கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழர்

Page 1
HHHHH
 

|-

Page 2


Page 3

1D606MILIJj Jifupi
சாரல் நாடன்
மலையரசி பதிப்பகம் /ே10, முதல் குறுக்குத் தெரு, ைெனட்டெட் இந்தியா காலனி.
சென்னை-600024

Page 4
srdbado delagfiliado Mahadir (opuarga அஞ்சல் பெட்டி எண் தே0ே Carrow -6300 094
இலங்கையில், மலையக வெளிவிட்டகம்
7. மகிந்தா பிளேஸ் கோழும்பு.8
Rodamos
மலையகத் தமிழர் 0 ஆசிரியர் : சாரல்நாடன்
வெளியீடு : மலையரசி பதிப்பகம் முதல் பதிப்பு: அக்டோபர் 1890 a favoue : Mfuggåsa அட்டைப்படம் : ஜி. சி. சேகர்
uisi 4B alabar : Gagata areagatafo grafo, Galegiten gura-84

பதிப்புரை
மேகங்கள் தவிழ, வான் முட்டி நிற்கும் மலைகளையும் மடுக்களையும் கண்ணிரும், செந்நீரும்-வியர்வையும் சிந்தி தமது கடுமுழைப்பால் பெருத்தோட்டங்கள் ஆக்கி இலங்கை யின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் மலையகத் தமிழ் மக்கள்.
அவர்களின் ஒரு பகுதியினராக 1984 இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடு கடந்து தமிழகத்திலும். தென்னிந்திய மாநிலங்களிலும் வந்து குடியேறி வாழும் தாய கம் திரும்பிய மக்கள்
வாழ்க்கை, வரலாறு, கலை, இலக்கியப் படைப்புகளை அம்மக்களைச் சார்ந்த எழுத்தாளர்களின் - கவிஞர்களின் படைப்புகளை வெளிக்கொணரும் பொருட்டு "மலையரசி பதிப்பகம்" ஆரம்பிக்கப்பட்டது.
அதன் முதல் வெளியீடாக வெளிவந்த வண்ணச் சிறகு கவிதைகள்’ கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து.

Page 5
நீண்ட இடைவெளிக்குப்பிறகு-"மலையகத் தமிழர்" என்னும் இந்நூலினை வெளியிடுகிறோம்.
மலையகத்தின் பிரபல எழுத்தாளர் சாரல் நாடன் எழுதிய மலையகத் தமிழர் குறித்த வரலாறுப்படைப்பு இலங்கையில் வெளிவந்த பிரபல வாரப்பத்திரிகையான *செய்தி"யில் தொடர்கட்டுரையாக 1988 வாக்கில் வெளி
வந்தது.
இந்நூலின் மையப்பொருள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளி வந்துள்ளன. இச்சிறு வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் புதிய தகவல்களைத் தருகிறார்.
இதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.
- பதிப்பாளர்
22 O-1990

சிறப்புரை
இருபதாம் நூற்றாண்டில் புதியதொரு சமூகம், தோன்றி யது-சூரியன் மறையாத நாடு" என்று சொல்லுமளவிற்கு உலகமெங்கும் கொடி கட்டிப்பறந்த பிரித்தானியர் தாம் பிடித்த நாடுகளிலெல்லாம் காலனி ஆட்சியை ஏற்படுத்தினார் கள். தாம்பிடித்த நாடுகளில் இருக்கும் செல்வங்களையெல் லாம் திரட்டி தமது நாட்டிற்கு கொண்டு சென்றனர். அந் நாடுகளிலுள்ள நீர்வளத்தையும், நிலவளத்தையும், கணி வளத்தையும், சுரங்கங்கள், பெருந்தோட்டங்களை ஆரம்பித்து சுரண்டத் தொடங்கினர். இதற்காக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து கூலிகளைத் திரட்டி காலனி நாடுகளில் , குடி யேற்றினர். இப்படி குடியேற்றியதன் மூலம் புதியதொரு சமூகம்-"தோட்டப்புற சமூகம்" உருவானது.
தமிழகத்திலிருந்து தமிழ்மக்கள் குடிப்பெயர்ந்து, இலங்கை யின் தோட்டப்புறங்களில் குடியேறியதன் மூலம் அவர்களும் ஒரு தோட்டப்புற சமூகமாக மாறினார்கள். இச்சமூகமாக உள்ளடங்கிய இந்தியத்தமிழர்களாகிய இம்மலையகத் தமிழர் வாழ்வு இருள் குழ்ந்தது. இவர்கள் குடியேறியது முதல் ஒரு நூற்றாண்டு வரை தோட்டமுதலாளிகளின்.அவர்கனை

Page 6
"ஆள்கட்டி"க் சென்ற கங்காணிகளின் அடக்கு முறைக்கும் கொடுமைகளும் ஆட்பட்டு அடிமைகளாக வாழ்ந்தார்கள்
இருட்டு நேரம் வெளுக்கும் முன்னே மலையேறி "தன்னி கருத்து தவணைசத்தம் கேட்டப் பின் வீடு திரும்பும் கொடுமை யான வாழ்க்கையில் சிக்குண்டு எந்த சிந்தனையுமின்றி வாழத்தொடங்கிய இவர்களது வாழ்வில் 1930-க்குப் பின் விடிவு பிறக்க ஆரம்பித்தது.
முப்பதுகளில் இவர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்து இவர்களை பற்றுச்சீட்டு’ என்கிற கொத்தடிமையான வாழ்விலிருந்து விடுதலை செய்ய ஆரம் பித்ததோடு, தொழிலாளர்களுக்குரிய உரிமைகள்ை மெல்ல மெல்ல பெற்றுக்கொடுக்கத் தொடங்கின,
இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்ப்பத்திரிகை களும், சஞ்சிகைகளும் வரத்தொடங்கின; அதுமட்டுமல்ல; தமிழக நாடகக் கலைஞர்கள் வந்து நாடகங்கள் நடத்தினர். 'தமிழகத்திலிருந்து வந்த பத்திரிகைகள், நூல்களை வாசித்தும் நாடகங்களைப் பார்த்தும் உத்வேகம் பெற்ற இச்சமுகத்தின், இளைஞர்-மூத்த தலைமுறைகள் கூட இந்த நாடகங்களை தாமே போடத்தொடங்கினர்; தாய்மண்ணிலிருந்து ஏற்கனவே பயின்று-பழக்கப்பட்டு வைத்திருந்த 'காமன் கூத்து" போன்ற திாட்டுப்புற கலைகளை அரங்கேற்றத் தொடங்கினர். கதை கட்டுரை, கவிதைகள் என்று எழுதவும் தலைப்பட்டார்கள்.
ஆரம்பத்தில் மக்கள் கவிமணி அமரர் வி.வி.வேலுப் பிள்ளை போன்ற சிலரே பத்திரிகைகளில் எழுத்தத் தொடங்கி son frfassir,
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் தான் மலை யகத்தில்-தோட்டப்புற சமூகத்தின் கலை, இலக்கிய உலகில் ஒரு மறுமலர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. கலை-இலக்கியத்தில் ஈடுபாடுள்ள இளைஞர்கள் பலர் எழுதத் தொடங்கினார்கள்.

மாணவர்களும், பெண்களும் என்று பக்க்ங்கள் ஒதுக்கு வது போல-எல்லசத்துறைகளில் "தீண்டத்தகாதவர்"கள் இால ஒதுக்கப்பட்ட மலையகத் தமிழர் சார்ந்த எழுத்தாளர் கன், கவிஞர்கள் படைப்புகளுக்கு தமிழ்ப்பத்திரிகைகள் பக் கங்கள் ஒதுக்கி வழிவிடத் தொடங்கின.
இந்த காலகட்டத்தில்தான் “செய்தி" என்கிற வரம் பத்திரிகை கண்டியிலிருந்து வெளிவரத் தொடங்கின. aos ஆரம்பித்து தடத்திய திரு.ரா.மு.நாகலிங்கம் இந்த ஏட்டின் மூலம் மலையக கலை இலக்கிய உலகிற்கு பெருந்தெரின் டாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பிரவல எழுத்தாளர்களின் படைப்புகளும் இந்த ஏட்டில் இடம் வெற் றன. பிரபல எழுத்தாளர் அமரர் கி.வா.ஜகந்தாதன், நாடகத் தத்தை பம்மல் சம்பந்த முதலியார் போன்றோருக்கு மணிவிழா மலர் வெளியிட்டு சிறப்பாக கொண்டாற்றியது.
அதுமட்டுமல்ல; மலையகத்திலிருந்து புற்றீசல் விோல சிறுபத்திரிகைகளும் வெளிவந்தன. ஆயினும் மலைங்க எழுத்தாளர்கள், கவிஞர்கள் படைப்புகள் Le 549êamas களிலேயே வந்தனவே தவிர நூல் உருவம் பெறவே இல்லை.
அறுப்துகளில், மூதலாவது கவிதைத் தொகுப்பு நூலான "குறிஞ்சிமலர்' கவிஞர் குமரனின் "தூவானம் தொ, சிக்கன் ராஜாவின் 'தாயகம்" என்று குறுநாவலும், "கதைக்கனி' என்ற தொகுப்புமே இவளிவந்த குறிப்பிடத்தக்க நூல்கள்.
சமீபகாலமாகத்தான், மலையக எழுத்தாளர்கள்.கவிஞர் களின் படைப்பு ஏராளமாக துரல் வடிவில், வெளிவரத் தோடங்கியிருக்கின்றன.
மலையக வெளியீட்டகம் தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் நிர்வாகியாக சேயல்படும் திரு அந்தணிவோ உழைப்பும் அவராத ஆர்வமும்
mig (STJANT M.

Page 7
அந்த cassosfusio மலையகத்தின் gusu எழுத்தாளர் "சாரல் நாடன்' எழுதிய "மலையகத் தமிழர்” என்ற இந்த வரலாற்று நூல் தனக்கேயுரிய பணியில் புதிய விடங்களை நோக்குகிறார்.
மலையகத் தமிழர்களின் வரலர்ற்றை விவரிக்கும் இவர் இதில், அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் குடி பெயர ஏதுவான காரணங்கள், இலங்கை மலைத் தோட்டங் களில் பட்டதுயர் குறித்து விவரிப்பதோடு, மலையக மக்கள் மத்தியில் வழக்கிலிருந்து சொற்கள் என்ன கருத்தோடு பயன் படுத்தப்பட்டு வருகின்றன, இவற்றில் பொதிந்துள்ள அர்த் தங்கள் மூலம் தாம் தெரிந்துக் கொள்ளக் கூடியது என்ன மற்றும், இவர்கள் வாழும் மலைத்தோட்டங்களின் பெயர்கள் சூட்டப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பது போன்ற விபரங்கள் தருகிறார்.
சாரல் நாடன் அவர்களின் எழுத்துக்கள் மலையக இலக் கியத்திற்கு வலிமை சேர்ப்பன மட்டுமல்ல; இதுபோன்ற ஆராய்வுகள் வரலாற்று ஆசிரியர்களுக்கும், மொழியாய்வாளர் களும் பயனுள்ளவைகளாக விளங்கும் என்பது ஐயமில்லை.
கே. எஸ். ராஜா
ஆசிரியர்
மக்கள் மறுவாழ்வு" சென்னை894,
4-9-1990

1
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று நல்லுள்ளப் பான்மை பாடிய பூங்குன்றனார் வாழ்ந்த பூங்குன்றத்தின் சுற்றுவட்டமான இராமதாதபுரம், மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடித்த அழ கான தென்மதுரை ஆதிய பழந்தமிழ் ஊர்களிளெல்லாம் வரட்சி பரவத் தொடங்கிய நாட்கள், திரைகடலோடியும் திரவியந் தேடு என்று ஆக்கத்திறன் வளர்த்த தமிழர்கள் திரைகடலோடிதான் திரவியம் தேட வேண்டுமென்ற நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப் பட்ட நாட்கள், “எத்திசைச் செலினும் அத்திசைக் சோறே" என்று அதியமானுக்கு எதிர் நின்று ஒளவையார் பாடிய மனோநிலை தமிழர் வாழ்வில் எல்லாம் படர்ந்த நாட்கள். -
தென்னிந்தியத் தமிழர்கள் தங்கள் தாயகத்தை விட்டு முன்பு வாணிபம் நடாத்தவும் போர் புரியவுமே கடந்த கடலை இம்முறை வயிற்றை நிரம்ப வேண்டி கடந்து சென்று மலாயா ஆபிரிக்கா, பீஜித் தீவு, இலங்கை ஆகிய நாடுகளிலெல்லாம் குடியேறத் தொடங்கினர்.
குடிபெயர்ச்சி
வாழ்வாங்கு வாழ்ந்ததெல்லாம் பொய்யாய்க்கனவாய் பழங்கதையாய் ஆகிவிட்டபோது மனிதர் குடிபெயரத் தொடங்குகின்றனர்.

Page 8
ஆரியர்களின் குடிபெயர்ச்சிக்கு அவர்களிடையே நிலவிய வறுமைதான் காரணம் : சீனரும் யப்பானியரும் இந்தியரும் இன்று உலகமெல்லாம் பரவி வாழ்ந்து வருவதன் காரணமும் இதுதான் தென் இதாலி, அயர்லாந்து, ஸ்கொட் லாந்து ஆகிய நாட்டுக் குரியவர்களெல்லாம் வடஅமெரிக்கா வில் குடியேறியதன் காரணமும் இதுதான்.
தாட்டின் நிலைமை மக்களை வெளியே தள்ளுகிற தென்பதால் மாத்திரம் மக்கள் இன்னொரு நாட்டில் குடி யேறிவிடுவதில்லை. அவர்களை கவர்ந்திழுக்கிற சக்தியும் அங்கே இருக்க வேண்டும். வரலாற்றாசிரியர்கள் Pushing, Puing என்ற இரண்டு சொற்களில் குடிபெயர்ச்சியின் காரணங்களை குறிப்பிடுவது இதனால் தான்,
தாய்நாட்டை விட்டு இவ்வாறு பிறநாடுகளில் சென்று குடியேறி வாழத்தொடங்கும் மக்கள் தங்களின் சக்திக் கேற்ப குடியேறிய இடங்களை வளப்படுத்தினர். தங்கள் உழைப்பால் வளப்படுத்திய வாழ்வகத்தையே தாயகமாகக் கருதி இன்று புதியதோர் இனமாக வரலாற்றில் இடம்பெற்று ட மக்களுண்டு அமெரிக்கரைப் போல. விட்டு வந்த தாயகத்தில் உள்ள பற்றைவிட முடியாததாலும், தாயகத் தோடு நேரடித் தொடர்பு இல்லாது போனதாலும் வாழ்வகத் தில் பற்று பிறவாது போனதாலும் இடர்பட்டு, சீர்கெட்ட மக்களுண்டு, தமிழரைப் போல,
வாழ்வகத்தைத் தாயகமாகக் கருதாது இடர்படுகிற குறைபாடு, கடல் கடந்த தமிழினம் முழுமைக்கும் பொது வானது. இலங்கை மலைத் தமிழர் மட்டும் இதற்கு விலக் கல்லவே !
உள்ளோட்ட வரலாறு
வட அமெரிக்காவில் குடியேறி தாங்கள் முதலில் கண்டு, கேட்டு, உண்டு மகிழ்ந்ததையெல்லாம் ஜோர்ஜ் பேர்ஸி
JO

என்பார் தம்முடைய Observations எனும் நூலில் எழுதி வைத்திருக்கிறார். கம்பீரமான காடுகள், மலரும் ւյք(Մուն நிறைந்த மரங்கள், வானில் திரிந்தபறவைகள், வான்கோழிக் கூடுகள், சிவப்பிந்தியரின் இருப்பிடங்கள், அவர்கள் உண வாகக் கொள்ளும் சிப்பி மீன்கள் இவைகளை யெல்லாம் குறித்துவைத்து தங்கள் முதல் அனுபவத்தின் பரவசத்தை வெரிப்படுத்து மவர், முடிவில் சிவப்பிந்தியர்களின் கடுமை யான தாக்குதலையும், அதன் விளைவுகளையும் நாட்டின் தட்பவெட்ட நிலை காரணமாகவும் உணவில்லாக் காரணத் தாலும் வாடிவதங்கி மாண்டுமடிந்து செத்த நாயிலும் கேவலமாக இழுத்தெறியப்பட்ட கோரமுடிவையும் வெளி யிட்டுவைத்திருக்கிறார். புதிய தோர் இனமாக இன்று வர லாற்றில் இடம் பெற்று விட்ட அமெரிக்கர், ஆதியில் அனுப வித்த இடர்பாடுகள், சமாளித்த இடுக்கண்கள், வெற்றி கொண்ட தடைகள் இவைகளையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதைப் போல, இலங்கை மலையகத்தில் காலடி காணாத காட்டுப் பிரதேசம், வானம் எட்டிநிற்கும் மலைகள், அதில் வாசம் செய்கின்ற கொடுமையும் குரூரமும் மிக்க விலங்குகள், அந்த விலங்குகளிலும் மோசமான எஜமானர்கள், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத தட்பவெட்பம், இவைகளை யெல்லாம் ஏற்று எதிர் நீச்சல் போடும் முயற்சி ஆகியவை களையெல்லா மறிந்து கொள்ள நமக்குத் துணையாயிருப் பவை எவை?
உழைப்பு ஒன்றையே தங்களின் வாழ்க்கை அளவு கோலாகக் கொண்டுவிட்ட இந்த மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத்தரம், மதநம்பிக்கை, மனோபாவம் இவைகளையெல்லாம் தெரிந்துகொள்ள -சாலைகாணாத ம்லை நிலத்தில் முதலில் அவர்கள் அனுபவித்த மன உணர்வுகளை அறிந்து கொள்ள என்ன இருக்கிறது ? எங்கு நோக்கினும் உழைப்பின் காட்சியணியாக விளங்கும் இன் றைய மலையகத்தோடு போட்டால் தின்பேன், வைத்தால் சுமப்பேன்" என்கிற விலக்கு நிலையிலிருந்து வேறுபடாத இந்த பரிதாபத்துக் குரியவர்களின் வாழ்க்கையை இணைத்
1

Page 9
துப் பார்க்கையில் வெளிப்படுகிற வேதனை பெருமூச்சுக்கும் ஏக்கப் போருமலுக்கும் வழியமைத்த நிகழ்ச்சிகளை நாமெதன் மூலம் அறிந்துகொள்ள ?
மனஉணர்ச்சியை அப்படியே பிரதி பலிக்கிற கண்ணாடி யான வாய் மொழிப் பாடல்கள், ஓரளவுக்கு மனிதர்களின் உளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்ற அவர்களது இருப் பிடங்களின் பெயர்கள் ஆகியவைகளோடு, ஆங்கிலேயர்கள் எழுதி வைத்திருக்கிற குறிப்புகள், தொழிலாளர் சம்பந்தமான சட்டங்கள், அவை உருவானதற்கான சூழ்நிலை ஆகியவை களைக் யெல்லாம் மிணைத்துவைத்துப் பார்க்கையில் மலையக சமுதாயத்தின் உள்ளோட்ட வரலாற்றை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ளலாம்.
மலையக முக்கியத்துவம்
கடல் கடந்து பிரயாணம் மேற்கொண்ட ஆங்கிலேயர் களின் முக்கிய நோக்கம் பொருளிட்டு வதேயாகும், தாங்கள் குடியேறிய நாடுகளின் மண்வளத்தையும் பயன்படுத்திக் கொண்டு பயிர்ச் செயகை வியாபாரம் ஆதியன மூலம் அவர் கள் பொருளிட்டினர். தென் அமெரிக்காவில் குடியேறிய போது அதன் மிகப் பரந்த நிலப்பரப்பில் தோட்டங்களைத் திறந்தார்கள், நியூ இங்கிலாந்தில் குடியேறிய போது ஒடுங்கிய பள்ளத்தாக்குகளும், வளமற்ற மலைநிலமும், தோட்டங்கள் திறக்கத் தடையாயிருந்த போது சுற்றுப் புறத்தின் இயற்கை வனப்பையும், வசதியையும் தங்கள் வளர்ச்சிக்குப் பயன் படுத்த தவறாத அவர்கள் அங்கு வளர்ந்துகிடந்த மரங்களை யெல்லாம் வெட்டி எடுத்து கப்பல் கட்டுவதற்கான மூல பொருட்களாக்கி பணம் குவித்தார்கள். நீரில் வாழ்ந்த மீன் களையெல்லாம் பிடித்து விற்றார்கள். உள்நாட்டில் சிவப் பிந்தியர்களுக்கு சிறுசிறு அணிமணிகளையும் (Trinket) வெல்லச் சாராயத்தையும் (Rum) கொடுத்து விலைமதிப் புள்ள ஆட்டு ரோமங்களை வாங்கி வியாபாரம் பண்ணினர்.
இவ்விதம் குடியேறிய நாடுகளிலெல்லாம் தங்கள் குபேர வாழ்க்கைக்கு வழியமைத்துக் கொண்ட ஆங்கிலேயர்
2

இலங்கைக்கு வந்ததன் மிகப் பெரிய பயனை அனுபவிப்பதற் கான முதல் ஏற்பாட்டை இலங்கையில் காலடி எடுத்து வைத்த பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் செய்து முடித்தனர். ஆமாம்! அவர்கள் மலைநாட்டின் தலை நகரான கண்டியை 1815-ல் கைபற்றிய பின்னர்தான் குடி யேற்ற நாடான இலங்கையை குபேர வாழ்க்கையின் மூல தனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1824-ல் முதல் கோப்பித் தோட்டத்தைத் திறந்ததன் பின்னர் தான் என்று சொல்லவேண்டும்.
இலங்கையை ஆளவேண்டுமானால்.
உண்மையில் இலங்கைத் தீவை ஆள எண்ணுபவர்கள் மலைநாட்டை ஆட்படுத்த வேண்டும். பொருளாதாரத் துறை யாயிருந்தாலென்ன, அரசியற்துறையாயிருந்தால் என்ன, இரண்டுக்கும் இந்த உண்மை பொருந்தும், இலங்கையின் வரலாற்றோடு மலையகத்தின் இயற்கை அமைப்பு அவ் வளவு நெருக்கமாக இணைந்து விட்டிருக்கிறது. மலை நாட்டின் இயற்கை அமைப்புதான் இலங்கை யின் சுதந்திர ஒலியை இறுதிவரை எழுப்பி நிற்க உதவியது. கண்டியை கைப்பற்றினாலன்றி இலங்கையில் தங்களாட்சியை நிலைநிறுத்த முடியாதென்ற முடிவுக்குதானே ஆங்கிலேயரும் வந்தனர். இன்றும்கூட அரசியல் கட்சிகள் தங்களின் அரசி யல் கோஷங்களைப் பலப்படுத்த வேண்டி தொழிற் சங்கங் களை மலையகத்தில் அமைத்து வருவதை நாம் கண் கூடாக காண்கிறோம்.
கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றிய போது ஆலயங்
களுக் கருகேயும், அரண்மனை தோட்டங்களிலும் மகாவலி
கங்கைக் கரைகளிலும், அருகே அமைந்திருந்த angurankot
எனுமிடத்திலும் கோப்பி வளர்ந்திருப்பதைக் கண்டார்கள்,
அரேபியர்களே இலங்கைக்கு இதனைக் கொண்டுவந்தன
夏器

Page 10
ரென்றும், அரேபியர்கள் ஜாவாவில் பயிரிட்டதை டச்சுக் காரர்கள் இலங்கையில் அறிமுகம் செய்தனரென்றும், கோப்பி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறித்து கருத்து வேறுபாடு இருப்பினும், கோப்பிக் கொட்டைகளைப் பயன் வடுத்திக் குடிநீரகம் உற்பத்தி செய்கிற முறையைக் சிங்கள வர்கள் அறிந்து வைந்திருக்கவில்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட முடிபாகும். சிங்களவர்கள் கோப்பி இலை களை கறி தயாரிக்கவும், அதன் மென்மையான மலர்களை ஆலயங்களை அழகு பண்ணுவதற்கும் மாத்திரமே பயன் படுத்தினர்.
2
ம்ேபளைக் கருகில் 1824-ல் முதல் கோப்பித் தோட் டத்தை George Brd என்பவரும், அவரது சகோதரன் Colonel Bird என்பவரும் திறந்து வைத்தனர். அப்போது தேசாதிபதியாயிருந்த எட்வர்ட் பார்ன்ஸ் அவர்களும் மிகுந்த ஊக்கமூட்டினார். இருந்தும் என்ன? அவர்களின் முயற்சி இலாபம் தரவில்லை. தன் சகோதரன் "காலரா? நோய்வாய்பட்டு இறந்ததன் பின்னர் ஜோர்ஜ் பேர்ட் குண்ட சாலையிலும், பின் இம்புலபிட்டியிலும் கோப்பித் தோட்டங் களைத் திறந்தார். எனினும் அவரது முப்பத்துமூன்று வருட கால முயற்சியாலும் அவர் சம்பாதித்தது "தோட்டப் பயிர்ச் செய்கையின் தந்தை" என்ற பெருமை ஒன்றை மட்டும் தான் S
ஆனால் அவரது முன்மாதிரியைப் பின்பற்றி மற்றும் s
ஆங்கிலேயரும், உள்ளூர்க் குடியானவரும் ஏராளமான
கோப்பித் தோட்டங்களைத் திறந்திருந்தனர். 1887க்குப்
14

பிற்பட்ட காலங்களில் கோப்பி பயிர்ச் செய்கையில் மிகுந்த ஈடுபாடு காணப்பட்டது. மலைநிலத்தில் ஒழுங்கான முறையில் {Systamatic Seale) Gastrů aš CSS ru"Lấs6ir 6pisů படலாயின. 1889 வாக்கில் இலங்கையில் Hemileia atatrix எனும் கோப்பிச் செடி நோய் பரவியது. ஆரம்ப காலத்தில் இதைப்பற்றிபலரும் அசிரத்தையாகவேயிருந்தனர்" இதே காலத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கோப்பி பின் மதிப்பு கூடுவதாயிற்று. எனவே மேலும் மேலும் கோப்பித் தோட்டங்களைத் திறப்பாராயினர். அதன் பயனாக நுவரெலியா தொடங்கி டிம்புல, டிக்கேயே மஸ்கெலியா ஆகியவற்றுக்கூடாக சிவனொளிபாத மலை அடுக்குவரைப்பட்ட மேட்டு நிலங்களில் பயிர்ச் செய்கை இடம் பெறலாயிற்று. இந்த மலையடுக்குப் பாறை நிலம் (Wilderness of the Peak) sys) using uujir (955 Julras ஒதுங்கிய நிலமாயிருந்தது. அப்போது தேசாதிபதியாயிருந்த சாஹேர்குலஸ் ராபின்சன் பாதைகள் வெட்டியும், பாலங்கள் அமைத்தும் இப்பகுதியில் தோட்டத் திறப்பு பிரவாகத்தை ஊக்குவித்தார்.
1880-ல் ஏற்பட்ட கோப்பி நோயின் பலத்த தாக்குதல் குடியானவர்களையே அதிகம் பதிப்பதாயிற்று. நோய் பரவிய விடங்கள் இவர்களுக்குரித்தானவையே. ஆங்கிலேயத் தோட்ட முதலாளிகள் இந்த நோயின் பலத்ததாக்குதலி லிருந்து தப்பிப்பதற்கான ஒரு காரணம் மலை அடுக்குப் பாறை நிலத்தில் திறந்திருந்த தோட்டங்களேயாம். இந்தப் பகுதிகளில் தோட்டங்களைத் திறக்கும் முயற்சியில் உள்ளூர்க் குடியானவர்கள் சிரத்தைக் காட்டவில்லை. இந்த நிலத்தின் செங்குத்தும் பயங்கரமும் கடுமையான கட்டுப்பாடான உழைப்பை வேண்டி நின்றது தான் காரணம்,
எனினும், இந்நோயின் தாக்குதல் ஆங்கிலேயர்களை விழிப்படைய வைத்தது. எல்லாத் தோட்டங்களிலும் ஒரே இன பயிரை விளைவிப்பதன் காரணமாய் ஓரிடத்தில் ஆரம்ப மாகிற நோயின் தாக்குதல் மலையகத்து தோட்டப் பயிர்ச்
5

Page 11
செய்கை, முழுவதையுமே குறுகிய காலத்தில் பாதிக்க வழியமைக்கிறது என்பதை அறிந்து கொண்ட அவர்கள், ஒரே பயிர்ச் செய்கை (Mono Culture) முறையை விடுத்து கோப்பி, தேயிலை, கொக்கோ, சிங்கோனா ஆகிய நான்கு பயிர்களையும் விளைவிக்கலாயினர். ஒரு சில ஆண்டுகளின் பின்னர் தேயிலையே-தோட்டங்களில் ஏராளமான அளவில் மீண்டும் ஒரே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு விட்டனரோ என்று எண்ணத்தக்க விதத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக ரப்பர் பயிர்ச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பலனாக ஆங்கிலேயேரின் சுரண்டல் நிலைக்க வாய்ப்பு உண்டாயிற்று.
இவ்வாறு தோட்டப் பயிர் செய்கைக்கு இலங்கை மலை நிலம் ஏற்ற இடமென்பதை கண்டுகொண்ட ஆங்கிலேயருக்கு இந்த கைபடாத காட்டுப் பிரதேசத்தை அழித்துப் பண்படுத்தி பயன்படுத்த உழைப்பாளர்கள் தேவையாயிருந்தனர்
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் இம்மலைப் பிரதேசங்களில் மர அடர்த்தியற்ற வெளிகளில் சிங்கள கிராமங்களிருந்தன. என்றாலும் மூவாயிரம் அடிக்கு மேற் பட்ட பிரதேசங்களில் மனிதர்கள் வாழ்ந்தன ரென்று ஆதாரப் படுத்த முடியவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் திறந்த தோட்டங் களுக்கு பரந்த நிலபரப்பு தேவையாயிருந்த காரணத்தால், முன்பு அவ்விடங்களிலிருந்த சிங்கள குக்கிராமங்கள் அழிக்கப் பட வேண்டியதிாயிற்று. எனவே அவர்கள் அங்கிருந்து வெளி யேற்றப்பட்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட தோட்டங்களில் சிங்கள குடியான வர்கள் வேலை செய்ய முன்வரவில்லை. இதற்கான முக்கிய காரணம் ஒன்றுண்டு. ஆங்கிலேயர்களால் தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை அவர்கள் மறக்க வில்லை. அதனால் அவர்களின் கீழ் வேலை செய்ய அவர்கள் விரும்ப
6

வில்லை. எனினும் கால ஓட்டத்தில் படிப்படியாக திறக்கம் பட்ட ரப்பர் தோட்டங்களில் சிங்கள குடியானவர்கள் சேர்ந்து உழைப்பாராயினர். சிங்கள மக்கள் வசித்த ஈரலிப்பு தாழ் நிலத்திலேயே ஆரம்பத்தில் இந்த ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டதால் அவர்களுக்கு வீட்டுக்கருகிலேயே வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. மேலும் சிங்கள குடியானவர்களின் பொருளாதார நிலை இந்த காலத்தில் மோசமானதாயிருந்தது. இதனாலேயே அவர்கள் தோட்டங் களில் வேலைக்கமர்வாராயினர்
என்ற போதிலும், செங்குத்தான மலைச்சரிவுகளிலும் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களிலும் வருந்தி செயல்படுகிற, உழைப்பாளர்களாக ஆக அவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி முன் வரவில்லை. சப்ரகமுவா பகுதிகளில் நாள் சம்பளம் முப்பது சதமாயிருந்த போது நுவரெலியா போன்ற உயர்ந்த மலைப்பிரதேசங்களில் உழைப்பவர்களுக்கு முப்பத்தாறு சதம் கொடுத்தார்கள். உழைப்பின் கடுமையையும், வாழ்க்கை யின் வசதியின்மையையும் இது காட்டும்.
ஆங்கிலேயத் தோட்ட முதலாளிகள் உழைப்பாளர்களை வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்ப்பாராயினர். இதேகாலத் தில் அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் தென்னிந்தியாவில் விளைச்சல் மோசமான தாயிருந்ததன் பயனாக உணவு பற்றாக் கொடுமை மக்களைப் பிடித்தாட்டுவதாயிற்று. குடி பெயர்ச்சிக்கான Pushingம். Pullingth இணைத்து தென்னிந்தியத் தமிழர்களை இலங்கைக்கு வர வழிபண்ணின. 1900-ம் ஆண்டு இலங்கை பிலிருந்து 206718 court. Indian Famine Relief Fund dise. அனுப்பப்பட்டது.
வறுமையும் திரை கடலோடலும்
இலங்கை மலையகத்திற்கு வந்திருக்கிற தமிழக தொழி லாளர்களில் எண்பது சதவிகிதத்தினர் திருச்சி மாவட்டத்
7

Page 12
தையும், இராமநாதபுர மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவ்விரண்டு பிரதேசங்களும் தமிழ்நாட்டின் வரட்சிப் பிர தேசங்கள்.
வறுமை காரணத்தால் தான் இந்தியத்தமிழர்கள் இலங்கை மலையகத்துக்கு வந்தார்களென்பதற்கு வளம் கொழிக்கும் கோவையிலும், தஞ்சையிலுமிருந்து கூலிகள் யாரும் இங்கு வரவில்லை என்பதால் உணரலாம்.
தமிழ்நாட்டில் திருச்சியும், ராமநாதபுரம் போல ஐக்கிய ராஞ்சியத்தில் ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் இருந்தன அந்தாட்டவர்களான ஸ்கொட்லாந்தியரும், ஐரிஷ்காரர்களும் சமூக ஏற்றத்தாழ்வினாலும், வறுமையினாலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தென்னிந்தியாவிலிருந்து வெளியேறிய தமிழர்களுக்கும், ஐக்கிய இராஜ்யத்தை விட்டு வெளியேறிய ஸ்கொட்லாந்தி யருக்கும் இரண்டு முக்கிய ஒற்றுமைகளைக் காணலாம். தென்னிந்தியாவை விட்டு வெளியேறிய தமிழர்களில் பலர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; ஐக்கிய இராஜ்யத்தில் ஸ்கொட் லாந்தியரும் ஐரிஷ்காரரும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப் பட்டவர்கள்; மற்றது வறுமை.
இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் சுமுக உறவு இல்லாத இக்கட்டான இந்த நிலையில் சூரியனே மறைவ தில்லையானதாக பிரித்தானிய ஏகாதிபத்தியம் வளர்வ தாயிற்று. ஆகவே ஸ்கொட்லாந்தியர் இராணுவ வீரர்களாக -வும், கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி ஊழியர்களாகவும் நாடுவிட்டகன்றார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப் பாவிலிருந்து கிளம்பிய இரு பெரும் குடியிறக்கங்களை ஜெர்மன் அலை, ஸ்கொட்ச்.ஐரிஸ் அலை என குறிப்பிடுவர்.
ஸ்கொடச்.ஐரிஸ் மக்கள் தைரியமும் துணிச்சலுமிக்க வர்கள். அவர்களும் மதக்கொடுமையும், வறுமையும் தாங்
18

காது வந்தவர்கள் தாம் எனினும் அஞ் சாநெஞ்சமும் அறிவுக் கூர்மையும் மிகுந்தவர்கள். அமெரிக்காவில் புதிய தொரு சமுதாயம் அமைக்கும் பணியில் அவர்களாற்றிய தொண்டு மிகப்பெரிது.
இந்த சிதையா நெஞ்சும், சிக்கன வாழ்வும், ஆக்கத் திறனும் கொண்டு அவர்கள் வெளிநாட்டில் பேரும், புகழும், செல்வமும் பெற்றனர். இலங்கை வரலாற்றிலும் அவர்கள் பங்கு குறிப்பிடத் தகுந்த ஒன்றுதான்.
ஸ்கொட்லாந்தியர் பங்கு
இலங்கைக்கு முதலில் வந்த ஆங்கிலேயனான றொபர்ட் நொக்ஸ் ஒரு ஸ்கொட்லாந்தியன், இலங்கையின் முதல் தேசர்திபதி சேர். பிரட்ரிக் நோர்த் ஸ்கெசட்லாந்தியர்தான். முதல் மகாதேசாதிபதியான "சேர்ஹென்றி மூரும் ஸ்கொட் லாந்தியரே. தேசாதிபதிகளில் அதிகமானோர் ஸ்கொட்லாந்தி யரே. தோட்டப்பயிர் செய்கையிலீடுபட்ட ஆங்கிலேயர்களிலும் -ஸ்கொட்லாந்துக்குரியவர்களே அதிகம்.
3
தென்னிந்தியாவிலிருந்து இலங்கை 8 மலையகத்துக்கு
வெளியேறிய தமிழர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறை
யத் தொடங்கிற்று. இதற்குக்காரணம் இங்கு நிலவிய மோச
மான வாழ்க்கை நிலைமையேயாகும். இலங்கை Gissir suffs
வியாவின் அண்டைநாடாக இருந்தும், இரண்டு நாடுகளுக்கும்
19

Page 13
நீண்டகால கலாசாரத் தொடர்பிருந்தும், மலாயாவில் இலங்கையிலிருந்ததைவிட வாழ்க்கைத்தரம் நன்றாக இருந்த படியால் (1890-1919) தமிழர்கள் கூலிவேலை செய்ய அங்கு பெருவாரியாகச் சென்றார்கள். இந்த நிலைமையில் வலுக்கட்டாயமாக ஆள்சேர்த்தும் Srimpling இலங்கைக்கு வந்தவர்களை தோட்டம் விட்டுச் செல்ல முடியாதவாறு தடுத்தும் Botting நிலைமையை சமாளிக்க வேண் டியதாயிற்று,
இலங்கை மலையகத்துக்கு வந்த தென்னிந்தியத் தமிழர் கள் இங்கு நிலவிய மிகமிக மோசமான வாழ்க்கைத் தரத்தை விரும்பாது உடனே திரும்பிச் செல்லத்தான் விரும்பினர்.
"கொங்காணி போட்டும் பழக்கமில்லை. நாங்க கொழுந் தெடுத்தும் பழக்கமில்லை சில்லறை கங்காணி சேவுகமே-எங்களைச் சீமைக்கு அனுப்புங்க சாமி சாமி
என்று முடியும் எண்பத்தெட்டு வரிகளையுடைய மலையகம் கதைப்பாட்டு இந்த உண்மையை வெளிக்காட்டும் தென் னிந்தியத் தமிழர்களை திரும்பிச் செல்லவிடாது தடுத்த பணியில் ஆள் சேர்த்துதவிய பெரிய கங்காணிகளின் LäGE கொஞ்சநஞ்சமன்று. இங்கு நிலவிய வாழ்க்கையடைப்பு எவ் வளவு மோசமானதாக இருந்திருப்பின் தோட்ட மூதலாளி மார்களின் சம்மேளனம் முன்வந்து இவர்கள் வாழ்க்கைத் தரத்தை சீர் திருத்துவதற்கான சட்டங்களை வெளியிட அப் போதைய சட்ட மன்றத்தை தூண்டியிருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தல் வேண்டும். பர்மா, மலாயா ஆகிய நாடுகளில் மக்கள் கூலிகளாகச் சென்று பெருவாரியாக குடி யேறியதைக் கண்ட இவர்கள் வாழ்க்கைத் தரத்தின் சீர் கேடே இதற்குக்காரணம் என்பதை மிக A56ðir poras 65 Mpša Garcérsal.
ஆரம்பத்தில் இலங்கைக்கு , கூலிகளாக கொண்டுவரப் பட்டவர்கள் பிரயாணச் செலவுக்கான பணம் செலுத்த
O

வேண்டியிருக்கவில்லை. இங்குள்ளவர்களே அதற்கானச் செலவை ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு உதவிப்பெற்று இங்கு குடியேறியவர்கள் இலங்கை தோட்டங்களில் கூலி வேலைகளில் அமர்த்தப்படும் ஒப்பந்தத்துக்கு &ì6ơorälá? யிருந்தார்கள். ஆனால் கடல் கடந்தேனும் பொருள் தேடி வரவேண்டிய நிர்ப்பந்த நிலையில் வாழ்ந்த தென்னிந்தியர் தங்கள் செலவிலேயும் வந்து குவியலாயினர். குடியேற்ற புள்ளி விபரங்களை பார்க்கும் போது உதவி பெற்று வந்தவர்களைவிட உதவி பெறாது தங்கள் செலவிலே வந்தவர்களே அதிகமானோர் என்பது தெரியவரும்.
உதவிப்பெற்ற குடியேற்றக்காரர்கள் தொகையும் உதவிப் பெறாத குடியேற்றக்காரர்கள் தொகையும் 1929ல் முறையே 1,05,095 பேரும் 1,88,048 பேரும் 1980ல் முறையே 9,422 பேரும் 1,14,889 பேரும் 1981ல் முறையே 68,837 பேரும் 1,00,864 பேரும் 1982ல் முறையே 50,859 பேரும் 9,289,பேரும் 1983ல் முறையே 32,898 பேரும் 88,358 பேரும் ஆகும்.
உதவிபெற்றோ, பெறாமலேயோ இலங்கையில் குடி யேறிய தென்னிந்தியர்கள் "தேயிலைக்கடியில் பொன்னும் மாசியும் இருக்கும்" என்று எண்ணி ஏமாந்ததை உணர்ந்த உடனேயே திரும்பவும் தென்னிந்தியா திரும்பத் தொடங்கி , அவ்வாறு திரும்பத் தொடங்கியவர்களில் தங்கள் சொந்த செலவிலேயே வந்தவர்கள் தானதிகம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
உதவி பெற்று வந்தவர்களும் ஏனையோரும் 1929s முறையே 1,01,228 பேரும் 1,40,744 பேரும், 1930ல் முறையே 98,728 பேரும் 1,42,488 பேரும், 1931ல் முறையே 75,868 பேரும் 1,19,889 பேரும், 1932ல் pap0au 658, 157 Guoth 1, 18, 142 G Luth, 1988ö முறையே 48,848 பேரும் 1,82,877 பேரும் ஆகும்.
el

Page 14
தோட்டத்தில் தொழில் செய்யும் ஒப்பந்தப்படி வந்தவர் கள் செல்லமுடியாது விழித்தனர். இந்திய அரசாங்கத்தில், இலங்கையில் குடியேறிய இந்தியர்களின் நலனை பாதுகாக்க வென்று செயல் தலைவர் ஒருவர் நியமிக்கப் பட்டிருந்தார். இந்திய தொழிலாளர்கள் வசிக்கும் தோட்டங்களுக்குச் சென்று, அவர்களின் நிலைமையைக் கண்டறிய அவருக்கு அதிகாரம் கோடுக்கப்பட்டிருந்தது. (Immigration Fun) லிருந்து உதவி பெற்று இலங்கைக்கு வந்த ஒருவனை, வந்த ஒரு வருட காலத்தில் செயல் தலைவரின் கருத்துப்படி உடல்நிலை மோசமாயிருந்தாலோ, தகுதிக்கு ஒவ்வாத வேவை செய்தாலோ மேலதிகாரியின் நேர்மையற்ற முறைக் காட்பட்டாலோ, எங்கிருந்து வந்தானோ அங்கேயே இலவச மாக அனுப்பப்பட வேண்டிய நியதி இருந்தது. இருந்தும் என்ன? கால்களில் விலங்கிட்டு வெளியே செல்லலாம் என்று சொன்ன கதைதான் ! உலகில் எங்கும் இது நடந்ததாக யாரும் கூறுவதில்லை.
தோட்ட ஜனத்தொகை
தோட்ட ஜனத்தொகையில் Estate Population தாழ் நில சிங்களவர், கண்டியச் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கை முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம் கள், ஐரோப்பியர், பறங்கியர், யூரேசியர், மலாய் நாட்டினர் என்ற பல்வேறு இனமும் வகுப்பும் கலந்திருந்தன. ஆங்கி லேயர்களில் பெரும்பாலானோர் தோட்ட முதலாளிகளாகவும் முஸ்லிம்கள் வியாபாரிகளாகவும்பணியர்ற்றினர். மலைநிலத்துக் கூலிகளுக்குத் தேவையான கம்பளி, உடைகளை விநியோகிக்க 06 sir Gp (Cumbly and Cooly Cloth Supplors) assol. திறந்து அதன் பயனாக கொள்ளை லாபம் கண்டனர் இந்த முஸ்லிம் வியாபாரிகள், சாய்புகளைப் போல பரவலாக, இல்லா விட்டாலும், ஆங்காங்கே செட்டியார்களும், சிங்கள வர்களும் கடை திறந்திருந்தனர். உடலுழைப்பைக் கொடுக்கும் கூலி வேலைகளைத் தென்னிந்திய தமிழர்களே செய்வச் ஆயினர். முஸ்லிம்களிலும் பலர் கூலிகளாயிருந்தனர்.

1889-ல் தொழில் சட்டத்தின் 18-ம் பிரிவின் 8-வது ஷரத்தில் தொழிலாளிகள் என்பதற்கு ‘இந்தியரும், துலுக்க கும்" என்றே பொருள் தரப்பட்டிருக்கிறது.
காட்டையும், மேட்டையு மழித்து சீசீ திருத்தி பயிர்ச் செய்கைகளுக்கான விளைநிலமாக்கிய பெருமை தென்னிந்திய தமிழர்களையே சாரும். யுத்த நெருக்கடி காலத்தில் புதிது புதிதாக போர் வீரர்களை பெருக்கிய இந்திய அரசாங்கம் இந்தியாவிலிருந்து மக்கள் வெளி நாடுகளில் சென்று குடி யேறுவதை தடுத்தது. 1917-ல் நடைமுறைக்கு வந்த இச் சட்டத்தின் காரணத்தால் இலங்கைக்கு வந்து குடியேறியவர் களின் தொகை குறையலாயிற்று. 1916-ல் 115718 பேர் வந்திருக்க 1917, 1918-ம் ஆண்டுகளில் 47293, 4384 என அரைவாசிக்கும் குறைவதாயிற்று. இது எந்த அள வுக்கு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியைத்தடை செய்திருக்குமானால் 1920 செப்டம்பரில் இலங்கை அரசாங் கம் இந்திய அரசாங்கத்திடம் இலங்கையின் தரிசு நிலங்களில் தமிழர் குடியேற்றம் ஏற்படுத்த உதவும்படி கேட்டிருக்கும். என்பதை கவனித்தல் வேண்டும்.
1989 மே 18ல் தமிழக கூலிகளை தென்னிந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் இலங்கையரல்லாதோர் நாளாந்த சம் பளம் பெறும் தொழிலாளர்களாய் இருப்பதை முடிவு செய்ய வும் தீர்மானங்கள் மேற்கொள்ளப் பட்டன. அவை குறித்தே 1939 ஜூலை 18 ல் பண்டித ஜவஹர்லால் நேரு இலங் கைக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. *
இருபத்தினான்கு மணிநேரத்தில் நாடு கடத்தியே ஆவது ன்ேறு அரசியற் தலைவர்கள் முழங்கினர். இத்தனை ஆண்டுகளாகி விட்ட பின்னும் இந்த 6T gorgeorh கைகூடாமைக்கு உழைக்க அஞ்சாத இந்திய வம்சாவழி பினரை இழப்பதால் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பைத் தாங்கமுடியா தென்பதே காரணம் என்று கூறல், பொருந்தும்.
28

Page 15
இவர்களின் வருகையால்தானே மலையகம் பொருளிட்டும் சுர்ங்கமாகியது. காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு காசு பயிர் கள் நடப்பட்டதற்கும் பாதைகள் திறந்து தொடர்பு பால மாகியதற்கும் இவர்களின் வருகையும், உழைப்புந்தாமே காரணங்கள். கொழும்பிலிருந்து கண்டி, நாவலப்பிட்டி, அட் டன், பதுளை ஆகிய நகரங்களையெல்லா மிணைத்துவிக்க நீண்டு நெளிந்த தொடர்வண்டிப்பாதைகள் இவர்கள் கரங்க ளால் உருவானவை. அவைகள் தோன்ற வேண்டிய அவசியமே அவர்கள் வருகையால்தான் ஏற்பட்டது. : (Ff, ஹென்றி வார்டிக் தேசாதிபதியின் வருகையை சரித்திர as flufasir (The man and the hour had arrived together) என்பார்கள். அவர் சாதித்ததுதான் என்ன ! இலங்கையின் பொருளாதாரம் கோப்பி பயிர்ச் செய்கையில் தங்கியிருக்கிற தென்பதை உணர்ந்து தொடர்வண்டிப் பாதைகளையும், வழிகளையுமமைத்து குடியேற்றக்காரரை ஊக்குவித்ததுதான்
முக்கிய நகரங்களிலிருந்து தோட்டங்களுக்கு வழிகள் அமைத்து குடியேற்றக்காரரை ஊக்குவித்ததுதான்
முக்கிய நகரங்களிலிருந்து தோட்டங்களுக்கு வழிகள் அமைத்து கோச்சு வண்டிகளை பயன்படுத்துவதற்கான தேவையும் இந்த உழைப்பாளர்களின் வருகையால் தான் ஏற்பட்டது. இன்று அட்டன் ஊடாக சிவனொளிபாத மலையை நோக்கி இலகுவாகச் சென்றடைகிற வழி 85 வருடங்களுக்கு முன், கோச்சுவண்டி செல்லத்தானும் இலாபக்கற்றதாயிருந்தது. 1903 GF'Luhurif 1 & -6io 5 (T 6ðir பொகவந்தலாவைக்கும் அட்டனுக்கு மிடையில் கோச்சு வண்டி உபயோகம் மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு இந்த நாட்டில் காலடி எடுத்துவைத்தது முதல் இந்தாட் டின் பொருளாதாரத்தை அயராது உழைத்து அபிவிருத்தி செய்யுமிவர்களை இலங்கைக்குத் தொடர்ந்து கொண்டு வருவதற்குதான் எத்தனை எத்தனை சூழ்ச்சிகளும், ஏமாற்று வித்தைகளும் மேற்கொள்ளப்பட்டன ? அதன் சூத்திர தாரி களாகத்தான் எத்தனை பேரிருந்தனர் ?
34

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேறியவர்களோடு சம்பந்தமான சட்டங்களை அமுல் நடத்தும் பொறுப்பு Garbst) absoor u retrf (ThD Commissioner of Labour) glaucuf (3).J. if a rurgirit (The Protectora of Emigrants) ஆகியோரிடமிருந்தது. இவர்களுக்கும், தோட்ட முதலாளி களுக்கும் நேரடித் தொடர்பு இருக்க இடையிலே தூது வேலை பார்த்த பெரிய கங்காணிகளின் ஒத்து வேலைக்கு வசதி கிடைத்தது. கங்காணிமார்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான தனி உரிமை கொழும்பிலிருந்த கட்டுப்பாட்டதிகாரியால் மட்டுமே வழங்கப்பட்டது. குடியேற்றக்காரர்களைக் கொண்டு வந்த தோட்ட முதலாளிகளுக்கும் (Recruiting Allowance ஆள் சேர்ப்பு சலுகை ஆண்டுக்கு இருமுறை கொடுக்கப் பட்டது. ஆள் சேர்க்கும் கைங்கரியத்தில் ஈடுபட்ட பெரிய கங்காணிமார்களுக்கு துரைமார்களிடம் செல்வாக்கிருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இந்த ஆள் சேர்ப்பு சலுகைக்கான Aubas RDR '(g) (9-(5uip 65 (immigration Fund) 660 bgy பிரயாணச் செலவுக்கான பணம் பெற்ற வேலை செய்யக் கூடிய தொழிலாளர்களை கொண்டு வந்திருத்தல் வேண்டும் என்ப வாகும். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும், வேலை செய்யக்கட்டிய தொழிலாளர் வகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட மக்களுக்கான பிரயாணச் செலவு மாத்திரமல்ல, வழியில் சாப்பாட்டு வசதிகளையும் இலவசமாகவே செய்து வந்தனர்.
சோற்றுக் கடையிலே சாதஞ் சாப்பிட துட்டுக் கொடுத்தாரு தந்திரமா, அன்னாசி கையோடு தென்னங் குரும்பைகள் அவல் கடலையும் பொரி உருண்டையும் கொண்டைக்கு பூவும் கண்டாங்கி சேலையும்
கொடுத்ததாக இவர்களின் இதய ஒலியான மலையகக்
கதைப் பாட்டு கூறுகிறது. -
இந்தியாவின் அரசாங்க செயல் தலைவராலும், கட்டுப்
பாட்டதிகாரியாலும் ஏற்று ஆதரிக்கப்பட்ட ஆள் சேர்ப்பதற்
名司

Page 16
கான உரிமை திருச்சியிலிருந்த இலங்கை குடியேற்ற ஆணை யாளருக்கு கட்டுப்பாட்டதிகாரியால் அனுப்பப்படும், அவர்கள் மூலமே தோட்ட முதலாளிகள் செய்தி அறிந்து கங்காணி மார்களை செயலாண்மை நிலையத்தில் Agency தனி உரிமை பத்திரங்களை பெற்றுக்கொள்ள பணிப்பர். அதன் பின்னரே அவர்கள் ஆள் சேர்ப்பதற்கான பூரண அதிகாரத்தைப் பெற்று வந்தார்கள்.
வந்த விதம்
இலங்கையில் குடியேற விரும்பும் தன் குடும்பம் இலங்கைக்கு செல்ல விரும்புகிறது என்பதைத் தனது கிராம முனிசீப்பிடம் உறுதிபடுத்திய பின்னரே கிராமத்தைவிட்டு வெளியேறலாமென இந்திய சட்டம் பணிக்கிறது. அவ்வாறு இணக்கம் தெரிவித்து புறப்பட்டவர்கள் இலங்கை தொழில் ஆணைக்குழுவின் செயலாண்மை நிலையம் ஒன்றுக்கு, அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கே அவர்களின் உழைப்புத் திறமையும் சக்தியும் ஆராயப்படும். இரண்டுக்கும் மேலாக அவர்கள் தோட்ட முதலாளிகள் விரும்புகிற, சாதியைச் சேர்ந்தவர்கள் தானா என்பதும் ஆராயப்படும். இவைகளில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் கங்காணியோடு அவர்கள் மண்டபம் கேம்புக்கு (Mandapam aேmp) அனுப்பப்படுவார்கள். தொற்றுத்தடுப்பு காலமான ஆறு as a disely dis(e) (Ouarantine detention) (sir 607 it G5 TL வண்டியிலேற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்களுக்கு வந்தவுடன் ஊர்தி நிலையத்திலிருந்து வழி காட்டி ஒருவனின் துணையோடு தாங்கள் செல்ல வேண்டிய தோட்டங்களுக்குச் செல்வார்கள். பதுளைப் போன்ற மலை நாட்டு வண்டிக்கு காத்திருப்பவர்கள் பொல்காவலையிலும், களனிவேலிக்கும், கடலோரப் பகுதிகளுக்காக தொடர் வண்டியை நோக்குவோரும் கொழும்பில் தங்கியிருந்து தங்கள் தோட்டங்களுக்கு பகல் நேரத்தில் செல்லக்கூடிய விதத்தில் தொடர் வண்டிகளில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.
26

4.
இலங்கையில் குடியேற விரும்பும் மக்களுக்கு இங்குள்ள தோட்டத்தின் நிலை முழுவதும் விளக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய தோட்டத்துக்கு வெகு அருகில் உள்ள வூர்தி நிலையத்துக்குச் செல்லும்வரை சுரண்டபடாத வாறு மிக கவனமாக கவனிக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டனர் எனச் சொல்லப்படுகிறது.
பொன்னும் மாசியும்
உண்மையில் இல்லாததையும் பொல்லாததையும் எடுத் தியம்பி "மாசியும் பொன்னும் தேயிலைத் தூரில் தோண்டி எடுக்கலாம்" என மக்களை நம்பவைத்தனர். வெகு விரைவில் செல்வம் குவித்து தாயகம் திரும்பலாம் என்ற ஆசையை வளர்க்கும் விதத்திலேயே இந்த மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது. தோட்டத்துக்குச் செல்லும்வரைதான் அவரி தள் எரண்டப்படாது கவனிக்கப்பட்டனரேயன்றி அதற்குப் பின்னரல்ல. உண்மையில் அவர்கள் சுரண்டப்பட்ட தெல் லாம் தோட்டத்துக்கு வந்ததன் பிறகுதானே!
இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்வதால் வாழ்க் கையிலும் தொழிலிலும் உள்ள வாய்ப்புகளைப் பற்றிய பொய் 2, ான செய்திகளை பிரசாரக் குழுவினரும் பெரிய கங்காணி களும் கட்டவிழ்த்து விட்டனர். போதாதற்கு சஞ்சிகைகள், செய்தி அறிக்கைகள், விளம்பரங்கள் ஆகியவற்றின் துணை ச்பையும் பயன்படுத்திக் கொண்டனர். சம ஊழியர்கள் (missionary) போன்ற மக்களிடையே செல்வாக்குள்ள கூட் புத்தினர் மூலமும் தங்களது கோயபல்ஸ் திருவிளையாடல்
ருேக்குப் பலம் சேர்த்துக் கொண்டனர்.
இத்தனை ஏமாற்று வித்தைகளையும் நம்பி ஏமாந்து இலங்கை வந்த யாத்ரீகத்தந்தைகளும் ஆஸ்திரேலிய சிறைக்
27

Page 17
கைதிகளும் கண்டு வியக்குமளவுக்கு உழைத்த இந்த மக்கள் இன்று அரசியல் அனாதைகளாக வாக்குரிமையற்றவர்களாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இல்லாதவர் களாக இருக்கின்றனர்.
இலங்கை நாட்டில் பற்றில்லாத இந்தியாவிலேயே நாட்டம் முழுவதையுமே வைத்திருக்கிற இவர்களுக்கு அரசியல் உரிமை யும் வாக்குரிமையும் எதற்கு ? அதற்கு அவசியமுண்டா? என் றெல்லாம் கேட்கின்றனர் சிலர். இந்த மக்களை இந்தாட்டில் பற்றுள்ளவர்களாக்க இதுவரை யாரும் எந்த முயற்சியும் செய்ய வில்லை.
நாடு என்ற சொல்லுக்கான அர்த்தமென்ன? மலைநாடு என்ற சொற்பிரயோகம் சரியானது தானா? இலங்கைத் தீவி லிருந்து வேறுபடுகிற விதத்தில் ஒரு பிரதேசத்தின் பெயர் இருக்கலாமா? என்றெல்லாம் பலரும் கேட்கின்றனர். மலை யக மக்கள் நாடு என்ற சொல்லை எந்த அர்த்தத்தோடு பயன் படுத்துகின்றனர் எனத்தெரிந்து கொண்டால் இந்த ஐயத் துக்கே இடமில்லாமற் போய்விடும்.
சிங்கள கிராமங்களை இவர்கள் நாடு என்ற GFArsi) லாலேயே குறிப்பிடுகின்றனர். அங்குள்ள GustaforasBo6Troi "நாட்டு பொம்பளைங்க" என்றே குறிக்கின்றனர். அதாவது பிற பிரதேச மக்களோடு தொடர்பும் பிணைப்பும் இல்லாத மக்கள்" எனும் பொருளில் அவர்கள் வாழும் பிரதேசங்களை தனிபடுத்தி எல்லையமைத்து விடுகிறார்கள். நகர்புறங்களி லிருந்து வேறுபடுகிற செயல்களை நாடு என குறிப்பது பொருந்துமானால் மலைநாடு என்ற சொற்பிரயோகமே சரியானதுதான். அந்தளவுக்கு இவர்கள்; பிற பிரதேச மக்க ளோடு தொடர்பற்றவர்களாக இருந்து வருகின்றனர்.
இவர்களது சமுதாய அமைப்புமுறை இலங்கைத் தமிழருடையது போல இருப்பினும், நாளாந்த தொழிலாளர் களான அவர்களின் பொருளாதார நிலையும், சிறுபான்மை

யோர் என்ற தன்னறிவும், தனிப்பட்ட தோட்ட வாழ்க்கை யும் இலங்கையில் உண்மையான தமிழ் ஒற்றுமையை ஏற்” படுத்த விடாது தடுக்கிறது என Burt Stein எழுதுகிறார்.
தோட்டம்
இந்த மலைநாட்டிலே மக்கள் வாழுகின்ற இடத்தை தோட்டம் என அழைக்கிறார்கள், சங்கத் தமிழகத்தில் திணை மயக்கமுண்டாவதற்கு முன்பு குறிஞ்சியில் சிறுகுடி யும், பாலையில் குறும்புவும், முல்லையில் பாடியும், மருதத்தில் மூதூரும், நெய்தலில் பாக்கமும் மக்கள் வசிக்கும் ஊர்களிள் பொதுப் பெயராக இருந்ததைப்போல இன்றைய மலையகத் தில் தோட்டம் பொதுப் பெயராக களங்குகிறது.
1889-ம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிற் சட்டத்தின் 18-ம் பிரிவின் 3-வது சரத்தில் தோட்டம் எனில் பயிரிடப் பத்து ஏக்கருக்கும் குறையாத தொழிலாளர்கள் ساكاله வேலைக்கு அமர்த்தப் பட்ட நிலம் என பொருள் கூறப் பட்டிருக்கிறது. இவ்வாறு ஆங்கிலத்தில் Estate எனவும் தமிழில் தோட்டம் என்றும் குறிக்கப்படுவது சிங்களத்தில் வத்த" எனப்படுகிறது. தோட்டங்களின் Gluujifas6yfisis வெகுபல வத்த எனும் சொல்லை ஈற்றில் பெற்றிருக்கின்றன.
இந்த ‘வத்தை" எனும் சொல் எந்த மொழிக்குரியது ? இது குறித்து கருத்து வேறுபாடு உண்டெனினும் யாழ்ப் பாணத்திலுள்ள இடங்களின் பெயர்களைப்பற்றி முதன் முதலில் ஆராய்ந்து Ceylon Antiguaryல் எழுதிய Horsburgh ன்னும் ஆங்கிலேயர் அச்சொல் சிங்கள மொழிக்குரியது என்றார். சிங்களத்தில் வத்த என்பதே தமிழில் ஐகாரம் பெற்று வந்தது என்கிறார். பொல்வத்தை, மல்வத்தை, கொட்டியாவத்தை என்பனவெல்லாம் சிங்கள சொற்களாகக் கருதப்படும் போதுதான் பொருள் உள்ளனவாயிருக்கின்றன ான் யாழ்ப்பாணம் என்பதின் மூலச் சொல்லைப்பற்றி இவ

Page 18
ரோடு கருத்து வேறுபாடு கொண்ட ஞானப்பிரகாச சுவாமி கள், சபாரத்தினம் முதலியார் போன்ற தமிழறிஞர்கள் இவர் சிங்களச்சொற்கள் என எடுத்துக்காட்டிய ஏனைய வற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
வடமொழியிலிருந்த விருத்தம் என்பதே தமிழில் வத்தை யாக மாறியது என கருதுபவர்கள் அதைச் சான்றுகளோடு நிறுவவில்லை, எனவே வத்தை என்பது வத்த என்று சிங்களச் சொல்லிலிருந்து பிறந்ததென்ற கருத்தையே இன்று ஆராய்ச்சி உலகு ஏற்றுக் கொண்டிருக்கிறது எனக் கொளல் பொருந்தும். இதற்கு நாம் கொகொவத்த (கொக்கோ தோட் டம்) எண்டால் வத்த (ஏலக்காய் தோட்டம்) நடவத்த (நாட்டுத் தோட்டம்) என மேலும் ஆதாரங்கள் காட்டிச் செல்லலாம்.
வத்தை என தமிழில் வழங்கப்படுவது தோட்டம் என பொருள்படும் சிங்களச் சொல்லானால் சிங்காரவத்தை தோட்டம், குயில்வத்தை தோட்டம் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லையே என ஐயம் எழ இடமுண்டு. இதற்குப் orsbugh பதில் ள்முதியிருக்கிறார். இலங்கையின் பல பாகங்களிலும் சிங்களவர் வாழ்ந்து, அந்தந்த யிடங்களை நன்கு அறிந்து வைத்திருந்தனர். தமிழர்களந்த விடங்களை கைபற்றிய போது அந்த விடங்களின் பெயர்களைத் தமிழ்ப் படுத்தினார்கள். அவ்வாறு தமிழ் படுத்தும் போது முன்பு வழங்கிய சொற்களின் ஓசையை மனதில் கொண்டார்களே தவிர பொருள்களையல்ல என்கிறார். அவரது முடிபையே நாமும் ஏற்றுக்கொள்வோம், சிங்காரவத்த, குயிலுவத்த என மாத்திரமே சிங்களவர்கள் குறிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் போது, அந்த முடிபு மேலும் வலு வடைகிறது.
மேலும் செடித்தொகுதிக்குரிய நிலத்தை தோட்டம் எனவும், மரத்தொகுதிக்குரிய நிலத்தை தோப்பு எனவும் குறிப்பதே தமிழ் மரபு. இலங்கை மலையகத்தில் கோப்பிச்
80

செடி பயிரிடப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட தோட்டம் எனும் பொதுப் பெயரே தேயிலைச் செடியும், றப்பர் மர மும் பயிடப்பட்ட நிலங்களுக்கும் தொடர்ந்து இடப்படுவ தாயிற்று. அதனடியாகவே கோப்பி பயிரிடப்பட்ட நிலங் களில் உழைத்த மக்களை குறித்த சொல் பின்னர் தோட்டக் காட்டான் என பொதுப் பெயராக உருவெடுத்தது.
காசுபயிர் செய்கைக்கான தோட்டம் (Estate) ஒவ்வொன்
றும் வேளாண்மைத் தோட்டம் (Garden) போன்றே களை
பிடுங்கி, உரமிட்டு பாதுகாக்கப்பட்டன என 1, H. Wanden
Driesen st sår Liff STQggåorf.
ет0
காடு என்பது நிலம் எனும் பொருளுடைய பழந்தமிழ்ச் சொல் "காடு வாவா என்கிறது, வீடு போபோ என்கிறது" என்பது பொதுவழக்கு. இன்று காடு என்பது வனாந்தி ர்த்தைக் குறிக்குமெனினும், நிலம் என்ற அழகிய பொருளில் காடு என்ற சொல் மலைநாட்டில் வழங்கப்படுகிறது. New lேearing என்பது புதுக்காடு என மொழிபெயர்க்கப் பட் டிருக்கிறது. மரங்கள் அழிக்கப்பட்டு புதர்கள் அகற்றப்பட்டு பயிர்ச் செய்கைக்கான புதிய நிலத்தை புதுக்காடு என்பது எத்துணை பொருத்தமானது ?
மலையகத்தில் பதினேழுக்கும் மேற்பட்ட தோட்டங்கள் புதுக்காடு என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. புதிய நிலம் என்பதே அதன் பொருள். புதுமலை என்ற பெயரும் ஓரிரு தோட்டங்களுக்கு இதே பொருளில் இடப்பட்டிருக்கின்றன. மனிதர்களும், மதகுருமார்களும் எழுதிவைத்த புனைந்துரை யைப் போலல்லாது, இயற்கை அன்னை உண்மை வரலாற்றை தன்னுள் ஏற்று காத்து வருகிறாள். இந்த பாமரத் தமிழ்த் தொழிலாளர்கள்தான் எத்தனைக் கெட்டிக்காரர்கள் ? எழுத முடியாத தங்கள் குறையை இப்படி பெயர்களிடுவதன் மூலமே தீர்த்து வைத்திருக்கின்றனரே !
8.

Page 19
மந்திரச் சொற்கள்
மக்கள் தங்கள் வசிப்பிடங்களின் பெயர்களை மனம் போனபடி எல்லாம் வைத்திருக்கின்றனர், அவைகளைக் கொண்டு எதுவும் உபயோகமாகத் தெரிந்து கொள்ள சிேடி யாது என பலர் கருதுகின்றனர். அவர்களின் கருத்தை ஒரேயடியாக ஏற்றுக் கொள்ள முடியாது,
மக்களின் மூயற்சி, தொடர்பு, நம்பிக்கை, மன உணர்ச்சி ஆகியவற்றை யெல்லாம் வரலாறு ஒப்பி நிற்குமளவுக்கு வெளியிடுகின்ற இடங்களின் பெயர்களையும் உலகின் பல பாகங்களிலும் காணலாம்.
அமெரிக்கோ வெஸ்புக்கி என்பவனின் பெயரிலிருந்து வந்தது தானே அமெரிக்கா, ஹென்றி ஹட்சனின் பெயரால் தானே ஹட்சன் நதி அழைக்கப்படுகிறது; பென்சில் வேனியா நினைவுபடுத்துவது வில்லியம் பென் என்பவனைத் தானே! இவைகளெல்லாம் மனம் போனபடி வைக்கப்பட்டவைகள் är ar ? மனித சமுதாயத்தை தங்கள் துணிகரச் செயல்கள் முலம் முன்னுக்கழைத்துச் சென்றவர்களை நினைவுபடுத்தி, நடந்துவந்த பாதையை நினைக்கத் தூண்டும் மந்திரச் சொற்களல்லவா-அவை !
மொழி
மொழி என்பது மனித மனத்தின் பிரதிபலிப்பே என்கிறார் J. Venbryes 6T6ir Lirit. Apart from the human mind language has neither life nor reality. STSOTádia pith M. Breal எனும் மொழியியலறிஞர் தடைகளையும், தவிர்க்க முடியாத தாமதங்களையும் கடந்து நாகரிகத்தை வளர்த்து வந்திருக்கிற மனிதனின் முயற்சிகளை அவனது மொழியே வெளிப்படுத்தும் எனவும் சேர்க்கிறார். மனிதன் பேசுகிற மொழிக்கு பொருந்து கிற இந்த உண்மை அவனது வசிப்பிடங்களுக்கான ஊர்களின் பெயர்களுக்கும் பொருந்துமென்றே நான் கருகிறேன்.
32

வரலாறு ஒப்பிநிற்கிற உண்மையை புதுக்காடு என்ற பெயர் வெளிப்படுத்துவதை போலவே, இன்னும் பல உண்மை களை தோட்டப் பெயர்கள் வெளியிடுகின்றன.
பெயரும் பொருளும்
பட்டிக்காடு என்பது Easdale எனுமாங்கில Quu usoul-L தோட்டத்தின் தமிழ்ப் பெயராகும். அத்தோட்டத்தில் கால் நடைகள் வளர்ப்பதற்கான பட்டிகள். (தொழுவங்கள்) பல இருந்திருக்க வேண்டுமென எண்ண இடமுண்டு.
மலையகத்து இன்றைய நிலை உருவாக்கப்படுவதற்கு முன்னர் காடுகளாய் செறிந்து கிடந்தபோது, இன்று மனித நடமாட்டம் மிகுந்த இடமெல்லாம் வனவிலங்குகளின் அரசாட்சி நடந்தது. குரங்கு மலை, ஆனை மலை, હો5ff; மலை, குயில்வத்த, மயில்வத்த என்ற பேர்களெல்லாம் இந்த மக்கள் முதல் அனுபவத்தின் காட்சி பொருளாக இருந்த விலங்குகளையும், பறவைகளையும் காட்டி நிற்கும்.
சிக்கனத்துக்கும் செல்வம் ஈட்டுவதற்கும் செட்டியார்கள் பெயர் போனவர்கள். படிப்படியாக மலையகத்தில் திறக்கப் பட்ட தோட்டங்களில் அவர்களின் கவனமும் ஈர்க்கப்படுவ தாயிற்று, அப்படி செட்டிமார்களால் திறக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்ட தோட்டமே இன்று செட்டிக் காடு, செட்டி தோட்டம் என அழைப்படுகின்றன. ஜெர்மன் தோட்டம், பறங்கி தோட்டம், பாய் தோட்டம் என்பவைகளெல்லாம் இதே கருத்துப்பட உருவானவையே. இன்னும் கிழவி தோட்டம், ஊமை தோட்டம், கிழவன் தோட்டம், பொடியன் தோட்டம், பாதிரித் தோட்டம், இன்ஸ்பெக்டர் தோட்டம் ஒப்பல்காரன் தோட்டம் எனும் பெயர்களெல்லாம் துரைமார் ளையோ, அவர்களது முன்னையத் தொழிலையோ, அவர் களின் மூத்தோர் புரிந்த தொழிலையோ குறிப்பனவாக அமைத் துள்ளன.
88

Page 20
அழகுணர்ச்சி அற்றவர்களிந்த மக்கள் என சொல்லப் படுகிறது. ஓடும் ஆறும் வீழும் அருவியும் அவர்களின் கவ னிப்பை பெறுவதில்லை எனச் சொல்லப்படுகிறது. Drauesto நேரத்து மங்கிய வானில் படரும் செவ்வொளியையும் படர்ந்து வரும் பொழுதில் பரவிவரும் கதிரையும் இவர்கள் காத்திருந்து ரசிப்பதில்லைதான். வாழ்க்கை அமைப்பும் தொழில் அலுப்பும் அவர்களை அந்த ரசனைக்கு உட்படுத்துவதில்லை தான். அதற்காக அழகுணர்ச்சியே அற்றவர்களெனக் கூறி ஒதுக்கி விடலாகுமா? முத்துமலை, பளிஞ்சுமலை, பசுமலை, தங்க மலை, அழகுமலை என்றெல்லாம் தோட்டங்களுக்கு பெயர் குட்டி தங்கள் அழகுணர்ச்சியைக் காட்டியிருக்கிறார்கள். அழகு மலையென ஆறு தோட்டங்களும், தங்க மலையென ஆறு தோட்டங்களும் பெயரிடப்பட்டிருக்கின்றன.
எழுபத்தைத்துக்கும் மேற்பட்ட தோட்டங்கள் மலை என்ற ஈற்றைப் பெற்றிருக்கின்றன. கண்ணில்படுகின்ற RoS) களையெல்லாம் கடும் உழைப்பால் செழிப்பித்த தமிழர் கூட்டம், அந்த மலைகளையெல்லாம் அடைமொழி கொடுத்து அழைப்பதாயிற்று; அந்த அழைப்பில் தான் அவர்களின் அழகுணர்ச்சியும், கடவுள் நம்பிக்கையும், உழைப்புத் திறமும் எப்படி வெளிப்படுகிறது !
5
விசிநின்ற புயல் தன் கடற்பிரயாணத்தை மேற்கொண்டு தொடரவிடாத எந்த இடத்துக்கு பார்த்தலோமியோ டயஸ் புயல்முனை எனப் பெயரிட்டு அழைத்தானோ, அதே இடம் வாஸ்கோடகாமாவின் பிரயாணத்தின் போது அமைதியாயிருந்து, அதன் பயனாக அவனில் நம்பிக்கையை
34

வளர்த்த காரணத்தால் 'தன்னம்பிக்கை முனை" என புதிய பெயர்பெறுவதாயிற்று. ஆங்கிலேயர்களும் தோட்டங்கள் Msuaupo de Pleasure Ground, Golden Hope 6Tsirapt லாம் பெயரிட்டிருப்பதன் காரணமுமிதுவேயாம். இந்த நம் பிக்கை மனோநிலையில் சூட்டப்பட்ட பெயர்களும் ஏராள மான உண்டு.
ஒன்பதுக்கும் குறையாத தோட்டங்களுக்கு சாமிமலை என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆபத்து தேரும் போது ஆண்டவனை நினைத்துருகுவது மனிதகுலம் முழுவதற்கும் பொதுவானது. ஆனால் ஆயுட்காலம் முழுவதும் ஆண்ட வனையும் அவனருளையும் நினைத்து கூடவே சொந்த முயற்சியில் சோர்ந்து தாழ்ந்துவிட்ட தமிழினம் பார்க்கு மிடத்திலெல்லாம் பரம்பொருளைக் கண்டது. காக்கைச் சிறகினில் கண்ணனையும், தீக்குள் விரலை வைத்து தெய் வத்தையும் காணுகிற ஞான நிலையிலல்ல. அறியாமையும், அச்சமும் கலந்த ஒரு பலவீன நிலையில் அதன் விளைவு, கண்ணில் படும் மரமும் மலையும் கடவுளின் இருப்பிடங்க ளாயின. அந்த நம்பிக்கை இன்றைய துயரம் நாளை விடி யும், என்ற ஒரு நினைப்பை ஏற்படுத்தி அவர்களை வாழ வைத்தது. சாமி மலை எனும் தோட்டத்தின் பெயர் நமக்கு சொல்லிவைப்பது இந்த உண்மையைத்தான். மற்றும் வள்ளி மலை, அந்தோணிமலை, தவசிமலை, அண்ணாமலை என்ற தோட்டப் பெயர்களும் ஆண்டவனைக் குறித்த நினைவின் பிரதிபலிப்புகளேயாகும்.
தோட்டங்கள் தோறும் கோவில்களமைக்கப்பட்டு, ஆண்டு தவறாது உற்சவங்கள் நடாத்துமிந்த மக்கள் கோவில் மலையெனவும் தங்களிருப்பிடங்களுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். திருவிழாவுக்குத் தோரணம் கட்டி மகிழ்ந்த நினைப்பிலேயே மாவிலை தோட்டம் என்ற பெயருருவாயிற்றோ ! தைலமலை, கொடிமலை, பெறம்பு மலை, புல்லுமலை என்பவைகளெல்லாம் அந்தந்தத் தேர்ட்
85

Page 21
டங்களில் மண்டிக்கிடந்த செடி கொடிகளைக் குறித்து எழுத்த பெயர்களாமோ
எட்டு தோட்டங்களுக்கு மலை தோட்டம் என பெயரிடப் பட்டிருக்கிறது. மலை நிலத்திலமைக்கப்பட்ட தோட்டங் களுக்குத்தான் அப்பெயர் எப்படி பொருந்துகின்றன பப்பாளி தோட்டம், மொச்சைக்கொட்டை தோட்டம், புகையிலை தோட்டம் மிளகு சேனை தோட்டம், ரோசாப்பூ தோட்டம், கரும்பு தோட்டம் என்பவைகளெல்லாம் தொழிலாளர்களை அதிகாரம் பண்ணிய துரை, பெரிய கங்காணி ஆகியோர்களது தோட்டங்களின் விளைச்சலைக் குறித்து எழுந்தனவோ !
காட்டாறு பாய்ந்து செல்கிற தோட்டமொன்று ஆற்றி னிடையிடையே பாறைகள் குறுக்கிட்டு அதன்மேல் நீர் படிந்து படிந்து, பாசிபடர்ந்து வழுக்குகிற தன்மை. அதனால் அது வழுக்குப் பாறை தோட்டமாயிற்று. இன் னொரு தோட்டத்தில் கருங்கல் ஒன்றே ஆற்றைக் கடக்கும் பாலமாக இருந்தது. அதனாவது கடுக்கப்பாலம் தோட்ட மாயிற்று. கொல்லை
பாதையினிருமருங்கும் வங்கி நிலைத்து நின்று நிழல் கொடுத்து கொண்டிருந்தன. போவோர் வருவோரை அந்த இரட்டை வங்கி ஈர்க்காமலிருக்காது, அதனாற்றான் இரட்டை வங்கி என்ற பெயர் உருவானது போலும்,
கருங்கல்லொன்றை பார்க்கிற கைவந்த சிற்பக்கலைஞன் காரிகையொருத்தி உருவை அதில் காண்பதை Gusu கண்படுகிற நிலத்தின் தோற்றம் கொண்டே அதை பண் படுத்தி பயன்படுத்துவதிலுள்ள சிரமம் தொழிலாளர் களுக்குத் தெரியும், அதனாற்றான் போலும், Burnsibe என்ற ஆங்கிலம் பெயர் கொண்ட தோட்டம் தமிழில் அல வாங்கு தோட்டம் எனப்படுவதாயிற்று. மம்மட்டி தோட்டம் 88

(மண்வெட்டி) என நான்கு இடங்களுக்குப் பெயரிடப்பட்டி ருக்கின்றன.
கொல்லை என்ற சொல்லுக்கு தமிழில் தோட்டம், தரிசு, புன்செய் நிலம் என பொருள்களுண்டு. எனவே, தோட்டங் களின் பெயர்கள் பல கொல்லை என ஈற்று பெற்று முடிவது பொருத்தமானதாகவே இருக்கிறது. இங்கிலிஷ் கொல்ல, தமிழ கொல்ல, சீனாகொல்ல என்றெல்லாம் ஏராளமான பெயர்கள் அடைமொழி பெற்று வழங்கப்படுகின்றன. ராசி கொல்லை என்பது ஒரு தோட்டத்தின் பெயர். தங்களுழைப்பு பெருகவும், பலன் தரவும் வாய்ப்பான இடம் என்ற நம்பிக்கை யும் நம்பிக்கையை வளர்க்கிற வாழ்த்தும் மனப்பாங்கும் இணைந்ததன் (3шћGeo(šш у гđ. Glasтijepsu என்ற பெயர் தோன்றியிருக்க முடியும்.
வாழ்த்தும் உள்ளம்
ஒரு சமுதாயத்தின் குறிப்பிட்ட கால கட்டத்திற்கான மனப்பாங்கை வாழ்த்தும் முறையிலிருந்தே தெரிந்து கொள்ள
லாகும். வாழ்த்தும் முறைமை வாழும் முறையின் வெளிப் பாடாக அமைவதே இதன் காரணமாகும்.
வல்லுநர் வாழ்ந்தோர் என்ற கருத்து தோள்வலி சிறந் திருந்த காலத்தே உருவானது. அப்போது வீரம் புகழப்படுவ தாயிற்று.
வாழ்நாள் மிகுவதே வேண்டப்பட்ட போது, "காவிரி எக் கர் இட்ட மணலிணம் பலவே" என்ற வாழ்த்து பிறந்தது.
வீரமும் ஈரமும் இணைத்த வாழ்க்கை வேண்டிய சமுதா யம் வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத் தன் கதிர் மதியம் போலவும் நின்று நிலை இயர் உலகமோடு உடன் வாழ
aAVTjbâöğBfbaOy.
87

Page 22
ஈவோர் அருகிய நாட்களில் ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே என எல்லாம் வாழ்த்தும் உண்டாயிற்று.
தகுதியும் குணமும் மிகுந்தவராக நெடுநாள் வாழவேண் டும் என்ற எண்ணும் நிலைக்கு நெல்லிக்கனி கொடுத்து வாழ் வைப் பெருக்கும் பழக்கம் உண்டாயிற்று.
.வானத்து வாங்கித் தோன்றும் மீனினும் இம்மென இயங்கும் மாமழை உறையினும் உயர்ந்துமேந் தோன்றிப் பொலிக நும்நாளே”
என்ற தொடர் பிறக்கலாயிற்று. இறந்த பின்னரும் 9QAp° வாத புகழுடைய வாழ்க்கை விரும்பிய சமுதாயம் ஆண்டு நீ பெயர்ந்த பினுைம் ன்டு தீடு விளங்கும் நீ எய்திய புகழே, என வாழ்த்துவதாயிற்று.
Labdiduth (Happiness) Gap Lyth (Prosperity) ஆங்கிலேயர்களின் வாழ்க்கை நோக்கம், வாழ்க்கையின் திரும்பமாயிருந்தாலென்ன, வருடத்தின் பிறப்பாயிருந்தா லென்ன வாழ்த்துகிற ஆங்கிலேயர் இந்த இரண்டையுமே எதிர்பார்ப்பர்.
இவ்வாறு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை நோக்கைத் தெரிந்து கொள்ள அதன் வாழ்த்தும் முறையை அறிந்து கொண்டாலே போதுமானது.
குணமெனும் குன்றேறி நின்று வாழும் வாழ்க்கை உண்டு
உடுத்து ஒன்றாகப் படுத்து மகனையும், பேரனையும்
கண்டால் போது மென்ற நிலைக்கு இறங்கி வந்தபோது
பதினாறும் பெற்ற பெரு வாழ்வு, குழந்தைகளைக் குறிப்பு
தாயிற்று. இவ்வாறு வாழ்த்தும் முறையில் வாழ்வின் @8

போக்கை தெரிந்து கொள்பவர்களுக்கு "லெட்சுமி தோட்டத7 என்பது எவ்வளவு கருத்தமைந்த பெயரென்பது தெரியவரும்,
இலட்சுமி என்பதற்கு செல்வம், அழகு, குருட்டடி, சீதேவி என்றெல்லாம் பொருள்களுண்டு. வீடு சிறக்க வந்த மருமகளை "இலட்சுமி மாதிரி பொண்ணு, சீதேவியான முகம்" என்றெல்லாம் பெரியவர்கள் புகழ்வதுண்டு.
வயிற்றை நிரப்ப பரிதவித்த கூட்டத்துக்கு செல்வம் கொழிக்கும் மலையகத்தில் உழைப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. மலையகம் செல்வம் கோழிக்கும் பிரதேசம் மாத்திரமல்ல, அழகு விளையாடும் பிரதேசமுமாகும். அநீதி அழகு நிலத்தைக் கண்ட உழைப்பாளர் உள்ளம் விடு சிறக்க வந்த இலட்சுமியை கண்டது போல மகிழ்ச்சியால் ஆர்த் தது. இலட்சுமி தோட்டம் என்ற பெயர் சூட்டியது. காலப் போக்கில் அது "லெட்சுமி தோட்டம்" என உருமாறி நிலைப்ப தாயிற்று. இருபத் தொன்றுக்கும் மேற்பட்ட தோட்டங் களுக்கு இன்று இந்தப் பெயர் வழங்கப்படுகின்றன,
அடைக்கலம்
யாழ்ப்பாணம் சிலாபம் பகுதிகளிலுள்ள தேன்னந் தோட்டங்கள் சிலவற்றுக்கும் இப்பெயர் இடப்பட்டிருக்கின் றன. அங்கெல்லாம் இலட்சுமி என்பது தோட்ட சொந்தக் காரர்களின் பெயரி குறித்து எழுந்திருக்கின்றன. அடைக்கல வத்த என்ற பெயர் இலங்கை மலைநிலத்தை அடைக்கலமாக எண்ணிவந்தவர்களிட்ட பெயர் எத்தனை பொருத்தமானதாக இருக்கிறது?
மலை, காடு, கொல்லை என்பவைகளைப் போல பெரு வாரியான தோட்டங்களின் ஈற்றுப் பெயராக காணப்படு வது கந்தை என்பதாகும், செல்வக் கந்தை, தெய்வக் கந்தை
89

Page 23
குரிய கந்தை அவற்றுள் சிலவாகும். இவைகளெல்லாம் கந்த என்ற விகுதி ஐகாரம் பெற்று வந்திருக்கின்றன.
ஸ்கந்த என்ற சமஸ்கிருத சொல் மலையைக் குறிப்பதா கும். சிங்களத்திலும் கந்த என்பது மலையைக் குறிக்கும் சொல்லாகும்.
6
இலங்கை மலையகத்தோட்டங்களுக்கான ஈற்றுபெயர்கள் சிங்களித் தமிழ் தொடர்பால் ஏற்பட்டதென்றே கூற வேண்டும். மலைப்பகுதிகளில் தோட்டப்பயிர் செய்கைக்கு முன்னர் சிங்கள கிராமங்கள் ஆங்காங்கே இருந்தன. நில அளவை பகுதியார் வெளியிட்டிருக்கும் முக்கோண குத்துய größ6ör Ulq- Trignometrical Attitude 1009 soyq-låg Guagið பட்ட இடங்களின் பெயர்களில் 17% கந்த என்ற ஈற்றைக் காணலாம் என்பதே இதற்கொரு சான்றாகும். தோட்டங் களின் பெயர்களிலும் முன்பு அப்பகுதிகளிலிருந்த கிராமங்களின் பெயர்கள் அப்படியேயும் சிதைந்தும் ஒட்டிக்கொண்டிருப்பதை நாமவதானிக்கலாம்.
கும்புர என்றால் சிங்களத்தில் நெல்வயல் என்று பொருள் மடகும்பர என்பது ஒரு தோட்டத்தின் பெயராகும். அத்தோட் டத்தின் நடுவே ஒரு சீறுவயல் நிலம் இருக்கிறது. சிலர் வள" என்பது வளைவு என்ற தமிழ்ச்சொல்லின் சிதைவு என்கின்ற னர். உண்மையில் அது சிங்களச் சொல்லாகும். குழி என் பது அதன் பொருள்,
4O

கவரவளை என்பது சாமிமலை நகரத்துக் é560ofğöğ5 ATaujair ar தோட்டத்தின் பெயராகும். கவரவன என்ற சிங்களச்சொல் லுக்கு சாணக்குழி என பொருள், 50 வருடங்களுக்கும் முன் பாக இந்தப் பகுதிகளில் மாட்டு வண்டிகளே போக்குவரத்துச் சாதனமாயிருந்தன. அப்போது, அந்த மாடுகளின் தொழு வங்கள் இன்றைய சாமிமலை திசைமும் கவரவளை தோட்ட சிம் சேர்ந்த நிலப்பகுதியில்தான் இருந்தன என்று வயோதி, தோழிலாளர் சொல்கின்றன. தோட்டத்தில் மலைநாட்டுச் சிங்களவர்கள் உழைக்க மறுத்த காலத்தில் உள்நாட்டில் தாழ்நில சிங்களவர்கள் வர ஆரம்பித்தனர். lipirt.G9 nuairt. ஒட்டிகளாக வந்தவர்களந்த தாழ்நிலச் சிங்களவரேயாவர்.
கங் எனும் சிங்களச்சொல்லுக்கு ஆறுகள் கிராமங்கள் என்ற இருபொருள்கள் உண்டு. ஆற்றோரத்துக் கிராமங்களை குறிக்கவே அது ஆரம்பத்தில் பயன்பட்டிருக்க வேண்டுக் மஸ்கெலிய ஒய ஒடுகிற வழியில் ஒரு நகரமும் ஒரு தோடே மும் கங்குவத்தை என்ற பேயரால் குறிப்பிடப் படுகின்றன. உண்மையில் கங்கா வத்த என்பதே கங்குவத்தையாக ஒலி மாற்றம் பெற்றிருக்கிறது.
தோட்டங்களின்தும் மலைதாட்டு நகரகளினதும் ஜெய்ர் களின் ஈற்றில் காணக் கிடைக்கிற "யாயபிட்டிய" sr sögo Gerð கள் வயல் வெளிகளையும், தைரிய" என்ற சொல் பள்ளத்தாக் கையும் "எளிய ஓடையையும் குறிக்கும் சிங்களச் சொற்களா கும். இவைகளெல்லாம் சிங்கள கிராமங்கலிருந்த sreošGos காணப்பட்ட வயல் வெளிகளோடு தொடர்புடையச் சொற்கள் ன்ன்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
நாகவள்ளித் தோட்டம் என்பது உண்மையில் anó TTLgL TTCLSGMLTLT TTTTS SSLLLTTTS GTL TgLSSLLLLLL
4.

Page 24
ருந்து பிறந்ததேயாகும் அளி" என்பது குளிரையும் "நுவர? என்பது நகரத்தையும் குறிக்கும் சொற்கள் என்று தெரிய வரும் போது குளிர் மிகுந்த நகரமான நுவரெலியாவின் பெயர் பொருத் தம் வெளிப்படுகிறது.
கண்டி
விமலதர்மன் ஆட்சி காலத்தில் சிங்களவர்களின் தனித் தலைவனாக அவன் விளங்கினான். அவனது ஆட்சியிலிருந்த பிரதேசம் கந்த உடரட்ட எனப்பட்டது. ஆகவே அவின் போர்த்துகேயருக்கு கந்தஉட ராஜாவானான். அது கந்த ராஜாவாகியது. நாளா வட்டத்தில் கந்தவுக்கு ராஜாவானான் அதுவே கண்டி என பெயர் திரிபுக்குக் காரணமாகிற்று செங்கடகல, நுவர, மகாநுவர எல்றெல்லாம் அழைக்கப்பட்ட நகர் அப்புது பெயர் பெறுவதாயிற்று ஒல்லாந்தரும், ஆங்கி ல்ேயரும் கண்டி என்றே வழங்கினர்.
கண்டியர் என்பது அங்கு வசிக்கும் சிங்களவர்களையும் கண்டிச் சீமை மக்கள் அங்கு வாழும் தமிழரையும் குறிப்ப
5 sruf p,
ஒரு தோட்டத்துக்கு களுத்தோணி என பெயருண்டு. இதற்கடுத்திருப்பது "வளபொடுவ” எனும் சிங்கள கிராமமாகும் அங்கிருந்து கள், வாழைப்பழம் முதலியன தோட்டங்களுக்கு கொண்டுவந்து விற்கப்படுகின்றன. கிராமத்திலிருந்து தோட் டத்துக்கு வருவதற்கான வழியமைந்த தோட்டமே களுத் தோணி தோட்டம் என குறிக்கப்படுகிறது. கள்ளை கள்ளுத் தண்ணி என்றே மலைநாட்டுத் தமிழர் குறிக்கின்றனர். அதனால் கள்ளுத்தண்ணி தோட்டம் என்பதே களுத்தோணி தோட்டம் என சிதைந்தது என்று எண்ண இடமுண்டு.
தொழிலாளர்களுக்கும் கிடைத்த உண்மையான வரு மானம் அரிசிதானென்று சொல்லப்படுகிறது. தோட்டத்தில் வழங்கப்பட்ட அரிசியை தொழிலாளர்களே பயன்படுத்தினார்
42

கள் என்றில்லை. மிகுந்திருந்த அரிசியை கிராம மக்களுக்கு விலைக்குக் கொடுத்தார்கள். கப்பல் வகுவதில் தாமதமும் விளைச்சலில் ஏற்பட்ட தாமதத்தால் விலையில் ஏற்பட்ட மாற்றமும் தோட்ட மக்களை பாதிக்கவில்லை. எப்போதுமவர் கள் குறிப்பிட்ட விலைக்கே அரிசியை வாங்கினார்கள். சில சமயங்களில் தோட்ட நிர்வாகம் கூடுதலான விலைக்கு வாங் கிய அரிசியை குறைந்த விலைக்கு விற்றது. 1915 க்கு பிற் பட்ட சில ஆண்டுகளுக்கு பல தோட்டங்களில் Loss on riee என்று குறிப்பிடப்பட்டது.
அயர்லாந்துகாரரால் திறக்கப்பட்ட ஒரு தோட்டம் Avoca என பெயரிடப்பட்டது. தன் நாட்டில் பார்க்கிற நதியின் பெயரை ஈழத்து தோட்டத்துக்குச் சூட்டி மனமகிழ்ந்தாரவர், தோட்டச் சொந்தக்காரர்கள் வைக்கும் பெயரையே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நியதியில்லையே. இருந்திருந்தால் ? 6i 66 u r(D) (35 rubših Vernacular Name, English Name என்ற இரண்டு பெயர்களிட வேண்டிய அவசீய மேற் பட்டிருக்காதே! தொழிலாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பெயரைச் சூட்டி அதனையே வழங்கி வந்திருக்கின்றனர். அதற்குள் "அவொகா” என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்ட தோட்டம் தமிழில் வெள்ளைமலை எனப்படுவதாயிற்று-சரலை மணல் மலைச்சரிவுகளில் படர்ந்து கிடந்து வெள்ளை வெளே ரென காட்சியளித்ததுவே அந்தப் பெயர் தோன்றக் காரண மாயிற்று. உழைக்க அஞ்சாத இந்த மக்களுக்கே மலைப்புத் தருகிற அளவுக்கு சில மலைகள் உயர்ந்திருந்தன. அந்த இடம் உச்சிமலை எனப்படுவதாயிற்று. இதே பொருளுடைய மேமலை என்ற பெயரும் ஐந்து தோட்டங்களுக்கு இடப்பட்டி ருக்கின்றன. .
ஸ்கொட்லாந்தியரால் திறக்கப்பட்ட தோட்டமது. Kirே என்பது ஸ்கொட்லாந்தில் தேவாலயத்தைக் குறிக்கும். Kirk Calady, Kirk wall, Kirk Cub Bright 6Tair GipsiAir மிடப்பட்டிருக்கும் பெயர்களை மனத்தில் வாங்கி மதப்பற்று மிக்க அந்த ஸ்கொட்லாந்தியர் தன்னுடைய தோட்டத்துக்கு
48

Page 25
Kirklees எனப் பெயரிட்டார். Gup Rota turq வேறொரு பெயரிட வேண்டிய தமிழர்கள், குதிரைமலை என பெயரிடே ன. குதிரையேறிவந்து நிர்வாகம் செய்கிற தங்கள் agerumbu நினைவில் கொள்ள,
Cen Hill என்பது ஒரு தோட்டத்தின் QlJust, Cahr'n oேrm எனப் பெயரில் மலை ஒன்று ஸ்கொட்லாந்திலுள்ளது. aேirn என்பதற்கு நினைவுக் கற்குவியல் என்று பொருள், இந்த தோட்டம் தமிழில் கன்னிவாசல் என அழைக்கது LJ09ćRдрф. Midlothian என்பது ஸ்கொட்லாந்து மாவட்டம் ஒன்றிற்கான பெயராகும். அதே பெயரைக் கொண்ட தோட்டத்தை தமிழில் சீமைதோட்டம் re ஜார்கள். சீமை எனும் சொல் சொந்த ஊர் எனும் அர்த்த்த தில் இவர்களிடையே வழங்கப்படுகிறது. Brea rick 9wla (95u sixty Four Years in Ceylon எனும் நூலில் ஆறாம் பக்கத்தில் குறித்திருக்கிற சம்பவம் ஒன்றில் இது அழகாக விளங்குகிறது. படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு தொழி லாளியின் மகனைப் பார்க்க அவர் அவனது காம்பராவுக்குச் செல்கிறாராம். அப்போது அச்சிறுவன் எழுந்து உட்கார்ந்து "சின்ன தொர நான் என்னுடைய சீமைக்குப் போகிறேன். இனி திரும்பிவர மாட்டேன்? 6T sip Tsot (Tib. Little Maste lm going to my Seemni" (Country) and will not come back and his head dropped,
தாயக கிணைப்பு
Albany என்ற பெயர் அமெரிக்காவிலும், மேற்காஸ்திரி யாலிலுமுண்டு, கனடாவில் பாய்கிற ஆறு ஒன்றுக்கும் அப்பெயருண்டு Bostan என்ற பெயர் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலுமுண்டு. இங்கிலாந்தில் மட்டுமல்ல வட ஆஸ்திரேலியாவிலும் aேmbridge என்ற இட பெயருண்டு. Campbell Town figh floorisayib, ஆஸ்திரேலியாவிலும் காணக்கிடைக்கிற பெயர்கள். &ancastar őssu l-regyik,
44

இங்கிலாந்திலும் காணக்கிடைக்கிற பெயர்கள். இப்படி ஒரே பெயர் வெவ்வேறு நாடுகளில் காணப்படுவதன் காரணம் மக்களின் குடி பெயர்ச்சியே,
இங்கிலாந்திலுள்ள நகரம் ஒன்றின பெயர் லண்டன். இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு குடியேறிய மக்கள் அங்கே யும் ஓரிடத்துக்கு லண்டன் என பெயர் சூட்டினார்கள், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் அயர்லாத்துக்கும் சென்ற. வர்கள் Lonbon Derry என்று நீட்டுவித்த பெயரை வைத்தார்கள். தாங்கள் விட்டு வந்த தாயகத்தின் நினைவை யும், பற்றையும் குடியேறிய நாடுகளுக்குமிட்டு வளர்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்,
Prince of wales, princc Rupert, prince Edward, prince Albert, Queens Land, Queen Mary Land, Queens Town என்றெல்லாம் பெயர்கள் வருவதற்கு இந்த தாயகத் தினதும், தாயக ஆட்சியினதும் நினைவுகள்தாம் காரணம்.
கனடாவிலும் ஆபிரிக்காவிலும் விக்டோரியா என்ற என்ற பெயர் இடங்களுக்கிடப் படிருக்கின்றன. றொடேசி யாவில் ஒரு நீர்வீழ்ச்சி அந்தப் பெயரால் அழைக்கப்படு கிறது. ஆஸ்திரேலியாவில் அந்த பெயரில் ஒரு நதி ஓடுகிறது. அண்டார் டிகாவில் அந்த பெயர் காணக்கிடைக்கிறது. இங்கிலாந்தை ஆண்ட விக்டோரியா மகாராணியின் நினை வுக்கும், அவருக்கும் செலுத்தும் மரியாதைக்கும், தாயக் பக்திக்கும் இவைகளெல்லாம் சான்றுகளாகும்.
தோட்டங்களுக்கான ஆங்கில பெயர்களில் பல தோட்ட முதலாளிகளின் தாய்நாட்டிலுள்ள இடங்களுக்கான பெயர் scar Lur(e)th, Kintyre Moray, elasgow, Glenmore என்பவைகளெல்லாம் ஸ்கொட்லாந்தியர்களால் திறக்கப்பட்ட தோட்டங்களுக்கு தாயக நினைப்போடு இடப்பட்ட பெயர் களாகும். Brunswick என்பது ஜெர்மனியரால் நிர்வகிக்கப் LJLL- தோட்டம் தாயகத்திலேயே நாட்டமெல்லாம்
4.

Page 26
வைத்திருத்த தமிழர் கூட்டம் மாத்திரம் இப்படிப்பட்ட பெயர்களை வைக்காமல் விட்டது எதனால்?
மல்லிகைப்பூ, சோழகந்த எனும் ஓரிரண்டு பெயர்கள், tேony Cliff என்பதற்கு கல் மதுரை என்ற பெயர் Edinburgh என்பதற்கு நீலகிரி எனும் பெயர் என்ற இவைகளோடு அமைந்து விட்டார்களே-இது எதைக் காட்டுகிறது?
தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப் பட்டார்களே தவிர, தோட்ட செர்ந்தக்காரர்களாக அல்ல : மேலும் ஐரோப்பியர்கள் இங்கு திறந்த தோட்டங்களுக்கு வைத்த பெயர்கள் தங்கள் தாயகத்தைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தால் மட்டுமல்ல, இந்த நாட்டையும் தங்கள் தாய் நாட்டு மண்ணைப்போல எண்ணி வாழ்ந்தமையாலும் தங்கள் தாய்நாட்டுப் புகழ் இங்கெல்லாம் பரவவேண்டுமென்ற ஆசையாலும் இந்த நாட்டுச் செல்வம் தங்கள் தாய் நாட்டின் வளத்துக்கு பயன்பட போகிறது என்ற நினைப்பாலும் அவர்கள் அப்படி தூண்டப்பட்டார்கள்,
இந்நாட்டில் ஏற்றுக் கொண்ட துயரமிக்க வாழ்க்கை, இந்த நிலத்தை தாயகமாக எண்ணும் நினைப்பைத் தமிழர் களுக்கு தரவில்லை. இங்கவர்களுக்கு குழைத்து மிச்சம் பிடித்து தாய்நாட்டுக்கு அனுப்புவதென்பதை விட தங்கள் தங்கள் வயிற்றை நிரப்புவதே சிரமசாத்தியமானதாயிருந்தது முக்கியமாக இன்னுமொன்று.
இங்குள்ள சூழ்நிலை ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்த மானதாயிருந்தது. அதாவது இங்கிலாந்தின் இயற்கை சுவாத்தியத்தோடு மலைநாட்டில் நிலவிய சுவாத்தியம் பொருந்தியிருந்தது. அதனால் தாய்நாட்டில் வாழுகிற உணர்வை ஆங்கிலேயர்கள் பெறலாயினர். ஆனால் தமிழர் களுக்கோ மிக வேறான ஒரு நிலைமை,
46

தென்னிந்திய சுவாத்தியமும் இலங்கை மலை நாட்டு* சுவாத்தியமும் இயற்கையிலேயே வேறானதாயிருந்தது. எனவே, வேறொரு நாட்டில் வாழ்கிற உணர்வு இயல்பாகவும் இடைவிடாதும் அவர்களிடையே தோன்றி கொண்டே இருந் தது. இந்திய மண்ணோடும் காலநிலையோடும் யாழ்ப் பாணத்து மண்ணும் காலநிலையும் ஒன்றாக இருக்கின்றன என்பதால் தான் யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய இடங் களின் பெயரை நாம் காண முடிகின்றதோ?
தென்னிந்திய தமிழரின் வருகையால் இலங்கை மலைய கம் உழைப்பின் காட்சியணியாகியது. வளம் கொழிக்கும் பிரதேசமானது. .
விரும்பியோ விரும்பாமலோ அந்த சமுதாய*தில் பிறந் தவர்கள் இந்தநாட்டுக்குரியவர்களானார்கள்.
அவர்கள் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்வதெல் லாம் அந்த மலைகளுக்கிடையேதான்.
அவர்களும் மனிதர்கள்தான். ஆனால் நவீன காலத்து மனித முன்னேற்றத்துக்கான வாய்ப்பை பெறாத ஒரு சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் அம்புலி பார்த்து, சிறுபறை முழக்கி, சிற்றில் சிதைத்து, சிறு தேருருட்டி கழிந்ததல்ல அவர்களிள மைப் பருவம்,
உழைப்பு, ஓயாத உழைப்பு ஒழியாத உழைப்பு இன் னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த நிலை நீடிக்க வேண் டும்?
முற்றும்
47

Page 27
நூலாசிரியர் சாரல் நாடன்
எழுதிய நூல்கள்
சி. வி. சில சிந்தனைகள் . 17.50
தேசபக்தன் நடேசய்யர் . 75.00
வெளியீடு :
மலையக வெளியீட்டகம்
கொழும்பு : : soils.
 


Page 28


Page 29
உழைக்கப் பிறந்தவர் இலங்கையின் பொருளாத அந்நாட்டின் மலைத் தோ சமூகத்தில், கலை - இலக்கி தோன்றத் தொடங்கியது ஏற்பட்ட வளர்ச்சியில் 1 ஒருவர்தான் சாரல் நாடன்
சிறுகதை, கவிதை, மொழி ஆராய்ச்சி என்று தொடர்ந்தார்.
பிறந்து வளர்ந்து 6 மீது கொண்ட பற்றுதலி பெயரில் எழுதும் இவரது வெளிவரும் அனைத்து வந்து கொண்டிருக்கின்றன இலங்கையில் டன்சி சாலையில் அதிகாரியாக ஆக்கங்களில் குறிப்பிட சிந்தனைகள், தேசபக்தன் ஆகும்.
மலையக இலக்கியத் இலக்கிய உலகில் தன பதித்துக் கொண்டிருப்பவா
اسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسس
Cover printed at AR prints, 375
 
 

தள் என்ற நிலையில் ாரத்தின் முதுகெலும்பாக ட்டங்களில் வாழும் மக்கள் ய எழுச்சி அறுபதுகளில்
து அக்கால கட்டத்தில்
மலர்ந்த எழுத்தாளர்களில் T.
கட்டுரை, விமர்சனம்,
தன் இலக்கியப் பணியைத்
வாழும் மலையக மண்ணின் ல் சாரல் நாடன் என்ற படைப்புகள் இலங்கையில்
பத்திரிகைகளிலும் வெளி
*。 னன் தோட்டத் தொழிற்
பணி செய்யும் இவரது த்தக்கவை, சி. வி. சில
ன் நடேசய்யர் ஆகியவை
தில் மட்டுமல்ல இலங்கை க்கென ஒரு முத்திரையை
சாரல் நாடன் அவர்கள்.
8, Arcot Road, MAŁORAS-600 024.