கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவுரை மாலை

Page 1

\!)

Page 2

த. சி. கந்தைய பிள்ளை
ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் ଊ୫ ଗାଁrଅ୍t - l

Page 3

அறிவுரை மாலே
தொகுப்பாசிரியர் : திரு. ந. சி. கந்தையா பிள்ளை
ஆசிரியர் நூற் பகிப்புக் கழகம் 53-56, பவழக்காரத் தெரு : : சென்னை 1 பதிப்புரிமை) 1950

Page 4
கான்காம் பதிப்பு
Printed at the Progressive Printers, Madras 1.

முன்னுரை
பள்ளிக்கூடங்களில் பாட புத்தகங்களாக வைப்ப தற்கு உரிய நூல்கள் மாணவர்ச்கு தானவகையிலும் அறிவு புகட்டத்தக்கனவாக இருத்தல் வேண்டுமென்பது கல்விப் பகுதியாரின் கருத்தாகும். ஒருமுறை ஒரு நூலகத்துப் பயின்ற கருத்துக்களையே மேலும் பயிலுதல் மாணவர்க்கு இன்பம் அளிக்கமாட்டாது. பிற பாட புத்தகங்களில் வராத புதிய பொருளுரைகளைத் தேடித் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூல் இலங்கை எஸ். எஸ். ஸி. பரீட்சைக்கு நான்கு ஆண்டுகள் பாடமாக இருந்திருக்கின்றது. இது புதிய திருத்தங்க ளோடு நான்காவது பதிப்பாக வெளிவருகின்றது. தமிழ் உலகம் இதனை ஏற்று யாம் புரிந்து வரும் பணிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கின்றேம்,
சென்னை 影 1-11-1950. க. சி. கங்தையா

Page 5
10. 11. 12. 13. 14.
பொருளடக்கம்
aw.wixed
இருமலையும் கிகரேயாம் நச்சிஞர்க்கினியர்
சரித்திரம் முச்சங்கமும் இறையனர் அகப் பொருளும்
எழுத்தின் வரலாறு பழந்தமிழர் போர் முறை நிரை கவர்தலும் நீரை மீட்டலும் கிரை மீட்டல்
வீரக்கல்
கல் நடுதலின் விபரம்
இசை மரபு
மொழியின் வரலாறு s
சொல்லின் தொடக்கமும் மொழி
வளர்ச்சியும்
பண்டையோர் எழுதப் பயன்
படுத்திய பொருள்கள்
போசன் கதை
குண்டலகேசி வரலாற்றுச் சுருக்கம் .
நீலகேசி வரலாற்றுச் சுருக்கம் தமிழர் வாணிகம் சிந்து 5 திப் பள்ளத்தாக்கில் தமிழர்
நாகரிகம்
பக்கம்
14
18 25 32
42 46
55 60 70 75 78
88

அறிவுரை шDт 262
1. இருமலையும் நிகரேயாம்
வேனிற்காலத் தென்றல் இனிமையாக வீசு கின்றது. மேகம் திரண்டு தென்மலையில் தவழ் கின்றது. குன்ருரத வளமுடைய குற்ருல மலையி னின்றும் ஒரு குறவஞ்சி புறப்பட்டாள். பொன்ருரத வளமுடைய பொதிய மலையினின்றும் மற்ருெரரு குறமாது புறப்பட்டாள். இரு வஞ்சியரும் இடை நிலத்தில் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டார்கள். தன் மலையைப் புகழுந் தன்மைவாய்ந்த குற்ருரலக் குற வஞ்சி, திரிகூட மலையின் பெருமையை விரிவாகக் கூறத் தொடங்கினுள்.
* தவமுனிவர் கூட்டுறவும் அவரிருக்கும் குகையும் சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகையும் கவனசித்தர் ஆதியரும் மவுன யோகியரும் கத்திருக்கும் கைலாயம் ஒத்திருக்கும் அம்மே” * சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் R. P. சேதுப்பிள்ளை, B, A, B, I, அவர்கள் எழுதியது. -9. ար.-1 -

Page 6
2 : அறிவுரை மாலை
என்று குற்றுல மலையின் பெருமையைக் குறவஞ்சி ஒருவாறு கூறினுள்.
'அம்மே எனது மலை ஈசன் வாழும் கைலே மலையை ஒப்பதாகும். அங்கு தவமுனிவர் குழாம் குழாமாய்த் தங்கி வாழ்கின்ருரர்கள். யோகியரும் சிந்தையை ஒடுக்கிச் சீரிய தவஞ் செய்கின் ருரர்கள். சஞ்சீவி முதலான விஞ்சை மூலிகைகள் எங்கும் செழித்து வளர்கின்றன. மாதவத்தோர் தவம் புரியும் மலைக் குகைகள், எம்மருங்கும் மாண்புற விளங்குகின்றன. என் மலையை ஒப்பது கைலை up? ஒன்றே? என்று கன் up%აLou பெருமையை மலைமாது கூறினுள். இதைக் கேட்ட பொதியமலைக் குறவஞ்சி மனத்தில் புதியதோர் ஊக்கம் பிறந் தது. குற்றுல மலையிலும் தன் மலை சிறந்ததென்று குறவஞ்சியிடம் கூறத் துணிந்தாள் ; குற்முலக் குறமாதை நோக்கி, வஞ்சியே! என் மலையின் பெரு மையை மறைத்து வஞ்சமாகப் பேசுகின்ருரயோ!
* திங்கள் முடி சூடுமலை
தென்றல் விளையாடும் மலை தங்கும் முயல் சூழுமலை தமிழ் முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென பொங்கருவி துரங்கும் மலை பொதியமலை என் மலையே’
என்று பொதிய மலையைப் புகழ்ந்துரைத்தாள். 'வஞ்சி! எனது மலையின் திருமுடியில் வெண்மதி

இருமலையும் கிகரேயாம் 3
விளங்கும். LD2;) எங்கும் மந்தமாருதம் இருந்து விளையாடும். தமிழை , வளர்க்கும் தவமுனிவன் அங்கு தங்கி வாழ்வான். அங்கயற்கண் அம்மை யின் அருள்போல அருவி நீர் பொழியும்.இதனினும் சிறந்தம8ல இவ்வுலகில் உண்டோ ? என்று குற்ருரலக் குறவஞ்சியைக் குமைக்க முயன்றாள்.
இவ்வாறு பொதிய மலை மாது பொதிந் துரைத்த சொற் கேட்ட குற்ருரலக் குறவஞ்சி தன் மலையிலமைந்த அருவியின் பெருமையையும், பூக் களின் பண்பையும், மலர்களின் மாண்பையும் மிக ஏற்றமாய் எடுத்துரைக்க எண்ணினுள்.
* முழங்கு திரைப்புனல் அருவி
கழங்கென முத்தாடும் கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம் கிம்புரியின் கொம்பொடித்து வெப் புதின இடிப்போம் செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும் தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும் வழங்குகொடிை மகராசர் குறும் பலவி லீசர் வளம்பெருகும் திரிகூs ம8லயெங்கள் மலையே?
அம்மே! எனது குற்ருரல அருவி உன் ம8ல அருவி யிலுங் குறைந்ததோ? கண்டோர் வியக்கும் அவ்

Page 7
4. அறிவுரை மாலை
வருவி வெண் முத்தைக் கழங்காக விளையாடும். அவ்வருவி நீர் பெருகி எங்கள் சிறுமியர் சிறு வீட்டை அடித்துக் கொண்டோடும். இன்னும் எனது மலைவளம் கூறுகின்றேன் கேள். அம் ம8லயில் விஜளயும் இனிய கிழங்குக&ள நாங்கள் அகழ்ந்து எடுப்போம். தேனுங் தினைமாவும் உண்டு திளைத்திடுவோம். இன்னும் அம்மலையில் இலங்கும் மாங்கனிக3ள வானரங்கள் மாந்தி மகிழ்ந்து பந்தடித்து விளையாடக் கண்டு களிப்போம். வானுற ஓங்கிய மரங்களின் மலர்கள் விண்ணுலகில் வடித்து மணம் வீசும். இத்தகைய மலைக்கு உன் மஜல இணையாகுமோ?’ என்று இறுமாந்து கூறி னுள். இவ்வாறு குற்ருல மாது குளிர்ந்து உரைத்த மாற்றம், பொதியமலை மாதின் மனத்தை வெதுப் பியது; வண்ணமாய சொற்களால் தன் மலைவளம் கூறத் தொடங்கினள்.
* கொழுங் கொடியின் விழுந்தவள்ளிக்
கிழங்கு கல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைத்திடவே உடுப்போம் செழுந்தினையு நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம்

இருமலையும் கிகரேயாம் 5
எழுந்துகயற் கணிகாலில் விழுந்து வினை கெடுப்போம் எங்கள் குறக் குடிக்கடுத்த வியல் பிதுகா னம்மே." ‘ஏ, வஞ்சி மலையின் வளத்திலும் மலர்களின் மணத்திலும் என்மலை உன் மலைக்கு இளைத்ததென் றெண்ணுதே. எனது மலையில் கொழுங் கொடியில் செழுங் கிழங்கு வீழும். அக் கிழங்கை அகழ்ந் தெடுத்து நாங்கள் மகிழ்வோம். குன்றில் நிறைந்த குறிஞ்சி மலர் கொய்து, குழைத்த முல்லைக் கொடி யில் வைத்துத் தொடுப்போம். பழம் பிழிந்து சாறெடுத்து அதனைத் தேனெடு கலந்து தினமும் உண்போம். செழுந் தினையும் நறும் தேனும் விருந்தினருக்குக் கொடுப்போம். பதனிட்ட புலித் தோலைப் பாயலாக விரிப்போம். காலையிலெழுந்து கருணை வடிவாய அம்மையைத் தொழுவோம். இத் தகைய மலையிலும் செம்மை வாய்ந்த மலை எங்குமே யில்லை" என்று செம்மாந்து எடுத்துரைத்தாள்.
இவ்வாறு அருவியிலும் இருமலையும் கிக ரெனவே குற்ருரல மாதின் மனத்தில் தோன்றியது. ஆகவே, வேறு வகையால் பொதியமலை மாதை வெல்லக் கருதினுள். புதுப் பெருமையற்ருேரர் பழம் பெருமைகடறும் பான்மைபோலக் குற்ருலக் குறவஞ்சி தனது நாட்டின் தொன்மை கூறத் தொடங்கினுள்.
*எனது நாடு நன் நாட்டின் முன்னுட்டும் நாடா கும்; விண்ணுேரும் விரும்பும் விழுமிய நாடாகும். நீங்

Page 8
6 அறிவுரை மாலை
காத வல்வினையும் நீங்கிய நல் நாடாகும். முக்கண் ணுன் ஆடிய முதுமை பெறு நாடாகும். இத்தகைய பழம் பெருமை உனது காட்டுக்கு உண்டோ ?” என்று கூறி அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடிப்பாடி னுள். குற்ருரலமாது கூறிய நாட்டின் பெருமையை கன்முகக்கேட்ட பொதியமலை மாது, புன்முறுவல் பூத்துத் தன் மலையின் பழம் பெருபையைக் கூறத் தொடங்கினுள். இறையவரும் மறையவரும், வட கலையும் தென்கலையும், நவமணியும் குருமணியும் போற்றி யுறையும் பொதிய மலையின் பெருமை யைக் குறமாது கிறை மொழிகளாற் கூறுகின் ருள.
* மந்தமாருதம் வளரு
மலையெங்கள் மலையே வட்கலை தென்கலை பயிலு மலையெங்கண் மலையே கந்தவேள் விளையாடு
மலையெங்கள் மலேயே கனகநவ மணிவிளையும் D2o Gués Gór (D2òGui
இந்தமாநிலம் புரக்கு
மங்கயற்கண் அம்மை இன்பமுறும் தென்பொதிய மலையெங்கண் மலையே.’ "அம்மே 1 மந்தமாருதம் வளரும் மலை எங்கள் மலை யேயாகும். வடகலையும் தென்கலையும் வளர்ந் தோங்குமலை எங்கள் ம8லயேயாகும். கந்தவேள் விளையாடும் மலை எங்கள் மலையேயாகும். பொன்

இருமலையும் நிகரேயாம் f
னும் நவமணியும் பொருந்திய மலை எங்கள் மலையே யாகும். அங்கயற்கண் அம்மை அருள் சுரங்து அமரும் மலை எங்கள் மலையேயாகும். இவ்வாறு இமையோரும் ம்றையோரும் விரும்பி உறையும் இஃணயற்ற நாடு எங்கள் நாடேயாகும் என்று பொதிய நாட்டின் பழம் பெருமை கூறக்கேட்ட குறவஞ்சி சிறிது குனிந்தாள்.
காட்டின் பெருமை கூறிய பொதிய மலைக் குறத்தியை வெல்ல இயலாதென்றறிந்து குற்ருரலக் குறமாது, ஆற்றின் பெருமையால் அம்மாதை வெல் லக் கருதினுள். ஞானிகளும் அறியாத சித்திர மதி யின் பிறப்பையும் குறவஞ்சி கூறத் தொடங்கினள். திரிகூடமலையில் தேனருவி திரையாய் எழும்பிச் சிவகங்கை ஆருய்ப் பாய்ந்து, செண்பக அடவியின் வழியாய்ச் சென்று பொங்குமா கடலில் வீழ்ந்து சித்திர நதியாகப் பாயும் சிற்ருற்றின் பெருமையை கிறைந்த சொற்களாற் போற்றிப் புகழ்ந்தாள். அப் பால் அங்கதி பெருகிவரும் பெருமையையும் அவ் வாற்றில் உகளும் மீன்களின் வகைகளையும் குற வஞ்சி கூறத் தொடங்கினுள்.
குற்றுல மலையினின்று பெருகியோடும் சித்திர நதியில் பசவையும், குசவையும், வாளையும், கோளை யும், தேனியும், உளுவையும், மயிந்தியும், பயிந்தி யும், அசரையும், மசரையும், அராலும், விராலும் அங்கு மிங்கும் பாய்ந்து விளையாடும் பெருமையைக் குறவஞ்சி விளக்கமாகக் கூறினுள். இதனைக் கேட்ட பொதிய மலைக் குறமாது தனது மலையில்

Page 9
8 அறிவுரை மால்
தோன்றும் பெரியாறென்னும் பொருநையாற்றின் பெருமையையும்,அவ்வாற்றில் அமைந்த மீன்களின் வகையையும் அழகுற எடுத்துரைத்தாள். குறு முனிவன் வாழும் மலை விடத்தே தோன்றி, வான ருவியாய் விழுந்து, கல்யாணி தீர்த்தமாய் இழிந்து, பொருநையாய்ப் பெருகிவரும் பொதியமலை ஆற் றின் பெருமையைக் குறமாது கனிந்த சொற்க ளால் மொழிந்தாள். அவள் பொருநையாற்றின் பெருமையை வியந்து கூறக் கேட்ட குறவஞ்சி பொதிய மலையின் பெருமையை அறிந்து, இருமலை யும் கிகரென்றும் இதற்கு ஐயமிலதேயாம் என் னும் சமரச அறிவோடு சாந்தமாய்ப் பிரிந்து சென்ருரள்.
 

2. நச்சினர்க்கினியர்
*“, “ Luj-SO) F D T 6d2ko ULu (GuDa5id
பெளவநீர் பருகிக் கான்ற வெச்சினுற் றிசையு முண்ணு
மமிழ்தென வெழுநா வெச்சின் மெச்சிநா னுளும் விண்ணுேர் மிசைகுவர் வேத போத னச்சினுர்க்கினிய னெச்சி
னறுந்தமிழ் நுகர்வர் நல்லார்’ புலவர் உச்சிமேற் கொள்ளும் நச்சினர்க்கினியர் பாண்டிவள நாட்டிலே மதுராபுரியில் பிறந்தவர்; அந்தண மரபினர்; பாரத்துவாச கோத்திரத்தி னர்; சைவ மதத்தினர்.
இளம்பூரணர், பேராசிரியர், சேனவரையர், ஆளவந்த பிள்ளை முதலிய உரையாசிரியர்கள் இவர் உரையில் எடுத்துக் கூறப்படுகின்ற மையின், இவர், அவர்கள் காலத்தவர் அல்லது பிற்பட்டவர் ஆதல் வேண்டும். பரிமேலழகரும் இருவரும் ஒரே காலத்தவரென்றும் கருதப்படுவர். பரிமேலழகர் கொள்கையை இவர் திரு முருகாற்றுப்படை உரை யில் மறுத்திருக்கின்ருரர்.
*இதன் பொருள்; பச்சைமால் போன்ற மேகம் கடல் மீரைப் பருகி உமிழ்ந்த எச்சிலாகிய மழை மீரை நான்குதிசை களிலுமுள்ள உயிர்கள் அமிழ்து எனும்படி விரும்பி உண்ணும்: தீயின் எச்சிலாகிய ஆவுதியைத் தேவுக்கள் விரும்பி காள்தோறும் நுகர்வர்; அறிவுடையோர் அந்தணராகிய கச்சினர்க்கினியரின் எச்சிலாகிய கறிய தமிழை நுகர்வர்.

Page 10
O அறிவுரை மாலை
திருமுருகாற்றுப்படை பதினேராங் திருமுறை யின் ஒரு பகுதியாக உள்ளது. திருமுறை நம்பி யாண்டார் நம்பியாரால் வகுக்கப்பெற்றது. நம்பி யாண்டார் நம்பியின் காலம் பதினேராம் நூற்ருரண் டென்பர். திருமுருகாற்றுப்படை பதினேராங் திரு முறையிற் சேர்க்கப்பட்டுள்ளதை நச்சினர்க்கினி யர் கூறிற்றிலர். ஆகவே நச்சினர்க்கினியர், திரு முறை வகுப்பதற்கு முன்னிருந்தவராதல் வேண் டும். இன்றேல் திருமுருகாற்றுப்படை, திருமுறை யுள் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டதாதல் வேண் டும். உரை ஆசிரியர்களின் காலம் பன்னிரண்டாம் நூற்ருரண்டுக்கும் பதினன்காம் நூற்ருரண்டுக்கும் இடையிலென இக்கால ஆராய்ச்சியாளர் கூறுவர். பத்துப்பாட்டு, தொல்காப்பியம், கலித்தொகை சீவகசிந்தாமணி, முதலிய தூல்களுக்கும், குறுங் தொகையிற் பேராசிரியர் பொருளெழுதா தொழிந்த இருபது செய்யுளுக்கும் இவர் உரை செய்தனர். இதனை,
* பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியு மாரக் குறுந்தொகையு 2ளஞ்ஞான்குஞ்-சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னுச்க்கினிய மே,’ என்னும் வெண்பா விளக்குகின்றது.
இவர், சீவகசிந்தாமணிக்கு முதன் முறை ஓர் உரை எழுதினர். அக்காலத்துப் புகழ்பெற்றிருந்த சைன வித்துவான்கள் அவ்வுரையை அங்கீகரித்

நச்சினுர்க்கினியர் 11
திலர். அதுகண்டு இவர் அருகத நூல்கள் பலவற் யையும் நலமுற ஆராய்ந்து இரண்டாவது ஓர் உரை எழுதி அவர்களுக்குக் காட்ட அவர்கள் உற்று நோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக் கொண்டனர் என்று சைனர் கூறுவர்.
இவர் தொல்காப்பிய உரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய நூல்களிலிருந்தும், பல உரைகளிலிருந்தும் பற்பல பொருள்களை எடுத்து ஆங்காங்கு நன்கு காட்டிப் போகின்றனர். அத னல் இவர், வடமொழியிலும் மிக்க பயிற்சி யுடையவ ரென்று சொல்வதுடன் பலவகையான கலைகளி லும் வல்லவரென்று சொல்ல வுமிடமுண்டு.
இவர் காலத்தில் பரிமேலழகர் உடனிருந்தா ரெனக் கூறுவோர், “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே-உடம்பொ டுயிரிடை நட்பு’ என் லும் குறளில் ‘குடம்பை என்பதற்கு நச்சினர்க் கினியர் கூண்டு எனவும், பரிமேலழகர் முட்டை எனவும், பொருள்கூறினர் எனவும், நச்சினர்க்கினி யர், பரிமேலழகர்உரையைப் புகழ்ந்தனரெனவுங் கூறுவர்.
*பாற்கடல்போற் பரந்த நல்ல நூல்களின் உயர்ந்த பொருள்களை நுண்ணிதாகக் கற்று ணர்ந்த குற்றங் தீர்ந்த கேள்வியுடைய புலவோர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பொதிந்த நூல்களாகச் செய்தனர். நச்சினுர்க்
*இது நச்சினர்க்கினியர் உரைச் சிறப்புப்பாயிரம் என்று வழங்கும் செய்யுளின் வசன நடை.

Page 11
12 அறிவுரை, மாலை
கினியர் அந்நூல்களையெல்லாம் துறைபோகக் கற்ற றிந்த சிங்தையுடையர். -
எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூன் அறும் இழுக்கின்றி அமைந்த திருந்திய பழைய புகழுடைய தொல்காப்பியம் என்னும் ஆழ்ந்த கடற்பரப்பை நாவாய்கொண்டு கடந்து பெரிய கரையை அடைதலரிது. அதனைக் கற்றுக் கரை காணமாட்டாத கல்லா மாந்தர் கற்றுக் கரையேறு தல் வேண்டியும், நல்ல அறிஞர் விரும்புதல் வேண் டியும், மறுவுங் குறையுமின்றிக் கதிருடைய கலை கிறைந்த முழுமதிபோல், இவர் காண்டிகை உரை செய்தார்; பண்டையோர் புகழ்ந்த நூல்களே ஆராய்ந்து, சான்ருேரர் பாடிய தண்ணிய தமிழின் சுவையைக் கற்போர்க்கு விளங்குமாறு பத்துப்பாட் டுக்குத் தெள்ளிய உரை எழுதினர். கடல் சூழ்ந்த உலகில் அறிவுடையோர் பயிலுங் கலித்தொகைக் கருத்தினை விளக்கியும், உள்ளுறை உவமம், ஏனை உவமம், உரிப்பொருள், மெய்ப்பாடு, வினைமுடிவு முதலியவற்றைக் காட்டியும் யாவரும் போற்ற இனிய உரை எழுதினர்.
இவர், உலகம் புகழ்ந்து கொண்டாடும் சிந்தா மணிக்குத் திருத்தக்கதேவரின் கருத்து இது என நுண்ணுரை செய்த புலமையுடைய ஆசிரியர்; பேராசிரியர் உரை எழுதாதொழிந்த குறுங் தொகையின் இருபது பாடல்களுக்கும் உரை செய்த 'புகழமைந்த மறையோன்; எட்டுத்திசை களிலும் புகழ் விளங்க, வண்டு ஒலிக்கும் சோலை

நச்சினுர்க்கினியர் 18.
யுடைய மதுராபுரியிற் ருேன்றிய ஆசிரியன்; பாரத்துவாசிகோத்திரத்திற் ருேரன்றியவரும், நான் மறை துணிந்துகடறும் நற் பொருளாகியஞானம் நிறைந்த வருமாகிய சிவச்சுடர் ; தனக்குத் தானே ஒப்பாகிய தன்மையும் மெய்மையுமுடைய நச்சி னர்க்கினியன் என்னும் பெயரோன்; இருவினைகளை யும் போக்கும் அருவியுடைய பொதிய மலையிலிருக் கும் குறுமுனிவர் ஆராய்ந்த தமிழ் விளங்க, அவன் புகழ் இவ்வுலகில் ஊழிகாலம் விளங்குவதாக,
* எவனுல வாயிடைவந் தமுதவா
யுடையனென வியம்பப் பெற்றேன் எவன் பண்டைப் பனுவல் பல இறவாது
நிலவவுரை யெழுதி யீந்தோன் எவன் பரம உபகாரி யெவ
னச்சினுர்க்கினிய னெனும்பேராளன் அவன்பாத விருபோது மெப்போது
மலர்கவென தகத்து மன்னுே’
(இ-ள்) எவன் மதுரையிற் பிறந்து அமுதவா யன் என்று சொல்லப்பெற்றேன் ? எவன் பழைய நூல்கள் இறந்துபோகாது நிலவ உரையெழுதி அளித்தோன் ? எவன் பெரிய உபகாரி? எவன் நச்சினர்க்கினியன் எனும் பெயருடையோன் ? அவனது பாதங்களாகிய இருமலர்களும் என்ன கத்து எப்போதும் மலர்வனவாக,

Page 12
3. சரித்திரம்
கழிந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு மொழிதல் சரித்திரம் எனப்படுகின்றது. கட்டுக் கதைகள் சரித்திரமாகா. சரித்திரத்தையும் கட்டுக் கதைகள் போன்றபரம்பரைக்கதைகளையும் பிரித்து அறிவது எளிது அன்று. எழுத்துப் பிரமாணங்கள்,முற்றரகக் கொள்ளத்தக்கனவல்ல. சில செவிவழிக் கதைக ளூம், சரித்திரங்களோடு கலந்திருத்தல் கூடும். செவி வழிக் கதைகள் மிக ஐயத்துக்கு இடமானவையாக வும், சிலவேளை கட்டுக்கதைகளாகவும் மறந்துவிடத் தக்கனவாகவும் இருக்கும். மனிதன் செவிவழிக் கதைகளை வைத்துக்கொண்டு, பல கற்பனைக் கதை க3ள உண்டாக்கியிருக்கிருரன். இதனல் உண்மைக் கதைகளையும் கட்டுக் கதைகளையும் பிரித்தறிய முடி யாமல் இருக்கின்றது.
சரித்திரம் எழுதுவதற்கு உண்மையான ஆதாரங்கள் மட்டும் போதுமானவையல்ல. பல உண்மைச் சரித்திரங்களும், காலக் குறிப்புகளும் எகிப்து, ஆசிரியா, சீனம் முதலிய நாடுக 2ளப் பற்றிக் காணப்படுகின்றன. உண்மைச் சரித்திரங் களாயினும் அவை அங்காடுகளின் சரித்திரம் எழுதுவதற்குப் போதுமானவையல்ல. ஒரு காலத் தில் இருந்த அரசன் அடுத்த காட்டு அரசனேடு போராடி வென்றன், அல்லது தோற்ருரன் என் பனபோன்ற குறிப்புகள் கால சம்பந்தமான பயனுள்ளன. அனல் அவை சரித்திரம் ஆக

சரித்திரம் 15
மாட்டா. காலக் குறிப்புக்கள் மத்திரமல்ல, சமூக நிகழ்ச்சிகள், அவற்றின் படிப்படியான முன் னேற்றம், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் மிாற்றமடைந்த நிகழ்ச்சிகள், அவை ஒரு போக்கி லிருந்து இன்னெரு போக்கில் மாறுதலடைதல் முதலியவற்றை எல்லாம் விளக்கிக் கூறுவதே சரித்திரமாகும்.
பரந்த பூமியின் மேற்பரப்பில் மனிதர் வாழ்ந்து வருகின்ற காலத்தையும் இடத்தையும் உணர்த்தும் சரித்திரமோ அற்பமானது. பழயை அநாகரிக மக்களுக்குச் சரித்திரம் இல்லை. வாழ்க்கையின் பொருட்டுப் போராடுவதில் அவர் களுடைய ஆற்றல் ஓய்ந்துவிட்டது. அவர்கள் தம்மைக் கூட்டமாகச் சேர்ந்து வாழும் உயிர்க ளாக நினைக்கவும் சமூக நிகழ்ச்சிகளை எழுதவும் நேரம் பெறவில்லை. அரைகுறையாகத் திருத்த மடைந்த மக்கள் சரித்திர மெழுதும் அறிவைப் பெருரமலும் அதற்கு வேண்டி யஆதாரங்கள் இல்லா மலும் இருந்தனர். 'சாதி’ என்று சொல்லப்படு கின்ற பழமையான அடக்கியாளும் பரம்பரை வழக்கினுல் இந்தியா, எகிப்து, சீன முதலிய நாடு களின் சமூக வளர்ச்சி மிகப் பைய ஊர்ந்து செல் ன்ெறது; சில சமயங்களில் அது வளரவில்லை என்று கூறத்தக்கவாறு மெதுவாகச்செல்கின்றது. பாட்டன் வாழ்ந்ததுபோலவே பேரனும் வாழ்கின்ருரன். இந்நிலைமையில் சரித்திரம் எழுதுவ தற்கு வேண்டிய செய்திகள் இல்லாமல் இருக்கின்

Page 13
16 அறிவுரை மாலை
றன. பெரிய மக்கட் சமூகம் தலைமுறையாக ஒரே வகையான நிலைமையில் வாழ்தல் பெரிதும் கருத் தில் கொள்ளத்தக்கது. கிழக்குத் தேசங்களில் போரும் சமாதானமும் பெரிய மாறுதல்களேச் செய்திருக்கும் என்று தெரிகின்றது. ஆனல் அவ் வகையான மாறுதல்கள் சரித்திர சம்பந்தம் பெரு மலும்பெறுபேறுகள் குறிக்கப்படாமலும் இருக் கின்றன.
உண்மையான சரித்திரத்துக்கு நாலாயிரம் ஆண்டுகளை மட்டும் கொள்ளலாம். ஆரம்பம், பழைய எற்பாட்டுச் சரித்திரங்கள் ஆகலாம். யூதர் களின் சரித்திரக் குறிப்பு முடிவடைவதன் முன்னே கிரேக்கர் சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். அடுத்த படியில் உரோமர், தொடர்பான சரித்திரம் எழுதி வந்திருக்கின்றனர். இப்பொழுது சரித்திரத்துக் குள்ள ஆதாரங்கள் மேற்கிலும் தெற்கிலும் கிழக்கி லும் அதிகம் கிடைக்கின்றன.
உண்மை நிகழ்ச்சிகளை விசாரணை செய்வதில் ஆரம்ப சரித்திரகாரர் முயற்சி எடுக்கவில்லை. சரித் திரம் எழுதுவோரும் சரித்திரத்தைப் படிப்போரும், உண்மையான சம்பவங்களைப் பொருட்படுத்தும் நிலைமையை அடையவும் இல்லை. ஆரம்ப சரித்திர ஆசிரியர் உண்மைச் சம்பவங்களை விளக்குவதை விட, மக்களைக் கவரக்கூடிய கற்பனைகளிலும் சுவை களிலும் கருத்துச் செலுத்தினர்.
இரங்கத்தக்க அல்லது நகைக்கத்தக்க ஒரு நல்ல கதை, உண்மை ஆராயப்படாதே விரும்பப்

சரித்திரம் / 17
பட்டது. அவ்வகைக் கதைகளில் நேர்மைக்கும் தீநெறிக்கு முள்ள தாரதம்மியங்கள் உச்ச நிலையிற் கூறப்படுகின்றன. இவையே பழஞ் சரித்திர ஆசிரியர்களின் நோக்கங்களாக இருந்தன. பழைய நாடக ஆசிரியர்களைப் போலவே இவர்களும் உண் மைகளோடு கட்டுக்கதைகளையும் கலந்து எழுதினர். அவர்கள் எடுத்துக்கொண்ட பொருள்கள் ஒரே வகையின. நாட்டைக் காப்பாற்றிய வீரனைப்பற்றி யும் தோற்றுப்போன பகைவனைப் பற்றியுமே நாடகங்கள் எழுதப்பட்டன. அவர்களைப் பற்றிய வருணனைகள் உணர்ச்சி உண்டாக்கத்தக்ககற்பனை களாக இருந்தன. இவை கண்டிக்கத் தக்கனவாக இருப்பினும் பேச்சு வன்மைக்கும் ஆவேசத் துக்கும் ஏற்றனவாக இருந்தன. ஹெரதோதசு (கி. மு. 500) முதலிய கிரேக்க சரித்திர ஆசிரியர் களால் எழுதப்பட்ட சரித்திரங்கள் இவ் வகை யினவே.
பழைய சரித்திரம், ஒரு பொருளைப் பார்த்து அதன் சரியான சாயலை வரையாது மற்ற எல்லா அழகுகளும் தோன்ற வரையப்பட்ட ஒவியம் போன்றது. முற்கால ஆசிரியர்கள், பொது மக்க ளுக்குச் சரித்திரம் எழுதினர்களேயன்றிச் சரித் திரக் கலையைப் பயில்வோர்க்காக எழுதவில்ஜல என்று கூறலாம்.
-g. աfr-2

Page 14
4. முச்சங்கமும் இறையனூர்
அகப்பொருளும்
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென
மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினர் பாண்டி யர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்திய னரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடி நாகராயரும், நிதியின் கிழவனுமென, இத்தொடக் கத்தார், ஐற்றுஞ்ஞா நாற்பத் தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று காற்பத்தொன்பதின்மர் பாடின ரென்ப. அவர் களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாட லும், முதுநாரையும், முதுகுருகும், களரிய விரையு மென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று காற்பதிற்றியாண்டு சங்கமிருந்தா ரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினர் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோனீருரக எண்பத்தொன் பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினர் எழு வர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.
இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனரும்
தொல்காப்பியனரும், இருந்தையூர்க் கருங்கோழி
* இது இறையனர் அகப்பொருளுரையிலிருந்து எடுக்கப்பட் டது; முற்கால உரை கடைப் போக்கைக் காட்டுவது,

முச்சங்கமும் இறையனர் அகப்பொருளும் 19 யும்,மோசியும், வெள்ளுர்க்காப்பியனும், சிறுபாண் டாங்கனும், திரையன்மாறனும், துவரைக்கோனும், கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடின ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், இசை நுணுக்கமும், பூதபுராணமுமென இவை யென்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரீஇயினர், வெண் டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறனிருரக ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங் கேறினர் ஐவர் பாண்டிய ரென்ப. அவர் சங்க மிருந்து தமிழ் ஆராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக் காலத்துப்போலும் பாண்டியனுட்டைக் கடல் கொண்டது.
இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனரும், அறிவு டையானரும், பெருங்குன்றூர்க்கிழாரும், இளங் திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனரும், மருதனிள நாகனரும், கணக்காயர்மகனுர் நக்கீரன ருமென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன் பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினு ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுங்தொகை நானூறும், குறுங் தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூ றும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம் பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரி

Page 15
20 அறிவுரை மாலை
யும், சிற்றிசையும் பேரிசையுமென்று இத்தொடக் கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப் பியமுமென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணுாற்றைம் பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீஇயினர் கடல் கொள்ளப் பட்டுப்போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக் கிரப் பெருவழுதியீருக நாற்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறினர் மூவர் பாண்டிய ரென்ப.
அக்காலத்துப் பாண்டியனடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது; செல்லப் பசிகடுகுதலும் அரசன் சிட்டரையெல்லாம் கூவி * வம்மின், யான் உங்களைப் புறந்தாகில்லேன்; என் தேயம் பெரி தும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கறிந்த வாறு புக்கு, காடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின்' என்ருரன். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின பின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழைபெய்தது. பெய்த பின்றை அரசன் இனி நாடு நாடாயிற்ருகலின் நூல் வல்லாரைக் கொணர்க” என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் வல்லாரை எங்கும் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதி காரம்வல்லாரை எங்குந்தலைப்பட்டிலே மென்றுவங் தார்; வர, அரசனும் புடைபடக்கவன்று ‘என்னை ! எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத் தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறே

முச்சங்கமும் இறையனர் அகப்பொருளும் 2.
மெனின் இவை பெற்றும் பெற்றிலேம் ' என்று சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழனிறக் கட வுள்சிந்திப்பான், ‘என்னை பாவம் 1 அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று. அதுதானும் ஞானத் திடையதாகலான் யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத் தெழுதிப் பீடத்தின் கீழிட்டான்.
இட்ட பிற்றை ஞான்று தேவர்குலம் வழிபடு வான், தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து நீர் தெளித்துப் பூவிட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென் அறும் அலகிடாதான், அன்று தெய்வக் குறிப்பினன் அலகிடுவனென்று உள்ளங் குளிர அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினுேடும் இதழ் போந்தன. போத ரக்கொண்டு போந்து நோக்கினற்கு வாய்ப் புடைத்தாயிற்ருேரர் பொருளதிகாரமாய்க் காட் டிற்று. காட்டப், பார்ப்பான் சிந்திப்பான் ; *அரசன் பொருளதிகார மின்மைற்ே கவல்கின் ருரனென்பது பட்டுச் செல்லாகின்றுணர்ந்து நம் பெருமானருளிச் செய்தானகும் ' என்று, தன் அகம் புகாதே கோயிற் றலைக்கடைச்சென்று கின்று கடைகாப்பார்க் குணர்த்த, கடைகாப்பார் அரசற்குணர்த்த, அரசன் புகுதருக என்று பார்ப் பானைக் கூவச் சென்று புக்குக் காட்டக்கொண்டு நோக்கி, 'இது பொருளதிகாரம் ! நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானகற்பா லது” என்று, அத்திசை நோக்கித் தொழுது

Page 16
22 -sysólasæn g unrðað
கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து, 'நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம் 1 இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின்” என, அவர்கள் அதனேக் கன மாப் பலகை ஏறியிருங் தாராய்வுபூழி, எல்லாரும் தாம்தா முரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ் சென்றன. செல்ல, காம் இங்ஙனம் எத்துணே யுரைப்பினும் ஒருதலைப்படாது; நாம் அரசனுழைச்சென்று நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டுமென்று கொண்டு போந்து, அவனுற் பொருளெனப்பட்டது பொருளாய், அன்றெனப் பட்டது அன்ற யொழியக் காண்டுமென எல்லாரும் ஒருப்பட்டு அரசனுழைச் சென்ருரர். செல்ல, அர சனும் எதிர் எழுந்து சென்று, ‘என்ன ? நூற்குப் பொருள் கண்டிரேல்' என, “அது காணுமாறு எமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும்’ எனப் போமின் நுமக்கோர் காரணிகன் எங்கினம் நாடு வேன் ? விேர் நாற்பத்தொன்பதின்மராயிற்று. நுமக்கு நிகராவார் ஒருவர் இம்மையினின்றே" என்று அரசன் சொல்லப்போந்து, பின்னையும் கனமாப் பலகை ஏறியிருந்து, " அரசனும் இது சொல்லினன். யாங்காரணிகனைப் பெறுமாறு என்னை கொலென்று சிந்திப்புழிச் ‘சூத்திரஞ் செய்தான் ஆலவாயி லவிர்சடைக் கடவுளன்றே ! அவனையே காரணிகனையும் தரல்வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்’ என்று சென்று வாங் கிடப்ப, இடையாமத்து, “இவ்வூர் உப்பூரி குடி

நச்சினர்க்கினியர் 23
கிழார் மகனவான், உருத்திர சன்மன் என்பான் பைங்கண்ணன், புன்மயிரன் ஐயாட்டைப் பிராயத் தன்மூங்கைப்பிள்ளை உளன்; அவனை அன்னனென் றிகழாது கொண்டுபோந்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து ; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும். அவன் குமாரதெய்வம்; அங் கோர் சாபத்தினுற் ருேரன்றினன்' என முக்காலி சைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்றரக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரி குடிகிழாருழைச் சங்கமெல்லாஞ் சென்று இவ்வார்த்தை யெல்லாம் சொல்லி ஐயனவான் உருத்திரசன்மனத் தரல்வேண்டு மென்று வேண்டிக்கொடுபோந்து, வெளிய துடீஇ, வெண்பூச் சூட்டி, வெண்சாங் தணிந்து, கனமாப்பலகையேற்றி இரீஇக் கீழிருந்து குத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப் t ፡dé கேட்டுவாளா இருந்து, மதுரை மருத னிள நாகனர் உரைத்தவிடத்து ஒரோ வழிக் கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் கிறுத்துப் பின் னர்க் கணக்காயனர் மகனர் நக்கீரனர் உரைத்த விடத்துப் பதங்தோறுங் கண்ணிர் வார்ந்து மெய்ம் மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்ருரம் இந்நூற் கென்ருரர்.
அதனல், உப்பூரிகுடிகிழார் மகனர் உருத்திர சன்மனவான் செய்தது இந்நூற் குரையென்பாரு

Page 17
24 அறிவுரை மாலை
முளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்ப. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப் பட்ட நூற்கு நக்கீரனல் உரைகண்டு குமாரசாமி 2ாற் கேட்கப்பட்டதென்க. இனி உரை வந்த வாறு சொல்லுதும்.
மதுரைக் கணக்காயனர் மகனர் நக்கீரனுர், தம் மகனர் கீரங்கொற்றனர்க் குரைத்தார்; அவர் தேனூர்கிழார்க்குரைத்தார்; அவர் படியங்கொற்ற னர்க் குரைத்தார்; அவர் செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனுர்க் குரைத்தார்; அவர் செல்லூராசி ரியர் ஆண்டைப் பெருங்குமாரனர்க் குரைத்தார்; அவர் திருக்குன்றத்தாசிரியர்க் குரைத்தார்; அவர் மாதவளனர் இளநாகனர்க் குரைத்தார்; அவர் முசிறியாசிரியர் நீலகண்டனர்க் குரைத்தார். இங் வனம் வருகின்றது இவ்வுரை.
২১ 哆
--
NS
ち ジ
 
 
 

5. எழுத்தின் வரலாறு
மக்கள் வரலாற்றில் எழுத்துக்கள் ஆரம்பிப்பதற்
குச் சில காரணங்கள் உண்டு. மக்கள் தமது ஆயுதங்களையும் ஆடு மாடுகளையும் மட்பாத்திரங் களையும் குறிக்கும் அடையாளங்களை இடுதல், எண். ணங்களை அண்மையில் இல்லாதவர்களுக்கு அறி வித்தல் முதலியன அவற்றுள் தலைமையான கார ணங்களாகும்.
ஒவ்வொரு மக்கட்குழுவினருடைய பேச் சிற் காணப்படும் ஒலிகளைக் குறிக்கும் வடிவங்கள் எழுத்து எனப்படும். ஒரு மொழியில் எத்தனை தனி ஒலிகள் காணப்படுகின்றனவோ அத்தனை எழுத்துகளே அதற்கு உண்டு. பல நூற்ருரண்டு களாக ஒருமொழியின் ஒலிகள் மாருமல் இருத்தல் அரிது. ஒலிகள் மாறுபடவே பழைய எழுத்துக ளின் வடிவங்கள் பயன் அற்றுப் போகின்றன, புதிய எழுத்துகள் உண்டாகின்றன. ஒரு எழுத்தே பலவகையான ஒலிகளே உச்சரிக்க வழங்கப்படு வது முண்டு. அவ்வவ்வொலிகளைக் குறிக்கத்தக்க முறையில் அவ்வெழுத்து மாற்றமடைவது முண்டு. இவைபோன்ற காரணங்களால் எழுத்துகள் காலத் துக்குக் காலம் மாறுபடுகின்றன.
ஆங்கில மொழியின் எழுத்துகள் இலாத்தின் எழுத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்டன. இலாத் தின் எழுத்துகள் கிரேக்க எழுத்துகளைப் பார்த்துச் செய்யப்பட்டன. கிரேக்க எழுத்துகள் பினிசிய எழுத்துகளிலிருந்து பிறந்தன. பினிசிய எழுத் துகள் ஆப்பெழுத்துகளிலிருந்து தோன்றின. ஆப்பெழுத்துகள் ஓவிய எழுத்துகளின் திரிபு.

Page 18
26 அறிவுரை மாலை
ஆதி எழுத்துகள் ஓவிய வடிவமாக இருந்தன. அவ்வெழுத்துகளின் பிறப்பிடம் எகிப்து. எழுதும் இலகுவை நோக்கி அவ்வெழுத்துகள் சில் மாற்ற மடைந்தன. களிமண் தட்டில் சதுரமான துரலி கைகளால் எழுதப்பட்டமையால் அவ்வெழுத்து கள் ஆப்பின் வடிவைப் பெற்றன. ஆகவே அவ் வெழுத்துகள், ஆப்பெழுத்துகள் எனப்பட்டன. இவ்வாப்பெழுத்துகளைப் பின்பற்றியே பினீசியர் எழுதினர். மக்கள் நாகரிகமுருரத காலத்தில் மொழி, ஓவிய முறையாகவே எழுதப்பட்டது. காலப்போக்கில் ஒவிய எழுத்துகள் பலவகை மாற் றங்களடைந்தன. அதனல் பிற்கால எழுத்துகள் ஒவியங்களின் வடிவை இழந்தன.
எகிப்திலே ஒவிய எழுத்து வழங்கிய காலத்தில் உச்சரிப்புக்கு ஏற்ப எழுதப்படும் எழுத்துகளும் இருந்தன. உச்சரிப்பு முறைக்கு ஏற்ற அவ் வெழுத்துகளும் ஒவிய எழுத்துகளின் திரிபு என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒவிய எழுத்து கள் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களின் வடிவங்கள் அல்லது குறிகளாக இருந்தன. வடிவ மில்லாத செய்கை, குணம் முதலியவற்றைக் குறிக் குமிடத்து ஓவிய எழுத்துகளோடு உச்சரிப்பு முறைக்கேற்ற சொற்கள் வைத்து எழுதப்பட்டன. இக்காரணத்தினலேயே இருவகை எழுத்துகளும் ஒரு காலத்தில் வழங்கலாயின.
எழுத்தை உண்டாக்குவற்குப் போதிய நாகரி கமும் எண்ணங்களின் முதிர்ச்சியும் வேண்டும்.

எழுத்தின் வரலாறு 27
இங்கிலையை அடைந்த மக்களே எழுத்துகளை வழங்கினர். ஒரு பொருளை உணர்த்த வரிவடிவ மான ஒரு குறியீட்டைப் பயன்படுத்தலே முற்கால எழுத்தாகும். பின்னே தனித்தனி ஒலிகளுக்கு எழுத்துகள் ஏற்பட்டன. இவ்வெழுத்துகள் உயிர், மெய் என இரு பிரிவில் அடங்கும்.
நாம் அறிந்துள்ள மொழிகளே எல்லாம் நான்கு அல்லது ஐந்து ஆதி மொழிகளின் கூட்டங்களாகப் பிரிக்கலாம். இவை வெவ்வேறு வகையாகக் காணப் பட்டாலும் ஆதியில் ஓவிய எழுத்துகளாக இருந்தன. ஆப்பெழுத்துகளும், சீன, மெக் சிக்க, பூக்காற்றன், மத்திய அமெரிக்க எழுத்து களும் எகிப்திய எழுத்துகளே. சீன மெக்சிக்க எழுத்துகளும் ஆப்பெழுத்துகளுமே ஆதியில்வியா பகம் அடைந்திருந்தன. ஆப்பெழுத்துகள் 96of guy எழுத்துகளாயின. ஐரோப்பிய எழுத்துகள்பினிசிய எழுத்தினின்றும் பிறந்தன.
திருத்தமான ஒவிய எழுத்துகளிலும் சில குறைபாடுகளுண்டு. அவை எண்ணில் அதிகம் இருந்தமையின் அவற்றை ஞாபகத்தில் வைத்திருத் தல் மிக அரிதாக இருந்தது. எழுத்தின் பயன் அதிகப்பட்ட காலத்தில் அவை குறுக்கி எழுதப்பட் டன. இதனுல் அவை பழைய வடிவினின்றும் மாறுபட்டன. ஆகவே, ஒவிய சம்பந்தமான முதன்மையை அவை இழக்கலாயின. எண்ணில் மிகுதிப்பட்ட எழுத்துகளைப்பயில்வது இலகுவன்று;

Page 19
28 அறிவுரை மாலை
ஒவிய எழுத்துகளால் எல்லா இலக்கண முடிபுகளை யும் காட்ட இயலாது. சொற்கள் வைக்கப்படும் முறைகளைக்கொண்டே எழுவாய், செயப்படு பொருள் முதலியவற்றை அறியவேண்டியிருந்தது. சில சமயங்களில் சொற்களுக்கிடையில் உள்ள தூரத்தைக் கொண்டும் அவற்றை அறிய வேண்டி யிருந்தது.
எச்சமூகத்தினரும் வேண்டுமென்று எழுத்து களை மாற்றமாட்டார்கள். இரண்டு நாகரிகங்கள் சங் தித்து, ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்ளும் போது இவ்வகை மாறுதல்கள் உண்டாகும். இதனுல், தாழ்ந்த நிலையிலுள்ள சமூகம் முன்னேற்ற மடை யும். அப்பொழுது அச்சமூகத்தினர் புதிய பொருள் களுக்கு, அப்பெயர்கள் சம்பந்தமான பெயர்களை உண்டாக்குவார்கள். உரோமர், தாமறியாதிருந்த யானைக்கு லூகானிய எருது’ எனப் பெயரிட்டு எழுதினர்கள். தாழ்ந்த நாகரிகமுடையவர்கள் ஒவிய எழுத்துக்கு மேல் அறியாமல் இருப்பார்க ளானல், தாம் எழுத விரும்பிய பெயரின் உச் சரிப்பைக் கொடுக்கக்கூடிய L6וOשמשל குறி களால் எழுதுவர். சில பொருள்களின் வடிவங் களை எழுதி, அவற்றின் பெயர்களின் முதல் அசையைச் சேர்த்து உச்சரிக்குமிடத்துக் கருதிய பெயரின் உச்சரிப்புத் தோன்றுதல் அம்முறை யாகும். கத்தரிக்காயின் வடிவையும் ஒரு கோலின் வடிவையும் எழுதி, ‘கத்தரிக்கோல்' என்று உச்ச ரித்தல் இதற்கு உதாரணமாகும்.

எழுத்தின் வரலாறு 29
சீன மொழியில் எண்ணில்லாத எழுத்துகள் இருக்கின்றன. அவை எல்லாம் ஆதியில் ஒவிய எழுத்துகளாக இருந்தன. ஆனல் அவற்றின் ஆதிப்பொருள்கள் சிறிதளவில் மட்டும் அறியக் கிடக்கின்றன. அக் குறிகள் சூரியன் (வட்டமும் உள் ஒரு புள்ளியும்) சந்திரன் (பிறையும் உள்ளே ஒரு கீற்றும்) மழை (கவிந்த அரை வட்டத்துள் துளிகள்) மலை (ஒன்றன் பக்கத்தில் ஒன்றுக மூன்று சிகரங்கள்) முதலிய இவைபோன்ற இயற் கைப் பொருள்களைக் குறிக்கின்றன. பின் இவை ஒன்ருேரடு ஒன்று இணைக்கப்படுகின்றன. கண் ணுக்குப் பக்கத்தில் துளியை இட்டால் ‘கண்கீர்’ என்று பொருள்படும். இவை எல்லாம் ஓவிய எழுத் துகள். ஆதியில் எண்ணங்களை மட்டும் உணர்த் துவனவாக இருந்து, இப்பொழுது உச்சரிப்பு முறையில் மட்டும் பயன்படும் சொற்களும் சீன மொழியில் இருக்கின்றன. சீன மொழியிலுள்ள ஒவ் வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்இலக் குறிக்கும். ஆப்பெழுத்து பாரசீகம், சின்ன ஆசியா, பாபி லோன் முதலிய நாடுகளில் வழங்கிற்று. ஆப் பெழுத்திற் சில எழுத்துகள் ஓவிய எழுத்துகளே என அவை தெளிவாகக் காட்டுகின்றன. இவ் வெழுத்து பாபிலோனிய *செமத்திய மொழிகஜள *செமத்திய மொழிகள் என்பன, எபிரேயம் பினிசியம் அசிரி யம் அராபியம் எதியோப்பியம் ஆர்மேனியம் முதலிய மொழி களைக் குறிக்கும். இப்பெயர், இம் மொழிகளை வழங்கும் மக்கள் கோவாவின் குமாரணுகிய செம்' என்பவனின் சந்ததியினின்றும் வந்தார்கள் என்னும் விவிலிய நூல் ஐதிகத்தைத் தழுவி எழுந்தது.

Page 20
0 அறிவுரை Lorడి
வழங்கிய மக்களுக்குரியதன்று. பாபிலோனியர் அதனைச் செமத்திய மக்களுக்கு முற்பட்ட சுமேரிய சாதியாரிடமிருந்து கற்றனர்.
ஆப்பெழுத்துகள் அசீரியாவிலும் பாபிலோ னிலுமிருந்து சுமேரியரது அல்லது பாபிலோனிய ரது மொழிகளை வழங்காத பிற நாடுகளிற் பரவின. ஆசியாவிலும் கிரேத்தா (Crete) முதலிய ஐசியன் தீவுகளிலும் இவ்வகை எழுத்துச் சாசனங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வழங்கிய மொழி கித்தைதி (Hittite) மொழி எனப்படும். கி. மு. 800 வரையில் எகிப்திய எழுத்துகள் போன்ற ஒரு வகை எழுத்து கித்தைதியில் வழங்கிற்று. கிரேத் தாவிற் காணப்பட்ட மைசீனிய எழுத்துகள் எகிப்திய மட்பாத்திரங்களிற் காணப்படும் எழுத்துகள்போல் இருக்கின்றன.
புராதன சாதியினர் யாவரும், தங்கள் எழுத்து உற்பத்திக்குக் கடவுள் சம்பந்தங் கூறினர். அசி ரிய நூல் ஒன்றில் நோபோ என்னும் கடவுள் அங் நாட்டு அரசனுக்கு ஆப்பெழுத்தை அருளிச் செய் தார் என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது. சமஸ் கிருதம் எழுதப்படும் எழுத்து, ‘தேவர்நகரில் உள் ளது’ என்னும் பொருள்பட தேவநாகரி (தேவநகரி) எனப்பட்டது. எகிப்திய எழுத்துக்கு இடப்பட்ட பெயரின் பொருள் தேவர் எழுத்தை எழுது வது என்பது. இவ்விதமான கொள்கை எச் சாதியாருக்கிடையில் வேரூன்றியிருந்ததோ அவர் கள் எழுத்து முறைகளை மாற்ற விரும்பமாட்டார்.

எழுத்தின் வரலாறு 31.
இன்றும் சமய குருமார் பழைய மொழிகளில் நம்பிக்கை வைத்துக்கொண்டிருப்பது இதற்கு உதாரணமாகும்.
மொழிகள் இந்து ஐரோப்பியம், செமத்தியம், துரானியம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஐரோப்பிய மொழிகள் எல்லாம் ஏறக்குறைய இந்து ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தன.
பினிசியரைப் பின்பற்றிக் கிரேக்கர், எழுத் துகளை வலப்பக்கமிருந்து இடப்புறமாக எழுதி னர். இடம் இருந்து வலம் எழுதும் முறை பிற் காலத்தில் ஏற்பட்டது. இடைக்காலத்தில் எழுத் துகள் வலமிருந்து இடமும், பிற்காலத்தில் இட மிருந்து வலமுமாக எழுதப்பட்டன.
1921-ஆம் ஆண்டு சிந்துநதிப் பள்ளத்தாக்கு களில் ஹரப்பா மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. அவ்விடங்களில் வழங்கிய எழுத்துகள் பொறிக்கப்பட்ட பொருள்கள் அகப்பட்டன. அவ்வெழுத்துகள் சீன எழுத்து க3ளப்போல் காணப்படுகின்றன. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லைக் குறிக்க வழங்கப் பட்டிருக்கின்றது. இவ் வெழுத்துகளிலிருந்தே தமிழ் எழுத்துகள் வளர்ச்சியடைந்திருக்கின்றன. அசோக லிபி எனப்படும் எழுத்துகளும் சிந்துநதிப் பள்ளத்தாக்கு எழுத்துகளினின்றும் பிறந்தன என்று ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர்.

Page 21
6. பழந் தமிழர் போர் முறை
கிரைகவர்தலும் கிரை மீட்டலும்
ஒரு வேந்தன் பிறிதோர் அரசனேடு போர் செய்யக் கருதினன் ; கருதித் தனது படைத் தலை வரையும் போர் நிலத்தைக் காத்து நின்ருேரரையும் அழைத்துப் பகைவரின் கிரைகளைக் கவர்ந்து வரப் பணித்தான். அக்கட்டளையை மேற் கொண்ட வீரக் கழலைக் காலிலே புனைந்த மறவர், * அரசே ! பகைவரது ஆகிரைகள் விடியற் காலத்தே நின் வாயிலிடத்தனவாம்’ எனக் கூறிச் சென்று, மகிழ்ச்சிக்குரிய இச் செய்தியைப் போர் வீரர்க் குணர்த்தினர். போரின்மையால் தினவு கொண்டு 'மலையேறிக் குதித்தேனும் உயிர்விடு வோம்" எனக் கவன்றிருந்த மறத்தொழில் மிக்கார் இந் நற்செய்தியைச் செவிக்கொண்டு, அகமும் முக மும் மலர்ந்து,மகிழ்ச்சியால் ஆடல் செய்தனர். பகை வரது ஆகிரை கிற்கும் இடம் முதலியவற்றை அறி தற்கு அரசனுடைய ஒற்றர் சிலர் மாறுவேடம் பூண்டு சென்றனர்.
போர் வீரருள் சிலர், இருள் சூழ்ந்த மாலைக் காலத்தில் பாக்கத்தே சென்று முற்றத்தின்கண்
* இக் கட்டுரை புறப்பொருள் வெண்பாமாலை யிலுள்ள வெட்சி, கரந்தை என்னும் பகுதிகளின் வசன நடையாகும்.

பழந்தமிழர் போர் முறை 88
முல்லை மலரையும் நாழியிலிட்ட நெல்?லயும் தூவித் தெய்வத்தைப் பரவிக் கைகூப்பித் தொழுது நற் சொற் கேட்க கின்றனர். அஞ்ஞான்று அவ்விடத் துள்ள மாது ஒருத்தி, * பெரிய கண்ணேயுடைய பசு வைக் கொண்டுவா” எனக் கூறினுள். நற்சொற் கேட்டு வந்தோர், தாம் கேட்டதைப் படைத் த8ல வற்குணர்த்தலும் அன்னேன், அதனை அறிவனல் ஆராய்ந்து நன்றெனக் கொண்டனன். கொண்ட தும் பருக்கைக் கற்கள் செறிந்ததும், சிள்வண்டு கள் ஒலிப்பதுமாகிய காட்டுவழியே செல்லவேண்டி வீரர் ஆர்ப்பரித்துக் காலிடத்தே செருப்புத் தொட் டனர்; முடியிடத்தே வெட்சிப்பூச் சூடினர்; துடி கறங்கிற்று.
இஃதிவ்வாருரக, பகைவரது மணிகள் கட்டிய கிரைகள் நிற்கின்ற காட்டிடத்துள்ள காரி என்னும் புள் தனது கடிய குரலால் அவர்க்கு வரும் கேட் டினை முன்னர் அறிவித்தது. அதனைச் செவிக் கொண்ட கிரை காவலர், தமக்கு நேர்வதோர் ஏதம் உண்டென ஓர்ந்து ஏந்திய விற்களுடன் இமை கொட்டாது நிரைகளைக் காத்து கின்றனர்.
சிங்கக் கொடியையும், கிளியையும், கஜலமாஜன யும், பேய்மிக்க படையினையுமுடைய கொற்றவை யின் கொடியை முன்னே உயர்த்தியவர்களாய், கூற்றுவர் குழுவினை ஒத்த வெட்சிவீரர், கழுகும் பருந்தும் பின்னே படர்ந்து செல்ல, இருமல் தீர்க் கும் மருந்துடையவர்களாய், வில்லாளர் காவல் செய்வதும், மூங்கில் அடர்ந்த மலைச்சாாலிடத்தவு
அ. மா-3

Page 22
84 ay aayor Lorabo
மாகிய மாற்ருரர் கிரைகளைக் கவரும்பொருட்டுக் கடிதேகினர். முன்னே சென்ற ஒற்றர், பசுக்கள் கின்ற இடமும், அவற்றின் அளவும், அவற் றைப் புறங்காத்து கின்ற படையின் அளவும் ஆராய்ந்து நள்ளிருளில் வந்து சேனைத்த8லவற் குணர்த்தினர்.
பகைவர் நிலையினை நன்கறிந்துகொண்ட லெட்சி வீரர், மூங்கில் செறிந்த மலைச்சாரலிடத்தே நள்ளிருளிற் பதுங்கியிருந்து, தருணம் பார்த்து ஒய் னெக் கிளம்பி கிரைகாத்து நின்ற வில்லாளரை வீழ்த்தி, கிரையினை அடித்துச் சென்றனர். செல்லு மிடத்து கிரையினைப் பறிகொடுத்தார் சிலர் மானம் மிக்கவர்களாய்ப் பின்தொடர்தலும், அன் னேரைப் பின்னணியத்தார் பொருது வீழ்த்த முன்னணியத்தார் கிரைகளை வருத்தமின்றிக் கடத் திச் சென்றனர்.
அரசன், வெட்சிவீரர் கொணர்ந்த நிரையினை, கிமித்தம் பார்த்துத் தப்பா வகை சொன்ன அறி வுடையோர்க்கும், துடி கொட்டும் புலையனுக்கும், பாணிச்சிக்கும், பாணனுக்கும் இன்னும் தமக்கு வேண்டிய பிறர்க்கும் பகுத்தளித்தான் தமது உயிரைப் பொருட்படுத்தாது பகைவர் ஊரிற் சென்று ஒற்றிவந்தார்க்கும், கிமித்தம் அறிந்து சொன்ன அறிவுடையோர்க்கும், மேலும் சில பசுக் க3ளக் கொடுத்தான். போர்வீரர் கள்ளுண்ணும் போது, செருவிடத்துத் துடி கொட்டிய புலையனுக் குக் கள்ளினை மிகுதியாக வார்த்தனர். ஆபரணங்

பழந்தமிழர் போர் முறை 85
களே அணிந்த அழகிய பெண்கள், மணம் பொருங் திய மாலைகள் பக்கத்தே அசையும்படி வள்ளிக் கூத்தாடினர்.
இஃதிவ்வாருரக, கிரை கவர்தற்பொருட்டுச் சென்ற வீரர்களது செய்தியை அறியாத வேட்டுவிச் சியர் கையைக் கன்னத்தே கொடுத்து வியாகுலம் மிகுந்தவர்களாக இருந்தனர். அஞ்ஞான்று நிரை கள் மன்றத்தே புகுந்தன. இடக்கண் துடிக்கப் பெற்ற வேட்டுவிச்சியர் தமது துன்பத்தைப் போக் கியவர்களாய் ‘எம் முடைய சுவாமி தலேயிலுள்ள மாலை வாழ்வதாக" என்று வாழ்த்தினர். மாற்ருரர் கிரையினைக் கவர்ந்துவந்த போர்வீரர்க்கு மரி யாதை செய்தற்பொருட்டு ஊரார், மன்றத்தே பந்த ரிட்டு ஆற்றுமணல் பரப்பி ஆட்டு மாமிசத்தைச் சுவைபெறச் சமைத்துப் பெருவிருந் தளித்தனர்.
நிரை மீட்டல்
கிரையினேப் பறிகொடுத்தோர் மானம் மிக்க வர்களாய், கிரை கவர்ந்தோரைப் பின்தொடர்ந்து அவரைச் செருவிடை வீழ்த்தி கிரையினை மீட்டுக் கொண்டு வருதலுமுண்டு.
பகைவர் நிரைகளைக் கவர்ந்து சென்றனர். ஆன்காத்து நின்ருேரரில் இறவாது எஞ்சிய சிலர் ஓடோடியுஞ் சென்று, தமது வேந்தற்கு இழிவு பயக்கும் அச்செய்தியை உணர்த்தினர். அதனைச் செவிமடுத்த வேந்தன் மண்டுதியென வெகுண்டு,

Page 23
86 அறிவுரை மால்
முடியிடத்தே காங்தைப் பூவினைச் சூடினன். போர் வீரர், காலிடத்தே வீரக் கழலைக் கட்டினர்;கூற்று வரைப்போற் கோபித்துக் கரந்தை மலரை மயிர் மிசை மிஜலந்து கொடிய வில்லைக் கையிடத்தே கொண்டனர். போர் செய்தற்கு இயலாத சிறுவர், முதியவர், நோயாளர்களைக் தவிர ஏனையோர் சங்கும், கரியகொம்பும், மயிலிறகு காட்டிய வாத்தி யங்களும், பறையும் ஆர்ப்ப, ஒளிவிடுகின்ற வேல் களுடன் கல் நிறைந்த காட்டிடத்தே கூற்றுவரைப் போல் நிரையே சென்றனர். செல்லுதலும் கிரை கவர்ந்தோர், பசுக்களை முன்னே செல்ல விட்டுத் தழைகள் மூடிய காட்டிடத்தே தலைமறைக் திருந்தனர். கிரை மீட்கச்சென்றேர் அவர்களேப் பதுக்கிடங்களினின்றும் வெளியேறச்செய்து அவர் களுடன் அச்சம் தருகின்ற போரைச் செய்தனர். முடிவில், நிரை கவர்ந்தோர் பின்னிட்டனர். கிரை கள் மீட்கப்பட்டன.
நிரை மீட்டோரிற் சில வீரர், மார்பிலும் முகத் திலும் பட்ட புண்களினின்றும் உதிரம் பெருகச் சாதிலிங்கஞ் சொரியும் ம8லயைப்போல் மீண்டனர். ஒலர், விபர மறியாத சிறு பிள்ளைகளை ஒப்பப் பகைவரை வெட்டி வீழ்த்தியபின் நிரை கவர்ந்தோர் முதுகிட்டோடவும், தாம் போர்க்களத்தை விட்டுப் போகாராய்த் தனியே கின்றனர். தலை யறுபட்டு உடற்குறையாய் கின்ற வீரர் சிலர், பிள் 8ளத் தன்மை யுடையாாய் வாளை உறையினின்றும் வாங் இக் கையிலேந்திப் போர்க்களத்தே வீரர்களுடன்

பழந்தமிழர் போர்முறை
கின்று அடிமேலடிவைத்தாடினர். சிலர், பகைவர் மார்பைப் பிளந்த வேல்களை அவர் மார்புகளினின் அறும் வாங்கி அவற்றில் குடர் மா8லகளைச் சுற் றித் துடிகறங்க ஆடா கின்றனர். பகைவர் படைவெள்ளம்போல் வருதலும் அதனைக் குறுக் கிட்டு, 18 யானெருவனே தாங்குவனுகப் பிறர் மதுவை அருந்துகின்றனர்” என ஓர் வீரன் புகன்ருரன்.
போரிடத்தே காரி என்னும் குருவிவிலக்கவும் விலகாராய், வெட்சியாரை வென்று கிரையை மீட்டு வந்த வீரருக்கு அரசன் மருத நிலம் பலவுங் கொடுத்து வரிசை செய்தான். சிலருக்கு *ஏனுதி, காவிதி முதலிய பட்டங்களை அளித்தான். அவ்வரிசைகளைப் பெற்ற வீரர் வேந்தனை வாழ்த் தினர்.
அரசன் ஒருவன் பிறிதோர் அரசனின் M மகளைக்கேட்ட விடத்து, அவன் கொடுக்க மறுப் பின் இவ்வகையான போர்கள் கடப்பது வழக்கம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலே "மகண் மறுத்து மொழிதல்" என இலங்கியங்கள் கூறும். பாலை கிலத்தேயுள்ள மறக்குடித் தலைவர் பெரும்பாலும் முல்லை நிலத்துள்ள கிரைகளைக் கவர்ந்துவந்து கள்ளுலுக்கு விலையாகக் சொடுப்பர்.
"யானே தாக்கினும், அரவு மேல் ஊர்ந்து செல்லினும், இடியேறு இடிப்பினும், அஞ்சாத குற்
ஆஎனுதிப் பட்டத்துக்கு மோதிர மளித்தல் மரபு.

Page 24
88 அறிவுரை மாலை
கொண்ட மகளிரையும், கொள்ளையடிக்கும் உண வினையுமுடைய வாட்போர் செய்யும் மறக்குடியிற் பிறந்த மறவன் குறிவைத்த மிருகத்தைத் தப்பா மற் பிடிக்கும் வேட்டை நாயைப்போலக் காவலை யுடைய பகை வரது ஊரின்கண் சென்று விடியற் காலத்தே கொண்டுவந்த பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக்கொடுத்து, வீட்டிலே சமைத்த கள்ளினை பருகிக் கிடாயை உரித்துத் தின்று, ஊரின் நடுவே யுள்ளமன்றிலே மத்தளங்கொட்ட இடத்தோளை வலப்புறத்தே வளைத்து கின்ருரடுவான்." (பெரும் பாணுற்றுப்படை)
*கள் விற்குமவள் இவன் பழங்கடன் கொடா மையின், பின் கட் கொடாது மறுப்ப, அது பொருரத வீரன் அந்நிலையே வில்லைக் கையிலேந்திப் புள் கிமித்தம் தன் கருத்திற்கு ஏற்பச் சேறலிற் பகை வர் கிரைகொள்ளுதலைக் கருதிப் போகுதலைச் செய்யும்; அங்கினம் போகுங்கால் தான் கைக் கொண்ட ஆளிக்கொடியை உயர்த்தக் கொற்றவை யும் வில்லின் முன்னே செல்லுமன்ருே என்க."
* பெரிய மலர்போலுங் கண்ணேயுடையாய் ! கின் ஐயன்மார் அயலாரூர் அலறும்படி தலைநாளிற் கைக் கொண்டுவந்த நல்ல ஆகிரைகள், நயமில்லாத மொழியையும் நரைத்த நீண்ட தாடியையும் உடைய எயினரும் அங்ஙனம் மூத்த எயிற்றியருமாகிய இவர்கள் முன்றிலின்கண் கின்றன. (சிலப்பதி காரம் வேட்டுவரி)

பழந் தமிழர் போர்முறை 89
கிரை கவர்தலும் கிரை மீட்டலும் தமிழரது முற் காலத்துப் போர் ஒழுக்கங்களாகும். மக்கள், மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த ஒரு காலத்து இவ்வகைப் போரோழுக்கங்கள் மிக நிகழ்ந்தனவாதல் வேண்டும். நிரை கவரு வோர் முடியிடத்து வெட்சிப்பூவையும், கிரை மீட்போர் காங்தைப் பூவையும் குடுதல் மரபு. இக்காரணம்பற்றி நிரை கவர்தல் வெட்சி என் அறும் கிரை மீட்டல் கரந்தை என்றும் பெயர் பெறும்.
வீரக் கல் கிரை மீட்கு மிடத்துப் பலரும் வியப்புறும் படி தமது வீரத்தைக் காட்டிப் படை முகத்தே இறந்த வீரனுக்கு அவனுடைய பெயரும் ஊரும் ஆற்றலும் எழுதிக் கல்நடுவது பண்டையோர் வழக்கு. இவ்வழகினைப் பின்பற்றியே இறந்தவர் பொருட்டுப் பாடப்படும் பாடல்கள் * கல்வெட்டு” என வழங்குவனவாகும். இறந்தவர்களைச் சமாதி செய்து ஆலயங்கள் எடுத்தல் கல்காட்டும் வழக் கைப் பின்பற்றியதெனக் கருத இடமுண்டு.
கல் கடுதலின் விபரம்
வீரர் காட்டிற்சென்று, இறந்த வீரனுக்கு காட்டத் தகுந்த கல்லினைக் காண்பர். கண்டு அதற்கு மறும் புகை முதலியவற்றைக் காட்டி, எடுத்து வாசம்பொருந்திய நீரினலே மஞ்சன

Page 25
، 40 அறிவுர்ை மாலை
மாட்டி, வாவியிலும் முழுக்காட்டுவர். பிறகு மாலை தூக்கி, மணி ஒலித்து, மதுத்தெளித்து, மயிலிறகுஞ் சூட்டி, வீரன் பெயரை எழுதி, ‘வேற்போரை விரும்பினேனுக்கு இது உருவமாகுக" என்று. கல்லினை அழகுபெற நடுவர். நட்டபின் அக் கல் லின் நின்ற வீரனை எல்லோரும் வணங்கிக் கோயி லமைப்பர். போருக்குச் செல்லும் வீரர், அதனை வணங்கிச் செல்வர். அவ்வழியே செல்லும் பாணர் யாழினை மீட்டுப் பாடி, அக்கல்லினை வழிபட்டுச்
செல்வர்.
* கன்றுடனே கறவையையும் மீட்டுக்கொண்டு வந்து மறவரையோட்டி நோக்கிய நெடுந்தகைக்குச் சிவந்த பூவுடைய கண்ணியுடனே அழகிய மயிலிற கைச் சூட்டிப் பெயரை எழுதி இப்போழுதே கல்லை கட்டார்’ (புறம்)
* ஊர் முன்னுகச் செய்யப்பட்ட பூசலின்கட் டோன்றிய வீரன், தன்னுடைய ஊரின்கண் மிக்க கிரையைக்கொண்ட வீரர் எய்த அம்பினே விலக்கி வென்று, அவர் கொண்ட ஆகிரையை மீட்டான். தோலுரித்த பாம்புபோலத் தானுெருவனேயாகத் தேவருலகத்தின்கட் போயினன். அவனது உடம்பு காட்டுச்சிற்ருரற்றினது அரிய கரை யிடத்துக் காலுற கின்று நடுக்கத்தோடு சாய்ந்த விலங்கினை ஒப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது. புடைவையாற் செய்யப்பட்ட பந்தரின் கீழ் உயர்ந்த கீர்த்தி மிகத் தோன்றிப் பெயர் மேன்மையடைய

பழந்தமிழர் போர்முறை 41
கட்ட கல்லின் மீது மயிலினது அழகிய பீலி சூட்டப் பட்டது.’ (புறம் 200)
* கெடாத நல்லபுகழினையுடைய பெயர்களை எழுதி கட்ட கற்கள் முதுகிட்டுப் போனவரை இக ழும்." (மலைபடுகடாம்)
* பட்டார் பெயரு மாற்றலு மெழுதி கட்ட கல்லு மூதூர் 5த்தமும்.'
(சேரமான் பெருமாள்) * நல்லமர் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர் தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்." (அகம்) நடுகல் பெரும்பாலும் வீரர்களுக்கு நடுவதாயி னும், நிரை மீட்டு அவிந்தார் பொருட்டு நடுதலே சிறப்பு.

Page 26
7. இசை மரபு
முன்நாளிலே இருந்த பாணர் முடியுடை வேக் தரையும், குறுநில மன்னரையும் பாடிப்பொ ருள்பெற்றனர். பின்நாளிலிருந்த திருநீலகண்டப் பெரும் பாணர், பாணபத்திரனுர், திருப்பாணுழ்வா ராகிய மூவரும் ஆண்டவனைப் பாடி அருள்பெற்ற னர். பத்தாம் பதினேராம் நூற்ருரண்டிலே இசைக் கலை இருந்த நிலைமையைக் கொங்குவிேண்மாக் கதையாலும் சீவகசிந்தாமணியாலும் ஒருவாறு அறிதல் கூடும்.
பிரமசுந்தர முனிவர்பால் இசைப் பயிற்சி பெற்ற உதயணன் கோடபதியென்னும் யாழை மீட்டு மதங்கொண்ட யானைகளை வயமாக்கின னெனவும், அவன் தான் கற்ற இசைக் கலையைப் பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தைக்குக் கற்பித்தானெனவும், யாழ் நலனுராய்தலில் இவனை யொப்பாரு மிக்காரு மிலரெனவும் பெருங் கதை யால் அறிகின்ருேரம், சீவக நம்பி காந்தருவதத் தையை வீணையால் வென்ற வரலாறு சிந்தாமணி யில் கூறப்பட்டது. உதயணன், சீவகன் ஆகிய இரு வரது இசை வென்றியைக் கூறுடமித்து, கொங்கு வேளும், திருத்தக்கதேவரும் இசை நூற்றுறைகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர். இவ்விரு நூலின கத்தும் வீணே, யாழ் என்னும் மொழிகள் வேறு பாடின்றி வழங்கப்படுகின்றன. இவ்விரு நூலா
* உயர்திரு விபுலானந்த சுவாமிகள் எழுதியது.

இசை மரபு 43
சிரியரும் காட்டுகின்ற இசைப்புலமை இளங் கோவடிகளது இசை நூலுணர்ச்சியை ஒத்ததன்று. பன்னிரண்டாம் நூற்ருரண்டிலே வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகளது காலத்திலே இசைக்கலை அருகி நின்றதெனினும் முற்றிலும் அழிந்துபோக வில்லை. தேவாரத்துக்குப் பண்ணடைவு வகுத்த பெண்மணி, திருநீலகண்டப் பெரும்பாணர் மரபி லுதித்தவள். அவள் வகுத்த பண்முறை அன்று தொட்டின்றுவரையும் வழக்கிலிருந்து வருகின்றது. இந் நாளிலேயுள்ள ஓதுவார்மூர்த்திகளுட் சிலர் பழைய பண்முறையை ஓரளவிற்குக் கையாண்டு வருகின்ருரரெனினும், கருநாடக சங்கீதத்தின் வழிப்பட்டு ஏழிசை யியல்பறியாது இசை என் னும் மொழிக்கு இராகம் எனப் பொருள் கொண்டு இடர்ப்படுவாராயினர்.
பதின்மூன்றும் நூற்றண்டின் தொடக்கத்தி லிருந்த சாரங்கதேவர் என்னும் பெரியார் தேவகிரி இராச்சியத்தில் சிம்மண இராச சபையில் சமஸ் தான வித்துவானுக விளங்கினர். இவரியற்றிய சங்கீத ரத்நாகரத்திலே தேவாரப்பண்கள் சிலவற் றினிலக்கணங் கூறப்பட்டிருக்கின்றது. * இவை தேவராத்தினுட் கூறப்பட்டன " எனச் சில இசை நூல் முடிபுகளைத் தமது நூலிலுள்ளே சொல்லு கின்ரு ராதலின் இவர் தென்னுட்டிற்கு வந்து தேவாரப் பண்முறையைப் பயின்று கொண்டா ரென் றெண்ண இடமுண்டு. இவர்க்கு முக் நூருரண்டு பிற்பட்டவராகிய இராமா மாத்தியர் தாம்

Page 27
44 அறிவுரை மாலை
இயற்றிய சங்கீத ஸ்வர மேளகலாநிதியினுள்ளே தேவாரத்தினுள்ளனவும் பிற்காலத்தில் வழக்கு வீழ்ந்தனவுமாகிய இசைப் பெயர் சிலவற்றை எடுத் தாளுகின்ருரர். இக்காலத்தில் வழங்கும் இந்துஸ் தானி இசை நூல்களுள்ளும் தேவாரப் பண்ணின் பெயர் சில காணப்படுகின்றன. பதினன்காம் நூற்ருரண்டிலேயிருந்த உரையாசிரியர் காலத்தில் பண்டை இசை மரபு ஓரளவிற்கு மறைந்து போயிற்று. குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையும் வழக்கற் றுப்போக, ச-ரி-க-ம-ப-த-நி என்னும் ஏழு சுரங்க ளும் வழங்குபவாயின. சிலப்பதிகார அரும்பத வுரை யாசிரியர் காலத் திருந்ததிலும் பார்க்க அடி யார்க்கு நல்லார் காலத்தி லிசைநூற் பயிற்சி குன்றி யிருந்த தென்பதற்கு இவ்விருவரது உரையுமே சான்று பகருகின்றன. பதினைந்தாம் பதினருரம் நூற்ருரண்டுகளிலே இசைக்கலை முற்றிலும் மறை வுற்றுக் கிடந்தது. பதினேழாம் பதினெட்டாம் நூற் ரூரண்டுகளிலேதஞ்சையிலிருந்து அரசுபுரிந்தநாயக்க அரசரும், மஹாராஷ்டிர அரசரும் இசைவல்லாரை ஆதரித்து இசைக்கலையை வளர்ப்பாராயினர். அச் சுதப்ப நாய்க்கரிடத்து (கி. பி. 1572-1614) மந்திரி யாராக விருந்த கோவிந்த தீகதிதரின் குமாரர் வேங்கடமகி என்பார் கி. பி. 1660-ஆம் ஆண்டள விலே பண்டைத் தமிழரிசை மரபினின்றும் பெரி தும் வேறுபட்ட ஓரிசை மரபினை வகுத்து, சதுர்த் தண்டிப்பிரகாசிகை என்னும் வடமொழி நூலினை

Øen F LDP- 45.
யாத்தமைத்தார். கருநாடக சங்கீதம் என வழங்கும்இசை மரபிலே வேங்கடமகியின் ஆண்ணயே இன்றும் நடைபெற்று வருகின்றது. ஷாஜி மகாராசா (1687-1711) தாமும் இசை வல்லு நராகி. இசை வல்லுநரைப் பெரிதும் ஆதரித்தலை மேற்கொண்டார். திருவாரூர்க்கிரிராசகவி, இம் மன்னரது சமஸ்தான வித்துவான் ஆவார். கிரி ராச கவியின் பெளத்திரரே தியாகராச ஐயரெனக் கீர்த்திவாய்ந்த பெரியார், விசயராகவ நாய்க்கர் (1673) காலத்திருந்த துளசா மகாராசா (17631787) காலத்திருந்தவரும் இராமாயணக் கீர்த்தனஞ் செய்தவருமாகிய அருணுசலக் கவியும், எட்டைய புரம் சமஸ்தானத்திலிருந்த முத்துச்சாமி தீட்சி தரும் (1775) திருவாரூரிலே தோன்றிய சாமா சாஸ்திரியாகும் (1763) பிறரும் நமக்கு மிகவும் அணிமையான காலத்திலிருந்த இசை வல்லோ ராவர்.

Page 28
8. மொழியின் வரலாறு
மொழிநூல் மக்கள் வழங்கும் மொழிகளே ஆராய்ந்து கூறுகின்றது. மக்கள் தமது எண் ணங்களைப் பிறர்க்கு உணர்த்தும் அவாவினலேயே மொழியைத் தோற்றுவித்தனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவிக் கூட்டமாக வாழ்கின்றனர். மக்களின் கூட்டு வாழ்க்கைக்குப் பொது உதவி, அனுதாபம் என்பன அடிப்படையானவை. தன் னைப் பிறருக்கு விளக்கு வதற்கும், பிறர் தம்மை விளங்குவதற்கும் பேச்சு இன்றியமையாதது. அறிவு வளர்ச்சியுருரத காலத்தே மனிதன் இதனை அறியாதிருந்தான் என்று கூற முடியாது. ஒரு காலத்தில் மொழி தோன்றவில்லை; அக்காலத்தில் மனிதனின் எண்ணங்கள் நினைவளவிலேயே இருந் தன. ஒரு தனி மனிதன் மொழியை உண்டாக்கி யிருக்கமாட்டான், ஒரு குழுவிலிருந்து பிரிந்தவன் நெடுங் காலத்தின் பின் மொழியை மறந்து பேச மாட்டாதவன் ஆகின்ருரன். எண்ணங்களை வெளி யிட முயலும் எத்தனமே பேச்சின் ஆரம்பமாகும்.
மொழியின் தோற்றம் கட்புலனுகும் பொருள்களின் வடிவங்களே
ஆரம்பத்தில் எழுத்துகளாக இருந்தன. இவ்வகை யினன்றி வேறு தன்மைகளால் எழுத்துகள்

மொழியின் வரலாறு 47
பிறக்கமாட்டா. மரத்தின் ஒவியம் ஆரம்பத்தில் மரத்தைக் குறித்தது. பின்பு அது தடியையும் மரத்தால் செய்யப்பட்ட பொருள்களையும் குறித் தது. இரண்டு விரித்த சிறகுகள் பறப்பதைக் குறித்தன ; பின்பு உயரத்தை உணர்த்தின.
பேசும்போது முகம், கை, உடம்பு, ஒலி என் லும் நான்கும் தொழிற்படுகின்றன. ஆரம்ப மொழியில் சைகைகள் பெரும்பாலும் வழங்கின. அலைந்து திரியும் வெவ்வேறு கூட்டத்தினர் எதிர்ப் பட நேர்ந்தால் சைகைகளால் பேசுகின்றனர். ஊமரும் செவிடரும் இவ்வாறே பேசுவர். ஒலியின் பயன் அறியப்பட்டபின் சைகைகள் கைவிடப் lult-60T.
சைகைகளைத் தொலைவிலும் மறைவிலும் கின்று காட்டுதல் இயலாது. இடையில் உள்ள பொருள்கள் ஒலியை மறைக்கமாட்டா.
ஆரம்பத்தில் எழுதப்பட்ட எழுத்துகள், பொருள்களின் வடிவங்கள் என அறிந்தோம். மொழியும் இதுபோன்ற முறையில் ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்ட ஓசைகள் இயற்கை ஒலிகளைப் பின்பற்றியனவாகும். ஒலி யைப் பின்பற்றும் வகை, விலங்குகளின் ஒலி யைப் பின்பற்றுதல், மனிதரின் ஒலியைப் பின் பற்றுதல் என இருவகைப்படும். இரு வகையாகத் தோன்றினலும் இம்முறை, கொள்கையளவில்

Page 29
48 அறிவுரை மாலை
ஒன்றே. வியப்பு முதலிய ஒலிக்குறிகளே மொழி யின் ஆரம்பமாகும். முகக் குறி, நிலை, சைகை முதலிய நடிப்புகள் எண்ணங்களை வெளிப்படுத்து வன. இவற்றைப்போல எண்ணங்களை வெளிப் படுத்தும் ஓசைகளும் உண்டு. அவ்வகை ஒசைகளைச் செவியில் கொண்டவுடன் அவற்றின் பொருள் கஜள நாம் உடனே விளக்கிக் கொள்கின்ருேரம். கோழி தனது குஞ்சுகளுக்கு அபாயத்தை உணர்த் தும் ஒலியைச் செய்கின்றது. உடனே குஞ்சுகள் அதஜன விளங்கி ஓடிப் பதுங்குகின்றன. மகிழ்ச்சி, அழுகை, வருத்தம், சிரிப்பு, அனுக்கம் முதலிய வற்றுக்குரிய ஒலிகளைக் கேட்கும்போது அவை எவற்றைக் குறிக்கின்றன என்று நாம் விளக்கிக் கொள்கின்ருேம். அவ்வொலிகளின் பொருஆள எவரும் நமக்கு விளக்க வேண்டியதில்லை. இவ் வகை அடிப்படையிலிருந்தே மொழி தோன்றிற்று. இம்முறை இன்றுவரையில் கையாளப்பட்டு வரு கின்றது :
எண்ணங்களை வெளியிடும் வழிகள் நம் வசம் இருக்கின்றன. அவை சிறிதளவோ பெரிதளவோ நம்மால் பயன் படுத்தப்படுகின் றன. நோவினல் எழும் ஒலியும் பொழுதுபோக் திற் பிறக்கும் சிரிப்பும் பொருள் விளங்கக்கூடி யனவாக இருப்பினும் அவை பேசும் மொழி 专%° மாட்டா. அவை மற்றவர்களுக்கு நோவை அல் லது சிரிப்பை உணர்த்தும் பொருட்டுப் பிறப்பிக்

மொழியின் வரலாறு 49
கப் பட்டனவல்ல. ஒருவனது இருமல் மற்றவனது கவனத்தை இழுக்கின்றது, ஒருவனது கவனத்தை இழுப்பதற்கு இருமினல் அல்லது வேறு ஒலியை எழுப்பினல் அவ்வொலி மொழி உற்பத்தியைச் சார்க்கதாகும். இவ்வகை ஒலிக் குறிகள், பல தலை முறைகளாக வந்தன. இயற்கையான இம்முறை க3ள விட்டுச் சில ஒலிக் குறிகளேக் கையாளத் தொடங்கியபோதே உண்மையான மொழி உண் டாயிற்று. சில ஒலிக் குறிகளை எல்லோரும் ஒரே காரணத்துக்காக வழங்கினர். அப்போதுதான் அவை, தலைமுறை தலைமுறையாக வந்து ஒரு குழு வுக்கு உரியனவாயின. மதம், கலை இவற்றின் ஒற்றுமைகளைவிட மொழி, ஒரு சமூகத்தைப் பெரிதும் பிணிக்கின்றது.
sXN S ܠ ܐ
S. "... རང་རིགས་རིང་དར་
است. ay to f۲ی

Page 30
சொல்லின் தொடக்கமும் மொழி வளர்ச்சியும்
ஒவ்வொரு நாகரிக மக்களுக்கு இடையிலும் பல கூட்டத்தினர்களுக்குரிய மொழிச் சொற்கள் கலந்து, ஒரு மொழியாக வழங்குவதைக் காண்கின் ருேம். ஒரு குழுவினர், சில காலங்களில் தம் முன் னேர் அறியாத ஒரு மொழியை வழங்குகின்றனர்.
நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஒவ்வொரு சிறப்புக் குணம் நம்மைக் கவருகின் றது. நாம் பெரும்பாலும் உயிர்களின் ஒசை களை உற்றுக் கேட்கின்ருேரம், ஆங்கிலத்தில் குயி லுக்குக் குக்கு என்று பெயர். குயில் என்பதும் குக்கு என்பதும் அதன் ஓசை காரணமாகத் தோன்றிய பெயர்கள். இவ்வாறு தோன்றிய சொற்கஜள ஒவ்வொரு மொழியிலும் காணலாம். சில உயிர்களின் பெயர்கள் அவற்றின் நிறம் 5 it ir 6GOT DIT #5 ஆக்கப்பட்டிருக்கின்றன. சில உயிர் களின் பெயர்கள் அவற்றின் வேறு தன்மைகளை உற்று நோக்கி ஆக்கப்பட்டுள்ளன. குதிரை, பாய்வதால் பரி என்றும், குதிப்பதால் குதிரை என் நும் பெயர் பெறும். ஒரு சிறப்புக் காரணத்தால் ஒரு பெயர் ஒரு பொருளுக்கு இடப்பட்டால் அச் இால் அப் பொருளையே குறிக்கும். அக்காரண முடைய வேறு பொருளைக் குறியாது. சொற்கள் உச்சரிப்பு வேறுபட்டு, தோற்றம் அறிய முடியாமல் வழங்கினல் மூலச் சொற்கள் பரிகசிக்கத் தக்கன போல் தோன்றும். இம்முறையாகவே மொழிக்

மொழியின் வரலாறு 51 w
குரிய சொற்கள் தோன்றுகின்றன. மொழி உண்டான பின்பே சொற்கள் மாற்றம் அடைதல் இயலும், மொழி இவ்வாறு வளர்ச்சியடைகின்றது. மனிதனை மற்ற உயிர்களோடு ஒப்பிடுமிடத் தில் அவன் தனிச் சாதியாக இருக்கின்றன். அதுபோல மனித மொழியும் சிறப்புத் தன்மை களால் தனிமையாகவே இருக்கின்றது. மனிதன் மொழியைப் படிப்படியாக விருத்திசெய்து இன் றைய நிலைக்குவர எத்துணைக்காலம் சென்றது என்று அனுமானித்துக் கூறுதல் இயலாது. ஆரம்ப காலத்தில் முன்னேற்றம் தாமதப்பட்டது என்று கருதுவதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் அவிநய மொழியும், பின் அவிநயத் தோடு ஒலி கலந்த மொழியும், அதன்பின் இக்கால நிலைமையிலுள்ள மொழிகளும் தோன்றலாயின. மொழியில் அடங்கிய எல்லா ஒலிக் குறிகளும் தலை முறை தலைமுறையாக வந்தன. அவை, காலத்துக் குக் காலம் அதிகப்பட்டன. இது, ஒரு குழு வேறு குழுக்களோடு உறவாடி,அவற்றின் மொழியிலுள்ள சொற்களைக் கையாளுதலால் ஏற்படுகின்றது.
மொழித்தொடக்கத்திற்கு இயற்கையிலுள்ள ஆதாரங்கள் எவை என்று விளங்குகின்றது. ஒலிக் குறிகள் ஆரம்பத்தில் சிறியனவாக இருந்தன. அவை “சொல் மூலங்க்ள்’ எனப்படுகின்றன; மூலங் கள் பிரிக்கக்கூடாத முழுக் குறிகள். ஒவ்வொரு மூலமும் ஒவ்வொரு பொருளைக் குறித்தது. பழைய மொழிகள், சொல் மூலங்கள் அளவில் இருந்தன என்பது அனுமானிக்கத்தக்கது.

Page 31
52 அறிவுரை மாலை
ஆதியில் ஒவ்வொரு கலையும் இலகுவான முறையில் ஆரம்பிப்பதுதான் பொது விதி. கலைகள் எல்லாம் மனிதனின் ஆற்றலுக் கேற்பப் படிப் படியாக வளர்கின்றன. ஆரம்ப மொழி இரண்டு தன்மைகள் உடையதாக இருக்கின்றது. சொல் லின் ஒரு பகுதி பொருளின் ஒரு பகுதியை யும், மற்றது இன்னுெரு பகுதியையும் விளக்கின. ஆரம்பத்தில் மனிதன் உண்டாக்கிய ஆயுதங்களுக் குப் பிடியும், குகை வீடுகளுக்கு முன் அறையும், பின்அறையும் இருக்கமாட்டா. இக் கொள்கைக்கு மொழியின் எல்லாக் கால வரலாறும் ஆதாரமளிக் கின்றது. தொடக்கத்தில் தனிச் சொற்களே உண்டாக்கப்பட்டன. மொழியிலுள்ள சொற்களே ஆராய்வதால் நாம் அவற்றின் ஆரம்ப காலத்தை ஆராய்கின்ருேரம். மொழி உற்பத்தியைக் குறித்த ஆராய்ச்சி, நம்மைச் சொல் மூலங்களுக்குக் கொண்டுபோய் விடுகிறது.
ஆதிமொழி, ஒலிமுறையான குறிகளாக இருந் தது; இக் கொள்கை தக்க நியாயத்தோடு அங்கீ காரம் பெறுகின்றது. இக்காலச் சொற்களேப் போலவே ஆதிச் சொற்கள் உயிர் எழுத்தின் ஒலி யையும், மெய்யெழுத்தின் ஒலியையுைம் கலந்து உச்சரிக்கப்பட்டன. அவ்வுக்சரிப்புகள் நாம் வழங் கும் ஒலிகளின் பகுதிகளைக் கொண்டிருந்தன. எல்லா மொழிகளின் இயல்பும் இதுவே.
ஒவ்வொரு தனி ஒலியும் எழுத்தால் குறிக்கப் படுகின்றது. சிறப்பொலிகள் உயிரும் மெய்யு

மொழியின் வரலாறு M 53
மாகும். ஒவ்வொரு மொழிக்கும் உச்சரிப்பு முறை தனியாக உண்டு. சில ஒலி, சில மொழிகளுக்குமட் டும் சிறப்பாக உண்டு. எழுத்து முறையாகப் பிரிக் கக்கூடிய ஒலிகளென்றும், பிரிக்கக்கூடாதன என் ஆறும் இருவகை ஒலிகள் உண்டு. விலங்குகள் பறவை களின் ஒசையும் மனிதரின் அழுகைபோன்ற ஓசை யும் எழுத்து முறையாகப் பிரிக்கக்கூடாத ஒலி களுக்கு உதாரணங்களாகும். சொற்களைப் பல கூறுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பொருத்தும் ஒவ்வொரு அசை எனப்படும். ஒவ்வொரு அசையும் உயிர் மெய் என்றும் ஒலிகளால் ஆக்கப்பட்டன. அசைகள் பெரும்பாலும் ஒரு மெய் ஒசையோடு ஒரு உயிர் ஓசை பெற்றதாக இருக்கும். இவற்றில் ஏதா வது ஒன்று இல்லாமல் உச்சரிக்கப்படும் அசைகளும் சில மொழிகளில் உண்டு. ஆகவே எல்லாப் பேச் சுக்குறிகளும் ஒரசையினவாக அல்லது ஒரசை யையே திரும்பச் சொல்லும் குழந்தைகளின் பேச் சுப் போன்றனவாக இருக்கும். ஆதியில் எவ் வெழுத்தொலிகள் இருந்தன என்று கூறுதல் வெறும் ஊகத்தைப் பொறுத்தது. ஆதியில் உயிரும் மெய்யுமாகிய ஒலிக் குறிகளே இருந்தன. மற்றவை பிற்காலத்திற் சேர்க்கப்பட்டன.
ஆதி மொழியின் ஒலிக்குறிகள் புலன்களால் அறியப்படும் குணங்களையும் செய்கைகளையும் குறிப்பன வாக இருந்தன; ஆதலின் 5ம் மொழியின் வரலாறு புலன்களால் அறியப்படும் பொருள்களின் பெயர்களாவும் புனல்களாலறியப்

Page 32
54 அறிவுரை மாலை
படாத எண்ணங்களின் பெயர்களாகவும் மாறி யிருக்கிறது.
நாம் பல சொற்களை வழங்குகின்றமையால் எழுவாய் பயனிலை முதலிய உறுப்புகளை வைத்து வசனங்களை எழுதுகின்ருேம். இவ்வகையிலமை யாத வசனங்களைச் சுருக்கு வசனங்களாகக் கருதுகின்ருேரம். எழுவாய் பயனிலையோடு கூடிய வசனங்களே எழுதுவதற்குச் சொற் பாகுபாடு வேண்டும். சொற் பாகுபாடு என்பது பெயர், வினை, குணம் என்பன போன்ற வற்றுக்கு இன்ன இன்ன சொற்களேயே பயன்படுத்துதல் வேண்டு மென்னும் வரையறை. இவ்வாறு வரையறுக்கப் பட்ட சொற்களை உரிய இடங்களில் வைக்க வச னம் உண்டாகும். சொற்களின் பிரயோகம் வரை யறுக்கப்படாத ஒரு காலத்தின் நிலைமையை அறிந்துகொண்ட போதே மெர்ழியின் ஆரம்ப வரலாற்றை விளங்கிக்கொள்ள முடியும். ஆரம்ப மொழி, நம் மொழியைவிட விளக்கங் குறைவாக இருந்தது; ஆயினும் அது, அனுகூலமான பேச் சுக்கு உதவியாக இருந்தது. ஒன்றை ஏற்றுக் கொள்ளும்போது அல்லது வெறுப்பைக் குறிக்கும். போது காட்டும் பார்வையும், உடம்பாட்டை அல் லது வினவை உணர்த்தச்செய்யும் ஒலிக் குறிகளும் வசனங்களின் குறிகள் அல்லது வசனங்களாகும். அவற்றைத் தனித்தனி வசனங்களாக மொழி பெயர்க்கலாம். இவ்வாறே ஆதிச் சொல் மூலங் கள் வசனங்களாயின.

9. பண்டையோர் எழுதப் LI u 16öu படுத்திய பொருள்கள்
பழங்கால மக்கள் பொன், வெண்கலம், ஈயம், தக ாம் முதலிய உலோகங்களை எழுதுவதற்குப் பயன் படுத்தினர். ஈயத் தகடுகளின் பயன் பெரு வழக் கில் இருந்தது. பழைய அசீரியர், பச்சைக்களிமண் தகடுகளில் தமது வரலாறுகளை எழுதியபின் அவற் றை வெய்யிலிலுலர்த்தி அல்லது சூளையிலிட்டு எடுத் துக் காப்பாற்றினர். இவ்வகைய பல கற்கள் எகிப் தில் கண்டெடுக்கப்பட்டன. விலங்கின் தோல் அல் லது தாவரப் பொருள்கள் கிடைத்தபோது உறுதி யான உலோகப் பொருள்களின் பயன் குறைவ தாயிற்று. கடினமான பொருள்களுக்கும் மிருது வான பொருள்களுக்கும் இடையிலுள்ள வேருெரு பொருளும் பயன்படுத்தப்பட்டது. அது மேற்பக் கம் மெழுகினல் மெழுகப்பட்ட மரப் பலகையாகும். மெழுகின்மேல் எழுதுவதற்குக் குச்சு பயன் படுத்தப்பட்டது. இவ்வகை இரண்டு அல்லது மூன்று பலகைகள் வளையங்களிட்டுச் சேர்த்துக் கட் டப்பட்டிருக்கும். இவை, அன்றன்றைய நிகழ்ச்சி களே எழுதவும், கணக்குப் பதியவும், திருமுகம் வரையவும், பள்ளிச் சிறுவர் எழுதவும், பிற எழுத்து வேலைகள் புரியவும் பயன்படுத்தப்பட்டன. இவ்வகையான பலகைகள் கி. பி. 1148 வரையும் பயன் படுத்தப்பட்டன என்பதற்கு ஆதாரம்

Page 33
56 அறிவுரை மாலை
காணப்படுகின்றது. இப் பலகைகள் மேற்கு ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத் தப்பட்டன. 18-ஆம், 14-ஆம் நூற்ருரண்டுகளில் பணம் சம்பந்தமான கணக்கெழுதிய பலகைகள் கண்டு எடுக்கப்பட்டன. அயர்லாந்திலும் இத்தகைய பலகைகள் காணப்பட்டன. இதேகாலத்தில் இவ் வகைப் பலகை இத்தாலியில் பயன்படுத்தப்பட் டிருக்கின்றது. 16-ஆம் நூற்ருரண்டில் இவற்றின் பயன் பெரும்பாலும் கின்றுவிட்டது. மெழுகின் மீது எழுதும் வழக்கம் சமீபகாலம்வரை சிறிதள வில் இருந்தது. இன்றும் இத்தாலியிலுள்ள உருேரவென் (Reuen) 15ாட்டில் இவ்வகைத் தகடு கள் மீன் கடைகளில் கணக்கெழுதப் பயன் படுத் தப்படுகின்றன.
சில சமயங்களில் உரோமர், மரத்துக்குப் பதில் தந்தத்தைப் பயன்படுத்தினர். அவர்களுடைய இலக்கியங்களில் இவ்வகையான குறிப்புகள் காணப்படுகின்றன. தந்தத் தகடுகள் கிறித்துவ தேவாலயங்களில்வைத்து, பிரதம குருமாரின் பெயர்கள் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன.
பழைய எகிப்தில் பைப்பிரசு' என்னும் காணற் புல்லின் தண்டுகள் பிளந்து ஒட்டிக் கடுதாசி யாகப் பயன் படுத்தப்பட்டது. “பைப்பிரசு” என் லும் காணல், முக்கோணத் தண்டுடையதாய் காலு முழம் ஓங்கி வளரும். பைப்பிரசுக் கடுதாசியின் பயன் கி. மு. 2000 ஆண்டுகளுக்குமுன் அறியப்
f

பண்டையோர் எழுதப்பயன்படுத்திய பொருள்கள் 57
பட்டிருந்தது. பழைய உலகின் பெரும்பகுதியில் பைப்பிரசுக் கடுதாசிகளே எழுதப் பயன் படுத்தப் :பட்டன. கடுதாசியை உணர்த்தும் "பேப்பர்’ என் னும் ஆங்கிலமொழி பைப்பிரசு என்னும் சொல் லின் திரிபே, ራ'
பைப்பிரசு எகிப்திலிருந்து கிரேக்குக்கும் இக் தாலிக்கும் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டது. கி. மு. இரண்டாம் நூற்ருரண்டில் கிரேக்க மொழி யில் எழுதப்பட்ட பைப் பிரசுக் கடுதாசிச் சுருள்கள் காணப்படுகின்றன. பைப்பிரசை அறிவதற்கு முன்னே தோல் பயன்படுத்தப்பட்டது. தோலின் பயன் கி. பி. ஒன்பதாம் நூற்ருரண்டுவரையும் இருந் திது. 5-ஆம் நூற்ருரண்டு முதல் 10-ஆம் நூற்ருரண்டு வரையில் பயன்படுத்தப்பட்ட பைப்பிரசுத் தாள்கள் காணப்படுகின்றன. பிரான்சு நாட்டிலும் பைப் பிரசுத் தாள்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று சேர்த்துக்கட்டப்பட்ட பைப்பிரசுத்தாள்களில் புத் தகங்கள் எழுதப்பட்டன. புத்தகங்களின் மேலும் கீழும் தோல் வைத்துக் கட்டப்பட்டன. பிரான் சிலும் இத்தாலியிலும் இவ்வகையான புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன.
தோல்,மிகப் பழங்காலந்தொட்டுப் பயன்படுத் தப்படுகின்றது. மேற்கு ஆசியாவில் தோல் பயன் படுத்தப்பட்டதைப்பற்றிப் பழைய நூலாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். தமக்குப் புதிதாகக் கிடைத்த பைப்பிரசுத் தாளே அயோனியர், தோல் என்னும் பெயரால் வழங்கினர். யூதர் பழைய

Page 34
58 அறிவுரை மால்
வழக்கின்படி இன்றும் பிரமாணங்களேத் தோலில் எழுதுகின்றனர்.
உரோமர் சிவப்புச் சாயமூட்டிய தோ8லப் பைப் பிரசுப் புத்தகங்களுக்கு அட்டையாகப் பயன்படுத் தினர்.
சீனர் பஞ்சிற்ை செய்யப்பட்ட கடுதாசியை மிகப் பழைய காலத்திலேயே பயன்படுத்தினர். அராபியர், எட்டாம் நூற்ருரண்டில் அதன் பயனை அறிந்திருந்தனர். 13-ஆம் நூற்ருரண்டில் ரேக்க கையெழுத்துப் பிரதிகள் அக் கடுதாசி களில் எழுதப்பட்டன. இத்தாலிக்கு மேற்கே கடுதாசியின் பயன் அறியப்படவில்லை. கங்தைத் துணியினுற் செய்யப்படும் கடுதாசி ஐரோப்பாவில் 14-ஆம் நூற்ருரண்டில் பயன்படுத்தப்பட்டது. இது படிப்படியாகத் தோலின்’ இடத்தை ஏற்றது. 15ஆம் நூற்ருரண்டில் கடுதாசியும் தோலும் கலந்த கையெழுத்துப் புத்தகங்கள் மிகுதியாக இருந்தன.
பழைய பைப்பிரசுப் புத்தகங்கள் பெரும்பா லும் சுருள்களாகக் காணப்படுகின்றன. தோல் புத் தகமாகக் கட்டப்பட்டு, புத்தகத்தின் பெயர் முடி வில் எழுதப்பட்டது. அவ்விட்த்தில்தானே புத்த கத்திலுள்ள வரிகள் குறிக்கப்படடன. இது ஒரு காலத்தில் அதன் விலையைக் காட்டுவதற்காக இருக்கலாம். தோற்புத்தகங்கள் நேரான கோடு களின் மேல் எழுதப்பட்டன. பலகிறமைகள் எழுதப்பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பொன்

பண்டையோர் எழுதப்பயன்படுத்திய பொருள்கள் 59
வெள்ளிகளின் கிறந்தீட்டித் தோலின் முகப்பில் எழுதப்பட்டன. மஞ்சள் ஊதா சிவப்பு என்னும் கிறமைகள் பெரும்பாலும் பயனிலிருந்தன.
மெழுகில் எழுதுவதற்குக் கூரிய குச்சுகள் பயன் படுத்தப்பட்டன. பைப்பிரசுத் தாள்களில் ஆாலிகைகளில் மைதொட்டு எழுதப்பட்டது.
இந்திய நாட்டில்தாளிப்பனைஒலைகளிலுப் மாப் பட்டைகளிலும் புத்தகங்ள் எழுதப்பட்டன. ஏடு களில் ஒவியங்களும் வரையப்பட்டன. கற்களி லும் செப்புத் தகடுகளிலும் கருங்கல்லிலும் மலைகளி ஆலும் சாசனங்கள் எழுதப்பட்டன.
சிந்துநதிப் பள்ளத்தாக்குகளில் சுண்ணும்புக் கற்களில் எழுதப்பட்ட சாசனங்கள் கண்டு எடுக் கப்பட்டன. அவற்றின் காலம் ஏழாயிரம் ஆண்டு களாகும்.

Page 35
10. போசன் கதை
முன் நாளில்ே தாராபுரியிலே சிந்துலன் என்னும்
அரசன் ஒருவன் ஆண்டான். அவனுக்கு முதுமைப் பருவத்திலே போசன் என்னும் மகன் பிறந்தான்.
சில காலத்திற்குப் பிறகு சிந்துல அரசன், தனக்கு மரணகாலம் சமீபித்தலையும், தன் மகன் போசன் சிறுவனுக இருத்தலையும் குறித்து மந்திரி மாரோடு கலந்து எண்ணினன்; இராச்சியபாரத் தைத்தாங்கும் வலிமையுடைய தம்பி இருக்கச் சிறு வனகிய மகனிடத்தில் அதனை ஏற்றுதல் பழியும் பாவமும் என்று துணிந்து, இராச்சியத்தையும் ஐந்து வயதினனுகிய புத்திரனையும் முஞ்சனிடத்தே கொடுத்துவிட்டுச் சில நாளில் இறந்தான். முஞ்சன், போசனைப் பாடசாலையில் படிக்கவிட்டுத் தான் அரசாண்டிருந்தான்.
அப்படியிருக்குங் காலத்திலே ஒரு5ாள் சோதிட நூல்களில் மிகச் சிறந்த அறிவுள்ள பூசுர ரொருவர் முஞ்ச ராசனுடைய சபையிலே வந்து, அவனைக்கண்டு, தம்முடைய வித்தியா சாமர்த்தி யத்தை வியந்து பேசினர். அவன், ‘ஐயரே! நான் பிறந்த நாள்முதல் இன்றுவரையும், செய்தசெயல் களையும் பெற்ற பயன்களையும் முற்றச் சொல்வீரா பின் நீர் சாமர்த்தியமுடையவரே" என்ருரன். பூசுரர் இவன் இரகசியமாகச் செய்த செயல்களேத்தானும் தவறவிடாது முற்றச் சொல்லி முடித்தார். உடனே
* நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதர் சமஸ்கிருத நூலிலிருந்து மொழி பெயர்த்தது.

போசன் கதை 6.
அவன் அதிசயமும் ஆனந்தமுமடைந்து அவரை வணங்கி, உயர்ந்த சிங்காசனத்திலிருத்தி அவருக் குப் பலவகை உபசாரங்கள் செய்தான்.
அப்போது அச்சபையிலிருந்த புத்திசாகரன் என்னும் மந்திரியினுடைய வேண்டுகோளின்படி, முஞ்சகன், அவ்வையரைப் போசனுடைய சாதக பலனைச் சொல்லக் கேட்டான். ஐயர், ' நான் அப்போசனை ஒருமுறை பார்த்தபின் சொல்வேன்’ என்ருரர். அப்பொழுதே முஞ்சன் அவனைப் பாடசாலையினின்று அழைப்பித்துக் காட்டலும், ஐயர் பார்த்துக்கொண்டபின், முஞ்சனை நோக்கி 'இராசாவே போசனுடைய அதிட்ட விசேடத்தை விரித்துச் சொல்லுதல் பிரமதேவராலும் இயலாது ஏழைப் பிராமணனுகிய நான் எப்படிச் சொல்வேன்! போசன் ஐம்பத்தைந்து வருடம் ஏழுமாதம் மூன்று நாள் வரையும் கெளட தேசத்தோடு தென்னடு முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆள்வன்" என்ருரர்.
அதுகேட்டு முஞ்சராசன் அகத்தே மிகுந்த கவலையுடையவனகியும், புறத்தே அதனைக் காட்டா மல் ஐயரை உபசரித்து அனுப்பிவிட்டான். அவன் அன்றிரவு ஊணும் உறக்கமுமில்லாமல் சயனசாலை யிலே தனியே நெடுநேரம் ஆலோசித்து, 'போசன் இராச்சியத்தை அடைவானுயின் நான் உயிரோ டிருப்பினும் இறந்தவனே ஆவேன். ஆதலால் எவ்வாருரயினும் மிக விரைந்து போசனைக் கொல்லு விப்பதே தகுதி’ என்று தன்னுள்ளே கிச்சயித்துக் கொண்டான்.

Page 36
62 அறிவுரை மாலை
மற்றைநாள் முஞ்சராசன், தன் கீழதிகாரி யாகிய வற்சராசனை அழைப்பித்துத் தனியிடத் திலே அவனுக்குத் தன் கருத்தை அறிவித்து, * இன்றைக்கு நீயே போசனைப் புவனேச்சுவரி வனத்திலே இரவின் முதற் சாமத்திலே கொன்று அவனுடைய தலையை இங்கே கொணர்ந்து காட்டக் கடவாய்’ என்று கற்பித்தான்.
அப்பொழுது வற்சராசன் அவனை வணங்கி, * சுவாமி தங்கள் கட்டளை அடியேனுல் சிரமேற் கொள்ளப்படுவதே ; ஆயினும் அடியேன் செய்யும் விண்ணப்பத்தைக்கோபியாமற்கேட்டருளல் வேண் டும்.முன்னுளிலே அயோத்தியில் தசரதபுத்திரராகிய இராம சுவாமிக்கு முடிசூட்டுவதென்று முகூர்த்தம் கியமித்தவர் வசிட்ட மகாமுனிவர்; அவரோ பிரம தேவருடைய புத்திரர்; தவத்திற் சிறந்தவர்; சிறந்த ஞானமுடையவர். இங்கினமாகவும் அந்த முகூர்த்தத்திலே இராமசுவாமி, இராச்சியத்தை விட்டுக் காட்டுக்குப் போதலாயிற்று. அங்கேயும் மனைவியை இழத்தலாயிற்று. ஆனபின் வசிட்ட ருடைய வாக்கும் வீணுயிற்றே இங்ங்ணமாக, வயிறு வளர்க்கவந்த பிராமணனுகிய ஒருவனுடைய வார்த்தையை நம்பிக்கொண்டு அருமந்த இராச குமாரனைக் கொல்ல நினைப்பதோ? கேட்க, * இச்செயலா லிதுவரு மென்ருரா யாமலே
எச்செயலு மேலோ ரியற்ருர்தாம்-இச்சையொடு வல்லை யியற்றுவரேல் வந்திடுமே மாறுத அல்லலவர்க் கேன்றே யறி’ என்ருரர் மேலோர்.

போசன் கதை
அன்றியும் இவனைக் கொல்லின், முன்னே சி துல ராசன் மேலே மிகுந்த பிரீதியுடையவர்களாக இருந்து இப்பொழுது தங்களேயும் அனுசரிக்கின்ற மகா வீரர்கள் பலரும் உடனே தங்களுக்குப் பகை யாவர். இதனுல் போசனைக்கொல்லுவது புத்தி யாகாது’ என்ருரன்.
அப்பொழுது முஞ்சராசன் கோபமடைந்து, * நீயே இராச்சியத்துக்குத் தலைவன் சேவகன் ஆகின்றிலை! கேள்!
"சேவகனெ வன்றலைவன் செப்புமொழி கேட்கிலனுே பாவியவன் நள்ளப் படுமானுல்-மேவுமவன் ஆட்டுக் கழுத்தி னதள்போலுஞ் சீவனத்தாற் காட்டுபயன் யாதுமில்லை காண்’ என்பது மேலோர் வாக்கு’ என்ருரன். உடனே வற்சன் சமயத்துக்கேற்றது சூழ்ந்து செயற் பாலது என்று எண்ணிக்கொண்டு, 'சுவாமி ! தங்கள் சொற்படி செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் போனன்.
பின்பு வற்சன் உபாத்தியாயரை யழைப் பித்து, பாடசாலேயினின்று போசனைக் கொண்டு வரக் கற்பித்து விடுத்தான். அப்படியே அவ ரால் வருவிக்கப்பட்ட போசன் கோபமடைந்து வற்சனை நோக்கி, "பாவீ இராச குமாரனுகிய என்னை வெளியே யழைப்பித்தற்கு நீ யார்? என்று வைது, தன்னுடைய இடக்காலிற் பாதுகை யைக் கையிற்கொண்டு அதன லவனைக் கன்னத்தி லடித்தான். அவன், ‘அடியேன் இராசருடைய

Page 37
64 அறிவுரை மாலை
கட்டளைப்படியே செய்தேன்’ என்று போசனைத் தேரிலேற்றிக்கொண்டு புவனேச்சு வரி வனத்துக் குப் போனன்.
அப்போது, 8 போசன் கொல்லப்படுகிருன் ’ என்ற கதை பட்டணத்தில் பரவ எல்லோரும் துய ரடைந்தனர். சிலர் வாள், வேல் முதலியவற்றி னலே தம்மைத் தாமே கொன்ருரர்கள். போச னுடைய தாயாகிய சாவித்திரி என்பாள் கிகழ்ந் ததை அறிந்து விழுந்து அழுது புலம்பினள்.
வற்சன் அத்தமன காலத்தின்பின் புவனேச் சவரி கோயிலை யடைந்து, ஐயர் சோதிடஞ் சொன்னமையையும், அதுகேட்ட முஞ்சன், கொன்று தலையைக் காட்டுமாறு தனக்கு வலிந்து கட்ட8ள தங்தைமையையும் போசனுக்குச் சொன் னை.
போசன், * வற்சனே! இராமசுவாமிக்கும் பாண்டவர்களுக்கும் வனவாசமும், நளனுக்கு இராச்சிய இழப்பும், இராவணனுக்குச் சிறையும் மரணமும், சக்திரனுக்குத் தேய்வும் விதி வசத்தால் அமைந்தன அல்லவா! அப்படியே/விதி வசத்தால் அமைவனவற்றை விலக்க வல்லவர் யார் ? ? என்று சொல்லிவிட்டு, இரண்டு ஆலிலைகளை எடுத்து ஓரிலையைப் பாத்திரமாகத் தைத்துத், தன் கஃணக்காலை வாளினற் சிறிது வெட்டி ஒழுகின்ற இரத்தத்தை அவ்விலைப் பாத்திரத்தில் ஏந்தி வைத் துக்கொண்டு, ஒரு தும்பினலே அவ்விரத்தத்தைத் தொட்டுத் தொட்டு மற்றை யிலையிலே ஒரு சுலோகம்

போசன் கதை 65
"Gllás, gyaos அவன் கையில் கொடுத்து, “வற்சனே! so-you g i கட்டளைப்படி செய்தபின் இவ்விலையை அவர் கையில் கொடுத்து விடு என்றான்.
அப்போது வற்சனுடைய தம்பி அவனை நோக்கி, 6: அண்ணு 1 கேட்க, ஒருவன் சரீரத்தை விட்டு நீங்கும்போது 6 600637 کےODuu" திரவியங்களே அம், மாதா, பிதா, கண்பர், மனேவி, மக்கள்
உயிர்த்துணை : திருமத்தை விரும்பாதவன் கல்வி, செல்வம், வலிமை முதலியவற்ருரன் மிக பெரிய வனுயினும் ஒன்று மில்லாதவனே ஆவான்’ என் 房六 ஒரு சிறிதேனும் தரும சிக்கையில்லாமல் இப் பாலகனேக் கொல்ல *--6örulefr? ஐயோ! உம்முடைய மனந்தான் இவ்வளவு 3549.6OrtuDr?” என்றான்.
அது கேட்ட வற்சன் தன்னுள்ளே குழ்ந்து கொண்டு, போசஜர வணங்கித் தேரிலேறி, இருள் செறிந்த அவ்விரவிலேயே மீண்டும் Hட்டினத்திற் சேர்ந்து, வீட்டிலே நில அறையினுள்ளே போசஆன மறைத்துவிட்டு, கைவல்லவர்களாஒ சிற்பிகஜளக் கொண்டு போசனுடைய தலையே என்று Pேழுதும் கம்பத்தக்க ஒரு போலித் தலை செய்வித்து, அதை எடுத்துக்கொண்டு அரசன் வீட்டிற் சென்று, அவனைக் கண்டு வணங்கி, 18 சுவாமி1 a Tödsor so டளையிட்டபடி செய்துவந்தேன்? Tങ്ങrgങ്ങr.
マ身・ tDr.ー5

Page 38
66 அறிவுரை மாலை
முஞ்சன், 'வற்சனே! நீ வாளால் வெட்டிய பொழுது புத்திரன் யாது கூறினன்?’ என்ருரன்.
வற்சன், 'அவன் ஒரு பத்திரம் எழுதித்தந் தான்; அது இது ; ஏற்றுப் பார்க்க; சுவாமி1 இங்கே தலையையும் பார்த்துக்கொள்க’ என்ருரன். முஞ்சன், தலையைப் பார்த்துச் சிறிதே அழுது, * வற்சனே! இந்தத் தலையைக் கொண்டுபோய் அப்பாற் படுத்து ' என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு, மனைவியைக் கொண்டு விளக்கெடுப் பித்து, அப்பத்திரத்தில் எழுதிய சுலோகத்தை வாசித்துப் பார்த்தான்.
அச் சுலோகத்தின் கருத்து,
* கிருத யுகத்திலே பெரிது விளங்கிய மாந் தாதா என்னும் மகாராசன் இறந்தான் ! பெரிய சமுத்திரத்தின் கண்ணே ஒரு சேது வைக் கட்டி இராவணனைக் கொன்ற இராம சுவாமி என்னும் 'ஆதிமன்னன் இறத்தான். அம்மட்டோ 1 பொறையிற் சிறந்த தருமன் முகலாய பல கோடி முடிமன்னர் இறந் தனர்! அம்மகான்கள் ஒருவரோடாயினும் இப்பூமி உடன் சென்றிலது. இராசாவே ! உன்னேடே இப்பூமி உடன்செல்வது நிச்சயர் தானே 1’ என்பதாம். மூஞ்சராசன் அச்சுலோகத்தின் கருத்தை அறி தலும், தன் வயமிழந்து கீழே விழுந்தான். மனைவி புடைவையினலே வீசியபின் தன் அறிவடைந் தான். ெேபண்ணே புத்திரனைக் கொலைசெய்த சண்

போசன் கதை 67
டாளன் நான் ! என்னைத் தீண்டாதே 1 ஐயையோ ! நான் பாவி’ என்று புலம்பினன்.
அவ்வாறு புலம்பிய முஞ்சன் உடனே வாயிற் காவலாளரைக் கொண்டு அறிவிற் சிறந்த அங் தணர்களை அவ்விடத்தில் அழைப்பித்து, அவர்களை வணங்கி, ‘சுவாமிகாள் புத்திரக் கொலை என்னும் பாவம் என்னல்செய்யப்பட்டது; இனி இதற்கு யாது பரிகாரம் செய்யத்தக்கது? கற்பித்தருள்க’ என்று கேட்டான். அவர்கள், ‘இராசனே 1 அதி சீக்கிர மாக நெருப்பில் விழுதலே அதற்குப் பரிகாரமாம்" எனருராகள.
அப்போது புத்திசாகரன்என்னும் மந்திரி அவ் விடத்திற் சென்று அரசனை வணங்கி, ' சுவாமி ! முன்னே சிந்து அரசர் தாம் ஆண்டஇராச்சியத்தை உமக்குத் தந்த அப்பொழுதே போசனையும் உம் முடைய ஒக்கலையில் ஒப்பித்துவிட்டாரன்றே ! இங்ங்னமாக நீர் யாது செய்தீர்! கேளும் " என்று சொல்லி, ? நிலையுறுவதுபோலத் தோன்றிச் சில பொழுதில் அழிவதாகிய இளமையின் மயலடைந்த கயவர்கள், செய்வன தெரியாது உய்தியில் குற்றம் புரிந்து ஒய்யெனக் கெடுவர் " என்பது முதலிய நீதி மொழிகளைச் சொன்னன். அரசன், ' நான் இந்த இரவிலியே அக்கினிப்பிரவேசஞ் செய்ய நிச்ச யித்தேன் ' என்ருரன். புத்திசாகரன் அது கேட்டுப் பரிதாபத்தோடு வெளியில் வந்து இருந்தான். உடனே அரசன் புத்திரக் கொலைப்பாவத்தைப் பரிகரிக்கும் பொருட்டு அக்கினிப்பிரவேசம் செய்

Page 39
68 அறிவுரை, மாலை
கிருரன் என்ற கதை பரவியதால் பலரும் கூடி னர்கள். வற்சன் அவ்விடத்திலே புத்திசாகரனைத் தனியே கண்டு, போசன் காக்கப்பட்டிருத்தலை இரகசியமாக அறிவித்தலும், அவன் ஓர் உபாயம் சொல்லி உடனே வற்சனை வெளியில் அனுப்பினன். சிறிது பொழுதின் பின் சடைமுடி உடைய ராய்ப் படிக குண்டலமணிந்த இரு செவியினராய், உடம்பு முழுவதும் திருநீறு பூசினவராய், பட்டுக் கெள பீனந் தரித்தவராய், அழகில் சிறந்தவராகிய ஒரு சன்னியாசியார், கையிலே யானைத் தந்தமாகிய தண்டு பிடித்துக்கொண்டு அங்கே வந்தார். புத்தி சாகரன் அவரை நோக்கி, “ ஒகோ சன்னியாசி யாரே! எங்கிருந்து வருகிறீர்? உம்முடைய வாசத் தானம் யாது? நீர் யாதாயினு மொரு சிறந்த கலா சாமர்த்தியமேனும் வைத்திய சாமர்த்தியமேனும் உடையீரா?’ என்று கேட்டான். சன்னியா சியார் அவனை நோக்கி, எந்தெந்தத் தேசந்தானு மிருக்கையே வீடுதோறுந் தந்திடு பிச்சைதானே தனியுணவாகும் வாவி ஆஉந்தியிச் சலமுண்டே யொப்பின்மெய்ப் பொருளுணர்ந்த சிந்தைகொண் ஞானிகட்குச் செல்வத்தாற் பயனென்னம்மா’ என ஒரு பாட்டுப் படித்து, 'தம்பி கேளும் நமக்கு ஓரிடம் இல்லை; எங்கும் திரிவாம்; குருவின் உப தேசத்தின்படியே நிற்பாம்; எல்லா உலகையும் காத லாமலகம் போலக் காண்போம்; பாம்பு கடியுண்ட வரை, நோய் குடி கொண்டவரை, படைக்கலங்
*உந்தி - ஆறு.

போசன் கதை 69
களால் அறுபட்டவரை, நஞ்சினல் கெட்டவரைக் கணப்பொழுதில் உய்யச்செய்வோம்’ என்று, சொன்னர். இந்த வசனங்கள் உள்ளே இருந்த முஞ்சன் காதிலேபடுதலும், அவன் உடனே வெளி யில் வந்து, சன்னியாசியாரை வணங்கி, ‘சுவாமீ யோகீசுவரரே பெரும் பாவியாகிய என்னல் கொல்லப்பட்ட புத்திரன் உயிர்பெறச்செய்து, என் னைக் காத்தருள்க’ என்ருரன். அவர், 'அரசனே அஞ்சாதே, கடவுள் கிருபையினலே உன் புத்திரன் உயிர் பெறுவான். புத்திசாகரனேடு ஓமத் திரவி யங்களைச் சுடலைக்கு அனுப்பு ’ என்ருரர். அரசனும் அப்படியே செய்தான். அப்பொழுதே போசனும் இரகசியமாகச் சுடலைக்கு அழைத்துப் போகப் பட்டான். உடனே ? சன்னியாசியார் போசன் உயிர்பெறச்செய்தார்’ என்ற செய்தி பரவிற்று. பின்னர் போசனை யானையிலேற்றி வாத்தியகோஷ த்தோடு அழைத்துக்கொண்டு வருதலும், முஞ்சன் அவனைத் தழுவி அழ, அவன் முஞ்சனுடைய அழுகையை மாற்றித் துதித்தான்.
பின்பு ஆனந்தபரவசனகிய முஞ்சன் அவனைச் சிங்காசனத்தில் இருத்தி, இராச்சியத்தைக்கொடுத் தான் ; தன் புத்திரர்களுக்கு ஒவ்வொரு கிராமம் கொடுத்து அங்கங்கே இருத்திவிட்டு, மூத்த புத்திர கிைய சயந்தனைப் போசன் சமீபத்தில் இருத்தி னுன் ; சில நாட்களின் பின் தன் மனைவி மாரோடு காட்டை அடைந்து, வீடுபேற்றை வேண் டித் தவஞ்செய்தான்.

Page 40
11. “குண்டலகேசி வரலாற்றுச் சுருக்கம்
இராசக்கிருகம் என்னும் நகரத்தை ஆண்ட
அரசனுடயை மந்திரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு, பத்திரை எனப்பெய ரிட்டுப் பெற்ருேரர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். இவ்வாறு வளர்ந்த அப்பெண்மகவு பெரிதாகி வளர்ந்து, மணம்செய்யத்தக்க வயதினை அடைந் தது. ஒருநாள், இப்பெண் தன் மாளிகையின் மேற் புறத்தில் உலாவியபோது தெருவழியே கட்டழகு மிக்க கா8ள ஒருவனை அரசனுடைய சேவகர் கொலைக் களத்திற்கு அழைத்துக்கொண்டு போவ தைக் கண்டாள். கண்டதும், அக்காளையின்மேல் காதல்கொண்டாள். அவன், அரசனுடைய புரோ கிதன் மகன்; வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை அடையப்பெற்றுக் கொலேக் களத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக்குற்ற வாளியின்மேல் காதல்கொண்ட பத்திரை இவ னேயே மணம்புரிவேன், அன்றேல் உயிர்விடுவேன்' என்று பிடிவாதஞ் செய்தாள். இதனை அறிந்த இவள் தந்தை, கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக் கொண்டுவந்து, நீராட்டி
*மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் * பெளத்தமும் தமிழும்" என்னும் நூலிலிருந்து எடுத்தது.

குண்டலகேசி வரலாற்றுச் சுருக்கம் 71.
ஆடை அணிகளை அணிவித்துப் பத்திரையை அவ னுக்கு மணம்செய்வித்தான்.
மணமக்கள் இருவரும் இன்புற்று வாழுங் காலத்தில் ஒருநாள், ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப் பார்த்து, முன்பு கள் வன் அல்லனே ? எனக் கூறினுள். அவன், அவள் தன்னை இகழந்ததாக் கருதி மிக்க சினங் கொண்டான். ஆயினும், அதனை அப்போது வெளியிற் காட்டாமல் அடக்கிக்கொண்டான்.
பின்னர் ஒருநாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம், தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும்பொருட்டு அருகிலிருக்கும் மலை உச்சிக்குப் போக விரும்புவதாகவும், அவளை யும் தன் உடன் வரவும் கூறினன். அவளும் இசைய, இருவரும் மலை உச்சிக்குச் சென்றனர். மலைஉச்சியினை அடைந்தவுடன், அக்கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, 'அன்று நீ என்னைக் கள்வனென்று கூறினுயன்றே ? இன்று உன்னைக் கொல்லப்போகிறேன். நீ இறக்குமுன் உனது வழிபடு கடவுளை வணங்கிக்கொள் ” என்ருரன். இதனைக் கேட்டுத்திடுகிட்ட அவள், தற்கொல்லியை முற்கொல்லவேண்டும்’ என்னும் முதுமொழியைச் சிந்தித்து, அவன் கட்டளேக்குக் கீழ்ப்படிபவள் போல நடித்து, ‘என் கணவனுகிய உன்னை அன்றி எனக்கு வேறு தெய்வம் ஏது? ஆதலின், உன்னையே நான் வலம்வந்து வணங்குவேன்?

Page 41
72 அறிவுரை மாலை
என்று சொல்லி, அவனை வலம் வருவது .ொல் பின் புறம் சென்று, ஊக்கித் தள்ளினுள். இவ்வாறு அக்கொடியவன் மலை உச்சியினின்றும் வீழ்ந்து இறந்தான்.
இதன் பிறகு பத்திரை, உலகத்தை வெறுத்த வளாய், சைன மதத்தின் பிரிவாகிய நிகண்டமதத் தில் சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக்கொள் கைப்படி, பத்திரையின் தலைமயிரைக் களைந்து விட்டார்கள்; ஆயினும் மீண்டும் தலைமயிர் வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. அதனுல் சுருண்ட மயிரு டையவள் என்னும் பொருள்படும் குண்டலகேசி என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத் தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட் டது. சிலவேளைகளில் இவளது இயற்பெயரையும் காரணப் பெயரையும் ஒருங்கு சேர்த்த, 'பத் திரா குண்டலகேசி என்றும் சொல்லப்படுவது முண்டு.
சைனமதத்தில் சேர்ந்த குண்டல கே சி, சைனர்களிடம் சமய சாத்திரங்களையும் தர்க்க நூல் களையும் கற்றுத் தேர்ந்து, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்ற இடமெங்கும் நாவல் மரம் கட்டு வாதப்போர் செய்து வெற்றிகொண்டு வாழ்ந் தாள். வாதப்போர் செய்வோர், நாவல் மரக் கிளையை ஊர் நடுவில் கட்டு வாதுக்கு அழைப்பது அக்கால வழக்கம். இவ்வாறு நிகழுங்கால், ஒரு நாள் ஓர் ஊரை அடைந்து, அவ்வூர் நடுவில்

குண்டலகேசி வரலாற்றுச் சுருக்கம் ኾ8
மணலைக் குவித்து, நாவற்கிளே கட்டு, உணவு பெறுவதற்காக வீடுதோறும் சென்ருரள். அவ்வம யம் புத்தர், தமது சீடர்களுடன் அவ்வூர்க்கு அருகி லிருந்த ஒரு தோட்டத்தில் வந்து இறங்கினர். அவ ருடைய சீடர்களில் சாரிபுத்தர் என்பவர் உணவுக் காக அவ்வூருக்குள் சென்ருரர். சென்றவர் அங்கு காவல் கட்டிருப்பதைக் கண்ணுற்று, அதன் கார ணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து, அங்கிருந்த சிறுவர்களை அழைத்து அக் கிளையைப் பிடுங்கி எறியக் கூறினர். அவர்களும் அவ்வாறே செய் தார்கள்.
பின்னர், உணவுகொள்ளச் சென்ற குண்டல கேசி மீண்டும் திரும்பி வந்தபோது, தான் நட்ட நாவல் வீழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனை அறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து, அவை கூட்டச் செய்து, சாரிபுத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினள். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினவிய வினுக்களுக்கெல்லாம் சாரி புத்தர் விடை அளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினவிய வினவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக் கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து ‘என்னிடம் அடைக்கலம் புகாதே, என்னு டைய குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவா யாக’ என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று

Page 42
74. அறிவுரை மாலை
புத்தரை வணங்கச் செய்தார். புத்தர் அவளுக்கு உபதேசம் செய்து அவளைப் புத்த மதத்தில் சேர்த் தார். இதுவே குண்டலகேசி என்னும் தெரிவை யின் வரலாறு.
இந்தக் குண்டலகேசி என்பவள் சமயவாதம்
செய்யப் புறப்பட்டு சைனம், வைதிகம் முதலான சமயங்களைத் தருக்க முறையாகக் கண்டிப்பதாக இயற்றப்பட்டதுதான் குண்டலகேசிக் காப்பியம் என்பது. இது தமிழிலுள்ள ஐம்பெருங் காப் பியங்களுள் ஒன்ருரகும்.
*சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங் காப்பியங்களாகும்.
 

12. நீலகேசி வரலாற்றுச் சுருக்கம்
பாஞ்சால தேசத்திலே சமுத்திரராசன் என்னும் வேங்கன் பண்டாரவார்தன என்னும் நகரி லிருந்து செங்கோலோச்சினன். நகர்ப்புறத்தே பழவாலயம் என்னும் சுடலை இருந்தது. அங்கு ஒரு காளி கோயில் உண்டு. அதன் அண்மையில் சந்திரமுனி என்னும் சைன முனிவர் ஒருவர் வாழ்ந்திருந்தார்.
ஒரு நாள் நகர மாந்தர் காளிக்குப் பலியிடும் பொருட்டு விலங்குகள் பலவற்றைக் கொண்டு, சுடலையிலுள்ள காளி கோயிலுக்குச் சென்றனர். பிற உயிர்களுக்குத் துன்பமிழையாமையை மேற் கொண்ட சைன முனிவர், நகர மாந்தரைநோக்கி அவர்கள் பெருந் திரளான விலங்குகளைப் பலியிடக் கொண்டு வந்திருப்பதன் காரணத்தை வினவினர். அவர்கள் 'இத்தேவியின் அருளால் அரசி, பட்டத்துக்குரிய குமாரனை ஈன்ருள்; ஆதலின் இவ் விலங்குகளை எல்லாம் பலியிடும்பொருட்டு கேவி யின் திருமுன்பு கொண்டு வந்திருக்கின்ருேரம் ” என விடை பகர்ந்தனர்.
இதனைச் செவியில் ஏற்ற முனிவர் அவரை நோக்கி, ' உயிர்கள், தாம் முற்பிறப்பில் புரிந்த வினைகளின் காரணமாகப் பிறவிகள் எடுக்கின் றன. இங்கிகழ்ச்சியில் தெய்வங்களால் ஆம் வல் லமை எதுவும் இல்லை. இராச குமாரன் பிறந்ததின் பொருட்டு விேர் கொடுக்கும் மிருக பலியை ஏற்று இத்தெய்வம் மகிழுமாயின், அது மிருக வடிவாக

Page 43
76 அறிவுரை மாலை
மண்ணினல் செய்த பிரதிமைகளையும் பலியேற்று மகிழுமன்ருே ? இம்முறை, இரத்தம் சிந்தும் கொடிய கொலையின்றிச் செய்யப்படும் அன்பு கிறைந்த வழிபாடாகும் ' எனப்போதித்தார்.
சந்திர முனிவரின் உயர்வுடையதும் புனித மானதுமான வழிபாட்டு முறையைக் கூறக்கேட்ட மக்கள், தாம் பலியிடும்பொருட்டுக் கொண்டுவந்த விலங்குகளை விட்டுத் தத்தம் வீட்டுக்குத் திரும்பினர். முனிவரின் தரும உபதேசத்தைக் கேட்டு உயிர்ப் பலி கொடாது மாந்தர் அகன்றமையின், காளி வெகுளியுற்று, சைன முனிவரை ஒறுக்க நினைவுகொண்டாள். தவம் நிறைந்த சைன முனி வரை ஒறுக்கும் ஆற்றல் காளிக்கு இல்லாமல் இருந்தது ஆகவே அவள், சிறு தெய்வங்களுக்குத் தலைமை வகித்த நீலகேசி என்னும் தெய்வ அணங் கின் துணையை நாடினுள்,
நீலகேசி, காளியின் வேண்டுகோளுக்கு இணங் கிச் சந்திர முனிவர் வாசம்செய்யும் சுடலையை அடைந்து கோர வடிவங்கொண்டாள். யோகத் தில் அமர்ந்திருந்த முனிவர் இதனல் அச்சங் கொண்டாரல்லர். முனிவரைப் பணியவைக்குமாறு எடுத்துக்கொண்ட இம்முயற்சி பயனற்றுப்போகவே அவள், சாந்தமான இன்னெரு முறையினல் முனி வரைப் பணியவைக்க நினைத்தாள்.
அவள் காமலேகை என்னும் இராசகுமாரி போல் வடிவங்கொண்டு, தன்னை அழகிய ஆபரணங்

நீலகேசி வரலாற்றுச் சுருக்கம் 7ፐ
களால் அலங்கரித்துக்கொண்டு முனிவரின் அரிய தவத்தைக் கெடுக்குமாறு அவர் முன்னே கின்ருரள். முனிவர், தனது யோக ஆற்றலினல் அவள் லே கேசியே என்பதை அறிந்தார். அவர் அவளை நோக்கி 'நீ இராசகுமாரிஅல்லை; நீலகேசி என்னும் அணங்கு' என்ருரர்.
நீலகேசி, தன் முயற்சி பயனளிக்கவில்லே எனக்கண்டாள் ; முனிவர் தன்னை யார் என அறிந்து கூறும் வல்லமையை அளித்த யோகத் தின் பெருமையால் வசப்பட்டாள். 8.
அவள் மன்னிப்புக் கருதிக் கேட்கும் குரலில் * யான் உமது யோக ஆற்றலினல் தோற்றேன் ?? எனக் கூறித் தனக்குத் தரும உபதேசம் செய்யு மாறு முனிவரை வேண்டினள்.
முனிவர் நீலகேசிக்குத் தரும உபதேசம் செய் தார். நீலகேசி மற்றத் தேவர்களிலும் கீழான நிலைமையில் இருப்பதையும், மற்றவர் வெறுத்துத் தள்ளும் செயல்களுக்குத் தலைமை வகிப்பதையும் அவர் எடுத்துக்கூறினர்.
இந் நீலகேசி பல சமயத்தவர்களோடு வாதப் போர் செய்து வென்று, சைன மதத்தை நிலை நாட்டினுளாகச் செய்யப்பட்ட நூல் நீலகேசி எனப் படும். இது தமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. ஐஞ்சிறு காப்பியங்கள், பெருங்கதை, சூளாமணி, யசோதாகாவியம், நாகசூமாரகாவியம், நீலகேசி என்பனவாம்.

Page 44
13 தமிழர் வாணிகம்
பண்டைத் தமிழர் வாணிகத் துறையில் மிக முன் னேற்றமடைந்திருந்தனர். அசீரியர், பாபி லோனியர், எகிப்தியர், கிரேக்கர், உரோமர், சீனர், அராபியர், பினீசியர் முதலிய பழைய நாகரிக சாதியார் தமிழ் 15ாட்டோடு வாணிகத் தொடர்புடை யவர்களாக இருந்தனர். பிற5ாடுகளுக்குப் பண்டங் கஜள ஏற்றிச் செல்லும் மரக்கலங்களும், பிறநாட்டுச் சரக்குகளுடன் வந்த நாவாய்களும் தென்னிந்திய துறைமுகங்களில் குழுமி நின்றன. தமிழர் கடற் பயணத்தில் நன்கு , பழகியிருந்தனர். இந்து மாக்கடலில் தென்னிந்திய மரக்கலங்களே பெரும் பாலும் ஒடிக்கொண்டிருந்தன. மரக்கலங்களின் முன்புறம், யானை, சிங்கம், குதிரை முதலிய வற்றின் முகம்போல் செய்யப்பட்டிருந்தது. கி. மு. எட்டாம் நூற்ருரண்டின் முன் தென்னிந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையில் கப்பல் வழியாக வாணிகம் நடைபெற்றது என்பதற்குப் பல ஆதா ரங்களுண்டு. இந்தியாவில் வேதங்கள் தோன்று வதன்முன்னே தமிழர் சாலதியரோடு வாணிபம் நடத்தினர். சாலதியாவின் தலை நகரமாகிய ஊர் என்னும் நகரத்தின் அழிபாடுகளில், மலையாளக் கரைகளில் மட்டும் காணப்படும் தேக்குமரத் துண்டு கண்டெடுக்கப்பட்டது. ஊர் என்னும் நக ரம் தி. மு. 4000 வரையில் அமைக்கப்பட்டது.

தமிழர் வசனிகம் 79
தமிழர் ஆருயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாணிகத் துறையில் நன்கு பயின்றிருந்தார்களென் ன்பதை இது அறிவிக்கின்றது. கி.மு. 1700-இல் எகிப்துக்குச் சென்ற யோசேப்பின் வரலாறு, அக் காலத்தில் இந்திய வாணிகப் பொருள்கள் வணி கர் கூட்டத்தாரால் தரை மூலம் அராபியா வழியாக, எகிப்து, சிரியா, பாபிலோன் முதலியநாடு களுக்குக் கொண்டுபோகப்பட்டன என்பதை அறி விக்கும். கி. மு. பதினேழாம் நூற்ருரண்டில் இந் தியாவுக்கும், மேற்கே உள்ள நாடுகளுக்கும் வாணி பத் தொடர்பு இருந்தது என்பதற்கு எகிப்திய ஓவிய எழுத்து நூல்களில் ஆதாரம் காணப்படு கின்றது. குரங்கை உணர்த்தும் கவி என்னும் சொல்லின் திரிபாகிய கொவ் (கிரேக்கு) ஓவிய எழுத்தில் கவு’ என்று காணப்படுகின்றது. கி.மு. 1462-இல் முடிவெய்திய எகிப்திய பதினெட்டாவது பரம்பரையிலுள்ள அரசரின் பிணங்கள் இந்திய மசிலின் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. எகிப் தியர் கப்பற் பயணத்துக்குப்பினிசியரைச் சம்பளத் துக்கு அமர்த்தினர். தையர் காட்டு ஹிரம் என், ணும் அரசனும், சாலமனின் பிதாவாகிய தாவீது என்னும் எபிரேய அரசனும் சேர்ந்து * ஒயிர்? நாட்டுக்கு வாணிகக் கப்பல்களை அனுப்பினர். ஒபிர்ப்பயணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது. சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வதிலும், கப்பல் இடையே உள்ள வாணிகத் துறைகளில் தங்குவதிலும் மூன்று ஆண்டுகள்

Page 45
80 அறிவுரை மாலை
கழிந்ததாகச் சில சரித்திர ஆசிரியர் கூறுகின்ற னர். ஒபிர் என்பது தென்னிந்தியாவிலுள்ள உவரி என்னும் துறைமுகம் எனக் கருதப்படுகிறது.
சாலமன் என்னும் யூத அரசன் (கி. மு. 1000) சந்தனக்கட்டை, குரங்கு, மயில் முதலியவற்றை ஒபிரினின்றும் பெற்றன். மயில், இந்தியாவினின் றும் கொண்டுடோகப்பட்டது. துகிம் என்னும் பெயர் எபிரேய மொழியில் எழுதப்பட்ட விவிலிய நூலிற் காணப்படுகின்றது. இது தோகை என் னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. மேல் நாடுகளுக் குச் சென்ற தமிழ் நாட்டுப்பொருள்கள், தங்க ளுடன் தமக்குரிய தமிழ்ப் பெயர்களையுங் கொண்டு சென்றன. கிரேக்க மொழியில் அரிசி ஒரிசா? என்றும், இஞ்சி "இஞ்சிவேர்’ என்றும், கறுவா * கர்பி ஒன்' என்றும், திப்பிலி பிப்லி’ என்றும் வழங்கும். இவை முறையே அரிசி, இஞ்சிவேர், திப்பிலி என்பவற்றின் திரிபாகும். தந்தத்துக்கு *இபிம் என்னும் பெயர் எபிரேயத்தில் காணப்படு கின்றது. இது இபம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு.
இந்தியாவினின்றும் பொன், பட்டு, முத்து, வாசனைத் திரவியங்கள் ஆகிய பண்டங்கள் கிரேக்க நாட்டுக்குக் கொண்டுபோகப்பட்டன. ஹோமர் என்னும் பழைய கிரேக்கப் புலவர், இந்தியாவினின் றும் கிடைக்கும் பொருள்களைப்பற்றிக் கூறியிருக் இன்ருரர். முற்காலத்தில் இந்தியாவினின்றும் தங்
* இபம் என்பது விடசொல் என்பாருமுளர்

தமிழர் வாணிகம் 81
கம் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதுஎன் பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவோடு வர்த்தகம் செய்ததால் அசீரியா மிகுந்த தங்கத்தை ஈட்டிற்று, பாபிலோனிய பழைய சாசனங்களில் ஆடைக்கு, சிந்து என்னும் பெயர் காணப்படுகின்றது. இது இந்திய ஆடை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துக்கொள்கின்றனர்.இந்த ஆடை பாரசீகத்துக் கூடாகப் பாபிலோனுக்குச் செல்லவில்லை. அப்ப டிச் சென்றிருந்தால் ‘சி’ என்பது 'ஹி' என்று மாறியிருக்கும். வேத மந்திரங்களுக்குரிய சாதியார் கடலையும் கடற் பயணத்தையும் பற்றிக்கேள்விப் பட்டிருந்தார்களே அன்றி அவற்றை அறிந்திருக்க வில்லை. ஆகவே திராவிட மொழியைப்" பேசிய சாதியார்தான் ஆடையைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். ஆகவே தென்னிந்தியாவுக் கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையில் வாணிபம் நடைபெற்றது என்பதை மறுக்க முடியாது.
கி. மு. எட்டாம் நூற்றண்டுக்குப்பின் கடந்த வாணிபத்தைப்பற்றி மிகத் தெளிவான ஆதாரங் கள் கிடைத்திருக்கின்றன. பாபிலோனில் தைகிரஸ், யுபிராதஸ் என்னும் நதிகள் சந்திக்குமிடத்துக்கு அண்மையில் தமிழர் குடியேறியிருந்தார்கள். அங்கு கிருட்டிண, பலதேவ வழிபாடுகள் இருந்தன என்று அறியப்படுகின்றது. போதாயனர், மேற்கு ஆசியாவோடு வாணிகஞ் செய்தவர்க3ளக்
கண்டித்திருக்கின்றனர். இதனல் வடஇந்தியர்
gy. Dr.-6

Page 46
8. அறிவுரை மாலை
அவ்வாணிபத்தில் முதன்மையானவரல்லர் எனத் தெரிகின்றது. அர்த்த சாத்திரம் செய்த கெளடலி யர், வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவே வியாபா ரத்தில் சிறந்து விளங்கிற்று என்றும், தென்னிங் தியாவில் பொன், நவமணி, முத்து, சங்கு முதலிய பொருள்கள் கிடைத்தன என்றும், வடஇந்தியா கம்பளம், தோல் முதலியவற்றையே அளித்தது என்றும் கூறுகின்ருரர்.
மதுரை, அழகான ஆடைகளுக்குப் பேர் போனது. தமிழர்கடல்கடந்து திரவியம்தேடினர்கள் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. மேற்கு ஆசியாவிலுள்ள நாடுகளோடு கென்னிந்தியா வாணிகம் நடத்தியதாதலின் கி.மு.20-இல் பாண்டிய அரசன், அகஸ்தசு என்னும் உரோம சக்கரவர்திக் குத் தூதனுப்பினன். இன்னெரு அரசன், ஒரேக்க போர் வீரரைத் தனக்கு மெய்க்காப்பாள ராக அமர்த்தினன். யவனபோர்வீரர், பாண்டிய ரின் கோட்டை வாயில்களைக் காவல்புரிந்தனர்.
கிறிஸ்துவுக்குப் பல நூற்ருண்டுகளின் முன் இந்திய வணிகர் பர்மா வழியாகவும் அதன் தென் கரை வழியாகவும் சென்று, கம்போதியாவில் வாணிகத் தொடர்பை ஏற்படுத்தினர். அங்கு கில மாகக் கிடக்கும் கட்டிடங்களில் கடற்போர், கடற் பயணம் ஆகியவற்றை விளக்கும் ஒவியங்கள் காணப்படுகின்றன. கடல், தரை என்னும் இருவழி களாலும் இந்தியாவுக்கும் சீனவுக்கும் போக்கு வரவு இருந்தது.

தமிழர் வாணிகம் 83
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னும் தமிழர் சுமத்திரா, யாவா முதலிய நாடுகளோடு வாணிகம் நடத்தினர் கள். இதனை மணிமேகலை என்னும் நூல் தெளி வாகக் கூறுகின்றது. சுமத்திராவை அடுத்த பாலி என்னுங் தீவில் இன்றும் தமிழரது பழக்க வழக்கங்களும், நாகரிக சின்னங்களும் வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன.
கடல், பரவை, புணரி, ஆர்கலி, முந்நீர் முதலிய வும்; ஒடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலியவு மாகிய கடலையும் மரக்கலத்தையும் உணர்த்தும் தூய தமிழ்ச்சொற்கள், தமிழர் கடலையும் கடற் பயணத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள் என் பதற்குச் சான்ருகின்றன.
கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் தென்னிங் தியாவுக்கும் கிரீசுக்கு மிடையில் நெருங்கிய வாணி கத் தொடர்பு இருந்தது. உரோமர் முசிறியிலும் பிற இடங்களிலும் குடியேறியிருந்தனர். யவனர் அடிக்கடி போக்குவரவு செய்யும் இடங்களுள் முசிறி முக்கிய இடமாக இருந்தது. கிரேக்கர் தமது வாணிகப் பாதுகாப்பின் பொருட்டு முசிறியில் 2000 போர்வீரரை அமர்த்தியிருந்தனர். ம8ல யாளக் கரையிலுள்ள பிசன்தியம் (Byzantium) என்னும் இடத்தில் கிரேக்கர் குடியேறியிருந்தனர். உரோம நாட்டினின்றும் அழகிய பேழைகள், பாவைவிளக்கு, மது வகை முதலிய பொருள்கள் . தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. மிளகு,

Page 47
84 அறிவுரை மாலை
தந்தம், நவரத்தினம், பட்டாடை, கறுவா, சந்தனக் கட்டை முதலியன தமிழ் நாட்டினின்றும் யவன நாட்டுக்குக் கொண்டுபோகப்பட்டன.
உரோம வாணிபப் பெருக்கம் அதிகம் இருந் தமையால், உரோமர் தமது நாணயங்களைத் தென் னிந்தியாவில் வழங்கினர். உரோமரின் நாணய உற்பத்திச்சாலை ஒன்று தென்னிந்தியாவில் இருந்த தென்று நம்பப்படுகின்றது. தென்னிந்தியாவில் தெல்லிச்சேரிக்கு அண்மையிலுள்ள கோட்டயத் திலும், மதுரை மாகாணத்திலுள்ள கலியன் புத் தூரிலும், கோயம்புத்தூர் மாகாணத்திலுள்ள பொள்ளாச்சி, கருவூர், வெள்ளலூரிலும், புதுக் கோட்டை முதலிய இடங்களிலும் மிகப்பல உரோ மன் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை உரோம தென்னிந்திய வாணிகப்பெருக்கத்தைக் காட்டுகின்றன. இந்திய சரக்குகள் அலக்சாங் திரியா வழியாக உரோம் காட்டை அடைந்தன.
தென்னிந்தியாவில் முத்துக்குளிப்பு முக்கிய தொழிலாக இருந்தது. வடமொழியில் முத்தைக் - குறிக்கும் முத்த' என்னுஞ் சொல் முத்து என்ப
தென்னிந்தியாவில் முத்து கிடைப்பதை உரோமர் அறிந்திருந்தனர். அவர் தமிழ் நாட்டி னின்றும் ஏராளமான முத்தை வாங்கிச் சென்ற . உரோமைப் பெண்கள் முத்தில் அதிக மோகமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள்

தமிழர் வாணிகம் 85
தமது மேனியை முத்துக்களால் அலங்கரித்தர்கள். முத்துமாலைகள் ஒன்ருேரடு ஒன்று முட்டி ஒலி செய்வதைக்கேட்டு அவர்கள் உள்ளம் பூரித்தது. காலில்தரிக்கும் செருப்புக்களின் வார்களும் முத்து களால் அலங்கரிக்கப்பட்டன" கயஸ்குளோடியர் என்னும் உரோம அரசனின் இராணி உலோலா 300,000 தங்க நாணயம் விஜலயுள்ள முத்துகளால் தன்னை அலங்கரித்திருந்தாள். கிளியோபத்திரா என்னும் எகிப்திய இராணி, கீழ்நாட்டு அரசருக்கு முன் சொந்தமாக இருந்தனவும், காதில் அணியப் படுவனவுமாகிய இரண்டு பெரியமுத்துகளை வைத் திருந்தாள். 80,000 தங்க நாணயம் விஜலயுள்ள ஒரு முத்தை அவள் காடியில் (வின்னரியில்) கரைத் துக் குடித்தாள் ; மற்ற முத்தைக் கரைக்குஞ் சம யத்தில் அந்தோனியஸ் என்பவனின் வேலையா ளால் தடுக்கப்பட்டாள். தென்னிந்தியாவினின் அறும் உரோம இராச்சியத்துக்கு அனுப்பப்பட்ட வற்றுள் முத்து, வைடூரியம் கோமேதகம், நீலம் முதலிய இரத்தின வகைகளே முதன்மை யுடை யன. ஆண்டில் இரண்டு இலட்சம் தங்க நாண யம் வரையில் விலையுள்ள உரேமநாட்டின் செல் வத்தை இந்தியா விழுங்கிவிடுகின்றது என்று பிளினி (கி. பி. 62-113) என்பார் வெறுப்பாகக் கூறியிருக்கின்ருரர்.
பிறநாட்டு வணிகர், மிளகு, கசகசா, சந்தனம் ஆகியவற்றை மலையாளக் கரையினின்றும் வாங்கி னர். நெல்லூர் தொடங்கித் தெற்கே கூடலூர்,

Page 48
86 அறிவுரை மாலை
புதுச்சேரிவரையிலும் ஒருவகைத் தகட்டுச் செம்பு நாணயங்கள் நிலத்திற் கண்டு எடுக்கப்பட்டன, இவற்ருேரடு உரோம நாணயங்களும், துளையிட்ட சீன நாணயங்களும் கண்டு எடுக்கப்பட்டன. பெரிய மழைக்கும் புயலுக்கும் பின் மீன்பிடிப்போரின் பெண்டுபிள்?ளகள் இவ்வகை நாணயங்க?ளக் கடற் கரை ஓரங்களிலிருந்து பொறுக்கி எடுக்கிருரர்கள். கிறித்துவ வருட ஆரம்பத்திலிருந்து நாலைந்து நூற்ருரண்டுகளாகப் பிறதேச வாணிகம் தமிழ் நாட்டில் பெரிதும் நடைபெற்றது என்பதற்கு இது போதிய சான்ற கின்றது. நாணயங்களின் ஒரு புறத்தில் இரண்டு பாய்மரமுடையதும், தண்டு வலித்துச் செலுத்தபடுவதுமாகிய தோணியின் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
வணிகர் கடல் கடந்து மரக்கலங்களில் நெடுங் தூரம் செல்வதைப்பற்றி, மணிமேகலை என்னும் நூல் அழகாகக் கூறுகின்றது. 'திரைகட்லோடியும் திரவியங் தேடு" என்னும் பழமொழி இன்னும் தமிழ் நாட்டில் வழங்குகின்றது.
முசிறி, கொற்கை, தொண்டி, மாங்தை, புகார் முதலியன தமிழ் நாட்டின் முக்கிய துறைமுகங்க ளாகும். புகார் நகரின் சிறப்பைக் கடியலூர் உருத்திரங்கண்ணனர் பட்டினப்பாலேயில் விரித் துக் கூறியிருக்கின்ருரர். கடை வீதிகளில் கங்கை காவேரி நாடுகளின் விளை பொருள்களும், ஈழம், கடாரம் (பர்மா) முதலிய நாடுகளின் உணவுப் பொருள்களும், கீழ்க் கடலிலே பிறந்த பவளமும்

87
தென் டலில் குளித்த முத்தும், மேற்குக் தொடர்ச்சி மஜலயிற் பிறந்த சந்தனக்கட்டையும், இமயமலையிற் பிறந்த பொன்னும், மணியும், அரா பியாவினின்றும் கடல்வழியாக வந்த குதிரைகளும், வண்டிகளிலும், கழுதைகளிலும் கொண்டுவந்த மிளகு மூடைகளும் தேக்கிக் கிடந்தன.
மரக்கலங்கள் திசை அறிந்து செல்லும் கலங் கரை விளக்கங்கள் கடற்கரைப் பட்டினங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இக் கட்டிடங்கள் ஒலே முதலியவற்றல் வேயப்படர்து மூடு சாந்திடப் பட்டிருந்தன.
மரக்கலங்களின் உறுப்புகளைக் குறிக்க வழங் கும் சொற்கள் பெரும்பாலன தமிழ்ச்சொற்களா கவே காணப்படுகின்றன. கப்பற்பாட்டு என இக்காலம் வழங்கும் பாடல்களிலும் இச் சொற்கள் பலவறறைக் காணலாம்.

Page 49
14. சிந்து நதிப்பள்ளத் தாக்கில்
தமிழர் காகரிகம் சிந்துநதிப் பள்ளக் தாக்கில் ஹரப்பா, மொகஞ் சதரோ சங்குதரோஎன்னும் தமிழரின் புரா தனநகரங்கள், புதை பொருள் ஆராய்ச்சியாளரால் அகழ்ந்து கண்டுபிடிகப்பட்டுள்ளன. அங்கு காணப் பட்ட மாடி வீடுகள், வீதிகள், கோயில், குளங்கள், எழுத்துப் பொறித்த முத்திரைகள் ஆதியவற்ருரல் தமிழரின் சரித்திர காலத்துக்கு முற்பட்ட நாகரி கம் வெளிக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. ஹரப்ப8, மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் நாகரிகத்தை விளக்கும் மூன்று பெரிய நூல்கள் சர்யோன் மார்சல் என்னும் ஆசிரியரால் வெளியிடப் பட்டுள்ளன. அந்நூலில் காணப்படும் பொருட் சுருக்கம் வருமாறு.
பழஞ் சரித்திர ஆராய்ச்சி, நம்மை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாற் கொண்டுபோய் விடுகின் றது. சிந்து ஆற்றின் கிழக்கு மேற்குப் பள்ளத் தாக்குகளையும் பலுச்சுஸ்தானத்தையும் நோக்கு மிடத்து இந்தியா, சுமேரியாவோடும் *எல்லத்தோ டும் தொடர்பும் ஒற்றுமையும் உடையதாக இருக்கின் றது. இதற்கு ஆதாரமாக உள்ள சின்னங்கள் பஞ்சாப்பிலுள்ள ஹரப்பாவிலும், மொகஞ்சதரோ விலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஹரப்பா
*இது தைகிரசு யுபிராத்து என்னும் ஆறுகளின் கழி முகத்து குத் தென் கிழக்குப் பக்கத்திலுள்ளது.

சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தமிழர் நாகரிகம் 89
என்னும் நகர், சிந்து நதியின் கீழ் ஊற்றுவரை யிலும் அகழப்பட்டது. செல்வ வளம்பொருந்திய அழகிய நகரொன்று அவ்விடத்தில் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்ததென்று அறியப்படு கின்றது. எவ்வகையான நாகரிகம் அங்கு கில வியதென்று அறிதற்குரிய ஆதாரங்கள் கிடைத் திருக்கின்றன.
நகர், செங்கல்லாற் கட்டப்பட்டிருக்கின்றது. சுவர்கள் நிலமட்டத்துக்குமேல் செங்கல்லாற் கட்டப்பட்டிருக்கின்றன. அடித்தளம் முரடான செங்கல்லால் இடப்பட்டிருகின்றது. சில சுவர்கள் கற்களால் எடுக்கப்பட்டுள்ளன. மொகஞ்சதரோ விலும் அதன் சூழலிலும் கற்கள் கிடைத்தலரிது. வீதிகள் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகள் பெரும்பாலும் கிணறு உடையனவாக இருந்தன. கிணறுகளின் ஊற்றுகள் ஆற்றினின் அறும் வந்தன. குளிக்கும் அறைகளோடு கூடிய வீடு கள் பல காணப்புடுகின்றன. வீடுகளின் அழுக்கு நீர் வெளியே கழிவதற்குச் செங்கட்டி பதித்த வாய்க்கால்கள் இருந்தன. வாய்க்கால்கள், வீதி களில் சென்று முடிவெய்தின. வீதியில் கழிவு நீர் செல்லும் செங்கற் பதித்த வாய்க்கால்களிருந்தன. இவ்வாய்க்கால்கள் நகருக்கு வெளியே செல்ல வில்லை. வீட்டுக் கூரையின் நாற்புறத்துமுள்ள அழுக்குகள் பீலி வழியாக வந்து தொட்டியில் விழுமாறு கூரைகளுக்குப் பீலிகள் அமைக்கப்பட் டிருந்தன. வீடுகள் மாடிகள் உடையனவாக இருந்

Page 50
90 அறிவுரை மாலை
தன. மாடிகளுக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகள் அழகாகக் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகளின் அமைப்பைக்கொண்டு அந்நகரம் மிகச் சிறப்புற் றிருந்தது எனத் தெரிகின்றது.
மொகஞ்சதசோவில் வீடுகளல்லாத பெரிய கட்டி டங்களும் காணப்படுகின்றன. அவற்றின் பயன் யாதென்று தீர்மானமாகக் கூற முடியாது. ஒரு போது அவை வழிபாட்டுக்குரிய இடங்களாக இருக் கலாம். சாந்தினுல் மெழுகப்பட்ட கட்டிடம் ஒன்று சிறப்பாக அவ்விடத்திற் காணப்படுகின்றது. அது ஒருபோது அரசாங்கசபை கூடும் இடமாக இருத்தல் கூடும். அழகிய கட்டிடங்கள் சூழ்ந்த கேணி ஒன் முறும் அவ்விடத்திற் காணப்படுகின்றது. அது, மக்கள் நீராடுவதற்கு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.
அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை களையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்ளக் கூடிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. கோதுமையும், வாளியும் அங்கு பயிர் இடப்பட் டன. உணவின் பொருட்டு மக்கள், ஆடுமாடுகளே யும் கோழிகளையும் வளர்த்தார்கள். மக்கள் ஆற்று மீனையும் பயன் படுத்தினர். பல விலங்குகளின் என்புக்கூடுகள் அங்கு காணப்படுகின்றன. அவற் ருரல், எருமை, ஒட்டகம், ய்ானை, பலவகை மானினங் கள் முதலியன அங்கு வாழ்ந்தன என்று தெரி கின்றது. யூனிக்கோண்’ என்னும் ஒரு கொம் புடைய குதிரையும் அங்கு வாழ்ந்ததெனத் தெரி கிறது. புலி, குரங்கு முயல் முதலிய விலங்கு

சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தமிழர் நாகரிகம் 91
களின் உருவங்கள் கல்முத்திரைகளிற் காணப்படு கின்றன. இதனுல் அங்குள்ள மக்கள் இவ்விலங்கு களை அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது.
மொகஞ்ச தரோவிலுள்ள மக்கள் பொன்,
வெள்ளி, செம்பு, ஈயம் முதலியவற்ருரல் செய்த பதக்கங்களைப் பயன் படுத்தினர். அவர் வெள்ளியின் பயனை நன்கு அறிந்திருந்தனர். இருக்குவேத ஆசிரியர் வெள்ளியை அறியார். வெள்ளியை அறிந்த காலத்தில் அவர்கள் அதனை வெண்பொன் என்னும் பெயரால் வழங்கினர்கள். அவர்கள் சாதாரண ஆபரணங்களையும், பானை சட்டிகளையும் செம்பினல் செய்து பயன் படுத்தி னர். எலும்பு, ஆனைத்தந்தம், சிப்பி, மணி ஆதியன ஆபரணங்களாகப் பயன்படுத்தப்பட்டன. நீல நிறக் கண்ணுடியால் செய்த காப்புகளும் காணப்படுகின்றன. கம்பளியினலும் பஞ்சினலும் gb,6004--- நெய்யப்பட்டது. நூல் நூற்கும் கதிர்கள்پ பல காணப்படுகின்றன.
ஈட்டி, கோடரி, குத்துவாள், வில், கவண் முத லியன அவர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகளா கும். கவணில் வைத்து எறியும் உருண்டைக்கற்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. வாள் அல்லது தற்காப்புக்குரிய கருவிகள் இருந்தன என்று அறி யப்படவில்லை. மட்பாண்டங்கள் திரிகையிற் செய்யப் பட்டன. வழுவழுப்பான நிறம் பூசிய பானை சட்டி களும் காணப்படுகின்றன.

Page 51
92 அறிவுரை மாலை
சிறுவர் விளையாடுதற்குரிய விளையாட்டுப் பொருள்கள் மிகப்பல காணப்படுகின்றன. அக் காலத்து ஒவ்வொரு பிள்ளையும் பல விஜளயாட் டுப் பொருள்களை வைத்திருந்தது எனத் தெரி கிறது. கிலுகிலுப்பை, பாவை, ஊதுகுழல், சிறு வண்டிகள் ஆதியன அவ்விளையாட்டுப் பொருள் களிற் சில. அக்கால விஜளயாட்டு வண்டிகளைப் போல இக்காலம் சிந்து நாடுகளில் பயன்படுத்தப் படும் வண்டிகள் இருக்கின்றன.
அங்கு கண்டு எடுக்கப்பட்ட பொருள்களில் அக்கால வழக்கிலிருந்த ஓவிய எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்முத்திரைகள் முதன்மையுடை யன. அவ்வெழுத்துகள் சுமேரிய மொழிக்குரிய னவாக இருக்கலாம். சுமேரிய மொழிக்கும் இம் மொழிக்கும் பொதுவான ஓர் உற்பத்தி இருத் தலும்கூடும். மாடு, எருமை, ஒற்றைக் கொம்புள்ள குதிரை முதலியவற்றின் ஒவியங்கள் கல்முத்திரை களில் காணப்படுகின்றன. இவை, அக்கால மக் களின் ஓவியம் வரையும் திறமையைக் காட்டுகின் றன. முத்திரைகளில் காணப்படும் எழுத்துப் போன்றன மண்பாண்டங்களிலும் காணப்படுகின் றன. ஹெரஸ் பாதிரியார் என்னும் ஆசிரியர் அவற்றுள் பலவற்றை வாசித்திருக்கின்ருரர். அவ் வாசிப்பிற் காணப்படும் சொற்கள் பல தமிழில் காணப்படுகின்றன. எழுத்துக்குப் பதில் பயன் படுத்தப்பட்ட சில குறிகளே அவ்வெழுத்துகளா கும். ஒவ்வொரு குறியும் ஒவ்வோர் சொல்லைக்

சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தமிழர் நாகரிகம் 93
குறிக்கும். சீனரின் எழுத்து எழுதும் முறை இதனேடு ஒத்திருக்கின்றது. ஒரு மரத்திலிருந்து பிரிங்க இரண்டு கிளைகளுள் ஒன்று இவ்வெழுத்தும், மற்ருெரன்று சீன எழுத்துமாக இருக்கலாம். ஹரப் பாவில் வழங்கிய எழுத்துகள் முற்றும் மறந்து போகப்பட்டன. இவ்வெழுத்துகளைக் குறித்துப் பலவகையாக ஊகிப்பது பயனற்றது. அம்மொழி சமஸ்கிருதம் அன்று எனத் தீர்மானமாகக் கூற லாம். அது திராவிட மொழியே என அறிஞர் கருது கின்றனர். முத்திரைகளில் ஒவியங்களைப் பொறிப் பதில் மாத்திரமன்று, சிற்பத் தொழிலிலும் அம்மக் கள் திறமை அடைந்திருந்தனர். செங்கல்லினல் செய்த தலையில்லாத மனிதச் சிலை ஒன்று அங்கு கண்டு எடுக்கப்பட்டது. இது கிரேக்கரின் கைவேலை என்று முதலிலே கருதப்பட்டது. கிரேக்கர் வரு கைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இச் சிலை என்று இக்காலம் நன்முகத் துணியப்படு கின்றது.
அக்கால மக்களின் சமயமும் ஒருவாறு அறியப்படுகின்றது. சத்தி வழிபாடே பெரும் பாலும் மக்களுக்குரியதாக இருந்தது. பழைய நாள் வழிபாடு பெரும்பாலும் இவ்வகையினதே. மூன்று முகங்களுடைய தெய்வத்தின் சிலை ஒன்று காணப்படுகின்றது. இது, சிவன் சிலையாகும். பிற் காலத்தே வந்த ஆரியர், சிவனையும் தமது தெய்வங் களோடு சேர்த்துக்கொண்டனர் என்பதில் ஐயம் இல்லை. விலங்குகளையும் மரங்களையும் மக்கள்

Page 52
94. ... அறிவுரை மாலை
வழிபட்டனர். இறந்தவர்களைச் சுடுதலும் புதைத் தலும் அக்கால வழக்கு.
சிந்துநதிப் பள்ளத்தாக்கின் நாகரிகம் எல் லம், மெசபெத்தேமியா முதலிய நாடுகளின் நாக ரிகத்தோடு ஒற்றுமை உடையது. கல்லாயுதங்களுக் குப்பின் வந்த இரும்பாயுதங்கள் பயன் படுத்தப்பட் டன. அக்காலத்துக் கல்லாயுதங்கள் முற்றும் மறை ந்து போகவில்லை. பழைய நாகரிகத்துக்கும் கஜல வளர்ச்சிக்கும் அறிகுறியாகச் சிந்துநதிப் பள்ளத் தாக்கில் காணப்பட்ட முத்திரைபோன்ற பொருள் கள் எல்லத்திலும் காணப்பட்டன. இவ்விரண்டு நாடுகளுக்கும் மிடையே போக்குவரவு இருந்தது என்றறியப் பிற ஆதாரங்களுமுண்டு. மெசபெத்தே மியாவின் பழையவரலாற்றைக்கொண்டு மொகஞ்ச தரோவின் நாகரிகம் கி. மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நாட்டலாம் இந்நாகரிகம் கங்கைக்கரை வரையில் பரந்திருந்ததோ என்பது, ஐயத்துக்குரியது. மேலே கூறப்பட்ட இந்திய மக்களின் காலம், இருக்குவதே காலத்துக்கு முற் பட்டது. ஆரியர் ஆடுமாடுகளுடன் இடம் விட்டு இடம் பெயரும் கூட்டத்தவராக இருந்தனர். அவர் கள், பூர்வ குடிகளோடு ஓயாத போர் புரிந்து கொண்டிருந்தமையால் அவர்கள் மொகஞ்சதரோ போன்ற பலமான ஒரு5கரை அமைத்திருக்கமாட் டார்கள். மொகஞ்சதரோவி லுள்ளவர்கள் குதி ரையை அறியாதவர்களாக இருந்திருக்கலாம். வேத கால இந்தியர் குதிரையை நன்முக அறிந்திருந்த

சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தமிழர் நாகரிகம் 95
னர். இருவகையினரும் அறிந்திருந்த உலோக வகைகள் வேறு வேருனவை. மொகஞ்சதரோ மக் களின் நாகரிகம், வேதகாலத்தோடு சிறிதும் சம்பந் தப்படாதது.
மொகஞ்சதரோ ஹரப்பா என்னும் பழைய நகரங்களின் நாகரித்தை நன்று ஆராய்ந்தவரும், மொகஞ்சதரோ எழுத்துகள் பலவற்றை வாசித்த வருமாகிய ஹெரஸ் பாதிரியார் கூற்று வறுமாறு :
*பிற்கால இந்தியர்மேற்குப்புறமாகச்சென்று மெசபெத்தேமியாவின் தென்கோடியில் குடி யேறிச் சுமேரியர் என்னுஞ் சாதியாயிரானர்.”
யோகத்தில் வீற்றிருக்கும் பாவனையுடைய மூன்று முகமுள்ள நிர்வாணமான கடவுளின் சிலை ஒன்று காணப்படுகின்றது. அதன் சிகரங்களில் முடிகள் காணப்படுகின்றன. இச்சிலேயைச் சூழ்ந்து பல விலங்குகளின் உருவங்கள் காணப் படுகின்றன. இக் கடவுள் பசுபதி என்னும் பெயர் பெறுவர்.
፳ "ஆண்" என்னுங் கடவுள் மற்றைக் கடவுளருக் குத்தலைவராகக் காணப்படுகின்றனர். 'ஆண் என் னும் பெயருக்குரியவர் ஞாயிறு எனத் தெரிகின் றது. சூரியன் ஒருவீட்டில் ஒரு திங்கள் தங்குவான். ஒவ்வொரு வீட்டில் தங்கும்போதும் சூரியனுடைய வடிவம் வெவ்வேருகக் கொள்ளப்பட்டது. சூரியன் தங்கும் வீடுகள் எட்டு. ஆகவே அக்காலம் எட்டு மாதங்களும் ஒரு மாதத்தில் நாற்பத்தைந்து காட்

Page 53
96 அறிவுரை மாலை
களுமாக இருந்தன. பழைய இந்தியர், கடவுளுக்கு எட்டு வடிவம் உண்டு எனக் கருதினர். எட்டு இராசிகளாவன : ஆடு, மாடு, கண்டு, கன்னி, துலாம், கடகம், மீன், யாழ் என்பனவாம். இவ் வடிவங்களைக் கடவுளராக வைத்து மக்கள் வழி பட்டனர். இவ்வடிவங்களுள் மீன் மிகப் புகழ் பெற்றிருந்தது. சாசனங்கள் பலவற்றில் இப்பெயர் காணப்படுகின்றது. இக்காலத்தில் காணப்படும்சிவ னுடைய வடிவம்சாசனங்களில் தெளிவாகச் சொல் லப்படுகின்றது. சிவனுக்கு மூன்று கண்களுண் டென்றும் அக்கண்கள், தனித்தனி வழிபடப்பட் டன என்றும் சரிசனங்கள் கூறுகின்றன. கடவுள் அரசனுகக் கருதப்பட்டார். அரசன், கடவுளுக்குப் பதில் அவர்ஆண்யை ஏற்று கடந்துவோனக எண் ணப்பட்பட்டான். கடவுளுக்கு இறுவன் என்னும் பெயர் காணப்படுகின்றது.
ஒரு சாசனத்தில் 'தாண்வடன் இர் நால்மரம்’ என்று காணப்படுகின்றது. இதற்குத் தாண்ட வம் செய்யுங் கடவுள் என்பது பொருள்.
முத்திரைகளிலிருந்து வாசிக்கப்பட்டவற்றுள் சில சொற்கள், யாழ், வேல், நாய்வேல், காலாள், எண் ஆள், எண்மை (சிவன்), கலக்கு, நண்டு, நண்டூர், வேலூர், உழவன், அது, ஆண்டு, குட, குடவு,தடு, ஒட்டு, குட்டை, உதவு, அடு, அன்று, மாறு, அரி, முதலியன. “கோயில் எல்லாக் கடவுள் அது' என ஓர் சாசனத்தில் காணப்படுகின்றது. கோயிலில் உள்ள கடவுள் எல்லோரிலும் பெரிய கட

சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தமிழர் நாகரிகம் 97
வுள்,என்பது இதன்பொருள். முத்திரைகளில் குறள் வெண்பாவினலாகிய பாடல்கள் பல காணப்படு கின்றன. அக்கால எழுதும்முறை இடது புறத்தி னின்று சென்று, பின்னர் வலப்புறத்தினின்றும் இடப்புறமாகச் செல்வதேயாகும்.
வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கிய பிராமி எழுத்துகள் மொகஞ்சதரோ எழுத்துகளினின்றும் வளர்ச்சி அடைந்தவை. தென்னிந்திய திராவிடர்களுடைய எழுத்து மொகஞ்சதரோ ஏழுத்தை நேரேபின்பற்றியது. திருநெல்வேலியிற் கிடைத்த சரித்திர காலத்துக்கு முற்பட்ட மட்பாண்டங்களிலும், நீலகிரி மலையில் வெட்டப்பட்டுள்ள சாசனங்களிலும், கைதராபாத் துச் சமாதிகளிலும் இவ்வெழுத்து காணப்படு கின்றது.
மொகஞ்சதரோவியில் வாழ்ந்தோர் திராவிட ராயினமையின் வட இந்தியாவிலுள்ளோர் தமி ழையே பேசினர்,
சிந்துநதிப் பள்ளத்தகக்கிற் கிடைத்த சாச னங்கள் சிலவற்றிற் காணப்பட்ட வானநூற் குறிப் பைக்கொண்டும் மொகஞ்சதரோ முதலிய நகரங் களின் நாகரிகம் கி. மு. 5610 ஆண்டுகளுக்கு முற் பட்டதென ஹெரஸ் பாதிரிார் கூறுவர்.

Page 54


Page 55

)
----
|- -
|
|