கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்க்கையின் சோதனை

Page 1

下二一ー
Giff

Page 2


Page 3

வாழ்க்கையின்
சோதனை
ஆர். செல்லையா
சன்லைற் டையேர்ஸ் அன் றைக்கிளினேர்ஸ்
பெரியகடை, யாழ்ப்பாணம்.
970

Page 4
முதற் பதிப்பு : 30 மே 1970.
சகல உரிமைகளும்
ஆர். செல்லையாவுக்கே உரியன.
VALKKAlYIN SOTHANA
R. Cheliah Sunlight Dyers and Drycleaners Grand Bazaar, Jaffna.

CA சிவமயம்
agʻ! Dir' U 633r tib
முன்னள் தொடக்கம் இந்நாள் வரையும் என்னுடைய தேவை களைக் அறிந்து உதவியும், பிரச் சனைகளைத் தான் முன் நின்று தீர்த்தும் அன்புகாட்டிய நல்ல நண்பர் பண்டத்தரிப்பு-செட்டி குறிச்சி திரு. தம்பையா சிவசம்பு அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப் பிப்பதில் மனநிறைவு கொள்ளு கின்றேன்.
ஆர், செல்லையா
88, கண்டி வீதி, யாழ்ப்பாணம்,

Page 5
அச்சுப்பதிவு அர்ச், பிலோமினு அச்சகம், யாழ்ப்பாணம்

முன்னுரை:
உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் குறிப் பிட்ட காலத்துக்கு வாழவேண்டும் என்பது இறை வன் விதித்த விதியாகும். இவ்வாழ்வுக் காலத்தில் மனிதன் கைக்கொள்கின்ற நன்மைகளே அவனை நிர் ணயஞ் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது சுய விருப்பு வெறுப்புகளுக்கப்பால் தாம் வாழ்கின்ற சமுகத்தையும் அணைத்துக்கொண்டே தம்மையும் வளர்த்துச் செல்லுதல் கடமையாகும். உண்மையில் இந்தக் கடமையை இலகுவில் செய்துவிடமுடியாது. கால தேசத்துக்கமைய இதனை நிறைவேற்றுவதற் குத் தனிமனிதன் போராட வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. தனக்குப் பின்னே வருகின்ற சமுகம் தன் னைப் பார்த்து - அதிலேயுள்ள நல்லனவற்றைப் புரிந்து வளர்வதற்கான முறையில் வாழுகின்ற வாழ்க் கையின் மூலமே தனது பெயரை நிலைநிறுத்தமுடி tiIH Lf0.
இவற்றின் அடிப்படை என்ன? நேர்மை, உண்மை. பொறுப்புணர்ச்சி என்பனவாகும். எவ்வளவு தூரத் துக்கு இவற்றை ஒருவன் கைக்கொள்கின்றனே அவ் அளவுக்குத் தன்னுடைய இலட்சியத்தில் நிறைவு பெறுவான். ܫ
பலரகப்பட்ட மனிதர்கள் வாழும் பாரில் விசேட மான சில குறிக்கோளுடன் உள்ளவர்கள் இல்லா மலில்லை. இந்தக் குறிக்கோளுள்ள மனிதன் பகிரங் கத்திலேதான் இருக்கிருன் என்று கூறமுடியாது. எங் காவது ஓரிடத்தில் தன்னுடைய இலட்சிய வேள் விக்கு ஆகுதியாகிக் கொண்டிருக்கின்றன். அவனை இனங் கண்டுகொள்ளுவதும் இன்றைய நமது கடமை களுள் ஒன்ரு கும்.

Page 6
வசீகர நினைவுடன் வாழ்க்கைத் தடத்தில் காலடி எடுத்து வைக்கும்போது, குரூரமான எதிர்ப்புகள் மலைபோல் நம்முன் நிமிர்ந்து நிற்பதைக் காணமுடி யும். அப்போது அந்த எதிர்ப்புச் சக்திகளைக் கண்டு ஒதுங்கி இருந்துவிட்டால் பிறந்ததின் பயன் பூஜ்ய மாகிவிடும். எதிர்ப்புகளைக் கண்டு மலைக்காது எண் ணத்தில் இலங்குகின்ற இலட்சிய தீபத்துடன் முன் னேக்கிச் செல்லும்போதுதான் வெற்றிகிட்டும்.
இத்தகைய மனிதனின் சீவியமே ஒரு புத்தக மாகும். அந்தப் புத்தகத்தின் கருத்தைப் புத்த கத்துக்குரியவனே புலப்படுத்துவான் என்று கூற முடியாது. புலப்படுத்தும் திறமை எல்லோரிட மும் இல்லை. அத்திறமை இன்மையால் அப்புத் தகம் பயனற்றதாகிவிடுகின்றது. அதனல் நட் டம் புத்தகத்திற்கல்ல; நமக்குத்தான். எனவே நாம் நல்ல புத்தகத்தை வலுவில் தேடிப் படிக்க முயலவேண்டும்.
இத்தகைய கருத்துகள் என்நெஞ்சில் பிறப்ப தற்கு வழிவகுத்தது திரு. ஆர். செல்லையா அவர் களினது * வாழ்க்கையின் சோதனை " என்ற வரலா ருகும்.
சாதாரண ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற் படுகின்ற தடைகள் எத்தகையன? அவற்றை எதிர் நோக்கிச் சென்று எவ்வளவு தூரத்துக்குப் போராட வேண்டும் என்பன பற்றியெல்லாம் அறிந்துகொள்ள வும் இவ்வாழ்க்கையின் சோதனை ஒரு கருவியானது.
திரு. செல்லையா தன்னுடைய சுயதேவையை, இலட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கு நேர்மை யென்ற பாதையில் எவ்வளவு தூரத்துக்குச் சென் முர்? எத்தகைய சோதனைகளுக்கு ஆளானுர் என்பதைத் துலாம்பரமாகக் கண்டேன்.

தன் சோதனைகளை யெல்லாம் உள்ளக் குமுறலு டன் அவர் சொன்னபோது, இன்னெருவர் அவற் றைக் குறிப்பெடுத்தார். ஒரு தினம் அக்குறிப்பெடுத்த பிரதியை என்னிடம் தந்தார். அதனை வாசித்துப் பார்த்தேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நமது யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் ஊடுருவிப் போயிருந்த சாதிவெறியைக் கண்டேன். அதன் அடிப்படையில் எழுந்த பிரச்சனைகளின் வேகத்தை எதிர்த்துச் செல் கின்ற துணிச்சல் சாதாரணமானதல்ல. எவ்வளவு சிரமம்! இப்பிரச்சினைகளைச் சமாளிக்கவேண்டியவன் ஒரு சாதாரண மனிதன? அந்த மனிதனின் துன் பத்தைக் கண்டு கண்ணிர் வடித்தேன்; கொதித்தேன், சினந்தேன், பெற்ற வெற்றிக்காகப் பெருமிதப்பட் டேன். நாளை வாழ்வில் நாம் முன்னேறும் நம்பிக்கை ஒளியை அறிந்தேன். இவற்றினூடே புரிந்தது ஒன்றே ஒன்று. அது:
“சமுதாயத்தின் விடுதலைக்குத் துணிந்தி செல்ல எல்லோருமே ஒரே நேரத்தில் ஒன்றுசேர்ந்து விட மாட்டார்கள். எவ ஞே, ஒருவன்தான் முதலில் துணிந்து தனியாக முன்னுக்கு வரவேண் டும். அவனது போக்கினல் கிடைக்கும் ஆக்கத் தைக் கண்ட பின்னரே மற்றையோர்கள் தொடர்
வர் 9p
என்பது
திரு. செல்லையாவின் வாழ்க்கையின் சோதனையில் இந்தத் தனி உண்மை புலப்பட்டது. இவரது வாழ்க் கையின் குறிப்புகளை வைத்துக்கொண்டு கற்பனை மெருகுடைய புதிய நவீனத்தைப் படைத் திருக்க லாம். அப்படியான அபிப்பிராயத்தை யான் வெளி யிட்டபோது ' உங்கள் உசிதம்போல் செய்யுங்கள்” என்ருர் . ஆனல் உண்மையான ஒரு மனிதனின் கதை

Page 7
யைக் கற்பனையால் உருச்சிதைக்காது உள்ளவாறு புலப்படுத்தினுல் இந்த உலகம் அவரிருக்கும்போதே அவரை உணரலாம். அத்துடன் நமது கடந்த கால கொடுமையை அறிந்து அவ்வுணர்ச்சிகளுடன் ஒன் றிப்போக வழியும் பிறக்குமென்றும் கருதினேன்.
ஆகவே வாழ்க்கையின் சோதனையைத் திரு. செல்லையா தந்த மூலப்பிரதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க முனைந்தேன். இதிலுள்ள நிகழ்ச் சிகள் யாவும் அப்பழுக்கற்ற உண்மைகளே. அவற் றைக் கோவைப்படுத்திய கடமை மட்டும் என்னு டையது. அவ்வப்போது இடம்பெறும் கருத்துகளும் திருப்பங்களும் அவரது சிந்தனையோடொன்றியே
அமைக்க்ப்பட்டவை.
* கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே’ இது விவேகானந்தரின் பொன்மொழியாகும். இந்தப் பொன் மொழியைப் பொன் போல் போற்றுகின்ற மனப்பான்மை இவரது வாழ்க்கையின் சோதனையில் பிரதிபலிப்பதை உணர்ந்தேன்.
"நாம் நினைக்கின்றவை செய்கின்றவை யாவற் றையும் நோக்கிலே சிறப்புடையதாக அமைக்க நேர்மை தவருது இயக்குகின்ற திடமுந் தேவை."
அத்தகைய திடம் இவரது வாழ்வில் ஒன்றி யுள்ளது. அதுதான் என்னையும் ஊக்கியது. இந்த நூலின் பிறப்புக்கும் வழிவகுத்தது. சமுதாயத்தில் அடக்கமாகத் தொண்டாற்றுகின்ற ஒரு மனிதனை இங்கே அம்பலப்படுத்துகின்ருேம். அவர் நீட்டிய வாழ்க்கையின் சோதனையை வாங்கிப் படியுங்கள். பயனுண்டு.
இ. நாகராஜன் 2, பலாலி வீதி,
முதல் ஒழுங்கை, யாழ்ப்பாணம்,
12-3-70,

6.
வாழ்க்கையின் சோதனை
நினைவுப்பாதை:
பகலவன் என்ற பாட்டாளி நாள் முழுவதும் உல கத்துக்காக உழைத்துக் களைத்து அடிவானத்துக்குள் புகு ந்துவிட்டான். கயவனின் இருதயம் போன்ற கருவண் ணக் கங்குல் இயற்கையை இணைந்துகொண்டது" காலை யில் வானவெளியில் உலவிப் புளகாங்கிதம் கொண்ட புள் ளினங்கள் கூண்டை நோக்கிப் பறந்தன. அவற்றின் "கீக்கீ" என்ற கானம் கதிரவனைப் பிரிந்துவிட்ட உலகத்தின் சோககீதமாக அமைந்திது.
வழமைபோல் என வீட்டையடுத்துள்ள புகையிரதப் பாதை ஒரம் நிற்கும் அரச மரத்தடிக்கு வந்திருந்தேன். என்வரவை எதிர்பார்த்திருந்த நண்பர்களின் முகங்கள் என்னைக் கண்டதும் காலையில் மலர்ந்த கமலங்களாகின.
நாம் உட்கார்ந்திருக்கும் இடத்துக் கருகேயுள்ள புகை வண்டிக் கடவையை அந்தவேளையில் வர வேண்டிய புகை யிரதம் கடந்து செல்வதற்காகக் கடவைக்காவற்காரர் சண்முகம் சாத்தினர். கைகாட்டிக் கம்பங்களின் கரங் கள் கீழே சரிந்து எதிர்வரும் வண்டியை வரவேற்று நின்றன.

Page 8
- 2 -
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கிச் செல் லும் வண்டி, தடத்தில் கட கட வென்று ஒசை இட்ட படி யாம் இருக்கும் கடவையைத் தாண்டி அப்பாற் போய்விட்டது. சண்முகம் புகையிரதக் கடவையை அக லத் திறந்துவிட்டார். அதுவரை கடவையின் இரு புற மும் காத்துநின்ற மற்றைய வாகனங்கள் வீதியில் இரைந்து ஓடிச்சென்றன.
சில நிமிடத்துக்குள் அந்த இடத்தின் கலகலப்பு மங்கி மறைந்துவிட்டது.
எனது நினைவுகள் இன்னும் அந்தப் புகைவண்டியைப் பற்றியதாகவேயிருந்தது. ஏறக்குறைய இருநூற்று நாற் பது மைல்களை அது சென்ருக வேண்டும். எப்படிக் கட மையைச் செய்து முடிப்பேன் ? என்ற ஏக்கத்தில் அது குரல் எழுப்புவதுபோல் சுமார் ஒரு மைலுக்கப்பாலிருந்து *கூக்கூ" என்று வந்த அதன் ஒலி காதில் பாய்ந்தது. '
வாழ்க்கையும் இப்படியொரு புகைவண்டிதானே. ஒரே தடத்தில் வண்டி சென்ருலும் அது தனது ஓட்டத் தைத் தொடர முடிகிறதா ? எத்தனையோ நிலையங்களில் நின்று, பிரயாணிகளை ஏற்றி இறக்கிறது. சில வேளைக ளில் மற்ருெரு புகைவண்டிக்காகத் தனது தடத்தை மாற்றி வேருெரு நிலையத்தில் நிற்கவேண்டிய நிர்ப்பந்த மும் அதற்குண்டு. என்னையறியாத பெருமூச்சுடன் நாமும் இவ்வாறுதானே? என்றேன்.
நான் இப்படியொரு கேள்வியை எழுந்தமானத்தில் கேட்டேன்.
மெளனமாகவிருந்த எனது நண்பர்களான ஒவியர்' மணியம், கட்டிடக் கலைக்கு வண்ணமூட்டும் கோவிந்த பிள்ளை, கடவைக் காவலாளி சண்முகம் ஆகியோர்களுள் மணியம் ** என்ன முதலாளி இருந்தாற்போலிருந்து பெரு மூச்சும் கேள்வியுமாக இருக்கிறது?’ என்றர்.

سس۔ ”3 - ے
"தம்பி மணியம் இந்தப் புகையிரதத்தைப் பார்த்த தும் என் நினைவு வெகுகாலத்திற்குப் பின்னேக்கிச் சென்று விட்டது. இந்தப் புகைவண்டி எனக்கு மனித வாழ்க் கையை நினைவூட்டி விட்டது. அத்துடன், எனது வாழ்க் கையில் நான் நினைவு வைத்துத் தொடரக்கூடியதான ஒரு கால கட்டத்துக்குக் கொண்டுவந்துவிட்டது" என்றேன்
* அப்படியா ? ஏன் முதலாளி உங்களுடைய வாழ்க் கையைப் பற்றித்தான் எங்களுக்குத் தெரியுமே. புதி சாக என்ன இதில் இருக்கிறது!"
** இல்லை ஒவ்வொரு மனிதமனதிலும் ஏதோ ஏதோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் இடம்பெற்று விடுகின் றன. அவையனைத்துமே மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கு மென்று கூறமுடியாது.
* ஓ! அப்படியா! ஏன் நாங்கள் அறியக்கூடாதவையா அவை " என்ருர்.
அப்படி மறைக்கவோ, மறைத்துக்கொள்ளவோ வேண்டுமென்பதில்லை. அது மனத்துடன் கிடந்து மனத் துடனேயே மறையவேண்டியிருக்கிறது. ஆணுல் உங்களுக் குப் பொறுமையிருந்தால் நான் சொல்லுகிறேன். -
மணியம் மாத்திரமல்ல, அங்கு கூடியிருந்தவர்களனை வருமே ஆர்வங்காட்டினர். எனது வரலாற்றின் பெரும் பகுதியில் என்னல் மறக்கமுடியாதவைகளே வாழ்க்கை யின் சோதனையாயின.

Page 9
ашы» 4
கொழும்பிலிருந்து கொக்குவிலுக்குப் பயணமானேன்: '
1921-ம் ஆண்டு எந்த மாதமோ, திகதியோ திட்ட வட்டமாகக் கூறமுடியவில்லை. எனக்கு வயது ஏழு தான்.
எனது தந்தையார் இராமலிங்கம், தாயார் ஆச்சிப் பிள்ளை. இருவருக்கும் ஒரே ஒரு மைந்தன் நான். எனது தந்தையார் ஒரு சலவைத் தொழிலாளி. தங்களின் ஒரே ஒரு மைந்தன் நான் என்ற காரணத்தினல் அதிகமான செல்லங்காட்டி என்னைப்பேணினர்.
தந்தையார் தனது தொழிலில் மிகுந்த அக்கறை யுள்ளவர். அதனை வெகுவாகப் போற்றியும் வந்தமை யால் அத்தொழிலில் ஒரு தனித் திறமையையும், மற்ற வர்களின் பாராட்டுதலையும் பெற்றிருந்தார். இதன் கார ணமாகவே அவர் கொழும்பில் தொழில் செய்வதற்கு வாய்ப்புக்கிட்டியது. V
எவ்வளவுதான் செல்வாக்கும், தொழிற் றிறமையும் பெற்றிருந்தாலும் எந்த மனிதனையும் அதிஷ்டமும் துன் பமும் நிரந்தரமாக பிடித்து வைப்பதில்லை. ஒடுகின்ற சகடக்கால் போன்றதுதான் சீவியமும். உருண்டுகொண்டே இருக்கும். தந்தையாரைப் பற்றிய வறுமையின் பேருக அவர் தொடர்ந்து கொழும்பில் வசிக்க முடியவில்லை. மேலே குறிப்பிட்ட 192-ம் ஆண்டில் ஒருநாள் கொழும் புப் புகையிரத நிலையத்துக்கு வந்தோம். இதற்கு முந்திய நிகழ்ச்சிகள் தொடர்பாக என் நினைவினின்றும் விடுபட் டுப் போய்விட்டன.
அன்று யாழ்ப்பாணம் செல்லும் புகைவண்டியில் மூட்டை முடிச்சுகள் சகிதம் ஏறினுேம்,
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இன்றைக்குள்ள புகையிரதங்கள் வசதி

5 حشت
கள் நிறைய உள்ளவை. பிரயாணத்துக்கென எடுக்கும் காலமும் குறைவு. ஆனல் முந்தியகால வண்டிகள் வசதிக் குறைவானவை. பிரயாணிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. மின்வெளிச்சமோ, விசிறிகளோ வண்டியில் இணைக்கப்படவில்லை. எங்களுடைய இதயங்களில் எப் போது ஊருக்கு வந்து சேருவோம் என்ற ஆவல்தான் மேலோங்கி நின்றது. மிகவும் கஷ்டத்துடனே பிரயா ணத்தை மேற்கொண்டோம்.
மறுநாள் இருள் உலகைவிட்டு சிறுகச் சிறுக விடை பெற்றுக்கொண்டிருந்தது. எங்கும் மக்கள் விழித்தெழுந்த ஆரவாரம் உலகத்துடன் இணைகின்ற சமயத்திலே கொக்கு வில் புகைவண்டி நிலையத்தை அடைந்தோம்.
எனது தந்தையார் நாம் ஊருக்கு வருவதை ஏற்க னவே எனது மாமனருக்கு அறிவித்திருந்தார். மாமா நீண்ட நாட்களின் பின் எம்மைச் சந்திக்க வேண்டுமென் னும் ஆர்வத்தினுல் அதிகாலையிலே விழித்தெழுந்து புகை யிரத நிலையத்திற்கு வந்திருந்தார். • 7: ”ܝܼ
வண்டியிலிருந்து நாங்கள் இறங்கியதும் ஆரஈஅன்பு டன் மாமனர் என்னைத் தூக்கித் தோளில் இட்டுக்கொண் டார். தந்தையாரின் முகத்தில் அவரைக் கண்டதும் புன்னகை நெளிந்தது. தாயாருக்கோ தனது ஜெனன பூமியை அடைந்துவிட்ட மகிழ்ச்சி சொல்லிமுடியவில்லை.
வண்டி பிரயாணிகளை இறக்கிவிட்டு, மேலும் சில பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு தனது கடமையே கருத் தாக அப்பால் ஓடத் தொடங்கிவிட்டது.
சூரியனது கிரணங்கள் உலகத்தின் இருளையெல்லாம் தனது நாவினல் உறிஞ்சிவிட எங்கும் எழில் துலங்கியது. நால்வரும் நடந்து கொக்குவிலில் உள்ள மாமனரின் வீட்டையடைந்தோம்.

Page 10
-س- 6 ---
" பெற்றதாயும் பிறந்த பொன்னடும்
நற்றவ வானிலும் நனிசிறந்தனவே "
என்று பாரதி பாடினனே அந்தப் பாடலின் பொருள் எனது தாயாரின் வீட்டை அடைந்தபோதுதான் எனக் கேற்பட்டது. இந்த வீட்டிலேதான் 1914-ம் ஆண்டு வைகாசி முப்பதாந் திகதி நான் பிறந்தேன். ஆகவே இந்த வீடு அவளது பிறந்த வீடுமட்டுமல்லாது எனது பிறந்த விடுமாகும். -
நாங்கள் அங்கே வந்ததும் அயலிலுள்ளவர்களும் வந்துகூடிவிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் எங்களைப் பார்ப்பது புதுமையாக விருந்தது. பலநாட்கள் கொழும் பிலேயே தங்கியதன் காரணமாக எங்களுடைய நடை யுடை பாவனையென்பன மாறுதலாக விருந்ததில் வியப் பில்லை. அப்போது என்னெடொத்த எமது சமுகத்தவரின் பிள்ளைகளுக்கு வேறுபட்டவனகவே நான் தென்பட்டேன்.
நாட்கள் நகரத் தொடங்கின. மாதங்களாக அவை மாறிவிட்டன. நாங்கள் கொக்குவிலில்தான் வசித்துவந் தோம்,

-تست 7 -
இளமைப் பருவம்:
எனது மாமனர் பூமரங்களில் விருப்பமுள்ளவர். அந்த வளவின் கோடிப்புறத்திலே முல்லைச்செடியொன்று பக்க மெல்லாம் கிளையெறிந்து படர்த்துகிடந்தது. முற்றத் தில் மல்லிகைச் செடிகள் செம்பரத்தை, நந்தியாவட்டை மலர்கள் என்பன எதேஷ்டையாக வளர்ந்து கிடந்தன. அவை அவ்வப்போது பூத்துப் புதுமணம் பரப்பும். அந் தக் காட்சி இன்றுகூட நெஞ்சில் இனிப்பூட்டிநிற்கின்றது.
பூஞ்செடிகளில் மலர்ந்துள்ள மலர்களைப் பறிப்பதற்கு அடுத்த வீடுகளிலுள்ள சிறுவர் சிறுமிகள் எங்கள் வள வுக்கு வருவார்கள். யான் அந்த வீட்டில் உரிமை பெற்ற வணுகையால் என்னையறியாத பெருமிதம் எனக்குண்டு.
வருகின்ற சிறுவர்கள், சிறுமிகளுடன் அவ்வப்போது வலுச்சண்டை பிடிப்பதுண்டு. அவர்களைக் கிள்ளுதல், நுள் ளுதல், அடித்தல், பழித்தல் போன்ற சிறுபிள்ளைத்தனத் தினுல் ஏற்படும் சேஷ்டைகள் என்னிடம் வளர்ந்து வந் தன. இந்தச் சேஷ்டைகள் எல்லையை மீறிவிட்டன வென்றே சொல்லலாம். இவை பற்றி அச்சிறுவர் சிறு மியரின் பெற்றேர்கள் இடையிடையே என் பெற்றே ரிடம் வந்து புகார் செய்வதுண்டு.
ஒருநாள் ஒரு சிறுவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட சண்டை அவனது தந்தையாரை என் தந்தையாரோடு வாக்குவாதம் செய்யக்கூடிய நிலையை உருவாக்கி விட்
-gil.
என் தந்தையார் வீதியில் வரும்போது அச்சிறுவனின் தந்தையார் “ இராமலிங்கம் உன்னுடைய பொடியன்ர சேட்டை வரவரக் கூடி வந்துகொண்டிருக்கிறது என்னு டைய பிள்ளைகளுக்கு அடிக்கடி அடித்துத் தொந்தரவு தருகிறன். அவனை நீ திருத்தப்போகிருயா? அல்லது நான் திருத்தவா?

Page 11
-ست- 8 --
இப்படி அடுத்தவீட்டுக்காரர் ஆணவமாக என் தந் தையாரிடம் கேட்டார். காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சுதானே. நான் எவ்வளவு சுட்டித்தனம் மிக்கவன் ஆனலும் பிறரிடம் என் குறைபாட்டை ஒத்துக்கொள்ள அவர் முனைவாரா? •
*நீ சொல்லுவதுபோல என்னுடைய பையன் இல்லை.
அவனைத் திருத்துவதற்கு உனக்கு உரிமையும் இல்லை." என்று அவர் காரசாரமாக விவாதித்தார். அடுத்த வீட்டுக்காரனுக்கும் தந்தைக்கும் சரியான வாக்குவாதம் ஏற்பட்டு ஒய்ந்தது. ஆனல் தந்தையார் அடுத்த வீட்டுக் காரனேடு எனக்காக வn க்குவாதஞ் செய்த போதிலும், அவருக்கு என்னுடைய சுட்டித்தனத்தின் வேகம் புரியாம வில்லை. அடுத்த வீட்டுக்காரனிடம் சண்டையிட்ட வேகம் என்னில் தீர்க்கப்பட்டால் ஒழியக் குறையாது போலி ருந்தது. ஆத்திரத்துடன் வெளியே சென்றவர் நல்ல தாகசாந்தி செய்துகொண்டு திரும்பினர். .
அவரை நான் கண்டு விட்டேன். ஆனல் என்னை அவர் கவனிக்கவில்லை. கோடியில் சென்று பதுங்கிக் கொண் டேன். a
உள்ளே நுழைந்த தந்தை என் தாயாரைப் பார்த்து “எங்கயடி அவன்” என்று அடக்கமுடியா ஆத்திரத்துடன் கேட்டார். “ஏன்? அவனை என்ன செய்யப்போகிறீர்கள்?" ள்ன்ருள் தாயார். அவளது அமைதியான குரலும் கேள் வியும் அவருடைய ஆத்திரத்தை மட்டுப்படுத்திவிடுமா?
*அவனல என்னுல் ருேட்டில வெளிக்கிட முடிய வில்லை. பொடியளைப் போட்டு நுள்ளுருன் அடிக்கிருன் என்று எல்லோரும் முறைப்பாடு செய்யினம். இன்றைக்கு என்னுேட அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு வந்துவிட் டான்' என்று விடாமல் பொரிந்து தள்ளினர்.
“நீங்க யார் என்ன சொன்னலும் அப்படியே நம்பி விடுவியள். நான் என்ருல் நம்ப மாட்டேன். என்ர பிள்ளை

- 9 -
அப்படிச் செய்ய மாட்டான்" என்று தாயார் எனக்காக வக்காலத்து வாங்கிப் பேசுவது கோடியில் பதுங்கியிருந்த எனது நெஞ்சில் பால்வார்ப்பதுபோலிருந்தது. இப்படிக் கூறிய தாயார் “செல்லையா, செல்லையா” என்று என் னைக் கூப்பிட்டாள்.
நடந்த சம்பவம் எதையும் அறியாதவன் போல், நான் மெதுவாக வந்து விருந்தையில் ஏறினேன்.
எப்படித்தான் தந்தை என் செவியைப் பிடித்தாரோ தெரியாது. செவி அவருடைய கையில் வந்துவிட்டதோ என்னுமளவுக்கு வலியெடுத்தது. அதனைப் போட்டுத் திரு கினர். அடிகள் ஒன்றுக்குப்பின் ஒன்ருக அடுக்கடுக்காக விழுந்தன. வன் சொற்கள் பல காதின் உள்ளே நுழைந்த தன. " அடே எப்பவன் வீட்டைவிட்டு வெளியே போவாயா?” என்ற வினவை எழுப்பினர் *1 ஐயோ ஐயோ” என்ற சப்தத்தைத் தவிர வேறெவ்வித விடை யும் வெளிவரவில்லை என்னுடைய கண்ணிர் வெள்ளத் தில் பூமாதேவிதான் கரைந்தாள். தந்தைதரும் தண்டனை யைப் பொறுக்க முடியாது என் தாயாரும் உருகினர். அடுத்தது காட்டும் பளிங்குக் கண்ணுடியாக வேதனையை யெல்லாம் அவளது அமைதியும் அன்பும் குலவியமுகம் காட் டியது. கையொடிந்து விட்டகாரணம் மட்டுமல்லாமல் மன வேதனையும் கொண்ட தந்தையார் " " உம் எனக்கொன், றும் தெரியாது நீயும் உன்னுடைய பிள்ளையும் பட்டபாடு " என்று சொன்னபடி, துண்டை உதறித் தோழிற் போட் டுக் கொண்டு வெளியேறினர்.
தாயார் என்னை அணைத்து வைத்துக்கொண்டு கண் ணிர் வடித்ததுடன் அன்பான முறையில் புத்தியும் சொன் சூர்ை. குறும்புத் தனத்தைச் சிறுகச் சிறுகக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானமும் என்னுள் எழுந் ه انگی

Page 12
என்னுடைய தந்தையார் கொழும்பில் வசித்த காலத்தில் சேர். பொன் இராமநாதன், சேர். பொன். அருணுசலம் போன்ற பிரமுகர்களுக்கு சலவைத் தொழில் புரிந்து வந்தவர். அவருடைய தொழிற் பயிற்சியின் காரணமாக கொக்குவிலிலுள்ள பிரமுகர் களுக்கும் சலவைசெய்யத் தொடங்கினர். இந்தக் காலத்தில் எங் களுடைய சலவைத் தொழிலாளர் சமுகம் மிகமிகப் பின்' தங்கிய நிலையிலிருந்தது. எனது பெற்றேரும் யானும் கொழும்பில் வசித்து வந்த காரணத்தினல், எமது சமு கத்தவரைப் போலல்லாமல் நாகரிகமாக மற்றைய சமு கத்தவர்களைப்போல் உடை உடுக்கவும் தெரிந்திருந் தோம். இது நம் சமுகத்தவருள் பலருக்குப் பிடிக்க வில்லை. அதுமட்டுமல்ல எமது சமுகத்தவர்கள் ஏனைய உயர் சமுகத்தவர் போன்று உடை உடுக்கப்படாதென்ற கட்டுப்பாட்டையும் தாமே மேற்கொண்டிருந்தனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது அவர்கள் உயர் சாதி மக்களுக்குப் பயந்திருந்தமையாகும். அது மட்டு மல்ல தாம் பிறருடைய தயவில் வாழவேண்டி யிருப்பத னல் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டு மென்றும் கருதிவிட்டனர்.
இதனல் எம் சமுகத்தவர்களுள் சிலர் என் தந்தை யாரை நெருங்கி “ என்ன இராமலிங்கம் இப்படி மற் றைய உயர்சாதிக்காரர் போல நடக்கலாமா ? அவர் கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பினம்; உதனுலே நமக் கும் ஆபத்துத்தானே வரும் ? நீங்கள் வழமைக்கு மாருக இருக்கப்படாது" என்றெல்லாம் நெருக்கினர்கள். தந் தையார் * நாங்கள் சும்மா சப்புச்சவர்களுக்குத் தொழில் செய்யவில்லை. நல்ல பெரிய மனிதர்களுக்குத்தான் தொழில் செய்கின்ருேம். உங்களைப் போன்றவர்களுக்குத் தான் உந்தப்பயம் என்றுகூறி அவர்களை மடக்கினர்.
இப்படி பலரும் பேசுவதைக் கேட்க என்னுடைய மனதில் ஆவேசம் பொங்கியது. சிறிய வயதுதான் ஆனல்

س- ll --س-
நியாயத்துக்காகப் போராட வேண்டுமென்ற தவிப்பு மேலோங்கும். நாங்களும் மனிதர்கள், மற்றைய மணி தர்களுக்குள்ள உரிமை எமக்கும் வேண்டும் அவர்களைப் போல் வேட்டி, மேற்சட்டை, காற்சட்டை, சால்வை போடக்கூடாதா? போட்டால் என்ன ? நாம் ஏன் பயந்து நடக்கவேண்டும்? த் தனை க் கும் அடிப்படையானது சாதிப்பாகுப்பாடு. சாதி சாதி என மனிதனை மனிதன் தாழ்த்துகின்ற அவலநிலை துடைக்கப்படவேண்டும். இதற் குச் சமாதிகட்டவேண்டும் என்று அச்சிறு வயதிலேயே துடிப்பேன். இதுபற்றியெல்லாம் எனது தந்தையாரிட மும் பேசுவேன். 'போடாமடையா நீ ஒரு சின்னப் பொடியன் எப்படியும் தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிதான்; உயர்சாதிக்காரர்கள் போல நடக்க முடியுமா? உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தா காது” என்று சொல்லு வார். அப்படி நாங்கள் அவர்களைப்போல் நடந்து வந் தால் அவர்கள் நம்மை விட்டுவைப்பார்களா? எனது தந்தையார் கொழும்பில் தொழில் செய்து நாகரிகம் பெற்றிருந்தாலும் அவரது இரத்தத்தில் ஊறிப்போன இந்தப் பலவீனத்தை முற்ருக நீக்கிவிட முடியாதவர்.
ஊரில் நாம் எங்கே போனலும் திறந்தமேனியோடு தான் செல்லவேண்டும். அந்தக் காலத்தில் எங்கள் சமு கத்தவர்கள் மேற்சட்டை போடப்படாதாம். எனக்குச் சட்டையின்றி திறந்த மேனியுடன் வெளியே செல்லுவ தற்கு மிகவும் வெட்கமாகவும் கஷ்டமாகவுமிருந்தது. இந்த நிலையில் கையில் கிடைத்த சில்லறைக்கு பெரிய கடைக்குச் சென்று ஒரு றெடிமேட் சட்டையை வாங்கி னேன். அந்தச் சட்டையைத் தரித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன் தந்தையார் உருத்திரமூர்த்தியாகிவிட்டார். 16னது சட்டையைக் கிழித்ததுடன் தாறுமாரு கப் பேசி முறர் என் நெஞ்சம் கொதித்தது. என்னுடைய ஆவேச வெறியை அவர் புரிந்துகொள்ளவில்லை. எனக்குப் பிற சமுகத்தவரிஞல் தொல்லைகள் ஏற்படுமென்றும் அவர் அஞ்சிஞர்.

Page 13
-- 2 -
எனக்கு மட்டும் ஆவேசம் குறைவதாகவில்லை. தந்தை யின் பராமரிப்புக்குட்பட்ட வாழ்வேநமது சுதந்திர உணர்ச் சிக்கு முட்டுக்கட்டையாக அமைகின்றது என்று தீர்மா ணித்தேன். நான் உழைக்கவேண்டும், என்னுழைப்பி ஞல் தாய் தந்தையரைப் பேண வேண்டும் என்ற கருத் துச் சுடர்விட்டுப் பிரா காசித்தது. என்னுடைய தந்தை யார் செய்கின்ற தொழில்தான் நமது சுதந்திர எண்ணங் களுக்குத் தடையாக அமைகின்றது. ஆகையினல் உயர் சாதிக்காரர் செய்வது போன்ற தொழில்களுள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற திட்டம் நெஞ்சில் நிலைபெற்றது. என்னுடைய தந்தையாரும் குலத்தொழிலில் எனக்குப் பயிற்சியளிக்கவில்லை.
ஒரு தினம் என்வீட்டுக்குத் தந்தையாரின் நண்பர் கள் சிலர் வந்தனர். அப்போது அவர்கள் என்னைக்கண் டனர். தந்தையாரைப் பார்த்து "என்ன இராமலிங்கம் உன்னுடைய மகன் செல்லையாவை ஏன் பள்ளிக்கு அனுப் பவில்லை ? இந்த வயதிலே கொஞ்சமாவது படித்தாற் ருனே நல்லது.” என்று அவரிடம் தெரிவித்தனர். அதற்கு எனது தந்தையார் “நான் பெருமைமிக்க பிரமுகர்களின் தொழிலாளி. அவர்களின் பிள்ளைகள் படிக்கின்ற பெரிய பள்ளிக்கூடத்திற்ருன் என் பையனையும் சேர்க்க. வேண்டும். வசதி வரட்டும் பார்த்துச் செய்வோம். இது மாத்திரமல்ல நான் இன்னும் ஓரிடத்திலும் நிலையாகநின்று தொழில் பார்க்கத் தொடங்கவில்லை. எப்படியாவுதல் நிலை யாக இருப்பதற்கு ஓர் இடம் பார்த்துக்கொண்டுதான் மற்றக் காரியங்களைத் தொடங்க வேண்டும்" என்ருர், இந்தக் கதை என்நெஞ்சில் பால் வார்ப்பது போலிருந்தது.
என்னுடைய குடும்பத்தவர் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்கள். நான் ஒரு போஜனப்பிரியன். கல்லைத் தின் முலும் ஜீரணமாகக்கூடிய வயது. சாப்பாட்டைக் கண் டால் ஒரே மோகம். எந்தநிலையிலும் உண்ணத் தயங்க

-س- l3 ----
மாட்டேன் ஆனலும் எனது பிரியத்தை முற்றகத் திருப்தி. செய்ய முடியாத வறுமையிலே ஊறிவிட்டார்கள் பெற் ருர்கள். எனது தந்தையாரின் தமையனர் கைதடியி லிருந்து வந்து எம்மை அடிக்கடி சந்தித்துப்போவது வழக் கம், அவரைக் கண்டால் எனது மனம் மகிழ்ச்சியினுல் மலரும். ஒடிச்சென்று ? சீனியப்பு, சீனியப்பு ** என்று அவரைக் கட்டிக்கொள்வேன்.
அவர் வருகின்ற வேளையில் எங்கள் வீட்டு நிலையை உற்றுப் பார்த்துவிட்டு “நீங்கள் எங்களுடன் கைதடி யில் வந்து வசிக்கலாமே? ஏன் இங்கே நீங்கள் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து தருகிறேன்" என்று பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டேயிருப்பார். தந்தையும் அங்கு செல்லத் தீர் மானித்தார்.

Page 14
- 14தந்தையின் பிறந்ததத்துக்குச் சென்ருேரம்:
ஒரு தை மாதம் நாங்கள் கைதடிக்குக் குடிபெயர்ந் தோம். அப்போது எனக்கு எட்டுவயது நடந்துகொண் டிருந்தது.
மாரிகாலத்திய நீரையுண்ட கைதடி வயல்களெல் லாம் பச்சைப்பசிய காட்சி தந்துகொண்டிருந்தன. மழை நீரினல் ஊட்டம்பெற்ற செடிகொடிகள் மீது அழகு விரிந்து கிடந்தது. அந்தக் காலத்தில் சனப்பெருக்கம் மிகக்குறைவு. கண்காணும் இடமெங்கும் வெளிகளிலே பனைமரங்கள் எதேஷ்டையாக வளர்ந்திருந்தன. பனை வெளிகளில் விளையாடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி யுண்டானது. பெரியதந்தையார் வீட்டில் அவர்களுடன் சேர்ந்து அதிக நாட்களுக்கு நாம் சீவிக்க முடியவில்லை. மொத்தம் இருபத்திரண்டு "தினங்களே யாம் அங்கு வசிக்க நேர்ந்தது. காரணம்? எனது உறவினர்கள் அயல வர்களின் பழக்க வழக்கங்கள் வேருகவும் நமது பழக்க வழக்கங்கள் வேருகவுமிருந்தன. சீனியப்பரின் வேண்டு கோளுக்கமைய அவருடைய வீட்டுக்கண்மையில் தனி, Its வீடொன்றை அமைத்து அதிற் குடியிருக்கலா னுேம்.
நான் கொழும்பிலிருக்கும் காலத்தில் பலவகைப் பட்ட தீன் பண்டங்கள் எனக்குக் கிடைத்தன. ஆரம் பத்தில் ஒரளவுக்கு வசதியும் வாய்ப்பும் அங்கிருந்தது. நான் ஒரே மகன் என்ற காரணத்தினல் வேண் டிய போதெல்லாம் விதவிதமான பண்டங்களை வாங்கித்தந் தனா .
ஆனல் இங்கு அங்கேயுள்ள தின்பண்டங்கள் கிடைக் கவேயில்லை. அவற்றிற்கு மாருக பனம்பழம், ஒடியல், பனங்கிழங்கு, பனட்டுப் போன்ற உணவுகளே கிடைத் தன. காலப்போக்கில் இவைகளும் எனக்குப் பிடித்தமான

- 15 -
உணவாகின. எங்கள் குடியிருப்பைச் சுற்றி ஏராளம் பனைமரங்களுள்ளன. பனையிலிருந்து பனம்பழம் விழுந்து சத்தம் கேட்டதும் ஒடிச்சென்று அதனைப் பொறுக்கி வருவேன். மற்றவர்கள் கேட்டாலும் கொ டு க் க மாட்டேன். பழத்தைச் சுட்டோ, அன்றேல் சும்மாவோ இரசித்துச் சுவைத்துண்பேன். என்னைப்போல் பனம்பழத் தில் சுவைகண்ட சிறுவர்கள் வேறு சிலரும் அங்குள்ள னர். அவர்களும் இவ்வாறு பனம்பழங்களை என்னுடன் போட்டியிட்டுப் பொறுக்குவார்கள். அங்குள்ள மற் றைய சிறுவர்களும் நானும் பனை வடலியடியிலோ, ஏனைய மரங்களின் கீழோ பனம்பழத்தை இரசித்துச் சுவைப் போம். சூப்பப்பட்ட பனங்கொட்டைகள் தலையில் உச்சி வாரி இருப்பதுபோல அழகாக இருக்கும். இப்படிப் பனங்கொட்டையை தலை உச்சிவாரி இருப்பது போல் சூப்புவதில் எம்மிடையே போட்டிவரும். யானே அவர் களை இந்தப்போட்டியில் வெற்றிகொள்வேன். பலரும் யான் சூப்பியவிதத்தை மெச்சுவார்கள்.
இவ்வாறு வயல்வெளிகளிலும் பனை வடலிகளிலும், பற்றைகளிலும் உலவிக்கொண்டிருப்பேன். எனது தந்தை யாரை ஒருநாள் தமையனர் தான் தொழில் செய்துவரும் யாழ்ப்பாணத்திற்குக் கூட்டிச் சென்ருர். அவ்விடமுள்ள பலபிரமுகர்களிடமும் எனது தந்தையார் கொழும்பிற் தகுந்த பெரியார்களுக்குச் சலவைத் தொழில் செய்து பாராட்டுப்பெற்றவர் என்பதைத் தெரிவித்தார். இதன் பயனக தந்தையார் யாழ்ப்பாணப் பட்டினத்தில் ஒரு சில பிரமுகர்களுக்குத் தொழில் செய்யும் வாய்ப்புக் கிட்டியது.
இந்தக் காலத்தில் சீனியப்பு எனது தந்தையாரை கச்சேரி இலிகிதர் ஒருவருடைய வீட்டுக்குக் கூட்டிச் சென்ருர் அந்த இலிகிதர் எனது தந்தையாரைப்பற்றி விசாரித்தார். சீனியப்புவும் தந்தையின் திறமையை வெகுவாகச் சலாக்கித்துப் பேசினர்.

Page 15
سس۔ 16 سس۔
அப்போது அந்த இலிகிதர் * யான் ஒரு பெரிய இடத் தில் இவரைச் சேர்த்து விடுகிறேன் என்ருர், தந்தையா ருக்கு வெகு பெருமிதமாக விருந்தது. சீனியப்புவும் அதற்குச் சம்மதித்தார். அப்போது அந்த இலிகிதர் “யான் குறிப்பிடும் இடம் சாதாரண இடமல்ல, மிகப் பெரிய பதவியும் அந்தஸ்துமுள்ள இடம். அங்கே துப்புரவு, நேர்மை, நிதானம் இம்மூன்று விடயங்களிலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்ருர், எனது தந்தை "'உங்களுடைய சொல்லுக்கு ஒரு குறைவும் வராமல் நேர்மையாக நடந்துகொள்வேன்" என்ருர்,
அந்த இலிகிதர் தான் எவ்விதமும் ஒழுங்குசெய்வே னென்று உறுதியளித்ததினுல் ஒற்றை மாட்டு வண்டியில் தந்தையாரும், பெரியதந்தையும் மகிழ்வு பொங்க வீடுவந்து சேர்ந்தனர்
காலையில் எழுந்த தந்தையார் பெரிய தந்தையார் இருவரும் தம்பணிசெய்யக் கிளம்பிவிடுவார்கள். நான் வயல் வெளிகள், பற்றைகள், ஈச்சம்புதர்கள் உள்ள இடங் களில் சுற்றிக்கொண்டிருப்பேன். பள்ளிக்கூடப் படிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தட்டிக்கேட்கின்ற நிலை என் தாயாரிடமில்லை. தன்னிஷ்டையாக திரிந்து கொண்டிருப்பேன். என்போன்ற பள்ளி யறி வில் லாப் பையன்களின் சேர்க்கையினல் தாய் தந்தையரின் சொல்லை மீறுதல், தத்தையாரின் கண்களிற் படாமல் எங்காவது நுட்பமாய் மறைந்திருத்தல் போன்ற தீய குணங்களைக் கற்று அவற்றில் கெட்டித்தனம் பெற்றவணுனேன்.
சில காலங்களில் எனது சாதுரியம் ப யன் படா மல் தந்தையாரிடம் அகப்பட்டுவிடுவதுண்டு. அப்போது எனக்குத்தரப்படும் அடிகள் கணக்குவழக்கற்றவை. அவர் அடிமேல் அடிவைத்துக்கொண்டே யிருப்பார் . யான் போடுகின்ற ஒலம் அந்த ஊரையே கலக்கிவிடும் கொடு மையைத் தாங்க முடியாமல் தாயார் குறுக்கிடுவாள். அவளுக்கும் ஒருபங்கு கிடைக்கும்.

-پی۔ l7 ۔
முன்னர் குறிப்பிட்ட இலிகிதரின் சிபார்சு காரணமாக யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராகவிருந்த ஒரு வெள் ளைக்காரத் துரைக்குத் தொழில் செய்யவேண்டியேற்பட் டது. அக்காலத்தில் வெள்ளைக் காரரைத்துரையென்றே கூப் பிடுவார்கள். அந்தத் துரைக்குத் த்ொழில் செய்வதில் என் தந்தையாருக்குப் பெருமைதான். 'யான் அரசாங்க ஏசண்டுக்குத் தொழில் செய்கிறேன்’ என்று அவர் அடிக் கடி சொல்லித் தன்னை மற்றவர்களுக்கு முன் உயர்த்திப் பேசுவார். தந்தையாரின் துப்புரவான தொழில் திறமை யும், துல்லியமாக உடைகளை மடித்துக்கொடுக்கின்ற முறை யும் வெள்ளைக்காரத்துரையின் மனதைக் கவர்ந்துவிட் டன. இதனுல் துரையின் அபிமானத்துக்குத் தந்தையார் உரிமையானர். அப்போது யாழ்ப்பாணப் பட்டினத்தி லுள்ள கொட்டடி யென்ற பகுதியில் "கறுத்தார்’ என்ற பிரபலம் பெற்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவ ருக்கு நிலபுலங்கள் அதிகமிருந்தன. அவரைச் சுற்றி அவ ருக்குத் தொண்டு செய்வதற்காகக் குறைந்தது இருபத் தைந்து பேர்வழிகளாவுதல் நிற்பார்கள். எவரும் அவரி டம் மரியாதையாகவே நடப்பர். தவறு செய்பவர்களை இலேசில் விடமாட்டார். ஆனல் சூழ்நிலையை அனுசரித்துப் புத்திசாதுரியத்துடனும் திறமையாகவும் காரியங்களைத் செய்வதிற் செல்வாக்குப் பெற்றிருந்தார்.
அரசாங்க அதிபர் போன்ற பெரிய உத்தியோகத் தர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்து பெரிய கேளிக்கை விருந்துகள் வைப்பது அவரது வழக்க மாகும். பலவகையிலும் பிரபலம் பெற்றிருந்தவர்கள் அவருடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
கொட்டடிக் கறுத்தாரின் வீட்டு விருந்தொன்றுக்கு
அரசாங்க அதிபதி சென்றிருந்தார். கறுத்தாரின் கண்
கள் அரசாங்க அதிபதியின் உடுப்பின்மேல் விழுந்து
கொண்டிருந்தது, கறுத்தார் அடிக்கடி தன்னைப் பார்ப்
பதைக் கவனித்த அரசாங்க " அதிபர் கறுத்தாரை
3

Page 16
- 8 -
விசாரித்தார். கறுத்தார் “உங்கள் உடைகளைக் கவனித் தேன். அவை மிகவும் துல்லியமாகவும், அழகாகவும் சலவைசெய்யப்பட்டிருக்கின்றன துரையவர்கள் எங்கே சலவை செய்கிறீர்கள்?" என்று வினவினர். அதிபர் அவர்கள் ' என்னுடைய இலிகிதர் ஒரு புதிய சலவைத் தொழிலாளியைப் பிடித்துத் தந்துள்ளார். அந் த த் தொழிலாளியின் கைத் திறமையே நமது உடைகள் இவ் வளவு சிறப்படையக் காரணம் ” என்ருர், கறுத்தார் துரையிடம் “தங்களுடைய சலவைத் தொழிலாளியை எனக்கும் தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்டுக்கோண்டார்.
துரையின் ஏற்பாட்டின்படி எனது தந்தையார் கொட்டடிக் கறுத்தாருக்கும் சலவைத் தொழில் செய்து வரலானர் . ஏறக்குறைய ஒரு வருடமாகியது. கைதடி யிற் சலவை செய்த உடைகளை ஒற்றைத் திருக்கல் வண்டியில் ஏற்றிக்கொண்டு தந்தையார் யாழ்ப்பாணம் கறுத்தாரின் வீட்டுக்கு ஒருநாள் வந்தார்.
அந்த வேளையில் கறுத்தார் திண்ணையிலிருந்த சாய் மனைக் கட்டிலில் படுத்தபடி அன்றைய தினசரிப் பேப்பர் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். தான்படித்த பகு தியை முடித்துக்கொண்டதும் அவர் பத்திரிகையின் மறுபக்கத்தைப் புரட்டினர். அதைக் கண்ட தந்தை யார் ‘* ஐயா இந்தாருங்கள் ' என்று குரல் கொடுத் தாா.
திரும்பிப் பார்த்த கறுத்தார் “ ஒ! இராமலிங்கமா வா! ஏன் நல்லாக நாட்சுணங்கிப்போய்ச்சு’ என்ருர், w * ஐயா, என்ன செய்வது? கைதடியிலிருத்து அடிக் கடி வந்து போவதென்ருல் பெரிய கஷ்டம்” என்று அவரிரிடம் சுணக்கத்துக்குரிய காரணத்தை விளக்கினர்.
கறுத்தார் புன்னகை பூத்தபடி " " இராமலிங்கம் உனக்கு என்னைப்பற்றி அதிகம் தெரியாது. இங்கிருந்து

- 9 -
பளைவரைக்கும் எனக்குச் சொந்தமான காணிகள் அங் கங்கே இருக்கின்றது. நீயேன் கைதடியிலிருந்து இவ் வளவு கஷ்டப்படவேண்டும்” என்ருர் .
அவருடைய கருத்தும் கதையும் தந்தையாருக்குப் புரியவில்லை.
* என்னையா சொல்லுறியள்?’ என்ருர் எனது தந்தை untri.
* உன்னுடைய தொழிலுக்கு வசதியாக என்னுடைய காணிகள் ஒன்றில நீ குடியிருக்கலாமே ' என்ருர், !
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலத், தந்தை யாருக்கு அந்தக் கட்டளை யமைந்தது. அகமும் முக மும் விகர் சித்துக் கொள்ள * ஐயா இப்படி ஒரு வசதி செய்தால் அது எனக்கும் நல்லதுதானே. ஆனல் நீங்கள் இருக்கச் சொல்கின்ற காணியில் வீட்டைக் கீட்டைக் கட்டுவதற்கு என்னிடம் பணமில்லையையா” என்ருர்,
*அடேயப்பா உனக்குதவாத பணம் எதுக்காகும்" என்று கூறி உடனேயே ரூபா ஐம்பது கொடுத்தார் கறுத் தார்.
யாழ்ப்பாணத்தில் குடியிருக்க நிலமும், வீடுகட்டப் பணமும் கிடைத்தால் அதைவிட வேறு மகிழ்ச்சியுண்டா? மிகுந்த மகிழ்ச்சியுடன் திருக்கல்மாட்டின் நாணயக் கயிற்றை இடதுகையிலும் வலதுகையில் ஏர்க்காலையும் பிடித்துக்கொண்டு துள்ளி ஆசனத்தில் அமர்ந்து கொண் டார் . மாட்டின் வாலை முறுக்கியவுடன் அது துள்ளி யோடத்தொடங்கியது. ቆ)
தூரத்தில் மாட்டின் சலங்கை சப்தமிட தந்தையார் வந்த காட்சி இன்னும் மனக் கண்ணில் நிற்கிறது.
X

Page 17
யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினுேம்
தந்தையார் அன்று வீட்டுக்கு வந்ததும் பெரும் உற் சாகமாக அம்மாவிடம் கதைத்தார். யாழ்ப்புாணத்தில் கறுத்தாரின் காணியில் குடியிருக்கப் போவதில் ஏற் படும் பெருமிதம் ஒவ்வொரு சொல்லிலும் துள்ளியது. அம்மாவுக்கு மட்டுமல்ல எனக்கும் யாழ்ப்பாணத்துக்கு குடிபெயர்ந்து போவதிலும் புதிய புதிய இடங்களைப் பார்ப்பதிலும் புதியவர்களுடன் பழகுவதிலும் எனக்கு விருப்பம் அதிகம். யாழ்ப்பாணத்துக்கு எப்போ செல் வோம் என்ற கற்பனையில் ஆழ்ந்துவிட்டேன்.
குறித்த ஒரு தினத்தில் இப்போது மகாத்மா காந்தி வீதியென்று குறிப்பிடும் வீதியை (முன்பு இவ்வீதி மணிக் கூட்டு வீதியென அழைக்கப்பட்டது.) மருவியுள்ள காணி யில் வீடுகட்டிக் குடியேறினுேம். இன்றிருப்பது போல அன்று பெரிய கல்வீடுகள் இல்லை. நாம் சிறிய கொட் டில் கட்டியிருந்த காணிதான் இப்போது ஆர். செல்லையா அன் கோ இருக்குமிடமாகும். இங்கு குடியேறிய பின்பு என்னுடைய உறவினர் எனது தந்தையாரை மணிக் கூட்டடி இராமலிங்கம் என்று அழைக்கத் தொடங்கினர்.
யாழ்ப்பாணத்தில் நாங்கள் உறவினரின் தொடர் பில்லாத தனித்த இடத்தில் குடியிருந்தாலும், அடிக்கடி தந்தையாரின் உறவினர்களும், நண்பர்களும் வந்து சந் தித்துப்போவார்கள். அந்த நேரத்தில் யான் சுட்டித் தனஞ்செய்துகொண்டு வீட்டிலிருப்பேன். உறவினர்கள் “ஏன் இன்னும் பொடியனைப் பள்ளிக் கூட ம் விடா மலிருக்கிருய்' என்று கேட்பார்கள். அதற்குத் தந்தை யார் "ஓ இப்பவென்ன அவசரம். நான் படித்தனன? இவன் என்னத்தைப் படித்துக் கிளிக்கப்போருன்? தறு தலைப்பயல் வீட்டில் சொல்வழியே கேட்பதில்லை ஏதோ இங்குள்ள வேலைகளைப் பார்த்துக்கொண்டு எனக்கு உதவி யாக நிற்கட்டும்" என்பார்.

ー2I ー
என் தந்தையார் மாத்திரமல்ல எங்கள் ஊரிலிருந்த பெற்ருேர்களிற்பலர் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டு மென்ற அக்கறை குறைந்தவர்களாகவே இருந்தனர். தகப்பன் எவ்வழி மைந்தர் அவ்வழி என்ற பண்புடையவர் கள். இதனல் என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவ தில் தந்தையார் அக்கறை காட்டவில்லை. அன்றைய காலத்தில் அது அதிசயமான காரியமாகாது.
இப்பொழுது யாழ்ப்பாணத்திலிருக்கும் கடைகள், வீதிகள் பல முன் இருக்கவில்லை. ஒரு சில பிரதான வீதிகளைத் தவிர, மற்றைய வீதிகள் பிரபலம் பெற்றி ருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் விளங்குகின்ற பெரியாஸ் பத்திரியின் மேற்குப்புறப் பகுதியின் பெரும்பான்மை யான இடம் தோட்டங்களாகவே காணப்பட்டன. மர வள்ளிக்கு இந்த நிலம் வாய்ப்பாக அமைந்தமையால் மரவள்ளி செய்கைபண்ணப்பட்டு வந்தது. இதனல் இந்த இடத்தை மரவள்ளித் தோட்டமென்றே அழைத்தனர். இந்த மரவள்ளித் தோட்டத்துக்கு நடுவே நன்னீர்க் கிணருென்றிருந்தது. எனது தாயாரின் வேண்டுகோளின் படி நன்னீர் கொண்டுவந்து கொடுப்பேன். d
யாழ்ப்பாணத்தில் குடியேறிச் சுமார் ஒன்பது மாதங் களாக வறுமையும் எமது வீட்டை ஆக்கிரமித்துக் கொண் டது. அவ்வப்போது யாம் பட்டினியாகக் கிடக்க வேண் டிய துர்நிலையும் ஏற்பட்டது. வறுமை கோரமாக வீட்டை ஆட்சிசெய்தது.

Page 18
- 22 - ஒரே சூலில் நான்கு சகோதரர்கள் :
இந்த நிலையில் கர்ப்பிணியான என்தாய் பிரசவ வேதனையிற் துடித்தார். கடவுளின் சோதனைபோல் ஒரே சூலில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்தாள்.
இது ஒரு புதினமாக யாழ்ப்பாணப் பகுதியிற் பரவி விட்டது. மடையுடைத்த வெள்ளம்போல் ஜனங்கள் எங்கள் வீட்டை நோக்கி வாகனங்கள் மூலமும் கால் நடையாக்வும் வந்து சேர்ந்தனர். அப்படி வந்தவர்க ளுள் வெள்ளைக் காரத் துரைமார், கனவான்கள், சீமான் கள், சீமாட்டிகள், நகர காவலர், அரசாங்க உத்தியோ கத்தர்கள் ஆகிய பலரகப்பட்டவர்களும் காணப்பட்ட னர். எங்கள் வீட்டில் இப்படிப் பலரும் வந்து பார்த் தமை வேடிக்கையாக விருந்தது, எனக்கும் சகோத ரர்கள் நால்வர் ஒரே முறையிற் பிற ந் த து பெரு மையாக விருந்தது. அவர்களுக்கு நான் எதிர்காலத் தில் உழைத்துப் பல விளையாட்டுச் சாமான்கள், பொருட் கள் எல்லாம் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்றெல் லாம் கற்பனைபண்ணினேன். புதினம் பார்க்க வந்தவர் களுள் தர்மசிந்தனையுள்ளவர்கள் பணம் உதவியும் வாழ்த் தியும் சென்றனர். ஆனல் அன்னரின் வாழ்த்துக்கள் பலித மாகவில்லை. ஒரே சூலில் பிறந்த அந்த நாலு சிசுக்க ளும் ஒரே நாளில் காலன் கைப்பட்டன. இந்தத் துக் கத்தைத் தாங்காது தாயார் கண்ணிர் வடித்தாள் அண் ணணுகிய நானும் அழுதேன். புதினம் பார்க்க வந்தவர் களும் வருத்தப்பட்டனர். இதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும்?
ஆனல் புதினம் பார்க்க வந்தவர்கள் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை அம்மா சிக்கனப்படுத்திச் சேமித்து வைத்திருந்தாள். பணத்தின் பக்கம் தந்தை யின் பார்வை பட்டதால் அது கொஞ்சம் கொஞ்ச மாகக் கரையத் தொடங்கியது. நேரந்தவருது ஆறு மாதத்துக்கு ஒழுங்காக அடுப்புப் புகைந்தது. வேளைக்கு

۔سے 23 چیب۔
எனக்கும் உணவு கிடைத்தது. இந்தக் காலத் தி லே தந்தையும் சிறுது சிறிதாக குடிப்பழக்கத்துக்குள்ளானர். வீட்டில் செலவுக்குப் பணமிருக்கின்ற தன்மையினல் தொழிலில் அதுவரை காட்டிவந்த நேர்மையையும் காற் றில் பறக்கவிட்டுவிட்டார்.
நாள் முழுதும் கஷ்டப்படும் தொழிலாளர் பலர் இந்தவித மனப்பான்மை கொண்டனர் போலும், பணத் தின் அருமை அவர்களுக்கு விளங்குவதில்லை. இதனல் வாழ்க்கையில் மலர்ச்சியும் ஏற்படுவதில்லை.

Page 19
- 24 : - கல்வி கற்ற விதம் :
அம்மாவையும் ஒரே பிரசவத்தில் பிறந்த நாலு சகோதரரையும் பார்ப்பதற்கு வந்திருந்த பெரியார்கள் தாயாரைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் ஆங்கி லத்தில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நானும் ஆங்கிலத்தில் பேசினல் எவ்வளவு பெருமையாக இருக் கும் என்று கருதிக்கொள்வேன். ஆகவே படிக்கவேண்டு மென்ற ஆவல் பிறந்தது. எனது எண்ணத்தைச் செயல் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் மனதில் கொழுந்துவிட் டெரியும். தந்தையார் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தை முனை மழுங்கச் செய்தார். வீட்டில் மலைபோல் வீட்டு வேலைகள் குவிந்து கிடக்கும் காலையில் தந்தையாருக்கு உணவு கொண்டுசென்று கொடுக்கவும் தாயாருக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யவுமே நேரம் சரியாயிருக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போவதற்குச் சந்தர்ப்பம் தரமாட் டார்கள். ஆயினும் எவ்வாரு யினும் படி க் க வேண்டு மென்ற ஆர்வத்தைச் செயல்படுத்த முனைந்தேன்.
எங்கள் வீட்டுக்குச் சமீபத்தில் மாணிக்கம் என்ற பெண் குடியிருந்தாள். அவளது மகள் வேம்படி மகளிர் கல்லூரியில் படித்தவள். பள்ளிப்படிப்பை விட்டதும் ஒய்வு நேரத்தில் “டியூசன்" கொடுத்து வந்தாள். அந்த வீட்டுக்குப் பல பிள்ளைகள் படிக்க வருவார்கள். அதைப் பார்க்கும்போது நானும் சேர்ந்து படிக்க விரும்பினேன். "டியூசன்" எடுப்பதற்கு பணம் என்னிடம் இல்லை தந்தை யாரிடம் கேட்டால் ஒழுங்கு செய்யமாட்டார். வீட்டு வேலைகளையே செய்ய வற்புறுத்துவார். எனவே தின மும் சாணி சேகரித்துக்கொள்வதனுலும், வீதியில் சில ரிடம் பாடிக்காட்டுவதனுலும் சில்லறைக் காசு கிடைக் கும். அச் சில்லறையைச் சேகரித்துக்கொள்வேன். இப் படிச் சேர்த்த பணத்தைக்கொண்டு நான் படிக்கவேண்டு மென்ற முடிவுக்கு வந்தேன். பெற்ருர் அதற்குச் சம்ம திப்பார்களா? ஒரு நாள் தந்தையிடம் 'அப்பா படுத்து

-س- 25 --
நித்திரை செய்கின்ற நேரத்திலாவுதல் ஒய்வுதாருங்கள் நான் அடுத்த வீட்டுக்குச்சென்று படிக்கப் போகின்றேன்” என்று கெஞ்சினேன்.
என்னுடைய ஆர்வமும் துடிப்பும் அவரை இளகச் செய்தமையால் ஓய்வு நேரங்களில் அந்த வீட்டுப் பெண் ணிடத்தில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் படித்துவரப் பணித்தார். தினமும் பத்துச் சதம் கொடுத் துப் படித்து வந்தேன்.
இந்தக் காலகட்டத்தில் நாங்க ள் குடியிருக்கும் காணிக்கு உரிமையாளரான கறுத்தார் கல்வீடொண்றைக் கட்ட முற்பட்டார். எங்களுடைய ஒலைவீட்டை அந்த இடத்திலிருந்து பிரித்தெடுத்து. அக்காணிக்குள் வேருேரி டத்தில் கட்டினுேம் .
இந்த இடத்திலேதான் இப்போது லேக்ஹவுஸ் கிளைக் காரியாலயம் அமைந்துள்ளது. கறுத்தார் புதிதாக நிர் மாணித்த கல்வீட்டிலே இராசநாயக முதலியார் என்ற அரசாங்க உத்தியோகத்தர் குடிவந்தார்.

Page 20
- 26 - புதிய பழக்கங்கள்:-
என்னுடைய தந்தையார் குடிப்பதைப் பார்த்து எனக்கும் குடித்தாலென்ன என்ற எண்ணம் எழுந்தது. எனது வயதில் சிறுமாற்றம் கண்டது. தீய பழக்கங்கள் சில என்னை நெருங்கத்தொடங்கின தந்தையார் அன் ருடப் பாவனைகளுக்காகக் சாமான்களை ஒரு கடையில் கடனுக வாங்குவார். அவருக்குச் சாமான்கள் வாங்கச் செல்கின்ற சாக்கில் நானும் எனக்குத் தேவையான பீடி, சோடா போன்ற சாமான்களைக் கடனுக வாங்க ஆரம் பித்தேன்.
தந்தையார் ஒரு தினம் கடன்கா சைக் கொடுப்பதற் காகக் கடைக்குச் சென்ருர். கடைக்காரன் “உமது கணக் கில் ஆறு ரூபாய் பதினைந்து சதம், உன்னுடைய மகன் செல்லையா கணக்கில் எண்பத்தாறு சதம்" மொத்தம் ஆறெண்பத்தாறு என்ருன். தந்தைக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஆனல் அ டக் க ம |ா க செல்லையா என்ன சா மான் களை வாங்கினன்" என விசாரித்தார். ** நீ சொன்னது என்றுசொல்லி பீடியும் சோடாவும் வாங்கினன். உன்னுடைய மகனென்றபடியாற்றன் கொடுத்தேன்" என்ருன். மறுபேச்சுப் பேசாமல் “ சரி காரியமில்லை, அவனுடைய கணக்கிலுள்ள காசையும் எடுத்துக்கொள்ளுங்கள். இனிமேல் கடன் கேட்டால் கொடாதீர்கள்" என்று சொல்லிவிட்டு வந்தார்.
எனது கடனையடைத்துவிட்டார். என்ருலும் அவரது மனதில் உள்ளூரக் கோபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆத்திர மிகுதியுடன் வீட்டுக்கு வந்தார். தூரத்தில் அவர் வருவதைக் கண்டேன். காரணம் புரிய வில்லை. இருந்தும் அவர் முகத்தில் கோ பக்கனல் தெறிப் பதைக் கண்டபோது இன்றைக்கு நமக்கு மண்டகப்படி நடக்குமா க்கும் என்று பயந்து கோடிப்புறத்தில் பதுங்கிக் கொண்டேன்.

- 27 -
வீட்டுத் திண்ணையிற் காலடி எடுத்து வைத்ததுமே ' எங்கேயடி அவன்' என்று அதட்டினர். அவரது அதட் டல் கேட்டதும் அம்மா வெளியே வந்தாள். தாயின் உள்ளம் களிவுடையது என்றைக்கும் அவள் என்மீது அன்புடையவள். தந்தையின் அதட்டலை அ வ ள |ா ற் பொறுக்க முடியவில்லை. மெதுவாக ‘என்றைக்காவுதல் தம்பியை நீங்கள் அன்பு ஆதரவாக கூப்பிட்டதுண்டா? என் வயிற்றில் பிறந்து அவன் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். கடவுளே கடவுளே ’ என்ருள்.
‘‘அடியே உன்னுற்றனடி அவன் இப்படிக் கெட்டுப் போனன். பால்குடி கூட மறக்கவில்லை. பத்துவயதிலே பீடி குடிக்கத் துவங்கிவிட்டான். அதுவும் என்னுடைய கணக்கிலையல்லோ கடையில் கடன்வாங்கி பீடி குடிக்கி முன் இது உனக்குத் தெரியுமா? சனியன் வரட்டும் எங்கேயவன்? இன்றுடன் அந்தச் சனியனைத் தொலைத்து விடுகிறன்’ இவ்வாறு தனது ஆத்திரம் தீருமட்டும் சத் தம் போட்டார். பெற்றவளுடைய கண்கள் நீச்சல் தடத்து மீன்களாகின. நான் புரிந்துள்ள குற்றம் அவ ளது நெஞ்சத்தையும் கசக்கிப் பிழிந்திருக்கும். பெற்ற மனம் வற்ருத அன்புச்சுனையானது. 4A
இவ்வளவு பேச்சுவார்த்தைகளையும் கோடிப்புறத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அதுமட்டுமல்ல சுவாரஸ்யமாகப் பீடி புகைத்த பின்னர் எதையும் தெரிந்த தாகக் காட்டாது வெகு நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்.
தந்தையார் எப்படி என்னைப்பிடித்தாரோ தெரியாது. அவர் தடியெடுத்தது தெரியவில்லை. முதுகில் தடதட வென்று அடிகள் விழுந்தன. அவரது கண்கள் அக்கினிச் சுவாலையை வீசின. திட்டுகளும் வசவுகளும் ஏராளமாக வெளிவந்தன.

Page 21
- 28 - வெள்ளமும் பஞ்சமும் :
சூரியன் மேற்குத் திசையில் மறைந்தான். இருள் எங்கும் கவியத்தொடங்கியது. கை விளக்கு மூலையில் சுடர் பரப்பிக்கொண்டிருந்தது. திக்கித்திக்கி அழு து கொண்டிருந்தேன். கண்ணிர் கரைபுரண்டோடியது. திடீ ரெனக் குளிர்க்காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மின்னல்கள் கண்ணைப் பறிக்கத் தொடங் கின. பேய்மழையும் பொழியத் தொடங்கியது. காற்றின் பலமான வீச்சினல் மரங்கள் பல ஆங்காங்கே விழுந்தன. பயங்கரமான இம்மழை என் நினைவில் இன்றும் நிழலாகக் கவிந்துள்ளது. எனது கண்களிலிருந்து வெளியேறிய கண் ணிர் இப்படிப் பயங்கரமான மழையாக மாறியதோ? மறுநாள் யாழ்ப்பாணமே வெள்ளத்துள் மிதந்தது. இவ் வெள்ளம் தரையிலிருந்து நாலுமுழத்துக்கு ஏற்பட்டதாக அவதானிகள் தெரிவித்தனர்.
எங்கள் கூரைவீடு வெள்ளக்காட்டுக்குள் அகப்பட் டுக் கொண்டது. புகலிடம் தேடி வேறிடத்துக்குச் சென் ருேம். வெள்ளத்தால் பர்திக்கப்பட்ட அகதிகளுக்குக் கறுத்தார் தலைக்கு அரைப்படி அரிசியும் வேறு சாமான் களும் வழங்கினர். அரசாங்கமும் சிறிய உதவி வழங்கி யது. வெள்ளத்தை யடுத்து கடைகளை உடை த் து க் கொள்ளையுமிட்டனர்.
வெள்ளம் வடிந்து சீர்நிலை உருவானது ஆணுலும் பாதிப்பு இலகுவில் தீரவில்லை. என் தந்தையின் தொழி லுக்கு மழைக்காலம் இடக்காக அமைந்தது. தொழில் குறைந்தது. பசி பட்டினி வாட் டத் தொடங்கி யது. தொழில் செய்யும் இடங்களில் பாக்கிப் பணங்களை வாங்கி வரும்படி தந்தை அனுப்புவார். யான் அவ்வவ் இடங்களுக்குச் சென்று மெய் கலந்த பொய்பேசிப் பணத்தை வசூலித்து வருவேன்.
இப்போது யாழ்ப்பாண மாநகரசபை மண்டபம் உள்ள இடத்திலே மெளனச் சினிமாப்படம் காட்டி வந்

- 29 -
தனர். இம் மண்டபத்தை "றிஜ்வே ஹோல்" என்று அழைத்தனர். எனக்குச் சினிமாப் பார்ப்பதற்கு மிகுந்த ஆசையுண்டு. ஆனல் கையில் பணமிருக்காது. தந்தை யிடமே பணம் கேட்பேன். அவர் தொழில் செய்யு மிடங்களுக்குச் சென்று பணம் வாங்கி வாவென்று பணிப் பார். யான் சாமார்த்தியமாகப்பேசிப் பணத்தை வசூல் செய்து வருவேன், இந்த மகிழ்ச்சியினல் இடைக்கிடை 25 சதம் தருவார்.
கறுத்தார் கட்டிய கல்வீட்டில் வாசஞ்செய்த இராச நாயக முதலியார் வேறு இடத்துக்குச் சென்றமையால் அந்த வீடு வெறுமையாக விருந்தது. அந்த வீட்டை கறுத்தார் * சென் மேரிஸ் ** என்ற பெயருடைய வாடி வீடாக மாற்றினர். இந்த வாடிவீட்டில் பல பிரமுகர்கள் அடிக்கடி வந்து விருந்து கேளிக்கைகள் நடத்துவதுண்டு.
முதன்முதல் மகாத்மா காந்திஜி யாழ்ப்பாணம் வந்த போது இந்த வாடி வீட்டிலேதான் தங்கினர். ஏராள மான ஜனங்கள் அந்த மகானைக் கண்டு அவரது உப தேசங்களைக் கேட்பதற்காக வருவார்கள். பக்கத்திலே குடியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தமையால் நானும் தந்தையாரும் தாயாரும் அந்த மகானைக் காணவும் அவ ரது உபதேசங்களைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. இது ஒரு பாக்கியமான நிகழ்ச்சியாகும். ஆனல் சிறுவ ஞன எனக்கு அந்தக் காலத்தில் அவரது அருமையை அறிந்துகொள்ளக்கூடிய பக்குவமில்லை. இவர் வருகை புரிந்த காலம் 1927-ம் ஆண்டாகும்.
அந்நியநாட்டு உடை, உணவு வகைகளை நம்பியிருக் கப்படாது. நமது சுயதேவைகளை நாமே பூர்த்திசெய்ய வேண்டும். கதராடையே நமக்குரியது. என்றெல்லாம் கூறலாஞர். அவர் சென்ற கூட்டங்களிலெல்லாம் கத ராடை விற்பனயாகியது. மக்கள் விழுந்தடித்து அவற்றை வாங்கிஞர்கள்

Page 22
- 30 -
நான்கு முழ வேட்டி, உடலில் ஒரு ஆபாரம், தோளில் ஒரு கைத்தறித்துண்டு. இவற்றுடன் அவரது எழில் பிர காசிக்கும். காந்திஜி அங்கு தங்கியிருந்த காலத்தில் அவ ரது உடைகளை எனது தந்தையாரே சலவை செய்து வந்தார். காந்திஜி சில தினங்களில் திரும்பிவிட்டார்கள்.
வாடிவீட்டுரிமையாளரும் எமது நிலச்சுவாந்தருமான கறுத்தார் அத்துமீறிய செலவினங்களினல் பாதிக்கப் பட்டார். கீர்த்திக்காகவும், சுய விருப்பு வெறுப்புகள் காரணமாகவும் அவரது செல்வம் விரயமானதுபோலும். அதனுல் சென் மேரிஸ் வாடிவீட்டை அவர் விற்க நேர்ந் திது.
கறுத்தார் அந்த வாடிவீட்டுடன் நாமிருந்த நிலத் தையும் சேர்த்து விற்றுவிட்டதால் நாமும் இ ட ம் பெயர்ந்து அந்த வளவுக்குத் தெற்கேயுள்ள வளவில் கொட்டில் கட்டி வசிக்கத் தொடங்கினேம்.
** வாழ்க்கையில் வெற்றி” எப்போதுமே கிட்டா மல் இருந்துவிடுவதில்லை யென்பார்கள். ஆனல் அந்த வெற்றி என்னை எட்டிப்பார்க்கவில்லை. தள்ளித் தள்ளிப் போனது.
எமது வீட்டுக்கடுத்துள்ள யாழ்ப்பாணம் மத்திய கல் லூரி, வேம்படி மகளிர் கல்லூரி என்பவற்றில் பயிலுவ தற்காக மாணவ மாணவிகள் செல்லுவார்கள். அவர் கள் பள்ளிக்கூடஞ் செல்வதைப் பார்த்துக்கொண்டிருப் பேன். பள்ளிக்கூடம் கறுப்பா? சிவப்பா? என்பது பற் றியே எனக்குத் தெரியாது. அடுத்த வீட்டிலுள்ளவர் களிடம் படித்தே எனது அறிவை வளர்த்துவந்தேன்.
வீட்டில் உள்ள சில பெட்டிப் பலகைகளைப் பொரு ச் தி ஒரு சிறு வண்டியொன்று செய்தேன். தினமும் அந்த வண்டியை வண்டிக்காலைக்கு இழு த் து ச் செல்வேன். அங்கே வண்டியிற் பூட்டப்பட்ட பாடுகளின் சாணத்

- 3 -
தைக் குவிப்பேன். தற்போது யாழ்ப்பாண பஸ் நிலைய மாகவுள்ள இடம் அக்காலத்தில் மாட்டுவண்டிக் காலை யாக விருந்தது. ஊரிலுள்ள கட்டாக் காலி மாடுகளும் வீதியில் இஷ்டப்படி உலவிவருவதுண்டு. மாடுகள் உல வும் இடங்களிலும் சாணகம் கிடக்கும். சாணகம் சிறு கச்சிறுகக் குன்முகக் குவியும். பணம் சேர்த்துச் சாமான்கள் வாங்கலாம் என்ற கற்பனை மலைகள் மனதில் வளரத் தொடங்கும்.
எனது தாயாரும் கர்ப்பவதியாகியிருந்தாள். தந்தை யார் கொக்குவில் போன்ற இடங்களுக்கு என்னையும் கூட அழைத்துச் செல்லுவார். ஜாதிவெறியினல் பாட சாலைகளிலோ, பஸ் வண்டியிலோ, புகைவண்டியிலோ தாழ்ந்தசாதி மக்கள் சரிசமமாக ஆசனங்களில் உட்கார முடியாது. நடைபாதையாக உள்ள இடங்களிலேதான் உட்காரவேண்டும்.

Page 23
- 32 -
சாதி'வெறி :
தந்தையாருடன் ஒருநாள் கொக்குவிலுக்குச் செல்லு வதற்காக பஸ்வண்டியில் ஏறினுேம். நான் திடுமென சிறுபிள்ளைப் புத்தியினல் ஓர் ஆசனத்தில் அமர்ந்துவிட் டேன். தந்தையார் முகத்தில் பயத்தின் சாயல் படர்ந்தது. பயத்தில் ஏற்பட்ட ஆத்திரத்துடன் சற்று என்னை அதட்டிய படி * அடே நாங்கள் குறைந்த சாதிக்காரர் இந்த ஆச னத்தில் இருக்கப்படாது. நீ வந்து என்னுடைய மடியில் இரு" என்று பலவந்தமாக இழுத்துத் தனது மடியில் இருத்தினர் தந்தை.
இது இருக்கத்தானே போடப்பட்டிருக்கிறது; இப் படி மனம் ஆத்திரப்பட்டது. ஆனல் தந்தைமுன் இதைப் பேசமுடியுமா? குறும்புத்தனஞ் செய்தால் அவர் தண் டிப்பார். அத்துடன் உயர்சாதிக்காரர்களின் தாக்குத லுக்கும் ஆளாகவேண்டிவரும். ஆகவே என்னுடைய நெஞ்சம் வேகத் தந்தையின் மடியில் உட்கார்ந்தேன்.
இந்நிகழ்ச்சி மனதை வெகுவாக உறுத்தியது. கொதிப் புடன் புழுங்கினேன். வேறென்ன என்னுற் செய்ய முடி யும்? எதிர்காலத்தில் நான் ஒரு பஸ் வண்டிக்கு உரிமை யுடையவனுகி எல்லாச் சமுகத்தவரையும் சரியாசனத் தில் வைத்தாலென்ன? அப்படியான நிலை உருவாகுமா? என்றெல்லாம் சிந்தனையை உருட்டினேன்.
தாயார் கர்ப்பவதியாக இருந்தமையால் வீட்டி லுள்ள பல காரியங்களை நானே செய்யவேண்டியிருந்தது. தற்போது யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானமாகத் திகழும் இடத்தின் நடுவே முன்னளில் நன்னீருற்றுக் கிணறு ஒன்றிருந்தது. வீட்டுக்குத் தேவையான தண் ணிரை அங்கும் சென்று அள்ளிக்கொண்டு வருவேன். வீட்டுக்குத் தேவையான பண்டங்களை கடையிற்சென்று வாங்கிவருவதும் எனக்குள்ள கடமைகளுள் ஒன்ருகும் வீட்டுக்குரிய பண்டங்களை வாங்கும்போது சில்லறைக் காசுகள் மிச்சப்படும். அதனை என்னுடைய உரிமை

- 33 -
யாக்கிவிடுவேன். சாமர்த்தியமாகச் சாமான்களை வாங்கு வதன் காரணமாகச் சிறுசிறு வெட்டுகள் கெய்வேன். சோளகக் காற்று வீசுங்காலத்தில் இப்படிச் சேர்ந்த பணத்தைப் பட்டங்கள் செய்வேன். அவற்றை விற்பேன். சோளகக் காற்று உரமாக வீசுகின்றவேளையில் யாழ்ப்பாண முற்றவெளியில் என் போன்ற சிறுவர்களின் பட்டங்கள் விண் கூவியபடி பறந்துகொண்டிருக்கும். பட் டங்களை ச் செய்வதிலும் அவற்றை உயரப் பறக்க விடுவதிலும் சாமர்த்தியம் பெற்றவனனேன். முற்றவெளியில் தண் னிர் அள்ளுவதற்குச் சென்றேன். அப்போது ஒரு சிறு வன் பெரிய பட்டமொன்றைப் பறக்கவிட்டான். அது விண்கூவிக்கொண்டு நின்றது. அதைப்பார்த்ததும் அது போல் பட்டம் செய்து, சோளகம் முடிவதற்கிடையில் வானில் வட்டமிடச்செய்யவேண்டுமென்று கருதினேன். பட்டத்தை எப்படிச் செய்வதென்ற கற்பனை மனதிற் கனிந்தது. முற்றவெளியில் அள்ளிய தண்ணிர்க் குடம் தலையிலிருந்தது அந்த நினைவே மனதிலுறைக்கவில்லை. பட்டத்தைப்பற்றிய கற்பனையில் மிதந்தேன். பாற் குடம் சுமந்த சிறுமியின் கதையாகவே என் கதையும் முடிந்தது. தலையிலிருந்த மண்குடம் நிலத்தில் விழுந்து சிதறிவிட்டது. தண்ணிர்க் குடமின்றி வெறுங்கையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன் அம்மாவுக்குத் தவறுதலாக உடைந்துவிட்டதென்று கூறித் தப்பலாம். ஆனல் அந்த வேளை தகப்பனுமிருந்தார்.
* ஊரெல்லாம் திரிந்து கொடியேற்றத் தெரியும் தறுதலைப்பயல் ஒழுங்காகத் தண்ணிரைக் கொண்டுவரத் தெரியவில்லையா?" இவ்வாறு பேசியபடி தந்தை என் முதுகில் டமார், டமார்” என்று அடிமேல் அடியாகப் பலமாக அடித்தார். உடலிலே வலி தாளாமல் அலறத் தொடங்கினேன். தாயார் விலக்க வரவில்லை. காரணம்? சுப்பிரமணியம் என்ற எனது தம்பியைப் பிரசவித்த அற்பநாட்களாகையால் மூலேயிற் கிடந்தாள். தண்ட

Page 24
- 34 -
னையை விலக்கவோ எதையாவுதல் சொல்லவோ முடி யாத நிலையில் மூலையில் முனகியபடி கிடந்தாள். அவ ளது பெற்றவயிறு கொ தித் திரு க்கு ம் அடிகளைத் தொடர்ந்து தந்த தந்தையின் கைகள் வலியெடுத்திருக்க வேண்டும். அவரும் சோர்ந்துபோய் சென்றுவிட்டார்.
எனது உதடுகள் துடித்தன. நெஞ்சம் உலையிலிட்ட இரும்பாகக் கொதித்தது. கண்கள் நீரைப் பொழிந்த வண்ணமே யிருந்தன.

ー35ー
வீட்டைவிட்டு வெளியேறினேன் :
வீட்டைவிட்டு வெளியேறினேன். இனிமேல் இந்த வீட்டுக்கே திரும்பக்கூடாது என்ற வைராக்கியம் மன தைப் பற்றிக்கொண்டது. வீ தி க ள் பலவற்றையும் அளந்துகொண்டே நடந்தேன். புசி புசி! எனத் தூண் டும் பசிநோய் வாட்டும். தந்தையின் நண்பர்கள் கண்டு விடுவார்களோ என்ற அச்சம் வேறு. பசியென்று மற் றவர்களிடம் கேட்கமுடியாத வெட்கம் நெஞ்சைக் கப் பிக் கவிந்தது. விளாமரங்கள், மாமரங்கள், கொய்யா
மரங்கள் என்மீது இரக்கம் காட்டின. அவற்றை உண்ட
பின் வீதியோரங்களை 'மஞ்சமாக்கிக்கொண்டேன்.
மூன்று தினங்கள் கழிந்துவிட்டன. யாழ்ப்பாணம் கோட்டை முன்னீஸ்வரன் கோவிலுக்கு முன்னல் அமைந் துள்ள “ரெனிஸ்’ மைதானத்தை அடைந்தேன். பல பிரமுகர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். விளையாட் டைப் பார்த்துக்கொண்டு நின்றேன். இடைக்கிடை யான் நின்றுகொண்டிருந்த இடத்தை நாடியும் பந்துகள் வந்து கொண்டிருந்தது. அப்போது அவற்றைப் பிடித்து வீசி விளையாடுபவர்களிடம் எறிவேன் பந்துகளைப் பொறுக் எறிவதற்கு வேலைக்காரருளர். நான் அவர்களுக்கு உதவி யாகவும், எனக்குப் பொழுது போக்காகவும் இதனைச் செய்தேன்.
அன்று ரெனிஸ் விளையாடிக்கொண்டிருந்தவர்களுள் உதவி அரசாங்க அதிபரும் ஒருவர், வெள்ளைக்காரர் அவர், அவரது பெயர் ஹோர் என்பது. அவரது பார்வை என் மீது படர்ந்தது. தனது சேவகனன ஹான்பாய் என்ப வரை அழைத்தார். ஆங்கிலத்தில் ஏதோ சொல்லச் "சலூற்” ஒன்றைக் கொடுத்தார் ஹான்பாய். துரை அவரிடம் எதையோ சொன்ஞர்.
துரையின் சொல்லைக்கேட்ட ஹான்பாய் திரும்பி என் திசையை நோக்கிவிட்டு என்னிடம் வந்தார். எனக்கு

Page 25
- 36 -
உள்ளூர அச்சம். ஆனலும் ஒன்றும் பயப்படாதவன் போல் நின்றேன். வந்த ஹான் பாய் ** நீ ஏன் இங்கு வந்த நீ" என்று கேட்டார். நான் 'ஐயா, கிட்டத் தான் நான் இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, மேலும் எனது விருத்தாந்தத்தையும் தற்போது வீட்டுக்குத் தெரி யாமல் வீதியிலே நிர்க்கதியாக நிற்கின்ற நிலையையும் விளக்கினேன். ஹான்பாயின் முகத்தில் இரக்கம் மலர்ந் தது. இதுதான் சமயமென்று " ஐயா எனக்கொரு வேலையொன்று பெற்றுத்தாருங்கள் ” என்றேன்.
* சரி நாளைக்கு வா பெரியதுரையிடம் சொல்லி ஏதா வது வேலை வாங்கித்தருகின்றேன்’ என்ருர் .
வீட்டுக்குத் திரும்புவதில்லை என்ற பிரதிக்கினையுடன் பந்தடி முடிந்ததும், யாழ்ப்பாணக் கிட்டங்கி விருந்தையில் படுத்துக்கிடந்து இரவு முழுதும் நாளைக்கு ஏதாவது வழி கிடைக்காதா? என்ற சிந்தனையில் பொருமினேன். மறு நாள் அரசாங்க அதிபரின் இருக்கைக்குச் சென்றேன். மனதிலே அச்சம். என்ன நடக்குமோ என்ற சபலத்தி ஞல் எதிலும் ஒருவித முடிவுக்குவர முடியவில்லை. என் னுடைய அதிர்ஷ்டம் பங்களா முகப்பிலேயே ஹான்பாய் நின்றுகொண்டிருந்தார்.
“வந்திட்டியா? என்று வரவேற்ருர் . அவரை நெருங்கி யதும் “நான் உன்னைப்பற்றிப் பெரிய துரையிடம் சொல்லியிருக்கின்றேன். நீ கெட்டிக்காரன் நல்ல பிள்ளை என்ற எனது வார்த்தைக்கு மதிப்புப்பெற வேண்டும் ” இவ்வாறு புத்திமதி சொன்னர் . அவற்றை யெல் லாம் நான் அடக்கமாகக் கேட்டுக்கொண்டே உள்ளே சென்றேன். துரையும் என்னைப் புன்முறுவலுடன் நோக் கினர். அவரது காரைச் சுத்தமாக வைத் திரு க் கும் கிளினர் வேலை எனக்குத் தரப்பட்டது.

- 37 - .
உதவி அரசாங்க அதிபர் வீட்டுக் கார்க்கிளினர்:
யாழ்ப்பாணச் சுப்பிறீம் கோட்டு நீதியரசர்கள் தங் கும் வீட்டுக்கருகாமையிலே கோட்டைக் கட்டிடத்துக்கு மேலேதான் உதவி அரசாங்க அதிபரின் வீடு இருந்தது.
காரைமட்டும் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல் லால் ஏனைய வீட்டு வேலைக்காரர்களுக்கும் அவ்வப்போது ஒத்தாசை செய்வதும் எனக்குரிய கடமையாகும்.
துரைக்குப் பிரியமான கோப்பிப்பானமுடைய சுடு நீர்ப்போத்திலை ஒரு பையை தோளில் தொங்கவிடுவேன். அத்துடன் கையில் சிகரட் பேணியும் நெருப்புப் பெட்டி யும் எடுத்துக்கொண்டு தயாராகி நிற்பேன். துரை புறப் படும்போது அவருக்குப் பின்னுற் செல்வேன். விரும்பிய போது " போய்’ என்று அழைப்பார். கோப்பிப் பான த்தைப் பாத்திரத்தில் ஊற்றிக்கொடுத்தபின் சிகரட் என்பார். அதனையும் வழங்குவேன். வீட்டிலுள்ளவர்க ளுடன் மற்றைய வேலைகளிலும் ஒத்துழைப்புக் காட்டின மையால் அவர்களது அன்புக்கும் பாத்திரமானேன். இத ணுல் துரைக்குச் சமைத்த சுவையான உணவுகளை யானும் சுவைக்க முடிந்தது.
எனது பெற்ருேருக்கு இவ் விபரங்கள் எதுவுமே தெரியவில்லை. எனது தாயார் நான் ஆற்றிலோ குளத் திலோ விழுந்து மடிந்திருக்கலாம் என்று சதா அழுத வண்ணமிருந்தாள். தாயாரின் துன்பத்தை நீக்கவும், பிள் ளைப் பாசத்தின் வேகத்தினுலும் தந்தையார் என்னைத் தேடியலைந்தார். * 。
பதினேழு தினங்கள் கழிந்துவிட்டன. பதினெட்டா வது தினம். உதவி அரசாங்க அதிபர் வீட்டில் பணிபுரிகிற சங்கதி தந்தைக்குத் தெரிந்துவிட்டது.
அன்று சாயந்திரம் அதிபர் ரெனிஸ் பந்தாடும் திட லுக்கு வந்திருந்தார். நானும் அவருடன் திடலுக்கு

Page 26
- 38 -
வந்திருந்தேன். என்னை எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தை கண்டுவிட்டார். நானும் அவரைக் கண்டுவிட் டேன். மனம் பயத்தினுல் அடித்துக்கொண்டது. அந்த இடத்தைவிட்டு ஓடிவிடலாமா என்று நினைத்தேன் துரை யின் பணியாளன் நான். அவரது கடமைக்காக வந்திருக் கிறேன் எனவே மனம் பயத்தினல் அடித்துக்கொள்ள பொறுமையுடன் நின்றேன். அப்போது தந்தை மெது வாக என்னை நோக்கிவந்தார். இங்கேயும் அடித்து நொறுக்குவிாரோ என்ற காரணத்தினல் உடல் நடுங்கி யது .
நான் நினைத்தவை நட்க்கவில்லை. நெருங்கிவந்த தந்தை எதையும் பொருட்படுத்தாதவராய் கனிவுடன் * 'வா தம்பி வீட்டுக்குப் போவோம் என்ருர் ." அவரது கனிவும் பணிவும் எனக்கு உசாருண்டாக்கின. மனதின் அச்சம் பறந்தது.
* இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன். நான் இப்போ கவர்மென்ட் ஏஜண்ட் வீட்டில் வேலை செய்கின்றேன். மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கிறது. சம்ப ளமும் தருவார்கள்’ என்றேன்.
* அதெல்லாம் இருக்கட்டும் Gust ”” என்ருர்,
* முடியாது வேண்டுமானல் சம்பளத்தை மாதம் முடிந்ததும் அனுப்புகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் உங் களுடைய போக்கும் என்னுடைய போக்கும் வேறுபட் டவை நான் வரமாட்டேன்’ என்றேன் பிடிவாதமாக,
எனது இந்த உரையைக் கேட்டதும் சற்று நேரம் மெளனமாக நின்றர்.
பெற்ற பாசம்போலும், அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. நிமிர்ந்து ஆங்காரமாக அவர் முகத்தைப் பார்த்தேன். நான் எதிர்பாராத வகையில் என்னுடைய தந்தையின் கண்களில் கரைபுரண்டது கண்ணிர். அந்த க்

-س- 39 --
கண்ணிராற்றினல் என்னுடைய ம ன மாளிகை  ையக் கரைக்க முடியுமா? திடத்துடன் நின்றேன். ஆனல் அவர் விடவில்லை. தொடர்ந்து பெருமூச்சுடன் "" தம்பி எனக் காக வரவிட்டாலும் உனது அம்மாவுக்காவுதல் அங்கு வாவன்ரா. உன்னைக் காணுமல் அவள் துடிக்கிற துடிப்பு உனக்குத் தெரியுமா? என்னைப் பற்றிப்பறுவாய் பண்ணு விட்டா உன்னுடைய தாயையும் தம்பியையும் பார்க்கவா வது வரப்படாதா?’ என்ருர், தாயைப்பற்றி அவர் பிரஸ் தாபித்தபோது எனது மனம் தனது கடினநிலையினின்றும் சற்று இளகியது. ஆயினும் துரைவிட்டு வசதியும், எனது மன ஆத்திரமும் மேலோங்கி நின்றுகொண்டமையால் ** இப்போது என்னல் வரமுடியாது. வேண்டுமானுல் மாதம் ஒருமுறை வந்து அம்மாவைப் பார்க்கின்றேன்" என்று கூறினேன் எனது பிடிவாத குணத்தைப் புரிந்துகொண்ட தந்தையார் தொடர்ந்து வற்புறுத்தி ஞல் ஒருவேளை தற்போதுள்ள வேலையையும் உதறித் தள்ளிவிட்டு வேறெங்காவுதல் மறைந்துவிடுவேனே? என்ற அச்சத்தினல் ‘சரி உன்னுடைய வசதியைப்போல் அம் மாவை வந்து சந்தித்துக்கொள்’ என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டபடி அவ்விடம் விட்டகன்ருர், நானும் அப்போது நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.
உதவி அரசாங்க அதிபர் வீட்டில் எனக்குச் சகல வசதி களும் கிடைத்தன. நிம்மதியான உணவு நேரந்தவருது கிடைத்தது. மனதுக்குப் பிரிய மா ன தொழிலாகவி ருந்தமையால் நிறைவு கண்டேனென்றுதான் கூறவேண் டும். கல்லையும் சீரணிக்கச்செய்யக்கூடிய இளமைப்பரு வத்தில் நேரந்தவருது ஊட்டமுள்ள உணவு கிடைத்தது. அடக்கத்துடன் நான் செய்கின்ற பணிகள் பெரியதுரைக் குப் பிரியத்தை உண்டாக்கியது. அவர் பிரியத்துடன் போய், போய்’ என்று கூப்பிடுவார். சுத்தமான காற் சட்டை, சேட் தரித்துக்கொண்டு, கையில் சிகரட் டின் ஒடனும் தோளில் சுடுநீர் போத்தலிட்ட பையுடனும் நான் அவருக்குப் பின்னல் செல்லும்போது என்னையும்

Page 27
- 40 -
ஒரு பெரிய மனிதனுகக் கற்பனை செய்துகொள்வேன். எதற்கும் துள்ளிக்கொண்டு முன்நிற்பேன்.
இந்தச் செருக்குடன் சிகரட் புகைக்கவும் பழகிக் கொண்டேன். சிகரட்டை யான் காசு கொடுத்து வாங்கு வதில்லை. துரையினுடைய சிகரட்டில் தினம் இரண்டைத் திருடி வைத்துக்கொள்வேன். மற்றவர்கள் கண்கள் படாத இடத்தில் சென்று அவற்றைப் புகைத்து இரசித் துச் சுவைப்பதில் எனக்கு மட்டி லா மகிழ்ச்சியுண்டாகும்.
*"பலநாள் திருடன் ஒருநாளைக்கு அகப்பட்டுக் கொள் ளத்தான் வேண்டும்” என்ற பழமொழி பொய்ப்பதில்லை. ஒருநாள் வழமைப்படி இரண்டு சிகரட்டுகளைத் திருடி எனது சட்டைப் பைக்குள் மறைத்தபோது துரையினு டைய வார்வை என்மீது பட்டுவிட்டது. ஆயினும் அவர் என்னைப்பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அமைதி யாக ஆங்கிலத்தில் "* பையா இங்கே வா " " என்ருர் . தொலைந்தது, இன்றுடன் வேலை காலியாகிவிடுமோ ? தண்டனை கிடைக்குமோ? என்ற வினக்களில் என்னுடைய நெஞ்சம் பதைபதைக்க பயத்துடன் அவரை நெருங்கி னேன். அமைதியாக ஆங்கிலத்தில் “ எத்தனை சிகரட்டு கள் எடுத்தாய்” என்ருர்,
எனக்கு ஆங்கிலம் தெரியாது ஆயினும் இரண்டு விரல்களைக் காட்டி * ரூ சிகரட் ’ என்று அரை குறை ஆங்கிலத்தில் கூறியதுடன் எனது சட்டைப் பையிலிருந்து இரண்டு சிகரட்டுகளைபும் வெளியே எடுத்து அவர் முன் நீட்டினேன். துரையினுடைய வாயிற் புன்னகை பூத் தது. நான் உண்மையைக் கூறித் திருட்டுப்பொருட்களே வெளியே எடுத்துக்காட்டினமையால் உண்டாகிய மகிழ்ச்சி யின் பிரதிபிம்பமது. எனது நேர்மையினல் திருப்தியும், மகிழ்ச்சியும் கண்டார் அவர். இந்த நிகழ்ச்சியின் பய ஞக முந்திய நிலையிலும் நம்பிக்கை ஏற்பட்டது. பின் னர் தனது காரியஸ்தனிடம் ஆங்கிலத்தில் 'நீ உண்மை

- 4 -
யைக் கூறியபடியால் எனக்குச் சந்தோஷம். இனிமேல் எப்பொழுதாவது சிகரட்டுகளைத் திருடாதே. உனக்குத் தினமும் இரண்டு சிகரட்டுகள் தருவேன். இப்போது எடுத் துள்ள சிகரட்டுகளையும் நீயே வைத்துக்கொள்" என்று என்னிடம் தெரிவிக்கும்படி கூறினர். காரியஸ்தன் தமி ழில் எனக்கு விளக்கினன். அன்றுதொட்டு நான் திருடு வதை விட்டுவிட்டேன். தினமும் காலையில் துரை அன் பளிப்பாக இரண்டு சிகரட்டுகளைத் தருவார். மறைவான இடத்துக்குச் சென்று அவற்றை நிம்மதியாகப் புகைத்து வந்தேன்.
மாதமுடிவில் சம்பளம் தந்தார். அப்பணத்தை எனது தாயிடம் கொடுப்பதற்கு ஓடிவந்தேன். 'பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்’ என்பார்கள் அது உண் மையே. என்னைக் கண்டதும் தனது ஆராஅன்பைச்சொரிந்து வரவேற்ருள் அம்மா. சோகமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில் கண்களில் முத்துக்களுருண்டன. இந்த நிலையில் சம்பளத்தை அவளிடம் கொடுத்தேன். உண்மையில் தந்தையார் கொடுக்கும் பெருந்தொகையைக் கண்டு அவளது உள்ளம் இவ்வாறு பெருமிதம் அடைந்தது கிடையாது. தொடர்ந்து நான் மாதந்தோறும் சம்பளப் பணத்தைக் கொடுப்பதோடு தாயின் அன்பிலும் களித்து மூழ்குவேன்.
எனது எசமானகிய உதவி அரசாங்க அதிபர் தினமும் மேசையோரத்தில் உட்கார்ந்து சிகரட் பற்றவைப்பது வழக்கம். அந்த வேளையில் ‘போய்’ என்று அழைப்பார். *யேஸ் சேர் " என்று குரல் கொடுத்தபடி அவரிருக்கு மிடத்தை நாடிச்செல்வேன். இரண்டு கைகளையும் நீட் டென்பார் . நான் கைகளை நீட்டியதும் இரு கைகளிலும் இரண்டு சிகரட்டுகளை வைப்பார். “ தாங்ஸ் சேர்’ என்று கூறி ஒரு “ சலூட் ’ கொடுத்துச் செல்வேன்.
சில வேளைகளில் அங்கு விருந்து வைபவம் நடை பெறுவதுண்டு. துரை வீட்டு விருந்தின் தரத்தைக் கூற

Page 28
- 42 -
வும் முடியுமா? வெள்ளைத்துண்டு விரித்திருக்கும் மேசையை மேல்நாட்டுக் குடிவகைப்புட்டிகள் அலங்கரிக்கும். சுற்றி வரப்பலவகைப்பட்ட மாமிசக் கறிகள், மரக்கறி வகைகள், முட்டைகள், கட்லிஸ் போன்ற உணவு வகைகள் தட்டு களில் இடப்பட்டிருக்கும். விருந்திற் கலந்து கொள் பவர்கள் அரசாங்கத்தில் உத்தியோகம் பார் க் கும் பெரும் புள்ளிகள். தரத்துக்குத்தக உரிய ஸ்தானங்களில் அமருவார்கள். சில வேளைகளில் உணவு பரிமாறுகின்ற பணியையும் நான் செய்வேன்.
விருந்தினர்கள் குடித்து உணவை அருந்தி ஆங்கிலப் பாடல்கள் பாடி ஆடுவார்கள். முடிவில் துரைக்கு வணக் கஞ் சொல்லிச் செல்வர். விருந்தினர் சென்ற பின்பு எங்களுக்குக் குஷி பிறந்துவிடும். எஞ்சிய குடிவகைகள், உணவுகளை ஒருபிடி பிடிப்போம். அடுத்த விருந்து எப் போது நடைபெறுமோ? என்று எதிர்பார்த்திருப்போம். அங்குள்ள பணியாளர் மூலம் சிங்களத்தில் பேசக் கற் றுக்கொண்டேன்.
என்னுடைய மனம் இவ்வாறு நிம்மதியையும் குதுர கலத்தையும் பெற்றது. எதைத்தான் நிரந்தரமென்பது? வாழ்க்கையை வண்டிச்சக்கரம் என்று அறிஞர்கள் உவ மானப்படுத்தியதில் தவறே காணமுடியாது. என்னு டைய துர் அதிர்ஷ்டம் எனது எசமானுகிய அரசாங்க அதிபருக்கு மாற்றம் கிடைத்தது. அவர் இங்கிலாந்துக்குச் சென்றதால் எனது உத்தியோகமும் போய்விட்டது.
** பழைய குருடி கதவைத் திறவடி" என்ற பழ மொழிப்படி, அம்மாவையும் தந்தையையும் நம்பி வாழ வீட்டுக்கு வந்தேன். அங்குள்ள த ரி த் தி ர நிலையில் தொடர்ந்து ஒருவித வேலையும் இல்லாமலிருந்தமையால் மனக்கஷ்டத்துக்குள்ளானேன். த ந் தை யார் தனது தொழிலில் எனக்குப் பயிற்சி தரவில்லை. அந்தத் தொழி லைச் செய்ய எனக்குப் பிரியமுமில்லை. எனக்கென்று ஒரு வேலையைத் தேடிக்கொள்ள விரும்பினேன்.
X

--س۔ 43 ----
மோட்டார் வாகனங்களைத் திருத்தும்பணி:
வண்ணை வைத்தீசுவரன் கோவில் மேலை வீதியில் சூத்திரஞ் சின்னத்தம்பி என்பவர் மோட்டார் திருத்தும் தொழிற்சாலையை நடாத்திக்கொண்டிருந்தார். அவரது தொழிற்சாலையில் மாதம் ஒன்பது ரூபா சம்பளத்தில் ஒரு தொழிலாளியாகத் தந்தையார் சேர்த்துவிட்டார். இது நான் வரவேற்கக்கூடிய தொழிலாயமைந்தது.
இந்தத் தொழிலின் திட்ப நுட்பங்களை யெல்லாம் அறிந்துவிட வேண்டுமேன்ற ஆர்வத்தினல் அக்கறையா கப் பழகிவரலானேன். என்னுடைய ஆர்வத்தைக் கண்ட தந்தையும் ஊக்கம் தந்தார். குறித்த நேரத்துக்கு வேலைக்குச் செல்வதற்காக பைசிக்கிள் ஒன்றும் வாங்கித் தந்தார். தானே பைசிக்கிளைச் செலுத்தவும் பழக்கினர். பழக்கத்தின்போது அடிக்கடி நிலத்தில் விழுந்து காயங் களும் ஏற்பட்டதுண்டு. w
எங்கள் தொழிற்சாலைக்குப் பக்கமாக அமைந்த வீதி யில் அடிக்கடி பஸ் வண்டிகள் போய்க்கொண்டிருக்கும், அவற்றைப் பார்க்கும்போது முன்னுெரு நாள் தந்தை யோடு செல்லும்போது ஆசனத்தில் நான் உட்கார முடி யாமலிருந்த சம்பவம் மனத்திரையில் எழும் இப்படி ஒரு பஸ் வண்டி ஒன்றை எனதுடமையாக்கிவிட்டால் எனது சமுகத்தவர்களை மற்றை சமுகத்தவருடன் சரிசம மாக இருக்கச் செய்யலாம் என்ற நினைவு நெஞ்சை அரித் துக்கொண்டே இருக்கும்.
யாழ்ப்பாணம் மணிக்கூண்டு வீதியும், ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இடத் திலே ஒரு தேநீர்க்கடை இருந்தது. அக் க  ைடயி ன் உரிமையாளர் செல்லத்துரை என்பவர். அவருக்குச் சொந்தமானது நீலப்பறவை ( Blue Bird ) என்னும் பஸ் வண்டி. மேற்படி செல்லத்துரை முதலாளியின் பஸ்

Page 29
வண்டியில் ஊழியஞ் செய்தால் என்னுடைய கனவு நன வாகுமல்லவா?
இந்த எண்ணத்தின் பயணு க செல்லத்துரையா ரின் தேநீர்க்கடைக்கு அடிக்கடி செல்வேன். அவரது பஸ்ஸில் வேலை செய்வதற்கு அனுமதிப்பாரா? இப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்து வாட்டும். ஆயினும் ஒரு நாள் மிகவும் பயத்துடன் முதலாளியை நெருங்கி "ஐயா! என்னையும் உங்கள் பஸ்ஸில் ஊழியனுகச் சேர்த்துக்கொள் ளுங்கள்' என்றேன். * அட உன்னை எப்படிச் சேர்ப் பது? நீயோ குறைந்த சமுகத்தவன்; அது சரிவராத காரியம் " என்ருர். இந்த விடையினல் என் முகம் கூம்பி விட்டது. ஆயினும் எனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆவேசம் மனதைவிட்டு நீங்கவில்லை.
மோட்டார் திருத்தும் தொழிற்சாலையில் வேலை முடிவுற்றதும் செல்லத்துரை முதலாளியின் கடையின் முன் புறத்தில் வந்து நிற்பேன். இதனல் கடைக்கு வருபவர் களுடன் நட்புறவு கொள்ள நேர்ந்தது. முதலாளி காய் கறி முதலான வீட்டுச் சாமான்களை என்னிடம் தந்து * செல்லையா இவற்றை என்னுடைய வீட்டில் கொடுத்து வா ** என்பார், துள்ளிக்கொண்டு அவரது வீட்டுக்கு ஒடிச் செல்வேன். அவரது வீட்டில் மனைவியும் சில பணி களைச் செய்யச் சொல்லுவார். மறுத்துப் பேசாது உற் சாகமாகச் செய்துகொடுப்பேன். இவ்வாறு எனது பழக் கமும் பணியும் பலம்பெற்றுவிட்டன. இவ்வேலைகளுக் காக யான் எவ்வித பிரதிஉபகாரமும் பெறுவதில்லை. யாருக்கும் சம்பளமில்லாமல் வேலை செய்கின்றவனிடம் கொஞ்சம் பிரியம் உண்டாவது சகசந்தானே. சொற்ப காலத்துக்குள் செல்லத்துரையாரதும், பாரியாரதும் அனு தாபத்தைப் பெற்றுக்கொண்டேன்.
மோட்டார் திருத்தும் வேலையில் சேர்ந்து ஏழு மாதங் கள் கழிந்துவிட்டன. உழைத்த பணம் எனது தேவை களுக்கே போதுமானதாகவில்லை. இரகசியமாக மது

- 45 -
பானம் பருகவும், பரகசியமாக சிகரட், புகையிலை, பீடி புகைக்கவும் அந்தப் பணம் போதுமானதா?
இத்தகைய துர்ப்பழக்கங்கள் என்னிடம் வலுப் பெற்றதை அறிந்த தந்தைக்கு என்மீது வெறுப்பு அதி கரித்தது. மனம் குமுறுவார். நான் எதையும் பொருட் படுத்துவதில்லைs

Page 30
- 46 -
பவ்ஸ்ஸில் கொண்டக்டர் :
இந்த நிலையில் செல்லத்துரை முதலாளியின் இஷ் டத்துக்குகந்தவனுக மாறிவிட்டேன். அவரது பஸ்ஸில் கொண்டக்டர் வேலை கிடைத்தது. என்னுடைய நெஞ் சில் நீண்டகாலமாகப் புழுங்கிக்கொண்டிருந்த இலட்சி யம் நிறைவேறிவிட்டதென்று பெருமிதங்கொண்டேன். என்மீது வெறுப்புக்கொண்ட தந்தையாரிடம் நான் பஸ் கொண்டக்டராகிவிட்ட செய்தியை அம்மா பெருமை யோடு தெரிவித்தாள். " " என்னடி நான் கொண்டுபோய் விட்ட வேலையை விட்டுவிட்டு பஸ்ஸுக்கு ஆள்பிடிக்கப் போருஞ? இந்தக் கழுதையால் என்ன உதவி. உருப்படாத வன் இனிமேல் உனக்கு உழைத்தா கொட்டப் போருன்? பார்த்துக்கொண்டிரு' இவ்வாறு வெறுப்பை உமிழ்ந்தார். அவருக்கு இது எனது கனவின் நனவு என்ற காரணம் தெரியவே இல்லை. கொண்டக்டர் வேலை செய்வதில் யான் சூட்டிகையானவன் என்பதை விரைவாக வண்டி யில் ஏறுவதினுலும் ஆட்களைச் சேர்ப்பதினலும் நிரூபித்து வந்தேன். நான் உயரத்தில் மிகவும் குறைந்தவன். அத் துடன் கறுவல் நிறத்தவன். இது பார்ப்பவர்களுக்குக் கவர்ச்சியாகவிருக்கும்.
அக்காலத்தில் பஸ் கொண்டக்டர்கள் பிரயாணிகள் கொண்டுவரும் மூட்டை முடிச்சுகளை பஸ்ஸின் மேற் கூரையில் நாமே ஏற்ற வேண்டும். பஸ் தரிப்பிடங்களிலெல் லாம் ** வாருங்கோ ஐயா, பஸ் புறப்படப்போகுது, ஏறுங்கோ ஐயா " என்று மூச்சுப் பிடித்துக் கத்த வேண் டும். பிரயாணிகளின் வயது, தகுதி இவற்றை அநுச ரித்து ஐயா, அம்மா, தம்பி, தங்கச்சி என்று பணிவாகக் கூறினல் வண்டியில் ஏறுவர். மரியாதை குறைந்து விட் டால் நமது பஸ்ஸைத் தேடி மறுநாள் எவருமே வர மாட்டார்கள். இதனல் வருமானம் குறையும். வருமா னம் குறைந்தால் எங்களுக்குரிய சம்பளமும் குறையும். முதலாளியிடம் நற்பெயரும் கிடையாது. நீலப்பறவை

حسی- ,47
(Blue Bird) யாழ்ப்பாணத்துக்கும் கீரிமலைக்கும் சேவை செய்வது. எனவே பஸ் வண்டி புறப்படு முன்னர் “சிவன் கோயில், தட்டாதெரு, நாச்சிமார் கோவிலடி, கொக்கு வில், குளப்பிட்டி, நந்தாவில், கோண்டாவில், இணுவில், மருதனுமடம், சுன்னகம்: மல்லா கம், தெல்லிப்பளை, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, போயிட்டி, கீரிமலை" என உரமாகச் சொல்லுவேன். எனது விடாப்பிடியான ஊக்கத்தால் நீலப்பறவைக்கு நல்ல வருமானம் கிடைத் ததுடு ஏனைய பஸ் சொந்தக்காரர்களின் பொருமைக்கு நான் உள்ளானேன். எனது சம்பளத்தை 35 சதத்திலிருந்து 50 சதமாக முதலாளி கூட்டினர் காலைப்போசனம், மதிய போசனம் என்பவற்றிற்கும் பிரத்தியேகமான பணம் தந்தார்.
பஸ் முதலாளிமாரின் கணக்கில் எடுக்கும் பணத் தைக்கொண்டு உணவைக் கடையிலேதான் கொள்ளவேண் டும். அக்காலத்தில் சாதித்தடிப்பு வெகு ஆழமாக வேரோடியிருந்தது. எமது சமுகத்தவர்கள் ஏனைய சமூ கத்தவர்களுடன் சரிசமனுக அமர்ந்து பொதுத் தேநீர்க் கடைகளிலோ போசனசாலைகளிலோ உணவு கொள்ள முடியாது. பஸ் வண்டியில் கண்டக்டர் வேலைசெய்யும் என்னைப் பலரும் அறிவர். என்னுடைய தொழிலும் என்னுடைய சமுகத்தவருக்குப் புறம்பான தொழில். தேநீர்க்கடைகளில் எமது சமுகத்தவர்களுக்குப் புறம் போக்காக இருத்தியே உணவு பரிமாறுவர். இந்தக் கேவ லமான நிலையை வெறுத்த காரணத்தினுல் பல தேநீர்க் கடைக் காரர்களுடன் சச்சரவுசெய்ய நேர்ந்தது. ஆயி னும் பசியைத் தீர்க்கவேண்டும். கெளரவமாக உண்ண முடியவில்லையே என்ற வேதனையுடன் பலநாள் குமிறியிருக் கின்றேன்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் திரு. சிவசம்பு என்பவர் போசனசாலை வைத்திருந்தார். இ வ ர து போசனசாலை மாமிசக் கறிவகை சமைப்பதில் செல்வாக்

Page 31
----- 48 ست
குப் பெற்றிருந்தது. ஒரு தினம் இக்கடையிற் சாப்பிடு வதற்குச் சென்றேன். இவர் ஏற்கனவே என்னுடன் பரிச்சயமானவர். ஆயினும் இவரது கடைக்கு அதற்கு முன் யான் சென்றதில்லை.
என்னைக் கண்ட சிவசம்பு அவர்கள் ** என்ன செல் லையாபிள்ளை சாப்பிட வா ! என்ருர்,
* ஆம் முதலாளி " என்றேன்.
அவர் என்னைக் கனிவோடு பார்த்து . " செல்லேயா பிள்ளை நீர் உங்களுடைய சமுகத்தவர் செய்கின்ற வேலை யைச் செய்வதில்லை. உங்களுடைய சமுகத்திலே நீர் ஒரு தனி மனிதன். உமது சமுகத்தவரின் தொழிலின் காரணமாக இங்குள்ளவர்கள் வேற்றுமை பாராட்டு வது நீர் அறிவீர். ஆனல் உம்முடைய தொழிலுக்காக இங்கு மற்றவர்களைப்போல சமனக வைத்து உணவு தரு வது முடியாத காரியம். அதே வேளையில் உம்முடைய தொழிலும், உமது உடையும், இலட்சணமும் உம்மை மற்றவர்களுக்கு முன்னல் புறப்பணிப்பாக நடத்த என் னைத் தடுக்கின்றன. ஆகவே என்றைக்கும் நீர் எனது மாடிக்குச் சென்று மரியாதையாக ஓரிடத்தில் அமர்ந்து உணவு கொள்ளும் " என்ருர், அன்று தொடக் கம் கெளரவமாகவே உணவு தந்தார். இந்த முதல் நிகழ்ச்சி என் மனதில் பசுமரத்து ஆணிபோன்று பதிந்தேயுள்ளது. இக்காரணத்தினல் எம்மிருவர்க்குமிடையே நட்பு இறுக்க மூற்று இன்றுவரை நீடித்து வருகிறது.
இவரது கடையில் சமைக்கப்படும் மாமிச உணவு களுக்காகக் கூட்டம் நெருக்கமாகவே கூடும். நெருக் கத்தினுடே மதுப்புட்டிகளுடன் சிலர் வருவார்கள். மது வைப் பருகிப் போதையேறிய காரணமாக அத்தகைய வர்கள் கலவரஞ் செய்ய நேரிடும். அவ்வேளையில் நானும் எனது சகபாடிகளும் குறுக்கிட்டுக் கலவரஞ் செய்பவர் களை விரட்டுவோம்.

- 49 -
திரு. சிவசம்பு அவர்களின் அன்பினல் மரியாதை யாக உணவுட்கொண்டதும் நீலப்பறவையென்ற பஸ் வண்டிக்குச் செல்வேன். எனது குரல் தனித்து ஒலிக்கும் கூட்டம் சேரும். என்னுடைய பஸ் வண்டியைக் கண்ட தும் எனது சமுகத்தவர்கள் மறித்து ஏறுவார்கள். ஆண் டவனுக்கு முன் அனைவரூம் சமம். எனது வண்டியிலும் யாவரும் சமமாகவே பிரயாணஞ் செய்வர்.
எனது சமுகத்தவரை ஆசனங்களில் இருத்துவது, உயர் சாதிக் காரணுன பஸ் சாரதிக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி குறைப்பட்டுக்கொள்வார். நான்’ பறுவாய் பண்ணுவதில்லை. ஆணுல் அவர் மனதில் வர்மம் வைத் துக்கொண்டார். ஒருதினம் நீலப்பறவையின் உரிமை யாளரான் செல்லத்துரை முதலாளியிடம் "செல்லையா சாதிவித்தியாசம் பாராட்டாமல் எல்லோருக்கும் ஆசனங் கள் கொடுக்கிருன். அது மரியாதைக் குறைவு " என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிருர் . முதலாளியும் சாதித் திமிர்க் குட்டையில் ஊறிய மட்டைதானே. அன்று பிற்பகல் முதலாளியிடம் பஸ்ஸில் சேர்த்த பணத்தைக் கொடுக்கச் சென்றேன். பணத்தைப் பெற்றதும் ** நீ நாளை தொடக்கம் வேலைக்கு வரவேண்டாம் ' என்று சற்றுக் கடுமையாகச் சொன்னர் . எனது நெஞ்சு திக் கென்றது. * ஏன் முதலாளி” என்றேன் அடக்கமாக.
** நீ கண்ட சாதிக்காரனுக்கும் பஸ்ஸில் ஆசனம் கொடுக்கிருயாம் உதுகூடாது. இப்படி நீ ஆசனம் கொடுப்பதனுல் எங்கள் பஸ்வண்டியின் மதிப்புக் கெட் டுப்போகும் ' என்ருர். எனக்குச் சாரதியே இதற்குரிய மூலமூர்த்தி என்பது விளங்கியது. திடீரென என் மன தில் ஒர் எண்ணம் உதித்தது. மெதுவாக முதலாளியிடம் குழைந்து பேசலானேன். என்னுடைய பேச்சில் அவர் ஒரளவுக்கு வசைந்து வந்ததும் “ ஐயா, உங்களுக்கு விஷ யம் தெரியவில்லை. சாரதி ஒவ்வொரு நாளும் உங்களுக் குத் தெரியாமல் எட்டுப்பணம் கேட்கிருன். அது சரி
7

Page 32
- 50 -
யில்லை நேர்மைக்கேடு என்று நான் மறுத்தேன். அது தான் அவனுக்குக் கோபம். இந்த மாதிரிக் கதை கட்டியிருக்கிருன்". என்று அவர் நம்பக்கூடியவாறு பதி லுக்குரைத்தேன்.
* ஒ ஓ! அப்பிடியா சங்கதி அவர் விஷயத்தில் முந்தி யிருக்கிருர், “ சரி, நீ நாளைக்கும் வா. அவரை நிற் பாட்டி விடுவோம். வேருெரு சாரதி கிடைக்கும்வரை பஸ் ஓடாமலே நிற்கட்டும்.” என்ருர். என்னுடைய சாதுரியத்தினல் முதலாளியை மடக்கிவிட்ட வெற்றிப் பெருமிதத்துடன் அங்கிருந்து திரும்பிவிட்டேன்.
ஆனலும் ஒருவனுடைய வயிற்றில் மண்ணை அடித்து விட்டேனே என்ற வருத்தந்தான். என்னுடைய சமுகத் தைக் கேவலமாக மதித்ததுடன் என்னையும் மட்டந்தட் டும் அவருக்குப் பாடம் படிப்பிக்க வேண்டாமா? இத் தகைய கேள்வி நெஞ்சில் அலைமோதிக்கொண்டிருக்க வீட்டுக்குச் சென்று ஒன்றும் புசியாமலே படுத்துவிட் டேன்.
விடிந்தது காலை. எட்டு மணிவரை பஸ் முதலாளியின் கடைக்குச் சென்றேன். அதிகாலையில் வந்த சாரதியை முதலாளி வேலையிலிருந்து நீக்கிய விடயம் தெரிந்தது. என்னைக் கண்ட முதலாளி **நீ உனக்குத் தெரிந்த நல்ல சாரதி யொருவனைக் கூட்டிவா ” என்ருர் .
என்னுடைய எண்ணப்படி ஏற்றத் தாழ்வின்றி இந்த பஸ் வண்டியில் எல்லோரையும் ஏற்றவேண்டு மா ன ல் யாழ்ப்பாணத்தவரல்லாத ஒருவர் சாரதியாக வரவேண் டும். இந்த முடிபுடன் ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான *பொடிசிங்க” என்ற சிங்கள சாரதியைக் கண்டுபேசி முதலாளியிடம் அழைத்துச் சென்றேன்.
முதலாளி அவரை ஏற்றுக்கொண்டார். பொடிசிங்கோ என் விருப்பத்தை அனுசரித்தமையினுல் என்னுடைய

سے 5 حس۔
எண்ணப்படி சாதி சமய பேதமின்றி நீலப்பறவை எல்லாப் பிரயாணிகளையும் ஏற்றியிறக்கியது. அதிகாலையில் பஸ் வண்டியை பஸ் காலைக்குக் கொண்டுசெல்வோம். இதனல் வழமையான பிரயாணிகள் கிடைத்தனர். ஏற்றத் தாழ் வின்றி எல்லோருக்கும் சரிசமமான ஆசனம் வழங்கினேன். எல்லாச் சமுகத்தவரும் தேடிவந்தனர். வண்டியில் சில சமயங்களில் கூடுதலாகப் பிரயாணிகளை ஏற்றுவேன். இதனுல் சிறுசிறு பேச்சுவார்த்தைகள் எழும், அடிபிடி சண்டைகள் உண்டாகும். அவற்றைச் சமயோசித புத்தி யினுல் சமாளிப்பேன். என்னுடைய திறமை மற்றைய பஸ் சொந்தக்காரர்களுக்குப் பொருமையையும் எரிச்சலை யும் தந்தது.

Page 33
- 52 -
மதுவைப் பருகப் பழகினேன் :
கையில் சில்லறை புரண்டதால் நான் நன்ரு கக் குடிக் கப் பழகினேன். வலுச் சண்டைகள் ஏற்படுத்திக்கொண் டேன். இவற்றைக் கேள்வியுற்ற தந்தை “இந்தத் தறு தலையை ஏன் பெற்றேன்' என்று என்மீது மிகவும் கோப மாகவிருந்தார். உழைக்கிறேன் என்ற மமதையில் இவை பற்றி நான் சிந்திப்பதில்லை. நான் குடிப்பது மட்டுமல்லா மல் சிநேகிதர்களுக்கும் கொடுப்பேன். போதை தலைக்கேறி விட்டால் என் சமூகத்தைத் தாக்குபவர்களிடம் வெறுப் புத் தலைதூக்கும். அவர்களைப்பார்த்து முறைப்பேன். என் சமுகத்தவர்களை அவமதிக்கும் தேநீர்க் கடைக் காரர்களோடு வலுச்சண்டை செய்ய முயல்வேன். இவ் வாறு ஊரில் பலரது வெறுப்புக்கும் உள்ளானேன்.
நாங்கள் குடியிருந்த வளவைக் கறுத்தார் விற்று விட்டார். ஆகவே நாம் மேலும் வடக்கு நோக்கியுள்ள வளவில் புதிதாக கொட்டில் கட்ட நேர்ந்தது.
அம்மாவும் நடராசா என்ற தம்பியைப் பெற்றெடுத் தாள். தந்தையார் நோய்வாய்ப்பட்டார். இந்நிலையில் குடும்பப் பொறுப்பு என் தலையில் சுமத்தப்பட்டது. குடும்ப பாரத்தைச் சுமப்பதென்பது இலகுவான காரியமல்ல. மனதில் வேதனை அதிகரிக்கலானது. எனது வயதோ பதினறு. உலக சிந்தனைகளிலிருந்து வேறுபட்டு நிற்க வேண்டிய வயதில் குடும்ப பாரத்தையும் சுமக்க வேண்டி யிருந்தது
எந்தக் கஷ்டம் நேரிட்டாலும், நேர்மையைப் போற் றவும், உண்மையைப் பேசவும் சங்கற்பஞ் செய்துகொண் டேன். எவ்வகையிலும் பட்டகடனை அடைக்கவேண்டும். நாணயம் தவறக்கூடாது, என்ற சில கொள்கைகளை நானகவே ஏற்றுக்கொண்டேன். பிழைகளை உண்மையில் நானே செய்ய நேர்ந்தால், அப்பிழைகளுக்காக மன்னிப் புக் கோரப் பின்நிற்கவில்லை. இதனுல் ஒருசிலர் என்னி

-سس- 53 --
டம் அன்டி காட்டினர். நான்விடுந்தவறுகளை மன்னித்து
முள்ளனர்.
நீலப்பறவைதான் வாழ்க்கைக்குக் கைகொடுத்தது. கல கலவென்று சிரித்து மற்றவர்களைக் கவரக்கூடியவாறு பேசுதல், காலத்தை அநுசரித்து நாகரிகமாக உடை யுடுத்தல் என்பன என் கைவந்த கலைகளாகின. கையில் மணிக்கூடு, விரல்களில் தங்கமோதிரம் என்பன பளிச் சிட்டன. தூய வெள்ளை வேட்டி, வயில் சேட், இவற். றைத் தரித்துவிட்டால் சற்று எடுப்பாக இருக்கிருரன் இவன் என்று பேசிக்கொள்வர்.
என்னுடைய தோற்றத்தையும் அலங்காரத்தையும் பார்த்தால் இவனுக்கா இந்தவேலை. இவனுடைய “ஸ்ரை யிலுக்கும் தோற்றத்துக்கும் வேறெந்த வேலையும் கிடைக்கவில்லையா? என்று அனுதாபப்படுவர்.
என்னுடைய சமுகத்தவர்களை மற்றவர்கள் பல விதத்திலும் தாழ்த்திவந்தனர். இந்தக் கொடுமை நெஞ் சில் ஆழமாகப் பதிந்துவிட்டமையினல் ஆக்கிரோசம் பெருகும். மற்றவர்கள் நம்மைக் கேவலமாக நடத்து வதுபற்றி நம்மவர்களிற் பலரும் சிந்திப்பதில்லை. என் முன்னுல் அவர்களுக்கு ஏற்படும் எந்த அவமானத்தை யும் நான் சகிக்கமாட்டேன். முக்கியமாகத் தேநீர்க் கடைகளிலேதான் நம் சமுகத்தவருக்குப் பெரும் அவ மானம் விளைக்கப்படும். “ஐயா ஒரு தேநீர்” என்ற ஒரு சொல்லைச் சொன்னதும் கடைக்காரன் அங்குள்ள போத் தல் ஒன்றை ஒரு சொட்டுத் தண்ணிர் விட்டுக் குலுக்கு வான். எனக்குக் கோபம் சுரந்துவிடும். சில சமயங் களில் ஆபத்தைப் பொருட்படுத்தாது அப்போத்தலைப் பறித்துத் தேநீர் தந்தவனின் தலையிலேயே அடித்துவிடு வேன். கலவரம் மூளும்.
தேநீர்க்கடைக் கலவரங்களினலும் பஸ்ஸில் மிதிபல கையில் பிரயாணிகளை ஏற்றிச் செல்வதனுலும், அதிக

Page 34
- 54 -
பிரயாணிகளை ஏற்றிச் செல்வதினலும், வ்ழக்குகள்வரும்: நீதிமன்றத்தில் முதலாளி குற்றங்கட்டிவிடுவார்.
இந்த நிலையைத் தொடர்ந்து யான் உருவாக்கி வந் தமையால் திடீரென முதலாளி என்னை வேலையினின்றும் நீக்கிவிட்டார்.
வறுமை சூழ்ந்தது. மதுப்பழக்கத்தினுல் அதைப்பருகா மலிருக்கமுடியவில்லை. கெட்ட நண்பர்களின் தொடர்பு கள் ஆரம்பித்தது. காடைத்தனம், சண்டித்தனம், மற் றவர்களை வெருட்டுதல் போன்ற துர்ப்பழக்கங்களை அந் தக் கெட்டவர்களின் தொடர்பால் ஏற்றுக்கொண்டேன். இவற்றைக் கேள்வியுற்ற தந்தையின் மனம் தளர, அவ ரது உடலும் பாதிக்கப்பட்டது.
நான் வீட்டுக்குச் செல்வதில்லை, வீதியையே பஞ்சணை யாக்கினேன். சாரதி விரும்பினல் கொண்டக்டர் இல் லாத பஸ்ஸில் தற்காலிகமாக வேலை கிடைக்கும். பஸ் முதலாளிமார்களிற் பலருக்கு நேர்மை என்ன என்றே தெரியாது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் திருவிழாக் காலங்களிலேதான் தற்காலிகக் கொண்டக்டர் வேலை கிடைக்கும். சந்தர்ப்பத்தை அனுசரித்துப் பிரயாணி களை அதிகமாக ஏற்றிக்கொண்டு வருவேன். இடையில் மறித்து வழக்கெழுதுவார்கள். வழக்கு வந்தால் குற் றப்பணத்தை முதலாளிகளே கட்டவேண்டும். ஆனல் தற்காலிக ஊழியனுன என் சார்பில் முதலாளிகள் பணம் கட்டுவார்களா?
இதனல் நான் சமன்ஸ் கிடைத்தாலும் கோட்டுக் குப் போவதில்லை. பிடிவாரண்ட் வரும். இதற்குத் தப் பித் தலைமறைவாகி விடுவேன். ஏனைய பஸ் கொண்டக் டர்களை வழியில் மறித்து, நயமாகவும் அன்பாகவும் பணம் கேட்டுப் பெற்று அன்ருடப் பிரச்சனையைத் தீர்ப்பேன்.
பிடிவாரண்டுடன் தேடுவார்கள். இடத்தை மாற்றி மாற்றி யான் மறைந்து கொள்வேன். ஒருமுறை கீரி மலையில் மறைவாகச்சென்று வசித்தேன். அங்கு தேடு

- 55 -
தல் வேலை ஆரம்பமாகக் கொக்குவிலில் உள்ள எனது பாட்டியின் வீட்டில் தஞ்சமடைந்தேன். ஒருநாள் இரவு வளவுக்கு வெளியே * வள், வள் ” என்று நாய் குரைக் கும் சப்தம் கேட்டது. பாட்டி உட்பட ஏனையவர்கள் பயந்து நடுங்கினர்கள். என்னைத் தேடுகிருர்கள் என்ற விடயம் தெரிந்துவிட்டது. * ஐயா வாறன் வெளியில் நில்லுங்கள் " என்றேன். அவர்கள் வெளியே நின்ருர் கள். நான் கொல்லைப்பக்கமாக வெளி யேறினேன். வெளியே நின்றவர்கள் “செல்லையா" என்று அழைப்பது ஓடிச்செல்லும் என் காதுகளில் ஒலித்தது.
மீண்டும் கீரிமலையினைத் தஞ்சமடைந்தேன் ஒரு கடை யின் முகப்பில் இருக்கும்போது இருவர் என்னை மிகவும் நெருங்கிவந்தார்கள்; சில நிமிடங்கள் மனம் நடுங்கியது. அப்புறம் சிறுகச் சிறுகத் திடப்பட்டதும் அப்போதுதான் பார்ப்பதுபோல் பாவனை செய்து “ஐயா இருங்கோ’ என்று சொல்லி, வந்த இருவருக்கும் இரண்டு சிகரட்டுகளைக் கடையில் வாங்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்தேன். அவர்கள் குனிந்து சிகரட்டைப் பற்றவைக்கும்போது ஒடினேன். கட்டையான என்னல் ஒடமுடிந்தது. அவர் களால் துரத்திப்பிடிக்க முடியவில்லை, இவ்வாறு ஓடிய நான் வடமாகாணத்தின் பலபகுதிகளிலும் அலைந்தேன். முடிவில் வற்ருப்பளையை அடைந்தேன். நல்ல உடையில்லை உணவில்லை, அணுதைபோல் வீதியில் நின்றேன்.
ஒருநாள் என்னுடைய நண்பருள் ஒருவர் சந்தித் தார். என்னுடைய நிலை அவருடைய மனதில் வேதனை யைக் கிளப்பியிருக்க வேண்டும். *செல்லையா உனக்கா இந்தக் கதி? ஏன் இப்படி ஊரூராய் அலைகிருய்? " என் ருர், விபரங்களை மிகவும் துன்பத்துடன் கூறினேன்.' அவர் ** உனக்குக் கோட்டில் கட்டுவதற்குப் பனந் தானே தேவை? எவ்வளவு வேண்டும்? “ என்ருர், ** எனக்குப் பணம் வேண்டாம் நீதிமன்றத்தில் வெளிப் பட வழக்கறிஞரை ஏற்பாடு செய்தால் போதும்" என்

Page 35
- 56 -
றேன். அவர் “சரி வா’ என்று கூட்டிக்கொண்டு யாழ்ப் பாணம் வந்தார்.
இக்காலத்தில் எனக்குத் தேநீரைப் போத்தலில் வழங்கிய கடைக்காரருடன் சண்டையிட்ட வழக்குக ளும் இருந்தன.
மறுதினம் வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றத் திற்குச் சென்றேன். பொலிசார் ஏழு குற்றப்பத்திரங் களைத் தாக்கல் செய்தனர். ஏழு முறை கூப்பிட்டனர். ஏழுமுறையும் குற்றவாளியென ஒப்புக்கொண்டேன். நீதி பதி மொத்தமாக நூற்று எழுபத்தைந்து ரூபா குற்றம் விதித்தார். என்னிடம் பணமில்லை. ஏழுமாதக் கடுங் காவற் தண்டனை விதித்தார். ܖ
நான் சிறைக்குச் சென்ற கதை அம்மாவுக்குத் தெரிந்தது. அம்மா மிகுந்த துக்கத்துக்காளானள். தந்தை யார் இந்த நிலைக்கு நான் ஆளாவேன் என்று முன்ன மேயே ஊகித்திருப்பார். ஆனலும் அவராலும் சோகத் தைத் தாங்க முடியவில்லை. அவர் உடல் மேலும் பாதிப் புற்றது.
நான் சிறைக்கூடத்திலிருந்தாலும் நேர் மை யைத் தவறவிடவில்லை. சிறைச்சேவகர், அதிகாரிகள், கைதி கள் யாவரதும் அன்புக்கும் பாத்திரமாகவும், நேர்மை யாகவும் நடந்துகொண்டேன். எனது நன்னடத்தையின் பேருகவோ என்னவோ குறிப்பிட்ட கெடுவுக்கு முன் னரே விடுதலை கிடைத்தது.
சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் யாழ்ப்பாண பஸ் நிலையத்தையே சென்றடைந்தேன். கொண்டக்டர் வேலை செய்யும்போது சாரத்தியம் செய்வதிலும் பயிற்சி பெற்றுவிட்டேன். சாரதி இல்லாத பஸ்ஸை ந |ா ன் எடுத்து ஒடுவேன். அக்காலத்தில் பஸ் கொண்டக்டர் இன்றிப் பஸ்ஸை எடுப்பது குற்றமாகும். அக்குற்றத்தி

سے 57 مس۔
லிருந்து தப்புவதற்காக எவனுவது சின்னப்பையனைச் சாட்டுக்குக் கொண்டக்டர் ஸ்தானத்தில் வைத்துக்
கொள்வேன். பிரயாணிகளை ஏற்றுவது பணம் வசூலிப் பது போன்ற கொண்டக்டரது பணியையும் நானே செய்து கொள்வேன்.
பலமுறை முயன்றும் வயது காணுத காரணத்தால் பஸ் சாரதி லைசன்ஸ் பெறமுடியவில்லை. ஆகவே லைசன்ஸ் இல்லாது பஸ்ஸைச் செலுத்தியதற்காகவும் சாதிப்பாகு பாட்டினுல் ஏற்பட்ட கரைச்சல் காரணமாகவும் நீதிமன் றத்தினுல் தண்டிக்கப்பட்டு மேலும் இருமுறை சிறைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
சோதனைகளுக்கிடையிலும் பஸ் தொழிலையே விடா மற் செய்துகொண்டிருந்தேன் ஒருநாள் பஸ்ஸில் பணி யாற்றிக்கொண்டிருக்கையில் எனக்குப் பரிச்சியமான ஒரு வர் வந்து ** உன் தந்தையாரை கடுமையான சுகவீனத்தி ஞல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறர்கள்” என்று தெரிவித்தார். ஆஸ்பத்திரிக்கு ஒடிச்சென்றேன்.

Page 36
-- 58 --س
தந்தையின் பிரிவும், மற்றவர் சன்மானமும் :
சதை வடிந்து எலும்பாகித் தந்தையார் கட்டிலில் கிடந்தார். பலவீனத்துடன் அனுங்கும் ஒலி நெஞ்சைக் கசக்கியது. அருகிற் சென்றேன். என் கண்கள் நீரில் துடித்தன. மட்டற்ற வேதனை நெஞ்சிற் கப்பிக் கவிந்து கொண்டது. மெதுவாக அவரது உடலை வருடினேன். கண்களை விழித்துப் பார்த்தார். சிறிது நேரம் இருவர்க் கிடையிலும் மெளனம் நிலவியது. அம்மெளனத்தை அவரே வெட்டி, வேட்டித் தலைப்பில் இருந்த முடிச் சைக் காட்டி * இதிலுள்ள ஆறு சதத்தைக் அவிழ்த் துக் கொண்டுபோய் உடனே விசிறி வாங்கிவந்து எனக் குக் களைப்பாக இருக்கிறது வீசு " என்ருர்,
* என்னிடம் பணம் இருக்கிறது; நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் அப்பா ?’ என்றேன். என்னிடத் தில் பணம் ஏது என்று நினைத்தாரோ? அன்றேல்; என் னுடைய பணத்தில் தான் எந்தவித உதவியும் பெறக் கூடாது என்று கருதினரோ? "வேண்டாம், வேண்டாம் என்னுடைய காசிலேயே வாங்கிவா! மறுக்காதே இது தான் நீ எனக்குச் செய்யும் கடைசிக்கால உதவி " என் முர் வெகு உறுதியாக. இதற்குமேல் என்னுல் என்ன பதில் சொல்லமுடியும். வெளியே சென்று விசிறியை வாங்கிவந்து விசிறினேன். -
உடலில் தெளிவும் தெம்பும் சிறிதுண்டானது. மெது வாகத் 'தம்பி’யென்று அழைத்தார். நெருங்கி நின் றேன். ' தம்பி செல்லையா உன்னுடைய முதற் தம்பி சுப்பிரமணியத்தை என்னுடைய மருமகனும், உன்னு டைய மச்சானுமாகிய வேலுப்பிள்ளையிடம் ஒப்படைத்து விடு. மற்றத்தம்பி நடராசாவையும், அம்மாவையும் கவனமாகப் பார்த்துக்கொள். இனிமேலாவுதல் நல்ல பிள்ளையாக நடந்துகொள் ” இதற்கு மேல் அவர் பேச வில்லை. திக்கித் திணறினர். அவர் துடிப்பு அடங்கிவிட் L-gil.

- 59 -
ஐயோ! ஐயோ! என்று அலறு வ ைத த் தவிர வேறென்ன செய்ய முடியும்? இது எனது தாயாருக்குத் தெரியாது. அதைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. சிறிது நேரத்தால் பிணத்தைப் படுக்கையிலிருந்து அப்புறப் படுத்திச் சவஅறைக்குக் கொண்டுபோய்விட்டார்கள். காலையில் சேர்க்கப்பட்ட நோயாளி குறிப்பிட்டமணி நேரத்துக்கு முன்னர் மரணமானுல் உடலைக் கீறிக்கிழித் துப் பரீட்சித்த பின்னரே தருவார்கள். இப்படியான நிலை யேற்படாது சீராக உடலைப் பெறவேண்டுமானல் அதிகாரிகளின் அனுசரணை வேண்டும். எனது பஸ் முத லாளியைக் கொண்டு அதற்கான அதிகாரிகளின் ஒத் துழைப்பைப் பெற்றேன். நீண்ட நாட்களாக அவர் நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதற்குரிய அத்தாட் சிப் பத்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதனுல் உடலை வடுவின்றிப் பெற்றுக்கொள்ள அனுமதியைப் பெற்றேன். இந்த வேலை முடிந்ததும் மரணமானவரைக் கொண்டு வருவதற்குப் பெட்டி வேண்டும். பழைய கார் ஒன்றினை நண்பன் ஒருவனிடம் இரவலாகப் பெற்றுகொண்டு பெரிய கடைக்குச் சென்றேன். கையிற் பணமில்லை. சவப் பெட்டி விற்பவன் எனது நண்பன். எனவே அவனிடம் விடயத்தை விளக்கியதும் பெட்டியைத் தந்தான். அத னைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டு பிரேதத்தை வீட்டுக்குக் கொண்டுவருவதற்காக ஆஸ் ப்த் திரிக் குச் சென்றபோது தயார் கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு வந்துவிட்டார். அவரை ஒருவாறு வீட்டிற்கு அனுப் பிய பின்னரே மரணமானவரை வீட்டுக்குக் கொண்டு வந்தேன். கையில் பணமில்லை. அன்ருட வாழ்க்கையே பெரிதென வாழ்ந்தவனுகையால் பெரிய துன் பத் துக்காளானேன். இறுதிக்காலத்துக்குதவு மென்ருவுதல் தந்தையார் எவ்வித பணத்தையும் சேமிக்கவில்லை. அவர் நிர்க்கதியான நிலையில் எம்மை நிறுத்திவிட்டார். எனது உள்ளம் துடித்துத் துவண்டது. இந்நிலையைப் புரிந்து கொண்ட என்னுடைய நண்பர்கள் தம்மால் இயன்ற பணத்தைத் தந்துதவினர். சயிக்கிலில் சென்று உறவி னர்களுக்கு அறிவித்தேன். அவர்கள் வந்து கூடினர். அந்தியில் தந்தையின் மரணச்சடங்கு செவ்வனே நிறை வெய்தியது.

Page 37
- 60 - தாயின் பிரிவு:
சில நாட்கள் காலக்கடலுள் மறைந்தன. தாயாரின் உளம் நொந்தபடியே இருந்தது. அவளுக்கு ஆறுதல் சொன்னேன், எனது நண்பர்கள் உதவிய பணத்தில் செலவு போக மிகுதியில் எனது தாயாருக்கு நகை செய்து கொடுத்தேன். மரணச்சடங்குடன் சம்பந்தமு டைய எட்டாவதுநாள் செலவு, அந்தியேஷ்டிக் கிரிகை களைச் செய்துமுடிக்க எனது சீனியப்புவும் ஐம்பது ரூபாய் பணந்தந்தார். ஆனல் உறவினர் இவ்வாறு ஊரா ரிடம் சேர்த்து மரணச்சடங்கை யான் செய்ததை மிக வும் இளப்பமாகக் கதைத்தனர். இவைபற்றி யான் அக் கறை செய்யவில்லை. எவ்விதமும் விஷயம் ஈடேறவேண்டு
மென்பதே என்னுடைய கொள்கை.
தந்தை இறக்குந் தருணத்தில் தாயார் மூன்றுமாதக் கர்ப்பவதியாக விருந்தார். தந்தை மரணமாகி ஏழாவது மாதத்தில் குழந்தையை ஈன்றெடுக்கவேண்டி யிருந் தமையால் பாட்டி யின் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். தந்தையார் வேண்டுகோளின்படி தம்பி சுப்பிரமணியத்தை மைத்துனர் வேலுப்பிள்ளையிடம் ஒப் படைத்தேன். பாட்டியின் வீட்டுக்கு நாம் சென்ற எட் டாவது தினம் தயார் ஒரு பெண் குழந்தையைப் பிரச வித்தார். தங்கை பிறந்ததில் எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சியே உண்டானது. எனவே கையிலுள்ள பணத் தையெல்லாம் செலவிட்டுத் தங்கைக்கும் தம்பி நட ராசாவுக்கும் நகைசெய்து கொடுத்தேன்.
ஆனல் எனது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குழந்திை யைப் பிரசவித்த பின்னர் தாயார் கடுமையான நோய் வாய்ப்பட்டார். அவருடைய நோயைக் குணப்படுத்தப் பல வைத்தியர்களை நாடினேன்.
அன்னையின் நோய் சிறுகச் சிறுக அதிகரித்துக் கொண்டது. என்னுல் என்ன செய்ய முடியும்? என் சக்

س 6 حسب
திக்குட்பட்ட வகையில் பல வைத்தியர்களிடமும், அவ ளைக் கொண்டுசென்று காட்டினேன். பூவிற் பிறக்கும் போதே ஆண்டவன் தலையில் எழுதிவைத்த விதியை எம்மால் மாற்ற முடியுமா?
தந்தையார் மரணமாகி ஒருவருடமாகியது. இரண் டாவது வருட ஆரம்பத்தில் தாயாரும் தந்தையைத் தொடர்ந்துவிட்டார். எனது தோளிலே தம்பி, தங்கை இருவரும் சுமத்தப்பட்டனர். அன்னை தந்தையில்லாத அனதைகளாகிவிட்ட இருவரையும், அன்னைக்கு அன்னை யாயும் தந்தைக்குத் தந்தையாகவுமிருந்து பேணிப் பாது காக்க வேண்டியவனனேன். இத்துயர் பொறுக்கமுடி யவில்லை, புலம்பித் துடித்தேன். என்ன செய்தாலும் பல னுண்டா? "அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும்" என்பார்கள்: நான் இதையெண்ணி மனத்துயரைப் பொறுத்துக்கொண்டு சகோதரனையும் சகோதரியையும் என் பாட்டியிடம் ஒப்படைத்தேன். ஆனல் அவர்களுக் குரிய செலவினங்களுக்காக நான் முன்னிலும் அதிகமாக உழைக்கவேண்டியவனனேன்.
எனது வயதுக்குறைவு காரணமாக மோட்டார் சாரதிக்குரிய லைசன்ஸ் வழங்க யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி மறுத்து விட்டார். புதியவர் ஒருவர் மாறுத லாகி இங்கே அதிகாரியாக வந்ததும், மீண்டும் விண்ணப் பித்தேன். எனது திறமையையும் சாதுரிய த் தை யும் கண்ட புதிய அதிகாரி லைசன்ஸ் வழங்கினர். ஆனல் அக் காலத்தில் முதலில் சாதாரண மோட்டார் கார்களுக்கே லைசன்ஸ் கிடைக்கும். ஒராண்டிற்குப் பின்னரே பஸ் வண்டி ஒடுவதற்கு லைசன்ஸ் தருவார்கள். எனவே மீண் டும் கொண்டக்டராகவே தொழிலாற்றத் தொடங்கி னேன்.
+〈

Page 38
- 62. - கார்ச் சாரதியானேன்:
எனது இளமையான வயதின் காரணமாக நான் ஒர ளவுக்கு மற்றவர்கள் முன் கவர்ச்சியுடையவனுகத் தென் பட்டேன். அத்துடன் என்றைக்குமே ஆடை அலங்கா ரங்களில் பிரீதியுள்ளவன். கையில் கழுத்தில் எல்லாம் ஆபரணங்கள் அணிந்துகொள்வேன். எனது பேச்சும் சிரிப்பும் பெரிய இடத்துப் பையன்போலிருக்கும். இவ் வாறு ஓராண்டு கழிந்துவிட்டது. மேலும் விண்ணப்பித் தமையாலும், முயற்சித்தமையாலும் பஸ் சாரத்தியம் செய்யும் லைசன்ஸ் கிடைத்தது. அதனல் பஸ் சாரதி வேலை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. எனக்குத் தினம் ஒரு ரூபாய் ஐம்பது சதம் சம்பளம் கிடைத்தது. என்னு டைய சுறுசுறுப்பையும் தொழிற் திறமையையும் கண்ட பஸ் முதலாளி என்னையே வண்டியைப் பொறுப்பாகக் கவனிக்கப் பணித்தார். இது எனக்குப் பரமதிருப்தியாக இருந்தது.
ஒரு தினம் கொண்டக்டர் வராமையால் ஒரு சார தியை எனது பஸ் வண்டியை ஒட்டப் பணித்து நானே கொண்டக்டர் ஆனேன். பிரயாணிகளை ஏற்றியிருந்த பஸ்வண்டிக்குப் பெற் ருே ல் நிரப்பவேண்டியிருந்தது. அந்த வண்டியை ஒட்டிவந்த சாரதியைப் பொலிசார் ஒருவர் அழைத்தமையால் போய்விட்டார்.
நான் பஸ் வண்டியைப் பின்னுேக்கிச் செலுத்துவதற் காக எடுத்தேன். பஸ் வண்டியின் பின்புறத்தில் ஒரு சிறுவன் கோடுகீறிக் கெந்தி விளையாடிக்கொண்டிருந்தார் ணும் எனக்குத் தெரியாது. அப்பையன்மீது யான் பின்புற மாக எடுத்த பஸ் வண்டி முட்டியதால், ஸ்தலத்திலேயே பையன் இறந்தான் என்றனர். இந்த அமளியிலே பொலி சார் அங்கு விரைந்துவந்துவிட்டனர் என்னுடைய செயலே இதற்குக் காரணமென்று பலரும் வசைமாரி பொழிந்தனர்.

ــ 63 سبيس
நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. முதலாளி வழக்குக்காக முன்னின்று செயலாற்றினர். நீதிமன்றத்தில் என்மீது சுமத்தப்பட்டவை ருசுவாக்கப் படாதபடியால் விடுதலை கிடைத்தது.

Page 39
- 64 - திருகோணமலை வாழ்க்கை :
இதனுல் மனச்சோர்வடைந்துவிட்டேன். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வாழுவதில் அர்த்தமில்லை யென்ற விரக்தியோடு சிலநாட்களைக் கழித்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர் ஒருவர் 'திருகோணமலை சீனன் வாடியென்ற இடத்தில் றசூல்ஸ் கம்பனியார் கல்மண் ஏற்றுகின்ற லொறிகளை வைத்துத் தொழில் நடத்துவதனுல் செல் லையா நீ அங்கு போய்ச் சாரதியாகச் சேர்ந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் ' என்ருர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இருப்பதற்கும் விருப்பமில்லை. மனதுக்குச் சற்று அமைதியாவுதல் இடமாற்றத்தினுல் கிடைக்கு மென்று நம்பினேன். h
பாட்டியிடம் சென்று தம்பி தங்கச்சி இருவரையும் பார்த்துக்கொள்ளும்படி பணித்துவிட்டு பஸ்ஸில் ஏறித் திருகோணமலைக்கு வந்தேன்.
நினைத்ததுபோல் உத்தியோகம் கிடைத்துவிடுமா ? றசூல்ஸ் கம்பனியாரிடம் நான் சென்ற சமயம் சாரதி உத்தியோகம் காலியாக இருக்கவில்லை. என்னசெய்வது காலத்தைக் கடத்த வேண்டுமே. துன்பம் விடியும்வரை எதையாவுதல் செய்து வயிற்றைக் கழுவவேண்டுமல்லவா? "டொக்கியாட்"டில் கூலிக்கு ஆட்களை எடுத்தார்கள். லொறியில் ஏற்றுவதற்குக் கல்லையும் மண்ணையும் சுமந்து வந்து குவிக்கின்ற வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.
ஒரு தினம் கூடையில் கல்லைச் சுமந்து கொண்டு குறிப்பிட்ட இடத்திற் கொட்டுவதற்கு மெதுவா த் நடந்துகொண்டிருந்தேன். வேலைத்தலத்தின் ஒவர்சியரை எனக்குத்தெரியாது. கண்காணியாரின் பொறுப்பிலேயே நாம் வேலைசெய்ய வேண்டியிருந்ததால் ஓவர்சியருடன் தொடர்பு இருக்கவில்லை. அன்று மேற்பார்வை செய்வ தற்காக வந்த சின்னத்தம்பி ஒவசியர் என்னைக் கண்ட

- 65 -
தும் " என்ன செல்லையாவா?’ என்ருர், நிமிர்ந்து பார்த் தேன். அவர் என்னுடன் நன்கு பழக்கமானவர். எனது சக்கர வாழ்க்கையைப்பற்றியெல்லாம் அவருக்குச் சவிஸ் தாரமாகச் சொன்னேன். என்னைப்பற்றி நன்ருக அறிந் திருந்த சின்னத்தம்பி ஒவர்சியருக்கு அந்த நிலையில் என்னைக் காணச் சகிக்கவில்லை. எனவே என்னைப்பார்த்து ° செல் லையா உனக்குக் கருவாடு சுடத்தெரியுமா?’ என்ருர், “ஆம்” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே 'நீ நினைக்கிறபடி கருவாடு சுடுவதென்றல், உண்மையான கருவாட்டைச் சுடுவதல்ல. இங்கு வேலைக்குப் பதிவுசெய்துகொண்ட பின்னர் எங்காவது பதுங்கி இருப்பதைத்தான் கருவாடு சுடுவது என்பார்கள். உனக்கு அது தெரியவில்லை. இப்படிக் கஷ்டப்படவேண்டாம். நீ பஞ்சத்து ஆண்டி பரம்பரை ஆண்டியல்ல. இந்தக் கடின வேலையை உன் ஞற் செய்ய முடியாது. ஆகையால் இனிமேல் எல்லோ ரும் வேலைக்கு வரும் நேரத்தில் வந்து பேரைப் பதிவு செய்துகொள். சாப்பாட்டுப் பார்சலை மரத்தில் கட்டித் தூக்கிவிட்டு எங்காவது பதுங்கிவிடு. வேலைசெய்ய வேண்டாம் யாராவது அதிகாரிவந்தால் விசிலடிப்பேன். அப்போது ஒழு ங் கா க வேலை செய்வதாக நடித்துக் கொள்” என்ருர் . அவரது கட்டளைப்படி கருவாடு சு
கின்ற வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.
ஒரு நாள் விசில் சப்தம் கேட்டது. வேலையாட்களு டன் சேர்ந்து வேலைசெய்பவன் போலப் பாவனை செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த வெள்ளைக் கார அதிகாரி ** இங்கு யாராவது வொறி ஓடத்தெரிந் தவர்கள் உண்டா ?" என்று விசாரித்தார். சின்னத்தம்பி ஒவர்சியர் என்னைப் பார்த்தார். நான் சாரத்துள் போட் டிருந்த காற்சட்டையிலிருந்த “லைசென்'சைக் கொடுத் தேன். அன்றைக்கே எதிர்பார்த்துவந்த "றகுல்ஸ்' கம் பணியில் சாரதி உத்தியோகம் கிடைத்தது. மாதச் சம் பளம் 200 ரூபா. அக்காலத்தில் இது மிகவும் நல்ல
9

Page 40
- 66 -
தொகையாகும். சமமற்ற" கரடுமுரடான வீதி களில் லொறியைச் செலுத்த வேண்டும். மிகவும் கஷ்டமான வேலையது, உடலையும் வெகுவாகப் பாதித்தது. பெறு கின்ற சம்பளம் வாழ்க்கைக்கு உதவினலும் திருப்தி கிடைக்கவில்லை. உடலும் உள்ளமும் களைக்க எத்தனை நாட்களுக்குச் சிரமமான பணியைச் செய்யமுடியும். இந்த வேலை போதும் போதும் என்ருகிவிட்டது எப்படியா வது இந்த வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு வேறெங் காவது செல்லவேண்டுமென்று கருதினேன்.
அப்போது சீனன் வாடியில் இராசையா கம்பனியார் லொறிகள் வைத்துப் பொருள்களையும், கல் மண்ணையும் ஏற்றி இறக்கினர். ஒரு நண்பனுடைய சிபார்சினல் இரா சையா கம்பனியின் லொறிச்சாரதியானேன். சீனன் வாடி வீதிகள் சமதரையானவை. இவ்வீதியில் லொறி செலுத்துவது இலகுவாகவே இருந்தது ஆறுமாதகால மாக இவ்வேலையைச் செய்துகொண்டிருந்தேன்.
திடீரென எனது தங்கை காலமாகிவிட்டாளென்ற தந்தி கிடைத்தது. தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து விட்டேன். எனது அன்னையை நினைவூட்டிக்கொண்டிருந்த தங்கை பிரிந்துவிட்டாள். என்ன செய்வது? ஊரவரு டன் ஏற்பட்ட மனக்குழப்பத்துடன் இருந்தபடியால் தங்கையின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்குச் செல்லவில்லை. துன்பம் நெருடியபடியால் வேலைக்குச் செல்லாமலே வீட்டில் சில தினங்கள் இருந்துவிட்டேன். இந்த நிலையில் இராசையா கொம்பனி வேலையும் போய் விட்டது. கையிலிருந்த பணத்தைச் செலவிட்டுச் சில காலம் கடத்தினேன். எவ்வளவு நாட்களுக்குத் தொழி லின்றி அந்நிய ஊரில் வசிக்க முடியும்? மனத்தின் சஞ்ச் லம் தீர, ஒருமுறை ஊருக்குச் சென்று திரும்பலா மென்று பஸ் ஏறிவிட்டேன்.
-x

سے 67 سے
ஊரும் உறவுப்பெண்ணும்:
ஊருக்குவந்த' என்னைப்பாட்டி அன்பாக உபசரித் தாள். தம்பி நடராசா அவளது பராமரிப்லில் வாழ்ந்து வந்தான். மைத்துனர் வேலுப்பிள்ளையுடன் வளர்ந்துவரும் தம்பி சுப்பிரமணியத்தைப்பற்றி விசாரித்த போது அவன் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பதாக அறிந்தேன். ஊரவர்கள் வந்து என்னுடைய சேமநலங் களை விசாரித்துச் சென்றபின் எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியுள்ள கிணற்றடிக்குச் சென்றபோது அங் கோர் இளம்பெண் தண்ணீர் அள்ளிக்கொண்டு நின்ருள், நான் மிகுந்த வெட்கத்துடன் அங்கு சென்றேன். அவள் திரும்பியபோதுதான் என்னல் அவதானிக்க முடித்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்,
அந்தப்பெண் வேறுயாருமல்ல, எனது மாமாவின் புத்திரி சரஸ்வதி. சிறிய பெட்டையாகத் திரிந்த அவள் பெரிய கன்னியாகக் காளைகளின் நெஞ்சினைக் கரைக்கும் கட்டழகுடன் திகழ்ந்தாள். சிறிய வயதில், என்னிடம் பலமுறை நுள்ளும் அடியும் வாங்கியவருள் அவளும் ஒருத்தி. 14A
திரும்பி ஒருமுறை பார்த்த அவளது முகத்தில் நாணம் கவிந்து கொண்டது. குடத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு அவள் அகன்றதும் நான் குளித்துவிட்டு வீட்டுக்குப் போனேன். பக்கத்து வீட்டு வேலியில் இரண்டு வண்டு விழிகள் முளைத் திருந் தன. அந்த விழிக்குரியவள், என்மனதைத் தொட்ட மாமாவின் புத்திரி. மனதில் என்னையறியாத குதூகலம், அடிக்கடி அந்தத் திசையையே பார்த்துக்கொள்வேன்"
கடந்த இரண்டு வருடகாலம் ஊரில் இல்லாத என் னைப் பார்ப்பதற்குப் பலர் வந்தனர். அவர்களுக்கெல் லாம் ஊர்ப்புதினங்களை யெல்லாம் அளந்துகொண்டிருந் தேன். “ குளித்துவிட்டு வந்திருக்கிருய் இன்னும் சாட்

Page 41
- 68 -
பிடவில்லையே வா’ என்று பாட்டி அழைத்தாள். வந்த வர் கள் விடைபெற்றுச் சென்ற பின்னர் சாப்பிடச் சென் றேன். நண்பர்கள் கண்டு சுகதுக்கம் விசாரித்தனர். இனிமேல் என்ன வேலைசெய்ய உத்தேசம் என்றெல்லாம் கேள்விகள் கேட்டனர். * ஏதோ பார்ப்பம்’ என்று
விடை கூறிவிட்டுச் சாயந்தரம் வீட்டுக்கு வந்திேன்,
கையில் மூட்டிய சிகரட்டுடன் சாய்மனைக் கட்டிலில் படுத்துக் கிடந்தேன். எனது எண்ணங்கள் சிறகு கட்டிப் பறந்தன. கையில் எரிந்துகொண்டிருந்த சிக ரட் டு க் கையைச் சுட்டது. ‘உஷ்” என்று உணர்ச்சியை மீட்டுக் கொண்டேன்.
சரஸ்வதியைப்பற்றியே நினைவுத் திரையில் சலனப் படம் ஓடியது. இரவு நித்திரையைத் தட்டிக் கழித்தபடி படுக்கையில் புரண்டேன். விடிந்ததும் ஆடம்பரமாக உடை உடுத்து வெளியே கிளம்பினேன். எதிர் வீட்டி லிருந்து இரண்டு தாமரை விழிகள் என்னையே நோக்கின. முத்துக்கள் கலகலப்பது போன்ற சிரிப்பொலி கேட்டது. இரவு முழுதும் நினைவில் மானசிகமாக உறவாடிய கன் னியே தோற்றினுள்.
அவளை அடையவேண்டுமானல் * ரெளடி" என்ற பட்டம் போய் நான் மனிதனுக வேண்டும். இதற்கு விடாமுயற்சி, சலியாத உழைப்பு என்பன அவசியம் வேண்டும்.
கையிலிருந்த காசைக் கொடுத்துப் பழைய கார் ஒன்றை வாங்கிக்கொண்டு பாட்டியின் வீட் டுக் கு இராஜாமாதிரி வந்தேன். கார்ச்சத்தத்தினல் பல கண் கள் வேலியில் முளைத்தன. நான் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குச் செல்லுகையில் அடுத்த வீட்டிலிருக்கும் மாமி அது யாருடைய கார் என்று விசாரித்தார். * செல் லையா அத்தானுடையது” என்று சரஸ்வதி கூறும் ஒலி என் செவிகளில் தேனை வார்த்தது.

- 69 -
காரைச்சுற்றி ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்களில் கார்கள் அதிகம் ஊடாடாத காலமாகையால் கிராமவாசிகள் அதனை ஈ போல மொய்த்ததொன்றும் அதிசயமான நிகழ்ச்சியல்ல. அதுவும் பின் தள்ளப்பட்ட சமுகத்தினைச் சேர்ந்த எனது உறவினர்களுக்கு அது வேடிக்கையாகவே இருந் திது.
என்னுடைய புதுமையான செயல்கள் சரஸ்வதியின் மனதை வெகுவாக ஈர்த்துவிட்டன. அவளு  ைடய பேச்சுக்களிலும் செயல்களிலும் தீவிரமான பற்றுத் தொனித்தது. நான் வீட்டிலில்லாத சமயத்தில் என்னைப் பற்றியெல்லாம் மற்றவர்களுக்கு வானளாவப் புகழு வாள் என்பதை நான் திடமாக அறிந்து கொண்டேன்.
பாட்டியின் வீட்டில் காரை நிறுத்துவதற்குரிய இட மிருக்கவில்லை. என்னுடைய சிறியதாயார் இரத்தினத் தின் வளவில் சிறு கொட்டிலைக் கட்டி காரை விட்டு வைப்பேன். -
ஒருநாள் அதிகாலை கிணற்றுக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் சரஸ்வதி நின்ருள். அவ ளைக் கண்டதும் என்னுள் கிளர்ந்து கொண்டிருந்த உள் ளுணர்வுகள் விழித்துக்கொண்டன. அவள் தளிர்க் கரத் தைப் பற்றிப்பிடித்துக்கொண்டேன். 'விடுங்கள் அத் தான் யாராவது பார்த்துவிடப்போகிருர்கள்' இவ்வாறு அவள் கூறித் தலைகுனிந்துகொண்டாள். அவளது பட் டுக் கன்னங்கள் சிவந்தன. நாணிக்கோணிக்கொண்டு ஓடி மறைந்துவிட்டாள்.
காரை எடுத்துக்கொண்டு உடனேயே வெளிக்கிளம் பினேன். பகல் முழுதும் வெளியில் கழித்துவிட்டு இரவு தான் வீடு திரும்பினேன். அதிகாலையில் பெற்றேர் எழுந்திருக்கு முன்னர் சரஸ்வதி காப்பி தயாரித்து எனக்

Page 42
- 70 -
குக் கொண்டுவந்து தந்தாள். அதன் பிறகு தனது பெற் ருேருக்கும் வழங்கினள்.
மாமனுருக்கும் மாமிக்கும் அதிகாலையில் அவள் எழுந்து காப்பி தயார் செய்து கொடுத்தமை புதுமை யாகவிருந்தது. “பிள்ளை தினமும் இப்படி எழும்பிப் பழ கிக்கொள்ள வேண்டும்’ என்று அவளுக்குக் கூறினூர்கள். இதைக்கேட்டு உள்ளூரச் சிரித்துக்கொண்டேன்.
சிறியதாயார் வீட்டை அடுத்துள்ள கார்க்கொட்டி லில் படுத்திருந்தேன். விடிவதற்குச் சிலமணிநேரங்களி ருந்தன. எனது மேனியில் தளிர்க்கரம் ஒன்றுபட்டது. திடுமென விழித்துக்கொண்டேன். ' அத்தான் இந்தக் குளிரில் இப்படிப் படுத்திருக்கிறீர்களே இந்தாருங்கள் காப்பி " என்று சரஸ் காப்பியை நீட்டினுள்.

- 71 -
மாமாவிடம் பெண் கேட்டது :
எம்மிருவருக்கிடையே ஏற்பட்ட இந்த அன்புத் தொடர்பைத் துண்டிக்கச் சிலர் முயன்றனர். சரசுவின் உள்ளத்தை உடைக்கக்கூடியவாருன, கதைகளைப் பரப் பினர். அக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டு மானல் ஊரறிய அவளைக் கையேற்கவேண்டும். என் சார் பில் பெண் கேட்க எவருமில்லை. எனவே நானே ஒருநாள் மாமாவிடம் சென்றேன்.
எனக்கு எப்பவுமே அச்சம் கிடையாது. நேரடியாக மாமாவைப் பார்த்துச் ** சரசுவை எனக்குக் கட்டித் தாருங்கள். " இவ்வாறு யான் கூறியதும் அவருடைய முகத்தில் கோபம் பீறிட்டுப் பாய்ந்தது. உனக்கா பெண்? தாய் மாமன் என்றுகூட மரியாதை இல்லாமல் நேரில் வந்திட்டாய் ’ இவ்வாறு இரைந்த மாமனர் “ சிவக் கொழுந்து சிவக்கொழுந்து !!” என்று உள்ளே உள்ள தன் மனைவியை அழைத்தார். சரசுவின் தந்தையைவிட தாய் புத்திசாலி. என்னுடைய கோபத்தை நேரே தேடா மல் தனது மனவெறுப்பை மறைத்துக்கொண்டே வார்த் தைகளைக் கக்கினுள்.
* ஏன் சும்மா கத்திறியள், சரசுக்கென்ன வயதா வந்திட்டுது இப்ப கலியாணம் செய்ய நகைநட்டு ஒன்று மில்லை, காணியும் ஈட்டில் கிடக்கு, இரண்டொரு வரு டம் பொறுத்துப் பார்ப்பம்.'
இவ்வாறு மாமி தந்திரமாகப் பேசியதைப் புரிந்து கொள்ளாமல் கார்க்கொட்டிலுக்கு வந்துவிட்டேன். அப் போது கிழவன் ஒருவன் மாமாவினுடைய வீட்டுக்கு வந் தான். அவன் கூறியதெல்லாம் அருகு வீட்டிலிருக்கும் எனக்குக் கேட்காதா ?
சரசுவின் கலியான விடயமாக நான் கதைத்த சங் கதிகளை மாமனும் மாமியும் கூறியபோது 'நல்ல காலம்

Page 43
- 72 -
நீங்கள் பாண்கிணற்றில் விழப்பாத்தியள். அந்தப் பயல் மறியல் வீட்டுக் கோப்பையைப் பத்திரமாக வைத்திட்டு வந்திருக்கிருன்”. இவ்வாறு கிழவன் கூறிய வார்த்தை கள் என் செவியில் நாராசமாகப் புகுந்துவிட்டன. ஆத் திரம் பற்றிக்கொண்டது. வீட்டில் நின்ருல் கரைச்சலாகும். எனவே காரை “ஸ்ராட்” செய்ததுதான் தெரியும், கார் பறக்கத்தொடங்கியது. கார்ச்சத்தம் கேட்டுச் சரஸ்வதி வெளியே வந்தாள். அவள் கண்களில் நீர்முத்துக்கள் பெருகி வழியத்தொடங்கின.
நான் புறப்பட்டுப் போய்விட்டதை மாமன் மாமி அறிந்தனர். வெகு உற்சாகமாக மாமியாரும் மாமனு ரும் அந்தக் கிழவனுடன் பேசிக்கொண்டார்கள். * சரஸ் வதியை இப்படியே விட்டு வைத்தால் அந்த முரடனுக் குத் தப்பமுடியாது. ஆகையால் நீர்வேலியில் ஒரு மாப் பிள்ளை இருக்கிருன். நீங்கள் சம்மதித்தால் நான் உடனே கல்யாணம் செய்ய வழி செய்கிறேன். செல்லையாவுக்கு மறியல்வீடு பழக்கம். ஏதாவது துணிந்து செய்துவிடு வான்'. இவ்வாறு சகுனிக் கிழவன் கூறியவற்றையெல் லாம் ஒன்றும் விடாமல் சரஸ்வதி மறைந்து நின்று அறிந்து கொண்டாள். அன்று மாலை தனிமையில் என்னைக் கண்டு விபரம் தெரிவித்தாள்.
எனது நெஞ்சில் ஆத்திரமும் வேதனையும் ஒன்ருக இணைந்துகொண்டன. மறுநாள் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். பகல் முழுவதும் நன்ற க மது வருந்திவிட்டு அந்தியில் வீடு திரும்பினேன். என்னுடைய ஆத்திரத்தை யெல்லாம் வெளிக்குக் காட்டாது அடக் கிக் கொண்டு சாய்மனைக் கட்டிலில் ஆமைபோல் முடங் கிப் படுத்துக்கொண்டேன். தம்பி நடராசா வந்து சாப் பிடும்படி அழைத்தான். 'கரைச்சல் தராமல் போடா அப்பாலே" என்று அதட்டிவிட்டு அப்படியே படுத்து விட்டேன். உறக்கம் பற்றிக்கொண்டது. எனக்கு எது வுமே தெரியவில்லை.

- 73 -
ஊரடங்கிய சாமவேளை, வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்துக்குள் மூழ்கிவிட்டனர். ஒரு தளிர்க்கரம் என் உடலை வருடியது. மெதுவாக விழித்துக் கொண்டேன் "அத்தான்!’ என்ற குரல் இன்பநாதமாக ஒலித்தது. வந்தவள் சரஸ்வதிதான். திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டேன். எவ்வளவுதான் என்னுடன் உரிமையாகப் பழகினலும் ஊரறிய அவள் என்து மனைவியாகவில்லை. அவளது அன்பைப் புரிந்துகொண்ட நான். "சரஸ்வதி உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. உனது பெற் ருேர்களின் விருப்பம் இல்லாத விடயத்தில் நீயேன் தலை யிடுகிருய். உன்னுடைய நல்ல குணத்துக்கு ஊரெல்லாம் கூடித் தப்பான கதை கட்டிவிடக்கூடும். ஆகவே இனி மேல் என்னைச் சந்திக்காதே போய்விடு" என்றேன்.
*"அத்தான் யாரென்ன சொன்னுலும் உங்களைப் பிரியமாட்டேன். எதை வேண்டுமானலும் இவர்கள் திட்டம் போடட்டும் அது சரிப்படாது".
அவளது உறுதியைக் கண்டதும் என்மனதின் கவலை கள் பறந்தன. அவளது கையைப் பற்றிக்கொண்டேன். "சரஸ்வதி சத்தியமாக உன்னை நான் கைவிடமாட்டேன். எந்தச் சோதனை வந்தாலும் அதில் வெற்றிபெற்று உன்னை அடைவேன்” என்று உறுதி கூறினேன்.

Page 44
-س- 74 -س- சண்டியர்களுடன் கீரிமலைப் பயணம் :
தாழ்ந்த சாதிக்காரணுகிய நான் கார் வைத் திருப்பது சில தடித்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. உயர் சாதிச் சண் டியர்கள் இருவர் வழியில் என்னை மறித்து “இந்தக் காரை ஒருக்கால் கீரிமலைக்கு விடு’ என்று வெகு ஆங்காரத்து டன் கேட்டனர். அவர்களைப்பற்றி எனக்கு முன்பே தெரியும். சண்டியர்களாகிய அவர்களை எதிர்ப்பினல் சமாளிக்க முடியாது. தந்திரத்தினல் இவர்களை வெற்றி கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தேன்
'சரி ஐயா, கீரிமலைக்குத்தானே ஏறுங்கள்” என்று பல்லைக்காட்டிக் கூறினேன். அவர்கள் காரில் ஏறினர்கள். அவர்களிடம் காசு பெறமுடியாது என்பதும் வெட்ட வெளிச்சமான சங்கதி. எப்படியாவுதல் பணமும் பெற்று அவர்களைத் தோல்வியடையச் செய்யவேண்டுமென்ற முடிவுடன் காரை வீதியிலுள்ள பெற்ருேல் நிலையத்தை நோக்கிச் செலுத்தினேன். போதியளவு பெட்ருேலை நிரப்பிக்கொண்டு அவர்களைப்பார்த்து * ஐயா என்னிடம் காசில்லைக் காசைக்கொடுங்கள்’ என்று குழைந்து பேசி னேன். மரியாதைக்காகப் பணத்தைக் கொடுத்தனர்.
கீரிமலை நோக்கிச்செல்லும் சாலையில் உள்ள கள்ளுக் கொட்டில்களின் முன்பெல்லாம் காரை நிறுத்தினேன். கார் பெற்ருே லால் நிரப்பிக்கொண்டது போல் கள்ளி னல் என்னுடைய வயிற்றை நிர ப் பி னே ன். கள் அருந்தியதால் ஏற்பட்ட போதையினல் அவர்கள் வாயி லிருந்து வந்த சொற்களை நான் செவிசாய்க்கவில்லை. *காரியமே வீரியமன்றிக் கதை பெரிதாகாது". வண் டியை ஒரிடத்தில் நிறுத்தி பெற்ருேல் நின்றுவிட்டதாக அவர்களை மயக்கி மெதுவாக எதிர்ப்பட்ட பெற்ருேல் நிலையத்தில் மீண்டும் பெற்ருேலை ஊற்றினமையால் தாங்கியும் நிரம்பிவிட்டது. கையில் வைத்திருத்த சிகரட் டின்னிலிருந்து அடிக்கடி சிகரட் தந்துகொண்டேயிருந் தார்கள். அவற்றையும் புகைத்துச் சாம்பராக்கினேன்.

- 75 -
கிட்டத்தட்ட மதியவேளைக்கு முன்பாகக் கீரிமலையை அடைந்தோம். கீரிமலையில் குளிப்பதென்ருலே எனக்கு மட்டற்ற பிரியம். வடிவாகத் தண்ணிரில் குளித்து இன் பம் பெற்றபின் அவர்களது செலவில் வயிருர உண்டேன்.
அங்கிருந்து புறப்பட ஆயத்தமாயினர். இவர்கள் போதையினலும் பொருமையினலும் தங்களது திட் டத்தை எப்படியும் நிறைவேற்றக்கூடியவர்கள். நான் தனி ஒருவனுக அந்த முரடர்களைச் சமாளிக்க முடியாது. இவர்களுடன் சச்சரவு செய்தால் அது தொடந்துவிடும். இவற்றை எல்லாம் திடமாக யோசித்துத் தந்திரமாகத் தப்பிக் கொள்ளவேண்டும் என்று கருதினேன். கீரிமலை யில் நின்று கார் புறப்படுவதற்கு முன்னர், கா ரின் “போணற்’றைத் திறந்து ஒருவருக்கும் தெரியாமல் எஞ் சினில் சிறிய கோளாறை உண்டாக்கினேன். இருவரும் காரில் ஏறிவிட்டனர். காரை “ஸ்ரார்ட்' செய்தேன் அது ஒடவில்லை. ‘இதென்னடாப்பா " என்ருர்கள். ஐயா, கொஞ்சம் பிடித்துத் தள்ளுங்கோ கார் ஒடும் " என்று இரந்தேன்; தள்ளினர்கள் கார் சிறிது தூரம் ஒடிப் பின்பு நின்றது. இவ்வாறு மூன்று கட்டைவரை அவர்கள் தள் ளுவதும் நான் “ஸ்ரார்ட்” செய்வதுமாக அவர்களைக் களைக்கப்பிடித்துச் சோரப்பண்ணினேன். அவ்விருவர்க ளது வெறியும் முறிந்தது. உணவும் ஜீரணமாகிவிட்டது. சோர்ந்து போனர்கள். மெதுவாக இறங்கி ஏற்கெனவே யான் செய்த கோளாறைத் திருத்தம் செய்தேன், அதன் பின்னர் கார் நிதானமாக ஒடத்தொடங்கியது. வழியில் எதிர்ப்பட்ட கள்ளுக் கொட்டில்களின் வாசல்களில் அவர் கள் சொல்லாமலே காரை நிறுத்தினேன். தாமும் குடித்து எனக்குந் தந்தனர்.
மதியம் கடந்துவிட்டது. வழியில் காரைச் செலுத்தி வரும்போது, எதிரே ஒரு கார் வந்தது. வெட்டித் திருப் புவது போல் வேலியுடன் காரை வேண்டுமென்றே மோதவைத்து நிறுத் தி னே ன். “ ஸ்ரியரிங் “ கையு

Page 45
- 76 -
டன் வந்துவிட்டது. அவர்கள் இருவரும் ஆடி ச் சரிந்து நிமிர்ந்தார்கள். இருவருக்கும் பயமேற்பட்டது. * ஐயையோ, கடவுளே தெரியாத்தனமாக வந்து இதிலே மாட்டிக்கொண்டோம்”. இவ்வாறு அவர்கள் மனஞ் சோரக் கதைத்தனர். அதன் பின்னர் மெதுவாகக் காரைச் செலுத்திவந்து அவர்களைப் புறப்பட்ட இடத் திலே கொண்டுபோய் இறக்கிவிட்டேன். அவர்களது திட்டத்தை முறியடித்ததோடு மூன்று மடங்கான கூலி யைப் பெற்ருேல் மூலமும் பிறசெலவின் மூலமும் அற விட்டுக் கொண்டேன். அவர்களை மடக்கிவிட்ட வெற் றிப் பெருமிதத்துடன் வீட்டிற்குச் சென்ற என்னை அதிர்ச் சியான சம்பவம் காத்திருந்தது.

ܚ- 77 --
சாவ்ஸ்வதியை விவாகஞ் செய்தேன்.
காரைக் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திய பின்னர் கிணற்றடிக்குச் சென்றேன். அங்கே தனிமையாக என் னைச் சந்தித்தாள் சரஸ். நீர்வேலியிலுள்ள மாப்பிள்ளை வீட்டார் வந்தது பற்றியும், எதிர்வரும் நல்லூர் பூங்கா வனத்திலன்று தன்னை அந்த நீர்வேலி மாப்பிள்ளைக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றேர் முடிவு செய்துள் ளது பற்றியும் தெளிவாகத் தெரிவித்தாள். இதனல் ஏற்பட்ட ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு “விடியட்டும் சரசு பார்ப்போம்" என்று சொல்லி அவளை அனுப்பி விட்டேன்.
மறுநாள் காலை 10 மணிக்கு மாமா வீட்டிற்குச் சென்றபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அத்து டன் அதிர்ச்சியும் அடைந்தனர். என் மடியில் பயங்கர ஆயுதம் இருப்பது போல் நடித்தேன். என்னைக் கண்ட தும் “வா தம்பி ! இப்படிக் கதிரையில் உட்கார்’ என்று அழைத்தார் மாமா. மாமி ஒன்றுந் தெரியாதவள் போல் அமைதியாகக் காணப்பட்டாள். நான் கதிரையில் உட் காரவில்லை. மெதுவாகத் தரையிலேயே இருந்தேன். அவர்கள் இருவரும் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த் தனர். பின்பு அமைதியாக அவர்களைப்பார்த்து, “என்ன சங்கதி நடக்குது? நீர்வேலியானுக்குச் சரஸைக்கொடுக்க முடிவு செய்துவிட்டீர்களாம் உண்மையா?’ என்றபோது இருவரும் பேசவேயில்லை. நான் தொடர்ந்து ‘இது நடக் காது, சரஸ்வதி எனக்குரியவள். முதலில் நான் கேட்ட போது காணி ஈடு. நகைநட்டு இல்லை என்றெல்லாம் சொன்னீர்கள். இப்போது நீர்வேலியானுக்குக் கட்டிக் கொடுக்க, நகை நட்டெல்லாம் ஆகாயத்திலிருந்து குதித்துவிட்டதோ ?’ என்றேன். திருதிரென்று விழித் தார்கள். நான் மேலும் தொடர்ந்தேன் “நல்லவனுக வாழ நான் விரும்புகின்றேன். ஏமாற்றப் பார்க்கிறீர் கள். நேர்மையிருந்தால் நான் முதல் கேட்டபோதே

Page 46
- 78 -
முடியாது என்று சொல்வியிருக்கலாமே. என்னைப் பேய ஞக்கி விட்டீர்கள். ஆனல் என்னுயிர் உள்ளவரை இன் னெருத்தன் சரசுவின் கையைப் பிடிக்க விடமாட்டேன். ஊரிலுள்ள சொந்தக்காரனை விட மாற்ருன் என்ன பெரிய வன? அவனுடைய நடத்தையைப்பற்றி உங்களுக்கு நிச்சய கத் தெரியுமா? அவள் கண் கலங்காமல் இருப்பது உங்க ளுக்குப் பிடிக்கவில்லையா? சரஸ்வதியை இன்னெருவ னுக்குக் கொடுக்க முற்பட்டால் இவ்வீட்டில் என்ன நடக்குமென்பதை நீங்கள் அறிவீர்கள்.’’ என்று ஆத்தி ரத்துடன் கூறிவிட்டு வெளியேறினேன். அவர்களின் மெளனமே அவர்கள் சிந்திக்கிருர்கள் என்பதை விளக்கி Ամֆl .
எனது முரட்டுத்தனத்தை ஊரே அறியும். அவர்க ளுக்குத் தெரியாமலிருக்குமா? அத்துடன் சரசுவின் பிடி வாதம் பொல்லாதது. இந்தத் தொல்லைகளை விலைக்கு வாங்க விரும்பாத மாமனும் மாமியும் சில தினங்களில் எனக்கே சரஸ்வதியை மணஞ்செய்ய இசைந்தனர். நல் லூர் பூங்காவனத் திருவிழாவினன்று விவாகத்தை நடத்த ஏற்பாடு நடந்தது. எனது கையிற் பணமில்லை. விவா கத்துக்கான பணத்தைத் திரு. அம்பலவாணரிடம் பெற் றுக்கொண்டேன். குறித்தநாளில் சைவாசார முறைப் படி அதிக ஆடம்பரமின்றி எமது திருமணம் இனிது நிறைவெய்தியது. வெற்றியினல் என்னைவிட சரஸ்வதியே பெருமிதங் கொண்டாள்.

- 79புதிய கார் :
நான்காவது நாள் கோவிலுக்குச் செல்வதாக முடிவு செய்துகொண்டோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி எனது பழையகாரை மாற்றிப் புதுக்கார் ஒன்று வாங்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். எனக்குச் சீதனமாக நகைகளுடன் ஒரு காணிமட்டுமே தந்தார்கள். பணமாகத் தரவில்லை. காணியை ஈடுவைத்துப் புதுக் கார் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை மனைவியிடம் வெளியிடக் கோவிற் பயணத்தைச் சாதகமாக்க முயன் றேன்.
அன்று எனது பழைய காரில் மனைவியையும் மாமன் மாமியையும் ஏற்றிக்கொண்டு கொக்குவிலிலிருந்து நல் லூரை நோக்கிப் புறப்பட்டேன். திருநெல்வேலியை அடைந்ததும் கார் பழுதடைந்துவிட்டது போன்று பாவனை செய்தேன். கீழே இறங்கிப் போனட்டைத் திறந்து பார்த்துக்கொண்டே ‘இந்தப் பழைய காரின் குணமே இப்படித்தான். சமயம் பார்த்துக் கைவிட்டு விடும்" என்று கூறிச் சலித்தவன் மாதிரி நடித்தேன்.
* இதென்ன புதுக்குடித்தனமாகக் கோவிலுக்குப் போகும்போது இப்படி வந்துவிட்டதே, கடவுளே! நல் லூர் முருகா ” என்று மாமி முணுமுணுத்தாள் என் னுள் சிரித்தபடி மாமியைப் பார்த்து, “கொஞ்சம் பொறுங் கள், திருத்திக்கொண்டு போகலாம்" என்று மேலும் காரில் சிறு பழுதை உண்டாக்கினேன். கார் எப்படி நகரமுடியும் ? மாமியும் மாமனும் முணுமுணுத்தார். நான் வெறுப்புக்கொண்டவன் போல் நடித்துவிட்டு “கொஞ்சம் பொறுங்கள் பக்கத்தில் எனது நண்பர் ஒரு வர் கராச் வைத்திருக்கிருர். அவரது காரை வாங்கி வருகிறேன்” என்று சொல்லி நடந்து சென்றேன். திருநெல் வேலி கராச் உரிமையாளரான நண்பர் தனது காரைத் தந் துதவினர். அங்கிருந்து வந்த சிலர் காரைத் தள்ளிக்

Page 47
س- 80 --
கொண்டு கராச்சுக்குப் போயினர். நண்பருடைய காரில் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பினுேம். பகல் கழிந்து விட்டது.
இரவு சரஸ்வதி சாப்பிடவரும்படி அழைத்தாள். கோபம் வந்தவனுகப் பாவனைசெய்து சாப்பாடு வேண்டாமென்று மறுத்தேன். சரசு விடுவதாகவில்லை. மேலும் மேலும் கோபத்துடன் அவளை விரட்டினேன். ** ஏன் அத்தான் விஷயம் என்ன? சொல்லுங்கோ " என்று கெஞ்சத் தொடங்கினள். “ஒன்றுமில்லை; பசிக்கவில்லை” என்றேன். 'இல்லை நீங்கள் எதையோ மனதில் வைத்துக்கொண்டு தான் இப்படிச் சாப்பிட மறுக்கிறீர்கள் என்ருள். “நான் முன்னேற வேண்டும் அது உனக்கு விருப்பந்தானே?” என்ற ஒரு வினவை விடுத்தேன்.
“ஆம், நீங்கள் முன்னேறினல் நான் முன்னேறியது தானே அத்தான். அதுக்கு நான் என்ன செய்ய வேண் டும்?”
* ஒன்றுமில்லை; சரஸ் நீ போ செய்ய வேண்டியதை ஆறுதலாகச் சொல்லுகின்றேன். இப்ப அதெல்லாம்
வேண்டாம்"
"நான் போகமாட்டேன். நீங்கள் எதைய்ோ மறைக் கிறீர்கள். மனதைத் திறந்து சொல்லுங்கோ.” இவ்வாறு கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே கேட் டாள்.
அவளைப் பதப்படுத்திவிட்டதைப் புரிந்துகொண்ட நான் மெதுவாக அவளை அருகில் அழைத்தேன்.
* என்ன அத்தான்?’
* சரஸ் உன்னிடத்தில் எதையும் என்னல் மறைக்க முடியாது. எல்லாம் இந்தக் கார் விஷயந்தான். இன் றைக்குப் பகல் நல்லநாள் பார்த்துப் புறப்பட இந்தக்

ார் இடையில் இடக்குப்பண்ணிவிட்டது. இதனை வைத்துக் கொண்டு ஒழுங்காக உழைக்க முடியாது. இந்தக் காரைப் பாத்துப் பலரும் கேலிசெய்கிருர்கள். என்னைக் கேலி பண்ணினல் அது உனக்குத்தானே அவமானம். அதுதான் இந்தக் காரை விற்கலாம் என்று யோசிக்கிறன். விற்றுப் போட்டுப் புதுக்கார் வாங்கவேண்டும். அதுதான் என்னு டைய வருத்தம்"
*அதுக்கு நான் என்ன செய்யச் சொல்லிறியள்?"
*புதுக்கார் வாங்க வேண்டும். நம்முடைய காணியை ஈடுவைத்துக் காசு தருகிருயா?”
சரசு உண்மையில் கணவனைக் கண்ணுக மதிப்பவள்: அவளுக்குக் காணி பெரிதாகத் தெரியவில்லை. 'உங்களு டைய இஷ்டப்படி எல்லாம் நடக்கும். இப்போது சாப் பிட வாருங்கள்’ என்று அன்பு விஞ்சக் கெஞ்சி அழைத் தாள.
இரண்டொரு தினங்களில் காணியை ஈடுவைத்த மையால் ரூபா 400 கிடைத்தது. என்னுடைய பழைய காரையும் விற்றுவிட்டேன். மொத்தம் 460 ரூபர் கொடுத்து நல்ல கார் ஒன்றை வாங்கிக்கொண்டேன். சீதனக் காணிக்குள் இருந்த வீட்டைப் புதுக்கி அமைத்து சரசுவும் நானும் குடிபோனேம்.
இன்பத்தளிர் அரும்பும் பருவமது. வாழ்க்கையென்ற தடம் முள்ளுகள், கல்லுகளற்றுச் செம்மையாக இருந் தது. நல்ல காராக இருந்தமையால் வாடகைக்காரர்கள் அதிகம் வந்தனர். உழைப்பும் போதியளவுக்குக் கிடைத் தது. கடந்த காலத்திய துன்பங்கள் போய்விட்டன. நிம்மதியாக வாழ்க்கை ஓடியது. முன்னுள் எம்மை உதா சீனம் செய்தவர்கள் நெருங்கிவந்தனர். கொப்பும் கிளை யும் விட்டு நிற்கும் மரத்தைத் தேடிப் பட்சிகள் வருவது புதுமையல்ல. என்னை வெறுத்தவர்கள் உதவிபுரிய நான்
Z

Page 48
- 82 -
நீ என்று போட்டிபோட்டனர். தேவைகளுக்குப் வேண் டிய பணம் புரண்டது. என் கையில் பணமில்லாதபோது பிறரும் உதவத் தயங்கினர். கையில் பசையுள்ளபோது நான் நீ யென்று தாக்குப்பிடிக்கப் பலர்வந்தனர். இது தான் உலக விசித்திரம்.

- 83 -
சொந்த பவ்ல :
சரசுவுடன் கூடிக்கொண்டு வடமாகாணத்தில் பிர பலம் பெற்றுள்ள ஸ்தலங்களுக்கெல்லாம் சென்றேன். இந்த நேரத்தில் நான் ஒரு சொந்த பஸ் வண்டி வைத்து அதில் என் சமுகத்தவருக்குச் சம ஆசனம் கொடுக்க வேண்டும் என்ற பழைய கனவுக்கு உருவம் கொடுக்க முயன்றேன். புதிய பஸ்ஸை மனைவியின் ஒத்துழைப்புட னேயே பெறவேண்டும். ஆகவே பஸ் வாங்கும் எண் ணத்தை மனைவியிடம் தெரிவித்தேன் என்னுடைய பிடி வாதமான மனதைப் புரிந்துகொண்ட சரசு எதுவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அவளது ஆலோசனையின்படி எனது காரை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்துடன் *ராஜ பூபதி” என்னும் பெயருடையதும் 462 இலக்க முடைய பஸ் ஒன்றை வாங்கினேன்.
அக்காலத்தில் இ. போ ச. என்ற நிறுவனமோ, முதலாளிகளின் தனிப்பட்ட கம்பணிகளோ இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களது பஸ்ஸைச் சேவைக்கு விடுத்து உழைத்தனர். இதற்காக ஒவ்வொரு வீதிக்குரிய அணு மதியான “ரூட்" பெற்ருகவேண்டும். எனக்குக் காங்கே சன்துறை வீதி வழியாகக் கீரிமலைக்குச் செல்லும் “ரூட்" கிடைத்தது. பஸ் நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு யாழ்ப்பாண பட்டின சபையினர் வரியாக 50 சதம் அற விடுவர். பிரயாணிகள் தாமாக வந்து பஸ் வண்டியில் ஏறமாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பிரயாணத் தைத் தொடங்கவும் முடியாது. பிரயாணிகளைப் பல பக்கமும் ஒடிச்சென்று கூட்டிவந்து சேர்த்தபின்னரே பிரயாணத்தைத் தொடங்கவேண்டும். என்னுடைய பயிற்சியின் பேருக உழைப்பு ஒரளவுக்குக் கிடைத்தது. சரசுவதி தேவைக்குத் தகச் செலவுசெய்து குடும்பத்தை ஒட்டிவந்தாள். இவ்வேளை அவள் ஒரு ஆண் குழந்தை யைப் பிரசவித்தாள்.

Page 49
- 84 -
சகடக்கால் போன்றதுதான் வாழ்க்கை. இது மிக வும் எனக்குப் பொருத்தமானது. எனது சீவியத்தின் பெரும் பகுதி சகடமாகவே இருந்தது. உழைப்போ என் றும் மாறுபட்டதில்லை. ஆயினும் கடன் சிறுகச் சிறுக பஸ் வண்டியின் திருத்தத்தினுலும், எனது தவிர்க்க முடி யாத அபரிமிதமான செலவினுலும் பெருகத் தொடங்கி யது. எவ்வளவு உழைத்தாலும் பஸ்ஸின் திருத்தங்களுக் குச் செலவழிக்க வேண்டிய தொகைதான் நெடுத்து நின்றது. இத்தகைய திருத்தத்துக்கு அடிப்படையாக அமைந்தவனும் நானே. மற்றைய வண்டிகளை முந்த வேண்டுமென்ற விறுவிறுப்பினல் வேகமாக வண்டியைச் செலுத்துவேன். மற்ற பஸ் வண்டிகள் புறப்படுவதற்கு முன்னர் புறப்பட்டாற்ருன் பிரயாணிகள் பிரியப்படுவார் கள். போட்டிக்காக, பிரயாணிகள் அதிகம் சேராவிட் டாலும் நட்டத்துடன் வண்டியைச் செலுத்த வேண்டியு மிருந்தது. கையில் பணம் புரண்டால் சொல்ல வேண் டுமா? துர்நடத்தையும், கெட்ட நண்பர்களின் சகவாச மும் கலந்து கொண்டன. கடன் தலையை மூழ்க வைக் காமல் என்ன செய்யும?

- 85 -
மனேகரன் மதருவ்ஸ் மெயில்
இந்த நிலையில் “ராஜபூபதி” பஸ்ஸின் கவர்ச்சி குன் றியது. பிரயாணிகள் நல்ல நிலையிலுள்ள வண்டியிலே தான் ஏறுவார்கள். பார்வைக்கு மவுசு இழந்து விட் டால் உழைப்பும் இல்லாமலே போய்விடும் ஆகவே அதனை விற்று மேலும் 700 ரூபா சேர்த்து ‘மனேகரன்' என்னும் H 2433 இலக்கமுடைய வேருெரு பஸ்ஸை வாங்கினேன். இந்த பஸ்ஸின் மூலம் ஒரளவுக்கு வருமா ணம் வரத் தொடங்கியது. பட்ட கடனில் ஒரு பகுதியைக் கோடுத்துச், சீவனத்தையும் நடத்தி வந்தேன். என்னு டைய விறுவிறுப்பும் வேகமும் கட்டுப்படவில்லை. வண் டியை வேகமாகச் செலுத்துவேன். போட்டியினல் மற் றவர்களைத் தோற்கடிப்பேன். என்னுடைய வேகத்தை யும் பந்தயத்தையும், சாதாரண பஸ் வண்டி க ள் பொறுக்க முடியுமா? இராஜபூபதியின் நிலையை மனேக ரனும் அடைந்தது. கையிற் பணமில்லை. இந்த நிலை யில் மனேகரனுக்காக 700 ரூபா கடன் தந்தவர் பணத் தைத் தரும்படி வற்புறுத்தினர். நாளும் பொழுதும் அவர் உபத்திரவம் தாங்க முடியவில்லை. பலரிடமும் சென்று கடன் கேட்டேன் எவரும் தருவதாகக் காணுேம். வண்டி தடத்தை விட்டு விலகிவிட்டால் எவரும் தள்ள வரமாட்டார்கள். ஆணுல் வண் டி ஒடும்போதுதான் நானும்கூட வருவேன் என்பார்கள் இது நியதிதானே. கையில் வளையம் கழன்று கொண்டிருக்கும் நேரத்தில் கடன்காரன் விடுவான? கழுத்தைப் பிடித்துக் கொண் டான். வேறுவழி இல்லாமற் போகவே மனேகரன் பஸ்ஸை விற்றேன். கிடைத்த தொகையில் பஸ்ஸை வாங்குவதற்காகப்பட்ட 700 ரூபாவையும், மற்றைய சில் லறைக் கடனையும் அடைத்துவிட்டேன். கடன்மிடி தீர்ந்தது. சீவியத்துக்கு எவ்வித பாதையுமில்லை. வீட் டில் நெருக்கடிகள் கூடின. பலத்த துன்பத்துக்கு இலக் காகிக்கொண்டிருந்தேன்.

Page 50
- 86 -
தம்பகட்டியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் பஸ் வண்டிகளை இறக்குமதிசெய்து நேர்மையானவர்களுக்கும், தவணைமூலம் கட்டுப்பணம் செலுத்துபவர்களுக்கும் விநி யோகித்து வருகிருர் என்பதைக் கேள்விப்பட்டேன். கட் டுப் பணம் மூலம் ஒரு பஸ்ஸை வாங்க முடிவுசெய்தேன்: பணமில்லை.
எனது மைத்துணி ஒருத்தியின் வீட்டுக்குச் சென்றேன். என்னுடைய நிலையை விளக்கினேன். தனது தாலிக், கொடியை அடகுவைத்துப் பணத்தைப் பெறும்படி தந் தாள். மனதில் ஆறுதலுடன் பெரியகடையில் அடகு வைத்தேன். 800 ரூபா கிடைத்தது. தம்பகட்டிக்குக் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தேன். 1600 ரூபா பெறுமதியான பஸ் வண்டியை 800 ரூபா முற்பணத்து டன் தந்தார். மிகுதி 800 ரூபாவையும் மாதம் மாதம் கட்டுவதாகப் பொருந்திக்கொண்டேன்.
புதிதாக வாங்கிய வண்டியின் இலக்கம் X 95. அக் காலத்தில் புகழ்பெற்ற "மதமுஸ் மெயில்’ என்ற சினி மாப் படத்தின் பெயரை அதற்கு இட்டேன். பார்வைக்கு இலட்சணமான பஸ் வண்டியது. பெயரும் கவர்ச்சியாக அமைந்தது. "குதிரை பஞ்சகல்யாணியானுலும் சுழி சரி யில்லையே என்ன செய்வது? திடீரென வருமானவரியை அரசாங்கம் ஏற்றியது.
என்னைத் தொடர்ந்த துர்அதிர்ஷ்டத்தின் காரண மாக பஸ்ஸில் வருமானம் குறைந்தது. மனவிரக்தியைப் போக்கக் குடியையும், சூதையும் சரண் அடைந்தேன். இதனுல் கையிலுள்ள பணமும் கரைந்துகொண்டே சென் றது. மனைவி சரசு கண்ணீர்க் கடவில் மிதந்தாள். உப்பு புளிபோன்ற சில்லறைப் பொருட்களுக்குக்கூடத் தட் டுப்பாடு ஏற்பட்டது. எந்த நிலையிலும் தன் இல்லாமை யைச் சரஸ்வதி காட்டமாட்டாள். வீட்டிலே சில்லறைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அடுத்த வீட்டில் கடன் பெருத பழக்கம் அவளுடையது. எனக்

سے 87 --سم
கேற்பட்ட கஷ்டங்களைச் சகிக்க அவளால் முடியவில்லை. சரசுவின் கண்ணிரைக் கட்டுப்படுத்த என்னுலும் முடிய வில்லை.
இந்த வேளையில் அவள் பூரண கர்ப்பிணி. நல்லாகப் பேண முடியவில்லை. என்ன செய்வது வறுமையுடன் ஒரு ஆண்குழந்தையைப் பெற்ருள். சந்தோஷப்படவேண்டிய நிலையில் நானில்லை. இராஜபூபதி, மனேகரன் போன்ற பஸ் வண்டிகளைப் போல மதருஸ் மெயில் அதிஷ்ட முடையதாக அமையவில்லை. அடிக்கடி அதற்கு நோய் ஏற்பட்டு வந்தது. வழியில் பெற்றேல் இன்றி நின்று விடும். பெற்ருே ல் ஊற்றக் கையில் பணமிருக்காது. வண்டியிலுள்ள பிரயாணிகளிடமே கடனுகக் காசுபெற்று பெற்றேல் ஊற்றுவேன். பணம் சேர்ந்தபின் அவர்க ளுக்குத் திருப்பிக் கொடுப்பேன்.
ஆட்களைச் சேர்ப்பதற்கு அலைவேன். ஒருசிலர் மட் டுமே சேருவர். பிரயாணிகள் குறைவாக இருக்கும். வண்டி நேரத்துக்குப் புறப்படாது என்று கருதுவார் களே, இதற்காகச் சும்மா நிற்பவர்களையும் தூக்கிப் பொலிவுக்காக ஏற்றுவேன். வண்டியில் ஆட்கள் அநேகர் உள்ளனர் என்று சிலர் கருதுவர். பொலிவுக்காக ஆட் களைப் போடுவதால் பார்க்கிறவர்களுக்குப் பொருமை ஏற்படுமே தவிர, வசூல் கிடையாது. ஆயினும் என் மிடுக்குத் தளரவில்லை. வீதியிலே என்வண்டி வேகமா கவே ஒடும். எனது "ஹோர்ன்" சப்தம் “மதருஸ் மெயில் இதோ வருகிறது’ என்று சொல்வது போலவிருக்கும். எப்போதுமே மதருஸ் மெயில் தான் வீதியில் முன்னே செல்லும்,
என்னுடைய வீம்புக்கு வேட்டையாடும் குணத்தால் பிரயாணிகள் எண்ணிக்கை குறைந்தது. மற்றைய பஸ் வண்டிகளுக்குமுன் குறித்த இடத்தை அடையவேண்டு மென்பதால் நிற்பாட்டும் இடங்களைக் குறைத்து வண் டியை வேகமாக ஒட்டினேன். வழியிலுள்ள பிரயாணி

Page 51
- 88 -
களை உதாசீனஞ் செய்வதால் வருமானம் வெகுவாகப் பாதித்தது. வண்டி விரைவான ஓட்டத்தினுல் பழுதுக் குள்ளானது. கடன்காரர்களுக்குக் கடன் கொடுக்க வேண்டும். பஸ் நிலையக் கட்டணம் கொடுக்க முடியா மையால் வீதியிலேயே வண்டியை நிறுத்துவேன்.
மதழுஸ் மெயில் பஸ் நிலையத்தில் நின்ருல் என்னுடைய குரல் தனித்து ஒலிக்கும். அங்குமிங்குமாகத் திரிந்து பிரயாணிகளை ஏற்றுவேன். வீதியில் வேகமாகவே வண்டி ஒடிக்கொண்டிருக்கும்.
மாலையில் குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்பட்ட வண்டி யாழ்ப்பாண பஸ் நிலையத்தை வந்து சேரவேண் டும். அப்படி வருகின்ற வண்டிகள் விரைவாக வந்து நிலையத்தில் முன்னிடத்தில் நிறுத்தப்பட்டாற்ருன் மறு நாள் முதலாவது முறை கிடைக்கும். ஆகவே கீரிமலை யிலிருந்து மாலையில் திரும்பி வரும்போது வீதியிலுள்ள ஏனைய வண்டிகளை விலத்திக்கொண்டே வேகமாக வண் டியைச் செலுத்துவேன். வழியில் அநேகமாக எவரை யும் ஏற்றுவதில்லை.
இவ்வாறு ஒருமுறை மாலையில் முதல்முறை பெறும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நான் குடி க் க ச் சென்றுவிட்டேன். நல்ல போதையில் திரும்பி வந்த போது மதருஸ் மெயில் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அப்பால் நின்றது. யாரோ பொருமையில் இவ்வாறு செய்துள்ளார். எனக்கு நல்லவெறி. கோபம் மிகுந்தி ருந்தது. தலையினல் இடித்து இடித்து மதருஸ் மெயிலின் **பொடி'யின் நாலுயுறத்தையும் நெளித்துக்கொண்டி ருந்தேன். இவ்வேளையில் என்னைப் பிடிக்கமுடியாது. பஸ், நிலையத்திலுள்ளவர்கள் கஸ்தூரியார் வீதியில் போசன கடை வைத்திருக்கும் எனது நண்பரான நாகலிங்கத்தா ரிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக வந்து என்னை ஆறுதல்படுத்திக் கூட்டிச்சென்று தனது கடையின் மேல் மாடியில் படுக்கவைத்தார்.

---*89 -س-
பஸ் நிலையத்தில் நான் எவருடன் சச்சரவு செய்தா லும் அவர் அங்கு வந்துவிடுவார். ஏனைய சாரதிகள் கொண்டக்டர்கள் கலவரஞ் செய்தாலும் அவர் வந்து அவர்களை அமைதியுறச் செய்வார்.
எனது சச்சரவுகளினல் செலவு ஏற்படும். வருமானம் குறைந்து செலவு அதிகரித்ததால் ஏற்பட்ட கஷ்டத் தைச் சொல்லி முடியாது?
காலஞ் செல்லச் செல்லக் கிழடுபற்றிய எனது மத ரூஸ் மெயில் ஓடமுடியாமல் பழுதுபட்டுவிட்டது. பிர யாணிகளை ஏற்றி இறக்கிப் பணம் சம்பாதிக்க முடிய வில்லை.

Page 52
-90 - கடன் தொல்லை:
காலையில் கண்விழித்து எழுந்து பார்த்தால் முற்றத் தில் கடன்காரர்கள் வரிசையாக நிற்பது தெரியும். எத் தனை நாளைக்குத் தவணை சொல்லுவது? சித்தப்பிரமை பிடித்தவனனேன். மனதைத் திடப்படுத்த மேலும் குடியையே தஞ்சம் புகவேண்டி வந்தது. இரவில் நன்ரு கக் குடித்துவிட்டு வருவேன். செல்லையாவுக்கு நல்ல வெறி இரவில் போனல் கரைச்சல் உண்டாகும் என்று கடன்காரர்கள் வருவதில்லை. ஆனல் விடிந்ததும் அவர்க ளைச் சந்திக்கலாம். எனவே விடிவதற்கு முன்னரே விழித்து வெளியே புறப்பட்டு விடுவேன். கஷ்டங்களை நிவிர்த்தி செய்ய முடியவில்லை.
ஒரு ரூபாய் லொத்தர் மூலம் பஸ்ஸை விற்கலா மென்று அதிர்ஷ்ட லாபச் சீட்டு அச்சிட்டு விநியோகித் துப் பணம் பெறலானேன். நினைத்ததுபோல் லொத்தர் சீட்டுகள் விற்பனையாகவில்லை. என்னுடைய கஷ்டத்தை உணர்ந்த பஸ் சாரதிகள், கொண்டக்டர்கள் சிலர் வாங் கினர்களே தவிர, மற்றவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஆகவே லொத்தர் மூலம் பஸ்ஸை விற்கவேண்டுமென்ற திட்டத்தை நிறுத்திக்கொண்டேன், என்மீது அனுதாபப் பட்டு டிக்கட் வாங்கிய நண்பர்களிடம் மன்னிப்புக் கோரி னேன். அந்த நண்பர்கள் டிக்கட்டுக்காகத் தந்த பணத் தைத் திருப்பிக் கேட்கவில்லை நானும் திருப்பிக் கொடுக் கக் கூடிய நிலையிலில்லை. இவ்வதிர்ஷ்ட இலாபச் சீட்டு மூலம் சேர்ந்த பணம் கொஞ்சக் காலத்துக்கு இல்லாமை யைப் போக்க ஆதாரமாயிருந்தது.
இரண்டாவது மகாயுத்தம் நடக்கும் நெருக்கடியான காலமானதால் மோட்டார் வண்டிகளின் உதிரிப் பாகங் களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. என்னுடைய மதருஸ் மெயிலை உருப்படியாகக் கொடுப்பதை விட, உதிரிப் பாகங்களாக விற்பதினல் சற்றுக் கூடுதலான தொகை

س- 9l س--
ைெடக்கலா மென்ற கருத்தினுல் இஞ்சின் தொடக்கம் மட்காட்வரை யாவற்றையும் பிரித்து எடுத்துப் பகுதி பகுதியாக்கினேன். அவற்றை விற்றதனுல் கணிசமான தொகை கிடைத்தது. ஏற்கனவே பாக்கியாகவிருந்த பஸ்சுக்குரிய கட்டுப் பணத்தையும் தீர்த்துக்கொண்டேன்.
பஸ் ஒடும் “ரூட்"டையும் வேருெருவருக்குக் கொடுத் துப் பணம் பெற்றேன். பஸ்ஸின் 'பொடி” மாத்திரமே எஞ்சியது. இந்த நிலையைக் கேள்விப்பட்டதும் பணத்துக் காகத் தாலிக்கொடியைத் தந்த மைத்துணி தன் தாலியை மீட்டுத்தரும்படி வீட்டுக்கு வந்துவிட்டாள். மற்றைய கடன்காரர்களும் நெருக்கினர்கள். கடன்பட்டார் நெஞ் சத்தைத் துன்பத்தின் உச்சமான நிலையிலிருந்த இராவ ணனது மனதுக்கு ஒப்பாக்கிய கம்பனைப் பாராட்டவே வேண்டும். கடன்பட்டவனது நெஞ்சத்தைக் கடன் தொல்லையால் அவதியுறுபவனே உணரமுடியும்.
இல்லாமை நெருக்கியது. மனைவி கண்ணீரில் புரளு கிருள். ஊரவர் உதாசீனப் படுத்தினர். “இவனது கெட்ட செயலுக்காகவே இந்தக்கதி வந்தது” என்று என் காது கேட்கவே வாய்விட்டுப் பேசினர். என்னுடைய வேதனை களைத் தீர்ப்பதற்குரிய ஒளடதமாக உதவியது மதுபா னமே. மதுபானத்தை நன்ரு கப் பருகிவிட்டு மெய்மறந்த நிலையில் வீட்டுக்கு வருவேன். காலைக் கதிரவன் கீழ் வானிற் ருேன்று முன்னரே விழித்தெழுந்து வெளியே கிளம்பிவிடுவேன்.
வறுமை ! வறுமை ! உண்மையில் இந்த வறுமையை மிஞ்சிய துன்பம் உலகத்தில் இல்லவே இல்லை. கடன் காரர்கள் வீட்டை முகாமிட்டுக்கொள்வார்கள். அரு மையாகப் பிறந்த ஆண்மகவு மரணமானன். இச்சோகம் நெஞ்சைப் பிழிந்தது. இந்தச் சோகத்தை என் இதயத் தினுல் கட்டுப்படுத்திக்கொண்டேன். ஆனல் சரஸ்வதி தலையில் வைத்த கையை எடுப்பதில்லை. அவளது விழி கள் சதா சோகக்கடலில் நீந்தும் மீன்களாகின.

Page 53
-س- 92 --
எவராலுமே கட்டுக்குக் கொண்டுவரமுடியாத புயல் வீசத்தொடங்கிவிட்டது. இதனைத் தாங்க முடியவில்லை. மகனது ஈமச்சடங்கைச் செய்துவிட்டு, யாவற்றையும் பறிகொடுத்துத் துன்பக்கடலின் துரும்பெனச் சுழன்று கொண்டிருந்தேன். உலகத்தில் ஒரு மனிதனின் துன்பத் தைப் பற்றி மற்றவர்கள் அக்கறைப்படுவதில்லை. ஆறு தலும் அமைதியும் குழைந்த வார்த்தைகள் துன்பப்படு பவனின் இதயத்தை இதப்படுத்தும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. வேதனை வளைத்துக்கொண்டிருந்த என்னே நெருங்கிவந்த சீனியப்பா " என்ன செல்லையா உன்னு டைய மச்சாளினுடைய தாலிக்கொடிக்கு என்ன சொல் லுகிருய்" என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்று வது போலக்கேட்டார். நெஞ்சம் ஆத்திரக் கனலில் புழுங்கிக்கொண்டிருந்தமையால் "* சீனியப்பா என்னைச் சிறிதுநேரம் அமைதியாக இருக்க விடுங்கள் ” என்றேன். என்னுடைய அப்போதைய நிலையைக் கண்டு பீதியடைந்த அவர் எதுவித பதிலும் சொல்லாமலே அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார். என்னுடைய சோகம் தளர்வ தாகவில்லை. அடுக் கடுக்கான சோதனைகளி லெல்லாம் பாரியது கடன் துன்பம். ஐயோ எ ன் ன செய் வது? விதியே இது என்ன சதி என்று எத்தனை தரம் விதியை நொந்துகொள்வது. ஆடிக் காற்றில் அலையும் பஞ்சு போலானேன். இதே நிலையில் தொடர்ந்து இருப் பது பயங்கர பைத்தியத்துக்கு வித்துண்டாக்கியதாகும்.
இனிப் பொறுக்க முடியாது. தேசத்தை விட்டே அகல்வது என்று திடஞ்செய்து கொண்டேன். இதுபற்றி வெளியே சொன்னல் என்னுடைய மனைவி பொறுப் பாளா? என்ன செய்வது நளமகாராசனே உயிருக்குயி ரான தமயந்தியை கானகத்தில் காரிருளில் கைவிட்டு விட்டான். அவனைவிட நான் ஒன்றுஞ் செய்துவிட வில்லை என்று முடிவு செய்தேன்.
சரசுவைக் கூப்பிட்டு “நான் ஒருவரிடம் காசு கேட் டிருக்கின்றேன். அவருடைய வீடு தூரத்தில் இருக்கிறது

--- 93 س
போய் வர இரண்டொரு தினங்களாகும். அதுவரை இந்தத் தனித்த வீட்டில் இருக்கவேண்டாம் உன்னுடை அம்மாவுடன் சென்றிரு’ என்று கூறினேன். அவளும் சம் மதித்தாள்.
உடுத்திருந்த வேட்டியும் சட்டையுமாக, கையில் லைசன்ஸ் பத்திரத்துடன் புறப்பட்டேன். பிறதேசஞ் செல்வதென்ருல் கையிற் பணம் வேண்டுமல்லவா?
மதருஸ் மெயில் என்ற பஸ் வண்டியின் உள்ளுதிரிப் பாகங்களை விற்றபின் அதன் பொடி மாத்திரம் மிகுந்தி ருந்தது.
யாழ்ப்பாணத்தில் வந்து ஒரு சிலரிடம் அதுபற்றிப் பேசினேன். தகரத்துக்கு அக்காலத்தில் இற க்கு மதி குறைந்தமையால் நல்ல கிராக்கி இருந்தது ஒருவரிடம் பொடியை விற்றுவிட்டேன்.
நூறுரூபாய் பணம் கிடைத்தது. நூறு ரூபாவையும் மடியில் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பெரியகடைக்கு வந்து ஒரு கடையில் 1703-ம் நம்பர் குறியில்லாத வேட்டி யொன்றும், அதற்குப் பொருத்தமாக நல்ல ஒரு சட்டை யும் வாங்கிக் கொண்டேன். சலூனுக்குச் சென்று முகச் சவரம் செய்த பின்னர் பெரியகடையில் அமைந்துள்ள வாளிக்கிணற்றுக்குச் சென்று உடுத்திருந்த உடைகளைத் தோய்த்து உலர்த்திவிட்டு, குளித்துக் கோடி உடுப்புக் களையும் தரித்துக்கொண்டேன்.
ஏற்கனவே பழக்கமான ஒரு கடையில் திருப்தியான சாப்பாட்டை முடித்துவிட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடைந்தேன்.
★

Page 54
س- 94 "خت
இந்தியப் பயண்ம் :
அன்னளில் இந்தியாவுக்குச் செல்வதற்குப் “பாஸ் போட்” போன்றவற்றைப் பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. சென்னைக்குப் பதினைந்து ரூபாவை நீட்டி ஒரு டிக்கற் பெற்றதும் எனது பணத்தில் ஐந்து ரூபாவை வழிச்செலவுக்கு சட்டைப் பையில் வைத்துக்கொண்டு மிகுதியை அரையில் முடிந்துகொண்டேன்.
புகைவண்டி வந்து ஏக்கப் பெருமூச்சுடன் நகர்ந்தது. எனது தாயகம் என்னைவிட்டுச் சிறுகச் சிறுக நீங்கிக் கொண்டேயிருந்தது. இரவின் இருளை ஊடறுத்துச் செல்லும் வண்டிக்குள் குறண்டினேன். மறுநாள் காலை தலைமன்னரை வண்டி அடைந்தது. இலங்கைப் பிரயா ணிகள் தாம் கொண்டுவந்த இலங்கை நாணயங்களை இந்திய நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ் வேலை முடிந்ததும் இரு மணித்தியாலங்கள் தனுஷ்கோடி வரை கப்பலில் பிரயாணம் நடந்தது. அங்கிருந்து புறப் பட்ட மதருஸ் வண்டியில் ஏறினேன். ஏற்கெனவே இந் தியாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவே என் முதற்பிரயாணம். வண்டி செல்லும் பாதையில் இருமருங் கும் தென்பட்ட காட்சிகள் மனதை ஈர்த்தன. புதிய புதிய மனிதர்கள், புதிய அனுபவங்களுடன் சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன்.
சென்னையில் போய் என்ன செய்வது? இப்படியொரு கேள்வி மனதிற் புகுந்துகொண்டது? ஆத்திரமும், துன்ப மும் மனதை உந்தியதன் விளைவுதான் பிரயாணம். எதிர் காலம் என்னுகுமோ? வீட்டில் தேடுவார்களே இந்த கேள்விப்பாதையில் மனக்குதிரை லாகன் இன்றி தன் போக்கில் ஓடியது. வந்தது வந்தாயிற்று நடப்பது நடந் தேயாகட்டும். இவ்வித முடிவுடன் மூன்றம் தினம் சென் னையில் கால் வைத்தேன்.

- 95 -
வாழ்க்கையில் மனிதன் எதையெதை சாதித்தாலும் புதிய ஊர்களைப் பார்க்கவும், புதுமையான செயல்களை உணரவும் வேண்டும். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் காணமுடியாத வசதிகளையும் அமைப்புகளையும் கொண்ட தாக விளங்கியது சென்னை.
அடுக்கடுக்கான கட்டிடங்கள், நீண்ட அகன்ற வீதி கள், வீதியில் நடமாடும் ஆயிரக்கணக்கான மனிதர்கள், தெருவில் அலை அலையாக வரும் வாகனங்கள் யாவும் மன தின் சோர்வை அகற்றித் தென்பூட்டின. எந்த வாகனங் களிலும் நான் ஏறவில்லை. நாள் முழுதும் நடந்தே அந்த ஊரை வலம் வந்தேன். எங்கே போகின்றேன்? எங்கே நிற்கின்றேன்? என்றே தெரியவில்லை. பார்க்குமிடமெங் கும் இன்பமாகவே இருந்தன. படமாளிகைகள், கோவில் கள் யாவும் தென்பட்டன. மனதிற் குதூகலம் உந்த அவற்றை பார்த்துக்கொண்டே நின்றேன். வீடுகளின் முன்னே அமைந்த கலைவடிவான கோலம் கண்ணை ஈர்த் தது. இங்குள்ள யாவிலுமே தனித்தன்மை துலங்கியது.
இவ்வாறு வீதிகளை யெல்லாம் தன்னிச்சையாகச் சுற்றிக்கொண்டு செல்லுகையில் பிச்சை யெடுப்பவர் கள் வீதியில் தூங்குவதைக் கண்டேன். வசதியற்றவர் கள் பக்கீஸ்பெட்டிகளினல் குடிசையமைத்து நெருங்கி இருப்பதைக் கண்டேன். கடுமையான நோயாளிகள், குஷ்டரோகிகள், அனதைகள், ஆதரவற்ற குழந்தைகள், கோவணத்துடன் பிச்சையெடுக்கும் எலும்புக்கூட்டு மணி தர்கள் யாவரும் மனதில் துன்பத்தை ஊட்டினர். இந் தக் கொடுமையின் முன்னே நாம் எம்மாத்திரம் என்ற திருப்தியும் கிடைத்தது.
பகல் முழுதும் இவ்வாறு சுற்றிக்கொண்டிருந்தேன். கொடுமையான வெயில் பற்றிக்கொண்டது. தரித்திருந்த சட்டை வேர்வையினுல் நனைந்துவிட்டது. ஆனல் ஊர் பார்க்கவேண்டுமென்ற ஆவல் பிடர் பிடித்துந்தியதால் மேலும் நடந்தேன்.

Page 55
- 96 -
அப்பப்பா என்ன அழகு! எத்தனை வகைகள்! மூக் கைக் கவரும் திவ்விய வாசனை நெஞ்சிலும் கவிந்தது . இது எங்கிருந்து வருகின்றதென அறியச் சென்றேன். பூக்கடை எதிர்ப்பட்டது. பூக்கடைகளைப் பார்க்கப் பார்க்க இன்பக் கிளுகிளுப்பூறியது. எத்தனைவகை நிற முள்ள மலர்கள் எவ்வளவு வாசனை! சற்றுநேரம் அவற் றைப் பார்த்துவிட்டு இன்பக் களிப்புடன் அகன்று அப் பால் சென்றேன்.
சூரியன் சிறுகச் சிறுக மேற்குத் திசையை நாடி இறங்கினன். உலகிலேயே சிறந்த கடற்கரையான மெரீன பீச்சை நாடிப் பலர் சென்றனர். அவர்களு டன் யானும் தொடர்ந்தேன். அடேயப்பா! ஓவென்று இரையும் அலைகள், ஒவ்வொரு அலையும் மற்ருேர் அலை யுடன் கூடிப் புரளும் விந்தையெல்லாம் துன்பம் என்பது என்ன என்று கேட்பது போலிருந்தன.
நீண்டநேரம் அங்கே இருந்துவிட்டு அப்பால் நடந்து போனேன். பசி வயிற்றைக் கிள்ளியது. எதிரே தெரிந்த கடையொன்றினுள் புகுந்தேன். அந்த ஹோட்டலின் பெயர் இன்றும் நல்ல நினைவிலிருக்கிறது. " மீனம்பிகை ஹொட்டல் ' என்பதுதான் அதன் பெயர். தோசையை அருந்திவிட்டு தேநீர் தரும்படி கேட்டேன். தேநீர் என் முல் அவர்களுக்கு விளங்கவில்லை. யாழ்ப்பாணத்துக் கடைகளில் கேட்ட பழக்கத்தினல் இவ்வாறு கேட்டேன். இப்பதம் அங்குள்ள சர்வருக்கு விளங்கவில்லை. அவன் திரு திருவென்று விழித்தான். யான் எனது பலவீனத் தைக் காட்டாது, சாப்பாட்டுக்குரிய பில்லைக்கொடுத்து, பீடியும் வாங்கினேன்.
இரவில் எங்கே போவது. இடமோ புதியது நண் பர்களோ கிடையாது. எனவே அந்தத் தேநீர் கடையி லிருந்த வாங்கொன்றில் குந்திக்கொண்டேன். பலரும் வந்து ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் போனர்கள். அவர்கள் எல்லாம் குரலை இழுத்துப்பேசுவதைக் கவனித்து அந்த வழியிலேயே நானும் பேசவேண்டுமென்று சங்கற் பித்துக்கொண்டேன்.

-97 -
சென்னையில் செட்டியார் கடை :
எங்கும் இருள் பரவத்தொடங்கவே மின்சார வெளிச் சம் கடையில் துலங்கியது. மம்மல் பொழுதாக இருந் தமையால், கடை முதலாளி இதுவரை என்னையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. அவர் மெதுவாக “யாரப்பா நீ? என்ன விஷயம் இங்கேயே உக்காந்துகிட்டிருக்கிருய் ' என்ருர் . அந்தக் கேள்வியு டன் சிந்தனை கலைந்தது. மெதுவாக எழுந்து சிரித்தேன். என்னை நெருங்கி வரும்படி அழைத்தார். நான் நெருங் கிச் சென்றதும் "உங்களுக்கு எந்த ஊரையா?" என் முர் கொச்சைத் தமிழில். நானும் அவர்போல் குரலைத் தாழ்த்திக் கொச்சையாகச் “சிலோனுங்க " என்றேன். என்னுடைய பதட்டத்தையும், துன்பத்தையும் பிரதிபலிங் பதாக அமைந்தது என் குரலொலி.
'ஏன் இங்கேயே நீண்டநேரமாய் உக்காந்துகொண் டிருக்கீங்க. உங்க முகத்தைப் பார்த்தா ரொம்பக் கஷ் டப்பட்டவன்மாதிரி இருக்கே " இவ்வாறு தன்னுடைய உள்ளத்தில் பட்டவற்றை மிக்க அனுதாபத்துடன் கூறி னர். அவரது முகத்தில் கனிவும் குழைவும் மிளிர்ந்தது. மெளனமாக அவரைப் பார்த்துக்கொணடிருந்தேன். அவ ரது உரையாடலும் நோக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக விருந்தது. மேலும் நெருக்கமாகச் சென்று என்னுடைய கதையை ஒரளவுக்குக் கூறினேன். அவரது பேச்சிலி ருந்து என்போன்ற துயரத்தை அவரும் அடைந்தவர். என்பதை அறிந்தேன். என்னுடைய ஊகம் பிறழவில்லை. அவர் என்னைப் பார்த்து நீரும் என்னைப்போல மிகவும் கண்டப்பட்டே இருக்கிறீர். இதற்காக ஊரைவிட்டே
p' a rakr arri rte : ಆT. இகாழுழ்பூதழிழ்ச்له سال سالها،
"கடன் தொல்லை தேசத்ஃை GT 6OT g: கையா ' என்று என்னுடைய பிரயாணத்தின் மூல கார னைத்தைச் சுருக்கமாக விளக்கினேன்.

Page 56
-س- 98 --
'முதலில் உள்ளே வாய்யா. இங்கேயே தங்கி இருக் கலாம்; வேறு எங்கும் அலைய வேண்டாம்" என்ருர், நான் மரியாதையாக * நீங்கள் செய்யும் உதவி யை என்றும் மறக்கமாட்டேன் என்று கூறிக்கொண்டே கடை யின் உள்ளே சென்றேன்.
முதலாளியின் பெயர் ஏழுமலைச் செட்டியார். அவ கும் தன்னுடைய கதையை விஸ்தாரமாய்க் கூறினர். கிட்டத்தட்ட என்னுடைய வாழ்க்கையைப் போன்ற சாயல் அவரது வாழ்க்கையிலும் விழுந்திருந்தது. கழுதை கெட்டாற் குட்டிச்சுவர் என்பது போல நானும் என் னைப் போன்ற ஒருவரை அடைந்ததில் ஆறுதல் பெற் றேன். சில தினங்களில் எம்மிருவர்க் கிடையிலும் நட் புக் கனியத் தொடங்கியது. நெருக்கமாகப் பழகத் தொடங்கினேம். ° செல்லையா நீ உண்மையில் துணி வுள்ளவர்தான். அல்லாவிடில் கடல்கடந்து இவ்வளவு தூரத்துக்கு வருவீர்களா? உங்களுடைய நேர்மையும் துணிவும் ஒருநாள் நல்ல வெற்றியைத்தரும் ' என்று என் நொந்த மனதில் நம்பிக்கை ஒளியை யேற்றினர்.
சில தினங்கள் கடந்தன. அவர் என்னைக் கூப்பிட்டு * செல்லையா எனக்கு வேலைகளிருப்பதால் அ டி க் கடி வெளியே செல்லவேண்டி யிருக்கின்றது. சும்மாதானே இருக்கிறீங்க. இந்தக் ஹொட்டலைக் கவனித்துக் கொள் ளுங்க” என்ருர். எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.
குறுகிய காலத்துக்குள் இப்படி என்னை நம்பி இந்த முடிவுக்கு வருவார் என்று யான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு தூரத்துக்கு நம்புகிறரே என்று யான் உள் ளூர மகிழ்ந்தேன்.
செட்டியாருக்கு அடிக்கடி பணமுடை ஏற்படுவது சகசம். ஒருநாள் நான் "" செட்டியார் உங்களுடன் சேர்ந்து நானும் கடையை நடத்துகிறேன் ” என்று கூறி என்னிடமுள்ள மிகுதிப் பணத்தை யெல்லாம் அவரிடம் கொடுத்தேன்.

- 99 -
அந்த நேரத்தில் அவருக்குப் பணமுடை ஏற்பட்டிருந் தது. அவர் பட்ட கஷ்டத்துக்கு என்பணம் சமய சஞ் சீவியாக அமைந்தது. இவ்விணக்கத்தால் இருவருக்கும் நட்பு இறுக்கமாகியது. ஐக்கியம் வளர்ந்தது. பங்கு தாரர்கள்போல் ஹொட்டலை நடாத்தி வந்தோம். V.
எங்கள் கடை பெயர்ப்பலகையில் குறிப்பிட்டிருக்கும் அளவுக்குப் பாரிய ஹோட்டலல்ல. செட்டியார் தன் னிடமுள்ள சிறிய முதலைக்கொண்டு நடாத்திவந்தார். செட்டியாரும் என்னைப்போல பஸ் கம்பனியில் கொண்டக் டர் உத்தியோகம் பார்த்தவர். பஸ்ஸில் வேலைசெய் யும் கொண்டக்டர்கள் இரண்டு மூன்று தினங்கள் பணம் சேர்ந்த பின்னர்தான் பஸ் கம்பனியில் கட்டுவார்கள். இடை நாட்களில் சேர்ந்த பணத்தைச் செட்டியாருக்குக் கைமாற்முகக் கொடுப்பார்கள். இப்படிச் சிலரிடம் மாறி மாறிக் கடன்பட்டே கடையை நடாத்தி வந்தார். இந் தக்கடைக்கு உரிமையாளர் அவரது மாமியார். .
இரவிற் கடையைப் பூட்டியதும் கடை முகப்பில் குந்தியிருப்போம். பேச்சின்போது கடந்தகால வாழ்க் கையைப்பற்றிய நிகழ்ச்சிகள் குறுக்கிடுவதுண்டு. இவ் வாறு ஆளுக்காள் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுவதினுல் மனத்தின் துயரம் ஆறுதலடையும்.
தினசரி மாலை நேரத்தில் செட்டியார் இலாபப் பணத் தில் பத்து ரூபா எடுத்துக்கொண்டு வெளியே செல்லு வார். இதை அவதானித்துவந்த நான் அதுபற்றி அன் புடன் விசாரித்தேன். அவர் தனிமையாக ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று * தினமும் குது விளையாடச் செல் லுகிறேன் ஐயா " என்ருர், எனக்குச் சிரிப்புவந்துவிட் டது. ஒருவாறு சிரிப்பை அடக்கிக்கொண்டு " செட்டி யார் நீங்கள் எப்போதாவது சூதில் வெற்றிபெற்றிருக் கிறீர்களா?" என்றேன்,

Page 57
- 00 -
சில வேளைகளில் வெற்றி பெறுவதுண்டு. அநேகமா கத் தோல்விதான் கிட்டுகிறது. மேலும் பெருந்தொகைப் பணம் சூதினல் போய்விட்டது. நட்டத்தை ஒருநாளைக்கு எடுக்கவே முயல்கிறேன்.” எனக்கு மீண்டும் சிரிப்பு வந் தது. * செட்டியாரே, நீங்கள் உங்களது திட்டத்தை ஒருநாளும் நிறைவேற்ற மாட்டீர்கள்; ஒன்று க்கு ம் யோசிக்கவேண்டாம். ஒருநாளைக்கு என்னையும் சூதுப் பளைக்குக் கூட்டிச் செல்லுங்கள்" என்றேன்.
இவ்வளவு நாளும் எனக்குத் தெரியாமல் போய்விட் டதே. “இந்தாரும் நூறு ரூபாய் இன்றைக்கே புறப்படும்" என்று இலாச்சியைத் திறந்து 100 ரூபாவை என்னிடம் தந்து தன்னுடன் கூட்டிச் சென்ருர்,
இருவருமாகச் சூதுப்பளையில் விளையாட ஆரம்பித் தோம். அன்று எனக்கு 650 ரூபாவரை வெற்றி கிடைத் தது. என்னுடைய துணிவையும் புத்திக்கூர்மையையும் செட்டியார் பார்த்துக்கொண்டே யிருந்தார். சூது விளை யாட்டு முடிந்து வெற்றிப்பணம் முழுவதையும் செட்டி யாரிடம் கொடுத்தேன். செட்டியாருக்கு அதிர்ஷ்டலாபச் சீட்டு விழுந்ததுபோலிருந்தது. இதனல் மட்டற்ற மகிழ்வு பெற்ருர்,

-س- 091ل ---
கடைச் சிப்பந்திகள் : "
செட்டியாரின் கடையிற் பணி செய்யும் வேலைக் காரர்களைக் கவனிக்கத் தொடங்கினேன். அந்தக் கடை யிற் பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் சொற்பமாகவே கொடுக்கப்பட்டது. செட்டியாரது கடையில் மாத்திர மல்ல சென்னையிலுள்ள பல கடைகளிலும் இதே ரீதி யில்தான் சம்பளம் வழங்கிவந்தார்கள்.
இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பணியாட் களிற் சிலர் திருட்டுப் புரி வது ண் டு. கடையில் யானும் பங்குதாரணுகச் சேர்ந்து கொண்ட பின்னர் பணி யாட்களைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு தினம் ஒருவன் பன்னிரண்டு கொத்து அரிசி போடுவதாக எனக்குச் சொல்லிவிட்டு பத்துக்கொத்து அரிசியையே உலையிலிட்டான். நான் கையும் மெய்யுமாக இதனைப்
விடித்தேன்.
Z
எனக்கு விழிப்பேற்பட்டது. ஒய்வு நேரத்தில் அவர் களைக் கண்காணிக்க முயன்றேன். ஐந்து தேங்காய்களை எடுத்து மூன்று தேங்காய்களையே பாவனைக்கு எடுத்துக் கொள்வார்கள். மேற்கொண்டுள்ள இரு தேங்காய்களை ஜன்னலூடாகத் தங்களுக்குத் தேவையானவர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள். பழக்கமான பேர் வழிகள் கடைக் குச் சாப்பிட வரும்போது தாராளமாக உணவுகளைக் கொடுத்துவிட்டுக் கணக்கைக் குறைத்துத் தெரிவிப் பார்கள்.
ஒரு தினம் கடையில் சாப்பிட வந்தவர் ஒருவருக்கு தாராளமாகப் பணியாளன் ஒருவன் உணவு கொடுப்ப தைக் கவனித்தேன். குறிப்பிட்ட நபர் சாப்பிட்டு முடிந்த பின்னர் அப்பணியாள் கணக்கைக் குறைத்துக் கூறி னன். இதனையும் நேரடியாகப் பிடித்துக் கொண்டேன்.

Page 58
ب- 02ا سي
எங்கள் கடையிற் பணிபுரிகின்ற பணியாட்களிற் சிலருக்குச் சங்கீதத்தில் பயிற்சியுண்டு. தானப்பன் என்ற வாலிபன் தனது சங்கீதப் பயிற்சியைப் பயன்படுத்திச் சினிமாவில் சேர உத்தேசித்தான்.
ஸ்ரூடியோவிலுள்ள பிரமுகர் ஒருவர் எங்களுடைய கடைக்குச் சாப்பிட வருவார். தானப்பனின் சங்கீதப் பித்தைக் கவனித்து வந்த பிரமுகர் அவனை ஏமாற்ற நினைத்து ** என்ன தானப்பா நீ சினிமாவில் சேரலாமே?” என்று ஆசைகாட்டிஞர். அதன் பிறகு தானப்பன் சினிமாவில் சேருகின்ற பித்துடையவனுகவே இருந்தான். இதனுல் வேலைகளை உதாசீனஞ் செய்யத் தொடங்கினன். இதைக் கவனித்து வந்ந் நான் ஒருநாள் கண்டித்தபோது தான் கடையிலிருந்து விலகப் போவதாகத் தெரிவித் தான். யாமும் அவனைக் கடையிலிருந்து விலக்கினுேம்.
தானப்பன் அதுவரை சேர்த்து வைத்திருந்த பணத் தைக் கொண்டு வெளியேறிஞன்.
பாவம் இருமாதத்துக்குள்ளேயே அவன் சேர்த்து வைத்திருந்த பணத்தை யெல்லாம் காலிசெய்து சாப் பாட்டுக்கில்லாத நிலையில் திரும்பி எங்கள் கடைக்கே வந்தான்.
இந்த வகையாகச் செட்டியாரின் கடையைச் சீனிக் கச் செய்கின்ற பணியாட்களை அவதானித்து அவ்வப் போது திருத்தியும், நீக்கியும் சீர்படுத்தி வந்தமையால் செட்டியார் என்னிடம் முன்னையதிலும் பார்க்க மிகுந்த அன்பு பாராட்டினர்.
கடையைச் செட்டியாரால் நடாத்த முடியவில்லை. கடைப் பொறுப்பை எ ன் னி ட ம் ஒப்படைத்தார். செட்டியார் ஒருநாள் மீண்டும் சூது விளையாட அழைத் தார். முன்பு பெற்ற தொகையை மேலும் பெறலாம்

ܣܝ 103 -
என்பது அவரது நப்பாசை. நான் - பொறுமையாகச் ' செட்டியாரே சூது விளையாட்டினல் நாம் நல்லாக இருக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள். அது முடியாது. அன்று நான் விளையாடிய தெல்லாம் தந்திரமான விளை யாட்டு. உண்மை நேர்மையோடு விளையாடினல் வெற்றி பெற முடியாது. என்னுடைய தந்திரம் நெடுகப் பலிக்க வும் மாட்டாது. ஆகவே நான் வரமாட்டேன்; நீங்க ளும் அங்கு செல்லாதீர்கள் " என்று தடுத்தேன். அவர் ஒத்துக்கொண்டு தான் இனிமேல் சூதாட்டத்துக்குச் செல்வதில்லையென்று சத்தியம் செய்துகொண்டார்.
அன்று தொடங்கி இருவரும் கடையைச் செப்பமாக நடாத்தி வந்தோம். ஆயினும் செட்டியார்பட்ட கடன் தொகை அதிகமாகி விட்டமையால் கடன்காரர்கள் படையெடுக்கத் தொடங்கினர். பொறுமை இழந் த அவர்கள் அவரைத் திட்டவும் தொடங்கினர். மனம் நொந்த செட்டியார் தற்கொலை செய்யலாமா என்று கூறுமளவுக்குப் போய்விட்டார். என்னுடைய ஆறுத லான வார்த்தைகளே அவரைத் தடுத்து நிறுத்தின.
கடையில் சிலர் வாடிக்கையாகச் சாப்பிட வருவார் கள். அப்படி வருபவர்களுள் காடையர்களுமிருப்பர். காடையர்களைக் கண்டால் பணியாட்களுக்குப் பயம், அவர்கள் கேட்பதை யெல்லாம் தாராளமாகக் கொடுப் பர். விளூர உண்ட அக்காடையர்கள் பணம் கொடுப்ப தில்லை. ஒரு தினம் ஒரு காடையன் சாப்பிட்டுவிட்டு பணந்தராமல் செல்ல எத்தனித்தபோது அ வ னை க் கூப்பிட்டுச் "சாப்பிட்ட காசைத் தா" என்றேன். அவன் தரமறுத்தான். இருவருக்கும் தகராறு நேர்ந்தமையால் அவனுக்குப் பாடம் கற்பித்து அனுப்பினேன்.
y

Page 59
س- l04 --
வடக்குத்திசைப் பிரயாணம் :
இத்தகைய தொல்லைகளுக்கிடையே கடையைச் சுமுக மாக நடத்தச் செட்டியாருக்கு விருப்பமில்லை. கடையை மூடிவிடவேண்டுமென்று தீர்மானித்தார். நானும் அதற் குச் சம்மதித்தேன். மாமியாரிடம் கடையை ஒப்படைத் தோம். எங்கள் கடையிற் சாப்பிடுகின்ற பஸ் பணியா ளர்களின் பணத்தை மாத முடிவில்தான் வசூல் செய் வோம். இதற்காகக் கணக்கெழுதிய கொப்பியுடன் கம்பனி வாசலுக்குச் சென்ருேம். சம்பளம் பெற்ற தொழி லாளர் பெயரை யாம் கூப்பிட்டதும் ஒவ்வொருவராக வந்து தமது கணக்கில் சிறுபகுதிகளேத் தந்தனர். இந்த வகையில் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்வரை சேர்ந்தது. அன்றைக்கே இருவரும் திட்டமிட்டபடி கையிலிருந்த பணத்துடன் பம்பாய்க்கு டிக்கட் பெற்றுக்கொண்டு வண்டி ஏறிவிட்டோம்.
பம்பாய் மிகப் பிரமாண்டமான நகரம். எனக்கு அவர்களது மொழியே தெரியாது. செட்டியாருக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் தெரியும். இருவரும் எங்காவது வேலையில் அமர்ந்துகொள்ளலாமென முனைந்தோம். அந்த முயற்சி சரிவராமற் போயது கையிலிருந்த பணமும் கரைந்தது. எட்டாவது தினம் பெங்களூருக்குத் திரும்பி னுேம்,
பெங்களூருக்கு வந்தபோது எங்கள்  ைக க ளில் ஒன்றரை அணுவே இருந்தது. செட் டி யார் ஒரணு வுக்குத் தோசை சாப்பிட்டார். நான் அரையனுவுக் குத் தேநீர் குடித்தேன். இருவரும் பகல் முழுவதும் பங்களூரைச் சுற்றியலைந்தோம். இரவு சாப்பிடவோ பீடி புகைக்கவோ வழியில்லை. தண்ணீரைக் குடித்தோம். யாருக்குந் தெரியாமல் வீதியிலுள்ள குறை பீடிகளையும் சிகரட்டுகளையும் பொறுக்கிப் புகைத்தோம்.

- 105 -
காலை தொடங்கி வெயிலில் அலைந்த இருவரும் ஒரு 11.மாளிகையைக் கண்டதும் காலாறுவதற்காக அதற்கு முன்னர் உட்கார்ந்தோம். மதியவேளை நெருங்கிவிட்டது. பசியோ உயிரை வாட்டியது.
ஊரோ முன்பின் தெரியாதது. எங்களுக்கு உதவ வருவோர் எவருளர்? பசியின் துன்பம் சொல்லில் அடங் குமா? “ பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்” என்று ஒளவைப் பாட்டி கூறியதில் உண்மையுண்டு . என்னு டைய உடலிலே போட்டிருந்த கோட்டைக் கழற்றிக் கொண்டு இருவரும் கடைவீதிக்குச் சென்ருேம். அங்கே யுள்ள மார்வாடிகள் எந்தப் பொருட்களையும் ஈடுபிடிப் பார்கள் என்னுடைய கோட்டை ஈட்டுக்குக் கொடுத்த போது எட்டணுவே தருவேன் என்ருர் ஒரு மார் வாடி. அவரது கோரிக்கைப்படி எட்டணு பெற்றுக்கொண்டோம்.
இருவரும் போசனசாலைக்குச் சென்று உணவு உட் கொண்டமையால் ஐந்து அணு செலவாகியது. மீதமாக மூன்று அணு இருந்தது. அந்த மூன்று அணுவை இரவு உணவுக்காக வைத்துக்கொள்ளலாம். ஆணுல் நாம் அப் படிச் செய்யவில்லை. கடந்த இரண்டுமணி நேரத்துக்கு முன்னர் வீதியில் கிடந்த குறை பீடி சிகரட்டுகள்ைப் புகைத்தோமே. இதையெல்லாம் மறந்து இரண்டரை அணுவுக்கு "தசரா' சிகரட் பைக் கற் ஒன்று வாங்கி உல்லாசமாகப் புகைத்தோம்.
சாயந்திரமானது. கையிலிருந்த அரையனவுக்கும் இருவரும் தேநீர் அருந்தியதுடன் அதுவும் தீர்ந்துவிட் டது. இப்போது எம்மிடம் விற்கவோ, அடைவு வைக் கவோ சொத்தேதுமில்லை; கையிற் பணமுமில்லை.
சூரியன் மேற்குத் திசை யி ல் மறைந்துவிட்டான்.
உலகத்தைச் சூழ்ந்துள்ள இருளை வீதிகளிற் பொருத்தட்
பட்ட மின்சார விளக்குகள் விழுங்கின. எமக்கு ஏ
14

Page 60
- 06 -
பட்ட பசியைப்போக்க எவருமில்லை. இரவு நெருங்கி யது பசியும் தாகமும் வயிற்றை மோதத் தொடங்கின. வீதியிலுள்ள தண்ணிர்க் குழாயில் தாகத்துக்கும் பசிக்கு மாகச் சேர்த்துத் தண்ணிர் அருந்திவிட்டு தியேட்டர் முன் தங்கியிருந்தோம். நமக்கருகில் பகல் முழுவதும் பூட்டி யிருந்த கடையொன்று படம் தொடங்குவதற்குச் சில மணிக்கு முன்னர் திறந்துகொண்டது. படத்துக்கு வந்த வர்கள் டிக்கட் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். நாமிருவரும் அங்கேயே வேதனை கவிந்த முகத்துடன் அநாதைகள் போல் உட்கார்ந்திருந்தோம்.

سنه 107 حسب
பெங்களுர்ச் சகாதேவர் :
நீண்ட நேரமாக இருக்கின்ற எங்களைக் கவனித்த அந்தக் கடைக்காரர். " " இப்படி வாருங்கள் " என்று ஆதரவுடன் அழைத்தார். நாம் இருவருமே சென்ருேம். ** என்ன விடயம் இப்படியே நீண்ட நேரமாக இருக்கி நீர்கள்’ என்று பேச்சினுாடே அன்பைப் பெய்து கேட் டார். என் கண்களிலிருந்து கண்ணிர் முத்தென உதிர்ந் தது. ஐயா, நாங்கள் சென்னையிலுள்ளவர்கள். எங்கும் வேலை கிடைக்கவில்லை. சுற்ருத இடமில்லை. கடைசியில் இவ்விடம் வந்தோம். எங்கள் கால கஷ்டமிது ' என்று முடித்தேன்.
எனது சோகக்கதையையும் துன்பத்தையும் புரிந்து கொண்டது மாத்திரமல்லாமல்; நாமிருவரும் சாப்பிட வில்லை யென்பதையும் அறிந்துகொண்டார் அந்தக் கடைக் காரா .
"ஐயா, பிறகு ஆறுதலாகப் பேசுவோம். இப்போது நீங்கள் சென்று சாப்பிட்டு வாருங்கள் " என்று கூறி தனது கடையிலுள்ள பையனையும் சேர்த்து எங்களுடன் ஹோட்டலுக்கு அனுப்பினர். མ་
கடையிற் சாப்பிட்டானதும் சோர்வு நீங்கியவராக மீண்டும் அவரது கடைக்கு வந்தோம். புகைப்பதற்கு பீடி தந்தார். புகைத்துக்கொண்டே 'உங்கள் கண்களில் தட்டுப்படாமல் விட்டால் எங்கள் கதி அதோ கதிதான். உங்கள் பெயர் என்ன ஐயா" என்றேன். அவர் “சகா தேவர்” என்ருர் . உங்களுக்கல்லவோ பெயர்ப்பொருத் தம் உங்களைக் கடவுள் ஆசீர்வதிப்பார்." என்றேன்.
*" என்னை அதிகம் புகழாதீர்கள். இது மனிதனது கடமை. முதலில் இருவரும் சென்று படம் பார்த்து வாருங்கள். தியேட்டரில் சொல்லியுள்ளேன் ” இவ்வாறு சகாதேவர் சொன்னுர்,

Page 61
- 108 - .
அவரும் என்னைப்போன்ற கட்டையர். அவரது உட லில் துல்லியமான கதர் வேட்டியும், கதர் சட்டையும், கதர் குல்லாவும் விளங்கின. அவர் உண்மையான காந்தி பக்தர் என்பதைத் தனது செயலால் நமக்கு உணர்த்தி ஞர்.
* எங்களுக்குச் சாப்பாடு போட்டதே பெரியகாரியம், அது போதாதென்று படமும் பார்க்கச் சொல்கிறீர் களே’ இவ்வாறு கூறி நாம் மறுத்தபோது பேசவேண்டிய வற்றை யெல்லாம் பின்புவைத்துக்கொள்வோம். இப்போ பேசாமல் படத்துக்குச் செல்லுங்கள்" என்று வற்புறுத்தி அனுப்பினர்.
தியேட்டரில் ஆங்கிலப் படமொன்று நடந்துகொண் டிருந்தது. படத்தைப் பார்த்து நிம்மதி பெறவே சென் ருேம். கதையிலும் எங்கள் சாயல் படர்ந்திருந்தது. அதைப்பார்க்கப் பார்க்க மனம் நொந்துருகியது.
படம் முடிந்து வந்தோம். மகிழ்ச்சியுடன் எம்மை வரவேற்ற சகாதேவருக்கு எங்கள் சோகவரலாற்றை விவரமாகச் சொன்னுேம். மிகுந்த அக்கறையுடன் கேட் டார் கதை அவரது மனதை உருக்கிவிட்டது. கடையைப் பூட்டிச் செல்கையில் “இருவரும் இக்கடை விருந்தையி லேயே படுத்துக்கொள்ளுங்கள். விடிய வந்து சந்திக் கின்றேன். ஏதோ என்னுலான உதவியைச் செய்வேன்' என்று உறுதி கூறினர்.
விடிந்துவிட்டது. விடியற் காலையிலேயே சகாதேவர் வந்துவிட்டார். அவரைக் கண்டதும் வேலை கிடைத்து விட்டதென்ற மகிழ்ச்சியில் எங்கள் உள்ளங்கள் பூரிப்புற் றன.

است 109 -
பெங்களுர்த் தியேட்டரில் வேலை
கடந்தநாள் யாம் சாப்பிட்ட ஹொட்டலிலே மாதம் 25 ரூபா சம்பளத்தில் ஏழுமலைச் செட்டியாருக் குக் கணக்கப்பிள்ளை வேலைக்கு ஏற்பாடு செய்தார். என்னை எம்பயர் தியேட்டரில் சைக்கிள் பாதுகாப்பாள னகச் சேர்த்துவிட்டார். எனக்குத் தினம் எட்டணு சம் பளம் தந்தார்கள். புயலில் சிக்கிக் கரைதெரியாது அலை மோதிய படகுக்குக் கரை கிடைத்தது போல எங்களுக்கும் வாழ்வுக்கு வழி பிறந்தது.
ஏழுமலைச் செட்டியாரும் நானும் அடிக்கடி சந்தித் துக் கொள்வோம். எனக்குரிய உணவுகளை அவர் பணி செய்யுங் கடையிலேயே பெற்று வந்தமையால் சந்திப்பு நீடித்தது.
ஊர் தேசம் விட்டு வந்த வருத்தம் நெஞ்சத்தைத் தாக்காமலில்லை. இடையிடை சிந்தனை எழும். என்ன செய்வது? கட்டுண்டோம் காலம் மாறும் என்று நினைத் துக் கொள்வேன்.
நான் தொழில்புரிந்த தியேட்டரில் விளம்பர வாக னத்தை ஒட்டிச் செல்லும் சாரதி சுகவீனம் காரணமாகத் திடீரென்று நின்றுவிட்டான். தியேட்டர் முதலாளி என்னை வாகனத்தை ஒட்டப் பணித்தார். இந்திய லைசென்ஸ் இன் மையால் யான் தயங்கினேன். “பயப்படாதே பொலிஸார் பிடித்தால் நான் பார்த்துக் கொள்கின்றேன் ” என உற்சாகப்படுத்தினர் படமுதலாளி. ஒருநாள் மட்டுந் தானே ஏதோ செய்வோமென ஒப்புக்கொண்டேன். மறு நாளும் சாரதி வராமல் விடவே பணியைத் தொடர வேண்டி வந்தது. உடனே முதலாளி எனது இலங்கை லைசென்சைப் பொலிசாருக்குக் காட்டி இந்திய லைசென்ஸ் பெற்று வந்தார். எனக்குப் பழக்கப்பட்ட தொழிலா கக் கிடைத்ததினுல் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்,

Page 62
- 10 -
முப்பத்தைந்து ரூபா சம்பளம் தருவதாக முதலாளி கூறினர். அவரது கணக்கிலேயே சாப்பாட்டுக்கும் ஏற் பாடாகி இருந்தது. இது முன்னைய வேலையைவிடத் திருப் தியாக அமைந்தமையால் உற்சாகத்துடன் வேலை செய்து வரலானேன். இந்த உற்சாகம் பதினேழு நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. நிரந்தர கார்ச்சாரதி திரும்பிவந்து விட்டான். எனது வேலை போய்விட்டது. r
தொடர்ந்து சையிக்கிள் பாதுகாப்பாளனுகவும் இருக் கவும் விரும்பவில்லை. வேறேதும் வேலை கிடைக்குமா வென ஊரில் அலைந்துகொண்டிருந்தேன். கையிலிருந்த பணம் கரைந்ததே யொழியப் பயனைக் காணுேம். சகா தேவருக்கும் செட்டியாருக்கும் சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை. கோட்டையும் ஈட்டிலிருந்து மீண்டு கொண் டேன். கையில் மிகுந்திருந்த ஒரு ரூபாயுடன் இருவருக்கும் வணக்கங்கூறி அங்கிருந்து புறப்பட்டேன்.

- I -
மீண்டும் சென்னை சென்றேன் :
சென்னை செல்வதற்குப் பிரயாணச் சீட்டுக்குப் பணம் போதாது. எனவே டிக்கட் இன்றியே பிரயாணத்தை மேற் கொண்டேன். கையிலிருந்த ஒரு ரூபாயை யாருக்கும் தெரி யாமல் மறைத்து வைத்துக்கொண்டேன். இவ்வுலக வாழ்க் கையின் தன்மையைச் சிந்தித்துக்கொண்டிருக்கும் என். னைப் புகைவண்டி சென்னையை நோக்கி யிழுத்துச் சென்
Dģ•
* வண்டியின் இருபுறமும் இயற்கைத்தேவி விரித்து வைத்துள்ள அழகுகள் நிரம்பிக்கிடந்தன. வ ண் டி க் குள்ளே பலரகப்பட்ட மனிதர்கள் கூடியிருந்தனர். அவர வர் தமக்கென பெற்றுக்கொண்ட அனுபவங்களை, வாழ்க் கைச் சம்பவங்களைக் கூறும்போது கேட்பதற்கு இரசனை யாகவிருந்தது. இந்த வேளையில் பிச்சைக்காரர்கள் "ஐயா, ஐயா" என்று கை நீட்டத் தொடங்கினர். அவர்களுக்கு என்னல் எதைக் கொடுக்கமுடியும்? கண் களை மூடிக் கொண்டேன். கண்களில் தூக்கம் முட்டிக்கொண்டது. வண்டிப்பெட்டியில் நடந்தவை நினைவிலகலத் தூக்கத் தில் ஆழ்ந்துவிட்டேன்.
தூக்கக் கலக்கத்தைத் தெளிவிப்பது போல பூட்சு கள் சப்தமிட டிக்கற் பரிசோதகர் நானிருந்த பெட் டிக்கு வந்தார். அவரைக் கண்டதும் அச்சம் என்னை ஆட்கொண்டதால், திருதிரு வென்று விழித்தேன். என் னுடைய நிலையை என் அச்சமே வெளிப்படுத்தியது. அவர் என்னைப் புரிந்துகொண்டதுபோல * கொண்டு வா டிக்கற்’ என மிரட்டினர். பெட்டியிலுள்ள அத்தனை விழி களும் என்னையே மொய்த்தன. கூனிக் குறுகிக் கொண்டே எழுந்து நின்றேன். மீண்டும் " டிக்கற் எங்கே எடு” என்ருர் பரிசோதகர் மிடுக்குடன். என்னுல் பொய் சொல் லவே முடியவில்லை.

Page 63
- 2 -
“ஐயா, நான் இலங்கை வாசி, எனக்கு எவரும் உத விக்கு இல்லை. கால கஷ்டத்தினுல் டிக்கற் இல்லாமல் பிரயாணம்செய்ய நேர்ந்துவிட்டது." இவ்வாறு கூறிக் கெஞ்சினேன். பரிசோதகர் நடநடவென உறுக்கினர். நான் தொடர்ந்து வெகு பவ்வியமாக " " ஐயா எவ்வ ளவோ கஷ்டப்பட்டும் டிக்கட்டுக்குரிய பணத்தை என் ஞற் பெறமுடியவில்லை. பெங்களூரில் வேலை தேடாத இடமுமில்லை. என்மீது சந்தேகமானல் இதோ எனது லைசன் சைப் பாருங்கள்’ என்று சாரத்தியத்துக்குரிய லைசன் சுப் புத்தகத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினேன். அவ்வேளை என் கண்கள் நீருள் மூழ்கின. இந்த அவமானத்தினல் உடல் மேலும் குறுகிப்போனது. பரிசோதகரும் ம னி தன் தானே மனமுருகியிருக்கும். சிறிது அநுதாபத்துடன் பேசிய அவர் 'தொடர்ந்து பிர யாணம் செய்யாதே' என அச்சுறுத்தி அரக்கோணம் என்னுமிடத்தில் வண்டி நின்றதும், என்னை இறக்கிவிட் டார். த ப்பினேன் பிழைத்தேன் என்று மனதில் நினைத் துக்கொண்டு புகைவண்டி நிலையத்துக்கு வெளியில் வந் தேன். எதிரேதான் பஸ்நிலையமிருந்தது. காலைக் கதிர வன் கீழ்வான விளிம்பில் குங்குமப் பொட்டெனப் பிரகா சித்துக்கொண்டிருந்தான். உலகத்தின் இருளழுக்கு அவ னது ஒளித்துகளினல் அகன்றுவிட்டது. ஊரே கலகலத் துக்கொண்டிருந்தது
ஒன்றரை நாள் புகைவண்டிப் பிரயாணத்தின்போது எதனையும் சாப்பிடவில்லை. வயிறு எதையாவுதல் தின்ன வேண்டுமெனத் தூண்டியது. ஏற்கனவே கோட்டுக்குள் போட்டிருந்த சட்டையின் கைவிளிம்பைத் துளை த் து மறைத்து வைத்த ஒரு ரூபாவை எடுத்தேன். ஆங்கிலச் சக்கரவர்த்தியின் பிரதிமையுடன் விளங்கிய அந்த ரூபா இக்கட்டான வேளையில் கடவுள் போன்று காட்சியளித் தது. கண்ணில் ஒற்றிக்கொண்டேன். பஸ்நிலையத்தின் எதிரேயிருந்த சாப்பாட்டுக் கடையில் தயாரிக்கும் பல காரத்தின் சுகந்த மணம் என்பசியை மேலும் தூண்டி

--س۔ l13 - ۔
யது. கடையின் உள்ளே சென்றேன். சப்பாத்தியும் குறுமாவும் புசித்தேன். ஒரு ரூபாய்க் குற்றியை மாற்றி இரண்டு அணு கொடுத்த பின், ஓரணுவுக்கு இரு சிக ரட்டுகளை வாங்கிப் புகைத்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் பிறந்த குஷியினுல் சிகரட் புகையை ஊதிச் சுவைத் தேன். -
எதிரே உள்ள பஸ்நிலையத்தில் சென்னைக்குச் செல் லும் பஸ் வண்டி தயாராக நின்றது. அரக்கோணம் - சென்னைக்குப் பஸ் கட்டணம் எட்டன. என் கையிலிருந்த காசில் எட்டணுவுக்குப் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன் மிகுதி ஐந்தணு மட்டுமே மடியிலிருந்தது.

Page 64
- 14 -
வறுமையின் கொடுமை :
ஐந்தணுவுடன் மீண்டும் சென்னை பஸ்நிலையத்தை அடைந்தேன். எப்படி எதிர்காலம் செல்லும்? என்ன என்ன சோதனைகளை இனித் தாண்டவேண்டுமோ என் றெல்லாம் உள்ளம் கொந்தளித்தது. சிந்தனைக் கிருமி கள் கசக்கிருமிகளாகி மனதை அரிக்கத் தொடங்கின. பஸ் நிலையத்துக்கு எதிரேயிருந்த பிளாட்பாரத்தில் குந்திக் கொண்டேன். நான் இருந்த இடத்துக்கு எதிரே ஓர் உணவுச்சாலை இருந்தது. உணவுச்சாலையில் உண்டவர் கள், எச்சில் இலைகளைக் கொண்டுவந்து அதற்கெதிர்ே யுள்ள குப்பைவாளிக்குள் போட்டார்கள்.
அந்த வேளை குப்பை வாளிக்கு அண்மையில் ஒரு பெண் வந்தாள். பரட்டைத்தலை, சதையெல்லாம். வற்றி உலர்ந்த பூவரசம் மரம்போன்ற அவளது உடலின் எலும்பு களை ஒரு கிழிந்த புடவையே மறைத்திருந்தது. இந் தத் தோற்றம் அவளது வறுமையின் கொடுமையை எனக்குச் சுட்டிக்காட்டியது.
குப்பை வாளிக்குள் குனிந்த அவள் ஒவ்வொரு இலை களாகப் பொறுக்கி வெளியே எடுத்தாள். பின்னர் இலை களில் ஒட்டிக்கிடந்த பருக்கைகளை எல்லாம் தட்டித் தட்டி ஒரு கிழிந்த பெட்டிக்குள் இட்டாள். என்ன கொடுமையிது! இத்தகைய கொடூரமான வறுமைக் காட் சியை இலங்கையில் எந்தப் பகுதியிலும் எப்போதாவது நான் பார்த்தது கிடையாது. இலைகளின் பருக்கைகளைச் சேர்த்த பெண் நான் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்தாள். வீதியோரத்தில் நின்ற ஹிக் ஷோவின் கால் முமிதி பலகையில் குறவணன் புழுப்போல் சுருண்டுகிடந்த அவளது கணவனும், எலும்புக்கூடுகளான இரு பிள்ளை களும் அவளைச் சூழ்ந்துகொண்டனர். பெட்டியிலுள்ள பருக்கைகளைச் கையாற் பிசைந்து குழைத்துக் கவளங்க ளாக்கி நீட்டினுள். கணவனும் பிள்ளைகளும் ஆருத பசி

- 5 -
யுடன் அபக் அபக்கென்று வாங்கிப் புசித்தனர். ஒரு கையால் குழைத்துக் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்குமவள் மறு கையில் ஒரு கவனத்தை இட்டுத் தானும் கவ்விக் கவ்விப் புசித்தாள். ܚ -
அந்த கொடுமையான வறுமைக் காட்சி என்னுடைய கண்களில் நீரைப் பெருக வைத்தது. என்னுடைய மனிை வியே என்மனக்கண் முன் வந்தாள். இங்கே யு ள் ள் பிச்சைக்காரி , அவளது வாழ்க்கையை நெருடுகின்ற கொடூரமான துன்பத்தைப் பற்றியெல்லாம் கடுகத்தனை யும் பொ ட்படுத்தாதவள் போல் குப்பைவாளி உணவை உண்ணுகிருள். 'ஆண்டவா! இத்தகைய கொடிய நிலை யில் என் மனைவியை நீ வைக்கவில்லை. அதற்காக உன் னைப் பிரார்த்திக்கின்றேன்.
ஆனல் என் உள்ளத்தில் வாட்டும் துயருடன் மனைவி யையும் ஊரையும் பிரிந்து இந்தப் பிரதேசத்தில் நிர்க்கதி யாக நான் நிற்கவேண்டி நிலையேற்பட்டதே’என்று கேவிக் கேவி அழுதபடி, ஆக்குரோசத்துடன் என் தலையின் உச் சியைப் பிடித்தேன். கையில் உதிர்ந்த தலைமுடிகள் சில வந்துவிட்டன. என்னுடைய பைத்தியம் போன்ற இந்தச் செயலைக் கண்டதும் வீதியிற் சென்ற இரண்டொருவர் என்முன் வந்துவிட்டனர். உணர்ச்சியலைகள் அடங்கியதும் நிதானம் பிறந்தது. கூட்டத்தைக் கண்டு வெட்கினேன். அதற்குமேல் அவ்விடத்தில் நிற்கவில்லை. எழுந்து அப் பாற் சென்றேன். மதியவேளையாகி விட்டது. பசியோ வயிற்றைக் கிண்டியது. கையிலிருந்த சில்லறைப் பணமோ இன்னும் ஒருவேளை சாப்பாட்டுக்குத்தான் போதுமான தாகும். இதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்ற வேதனை கவிந்து கொண்டது.

Page 65
- 6
வீதியில் வியாபாரம் :
அந்தவேளை "தர்பேசி தர்பேசி" என்று கூவிக்கொண்டு ஒருவன் வந்தான். நிமிர்ந்து பார்த்தேன். அவனது கையி லிருந்த தட்டில் வெட்டிய வத்தகைப்பழத் துண்டங்களி ருந்தன. இங்குள்ள மொழியில் தர்பேசி யென்று குறிப் பது வத்தகைப்பழத்தை என்பதை ஊகித்தேன். அத் துடன் இப்படியொரு வியாபாரத்தை யானும் தொடங் கினல் ஒருநேரப் பசியை மானத்துடன் போக்கலாம் என்ற கருத்துப் பிறந்தது.
பக்கத்திலிருந்த ஒருவனிடம்தர்பேசி முழுப்பழங்கள் எங்கே வாங்கலாம் என்று விச *శ్రీక్షిణా- பக்கத்தே யுள்ள காய்கறிச் சந்தையைக் காட்டினன். அங்கே வத்த கைப் பழமொன்று இரண்டணவுக்கு விலைபோயது. இரண் டணு கொடுத்து ஒரு வத்தகைப்பழம் வாங்கினேன். காலணுவுக்கு ஒரு சிறு பிரப்பந்தட்டி கிடைத்தது வத் தகைப் பழத்தை அளவான துண்டங்களாக்கி தட்டில் வைத்துக்கொண்டேன். நான் ஏற்கனவே குந்தியிருந்த வீதியில் இன்னெருவன் தர்பேசி வியாபாரஞ் செய்வத ஞல் அந்த வீதியில் வியாபாரத்தைத் தொடங்கினல் தனக்குப் போட்டியாக நான் முளைத்துவிட்டேன் என்ற குரோதத்தினுல் அவன் சச்சரவுக்கு வருவான். இந்த நினைப்பினல் றிக்ஷோக்காரர்கள் தங்கிநிற்கும் வேருெரு வீதிக்குச் சென்றேன்.
தட்டைக் கையில் வைத்துக்கொண்டு 'தர்பேசி தர் பேசி" என்று கூவிக்கொண்டே சென்றேன். அவ்வப்போது சிலர் வந்து வாங்கினர். நான் சோராமல் வீதிகளெல் லாம் திரிந்து விற்றேன். மாலையில் ஆதாயமாக எட்டணு கிடைத்தது. ஒரு கடைக்குள் சென்று வயிருற உண்டேன். சிலமணி நேரம் ஊரெல்லாம் அலைந்தேன். உடலும் களைத் தது. உள்ளமும் சோர்ந்தது. நல்லாக உடலுக்கு ஒய்வு கொடுக்க உறக்கமே மருந்தாகும். உறங்குவது எங்கே?

-- l17 -س-
கையில் பணமில்லாத பரதேசி நான். சென்னையில் கடை கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. ஏதாவது கடையின் விருந்தையில் படுக்கலாமா? என்று விழிகள் சுற்றிச் சுழன் றன. பல கடைகளின் முகப்புகள் மிகவும் ஒடுக்கமாகவே தென்பட்டன. இனியும் இடந்தேடமுடியாத சோர்வினல் ஒரு கடையின் ஒடுங்கிய விருந்தையில் உடலைச் சரித் தேன். ஒய்வற்றுக் களைத்த உடலை உறக்கம் பற்றிக் கொண்டது. என்னை மறந்த தூக்கம். அந்தவேளை மழை பெய்தமையால் தூவாணம் என்மீது படத் தொடங்கி யது. அதை நான் பறுவாய் பண்ணுது உ ற ங் கி க் கொண்டேயிருந்தேன். இரவு பன்னிரண்டு மணியள வில் கடுமையான மின்னலுடன் கூடிய இடிமுழக்கத்து டன் பெருமழை கொட்ட ஆரம்பிக்கவே பெருந் துளிக ளாகத் தூவாணம் பட்டு எனது உடையை நனைத்து விட்டது. தெப்பமாகி விட்ட உடையுடன் தொடர்ந்து உறங்க முடியுமா? சேட்டைக் கழற்றி பிழிந்தேன். பின் னர் சேட்டைக் கட்டிக்கொண்டு வேட்டியைப் பிழிந்தேன்.
ஒரு மணித்தியாலமாக பெய்த மழை ஒய்வுகொண்ட பின்னர் மீண்டும் படுத்து ஈர உடையுடன் அசதி தீரும் வரை உறங்கினேன். sa
தினமும் தர்பேசி வியாபாரம் செய்து, இரவில் அதே இடத்திலேயே படுத்துறங்கி வந்தேன். கிடைத்த வருமா னத்தினல் மானம் போகாமல் என்னுடைய சாண் வயிற் றைப் பாதுகாத்துக்கொண்டு வந்தேன். இந்தக் கொடு மையான வாழ்வு எப்போ விடியப்போகின்றதோ? இரண்டு வாரங்களாகத் தர்பேசி வியாபாரஞ் செய்துகொண்டிருந் தேன். இருவார முடிவில் காலைவேளையில் வீதியில் ஒடிக் கொண்டிருந்த மோட்டார் வண்டியிலிருந்து ஒரு நோட் டீசைப் போட்டார்கள். அந்த நோட்டீஸ் ஹிந்தி மொழி யில் அச்சிடப்பெற்றிருந்தமையால் என்னல் வாசிக்க முடி யவில்லை. சக வியாபாரி ஒருவனிடம் அதனைக் கொடுத்து என்ன எழுதியிருக்கின்ற தென்பதை விளக்கும்படி கூறி னேன்.

Page 66
مست۔ ll8ا سے
'நியூடோன் ஸ்ரூடியோவினர் தயாரிக்கும் ஹிந்தி மீரா படத்தில் நடிப்பதற்குக் கூலியாட்கள் தேவை” என்று எழுதியிருப்பதாகத் தெரிவித்தான்.
அன்றைக்கே நியூடோன் ஸ்ரூடியோவை விசாரித்து சென்றேன். மீராபாய் என்னும் ஹிந்திப்படத்தில் வாளேந் திக் கொண்டிருக்கும் சிப்பாய்களுள் ஒருவனுக நிற்க வைத்துப் படம் பிடித்தனர். இப்படி வாளேந்திக்கொண்டு நின்றதற்காக பகலுக்கு நல்ல உணவு தந்தனர். கூலி யாக மாலையில் பத்து அணு கிடைத்தது.

- 19 - கன்னியப்பனின் கருணை:
பொழுது சாய்வதற்கு முன்னர் மயிலாப்பூர், மவுண்ட் வீதி என்பவற்றைச் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். அவ்வீதிகளில் மோட்டார் திருத்தும் நிலையங்கள் பல விருந்தன. எனக்கும் மோட்டார் திருத்தும் தொழி லில் பயிற்சியிருந்தமையால் அந்நிலையங்களுள் ஒன்றிலா வது வேலை பெறலாம் என்ற நம்பிக்கை. பல ஸ்தாப னங்களுக்கும் சென்று விசாரித்தேன். என்னுடைய துன்ப நிலைக்காக வருத்தப்பட்டார்கள். தங்களுடைய அனுதா பத்தைத் தெரிவித்து தொழிலாளர் சிலர் தங்களால் இயன்ற பணத்தைச் சேர்த்துச் சிறுதொகை வழங்கினர். ஆனல் வேலை தரவில்லை. அவர்கள் கொடுத்த தொகை யினல் பத்துத்தினங்கள் தட்டுப்பாடின்றிக் கழிந்தன ஆயினும் ஆங்காங்கு வேலைதேடாமலிருக்கவில்லை.
ஒருதினம் வெல்டிங் வேலைசெய்யும் தாபனம் ஒன் றுக்குச் சென்றேன். அந்த தாபனத்தின் முதலாளியின் பெயர் கன்னியப்பன் என்பது. கன்னியப்பன் நல்ல குண வான். என்னுடைய வரலாறை அவருக்குக் கூறியதும் அனு தாபப்பட்டு "நீங்கள் எங்கும் போகவேண்டாம் இங் கேயே நில்லுங்கள்' என்று பணித்தார். எனக்கு வெல் டிங் வேலையில் பயிற்சியில்லை. பங்களூரில் இந்தியாவில் கார் செலுத்த சாரதிப்பத்திரம் பெற்றிருந்தமையால் அங்கு திருத்தம் செய்வதற்குக் கொண்டு வந்த மோட் டார் வாகனங்களை உரியவருக்குக் கொண்டுபோய் கொடுக் கும் பணியைச் செய்தேன். கன்னியப்பன் இதற்காக கூலி தந்ததுமல்லாமல் மேலதிகமான சன்மானமும் அடிக் கடி தந்தார். ஆகவே காலச்சக்கரம் ஒரளவுக்குத் தட் டுப்பாடின்றி உருண்டது.
இங்கே பணிபுரியும்போது எங்கள் தாபனத்துக்கண்
மையிலுள்ள லோண்ட்றியில் என் உடைகளைச் சலவை செய்வித்தேன். ஒருதினம் சலவை செய்த உடைகளைப்

Page 67
- 20 -
பெறுவதற்காக லோண்ட்றி முதலாளியிடம் றிசீற்றைக் கொடுத்தேன். அவர் பார்த்துவிட்டு ' ஐயா உங்கள் உடைகளை இரண்டொரு தினம் கடந்துதான் எடுக்க வேண்டும்” என்ருர்,
'காரணம் என்ன?’ என்றேன். “ இங்கு சலவைத் தொழிலாளி சில தினங்கள் வராமல் நிற்கிருன். இத ஞல் உங்களுடைய உடைகளைச் சலவை செய்யத் தாம தம் ஏற்பட்டுவிட்டது” என்ருர் விநயமாக.
அவர் ‘சலவைத் தொழிலாளி வரவில்லை” என்று கூறி யதால், முதலாளி சலவைத் தொழிலாளியல்ல என்ற விட யம் எனக்குப் புரிந்தது. எங்களுரைப் போலவல்ல இங்கே உயர்சாதிக்காரர்களும் லோண்ட்றி வைத்து நடாத்தி வந்தனர். யாவரும் சலவை செய்ய வேண்டுமானல் தமது உடைகளை லோண்ட்றியிலேதான் கொடுத்தாக வேண்டும். சலவைத் தொழிலாளர் வீடுவீடாகச் சென்று அழுக்குத் துணிகளைச் சேர்த்து மூட்டையாகக் கட்டி முதுகில் சுமக்கவேண்டியதில்லை. லோண்ட்றி உரிமையா யாளர்கள் அழுக்கு உடைகளை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக்கொள்ளுவர். சலவைத் தொழிலாளர் பொருத் தம் பேசி அவற்றைச் சலவைசெய்து கொடுத்துவிடுவர். கன்னியப்பனிடம் பேசிக்கொண்டிருந்தபோது லோண்ட்றி முதலாளி எ ன் ன சமுகத்தவர் என விசாரித்தேன். லோண்ட்றி முதலாளி ஒரு பிராமணர் என்று தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியாகவும், புதுமையாகவுமிருந் தது. பிராமணர்களே இந்தியாவில் லோண்ட்றி நடத்து கிருர்களே. நான் என்னுடைய சமுகத்துக்குரியதான தொழிலை நாகரிகமாக ஏன் செய்யப்படாது? யாழ்ப்பா ணத்தில் இத்தொழில் புதுமையாக இருக்கும் என்றெல் லாம் நினைத்துக்கொண்டேன்.
வெல்டிங் கம்பனியாரிடம் திருத்தஞ்செய்த மோட் டார் வாகனங்களை உரிமையாளரிடம் சேர்ப்பித்து வந்

- 2 -
தேன். ஒரு தினம் திரு. M. K. தியாகராஜா பாகவதர் அவர்களின் மோட்டாரைத் திருத்தத்துக்குப் பின்னர் கொண்டுபோய்க் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. காரைப் பெற்றுக்கொண்ட தியாகராஜா பாகவதர் சன்மானமாக ஒரு ரூபா தந்தார்.
கன்னியப்பன் கம்பனியிலுள்ள தொழிலாளர்களும் என்னிடம் பட்சம் காட்டினர். கன்னியப்பனும் அன் பாகவும் கெளரவமாகவும் நடந்தார். ஆயினும் என்னு டைய உழைப்பு உணவுக்குமட்டுமே போதுமானதாக விருந்தது மேற்கொண்டு கன்னியப்பன் தரும் சன்மா னத்தை நம்பி எவ்வளவு காலத்துக்குப் பிறநாட்டில் நிற்க முடியும். ஊரையும் உறவையும் நினைத்துத் தனி மையில் வருந்துவேன். கடந்துபோன நிகழ்ச்சிகள் மனத் திரையில் சலனப்படமாகத் தோன்றிக்கொண்டே இருக் கும். தனிமையில் சோகச் சித்திரமாக இருப்பேன்.
கன்னியப்பன் இதைக் கவனித்து வந்தார். மெது வாக என்னை நெருங்கி ' என்ன செல்லையாபிள்ளை இப் படியே யோசிச்சுக்கிட்டு இருக்கிறீங்களே. ஊரைவிட்டு வந்து வெகுநாளாச்சு ஊருக்குப் போனற்ருன் மனம் அமைதியடையும். நீங்க ஊருக்குப் புறப்படுங்க. யாழ்ப் பாணம் வரைக்கும் டிக்கட் வாங்கித் தருகின்றேன்" என்ருர். இந்த வார்த்தைகள் வயிற்றில் பாலை வார்த்
தன. " உங்களுக்குச் சிரமம் அதிகம் வேண்டாம். தலை மன்னுர்வரை டிக்கட் பெற்றுத் தாருங்கள். அப்பால் நான் பார்த்துக்கொள்கின்றேன் " என்று கூறினேன்.
அன்று பிற்பகல் புகையிரத நிலையத்துக்கு வந்து தனுஷ் கோடி வரையும் டிக்கட் பெற்றுத் தந்ததோடு கைச் செலவுக்கும் இரண்டு ரூபா தந்தார் கன்னியப்பன்.
6

Page 68
- 22 -
தாய்நாடு திரும்பினேன் :
சென்னையை விட்டுப் புறப்பட்டேன். என்னுடைய சோக வரலாற்றின் நிழல்போன்ற அந்த ஊர் நினைவி னின்றும் விடுபட ஊர்பற்றிய எண்ணமே புகுந்துகொண் டது. எப்போது இலங்கைக் கரையை அடைவோம் என்ற துடிப்பு என்னுள் ஊடுருவி நின்றது.
தனுஷ்கோடிக்கு வருமுன்னரே கையிலிருந்த இரண்டு ரூபாவும் தீர்த்துவிட்டது. அப்புறம் கப்பல் மூலம் தலை மன்னரை யடைந்தேன்.
எனது ஜனன பூமியாகிய இலங்கையை அடைந்த போது கையில் ஒரு சதமும் இல்லை. கையில் பணமில்லை யென்ருல் மனமும் சோர்வுறும் போலும். சோர்ந்த உள்ளத்துடன் மன்னரை நோக்கி நடந்தேன். மன்னர்ப் பாதையின் நிழல் மரங்களில் குந்தியிருந்து இளைப்பாறுவ தும், நடையைத் தொடர்வதுமாக சிலமணி நேரங்கள் கடந்த பின்னர், மதியவேளை மன்னர்ப் பட்டினத்தை அடைந்தேன்.
பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டமாகவே இருந்தது. அங்கேயுள்ள பஸ்சாரதிகளும், கொண்டக்டர்களும் என் னைக் கண்டுகொண்டனர். பிரிந்த நண்பர்களைக் கண் டால் ஓர் உற்சாகம் பிறப்பதை எதுவுமே தடைசெய்ய Փւգաng/. ,
சாரதிகளும் கொண்டக்டர்களும் 1 வா சாப்பிடு, தேநீர் குடி " என்றெல்லாம் உபசாரம் செய்தனர். பசியும் துயரும் விடுபட்டுப் போனதாக உணர்ந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் தெரிந்தவர்களுடன் பழகும் போது மனம் இயற்கையிலேயே பூரிப்புப் பெற்று விடு கின்றது பலரும் தனித்தனியாகத் தமது பஸ்ஸில் யாழ்ப் பாணம் வரும்படி அழைத்தனர். எனக்கு உடனடியாக யாழ்ப்பாணம் திரும்ப விருப்பமில்லை.

-سے l23 --سے
நான் மன்னுரை அடைந்த காலத்திலேதான் மடுப் பதி உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனல் கிராமங்களிலுள்ள யாத்திரிகர்களின் கூட்டம் அதிகமா கக் காணப்பட்டது. யாத்திரிகர்களுக்கு வசதியாகப் பல பஸ் வண்டிகள் சேவைக்கு நின்றன. ஒருசில சாரதி இல்லாத பஸ்களும் அங்கே இருந்தன. ஒரு முதலாளி மடுவுக்கும் மன்னருக்கும் பஸ் செலுத்த வரும் படி அழைத்தார்; சம்மதித்துக்கொண்டேன்.
சில வாரமாக மடுவுக்கும் மன்னருக்கும் இடையி லோடும், சாரதிகள் இல்லாத பஸ் வண்டியைச் செலுத் தியமையால் இருபத்தைந்து ரூபா கிடைத்தது.
இருபத்தைந்து ரூபாயுடன் சுமார் இரண்டரை ஆண் டுகளுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்குப் பயணமானேன். யாழ்ப்பாணம் நெருங்க நெருங்க மனதில் வேதனையும் பதட்டமும் பற்றிக்கொண்டன. என்ன செய்வது? எவ் வாருயினும் ஊருக்குச் செல்வோம் என்ற திடத்தினல் யாழ்ப்பாணப் பட்டினத்தை அடைந்தேன். ஆயினும் என்னுடைய மனைவி வசிக்கும் கொக்குவிலுக்குச் செல்ல @ນີ້ຄໍາ ທີ່ລ). N
யாழ்ப்பாணத்திலிருந்து வேறிடங்களுக்குச் செல்ல வேண்டிய சாரதி இல்லாத வண்டிகளைத் தற்காலிகமா கச் செலுத்தி வந்தேன். மாலே வேளையில் கடையில் உணவு கொண்டதும் அறிந்தவர்களின் கடையிற் படுத் துக்கொள்வேன். காலையில் ஏ தா வது வண்டியைச் செலுத்த வசதி கிடைக்கும். இரவு கூலிப் பணத்தின் குடியிலும் சாப்பாட்டிலும் கழிந்தது.

Page 69
-- l24 --س-
மனைவியின் கையமுது :
இரண்டு வாரத்துக்குப் பின்னர் மாலையில் வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு மது அருந்திய போதை யுடன் பஸ் நிலையத்துக்கு வந்தேன். ஏழுமணி இருக் கும் “தம்பி, தம்பி" என்ற பணிவான குரல் கேட்டது. அக்குரல் பழக்கப்பட்ட குரலாகையால் திரும்பிப் பார்த் தேன். என் மாமன் ஒரு காரில் சாய்ந்தபடி நின்றர். அவரைக் கண்டதும் என்னுடைய வெறி பறந்தது. அமைதியாக அவரண்டை சென்றேன்.
'உன்னைக் காணுது என்னுடைய பிள்ளை பெரிய கஷ் டப்படுகிருள். ஏன் வீட்டுக்கு வராமல் நிற்கிருய்? இவ்வ ளவு காலமும் எங்கே போனநீ? ஊர் தேசம் விட்டுப் போகவா என் பிள்ளையைத் தந்தேன்” என்று அழுதபடி G35 ''L-imrii .
* g L-Gir தொல்லையாற்றன் ஊரைவிட்டு ஓடினேன்" என்றேன்.
“சரி சரி ஊருக்கு வந்த நீ ஏன் வீட்டுக்கு வராமல் நிற்கிருய்? வா" என்முர். எனக்கும் வீட்டுக்குச் செல் வதற்கு மட்டற்ற ஆவ்ல்தான். ஆயினும் பிடிவாதமாக வரமாட்டேன் என்று மறுத்தேன். மாமனர் கேவிக்கேவி அழுது கெஞ்சத் தொடங்கிவிட்டார். அந்த முதிர்ந்த மனிதனை அப்படி நீண்ட நேரத்துக்கு அழவைக்க எனக்கு மனமில்லை. எனவே ஒருவாறு சம்மதித்தவன் போல் உடன்பட்டேன்.
மாமனர் என்னை அழைத்துச் செல்வதற்கு வாடகைக் காரிலேயே வந்தார். அந்தக் கார்ச் சாரதியும் வந்து எங்களுடைய உரையாடலில் கலந்து கொண்டார். அன்று இரவு எட்டு மணிவரையில் வீட்டுக்குப் புறப்பட்டோம். இதுவரை எத்தனையோ நண்பர்களையும், உறவினர்களை யும் இந்தியப் பயணத்துக்குப் பின் சந்தித்துவிட்டேன்.

- 25 -
எனக்குரியவளான சரஸ்வதியை எந்த முகத்துடன் பார்ப் பேன் என்ற சிந்தனையில் கலங்கினேன். அப்போதைய என்னுடைய மனநிலையைக் கவனிக்காத மோட்டார் வண்டி சுமார் பதினைந்து நிமிடத்தின் பின் எங்கள் வீட்டின் முன் சென்று நின்றது.
அங்கே புகையுண்ட சித்திரம் போல் துன்பத்தினல் கறுத்து வாசலைப் பார்த்தபடி சரஸ்வதி நின்ருள்.
கார் நின்றது; காரைத் திறந்துகொண்டு யா ன் வெளியே காலடி எடுத்துவைத்ததுதான் தாமதம் என் கால் களை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவளது கண்ணிர்த் துளிகள் என் கால்களைக் கழுவின. என்னுடைய கண்ணிலிருந்து புறப்பட்ட சோகநதி அவளது உச்சியை அபிஷேகித்தது. கால்களைப் பிடித்த கரங்கள் விடுபட வில்லை. அவளது கேசத்தைக் என் கைகள் வருடின. நீண்டநேரச் சோகப் புலம்பலுக்குப் பின் அவள் எழுந் தாள். அவளது முகத்தைப் பார்க்கத் திராணியற்ற என் கண்கள் நிலத்தையே நோக்கின. அவள் என் பிரி வினற் பட்டவேதனைகளை யெல்லாம் சொல்லி அழு தாள். நானும் அழுதேன். ஒருவாறு தேறிய பின்னர்,
* அத்தான் உங்களுடைய துன்பத்தில் எனக்குப் பங் கில்லையா? ஊரைவிட்டுச் சென்று என்ன கஷ்டப்பட்டீர் களோ ? அப்படிப் போன நீங்கள் ஒரு கடிதமாவது போடப்படாதா? அவ்வளவுக்கு நான் என்ன கொடுமை செய்தேன்?" என மீண்டும் புலம்பினள்.
"கடிதம் போட்டால் தேடி வந்துவிடுவீர்களே! கடன் காரர் அறிந்தால் தொல்லையென்றே இப்படி நடந்தேன் சரஸ்.” சிறிது நேரம் மெளனம் நிலவியது. ஆனல் சரஸ்வதியின் கண்கள் அழுகையை நிறுத்தவில்லை. எனது
விழிகளும் கண்ணிர்க் கடலுள் நீந்தின. இந்த நிலையை நீடிக்கவிடாது மாமாவும் மாமியும் வந்து ' சரி அழுது என்ன காணப் போகிறீர்கள்?” என்று ஆறுதல் கூறி

Page 70
ستم 126 --
ஆளுக்கொருவராகப் பிடித்திழுத்தனர். என் வரவைக் கேள்விப்பட்ட அயலில் உள்ள உறவினர்களும் வந்து எம்மைத் தேற்றினர்.
சில மணித்தியாலங்கள் கழிந்துவிட்டன. சரஸ் மனம் தேறியவளாக ** அத்தான் குளித்துவிட்டு வாருங்கோ சாப்பிடுவதற்கு ” என்ருள். குளித்துவிட்டு வந்த எனக்கு இரண்டரை வருடங்களுக்குப் பிறகு மனைவி அமுது படைத்தாள். அன்பு கலந்த அந்த உணவின் சுவைக்கு நிகரேது?

- 127 -
மாமாவுடன் வாக்குவாதம்.
வீட்டிற் கூடியவர்கள் வெளியேறிவிட்டனர். சாய் மனை நாற்காலியில் படுத்துக் கிடந்தேன். வானத்தில் பிரகாசிக்கும் நிலவின் ஒளி உக்கி உலர்ந்த கிடுகுகளின் நீக்கலுக்கூடாக வழிந்தது. அதன் மூலம் வீடு பலநாட் களாக வேயப்படவில்லை என்ற உண்மை துலங்கியது. இதுபற்றிச் சரஸ்வதியை விசாரித்தேன். காசில்லாமை யால் வீடு வேயப்படவில்லை என்ருள்.
வந்ததும் வராததுமாக கவிந்து கிடக்கும் துன்பத்தை நீக்குவது எப்படி? என்று பலவாறு சிந்தித்தேன். எவ் விதமேனும் நன்ருக உழைத்து வாழ்க்கையைப் புனருத் தாரணம் செய்யவேண்டுமென்று சங்கற்பம் செய்து கொண்டேன்.
தினமும் காலையில் பஸ் நிலையத்திற்கு வருவேன். சாரதிகள் சிலர் குளிப்பதற்காக ஒய்வு எடுப்பர். அவ் வேளை தம் வண்டிகளை செலுத்தும்படி பணிப்பார்கள். இவ் வாறு மாறி மாறிப் பலரது வண்டிகளைச் செலுத்தினேன். குடிப்பதையும் ஒர ளவு க் கு நிறுத்திக்கொண்டேன். உழைத்த பணத்தை மனைவியிடம் ஒழுங்காக வழங்கு வேன்.
ஒருநாள் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தேன். என் வரவை வீட்டுநாய் அறிவித்தது. அவ்வேளை மாமா யாரையோ அவதூருகப் பேசிக்கொண்டிருந்தார். எவரைப் பேசுகிருர் என்பது எனக்குத் தெரியாது. * உன்னுடைய தந்தை யாரைப் பேசுகிருர்? “ என்று சரசுவிடம் விசா ரித்தேன். வீடு வேயாமல் இருப்பதனல் அப்பு உங்க ளைப் பேசுகிருர் என்ருள்.
நான் நல்லாக வாழ்ந்த சமயத் கில் வீடு வேய்வ தற்காக உரிய பருவத்தில் பணம் கொடுத்தனுப்பினுலும் அதைப் பெறுவதற்கு மறுப்பவர் மாமா.

Page 71
- 128 -
இன்றைய துன்பநிலையை அறிந்துகொண்டும் அது பற்றிச் சிந்திக்காமல் பேசுவதை என்னுற் பொறுக்க முடியவில்லை. ஆத்திரம் மனதில் மூண்டது. பேச்சுக்குப் பேச்சை யானும் பேசினேன். இருவருக்கிடையேயும் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. மாமி மாமாவை ஒருவாறு அடக்கினள். சரஸ்வதி என்னைத் தேற்றினுள். அன்று இரவு முழுவதும் எனக்கு நித்திரை வரவில்லை.
நன்ரு கப் புலருமுன் எழுந்து எனது நண்பன் ஒருவ னின் காரைக்கொண்டுவந்தேன். தட்டுமுட்டுச் சாமான் களுடன் சரசுவையும் தம்பி நடராசாவையும் ஏற்றிக் கொண்டு கைதடி நோக்கிப் புறப்பட்டேன்.
சீனியப்புவின் வளவில் ஒரு கொட்டில் காலியாக இருந்தது. அங்கே சாமான்களை இறக்கி வைத்தேன். அக்கொட்டிலையே வாசஸ்தலமாக்கி சில காலத்துக்குத் தனிக்குடித்தனம் நடாத்தலானேன்.

-س- l29 --
கொழும்பு பவ்லவண்டிச் சாரதி:
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் செல்லும் பஸ் வண்டிச் சாரதியாக நிரந்தரவேலை கிடைத்தது. யாழ்ப் பாணத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் ஒரே நேரத்தில் இருவண்டிகள் புறப்படும். இவ்விரு வண்டிகளும் அநுராத புரத்தில் சந்திக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு சென்ற பஸ்சைக் கொழும்பிலிருந்து வந்த சாரதிகளும் கொண்டக்டர்களும் பொறுப்பேற்பர். கொழும்பிலிருந்து வந்த வண்டியை நாம் பொறுப்பெடுப்போம். நீண்ட தூர மாக இருந்தமையால் ஒவ்வொரு பஸ் வண்டியிலும் இரு சாரதிகள் கடமை பார்ப்பர். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும் வண்டியிலேதான் யான் கடமை பார்த்து வந் தேன்.
எனக்கு கொழும்பு வியாபாரி ஒருவரின் தொடர் பேற்பட்டது. யாழ்ப்பாணக் கோழிமுட்டை, பச்சை மிள காய் போன்ற பொருட்களை நான் கொழும்பு பஸ்ஸில் ஏற்றிச் சென்று அவற்றைக் கொழும்பிலுள்ள வியாபாரி ஒருவரிடம் கொடுப்பேன். எனது பொருட்கள் வியா பாரிக்கு ஒழுங்காகக் கிடைக்கும் வண்ணம் எனது செல் வாக்கைப் பிரயோகித்து வந்தேன்.
கோழிமுட்டை, பச்சை மிளகாய் போன்றவற்றைச் சீனியப்புவும் தம்பி நடராசாவும் ஊருக்குள் திரிந்து மலி வாகக் கொள்முதல் செய்வர். காலையில் ஊரில் கொள் முகல் செய்த பொருட்களை இரு பார்சலாகக் கட்டிக் கொண்ட பின்னர் மாலையில் என் பஸ் வருகையை எதிர் நோக்கிக் கைதடியிற் காத்திருப்பர். அவ்விடத்தில் யான் பொறுப்பேற்றுக்கொள்வேன். ஒழுங்காக விற்பனை செய் ததால் இலாபகரமாக அவ்வியாபாரம் அமைந்தது.
சரஸ்வதியின் சிக்கனத்தாலும் எனது நீடித்த உழைப்
பாலும் ஓரளவுக்குக் கடன்களை அடைக்க முடிந்தது.

Page 72
-سس 130 -
இந்தநிலை நீடிக்கப்படாதா? 'கற்பகத்தைச் சார்ந்தார்க் கும் காஞ்சிரஞ்காய் கிடைப்பதற்கு முற்பவத்தில் செய்த வினையே காரணமாகும்” என்பர். அது உண்மையே யாழ்ப் பாணம் - கொழும்பு பஸ் சேவை நீடிக்கவில்லை. இதனல் என்தொழில் பறிபோயிற்று. வீட்டிற்குச் சோர்வுடன் வந்தேன்.
இரண்டாவது யுத்தம் தொடங்கியது. பழைய இரும்பு, போத்தல்கள், உலோக வகைகளுக்குக் கிராக்கியுண்டா னது. இந்த விஷயம் மற்றவர்களுக்குப் புலப்படுவதற்கு முன்னர் வீடுவீடாகச் சென்று குறைந்த விலையில் அவற் றைக் கொள்முதல் செய்தேன். எனது உறவினனன இளை யவனுடைய வண்டியைப் பிடித்து ஏற்றிச்சென்று யாழ்ப் புாணத் கில் விற்பதனல் அதிக இலாபம் பெறமுடிந்தது.

- 13f
லோண்ட்றி உதயம்:
ஒரு தினம் மாட்டுவண்டியில் இளையவனும் நானும் கொள்முதல் செய்த இரும்பு உலோகச் சாமான்களை நல் லூர் வழியாக ஏற்றி வந்தோம். நாம் வரும் வீதி வழி யாக நமது சமுகத்தைச் சேர்ந்த தொழிலாளி இரண்டு அழுக்குப் பொட்டணிகளைத் தோளில் மாட்டி மிகச் சிர மத்துடன் சுமந்து வந்துகொண்டிருந்தான். அந்த மணி தனைக் காட்டி, இளையவனிடம் "" நமது ஆட்கள் புத்தி யிற் குறைந்தவர்கள். ஆனபடியாற்றன் இப்படிக் கஷ் டப்படுகிருர்கள்” என்றேன்.
**ஏன் என்ன கஷ்டம்? இது எமது தொழில். இதை இப்படிச் செய்யாமல் எப்படிச் செய்வது? நீ இந்தத் தொழில் செய்யாதபடியால் இப்படிச் சொல்லுகிருய்" என்ருன்.
*"அட பைத்தியக்காரா, நான் தொழிலுக்கெனச் சொல்லவில்லை, தோளில் அழுக்கு மூடைகளை வைத்து இவ்வளவு கஷ்டப்பட்டுச் சுமக்கத் தேவையில்லை. இருந்த இடத்திலேயே தொழில் செய்யலாம். இந்தியாவில் ஆட் கள் தமது அழுக்குடைகளைத் தாமே கொண்டுவந்து கடையினிற் கொடுப்பர். அந்தக் க  ைட களு க்கு லோண்ட்றி என்று பெயர். லோண்ட்றி வைத்திருப்ப வர்களில் பலர் உயர்சாதிக்காரர்கள்" என்றேன்.
இதைக் கேட்டதும் இளையவன் அதிசயப்பட்டான். மேலும் நான் 'நம்மைப் போன்ற சலவைத் தொழிலா ளர்கள் சலவை மட்டும்செய்து கொடுப்பார்கள். எங் களைப்போல் அழுக்குத் துணிகளை வீடுவீடாகச் சென்று எடுக்கவேண்டியதில்லை. லோண்ட்றிக் காாரிடம் பொருத் தம் பேசித் துணியை எடுப்பர். இது நல்லமுறைதானே? இளையவன், ஏன் நாமும் ஒரு லோண்ட்றி வைத்தால் என்ன?’ என்று எனது மனதில் ஏற்கனவே திட்டமிட் டிருந்த எண்ணத்தைத் தெரிவித்தேன்.

Page 73
- 32 -
"நீ சொல்வது போல லோண்ட்றி இந்தியாவிலே தான் சரிவரும். இங்கு சரிவராது.” உயர்சாதிக்காரர்கள் உடுப்பைக் கொண்டுவந்து நம்மிடம் தரமாட்டார்கள். சிறுபான்மைத் தமிழர்கள்தான் உடுப்பைக் கொண்டு வந்து போடுவார்கள். அது பிழை, இந்த வேலை எங்க ளுக்குச் சரிவராது" என்ருன்.
* இந்த இருபதாம் நூற்ருண்டிலுமா இப்படிச் சிறு பான்மை யென்று பிரித்துப் பேசுகிருய், அவர்களும் மணி தர்கள் தானே, நாம் அவர்களது உடைகளைச் சலவை செய்தாலென்ன? என்று மேலும் வாதத்தைத் தொடர்ந் தேன்.
** அது எப்படிச் சரிவரும் ” என்ருன் இளையவன்.
* நாம் மற்றவர்களை மதித்தாற்ருன் நம்மையும் உயர்ந்தவர் மதிப்பர்" என்றேன்.
"நாம் அப்படிச் செய்தால் நம்முடைய ஆட்களே நம்மைப் பிரித்து வைத்துவிடுவார்கள்.” இளையவனின் இந்தப்பதில் எனக்குச் சிரிப்பைத் தந்தது. தன்னை மற்ற வர்கள் தாழ்த்துவதைப்பற்றிச் சிந்தியாது, தான் மற்ற வர்களைவிட உயர்ந்தவன் என்று எண்ணுகின்ற மட மையை என்ன சொல்லுவது.
**இந்த உலகில் எல்லோருமே சேர்ந்து முன்னேற்ற வழியை முதலில் ஆரம்பித்ததில்லை. யாராவது ஒருவன் தான் துணிந்து முன்னே செல்லவேண்டும். காலப் போக் கில் மற்றவர்களும் தொடர்வார்கள்."
இவ்வாறு யான் கூறியதும் இளையவனின் மனம் ஒர ளவுக்குப் பக்குவம் பெற்றது. நான் உற்சாகமாகச் "சரி கடையை நான் திறக்கிறேன், எனக்கு எங்களுடைய தொழிலில் பயிற்சியே கிடையாது, நீ தான் சலவை செய்துதரவேண்டும் ” என்றேன். “ஆம்” எனச் சம்மதித் தான். ஒரு துண்டுக்கு ஆறு சதம், அறவிட்டு சலவை

-- 133 , ح
செய்யுங் கூலியாக மூன்று சதம் உனக்குத் தருவேன். உடைகளைத் தோய்த்து உலர்த்தித் தருவது உன்னுடைய வேலை" என்றேன் அதற்கும் அவன் ஒத்துக்கொண்டான்.
வண்டி யாழ்ப்பாணத்தை அடைந்தது. கொண்டு வந்த பழைய இரும்புகளையும் போத்தல்களையும் எண்பது ரூபாவுக்கு விற்றேன். எனது கொள்முதல் இருபத்தி ரண்டு ரூபாவே. யான் எந்தத் திட்டத்தையும் விரைவி லேயே செயல்படுத்த முயல்பவன். இளையவனுடன் முடிவு செய்த அன்றைக்கே லோண்ட்றி யொன்றைத் திறக்கும் வேலையை மேற்கொள்ளலானேன்.
இப்போது மின்சார வீதியாக அமைந்திருக்கும் வீதி அக்காலத்தில் ஒரு கையொழுங்கையாகும். பெரிய கடை மீன் மார்க்கட்டுக்கு வருபவர்களுக்கு மலசலகூட வசதி யிருப்பதில்லை. உடல் உபாதையை சிலர் இந்த இடத்திலே தீர்த்துக்கொள்வதால் துர்க்கந்தம் வீசியபடியே இருக் கும். இந்த ஒழுங்கையில் ராணித் தியேட்டருக்கு அண் மையில் உள்ள கடையில் அக்காலத்தில் ஒருவர் அப்ப ளம் தயாரித்து விற்றுவந்தார். அந்த அப்பள வியாபா யிடம் இரண்டொரு நண்பர்களுடன் சென்றேன். அங்கே யுள்ள மூன்று கடைகளுள் ஒன்றை மட்டுமே அப்பள வியாபாரி வாடகைக்கு எடுத்திருந்தான். ஆனல் கடை உரிமையாளருக்கு ஒரு கடைக்கு மட்டுமே வாடகை கொடுத்துக்கொண்டு மூடப்பட்டிருக்கும் மற்றக் கடை களைத் த ன க் கு வசதியானவர்களைத் தங்கச்செய்து வாடகை அறவிட்டுக்கொண்டிருந்தான். இது உரிமை யாளருக்குத் தெரியாது.
எங்களைக் கண்டதும் அவன் 'ஏன் வந்தது?" என் முன். “பூட்டப்பட்டிருக்கும் கடைகளுள் ஒன்று எமக்குத் தேவை” என்ருேம்.
அப்பள வியாபாரிக்கு நாம் அங்கே வந்து கடை திறப்பது பிரியமில்லை. தனது குட்டு அம் பல மாகி

Page 74
- 34 -
விடுமோ என்று அஞ்சினன். ஆகவே “ கடையை என் னிடம் கேட்டுப் பயனில்லை. முதலாளியிடம் கேட்டே பெறவேண்டும்” என்றன்.
அவனது திருட்டுத்தனத்தை நாம் புரிந்துகொண் டோம். எனது நண்பர்களுள் ஒருவர் அவனைப்பார்த்து 'நீ எங்களை ஏமாற்றப்பார்க்கிருய். உன்னுடைய காரி யம் எங்களுக்குத் தெரியும். இந்த ஊரில் பொட்டணி தூக்கியும், மணிப்பெட்டி வியாபாரஞ் செய்தும் சீவிக் கின்ற அங்காடி வியாபாரிகளைக் காலியான கடைகளில் தங்கவைத்திருக்கிருய். அவர்களிடம் ஆளுக்கு ஒன்பது ரூபா சாப்பாட்டுக்கும் ஒரு ரூபா படுக்கைக்குமாக நீ பத்துரூபாய் வாங்கிற சங்கதி தெரியும். அந்த அங் காடி வியாபாரிகளிடம் நாம் அறிந்துதான் வந்திருக்கி ருேம்" என்ருர் .
இவ்வாறு அவனது நடத்தைகளை நாம் அம்பலப் படுத்தியதும் அவன் வெலவெலத்துப் போனன். மேலும் நண்பன் “நீ இவரையும் இந்த இடத்தில் வைத்திருப்ப தால் உனக்கும் நன்மை. இவர் ஊரறிந்த ஆள் இங்கே பிறந்தவர். நீயோ அந்நிய தேசத்தவன். உன்னுடைய காரியங்களுக்கு ஒத்தாசையாக இவர் உனக்கு உதவு வார்’ என்ருர், அந்த அப்பள வியாபாரி வேண்டா வெறுப்பாக இசைந்தான். அவனிடமிருந்து திறப்பைப் பெற்று கடையைத் திறந்தோம். அங்கே படுக்கைகளும் தலையணைகளுமாக இருந்தன. அவற்றை யெல்லாம் அப் புறப்படுத்திவிட்டுச் சுத்தஞ் செய்த பின்னர், புதிய பூட் டொன்று வாங்கிப் பூட்டினுேம், இக் கடைக்கு மாதம் பத்து ரூபா தருவதாகப் பொருந்திக்கொண்டோம்.
கடையை ஏற்பாடு செய்த பின்னர் வெற்றிப் பெரு மிதத்துடன் கைதடிக்குத் திரும்பினேன். சரஸ்வதிக்கு யான் லோண்ட்றி திறக்கின்ற சங்கதியைச் சொன்னதும் வெகு உற்சாகம். எனது சீனியப்புவுக்கு இது பிடிக்க வில்லை; அவர் வெளிப்படையாகவே * நீ செய்கிற காரி

-سس- l35 --
யம் எனக்குப் பிடிக்கவில்லை உன்னுடைய சலவைக் கடை யில் ஒருத்தரும் உடுப்பு வெளுக்கமாட்டார்கள்” என்ருர்: சீனியப்பு இவ்வாறு கூறியதை எனது மனைவி கேட்டுக் கொண்டிருந்தாள். குலத்தொழிலில் ஈடுபட்டு நான் உழைப்பதை அவள் விரும்பினள். பயிற்சி இன்மையி னல் வெற்றி பெறுவேனே என்ற சந்தேகம் அவளுக்கும். இல்லாமலில்லை.
என்னுடைய திட்டம் அடுத்துவரும் சித்திரை வரு டப் பிறப்பன்று லோண்ட்றியை ஆரம்பிக்கவேண்டுமென் பது. இதற்கான ஆயத்தங்களைத் செய்துகொண்டிருந் தேன். சித்திரை வருடத்துக்குச் சில தினங்களே இருந் தன. சீனியப்பரிடம் சென்று பணம் கடன் கேட்டேன். புதிய முயற்சியில் நான் பயன் பெருது நட்டத்துக் குள்ளாவேன் என்ற காரணத்தினுல் பணம்தர மறுத்து விட்டார். இதைக் கவனித்துச் கொண்டிருந்த சரஸ் வதியும் ஆத்திரமுற்ருள்.
தனிமையில் சரஸ்வதி அவரிடம் பணம் கேட்டதைப் பற்றிக் குறை கூறினுள். எனது திட்டங்களை எவருமே ஆரம்பத்திலிருந்து மதிப்பவர் குறைவு. இதையிெல் லாம் சுட்டிக்காட்டினள். ஆனல் நான் லோண்ட்றியை, ஆரம்பிப்பதற்கு தனது முழு ஆதரவையும் தந்தாள். சீனி, யப்புவிடம் ஒரு வாங்கு இருந்தது. அது லோண்ட்றிக்" குப் பயனுகும். எனவே அவரிடம் " பணம் இல்லாவிட் டால் காரியமில்லை உங்களுடைய வாங்கைத் தாருங்கள் துணிபோட்டு மினுக்க உதவும் " என்றேன். வேண்டா வெறுப்பாகக் * கொண்டுபோ " என்ருர், இளையவனு டைய வண்டியில் அதனை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தோம். கடையில் அதனை இறக்கி வைத்துக் கையி லிருந்த சில்லறையில் கூலியாக இளையவனுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டேன். உள்ளதுக்கு வள்ளிசாக சில கள்ளிப் பெட்டிகளைச் சேகரித்தேன். வாங்கை ஒரு ஆசாரியைக்கொண்டு இரண்டாக அரிந்து கள்ளிப்

Page 75
- 136 -
பெட்டிகளுடன் இணைத்து அதனைச் செம்மைப்படுத்தி னேன். ரீசீற் அடிக்கப் பணமில்லை. ஒரு நண்பனிடம் பெற்ற மூன்று ரூபாவுடன் யாழ்ப்பாணம் விவேகானந்தா அச்சகத்துக்குச் சென்றேன். அவர்களிடம் மோகன விலாஸ் என்ற பெயருடைய லோண்ட்றி ரீசீற் அச்சிடும்படி கூறி னேன். இவ்வாறு லோண்ட்றியைத் திறப்பதற்கான ஆயத் தங்கள் யாவும் ஒரளவு நிறைவுற்றன. w
சித்திரை வருடப்பிறப்பன்று தம்பி நடராசாவையும் அழைத்துக்கொண்டு லோண்ட்றிக்கு வந்தேன். குத்து விளக்கை ஏற்றிக் கடையைத் திறந்துவிட்டேன்.
நாட்கள் சிறுக ஊர்ந்தன. நான் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் கிடைக்கவில்லை. மேல் சாதிக்காரர் கள் தங்கள் உடைகளைக் கொண்டுவந்து போடவில்லை. தாழ்ந்த சாதிக் காரணின் உடையுடன் தங்கள் உடைகள் கலந்துவிடுமென்று கருதினர். அது மாத்திரமல்ல சல வைத் தொழிலாளர் அழுக்குடைகளை வீடுவீடாகச் சென்று எடுப்பதற்கு மாரு சுத் தாம் இப்படிக் கையில் சுமந்து வருவதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சல வைத் தொழிலாளர்களும் தாம் தாம் மட்டும் வாழ வேண்டுமென்று கரு திய காரணத்தால் ஒற்றுமையை அநுசரிக்கவில்லை. ஆகவே அவ்வபபோது வழிப்போக்கர் உடைகளைத் தருவர். நாட்கள் நகர்ந்தன. மாதங்க ளாகி மறைந்தன. பலனே பூஜ்யமாகவே இருந்தது. சிறுபான்மைத் தமிழர்களும் வழிப்போக்கர்களுமே உடை களைக் கொண்டுவந்து போட்டனர். போதிய உடைகள் வரவில்லை. உழைப்போ இல்லை. வறுமை வாட்டத் தொடங்கியது. மனைவியும் வாடினள் ஆனல் அவள் என்னுடைய திட்டமான இலட்சியங்களைக் கு லை க் க விரும்பவில்லை.
சீனியப்பு இந்த நிலையைக் கண்டு பல்லுக்குப் பதமாக்
கிப் பேசினர். அவ்வப்போது எனது சமுகத்தவர் லோண்ட்றிக்கு வருவர். உண்மையை ஒழிக்காமல் கூறு

- l37 حس
வேன். அநுதாபப் படுபவர்களாக நடித்தார்களே தவிர உதவ எவரும் முன்வரவில்லை.
அக்காலத்தில் சோற்றுக்கடைகளில் ஒரு சாப்பாடு பதினைந்து சதம். வரும்படி குறைவாகையால் அப்படி இப்படிப் புரட்டி ஒரு சாப்பாடு எடுப்பேன். அந்தச் சாப்பாட்டை நன்ருகக் குழைத்துத் தம்பியைக் கையை நீட்டச் சொல்லிக் கொடுப்பேன். அவனுக்குப் பசி அதிக மென்ருல் நெடுக நீட்டிக்கொண்டே யிருப்பான். இத ணுல் சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் தண்ணிர் குடி பேன். அப்படிக் குடித்தால் அவனுக்கும் எனக்கும் அரைவயிற்றை நிரப்புவதற்குப் போதியதாகும். கடைக்கு வருபவர்கள் புகைத்துக் குறையாக எறிந்த பீடி, சிக ரட் துண்டுகளைக் காலால் மிதித்து மறைத்துப் பின்னர் எடுத்துப் புகைப்பேன்.

Page 76
---س- 1383 --
விளம்பரம் கைகொடுத்தது :
நிலைமை கட்டுக்கடங்கா வகையில் வறுமை சூழ்ந் தது. எனது தொழில் சரியான முறையில் இயங்கவில்லை. இதைச் சமாளிக்க யான் முன்பு பஸ் செலுத்திய முத லாளிமார்களின் வீடுகளுக்குச் சென்று ‘நான் லோண்ட்றி வைத்திருக்கின்றேன் உங்கள் உடைகளை எனது லோண்ட் றியில் போடுங்கள், நீங்கள் கைகொடுங்கள் ' என்று கெஞ் சினேன். இது விடயமாக ஏனைய பஸ் சாரதிகள், கொண் டக்டர்களுக்கும் தெரிவித்தேன். இதன் பயனக இடை யிடை அவர்களும் உடைகளைத் தந்தனர். ஆனுலும் எதிலும் ஒரு முன்னேற்றம் கிட்டவில்லை.
ஒரு முறை ஒரு முஸ்லீம் வியாபாரி எனது கடைக்கு வந்தார். என்னுடைய அகத்தின் உணர்ச்சிகளைக் காட் டியது என் முகம். என்னுடைய முகத்தையே சிறிது நேரம் பார்த்தார். கடையில் தொழில் துப்புரவாக இல்லை என்பதையும் புரிந்துகொண்டார்.
* செல்லையா தொழில் சரியாக நடைபெறவில்லை யென்று தெரியுது. இதுக்கு ஒரு வழி சொல்லுகிறேன் கேள். எங்களுடைய முஸ்லீம் பகுதியில் ஒழுங்கான சல வைத் தொழிலாளர் இல்லை. எங்களுடைய ஆட்கள் சலவைத் தொழிலாளி இன்மையால் வெகு சிரமப்படு கின்றனர். உம்முடைய லோண்ட்றியைப் பற்றி ஒரு சிறிய விளம்பரம் அச்சிட்டு எங்கள் பகுதியில் விநியோ கஞ் செய்தால் அங்கேயுள்ளவர்கள் கட்டாயம் துணி யைக் கொண்டுவந்து போடுவார்கள்' என்முர் .
அது ஒரு மேலான யோசனையாகவே என் மனதுக் குப்பட்டது. கையிலே பணமில்லை. தேநீர்க்கடை வைத் துள்ள நண்பர் சிவசம்புவிடம் சென்று கடனுகப் பணம் பெற்றேன். விவேகானந்தா அச்சகத்தில் விடயத்தைக் கூறவே அன்று சாயந்திரமே அவர்கள் விளம்பர நோட் டீசுகளை அச்சிட்டுத் தந்தனர்.

--سے 139 ہے
மறுநாள் கடையைப் பூட்டி யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு நானும் தம்பியும் சென்ருேம். தம்பியிடம் நீ வீடுவீடாகச் சென்று விளம்பரங்களைக் கொ டு த் து விட்டு வா ' நான் கடையைத் திறக்கின்றேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். தம்பி அப்படியே செய்துவிட்டு வந்தான். நோட்டீஸ் பலன் தந்தது. அநேக இஸ்லா மியர்கள் எனது லோண்ட்றியைத் தேடிவந்து உடுப்புக் களைத் தந்தனர். சிறுபான்மைத் தமிழ் மக்களுடைய உடைகளையும் பாரபட்சமின்றி சலவைசெய்து கொடுத் தேன்.
தொழில் முன்னேறத் தொடங்கியது. கடையில் துணிகள் மலையாகக் குவிந்தன. சலவைத் தொழிலா ளர் போட்டிபோட்டுக் “கொன்ரு க்ற்" முறையில் உடை களை எடுத்துத் தோய்த்து உலர்த்திக் கொடுத்தனர்.
மனைவியின் முகத் தாமரையில் மலர்ச்சி தோன்றி யது. அவளுக்கு வேண்டியவற்றை யெல்லாம் செய்தேன். மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந் தழைக்க வேண்டுமா? உறவினர் கூடினர்.

Page 77
சரஸ்வதி தாய்வீடு சென்ருள் :
சரஸ்வதி ஏழுமாதக் கர்ப்பிணியாக விருந்தாள். பிர சவத்தைத் தனது தாயகத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்பது அவளது விருப்பம். கொக்குவிலில் மாமாவிடம் பிணக்குற்றுக் கைதடிக்கு வந்த பின்னர் நான் கொக்குவிலை எட்டியும் பார்க்கவில்லை. வலிய அங்கு செல்ல என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. சரஸ் வதியிடம் " நான் அறியாதது மாதிரி நீ கடிதம் எழுதி அம்மாவுக்கு அனுப்பிவை அவர்கள் இங்கே வ ந் து அழைத்துச் செல்வார்கள்" என்றேன். அவள் “நீங்கள் வரமாட்டீர்களா?" என்ருள். நான் * அங்கு வரமாட் டேனென்று அடம் பிடிப்பேன். நீ உனது அப்புவுக்கு கரைச்சல் கொடுத்து அவரே என்னை கெஞ்சிக் கூப்பி டச் செய்" என்றேன்.
சரஸ்வதி எப்போதுமே எனது யோசனையை அநுச ரித்து நடப்பவள். மறுக்காது கடிதம் எழுதினள். நான் வீட்டிலில்லாத வேளை மாமனரும் மாமியாரும் வந்து அவளை அழைத்துச் சென்றனர்.
சரஸ்வதி பெற்ருர் வீட்டுக்குச் சென்றதில் எனக்குத் திருப்தி. பிரசவம் அவளுடைய அன்னையின் முன்னல் நடைபெறுவதுதான் அவளுடைய இதயத்துக்கு இதந் தரும். இது பெண்களின் இயல்பு.
ஆனல், எவற்றையும் பொருட்படுத்தாதவன் போல நான் யாழ்ப்பாணத்தில் என்னுடைய கடமைகளைக் பார்த் துக் கொண்டிருந்தேன். கொக்குவிலுக்கோ, கைதடிக்கோ செல்வதில்லை.
சரஸ்வதி என் பிரிவைச் சகிக்க முடியாதவளாணுள். தினமும் என்னைப்பற்றி தன் வீட்டில் பிரஸ்தாபித்தாள். என்னுடைய அனுமதியின்றி தானே வந்ததாகக் காட்டிக் கொண்டாள். நான் கோபப்பட்டிருப்பதாக பெற்ருரை

-- 4 -
நம்பும்படி செய்தாள். ' அத்தானைக் கூட்டி வாருங்கள்’ என்று அவள் தினமும் பெற்றரை வற்புறுத்தினுள்.
மூன்ருவது கிழமை மாமா சின்னத்தம்பி லோண்ட்றி தேடி வந்தார். அவர்கள் எதிர்பாராத வகையில் கடை யானது முன்னேறி இருப்பதைக் கா ண அவருக்குத் திருப்தி.
மலர்ச்சியுடன் * தம்பி வாருங்கள் வீட்டுக்கு என் ருர், நான் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண் டேன். * நான் ஏன் உங்களுடைய வீட்டுக்கு வருவது? நீங்கள் என்னைக் கேட்டா மகளை வந்து கூட்டிப் போனீர் கள். என்னைக் கேட்டுக்கொண்டா அவள் உங்கள் வீட் டுக்கு வந்தாள்? அவளைப்பற்றி எனக்கு அக்கறையில்லை" இவ்வாறு வெறுப்புக்கொண்டவன் போல் பேசினேன். மாமனர் வெலவெலத்துப் போஞர். அந்த வேளை பக்கத் துக் கடைக்காரரும் வந்துவிட்டார். என்னுடைய நாட கம் அவர்களுக்குப் புரியவில்லை. மாமஞர் கண்ணீரும் கம்பலையுமாக நிற்பதைக் கண்டு என்ன முதலாளி பெரிய வர் இவ்வளவு வேதனையுடன் கதைக்கிருர், நீங்கள் கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என்ருர்,
நான் எனது நடிப்பை அடக்கி ஒடுக்கிக்கொண்டு ஒருவாறு அரைகுறை மனதுடன் சம்மதிப்பவனுக மாம ஞருடன் புறப்பட்டேன்.
எட்டுமாதக் கர்ப்பிணியான சரஸ்வதி என்னுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். என்னைக் - கண்டதும் புன்னகை பூத்தபடி வரவேற்ருள். தன்னு டைய உறவினர்களுக்கோ மற்றவர்களுக்கோ என்னு டைய கெளரவத்தை விட்டுக்கொடுக்கமாட்டாள். என் னுடைய கொள்கைகள், இலட்சியங்கள் என்பன செயல் படுவதற்காக முன்னின்று உழைக்கின்ற பண்பு அவளது பிறவிச் சொத்தாகும்.

Page 78
ܚ 142 -
கொக்குவிலில் மீண்டும் வாசஞ் செய்யத் தொடங் கினேன். யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் கொக்குவில் அமைந்திருப்பதால் தொழிலகத்தைக் கண்காணிப்பதற் கும் வாய்ப்பாக விருந்தது. முந்திய நிலையிலும் தொழி லில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அன்ருடம் காலையில் கொக்குவிலில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டு யாழ்ப்பா ணம் வருவேன். மாலையிற்முன் வீடு திரும்புவேன். இரண்டு மாதங்கள் கழிந்தன.

س- l43 -س-
மனைவியின் பிரிவு:
ஒருநாள் அதிகாலை அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன். நான் முன்பின் அறியாத ஓரிடத்தில் தட் டந் தனியணுக நிற்கின்றேன்; என்னுடைய ஆதரவாளர் கள் என்று சொல்லுவதற்கு எவருமில்லாத தனியிடம் பக்கத்திலே ஒரு கடல் பயங்கர அலைகளைத் தூக்கி ஓ ! ஓ!! என்று வயிற்றிலடிப்பது போன்று இரைந்து கொண் டிருந்தது, என்னுடைய அச்சத்தைக் கட்டுப்படுத்த முடி யவில்லை.
சோடிழந்த அன்றிலைப்போல் துயர மானேன்
தோகைமயில் வாயில கப்பட்ட சர்ப்ப மானேன் காடுகளில் இனம்பிரிந்த கலைக ளானேன்
கருங்கடலிற் காற்றடிக்கும் கப்ப லானேன் ஒடுகின்ற பாய்மரத்தின் காக மானேன்
உற்ருருற வில்லாப் பித்த ஞனேன் பாடுபட நானறியேன் பழனி வேலா
பச்சைமயில் ஏறிவந்து ரட்சிப் பாயே
முருக நினைவுடன், இந்தப் பாடலைப் பாடுகின்றேன். பக்கத்தில் படுத்திருந்த சரஸ்வதி என்னுடைய அலறலைக் கேட்டு விழித்துக்கொண்டு என்னைத் தட்டியெழுப்பினள், என் கண்களில் நீர் சுரந்திருப்பதைக் கண்டு பதறித் தனது தாமரைக் கைகளினல் துடைத்துவிட்டாள். அவள் துடைத்த போதிலும் என் கண்ணிராறு வற்றுவதாக வில்லை. சிறுகச் சிறுகப் பொழுது விடிந்தது.
காகங்கள் கரையத் தொடங்கின தும்பிகள் ரீங் காரமிடத் தொடங்கின. காலைக் கடனை முடித் துக் கொண்டு தொழிலகத்துக்குப் புறப்பட ஆயத்தமானேன். சரஸ்வதியின் முகத்தில் கவலைக் குறிகள் படர்ந்திருந்தன. என்றுமில்லாதபடி ஒரு ஏக்கமான பார்வை அவளது விழிகளிற் பிரதிபலித்ததைக் கவனித்தேன். மெதுவாக வந்து என்னுடைய தோளிற் சாய்ந்து கொண்டாள்.

Page 79
- 44 -
அவளை அணைத்துப் பிடித்தேன். என்னுடைய சிறிய தகப்பன் முறையான பெரியதம்பி என்பவர் அந்த வேளை எங்கள் வீட்டில் தங்கியிருந்தவர். அவர் சரஸ்வதி நாண மின்றி என்னுடைய தோள்மீது அணைந்துகொண்டதும் அவளைப் பார்த்து ? இதென்ன பிள்ளை இப்படியெல்லாம் நடக்கலாமா? என்று கண்டித்தார். சரஸ்வதியின் கண்க கள் பனித்தன. என்னுடைய புருஷனின் தோளிற் சாய்ந் தால் என்ன என்று கேட்டுவிட்டு என்னுடைய நாடியைத் தடவியபடி "அத்தான் நான் இரண்டொரு தினங்களுக்கு மேல் இருக்கமாட்டேன் போலுளது. இன்றைக்குக் கடைக்குச் செல்லாமல் வீட்டில் நில்லுங்கோ’ என்ருள். எனக்கு அந்தச்சொல் அதிசயமாக இருந்தது. கையில் எடுத்த சாவியை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுத் திண் ணையில் குந்திக்கொண்டேன். மனமோ ஒருநிலைப்பட வில்லை. ஆயினும் தொழிலகத்தைப் பார்த்துவரவேண்டு மென்ற நினைவும் சலவைசெய்ய உடைகளைத் தந்தவர்க ளுக்கு உதவ வேண்டுமென்ற கடமை யுணர்ச்சியும் மனதை உந்தின. " நான் ஒரு முறை போய்விட்டு வருகின்றேன்" என்று சரஸ்வதியிடம் கூறியபோது அவளது முகத்தின் வாட்டம் தீர்ந்தபாடாகவில்லை. "கெதியாகப் போய் வாருங்கள்" என்ருள்.
பஸ்ஸில் ஏறித் தொழிலகத்துக்கு வந்தேன். உற்சாக மிழந்தவனக அங்கே ஓரிடத்தில் குந்தியிருந்தேன். காலை யில் ஒன்றும் புசிக்கவில்லை. கடையில் இடியப்பம் வாங்கி வரும்படி ஒரு பையனை அனுப்பினேன். அவன் கட்டிவந்த இடியப்பத்தைப் புசிக்கும் ஆர்வத்துடன் பார்சலைக் கிழித் தேன். அந்த இடியப்பத்துக்குள் நீட்டு மயிர்கொட்டிப் புழு ஒன்று கிடந்தது. அருவருப்புடன் அதனை வீசிவிட்டு வெறும் கோப்பி ஒன்றை ஆயாசத்துக்காகப் பருகிவிட்டு உட்கார்ந்திருந்தேன்.
மனம் நிலைப்படவில்லை. பிரசவ வேதனையினல் மனைவி கஷ்டப்படுகிருளா? ஏன் இன்றைக்கு என்னை கடைக்குச்

- 145 -
செல்ல வேண்டாமென மறித்தாள்? தோளிற் சாய்ந்த படி **அத்தான் நான் இரண்டொரு நாளுக்குமேல் இருக்க மாட்டேன்” என்று கூறியதின் அர்த்தமென்ன? என்றெல் லாம் அவளைப் பற்றிய நினைவில் மனம் ஊசலாடியது.
அந்தவேளை அருகு வீட்டிலுள்ள ஒருவர் வந்தார். வந்தவர் 'அவசரமாக என்னை அழைத்தார். அவரிடம் விசாரித்தபோது சரஸ்வதி பிரசவ வேதனையினல் கஷ் டப்படுவதாகக் கூறினர். அவரை அனுப்பிவிட்டு, கடைத்தெருவுக்குச் சென்று நோயாளியைப் பார்க்க வருபவர்களுக்குக் கொடுப்பதற்காக வெற்றிலை புகையிலை வாங்கிக்கொண்டு பஸ்நிலையம் வந்தேன்.
பஸ் ஒன்றும் அந்தவேளை கொக்குவில் நோக்கிப் புறப்படுவதாகவில்லை. கொண்டக்டரிடம் விசா ரித்த போது அடுத்த பஸ் அரைமணி நேரம் கடந்த பின்னர் தான் புறப்படும் என்ருர், மனைவி ஆபத்தான நிலை யில் கிடக்கின்ற நேரத்தில் மேலும் பஸ்சுக்காகக் காத் திருக்க முடியவில்லை.
R کپټه
பஸ் நிலையத்துக்கு அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவரைக் கைதட்டிக் கூப்பிட்டேன். அந்த நபர் உடனே வந்தார். என்னுடைய மனைவியின் ஆபத்தான நிலையைக் கூறி, கொக்குவில் வரையில் என்னை சைக்கிளில் கொண்டு போய் விடுமாறு கேட்டேன். அதற்கு அந்த நபர் சம் மதித்தார். என்னைச் சைக்கிளின் பின்புறத்திலேற்றிக் கொண்டு வீட்டை நோக்கிச் சைக்கிளை செலுத்தினர். அந்தவேளை பின்புறம் வந்த போலீஸ்காரர் கைதட்டி எம்மைக் கூப்பிட்டார். சைக்கிளை ஒட்டி வந்தவர் காலை
ஊன்றிச் சைக்கிளை நிறுத்தினர்.
நானும் குதித்து இறங்கினேன். பொலிஸ்காரர் எங்களை விசாரித்தபோது என்னுடைய மனைவியின் நிலை
9

Page 80
- 46 -
யைச் சொன்னேன். மனிதத்தன்மையுள்ள அப்பொலிஸ் காரர் என்னைச் சைக்கிளிற் செல்ல அனுமதித்தார்.
பதட்டத்துடன் வீட்டுக்கு வந்தேன். என்னுடைய மனதிற் கவிந்துகொண்ட வெறுமைபோல வீட்டிலும் அமைதி இழையோடிக் கிடந்தது. அசமந்தமான சூழ் நிலையின் நடுவே சரஸ்வதியைத் தேடினேன். வீட்டின் திண்ணையின் ஒரு புறத்தில் வெள்ளைச் சேலையிலான திரை யொன்று தொங்கியது. மாமனர் வெளியே வாட்டத் துடன் உட்கார்ந்திருந்தார். எனக்கு விஷயம் புரிந்தது. சரஸ்வதி பிரசவிப்பதற்காக திண்ணையின் ஒருபுறம் விடப் பட்டிருக்கிருள். என்னுல் அமைதியாக ஓரிடத்தில் இருக்க முடியவில்லை. வெளியே சிகரட்டைப் புகைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.
*வீல், வீல்" என்று இரண்டு குழந்தைகள் ஏககாலத் தில் அழுகின்ற ஒலி என் காதுகளில் தேனக ஒலித் தது. அப்போது சரஸ்வதிக்கு ஒத்தாசை புரிவதற்காக வந்திருந்த பெண் ஒருத்தி வந்து 'உனக்கு ஆண் பெண் ஆகிய இரு குழந்தைகள் பிறந்திருக்கிருர்கள்” என்ருள்.
குழந்தைகளையும் சரஸ்வதியையும் பார்க்க வேண்டு மென்ற ஆவலைத் தடுக்க முடியவில்லை. விர்ரென்று எழுந்து சென்று திண்ணையில் தொங்கிய திரையை விலக்க முயன்றேன். மருத்துவமாது சடாரென்று வந்து என்னை அப்புறம் போகும்படி பணித்தாள். வெட்கத்துடன் அப் பாற். சென்றேன்.
மனதில் அமைதியும், அதே வேளையில் என்னையறி யாத பதட்டமும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. மேலும் சிகரெட்டைப் புகைத்தபடி அங்குநின்றேன்.
இப்படி எத்தனை நிமிடங்கள் கடந்தனவோ தெரிய வில்லை. திரைக்கு அப்பாலிருக்கும் சரஸ்வதியின் முன கல் ஒலி என் காதுகளிற் கேட்டது. அந்த ஒலியிலே

ب- l47 --
பயங்கரமான வேதனை இணைந்திருப்பதை என்னல் ஊகிக்க முடிந்தது. அப்போது வெளியே வந்த மருத்துவமாதின் முகத்தையும் கவனித்தேன். அவளது முகத்தில் திருப்தி யற்ற கவலை கப்பிக் கவிந்திருந்தது. எது விடயத்தை யும் அவளிடமிருந்து கிரகிக்க முடியவில்லை. நிதானமா கச் சென்று திரைச்சீலையை விலக்கினேன். சரஸ்வதியின் முனகல் ஒலி இப்போது கேட்கவில்லை. அவள் ஒலி கேட் காததன் காரணமென்ன?
கேள்விகள் நெஞ்சை நெருடின. திரைச்சீலைக்கு அப் பால் சரஸ்வதி அசைவற்றுக் கிடந்தாள். அவள் மாத் திரமல்ல என்னுடைய ஆசைகளின் விளக்கமாகப் பிறந் திருந்த அச்சிசுக்கள் இரண்டும் தாய்போல் எந்தவித மான சலனமுமின்றிக் கிடந்தன.
எனக்கு விடயம் புரிந்து விட்டது. என்னுடைய இன்ப துன்பங்களைத் தூக்கித் தனது தோளிலே அன்றுவரை சுமந்து திரிந்த சரஸ்வதி நித் திரைகொள்ளவில்லை. இந்த உலகத்தைவிட்டே அகன்றுவிட்டாள். அவளது குழந்தை க்ளும் தாயைத் தொடர்ந்துவிட்டன. மருத்துவ மாதின் முகத்தில் பிரதிபலித்த கவலையின் காரணம் இதுதான்.
* ஐயோ, ஐயோ " என்னுடைய உயிர் மூச்செல்லாம் இந்த இரு வார்த்தைகளினுலும் வெளியேறிவிட்டதோ என்னுமளவிற்குக் குரல் நீண்டு ஒலித்தது.
காலையில் தன்னுடைய நிலையை அவள் உணர்ந்து கொண்டிருக்கிருள். அதுதான் என்னைத் தொழிலகத்துக் குச் செல்லாமல் மறித்திருக்கிருள். என்னுடைய மன மும் அவளது நிலையை உணர்ந்தமையாலேயே பதறிக் கொண்டிருந்தது. தொழிலகத்தைத் திறக்கவேண்டும். நம்பிவரும் வாடிக்கைக்காரர்களுக்குரிய உ  ைட களைக் கொடுக்க வேண்டுமென்ற கடமையின் நேர்மை காரண மாகவே தொழிலகம் சென்றேன். நமக்கு எவ்வளவு தொல்லைகளிருந்தாலும் நமது தொல்லைகளை மற்றவர்க

Page 81
ட 148 -
ளும் சுமந்துகொள்ளக்கூடாது என்பதனலேயே தொழி லகஞ் சென்றேன்.
"ஐயோ, இன்றைக்கு அவள் கூறியபடி நின்றிருந் தேன? இரவு யான் கனவில் சோடிழந்த அன்றிலைப் போல் துயரமானேன் என்ற பாடலைப் பாடியதெல்லாம் இன்றைய அத்துமீறிய சோகத்தை ஆத்மா உணர்ந்தி ருந்தபடியினலா? சோகநெருப்பில் துடித்துக் கொண்டிருந் தேன்.
கடந்த காலத்தில் சரஸ்வதியுடன் கூடிவாழ்ந்த வாழ்க்கையில் நிகழ்ந்த துன்ப, இன்ப நிகழ்ச்சிகள் திரைப் படம்போல் வந்து மனதைச் சூழ்ந்துகொண்டன.
*காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" " கட்டிய மனைவியும் மைந்தரும் காலத்தச்சன் வெட்டி வீழ்த்தும்” மரங்கள் என்றெல்லாம் தத்துவங்களைக் கூறித் தப்பித்துக்கொள்ள முடியுமா? அப்பப்பா மரணம் என்ற பிரிவுக்கோட்டை அடைந்துவிட்டவரை இந்த உலகத் தில் வாழ்ந்துவிட்டவர்களால் திருப்பிப் பெறவே முடி யுமா? விதியின் கைப்பாவையாகி விட்டாள் சரஸ்வதி. இந்தச் சோகத்தினை மாற்றவேண்டுமானல் என்னுடைய கண்ணீரைத் துடைக்கவேண்டுமானல் அதோ நித்திய மான நித்திரையில் கிடக்கும் அவள்தான் வரவேண்டும். அவள் எழுந்து வரமுடியுமா ?”
பைத்தியம்போல் ஓரிடத் தில் என்னை யறியாமலே பிதற்றிக்கொண்டும் ஓவென்று குரல் எடுத்து அழுது கொண்டு மிருந்தேன். உறவினர்கள் வந்து "இப்படியே அழுதுகொண்டிருந்தால் என்ன நடக்கும் நடக்கவேண்டி யதைப்பார்” என்று அழைத்தனர். "ஐயோ கடவுளே என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பல துன்பங்களை யெல்லாம் எனது இரும்பான இதயத்தினல் தாங்கியிருக். கின்றேன். இந்தச் சோதனையை எப்படித் தாங்குவேன். என்று கூறி மயங்கிச் சோர்ந்தேன். என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர்."

- 49 -
அவர்களது உதவியின் பின்னர் எனது மயக்கம் தெளிந்தது. கவலைகள் இலகுவில் விடுபடக்கூடியது அல் லவே. உள்ளே உறவுமுறையான பெண்கள் தங்கள் சோகத்தை யெல்லாம் திரட்டி ஒப்பாரிவைத்துக்கொண் டிருந்தனர்.
எனது தொழிலகத்துக்கும் செய்தி அறிவிக்கப்பட். டது. கடையிலிருந்து வந்த ஒருவர் என்னிடம் நெருங்கி வந்தார். நிமிர்ந்து பார்த்தேன்.
"முதலாளி" என்மூன்.
"என்ன" என்றேன்.
"கடையைப் பூட்டிவிடட்டுமா?"
என்னுடைய நெஞ்சம் சோகப்புயலில் அகப்பட்டுத் துரும்பெனத் துடித்துக்கொண்டே யிருந்தது. வாழ்க்கை யில் என்னுடன் கைகோர்த்துக்கொண்டு நீண்டகாலம் இணைந்து வந்தவள் மீளாத துயிலில் ஆழ்ந்துகிடக்கின் ருள். ஆனலும் எந்த இடத்திலும் என்னுடைய கட மையை நான் மறந்துவிடவில்லை. என்னுடைய தொழி லகம் ஊராருக்கு அத்தியாவசியமான பணியைச் செய் வது. அவசரமாக வெளியூர் செல்வதற்கு ஒரு வாடிக்கை காரர் உடைகளைச் சலவைசெய்யத் தந்திருப்பார். இன் னெருவர் தன் உறவினர் வீட்டுக் கலியாணத்துக்காக் உடையை நம்பி இருப்பார். எனக்கோ மரணச்சடங்கு செய்யவேண்டிய துன்பகரமான நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது. எனக்காக மற்றவர்களை இத்தகைய துன்பத்தை ஏற்கச் சொல்ல முடியுமா?
கடைப் பணியாளனை மீண்டும் பார்த்தேன். என்ன சொல்லுவேனே என்று தெரியாது விழித்தான்.
“இங்கேவா! எங்களுக்காக உடைகளை நம்பியிருக்கின்ற வாடிக்கைகாரர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது.

Page 82
بسبب 50 سس
அவர்களது செளகரியத்தை அநுசரித்தே நாம் நடக்க வேண்டும். ஆகையினல் கடையைப் பூட்டவேண்டாம். கடையைத் திறந்துகொள்” என்றேன்.
நான் இவ்வாறு கூறியது அவனுக்கு அதிசயமாக இருக்கலாம். “இவன் என்ன மனிதன். பெண் சாதி செத் துக் கிடக்கின்ற வேளையிலும் கடையைத் திற க்க ச் சொல்கிருனே" என்று கருதியிருப்பான்.
மீண்டும் அமைதியாக " "என்ன முதலாளி கடையைத் திறக்கவா சொல்கிறீர்கள், உண்மையாகவா? என்று வினவை எழுப்பினன். நான் சாந்தமாக * ஆம் கடை யைத் திறக்கத்தான் வேண்டும்." என்றேன்.
**எனது மனைவிதரின் செத்தவள். என் வீடுகவலைக் குரியதாகவே இன்றிருக்கிறது. இந்தத் துன்பத்தை வாடிக்கைகாரரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட் பது சரியல்ல. இன்றைக்கு எத்தனை பேர் வந்து காத்து நிற்பார்களோ தெரியாது. உடனே செல்” என்று பணித் தேன்.
அதற்குமேல் அவன் பேசவில்லை, இடத்தைவிட்டு அகன்ருன்.
ஊரெல்லாம் திரண்டுவந்தது. என்னுடைய துன் பத்தை அவர்களால் நீக்கிவிட முடியுமா? ஆழ்ந்த அனு தாபத்தைத் தந்தனர்.
மறுநாள் சாயந்திரம் மனைவியின் இறுதி யாத்திரை
தொடங்கியது. சோகப்புயலில் சுழன்ற செடியாக சுடலை சென்று தீமூட்டினேன்.
வாழ்வை முடித்த அவள் உடல் நெருப்பில் கருகிக் கொண்டிருந்தது.
உறவினர்கள் சிதையைச்சுற்றி நின்றுகொண்டிருந்த
னர். அங்கு பணிசெய்தவர்களுக்குக் கொடுக்கவேண்டிய காரியத்தைச் செய்தனர் சிலர்.

சிதையைத் திரும்பிப் பார்க்காமல் என்னைக் கூட்டி வந்த ஒருவர் மடத்தில் உட்காரவைத்தார்.
முடிந்தது காரியம் என்று நிம்மதியாக ஆசுவாசப் படமுடியுமா?
அந்தோ! மரணம் எவ்வளவு கொடியது. கடந்து போன காலத்து நிகழ்ச்சிகள் யாவும் நெஞ்சைச் சிறைப் பிடித்துக்கொண்டன.
என்னை ஆதரவு காட்டி வளர்த்த தந் ைத க்குக் கொள்ளி வைத்தது இந்தக் கரங்கள். ஆதரவாக அணைத்து உயிரூட்டி வளர்த்த தாய்க்கும் கொள்ளி வைத்தது இந் தக் கரங்கள்.
என்னுடன் பிறந்த சகோதரர்கள் சிலரை இழந் தேன். வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கிச் சுழன்றேன். கொடுமையான இந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் மனதிற் கிளப்புவது இந்தச் சுடலைதானே.
தந்தையார், தாயார் உடன்பிறந்தார் . ی* சுற்றத்தார் யார்? வந்தவாறெங்ங்னே போமாறேதோ? மாயமாம் இதற்கேதும் . வருந்தவேண்டாம் “ என்றெல்லாம் வழியிற் தேவா ரம் படித்துக்கொண்டு வந்தவர்கள் குறிப்பிட்டார்கள்.
மடத்தில் மற்றவர்கள் வந்திருந்து புகைபிடித்தனர், வெற்றிலை போட்டனர். இவற்றையெல்லாம் என்னுற் செய்ய முடியவில்லை.
என்னுடைய இன்பதுன்பத்தைத் தனது தோளிற் சுமந்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வந்தவள் இன்று இல்லை. அத்தான், அத்தான் என்று ஆசை ததும்ப அழைத்த குரல் இனி வீட்டில் ஒலிக்காது. அவளது ஞாபகமாக எனக்கொரு குழந்தையையாவுதல் தராமல் முற்ருகத் தன்னைத் துண்டித்துக்கொண்டாளே, !

Page 83
ســـ- 52 -ـه
கொடுமையான் மறலியின் செயலுக்கு யார்தான்
இடைநிற்கமுடியும். சுடலையைச் சுற்றிநிற்கும் சவுக்க மரங்கள் காற்றில் சோககீதம் இசைத்தன.
பயங்கரமான துன்பத்தை உடைத்தெறிய முடியா மல் தலையை அப்படியே பிடித்து இழுத்துக்கொண்டேன். கையுடன் ஒருசில மயிர்கள் உதிர்ந்து வந்துவிட்டன.
கண்ணிலிருந்து ஆறென நீர் பெருகிக்கொண்டே யிருந்தது. உறவினன் ஒருவன் என்னண்டை வந்தான். * என்னப்பா இப்படியெல்லாம் கதறி அழுவதனல் எதைக் காணமுடியும். நடக்க வேண்டியது நடந்துதான் ஆகும். நீயே இப்படியென்ருல் மற்றவர்கள் எவ்வாறு இருப் Luntrisait.’’
எவர் என்ன சொன்னலும் கொந்தளிக்கும் மனக் கடல் அடங்குமா? கடலுக்கு அடங்குவதற்குச் சில பரு வங்களுண்டு. மனதை அடக்க எதளுல் முடியும்?
சிதையைச் சுற்றி நின்றவர்கள் மடத்துக்குத் திரும் பினர். சிதையை அடுத்து ஒருசில பணியாட்களே நின்று கொண்டிருந்தனர்.
மற்றையவர் புறப்பட்டனர். அவர்களுடன் ஒருவ ணுகப் புறப்பட்டேன். எத்தனையோ பேர்களுக்கு அவ் வப்போது ஆறுதல் சொல்லக்கூடிய என்னுல், என்னை ஆறுதல்படுத்த முடியவில்லை. நடைப்பிணமாகத் திரும் பினேன்.
சுடுகாட்டுக்குச் சென்றவர்கள் வரவை எதிர்பார்த் திருந்த பெண்களும் மாமியும் என் காலைக் கட்டிக்கொண் டனர். மாமியின் குரலில் "ஐயோ மகளே! உன்னை நம்பி நாமிருக்க எம்மை இடைவழியிற் தனித்து நிறுத்தி நீ மட்டும் சென்று விட்டாயே. அம்மா எங்களுக்கு இனி மேல் யார் துணை" என்ற பதங்கள் அவர்தம் வாய்களி

حس- l53 - است.
லிருந்து வெளிவந்தன மாமனும் என் காலைக் கட்டிப் பிடித்து அழுதார்.
அவர்கள் இருவரது பரிதாபநிலை என்னுடைய நெஞ் சைப் பிழிந்தது. நானும் ஓவென்று குரல் எடுத்து அழு தேன். சோகத்தைச் சிறுகச் சிறுக அடக்கி ஒடுக்கிய பின் னர் நீங்கள் உங்கள் மகளை இழந்துவிட்டதால் உங்களை நான் மறந்துவிடமாட்டேன். என்னை உங்களுடைய மூத்த மகன் என்றே நினைத்துக் கொள்ளுங்கள். உங்களைக் கடைசிவரை பாதுகாப்பேன். என்னுடைய சீவன் இருக் கும் வரை இதை மறக்கமாட்டேன். இருவருக்கும் இறு திக் கடின் செய்தபின்னர்தான் இந்த வீட்டைவிட்டு வெளியேறுவேன். என்றைக்கும் உங்களை அணுதையாக விடமாட்டேன்’ இவ்வாறு உறுதிமொழி கூறித் தேற்றி
னேன்.

Page 84
- 54 -
தொழிலகமும் தொழிலாளரும் :
நாட்கள் சில நகர்ந்தன. சரஸ்வதியின் மரணம் காரணமாக வீட்டிற் கூடியிருந்த உறவினர்கள் விடை பெற்றுக்கொண்டனர்.
தொழிலகத்தில் நான் கவனத்தை எந்தச் சோகத் திலும் இழந்துவிடவில்லை. அடுத்தநாளே அங்கு சென் றேன். அங்குள்ள வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந் தேன்.
இக்காலத்தில் ஜப்பானியரின் குண்டுவீச்சின் காரண மாக கொழும்பிலிருந்து ஏழு தொழிலாளர்கள் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்களை என்னுடைய கடையிற் சேர்த்துக்கொண்டேன். ஆனல் என்னுல் அவர் களை நிர்வகிப்பது கஷ்டமாகவே இருந்தது. இருந்தும் அவர்களை ஆதரவாகப் பேணி வந்தேன். நல்ல தொழி லாளிகள் அவர்கள். கொழும்பில் பாய்மார்களுக்குத் தொழில் செய்து பழக்கப்பட்ட காரணத்தினல் யாழ்ப் பாணத்திலுள்ள பாய்மார்களின் உடைகளையும் பெற்று வந்து என்னுடைய தொழிலகத் தொழிலையும் பெருக்கி வளர்த்தனர். இந்த எழுவருள் என்னுடைய மனதைக் கவர்ந்தவனக ஒருவன் விளங்கினன்.
நான் சாதி அடிப்படையில் தொழிலாளியே தவிர தொழில்நுட்பங்கள் தெரியாதவன். லோ ன் ட் றி யில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு உணவு பக்குவம் செய்வதையே பிரதானமான கடமையாகச் செய்து வந் தேன். அவ்வப்போது இரசீது போடுபவர் வராவிட்டால் இரசீது போடுவது கணக்கெடுப்பது போன்ற வேலைகளை யும் செய்வேன். இதல்ை எனக்குத் தொழிலில் அனுப வம் இல்லையென்ற காரணத்தைப் பயன்படுத்திக்கொள் ளலாமென்று அத்தொழிலாளருள் அறுவர் கருதினர்.
* நாம் இல்லையானல் இவரால் தொழில் நடாத்த முடியாது. நாம் ஒருமித்து பதின் மூன்று நாட்களுக்கு

- 155 -
லீவு எடுப்போம். அப்போது அழுக்குத் துணி மலே போலக் குவிந்துவிடும். இவரால் ஒன்றும்செய்ய முடி யாத நிலையுண்டாகிவிடும். எங்கள் தயவை நாடுவார். நாம் முடியாதென்று ஒரேயடியாக மறுத்துவிடுவோம். அதன்பின் இவர் கடையை விட்டுவிடுவார். அதற்குப் பிறகு நாமே நடத்தலாம்” என்று கடந்த காலத்தில் அவர்களுக்குத் செய்த நன்றியை மறந்து தம்முள் பேசிக் கொண்டனர்.
ஏழாவது பேர்வழியானவர் என் நண்பர். அவர் உறங் காப்புலி. இவர்களின் திட்டத்தை முன்கூட்டியே எனக்கு அறிவித் திருந்தார். உண்மையும் தேர்மையும் கொண்ட வர் அவர் . எனவே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந் தேன்.
ஒருநாள் இந்த ஏழுபேருமாக அதாவது எனது நண் பன் உட்பட ஒருமித்து * லீவு தாருங்கள் ஊருக்குப் போகப் போகிருேம்” என்ருர்கள். அப்போது நான் தயங் காது 'அப்படியே நீங்கள் போகலாம். உங்களுக்கு டிக் கட்டும் எடுத்துத் தந்து பணமும் தருகிறேன்" என்றேன். அவர்கள் வெலவெலத்துப் போனர்கள். ஆனலும் சமா ளித்துக் கொண்டு **முதலாளி இன்றைக்கே போகப்போகி ருேம் " என்றனர். எதுவித தயக்கமுமின்றி "ஆம்" என் றேன்.
எனது நண்பன் உறங்காப் புலியும் அவர்களுடன் போக வேண்டியவனகவே நடித்தான். அனைவருக்கும் யாழ்ப் பாணம் புகையிரத நிலையத்துக்குச் சென்று டிக்கட் எடுத் தேன். எல்லோரும் வண்டியில் ஏறினர்கள். வண்டி நக ரத் தொடங்கியது. நான் யாழ்பாணத்திலே நின்று கொண்டேன். எனது நண்பன் தந்திரமாக அடுத்த புகை யிரத நிலையமான நாவற்குழியில் அவர்களை ஏமாற்றி இறங்கி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த வண்டி யில் ஏறித் திரும்பிவிட்டார். அவரையும் அழைத்துக்
கொண்டு வந்துவிட்டேன்.

Page 85
بیسس۔ l56 --س
தொழிலகத்தில் அவ்வேளை எனது தம்பி நடராஜாவு டன் வேறு ஒரு தொழிலாளி மட்டுமே இருந்தார். அழுக் குத் துணி மலைபோல் குவிந்தமையால் அவற்றை உரிய காலத்தில் வாடிக்கைகாரர்களுக்குக் கொடுப்பதற்கு வழி யில்லை. என்னை ஏமாற்ற முற்பட்டவர்களை முறியடித்து விட்டதில் பெருமைப்பட்டேன். ஆனல் தொழில் வகை யில் சுமுகமான நன்மை உண்டாகவில்லை. செய்வதறி யாது திகைத் திருத்த நான் அவற்றை எவ்விதமேனும் சலவை செய்வதற்கு எனது உறவினர்களையே தேடிப் போகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அன்று இரவே ஒரு காரில் ஏறிக் கொக்குவிலில் உள்ள உறவி னர்களிடத்துக்குச் சென்றேன். முதலில் அவர்கள் தமது வேலையோடு இதுவும் ஒரு வேலையா? என மறுத்தனர். இறுதியில் எனது பணிவான வேண்டுகோளை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. வீட்டுக்கு ஒருவராக 20 பேர் உதவ முன்வந்தனர்.
இவ்வாறு சுமுகமான நிலை உருவாகியதைக் கண்ட மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனது உறவினர்கள் உடைக ளைப் பெரிய அண்டாவில் போட்டு அவிக்கும்போது அண் டாவிலுள்ள தண்ணிர் வற்றியமையால் அண்டாவுக்குள் ளேயே புகையும் தீயும் கலந்து உடைகளுள் அநேகம் பொசிங்கிப் பழுதடைந்தன. இதனுல் தொழி லில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று வேதனைப்பட்ட நான் உள்ளதை உள்ளவாறு வாடிக்கைகாரர்களுக்குத் தெரி விப்பது, நடப்பது நடக் கட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என்னுடைய வார்த்தையிலும் நேர்மையிலும் நம்பிக்கை வைத்த வாடிக்கைகாரர்கள் 'எவ்வித நட்டஈடும் வேண் டாம் இனிமேல் கவனமாகத் தொழிலைச் செய்துவா * என அனுதாபத்துடன் தெரிவித்தனர்.

- 57. -
சூரியப் பிரகாவ்ய உதயம் :
மனைவியின் அந்தியேட்டிக் கிரிகைகள் முடிவுற்ற பின்
னரும் மாமனர் வீட்டிலேயே இருந்து வந்தேன். மாம னுக்கும் மாமிக்கும் மாதம் இருபது ரூபா வழங்கினேன். தொழிலைச் செம்மைப்படுத்த வேண்டுமானல் தொழிலா
ளர்களை இந்தியாவிலிருந்து அழைத்து வரவேண்டுமென முடிவுசெய்து இந்தியாவுக்குப் பயணமானேன். நல்ல
உண்மையுடன் உழைக்கக்கூடிய நால்வரை அ  ைழ த் து
வந்தேன்,
1944-ம் ஆண்டு யூன் மாதம் 10-ந் திகதி மோகன விலாஸ் என்ற பெயரை மாற்றிப் பொருத்தமாக என்ன பெயர் வைக்கலாமென யோசித்தேன். உலகத்தில் தின மும் சூரியன் உதிக்கின்றன். அவனது பிரகாசம் பூமி யில் படருகின்றது. சேற்றிலும் சகதியிலும் குளத்திலும் குட்டையிலும் மலையிலும் மடுவிலும் அவன் ஒளிபடுகிறது. என்னுடைய லோண்ட்றியும் சமுகத்தில் எவரையும் விலக் காமல் யாவருக்கும் பணியாற்றும் இலட்சியம் கொண்ட தாகையினல், அதற்குச் * சூரியப் பிரகாஸ் ’ என்ற புதுப். பெயரைச் சூட்டினேன். லோண்ட்றி புதுக்கப்பட்டது இத் தப் பெயரின் கருத்துக்கமையத் தொழிலிலும் வாழ்க்கை யிலும் பிரகாசம் எறிக்கத் தொடங்கியது என்ருல் அது மிகைப்பட்ட கருத்தாகாது. இவ்வித முன்னேற்றத்துக்கு இந்தியாவிலிருந்து கூட்டி வந்த தொழிலாளருடன் எனது தம்பி நடராசாவும் ஒத்துழைப்புத் தந்தான். உண்மை, நேர்மை ஆகிய பண்புகளுடன் இவர்கள் தொழிலாற்றி வந்தனர்.
தொழில் பெருக்கம் ஏற்பட்டபடியினல் யாழ்ப்பா ணம் ஐந்து சந்தியில் சன் பிறையிற் என்ற பெயரில் புதிய கிளையைத் தாபிதம் செய்தோம்.
தனியே லோண்ட்றித் தொழிலை நிர்வகிப்பதினல் சம்பாத்தியம் அதிகம் கிடைத்துவிடாதென்பதால் வேறு

Page 86
- 158 ܚ
வியாபாரங்களிலும் ஈடுபட்டேன். இதனல் பொருளும் திருப்திகரமாகக் கிடைத்தது. வேலைத்தலத்துக்கு நல்ல தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். எனவே இந்தி யத் தொழிலாளர்கள் சிலரை இந்தியாவுக்குச் சென்று கூட்டி வந்தேன். தொழிலாளர் தொகை 42 ஆகப் பெருகிவிட்டது. தொழிலகமும் நல்ல முன்னேற்றம் é5 Göt L–5l. .
இக்காலத்தில் எனது அன்புச் சரஸ்வதியின் தந்தை யார் கடுமையான நோய்க்குள்ளானர். அவரை மானிப் பாய் கிறீன் வைத்தியசாலையில் சேர்த்து அவரைப் பாது காத்தேன். அவரது உள்ளம் கனிந்தது. தனது சொந்த மான காணியை எனக்குத் தெரியாமல் என் பெயருக்கு எழுதினர். பின் நான் அதை அறிந்து, அதைத் திருத்தி அவர்களது சீவியத்துக்குப் பின்னர்தான் எனக்கு என்று மாற்றி எழுதினேன்.
ஈடுவைத்த காணியையும் மீட்டு என் சொத்தாக்கி னேன். யாழ்ப்பாணம் இலுப்பை யடிச் சந்தியில் சூரியப் பிரகாஸ் என்ற புதிய கிளைத்தாபனத்தை நிறுவினேன். இதைத்தொடர்ந்து எம்மவர் பலரும் லோண்ட்றிகள் ஆரம்பித்தனர்.

- 159 - விவாகப் பேச்சு :
என்னுடைய தொழிலக முன்னேற்றத்தை உறவினர் கண்டனர். மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவர் உளர். ஆனல் வெளவாலே அந்த மரத்தை நாடி வந்துவிடுமல்லவா? நல்ல தொழி லுடன் மனைவியை இழந்துள்ள என்னைத் தனிமையாக நீண்ட நாட்களுக்கு இருக்கவிடுவார்களா? இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வந்தமையால் அங்கு பழக்கப்பட்ட ஒருவர் ஒரு கல்யாணம் பேசினுர், அந்த நண்பர் என். னிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். அடிக்கடி இது பற்றி எழுதுவார். இங்கே என் இனத்தைச் சேர்ந்தவர்கள் விவாகத்துக்காக நிர்ப்பந்தப்படுத்தினர். விடிந்துவிட்டால் என்னைத்தேடிக் குறைந்தது நாலு தரகர்களாவுதல் வரு வார்கள். இலங்கையில் எனது உறவினர்களுள்ள இடங் களிலிருந்தெல்லாம் தகுந்த பூரீதனத்துடன் பெண் பேசி வந்தனர். என்னுடைய மனதை அவர்களுடைய ஆசை வார்த்தைகள் அசைக்கவில்லை. என்னுடைய மனதில் எனது உறவுமுறையான பெண்ணையே விவாகஞ் செய்ய வேண்டுமென்ற கருத்தே மேலோங்கி நின்றது.
இவ்வாறு பலரும் விவாகம் பேசி என்னை நெருக்கிக் கொண்டிருந்தனர். ஆனல் எவருக்கும் இடம் கொடுக்க வில்லை. எனது முந்திய மாமனும் மாமியும் என்னைத் தங்களுடைய உறவினர் முறையிலுள்ள பெண்ணுக்கு விவாகஞ்செய்து தரவேண்டுமென்றே கருதினர். எனது மாமியின் சகோதரி ஒருவர் வேலணையில் வாழ்ந்து வந் தார். இந்த மாமி முறையானவர் நல்ல நடத்தையும் பண்பும் கொண்டவர் என்பதை நானறிவேன். அத்து டன் என்னுடைய நோக்கம் உறவினர்கள் வீட்டுப் பெண்ணையே மணக்கவேண்டுமென்பது.
மாமனும் மாமியும் வேலணைப் பெண்ணைப்பற்றி ன்னிடம் பிரஸ்தாபித்தபோது நான் அவர்களிடம் “உங்

Page 87
- 60 -
களின் விருப்பப்படியே நடக்கட்டும். உங்களை நான் கடைசிவரையில் பாதுகாப்பதற்கு என்னைக் கைப்பிடிக் கின்ற பெண் ஒத்தாசையாக இருக்கவேண்டும். நான் மணக்கின்றவள் உங்களுக்கு எதிரிடையாக இருந்தால் என்னல் சகிக்கமுடியாது ' என்று தெரிவித்தேன்.
இந்த வார்த்தைகள் அவர்களுக்கு மனதில் சந்துஷ்டி யைக் கொடுத்தன. ஒருநாள் எனது மாமியாரே சென்று வேலணையில் தனது சகோதரியிடம் பெண்கேட்டு வந்தார். என்னை அவர் 'நீ ஒருமுறை சென்று பெண்ணைப் பார்த்து வா” என்ருர்,
* எனக்குப் பெண்ணை நேரில் பார்க்க விருப்பமில்லை. நீங்கள் ஏற்பாடுசெய்தால் போதும். யான் நேரில் சென்று பார்த்து குறைகுற்றங் கண்டால் மனதுக்குத் திருப்தி யற்றுவிட்டால் என்னுடைய நோக்கம் பிழைக்கும். உற வினர் முறையில் உள்ளதாகவும், குணம் நடை திறமா கவும் அமைவதே எனக்குப் பிரியமானது. நீங்கள் நல் லது என்றும், உங்களுடைய எதிர்காலத்தில் உதவக் கூடியவள் என்றுங் கருதினுல் போதும்" என்றேன்.
என்னுடைய இந்தக் கதை அவர்களுக்கு மனதுக்கு நிறைவைத் தந்தது. விவாகத்துக்கு ஏற்பாடு செய்தனர். இந்த வேளையில் நான் அங்கு விவாகம் செய்வதை உற வினர்கள் சிலர் விரும்பவில்லை. மனைவியின் மாமனரான பெரியதம்பி யென்பவர் வேலணைக்குச் சென்று விவாகத்
தைத் தடுப்பதற்கு முயற்சியெடுத்தார்.
என்னுடைய லோண்ட்றியில் சாதி வித் தி யா சம் பாராது சகலருக்கும் தொழில் செய்வதனல் "" நான் ஒரு சாதிப்பிரஷ்டனெனக் குற்றத்தைச் சுமத்திப் பேசி யுள்ளார். ஆனல் பெண்ணின் தாயாரான எனது மாமி யார் இந்தவிதமான வார்த்தைகளினல் மனம் மாறவில்லை. பெண்ணும் என்னைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்த கார ணத்தினல் என்னை விவாகஞ் செய்வதில் கருத்துக்கொண் டிருந்தாள்.

- 6 -
இரண்டாவது விவாகம் :
ஒரு நல்ல தினத்தை விவாகத்துக்கெனக் குறிப்பிட் டனர். விவாகத்தை ஆடம்பரமாகச் செய்யவேண்டு மென நண்பர்களும் உறவினர்களும் விரும்பினர். நான் இரண்டாவது தடவையாக விவாகஞ் செய்பவன். அத் துடன் என்றைக்கும் ஆடம்பரத்தை விரும்பாதவன். எனவே ஆடம்பரமாகச் செய்வதைத் தடுத்தேன். மாப் பிள்ளை வீட்டில்தான் ஆடம்பரமில்லாதிருந்தது. பெண் வீட்டார் வெகு தடல் புடலாகவே காரியங்களைச் செய் தனர். நல்ல நாளில் விவாகம் நிறைவுற்றது.
எனது தொழிலகத்தில் பணிபுரிபவர்கள் விவாகத் தில் கலந்துகொண்டனர். என்னுடைய இல்லமாகிய கொக்குவிலுக்கு மணப்பெண்ணுடன் விவாகம் முடிந்த அன்றைக்கு யான் வரவில்லை. தொடர்ந்து பதின்மூன்று தினங்களாகப் பெண்வீட்டிலேயே மணமக்களாகிய யாம் தங்கியிருந்தோம்.
புதுமண வாழ்வின் பொலிவு பூத்தது. முனதிற் குழு மையான மணவிழா பதின்மூன்ற வது நாள் கசப்பான நிலையை உருவாக்கிவிட்டது. என்னுடைய மனைவிக்கு வயிற்றில் கடுமையான குதது ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுசென்று நல்ல ஆங் கில வைத்தியர்களிடம் காட்டலாம் என்று அபிப்பிரா யம் தெரிவித்தேன். பெண் வீட்டார் யாழ்ப்பாணம் வேண் டாம் ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலைக்கே கொண்டு செல்லவேண்டுமென்று விடாப்பிடியாக நின்ற னர். அவர்களது எண்ணத்துக்குச் சம்மதித்தேன். அவ் வேளை இரண்டாவது யுத்தத்தின் காரணமாகப் பெட் ருேல் விலை அதிகம். வேண்டிய பெற்ருேல் பெறமுடி யாது. வேலணையில் கார்கள் பிடிக்கமுடியவில்லை நோயாளி யான மனைவியை வண்டியொன்றில் ஏற்றியே ஊர் காவற் றுறை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ருேம்.
2.

Page 88
- 62 -
அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த வைத்தியர் நோய் சற்றுக் கடுமையென்றர். என் னுடைய உள்ளம் கலங்கிவிட்டது. என்னுடைய பழைய துக்க நிகழ்ச்சிகள் நினைவைக் கவிந்துகொண்டன. மண வாழ்வின் விளிம்பிலுள்ள வேளையில் 'இந்தத் துன்பமா? இறைவா” என்று கண்கலங்கி அழத்தொடங்கினேன். உறவினர் தேற்றினர். ஆறுதல் பெற்ற பின்னர் வைத் தியசாலைப் பொறுப்பதிகாரியைக் கண்டு விசேட அக் கறை எடுத்து மனைவியைக் குணப்படுத்தும்படி வேண்டிக் கொண்டேன்.
மலைபோல் வந்தது பணிபோல் மறைந்தது என்று சொல்லுவார்களே அதுபோல் வைத்தியரின் கவனத்தி ஞல் மனைவி குணம் பெற்ருள்.
மனைவி குணம் பெற்றதும் வீட்டுக்கு வந்தோம். எனது மாமியாரின் பணிவிடையினல் என் மனைவியின் உடல்நிலை தேறியது. . f
முந்திய மனைவியை யான் மணமுடித்தபோது உறவி னர்களின் ஆத்திரத்துக்குள்ளானேன். என்னிடம் பசை யில்லை. இதனல் என்னை நெருக்கி விருந்து வைப்பதற்கு வந்தோர் தொகை மிக அற்பமானது. இன்றைய என் னுடைய நல்ல நிலை காரணமாக என்னை நெருங்கிப் பலர் வந்தனர். ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வந்தே விருந்து கொண்டாட வேண்டுமெனப் பணித்தனர். மனைவி யின் இசைவுடன் பல உறவினர்களின் வீட்டுக்கும் விருந் துக்குச் சென்றேன். ஒரு மாத காலத்துக்குப் பல விருந் துக் கேளிக்கைகள் நடைபெற்றன. விருந்து வேளைகளில் நன்ருக மதுபானத்தைப் பருகவேண்டி வந்தது. இக் காரணத்தினல் என்னுடைய உடல் நலம் சிறுகச் சிறு கப் பாதிக்கப்பட்டது. ஒரு நாள் கடுமையான நோய்க் குள்ளானேன்.

- 163 -
என்னுடைய நோய் கை வைத்தியத்தினல் தீருவ தாகவில்லை. என்னை மானிப்பாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லக் கார் ஒன்றைப் பிடித்து வந்தனர். நோயைத் தீர்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் செ ல் ல க் காரில் யான் ஏறுவதற்கு முன்னர் பாய் தலையணைகளு டன் என் புது மனைவி தானே முதலில் ஏறிக்கொண் டாள். அவளை வரவேண்டாமெனத் தடுத்த போதும் அவள் கேட்கவில்லை.
இரண்டாந்தாரம் அவதாரம் என்று சிலர் சொல்லு வார்கள். ஆனல் அன்பும் பண்பும் கொண்ட பெண் எந்தத் தாரமானுலும் கணவனுக்காகத் தன்னை அர்ப்பணிக்க என்றும் பின்நிற்க மாட்டாள். இந்த உயரிய தன்மையை என்னுடைய மனைவியிடம் கண்டேன். ,
நோயினுல் வாடிச்சோர்ந்து சருகாக நான் கிடந்தேன். எனக்கு வேண்டிய பணிவிடைகளை அன்புடன் தானே துன்பப்படுவதாக உணர்ந்து அவள் செய்தாள். இரவில் யான் அனுங்கும் போதெல்லாம் எனது அண்மையிலேயே விழித் திருப்பாள். அன்பாகவும் ஆதரவாகவும் பேசினள். தேவைகளை உடன்நின்று உதவினுள். என்னுடைய கைக ளாக அவள்கைகள் செயல்புரிந்தன. என்னுடைய தாயி டம் கண்ட பரிவை அவளது உள்ளத்திலும் கண்டேன். நான் எதற்காகவும் சிரமப்படாதவாறு அவள் உடனுக் குடன் தேவைகளை உணர்ந்து செயல் செய்தாள்.
என்னுடைய நெருங்கின உறவினர்களை யெல்லாம் நான் நினைக்கவிடாது தனது மேலான குணத்தைக் காட்டி விட்டாள். புதுமணப் பெண்ணுகிய அ வ ளு க் குரிய பொறுப்பு மகத்தானது. அவளை யான் உண்மையான மனைவி யென்று புரிந்து கொள்வதற்கு இறைவனே இந்த நோயைத் தந்தானே என்று கருதினேன். மனைவியின் அன்பான பணிவிடைகளினுல் உடல் நலமுற்றது. மாணிப் பாய் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பினேம்.

Page 89
دخلت 164 ــ
மனைவியின் நோயும் குழந்தைகளும் :
புதுமண வாழ்க்கையின் பின் எனக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட சுகவீனத்தினல் மனம் சோர்ந்தேன். தெய்வ சித்தத்தால் சிறுகச் சிறுக எம்மை நோக்கி வசந்தம் வீசத்தொடங்கியது. நிம்மதியைப் பெற்றுத் தொழிலி லும் அக்கறை காட்டிவந்தேன். இக் காலத்தில் என் மனைவி கர்ப்பிணியானள். முந்திய மனைவி சரஸ்வதிக்குப் பிறந்த எந்தக் குழந்தைகளும் என் வாரிசாக உலகில் இல்லை. எதிர்காலத்தில் என் பெயரை நிர்ணயிக்கவும், நம்பிக்கை பூட்டவும் கூடியதாக மனைவி ஒர் ஆண் குழந் தையைப் பிரசவிக்க வேண்டுமென்றே விரும்பினேன். **மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் " என்பர். என் னுடைய இதயத்துக்கு ஆறுதல் தரக்கூடியதாக ஓர் ஆண் குழந்தையையே மனைவி பெற்றெடுத்தாள்.
அக்குழந்தைக்குச் சிவநேசன் என்ற பெயரை இட் டேன். குழந்தையின் சாதகத்தை எழுதிய சாஸ்திரி முதற் குழந்தைக்கு ஒன்பதுவயதுவரை வேறு குழந்தைப் பொருத்தமில்லை. அப்படிப் பிறந்தாலும் அக்குழந்தை கள் உயிருடன் வாழமாட்டாவென்று கூறினர். எனக்கு இந்தச் சாஸ்திரம் சாதகம் ஆதியனவற்றில் நம்பிக்கை குறைவு.
மனைவி இரண்டாந்தடவை கர்ப்பமுற்ருள். முதல் மைந்தனுக்கு இரண்டு வயது நடக்கும்போது இரண்டா வது குழந்தை பிறந்தது. அதுவும் ஆண் குழந்தை யாகை யால் எனது மனதில் மகிழ்ச்சி நிலவியது சிவயோகன் என்ற பெயரிட்டேன். இரண்டாவது குழந்தையைப் பிர சவித்ததின் பின் என் மனைவி நோய்க்குள்ளானள். ஆஸ் பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டிய அளவுக்கு கடுமை யானது. அடிக்கடி வயிற்ருேட்டமிருந்தது. வயிற்ருேட்டத் துடன் வேலணையிலிருந்து காரில் ஏற்றிவந்தோம் வழி எல் லாம் மனைவியின் உடல்நி%லயின் கேவலத்தைப்பற்றியே

- 65 -
என் சிந்தனை படர்ந்தது. எவ்வளவு சோதனை என்ன செய்வது? அப்போது பண்ணைப்பாலம் இணைக்கப்பட வில்லை. அல்லைப்பிட்டித்துறையிலிருந்து பண்ணைத்துறைக்கு மோட்டார் வாகனத்தை ஏற்றிக்கொண்டு வருகின்ற பாதை கடலில் மிதப்பது போல யானும் துன்பக் கடலுள் மிதந்தவனனேன். கடலில் வரும்போது மனைவியின் வயிற் ருேட்டம் நிற்கவில்லை. எம்முடன் வந்த உறவினரான பெண்கள் அவளுக்கு ஒத்தாசை புரிந்தனர். இந்தக் கவி லைக்குரிய நோயுடன் இணுவில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தோம்.
வருத்தம் மிகவும் ஆபத்தானதென்று வைத்தியர் அபிப்பிராயப்பட்டனர். என்னுடைய நெஞ்சம் வேதனை மெழுகில் உருகிற்று. மீண்டும் மீண்டும் சோதனைகளையே இறைவன் தருகின்ருனே என வெதும்பினேன். அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கும் இணுவிலுக்கும் சென்றுவரக் கார் வாடகைச் செலவு அதிகரித்தபடியால் X 7080 என்ற இலக்கமுடைய காரைத் தேவைக்காக வாங்கினேன்.
டாக்டர்களின் ஆலோசனைப்படி ஏழு" மாதங்கள் இணுவில் வைத்தியசாலையிலேயே அவளை வைத்திருக்க வேண்டியேற்பட்டது. ஏழுமாதங்களும் விடாப்பிடியான செலவுகள் ஏற்பட்டன. தொழிலகத்தில் நிம்மதியாக இருந்து தொழில் நடத்தமுடியவில்லை. வரவுக்கு மீறிய செலவினங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. என்னு டைய நேரடியான கண்காணிப்பு இன்மையால் வருமானம் குன்றிவிட்டது. மனைவியை எவ்விதமேனும் காப்பாற்ற வேண்டுமென்ற கருத்துக்கொண்டமையால் பழையபடி கடன் வாங்கத் தலைப்பட்டேன். கடன் பெருகியமை யால் மனநிம்மதியை வேண்டி அதிகமாகக் குடிக்கத் தொடங்கினேன். தினமும் காலையிலேயே குடிக்க ஆரம் பிப்பேன். பொழுது ஏற ஏறப் போதை மிகுந்துவிடும். மனத்தை அடக்கி ஒடுக்க இந்தக்குடிதான் ஒளடதமாக விருந்தது.

Page 90
- 166 -
ஏழு மாதங்களின் பின் மனைவியை எலும்புக்கூடான நிலையில் வீட்டுக்குக் கொண்டுவந்தேன். அவளது அழ கான சிகை முற்ருக உதிர்ந்துவிட்டது. மொட்டந் தலைச்சி யானுள். பெண்மைக்குரிய இலட்சணங்களே இல்லை. தாய் நோய்வாய்ப்பட்டமையால் தக்கமுறையில் பேணப் படாத இரண்டாவது மகனன சிவயோகன் தான் பிறந்து ஏழாவது மாதத்திலேயே மரணமானன்.
இரண்டாவது மகன் மரணமான பின்னர் ஏறக் குறைய ஒன்றரை ஆண்டுகளின் மேல் இன்னெரு மகன் பிறந்தான். இவனுக்கும் சிவயோகன் என்றே பெயரிட் டேன். இந்தப் பி ர ச வ த்  ைத அடுத்தும் மனைவி நோய்வாய்ப்பட்டாள். ஆனல் இந்த நோய் முந்திய அளவுக்குக் கடுமையானதாக வில்லை. இருப்பினும் மனை வியின் உடல்நிலை சீனித்தது. ஆயுள்வேத வைத்தி யத்தை மேற்கொண்டேன். மனைவியின் உடல்நிலை சிறு கச் சிறுகக் குணமடைந்தது. தலையில் மயிர் நன்கு அடர்த் தியாக வளர்ந்தது. ஆனல் மனைவியின் வயிற்றில் குத் துண்டானது. இவ்வேளை மனைவி மீண்டும் கர்ப்பமுற்ருள். கர்ப்பத்தின் அடிப்படையாகவே வயிற்றில் குத்துண்டா னது என்று சிலர் அபிப்பிராயப்பட்டனர். ஆனல் வயிற் றுக்குத்தோ பெருத்துவிட்டது. இனிமேல் வீட்டில் வைத் திருக்கமுடியாது என்ற நிலை உருவானதும் மனைவியைக் கர்ப்பமுற்ற ஐந்தாவது மாதம் இணுவில் ஆஸ்பத்தி ரிக்கே கொண்டு சென்றேன். அங்கு மூன்று மாதங்க ளுக்கு மேல் வைத்தியம் செய்வித்தும் அவள் குணமடைய வில்லை "ஒப்பிறேசன்’ மூலமே அவளைக் குணப்படுத்த லாம் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர். ஒப்பிறேசன் செய்வதற்காகக் கையெழுத்துக் கொடுத்துவிட்டேன். இதைக் கேள்வியுற்று மனைவியின் பெற்றேர்கள் இணு வில் ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் ஒப்பி றேசனுக்குச் சம்மதிக்காமையினல் இணுவில் ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.

--۔ 67 ہی
நோய் இளகுவதாக வில்லை. மனைவி நோயினல் துடித் துத் துவண்டாள். பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. அவ ளின் பெற்றேரின் வேண்டுகோளின் மேல் மானிப்பாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ருேம். . . .
மானிப்பாய் வைத்திய அதிகாரியிடம் மா மஞர் சென்று என் மனைவியின் நி%ளயை நன்முக விளக்கினர். மனைவியின் நிலையை பரிசோதித்த டாக்டர் எட்டு மாதத் திலேயே குழந்தையைப் பிரசவிக்கச் செய்தால் வயிற் றுக்குத்து முற்ருக நீங்கிவிடும். அதன்மேல் குழந்தை யைக் கண்ணுடிப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம்’ என்று கூறினர். யாம் அதற்குச் சம்மதித்தோம். மானிப் பாய் ஆஸ்பத்திரியில் குறைப்பிரசவமாகப் பெண் குழந்தை பிறந்தது. இதற்குச் சிவயோகம் என்று பெயரிட்டேன்" டாக்டர் சொற்படி குழந்தை தப்புமென நம்பினேன். ஆனல் இந்தக் குழந்தை சீவித்திருக்கவில்லை. குறைப் பிரசவமான அச்சிசு தான் பிறந்த எட்டாவது மணித்தி யாலத்திலேயே இறந்துவிட்டது.
மானிப்பாய் ஆஸ்பத்திரியைச் சேர்ந்தவர்தள், இறந்த இசுவை அங்கேயே அடக்கஞ் செய்யலாம் என்று தெரி வித்தனர். நான் சம்மதிக்கவில்லை. மனதிலே மட்டற்ற வேதனை சூழ்ந்துகொண்டது. வேதனையைத் தீர்க்கும் மருந்தான குடியையே நாடினேன். யாழ்ப்பானத்துக் காரைச் செலுத்திவந்து அங்கு சவ அடக்கத்துக்குரிய பொருட்களுடன் திரும்பினேன்.
எனது மாமனருடனும் கார்ச்சாரதியுடனும் இறந்த இசுவைக் கொக்குவில் மயானத்துக்கு எனது காரிலேயே கொண்டு வந்தேன். மாமனர் உண்டாக்கிய சவக்குழி யில் பிணத்தை வைத்தபோது என்னுடைய முந்திய மனைவி, அவள் பெற்ற குழந்தைகள் தாய் தந்தையர் எல்லோரும் நினைவில் எழுந்தனர். மதுவின் போதையோ அதிகம். அத்துமீறிய நிலையில் குரலெடுத்து அழுததுடன் எனது தலைமயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டேன்.

Page 91
-- l68 -س
எனது சோகத்தின் செயலைத் தொடரவிடாது கூட வந் தவர்கள் தடுத்து என்னை ஒருவாறு தேற்றி மாணிப்பாய்க் குக் கூட்டி வந்தனர்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மனைவியின் உடல் நலம் சிறுகச் சிறுகக் குணமுற்றது; வீட்டுக்கு வந்தேன். நல்ல உண்டியும் பாதுகாப்பும் அவளுடைய உடலுக்குத் தேறுதல் தந்தன.
துன்பமும் பிணியும் அடிக்கடி தொடர்கின்றதே இதற்குக் காரணம் என்ன? இவ்வாறு சிந்தித்தபோது ஒரு நண்பனின் சிபார்சின் பெயரில் ஒரு சாஸ்திரியை வீட்டுக்குக் கூட்டிவந்தேன். சாஸ்திரி வளவைச் சுற்றிப் பார்த்த பின்னர் எங்களுடைய சாதகங்களைக் கொண்டு வரப்பணித்தார். மூத்த மகனுடைய சாதகத்தை நன் ருகப் பார்த்த சாஸ்திரி ஒன்பது வயதுவரை மூத்த மகளுகிய சிவயோகனுக்கு எவ்வித சகோதரங்களுமில்லை யெனச் சொன்னர். அந்த வேளை என்னுடைய மூன்ரு வது மகனகிய சிவயோகன் வீட்டுக்குள்ளிருந்தான். சாஸ் திரியின் சொல்லில் எனக்கு நம்பிக்கை பிறக்குமா? ஏதோ சொன்னர் என்பதற்காகக் கொடுக்கவேண்டிய சன்மா னத்துடன் அவரை அனுப்பிவிட்டேன்.
சாஸ்திரி வந்து போய் ஒரு மாதத்திலேயே மூன்று வது மகளுகிய சிவயோகனுக்கு வருத்தம் பிடித்துக் கொண்டது. அவனுக்கு வயது இரண்டரை. தாயார் ஆஸ்பத்திரியில் இருந்த காலத்தில் அவனைக் கவனித் துப் பாதுகாக்கத் தகுந்தவர்களில்லை. சிறு சிறு வருத் தங்களுடன் இருந்தவன். இப்போது கடுமையான வருத் தம் பற்றிக்கொண்டது. இந்தவேளை சாஸ்திரியின் சொல் லும் என்மனதிற்பட்டது. அவரது சொல்லு உண்மையா கக்கூடியவாறு அவனும் இறந்துவிட்டான். வேதனையோ சொல்லி முடியாத அளவுக்குப் பெருகியது. விதியின் விசித்திரத்தை என்னென்று சொல்வேன்.

- 69 -
புதிய வசிப்பிடம் :
காங்கேசன்துறையில் வசித்துவந்த எனது தம்பியா கிய நடராசா வீட்டுக்கு வந்தான். அவன் முகத்தில் கவலைக் குறியே நிரம்பி இருந்தது. இரண்டொரு தினங்க ளாகியும் வீட்டுக்குச் செல்லாமல் எனது வீட்டிலேயே தங்கியிருந்தான். காரணம் என்னவென்று விசாரித்தேன். அவன் மிகவும் மனத்துன்பத்துடன் " " அண்ணு! நீ என் னைச் சிறுவயது முதல் வளர்த்து வந்தாய்’ என்று கண் கலங்கினன். அவனது கண்ணிர் நெஞ்சை உருக்கியது. மேலும் 'அண்ணு, என்னுடைய மனம் நிம்மதியாகவில்லை. உன்னைப் பிரிந்து சென்று காங்கேசன்துறையில் கடையை வைத்து நடத்தினேன். நீ தடைசொல்லியும் கேளாது ஒரு டெண்ணே என் பிரியப்படி மணந்தேன். அவள் தற் போது பைத்தியக் காரியாக அங்கொடையில் இருக்கி ருள். எனக்கோ கடன் துன்பம் பெருகிவிட்டது. தொழிலை நடத்தமுடியவில்லை. பெரிய கஷ்டத்துக்குள்ளாகியுள் ளேன்” என்று தனது நிலையை விவரித்தான்.
அவன் கண்கலங்கியதைக் காண மனம்"வேதனையுற் றது. திடீரென மனதில் எனது மைத்துனனுன வேலுப் பிள்ளையுடன் கொழும்பில் வசித்துவந்த மூத்த தம்பி சுப்பிர மணியத்தின் நினைவு எழுந்தது. ஒருநாள் அங்கிருந்து அவன் மறைந்து,விட்டான். இன்றுவரை எங்கிருக்கிருன் என் பது தெரியவில்லை. அவனது மறைவு எனது மனதை வாட்டிக்கொண்டே யிருந்தது. ஆகவே எப்படியாவது தம்பி நடராசனையாவது பாதுகாக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.
காங்கேசன்துறையில் பலவித கடன்களுக்கு மத்தி
யில் தன் தொழிலைத் தம்பி நடராசாவினல் இயக்கமுடிய
வில்லை. ஆகவே அவனுடன் காங்கேசன் துறைக்குப்
புறப்பட்டு சென்று அவன் பட்ட கடன்களையும் தொல்லை
22

Page 92
-- 170 س
களையும் நிவிர்த்தி செய்தேன். காங்கேசன்துறையிலுள்ள அவனது லோண்ட்றியையும் பாரமெடுத்துக்கொண்டேன், அவனைப் பின்னர் எனது தொழிலகத்தில் மனேஜராகச் சேர்த்துக்கொண்டேன்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் நான் லோண்ட்றி திறந்தபோதுள்ள சாதித்தடிப்புக் காங்கேசன்துறையி லும் ஊடுருவி இருந்தது. இங்கு நிரந்தரமாக வசிப்ப வர்கள் லோண்ட்றிக்கு உடுப்புப்போடுவதில்லை. காங்கே சன்துறை புகையிரத நிலையத்தில் பணிபுரிகின்ற உத்தி யோகத்தர்களும் ஊரவரல்லாத மற்றையவர்களும் உடை களைப் போடுவர். அவர்கள் தொகையோ குறைவு. அவர் களை நம்பி நிரந்தரமாகத் தொழில் நடத்தமுடியாது.
ஆகவே இந்த லோண்ட்றியைத் தனியே நம்பி வெற்றி காணமுடியாது என்பதை ஊகித்துக்கொண்டேன். காங் கேசன் துறையிலிருந்து பிற இடங்களுக்கு மீனை ஏற்றி சில வாகனங்கள் நல்ல வருவாய் பெற்றன. சாரதி வேலையில் நல்ல பயிற்சியும் அனுபவமும் உள்ளவன் நான். ஒரு வானையும் இன்னெரு காரையும் வாங்கிக்கொண் டேன். கார்களிலும், வா னி லு ம் சூரியப் பிரகாஸ் லோண்ட்றி என்ற பெயரை எழுதினேன். இந்த வாக னங்கள் ஓடுவதன் காரணமாக எனது லோண்ட்றிக்கும் நல்ல விள்ம்பரம் கிடைக்குமென்பது என்னுடைய நம் பிக்கை.
தினசரி மீனை ஏற்றிக்கொண்டு வானைச் செலுத்திக் குறிப்பிட்ட இடங்களில் கொடுத்துவந்தேன். ஆஸ்பத் திரிக்கு முன்பாக எனது வானும் கார்களும் நிற்பதனல் நோய் தீர்ந்தவர்களைக் காரில் ஏற்றி அவரவர் வீடுக ளுக்குச் கொண்டுசெல்வேன். சில சமயங்களில் நோயி னல் மரணமானவர்களைக் கொண்டு செல்வதற்கு கார் வசதியில்லாது பலர் கஷ்டப்பட்டனர். இதற்காக எனது கார்களிலொன்றை இறந்தவர்களை ஏற்ற உபயோகித் தேன்.

-- I W Ha
காங்கேசன்துறை லோண்டிறியுடன் குடியிருக்க நல்ல வீடொன்றிருந்தது. வீட்டுக்குத் தேவையான தளபாடங் களைச் சேகரித்தேன். கொக்குவிலில் உள்ள வீட்டில் இனிமேல் குடும்பத்தவரை வைத்திருக்கக்கூடாது என்ற முடிவுக்குப் பின்னர் அவர்களை யெல்லாம் காங்கேசன் துறைக்கு அழைத்து வந்தேன்.
காங்கேசன்துறை துறைமு சத்தில் பிறநாட்டுக் கப்பல் கள் வரும். அவ்வேளை கப்பலில் உள்ளவர்களின் உடை களைப் பொருத்தம் பேசி சலவைசெய்து கொடுப்பதனல் லோண்ட்றியின் வருமானம் கூடியது.
எனது வீட்டுக்கு முன்னர் வெறுமையாகக் கிடந்த கடையொன்றை வாடகைக்கு எடுத்தேன். முஸ்லிம் வாலிபர் ஒருவரைப் பணியாளராக்கி தேங்காய் வியாபா ரஞ் செய்துவரலானேன். வான் என்னிடம் சொந்த மாக நின்றபடியால் அதிகாலையில் கொடிகாமத்துக்குச் சென்று தேங்காய்களை ஏராளமாகக் கொள்முதல் செய் வோம். அவற்றை நூற்றுக்கணக்காகவே விற்பதனல் ஆதாயம் கிடைத்தது.
கொக்குவிலில் பிறந்தநாட் தொடக்கம் நான் பட்டு வந்த துன்பங்களெல்லாம் காங்கேசன்துறை வாழ்க்கை யின்போது நீங்கியது. சந்தோசம் உள்ளத்தைப் பலமா கப் பற்றியதென்றே கூறவேண்டும்.
யாழ்ப்பாணம் சூரியப் பிரகாஸ் லோண்ட்றியிலும் நல்ல வருமானம் வரத்தொடங்கியது. காங்கேசன்துறை லோண்டிறி, தேங்காய்க் கடை, வான்கள் இவற்றல் தேவைக்கு வருவாய் கிடைத்தது. இதுவரை துன்பத் தையே அனுபவித்து வந்த என்னுடைய ஆதரவில் மொத் தமாக 42 தொழிலாளர் பணிபுரியத் தொடங்கினர். இத்தொழிலாளர்கள் பல மதத்திலுமுள்ளவர்கள். அவ ரவர்களுக்குத் தேவையான உணவுவகைகளைச் சமைப்ப தற்கு மூன்று சமையற்காரர்கள் வீட்டில் இருந்தனர்.

Page 93
- 172 -
குடிபானங்கள் எந்த நேரத்திலும் என் வீட்டில் தயாராக இருந்தன. ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னுடைய ஸ்தாபனங்களில் பணிசெய்கின்ற பணியாளர் அனைவருக்கும் விருந்து வைப் பதை ஒரு கடமையாகக் கொண்டேன். இந்த விருத் தின் போது அதிகமாகக் குடிப்பேன். என்னுடைய இத யம் பூரிப்படையும். கையில் பணம் புரண்டது. இந்த வேளையில் என்னுடைய குடும்பத்தவரின் சொந் த த் தேவைக்காக A போட்டி C N 7280 என்ற இலக்கமுடைய கார் ஒன்றை வாங்கினேன். வழமையாக ஞாயிற்றுக் கிழமைகளில் எனது நாற்பத்திரண்டு தொழிலாளர்களும் என்வீட்டில் ஒரே இடத்தில் உட்கார்ந்து உணவுகொள்வர். *ஒவ்வொருவரும் தங்கள் இலைகளில் முதலிற் குழைக்கும் ஒரு கவளம் சோற்றை என்னுடைய பாத்திரத்திலேயே இடவேண்டும்” என்பது எனது வேண்டுகோள் காரணம் பணியாளர்களின் ஒத்துழைப்பினலேயே நான் வாழ்கின் றேன். ஆகவே அவர்தம் கையினுற் குழைத்த உணவை நான் ஏந்திப் புசிக்கவேண்டுமென்பது என் பிரியமாகும். பிறந்த காலத்திலிருந்து நான் பட்ட வேதனைகளினின் றும் விடுபட்டு நிறைவைப் பெற்றுள்ளேன் என்று நான் நம்பினேன்.
சகடக்கால்போல் வருவது சுக துக்கம் இவ்வாறு தத்துவ ஞானிகள் தெரிவிப்பர். காங்கேசன்துறையில் என்னுடைய வாழ்க்கைத் தேர் அச்சுப் பிசகாது நிதா னமாகவே ஊர்ந்து வந்தது.
女

- to -
புத்திரி பிறந்தாள் :
அங்கொடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தம்பி நடராசனுடைய மனைவி காலமாகிவிட்ட கள். இச் செய்தி கிடைத்ததும் தம்பி கலங்கினன்; நானும் கலங்கி னேன். சிறுவயது முதல் அவனைத் தூக்கி வளர்த்தவன் நான். என்னுடைய இரத்த உறவு என்று சொல்லுகின்ற உரிமை அவனுக்கே உண்டு. அவன் பிரியம்போல் அதிகஞ் செலவிட்டு விமரிசையாக அவன் மனங்கோணது இவ்விவா கத்தைச்செய்து வைத்தேன். சிறுபராயத்திலேயே அவன் தாரமிழந்தது பற்றிய வேதனை என் நெஞ்சைக் கலக்கி யது. ஆறுதல் சொல்லித் தேற்றினேன்.
இந்த வேளையில் என் மனைவி கர்ப்பமுற்ருள். முத லாவது மைந்தனுக்குப் பின்னர் பிறந்த எந்தக் குழந்தை களும் உயிருடன் இல்லை. இறைவா இந்தக் குழந்தையா வுதல் நல்ல முறையிற் பிறந்து என்னுடைய இதயத்தில் இன்பத்தை ஊட்டவேண்டுமென்று பிரார்த்தித்தேன்.
மனைவி பூரண கர்ப்பவதியானள். அவரே இணுவில் ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் யான் வீட்டுக்குச் செல்ல வில்லை. இணுவில் ஆஸ்பத்திரியில்தான் என்னுடைய நேரம் அதிகமாகக் கழிந்தது.
பிறக்கப்போவது பெண் குழந்தையாக இருக்கவேண் டும். அந்தக் குழந்தைக்கு ஒரு வித துன்பமும் ஏற்படக் கூடாதென்றெல்லாம் கடவுளைப் பிரார்த்தித்தேன். முதல் மகனது சாதகத்தில் குறிப்பிட்டபடி அவனுக்கு ஒன்பது வயதுவரை சகோதரப் பொருத்தமற்றதனல் போலும் மற்றைய குழந்தைகள் மடிந்துவிட்டன. ஒன்பது ஆண்டு களுக்குப் பின்னரே இந்தக் குழந்தை பிறக்கப் போகின் ADg5I •
முதல் மனைவியின் வயிற்றில் ஜனித்த குழந்தைகளே இழந்தேன். இரண்டாவது மனைவியின் வயிற்றில் உதித்த

Page 94
- 74 -
மூன்று குழந்தைகள் இல்லாதொழிந்தன. இதுவே மன தில் சலனத்துக்குக் காரணமாகவிருந்தது.
தெய்வம் என்னைக் கைவிடவில்லை. 1953-ம் ஆண்டு மே மாதம் 28-ந் திகதி இரவு பதினெரு மணியளவில் குழந்தை பிறந்தது. நான் பூரிப்படையக்கூடியதாகப் பெண் குழந்தையே பிறந்தது. மனதில் இன்பம் சுரந்தது. குழந்தை பிறந்த வேளை ஆஸ்பத்திரியிலேயே நான் நின்ற மையால் உடனேயே குழந்தையைப் பார்க்க முடிந்தது.
என்னுடைய மனைவியின் சகோதரி பல குழந்தைகளைப் பெற்றவர். பிரசவித்த மனைவியை பேணுவதற்குத் தகுதி வாய்ந்தவர் அவர் என்பதைத் தீர்மானித்தேன். இதை மனைவியின் பெற்ருேரும் ஒப்புக்கொண்டனர்.
ஏழாவது தினம் மனைவியை இணுவில் ஆஸ்பத்திரியி லிருந்து விலக்கினர். அங்கிருந்து காரில் புறப்பட்டு ஊர் காவற்றுறையைச் சேர்ந்த கரம்பனிலுள்ள முற்குறிப் பிட்ட மைத்துணி வீட்டுக்குக் கொண்டுசென்றேன்.
நல்ல பாதுகாப்பினல் மனைவியின் உடம்பு தேர்ச்சி கண்டது. முப்பத்தொராவது தினம் கொண்டாட்டத் துக்குப் பல உறவினரும் வந்தனர். பகல் கொண்டாட் டத்தின் பின்னர் மனைவியையும் குழந்தைகளையும் காரில் 'காங்கேசன்துறைக்குக் கூட்டி வந்தேன். உறவினர் சில
ரும் எம்முடன் கூடி காங்கேசன்துறைக்கு வந்தனர்.
விருந்தாளிகளை உணவுடன் திருப்தியாக்க முடியா தென்பதனல் அதிக போதை தரக்கூடிய மதுபானங்களை வாங்கினேன். அவற்றைக் குடித்து உண்வருந்திய பின் னர் எல்லோரும் படுத்துவிட்டனர்.
மறுநாளும் விருந்து ஆரம்பமானது. எனக்கு நல்ல போதை. உணவுண்ட பின்னர் உறவினர் சிலர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். கரம்பனிலிருந்து வந்த உற வினர்களை வானில் ஏற்றிச் சென்று அவர்தம் வீட்டில்

-- l75 -س-
கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பது என்னுடைய எண்ணமாகும்.
திரும்பி வரும்போது தனியே நான் வரவேண்டியி ருக்கும். எனக்குத் துணையாக பிரியமான நண்பர் ஒரு வரை வானில் ஏற்றிக் கொண்டேன். பாட்டுங் கூத்து மாக உறவினர்கள் கலகலப்புடன் வந்தனர். அன்று சாயந்திரம் கரம்பனை அடைந்தோம். என்னுடன் வந்த உறவினர்கள் 'நீர் சும்மா போகப்படாது” என்று வற் புறுத்தினர். ஆகவே அவர்களுடன் சேர்ந்து மதுவைப் பருகினேன்.

Page 95
- 76 - மதுபானம் பருகும் பழக்கம் ஒழிந்தது :
இரவு சுமார் ஆறுமணிவரை அங்கிருந்து எனது நண் பனுடன் புறப்பட்டேன். ஊர்காவற்றுறையிலிருந்து புறப் பட்டு யாழ்ப்பாணம் வந்ததும், மேலும் தவறணையில் மது பருகினல் என்ன என்ற நப்பாசை யெழுந்தமையால் யாழ்ப்பாணம் சாராயத் தவறணையிலும் மதுவைப் பரு கினேன்.
எத்தகைய போதையிலும் நான் வாகனங்கள் செலுத் திப் பயிற்றப்பட்டவன். ஆயினும் இன்று நிலைமோசம். என்னுடன் துணைக்கு வந்தவர் வாகனஞ் செலுத்தப் பயிற்சி இல்லாதவர். வானில் ஏறியதும் அவரிடம் ** நண்பா! வெறி சிறிது அதிகம். ஆயினும் வானைச் செலுத்தும் திராணியுண்டு. நீ பக்கத்திலிருந்து எதிரே ஏதேனும் வாகனங்கள் வருகின்றனவா என்பதை அவ தானித்துக்கொள்’ என்றேன். வருகின்ற வழியில் என் னுடைய நண்பன் வழிகளை நிதானித்து எச்சரித்து வர வானைச் செலுத்தினேன்.
தெய்வாதீனமாக எவ்வித இடையூறுமின்றி வான காங்கேசன்துறையிலுள்ள இல்லத்தின்முன் நிறுத்தினேன்.
வானை வழியில் நிதானமாகச் செலுத்தி வந்தேன். ஆயினும் என்னுடைய போதை காரணமாக கீழே இறங்க முடியவில்லை. நானுக இறங்கினல் எவ்விதத்திலும் விழுந்து விடுவேன். இந்த நிலையை உத்தேசித்து என்னுடைய பணியாள் ஒருவரும், கூடவந்த நண்பனும் மெதுவாக இறக்கி இல்லத்துக்குள் கொண்டு சென்றனர்.
வீட்டிற் சென்று கட்டிலில் படுத்ததுமட்டும் என் ஞாபகத்திலுண்டு. மற்றைய எதுவும் என் நினைவிலில்லை. அவ்வளவு மயக்கம். விடியும்வரை நல்ல உறக்கம். விடிந்த பின்னரும் மயக்கம் தெளிந்தபாடாக இல்லை. என்னு

- 77 -
டைய சீவிய காலத்தில் இன்றுபோல் 676irrodegoud யான் இத்தகைய அளவுக்குக் குடிக்கவில்லை.
எனவே காலையிலேயே புசத்தத் தொடங்கிவிட்டேன், என்னுடைய பணியாட்களுள் நேர்மையும், பண் பும், கடமை உணர்ச்சியும் கொண்ட இந்தியத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் சதா ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். அத்தகைய உண்மை ஊழியனை யான் எப்போதும் உறங்காப்புலி என்றே அழைப்பேன்.
அவர் மயக்கத்தினல் நான் புசத்துவதைக் கண்டதும் என்னிடத்துக்கு வந்துவிட்டார். என்னை அப்படியே புசத்திக்கொண்டிருக்கவிடவில்லை. இன்னெருவரின் உத வியுடன் அழைத்துச் சென்று கிணற்றடிக்குக் கொண்டு சென் ருர் . மற்றவர் பிடித்துக்கொள்ள நூறுவாளி தண் ணிருக்கு மேல் ஊற்றி என்னைக் குளிப்பாட்டினர்.
குளித்து முடிந்த பின்னரே என்னுடைய போதை யும், மயக்கமும் தெளிந்தது. அப்போது மனைவியை ஏறெ டுத்துப் பார்த்தேன். இரவு முழுதும் அவள் என்னு டைய போதையை நினைத்து அழு திருக்கவேண்டும். அழுத கண்கள் செந்நிறம் பாய்ந்திருந்தன.
என்னுடைய சிந்தனையும் விரிந்தது உலகத்தில் எத் தனையோ மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள். பலவிதமான செயல்களையும் செய்கிறர்கள். நல்ல செயல்களைப் புரி கிறவர்களின் பெயர் நாட்டில் நிலைபெறுகிறது. அல்லா தன செய்கின்றவர்களை மனிதர் மறந்து விடுகிருர்கள். இது இயற்கை. நாம் உலகில் பெரிய சாதனைகளைச் செய்துவிட முடியாது. ஆனல் நல்ல காரியங்களை ஏன் செய்யமுடியாது.
உலகத்தில் காமம், களவு, சூது, கொலை முதலிய பலவித பாவங்களை மனிதர் செய்கின்றனர். இந்தப் பாவங்களை யெல்லாம் தூண்டுவதற்கு முன்னணியில் நிற்
2品

Page 96
س۔ l78 حس۔
பது குடி. குடியொன்றினலேயே மற்றைய தீய காரி யங்கள் பிறக்கின்றன. இத்தகைய சரித்திரங்கள் நம் முடைய நினைவில் எப்போதும் எழுவதில்லை.
நான் ஊரில் அவ்வப்போது பலருடன் சண்டை சச் சரவில் ஈடுபட்டுள்ளேன். பலவித தொல்லைகளை விலைக்கு வாங்கியுள்ளேன். இவையெல்லாம் நான் சுய நினைவி லிருந்த வேளையில் நடைபெறவில்லை. குடித்து வெறியே றிஞற்ருன் இத்தொல்லைகள் ஏற்படுகின்றன.
*" குடி கெடுப்பது குடி" என்பது உண்மை. இது பற்றியெல்லாம் அறிஞர் கூறியிருப்பது என் சிந்தனையில் எழுந்தது. நேற்றுக் குடித்த குடியினல் என் நினைவு தவறி விட்டது. நிதானமாக இருக்க முடியவில்லை. என்னு டைய வீட்டில் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் எனக்குத் தெரிந்திருக்காது. இதற்கு அடிப்படையானது குடிப்பழக்கம். இவ்வாறு மதுவைக் தொடர்ந்து குடித் துக்கொண்டிருப்பேனகில் எதிர்காலத்தில் எத்தகைய கொடுமைக்கு ஆளாவேனே? கடந்த காலத்தில் யான் குடியினுல் அழித்த பணத்தின் தொகையோ அதிகம். குடிபோதையின்போது எவரும் என்னிடம் எதையும் பெற்றுவிடலாம். நிதானம் இழந்து விட்டவனை மடக்கி எதையாவுதல் தமது சுயநன்மைச்காகப் பெற்றுவிட முடியுமல்லவா?
என்னுடைய வாழ்க்கையின் எதிர்கால விளக்குக ளாக இரு குழந்தைகள் உள்ளனர். தந்தை இப்படிக் கேவலமான குடிப்பழக்கத்துக்களாகி அழிந்துகொண்டி ருக்கிருர் என்பதை உணர்ந்தால் எவ்வளவு துன்பப்படு வர். குற்றவாளியைத் தண்டிப்பவன் தான் குற்றத்தைச் செய்யாது நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும். தாம் ஒழுங்காக இருந்துகொண்டுதான் குழந்தைகளைக் கண்டிக்க வேண்டும். ஆகவே நேர்மையைக் கடைப்பிடிப்பதற்கு gத்தியாவசியம் குடிப்பழக்கம் நீக்கப்படவேண்டும்.

س- 79! --س-
இத்தகைய முடிவுக்குவந்து அன்றைக்கே குடியை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டேன்.
குடியை மறந்துவிட்டேன். நல்ல பண்புகளை எவ்வள வுக்குக் கடைப்பிடிக்க வேண்டுமோ அவ்வளவுக்கு நான் காரியங்களைச் செய்துவந்தேன்.
ஏற்கனவே சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதிருந் தது. குடிப்பழக்கத்தை விட்டபின்னர் இயற்கையாகவே இறை நினைவு எழுந்தது. சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டானது. 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் திகதி இணுவில் ஆஸ்பத்திரியில் மனைவி ஒரு ஆண்குழந்தை யைப் பெற்றெடுத்தாள். மூத்த ம க ன் சிவநேசன் பிறந்து ஒன்பது ஆண்டுகள் கழிந்த பின்னரே குழந்தைகள் பொருத்தம் என்பது சாஸ்திரிமார்களின் கருத்து. இறை வன் செயலாலே சாஸ்திரிமார்களின் கருத்து நிதர்சன மாகிவிட்டது.
என்னுடைய எண்ணப்பாங்கிற்கிசைய இரண்டாவது மகனுக்குச் சிவனடியான் என்ற நாமத்தைச் சூட்டினேன். இந்தக் கருத்துக் கிசைய அந்தக் குழந்தையின் இயற்கை யான குணம் அமைத்திருப்பதை எந்தநாளும் அவதானிக் கின்றேன். இயற்கையாகவே அவன் இறைவனிடம் நம்பிக்கை கொண்டே வளர்கின்றன்.

Page 97
- 80 -
யாழ்ப்பாணத்தில் வீடு:
வாழ்க்கைப் படகு சுமுகமாக மிதக்கத் தொடங்கி யது. என்னுடைய முந்திய மனைவியின் பெற்றேர்கள் கொக்குவிலில் அமைந்துள்ள வீட்டிலேயே குடியிருந்த னர். அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தேன். இடையிடையே அவர்களுக்குச் சுகவீனம் ஏற் படும் அவ்வப்போது என்மனைவியும் நானுமாக அவர்க ளைச் சென்று கண்காணிப்போம்.
என்னுடைய மனதில் எனக்கு வசதியாக யாழ்ப்பா ணத்தில் ஒரு காணி வாங்கவேண்டுமென்ற நினைவுண்டு. அதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. எப்படியும் இது என்னுடைய கனவாகவே நிலைத்துவிட்டது.
1956-ம் ஆண்டு ஆவணி மாதம் பிரசவத்திற்காக மனைவியைக் இணுவில் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ச் சேர்த்தேன். இந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் கச்சேரி யடியில் ஒரு காணி ஒன்று விற்பனைக்கிருப்பதாகக் கேள்வி யுற்றேன். என்னுடைய சமுகத்தவர்கள் சூழ்ந்து வாழு கின்ற இடமாக அது அமைந்தமையால் அந்தக்காணியை வாங்க முயற்சித்தேன். 1956-ம் ஆண்டு ஆவணி மாதம் 4-ந் திகதி இணுவில் ஆஸ்பத்திரியில் மனைவி குழந்தை யொன்றைப் பிரசவித்தாள். இந்த ஆண் குழந்தையின் அதிர்ஷ்டத்தின் பேருக அக்காணியை அன்றைக்கே வாங்கினேன். இந்தக் காணி வாங்கிய விபரம் என்னு டைய மனைவிக்குத் தெரியாது. இதுபற்றி மனைவிக்குத் தெரிவித்தேன்.
நான் வாங்கிய காணியில் ஒரு பழைய வீடு இருந் தது. அந்தப் பழைய வீட்டைச் செப்பப் படுத்திய பின் னர், காங்கேசன்துறையில் அமைந்த வீட்டின் அடுக்களை எப்படி அமைந்திருந்ததோ அதேபோன்று ஒரு அடுக் களையைக் கட்டினேன். பழைய வீட்டையும் சில பத்தி களை இறக்கி விஸ்தாரஞ் செய்துகொண்டேன். மின்சார

. سس۔ 8! ----
வசதியற்றிருந்த அந்த வீட்டுக்கு மின்சார வசதியையும்
உண்டாக்கினேன்.
எனது மகள் சிவயோகத்தின் பிள்ளைப்பேற்றைக் கவனித்து வந்த கரம்பன் மைத்துணியே சிவனடியானைப் பிரசவித்தபோதும் மனைவியைப் பேணி வந்தார். இந்த மைத்துணி கைராசியுடையவர் என்ற காரணத்தினுல் இந்தப் பிள்ளையையும் தாயையும் கவனிப்பதற்காக அவ ரிடம் கொண்டுபோய் சேர்த்தேன். இந்தப் பிள்ளைக்குச் சிவநாதன் என்ற பெயரிட்டேன்.
காங்கேசன்துறை வீட்டிலிருந்த சாமான்களை யாழ்ப் பாண வீட்டில் கொண்டுவந்து முறையாக வைத்துக் கொண்டேன். பிள்ளை பிறந்த முப்பத்தொராவது தினம் கரம்பனில் கொண்டாடப்பெற்ற பின்னர், மனைவியை யும் குழந்தையையும் யாழ்ப்பாண வீட்டுக்குக் கொண்டு வந்தேன்.
மனைவிக்கு யாழ்ப்பாணம் கச்சேரியடியில் காணி வாங்கியது தெரியும். அங்கே உடனடியாகக் குடிபோவ தைப்பற்றி அவளுக்கு நான் அறிவிக்கவில்லை: கரம்பனி லிருந்து யாழ்ப்பாணம் கச்சேரியடி வீட்டுக்கு வந்தபோது காங்கேசன்துறை வீட்டை அப்படியே இங்கே கொண்டு வந்துவிட்டேனே என்னும்படியான பிரமை ஏற்பட்டது அவளுக்கு. அடுக்களையில் இருக்கவேண்டிய சாமான்கள் உரிய ஸ்தானங்களில் இருப்பதைக் கவனித்து அதிசயித் தாள்.

Page 98
- 182 -
புதிய தொழிலுக்கான ஆரம்பம் :
யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் லோண்ட்றி கள் தொடங்கிவிட்டார்கள். சூரியப் பிரகாஸ் லோண்ட்றி யில் பணிபுரிந்த ஊழியர்கள் விலகிச்செல்லத் தொடங்கி னர். இந்தியத் தொழிலாளர்களை இலங்கையரின் ஸ்தா பனங்களில் பணியாட்களாக வைத்திருக்கப்படாதென்று அரசாங்கம் ஆணையிட்டது. என்னுடைய ஸ்தாபனத்தில் இந்தியத் தொழிலாளர்களே விகிதாசாரத்தில் அதிகமான வர்கள். அவர்களைத் தொடர்ந்து வைத்திருக்க முடிய வில்லை. பலர் இந்தியாவுக்குச் சென்றனர். ஸ்தாபனத்தை ஒழுங்காகக்கொண்டு இயக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
பழக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலையைவிட்டு விலகினர். புதிய தொழிலாளர்களால் விருத்தி குறைந் தது. நியாயமாகவும் உண்மையாகவும் உழைக்கின்ற பலர் விலகினர். யாழ்ப்பாணத்தின் முக்கிய ஸ்தானங் களிலெல்லாம் லோண்ட்றிகள் திறக்கப்பட்டன. இவற்று டன் போட்டிபோட்டுத் தொழிலை இயக்க வேண்டியநிலை ஏற்பட்டது. விருத்தியோ மிகக் குறைவாக இருந்தது. தனியான தொழில் ஒன்றைச் செய்வோம் எனச் சிந்தித் தேன்.
இந்தியாவில் பட்டுடைகளைத் நீரிற் போடாது சலவை செய்வதுக்கும், உடைகளுக்குச் சாயம் போடுவதுக்கும் ( Dyers & Drycleaners ) 60 l-uri Giv sy6örl - ig-60) pá6)Gif னேர்ஸ் ஸ்தாபனங்கள் பல இருக்கின்றன. ஐரோப்பியர் கள், சீனர்கள், இந்தியர்கள் இவற்றைத் திறம்பட நடாத் திவந்தனர். பட்டுடைகளை நீரில் போடாது சலவை செய் யவும், உடைகளுக்குச் சாயம் போடுவதுமான தொழில் ஸ்தாபனத்தை நடத்தினுல் என்ன என்ற முடிவுக்கு வந்தேன்.
இப்புதுத் தொழிலில் எங்களுடைய ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுபவம் இல்லை. எனக்கு இது பற்

س- 183 --
றிய ஞானம் சிறிதளவு இருந்தமையால். லோண்ட்றி வேலையுடன் பட்டுடைகளை தண்ணிரில் போடாது சலவை செய்வது பற்றி விளம்பரப்படுத்தியிருந்தேன்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் களியாட்ட விழா நடைபெற்றது. அங்கே எங்களுடைய ஸ்தாபனத்துக்கு விளம்பரம் ஏற்படவேண்டு மென்பதற்காகக் களியாட்ட விழா மைதானத்தில் ஒரு கடையைத் தற்காலிகமாகத் திறந்தேன்.
அங்கே டிறைக்கிளின் செய்வதற்காக வெளிநாட்ட வர் ஒருவர் லோங்ஸ் ஒன்றைத் தந்தார். அதனை யான் சுத்தஞ்செய்ய ஆரம்பித்தேன். டிறைக் கிளின் செய்வதற்கு முறையான ஞானம் அப்பொழுது எனக்கில்லை. குறிக் கப்பட்ட உடை எந்தப் பட்டுவகையைச் சேர்ந்தது என் பதை முதலில் நிர்ணயஞ்செய்துகொள்ள வேண்டும், அதன் பின்னரே அதற்குத் தகுந்த மருந்தையிட்டுச் சுத் தஞ்செய்ய ஆரம்பிக்க வேண்டும். அனுபவக் குறைவி ஞல் வெளிநாட்டவர் தந்த காற்சட்டைக்குப் பொருத்த மற்ற மருந்தை இட்டு வேலையை ஆரம்பித்தோம். காற் சட்டை அப்படியே சுருங்கி மருந்தினுல் உருண்டுவிட்டது. மாற்று மருந்துகள் இட்டபோதிலும் அது சரியாகவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை.
குறிப்பிட்ட தவணையில் வெளிநாட்ட வர் வந்துவிட் டார். அவரிடம் நடந்தவற்றை அப்படியே கூறினல் என்னுடைய தொழில் ஸ்தாபனத்துக்குப் பாதிப்பு ஏற் பட்டுவிடும். எனவே அந்த வெளிநாட்டவரிடம் "ஐயா உங்கள் காற்சட்டை தொலைந்துவிட்டது. அதற்கு நட்ட ஈடு எவ்வளவும் தரச் சம்மதிக்கின்ருேம் என்று அன்பா கப் பேசினேன். நட்ட ஈடாக நூறு ரூபா தரும்படி கேட் டார். அவ்வாறே நூறு ரூபாயை அவருக்குக் கொடுத் தேன். இரகசியமாக இந்த விவகாரம் தீர்ந்துவிட்டது.
இதன் பின்னர் தகுந்த ஒருவரைக் கொண்டு இவ் வேலையைப் படிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பயிற்சியை இந்தியாவிற்ருன் பெறவேண்டும். அங்குதான் இந்த வேலையின் நுட்பங்களை அறியலாம் என்று இந்தியா செல்ல உத்தேசித்தேன்.

Page 99
- 84 -
இரண்டாவது இந்தியப் பயணம்:
முந்திய காலம் போன்று நினைத்த உடனே இந்தியா வுக்கு வண்டியேற முடியாது. இலங்கை அரசாங்கத்தின் அனுமதியான பாஸ்போட் பெறவேண்டும். விசா எடுக்க வேண்டும். இதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண் Gl Gör.
இந்தியாவுக்குச் சென்று திரும்பும்வரையில் யாழ்ப் பாணத்தில் என்னுடைய மனைவி மக்களுக்கு உதவி வேண் டும். தனியே உதவியின்றி விட்டுச் செல்ல முடியாது. புதிய வீட்டில் குடியிருக்க வந்து கொஞ்சக் காலந்தான் ஆகி யிருந்தது. இத்தகைய நிலையில் எவ்வாறு அவர்களைத் தனியாக இருக்கவிடலாம். எனவே மனைவியின் நம்பிக் கைக்கு உரியவர்களான உறவினர்களை வந்து தங்கும் படி ஏற்பாடு செய்துகொண்டேன்.
பதினறு ஆண்டுகளுக்கு முன்னர் யான் இந்தியாவில் நின்றபோது எனக்கு உதவிய கன்னியப்பன் என்ற நண் பனுக்கு என்னுடைய தற்போதைய நிலையைப்பற்றியும் அங்கு நான் வருகைபுரிவதுபற்றியும் குறிப்பிட்டுக் கடி தம் எழுதியிருந்தேன்.
எனக்கு இலக்கச் சாஸ்திரங்களின் அதீத நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆகவே பிரயாணத்துக்கான திகதி யாக 1956-ம் ஆண்டு புரட்டாதி மாதம் 3-ந் திகதியை நிர்ணயம் செய்துகொண்டேன்.
குறிப்பிட்ட திகதி வந்தது. அன்றைக்கு என்னை விமான நிலையத்துக்கு வழியனுப்புவதற்குக் காரில் பல நண்பர்கள் வந்தார்கள். பதினறு ஆண்டுகளுக்கு முன் னர் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டது என்னுடைய மனைவிக்குக்கூடத் தெரியாது. வழியனுப்புவதற்கு எவ ருமே இல்லை. இந்தப் பயணத்தின்போது பலர் வந்திருத் தனர். என்னுடைய மடியில் போதிய பணமிருந்தது,

- 85 -
வசதியாக விமானத்தில் பிரயாணத்தை மேற்கொண் டேன்.
முருகா என்னுடைய காலத்தின் சேணத்தை நீயே பிடித்துக்கொண்டிருக்கிருய்’ என்றுட் பிரார்த்தித்தேன்.
என்னுடைய தாயகம் கீழே மனக் கண்ணின் முன்னும் புறக் கண்ணின் முன்னும் விடுபட்டுச்செல்ல இந்தியாவை நோக்கி விமானம் பறந்தது.
நிலையத்தில் விமானம் வந்து நின்றது. என்னுடைய வருகையை எதிர்நோக்கி வெல்டிங் தொழிலகத்தின் அதிபரும், என்னை முன்னுள் ஆதரித்து வந்தவருமான நண்பர் கன்னியப்பன் காருடன் வந்திருந்தார்.
பிரிந்தவர் கூடினல் பேசவும் வேண்டுமா? ஏற்கனவே என்னுடைய நிலையைப் பற்றிக் கன்னியப்பனுக்கு எழுதி யிருந்தேன். தற்போது என்னுடைய ஸ்தாபனம் பற்றிய தஸ்தா வேசு களையும், தொழிலாளர்களுடன் நான் நடத் தும் தொழிலகத்தையும் சேர்த்து எடுத்த படங்களேயும் காட்டினேன். 'உம்முடைய ஊக்கமும் விடாமுயற்சி யும் இத்தகைய வெற்றியான வாழ்வை உமக்குப் பெற் றுத்தரும் என்பதை நான் முன்பே அறிவேன்” இவ்வாறு கூறிக் கன்னியப்பன் என்னைப் பாராட்டினர்.
பதினறு ஆண்டுகளுக்கு முன்னர் நான் அலைந்து திரிந்த வீதிகள் கண் களிற்பட்டன. என்னே காலத்தின் மாற்றம்! முன்னர் கல்பதித்திருந்த வீதிகள் அகன்று விஸ்தாரம் பெற்றிருந்தன. கட்டிடங்கள் புதுமையுடன் விளங்கின. தர்பேசி விற்ற வீதிகளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் வடிந்தது. விதியின் சக்கரம் ஒரே திசை யில் உருள்வதில்லை என்பது எத்தகைய உண்மை. இன் றைக்கு நான் இவ்வீதிகளை யெல்லாம் நடந்து பார்க்க வில்லை. நண்பர் கன்னியப்பனுடன் சேர்ந்து உல்லாச மாகக் காரிலேயே பார்வையிட்டேன்.
罗尘

Page 100
- 86 -
அன்று பின்னேரம் நண்பர் கன்னியப்பன் என்னைச் சினிமாவுக்குக் கூட்டிச்சென்ழுர், முன்னுள் செட்டியார் நடாத்தி வந்த கடைக்கு அருகில் அமைந்த பாரகன் தியேட்டருக்குச் சென்ருேம்.
இரவு தன் வீட்டிலேயே என்னைத் தங்கும்படி கன்னி யப்பன் வற்புறுத்தினர். எனக்கு எவருடைய வீட்டிலும் தங்கியிருப்பதற்கு விருப்பமில்லை. எனவே நல்ல ஹொட் டல் ஒன்றிலேயே தங்கவேண்டுமென்று பிடிவாதமாக நின்றேன்.
டிறைக்கிளின்ஸ் தொழிலைப் பற்றிய பயிற்சியைப் பயிலுவதற்கே இம்முறை சென்னைக்கு வந்தேன். எவரி ட்ம் பயிற்சிபெறலாம் என்று கன்னியப்பனிடம் விசாரித் தேன். அவருக்கு இத்துறைபற்றிய அரிச்சுவடியே தெரி யாது.

سے 187 –۔
டிறைக்கிளின் மாவ்ஸ்டர் தொடர்பு :
நான் ஹொட்டலின் மேல் மாடியில் தங்கியிருந்தேன். அந்த ஹொட்டலுக்கு எதிரில் டிறைக்கிளின் தொழில் ஸ்தாபனம் ஒன்று இருந்தது. மேல் மாடியில் நான் தங்கியிருந்தமையால் டிறைக்கிளின் ஸ்தாபனத்தில் நடை பெறுகின்ற வேலைகளை என்னுல் அவதானிக்க முடிந்தது. தூரத்தில் நின்று அத்தொழிலைப் படித்துவிட முடியுமா? எனவே அந்த ஸ்தாபனத்தில் டிறைக்கிளின் செய்வதில் முதல் வணுக உள்ளவர் யாரென்பதை அவதானித்தேன். வேறு சிலரிடமும் விசாரித்துக்கொண்டேன். அவர் நான் தங்கியிருக்கும் ஹொட்டலிலேயே காலை மதியம் ஆகிய இரு வேளையும் உணவு உட்கொள்ளுவார். என்பதை அறிந்தேன்.
ஒரு தினம் காலை ஹொட்டலுக்குக் கீழே வந்து மனேஜரின் இருக்கைக்குப் பக்கத்திலுள்ள ஒரு நாற்காலி யில் அமர்ந்துகொண்டேன். காலையில் உணவு கொள்வ தற்காகக் குறிப்பிட்ட றைக்கிளின்ஸ் மாஸ்பூர் வந்திருந் தார். ۔
வலியச்சென்று அவருடன் கதைத்தேன். அவருக்கு என்னுடைய கதையில் பிடித்தமேற்பட்டது. இதனுலே என்னுடன் நட்புக் கொண்டார். சில மணிநேரப் பழக்கத் தின் பின்னர் அவரை அறைக்கு அழைத்துச்சென்று கதைத் துக் கொண்டிருந்தேன். அவரது கதையின் மூலம் அவர் மதுபானத்தில் நாட்டமுடையவர் என்பதை உணர்ந் தேன். பதுவைப் பருகமுடியவில்லை யென்று மிகுந் வேதனைப்பட்டார்.
இலங்கை யாத்திரிகர்களின் தேவைக்காக இந்தியா வில் பேர்மிட் மூலம் மதுபானம் பெற வாய்ப்பிருந்தது. பேர்மிட்பெற்று இரு மதுப்புட்டிகளை வாங்கினேன். நண்பர் மாலை என்னுடைய அறைக்கு வந்தார். அவருடன் பேசிக் கொண்டே மதுப்புட்டிகளை வெளியே எடுத்தேன். நண்

Page 101
- 88 -
பருக்கு மதுவைக் கண்டதும் அதீத பிரியம் ஏற்பட்டது. அவருக்குத் தேவையான அளவு குடிக்கக் கொடுத்தேன். பேச்சின் போது நான் டிறைக்கிளின் ஸ்தாபனம் ஒன்றை நடாத்துவதுபற்றித் தெரிவித்தேன். அவர் ஆச்சரியப் பட்டார். நான் அத்தொழிலில் பயிற்சி பெறவே வந்த செய்தியை விபரித்தேன். அவ்வேளை நண்பர் என்னையும் மதுவைப் பருகும்படி வற்புறுத் திர்ை. ஆனல் நான் குடிப்பதில்லை என்ற கொள்கையைக் கைவிடத் தயாராக வில்லை.
இறுக்கமான என்னுடைய கொள்கையைப் பாராட் டினர் அவர். டிறைக்கிளின் பற்றிய நுட்பங்களை விசா ரித்தேன். அவர் தெரிவித்தார். குறிப்புகளை யெல்லாம் விபரமாக ஒரு டைரியில் எழுதும்படி கேட்டுக்கொண் டேன். தினமும் நண்பர் என்னுடைய இருக்கைக்கு வந்து தொழில் நுட்பங்களை எழுதித்தந்தார். டைரியில் எழுதிக்கொண்டதுடன் விபரமாகக் கேட்டும் பயிற்சி பெற்றேன்.
* இந்த எழுத்துடன் டிறைக்கிளின் வேலையை யான் படித்துவிட முடியாது. தொழிலையும் செய்துவிட முடி யாது. ஆகவே உம்மைப்போன்ற ஒருவரை இந்தத் தொழிலை யான் செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவரை இலங்கைக்குக் கொண்டுசெல்ல யான் அரசாங் கத்திடம் அனுமதி பெற்றுத்தருவேன்’ என்றேன்
ஒருவரை ஏற்பாடு செய்தார். அவர் ஏற்பாடு செய்த தொழிலாளியின் பெயர் ஜீவானந்தம் என்பது. ஜீவானந் தத்துக்கு முன் பின் வெளிநாடு சென்று பயிற்சி கிடை யாது. நல்ல குணமான பையன். அவரை இலங்கை கூட்டிவருதற்கான ஒழுங்கைச் செய்தேன். இலங்கை அரசாங்க தூதரகத்தில் ஐந்து வருடத்துக்கு அவர் தங் கக்கூடிய விசாவை எடுத்தேன்.

- 1891 -ܚܗ
ஒரு நல்ல தினத்தில் ஜீவானந்தத்துடன் புறப்பட ஆயத்தமானேன். நண்பர் கன்னியப்பனும் டிறைக்கிளின் மாஸ்டரும் விமானநிலையத்துக்கு வந்து எம்மை வழி யனுப்பிவைத்தார்கள்.
யாழ்ப்பாணத்துக்கு வந்ததும், என்னுடைய ஸ்தாப னத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜீவானந்தத்தை அறிமுகம் செய்துவைத்தேன். ஜீவானந்தத்திடம் டி  ைறக் கிளின் வேலையை யாராவது ஒருவர் நல்லாகப் பயிற்சிபெற வேண்டும். அப்படிப் பயிற்சி பெற்றிருந்தாற்ருன் எதிர் காலத்தில் ஸ்தாபனத்தை இலகுவாக நிர்வகிக்கலாம்.

Page 102
ܚ- 190 -
தம்பிக்குப் பயிற்சி
எனவே டிறைக்கிளின் தொழிலில் என்னுடைய தம்பி
நடராசாவைப் பயிற்சிபெற ஒழுங்கு செய்தேன். அவன் ஜீவானந்தத்தின் கீழ்ப் பயிற்சிபெற்று வந்தான்,
தம்பி நடராசா தாரமிழந்து தனிமையாக இருந் தான். அவனது முதல் தாரம் காலமான ஆண்டுத் திவசத் தின் பின்னர் ஒரு பெண்ணை ஒழுங்கு செய்வதற்கு முற் பட்டேன்.
மல்லாகத்தில் எங்கள் உறவினர் குடும்பம் ஒன்று இருந்தது. அங்குள்ள பெண்ணை ஒழுங்கு செய்தேன். இப்பெண்ணை அவனுக்குப் பிடித்திருந்தமையால் நல்ல தினத்தில் விவாகத்தைச் செய்துவைத்தேன்.
என்னுடைய தம்பி விவாகத்தின் பின்னரும் புறம் பாக இருக்க விரும்பவில்லை. 'முன்னர் யான் உங்களைப் பிரிந்துசென்று கஷ்டங்கள் பட்டுவிட்டேன். ஆகையினல் உங்களுடனேயே இருக்கவேண்டும்’ என்று கே ட் டு க்
கொண்டான்.
அவனுடைய கோரிக்கைப்படி என்னுடைய குடும்பத்த வருடனேயே, தம்பியும் அவன் மனைவியும் குடியிருந்தனர். இந்த வீடு இரு குடும்பத்த வரது செளகரியத்துக்கும் வச தியாக இருக்கவில்லை. மண்வீடானமையால் ஆங்காங்கு பழுதுகளும் ஏற்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் கார ணமாகக்கொண்டு என்னுடைய வீட்டை இடித்துப் புதிய வீடொன்றை நிர்மாணிக்க முயன்றேன்.

புதிய வீடு :
1957-ம் ஆண்டு யூலை மாதம் 7-ந் திகதி வேலையை ஆரம்பித்தேன். இறைவனுடைய செயலால் ஆறுமாத காலத்திலே வீட்டுவேலைகள் நிறைவுபெற்றன. வருடத் துக்கொருமுறை சந்நிதி முருகன் ஆலயத்தில் அன்னதா னம் வழங்குவது என் கடமைகளில் ஒன்று. அந்த அன்ன தானத்தில் கலந்து கொள்வதற்குப் பலருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தேன். சந்நிதியில் அவர்களுக்கெல்லாம் உணவு வழங்கிய பின்னர், அன்றைக்கே புதுவீட்டுக்குள் குடிபுக வேண்டுமென்று தீர்மானித்தேன். முன்னறிவித்த லறி இப்படி ஒரு காரியத்தை நான் செய்வதை அவர் கள் விரும்பவில்லை. அவர்களைச் சம்மதிக்கச்செய்து அன் றைக்கே கூட்டிவந்து புதுவீட்டில் குடிபுகுந்தேன்.
புதிய வீடு கட்டுவதற்கு என்னிடம் கைப்பணம் இருக்கவில்லை. தந்தை தாயார் இருவரும் என்னுடைய எதிர்காலத்துக்காக எதையும் தேடிவைக்கவில்லை. பெற் முரை இழந்த பின்னர் என்னுடைய வாழ்க்கையின் காரி யங்கள் எதுவும் கடனுலேயே இயக்கப்பட்டு வந்தது. 14றைக்கிளின் ஸ்தாபனத்தைத் தொடங்கியபோதும் என் 0ணிடம் கைப்பணம் இருக்கவில்லை. இந்தியாவிலிருந்து டி றைக்கிளின் ஸ்தாபனத்தை இயக்குவதற்காக வர வழைத்த தொழிலாளி சரியாகத் தொழிலை இயக்குவதற்கு அது சம்பந்தப்பட்ட இயந்திரம் தேவையாயிருந்தது. கொழும்பில் சென்று கட்டுப்பணம் மூலம் இயந்திரம் பெற்று வந்தேன். பல கார்களை இவ்வாறே யான் கடன்பட்டே வாங்கி வந்தேன்.
இவற்றை யெல்லாம்விட என்னுடைய வீட்டைக் கட்டியபோதுதான் கடன்தொகை அதிகரித்தது. என்னு டைய குடியிருப்புக் காணியை ஈடுவைத்தும், பிறரிடம் கடன்பட்டுமே வீட்டை அமைக்க முடிந்தது.

Page 103
- 192 -
இனிமேல் புதிய கடன்கூடாது. அதுவரைபட்ட கடன் களை அடைக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டேன். அவ்வப்போது சேரும் பணத்தைப் பத்திரப்படுத்த ஒரு இரும்புப்பெட்டி தேவையாக இருந்தது,
யாழ்ப்பாணம் சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரும்புப்பெட்டிக் கடைகளுள்ளன. ஒருநாள் இரும்புப் பெட்டிக் கடைக்காரரிடம் விலைபேசிப் பெட்டி ஒன்றை வாங்கினேன். அப்பெட்டியை என்னுடைய இல்லத்துக்கு ஏற்றிக் கொண்டுவரவுள்ள சமயம் பருத்தித்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் அங்கு வந்திருந்தார். அவருக் கும் ஒரு இரும்புப் பெட்டி தேவையாக இருந்தது. பெட் டியை வாங்கிய நண்பர் வானிலேயே தன்னுடைய பெட் டியைக் கொண்டுவந்து பருத்தித்துறையில் தரும்படி கேட்டார். தட்டிக் கழிக்க முடியவில்லை. அவரது பெட் டியைப் பருத்தித்துறைக்குக் கொண்டுசென்று கொடுத்து விட்டு, என்னுடைய பெட்டியை எடுத்துச் செல்லக் கடைக்குத் திரும்பிச் சென்றேன்.

- 93 -
மனைவிக்கு வருத்தம் :
பெட்டியை எடுத்து வானில் வைத்தாயிற்று. வான் புறப்பட இருந்த சமயம் காரில் என்னுடைய உறவி னர் சிலர் என்னைத் தேடிச் சிவன் கோவிலடிக்கு வந்த னர்.
பதட்டமாக வந்த அவர்களிடம் காரணத்தை விசா ரித்தேன். * உன்னுடைய மனைவி கடுமையான நோயி ஞல் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை வைத்தியசாலைக் குக் கொண்டுசெல்ல வேண்டுமெனத் தெரிவித்தனர்.
என்னுடைய உற்சாகம் கெட்டுவிட்டது. மனதிலே மட்டற்ற கலக்கம். வானை விரைவாகச் செலுத்திக் கொண்டு சென்றேன். வீட்டில் மனைவி கடுமையான
மயக்குடன் கிடந்தாள்.
உடனடியாக டாக்டர் வெற்றிவேலுவிடம் மனைவி யைக் கொண்டுசென்று காட்டினுேம். அவர் பரிசோ தித்துவிட்டு மானிப்பாய் ஆஸ்பத்திரிக்கே கொண்டுசெல் லும்படி தூண்டினர். தானும் மானிப்பாய்க்கு அடிக்கடி வந்து பார்ப்பேன் என்றர். அவரது வேண்டுகோளின் படி மானிப்பாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்ருேம். ஒரு வாரத்துக்கு வைத்து வைத்தியஞ் செய்தோம். டாக் டர் வெற்றிவேலுவும் இவ்விடைக்காலத்தில் வந் து பார்வையிட்டார். ஆனல் குணம் கிடைக்கவில்லை. ஒரு வாரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் ஜெனரல் ஆஸ்பத்திரிக் குக் கொண்டு வந்தோம். ஆஸ்பத்திரி அதிகாரிகளின் சிபார்சின்படி பல ஸ்பெஷல் டாக்டர்களுக்கு பணம் கட்டி பலமுறை வைத்தியஞ் செய்தோம். வருத்தம் குணப் படுவதாகவில்லை.
இரும்புப் பெட்டியை வாங்கிக்கொண்டு வந்த நாட்
தொடக்கம் அதற்குள் பணம் வைக்க முடியவில்லை. மனை
வியின் சுகவீனத்துக்காகப் தண்ணிர் போல் பணம் கரைந்
25

Page 104
- 194 ܝܢ
தது. இரும்புப் பெட்டியில் பாதுகாப்பாக மனைவியின் நல்ல நகைகளைக்கூட அதனுள் வைக்க முடியவில்லை. அவைகளும் ஈட்டிலேயே கிடந்தன.
சகடக்கால் போல் மாறி மாறி வரும் சுகதுக்கத்தை என்னவென்று சொல்வது. பணம் எவ்வளவு போன லும் பரவாயில்லை மனைவியின் உடம்பு தேறினல் போதும். நோயற்ற வாழ்வுதானே குறைவற்ற செல்வம். இவ் வாறு எண்ணினேன்.
மனைவியைப் பார்க்க வந்த உறவினர் சிலர் அவ ளுக்குப் பேய்க்கோளாறு இருக்குமென அபிப்பிராயப் பட்டனர். என்னுடைய மனம் அனலிடைப்பட்ட மெழு காக உருகத் தொடங்கியது. எவ்வளவு தூரத்துக்கு நான் தொழிலைப் பெருக்கியும், முன்னேற்றமான காரியங்களை மேற்கொண்டும் மனநிம்மதி யென்பது ஏற்படவில்லை மனைவியின் உடல் தேறி நலம் பெற வேண்டும் என்பது தான் இப்போதைய கனவாக அமைந்தது.
ஒரு சில உறவினர்களின் உத்தேசப்படி ஒரு மந்திரவா தியைக் கூட்டிவந்தேன். அவர் பார்வையொன்று பார்த்து மந்திரம் ஜெபித்தபோது பேய் பிடித்தவள்போல் ஆடத் தொடங்கிவிட்டாள். பலநாட்கள் இந்த மந்திரவாதி பார்வை பார்த்தார். குணம் பெறுவதாகக் காணேம். வேறு பல மந்திரவாதிகளையும் கூட்டிவந்து காட்டினேன்.
மந்திரவாதிகள் குறிப்பிடும் பொருட்களோ ஏராளம். ஆடு கோழிகளைக் கொண்டுவரச் சொல்வார் ஒருவர். ஒருமுறை மறுவில்லாத கறுத்த ஆடு வேண்டுமென்ருர் இன்னுெருவர். கறுத்தக்கோழியைக்கொண்டுவா என்ருர் வேருெருவர். குறிப்பிடும் பூக்களின் பெயர்களோ தொண் டைக்குள் நுழையாதவை. ஒருமுறை ஒரு பூவைத்தேடி வெகுதூரத்துக்கு அலையவேண்டி ஏற்பட்டது. செம்பாம்பு, கரும்பாம்பு, பொன்பாம்பு என்றெல்லாம் குறிப்பிடுவார் கள். அவற்றை உலோகத்தினுல் செய்தோம். மந்திரவா

ܚܝ 195 -
திகள் குறிப்பிடும் பொருட்களைத் தேடுவதே பெரிய வேலையாகும். மந்திரவாதி மந்திரம் ஜபித்து பார்வை பார்க்கும் இரவு வேளைகளில் நானும் விழித்துக்கொண்டே கூடஇருக்க வேண்டும். நித்திரைக் குறைவால் என்னு டைய உடலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வரு வாயை தருகின்ற தொழிலகத்தைக் கண்காணிக்க முடி யவில்லை.

Page 105
- 96 -
மனைவி குணம்பெறல் :
மட்டுவிலிலிருந்து ஒருநாள் என்னுடைய உறவினர் ஒருவர் வந்திருந்தார். மனைவியைப் பார்த்த அவர் 'இவவை எங்களூரிலுள்ள நரசிங்க வைரவர் கோவிலுக்குக் கொண்டுபோங்கள். அங்கே பூஜாரிக்கு உருவரும் சமயம் இவவைப் பார்த்தால் இந்தப் பிணிதீர வழிபிறக்கலாம். இப்படி ஒருமுறை எங்களுடைய உறவினர்ப்பெண் ஒரு த் திக்கு இருந்தபோது அக்கோவில் பூஜகரினல் குணப்ப டுத்தமுடிந்தது' என்ருர் . இந்தக்கோவிலுக்கு மனைவியைக் கொண்டுசென்ருேம். எங்களுடைய வருகையைப் பற்றி உறவினர் பூ ஐகருக்குத் தெரிவித்தார். ஆகவே நாங்கள் கொண்டுசென்ற பூஜனைப் பொருட்களையெல்லாம் ஒழுங் குறப் பரப்பி அவர் பிரார்த்தித்தபோது அவருக்கு உரு வுண்டானது. நாம் அனைவரும் பக்தி சிரத்தையுடன் அவ ரைச் சுற்றிநின்ருேம்.
"உங்களுடைய சந்ததியில் தோன்றிய ஜீவன்ஒன்று பத்திரகாளி வைரவரை ஆதரித்துவந்தது. இப்போது அந் தச் சீவன் இல்லை. அச்சீவன் மோசமடைந்தபின்னர் நீங் கள் பத்திரகாளி வைரவரை ஆதரிக்கத் தவறிவிட்டீர்கள். இதனுல் பத்திர காளி வைரவர் இப் பூமரத்தை தனது இடமாகக் கொண்டிருக்கிருர், அவரை இங்கே ஒரு கோவில் கட்டி இறக்கிவிட்டால் இந்தப் பூமரத்துக்கு ஒரு தீங்கும் இல்லை" என்று கூறினர். பூஜகரின் உருக்கலைந் தீது,
அக்கோரிக்கையின்படி அங்கே ஒரு சிறுகோவிலைக் கட்டி சூலம் ஸ்தாபித்துக்கொண்டோம். அன்றுதொட்டு ஒவ்வொரு வாரமும் அந்தக் கோவிலுக்குச்சென்று வழி பாடு செய்துவருகின்ருேம். மனைவி பூரண குணமடைந் தாள.
மனைவி பூரண குணமாகி இரு ஆண்டுகளின் பின்னர் அதாவது 1959-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் இருபத்து

-- ,l97 -سیه
நாலாம் திகதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக் குழந் தைக்கு சிவதாசன் என்று பெயரிட்டோம்.
மனைவியின் சுகவீனம் காரணமாக கைப் பொருள்க ளும் கரைந்தது கடனும் பெருகிவிட்டது. ஆகவே கடனையெல்லாம் இப்போதுள்ள ஸ்தாபன வருவாயினல் தீர்க்கமுடியாது. வேறு தொழில்களையும் ஆரம்பிக்க வேண்டுமென்று கருதினேன்.
எனது வீட்டுக் கண்மையில் இரு கடைகள் உள்ளன. இக்கடைகளின் உரிமையாளரான என்னுடைய நண்பரே கடைகளை நடாத்திவந்தார். நான் வசித்துவரும் காணியை இவரே வாங்கித்தந்தவர். நண்பர் முற்குறிப்பிட்ட கடை கள் மூலம் நல்ல வருவாய் பெறவில்லை. வேறு தொழில் களை மேற்கொள்ள விரும்பிய நான் அக்கடைகளை எடுத்து நடத்தவேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன்.
இரு கடைகளை ஒன்ருக்கி பலசரக்கு வியாபாரம் செய்துவந்தார். நான் அக்கடைகளைப் பெற்றுக்கொண்டு ஒன்றைப் பலசரக்குக் கடையாக்கினேன். மற்றதை இரும் புச் சாமான் வியாபாரம் செய்யும் ஹாட்வயர் ஸ்டோரா க்கினேன். அத்துடன் யாழ்ப்பாணம் செப்பள் வீதியில் றைக்கிளின் கிளைத்தாபனம் ஒன்றையும் ஆரம்பித்தேன்.
ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்ய வானை வாங்கி னேன். அந்த வானில் எனது முக்கிய ஸ்தாபனமாகிய றைக்கிளின் ஸ்தாபனம் பற்றிய விளம்பரப் படங்களை வரைவித்தேன். டாக்ஸிகள் யாழ்ப்பாணத்தில் அப்போது தான் ஒடத்தொடங்கியிருந்தன. எனவே யானும் இரு டாக்ஸிகளை வாங்கிச் சாரதிகளைக்கொண்டு வாடகைக்கு 6 GL65T.
பல தொழில்களுக்கும் வசதியாக வீட்டுக்கும் ஸ்தாப னங்களுக்கும் தொலைபேசித் தொடர்பு வைத்துக்கொண் டதால் அலைச்சல் குறைந்தது. இவ்வேளையில் பழைய கார்கள் மலிவாகக் கிடைத்தால் அவற்றை வாங்கிச்

Page 106
-- 198 -
செலவுசெய்து புதுக்கி விற்று வியாபாரமும் செய்துவந் தேன்.
ஹாட்வயர்ஸ் ஸ்தாபனத்துக்கு கச்சேரியடி, பொருத் தமான இடமல்ல. வியாபாரம் மிகக்குறைவாகவே இருந் தது. யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்திக்கு அதனை மாற் றஞ் செய்தேன்.

۔ 199 سے
எனக்கு நோய் பிடித்தது:
இரவு பகல் பாராது ஸ்தாபனங்களை பார்வை யிட்டுவந்தேன். இதனுல் ஆறுதல் பெறுவதற்கு அவகா சம் கிடைக்கவில்லை. ஒவ்வென்றும் நல்லமுறையில் இயக்க வேண்டுமென்பது என் ஆசையாகும். ஒய்வில்லாத கடுமையான உழைப்புக்கு உடல் ஒத்துவருமா? மனைவி உடல்நலம் குன்றிய காலத்தில் ஏற்பட்ட அலைச்சலும் உடலை நையப்பண்ணியிருந்தது. ஹாட்வயர் ஸ்தாபனம் தொடங்கிய ஏழாவது நாள் தலைச்சுற்றுடன் வீட்டுக்கு அவசரமாக வந்தேன்.
வருத்தம் சிறுகச் சிறுக முற்றிவிட்டது. விசேட வைத் தியர் ஒருவரிடம் கொண்டுசென்று காட்டினர்கள். அவர் என்னைப் பரிசோதித்ததும் உடனடியாக யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்குக் கொண்போகவேண்டுமென்று கூறினர்.
யாழ்ப்பாண ஆஸ்பத்திரிப் பொது விடுதியில் என்னை அனுமதிக்கவே டாக்டர் சிபார்சு செய்தார். ஆனல் என் உறவினர்கள் வந்து பார்க்கவும், ஆறுதலாக இருக்கவும் வாடகை விடுதியில் வைத்திருக்க வேண்டுமென்றே கேட் டுக்கொண்டேன். கையில் பணம் புரண்டால் மனிதன் வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளமுனைவது இயற்கைதானே. இவ்விடுதிக்குத் தினமும் பதினைந்து ரூபா வசூலித்தனர். அத்துடன் நோயாளிக்கான மருந்து வகைகளையும் வெளி யிலேயே பணம் கொடுத்து வாங்க வேண்டி ஏற்பட்டது.
படுக்கையில் பதினலு தினங்கள் கிடந்தேன். பதினுலு தினங்களும் மனைவிக்கும் மக்களுக்கும் கடுமையான சிர மத்தைக் கொடுத்துவிட்டேன் என்னுல் அவர்களுக்குத் துன்பம் என்பதை நினைக்கும்போது வேதனை பெருகும். எள்ளுக்காய்வது எண்ணெய்க்காக, ஆனல் அதனுடன் உள்ள எலிப்புழுக்கையும் கூட இருந்த குற்றத்துக்காகக் காயவேண்டியே இருக்கிறது.

Page 107
ܚ- 200 -
பதினலு தினங்கள் படுக்கையில் கிடந்து வீட்டுக்கு வந்தேன்.
தனிமையில் என் சிந்தனை அலைந்தது. நாம் எவ்வ ளவு முயற்சிகளை எடுத்தாலும் ஆகுநாளன்றி எதுவும் கைகூடமாட்டாதென்ற உண்மை புலணுகியது. பல ஸ்தாபனங்களையும் கட்டியாளலாம். அதற்கு இறைவன் அருள் வேண்டும். கடவுள் நமக்குத் தந்த உடலை ஓரள விற்குமேல் வருத்தக்கூடாது என்பது அனுபவத்திற்கப் பால் புரிந்தது.
என்னுடைய மூத்த மகன் அப்போது பிறப் எஸ். எஸ். ஸி. வகுப்பில் படித்துக்கொண்ட்டிருந்தான். அவ னைத் தொடர்ந்து படிக்கவைக்க எனக்கு விருப்பமில்லை. தொழிலை நிர்வகித்தால் போதுமென்பதே என்கருத்து. இதற்காகப் படித்துக்கொண்டிருப்பவனைத் த டு க் க க் கூடாது. தானகப் படிப்பை அவன் தொடரமுடியவில்லை யென உணர்ந்து வந்தால் தொழிற் பயிற்சி கொடுக்க வேண்டுமென்றே முடிவுசெய்தேன். என்னுடைய விருப் பமோ, அன்றேல் அவனது சாதகப்பலனே என்னவோ, ஒருதினம் கல்லூரியிலிருந்து கடிதம் ஒன்றுடன் வந்தான். அதை வாசித்தேன். 'உங்கள் மகன் தொடர்ந்து படிக் கக்கூடிய நிலையிலில்லை. தொடர்ந்து படிக்கவைக்கச் சிர மப்படாது இப்போதே உங்கள் தொழிலில் பயிற்சியளிப் பது நல்லது’ இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந் 5gil
என்னுடைய மனைவி ஒருத்தியின் சகோதரி மகன் என் தொழிலகத்தில் பொறுப்புள்ள நிர்வாகியாகப் பணி புரிந்து வந்தான். அவனுடன் மகனைச் சேர்த்துத் தொழி லில் பயிற்சிபெற அனுப்பினேன். *”
நான் எவ்வாறு தொழில் தாபனங்களை நிர்வகிசீ வருகின்றேனே அந்த முறைகளையெல்லாம் மகனும் அறிய வேண்டும். என்ற முடிவுடன் அவற்றையெல்லாம் மக

- 20 -
றுக்குக் கற்பித்தேன். காரைச் செலுத்தப்பழக்கி சில நாட்களிலேயே சாரத்திய லேசன்ஸ் பெறும்படி செய்தேன்.
என்னுடைய நற்பழக்கங்களில் பலவற்றை ஒழுங்காக அவன் கையாளத் தொடங்கியமை எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. தொழிலை எதிர்காலத்தில் செப்பமாக நிf வாகஞ்செய்வானென்ற நம்பிக்கையும் பிறந்தது.
ஒரு தினம் என்னுடைய இரண்டாவது மகன் சிவன டியான் பாடசாலையிலிருந்து வரும்போது படம் ஒன்றைக் கையில் வைத்திருந்தான் “என்ன படம்’ என்று விசா பித்தேன். சத்திய சாயிபாபாவின் படமென்றும், அதனைப் பூஜித்து வந்தால் பரீட்சையில் சித்தியடையலாம் என்றும் தெரிவித்தான். நான் அப்படத்தை வாங்கிப்ப த்திரமாக வைத்துக்கொண்டேன்.
என்னுடைய உறவினர் ஒருவரை ஒருதினம் வைத்தி யர் சோமசுந்தரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அவ் வேளை என்னைச் சந்தித்த வைத்தியர் சோமசுந்தரம் சத் திய சாயிபாபாவின் பிரார்த்தனையில் என்னையும் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சத்திய சாயிபாபாவின் பிரதிமையிலிருந்து விபூதி வெளிப்படுவதான செய்தியும் கிடைத்தது. இவற்றலெல் லாம் சத்திய சாயிபாபாவின் மீது எனக்கு ஒருவித பக்தி உண்டானது.
ஒய்வு நேரத்திலெல்லாம் ஆத்மீக சிந்தனையில் ஈடு படக்கூடிய பகவத்கீதை போன்ற உயரிய ஆன்ம வளர்ச் சிக்குரிய புஸ்தகங்களை வாங்கிப் படித்து வந்தேன்.
*" கிணற்றில் கிடக்கும் மீன், குளத்துக்குச் செல்ல
முனையும். பின்னர் ஆற்றுக்குச் செல்லத் தாவும்.
மட்டற்ற அதன் ஆசை பெருகிக் கொண்டே
இருக்கும். ஆகவே ஒருநாள் கடலைச் சென்றடை 26

Page 108
- 202 -
யும். கடலுக்கு அப்பால் செல்லுவதற்கு இடமே இல்லை. இறுதியில் விதியென்ற வலையில் அகப் பட்டு விடும்.”*
"ஆசை ஒரு பாற் பாத்திரம். பால் அடுப்பில் பொங்கிக்கொண்டிருக்கும் போது நெருப்பைத் தணித்து விட்டால் அது பொங்குவது நின்றுவிடும். ஆசையையும் இவ்வாறே அடக்கலாம். ஆசை யென்ற கயிற் றி ல் கட்டப்பட்டிருக்கும்போது நாமெல்லாம் இறையென்ற சூத்திரத்தாரியினல் இயக்கப்படுகின்ருேம். இறைவன் நினைவு ஒன்று தான் அமைதியைத் தருவது.”
இத்தகைய இறை மொழிகளினல் டாம்பீக வாழ்வு நமக்கு அமைதி தராதென்பதைப் புரிந்து கொண்டேன்.

- 203 -
பகளின் ருதுசாந்தி:
என்னுடைய மகனின் நிர்வாகத்தில் தொழிலகம் இயங்கியது. ஆனலும் பலவிதமான தாபனங்களை வைத் துக்கொண்டு நிம்மதியாக ஓடமுடியுமா? முன்னேற்றப் பாதையில் செல்லுவதற்கு பலவித தாபனங்களும் தேவை யில்லை. தேவையானது கிடைத்தாற் போதும். இத்தகைய நினைவினல் எனது சன்லைற் டையேர்ஸ் அன்ட் றைக்கிளி னேர்ஸ் என்ற முக்கிய தொழிலகத்தையும், வெலிங்டன் சந்தியிலமைத்துள்ள ஹாட்வெயர் ஸ்டோரையும் வைத் துக்கொண்டு மற்றைய தாபனங்களை மூடிவிட்டேன். சொந்தப் பாவனைக்காக ஒருகாரை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றைய வாகனங்களை விற்றேன். காரை மகனே பாவித்து வந்தான்.
1966-ம் ஆண்டில் எனது மகள் சிவயோகம் ருதுவா ஞள். மகளின் ருதுசாந்தியைப் பற்றி மனைவியும் மூத்த மகனும் சிறப்புடன் செய்ய வேண்டுமென்று கருதினர்.
எனக்கு டாம்பீகத்தில் அக்கறையில்ல். எதுவும் நடக்கவேண்டிய காலத்தில் நலமே நடந்தேறும். இது என் முடிவு. மகளின் ருதுசாந்தியை ஆடம்பரமாகச் செய்யவேண்டுமென்பது மனைவியின் விருப்பம். ? ? எத்த னையோ காலமாக பலபேருடைய இன்ப நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வந்திருக்கிறீர்கள். இந்த ஒரு நல்ல சுப காரியம் ஒன்று தற்போது நடக்கவிருக்கின்றது. அவளுக்கு விவாகம் ஆகின்ற காலத்தில் நமது இனத்தில் ஒருவரைத் தெரிவு செய்யும்போது நம்மவர் அதில் ஏற்ற இறக்கம் பார்ப்பார்கள். அப்போது சிறப்பாகச் செய்ய சாத்தியம் உண்டாகுமோ தெரியாது. ஆகையால் இதனை இப்போ தைக்கு வடிவாகச் செய்வோம்" என்று வற்புறுத்தினுள். மனைவியினதும் வீட்டிலுள்ள மகன் மற்றேரதும் எண்ணத் துக்கு இசைந்தேன்.
மகளின் ருதுசாந்திக்காக 2-5-66 என்ற திகதியிட்டு அச்சிட்ட பத்திரத்தில் 'ஆசனம் கம்பளம்' என்று ஒரு

Page 109
- 204 -
வார்த்தையைப் போட்டிருந்தேன். அந்த வார்த்தையின் தாற்பரியம் வீட்டில் மனைவிக்கும் மக்களுக்கும் விளங்க வில்லை. நான் அவ்வாறு குறிப்பிட்டதில் நோக்கமுண்டு. கலந்து கொள்ள வருகின்ற உறவினர்களில் எவராவது காற்சட்டை தரித்துக்கொண்டு வந்தால் அன்ருைக்குப் பிரத்தியேகமான ஆசனம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். இதனல் யானே தாரதம்மியம் பார்ப்பவனகி விடுவேன். இக்குறைபாட்டைத் தவிர்த்துக்கொள்ளவே இவ்வாறு இட்டுக்கொண்டேன்.
ருதுசாந்திப் பத்திரத்தை என்னுறவினர் அனைவருக் குமே விநியோகிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. ருதுசாந்தி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மெக்கானிக் வேலைசெய்யும் எனது மருமகன் ஒருவனை யும் மகனையும் மனைவியுடன் சேர்த்து அனுப்பினேன். இந்தப் பத்திரங்களை ஒரு உறவினரையாவது தவறவிடாது கொடுக்கவேண்டுமென்பது என்னுடைய கண்டிப்பு. கார ணம்? யான் பல சாதியினருக்கும் சலவைத் தொழில் செய்யும் லோண்ட்றியை ஆரம்பித்தவன். என்னுடைய இனத்தவர்கள் ஆரம்பகாலத்தில் இதுபற்றிக் குறைவா கப் பேசியவர்கள். அவர்கள் இப்போது என்னைப்பற்றி என்ன நினைக்கிருர்கள்? என்னுடன் கோபமாக உள்ள னரோ என்பதை அறியவும் இதனல் சந்தர்ப்பம் கிட்டும்.
ஒரு வாரத்துக்கு மேலாக மனைவியும் மக்களும் பத்தி ரம் விநியோகஞ் செய்துவந்தனர். பத்திரம் விநியோகிக் கச் சென்ற உறவினர் இல்லங்களில் தேநீர் பானம் அருந் தாவிட்டால் அவர்கள் குறைகூறுவார்கள். இதனல் தின மும் ஐம்பது வீட்டிலாவுதல் தேனீர் பருகவேண்டிய நிர்ப் பந்தம். அவர்களுக்குண்டானது.
திகதி நேரம் இவற்றை யான் மிக இறுக்கமாகப் பின்பற்றி வந்தேன். இதுபற்றி உறவினர்கள் அறிவார் கள். கஷ்டமான நிலையிலும் நேரத்தை யான் அனுசரிக்கப் பிந்துவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் எம்மை ஒருவர்

-- 205 -س-
எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். நாம் நேரத்தைத் தவற விட்டால் நம்மைக் காத்திருந்தவரின் பல அலுவல்கள் தவறிவிடும். என்னுடைய அனுபவத்தின் மூலமும் இந்தக் கஷ்டத்தை அறிந்திருக்கின்றேன். உறவினர் இதை நன்கு அவதானித்திருக்கிருர்கள். மகளின் ருதுசாந்தி நடை பெறவிருந்த 2-5-66 பகல் 9-0-10-52 என்ற சிறந்த சுப நேரத்தில் அனைவருமே திரண்டு வந்திருந்தனர். இந்த ருதுசாந்தி விழாவுக்கு என்னுடைய வீடுமட்டும் போது மென்று கருதியிருந்தேன் ஆனல் உறவினர் கூட்டம் அதி கமாகவே இருந்தது. என்னிடத்தில் அத்தனைபேரும் அன்பையே வைத்துள்ளார்கள் என்பதை அறிய இந்த ருது சாந்தி வாய்ப்பாகவிருந்தது. பாரிய கூட்டம் சேரும் என்று யான் எதிர்பார்க்கவில்லை. அப்படி எதிர்பார்த் திருந்தால் யாழ் நகர மண்டபம் போன்ற விசாலமான இடத்தை ஏற் பாடு செய்திருப்பேன்.

Page 110
-س- 206 --
மீண்டும் எனக்குச் சுகவீனம்
மகளின் ருதுசாந்தியை அடுத்து நான்கு மாதங்களுக் குப் பின்னர் என்னுடைய தொழிலகங்களைப் பார்வையிடு வதற்கு சென்றிருந்தேன். என் உடல் அன்று களைத்துச் சோர்ந்திருந்தது. பகல் உணவுண்டபின்னர் ஏற்படட நோய் இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் அதிகரித்தது.
டாக்டர் பாலசுப்பிரமணியத் திடம் சிகிச்சைக்கு காரில் அழைத்துச்சென்றனர் உடன் சிகிச்சை செய்த டாக்டர் இரவும் நோய் இறங்காமல் தொடர்ந்து இருக்குமானல் காலையிலே இங்கே கொண்டுவாருங்கள் என்று பணித் தாா .
மறுநாள் காலை வரை குணம் ஏற்படவில்லை. மீண்டும் காலையில் டாக்டரைச் சென்று சந்தித்தோம். அவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் டாக்டர் ஆனந்தராசாவிடம் காட்டும்படி கேட்டுக்கொண்டார். அவரது சிபார்சின்படி ஆனந்தராசாவிடம் கொண்டுசென் றனர். அவர் என்னைப் பரிசோதித்த பின்னர் படுக்கைப் பூரண ஒய்வு (பெட் றெஸ்ட்) வேண்டுமென்றர்.
இம்முறை ஏற்பட்ட நோய் மிகக் கடுமையாகவ்ே இருந்தது. இதனுல் எனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மனைவியும் உறவினர்களும் அஞ்சினர். ஆகவே அடிக்கடி உறவினர்கூட்டம் என்னைச் சுற்றியே நின்று கொண்டிருந்தது.
ஆஸ்பத்திரிப் பொது விடுதியில் என்னைச் சுற்றிலும் என்போன்ற நோயாளர்கள். அவர்கள் எல்லாம் வசதி களிற் குறைந்தவர்களில்லை. இப்போது அரசனும் ஆண்டி யும் ஒருவரே என்ற தத்துவந்தான் இங்கு எவருக்கும் தோன்றும். இந்நிலையில் என்னுடைய சிந்தனை சிட்டாகப் பறந்தது. உலகத்தில் எவ்வளவு டாம்பிகத்தையெல்லாம் யாம் மேற்கொள்கிருேம். இறைவனது ஆணேயை நம்

میشد 207 --
மால் மீறமுடியுமா? மனிதனை எந்த வேளையும் ஆபத்துச் சூழ்ந்தே இருக்கின்றது. என்னுடைய படுக்கைக்கு அரு கில் முதல்நாள் படுத்திருந்த நோயாளி ‘என்னைப்பார்த்து இந்த நோய்க்கெல்லாம் நாம் பயந்தால் முடியுமா? மனதை வைரமாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்ருர் . ஆனல் அந்த நோயாளி மறுநாள் மரண தேவனின் பிடிக்குள் அகப்பட்டார். சில தினங்களுக்குள் என்னைச் சுற்றிப் படுத்திருந்தவர்களுள் சிலர் மரணமாயினர். இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது என்னுடைய நெஞ் சில் இறைவனது ஆணை தான் நினைவில் எழும் நாம் இங்கு நினைத்தவாறு எது நடக்கும்? நடக்கவேண்டிய காலத் திலே யாவும் நடந்துமுடியும். நோய் என்ற ஒன்று வந்து விட்ட பின்னர் அந்த நோயின் முடிவு எதுவென்பதை
எம்மால் நிர்ணயிக்க முடியவே முடியா.
\
உடலின் பலமும், கையிற் பணமும் புரண்டுகொண்டி ருக்கும்போது நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் வந்துவிடுகிறது. கடவுளைப்பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுகின்ருேம். கட்டிய மனைவியும் மைந்தரும் காலத் தச்சன் வெட்டிமுறித்துவிட்ட மரம்போல்" சரீரத்தை வீழ்த்தி விட்டால் அ ப் பா ல் எட்டியுமடி வைப்பரோ இறைவா கச்சியேகம்பனே என்ற பட்டினத்தடிகள் பாடலை நினைத்துக்கொள்வேன்"
உடல் பலவீனப் படுகின்றவேளை கடவுள் நினைவு வரு கின்றது. நோயாளி குணமாவதும், நோயற்ருர் நோயாளி யாவதும் நம்மைப் பொறுத்ததல்ல. இவ்வாறு என் மனச் சிட்டு சிந்தனை வட்டத்துக்குள் சுற்றிச் சுழன்றுகொண்டி ருந்தது.
அப்போது 'கையை நீட்டு ஊசி போடுவதற்கு’ என்ற தும் என் சிந்தனை விடுபட்டது. இவ்வாறு ஊசிபோடுவ தும், மருந்து சாப்பிடுவதுமாக இருபத்து இரண்டு தினங் கள் ஆஸ்பத்திரியில் கழிந்தன. டாக்டர்கள் பலரின் கண் காணிப்பினல் நோய்தீர்ந்தது. குறிப்பிட்ட இந்நாட்கள்

Page 111
- 208 -
என் மனைவிக்குத்தான் பெருந்தொல்லையாக அமைந்தது. காலை, மத்தியானம், பிற்பகல் ஆகிய மூன்று வேளையும் எனக்குத் தேவையான ஆகாரங்களைச் சமைத்து எடுத்து வருவாள். நோயாளரைப் பிறர் சந்திக்க அனுமதிக்கப் படும் வேளையெல்லாம் என்பக்கத்தில் நின்று மணிஅடித் ததுந் தான் வெளியேறுவாள்.
இருபத்துமூன்றுவது தினம் ஆஸ்பத்திரியினின்று வெளி யேற அனுமதித்தனர். ஆனல் நோய் முற்ருகத் தீர்ந்து விட்டதாகக் கருதமுடியாது. எனவே மேற்கொண்டும் அவ்வப்போது வருத்தத்தைக் குணப்படுத்த வைத்தியஞ் செய்தே வருகின்றேன்.
பலவீனப்பட்ட நிலையில் மனிதனுடைய நெஞ்சம் கடல்போல் ஆர்ப்பரிக்கின்றது. இந்த நியதி எனக்கும் உண்டென்ருல் அது மிகையான காரியமில்லை விதியின் வேகத்தினுல் நடக்கின்ற செயலை இந்த நோய் வந்த போதுதான் முற்ருக உணர முடிந்தது.
என்னுடைய நோயோ முற்றறக் குணமாகவில்லை. இதற்கெல்லாம் காரணங்களை அறிய வேண்டுமென்பத ஞல் என்னுடைய சாதகத்துடன் பிள்ளைகளின் சாதகங் களையும் எடுத்து ஒரு சாஸ்திரியாரிடம் காட்டினேன்.
பிள்ளைகளுடைய சாதகங்களையும் என்னுடைய சாத கங்களையும் வடிவாகப் பார்த்த சாஸ்திரியார் எனது நாலாவது மகன் சிவதாசனுடைய சாதகத்தின் படி அவ னது பத்தாவது வயது பூர்த்தியடையும் 1969-ம் ஆண்டு மே மாதம் 28-ந் திகதிக்குப் பின்னர் வருத்தம் பூரண மிகக் குணமடையும் என்ருர். மேலும் அவர் எங்களு டைய சாதகங்களின்படி வீட்டில் ஐந்து வருடகாலத்துக்கு எவ்வித வாகனங்களும் இருக்கப்படாது. நீங்கள் ஏதா வது வாகனங்களை வைத்திருந்தால் அவற்றை விற்றுவிடு வது நல்லதென்ருர், சாஸ்திரியாரின் வேண்டுகோளின் படி யும் டாக்டர்களின் சிபார்சின் படியும் எங்க ளு  ைடய

-- 209 حسن
தேவைக்கென வைத்திருந்த காரை விற்றுவிட்டேன் என்னுடைய இடது கண்ணில் பார்வை குறைவாக இருந்தது. இதனல் தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்க முடியவில்லை. இக்காரணத்தினுல் வருத்தமும் உண்டானது. டாக்டர் சோமசுந்தரத்தாரின் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று என்னைக் காட்டினர். டாக்டர் தனது ஆஸ்பத் திரியில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கண்நோயாள ரைப் பரிசோதிக்கும் விசேட டாக்டரைக் கொண்டு சத் திர சிகிச்சை செய்விக்க வேண்டுமென்று கூறினர். அதன் பின்னர் சத்தியசாயிபாவாவின் பிரதிமைக்கு தினமும் பூஜனை செய்துவர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

Page 112
- 20 -
இன்றைய வாழ்க்கை :
வைத்தியருடைய வாக்கை வேதமாகக் கொண்டு தினமும் யான் வணங்கும் தெய்வங்களுடன், சத்திய சாயிபாபாவையும் பூஜித்து வருகின்றேன்.
1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் திகதி கண் ஒபி றேசன் செய்து கொண்டேன். ஒபிறேசனுக்கு அடுக்க இரண்டு தினங்கள் கட்டிலில் அசையாமல் கிடக்க வேண்டு மென்று டாக்டர் கேட்டுக்கொண்டார்.
இவ்விரு தினங்களும் என் மனைவியின் சே  ைவ யான் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவுக்கு அமைந்திருந்தது. வாழ்க்கையில் நாம் திடமான நிலையி லிருக்கும்போது நமது உற்ருர் உறவினர்களை நெருங்கிய நிலையில் காணமுடியாது. விழுந்து கிடக்கும்போதுதான் அவர்களின் உண்மையான தொண்டை எம்மால் அனு மானிக்க முடியும். மனைவி நல்லம்மா என்னுடைய வலது கையாக மாறினள். நோயினுல் அசக்தனுன என் உடலில் அவளது அன்பு அதிக அக்கறை காட்டியது. என்னுடைய எல்லாத் தேவைகளையும் அவள் உடனுக்குடன் உதவி ஞள். மணம் முடித்த காலம்முதல் யான் அவளிடம் காணுத மிகப் பாரிய அன்பைக் கண்டேன். எனது உட லின் துடிப்பை அவள் உள்ளம் உணர்ந்தது. எனது உணர்ச் சிகளை அவள் விழிகள் கவனித்தன. அவ்வப்போது அவள் தன்னைப்பற்றிக் கவனிக்காது எனக்காகச் சிரமப்பட்டாள். அவள் தன் உடலின் சோர் வைக் கவனிக்கவில்லை; இவ்வாறு நல்லம்மா செய்த தொண்டு என் இதயத்தில் அஜந்தா ஒவியமாகப் பதிந்து விட்டது.
மூன்ரு வது தினம் கண்ணை மூடிய திரையை டாக்டர் அவிழ்த்தார். என்ன அதிசயம் எனக்கு முன்னே யான் வணங்கும் தெய்வங்களின் பிரதிமைகள் தெரிந்தன. டாக் டர் கண்ணைக் கூர்ந்து பார்த்துவிட்டு 'உங்கள் கண்கள் திற மைபெறக் கூடியவாறு ஒபிறேசன் அமைந்துவிட்டது என்

ـسـ | 21 سند
` ლmpr# இந்த மகிழ்ச்சியில் என்னைவிட நல்லம்மாவே
ஆழ்ந்துவிட்டாள். டாக்டரிடம் எ வ் வ ைக உண
வுகள் கொடுக்க வேண்டும், மேற்கொண்டு எவ்வாறு
பேண வேண்டுமென்றெல்லாம் விசாரித்தாள். பதினுலு தினங்கள் ஆஸ்பத்திரியில் கழிந்தன. வீட்டுக்கு மறுநாள் செல்ல லா மென் ருர் கண்ணை ஒப்பிறேசன் செய்த டாக்டர். கண்ணுக்குரிய மருந்துகளையும் கொண்டு செல்லும்படி சொன்னர். ஆனல் பதினுலு தினம் கழிந்தபின்னர் மீண்டும் வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். என்னுடைய ஒற் றைக் கண்ணே உபயோகத்திலிருந்தது மறுகண் மருந்து கட்டி மூடியபடியே இருந்தது. பதினுலு தினங்களின் பின் னர் டாக்டரைச் சந்தித்தேன் கண்ணுடிகள் மூலம் சோதனை செய்து பார்த்தார். சோதனை செய்தபோது சிறு பிள்ளையில் யான் கொண்ட பார்வைக் கூர்மை எனக்குண் டானதுபோல் வெள்ச்சமாக இருந்தது. எனக்கென ஒரு கண்ணுடியை வாங்குவதற்கு குறிப்பு எழுதித்தந்தார். கண்ணுடியை வாங்கிக் கண்ணில் தரித்ததும் யாவும் துலக் கமாக விளங்கின. கண்ணின் முன் எது வேண்டுமோ அது எல்லாம் துலாம்பரமாகத் தெரிந்தன. நோய் நீங் கிய பின்னர் சிறிது காலம் நகர்ந்தது.
என்னுடைய மூத்த மகனுக்கு இருபத்து நாலு வயது வந்துவிட்டது. அவனுடைய தொழிலைக் கட்டுப்பாட்டு டன் செய்ய வேண்டுமானல் ஒரு பொறுப்புள்ள குடும் பத்தவனுக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம். இதன் படி என்னுடைய இரத்தத் தொடர்பு விடுபடக் கூடாது என்பதற்காக என்னுடைய உறவினர் முறை யில் உள்ளவரின் பெண்ணை விவாகஞ் செய்து வைத்தேன்.

Page 113
- 22 -
கதையை நிறுத்தினேன் :
இவ்வளவுதான் கடந்துபோன என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் நினைவில் நிற்பவை. இனி எவை எவை நடக்குமோ? ஆண்டவனே அறிவான் என்று நண்பர்க ளுக்குக் கூறினேன்.
ஆவலுடன் கதையை அதுவரை இரசித்துக் கேட்ட வர்கள் பல்வித உணர்ச்சிகளுக்கும் ஆளாயினர். கதை யைக் கேட்டு முடிந்த பின்னர் யாவரும் சில நிமிடங் கள் மெளனமாகவே இருந்தனர். அந்த மெளனத்தை வெட்டி வீழ்த்திக்கொண்டே ஒருவர் என்னைப் பார்த்து * முதலாளி நீங்கள் சிறியவயது தொடக்கம் உங்களு டைய வாழ்க்கையில் பட்ட இன்பதுன்பங்களை யாம் அறிய வடிவாகச் சொல்லிவிட்டீர்கள். ஆனல் உங்களுடைய சமு கத்தவருக்கு நீங்கள் என்ன ஆக்கமான காரியங்களைச் செய்தீர்கள்" என்ற ஒரு வினவை எழுப்பினர், நான் தொடர்ந்து அப்பாலும் கூறினேன்.

س- 2l3 --
என் இலட்சியம் :
"'நான் முதலில் ஆரம்பித்த தொழில் மோட்டார் வாகனங்களைத் திருத்தஞ்செய்வது யான் எத்தொழிலைச் செய்தாலும் என் உறவினர்களுடைய பந்தத்தை விட்டு விடவில்லை. சிலரை மெக்கானிக்குகளாகப் பயிற் றி யுள்ளேன். பலர் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிருர்கள். அவ்வப்போது அவர்களைச் சந்திக்கும்போது என்னுடைய மனதில் சந்தோஷம் உண்டாகும். பஸ் கண்டக்டர் வேலை யில் நான் இருந்தபோது, அக்காலத்தில் வேரோடியிருந்த சாதிவெறிக்கெதிராக அலைமோதி அவர்களுக்கெல்லாம் சமஆசனம் வழங்கியிருக்கிறேன். உறவினர் குலத்தொழி லில் மட்டும் ஈடுபடக்கூடாது; பல தொழிலிலும் பயிற்சி பெறவேண்டுமென்பது என்கருத்து. சிலரை பஸ் கொண் டக்டராக மாற்றியிருக்கின்றேன். இதனுல் சமுதாயத் தில் ஒரளவுக்கு அவர்கள் மரியாதையாக நிலைத்துநிற் முடிந்தது:
மோட்டார் சாரதியாகச் சிலருக்குப் பயிற்சிகொடுத் திருக்கிறேன். அவர்கள் பூரண தேர்ச்சி பெறுவதற்காக என்னுடனேயே பல மாதங்கள் வைத்திருந்தேன். இவ்ர் களிடம் யான் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் தொழிலில் முன்னேற வேண்டுமென்ற கருத் தைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை. என் னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டே சாரத்தியத் துக்குரிய லைசன்ஸ் பத்திரத்தையும் சிலருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.
என்னுடைய தொழில் ஸ்தாபனங்களில் புதிதாகச சேருபவர்களைக் கவனிப்பேன். நல்ல முறையில் வேலை களைக் கிரகித்துச்செய்து பழக அவர்களை ஊக்குவேன். குறைந்த சம்பளத்துடன் சேர்ந்தவர்களுக்குத் தகுந்த முறையில் பயிற்சிகொடுத்து உற்சாகப்படுத்தி வந்திருக் கின்றேன். என் ஸ்தாபனத்தில் பணி புரிந்தவர்கள் பலர்

Page 114
س- 2l4 --
வெளியே சுயமான தொழிலைச் செய்து செல்வாக்குடன் வாழ்கின்றனர்.
என்னுடைய சரித்திரத்தினுாடே அந்தக் காலத்தில் யான் சாதித்திமிரினல் பட்ட அவலங்களை உங்களுக்குக் கூறியிருக்கின்றேன். அப்போது யான் தனித்துநின்று பலருடன் சாதிப்பாகுபாடு காரணமாகப் பட்ட கஷ்டங் களை விவரித்திருக்கிறேன்.
இன்றைக்கு வேறுபாடுகள் அழிவுற்றுவிட்டன. மக் கள் அன்ைவரும் ஓரளவுக்குச் சமத்துவமாக வாழ்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்காக யான் துடித்தவை யெல்லாம் சரித்திரத்தில் புலப்படும்.
எதற்கும் ** கடமையைச் செய் பலனை எதிர்பார்க் காதே " என்ற பொன் வாக்கே மனதில் நிலைத்து வழி காட்டியது. நல்லதுக்காகப் போராடவேண்டும். நல்ல துக்காகக் கஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வே ண் டு ம் என்பதையும் உணர்ந்தேன். நேர்மை, உண்மை, என் பவை என் முன் என்றைக்கும் நின்றுகொண்டே யிருக்கின் றன. அவற்றை நோக்கி மெல்ல மெல்ல அடிவைத்து செல்லும் ஆசைதான் என்னுடையது. உண்மையை மாற் ரூது நான் கஷ்டப்பட்டாலும் பிறருக்குக் கஷ்டத்தை யும் துன்பத்தையும் உண்டுபண்ணுமல் இருப்பதுதான் என்னுடைய இன்றைய முடிபுகளுள் ஒன்ரு கும். இதன் மூலம் என்னுடைய சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு நானும் ஒரு கருவியாக அமைய வாய்ப்புண்டாகும். நிம்மதியென்பது நாம் நினைத்து வருவதல்ல. இறைவன் காட்டும் கருணை ஒளியினற்ருன் அது ஏற்பட வேண் டும். வலுவையும் நம்பிக்கையையும இறைவனே அரு ளுவான் என்று நம்புகிறேன்.
தனிப்பட்ட சாதாரண மனிதனகிய என்னுடைய வாழ்க்கையை இங்கு யான் சொல்ல முற்பட்ட காரணமே என்னை அடுத்து நிற்பவர்களும், என் சமுகத்தைச் சார்ந்

- 25 -
தவர்களுமீ என்னை அறியவேண்டு மென்பதற்காகவே, ஆனல் மாபெருஞ் சாதனையை புரிந்துவிட்டேனென்று இங்கு இதைக் கூறமாட்டேன். என்னுடைய அனுபவத்தி லிருந்து மற்றவர்களுக்கு ஏதாவது பயன் கிடைத்தால் போதும்.
உண்மை, நேர்மை, கடமை, கட்டுப்பாடு என்பவற்றை நாம் அச்சிலும், புத்தகத்திலும் வெறுமனே கண்டுவிட முடியாது. சொந்த வாழ்க்கையில் கையாள வேண்டும்; நெஞ்சில் நிலைப்பட்டு நிற்கவேண்டும் என்றே கருதுகிறேன்.
சோதனைகளும் வேதனைகளும் என்னை நெருக்கியிருக் கின்றன. எத்தனை பேர் என்போல் கடந்த காலத்தில் நெருக்குண்டார்களோ? அவர்களை எதிர்கால உலகம் அறிந்துவிட முடியுமா? தேசத்தில் முற்போக்குச் சக்தி கள் இத்தகைய குறைபாடுகளை நிவிர்த்திசெய்து வரு கின்றன. என்னுடைய காலத்திலும் பார்க்கப் பிள்ளை கள் வாழும் இக்காலத்தில் நெருக்கம் தளர்ந்திருப்பதைக் காணும்போது திருப்தி நிலவுகிறது. ஆயினும் மாற்றங் களும் முன்னேற்றங்களும் பூரணத்துவமானி நிலையைப் பெறவேண்டும் சமுதாயம் புனித களமாக மாற வேண் டும். அனைவரும் ஆண்டவனது அருளுக்கு உட்பட வேண் டும். சொல்லுக்கு மேலாக நல்ல செயல்களைச் செய்து கொள்ள முன்வரவேண்டும். நேர்மையைக் கடவுளாகக் காணவேண்டும். அதன் சுவட்டிலே எவ்வளவு தூரத் துக்கு நான் முன்னேக்கிச் சென்றுள்ளேன் என்பதை என்னை இந்நூலால் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இத்துடன் கதையை நிறுத்தினேன். அவர்கள் அதற்குமேல் வித கேள்வியும் கேட்கவில்லை. நல்ல கதையை இரசித் தோம் என்றனர்:

Page 115
-س- 216 --
நினைவுப் பாதை மாறியது:
நேரமோ பன்னிரண்டை அடுத்துவிட்டது. வானத் தில் பஞ்சுப் பொதிபோல் மிதக்கின்ற மேகத்திட்டுக ளிடையே சந்திரன் சிறு குழந்தைபோல் கண்ணும்பூச்சி விளையாடிக்கொண்டிருந்தான்.
புகைவண்டிக்கடவையின் அருகே நாமிருக்கும் மரத் தின் இலைகளுக்கூடாக நிலவின் ஒளி சல்லரியால் அரித் துக்கொட்டிய மாப்போல் வீழ்ந்துகொண்டிருந்தது.
சாமத்துக்கான பீனிவாடை வீசத்தொடங்கிற்று. கதையின் உற்சாகத்தில் உலகத்தை மறந்திருந்தோம். எதிரே நீண்டுகிடக்கும் தண்டவாளம்போல் வாழ்கையும் தொடர்ந்து நீளுவதுதானே.
அப்போது என்னைச் சூழ்ந்திருந்த நண்பர்களுள் ஒரு வர் முதலாளி நீங்கள் நீண்டநேரமாக இங்கே இருந்து விட்டீர்கள். சுகவீனமுற்ற நீங்கள் இந்தப்பணியில் இனி யும் இருக்கப்படாது போங்கள் " என்ருர். அவர் அப் படிக் கூறவே யான் எழுந்தேன்.
அன்று வழமையாக வரவேண்டிய யாழ்தேவி தாமத மாகியதால் ஏறக்குறைய ஒருமைல் தொலைவில் இரைந்தது கேட்டது. கதவுக்காவலாளியான சண்முகமும் தனக் குரிய சைகையை அறிந்து கதவை சாத்தச் சென்றுவிட்
Trif.
நண்பர்கள் பிரிந்தனர். யானும் இல்லத்தை நோக் கிப் புறப்பட்டேன்.
இரவும் பகலும், ஒளியும் நிலவும் என்றும் ஒன்ருே டொன்று பின்னிய வாழ்வில் எதிர்காலம் இறைவனல் நிறைவுடன் நிலவப் பிரார்த்தித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.
& Lulb.


Page 116


Page 117