் பாலைப் பழமும் வருந்தி யருந்தித் தின்னவும் கானி லிருந்து குயிலும் மயிலும்
கலந்தே ஊஞ்சல் பாடவும் காட்டில் கிளியும் கூட்டில் புருவும் கடிபட் டேசல் பாடவும் தேனில் இனிய மனைவி கண்டு
திடுக்கிட் டெழும்பி என்னிடம்
செப்பிடப் பொருள் தேர்ந்து யான் தேவி யாரிடம் கூறுவேன்
கன்னல் தழையும் செங்கெல் விளையும்
கால மென்றறி யாயோடி
காட்டில் பிழைப்பைப் போட்டு மானிடர்
காட்டிற் சென்றிட லாமடி

A.
மண்ணில் எனது கண்ணிற் கினிய மக்களைத் துரங் தழையடி
வல்ல பயிர்கள் செங்கெல் வயலில்
சேர்ந் தருந்திட லாமடி
பன்னு மடியும் நுனியும் பருத்த பனை மரம்போல் அழகியார்
பாவை நம தாசைக் கியைந்த
பருத்த உரல்போல் இடையினுள்
சொன்ன படியே நம்முடன் நமைச்
சூழ்ந்த பன்றிகள் யாவரும்
சுறுக்குள் விளைவு தறைக்குள் வந்தோம் துரத்த வேண்டாம் மனிதரே.
பிள்ளைப்பாசம் கொண்ட பன்றி தன் குட்டிகள் கெல்லுத் தின்னும்போது கொடியமனுடராற் கொல்லப்படாமல் தப்பவழி கூறுகின்றது.
காடியே ஒரு பிள்ளையில் லாமலே
நாள் முழுவதும் தவங்கள் புரிந்து
தேடியே எங்கள் சிவலிங்கப் பிள்ளையார்
சிந்தைகூர்க்திந்த மைந்தரைத் தக்தார்
காட்டி லோடிவிளே யாடுமாப் போல்
இடத்திலே நீங்கள் போகவும் வேண்டாம்
காட்டில் மானுடர் செய்திடும் செங்கெல்லை
நாளும் தின்னக் கிடையா தென்மக்காள்
தாயை விட்டுப் பிரியவும் வேண்டாம்
தனியே துரத் தகலவும் வேண்டாம்
வேசை மக்கள் உலாவியே வந்தால்
வெருட்டுவார் ஓடித் தப்பவும் மாட்டீர்

Page 36
-48
ஒட்டும் கட்டையு மாகத் துரத்துவான்
ஊண்டிச் சூழினுல் ஊட்டி முறிப்பான் குட்டி யென்று மனமிரங் கான்குறங்
கொள்ளி யால் உயிர் கொல்லுவான் மக்காள்
பெற்ற தாய்க்கும் பிதாவுக்கு மல்லால்
பிள்ளைச் செல்வம் பிறர் அறி வாரோ
உற்ற தோர்எலி தன்விளை யாட்டில்
உறங்கும் பூனைக் குவப்பில்லைக் கண்டாய்
தாங்கொ னுத பசியின் துயரால்
தழைக்குஞ் செங்கெல் தரைக்குள்ளே வந்தோம்
எங்கும் புண் கொண்ட எருதின் துயரத்தை
இரங்கு மோசொல் அருந்திய காகம்
தின்னும் உங்கள் பசியின் துயரால்
இங்கு மானிடர் கைவச மானுல்
பாம்பின் வாயி லகப்பட்ட தேரையை
பறிக்க லாகுமோ கூறுங்கள் மக்காள்
தூர மீதினில் காட்டினில் உம்மை
துரக்து நீங்க ளடர்ந்துகின் ருலும்
பார மாய்உம்மைப் பெற்ற வயிறு
பதைத்து கெஞ்சம் தரிக்குமோ மக்காள்
எங்கள் தன்னை வளர்த்த தகப்பனும்
ஈன்ற தாயும் இறந்ததின் பின்னல்
வர்து காண்பது முண்டே நீர் மாண்டால் பேந்து வந்து மனத்துயர் மாறும்ோ
கொல்லை யெங்கும் குதித்திடிற் காலின்
குளம்பு கோகும் குழந்தைகள் நீங்கள்
சொல்லும் வார்த்தையைக் கேட்டெங்க ளோப்ே
துரந்துசெர்கெல் அருந்திடு வீரே.

4)
தன் குட்டிகளுக்கு கன்னிகன்னித் தின்னும்படி புத்தி கூறும்பன்றி காவற்காரன் வருகிறதையும் எச்சரிக்கிறது.
என்னைத் தொடர்ந்து வந்து
செங்கெல் கதிர்தன்னைத் தேடி சேறும் பாடு மாயுழக்கி
தின்னுங்கோ மக்காள்.
வஞ்சக மில்லா தருக்தி
மடக்கி முறித்தே உங்கள் வயிற்றின்கீழ் போட் டுழக்கி
வாருங்கோ மக்காள்
தண்ணிர் சுரியென் றெண்ணுமல் தாறு மாற தாய்உழக்கி
பண்ணும் வயலில் பசி
யாறுங்கோ மக்காள்
தேடித் தேடித் திரிந்தாலும்
உங்கள் பசி தீராது
ஓரிடத்தில் நின் றுழக்கி
தின்னுங்கோ மக்காள்
சொல்லிச் சொல்லித் திரிந்தீரே
கெல்லுத் தின்ன வேணுமென்று
சோட்டைதீர நீங்கள் நின்று
தின்னுங்கோ மக்காள்
கெல்லுத் தின்னும் ஆசையாலே
பல்லுக் கில்லுப் பேர்த்திடாமல்
நின்றுகொண்டு நன்னி கன்னி
தின்னுங்கோ மக்காள்

Page 37
உண்ணத் தின்ன இல்லாமல்
வன்னத் தொந்தி வாட்டம் கொண்டு உன்னுணை யென் கண் உறக்கம்
இல்லை என் மக்காள்
கள்ளத் தனம் பண்ணுமலே
மெள்ளத்தசை துன்னத் துன்ன தொண்டை மட்டும் நீங்கள்கின்று தின்னுங்கோ மக்காள்
கண்ணுலே பார்த்துப் பார்த்து
காதாலே கேட்டுக் கொண்டு
கச்சைச்சூள் காரன் வரான் தின் னுங்கோ மக்காள்
பன்றி நெல்லத் தின்னுமென்று
பாரச் சூள் காரன் வாருன்
பார்த்துப் பதுங்கி நின்று
ஒடுங்கோ மக்காள்
வாருன் உலாத்துக் காரன்
வந்த வழிதன்னை விட்டு வாருங்கோ முள்வேலிக் கப்பால்
ஒடுங்கோ மக்காள்
ஒடிப்போவம் என்று சொல்லி
தூரத்தில் நீர்போக வேண்டாம் ஓரிடத்தில் கின் றவனைப் பாருங்கோ மக்காள்
புறங்காட்டிப் போற போது
திறங்காட்டிச் சீென்று நீங்கள்

5.
பின்னே முன்னே பாராமலே
தின்னுங்கோ மக்காள்
மானிடவன் செய்த செய்கை
யாவருக்கும் பங்க தாகும் வன்னிமையில் லாமல் நீங்கள்
தின்னுங்கோ மக்காள்
பொழுது விடியு தாக்கும்
பூமி வெளிப்பாகு திங்கே பேசாமல் வேலிக் கப்பால்
ஒடுங்கோ மக்காள்
பற்றைக் குள்ளே போய்க்கிடந்து
வெப்ப வெய்யில் சாயுமட்டும்
பாங்குடனே போய் மறைக் து
தூங்குங்கோ மக்காள்.
(இப்பாடல்கள் உடுத்துறை வடக்கு திரு. ச. கணபதிப்பிள்ளை அவர்கள் உதவியது).
<
கதிரையப்பர் பள்ளிலே . .
*மாவலிகங்கை ஆறுபெருகி வாறது.பாரும் பள்ளரே
குண்டந்திருக்கை குறவைசாளே கொடுவாளுளுவை கும்பிளா குறவைமணலை பிறையன் நகரை குழுமுரல்கடல் மறிபன்னு கெண்டைபறவை காலைபாரை சுருவிளைமீன் கடல்விரால் அரும்புகெத்தலி கெளுத்தல்கத்தலை தும்பைஜரா வஞ்சூரன்
கொண்டைத்திருக்கை திரளிவாளை கீஸ்ரிகாரல் பாலை மீன்'
... என்று மா வலிகங்கையில் ஒடும்
மீன்களின் காமாவலி வருகிறது.

Page 38


Page 39