கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எழினி

Page 1


Page 2

t G
G ( S
ஒம்: தமிழ் வாழ்க
விசய அண்டு ஆணித் திங்கள் 28 1ம் நாள்
ப?னயப்பன் - சரசுவதி
திருமண அன்பளிப்பு. நல்வரவுக்கு நன்றி.
12-7-1953.
LSAkS SASLMMSLLeAeAe LMAASLSLLLLJLLAA Aeee LLLSLLLLLLL0YJLLLLLL LAhSLS0LJSLAYYLMLeLSSL0LSSLASh0S SLMAM LkLkSL
sø,

Page 3

திருமண நினைவு வெளியீடு
எ ழ் னி.
ஆக்கியோர் புலவர். பாண்டியனுர்.
குயிற்றியோர் நெற்குப்பை
Fr. Lup. dyp. JFT. Llobru lůLIš GFiguur.
திருவள்ளுவர் ஆண்டு 1981,
ceeeem

Page 4

நன்றியுரை.
இக்கால விளைஞர்கள் திருமணங்களை யெழிலுற வியவற்று கின்றனர். மணமக்களுக்கு நன்னூற் பரிசுகள் நல்கு5ரும், வாழ்த்துரைகள் வழங்குநரும், மணமக்கள் தம் மணவினை நினை வாக நூல்கள் வெளியிடுநருமாக வுளர். இந்நிகழ்ச்சிகளிற் பரிசு வழங்கல்-வாழ்த்துரை வழங்கல்களில் யான் பங்கு கொள் வேன்.
நன்று, நன்று. எனது திருமண நினைவு வெளியீடாக ஒரு துல் இயற்றுவித்து வெள்யிடுவேனென முடிபு கொள்வேன். யாரால் எத்தகைய நூல் எழுதுவிக்கலாமென அறிஞர் பலரையும் உசாவுவேன். பலரும் மலை விளக்காய்ச் சிலையெழுத்தாய்க் கலை மணியாய் நிலைபெறத்தக்க நூலாதல் வேண்டும் ; பழுதில் புலவ ரால் எழுதுவிக்கவென்று ஒருபடித்தாக மொழிவர். யானறிந்த புலவரிலே யாவரிதற் குடன்படுவாரெனக் கருதலானேன். சட் டென்று நினைவிற்கு வந்தது ஆசிரியர்-புலவர்-உயர்திரு” பாண்டியனுரவர்கள் திருப்பேர். அவர்களே யென் னிளம்பருவ முதலே யானறிவேன். அவர்கள், அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளரும், எனது குலச் செல்வரும், ஊர வரும், உறவினருமான புலவர்-திரு. லெ. ப. கரு. இராமநாதச் செட்டியாரவர்கள், என் அருமந்த அண்ணன் முதலானவர் கட்குத் தமிழறிவுறுத்தியவர்கள். அத் தொடர்பு கொண்டு யான் என தெண்ணத்தை இலங்கையிலுள்ள அவர்கட்கு அஞ்சல் வாயி லாகத் தெரிவித்தேன், ஒரு சில நாட்களுக்குள் "எழினி’ யெனப் பெயரிய இந்நூற்படி யெனக்குக் கிடைத்தது.
இவ்வரிய ஆராய்ச்சி நூல் ஒரேழு நாட்களிலே இயற்றப் பெற்றமையை அருகிருந்தார் வழியறிந்து இறும்பூ தெய்கினேன். இந்நூலாசிரியரின் அளப்பரிய புலமையை யளத்தற்கு இந்நூல் ஒரு சிறு எடுத்துக்காட்டா மன்றே? இங்கினமாகக் கைம்மாறு ஒரு சிறிதுங் கருதாமலும், காலங் தாழ்க்காமலும் என தெண் ணத்தை முற்றுவித்த ஆசிரியர்-புலவர்.

Page 5
. ae f : i
பாண்டியரைவர்கட்கு எனது முழுமனதோடுங் கூடின நன்றி யறித லுரிய தாக,
மேலும் ஒன்று. என் அனைய தமிழ் இளைஞர்களும் தத்தம் திருமண நினைவு வெளியீடாக இத்தகைய நூல்கள் எழுதுவித்து வெளியிடல் வேண்டுமென்பது என் கருத்து. கைம்மாறு கருதாப் புலவர் பெருமக்கள் பலர் உளர். அன்றியும் பல்கலைச் செல் வரும், நூல்கள் யாத்தலையே பொழுது போக்காக வுடையவரும் எளிமை யினிமை முதலான பண்பமைந்தவரும், எதிர் நன்றி கருதா வேந்தலும், அரிய தம் நூல்கள் வெளிவருதலையே தமக் குரிய வூதியமாகக் கருதுபவருமான புலவர். பாண்டியனுரவர் களும் உளர். வேறு பலமொழி யறிஞர் பலரு முளர். ஆதலால் இன்னேரால் முறையே பழந்தமிழ்ப் பெரு நூல்களைக் கொண்டு கம் அரசர், புலவர், வீரர் வரலாறுகள் எழுதுவித்தும், இன்றி யமையாப் பிறமொழி நூல்களே மொழிபெயர்ட்பித்தும் வெளி யிடலாம். இவ்வகையில் இளைஞர் முயல வேண்டுகிறேன்.
இன்னும் ஒன்று. இக்கால இந்நாடு கண்டிராத தீவிய-செவ் விய-தனித்தமிழ் நடை நூலை அகவழகுக் கேற்பப் புறவழகும் அமையச் செவ்விதின் விரைந்து அச்சிட்டுத் தந்த திருச்சிராப் பள்ளி * கல்யாண் அச்சுக்கடட' வுரிமையாளர், தொழிலாளர் முதலானவர்கட்கும் எனது நன்றி யுரியதாக.
அவ்வப்போது அச்சகத்தார் அனுப்பிய அச்சுப்படிகளை யுடனுக்குடன் ஒப்பு நோக்கித் தந்த எனது தமிழாசிரியர் உயர்திரு. மீ. கந்தசாமிப் புலவரவர்கட்கும் எனது நன்றி யுரித்தாகுக.
வாழ்க தமிழ். 5ெற்குப்பை, இங்கினம்,
1950. சா. பழ. மு. சா. பனையப்பன்.

ஒம் முன் னுரை.
இது தலையெழுவள்ளல்களு ளொருவனும் ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனுர், பொன்முடியார் முதலிய நல்லிசைப் புலவர் பலராற் பாடப்பெற்ற பாட்டுடைத்தலைவனும் இற் றைக்குமுன் னிராயிரம் யாண்டளவை யடுத்து வாழ்ந்த தொல் லோனுமாகிய அதியமானெடுமானஞ்சி யெனவழங்கும் எழினி யென்பவன் வரலாற்றை விளக்கிப் புனைந்துரை விரவச் செய்யப் பெற்ற வுரைச்செய்யுள்.
எனவே யிது புனேந்துரையிடையிட்ட கட்டுரைச்செய்யு ளாகும்.
எழினி மரபு; எழினி மாண்பு; எழினி யிற்கிழத்தியார்; எழினிசேயெழினி யென 15ாற்கடறுபடுத்துரைத் தொருவாறு முடிக்கப்பட்டுள்ளது. இது நுதலிய பொருளாற் பெயர் பெற்றது.
நெற்குப்பை சா.பழ மு.சா. பனையப்பச் செட்டியாரென்பவர் தந்திருமண விழாவிற் குறுப்பாக ** யாதானு மொரு சிறு நூல் குயிற்றி வெளியீடு செய்வான் கருதுகின்றேன்; அன்னதொன்று செய்ததுளதாயிற் றருக" வெனக்கேட்டனர்.
அவ்வன்பர் வேண்டுகோளை மறுக்க மாட்டாது அச்செல்வ மைந்தரது திருமணவிழாவுக்கு மவரது தமிழார்வத்துக்கு மியைய விச் சிறு கட்டுரை யெம்மால் விரைந்து செய்து தரப்பெற்றது.
ப?னயப்பச் செட்டியார் கொல்பெருங்குடித் தமிழ் வணிக மரபினர்; நன்பொருட் செல்வர்; இளமையிலேயே அடக்க மொழுக்க முதலிய இனிய நற்பண்புக ளமையப் பெற்றவர். தமிழ்ப் புலமையின்பாலுந் தமிழ்ப் புலவர்பாலு மார்வமிக் குடையவர்; இவர் சிறந்த தமிழ்ப் புலவர்களிடம் சிறந்த தமிழ்ப் பனுவல்களே வரன்முறையாற் கற்று வருகின்றனர்; அன்ன வியைபு பற்றி யெம்பா லாசிரியக்கிழமை மேலிட்டுக்கொண்டு

Page 6
II
பேரன்பு வைத் தொழுகுவர்; இவர் இதுகாலை மருதையம் பேரூரிற் பள்ளி யீற்றுத் தேர்ச்சி வென்றி யெய்தியுள்ளார்.
இன்னுேரன்ன கன்னலமெய்கிய இளேஞர் பனையப்பனர் தம் மனைப் பொறுப்புக்கள் பற்றிய கவலைக் கிடனின்றிக் கல்விக் கண் முனைந்து நின்று மேம்பாடுற்று வளர்தற்கு வாயிலாயிருப் பவர் தம்மருமைத் தமக்கை கணவனுர், தெற்குப்பைத் திரு. சுப. சுப்பிரமணியச் செட்டியாராவர்.
பஃனயப்பனர் தந்திருவன்ன வாழ்க்கைத் துணைவியொடுஞ் செல்வமக்களொடுங் குறையின்றிப் பெருகித் தஞ்சுற்ற முதலிய பலர்க்கும் பேரூதியமாகி யிசை யெழ வசையொழிய விறைவன் றிருவருள் வழி நின்று வழி வழி மீடு வாழ்வாராகுக.
குறுவற்றைத் தோட்டம் ଦ୍ବି.fig) ୪୪tli
கொல்லம்யாண்டு, 1193, இங்ஙனம்,
மான்றலைத் திங்கள்
് ഖക്ക്, 28. J
புலவர். பாண்டியனுர்,

ஒம்: எழினி.
இன்றினூங்கு ஏறக்குறைய ஈராயிரம் யாண்டளவிலே எழினியென வியற்பெயருடைய பாட்டுடைத்தலைவர் பலர் வாழ்ந்தனர்.
அவருட் சிறப்புடைய அதியமா னெடுமா னஞ்சி யென்பவனே இக்கட்டுரைத் தலைவனுகிய எழினியாவன்.
இவற்கு எழினியெனவும் அஞ்சியெனவும் வழங்கு மிருபெயரு மியற் பெயரெனப்படும்.
அதியமானென்பது குடிப் பெயர். நெடுமானென்பது சிறப்புப பெயர்.
தோற்றம், ஆற்றல், அறிவு, புகழென்பனவற்றல் வீறுகோ ஞடையவனென்பது நெடுமானென்னுஞ் சொற் பொருள். நெடுமை வீறுகோள்.
நெடுமானென்பதும் நெடியோனென்பது மொன்று. வீறு, பிறர்க்கில்லாத பெருமை.
எழினி மரபு.
'ஆர்கலி நிறவி னதியர் கோமான்?? (புறம் 91) எனவும்
மதியேர் வெண்குடை யதியர் கோமான் ' (புறம் 392)
எனவும், அதியமா னெடுமா னஞ்சியெனவும், அதியமான்
பொகுட் டெழினியெனவும் வழங்குமாற்முன் அதியமான்

Page 7
2
மரபென வொரு மரபு பண்டைஞான்று மேம்பாடுற்று
விளங்கினமை புலணுகும்.
சேரன் சேரமான்; ம%லயன் மலையமான் ; தொண்டை யன் தொண்டைமா னென் முற்போல அதியன் அதியமா
னென வழங்கும்.
இவ்விரண்டனையும் அதிகன் அதிகமானெவும் வழங் குப. அதியன் மரபினர் அதியர்.
நாகனென்னு மாண்பாற்சொற்கு நாகையென்பது பெண்பாற் சொல்லாதல் போல அதியன் அதிகனென வழங்கு மாண்பாற் சொற்கு அதியை ; அதிகை என்பன பெண்பாற் சொல்லாதல் வேண்டும்.
இனி, நீரக விருக்கை யாழி சூட்டிய, தொன்னிலை மரபினின் முன்னேர் போல, வீகையங் கழற்கா லிரும்பனம் புடையல் ...வழுவின் றெய்தியும். (புறம் 99) என ஒளவையார் நெடுமா னஞ்சியைப் பாராட்டு மிடத்தே அவற்கு மவன் முன்னேர்க்கும் பனமாலை யுரிமை கூறப்படுவது கொண்டு அதியரைச் சேர மன்னர்களி னுற வினரெனக் கருதுவாரு முளர். (நற்றிணை பாடப்பட்டோர் வரலாறு. புறநானூறு பாடப்பட்டோர் வரலாறு. புற நானூற்றுரை புறம் 99.) ४०
அங்ஙனம் வெளிப்படப் புலவர் யாரும் பாடிற்றிலர். அஃதுண்மைய2யிற் புலவர் யாரேனும் யாண்டேனும் நெடு மானைச் சோர் குடிப்பாற்படுக லெடுத்தோதிப் புகழாதிரார்.
அன்றியுங் தம்மரபுக் குரிய பன மாலையை கின் முன் னுேர்போல வுடையையென அதற்கவன் முன்னுேரை

3
யொப்புமை காட்டல் வேண்டா. ஒரு பாண்டியனைச் சுட்டி வேப்பந்தா ருடையை யெனக் கூறலே மரபன்றி கின் முன் னுேர்போல வேப்பந்தாருடையை யென்முற் போலக் கூறு
மரபி பாண்டு மின்றே.
அதனல் அக்கூற்றுத் தானே பனமாலை அதியர் மரபுக் குரிய அடையாள மாலை யன்றென்பதற்குச் சான்றகும்.
அன்றியும் பனமாலையே யன் றிச் சேரர்க் குரிய விற் கொடி முதலியவற்று ளொன்று மதியர்க்குக் கூறப்படாமை கினைக்கற்பாலது.
கூடல், உறங்கை, வஞ்சியென்முற்போலும் அகனட்டி யாற்றங்கரை மூதூருங் கொற்கை, தொண்டி, புகாரென் முற்போலுங் கடற்கரைத் துறைமுகமும் அதியர்க் கில்லை யாதலால் அதியர் நெடுமுடியும் வெண்குடையுஞ் செங் கோலு முயர்கொடியும் யாளியணையு மென்றிவ் வடையாள மைந்துங் கொளத்தகு மன்னுரிமை யுடைய கொற்றவரல்ல ரென்பது தெற்றெனப் பெறப்படும். சோமான்கள் கொற்றவர்.
தொண்டைமான் கொற்றவணுதற்கு முறையுடைய னல்ல ணுயினும் பாலாற்றங் கரைக் காஞ்சியம் பேரூரும் நாகர் பட்டினமு முடைமை யானே கொற்றவனகி முடி முதலி யன கோடற் குரிமை யெய்தினன். இங்ஙன மாகு மன்னர்
* மன்பெறு மரபி னேனேர்.?
" மதியேர் வெண்குடை யதியர் கோமான் ? எனக்
குறுநில மன்னாாகிய அதியர்க்கு வெண்குடை கூறுதலின்

Page 8
4.
மன்னுரிமை யின்றியேயு மதியர் தம் மாற்றன் மிகுதி தோன்ற வெண்குடை கொண்டா ரென்பது பெறப்படும்.
மேலும் 'வழுவில் வன்கை மழவர் பெரும" (புறம் 90.) வெனவும் “ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமக ?? (புறம் 88.) னெனவும் அதியமான மழவரினத்தைச் சார்ந் தவனெனப் புலப்படக் கூரு நிற்பவு மவனைச் சோமாற் குறவின ணென்ப தெங்ஙன மமையும்?
நெடுமா னஞ்சியின் முன்னேர்களாகிய அதியமான்கள் சேரமான்களின் படைத்தலைவராகவும் உழைய (மந்திரி) ராகவுஞ் சிறப்புப் பெற்றிருந்தமையாற் சேரமான்களுக் குரியவ ரென்பதற்காகப் பனந்தார் புனைந்து கோடற் குரிமை நல்கப் பெற்றிருந்தனர்; அவ்வுரிமையே மரபுபற்றி நெடுமா னஞ்சிக்குங் கூறப்பட்டதென்பதே முறையாகும்.
சோமான் படைத் தலைவர்க்குஞ் சோமாற்குரிய பனந்தா ருரித்தென்பது,
" வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்
தடங்கிய புடையற் பொலங்கழ னேன்மு ளொடுங்காத் தெவ்வ ரூக்கறக் கடைஇப் புறக்கொடை யெறியார்கின் மறப்படை கொள்ளுத
ரெனவும், (பதிற்றுப் பத்து. 82)
w
"இரும்பனம் புடைய லீகை வான்கழன் மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச் சிால்பெயர்ந் தன்ன நெடுவள் ரூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பி னம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ சல்லது

5
தும்பைகு டாது மலைந்த மாட்சி பன்னேர். 8 o O p
(பதிற்றுப்பத்து. 42) எனவுங் கூறு மாற்ருற் பெறப்படும். (புடையல் - பனமாலை) ஆண்டுக் குறிப்புப் புத்துரை யாசிரி பரும் " கரியபனை மாலையினையும் பொன்னுற் செய்த விரக் கழலினையுமுடைய; இவை சேரன் படைவீரர்க்குரியன 29 வென்றர்.
இவ்வாற்றனே அதியமான்கள் சோமான்களி னுற வின நூல்லர் ; சோமான்களுக் குரிய மழவர் தலைவரெனக் கொள்க. இம் மழவர் சேரன் மழவரெனப் பெயர் வழங் கப் பெறுவர். இவ்வாறே யேனைச் சோழ பாண்டியர்க் குரிய மழவரு மிருந்தனர்; அவரு முறையே சோழன் மழவரெனவும் பாண்டி மழவரெனவும் பெயர் பெற்றுச் சிறப்புற்று வாழ்ந்த வந்தனர்.
கடல் சூழ்ந்த ஈழ்ப்பாண னுட்டகத்துக் கல்வி யறி வொழுக்கங்களிற் றலை சிறந்து தமிழ் வளர்த்துப் பொன்முப் புகழ் கிறீஇய திரு. ஆறுமுக நாவலர் பாண்டி மழவர் குடிப்பிறந்தவரென்ப. ஈழ்ப்பாணம் தொண்டைமா னிளங் திரையன் காலத்துப் பல்லவ மன்னராற் கைப்பற்றப் பட்ட பொழுது மணி பல்லவமெனப் பெயர் பெற்றிருந்தது, பல்லவராட்சியின் பின் பாண மன்னாாற கைப்பற்றி யாளப் பட்டபொழுது பாணமெனப் பெயர் வழங்கப்பட்டது; வேறிடத்தினும் பாணனு டிருந்தமையின் வேறுபாடு தோன்றுதற் பொருட்டு ஈழனுட்டகத்துப் பாணமெனப் பொருள்பட ஈழ்ப்பாணமென வழங்கினர். ஈழ்ப்பாணம்
மீண்டுன் தமிழாாற் கைப்பற்றப்பட்டபொழுது அங்கு

Page 9
6
வாழ்ந்த பல்லவரும்பாணரும் தமிழ ராயினர். பல்லவரும் பாணருங் தமிழரல்லாத வட மர்; ஆரியர். மணிமேகலை யாற் கொலையுண்டிறந்த உதய குமாரனென்னுஞ் சோழன்
மகன் ருய் சீர்த்தி யென் பவ்ஸ் பாணர் மரபுப் பெண்.
ஆறகழுர்வாணன், ஏகம்பவாணன் முதலியோர் பாண மன்னர் பாற்பட்டவராவர். பாணர் என்பது வாணரென வழங்கும். வாண ராயர், வாணுதி ராய ரென்முற் போலுஞ் சிறப்புப் பெயராக வேளாண் மரபினர் முதலியோரிடைப் பயிலுவன வாண மன்னரைக் குறிப்பனவேயாம். வாணர் தம்மை மகதரென வுங் கங் நாட்டை வாண நாடு, மகத நாடு, மகத மண்டலம், மகதமெனவும் வழங்கிக் கொண்டனர். கிருமுனைப்பாடி யென்னும் நடுநாடுதான் வாண நாடு மாயிற்று. அது சோழ கொங்கு தொண்டை நாடுகட்கு ஈடுவ ணிருக்க மையானே யம் முப்பெரு நாட்டாரானும் வாணரெனவும் மகத மண்டலமெனவும் வழங்கிய பெயரெல் லாம் விரைய இ ருந்த விடங் கெரியாமன் மறையலாயிற்று. இவர் அகியர் முகலிய தமிழரிற் பிரிங் கவ ராகல் வேண்டும். திருமான் மாவலி யென்னு மசுர வேந்தன்பான் மூவடி கில மிரந்து வாங்கி வளர்ந்தா னென்ற புராணக் கோலத்துக்குக் கோயிலெடுப்பித்தவற்கும், அவன் மகனுக்கு முறையே மாவலி யெனவும் அவன் மகன் பெயராகிய LJt 3007 னெனவும் பெயரிடப்பட்டன. அவ்வழியிற் பின்பு வருவோரு மப் பெயர்களை மீண்டு மீண்டும் வைத்துக்கொண்டுவர அவர் பாற் பரிசிலபெற விரும்பிய வடமொழியாளர் அப்பெயரை வைத்துக்கொண்டு அவரை மாவலி பாண மரபினர்; மூவுலகிலுக் கொழப்பட்டவர் மரபின சென்றெல்லாம் விரித்துச் சான்றுகளை யுண்டாக்கினர். அச்சான்றுகளால்
வந்த புகழ் கினைந்து வந்த மையல் மண்ட்ைக்கேறி எம்மைத்

திருமாற்கு மூவடி நிலங் கொடுத்த மாவலி மரபினரெனச் சொல்லுக ; அவன் மகன் பாணன் மரபினரெனச் சொல் லுக ; வெனச் சொல்லிச், சொல்லுவித்துச், சொல்லுதற்குக் கூலி கொடுத்து வெறியாடியவர்களே புகழ்பெற்ற tu ITGOOT மன்ன செனப்படுவோர். இதனு லிவராரியரு மல்லராய்த் தமிழரு மல்லாாய்ப் போலி யாரியரும் போலித் தமிழரு மாயினர். இடைக்காலத்துத்தமிழ் மன்னர் பலரு மிங்ஙனமே கூத்தாடியவராவர். ஒரு தமிழ் மன்னன் இராமன் கோயில் கட்டினுல் அவன் மகனுக்கு இராமனெனப் பெயரிடப் படும், அவன் மகன் மன்னனனவுடன் அவன் அயோத்தி யாண்ட இராமன் மரபின னுகிவிடுவான் அதற்குக் கல் வெட்டுச், செப்பேடு, நூல்வழக்கு, உலக வழக்குத், தனிப் பாடல், புராணம், இதிகாசமுதலிய சான்றுகள் பலவுளவாம். ஆகவே அவன் குரிய மரபின னுவன். அவன் குரு வசிட்ட முனிவராய் விடுவர். அவன் பூணு லிடுதற்கும் வேள்விக்கு முரிய இருபிறப்பாள னவன். ஆகவே துாய ஆரியன் அவனே. தன்னின மாகிய ஆரியரே தலைவர்; தமிழர் ஏவல் செய்யு மடியர். இங்ங்னமே தமிழ் மன்னவரும் அவரைச் சார்ந்துயர்ந்தவரு மெல்லாம் பேய் கோட்பட்டவ ாாயினர். தங் கலங்கட்கெல்லா முற்ற துணையாய் கின்ற தமிழரை யெல்லாஞ் செய்ங் நன்றி கொல்லுங் தமிழ் மன்னர் மிகவு மிழிவு படுத் தெல்லார்க்கு மடியவ சாக்கி விட்டனர்.
சேலத்தைச் சார்ந்த நாமக்கல்லிலே திருடிால் கோயில் அதியர் மன்னன் பெயரால் வழங்கப்படுகின்றது. அக்கோயி லில் மாவலி மூவடி கிலங் கொடுப்பத் திருமால் குறியணுகி யேற்றலும் நெடியனசு லு மடிைக்கப்பட்டுள்ளன. இதனலே தம்மை மாவலி மரபினர் ; அவன் மகன் பாணன் மரபின
ரென வழங்குவித்துக் கொண்டவர் அதியரு ளொருசாரா

Page 10
8
ரென் றெண்ண இட்முண்டாகின்றது. அதியர் முதலிய தமிழ ரல்லாாயின் இவரெல்லாரையுங் தாண்டி நுழைந்து நடுநாட்டுக்குள் வேருெரு புதிய சிற்றி ன ம் வந்து குடிபுக்கு நாடாளுத லென்பது சிறிது முடியாது.
பாணரினின்றும் ஈழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய தமிழர் பாண்டி மழவராவர். பல்லவரும் பாணரு மாரிய ாாதலால் அவரை யடக்கி யாள வல்ல பாண்டிமழவர் தலைவ ணுகிய படைத் தலைவனை ஆரியச் சக்கரவர்த்தி யெனச் சிறப்புப் பெயர் புனைந்து பாண்டியன் உய்த்தான். அம் மழவன் நல்லூ ரெனவோ ரூருண்டாக்கி அதன் கணிருந்து ஈழ்ப்பாண முழுது மாட்சி செய்து வர்தான்; அவன் வழி வந்தோ ரெல்லாம் ஆரியச் சக்கரவர்த்தியெனப் பெயர் வைத்துக்கொண்டு முடிசூடி யாள்வா ராயினர். ஆரியச் சக்கரவர்த்தி யென்பது குடிப் பெயராயிற்று. ஈழ்ப்பாணம் யாழ்ப்பாண மென மரீஇயிற்று. ஈழ்ப்பாணத்துக் குடியேறிய ஆரியப் பார்ப்பனர் சொல்லிசையை வைத்துக் கொண்டு ஆரியச் சக்கரவர்த்திகளென்பவர் இராமேசுவரக் கோயிலுக் குரியராய்க் கோயில் வழிபடவருவோர் கொடுக்குங் கூலியால் வயிறு பிழைக்க ஆரியப் பார்ப்பனர் மரபின ரெனப் புராண மெழுதி நம்புமாறு செய்துவிட்டனர். செய்துங் தங்களை ஆரியச் சக்கரவர்த்திகள் கோமிக்க ளாக்கி விடவில்லை.
இங்ஙன மழவரினங் தமிழக மெங்கணுங் கடல் கடங் தும் பாந்து வாழ்ந்து மேம்பா டுற்றுத் தமிழர் சிறப்பினைப் பாது காத்து வந்த வன்கண் மீளிய ரினமென்பது பண்டு தொட்டு மாருது வருகின்றது.
அஞ்சா நெஞ்ச மமையப் பெற்ற மழவர் மிக்கு வாழ்ந்த இாடு மூரும் மழநாடெனவும் மழபாடி யெனவும்

9
வழங்கப்பட்டன. மழபாடி திருமழபாடியாய்த் தேவாரப் பாடல் பெற்றுள்ளது. மழவர்பாடி மழபாடி, ஆய்ப்பாடி போல மழவர் சேரியென்னும் பொருட்டு. ஆனய நாயனர் பிறந்த நாடு மழநாடு
'ஈன்றுபுறத் தந்த வெம்மு முள்ளாள் ?? (அகம். 35) ன்ன்னு மகப்பாட்டிற் குறிப்புரையாளர் “மழவர் மழநாட் டார்’ என வுரைத்தலானே பண்டைஞான்று மழநாடென வொரு நாடுண்மை பெறப்படும். மழநாடு மழபுல மென
வும் வழங்கப்படும்.
மழபுல மழவர் பாலை கில மாக்க ளெனவும் முல்லைகில மாக்க ளெனவுங் கொள்ளப்படுவர். வேளிர், மறவர், கள்வர், இடையர், நாகர் என்றிவ் வினங்களோ டொப்ப மழவரின மும் போர்த்துணிவுங் குறும்பு மிக்ககோ ரினம், மழவ ருள் ளும் மழபுல மழவர் கொடுஞ்செய லிழைப்பவ ராவர், இவரை யடக்கி யாளுதல் எவர்க்கு மரிகா யிருந்தது. அவ செல்லா மாறலை கள்வர்; பகைவ ரானிரைகளைக் களவிற் கொணர்தலில் வல்லுநர் ; ஆவி னிறைச்சியு முண்டனர். இம்மழவரைப் பொதினிமலை யுடைய வேளா யென்னும் வேளிர் கலைவன் முதுகிட்டோடத் துரத்தின னெனவும் வேங்கடமலை யுடைய புல்லியென்னுங் கள்வர் தலைவன் வென்று வணக்கின னெனவு மக நானூற்றுப் பாடல்களா லுணரலாகும். இம்மழவர் சுருண்டு வளைந்து பாட்டுக் கொம்புபோன்று முறுக்குண்டு தோளிற் ருெங்கிக் கிடக் குங் தலைமயி ருடையவர்.
இவ செத்துணைக் கொடி யரா யிருந்தா ராயினுந் தர் தலைவரின் கீ ழடங்கி வாழ்ந்து தலைவருடைய முயற்சி

Page 11
l0
யானே நாளடைவிலே மிக்க சீர்திருத்த முற்று வேளாள
ராய் விட்டனர்.
சேரன் மழவருட் கொல்லிமலையைச் சார்ந்து வாழ்ந்த வர் கொல்லி மழவரெனப் பெயர் பெற்றனர்.
மழநாட்டிற் பொன்னியாற்றின் வடகரை மருங்குள்ள திருப் பாச்சிலாச்சிராமத்திலே ஆளுடைய பிள்ளையாரான் முடக்குநோய் தீர்ந் துய்ந்த மங்கையின் றமப்பன் கொல்லி மழவனெனப் பெரியபுராணங் கூறும். திருப்பாச்சிலாச்சி ராமஞ் சோழ னட்டைச் சார்ந்த தெனினும் வட கொங்கு காட்டை யடுத்துள்ள தாதலான் மழநாட்டுக் கணித்தாய தேயாம்.
கொல்லிமழவர் வாழ்ந்த நாடு கொல்லிக் கூற்ற மென வும் வழங்கப்பட்டது. 'கொல்லிக் கூற்ற மென்றது கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளை புடைய ஈாட்டின". (பதிற்றுப்பத்து எட்டாம்பத்துப் பாயிரக் கட்டுரை.) யென்பர் பதிற்றுப்பத்துப் பழைய வுரையாளர். இதனுற் கொல்லிக் கூற்றத்தை யாண்டுவர்த அதியமான்களுக்குக் கொல்லிமலை யுரிய தன்றென்பது பெறப்பட்டது. எனவே பதியமா னெடுமானஞ்சி காலத்திற் கொல்லிமலை ஒரியென் பவனுடையதா யிருந்த தென்பது பொருந்தும்.
கொல்லிமலையுங் கொல்லிக் கூற்றமுங் கொங்குநாட் டின் பாற் பட்டன. அதனுற் கொங்கு மண்டல சதக முடையார் கொங்குநாட்டைச் சூழ்ந்த பதினறு மலைகளுட் கொல்லிமலையை முதற்கண் வைத்தெண்ணினர். இன்னு மச் சதகமுடைய கார்மேகக் கவிஞ ரென்பவர்,

11
*சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொ லெளவைக், காதா வோடு கொடுத்தவன் கன்னலை யங்கு நின்று, மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மா டோர், மாதிரஞ் சூழரண் மேவுவதுங்கொங்கு மண்டலமே'
எனவும்,
* விாையார் தொடையணி மூவேந்த ராசை மிகுந்து நச்சக், தரைமீ கெலா வள முஞ்செறி கொல்லிக் கடவரை யாள், துரையாய்த் தமிழ்மொழிக் கல்லும் பகலுஞ் சுரங்து செம்பொன், வரையா தளித்தால் லோரிவள் ளல்கொங்கு மண்டலமே? எனவும் பாடிய கட்டளைக் கலித்துறைகளால்
அதியமான யுமோரியையுங் கொங்க ரென்றனர்.
இற்றைக் கீாாயிரம் யாண்டுகட்கு முன்னரேயே சோழ னட்டிற் பிரிவுபட்ட தொண்டைநாடு போலச் சேசனுட்டிற் பிரிவுபட்டது கொங்குநாடு, கொங்குநாடு பிரிவுபடினு மதன் பாற் பட்ட கொல்லிமலே சேரமான்களி ஞட்சிக் குரிய தாகவே யிருந்து வந்தது. கொங்கு கொங்கிளங் கோசா தாயிற்று."
சேரர் சோகம் என்னுங் தமது நாட்டின் பாதுகாப்புக் கின்றியமையாமையாற் கொல்லிமலையைப் பிறர் கைக் கொள்ளாமே நோக்கிவர்க் கடவ ராயினர். கொல்லிம%லயை யிழப்பிற் சேரகம் பகைவர் கைப்பட்டுத்தாமு மடிமையாத லொருகலை. அதனுற் கொல்லிமலைத் தலைவர்களைச் சோ மான்க ளடக்கிக் கம் மேவல்வழிப் படுத்துதல் வேண்டும்; அன்றேற் பொருது துரத்துதலோ கொல்லுதலோ செய்கல் வேண்டும் ; என்னுங் கொள்கை யுடையவரா யிருந்து ஈடந்து வங்கனர், சோக மெனற்பாலதனக் கேரளமென மாற்றினர் பார்ப்பனர்.

Page 12
2
இஞ்ஞான்றைக் கோயம்புத்தூர்க் கூற்றமுஞ் சேலக் கூற்றமுஞ் சேர்த்துக் கொங்குநா டெனப்படும். கொல்லி மலையுங் கொல்லிக் கூற்றமும் வடகொங்கு. பொன்னி யாற்றின் வடபாலைக் கொங்கு வடகொங் கெனப்பட்டது. கொல்லிக் கூற்றமே அகரானூற்றிற் கூறப்பட்ட மழநா டெனக் கோடல் வேண்டும். அது தனியாட்சி யுற்ற பொழுதே யப்பெயர்த் தாயது போலும்,
கொல்லி மழவருள்ளே தொன்றுதொட்டுத் தலைவரா யிருந்து வந்தவர் அதியமான்களே யாமெனத் தெரிய வரு கின்றனர். கொல்லிக் கூற்றத் துட்பட்ட குதிரைமலையும் அம்மலைமே லுள்ள தகடூரு மதியமான்க ளுடையவை.
மழவர் குதிரை யூர்தலில் வல்லுநர். அவருட் பெரும் பாலார் குதிரைப்படை மள்ளரே யாம். அதனுல் அவர் 'உருவக் குதிரை மழவ" ரெனச் சிறப்பிக்கப் பட்டனர் அகநானூற்றில். (க.) மழவரது போராண்மை மிகுதிக்கு அவரது குதிரை யேற்றப் பயிற்சி மிகுதியே பொருட்டா கல் வேண்டும். தம் மலையிற் குதிரைப் படைப்பெருக் குடைமை தோன்றத் தமது மலைக்கு அதியமான் குதிரை மலையெனப் பெயரிட்டு வழங்கினன் போலும், தகடென் பது மலரின் புறவிதழ்க்குப் பெயர்; இது “அரும்பற மலர் ங் த கருங்கால் வேங்கை, மாத்தகட் டொள்வி தாய துறு கல்? (212) எனப் புறத்தின் வந்த வாற்முற் பெறப்படும். *பெருந்தண் செண்பகஞ் செரீஇக் கருங் தகட், டுளைப்பூ மருதி னுெள்ளிண சட்டி? யென முருகாற்றுப் படையி னும் வந்தது. அகவிதழைப் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலை யுடைய வூரென்னும் பொருள்பட அதிய மான் ஹன்னூர்க்குத் தகடு ரெனப் பெயர் வைத்தான்;

13
இப்பெயரையு மாரியர் தம் வழக்கம்போல வடசொற் சிதை வென வலிந்து கொண்டு உண்மையான தமிழ்ச்சொற் பொருளைப் பாழாக்குவர். வடசொல் லோசையோ மழவர் செவிக்கும் நாவிற்குங் கடப்பாரை போலிருக்கும்; அவர் தங் தமிழ்ச்சொல்லாற் பெயரிடுக லிழுக்கென்று வடசொல் லாற் பெயரிட்டன சென்றல் கேட்பவ ரெல்லா மடவோ ரென நினைத்துக் கூறுவார் கூற்றேயாம். தமிழர்க்குப் பொருள் விளங்காத சொல்லாற் பெயரிடுபவர் எதற்காகப் பெயரிட வேண்டுமென்பதையே யறியாதவ ராவர்; தமிழ்ப் புலவர்களை வழிபடுதலே தொழிலாகக் கொண்ட அதிய மான் இனிய எளிய தமிழ்ச்சொல்லாற் பெயரிட விரும்பு வானே யல்லது வேறிாவலர் சொற்கேட்டுப் பெயரிட விரும்பா னென்பது சிறு மகாரு முணர்வர்.
கொங்குசா டிருபத்து நான்கனுள்ளுங் கீழ்கரைப் பூங் துறை நாடென்ப தொன்று. அதுவே யவற்றுட் பெரிய நாடு. அதற் குரிய முப்பத்திரண் டூர்களுள்ளே தக டப்பாடி யென்ப தொன்றுண்டு. அது தகடூரார் வந்து குடியேறிய பாடி போலும் ; தகடூரார் தகட ரெனப் புகழெய்தி யிருத்தல் வேண்டும். அதனைச் சார்ந்த மலைக்கோட்டை சூழ்ந்த குன்றத்தூர் பண்டை யதி யமான் றகடூரா யிருப்பினு மிருக்கலாம்; அக்கூற்றங் குன் றத்தூர்க் கூற்ற மெனப்படும். கீழ் கரைப் பூந்துறை நாட் டுத் தலையூர் குன்றத்தூர்க் கூற்றத்துக் குன்றக்தூராம். கொங்குகா டிருபத்து நான்குங் குன்றத்தூர்க் கூற்றம், தாராபுரக் கூற்றம், தணுக்கன் கோட்டைக் கூற்ற மென மூன்று கூற்றத்து ளடங்கும். குன்றத்தூர்க் கூற்றக்து நாடு பன்னிரண்டு; தாராபுரக் கூற்றத்து நாடு ஐந்து; தணுக் கன் கோட்டைக் கூற்றத்து ஈாடு ஏழு ஆக விருபத்து

Page 13
14
நான்கு மடங்கின. இம் முக்கூற்றத் துள்ளுங் குன்றக் தூர்க் கூற்றஞ் சேலத்தைச் சார்ந்தது; ஏனைய விரண்டுங் கோயம்புத்தூரைச் சார்ந்தன. கொல்லி மலை நாடுக் ளெல் லாங் குன்றத்தூர்க் கூற்றத்தைச் சார்ந்தனவாம்.
எனவே சேரமான்கள் வழங்கிய கொல்லிக் கூற்றமே கொங்கர் வழங்குங் குன்றத்தூர்க் கூற்ற மென்பது நன்கு விளங்கும். திருச்செங்கோடு மிக்கூற்றத்தைச் சார்ந்ததே யாம். அன்றைய தகடூர் பகைவரால் வெல்லுதற் கரிய மலைக் கோட்டையா ற் புகழ் பெற்றது. இன்றைய குன் றத்தூரு மத்தகையதே யாம்.
தோல்வி யுற்ற மன்ன ஹார்ப்பெயரை வெற்றி யுற்ற மன்னன் மாற்றி வேறு பெயரிடுதன் மரபு ; அம் முறை யானே தகடூர் குன்றத்தூ ரென்னும் பெயரின தாதல்
கூடும்.
இனித் தகடூர் அதியமான் றகடூரென வேறுபடுத்து வழங்குதலின் அக்காலத்துத் தகடூரெனப் பெயர்பெற்ற வூர் பல வுளவாதல் வேண்டும்.
கொல்லி மழவ ருள்ளே யதியமான் மரபினரே கட வுள் வழிபாடு, கல்வி, கொடை, வென்றி, ஒப்புரவு, தலைமை முதலிய ஈலம் பலவும் வாய்க்கப் பெற்றுப் புகழ்பட வாழ்
க்தவ ராவர்.
நல்லிசைப் புலவர் பலராற் பாடப் பெற்ற சிறப்புடைய ாதியமான்கள். அவரா லெடுப்பிக்கப் பெற்ற கடவுட் கோட்டம் பல வுள. திருவதிக விரட்டானம், சேலத்தைச்
சர்ந்த ராமக்கற் றிருமால் கோட்டம், போளுர்த் திருமலை

l5 யருகன் கோட்ட முதலாயவை அதியரா லெடுப்பிக்கப் பெற்று அவர் பெயரான் வழங்கப் பெறுபவை. திருவதி கைக் கோட்டமே ஆளுடைய வரசுகளினுடைய தமக்கை யார் திலகவதியார் திருத்தொண்டு செய்து வழிபடப் பெற் றது. அப்பரு மங்குத்தான் மருள்வழி நீங்கி யருள் வழிப் புக்கு நம்பன் முெழும்பாாகித் திருநெறித் தமிழ்பாடத் தொடங்கித் தம் வயிற்றுவலி நோயும் பிறவி நோயு மொருங்கு நீத்துத் தமிழக முய்விக்கத் தலைப்பட்டனர். இதனல் அதியர் தம்முடைய தமிழ் மொழியின்பாலும் தமிழ் முகல்வன்பாலும் வைக்கிருந்த பேரார்வம், தாம் அம் முகல்வன் றிருவடி யடைங் துய்ந்தபின்னரு மிடைவிடாது தமிழ் மொழியையுர் திருவருளையும் அப்பர் முதலிய சான் முேர் வாயிலாகப் பாதுகாத்து வருதல் கண்டு வியக்கத் தக்க காகும். திருவகித வீரட்டானம் திருமுனைப் பாடி நாடெனப்படு நடுநாட்டகத்த காதலின் அங் நடுநாட்டினையு மதியர் கைப்பற்றி யாட்சிபுரிந்து வந்தன ரென்ப துணரப் படும். நடுநாட்டுத் திருகாவலூர்- ஆளுடைய நப பியாரை வளர்தத நடுராட்டு மன்னன் நரசிங்க முனை யரையன் நரசிங்க முனையதியனே வென்ப தாராயத் தக்கது. தேவார முதலிக ளிருவர், திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட நாயனுர் முதலிய பெரியோரை யீன்று தமிழக முழுதி லுச் திருவரு ளொளியைப் பாப்பி நடுநாடென்னுங் தன் பெயர்க்குக் தான் றகுதி யுடைய தாதலை மெய்ப்பித்த திரு முனைப் பாடி நாட்டுக் கித்துணை யேற்ற மெய்து வித்தவர் அதியமான் மரபினரே யாதல் வேண்டும். இவர் திருமால் கோட்டம், சினன் கோட்ட முதலியவையு மெடுப்பித்த லான் மக்க ளெல்லாருங் தாங் தாம் விரும்பியவா றெங்ங்ன மேனுங் கடவுள் வழிபா டுடையராயிற் சாலு மென்னுங் தூய வெண்ண முடையரென்பது விளங்கும். எல்லாக்

Page 14
6
கடவுளு மாகி யிறைவ னுெருவனே அவரவ ரெளிதி னின்னக்கத் தக்க வாறு கோலங் கொண்டு தொண்டர் வழிபா டேற்று மகிழ்ந்தருளி ய வரவர்க் காவன புரியு மென்னும் வாய்மையினை யுணராகவ ரல்ல ரதியமான்கள் சித்தூரைச் சார்ந்த போளூர்க் திருமலைச் சினன் கோட்டத் தினை அதியருளதியமா னெடுமா னஞ்சியே கட்டின னென
ண்டைக் கல்வெட்டுப் பாட்டுக் கூறுகின்றது அப்பாட்டு * வஞ்சியர் குலபதி யெழினி யெனக் கூறுதலின் அதிய ாைச் சோமான் மரபைச் சார்ந்தவரெனக் கருதுங் குறிப் புப் பெறப்படும். இதனுற் பிற்றைஞான்றை யதியர் நாடாட்சித் தலைமையுரிமை பற்றி உயர்வு கருதித் தம்மைச் சோமான் மரபின ரென வழங்கிக் கொண்டா செனக் கரு தல் வேண்டும். சேர சோழ பாண்டிய ராகிய தமிழர் பிற்றைஞான்று ஆரியர் வலைப்பட் டுயர்வு கருதிப் பூனூ லிட்டுக்கொண்டு தம்மை யாரியர்பாற் பட்டவரெனப் புகழ் வித்துக் கொண்டனர். மையூர் (மைசூர்) நாட்டு வேளிர் மரபினராகிய உடையார் (அரசர்) தங்களை ஆரிய ரெனவும், எரிக்கடவுளின் வழியின ரெனவும் வ்ழங்கிக் கொள்ளுதலை யின்றுங் காணலாம். அன்றும் வேள்பாரி முதலிய வேளிர் களைக் கபிலர் வடபான் முனிவன் வேள்விக் குழியிற் ருேன் றியன் மரபினரெனப் புனைந்து பாடி யுள்ளார் ; இப் புகழ்ச்சி தெலுங்கரு ளொருசாராரு மின்று தமக்குச் சொல் லிக் கொள்வர். இவை யெல்லாம் புகழ்ச்சியின் மயங்கு மன்னரையுங் தலைவர்களையுஞ் செல்வர்களையுங் கையகப் படுத்தற் பொருட்டு ஆரியர் கண்ட ஆராய்ச்சி வாய்பாடுகள். அவற்றை யுண்மை யெனத் துணிந்து மற்றை யினத்தி னின்றுங் தம்மை யுயர்வாக கினைத்துச் செருக்கிய தலைவ ரெல்லாங் குடி பொன்றி மண்புக்கு மாய்ந்தனர். இது பொய்ப்புகழ்ச்சிக் காகத் தங் கீழ் வாழு மெளியவர் தாம்

7
பாடுபட் டுழைத்துப் பயிர்செய்யு கிலங்களை ஏமாற்றி, வேறு பிழைப்பின்றி நிழல் வதிந்து கங்ரலமே நோக்குஞ் சூழ்ச்சி யாளர்க்கு நன்கொடை நல்கிப் பிறர்க் கிடையூறு செய் யாது தமக்குத்தா முரியவரா யடிமை யின்றி வாழு மவ் வெளியவர்களையு மடிமை யாக்கிக் கெடுப்பது பற்றிச் சிறி தும் கினைத்துப் பார்க்க மாட்டாத வன்கண்மையின் விளை வாகும். வானம் பொழிய மண்ணிலம் விளைய உழவ ருழுது காப்ப அவ் விளைவு கோடற் குரியவரவரே யாக அவ் விளை வுக் கியைபில்லாத முரடர் இயைபில்லாத மடியாளர்க்கு நன்கொடை யளிப்பதும் நன்கொடை வாங்குவது மெத் துணைக் கொடுஞ்செயல். மரத்தை வெட்டாது மரத்திற் பழம் பறிப்பது போல அவ் விருசாராரு மவ் வுழவர்பாற் போயிரந்து அவ் வுழுபயனை அவ சருளொடு கொடுப்ப அன்பொடு வாங்கி யுண்ணுதலே முறையாகும். அம்முறை கெடுத்துப் பழத்தைப் பிற ருண்ணுதல் கூடாது; நா மிரு வேமுமே யுண்ணுதல் வேண்டு மெனச் குழ்க் கொருவன் மாத்தையே பறிக்கக்கொடுப்ப வொருவன் வாங்கிக் கொண்டு போவதாயின் மர மென்னகும், கடவுள் படைக்க உழவர் காத்துப் பேணிய செய்களை முரடரு மவரைப் புகழ்வோரு மாகிய விருவர் கூடிப் பேசித் தம்மு ளொருவர் கொடுப்ப வொருவர் வாங்கிய தாகத் தாமே யெழுதி வைத் துக் கொண்டு எழுத்துச் சான்று காட்டி வழக்காடுவது எவ் வளவு அடாத செயல். உலக முழுதுமே கடவுள் கோயில்; உலகத்து வாழு மக்க ளெல்லாங் கடவு ளடியர்; அம்மக்கள் செய்யுங் கொழி லெல்லாங் கடவுள் வழிபாடே அங்ஙன மாகக் கற்களை யெடுத்து வைத்து ஈட்டுக்கொண் டிதுதான் கடவுள்; இதற்குக் கோயில் கட்டு; உழவரையும் உழுகிலங் களையுங் கடவுளுக்குக் கொடுவென மயக்கித் தாமுண் டுெத்
2

Page 15
8
கைம்பொறியின்ப மாரத் துய்த்துப் பிறருடைய முன்னேற் றத்துக்கு அடைகல்லா யிருப்பவர் இல்லாத நாடுதான் கட வுள் குடியிருக்கும் நாடெனப்படும். அங் நாட்டு மக்களே நோய், பகை, கவலை, தீயவெண்ணம், அறியாமை என்பன வின்றி யிடையி டில்லா வின்ப நுகர்ச்சி யுடையவராவர்.
பிற்றை ஞான்றை யதியர் தம்மைச் சோர்பாற் பட்ட மரபின ரெனச் சொல்லிக் கொள்வதற்கு வாயிலா யிருந்த வர் அவர் புகழ்ச்சியின் மகிழ்ந்து தமக்கு வேண்டுவன கல் குவ ரெனக் கருகிய தங்கய வாளரே யாம். வான வருங் கற் புகழ்ச்சிக்கு மயங்குவ ராயின் மண்ணக மாக்களின் மயங்
கார் யாவர்?
அதியர்களாற் கடவு ட் கோட்டம் பல்கியவாறு போலவே ஏழை யெளிய குடிகளுங் தழைத்தோங்கிப் பல்கின.
தமிழ் மொழிக்குங் தமிழ்ப் புலவர்க்குங் களைக ஞகி யிருந்தன மதியமான்கள்.
அவருள்ளே முடியுடைமன்னர் மூவர்பாலும் படைத் தலைவரும் உழையருமாயிருந்து சிறப்பெய்தி அப்பெரு மன் னர்களின் செங்கோற்கொற்றத்தை மாட்சியுற நடாஅய்த் துறைபோயினரும் பலருளர்.
அவர் கணிக்கொற்றமுங் தாங்கினர்.
தமிழ்ப்புலவர்க்குப் போலவே ஆரியப் பார்ப்பனர்க்கும்
வேள்விடல செய்வித்து வேண்டுமளவு கையுறையும் ஈன்கொடையு முற்றாட்டு மளித்தவ சதியமான்கள்.

19
அவர் கோயில் பலவற்றுக்கு நல்கிய உழுவரையு மளப் பில
நெடுமா னஞ்சி முன்னுேர்தாம் யாண்டிருக்கோ கரு ம்பு கொணர்ந்து தமிழகத்துக்கண் முதலி னட்டுப் பயிர் செய்து புது முறையான் வேளாண்மைத் தொழில் வளர்ச் சிக் கடிகோலியவர்.
பழைய முறையையே செய்தல் வேண்டும்; புதுமுறை கண்டு செய்தல் கூடா தென்னு மறியாமை அகியமான் களுக் கிருக்கதில்லை, V−
புதுப்புது முறையில் வேண்டுவனவற்றைக் கண்டு மக்க ளிடையூ றில்லா வின் பப் பேற்றை நோக்கி மேன் மேல் வளர்ந்து கொண்டு போகல்வேண்டு மென்பதைத் தமிழருக் கெடுத்தக் காட்டியவ ரதியமான்க ளாவர்.
நெடுமா னஞ்சியின் முன்னேர் கடவுள் வழிபாட்டிற் றலை கின் முெழுகியவரென்ப துணரப் படுகின்றது.
அவர்க்கு வேண்டுவன ால்குதற் பொருட்டு gia வர் வந்திருந்த வண்பொழி லொன்று தகடூர்ப்புறத் திருச்
திது.
" நீாக விருக்கை யாழி குட்டிய
தொன்னிலை மரபினின் முன்னுே’ (புறம், 99)
ரென அதியமா னஞ்சியின் முன்னேர் சானிலத்துக் கட் டளையாழி யுருட்டியதாகக் கூறியது சோமான்களின் படைத்தலைவராகிய குறுகில மன்னராகிச் சோமான்களின் செங்கோற் கட்டளையை யினிது ஈடாத்தியமை பற்றியே
u TLò.

Page 16
20
'வறலுறு செய்தியின் வாடுபு வருந்தி’ (அகம், 301) யென்னு மகனா னுாற்றுப் பாடல் பாடியவர் அதியன் விண்ணத்தணு ரெனக் காணப் படுதலால் அதியருள்ளே டூல்
லிசைப் புலவரு மிருந்தன ரென்பது பெறப்படும்,
இத்துணைச் சிறந்த அறிவு மாண்மையு முதலாயின வுடைய அதிய ராட்சியின் கீழ்த் தகடூர் நன்கு செழிப்பும் பாதுகாவலுஞ் சிறந்திருந்த தென்பது,
"வள்ளிகழ்த் தாமரை நெய்தலொ டரிங் து மெல்லியன் மகளி சொல்குவன ரியலிக் கிளிகடி மேவலர் புறவுதொறு நூவலப் பல்பய னிலைஇய கடறுடை வைப்பின் வெல்போ சாடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும் பிற் றகடூர். ، . . . . . . "
(பதிற்றுப்பத்து. 78.) எனவரு மெட்டாம் பத்துச் செய்யு ளடிகளான் விளங்கும்.
எழினி மாண்பு.
இன்ன சீருஞ் சிறப்பு மமைந்து விளங்கிய அதியமான் மரபுக்கு விளக்காயவன் அதியமா னெடுமா னஞ்சி யென்
பான்.
இவன் அதியமா னெடுமா னஞ்சி யெனவும், நெடுமா னஞ்சி யெனவும், அஞ்சி யெனவும், எழினி யெனவும், அதிய
னெனவும் வழங்கப்படுவன்.

2.
இவனைக்குறித்துப் பெருஞ்சித்திான சென்னும் புலவர் * ஊரா கேந்திய குதிரைக் கூர்வேற், கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினி’ (புறம் 158) எனக் கூறுகின்றமையி னிவற் கெழினி யெனப் பெயர்வழக் குண்மை துணியப்
படும்.
ஈண்டுக் குதிசை யென்றது பரிமா வன்று; எழினியின் குதிரைமலை யென்று வெளிப்படுத்துதற் பொருட்டு ஊரா தேந்திய குதிாை யெனக் குதிரை விதந் துரைக்கப்பட்டது. இப் பெருஞ்சித்திரனர் கூற்முற் கூவிளங் கண்ணியும், * வட்கர் போகிய வளரிளம் போங்தை யுச்சிக் கொண்ட வூசிவெண் டோடு வெட்சி மாமலர் வேங்கையொடு விாைஇச் சுரியிரும் பித்தை பொலியச் சூடி ??
(புறம் 100.) என வரு மெளவையார் கூற்ருற் பனங் குருத் துத் தோடு, வெட்சி மலர், வேங்கை மலரென் றிம்மூன்றும் விராஅய்த் தொடுத்த கண்ணியும் நெடுமா னஞ்சிக் குரியன வென்பது பெறப்படும்.
அதியமான் றன் ணுற்றலைப் பிறர்க்குச் சிறிதுங் காட்டிக் கொள்ள விரும்பாது மறைக்கு மடக்க முடைமையிற் சிறந்தவ னென்பதை ஒளவையார் பன்முறை பாராட்டிக் கூறுகின்முர்; அவ்வாறு வேறெவரையுமெளவையார் பாடிய தில்லை. அதுபோலவே அவன் வறிய மக்களைத் தழீஇப் பேணு முறையுஞ் சிறந்திருந்தது.
" . . . . . . . . . . . . . . . . . . . . . செருவேட்
டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்

Page 17
盛2
சென்றமர் கடந்துகின் னற்ற முேற்றிய வன்றும் பாடுநர்க் கரியை யின்றும் பாணன் பாடினன் மற்கொன் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறிகின் னரணடு திகிரியேந்திய தோளே" (புறம் 99.)
* உடைய னயி னுண்ணவும் வல்லன்
கடவர் மீது மிாப்போர்க் யுே
மடவர் மகிழ்துணை நெடுமா னஞ்சி
யில்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்ற திருக்கவும் வல்லன் மற்றதன்
கான்றுபடு கனையெரி போலத்
தோன்றவும் வல்லன்முன் முேன்றுங் காலே. (புறம் 815) எனவும்,
* இல்லாயிற் பதங்கொடுத்
துண்டாயி னுடனுண்ணு மில்லோ ரொக்கற் றலைவ VM னண்ணலெங் கோமான். 8 & s
(புறம் 95.) எனவும் வருவனவற்ருனே மேற்கூறிய விரு பெரும் பண்புக் குறையு ளாவா னெடுமா னஞ்சி யென்பது
புலப்படுதல் காண்க.
(கடவர் மீதும் =கொதிக்கக் கடவோர்க்குக் கொடுக்கு மளவின் மேலும், மடவர் - பாணர். குடிப் பிறப்பிற் கல்லாமே வரு மிசைப் பயிற்சியல்லது இசை பயிலுமா முசிரியர்பாற் கல்லாமையிற் பாணர் மடவ ரெனப்பட்டனர். ஞெலிகோல்-தீக்கடைகோல். அக்கோலைக் கடையும் பொழுதன்றித் தீயுண்மை தெரியாத வாறுபோலப் போர்

纷3
முதலியன செய்யுங் காலத்தன்றி அகியமான தாற்றல்
காணப்படா தென்றவாறு.)
திருவாதவூரடிகள் இறைவன " அருமையி லெளிய வழகே போற்றி ?? (போற்றித் திருவகவல், அடி 126) என விளித்து வணங்கிக் காதலின் மெய்யயர்கின் முர் அன்ப ருள்ளங்களை யெல்லா மீளாமே கவரவல்ல இறைவ னழகாவது அருமையி லெளிமை யென்பதாம் இறைவ னழகுடையவனல்லன்; அழகே தானும்
இதனுல் அடிகள் உயிரி னழகுக்கு இயல் வரைக் துணர்த்தினரு மாயினர்.
செல்வ மிக்குள்ளவர் பிறராற் காண்டற் கரியர்; அவர் காணின் யாதேனுங் தம்மிடங் கேட்கக் கூடுமென்றும், தம்முயர்வுக் கிழுக்காகு மென்றும், அவர் தம்மைக் காண் டலைச் செல்வராயினர் விரும்பா ராகலின் அவராற் பெரிதுங் தாங் காண்டற் கரியாாவர்; அச்செல்வர் கடும்பற் றுள்ளம், அன்பு மருளு மின்மை முதலாய இழிந்த பண்புகட்குப் பற்றுக் கோடாவர். அவரைப் பிறர் விழைதலும் புகழ் தலும் அணுகுதலுஞ் செய்யார். அங்கினங் காண்டற் கருமை யமையக் கூடுஞ் செல்வர்பாற் காண்டற் கெளிமை வாய்க்குமாயின் அஃதவர்க்கு உலகத்தா ருள்ளங்களை யெல்லாங் கவரு மழகெனப்படும். அவ் வழகுடையாரைக் காண்டொறுங் கானுவார்க்குக் காதலு மகிழ்ச்சியுந் தலைத் தலைச் சுரக்கும். அவ் வழகரைக் காண்டலு மக்காண் போர் அவரைச் சார்தல் வேட்கையும் பிரியாமையும் பிரியி குற்முமையு முறுப. அரியர் எளிய ராத லாவது அவர் தம் பெருமை நோக்காது எளியவ ரிருக்கு மிடத்திற்குத்

Page 18
24
தாமே வலிந்து சென்று காட்சியளித்து அவர்க்கு வேண்டு வன வுதவுதலாம். அருமையி லெளிமை யெனப்படு மழகுக் கெல்லை யாயின னிறைவனே.
அவ னருளாலே யவ்வழகு நெடுமா னஞ்சி, வேள்பாரி முதலிய வள்ளற் பெருஞ் செல்வர்பா லிருந்தமையின் அவர் நல்லிசைப் புலவர் முதலிய மக்க ளெல்லாருடைய உள்ளங்களையுங் கவர்ந்தனர்.
அங்ஙனங் கவர்வோரொடு கவரப் படுவாரிடைப் பாயு மின்ப வெள்ளத்திலே அவ்விருவரும் பாடியு மாடியும் பாடுவித்து மாடுவித்துர் திளைத் தயர்வர்.
அங்கிலையிலே அவர்தா மிருவான்றி யொருவராகு மொப்புமை யுணர்வின லாகு மமைதி கூடும்.
அருமையி லெளிமை யென்னு மழகுகண்டு காமுறுங் காதலே வாய்மைக் காத லெனப்படும்,
நல்லிசைப் புலவர் பாடலெல்லாங் குறிப்பாக வேனும் வெளிப்படையாக வேனு மஞ்ஞான்றை வள்ளல்களி னுரு யிர்ப் பேரழகையே நுதலிப் புனைந்து பாடப்பட்டனவே. அவ்வழகே பாட்டுக்களுக்கு மழகாயிற்று.
ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனர், பொன்முடி யார் முதலிய புலவர் பலர் நெடுமா னஞ்சியைப் புகழ்ந்து பாடி யிருக்கின்றனர். அவருள் ஒளவையாரே மிகவும் வியந்து பல பாட்டுகள் பாடி யிருக்கின்றனர்.
இவன் திருக்கோவலூரை யழித்த பொழுது பரணர் வியந்து தம் பாடுமாற்றல் புலப்பட அதியமான் பொருமாற்

25
நலைப் பாடின சென்ற ஒளவையார் கூற்றற் பெறப்படும் பரணர் பாட்டுக் கிடைக்கவில்லை, பரணர் திருக்கோவலூர்க்
காரியின் உயிர் நண்பர். `ܟ
* குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருகிரை பிடிபடு பூசலி னெய்தா தொழியக் கடுஞ்சின வேந்த னே வலி னெய்தி
நெடுஞ்சே ணுட்டிற் றலைக்கார்ப் பட்ட கல்லா வெழினி பல்லெறிங் கழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயின்
மத்தி 5ாட்டிய கல்கெழு பனித்துறை?
(அகம். 211.) எனவரு மாமூலனர் கூற்றுன் மத்தி யென்ப வன் எழினி யென்பவனுடைய பல்லை யடித்துதிர்த்து அப் பல்லைத் தன் வாயிற் கதவிற் பதித்து வைத்த வரலாற்றிற் பெறப்படுங் கல்லா வெழினி யென்பவ னெடுமா னஞ்சி யெழினியின் வேருவன். அவன் மகனுங் கல்லா வெழினி
யல்லன்.
இனி, * மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாடவச் சிலரே பலரே கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசுப்பூட் பாண்டியன் வினை வ லதிகன் களிருெடு பட்ட ஞான்றை யொளிறுவாட் கொங்க சார்ப்பினும் பெரிதே?.
(குறுங்தொகை. 898) என்னுஞ் செய்யுளிற் பசும்பூட் பாண்டியன் வினவ லாளனும் வாகை யென்னு மூரின்
போர்க்களத்துக் கொங்கராற் பொருது கொல்லப்பட்டுக்

Page 19
26
களிறெடு வீழ்ந்தவனு மாகிய அதிகனும் அஞ்சி யெழினி யாகிய அதிகனின் வேருவன்.
இனி, 'கறையடி யானை நன்னன் பாழி யூட்டரு மரபி னஞ்சு வரு பேஎக் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி ஞமிலி புள்ளிற் கேம மாகிய பெரும்பெயர் வெள்ளத் தானே யதிகற் கொன்றுவந்து.??
(அகம், 142.) என்பதன் கண் 15 ன் ன லு  ைடய பாழி யென்னு மூர்ப் போர்க்களத்தின் ஞமிலி யென்பவன் அதி கனைக் கென் மு னெனப் பரணராற் கூறப்பட்ட அதிக னென்பவனும் பரணராற் புகழ்ந்து பாராட்டப் பெற்ற
நெடுமா னஞ்சி யெழினி யென்னுமிவ் வதிகனின் வேருவன்.
இங்குக் கூறிய அதிக ரிருவரு மதியமா னெடுமா னஞ் சியினுடைய அதிய மரபின மாவர் போலும் இவ்வதிகர் மூவரு மொருகாலத்து வாழ்ந்தவரே யாம்.
இனி, அதியமான் றகடூர் பொருது வீழ்ந்த வெழினி யென வொருவனை அரசில் கிழா ரென்னும் புலவர் பாடிய பாட்டொன்று புறநானூற்றிற் (புறம். 280) காணப்படு கின்றது, அப்பாட்டை யடுத்துப் பின்வரு மிரு பாட்டு மதியமா னெடுமா னஞ்சியை ஒளவையார் பாடியன வாகக் குறிக்கப்பட் டுள்ளன. அம் மூன்று பாட்டுங் கையறு நிலை யென்னு மொருபொருண் மேலன. அ க் குறிப்பு  ைர யாளர்க்கு அதியமான றகடூர் பொருது வீழ்ந்த வெழினியும் அதியமா னெடுமா னஞ்சி யெழினியு மொருவனல்ல ரென் பது கருத்தாதல் விளங்கும். அக்கருத் தின்றெனின் அவ சவ்விரு பாட்டின் கீழும் அவனை ஒளவையார் பாடிய

27
தெனச் சுட்டிக் கூறுவர்மன், முற்பாட்டுப் பாடினேர் பாடப்பட்டோரு ளொருவரோ இருவருமோ அடுத்து வரும் பாட்டுக்களுக்கு மாயின் அப்பாட்டுத்தொறு மவனை யின் ஞர் பாடிய தென்றேனும் இன்னுனை யவர் பாடிய தென்றே னும் அவனை அவர் பாடிய தென்றேனு மேற்பச் சுட்டிக் கூறிப் போதலே அக் குறிப்பாளர்க் கியாண்டும் வழக்கம்,
தகடூர் அதியமா னெடுமா னஞ்சியி னுடையதே யென்பதும் அவனே சேரமான் றகடு செறிந்த பெருஞ்சேர லிரும்பொறையொடு பொருது வீழ்ந்தவ னென்பதும் பலரு மறிப, அஞ்சிக்கு எழினி யென்னும் பெயருண்மை முன்னர்த் தெளிக்கப்பட்டது.
அதியமா னெடுமா னஞ்சி யெழினியும் அகியமான் றகடூர் பொருது வீழ்ந்த வெழினியும் வேறு வேருயி னிரு மன்னரு மொரு தகடூரை யாண்டுகொண் டிருந்தன ரென் பது செல்லாது. இருவர்க்கு மிரு தகடூர் கொள்வ தாயின் தகடூ ரென்பது வேறுபாடு தோன்ற விதங்தோதப் பட் டிருக்குமன்.
'பால்கொண்டு மடுப்பவு முண்ணு ணுகலிற் செழுஅ தோச்சிய சிறுகோ லஞ்சியொ டுயவொடு வருந்து மன்னே யினியே புகர்கிறங் கொண்ட களிறட் டானுன் முன்னுள் வீழ்ந்த வுரவோர் மகனே யுன்னில னென்னும் புண்ணுென் றம்பு மானுளை யன்ன குடுமித் தோன்மிசைக் கிடந்த புல்லண லோனே ?
(புறம், 310) எனப் பொன்முடியார் பாட்டுள் அஞ்சி கூறப்

Page 20
28
படுலிற் டொன் முடியா சாற் பாடப்பெற்ற அதியமா னெடுமர் னஞ்சி யெழினியும் டொன் முடியாரோ டுடனிருந்த அரிசில் கிழாராற் பாடப் பெற்ற அதியமான் றகடூர் பொருது வீழ்ந்த வெழினியு மொருகாலத் திருர்தவ ரென் றன்றி வேறு வேறு காலத் திருந்தவ ரெனக் கோடற் கிடனின்று,
அன்றியுங் தகடூர், ஈெடுமா னஞ்சி யெழினியி னுடை யதா யிருப்ப அவ்வூர் அவனுக்கு வேற்றார் போல வைத்து அவனைத் தகடூர் பொருது வீழ்ந்த வெழினி யென்றலு
மமைவ தன்று.
தகடூர்ப் பொருது எனப் பகா வொற் றிரட்டாமை யானே தகடூரின்கட் பொருது வீழ்ந்த வெழினி யென வேழன் வேற்றுமைப் பொருள்படாது தகடூரைப் பொருது வீழ்ந்த வெழினியென விரண்டன் வேற்றுமைப் பொருளே படுவதாம். நெடுமா னஞ்சி தானே வேமுெரு தகடூரைப் பொருகமை பற்றி அவ்வாறு வழங்கப் பட்டா னெனக் கோடுமேல் அவனூாருங் தகடு ராதலால் அவனுற் பொரப் பட்ட தகடூர் விதர் தோதப்படு மாகலானும் தன்னூர்க் கண்ணே சேரமானுற் பொருது வீழ்ந்தானத் தகடூர் பொருது வீழ்ந்தா னெனக் கூறக் கூடாமையானும் அத் தகடூர் வேறு தகடூ ரன்று; நெடுமா னஞ்சியின் றகடுரே யாதல் வேண்டும்.
இனி, அதியமான் றகடூர் பொருது வீழ்ந்த வெழினி யென்பவன் அதியமா னெடுமா னஞ்சி யெழினியின் வேறு யதியர் மரபிற் முேன்றின ைெருவ னென்னுமோ வெனின் அதுவு மமைவ தன்று. என்ன? ஒருகுடிப் பிறந்த விரு வர் தம்மு ளொருவரொருவர்மேற் போர் தொடுத்தல் குறு

29
மன்னரு எரியல்வ தன்று. ஒருகுடிப் பிறந்தார் தம்முட் பொருதல் அரிதி னியலு மெனக் கொளினும் அதியமான் களுளங்கின மியன்ற குறிப்புப் புலவர் பாடல்களுட் பெறப் பட்டிலது; எழினி யிருவருங் கொடையாளிகளாய்ப் புலவர்ப் பேணும் பெருந்தகைமை பூண்டவ ராதலின் அன்ன ரொரு குடிப் பிறப் பாள ராயி னவ்விருவரையுங் கொன்னே திம்முட் போர் உஞற்ற விடாது புலவர் தகைய வல்லராவர்; புலவர் வேண்டுகோளை மறுக்க வவ ரிருவரும் மஞ்சு மியல்பினர்; ஒரு குடிப் பிறந்த சோழ ரிருவரையும தம்முட் போர் பொாா த மையச் செய்தன ரல்லரோ
சோவூர் கிழார்.
அன்றியு மதியமான் றகடூர் பொருது வீழ்ந்த வெழினிக்கு அரிசில் கிழார் செங்கோ லுரிமை கூறுதலானே
அவ னெடுமுடி மன்னர்பாற்பட்டவன்போலும்.
இவ்வாற்றுனே யெழினி யிருவரு மொரு குடிப் பிறப்பாள ரல்ல ரென்பது தேற்றம்
அதியமான் றகடூர் பொருது வீழ்ந்த வெழினி யென் புழி அதியமா னென்பது எழினி குடிப் பெய என்று; தகடூரை விளக்கி நின்ற விதப்புக் கிளவியெனக் கொண்டு அதியமானது தகடூரைப் பொருது வீழ்ந்த வெழினி
யெனப் பொருள்கோடலே வாய்மையாகும்.
இங்ஙன மரிதிற் சில பெயர் குடிப்பெயர் போல நின்று மயக்கலு முண்டென்பது 'சேரமான் பாமுளு செறிந்த நெய்தலங் கான லிளஞ்சேட் சென்னி யென்னும் பெயர்
வழக்கா னினி துணா லாகும். இதன் கட் சோழன்
பெயர்க்குச் சோமா னென்பது குடிப்பெய ரென்று

Page 21
30
கொள்ளல் கூடாமையிற் சேரமா னென்பது குடிப்பெயர் போல கின்று சேரமானது பாமுளுரை யெனப் பொருள் பட்ட வாறு காணப்படும்.
தகடூர் பொருது வீழ்ந்த வெழினி தகடு ரெறிந்து வீழ்ந்த வெழினி யெனவும் வழங்கப்படுவன்.
எனவே யவ்வெழினி சோமா னெடு கிகழ்ந்த தகடூர்ப் போரில் அவனுக்குத் துணை நின்று பொருதோ? தான் றனியே படையெடுத்து வந்து தகடூரைத் தாக்கிப் பொருதோ? அதியமா னெடுமானஞ்சியாற் கொல்லப்பட்ட வேருே ரெழினி யாதல் பெற்மும்,
நெடுமா னஞ்சி, பகைவ ரணுகுதற் கரிய மலைக் கோட்டையின் வலிமையானும், தன் படை மிகுதியானும், அஞ்சா வாண்மையானும், நுண்ணுணர்வானும், கடவுள் வழிபாட்டினனும், பொதுமக்க ளன்பினனும் தான் தன் முன்னேர் போலச் சோமானுக்குப் படைத்தலைவனுகுஞ் சிறப்பினை வெறுத்துத் தனித்தலைவ னனன். யானை, தேர், குதிரை, காலா ளென்னும் நால்வகைப் படைகளையும் நன்கு
பெருக்கிக் கொண்டான்.
முடி மன்ன ரென்பதுங், குறு மன்ன ரென்பதுக், தலைவ ரென்பது மவரவர்கள் அவ்வப்பொழுது தத்தமக்கு முடிந்தவாறு காந்தாமே யமைத்துக் கொள்வ த ல்லது ஒரு நிகரான மக்கட் பிறப்பில் வரம்புபட்ட வேற்றுமை யில்லை யென்பதும், இவ் வுண்மை யறியாத மடவோரே யாரேனு மேமாற்றுகின்றவணைத் தலைவனெனக் கொண்டு அஞ்சித் தம்மைத் தாமே யிழித்தும் பிறனை யுயர்த்தும் வைத்

31
தொழுகி முடிவில் மண்ணுகி )6( וu ாழி ங் த தல்லது மக்கட் பிறப்பி னுேக்கத்தைப் பெற்றில ரென்பதும் நெடுமா னஞ்சியி னெண்ணம்.
பிறர்க் கேவல் செய்தலும், பிறரை யேவுதலு மென்னு மிழிவுங், கொடுமையு மின்றி வாழு மொரு தனித் தலைவர்க ளாகிய புலவர்களோடு பயின்றுவரு மவனுக் கவ்வுயர்ந்த வெண்ணங் தானே வருத லியல்பாகும்.
அன்றியு மக்கட்குத் தலைவ பாகக் கடவுளாற் படைக் கப்பட்டோம்; அதனல் மக்களெல்லாங் தம்மைப் பணிந்து தம் மேவலை மருது செய்யவேண்டும்; செய்யாதவர்களைக் கொல்லுவதுங் துன்புறுத்துவதுங் க்டவுளின் கட்டளைக்கு மாமுன கன்று; என மன்னுயிர்த் தொகுதிக்கு வேருகக் கடவு ளொருவ னுண்டென்னு மடமையானே தம்மைத் தா முணராது வியந்து; செருக்குக் கொண்டிருக்கு மன்னர் முதலிய தலைவர்களை யடிமை யாக்கி யுணர்வு கொளுத்து தலே கடவுளுக்குச் செய்யும் பெருந்தொண்டென அதிய மா னெடுமா னஞ்சி தெளிந்தான்.
தன்னை யேனே மக்களொடு மொப்பாக வெண்ணி மக்களுள்ளே தானு மொருவ னெனவும், உயிரெல்லாவற் றின் முெகுதியி னுதவியானேயே தனியுயிர் வாழ்ந்து வரு கின்ற தெனவும், அதன லெல்லா வுயிர்களுங் தம்மு ளொன் றற் கொன்று அடிமையெனவும், ஒருயிருந் தனித்தனி நிலைக் கண் முதன்மை யிலவா மெனவும், அம்முதன்மையை விழையு முயிர் அழிந்து விடுதலே வாய்மை யெனவுங், கடவுளின் மக்களுட் கடவுட்கு வேற்றுமை யுண்டாகா தெனவும், வேற்றுமை கொள்வோ ரெல்லாங் கட்வுட்குப்

Page 22
32
பகைவ ரெனவும், அசனுலவர் கடவுள் படைத்த ஞாலத்து வாழ்தற் குரிமையில ரெனவும், அவரை யழிப்பவர் கடவுட் குப் பகையாகா ரெனவும், இன்னவா றெண்ணி நட்புக் கொள்ளாத் தலைவரை யெல்லா மழிக்கத் தொடங்கின னெடுமா னஞ்சி.
அவர், தம்மை வேற்று நாட்டுப் படிற்ருளர் வந்து புகழினும் நாய்கள் போல அவ்வப் புகழ்ச்சிகட்கு மகிழ்ந்து உடனே தம்மையுங் தங்நாட்டாரையும் விற்று விடுதற்குப் பின்னில்லா ராகலின் அவர்களாற் றன் னருமையான தமிழகம் காலப் போக்கிற் றாய்மை கெட்டுத் துன்புறு மென்பதனை யஞ்ஞான்றே அறிந்து தமிழரை யுய்விக்கத் தலைப்பட்டவன் அதியமான்.
அவன் தான் முடிமன்ன னகற் குரியவன யிருந்து மவ்வாறு கொள்ள விரும்பாது, புலவர்கட்கும் பொதுமக் கட்கும் நண்ப னதலே முடி மன்ன னதற்கு மேற்பட்ட நிலையென விரும்பினன்.
அதியமான் சோமானுக்குத் திறைசெலுத்த மறுத்தது மன்றிச் செவ்வி வாய்த்த பொழுது சேரமான்மேற் படை யெடுக்கவு மெண்ணி யிருந்தான்.
இங்கிலையில் ஒரி யென்பவன் கொல்லிமலையைக் கைப் பற்றிச் சோமானுக்குப் பணியாது தனித் தலைவனனன்; ஆகவே சேரமான் சோகப் பாதுகாப் பாகிய தன் கொல்லி மலையையுங் கொல்லிக்கூற்றத்தையுமிழந்தான். தனக் கிரு தெல்வர் நேர்ந்து விட்டதனல் ஒரியையும் அதியமானையுஞ் சேரமான் படையெடுத்துச் சென்று பொருது அடக்க முடியா நிலை தலைப்பட்டது. ஒரு முறையிலிருவரொடும் பொரு மாற்ற லுடைய னல்லன் சோமான். அவனுஞ்

செவ்வியை யெதிர்பார்த்துப் படையும் பொருளும் பெருக் கிக்கொண்டு வந்தான்.
ஒரி வல்வி லோரி யெனவும் வழங்கப்படுவன். இவனை ஆகனேரி யெனவுங் கூறுப. தலையெழு வள்ளலுள்ளு மொருவன் ; பெரும்போர் மீளி. ஒரேவிலே பலவற்றையு 'மம்பு தைத்துருவச் செய்ய வல்ல விற்கு வல்வி லென்பது பெயர். ஒரி வல்வி லுடையவ னுதலின் வல்வி லோரி யாயினுன் இவன் றங்தை ஆத னென்பவ னுதல் வேண்டும். வல்வி லோரிக்குச் சிறந்த குதிரை யொன்றன் பெயரும் ஒரியென்பதே *ஓரிக் குதிரை யோரி* யென்றது சிறுபா னுற்றுப்படை, இவன் வேட்டுவன் போலும்,
திருக்கோவ லூரைத் தலையூராக வுடைய மலையமா னடென்பதனை யாண்டுவந்த காரி யென்பவனைச் சேரமான் தான் அதியமானத் தாக்க வேண்டி யிருத்தலால் அதற் கிடையீடாகிய ஒரியென்பவனை யடக்கித் தனக்குத் துணை
செய்யுமாறு காரியைக் கேட்டுக்கொண்டான்"
காரி மலையமான் றிருமுடிக் காரி யெனவும் வழங்கப் படுவன். அவ னவ்வப்போழ்து மூவேந்தர்க்குங் கூலிக்குப் படைத் துணை செய்பவன். இவனுக்குச் சிறந்ததொரு குதிரையின் பெயருங் காரியென்பதே. இவனும் பெரும் போர் மீளி வரை பாது சுரக்கும் வள்ளல்; புலவர் தோழன்; புலவராற் புகழ்ந்து பாராட்டிப் பல பாடல்கள் பாடப் பெற்றவன்; அவ்வாற்ருன் அதியமான், ஒரியென்பவரோடு நிகராவான். இவனுடைய முள்ளுரும் முள்ளூர்க் கான முஞ் சிறந்தன. முள்ளூர்க் கானத்துப் புக்க கள்வ ராகிய ஆரியரைத் துரத்திப் புறங்கண்டு தமிழகத்திற்குப் பாது
. Fሣ3,

Page 23
84
காவல ஞயினன் காரி. இவனுடைய மலையமான் LD TIL சேரமான் மரபிற் பிரிந்ததொரு கிளையாத லுரிமை பற்றி யும் கூலி பற்றியுஞ் சேரமான் வேண்டுகோட் கிணங்கி ஒரியின்மேற் படையெடுத்துச் சென்று கொல்லிமலையை முற்றினன். காரிக் குதிரைக் காரியும் ஒரிக் குதிரை யே8ரி யும் பன்னெடுநாட் பொர முடிவின் எதிர்பாராத வாறு தாக்குண்டு வல்வி லோரி போர்க்களத்து மாய்ந்தான். கொல்லிமலை மீண்டுஞ் சோமானுடைய தாயிற்று.
தற்பாதுகாப்பின் பொருட்டும் நட்பின் பொருட்டு மதியமான் வல்வி லோரிக்குத் துணைபோகரக் கடவ னகியும் பெரும்படை யுடைய சேரமான் றன்னெடு பொரக் கருதி யிருப்பதனை யுணர்வானதலிற் சிறுபோர்களிற் றன் படை யைச் சிறிது மிழத்தல் கூடாமையானும் காரியை யோரி வெல்லுதல் கூடுமெனத் துணிந்திருந்தமையானும் அதிய மான் வல்வி லோரிக்குத் துணைபோதா வில்லை : ஒரியு மதிய மானைத் துணை செய்யுமாறு கேட்டுக்கொள்ளவு மில்லை.
சேரமான் சூழ்ச்சி பாராட்டத்தக்கது. ஒரிக்குச் சோழ பாண்டியர் துணை நிற்கமாட்டார். அதியமானுக்குத் துணை கிற்பர். தானே ஓரியைத் தாக்கினும் ஓரியைத் தொலைக்கு முன் அதியமானைத் தாக்கினுஞ் சேரமா னகப்பட் டிருக்கக் கூடும். எங்ஙனமெனிற் சோமான் றனக்கும் பகைவ னுக லான் ஒரிக்கு வலிந்து துணைபோவான் அதியமான். அதிய மானுக் கோரியு மங்ஙனமே, அதியமானுக்குச் சோழ பாண்டியருந் துணை வருவர். சோழ பாண்டியர் கூலி மிகக் கொடுப்பா ராதலாற் காரியுஞ் சோழ பாண்டியர் பொருட் டுத் துணைவரக் கூடும். அன்றியும் ஒரியின் கோட்டையை யேனும் அதியமான் கோட்டையை யேனும் கிலைபெற

85
கின்று தாக்குதற் குரிய பாசறையுங் கிடைத்திராது. இப் பொழுதோ ஒரியின் றுணை அதியமானுக்குக் குன்றியது. காரியு மதியமானுக்குப் பகைவ னுயினமையிற் சோழ பாண்டியர் பொருட்டு வரக்கூடுங் காரியின் அறுணையு மதிய மானுக்குக் குன்றிற்று. அன்றியு மதியமானுடைய குதிரைமலைத் தகடூர்க் கோட்டையை நன்கு கின்று தாக்கு தற்குரிய கொல்லிமலைப் பாசறையுஞ் சோமானுக்குக் கிடைத்தது. * .
இச்சூழ்ச்சி யின்முயிற் சேரமான் அதியமானப் பொருது வெல்லுத லென்பது சிறிது மியலாது.
காரி, கொல்லிமலை சேரனுக் குறித்தாதற்குத் துணை செய்யு முகமாகத் தன் னுட்டுப் பாதுகாப்பைக் குறைத் தமை பொருது சினர்து காரிமேல் அதியமான் படை யெடுத்துச் சென்று திருக்கோவ லூரை முற்றிப் பொரு தழித்தான். அப்போரில் காரி துஞ்சினன் போலும். முள் ளூாக் கானத்து ளோடி யொளித்துத் தப்பினு னென்பாரு முளர். அங்கினர் தப்பி யிருப்பிற் சேரமா னதியமானேடு பொரும்பொழுது, சேரமானுக்குத் துப்பா யிருந்திருப்பன்; அங்கினங் துப்பாயினு னென்பது கூற்றி னன்றிக் குறிப் பினும் பெறப்படவில்லை. அவன் றப்பினுற் சேரமானுக்குத் துணை போவா னென்பது அதியமான் றுணிபாகலின் அவனை முள்ளூர்க் கானத்துள்ளே துருவிக் ன்கப்பற்றவே முன்னர் திருப்பன்; முள்ளுர்க் கான மென்பது நாடு முழு திலும் பார்த தன்றே. இப்போரில் அஞ்சியைப் புகழ்ந்து பரணர் பாடினர்.
இக் காரி யதியமான் போரு மொருவாறு சேரமான் வென்றிக்குத் துணையாயிற்று. சேரமான் காரியின்

Page 24
86
அறுணேயை யிழப்பினு மவன லதியமான் படைக்கு சேர்ந்த குறை தனக்குக் காரி செய்த துணையாயிற்று.
இங்கின மதியமான் படை குறைவு மிளைப்பு முற்றி ருக்குஞ் செவ்வி யோர்ந்து முயன் முதலிய காட்டு விலங்கு களை யோடச் செய்து அவை யிளைத்த பொழுது பாயும் வேட்டைநாய்போலச் சேரமான் அதியமான்மேற் பாய
லுற்ருரன்.
உடனே சோமான், அதியர் தன் குடிக ளென்பது பற்றிப் பொாாதே வணங்கித் திறை செலுத்தச் செயிற் சாலு மென்னுங் துணிவானும் போர்முறை கருதியும் பொன் முடியா ரென்னும் புலவரை அதியமானுழைத் தூதுசெல விடுத்தான் ; புலவர் கூற்றுக்குச் செவி சாய்த்தா னுயினும் வல்லுப் போரிற்போல் வாட்போரிலும் வெற்றி தோல்வி யின்னர் கண்ணதுதா னென யாவரானுந் துணிந்து சொல் லக் கூடாமையானும் வெற்றி தோல்வி ஊழ்வினையா னேர்வ தன்றி எத்துணை முயற்சியானும் நேர்வதன் முகலானும் என்றேனு மொருகா ளொருபொழுது பொன்றுதலிற் றப்பாத வூனுடலை நச்சி வைய முள்ள வளவும் பொன்றது கிலைபெறும் புகழுடலைக் கைவிட விரும்பாமையானுங் தூதுடன் படா னயின னதியமான் ; அவனைப் பாராட்டிப் புகழ்ந்து மீண்ட பொன்முடியார் அதியமான் மலைக் கோட்டையி னருமையையும் கோட்டையைப் பாதுகாக்கு மறவரி னுண்மை மிகுதியையு மெடுத்துப் புகழ்ந்து கூறி அவனை வெல்லுத லரிதென்பது தோன்றச் செய்து படை யெடுப்பினைத தடுக்குங் குறிப்புடையவரா யிருந்தார்;
இராவணன் கோட்டையி னருமையை அனுமான் கூறக்

37
கேட்ட இராமன் தன் வென்றியில் ஐயுற்றது போலவே சோமானுங் கன் வெனறியி லையுற்மு னென்பது தோன்று கின்றது.
“மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட தெவ்வழி யென்றி வியன் முர் மார்ப! வெவ்வழி யாயினு மவ்வழித் கோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்தி மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர்
தீண்ட றகrது வெந்துறை யாணே.??
(தகடூர்யாத்திரை) இது பொன்முடியார் மீண்டு வந்து" அகியமானது எயிலருமை கூறிய பாட்டு, (தொல்காப்பி யன். புறத்திணையியல் 12) ペ
சேரமான் பெரும்படை கொண்டு புற ப் பட் டு ப் போய்ப் பாசறை விட்டிருந்து தகடூர் மதிலை முற்றியிருந் தான்; அவன் றன் னெயிற்புறத்து வருந்துணையு மதிய மான் புறப்பட் டெதிர்சென்று தாக்கின னல்லன், அஃ திராமன் மதிற்புறத்து வருந்துணையு மெ தி ர் சென்று பொாாது மதிலுள் ளிருந்த இராவணன திருக்கை போன்
றது.
சோழ பாண்டிய ருடைய படை வாவை யெதிர்பார்த்
தும், முற்றுகையிடச்செய்தாற் சோழ பாண்டியர் படை சேரமான் படையை வளைத்துக் கொள்ளக் கூடும்; அப் பொழுது முன்னும் பின்னுங் தாக்கிச் சோமான் முற்

Page 25
88
றுகையை யழித்து விடலா மென நினைத்துஞ் சேரமான் படை தன் கோட்டையை முற்றுகையிடும் வரையு மதியமா ணெயிலுள் ளிருந்தான் போலும். அங் கினைப்
பெல்லா மவனுக்கு வாயாமற் போயின.
முற்றிய சேரன் மீண்டும் அரிசில்கிழா ரென்னும் புலவரைத் தூது விடுத்தான், அக்காதுரைக்கு முடன் படாத அ தி ய மா ன் டோர்பொருவான் பு, ற ப் பட் டான் ; மதிலை முற்று முன்னே யெதிர் சென் று பொராததன் றவற்றை யுணர்ந்தான்; சேரமான் படை வருமுன்னே சோழ பர்ண்டியர் ப  ைட வர்துதவாத தவற்றையு மெண்ணினன். இனி யென் செய்வது ; என்னு ணுலுங் கலங்காது பொருது மடிந்து புக ழெய்துதலே தக்க தெனத் துணிந்தான். பெரும்படை போர்க் கெழுந்தது; சோழ பாண்டியரும் பின்பு வந்தனர்; வந்துமென்ன? கடும் போர் நிகழ்ந்தது; அதியமான் படைத்தலைவன் பெரும்பாக்க னென்பவன்; போர்த்துறை போனவன் ; அவனுக்கு முன் அஞ்சாது சேரமா னின்ற திறத்தை அரிசில்கிழாரும் பொன் முடியாரும் பாராட்டினர்; போர் கிகழ்வுN அவ் விருபுலவரு முட னிருந்தனர். சோமான் படை மிக அழி வுற்றது. சோமான் முகமலர்ச்சி குன்றித் தன் படையழி வைச் சுட்டிக்காட்டி இருபுலவர்க்குங் கூறினன். அவ ரிருவரு மவனைத் தேற்றிப் போர்த் துணிவு பிறப்பித்த பாட்டு வியக்கற் பால காகும். ஆயினுஞ் சோமா னிடமே வெற்றித் திருமகள் எய்தினுள் ; சோழ பாண்டியர் தோற் றுப் புறங்கொடுத் தோடி விட்டனர். இறுதியில் எதிர் பாராத வாறு சோமான் வேற்படை மார்பிற் பாய்ந்துருவப்
பெற்றுடல் விட்டு வானவர்க்கு விருந் தாயினன், அதியமா

39
னெடுமா னஞ்சி யெழினி: தகடூ ரழிந்தது. குதிரைமலை யைச் சே ர ன் மறவன் பிட்டங் கொற்றணுக்குக் கொடுத்து விட்டுத் தன் னுார் வரவேற்ப வெற்றி மிடுக்கொடு புலவர் பாட மீண்டு போயினன் சேரமான் ; அதனல் இவனுக்குச் சோமான் றகடு ரெறிந்த பெருஞ் சோ லிரும் பொறை யெனப் பெயர் வழங்கப்பட்டது தகடூர்ப் போர் தமிழகப் பெரும்போருளொன்று. தகடூர்ப் படையெடுப்பை விரித்து விளக்கிக் கூறுமுகத்தாற் சேரமானப் பாராட்டிப் பாடிய தகடூர் யாத்திரை யென வொரு பெருங் தொடர் கிலைச் செய்யுளிருந்தது அதன் சில பாடல்க ளொழியச் செப்யுண் முற்று மிறந்தது; அப்பாடல்கள் சொற்சுவை பொருட்சுவை மிக்கன ; அச்செய்யுள் உரையும் பாட்டும் விராய தாதலால் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யு ளென் ப. உரை பெரும்பாலும் பாட்டுச் சிறுபாலு மாம். அப்பாட்டுப் பல அதியமானுழைச் சோமானுற் றாதுவிடுக் கப்பட்ட அரிசில்கிழாரும் பொன்முடியாரும் டாடியன alsT).
" அகியமான் றுஞ்சியதற் கிரங்காத தமிழ fல்லை யென லாம்; அதியமான் மறைவு பொதுவாகத் தமிழ ரெல்லார்க் குஞ் சிறப்பாகப் புலவர்க்கும் பேரிழ வாயிற் றென்பது ஒளவையார் கேட்டோ ருள்ள முருகு மாறு புலம்பிப் பாடிய * சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே' யென்னும் பாடலா னுணரலாகும். அப்பாட்டு கினைவிற் கொள்ளத் தக்க தாகலான் அஃ தீண்டுத் தரப்படுகின்றது.
* சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ங் துண்ணு மன்னே

Page 26
40
சிறுசோற் முனு தனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் முனு நனிபல கலத் தன் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயுமன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாங்
தானிற்கு மன்னே நரந்த நாறுங் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே யருந்தலை யிரும்பாண ரகன்மண்டைக் துளையுரீஇ யிரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கட் பாவை சோர அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவ னருகிறத் தியங்கிய வேலே யாசா கெங்தை யாண்டுளன் கொல்லோ இனிப் பாடுநரு மில்லைப் பாடுநருக்கொன்
- நீகுகரு மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் (சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன் நீயாது வீயு முயிர்தவப் பலவே '? (புறம். 285.) என்பது.
அதியமான் இப்போரிடைப் படுதற்கு முன்ன பொரு முறை ஒரு போர்க்களத்துத் தானுந் தன் படையுமேயாய் கின்று மன்ன ரெழுவரொருங்கு திரண்டு வந்தாரை வென்று வாகைமாலை புனைந்தான். அன்னதோர் வெற்றி முடியுடை மன்ன ரெவரு மெய்திலர். பாண்டியன் தலையாலங் கானத் துச் செருவென்ற நெடுஞ் செழிய ைெருவனே யத்தகைய வெற்றி பெற்றவன். அப் பாண்டியணு லங்ங்ணம் வெல்லப்

4.
வெழுவ ருள்ளு மொருவ னகிய எழினி யென்பவன் سانu அஞ்சி யெழினி யல்லன் ; அதியமான் றகர்ே பொருது வீழ்ந்த வெழினியோ ? வேருே ரெழினியோ ?
அதியமானல் வெல்லப் பட்ட மன்ன ரெழுவரும் யார்யா ரென்பது விளங்க வில்லை. அதன லவனவ் வெழு வருடைய கொடியடையாளமு முடையவனகி முடியாட்சி யுரிமை யெய்தினு னென்ப. குறுநில மன்னர்க்குக் கொடி யில்லாமையால் அதியமான் வென்ற மன்ன ரெழுவரு முடி மன்ன ரென்பது தோன்றும். அவராவார் சேர சோழ பாண் டியர், பல்லவர், பாணர், வேறிருவ ரென் றிவராதல் வேண் டும். பாண்டியன் றலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் ஒரு களத் தெழுவரை வென்மு னெனப் படினும், எழுவுரு முடி மன்ன ரல்லர்; ஐம்பெரு வேளிரு மிருபெரு மன்னருமே யாம். அதனு லதியமா னெடுமா னஞ்சிபோலு மன்னன் முன்னு மில்லை; பின்னு மில்லை; யென் பது பெறப்படும். எழுவரு விவனல் வெல்லப்பட்ட சோ மான் இவனே யிவன் முதுமையில் வென்ற இளைஞ ணுகிய
சேரமான் றந்தைபோலும்,
அதியமா னஞ்சி தமிழ் மொழியையுங் தமிழ்ப் புலவ ாையு மளவிறந்து பற்று வைத்துப் பேணி வந்தனன். தமிழக மெங்கணு மாடவரு மகளிரு மொப்பத் தமிழ் மொழிப் புலமை கிரம்பப் பெற்றிருத்தல் வேண்டுமென்ப தஞ்சியின் வேணவா.
மக்கட் பிறப்பினு லெய்து மூதியர் தமிழ் மொழிச் சுவை நுகர்தலே யாமென்பது மந் நுகர்ச்சிப் பொருட்டே

Page 27
42
யொ வ்வொருவரு முயிர் வாழ்தல் வேண்டுமென்பது மகற் காவன செய்தலே யாவரு மேற்கொளுங் தொழிலென்பது மச்சுவை யூட்டும் புலவரே கட்காண் கடவுளென்பது மவரைப் போற்றியொழுகுதலே கடவுள் வழிபா டென்பது மவர்க் கிஞ்ஞாலமுழுது மடிமை யென்பது உ மென்றிவை நெடுமா னஞ்சியி னகலா வுளக்கிடை.
அவனு மவ னுடைமையு மெல்லாம் புலவ ருடை
மையே யாம்.
அவன் காலத்துத் தலைவரெல்லாம் புலவர்ப் பேணு கலு மவராற் பாடப் பெறுதலுமே தமக்குப் பெருமை நல் குவன வெனக் கொண்டனராய் அவற்றிற்கே கம் முடல், பொரு, ளாவி யெல்லா முரிய வாக்கினர். அவருண் முன் வைத் தெண்ணத் தக்க சிறப்புடையவ னெடுமா னஞ்சியே
யாம்.
அஞ்ஞான்றைத் தமிழ்த் தலைவர் பலருங் கம்மு ளெத்திணை யழுக்காறு கொண்டு முரணிப் பொருவா T (Tu? னும் புலவரை வழிபடுதலி லொன்றிய வார்வ முடையாா
யிருந்தனர்.
புலவர் பலரு மத்தலைவரு ளொருவர் பாங்கு படா தெல்லாரையு மொப்ப வுள்ளவாறு புகழ்ந்து பாடி அவர்கட் கூக்கமு முணர்வுஞ் சுவையு மூட்டி வந்தனர். காரியையுங் காரியாற் கொல்லப்பட்ட ஓரியையு மொப்பப் பரணர் பாராட்டிப் பாடினர். சோமான் றகடு செறிந்த பெருஞ்சோ லிளம்பொறையையு மவனுல் வெல்லப்பட்ட

,48
நெடுமா னஞ்சியையும் பாராட்டிப் பாடினர் பொன் முடியார்.
ஏனைப் புலவரு மதுவே
தலைவரு மிவர் கம்மெதிரியைப் புகழ்ந்து பாடின ரெனப் புலவர்மே லன்பும் வழிபாடுஞ் சிறிதுங் குன்முராய் மகிழ்ந்து வேண்டுவ நல்கிப் புரந்தருவர்.
அஞ்ஞான்றைத் தலைவர்பலரும் தாம் புலவராற் பாடப்
பெற்றபின் றம்வாழ்க்கை யென்னணுலுங் கவலைகொள்ளார்.
இத்தலைமக்க ளானே புலவர் டாடுதற்கேற்ற செய்தி அவர்க்கு மேன்மேற் கிடைத்துக் கொண்டிருந்தன.
அங்ஙனம் பாடுதற்குரிய பொருள்வளங் கிடைத்ததன லளவில்லாத வினிய பாடல்க ஞருளவாயின
அவையெல்லாஞ் சொற்செறிவும் பொருணுட்பமு மமையப் பெற்றவாய்ப் புலவர் புரவலர் பொதுமக்களெல் லார்க்கு மொப்பக் கழிபெருஞ்சுவையும் நல்லுணர்வு மளித்தன.
அகன லஞ்ஞான்று மன்னர் தம்முட் செய்யும் போால் லது வேறு பூசலுங் களவுங் கொலையும் பொய்யு முதலாய கொடுமை யெல்லாம் பெரும்பாலு மிலவாயின.
அவை தமிழகம் புக்க தமிழரல்லார் மாட்டே மலிக் திருந்தன.
அக்காலைப் புலவரும் புரவலரு மாக்கிய பெருமை யன்ருே வின்று தமிழ்க்குங் தமிழர்க்குங் தமிழகத்திற்கும் ஈந்தா விளக்காகி மிளிர்வது,

Page 28
44
அப்பெருந்தகை மக்களில்லையே லின்று தமிழெங்கே? தமிழரெங்கே ? தமிழகமெங்கே?
இன்று தமிழுங் த மிழரு ங் தங் தமிழகத்திலேயே சிறைப்படுத் திழிவுபடுத்தப் பட்டனர்.
நேர்முக மாகவேனு மறைமுக மாகவேனு மச்சுறுத் தப்பட்டோ ஏமாற்றப்பட்டோ தமிழர் தமிழரல்லாதார்க்கே யடிமையா யிருந்து வருவதே தம்முயர்வுக்குப் பெருங் கடையா யுள்ள தென்பதனைத் தா மின்னு முணாாது மயங்கிக் கிடக்கின்றனர்.
தாமுங் தஞ் சுற்றமுமே வெயில் புகாது நிழல் வதிங் துண்டுடுத் தின்புற்று வாழ்தலே குறிக்கோளாக வுடைய ாாய் அதன் பொருட் டெளிய மக்க ளெல்லாரையு மெஞ் ஞான்று மெழவொட்டா தடிமையாக்கிக் கொண்டிருத்தலே நோன்பாக வுடைய முதலாளிகளும் ஆரியப் பார்ப்பனருஞ் செய்யுஞ் சூழ்ச்சியு ளகப்பட்டுப் பெரும்பாலுந் தமிழர் தம் ஆற்றலு முதன்மையு மிழந்து தங் தமிழையுங் சம்மை யுங் தந்தமிழகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வியலாதவ ராய்த் தஞ் சான்ருண்மையை விற்றுத் துன்புற்று நலி வுறுகின்றனர்; அதனலாகுங் களவு கொலை முதலிய கொடுமைகட்கோ அளவில்லை.
கடவுள தியற்கை யாற்றலையும் உலகியல்பையுமெண்ணி ரோக்காது பிறநாட்டாருடைய போலியாற்றலை வியந்து பாராட்டுவது மதற்கு நன்றியறி வுடையர் போன்று கூத் தாடுவது மவர்க்குக் கீழ் அவ சேவல் செய்வதிற் பெருமை கொள்வது மவருடைய பிறப்பு நாள் கொண்டாடுவது

45
மவர்க்குக் கோயில் கட்ட முனைவதுமே தொழிலா யிருக் கின்ற போலித் தமிழர் நிரம்பியிருக்கு மிக்காலைத் தமிழகம் உலகத்து நாடுக ளெல்லாவற்றுள்ளு மிழிந்த தென்பது சொல்ல வேண்டுமோ ?
பிற நாட்டாரை யுட்புக விடிற் றமிழகத்தின் மாய்மை கெடுமென வஞ்சியே யக்காலை நெடுமா னஞ்சி, மலையமான் றிருமுடிக்காரி முதலிய தலைவரெல்லாம் வலிங் துட்புக முயன்ற ஆரியரைத் துரத்தியடித்து வந்தனர். இவ்வாரி யரே பல்லவரென்பவர். இவரைத் தின் முள்ளூரில் வைத் துப் பொருது மலையமான் றிருமுடிக்காரி புறக்கொடை
கண்டது,
"ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப
பலருடன் கழித்த வொள்வாண் மலையன
தொருவேற் கோடியாங்கு O s
(நற்றிணை 170.) எனவரும் நற்றிணைச் செய்யுளா னுணம லாகும். ஆரியப்படை தர்த நெடுஞ் செழிய னென்னும் பெயரு மீண்டு கினைக்கற்பாலது.
பல்லவர்க்குப் பல நூற்றுண்டுகட்கு முன்னரே ஆரிய ருட் பார்ப்பனர் ஈந்தமிழகம் புக்கனர்.
அவரெல்லாங் தமிழ் மொழியை நன்கு பயின்று செந்தமிழியல் கெடாதவாறு வழங்கியும் செய்யுள் யாத்தும் வாழ்ந்து வந்தனர்; இல்லையே லிங்கு வாழ முடியாதவ ராயினர். அவர் சிறிதுங் அாய தமிழைக் கெடுக்க கினைக்கவு மில்லை. அவரானேயுங் தமிழ் வளர்ந்த தெனல் வேண்டும்,

Page 29
46
அதற்கு வாயிலா யிருந்தவர் மூவேந்தரும் நெடுமா னஞ்சி முதலிய தலைவரு மாவர். அவர் பிற்காலத்துப்போல அக் காலத்து அவரவ ரூழ்வினைக்கு மாறக மகப்பேறு, செல்வப் பேறு முதலிய வற்றை நல்குவனவாகச் சொல்லப்பட்ட போலி வேள்வியையும் புரியாத மொழியோசையையுங் காட்டித் தமிழரைத் தம் மகப்படுத்த முயலவு மியலாது.
ஆரியப் பார்ப்பனர் குடிபுகு முன்னரே தமிழருட் பார்ப்பனர் வாழ்ந்தனர். கம் பார்ப்பனருடைய தொழிலை மேற்கொண்டிருந்தமையா லவ்வொற்றுமைபற்றியே யவ் வாரியாையுர் தமிழர் பார்ப்பனரென வழங்கலாயினர்.
அயற் பார்ப்பனரோடு வேற்றுமை தோன்றத் தம் பார்ப்பனரைத் தமிழர் ஊர்ப்பார்ப்பனரென வேறுபடுத்து வழங்கினர்; தமக்குரிய கோயின் முதலியவற்றை யவ்வவ் வூரார் ஊர்க்கோயிலென்முற் போல வழங்குதல் இன்றுங் கண்கூடு
ஊர்ப்பார்ப்பனர் தமிழராதலின் வட மொழியாளர்க் குரிய வேள்வி முதலிய செய்திலர் அகணுலவர் வேள்வி செய்யாத வூர்ப்பார்ப்பாரென்னும் பொருள்பட வேளாப் பார்ப்பாரெனவும் வழங்கப்பட்டனர். இது "வேளாப் பார்ப்பான் வாளரங் துமித்த, வளைகளைங் தொழித்த கொழுந்தி னன்ன ? (அகம. 24.) னைவரு மகடூானூற்றுச் செய்யு ளடியானு மகன் பழைய குறிப்புரையானு மினி துணரப்படும்.
ஊர்க்கோயில் வழிபாடு செய்வித்தலும் ஊர் மணவினை நடத்தி வைத்தலும் பார்ப்பனர்க் குரிய தொழில் போலும்,

47
அவ ரத்தொழிலொழிந்த பொழுது வளைபோழ்தன் முக லிய வேறு மனைக் கைக்தொழிலுஞ் செய்து விற்றுப் பொருள் பெறுதன் மரபு. இக் கூறியவாற்ருன் வடமொழிக் கும் வடமொழியாளர்க்குஞ் சிறிது மியைபில்லாதவர் ஊர்ப் பார்ப்பனரென்பது பெறப்படும ; பூனூற்கு முரியால்லச்.
இவ் வளைபோழு மூர்ப்பார்ப்பன ரினத்தைச் சார்ந் தவரே மதுரைக் கணக்காயனுர், அவர் மகனர் நக்கீரஞர், அவர்மகனர் கீரங்கொற்றனர் முதலிய தமிழ்ப் ப்ெரும் புலவர்.
கபிலர், திருவாதவூ ரடிகள் என் றிவர் முதலிய தமிழ்ப் பெரும் புலவர்களு மூர்ப்பார்ப்பன ராதல் வேண் டும்.
பல்லவ ராட்சித் தொடக்கத்தின் பின் வேறு பிழைப் புக் கிடமில்லாத ஆரியப் பார்ப்பனர் ஊர்ப்பார்ப்பனர் தொழிலைக் கைப்பற்றி வந்தனர்.
பார்ப்பா ரென்னுஞ் சொல் பிராமணரென்னும் வட சொல்லின் மரூஉ வென்பாரு முளர்.
ஊர்ப்பார்ப்பன ரென்னும் வழக்குண்மையானும் மக ாம் பகரமாகாமையானும் ஈற்றயலெழுத் தகரமன்றி யாகார மாதலானும் அவ்வாகாரத்தின் றிரிபே அகர மாதலானும் அவ்வாறு கோடல் பொருங்தாது.
வேட்டுவர் மற்றை விலங்கு, பறவை முதலாயவற் றைப் பிடித்துக் கோடற்காகப் பற்றிப் பயிற்றி வைத் திருக்கு மவ்வவற் றினடிாகிய விலங்கு பறவைகட்குப் பார்வையென்னும் பெயர் பண்டு தொட்டு வழங்கி வருகின்

Page 30
48
றது. பார்வை மான், பார்வை யானை யென்முற் போலும்
வழக்குப் பயிலும்,
பார்வை பார்ப்பு எனவும் வழங்குதற் குரித்து.
கடவுள் தன் வழிப்படாத மாங்கரை யகப்படுத்து வழிப்படுத்துதற் பொருட்டு முன்ன ரகப்படுத்துத் தன் வழிப்படுத்துப் பயிற்றிவைப்ப அவன் றன்னினத்தை யழைப்ப அவ்வினத்தை மறைந்திருந்து வேட்டம்பார்க்குங் கடவுண் மெல்லச் சென்று பற்றிக்கொள்ளும்; அங்ஙனங் தன்னினத்தை 'யழைக்கு மவனுக்கு அப்பொருண்மை தோன்றப் பார்ப்பானெனப் புலவர் பெயரிட்டு வழங்கினர். பார்ப்பா னென்னுஞ் சொல்லினின்றும் பார்ப்பனன், பார்ப் பனி யென்னுஞ் சொற்க ளுண்டாயின. பார்வை யென் னுஞ் சொல் உயர்திணையோ டியைதற்பொருட்டே பார்ப் பென கின்றது. பார்ப்பான் ருெழில் பார்ப்பு, பார்ப்பன
ரினமும் பார்ப்பெனப்படும்.
மெய்யுணர்வு கொளுத்து மாசிரியன் வாயிலாக விறை வன் செவ்வியுடைய மக்களாகிய புட்சிமிழ்த்தலை மானக் காட்டி மானப் பிடித்தல் போலு மெனப் பலரு மொப்புக் காட்டுதலு மீண்டு நினைவு கொளற் பாலது.
பாம்பு முதலியவற்றும் கடியுண்ணன் முதலிய கோளாறு நேர்ந்தவழி அவற்றை யவ்வக் கடவுணினவொடு வாய்மொழி நவின்று மாற்றுதலைப் பார்வை பார்த்த லென வும் அது செய்பவனைப் பார்வை பார்ப்பவனெனவும் வழங் கும் வழக்காறு மிதனை வலியுறுத்தும்.

49
இன்னுேரன்ன தூய தமிழ்ச்சொற் பலவற்றையும் வடசொல்லெனச் சொல்லி வடமொழியாளர் கமக்கு முதன் மை புனைந்துகொண்டு பொதுமக்களை யேமாற்றிப் பிழைக்கும் வழக்கமெல்லாம் பல்லவ மன்ன ராட்சியிலே
முளைத்து வேரூன்றின.
பல்லவர் தமிழ் மொழியை வளர்த்திலர்; தமிழ்ப் புல வர்களை அவ்வளவு பேணினவ சல்லர்; காங்கள் ஆரிய மொழியையே முயன்று கற்றனர்; ஆரியமொழி வளர்த்த லிலே யூக்கங்கொண்டனர்; ஆரியப் பார்ப்பனர்க்கே அள விறந்த முற்றாட்டுக்களை யளித்தனர்; ஆரியமொழி நூல் பலவற்றைச் செய் வித்தனர்; அங் நூலாக்கியோர்க்கே பெரி தும் பரிசளித்துப் பேணினர்; கோயிற் ருெழிலிலு மண வினை நடத்துதலிலு மூர்ப்பார்ப்பனசை விலக்கி ஆரியப் பார்ப்பனரையே யமர்த்தினர்; அதனுல் அத்தொழிலை யூர்ப்பார்ப்பன ரிழந்து வேறு தொழில் செய்து மறைவா ராயினர்.
பல்லவரைப் பின்பற்றிச சேர சோழ பாண்டியரு மேனைத் தலைவரு மொழுகுதலில் ஆர்வங் கொண்டனர்; ஆகவே நாளடைவிற் றமிழ் மொழியின் வளர்ச்சியும் பெரு மையுந் தமிழ்ப் புலவர்களின் முதன்மையு மேன்மேற் குன்றிவருவன வாயின.
இலக்கணவிளக்க நூலாசிய ரினத்தாரும் மிதிலைப் பட்டி யழகிய சிற்றம்பலக் கவிராய ரினத்தாரும் இராமா யணம் பாடிய கம்ப ரினத்தாரும் பழைய ஊர்ப்பார்ப்பனர்
மரபினராவர்.
4

Page 31
50
இலக்கணவிளக்க நூலாசிய ரினத்தினர் வளைபோழ் தற் குரிய வேதாரணிய முதலிய கடற்கரைப் பட்டினத்து மிக்கு வாழ்வர் ; இவர் தேசிகரென வழங்கப்படுகின்றனர்; தருமபுரப் பெரும்பள்ளி முதலாயின இவர்களுடையனவே. இவர் கம தூர்ப்பார்ப்பனத் தொழிலை வடமொழியாளர் கைப்பற்றி அத்துறையில் அவர் மேம்பாடுற்றது கண்டு தாமு மவர் கிலையை யவாய் வாயுரை முதலிய பலவற்முனே வடமொழியாளர் போலத் தம்மைக் காட்டிக்கொண்டு
போலிகளாயினர்.
இங்கினங் தமிழ் வளங் குன்றிய விடத்தப் பழங் தமிழ் நூல் பலவற்றைப் பேணுதலை விருமபாராய் ஊக்கர் திறம பினர்; அவை பலவு மிறந்தன. தமிழக முழுதினையும வடமொழி நூலும் வடமொழி வழக்கும் வடமொழியாளரு மெளிதிற் கைப்பற்றிக் கொள்ள லாயிற்று.
பாடுதற்குச் சிறந்த பொருள் கிடைக்கவில்லை. அத னற் சிறந்த தனித் தமிழ்ப் பாட்டுக்கள் உண்டாகவில்லை. போலிப் பொருட்குப் போலிப் பாட்டுக்களே தேவைப் பட்டன. அதனுல் வடசொல்லுக் கமிழ்ச்சொல்லும் விராய்க் குழறித்தருங் குழறுபாட்டுக்கண் மலிவன வாயின. இவையெல்லாங் கால வெள்ளத்தால் நேரு மேடு பள்ள மென வெண்ணி யமைவதல்லால் வேறென்செய வல்லம்
ub.
இன்ன விழிவு நோக்கூடுமென முன்னரே குறிக் கொண்டு பாதுகாக்க முனைந்த காலங்கான் அதியுமா னெடுமா னஞ்சியின் காலம்.

5.
இவன்போன்ற புரவலர் புலவர்க்குத் தம் பெரும் பொருளை வைத்தெடுக்கும் பொற்பேழைகளா யிருந்தனர். புலவர் எப்பொழுது போனலு மெவ்வளவு பொருள் வேண்டுமானுலு மவர்பாற் போனவுட னெடுத்துக்கொண்டு
வரலாம்.
அவர்பாற் புலவர் பாடும் பாட்டுக்களே யப்புலவர் கம் பொற்பேழையைத் திறக்குங் திறவுகோல்.
அப்பேழைகளை வேறு திறவுகோல் கொண்டு திறக்க (LԲւգ Այո Յո. .
அஞ்ஞான்றைப் புலவர் பலருக் கம்மு ளழுக்காறின்றி யொருவர்க்கொருவ ருதவிசெய்து பரிவுற்முெழுகுப.
புலவராய் வாழும் வாழ்க்கையே விண்ணக வாழ்க்கை யாயிற்று. இன்றிவ்வாழ்க்கை மண்ணக வாழ்க்கையிற்
கடையாயிற்று.
அந்நாளிற் புலவரே தமிழகத்தை யாட்சி புரிந்து வங்கன ரெனல் வேண்டும். முடியுடை மன்னரெல்லாம் முடிகுடா மன்னராகிய புலவரேவல் செய்தொழுகும் பணி
யாளரா யிருந்தனர்.
இன்றே கல்வி வேண்டாமே மக்கள் கூட்டாவுப் பயிற்சியானே யெல்லார்க்கு மெளிதின் வரக்கடவ அரசிய லுணர்வு தமிழ்ப் புலவர்க்குச் சிறிதுங் கிடையாது; வரவு மாட்டாதென முடிவு கட்டி யொதுக்கி வைத்து விட்டனர் மடமையிற் சிறந்த பெரியோர் பலரும்,

Page 32
52
அன்று தலைவர் பலருங் தமிழ்க் கல்வி கற்கச் செவ்வி போதாகிருந்தும் புலவரொடு நட்புற்றுப் பயின்றுவரு மாற்றுனே தலைவரும் புலவராயினர்; அவருள்ளே நல் லிசைப் புலவ ராயினரும் பலருளர். அம்முறையா லதியமா னெடுமா னஞ்சியும் நல்ல புலமை வாய்ந்திருத்தல் வேண்டும்.
தலைவர் தாமே தமிழ்க் கல்விச்சுவையுணர வல்லராயின் அவர்பாற் செல்லும் புலவர்க் கெய்துஞ் சிறப்புச் சொல்ல வேண்டுமோ ? அஃதில்லாத குறையேயன்றே வின்றைய தமிழ்ப் புலவர்க் குற்ற குறைக்கெல்லாம் வித்தாகியது.
* ஏதிலா ராாத் கமர்பசிப்பர் பேதை
பெருஞ்செலவ முற்றக் கடை ?
(முப்பால், பொருட்பால், பேதளம், 7) என்றவாறே
யாயிற்று இன்றைய தமிழகத் தலைவர் கிலை.
எழினி யிற்கிழத்தியார்.
இங்ஙனம் விலங்காகாது மகன் மகனேயாகித் தமிழ்ப் புலவர் பாதுகாவலனுகிய நெடுமா னஞ்சியை அவனுடைய அருமை யத்தைமகளாரே காதலித்து மணஞ் செய் து கொண்டனர். அங்ஈங்கையா ரொருநல்லிசைப் புலவர். அஞ்சிசெய்த தவமே தவம், அஞ்சியினுடைய அன்பு முதலிய நற்பண்புகளும் தமிழ்மொழிச் சுவையார்வமும தமிழ்ப்புலவர்களை வழிபடு மாண்பும் நன்கு செழித்தோங்கி கிலைபெற்று நாட்டுக்கெல்லா மவன் பேரூதியமாகத் திகழ் தற்கு அவன் காதற்கிழத்தியாரும் பெருகற்றுணையா யிருந்
தனர்.

58
அஞ்ஞான்றை யிற்பெண்டிரும் புலவராகுமளவு தமிழ் வாணராய்ச் சிறந்திருந்தன ரென்பதற்கு அஞ்சியின் வாழ்க் கைத்துணையாரு மொருசான்றவர்.
அங்நல்லிசைப் புலமை மெல்லியலார் பெயர் நாகை யென்பது, அஞ் சி சிறந்த புகழ்பெற்றுக் குல விளக்கா யிருந்தமையானே நாகையார் தங் நல்லம்மான் சேயை மணந்துகோடற்கு முன்பே அஞ்சி யத்தைமக ணகையா
ரெனவே வழங்கப்பட்டனர்.
அவர்தம் மணத்திற்கு முன்ப்ே அஞ்சியின்மேற் பாடப் பட்ட வோரருமைப்பாட்டு உருத்திரசன்மனுரா லகநானூற் றிற் ருெகுக்கப்பெறும் பெருமை வாய்ந்தது. அது வரு LADITAZOJ,
*முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் பாடிமி முருவிப் பாறை மருங்கி ணுடுமயின் முன்ன தாகக் கோடியர் விழவுகொண் மூதூர் விறலி பின்றை முழவன் போல வகப்படத் தழீஇ யின்றுணைப் பயிருங் குன்ற நாடன் குடிசன் குடையன் கூடுநர்ப் பிரியலன் கெடுரா மொழியல னன்பின னெனநீ வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் நல்லை காணிற் காதலர் தோழிஇ கடும்பரிப் புரவி நெடுங்தே ரஞ்சி ஈல்லிசை கிறுத்த ஈயவரு பனுவற் முெல்லிசை கிமீஇய வுரைசால் பாண்மக

Page 33
54
னெண்ணுமுறை கிறுத்த பண்ணி னுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினு மினியன லெமக்கே’. (அகம். 352.) என்பது.
இவ்வகப்பாட்டு வரைந்தெய்தியபின்றை மணமனைக் கட் சென்ற தோழிக்குத் த%லமகள் சொல்லிய தென்னு மகத்திணைத் துறைப்பொருண்மேற் பாடப்பட்டது இதன் அறுறைப்பொருள் வரைவுமலிந்து சொல்லிய கோழிக்குத் தலைமகள் சொல்லியதெனவுங் கொள்ளலா மென்ப.
இப்பாட்டகத்தே யஞ் சி யி னினிமையைப் பாண் மகன் பண்களுட் புதுவது புனைந்துளர்ந்த திறப்பண்ணி னினிமையினு மிக்கதெனப் புனைந்திருத்தலால் நாகையார் இன்னிசையுங் கற்று வல்லுநராதல் வேண்டும்.
இப்பாட்டினனே நாகையா ருள்ளத்தை நெடுமா னஞ் சியி னற்பண்புக ளெவ்வளவிற் கவர்ந்துள்ளன வென்பது புலனும்,
அவ ரிதன்கண் அஞ்சியின் அழகையும் ஆண்மையையு மெடுத்தோதிற்றிலர். அவனுடைய குடிப்பிறப் பொழுக் கம், 5ட்பின் சிறப்பு, இன்சொல், அன்பு என்னு மிங்ாற் பண்பு நான்கே யெடுத்தோதினர். இவற்றையே யஞ்சிபாற் கண்டு பெரிதுங் காதலுடைய ராயினர் நாகையார். ஆண்மை குடிப்பிறப்பின் பாற்படும்.
இகனல் இற்பிறப்புமகளிர் கா மணஞ்செய்து கோடற் குரிய காதலன் பாற் காணவேண்டுவன மேற்கூறிய நான்கு
மேயல்லது அழகுங் கைப்பொருளுங் க்ாமத்தையெழுப்புங்

55
தோற்றமு மல்லவென்ப துணர்த்தின சாகின்ரு சஞ்சி யக் தைமக ணகையார். இவ்வுணர் விவர் கல்விகற்றதன் விளைவாகும். இது மகளிர்க் கின்றியமையாதது. அதனு லிவ்வுணர்விற் கின்றியமையாத கல்வியில்லாத மகளி ரெங் வனங் தங்நலனைக் காத்தோம்ப லொல்லும்.
இத்துணைத் தங் நல்லம்மான் சேய்பா லீடுபாடுடைய በ፱ ቨ ̆ õõ) &፳፱ ! ፬ ̇ ரவனையொழியக் கரும்பு விற்கைக் காமவேளே யெதிர்வரினு மேறட்டுப் பார்ப்பரோ? பாரார்.
இவர் பாடலைக் கேட்டபிற்பாடு அஞ்சி தானு மெங் கெங்குத் தனித்திருந்து எத்தனைநா ஞணுறக்க மின்றி யென்னென்ன வெண்ணி யல்லும்பகலு மெண்ணத்தி லாழ்க் திருப்பா னென்ப தவ னுள்ளமுங் கடவுளு மறிவதல்லது வேறியா பறிவார் ?
அஞ்சி தமிழார்வ முடையணுதலிற் றமிழ்ப்புலமை யில்லாத பெண்ணே மணஞ் செய்து கோ டலி னு மணமின்றி வாழ்நாளளவு மிருந் திறந்து விடுதலே தக்க தென்னுங் கடைப்பிடி யுடையன யிருக்கக்கூடும்; அஃ தறிந்த நாகையார் தம்மை யவன் மண்முடித்துக் கொள்வ தற்காக விவ்வருமைச் செய்யுளைப் பாடித் தந் தகுதியை யுணர்த்தினரோ வென்னவோ?
தமிழ்வளர்க்கின்ற வள்ளலுக்குத் தக்க பரிசளித்து மகிழ்வித்தற்காகக் தமிழ்க்கடவுள் அவனுக்கு நாகையாரை மகட்கொடை நேர்ந்தது தக்க பொருத்தமேயாம், எண்ணம்
போல வாழ்வென்பது பழமொழி.

Page 34
56
நெடுமான் மணஞ்செய்துகொண்ட பிற்பாடு அவனில் லம் புலவர்க்கெல்லார் தாயக மாயிற்று.
புலவர்க் கியல்பாகவே யானது கொடுக்கு மவன் இப் பொழுது தன் காதலியார்பா லுள்ள காதலானுங் கொடுக்க வேண்டுமென்னு முள்ள மளவுகடப்பப் பெருகிற்று. ஏனைப் புரவல ரில்லத்தினு மஞ்சியில்லத்தி னிப்பொழுது புலவர்க்குக் கிடைக்கும் பரிசி லிரட்டியாயிற்று ஒளவை யார்க்கோ அதியமான் வீடுதான் வீடு, அவர்க்கு மற்றைப் புரவலரில்லத்துப் பரிசின் மட்டுமே கிடைக்கும்; அதியமா னில்லத்துப் புலமைமிக்க நாகையாரொ டளவளாவு நட்புச் சுவை யின் பங் கிடைத்தலரிது.
புலவர்யாவருங் தங் கல்வித்திறமை யுணரவல்லவ ரிடமே தா மெய்யன் புவைத் தொழுகுதன் மரபு. அதி யமா னில்லு ளவரிருவருங் கல்விக்திறமை சீர்தூக்கவல்லவ ாாயினமையின் ஒளவையார் முதலிய கல்லிசைப்புலவர் பலரு மங் கடுத்தடுத்துப் போய்வர விழைவர். அஞ்சி யில்
லமே ஒரு பல்கலைக்கோட்ட பெனலாம்.
அங்குப் போனல் ஒளவையார் அதனை விட்டு மீள மாட்டாது பன்னட் டங்குவர். அவர் பன்னட் டங்கிய பின்னுளு மவரை விட்டுப் பிரியலாற்றர் அதியமானும்
நாகையாரும்.
ஒளவையார் நாகையாரொ டுரையாடிக்கொண்டிருப்ப கானல் எங்கெழிலென் ஞாயி றெமக்கென் றிருப்பார். அஃகொக்கும். புலவர் தம்மு ளளவளாவதினு மிக்க வின் பம்
வானுேர்க்கு மில்லைத்தானே.

57
பெண்பாலார் தாங் கல்விகல்லாமே எத்தனை நாளா ணுலு மொப்புமைமு கலிய நயங்களோடு மொப்பாரி முதலிய பாட்டுக்களோடு மெய்ப்பாடு காட்டி யுரையாடிக்கொண் டிருக்கு மாற்ற லியல்பாகவே யுடையர். அங்ஙனமாகத் துறைபோகக் கற்று வல்ல மகளிரிருவர் தம்முளுசையாடப்
புக்காற் சொல்லவாவேண்டும்.
மனைக்கண் மகளிர்கட்டுக்கு எளிருந்து ஒளவையாரும் நாகையாரு முரையாடிக்கொண்டிருக்குங்கா லங் குணவுண் டற் பொருட்டு வருமதியமான் அவ்விருவ ருரையாட்டுச் சுவை மாந்தியயர்ங் துணவு மறந்து தானுணவுண்டதாக கினைத்துக்கொண்டு போய்விடுவது முண்டு.
நாகையார் ஒளவையாரோ டுரையாடுவதுபோல ஏனை யாண்பாற் புலவரொடு தாராளமாக வுரையாடமாட்டார்; கல்வி கல்லா அசட்டுப் பெண்டிரோடுரையாடவும் விரும் பார்; அதியமானெடிருந் துரையாடிக்கொண்டிருக்கவேண்டு மென்ட கவரதவா வாயினு மவற்குரிய கடமையோ பல. அவற்றை முடித்கற் கவன் செல்லவேண்டு மாதலால் அவ் வவாவையு முவாடக்கிக் கொள்ளல் வேண்டுவதாயிற்று. ஆகவே ஒளவையாரைக் கண்டுவிட்டால் அவரைப் போக விடாமற் செய்யவேண்டு மென்பதுதான் நாகையார் கினைவு. ஒளவையார் அஞ்சிபாற் பரிசிற் பொருட்டு வருபவராகத் தோன்றவில்லை. தம்மருமை மகளையு மருமகனையும் பார்த்து நாளாயிற்று; போய்ப் பார்த்துவரல் வேண்டுமென நினைத்து வருவார் போன்றே வருவார் அவர்க்கு நெடுமான் பரிசில் கொடுப்பதில்லை. அவர் தாமே தமக்கு வேண்டுவன வற்றை யெடுத்துக்கொண்டு போகல்வேண்டும்.

Page 35
58
அஞ்சியைப் புகழ்ந்து பாடுதலில் ஒளவையார்க்குள்ள வார்வ மளவிறந்தது.
வேள்பாரிக்குக் கபிலரும் வேளாய்க்கு ஏணிச்சேரி முடமோசியாரும்போல அதியமானுக்கு ஒளவையார் ஆருயிர்க் கேண்மைப் புலவர். -
ஒளவையார் வந்தவுடன் அவரை முதலில் உண்டு மகிழச் செய்துவிட்டுப் பின்பு அவர் தன் னருகிருந்து பாடிக் கொண்டிருப்பப் பாட்டுக் கேட்டுக்கொண்டு மகிழ்ந்து கொண்டே தானுணவுண்ணும் வழக்க முடையவன் அதிய மான். இங்ஙனம் புலவர் பாடற்சுவை யார்தலா னவனுக் கிடைவிடாதுள்ள வின் பத்தாற்றுன்பமென்பதனையறியான்; ஆயினுமதியமானுக்குப் புலவர்களைப் பிரித லாற்ருத துன்ப மொன்றனை விலக்கிக்கொள்ள முடியாமை யிருந்துவந்தது.
அத்தகைய புலவர் தோழன் ஒருநாள் எவ்வாற்றுனே தன்னையுண்டாரை நெடும் பல் யாண்டுகட்கு வாழச் செய்ய வல்ல மருந்தாதற் றன் மையுடைய அரிய நெல்லிப் பழ மொன்று கிடைக்கப்பெற் றில்லங் கொணர்ந்தான். கொணர்ந்து கனியி னருமை பெருமை யுணர்ந்த வவன்றன் காதலியார்க்குக் காட்ட வவ்விரு காதலரு மொருமித்து இத்தகைய கனியை நம் மெளவையார்க்கே நல்கல் வேண்டு மென்றிருந்து அவர் வருதலு மவர்பால். யாது முரையாதே யம்ம! விங்ரெல்லிப்பழ முண்மினே வென்முணுக வதியமான், அவரும் யாதும் வினுவாதே யதனை வாங்கியுண்டு சுவைத்து மகிழ்ந்தின் புற்ற பொழுது அதியமான் அவ்வருங் கனியின் வரலாற்றை ஒளவையார்க் கெடுத்துரைத்தான்; உரைக்க அதுகேட்ட வவர்க் கெழுந்த வியப்பு மகிழ்வு மம்மட் டிம்

59
மட்டல்ல. என்னே ! யிவ் வள்ளலது பெருங் தகைமை, இவன் தமிழின் கண்ணுங் தமிழ்ப் புலவர்கண்ணும் வைத் திருக்கு மார் வந்தா னென்னே 1 இவன்போலுங் கமக்கென வாழாப் பிறர்க்குரி யாளரா னன்ருே வின்றிவ் வுலக மிருர்து வாாகின்றது. இன்றே லென்னுகு மளித் திவ் வுலகென நினைக்து கினைந்து அஞ்சியை நோக்கி, அம்ம! நீ யென்னச் சாவாமைச் செய்த நல்வினைப் பேற்ருனே கூற்றுதைத்த குழகன் போல மாயாது மன்னுகவென வாயாச வாழ்த் தினர். அவரங்ங்னம் வாழ்த்திப் பாடிய வகவற் பாவொன் றும் வெண்பா வொன்றும் வழங்குகின்றன.
அஞ்சிக்குத் தமிழ்ச்சுவை நுகரா திவ்வுலகின் வாழ விருப்பமில்லை. தன் னுயிரைக் காட்டினுந் தமிழ்ப் புலவரே யினிய ரென்ப தவன் றுணிபு. தனக்கு முன்னர் ஒளவை யார் காலஞ் சென்றுவிட்டால் தா னெல்லிக்கனி யுண்டமை. யால் உயிர் ாேகமாட்டாது நீண்டகா விருப்பது துன்ப மாகவே முடியும். அன்றியுங் கானிறந்த பின்னர் ஒளவை யாரிருந்து தன்னைப் பாடல்வேண்டு மென் னு மெண்ணத் தாலு மவரை நாமிருக்கு மளவுங் தமிழ்ச்சுவை யூட்டிக் கொண்டிருக்கச் செய்ய வேண்டு மென் னு மெண்ணத்தா லும் அருமையுடைய பொருளை யாருயிர் நண்பர்க்குக் கொடுத்தன்றி யிருக்கமுடியாத நட்புரிமையானும் ரெல்லிக் கனியை ஒளவையார்க் கதியமா னளித்தது தகுதியுடைத் தேயாம்.
'அன்பிலா ரெல்லாங் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு"
(முப்பால் அன்புடைமை. 2.) என்பது பொய்யாமொழி.

Page 36
'60
இவ்வரும்பெரு வள்ளன்மை கேட்ட புலவரானே அதியமான் தலையெழுவள்ளல்களு ளொருவணுக வைத்துப்
போற்றப்பட்டான்.
எழுவள்ளல்களு மிவரெனக் கூறுஞ் சிறுபாணுற்றுப்
1d படையுள்ளே
" . . . . . . . . . மால்வரைக் கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே லாவக்கடற் முனை யதிகனும் . . . . ’ (99. 103.) என வருமாற்முன் அதியமான் வள்ளலெழு வரு ளொருவ னென்பது மவ்வுயர்வுக்கு வாயி லின்ன தென்பதுங் துணியப்படும்.
தலையெழு வள்ளல்களை ஆரியர் சொல்வழிப்பட்ட பிறர் கடையெழு வள்ளல்க ளென வழங்கினர், பண்டைப் பாட்டுக்கள் இவ்வெழுவாையு மெழுவள்ளல்க ளெனக் கூறிப் போங்கனவே யொழியக் கடையெழு வள்ளல்களென யாண்டானுங் கூறிற்றில. இவரைக் கடையெழு வள்ளல்க ளென் டா ரிவர் புலவர் புகழ்தற்காகவே கொடுத்தாரெனப்
பொய்யுரைப்ப,
'இம்மைச் செய்தது மறுடிைக் காமெனு மறவிலை வாணிக ணுஅ யல்லன் பிறருஞ் சான்ருேர் சென்ற நெறியென
வாங்குப் பட்டன் றவன் கை வண்மையே?

6.
(புறம். 184) என்னுஞ் செய்யுண் முதலியவற்றி னுரை இயமறியாதாரே யங் வனங் கூறுவரென மறுக்க, தலைவள்ள லெழுவரையுங் தொகுக்கோதுவன சிறுபாணுற்றுப்படை யுங் குமணனைப் .ெ ருஞ்சித்திரனர் பாடிய * முரசு கடிப் பிகுப்பவு” (புறம். 158.) மென் னும் புறநானூற்றுச் செய் யுளு மென்னு மிவ்விரண்டுமேயாம்.
சிறுபாணுற்றுப்படை யுடையவன் ஒய்மா னுட்டு கல்லியக் கோடன். இவன் வள்ளல்க ளெழுவர்க்கும் பிற் பட்டவ னென்பது தோன்றிற்று.
குமணன் எழுவள்ளல்களின் காலத்தவனே யாயினு மவ்வெழுவருங் துஞ்சிய பின்னரு முயிர்வாழ்ங்க வனவன் . இது குமணனைப்பாடிய பெருஞ்சித்திரனுர் நெடுமா னஞ்சி யையும் பாடியிருத்தலாற் பெறப்படும்.
இங்கெல்லிப்பழம் பெற்றவிடத்தை ஒளவையார்,
“ · · •••••••••••••. ••••••••••• ...6)* Töð, Göflaví?
JM
பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி و?
(புறம், 91 ) எனக் குறிப்பிடுகின் முர். இகனல் விடாக மெனப் பெயர் பெற்றதொரு பெருமலையின் குவட்டிற் கனி பெற்றது புலனுகின்றது. விடாகமென்ப தீண்டு மலை முழை யெனப்படு மலையிடுக்கினை யுணர்த்திற்றன்று. அருமிசை யென்னும் வருமொழிப் பொருளொடு மலை முழை யென்னு கிலைமொழிப் பொருட்கு அத்துணை பியை பின்மை கண்டு விடாகம் என்பது அம்மலைப் பெயராக
வுங் கருதப்படுகின்ற ? தென்ற புறநானூற்றுக் குறிப்

Page 37
62
புரையாசிரியர் சாமிநாதைய ரவர்களினது நுண்ணுணர்வு கண்டின்புறற்பாலது. விடாகம் மலைமுழையு ளெனி னும் பொருந்தாத தன்று. அன்றி விடாக மென்றது டெருமலை யென்றதன் குவடுகளு ளொன்றன் பெயராகவுங் கருதலாம். இனிக் கனியுண்ட ஒளவையார் . அருமிசை 9 யாகிய குவடென்னுகிற்பச் சிறுபாணுற்றுப்படை ' O வரைக், கமழ்பூஞ் சாரம் கவினிய நெல்லி யென்னுகின்
Lys6)
றது. ஈண்டுச் சாரலென்பது மலைச் சார லன்று; மலைக் குவட்டின் சாரலெனக் கோடல் வேண்டும். மால்வரைச் சாா லென்றது உமது நோக்கியே. வரை மலைக்குவட்டினை யுணர்த்து மென்றல் திருமுருகாற்றுப்படை 'மால்வரை கிவந்த சேணுயர் வெற்பில் ’ (அடி. 12) என்னு மடியுரை யில் ‘இனித் திருமால் போலுங் குவடுக ளோங்கிய வெற்
பென்றுமாம் ; " மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்’ (நற்றிணை 32) என்ருர் பிறரும்’ என நச்சினர்க்கினிய ருரைக்குமாற்ருனுங் துணியப்படும். * வரைக்கவா ?"
னென்றலின் மலைச் சாரலென்றலே யன்றிக் குவட்டுச்சார லென்றலும் வழக்காமும், இம்மலையைக் கொங்கு நாட்டு மலைகளுட் பருத்திப்பள்ளி நாட்டைச் சார்ந்த கஞ்சமலை யெனப் பெயரிய மலையென வழங்குதலு முண்டு.
இவ்வரலாற்ருனே வியத்தகு தன்மையுடையவு மக் களா னெய்தற் கரியவு மாய மருந்து பல மக்கள் பயிலா மலையகத் துளவென்னும் வழக்குரை யொக்கு மென்பது பெறுதும்.
மேலு மலைமருந்துகளானே யெண்பெருஞ் செல்வ
மெய்திய இடைக்காடர், பாம்பாட்டியார் ம்பையார்
t . - km و . .

63
அழுகணியார், கருவூரார் முதலிய வொருசார் முனிவரு
ளொருவ ராயினு ரெளவையா ரென்ப துணர்ந்து கொள்க.
கருவயிற் பிறந்த வுயிர்க் கெல்லாஞ் சாத லொருதலை யாக அருநெல்லிப்பழ முண்டார் சாவாமை யாவது நோயு மூப்பு மின்றியே கீடு வாழ்ந்து அறிதுயிற்சண் ஆற்றலான் உடம்பின் மொய்யடுக்குகளை வல்லே பிரித்தலான் உடம் பொடு காணு தொழிதலாம். (மொய் - பிரிக்கலாகாநுண் டுகள்)
கருசெல்லிப் பழந் தன்னை யுண்டாரை நீடு வாழச் செய்வகோர் மருந்தென்பா ராயினுந் தன்னை யுண்ணுத நெடுமா னஞ்சியையும் புகழுடம்புகொண் டொருஞான்றுஞ் சாவா திவ்வையக முள்ளவளவும் நிலவிவாழச் செய்யு மருந்து மாயிற்று.
இசையுடல் வேண்டுவார் தசையுடல் வேண்டா ரென்ப
ததியமான் பாற் கண்டாம்.
இந்நெல்லிக்கனியை யுண்டால் நீடு வாழலா மெனக் கேட்ட சொற்முெடர்க்குத் துறைபோகக்கற்று நுண்மா அணுழைபுல மிக்க புலவரைக்காட்டினு மவரொடு பன்னெடு நாட் பயின்ற அதியமான் கண்ட வுாைாயம் பாராட்டற்
பாலது.
பொதுப்படக் கூறிய விச்சொற்ருெடர்க்கு யாருண் டால் யார் வாழலாம்ெனத் தன்னுள்ளே யெழுந்த வினவி னற் போலும் நுண்ணிய சிறந்த பொருளைக் கண்ட ததியமான்

Page 38
64.
இது திே வார முதலிகண் மூவரும் வந்தால் அவர்கள் வைத்துப்போ ன இத்தேவாரச் சுவடிக் கோட்டங் திறக்கப் படு மென்ற தில்லைவா ழந்தணர் கூற்றுக்குக் திருவாரூர்ச் சோழன் அபயன் கொண்ட வுரைாயம் போல்வ தொன்று,
அதியமான் ஒளவையார்க்கு அருநெல்லிப் பழ னல்கி யக்கண்ணே வியந்து மகிழ்ந்து பாராட்டிப் பாடிய ஒளவை யார் பாடலிரண்டு மெல்லாரும் நினைவிற் கொண்டு நெல்லிக் கனிபோலச் சுவைகொளற்பால வாகலின் அவை யிங்குத் கருதும்,
* வலம்படு வாய்வா ளேந்தி யொன்னர்
களம்டடக் கடந்த கழமுெடிக் கடக்கை யார்கலி ஈறவி னதியர் கோமான் ! போாடு திருவிற் பொலந்தா ரஞ்சி ! பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் ருெருவன் போல மன்னுக பெரும ! நீயே தொன்னிலைப் பெருமலை விடாகத் தருமி சைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாத னின்னகத் தடக்கிச் சாத னிங்க வெமக்கித் தனையே 29 (புறம். 91 ) இதனுள் விண்ணுேர் மருந்துண்டுஞ் சாவ வொருவரு முண்ணுதி நஞ்சுண்டிருந்தருள் செய்யு மிறை வனை நெல்லிக்கனி யுண்ணுதே யுண்டாரிற் காட்டினும் பல்லூழிசெலச் SF I a T வுடம்பெய்திய நெடுமாற் கொப்புமை காட்டியது மிக்க நயமுடைத்து. இன்னு மிதனனே நீல மணிமிடற் ருெருவன் பிறை சயெல்லா மழித்துத் தன்னை

65
யழிப்பாரின்றியுங் கனக் கழிவின்றியு மன்னுமாறுபோல நீயும் பகைவரையெல்லா மழித்து கின்னேயழிக்கும் பகை வரின்றியும் நினக் கழிவின்றியு மன்னுகவெனவும் அவன் வானேர் வாழ்கற்பொருட்டுத் தான் சாவத்துணிந்து நஞ் சுண்டு வாழ்ந்தாற்போல நீயும் யான் வாழ்தற்பொருட்டு நீ சாவத் துணிந் கண் யாதலின் மன் னுக வெனவும் பால் புரை பிறை பிறர்க் கிருணிக்கித் தானிருள்கொண்டு தண் ணுெளி மிக்காற்போலவும் நீலமணிமிடற் ருெருவன் பிறர் க்கு நஞ்சகற்றித் தானஞ்சுகொண்டு தண்ணளி மிக்காற் போலவும் நீயு மென் சாவகற்றி கின் சாவேற்றுத் தண்ணளி யுர் கண்ணுெளிபு மிக்கனை யாதலின் மன்னுகவெனவும் பால்புரை பிறைக்கண்ணும் நீலமணிமிடற் ருெருவன்கண் னுந் தம்முண் மறுதலை யாய வெள்ளொளியுங் காரிருளு மொருங்குட னின்று விளங்கி மன்னுமாப்போல இசையுட லாக்கமெய்தத் தசையுட னல்குரவெய்துத லொழிந்து கின் க ணசையுடலுக் கசையுடலு மொருங்குட னுக்க மெய்தி மன்னுக வெனவும் குழவித் திங்களொடு நீலமணிமிடற் ருெருவன் மன்னுமாப்போல நீயும் கின் மகன் பொகுட்டெழி னியோடு மன்னுகவெனவும் நீலமணிமிடற் ருெருவன் கூற் றுவனை யுதைத்து முனிவன் சிறுவனப் பாதுகாத்துச் சாவாமை யளித்தாங்கு நீயுங் கூற்றுவனை யுதைத் தென்னைப் பாதுகாத்துச் சாவாமை யளித்தனை யாதலின் அவ்விறைவன் போன்று மன்னுகவெனவுமென் றிங்கினம் பலகுறிப்பு முட்கொளக் கூறிய டூயங் கண்டுபாராட்டற்பாலதாகும்.
இதன் கண்ணு மதியமான தடக்கம் குறிக்கப்பட்டது.
இப்பாட்டானே அதியமா னெடுமா னஞ்சி நீலமணி
மிடற் முெருவனை வழிபடு மடிமையென்பதூஉம் போந்தது.
5

Page 39
66
'பூங்கமல வாவிகுழ் புள்வேளூர்ப் பூகனையு மாங்குவரு பாற்பெண்ணை யாற்றினையு-மீங்கு மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகக் கத்து?
$)ძზ தெளவையார் நெடுமானப் பாடிய வெண்பா,
ஆமலகம் - நெல்லி. ஆமலகம், கமல மென்பன விாண் டும் வடசொல். நீவுகற் குரிய ஆடையை நீவி யென்றற் போல மீனும் புள்ளு மக்களும் வாவி நீ ந் து க ற் குரிய பொய்கை வாவியென் வழங்கப்படும். இது வடமொழிக்கட் சென்று சிதைந்து வழங்கும், வாவுதல் = பாய்கல், “வாவு பரி' யென்ப. w
கூற்றுவன் வருங்கால் நாவைமடித்துச் சீழ்க்கை யடிக்கு மென்பதுபற்றி அது கிகழாமையைக் கூறுவார் நாவை யறுப்பித்தா யென்முர் அங்ஙனங் கூறுதல் மகளிர் வழக்காகிய கடுஞ்சொல், பூதனும் யாறும் என்னநன்றி செய்தனரோ ?
இங்ஙன மெளவையார் பழஞ் சுவைத்து மகிழப் பாட் டுச்சுவைத்து மகிழ்ந்த அதியமான் பாட்டின் சொற்சுவை பொருட்சுவைகளை வியர்து கொண்டாடினன்.
கரும்பயிலக் கூலிகொடுக்குங் தோன்றலது பெருங் தகைமையுங் தம்பெருமித மின்றிப் பணிவுடையாாதலுங் தோன்ற வோரினிய செய்யுள் பாடினர். அச்செய்யுள் வருமாறு:

67
'யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினுந் தங்கையர்க் கருள் வங் தனவாற் புதல்வர்தம் மழலை யென்வாய்ச் சொல்லு மன்ன வொன்னர் கடிமதி லாண்பல கடந்த நெடுமா னஞ்சிரீ யருளன் மாறே?
(ւ) ու, 92.)
இதன் கண் ஒளவையாருடைய அடக்க முடைமையும்
அதியமானுடைய அருளுடைமையும் இன்புறற்பால,
இச்சான்றே ரிருவருங் தமிழர்க் கணிகல மாவர்.
எழினிசே யெழினி.
இத்தகைய வள்ளற் றலைவற்கு நெடுநாட்பிற் கற்பின் கொழுந்தாகிய நாகையார்பாற் செல்வமகன் பிறந்தான் அவன் பெயர் பொகுட்டெழினி யென்பது, பொகுட்டு= மலை, பல மலைகட்குத் தலைவ னுகிய வெழினியென்ப தப்பெயர்ப் பொருளாகும். அன்றி மலைபோலக் கலங்காது நின்று பகைவர்களைப் புறக்கொடைகாணு மெழினியெனக் கருத்துக் கொள்ளினுங் கொள்ளலாம்.
தனக்கு மகன் பிறந்த போது, போர்க்களம் புக்கிருந்த நெடுமான் விரையவந்து மகவைக் கண்ணுற்று மகிழ்பூத்துச் செய்வ செய்துவிட்டுப் போர்க்களம் புக்கான். இவன் தவ

Page 40
68
மகன் பிறந்தது கண்டவாற்றை ஒளவையார் புகழ்ந்து
பாடியுள்ளார்.
வாழையடி வாழையாகப் புலவர்களைப் பாதுகாத்தற்
பொருட்டு வேண்டப்பட்ட மகனலே புலவர்களி னெண்ண
மும் அதியமா னெண்ணமும் கிறைவெய்தின.
தாயார் நல்லிசைப் புலவர் ; தந்தையோ புலவர் தோழன். ஆருயிர்ச் சுற்றமோ புலவர். இங்ஙனமாக அதியமான் மகன் பொகுட்டெழினி தன் குடிப்பிறப்புக் குரிய வள்ளன்மையு மாண்மையும் பொறுமையுமேயன்றிக் கல்விப் புலமையுங் கட்டிளமையிலேயே கிரம்பப் பெற்றி ருத்தல் வேண்டுபென்பது சொல்லாமே பெறப்படும்.
அடுத்தடுத்துப் பழுமரத் தீண்டும் பறவைபோலப் புலவர் பலரும் வந்து மொய்த்துப் பலப் பல பாட்டு முாையு முழங்கு மிடத்திலே பொகுட்டெழினிக்குக் கேள்வியுணர் வெய்து தற்குக் குறையில்லை.
இங்கினங் கல்வி கேள்விகளிற் சிறந்து வளரும் பொகுட்டெழினிக்கு இயல்பாகிய அடக்கமு மொழுக்கமு நன்கு நிலைபெற்று வளருமென்பதற்கோ ரையுறவில்லை.
v
எல்லா நலங்களானுந் தந்தை தாயர், புலவர், பொது மக்களெல்லாரையு மகிழ்வித்து வர்தான் பொகுட்டெழினி,
இவன் றர்தை போன்றே யிவனுங் தமக்குக் களை கணுவா னென்பதனை யிவனதிளமையிலே கண்டு மகிழ்ந்த னர் புலவர். * விளையும் பயிர் முளையிலே தெரியும் ? * தொட்டிற் பழக்கஞ் சுடுகாடு மட்டும் '

69
* செந்நெல்லா னய செழுமுளை மற்றுமச் செந்நெல்லே யாகி விளை தலா -னங்நெல் வயனிறையக் காய்க்கும் வளவய லூச ! மகனறிவு தங்தை யறிவு ?
(நாலடியார். 367) என்ருங்கே அதியமான் மகன் அதிய மானின் வேருவ தெங்ஙனம் ?
அஞ்சியுந் தன்மகனே மணமெய்துவிப்பதன் முர் துறவே கற்பவெல்லாங் கற்கச் செயல் வேண்டுமென்னும் வேட்கையானே அவனை வேறு தொழிலிற் புகவிடாது கற் கச் செய்து வந்தான். அங்கின மன்முயிற் பின்பு கற்பதற் குச் செவ்வி தலைப்படாது போம்.
* ஆற்று மிளமைக்கட் கற்கலான் மூப்பின்கட் போற்று மெனவும் புணருமோ -ஆற்றச் சுரம்போக்கி யுல்குகொண்டா ரில்லையே யில்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார் ??
என்னும் பழமொழியை நன்குணர்ந்தவ னதியமான்.
*இளையா னடக்க மடக்க " மென்பதற் கெடுத்துக் காட்டாகித் திகழ்ந்தான் பொகுட்டெழினி. ஒரு முறை ஒளவையார் நகைச்சுவை படப் பாடிப் பொகுட்டெழினி பின் அடக்கத்தையும் ஆண்மையையும் பாராட்டிப் பாடிய பாட லறிந்தின்புறற்பாலது. அப்பாட்டு வருமாறு.
* அலர்பூந் தும்பை யம்பகட்டு மார்பிற் றிரண்டுரீடு தடக்கை யென்னை யிளையோற் கிரண்டெழுத தனவாற் பகையே யொன்றே

Page 41
பூப்போ லுண்கண் பசந்துதோ னுணுகி நோக்கிய மகளிர்ப் பிணித்தன் முென்றே விழவின் முயினும் டடுபதம் பிழையாது மையூன் மொசித்த வொக்கலொடு துறைர்ேக் கைம்மான் கொள்ளு மோவென வுறையுண் முனியுமவன் செல்லு மூரே ’ என்பது (புறம், 96)
பொகுட்டெழினிக் கிரு பகை யெழுங்தனவாம்; ஒன்று : அவன் தன்னைக் கண்ட மங்கையர் காமுறத் தான் காமுருமையிற் பிணங்கி முனிந்த அம்மெல்லியன் மக ரோ டுண்டாய பகை. மற்முென்று : அவன் முன் சென்று பொருது வென்றுகைக் கொள்ள கினைத்த பகைவ ரூரோ டுண்டாயது. எனவே பொகுட்டெழினி பகைவர் வழிப் படாதது போன்றே மகளிர்வழிப் படாதவ னென் பது பெறப்படுகின்றது. இங்கின மிருபாலார் பகையையும் வெல்லு மிருபே ராண்மையு மொருங்குவாய்ந்த பொகுட் டெழினி புலவரும் பொதுமக்களும் நல்கும் புகழ்க்கும் வாழ்த்துக்குஞ் சிறப்புக்குங் தகுதியுடையவனுயினன்.
நெடுமா னஞ்சிக்குக் கல்வி, யார்வமும் கல்வி சான்ற மனைவியும் கல்வி சான்ற புதல்வனுமென் றிங்நஎன மெல்லாம் வாய்ந்திருத்தல் பிறவிடத்துக் காண்ட லரிது
இஃதவன் புலவரை வழிபட்டு வருவதன் விளைவே யாம்.
புலவர்கட்கு வழிபாடு செய்வதணு லிறைவன் றிருவுரு ளெளிதிற் கிடைக்குமென வேனைக் குறுமன்னரும் நெடு மன்னரும் பிறரும் வியந்து தம்மு ஞரையாடிக் கொள்வர்.

71
மக்களாகப் பிறக்கி னெடுமா னஞ்சிபோற் பிறத்தல்
வேண்டும் ; இன்றேல் விலங்காகப் பிறத்தலே மேலாகு மெனப் புலவர் பிறர்க் கெடுத்துக்காட்டி யிடித்துரைப்ப.
"எல்லார்க்கு நன்மும் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வர் தகைத்து?
(முப்பால். அடக்கமுடைமை. 5) என்றவாறே செல்வன் மகனுகிய பொகுட்டெழினி தான் சான்முேர்மாட்டெல் லாம் பணிவுடையணுதல் செல்வத்தின்மேல் வேறுமொரு செல்வமாகத் திகழ்ந்தது.
இங்ஙனம் பிறப்புச்செல்வம், கல்விச்செல்வம், கேள் விச்செல்வம், பொருட்செல்வம், கொடைச்செல்வம்) வென்றிச்செல்வம், புகழ்ச்செல்வமென் றின்ன பல செல்வ மெய்திய பொகுட்டெழினி தன் முய்தங்தையர்க்கே யன்றி யேனையெல்லார்க்குந் தான் செல்வமா யிருந்தான்.
மணச்செவ்வியுற்ற மகற்கு மணஞ் செய் வித் துப் பார்த்து மகிழ்தல் வேண்டுமென அதியமான் அவாயினுன், தனக் கொருமகன்; தானுே அடிக்கடிப் போர்த்தொழிலி லிடுபட் டொழுகுவதனனே தன் னிலையாமையையு மெண்ணக் கடவன்; மக்லும் போர்விழைந்து கிற்கின்றனன் ; இங்ஙனம் பலவுமெண்ணி நோக்குக் தங்தை தன் னருமை மகிற்கு விாைய மணஞ் செய்வித்தலை விழைதலியல்பே.
அவனிவ் வெண்ணத்தினைத் தன் மனைக்கிழத்தியார் வயி னுரைத் துசாயினன்.

Page 42
72
அவருங் தம்மகன் மணங்காண்டல் விழைவுடைய
ாாயினுங் தர்நுண்ணுணர்வாற் சொலற்பால சொல்லுவ ராயினர். .
நம்மகற்கு நாம் மணஞ்செய்வித்தன் முறையன்று; அவனே தனக்கேற்ற வாழ்க்கைத் துணைவியைக் கண்டு தேர்ந்துகோடல் வேண்டும்; அதுவே யவனுக்கும் நமக்கு மிக்க மகிழ்வு பயப்பதாம். அவனு மவ்வாறே செய்து கொள்வான். எல்லா மூழ்வினை யிருந்தவாறே யவ்வங் நோங் காலம் வந்தா லொருவர் முயற்சியும் வேண்டாமே தாமே முடிந்து விடும். ஈமக் கவ்வாறுதானே யமைந்தது; நாமேன் அது பற்றி கினைவுகோடல் வேண்டுமெனச் சொல்லிவிட்டுத் தமிழ்ச்செய்யுளின் நயங்களை யெடுத்துக் காட்டி மகிழ்வித்து மகிழ்ந்தனர். அதற்கிடையே ஒரு புலவர் பரிசிறகு வந்துளாரெனக் கேட்டான்; அஃதறிந்து களிகொண்டு அப்புலவரையு மங்குவரச்செய்து வரவேற் றுப் புலவரோ டிருவரு மளவளாவி யின்புற்றனர்; அப்பொழுதுதானே தன் படைத்தலைவன் வங் தேதோ சொல்லலு முடனே போர்க்களம் புறப்படக் கோலங் கொள்ள லாயினன்.
கோலஞ்செய்து புறப்படாகிற்புழி யான் போருக்குப் போய் மீண்டுவருங்காறும் புலவ ரிங்கிருத்தல் வேண்டும். புலவருடைய பொக்கணங்களை வாங்கிவைம்மின் ; அவர் கேட்பினுங் கொடுத்தல் வேண்டாவெனப் பணித்து விட்டுப் போர்க்களம் புக்கான், தான் வென்றுகொணரும் யானை,
குதிரை முகலியவற்றையெல்லாம் புலவர்க்குப் பரிசி

8
லளித்தல் வேண்டு மென் னு மவாவினனேயே நெடுமா னங் வனங் கூறிச்சென் முன்.
அதியமான் போர்க்குப் புறப்படுங்காற் பெரும்பான் மையுங் தன் மகனை யில்லத்து வைத்து விட்டுப் போவது வழக்கம். í
அவனில்லம் புலவ ரிடைவிடாது வந்து போகும் பொதியிலாதலிற் புலவரைப் பேணவும் புலவர்பாற் கல்வி நுண்பொருளை யுணரவுங் தன்மக னில்லத்திருத்தல் வேண் டுமென்பதுதா னவ னெண்ணம். · நெடுமா னஞ்சியாதல் அவன்மகன் பொகுட்டெழி யாத லில்லா திருப்பிற் பரிசில் பெறுவான்வந்த ஒளவையா ரொழிந்த ஆண்பாற்புலவர் பரிசில்பெருது மீண்டு சென்று விடக்கூடும். அவ்விருவருமங்கிருப்பினு மில்லாதொழியினும் புலவர்க்கு வேண்டுமளவு பரிசில் கிடைப்பத் தடையில்லை யாயினும் பெரும்புலவர். அவ்விருவரு ளொருவரு மில்லா மல் வாங்கும் பரிசிலைப் பெறவிழையார். அவர்தம்மோ டளவளாவித் தங் கல்விப்புலமைகண்டு மகிழ்ந்து நேர்கின்று கொடுக்கும் பரிசிலையேபெற விரும்புவர். மற்றைப் பரிசிலை வாணிகப் பரிசிலென விகழ்ந்து வாங்கார், முன்னெரு முறை அதியமான் றம்மைக் காணுது வரவிடுத்த பெரும் பரிசிலை யிகழ்ந்து புறப்பட்டுவிட்டனர் பெருஞ் சித்கிான ரென்னும் புலவர். அதுமுதற்முெட்டுப் புலவர் யாரையுங் தானே கண்டுகொடுத்து வருவன் அதியமான்.
அஞ்ஞான்றைப் புலவர்க்குப் பரிசி லளிப்பதே தொழி லாகப் பூண்ட புரவலர் பலர் வாழ்ந்தமையானே தமக்கு வரிசையின்றிக் கொடுக்கும் பரிசிலைப் புலவர் வேண்டாது மீளிலு மவர்க் கொருமுறையு (POyg.

Page 43
74
இவ்வாறு மனையகர் தங்கிய பொகுட்டெழினி தன் அன்னயார் புலவரோடு தமிழாராய்ந்து கொண்டிருக்குங்காற் முனு முடனிருந்து தமிழாராய்வான். இடையே சன் மணச் செய்தியைப் புலவர் மகிழ்ந் துசாய்வரத்தலைப்ப்ட்டா ராயின் அவனங்கு கிற்கமாட்டான் ; மிக்க நாணமுடைய வன்.
ஒளவையார் வர்து விட்டாற் போதும். யான் இன்ன தற்காகப் போய்வருவேனெனக் கூறி விடைபெற்றுப் புறப் பட லுறுவான் பொகுட்டெழினி.
ஒருநாள் அவன் ஒளவையார்பால் யான் இன்று போர்க்குப் போகல் வேண்டுமெனப் பொய்யுரைத்தான் ; அதற்கு ஒளவையார் ? நல்லது யான் விருங்காற் பெரும் படை திரண்டு கிற்பக் கண்டேன். இன்று நினக்கு வெல் லுத லரிதாயிருக்கு மென்றனர்; அவர் குறிப்புணர்ந்து நாகையார் புன்முறுவல் பூப்ப அஃதுணர்ந்த வவன் யா னதியமான் மரபின னல்லனே வென்ச் சொல்லி அன்முெரு வாறு தன் வெட்கத்தினின்றுங் தப்பித்துக் கொண்டான்.
வேருெரு நாளினே யெழினி ஒளவையார்பால் 'இன்றியான் வேட்டைபோய் வருவென் விடை தருக" வென மெய்யே யுாைத்தான். “இன் றெனக் கியாது கொணர்தி' யென வவர் விணுயினராக அதற்கவன் 'நுமக் கின்று சிறந்த யானைப்பரிசில் கொணர்வ? லென்ன, ஒளவையார் 'கின்வேட்டம் வாய்ப்ப தாகுக; அவ்யானை கினக்கே யுரித்தாகுக ’ வென வாழ்த்தினர். அவரது குறிப்புப்பொரு ஞணர்ந்து கொண்ட வெழினி நாணி முகங்கவிழ்ந்து சென்ருரன். அதுமுதல் ஒளவையார்பால் யாது கூறியுர் தப்ப கினையானகி வாளா வொடுங்கி கிற்பன்.

இங்ஙனம் பொகுட்டெழினியைக் கா ண் ட லும் ஒளவையார்க்கு வழிசடை மெலிவும் பட்டினியயர்வு மெல் லாங் காணுதவாறு தலை குளிர்ந்து விடும்.
பொகுட்டெழினி தான் எத்துணை நாணமுடையவனுக விருக்கின்றனே அத்துணை யெண்ணமிகுதி தான் மண முடிக்க வேண்டு மங்கையைப் பற்றியதாகவே யிருக்கு மவனுக்கு.
என்னை நாணமென்பது காதற்காம மரும்பிய அரும்பே யன்ருே? அவ்வரும்பு மலரத்தொடங்கி கிலை யா கி ய போதுதான் காமத்தினெழு கினைவு. அங்கினவின் மலர்ச் சியே காம நுகர்ச்சி. அம்மலர்ச்சி மணத்தொடு புலப்படுவ
፰jff`t D•
அவன் தான் மணமுடிப்பதாயிற் றன்றுயார் போலவும் ஒளவையார்போலவுங் தமிழ்ப்புலமையும் இனிய நற்பண்புக ளுமுடைய நங்கையையே மணமுடிப்பது; வனப்புத் தேவை யன்று. அங்கின மன்முயின் மணமென்பதே வேண்டா; தாய்தந்தையர் பணிசெய்தலே சாலுமென்பது தான் அவன தாராய்ச்சியின் முடிபு. ஆராய்ச்சிதானே முடிந்து விட்ட பிற் பாடும் அவனுராய்ச்சியை முடிப்பதில்லை.
பொகுட்டெழினி வேட்டைக் கானகஞ் சென்று வில் வளைத்து வில்லிற் கணைதொடுத்து யானை வாவை யெதிர் நோக்கி யிருப்பான்; அவ்யானை வரும்வரையுங் கொன்னே பொழுதுபோக்காது தன்மணமங்கையைப்பற்றிய ஆராய்ச்சி கினைவோடே தங்கியிருப்பான். அப்பொழுது அவன் இங் நுனம் கினைக்கும்.

Page 44
தமிழ்ப்புலமை யில்லாத பெண்ணை மணந்து வாழ்வது பேயோடு வாழ்வதனை யொக்கும். அவளொடு ராடொறு மென்ன வுரையாடுவது? சாமம்பற்றிய கட்டுரை தான் எவ்வளவு பொழுது சொல்லிக்கொண்டிருக்க முடியும்! அதுதானுந் தமிழ்ப்பாட் டுரை நயம் போன்றிருக்குமா? எட்டுணையு மிராது. ஆகவே பெரும்பாலும் பொழுதெல்லா மவளோடு வெற்றுரையாடல் வேண்டும்; அது முடியாது போனல் ஒருவர்க்கொருவர் பூசல் விளைத்து வசைமாரி பெய்துகொண்டிருக்கல் வேண்டும். அதனுல் விளையுங் தீங்கோ சொல்லொணுதது. அஃதில்லையென்முற் பிற ரொடு வம்புரையாடல் வேண்டும். அதுவும் பெருங்கேடு களை விளைவிப்பதாகும். கல்லாத மகளிர் தாமேயு மறிந்து ஈடவார்; அறிந்து சொல்லுவார் சொல்லையுங் கேட்டு ஈடவார். தாங்கொண்ட கொள்கையை முதலைபோலப் பிடித்துக்கொண்டு விட மாட்டார். பிற  ைரயே மாற் அறுதற்கு கினைத்தவுடன் மு த லை க் கண் ணி ர் விடு வர். தம்மைத்தாம் வியந்துகொண்டிருப்பர். சிற்றின்பத் தின்பொருட்டுத் தம்மைப் புலைய ருற்று நோக்கினலு மதனுற் பெருமையுஞ் செருக்குங் கொண்டு அவர்பால் மிக விரக்கப்பட்டு அவர் வேண்டுகோட் கிணங்கவே முனைந்து கிற்பர். பின் விளைவ தெண்ணுர். காம நுகர்ச்சியுள்ள சிறுபொழுது தவிர மற்றைப் பொழுதெல்லாங் கவலை யின்றி யின்பமா யிருக்குமுறை யென்ன வென்பதனை யெண்ணிப் பாரார். அவர் தம்மைப் புகழ்ந்துரைப்பார்க்கு வேண்டுவனவெல்லாஞ் செய்வர். தம்போலுங் கல்லாப் பேதைப் பெண்டிர் சொல்லு மாற்றத்தை விரும்பிக் கேட் டொழுகுவர்; தங்கணவ சாடவராதலால் அவருரையையுங் கேளாது புறக் கணிப்பர். வெகுண்டால் அளவு கடப்ப

ሻ7
வெகுள்வர்; சிரித்தால் அளவு கடப்பச் சிரிப்பர்; அழுதால் அளவுகடப்ப அழுவர் ; சொன்னுல் அளவுகடப்பச் சொல் லுவர்; ஒரு வரையறையி னிற்க மாட்டார்; அருவருக்கத் தக்க நகை பலவற்றையு மணிந்து தங்கணவர் கண்ணிற்கு எவ்வாறிருப்பினுந் தங் கண்ணிற் கழகெனத் தாமே கினைத் துக்கொண்டிருப்பர். மூக்கு வழும்பு வடிந்து மூக்குத்தி யெல்லா மொட்டி கிரம்பி மூக்குக்தி பாசி பிடித்திருந்து ராறினுலும் யாரு மோர்து பார்க்கப் போவதில்லையென்னுங் துணிவுடையவர். அவர் தம்மை பென்னகுற்றஞ் சொல்லிக் காட்டினு மவற்றைத் திருக்க கினை பாது சிரீத்தவளவில் வாளாவிருப்பர். இத்தகைய பெண்களொடு சேர்ந்திருப் பார் இவரினும் பேதைய ராவர். இவர்க் கெங்ஙனம் வாழ்நாள் செல்லா கிற்குமோ? பெண்களொடு கூடுவ தென்பது மாந்தர்க்கே சிறந்த அரும் பெருஞ் செயலோ ? நாய்க்கும் பேய்க்கு மியல்பானதே. அவ் விழிசெயலைத் தம் பேராண்மையையும் பேரழகையும் விளக்குவதென மடவோர் கினைக்கின்றனர். அது க ம் வி ல ங் கி ன் றன்மையை விளக்குவதென கினைக்கின்றிலர். அவரறி வவ்வளவுதான். தமிழ்ப் புலமையில்லாத மங் ை யரை மணப்பவர் எவ்வாற்ருனும் வறுமையும் நோயும் பகையும் கவலையு மணப்பவராவர். கல்லா வாடவர் கல்லா மகளிரை மணந்து வாழ்க, யான் புலமையில்லாதவளை மணஞ் செய்த லில்லை யென்ப துறுதியானதே; யென விங்ஙனம் கினைந்து கொண்டிருப்பான். ஆயிடை யானை பல வந்துபோகும் ; அவை யிவனுக்குப் புலணுவ தில்லை; இவனை யவ் யானை அஞ்சுதலு மிலலைத்தாக்குதலு மில்லை. நடுகல்லென கினைத் திருக்கும்போலும், இங்ங்னஞ் செவ்வி வாய்த்த பொழு தெல்லா மங்கையருடைய ஈன்மையோ தீமையோ கினைந்து

Page 45
78
முடிவு செய்யாதிருப்ப தில்லை யெழினி. கல்வியாற் காமத்தை யடக்கியாள்வோர் ககாத மகளிரைக் காமுரு?
மையின் அவரிங்ஙன மாராய்த லியல்பேயாம்
தமிழ்ப் புலமையுந் தன் பாற் காதலுமுடைய மங்கை தன்னினத்தைச் சார்ந்தவ ளல்லளாயினு மவளையே மணஞ் செய்துகொள்ளல் வேண்டு மென்பதுதான் எழினியி னுளக் கிடை ஆன லவன் போர்க்கஞ்சாத மள்ள னதலானும் தந்தையி னுட்டுக்குத் தலைவ னுதலானும் தான் விரும்புங் காதலி அவள் தந்தைக் கொருமகளாக அவனும் பெருஞ் செல்வமுடையவனுய் அவன் செல்வமெல்லாக் தனக்கே
கொடுத்து மகட் கொடுத்தல் வேண்டுமென நினைப்பதில்லை.
அதியமான் மரபிற் பிறந்தவரெல்லாரு மெப்பொழுது முன்னேற்றமாகிய சீர்திருத்சத்தினையே யாராய்பவர். ஆராய்வதனுேடன்றி யாராய்ந்தவாறே செய்தலுந் துணிவர்: தம்மைச் சார்ந்தோரையு மங்ஙனமே செய்விப்பர். தம் முன்னுேர் வழக்க மென்பதற்காக யாதனையும் விடா மற் பற்றியிருக்க வேண்டு மென்னு மெண்ண மதியமான்களுக் கில்லை. இத்தகைய பேரறிவில்லையான லகியமான் மரபி னர்க் கிவ்வளவு தலைமையும் வெற்றியும் புகழு மின்பமு மெய்த முடியா வல்லவா?
பொகுட்டெழினியி னெண்ணம் ஒளவையார், நாகை
யார், நெடுமானஞ்சி முதலிய பலர்க்குங் தெரிந்திருந்தது,
அதன லவன் மணக்கைப் பற்றி யாதுஞ் சொல்லிக் கொள்ள மாட்டாதிருச்தனர்.

79
கொல்லி மழவருள் அதியமான் மரபைச் சார்ந்தவ ால்லாத மழவரெல்லாம் பெரும்பாலுங் கல்வியில்லாதார்; ஆறலை கள்வர்; ஆடவரே யங்கினமாயி னல்லிசைப் புலமை மெல்லியலார் கிடைக்க லெங்கனம்? அதனுற் பொகுட் டெழினி யிங்ஙனம் நீள கினைக்கவேண்டியதாயிற்று,
பொகுட்டெழினி யன்னயாரும் அதியமான் குடியிற் பிறந்த நங்கையின் மகளா ராயினமையானே அவர் நல் லிசைப் புலவ ராயினர். மின்முயின் நெடுமா னஞ்சியும் மணஞ் செய்திரான் ; பொகுட்டெழினியும் பிறந்திரான் ; அது நல்லிசைப் புலவர் பலர்க்கும் பெருங் குறையாய் முடிந்திருக்கும். இறைவன் றிருவருண் முன்னின்றது.
நெடுமா னஞ்சி தனக்குரிய வேருெரு மலைநாட்டு மருங் கினைப் பாதுகாத்து வருமாறு பொகுட்டெழினியைப் பணித்தான். பொகுட்டெழினி அதற் குடன் பட்டுக் குதிரைமலைத் தகடூரை விட்டுத் தனக்களித்த பொகுட்டி ன்மே லமைக்கப்பட்டிருந்த கோட்டையிலிருந்துகொண்டு படைக்காவலோடு அம்மருங்கினை யாண்டு வந்தான். அங் குப் பொகுட்டெழினிபாற் புலவர்பலரும் போய்ப்பாடிப் பரிசில் பெற்று மீள்வா ராயினர்.
தங்தைப்ோலவே மைந்தனு மள்ளன்; வள்ளல்; அறி ஞன்; சான்றேனெனப் பொகுட்டெழினி புகழ் நாடெங் கணும் பாவிற்று.
ஒருராட் பொகுட்டெழினிமேற் பாடப்பெற்ற வொரு பாட்டுவரைந்த மையிதழைக் கொணர்ந்து அவற்குக் கொடுத்தனள் ஒரு பெண் அதனை வாங்கி அதன் கண் வாைக்கிருத்த செய்யுளி னினிமையையும் தன்புகழையு

Page 46
80
முணர்ந்து மகிழ்ந்து கீழ்க் கையொப்பத்தைக் காண்டலு மவற் கெல்லையற்ற வியப்புங் காதலும் மகிழ்வு மொருங்கே பொங்கின.
கையொப்பம் இது பாடியது பொகுட்டெழினி யம் மான்மகள் பொகுட்டிளம் பாவை யென்றிருந்தது. அவளு டைய தந்தை பொகுட்டெழினி தாயார் நாகையா ருடன் பிறப்பாளன். இங்கினர் தன் னம்மான் மகள் புலமை சிறந்தவ ளொருத்தி யுளளெளத் திானதுவரையுங் கேள்வி யுற்றதில்லை; கேள்வியுற்றிருந்தால் மணமகளமைப்பு ஆராய் ச்சியி லீடுபட்டு மூளைச்சோர்வும் யாக்கைமெலிவு முற்றிருந் திரான்.
யாவர்க் காயினுந் தன்கினைவு வாய்க்கக் கூ டி ய கா யிருக்குமானுல் அதனைப்பற்றிய கவலைபுள்ள மதற்கு முன்
னர் வருத லியல்டாகாகின்றது,
அவள் பொகுட்டெழினியின் கல்வி, நற்பண்பு முத லிய சிறப்புக்களாற் கவரப்பட்ட வுள்ளத்தளாய் அவன்மேற் றனக்குள்ள காதற்கிழமை தோன்றவோ ரகத்திணைத் துறைப்பொரு ளமைத் தினியதொரு பா ட் டு ப் பா டி வரைந்து தோழிகைக் கொடுத் துய்த்திருந்தனள்,
அங்ஙன முளப்பாடு முயற்சியு மின்றித் தலைப்பெய்த நிகழ்ச்சிகண்டு தன்னினை வைக் கடைக்கூட்டிய விறைவன் றிருவருளை வியந்து தொழுதுகொண்டான்.
செய்யுள் கொணர்ந்த தோழிக்கு முகமலர்ச்சி காட்டிச்
சிறப்புச் செய்து செலவிடுத்தான். அவளும் ஈகையரும் பிய முகத்தளாய் விடைபெற்றுச் சென்றனள்,

8.
எழினி கன்மேற் பாடிய தன் னம்மான் மகளின் செய் யுளைப் பாடுவதும் பொருளாராய்வுதும் நயங்கண்டு மகிழ் வதுமே தொழிலாக விருந்தான். கற்றேர் செய்த செய்யு ளருமையைக் கற்ருேரே புணர்வர். மகப்பெறுதலி னரு மையை மலடி யறிவளோ ? ۔۔۔۔
வேமுென்றினு மவனுள்ளஞ் செல்லவில்லை. காத லின் பங் கைகூடப்பெருதவர்தாம் வீடுபேற்றின்பமே மேலெ னக் கூறுவரென வொரு மறுப்புரையுங் கண்டான்; உணவு
மறன் கான் ; வேட்டை மறந்தான்.
பொகுட்டெழினியது கிலைமையை யுள்ளவா றறிய முடியாதவர் இவன் நன்கு கற்றுணர்ந்து புலவர்ப் பேணும் பேரார்வ முடையணதலிற் றுறவுபூண் டுலக வாழ்க்கையை விட்டுத் தவஞ்செய்யு மெண்ண முடையவனு யிருக்கின் மு
னெனச் சொல்லிக் கொண்டனர்.
இன்னண மாகிய வெழினி தான் மணஞ்செய்யு நாளைக் குறித்துக் குதிரைமலைக்குப்போய்த் தகடூரையடைந்து தன் முய்தங்தையரைப் பணிக் துணர்த்தினன்.
அவரு மிங்னெம் நடைப்ெறுமென முன்னமே யுணர்ந் தவர்களாதலின் வியப்பின்றி மகிழ்ச்சி மீக்கூர்ந்தனர்.
ஆயினும் ஈம் ஒளவையார் வந்த பிற்பாடுகான் திருமண நாளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டு மென்பதுதான் அஞ்சிக் கும் நாகையார்க்கு மொருதலையான வெண்ணம். ஆதலால் ஒளவையார் வந்தவுடன் றிருமண விழாவை வைத்துக் கொள்ளலாம்; அவர் வந்தவுடன் அவரொடு யாம் வருது மெனத் தமப்பன்கூற மகனும் உடன்பட்டு விடைபெற்றுத் தங்தை தாயரைத் தொழுது மீண்டான்.
6

Page 47
82
எழினிக்கு மெளவையா ரின்றி மணவிழா மேற்
கொள்ளலை விரும்பமாட்டா னென்பது சொல்ல வேண்டுவ
தில்லை.
ஒளவையாரை யதியமான் இதுபொழுது தொண் டைமா னிளந்திரைய னென்னு மன்னன்பாற் அாதுவிடுத் திருக்கின்றனன். தொண்டைமா னிளங்திரையன் காஞ்சியி லிருந்து காஞ்சியைத் தலையூராகவுடைய கொண்டை நாட்டை யாண்டு வருபவன்; குறுகில மன்னருண் மிக்கவன். ஆயினு மவன் மலையமான் றிருமுடிக் காரிபோல நெடுமுடி புனையு முரிமையுடையவனனன்.
/ தொண்டைமா னென்பது குடிப்பெயர். இக் குல முதல்வ னுகிய தொண்டைமான் நாகர்பட்டினத்தை யாண்டுவந்த நாகர் தலைவன் மகளிடம் புகார்ச் சோழன் மாவண்கிள்ளிக்குப் பிறந்தவன். V
இவன் அஞ்ஞான்று காஞ்சிநாட்டை யாண்டுவந்த தொடுகழற் கிள்ளிக்குங் துணையிளங் கிள்ளிக்கும் பின்னர்க் சாஞ்சிநாட்டுக்குத் த%லவனுக மாவண்கிள்ளியா லமர்த்தப் பட்டான்.
மாவண்கிள்ளிக்குப் பாணர்மன்னன்மகள் சீர்த்தி யென்பவளிடம் பிறந்த மகன் முன் மணஞ்செயு முன்னரே கொலையுண் டிறங் தமையானும் புகார் கடல்கோ ளுற்றத னலும் மீண்டுஞ் சோழ மன்னர் உறையூர்க் கோட்டையி னிருந்தே சோழனுட்டை யாட்சி புரியத் தலைப்பட்டனர்.
அதனுற் காஞ்சித் தொண்டைமான் சோழனட்டிற் பிரித்துக் காஞ்சி சாட்டுக்குத் தானே தனித்தலைவனனன். அது முதற்முெட்டுத் தொண்டைமான் முடியுடை மன்

88
னர்க் குரிய சிறப்பினைப் பெற்றன். சோழனடு கூறுபட் டது. காஞ்சிநாடு தொண்டைமான் பெயராற் முெண்டை
ராடெனப் பெயர் மாற்றி வழங்கப்பட்டது.
தொண்டைமான்வழி மரபினரெல்லாங் தொண்டை
மர்ன்களென வழங்கப்படுவர்.
காஞ்சியென்பது போராற் பெற்ற பெயர். வலிந்து போர்தொடுத்த பகைவரை யெதிர்சென்று பொருதல் காஞ்சி யெனப்படும், காஞ்சிப்போர் செய்து வெற்றியெய் திய களத்துப் படைக்கப்பட்ட வூர்ச்குக் காஞ்சியெனப் பெயரிட்டனர் தமிழர். அஞ்ஞான்று போர்த்திறம் பற்றி ஊர்கட்குப் பெயர் வழங்குசுலு மரபு. வஞ்சி, வாகை நொச்சி யென்னு மூர்ப்பெயர்கள் போர்ப்பெயர்களேயாம். வஞ்சி சோமான்களி னுார். ' கூகைக் கோழி வாகைப் பறந்தலை ? என்னுங் குறுக்தொகைச் செய்யுளால் வாகை யெனப் பெயரிய வூருண்டெனத் தெரியவருகின்றது. நொச்சி ஈழ்ப்டாணத்து வழங்கப்படுகின்றது. கீழை நொச்சி யென்பதனை இப்பொழுது ஈழ்ப்பாணத்தவர் கிளி நொச்சி யென வழங்குகின்றனர்.
இத் தூய தமிழ்ச்சொற்பெயராகிய காஞ்சியைப் பல்லவர் துணை பெற்ற பார்ப்பனர் தம் வடசொற்கேற்பப் பொருள் செய்து வடசொல்லெனச் சொல்லி அப்பெயர் வந்த வாற்றிற்குக் கதை படைத்து மலையென நிலைபெறுத்தி விட்டனர்,
அவர் தமிழரிட்ட பெயரைத் தாம் வழங்கினல் தமிழர்க்குத் தாங் கீழாயினவ ரெனப்படுவோம்; அங்கின மாகாது தமிழரைக் கீழாயினவ ராகவைத்துக் கொள்ளல்

Page 48
84
வேண்டுமென்னு மெண்ணக்காலும் பிறருடைய வுடைமை யெல்லாங் தம்முடைமை யென்பதற்குச் சான்று காட்டி வருந்தாது வைத் துப் பிழைக்க வேண்டு மென் னு மெண் ணத்தாலும் தமிழரிட்ட எப்பெயர்க்கு மேலே காமொரு பெயரிட்டே வழங்குக லவர் மரபு. அதை நிலைபெறுத்தப் பதினுயிரத்துக்கு மேற்பட்ட செய்யுட்களையுடைய பெரு நூலாக்கிக் கட்டிமுடித்தலே தொழிலாக வுடையவர். அக் கதையை யாராயுங் தமிழர் கதைச்சுலையிலே மருண்டு தஞ்குழ்ச்சி தெரியாதவாறு மறைக்கு மவர் திறமை டாராட் டற்பாலதே. அதனல் தமிழகத்தின துண்மை வரலாறு கெட்டு மறைவதனைச் சிறிது மெண்ணுர். மறைய வேண்டு மென்பதே யவர் நோக்கம். இவர் தங்கொள்கைக்கு அக் காலைத் தமிழமன்ன ரிடையூருய் கில்லாமைப் பொருட்டு அவர்க்குப் பூனூலிடுவித்து அவர் தூய ஆரிய மரபினரென் பதற்குப் போதிய சான்றுகளைப் படைத்து விரிவான கதை யொடு கூடிய புகழ்ச்சியாலே அவர்க்கு மகிழ்ச்சி தலைக் கேறச் செய்து அவர்களைத் தம்மொடு கூட்டிக் கொண்டு பல்லவர் முதலிய ஆரியமன்னர் தமிழகம் புக்கவுடன் அவர் பாற் சேர்ந்துகொண்டு தமிழ் மன்னருடைய மரபு வேரொடு தொலே தற்கு வேண்டுவன வெல்லாஞ் செய்து முடித்து விட்டனர். அவ்வளவு மிக்க வாற்றலுடையவர் தமக்குச் செய்யும் பேருதவிகளை மறவாது தமிழர் அவர் களைத் தம்முடைய கடவுண் மக்களாக்கிச் சிற்ப்புச்செய்வர். செய்ந்நன்றி மறவாமை யென்பது தமிழர்க்குப் போன்று வேறெங்காட்டார்க்கு மில்லை யென்ப திதனுற் பெறப்படும். காஞ்சித் தொண்டைமான் மகனே தொண்டைமா னிளந்திரைய னென்பவன். இவன் தன்றங்தை தொண்டை எானுக்குப் பின் தொண்டை நாட்டு மன்ன னணுன்.

85
மன்னனிள வலு மகனும் இளங்கோவென வழங்கப் பட்டனர். ஆகனல் இளங்திரைய னென்னு மடைமொழி யீண்டு மகன்முறைக் குறிப்பின்மே னின்றதெனக் கொள் ளல்வேண்டும். இளங் திரையனுக்குச் த  ைம ய னெ ரு வ னிருந்தானென்னுங் குறிப்பு யாண்டும் பெறப்படாமை
காண்க,
கடல்வழிவந்து தமிழகங் குடியேறினரைத் தமிழர் திசையரென வழங்கினர். நாகர் கீழைக்கடல் வழியாக வந்து தமிழகம் புக்கோராதலிற் றிாைய ராயினர்; நாகருண் முதலிற் றமிழகத்து மன்னனுகியது தொண்டைமானே யாதலின் அவன் திரையனென வேனை மன்னரால் வழங்கப் பட்டனன். இவ்வாற்ருனே காஞ்சிமன்னன் தொண்டைமா
னிளங்திரைய னெனப்படுவன்.
ஈாக ரினம் போாண்மையுடையதோர் வேட்டுவ ரினம். நாகு என்பது ஆவின்பெயர்களு ளொன்று. ஆவின் வயிற்றிற் பிறந்தவன் நாகன், நாகனச் சார்ந்தவர் நாகர்.
ஆ பலவற்றை 'முதலிற் பாதுகாத்துப் பேணிவந்த வொருதலைவனையே அம்முறைபற்றி நாகர் முதலில் நாக னென வழங்கியிருத்தல் வேண்டும். பின்ன ரவனே ஆமக னெனப் பிறர் புனைந்துரைத்தது பாவியதாயிற்றுப் போலும். சாகருள் வழங்கிய ஆமகன் கதையைக் கேள்வியுற்றே சீத்தலைச்சாத்தனர் தாம் பாடிய மணிமேகலையில் நாகனட்டு ஆமகன் கதை கட்டியிருக்கின் முர் இதனனே நாகன், சாகர், என வழங்குஞ் சொற்பொரு ஞண்மை துணியப் படும்.

Page 49
86
இதனை யறியாதவரும் அறிந்தாலுந் தமக்கேற்பக் கதைகட்டி மாற்றுதலே தொழிலாக வுடையவரு மாகித் தமிழர்க்குப்பின் னுகனுட்டைக் கைப்பற்றியவராகிய ஆரியப் பல்லவருங் கலிங்கரும் தம்மொழிக்கேற்ப நாகர் பாம்படை யாள முடையவர்; அதனுல், நாகரெனப் பெயர் பெற்றன ரென வைத்து அவர்க்குப் பாம்புமுடி யடையாளமும் அவ்வடையாளமுடைய மண்ணிடும் படைத்துத் தமிழ்ச் சொற்பொரு ஞண்மை வரலாற்றினை சாகரையுமுட்பட எல்லாரையு மறக்கச் செய்துவிட்டனர். அது முதற் முெட்டு நாகருங் தம்மை யங்ஙனமே சொல்லிப் பெருமை கொள்வா ராயினர். அவ்வாறே யங்காட்டுப் பாடல்களும் வழங்கலாயின. தமிழின்முென்மை புதையுண்ணுத லாயிற்று ஆரியர் வருகைக் கெத்துணையோ நூற்ருண்டுகட்கு முற்முெட்டே தமிழரும் ராகருங் தம்முட் டொடர்புடைய ராமெனக் கருதப்பட்டிருந்தனர். நாகுமொழியுங் தமிழ் மொழியைச் சார்ந்ததே. ஆரியராலு மாாபியராலு மது மலையாளம்போலத் தமிழ்மொழிக்கு சேர்மாறயிற்று. தமிழ் மொழியின்பாடே யிங்ஙனமாயின் நாகுமொழியைக் கூறல் வேண்டுமோ ?
அத்தகைய நாகர்பாற்பட்ட காஞ்சித்தொண்டை மான் கடியலூர் உருத்திரங்கண்ணனுராற் பாடப்பெற்ற பெரும்பாணுற்றுப்படைக்குத் தலைவன் , தமிழ்ப்புலமை சிறந்தவன் ; நூலாசிரியன் ; நல்லிசைப்புலவரு ளொரு வன்; இவன் பாடிய பாடல்கள் புறத்தினும் நற்றிணையினுங் தொகுக்கப்படும் பெருமைவாய்ந்தன.
தொண்டைமானுட்டுக்குள் ஆரியராகிய பல்லவர் ஆங்காங்குப் புகுந்து குறும்புசெய்து வருவதனுல் அவர்க

87
ளடங்கியொழுகுவதற்காக அவர்களை யாங்காங்குக் குடி யேற்றிச் சிலவுரிமைகளு மவர்க்குக் கொடுத்துத் தனக்குத் துணையாக்கிக்கொண்டிருந்தான் தொண்டைமான்,
அஃதுணர்ந்த அதியமா னெடுமா னஞ்சித் தங் தமிழ கத்துக்கு வருங் கேட்டையுணர்ந்து பொங்கி ஆரியரைத் துரத்தாது துணையாக்கிக் கொள்வதாயின் மலையமான் கோவலூர்போலக் தொண்டைமான் காஞ்சியு மழிக்கப்படு மென்பதனைச் சொல்லித் தொண்டைமான் கருத்தறிந்து வருமாறு ஒளவையாரை யவன்பா லதியமான் மாது
விட்டான்.
அஞ்சியின் சிறந்த கொள்கைக்குத் தொண்டைமானை யிணங்குமாறு சொல்லி அதியமானுந் தொண்டைமானுங் தம்மு னிகலிப் போர் பொராது தமிழகத்தையுங் தமிழரை யுங் தமிழ்மொழியையும் பாதுகாக்குங் கடமையை வற் புறுத்தி வால் வேண்டுமென் றருள்கூர்ந்தே அதியமான்
வேண்டுகோட்கு ஒளவையா ருடன்பட்டனர்.
ஒளவையாரைத் தூதுய்த்தலாலே காஞ்சியை யெறி யுங் கருத்து அதியமானுக்கில்லையென்பது தெளிவாகின்றது. தொண்டைமான யெவ்வாற்ருனுக் தன் கொள்கைக் கிணங் கும் ஈட்பாளனுக்கிக் கோடல்வேண்டு மென்பதே அதியமா னுேக்கம். தொண்டைமா னில்லையானுற் பல்லவரைச் சிறிதுங் தடுக்க வியலா தென்பதனையும் தொண்டைமான் பல்லவரோடு சேர்ந்துவிடக்கூடு மென்பதனையு மதியமா னுணராதவ னல்லன். அன்றியுந் தன் பெரும் பகைவனு
கிய சேரமானுக்குத் தொண்டை மான் றுணயாய் விடா

Page 50
88
மலும் பார்த்துக் கொள்ளல் வேண்டும். இவ்வெல்லாவற் றையு மெண்ணியே தொண்டைமான்பாற் றாது விடுத்தற்கு ஒளவையாரை அதியமான் றேர்ந்தெடுத்தது அவனது நுண் ணறிவை விளக்குவதாகும்.
ஒளவையார் தூது போனது அதியமான தேவல் செய்த தாகாது. ஆளுடை நம்பியார்க்குத் திருவாரூர் வள் ளலும் பாண்டவர்க்கு நம்பி மாயோனும் போலத் தானவ னென்னும் வேற்றுமை யில்லாத தல்ையன்பிற் கட்டுண்ட கெழுதகைமையானே தூது போன தாகலிற் புலவர்க் கிழிதகவன்று. அதியமான் புலவரைத் தூதுவிட்ட தறிந்த சோமானு மதியமான்பாற் புலவ ரிருவரைத் தூது விட்ட தீண்டு கினைக்கத் தக்கது அன்றியுங் தூதுரைத்தற்குப் புலவர்போலப் பிறரெவரு மத்துணைச் சிறந்தவராகாரென்ப
தக்காலை மன்னர்களின் கொள்கை,
இதனுல் அதியமானேடு ஒளவையாரிடை நிலவிய நட் புரிமை யெத்துணைச் சிறந்ததென்பது புலனும்,
அதியமான் அாதுவரென்ற முறையிலும் நல்லிசைப் புலவரென்ற முறையிலுந் தன் புலமைக்கும் வள்ளன் மைக்கு மேற்ற முறையிலுக் தொண்டைமான் ஒளவை யாரை நன்கு வரவேற்றுப் பேணிப் பல சிறப்புக்களானு மகிழ்வித்தான்.
தூதுவருக் தொண்டைமானு மொருமுறைக் கோயி லில் உலாய்க்கொண்டே யுரையாடுகின்றுழித் தூதுவர்க் குத் தன் படைக்கலக்கொட்டிலைக் காட்டித் தன் னுற்றலைக் குறிப்பித்தான் தொண்டைமான். அவன் குறிப்புக் கண்ட

89
தூதுவர் அக் கொட்டிலைப் புகழ்ந்துரைப்பார் போலத் தர் தலைவன் அகியமான தாற்றன் மிகுதியுங் தொண்டைமான தாற்றற் குறையுங் குறிப்பாற் பெறப் பாடியுணர்த்தித் தொண்டைமான் வெள்கித் தலைகவிழச் செய்து தங் தூதின் சிறப்பை நிலை நாட்டியது உலகிலுள்ள மன்முறைத் துTதுவ ரெவர்க்கு மில்லாததொரு புதுமையேயாம். அவாங்ஙனம்
பாடிய பாட்டிது.
Ya
'இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணுேன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்று முண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணு மில்லோ ரொக்கற் றஃலவ னண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே 29 (புறம். 95 )
தொண் ை டமான் படைக்கலம் செய் பூசிப் பீலி யணிந்து மாலை குட்டிச் சிறந்த பாதுகாவலிற் பளபளப்பாக வைக்கப் பட் டழகு பெற்று மிளிர்கின்றனவாம். அதிய மான் படைக்கலமெல்லாங் கூர்மழுங்கிக் கதுவாய் போகித் திருத்துதற் பொருட்டுக் கொல்லன் பணிக்களரியாகிய குற் றிலிற் கிடக்கின்றனவாம். அதனே டமையாத தூதுவர் அதியமான யெங்கின மன்பொழுக எதிரிடாற் பாராட்டு கின் முச்! இராமன் றாதுவ ருரையும் முருகக்கடவுளின் அறாது வருாையு மிங்கினஞ் சுரு ஸ்கிவிளங்கும் பெற்றியிலவே; அத் துளது கேட்ட விருவருங் தொண்டைமான் போலும்

Page 51
g0
புலவரல்லராகலின் அவர்க் கிங்வனஞ் சொல்லிற்றிலர் போலும், ஒளவையார் தூதுரைக் கீடாவது கதையினு L86%),
இத் தூது, நட்பு, அவா, அச்ச மென்னு மூன்றனு ளொன்று பற்றி யாயினுங் தூதியல் வழிஇவிடாமற் பாது காத்த வளவிற்றன்று. ஒப்புயர்வற்றுத் தலை சிறந்தது.
தாம் பெண்பாலா ராயினு மாண்பாலா ரெவர்க்கு மில்
லாத் தறுகணுண்மை யிருந்த வா றென்னே!
பெண்பாலார்க் காண்மையில்லை யென்போர் மடவோ
ரென்பதனை மெய்ப்பித்தனர் ஒளவையார்.
ஒளவையாாானே தமிழ்ப்பெண்டிருடைய சிறப்பு ஏனைநாட்டுப் பெண்டிரெல்லாருடைய சிறப்பினு மிக விஞ்சிற்று.
கூற்மு னுணர்த்துதலினுங் குறிப்பா னுணர்த்துதலே யறிஞரைப் பிணிக்கவற் றென்பதனைக் கண்டு துறைபோன சொல்லின் செல்வராகிய ஒளவையார் தனக்குக் குறிப்பா னுணர்த்தவே புலமைமிக்க தொண்டைமான் வெள்கின ணுயினும் அவரது திறமையை நினைந்து கினைந்து பாராட்டிக் கொண்டான். இனி, அவன் அச்சொல்வல்லார் பணியைக்
கடக்கவல்லனே?
கேட்டார்ப் பிணிக்குத் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவார்க்கு ஞாலம் விரைந்து தொழில்கேட்கு மாயிற் முெண்டைமான் ஒளவையார் பணிதலைகின்றது
வியப்பன்று.

g
அத்தகையாளரைத் தேர்ந்தெடுத்துத் தூதுவிட்ட அதியமானத் தொண்டைமான் பாராட்டிக்கொண்டான்.
அவன் அறாதுவரை வேண்டுமளவு பொன், ஹாசு, அணிகலமுதலியன நல்கிச் சிறப்புச்செய்து யானை, தேர், குதிரை, காலாள் என்றிங் நாற்படையுஞ் குழும் வரிசை யோடு பின்னடந்து வந்து வழிவிட்டு விடைபெற்று மீண்
டான்.
ஒளவையார் தொண்டைமான வாழ்த்துரைகளான் மகிழ்வித்துத் தம் படைகுழ மீண்டதியமான யடைந்தார். இவர் வெற்றியோடு மீள்வதனை முன்னமே யொற்றுவாயி லாக வுணர்ந்த அதியமான் மிக்க கொண்டாட்டத்தோ டெதிர்சென்று தூதுவரைக் கொணர்ந்து சிறப்புச்செய்து பெருமிதத்தோடு வீற்றிருந்தான்.
அவன் முன் ஒளவையாரைத் தூது விட்ட தன் பெரு மையையும் ஒளவையார் தூதின் பெருவென்றியையு மெண்ணி யெண்ணி மகிழ்ச்சியானே உடம்பெல்லா மலர்ச்சி பூத்தான்.
இற்றைக் கிரண்டாயிரம் யாண்டுகட்கு முன்பே பெண்டிரும் ஆடவர்போலவும் ஆடவரின்மிக்கு மாசியற்ருெ ழிலைத் திறம்பட நடாத்துதற்குக் ககுதியுடையரெனக்
கண்டமக்கள் செங் சமிழ் மக்களேயாம்.
வையக முழுதினு மரசியல் வினையேற்று ஈடாத்திய முதற்பெண்மணி ஒளவையாரே.

Page 52
92
வையக முழுதினும் பெண்ணிற்கு அரசியன் முதன் மைத்தொழில் நல்கிய முதன்மன்னன் அதியமா னெடுமா னஞ்சியே.
வையக முழுதினு மாசியற்முெழின் மேற்கொண்ட பெண்பாலாரை வரவேற்றுச் சிறப்புச்செய்து அவரது கட்டளைமருத முதன்மன்னன் முெண்டைமா னிளந்திரை
யனே,
இங்ஙனம் பெண்டிரையு மாடவரோ டொருபா லென்று நேர்கிகராகக் கொண்டாடிய பெருமை தமிழகத்தி னுடையதேயென் றிவ்வாறு தமிழரு மற்றைநாட்டினரும் வியந்து புகழ்ந்தார்கள்.
இதனைக் கேட்குங்தொறு மதியமானுக்கெழுங் களி யளவிடற் பாலதன்று.
முன்னரெல்லா மெளவையார் ஊர்தொறுங் தெருக் திொறு மெத்தனையோ முறை போய்வருவர். அவரை யேறட்டுப்பார்ப்பார் மிக அரியர். அரசியலி லீடுபட்ட பின்பு அவரைப் பார்க்க எண்ணற்ற மக்கள் வந்து பார்த்து மகிழ்ந்து போவர். ஒளவையார் வருகின்றுரென்முற் பார்க் கப் பதினுயிரத்துக்கு மேற்பட்டார் குழுமிவிடுவர்.
இனிமேற் பொகுட்டெழினி திருமணத்துக்குத் தடை யின்று திருமணத்திற்கு யார்வந்தாலும் வராவிட்டாலும் ஒளவையார் வால் வேண்டுமென்பதுதா னதியமா னெண்
ணம். அவரும் வங்துவிட்டார்.

98
மண னிகழ்ச்சிக ளெல்லாம் ஈன்கு நடைபெற்றன. லவரெல்லா மழைக்கப்பட்டனர். மையாமலே வாநம்
էԲ p ரு
புலவர்க் கழைப்புவங்காற் சொல்லவாவேண்டும்.
ஊர்ப்பார்ப்பாராலே மணவிழா நன்கு ஈடாத்தப் பெற்றது.
ஒளவையார் முகலின் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினர் பின்பு புலவரெல்லாங் கனிக்கனி வாழ்த்துரை வழங்கினர்.
விழாவிற்கு வந்த புலவர்க்கும் இரவலர்க்கும் உறவினர் க்கும் முடிமன்னர்க்கும் பிறர்க்குமொப்ப முப்பழம், பால், நெய், தேன், பாற் சோறு முதலியவற்முேடு பலநாள் விருந்து நடைபெற்றது.
புலவர்க்கும் இரவலர்க்கும் விருந்துணவோடு வேண்டு மளவு பரிசில்களுங் கிடைத்தன
எல்லாரும் அதியமான் ஒளவையாரைத் தூதுய்த்த அருஞ் செயலையும் அவர் தூதுபோய் மீண்டவாற்றையும் மணமக்களின் றகுதியையும் பாராட்டி மகிழ்ந்துகொண்டே மீண்டேகினர்.
ஒளவையாருங் தமக்குற்ற வேறு கடமைகளையும் பார்த்துவர அதியமான் பால் விடைபெற்றுக்கொண்டு அவன் தம் பிரிவாற்றது கண்கலங்கப் புறப் பட்டுப் போயினர்.
பொகுட்டெழினியும் பொகுட்டிளம்பாவையுங் காதற் சுவையொடு தமிழ்ச்சுவையு மாந்தி யின்புற்றுத் தம் ஈல்

Page 53
94
வினையை வாழ்த்திப் புலவர்க்கும் பிறர்க்கும் பற்றுக் கோடாகி யிறைவன் றிருவருட் குரியராய் வாழ்வாராயினர்.
பொகுட்டெழினியுங் தன் றந்தைக்குப்பின் மிகப் புகழோங்கத் தன் ணுட்டை யாண்டுவந்தான். பல போர் களை வென்று புலவர் பாடல்பெற்றன்.
அதியமான் மரபினர் இற்றைக் கைந்நூறியாண்டுகட்கு முன் வரையு மிருந்ததாக அம்மாபிற் பிறந்த விடுகாதழகிய பெருமாளென்பவனல் எழுது விக்கப்பட்ட கல்வெட்டுச் சான்று கிடைத்திருப்பதனற் பொகுட்டெழினி ரன்மக்கள் பெற்று மகிழ்ந்திருத்தல் வேண்டும்.
பொகுட்டெழினி தன் றந்தைக்குப்பின் றன்னட்டை யிடையூறு கடிந்து வேண்டுவன செய்யு மூக்கமேற்கொண்டு குடிகளை யின்புறுத்தி மகிழ்வித்துவந்த மரபொழுக்கத்தைக் கண்டு மகிழ்ந்த ஒளவையார் பாராட்டி யொருபாட்டுப்
பாடினர்.
"எருதே யிளைய நுகமுண ராவே சகடம் பண்டம் பெரிதுபெப் தன்றே யவலிழியினு மிசையேறினு மவண தறியுநர் யாரென வுமணர் கீழ்மாத்தி யாத்த சேமவச் சன்ன விசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள் நாணிறை மதியத் தனையையிருள் யாவண தோகின் னிழல்வாழ் வோர்க்கே ?
புறம். 102.)

95
இப்பாட்டினுற் பொகுட்டெழினி தன்னல னெண் ணுது கன கொற்றவெண்குடைநிழற் குடிகளைப் பார்ப்பைப் பார்க்கும் பறவைபோலப் பார்த்துவந்த தண்ணளி பெறப்
படுகின்றது.
உப்பு வண்டிகளிலேற்றி யூர்தொறுங் கொண்டுய்த்து விற்கு முமணர் தம் வண்டிக்காளைகள் இளமை கழியாசன; வண்டி நுகம்பூண் டீர்த்துப் பழக்க மில்லா கன; வண்டியோ உப்பு மிகவு மேற்றப்பட்டுள்ளது ; வண்டி பள்ளங்களிலிறங் குங்காலும் மேடுகளில் ஏறுங் காலும் அவ்விடங்களில் வண்டியச்சுக்கு யாதேனு மிடையூறு நேரக்கூடும். நேரா தென்பதனை யார் துணிந்தறிய முடியும் ; என முன்னமே யுணர்ந்து அச்சு முறியுமிடத்தில் மாட்டியூர்,கற்கு வேருே? ாச்சும் வண்டிக் கீழ் வைத்துக் கட்டிக்கொண்டுபோகுமாறு போலப் பொகுட்டெழினியுங் சன் னுட்டுமக்கட்கு நேரக் கூடு மிடையூறுகளை அவை வாராமுன்னரே யையுற்றுக் கடைப்பிடித்து முற்கொண்டு வேண்டுவன கினைந்து செய்து வருதலானே அவனுட்சியின் கண் மக்கள் கவலையின்றி யின்புற்று வாழ்ந்துவருகின்றன ரென்பது பாட்டின் கருத்து.
இங்கின மவனைப் பாராட்டிய ஒளவையார் தொண் டைமா னிளந்திரையன் பாடிய பாட்டொன்றை நினைந்து சொல்லிப் பொருள்விரித்துரைத்துப் பொகுட்டெழினிய துரக்கத்தை வலியுறுத்து வாழ்த்தி விடைபெற்றனர்.
* கால்பார் கோத்து ஞாலத் தியக்குங்
காவற் சாகா டு கைப்போன் மாணின்
ஊறின் முகி யாறினிது படுமே

Page 54
96
யுய்க்க முேற்மு னயின் வைகலும்
பகை கூ ழள்ளற் பட்டு
மிகப்பஃ றிநோய் தலைத்தலைத் தருமே? (புறம். 185) என்பது கொண்டைமா னிளங்திரையன் பாட்டு. -
உலகியற்கையை யுலகிலே கிலைபெறுத்தி நடத்தும்
நாடுகாவலாகிய வண்டியை ஒட்டுபவன் நற்பண்பு நற்செயல் களு மு ய்த்துணர்வு முடையவனாய் மாட்சிமைப்பட்டிருங் தால் அவ்வண்டிதா னிடையூறின்றி வழியே யெளிதிற் செல்லு: ; அவ்வோட்டுபவன் அவ்வண்டியைச் செலுத்து முறையை யறியானுயின் எப்பொழுது மவ்வண்டி மாறுவழி யாகிய செறிந்தசேற்றிலே யகப்பட்டுப் புதைந்து மிகப்பல தீப துன்பங்களை மேன்மேற் கொடுக்குமென்பது பாட்டி ன் பொருள்.
இதனுற் பண்டைத் தமிழாாட்சிமுறை யெத் துணை மேம்பாடுற்று விளங்கிற் றென்பதும் புலவ ரவ்வாட்சிமுறைக் கெவ்வள வின்றியமையாதவரா யிருந்தன ரென்பதும்
விளங்கும்.
அதியமா னெடுமா னஞ்சியி னருளினுல் ஒளவையார் நீடுவாழ்ந்திருந்தமையானே அவலுக்குப்பின் அ வ ன் மகனுக்கு மவர் நற்றுணையா யிருந்தனர்.
முற்றும். புலவர் வாழ்க.
புரவலர் வாழ்க.


Page 55


Page 56