கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாற்றில் கச்சத்தீவு

Page 1


Page 2


Page 3

வரலாற்றில் கச்சத்தீவு
உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
உணர்ச்சிக்கவிஞர் பதிப்பகம் 2, as IT off & IT 606)
தேவதானம் திருச்சிராப்பள்ளி-620002 தமிழ்நாடு

Page 4
நூல் தலைப்பு
ஆசிரியர்
a food
பொருள்
பக்கங்கள்
எழுத்து
பதிப்பு
விலை
வெளியீடு
அச்சிட்டோர்
வரலாற்றில் கச்சத்தீவு உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
ஆசிரியர்க்கே
வரலாறு
112
10 புள்ளி
முதற் பதிப்பு நவம்பர் 1999
gy. 30-00
உணர்ச்சிக்கவிஞர் பதிப்பகம் 2 காவிரி சாலை தேவதானம், திருச்சி-620 002
கவிக்குயில் பிரிண்டர்ஸ் 47. நல்லதம்பி தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை-600005 தொ.பேசி : 8536107

AUTHOR SPEAKS
This Book on KACHCHATHIVU is yet another jewe on the crown of our Mother Tamil, as she enters the Twenty first Century.
Lemuria continent was in existence since the emergence of the planet Earth.
The ancient inhabitants of this continent Were yramilis. (Lemurians).

Page 5
At the efflux of time, the continent drifted and changed its position and large portions had been submerged in the ocean.
The islands scattered along the south eastern and western seas of the south Asian peninsula seem to be the remains of that ancient sprawling mass of land which was once our ''Lemuria Continent.
The Chain of these islands, are still inhabited by Tamils only. The island of KACHCHATHIVU is one among them.
The Sinha lese were aliens to Lemuria Continent, and they have no right to claim Kachchathivu or any of the neighbouring islands.
Nearly 150 coastal Countries participated in a Conference held in JAMAICA, in the month of December 1982.
They started out with a few norms relating to the use of the seas. (U.N.C.L.OS)
The Sinhalese Government is violating all norms, enshrined in the declaration.
The poor victims are the Tamils, engaged in fishing in their own ''LEMURA SEAS'.
The unauthorised occupation by Sinhalese devoured the right of Tamils, is harmful to the Tamils.
The blue sea turned into red by the blood of Tamils.
The Sea brecze is emitting fire,

The anguish of our brethren disquietens our peace and happiness,
The U.N.O. is a silent spectator of this harrowing tale.
Certainly, the conflict is not between two countries (India 8 Srilanka) but between two races (Tamils 8 Sinhalese).
have unearthed enough evidence, to bring to light this attempted annihilation of the Tamil race. I have culled them from innumerable records of history.
My rightful pen and choicest Words have attempted here to place in sharp focus on the problem of “KACHCHATHI VU”.
OPPONENTS, may hurl boulders or fire bullets at my head, but my thoughts they can never break.
Opponents may scorch my fingers, but never car they prevent me from writing.
My moving finger writes and having written moves on to record more facts.
My Writings shunned the pedantic style in Tamil and have chosen forcible simplicity easily understbod even by the Common folk.
There was a unique political situation in TAM IL NADU during the mid-decades of the 20th Century.
Along with the freedom Struggle, the fight between nationalism and regionalism erupted then,

Page 6
6
The imperialistic, dominating and enslaving vigour to suppress and subdue the Tamil Race, became deep rooted in the hearts and minds of the 'North indian'
eaders.
As an echo of this racial chauvinism, the handing over of the KACHCHATHIVU", originally belonging to Tamils, was Perfected meticulously.
In this social milieu, the unduenchable thirst and Zeal for a separate independent Sovereign State for Tamils, is emerging now in Tamil world.
Now, the spirit of having 'a separate powerful Tamil nation' for the great Tamil race, has been inspired.
The concept is gathering momentum.
Surely, we are on the path or our heroic triumph.
UNARCHIK KAVINGAR SINGARAVELAN GENERAL SECRETARY NAMI TAMLAR YAKKAM
No: 02, KAVER SALA DEVADANAM TRUCH RAPPALL-620 002, TAM LLNAD U - INDIA.

B plugs 1ų90īgotnosť3| 4 �ミ
* Uogyaygınoğ∞
| | 守L.6-0490哈9日增色nグ〜
.lv.64 - 0upos:60íb qılırsaggiờus
--灌199ĪTUI JITTO 顾)•溜→ -+ - - -, → → → -->FECT **~*~~qish@115Īuius@jT ∞摩 乌臣!寸ng9观D)s -V安 四y 幻的 磁R 封 1,909ụģ阳) ș un
filopo loĝe) f), 'gırış gz ftoĝĝeşo ol yılıng ışmastuso� ம9ழய பாழுபிழி
ają9Ệ tījussĜiņormoorgıllo 'golo 04.its $ąặaşo ol giungo urīņsium 蛇頸過白'gito gı hoşệ gạo ou qıfırtsaping) usử
+foĝșește șųo-ioடிரீமுதி
그民니u中城)道ng府院) ●]] .so.64 ||-

Page 7
உள்ளே.
கச்சத்தீவின் தோற்றம் அமைப்பு
சோழர் ஆட்சியில் கச்சத்தீவு
சேது மன்னர் ஆட்சியில் கச்சத்தீவு
ஆங்கிலேயர் ஆட்சியில் கச்சத்தீவு
சுதந்திர இந்தியாவில் கச்சத்தீவு
கச்சத்தீவு தாரைவார்ப்பு
தில்லி ஆட்சியாளரின் பங்கு
தமிழ்நாடு அரசுகளின் பங்கு
கச்சத்தீவில் துயரங்கள்
காசுக்கடலில் கச்சத்தீவு
போராட்டமே வெல்லும்
இளைஞர்கட்கு அழைப்பு

வரலாற்றில் கச்சத்தீவு
கச்சத்தீவின் தோற்றம்
ஆதித் தமிழனின் காலடி மண்ணே
இலெமூரியாக் கண்டம்
அதுவே.-
மாந்தரின் மரபையும் மொழியையும் பண்பாட்டை யும் உருவாக்கிய தமிழ் இனத்தின் தாயகம்.
அதுவே
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் இனத்தின் வாழ்விடம்.
காலத்தின் சுழற்சியால், கடற்கோள்கள் அடுத் தடுத்து நிகழ்ந்தன. கடற்கோள்கள் நிகழ்ந்த
போதெல்லாம் தமிழர்கள் வாழ்ந்த இலெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.
'வடிவேல் எறிந்த வான்பகை பொறா b
பஃறுளி யாற்றுடன் பன்மலை செசிகித்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள."

Page 8
10 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அதில் எஞ்சின முந்நீர்ப்பழந்தீவுகள் பன்னிராயிரம். அதில் ஒன்றே கச்சத்தீவு
இத்தீவு கச்சை வடிவம் கொண்டது. எனவே இத்தீவுக்குக் 'கச்சத் தீவு" எனப் பெயர் வந்தது.
தமிழ்நாடு-தமிழ் ஈழம் இரண்டுக்கும் மையத்தில் இத்தீவு அமைந்தது.
கச்சத் தீவின் நீளம் 1கல். அகலம் * கல். தீவின் பரப்பளவு 285 ஏக்கர். இத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. நெடுந்தீவிலிருந்து 28 கி.மீ. இராமேசுவரத் திலிருந்து 18 கி.மீ. தலைமன்னாரிலிருந்து 25 கி. மீ, படகில் செல்லும் போது இராமேசுவரம் கோபுரம் மறைந்ததும் கச்சத் தீவு கண்களில் படும். இராமேசு வரத்திலிருந்து கச்சத் தீவுக்கு விசைப் படகுப் பயணம், இரண்டு மணி நேரம்
கச்சத்தீவின் புவியியல் அமைப்பு
இது முட்டை வடிவில் இருக்கும்
கடலில் தக்கையென மிதக்கும்.
இத்தீவு நெடுங்கோடு 79° 41 படுக்கைக் கோடு 90 14 இவற்றின் சந்திப்பில் அமைந்துள்ளது. தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும். உட் பகுதியில் வெண்மணல் திட்டுகள் மிளிரும். ஆங்காங்கே குழிகளும் உண்டு. பசும்புல் தரைகளும் உண்டு. நடுப் பகுதி கல்லுமலை என அழைக்கப்படும். கடல் மட்டத் திருந்து கல்லுமலை 20 அடி உயரம்: அதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உண்டு, அதன் நீர், குடிப்பதற்கு நன்று தொடர்ந்து கனமழை பொழியும். செடி, கொடி அரும்பும்

வரலாற்றில் கச்சத்தீவு t
விண்ணில் பறவைகள் பறக்கும்! மண்ணில் பனிமலர் மணக்கும்!
கான் மலரில் வண்டுகள் பாடும் மீன், அருவியில் தாவியே ஒடும்!
இங்கு 'டார்குயின்" எனும் பச்சை ஆமைகள் இருந்தனவாம். அதனாலும் கச்சத்தீவைப் பச்சைத்தீவு என அழைத்தனராம். கச்சம் என்றால் ஆமை என்பர். அதனாலும் இத்தீவை, கச்சத்தீவு என்பர். இத்தீவின் பச்சை மேனியில், இச்சை கொண்டோர், "பச்சைத் தீவு! என மாம்பழச் சொல்லால் அழைத்தனராம். பச்சைத் தீவு மருவி "கச்சத்தீவு" என வழங்கப்படுகிறதாம்.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துக்குத் தேவையான மருந்தாகும் மூலிகைகள் இங்கே மண்டிக் கிடக்கின்றன. அவற்றால் நோய்கள் மடிகின்றன. இத்தீவில் விளையும் 'உமிரி" எனும் மூலிகை, நோய் களைக் கொல்லும் மூலிகைகளின் வேர், தழைகளின் அருமையைச் சொல்லும்!
கச்சத் தீவில் பச்சைக் கொடிகள் படர்ந்திடும் அவற்றினூடே அவரைக் கொடிகள் கலந்திடும். சாயா மலர்கள் மலர்ந்திடும். கற்றாழை-கள்ளிச் செடிகள் தழைத்திடும். முட்புதர்களும் எழும்பிடும். அல்லைக் கிழங்கு விளைந்திடும்; கச்சத் தீவின் சுற்றுக் கடலில், சங்கு குளிப்பர். எனவே இக்கடலைச் 'சங்கு வயல்" என அழைப்பர். கச்சத்தீவுக்கு, "சங்கு புட்டித் தீவு", "சங்குபுட்டித் தீடை" எனும் புனை பெயர்களும் உண்டு. இதற்குக் கண்ணகி அம்மன் பள்ளுப்பாட்டுகளில் சான்றுகள் உள்ளன.
கச்சத்தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால், கிடைக்கும், உலகச் சந்தையில் பொன்னைக் குவிக்கும் கச்சத்தீவின் மீன்கள் தண்ணீர்க் கதவைத் திறக்கும்.

Page 9
12. உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
கடல் பரப்பில் பறக்கும். சுருங்கச் சொன்னால்கச்சத்தீவு சூழ்கடல் ஒரு கணிச்சுரங்கம்! மீன் அரங்கம்! கச்சத்தீவு, கடல் வாணிபத்தில், தமிழகத்தையும் தமிழ் ஈழத்தையும் பிணைத்தது. இரு நாட்டுத் தமிழர் களையும் இணைத்தது.
கச்சத்தீவில் இயற் கை யின் அழகெல்லாம் காணலாம். பச்சை விரிப்பைப் பார்த்து மகிழலாம். ஓய்வுக்கும், மகிழ்வுக்கும் உகந்த இடம். இங்கே தங்கும் பயணிகளுக்கும் பூங்காற்றின் மணம் கிடைக்கும்.
கச்சத் தீவில் வெப்பம் தணியும். காய்ந்த உடலில் குளிர்ச்சி மிளிரும்! பச்சை வயலில் பயிர்கள் வளரும் பளிங்குச் சிமிழ்கள் கரையில் கிடக்கும்!
கச்சத்தீவு: இது, தமிழன் கடலில் மிதக்கும் பூங்கா இது, கத்துக் கடலில் முத்துத் தீவு! இது, தமிழ் மருத்துவ மூலிகை வயல் இது, தரணி வியக்கும் மரகதத் திடல்
சோழர் ஆட்சியில் கச்சத்தீவு
அன்று, கீழ்க் கடலும் குமரிக் கடலும், சோழ மன்னர்க்கே சொந்தம். அக்கடலில் அமைந்த தீவுகள் அனைத்தும், சோழர் ஆட்சியின் அங்கம்.
சோழ மன்னர்களே, உலகில் முதன் முதலில் கடற்படை அமைத்தவர்.
இன்றைய சேதுக்கடல், அன்றைய சோழ மன்னர்கள் நீந்தி விளையாடிய கடல், கச்சத் தீவோ, அன்றைய சோழப் படையினர் ஒய்வெடுத்த

வரலா றில் கச்சத்தீவு 1S
சோழர் குல வேழம், இராசராச சோழன், உலகம் வியக்கும் கடற்பேரரசை நிறுவினான் கடல் போரை நிகழ்த்தினான்!
சோழப் படையினர், கடலாடிகளை எப்படிச் சாய்ப்பது கடற்தீவுகளை எப்படிக் காப்பது என்பதை அறிந்தனர். கடலிலும் பகையை வென்றனர்
சோழ மன்னர்கள் உறங்குவது ஒரு தீவில். காலை உணவு மற்றொரு தீவில். பகல் உணவோ வேறொரு தீவில், இரவுக்கு தங்கல் இன்னொரு தீவு. இப்படிச் சோழர்கள் முந்நீர்ப்பழந்தீவு பன்னிராயிரத்திலும் தங்களது இறையாண்மையைச் செலுத்தினர்.
"சோழர்களின் களிறு" என விளங்கிய பேரரசன் இராசராசன, கச்சத்தீவில் நின்றாடினான்! அனைத்துத் தீவுகளையும் பந்தாடினான்! சிங்களக் காளையரை வென்றாடினான் குமரிப் பெருங்கடல் முழுவதையும் தமிழன் கடல் எனக் கொண்டாடினான்!
பத்தாம் நூற்றாண்டில், உலகக் கடலின் காற்பகுதி யில் சோழனின் மரக்கலங்களே மிதந்தன. அவற்றி லெல்லாம், புலிக்கொடிகளே பறந்தன. மரக்கலங்களில் ஒளிப்பெருக்காடி (லென்ஸ்) பொருத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் கடலின் நெடுந் தொலைவினைக் கண்டறிந்தனர்.
இரவிலும், பகலிலும் வீசும் காற்றிலும்; விழுங்கும் அலையிலும், மரக் கலத்தைக் கடற்பரப்பில் இடைய றாது செலுத்திய முதல் கப்பலோட்டிய தமிழன் பெயர் *“儒函可ár””
சங்குகள் கரையின் கண்ணே திரிய கடல் எழுந்து ஆரவாரிக்கும் ஒலமாந்த அழகான துறைக்கண் கலங்களைப் பரதர் செலுத்துவர்

Page 10
14 உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன்
விரிந்த கடலே பரதர் வீடு வெள்ளி நிலவே அவர்களின் சோறு இதுவே வரலாறு.
இப்படிச் சோழப் பேரரசு தென் கடல் தீவுகளை யெல்லாம் வென்றது. அனைத்துத் தீவுகளிலும் ஆளுமை கொண்டது.
சோழனுக்கு உரித்தான, குள்ளக்காரன் பெட்டி யிலிருந்து நேர் வடக்கே கோடு கிழித்தால், கச்சத் தீவுக்குக் கிழக்கே அக்கோடு வருகிறது. தலை மன்னார் தனுஷ்கோடிப் பகுதியில் உள்ள மேடான பகுதியில் முன்பு நடந்தே இலங்கை செல்ல கற்பாலம் இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டக் கோனாட்டுப் பகுதி. "கடல் அடையாது இலங்கை கொண்ட சோழ வளநாடு' என்று அழைக்கப் பெற்றது.
1480-ஆம் ஆண்டில் சோழ மன்னர்கள் ஈழம் சென்றனர். இடையில் ஓய்வுக்காகக் கச்சத் தீவில் தங்கினர்.
பாண்டிய மன்னர்களோ-தங்கள் நாட்டு விளை பொருட்களான மிளகு, திப்பிலி, இலவங்கம், சந்தனம், யானையின் தந்தம், விலையுயர்ந்த முத்துக்கள், மூதலிய பொருட்களை கச்சத்தீவில் ஏற்றுமதி செய்தனர்.
இரு நாட்டுத் தமிழ் மன்னர்களும், கச்சத்தீவின் கடலில்-முத்து குளித்தல், சங்கு குளித்தல், மீன் பிடித்தல், ஆகிய தொழில்களை நடத்தினர்.
இரு நாட்டு மீனவத் தமிழர்களும், வலைகளைக் காபப் போடுவதற்கும், மீன்களை உலர்த்துவதற்கும் கச்சத்தீவைப் பயன் படுத்தினர்.

வரலாற்றில் கச்சத்தீவு 5
இவை குறித்து அகநானூறு, புறநானூறு, கலித் தொகை, சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங் களில் பேசப் படுகின்றன.
மேலும், எகிப்தியச் சுற்றுலாப் பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ் ஆறாம் நூற்றாண்டில் (கி.பி. 530-550) எழுதிய வரலாற்றுக் குறிப்பிலும் இக் கருத்துகள் காணப்படுகின்றன.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தமிழ் ஈழம் நீங்கலான இலங்கையைத் துட்டகாமினு எனும் சிங்களன் ஆண்டான். அன்று தமிழ் ஈழத்தை "ஏலேலோ சிங்கன்" எனும் தமிழ் மன்னன் ஆண்டான்.
துட்டகாமினு ஒரு நாள், அவனது அரியணையில் இரு கால்களையும் முடக்கிக் கொண்டு படுத்திருந்தான்? அதனைக் கண்ட துட்டகாமினுவின் தாய் விகாரதேவி, "மகனே! ஏன் இப்படி ஒரு அடிமையைப் போல் கால் களை முடக்கிக் கொண்டு கிடக்கிறாய்?" என்று கேட்டாளாம்.
அதற்குத் துட்டகாமினு, "நான் என்னம்மா செய்வேன், தெற்கே காலை நீட்டினால்-கடல் முட்டு கிறது. வடக்கே காலை நீட்டினால்-ஏலேலோ சிங்கன் ஆட்சி என்னைக் குட்டுகிறது. நான் எப்படிக் காலை நீட்டுவேன்" என்றானாம், கால் நீட்டும் அளவுகூட நாடு பெற்றிறாதவன் சிங்களவன். இன்றோ தமிழனின் கடலுக்கும், தமிழரின் தீவுகள் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடுகிறான். கேட்கின்றோம் நெஞ்செரியத் தமிழ் இனத்தீர்.
11-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் இராச ராசன், பாண்டிய மண்டலத்தை வென்றான். இலங்கைத் தீவையும் வென்றான். அன்று இராமேசுவரம்

Page 11
16 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
கடற்பாதையைக் கண்காணிப்பதற்குச் சோழ மறவர் களை அமர்த்தினான்.
16-ஆம் நூற்றாண்டில், சோழர் ஆட்சி தாழ்வுற்றது. பாண்டியர் ஆட்சி மறைவுற்றது. இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் இராமநாதபுரம் உள்ளிட்ட மறவர் சீமையில் தனி ஆட்சி நிறுவினர்.
சேது மன்னர் ஆட்சியில் கச்சத்தீவு
இந்த மறவர்குல மன்னர்கள் "சேதுபதி” என அழைக்கப்பட்டனர். தென் தமிழ் நாட்டை மறவர் சீமை" எனப் பெயரிட்டு ஆண்டனர். கச்சத்தீவில்
தங்கள் ஆளுமையை நிலை நாட்டினர். தமிழ் ஈழ மக்களுடன் குருதி உறவு கொண்டனர்.
கி.பி. 1736-ஆம் ஆண்டுடன் தமிழ் மன்னர்கள் வரலாறு முடிகிறது. வரலாற்றுக் கண்ணாடியில் 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயரின் நேரிடை ஆட்சி இந்தியாவில் ஏற்படும் வரை தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த தனி ஆட்சி, தமிழ் ஆட்சி, சேது மன்னர்கள் ஆட்சியே ஆகும். கச்சத்தீவு, சேதுமன்னர் ஆட்சிக்கு உட்பட்டே இருந்தது. தமிழ்க் கொடியே அங்குப் பறந்தது.
சேது மன்னர்களின் வழிவழி:
சேது மன்னர்கள், இராமநாதபுரத்தைத் தலை நகராகக் கொண்டனர்! இராமநாதபுரத்திற்கு வர லாற்றுச் சிறப்பினைத் தந்தனர்! கட்டபொம்மன், பிரித் தானிய கும்பெனி படைத்தளபதி நிக்சனைச் சந்தித்தது அங்குதான்.

வரலாற்றில் சச்சத்தீவு 17
தாயுமானவர் அடக்கமாகியிருப்பதும் அங்கேதான். விவேகாநந்தரை அனைத்துச் சமய மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததும் இராமநாதபுரமே சேது மன்னர் செப்பேடு இதைக் கூறுமே.
சேது நாட்டை ஆண்ட முதல் சேது மன்னர் சடைக்கத் தேவர் ஆவார். இவர் கி.பி. 1605-இல் புகளுர்த் தலைநகரில் சேது மன்னராகப் பதவி ஏற்றார். இவரை உடையான் ரகுநாத சேதுபதி என அழைப்பர். கச்சத்தீவு இவரது ஆட்சிக்குஉட்பட்டு இருந்தது. இவர் 1622-இல் காலமானார். 1622-1635 வரை இவரது மகன் கூத்தன் ரகுநாத சேது மன்னர் ஆட்சி புரிந்தார். 1635-1646 கூத்தன் சேதுவின் தம்பி தளவாய்ச்
சடைக்கன் 1647-1672 இரகுநாத திருமலை என்ற சேது மன்னர். 1672-1673 இராசதரிய சேது மன்னர்.
1674-1710 கிழவன் என்ற இரகுநாத சேது மன்னர். (இவர் காலத்தில் தஞ்சையிலிருந்து மராட்டிய மன்னன் படை எடுத்தான் தோற்று ஓடினான். மதுரை மேல் படை யெடுத்து வந்த மைதர்ப் படையை எதிர் கொண்டவர்; படை வென்றவர்; திருமலை நாயக்கருக்குத் துணை நின்றவர்.) - -
1711-1725 திருவுடைத் தேவர் என்ற விசயரகுநாத
சேது மன்னர்,
1722-இல் ஆங்கிலேயக் கும்பெனி ஆட்சித் தொடங்
கியது.
1722-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கும்பெனி ஆட்சி
தொடங்கியது.
1726 ஓராண்டு சந்தரரேசுவரர்; தண்டித் தேவர்

Page 12
18
1726-1730
1730-1735
1735-1747
1747 - 1749
1749-1762
1763-1795
உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
பவானி சங்கர் எனும் சேது மன்னர். குமார விஜயமுத்து ரகுநாத சேது மன்னர். சிவகுமார முத்து விசயரகுநாத சேது
D676Orii.
இராக்கத் தேவர்.
செல்ல முத்து விசயரகுநாத சேது மன்னர்,
முத்துராமலிங்க விசயரகுநாத சேது மன்னர். (இவரே மறவர் சீமையில் தனி ஆட்சி நடத்திய இறுதிச் சேது மன்னர் ஆவார். ஆங்கிலக்கும்பெனியார், திடீ ரெனப் படையெடுத்து இம்மன்னரைச் சிறைப் பிடித்தனர். மறவர் சீமையில் ஜமீன்தார் முறையை ஏற்படுத்தினர்.
இராமநாதபுர குறுநில மன்னர் (ஜமீன்தார்)
1803-1807
1807-1820
1820-1829
1829-1830
1830-1845
1846-1862
1862-1873
1873-1903
இராணி மங்களேசுவரி நாச்சியார் (முதல் குறுநில அரசி-ஜமீன்தாரினி)
அண்ணச்சாமி என்ற முத்துவிசய ரகுநாத சேதுபதி.
விசயரகுநாத இராமசாமி சேது மன்னர். இராணி முத்து வீராயி நாச்சியார். துரைராசா நாச்சியார்,
இராணி பருவத வர்த்தினி நாச்சியார்.
முத்துராமலிங்க சேதுமன்னர் (இவர் சிறந்த தமிழறிஞர்.) பாஸ்கர சேது மன்னர். (இவர் சிறந்த
கொடையாளி. ஆங்கிலப் பட்டதாரி,

வரலாற்றில் கச்சத்தீவு 19
இவரே விவேகாநந்தரை 1893 இல் தனது சொந்த செலவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தவர். உ.வே. சாமிநாத அய்யருக்கு உதவியவர்.) *
1903-1928 இராஜராஜேசுவர சேது மன்னர். (நீதிக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக
இருந்தவர்.)
1928-1967 சண்முக இராசேசுவரன் நாகநாத சேது
மன்னர்.
1949 இல் குறுநில மன்னர் ஒழிப்புச் சட்டம் நிறை
வேற்றப்பட்டது.
1967-1979 இராமநாத சேது மன்னர்.
1979-1997 இந்திராதேவி 10.10-1997 இராஜேஸ்வரி நாச்சியார்.
நோய் வாய்ப்பட்டிருந்த இந்திராதேவி 4-11-1998 இல் காலமானார்.
மறவர் சீயையை ஆண்ட சேது மன்னர்கள் தண்ணளியும், தாளாண்மையும் கொண்டவர்கள். இவர்கள் கோயில் பராமரிப்புக்கு இறையிலியாக விளை நிலங்களையும், அணி, மணி, பொன், பொருட்களை யும் வாரிவழங்கினர். 'இராமநாதபுரத்தில் கல்லால் ஆன ஏற்றமிகு கோட்டையையும் எழில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். அரண்மனை வாயிற்படிகள் வைரத்தால் ஆனவை. அந்த அரண்மனையில் பளிங்கு மண்டபம் உண்டு. சொக்கிடுவர் அங்குள்ள ஓவியம் கண்டு. கோட்டைக் கதவு எஃகு இரும்பால் ஆனது. அதில் தாமரை மொட்டுகள் பதிந்திருக்கும். யானைகள் கோட்டைக் கதவை முட்டும்!

Page 13
20 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அப்போது, தாமரை மொட்டுகள் யானையின் தலையை வெட்டும். களிறு தலையில் குருதி கொட்டும்!
சேது மன்னர்கள் போர்க் களத்தில் வளறி' எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தினர். அந்த வாள் முன், எதிரிகள் தூள்! தூள்! வளறி-எதிரிமேல் பாய்ந்துகொன்று, பின், எய்தவரிடமே வந்து சேரும்.
சேது மன்னர்கள், தமிழ் ஈழ மக்களுடன் உறவு கொண்டிருந்தனர். இவர்களின் சந்திப்புக் களமாய்க் கச்சத்தீவு திகழ்ந்தது தமிழ் ஈழத்திலும், தமிழகத்திலும் சேது மன்னர்கள் தமிழ் வளர்த்தனர். சேது மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டரசன் கோட்டை, மகாகவி கம்பர் தமது இறுதி நாளில் வாழ்ந்து அடங்கிய கள மாகும். அதுவே, இன்று கம்பரின் நினைவகம்.
தமிழின் சிறப்பை நன்கு அறிந்த சேது மன்னர்கள், தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர். தமிழை வளர்த் தனர். அமுதக் கவிராயர் என்பவர் இரகுநாத சேது மன்னரின் மீது 'துறைக் கோவை’ எனும் நூலினைப் பாடியுள்ளார். பாஸ்கர சேது மன்னரும், அவரது அண்ணான பாண்டித்துரைத் தேவரும் 1901 செப்டம்பர் 15 இல் மதுரையில், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத் தனர். தமிழை உயர்த்தினர். கீழக்கரையில் வாழ்ந்த சீதக்காதி மரைக்காயர் எனும் இசுலாமியரும் தமிழர் எனும் உணர்வுடன் சேது மன்னர்களோடு இணைந்தார்! தமிழ் வளர்த்த வள்ளலாய்த் திகழ்ந்தார்.
தரர்கள் எழுந்தனர். 'துரன் கோட்டை அமைத்தனர். சேது மண்ணின் மறவர்களுக்கு வாள் தான் ஆடை விழுப்புண்தான் அவர்களின் அணிகலன் பாஸ்கர சேது மன்னரின் வீரத்தளபதி வன்னியத் தேவன். இவன் பெயர் கேட்டால் பகை அஞ்சும் தமிழ்
விஞ்சும்,

வரலாற்றில் கச்சத்தீவு 21.
இவன் படை நடுங்கப் போராடுவான்! பரங்கியர் குருதியில் நீராடுவான்
எதிரிப் படை என்றால் இவன்
சீறும் சிங்கம்!
பாயும் புலி இவன் போர்க்களம் நின்றால் மண் வீரம் துள்ளும் மறவர் படை வெல்லும்
தமிழன் கடலில் உரிமைப்போர்
அப்போது மதுரையைத் தலைநகராகக் கொண்டு, பாண்டிய மண்ணைத் திருமலைநாயக்கர் ஆண்டான். தமிழரின் கடலையும், கச்சத்தீவையும் கைப்பற்றிட முனைந்தான். அதற்குத் தடையாகச் சேது மன்னர் ஆட்சி நிலைத்து நின்றதால், சேது மன்னரை வீழ்த்திட
எ மு ந் த ர ன். அவனது படைத்தளபதியாம் 'இராமப்பய்யன்" பெரும் படையோடு மறவர் சீமையைத் தாக்கினான். இராமேசுவரம் கோட்டைக்குக் கடலில் பாலம் அமைத்தான். பெரும் படையோடு
அதை வளைத்தான். சேது மன்னரின் படைத்தலைவன் உறங்காப்புலி வன்னியத்தேவன், மறவர் படையோடு திரண்டான். நாயக்கர் படையை எதிர் கொண்டான். தமிழரின் கடலில் வீரப்போர் நிகழ்ந்தது. சேதுப்படை வென்றது. நாயக்கர் படையினர் கையற்றும், காலிழந்தும் கடலில் மூழ்கினர். இதைப் பொறுக்காத திருமலை நாயக்கர், தமிழர் கடலிலும், கச்சத் தீவிலும் வல்லூறுகளாய்ப் பறந்து கொண்டிருந்த போர்த்துக் கேசியர் உதவியை நாடினார்.

Page 14
22 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
ஐந்து கப்பல்களில், போர்த்துக்கேசிய கடற்படை யினர் இராமப்பய்யன் படைக்கு உதவிட வந்தனர். இராமேசுவரம் தீவு முழுவதையும் வளைத்தனர். சேதுப்படை வன்னியத்தேவன் தலைமையில் "பெண்டு காச்சியார்" எனும் பெருங்கப்பலுடன், கடற்போரில் இறங்கியது. இராமப்பய்யன் சண்டியாய் எழுந்தான். நொண் டியாய் விழுந்தான். பெருங்கப்பற்படைகளை சிறிய "யு' படகு கொண்டு தாக்கும் முறையைச் ஜெர்மானியர்கள் கையாண்டனர். ஆனால், அன்றே இம்முறையைக் கையாண்டு சேதுப்படை வென்றது. பரங்கிப் படை தோற்றது. வளையாத் தளபதி வன்னியத்தேவன் 'நாடு கலக்கி" எனும் தன் குதிரை யில் ஏறினான். வீரத்தை ஏ வினான். வெற்றியை நாட்டினான். அந்தோ வன்னியத்தேவன் அம்மை நோயால் இறந்தான். வரலாற்றில் சிறந்தான்.
16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வன்நெஞ்சு வடுகரும், வஞ்சகப் பரங்கியரும் தமிழகத்தில் புகுந்தனர்.
தமிழரின்வணிகத்தைச் சிதைத்தனர்
தமிழ்க் கடலைப் பறித்தனர்!
அன்றும்,
மூவேந்தர் வழி வந்த செந்தமிழ்ச் சேது மன்னர் களே கயவர்களை விரட்டினர்; கச்சத் தீவை மீட்டனர்
சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு தமிழ் மண்ணில், சேது மன்னர்களே தனி ஆட்சி நடத்தினர்! தமிழ் ஆட்சி முழக்கினர்!
1706-1744 இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தீவில், டச்சுக்காரர்கள் திமிர் நடை போட்டனர். கச்சத்

வரலாற்றில் கச்சத்தீவு 23
தீவிலும் கால்களை நீட்டினர். சேதுப்படை எழுந்தது டச்சுப்படை விழுந்தது!
கச்சத்தீவில் விறகு, பூ, மீன் சங்கு முத்துமருந்து மூலிகைகள், சாயவேர் முதலானவை நிறையக் கிடைத்தன. அவற்றின் வரவு செலவுக் கணக்குகளைக் கண்காணிக்கச் சேது மன்னர் அரண்மனையில் ஒரு தனி அலுவலகமே இயங்கியது. அதில் பணிபுரிய ஒரு கணக்கரும் நியமிக்கப்பட்டு இருந்தார்.
1944-இல் தூத்துக்குடி முத்து - மீன் வளத்துறை உதவி இயக்குநர் தயாரித்த நிலப்படத்திலும் 20.4.1950 இல் தமிழக அரசு தயாரித்த நிலப்படத்திலும் கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுமன்னர் ஆட்சியில்தான் சேர்க்கப் பட்டுள்ளது.
1929-1945 ஆண்டுகளில் மீன் பிடித்துறைகளைப் பற்றிய தமிழக அரசின் கோப்புகளிலும் கச்சத்தீவு இராமநாதபுரம் குறுநிலத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.
1911 இல் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் சேது மன்னருக்குரிய குறுநிலப் பட்டியலிலும் கச்சத்தீவு இடம் பெற்றுள்ளது.
மதுரை நாயக்க மன்னர்களின் ஆவணத்திலும், கச்சத்தீவு இராமநாதபுரம் சேது மன்னர்களுக்கே சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமேசுவரம் - மன்னார் குடா இடைப்பட்ட கடல் முழுமையும் சேது மன்னர்களுக்கே அடக்கம், எனவே அதனைச் சேதுமாக் கடல் (சேது சமுத்திரம்) என அழைப்பது வழக்கம். -
கச்சத்தீவில் சாயவேர் தயாரிக்க, கீழக்கரை சாயபு மாப்பிள்ளை மரைக்காயர் மகன் சனாப் முகம்மது அப்துல்காதர் மரைக்காயரும், இராமசாமிப்பிள்ளை

Page 15
24 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
மகன் முத்துசாமிப்பிள்ளையும் குத்தகைக்கு எடுத் துள்ளனர். ஆண்டுக் குத்தகைக் கட்டணமாக ரூ.700/ வது லித்து ஒவ்வோர் ஆண்டும் இராமநாதபுரம் சேது மன்னரின் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
(சான்று: இராமநாதபுர இணைப்பதிவாளர் அலுவலகப் பதிவு எண் 134 ஆண்டு 1885.
கச்சத்தீவைக் குத்தகைக்கு விடுவதற்கும், குத்தகை தாரர்களிடமிருந்து குத்தகைத் தொகையை வதலிப் பதற்கும் சேது மன்னர்களே உரிமம் பெற்றிருந்தனர்.
போர்த்துக்கேசியர், ஒவ்வொரு முறையும் முத்துக்
குளித்தபோது சேது மன்னருக்குச் சுங்கவரியாக அறுபது முத்துக்கள் வழங்கி வந்துள்ளனர். ஒவ்வொரு பருவ முதல் நாளில், குளித்து எடுக்கும் முத்துக்களைச் சேது மன்னர்க்கே வழங்கியுள்ளனர். இதற்கு அரண்மனை முத்து என்று பெயர்.
1796 இல் சேதுக்கடலில் முத்துக் குளிக்கும் தொழிலைப் போர்த்துக்கேசியரிடமிருந்து டச்சுக் காரர்கள் கைப்பற்றினர். போர்த்துக்கேசியர் போன்றே இவர்களும் சேது மன்னருக்குரிய பங்கை வழங்கினர். (1653 முதல் 1796 வரை).
கச்சத்தீவில் கிடைக்கும் சங்கு - சிப்பிகளை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைக்கு விட்டுச் சேது மன்னர்கள் பொருள் ஈட்டியுள்ளனர்.
மீன் வளத்துறையின் 1936-ஆம் ஆண்டு குறிப்பேட்டில் இத்தகவல் பதிவாசி உள்ளது. சேது மன்னர்களின் மரக்கலங்கள் கச்சத்தீவைக் கடந்து செல்லும். தமிழன் கடலில் வலம் வரும்.
தமிழ் ஈழத்திலிருந்து கொட்டைப்பாக்கு, ஏலம், கிராம்பு, சாதிக்காய் மற்றும் சாதிப் பத்திரியையும் - சேர

வரலாற்றில் கச்சத்தீவு *a sa 2$
நாட்டிலிருந்து குறுமிளகு, சோழ நாட்டிலிருந்து கைத்தறித்துணிகள். பாண்டிய நாட்டிலிருந்து முத்து, பவளம் இவற்றை மறவர் சீமை வணிகர்கள் கச்சத் தீவில் கொணர்ந்து குவித்தனர். டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் அவற்றைப் போட்டிப் போட்டு வாங்கினர். அதனால் சேது நாட்டுக் கருவூலம் நிரம்பியது. மறவர் பூமி மகிழ்ந்தது.
கொங்கு மண்டலத்திலிருந்து காங்கேயக் காளை களும், காஞ்சிபுரத்துப் பட்டுப்புடவைகளும் கச்சத்தீவில் இறங்கும். வெளிநாட்டு வணிகர்கள் அவற்றைப் பெறுவர். பதிலுக்குப் பொன்னையும், பொருளையும் தருவர். இங்கே மிளகாய் வற்றலுக்கு நல்ல எதிர் பார்ப்பு.
சேதுக்கடலில் பெரிய துறைமுகம் கீழக்கரை, இதற்கு "நினைத்ததை முடித்தான்". என்ற பெயரும் உண்டு. கீழக் கரையிலிருந்து மடிச்சீலை எனும் கைத்தறித் துணிகளும் பனம் பழத்தைச் சுட்டுச் செய்யப்பட்ட பனைமட்டுகளும், பதனீரிலிருந்து எடுக்கப்பட்ட கருப்பட்டி போன்ற பொருட்களும் கச்சத்தீவில் நடைபெறும் சந்தைக்கு வரும். ۔ی
அயல்நாட்டு வணிகர்கள், அதிக விலை கொடுத்து அவற்றை வாங்குவர், கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடலில் முத்துக்குளியல் நடக்கும். சேது மன்னருக்குப் பெரும் செல்வம் கிடைக்கும், இவற்றிற்கெல்லாம் சான்று கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோவிலில் உள்ள கல்வெட்டுகள் ஆகும்.
கச்சத்தீவுக்கடலில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே முத்துக்குளியலைத் தமிழர்கள் நடத்தி
su-2

Page 16
26 உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன்
வந்துள்ளனர். உலகிலேயே விலை உயர்ந்த முத்து களைப் பெற்றுள்ளனர். இதற்குரிய சான்றுகளைச் சேது மன்னர் செப்பேடுகள் சொல்லும்,
இத்தாலிய நாட்டைச் சார்ந்த பன்னாட்டுப்பயணி மார்க்கோ போலோ கி. பி. 1311 இல் தென்னகம் வந்தார். காயல் துறைமுகம், ஏற்றுமதியில் ஏற்றம் பெற்றிருந்ததைக் கண்டார். 'காயல்பட்டினம் கம்பீர மான மிகப்பெரிய நகராகும்" எனப் புகழ்ந்தார்.
மேலும் அவரது குறிப்பேட்டில் கூறி இருப்பவை: "கச்சத்தீவுக் கடலில் முத்தெடுக்கும் இளவேனிற் காலத்தில் பிற நாட்டினர் பெரும் அளவில் வருவர். முத்து வணிகத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாய்ப் பொன்னையும் பொருளையும் பெறுவர்."
சேது மன்னர்கள் தமிழ் ஈழத்துடன் வணிகத் தொடர்பு கொண்டனர். தங்களிடையே போக்கு வரத்தை எளிதாக்க இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு ஒரு கற்பாலம் அமைத்தனர். அதை, ஆங்கிலேயர் ஆதம்பாலம் (Adambs bridge) என்றனர். இதனைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், பாரதிதாசன் பல்கலைகழகத்திலும் உள்ள செயற்கைக் கோள் படம் விளக்கும். சேது மன்னர்கள் பெற்ற செல்வங்களைக் கொண்டு ஆயகலைகளை வளர்த் தனர். அன்னைத் தமிழை உயர்த்தினர். அதனால்,
1. 'நடநாடக சாலை உண்டான தேவன்
2. உபயசாமர உல்லாச நளினக்காரன்'
என்ற விருதுகளைப் பெற்றனர். மறவர் சீமையில் தோன்றிய வீரன் ஒருவன், அன்னியன் கையில் இருந்த தமிழர்க் கடல் துறைமுகம் ஒன்றைக் கைப்பற்றினான். அவன் 'துறைமுகம் கொண்டான்', என்ற விருதிதைப்

வரலாற்றில் கச்சச்தீவு 27
பெற்றான். மதுரையைத் திப்புசுல்தான் படையெடுப்பி லிருந்து காத்த சேது மன்னர் 'மதுரையார் மானங் காத்தான்" என்ற விருதிதைப் பெற்றார். இப்படிக் கலைகளிலும் வீரச் செயல்களிலும் சிறந்து விளங்கிய சேது மன்னர்கள் காட்சிக் கெளியவராய், கடுஞ்சொல் அற்றவராய் விளங்கினர். இவர்கள், அன்பு உள்ளத் துடனும் அற உணர்வுடனும், மனித நேயத்துடனும் மறவர் மண்டலத்தை ஆண்டனர். தமிழர்க்கடலையும், தமிழர்த்தீவையும் காத்தனர்.
சே து ப தி அன்னமும்-காவிரி நீரும்ஆவுடையப்பர் நிழலும்" எனச் சேது மன்னர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர். V
இவர்கள்,
வில்லேர் உழவர்களாய் விளங்கினர்
வீர மறவர்களாய்த் திகழ்ந்தனர்!
ஒளி முத்து மாலைகளை அணிந்தனர்!
சேது மன்னர்கள் தலை வணங்கும் நேரங்கள் மூன்று.
1. இராமநாத சுவாமியை வணங்கிடும் நேரம்,
2. புலவர்களை வரவேற்றுக் கொடை வழங்கும்
நேரம். 3. மனைவியை மஞ்சத்தில் கொஞ்சி மகிழும்
நேரம்.
இராமேசுவரம்
'இராமேசுவரம்". சேது கடலில் ஒரூ தீவு.
இராமன், ஈசுவரனை வணங்கிய இடமாம். எனவே

Page 17
丞 *
28 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
இத்தீவை (இராமன் + ஈசுவரன்) இராமேசுவரம் என்பர்.
இராமேசுவரம், மதுரை மாநகரிலிருந்து 85 கல் தென்
கிழக்கில் உள்ளது. இதன் நீளம் 16 கல், அகலம் 1.9
கல். பரப்பளவு 13.224 ஏக்கர். மக்கட் தொகை 32,500, இத்தீவை இராமநாதபுரத்துடன் இணைப்பது பாம்பன்: பாலம். இதன் நீளம் 2.36 கிலோ மீட்டர். இத்தீவின்
சிறப்பு, இராமநாதர் கோவில். இந்தியத் துணைக் கண்டத்தில் போற்றப்படும் திருப்பயண இடம் இராமேசுவரம்.
மொழி, இனம், சமயம் இவற்றைக் கடந்து, புனிதப் பயணிகள் இங்குக் கூடுவர். தனுஷ்கோடி கடலில் குளிப்பர் களிப்பர் உடல் நலம் பெறுவர்.
27.01-1897அன்று, விவேகானந்தர் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளார். 28-09-1963 இல் இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் இராதாகிருஷ்ணன் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.
திகைப்பூட்டும் இராமேசுவரம் திருக்கோவில்
மறவர் மண்ணை ஆண்ட சேது மன்னர்கள், கச்சத் தீவுக்கடலில் முத்துக்குளிப்பு மூலம் தங்கள் கருவூலத்தை நிரப்பினர். அச்செல்வத்தில் பெரும் பகுதியை இராமேசுவரம் கோவிலுக்கு அளித்தனர். இராச இராச சோழன் தஞ்சையில் எழுப்பிய இராச ராசேச்சரம் கோவில் போன்றே சேது மன்னர்கள் இராமேசுவரம் தீவில், இராமநாதர் திருக்கோவிலை எழுப்பினர். 6) 96) சமயத்தை உயர்த்தினர். கோவிலின் நாற்புறங்களிலும் கோட்டைச் சுவரென மதில்கள் உள்ளன. கோவில் உட்புறத்தின் பரப்பு 16 ஏக்கர், கோவிலின் மேற்குக் கோபுரம் 78 அடி உயரம், ஐந்து அடுக்குகளைக் கொண்டது.

வரலாற்றில் கச்சத்தீவு 29
கோவிலின் கிழக்குக் கோபுரம் 126 அடி உயர்ந்த்து. ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. கோவில் உள் மண்டபம் 1200 கற்றுாண்களைக் கொண்டது. தூண் களின் பொலிவு, உறுதி, சிற்பிகளின் திறமையினைச் சொல்லும் சேது மன்னர்களின் மாண்பினை அள்ளும்!
இக்கோவிலுள் படர்ந்திருக்கும் மூன்றாம் திருச்சுற்று உலகிலேயே பெரியது. காட்சிக்கு அரியது. கிழக்கு மேற்கில் இதன் நீளம் 690 அடி, உட்புற நீளம் 649 அடி. வடக்கு தெற்கில் 435 அடி நீளம், உட்புற நீளம் 395 அடி. இதன் உயரம் 22 அடி 7.50 அங்குலம். மூன்றாம் வளாகத்திலுள்ள மொத்தத் தூண்கள் 1212. இதைக் கட்டியவர்-முத்து இராமலிங்க விசய ரெகுநாத சேது மன்னர் (1740-1770). கோவில் கொடி மரத்தின் முன் படுத்திருக்கும் நந்தியின் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி,
கடலில் ஒரு கலைக் கோவில்! கண்ட துண்டோ இப்பாரில்! கவின்மிகு இக்கோவில்-கற்பனையின் á? spubl கட்டடக் கலையின் மகுடம் கோவில் சிற்பங்கள் கண்களில் நிலைக்கும் ஓவியங்கள் உள்ளத்தைப் பறிக்கும்! இராமேசுவரம் கோவிலின் கோபுரத்தில் நின்றால் கச்சத்தீவு கண்களுக்குத் தெரியும். கச்சத்தீவின் மணல் முகட்டில் நின்றால் இராமேசுவரக் கோவில் கோபுரம் தெரியும். கச்சத்தீவு தமிழகத்தின் கண்ணுக்கெட்டிய தூரமே என்பது புரியும். இராமேசுவரம் கோவிலுக்குக் கச்சத்தீவிலிருந்தே பூக்கள் வந்தன வழிபாடுகள் நடந்தன!
மேற்படி கோவில்களுக்கு, பக்தர்களால் கொடை யாக வழங்கப்பட்ட ஆடு, பசு போன்ற கால் நடைகள்

Page 18
30 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
கச்சத்தீவில்தான் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. இறை வழிபாட்டுக்கும், அரசர் பருகுதற்கும் கச்சத்தீவி லிருந்தே ஆவின்பால் தருவிக்கப்பட்டது.
இராமேசுவரம் கோவில் திருப்பணிக்குத் தமிழ் ஈழம் சார்ந்த யாழ் மன்னர் பொன்னும், பொருளும் வழங்கி யுள்ளனர். சேது மன்னரும் தமிழ் ஈழம், நல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு நிதி வழங்கியுள்ளார். கோவில் பூசாரிகளையும் அனுப்பியுள்ளார்.
சேது மன்னர்களின் செப்பேடுகள் இச்செய்திகளைக் கூறுகின்றன. இ ராமநாதபுரம்-கச்சத்தீவு-தமிழ் ஈழம், ஆகிய நிலப்பகுதிகள் தமிழ் இன உணர்வுடன் இணைந் திருந்தமைக்கு இவைகள் சான்றாகும்.
இவ்வாறு, அரசியல், வீரம், தமிழ் வளர்ச்சி, கலைப் புரட்சி,ஈகை, இறை நெறி எனப்பல துறைகளிலும் சேது மன்னர்கள் சிறந்து விளங்கினர். செந்தமிழ் ஆட்சியைச் சிறப்புடன் நடத்தினர்.
கச்சத்தீவில் வெள்ளைக் கமுகுகள்
அய்ரோப்பிய வணிகர்கள் கால் ஊன்ற நிலம் தேடி அலைந்தனர். அவர்களின் கருடப் பார்வையில் மறவர் சீமை தென்பட்டது! மாளாத்துன்பம் உடன் தொட்டது கச்சத்தீவின் மீது இ ச்  ைச கொண்டனர் போர்த்துக்கேசியர்.
1544 இல் போர்த்துக்கேசிய மேல் ஆளுநர் (வைசிராய்) டோங்கான்ஸ்டைன் டி பிரகாசா, கச்சத்தீவில் படைகளைக் குவித்தான். மறவர் நாட்டின் மீதும், யாழ்க்குடா நாட்டின் மீதும் தாக்குதலைத் தொடுத்தான்,

வரலாற்றில் கச்சத்தீவு 3f.
சேது மன்னர், யாழ்க்குடா மன்னர் ஆகிய இரு மன்னர் களின் தமிழ்ப்படை முன் தாக்குப்பிடிக்க முடியாமல் போர்த்துக்கேசியப் படைகள் ஓடின. டச்சுக்காரர் களும் கச்சத்தீவை நாடினர், தோற்று ஓடினர்.
தஞ்சையைக் கைப்பற்றிய மராட்டிய மன்னன் படையும், ஆர்க்காட்டைக் கைப்பற்றிய நவாபுப் படை யும் இணைந்தன. மறவர் சீமையில் பாய்ந்தன. மறவர் மண்ணை விழுங்கக் காத்திருந்த பரங்கியர் படையும் சேர்ந்தன. மறவர் மண் செந்நீரால் சிவந்தது!
வானம் பார்த்த பூமியில்-தமிழ் மானம் காத்த மறவர்!
தென் தமிழ் நாட்டின் அடிமைச் சங்கிலியை அறுத் தெரியத் துடித்தெழுந்த வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கம், நெற்கட்டுச் சேவல் பூலித்தேவன் முத்துவடுக நாதர், வீரமங்கை வேலு நாச்சியார், முத்துராமலிங்கச் சேது மன்னர், வீரபாண்டியக் கட்டபொம்மன், சீமைத்துரை முன் சீறிப் பாய்ந்த மருது பாண்டியர், வாட்போரில் வல்ல வாளுக்குவேலி,தளபதி ஒண்டிவீரன் பகடை, ஒடிக் குத்துவான் பகடை சின்னான் பகடை, பெரியான் பகடை, சின்னச் சொக்கான், பெரிய சொக்கான், சிவத்தச் சொக் கான் கருத்தச் சொக் கான், சின்னக் காலாடி, பெரிய காலாடி நாஞ்சில் தளவாய் வேலுத்தம்பி இவர்களெல்லாம் கள்ளர், மறவர், அகமுடையர் என்ற பல்வேறு தொழில் வகுப்பினைச் சார்ந்தோர்கள், "நாம் தமிழர்" என்ற உணர்வில் பொங்கி எழுந்தோர்கள் தாயகம் காத்திடத் தங்களையே ஈந்தோர்கள்
வாளுக்கு வாள்! நேருக்கு நேர்! என இப்போரில் சேதுப்படையை வெல்ல இயலாது என்பதை ஆங்கிலே

Page 19
32 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
யர் அறிந்தனர். பேச்சு வார்த்தையைத் தொடங்கினர். சமாதான நாடகம் நடித்தனர்.
இதற்கிடையில் 'குலை குலையா முந்திரிக்கா! நரியே! நரியே! ஓடி வா" என, இனத் துரோகிகளுக்கு வெள்ளையன் அழைப்புக் கொடுத்தான். சோற்றுக்கும் உப்புக்கும் சோரம் போவோர் வெள்ளையர் பக்கம் சாய்ந்தனர். சேது மன்னர் முத்துராமலிங்க விசய ரகுநாதரைத் திருட்டுப் பரங்கியர் திடீரெனத் தாக்கினர். சிறைப்படுத்தினர். 8-5-1795 இல் மறவர் மண்ணில், சேது மன்னர் ஆட்சியை முடக்கினர். பிரித்தானிய கிழக் கிந்தியக் குழும ஆட்சியை விளைத்தனர். (சான்று: 1891 இல் இராசா ராம் ராவ் என்பவரால் எழுதப்பட்ட *ராம் நாடு சமஸ்தானம்" எனும் நூல், பக்கம் 269.
படிப்படியாகத் தமிழ் மண்ணில் வெள்ளையரின் வல்லாண்மை கால் ஊன்றியது. தமிழர் ஆட்சியின் வேர் அறுந்தது. 1803 இல் குறுநிலமன்னர் (ஜமீன்தார்) முறை இராமநாத புரத்தில் கொலு ஏறியது.
இராணி மங்களேசுவரி நாச்சியார் 1803 இல்-முதல் ஜமீன்தாரினியானார். அன்று முதல், சேது மன்னர்கள் பிரித்தானியக் கும்பெனி ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் ஆயினர். அன்றும், கச்சத்தீவு இராமநாதபுர மன்னர் ஆட்சிக்கே உட்பட்டிருந்தது. மன்னர் அலுவலகத்தில் தமிழர்களே பணிபுரிந்தனர். இதை உறுதிப்படுத்தவே "இஸ் திமிரார் சன்னத்' அளிக்கப் பட்டது. அது ஜமீன்தாரர்களின் நில உரிமைப் பட்டய மாகும். 1822 இல் இராமநாதபுர மன்னர்களிடமிருந்து கச்சத்தீவை அனுபவிக்கும் உரிமையைக் கும்பெனியார் குத்தகையாகப் பெற்றனர். குத்தகைத் தொகையினை சேது மன்னரின் கருவூலத்தில் செலுத்தினர்.

வரலாற்றில் கச்சத்தீவு 33
ஆங்கிலேயர் ஆட்சியில் கச்சத்தீவு
கச்சத்தீவு உள்ளிட்ட சேது நாடு, 1858 இல் கும்பெனியாரிடமிருந்து பிரித்தானிய மன்னரின் நேரடி ஆட்சிக்கு மாறியது. இங்கிலாந்துப் பேரரசி விக்டோரி யாவின் அரசு ஆணை எண். 11:57, நாள் 3.1-1885-இன்
படி, கச்சத்தீவின் உரிமை இராமநாதபுர மன்னர்கட்கே வழங்கப்பட்டுள்ளது.
பி. பி. பியரிஸ் சொன்னது :
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப் பில் (Proclamation)இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் கச்சத்தீவைக் குறிக்காமலும், இராம நாதபுர அரசரைப் பற்றியனவற்றில், கச்சத்தீவு அவருக் குரியதொன்று என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் (Secretary of the Cabinet of Ceylon) பி.பி. பியரிஸ் (P.B. Pieris) அவர்களே உறுதிப்படுத்தி யுள்ளார்.
remember coming across this problem when was an Assistant Legal Draftsmen. I had to deal with a file for the purpose of verifying some of the boundaries of the Northern District. in the process of revising the Draft Proclamation, I had to trace the history of the boundary back over many years. I remember coming across a proclamation issued probaby in the time of Oueen Victoria, in which the Island of #' is
excluded from the Northern Dន្លែtric_glé o the Raja of Ramnad,

Page 20
34 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
மேற்கண்ட பியரிஸ் அவர்களின் சொற்களே கச்சத் தீவு தமிழகத்தின் சொத்து என்பதற்குப் போதுமான சான்றாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியில், கச்சத்தீவு வெள்ளையர்க்கு இச்சைத்தீவு அய்ரோப்பிய கப்பல் அங்கு வரும் ஆங்கிலப் படையினர் இறங்குவர் அந்நியக் காமிகளை இறக்குவர்! பருவக் கிளிகளை அணைப்பர் பசித்த பூனைகளாய்ச் சுவைப்பர்! இத்தீவில் ஓய்வு பெறும் ஆங்கிலப்படை வீரர்களுக்குத் திங்கள் ஒளி அளிக்கும்! தென்றல் குளிர் அளிக்கும் இளமை விருந்தளிக்கும்!
1939 இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஆங்கிலேயப் படையினர், கச்சத்தீவில் போர்ப் பயிற்சி பெற்றனர். போர்முனை சென்றனர்; வென்றனர்.
இங்கே சிதைந்த நிலையில் காணப்படும் போர்ப் பயிற்சித் தளம் இதற்குச் சான்று. ஆங்கிலேயரின் கடற் படை கச்சத்தீவில் தங்கியபோது கடல் மண்டலத்தைக் கண்காணிக்க, கண்காணிப்புக் கோபுரம் (Watch Tower) கட்டினர். கப்பல்களுக்குக் குறிகாட்ட "ஒளிவிடும்? (Light House) எழுப்பினர். இதற்குச் சான்று இத்தீவில் 22 அடி உயரத்தில் இன்றும் நிற்கும் முறிந்த கம்பம்.
வரைபடங்களில் கச்சத்தீவு
இனி நாம் கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்பது பற்றிய பழங்கால வரலாற்று ஆதாரங்கள் சிலவற்றை

வரலாற்றில் கச்சத்தீவு 35
இங்கே காணலாம். உலகத்தை வரைபடமாக (MAP) வரைந்த முதல் நிபுணர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த தாலமி என்பவர். 1890 ஆண்டுக்கு முன்பாக (கி.பி. 140-ம் வருடத்தில் அவர் உலகப்படம் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் நேரில் போய்ப் படம் வரைந் திருக்கிறார். அவர் வரைந்த இலங்கை வரை படத்தில் கச்சத்தீவு இடம்பெறவில்லை. }
நவீன காலத்தில் மிகவும் முன்னேற்றமான தேசப் படங்கள் வரைந்தனர். அவைகளே சரியான ஆதாரங்க ளாக கருதப்படுகின்றன. இவற்றில் காலத்தால் மிகவும் முந்தியது ராபர்ட் நாக்ஸ் (ROBERT KNOX) என்பவர் வரைந்த படம். கி. பி. 1660-ஆம் ஆண்டு கண்டி சிங்கள அரசனால் சிறை பிடிக்கப்பட்ட ஆங்கிலேயர் இவர். 19 ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர் தப்பி யோடி விட்டார். அவர் வரைந்த தேசப்படத்தில் கச்சத் தீவு பற்றிய குறிப்பு இல்லை. அப்போது ஹாலந்து நாட்டுக்காரர்கள் இலங்கையில் நாடு பிடிக்கத்தொடங்கி யிருந்தனர். குறிப்பாக, யாழ்ப்பாணம் பகுதிகளை 1619 முதல் பிடிக்கத் தொடங்கியிருந்த போர்ச்சுக் கேசியர் களை விரட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்த விரட்டும் வேலையை 1638-ல் வெற்றிகரமாக முடித் தனர். எனவே ராபர்ட் நாக்சின் படம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அடுத்து, மிகவும் முக்கியமான தேசப்படம் என்று கருதப்படுவது இதே ஹாலந்து ஆட்சிக்காலத்தின் கடைகோடிப் பகுதியில் வரையப்பட்ட படமாகும். இதை வரைந்தவர் சே. கு. பெரான் என்பவர். இது வரையப்பட்ட ஆண்டு 1790, இதில் யாழ்ப்பாணத்துக் கும்இந்தியாவுக்கும் இடையே இலங்கைக்கடற்கரையை ஒட்டியதாக மொத்தம் 5 தீவுகள் குறிப்பிடப்படு கின்றன. அவற்றில் கச்சத்தீவு இடம் பெறவில்லை,

Page 21
36 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அடுத்தது, பிரித்தானியர் இலங்கையைப் பிடிக்கத் தொடங்கிய பின்னர் வரையப்பட்ட தேசப்படம் ஆகும். இதை வரைந்தவர் பெயர் ஆரோஸ்மித் (ARROW SMITH). அதுவரை ஹாலந்து காரர்களின் பிடியில் இருந்த இலங்கையின் கடற்கரைப் பகுதிகள் முதலில் பிரித் தானியர் கைக்குள் சிக்கின. இது நடந்தது 1796 ஆம் ஆண்டு. இதிலே ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் அடங்கியிருக்கிறது. 1619-ஆம் ஆண்டு தமிழீழ ஆட்சி யின் பிடியிலிருந்து ஈழப்பகுதிகள் போர்த்துக் கேசியர் களிடம் கை மாறியது. 1658-இல் இது ஹாலந்துக்காரர் களிடம் மாறியது. பிறகு 1796-இல் இது ஆங்கிலேயரிடம் மாறியது. அப்போது பிரித்தானிய இந்திய நிர்வாகம் இங்கிலாந்து நாட்டு மன்னர்களிடம் நேரடியாக இருக்க வில்லை. மாறாக கிழக்கு இந்தியக் கம்பெனியிடம் இருந் தது. தென்னிந்தியா முழுவதும் சென்னையிலுள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தே நிர்வாகம் செய்யப் பட்டது. இலங்கையில் ஆங்கிலேயர் பிடித்த பகுதிகளும் அப்படியே சென்னையிலிருந்தே நிர்வகிக்கப்பட்டன. அந்த நிலையில் வரையப்பட்ட படம்தான் ஆரோ ஸ்மித்தின் படம். அதில் டெல்த் என்னும் தீவுதான் யாழ்ப்பாணக் கடற்பகுதியின் இறுதித் தீவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
1959-ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் எமர்சன் டென்னென்ட் என்பவர் இலங்கையின் வரை படத்தை 69 fourts Gausful G6ir 6TIT it. (An Account of the Island, Physical Historical and Topographical with note of its Natural History Antiquities and Productions" Vo 1. 1) இலங்கை வடக்கு அட்ச ரேகை 5955 -9951" ஆகியவற்றின் இடையிலும் கிழக்குத் தீர்க்கரேகை 799 41 4" -81° 54' 50" ஆகியவற்றின் இடையிலும் உள்ளது என்று திட்டவட்டமாக கூறுகிறார். கச்சத்தீவு கிழக்குத் தீர்க்கரேகை 79° 35"க்

வரலாற்றில் கச்சத்தீவு 37
குள்ளேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலங்கை எல்லைக்குள் கச்சத்தீவு வருவதில்லை.
இதற்கு அடுத்தபடியாக, கோல்புரூக் அறிக்கை யுடன் இணைக்கப்பட்டிருக்கும் இலங்கை தேசப் படமே வரலாற்றில் முன் நிற்பதாகும். இந்த நிலப் படத்திலும் டெல்த் தீவுவரை இலங்கையின் கடற்பகுதி யெனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் கச்சத்தீவு. இல்லை.
17-ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆய்வாளர் பர்னெப்ஃப் (Burnout) இலங்கைத்தீவு நிலப்படம் வரைந்தார். அந்த வரை படத்தை 1857இல் வெளி யிட்டார். அதில் கச்சத்தீவு இல்லை. 16-02-1876-இல் நெதர்லாந்துக்காரர்களுக்கும், கண்டி அரசர்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இல்லை.
அரேபிய அய்ரோப்பியப் பயணிகள் இலங்கை யைச் சுற்றினர். குறிப்புகள் வரைந்தனர். அதில் சின்னஞ்சிறு பாறைப்பகுதிகளும் உள்ளன. ஆனால், கச்சத்தீவை அதில் காட்டவில்லை. "ஹெல்த்" எனும் நெடும் தீவையே இலங்கையின் எல்லையாகக் காட்டினர்.
1-1-1803இல் வெளியிட்ட ஆரோசுமித்தின் அதிகார பூர்வமான இலங்கைப் படத்திலோ, 1954, 1956ஆம் ஆண்டு நில அளவைத் துறைத் தலைவர் (Surveyor Genaral) வெளியிட்ட இலங்கைப் படங்களிலோ, எதிலும் கச்சத்தீவு இலங்கைக்குரியதாகக் காட்டப் படவில்லை. ஆர். எல். புரோகிர் என்பார், இலங்கைத் தேசப்படங்களை ஆய்வு செய்து 'Maps and Surveys of Ceylon" என்னும் நூலை 1802-இல் இங்கிலாந்தில் வெளியிட்டார். அதிலும் கச்சத்தீவு சிங்களர் பகுதியாக இடம் பெறவில்லை.

Page 22
38 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்'
டச்சுக்காரர்களின் உரிமையாக இருந்த இலங்கைக் கடற்கரைப் பகுதிகள், தீவுகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றும் ஒப்பந்தங்கள் எதிலும் கச்சத்தீவைப் பற்றிய குறிப்பே இல்லை.
டர்னொர் என்பவர் மேற்கண்ட நிலப்படங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். அவர், கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே உரியதெனக் காட்டினார்.
இந்திய அரசின் உச்ச நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) நிரேன்டே அவர்கள், 'அன்றும் சரி; இன்றும் சரி; கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியே என உறுதிபடுத்தியுள்ளார்.
இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலை மன்னாருக்கு 5 கி.மீ. மேற்கு வரை நடைபெற்ற வழக்குகளில் தன் ஆளுமையைச் செலுத்தியுள்ளார், தீர்ப்புகளும் கூறியுள்ளார். கச்சத் தீவும் அதன் கடற் பகுதியும் இந்திய நீதித்துறையின் எல்லைக்குட்பட்டே இருந்துள்ளது.
குள்ளக்காரன் பெட்டி-தமிழகத்திட்டு
தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலை மன்னா ருக்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் ஆழம் மிகக் குறைவு. இவற்றின் இடையில் சுமார் 24 திட்டுகள் உள்ளன. அவற்றைப் பெட்டி அல்லது திட்டு என்று கூறுவர். தலைமன்னாருக்கு மேற்கிலிருந்து 5. கி.மீ. தொலைவில் உள்ள குள்ளக் காரன் பெட்டி வரை தமிழ் நாட்டைச் சேர்ந்திருந்தது. இதை ஆதாம்பாலம் அல்லது சேது அணை என்பர்.
தலை மன்னாரிலிருந்து மேற்கே உள்ள பெட்டி களில் இலங்கையின் மேற்கு எல்லையாகக் கூறும்

வரலாற்றில் கச்சத்தீவு 39
799 41-4' கிழக்கு நெடுங்கோடு ஏறக்குறைய 8 ஆம் பெட்டி வரை அமைந்துள்ளது. அப்பெட்டியிலிருந்து நேர் வடக்காகப் பார்த்தால் அவ்வெல்லை கச்சத் தீவுக்குக் கிழக்கே சுமார் 5 கல் தொலைவிலுள்ளது. எனவே, இலங்கையின் மேற்கு எல்லையாகக் கூறும் பகுதிக்குள் கச்சத்தீவு உட்படவில்லை.
ட ச் சு க் கா ர ர் களு ம், போர்த்துக்கேசியரும் இலங்கைத் தீவை வளைத்தபோது கூட, கச்சத்தீவில் அவர்கள் கால் வைக்கவில்லை.
1685 இல் போர்த்துக்கேசியர் யாழ்ப்பாணத்தை வென்ற போதும் கச்சத்தீவை அவர்கள் நாடவில்லை. 1650-1800 ஆண்டுகளில் இலங்கைத் தீவில் ஹாலந்துக்காரர்களின் (Hollanders) ஆட்சி நடந்தது. அப்போதும், கச்சத்தீவு சேது மன்னர்களிடமே இருந்தது.
19.02.1922 இல் இராமநாதபுரத்தின் அமைச்சராக (திவானாக) இருந்த திரு. ஆர். சுப்பையா நாயுடு என்பவர், ஆர். இராஜேசுவர சேதுபதிக்குத் தம் கடல் எல்லைகளைப் பற்றித் தந்த குறிப்பில் கச்சத்தீவு உள்ளது.
1921 இல் கொழும்பு மாநாடு:
(Colombo Conference)
27-10-1921 இல் கச்சத்தீவு பற்றி, தருக்கம் செய்ய ஆங்கிலேய அரசு ஏற்பாடு செய்தது. சென்னையில் பணியாற்றிய ஆங்கிலேய அலுவலர்களும், கொழும்பில் பணியாற்றிய ஆங்கிலேய அலுவலர்களும் கொழும்பில் கூடினர். சென்னையைச் சார்ந்தோர், கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை

Page 23
40, உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அடுக்கினர். சிங்களச் சார்புடைய ஆங்கிலேயர்களோ மழுப்பினர்.
1874ஆம் ஆண்டு, கர்னல் வாக்கர், அவருடைய உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு ஆகியோர் இத்தியாவின் அளவைத்துறைக்காகக் கச்சத்தீவை அளந்தனர். இது பற்றி அவர்கள் நாட்குறிப்பில் விளக்கமாக வரைந்தனர்.
அப்போது, அந்தோணியார் கோயிலுக்கு முன்புறம் இந்திய அரசின் அளவைத் துறையினர் நட்டதுாண், இன்றும் உள்ளது. அதில் அளவை எண் 1250 என்று குறிக்கப்பட்டு உள்ளது.
1895, 1930-ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு, மீண்டும் அளவை செய்யப்பட்டது. இந்திய அரசு வரைபட ஆவணங்களில் அது குறிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1952, 1956-ஆம் ஆண்டுகளில் வெளி யிடப்பட்ட வரைபடங்கள் அனைத்திலும் கச்சத்தீவை இராமேசுவரத்தின் ஒரு பகுதியாகவே காட்டப் பட்டுள்ளது.
1874 முதல் 1956-ஆம் ஆண்டுவரை கச்சத்தீவு
இந்தியாவின் பகுதிதான் என்பதை மெய்ப்பிக்கும் புள்ளி விவரங்கள் இந்திய அரசின் அளவைத் துறையினரிடம் உள்ளன.
சிங்கள மீனவர்கள் மீது இராமநாதபுரம் துணை ஆட்சியர் நீதிமன்றத்தில், ஒரு வழக்குத் தொடரப் பட்டது. சிங்களவர்களுக்கு தண்டமும் விதிக்கப் பட்டது. இதில் இருந்து இந்திய வழக்குமன்றத்தின் அதிகாரம், மன்னாருக்கு மேற்கே 5 கல் வரை உறுதி செய்யப்பட்டது

வரலாற்றில் கச்சத்தீவு 41
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
கீழக் கரை வாசுதேவன் செட்டியார் என்பவர்.
கச்சத் தீவுக்குச் சில பொருட்களைக் கொண்டு சென்
றார். இந்திய அரசின் சுங்கத் துறையினர் அவரைத் தடுத்தனர். வழக்கு உச்சநீதி மன்றம் வரை சென்றது.
**கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே; அங்குச் சென்று வாணிபம் செய்ய ஒவ்வொரு இந்தியர்க்கும் உரிமை உண்டு. "இந்தியர் யார் வேண்டுமானாலும் கச்சத்தீவுக்குப் போகலாம்," எனும் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் தந்தது.
அன்று மீனவத் தமிழர்கள்:
முச்சங்கம் தானமைத்தே முத்துக் கடல் தான் பெற்றே பாண்டிமண் கொடிதனிலே மீன் சின்னம் தான் பொறித்தே பார் ஆண்ட பாண்டியரும் பரதவர் எனும் மீனவரே! தமிழின மீனவர் குமரிப் பெருங்கடலில் நெடும் பயணம் செய்வர்.
1. இராக் காலப் பயணம் ஊ நிலாப்பரவர். 2. பகற் கால பயணம் கதரியப் பரவர்.
தமிழின மீனவர் கூர்மையான அறிவுடையோர் நேர்மையான குணமுடையோர் இவர்களே சிறு சிறு கண்களையுடைய வலைகளைப் பின்னுவர், கடல் மீன் களையெல்லாம் பிடித்திட எண்ணுவர்.
உலகளாவிய மீனவர்களிடையே இ வ ர் க ள் திண்ணியர். கடலில் இறங்கும் மீனவர், வலை நிரம்பினா லொழிய கரையேற மாட்டார்.
வ-3

Page 24
42 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
பங்குனிமுதல் வைகாசித் திங்கள் வரை, கச்சத்தீவுக் கடலில் மீன் பிடிக்கும் தொழில் உச்சக் கட்டமாக நடக்கும். மீன் விற்பனை சிறக்கும்.
தமிழக மீனவர்கள், யாழ்ப்பாணம் வரை செல்வர். தமிழ் ஈழ மீனவர்கள் இராமேசுவரம் வரை வருவர். இரு நாட்டு மீனவத் தமிழர்களும் சேதுக் கடலில் சேருவர் கச்சத்தீவில் கூடுவர். உறவுகள் கலக்கும் பண்ட மாற்றல் நடக்கும்.
மீனவர் ஒரு சாதியினர் அல்ல. கடலின் உழ வர்கள். மீன் பிடிக்கும் தொழிலாளர்கள், தமிழகத்தி லும், தமிழ் ஈழத்திலும் 35 லட்சம் மீனவத் தமிழர்கள் உள்ளனர்.
கடலே இவர்களது இல்லம்
கடல் மீன்களே இவர்களது செல்வம்!
மீனவத் தமிழர்களால் கிடைக்கப் பெற்ற இரத்தினங் களும், மாணிக்கங்களும், முத்துக்களும் சேது மன்னர் மாளிகையை அலங்கரித்தன. மீனவர்களின் வாழ்வை மகிழ்வித்தன. ܗܝ
தமிழக மீனவர்களும், தமிழ் ஈழ மீனவர்களும் ஆழ் கடலில் புகுவர்! வலைகளை விரிப்பர் மீன்களைப் பிடிப்பர்! கச்சத்தீவில் அவற்றினைக் குவிப்பர்! காத்திருக்கும் வெளிநாட்டவர் மீன்களை வாங்குவர்! மகிழ்வுடன் திரும்புவர்!
விற்றது போக எஞ்சிய மீன்களைக் கச்சத்தீவுத் திடலில் உப்பிட்டு உலர்த்துவர். காய்ந்த மீனைக் கருவர்டுஎன்பர். வறுத்து உண்பர். கச்சத்தீவுக் கருவாடு தனை இடித்து அதனுடன் மிளகு, பூண்டு சேர்த்துச் சாறு வைத்துச் சாப்பிட்டால் கடுமையான காய்ச்சலும் உடன் குணமாகும் என்பர்.

வரலாற்றில் கச்சத்தீவு 43
போர்த்துக்கேசியர் இந்தக் கருவாடு மீனை அதிக விலை கொடுத்து வாங்குவர். கச்சத்தீவில் கருவாடு ஏற்றுமதி உச்சநிலை அடைந்தது. சேதுமன்னர்க் கருவூ லம் நிறைந்தது.
இதற்குச் சான்று:
"கொழுமீன் குறைஇய
துடிக்கண் துணியல்"
--மதுரைக் காஞ்சி: 320
இராமேசுவரம் தீவில் அக்கா மடம், தங்கச்சி மடம் இவற்றிலுள்ள மீனவர்கள் கச்சத்தீவுக்கு வருவர். கருவாடு காய வைப்பர். விற்பனைக்கு எடுத்துச் செல்வர். கச்சத்தீவுக் கருவாடு மெச்சத்தகு சுவை தரும்.
மீனவத் தமிழர்களின் படகோ, வலையோ c தானால், அவைகளைப் பழுது பார்க்க கச்சத்தீவில் இறங்குவர். பழுது பார்க்கும் பணியினை முடிப்பர். தமிழ்நாட்டின் மீனவர்கள் கச்சத்தீவில் தங்கும் நாட் களில் மீன்களைப் பிடிப்பர்! வறுப்பர் சுவைப்பர் வலைகளை உலர்த்துவர்! களைப்பாறுவர் மீண்டும் பயணம் தொடருவர்.
இவர்கள் அக வாழ்விலும் களிப்பர்.
நெய்தல் நிலத்தில் அன்றொரு காட்சி
தென்கடல் கொண்டான் தேரினில் வந்தான் தேன்மதுக் கண்ணான் தேவியைக் கண்டான்! தாமரைக் கண்ணான் தனதுளம் தந்தான்!

Page 25
44 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
பூந்தளிர்ப் பெண்ணாள் பூமடை வந்தாள்! காமுறு கண்ணாள் கணிஉடல் தந்தாள்!
ஆதவன் மறைந்தான் அழைத்தனள் தோழி காரை திரும்பும் நாழிகை உணர்த்தி
நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி, நின்குறி வந்தனென், இயல்தேர்க் கொண்க செல்கம்; செலவியங் கொண்மோ அல்கலும், ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும், என் மகள் நுதலே."
-குறுந்தொகை பொன்னாகனார்.
அந்தோணியார் கோவில்:
1939-ஆம் ஆண்டில், இராமநாதபுர மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகேயுள்ள நம்பு தாழையைச் சார்ந்த மீனவர், சீனிக்குப்பன் என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து இராமேசுவரம் ஒலைக்குடா மீனவக் கிராமத்தைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை எனும் மீனவர் அக்கோவிலுக்கு ஓடுகள் வேய்ந்தார் (2:1:1951). புனித அந்தோணியார், ஏசுவின் சீடர்களில் ஒருவர்.
இவரே, கச்சத்தீவின் காப்புக் கடவுள்; பரவர் குல பாதுகாவலர் எனக் கொண்டனர், வணங்கி வந்தனர். 1972 இல் இந்திய அரசு வெளியிட்ட அரசிதழ் ஆணை யின்படி, இராமநாதபுரம் அருகிலுள்ள தங்கச்சி மடத்தி

வரலாற்றில் கச்சத்தீவு 45
லுள்ள ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் பொடேல் (பிரஞ்சுக் காரர்) அந்தோணியார் திருவிழாக் காலங் களில் கச்சத்தீவுக்குச் செல்வார். வழிபாடு நடத்துவார் அன்று கச்சத்தீவில் அந்தோணியார் விழாவும், பண்ட மாற்று வணிகமும் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்தது. கோவில் கண்காணிப்பு யாழ்ப்பாணக் கிறித்தவத் திருச்சபையிடமே இருந்தது.
கச்சத்தீவில் விழா! தமிழர்களின் உலா!
ஒவ்வோர் ஆண்டும் மாசித் திங்களில் (மார்ச்சுத் திங்கள்) நான்கு நாட்கள் புனித அந்தோணியார் கோவில் விழா கச்சத்தீவில் நடக்கும், தீவு சிறக்கும்
வழிபாட்டுக்காக வரும் புனிதப் பயணியர் கூட்டம் பண்டமாற்றிட வரும் வணிகர்கள் கூட்டம்; உறவுக்குக் கை கொடுக்க வரும் தமிழ் இளைஞர்கள் கூட்டம் இப்படி விழா நாளில் வருவோரால் கச்சத்தீவு கல கலக்கும் சுற்றுக்கடல் சலசலக்கும்!
தமிழ் ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு வரவும், தமிழ் நாட்டுத் தமிழர்கள் தமிழ் ஈழம் செல்லவும், தடை விதிக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில், இரு நிலத் தமிழர்களும் கூடி மகிழ்ந்த தலம். கச்சத்தீவு எனும் களம்.
கனித் தமிழர்கள் கச்சத்தீவில் கூடுவர். தங்கள் மனச் சுமையை இறக்குவர்.
தமிழ் ஈழத் தமிழர்கள், கண்ணிர் வடிப்பர், அக் கண்ணிரை தமிழ் நாட்டுத் தமிழர்கள் துடைப்பர். நெஞ்சம் நெகிழும், உள்ளம் உருகும்.
பிரிந்து இருந்த செர்மானியர்கள் பெர்லின் சுவர் அருகே சிறப்பு நாட்களில் சந்திப்பார்களாம். பிரிவுத்

Page 26
46 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
துயரத்தைப் போக்கிக் கொள்வார்களாம். இச்செய்தி களைக் கல்விக் கூடங்களில் படித்தோம் கச்சத்தீவில் அதைப் பார்த்தோம்! தமிழனும், தமிழச்சியும் சூழலை மறந்து தழுவுவர்! ஒருவரையொருவர் புகழுவர்! உறவுகள் நாடும் உள்ளங்கள் கூடும்!
"கண்டியில் ஒரு பேரிளம் பெண் ஆத்தாள்
கற்பை அவள் அற்புதமாய்க் காத்தாள்! கச்சத்தீவில் என்னை அவள் பார்த்தாள்! காதல்வலை வீசி என்னை ஈர்த்தாள்!"
'பூவைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா?”
எனப் பருவக் காளைகள் பாடுவர் பருவச் சிட்டுகள் ஆடுவர்! பின் கூடுவர்!
அன்று பாலாவிப் பாவைக்கும் இளையாங்குடி இளைஞனுக்கும், கிளிநொச்சிக் காளைக்கும் தேவிப் பட்டனம் தேவிக்கும் திருமணங்கள் கச்சத்தீவில் நிச்சயமாகும் பிரிந்தோர் சேர்தல், இலட்சியமாகும்! கூடிப் பிரியும் புலவர்களாய் இங்கே தமிழர்கள் கூடுவர், மகிழ்வர், பின்னர் பிரிவர்
பண்ட மாற்றுச் சந்தை விழா
விழா நாட்களில், கலப்படத் தமிழ் பேசும் தமிழ் நாட்டு வணிகர்களும் வருவர். தூய தமிழ் பேசும் தமிழ் ஈழ வணிகர்களும் வருவர். பண்டம் மாறும். பண்பு சேரும். தமிழ் ஈழத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் சோப்பு வகை, தங்கம், வெள்ளி, கிராம்பு, ஏலக்காய், பாக்கு, கல்சங்கிலி, மணிமாலை முதலிய பண்டங் களைக் கொணர்வர். கமிழ் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் சேலை, காஷ்மீர் சால்வை, வேட்டி, புல்லால் செய்யப் பட்ட பாய்கள், நெகிழி வாளிகள், (பிளாஸ்டிக்)

வரலாற்றில் கச்சத்தீவு 47
மின்சாரக் கருவிகள், கைக் கெடிகாரங்கள், தூவல்கள் (பேனா) வானொலிப் பெட்டிகள், திரைப்பட ஒலி நாடாக்கள் ஆகிய பொருட்களைக் கொணர்வர்.
கச்சத்தீவுக்குப் பைநிறையப் பொருள் கொண்டு வருவோர் பண்டமாற்று மூலம் பைநிறையப் பொருள் கொண்டு செல்வர். இத்தீவில் காசுக்கு மதிப்பில்லை. பொருளுக்கே மதிப்பு. இங்கு கூடுவோர் இதயத்தில் பாசம் மலரும் பண்பு மிளிரும்!
சுதந்தர இந்தியாவில் கச்சத்தீவு
1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 இல், இந்தியத் துணைக்கண்டம் விடுதலை அடைந்தது. விடுதலைக்குப் பின்னும் கச்சத்தீவு சேது மன்னர்களிடமே இருந்தது.
இந்திய அரசு, 1949 இல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொணர்ந்தது. தமிழ்நாடு அரசாணை எண். 2093, நாள் 11-8-1949, கால்நடைத் துறை மூலம் கச்சத்தீவை அரசு புறம்போக்காக மாற்றியது. அரசு ஆணையின் படி, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுர வட்டம், இராமேசுவரம் இராமப்புல எண். 1250 இல் 285 ஏக்கர் 20 சென்ட் புறம்போக்கு நிலமாகக் கச்சத்தீவை அறிவித்தது.
சென்னை, நிலத்தீர்வை உதவி அலுவலர்(Assistant Settlement Officer) fcit. 6 Tah). J. 656 p.T 56ir அவர்களால் 11-11-1958 இல் வெளியிடப்பட்ட இராமேசுவர கிராமத்தின் நிலப்பதிவேடு (Settlement Register) எண். 68 இல் இந்த அரசு ஆணை பதிவாகியுள்ளது. அதன்படி கச்சத்தீவு இன்றைய தமிழ்நாட்டுடன் இணைந்தது.

Page 27
48 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
தினமணி இதழில் கட்டுரை
"கச்சத்தீவு நமக்கே சொந்தம் என்னும் ஆதாரங்கள்'
'கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தம் என்பதைவிட கச்சத்தீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். இதையும்விட பொருத்தமாக வும் இதைச் சொல்லலாம். அதுதான்-கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தம் என்பது
இது தீவு என்பதால் இதன் முக்கியத்துவம் மீன் பிடித் தொழிலில்தான் உள்ளது. இது தென் பாண்டி நாட்டுக் கடலில் இருப்பதால் மீன்பிடிப்பதற்குச் சமமாக சங்கு குளிக்கும் தொழிலும் அவ்வப்போது முத்துக் குளிக்கும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தன இப்பவும் கூட மீன் பிடித் தொழிலின் அடிப்படையில் தானே பெரிய வம்பே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
1802-ம் வருடம் வரையப்பட்ட ஒரே ஒரு தேசப் படத்தில் மட்டும் தான் கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்தது என்றுகாட்டுவதற்கான ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது அல்லவா! இது எந்தக் கால கட்டமோ அதே கால கட்டத்திலிருந்து கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மகாராஜாக்களுக்குச் சொந்த மானது என்பதற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. இவற்றில் சில வருமாறு :-
23-6-1880 அன்று கச்சத்தீவு இரண்டு பேருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இது சம்பந்தமான பத்திரம் பதிவு செய்யப்பட்ட தேதி 2-7-1880. இது ராமநாதபுரம் சப் - ரிஜிஸ்திரர் ஆபீசில் 510 எண்ணுள்ள பத்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவை குத்தகைக்கு

வரலாற்றில் கச்சத்தீவு 49
விட்டவர் ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா. குத்தகைக்கு எடுத்தவர்கள் முத்துசாமிப் பிள்ளை என்பவரும் அப்துல் காதர் மரைக்காயர் என்பவரும்.
இந்த ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது. இது தொடர்பான பத்திரம் இதே ராமநாதபுரம் சப்" ரிஜிஸ்திரார் ஆபீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4-12-1885 அன்று பதிவு நடந்திருக்கிறது. பத்திரத்தின்
எண் 134.
அடுத்து 1913-ம் வருடத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமே தென்னிந்தியாவில் உள்ள பல இடங்களில் சங்குக் குளிக்கவும், மீன் பிடிக்கவும்,முத்துக் குளிக்கவும் குத்தகைக்கு விட்டிருக்கிறது. அப்படி விடப்பட்ட பல இடங்களில் கச்சத்தீவும் ஒன்று. இந்தக் குத்தகை 15 வருடக் காலத்துக்குச் செல்லுபடி ஆகும். அடுத்து இதே குத்தகை 1936-ம் வருடத்தில் புதுப்பிக்கப்பட்டிருக் கிறது.
இதற்கிடையில் 1922-ம் வருடம் ராமநாதபுரம்
மகாராஜா தமது திவானிடம் தமது சமஸ்தானத்தின் கடல் எல்லைப்பற்றி உறுதியான விவரங்கள் கேட்டிருக் கிறார். இப்படிக் கேட்ட மகாராஜாவின் பெயர் ராஜேசுவர சேதுபதி திவானின் பெயர் சுப்பையா BITWIG. இவர் 19.2 1922 அன்று மகாராஜாவிடம் அறிக்கை கொடுக்க மகாராஜா 27-2-1922 அன்று அந்த அறிக்கையை ஏற்றுக் கையொப்பமிட்டிருக்கிறார்.
1943-ம் வருடம் தூத்துக் குடியிலுள்ள மீன் பிடித் துறையினர் ஒரு நிலப்படத்தை மீன்பிடியைப் பின்னணி யாகக்கொண்டு தயாரித்திருக்கிறார்கள். அதில் கச்சத்தீவு நம் தீவே என்று வரைந்து காட்டப்பட்டிருக்கிறது. வரைந்தவர் பெயர் கணேசன்,

Page 28
50 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அடுத்து 1947-ம் வருடம் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் இரண்டாண்டு காலத்துக்கு அதாவது 30-6-1949 வரை, கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு அதற்கான பத்திரமும் ராமநாதபுரம் சப் - ரிஜிஸ்திரார் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் எண் 278. தேதி 26-7-1947.
இவற்றுக்கெல்லாம் முந்திய தஸ்தாவேஜ 0 ஒன்றும் உள்ளது. இதற்கு முன்பு மேலே காட்டப்பட்டவை பிரிட்டிஷ் ஆட்சியாளர் 6) 5 T - i Lj 60 L uj தஸ்தாவேஜ"0கள். இதுவோ கிழக்கு இந்தியக் கம்பெனி தொடர்பான தாஸ்தாவேஜ0 ஆகும். கம்பெனிக்கும் ராமநாதபுர சேதுபதிக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தப்படி சேதுபதிக்குச் சொந்தமான 69 கடற்கரை ஊர்களில் வியாபாரம் செய்யவும் கடலின் உள்ளே உள்ள 8 தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் பிரிட்டிஷாருக்கு வசதி செய்து தரப்பட்டது. இந்த 8 தீவுகளில் ஒன்று கச்சத்தீவு ஆகும்.
இவை தவிர இந்திய அரசு கூட அவ்வப்போது ராமநாதபுரம் சேதுபதியிடம் கச்சத்தீவு உட்பட பல தீவுகள் பற்றிப் பல ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது.” -தினமணி-7-9-1991
சுதந்தர இந்தியாவில், கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம். இராமநாதபுரம் மாவட்ட ஆளுமைக்கு உட்பட்டது என்பதையும் மேற்படி தினமணிக் கட்டுரை விளக்குகிறது. ஆனால், சுதந்தர இந்தியாவில், சிங்களவன் சுதந்தரமாகக் கச்சத்தீவை மெல்ல மெல்ல விழுங்கினான்.
இமயத்தில் கொடி ஏற்றி-ஏறு நடைபோட்ட தமிழனோ.
"சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்"

வரலாற்றில் கச்சத்தீவு 5.
எனும் பாடலை, சுதந்தரமாகப் பாடிக் கொண்டே உறங்கினான்!
இனப் பெருமை, மொழி அருமை, படை வலிமை அனைத்தையும் மறந்தான். முக்கடலையும் துறந்தான். முந்நீர்ப் பழந் தீவுகளையும் இழந்தான். தமிழினப் பகைவரிடம் மண்டியிட்டுக் கிடந்தான். கச்சத்தீவோ இருளுக்குள் விழுந்த கரும் பொருள் ஆனது கை மாறியது!
இராமநாதபுர மாவட்டம் என்னும் நூலை எழுதிய "சோமலெ" தம் நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
ஒவ்வொரு திருவிழாவின் போதும் இலங்கை இராணுவமும், இலங்கைக் கடற்படைக் கண்காணிப்புக் குழுவினரும் கப்பலிலும், விசைப்படகுகளிலும் வருகிறார்கள். ஆனால் இந்திய இராணுவமும், தமிழகக் காவல் துறையினரும் அங்குப் போவதும் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதும் இல்லை.
ஆடுவாரில்லா அரங்கமாய்ச் தடுவாரில்லா மலர்க் கொத்தாய்க் கச்சத்தீவு கடலில் கிடந்தது. வந்தவர் ஆண்டனர்! ஆண்டவர் வீழ்ந்தனர் இயலான் தீவு அயலான் கையில்
கச்சத்தீவு தாரை வார்ப்பு
பண்டித நேருவின் பங்கு
பண்டித ஜவர்கலால் நேரு : இவர் இந்திய மண்ணில் பிறந்தவர் இங்கிலாந்தின் மூளையைக் கொண்டவர் கி.பி. 1927 இல், காந்தியடிகள் நேருவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதுபோல

Page 29
52 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
நேரு இலங்கையில் கால் வைத்தார். சிங்களவர் காதில் இனவெறியை ஊதி வைத்தார். சிங்களவர்களே! சுதந்தரம் கிடைக்கப் போகிறது. சிங்கள இனத்தை வலுப்படுத்துங்கள். இலங்கையைக் கைப்பற்றுங்கள். தவறினால், தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள். நாட்டைப் பிடித்துக் கொள்வார்கள்" எனச் சிங்கள வரைத் தூண்டி விட்டார்.
தேசாய் எனும் வட இந்தியர் இலங்கையில், "இலங்கை இந்தியச் சங்கம்", என ஒரு அமைப்பை நடத்தி வந்தார்.
இலங்கையில், த மிழ் நா ட்  ைட ச் சார்ந்த வள்ளியப்பச் செட் டியார் 'இந்தியச்சேவா சங்கம்", என ஒரு அமைப்பை நடத்தி வந்தார். மற்றும்,
சிங்களத் தலைவர்கள் சில அமைப்புகளை நடத்தி விந்தனர், அவர்களையெல்லாம் நேரு, பாசத்தோடு அழைத்தார். பக்குவமாய் இணைத்தார். 'இலங்கைஇந்தியக் காங்கிரசு" என அமைத்தார் அந்த அமைப் புக்குத் தமிழ் இனப்பகைவர் ஜெ. ஆர். செயவர்த்த னாவை செயலராக நியமித்தார்.
கற்றறிந்த தமிழர்களையும், தமிழ் இனத்திற்கு உரிமை கேட்போரையும் இந்த அமைப்பிலிருந்து வெளி யேற்றினர். இந்த இயக்கம், இந்தியத் தலைமை அமைச்சர் நேருவின் உதவியுடன் சிங்கன இனவெறியர் இயக்கமாக வளர்ந்து. ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P) என மலர்ந்தது. வெள்ளையரிடமிருந்து இலங்கைத் தீவை கவர்ந்தது!
முடிசூடா மன்னர் நேரு 15-8-1947-இல் கங்கையில் நீராடி இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராகப் (பிரதமராக) பதவியில் அமர்ந்தார். 27-5-1964-இல்

வரலாற்றில் கச்சத்தீவு 53 காலமானார். அதுவரை அவரே இந்தியாவின் தலைமை அமைச்சராகத் திகழ்ந்தார்,
1951 தன் திங்களில், இந்தியத் தலைமை அமைச்சர் நேருவும், சிங்களத் தலைமை அமைச்சர் டட்லி எஸ். சேனநாயக்காவும் லண்டனில் சந்தித்தனர். 6) is குலுக்கினர்: அப்போது, இலங்கையில் தமிழர்கள் குடி யுரிமை இழந்து தவித்தனர்.
இலங்கையில் வாழ்ந்த பாகிஸ்தானியர்களின் குடி யுரிமையை, சிங்கள அரசு பறித்திட முனைந்தபோது அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் "இலங்கை யில் உள்ள அனைத்துப் பாகிஸ்தானியர்களையும் ஏற்று கொள்ளத் தயார்', என மார்தட்டி முழங்கினார். நேரு பெருமகனாரோ, தமிழர்கள், தனது நாட்டினர் என்பதை மறந்தார். மெளனமாய் இருந்தார்.
1954-இல், நேரு-ஜான்கொத்தலாவல பேச்சு வார்த்தை தில்லியில் நடந்தது. சிங்களத் தலைமை அமைச்சருக்கு நேரு விருந்தளித்தார். தமிழ் இனத் திற்கோ நஞ்சளித்தார். பல்லாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை, கொத்தலாவல, இந்திய வழி வந்தோர் என்றார். அவர்களுக்கு இலங்கையின் குடி யுரிமையை மறுத்தார். அதற்கு நேருவும் தலை அசைத்தார்.
1955-இல் நேருவின் வலதுகையாக இருந்த பச்சைத் தமிழர் காமாாசர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர். அந்த ஆண்டில்தான் சிங்களப்படையினர் கச்சத் தீவில் இறங்கினர். "பயிற்சிக்காகவே வந்துள்ளோம்” எனப் புளுகினர், பச்சைத்தமிழர் கண் பார்க்க, கச்சத்திவை விழுங்கினர். நேருவின் மழுப்பல்:
கச்சத்தீவை, சிங்கள அரசு அடாவடித்தனமாகப் பிடித்துக் கொண்ட செய்தி நாடாளுமன்றத்தில்

Page 30
54 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
பரபரப்பை ஏற்படுத்தியது. "பண்டித நேரு”, கச்சத் தீவு எங்கே இருககிறது? என வினவினார். நேருபிரான் 1927-இல் இலங்கை இந்தியக் காங்கிரசு இயக்கத்தைத் தொடங்கி வைக்க பாம்பன் பாலம் வழியாகத்தான் தனஷ்கோடி வந்தார். அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குச் சென்றார். ஆனால் Lufth Lair பாலத்தைப் பார்த்தது இல்லை, கச்சத்தீவைக் கேட்ட தில்லை. கச்சத்தீவு குறிததுப் போதிய செய்திகள் இந்திய அரசிடம் இல்லை" எனப் பொய்ப் புகன்றார்.
1947ஆம் ஆண்டு முதல் இந்தியத் துணைக் கண்டத் தின் தலைமை அமைச்சராய் இருந்துவரும் நேருவின் கண்களுக்குக் கச்சச் தீவு காணாமற் போனது வியப்பே. கச்சத்தீவைப் பற்றிய செய்திகள் அரசிடம் இல்லை என்றார் நேரு
நேரு ஆணையிட்டிருந்தால் சென்னை, நிலத் தீர்வை உதவி அலுவலகர் (Settlement officer) இராமேசுவர கிராமத்தின் நிலப்பதிவேட்டினை (Šettlement register) நீட்டியிருப்பார். அதில் கச்சத் தீவு பதிவாகி இருப்பதைக் காட்டியிருப்பார்.
1956-இல், தில்லிமக்களவையில், பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த நம்பியார் கச் சித்தீவுச் சிக்கலை எழுப்பினார். நேரு எழுந்தார்.
கச்சத்தீவு பற்றிய குறிப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
மேலும் இந்தச் சிறுதீவு பற்றி இந்தியா போராடும் என்ற கேள்விக்கு இடமே இல்லை.
கச்சத்தீவு சிக்கலால் இந்தியாவின் தன்மானம் இழக்கப்படவில்லை.

வரலாற்றில் கச்சத்தீவு 55
சிங்கள நாடு நம் அண்டை நாடு, அந்த நாட்டோடு உறவோடு இருப்போம்" எனப் பண்டித நேரு பகர்ந்தார்.
அவரது ஆங்கில உரை :
To a pointed Ouestion by Ananthanambiar, regarding the Raja of Ramnad's clain to the island, Jawaharlal Nehru declared, "There is no question of the Government of India or the Government of Singalese, coming into conflict over a tiny little island. There is no national prestige involved in this matter, especially with our neighbour Ceylon.'
கச்சதீவை "சிறுதீவு' 'மணல் மேடு" என அலட்சியப் படுத்தினார் நேரு, உமி மலையுள் ஓர் அரிசி என்றா லும், அது தமிழன் வயலில் விளைந்தது அல்லவா! அது தமிழன் உலையில்தானே வேக வேண்டும்.
கச்சச் தீவு தமிழகத்தின் முகவாய்; அதனைத் தமிழர்கள் இழந்திட இசையார்.
பாலை நிலத்தில் கடந்த விடுதலைப் போர்:
உலகிலேயே மிகப் பெரிய 606) நிலம், ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள சகாராப் பாலைவனம். அங்கே பூ மலராது. பூண்டும் முளையாது. "பாசுப்பேட்” எனும் கணிப்பொருளே அங்கே கிடைக்கும், இப்பகுதியின் பழங்குடிமக்கள் "கருப்பர்கள்'. இவர்களே அம்மண்ணின் மைந்தர்கள்.
அப்பாலை நிலத்தின் அருகில் ஸ்பெயின் எனும் வல்லரசு இருந்தது. அவ்வல்லரசின் கண்களில் சகாராப் பாலைவனம் பட்டது. கேட்பாரற்றுக் கிடக்கும்

Page 31
5ó உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
பாலைவனம் எனக் கருதிப் படையுடன் சென்றது; வென்றது. ஸ்பெயின் மக்கள் குடியேறினர். அப்பாலை நிலத்தைத் தமதாக்கினர். அம்மண்ணின் மைந்தர் களாம் கறுப்பர்கள் கண்டனர். கடுங்கோபம் கொண்டனர். அது மணல் தானே எனக்கறுப்பர்கள் விட்டாரில்லை.
1950-இல் கறுப்பர்கள் எழுந்தனர், கரங்களில் வாள்களை ஏந்தினர். ஸ்பெயின் மக்களைச் சீவினர். வல்லரசு, பெரும் படையைத் திரட்டியது. கருப்பர் களோ புதர் மறைவுப்போரில் (கொரில்லாப் போரில்) இறங்கினர். 10-ஆண்டுகள் போர் நடந்தது. 1960-இல் கறுப்பர்கள் வென்றனர். பாலை நிலத்தைத் தமதாக்கிக் கொண்டனர்.
கறுப்பர்கள் ஒரு பாலை நிலத்திற்காக எவ்வளவு பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்தினர். எத்தனை உயிர்ப்பலி கொடுத்தனர். ஆனால் நேருவோ, ஒரு பசுந்தீவை இழந்து நிற்கும் தமிழரைப் பார்த்து, அது என்ன பொடித்தீவு, மணல் மேடு, மொச்சைக்கொட்டை அளவுள்ள கச்சத்தீவு என ஏளனம் செய்தார். கச்சத் தீவை இழப்பதால் இந்தியாவின் தன்மானம் போக வில்லை எனப் புகன்றார்.
நேருவுக்குத் தன்மானம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் தமிழனுக்குத் தன்மானம் உண்டு. தன் மண் பறிபோவதைக் கண்டு தமிழன் பொறுக்க மாட்டான். பொங்கி எழுவான்.
காலம் காலமாகத் தமிழர்களுக்கு உரித்தான கச்சத் தீவை,சிங்களவர்கள் கைப்பற்றினர். தமிழர்கள் கண்ணீர் வடித்தனர். ஆசியாவின் ஒளி நேரு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வரலாற்றில் கச்சத்தீவு 5?
ஆனால், 1962-இல் இமயமலையில் ஒரு புல்கூட முளைக்காத பனிப்பாறைப் பகுதியில் (லடாக்) மக்மில்லான் எல்லைக்கோட்டை சீனர்கள் தாண்டிய போது நேரு சீறினார்! சீனரைச் சாடினார் உலக நாடு களின் உதவியைக் கோரினார்; பன்னாட்டுப்படைகளை ஏவினார். தனது அணிசேராக் கொள்கையைப் புதைத்தார். அணிதிரள அழைப்புகள் விடுத்தார்.
ஆனால், கனிவளம் நிறைந்த கச்சத்தீவை சிங்களவர் கைப்பற்றியபோது, நேரு ரோசாப் பூவாய்ச் சிரித்தார்! மகிழம்பூவாய் மகிழ்ந்தார்! மல்லிகைப்பூவாய் மணந் தார் தன்மானம் போகவில்லை என மொழிந்தார்! நேரு பதவி வகித்த 17 ஆண்டுக் காலங்களிலும் தமிழ் இனத்தின்பால் அவர் காட்டியது ஓநாய்த்தனமான பாசம் அவர் இதயத்தில் இல்லை தமிழ்த்தேசம் தமிழ் இனத்திற்காக நேரு வாதாடியதாக வரலாறு இல்லை. தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்ததற்கே சான்றுகள் SD-66hTGS
அது கண்டு, கவிஞர் கண்ணதாசன் துடித்தார் நேருவுக்கே கவிதை வடித்தார்!
"கொதிக்கின்ற நெஞ்சத்தைத் தேற்றார் நேரு குமுறியெழும் கண்ணிர்க்கு இரங்கார் நேரு வதைக்கின்ற முள்வேலி களையார் நேரு வாடிவிழும் நிலைமாற்ற உதவார் நேரு கதியின்றித் திகைக்கின்ற தாயும் சேயும் கால்பார்த்து நடக்கின்ற மாத ராரும் சதிக்கூட்டம் மத்தியிலே புறாக்கூட்டம்போல் தடுமாறும் தமிழர்க்குறை தீரார் நேரு
-கவிஞர் கண்ணதாசன்
Guー4

Page 32
58 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
இந்திராவின் பங்கு:
இந்திரா நேருவின் ஒரே மகள் இந்தியாவின் தலைமகள்11 இந்திரா, 24-01-1966 இல் இந்தியத் துணைக் கண்டத் தலைமை அமைச்சர் ஆனார். 25-06-1975 இல் நெருக்கடி நிலையை அறிவித்து நாட்டின் "வல்லரசி' என எழுந்தார். 1977 இல் நடை: பெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் 23-03-1977 இல் பதவி இழந்தார். 34 மாதங்கள் மகுடம் துறந்த இராணியாய் இருந்தார். மீண்டும் எழுந்தார். 1980 தேர்தலில் நின்றார்; வென்றார். 14-01-1980 இல் மீண்டும் பதவியில் அமர்ந்தார். அன்றுமுதல் குண்டடிப் பட்டு மரணம் அடைந்த 3 1-10-1984 வரை இந்திராவே இந்திய நாட்டின் தலைமை அமைச்சராய் மிளிர்ந்தார். இவர் இந்தியாவுக்குத் தலைமை அமைச்சராகவும், சிங்களவர்க்குத் துணை அமைச்சராகவும் திகழ்ந்தார்.
19-01-1966 இல் இந்திரா, இந்தியப் பேராயக் கட்சி யின் தலைவரானார். அப்போது அவர் சொன்னார், "நான் ஒரு பெண் அல்ல. ஆசைகள் நிறைந்த Guy IT 60s disas IT f.' I do not regard myself as a woman I am a person with agog.'
உலகின் உச்சிக்கே சென்றுவிட ஆசைப்பட்டார். அதற்காக அவசரப்பட்டார்.
சிங்கள அரசி, திருவாட்டி சிரிமாவோ பண்டார காயக்கா, பாரதத்துச் சகுனியும், இராமாயணத்துக் கூனியும் சேர்ந்து பிள்ளை பெற்றிருந்தால் அவள் எப்படி இருப்பாளோ, அப்படிப் பட்டவள்.
இந்திராவை மயக்கினாள். தமிழர் வாழ்வைப் பொசுக்கினாள் இந்திராவோ, தமிழர்க்குரிய கச்சத்

வரலாற்றில் கச்சத்தீவுகத் 5弹
தீவைக் கற்பூரத் தட்டில் வைத்தார். அதைச் சிரிமாவோ பண்டார நாயக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுத் தார்.
29-10-1964 இல் சிரிமாவோ பண்டார நாயக்கா, சிரிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் மூலம் பத்து இலட்சம் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தாள். பத்து ஆண்டுகளுக்குப் பின் 26-06-1974 இல், அதே திருவாட்டி பண்டார நாயக்கா, இந்தியாவுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின் மூலம், தமிழ் ஈழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் பிரித்தனள் இரு நாட்டு உறவுகளை அறுத்தனள்! தமிழன் கடலில் முத்துக் குளித்தனள்
சந்திரிகாவின் அன்னைக்கு, இந்திரா வழங்கிய அன்பளிப்பு-வைர மாலை யோ, முத்துச்சரங்களோ அல்ல. தமிழ் அன்னையின் கழுத்தில் காலம் காலமாகத் துலங்கிய கச்சத்தீவு எனும் ஆரம் இது இந்திரா தமிழினத் திற்கு இழைத்திட்ட பச்சைத் துரோகம்.
01-03-1968 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பி.ஆர். பகத் அவர்கள், 'கச்சத்தீவு இந்தியாவுக்கு உரியதல்ல. கச்சத்தீவு ஒரு பாறைத் தீவு, அது ஒரு பொட்டல் காடு" என வார்த்தைகளைக் கொட்டினார். அந்த அமைச்சரை, இந்திரா மெச்சினார்.
விசிறியை ஒளித்து வைக்கலாம் என்பர். ஆனால் இந்திராவோ, தமிழர்களிடமிருந்து ஒரு தீவையே ஒளித் தார். அதைத் தமிழ் இன எதிரிக்கு அளித்தார்.

Page 33
60 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
g2,5)-¿PPubGau UGTL) sudis
இருவரும்செய்து கொண்ட
கச்சத்தீவு ஒப்பந்தம்
Appendix
AGREEMENT BETWEEN INDIA AND SRI LANKAON
THE BOUNDARY IN HISTORC WATERS BETWEEN
THE TWO COUNTRIES AND RELATED MATTERS.
(26 June 1974)
The Goverryment of the Republic of India and the Government of the Republic of Sri Lanka.
Desiring to determine the boundary line in the historic waters between India and Sri Lanka and to settle the related matters in a manner which is fair and equitable to both aides,
Having examined the entire question from all angles and takən into account the historical and other evidence and legal aspects thereof, ܫ
Have agreed as follows: ARTICLE
The boundary between India and Sri Lanka in the waters from Adam's Bridge to Pak Strait shall be arcs of Great Circles between the following positions, in the sequence given below, defined by latitude and longitude:
Position 1 : 100 05' North, 800 03' East Position 2 : 09' 57' North, 790 35' East Position 3 : 09° 40'15' North, 79° 22.60' East

வரலாற்றில் கச்சத்தீவு
Position 4: 09° 21.80' North, 79° 30.70" East Position 5: O9° 13' North, 79° 32' East Position 6 : 09° 06' North, 79° 32' East
ARTICLE 2
The Coordinates of the positions specified in Article are geographical coordinates and the straight lines Connecting them are indicated in the chart annexed hereto which has been signed by the surveyors authorized by the two Governments respectively.
ARTICLE 3
The actual location of the aforeme ntioned positions at sea and on the seabed shall be determined by a method to be mutually agreed upon by the surveyors authorized for the purpose by the two Governments
respectively.
ARTICLE 4
Each country shall have sovereignty and exclusive jurisdiction and control over the waters, the islands, the continental shelf and the subsoil thereof, falling on its own side of the aforesaid boundary.
ARTICLE 5
Subject to the foregoing, Indian fishermen and pilgrims will enjoy access to visit Katchativu as hitherto, and wil not be required by Sri Lanka to obtain travel documents or visas for these purposes.

Page 34
62 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
ARTICLE 6
The vessels of India and Sri Lanka will enjoy in each other's watets such rights as they have traditionally enjoyed therein.
ARTICLE 7
If any single geological petroleum or natural gas Structure or field, or any single geological structure or field of any other mineral deposit, including sand or gravel, extends across the boundary referred to in Article and the part of such structure or field which is situated On one side of the boundary, is exploitod, in whole or in part, from the other side of the boundary, the two countries shall seek to reach agreement as to the manner in which the structure or field shall be most effectively exploited and the manner in which the proceeds deriving there from shall be apportioned.
ARTICLE 8
This agreement shall be subject to ratification. It
shall enter finto force on the date of exchange of the
instruments of the ratification which will take place as soon as possible.
For the Government of For the Government of the the Republic of India Republic of Sri Lanka Sd/- Indira Gandhi Sd/- Sirimavo R.D. Bandaranaike
Source : Indian Journal of International Law (New Delhi) Vol. 16, No. 1, January March 1976, pp. 126-127,

வரலாற்றில் கச்சத்தீவு 63
1974 ஆம் ஆண்டின் கச்சத்தீவு உடன்பாடு தமிழாக்கம் : 26 - 60 - 974
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட நீர்ப் பரப்பில், இரு நாடுகளுக்கிடையேயான எல்லையினை யும் அதன் தொடர்பான சிக்கல்களையும், நீதியாகவும் சமமாகவும் தீர்த்துக் கொள்ள இருதரப்பினரும் செய்து கொண்ட உடன்பாடு.
இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கும் எண்ணத்துடன் சிக்கல் முழுவதையும், எல்லாக் கோணங்களிலிருந்தும் வரலாறு உட்படப் பிற ஆதாரங்களுடன் சட்ட முறைகளையும் எடுத்து நோக்கிய பின்னர், இந்திய அரசும்-சிங்கள அரசும் பின்வரும் உடன்பாட்டுக்கு வருகின்றன.
விதி.1 : சேது அணையிலிருந்து, வடக்கே பாக்கு நீரிணை வரையுள்ள வட கடலில், பின்வரும் நிலை களில் அதில் கொடுத்துள்ள ஒழுங்குக்கு அமைய, நெடுங்கோட்டாலும் கிடைக் கோட்டாலும் சுட்டிய நிலைகளை ஒட்டிய பெரும் வட்டங்களின் இணைப்புக் கோடே, இந்திய-இலங்கை எல்லைக் கோடாகும்.
விதி-2: விதி 1 இல் வரையறுக்கப்பட்ட புவியியல் பெருவட்ட நிலைகளையும் இவற்றை இணைக்கும் நேர்க் கோடுகளையும் இரு அரசுகளின் நில அளவை யாளர்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிட்டுள்ளனர். எனவே, இரு அரசுகளால் வரையறுக்கப்பட்ட புவியியல் தொடர்ச்சியான நேர்வரை கோட்டின் நிலைகள் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.
விதி-3: நீர்ப்பரப்பிலும் கடற்படுகையிலும் மேற் கூறிய நிலைகள், எங்கெங்கு உள்ளன என்பதை,

Page 35
64 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
இரு அரசுகளின் நிலஅளவையாளர்கள் ஒருங்கிணைந்து தீர்மானிப்பர்.
விதி-4 : மேற்கூறியவாறு உறுதி செய்யப்பட்ட எல்லைக் கோட்டில், அந்தந்த நாடுகளின் பக்கம் உள்ள நீர்ப்பரப்பு, தீவுகளின் பரப்பு, கண்ட மேடை, கடலின் அ டி ப் பரப் பு ஆகியவற்றை அந்தந்த நாடுகள். தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், இறையாண்மை செலுத்தவும் உரிமை கொண்டவை.
விதி-5 : மேற்கூறிய 4ஆம் விதிக்கமைய, இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு, இது நாள் வரை வந்து போனது போல் வந்து போகவும், கச்சத்தீவை அனுபவிப்பதற்கும் (Wil enjoy), முழு உரிமை உடையவர்கள் ஆவார்கள். இதற்காக, சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதி களோ இவர்கள் பெறவேண்டியதில்லை (Will not be required)
விதி-6 : இந்திய இலங்கைப் படகுகளும், கப்பல் களும் கச்சத்தீவுக்குச் சென்று வர என்றும் உள்ள மரபு வழி உரிமைகள் தொடர்ந்து நீடிக்கும்.
விதி-7 : இப்பகுதிக் கடலினுள் - பெட்ரோலியம், இயற்கை வாயு, மற்றும் வேறு வகையான உலோகங் களும் கடல் பூமிக்குள்-மணல், கனிமம் போன்றவை களும் கண்டுபிடிக்கப்பட்டால், அவ்வளங்கள், எல்லை யின் இருபகுதிகளிலும் இருந்தால், அவற்றை எடுப்பதற் கும், பயன்படுத்துவதற்கும் அவற்றின் மூலம் கிடைக் கின்ற வருவாயினைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்திய அரசும் - சிங்கள அரசும் உடன்கூடி, கலந்து பேசி உடன்பாடு செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகே அந்த வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை இரு நாடுசளுக்கும் உரித்தாகும்.

வரலாற்றில் கச்சத்தீவு 65
விதி.8 இந்த இரு நாடுகளிடையே உறுதிப் படுத்தப்பட உடன்பாடு உறுதிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். உடன்பாடு கையெழுத்தான நாளிலிருந்தே அது செயற்படுத்தப் படும். ر
26-6-1974 இன் உடன்பாடு-விதி 5-இல் 'இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் எப் பொழுதும்போல் சென்று வரலாம்" எனக் குறிப் பிட்டுள்ளது. அப்படி என்றால் என்ன பொருள்? இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு தாயம் விளையாட வா செல்வார்கள்? 'இந்தியத் தமிழக மீனவர்கள் தங்களின் மீன் பிடிக்கும் தொழிலை முன்னிட்டு கச்சத்தீவு தழ் கடலுக்குச் சென்று வரலாம். மீன்பிடிக்கும் வலைகளை அங்குக் காயவைக்கலாம்" என்பதே அதன் பொருள்.
அஃதே போல், இறைவழிபாடு செய்வோர் கச்சத் தீவுக்குக் கடவுச்சீட்டு இல்லாமல் எப்போதும் போல் சென்று வரலாம் என்றால் என்ன பொருள்?
'கச்சத்தீவிலுள்ள புனித அந்தோணியர் கோவில் விழாவினை எப்பொழுதும் போல் எழிலாக நடத்திட வும், பக்தர்கள் சென்று வணங்கிடவும்", உரிமை உண்டு, என்பதே அதன் பொருள்.
இன்றென்ன காண்கின்றோம்? 23-3-1976 இல் ஏற்பட்ட உடன்பாட்டிலும், மேற்படி உரிமைகள் மறுக்கப்படவில்லை. நீக்கப்பட வும் இல்லை.
இது நாள் வரை, 1974 ஆம் ஆண்டு உடன்பாட்டில் கண்டுள்ள இந்திய மீனவர்களின் உரிமைகள், கச்சத் தீவுக்கு வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளுக்கு வழங்க ப் பட் டு ஸ் ள உரிமைகள் - இவற்றிற்கு

Page 36
66 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
மாற்றாகவோ - முரண்பாடாகவோ இலங்கையுடன், இந்தியா எவ்வித உடன்பாடும் செய்து கொள்ள வில்லை. ஆனால் நடைமுறையில், சேது கடல்-பாக்கு நீரிணை ஆகிய கடல் பகுதி முழுவதும் சிங்கள அரசின் கடற்படை ஆதிக்கத்துக்கு உட்பட்டே உள்ளது.
நாகப்பட்டினம் முதல் தனுஷ்கோடி வரையிலான "தமிழக நாட்டுரிமைக் கடல்" தனில், சிங்களக் கடற்படை சுதந்தரமாக உலவி வருகிறது. அக்கடலில் மீன் பிடிக்கும் தமிழின மீனவர்களைக் குருவிகளைச் சுடுவது போல், சிங்களப் படையினர் சுட்டுத் தள்ளு கின்றனர். இராமேசுவரம் தீவு வரை வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் பிடித்து வைத் திருக்கும் மீன்களையும், படகு களையும் சிங்களப் படையினர் களவாடிச் செல் கின்றனர். இது, உடன்பாட்டுக்கு முரணானது.
சிங்களவரின் ஆதிக்கம் ஏற்பட்ட நாள் முதலாய், தந்தை செல்வாவின் காலம் தொடர்ந்து இன்றுவரை, நெருக்கடி வருகின்றபோது சிங்கள அரசினர் உடன் பாட்டுக்கு வருவர். ஒப்பந்தத்தில் கைஎழுத்தும் இடுவர். ஆனால், கை ஒப்பமிட்ட மை காய்வதற்குள்ளேயே-- உடன்பாட்டை மீறுவர். ஒப்பந்தத்தை கொளுத்துவர். இது, சிங்கள அரசுக்கு வாடிக்கை அது, இந்திய அரசுக்கு வேடிக்கை
இந்திரா ஆட்சியில், எத்தனையோ சிக்கல்கள் இந்தியாவில் இருந்தன. பொருளாதாரத்தை மேம் படுத்த வேண்டியக் காலம். தொழில் துறையை விரிவாக்க வேண்டிய நேரம். ஆனால், இந்திரா இதை
யெல்லாம் விடுத்தார். Ff Dm G6 m 65T LIT T நாயக்காவை அழைத்தார். கச்சத்தீவைத் தூக்கி அவர் கையில் கொடுத்தார். அதற்கென்ன அவ்வளவு
அவசரம் கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு இந்திரா கூறும் காரணம் தான் என்ன?

வரலாற்றில் கச்சத்தீவு 67
இந்திரா சொன்ன சொற்கள்;
* இருநாடுகளும் கொடுத்த சான்றுகள் அடிப்படை யில் மட்டுமே வழங்கப்படவில்லை. சில அரசியல் காரணங்களைக் கருதியும் வழங்கப்பட்டது."
9]] என்ன அரசியல் காரணம்? அதுதான் தமிழ் இனத்தை அழிப்பது. இதற்கு மேலும் ஒரு சான்று.
"பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
கடந்தாய் வாழி காவேரி" எனச் சிலப்பதிகாரம் சிறப்பிக்கும் காவிரி: தமிழர்களின் குலக்கொடி!
கச்சத்தீவை இழந்த கால கட்டத்திலேயே அந்த காவிரி நீர் உரிமையினையும் இழந்தோம். 1924-இல் காவிரி நீரைத் தமிழகம் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆங்கில ஆட்சி ஒரு ஒப்பந்தம் செய்து கொடுத்தி ருந்தது. அந்த ஒப்பந்தம் 1974-இல் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையாகத் தமிழக விவசாயிகள், உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத் திருந்தனர். ஆனால், இந்திரா அம்மையார், அன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதியைத் தன் வயப்படுத்தினார். வழக்கைத் திரும்பப் பெறச் செய்தார். இப்படி, தமிழ்நாட்டின் கடல்வளத்தைப் பறித்தார்! தமிழ்நாட்டின் நிலவளத்தைப் பொசுக்கிட நினைத்தார்.
இந்திரா அம்மையாருக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்த தமிழ்நாட்டுத் தலைவர்களே! தமிழ் இனத்தின் முதல் எதிரி யார் தெரியுமா?

Page 37
68 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அன்று : சந்தன நிறத்தினன் வஞ்சக மனத்தினள்
இந்திரா இன்று : சிங்களவர் தலைவி சந்திரிகா
அறிஞர் அண்ணாவின் பங்கு
சான்றோர் வாழும் காஞ்சிபுரத்தில், அறிஞர் அண்ணா. 15.9.1909 இல் பிறந்தார். 17.9.1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்
1967-இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றியை அடைந்தது! தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கை 138 என உயர்ந்தது. 6-3 1967இல் அறிஞர் அண்ணா அரியணையில் அமர்ந்தார். சென்னை மாகாணம்’ என்பதைத் 'தமிழ்நாடு" எனப் பெயரிட்டுச் சட்டம் கொணர்ந் தார். அதனால் சிறந்தார். 1962இல் நேரு, சீனாவோடு எல்லைப் போர்த்தொடங்கினார்; 28.10.1962இல் அறிஞர் அண்ணா நேருவின் உறவுக்குக் 68) is கொடுத்தார். போருக்குப் பொருள் கொடுத்தார். தொடக்கத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு பெறுவதே தி.மு. கழகத்தின் இலக்கு என்றார். 3-05-1963 இல் பிரிவினைத் தடைச் சட்டம் வந்தது. திராவிட நாட்டுக் கொள்கை புதைந்தது. முதல்வர் அண்ணா தலைமையில் ஆட்சி மன்றம் சட்டமன்றத்தில் கேள்வி நேரம் (2-03-1968) இரண்டே உறுப்பினர்களைக் கொண்ட சம்யுக்த சோசலிஸ்ட்டு கட்சியினர் தமிழர் களுக்குச் சொந்தமான கச்சத்தீவை - சிங்கள அரசு கைப்பற்றிக் கொண்ட கொடுஞ்செயலைச் சட்ட மன்றத்தில் எழுப்பினர். ஒத்திவைப்புத் தீர்மானத்தைச் சட்டப் பேரவையில் வைத்தனர். அவை நடுவர்

வரலாற்றில் கச்சத்தீவு 69
சி. பா. ஆதித்தனார், அன்று சட்ட மன்றத்துக்கு வரவில்லை.
அன்று, அவைக்குத் தலைமை வகித்த துணைப் பேரவைத் தலைவர் புலவர் க. கோவிந்தன் "இது, வெளி நாட்டு அரசியல் தொடர்புடையது. இது நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது". எனச் சொல்லி ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கு முற்றுப்புள்ளி spairfi! (The deputy Speaker ruled it out on the ground that it was a Foreign policy issue). syl Gurg முதல்வர் அண்ணாவும், 138 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், கோவிந்தனுக்கு எதிர்ப்புக் குரல் முப்பவில்லை. கச்சத்தீவு சிக்கலை வெளி நாட்டுப் பிரச்சினை எனத் தட்டிக் கழித்தனர். தமிழர்க்கு உரியத் தீவை விட்டுக் கொடுத்தனர்.
தேர்தலில், தி.மு. கழகம் தனித்த பெரும் பான்மையை நெருங்குகிறவரைதான், தி.மு.க. தலைவர் கள் தமிழ்இனப்பகைக்கு வேப்பிலை. முழுமையான பெரும்பான்மை அடைந்து ஆட்சியில் அமர்ந்தவுடன், அவர்கள் தமிழ் இனப்பகைக்குக் கறிவேப்பிலை.
அறிஞர் அண்ணா 6-10-1963இல், திராவிட நாட்டைக் கைவிட்டார். 2-10-1968-இல் கச்சத்தீவைக் கை நழுவ விட்டார். எனினும் தமிழ்நாடு எனப் பெயரிட்ட பெருமைக்கும், சீர்திருத்தத் திருமணம் செல்லும் எனச் சட்டம் இயற்றிய அருமைக்கும், இரு மொழிக் கொள் கையைச் சட்டமாக்கிய சிறப்புக்கும் உரியவர், உயர் புகழாளர் அறிஞர் அண்ணா!
கலைஞர் கருணாநிதியின் பங்கு
நஞ்செய் தழ் தஞ்சை தேரோடும் திருவாரூர் குவளைக் கண் விழித்துநோக்கும் திருக்குவளை எனும்

Page 38
7). உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
ஊர்! ஆங்கே, 3-6-1924-இல் மு. கருணாநிதி பிறந்தார். 3.02.1969-இல் அறிஞர் அண்ணா மறைந்தார். 10.02.1969-இல் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தார்.
"கடலோடி இனமடா எங்கள் தமிழரினம் அந்தக் கடலோடி இனம், தனக்கு மட்டுமே சொந்தமான தமிழ்க் கடல்களான குமரிப் பெருங்கடலின் மீதும், சோழர் கடலின் மீதும் கொண்டிருந்த இறையாண்மையை இழந்து விட்டது. இது காலத்தின் கோலமடா! இதை மாற்றிட எழுவோமடா!' ଶT ଘdit முழங்கியவரும் கலைஞர் கருணாநிதிதான். தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தனது இச்சைக்குரிய சிங்களவருக்குத் தாரை வார்த்த இந்திராகாந்தி அம்மையாரை, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக" என வரவேற்றவரும் அதே கலைஞர்தான்.
கன்னித் தமிழினத் தலைவர் கலைஞர் ஆட்சியில் தான், அதாவது 15.07.1972-இல் தமிழக அரசின் ஆவணக் காப்பகம் மூலம். இராமநாதபுர மாவட்ட அரசுப் பதிவு இதழ் (கெசட்) திருத்திய புதுப்பதிப்பை (The Tamil Nadu Gazetteer pertaining to Ramanathapuram) வெளியிட்டது. அன்றைய முதல்வர், கலைஞர் கருணாநிதி இதற்கு அணிந்துரை வழங்கி ஒப்ப மிட்டுள்ளார். 1062 பக்கங்கள் கொண்ட அந்த அரசுப் பதிவு இதழில் தொடக்கத்தில் இராமநாதபுர LDT 6). -- வரைபடம் உள்ளது. அதில் இந்திய எல்லையும் இந்தியக் கடல் எல்லையும் காட்டப்பட்டுள்ளன. ஆனால்: அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில், அந்த வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. தமிழ்நாடு அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த அரசிதழின் வரை படத்தில், இந்திய எல்லைக்குட்பட்ட கச்சத்தீவு விடு பட்டுப் போனதற்கு யார் காரணம்? கண்டறிய GausbrGb. Sob விடை சொல்லும்,

வரலாற்றில் கச்சத்தீவு 71
1800-ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அறிஞன் தாலமீ வரைந்த வரைபடம் முதல் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு முந்திய காலகட்டம் வரை வரையப்பட்ட இந்தியத் துணைக்கண்ட நிலவரைபடங்கள் அனைத்தி, லும் கச்சத்தீவு இருப்பதைப் பாரும் கச்சத்தீவு இல்லாத ஒரு வரைபடத்தை, முதன் முதலில் வெளியிட்டக் கொடுமை கலைஞர் ஆட்சியினையே சாரும்!
கச்சத்தீவு, சிங்களவருக்குச் சொந்தமா? தமிழ ருக்குச் சொந்தமா? எனும் சிக்கல் ஏற்பட்டு, அது சிங்களவருக்கே உரியது என இந்திரா அம்மையாரால் முடிவு எடுக்கப்பட்டு, கச்சத்தீவு உடன்பாட்டில்க் இந்திய-சிங்கள அரசுகள் கையெழுத்து இட்ட நாள் 28.06-1974. அப்பொழுது தமிழ்நாடு சட்டப் பேரவை யில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 184, இது? அறுதிப் பெரும்பான்மை. தில்லி நாடாளு மன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை 22. தமிழக மக்கள் கலைஞரை பதவியின் உச்சியில் அமர்த்தினர். ஆனால், அந்தத் தமிழினம் மெச்சிட, கச்சத்தீவு உடன்பாட்டை எதிர்த்தாரில்லை. குறைந்த அளவு காந்தியார் போன்று, ஒத்துழையாமை இயக்கத்தை' யாவது நடத்தினாரில்லை. བོད་
கலைஞர், 29-06-1974 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். கண்டனக் குரல் எழுப்பி னார். அதை விளம்பரப் படுத்தினார். அத்துடன் நிறுத்தினார்.
அன்று, இந்திராவின் நிழலாக இருந்தவர் கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ். அவர் இந்திராவுக்குத் தோழனாக இருந்தார். உயிர் காக்கும் வேலனாகவும் இருந்தார். ஆனால், அவரே கன்னடத்தின் உரிமை என்று வருகின்றபோது, தன் இனத்தோடு இணைந்தார். இந்திராவை எதிர்த்தார். ஆனால், இந்திராவோடு அந்த

Page 39
72 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அளவு ஒட்டு, உறவு இல்லாத கலைஞர், தமிழன் தீவைப் பறித்துச் சிங்களவனுக்குத் தாரைவார்த்த இந்திராவுக்கு இறுதிவரை எதிர்ப்புத் தெரிவித்தாரா? கச்சத்தீவை மீட்டாரா? இல்லவே இல்லை!
'தமிழக அரசின் தலைமைச் செயலகமும், தமிழ் நாடு சட்டமன்றமும் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை, ஆதியில் மீனவத் தமிழர்களுக்குச் சொந்த மான மீனவர்க் குப்பம், கி.பி. 1630 இல், ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கும்பெனி வணிகக் கூடம் கட்டு தற்கு இடம் வேண்டி, கெஞ்சினர். குப்பத்து மீனவர்களும் மனம் இரங்கினர். தங்களுக்குச் சொந்தமான குப்பத்தை வழங்கினர். ஆங்கிலக் குழுமம் சார்ந்த திரு "டே" என்பவர், அந்த மீனவக் குப்பத்தில் இன்றுள்ள புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். கும்பெனி ஆட்சியைக் குடி ஏற்றினார்.
தமிழக முதல்வர் கலைஞர் மீனவர்களுன்டய மண்ணில் கட்டப்பட்டுள்ள கோட்டையில் அமர்ந்து கொண்டே "மீனவரின் உயிருக்கு விலை ஒரு இலட்சம் உரூபாய்” என அறிவித்துள்ளார்.
'சங்கறுப்ப தெங்கள் குலம் சதிகாரருக் கிங்கேது இடம்? - சங்கை அறுத்துண்டு வாழ்ந்தாலும் வாழ்வோம்-அரனே இரந்துண்டு வாழோம்! உன்போல்"
என மீனவ நக்கீரன் முழங்குகிறார்.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலம்
1. 10-02-1969 முதல் 14.03-1971 வரை (138 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்)

வரலாற்றில் கச்சத்தீவு 73
2. 15.03.1971 முதல் 31-01-1976 வரை (184 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்)
3. 27.01.1989 முதல் 30-01-1991 வரை (151 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்)
4. 13-5-96 முதல். (சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை 166.)
கலைஞர் கருணாநிதி, பெரும்பான்மை பலத்தோடு தமிழ்நாட்டை நான்கு முறை ஆட்சி செய்தும், தமிழின மீனவர்களின் உயிரைக் காத்தாரில்லை. கச்சத்தீவை மீட்டாரில்லை தஞ்சை உழவர்க்குக் க்ாவிரி நீரின் உரிமையைப் பெற்றுத் தந்தாரில்லை
ஒருவன் பகலுக்காக இரவைத் தொலைத்தானாம்! பிறகு இரவுக்காகப் பகலைத் தொலைத்தானாம்! அது போன்றே, கலைஞர் கருணாநிதி சில நேரங்களில் கொள்கைக்காகப் பதவியைப் பறி கொடுப்பார்! பல நேரங்களில் பதவிக்காகக் கொள்கையைப் பறி கொடுப்பார். எனினும்,
வள்ளுவர் கோட்டம்
கலைஞரை வாழ்த்தும்!

Page 40
• • • (f)ogË电J助鸣电9油9P取4Q9唱唱电giu ortogo odų919'quo '0's
sdD盟posē uzo Qoqię șgers ugi secesso qi soqoqiu od oth‘o solo ‘6 も4gg』*gogorosłą9@go į Tugofeoș únqī£ €199rngasoquísirio "8 sdpgqudsī ugiggguesfđề regÐ úņo osoɛ) */ se úgyışı usof\cos 1@crıgriego goț¢rısıdereg)1994; ug gnuo 'so' yoo ’9 田digqırmuscosurısıtı~ī£19.511 soo)qisadî sïo, o qī 19:511999, u gj gulo * (9 °5T “S op uuosi心n9岭D @d)史』ュqi s Hg} u għonu sốgregog)??? 1 reto@gournogoșof) •q• 19 osoɛD'57 "Ž
•• •đfi) og}y loqpreto 199-1-159-11ggeri 'quoggg的o-sg:追%。8 因dig丁oe寸u的D哈勒hy ulosus gournricorn@o urmfnú so ‘o ‘Z 粤d巴*筑gourtsogiregn巨由哈99949D1994; ugħreq,95,9 ° § “T Įrnrito) oặcoogjoyrmno) y 1995īrī£đ~~ **나ns g學的仁成9që ajış9a1@ 11-i ugi199 g/1095īņıf(UTāsaj 199ơn@u-i ugi
·ạmoći--in ışųoo ŋusɛiŋssosqỉ ngơi@u-nııgı soņņuoș-nos-luaisiglo 恩暗自強邑。é強城且每n@nua &g強_****」喻城自g 函服93了強城追領。9"爾 陽anp鼠城@ne@聰過嶼usne』g 戦Q場担degag aseョnsfg取硫退us与硕准圆(追0恩45) çeşmesie mesosoɛ ɖo namne)ņraeae is q$ąriņ&Heșșește op&-v1-9-92ro良姆城的油田 is ĝhņon -ispeb oz. soạo G8z souoooooo**嶼臣空望取 an虎é-09z 臣月9hp"* qarsson pung Qi-i-irononquh&ngigina& -\~\n",四将雷丁司每它的恒星唱n函电四 , , ,- ·

因dD盟soos spisertogo 1çeris-i logo doissuese-bi-ig)go 'uos osz
因dD毁quae osoqe unusosò83 u số 1991,949@g? - ļoso oặz 唱dD舰1990-91994e09-arts1991,9%9@g?1ęs so u.109@qi qooo ugi ocz quaesorgson suon@ o úgyışı Isso毛与心曲时h占mu4习占:Sng!唱与!1çoso uong) onļ919 ‘zz 1991,9 rn || 6 ugħ 9.4g寺石田之usquoruo-bilogogo 1991:94-9@goonuđỡ • o6igiao-Jiaoto) · porque • Iz 唱d巴gyıshqi@rītos@Irmnosra:ugologio-IIaelo oogs ooz 旧dā取qıúnqī£ € Tđềrteso-turus199rvern uon orto o 6Ț ĮrnudĮrmuńsoņiųı911° 旧dD貌gołę u 1191,9 unuo) orņigis uso ' yooqi , soro 83116 losso uong) - ļos, 'quo' so ’8I șogo qigodụ9đù七闽晚h914@ 1șērngoosì rmgo giữரய9ாெழாகுyoqoqi sẽano dì) rı yo sẽơisodf) -qı 19'ɑso is 'ZT 唱d巴题与90949994999g11羽混9哈d巴499为1ņ9aj uongo uolo) útfừ ‘91 !? one-festerneஒ9ா9றq9றிகுவிதிqış đùi đoào qigogs 109 uos@cf) • oo ayo 19 *gr 唱dD圈இயகதgeகுஓடுg ர டி99க ஒார்பியனgiu-o ș1@@(f) •qi19 **T 94留gu哈pī£§-iš- ( qirngorodnú,5īņio · 5ī 1991,949@golio u số : ayo I o ‘ET 田dpgG99唱94冷嘲gregog) -tı 1999 urn ugiquorņi 11831, 6 oqi 19 · ZT 的...d巴盟quomo uogòriqi@ q9 uri logo&sou sẽ “ayo 19°591çorm off-oto) · Lúsẽ “rr yrmrnto) oặcoegfoĮrnrito) y 1995ısırúJ-a
go-iso gos? uolo șalış9ơi@u-i ugi199ụ1995īņIŪ-as aj 199ơn@u-urađ

Page 41
。(gredgan @nglég鴻消re函強白日*姆 も4gg』sgunu的DFg 494日取鸣可ğı logoạo úố "514994启9D9:4RF:电&);6&
qunus???Ųı ışııgıségio
出4留宿11唱429讽喻自殴1993Ě ugi ruoasso so199øogođìło o 5,9° so ’88 9니1國. șơngs-igsfessourilopilsēự đùm llogo@ogaoeue qghu「占egon* 4 *4ggusκαι μ 9) . ισπ5)gnus啦9949D1999, u sreof, * 98 的4町gus(舰岛-39咀ue的)f49点30gi uzo -IIIGigi u pasq9oC9 o quo” (o '98 Į urmgoodfi) 田dā盟6)-니nrng道的 思仁寺899999哈4电9h untı-ı go o go osoɛ
·ę odfi) også岛电g羽哈4949因y ulogs de 1993?ofÐ 1998? 9,91 m@09) o qiio '88
· o ocsi) ogËqi úH II (11133舰晚ydi与Tgogo un-ı 1,99$ (tio so ‘Z8 (舰岛u喻9喻u99)
•••đì) og?Į LIĜfaqı sírı(g)qisposòsof, ’ ”占444ce助· @> · I q ! கிபி ஓடிய, ņ@ā ņ–11ņofeo 1989 urmgooqe un usog) ‘o ‘08
·soofi) og?y goqogiy-ıhloog? 11833)Į —ıftsso usē un o 1833) ’62 9니그的. · -- șơngo-icooftos@untogısıyerısı uff gooogoqi soț¢ £ - i u 1999)quaeq' solo urnąoo og '82 ag úgyışı ilo rndsoort39949D4949Į U-ı uq; g. u o úljonoƐƐ ŋŋgiuso · @ : Zz P니T的.` _ · <ı. șơicos-looftos@unto)q. 109-til-arīrī£ ugiqigo ogogo UJI励舰dD混混与旧:401:9Z grnneg) sẽcoogjo ựrnno) y 1095010 (UTC)
ș-aș ș@uolo, saj 199ơn@u-i ugi1994/1995arısűj Tō· á sean@u-i lygį į

வரலாற்றில் கச்சத்தீவு 77
கச்சத்தீவைத் தாரை வார்த்ததில் தில்லி ஆட்சியாளரின் பங்கு
தில்லி ஆளுமையும், சிங்கள வல்லாண்மையும் சேர்ந்து செப்த சதி அதுவே கச்சத்தீவின் விதி! இலை களுக்குப் பின் காய் ஒளிந்து இருக்கும்! அது போல் சிங்களச் சதிகாரர்களுக்குப் பின், தில்லி ஆட்சி யாளர்கள் மறைந்துள்ளனர். தீயைப் போன்றோரும், ஈயைப் போன்றோரும் இணைந்தனர். தேன் சுரக்கும் கச்சத்தீவையும், மீன் விளையும் தமிழன் கடலையும் பறித்தனர்.
தமிழ் ஈழ விடுதலைப் போருக்கான் பின்புலமே தமிழ்நாடு, இது புது தில்லியின் கருத்து. எனவே கடலில் தடை எழுப்பித் தமிழ் ஈழ மீனவர்களையும் தமிழ் நாட்டு மீனவர் களையும் பிரித்தனர். அதற்கு முன்னோடியாய்க் கச்சத்தீவைப் பறித்தனர். சிங்கள அரசுக்குக் கொடுத்தனர்.
'' 'fáSI gaira).15 (Divide 8 Rule) 2) S], S, sé é லேயரின் அணுகுமுறை.
"பிரித்து அழி" (Divide a Destroy) இது, தில்லிசிங்கள ஆட்சியரின் நடைமுறை.
மாட்டுச் சந்தையில்-மாடு வாங்குபவன்-விற்பவன் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, கை மேல் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு, கைகளால் விலை பேசுவர் மாட்டுத்தரகர்கள். அது போன்றே, தில்லி அரசினரும்--சிங்கள அரசினரும் நாடகம் நடத்தினர். கச்சத்தீவைக் கடத்தினர்.
இதற்குச் சான்று இதோ!

Page 42
78 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
எல்லைக் கோடு தொல்லைக் கோடு
இலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையில் உள்ளது பாக் நீரிணை. இதன் நீளம் 270 கி.மீ. அகலம் 40 கி.மீ. சர்வதேச கடல் சட்டத்திற்கும், இருநாட்டு கடல் சட்ட வரம்புகளுக்கும் அப்பாற்பட்ட திறந்த, அகன்ற, இடைவெளிக் கடலான மன்னார் குடாக் கடலிலும், வங்காள விரிகுடாக் கடலிலும் வரைந்தனர் புதிய எல்லைக் கோடு. அதுவே, தமிழக மீனவர்க்குத் தொல்லைக் கோடு.
ஆதி சேது என்றழைக்கப்படும் ஆடம்ஸ் பாலம்தனஷ்கோடி தீடைப்பகுதியிலிருந்து 9.06° வடக்கு படுக்கைக் கோட்டிலிருந்து-பாக் நீரினை 10.05° வடக்கு படுக்கைக் கோடு வரை எல்லைக்கோடு தீட்டினர். நேராக திட்டப்பட வேண்டிய எல்லைக் கோட்டினை கச்சத்தீவு அருகில் வளைத்தனர். கச்சத்தீவு இலங்கைக்கடல் எல்லைக்குள் அடங்குமாறு வரைபடம் வரைந்தனர். அரிவாளில் வளைவு இருக்கலாம். ஆனால் ஆழ்கடலில் வளைவு ஏது? தமிழக எல்லைக்குட்பட்ட குள்ள க்காரன் பட்டியிலிருந்து நேர் வடக்கில் கோடு இழுத்தால் கச்சத்தீவுக்குக் கிழக்கேதான் எல்லைக் கோடு வரும். எனவே, கோட்டுக்கு மேல் பகுதியி லுள்ள கச்சத்தீவு இராமேசுவரம் கடற்பகுதியைச் சாரும். அதன்படி கச்சத்தீவு சேது நாட்டுக்கே உரித் தாகும். 23.03.1976-இல், இரு நாட்டு வெளியுறவுத் துறைச் செயலாளர்களும் முறை கேடான இந்த எல்லை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். கச்சத்தீவை தமிழ் இனத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பறித்தனர்.
ஸ்வெல் எனும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் 'கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமா? சிங்கள நாட்டுக்குச் சொந்தமா? என்பதை அறியேன்" என்றார்.

வரலாற்றில் கச்சத்தீவு 79
மற்றொரு இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இக்பா லிரோஸ், "கச்சத்தீவு தொடர்பான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை" என்றார்.
நாடாளுமன்றத்தில் மூக்கையா தேவர் வெளி கடப்பு
அடுக்கடுக்காக இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்தாக வேண்டும் எனக் கருதினார், இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. மூக்கையா தேவர். இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி யின் தலைவர். இவர் 23-07-1974 அன்று, தில்லி நாடாளுமன்றத்தில் கச்சத்தீவுச் சிக் கலையும் மீனவத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கினார். ஆனால், அவை நடுவரோ மூக்கையாதேவர் பேசுவதற்கு தடை விதித்தார். எனது தொகுதி சம்பதமாகப் பேசஅனுமதிக்க வேண்டுமெனத் தேவர் வேண்டுகோள் விடுத்தார். அவை நடுவர் அனுமதி மறுத்தார்.
மூக்கையாதேவரும், பெரிய குளம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முகமதுசரீப் என்பவரும் அவையி லிருந்து வெளி நடப்பு செய்தனர்.
அன்றைய நாடாளுமன்ற நடவடிக்கையின் விவரம் ஆங்கிலத்தில்:
SHR P. K. M. THEVAR (Ramanathapuram) : Kachchativu forms part of my constituency, You are acting like a dictator. You are speaking like e democrat, but at the same time you are acting like a dictator. The
whole life of thousands of fishermen.... Today the Ceylon Government has moved their forces, their military,

Page 43
80 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
towards that island. Thousands of mechanised boats were stopped; movements were restricted. Their lives are in danger. You have simply betrayed. You have no sympathy and courtesy to consult those people. You are thinking of it as a part of Tamil Nadu. Do not think it as part of Tamil Nadu. It is going to be the base for a future war. It is going to be the base and challenge the life of the nation. I have to warn all these things bacause in the past it has been the tradition of our Government to give bhoodan cf the northern borders. (Interruptions).
MR. SPEAKER : Kindly sit down.
SHR PKM THEVAR: The division of India has Cost the life of Mahatma Gandhi. It is not a part of Tamil Nadu but it is a part of the holy land of India. You are betrarying.... On behalf of the constituency and on behalf of the Forward Block, I walk out.
SHRI MUHAMMED SHERIFF (Periakulam): Even on the lst April 1968, produced sufficient records in this House to show that Kachchativu belongs to the Raja of Ramnad. Government has failed to go through those records. was the elected representative of that constituency here previously. It s a shame on the parr of the Government that they have not consulted the people of the place and the Chief minister of the State. We Condemn this action of Government and along with my friends, also walk out in protest.
(Shri P.K.N. The var and Shri Muhammed Sherff then left the House),

வரலாற்றில் கச்சத்தீவு 8.
சிங்கள அரசு தமிழினத்தைக் கூண்டோடு அழிக்கச் செயல்படுவதற்கு இந்திய அரசு துணை, என்பதற்கு இதுவே சான்றாகும்.
சார்க் மாநாடுகளில் தில்லி அரசு கலந்து கொள் கிறது! சிங்கள அர சோடு கை குலுக்குகிறது! விருந் தினை ஏற்கிறது! விருந்தினைப் படைக்கிறது! உறவு கொண்டு உரசுகிறது! உள்ளம் உருகப் பேசுகிறது.
ஆனால், அன்றாடம் சிங்கள அரசால் கொல்லப் படும் தமிழின மீனவர்களைப் பற்றி, மத்திய அமைச்சர் களோ, தலைமை அமைச்சரோ வாய் திறப்பதில்லை" காரணம்? தில்லி அரசுக்குத் தமிழினம் மாற்றான் பிள்ளை.
மீனவத் தமிழர்களின் சிக்கலில் நடுவண் அரசு தலையிட தயக்கம்!
இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து சுடுவது பற்றியும், தமிழக மீனவர்களைப் படுகொலை செய்துவது பற்றியும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப் பினர்கள், தில்லி மாநிலங்கள் அவையில் (ராஜ்ய சபா) 14-08-1997 இல் கேள்வி எழுப்பினர். குறுகிய கால பிரதமர் ஜ. கே. குஜ்ரால் கீழ்க் கண்டவாறு பதிலளித் தாா.
'இனி இம்மாதிரி சம்பவம் நடக்காதிருக்க, நடை முறைகளை உருவாக்க இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ஒவ்வொரு இந்து மீனவர் இறந்ததும் அது குறித்து விசாரணையும் நடவடிக்கை களும் மேற் கொள்ளப்படுகின்றன.

Page 44
82 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
இம்மாதிரி படுகொலைகளை அங்கு ஸ் ள போராளிகள் செய்தனரா, அல்லது இலங்கைக் கடற் படை செய்ததா, என்பது பற்றி நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே நமது கடற்பரப்பு எல்லையைத் தாண்ட வேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
எம்.பி., க்கள் இங்குக் கூறுவது கவலை தரும் விஷயம் தான். ஆனால் வரம்பைத் தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது.
-தினமணி 15-8-1997
இவ்வாறு தமிழ் இனத்தின் சிக்கல்கள் எழுப்பப் பட்ட போதெல்லாம், தில்லி ஆட்சியாளர்கள் பொறுப் பில்லாமல் பதில் அளித்துள்ளார்கள். காரணம்-தில்லி ஆட்சியாளர்களிடம் எள்முனையளவும் த ன்  ைம இல்லை. அவர்களால் தமிழ் இனத்திற்கு ஒரு முள் முனை அளவும் நன்மை இல்லை.
கச்சத்தீவு தாரை வார்ப்பு தமிழக அரசுப் பணியாளர்களின் பங்கு:
தமிழக அரசுப் பணியாளர்கள்: இவர்கள்,இட்லிக்கு அரைத்த மாவில் இடியாப்பம் அவிக்கும் வித்தையில் தேர்ந்தவர்கள், இவர்கள் கிழவியைக் குமரி என்பர். கிளிஞ்சலை முத்து என்பர். புழுவினைப் புலி என்பர். புலியினைப் பூனை என்பர். இவர்கள் கோடி கிடைத் தாலும் வாங்குவர்! கோழி கிடைத்தாலும் வாங்குவர்!
கையூட்டு-இவர்களுக்கு நெய்யூட்டு இவர்களது கையூட்டுப் பெறும் திறனால்தான் கச்சத்தீவு ஆவணங்கள், காணாமல் போன கோவணங்கள் ஆயின.

வரலாற்றில் கச்சத்தீவு 83
இவர்கள் கைகளை நீட்டினர்! 6566 நிரப்பினர் கச்சத்தீவைப் புறம்போக்கு ஆக்கினர். பின்னர், கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட அடங்கலி லிருந்தே நீக்கினர். *
விளக்கம்:- சென்னை மத்திய நில அளவு அலுவல கத்தின் ஹெச் 2, 38482/81, நாள் 29.09.1981 மற்றும் சென்னை நில அளவைப் பதிவாளர் அவர்களது ஹெச், 2. 38495/91, நாள் 11.09.1981 குறிப்பானை களின்படி, கச்சத்தீவை இராமநாதபுர மாவட்ட வரை படத்தில் இருந்து நீக்குவதற்கு இராமநாதபுர மாவட்ட ஆட்சியர், இராமேசுவரம் கிராமப்புல எண். 1250, சர்க்கார் புறம்போக்கு, கச்சத்தீவு ஆர்.சி.எப். 23, 75/83, பி.எ.சி. 6-02-82 குறிப்பாணையின்படி உத்தர விட்டார்.
இராமேசுவரம் வட்டாட்சியரும், 118/82 நாள் 19-02-82 மூலம், மாவட்ட வரைபடத்தில் இருந்து கச்சத் தீவினை நீக்க, டேராடூனில் இருக்கும் இந்திய வரைபட அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினார். அதன்படி இராமநாதபுர மாவட்டம் பட்டா சர்வே எண்: 1250. லிருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டது. இக்கொடுஞ்செயல் நடைபெற்ற போது புரட் சித் தலைவர் எம்.ஜி. இராமச் சந்திரன், தமிழக முதல் அமைச்சராக இருந்தார். (1982) தமிழக அரசுப் பணியாளர்களின் பங்கு இதோடு நிற்க வில்லை.
1951. 1961, 1971 ஆகிய ஆண்டுகளின் மக்கட் தொகைக் கணக்கெடுப்புப் பேரேட்டில் கச்சத்தீவு நீக்கப்பட்டுள்ளது. நினைவுக்கு வராத சிற்றுார்கள் எல்லாம் மக்கட் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப் பட்டுள்ளபோது கச்சத்தீவு மட்டும் விடுபட்டுள்ளது இதற்கு யார் உடந்தை?

Page 45
84 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
(The Sections of the Census Reports of 1951, 1961 and 1971, Pertaining to Ramanathaprsam district do not Contain any entry Releting to Kachchativu These Reports do, however, Contain entries relating to Several uninhabited Villages. why was kachchathivu . excluded from these Census Reports?)
அரசுப் பணியாளர்கள் தான் இதற்கு பதில் அளிக்க Causoit Gub.
செல்வி ஜெயலலிதாவின் முழக்கம்
1991 இல் நடைபெற்ற 10வது சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 163 இடங்களில் வென்றது. 4வது முறையாக அ.தி.மு.க. அரியணையில் அமர்ந்தது. புரட்சித்தலைவி செல்வி ஜெ. லலிதா 24-06-1991 இல் தமிழக முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். 05-05-1996 வரை அப்பதவியில் இருந்தார். ஆசியாக் கண்டத்தி லேயே மிக உயரமான கொடிக் கம்பம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. 15-08-1991 இல், அக்கொடிக் கம்பத்தில் மூவண்ணக் கொடியை செல்வி ஜெயலலிதா ஏற்றினார்; உரையாற்றினார்.
'தமிழக மக்களே! இந்தச் சுதந்தர நன்னாளில், 1974 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு அநீதியாக வழங்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெறுவோம்" நமது தீவை நாம் மீட்போம், தேவைப்பட்டால், மத்திய அரசோடு, தமிழக அரசு நியாயமான கோரிக்கையை எடுத்து வைக்கும். மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்க

வரலாற்றில் கச்சத்தீவு 85
வில்லை என்றால், நாம் போராடவும் தயாராவோம்" எனச் சூளுரைத்தார்.
அதே ஆண்டில் நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ் செழியன், தமிழக அரசு வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் கொணர்ந்தார். அப்போது அவர் தமிழக மீனவர்களின் நலன் கருதிக் கச்சத்தீவைத் திரும்பப் பெற தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும்" எனச் சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினர்.
முதல்வர் செல்வி ஜெயலலிதா 05.09.1991 இல் தி இந்து' இதழின் நேர்காணலின் போது, 'கச்சத் தீவைத் தாம் திரும்பப் பெற எடுத்துக் கொள்ளும் முயற்சி இனவெறியால் ஏற்பட்டதல்ல. (the demand was not motivated by 'Chauvinistic Consideration)" தமிழினத்தின் உரிமையைக் காத்திடவும், மீனவத் தமிழர்களின் உயிரைக் காத்திடவுமே கச்சத்தீவைத் திரும்பக் கோருகிறோம்" என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1993 ஏப்ரல் திங்களில், மீன் வளத்துறை மானியக் கோரிக்கையின் பேரில் தருக்கம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, கச்சத்தீவை மீட்பது சம்பந்த மாக மாநில அரசு எல்லா முயற்சிகளையும் செய் துள்ளது. இதற்கு மேல் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவண் அரசுக்குள்ள அதிகாரம் மாநில அரசுக்கு இருக்குமேயானா ல் , கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்து பறிமுதல் செய்வோம்” என்று கூறித் தனது கச்சத்தீவுப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். (சான்று 16-04-1993 நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்)
1998-இல் நடந் பாலுருமன்றத் . .தேர்தலில்
•#†ಸಿ తోల్దీ இத்ங்கம்ள

Page 46
86 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
வென்றது. அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த நால்வர் மத்திய அமைச்சர்களாய் இருந்தனர். இந்திய நாடாளுமன்றம், செல்வி ஜெயலலிதா ஆட்டிவைக்கும் பொம்மையாய் இருந்தது. அப்படி ஒரு வல்லாண்மை பெற்றிருந்தும் செல்வி ஜெயலலிதா, கச்சத்தீவுச் சிக்கலை எழுப்பவில்லை. மீனவர் சிக்கலை முடிக்க வில்லை. மத்திய, மாநில அரசுகளைக் கலைப்பதில் காட்டிய ஆர்வத்தை - வேகத்தை கச்சத்தீவை மீட்பதிலோ - காவிரி சிக் கலைத் தீர்ப்பதிலோ காட்டவில்லை,
அகில இந்திய பேராயக் கட்சியினர் (காங்கிரசார்),
இந்தியாவுக்குச் சுதந்தரம் வாங்கித் தந்தது தாங்களே எனக் கருதினர். பதவிகளை தங்களுக்குள் பகிர்ந்தனர்.
தமிழ்நாடு எ கிர்நோக்கியுள்ள கச்சத்தீவுச் சிக்கல், காவிரி உள்ளிட்ட கதிர்ேச் சிக்கல், சேதுகால்வாய்த் திட்டத்தை கிடப்பில் போட்ட சிக்கல், தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பயிற்று மொழி கொள்கையை அடுப்பில் போட்ட சிக்கல்; இவைகளில் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாது தமிழ்நாடு பேராயக் கட்சியினர் உறங்கினர். தில்லிகாங்கிரசுத் தலைவர்களுக்குத் தெண்டனிட்டே உயர்ந்தனர்.
எனவே, 1967 தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசு கவிழ்ந்தது; தமிழ் மண்ணில் அதன் வேர் அறுந்தது!
அன்று முதல், தமிழ்நாட்டுப் பெருமக்கள், திராவிட இயக்கங்களுக்கே தொடர்ந்து வா க் களித் து வருகின்றனர்.
ஆனால், திராவிட இயக்க அரசுகளோ, தமிழ் நாட்டின் சிக்கல்களை நடுவண் அரசிடம், துணிவோடு அவிழ்ப்பதில்லை. திராவிடப் இயக்கத்தை பெரும்பான்மை வலிவோடு அரியணையில் அமர்த்தி வரும் தமிழ்

வரலாற்றில் கச்சத்தீவு 87
இனத்தின் நலனுக்காக ஒருமித்தப் போர்க்குரல் எழுப்புவதில்லை.
பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள, பதுக்கிய செல்வங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தில்லியின் உறவுக்கே அணிமாறி, அனிமாறி கைகொடுப்பர்! தமிழ் இன உரிமைக்குக், குரல் கொடுக்க மறுப்பர்
திராவிட இயக்கங்களின் ஆட்சியில், உலகத் தமிழின மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கானல்கீர் ஆயின.
All their Vows are Mirages.
வண்ணத் தீவைத் தொலைத்தோம்!
சேது மன்னர்களாம், நெறியாளர்களின் கையிலி ருந்த கச்சத்தீவு வெறியாளர்களின் கைக்குமாறியது.
வாணிபத் துறைமுகங்களாம் திருமறைக்காடு (வேதாரண்யம்) அதிராமப்பட்டினம் தொண்டி, மண்டபம், இராமேசுவரம், ஆகிய துறைமுகங்களுககுத தமிழீழத்தமிழர்கள் வருவதைத் தடுத்தனர். அது போன்றே, தமிழீழக் கடற்கரை நகரங்களாம் பருத்தித் துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், ஆகிய துறை முகங்களுக்குத் தமிழ்நாட்டு வணிகர்கள் செல்வதையும் தடுத்தனர். இன்று அத்துறைமுகங்களை மூடினர்.
இன்று
இந்து மாக்கடலில், பூக்கள் உதிர்வதுபோல் தமிழனின் உடல்கள் உதிர்கின்றன.

Page 47
88 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
கச்சத்தீவு இன்று துக்கத்தீவு வீழ்வது தமிழன் என்பதால் விழி மூடிக்கிடக்கிறது தில்லி அரசு.
இன்று மீனவத் தமிழர்களின் மீளாத் துயரம்
தமிழ்நாட்டு மீனவன் கடலில் இறங்கினால் கள்ளத் தோணி எனவும், தமிழ் ஈழ மீனவன் கடலில் இறங்கி னால் விடுதலைப்புலி எனவும் பெயர் தட்டிப் பிடிக் கின்றனர். தமிழ் இனத்தையே அழிக்கின்றனர். இப்படித் தமிழன், கடலில் வதைபடுகின்றான் தரையில் புதைபடு கின்றான்.
மீன் பிடிக்க மீனவர்கள் கடலில் சென்றால் வான் பறந்து சிங்களவன் கீழே சுடுகின்றான்.
சிங்களவன் கையிலுள்ள சுழல் துப்பாக்கி, ஒரு முறை தும்மினால் ஒரு மீனவத்தமிழன் சாகினறான். கச்சத்தீவு கடல் பகுதியில் மீனவத் தமிழர்கள் தப்பித் தவறி சென்றாலும், வழி தவறிச் சென்றாலும் இயற்கை யின் சீற்றத்தால் எழும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டாலும், சிங்களவரின் கப்பல்படை அவர் களைச் தழ்கிறது. படகுகளைப் பறிமுதல் செய்கிறது. வலையையும், பிடித்த மீன்களையும் அபகரிக்கிறது. மீனவர்களையும் வதை செய்கிறது. பின்னர் கொலை செய்கிறது.
நீலக்கடலில், மீனவர் பிணம் மிதக்கிறது. நெய்தல் நிலத்தில் மீனவர் குடும்பம் தவிக்கிறது. தமிழின மீனவன் கருவறையில் இருக்கும் போதே, "கடலில் அவன் மரணம்? நிச்சயிக் கப்படுகிறதாம்.
படகோட்டித் திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பாடுவார்.

வரலாற்றில் கச்சத்தீவு 89.
'தரைமேல் பிறக்க வைத்தான்! -எங்களைத்
தண்ணிரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான் -பெண்களைக்
கண்ணிரில் குளிக்க வைத் தான்!"
'கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கண்டவர் யாரோ.
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் யாரோ.
"ஒரு நாள் போவார் மறுநாள் மடிவார்! ஒவ்வொரு நாளும் துயரம்தான்! ஒரு ஜாண் வயிரை வளர்ப்பவர் உயிரைப் பறிப்பவர் சிங்கள நரியர் தான்!" நெஞ்சுருக்கும் இத்திரைப்படப் பாடல்
நெய்தல் நிலத்தினிலே, நித்தமும் கேட்கிறதே! கடல்மடியில் நிகழ்வதெல்லாம் தமிழர்ச்சாவே -
கடல் அலையின் இசையெல்லாம் இரங்கற்பாவே இவர்கள், இரவிலே இறப்போம், என அறிவர். அறிந்திருந்தும் படகினைக் கடலிலே செலுத்துவர் சென்றால் தானே வலை நிரம்பும் குடும்பத்தின் வயிறு நிரம்பும்
இன்று நெய்தலில் இரங்கற் காட்சி
மீனவன்தன் மனைக்கிழத்தி
நெத்திலியாய் மெலிந்திருப்பாள் மீன்பிடிக்கக் கடல்சென்ற
கணவனையே பார்த்திருப்பாள்! வ 6

Page 48
90.
உணர்ச்சிக்கவிஞர் சிங்கா ரவேலன்
aur Gool - llu6urf கருக்கலிலே
வழிபார்த்து நின்றிருப்பாள் வந்திடுவான் அத்தான் என
கனவுபல கண்டிருப்பாள் பச்சரிசிப் பொங்கலிட்டுப்
பகிர்ந்துண்ணக் காத்திருப்பாள் பருவத்தை உள் அடக்கி
பால்நிலவில் வேர்த்திருப்பாள்
வரவிலையே கணவன் எனும்
கவலை எP உளம்துடிப்பாள் வருணனிடம் கைஏந்தி
விழிநீரை வடித்திருப்பாள்!
சூரியனின் ஒளிவரும்முன்
துடாகச் செய்திவரும்!
சுடுபட்ட கணவன் உடல்
கரைவந்து சேர்ந்ததென்றே
க்ரிகாலன் இனத்தோரின்
கடலாட்சி மறைந்ததனால்
கண்ணிரே மீனவப்பெண்
காவியமாய்த் தொடர்கிறதே!
தமிழ்க்கடலும் தமிழ்த்தீவும்
கைமாறிப் போயினபின்
தமிழ்ப்பரப்பில் சிங்களரே
கழுகுகளாய் மொய்க்கின்றார்!
கண்டவுடன் மீனவரைக்
கருணையின்றிச் சுடுகின்றார்!
கடலெங்கும் தமிழ்ப்பிணமே
காண்கின்றோம் தினம்தினமே

வரலாற்றில் கச்சத்தீவு 9
ஒரு கண்ணகி-கைம்பெண்ணானதற்கே. பாண்டிய மன்னன் உயிர் பிரிந்தது! மதுரை நகர் எரிந்தது! இன்றோ! ஆயிரம் ஆயிரம் பெண்கள் கைம்பெண் களாய்க் கடற்கரையில் நிற்கின்றனர். அதற்குக் கரண்ய மான, சிங்களவர்களில் ஒருவர் கூட சாகவில்லை.
இந்து முன்னணித் தலைவர் திரு. இராமகோபாலன், 'மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இராணுவத் துக்குத் தடை விதிக்கவும், அவர்களை ஏவி விடும் சிங்கள அரசு மீதும் நடவடிக்கை எடுக்கவும், ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டும்’எனக் கோரி யுள்ளார். (சான்று: 9-6-1997 நாளிட்ட தினமலர் இதழ்)
தமிழனுக்கு ஒரு நாடு இருந்தாலொழிய, தமிழன் குரல் ஐ.நா. மன்றத்தில் ஒலிக்காது. உலகமும் செவி மடுக் காது.
கச்சத்தீவில் தமிழர் வழிபாட்டுத் தலம் மூடப் பட்டது. தமிழ் ஈழ மக்களும், தமிழக மக்களும் கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு ஆண்டுக் கொரு முறை வருவர்! ஆண்டவனைத் தொழுவர் கச்சத்தீவு, சிங்களவர் கைக்கு மா றி யது ம் அந்தோணியார் கோவில் திருவிழா சிங்கள அரசால் நிறுத்தப்பட்டது. தமிழர்கள் வழிபாட்டுக்காகக் கச்சத் தீவுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
23.8-1974 அன்று, கச்சத்தீவில் புனித அந்தோணி யார் திருவிழா கொண்டாடத் தமிழர்கள் கூடினர். தீவில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவம் புனிதப் பயணி களைச் சூழ்ந்தது. பண்ட மாற்றுக்காக அவர்கள். கொண்டு வந்த பொருட்களைக் கவர்ந்தது.இராணுவம், காலணிகளைக் கூடக் கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது. வழிபடுவோரிடமிருந்த,புனம், 'நிை g
്?''' ' '

Page 49
92 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
முதலானவற்றைப் பறித்தது. உயிரைக் குடித்தது.
திருவிழா, பிணவிழா ஆனது." V
ரோமாபுரிவத்திக்கான் அரண்மனையில் விற்றிருக் கும் கிறித்தவ மதத்தலைவர். பாப்பரசர், "சமய வழிபாட்டு உரிமை"யைப் பறித்திட்ட சிங்கள அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை. பன்னாட்டு ஒன்றிய மனித உரிமைகள் நிலைக்குழு; அனைத்துலக 5GBouř LD6ö7 golub (U.N. Permanent Human Rights Commission International Jurists Commission) pau நிறுவனங்கள் இக்கொடுமையினைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கா திருப்பது ஏன்? மனித உரிமைகள் காப்பு அமைப்புகளெல்லாம் மெளனமாய் இருப்பது ஏன்? உலகிலுள்ள சமயச் சார்புடைய அமைப்புகளின் கண்களில் இக்காட்டுமிராண்டிச் செயல்கள் படாமல் இருப்பது ஏன்?
16.12-1971 இல் ஐ.நா. மன்றத்தில் உலக நாடு களால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இதுவே.
'இந்துமாக் கடலில் எந்த ஒரு அரசும் போர் விமானங்கள் மூலம் இக் கடலை ஒட்டியுள்ள மக்களை அச்சுறுத்தக் கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் ஐ.நா. சபையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானவை ஆகும்.'
மேற்கண்ட ஐ.நா. மன்றத் தீர்மானத்தை, அதில் அங்கம் வகிக்கும் சிங்கள இனவெறி அரசு ஏற்க வில்லையே ஏன்? தமிழன், கச்சத்தீவில் கடவுள் வழி பாட்டுச் சுதந்தரத்தை இழந்தது ஏன்? மீனவத் தமிழன், தமிழன் கடலில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்தது ஏன்? ஏன்? ஏன்?

வரலாற்றில் கச்சத்தீவு 93
ஏன் என்ற கேள்விக்கு விடை : தமிழனுக்குத் தீங்கு என்றால்தட்டிக் கேட்க யாருமில்லை. நியாயம் வழங்க நாதி இல்லை. அன்று, தமிழன், ஆங்கில ஆட்சிக்கு அடிமையானான். இன்று, தமிழன் தில்லி ஆட்சிக்கு அடிமையானான். தமிழ் இனத்தின் விடுதலைப் போர் தொடர்கிறது.
தமிழ் இனப் படுகொலை
தமிழ் இனப் படுகொலை யைத் தொடர்ந்து நடத்தி வரும் சிங்கள அரசுக்கு, ஒரு கருத்தியல் (Idealogy) பின் னணியாக உள்ளது. அது எதுவெனில் மொழி, மதம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றில் முற்றிலும் மாறு பட்ட தமிழினத்தை வேறுபடுத்துவதாகும். இதனைச் சிங்கள-பெளத்த இன வாதம் எனலாம். இந்த இனவாத வெறிப்போக்கு, சிங்களச் சமுதாயத்தில் ஆதிமுதல் இருந்து வருவதாகும். −
சிங்களப் பேரினவாதத்தின் முக்கிய நோக்கம் 'சிங்கள இனத்தவரை, இலங்கைத்தீவு எங்கிலும் நிலைபெறச் செய்வது; இலங்கையிலும், இந்தியா இலங்கைக்கு இடைப்பட்ட கடல்கள், தீவுகள் எங்கி லும் சிங்கள அரசின் வல்லாண்மையை நிலைநாட்டுவது
இதன் பொருட்டுத் தமிழ் இனத்துக்கும், சிங்கள இனத்துக்கும் இடையே LO 5 உணர்ச்சியை ஊட்டுவது, தமிழ் இனத்தை முற்றாக அழிப்பது."
கருத்தியல், மத இயல் அடிப்படையில் தீவிரமான தமிழ்ப்பகை கொண்ட ஆரவாரமிக்க புத்தக்

Page 50
94 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
துறவிகளே இக்கொடுஞ்செயல்களுக்குத் தூண்டு கோலாக இருப்பவர்கள்.
இலங்கைத்தீவில் நாட்டின் வளர்ச்சி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுச் சிங்கள பெளத்தப் பேரின வாதமே சிங்கள அரசை ஆட்டுவிக்கின்றது. தமிழினப் படுகொலையை ஊக்குவிக்கின்றது. சிங்கள இராணு வமோ தமிழரைப் புலிவேட்டை ஆடுகிறது. 'தமிழனைக் கொல்லாத நாளில்லை; அதைச் சொல்லாத காவில்லை."
gGOTUGG). It so Go (Genocide)
"சிங்கள அரசின் இந்தக் கொடூரச் செயல்களை இனப்படுகொலை (Genocide) என்றே குறிப்பிட வேண்டும். Genocide என்ற சொல், சட்ட அறிஞர் JdoGucib Gaolibás 6ör (Raphael Lemkin) 6T6övuguyn Gib உருவாக்கப்பட்டது.
நெ டுங் கா ல மா க நடந்து வரும் இனப் படுகொலை", எனும் கொடுஞ்செயலுக்கு இனம், நாடு, பழங்குடி என்ற பொருள் தரக்கூடிய "ஜினோஸ்" (Genos) எனும் கிரேக்க மொழிச் சொல்லையும், கொல்லுதல் எனும் பொருள் தரும் "சைடு" (cide) எனும் இலத்தீன் சொல்லையும் இணைத்து ஜினோசைடு" (Genocide) எனும் புதிய சொல், லெம்கின் அவர்களால் உருவாக்கப்பட்டது.
நாகரிக உலகத்தால் கண்டனம் செய்யப்படும் இனப்படுகொலை குற்றத்திற்கான தண்டனை குறித்து, 1948-இல் உலக நாடுகள் ஒரு ஒப்பந்தம் செய்தன. (Convention on prevention and punishment of the crime ot Genocide).
இனப்படுகொலைகள், அமைதிக் காலத்திலோ அல்லது போர்க் காலத்திலோ நிகழ்ந்தால் அது

வரலாற்றில் கச்சத்தீவு 、95
சர்வதேசச் சட்டத்தின்படி குற்றமாகும். அதைத் தடுப்ப தும் அதற்கான தண்டனையை வழங்குவதும் தமது கடமையாகும் என, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ள நாடுகள் ஒப்பந்த விதி எண் 1 இல் உறுதி செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 1961 சனவரி 12 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆனால் இன்றென்ன காண்கின்றோம்.
மீன்பிடிக்க மாலையில் சென்ற மீனவன், காலையில் திரும்பவில்லை. வெள்ளைக்காரன் வந்தானா? இல்லை சிங்களக் கொள்ளைக் காரன் வந்தான்; கண்டான்! கொன்றான். ஆக, இனப்படுகொலையின் சிகரத்தை சிங்களவர் அடைந்து விட்டனர். *
தமிழினத்தைக் கடலிலும் தீவிலும் கொன்று குவிக் கின்றனர். இனப்படுகொலை சட்டம் இங்கே நீட்டப் படவேண்டும். தமிழினப் படுகொலை தடுக்கப்பட வேண்டும். தமிழ் இனத்தின் வாழ்வுரிமைகள், காக்கப் பட வேண்டும்.
உலக அரசுகளுக்கு இதை உணர்த்திட வேண்டும். மனித உரிமை ஆணையத்திடம், இக்கொடுமைகள் அறிவிக்கப்பட வேண்டும்.
மனிதஉரிமை ஆணையம்,ஒரு தற்காலிகக் குழுவை (Adhoc Committee) நியமிக்க வேண்டும். அக்குழு இனவாதச் சிங்கள அரசின் நடவடிக்கையினையும் சிங்களக் கடற்படையின் நடவடிக்கையினையும் ஆய்வு செய்யவேண்டும்.
இனப்படுகொலை உள்ளிட்ட பெருமளவிலான மனித உரிமைகள் மீறப்படும் நிலைகுறித்துப் புலனாய்வு செய்ய வேண்டும்.

Page 51
96 ணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
jഞഖ (Economic. که طوك۴قه , ah IT & 6IT IT B IT W and Social Council) Gun g5 19* (General Assembly) Gust 6irp அமைப்புகளையும் முடுக்கி விடவேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவக் குடும்பங் களுக்குச் சிங் கள அரசை நிவாரணம் வழங்கச் செய்திட வேண்டும். அதற்காக அண்மையில் ஹாலந்து நாட்டில் ஹேக் நகரத்தில் ஐ.நா. மன்றத்தால் அமைக்கப்பட்ட சர்வதேசப் போர்க்கால குற்றரீதிமன்றத்தில் தமிழக மீனவர் களுக்காக வழக்குத் தொடர வேண்டும். அடுத்து சிங்கள் அரசின் இனப்படுகொலைச் செயல்கள் குறித்து குற்றச்சாட்டு அடங்கிய அறிக்கையினை உலக அரசர்
ரின் பார்வைக்கு வைத்திட வேண்டும்.
தமிழினத்தின் அடிமை வாழ்வை உலக மக்கள் அறிந்திடச் செய்திடல் வேண்டும்.
காசுக்கடலில் கச்சத்தீவு
புவியின் பரப்பில் 71% கடல் ஆகும். உலகில் உள்ள கடல்களின் மொத்தப் பரப்பு 30 கோடி கன சதுரமைல் எனக் கனக்கிட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டைச் துள்ள கடலும், அந்தக் கடலுக்கு மேல் உள்ள விண் வெளியும் உரித்தாகும்.
கனடா நாடு, தன் கடற்கரைக்கு நேரான கடலில் 180 மைல்கள் தொலைவுவரை "கனடா நாட்டுரிமைக் கடல்" என உரிமை கொண்டுள்ளது.

வரலாற்றில் கச்சத்தீவு 97
சிலி, ஈக்வடார், பெரு ஆகிய நாடுகள், அவை களுக்கு நேரான கடலில் 200மைல்கள் தொலைவு வரை சொந்தம் கொண்டாடுகின்றன.
இவ்வண்ணம் உலகநாடுகள் தங்களின் நாட்டு ரிமைக் கடலில் இறையாண்மை செலுத்துகின்றன. தங்கள் எல்லைக்குட்பட்ட ஆழ்கடலில் கனிவள ஆய்வு களை நடத்துகின்றன. i
மேலும், கடலில் உள்ள மீன், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முன் உரிமை வழங்குகின்றன.
தீவுகளைப் பெற்றிராத நாடுகள், கடலின் உள்ளே உள்ள மேடுகளைச் செயற்ககைத் தீவுகளாக்கி வளத்தைப் பெருக்குகின்றன.
இயற்கை-தமிழ் இனத்துக்கோ பொற்குவிக்கும் தீவையும் கடலையும் வழங்கி உள்ளது.
கச்சத்தீவும் அதன் சுற்றுக் கடலும்
இக்கடலில் கிடைக்கும் மீன் வகைகள் கணவாய் வாளை, சொடுவாய்ப்பாறை, திருக்கை, நீலசுறாமீன், பொன் வண்ணக்குறாமீன், முத்துச் செதிற்மின், குமிழ் வடிவக்கண் மீன், கருப்புமாளிக், கெளரா மீன், சிப்பிலி, சாதாவால், கோய்க்குண்டை , ஆபரண மீன்கள் (இவை ஆபரணம் போல் அழகாய் இருக்கும்) கீச்சான், பெரிய சுறா, முரல், உழுவை கடல் ஆரா கண்ணாடிமீன், விலாங்குமீன், கூனி இறால், செங்கேணி, கெளுத்தி பண்ணா, கெண்டை, கிளிமூக்குமீன், எருமை நாக்கு மீன், மடக்கெறால், கடல்மான், நெய்மீன், ஆளிமட்டி, நெய்தலி, வெள்ளை வெளவால் இறால், நண்டு எனப் பல்சுவை மீன்கள் கிடைக்கும், பணத்தை குவிக்கும்.

Page 52
98 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
இந்த மீன்களுக்கெல்லாம் தென்மேற்கு ஆசியா விலும், ஜப்பான் அய்ரோப்பா, வடஅமெரிக்கா போன்ற நாடுகளிலும் அமோக வரவேற்புண்டு. அதிக விலை கொடுத்து வாங்குவோரும் உண்டு.
இறால்மீன் ஏற்றுமதி நிறுவனங்கள், கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால்மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவர்.
உலகின் கடல்களில் உள்ள மீன்கள், பிற உயிரினங்கள் அனைத்தும் இன்று கச்சத்தீவை அடுத் துள்ள கடல் நோக்கித்தான் வருகின்றன!
கடலின் நீரோட்டத்தில் மாற்றம் அதுவே இதற்குக் காரணம் அதனால் தமிழனுக்குப் பேரின்பம்!
வருகின்ற மீன்கள்,எங்கிருந்து வருகின்றன என்பதை அறிந்திட வேண்டும். அவைகளுக்கு ஏற்ற தழ்நிலை மற்றும் அவை முட்டையிடும் பருவம் போன்ற விவரங் களைப் புரிந்திடவேண்டும். மீன்கள் அற்றுப்போகாமல் காத்திட வேண்டும். இதுவே இந்திய அரசின் கடமை. அதை விடுத்து, கச்சத்தீவையும், சுற்றுக்கடலையும் சிங்களவர்குத் தாரை வார்த்தது மடமை.
இன்றோ--சிங்கள இராணுவத்தினர் தமிழர்களைக் கொன்றிட, குண்டுகளை கடலில் பொழிகின்றனர். இதனால் சாவது தமிழர் மட்டுமல்ல; மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் அழிகின்றன.
கடலின் பாதுகாப்புக் கருதி, 1958-ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் 'கடற்கரை நாடுகள் தங்களது கடற்பரப்பில் தூய்மை

வரலாற்றில் கச்சத்தீவு 99
கெடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், சிங்கள இராணுவத்தினர் வானிலிருந்தும் கடல் பரப்பிலிருந்தும் -கச்சத்தீவு சுற்றுக் கடலில் உயிர் கொல்லிக் குண்டுகளை பொழிந்து கொண்டே இருக்கின்றனர்.
அதனால், சிஸியம், கந்தகம் போன்ற உலோகப் பொருள்கள் இக்கடல் நீரில் கலக்கின்றன.
இதனால், இக்கடலில் உள்ள மீன்கள் உயிர் வாழும் சக்தியை இழக்கின்றன.
உலகில்-ஜப்பான், ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகள் கடலில் மீன் இனங்களை வளர்த்தே நாட்டின் வளத்தைப் பெருக்கி வருகின்றன.
முதலீடு இல்லாத தொழில்-மீன்பிடித் தொழில்!
இத்தொழில் வளர்ந்தால் பன்னூறு கோடி உருபாக்கள்
மதிப்புள்ள அந்நியச் செலவாணி கிடைக்கும் நாடு சிறக்கும்!
கனிவளம்
கச்சத்தீவைச் சுற்றிமுலுள்ள கடல் பகுதிகளில் பல நூறு ஆண்டுகளுக்குப் போதுமான எண்ணெய் வளம் உள்ளது எனச் சோவியத் கடல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
கச்சத்தீவு-குமரிமுனை இடைப்பட்ட கடலுக்கடி tgio gd 6irant மேட்டுப்பகுதியில் யுரேனியம், பிளாட்டினம் கிடைக்கிறது. நிலத்தடி ஆய்வாளரின் அறிக்கை இதைக் கூறுகிறது.

Page 53
1 100 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
இக்கடலில் விலையுயர்ந்த வெண் சங்குகள் கிடைக்கும். இந்தக் கத்துக்கடல் விலைமதியா முத்துக் களைப் படைக்கும். இக்கடல் ஒரு முத்துக் களஞ்சியம் இங்கே கிடைக்கும் கடல்பாசி வெகுநேர்த்தி கடலினுள் வெள்ளைச் சுண்ணாம்புக் கற்கள் கிடைக்கும். சிமெண்ட் தயாரிக்கத் தேவைப்படும் ஓடக்கல், கால்சியம் கார்பனேட் எனும் கற்களும் இங்கே கிடைக்கும். ஆழ்கடலில் பவளப்பாறைகள் மின்னும் கிளிஞ்சல் ஒடுகள் குலுங்கும்! அவை, பணத்தை அள்ளும்!
கச்சத்தீவில் கடல் உணவு வகைகள் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கலாம்.
செய்தித் தொடர்பு நிலையம், தொலைநிலை இயக்கமானி-ராடார் (Radar) நிலையம் ஏற்படுத்தலாம்.
கடலில் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கு ஒரு மையம் நிறுவலாம்.
இத் தீவில் வீசும் காற்றில் சுழலக்கூடிய காற்றாடி கள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்.
நாட்டின் பொருளாதாரம் ஏற்றம்பெற, மேற்கண்ட வாறு கச்சத்தீவு உடன்படும்.
போர்க்காலங்களில்-கப்பற் படையினருக்கும் நீர் மூழ்கிக் கப்பல் படையினருக்கும் பயிற்சிக்களம் அமைத்திட, பழுதாகும் கப்பல்களையும் படகுகளையும் செப்பனிட, கச்சத்தீவு பயன்படும்.
போர் விமானங்கள் தற்காலிகமாக இறங்குவதற் குரிய திட்டாகவும் (Airship) இத்தீவு இயங்கும்!
பகைநாடுகளின் தீவுகளில் அமைக்கப்படும் ஏவு கணைத் தளங்களின் இலக்குகளுக்கு நேர்எதிரான ஏவுகணைத் தளமாகவும் இத்தீவு துலங்கும்!

வரலாற்றில் கச்சத்தீவு Of
இப்படி போர்முகாமைத்தீவு (Strategic Island) எனவும் கச்சத்தீவு விளங்கும்.
எனவே தோழா !
கச்சத் தீவைப் பொட்டலெனும் கயவர் கூற்றை மறுத்திடடா மெச்சத் தகுந்த கனிச்சுரங்கம்
மேலை நாட்டார் சந்தையடா! கொட்டிக் குவிந்தே கிடக்குதடா
கோடிச் செல்வம் தமிழ்க்கடலில் கச்சத் தீவு மிதப்பதுவோ,
காசுக் கடலில் புரிந்திடடா வெட்டிப் பேச்சை நிறுத்திடடா
வெல்லும் நாளைக் குறித்திடடா
போர் ஒன்றே வெற்றி தரும்
தமிழ்நாடு போன்றே, உலகின் வேறு நாடுகள் அவற்றிற்குச் சொந்தமான தீவுகளை இழந்தன; இழந்த தீவை மீட்பதற்காகக் களத்தில் இறங்கின. இழந்தது சிறு தீவு தானே மணல்மேடு தானே என எந்த நாடும் வாளா இருக்கவில்லை.
(உ. ம்.) ஐரோப்பாக் கண்டத்தில் ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானியக் கடற்கரைக்கும், பிரெஞ்சு நாட்டின் கடற்கரைக்கும் இடையே மின்கொயர்ஸ். ti, Grant (Minguires and Ecrehou) 6T6örp šonyt பாறைக் கூட்டங்கள் உள்ளன.
அவை இங்கிலாந்தை விட்டு நெடுந்தொலைவிலும், பிரெஞ்சு நாட்டின் அண்மையிலும் இருந்தன. அத்தீவு

Page 54
102 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
பிரஞ்சு நாட்டு ல்லைக்கு அருகே இருப்பதால் அவை தனக்கே சொந்தம் எனப் பிரெஞ்சு நாடு வாதாடியது. பின் போராடியது. தீவைத் தனதாக்கியது. அங்கே பிரெஞ்சுக் கொடியை ஏற்றியது
அதுபோன்றே பிரெஞ்சு மக்களுக்குச் சொந்தமான கிளிப்பர்டன் என்ற தீவை மெக்சிகோ என்ற நாடு கைப் பற்றியது. ஐ.நா நீதிமன்றத்தில் பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுத்தது; பயனில்லை, போர் தொடுத்தது. வென்றது! அத்தீவைத் தனதாக்கிக் கொண்டது!
பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள பால்மஸ் மியான் ஜஸ் எனும் தீவு நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது அத்தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. திடீரென்று ஒருநாள் நெதர்லாந்தினருக்குச் சொந்தமான அத்தீவை ஸ்பெயின், பிரெஞ்சுக்காரருக்குத் தாரை
வார்த்தது.
ஆனால், நெதர்லாந்து உலகநீதி மன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தது. வழக்கு நடந்தது. நெதர்லாந்துப் படை பொங்கி எழுந்தது. தீவை வென்றது.
பிரெஞ்சு மன்னன் ாட்டாம் சார்லஸ் இத்தாலி நாட்டுக்குச் சொந்தமான ரோம், நேபின்ஸ் ஆகிய நகரங்களைப் பிடித்துக் கொண்டான்
இத்தாலி சிறிய நாடாக இருந்தபோதிலும் ஸ்பெயின் ஜெர்மனி போன்ற வல்லரசுகளின் உதவியை நாடியது" அந்நாட்டுப் படைகளுடன் தன்
நாட்டுப் படைகளையும இணைத்தது. ப-ை எடுத்தது. இழந்த நகரங்களைப் பிடித்தது.
இப்படி இழந்த மண்ணை மிட்ட நாடுகளின் வரலாறு ஏராளம் Jy T6Th

வரலாற்றில் கச்சத்தீவு 03
ஆனால், அந்த மக்களுக்கெல்லாம் ஒரு நாடு, இருந்தது.
ஒரு கொடி இருந்தது.
ஒரு படை இருந்தது.
நாட்டின் இறையாண்மை அந்தந்த நாட்டவர் கைகளில் இருந்தது.
தங்களுக்கு மாற்றார் அ நீதி இழைத்த போதும் தங்களது மண்ணைக் கவர்ந்த போதும், பொங்கினர்
படையுடன் சென்றனர்!
பறிகொடுத்த மண்ணை வென்றனர்!
தமிழனுக்கும், அன்று நாடு இருந்தது. தமிழ்க்கொடி பறந்தது.
ஆர்ப்பரிக்கும் காலாட்படை, திகைக்க வைக்கும் தேர்ப்படை, அதிரவைக்கும் யானைப்படை, கலங்க
வைக்கும் கடற்படை, புயலாய்ப்பாயும் குதிரைப் படை இப்படித், தமிழ் மண்ணில் போர்ப் படைகள் இருந்தன. அவற்றைக் கண்டு பகைப் படைகள் பறந்தன.
அன்று, தமிழ் மறவர் கண்களிலே வீரம்
உள்ளத்திலே வேகம்!
கைகளிலே தீட்டிய வாள்!
கால்களிலே வீரத்தண்டை இருந்தன.
கரை முட்டி நிற்கும் நீர்ப்பரப்பாய் வீரர்கள் நின்றனர்! வில்லை வளைத்தனர். பகைவர் தம் பல்லை உடைத்தனர்.
கி.பி. 1141 முதல் 1173 வரை முதலாம் நரசிம்மன், கருநாடகத்தை ஆண்டான். இவன், காவிரியின்

Page 55
i04 உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன்
குறுக்கே செயற்கை மலையினை அமைத்தான், தண்ணிரைத் தமிழகம் செல்லவிடாமல் தடுத் தான்.
அன்று காவிரி பாயும் சோழநாட்டின் மன்னன் இரண்டாம் இராசராசன் காவிரி நீரைத் தடுத்திட்ட கருநாடக மன்னனுக்கு எதிராய்,
படை எடுத்தான்! அணை உடைத்தான்! காவிரி நீரைத் தஞ்சைக்கு வரவழைத்தான்! **காவிரி கண்ட சோழன்", எனப் புகழ்படைத்தான்!
"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்!" என முழங்கினர்.
சான்று ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப் பரணி, 'இன்றோ, தமிழனுக்கு நாடில்லை, கொடியில்லை, வெல் படையில்லை, வீரவாளில்லை.
படைமாட்சி அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லுவார்.
'உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை” குறள்-761 தமிழினம் பகைவென்று, இழந்ததை மீட்டிட, ஏற்றமிகு வாழ்வுபெற தமிழர்க்கொரு நாடு வேண்டும். நாட்டிற்கொரு தலைவன் வேண்டும். அத்தலைவனிடம் படை உறுப்புகள் அனைத்தும் அமைந்த, சமர் அஞ்சா, வெல்படை இருத்தல் வேண்டும்.
இதுவே, இறவாக் குறள் வரிகள்
வள்ளுவரை, மறவாப்புகழ் வரிகள்

வரலாற்றில் கச்சத்தீவு 195
எனவே, கச்சத்தீவு-சும்மா வாராது, சந்திரிகா அம்மா தராது. கச்சத்தீவு - வாய் வி ச் சி ல் கிடைக்காது, வாள் வீச்சில் கிடைக்கும்!
இன்றைய தமிழினத் தலைவர்களோ *கச்சத்தீவை மீட்போம்!” என முழங்குவர். பதவி கிடைத்தவுடன் உறங்குவர்.
விளையாட்டில் விரம்
**நான் தாண்டா ஒப்பன் நல்ல முத்துப பேரன் வெள்ளிச் சிலம்பெடுத்து வெளயாட வாரன் தங்கச் சிலம்பெடுத்து தாலிகட்ட வாரன்! வாரன்!! வாரன்!!!"
பண்டைய சடுகுடு ஆட்டத்தில் மூச்சுவிடாமல் பாடப்படும் பாடல் இதுவே.
அன்றைய தமிழர், பொழுது போக்கு விளையாட் டிலும் வீரத்தைக் காட்டினர். அறைகூவல் விடுத்தனர்.
இன்றோ, விலை மதிப்பில்லாத் தீவை இழந்தும் வீரமின்றிக் கிடக்கின்றனர்; இன்றைய தமிழ்நாட்டுத் தலைவர்கள்.
இந்தத் தலைவர்களைப் பார்த்துக் கவிஞர் கண்ணதாசன் கேட்கின்றார்.
'தடை எங்கே? படைஎங்கே? என்று கேட்ட தமிழ்இனத் தலைவர்களே நானு ரைப்பேன்! தடை இங்கே படைஎங்கே தலைவ ரெங்கே? தொடையின்று நடுங்குவதேன் பகல் நேரத்தில்
●」ー7

Page 56
உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
தூக்கத்தில் புலம்புவதேன் விரலை நீட்டி மடைபோல பேசிவரும் வார்த்தை யெல்லாம் மழையில்லா நிலமாகிக் காய்ந்த தென்ன? வாள்வலியும் தோள்வலியும் மறைந்த தென்ன?
- கவிஞர் கண்ணதாசன்
இளைஞர் படை எழும்பட்டும்
4-10-1904இல் சென்னிமயிைல் பிறந்தான்! ஆங்கிலப் படைக்கு எதிர் நின்றான்;
இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தான்;
தடைமீறி கொடிபிடித்தான்; உயிர் கொடுத்தான். (1-1-1932-இல்)
அவ்வீரனே, தமிழக மண்ணின் மைந்தன் திருப்பூர்குமரன்
யாழ்ப்பாணம் ஊராமு எனும் கிராமத்தில் 29-11-1963-இல் பிறந்தான்.
தமிழ் ஈழ மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க, தாயக விடுதலைக்கு எழுச்சியூட்ட, 12 நாட்களும் ஒரு சொட்டு நீரும் அருந்தாது பட்டினிப்போர் தொடர்ந்தான், 26.9.1987-இல் வீரச்சாவு அடைந்தான் அவ் வீரனே: தமிழ் ஈழ மண்ணின் மைந்தன் லெப். கேணல் திலீபன் .
இவ்விரு இளைஞர்களும் இலட்சியத்தின் உருவங் கள். புறநானூற்றின் வடிவங்கள். தமிழினப் போராளி

வரலாற்றில் கச்சத்தீவு 107
களின் அங்கங்கள். இந்தச் சிங்கங்களின் அடிச் சுவட்டில்
வா இளைஞனே வா!
வரிப் புலியாய்ப் பாய்ந்து வா!
"பார்த்தொழில் அனைத்தும் கொண்ட பயன்தரும் ஆலைக் கூட்டம் ஆர்த்திடக் கேட்ப தென்றோ?
அணிபெறத் தமிழர் கூட்டம் போர்த்தொழில் பயில்வ தெண்ணில்
புவியெலாம் நடுங்கிற் றென்ற வார்த்தையைக் கேட்ட நெஞ்சு
மகிழ்ந்து சுத்தாடல் என்றோ?" எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஆதங்கத்தை அகற்ற வா.
வெண்ணிலா மங்குமா? வெண்ணலை தூங்குமா? இளைஞனே எழுந்துவா இனப்பகை அழிக்கவா புறத்தினை காட்டவா! புகழ்தனை நாட்டவா
அன்று சிங்களவர், புழுக்களாய் நெளிந்தனர்1 இன்று, கழுகுகளாய் வளர்ந்தனர்!
குண்டுகளை பைகளில் நிரப்புகின்றனர்! துப்பாக்கி யும் கையுமாய்ச் சேதுக் கடலில் அலைகின்றனர்!
தாங்கிக் கொண்டிருந்த காலம் போதும் -இனி தாக்க வேண்டிய காலம் வாரும் "சாகின்றாய்த் தமிழா சாகின்றாய் -உன்னைச் சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல்
Prêairps"

Page 57
108 உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
எனப் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் குமுறுவதைக் GaseBh
தமிழ் இனப்பெண்களே! தாழ்வு மனப்பான்மையை அகற்றுவீர்! பிரஞ்சு நாட்டிலுள்ள mr brufS) (Domremy) 6 T SEO h கிராமத்தில், பாமர விவசாயக் குடும்பத்தில் 6-1-1431 இல் வீரமங்கை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தார். பிரஞ்சு மக்களின் விடுதலைக்காக வெற்றிப்படை நடத்திச் சிறந்தார்.
அந்த வீராங்கனையை நெஞ்சில் நிறுத்துவீர்! நிமிர்நடை போடுவீர்!
மானமே நமக்குத் தாலாட்டு! மரணமே நமக்கொரு விளையாட்டு வீரனாய் வளர்ந்திடப் பாலூட்டு வேழமாய்ப் பாய்ந்திட சோறுரட்டு
சுரதாவின் அழைப்பு
"பூ மணக்கும் தமிழகத்தில் சாவொலிக்க
வேண்டுமா? பாமணக்கும் தேன்மொழியில் ஓலமிட
Gehuest GSDIT? நா மணக்கும் காப்பியத்தில் தீமுட்ட வேண்டுமா? வா மகனே! வா மகளே! தமிழினத்தைக் காக்கவா"
என, உவமைக் கவிஞர் சுரதா, உயிர்க்கஞ்சா இளைஞர் களை, மண்மீட்க அழைக்கின்றார்.
"கூப்பிடு பகைவரை கூப்பிடு பகைவரை
கொத்திக் கிளறிக் கொன்றிடுவோம்!

வரலாற்றில் கச்சத்தீவு 109
காப்பிடுவோர் தமிழ் அன்னையின் கால்களில்
கைகளை வெட்டிப் பங்கிடுவோம்!" எனப் போர்ப்பரணி பாடுகிறார், இந்நூலாசிரியர் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்.
'கர்ப்பத்தில் இருக்கும் தமிழனும் தமிழனுக்குத் தனிநாடு வேண்டும்" எனக் கூவ வேண்டும்.
இளந்தமிழர் செவிகளில் அது ஏற வேண்டும்.
விடுதலையின் நினைவோடு விடிவு வரும் கனவோடு புலிபோலப் பாய்கின்ற போர்ப்படையின் மல்லர் காள்! எரிமலையாய் எழுந்திடுவீர் இனங்காக்க விரைந்திடுவீர்! தமிழ்த்தீவை மீட்டிடுவீர்! தமிழ்மானம் காத்திடுவீர்!

Page 58
*
--』『------
 

| |-占唱4日%9991Fung曾与电gg眼点圆目励ue电9点4dg与©® Izfozqi@rtorf) mono googeo pangor s-a불ogn8홍4느5명 또 4的5g同學.9%Mucia-여
ܒܒ ܥ ܐ

Page 59
உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன்
அவர்களின் படைப்புகள்
தடை கடந்து காவிரியே தமிழ்நாடு வந்துவிடு. (கவிதை நூல்)
சுதந்தரம் பேசுகிறது.
உணர்ச் சிக் கவிஞர் சிங்காரவேலன்
வாழ்க்கை உலா,
வரலாற்றில் தமிழ் ஈழம்.
காவி உடையில் பாவி உலா.
தமிழ் ஈழப் போர்ப் பரணி. (கவிதை நூல்)
நாம் தமிழர் இயக்கம்.
வரலாற்றில் கச்சத்தீவு
உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் கவிதைகள்,


Page 60


Page 61

-
1ங்காரே ாம்தழிழர் இயக்கம்
_ ہے