கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மண்ணும் மனிதர்களும்

Page 1
W W
《
%
 

W | .
ή
M * 《 У A. Α ή ,
W W. W
ർ
է:
: , :
്യ"
ეჭეჭეჭეჭეჭეჭუკუნეზე ქვეჯე წეს
சித்
(% ്യ
%
W 線

Page 2

மனிதர்களும்
சை. பீர்முகம்மது
மித்ர வெளியீடு 375-10ஆற்காடு சாலை, சென்னை - 600 024.

Page 3
MUHL ENTERPRISES in Collaboration with MITHRA PUBLICATIONS
(C) SYED PEER MOHAMMED
Apart from any fair dealing for the purpose of private Study, Research. Criticism or Review as permitted under the Copyright Act, no part may be reproduced, stored in a retrieval system, of transmitted, in any form, or any means, electronic mechanical or photocopying, recording or otherwise without prior written permission from the author.
MANNUM MANTHIARKAILUM
A re-discovery of india & its People
MANNUM MANTHARKALIUM First Edition, Published by
MUHL ENTERPRISES 38, Jalan Selaseh 19 Taman Selaseh 68100 Batu Caves Malaysia
in Collaboration with
MITHRA PUBLICATIONS, 375/10, Arcot Road, Chennai - 600 024.
Cover Design by: K. PUGAZHENTH Made in India by: MITHRABOOKMAKERS
மித்ர : 25 19 ஆகஸ்டு 1998 விலை : ரூ.100/- பக்கங்கள் : 400

என்னை
இன்றுள்ள
நிலைக்கு
உயர்த்துவதை
தமது
வாழ்க்கை இலட்சியமாக வரித்து வாழ்ந்த என் 'பெரியத்தா
கே.பீ. அப்துல்லா
நினைவுக்கு இந்நூல் படைப்பு

Page 4

பதிப்புரை
தமிழ் இலக்கியத்திற்கும், அதன் உலகளாவிய பரம்பலுக்கும் சேவை செய்யும் இலட்சிய வேட்கையுடன், மித்ர வெளியீடு நிறுவப்பட்டது. கற்பிதங்கள்-இலட்சியங்கள்நடைமுறை வெற்றிகள் ஆகியவற்றின் திரிவேணி சங்கமம் சதா நிகழ்வதில்லை. உண்மை. இருப்பினும், இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் தமிழ் இலக்கிய உபாசகர்களை சேமமுற அழைத்துச் செல்லும் மித்ர வெளியீட்டின் பயணம் தொடரும்.
புதிய படைப்புத் தேவைகளுக்கு ஏற்பத் தமிழ் நெகிழ்ச்சி சுகித்தது இருபதாம் நூற்றாண்டிலேதான். பாரதியும் புதுமைப்பித்தனும், தி. ஜானகிராமனும் தமிழ் செய்ததும் இந்நூற்றாண்டே! கலை-இலக்கிய வெளிப்பாட்டிற்கு புதிய சாதனங்களும் ஊடகங்களும் கிட்டின. இவற்றின் பெறு டேறுகள் என்ன ? இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்புகள் எவை? அவற்றைச் சாதித்த படைப்பாளிகள் யார்? அடுத்த நூற்றாண்டின் இலக்கிய ஆரோக்கியத்துக்கு இவை எவ்வாறு உதவும்? அன்றேல், எல்லாமே களப்பிரர் காலமாய், கணவாய்ப் பழங்கதையாய் போயினவா? இவற்றின் சத்தியமான, நம்புதிறன் வாய்ந்த ஆவணங்கள் நம் மத்தியில் உண்டா? இல்லையேல், ஏன்?
இந்த தேடலுக்கான விடைகாணவும் அண்மையில் நான் மேற்கொண்ட தமிழ்நாட்டுப் பயணத்தைப் பயன் படுத்தினேன். தமிழ்நாட்டின் அரசு நிறுவணங்கள் பல, நீள்துயில் பயில்கின்றன. சும்மா கிடப்பதே சுகம் என்பது அல்ல; தூங்கிக் கிடப்பதே பதவிக்கு நலம்! பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைகள் இன்னமும் சங்க கால இலக்கிய இன்பங்களிலேயே சயனித்துக் கொண்டிருத்தல் சோகமானது. கனவு கலைந்த நிலையில் சங்கத்
5

Page 5
தமிழின் நடமாடும் திருவுருவங்களையும், புதிய கவிச்சக்கரவர்த்திகளையும் அவசர அவசரமாக நிவேதித்தல் இன்னும் கொடுமையானது. தமிழ்ச் சுவைப்பும் பரம்பலும் பாமரத்தனப்படுத்தப்படுதல் மகா அவலம். படைப்பு வீரியம் கோடம்பாக்கக் கனவுத் தொழிற்சாலைகளின் அயலிலே காயடிக்கப்படுதல் படு ஆபாசம். விடிவே இல்லையா?
இந்த வெளித்தோற்றங்களின் அடியிலே தண்மையான நீர்ச் சுனைகளைக் கண்டு மகிழ்ந்தேன். ஒவியர்கள், கலைஞர்கள், நேற்றைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இளைய கதைஞர்கள்-கவிஞர்கள் எனப் பலதிறத்துத் தமிழர்களும். சினிமா மாயையும், அரசியல் மயக்கமும் ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடுகளைக் கொச்சைப்படுத்தும் போக்குகளுக்கு எதிராக இத்தனை சினம் மண்டிக்கிடக்கிறதே என்கிற ஆச்சரியம். குழு நலங்கள் பேணாது, மத ஜாதி பிராந்திய நலன்களுக்கு வளைந்து கொடுக்காது, இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கலை இலக்கிய முயற்சிகளும், ஊழியங்களும் ஆவணப்படுத்தப்படும் நூல்கள் வெளியிடுதல்.வேண்டும் என்பதிலே அவர்கள் வெளிப்படுத்திய அக்கறைகள் சத்தியமானவை. அவர்களுடைய உழைப்பையும் ஊதியத்தையும் இப்பணிக்கு நன்கொடை செய்யவும் ஆர்வமாக இருக்கிறார்கள். .
தமிழ் இலக்கிய ஊழியத்திலே "மித்ர" அகலக் கால் பதிக்கின்றது. இதற்கு உலகளாவிய தமிழ் நேசர்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியம். இத்துறையில் மலேசியா உதவிக் கரம் நீட்டும் என முதலில் உற்சாகந் தந்தவர் ஆ. சோதிநாதன். இதனை சை.பீ.யும் ஆதரிக்கிறார். உலகளாவிய தமிழ்ப் பிரசுரங்கள் “மித்ர" வுடன் கூட்டு முயற்சிகளாக நூல்களை வெளியிடுதல் நமது பணியை இலகுபடுத்தும். இத்தகைய முயற்சிகள் சாத்தியமானதே என்பது 'மண்ணும் மனிதர்களும் என்னும் இந்த நூலின் மூலம் நிரூபணமாகின்றது.
அவுஸ்ரேலியா டாக்டர். பொன்அநுர

என்னுரை
பலமுறை இந்திய மண்ணிலே என் பாதங்கள் பதிந்துள்ளன. ஒவ்வொரு பயணத்தின் பொழுதும் எனக்கு புதுப் புதுப் பாடங்களை நடத்தும் ஆசானாக இருந்துள்ளது. புராண காலம் மாறி, சரித்திர காலம், தற்காலம் என்று காலங்கள் மாறினாலும் இந்த மண்ணின் மனிதர்கள் உடைகளால் மட்டுமே மாறி, மனத்தளவில் இன்னும் தங்கள் பாரம்பரியத்தைப் பேணியே வாழ்ந்து வருகிறார்கள்.
சிந்து நதி தீரம் எப்பொழுதும் பண்பாட்டு மாற்றங்களுக்கு மட்டுமல்லாது, போர்கள் பலவற்றின் செருக்களமாகவும் விளங்கி வந்துள்ளது. கைபர் கணவாய் எத்தனை படையெடுப்புகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது? இன்றுகூட அதற்கு அப்பாலும் அமைதியில்லை; இப்பாலும் அமைதியில்லை.
பாரதப் போர் கூட ஒரு வகையில் சகோதரர் சண்டைதான்! இராமாயணப் போர் வேறு வகையானது. வகைகள் வேறுபட்டாலும் மனிதப் பகை என்பது தொடர்ந்து பல வடிவங்களில் அவதாரம் எடுத்தே வந்துள்ளது. கடவுள் அவதாரங்கள் கூட்ப் போர் புரிவதிலிருந்து இந்தப் பூமியில் தப்பிக்க முடியவில்லை.
இந்திய மண்ணிலே நான் பயணம் செய்த இடங்களில், பல இளைய தலைமுறையினர் புதிய பாரதம் காண ஆவலுடன் 7

Page 6
புதிய திசைகளில் தேடல்களை நோக்கிப் பயணிப்பதைக் காண நேர்ந்தது. மகிழ்ச்சி. வரும் காலத்தில் அபார நம்பிக்கையுடன் அவர்களுடைய பயணம் தொடருதல் வேண்டுமென விரும்புகின்றேன். அப்பொழுதுதான், வற்றிவிட்டதாகத் தோன்றும் இந்திய மண்ணின் மனித நேயம், காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடும் என்கிற நம்பிக்கை என் அடி மனத்தில் இருக்கிறது. سمبس
நம்பிக்கைதானே வாழ்க்கை! இந்த நூல் இவ்வாறு அமைவதற்கு நான் பலருக்கு நன்றியுடையவன். இது கட்டுரைகளாக மலேசியத் தமிழ் வாசகர்களைச் சென்றடைவதற்கு, பல வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய "மக்கள் ஓசை" ஆசிரியர் குருசாமி அவர்களுக்கும், "மலேசிய நண்பன்" நிர்வாக ஆசிரியர் ஆதி குமணன் அவர்களுக்கும் முதற்கண் நன்றி.
முன்னிடு வழங்கிய ஆஸ்திரேலிய நண்பர் எஸ். பொ, அட்டை அமைத்துதவிய ஓவியர் புகழேந்தி, நூலாக்கும் பணியைச் செப்பமுறக் கண்காணித்துதவிய இலக்கு ஆசிரியர் தேவகாந்தன், பத்திரிகைத் துறையிலும் நூல் வெளியீட்டுத் துறையிலும் ஈழத்து இலக்கிய உலகின் வழிகாட்டியாகவும் வள்ளலாகவும் வாழ்ந்து, இன்று மித்ர வெளியீடு நூல்களை வடிவமைக்கும் எம்.ஏ. ரஹ்மான் ஆகிய பலருக்கு உளமார நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். இந்த நன்றி கூறல்கள் சம்பிரதாயமல்ல; உளமார்ந்தது.
வணக்கம்.
கோலாலம்பூர் என்றும் அன்புடன் 1908.98 - சை. பீர்முகம்மது

முன்னீடு
அவுஸ்திரேலியாவைக் 'கைதிகள் கண்ட கண்டம்' என சை. பீர் முகம்மது வியப்பார். இங்கு அவருக்கு நிறைய நண்பர்களும் நேசர்களும் உளர். பல்லாயிரக்கணக்கான தமி ழர்கள்-பெரும்பாலும் ஈழத்தமிழர்கள்-நிரந்தர வதிவிட உரிமை பெற்றும், குடியுரிமை பெற்றும் வாழ்கிறார்கள். பலவினக் கலாசாரம் ஊக்கப்படுத்தப்பட்ட போதிலும், ஆங்கிலம் மட்டுமே ஜீவனோபாய மொழியாகப் பயிலப்படும் இந்நாட்டிலே, ஈழத்தமி ழர் தம்முடைய தனித்துவமான இன அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெரும்பாடு படுகிறார்கள்! சோகங்கள் சுமப்பவர்கள்; தாயக விமுக்திக் கனவு காண்பவர்கள்; கோஷ்டிகளிலும், பஜனைகளிலும் வடிகால் அமைத்தவர்கள்; புதிய வசதிகளின் செளகரியங்களிலே மூழ்கியவர்கள்; என ஈழத் தமிழரும் பல வகைத்து. இருப்பினும், இவர்களுடைய தமி ழ்க் கலாசார அக்கறைகள் இன்னமும் அந்நியப் படுத்தப்படாமல் இருக்கின்றன. இந்த அந்நியமாதல் தீவிரமடையாமல் இருப்பதற்கு உழைக்கும் அயல் நாட்டுத் தமிழர்களுள் மலேசிய எழுத்தாளர் சை. பீர்முகம்மது முக்கியமானவர்.
சில ஆண்டுகளுக்கு முன் "வெண்மணல்’ என்னும் சிறுகதைக் தொகுதியின் வெளியீட்டு விழா ஹோம்புஷ் பாடசாலையில் நடைபெறும் என்கிற தகவலை நண்பர் இராஜகோபால் அறியத் தந்தார். என் கலாசாரத் தகவல்களுக்கு அவர் முக்கிய மூலம். சிறுகதைக் கலையிலே நான் பாராட்டும் காதலுக்கு ஐம்பது வயசு, அந்த வெளியீட்டு விழாவுக்குச் செல்லுதல் இயல்பின் நியதி. எங்களுடைய சந்திப்பு
9

Page 7
இவ்வாறுதான் நிகழ்ந்தது. பீர்முகம்மது இலக்கியத்திற்கு அப்பால், ஈழத் தமிழர்களுடைய சுயாதீன அபிலாஷைகளுக்குத் தெளிவான குரல் கொடுத்துப்பேசினார். அவருடைய குரலிலே சத்தியத்தின் ஆவேசம் கனன்றது. சத்தியத் தேடல் என் வழியும். இருவருக்கும் இடையில் நட்பு மலர்தல் இயல்பாயிற்று.
அவுஸ்திரேலிய முக்கிய நகரங்களான கன்பரா, சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேர்ன் ஆகியவற்றிலே நிகழ்ந்த தமிழர் கூட்டங்கள் பலவற்றில் பீர்முகம்மதுவின் குரல் ஒலித்தது நிர்ப்பந்தங்களுக்கு வளைந்து கொடுக்காத உறுதியும், தமிழிலே அழுங்குப் பிடியான பக்தியும் அவர் பேச்சுகளில் ஒலிக்கும். இதனால், அவுஸ்திரேலியர் விரும்பும் தமிழ் மேடைப் பேச்சாளர்களுள் ஒருவராய் அவர் உயர்ந்துள்ளார்.
அவருடைய தமிழ் ஊழியம் மேடைப்பேச்சாளர் என்கிற சட்டகத்திற்குள் அடங்காது. அவருடன் பழகிய பொழுது, அவருள் பிரகாசிக்கும் தமிழ் அக்கறைகள் பலவற்றை அறிந்து கொள்ளவும் முடிந்தது. நண்பர் சை. பீர்முகம்மது பரமார்த்த இலக்கிய உபாசகர். எழுத்து ஊழியத்தினை வாழ்க்கையின் அர்த்தமாய்த் தரிசிப்பவர். தமிழ் இலக்கியம் உலகளாவிய தரமும் பரம்பலும் சுகித்தலை அவாவும் இலட்சியர். உலகளாவிய தமிழ் ஊழியத்திலே மலேசியத் தமிழுக்குச் சரியாசனம் சம்பாதிக்கத் துடிக்கும் ஊழியத்தின்ஆதர்ஷம். சிறுகதைகள்நாவல்-பயணக் கட்டுரைகள் எனப் பல துறைகளிலும் வெற்றி பதித்த அவர் ஊழியம் தொடர்கின்றது. தன்புகழ் நாட்டுதலுக்கு அப்பாலான தமிழ் ஊழியம். மலேசிய நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுடைய இலக்கியப் படைப்புகளை அழகிய நூல்களாக வெளியிட்டு, உலகளாவிய விநியோகச் சந்தையுடன் இணைக்கும் பணியினைக் காரிய சாதனையாக்கும் நோக்குடன் அண்மையில் தமிழ்நாடு வந்திருந்தார். மித்ர வெளியீடு நிறுவணத்தினைப் புதுக்கி அமைக்கும் பணிகளிலே நான் ஈடுபட்டிருப்பதை அறிந்தர்ர். மித்ரவின் புதிய திட்டங்களில் "மண்ணும் மனிதர்களும் முதலாவது நூலாக வெளியிடுதல் வேண்டும் என்பதிலே தீவிரம் காட்டினார். செயல் என்பதுதான் அவர் தமிழ் ஊழியத்தின் முத்திரை. மலேசிய நாட்டின் முகில்
10

எண்டர்பிரைஸிஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்நூல் பிரசுரமாகின்றது. உலகளாவிய கூட்டு முயற்சிகளுக்கு இது தக்கதொரு நன்னிமித்தமாய் அமையும் என நம்புகின்றேன்.
'மண்ணும் மனிதர்களும் ஒரு புதுமையான முயற்சி. சந்தேகமில்லை. எடுத்தடி மடக்காகச் சொன்னால், இந்த நூலுக்குள் சஞ்சாரஞ் செய்பவர்களுக்குப் புதியதோர் அநுபவம் வாய்க்கும்.
இதனைப் பயண நூல் என வகைப்படுத்துதல் முறையென எனக்குத் தோன்றவில்லை. அந்தக்காலத்தில், நான் சிறுவனாய் இருந்த காலத்தில், 'குமரி மலர்' ஆசிரியர் ஏ.கே. செட்டியார் 'உலகம் சுற்றிய தமிழர்’ என்று "கியாதி" பெற்றிருந்தார். அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் பலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அக்கட்டுரைகளிலே சில இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. அவர் பதித்த இந்தத் தடத்திலே சோம. லெ. யும் பயண நூல்கள் என்கிற வகைக்குப் பக்களிப்புச் செய்தார். அவர்களுடைய காலமும், அவர்களுடைய காலத்தில் வாழந்த தமிழ் வாசகர்களுடைய எதிர்பார்ப்பும் வேறு வகையின. அந்நிய நாடுகளிலே பயணித்தலும், அதனால் ஏற்படும் அநுபவங்களும், தமிழ் வாசகர்கள் பலருக்கும் எட்டாக் கனவுகளாகவே இருந்தன. இந்த ஏக்க நிலையைப் பிரதி செய்து வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்கிற 'குக்கும’ த்தைச் சில பத்திரிகையாளர் உணரலாயினர். பயண நூல்கள் எழுதுவதிலே வணிக இலக்கியம் அக்கறை காட்டிற்று. இதிலே பணமும் புகழும் சம்பாதிக்க முந்தி நின்றார், "இதயம் பேசுகிறது" மணியன். பல நாடுகளுக்குச் சென்றுவிடல் வேண்டும் என்கிற அவசரத்திலும், தனி நபர் புகழ் வளர்க்க உதவும் சாதனமாக அதனைப் பயன்படுத்தும் சிரத்தையிலும் அவர் பயணங்கள் செய்ய விழைந்தார். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்' அரை வேக்காடு உண்மைகளைச் சேர்த்து அவர் செய்ய முனைந்த 'பிஸினஸ்' இந்த வகை இலக்கியங்களின் நம்பு திறனை நாசப்படுத்தியது. என்னுடைய இந்தக் கருத்தினை மணியனுக்கு, கொழும்பில் வைத்து, நேருக்கு நேராகவும் சொல்லியிருக்

Page 8
கின்றேன். இந்த வகை இலக்கியத்தின் சேமம் குறித்தே இந்தத் தகவலையும் இங்கே குறிக்க நேர்ந்தது. அவரைத் தொடர்ந்து, அந்தப் பண்ணையில் விளைந்த கோலத்தில், டயரிக் குறிப்புகள்' போன்ற வடிவில் அமைந்த நூல்கள் வந்துள்ளன.
இத்தகைய பின்னணியில், "மண்ணும் மனிதர்களும் என்கிற இந்நூலையும் பயணக் கட்டுரைகள் என்கிற இலக்கிய வகைக்குள் இணைத்து, இதன் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துதல் சரியான பார்வையல்ல.ரயிலில் போனதையும், படகில் பிரயாணம் செய்ததையும்.பின் காலை எழுந்து சூரியனின் பார்வையில் அந்த நாட்டைப் பார்த்த பொழுது, அதன் பசுமையைக் கண்டு உள்ளம் பூரித்ததையும் எழுத எனக்கு ஏனோ முடிவதில்லை. எல்லா நாட்டிலும் சூரியன் உதிக்கின்றான். என்று தமக்கு ஒத்துவராத சமாசாரங்களை பீர்முகம்மது வாசககர் மத்தியில் அறிக்கையிடுவதற்கு. தயங்குவதும் இல்லை. . .
இவருடைய முந்திய நூலான 'கைதிகள் கண்ட கண்டம்' என்கிற நூல் மேலோட்டமான பார்வைக்குப் பயண நூலாகவே தோன்றும். ஆனால், அவுஸ்ரேலியாவின் வரலாற்றையும், அதனாலே வனையப்பட்ட சமூகக் கட்டமைப்புகளின் தன்மைகளையும் மீள்பார்வைக்கு எடுத்துக் கொள்ளுதல் ஆசிரியரின் உள்ளார்ந்த நோக்கமாக இருந்துள்ளது. அந்தநூலின் எல்லைக்கட்டுக்குள் இந்த உள் நோக்கத்தினை முழுமைப் படுத்த இயலாத அவதி ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நூலின் பக்கங்கள் குறைவு. அவுஸ்ரேலியாவில் புதிதாக ஏற்படுத்திக் கொண்ட நண்பர்களைப் பற்றி நன்றியறிதலுடன் குறிப்பிடுதல் வேண்டும் என்கிற அக்கறைவேறு. இவை இரண்டும், பிரதான சஞ்சாரத்தில் ஈடுபடும் சுயாதீனத்தினை கட்டுப்படுத்தின. இதனை அவரே பின்னர் உணர்ந்திருத்தலுங்கூடும். இக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ே மண்ணும் . மனிதர்களையும் எழுதியுள்ளார்.
W− உண்மையில், மண்ணும் மனிதர்களும் is are-discovery ofindia andits people. இந்த மீள் தரிசனத்துக்குத் தேவையான
12

அளவுக்கு அவர் இந்திய மண்ணினதும், அதன் நாயகநாயகியர்களினதும் வரலாற்றினைத் துருவி ஆராய்வதிலே மிகவும் சிரத்தை ஊன்றியுள்ளார். அதற்காக, வரலாற்று நூல் ஒன்றினைப் புதிதாக எழுதும் பணியிலும் அவர் ஈடுபடவில்லை. சரித்திரப் பாடநூல் எழுதும் முயற்சி அல்ல! சரித்திரம் பற்றிய ஒரு ஞானத்தேடல் நடத்துகிறார் எனக் கொள்ளலாம். மனித நாகரிகங்கள் பற்றியதாக இருக்க வேண்டும்; ஜாதி, மதம் இவைகளுக்கு அப்பால் மனித இனம் பற்றி அவை கூறுவதாக அமைய வேண்டும். மனித இனத்தின் எண்ணங்கள் உயர எவனாவது ஏதாவது செய்துள்ளானா என்று துருவிப் பார்ப்பதே எனது எழுத்தின் வேலை’ என்று தமது ஞானத் தேடலின் தரிசன பயனைத் தெளிவாக வரையறை செய்துள்ளார்.
இந்தியாவிலே இன்று மூன்று பிராதன மதங்கள் அரசியல் ரீதியிலும் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. அவை : இந்து-இஸ்லாம்-சிக்கியம். இந்த மூன்று மதங்களும் இந்திய மண்ணிலே வேர்கொண்டு பரம்பிய வரலாற்றினைப் பார்வைக்கு எடுத்துத் கொள்ளுகின்றார். எந்த மதத்தின் மகத்துவத்திலும், பக்கச் சாய்வு கொள்ளாத ஆரோக்கியமான விசாரணை, வட இந்திய வரலாற்றிலே ஏதோ வகையில் தடம் பதித்த அசோகன், அக்பர், பிருதிவிராஜ், ஜஹாங்கீர், ஷாஜகான், குருநானக், ராஸியா எனப் பலரும். தென் தமிழ்நாடு பாளையங்களாக சிதிலடைந்த காலத்தின் வரலாறும், அந்த வரலாற்றினை உருவாக்கிய மனிதர்களும், அவர்களுடைய ஆசைகள்அவலங்கள் அனைத்தும் விசாரனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சரித்திரநூல்களிலே பயிலப்படும் இறுக்கமான சான்றாதாரங்கள் என்கிற புத்திஜீவித மேட்டிமை, இதிலே புத்தி பூர்வமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்துக்குத் தாவுதல் சுவாரஸ்யமான வாசிப்புக்குத் துணை நிற்கின்றது. மனித நேயம் பற்றிய அக்கறைக்கு முதலிடம் கொடுக்கின்றார். மதங்கள் ஒற்றுமையைப் பேண உதவும் சாதனங்கள் என்று வலியுறுத்துகின்றார். மத வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி,
13

Page 9
மனிதர்களைப் பிரித்தலை அவர் அரசியல் பேதமையாக இனங்காணுகின்றார். ஒற்றுமையும் செளஜன்யமும் மனித நேயத்தின் ஆதார சுருதிகளையும் நேர்மையுடன் ஆராதனை செய்கின்றார்.
மனித நேயத்திற்கு வசதியாகக் கற்பிக்கப்படும் விகாரங்களை பீர்முகம்மது நிராகரிக்கின்றார். மனித நேயம் முலாங்கள் பூசப்படாத புனிதம் என்பதிலே கெட்டியான நம்பிக்கை வைக்கின்றார். பெண்ணியம் பற்றிப் பேசுதல் இன்றைய தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு ஒரு Fashion ஆகவும் கோஷமாகவும் பயன்படுகின்றது. அத்தகைய பாவலாக்களின்றி, ராணி ராஸியாவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையிலே ஓர் ஒப்பீட்டினை நடத்துகின்றார். அந்த இரண்டு வீராங்கனைகளும் ஆணாதிக்கம் உருவாக்கிய சதி வலைப் பின்னலிலே வீழ்ந்து விட்டார்களா? டில்லிப் பயணத்தின்போது குதுப் மினார் கட்டப்பட்ட வரலாற்றினைப் பதிவு செய்வதில் எடுத்துள்ள அதே அக்கறையை, கிரண்பேடி சாதனைகளைப் பதிவு செய்வதிலும் ஊன்றுகின்றார். பாரதிகண்ட புதுமைப் பெண் பஞ்சாப் மாநிலத்திலே பிறந்தாள் என அதிசயிக்கின்றார்.
அசோக்குமார் படம் பற்றிய போஸ்டர் ஒன்றைப் பார்த்ததும் எழும் நினைவுச் சிதறல்கள், ஆசிரியரின் அக்கறைகளின் விசாலத்துக்கு மட்டுமல்ல, எழுத்தாற்றலுக்கும் சான்று பகர்கின்றன. அந்த சினிமாவிலே கதாநாயகனாக நடித்த தியாகராஜ பாகவதர் பற்றிப் புதியதொரு பிரக்ஞையை ஏற்படுத்துகின்றார். சங்கீதத்திலே ஆசிரியருக்குள்ள ஈடுபாட்டினைச் சொல்லி, மலேசியாவில் முகிழ்ந்துள்ள சங்கீத ரஸனையைப் பிரீதி செய்வதிலே தமக்கு ஏற்பட்ட பண இழப்புகளை அறிக்கை செய்கிறார். சினிமா உலகின் கயமைக்கு அவர் திரையிடவில்லை. ஆனால் அந்த உலகிலேகூட ஜெமினி கணேசன், ரமணன், எஸ்.வி. சுப்பையா போன்ற பண்பாளர்களும் வாழ்கிறார்கள் என்கிற தகவல்களைச் சொல்லிப் பிரமிப்பூட்டுகிறார். சடுதியாக, சிவகங்கைச்சீமை, சேதுபதிகள் நாடு, ஆற்காடு, மதுரை போன்ற இடங்களுக்கு
14

அழைத்துச் சென்று, ஆங்கிலேயர் ஆட்சி வீழ்ந்துபடுவதற்கு முந்திய தமிழகத்தின் சரித்திர நாயகர்களைத் தரிசிக்க வைக்கின்றார். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு தாவும் இயல்பான ஒரு மொழி நடையைக் கையாளுகின்றார்.
மக்களுடன் நேரிலே பேசுவதற்கும், எழுதுவதற்கும் இடைப்பட்ட ஒரு நடை பயிலப்படுகின்றது. இந்த நூல், முதன் முதலில் மலேசியப் பத்திரிகை ஒன்றிலே கட்டுரைத் தொடராகப் பிரசித்தம் பெற்றது. வாசகர்களுடைய பிரதிபலிப்புகளுக்கு மத்தியிலே எழுதிக் கொண்டிருந்ததினால், இந்த நடை நிர்ப்பந்தமாக ஏற்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த நடை இந்த நூலுக்கு ஒரு நெகிழ்ச்சியையும், வாசிப்பதற்கு ஒர் இலகுத் தன்மையையும் கொண்டு வந்து சேர்க்கின்றது.
வரலாறு பற்றிய அக்கறையான தேடல்களை, அவற்றின் மூலம் பெறப்படும் சத்தியங்களை, தமிழரின் நாளைய விடியலுக்குப் பயன் படுதல் வேண்டும் என்கிற தமிழ்த் துடிப்பு, தமிழர் விமுக்தியிலே சிரத்தை ஊன்றியுள்ள யாரையும் பரவசப்படுத்தும். மதங்களை முன்வைத்துக் குறுகிய ஆதாயம் சம்பாதிக்கும் போலி அரசியல் நாகரிகம் வளர்க்கப்படுவதை சாடுகிறார். அந்தச் சாடலிலே கோஷங்களின் பரபரப்பு இல்லை. சத்தியத்தின் ஆவேசத்தினைக் காண முடிகிறது. கங்கை வரை படையெடுத்து வென்று தங்கள் பராக்கிரமத்தைக் காட்டியவர்கள், கீழைத் தேசங்களில் சாவகம் வரையிலும் வந்து தங்கள் நாகரிகத்தைப் பரப்பியவர்கள். இன்று ஐ.நா. சபையில் தமிழர்கள் நாடு என்று சொல்வதற்கு ஒரு கையகல இடம் இல்லை!" என்று தமது நெஞ்சிலே உதிரம் கொட்டி, அனைத்துத் தமிழர்களுடைய மனச்சாட்சியிலும் ஓங்கிக் குத்துகின்றார். இனத்தாலும், மொழியாலும் நாம் தமிழர்கள் என்கிற ஒருமைத்துவ உணர்வினை அவர் உலகளாவிய தமிழ் இனத்தின் விடியலுக்காக யாசிக்கும் பொழுது, கட்சிக் கொடிகள் தாங்கி, ஊத்தை அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? காட்டிக் கொடுத்த துரோகக் கும்பலிலேதான் மருதுசகோதரர்கள் வீழ்ச்சியடைந்தார்கள்.
15

Page 10
இந்தக் காட்டிக் கொடுக்கும் கும்பல், இன்றும் ஈழ விடுதலைப் போரினைக் கொச்சைப் படுத்தி, முகமூடிதாரிகளாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பவனிவருகிறார்களே !
வரலாற்று ஞானத்தைத் துணைப் பற்றி, நமது தவறுகளைக் களைந்து, புதிய விடியலை நோக்கிப் பயணிக்க மாட்டோமா?
தமிழ் இனம், தன்னை மீள்தரிசனத்திற்குள் உட்படுத்தி, நேற்றைய வரலாற்றுத் தவறுகளைத் திருத்தி, புதிய வீறுடன், ஜாதி-மதம்-பிராந்தியம்-குழுநலன் பேணுதல் ஆகிய குறுகிய தளைகளை உடைத்தெறிந்து, புதியதோர் தமிழ் உலகம் படைத்திடும் புனிதமான-புதுமையான பயணத்தின் ஊடாக மண்ணும் மனிதர்களும் அழைத்துச் செல்வதாக எனக்குத் தோன்றுகின்றது. எனவே, புதுமையான இலக்கிய முயற்சி என்கிற பதிவும் ஏற்படுகின்றது. இந்தப் பதிவு உங்களுக்கும் ஏற்பட்டால், நான் மிகவும் மகிழ்வேன்.
எஸ்.பொ. 1123, Munro Street,
Eastwood 2122 Australia.
19.08.98
16

முதலாம் பாகம்

Page 11

அஜ்மீரை நோக்கி.
Tெண்பதுகளில் பல முறை இந்திய மண்ணையும் அந்த மக்களையும் காணும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தாலும், எனது பயணங்கள் யாவும் தொழில் ரீதியில் அமைந்திருந்ததால் அணுக்கமாக அந்த மண்ணைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு ஏற்படவில்லை. கோடம்பாக்கம் ஏரியாவில் சினிமாக்காரர்களைச் சுற்றிச் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை அப்பொழுது.
இளையராஜாவை முதன் முறையாக இந்த நாட்டிற்கு வரவழைத்து. சம்பாதித்த அனைத்தையும் இழந்து தெருவில் நின்றபொழுதுதான் எனக்கு ஞானம் பிறந்தது! அதன் பிறகு மறந்தும் கோடம்பாக்கம் பக்கம் எனது காலடிகள் பட்டதில்லை. ‘போதுமடா சாமி’ என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு எனது தொழிலையே மாற்றிக் கொண்டேன். நாணயமிக்கவர்கள் பெயர் போட முடியாத துறை அது. நிமிடத்துக்கு ஒரு பொய்யும், மணிக்கு இரண்டு வேடங்களும் போட முடிந்தவர்கள் மட்டுமே இந்தச் சினிமாத் தொழிலில் பெயர் போட முடியும் துரதிர்ஷ்டவசமாக
19

Page 12
O மண்ணும் மனிதர்களும்
எனக்கு எவ்வளவு முயன்றும் வேஷம் போடவும் பொய் பேசவும் முடியவில்லை!
சினிமாவில் நீண்ட காலம் பெயர் போட்ட ஒரு கதாநாயகன் எனக்கு நெருங்கிய நண்பரானார். அவர் எனக்குத் தந்த அறிவுரை இதுதான்:“நம்பிக்கை, நாணயம் என்பதெல்லாம் இங்கே செல்லாக் காசுகள்! நீங்கள் நண்பர் என்பதால் சொல்கிறேன். தயவுசெய்து இனிமேல் வேறு தொழில் செய்யப் பாருங்கள்!”இந்த வார்த்தைகள் எனக்கு அப்பொழுது வேதவாக்காகப் பட்டது.
உண்மையில் கோடம்பாக்கம் ஏரியா மனிதர்கள் மட்டுமே அப்படி இருந்திருந்தால்கூட என்னால் அதை சமாளித்திருக்க முடியும். ஆனால் நடிகர்களை வரவழைத்து இங்கே கலை இரவுகள் நடத்திய நண்பர்கள், படங்களை வரவழைத்துத் தியேட்டர்களில் திரையிட்ட தோழர்கள் அனைவருமே என்னைச் சுற்றி பெரிய வலையையே பின்னிவிட்டார்கள். நம்பத் தகுந்த வட்டாரங்களி லிருந்து நம்பத்தகாத - நம்ப முடியாத - வார்த்தைகளைக் கேட்டு ஒரு நாள் முழுதும் சென்னை அண்ணா சாலையில் உள்ள Madras International Hotelலில் நான் கதவை சாத்திக்கொண்டு அழுது தீர்த்தேன். அதன் பிறகு இந்திய மண்ணை மிதிப்பதில்லை என்ற முடிவோடு விமானம் ஏறினேன்.
இறைவன் மிகப் பெரியவன்!
யாரை என் நெருங்கிய நண்பர்கள் என்று நினைத்து ஏமாற்ற மடைந்தேனோ - எந்த மணணில் அவர்களின் அடையாளங்கள் எனக்குத் தெரிந்ததோ - அதே மண்ணில் சில நல்ல கோடீஸ்வர நண்பர்களும் எனக்கு அடையாளம் தெரிந்தார்கள். அந்த இந்திய மண்ணில் எனக்கு மிக அபூர்வமான நண்பர்கள் அமைந்தார்கள். ஏதோ ஒரு வகையில் எனது நட்பு என்ற பள்ளம் தோண்டப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே அது அற்புதமான வேறு நண்பர்களால் நிரப்பப்பட்டது. இது அந்த நாட்டில் எனது சொந்தக் கதை - சோகக் கதை!
அதன்பின் பத்து ஆண்டுகள் கழித்து. 1992 ஆம் ஆண்டு எனது பெரிய தகப்பனார் - என்னை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கியவர் - திடீரென்று நோய் வாய்ப்பட்டு தமிழகம் சென்று
20

சைபீர்முகம்மது O இறந்து விட்டார். நான் இந்திய மண்ணில் மீண்டும் காலடி வைக்க வேண்டிய கட்டாயம். ஒரு மாதம் தமிழகம் முழுதும் சுற்றிய போதுகூட எனக்கு அணுக்கமான ஒரு பார்வை ஏற்படவில்லை. ஏதோ சென்றோம். பார்த்தோம் என்று திரும்பி விட்டேன்.
இந்த முறை சென்ற பொழுது, எனது பழைய நண்பர்கள் நிறைய பணத்தைக் கொடுத்து செலவு செய்யச் சொன்னார்கள். இம்முறை அவர்களுக்கே நான் செய்த செலவைப் பார்த்து ஆச்சரியமாகி விட்டது. "பணம் வரும், போகும், ஆனால் அன்பு ஒன்றுதான் நிலைக்கும்” என்று கூறி, அவர்கள் தந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டேன்.
அதன் பிறகு - இம்முறை!
நூல்கள் அச்சடிக்கும் வேலையாக ஒரு மாதம் இந்திய மண்ணில் நான் காலடி எடுத்து வைத்தேன்.
டில்லி, அக்ரா, ஜெய்ப்பூர், அஜ்மீர் என்று வட இந்தியாவிலும், தென்னாட்டின் பல மாவட்டங்களிலும் பயணம் செய்தேன். உண்மையில் எனது இந்தப் பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன், ஒரு சில வார்த்தைகளை முன்கூட்டியே சொல்லி விடுவது நல்லது என்று படுகிறது.
பயணக் கட்டுரை என்பது Blank Cheque மாதிரி. எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதும் காசோலை’ வாசகர்களாகிய உங்கள் பேங்கில் பாசாக வேண்டும். சரியாக எழுதாவிட்டால் எழுதியவனிடமே திரும்பிவிடும்.
இந்திய மண்ணைப் பற்றியும், அதில் வாழும் இன்றைய மனிதர்களைப் பற்றியும் மட்டுமே நான் எழுதப் போவதில்லை. அந்த மண்ணில் 1526 ஆம் ஆண்டு முதலே மதச் சண்டைகளும் படையெடுப்புகளும் - சுவையான சரித்திரப் பின்னணிகளும் காதல் விவகாரங்களும் - இலக்கியப் படைப்புகளும், வீரமிக்க போர்க்களங்களும் - ஆத்மீகம் - ஞானம் என்று பல்வேறு கோணங்களிலும் இது உங்களைச் சுற்றி வரப்போகிறது.
இன்றைய நவீன இந்திய மண் - சாதி, மதம், அரசியல், சினிமா, பக்தி, சாமியார்கள். சித்தர்கள். பாபர் மதுதி உடைப்பு.
21

Page 13
O மண்ணும் மனிதர்களும்
அன்றாடம் ஓர் ஊரில் குண்டுவெடிப்பு என்று வேறொரு திசையில் சென்றாலும், புதிய தொழில் முன்னேற்றம், உலக நாடுகளுடன் பொருளாதாரப் போட்டி என்று அதன் கவனம் இருந்தே வருகிறது.
வட நாட்டில் பயணம் செய்யும் பொழுது, குறிப்பாக அக்ராவிலிருந்து டில்லி வரை நான் விமானத்திலேயே வந்திருக்கலாம். அந்த 260 கிலோ மீட்டர் தூரத்தை கடும் கோடையில் காரிலேயே - அதுவும் குளிர்சாதன வசதியற்ற காரிலேயே - பயணம் செய்த பொழுது, உத்தரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, அக்ரா, டில்லி போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியைக் காண முடிந்தது. பார்த்தீர்களா வாசகர்களே! நீங்கள் சரியான தகவல்களைப் பெற வேண்டுமென்பதற்காக நான் பல சிரமங்களை ஏற்றுக் கொண்டேன். சிரமமான பயணம். ஏற்றுக் கொள்ள முடியாத உணவு. வசதியற்ற படுக்கை. இவைகள் எல்லாமே இதனை எழுதுகின்ற நேரத்தில் இன்பமாகவே இருக்கின்றன.
முதலில் நமது பயணத்தை அஜ்மீரிலிருந்து தொடங்கு வோமே!
அஜ்மீர் - முஸ்லீம்களுக்கு ஒரு புனிதமான இடம். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் குறைந்தது 50,000 மக்கள் வருகை தருகிறார்கள். இங்கே ஹாஜா முயீனுத்தின் (ரலி) அவர்களின் புனித அடக்க ஸ்தலம் உள்ளது. தென்னாட்டில் எப்படி நாகூர் ஆண்டகையின் புனித இடம் கருதப்படுகிறதோ, அதே போல் வடநாட்டில் அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்களின் இடம் பிரசித்தி பெற்றது.
அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்களின் வரலாறும் மன்னன் பிருதிவிராஜனின் வரலாறும் மிகவும் பிரபலமானது என்றாலும், இன்றைய இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, பல முதிய தலைமுறையினருக்கும் இந்த வரலாறு சரியாகத் தெரியாது.
இந்த வரலாற்றை அடுத்து வரும் அத்தியாயத்தில் உங்களுக்குச் சொல்லுவேன்.
22 -

சைபீர்முகம்மது O
அஜ்மீர் நகரமும் ஹாஜா நாயகத்தின் புனித இடமும் மலையடிவாரத்தில் மிக அழகிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்தப் புனித இடத்திற்குப் பக்கத்தில் 400 ஆண்டுகளுக்கு முன் டில்லியை ஆண்ட அக்பர் மன்னர் கட்டிய பள்ளிவாசலும், ஷாஜஹான் கட்டிய சலவைக்கல் பள்ளிவாசலும் இருக்கின்றன. தரை முழுதும் ஷாஜஹான் சலவைக்கல் பதித்து. அந்த தொழுகை பள்ளி வாசலை மிக நேர்த்தியாகக் கட்டியுள்ளார். இன்றும் இந்த பள்ளிவாசலில்தான் தொழுகை நடைபெறுகிறது.
அக்காலத்து மன்னர்கள். மக்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கிச் செல்வதற்கு மண்டபங்களும் வசதிகளும் செய்து வைத்துள்ளார்கள்.
அஜ்மீரில் மிகப் பெரிய நீர்த் தேக்கமும் அதன் கரையில் மன்னர் ஷாஜஹான் கட்டிய அழகிய மண்டபங்களும் உள்ளன. நான் சென்ற அந்த ஏப்ரல் கோடையிலும் குளிர்ந்த காற்று வந்து என்னைத் தொட்டுச் சென்றது.
பக்கத்தில் இருக்கும் குன்றைச் சுற்றி பிருதிவிராஜன் கட்டிய பழைய கோட்டை இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. அண்மையில்தான் இந்த கோட்டைக்குச் செல்ல அரசாங்கம் அழகிய சாலை அமைத்துள்ளது. கோட்டையின் உள்ளே பிருதிவிராஜன் காலத்தில் போர் தொடுத்து அதில் இறந்த முஸ்லீம் படைத் தளபதிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இங்கேயும் மன்னர் அக்பர் தனது மொகலாய கட்டடக்கலை நுணுக்கத்தோடு ஒரு நுழைவாயில் கட்டியுள்ளார். இந்த குன்றின் மேல் இருந்து பார்த்தால் அஜ்மீரின் ஒரு பகுதி முழுதும் நன்றாகத் தெரிகிறது.
இந்தக் குன்றின் அடிவாரத்தில் அரசாங்கம் ஒரு சிறிய பூங்காவை அமைத்து. அதில் பிருதிவிராஜன் சிலையை குதிரை மேல் சவாரி செய்வது போல் அமைத்துள்ளது. பொதுமக்களுக்கு இன்னமும் அந்தப் பூங்கா திறந்து விடப்படவில்லை. என்றாலும் அந்த சிலையை அருகில் சென்று காண அனுமதி பெற்று கண்டேன். இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால். அந்த சிலை பற்றியும், பிரதிவிராஜன் பற்றியும் ஹிந்தியிலேயே எழுதி வைத்துள்ளதுதான். -
23

Page 14
O மண்ணும் மனிதர்களும்
இந்திய சுற்றுப்பயணத் துறையைப் போன்ற ஒரு மோசமான துறையை நான் கண்டதே இல்லை. எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்த கோடைக் காலம் 180 டிகிரிக்கு ஏற்றம் கண்டது! ஒரு வெளிநாட்டுக்காரன் எப்படித்தான் அந்த ஹிந்தியைப் படித்து புரிந்து கொள்ள முடியும்? ஏ. ஹிந்திக்காரர்களே! உங்கள் மொழியை வணங்குங்கள்! மற்ற மொழிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்!!
அக்பர். ஷாஜஹான் போன்றவர்கள் கட்டிய நீர்த் தேக்கங்கள். அத்தாணி மண்டபங்கள், கோட்டைகள் மற்றும் எண்ணற்ற சரித்திரச் சான்றுகளில் குறிப்புகளே கிடையாது. அவை பழம்பொருள் காப்பகத்தால் பாதுகாக்கப்படுபவை. எந்த விதமான சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்படுத்தினால் இந்திய சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்ற குறிப்பு எல்லா இடங்களிலும் உள்ளது. முதலில், தண்டனையை காப்பகத்தின் தலைவருக்கு வழங்கினால் என்னை விட மகிழக் கூடியவர்கள் இருக்க முடியாது.
அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்களின் தர்காவில் இரண்டு பெரிய பானைகள் இருக்கின்றன. ஒன்று, மன்னர் அக்பரால் வழங்கப்பட்டது. மற்றது சிறியது. ஷாஜஹான் வழங்கியது.
அக்பர் வழங்கிய பானையில் ஆண்டுக்கு இரண்டு முறை கஞ்சி காய்ச்சி எல்லோருக்கும் வழங்குகின்றார்கள். இதில் ஒரு முறை கஞ்சி காய்ச்சுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆகும்! மற்றதில் காய்ச்ச முப்பது ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். இதில் கஞ்சி காய்ச்சி வழங்க பலரும் போட்டி போடுகிறார்கள்.
இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால், ஒரு பக்கம் இந்து, முஸ்லீம், சிக்கியர் என்று வெட்டிக்கொண்டு மதக் கலவரத்தில் ஈடுபட்டு மாய்கிறார்கள். ஆனால், அஜ்மீரில் நான்
24

சைபீர்முகம்மது O
பார்த்த அதிசயம் - இந்த முஸ்லீம் புனித இடத்தில் சிக்கியர்களும், இந்துக்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்து வணங்கு கிறார்கள்.
நம் நாட்டைச் சேர்ந்த பாரதிதாசன் விழா இயக்கத்தின் செயலாளர் கே. பழனிச்சாமியின் பெயரும், கோலாலம்பூர் கைவல்யம் பெயரும் இங்கே மிகப் பிரபலம். பழனிச்சாமி ஒரு லட்சம் ரூபாயில் கஞ்சி காய்ச்சி ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் என்பதை அங்கே அறிந்து, எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது!
எனக்கு மிகப் பெரிய இன்னொரு அதிசயம், அவ்வளவு Gourfuu இரும்புப் பானையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் - கொதிக்கும் கஞ்சியில் - அந்தப் பானை சிறிதுகூட சுடவே இல்லை!
ஏறக்குறைய 15அடி உயரமும், 18 அடி அகல வாய் சுற்றளவும் கொண்டது அந்த அக்பரின் பானை. 400 வருடங்களாக அங்கே ஏழைகளுக்கு கஞ்சி வார்த்துக் கொண்டிருக்கிறது!
கருணைக்கடல் ஹாஜா g5 Tuusub
கிருணைக் கடல், ஏழைகளின் நண்பர் என்று சொல்லப்படும் - போற்றப்படும் குலாஜா மொய்னுதின் சிஷ்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன் இறைஞானிகள் பலர் சித்தர்கள் வழியில் இறைவனைத் துதித்து ஞானம் பெற்றவர்கள் என்பதையும், இவர்களை துருஃபி ஞானிகள் என்று ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டால் அவரின் வரலாறு மேலும் தெளிவாகும்.
மறைஞானத்தை ஓதி உணர்வது வேறு, பக்குவமடைந்தோர்
மட்டுமே மறைபொருள் ஞானத்தைப் பெறுவது வேறு! தஃப்பிகள் மறைபொருளை உணர்ந்தவர்கள்.
25

Page 15
O மண்ணும் மனிதர்களும்
‘சூஃபி’ என்ற சொல் எப்படி ஏற்பட்டது என்பதற்குப் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. 'தஃப்’ என்ற சொல் அரபு மொழியில் கம்பளி ஆடையைக் குறிக்கும் சொல்லாகும். தஃபிகள் என்னும் அரபுச் சித்தர்கள், கம்பளி ஆடையை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்ததன் காரணத்தால் அச்சொல் வழக்கத்திற்கு வந்தது என்பர். தொழுகையின் பொழுது ‘சஃப்' என்ற வரிசையாக நிற்கும் காரணத்தால் வந்தது அச்சொல் என்று மற்றொரு சாரர் கூறுவர். நபிகள் நாயகம் (சல்) அவர்களோடு முன் வரிசையில் நின்று தொழுத இறைநேசம் மிக்க தோழர்களை இது குறிக்க பயன்பட்ட சொல் என்றும் கூறுவர். பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் மிகப் பிரியத் தோழர்களில் சிலர் உலகியலை வெறுத்து, எந்நேரமும் இறைச் சிந்தனையிலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் பள்ளிவாசலின் திண்ணையிலேயே தங்கி வந்தார்கள். திண்ணைத் தோழர்கள் என்றழைக்கப்பட்ட இவர்களே, பின்னர் உலகம் முழுதும் இறை ஞானம் போதிக்கக் கிளம்பியவர்கள். திண்ணைக்கு அரபுச் சொல் ‘சுஃபா' என்பதாகும். சுஃபா' என்ற திண்ணையைக் குறிக்கும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாமென்பது ஒரு சிலரின் முடிவு. மேலும் துய்மை என்ற பொருளில் வழங்கப்படும் ‘சஃபூ சொல்லிலிருந்தும், “சோஃபியா’ என்ற ஞானத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லிலிருந்தும் இச்சொல் தோன்றியிருக்கலாம் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்துள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் இச்சொல் இஸ்லாமிய இறைஞானிகளைக் குறிக்கும் சொல்லாக கி.பி 815 ஆம் ஆண்டிலிருந்து வழக்கத்திற்கு வந்து விட்டது.
தஃபிகளின் ஆன்மீக தத்துவத்தை அதா (ரஹ்) அவர்கள் மிக எளிய முறையில் விளக்கியுள்ளார்கள். ‘தூக்கத்தைத் துறந்து துன்பத்தை நுகர்வதாகும்’அதாவது ‘இறைவனை மிக அணுகி இருப்பதாகும் என்று கூறியுள்ளார்கள்.
‘ஷரீஅத்’ என்றால் நடைமுறையில் பின்பற்றி ஒழுக வேண்டிய மார்க்க முறைகளாகும். அதற்கு மேல் ஆன்மீக வழியில் மேலே செல்லும் படி தான் தரீக்காவாகும். இந்த மேலே உள்ள
26

சைபீர்முகம்மது O
படிகள் உலக முழுதும் 200 பிரிவுகளாக உள்ளன. அதில் இந்தியாவில் நான்கு முக்கியப் பிரிவுகள் காலூன்றின.
ஒரு தஃபியின் பயணம் குருவின் வழிகாட்டுதல் இன்றி அமைய முடியாது. இந்த வழிகாட்டி, குரு 'ஷைகு’ என்றும் 'பீர்’ என்றும் அழைக்கப்படுவர். இந்த வழிகாட்டியின் மூலம் ஒருவன் அந்நெறியின் தலைவரையும் அதன் பின் இறைத் தூதர் (சல்) அவர்களையும் அவரிடம் இறைவனையும் காணும் பேறு பெறுகிறான். இதற்கு ஆன்மா ஏழு படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. முதற்படி தன் பாவங்களுக்கு வருந்தி ஆன்மாவை தூய்மைப் படுத்துதல். இரண்டாவது படி இச்சைகளைத் துறந்து இறைவன் மேல் காதல் கொள்ளுதல் (நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் காதல் என்று எழுதியுள்ளேன்). மூன்றாவது படி துறவு. இறைவனைத் தவிர உலகத்தில் அனைத்தையும் துறத்தல், நான்காவது படி ஞானம். இறைவனின் இயல்புகள், பண்புகள், செயல்களை சிந்தித்து உளமார்ந்து உணர்தல். ஐந்தாம் படி பரவசம். இறையைத் தியானித்து மனக் கிளர்ச்சியடைந்து தன்னை மறந்து இறையோடு ஒன்றுதல். ஆறாம் படி சத்தியம். இதயம் உண்மைப் பரம்பொருள் தன்மையால் விளக்கமுறுதல், விளக்கமுற்றுப் பரம்பொருளைச் சார்தல், ஏழாம் படியான இறுதி நிலை ஒருமை. இறையை நேருக்கு நேராகக் கண்டுணர்ந்து ஒன்றுதல். இவ்வேழு படிகளையும் கடக்க, ஒருவன் கடைசியில் 'தான்’ என்பதை முற்றிலும் அழித்துக் கொண்டு பரமான்மா வோடு அத்வீத நிலையடைவான்.
இது நான் விளக்கி நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று. தமிழில் பம்பாட்டிச் சித்தர் என்றும் இன்னும் பல்வேறு பெயர்களிலும் பல நூறு சித்தர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளார்கள். அவர்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருப்பது போலவே அவர்கள் இயற்றிய பாடல்களைப் புரிந்து கொள்வதும் கடினம். பல்வேறு விளக்க உரைகளும் பல்வேறு விளக்கங்களையே சொல்லிக் கொண்டிருக் கின்றன.
சித்தர்களின் பரிபாஷைகளைத் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.
27

Page 16
o மண்ணும் மனிதர்களும்
‘பாடுகின்ற சித்தருடைய நூல்களெல்லாம் பரிபாஷை தெரியாது’ என்று அகத்தியரே பாடியுள்ளார். குருவின் துணையின்றி இந்தத் துறையில் ஈடுபடுவது பெரிய ஆபத்தாக முடியும். உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு ‘திருமால்' என்றே பொருள் கொள்வது வழக்கம். ஆனால் அதற்கு “கடுக்காய்’ என்ற மற்றொரு அரிய மருத்துவப் பெயரும் உண்டு.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய சித்தர்களில் ஒருவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்தவர் குணங்குடி மஸ்தான் அவர்கள். இரண்டாவது நிலையில் இறைவன் மேல் காதல் கொண்டு இப்படி பாடுகிறார்.
“வேதவேதாந்த மெல்லாம் விட்டேறியே கடந்து காதலித்து நின்றேன் கண்ணே றகுமானே’. இறைவனைப் பெண்ணாக நினைத்து கட்டழகி என்றும், கண்ணாட்டி என்றும் உளமகிழ்ந்து அழைக்கிறார். அடுத்து....மனோன்மணிக் கண்ணி’ என்று தனியாக ஒரு நூலில் இறைவனைக் கீழ்க்காணும் வகையில் காதல் போதையேறிப்பாடுகிறார்.
"என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே உன்னைவிட்டால் பெண்னெனக்கும் உண்டோ மனோன்மணியே!”
மேற்கண்டவற்றை துஃபிகள் பற்றியும் சித்தர்கள் பற்றியும் ஒரு கோடிட்டே காட்டினேன். இதையே எழுதினால் அதுவே தனி நூலாக விரியும்.
இப்பொழுதுள்ள துழிநிலையில் சித்தனைப் பற்றியும் புத்தனைப் பற்றியும் எழுதினால் எனது BLANK CHEQUE தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் பிறகு என்னிடமே திரும்பி விடுமல்லவா? அதற்காக 'வாசகர்கள் பேசுகிறார்கள்’ பகுதியில் எழுதும் நமது ‘அதிமேதாவிகளுக்காக நான் கமலஹாசன் பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும் கொஞ்சம் செய்திகளைத் திரட்டியே வைத்துள்ளேன்.
28

சைபீர்முகம்மது O
சூஃபிகள் பற்றி இப்பொழுது ஒரளவு தெரிந்து வைத்திருப் பீர்கள். இந்தியாவில் உள்ள நான்கு தரீக்காக்களின் உட்பிரிவு ஒன்றுதான் ஷிஸ்தி தரீக்காப் பிரிவு. அஜ்மீரில் அடங்கி இருக்கும் ஹாஜா நாயகம் அவர்களே இப்பிரிவை ஏற்படுத்தியவர் என்றும் ஒரு வரலாறு உண்டு.
கி.பி. 1142 ஆம் ஆண்டில் ஹாஜா நாயகம் அவர்கள் ஆப்கனிஸ்தானில் பிறந்தவர். இவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வழித்தோன்றல் ஆவார். இவரின் தாயாரும் தந்தையும் நபிகள் நாயகத்தின் (சல்) மருமகன் அலியார் (ரஹ்) அவர்களின் வழித்தோன்றலாகும். நாயகம் ரதுல் (சல்) அவர்களின் நிருப்பேரர்களில் ஒருவரான ஹஜரத் ஹசன் (ரலி) அவர்களின் 10 ஆவது வழித்தோன்றலில் வந்தவர். இவரின் தாயார் உம்மல் வரஃ. ரதுலுல்லாவின் (ஸல்) அவர்களின் மற்றொரு பேரர் ஹஜரத். ஹ சஸைன் (ரலி) அவர்களின் 10 ஆவது வழித்தோன்றல் தான் அஜ்மீர் நாயகத்தின் தந்தையார் சையத் கியாஸ”த்தீன், பின்னாளில் ஹாஜா முயீனுத்தீன் ஷிஸ்தி (ரஹற்) என்றழைக்கப் பட்ட இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே திருக்குரான் முழுதும் மனப்பாடம் செய்து விட்டார். பாரசீக மொழியில் தேர்ச்சி பெற்று அதில் பல்வேறு அறிவு நூல்களைக் கற்றார்கள்.
அவரது மனம் ஞான மார்க்கத்திலேயே இருப்பதை அறிந்த அவரின் தந்தையார் இவருக்கு மேலும் மேலும் கல்வியையும் ஞானத்தையும் போதித்து வந்தார்கள். தனது 15 ஆவது வயதில் தாயையும் தந்தையையும் இழந்த முயினுத்தின் அவர்கள் தந்தையார் விட்டுச் சென்ற திராட்சைத் தோட்டத்தை வைத்துக் கொண்டு அதில் பாடுபட்டு பிழைத்து வந்தார்கள்.
தோட்டத்தில் நீர் இறைக்கும் பொழுதெல்லாம் இவரின் மனம் வெட்ட வெளியில் இருக்கும் இறைவனையே நாடி நின்றது.
ஒரு நாள் ஹஜரத் இப்ராஹிம் கன்தூஸி என்ற தஃப்பி பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தனது தோட்டத்தில். விளைந்த திராட்சைப் பழத்தை எடுத்து அவருக்கு வழங்கிய பொழுது அந்த பெரியவர் ஒரு பழத்தை எடுத்து இவரின் வாயில் ஊட்டி விட்டார். முயீனுத்தின் தன்னை மறந்து கண்ணை
29

Page 17
O மண்ணும் மனிதர்களும்
மூடினார். உலகம் - விரிந்து - தான் பறந்து பறந்து பேரின்ப வெளிச்சத்தை அடைவதை உணர்ந்தார். கண் விழித்துப் பார்த்த பொழுது அந்தப் பெரியவர் அங்கே இல்லை!
அஜ்மீர் நாயகம் வரலாறும் வாழ்க்கையும்
உலகம் தனது சிறிய திராட்சைத் தோட்டத்தில் இல்லை என்பதையும் இறைவனின் அருள் உலகம் முழுதும் விரிந்து பரந்துள்ளது என்பதையும் அறிந்த ஹாஜா முயீனுத்தின் அவர்கள். தனது திராட்சைத் தோட்டத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்கு வழங்கிவிட்டு தனது ஊரிலிருந்து புறப்பட்டு தனது ஆன்மீகக் குருவைத் தேடினார்கள்.
தனது கண் மூடித் திறப்பதற்குள் மறைந்து விட்ட ஹஜரத் இப்ராஹிம் கன் துரளி அவர்களை எப்படியும் கண்டுவிட துடித்தார்கள். தனது 22வது வயதில் காடு மலைகளைக் கடந்து ஞானம் பெற ரஷ்யாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் அடைந்து கடைசியில் ஹாரூன் நகரில் ஒரு பெரிய மகான் இருப்பதை அறிந்தார்கள். ஹாஜா உதுமான் ஹாரூனி என்றழைக்கப்படும் அந்த ஞான மகானே இவருக்கு குருவாக அமைந்தார். பல ஆண்டுகள் அவரிடம் கல்வியும் ஞானமும் பெற்று அவரோடு இணைந்து மக்கா சென்று தொழுத வேளையில் இவரின் ஞானக் கண் திறந்தது. நான் சென்ற அத்தியாயத்தில் சொன்ன ஏழு நிலைகளின் இறுதி நிலை இருவருக்குக் கிட்டியது. ‘தஃபி’ என்றழைக்கப்படும் சித்தர்களின் நிலையை அவர் அடைந்தார். Y ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இறைவனிடம் மன்றாடி தியானித்து குருவருளால் திருவருள் பெற்றார்கள்!
இதன் பின் தனது ஞானக்குருவின் ஆசியுடன் பாக்தாத் சென்றார்கள். பாக்தாத்தில் இன்று உலகம் முழுதும் போற்றப்படுகின்ற துஃபிகளின் தலைவர் என்றழைக்கப்படுகின்ற கெளதுல் ஆலமான முஹயீத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹற்)
3O

சைபீர்முகம்மது O
அவர்களின் அருளாசியும் இவருக்குக் கிட்டியது. ஒரு வகையில் பார்க்கப் போனால் முஹற்யித்தின் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உறவு முறையில் இவரின் தாய் மாமன் ஆவார்கள்.
அதன் பின் தனது ஹஜ் பயணத்தை மேற்கொண்ட பொழுது தான் இவருக்கு இந்தியப் பயணம் பற்றிய கட்டளை பிறப்பிக்கப் Lull-gil.
நாற்பது சிடர்களுடன் இந்திய நாட்டிற்கு வந்த ஹாஜா முயீனுத்தின் அவர்கள் யமுனை நதியில் டில்லியில் முகாமிட்டு பின் அஜ்மீர் வந்தடைந்தார். அப்பொழுது அஜ்மீரை தலைநகராகக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தை புகழ் பெற்ற மன்னன் பிருதிவிராஜன் ஆண்டு கொண்டிருந்தான்.
பிருதிவிராஜன் பக்கத்து மாநிலங்களிலும் குறிப்பாக டில்லி, அக்ரா போன்ற இடங்களிலும் தனது வீரத்தால் கதி கலங்கச் செய்து கொண்டிருந்தவன். புகழ் பெற்ற வீரன்.
நான் அஜ்மீர் சென்ற பொழுது மலை உச்சியில் இருந்த பிரதிவிராஜன் கோட்டைக்கு ஏறக்குறைய ஏழு கிலோ மீட்டர் நடந்தே சென்றேன். எவரெஸ்ட் மலைக்கே சென்றிருக்கலாம்! பணியும் குளிரும் கொஞ்சம் இதமாக இருந்திருக்குமோ? கடும் கோடையில் அந்த ஏழு கிலோ மீட்டரில் மலையேறியதை இப்பொழுது நினைக்கும் பொழுதும் எனது இரண்டு கால்களும் ‘வெட வெட!’
டில்லி, அக்ரா, ஜெய்ப்பூர் என்று அழகிய இடங்கள் இருக்கும் பொழுது இந்த பிருதிவி ஏன் இப்படி மலை உச்சியில் கோட்டையைக் கட்டி என்னை வாட்டினான் என்று திட்டிக் கொண்டே ஏறினேன். கல்லும் பாறையும் தவிர ஒதுங்குவதற்கு ஒரு மரம் கூட இல்லை! பாதி வழியில் ஒரு கூடாரம் தெரிந்தது. அப்பாடா என்று அங்கே சென்றபொழுது அந்த கூடாரத்தில் ஹாஜா நாயகம் அவர்களின் புகழ் பாடும் கெசட் விற்பனை மும்முரமாக இருந்தது. பெரிய ஒலிபெருக்கிகளைப் பொருத்தி பாடல்களைப் போட்டு, கெசட் விற்பனையில் பெருங் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நின்றது. கெசட் வாங்குபவர்களைக் காட்டிலும் நிழலுக்கு ஒதுங்கியவர்களே அதிகம்! அதையும்
31

Page 18
O மண்ணும் மனிதர்களும்
தாண்டிச் செல்லும் பொழுதுதான் எனது சிரமம் எவ்வளவு சிறிது என்பதை உணர்ந்தேன்.
இரண்டு கால்களுமே தும்பிய நிலையில் தனது கைகளால் ஒருவர் அடி அடியாக மலையேறிக் கொண்டிருந்தார். அவரது கால்களை நகர்த்தவே முடியவில்லை. ஓரடி வைத்ததும் தனது கைகளால் கால்களைத் தூக்கி முன்னே வைத்து இடுப்பில் நகர்ந்து நகர்ந்து முன்னேறியதைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன. ஏழைகளுக்குப் போடுவதற்கு நிறைய சில்லறைக் காசுகளை மாற்றி வைத்திருந்தேன். அவர் கையில் கொஞ்சம் சில்லறைக் காசுகளை எடுத்துக் கொடுத்த பொழுது அவர் வாங்க மறுத்து என்னை மேலும் மலை உச்சியிலிருந்து கிழே உருட்டினார்!
அஜ்மீரில் தமிழ்நாடு ஹவுஸ் என்ற விடுதியில்தான் நான் தங்கியிருந்தேன். இங்கிருப்பவர்கள் நன்றாகத் தமிழ்ப் பேசக்கூடிய அதே வேளையில் ஹிந்தியும் பேசுவார்கள். அவர்களில் ஒருவர்தான் என்னோடு வழிகாட்டியாக வந்தார். அந்த ஆள் ஏன் காசு வாங்க மறுக்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்லச் சொன்னேன்.
ஏற்கனவே தனது கால்களையும் உடம்பையும் சுமந்து மலையேறும் அவர் சில்லறைகளையும் சுமக்க முடியாது வேண்டுமானால் நோட்டாகத் தரும்படி கேட்டுக் கொண்டதாக வழிகாட்டி கூறினார். கையில் இருந்த நோட்டுக்களைக் கொடுத்து விட்டு மலையேறினேன். மலை மேல் கோட்டை வாயிலுக்கு ஒரு கிலோ மீட்டருக்குக் கிழே ஒரு குளிர்பானக் கடை இருந்தது. நான் அங்கே எலுமிச்சை நீரைப் பருகிவிட்டு அங்கேயே அமர்ந்து சுற்றிலும் நோட்டம் பார்த்த பொழுதுதான் பிருதிவிராஜனின் புத்திசாலித்தனம் விளங்கியது.
கோட்டை குன்றின் மேல் இருந்தது. குன்றைச் சுற்றி பெரிய பள்ளத்தாக்கு. அதன் பின் மலைகள்! மலைகளைச் சுற்றி இப்பொழுது இடிந்து விட்டாலும் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மதிற்கவர்கள் எதிரிகள் எந்த திசையிலிருந்து வந்தாலும் துல்லியமாக கணித்து விடக்கூடிய இடத்தில் பிருதிவிராஜன் அரண்மனைக் கோட்டை சினப்பெருஞ்
32

சைபீர்முகம்மது O
சுவர்போல் இல்லாவிட்டாலும் ஓரளவு மலையைக் சுற்றி இவனும் சுவர் எழுப்பியுள்ளான். ஒரே ஒரு வித்தியாசம் அது மிக நீண்டது. இது சற்று சிறியது! சீனப் பெருஞ்சுவர் உலகம் முழுதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரமே விரும்பாத நமது இந்திய பழம் பொருள் காப்பகம் அடக்கி வாசிக்கிறது. வாழ்க இந்திய பழம்பொருள் காப்பகம்!
நான் நீர் பருகி களைப்பு தீர்ந்து புறப்பட்ட பொழுது அந்த கால் தும்பிய மனிதர் அங்கே வந்து விட்டார். எனக்கு முயலும் ஆமையும் கதைதான் ஞாபகம் வந்தது. அவர் விரும்பிய நீரை விரும்பிய அளவு வாங்கிக் கொடுத்து விட்டு நான் ஆமையாக மலையேற ஆரம்பித்தேன்.
கோட்டை வாயிலை அடைந்த பொழுது எனக்கு ஏனோ அந்த ரஜபுத்திரர்களின் வீரமும், அந்தப் பெண்களின் கற்பும் கண் முன்னே வந்து நின்றது. எத்தனை வீரர்களின் ரத்தம் இந்த இடத்தில் கொட்டியிருக்கும்? எத்தனை பெண்கள் இந்த கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் உடன்கட்டை ஏறியிருப் பார்கள்?
கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறும் வழக்கம் ரஜபுத்திரர் களின் பாரம்பரிய வழக்கமாகும்.
கோட்டை வாயிலில் என் செவிகள் சற்று நேரம் 800 ஆண்டுகளைக் கடந்து சென்று அந்தப் போர்க் கால அவலக் குரல் களைக் கேட்டது. சிறிது நேரத்தில் பெண்களின் அலறல்களைக் கேட்டது. ஒன்று. அம்பு பட்டு வேதனையால் துடித்த குரல். மற்றது. தியால் உடலெங்கும் வெந்து அந்த வேதனையில் கதறும் பெண்ணின் அபயக்குரல்! என்னால் உண்மையில் அந்த வேதனையை உணர முடிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் நான் கோட்டையின் உள்ளே சென்றேன்.
கோட்டையின் உள்ளே பிருதிவிராஜனுக்கும் முஸ்லிம் மன்னர்களும் நடந்த போரில் இறந்த வீரத் தளபதிகளில் அடக்கஸ்தலங்கள் உள்ளன. இந்த இடம் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகின்றது. அக்பர். அவர் மகன் ஜஹாகிர், அவரின் மகன் ஷாஜஹான் போன்றவர்கள் கட்டிய புதிய
33

Page 19
) மண்ணும் மனிதர்களும்
நுழைவாயில்கள், போர்த் தளபதிகளுக்குக் கட்டிய நினைவு மண்டபங்கள் என்று அந்த இடம் அழகு படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்த மக்கள் அனைவருமே அந்தக் காலத்துப் பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஒரு 800 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோட்டையில் நடந்த போருக்குப் பின் அங்கேயே குடிவந்தவர்களின் பரம்பரை அது. ஏறக்குறைய 10,000 பேர் அங்கே வசிக்கிறார்கள். கோட்டைக்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அரசாங்கம் போட்ட புதுப் பாதை. இதில் ஆட்டோவில் செல்லலாம். மற்றது பாறைகளின் ஊடே நடந்து செல்லும் கடினமான வழி! நான் போகும் பொழுது நடந்தே சென்றேன். வரும் பொழுது ஆட்டோ வழியாக இறங்கினேன்.
இங்கேயும் அக்பர், ஜகாங்கிர் மன்னர்கள் வழங்கிய பானைகள் இருக்கின்றன. அவற்றில் அன்றாடம் கஞ்சி காய்ச்சி ஏழைகளுக்கு வழங்குகிறார்கள், ஆனால் இவை அளவில் சிறியவை.
அஜ்மீர் ஹாஜா நாயகம் அவர்கள் அஜ்மீர் வந்ததும் அவருக்கும் மன்னர் பிருதிவிராஜனுக்கும் பிரச்னைகள் ஆரம்பமாகிவிட்டன.
ஹாஜா நாயகம் அவர்களின் பல அற்புதங்கள் இங்கே நிகழ்த்தப்பட்டதைக் கண்ட மக்கள் அவரை போற்றிப் புகழ ஆரம்பித்தார்கள்.
ஏறக்குறைய தொண்ணுாறு லட்சம் பேர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். மன்னனுக்கும், மக்கள் மனம் வென்றவருக்கும் இடையில் நெருப்பு எரிய ஆரம்பித்தது.
நாடோடி மன்னன்
நTளுக்கு நாள் அஜ்மீரில் ஆன்மீக அரசு கோலோச்சத் துவங்கியது. மக்களிடம் செல்வாக்கு, ஒரு துருஃபிக்குப் பொருகுவதைக் காண மன்னன் பிருதிவிராஜனுக்குப் பொறுக்கவில்லை. தனது படைத்தளபதியை அனுப்பி ஹாஜா முயீனுத்தின் அவர்களை
34

சைபீர்முகம்மது O
அஜ்மீரை விட்டு வெளியேற உத்தரவிட்டான். இறைநேசர் இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதன்பின்தான் இருவருக்கும் பெரிய பிரச்னைகள் ஆரம்பித்தன.
ஒருநாள் சம்பல் நதிக்கரையோரம் அஜ்மீர் நாயகம் அவர்கள் நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டது. கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் ஓர் இளம் பெண்ணை சில வீரர்கள் கையையும் காலையும் கட்டித் தூக்கிப் போட முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் எப்படியோ தப்பி விட்டாள். தப்பியவள் அஜ்மீர் நாயகம் இருந்த
திசை நோக்கி ஓடி வந்து ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று
கதறியவாறு அவரை தஞ்சமடைந்தாள். “எனக்கு உயிர்ப் பிச்சை கொடுங்கள், நான் உங்கள் அடிமை” என்று அந்தப் பெண் கதறியதைக் கண்ட இவர். “பெண்ணே, மனிதரில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை! மனிதர்கள் அனைவரும் இறைவன் ஒருவனுக்குத்தான் அடிமை” என்றார்கள். அதற்குள் பத்துப் பதினைந்து வீரர்கள் அவ்விடம் வந்து விட்டார்கள், அவர்களின் தலைவன், “பெரியவரே, இவள் எங்கள் இளவரசரின் மனைவி யாவாள். இன்று காலை இவளுக்கும் எங்கள் இளவரசருக்கும் திருமணம் நடக்க இருந்தது. எதிர்பாராதவிதமாக இளவரசர் இறந்து விட்டார். இந்தப் பெண் குஜராத் மாநிலத்து இளவரசி, நாங்கள் ராஜபுத்திரர்கள். எங்கள் குல வழக்கப்படி கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏறுவது வழக்கமாகும். அதோ எரிகிற எங்கள் இளவரசரின் சிதையிலேயே இவளை நாங்கள் எரிக்க வேண்டும். தயவுசெய்து இவளை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்று கேட்டார்கள்.
“நீங்கள்தான் திருமணமே நடக்கவில்லை என்று கூறுகிறீர் கள், பிறகு எப்படி இவள் அவரின் மனைவியாக முடியும்?”
“அப்படியில்லை. எங்கள் ராஜபுத்திர வழக்கப்படி இவள் இறக்கத்தான் வேண்டும். எங்கள் இளவரசரின் சடலம் கருகி, தி அணைவதற்குள் அத்தியில் இவள் வெந்து சாம்பலாக வேண்டும்!”
அஜ்மீர் நாயகம் மிகவும் பொறுமையாக அவனுக்குப் பதிலளித்தார்கள்.
35

Page 20
O மண்ணும் மனிதர்களும்
“வீரனே, ஒரு உயிரைப் படைக்க எப்படி உனக்கு சக்தி "-யில்லைய்ோ அப்படியே அழிக்கவும் உனக்கு உரிமையில்லை. தவிரவும், இந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடைபெறவில்லை. அப்படி இருக்கும்பொழுது அவள் உங்கள் குல வழக்கப்படி உயிர் விடுவதும் சரியில்லை. இவள் என் அடைக்கலம் என்று வந்துவிட்ட பிறகு, அவளைக் காப்பது எனது கடமை!”
இந்தப் பதில்லைக் கேட்ட படைத்தலைவன் தனது வாளை உருவிக் கொண்டு அஜ்மீர் நாயகத்தின் மேல் பாய வந்தான்.
இறை நேசச் செல்வர்களுக்கு அதாவது சித்தர்கள் என்றழைக்கப்படும் துஃபிகளுக்கு இறைவன் அளப்பரிய சக்திகளை வழங்கியுள்ளான். அற்புத நிகழ்ச்சிகள் நடத்தும் ஆற்றல் பெற்றவர் கள். ஆனால் இந்த அற்புதம் நிகழ்த்தும் ஆற்றலை இவர்கள் மிக :ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். என்றாலும் தேவையான இடங்களில் இறை ஆணைப்படி அற்புதங்களை வெளிப்படுத்த வேண்டி வந்தால் வெளிப்படுத்துவார்கள். இவர்கள் உயிரோடு இருக்கும் பொழுது இது நடைபெறும் இறந்த பிறகும் தன்னை நாடி வருகிறவர்களுக்கு இவர்கள் மறைபொருளாக இருந்து உதவுவார்கள்.
இன்று நாகூரில் அடங்கியுள்ள நாகூர் ஆண்டகை, ஆஜ்மீரில் அடங்கியுள்ள ஹாஜா முயீனுத்தீன், பாக்தாத்தில் அடங்கியுள்ள அப்துல் காதீர் ஜிலானி போன்றவர்களும் இன்னும் உலகில் பல்வேறு மதங்களின் பெயர்களில் பல்வேறு சித்தர்கள். ஆங்காங்கே இருந்து மக்களுக்குச் சேவை செய்து கொண்டுதான்
இருக்கிறார்கள். உண்மையில் பார்க்கப் போனால் துஃபிகளும், .
சித்தர்களும் மதங்களையும் சடங்குகளையும் கடந்தவர்கள் என்று ón ApGaynTLö.
தமிழகத்தில் புகழ் பெற்ற தஃபிகளில் ஒருவர் குனங்குடி மஸ்தான் அவர்கள். இவருக்கு முஸ்லிம்களைவிட இந்து சீடர்களே அதிகம்.
அஜ்மீர் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு முஸ்லிம் சூஃபியின் வரலாறாகக் காணாமல் ஓர் இறைசித்தர் என்ற வகையில் மட்டும் காணும்படியாக இவ்வேளையில் நான்
36 as

சைபீர்முக்ம்மது o
கேட்டுக் கொள்கிறேன். அதுதான் உண்மை. ஞானிகள் தேன் போன்றவர்கள். தேனீக்களின் வழியாக பல்நூறு பூக்களிலிருந்து கிடைக்கிறது. ஆனால் அது தேனாக வந்து கூட்டை அடையும் பொழுது அதில் பூக்களின் வாசத்தை உணர முடியுமா?
“எங்களுக்கு சாதித்லம் இல்லையப்பா'என்று பாடுகிறார் சித்தர் வால்மீகி. 姆
துஃபி ஞான மேதை மெளலானா ஜலாலுத்தின் ரூமி அவர்கள்,
நான் கிறித்தவன் அல்லன்
பூதன் அல்லன்
பார்சி அல்லன்
முஸ்லிமும் அல்லன்” என்று பாடுகிறார்.
அருளே வடிவாகிய இறைவன் மதத்தின் பெயரால் ரத்தம் சிந்தும் பித்தர்களின் சித்தத்திற்கு அகப்பட மாட்டான் என்பார் குணங்குடியார்.
"மத பேதம் ஒதி
மதி கெட்டவருக்கு எட்டாத
வான்களுனை வெள்ளம்”
இப்படி பாடியதால்தான் பிற்காலத்தில் பல இந்து மதத்துச் சிடர்கள் குனங்குடியாருக்கு அமைந்தார்கள். திருத்தணிகை மகாவித்துவான் சரவணப் பெருமாள், சிவயோகி ஐயா சுவாமி முதலிய ர், கவிராயர் வேங்கடராயப் பிள்ளை, கோவளம் அருணாசல முதலியார் அவர்களின் மகன் சபாபதி முதலியார் இப்படிப் பல்வேறு சீடர்கள் குனங்குடியாரைப் புகழ்ந்து பாடி யுள்ளார்கள்.
இன்றும் தமிழகத்தில் பல சித்தர்களும் தஃபிகளும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு பெரிய விளம்பரங்களோடு ஆர்ப்பாட்டங்கள் செய்வ
37

Page 21
O மண்ணும் மனிதர்களும்
தில்லை. எங்காவது ஒரு தையற்காரராகவோ, சமையற்கார ராகவோ அமைதியாக இருப்பார்கள். தங்களுக்கு மனதில் படும் சிடர்களை மட்டுமே அழைத்து உபதேசிப்பார்கள்.
எனவே அஜ்மீர் நாயகம் அவர்களை ஒரு மதவாதி என்பதை விட ஒரு இறை நேசர் என்ற வகையில் மட்டுமே காணுங்கள்.
ஓங்கிய வாளுடன் வந்த படைத் தலைவனின் வாள் கையி லிருந்து பறி போனது. அவன் பக்கத்தில் இருந்த சம்பல் நதியில் போய் விழுந்தான். அஜ்மீர் நாயகத்தின் பார்வையைத் தாங்க மாட்டாது மற்றவர் திசைக்கொருவராக ஓடினார்கள்.
தன்னிடம் அடைக்கலமாக வந்த அந்த குஜ்ராத் இளவர சியையே பின்னாளில் ஹாஜா அவர்கள் மணமுடித்துக் கொண் டார்கள். அவரின் பெயர் பின்னாளில் “பீபீ அகமதுல்லாஹற்’ என்று வழங்கலாயிற்று.
அஜ்மீரை விட்டு ஹாஜா ஷஷ்தி அவர்கள் போக மறுத்ததால் பிருதிவிராஜன் மிகவும் ஆத்திரமுற்றான். பல வகையிலும் அவருக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தான்.
இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், பிருதிவியின் அன்னை லாசவத்தா பல முறை தனது மகனை எச்சரித்தாள். அந்த ஞானியின் பகை வேண்டாமென்பதை எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை.
இந்த நேரத்தில் பிருதிவிராஜனின் சாம்ராஜ்யத்தின் செல்வாக்கு டில்லி வரையில் பரவியது. - பிருதிவியின் ராஜகுருவும் படைத் தளபதியுமான ஜெயபாலர் மிகுந்த போர்த்திறன் படைத்தவர். மட்டுமன்று, பெரிய மந்திரவாதியுமாவார்.
தனது படைபலத்தால் அந்த பக்கிரை வெளியேற்ற இயலாது என்பதை அறிந்து மந்திர சக்தியால் வெளியேற்ற ஆலோசனை
நடத்தி, அதன்படி ஜெயபாலரை ஐம்பது வீரர்களுடன் அனுப்பி வைத்தான்.
38

சைபீர்முகம்மது O
மலையிலிருந்து கிழே ஜெயபாலர் இறங்கி வந்த வேளையில், கீழேகுதிரையில் அஜ்மீர் நாயகம் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது மேலே இருந்து பெரிய பாறையை உருட்டித் தள்ளினார்கள். அப்பொழுது அஜ்மீர் நாயகத்தின் குதிரை தனது தலையாலும் ஒற்றைக் காலாலும் அந்தப் பாறையைத் தடுத்து நிறுத்தியது. இன்றும் அந்தப் பாறை அந்தக் குதிரையின் முகம் பதிந்த முகப் பதிவோடும் காலடி பதித்த குறியோடும் அப்படியே நிற்கிறது! அதிசயம்! ஆனால் உண்மை! அப்படியே பாறையாக அழியாமல், கோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ளது!
“ஜெயபாலரே. நான் இறைவனின் அடியவன். தயவுசெய்து என் பாதையில் குறுக்கிடாதீர்கள்!”
“முயீனுத்தினே. நீர் உடனே நாட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும். இல்லையேல் இந்த வாளுக்குப் பலியாவீர்” என்று கூறியவாறு அவர் மேல் பாய்ந்தான். ஆனால் அஜ்மீர் நாயகம் மூன்று முறை வானத்தை நோக்கி"அல் அமான்’ என்று கூவினார்.
ஜெயபாலரின் மந்திரக்கோல் வேலை செய்யவில்லை.
அன்றிரவு நிம்மதி இழந்த ஜெயபாலர் தனது மந்திரச் சக்தி பலிக்காதது கண்டு மனம் வெதும்பி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். காளிக்கு நரபலி கொடுத்தால் தனது சக்தி பெருகுமென்று நினைத்து தனது ஐந்து வயது மகனை வெட்டிப் பலி கொடுத்தார். இதன் மூலம் அரசன் பிருதிவிக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட முடியுமென்று அவர் மனதார நம்பினார். ஆனால் நரபலிக்குப் பிறகும் ஏதும் அதிசயம் நிகழவில்லை! அதன் பிறகே தான் செய்த தவறை நினைத்து அவர் காளியின் முன் புலம்ப ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில், இதமான கரமொன்று அவரின் தோளைத் தொட்டது. திரும்பிய ஜெயபாலர் அதிர்ந்து போனார். அங்கே அஜ்மீர் நாயகம் நின்று கொண்டிருந்தார்கள்.
“பெரியவரே, இந்த நடுநிசியில் தாங்கள் இங்கே ஏன் வந்தீர்கள்”
39

Page 22
O மண்ணும் மனிதர்களும்
“நோயுள்ள இடத்தில்தானே மருத்துவனுக்கு வேலை. உமக்கு தெரியுமா? நரபலியை எந்த மதத்திலும் விரும்புவதில்லை. நீர் பெரிய தவறு செய்துவிட்டீர்”என்று கூறியவாறு அந்தச் சிறுவனை கீழே கிடத்தி தலையைப் பொருத்தி, செய்த தவறுக்கு மன்றாடி மன்னிப்புக் கேட்கும்படி செய்து தானும் மன்றாடி அச்சிறுவன் உயிர் பெற்று எழச் செய்தார்கள். இச்சம்பவத்துக்குப் பிறகு ஜெயபாலர் முஸ்லீமாக மாறிவிட்டார். அவரே அப்துல்லாஹ் பியாபாணி என்று பின்னாளில் அழைக்கப்பட்டார். இதன் பிறகு அஜ்மீர் தெருவெங்கும் பிரச்சாரம் செய்யும் பெரிய இறைநேசராக இவர் மாறிவிட்டார். முயீனுத்தின் ஷஷ்தி அவர்கள் இவர் வீட்டிலேயே தங்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அந்த இல்லமே இன்று புனிதத்துவம் பெற்று வழங்கும் ஹாஜா நாயகம் அவர்களின் அடக்கவிடமாகும்.
பாபரும் ராணா சிங்காவும்
இவ்வளவு நடந்த பிறகும் பிருதிவிராஜனின் போக்கில் மாறுதல் ஏற்படவில்லை. உன்னை அழிக்காமல் விடமாட்டே னென்று பிடிவாதமாக நின்றான்.
இந்த நேரத்தில் தான் ஷிகாபுத்தின் கோரி டில்லியை நோக்கி படையெடுத்து வந்தான். மொகலாய மன்னர்கள் பலர் இந்தியாவை ஆண்டுள்ளார்கள். இதனை பின் வரும் என் காலடிபட்ட மண்ணுரி லிருந்து உங்களுக்கு விரிவாக விளக்குவேன். மொகலாயர்களுக்கு மட்டுமல்ல, வேத ரிஷிகளின் காலத்திலிருந்தே யமுனை நதியும் அதனையொட்டிய டில்லி வட்டாரங்களும் பல போர்க் களங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
ஷிகாபுத்தின் கோரியின் படையெடுப்பால் அஜ்மீரை விட்டு தனது யானை, குதிரைப் படைகளுட்ன் பிருதிவிராஜன் டில்லி நோக்கி புறப்பட்டான். ராணி சம்யுக்தையை தூக்கிச் சென்று மணமுடித்த பிறகு தனது மாமனார் ஆட்சியில் இருந்த டில்லியும் இவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. பிருதிவிராஜன் - சம்யுக்தை
40

சைபீர்முகம்மது O
காதல் கதை மிகப் பிரசித்தி பெற்றது என்பதாலும், எம்.ஜி.ஆரும் பத்மினியும் நடித்த பிரபலமான படம் என்பதாலும் இந்த வரலாற்றை சொல்வது தேவையற்றது என்று நினைக்கிறேன். இளைய தலைமுறையினர் ஒரு முறை வீடியோவில் எடுத்து இந்தப் படத்தைப் பார்த்தால் பிருதிவிராஜனின் மற்றொரு வரலாறு தெரியும், ւյrՈպաl
சித்திரத்தில் பெண் எழுதி
சீர் திருத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விடமாட்டாயா..? என்ற அற்புதமான இன்றும் வாழும் கண்ணதாசனின் பாடல் உள்ள படம் அது!
கோரிக்கும் - பிருதிவிராஜனுக்கும் நடந்த போரில் பிருதிவி தோற்று அஜ்மீர் தெருக்களில் கட்டி இழுத்து வரப்பட்டான் என்பதுதான் மிகப் பெரிய சோகம்!
கி. பி. 1236 ஆம் ஆண்டு தனது 97 ஆவது வயதில் ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தின் ஷிஷ்தி அவர்கள் மீளாத் துயிலில் ஆழ்ந்தார்கள்.
இன்றும், இவரின் கிராமத்தை நாடி வரும் ஏழைகளுக்கு அவர் உதவி செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இல்லா விட்டால் ஏன் இத்தனை லட்சம் மக்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கிறார்கள்? முஸ்லிம்கள். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சிக்கியர்கள் என்று பேதமின்றி அனைவருமே அங்கே செல் கிறார்கள்?
ஹாஜா நாயகத்திற்கு ரோஜா மலரின் மேல் அளவற்ற பிரியம் என்பதால் மக்கள் கூடை கூடையாகத் தலையில் சுமந்து சென்று ரோஜா மலர்களை அவரின் கல்லறையில் கொட்டுகிறார்கள்.
நீதிபதிகள், அமைச்சர்கள், பெரும் தொழிலதிபர்கள், சாதாரண மக்கள் அனைவரும் அங்கே சமமே. ஏற்றத் தாழ்வு கிடையாது. காலையில் கதவு திறந்ததும், மக்கள் வெள்ளம் உள்ளே பாய்கிறது. பிறகு இரவு வரையில் இது தொடர்கிறது.
41

Page 23
O மண்ணும் மனிதர்களும்
இங்கே, அஜ்மீர் ஹாஜாவின் வழியில் வந்த பரம்பரையினர் 500 பேர் இருக்கிறார்கள். இவர்களே இந்த இடத்தை இன்றும் பரம்பரையாக பாதுகாத்து வருகிறார்கள். உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் காணிக்கையாக வருகின்றன. இதிலிருந்து ஏழைகளுக்கு உணவளிப்பது முதல் இன்னும் பல நற்காரியங்கள்வரை இவர்கள் செய்து வருகிறார்கள்.
ஹாஜா நாயகத்தின் மேல் அற்புதமான கவாலிப்பாடல்களை இங்கே சன்னதிக்கு முன்னே பாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் இந்தப் பாடல்கள் பாடுவது நிறுத்தப்பட்டு, தொழுகை முடிந்த பின் தொடர்கிறார்கள். ஒரு தொழுகை நேரத்தில் இருந்து அடுத்த தொழுகை நேரம் வரை ஒரு குழு பாடுகிறது. இப்படியே ஒரு நாளைக்கு ஐந்து குழுக்கள்! இவர்களுக்கு - அதிலும் அந்த பத்து பன்னிரண்டு வயதுச் சிறுவர்களுக்கு - அந்த அற்புத சங்கிதக் குரல் எப்படி வந்தது? இரண்டு ஆர்மோனியப் பெட்டிகள், ஒரு தபேலாவை வைத்துக் கொண்டு பத்து ஏ.ஆர்.ரஹற்மானையும், பத்து இளையராஜாவையும் தூக்கிச் சாப்பிடுகிறார்கள். நான் இங்கே இருந்த நான்கு நாட்களிலும் என்னையறியாமலேயே அங்கே போய் உட்கார்ந்து அவர்களின் பெரிய ரசிகனாகி விட்டேன்.
நான் அங்கிருந்த வேளையில் ஹஜ்ஜூப் பெருநாள் சமயம். வாழ்க்கையில் நான் அவ்வளவு பெரிய ஆடுகளை அங்கேதான் கண்டேன். சாதாரண ஆடு 80 கிலோ இருந்தது. பெரியது 120 கிலோவுக்கு மேல் ஒரு கன்றுக் குட்டியின் உயரத்துக்கு இருந்தது. ஆட்டின் பால் மடிகளில் பை கட்டி விட்டிருந்தார்கள். அந்த ஆடுகளின் மடிப் பால் கிழே சிந்தி வீணாகி விடக் கூடாது என்பதற்காக அப்படி பைகளைக் கட்டி விட்டிருந்தார்கள்.
தமிழ்நாடு ஹவுஸில் எனக்கு ராஜ வரவேற்பு கிடைத்தது. முதல் நாள் நான் இரவு உணவிற்காக காத்திருந்த பொழுது பெரிய தட்டில் பால், பலகாரங்கள், வெண்ணெய், ரொட்டி, இறைச்சி, வெள்ளைச் சோறு, நெய்சோறு, பழங்கள் என்று இருபத்து நான்கு வகை உணவுகளைக் கொண்டு வந்து வைத்தார்கள். நான் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். என்னை அஜ்மீர் நாயகம் அவர் பரம்பரையைச் சேர்ந்த, அந்த புனித
42

சைபீர்முகம்மது O
இடத்தின் திறவுகோலை வைத்திருக்கும் அல்ஹாஜ் நஜீப் ஹேைசன் அவர்கள் அழைத்திருந்தார்கள். அந்தப் புனித இடத்தின் அறங்காவலரும் அவர்தான். அவர்களின் விருந்தினராகவே நான் தங்கி இருந்தேன்.மேல் மாடியில் அவர்களின் குடும்பம் இருந்தது. “சரி. இவ்வளவு உணவு வந்திருக்கிறதே. இன்று அவர் குடும்பத்தார் அனைவரும் என்னோடு உணவருந்தப் போகிறார்கள் என்று நினைத்து நான் காத்திருந்த பொழுது சிறிது நேரம் கழித்து ஒரு பையன் “என்ன சார் சாப்பிடவில்லையா” என்று கேட்டுக் கொண்டு அறைக்கு வந்தான். பிறகுதான் தெரிந்தது. அவ்வளவு உணவும் எனக்காக அனுப்பப்பட்டது என்பது. நான் உண்மையில் பயந்து போனேன். அந்தக் காலத்தில் மன்னர்கள் எப்படி உணவு சாப்பிட்டிருப்பார்களோ, அப்படி ஒரு உபசரிப்பு செய்திருந் தார்கள். நாடோடியாகச் செல்லும் நமக்கு இப்படி இறைவன், மன்னனின் உபசரிப்பையும் பெறச் செய்கிறான்.
அஜ்மீர் தெருக்களிலும் கிராமங்களிலும் நான் நடந்து சென்று பார்த்த பொழுது ஏறக்குறைய ராஜஸ்தான் மாநிலம் முழுதுமே பெரிதாக தொழில் வளர்ச்சி தெரியவில்லை. இங்கே மலைகளி லிருந்து கருங்கல்லும் சலவைக் கற்களும் நிறைய வெட்டி எடுக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தின் குடிசைத் தொழில் போல கருங்கல் தொழில் நடக்கிறது. ஏறக்குறைய இதுதான் தொழில் பெரிய பெரிய வீட்டுத் தூண்கள், பூ வேலைப்பாடு கொண்ட அடைப்புகள், வேலித் தூண்கள் என்று மற்ற மாநிலங் களுக்கு நிறைய ஏற்றுமதி செய்கிறார்கள். சலவைக் கல் அறுக்கும் தொழில் இங்கே வீதிக்கு ஐம்பது இருக்கிறது.
‘காதல் கோட்டை படம் இங்கே தான் எடுக்கப்பட்டது. அதில் கூட ஒரு சண்டைக் காட்சி, அஜீத்குமாருக்கும் மற்றவர்களுக்கும் சலவைக்கல் தொழிற்சாலையில் நடக்கும்.
இங்கே வாகனங்களை விட லாரிகளே அதிகம். சாலைகளில் குறிப்பாக டில்லி - ஜெய்ப்பூர் சாலையில் செல்லும் பொழுது ஆயிரக்கணக்கான லாரிகள் பாரம் ஏற்றிக் கொண்டு செல்வதைக் காணலாம். ஜெய்ப்பூர் - டில்லி சாலையில் நூறு லாரிகளைக் கடந்து வந்தால் இடையில் விபத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஐந்தாறு லாரிகளைப் பார்க்கலாம். வேகமாக முன்னேறி வரும்
43

Page 24
O மண்ணும் மனிதர்களும்
அந்த நாட்டிற்கு ஏற்ற சாலைகள் இன்னமும் ஏற்படவில்லை யென்றே கூற வேண்டும்.
அஜ்மீரில் முஸ்லீம்கள் நிறைந்து வாழ்ந்தாலும் அஜ்மீர் நாயகத்தின் அடக்க இடத்திற்கு அருகில் கிருஷ்ணர் ஆலயமும் இருககிறது! ராஜபுத்திர வம்சத்தவர்கள் இப்பொழுதெல்லாம் விவசாயம் கருங்கல் தொழில் என்று போய் விட்டார்கள்.
ஆனால் பெண்கள் இன்னமும் பெரிய பெரிய வெள்ளிக் காப்புகளை தங்கள் கைகளிலும் கால்களிலும் அணிந்து கொண்டு தங்கள் பாரம்பரியத்தின் சின்னத்தைக் கை விடாமல் இருக்கிற்ாக்ள்.
ராஜபுத்திரர்களின் எழுச்சி 15 ஆம் நூற்றாண்டில் பெரிய அளவில் இருந்தது. சரித்திரத்தின் சில ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் வீரமும் பக்தியும் ஆட்சித் திறனும் கொண்டு ஆண்ட பல மன்னர்களை இவர்களில் நாம் சந்திக்கலாம்.
அக்காலத்தில் மொகலாய மன்னர்களுக்கும் இந்து மன்னர் களுக்கும் நடந்த போர்கள் ‘நிலம் பிடிக்கும் போராகவே இருந்தன. சரித்திரத்தை மிக உன்னிப்பாகப் பார்த்தால் இந்த உண்மை நன்கு விளங்கும். பிற்காலத்தில் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களே இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பிரித்தாளும் (Divide and Rule) கொள்கையை கடைப் பிடித்து, இரு சாரரையும் மதச் சண்டைகளுக்குத் தூண்டிவிட்டுள்ளார்கள். -
1433 முதல் 1468 வரை மேவார் மாநிலத்தை (அப்போதைய பெயர்) சித்துரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சங்கரராம் சிங் என்றழைக்கப் பெற்ற ராணா சிங்கா மிகவும் பிரபலமான மன்னன். 18,000 குதிரைப் படைகளையும் 500 போர் யானைகளையும், 104 தளபதிகளையும் கொண்டு மிகச் சக்தி பெற்ற மன்னனாக இவன் வாழ்ந்த காலத்தில் ஏழு சிற்றரசர்கள் இவனின் கீழ் இருந்தார்கள். அந்த நேரத்தில் கூட அஜ்மீரை இவன் ஒரு முஸ்லீம் சிற்றரசரின் ஆட்சியில்தான் வைத்திருந்தான்.
படைத் தளபதிகளை முன்னுக்கு அனுப்பிவிட்டு போர்க் கூடாரங்களிலிருந்து வழி நடத்தும் ஒரு மன்னனாக ராணா
44

சைபீர்முகம்மது O
சிங்கா இருந்ததில்லை. ராஜபுத்திரர்களின் மாபெரும் எழுச்சிக்கு இவனே தலைவன். எதிரிகளை நேருக்கு நேர் நின்று போர் புரிந்து சாய்த்தவன், பாபர் மன்னனுக்கும் இவனுக்கும் நடந்த போர்களை இன்றும் சரித்திரம் சொல்லும்!
ராஜபுத்திரர்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனவர்கள்! வீரம் இவர்களின் தனிச் சொத்து. 1526-ல் பாபர் படையெடுத்து வந்து தாக்கிய பொழுது முதன் முதலில் ஒரு மாபெரும் போர்க்களம் 'பானிபாட்’ என்ற ஊரில் நடந்தது. சரித்திரத்தின் மிகப் பெரிய முக்கிய போர் இது. டில்லிக்கு வந்ததும் இது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுவேன். இந்தப் போரில்தான் டில்லியையும் ஆக்ராவையும் பாபர் பிடித்தான். வேறு நாட்டிலிருந்து படையெடுத்து நிரந்தரமாக ஒரு மன்னனை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமல்ல என்றாலும், ஜாஹீர் யூடின் முகம்மது என்ற பாபர் அந்தப் போர்க்களத்தில் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து. மொகலாய சாம்ராஜ்யத்தின் முதல் காலடியை எடுத்து வைத்தான். இதனை சரித்திர ஆசிரியர்கள் ரோம அரசாட்சியின் ஒரு மறு உருவமாகவே கருதுகிறார்கள்.
இவ்வளவு வீரப் பராக்கிரமம் மிக்க பாபர் 1527-ல் கன்வா போரில் ராணா சிங்காவை போர்க்களத்தில் சந்தித்தான்.
ராணா சிங்கா பதர்பூர் சிக்ரீயில் நடந்த மிகப் பெரிய போரில் பாபர் படையை சிதறடித்தான்.
இங்கேதான் சரித்திரத்தில் மிகவும் பிரபலமான ஒரு சம்பவம் நடந்தது. போரில் தோற்ற பாபர் அன்றிரவு தனது தட்டாரத்துக்குத் திரும்பி ஒரு சபதம் செய்தான். தனது ராணுவம், படைத் தளபதிகள் முன் தனது மதுக்கிண்ணத்தை போட்டு உடைத்தான். “இந்த உலகத்தில் நாம் பிறக்கும்பொழுதே இறப்பதும் நிச்சயமாகிவிட்டது. அந்த இறப்பு இந்த மதுவால் நிச்சயம் நடைபெற வேண்டாம். இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் இறைவன் ஒருவனே நிரந்தர மானவன். மிகச் சோகமான, துன்பமான சாவை விட புகழ் பெற்ற சாவே மேலானது.
45

Page 25
O மண்ணும் மனிதர்களும்
நான் இறந்தாலும் நினைக்கப்பட வேண்டிய வனாகவே இருக்க விரும்புகிறேன்! என் உடல் மண்ணில் சாய்ந்தாலும் எனது புகழ் நீடித்திருக்க வேண்டும்.”
இந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்த போரில் பாபர் ஒரு சிங்கத்தைப் போல் போர்க்களத்தில் பாய்ந்து போரிட்டதாக வரலாறு கூறுகிறது.
இதன் பிறகே இந்தியாவின் ஆட்சி மொகலாயர்களின் கைக்கு மாறியது. இந்தப் போரில் பாபர் விலையைக் கொடுத்துத்தான் வெற்றியை அடைந்தான். ஒரு தூய வீரன் எப்பொழுதுமே மற்றொரு வீரனை எந்த வகையிலும் சிறுமைப்படுத்த மாட்டான் என்பதற்கு பாபர், ராணா சிங்கா பற்றிச் சொல்லியுள்ள இந்த வார்த்தைகள் பொன்னெழுத்துகளில் பொறித்து வைக்க வேண்டியதாகும்.
ராணா, போர்க்களத்தில் தனது போர் வாளையும் வில் அம்புகளையும் இழந்த பொழுது, அவரின் ஒரு கையும் ஒரு கண்ணும் இழந்து தரையில் தவழ்ந்து தவழ்ந்து சென்ற பொழுதும் அந்த வீரனின் போர்க் குணம் கொஞ்சமும் குறையவே இல்லை! கால்களில் தவழ்ந்து போர் புரிந்தார்!’
ராஜபுத்திரர்களின் வீரத்திற்கு ராணா சிங்கா ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு.
“பாபரை வெற்றி கொள்ளாமல் சித்தூரை மிதிக்க மாட்டேன்’ என்று ராணா சபதம் செய்தான்.
ராணா செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால் இப்ராஹிம் லோடியை எதிர்த்து டில்லியையும் அக்ராவையும் தாக்க பாபர் வந்த பொழுது இவன் கை கட்டி மெளனியா இருந்ததுதான்!
இப்ராஹிம் லோடி என்னதான் முஸ்லீமாக இருந்தாலும் அவன் இந்தியன். ஆனால் பாபர் காபூலை ஆட்சி செய்த அந்நிய மன்னன். அன்று ராணா தனது நட்புக் கரத்தை இப்ராஹிம் லோடிக்கு நீட்டி இருந்தால் ஒரு சமயம் இந்தியாவில்
46

சைபீர்முகம்மது O
மொகலாயர்களின் சாம்ராஜ்யம் அமைந்திருக்க முடியாமல் போயிருக்கலாம்!
இதன் பிறகு ராஜபுத்திரர்களை பல போர்க்களங்களில் பாபர் சந்தித்தான். ராஜபுத்திரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் சில பகுதிகளில் செல்வத்தோடு சிறிய சிறிய கோட்டைகளோடு ஆண்டு வந்தார்கள். ஆனால் பாபரின் வேகமான தாக்குதலுக்கு சிதறிப் போனார்கள். ஒற்றுமையின்மை இவர்களை மேலும் பலவீனப் படுத்தியது. மனம் நொந்த நிலையில் 1528 ஆம் ஆண்டு ஜனவரியில் ராணா சிங்கா என்ற மாபெரும் வீரனின் உயிர் பிரிந்தது.
இந்த சரித்திர நினைவுகளோடு நான் அஜ்மீரை வலம் வந்து கொண்டிருந்தேன். அஜ்மீரை வந்தடைந்ததிலிருந்து வட நாட்டு ரொட்டியும் நெய்யும் பாலும் சாப்பிட்டு நிலைமை தர்மசங்கட மாகிவிட்டது. எப்பொழுதுமே வெளிநாடு சென்றால் நான் இந்தச் சாப்பாட்டு விஷயத்தில் கவலையே படுவதில்லை. என் நண்பர்களில் சிலரும் என் சொந்தக்காரர்களில் சிலரும் இந்தச் சாப்பாடு விஷயத்தில் மிகவும் கெடுபிடிக்காரர்கள். நான் இதைச் சாப்பிட மாட்டேனென்று ‘ராணா - பாபர்’ போர்க்களமே நடத்தி விடுவார்கள். எனது பெரியப்பா அடிக்கடி, “டேய், பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு வேணுமுன்னு கேளு இல்லாட்டி பட்டினி கிடந்து செத்துப் போவாய்” என்பார். அதை நான் வேதவாக்காக ஏற்றுக்கொண்டு விட்டேன். என்றாலும் தெருவழியாகச் சென்ற பொழுது இட்லி சாம்பார் வாசனை வந்தது. பாம்பு மட்டுமே கிடைக்கும் ஊரில் திடீரென்று கோழி பிரியாணி கிட்ைத்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். என் நிலையும் அதுதான். தமிழ் நாட்டுக்காரர் ஒரு சிறிய கடையில் இட்லி சாம்பாருடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.
நான் சென்றதும் ஹிந்தியில் என்ன வேண்டுமென்று கேட்டார்.
என்னடா இது! இட்டி சாம்பாருக்குள் எப்படி ஹிந்தி வந்து மாட்டிக் கொண்டது?
“இரண்டு இட்லி கொடுங்கள். காப்பி கொடுங்கள்!” என்று துணிந்து செந்தமிழ் மணக்கக் கூறினேன். அந்த நேரத்தில் சாம்பாரின் மணமே பிரமாதமாக இருந்தது!
47

Page 26
O மண்ணும் மனிதர்களும்
“என்ன மெட்ராசா?” என்று கேட்டுக் கொண்டே இட்லியை மகிழ்ச்சியாக எடுத்து வைத்தார்.
வந்தானே தைமூர் வந்தானே
“என்ன சார் இட்லி சாம்பார் பற்றி எழுதுகிறீர்கள். பாபர், ரணா போர் பற்றி எழுதுகிறீர்கள். இந்த பிருதிவிராஜன் சம்யுக்தை காதல் விவகாரத்தை மட்டும் வீடியோவில் பார்க்க சொல் கிறீர்கள்’ என்று சில அன்பான வாசகர்கள் போன் மூலம் பேசினார்கள். இந்த காதலுக்கு நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை, வாழ்க்கையிலும் சரி, என் பேனாவிலும் சரி எனது பக்கமே தலை வைத்து படுக்க மறுக்கிறது! நானும் எவ்வளவோ முயற்சி செய்து ஒரு அமர காவியம் படைக்கலாமென்று நினைத்தால் அது மரண காவியமாகவே வந்து முடிகிறது! ஆமாம்! இந்த மூஞ்சிக்கு காதல் ஒரு கேடா? என்றாலும் சரித்திரத்தின் மிக அற்புதமான அந்த பிருதிவிராஜன் சம்யுக்தை காதலைச் சொல்லாவிட்டால் என்னை நீங்கள் சும்மா விடமாட்டீர்கள் போலிருக்கிறதே? உங்களோடு எனக்கேன் வம்பு? ஏற்கனவே தெரியாத்தனமாக அறிவுரை G&Frtaipaul Gufrtil இப்போது ஏகப்பட்ட வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக் கிறேன். கோழி மிதித்து குஞ்சு செத்து விடாது! மிதிப்பதற்கு நீங்களும் மிதிப்படுவதற்கு நானும் என்றுவிதி இருக்கும் பொழுது அதை யாரால் மாற்ற முடியும்? அதை விடுங்கள்! நாம் விஷயத்துக்கு வருவோம். w
இந்த பிருதிவிராஜன் - சம்யுத்தை காதல் இருக்கிறதே அது ஒரு தப்பர் காதல் கதை அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு என எல்லாம் எழுத்தாளர்களும் கவிஞர்களும் உங்களிடம் விட்ட "புரூடா’; கற்பனைக் கதை ஆனால் பிருதிவிராஜன் - சம்யுக்தை காதல் அந்த மண்ணில் நடந்த அற்புத் காதல் வரலாறு.
8 ஜெயச்சந்திரன் கன்னோசி நாட்டு மன்னன்! ராஜபுத்திரர் களில் இரு வகை உண்டு. தோமார் ராஜபுத்திரர்கள், செளகான்
48

சைபீர்முகம்மது O
ராஜபுத்திரர்கள் என்று இரண்டு வம்சாவழியினர் பல ஆண்டுகள் சமர் செய்து கொண்டே டில்லியை ஆட்சிசெய்து கொண்டும் பக்கத்து மாநிலங்களை ஆட்சி செய்து கொண்டும் இருந்தார்கள். முந்நூறு ஆண்டு கால நீண்ட வம்ச போருக்குப் பிறகு தோமார் ராஜபுத்திரர்களை வென்று ஒரு நிரந்தரமான ஆட்சியை செளமிய ராஜபுத்திரர்கள் அமைத்தார்கள். இந்த வம்சத்தில் கடைசியாக வேங்கையென வந்தவன்தான் நமது கதாநாயகன் மூன்றாம் பிருதிவிராஜன்!
கன்னோசி நாட்டு மன்னன் ஜெயச்சந்திரனுக்கும் பிருதிவிக் கும் நீங்காத பகை இருந்தது! ஆட்சியும் படை பலமும் இருந்தாலே பலருக்கு கிறுக்குத்தனம் - அல்லது அடாவடித்தனம் - தானே அமைந்து விடுகிறது. சரித்திர ஏடுகளை மிகக் கூர்மையான கண் கொண்டு நோக்கினால் சில மன்னர்கள் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களே என்ற பைத்தியக்காரத்தனமான சங்கதி களை நாம் ஜீரணிக்க வேண்டியுள்ளது.
தனது மகள் சம்யுக்தைக்கு திருமணம் செய்து வைக்க ஜெயச்சந்திரன் நினைத்து சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்தான். அண்டை மாநிலத்து மன்னர்கள் அனைவரையும் அழைத்த அவன் பிருதிவிராஜனை அழைக்கவில்லை. அதற்குப் பதிலாக ஒரு துப்பர் ஐடியாவுடன் பிருதிவிராஜன் சிலையைச் செய்து வாயில் காவலன் போல் நிறுத்தி வைத்து விட்டான்! ஏற்கனவே ஜெயச்சந்திரனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அந்தப்புரத்திலும் நந்தவனத்திலும் பிருதிவிராஜனும் சம்யுக்தையும் காதல் ‘டூயட் பாடிக் கொண்டிருந்தார்கள். மன்னனாக இருந்தாலும் பிருதிவிக்கு திருட்டுத்தனமாகவே காதலிக்க வேண்டிய தலைவிதி வில்லன் ஜெயச்சந்திரன் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்ததும் கதாநாயகன் பிருதிவி மற்றொரு 'சூப்பர் ஐடியா’ போட்டான். வாயில் காவலன் சிலைக்குப் பதில் இவனே குதிரையில் வந்து நின்று சம்யுக்தையை தூக்கிச் சென்றுவிட்டான். இவன் தூக்கிச் சென்றானா இல்லை பிருதிவிராஜனைப் பார்த்ததும் குதிரையில் ஒரே தாவாக சம்யுக்தை பாய்ந்து ஏறினாளா என்பதை நானும் எல்லா சரித்திர நூல்களையும் தடயங்களையும் துருவித் துருவிப் பார்த்தும் அந்த குறிப்பிட்ட இடம் மட்டும் காணாமல் போய் விட்டது. அதன் பிறகு
49

Page 27
O மண்ணும் மனிதர்களும்
என்ன? தாலி கட்டி, மேளம் கொட்டி முதரலிரவுக் காட்சிகளும் முடிந்துவிட்டதால் ஜெயச்சந்திரன் தலையில் கை வைத்துக் கொண்டு ‘அம்போ?”
இந்த அற்புத காதல் கதையில் இரண்டாவது வில்லன்தான் முகம்மது கோரி! நாடு பிடிக்கும் ஆசையில் காபூலிலிருந்து படையெடுத்து வந்து டில்லியைத் தாக்கினான். 1191 ஆம் ஆண்டு நடந்த போரில் ராஜபுத்திரர்களின் படைபலமும் வீரமும் யானைப் படையின் வேகமும் கோரியை ஆப்கான் நோக்கிப் புற முதுகிட்டு ஒட வைத்தது.
புதுக் காதல் மனைவியுடன் உல்லாசமாக பல நாட்கள் வாழ நமது கதாநாயகனுக்கும் கொடுத்து வைக்கவில்லை பாருங்கள்.
உண்மையில் இதன் பிறகு பிருதிவி மிகச் சுறுசுறுப்பாக இயங்கினான். சிறு சிறு குறு நில மன்னர்களாக சிதறிக் கிடந்த ராஜபுத்திர அரசர்களை ஒன்று திரட்டினான். இந்திய சரித்திரத்தில் இப்படி இவர்கள் ஒன்று திரண்டது மகத்தானது என்றே சொல்ல வேண்டும். ஒற்றுமைக்கும் இந்தியர்களுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் 1191 ஆம் ஆண்டு அந்த உலக மகா அதிசயம் நடந்துள்ளதை நினைக்கும் பொழுது சற்று மலைப்பாக உள்ளது! இதிலும் ஒரு பெரிய கோளாறு உள்ளது.
அதை நினைக்கும் பொழுதுதான் இவர்கள் இன்னும் இந்தியர்கள் என்பதை பலமாக முத்திரை குத்த வேண்டியுள்ளது.
இவ்வளவு குறு நில மன்னர்களும் ஒன்று திரண்டு பொது எதிரிக்கு எதிர்ப்பாக எழுந்து நின்றபொழுது மிகச் செல்வாக் கோடும் பெரிய படைபலத்தோடும் இருந்த நமது ஜெயச்சந்திரன் அதாவது பிருதிவிராஜனின் மாமனார். தனது மருமகனின் மேல் கொண்ட பகையால் உதவ முன் வரவில்லை! இவனுக்கும் LDTD60T (pGi) ரோசம்! கதாநாயகன் அல்லவா?
இவனும் உதவி கேட்டு குரல் எழுப்பவில்லை. விளைவு ஒரு வேற்று நாட்டுக்காரனான காபூலின் மன்னன் முகம்மது கோரி வெற்றிகரமாக உள்ளே நுழைந்து விட்டான். இந்த தோல்விக்குப் பிறகு கன்னோசி மன்னனான வில்லன் ஜெயச்சந்திரனை சும்மா
50

சைபீர்முகம்மது O
விட்டு வைத்திருப்பானா முகம்மது கோரி? அவன் இரத்த தாகம் கொண்ட வேங்கையைப் போல இந்திய மண்ணைச் சூறையாடி னான்.
பிருதிவிராஜனை விட, அவனுக்கு மாமனாராக இருந்தும் உதவாமல் இருந்த ஜெயச்சந்திரன் மிகவும் ஆபத்தானவன் என்பதை சொல்லியே தலையை சிவ விட்டான் சிவி! நேரே அரண்மனைக்குச் சென்ற கோரி மிகவும் அதிர்ந்து போனான். ராணி சம்யுக்தை உட்பட அரண்மனையில் இருந்த அனைத்து ராஜபுத்திரப் பெண்களும் தியில் தங்களைக் கருக்கிக் கொண்டு மாண்டு கிடந்தார்கள். −
இந்த இடத்தில் ஒன்று நமக்கு நன்றாகத் தெரிகிறது. பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கண் குருடாக வேண்டும் எனக்கு இரண்டும் போனாலும் பரவாயில்லை என்ற கொள்கையை பல நூற்றாண்டு களாக இவர்கள் கடைப்பிடித்து வந்த காரணத்தால் நாமும் இன்று இதே பாதையில் செல்கிறோம். மற்றது பெருந்தன்மை. எதிரியை மன்னிக்கும் 'மாபெரும் தத்துவம் நம்மிடம் அதிகம். நமது வேத சாஸ்திர நூல்களும் இதையே போதிப்பதால் முதல் போரில் கோரியை வென்றும், அவன் தலையை வெட்டாமல் விட்ட பெருந்தன்மையின் காரணத்தால் இரண்டாவது போரில் பிருதிவிராஜனின் தலையை இவன் வாழைத்தண்டு போல சிவி விட்டான்!
இவனுக்கு நான் என்ன உதவுவது என்ற மனப்பான்மை இந்திய சமூகத்தில் மிக அதிகம்! அதனால்தான் மிகவும் குறுகிய பாதை கொண்ட கைபர் கணவாயை ஒரு கோட்டை கொண்டு பாதுகாக்காமல் அவனவன் தனித்தனி கோட்டை கட்டிக் கொண்டு தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொண்டிருந்தான்!டில்லி, அக்ரா, ஜெயப்பூர், உதயப்பூர், அஜ்மீர், பேத்பூர், சிக்ரி என்று சுற்றிச்சுற்றி ஒவ்வொரு மன்னனும் தனக்கு ஏகப்பட்ட கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்திருக்கிறானே தவிர எதிர் நாட்டுப் படைகள் வரும். ஒரு பொதுப் பாதையை அடைக்க வேண்டும் என்று இவர்கள் நினைக்காமல் போனது ஏன்? இந்த இடத்தில் நமது சிந்தனையை நாம் மிகக் கவனமாக சிர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.
51

Page 28
O மண்ணும் மனிதர்களும்
சினர்கள் தங்களை, பொது எதிரிகூட அல்ல, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்ட பொழுதே அவர்களால் 1500 மைல் நீளம் கொண்ட சினப்பெருஞ் சுவரை எழுப்ப முடிந்தது. ஆனால் இந்த கைபர் கணவாயைக் கடந்து இந்தியாவுக்குள் எத்தனை அந்திய படையெடுப்புகள் நடந்துள்ளன?
வேதரிவிகள் காலத்திலிருந்தே சிந்து நதி நாகரிகத்தைப் பார்த்தலும் அதன் பிறகு சரித்திரப் படையெடுப்புகளில் இந்த இந்திய மன்னர்களுக்கு அப்பொழுதே தெரிந்திருக்க வேண்டியதுமான அலெக்ஸாந்தரின் படையெடுப்பும் எவ்வளவு முக்கியமானது!
அலெக்ஸாந்தர் வந்தபொழுதே இவர்களுக்கு 'மூளை வேலை செய்திருக்க வேண்டும். அப்பொழுதே இந்த ‘பெருநில'குறுநில மன்னர்கள் எல்லாருமாகச் சேர்ந்து Toll Gate போல ஒரு கோட்டையைக் கட்டினார்களா? அதுதான் இல்லை! அலெக்ஸாந் தரின் வருகைக்குப் பிறகு நமது இந்திய மன்னர்கள் தங்களுக்குள் ‘குடுமிப்பிடி’ சண்டை போட்டுக்கொண்டு இந்த Tol Gate ஐ மறந்தே போய் விட்டார்கள்! அலெக்ஸாந்தரின் வருகைக்கு 1500 ஆண்டுகள் கழித்து செங்கிஸ்கான் சிந்து நதி வரையில் வந்து தனது படைகளை இதே கைபர் கணவாய்வழியாக பாரசீகத்துக்குத் திருப்பி விட்டான். செங்கிஸ்கான் மட்டும் உள்ளே நுழைந்திருந்தால் கதை கந்தலாகி இருக்கும் ஒரு மங்கோலிய ஆட்சி டில்லியை நிச்சயம் ஆண்டிருக்கும். அவன் வந்த நேரத்தில் சிந்து நதி பெருக்கெடுத்து ஓடியதால் தனது படைகளை பெர்ஷியா பக்கம் திருப்பிக் கொண்டுவிட்டான். அந்த நேரத்தில் நமது இந்திய மன்னர்கள் எல்லாம் நிச்சயம் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி ‘தீர்மானங்கள்’ போட்டிருப்பார்கள்! பிறகு செங்கிஸ்கான் திரும்பிப் போனதும் ‘தீர்மானங்களை’ மறந்து இவர்களுக்குள் மீண்டும் ‘மாமன் மச்சான்’ சண்டை நடந்திருக்கும் இந்த சண்டை யில் கைபர் கணவாயில் தங்களின் பொது எதிரி எப்பொழுதும் வரக்கூடுமென்பதை இவர்கள் மறந்தே போனார்கள்.
கி.பி.1221ஆம் ஆண்டு மங்கோலியத் தலைவன் செங்கிஸ்கான் வந்து திரும்பிய பிறகு நமது மதிப்புக்குரிய இந்திய மன்னர்கள் குஷியாக உள்நாட்டு அடுப்பங்கரைப் போர்களை நடத்திக்
52

சைபீர்முகம்மது O
கொண்டிருந்தார்கள். கோட்டைகள் கட்டுவது, அகழிகள் வெட்டுவது, அதில் முதலைகளை வளர்ப்பது, அந்தப்புரத்தில் நூறு மனைவிமார்களுடன் உல்லாசமாக இருப்பது, மதுவில் நீச்சலடிப் பது, அப்போதைக்கப்போது தேகப் பயிற்சி செய்வதுபோல் போர்களும் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் பாலைவனப் புயலென, வெப்பக் காற்றென கைபர் வழியாக 1898-ல் மங்கோலியன் தைமூர் உள்ளே நுழைந்தான். அதாவது செங்கிஸ் கான் காலடி பட்டுத் திரும்பிய அதே சிந்து நதித் தீரத்தில் 177 ஆண்டுகளுக்குப் பிறகு தைமூரின் படை வந்து நின்றது.
பெருக்கெடுத்தோடும் சிந்து நதியை படகுகளைப் பாலமாய்ப் போட்டு ஆற்றைக் கடந்து டெல்லியில் தனது காலடியை வைத்தான் தைமூர்!
ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உஸ்பெக்கிஸ்தானின் சாமர்கண்ட் நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் தைமூர். உண்மையில் இவன் மங்கோலியன் என்பதைவிட துருக்கிய மாங்கோலிய கலப்பு இனத்தவன் என்பதே சரியாக இருக்கும்.
இந்தியாவின் டில்லியைப் பிடிப்பதுதான் இவனது நோக்கமென்றாலும் வழியில் பாரசீகம், மாஸ்கோ என்று புயல் வேகத்தில் தனது படைகளை வழி நடத்தி வந்தான். பாரசீகத்தில் நடந்த போரில் மட்டும் இவன் 70,000 மனிதத் தலைகளைப் பந்தாடியுள்ளான்.
செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் 1398 ஆம் ஆண்டு தைமூர் சிந்து நதிக்கரையில், இன்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன் காலடியெடுத்து வைத்த நாள்தான் பிற்காலத்தில் மொகலாய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் அமைய வழி கோலியது எனலாம். சுமார் 70,000 படை பலத்துடன் இவன் இந்திய மண்ணை மிதித்த பொழுது டில்லியை சோம்பல் நிறைந்த சுல்தான்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள்.
நெஞ்சு பொறுக்குதில்லையே! எனது பயணத்தின் வழியில் தென்படும் கோட்டைகள்,
53

Page 29
O மண்ணும் மனிதர்களும்
அரண்மனைகள், தொல்பொருள் காட்சிசாலைகளைப் பார்க்கும் பொழுது, இந்திய மண்ணில் வாழ்ந்த வீழ்ந்த சுல்தான்கள், மகாராஜாக்கள் இயற்கையாகவே இந்த வழிப்பயணத்தில் வந்து புகுந்து கொண்டு 'என்னைப் பற்றி நீ கட்டாயம் எழுதத்தான் வேண்டும்' என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்! நீங்கள் நம்ப மாட்டீர்கள், இரவில் இரண்டு மூன்று மணிக்குத் தூங்கச் சென்றாலும் யானைப்படை, குதிரைப்படையுடன் என் கனவில் உருவிய வாளுடனும் முறுக்கிய மீசைகளுடனும் வந்து படு பயங்கரமாக நிற்கிறார்கள்! இவர்களுடன் எனக்கு ஏன் வீண் பிரச்னை? பேசாமல் அவர்களைப் பற்றி போகப் போக உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.
இவர்களாவது கனவில் வந்து மிரட்டுகிறார்கள். இந்த கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததிலிருந்தே எனக்குப் பிரச்சனைதான்! ஒரு பக்கம் மன்னர்கள், மறுபக்கம் மனிதர்கள்!
உண்மையில் இந்த மன்னர்களின் வாழ்க்கை துழச்சி, பொறாமை, கிறுக்குத்தனம், மது, மங்கை, போர் என்று சுற்றிச் சுற்றி வந்தாலும், இவற்றுக்கும் அப்பால் சில அற்புதமான, மனிதாபிமானம் மிக்க மன்னர்களையும், நூறு மனைவிமார்கள் இருந்தும் சில 'அலிகளைச் சுற்றிச் சுற்றி காமக் களியாட்டம் புரிந்தவர்களையும் பார்க்கும் பொழுது, உங்களுக்குச் சொல்ல நிறைய சுவாரஸ்சியமான கதைகள் உண்டு என்று நினைக்கிறேன்.
இந்தியாவை பலரும் சென்று பார்த்திருப்பீர்கள். அதை அப்படியே நானும் சொல்வதைவிட சொல்லாமல் விடுவது மேல். ஆனால் ஒரு தாஜ்மகாலை வெறுமனே கண்டு வருவதைவிட, அதன் பின்னணியை உங்களுக்குச் சொன்னால் ஆர்வமாக இருக்கும்!
தைமூர் 70,000 படைகளுடன் வந்து பிறகு, தனது படை பலத்தை 90 ஆயிரமாகப் பெருக்கிக் கொண்டான். அப்படி யென்றால் உள்நாட்டுத் துரோகிகள்’ 20,000 பேர் சேர்ந்து கொண்டார்கள். சிந்து நதியைக் கடந்து பஞ்சாப் முழுதும் இந்தப் படை புயலெனப் புறப்பட்டு ஊடுருவியது. வழியில் கிடைத்ததை யெல்லாம் துறையாடியது! வெறும் 90,000 படைகள் கொண்ட
54

சைபீர்முகம்மது O
தைமூரின் ராணுவம் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களைப் பிடித்து அடிமைகளாக கயிறுகளால் கட்டி இழுத்து வந்தது. பத்தாயிரம் பேர் கூடுதலாக இருந்தும் எதிர்த்துப் போர் புரியாமல் 'அடிமைச் சுகம் கண்ட இந்த வரலாற்றை எப்படி எழுதுவது? அந்த நேரத்தில் மகாகவி பாரதி இருந்திருந்தால் இப்படி பாடியிருப்பான்.
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச் சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் அப்பாலெ வனோசெல்வான் - அவன் ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார் எப்போதும் கைகட்டுவார் - இவர் யாரிடத்தும் பூனைகள்போல் லேங்கிநடப்பார்
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.
பாரதி வாழ்ந்த நமது காலத்திலேயே அவன் மனம் நொந்து. இவர்களைப் பற்றி இப்படிப் பாடியிருக்கிறான். பாரதி வாழ்ந்த காலத்துக்கு 600 ஆண்டுகள் முந்திய இந்தியர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும்? கொஞ்சம் பின்னோக்கி சிந்தித்துப் பாருங்கள். இவர்களின் ‘வீரமும் ஒற்றுமையும் நன்கு தெரியும்!
தைமூர் டில்லியை நோக்கிவேகமாக வந்தான்.அடிமைகளும் இழுத்து வரப்பட்டார்கள். சரித்திரத்தில் இவன் வருகையை ஆசிரியர்கள் ‘தைமூர் பறவையை விட வேகமாக டில்லி நோக்கி வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.
டில்லியை நெருங்கியதும் இவனுக்கு புதிய தலைவலி உண்டாகியது. இந்த ஒரு லட்சம் பேரும் திடீரென்று எதிர்ப்புக் கிளப்பினால் என்ன செய்வது?அதுவும், அப்பொழுது முகம்மது ஷா என்ற சுல்தான் போருக்குத் தயாராக இருக்கிறான் என்ற கெட்ட செய்தியையும் தைமூரின் வேவுப் படை கொண்டு வந்தது.
55

Page 30
0 மண்ணும் மனிதர்களும்
எதற்கு வம்பு என்று நினைத்து ஒரு லட்சம் தலைகளையும் வெட்டிப் புதைத்தான் தைமூர்! எதிர்ப்பே இல்லாமல் ஒரு லட்சம் இந்திய தலைகளை அந்த மங்கோலிய மன்னன் கோழிகளை வெட்டுவது போல் வெட்டினான்!
டில்லிப் போர்க்களத்தைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் எழுதும் பொழுது, சில ஆர்வம் தூண்டும் சங்கதிகளையும் நமக்குச் சொல்லிச் செல்கிறார்கள்.
‘டில்லிக் கோட்டை வாயில் திறந்த பொழுது, பத்தாயிரம் குதிரைப் படைகள், நாற்பதினாயிரம் படை வீரர்கள் என்று அணிவகுத்து முகம்மது ஷாவின் படை வந்த பொழுது, முதலில் தைமூர் சிரித்தான். இவற்றுக்குப் பின்னே பூமி அதிர புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்த யானைப் படையைக் கண்டு கதிகலங்கிப் போனான் தைமூர்! அந்தக் கலக்கமே அவனை புறமுதுகிட வைத்தது எடு ஓட்டம்! துண்டைக் காணோம், துணியைக் காணோமென்று தைமூரின் படை சிதறி ஓடியது முதல் 'செட்டில்’ முகம்மது ஷா வெற்றி அடைந்தான்.
தைமூர் வெறி தலைக்கேறி குடி, குடி என்று குடித்துத் தீர்த்தான்! ஒயின் குடிக்கும் பொழுதே அவனது ‘மெயின்’ மூளை வேலை செய்தது!
அடுத்த படையெடுப்பு: ஏகப்பட்ட எருமை மாடுகள் ஒட்டகங்கள், அவற்றின் முதுகில் வைக்கோலை நிறைய கட்டி வைத்து. பின்னே மங்கோலிய வீரர்கள் உருவிய வாளுடன் சென்றார்கள். சுல்தானின் யானைப் படை அருகில் வந்ததும் எருமைகள், ஒட்டகங்களின் முதுகில் கட்டப்பட்டிருந்த வைக்கோலில் நெருப்பைப் பற்றவைத்தார்கள். அவ்வளவுதான் எருமைகளும், ஒட்டகங்களும் ஒட நெருப்பைக் கண்ட முகம்மது ஷாவின் யானைப் படை தலை தெறிக்க வேறு திசைகளில் ஒட. தைமூர் டில்லியைக் கைப்பற்றினான்!
ஏறக்குறைய பனிரெண்டு மணி நேரத்திற்குள் போர் முடிந்து விட்டது.
56

சைபீர்முகம்மது O
10 நாட்கள் வரை கிடைத்த மனிதர்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு, டில்லியைப் பிணக்காடாக மாற்றிவிட்டு, அனைத்துப் பொன்னையும் மணிகளையும் துறையாடிக் கொண்டு, கொஞ்சம் யானைகளையும் இந்தியாவின் கை தேர்ந்த கட்டடக் கலைஞர்களையும் அழைத்துக் கொண்டு தான் வந்த சாமர் கண்ட் நகரம் - அதாவது உஸ்பெக்கிஸ்தான் - சென்றடைந்தான்.
கொலை வெறிபிடித்த தைமூர் இதன் பிறகு துருக்கி போன்ற நாடுகளில் வெறியாட்டம் ஆடினான். ஆனால் அவனது கனவு எப்படியும் சினாவைத் தனது காலடியில் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதற்காகவே பல ஆயத்தங்களை அவன்செய்து வந்தான். ஆனால் இயற்கையின் பார்வை வேறுவிதமாக இருந்தது.
1405-ல் ஒரு ஜனவரி நாளில் நோய்வாய்ப்பட்டு தைமூர் இறந்தான்.
இன்று சாமர்கண்ட் நகரில் “குர் அமீர்’ என்றழைக்கப்படும் வேலைப்பாடுகள் கொண்ட கல்லறையில் அவன் அமைதியாக உறங்குகிறான். இந்த கல்லறையைக் கட்டியவர்கள் இந்தியாவி லிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கட்டடக் கலைஞர்களே!
சரித்திரத்தில் இந்த தைமூரின் படையெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பிற்காலத்தில் மொகலாயர்களின் ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யம் இந்தியாவில் அமைய, அது பாதை அமைத்துக் கொடுத்தது.
நான் தைமூரின் நினைவுகளோடு காரில் ஜெய்ப்பூர் நோக்கி வேகமாகப் பயணம் செய்தேன். கடுமையான கோடை அஜ்மீர் - ஜெய்ப்பூர் சாலை 'பரவாயில்லை’ என்று சொல்லும்படியாக இருந்தது. சிறிய சிறிய கிராமங்கள். நகரங்களைத் தாண்டி வரும் பொழுது, என்னால் ஒரு ஆச்சரியத்தைப் பார்க்க முடிந்தது! இங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வாழ்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள். பிறகு எப்படி இந்து - முஸ்லிம் கலவரம் அடிக்கடி வடநாட்டில் நடைபெறுகிறது?
உண்மையில் மதக் கலவரங்கள் நடைபெறுவதற்கு 'மதங்கள்’ காரணமே இல்லை! எந்த மதமும் அடுத்த மதத்தவனை வெட்டிச்
57

Page 31
O மண்ணும் மனிதர்களும்
சாய்க்கச் சொல்லவில்லை. சில மதவெறிகொண்டவர்கள், குறுகிய மனம் படைத்தவர்கள் லாபத்துக்காக தூண்டி விடும் அரசியல்வாதிகளால்தான் மதக் கலவரங்கள் நடைபெறுகின்றன.
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங் களில் நான் கண்ட சில உண்மைகளை விளக்குவது எனது கடமையென்று நினைக்கிறேன். இதன் மூலம் மிகக் குறுகிய பார்வை கொண்டவர்கள் கூட சில தெளிவுகள் பெற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
இஸ்லாத்தின் பார்வையில் அவன் முஸ்லிமாக இருந்தாலும், அல்லாதவனாக இருந்தாலும், முதலில் அவன் ஒரு மனிதன். அதன் பின்னரே சமயம், மொழி, இனம் போன்றவை வர முடியும். எனவேதான் ‘மனித நேயத்தின் உயிராக முகம்மது நபியை (ஸல்) கண்ட பிரித்தானிய கலைக் களஞ்சியம் 'அனைத்து மதத் தலைவர்களையும் வெற்றி கண்டவர் முகம்மது நபி (ஸல்) என்ற புகழ் மொழியால் பாராட்டுகிறது.
'படைக்கப்பட்ட அனைவரும் அல்லாவின் குடும்பத்தினரே என்று கூறும் பெருமானார் “சிப்பின்பற்களைப்போல் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே’ என்றும் கூறியுள்ளார்.
பெருமானாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே கூறலாம். ஒரு மனிதன் தன்னைப் போன்ற மற்றொரு மனிதனை - அவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவனை - எப்படி நடத்த வேண்டும் மதிக்க வேண்டும் என்பதற்கு அது உதாரணமாக அமையுமென்று நம்புகிறேன். பெருமானார் அனைத்துக்கும் முன்மாதிரி என்று வாயளவில் கூறுவது மட்டுமே அவரின் புகழை ஓங்கச் செய்துவிடாது.
பெருமானாரின் உற்ற தோழர்களில் ஒருவரான ஆபூபக்கர் (ரலி) அவர்கள் தனது சொத்து அனைத்தையும் இஸ்லாத்துக்காக கெர்டுத்தவர். பெருமானாரின் நிழல்போல் அவரோடுஇருந்தவர். இஸ்லாமே மூச்சென வாழ்ந்த இத்தகையவரின் மனைவி இஸ்லாத்தில் இணையாமல் சிலை வணக்கத்திலும் வேறு மதச் சம்பிரதாயங்களிலும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவர் தனது மகள் அஸ்மாவைக் காண, தனது அன்பை வெளிப்படுத்து
58

சைபீர்முகம்மது O
வதற்கான சில அன்பளிப்புகளோடும் வந்தார். மாற்று மதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் தனது தாயை விரோதி போல் கருதி,தனது தாயை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அன்பளிப்பை யும் ஏற்க மறுத்துவிட்டார். இச்செய்தி கேட்டு பெருமானார் மிகுந்த வேதனையடைந்து உடனே அஸ்மாவை அழைத்து 'உன் தாயாரை வீட்டிற்குள் அனுமதிப்பதோடு, அன்பளிப்பையும் ஏற்று அவரை கண்ணியப்படுத்து’ எனக் கூறினார். இந்தச் சம்பவம் ஒன்றே மனித நேயத்திற்கும் சமய நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இஸ்லாம் இறுக்கமானதும்,வைதிகமானதும் அல்ல. தொடக்க கால இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், நீதிமான்கள். மதச் சிந்தாந்திகள், ஏன் முகம்மது நபி (ஸல்) அவர்கள்கூட இறுக்கமாக இருந்ததில்லை. தன் சகாவான மு ஆத் பின் ஜபல் அவர்களை ஏமன் நாட்டுக்கு ஆட்சியாளராக நியமித்த பொழுது, பெருமானார் இப்படி கேட்டார்கள்: 'நீ எப்படி ஆட்சி செய்வாய்? மு ஆத் சொன்னார்: “குர் ஆனின் படி’ குர் ஆனில் கூறப்படாமல் இருந்தால்.' “உங்கள் கட்டளைகளின் படி’ என்றார் மு ஆத். ‘அவற்றிலும் இல்லையென்றால்?’ என்று தூதர் கேட்டார். "அப்படியானால் நானே முயல்வேன்’ என்றார் மு ஆத்.
அவரது பதிலை அங்கீகரித்த பெருமானார் அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்து, ஏமனுக்கு அவரை ஆட்சியாளராக வழியனுப்பி வைத்தார்கள். இஸ்லாமிய சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் இது. புனித குர் ஆனிலும் 'சுன்னா’விலும் சொல்லப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் தாமாகவே முயற்சிகள் மேற்கொள்ள பெருமானார் ஊக்குவித்தார் என்பதுதானே இதன் பொருள்!
இன்று உலாமாக்களும், சில இஸ்லாமிய பெரியவர்களும்தான் இறுக்கமாக, ஒரு கட்டுப்பாட்டுக்குள் யந்திரகதியில் இயங்குகிறார் களேயன்றி உண்மையில் இஸ்லாம் அல்ல! உண்மையில் இஸ்லாம்
59

Page 32
O மண்ணும் மனிதர்களும்
மனித குலத்துக்குப் பொதுவானது! அது யாருக்கும் சொந்தமான
தல்ல, அல்லது ஒரு கூட்டத்தாருக்கு மட்டும் உரிமையுடையதும்
! حس۔ • :
91Ꮆu)Ꭷu) ;
இஸ்லாமிய போதனைகள் வேறு வகையிலும் புரட்சிகர மானவையாகும். எல்லா மனிதர்களும் சமம் என்பதை முதன்மை படுத்தி, மத வேறுபாடுகளைப் பின் தள்ளியிருக்கின்றன.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தியோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையான வேதத்தையும் இறக்கிவைத்தான் எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டனர். (2213)
மேற்கண்ட விளக்கங்களே இஸ்லாம் எவ்வளவு பொது வானது, சமத்துவானது என்பதை தெளிவாகக் காட்டும். இப்பொழுது ‘கோல் தூக்குபவர்கள் எல்லாம் தாங்களே சகலமும் அறிந்தவர்கள், மற்றவர்கள் மடையர்கள் என்று நினைப்பதால் தான் பிரச்னையே எழுகிறது. எல்லா நிலைகளிலும் இஸ்லாம் மனிதனை நெறிப்படுத்தவே அன்றி வெறிப்படுத்த அல்ல!
மேல்நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நடந்த சிலுவைப் போரும், அதன் பின் இந்தியாவில் நடந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியும். முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரித்து வைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற வாதமே இக்கால கட்டத்தில் எழுந்ததுதான்.
இன்று ஆர். எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் இந்தியாவில் மத வேற்றுமையை வளர்ப்பது போலவே முஸ்லிம்களிலும் சிலர் இருக்கிறார்கள். பாபர் கட்டிய மதுநதியை உடைத்தார்கள். இதன் மூலம் இந்திய வாக்காளர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு
60

சைபீர்முகம்மது O
ஆதரவு திரட்டப்பட்டதேயன்றி, உண்மையில் பாபரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் அவன் மற்ற மதத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்தான் என்பது தெரிய வரும்!
பாபர், ராஜபுத்திரர்களை வெற்றி கொண்டு கோட்டைக்குள் நுழைந்ததும் அவனுடைய தளபதி பெண்கள் இருக்கும் பகுதிக்குப் பாய்ந்து சென்றான். அப்பொழுது கோட்டையின் மேல் தளத்தில் இருந்த பாபர், அங்கிருந்தே அம்பெய்து தனது தளபதியையே கொன்றான்!
“பெண்களை மதியுங்கள். எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை என் வீரர்கள் தொடுவதை நான் அனுமதிக்க மாட்டேன். அப்படி தொட்டால் அதோ தளபதிக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கும் என்று கர்ஜித்தான்.
அதன் பிறகு பாபர் தனது ஆட்சியில் பசு வதையை தடை செய்திருந்தான்.
‘நாம் இந்துக்கள் அதிகமாக வாழும் நாட்டில் ஆட்சி செய்கிறோம். அவர்கள் பசுக்களை மதிக்கிறார்கள்.எனவே எந்த காரணத்தைக் கொண்டும் பசுக்களை கொலை செய்யாதீர்கள்’ என்று கட்டளை பிறப்பித்தான். இது வரலாறு.
இந்த வரலாற்று நாயகன் கட்டிய மதுசூதியைத்தான் மக்களைத் துரண் டிவிட்டு உடைக்க வைத்தார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் அந்த நாள் ஒரு கறுப்பு தினமாகும். அதன் பிறகு எத்தனை உயிர்கள் பலியாயின மனித உயிர்கள் எவ்வளவு மலிவாகப்போய்விட்டது அங்கே! பம்பாயில் வெடித்த குண்டு அப்பாவி மக்களைப் பலி கொண்டது! ஆனால் தூண்டி விட்டவர்கள் அந்த மனிதத் ‘தலைகளின்’ மேல் தங்கள் ‘ஏர் கண்டிஷன் ஆட்சியை அமைத்துக் கொண்டார்கள். மனிதநேயம் என்பது இங்கே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு ரஹற்மான் செத்தாலும், ராமன் செத்தாலும் தாங்கள் அரசு கட்டிலில் ஏற வேண்டுமென்பதுதான் முக்கியம்!
இந்த கோடைப் பயணத்தில் எல்லாமே துருடாகி விட்டது. சற்று காரை நிறுத்தி குளிர்பானம் அருந்தி பயணத்தைத்
61

Page 33
O மண்ணும் மனிதர்களும்
தொடர்வோமே! அதோ ஜெய்ப்பூர். மன்னர்களின் நகரம் - Pink City தெரிகிறது.
கோடைகாலத்தில் ஜெய்ப்பூரில் மட்டுமல்ல வடநாடு முழுதும் வெள்ளரிக்காய் நல்ல வியாபாரம். ஆனால் அந்த நாட்டு வெள்ளரிக்காய், புடலங்காயில் பாதி அளவு நீளமாக இருக்கிறது.இரண்டு காய்களை வாங்கிக் கடித்துக் கொண்டேட் காரில் ஏறி ஜெய்ப்பூர் வந்தடைந்தேன்.
ராஜஸ்தான் பாலைவனமும் மலைகளும் நிறைந்த மாநிலம். நகரத்துக்கு வந்ததும் முதலில் "வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் எடுத்த அரண்மனையைத்தான் தேடினேன். நமது சினிமாக்காரர்கள் எதையுமே மிகைப்படுத்திக் காட்டுவதில் கெட்டிக்காரர்கள். அதிலும் தமிழ்ச் சினிமாக்காரர்களுக்கும் யதார்த்தத்திற்கும் சம்பந்தமே இல்லை.
ஒரு சாதாரண பாளையக்காரனாக கட்டபொம்மனை ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க வைத்து சிவாஜி கணேசனை காட்டினார்களே தவிர, உண்மையான கட்டபொம்மனைக் காட்டவில்லை! ஆனால் படம் நமது தமிழ் ரசிகர்களால் நன்கு வரவேற்கப்பட்டது. அதே நேரத்தில் கண்ணதாசன் தயாரித்த “சிவகங்கைச் சிமை கொஞ்சம் யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்தது. கவிஞர் கண்ணதாசனை கடனாளியாக்கியது இந்தப் படம்தான்! நமது மகா கனம் பொருந்திய ரசிகப் பெருமக்கள் படத்தை விரைவாக டப்பாவுக்குள் அடைத்து விட்டார்கள். வாழ்க நமது ரசிகத் தன்மை!
ஜெய்ப்பூர் அரண்மனைகள், கோட்டைகள் சிலவற்றை இன்று பெரிய பெரிய ஹோட்டல்களாக மாற்றிவிட்டார்கள். முக்கியமான சிலவற்றை மட்டும் தொல்பொருட்காட்சி சாலையாக வைத்துள் ளார்கள். ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர், ராஜபுத்திரர் களின் வீரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் இன்றும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
62

சைபீர்முகம்மது O ஜெய்ப்பூரும் மன்னர்களும்
இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பிக்கும் பொழுதே பலவிதமான எதிர்ப்புகளும் கிளம்பும் என்றே நினைத்தேன். எதிர்பார்ப்பது நடக்கும் பொழுது எனது வேலை சுலபமாகி விடுகிறது. எழுதுவதற்கு வேகமும் விவேகமும் வந்துவிடுகிறது.
ஜெயகாந்தன் ஒரு முறை ஆனந்த விகடனில் சிறிய கதையொன்றை சொல்லியிருந்தார். அந்தக் கதையை பலர் மறந் திருக்கலாம். ஏன் என்றால் அது பின் எந்த நூலிலும் வரவில்லை. இப்பொழுது அதை ஒரு மறுநினைவுக்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறேன்.
குருடன் ஒருவன் ஒரு கையில் கோலுடனும் மறு கையில் விளக்குடனும் இரவில் காட்டு வழியாக நடந்து வந்து கொண்டி ருந்தான். எல்லாம் அறிந்த ஞானியொருவன் அதே காட்டு வழியாக தனது பரிவாரங்களோடு வரும் பொழுது இந்த குரு டனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பெரும் அறிவாளியான அந்த ஞானிக்கு ஒரே ஆச்சரியம். இவனோ குருடன் - இவனுக்கு எதற்கு விளக்கு?
குருடனை வழிமறித்து ஞானி கேட்டான்.
‘ஐயா, தாங்களோ கண் தெரியாதவர். இரவும் பகலும் உங்களுக்கு ஒன்றுதான். அப்படி இருக்கையில் கையில் ஏன் விளக்கு?
“எனக்குக் கண் தெரியாது என்பது உண்மைதான்! ஆனால் பெரிய பரிவாரங்களோடு வரும் நீங்கள் என் மேல் மோதாமல் இருக்கவே இந்த விளக்கைப் பிடித்துக் கொண்டு செல்கிறேன்! வேறொன்றும் இல்லை’ என்றான் அந்த அப்பாவிக் குருடன். அந்த ஞானிக்கு குருடரின் கைக்கோல் மட்டுமல்ல, மறுகையில் இருந்த கை விளக்கும் ஞான விளக்காகத் தெரிந்தது.
இந்திய வரலாற்றில் ஒரு நானுாறு ஆண்டுகளைக் கடந்தும் இப்போதைய நிலைமையைப் பார்த்தும் வரும் அறிஞர் பெருமக்களுக்கு ஒரு உண்மை நன்கு புலப்படும். ராஜபுத்திரர்களும்
63

Page 34
O மண்ணும் மனிதர்களும்
மொகலாய மன்னர்களும் சண்டை போட்டபொழுதெல்லாம் மதம் எந்த வகையிலும் குறுக்கிடவில்லை. தங்களின் மண்ணைக் காப்பாற்றிக் கொள்ள ராஜபுத்திரர்கள் போராடினார்கள். அந்த மண்ணை ஆள்வதற்கு மொகலாயர்கள் ராஜபுத்திரர்களை எதிர்த்தார்கள்!
உண்மையில் தங்களின் மொகலாயப் பேராட்சி நடக்கும் பொழுது பெரும் படைபலமும் வீரமும் ஆட்சி பலமும் அவர்களிடம் இருந்தது. கோரி மன்னன், தைமூர், பாபர், ஹ "மாயூன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் ஆகிய பெரிய வரலாற்று மொகலாயர் களின் தொடர் ஆட்சியில் ‘வாள் முனையில்தான் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்’ என்ற ஆங்கில வரலாற்றாசிரியர்களின் கூற்று உண்மையாய் இருக்குமேயானால் வட இந்தியாவில் ஒரு இந்து மதத்தவர் கூட இருந்திருக்க முடியாது. இன்று தொண்ணுரறு கோடி மக்கள் தொகையை எட்டப்போகும் இந்திய மண்ணில் ஒரு முப்பது கோடியினர் மட்டுமே முஸ்லிம்கள்!
அக்பர் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு இந்து மனைவியை கட்டிக் கொண்டு, சில இந்து சம்பிரதாயங்களையும் கடைபிடித்தார் என்பது வரலாறு. தனது அரண்மனையில் முஸ்லிம் பண்டிகைகள் கொண்டாடுவது போலவே, அந்தப்புரங்களில் இந்து மத தீபாவளி கொண்டாடப்படுவதற்கும் அவர் அனுமதி தந்தார். சில சமயங்களில் நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்துக் கொண்டு அரசாங்க கொலு மண்டபத்தில் மந்திரி பிரதானிகளுடன் இருந்து, சமயவாதிகளுக்குப் பெரிய சங்கடங்களை உண்டு பண்ணி யுள்ளார்!
இந்த‘மதப் பிரச்சனைகளை இப்படியே விட்டு விட்டு மன்னர்களையும் அவர்களின் மாளிகைகளையும் அதன் உள்ளே இருக்கும் சில மர்மங்களையும் நாம் காணலாம்.
ராஜஸ்தான் 342214 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஏறக்குறைய 41/2 கோடி மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்தில் ஹிந்தியும் ராஜஸ்தானி மொழியும் பேசப் படுகின்றன. இது மன்னர்களின் மாநிலம். எங்கு பார்த்தாலும்
64

சைபீர்முகம்மது O
கோட்டைகள், அரண்மனைகள் என்று 1000 வருட ராஜபுத்திரர் களின் வரலாற்றை உள்ளடக்கியதாக இது உள்ளது.
உண்மையில் ஜெய்ப்பூரை சுற்றிப் பார்த்தபொழுது எனது கண்கள் மிக நிதானமாக அதன் வடிவமைப்பையும் சாலைகளின் நேர்த்தியையும் நோக்கி இது உண்மையில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகர் என்பதை அறிந்து சரித்திர புத்தகங்களை புரட்டினேன். இந்த சரித்திரத்தைப் புரட்டும் பொழுது எப்பொழுதுமே தேவை யான்து உடனே கிடைக்காது. ஆனால் தேவையற்றது என்று நாம் நினைக்கும் சில அபூர்வ சங்கதிகள் வைரம் போல் பளிச்சிடும். பள்ளியில் படித்த காலத்திலே சரித்திரப் பாடத்தில் நான் கவிழ்ந்ததே இல்லை. தோண்டுவது, கிளைகளைத் தேடுவது. வேர்களுக்கு அடியில் சென்று இன்னும் கிடைக்குமா என்று பார்ப்பது எனது வேலையாய் போய்விட்டது.
30 அடி அகலமுள்ள பாதைகளை எப்படி அமைத்தான் என்று ஆராய்ந்த பொழுது எனது கண்களில் சாவாய் ஜெய்சிங் வந்து அகப்பட்டுக் கொண்டார். ராஜபுத்திரர்களில் புத்திசாலியா கவும் படித்தவராகவும், கொஞ்சம் எதிர்கால அறிவும் விஞ்ஞான நோக்கும் கொண்டவராகவும் ஜெய்சிங் இருந்துள்ளார்.
கணக்கியல், வானவியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் கிரேக்க மொழி, அரபு மொழி போன்றவற்றில் இருந்த பல சிறப்பம்சங்களை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க வைத்தார். அவற்றின் உதவியால் இந்த நகரத்தை உருவாக்கினார். இவரின் வானவியல் கணக்குகள் அணு அளவும் தப்பியதில்லை என்று சரித்திரம் கூறுகிறது. தனது கிரகங்களின் கணிப்பு பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் இவர் சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மிகவும் போற்றப்படுகிறது.
ஜெய்ப்பூர் நகரை அமைப்பதற்கு முன் டில்லி, பனாரஸ், மதுரை போன்ற நகரங்களின் அமைப்பை கண்ட பிறகு Gisgiữ LDĪT GOfuu TnTGOT ANTOINE GABELSPER GUER I GuT6JGOopgšgy தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு நகரத்தை நிர்மாணித்தார்.
இன்று இளஞ்சிவப்பு நகர் (Pink City) என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர் உண்மையில் அருமையான முறையில் திட்டமிட்டு
65

Page 35
O மண்ணும் மனிதர்களும்
அமைக்கப்பட்ட நகர் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். இன்று பிரதான வீதியில் அரசாங்க அலுவலங்கள், கடைகளாக இருக்கும் கட்டடங்கள் அக் காலத்தில் அரண்மனைப் பிரமுகர் களின் வீடுகளாக இருந்துள்ளன. அரண்மனை, கோட்டை மற்றும் நுழைவாயில் அனைத்தையும் தாண்டிப் போனால் சரித்திரத்தின் சில கசப்பான பகுதிகள் தெரிகின்றன.
பிற்காலத்தில் மொகலாயர்களின் ஆட்சி வந்த பொழுது ஜெய்சிங் உதய்ப்பூருக்கும் அக்ராவுக்கும் சுபேதாராக நியமிக்கப் பட்டார். அந்த நேரத்தில் மராட்டியர்களின் கெடுபிடி அதிகமாக இருந்த காரணத்தால் இவருக்கு நிறைய பணம் தரப்பட்டு இந்த இரண்டு நகரங்களையும் பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. உதய்ப்பூரில் மராட்டியர்களோடு ஒப்புக்கு சண்டை போடுவது போல் பாசாங்கு செய்தார் ஜெய்சிங், உண்மையில் மொகலாயர்கள் கொடுத்த பணத்தில் இவர் மராட்டியர்களை வாங்கும் வியாபாரத்தில் ஈடுபட்டார். பூண்டியில் நடந்த போரில் ஒரு சிறிய வெற்றியைப் பெற்ற ஜெய்சிங் 1714 - ல் கங்கா வானா போரில் படுதோல்வியடைந்தார். இதன் பிறகு இவர் சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக அக்கறை கொண்டவர் என்பதால் மிகப் பெரிய ‘அசுவமேத யாகம் செய்தார்.
இதன்பின் ராஜபுத்திரர்களை ஒன்று திரட்டி மராட்டியர் களை எதிர்க்க பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
ராஜபுத்திரர்களின் வரலாற்றைக் காணும்பொழுது அவர் களின் வீரமும், விவேகமும் நமக்கு ஆச்சரியமளிப்பது போலவே ஒற்றுமையின்மையும் பேராச்சரியம் அளிக்கின்றது. மராட்டியர் களின் அடுத்தடுத்த படையெடுப்புகளால் ராஜஸ்தான் முழுதும் ஒரு “ஒற்றுமைக் குரல் ஒலித்ததேயன்றி, உண்மையில் ஒற்றுமை ஏற்படவே இல்லை.
எழில் மிகுந்த ஜெய்ப்பூரை உண்டாக்கிய ஜெய்சிங் செப்டம்பர் 21 ஆம் நாள் 1743 - இல் இறந்தார். இதன் பிறகு ராஜபுத்திர வம்சத்தில் வந்த ஈஸ்வரி சிங்குக்கும் அவரின் இளைய தம்பி மது சிங்குக்கும் ஏகப்போட்டி! தனது தம்பிக்கு ஏகப்பட்ட நிலங்களையும் பணத்தையும் பொன்னையும் கொடுத்து கொஞ்ச நாள் அடக்கி
66 .

சைபீர்முகம்மது O
வைத்தான் ஈஸ்வரி சிங். 1743 முதல் 1750 வரை ஏழு ஆண்டுகள் ஒரு போராட்ட வாழ்க்கை தான் இவனுக்கு.
இந்த நேரத்தில் மற்றொரு துரோகம் நடைபெற்றது. மராட்டியர்கள் மது சிங்கை கைக்குள் போட்டுக் கொண்டு ராஜஸ்தானில் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். மது சிங் அண்ணனிடமும் பணம் வாங்கிக் கொண்டான். மராட்டியர் களிடமும் பணம் வாங்கிக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டான். 1745 - ல் ஒரு போரிலும், 1747 - ல் மற்றொரு போரிலும் ஈஸ்வரி சிங் வெற்றி வாகை துடினாலும் 1750 ல் நடந்த போரில் மராட்டிய மற்றும் காட்டிக் கொடுத்த தன் சொந்தத் தம்பியின் படையிடம் தோல்வி கண்டான். ஜெய்ப்பூர் மற்றவர் களின் கையில் அடிமைப்படுவதைக் காண விரும்பாத ஈஸ்வரிசிங் 1750 ல் தற்கொலை செய்து கொண்டான்.
இதன் பிறகு பல வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எந்த மராட்டியர்களின் உதவியுடன் மணிமுடியைப் பெற்றானோ, அவர்களுக்கே கண்ணாமூச்சு காட்ட ஆரம்பித்து விட்டான் மது சிங். ராஜபுத்திரர்கள் ஒரு காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரசர்களாக இருந்தார்கள். ராஜஸ்தான் மாநிலத்தை மட்டுமல் லாது டில்லியையும் தாண்டி துரத் வரை இவர்களின் ஆட்சி பரவி இருந்தது. பதவி மோகம், பணத்தாசை, நிலத்தாசை இவர்களை வாழவிடாமல் செய்துவிட்டது. தங்களுக்குள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்கள். ஒரு சமயத்தில் உதய்ப்பூரை (மாவார் மாவட்டம்) ஆண்ட அஜித் சிங்கை அவன் மகனே குத்திக் கொன்றான்! எல்லாம் பணம் பதவிதான்!
ராஜபுத்திர இளவரசர்களை காசு கொடுத்து மயக்கி தங்கள் சொந்த அரசாட்சிக்கு எதிராகத் திருப்புவதில் மராட்டியர்கள் பெரும் பங்காற்றினார்கள்.
ராஜபுத்திரர்களுக்கு ஒரு புறம் மராட்டியர்களின் எதிர்ப்பு. மறுபுறம் மொகலாயர்களின் எதிர்ப்பு. இரண்டுக்கும் இடையே சொந்த இனமே வஞ்சகமும் துதும் செய்து தன்னைத் தானே கவிழ்த்துக் கொண்டது!
67

Page 36
O மண்ணும் மனிதர்களும்
போர்க்களங்களில் இவர்கள் புறமுதுகிட்டு ஓடியது கிடையாது. இறுதி வரை போரிட்டு கடைசி வரை பார்த்து விடுவது இவர் களின் கொள்கை. முடியாத நிலையில் கோட்டையின் உள்ளே பெரு நெருப்பை உண்டாக்கி அதில் குழந்தைகளையும் பெண் களையும் தூக்கி எறிந்து கொன்று விட்டு, அனைத்து ஆண்களும் குதிரையில் ஏறி கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு நிர்வாண மாக போர்க்களம் புகுந்து சண்டையிட்டு மடிவ்ார்கள்! சில பெரும் போர்க்களங்களில் ஆயிரமல்ல இலட்சக்கணக்கான ராஜ புத்திரர்கள் இப்படி ‘போர்’ செய்து மடிந்துள்ளார்கள்!
இவர்களின் விநோதமான ஆயுதங்களை ஜெய்ப்பூரின் மியூசியத்தில் காணலாம். இந்த மகாராஜாக்களைத் தெரிந்து கொள்ள வேண்டி நாம் மியூசியத்துக்குள் நுழைந்தால் ஒரு மண்ணையும் தெரிந்துகொள்ள முடியாது. தூங்கி வழியும் வாயில் காப்போர் உள்ளே நுழைந்ததும் முதலில் “டிக்கெட்' என்று கேட்பார்கள். அவ்வளவுதான். பிறகு நாம் இரண்டடி எடுத்து வைத்ததும் மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த மியூசியத்தில் சில வழிகாட்டிகள் (Guide) உள்ளார்கள். அவர்கள் சொல்வதுதான் சரித்திரம், நாம் கேட்டுக் கெள்ண்டு வருவதுதான் இந்தியாவின் அல்லது. ராஜஸ்தானின் வரலாறு! என்னைப் போல கொஞ்சம் சரித்திரம் தெரிந்தவர்களிடம் பாவம் அவர்கள் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கும் காட்சி மிக சுவாரஸ்யமானது.
இந்த மியூசியத்தில் சில கையெழுத்துச் சுவடிகள் மட்டுமே ஆங்கிலக் குறிப்புகளுடன் உள்ளன. மற்றவை எந்தக் குறிப்பும் இன்றி இருக்கும் அல்லது உலக முழுதும் அறிந்து தெளிந்த சர்வ தேச மொழியான ஹிந்தியில் இருக்கும்!
இங்கே இமாம் கசாலி அவர்களின் கையெழுத்துப் பிரதிகள், மன்னர்கள் சிலரின் கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன.
உலகத்திலேயே மிகப் பெரிய வெள்ளிக் குடம்- ஏறக்குறைய 800 கிலோ கிராம் எட்ை கொண்டது - இரண்டு இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு மன்னர் தனது இங்கிலாந்து பயணத்தின் பொழுது கப்பலில் பருகுவதற்கு நீர் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டது. ஆங்கில சரித்திரக் குறிப்பில் இப்படி எழுதி
68

சைபீர்முகம்மது O
வைத்துள்ளார்கள். மிகவும் வைதீக இந்து மன்னரான இவர் இங்கிலாந்து நீரைப் பருக விரும்பாமல் நீரைக் கூட இந்தியாவி லிருந்து எடுத்துச் சென்றதாக குறிப்பெழுதி வைத்துள்ளார்கள். நீரில் கூட இந்திய நீர், இங்கிலாந்து நீர் என்று இருக்குமோ?
பொற் கோயிலும் பொல்லாத மனிதர்களும்
கோட்டை அரண்மனை போன் வற்ை L if fféË சலிப்
றவறறை g5g Լ! ஏற்பட்ட பொழுது கொஞ்சம் 'ஆபத்தை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கினேன்!
ஜெய்ப்பூரிலிருந்து நேராக ஆக்ரா, டில்லி செல்லலா மென்றாலும் எனக்குக் கொஞ்சம் வந்த அசட்டுத் துணிச்சலில் நேராக பஞ்சாப் சென்று பொற்கோயிலைக் கண்டு தீவிரவாதி "களுடன் கொஞ்சம் விருந்து சாப்பிட்டுவிட்டு வரும் ‘மேலான
உத்தேசத்துடன் அமர்தசரஸ் சென்றேன்.
ஏற்கனவே வெளிநாட்டவர்கள் கடத்தல், உயிரோடு எரித்தல், வெட்டிக் கொலை செய்தல் போன்ற சமாச்சாரங்கள் அங்கே கடலை வியாபாரம் போல் சர்வ சாதாரணமாக நடப்பதால் என்னை அங்கே போக வேண்டாமென்று பலரும் தடுத்தார்கள்!
ராணுவ விவகாரங்களில் குறைந்த பட்ச அறிவு எனக்கு இருந்த காரணத்தினாலும், தெரியாத்தனமாக கொஞ்சம் காலம் ராணுவத்தில் மாட்டிக் கொண்டு விழித்ததாலும் இந்த துப்பாக்கி விவகாரங்கள் எல்லாம் எனக்கு ஒன்றும் பெரிதாகப் படவில்லை. அப்படியே மாட்டிக் கொண்டு செத்தாலும் துப்பாக்கிக் குண்டு பட்டு இறந்தால் எப்படி இருக்கும் என்பதில் எப்பொழுதும் எனக்கு ஒரு கற்பனை உண்டு! "பட்டென்று பட்டு சட்டென்று போய் விடலாம் பாருங்கள்! அத்தோடு சர்வதேச பத்திரிகைகளிலும் கொஞ்சம் என் பெயர் விலாசப் படும். என்னைப் பற்றி இதுவரையில் வாழ்த்துப்பா பாடாத கவிஞர்கள் அப்பொழுது ஏகப்பட்ட இரங்கற்பாக்களை அள்ளித் தெளிப்பார்கள்.
69

Page 37
O மண்ணும் மனிதர்களும் அப்பொழுது நரகத்திலிருந்து நான் நிச்சயம் இந்தக் கவிதைகளை ரசிக்க முடியும்! நான் ஏன் நரகம் என்று சொல்கிறேன் என்றால் அதிலும் கொஞ்சம் விவகாரம் இருக்கிறது.
'நீ எதை விரும்புகிறாயோ. அதையே மனதில் நினைத்துக் கொள். ஒரு நாள் நிச்சயம் அது உனக்குக் கிட்டும் என்று எங்கேயோ படித்ததை வைத்துக் கொண்டு இரவில் தூங்கும் பொழுது சொர்க்கத்தைக் காண ஆவல் கொண்டு அதையே நினைத்து தூங்குவேன்! ஒரு நாள் கனவில் 'சொர்க்கம்’ எனக்குத் தெரிந்தது. பக்கத்தில் ஒரு நண்பன் கூட இல்லை! மதத்தலைவர்களும், காந்தி, விவேகானந்தர், பெரியார், அண்ணா என்று அவரவர் இடத்தில் அமர்ந்து சொர்க்கத்தின் இனிமையை அனுபவித்துக் கொண்டிருந் தார்கள். இது நமக்கு ஒத்துவராது என்று நான் நரகத்துக்கே செல்ல முடிவெடுத்து விட்டேன்! கனவில் நரகத்தை கண்ட பொழுது எனக்கு பேரானந்தம் ஏற்பட்டது! அங்கே ஏகப்பட்ட எனது நண்பர்கள் அமர்ந்து 'தண்ணீர்’ போட்டுக் கொண்டிருந் தார்கள்! நானும் ஒரு கொக்கோ கோலாவுடன் போய் அவர் களோடு அமர்ந்து கொண்டேன்! நரகத்துக்குப் போய் கஷ்டப்பட்டும் இவர்களுக்கு புத்தி வரவில்லை! −
“மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் பீர்முகம்மது பெயரை மட்டுமே சுஜாதா எப்படி சொல்லலாம்?” . .
“எத்தனையோ அற்புதமான எழுத்தாளர்கள் இருக்கும் பொழுது தமிழ்நாட்டின் பெருமாள் முருகன், வண்ணதாசனுக்கு அடுத்து இந்த பீர்முகம்மதுவா? சுத்த பேத்தலாக இருக்குதய்யா!”
“முன்பு ஒரு முறை வல்லிக்கண்ணன் மலேசியாவில் படைக்கப்படும் எழுத்தில் தரமே இல்லை என்று சொன்ன பொழுது நாம் அன்ைவருமே எதிர்த்தது பேர்ல் இப்பொழுது தரமுள்ள ஒருவரை மட்டுமே சொன்னதால் நாம் எதிர்க்க வேண்டும்!"
இந்த உரையாடல் எனக்கு படுகுவியாக இருந்தது. மண் ணுலகில்தான்நம்மை இவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை, விண்ணுகிலும் என்னை இப்படி பிய்க்கிறார்களே! விஸ்வாமித்ர முனிவரே உடனே எனக்கு ஒரு 'திரிசங்குநரகத்தை உண்டாக்கித் தருவீரா?
70

சைபீர்முகம்மது O
என்னோடு வந்தவர்கள் அவ்வளவு சிக்கிரத்தில் சொர்க் கத்தையோ நரகத்தையோ காண விரும்பாத காரணத்தால் ஜெய்ப்பூரோடு கழற்றிக் கொண்டு நான் உயிரோடு திரும்பினால் என்னை அக்ராவில் சந்திப்பதாக விடைபெற்றார்கள். அப்படியும் இறுதி நேரத்தில் எனக்கு விடை கொடுக்க அவர்களுக்கு மனமில்லை! நான் எதற்கும் கவலைப்படாமல் எனது பெட்டி களுடன் அமிர்தசரஸ் புறப்பட்டேன்!
பஞ்சாப். ஐந்து நதிகள் பாயும் அற்புத மாநிலம். இந்தியாவிலேயே தூய்மையும் பசுமையும் நிறைந்த மாநிலம். மிகக் குறைந்த அளவே பிச்சைக்காரர்களை இங்கே நான் கண்டேன். அகில இந்தியாவிலேயே பொருளாதர வளர்ச்சி விகிதம் 50 சதவிகிதம் இங்கேதான் அதிகம்! இரண்டு கோடி மக்கள் தொகையும் 50,362 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுமுள்ள பஞ்சாப் இந்திய மக்கள் தொகையில் 2 1/2சதவிகிதத்தினர் தான்! ஆனால் இந்திய கோதுமை உற்பத்தியில் 22%மும், அரிசி உற்பத்தியில் 10%மும் இவர்களின் பங்காக இருக்கிறது. பால் சார்ந்த தயாரிப்பு களில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் பஞ்சாபியர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த வைப்புத் தொகையில் பஞ்சாப் மக்கள் மாத்திரமே 5% சதவிகிதத்தைக் கொண்டுள்ளார் கள். மற்ற மாநிலங்களின் சராசரி வயதை விட பஞ்சாபியர்களின் சராசரி வயது 15 கூடுதலாக இருக்கிறது. 1981 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியனின் சராசரி வயது 50. ஆனால் பஞ்சாபியர் களின் வயது 65!
பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த மாநிலம் பாகிஸ்தான் இந்திய பிரிவினைக்கு முன்பு லாகூரைத் தலைநகராகக் கொண்டு இயங்கியது. இப்பொழுது பிரிவினைக்குப் பிறகு இதன் ஒரு பகுதி பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாநிலமாக ஆகிவிட்டது. சண்டிகார் நகரத்தை அதன் பிறகு தலைநகராகக் கொண்டு பஞ்சாப் மாநிலம் இப்பொழுது இயங்கினாலும் இப்பொழுது இரண்டு மாநிலங்களின் தலைநகராக இந்த சண்டிகார் இயங்கி வருகிறது. 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் இரண்டு பிரிவாக பிரிந்து விட்டது. ஒன்று ஹரியானா மற்றது பஞ்சாப்,
71

Page 38
O மண்ணும் மனிதர்களும்
பஞ்சாப்பின் லூதியானா நகரில் தான் இந்தியாவின் ‘ஹீரோ சைக்கிள் உற்பத்தி இருக்கிறது. சாதாரண மக்களின் 'குதிரையாக இருக்கும் இந்த சைக்கிளின் மிகப் பெரிய உற்பத்தி இங்கேதான் நடைபெறுகிறது.
'தண்ணி’ போடுவதில் இந்தியாவிலேயே அதிகமானோர் இங்கேதான் இருக்கிறார்கள். உற்பத்தியில் - உழைப்பில் - இவர்கள் நம்பர் ஒன்னாக இருப்பது போலவே குடிப்பதிலும் இவர்களே முதல்! பீர் பாட்டில்களை திறப்பதற்கு இவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சாவிகளைப் பயன்படுத்துவதே இல்லை. கையில் அணிந்திருக்கும் இரும்புக் காப்பால் ஒரே நெம்பு, பாட்டில் திறந்து கொள்கிறது!
சிக்கியர்கள் இன்று உலகின் பல நகரங்களிலும் வாழ்கிறார் கள். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தலைப்பாகையும் தாடியும் இவர்கள் சிக்கியர்கள் என்பதை தனியாக அடையாளப்படுத்தும். பெயரைக் கேட்டாலே இவர் சிக்கியர் என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ‘சிங்கம்’ என்பதின் மறு சொல்தான் சிங்! ஆண்கள் சிங்கத்தைப் போல் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகவே பெயரிலும் உருவிலும் அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.
இன்று சாதாரண ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து 747 விமானத்தை ஒட்டுவது வரை அவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு விட்டார்கள். உண்மை, உழைப்பு இவற்றுக்கு ஒரு எடுத்துக் காட்டான சமூகம் சிக்கியர் சமூகம்
நான் அமர்தசரஸில் காலடி வைத்தபொழுது 1989 ஆம் ஆண்டு தான் எனக்கு ஞாபகம் வந்தது மத்திய கிழக்கு நாடான பெய்ரூட்டில் மக்கள் கொல்லப்பட்டதைவிட இங்குதான் அதிகமாக கொல்லப்பட்டார்கள்.
சண்டிகார் தலைநகராக இருந்தாலும் பஞ்சாபியர்களின்
புனித நகரான அமிர்தசரஸ்தான் மக்கள் தொகை அதிகமுள்ளது! சண்டிகார் 5 லட்சம், அமிர்தசரஸ் 7 லட்சம்!
72

சைபீர்முகம்மது O
1877 ஆம் ஆண்டு ராமதாசரால் இந்நகரம் உருவாக்கப் பட்டது. இவர் சிக்கியர்களின் நான்காவது குரு அமிர்தசரஸில் ‘தங்கக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நகரத்தின் மற்றொரு பகுதி அமைய அக்பர் மன்னர் நிலம் வழங்கினார். உலகம் முழுதுமிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சிக்கியர்கள் இங்கே எப்பொழுதும் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். இந்தக் கோயில் பழைய நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சுற்றிலும் நீர்த்தேக்கமும் நடுவில் கோயிலுமாக உள்ள இந்த இடத்தில்தான் 1984 ஆம் ஆண்டு சிக்கிய தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து தங்களின் தளத்தை அமைத்துக் கொண்டார்கள். இதன் அடித்தளத்தில் தங்களின் ஆயுதங்களை சேகரித்து வைத்துக் கொண்டார்கள். 'காலிஸ்தான்’ அமைக்க அமைந்த செயலகமும் இங்கேதான் செயல்பட்டது! 1984ஆம் ஆண்டு எவ்வளவு கேட்டுக் கொண்டும் இந்த சிக்கிய தீவிரவாதிகள் வெளியே வர மறுத்து, உள்ளே இருந்தபடி சுடத் தொடங்கினார்கள். VK
“கோயில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது’ என்று ஒரு வசனம் பராசக்தியில் வரும். அது போல அந்த நேரத்தில் இந்த புனிதக் கோயில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. சிக்கியர்களின் மூல நூல் ‘கிரந்த சாகிப் என்ற புனித நூல் இங்கேதான் வைத்துப் போற்றிப் பாதுகாக்கப் படுகிறது. எந்த நூல் மனித நேயத்தையும், மனிதனையும் போற்றுகிறதோ அந்த நூல் உள்ள இடத்திலேயே இந்திய ராணுவத்திற்கும் சிக்கிய தீவிரவாதிகளுக்கும் நடந்த போரில் மனிதநேயம் நசுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ள தடாகங்கள் ரத்தச் சிவப்பேறி மனித குலத்தைக் கேலி செய்தன! மனிதர்கள் மீண்டுமொரு முறை புனிதத்தின் பெயரால் ரத்தம் சிந்தினார்கள்.
இதன் பின்னால் இந்த செய்கையால் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். 1986 ஆம் ஆண்டும் காலிஸ்தானியர்கள் மீண்டுமொரு முறை இந்தப் புனிதக் கோயிலுக்குள் புகுந்து கொண்டு அந்த மண்ணையும் நீரையும் சிவப்பாக்கினார்கள்.
முன்பு இந்த பொற்கோயில் சிக்கியர்களின் நிர்வாகத்திலேயே இருந்தது. இப்பொழுது மத்திய அரசாங்கத்தின் பார்வையில்
73

Page 39
O மண்ணும் மனிதர்களும்
உள்ளது. இதன் அடித்தளம் முற்றிலுமாக மூடி'சில் வைக்கப்பட்டு விட்டது. அங்கே பொற்கோயிலில் சண்டை நடந்ததற்கு அடையாளமாக ஆங்காங்கே துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடங்கள் நமக்கு சரித்திரம் சொல்லி அழுகின்றன. ஒவ்வொரு குண்டு பட்ட ஒட்டையிலிருந்தும் ரத்தக் கண்ணிர் வடிவது போல் எனக்கு பிரமை ஏற்பட்டது!
இந்த சண்டை வருவதற்கு முன்பு அங்கே ’மனிதர்களை’ தாராளமாக அனுமதித்தார்கள். நீங்கள் தூய்மையான இதயத்துடன் வருகிறீர்களா என்று மட்டுமே பார்த்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது உடல் முழுதும் தடவிப் பார்த்து ஏதும் 'ஆயுதம் கொண்டு செல்கிறீர்களா என்பதை நன்றாகச் சோதித்தப் பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே செல்பவர்கள் நிச்சயமாக தங்களின் காலணிகளை கழற்றிவிட வேண்டும் என்பது போல் தலையில் தலைப்பாகை அணிந்து அல்லது துணியாவது அணிந்து செல்ல வேண்டுமென்பது கட்டாயமாகும்.
பொற்கோயிலின் கிழக்குத் திசையிலிருந்து சிக்கிய மத குரு தொடர்ந்து “கிரந்த சாகிப்பிலிருந்து புனித வாசகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார். ஒலிபரப்பு சாதனங்களின் வழி அது எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பற்றியும், குரு நானக் அவர்கள் பற்றியும் சிக்கிய மதம் இந்தியாவில் தோன்றிய விதம் பற்றியும் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியுள்ளது. சரித்திரச் சுவை பயக்கும் இந்த வரலாறு 1469 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. பலருக்கு சிக்கிய மதம் பற்றியே சரியாகத் தெரியாது என்பதாலும் இது இந்திய மண்ணில் தோன்றிய மனிதர்கள் பற்றிய ஒரு பகுதி வரலாறு என்பதாலும் நான் நிச்சயம் உங்களோடு இதைப் பகிர்ந்து கொள்வேன்! இந்த வரலாற்றை அடுத்து வரும் வாரங்களில் நாம் காண்போம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த 'ஜாலியன் வாலா படுகொலை நடந்த இடத்தைக் காண் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆவல். அது இங்கேதான் எனது உயிரைப் பணயம் வைத்து நடந்தது. உண்மையில் எனது பஞ்சாப்
74

சைபீர்முகம்மது O
பயணம் நான் உங்களுக்குகி கட்டுரை எழுதுவதற்காகவே உயிரோடு திரும்பி வந்த கதைதான்! மிக அருகிலேயே பாகிஸ்தான் எல்லை. காஷ்மீர் தீவிரவாதிகளின் நடமாட்டம். காலிஸ்தான் திவிரவாதிகள் வெளிநாட்டவர்கள் என்றால் ‘அல்வா’ சாப்பிடுவது மாதிரி தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். பிறகு துண்டு துண்டாக வெட்டி “சின்சாவ் செய்து பார்சல் செய்து அனுப்பி விடுவார்கள்.
பொற்கோயிலிலிருந்து ஒரு ஐந்து நிமிட நடையில் நீங்கள் ஜாலியன் வாலா பாக்கை அடைந்து விடலாம்.
1919 ஆம் ஆண்டு 2000 இந்தியர்களை இங்கேதான் துடிக்கத் துடிக்க பீரங்கியால் சுட்டுத் தள்ளினார்கள் ஆங்கிலேயர். உலகத்தின் மிக மோசமான படுகொலை அது! நீதியின் வாரிசுகள் என்று சொன்ன பிரிட்டிஷாரின் அடக்கு முறைக்கு இன்றும் gol 60) t - LILI ff6 L Dfd5 ‘ஜாலியன் வாலா படுகொலை இருந்து கொண்டிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு உத்வேகத்தையும் மக்களிடத்தில் உணர்ச்சிகளையும் கிளப்பிய மாபெரும் சம்பவம் அது ‘காந்தி’ என்ற ஆங்கிலப் படத்தில் இந்த காட்சி வரும்பொழுது உண்மையில் நான் அதிகம் உணர்ச்சி வசப்பட்டேன். மனிதர்களை இப்படியும் ஆடு மாடுகளைப் போல் கொல்ல முடியுமென்பதற்கு அந்தக் காட்சி பெரிய சாட்சி!
ஜாலியன் வாலா பூங்காவின் பழைய சுவர்கள் இன்னமும் அப்படியே சரித்திரம் பேசிக் கெர்ண்டு நிற்கின்றன. அங்கே கூட்டம் நடக்கையில் ஆங்கிலப் படை சுட்டபொழுது அந்தச் சுவர்களைத் தாண்டி மக்கள் ஏறி ஒட முயன்றார்கள். ஆனால் ஏற முடியாமல் துடுபட்டு அங்கேயே இறந்தார்கள்! அந்தப் பழைய சுவர்களில் இன்னமும் மனித அநாகரிகத்தைக் காட்டும் வண்ணம் துப்பாக்கிக் குண்டுகளின் ஓட்டைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன!
பிரிவும் பிணைப்பும்
ஜTலியன் வாலா பாக் ஒரே ஒரு நுழைவாயிலைக் கொண்டது. இந்த பாக்கின் உள்ளே கிணறுகள் உண்டு. ராணுவ சட்டம்
75

Page 40
() மண்ணும் மனிதர்களும் பிறப்பிக்கப்பட்ட ஏப்ரல் 6ம் நாள் 1919ம் ஆண்டு இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்கள். ஆங்கிலேயர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மதக் கலவரங்களைத் தூண்டி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு அதுவே 'சுடத் தொடங்கிய பொழுது தடுமாறி விட்டார்கள். இந்த நேரத்தில் விசாரணையின்றி தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை ஆங்கிலப் பேரரசு பிரகடனப்படுத்தியது. இதனை எதிர்க்குமாறு மகாத்மா காந்தியடிகள் 'எதிர்ப்பு நாளை அறைகூவல் விடுத்து ஆரம்பித்து வைத்தார்.
மதக் கலவரங்களில் ‘வெட்டி குத்தி’க் கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் நாட்டுக்காக தங்களின் உயிரை தருவதற்கு முன் வந்தார்கள். அப்பொழுது பஞ்சாப் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தினார். ஜாலியன்வாலா பாக்கில் இந்துக்களும் முஸ்லீம்களும் பெண்களும், ஏன் சிறுவர்களும் கூட இருந்தார்கள்.
உள்ள ஒரே நுழைவாயிலில் இயந்திரத்துப்பாக்கியை வைத்து குண்டுகள் திருமட்டும் சுட்டபொழுது மக்கள் சிதறி ஓடினார்கள். பலர் அங்கிருந்த கிணற்றில் விழுந்து தப்பிக்கலாமென்று பாய்ந்த பொழுது அதில் மூழ்கி இறந்தார்கள். வரலாற்றில் 2000 இல் இருந்து 2500 பேர் வரை இறந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். ஆங்கில அரசின் அதிகாரத்துவ கணக்கின்படி வெறும் 300 பேர் மட்டுமே இறந்ததாக எழுதி வைத்துள்ளார்கள்! இன்று அங்கே ஒரு நினைவுச் சின்னம் மனுக்குலத்தைப் பார்த்து சிரித்தபடி நிற்கிறது.
இன்று மதவெறி கொண்* பேனா துாக்குபவர்களுக்கும் அன்று அதிகார வெறி கொண்டு துப்பாக்கித் தூக்கியவர்களுக்கும் என்ன வேறுபாடு?
அன்று அந்த பஞ்சாப் படுகொலையில் இந்துவும் முஸ்லீமும் தனது மண்ணில் படுகொலை செய்யப்பட்டு சாய்ந்த பொழுது அவர்களுக்கு ‘தேசம்’ ஒன்றே பெரிதாக இருந்தது. அன்று மனிதர்களின் ரத்தம் இந்து ரத்தம், முஸ்லீம் ரத்தம், சிக்கிய ரத்தம்
76

சைபீர்முகம்மது O
என்று பேதமிருந்ததா என்று இன்றைய புனித கங்கைநீர் பற்றி மட்டுமே பேசத் துணிந்தவர்கள் பார்த்துச் சொல்வார்களா'
மனுக்குலத்தையே ஒன்றாக நினைக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் சிலர் இன்னமும் பழைய குகை மனிதர்கள் போலவே வாழ நின்ைக்கிறார்கள். அல்லது இன்னமும் குகை'யை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்கள். மதத்தின் பெயரால் - அதன் புனிதத்தின் பெயரால்-எத்தனை முறை ரத்தம் சிந்த வைத்தும் இந்த கலவரம் தூண்டுபவர்களால் புத்தி திருந்த முடியவில்லையே?
இந்த ஜாலியன் வாலா படுகொலை ஒரு அரசியல் அதிகாரத்தைப் பெற நடந்த படுகொலை என்றால் அதன் பின் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது மிகப் பெரிய மதக்கலவரங்கள் வெடித்தன! அப்பொழுது பஞ்சாப் இரண்டாக ஆகிவிட்டது! ஒரு பகுதி பாகிஸ்தானிலும் மறுபகுதி இந்திய மண்ணிலும் அமைந்தது!
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி இரண்டாகப் பிரிந்தது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று பிரித்து இடையில் பெர்லின் சுவரை எழுப்பி விட்டார்கள். தாய் ஒரு பக்கம் - மனைவி ஒரு பக்கம் - பிள்ளைகள் மறுபக்கமென்று இந்த மனித ஜாதியின் மிகக் கேவலமான பிரித்து வைக்கும் சுவர் அங்கே எழுப்பப்பட்டு நம்மைப் பார்த்துச் சிரித்தது. இரண்டு பக்கமும் துப்பாக்கியை ஏந்திய ராணுவ வீரர்கள் காவல் காத்து சொந்த குடும்பங்களே ஒன்று சேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
மனிதர்கள் சில நேரங்களில் சில விஷயங்களுக்குத் தரும் முக்கியத்துவம் மனிதநேயத்திற்கு எவ்வளவு மாறானவை என்பது அவர்களின் “சிற்றறிவுக்கு எட்டுவதே இல்லை! என்ன செய்வது? அவர்களின் 'மூளை வளர்ச்சி அவ்வளவு தான்!
ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்ட பொழுது குடும்பங்கள் அங்கேயும் இங்கேயும் பிரிந்தது போல் பஞ்சாப் பிரிக்கப்பட்ட போதும் இதே நிலை ஏற்பட்டது. 1947ம் ஆண்டு முதல் பல குடும்பங்களின் கண்ணிர்க் கதையைக் கேட்டால் அந்த
77

Page 41
O மண்ணும் மனிதர்களும்
துயரத்தையும் துன்பத்தையும் உலகத்தின் எந்தப் புனிக நீராலும் கழுவிட முடியாது! -
இந்தியா சுதந்திர மடைந்த 50வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்படும் இந்த வேளையிலும், அப்பொழுது சிதறுண்ட இந்த மனிதர்களின் துயரம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
பெர்லின் சுவர் -மனித் குலத்தின் அவமானச் சின்னம் - சில ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டு இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைந்தன. மனித குடும்பங்களும் தங்களை மீண்டும் பிணைத்துக் கொண்டன. ஆனால் பஞ்சாப்பில் இன்னும் அந்த் நிலை வரவில்லை. அண்மையில் ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் இந்தத் துயரக் கத்ையின் சில பகுதிகளை அற்புதமாகப் படம் பிடித்துப் போட்டுள்ளார்கள். மனித நேயம் உள்ளவர்களுக்கு நிச்சயம் கண்ணீர் வரும். வெறும் ‘புனித நேயம் உள்ளவர் களுக்கு..!
அமிர்தசரஸ் அருகிலுள்ள இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டைப் பிரிக்கும் இடத்தில் 75 வயத மூதாட்டி ஷாம்லிபாய் தனது சகோதரரின் வருகைக்காக சோடா புட்டி கண்ணாடியுடன் காத்துக் கொண்டிருக்கிறார். தனது சகோதரரைப் பிரிந்து 50 ஆண்டுகள் கடந்தும் அந்தச் சகோதரியின் கண்களில் அந்த பழைய ஏக்கமும் பாசமும் பொங்கி வழிய சிலை போல பாகிஸ்தானைப் பார்த்தபடியே நிற்கிறார். ஷாம்லி பாயின் சகோதரர் வீர்பான் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது காணாமல் போனவர். இந்த 50 ஆண்டுகளாக அவர்கள் சந்திக்கவே இல்லை.
இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் கடந்த 50 ஆண்டுகளாக இவர்கள் சந்திக்கவே இல்லை என்பதை அறிந்து இந்திய எல்லைக் காவல்படையினரும், பாகிஸ்தான் “ரேஞ்சர்ஸ்’ படையினரும் ஒற்றுமையாக உதவியது தான். அந்த இரண்டு மண்ணிலும் குண்டுகள் வெடிக்கின்றன. எல்லைகளில் கடும் சண்டைகள் நடக்கின்றன. மதப் பிரச்சனைகளின் பெயரால் தீவிரவாதிகள் செயல்படுகின்றனர். இத்தனைக்கும் மத்தியில்
78

சைபீர்முகம்மது O
இரண்டு சகோதர உள்ளங்கள் சந்திக்க எப்பொழுதுமே எதிரெதிராக துப்பாக்கி ஏந்தும் இரு நாட்டு படை வீரர்களும் ஒத்துழைப்பு நல்கியது தான்! இன்னும் மனித நேயம் அந்த இரு தேசத்து மண்ணிலும் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?
ஏறக்குறைய ஆறு மாதங்கள் தேடிய பிறகே வீர்பானைச் சந்திக்க முடிந்தது! ஆனால் வீர்பான் இன்று ஷேக் இமாம் பக்ஷ்! அவர் முஸ்லீமாக மாறிவிட்டார்!
எல்லைக்கோட்டில் நிற்கும் தனது சகோதரியை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு கொண்டு ஷேக் இமாம் பக்ஷ் பாய்ந்து சென்று தனது சகோதரியைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். வார்த்தைகளுக்குப் பதில் கண்ணிர் மட்டுமே கொட்டுகின்றது. கூடியிருந்த படைவீரர்களின் கண்களும் பனிக்கின்றன.
அந்த நேரத்தில் அங்கே நின்ற மனிதர்களால் சிந்தப்பட்ட கண்ணிருக்கு எத்தனை கோடி கலன் புனித நீரும் ஈடாகாது!
1947ம் ஆண்டிலிருந்து பல குடும்பங்கள் இப்படித்தான் பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு குடும்பக் கதையும் ஒரு கண்ணிர் வரலாறு ஆகும்.
தனது சகோதரரைச் சந்தித்தபொழுதுவுாம் லி பாய் பேசிய முதல் வார்த்தை இவ்வளவு நாள் எங்கேப்பா இருந்தே? கடைசியாகப் பிரிந்து அவர் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்ட பிறகு அவர் இப்படி கூறினார்: “இப்போ அவன் முஸ்லீமா இருந்தா என்ன? அது அவன் ரத்தத்தை மாற்றலையே? அவன் என் சதோரன் தான்!
இப்படிப் பிரிந்த பல குடும்பத்தினர் இன்று கடித வழியாகவும், கெசட் வழியாகவும் தொடாபுகள் கொண்டு பேசி வருகிறார்கள்.
96 வயது கிழவர் கர்த்தார் சிங் அமர்தசரஸில் இருக்கிறார். அவரின் தங்கையின் மகள் ருக்கியா பேகம் சியால் கோட் (பாகிஸ்தானில்) இருக்கிறார். தனது தாயுடன் இவர்கள் அனுப்பிய
79

Page 42
O மண்ணும் மனிதர்களும் கெசட்டில் அந்தத் தாயின் குரல் ‘அண்ணா நீ எங்கே இருக்கிறாய்?" என்று ஆரம்பித்து அடுக்கடுக்காக தனது ஏக்கத்தைச் சொல்கிறது.
“எனக்கு உன்னைப் பார்க்காமல் சாகப் பிடிக்கவில்லை. தயவு செய்து ஒரு தரமாவது எங்களை வந்து பாரேன்’
தலையைக் குனிந்து கொண்டு 'தங்கச்சி’ என்று வாய் முணு முணுக்க யோசனையில் ஆழ்ந்து விடும் கர்த்தார் சிங் மீண்டும் அந்த கேசட்டைக் கேட்க வேண்டாமென்றுதான் ஒவ்வொரு முறையும் நினைக்கிறார். ஆனர்ல் அவரால் அப்படி இருக்க முடியவில்லை.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழைய பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது. எல்லாமே நமது ஊர்தான் என்று ஒரு பழைய தமிழ்ப் புலவன் உரத்த குரலெடுத்துப் பாடினான். ஆனால் இன்றுள்ள பெரும் புலமை படைத்த கவிச்சக்கரவர்த்தி களோ வானத்திலிருந்து பொதுவாகப் பொழியும் நீரே வேறு வேறு தான் என்கிறார்கள்! மனுக்குலம் ஒன்றுபடுமா?
ஆக மொத்தம் அனைவருக்கும்
பத்து மாதம் தான்
யாரு மேலே கிறினாலும்
ரத்தம் ஒன்று தான்! என்று பட்டுக்கோட்டை இல்லை. பாட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடினான்! கணியன் பூங்குன்றனுக்கு வாரிசாக யாரும் இல்லையோ என்ற எனது ஏக்கத்தை இந்த வைர வரிகள் போக்கின!
சுப்பிரமணிய பாரதியாருக்கு வாரிசுகள் என்று எத்தனை சுப்பிரமணியன்கள் சொல்லிக் கொண்டாலும் அதை அவர்களின் எண்ணமும் எழுத்தும்தான் நிரூபிக்க வேண்டும். காலம் தான் அவர்களின் எண்ணத்தையும் எழுத்தையும் வாழ வைக்கும்!
இந்திய மண்ணில் எத்தனையோ வேறுபாடுகளும் மாறுபாடுகளும் உண்டுதான்! ஆனால் அவ்வப்போது இப்படி மனுக்குலத்தை ஒன்றிணைக்கும் அற்புதமான கவிதை வரிகளும்
80 a -

சைபீர்முகம்மது O
வந்து விழுகின்றன. இது அந்த மண்ணில் இன்னமும் மனிதநேயம் இருப்பதை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.
1942ம் ஆண்டு காந்திஜி பிரிட்டிஷ் அரசைப் பார்த்து "QUIT INDIA என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அப்பொழுது பாகிஸ்தான் பிரிவினையை அதிகமாகப் பேசி வந்த முகமதலி agairaoTIT DIVIDE AND QUIT" 67 air DJ Gigitliusahi Litfit.
இப்படி இவர்கள் இருவேறு கருத்துக்களை வெளியிட்ட பொழுது சர்ச்சில் ‘இந்தியாவை பாகிஸ்தான், ஹிந்துஸ்தான். சமஸ்தானஸ்தான் என்று பல ஸ்தான்களாகப் பிரிக்கலாம் என்பது உங்கள் எண்ணமா? என்று கேட்டார்.
நல்ல வேளையாக அப்படி ஆகவில்லை. இல்லாவிட்டால் இன்னும் எத்தனை குடும்பங்கள் பிரிவுத்துயரில் நீந்தி இருக்கும்
சீக்கியர்களின் எழுச்சி
"பாவங்களை உனது கடைசிக் கால லக்கேஜ்ஜில் நிறைய சேர்த்து விடாதே. பிறகு அதைத் தூக்கிச் செல்ல மிகச் சிரமமாக இருக்கும்.
“செங்குத்தான, இருள் நிறைந்த பாதையில் உனது “லக்கேஜ்ஜை தூக்கிக் கொண்டு போகும் பொழுது உன் பின்னே உனக்குத் தண்டனை கொடுப்பவர்கள் கையில் வாளுடன் பின் தொடர்ந்து நடந்து வருவார்கள்.
'உன் முன்னே, தீ கடல் போல் பரந்து எரிந்து கொண்டிருக் கும். அதை எப்படித் தாண்டி உன் பயணத்தை மேற்கொள்ளப் போகிறாய்?
'பள்ளத்தாக்குகள் உனது மண்டைக்குள்தான் இருக்கிறது. அந்த கணக்கில் உனது ‘பொறியை’கைப்பற்றிக் கொள். பிறகு தொடர்ந்து பெரு நெருப்பாய் அது உருவாகும்.
‘கடவுள் என்ற ஒரு வார்த்தை மட்டுமே இறுதிக் கணக்கில் வரும். மற்ற பெயர்கள் எல்லாம் அந்த நேரத்தின் பெருமிதத்தின் ஆணவத்தின் வெளிப்பாடுகளே!
81

Page 43
O மண்ணும் மனிதர்களும்
மேற்கண்ட வேதங்களை தனது சிக்கிய மதத்தவருக்கு மட்டுமல்லாது உலகமனைத்துக்கும் சொல்லிச்சென்றவர் குரு நானக், சிக்கிய மதத்தை உருவாக்கிய இவர், 1469 ஆம் ஆண்டு மேற்கு பஞ்சாப்பில் 'தால் வண்டி’ என்ற கிராமத்தில் பிறந்தார். இன்று இந்த ஊர் நன்கானா சாகிப் என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.
தந்தை மேத்தா காலுவும், தாய் திரீப்தாவும் இவரை ஏழு வயதில் கிராமத்துப் பள்ளியில் சேர்த்தார்கள். இவரின் சகோதரி நன்கியுடன் பள்ளி சென்றவருக்குப் படிப்பில் நாட்டம் வரவில்லை. அப்போதைய துழ்நிலையில் இந்து மதக் கல்வியும் முஸ்லீம் மதக் கல்வியும் பள்ளிகளில் பிரதான பாடங்களாக இருந்தன. இந்த இரு மதக் கல்வியிலும் இவரின் மனம் செல்லாமல் வெறுமனே ஊர் சுற்றிய இவரை, தந்தை மேத்தா காலு தனது ஆடு மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையை கொடுத்தார்.
உலகத்தின் எல்லா மதத் தலைவர்களும் “மேய்ப்பர்களாக இருந்தே வந்துள்ளார்கள். புராணங்களில் கூறப்பட்ட கிருஷ்ண பரமாத்மாவும் சரி, பைபிளில் கூறப்படும் ஏசு கிறிஸ்துவும் சரி, தங்களது ஆரம்ப கால வாழ்க்கையில் ஆடு - மாடு மேய்ப்பவர் களாகவே இருந்து வந்துள்ளார்கள். பிற்காலத்தில் இந்த மனிதர்களை மேய்ப்பதற்கு இறைவன் தந்து பயிற்சியோ?
குரு நானக் ஆடு மாடுகளைக் கவனிக்காமல் வெறுமனே மீண்டும் சுற்ற ஆரம்பித்ததால், இவரின் தந்தை இவரை வியாபாரத்தில் ஈடுபடுத்தினார். வியாபாரத்தில் இலாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். இவரோ உண்மைகளை விற்க முற்பட்டார். கிடைத்த சிறிய இலாபத்தையும் ஏழைகளுக்கு வழங்கிடும் இவரின் செய்கை தந்தைக்குப் பெரிய தலைவலியாகப் போய்விட்டது! ஒரு கால்கட்டுப் போட்டால்தான் பையன் சரியான வழிக்கு வருவான் என்று நினைத்து குரு நானக்கின் 15 ஆவது வயதில் சுல்லாகினி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். திருமணமும் இவரை மாற்றவில்லை. சுல்தான்பூரியில் இருந்த குரு நானாக்கின் மைத்துனர் இவரை வரவழைத்துக் கொண்டார். அங்கே பண்டகசாலைக் காப்பாளராக மிக உண்மையாக் உழைத்தார்.
82

சைபீர்முகம்மது O
வேலை முடிந்து மற்ற நேரங்களில் இவர் சுல்தான்பூரின் நதியோரத்தில் தனிமையில் அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட்டது. 1499 ஆம் ஆண்டு தனது வேலையையும் விட்டு விட்டு இவர் துறவறம் பூண்டார்! சுமார் 30 ஆண்டு காலம் படிப்பதும், ஆராய்ச்சி செய்வதும், அதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுமாக இருந்தார். இதன் பின் பன்னிரண்டு ஆண்டுகள் பல்வேறு நகரங்களுக்கு இவரின் பயணம் தொடர்ந்தது. குருசேத்திரம், ஹரித்துவார், பெனாரஸ், அசாம் என்று இவரின் பயணத்தின் அடுத்த கட்டத்தில் இலங்கைக்கும் டெக்கானுக்கும் சென்று வந்தார். இந்தப் பயணங்களில் இவரின் மனம் ‘இறைவனை தேடும் படலத்தில் படுவேகமாக பிரயாணம் செய்தது. உண்மையில் புத்தமதக் கோட்பாடுகளை அறியவே இலங்கை சென்றார்.
‘தேடல் நிற்கவில்லை! இவரின் கால்களும் நிற்கவில்லை. காஷ்மீர் குளிர் மலைகளில் ஏறி இறங்கினார். பின் கயிலை மலை சென்று இமயத்தில் சிறிது காலம் இருந்து வந்தார். அப்பொழுதும் மனம் அமைதி அடையவில்லை. தேடல், தேடல், தேடல் என்று மனம் இறைவனின் அருகில் செல்ல முயன்றது. இந்த வேளையில்தான் இவருக்கு தஃபிகளின் அணுக்கம் ஏற்பட்டது. ஞானம் பிறந்தது! தனது பயணத்தை பாக்தாத் நோக்கிச் செலுத்தினார்! மக்கா மதினாவையும் இவர் இதன் பின் சென்று கண்டு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுகின்றன.
இந்த இடத்தில் ஒன்றை விளக்கிட என் மனம் துணிகிறது. இந்த கட்டுரைத் தொடரை எழுதும் பொழுது - மதம் சார்ந்தவற்றை எழுதும் பொழுது - நான் மிக ஜாக்கிரதையாக இருக்கிறேன். வரலாற்றின் சில இடங்களில் முஸ்லீம்கள் போற்றப்படுவார்கள். சில இடங்களில் அவர்களின் செய்கைகள் அவர்களையே இழிவு படுத்துவதும் உண்டு! இந்துக்களும் அப்படித்தான். பல இந்து மன்னர்களும் அவர்தம் செய்கைகளும் வரலாற்று ஆவணங்களிலிருந்து எடுத்துச் சொல்லப்படும் பொழுது, சிறப்பான பகுதிகளை மட்டுமே சொல்வது என்று கங்கணம் கட்டிக் கொண்டு மற்றவற்றை மறைத்து விடுவார்கள். இப்பொழுது சிக்கியர்களின் எழுச்சி பற்றியும், பின் அவர்களின் வீழ்ச்சி பற்றியும் விரிவாக ஆராய்ந்த பிறகே எழுத
83

Page 44
O மண்ணும் மனிதர்களும்
ஆரம்பித்துள்ளேன். இந்தத் தொடரை நான் ‘மனிதன்' என்ற நிலையில் மட்டுமே நின்று எழுதுகிறேன். தயவு செய்து மதத்தின் பெயரால் எனக்கு முத்திரை குத்தி விடாதீர்கள். சரித்திரத்தின் சில பகுதிகள் சிலருக்கு கசப்பாகவே இருக்கும்.
ஆனால் அவை நடந்தவை. எனது கற்பனை அல்ல. பாபரும் தைமூரும் முஸ்லிம் மன்னர்கள். முஸ்லிம்கள் குடிக்கக் கூடாது. குடிப்பது ஹராமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் நிறைய குடித்த பிறகே போர்க்களத்திற்குச் சென்றுள்ளார்கள். பாபர் தனது முதல் போரில் தோற்றபொழுது இனி குடிப்பதில்லை என்று அல்லாவின் பெயரில் சத்தியம் செய்ததை, தனது சுய சரிதையில் குறித்துள்ளான். அதன் பிறகே வெற்றி மேல் வெற்றிகளை அவன் பெற்றான். இது சரித்திரம். அவன் பெற்ற வெற்றிகளை மட்டுமே கூறினால் நான் ஒரு முஸ்லிம் மட்டுமே! ஆனால் அவன் குடித்ததையும் கூறியதால் நான் ‘மனிதனாக' மட்டுமே நடுநிலையோடு இருக்கிறேன் என்பதை வாசகர்கள் உணர வேண்டும். இந்தக் கட்டுரைத் தொடரை மதக் விண்ணோட்டத்தோடு பார்க்காமல் சரித்திரக் கண்ணோட்டத் தோடு காணும்படி கேட்டுக் கொள்கிறேன். சிக்கியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நடந்த பல போர்களைப் பற்றி சில உண்மைகளை எழுத வேண்டிய துழல் வரும் பொழுது இந்த என் முன் எச்சரிக்கை நிச்சயம் உங்களுக்குப் பயன்படும், உண்மைகள் சுடத்தான் செய்யும். அதற்காக அதை மறைத்து எழுத வேண்டிய அவசியமில்லை. உண்மைகளை மறைத்து பேசவும், எழுதவும் தெரியாத பரம்பரையில் வந்த காரணத்தால், கொஞ்சம் பெரியாரின் பின்பற்றுதல் இருக்கின்ற காரணத்தால் யார் மனம் புண்படும் என்பதைவிட, நான் எவ்வளவு உண்மை பேசுகிறேன் என்பதே எனக்கு முக்கியம். எப்பொழுது உண்மைகளைப் பேச முடியவில்லையோ, எழுத முடியவில்லையோ, நான் அப்பொழுதே வாய்மூடி மெளனியாகி, எனது பேனாவை மூடிவைத்துவிடுவேன்!
சரி, வரலாற்றுக்கு வருவோம்!
குரு நானக்கின் காலத்தில்தான் பாபரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று
84

சைபீர்முகம்மது O
திரும்பியதும் துருஃபித்துவத்தில் ஈடுபட்டார். இவருக்கென்று பெரிய சிடர்கள் கூட்டம் சேர்ந்து விட்டது.
இந்து மத அடிப்படைகளை ஏற்றுக் கொண்ட குரு நானக் அவதாரங்களைக் கண்டித்தார். 'கடவுள் விஷ்ணுவுக்கு மேலானவர், பிரம்மாவையும் தாண்டியவர், சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் ராமனுக்கும் அப்பால் நிற்கும் மாபெரும் நிலைதான் கடவுள்! உண்மைதான் கடவுள்! எந்த அவதாரமும் கடவுளுக்கு இணையாக முடியாது! என்று பிரச்சாரங்கள் செய்த பொழுது இந்துக்கள் மத்தியில் பிரச்னை எழுந்தது.
பாபரின் ஆட்சியில் இருந்த அதிகாரிகள் குரு நானக்கின் சிடர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சிறிது காலம் சென்ற பிறகு இது பாபருக்குத் தெரிய வந்தது. ஒரு குருவின் சிடர்கள், அதுவும் அவர்கள் சந்நியாசிகள் என்பதை அறிந்து உடனே அவர்களை விடுதலை செய்ததுடன், அந்த செய்கைக்காக குரு நானக்கிடம் மன வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
வேதங்களையும் புராணங்களையும் மிக ஆழமாகக் கற்ற குரு நானக் கடைசியில் அவற்றின் அடிப்படை கருத்துகளின் தேவை என்பதையும் ஆனால் வரலாற்றில் கூறப்பட்ட கதைகளையும் அவதாரங்களையம் தாண்டி மனிதன் அவற்றை உள்நோக்க வேண்டுமென்பதையும் கூறி வந்தார். இந்திய வாழ்க்கையில் நடைமுறை வாழ்க்கையே மேலானது; அதையே மேன்படுத்த வேண்டும் என்பது அவரின் கொள்கை இதனாலேயே வேதத்திலும் புராணத்திலும் கூறப்பட்ட பல கருத்துக்களை இவர் எதிர்த்தார்.
இவரின் கொள்கைகளை ஆராய்ந்த அறிஞர்கள் இரண்டு விதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
ஒன்று - இந்து மதத் தத்துவங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, இந்தியாவில் பக்தி மார்க்கத்தை வளர்ப்பது. இது ஏற்கனவே கபீர் போன்றவர்கள் செய்த அதே வழியில் உள்ளதுதான். குருநானக் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை எதிர்க்கவே இல்லை. ஆனால் அவதாரங்களும் அவர்களுக்குத் தரப்பட்ட கடவுள் தன்மைக்கும் அவர் மிகுந்த எதிரியாக இருந்தார். ஏறக்குறைய நாமதேவர், கபீர்தாஸ். போன்றவர்களின் இந்து மதத்தின் மறு
85

Page 45
O மண்ணும் மனிதர்களும்
சிரமைப்பான 'பக்தி இயக்கத்தின் கொள்கைகளை ஒட்டியே இவரின் கொள்கைகளும் இருந்தன. இந்து மதத் தத்துவத்தில் புகுந்து கொண்ட தேவையற்ற இடைக் காலச் செருகல்களை விட்டு, அது தனது முன்னைய 'தனித்துவ இடத்திற்கு வர வேண்டுமென்று அவர் விரும்பினார்.
இவரின் இரண்டாவது மிகப் பெரிய சீர்திருத்தம் சாதி ஒழிப்பு ஆகும் இந்துக்களின் மிகப் பெரிய பின்னடைவுக்கு சாதியே முதல் பிரச்னை என்று இவர் பேசி வந்தார். இன்று அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு தங்களின் உயர் சாதித் தன்மையை வெளிப்படுத்த நினைக்கும் இந்திய சமுதாய வாழ்வில் 500 ஆண்டுகளுக்கு முன் சாதி ஒழிப்புக்குக் குரல் கொடுத்தவருக்கு என்ன எதிர்ப்பு இருந்திருக்கும்!
இன்றைய நமது நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாரை இவ்வேளையில் நான் நினைக்கிறேன். ‘வைக்கம் வீரர்’ என்று பெயர் - பெற்ற பெரியார் எவ்வளவு அவமானங்களை அந்த மண்ணில் பெற்றுள்ளார். சொல்லால் மட்டுமல்லாது செயலாலும் அவரை அவமானப் படுத்தினார்கள். ஒரு முறை சாதி ஒழிப்புக் கூட்டத்தில் பேசப்போன பெரியார் வழியெல்லாம் செருப்புத் தோரணம் கட்டி தன்னை வரவேற்ற மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார். எத்தனை கூட்டங்களில் அவருக்கு செருப்பை வீசி அவமானப்படுத்தி இருப்பார்கள். கூட்டத்தில் ஒரு செருப்பை மட்டுமே வீசியவனைப் பார்த்து ‘இதன் இன்னொரு ஜோடியையும் வீசப்பா!' இந்த ஒன்று எனக்கும் பயன்படாது உன்னிடம் உள்ளது உனக்கும் பயன்படாது’ என்று கூறி நகைச்சுவை வெடி கிளப்பி, சாதி ஒழிப்பு செய்தார். இன்று ஓரளவாவது தமிழகத்தில் சாதிகளைத் தாண்டி தாழ்த்தப் பட்டவர்கள் முன்னுக்கு வந்துள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியார்தான்! செருப்பு வீசியவர்கள் காணாமல் போய் விட்டார்கள்! ஆனால் பெரியார் சரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் “கை” தூக்கிய நிலையில் அவரின் சிலை நம்மைப்பார்த்து ‘சுயமரியாதையுடன் இரு’ என்று எச்சரிக்கை விடுக்கிறது.
86

சைபீர்முகம்மது O
குரு நானாக், சாதி ஒழிப்புக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னே மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். ‘லங்கார்’ என்று பஞ்சாபி மொழியில் அழைக்கப்படும் பெரிய இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் பொதுவான சன்மயல் கூடங்களை ஏற்படுத்தி அங்கேயே அனைவரும் சமைத்து ‘சமபந்தியாக உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இன்னும் சிக்கியக் கோயில்களில் அனைவரும் ஒன்றாகச் சமைத்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். குரு நானாக் உண்மையில் ஒரு மதவாதியல்ல! அவருக்குப் பின்னே வந்தவர்களே சிக்கிய மதத்தை உருவாக்கினார்கள். இன்று பஞ்சாப்பில் மட்டுமல்லாது ஏன் இந்தியாவில், உலகத்தின் பல்வேறு நாடுகளில் வாழும் சிக்கியர்கள் அவரை ஒரு கடவுளின், தூதர் என்றே அழைக் கிறார்கள். அன்பு, மனித நேயம், நன்னடத்தை, ஒருமைப்படுத்தல் போன்றவற்றில் ஒரு சாராரிடமாவது அவர் வெற்றி பெற்றிருக்கிறார். சிக்கியர்களின் வாழ்க்கையை மிக நுணுக்கமாக கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியக்கூடும் உலகத்தின் எந்த மூலையிலாவது ஒரு சிக்கியரை இன்னொரு சிக்கியர் கண்டு விட்டால் ‘சாஸ் சிரிகால்’ என்று வணக்கம் சொல்வதை இன்றும் காணலாம். அறிமுகம் உள்ளவனோ இல்லையோ, ‘சாஸ்சிரிகால்' நிச்சயம் பரிமாறிக் கொள்ளப்படும்! அவர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகையே அவர்களை தனித்துக் காட்டுகிறது அல்லவா?
நம்முடைய தமிழினம் இன்னமும் அறிந்தவனைக் கண்டாலே முகம் திருப்பிக் கொண்டு போகும் நிலைதானே இருக்கிறது. “வணக்கம் சொல்வதற்கே இவனுக்கு பத்து ‘பெரியார்கள்’ வந்தாலும். எனக்கு நம்பிக்கை இல்லை! பொறாமைப் பட்டே வெந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம் குரு நானாக் போல ஒரு வழிகாட்டி வந்தால் ஒரு வேளை திருந்தலாம்!
குரு நானக்கைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு மதவாதியல்ல. ஆனால் மத சீர்திருத்தவாதி. இந்து மதம் மறு ஆய்வின் வழி ஒரு புரட்சிகரமான சமுதாயத்தை உண்டாக்கவே அவர் விரும்பினார். ஆனால் அவருக்குப் பின்னே வந்த குருமார்கள் சிக்கிய மதத்தை உருவாக்கினார்கள். அந்த மதம் குரு நானக்கின் அடிப்படைப் போதனைகளில் இருந்தே உருவாக்கப்பட்டது. தனது இறுதிக்
87

Page 46
O மண்ணும் மனிதர்களும்
காலத்தில் அவர் மிகப் பெரிய ஜனநாயகவாதியாக இருந்துள்ளார். 1538 ஆம் ஆண்டு தனது 69 ஆவது வயதில் அவர் இறக்கும் பொழுது தனக்கு தனது வாரிசை அவர் நியமிக்கவில்லை. மக்களே தீர்மானிக்கும்படி விட்டுவிட்டார்.
சீக்கியர்களின் எழுச்சி - 2
சிக்கியர்களின் மற்றொரு குருவான அங்காத் 1538 முதல் 1552 வரையில் தலைமையேற்றார். இவர் காலத்தில்தான் இன்று சிக்கியர்களின் எழுத்து வடிவமான ‘குருமுக்கி வரி வடிவத்தை நடைமுறைப்படுத்தினார். இந்த மொழியிலேயே குரு நானாக்கின் வாழ்க்கை வரலாறும், அவரின் போதனைகளும் எழுதப்பட்டு ஒரே இடத்தில் வைக்கப்பட்டன.
குரு அங்காத் தனது சீடர்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்து ஒழுக்கமுடன் அவர்களை உருவாக்கினார். இந்த கட்டொழுங்கே பிற்காலத்தில் சிக்கியர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தியது எனலாம்.
குரு அங்காத்தின் சிறப்பைக் கேள்விப்பட்ட அப்போது டில்லியையும் வட இந்தியா முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த மன்னன் ஹ" மாயூன், இவரை நேரில் வந்து கண்டு சென்றான்.
இவருக்குப் பின் மிகப் பெரிய விஷ்ணு பக்தராக இருந்து சிக்கியராக மாறிய குரு அமர்தாஸ் சிக்கியர்களின் தலைவரானார். இவரின் தலைமைத்துவத்தை குரு நானாக்கின் பிள்ளைகளும் குரு அங்காத்தும் எதிர்த்தார்கள். அமர்தாசின் பொறுமையும், காத்திருப்பும் இவரை மக்களிடத்தில் செல்வாக்குப் பெற வைத்தன. இவர் கோவிந் வாலில் கட்டிய கோயில் பக்தர்களை ஈர்க்கும் இடமாக மாறியது. சிக்கியர்களின் புனித கோயில்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இவர் காலத்தில் சாதி ஒழிப்பு மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ‘லங்கார்’ என்ற
88

சைபீர்முகம்மது O
பொது சமையல் கூடத்திற்கு இவர் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் தரப்பபட்டது.
இவருக்குப் பின் 1575-ல் அக்பரின் ஆட்சிக் காலத்தில் குரு ராம்தாஸ் பதவிக்கு வந்தார். குரு அமர்தாளியின் மருமகனான இவருக்கும் மன்னர் அக்பருக்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்தன. இக்கால கட்டத்தில் சிக்கியர்கள் மிக அமைதியாக தங்களின் மதப் பணிகளைச் செய்து வந்தார்கள். அக்பர் அக்காலத்தில் சிக்கிய மதகுருவான ராம்தாஸின் கீழ் செயல்பட்ட குழுவினருக்கு 500 பிகாஸ், நிலம் வழங்கினார். இங்கே தான் குரு ராம்தாஸ்புரா’ என்ற பெயரில் புதிய நகரத்தை இவர்கள் உருவாக்கினார்கள். இதுவே மிகப் பெரிய அளவில் வளர்ந்து இன்றைய பொற்கோயிலையும் உள்ளடக்கிய அமர்தசரஸ் நகராகும். அக்பர் ஒரு மொகலாய முஸ்லிம் மன்னராக இருந்தாலும் தனது ஆட்சியில் இருந்த மற்ற மதக் கோயில்களுக்கும் மான்யங்கள் வழங்கியே வந்துள்ளார். வரலாற்று ஆவணங்களில் அக்பர் இந்த நிலம் வழங்கிய வேளையில் சுமார் ஓராண்டு காலம் பஞ்சாப் முழுதும் வரிவது லிப்பதை நிறுத்தி வைத்தார். கோயில் கட்டுவதற்கும் புதிய நகரை நிர்மாணிப்பதற்கும் குரு ராம்தாஸ் தனது சிஷ்யர்களின் வழி நிதி வதுல் செய்தார். இவர் காலத்தில் பஞ்சாப் முழுதும் சிக்கிய மதம் புதிய எழுச்சி பெற்றது.
இக்கால கட்டத்தில் அக்பரின் ஆட்சியில் வடநாட்டில் 35 கோயில்கள் மான்யம் பெற்று வந்தன.இந்துக்களின் முக்கிய யாத்திரை இடமான மதுரா மற்றும் பிருந்தாவனம் - இவை டில்லி அக்ரா பகுதிகளில் உள்ளவை - இங்கே பணி புரிந்த கோயில் பணியாளர்களுக்கு அக்பர் பெருமளவில் நிதியுதவிகள் செய்துள்ளார்.
1598 ஆகஸ்ட் 15 தேதியிட்ட செப்பேடுகளிலும் செப்டம்பர் 11, 1598 தேதியிட்ட செப்பேடுகளிலும் இந்தக் குறிப்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மதுரா பகுதியில் கிடைத்த இந்தச் செப்பேடுகளின் குறிப்புகள் குறித்து இந்திய வரலாற்றுக் காங்கிரஸ் கூட்டிய 48 ஆவது மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இவைகளை ஆராய்ந்து
89

Page 47
O மண்ணும் மனிதர்களும்
டாக்டர் தராபதா முகர்ஜி இது குறித்து விரிவான கட்டுரையும் இம்மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆவணங்களில் மேலும் ஆச்சரியம் தரும் சில விஷயங்களும் வெளியிடப்பட்டன. எப்போதாவது கோயில் பூசாரிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பொழுது அதனை மொகலாய மன்னர்களே தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார்கள்.
அக்பரின் காலத்தில் 35 பெரிய கோயில்களுக்கு மான்யம் வழங்கப்பட்டது. ஜஹாங்கிர் மேலும் தனது ஆட்சியில் இரண்டு கோயில்களை இந்த மானியம் பெறும் பட்டியலில் சேர்த்துள்ளார்.
இதன் பின் ஆட்சிக்கு வந்த ஒளரங்கசிப் ஆட்சியிலும் பல கோயில்கள் மான்யம் பெற்றன. அலகாபாத், வாரணாசி, உஜ்ஜைனி, சித்ராகூட் போன்ற இடங்களில் உள்ள கோயில்களுக்கு இவர் பெருமளவில் உதவிகள் செய்தார்.
சித்ரா கூட்டிலுள்ள யாத்திரை தலத்தில் ஒளரங்கசீப் கட்டிய பாலாஜி கோயில் இன்றும் இருக்கிறது அல்லவா? மேலும் இக்கோயிலில் பராமரிப்புக்காக அவர் எட்டு கிராமங்களை தானமாகக் கொடுத்தார். இது பற்றிய விரிவான ஆய்வை பிரபல வரலாற்று ஆய்வாளர் பி. என். பாண்டே தனது வரலாற் ஆய்வில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கால கட்டத்தில் மனித நேயம் எந்த அளவு மதங்களைக் கடந்து நின்றது என்பதை பி.என்.பாண்டே தனது வரலாற்றுக் குறிப்பின் பல இடங்களில் எழுதிச் செல்கிறார்.
காஷ்மீரில் உள்ள கோயில் ஒன்றில் அபுல் ஃபாசலினின் கல்வெட்டு இன்றும் உள்ளது. அந்த நேரத்தில் உலகம் முழுதும் நிலவ வேண்டிய அன்பு ஒன்றை மட்டுமே அது பேசுகிறது. குறுகிய வட்டத்துக்குள் இருப்பவர்களால் இதை எக்காலத்திலும் புரிந்து கொள்ள முடியாது. மனமும் குணமும் விரிவடையாத பிற்போக்குச் சிந்தனையாளர்களால் இந்த சமூகமும் உலகமும் என்ன நன்மை பெற முடியும்? அபுல் ஃபாசலின் கீழ்க்கண்ட கல்வெட்டு
90

சைபீர்முகம்மது O
வாசகங்கள் இவர்களை வட்டத்துக்கு வெளியே கொண்டு வருமென்று நம்புகிறேன்.
ஒ. இறைவா. ஒவ்வொரு கோயிலிலும் உன்னைத் தேடுகின்ற மக்களை நான் பார்க்கிறேன். நான் கேட்கின்ற மொழிகளில் எல்லாம் உன்னைத் துதி பாடுவது என் காதில் விழுகிறது பல கடவுள்களை நம்புகிற மதமாகட்டும், அல்லது இஸ்லாம் ஆகட்டும் அவர்கள் உன்னையே தொடருகிறார்கள்
நீ. ஒன்றே, உனக்கு ஈடாக எதுவுமில்லை என்றே எல்லா மதங்களும் சொல்கின்றன. தனது நோக்கங்களில் கறைபடிந்த யாரேனும் இந்தக் கோயிலை நாசம் செய்ய முனைவார்கள் என்றால், முதலில் அவன் தன் சொந்த வழிபாட்டுத் தலத்தைத் தகர்த்து எறியட்டும்’ இந்த கல்வெட்டு ஒரு முஸ்லிம் மன்னன் எழுதி வைத்தது. அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அது இன்றும் அவனது உணர்வுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
பஞ்சாபின் எழுச்சிமிக்க மற்றொரு வீரன் ரஞ்சித் சிங்கின் காலத்தில் காஷ்மீரில் பட்டாணியர்களின் கொடுங்கோன்மை தாண்டவமாடியது. காஷ்மீரை பட்டாணியர்களின் பிடியிலிருந்து மீட்க ரஞ்சித் சிங்கின் உதவியை நாட இந்து சமூகத் தலைவர் ஒருவர் தூது சென்றார். அவரைப் பிடித்து கொன்றுவிட பட்டானியர்கள் விரட்டினார்கள். அந்த தூதுவரின் குடும்பத்துக்கு கம்பளி விற்கும் முஸ்லிம் வியாபாரி அடைக்கலம் கொடுத்தார். அவர்களைக் காட்டிக் கொடுப்பதை விட பட்டாணியர்களின் வாளுக்குப் பலியாக அவர் தயாராக இருந்தார். அந்த மண்ணில் அப்பொழுது மதம் என்பதை விட மனிதம் என்பதே பெரிதாக இருந்தது.
இதுபோல்தான் பட்டாணியர்கள் ஆட்சியில் புனித அமர்நாத் குகை காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் இந்த அமர்நாத் குகை யாத்திரைத் தலத்தில் இன்றும் மக்கள்
91

Page 48
O மண்ணும் மனிதர்களும்
லட்சக்கணக்கில் கூடுகிறார்கள். பனிப் பாறைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் இக்குகைக் கோயில் உள்ளது. அண்மையில் கூட அமர்நாத் குகைக்குச் சென்ற பல பக்தர்கள் பணியில் சிக்கி இறந்ததாக நாம் செய்தியில் படித்திருக்கலாம். அக்காலத்தில் கொட்டிய பனியில் இந்தக் குகைக் கோயில் காணாமல் போய்விட்டது. அப்பொழுது ஒரு முஸ்லிம் மாலிக் தான் அந்த கோயிலைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். இன்றும் அந்தப் புனித தலத்திற்கு வரும் காணிக்கையில் ஒரு பங்கு அந்த மாலிக்கின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மனமொத்த இறைவனின் மீதான நம்பிக்கை என்பது அறிவு பூர்வமானதாக மட்டுமல்ல, உலகம் தழுவிய அன்புடன் گیWنl இரண்டறக் கலந்தும் விட்டிருந்தது. அன்பு ஒன்றுதான் இறைவனை அடையும் மிகச் சுலபமான வழி என்பதை அவர்கள் அறிந்தே லுைத்திருந்தார்கள்.
‘மனிதனின் படைப்பிற்கு எல்லாவற்றிற்கும் மேலான இறைவனின் அன்பே காரணம்’ என்று நிஜாமுதீன் அவுலியா கூறுகிறார்.
‘ஏ. முஸ்லிமே. இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். மனிதகுலத்திற்காக அவனை நேசிக்கிறவர்களையும், அவனுக்காக மற்றவர்களை நேசிக்கிறவர்களையும் இறைவன் தன் அன்புக் குரியவர்களாக ஆக்கிக் கொள்கிறான்’ என்று மேலும் அதனை விளக்குகிறார் நிஜாமுதீன் அவுலியா.
இந்திய மண்ணில் பிற்காலத்தில் குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்ட பல பிரச்னைகளில் இந்த மதப் பிரச்னையே பெரிதாக ஆகிவிட்டது. அல்லது ஆக்கப்பட்டுவிட்டது. மக்களை தங்களின் சுயலாபத்துக்காக அரசியல்வாதிகள் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து ‘மத உணர்ச்சிகளை தூபம் போட்டு வளர்த்து கலவரங்களை அங்கே உண்டு பண்ணுவதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்!
மேற்கண்ட பிரச்னைகள் மத இணக்கத்துக்கு அந்த மண்ணில் நடந்த பழைய சம்பவங்கள் பஞ்சாப்பில் 1581-ல் குரு ராம் தாசின் மறைவுக்குப் பிறகு குரு அர்ஜான் பதவிக்கு வந்தார்.
92

சைபீர்முகம்மது O
அதுவரையில் மொகலாயர்களுக்கும் சிக்கியர்களுக்கும் சுமுகமான நிலைமையே இருந்து வந்தது. ஆனால் குரு அர்ஜானின் வருகை பல்வேறு பிரச்னைகளைக் கிளப்பியது.
இவர் காலத்தில்தான் சிக்கியர்களின் 'ஆதி கிரந்தம் வேத நூல் முழு வடிவம் பெற்றது. இவர்களின் *ஆதி கிரந்தம் பழைய குருமார்களின் போதனைகளையும், சரித்திர குறிப்புகளையும், அக்காலத்திய கவிஞர்களின் கவிதைகளையும் உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது. நாம தேவர், கபீர்தாஸ் போன்றவர்களின் இறைவழிபாடுகளையும், தத்துவ நோக்கங்களையும் இது உள்ளடக்கியதாக அமைந்தது. ‘கிரந்த சாகிப் சிக்கியர்களின் வேத நூல் என்றாலும், அது குருமார்களின் படிப்பினைகளைக் கொண்ட வழி காட்டி நூல் என்றே கணக்கிடப்படுகிறது.'
குரு அர்ஜான் 1604 ஆம் ஆண்டில் பழைய ஐந்து குருமார் களின் போதனைகளை உள்ளடக்கிய “கிரந்தசாகிப்பை தொகுத்து முடித்தார். இவருக்கும் மொகலாய மன்னர் அக்பருக்கும் நல்ல சுமுகமான உறவுகள் இருந்தன. ஆனால் அக்பருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கிர் ஆட்சியில் பல்வேறு பிரச்னைகள் தலைதுாக்கியன.
இந்து மதத் தலைவர்கள் “கிரந்தசாகி’பில் உள்ள இந்துக் களுக்கு ஆட்சேபகரமான பகுதிகளை அகற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல் முஸ்லிம்களுக்கு எதிரான பகுதிகள் பல அதில் இருந்ததால்அவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். முஸ்லிம்கள் கூடுகின்ற இடங்களில் இது பற்றிய பிரச்னை பெரிதாகப் பேசப்பட்டது. மன்னர் ஜஹாங்கிர், குரு அர்ஜானை அழைத்துப் பேசி அந்த இரு மதங்களையும் குறிக்கும் பகுதிகளை கிரந்த சாகிப்பிலிருந்து அகற்றிவிட உத்தரவிட்டார். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார்.
க்ேகியர்களின் எழுச்சி - 3 இஹாங்கிரின் மகன் குஸ்ரு, தந்தைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி எதிர்ப்புகள் செய்து கொண்டிருந்தான். மொகலாய வரலாற்றில் இந்தப் பகுதி சற்று சோகமானது.
93

Page 49
O மண்ணும் மனிதர்களும்
அக்பர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே மகன் ஜஹாங்கிரின் நடவடிக்கைகளால் மனது வெதும்பிப் போயிருந்தார். அக்பரின் இறுதிக் காலத்தில் குஸ்ருக்கு 17 வயது. மகனை விட பேரனின் ஆற்றலில் அக்பர் அதிக நம்பிக்கை வைக்க வேண்டியதழ்நிலைகள் அரண்மனையில் உருவாகின. ஜஹாங்கிர் ஆரம்பத்தில் இருந்தே அக்பருக்குத் தலைவலிகளைத் தர ஆரம்பித்தார்.
வங்காளத்தில் உஸ்மான் கான் என்ற ஆப்கானிய தளபதி ஒருவர் மிகப் பெரிய பிரச்னைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தார். அவரை அடக்க சலீம் என்ற பெயர் கொண்ட ஜஹாங்கிர் அனுப்பப்பட்டார். உஸ்மான் கானை அடக்கிவிட்டு நல்ல பிள்ளையாக வீடு திரும்பாத ஜஹாங்கிர் தனக்கும் தனித் திறமைகள் உண்டு என்பதையும், மன்னருக்கு தான் காலம் முழுதும் படை நடத்தும் தளபதியாக மட்டும் செயல்பட முடியாது என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
அலகாபாத்தில் ஒரு படையுடன் இருந்த ஜஹாங்கிர், பீஹார் மாநிலத்தில் வரியாக வந்த முப்பது லட்சம் ரூபாயை தானே எடுத்துக் கொண்டார். தன் நெருங்கிய சகாக்கள் சிலருக்கு பீஹாரின் சில பகுதி நிலங்களை “பட்டா’ போட்டுக் கொடுத்தார். இதோடு இல்லாமல் தன் பெயரில் நாணயங்கள் அச்சிட்டுக் கொடுத்தார். சக்கரவர்த்தி செய்யும் காரியத்தை இளவசரன் செய்ய ஆரம்பித்தான்.
நாணயங்கள் அக்பரின் பார்வைக்கு வந்த பொழுது அதில் தனது முத்திரை இல்லாதது கண்டு என்ன பாடு பட்டிருப்பார்?
இதோடு பிரச்னை விட்டிருந்தாலும் நிலைமை கொஞ்சம் துடு தணிந்திருக்கும். ஆனால், தான் முப்பதாயிரம் படையுடன் ஆக்ரா நோக்கி வருவதாக செய்தி அனுப்பினார் ஜஹாங்கிர். கடுங்கோபம் கொண்ட அக்பர் 'வாலைச் சுருட்டிக் கொண்டு அலகாபாத்திலேயே இரு. இல்லாவிட்டால் நறுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுமென்று எச்சரித்து அனுப்பினார்!
தனது மகனின் செயல்களால் அதிக கவலை கொண்ட அக்பர் தனக்கு மிக நெருங்கிய படைத் திளபதியாக இருந்த அப்துல் ஃஸல்லுக்கு கடிதம் எழுதி தனது மகனுக்கு அறிவுரைகள் கூறும்படி
94

சைபீர்முகம்மது O
சொன்னார். அதோடு, சற்று அடக்கி வைக்கவும் உத்தரவு இட்டார். சக்கரவர்த்தி அக்பரின் அந்தரங்கத் தளபதியான இவரை ஒழித்துக் கட்ட ஜஹாங்கிர் சதித் திட்டம் திட்டினார்.
ஏற்கனவே தனது செல்வாக்கில் ஜான்ஸிக்கு அருகே உள்ள இடத்தை நிர்வகித்து வந்த ராஜபுத்திரனான வீர் தேவ் சிங்கிற்கு ரகசியத் தூது அனுப்பி வழியிலேயே அப்துல் ஃஸல்லை தீர்த்துக் கட்டச் செய்தார் ஜஹாங்கிர்.
1602 ஆகஸ்ட்2-ல் வீர் தேவின் கொலைப்படை அப்துல் ஃஸலை வெட்டிக் கொன்று. தலையைமட்டும் ஒரு தாம்பாளத்தில் வைத்து ஜஹாங்கிரின் ‘ராஜ பார்வைக்கு அனுப்பி வைத்தது.
இதைக் கேள்விப்பட்ட அக்பர் மனம் மிகவும் வேதனைப்பட்டு, மகன் மேல் வெறுப்படைந்தார்.
ஜஹாங்கிரின் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒழுக்கமுள்ளதாக அமையவில்லை. தனது பரந்த ஆட்சியை இவன் கெடுத்து குட்டிச் சுவராக்கிவிடுவானோ என்று அக்பர் கலங்கினார். இதனால் பேரன் குஸ்ரு மேல் அளவுக் அதிகமான பாசத்தைப் பொழிந்தார்.
அக்பரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜஹாங்கிருக்கும் மகன் குஸ்ருக்கும் ஏகப்பட்ட ஏழாம் பொருத்தங்கள்!
1605 அக்டோபர் 24-ல் அக்பர் இறந்த ஒரு வாரத்திற்குப் பின் டில்லி பாதுவுசா வாக அமர்ந்தார் ஜஹாங்கிர். இவரின் உண்மையான பெயர் சலீம் என்பதாகும். அக்பரின் ஆட்சிக் காலத்தில் அனார்கலி என்றநாட்டிய மங்கைக்கும் சலீமுக்கும் காதல் என்பதெல்லாம் பிற்காலத்தில் வந்த எழுத்தாளர்களால் வடிக்கப்பட்ட கற்பனைக் கதை. சரித்திரத்தில் இதற்கு அடையாளங்களே இல்லை. அப்படி ஒரு அமர காவியத்தை எழுதிய அந்த மகா பெரிய எழுத்தாளன் யார்? இன்று சிறு துணுக்கு எழுதினாலும் தனது பெயர் அதில் வரவேண்டுமென்று துடிக்கும் தலைமுறையில் அப்படியொரு காவியத்தைத் தீட்டியவனின் பெயரை நான் தேடித் தேடி களைத்துப் போனேன். என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!
95

Page 50
O மண்ணும் மனிதர்களும்
ஆட்சிக்கு வந்த ஜஹாங்கிர் தனது மகன் குஸ்ருவின் மேல் இருந்த சந்தேகக் கண்ணை எடுக்கவில்லை. அவனை அரண் மனைக் காவலில் வைத்தார். பிரதம அமைச்சராக இருந்த மான்சிங்கை வங்காளத்துக்கு பதவி கொடுத்து அனுப்பி வைத்தார். இதற்கு உள் காரணமும் இருந்தது. மூத்த மகன் குஸ்ருவுக்கு ஆதரவாக மான் சிங் செயல்பட்டதால் அவரை இடம். மாற்றி அரசியல் காயை நகர்த்தினார் ஜஹாங்கிர்.
பாதுஷாவின் பிடியிலிருந்து எப்படியும் தப்பிக்க நினைத்த குஸ்ரு, தனது தாத்தாவின் - அதாவது அக்பரின் - கல்லறையைக் கண்டு வருவதாகச் சொல்லிச் சென்றவன், பாதுகாவலர்களை எப்படியோ ஏமாற்றி விட்டு பஞ்சாப் வந்தடைந்தான்.
அதுவரையில் சிக்கியர்களுக்கும் மொகலாயர்களுக்கும் சுமுகமான நிலைமையே இருந்து வந்தது. குஸ்ரு பஞ்சாப்பை அடைந்து குரு அர்ஜானிடம் தஞ்சமடைந்த பிறகு நிலைமையே
மேற்கே ஆப்கானிஸ்தானிேலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் தெற்கே கோதாவரி நதிவரையிலும், வடக்கே காஷ்மீர் வரையிலுமாக மொகலாய ஆட்சி நடந்து கொண்டிருந்த இவ்வேளையில் குஸ்ருவின் பஞ்சாப் தஞ்சம் மொகலாய ஆட்சியில் ஒரு கரும் புள்ளியை உண்டு பண்ணியது எனலாம்!
1605 ஆம் ஆண்டு குரு அர்ஜான் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
தனது மகனுக்கு தஞ்சம் கொடுத்ததால் மட்டுமே ஜஹாங்கிர் இந்த தண்டனையை வழங்கிடவில்லை. குஸ்ரு, பஞ்சாப்பில் ஒரு படைதிரட்டி, தந்தையை எதிர்க்க குரு அர்ஜான் பண உதவி செய்தார் என்பதும் மற்றொரு காரணம்.
இது மட்டுமல்லாது. லாகூரில் ஜஹாங்கிரின் திவானாக செயல்பட்ட சாந்து, தனது மகளை குரு அர்ஜானின் மகனுக்கு மணமுடிக்க விரும்பி தூது அனுப்பினார். குரு அர்ஜான் எடுத்த எடுப்பிலேயே இதற்கு மறுத்து விட்டார். ஆத்திரம் கொண்ட சாந்து ஜஹாங்கிரிடம் “நெருப்பை எரியவிட்டார். நெருப்பு பற்ற
96

சைபீர்முகம்மது O
வைப்பதில் இந்திய வரலாற்றில் பல மனிதர்கள் கைதேர்ந்தவ களாக இருந்திருக்கிறார்கள். -
ஆட்சி பலம் பெற்ற ஒருவர் இருந்துவிட்டால் அன்றாடம் இந்த “கோள் மூட்டிகளுக்கு எப்படியாவது அவரிடம் ‘அப்பாய்ன்மெண்ட் கிடைத்துவிடுகிறது. “அவன் அப்படி இவன் இப்படி என்று நாக்கின் ஏழாவது சுவையை நன்றாகப் பயன் படுத்திக் கொள்வார்கள். சாந்துவும் இப்படித்தான், ஜஹாங்கிரைப் பயன்படுத்திக் கொண்டு குரு அர்ஜானை பழி வாங்கியதாக வரலாறு கூறுகிறது.
குரு அர்ஜானின் சிறப்பிற்குப் பிறகுதான் சிக்கியர்கள் இனி தாங்கள் வெறும் அமைதி நிறைந்த பக்தர்களாக மட்டும் இருக்க முடியாது, போர் வீரர்களாவும் மாற வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். வரலாறு திரும்பியது!
1606-ல் குரு ஹரிகோவிந்த் பதவிக்கு வந்தார். 1644 வரையில் பதவியில் இருந்த இவரின் காலத்தில் முஸ்லிம்களுக்கும் சிக்கியர்களுக்கும் சண்டை குதிரை மற்றும் கழுகுகளால் உண்டானது கர்த்தார்பூர், அமிர்தசரஸ் போன்ற இடங்களில் நடந்த போர்களில் இருதரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
மிக அமைதியான சிக்கிய மக்களை போர்ப் படையாக மாற்றியமைக்காக ஹரி கோவிந்த் மிகவும் விமர்சிக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் அனைத்தும் துறந்து, பஞ்சாப்பின் மலைப் பிரதேசங்களில் தனது காலத்தை கழித்தார்.
பஞ்சாபியர்களின் இறுதி குருவாகவும் 10ஆவது குருவாகவும் வந்தவர் குரு கோவிந்த் சிங் (1675 - 1708). இவர்தான் ‘கல்சா’ என்ற அமைப்பை உருவாக்கியவர். கோவிந்த் சிங் பெரிய கல்விமானாகவும் கவிஞராகவும் இருந்தார். இவர் தம் கவிதைகளை மூன்று மொழிகளில் எழுதினார். பஞ்சாபி, ஹிந்தி. பார்ஸிய மொழிகளில் இவரின் படைப்புகள் இன்றும் பஞ்சாபியர்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
இவர் காலத்தில் ஆட்சியில் இருந்த மொகலாய மன்னர் ஒளரங்கசிப்புக்கும் இவருக்கும் நட்பும் பகையும் மாறி மாறி
97

Page 51
O மண்ணும் மனிதர்களும் இருந்துள்ளது. ஆனந்தப்பூரில் நடந்த போரில் இவர் தனது 4 புதல்வர்களையும் பலி கொடுத்தார். 1708 அக்டோபர் திங்களில் இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இவரின் இறப்புக்குப் பிறகு சிக்கியர்களின் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. பஞ்சாப் முழுதும் ஒன்றுபட்ட குரலும் மொகலாயர்களுக்கு எதிர்ப்பான குரலும் ஒலித்தது. இதன் பலனாக அப்போது சிக்கியப் படைக்கு தலைமையேற்ற பன்டா பகதூர், சிரீந்த் போரில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். சிரீந்த் நகரில் இரத்த ஆறு ஓடியதாக வரலாறு கூறுகிறது. முஸ்லிம்கள் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டார்கள். வீடுகள் எரிக்கப்பட்டன. கண்ணில் பட்ட முஸ்லிம்களையெல்லாம் கண்டம் துண்டமாக வெட்டி எரித்தார்கள். தங்களின் குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்கள் இறந்ததற்குப் பழிதீர்த்தார்கள். அப்போதைய சிரீந்தின் கவர்னராக இருந்த வஜிர் கான் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவர் உடலை மீண்டும் தூக்கில் தொங்க விட்டு காக்கைகளும் கழுகுகளும் அதை உண்பதைப் பார்த்து கை கொட்டி ஆர்ப்பரித்தார்கள். இந்த கோரத்தை சரித்திரத்தில் அனைவரும் குறிப்பிட்டுள்ளார்கள். சிக்கியர்களின் தலைமைத்துவம் வேறு திசையில் திரும்பிவிட்டது.
பன்டா பகதூர் ஒரு ராஜபுத்திரர். இவரின் உண்மையான பெயர் லட்சுமணதாஸ் என்பதாகும். வேட்டையில் மிகவும் நாட்டம் கொண்ட இவர் பிற்காலத்தில் மனிதர்களை வேட்டையாடத் தொடங்கினார்.
பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. முல்லாக்கள், இமாம்கள், மெளலவிகள் கொடுமைப்படுத்தப் பட்டார்கள்.
சிரீந்தின் வெற்றிக்குப் பிறகு தாங்களே புதிய கவர்னரை நியமித்தார்கள். பாஜ் சிங் என்பவர் புதிய கவர்னராக நியமிக்கப் பட்டதும் குருவின் பெயரில் புதிய நாணயம் வெளியிடப்பட்டதும் இதில் நடந்த மற்றொரு விஷயம்.
98

சைபீர்முகம்மது O
இதனை கேள்விப்பட்ட ஒளரங்கசீப்பின் மகன் பகதூர் ஷா 60,000 படையினரை அமீன் கான் தலைமையில் பஞ்சாப்புக்கு அனுப்பி வைத்தார். 1710 டிசம்பர் 10ஆம் நாள் பன்டா பகதூர் மலைக்கு ஓடியதுடன் பஞ்சாபில் மீண்டும் அமைதி ஏற்பட்டது. ஆனால் அந்தப் போரில் ஆயிரக்கணக்கான மனித உடல்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
அதிகாரம், கொள்கை, மதம் போன்ற தலைமைத்துவப் போராட்டங்கள் நடைபெறும்பொழுது சாதாரண மக்களே உயிர்விட வேண்டியுள்ளது. அன்றும் இன்றும் இந்த ‘மனித கேடயங்களே’ முதலில் பலியாக வேண்டியுள்ளது.
மீண்டும் ‘குருதாஸ் நங்கல்’ என்ற இடத்தில் நடந்த போரில் பன்டா பகதூர் பிடிபட்டார். டில்லிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். 1716 டிசம்பர் மாதம் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, "மரண
分 தண்டனை விதிக்கப்பட்டார். அதற்கு முன் டில்லி தெருக்களில் அவர் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட தமாவு 7ம் நடந்தது.
சிரீந்தில் இவர் செய்த அட்டூழியங்களுக்கு அது போதுமான தண்டனையாக படைத் தளபதிகள் நினைக்கவில்லை. வாசிர் கானின் உடல் குத்தி கொலை செய்யப்பட்ட பிறகும் அதை காக்கை கழுகுகளுக்குத்தீனியாக்கியது, அவர்களை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.
பன்டா பகதூரின் உடலை சிறிய சிறிய துண்டாக வெட்டி கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரித்தார்கள்.
பன்டா பகதூரின் இறப்புக்குப்பின் சிக்கிய சமூகம் இரண்டு பிரிவாக டபிளவு பட்டது.
அரிய அரியானா!
இந்தியப் பெருங்கடலுக்கு மேல் 37000 அடி உயரத்தில் சிங்கப்பூரில் நான் ஏறிய விமானம் மணிக்கு 1050 கிலோ மீட்டர் வேகத்தில் சிட்னியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. விமானத்தில்
99

Page 52
O மண்ணும் மனிதர்களும்
பட்டிமன்றக் குழுவோடு வந்த நான் உணவிற்குப் பின் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்த பிற்கு, இந்தியப் பெருங்கடலுக்கு மேல் இருந்து இந்திய மண்ணைப் பற்றியும் மனிதர்கள் பற்றியும் இந்தக் கட்டுரை எழுத கிடைத்த வாய்ப்பே அதிசயமானதுதான்!
எனக்கிருக்கும் வேலைப் பளு, பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், நூல் வெளியீடு போன்றவற்றிக்கு இடையே இந்த ஆஸ்திரேலியப் பயணமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. மண்ணும் மனிதர்களும் கட்டுரைத் தொடரை தொடர்ந்து படித்து வரும் ‘மக்கள் ஓசை’ வாசகர்களை இடையில் ஏமாற்றி விடக் கூடாது என்ற நோக்கிலேயே இந்த நள்ளிரவில் கட்டுரையை தொடர்கிறேன்.
பஞ்சாப் மாநிலத்தில் எனது பயணம் ஏறக்குறைய முடிந்து திரும்பும் நிலையில் அதன் துண்டுபட்ட மூன்று நிலைகளிலும் இன்னும் ஓர் அமைதியற்ற நிலையில்தான் இருந்து வருவதை அறிந்து கொண்டேன்.
பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பஞ்சாப்பின் ஒரு பகுதி லாகூரைத் தலைநகராகக் கொண்டு பாகிஸ்தானுக்குள் போய் விட்டது. பஞ்சாபியர்கள் பலர் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து விட்டாலும் தங்களின் பிறந்த மண்ணை இன்னமும் மறக்காமலேயே இருந்து வருகிறார்கள். சிலரிடம் பேசிய பொழுது ‘என் இதயத்தின் ஒரு பகுதி அங்கேதான் இருக்கிறது’ என்றே கூறினார்கள். அதன் பிறகு தற்போதைய பஞ்சாப் 'அரியானா’ என்று மற்றொரு பகுதியாகப் பிரிந்து விட்டது. இப்பொழுது சிக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்று தனி நாடு கேட்டுப் போரிட்டு வருகிறார்கள்.
பிரிவினைகள், போராட்டங்களுக்கிடையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிக்கியர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சோம்பித்திரி கிறவர்கள் மிகக் குறைவு. இந்தியாவிலேயே பிச்சைக்காரர்கள் குறைந்த மாநிலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
நான் எனது பயணத்தின் வழியை அரியானா மாநிலத்தின் வழியாக அக்ரா நோக்கி வைத்துக்கொண்டேன்.அக்ராவிலிருந்து
100

சைபீர்முகம்மது O
டில்லி நோக்கி வரும் சாலை வழியாக எனது பயணத்தை ஆரம் பித்த பொழுது, எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அரியானா மாநிலம் மிகப் பெரிய தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக எனது கண்ணுக்கு தெரிந்தது. ஏறக்குறைய இந்தியாவின் பல கனரகத் தொழிற்சாலைகள் இங்கேதான் இருக்கின்றன.
மாருதி கார் தொழிற்சாலை மிகப் பெரிய அளவில் இங்கே செயல்படுகிறது. மாருதி கார் வந்த பிறகு இந்தியாவில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த ஃபியட் மற்றும் அம்பாசிடர் கார்களின் உற்பத்தி குறைந்து விட்டது எனலாம். ஜப்பானியர்களின் “சுகுக்கி" கார்தான் மாருதி என்ற பெயரில் அங்கே தயார் செய்யப்படுகிறது. நமது நாட்டில் கஞ்சில் காரும் SUZUK1 யின் மறுவடிவம்தான். இன்று இந்தியத் தெருவெங்கும் மாருதிதான் ஆட்சிசெய்கிறது.
அரியானா மாநிலத்தின் பிரதான சாலைகள் சிர்படுத்தப் படுகின்றன. முக்கியமாக டில்லி நோக்கிச் செல்லும் சாலையை மிகப் பெரிய நெடுஞ்சாலை அமைப்பில் மலேசியாவின் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை போல் அமைக்கிறார்கள். ஆனால் இடையிடையே மாட்டு வண்டிகள், கிராமங்களிலிருந்து நெடுஞ் சாலையைக் கடந்து போவது தான் மனதுக்கு சங்கடத்தை உண்டு ' பண்ணுகிறது. இந்த நெடுஞ்சாலையை அனேகமாக இப்பொழுது முடித்திருப்பார்கள். இரவில் வரும் கனரகவாகனங்களில் இந்த மாட்டு வண்டிகள் மோதாமல் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அன்றாடம் மாட்டு வண்டி விபத்துகள்’ நடந்த வண்ணமே இருக்கும். பிறகு இந்த நெடுஞ்சாலையையே பயன் படுத்தக் கூடாது என்று கொடி பிடித்து மறியல் செய்வார்கள்.
இந்தியாவில் அளவுக்கு அதிகமான ஜனநாயகம் இருக்கிறது. ஊர்வலங்கள்,மறியல்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று மக்கள் தங்களின் குரலை உயர்த்திக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். நான் பயணம் செய்த ஊர்களில் ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர் வலமாவது இல் லாமல் இருந்த தில்லை. இதில் பெரும் பகுதி அரசியல்வாதிகளின் தூண்டுதல் பேரிலேயே நடைபெறுகின்றது.
101

Page 53
O மண்ணும் மனிதர்களும்
ஒரு தாய் ஒரு குறிப்பிட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்றார். ஊர்வலம் முடியும் வரை நானும் கூடவே சென்று அந்த அம்மையாரை தனியாக அழைத்துப் பேசினேன்.
'நீங்கள் ஏன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டீர்கள்?’
முதலில் பதில் சொல்ல மறுத்த அந்தத் தாய் ஒரு வழியாக எனது தேநீர் பகிர்விற்குப் பிறகு சரளமாகப் பேசினார்.
‘இந்த கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் எதற்கு நடைபெறுகிறது என்று எங்களுக்கு உண்மையில் தெரியாது. தட்டி துாக்கிக் கொண்டு போனால் இருபது ரூபாய். கொடி பிடித்தால் பதினைந்து ரூபாய், வெறுமனே கோஷம் போட பத்து ரூபாய் என்று ‘ரேட்' வைத்திருக்கிறார்கள். நாங்கள் யார் கூப்பிட்டாலும் போய் கோஷம போடுவோம். இதைக்கேட்டு உண்மையில் நான் அதிர்ந்து போனேன். ஒரு பக்கம் இந்தியா வளரத் துடிக்கிறது. இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட தூண்டுதல் பேர்வழிகள் அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் கோஷம் போடும் இந்த அப்பாவி மக்களைவிட ‘தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த கயவர்களை முதலில் நாடு கடத்த வேண்டும். இவர்கள் பாம்புக்கும் தலையைக் காட்டுவார்கள் மீனுக்கும் வாலைக் காட்டுவார்கள். இந்த விலாங்குகளின் நடவடிக்கைகளால் அந்த நாட்டின் அமைதி, ஒற்றுமை, தேசியம் அனைத்தும் சிர்குலைந்து வருகிறது.
அரியானா மாநிலத்தில் கனரகத் தொழில் அனைத்தும் குடிகொண்டு விட்டதோ என்று சொல்லுமளவிற்கு நெடுஞ் சாலையின் இரு மருங்கிலும் பல தொழிற் பேட்டைகள் உருவாகி உள்ளன. இங்கே மிகப் பெரிய மண்வாரி இயந்திரங்கள், லாரிகள், கனரக இயந்திரங்கள் அனைத்தும் தயாராகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரமும் இங்கே உயர்ந்தே காணப்படுகின்றது.
மற்ற மாநிலங்களை விட இங்கே தொழில் வளர்ச்சி அதிகம் என்பது ஒருபுறமிருந்தாலும் மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு ஆட்சி செய்கின்ற மாநில அரசு வலுவாக இருக்கிறது.
102

சைபீர்முகம்மது O
ஏகப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் இங்கே செய்யப் பட்டுள்ளன. அரியானா மக்களின் எண்ணங்கள் நன்றாக இருப்பதால் அவர்களின் வாழ்வும் வள்மாக இருக்கிறது.
ஒருவழியாக நான் உயிரோடு அக்ரா வந்து சேர்ந்தேன். ஜெய்ப்பூரிலிருந்து என்னோடு வந்து பிறகு எனது பஞ்சாப் பயணத்தில் பிரிந்தவர்கள் அக்ராவில் ஒரு வழியாக என்னை ஹோட்டலில் வந்து சந்தித்து, என் கை கால்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்த பிறகு ஆரத் தழுவிக் கொண்டார்கள்.
அன்று இரவு முழுதும் அக்ரா நகரை சுற்றிப் பார்த்தேன். மக்கள் ஒருவர் விடும் மூச்சு மற்றவர் சுவாசிக்கும் அளவுக்கு மக்கள் தொகை பெருகிய நகரம்.
குறுகிய தெருக்களில் ஆட்டோக்களின் நெருக்குதல் மிக்க ஓட்டங்கள், சைக்கிள் மணி ஒலிகள், கார்களின் ஓயாத ஹாரன் சத்தங்கள். இவைகளுக்கு நடுவே எந்த கவலையும் கொள்ளாது குதிரை வண்டிகளும் ஒடுகின்றன. இன்னும் சாதாரண மக்களின் வாகனமாக ஜட்கா வண்டியும் இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏறிக் கொண்டு குதிரைகளின் குளம்பொலியோடு இவர்களின் குடும்ப ஒலியும் சேர்ந்து தனி ஆவர்த்தனமாக பிரயாணம் செய்கிறார்கள்.
எனக்கு இரவெல்லாம் தாஜ்மகாலின் கனவுகளே வந்தன. அந்த உலக அதிசயத்தை மறுநாள் காணப் போகிறோம் என்ற நினைப்பே என் தூக்கத்தை விரட்டியது!
தாஜ்மகால் ஒரு பளிங்குக் கவிதை எனது நினைவுகள் 350 ஆண்டுகள் கடந்து சென்றன!
ஜஹாங்கீர்
தTஜ்மகாலை கட்டிய மன்னன் குர்ராமைப் பற்றி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத பல பகுதிகள் உண்டு மன்னர்
103

Page 54
O மண்ணும் மனிதர்களும்
ஜஹாங்கிரின் நான்காவது புதல்வர்தான் குர்ராம் ஷாஜஹானின் உண்மைப் பெயர்தான் குர்ராம்.
1592ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் குர்ராம் என்ற ஷாஜஹான் பிறந்தார். லாகூரில் மன்னர் ஜஹாங்கிரின் இந்து மனைவிக்குப் பிறந்தவர் தான் உலகப் புகழ் பெற்ற ஷாஜஹான்!
இளமையில் கல்வியில் தேர்ந்தவராகவும் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட புத்திசாலியாகவும் விளங்கியதால் தாத்தா அக்பரின் செல்லப் பேரனாக இருந்தார்!
தந்தை ஜஹாங்கிர் இறந்தவுடன் இவருக்கு உடனே முடி சூட்டு விழா நடந்துவிடவில்லை. தடைகள் பல கடந்து, படைகள் பல வென்ற பிறகே, இரத்தம் சொட்டும் அக்ராவில் இவரின் முடிசூட்டு விழா நடைபெற்றது.
ஷாஜஹானின் வரலாற்றைப் பார்க்கும் முன் நாம் அக்பரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றாலும், முதலில் தந்தை ஜஹாங்கிரின் பின்னணியைச் சற்றே தெரிந்து கொண்டால்தான் ஷாஜஹானின் முழு வரலாறும் சுவையானதாக அமையும்
முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல், அக்பரின் அன்பைப் பெறுவதில் ஜஹாங்கிர் மிகவும் பின்தங்கியிருந்தார். பட்டத்து இளவரசர் என்றாலும், இவர் சட்டத்துக்கு அடங்காமல் காலத்தை கழித்தார். இதன் காரணமாக பேரன் குஸ்ருவை மன்னராக்கவே அக்பர் மனதில் நினைத்திருந்தார். அக்பரின் பிரதம அமைச்சர் மான் சிங்கும் இதற்கு உடந்தையாக இருந்தார். அப்பொழுது குஸ்ருக்கு 17 வயது. அக்பரின் உள்ளுணர்வை இலேசாக உணரத் தொடங்கிய ஜஹாங்கிரின் சகாக்கள் சதி வலையைப் பின்ன ஆரம்பித்தார்கள். இதை உணர்ந்த மான் சிங் குஸ்ருவை வங்காளத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துக் கொண்டார்.
63 வயதில் அக்பருக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்தது. இந்த நேரத்தில் அரண்மனையில் ஜஹாங்கிர் தன் தந்தையின் காலடியில் தான் செய்ததவறுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு நின்றார். காலடியில்
104

சைபீர்முகம்மது O
மண்டியிட்டுதலைகுனிந்து நின்றார். அக்பர் உடனே கண்சாடை செய்து மணிமுடியை மகன் தலையில் அணிவிக்கச் செய்தார்.
அதன் பின் அக்பரின் உயிர் அமைதியாகப் பிரிந்தது. ஜஹாங்கிர் தந்தைக்கு எதிராக பலதரப்பட்ட எதிர் வேலைகள் செய்தவர் மாத்திரமல்ல, குடியும் கும்மாளமுமாக காலத்தைக் கழித்தவர். வரலாற்றில் இவருக்கு 800 மனைவிகள் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மனைவியுடன் காலத்தைக் கழித்தாலே முதலில் இருந்த மனைவியின் படுக்கை அறைக்கு இரண்டே கால் வருடங்கள் கழித்தே திரும்ப முடியும்!
800 மனைவிகள் இருந்தும், இவரின் வாழ்க்கையில் மிகவும் பங்கேற்ற பெண் நூர்ஜஹான் என்ற மனைவிதான்!
அக்பரின் ஆட்சியில் ராணுவத்தில் பெருந்தளபதிகள் முதற்கொண்டு சாதாரண சிப்பாய்கள் வரை பெரும்பான்மையாக இந்துக்களே இருந்தார்கள். தனது ஆஸ்தான ஒவியர்கள் என்று பதினேழு பேரை அக்பர் நியமித்திருந்தார். இதில் பதின்மூன்று பேர் இந்துக்கள். திறமை எங்கிருந்தாலும் அதைத் தட்டிக் கொடுத்து முன்னுக்குக் கொண்டு வருவதில் அக்பருக்கு நிகர் அக்பர்தான்.
அரண்மனையில் குப்பை கூட்டும் பணியில் இருந்த ஒருவரின் மகனும் குப்பை கூட்டிக் கொண்டு இருந்தார். ஒரு நாள் தனது ஓய்வின் பொழுது அந்தப் பையன் ஓவியங்கள் வரைவதைக் கண்ட அக்பர், உடனே அந்தப் பையனை அழைத்து கைதேர்ந்த ஒவியர்களிடம் பயிற்சி பெற வைத்து, சிறந்த ஓவியனாக்கினார். அக்பரின் ஆட்சியில் மொகலாய சாம்ராஜியத்தின் மூத்த அமைச்சராக இருந்ததோடர் மால் ஒரு இந்து அக்பரின் காலத்தில் மிகப் பெரிய இசைக் கலைஞராகப் போற்றப் பெற்றவர் தான்ஸேன். ஆஸ்தான இசைக் கலைஞராக அவரை கெளவரப்படுத்தி வைத்திருந்தார் மன்னர். இவரும் ஒரு இந்து தான். பிற்காலத்தில் தானே விரும்பி இஸ்லாத்தை ஏற்றவர்.
அக்பருக்கு நிறைய இந்து மனைவிகளும் இருந்தார்கள். தனது கடைசிக் காலத்தில் சைவ உணவை மட்டுமே அவர் உண்டு வந்தார். 'எனது வயிற்றை விலங்குகள் புதைக்கும் இடுகாடாக மாற்ற விரும்பவில்லை’ என்பது அவரின் வாதம்,
w 105

Page 55
O மண்ணும் மனிதர்களும்
தனது ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் உடன்கட்டை ஏறுவதை கடுமையான சட்டத்தால் தடை செய்தார் அக்பர். இது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கூறியதாக அவரின் வரலாறு கூறுகிறது. இளம் விதவைகளை கடுமையாக கை கால்களைப் பிணைத்துக் கட்டி, எரியும் நெருப்பில் தூக்கி எறிந்து கொல்லும் காட்சிகளைக் கண்ட அவர் மேற்கண்ட சட்டத்தை உடனே அமுலுக்கு கொண்டு வந்தார்.
அக்பரை பற்றி தனியே எனது டில்லி வருகையின் பொழுது எழுதுவேன். இப்பொழுது இந்த முன்னோடிக் குறிப்புகள் ஏன் என்றால், இவ்வளவு இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழி வகுத்துக் கொடுத்துச் சென்ற அக்பரின் ஆட்சிக்குப் பிறகு பதவியேற்ற ஜஹாங்கிர் இவற்றையெல்லாம் கடைபிடித்து நல்ல பிள்ளையாக' ஆட்சி செய்வாரா என்ற கவலை மந்திரிகளிடமும், மக்களிடமும் இருந்ததில் வியப்பில்லை.
அக்பர் மிகச் சிறந்த நிர்வாகத் திறமை பெற்றவர். அரசியல் சாணக்கியத்தில் இந்திய வரலாற்றில் இன்றும் போற்றப்படும் மாபெரும் மன்னர் அவர். எப்பொழுதுமே நிலை தடுமாறாத கட்டொழுங்கு அக்பரிடம் இருந்தது. அக்பரோடு ஒப்பிடும் பொழுது ஜஹாங்கிர் பல பலவீனங்களை பழக்கமாகக் கொண்டிருந்தார்.
மது - மங்கை இவற்றுக்கும் மேலாக ஒப்பியம் (அடரின்) சாப்பிடும் பழக்கமும அவரிடம் இருந்தது. இத்தனை பலவீனத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டு அகன்ற மொகலாய சாம்ராஜ்யத்தில் கொடியை பறக்கவிட்டதே அவரின் தனித் திறமை என்றுதான் சொல்ல வேண்டும்.
சில வரலாற்றாசிரியர்கள் இவருக்கும் முந்நூறு மனைவிகள் என்று எழுதியுள்ளார்கள். ஆனால் நேரில் வாணிகம் செய்த ஆங்கில போர்த்துகிசிய வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் இவருக்கு 800 மனைவிகள் என்று கணக்கு இருக்கிறது. (எனக்கு எப்பொழுதுமே சற்று தாராளமான மனம், எதற்கு மற்றவர்களின் மதிப்பை வீணே குறைத்துச் சொல்ல வேண்டும்? அதனால் 800 என்ற கணக்கைக் கொடுத்து அவரின் ‘மார்க்கை’ உயர்த்தி விட்டேன்.)
106

சைபீர்முகம்மது O ஜஹாங்கிர் கலை மனம் படைத்தவர். மிருகங்களிடம் அவருக்கு அதிக ‘காதல்’ இருந்தது. குறிப்பாக, பறவைகளை அவர் மிகவும் ரசித்தார். தனது பராமரிப்பில் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலையை அவர் அமைத்தார்.
இயற்கையை - அதன் அழகை - மிகவும் நுணுகி நுணுகி ரசித்தவர் ஜஹாங்கிர். பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி அதன் இனப்பெருக்கம் பற்றி அவற்றின் காதல் காமம் பற்றி யெல்லாம் தனது வாழ்க்கைக் குறிப்பில் பக்கம் பக்கமாக எழுதி வைத்துள்ளார்.
கலை, இந்த மன்னரின் காலத்தில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் இல்லாத அளவு வளர்ந்தது.
இவரின் ஆட்சிக் காலத்தில்தான் துளசிதாஸ் தனது இராமாயணத்தை எழுதினார். ஆட்சி சிறப்பாக இருக்கும் காலத்திலேயே அற்புத இலக்கியங்கள் உருவாகும். சங்க காலத்தில் மன்னர்கள் சிறந்த ஆட்சி செய்த காலத்தில்தான் சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை என்று வரிசையாக காவியங்களும் காப்பியங்களும் தோன்றியிருக்கின்றன. அந்த வகையில் ஒரு முஸ்லிம் மன்னரின் ஆட்சிக் காலத்தில் துளசிதாஸரின் மிகச் சிறந்த இந்துக் காவியமான இராமாயணம் தோன்றியது.
இவ்வளவு கலை மனம் கொண்ட பாதுஷாவின் மனதில் பல குரூரபுத்திகளும் குடி கொண்டிருந்தன. தனது மணிமகுடத்துக்குப் போட்டியாக வந்து விடுவானோ என்று நினைத்து தனது மூத்த மகன் குஸ்ருவை அவர் பிற்காலத்தில் பழிவாங்கிய விதம்தான் சரித்திரத்தில் இன்றும் கரும் புள்ளியாக உள்ளது!
ஆட்சிக்கு வந்த மறு வினாடியே தனது மகன் குஸ்ருவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வந்த மான் சிங்கை வங்காளத்துக்கு கவர்னராக மாற்றினார். அதன் பிறகு அரண்மனையிலிருந்து தப்பிய குஸ்ரு சிக்கிய மத குருவிடம் தஞ்சமடைந்ததும், அதனால் அவர் கொல்லப்பட்டதும், ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக் கிறேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குஸ்ரு மீண்டும் வீட்டுக் காவலில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தனியறையில் வைக்கப்பட்டான். ஆறு மாதம் கழித்து பாதுஷாவுக்கு புத்திர
107

Page 56
O மண்ணும் மனிதர்களும்
பாசம் பொங்கியது. என்ன இருந்தாலும் தனது மூத்த மகன் என்ற நினைப்பில் குஸ்ருவை மன்னித்து சங்கிலிகளைக் களையச் செய்து, தன்னோடு வேட்டைக்குக் கூட்டிச் சென்றார்.
அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, அரசியல் என்பது ‘சதி வேலைகள் நடக்கும் பெரிய கூடாரமாகத்தான் இருக்கிறது. சொந்தக் கட்சிக்குள்ளேயே இன்று ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் காட்சிகள் சர்வ சாதாரணமாக நடைபெறு கின்றன. எந்த நேரத்தில் எவன் காலை எவன் வாரி விடுவானென்று சொல்லவே முடியாது! நேற்று வரை நண்பனாக இருப்பவன் அடுத்த நாள் காலையில் எதிரணியில் நின்று கொண்டு முகத்தை வேறு திசையில் திருப்பும் சந்தர்ப்பங்களை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இதன் காரணமாகவே அரசியல் பக்கம் நான் தலை வைத்துப் படுப்பதில்லை. அரசியல் வாதிகளுக்கு நாளுக்கு ஒரு தலைவன். என்னைப் போன்றவர் களுக்கு என்றும் ஒரே தலைவன்! நடிக்கத் தெரிந்தவ்ர்களுக்கு இங்கே தினம் ஒரு வேஷம்!
வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஜஹாங்கிரின் தலையைச் சிவி எடுக்க குஸ்ரு திட்டம் தீட்டி வைத்திருந்தான். இதில் அரண்மனையில் இருந்த சுமார் நானுாறு தளபதிகள் ஆலோசகர்கள் - பிரபுக்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் மன்னருக்கு விரைவாகச் சென்றடைந்தது!
பதவி என்ற ஆசை தந்தை என்றும், மகன் என்றும் வித்தியாசம் தெரியாமல் செய்து விடுகிறது.
தனது மெய்க்காவலர்களை அழைத்து. உடனே குஸ்ருவின் இருகண்களையும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் குத்திக் குருடாக்கச் சொன்னார் மன்னர்.
நானுநூறு பேர் தனது அரண்மனைக்குள் தனக்கு எதிராக இருப்பது தெரிந்ததும் மன்னர் உடனே நடவடிக்கை எடுக்காமல் முக்கிய நாலு பேர்ை.மட்டுமே முதலில் எமலோகம் அனுப்பி வைத்தார். மற்றவர்களின் மேல் எப்பொழுதும் அரண்மனைக் காவல் ‘கண்‘ இருந்து கொண்டே வந்தது.
108

சைபீர்முகம்மது O 'குஸ்ருவின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பி சொருகும் பொழுது அவன் மிகவும் வீறிட்டு அலறியதாக பிறகு கேள்விப்பட்டேன். என்ன செய்வது? அது அவனுக்குரிய தண்டனை' என்று தனது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார் ஜஹாங்கிர்.
இதில் மற்றொரு அதிசயம் என்ன வென்றால், கம்பி பாய்ச்சப்பட்ட பொழுது இளவரசர் மேல் அனுதாபப்பட்டு ஒரு கண்ணை பாதியாகவும், மறு கண்ணை முழுமையாகவும் குருடாக்கினார்கள். கட்டளையை நிறைவேற்றும் பொழுதுகூட அங்கே இருந்த சிலருக்கு மனிதாபிமானம் தலை தூக்கியுள்ளது!
பின் மகனின் நிலைக் கண்டு பாசம் பொங்கி வழிய அவனுக்குப் பாரசீகத்திலிருந்து கண் வைத்தியர் ஹக்கிம் ஸாத்ராவை வரவழைத்து சிகிச்சை அளித்தார் ஜஹாங்கீர்! பிறகு வைத்தியம் பலனளித்து, சிறிது சிறிதாக அந்த ஒற்றைக் கண்ணில் பார்வை வந்துவிட்டது.
ஒரு கண் போன குஸ்ரு அதன் பிறகு அமைதியாகி விட்டான். மகனுக்கே இந்தக் கதி என்றால் நமக்கு என்ன ஆகுமென்று நினைத்து மன்னரின் எதிரிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டார்கள். இது ஒரு வகையில் ராஜ தந்திரம்தான். எனக்கு எதிராகத் திரும்பினால் யாராக இருந்தாலும் விடமாட்டேனென்று பாதுவுா சொல்லாமல் தனது அரண்மனை ‘சதி’காரர்களுக்கு செய்கை மூலம் செய்து காட்டினார். இதன் பிறகு அரண்மனை ‘கப்சிப்’ ஆகிவிட்டது!
நூர்ஜஹான்
இஹாங்கிர் வாழ்க்கையில் பல மனைவிகள் வெறும் அரண் மனைப் பதுமைகளாக இருந்த பொழுது, நூர்ஜஹான் மட்டுமே சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். இத்தனைக்கும் நூர்ஜஹான் ஒரு விதவையாக பாதுஷாவின் வாழ்க்கையில் வந்து பங்கேற்றவர்!
109

Page 57
) மண்ணும் மனிதர்களும்
பாரசீகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மீசா கியாஸ் பேக் என்பவர் இந்தியாவில் மொகலாயர்களின் செல்வாக்கு பற்றிக் கேள்விப்பட்டு தனது குடும்பத்தினரோடு, மிகப் பெரிய வியாபாரியும் செல்வந்தருமான மாலிக் மதுது என்பவரோடு புறப்பட்டு இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தார். வரும் வழியில் கந்தார் எனும் இடத்தில் இவருக்கு மிக அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த நேரம் நல்ல நேரம் போலும். மாலிக் மதது. மன்னர் அக்பருக்கு மீசா கியாஸ் பேக்கை அறிமுகம் செய்து வைத்தார். தனது கடுமையான உழைப்பாலும், உண்மை, நேர்மை ஆகியவற்றாலும் காபூல் திவானாக உயர்ந்தார் அவர். மகள் மெகருன்னிஸா 17 வயதடைந்ததும் அலி கூலி பெக்ஸ்தாலு என்பவனுக்கு மணமுடித்து வைத்தார். இவரும் பாரசீகத்திலிருந்து வந்தவர்தான். இவர் வங்கத்துக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், ஷெர் அஃகான் என்ற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
பதவியும் பட்டமும் வந்தவுடனேயே பலருக்குப் பேராசை களும் கூடவே வந்து விடுகின்றன. பொதுவாகவே பாரசீகத்தி லிருந்து இந்திய மண்ணில் பிழைக்க வந்த இவருக்கு அரச பதவியும் பெரிய பட்டமும் வழங்கப்பட்டது. வங்கத்துக்குத் தளபதியாக தனிப்படையுடன் சென்ற இவருக்கு நெஞ்சில் ஆசைகள் முளையிட்டன. அக்பருக்கு எதிராக இவர் புரட்சிப் படை ஒன்றை ஏற்படுத்தியதோடு, தன்னிச்சையாகவும் செயல்பட ஆரம்பித்தார். இந்த நேரத்தில் வங்க நாட்டின் கவர்னராக இருந்த குதுப்தின் என்பவர் ஷெர் அஃகானை விசாரணை செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் பொழுது தனது வாளால் குதுப்தினை வயிற்றில் குத்திக் கொலை செய்தான் ஷெர் அஃகான்! கவர்னர் குதுப்தி னுக்கு பாதுகாவலாக வந்த வீரர்களுக்கும் ஷெர் அஃகான் வீரர்களுக்கும் நடந்த சண்டையில் ஷெர் அஃகான் அங்கேயே கொல்லப்பட்டான்! மெகருனிஸ்ஸா விதவையானாள்!
இந்த சம்பவத்துக்குப் பின் மெகருனிஸ்ஸா அக்பரின் அரண்மனையில் அந்தப்புரத்தில் ஒரு செல்லப் பெண்ணாக வளர்ந்து வந்தாள். அப்பொழுது அவளுக்கு கையில் ஒரு பெண்
11 O

சைபீர்முகம்மது O குழந்தையும் இருந்தது!
1607-ல் மெகருனிஸ்ஸா அந்தப்புரத்தில் இருந்த ராணிகளின்
மேற்பார்வையில் அரசியல் ஞானம் பெற்றுவந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அரண்மனைப் பெண்கள் அடிக்கடி விற்பனைச் சந்தை போன்ற ஒரு வேடிக்கையான கேளிக்கைச் சந்தையை நடத்துவது வழக்கம். இப்படி ஒரு நாள் சந்தை நடந்து கொண்டிருந்த பொழுதுதான் ஜஹாங்கிர் இளவரசராக இருந்த சமயம், சந்தை வழியாக நடந்து வந்தார். இளம் விதவையாக, பேரழகியாக இருந்த மெகருனிஸ்ஸாவை கண்டதும் ஜஹாங்கிர் மெய்மறந்து நின்றுவிட்டார். 1611 ஆம் ஆண்டு அதாவது மெகருனிஸ்ஸாவின் கணவர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவளுக்கு மறுமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் முதலில் மெகருனிஸ்ஸா என்ற பெயரை 'நூர் மகால்’ என்று மாற்றி வைத்தார் ஜஹாங்கிர். நூர் மஹால் என்றால் ‘அரண்மனை ஒளி' என்று பொருள்!
தனது பல மனைவிகளிடத்தில் இல்லாத அறிவுத் தெளிவும் ஆற்றலும் அழகும் அவளிடம் இருப்பதை அறிந்து பாதுவுசா 9G) 6861 'நூர் ஜஹான்’ அதாவது ‘உலகின் ஒளி' என்று பெயரை மாற்றினார். பிற்காலத்தில் நூர்ஜஹான் என்ற பெயரே நிலைத்துவிட்டது!
நூர் ஜஹானின் முதல் கணவர் ஷெர் அஃகான் கொலை செய்யப்பட்டதில் ஜஹாங்கிருக்குப் பங்கு உண்டா? ஏற்கனவே அவளைக் கண்டு மயங்கியதால் சதி செய்து அவள் கணவனைக் கொன்றாரா? இந்தக் கேள்விகள் பல சரித்திர ஆசிரியர்களைக் குழப்பியுள்ளன. இந்த இரண்டு கேள்விகளுக்காகவே சரித்திரத்தை புரட்டியதில் சில உண்மைகள் தெளிவாகின.
1161 ஆம் ஆண்டு வரையில் நூர் ஜஹானை சலீம் என்ற பெயர் கொண்ட ஜஹாங்கிர் பார்க்கவே இல்லை. இவர்களின் திருமணத்தை கடைசி நேரம் வரையிலும் அக்பர் ஆதரிக்க வில்லை.அக்பரின் மனைவி சுல் தானா சலீமா பேகம்தான் தம்
111

Page 58
O மண்ணும் மனிதர்களும்
மேற்பார்வையில் நூர் ஜஹானை கண்காணித்து வந்தார். அவரே இந்தத் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்துள்ளார். மேலும், தனது கணவரைக் கொலை செய்த ஒருவரை மணக்க நிச்சயமாக நூர்ஜஹான் சம்மதித்திருக்க மாட்டார்!
கவர்னர் குதுப்தின் கொல்லப்பட்டது உண்மை. அதே நேரத்தில் ஷெர் அஃகான் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதும் உண்மை. இதனால் நடந்த வாக்குவாதத்தின் போது நடந்த கைகலப்பரில் ஷெர் அஃகான் கொல்லப்பட்டார். எனவே ஜஹாங்கிர் பெயரில் உள்ள சந்தேகம் அர்த்தமற்றது.
நூர்ஜஹானின் வாழ்க்கை மொகலாய அரசில் முக்கியத்துவம் பெற்றதாகும். அரசிக்குத் தெரியாமல் எந்த ஒரு காரியமும் நடைபெற முடியாது என்ற அளவில் ஆகிவிட்டது. பல அரசியல் சட்ட திட்டங்கள் அந்தப்புரத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே பாதுஷா கையெழுத்து இடுவது வழக்கமாகி விட்டது.
நூர் ஜஹான் சிறந்த கவிதை ரசிகையாக மட்டுமல்லாது. தானே கவிதைகள் எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார். மொகலாய மன்னரின் அத்தாணி மண்டபத்தை மிக நேர்த்தியாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு!
பட்டாடைகளில் புதிய அமைப்புகளை (Design) உருவாக் கினார். நூலாடையில் அதிசயிக்கத்தக்க வகையில் ஆடைகளைத் தயார் செய்தார். இயற்கையிலே ‘தேடல் மனம் கொண்டிருந்ததால் அவரால் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய முடிந்தது. ‘அத்தர்’ என்ற வாசனையைக் கண்டுபிடித்தவரே நூர்ஜஹான்தான்!
மனத் துணிச்சலும், உடல் கட்டும் இருந்ததால் பாதுவுா வேட்டைக்குச் செல்லும் பொழுதெல்லாம் இவரும் கூடவே செல்வார். பல சந்தர்ப்பங்களில் காட்டில் புலிகளை நேரில் தானே தனியாக வேட்டையாடிக் கொன்றுள்ளார். ஜஹாங்கிர் உலகையே மறந்து விடும் அளவுக்கு நூர்ஜஹான் மேல் காதல் வயப்பட்டுக் கிடந்தார். அரசியும் அவ்வாறே சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லாத அளவு பாதுஷாவின் மேல் அன்பை பொழிந்தார்.
112

சைபீர்முகம்மது O ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அத்தனை நடைமுறை களையும் தனது மனைவியிடம் ஒப்படைத்தார். தனது வா ழ்க்கைக் குறிப்பில் ஜஹாங்கிர் இப்படி எழுதுகிறார்: “எனது அரசு முழுவதையும் ஒரு கோப்பை மதுவுக்காகவும் ஒரு வேளை சூப்புகாகவும் எனது அரசிக்கு எழுதிக் கொடுத்து விட்டேன்” இதிலிருந்து அவர்களின் காதல் எப்படிப்பட்டது என்பதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். i
நூர் ஜஹானின் பார்வையில் தப்பி எந்த அரசு காரியமும் நடைபெற்றுவிட முடியாது. மக்களிடத்தில் அன்பும் பரிவும் கொண்டிருந்தார் அரசி! ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் அவர் எப்பொழுதுமே முன் நின்றார். பல ஏழை முஸ்லிம் பெண்களுக்கு தனது செலவில் திருமணம் முடித்து வைத்தார். பணத் தகராறு காரணமாக வாழ்க்கையில் சிரமத்தை எதிர்நோக்கிய 500 பெண்களுக்கு தனது திருமணப் பரிசாகக் கிடைத்த பணத்தையும் ஆடை ஆபரணங்களையும் கொடுத்து. அந்த குடும்பங்களை அவர் வாழ வைத்தாக ஜஹாங்கிர் தமது குறிப்பில் குறிப்பிடுகிறார்.
ஜஹாங்கிரின் வேறொரு மனைவிக்குப் பிறந்தவரான குர்ராம் என்ற ஷா ஜஹானுக்கும் நூர் ஜஹானுக்கும் எப்பொழுதுமே சரித்திரத்தில் ஏழாம் பொருத்தம்தான்! அடுத்தபட்டத்து இளவரசராக இருந்த ஷாஜஹான் பல கெடுபிடிகளில் இறங்கி இருந்தார். தனது நிலையைச் சிறிதும் விட்டுக் கொடுக்க விரும்பாத நூர்ஜஹான் பல வகையில் இவருக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தார். ஷாஜஹானின் எழுச்சி தனது நிலையை பலவீனப்படுத்திவிடும் என்பதில் எப்பொழுதுமே நூர்ஜஹான் கண்ணும் கருத்துமாக் இருந்தார்.
ஒரு முறை ஜீலம் நதிக் கரையில் ஜஹாங்கிர், மொகபட் கான் என்பரால் சிறைபிடிக்கப்பட்டார்.இந்த நேரத்தல் வேறு யாரையும் நம்பாமல் தானே யானை மேல் அமர்ந்துபடை நடத்திச் சென்றார் நூர்ஜஹான். தனது கணவனுக்கு வந்த ஆபத்தை தனக்கு வந்ததாக நினைத்துப் படை நடத்தி எதிரியை வென்று கணவனை மீட்ட அந்தக் கட்டம் எல்லா சரித்திரக் குறிப்புகளிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் தனது உயிரையும் துச்சமென
113

Page 59
O மண்ணும் மனிதர்களும் மதித்து ஒரு முஸ்லிம் பெண் படை நடத்துவதென்பது கனவிலும் அப்பொழுது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று! நூர் ஜஹானின் வாழ்க்கையில் மிகச் சிறந்த இடமாக இதைச் சொல்லித் தான் ஆக வேண்டும். எதிரிகள் கண் கலங்கி ஓட்டமெடுக்கும் அளவுக்கு நூர்ஜஹானின் போர்த்திறமை இருந்ததாக அப்போரில் நேரிடையாகப் பங்காற்றிய தளபதிகள் கூறியுள்ளார்கள்.
நூர்ஜஹானின் செல்வாக்கு மென் மேலும் பெருகியது. தனது சகோதரர் அஸஃப் கானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கினார். தனது தகப்பனாருக்கு அரசாங்கத்தில் உயர் பதவி கொடுத்தார்.
ஜஹாங்கிர் தனது மகன் ஷாஜஹானிடம் தனியன்பு கொண்டிருந்தார்.பல போர்களில் வென்று பொன்னும் மணியும் கொண்டு வந்து குவித்த ஷாஜஹானின் செல்வாக்குப் பெருகுவதைப் பொறாமைக் கண் கொண்டு பார்த்தார்.அரசி! மனிதர்கள் பொறாமைப் படுவது இன்று நேற்றா நடக்கிறது? ஒருவன் தனது திறமையால் கொஞ்சம் பேரும் புகழும் பெற்று விட்டால் பலருக்குத் தூக்கமே வருவதில்லை. சுடுகாட்டில் கொண்டு போய் எரிப்பதற்கு முன்பே தங்கள் நெஞ்சை பொறாமைத் தியால் தாங்களே எரித்துச் சாம்பலாக்கிக் கொள்கிறார்கள்! இதில் பேரும் புகழும் பெற்ற மொகலாய அரசி மட்டும் என்ன விதிவிலக்கா?
தன்னை எப்படியும் அரியணை ஏற நூர்ஜஹான் அனுமதிக்க மாட்டார் என்பதை அறிந்து ஷாஜஹான் மனமொடிந்து.பாரசீகம் * நோக்கிப் பயணம் மேற்கொண்டார். இதற்கு முன் இன்னொரு
கொடூரமும் நடந்து முடிந்தது.
கண்கள் இழந்த குஸ்ரூ அரண்மனைக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். குஸ்ரூ பதவியில் இல்லையே தவிர, அவருக்கு அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு இருக்கவே செய்தது. ஏகபத்தினி விரதனாக இருந்ததோடு, தொழுகை, ஞானம் என்று அவரின் போக்கு ஒரு ஞானியைப் போல இருந்தது.வருங்காலத்தில் தனது திட்டங்களுக்கு குஸ்ரூ ஒரு தடங்கலாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து சகோதரர்களுக்குள் பகை மூட்டப்பட்டது. குஸ்ரூ உயிரோடு இருந்தால் நீ பதவிக்கு வருவது ஆபத்து என்று
114

apsdispasábeg O
மறைமுகமாக ஷாஜஹானுக்கு உணர்த்தப்பட்டது. நெருப்புவைக்க அரசியல்வாதிகளுக்கு சொல்லியா தர வேண்டும்? ‘அண்ணன் எப்பொழுது சாவான்.திண்ணை எப்பொழுது காலியாகும்’ என்று சதா கனவு காண்பவர்கள் ஆயிற்றே!
தெற்கே தனது படையுடன் ஷாஜஹான் சென்ற பொழுது குஸ்ருவையும் அழைத்துச் சென்றார். பர்ஹான்பூர் என்ற ஊரில் படை முகாமிட்டிருந்தி பொழுது குண்ருவை அரண்மனையில் தங்க வைத்துவிட்டு ஷாஜஹான் மட்டும் தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார்.
ஷா ஜஹான் வேட்டையில் ஏகப்பட்ட மிருகங்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுது, இங்கே பர்ஹான்பூர் அரண்மனையில் குஸ்ரு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்
வேட்டையிலிருந்து திரும்பி ஷாஜஹான் தனது தந்தைக்கு பக்குவமாக ஒரு கடிதம் எழுதினார். "அன்பு அண்ணன் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். நான் எவ்வளவோ வைத்தியர்களை வைத்துப் போராடிப் பார்த்தேன். கடைசியில் நான் தோற்று விட்டேன்’ என்று கடிதத்தைப் படித்து விட்டு ஜஹாங்கிர் அழுது புலம்பியதாகக் குறிப்பு கூறுகிறது. -
குஸ்ரூவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. ஜஹாங்கீர் நல்ல மனமும் அதேவேளையில் கொடூரங்கள் நிறைந்த மனமும், ஒருங்கே பெற்றவர். குஸ்ரூ வாழ்ந்த பொழுது அடுக்கடுக்காகத் துன்பங்களை அவனுக்குக் கொடுத்து. கண்ணையும் சுட்டெரித்து விட்டு, இப்பொழுது ஒட்டுமொத்தமாக தலையில் கையை வைத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டார். புத்திர சோகம் அவரை வாட்டியது.
இந்த அரசியல் சொக்கட்டான் ஆடுபவர்களை நம்பவே முடியவில்லையே! அந்த நேரத்தில் ஜஹாங்கிர் வடித்த கண்ணிர் உண்மையானதா, இல்லை போலியா என்பதை இறைவன் மட்டுமே
கடைசியில் குஸ்ரூவின் உடலை பர்ஹான்பூரிலிருந்து தோண்டி எடுத்து வந்து, அவனது தாயாரின் கல்லறைக்குப்
115

Page 60
O மண்ணும் மனிதர்களும்
பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்ட அரசியல் நாடகமும் வெற்றிகரமாக நடந்தேறியது. மக்களும் ஜஹாங்கிர் குஸ்ரூவின் கண்ணைத் தோண்டியதை மறந்து இந்த பெரிய அடக்கம் நடத்திய விதம் பற்றியே பேச ஆரம்பித்து விட்டார்கள்! "
நூறு பேர் கூடி வாழ்த்துப்பா பாடினால் துரோகியும் தியாகியாவான்’ என்ற கண்ணதாசனின் வசனம் இந்த இடத்தில் பிரமாதமாகப் பொருந்தி வருகிறதே! .
மொகலாய சாம்ராஜ்ய தீபமே
இரவு முழுதும் அக்ராவில் சுற்றித் திரிந்து பின் நள்ளிரவில் படுக்கச் சென்ற பொழுது, எனக்கு முதலில் ஷ்ாஜஹானின் நினைவுகளே வந்தன. ஆனால் தாஜ்மகாலைக் கட்டுவதற்கு முன் ஷாஜஹானின் பின்னணியை சற்றே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேய்ே ஜஹாங்கிர் மற்றும் நூர்ஜஹான் பற்றியெல்லாம் சொல்ல வேண்டி வந்தது.
மறுநாள் காலை நான் எழுந்து தாஜ்மகாலைக் காணச் சென்ற பொழுது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. எவ்வளவு ஆவலோடு சென்றேனோ, அந்த அளவு ஏமாற்றமடைந்தேன். அன்று திங்கட்கிழமை தாஜ்மகால் திறப்பதில்லை என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே திறந்திருப்பார்கள் என்றும் கூறினார்கள். பிறகு பின்புறமாக நடந்து சென்று யமுனை நதிக் கரையில் நின்று. தாஜ்மகாலின் மற்றொரு புறத்தை ரசித்தேன். மனது அழுதது! எனது பயணத் திட்டம் காரணமாய் உடனே டில்லி போக வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். இவ்வளவு தூரம் வந்து முழுமையாக அந்த காதல் மாளிகையைக் காணாமல் செல்வதா? எனது டில்லிப்பயணத்தைத் தள்ளி வைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து ஷாஜஹானின் நினைவுகளில் மூழ்கினேன். ༽།།
காதலைப் பற்றியும் மனைவியிடம் கொண்ட அன்பு பற்றியெல்லாம் பேசும் பொழுது ஷாஜஹானை நினைவு கூர்வது
116

சைபீர்முகம்மது O வழக்கம். ஆனால் அதற்கு முன் அந்த பாதுஷாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சோகமும், சில வீரமும், மற்றும் சில இன்பமும் நிறைந்தவை.
தாஜ்மகாலின் வாயிற்கதவு சாத்தப்பட்டிருந்தது. வெளியே மணல் வெளியில் “ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கடலைகன்ளக் கொறித்தவாறு ஷாஜஹானைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன்.
1582-ல் பிறந்த ஷாஜஹான் தனது 15ம் வயதில் 13,000 படை வீரர்களுக்கு தலைமையேற்று நடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இளமையிலேயே மிகச் சிறந்த கல்வி அவருக்கு வழங்கப்பட்டது. இளமைக் காலத்தில் அக்பர் பாதுஷாவின் செல்லப் பேரர்களில் ஒருவராக.அவர் வளர்ந்து வந்தார்.161 - ல் அவரின் 19 ஆவது வயதில் 15000 படை வீரர்களுக்குத் தலைமையேற்கும் தகுதியை உண்டாக்கிக் கொண்டார்.
ஜஹாங்கிரின் மூத்த மகன் குஸ்ருவின் துடைத்தொழிப்பு நூர்ஜஹற்ான்ை நிம்மதி அடையச் செய்யவில்லை. அரண்மனையில் “பதவி" க்கம் கண்டுவிட்ட ஆவர் தனது நிலைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது ள்ன்பதில் க்ண்ணும் கருத்துமாக இருந்து வந்தார். தனது முதல் திருமணத்தின் பொழுது பிறந்த மகளை சராயர் என்ற இளவரசருக்கு மணமுடித்து வைத்தார். இந்த வழியில் தனது மருமக்ன்சராயர் தன்து பேச்சு கேட்டு நடப்பான் என்பது அவரின் எண்ண்ம்
ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கும் திருமணம் راه-1612 நடைபெற்றது. மும்தாஜ் வேறு யாருமல்ல, நுர்ஜஹானின் சொந்த சகோதரர் அசப்கானின் மகள் தான். நான் முன்பே குறிப்பிட்டது போல் அசப்கானுக்கு தனது சொந்த செல்வாக்கால் அரசாங்கத்தில் முதலமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்திருந்தார் நூர்ஜஹான்!
ஜஹாங்கிர் காலத்தில் பல போர்களைச் சந்தித்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த ஷாஜஹான். 1627 அக்டோபர் மாதம் ஜஹாங்கிர் இறக்கும் பொழுது டெக்கானில் இருந்தார். இந்த நேரத்தில் தனது மருமகன் சராயருக்கு பட்டம் துட்டிவிட நூர்ஜஹான் துடியாகத் துடித்துக் கொண்டிருந்தார்.
117

Page 61
9 விண்ணுக் மனிதச்களும்
லாகூரில் இருந்த மருமகன் சர்ாபரை உடனே அக்ராவுக்கு வரவழைத்து முடிசூட்டு விழ்ாவுக்கு ஏற்பாடுகள் ச்ெய்ய ஆரம்பித்தார். இதை அறிந்த அசப்கான் உடனே தனது சகோதரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விட்டார். அமைச்சராக இருந்த அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை தூர்ஜஹானுக்கு
அசப்கானுக்கு ஒருபுறம் சகோதரி மறுபுறம் தனது மருமகன் ஷாஜஹான்! அவ்ர் நீதியின் பக்கமே இருக்க விரும்பினார். அறிவு, ஆற்றல், ராஜதந்திரம் போன்றவற்றில் அப்பொழுது ஷாஜஹானை விட்டால் மொகலாய சாம்ர்ாஜியத்தைக் கட்டி காக்க வேறு ஆள்ே கிடையாது. சராயர் அரண்மனை அழகுப் பதுமையாக இருக்க லாயக்கே தவிர அரசாள அவனால் முடியாது. அவனை அரசனாக்கினால் பின்னணியில் நூர்ஜஹான் தான் நாட்டை
ஆளும் நிலை ஏற்படும்.
டெக்கானிலிருந்து ஷாஜஹான் திரும்பும் வரையில் ஏதாவது ச்ெய்தாக வேண்டும். இந்த நிலையில்த்ான் கண்கள் பிடுங்கப்பட்டு பரிதாபகரமாக கழுத்து நெறிக்கப்பட்டு:இறந்த குஸ்ருவின் மூத்த toassär Laurr ušesu அக்ராத்ரின் இருப்பது தெரிந்து, உடனே தற்காலிகமர்க - ஷாஜஹான் ஆக்ரர் திரும்பும் வரையிலும் - அவனுக்கு முடி சூட்டப்பட்டது. இறைவனின் கருணையை இங்கேதான் நினைக்க வேண்டியுள்ள்து.
மொகலாய ஆட்சிக்கு ஜஹாங்கிருக்குப் பிறகு உண்மையில் குஸ்ருதான் வர வேண்டும், ஆனால் குஸ்ருவின் அவசரப் புத்தியாலும் பலரின் சதியாலும் கடைசி வரை அந்த மணிமகுடத்தை தொட்டுப்ப்ார்க்கும் வாய்ப்பே அவருக்குக் கிடைக்க வில்லை. ஆனால் அவரின் இறப்பிற்குப்பிறகு சிறிது காலமாவது அவரின் மகன் அந்த மணிமகுடத்தை அணியும்பேறு பெற்றான். நூர்ஜஹானும் சராயரும் பல சதி வேலைகள் செய்தும், அசப்கானிடம் அவை எடுபடவில்லை.இதற்கிடையில்ஷாஜஹான் டெக்கானிலிருந்து திரும்பினார். சிறிது காலமே மன்மகுடத்தை அலங்கரித்த டவார் பக்ஸ் உடனடியாக பெர்சியாவுக்கு அனுப்பப்பட்டான். அவனுடைய இறுதிக் காலம் வரையில் அங்கேயே வாழ்ந்து மறைந்ததாக வரலாறு கூறுகிறது. நல்ல
118 .حمه , بسنس نیست

சைபீர்முகம்மது O
வேளையாக இடைக்காலத்தில் மணிமகுடத்தைத் தரித்தமைக்காக அவன் தலை சிவப்படவில்லை!
அதன் பிறகு அரண்மனை ரத்தக் களரியாகியது. தனக்கு எதிராக சதி செய்த அனைவரையும் நூர்ஜஹானைத் தவிர, மேலுலகம் அனுப்பினார் ஷாஜஹான்! உண்மையில் பார்க்கப் போனால் ரத்தக்கறை படிந்த படிக்கட்டுகளில் ஏறியே தனது மணிமகுடத்தை ஷாஜஹான் துட்டிக் கொண்டார்.
இதன் பிறகு தனக்கு எந்த பாதுக்ாப்பும் இல்லை என்பதை அறிந்த நூர்ஜஹானும் அமைதியாகி விட்டார். ஏறக்குறைய ஒரு வீட்டுக் கைதி போலவே அவரின் இறுதிக் காலம் கழிந்தது. வுசாஜஹான் அவருக்குத் தனி அரண்மனையும் சேவகர்களும் கொடுத்ததோடு மான்யமும் வழங்கி விந்தார். 1645 ஆம் ஆண்டு தனது முதிய வயதில் நூர்ஜஹான் உயிர் துறந்தார்.
ஷாஜஹானுக்கு பல மனைவிகள் இருந்தாலும் மும்தாஜின் மேல் தீராத காதல் கொண்டிருந்தார். மும்தாஜ் உண்மையில் பலராலும் சொல்லப்பட்டதுபோல் ஒரு பேரழகியல்ல; ஆனால் தனது கணவரின் தேவை உணர்ந்து துன்பத்திலும் இன்பத்திலும் அவருடன் இருந்து வந்தார். -
1630ஆம் ஆண்டு ஷாஜஹானுக்கு மிகப் பெரிய சோதனை நிறைந்தகாலம். அந்த நேரத்திலும் சரி. மன்னர் செல்லும் போர்க் களங்களிலும் சரி மும்தாஜ் அவருடன் இருந்து துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். இவர்களுக்கு பதினான்கு (14) குழந்தைகள் பிறந்தனர். இதில் ஏழு குழந்தைகள் இறந்து விட்டன.
ஷாஜஹான் மும்தாஜ் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது ஒரு உண்மை நன்றாக எனக்குத் தெரிகிறது. ஒரு மனைவி மிக அழகியாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் இன்பத்திலும் துன்பத்திலும் கணவனுக்குப் பக்கத்தில் நிற்பவளாக இருக்க வேண்டும். மும்தாஜ் மிகப் பெரிய பேரழகி இல்லை. ஆனால் அன்பு இருந்தது. அதனால் தான்,அவள் இறப்பிற்குப் பின்னும் ஒரு தாஜ்மகாலை கட்டினான் ஷாஜஹான். இன்றும்-400 ஆண்டுகள் கழிந்த் பின்னும் - அது காதல் சின்ன்ம் என்பதைவிட அன்புச்சின்னம் என்றே நான் சொல்லுவேன்.
119.

Page 62
0 மண்ணும் மனிதர்களும்
1630 ஆம் ஆண்டு டெக்கான், குஜராத், கண்டேஸ் போன்ற இடங்களில் கடுமையாக வறட்சி நிலவியது. அது போன்றதொரு பஞ்சத்தை இது வரையில் உலகத்தில் மக்கள் அனுபவித்திருப்பார்களா என்பது சந்தேகமே! ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் மடிந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. மிருகங்களின் எலும்புகளைத் தூளாக்கி மாவு போல பொடியாக்கி ரொட்டி மாவுடன் கலந்து வியாபாரிகள் விற்றுள்ளார்கள். இதை விடக் கொடுமை,நாய்களைக் கொன் று ஆடு மாடுகளின் இறைச்சியுடன் கலந்து விற்றுள்ளார்கள். இந்த பஞ்சத்தால் பல கிராமங்கள் அழிந்தன. தெருக்களில் மனித எலும்புக் கூடுகள் குவிந்து கிடந்தன. நீண்டு கிடந்த சாலைகளில் மக்கள். நடமாட் பயந்தார்கள். பலவீனமானவனை வலிமையானவ்ன் அடித்துத்தின்றான்! ஆம் மனிதர்களை மனிதர்கள் சாப்பிடும் பஞ்சம் அது!
இந்த ேநரத்தில்தான் ஷாஜஹான் புர்ஹான்பூர், அமதாபாத், சூரத், போன்ற இடங்களில் கஞ்சித் த்ொட்டிகளை வைத்து ஏழைகளுக்கு அன்றாடம் உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
லங்கார் என்று இந்தியில் சொல்லப்படும் பொதுசமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு ரொட்டியும் துப்பும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திங்கட் கிழமையும் புர்ஹான்பூரில் 5000 ரூபாய் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. இப்போது இதன் மதிப்பு 50 லட்சமாகும். இப்படியாக அமதாபாத் நகரில் 70 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது. இப்படியாக 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று குறிப்புகள் சொல்கின்றன். 400 ஆண்டுகளுக்கு முன் 8 கோடி என்றால் இப்பொழுது 800 கோடியாக இருக்குமல்லவா?
நாட்டின் ஒரு பகுதி இவ்வளவு வறட்சியை எதிர்நோக்கிய நேரத்தில்தான் மும்தாஜ் பேகம் தனது கணவருக்கு ஒத்தாசையாக வாரி வாரி வழங்கினார். அரண்மனை கஜானாவிலிருந்து அரசர் வழங்கினார் என்றால் தனது சொந்த இருப்பில்இருந்து வாரி வாரி வழங்கிய அந்த மாதர்சியை எப்படி புகழ்வது? அதனால்தான் உலக அதிசங்களில் ஒன்றாக அவரின் கல்லறை இருக்கிறது.
120

சைபீர்முகம்மது (O
" உண்மையில் தாஜ்மகால் ஒரு கல்லறைதான். மும்தாஜின் கல்லறையைத்தான் உலகமே வியக்கும் அளவிற்கு ஷாஜஹான் கட்டினார். 22 ஆண்டுகள் இரவு பதலாக மக்களின் உழைப்பால் அந்த அழகு பளிங்குக் கவிதை எழுந்து நிற்கிறது. 1631 ஆம் ஆண்டு திடீரென்று நோய்வாய்ப்பட்டு மும்தாஜ் இறந்தார். இதன் பிறகு மன்னர் மிகவும் சோர்ந்து விட்டார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது ஷாஜஹானின் வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் மிகவும் 26) : * .
தாஜ்மகால் 12 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக அப்துல் அமீது லோரி என்ற சரித்திர ஆசிரியர் கூறுகிறார்.TRAVENER என்பவர் மூன்று கோடி ரூபாய் செலவில் 22 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
உண்மையில் இன்று அக்ரா கோட்டையின் உள்ளே காணப்படும் கட்டிடங்களும், டில்லியில் உள்ள ஜும்மா மஜீதும், டில்லி செங்கோட்டையும் ஷாஜஹானின் கலை உள்ளத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. *
அக்பர். ஜஹாங்கிர் கட்டிய கட்டிடங்கிளை விட ஷாஜஹான் கட்டிய கட்டிடங்கள் மிகவும் உறுதியானவை. அதிக அழகு மிக்கவை. தாஜ்மகால் ஒன்றே அவர்து கிலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
அன்பு நடமாடும் கலைக்கூடமே!
அன்று இரவு முழுவதும் ஷாஜஹான் - தாஜ்மகால் நினைவுகளே சுற்றிச் சுற்றி வந்தன. அக்ராவைச் சுற்றி பல கோட்டைகள் இருந்தும் எனக்கு தாஜ்மகாலைக் காணவே உள்ளம் துடித்தது. எனது தவிப்பைக் கண்ட “கைடு ஒருவர் பக்கத்தில் மினி தாஜ்மகால்கள் விற்கிறார்கள் அங்கே மிகப் பெரிய அளவில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட தாஜ்மகால் இருக்கிறது என்று ஆசை மூட்டினார். சரி அதையாவது பார்த்து வைப்போமே என்று அந்தக் கடைக்குச்
121

Page 63
O மண்ணும் மனிதர்களும
சென்றேன். மிக அழகிய கண்ணாடிப் பேழ்ையில் 2 1/2 அடி உயரத்தில் தாஜ்மகாலைச் செய்து வைத்திருந்தார்கள். எனக்கு என்னவோ மனம் அதில் செல்லவில்லை. சிறிய தாஜ்மகாலை வாங்கும்படி நச்சரித்தார்கள். எனக்கு அதிலும் ஆர்வமில்லை. ஏற்கனவே எனக்கு நண்பரொருவரின் ఆpడలీయ తొలu ர்கதாஜ்மகால்
அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.
அந்த ‘கைடு எனக்கு ஒரு புதிய செய்தி சொன்னார். இந்த மினி தாஜ்மகால்களை செய்து விற்பவிப்ர்கள் ஏற்கனவே தாஜ்மகாலைக் கட்டிய சிற்பிகளின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்றும் விலையில் அவர்கள் மிகவும் கண்டிப்பீாகஇருப்பார்கள் என்றும், மற்றவர்களின் மினி தாஜ்மகால்கள் மலிவுவிலையில் கிடைக்குமென்றும் கூறினார். ஏற்கனவேலுருவாய்மொழித் தகவல் என்னவென்றால் தாஜ்மகாலைக் கட்டிய அத்தன்ை சிற்பிகளும், கட்டிய கலைஞர்களும் தலை சிவப்பட்டுமடிந்தார்கள் என்பது தான். இது போன்றதொரு அழகிய கட்டிடத்தை வேறு எங்கும் கட்டிவிடக்கூடாது என்பதாலேயே அண்வரும் க்ொல்லப்ப்ட் டார்கள் என்பது ஒரு கட்டுகதை சரித்திரத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.
மும்தாஜின் உண்மைப் பெயர் அர்ஜுமான் பானு பேகம். திருமணம் முடிந்து ஜஹாங்கிருக்கு அதாவது அப்போது ஆட்சியில் இருந்த பாதுஷாவான தனது மாமனாருக்கு "சலாம் சொல்லிய பொழுது இன்றிலிருந்து நீ மும்தாஜ் அதாவது அரண்மனையில் முதன்மையானவள் என்றழைக்கப்படுவாய் என்று புதுப் பெயர் துட்டினார். பிற்காலத்தில் அதுவே நிலைத்து விட்டது. திருமணம் நடந்த பொழுது இவருக்கும் ஷாஜஹானுக்கும் ஒத்த வயது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜுன் 7 ஆம் தேதி 1631 ஆம் நாள் அகமத் நகர் பிஜப்பூர் சுல்தான்கள் ஏகப்பட்ட தலைவலிகளைக் கொடுத்துக் கொண் டிருந்த நேரம். ஷாஜஹான் எங்கு சென்றாலும் ಜ್ಷತಿ: மனைவியைக் கூடவே அழைத்துச் செல்வது வழக்கமல்லவா' பிஜப்பூர் சுல்தான்களை அடக்குவதற்கு பெரும் படையுடன் ஷாஜஹான் அகமத் நகரில் முகாமிட்ட பொழுது மும்தாஜ் நிறைமாதகர்ப்பிணியாக இருந்தார். வயிற்றில் பதினான்காவது
122

சைபீர்முகம்மது O குழந்தை. அதோடு கண்வரைப் பின்தொடர்ந்து சென்றிருந்தார்
என்றால் அந்த அன்பை எப்படி வர்ணிப்பது? མ.
ஒருபக்கம்பாதுஷா போர் வியூகங்ளை தனது தளப்திகளுடன் - ஆலோசித்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றொரு கூடாரத்தில் மும்தாஜுக்கு சுகப்பிரசவம் ஆனது. ஆனால் குழந்தை பெற்ற ஒரு தாய் இருக்க வேண்டிய இடம் போர்க்களம் அல்லவே! சிறிது நாட்களில் அவருக்கு ஜன்னி கண்டது.ஷாஜஹான் துடித்தார், பதறினார் கண்கலங்கினார். ஆனாலும் நிலைமை மோசமாகியது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும் மும்தாஜின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ஷர்ஜஹானின் மடியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. .
மும்தாஜின் மரணத்துக்குப் பிறகு பாதுஷாவின் முடிகள் தலையிலும் முகத்திலும் உடனே வெளுத்து நரைக்கத் தொடங்கின. தனது மனைவியின் மேல் எவ்வளவு அன்புவைத்திருந்தார்! இந்த இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனதாலேயே அந்த அளவு அவரின் முடிகள் நரைக்க ஆரம்பித்திருந்தன! மும்தாஜின் பிரிவிலிருந்து மீண்டுவருவதற்கு அவருக்கு இரண்டு ' ஆண்டுகள் ஆகின என்று குறிப்புகள் கூறுகின்றன. ஏறக்குறைய முதிய தோற்றத்தையே மன்னர் இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்றுவிட்டார். அக்ரா கோட்டையில் அவருக்கென்று இருந்த அறையில் மணிக்கணக்கில் தனிமையில் அமர்ந்து கொண் டிருக்கும் பழக்க்த்தைக் கொண்டு விட்டார். ஆடம்பர ஆடைகள் அணிவதை தவிர்த்தார். சுவையான உணவுகள், பானங்கள். வாசனைத் திரவியங்கள் அனைத்தும் மன்னருக்கு பகையாகிப் போயின! −
முதலில் பார்ஹான்பூரில் மும்தாஜின் நல்லுடல் புதைக்கப்பட்டிருந்தது.
தனது அன்பு மனைவிக்கு அழகிய கல்லறை கட்ட பாதுஷா முடிவெடுத்தார். யமுனைக் கரையில், இப்பொழுது தாஜ்மகால் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்தைப் பார்த்த பொழுது அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால் அந்த இடம் ராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமானதாக
123

Page 64
O மண்ணும் மனிதர்களும்
இருந்தது. அதில் அழகியதோட்டமும் இருந்தது. மன்னர் ஜெய்சங் நண்பர்தான் என்றாலும் இது மண் பிரச்சனையாயிற்றே!2கோடி ரூபாய்க்கு அதை வாங்க ஆலோசனைகள் செய்யப்பட்டு பணத்திற்குப் பதில் நான்கு அரண்மனைகளை மாற்றாகப் பெற்றுக் கொண்டு ஜெய்சிங் தோட்டத்தை விட்டுக் கொடுத்தார்.
இதன் பின் மும்தாஜின் நல்லுடல் சகல மரியாதைகளுடனும் அக்ராவுக்குக் கொண்டு வரப்பட்டு புதிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. .
தாஜ்மகாலில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இருபதாயிரம் வேலையாட்கள் சிற்பிகள் வரைபட நிபுணர்கள் என்று யமுனை நதிக்கரை அல்லோலகல்லோலப்பட்டது. w
தாஜ்மகாலுக்கு வரைபடம் தயாரித்தவர்கள் என பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. உண்மையில் ஷாஜஹானின் அந்த கனவு மாளிகை அவராலேயே கற்பனை செய்யப்பட்டது. என்றாலும் அந்தக் கனவு மாளிகைக்குவேறு ஒருகட்டிடம் தான் முன்னோடியாக இருந்தது. அதுதான் ஆக்ரின் தந்தை அதாவது ஷாஜஹானின் கொள்ளுத் தீர்த்த்ா ஹரீமர்யூனின் கல்லறை! இன்றும் டில்லியில் இருக்கும் அந்தக்கல்லறை பற்றி பலர் பேசுவதே இல்லை! அது வெறும் சிவப்பு வெள்ளைகற்கள்ால் கட்டப்பட்டது என்றாலும், அதுவும் ஒரு காதல்மாளிகைதான் என்பதை மறுக்க முடியாது. தாஜ்மகால் அத்ன் அழகுக்காக பெயர் பெற்றது என்றால் இதுவும் அதன் வடிவமைப்புக்காக நிச்சயம் பேசப் பட்டிருக்க வேண்டும்.
பாதுஷா ஹர9மாயூன் இறந்த பிறகு அவர் மனைவி ஹாஜுபேகம் மக்காவுக்குச் சென்று மிகச் சிறந்த கட்டிடக்கலை வல்லுனரான மீராக் மிர்ஸா கியாஸ் என்பவரை அழைத்து வந்து இந்த ஹ"மாயூன் கல்லறையைக் கட்டினார். பாரசீகக் கலையும் , இந்திய கட்டிடக் கலையும் ஒருங்கிணைந்தது இங்கிருந்துதான் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு. கி.பி. 1564-gi) ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளில் இது முடிக்கப்பட்டது. இந்த கல்லறையின் உள்ளே 154உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஹ"மாயூன், ஹாஜிபேகம் இருவரையும் தவிர மற்றவர்களின்
124

சைபீர்முகம்மது O விபரங்கள் கிடைக்கவில்லை. ஆக, தனது கணவருக்காக ஹாஜிபேகம் கட்டிய அந்த மற்றொரு காதல் மாளிகைதான் தாஜ்மகாலுக்கு முன்னோடியாக இருந்தது.
'இது கல்லறையாக மட்டுமல்லாது ஏராளமான மக்கள் வந்து பார்க்கும் புனித இடமாகவும் இருக்க வேண்டும் என்று ஷாஜஹான் கூறினார். அதன்படி ஏறக்குறைய ஹூமாயூனின் கல்லறை வடிவமைப்பை வைத்து. அதைவிட மிகச் சிறப்பாக அதன் ஒவ்வொரு கோணத்தையும் தேர்ந்தெடுத்தார் பாதுஷா!
தாஜ்மகாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்தில் நான்கு LADCuptb நான்கு மினார்களை உருவாக்கிய அழகே அந்த மாளிகையை மேலும் அழகு படுத்துகிறது. இந்த நான்கு மினார்களும் சற்றே வெளிப்புறமாகவே சாய்த்துக் கட்டியுள்ளார்கள். ஏதாவது இடர்பாடுகள் நேர்ந்தால் இந்த் மினார்கள் தாஜ்மகாலின் மேல் விழுந்து விடாமல் இருக்கவே இந்த முன் எச்சரிக்கை!
அக்காலத்தில் மொகலாயர்கள் கட்டிய அனைத்து கட்டிடங் களிலும் புனித குர்ரானின் வாசகங்கள் பொறிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.ஹரஜூமாயூன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் ஆகிய அனைவரின் ஆட்சிக் காலத்துக் கட்டிடங்களிலும் இந்த குர்ரானின் வாசகங்கள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தோவியங் களைச் செதுக்குபவர்களின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டன. இதில் மிகச் சிறந்தவரான பாரசீகக் கலைஞர் அமானாத்கானின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அவரோ தான் எங்கு கலை வேலைப்பாடுகள் செய்தாலும் கீழே எனது பெயரையும் செதுக்கி வைப்பேன், அதற்கு சம்மதம் என்றால் நான் இந்த வேலையை ஒப்புக் கொள்கிறேன் என்றார். பாதுஷாவும் சம்மதித்தார். இன்று தாஜ்மகாலில் ஒரே பெயர் மட்டுமே இருக்கிறது என்றால் அது அமானாத் கானின் பெயர்தான்.
தாஜ்மகாலைப் பற்றி ஷாஜஹான் பெரிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் தனது எண்ணமாக எழுதி வைக்கவில்லை. காலத்தை வென்று நிற்கும் என்று அவர் அப்போதே கணித்திருக்கலாம். இந்த சிறிய பதிவு மட்டுமே அவரின் குறிப்பாக எழுதப்பட்டுள்ளது.
125

Page 65
O மண்ணும் மனிதர்களும்
இந்த கல்லறையைக் கற்பனை செய்தவர் எப்படி பூமியில் பிறந்தவராக இருக்க முடியும்? இதற்கான வரைபடம் சொர்க்கத்தில் இருந்து இங்கே வந்து சேர்ந்தது என்பதற்கு வேறு சாட்சியும் தேவையா?” பிற்காலத்தில் ஆங்கில ஆட்சி வந்தபொழுது இந்தியாவையே கொள்ளையிடுவதில் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள். தாஜ்மகாலைக் கட்டும் பொழுது, ரஷ்யா,திபெத் பாரசீகம் மற்றும் உலக நாடுகளிலிருந்து வைரம், நீலம், வைடூரியம், கோமேதகம், முத்து. பவளம், மரகதம், பச்சை என்ற விலையுயர்ந்த கற்களை ஷாஜஹான் வரவழைத்து கட்டிடத்தின் சுவர்கள். கதவுகள் என்று எல்லா இடங்களிலும் பதித்து வைத்தார். ஆங்கிலேயர்கள் சும்ா இருப்பார்களா? அத்தனையும் தோண்டி எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். அப்போதைய ஆங்கில அரசு பல குறுநில மன்னர்களை அதாவது தங்களை எதிர்த்தவர்களையெல்லாம் ‘கொள்ளையர்கள்’ என்று முத்திரை குத்தியது. ஆனால் உண்மையில் இன்று வரலாறு நமக்கு யார் கொள்ளையர்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
வைரத்தையும் கற்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துச் சென்றவர்கள் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அதைவிட பயங்கரமான திட்டம் ஒன்றைத் திட்டினார்கள்.
அழகிய தெய்வீகம் பொருந்திய தாஜ்மகாலைக் காணக்கூடிய ஆங்கிலேயர்களுக்கு பொறாம்ை கொழுந்து விட்டு எரிந்தது. நாகரிகத்திலும் கட்டிடக் கலையிலும் சிறந்த நம்மால் இப்படியொரு மாளிகையை இங்கிலாந்தில் கட்ட முடியவில்லையே என்ற நினைப்பே அவர்களை வாட்டியது. லார்டு வில்லியம் பென்டிக் என்பவர் தாஜ்மகாலை இடித்துத் தள்ளிவிடலாமென்று ஆலோசனை கூறினார். கொஞ்சம் மனதில் ஈரமும் விவேகமும் இருந்த சில ஆங்கில பிரபுக்கள் திகைத்துப் போய்விட்டார்கள். கடைசியாக ஒவ்வொரு கல்லாக அகற்றி இங்கிலாந்தில் ஒரு பெரிய பூங்காவில் புதிய தாஜ்மகாலைக் கட்டி கண்காட்சியாக வைத்து விடலாமென்று முடிவெடுத்தார்கள். முடிந்தால் அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியாவையே கப்பலில் கட்டி இழுத்துக் கொண்டு போய் இங்கிலாந்துடன் இணைத்துவிட
126

606.jfcipá (bog O முடியுமென்றால் அதையும் செய்திருப்பார்கள். மனிதர்கள் வெறும் நிறத்தால் வெளுத்தும், மனத்தால் கறுத்தும் உள்ளதைப் பார்க்கும் பொழுது யாரை காட்டுமிராண்டிகள் என்று கூறுவது என்றே தெரியவில்லை. நாடு பிடிக்கும் ஆசை வேறு நாட்டையே தூக்கிச் செல்ல நினைப்பது வேறு
நல்லவேளையாக அப்போதைய வைஸ்ராய் கார்ஸன் பிரபு இந்த ஆபத்தான யோச்னைகளை நிராகரித்தார். அவர் கலை மனம் கொண்டவர் மட்டுமல்லாது தாஜ்மகாலின் மேல் கை வைத்தால் இந்தியாவில் தாங்கள் உடனே மூட்டை கட்டும் நிலைவந்துவிடுமென்று அவருக்கு தெரிந்திருந்தது! தாஜ்மகாலை பராமரிக்க தனிக்குழு அமைத்ததுடன் அதற்கான தனிச் சட்டமே இயற்றினார். தனது அன்புக் காணிக்கையாக எகிப்திலிருந்து ஒரு தொங்கும் விளக்கை வரவழைத்து ஷாஜஹான் - மும்தாஜ் கல்லறையின் மேல் தொங்கவிட்டார்! தாஜ்மகாலுக்கு ஆங்கிலேயர்கள் செய்த அட்டூழியம் இந்த விளக்கால் மட்டுமே ஈடு செய்ய இயலாது என்றாலும், அதை உடைபடாமல் காத்ததற்காக அவருக்கு நாம் மட்டுமல்ல மனிதகுலமே நன்றி சொல்ல வேண்டும். உலக வரலாற்றில் தனது அன்பு மனைவிக்காக ஒரு மன்னன் கட்டிய மாளிகை மட்டுமல்ல, மனுக் குலத்துக்கு “அன்பை வெளிப்படுத்தும் ஒரு மகத்தான சின்னமும் அது. உலகத்து அதிசயங்களில் ஒன்று என்பதால் மட்டுமே அதை நாம் போற்றுகிறோம் என்பதைவிட, கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் சின்னமாகவும் மிளிர்வதாலுமே போற்றுகிறோம்.
14 குழந்தைகள் பெற்ற பின்னும் அந்த அன்பு நீடித்திருக்கிறது.
காதல் திருமணம் செய்து கொள்ளும் பலர் முதல் குழந்தை பிறந்தவுடனேயே கோர்ட் கச்சேரி என்று விவாகரத்து விவகாரங்களில் ஈடுபடும் இன்றைய நாளில் நான் அந்த தெய்வீகக் காதலை நினைத்துப் பார்த்து அதிசயத்துப் போகிறேன்.
நீ எங்கே, நான் அங்கே!
‘வரலாறு மனிதனை அறிவாளியாக்குகிறது’ என்கிறான் பிரான்சிஸ் பேகன் (1561 - 1626), இந்த ‘மண்ணும் மனிதர்களும்
127

Page 66
O மண்ணும் மனிதர்களும்
தொடரை ஆரம்பித்த பொழுது அதை ஒரு பயணக்கதை மட்டுமாக அல்லாது, நான் சென்ற இடங்களில் உள்ள வரலாற்று நிகழ்வு களையும் அதில் சொல்லவேண்டும் என்பதே எனது ஆவலாக இருந்தது. ஆனால் இதுவரையில் நான் சென்ற பாதையெல்லாம் 15 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள பெரும்பாலும் மொகலாய மன்னர்க்ளின் சரித்திர எச்சங்களே காணக் கிடக்கின்றன. ஏறக்குறைய இன்னும் சில வாரங்களில் எனது டில்லி வருகையோடுவட மாநிலச் சுற்றுலா முடிந்து விடும் இதை முதல் பாகமாகவும். பின் தென்ன்ாட்டின் எனது பயணத்தை இரண்டாவது பாகமாகவும் எழுத எண்ணியுள்ளேன்.
‘பொதுவாக எனது இந்தப் பயணக் கட்டுரையில் நான் பயணத்தை விட கடந்த கால மன்னர்கள் தங்களது யானை, குதிரை, ஒட்டகங்களில் பயணித்து கைய்ல் வாளுடன் எதிரிகளைக் கொன்று குவித்தவற்றையே அதிகம் எழுதியுள்ளேன்! இதில் கோயில்கள் கொள்ளைய்டிக்கப்பட்டமை, மதச்சண்டைகள் போன்றவைகளை நான் சொல்லவில்லை என்பது என் மேல் உள்ள குற்றச்சாட்டு. தயவு செய்து எனது கட்டுரையை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்தால் வரலந்று தெரிந்தவர்களுக்கு சில உண்மைகள் புரியக்கூடும்.
இதுவரை மொகலாயர்களின் ஆடசி பற்றி குறிப்பாக பாபர்,
ஜஹாங்கிர், ஷாஜஹான் போன்றவர்களின் ஆட்சி பற்றி-மட்டுமே
நான் எழுதி வந்துள்ளேன். நான் எழுதுவது ‘சரித்திரப் பாடநூல்' அல்ல. இது பயணக் கட்டுரை. எனது வழியில் பார்த்தவைகளை மட்டுமே நான் எழுதுகிறேன். அடுத்து. ஒரு “டெலிபோன் டைரக்டரி போல உள்ளது உள்ளபடி எழுதும் பயணக் கட்டுரையும் இது அல்ல! ரயிலில் போனதையும் - படகில் பிரயாணம் செய்ததையும்-மனைவியுட்ன் இரவு விருந்து முடிந்து ஒட்டலில் படுத்துறங்கி பின் காலை எழுந்து சூரியனின் பார்வையில் அந்த நாட்டைப் பர்ர்த்தபொழுது அதன் பசுமையைக் கண்டு உள்ளம் பூரித்ததையும் எழுத எனக்கு ஏனோ முடிவதில்லை. எல்லா நாட்டிலும் சூரியன் உதிக்கிறான். இதை எழுதுவதற்கு ஒரு பயணக் கட்டுரை எழுதி பத்திரிகையின் பக்கங்களை ஏன் வீணாக்க வேண்டும்?
128

சைபீர்முகம்மது O
வரலாறு மன்னர்களைப் பற்றியதாக மட்டும் இருத்தல் கூடாது. அது மனித இயக்கங்கள், மனித ஆற்றல்கள், மனித நாகரிகங்கள் பற்றியதாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் இவைகளுக்கப்பால் மனித இனம் பற்றி அது கூறுவதாக அமையவேண்டும். வெறும் ‘போர்க் களங்கள்’ பற்றி மட்டுமே கூறுவது வரலாறு ஆகாது. மனித இனத்தின் எண்ணங்கள் உயர எவனாவது ஏதாவது செய்துள்ளானா என்று துருவித் துருவிப் பார்ப்பதே எனது எழுத்தின் வேலை.
ஒரு வரலாற்றில் சண்டைகளும் புரட்சிகளும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். கற்காலம் தொட்டே மனிதன் தனது அதிகாரத்துக் காக உணவுக்காக அடித்துக் கொண்டே வந்துள்ளான். அவை வரலாற்றில் மிகச் சிறிய இடத்தையே பிடிக்கும். ஆனால் மனித நாகரிகத்திற்கு - அவனுடைய மனித நேயத்திற்கு - செய்யப்பட்ட சிறிய செயலும் பெரிய இடத்தைப் பிடித்துள்ளன.
ரிக் வேதம் - ஏறக்குறைய ஆரியர்களின் சிந்துவெளி வருகையையும் நாகரிகத்தையும் ஓரளவு சரித்திரத்தையும் கூறும் நூல்! பிற்காலத்தில் இதற்கு வேத நூல் என்றே பெயர் வழங்கப்படுகிறது. ரிக் வேத ரிஷிகளான பரத்வாஜர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், காஸ்யபர், கெளதமர், அத்ரி, ஜமதக்னி என்று பலரும் இருந்துள்ளார்கள். இவர்களே பெரும்பாலான வேதங்களை (செய்யுங்கள்) இயற்றியவர்கள். இன்னும் சிலர் ஓரிரு சுலோகங்கள் இயற்றியவர்களும் உண்டு.
முதலில் ஐந்து இனப் பிரிவுகளாக சிந்துவெளியில் குடியேறிய இவர்கள் பிற்காலத்தில் பன்னிரண்டு இனக் குழுக்களாக பிரிவுபட்டார்கள். இவர்கள் கி.மு. 1500க்கு முன் குடியேறியவர்கள் என்று வரலாறு கூறுகிறது. இதற்கு 300 ஆண்டுகள் கழித்தே ரிக் வேதம் தோன்றியதற்குச் சான்றுகள் உள்ளன. அதை எழுதினால் இதுவே தனி நூலாக விரிவடையும்.
மனித நாகரிகத்தில் அந்தந்த இனம் தனது ஒற்றுமை குறித்து குரல் எழுப்பியதைக் காட்டவும், வேத காலத்தில் நிகழ்த்தப்பட்ட போர்கள், வெற்றிகள் அனைத்தும் மறைந்து, இன்று அந்த ‘வேதம் மட்டுமே நிற்கிறது என்பதைக் கூறவுமே இதை எழுதுகிறேன்.
129

Page 67
O மண்ணும் மனிதர்களும்
ரிக் வேதத்தின் கடைசி ஸ"க்தத்தில் (செய்யுள் 10 - 191) ஸ்வம்னன் என்ற ரிஷி இப்படி எழுதி வைத்துள்ளார் :
நீங்கள் அனைவரும் ஒன்றாகவே செல்லுங்கள் ஒன்றாகப் பேசுங்கள் உங்கள் மனங்களில் எல்லாம் ஒரே சிந்தனை உருவாகட்டும். பழங்காலத்து தேவர்கள் ஒரு மனதுடன் உபதேசித்தது போலவே, இன்பதுன்பங்களை ஒன்றாக அனுபவித்ததைப் போலவே, நீங்களும் ஒரு மனத்துடன் நடந்து கொள்ளுங்கள். என்று எழுதி வைத்துள்ளார்.
ஆரியர்களின் ஒற்றுமை வேண்டி 12 குழுக்களாகப் பிரிந்து கொண்டிருந்த அவர்களை ஒன்றுபடுத்தத் தோன்றிய இந்த வாக்கியமே பெரிதாகப் பேசப்படுகின்றது.
அடுத்து. "இந்தியா’ என்ற பெயர் எப்படி வந்தது?
ஆரியர்களுடன் இரத்த உறவு கொண்ட ஈரானியர்கள் 'ச'வை 'ஹ' என்றே உச்சரித்து வந்தனர். அதனால் 'சப்த சிந்து என ரிக் வேதத்தில் கூறப்படும் சிந்து நதிப் பிரதேசத்தில் குடியேறிய ஆரியர்கள் தாங்கள் குடியேறிய இடத்தை "ஹப்த ஹிந்து’ என்று அழைத்து வந்தனர். அப்போதைய மிக நாகரிகம் பெற்ற கிரேக்கர்கள் ஹ' வை ‘அ’ என்றே வழங்கி வந்தனர். கிரீஸ் நாட்டின் தொடர்புகளால் சிந்து ஹிந்துவாகி. பின் இந்துவாகி, அதன் பின் இந்தியாவாகிவிட்டது! இதுதான் வரலாறு.
ஆகவே மனித வரலாற்றில் போர்களும் மதச் சண்டைகளும் எவ்வளவோ நடந்திருந்தாலும், அந்தந்த இனம் ஏதோ ஒரு வகையில் மனித நாகரிக வளர்ச்சிக்கு உதவியே வந்துள்ளது. வரலாறு படிக்கும் பொழுது மனதில் இருக்கும் குறுகிய எண்ணங்களை விட்டொழித்து நாம் மனிதகுலத்தின் ஓர் அங்கம் என்று நினைத்துப் படித்தால் நமக்குக் கொஞ்சம் தெளிவு வரும். எதையுமே இனத்தாலும் மதத்தாலும் மட்டுமே பார்க்காதீர்கள். கொஞ்சம் மனித நேயத்தோடும் படியுங்கள்!
சரி, நாம் மீண்டும் ஷாஜஹானைக் காண அக்ரா செல்வோம்.
130

சைபீர்முகம்மது O
மொகலாய மன்னர்கள் காலத்தில் நடந்த சில அன்னிய நாட்டவர்களின், குறிப்பாக வெள்ளையர்களின் அடாவடித் தனங்களும் அதற்காக அவர்கள் தொடுத்த போர்களும் ஏனோ நமது இந்திய வரலாற்றில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவே
இல்லை.
நமது தமிழர்களுக்கு உணர்ச்சிகள் அதிகம் எதிலும் நாம்தான் முதன்மை பெற்றவர்கள் என்று சொன்ால்தான் நமக்குப் பரம திருப்தி 'குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்” என்று கூறி. ‘அப்படி தோன்றிய முதல் குரங்கே தமிழ்க் குரங்கு’ என்றாலும் நாம் கைதட்ட தயாராக இருப்போம். அதனால்தான் பூலித்தேவன், கட்டபொம்மன் போன்றவர்களின் வரலாறு கூறும் பொழுது அந்நியர்களுக்கு எதிராக முதல் குரல் எழுப்பியவர்கள் என்று எழுதி வைத்துள்ளார்கள். தென்னாட்டைப் பொறுத்தமட்டில் பிற்பாடு விரிவான ஆய்விற்கு நான் வரும் பொழுது இது பற்றிக் கூறுவேன்.
1631 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் ஹ"க்ளி நகரத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். பிறகு வியாபாரத்தைச் சிறிது சிறிதாகப் பெருக்கி பண்டகசாலைகள் அமைத்தார்கள். முதலில் வியாபாரம் செய்ய வரும் இவர்கள் பின் தங்கள் கைவரிசையைச் சிறிது சிறிதாகப் பெருக்கி நாடு பிடிப்பதில் இறங்கி விடுவது வழக்கம். கிராமங்களில் இருந்த இந்து, முஸ்லிம் சிறுவர்களைப் பிடித்து மதம் மாற்றும் வேலைகளில் இவர்கள் தீவிரம் காட்டினார்கள். இதைக் கண்டு பாரம்பரியமாக அங்கு வாழ்ந்த இந்து கிராமத்துத் தலைவர்கள் பாதுஷாவிடம் முறையிட்டார்கள்.
ஒரு முறை இரண்டு இளம் பெண்களைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள். இந்த விஷயம் அப்போது உயிரோடு இருந்த மும்தாஜின் காதுகளுக்கு எட்டியது. உடனே அவர்களை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டும் அவர்கள் மறுத்து விட்டார்கள். உண்மையில் அவர்களிடம் பீரங்கி போன்ற ஆயுதங்கள் இருந்ததால் இந்த வாய்ப்பையே பயன்படுத்தி மொகலாயர்களை வென்றுவிடலாமென்பது அவர்களின் எண்ணம். வங்கத்தில் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த காசிம்
131

Page 68
O மண்ணும் மனிதர்களும்
கான் என்பவரின் தலைமையில் பெரும் படை திரண்டு சென்று முற்றுகையிட்டது.
ஹ"க்ளி ரத்தக் களமாகியது. மூன்று மாதங்கள் தொடர்ந்து போர் நீடித்தது. போர்ச்சுகீசியர்களை நெருங்க முடியவில்லை. மொகலாயப் படை ‘வாழ்வா சாவா’ என்று கடும் போரில் இறங்கியது. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த போர்ச்சு கீசியர்களை வெளியில் இருந்து வெல்வது அவ்வளவு சுலபமாக அமையவில்லை. மக்களை இவர்களிடமிருந்து காப்பாற்றியாக வேண்டிய பெரும் பொறுப்பு மொகலாய ஆட்சிக்கு இருந்தது. மொகலாயப் படை பல போர்களில் வென்று வாகை துடிய படை. அதிலும் காசிம் கான் சுலபத்தில் பின்வாங்கும் நிலையில் இல்லை. இறுதியில் மொகலாயப் படை புயலெனப் புகுந்து போர்த்து கிசியர்களை வெட்டிக் குவித்தது. இதில் 10,000 போர்த்துகீசியர்கள் அங்கேயே மடிந்தார்கள். 4000 பேர் பிடிபட்டு சரணடைந்தார்கள். மதம் மாற்றம் செய்யவும் நாடு பிடிக்கவும் வந்த அவர்களுக்கு மன்னர் பாதுவுசா இரண்டு நிபந்தனைகள் விதித்தார். ஒன்று, அவ்வளவு பேரும் முஸ்லிமாக மாறினால் மன்னித்து விடுவதாக வாக்குறுதியளித்தார். அல்லது, ஜென்ம தண்டனையாகச் சிறைக்குப் போகத் தயாராகும்படி கட்டளையிட்டார். அதோடு போருக்குரிய தண்டமாக அவர்களின் செலாவணியிலேயே பெரும் தொகையைக் கட்டும்ப்டி செய்தார். மற்றவர்களை மதம் மாற்றும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் மனச் சங்கடத்தை இவர்கள் உணர வேண்டும் என்பதே பாதுஷாவின் நோக்கம்.
இதில் பெரும்பான்மையினர் மதம் மாறி பாதுஷாவின் மன்னிப்பைப் பெற்றனர் என்பது வரலாறு. ஆக இந்த அந்நிய எதிர்ப்பு 1631ஆம் ஆண்டில் நடைபெற்றது. தென்னாட்டில் 17ஆம் நூற்றாண்டில்தான் சிப்பாய்க் கலகம், பூலித்தேவன், கட்டபொம்மன் போன்றவர்களின் எதிர்ப்புணர்வு கிளம்பியது.
ஷாஜஹானின் ஆட்சி அக்ராவில் ஆரம்பித்தபொழுது அவருக்கு மிகப் பெரிய தலைநகர் கட்டும் ஆசை மனதில் இருந்தது. மே மாதம் 1639 ஆம் ஆண்டு 'ஷாஜஹான்பாத்” என்ற புதிய நகரை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இன்று பழைய டில்லி என்றழைக்கப்படுகின்ற இதில்தான் இவரின் உலகப் புகழ்
132

சைபீர்முகம்மது O
பெற்ற செங்கோட்டை உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய பள்ளிவாசலான ஜும்மா மஜீதையும், முத்து மஜீதையும் இங்கே நிர்மாணித்தார். நிஜிமுதீன் அவுலியாவின் மிகப் பெரிய கல்லறையை வரலாற்றுச் சின்னமாக பளிங்குக் கற்களால் நிர்மாணித்தார். உலக வரலாற்றில் இன்றும் அதிசயமாகப் பேசப்படும் இவரின் மயிலாசனம் தங்கத்தாலும் நவரத்தினங் களாலும் செய்யப்பட்டது.
அப்போதே இதன் மதிப்பு 19 கோடி ரூபாய்! இப்போழுது. நீங்களே பெருக்கிக் கொள்ளுங்கள். அப்பொழுது தங்கத்தின் விலை 18 ரூபாய். இப்பொழுது ஏறக்குறைய 3500 ரூபாய்!
ஷாஜஹான் தனது பாட்டனார் அக்டர், தகப்பனார் ஜஹாங்கிர் போல மற்ற மதத்துக்காரர்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுக்கவில்லை. இருந்த கோயில்களக்கு வழக்கப்படி மான்யம் வழங்கப்பட்டது. ஆனால் புதிய கோயில்கள் கட்ட அனுமதி முற்றாக மறுக்கப்பட்டது.
1648 ஏப்ரல் 19 ஆம் நாள் புதிய தலைநகர் அதிகாரபூர்வமாக பாதுவுாவினால் திறந்து வைக்கப்பட்டது. ஷாஜஹானின் ஒரே மகளான ஜஹனாராவின் மேற்பார்வையில் உருவானதுதான் இன்று பழைய டில்லியில் இருக்கும் சாந்தினி செளக் கடை வீதி இன்றும் குறுகலான பாதை கொண்டு மக்கள் நெரிசல் மிக்க வியாபார கூடமாக செயல்படுகிறது. டில்லியில் இந்த இடம் பிரசித்தி பெற்றது. இங்கே கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். அப்பொழுதே பாதுஷாவின் காலத்தில் இங்கே கடைகள் திறக்கப்பட்ட பொழுது அவற்றின் எண்ணிக்கை 1560!
டில்லி அரண்மனை சுமார் 124 ஏக்கரில் பாதுஷாவிற்காக கட்டப்பட்டது. புதிய நகரத்தின் கோட்டைச் சுவர் சுமார் 4 மைல் சுற்றளவு கொண்டது. வாணவேடிக்கை, ஊர்வலம், ஆடம்பரம் என்று நடந்த புதிய நகரப் பிரதேசம் ஷாஜஹானுக்கு அவ்வளவு நல்ல அறிகுறிகளைக் கொண்டு வரவில்லை! அவருடைய நான்கு மகன்களில் ஒருவரான ஒளரங்கசிப் புதிய தலைவலியாக உருவானார்.
133

Page 69
O மண்ணும் மனிதர்களும்
ஷாஜஹானின் நான்கு புதல்வர்களும் ஒரே வயிற்றுப் பிள்ளைகள்தான். தாரா 43 வயது. ஷாஸ"ஜா 41 வயது, ஒளரங்கசிப் 39 வயது. முராத் 33 வயது. இதில் தாராவிற்கே முடிதுட்ட பாதுஷா எண்ணம் கொண்டிருந்தார். மூத்த மகன் கல்வி, ஞானம், அரசியல், பொருளாதாரம் இவைகளை பாதுஷாவின் பக்கத்திலேயே இருந்து கற்றார். மூன்றாவது மகன் ஒளரங்கசிப்போ சதா போர்க் களத்துக்கு அனுப்பப்பட்டார். வெற்றிகளையும் செல்வங்களையும் ஒளரங்கசீப் குவித்த போதிலும் ஷாஜஹான் மூத்த மகனிடமே பாசமாக இருந்தார். மூத்த மகனுக்கு நூல் அறிவு இருந்தது. ஒளரங்கசிப்புக்கோ போர் பலகண்ட புஜ பலமும் உலகறிவும் இருந்தது.
அக்ரா கோட்டையில் அப்பொழுது இருந்த பாதுஷாவுக்கு ஒளரங்கசீப்பிடமிருந்து தூது வந்தது. "இதுவரையில் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். ஆட்சியை என்னிடம் ஒப்படையுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். பாதுஷா இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. பெரும் படை ஒளரங்கசிப்பிடம் இருந்ததால் அரண் மனைக்கு யமுனை நதியிலிருந்து செல்லும் குடிநீர் வழியை அடைத்துவிட்டார்.
குடிநீர் வற்றி மன்னர் சேறும் சகதியும் நிறைந்த நீரை சிறிது காலம் குடித்துப் பார்த்தார். இனி முடியாது என்பதை உணர்ந்து கடைசியில் மகனிடம் சரணடைந்தார். இது பற்றி தனது குறிப்பில் இப்படி எழுதி வைத்துள்ளார் ஷாஜஹான் :
இந்துக்களை போற்றுகிறேன். இறந்தவர்களுக்குக் கூட நீர் தரும் குணம் அவர்களுக்கு உண்டு நீஒரு சிறந்த முஸ்லிம் நீ எனக்கு இப்படி நீர்தராமல் செய்யலாமா?
இதை மனம் வெதும்பிய ஷாஜஹான் எழுதியதாகவே நினைக்க வேண்டியுள்ளது. இதன் பிறகு பாதுஷா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைபட்டிருந்த பாதுஷா தனது எழுபத்து நாலாவது வயதில் ஜனவரி 22-1666 ஆம் ஆண்டு இறந்தர்ர். கோட்டையிலிருந்து ஒரு ஜன்னல் வழியாக அவர் தாஜ்மகாலைக் காணும் பொருட்டு ஒரு கண்ணாடி அவரின் படுக்கைக்குப் பக்கத்தில் வைக்கப் பட்டது.
134

சைபீர்முகம்மது O
அவர் இறக்கும் பொழுது அந்தக் கண்ணாடியின் பக்கம்தான் முகம் திரும்பி நின்றது. இறுதி மூச்சு நிற்கும் வரை தனது மனைவியின் கல்லறையைப் பார்த்தவாறே உயிர் துறந்த பாதுஷாவின் அன்பை எந்த அளவு கோலால் அளந்து பார்க்க முடியும்!
போவோமா டில்லி நோக்கி
அக்ராவை விட்டு டில்லி வந்ததும் எனக்கு அதிசயமாக இருந்தது. ஒரு பக்கம் பழைய டில்லி கோட்டைகள், பள்ளிவாசல்கள், நிஜாமுதீன் அவுலியாவின் கல்லறை என்று தாண்டிப் போனால் புதிய டில்லி. ஒரு சர்வ தேச நாட்டின் தரத்தோடு அகன்ற சாலைகள், உயரமான கட்டிடங்கள், புதிதாகக் கட்டப்பட்ட அப்போலோ மருத்துவமனை, மேம்பாலங்கள் என்று நம்ப முடியாத அளவு புதுடில்லி காட்சியளிக்கிறது.
புதுடில்லியில் அக்கம்பக்கம் இருந்த குடிசைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டன. 68 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரம் டில்லி. 1485 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்நகரத்தின் பிரதான மொழி இந்திதான். என்றாலும் பஞ்சாபி மொழியும் தெரிந்து வைத்துள்ளார்கள்.
டில்லி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மொகலாயர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. படையெடுத்தவர்களும் தங்களின் படையெடுப்புகளை டில்லியை நோக்கியே வைத்துக் கொண்டுள்ளார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி புரிந்த அசோக மன்னன் இன்று பாட்னா என்றழைக்கப்படுகின்ற பாடலிபுத்திரத்தில் தனது தலைநகரை அமைத்துக் கொண்டு ஆட்சி புரிந்தான்.
5000 ஆண்டுகளுக்கு முன்னே சென்றால் மகாபாரத காலம் வருகிறது. பாண்டவர்களும் கெளரவர்களும் டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் 'சொக்கட்டான்’ ஆடி, துகிலுரிந்து, குருச்சேத்திரப் போரெல்லாம் நடத்தியதாக தோண்டியெடுப்
135

Page 70
O மண்ணும் மனிதர்களும் பவர்கள் வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது எந்த அளவு உண்மையென்று நமக்குத் தெரியாது. இராமன் பிறந்த அயோத்தி டில்லிக்குப் பக்கத்தில் இருந்ததாகக் கூறி, பாபர் கட்டிய மதுதியை அண்ம்ையில் உடைத்தார்கள். பாபரின் மதுதிக்குப் பக்கத்தில்தான் ராமரின் சிலை வைத்து வணங்கும் கோயில் இருக்கிறது. பாபர் பள்ளிவாசல் கட்டும்பொழுது இந்தக் கோயிலை விட்டுவிட்டுத்தான் கட்டியுள்ளார். உண்மையில் பாபருக்கு அப்போது இருந்த புஜபல பராக்கிராமத்துக்கு ராமர் கோயிலை எடுத்து விட்டு மதுதியைக் கட்டியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இன்றுள்ள ஆர்.எஸ்.எஸ். போன்ற மத அமைப்புகளும் பி.ஜே.பி. போன்ற அரசியல் அமைப்புகளும் தங்களின் சுய தேவைக்காக இப்படி அப்பாவி மக்களை பயன்படுத்திக் கொள்கின்றன. போதுமான படிப்பறிவு இல்லாத அப்பாவி மக்கள் இந்த போலிகள் செய்யும் காலித்தனங்களுக்குப் பின்னே அணிவகுத்துச் செல்கிறார்கள். இதனால் பம்பாய் போன்ற பெரிய நகரங்களில் எத்தனை மக்கள் அநியாயமாகச் செத்தார்கள், பி.ஜே.பி. போன்ற அமைப்புகளுக்கு மதம் மட்டுமே இப்பொழுது மூலதனம். அதை வைத்து எப்படியும் பதவிக்கு வந்துவிட அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இந்திய நாடு பல்வேறு பிரச்சினைகள் உள்ள நாடுதான் என்றாலும், அது இன்னமும் தனது ‘மதச் சார்பின்மை’ கொள்கையை வலியுறுத்தியே வருகிறது. கோயில்கள், மதுதிகள், தேவாலயங்கள், புத்த மடங்கள், ஜைன மடங்கள் மட்டுமல்லாது. ஆயிரக்கணக்கான புதுப்புது சாமியார்கள் வேறு தோன்றி தாங்கள்தான் கடவுளின் அவதாரம் என்று லட்சக்கணக்கான பக்தர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடு திறந்த ஜனநாயக நாடாக இருப்பதால் அவர்கள் காட்டில் பணம் மழையாகப் பொழிகிறது!
பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவாகத்தான் இருந்தது. ஏனோ புராண காலத்தில் இருந்தே இந்த டில்லிக்கு தனி மவுசு இருந்து கொண்டே இருக்கிறது. 1911 ஆம் ஆண்டு டில்லியைத் தலைநகராக மாற்றும் நடவடிக்கைகளை ஆங்கிலேயர்கள் ஆரம்பித்தார்கள்.
136

சைபீர்முகம்மது O
இதற்கு முன் பாண்டவர்கள் மகாபாரத காலத்தில் யமுனைக் கரையில் ‘இந்திரப் பிரஸ்தா' என்ற நகரை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பழைய டில்லியருகே தோண்டி எடுக்கப்பட்ட சில தொல்பொருட்கள் கி.மு. 1000 ஆண்டுகள் பிந்தியவை என்று கண்டு பிடித்துள்ளார்கள். ரிக் வேதத்தில் சரியான சான்றுகள், சரித்திரக் குறிப்புகள் இல்லையென்றாலும், 3000 ஆண்டு பழமை வாய்ந்த அவர்களின் அந்த வேத நூலை வைத்து சில சரித்திரத் தடயங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
ரிக் வேதம் தோன்றுவதற்கு முன்பே - அதாவது ஆரியர்கள் ‘சிந்து நதி' பிரதேசத்துக்கு வருவதற்கு முன்பே - நல்ல நாகரிகம் n_ổiron நாடாக மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்றவை இருந்துள்ளன. இந்த இரு இடங்களிலும் கிடைத்த பழம் பொருட்களில் இன்றும் சரித்திரம் பேசும் எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் படித்தறியும் அறிவுதான் இன்று வரை ஏற்படவில்லை. மேற்கண்ட மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கிடைத்த தடயங்கள், அவர்கள் மிகுந்த நாகரிகம் உள்ள திராவிட இன மக்களாகவும் பருத்தி ஆடை உடுத்துபவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை உணர்த்துகின்றன. அவர்கள் பித்தளை, தாமிரம் போன்ற உலோகப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார்கள். செல்வம் கொழித்த அழகிய மாளிகை களில் தூய்மையுடன் அவர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. இவர்கள் பருத்தியிலான அழகிய ஆடை அணிந்திருந்த காலம் கி.மு. 2500 என்று கணக்கிடப்படுகிறது. ஆனால் இவர்களைப் போர் மூலம் வென்ற ஆரியர்கள் கம்பளி, தோல் ஆடைகளையே அக் காலத்தில் அணிந்திருந்தார்கள்.
ஆரியர்களுக்கும் பழைய சிந்து வாசிகளுக்குமிடையிலான போர் ரிக் வேதத்தில் ‘தேவாசுர யுத்தங்களாக வர்ணிக்கப்படு கின்றது. இந்தியாவுக்குள் பிரவேசித்த ஆரியர்கள் ‘சவ்வரிசி’ போன்ற பெயர்களை தெரிந்து கொண்டார்கள் என்றாலும், இவர்கள் பிரதானமாக ஆடு மாடுகளை மேய்ப்பவர்களாக ஊர் விட்டு ஊர் போகும் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந் தார்கள்.
137

Page 71
O மண்ணும் மனிதர்களும்
உண்மையில் ஆரியர்கள் ஹரப்பாவில் வாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் சமுதாய முன்னேற்றத்தையும் தடுக்கவே விரும்பினார்கள். அவர்கள் தம்முடன் கொண்டு வந்த நாடோடி வாழ்க்கையை நிலைநிறுத்தவே முயற்சித்தார்கள். குதிரைகளையும் பசுக்களையும் செல்வமாகக் கருதி இவர்கள் நகர வாழ்க்கையை வெறுத்தார்கள். இந்த நிலையில் மொகஞ்சதாரோ நகர் பற்றி ஓர் ஆங்கில வரலாற்று - புதை பொருள் ஆராய்ச்சியாளர் இப்படி எழுதி வைத்துள்ளார். ‘நாம்தற்போது உள்ள லங்காஷயர் போன்ற நகரத்தின் இடிபாடுகளிடையே நின்று கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது.
அங்கே வடக்கிலிருந்து தெற்கே செல்லும் சாலைகள் அகலமாக அமைக்கப்பட்டிருந்தன. இதில் சக்கரங்கள் கொண்ட வாகனங்களும் மக்களும் செல்வதற்கு வசதியாக இருந்திருக்கிறது. சாலைகள் ஒன்பது முதல் முப்பத்தாறு அடி அகலச் சாலைகளாகச் செப்பனிடப் பட்டிருந்தன. ஒவ்வொரு சாலையும் அரை மைல் நீளம் வரையிலும் நீண்டு உள்ளது. அவை நாற்சந்திகளை உருவாக்கும் இடத்தில் முடிவடைகின்றன. ஒவ்வொரு சாலையிலும் தெருவிலும் பொதுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. பெரும்பாலான வீடுகளில் சொந்தக் கிணறுகள் இருந்துள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குளியலறை இருந்திருக்கிறது. கழிவுநீர் ஓட் நிலத்தடிக் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. பணக்காரர்களும், வியாபாரிகளும், கைவினைக் கலைஞர்களும் இருந்த பகுதிகளை அவற்றின் இடிபாடுகளுக்கிடையிலும் தெரிந்து கொள்ளலாம் மிகச் சிறிய வீடுகளில் இரண்டு அறைகள் உள்ளன. ஊசி, கோடாலி, அரிவாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறுத்தல் அளவைகளும் அங்கே இருந்திருக்கின்றன.
பொன், வெள்ளி போன்ற உலோகங்களுக்காக அவர்கள் மைதுர், காஷ்மீர், கிழக்கிந்திய, மத்திய ஆசியாவோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். மெசப்பொட்டோமியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வாணிப உறவு இருந்துள்ளது. அவர்களின் உயர்ந்த வர்க்கத்தில் வாணிகர்களும், போர் வீரர்களும் இருந்துள்ளார்கள். இவர்களின் பிரதானமான தொழில் விவசாயமாக இருந்துள்ளது. ஆரியர்கள் எப்படிப்பட்ட நாகரிகத்தையும் பெளதீக வாழ்க்கையை
138

சைபீர்முகம்மது O
யும் அழித்து தங்களின் நாடோடி வாழ்க்கையை நிலைநிறுத்துவதில் மேலானவர்களாக இருந்த காரணத்தால், மொகஞ்சதாரோ, ஹரப்பா நகர மக்களுடன் போர் தொடுத்தார்கள். அவர்களின் விவசாய நிலங்களை மேய்ச்சல் நிலமாக மாற்றினார்கள். புதைக்கப்பட்ட இடிபாடுகளுக்கு இடையே அங்கே மிகப் பெரிய ‘துவம்சப் போர்’ நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் நிறையவே காணக் கிடக்கின்றன.
"ஃபாய்ரி’ என்பவர் சிந்து நாகரிகத்தின் காலம் கி.மு. 2800 2500 GT60Tai ds(DigiSpirir. 'INDUS CIVILIZATION 67 (p5u M. WHEELIR ("Cambridge History of India' - Appendix)
ஆரியர்களும், ஏன் உலகத்தின் எல்லா இன மக்களுமே நதிக்கரையோரங்களிலேயே வாழ்ந்துள்ளார்கள். மனிதன் வாழ்வதற்கு நீர் மிக அவசியமானதாக உள்ளது அல்லவா? அதனாலேயே சிந்து நதிப் பிரதேசத்தில் வற்றாத நதியாக ஆண்டு முழுதும் ஒடும் சிந்துவின் கரையிலும், பின் கங்கைக் கரைகளிலும் மக்கள் விவசாயம், வாழ்க்கை, சரித்திரம் என்று உண்டு பண்ணினார்கள். முதலில் துரியனையும் சந்திரனையும் அவன் வணங்கினான். பிறகு அன்றாடம் தனது வயிற்றுப் பாட்டைத் தீர்த்து வைக்கும் நதிகளைப் போற்ற ஆரம்பித்தான். பிற்காலத்தில் தனது வேகத்தில் நதிகளை ‘புனித நதி’ என்றே எழுதி வைத்து விட்டான்.
எகிப்தில் நைல் நதி, இந்தியாவில் கங்கை நதி, சினாவில் மஞ்சள் நதி (Yellow River) என்ற பல புனித நதிகள் உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மனித நாகரிகம் முழுதும் நதிகளின் திரத்தில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்தில் ஏழு நதிகள் குறிப்பிடப்படுகின்றன. ஆரியர்கள் தங்களது மேய்ச்சல் வாழ்க்கைக்கு நதிகளையே அதிகம் நம்பி இருந்தார்கள். எனவே அவைகளுக்குப் புனிதம் கற்பிக்கப்பட்டது. ரிக் வேத கால ரிஷிகளில் மூத்தவரான பரத்வாஜர், யமுனை நதி பற்றியும் கூறியுள்ளார். எனவே 'ரிக் வேத காலத்திலேயே யமுனை ஒடும் டில்லியை ஆரிய இனக் குழுக்கள் அறிந்தே வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது அல்லவா? இது மட்டுமல்லாது. மகரிஷி விஸ்வாமித்திரரின் புதல்வர் அஷ்டக் 'சப்த் - ஆப்' (பஞ்ச் -
139

Page 72
O மண்ணும் மனிதர்களும்
ஆப்'; பஞ்சாப்பல்ல) 99 சிறிய நதிகளை ரிக் வேதத்தில் குறிப்பிடுகிறார்.
ஆக, டில்லியின் பழைய வரலாறு புராண காலம், ஹரப்பா போன்ற சிந்து வெளி நாகரிக காலம், பின் கி.பி. 736 - ல் வரலாறு கண்ட தோமார் என்ற ராஜபுத்திர அரசன் ஆண்ட காலம் ஆகிய பகுதிகளைக் கொண்டதாகிறது. அப்பொழுது இதற்கு ‘தில்லிகா என்று பெயர். இதன் பிறகு ஏறக்குறைய ராஜபுத்திரர்கள் வம்சத்தில் வந்த புகழ் பெற்ற மன்னன் ஆனங்பால் இன்று குதுப்மினார் உள்ள பகுழுதிகளில் மிகப் பெரிய லால் கோட் (சிவப்புக் கோட்டை) என்ற கோட்டையைக் கட்டினான். ஷாஜஹான் கட்டிய செங்கோட்டை வேறு. ஆனங்பால் கட்டிய சிவப்புக் கோட்டை வேறு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனங் பால் கட்டிய கோட்டையின் வாயில்களில் சிங்கத்தின் சிலைகள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தன. கோட்டையின் மையத்தில் பெரிய நாகப்பாம்பின் படமெடுக்கும் சிலையை வடித்து, அதற்கு மேல் பெரிய தூணைக் கட்டினான். இந்துக்களின் புராணப்படி ஆதிசேஷன் இந்த பூமியைத் தாங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக்கை. எனவே ஆதிசேஷனின் சிலையை கோட்டையின் மத்தியில் வைத்தான். இதற்கு மேல் அவன் செய்த மிகப் பெரிய நல்ல காரியத்தை சரித்திர ஆசிரியர்கள் குறித்துள்ளார்கள்.
‘ஆராய்ச்சி மணி கட்டி ஆண்ட தென்னகம்’ என்று நாம் படித்திருக்கிறோம். இதை ஆனங் பால் மன்னன் தனது கோட்டை வாயிலில் செய்து காட்டினான். கோட்டைக்கு வெளியே பெரிய மணியைக் கட்டித் தொங்கவிட்டு அதில் ஒரு கயிறும் பிணைக்கச் செய்திருந்தான். தனது குடிமக்கள் யார் வேண்டுமானாலும் பிரச்சினைகளைத் தீர்க்க அந்த ஆராய்ச்சி மணியை அடித்து தன்னை நேரிடையாக அழைக்கலாமென்று உத்தரவு போட்டிருந் தான். ஆனங் பால் வாழ்க நின்புகழ்!
இன்று ஒன்பது அடி உயரமுள்ள சிதிலமடைந்த கோட்டையின் பாகங்களே காணப்படுகின்றன. இதன் உள்ளே உள்ள பகுதியில் குதுப்மினார் நீண்டு உயர்ந்து நிற்கிறது. இது பற்றி அடுத்து வரும் கட்டுரையில் விளக்கமாகச் சொல்கிறேன். குதுப்மினாருக்குப்
140

சைபீர்முகம்மது O
பின்னே பெரிய நீண்ட வரலாறு இருக்கிறது.ஆண்டியும் அரசனாக முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் குத்புதீன் அய் பெக்
ஆண்டி அரசனாகலாம். ஆனால் வாழ்க்கையில் ஒரு அடிமை அரசனாக முடியுமா? அதிலும் பரம்பரையாகவே அடிமையாக வாழ்ந்த ஒருவன் எப்படி அரசனாக முடியும்? கடுமையான உழைப்பு, எதிர்காலம் பற்றிய Positive Thinking, நம்பிக்கை, நாணயம், எப்பொழுதும் செயல் பற்றிய கனவுகளில் ஒருவன் மூழ்கி இருந்தால் அவன் நிச்சயம் முன்னேற முடியும் என்பதற்கு குத்புதின் அய்பெக் மாபெரும் உதாரணம்! குதுப்மினாரைக் காண இன்று மக்கள் ஆயிரக்கணக்கில் நாள்தோறும் கூடுகிறார்கள். வானோக்கி உயர்ந்து நிற்பது குதுப்மினார் மட்டுமல்ல, ஒரு அடிமையின் வாழ்க்கையும் தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம்!
இங்கே ஓர் இரும்புத் தூண் சிவப்புக் கோட்டையின் உள்ளே நடப்பட்டுள்ளது. பலர் இது அசோகனின் துரண் என்று தவறாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மாட்சிமைமிக்க இந்திய தொல்பொருள் காப்பகத்தார் குறைந்தபட்சம் இந்தியிலாவது அதன் குறிப்பை எழுதி வைத்திருக்கலாம். தொல்பொருளும் பழசு, அதனைப் பாதுகாக்கும் இலாகாக்களின் தலைவர்களும் வயசான கிழங்கள். நவீன சிந்தனை ஆற்றலோ, உலக பொதுவான முன்னேற்றமோ அறியாமல் இன்னமும் ஏதாவது ஒரு கற்சிலைக்கு பால் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஸ்தூபி 1600 ஆண்டுகளாக துரு பிடிக்காமல் இருக்கிறது. 100 சதவிகிதம் இரும்பாலான இந்த தூண் கி.பி. 385 முதல் 415 வரை வட மாநிலங்களை ஆண்ட இரண்டாம் சந்திர குப்தரின் நினைவாக அமைக்கப்பட்டது. இது வேறு இடத்தில் இருந்தது. பின் இங்கே கொண்டு வரப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
தோமார்கள் அமைத்த ஆட்சியின் கடைசி இந்து மன்னன் பிருதிவிராஜ் 300 ஆண்டுகள் கழித்து பதவிக்கு வந்ததும், ஜெயசந்திரனின் மகள் சம்யுக்தையை மணந்ததும் ஏற்கனவே கூறியுள்ளேன். இதன் பிறகு டில்லி முகம்மது கோரியின் பிடியில் வந்தது. கோரிக்குப் பிறகும் பல முஸ்லிம் மன்னர்கள் டில்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். முகம்மது பின்
141

Page 73
O மண்ணும் மனிதர்களும்
துக்ளக், குதுப்புதீன், கோரிக்கு முன் கஜனி முகம்மது, ஆராம் ஷா, இல் தூத்மிஷ், ரஸியா பேகம் என்ற பெண்ணரசி, பஹற்ராம். நளீருதீன் முகமத், பல்பன், ஜலாலுதீன் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி, மாலிக்கஃபூர், சிக்கந்தர் லோடி, இப்ராஹீம் லோடி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போய் பாபரில் வந்த பிறகுதான் ஒரு நேர் கோட்டிற்குத் திரும்புகிறது. அதன் பிறகே மொகலாய ஆட்சி தொடங்குகிறது.
டில்லியை ஒரே நாளில் சென்றேன், கண்டேன் என்றும் பார்த்துவிட்டு வரலாம். 500 ரூபாய் செலவில் ஆட்டோ பிடித்தால் ஒரு பெரிய சுற்று சுற்றிக் கொண்டு வந்து விடலாம். ஆனால் டில்லியின் இதயத்தை - அதன் மக்களின் வாழ்க்கையை - அதற்கு மேல் சரித்திரத்தை- கிண்டவேண்டுமென்றால் குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். நான் டெல்லியில் இருந்தது நான்கு நாட்கள் என்றால் அதன் சரித்திரத்தைப் புரட்ட மூன்று மாதம் ஆனது.
பழைய டில்லியில் உள்ள ஜும்மா மஜீதில் 25,000 பேர் ஒரே நேரத்தில் தொழ முடியும். வெள்ளிக் கிழமைகளில் ஒரே நெரிசல் தான். இந்தப் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடியும் பச்சைப் போர்வையும், அவர் காலடித் தடம் பதித்த கல்லும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து புதுடில்லியில் மிக அழகிய லட்சுமி நாராயணன் கோயில் உள்ளது. இது 1938 ஆம் ஆண்டு இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பிர்லா கட்டியது. விஷ்ணுவும் லட்சுமியும் குடிகொண்டதாக உள்ள இந்தக் கோயில் 'பிர்லா கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. பிர்லா என்றாலே பணக்காரர். லட்சுமியும் பணம் தரும் தெய்வம்தானே? நல்ல பொருத்தம்!
அடுத்து மன்னர் ஒளரங்கசிப்பால் கட்டப்பட்ட மோதி பள்ளிவாசல். 1659 ல் கட்டப்பட்ட இது முற்றிலும் பளிங்குக் கல்லால் ஆனது. ‘முத்துப் பள்ளிவாசல் என்றும் இது அழைக்கப்படுகிறது. ராஜ்காட் 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை எரித்து நினைவாலயமாக வைத்துள்ளார்கள். யமுனைக் கரையில் கரிய
142

சைபீர்முகம்மது O
பளிங்கால் ஆன இந்த மேடை பல சோகங்களைக் காட்டி நிற்கிறது. 1964ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இங்கேதான் எரியூட்டப்பட்டார். அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு உயிர் துறந்த இந்திரா காந்தி அம்மையாரும் இங்கேதான் இரண்டாம் முறையாக எரிக்கப்பட்டார். முதலில் குண்டுகளால் சுட்டு எரித்தார்கள். பிறகு விறகுக் கட்டையால் எரித்தார்கள். ராஜ்காட்டில் பல வெளிநாட்டவர்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கிறார்கள். சுற்றுப் பயணிகளுக்கு அது ஒரு சோகமான இடம் இந்தியர்களுக்குப் பொழுதுபோக்குப் பூங்கா! எப்போதாவது வெளிநாட்டுப்பிரமுகர்கள் வந்தால் அரசியல்வாதிகளுக்கு அன்று அங்கே மலர் வளையம் வைக்க ஒரு வாய்ப்பு!
அடிமை கட்டிய கோபுரம்
Tெழ்க்கையில் எத்தனையோ பேர் முன்னேற வேண்டும் என்று துடிக்கிறார்கள். சிலர் கண்டதே காட்சி கொண்டிதே கோலமென்று கடைசி வரையில் வாழ்ந்து விட்டுப் போய்விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலர் 'வாய்கிழிய’ முன்னேற்றம் பற்றிப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு அடி கூட முன்னேற்றப் பாதையை நோக்கி எடுத்து வைக்கவே இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. மற்றவர்களின் முன்னேற்றம் பார்த்து நெஞ்சு வெந்து பொறாமைப்படுவதையே இவர்கள் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். தாங்கள் வேலை செய்யும் இடத்தில்கூட நேரம் பார்த்து சரியாகச் சென்று அதிகபட்ச நேரமெல்லாம் உழைக்கமாட்டார்கள். செய்யும் தொழிலிலும் ஒரு பக்தி - ஈடுபாடு - இருக்காது. வாங்கும் சம்பளத்துக்கு ஏதோ வந்தோம் போனோமென்றே வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு லாட்டரியில் கோடிக் கணக்கில் பணம் கிடைக்காதா என்று சதா பகல் கனவு காண்பதிலும், அது பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களை அறிவதிலும் காலத்தை ஒட்டிக் கொண்டிருப் Listfigsoit.
143

Page 74
O மண்ணும் மனிதர்களும்
வாழ்க்கையில் ஒரு அடிமையாக விற்கப்பட்டு, பிற்காலத்தில் டில்லிக்கு மன்னனாக வந்த தன்னம்பிக்கை தரும் ஒருவனின் வாழ்க்கையை உங்களுக்கு இந்த அத்தியாயத்தில் கூறப்போகிறேன்.
ஓர் அடிமைப் பரம்பரையில் வந்தவன்தான் குத்புதீன் அய்பெக், துருக்கிய இளைஞனான அவனுக்கு நம்பிக்கை, கடும் உழைப்பு இவைகள்தான் சொத்து. ஆப்கானிஸ்தான் கடைத்தெரு ஒன்றில் அவனை ஏலத்துக்கு ஒரு பேராசிரியர் வாங்கினார். அடிமையாக இருந்தாலும் உண்மை, உழைப்பு இவற்றுக்குச் சிறிதும் அவனிடம் பஞ்சமில்லை. வயதான பேராசிரியர் இறந்துவிடவே அவரின் மகன்கள் மீண்டும் குத்புதினை அடிமைச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். ஓர் அடிமை வியாபாரி குத்புதினை வாங்கினார்.
அப்பொழுது கஜினி நகரில் சுல்தான் கோரிமுகம்மது நிறைய அடிமைகளை வாங்கிக் கொண்டிருந்தார். அந்த அடிமை வியாபாரி குத்புதினை கோரியிடம் அழைத்துச் சென்றார். நல்ல உடற்கட்டும், துரு துருவென்ற பார்வையும், புத்திசாலித்தனமும் கொண்ட குத்புதீனை முகம்மது கோரிக்கு உடனே பிடித்துப் போய்விட்டது. நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.
சுல்தான் முகம்மது கோரியிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்த குத்புதீன் தனது கடுமையான உழைப்பைக் காட்டினான். நேர்மையாக நடந்து கொண்டான். தொழிலில் அவனுக்கு ஒரு பக்தி இருந்தது. படிப்படியாக அவனுக்கு உயர்வுகள் வந்தன. முகம்மது கோரி அவனை குதிரைப் படையின் தலைவனாக நியமித்தார். ஒரு நிலைக்கு வந்த பிறகு சிலர் உழைப்பதை நிறுத்தி விடுவார்கள். அதுவும் ஒரு பிரிவுக்கே தலைவனென்றால் சொல்லவே வேண்டாம். 'நானே ராஜா கதை தான்! சில இலாகாக்களின் தலைவர்கள் செய்யும் ‘கெடுபிடி’ இருக்கிறதே அதை எப்படி எழுதுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு ஐம்பத்தைந்து வயதில் இவர்கள் ‘ஓய்வு பெறும் பொழுது நாய்கூட இவர்களைச் சிண்டுவதில்லை. இவர்கள் மற்றவர்களை மதித்தால் அல்லவா மற்றவர்கள் இவர்களை மதிப்பதற்கு!
144

சைபீர்முகம்மது O
குதிரைப் படைத் தலைவனாக உயர்ந்து குத்புதீன் மேலும் உழைத்தான். இரவு பகல் பாராது உழைத்தான். அவ்னின் உழைப்பைக் கண்ட முகம்மது கோரி பிரதம தளபதிகளில் ஒருவனாக அவனை நியமித்தார்.
அதிர்ஷ்டம் என்பது நாம் விமானப் பயணம் செய்யும் பொழுது விமானப் பணிப்பெண்கள் நம்மை அழைத்துச் சென்று பணிவுடன் இதுதான் சார் உங்கள் “ g►ur ” என்று அமர வைப்பார்களே, அப்படி வந்து விடாது. சிலந்தி தனது எச்சிலை நூல் போல விட்டு சில சமயங்களில் திடீரென்று தொங்கும். அப்பொழுது கண்ணுக்குத் தெரியாத அந்த நூலைப் பற்றிக் கொண்டு மேலே செல்ல பல கோடி பேர்கள் இந்த உலகத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படித்தான் குத்புதீனுக்கு அதிர்ஷ்டம் வந்தது. முகம்மது கோரி தனது இந்தியப் படையெடுப்பை ஆரம்பித்த பொழுது பிரதம தளபதிகளில் ஒருவனாக குத்புதீனும் கூடவே போருக்குச் சென்றான்.
டில்லியில் மன்னனாக அப்பொழுது இருந்த பிருதிவிராஜ்சம்யுக்தை பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். அப்போது நடந்த போரில் குத்புதீன் தனது முழு வீரத்தையும் காட்டினான். அதன் பின் பிருதிவிராஜனின் மாமனார் ஜெயச்சந்திரனோடு கன்னோசியில் நடந்த போரில் இவனே கதாநாயகன். அதன் பிறகும் கோரியின் போர் வேடம் களையவில்லை. குஜராத், பிஹார், வங்காளம் என்று வெற்றிகளைப் பெற்ற பிறகே அந்தப் படையெடுப்பு அடங்கியது. இத்தனை வெற்றிகளையும் குவித்த பெருமை குத்புதீனுக்கே! ஆம், அந்த துருக்கிய அடிமை, போர்த் தளபதியாக உயர்ந்து உண்மையாக தனது மன்னனுக்கு உழைத்து வெற்றிகளை அவன் காலடியில் கொண்டு வந்து குவித்தான்.
ஒர் அடிமையை ஆண்டானாக ஆக்க நினைத்தான் முகம்மது கோரி! தனது நேரிடைப் பிரதிநிதியாக டில்லியில் குத்புதீனுக்கு முடி சூட்டினான் முகம்மது கோரி!
145

Page 75
)ெ மண்ணும் மனிதர்களும்
அதுவரையிலும் அடிமையாக, குதிரைப்படைத்தலைவனாக, பின் பிரதம தளபதியாக வாழ்க்கையைப் பார்த்தகுத்புதின் முதன் முதலில் மன்னனாக - டில்லி பாதுஷாவாக - உயர்ந்தான்!
சிலருக்கு பதவி வந்ததுமே மண்டையில் கனமும் ஏறிவிடும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவார்கள். தங்களின் பழைய நிலையை மறந்து விடுவார்கள்.
டில்லி ஆட்சியில் அமர்ந்ததுமே மிகத் திறமையாகவும்
சுறுசுறுப்புடனும் ஆட்சி புரிய ஆரம்பித்தான் சுல்தான் குத்புதீன் அய்பெக்! வரலாற்று ஆசிரியர்கள் இவனின் ஆட்சியை போலித்தனமற்றது என்றே வர்ணிக்கிறார்கள். குத்புதீனுக்கு முன் சில இஸ்லாமிய மன்னர்கள் டில்லி சிம்மாசனதில் ‘கண்ணா மூச்சி ஆட்சி செய்து வந்திருந்தாலும் ஒரு நிலையான முஸ்லிம் ஆட்சி பரவ குதுபுதினை வழிகோலினான் என்று சொல்லலாம். குத்புதின் மிகச் சிறந்த மல்யுத்த வீரன் என்று வர்ணிக்கப் பட்டுள்ளான்.
தனது தளபதிகளுக்கும், அமைச்சர்களுக்கும், உண்மை ஊழியர்களுக்கும் அவன் பல பரிசுகளை வழங்கியுள்ளான். ஏழைகளுக்கு லட்சக் கணக்கில் வாரி வாரி வழங்கினான். பசி என்று வந்தவர்களுக்கு அவன் கொடுத்த பொன்னும் பொருளும் அரண்மனை விருந்தும் வியப்பில் ஆழ்த்தும் தான் அடிமையாக இருந்த பொழுது அந்தப் பசியின் கொடுமையை அவன் உணர்ந்தவனாயிற்றே!
டில்லியையும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் சரியான ஆட்சி இல்லாமல் இருந்த காரணத்தால் ஏகப்பட்ட கொள்ளைக்கும்பல்கள் மக்களை கொள்ளையடித்து வதைத்து வந்தன. இன்றைய சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளை'ஸ்டைலில் கிராமம் கிராமாகப் புகுந்து கொள்ளையர்கள் அட்டூழியம் புரிந்து வந்தார்கள். குத்புதீன் ஆட்சிக்கு வந்த மறுகணமே கொள்ளைக் கும்பலை அடியோடு ஒழித்து மக்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்தானென்று சரித்திர ஆசிரியர்கள் தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்கள்.
ஓர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் குத்புதீன் வெற்றி பெற்றாலும் இவனுடைய ஆட்சியில் மற்ற மதத்தவர்கள் ஒரு
146

சைபீர்முகம்மது O
நிம்மதியான வாழ்க்கையை வாழவில்லை என்றே குறிப்புகள் கூறுகின்றன.
இன்று டில்லியில் உயர்ந்து நிற்கும் குதுப்மினாரின் முதல் மாடியை மட்டுமே குத்புதீன் கட்டினார். உலகத்தின் புகழ்பெற்ற கோபுரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. 242 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோபுரத்தை அடைய 379 படிகளை கடந்துதான் நாம் செல்ல வேண்டும் பாரீஸில் இருக்கும் EIFFELTOWER போல இந்தியாவுக்கு இந்த குதுப்மினார்! இதன் அடிப்பாகம் 1432 மீட்டர் அகலமுடையது. உச்சி 2.75 மீட்டர் அகலம். இந்த குதுப்மினாரை பிருதிவிராஜன் கட்டினான் என்றும், தனது மகன் தர்ஷன் தினமும் யமுனையை தரிசிப்தற்காக இதனைக் கட்டி ன்வத்தான் என்றும் வரலாறு கூறப்படுகிறது. குதுப்மினாரில் குர்ரானின் வாசகங்கள் உச்சி வரை எழுதப்பட்டுள்ளன. குர்ரானுக்கும் ராஜபுத்திர மன்னனான பிருதிவிராஜனுக்கு சம்மந்தமே இல்லையல்லவா?
1193 ஆம் ஆண்டு குத்புதீன் இந்த குதுப்மினாருக்குப் பக்கத்திலேயே ஒரு பள்ளிவாசலைக் கட்டினான். இது இன்றும் பல சரித்திரங்களைக் கூறிக் கொண்டிருக்கிறது. குத்புதின் பல கோயில்களை உடைத்தெடுத்து அதிலிருந்த அதே சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தங் பள்ளிவாசலைக் கட்டினானென்று ஒரு குறிப்பு கூறுகிறது. ஆனால் வேறு சில சரித்திரக் குறிப்புகளில் இப்பொழுது இடிபாடுகளுடன் இருக்கும் இந்தப் பள்ளிவாசல் முன்பு கோயிலாக இருந்ததாகவும் அதை அப்படியே பள்ளிவாசலாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பள்ளியில் இந்துக் கலாச்சாரசாயல் அப்படியே இருக்கிறது. நான் மிகக் கவனமாகப் பார்த்ததில் இது நிச்சயமாக அங்கே இருந்த ஒரு கோயிலை பள்ளிவாசலாக மாற்றியதாயிருக்க முடியாது. இதில் விஷ்ணு மதச் சாயலும் சிவ மதச் சாயலும் ஜைன மதச் சாயலும் பல ஆண்டுகள் வித்தியாசம் உள்ள சிற்பக்கலை வேறுபாடுகளும் உள்ளன. எனவே வேறு வேறு இடங்களில் உடைக்கப்பட்ட கோயில்களின் ஒரு மொத்த உருவமாகத்தான் இந்தப் பள்ளிவாசல் இருக்க வேண்டும். குதுப்மினார் முழுதும் குத்புதீன் கட்டியது அல்ல!
147

Page 76
பி) மண்ணும் மனிதர்களும்
குதுப்மினாரின் மேலே உள்ள இரு பகுதிகளை இல்துாத்மிஸ் என்ற மன்னன் கட்டினான். இவன் குத்புதீனின் மருமகனாகும். மூன்று மாடிகள் மட்டுமே இருந்த இந்த கோபுரத்தின் அடுத்த பகுதியை 1868ல் பிரோஷ்ஷா துக்ளக் என்ற சுல்தான் கட்டி முடித்தான். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட ஓர் இடியின் தாக்குதலால் மேல் பகுதி மோசமாகச் சேதமுற்றது. 1469 முதல் 1517 வரை ஆட்சியில் இருந்த சிக்கந்தர் லோடி என்ற சுல்தான் இதனை மராமத்துச் செய்து அழகு படுத்தினான். 1378-ல் ஒரு முறை இதே போன்று இடியின் காரணமாக சேதமுற்றது.
வைரம் பாய்ந்த தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய கூரை, ஒரு நில அதிர்வின் பொழுது கீழே விழுந்து விட்டது. 19ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சி வந்த பொழுது மேஜர் ஸ்மித் என்பவர் இதே போன்றதொரு கூரையைச் செய்து மேலே வைத்தார். 1848-ல் மீண்டுமொரு இடி அந்த கூரையைக் கீழே தள்ளி விட்டது! தங்கள் கட்டிய ஒரு உலக அதிசயத்தின் மேல் ஆங்கிலேயர்கள் ஏறி அமர்ந்து கொள்ள சுல்தான்கள் விரும்பவில்லை போலும் இன்றும் அந்தக் கூரை குதுப்பினாருக்குப் பக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது!
குதுப்மினாரின் இரண்டு அடுக்குகளை இல்துத்மிஸ் என்ற சுல்தான் கட்டியதாகக் கூறினேன் அல்லவா? இந்த பாதுஷாவின் வரலாறும் கொஞ்சம் சுவை மிகுந்ததுதான்.
குத்புதீன் அய்பெக் அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்து மன்னனாக உயர்ந்தாரென்று முன்பு சொன்னேன். அதே போல இந்த இல்துத்மிஸ"ம் ஓர் அடிமைதான். குத்புதீனிடம் அடிமையாக சேர்ந்து இவர் மெல்லமெல்ல தனது உழைப்பால் உயர்ந்து கவர்னர் பதவியை அடைந்தார். உண்மை-நேர்மை - உழைப்பு இவைகளின் மொத்த உருவமாக இல்துத் மிஸ் இருந்த காரணத்தால் தனது மகளையே அவருக்கு மணமுடித்து வைத்தான் குத்புதீன்.
குத்புதீன் போலவே இல் தூத்மிஸ் ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைப்பதில் தீவிரம் காட்டினார். குவாலியார், மால்வா, உஜ்ஜையினி போன்ற இடங்களில் நடந்த போர்களில் இவர் பெரும் வெற்றி பெற்றார் என்றாலும் அங்கிருந்த
148

சைபீர்முகம்மது O
கோயில்களை இவர் தரைமட்டமாக்கியதை சரித்திர ஆசிரியர்கள் மிகச் சோகமாகவே குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக உஜ்ஜையினியில் நடந்த போரில் அங்கிருந்த புகழ் வாய்ந்த காளி கோயிலை இவர் தரைமட்டமாக்கிவிட்டார்.
ஏறக்குறைய 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இல்துத்மிஸ், பல போர்க்களங்களைக் கண்டு குத்புதீன் அய்பெக்கின் ஆட்சியை நிலை நிறுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
குதுப்மினாரை டில்லியில் பார்த்த பொழுது எனக்கு பல நினைவுகள் தோன்றின. உலகத்தின் பழமை வாய்ந்த அந்த கோபுரத்தின் மூன்று அடுக்குகளை இரண்டு அடிமைகள் கட்டியுள்ளார்கள். தாங்கள் அடிமைகளாக வந்து, மன்னன்ாகி வெறும் குறிப்புகளை மட்டும் விட்டுச் செல்லாமல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைக் கட்டி அடிமையாலும் அரசாள முடியும் என்பதை நிரூபித்து விட்டும் சென்றுள்ளார்கள். ஒரு காலத்தில் இந்த குதுப்மினாரிலிருந்து தொழுகைக்கு முஸ்லிம்கள் அழைக்கும் 'அல்லாஹ" அக்பர்’ என்று அதான் பாங்கோசை எழுப்பப் பட்டதாக சரித்திரம் கூறுகிறது. அதோடு இப்பொழுது உண்மையாக உழைத்தால் எவனும் குதுப்மினாரைப் போல உயர்ந்து நிற்க முடியும் என்பதை அறைகூவுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பூ ஒன்று புயலானது
புராண காலத்தில் இருந்து இன்று வரை டில்லி மாறி மாறி பல சரித்திரக் குறிப்புகளை தன் கல்வெட்டுகளில் பதித்துக் கொண்டு வருகிறது.
மகாபாரதத்தில் கூறப்படும் ‘இந்திரப் பிரஸ்தா' என்ற நகர் இதுதான் என்று கூறப்படுகிறது. அப்பொழுதே ஒரு துதாட்டத்தில் இது கைமாறி பின் மீண்டும் உரியவர்களிடம் வந்து சேர்ந்தது.
டில்லியைச் சுற்றியுள்ள இடங்களில் பல்வேறு இந்து மன்னர்கள், பெளத்தம் தழுவிய அசோகன், சரித்திரத்தில் மிகச்
149

Page 77
O முண்ணும் மனிதர்களும்
சிறப்பாகப் போற்றப்படும் சந்திரகுப்தன், ஜைனர்கள் என்று மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளார்கள். டில்லியை ஒவ்வொரு (ւp6ճpպւծ படையெடுப்புகளால் சாம்பலாக்கினார்கள். ஆனால் அது மீண்டும் மீண்டும் அந்த சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்து நிற்கிறது.
டில்லியை கடைசியாக ஆண்ட இந்து மன்னன் பிருதிவி ராஜன். அதற்கு முன் எத்தனையோ இந்து மன்னர்கள் இந்த மண்ணை ஆட்சிபுரிந்துள்ளார்கள். ஆனால் சரித்திரம், கட்டிடம், கல்வெட்டு என்று தேடினால் எதையுமே இவர்கள் விட்டுச் செல்லவில்லை என்றே தெரிகிறது. நல்ல வேளையாக 1600 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த சந்திரகுப்தனின் இரும்புத் தூணையும், அசோகனின் சக்கரம் பதித்த தூண்களையும் அழித்து விடாமல் சில முஸ்லிம் மன்னர்கள் பாதுகாப்பாக இந்த டில்லியில் கொண்டு வந்து வைத்தார்கள். இல்லாவிட்டால் அவையும் அழிந்தே போயிருக்கும்.
ராஜபுத்திரர்கள் தங்களின் அழகிய மனைவியருக்காக உயிர் விடவும் தயாராய் இருந்தவர்கள்.அவர்களின் மனைவிமார்களும் உடன்கட்டை ஏறி உயிர் விடுவதில் ஆர்வமாக இருந்தார்கள். பலர் பலாத்காரமாக நெருப்பில் இறக்கப்பட்டார்கள். இந்த சடங்குகளில் ஆர்வம் செலுத்தியவர்கள், ஏனோ சரித்திரத்தில் கவனம் செலுத்தவில்லை.
1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டில்லியில் நடந்த பொழுது, இந்திராகாந்தி மிக வேகமாக ஒரு வளர்ச்சியை அங்கே கொண்டு வந்தார். உலகத்தின் மிக நவீன நகரங்களில் இன்று டில்லியும் ஒன்று பழைமையும் புதுமையும் பக்கம் பக்கமாக இருக்கும் இந்நகரம் ஓர் அதிசயம்தான். 11ஆம் நூற்றாண்டு தொடங்கி முஸ்லிம்களின் ஆட்சி இங்கே தலை தூக்கியதிலிருந்து கோட்டைகள் மதுதிகள்.நினைவாலயங்கள் என்று கட்டத் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி வரும்வரையிலும் அது நீடித்தது!
முகம்மது பின் துக்ளக் என்ற புகழ் பெற்ற சுல்தானை பலரும் அறிந்திருப்பீர்கள். இவரின் தந்தை கியாஸ9தின் துக்ளக் சுல்தானாக இருக்கும் பொழுது ‘துக்ளாபாத்” என்ற தனி
150

சைபீர்முகம்மது O
தலைநகரையே டில்லிக்கு அருகில் கட்டி ஆட்சிபுரிந்தார். இவரின் இறப்புக்குப் பிறகு இந்தத் தலைநகர் கைவிடப்பட்டது. இன்று கியாஸ9தினின் கல்லறை இங்கேதான் இருக்கிறது.
முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு வந்ததும் பெரும் வள்ளல், பேரறிஞர், ஒவியர், கவிஞர், தத்துவஞானி. பல மொழிகள் தெரிந்தவரென்று பெரும் புகழ் பெற்றார்.இந்தியாவில் நாணயம் அச்சடித்த முதல் மன்னர் துக்ளக்தான். இந்தியாவை மட்டுமல்லாது. சினாவையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர பேரார்வம் கொண்டிருந்த இவரை ஒரு "கிறுக்கன்’ என்று வர்ணித்து நடிகர் ‘சோ’ ‘முகம்மது பின் துக்ளக்' என்ற பெயரில் நாடகம் போட்டு வந்தார். சரித்திரத்தில் இவரை அவசரக்காரர் என்றுதான் குறிப்பிடுகிறார்களேயன்றி கிறுக்கன் என்று அல்ல!
இவர் செய்த மாபெரும் தவறு. ஒரு முறை தலைநகர் டில்லியை தேவகிரிக்கு மாற்ற நினைத்ததுதான். இவரின் கனவே இந்தியா முழுவதும் தனது ஆப்கியின் கீழ், வர வேண்டுமென்பது. தெளலாபாத் என்ற பெயரில் எழுதுாறு மைலுக்கப்பால் இந்த தலைநகரம் தேவகிரியில் அமைக்கப்பட்டது. இன்றைய கர்நாடகம், கோதாவரி நதிக்கருகே அமைக்கப்பட்ட இந்த தலைநகரம் சிறிது காலத்துக்குப் பிறகு டில்லிக்கே மாற்றப்பட்டது. -
டில்லி வரலாற்றில் துக்ளக்கின் பங்கும் உள்ளது. இன்றைய நவீன காலத்தில் பெண் பிரதமராக அமர்ந்து இந்தியாவையே கட்டி ஆண்டவர் இந்திராகாந்தி அம்மையார். சரி. சரித்திரக் காலத்தில் எந்தப் பெண்ணாவது டில்லியை ஆட்சி புரிந்துள்ளார்களா?
இந்தக் கேள்விக்கு நாம் மீண்டும் அடிமையாக இருந்து குத்புதீனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இல்துத்மிஸ்சுக்குப் பின் உள்ள வரலாற்றைப் புரட்ட வேண்டும்.
இல்துத்மிஸ் இறக்கும் தறுவாயில் அவருக்கு சில மகன்கள் இந்தார்கள். அத்தனை பேரும் குட்டியும் புட்டியுமாக இருந்தார் களேயன்றி ஒருவர் கூட ஆட்சிக்குப் பொருத்தமானவராக இருக்கவில்லை. பாதுஷா இறக்கும் பொழுது தனது அருமை மகள்
151

Page 78
O மண்ணும் மனிதர்களும்
ரஸியாவையே டில்லிக்கு சுல்தானாக நியமிக்க விரும்பினார். ஒரு பெண்ணை ஆட்சியில் அமர்த்த மந்திரி பிரதானிகளும் மத ஆலோசகர்களும் அனுமதி வழங்கவில்லை.
'டில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் முகமலர் மறைத்து வைத்தல்' என்று ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு பாடல் பாடுவார். உண்மையில் அக்காலத்து முஸ்லிம் அரசுகள் பெண்களை வெறும் அரண்மனைப் பதுமைகளாக வைத்திருந்தார்களேயன்றி. அவர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து வெளியுலகத்துக்கு கொண்டு வரவே இல்லை.
ஓர் அடிமையாக இருந்து, குதுப்மினாரின் இரண்டு அடுக்குகளைக் கட்டி சரித்திரத்தில் பெயர் பெற்ற இல்துாத்மிஸ் இங்கே மீண்டுமொரு சரித்திரம் படைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! அந்த மன்னர் தனது அகன்ற சாம்ராஜ்யத்தைக் காக்கும் பொறுப்பு தனது மகள் ரஸியாவுக்கே உண்டு என்று நினைத்தார். ஆனால் முதலில் விதிவேறு விதமாக வேலை செய்தது.
இல்துத்மிஸ் பல மனைவிகளைக் கொண்டவராக இருந்தார். இவர்களில் ஒருவர் அரண்மனைக்கு வேலைக்காரியாக வந்து பின் பாதுஷாவின் மனைவியாக ஆனவர். கஞ்சத்தனமும், ப்ேராசைகளும் நிரம்பியவர். இவரின் மகன்தான் ருக்னுதின் பிரோஸ்! தாய் எப்படியோ அதைவிட இருமடங்கு அதிகம் இவன்.
ரஸியா, பெண் என்பதால் முடி துட்ட மறுத்த அரண்மனைப் பெருச்சாளிகள் இந்த குடிகார ருக்னுதீன் பிரோஸ்"க்கு முடிதுட்டி மகிழ்ந்தன. ரஸியா, பெண் என்ற ஒரே ஒரு பலவீனம்தான். ஆனால் ருக்ணுதின் பிரோஸுக்கோ குடி, பெண் என்றில்லாம்ல் ஆட்சி செய்யும் எந்தவிதமான அறிவும் இல்லாமல் இருந்தது. என்றாலும் அவன் ஆண் என்பதால் முடிதுட்டி மகிழ்ந்தது இந்த உலகம்!
உண்மையில் பெயரளவில்தான் ருக்னுதீன் மன்னனாக இருந்தான். பின்னணியில் இருந்து இயக்கியது எல்லாம் ஷா துர்க்கான் என்ற அவனுடைய தாய்தான்! ஆட்சிக் கொடுமை தாங்காமல் மக்கள் மட்டும் கதறவில்லை. அரண்மனையில் இருந்த இல்துத்மிஸ்ஸின் மற்ற மனைவிகளும் கொடுமைப் படுத்தப்
152

சைபீர்முகம்மது O
பட்டார்கள். இந்த கொடுமையின் உச்சக் கட்டமாக இல்துத்மிஸ் பாதுஷாவின் மனைவியருள் ஒருவர் கடைசியாக ஒரு மகனைப்
பெற்றார். அந்தக் குழந்தை வளர்ந்தால் அது தனது ஆட்சிக்கு ஆபத்தாக முடியுமென்று எண்ணி அதன் கண்களை துட்டுக்
கோல்களால் குத்திக் குருடாக்கினான்! இந்த கொடுமை நாட்டு
மக்களுக்குத் தெரிய வந்த பொழுது நாடே பொங்கி எழுந்தது!
இத்தனைக்கும் ரஸியா பொறுமையாக இருந்தார்.மக்களின் செல்வாக்கு அவரின் பக்கம் இருந்ததால் ஷா துர்க்கான் அவரை அப்பொழுது ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மக்களின் அபரீதமான செல்வாக்கால் எங்கே தனது மகனின் ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ரகசியமாக ரஸியால்வக் கொன்றுவிடும் முயற்சியில் இறங்கினாள். இதை அறிந்த அமைச்சர்கள் அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து விழித்து எழுவது போல் எழுந்து உடனே ஷா துர்க்கானை அரண்மனைக் காவலில் வைத்தார்கள். அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் அந்த அமைச்சர்களை மக்கள் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள். தலைக்கு ஆபத்து வரும் பொழுதே இவர்கள் தங்களின் பத்தாம்பசலித்தன பழைய கோட்பாடுகளை விட்டுவிட நினைக்கிறார்கள்.
ஷா துர்க்கான் சிறையில் அடைக்கப்பட்டாள். பின் அங்கேயே அவள் உயிர் பிரிந்தது. உயிருக்குப் பயந்து ஒரு கோட்டைக்குள் போய் ஒளிந்து கொண்ட ருக்ணுதின் சிறை பிடிக்கப்பட்டு 1236 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி சிரச்சேதம் செய்யப்பட்டான்.
ரஸியா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பொழுது டில்லி கஜனா காலியாகிவிட்டிருந்தது. ஏகப்பட்ட அமைதியின்மை. ஆனால் மிகத் திறமையாக ஆட்சி செய்து வரலாற்றில் இடம் பிடித்தார். மன்னர்களுக்கு உரிய மதிநுட்பம், நிர்வாகத் திறமை, வீரம், நீதி தவறாத ஆட்சி முறை கொண்டு இவர் டில்லியை மட்டுமல்லாது. பஞ்சாப், வங்காளம், சிந்து மாநிலங்களையும் தனது பிடிக்குள் கொண்டு வந்து ஆண்டார். பெண்ணால் முடியாது என்று பேசியவர்கள் வாயடைத்து நின்றார்கள். குறுநில மன்னர்களும் இவரின் வீரத்துக்கும் நேர்மைக்கும் முன் மண்டியிட்டு நின்றார்கள்!
153

Page 79
O மண்ணும் மனிதர்களும்
போர்க்களத்தில் பெண்கள் அணியும் உடைகளை ஒதுக்கி விட்டு ஆண்கள் போல் போருடை புனைந்து அவர் போரிட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிறைய படிப்பதில் இவர் நேரத்தை செலவழித்தார். அறிஞர்கள், கவிஞர்கள், மத அறிஞர்கள், தத்துவ ஞானிகளிடம் நிறைய விவாதங்கள் செய்தார். திருக்குர்ரானை உச்சரிப்புப் பிழையில்லாமல் இவர் ஓதுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாமென்று குறிப்புகள் குறிக்கின்றன.
இவரின் முன்னெச்சரிக்கைக்கும் மதிநுட்பத்துக்கும் ஒரு மிகப் பெரிய சான்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. வழக்கமாக குதுப் மினாருக்கு அருகில் தனது தந்தை எழுப்பிய பள்ளிவாசலில் தொழுவதை இவர் கடமையாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் தொழுது கொண்டிருந்த பொழுது ஆயிரம் பேர் கொண்ட கொலைப் படை இவரைக் கொல்வதற்கு பள்ளிவாசலைச் சுற்றி சூழ்ந்து கொண்டது. ஏற்கனவே இதனை தனது ஒற்றர்கள் மூலம் அறிந்திருந்த ரஸியா தொலை தூத்தில் குதிரைப் படையை மறைவாக நிற்க வைத்திருந்தார். கொலைப்படை பள்ளிவாசலை அடையவும் குதிரைப் படைபாய்ந்து அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்தது. பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா? வாய்ப்பும் வசதியும் கொடுத்தால் அவர்களும் திறமையாக செய்லபட முடியும்தானே!
உலகத்தில் எந்த ஓர் இனம் தனது பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கிறதோ அந்த இனம் வரலாற்றில் முன்னேறி நிற்பதைக் காண்கிறோம்.
ரஸியா ஒர் ஆணைப் போல ஆட்சி செய்தாலும் மதவாதிகள் இதை விரும்பவில்லை என்பதை வரலாற்றுக் குறிப்புகள் பல இடங்களில் சுட்டுகின்றன. பெண்கள் அடுப்பூதவும் பிள்ளை பெறும் மெஷினாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் ரஸியாவால் நீண்ட நாட்கள் ஆட்சி செய்ய முடியவில்லை!
டில்லிக்கு வடக்கே 150 மைல் தொலைவில் சிர்ஹிந்த்பகுதியை ஆண்டு கொண்டிருந்தான் இக்தியாருதீன் அல்துனியா என்ற
154

சைபீர்முகம்மது O
சிற்றரசன். டில்லி அரண்மனை பெருச்சாளிகள் சதி வலை விரித்து அவனை டில்லி மேல் போர் தொடுக்க ஆயத்தப்படுத்தினார்கள்.
ரஸியா போர்க்கோலம்பூண்டாள்! அல்துணியாவை நேரில் சந்தித்து போர் தொடுத்தபொழுது, அவன் யானைப்படை, குதிரைப் படை ஏன் தன் நாட்டையே மறந்தான். ரஸியாவின்அழகில் மயங்கி காதல் வயப்பட்டு பித்தனாகி விட்டான். ரஸியா வின்நிலையும் அதுவாகத்தான் இருந்தது! டில்லியில் தனக்கு எதிராக நடந்த சதி வலைபற்றி அல்துனியாவிற்கு விளக்கினாள் ரஸியா. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
ரஸியாவின் படையும், அல்தூனி படையும் ஒன்று சேர்ந்து டில்லி நோக்கிப்புறப்பட்டன. இந்தப்படை டில்லி வந்தால் நிச்சயம் தங்கள் தலைதப்பாது என்று அறிந்த அரண்மனைப் பெரியவர்கள் ரகசியமாக ரஸியாவுக்கு உதவுவது போல் பெரிய படையை அவர்களோடு சேர்த்து விட்டார்கள்.
இதற்கிடையில் டில்லியில் பஹற்ராட் என்ற ரஸியாவின் ஒன்றுவிட்ட சகோதரன் மகுடம் துட்டப்பட்டான். இந்த அவசர ஆட்சி அமைக்கப்பட்டதும் டில்லியை நெருங்குவதற்கு முன்பே மீண்டும் போர்க்களத்தை சந்திக்க வேண்டிய துழநிலை ரஸியா அல்துரனியா படைக்கு ஏற்பட்டது. அன்று சண்டை முடிந்து கூடாரத்தில் ஓய்வாக இருவரும் இருக்கும் பொழுது வெறும் இந்துக்களே கொண்ட தனிக் கொலைப் படை கூடாரத்துக்குள் புகுந்தது. ரஸியா என்ற பெண் புலி வாளை உருவி பாய்ந்து போரிட்டாள். அந்தப் பூ புயலாக மாறியது. ஒரு பெண் எத்தனை பேரைச் சமாளித்து போர் புரிய முடியும்? கூடி நின்றவர்களின் ஒவ்வொரு கூர்வாளும் அந்தப் பெண்ணரசியின் உடலைக் குத்திக் கிழித்தன!
இந்த இடத்தில் சரித்திரம் மீண்டும் திரும்பியதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். ஒரு பெண்ணை - பூவை - கொல்வதற்கு. அன்று ஒரு அரசியல் சதி காரணமாக இருந்தது. இன்று மீண்டும் அதே டில்லியில் இந்திரா காந்தி என்ற பெண்ணை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் - அதே ஆண் வர்க்கம் - துப்பாக்கிக், குண்டுகளால் துளைத்தெடுத்துக் கொன்றனர். வெட்கம் கெட்ட
155

Page 80
O மண்ணும் மனிதர்களும்
இந்த காட்டு மிராண்டித்தனம் இந்திய சரித்திரத்தில் இரண்டு முறை நடந்துள்ளது. சரித்திரத்தில் கரும் புள்ளியாகிவிட்ட இந்த இரண்டு கொலைகளையும் நினைத்து இந்த மானிடவர்க்கம் மிகவும் வெட்கப்பட வேண்டும்.
இந்தியத் தலைநகர் மண்ணில் சிந்திய அந்த இரண்டு பெண்ணரசிகளின் ரத்தம் குறித்து அங்குள்ள மனிதர்கள் உடனே அதை மறந்து அடுத்த பதவிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நல்ல மண், நல்ல மனிதர்கள்!
ரஸியாவின் உடல் தரையில் சாய்வதற்கு முன்பே மற்றொரு கூட்டம் அல்துணியாவையும் வெட்டிச் சாய்த்தது!
ஒரு போர்க்களத்தில் மலர்ந்த அந்த காதல், வெற்றி பெற்று திருமணமும் முடிந்த சில நாட்களிலேயே மற்றொரு போர்க்களத்தில் முடிவுக்கு வந்தது.
ரஸியாவை இந்துக்கள் கொன்றார்கள். உண்மையில் இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். இந்திரா காந்தியை சிக்கியர்கள் கொன்றார்கள். கொன்றவர்கள் இந்திரா காந்தி அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள்.
தனது தந்தை இல்துத்மிஸ்ஸின் நினைவாக ரலியா பேகம் கட்டிய கல்லறை குதுப்பினாரின் ஒரு பகுதியில் இருக்கிறது. திருக்குர்ரானின் வாசகங்கள் இங்கே அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளன. இந்திய கட்டிடக் கலையும் முகம்மதியர்களின் கட்டிடக் கலையும் ஒருங்கே இந்த குதுப்மினாரைச் சுற்றி இருப்பதைக் காணலாம். இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்ட கல்லறைகளில் இல்துத்மிஸ்ஸின் கல்லறையே மிகப் பழமையான முஸ்லிம் கல்லறையாகும்.
புதிய உதயம் : அக்பர்
மொகலாயர்களின் ஆட்சியில் அக்பரைப் பற்றி எழுதாவிட்டால் அது ஒரு முழுமைபெற்ற வரலாறாக அமையாது. மிகச் சிறந்த
156

சைபீர்முகம்மது O
ஆட்சியாளராகவும், மனிதாபிமானம் மிக்க மாபெரும் மனிதராகவும், மற்ற மதங்களிடத்தில் மரியாதைமிக்கவராகவும் 14வயதில் ஆட்சிக்கு வந்து சன்னஞ் சன்னமாக உயர்ந்து ‘இந்துஸ்தானத்தில் ஈடு இணையற்ற மன்னர் என்ற பெயரை இன்று வரை சரித்திரத்தில் பதித்துவிட்ட மக்கள் திலகம் அவர்,
அக்பர் பிறக்கும் பொழுது அவருக்கு நூறு பேர் நின்று வாழ்த்துப் பாடி அழகிய தொட்டில்களில் கிடத்தி தாதியர் சிராட்டி வளர்க்கும் நிலையில் அவரின் பிறப்பு அமையவில்லை. அக்பரின் தந்தை ஹ"மாயூன் நாடு விட்டு நாடு தாவி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் அப்பொழுது இருந்தார்.
ஷெர்ஷா என்ற மன்னரின் மாபெரும் படையெடுப்பில் இருந்து உயிர் தப்பி சிந்து மாகாணத்தை அடைந்த பொழுது அவருக்கு மனதில் நிம்மதியில்லை. டில்லி ஆட்சி ஹர மாயூனின் கைகளில் இருந்து நழுவி ஷெர்ஷாவின் கைகளுக்குப் போய் விட்டது. இந்த நிலையில்தான் ஹர"மாயூனின் தம்பி ஹிண்டாவின் ஆசிரியர் மகள் ஹமீதா பேகம் அவர் கண்களில் பட்டாள்! ஹமீதாவுக்கு 14 வயது. ஹ "மானுயூக்கு 33 வயது! நாடிழந்து, படைகள் இன்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிந்து மாநிலம் வந்த அவருக்கு மனதில் காதல் ஏற்பட்டது ஆச்சரியம் தான். காதலுக்கு நேரமும் காலமும் எந்த வகையிலும் முக்கியமில்லையே. 21 ஆகஸ்ட் 1541-ல் அவர்களின் திருமணம் முடிந்தது. ஹர"மாயூன் தனது தோல்விகளைமறந்து ஒன்பது மாதங்கள் புதிய மனைவியுடன் இன்பமாக இருந்தார். இந்த நேரத்தில்தான் மேவார் மன்னர் ராஜபுத்திரர் மல்தேவ் ஹர"மாயூனை தனது கோட்டைக்கு அழைத்தார்.
இந்திய வரலாற்றில் ஷெர்ஷாவின் ஆட்சி பிரமிக்கத்தக்கது. வெறும் குப்பையிலிருந்து கோபுரமாக உயர்ந்த மாபெரும் மனிதர் அவர். எனது சுற்றுப்பயணத்தில் ஷெர்ஷாவின் நினைவு கூறும் எந்த சரித்திர இடத்தையும் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை யென்றாலும், பிறகு சரித்திரத்தைப் புரட்டிய பொழுது அவரின் மாபெரும் சாதனைகளை அடுக்கடுக்காக அறிந்து இப்படியொரு மனிதனா என்று என்னை அதிசயிக்க வைத்தன. அவர் டில்லியைஆண்டது 5 ஆண்டுகள் தான் என்றாலும் 50 ஆண்டுகள்
157

Page 81
O மண்ணும் மனிதர்களும்
சாதிக்க முடியாத பலவற்றை சாதித்தவர் என்ற பெருமை இவருக்குப் போய் சேருகிறது. வங்கத்தையும் பஞ்சாப்பையும் இணைக்கும் மிகப் பெரிய ஹைவே இன்றுவரை பயன்படுத்தப் பட்டுவருகிறது. ஏறக்குறைய 2000 மைல் நீளமுள்ள இந்த ஹைவே"யை அமைத்தவர் ஷெர்ஷாதான். அக்ராவிலிருந்து ஜோத்பூருக்கு ஒரு பெரிய சாலையும், லாகூரிலிருந்து முத்தான் என்ற ஊருக்கு மற்றொரு சாலையும அமைத்தார். சாலைகளின் இருபுறமும் பழ மரங்கள் நட்டு வழிபோக்கர்களின் பசிப் பிணி போக்கினார். இரண்டு மைலுக்கு ஒரு கிணறும், பத்து மைலுக்கு ஒரு சத்திரமும் அமைத்தார்.சத்திரத்தில் இந்துக்கள் - முஸ்லிம்கள் தனித்தனியாக வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இந்த சத்திரங்களை தபால் நிலையங்களாக செயல்பட வைத்ததோடு குதிரைச் சவாரி செய்யும் இளைஞர்கள்மூலம் ஒவ்வொரு ஊருக்கும் தபால் பட்டுவாடா செய்யவும் ஏற்பாடுகள் செய்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சாவடிகளை அமைத்தார்.
‘இந்தியாவில் இரவில் ஒரு பெண் தனியாக என்று நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் வந்ததாக நான் கூறுவேன்’ என்று காந்தியடிகள் கூறினார்.
நிஜாமுதீன் அகமது என்ற வரலாற்று ஆசிரியர் இப்படி ஷெர்ஷாவின் ஆட்சி பற்றி எழுதுகிறார் :
ஒரு வனாந்திரப் பகுதியில் வயதான மூதாட்டி பெட்டி நிறையப் பொற் காசுகளை வைத்துக் கொண்டுதனியாக இரவில் தூங்கலாம். ஏனெனில் ஷெர்ஷாவின் ஆட்சியில் திருடர்கள் பயமே கிடையாது.
இந்து - முஸ்லிம் என்று பார்க்காமல் திறமையின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. 150,000 குதிரைப் படைகள், 25,000 காலாட் படைகள், ஒரு பீரங்கிப்படை, 300 யானைகள் அடங்கிய யானைப் படை இவரிடம் இருந்தன. தனது வீரர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தை அவரே முன்
158

சைபீர்முகம்மது O
நின்று வழங்கினார். இதனால் ஒவ்வொரு வீரனும் அவருக்கு அறிமுகமாகி இருந்தான்.
ஷெர்ஷாவின் பிரதம தளபதி ஓர் இந்து மதத்தவர். பிரம்மஜித் கொளர் என்ற பெயர் கொண்ட இவர்தான் ஹ "மாயூனை நாடு விட்டு நாடு நிம்மதியில்லாமல் துரத்தி துரத்தி விரட்டியவர்.
ஷெர்ஷாவின் படையெடுப்பை தாங்கமாட்டாமல்தான் இந்த சிந்து மாகாணத்தில் வந்து தலைமறைவாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார் ஹர"மாயூன்.
மேவார் மன்னர் ஷெர்ஷாவுக்கு எதிராக வேலை செய்கிறார் என்பதைஅறிந்துதான் மன்னர் மல்தேவின் அழைப்பை ஏற்று அங்கே தனது இளம் மனைவியுடன் புறப்பட்டார் ஹ"மாயூன். வழியில் அவருக்கு வேறு விதமான தகவல் வந்தது. ஷெர்ஷாவிடம் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு மால்வாரில் தன்னை கைது செய்து ஒப்படைக்க மன்னர் மல்தேவ் திட்டம் போட்டுள்ளார் என்ற செய்திதான் அது. பாதி வழியில் திரும்ப வேண்டிய தழ்நிலை. மனைவி ஹமீதா 8 மாத கர்ப்பிணி இந்த ஆழ்நிலையில் தான் ராஜஸ்தான் பாலைவனத்தின் 200 மைல்களை அவர் கடக்க வேண்டும். வழியில் ஹமீதா சவாரி செய்த குதிரை இறந்து விட மன்னர் தனது குதிரையை அவளிடம் கொடுத்துவிட்டு தனது சமையல்காரரின் ஒட்டகத்தில் அவர் பயணம் செய்தார்.
டில்லியை ஆண்ட ஒரு மன்னன் துன்பம் வரும்போது எப்படியெல்லாம் அனுபவிக்க வேண்டியுள்ளது பார்த்தீர்களா? ஹர"மாயூன் தோல்விகளின் இறுதிப் படியில் நின்ற நேரம் அது. என்றாலும் நம்பிக்கை மட்டும் அவர் மனதில் வேர் விட்டு நின்றது. இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால் அவரது சொந்த தம்பிகளே இன்னொரு புறம் இவருக்கு எதிராக படை திரட்டி நின்றதுதான். மாபெரும் மொகலாய ஆட்சியை அமைத்த பாபரின் மகனான ஹர"மாயூன் அடிக்கடி தனது தம்பிகளை மன்னிக்கும் மனப்பான்மையில் நடந்து கொண்டதால் அவருக்கு ‘வேட்டு’ வைத்தார்கள் அவரின் தம்பிகள்.
159

Page 82
O மண்ணும் மனிதர்களும்
பாலைவனத்தில் ஒட்டகம் மிகப் பரிதாபகரமாக எம்பி எம்பி நடந்து வந்த வேலையில் ஹமீதாபேகம் “எனக்கு மாதுளம் ԼյքLB சாப்பிட வேண்டும் என்று கேட்டார். 8 மாதகர்ப்பிணி மசக்கையில் மாதுளம் பழம் கேட்ட பொழுது மன்னர் திகைத்து நின்றார். அந்தப் பாலைவனத்தில் மாதுளம் பழத்துக்கு அவர் எங்கே போவார்?
அந்த நேரத்தில் ஒர் ஒட்டகத்தில் மாதுளம் பழம் ஏற்றிக் கொண்டு ஒரு வியாபாரி அந்த வழியாக வந்தார். பழம் வாங்கிக் கொடுத்துவிட்டு ஹ" மாயூன் இப்படி கூறினார்: “இந்த பாலைவனத்தில் கூட நீ கேட்டவுடன் மாதுளம்பழம் கிடைக்கிறதே? உன் வயிற்றில் இருப்பவன் யார்?’
பின்னர் உலகமே புகழ்ந்த அக்பர்தான் அந்த வயிற்றில் இருந்த குழந்தை.
பாலைவனத்தின் நடுவில் ராணா பிரதாப் என்னும் குறு
நில மன்னர் அவரை வரவேற்றார். அமர்கோட் என்ற அந்த சிறிய ஊரில்தான் 15 - அக்டோபர் 1542-ல் அக்பர் பிறந்தார்.
இந்த நேரத்தில் ஷெர்ஷாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 'காபூலிலிருந்து வந்த நீங்கள் காபூலுக்கே திரும்பிவிட வேண்டும் என்ற கடிதம் கண்டு மனம் கலங்கினார் ஹ"மாயூன்!
இந்தியா அவர் கையிலிருந்து ஷெர்ஷாவின் கைக்குப் போய்விட்டது. இனியாவது தனது தம்பிகளின் ஆதரவு கிட்டுமென்று நம்பி அவர் காபூல் புறப்பட நினைத்தார். ஆனால் காபூலை நிர்வகித்து வந்த அவரின் தம்பி கம்ரான் ஹ"மாயூனைப் பிடிக்க தனிப் படையை அனுப்பியுள்ளான் என்ற செய்தி கேட்டு மாஜி பாதுஷா மனம் நொந்து போனார். தனது மனைவி ஹமீதா மற்றும் 40 வீரர்களுடன் அவர் பாரசீகம் நோக்கிப் பயணத்தை மேற்கொண்ட பொழுது 16 மாதக் குழந்தையாக இருந்த அக்பரை செவிலித் தாய்களிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டார்.
ஹ"மாயூனின் பாரசீகப் புறப்பாடு நடந்த சில மணி நேரங்களில் அவரது தம்பி கம்ரான் அனுப்பிய படை அக்பர் இருந்த இடத்தை அடைந்தது. அந்தப் படையை வழி நடத்திக்
160

சைபீர்முகம்மது O
கொண்டு வந்தவர் அஸ்காரி என்ற ஹ"மாயூனின் மற்றொரு தம்பி! ஹராமாயூனைக் காணாமல் குழந்தை அக்பரை மட்டும் கண்ட அஸ்காரி என்ன செய்திருப்பான்? குழந்தையை கண்ட துண்டமாக வெட்டிப் போட்டிருப்பானென்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அஸ்காரி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி விட்டு தனது மனைவியிடம் ஒப்படைத்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அக்பரிடம் ஏதோ ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும்.
இதன் பிறகு சரித்திரம் ஜூமாயூன் பக்கம் திரும்பியது. பாரசிகம் சென்ற அவரை மன்னர் ஷா தாமாஸ்ப் உற்சாகமாக வரவேற்றார். அவரின் உதவியுடன் பெரும் படைதிரட்டி மீண்டும் டில்லியைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தார் ஹ"மாயூன். இடையில் பல போர்கள், ராஜதந்திரங்கள் எல்லாம்நடைபெற்றன. டில்லி அரியணையில் அது அவரின் இரண்டாவது அமர்வு! அவரின் தம்பி கம்ரான் கைது செய்யப்பட்டான். பின் கண்கள் இரண்டும் பழுக்கக் காய்ச்சிய துட்டுக் கோல்களால் தோண்டி எடுக்கப்பட்டு குருடாக்கப்பட்டான். அவனைக் கொல்லாமல் விட்டதே பெரிய விஷயம். பிறகு ஓராண்டு கழித்து கம்ரானுக்கு ஹ"மாயூன் தகுந்த சிகிச்சைகள் செய்து 'உன் பாவங்களுக்கும் நீ செய்த துரோகங்களுக்கும் ஆண்டவனிடம் மன்னிப்பு கேள்’ என்று கூறி ‘ஹஜ்’ யாத்திரைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். கம்ரான் திரும்பத்திரும்ப நான்கு முறை மெக்கா பயணம் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. 5 அக்டோபர் 1557 ஆம் ஆண்டு அவர் அரேபியாவிலேயே காலமானார். கம்ரான் இறந்த ஒரு வருடத்திற்குப் பின் டமாஸ்கஸ் நகரில் மிக நோய்வாய்ப்பட்டு அஸ்காரி இறந்தார். ஆனால் இவர்களுக்கு முன்பே 1556-ஆம் ஆண்டு ஹராமாயூனின் உயிர் பிரிந்து விட்டது.
ஹ"மாயூன் இறந்தநேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 14 வயது அக்பர் தளபதி பைராம்கானுடன் இருந்தார். ஹர"மாயூனின் இறப்புச் செய்தி வந்ததும், உடனடியாக கற்களால் ஒரு மேடை அமைக்கப்பட்டு கம்பளங்கள் விரிக்கப்பட்டு ஒரு நாற்காலி போடப்பட்டு டில்லியின் அடுத்த மன்னர் அக்பர் என்று
161

Page 83
O மண்ணும் மனிதர்களும்
பிரகடனப்படுத்தப்பட்டார். 14-பிப்ரவரி 1556ல் அந்த அவசர முடிதுட்டு விழா நடந்தது.
அக்பரின் பிறப்பே ஒரு பாலைவனத்து கிராமத்தில் நடந்தது. அதன் பிறகு டில்லிக்கு மன்னராக முடிதுட்டும். ஒரு பொட்டல் வெளியில் அவசர அவசரமாக நடத்தப்பட்டது. ஒருவன் எந்த தழ்நிலையில் பிறக்கிறான் எந்த துருழ்நிலையில் பதவியேற்கிறான் என்பது முக்கியமல்ல. அவன் எப்படி வாழ்ந்தான், மக்களுக்கு என்ன செய்தான் என்பதே சரித்திரத்தில் குறிப்பிடப்படும் முக்கிய செய்தியாகும்.
அக்பர் பதவியேற்ற அந்த மேடை இன்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு வயல் காட்டின் நடுவே இருக்கிறது.
அக்பர் பதவியேற்ற பொழுது அவருக்கு 14 வயதுதான். ஆனால் பிரதம தளபதி பைராம்கான் பக்க பலமாக இருந்து உதவிகள் புரிந்தார். ஹ"மாயூன் இறப்பதற்கு முன்பே பைராம் கானிடம் அக்பரை ஒப்படைத்திருந்ததோடு தனக்கு ஏதும் நடந்தால் சகல பொறுப்புகளையும் ஏற்று அக்பரை வழி நடத்தும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
அக்பரின் ஆட்சி மலர்ப் படுக்கையாக இல்லை. அவர் ஆட்சிக் கட்டிலில் ஏறிய பொழுது டில்லியைச் சுற்றிலும் முட்களே நிறைந்திருந்தன. ஹ "மாயூன் முதல் முறையாக நாடிழந்து பாரசீகம் சென்ற பொழுது ராஜபுத்திரர்கள் தங்களது படை பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். 1555-ல் ஹராமாயூன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பொழுது தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ள போதுமான அவகாசம் இல்லாமலேயே இறந்துவிட்டார். அக்பருக்கு அந்த 'நடுக்காட்டில் சூட்டப்பட்ட மகுடம் ஹுமாயூனின் அடுத்த வாரிசு என்று சொல்வதற்குப் பயன்பட்டதே அன்றி உண்மையில் ஆட்சி செய்வதற்கு அவருக்கு நாடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராஜபுத்திரர்கள் மொகலாயர்களை எதிர்த்து தங்களை வளர்த்துக் கொள்ள தக்க தருணம் இதுதான் என்று முடிவு கட்டி நின்ற வேளை அது. மேவார். ஜய்சாமீர், பூண்டி,ஜோத்பூர் கோட்டைகளை வைத்திருந்த ராஜபுத்திரர்கள் தங்களின் பலத்தை பலமடங்காகப் பெருக்கிக் கொண்டார்கள். குஜராத், மலாவா
162

சைபீர்முகம்மது O
மாநிலங்கள் தங்களை சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. மிர்ஸா அக்கிம் என்ற அக்பரின் சகோதரர் ஆட்சியில் காபூல் சுதந்திரமாகச் செயல்பட்டது. மத்திய பிரதேசத்தில் அப்பொழுது கோண்ட் லானா’ என்றழைக்கப்பட்ட இடத்தை ராணி துர்க்காவதி தனது 'மைனர்' மகனின் சார்பில் ஆண்டு வந்தார். சுற்றிலும் பகை துழிந்த வேளையில் அந்த முடிதுட்டு விழா எதிரிகளுக்கு இன்னும் தைரியத்தைக் கொடுத்தது!
அக்பர் டெல்லி திரும்பும்வரையிலும் தார்தி பெஹற்கான்என்ற மற்றொரு தளபதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்த நேரத்தில் ஹேமு என்ற ஒரு புதிய தலைவலி ஏற்பட்டது.யார் இந்த ஹேமு?
ஒரு சாதாரண வியாபாரியாக இருந்து அமைச்சர்நிலைக்கு உயர்ந்தவர். “தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை, உயர் குலம் என்று சொல்லி ஷெர்ஷாவின் ஆட்சிக்குப் பிறகு வந்த ஆதில்ஷாவிடம் அமைச்சரானவர். குள்ள மதியும் நரித்தந்திரமும் கொண்டவர். எப்படியும் டில்லியின் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டுமென்று துடித்தவர். ஒரு இந்துவான ஹேமு. ஷெர்ஷாவின் வம்சம் சிதறிய பிறகு ஒரு படையைத் தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டே இருந்தார்.
ஹ"மாயூன் இறந்த பிறகு அக்பர் பஞ்சாப்பில் முடி தட்டிக் கொண்ட நிலையில் ஹேமு பெரும் படையுடன் டில்லியை முற்றுகையிட்டு வெற்றியும் பெற்றார். தனது ஹேமு என்ற பெயர் தனது குலத்தைக் குறிக்குமோ என்று நினைத்து உடனடியாக தனது பெயரை ‘ராஜவிக்கிர மஜித்’ என்று மாற்றிக் கொண்டார். தனது பெயரில் புதியநாணயங்களை அச்சிட்டு இனி இதுதான் செல்லு மென்றும்அறிவித்தார். -
டில்லி ஆளுநராக அக்பரால் நியமிக்கப்பட்ட தார்தி பெஹற்கான் ஒடி ஒளிந்த இடம் தெரியவில்லை.
இந்த நிலையில் பஞ்சாப்பில் மொகலாயப் படை கதி கலங்கி நின்றது. இனி டில்லி திரும்ப வேண்டாம் காபூலுக்கே ஒடி உயிர் பிழைத்துவிடலாமென்று அக்பருக்கு ஆலோசனை கூறப்பட்டது.
-163

Page 84
O மண்ணும் மனிதர்களும்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். அதுபோல 14 வயது அக்பர் போர் உடை புனைந்து வெளிக்கிளம்பினார். பைராம்கானின் வழி காட்டுதலோடு 1556 ஆம் ஆண்டு ‘பானிபட்’ என்ற ஊரில் ஹேமுவின் படையும் அக்பரின் படையும் மோதின. எந்த பானிபட் போரில் அக்பரின் தாத்தா பாபர் மாபெரும் வெற்றியைப் பெற்றாரோ அதே பானிபட்டில் பேரன் அக்பர் தனது மொகலாய சாம்ராஜியத்தை மீண்டும் நிலைநாட்ட போரில் குதித்தார்.
இந்த நேரத்தில் டில்லி, அக்ரா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வறுமை தாண்டவமாடியது. மக்கள் பசியால் இறந்து கொண்டிருந்தார்கள். வறுமையான நேரத்தில் மக்கள் போரையும் சந்திக்க நேர்ந்தால் அது எவ்வளவு கொடுமை என்பதை அந்த பானிபட் போர் நிரூபித்துக்கொண்டிருந்தது.
ஹேமு தானே யானையின் மீது அமர்ந்து போர் புரிந்தார். பிறவியில் ஏழை என்றாலும் பிறகு தன்னை ‘செளத்ரி’ வம்சம் என்று சொல்லி வளர்த்துக் கொண்டவர். எதிர்காலக் கனவுகள் நிறைந்தவர். சிறிது காலம் ஆட்சியில் ‘ராஜ விக்கிரமஜித்தாக அமர்ந்து அரச சுகம் கண்டவர். சும்மா விடுவாரா? கடுமையான போர்! இந்த நேரத்தில் அவரின் கண்களை துளைத்துக் கொண்டு அம்பு ஒன்று பாய்ந்தது! ஹேமு மயக்கமுற்றார்.கண் வழியாக பாய்ந்த அம்பை பிடுங்கிய பொழுது குருதி கொப்பளித்து வெளிக் கிளம்பியது! ஹேமுவின் நிலை கண்ட அவரின் படை நிலை தடுமாறியது! 1500 யானைப் படையை அக்பரின் படை சுற்றி வளைத்தது.ஹேமுவின் தளபதிகள் தப்பி ஓடி விட்டார்கள்.
ஹேமு சிறைபிடிக்கப்பட்டார். அக்பரின் முன்னிலையிலும் பைராம்கானின் மேற்பார்வையிலும் கட்டி இழுத்து வரப்பட்ட ஹேமுவின் கழுத்தை அக்பர் தன் வாளால் துண்டாக்கினார் என்று ஸ்மித் என்ற சரித்திர ஆசிரியர் குறிப்பிடுகிறார். அரிப் கந்தாரி என்கிற வரலாற்றாசிரியரும் இதையே ஆமோதித்து எழுதியுள்ளார். ஆனால் டாக்டர் பூரீவத்ஸா வேறுவிதமாகக் கூறுகிறார். அதாவது "ஹேமு காயம்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அப்படியுள்ள ஒருவனைக் கொல்வது என் மனசாட்சிக்கு விரோதமானது' என்று கூறியதாக அவர் எழுதி
164 f

சைபீர்முகம்மது O யுள்ளார். அப்துல் பைசால் என்பவர்தான் அக்பரின்அன்றாட வாழ்க்கையை ஒன்று விடாமல் எழுதியவர். "அக்பர் நாமா' என்ற இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2506 பக்ங்களில் வெளிவந்துள்ளது. அக்பரது ஆட்சியின் மற்றொரு பகுதியை 'அயன் இ அக்பரி 1482 பக்கங்களில் எழுதியுள்ளார்: இதில் அக்பர் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட ஹேமுவின் முடிவை இப்படி எழுதியுள்ளார்கள். அவர் தனது வாளை ஹேமுவின் கழுத்தில் வைத்து சம்பிரதாயமாக பின் எடுத்துவிட்டார். 14 வயதே நிரம்பிய அவரின் பிரதிநிதியாக இருந்த பைராம்கானின் வாளே அகலவாக்கில் பாய்ந்து ஹேமுவின் தலையைத் துண்டித்தது!’
இதன் பிறகு தார்தி பெஹற்கான் தேடப்பட்டார். அவர் பொறுப்பில் நாடு இருந்தபொழுது ஒரு கோழை போல் ஓடி ஒளிந்து கொண்டு டில்லியை பாதுகாப்பின்றி விட்டதற்காக அவருக்கு மரண தண்டனையை பைராம்கான் வழங்கினார்.
தார்தி பெஹற்கான் ஒரு துருக்கிய கல்விமான். ஹ "மாயூன் காலத்தில் அரச சபையில் இவருக்கு பெரு மதிப்பு இருந்தது. ஹுமாயூனின் இறப்புக்குப்பின் உடனடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் நிலையில் அக்பர் இல்லை.அவர் பஞ்சாப்பில் இருந்தார். இந்த நிலையில்தான் தார்தி பெஹற்கான் 17 நாட்கள் ஆட்சியில் அமர்ந்து எந்தவித பேராசையும் கொள்ளாமல் டில்லியை நிர்வாகித்து வந்தார். பெரும் படையுடன் திடீரென்று புகுந்து ஹேமுவை சமாளிக்க முடியாமல் அவர் வெளியேறியதை வைத்து பைராம் கான்தான் அவரைக் கொன்றார். அவரைக் கொன்ற பிறகே அக்பருக்கு அறிவிக்கப்பட்டது. சிறுவனாக இருந்த அக்பரால் அப்பொழுது பைராம் கானை மிஞ்சி எதுவும் பேச முடியவில்லை. பிற்காலத்தில் பைராம்கானின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு.காரணமாக அமைந்து விட்டது என்றே சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில் பைராம்கானுக்கும் தார்தி பெஹற் கானுக்கும் பகை இருந்துள்ளது. தார்தி பெஹற்கானின் அரச செல்வாக்கு பல சந்தர்ப்பங்களில் பைராம்கான் கண்களை உறுத்தியுள்ளது.பைரம்கான் ஷியா முஸ்லிமாகவும் தார்தி பெர் கான் சன்னி முஸ்லிமாகவும் இருந்த காரணத்தால் இந்த பகை
1.65

Page 85
") மண்ணும் மனிதர்களும்
ஆரம்பந்தொட்டே வளர்ந்து வந்துள்ளது. மொகலாயர் ஆட்சியில் இந்த வியா - சன்னி முஸ்லிம் அரண்மனைக்குள் பல பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது. அதன் உச்சகட்டம்தான் தார்தி பெஹற்கான் கழுத்து சிவப்பட்டது என்று சரித்திர ஆசிரியர்1SHWARI PRASAD கூறுகிறார்.
எது எப்படியோ, இந்த தண்டனையை அக்பருக்குத் தெரியாமலேயே நிறைவேற்றி விட்டு பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஒரு முறை யானைக்கு மதம் பிடித்து அருகில் இருந்த பைராம்கானின் யானையை அது மோதித் தள்ளி விட்டது. கோபமுற்ற பைராம்கான் யானைப் பாகனை அங்கேயே வெட்டிச் சாய்த்து விட்டார். இதை கேள்விப்பட்ட அக்பர் யானைக்கு மதம் பிடித்தால் பாகன் என்ன செய்வான்? நீங்கள் அவனைக் கொன்றது மிகப் பெரிய தவறு என்று நேரடியாகவே சுட்டிக் காட்டினார்.
அப்பொழுது அக்பருக்கு 17 வயது. தனது பலத்தால்தான் அக்பர் ஆட்சியில் இருக்கிறார் என்ற மமதையில் அவர் செய்த பலகாரியங்கள் அக்பருக்கு பெருத்த தலைவலியைக் கொண்டு வந்தன. இருவருக்கிடையில் தலைமுறை இடைவெளி உருவாகியது!
சாதனைகள் செய்த சக்கரவர்த்தி
ைெபராம்கானின் நேரிடைப் பார்வையில் தனது ஆட்சியை மேலும் நீடிக்க அக்பர் விரும்பவில்லை.தனக்கென்று ஒரு தனித்துவம் உண்டு என்பதை அக்பர் நிரூபிக்க விரும்பினார். யாருடைய பாதுகைக்குள்ளும் தனது பாதங்கள் இருக்க வேண்டாமென்று,அவர் தீர்மானித்தார்.
பதினேழு வயதில் அவர் அப்படியொரு முடிவெடுக்க அரண்மனையிலும் சில தூண்டுதல்கள் இருந்தன. பைராம்கான் ஷியா முஸ்லிம். அரண்மனையில் பெரும்பான்மையினர் சன்னி முஸ்லிம்கள், டில்லியின் மூத்த இமாமாக ஒரு வியா முஸ்லிமை
166

சைபீர்முகம்மது O
பைராம்கான் நியமித்தார். இது அக்பரை கேட்காமலே செய்யப்பட்டது. இந்த பதவி நியமனம் பல சந்தேகங்களைக் கிளப்பியது. சிறிது சிறிதாக தனது பலத்தைப் பெருக்கி ஆட்சியை பைராம்கான் கைப்பற்ற நினைக்கிறார் என்ற தகவல் அக்பரிடம் சொல்லப்பட்டது. அக்பரின் தாயார் ஹமீதா பேகம் மற்றும் செவிலித் தாயார் மஹாம் அன்னகா ஆகியோரை சந்தித்த பிறகு அக்பர் ஒரு முடிவெடுத்தார்.
பைராம்கான் பதவி துறப்பது என்றும், மாதம் 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு உதவித் தொகை வழங்குவதெனவும், உடனே அவர் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்கு அரசு சகல வசதிகளும் செய்து கொடுக்கும் என்றும் கூறும் செய்தி கேட்டு பைராம்கான் உண்மையில் அதிர்ந்து போனார். இதை பாதுஷாவே நேரில் சொல்லாமல் வேறு ஒருவரின் மூலமாக அவருக்குச் செய்தி வந்த பொழுது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் அரச கட்டளையை ஏற்று தனது பயணத்தைத் தொடர்ந்தார். தனது நெருங்கிய நண்பர்களோடு பஞ்சாப் வரை போன பைராம்கானின் மனம்மாறியது. ‘எனக்கென்று ஒரு வீரம் இருக்கிறது. இந்த அக்பரை நானே தோளிலும் நெஞ்சிலும் தூக்கி வளர்த்தேன். அப்படி இருந்தும் என்னை இப்படி கடைசி நேரத்தில் கழட்டிவிட்டாரே என்று அவர் மனம் மிகவும் வேதனையடைந்தது. கூட இருந்த நண்பர்கள் வேறு தூபம் போட்டார்கள்.
அரசியல் எப்பொழுதுமே தொண்டர்களுக்கு கருவேப்பிலை கதைதான்! தலைவர்கள் முடிந்த மட்டும் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். காரியம் முடிந்ததும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். உதவி என்று போனால் காக்க வைத்தே திருப்பி அனுப்பி விடுவார்கள். அல்லது உதவி செய்வது போல் அடுத்த பக்கம் டெலிபோனில் பேசி ‘உங்களுடைய எல்லா விஷயமும் சொல்லி விட்டேன். அவர் கவனிப்பதாகச் சொல்லி விட்டார். விரைவில் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்’ என்று ஒரு போலி நாடகம் நடத்தி இந்தத் தொண்டர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள். உண்மையில் டெலிபோனில் மறுமுனையில் யாரும் பேசியே இருக்க மாட்டார்கள்.
167

Page 86
k) மண்ணும் மனிதர்களும்
பைராம்கானின் நிலையைக் கேள்விப்பட்ட பொழுது எனக்கு 60களில்"கண்ணதாசன்’ இதழில் கண்ணதாசன் எழுதிய ஒரு குட்டிக்கதை ஞாபகத்துக்கு வந்தது.
தெருவில் ஒருவன் ‘ஏணி, தோணி 'வாத்தியார்’ என்று கூவிக் கொண்டே போனான். அதைக் கேட்ட ஒரு அரசியல் தொண்டன் அவனை அழைத்து, “ஏனப்பா அப்படி ஏணி, தோணி, வாத்தியார் என்று கூவிக் கொண்டு போகிறாய்’ என்று கேட்டான். அதற்கு அவன் ‘ஏணி பலரை மேலே உயர்த்தப் பயன்படும்.
ஆனால் அது இருந்த இடத்தில் தான் இருக்கும். தோணி
மனிதர்களை இக்கரைக்கும் அக்கரைக்கும் எடுத்துச் செல்லும் அதுவும் தண்ணிருக்குள்ளேதான் கிடக்கும். வாத்தியார் பலரை டாக்டராகவும் வக்கீலாகவும். இன்ஜீனியராகவும் ஆக்கி விடுவார். ஆனால் அவர் அதே பள்ளிக்கூடத்தில் எந்த வகுப்பில் கற்பிக்க ஆரம்பித்தாரோ அதே வகுப்பிலேயே இருப்பார் என்றான்.
இதைக்கேட்ட அரசியல் தொண்டன், ‘அப்பா. இனி ஏணி தோணி வாத்தியாரோடு அரசியல் தொண்டனையும் சேர்த்து கூவிக் கொண்டு போ’ என்றானாம். அவனும் ‘ஏணி, தோணி, வாத்தியார், அரசியல் தொண்டன்’ என்று மூச்சு வாங்கக் கூவிக் கொண்டே போனான்.
பஞ்சாப் வரை வந்துவிட்ட பைராம்கான் தனது நிலையை மீண்டும் நிலைநாட்ட விரும்பினார். அக்பரோடு மோதுவதற்கு அவர் தன்னை தயார் படுத்தினார். இதை அறிந்த அக்பர் தனிப்படை ஒன்றை அனுப்பி பைராம்கானுடன் மோதினார். கைது செய்யப்பட்ட பைராம்கான் மரியாதையுடன் நடத்தப்பட்டு அக்பரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.
அக்பரின் உருவம் உயரமானது அல்ல. அகன்ற மார்பும் நீண்ட கைகளும் கோதுமை நிறமும் கொண்டவர். அவருக்கு அழகான முகம் என்று சொல்ல முடியாது. அக்பரின் மூக்கின் கிழே இடது நாசித் துவாரத்துக்கு வெகு அருகில் மச்சம் ஒன்று உண்டு. இதுவே அவருக்கு இந்தியாவை ஆளும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாக ஜோதிடர்கள் கூறியுள்ளார்கள். பேசும் பொழுது மிகுந்த ஆர்வமுடன் பேசும் விஷயம் குறித்து முகத்தில்
168

சைபீர்முகம்மது O
ஈடுபாட்டுடன் பேசுவார். எப்பொழுதும் உரத்த குரலில் பேசுவார். தனது தந்தையைப் பற்றி இப்படித்தான் ஜஹாங்கிர் எழுதி வைத்துள்ளார்.
பாதுஷாவின் முன் நிறுத்தப்பட்ட பைராம்கான் பழைய பாசத்துடன் அவரை நோக்கினார். அக்பரும் அவரை தன்னருகில் அமர வைத்து மரியாதை செலுத்தினார்.
‘பைராம் உங்களுக்கு என்ன வேண்டும்? என்னை தூக்கி வளர்த்தவர் நீங்கள். போர் தொடுக்க வேண்டுமா? இன்னும் நமது ஆட்சிக்குக் கட்டுபடாத பல கோட்டைகள், மாநிலங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடிக்க வேண்டுமா? அல்லது ஓய்வாக எனது பக்கத்திலேயே இருக்க வேண்டுமா? சொல்லுங்கள்’ என்று கேட்டார்.
பதினேழு வயதே நிரம்பிய அக்பரின் பார்வைக் கூர்மையும், குரலில் தொனித்த சக்கரவர்த்தி என்ற கம்பீரத் தொனியும், அதற்கு மேல் அவர் மேல் காட்டிய கனிவும் இனி இவர் தனித்து இயங்கக் கூடிய சகல பயிற்சிகளும் அடைந்து விட்டார் என்பதை பைராம்கானுக்குச் சொல்லாமல் சொல்லிக் காட்டின.
‘பாதுஷா என்னை மன்னித்ததே பெரிய காரியம். உங்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் நான் இங்கே இருப்பது சரியாக இருக்காது. நம் இருவருக்கும் அது சங்கடத்தைத் தரும். எனவே நான் மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்கிறேன்’ என்று பைராம்கான் கூற, சகல மரியாதைகளுடன் அவர் மெக்காவுக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் வழியில் மற்றொரு சோகம் நடந்தது. குஜராத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பைராம்கான் நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ன்பராம்கானை ஆப்கானிய இளைஞன் முபாராக் லோஹானி நெருங்கிவந்து ‘அக்பரோடு போரிட்ட பொழுது சிக்கந்தர்ஷா சார்பில் கைதியாக்கப்பட்ட என் தந்தையின் தலையை எந்த விசாரணையும் இன்றி தாங்கள் துண்டாக்கினீர்கள். அது உங்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகிறேன்’ என்று கூறியவாறு யாரும் எதிர்பாராத வகையில் தனது இடுப்பில் மறைத்து
169

Page 87
O மண்ணும் மனிதர்களும்
வைத்திருந்த குறுவாளை எடுத்து பைராம்கான் நெஞ்சிலும் வயிற்றிலும் பாய்ச்சினான். இந்தியாவின் மாபெரும் சக்கர வர்த்தியை உருவாக்கிய பைராம்கானின் உடல் மண்ணில் சாய்ந்தது. அதோடு அவரின் கதையும் முடிந்தது.
அக்பருக்குச் செய்தி எட்டியது. மனிதாபிமானமும் நேர்மையும் கொண்ட பாதுஷா, பைராம்கான் குடும்பத்தை அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டார். அதோடு நான்கே வயது நிரம்பிய அப்துல் ரகிம் என்ற பைராம்கானின் மகனுக்கு அவரே பாதுகாவலராக இருந்தார். பிற்காலத்தில் அக்பரின் அரச சபையில் மிகத் திறமையான புத்திசாலியான பிரபுக்களாக விளங்கியவர்களில் இந்த ரகிமும் ஒருவர்!
அக்பரின் வாழ்க்கையில் பாதி ஆயுள் போர்க்களத்திலேயே கழிந்தது. “உண்மையான மன்னன் ஒய்வெடுக்க முடியாது. நாட்டு மக்களின் நன்மைக்காக தொடர்ந்து போர் புரிந்து தனது எல்லைகளை விரிவாக்க வேண்டும். அப்பொழுதுதான் நாட்டின் நிதி நிலை நன்றாக இருக்கும்’ என்று கூறியவாறு அவர் போர்க்களத்தில் பெரும் பகுதி நாட்களை செலவிட்டார்.
போர் நடக்காத காலங்களில் காட்டுக்கு வேட்டைக்குச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். வேட்டையாடு வதில் அவருக்கு தனி விருப்பம் இருந்தது!
தனது ஓய்வு நாட்களில் அஜ்மீர் சென்று க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி என்ற ஞானியை சந்திக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் штgыongт.
அப்படி ஒருமுறை செல்லும் பொழுது ஜெய்ப்பூருக்கு வருகை புரிந்தார். அங்கே ராஜபுத்திர மன்னர் பிஹாரிமால் ஆட்சியில் இருந்தார். அக்பரை அன்போடு வரவேற்று உபசரிக்கும் வேளையில் பிஹாரியின் மகள் மேல் கண் நோக்க, அவள் நிலம் நோக்க, காதல் மலர்ந்தது. பிறகு அது திருமணத்தில் முடிந்தது. ஜெய்ப்பூர் இளவரசியின் அதாவது அக்பரின் புதிய மனைவியின் தம்பி பகவான்தாஸ் அமைச்சர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இந்த உறவின் மூலம் நீண்ட காலமாக மொகலாயர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இருந்து வந்த பகை' பெருமளவில்
17O

சைபீர்முகம்மது O
தணிந்தது எனலாம். சில அரச உறவுகள் இப்படித்தான் நாட்டின் எல்லைகளை விரிவாக்க பல வகைகளில் உதவும்.
அக்பருக்கு திருமணம் நடந்ததேயொழிய பிள்ளைப் பேறு கிடைக்க வில்லை. பல சந்தர்ப்பங்களில் மனைவிக்கு குறைப் பிரசவங்கள் ஏற்பட்டன. அல்லது குழந்தை பிறந்து இறந்தது. இதன் காரணமாக அக்பர் மிகவும் மன வேதனைப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக அவர் மீண்டும் அஜ்மீர் சென்று க்வாஜா மொய்னுதீன் சிஷடியைச் சந்தித்தார். அவரும் கொஞ்ச நாள் இங்கே அஜ்மீரில் நீ உன் மனைவியுடன் தங்கு. நிச்சயம் குழந்தைப் பேறு உண்டாகுமென்று கூறினார். தனது ஜெய்ப்பூர் இளவரசியோடு அக்பர் அஜ்மீரில் தங்கினார். இந்த ‘தங்கலுக்கு பின்தான் குழந்தை தங்கியது! அந்த குழந்தைதான் சலீம் என்ற ஜஹாங்கிர்!
அக்பர் ஆரம்பித்த புது மதம்
அக்பர் தனது எல்லைகளை விரிவாக்கி கொண்டே போனார். அது வரையில் எதிரியின் காலடியில் விழாத சித்தூர் கோட்டையும் அவரின் ஆட்சியின் கீழ் வந்தது.
அக்பர் அக்ராவுக்கும் டில்லிக்கும் இடையில் ஒரு தலைநகரை உருவாக்க எண்ணினார். அதுதான் ஃபதேபூர் ஸிக்ரி! இன்று ஒரு சுற்றுப் பயணத் தலமாக மட்டுமே பரிதாபகரமாக காட்சியளிக் கிறது. 15 ஆண்டுகள் மட்டுமே அக்பர் இங்கே இருந்து ஆட்சி செய்தார். பின் ஏனோ யாரிடமும் சொல்லாமல் தனது தலைநகரை அக்ராவுக்கு மாற்றிக் கொண்டார்.
இந்த ஃபதேபூர் ஸிக்ரியில்தான் அப்துல் பைசல் என்ற அறிஞரை அக்பர் சந்தித்தார். இவர்தான் பிற்காலத்தில் பாதுஷாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்து ‘அக்பர் நாமா' என்ற வரலாற்று நூலை எழுதியவர்.
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று வரலாற்று ஆசிரியர்கள்
.171

Page 88
1) மண்ணும் மனிதர்களும்
கூறுகிறார்கள். அப்துல் பைசல் மட்டும் எழுதாமல் இருந்திருந்தால் அக்பரின் வரலாறு முழுமையாக கிடைக்காமல் போயிருக்கும். ஹ"மாயூன் தனது மகன் அக்பரின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தினார். ஆனால் மகனோ படிப்பதாக இல்லை. ‘போரிடுவது எனது வேலை, போரிட்டு எனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த கல்வி தேவையில்லை, என்பது அவர் வாதம். யானை குதிரை சவாரி செய்வது, வாள் சுழற்றுவது என்று தனது இளமையைக் கழித்தவர் அவர்.
அக்பர் கல்வி கற்கவில்லையே தவிர பிற்காலத்தில் ஏகப்பட்ட நூல்களை படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். ஃபதேபூர் விக்ரியில் தனி நூலகம் ஏற்படுத்தி 24,000 நூல்களைச் சேகரித்து வைத்தார். பிறமொழி நூல்களை மொழி பெயர்த்து தனது நூலகத்தில் பைண்ட் செய்து வைத்துப் பிறர் படிக்கக் கேட்டு தனது அறிவை வளர்த்துக் கொண்டார். தனது அட்சியில் தனிப் பிரிவையே உண்டாக்கி ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண நூல்களை பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்க வைத்தார். அறிஞர் பாதானி அக்பரின் கட்டளைக்கு இணங்கி மேற்கண்ட நூல்களை மொழி பெயர்த்தார். இப்ரஹிம் சிர்ஹிண்டி என்ற மற்றொரு அறிஞர் அதர்வண வேதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்க்க அக்பர் ஏற்பாடு செய்தார். தனது அரண்மனை யில் பல கலைஞர்களை, ஒவியர்களை, கவிஞர்களை உருவாக் கினார். -
பிற்காலத்தில் ஃபதேபூர் ஸிக்ரியில் மகான் சலீம் சிஷ்டியிடம் அதிக பக்தி கொண்டு அவரை தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். இன்றும் சலீம் சிஷ்டியின் அழகிய கல்லறை மிக புனிதமாக ஃபதேபூர் ஸிக்ரியின் கோட்டைக்குள் அழகிய பளிங்குக் கல்லில் நிமிர்ந்து நிற்கிறது. இந்தியக் கதைகளில் மிகப் பிரபலமான பெயர் பீர்பால், அக்பரின் அரச சபையில் ஒரு அறிவு நிறைந்த ஞானியாக - அமைச்சராக - தளபதியாக - இருந்தவர் இவர். ஏழ்மையான பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரின் உண்மைப் பெயர் மகேஸ்தாஸ். பீர்பாலுக்கு தனி மாளிகையை தனது அரண்மனைக்குப் பக்கத்திலேயே கட்டிக் கொடுத்தார் பாதுஷா. வெற்றிலை போடும் பழக்கத்தை அக்பரின் அரச சபைக்குக்
172

சைபீர்முகம்மது O
கொண்டு வந்தவரே இந்த ர்பால்தான். நகைச்சுவையாக எந்த பிரச்சினையையும் தீர்த்து வைக்கும் அபார ஆற்றல் அவருக்கு ସ୍ଥି(5|b&&!.
ஃபதேபூரில் எல்லா மதங்களையும் சேர்ந்த மதகுருமார்களை அழைத்து விவாதங்கள் நடத்தினார் அக்பர். இதற்காகவே ‘இராதத் - கானா’ (வழிபாட்டு இல்லம்) ஒன்றை அமைத்தார். அக்பருக்கு மிக நெருக்கமாக இருந்த அப்துல் பைசல் எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் துஃபியாக இருந்தவர். பாதுஷாவிடம் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருந்தது. இவரது ஆட்சியில் இந்து மதம் ஜைன மதம், மற்றும் குருநானக் ஏற்படுத்திய சிக்கிய மதம், யூத மாதம் என்று பெரிய சர்ச்சைக்கிடையில் சாதிகள் வேறு தல்ை தூக்கி ஆடின. இதற்கிடையில் பாபரின் ஆட்சியின் பொழுதே இந்தியாவில் காலூன்றிய போர்ச்சுக்கிசியர்கள் கோவாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் பணியில் இறங்கி இருந்தார்கள். அக்பரின் புதிய வழிபாட்டு இல்லத்தில் வாதங்கள் துடேறினவே தவிர உண்மைகள் மிக அரிதாகவே வெளிப்பட்டன. ஒவ்வொரு குருமாரும் தங்களது மதமே பெரிது என்று கூறி அதையே பின்பற்றும்படி மன்னரை வலியுறுத்தினார்கள்.
கடைசியில் அக்பர் தனியாக ஒரு முடிவெடுத்தார். எல்லா குருமார்களும் ஏமாற்றம் அடையும் வகையில் தானே ஒரு புதிய மதத்தை ஒருவாக்கினார். அதற்கு 'தீன் - இல்லாஹி’ (கடவுளின் மதம்) என்றும் பெயரிட்டார். அப்போதைய துழிநிலையில் இந்து முஸ்லிம் ஒற்றுமை தேவைப்பட்டதால் இப்படியொரு ‘புதிய மதத்தைத் தோற்றுவிக்க அவருக்கு எண்ணம் வந்திருக்கலாம். தனது புதிய நாணயங்களில் ‘அல்லாஹர7 அக்பர்’ என்ற வாசத்தைப் பொறித்தார். இது முஸ்லிம்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது எனலாம். அல்லா பெரியவன் என்று சொல்ல நினைத்தாரா, இல்லை தானே கடவுள் என்று நிரூபிக்க முயற்சித்தாரா என்று முனு முணுக்க ஆரம்பித்தார்கள். அக்பருக்குப் புகழ் பாட மட்டுமே இந்த மதம் இருந்தது. அவரின் மறைவுக்குப் பின் ‘தீன்-இல்லாஹி’யும் மறைந்து விட்டது.
இந்துக்கள் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காகவே சிவராத்திரி போன்ற பண்டிகைகளின் பொழுது இவர் விரதம்
173

Page 89
O மண்ணும் மனிதர்களும்
இருக்க ஆரம்பித்தார். அக்பரை சந்திக்கும் பிராமணர்களும் சாமியார்களும் அவர் கடவுளின் அவதாரம் என்றே பேச ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு அவதார மனிதர் தோன்று வாரென்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஒலைச் சுவடிகளில் கூறப்பட்டுள்ளது என்று கூறி போலியான ஒலைச் சுவடிகளைத் தயாரித்து மன்னருக்குக் காட்டி பெரும் பொருளை சன்மானமாகப் பெற்றுச் சென்றார்கள்.
போகப் போக மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி "சுத்த சைவமாகி விட்டார் அக்பர். ஒரு பிராமணர் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத சுலோகத்தை ஆயிரத்தெட்டு முறை அதிகாலையில் சூரியனை நோக்கி முணுமுணுக்கவும் ஆரம்பித்து விட்டார்.
இஸ்லாத்தின் நெறிமுறைகளை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றவர் அக்பர் என்று வரலாற்று அறிஞர் பாதானி எழுதுகிறார்.
ஆனால் தனது தந்தையைப் பற்றி ஜஹாங்கிர் இப்படி கூறுகிறார் : “ எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை அவர் ஏற்றுக் கொண்டார். மனத்தளவில் உண்மையான முஸ்லிமாகவே அவர் இருந்து வந்தார். கடைசிவரை ஐந்து வேளை தொழுகையை அவர் கடைப்பிடித்து வந்தார்.
அக்பர் ஆட்சிக்கு வருவதற்கு முன் 500 ஆண்டுகளாக இந்தியாவில் வலுவான முஸ்லீம் அட்சி அமைய முடியவில்லை. அக்பர் மட்டுமே இந்துக்களை அரவணைத்துக் கொண்டு செல்லும் புதிய முறைகளைக் கையாண்டார். இதன் மூலம் நிலையான, அமைதியான மொகலாய ஆட்சி அமைய அவர் வழி ஏற்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
1563 ஆம் ஆண்டில் மதுரா நகரில் அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயத்துக்கு அவர் வருகை புரிந்தார். அங்கே வரும் பக்தர்களுக்கு - அதாவது இந்து மதத்தவருக்கு - தனியாக வரி விதிப்பதைக் கண்ட பாதுஷா ஆத்திரமுற்று உடனே அந்த வரியை ரத்து செய்தார். இது இல்லாமல் இந்து மதத்தவர்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அப்பொழுது 'ஜிஸியா’ என்னும் வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த வரியையும் உடனே நிறுத்தும்படி
174

V சைபீர்முகம்மது O ஆணையிட்டார். 'எனது ஆட்சியில் இந்துக்கள் - முஸ்லிம்கள் அனைவரும் சமமே. அனைவரும் எனது குடிமக்கள் தான்’ என்று கூறினார்.
ஆகஸ்ட் 12, 1602 - ல் ஜஹாங்கீர் மிக மோசமான ஒரு காரியத்தைச் செய்தார். அக்பருக்கு மிக நெருக்கமாக, அரசியல் ஆலோசகராக இருந்த அப்துல் பைசலை கொலை செய்து தலையைத் தூக்கி எறிந்து விட்டார். இது அக்பரின் மனதில் மிகப் பெரிய கவலையை உண்டு பண்ணியது. எட்டு மாதங்கள் அந்தப் பிரிவில் மன்னர் துயரமடைந்து இருந்ததாக வரலாறு கூறுகிறது.
1605 அக்டோபர் 15 ஆம் நாள் மன்னர் மிக மோசமான நிலையில் படுக்கையில் இருந்தார். ஜஹாங்கிர் அருகே அழைத்து வரப்பட்டார். அக்பரால் பேச முடியவில்லை. கண்கள் மட்டுமே அசைய ஜஹாங்கிருக்கு அங்கேயே முடி சூட்டப்பட்டது.
அக்பரை அரச உடையில் வந்து வணங்கி ஜஹாங்கிர் "சலாம் கொடுக்க முற்பட்ட பொழுது அக்பரின் உயிர் பிரிந்து விட்டது.
திகார் சிறையின் மர்மங்கள்
டல்லியில் நான் இருந்த நேரத்தில் பத்திரிகைகளில் அதிகமாகப் பேசப்பட்ட திகார் சிறையை ஒரு கண்ணோட்டமிட நினைத்தேன். கிரண்பேடி தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு இந்த திகார் சிறைச்சாலை பத்திரிகைகளில் அன்றாடம் அடிபடும் பெயராகிவிட்டது.
யார் இந்த கிரண் பேடி? உண்மையில் திகார் சிறை அப்படி என்ன மர்மங்கள் நிறைந்தது? - என்று இரவு முழுதும் என்னால் தூங்க முடியாமல் தவிக்க வைத்த இரண்டு கேள்விகளுக்கு விடையறிய காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஆட்டோ பிடித்து திகார் என்ற கிராமத்துக்குப் பக்கத்தில் அமைந்திருந்த சிறைச்சாலைக்குச் சென்றேன்.
சிறை என்றதும் பலருக்கு அது கேவலமான அடையாளமாகத் தெரியும். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதிலும்
175

Page 90
() மண்ணும் மனிதர்களும்
'மனிதர்கள்’ இருக்கிறார்களே? சிலர் குற்றம் புரிவதையே தொழி லாகக் கொண்டவர்கள். சிலர் சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளி களாக ஆனவர்கள். வேறு சிலரோ குற்றம் புரியாமலேயே தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.
அண்மையில்கூட் இங்கிலாந்தில் கால் நூற்றாண்டுக் காலத்தை சிறையில் கழித்த ஒருவர், பின் உண்மையான குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு, விடுதலையடைந்தார். நீதிபதி அவருக்குப் பெருந்தொகையை அரசாங்கம் வழங்க உத்தர விட்டார். அந்தத் தொகை அவரின் கால் நூற்றாண்டு வாழ்க்கையைத் திருப்பித் தருமா? உண்மையில் அந்த முகம் தெரியாத மனிதருக்காக நான் அதிகம் வேதனைப்பட்டேன். அவரின் நிலையில் என்னை வைத்து சிந்தனை செய்த பொழுது அந்தக் கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. “இப்படி மற்றவர்களுக்காக வேதனைப்படுகின்ற பைத்தியக் காரனை நான் கண்டதில்லை’ என்று எனது நண்பர்கள் திட்டும் பொழுது இது எனது பலமா, பலவீனமா என்று என்னால் ஒரு முடிவுக்கே வர முடியாமல் தடுமாறியது உண்டு!
மொகலாய ஆட்சியின் பொழுது பரீத்கான் என்பவர் இப்போதைய டில்லி கேட்டுக்கு அருகில் சுற்றுப் பயணிகளுக்காக ஒரு பெரிய தங்கும் விடுதியைக் கட்டியிருந்தார். ஆங்கிலேயர் ஆட்சி வந்ததும் இந்த தங்கும் விடுதியை டில்லி சிறையாக மாற்றி விட்டார்கள். 1919 ல் இருந்து இந்திய சுதந்திரப் போராட்டம் வீச்சாகத் தொடங்கிய பொழுது அரசியல் கைதிகள் அதிகமாகி விட்டார்கள். டில்லி சிறை 1937 ஆம் ஆண்டு மாவட்டச் சிறையாக பதவி உயர்வு பெற்றது!
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் குற்றங்களும் குற்றவாளி களும் பெருகிய காரணத்தால் திகார் என்ற கிராமத்தில் இதை மத்திய சிறையாக உயர்த்தினார்கள். 1958 ஆம் ஆண்டு 170 ஏக்கர் நிலபரப்பில் இந்த சிறை நிர்மாணிக்கப்பட்டது. 2500 கைதிகள் மட்டுமே சிறையிடுவதற்கு வசதி படைத்த திகார் சிறையில் இப்பொழுது 8500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
176

சைபீர்முகம்மது O
திகார் சிறைக்குள் ஒரு குண்டர் கும்பலே செயல்படுவது போல் இருந்ததேயன்றி. அது சிறையாக, கைதிகளை நல்வழிப் படுத்தும் இடமாக அமைந்திருக்கவில்லை.
சுகா என்ற 55 வயது மாது நான்கரை ஆண்டு காலமாக விசாரணைக்காக அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். டில்லியின் பிரதான சாலையில் சப்பாத்துக்களுக்கு பாலீஷ் போட்டு நாளொன்றுக்கு இரண்டு ரூப்ாய் சம்பாதித்து வயிறு வளர்த்து வந்த அந்த முதிய ம்ாது போதைப் பொருள் விற்பனை செய்கிறார் என்று கூறி போலீசார் கைது செய்து, அங்கே அடைத்து வைத்துள்ளார்கள். இவரைப் போல ஏறக்குறைய 1200 “போதை கேஸ்கள் அங்கே விசாரணைக்காக காத்திருக்கின்றன.
பெண் கைதிகள் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள். ஒரு சிறிய உதவிக்கும் அவர்கள் தங்கள் உடம்பைத் தர வேண்டி இருந்தது. பலர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட, டில்லி மனநல மருத்துவமனை ஒரு கிளையை திகார் சிறையில் அமைக்க வேண்டிய நிலை உருவாகியது.
தமிழ் நாட்டுப் போலீசார்தான் இங்கே காவல், மிகக் கடுமையான பாதுகாப்பு உள்ள சிறை இது. தானியங்கித் துப்பாக்கிகள் வைத்துக் கொண்டு சிறையின் உயர் சுவர்களில் உள்ள மாடங்களில் இருந்து இவர்கள் கண்காணிப்பு செய்து வருகிறார்கள். ஆனால் சிறையின் உள்ளே சிறை அதிகாரிகளை விட சிறைக்குள் இருக்கும் குண்டர் கைதிகளே அந்தச் சிறையை நடத்திவந்தார்கள்.
இந்த சிறையின் அதிகாரியாக இருந்த ஜெகதீஷ் பிரசாத் நித்தானி தமது அனுபங்களை இப்படி எழுதியுள்ளார்
சிறையில் எப்பொழுதுமே இருவகை கைதிகள் இருப்பார்கள். இருப்பவர் இல்லாதவர் என்ற வகைதான் அது!திகார் சிறையில் உள்ள சில சக்தி வாய்ந்த கைதிகளுக்கு சிறைக்கு வெளியே நிறைய தொடர்புகள் இருந்தன. பணம், ஆள்பலம் செல்வாக்கு என்று மட்டுமல்லாது சிறையதிகாரிகள் சிலரும் இவர்களின் கையாட்களாக இருந்தார்கள். சிறையில் நடந்த பல முறைகேடு
177

Page 91
O மண்ணும் மனிதர்களும்
களுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளே காரணமாக இருந்தார்கள். சிறையில் அனுமதிக்கப்பட்டதைவிட மிக மிகக் கூடுதலான கைதிகள் சிறைப்பட்டிருந்த காரணத்தால் எதையும் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. கைதிகளிடம் நடக்கும் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வராமலேயே போயின. மிக நீண்ட அவரின் இந்த வாக்கு மூலம் திகார் சிறையின் பல அவலங்களைக் கூறுகிறது.
'அன்னி’ என்ற ஒரு நைஜீரிய டில்லி (பல்கலைக்கழக) மாணவி ஐந்து ஆண்டு சிறைவாசம் விதிக்கப் பெற்று அங்கே அனுப்பப்பட்டார். அவரின் வாய்மொழியாகவே அங்கு நடந்ததைக் கேளுங்கள் :
நான்இங்கே வந்த பொழுதுதற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட முடிவெடுத்தேன். மிக மோசமான சூழ்நிலையில் சிறை வாழ்க்கை இருந்தது. பைத்தியம் பிடித்த சில கைதிகளும் அங்கே இருந்தார்கள். நானும் இன்னும் புதிதாக வந்தவர்களும் அந்தப் பைத்தியக்காரக் கைதிகளுடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டோம் நாங்கள் அடிக்கடி அடிக்கப்பட்டோம். எதற்காக என்னை அமுக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாது. எனக்கு இந்தி மொழி பேசத் தெரியாது. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதும் விளங்காது. இதனாலேயே பல முறை நான் தண்டிக்கப்பட்டேன். நான் என்னையே கேட்டுக் கொண்டேன். இங்கே நான் எதற்கு, ஏன் இருக்கிறேன்?’ இப்படி பல கைதிகளின் வாக்கு மூலங்களை அங்கே கேட்க (Մ)ւգ-պւճ,
சக்தி வாய்ந்த குண்டர் தான் அங்கே ராஜா கைதிகளை டாக்டர்கள் கவனிப்பது அங்கே ஒரு வழக்கம். நோயாளிகள் வரிசையாக நின்று டாக்டர்களைப் பார்ப்பது என்பது எப்பொழுதுமே நடக்காத ஒன்றாகவே இருந்து வந்தது. குண்டர் தலைவர்கள் வரிசையைத் தள்ளிக் கொண்டு தங்களுக்குத் தேவையான மருந்துகளை அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.
178

சைபீர்முகம்மது O
டாக்டர்களோ - அங்கே காவலுக்கு நிற்கும் வார்டன்களோ கேள்விகளே கேட்பதில்லை. போதை தரும் மாத்திரைகளை அவர்கள் அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்.
பெரும்பாலும் ஒரு கைதிக்கு ஒரு போர்வை வழங்கப்படும். ஆனால் குண்டர் கும்பலோ மற்ற கைதிகளின் ரேசனையும் சேர்த்து மூன்று நான்கு போர்வைகளென எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். டிசம்பரில் டில்லியில் தாங்க முடியாத குளிரில் வாய் பேச முடியாத பலமில்லாத கைதிகள் வாட வேண்டியது greir! ረ
r
பல வெளிநாட்டுக் கைதிகளும் முக்கியமாக போதைப் பொருள் குற்றங்களுக்காக இங்கே ஆண்டுக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மைக்கல் என்றொரு முன்னாள் ராணுவ வீரர். இவர் ஆங்கிலேயர், போதைப் பொருள் கடத்தினார் என்று ஏழு ஆண்டுகள் சிறையில் வாடினார். இவரின் வழக்கு விசாரணைக்கு வருவதற்கே ஏழு ஆண்டுகள் ஆகியது.
மார்கோ நீட்டா என்ற ஓலாந்துக்காரப் பெண் முதன் முறையாக டில்லி வந்திறங்கிய பொழுது போதைப் பொருள் கடத்தினாரென்று கைது செய்யப்பட்டார். நான்கரை ஆண்டுகள் ஆகியும் இவரது வழக்கு ஒரு முடிவுக்கு வரவில்லை. வக்கிலுக்கு 45, 000 ரூபாய் கொடுத்து தனது வழக்கை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். இரண்டு முறை பணம் வாங்க வந்த வக்கில் அதன் பிறகு அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க வில்லை. தனது குழந்தைகளையும் இவர் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை.
இப்படி பல வழக்குகள் அங்கே வழக்கு மன்றங்களில் தேங்கி நின்ற வேளையில் இந்த சிறைக் கைதிகள் திகார் சிறையில் தங்கள் விடுதலைக்காக ஏங்கி நின்றார்கள்.
இந்த நிலையில்தான் திருமதி கிரண்பேடி மே மாதம் முதல் தேதி 1993 ல் இந்த சிறைக்கு இன்ஸ்பெக்டர் ஜெனராக பதவி பெற்று உள்ளே நுழைந்தார். ஒரு பெண் - அதுவும் ஏகப்பட்ட பிரச்சினைகள் அடங்கிய சிறைக்கு - அதிகாரியாக அனுப்பபட்ட தன் பின்னணியைத் தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த
179

Page 92
O மண்ணும் மனிதர்களும்
கிரண்பேடி என்பதை அறிந்து கொள்வது தான் என் நோக்கமாக இருந்தது.
பெண்ணை ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமே பார்த்து வரும் நமது இந்திய சமூக நோக்கில், கிரண்பேடி போன்ற ஒரு புரட்சிப் பெண்ணை திடீரென்று ஜீரணிப்பது சற்று சிரமம்தான். 1973 ஆம் ஆண்டு முதலே இவரின் நடவடிக்கைகளை மிக அணுக்கமாக நான் கவனித்து வந்துள்ளேன். இந்தியப் பெண்களில் இப்படிப்பட்ட ஒரு போராட்ட குணம் கொண்டவர்களைப் பார்ப்பது மிக மிக அபூர்வம். பத்திரிகைகளில் இவரைப் பற்றி வரும் செய்திகள் என் விழிகளை அகலப்பபடுத்தியுள்ளன. இந்த சகோதரிதான் உண்மையில் ‘வாழும் வரை போராடு’ என்பதை என் மனதில் விதைத்தாரோ என்று கூட சில சமயங்களில் நான் நினைப்பது உண்டு. எத்தனை தடைகள்! எத்தனை போராட்டங் கள்! அனைத்தையும் வெற்றி கொண்ட ஒரு மாபெரும் இந்தியத் தாய் இவர்! மூன்று தலைமுறைக்கு வேண்டிய சொத்துகள் இவர் தந்தை இவருக்கு வைத்திருந்தும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த மாதரசியை உண்மையில் நான் மனதாரப் போற்றுகிறறேன். தகப்பன் சொத்தில் உட்கார்ந்து சாப்பிட நினைக்கும் தமிழ் நாட்டில், ஏன் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், சோம்பேறிகள் பெருத்துவிட்ட இன்றைய தழ்நிலையில் உழைத்து உன்னத நிலை எய்திய இந்தப் பெண் இந்திய மண்ணில் வாழும் மனிதர்களுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு. இவரைப் போல் இந்தியர்கள் வாழ நினைத்து விட்டால் உண்மையில் சொல்கிறேன், இன்று இந்திய நாடு இருக்க வேண்டிய இடமே வேறு! .ベ
பஞ்சாப்பில் ஒரு பெரிய வியாபாரியின் மூன்று பெண் குழந்தைகளில் கிரண்பேடி மூத்தவர். படிப்பு முடிந்து பஞ்சாப் அமிர்தசரஸில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த இவரின் எண்ணமெல்லாம் போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே. அப்பொழுதே 9 ஆம் தேதி மார்ச் மாதம் 1972 ஆம் ஆண்டு மிக சிறிய அளவிலான நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இவரின் திருமணம் நடைபெற்றது. பிரிஜிபேடி இவரின் கணவர். பல வழிகளிலும் ஒத்துழைப்பு
180

சைபீர்முகம்மது )
Guypiisatirir. IPS (Indian Police Service) gai) golfragaoay 1972ai) சேர்ந்தார். இந்திய வரலாற்றில் ஒரு பெண் IPSக்கு தேர்ந்தெடுக்கப் பட்டது அது தான் முதன் முறை!
இவரின் நேர்காணலின் பொழுது 'இது மிகவும் கடினமான வேலை, நீங்கள் வேறு வேலைக்குப் போவதே மேல், இது ஆண்களுக்கே உரியது. பெண்கள் தாக்குப்பிடிக்க முடியாது’ என்று கூறப்பட்டது. ஆனால் கிரண்பேடி பிடிவாதமாக போலீஸ் அதிகாரிகள் பயிற்சியில் சேருவதில் ஆர்வம் க்ாட்டினார். இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபுமலைக்கு போலீஸ் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். வெற்றிகரமான தன்து கடுமையான பயிற்சியை (Uрtg-55птfї.
20 - ஜுலை 1973 ல் இந்துஸ்தான் டைம்ஸ் இவரைப்பற்றி தனிக் கட்டுரையே வெளியிட்டது. அது பேட்டியாகவும் அமைந்திருந்தது.
திருமதி கிரண்பேடி இந்தியாவில் முதல் போலீஸ் பெண் அதிகாரியாக நியமிக்கப்பெற்றுள்ளார். தேசிய டென்னிஸ் வீராங்கனையான இவர் எப்பொழுதுமே தனித்துவமாகவே எதையும் செய்ய விரும்புகிறார். அவரைப்பற்றி அவரே கூறு வதைக் கேளுங்கள் எதையும் வாழ்க்கையில் சாதாரணமாக எடுத்துக்கொள்ள நான் விரும்புவதில்லை. வாழ்க்கையில் சாதனைகள் படைக்கும் வேலையைத்தான் நான் தேர்ந் தெடுத்துள்ளேன். இந்திய அரசாங்கப் பொதுத் துறையிலும் வெளிநாட்டு அலுவலகங்களிலும் நமது பெண்கள் ஏற்கனவே போதுமான அளவு நிரம்பி இருக்கிறார்கள். இந்திய போலீஸ்துறையில் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? சுதந்திரமான சிந்தனையாற்றல் உள்ள, உடலும் உள்ளமும் வலுவான் பெண்கள் ஐ.பி.எஸ்.இல் சேர்வதை நான் பலமாக ஆதரிக்கிறேன்.'
181

Page 93
() மண்ணும் மனிதர்களும்
அவர் தனது இப்போதைய நிலையை இப்படி விவரித்தார். எனது பெற்றோர்கள் எனது சுயசிந்தனைக்கு வலுவான ஆதரவு நல்கினார்கள். நான் ஐ.பி.எஸ் இல் சேர்ந்தது கூட எனது சுயமான முடிவு தான்!” • ་་་་་་་་ r
இந்திய சுதந்திர தின அணிவகுப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் டில்லியில் நடைபெறும். 1993 ஆம் ஆண்டு வேறு விதமான அணிவகுப்பாக அது வரலாற்றில் இடம் பெற்றது. அந்த ஆண்டு போலீஸ் உடையில் பதக்கங்கள் பெறும் அணியை கிரண்பேடி தலைமையேற்று வழிநடத்திச் சென்றார். ஒரு பெண் போலீஸ் படையை வழி நடத்துவது அதுதான் முதன் முறை
கம்பீரமாக கையில் வாளுடன் அவர் வழிநடத்திய அழகைக் கண்ட அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அணிவகுப்பு முடிந்த உடனே அவரை அழைத்துப் பேசினார். அது மட்டுமல்லாது மறுநாள் காலை தன்னோடு சிற்றுண்டி சாப்பிட வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
இந்த அணிவகுப்பில் கிரண்பேடி தான் முன் நிலையில் வழி நடத்திச் செல்லவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தான் வழி நடத்தப் போவதில்லை என்பதை கிரண்பேடி அறிந்ததும் உடனே பி.ஆர். இராஜகோபால் என்பவரை அணுகி தனது நிலைபற்றிக் கேட்டார். டில்லி போலீஸ் ஜெனரலாக இருந்த அவர் ‘கிரண், தயவு செய்து இது வேண்டாம். இந்த அணிவகுப்பு 15 கிலோ மீட்டர் நீளமுள்ள்து. மிக கனமுள்ள வாளை கையில் ஏந்தியவாறு இவ்வளவு தூரத்தை உங்களால் - ஒரு பெண்ணால் - நடத்தி முடிக்க இயலாது’ என்று கூறினார்.
கிரண்பேடிக்கு உள்ளே முடியும் என்ற தன்முனைப்பு. ஓர் ஆணால் முடியுமென்றால் பெண்ணாலும் முடியும் என்ற உள் உணர்வு அவரை தலை நிமிர்ந்து பேச வைத்தது.
‘இந்த அணிவகுப்புக்காக தான் பல நாட்களாக பயிற்சி பெற்றுள்ளேன். பயிற்சியில் முடிந்த என்னால் அங்கே ஏன் முடியாது?’ என்று கேட்டார்.
182

சைபீர்முகம்மது O
இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி.ஆர்.இராஜகோபாலும் அனுமதி வழங்கினார். கிரண்பேடியும் 15 கிலோ மீட்டர் வாளுடன் நடந்து அணிவகுப்பில் சாதனை புரிந்து இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் காலை சிற்றுண்டியும் சாப்பிட்டார். வாழ்க்கையில் ‘முடியாது’ என்று எப்பொழுதுமே சோம்பிக் கிடக்கும் மனிதர்கள் மத்தியில் கிரண்பேடி என்ற பெண் இந்திய மண்ணில் சரித்திரம் படைத்தார்.
சில ஆண்டுகள் கழித்து (5 நவம்பர் 1979 ல்) நூற்றுக் கணக்கான சிக்கியர்கள் இதே டில்லி நெடுஞ்சாலையில் ராஷ்டிரபதி பவனத்தை நோக்கி கையில் வாளுடனும் தடிகளு டனும் வந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சிக்கியர் களிலேயே இரு பிரிவுகள் உண்டு. அதில் நிராங்கனி சிக்கியர்கள் தங்கள் மதச் சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவு அவர்களைத் தாக்க வந்தது! கிரண்பேடி போலீஸ் LGOL-56 தல்ைமையேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டார். மற்ற சிக்கியப் பிரிவின் மேல் பாய வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உடனே போலீசைத் தாக்க முற்பட்டார்கள். போலீஸ்காரர்கள் கடுமையாத கர்யமுற்றார்கள். இதில் திருமதி கிரண்பேடி ஹெல்மட்டால் தலையிலும் கழியால் கையிலும் தாக்கப்பட்டார். அதுவரை அமைதி காத்த கிரண்பேடி தனது இயல்பான “போர்க்குணத்தைக் காட்ட ஆரம்பித்தார். கையில் வாளுடன் நின்ற அந்த சிக்கிய தீவிரவாதிகளின் மத்தியில் ஒரு போலீஸ் தடியைமட்டுமே வைத்துக் கொண்டு எதிர்த்தார். அவரின் இந்த திடீர் ஆவேசத்தைக் கண்ட சிக்கிய தீவிரவாதிகள் மண்டியிட்டார்கள். சிறிது நேரத்தில் புதிய போலீஸ் படையும் வந்து சேரவே அந்த ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது!
அன்று கடமையில் அவர் காட்டிய தீவிரம், பயந்து ஓடி ஒளியாமல் வெறி கொண்ட ஆண் கும்பலை எதிர்த்து நின்ற தைரியம், டில்லி மக்களை திகைக்க வைத்தது. அந்த சூழ்நிலையில் எந்த பெண்ணும் அடங்கிப் போகவே நினைப்பாள். ஆனால் திருமதி கிரண்பேடி எதிர்த்து நின்றார். தலையிலும், கையிலும் அடிபட்டபொழுதும் பின் வாங்காமல் போலீஸ் படையை முன்
183

Page 94
O மண்ணும் மனிதர்களும் நின்று வழி நடத்தி ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்த செயலுக்காக 10-அக்டோபர் 1980 ஆம் ஆண்டு போலி சில் வழங்கப்படும் மிக உயர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இக்காலத்தில் பரிசுகளும் பட்டங்களும் எந்த விதமான சாதனைகளும் புரியாமலேயே பலருக்குக் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவை நீண்ட காலத்துக்குப் பேசப்படுவதில்லை. உண்மையான சாதனை புரிபவர்களே பேசப்படுவார்கள். சரித்திர ஏடுகளில் அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களின் பெயர் இடம் பெற்றுவிடும்.
கிரண்பேடி மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை. தனது 16 வது வயதிலேயே இவர் ஜுனியர் தேசிய சாம்பியனாக வலம் வந்தவர். ஒரு சிக்கியப் பெண்ணான இவர் பஞ்சாப்பில் முதலில் சாம்பியனாகவும் பின் தேசிய சாம்பியனாகவும் ஆனார். 1982 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி களில் இவர் ஆசியாவின் முதல் பெண்கள் பிரிவு சாம்பியனாக வாகை தடினார். இவருக்கும் இவர் கணவருக்கும் ‘காதல் மலர்ந்தது’ கூட ஒரு டென்னிஸ் மைதானத்தில்தான்! இவருக்கு முதல் பயிற்சியாளராக இவரின் தந்தையே இருந்தார். உண்மையில் இவர்களின் குடும்பத்தை “டென்னிஸ் சாம்பியன் குடும்பம்’ என்றே அழைக்கலாம். இவரின் சகோதரி f'LT மூன்று முறை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வென்று சாம்பரியான் ஆனவர். கடைக்குட்டி அனு தேசிய சாம்பியனாக மூன்று முறை வென்றதுடன் ஆசிய பட்டத்தையும் வென்று. விம்பிள்டன் போட்டிகளிலும் இந்தியாவை பிரதிநிதித்து ஆடியுள்ளார்.
டென்னிஸ் எனது உயிரான விளையாட்டு என்று கூறும் கிரண்பேடி தனது பிற்கால வாழ்க்கையின் மனோதிடத்திற்கும் போராட்ட உணர்வுகளுக்கும் டென்னிஸே காரணம் என்கிறார். போலீஸ் படையில் எனது பயிற்சிக் காலத்தின் பொழுதும், அதன் பின் இரவுபகல் பாராது கடமையில் ஈடுபட்ட பொழுதும் எனக்கு
184

சைபீர்முகம்மது ()
டென்னிஸ் மைதானத்தில் கிடைத்த பயிற்சிகளும் முயற்சிகளும் தான் உதவியாக இருந்தன என்று கூறுகிறார்.
இவரின் வாழ்க்கையில் போலீஸ் படையில் சேர்ந்ததிலிருந்தே பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக அரசியல்வாதிகள் இவருக்குக் கொடுத்த தொல்லைகள் கணக்கில் அடங்காது. ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக இருந்து இவர் அவைகளைச் சமாளித்த விதம் நம்மை பிரமிக்க வைக்கிறது. பாரதி கண்ட புதுமைப் பெண் இவர்தான்! இந்திய மண்ணில் இவரின் சாதனைகளை அடுத்து பார்ப்போம்!
பாரதி கண்ட புதுமைப் பெண்
கிரண்பேடி ஒரு போலிஸ் அதிகாரியாக மட்டும் செயல்படாது. பல சந்தர்ப்பங்களில் மக்களின் குரலாகவும், நீதியின் உரத்த குரலாகவும் செயல்பட்டுள்ளார். பல சந்தர்ப்பங்களில் குற்றவாளி களும் மனிதர்கள்தான், வாய்ப்பும் வசதியும கொடுத்தால் அவர்களும் திருந்தி வாழ முடியும் என்பதை இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இவரின் நீதியான பல நடவடிக்கைகள் இந்தியப் பத்திரிகை களின் தலைப்புச் செய்திகளாக வெளி வந்தன.
நாட்டின் எல்லா தரப்பிலும் இவர் பேசப்பட்டார். இந்த சூழ்நிலையில்தான் இவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து விஜயசாந்தி நடித்த ‘கார்த்தவயம்’ என்ற தெலுங்குப்படம் தயாரிக்கப்பட்டது. தேசிய விருது பெற்ற இப்படமே பின் “வைஜயந்திIPS என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் தயாரிக்கும் பொழுது கிரண்பேடியின் முழு ஆலோசனையும் பெறப்பட்டது. தன்னை எப்படி படத்தில் போலிஸ் சிருடையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் பேடி அதிக கவனம் செலுத்தினார். படத்தின் ஆரம்ப விழாவிற்கு வெள்ளி விழாவிலும் கிரண்பேடி கலந்து கொண்டு சிறப்பித்தார். ஹிந்தியில் இவரின் வாழ்க்கையை
185

Page 95
O மண்ணும் மனிதர்களும்
அடிப்படையாக வைத்து "TEAS WA NI என்ற பெயரில் ஒரு படமும் தயாரிக்கப்பட்டது. டெலிவிஷன் தொடராக 'STR1 என்ற படமும், ‘இன்ஸ்பெக்டர் கிரண்’ என்ற தொடரும் தயாரிக்கப் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படங்கள் வந்த பிறகும் (இதற்கு முன்பும் கூட) இருவருக்குப் பல 'வேலிக்கு வெளியே இருந்தவர்களின் எதிர்ப்பு கிளம்பரியது. கள்ள மார்க்கெட் வியாபாரிகள், அரசியல்வாதிகள், குண்டர்கள், சாராய விற்பனையாளர்கள் என்று எதிர்ப்பின் மத்தியில் நேர்மை, நீதி இவைகளை மட்டுமே தனது ஆயுதமாகக் கொண்டு இவர் செயல்பட்டார். 1982 ஆம் ஆண்டு டில்லி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. புதுடில்லி உண்மையில் புது டில்லியாக உருவாகிக் கொண் & டிருந்தது. மேம்பாலங்கள், ஸ்டேடியங்கள் என்று கட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.ஏற்கனவே மக்கள் நெரிசலில் திணறிக் கொண்டிருந்த டில்லி, போக்குவரத்து நெரிசலில் மேலும் மூச்சடங்கி நின்றது. புதிய மேம்பாலம், ஸ்டேடியங்கள் கட்டப்பட்ட தழ்நிலையில் பல சாலைகள் அடைக்கப்பட்டு ஒரு வழிப் பாதையாக ஆகியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
இந்த நிலையில்தான் அக்டோபர் 1981 ஆம் ஆண்டு டில்லி DCP டிராஃபிக் போலிஸாக பதவி உயர்வு பெற்ற கிரண்பேடி அங்கே அனுப்பப்பட்டார். பதவியேற்று அலுவலகம் சென்றதும் அவருக்குத் தலை சுற்றியது. என்றாலும், திட்டமிட்டு காரியங்களை கவனிக்க ஆரம்பித்தார். 5 மணிக்கு எழுந்து 6 மணிக்கு அலுவலகம் அடைந்து 7 மணி வரை முக்கிய வேலைகளைக் கவனிப்பார். அதன் பிறகு டில்லி தெருக்களில் தனது வெள்ளை அம்பாஸிடர் காரில் பவனி வர ஆரம்பித்து விடுவார். இவரின் காரில் சிக்னல் விளக்குகளும் கூரையில் ஒலி பெருக்கியும் பொருத்திக் கொண்டு கார்கள் ஒழுங்காகப் பயணம் செய்ய பன்னிரண்டு மணி வரை வேலை செய்வார். ஒலி பெருக்கியில் கம்பீரமான குரல் டில்லி போக்குவரத்தை வெகு விரைவில் ஒழுங்குக்கு கொண்டு வந்தது. ஒரு ஆணின் குரலை விட திடீரென்று டில்லி சாலைகளில் உரத்து ஒலித்த ஒரு பெண்ணின் குரல் பலரை திகைப்படையச் செய்தாலும் அந்த “கட்டளை நிறைந்த குரலுக்கு அனைவரும் பணிந்தார்கள்.
186

சைபீர்முகம்மது )
ஒவ்வொரு நாளும் இப்படி தனது குரலை உயர்த்தி ஒலி பெருக்கியில் பேசியதால் இவரின் குரல் பாதிக்கப்பட்டு, இரவில் இவரின் தாயார் சுடுநீரில் குரல்வளையை ‘மசாஜ் செய்து விடுவார். மறுநாள் மீண்டும் டில்லி சாலைகளில் அந்த கம்பீரக் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும்.
டில்லியில் கார்களைக் கண்ட கண்ட இடங்களில் நிறுத்தி விட்டுப் போய் விடுவார்கள். குறிப்பாக, “கானாட் பிளேஸ்' என்ற வர்த்தக மையத்தில் மக்கள் நெரிசல் அதிகம். இங்கேதான் எல்லாவிதமான் பொருட்களையும் டில்லியில் வாங்க முடியும். இந்த இடத்தில் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடைகளும் அதிகம். மூலைக்கு மூலை மோட்டார் பழுது பார்க்கும் பட்டறைகளும் உண்டு. நினைத்த இடத்தில் கார்களை நிறுத்தி கார்களைச் சரி பார்ப்பதால் போக்கு வரத்துக்கு மிகப்பெரிய தடையாய் இவை விளங்கின. அந்த இடங்களில் கார்களை நிறுத்தக்கூடாது என்று அடையாளங்கள் இருந்த போதிலும் அவர்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை. கிரண்பேடி இந்த கார்களை ‘கிரேன்’ வைத்து இழுத்து பக்கத்துப் போலிஸ் நிலையத்தில் கொண்டுபோய் நிறுத்த ஆரம்பித்தார். இதனால் இவரை கிரண்பேடி என்று அழைப்பதை மறந்து ‘கிரேன் பேடி’ என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள்.
1982ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவுற்ற தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இந்த விளையாட்டு பற்றி குறிப்பிடும் பொழுது டில்லி போக்குவரத்து ஒழுங்கைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதியது.
விளையாட்டின் ஆரம்ப நாளிலும் நிறைவு நாளிலும் டில்லி போக்குவரத்து இவ்வளவு அழகாக சீர்படுத்தப்பட்டு கார்கள் நிற்காமல் நகர்ந்து சென்றதை சிறப்பாகச் சொல்ல வேண்டும். குறிப்பாக இந்த விளையாட்டு நடந்த எல்லா நாட்களிலும் டில்லி போக்குவரத்து மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டதை நாம் பாராட்ட வேண்டும். டில்லி போக்குவரத்து போலீஸசிக்கு நமது வாழ்த்துக்கள்’
187

Page 96
O மண்ணும் மனிதர்களும்
தவறான இடத்தில் நிறுத்தப்படும் கார்கள் யாருடையதாக இருந்தாலும் ‘சம்மன்’ கொடுக்க தனது அதிகாரிகளுக்கு பேடி கட்டளை பிறப்பித்திருந்தார். இதனால் பெரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் கார்களெல்லாம் மாட்டிக் கொண்டன. சும்மா இருப்பார்களா? அவர்களா? இவரை அங் கிருந்து அகற்ற தங்களது செல்வாக்கைப் பயன்படுத்த முற்பட்டார்கள்.
இன்னொரு மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இவரின் கீழ் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நிர்மல் சிங் என்பவர் ஒரு முறை ‘கானாட் பிளேசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DH1 1817 என்ற காருக்கு சம்மன் எழுதி வைத்துவிட்டார். அதோடு நிற்காமல் கிரேன் வைத்து பக்கத்துப் போலிஸ் நிலையத்துக்கு இழுத்தும் சென்றுவிட்டார். பிறகுதான் தெரிந்தது அது பிரதமர் இந்திராகாந்தியின் அதிகாரத்துவ கார் என்று! பிரதமர் இலாகா அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் அபராதம் கட்டாமல் காரை விடுவிக்க மறுத்துவிட்டார் கிரண்பேடி! அந்த நேரத்தில் பிரதமர் இந்திரா காந்தி தனது குடும்பத்தாருடன் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருந்தார். உண்மையில் அந்த கார் பழுது பார்ப்பதற் காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டதாக எடுத்துச் சொல்லியும் நிறுத்தக் கூடாத இடத்தில் யாருடைய கார் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு சலுகை காட்ட முடியாது என்று மறுத்து விட்டார். இதற்காக தனி விசாரணையே நடத்தப்பட்டு இந்திரா காந்தி திரும்பியதும் அவரிடம் இது பற்றிக் கூறப்பட்டது.
1982 ஆசிய விளையாட்டின் பொழுது முதன் முறையாக வண்ணத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. டில்லி போக்குவரத்து குறித்து கிரண்பேடி மக்களுக்கு எடுத்துச் சொல்ல தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்."எனக்குக் கீழ் 19 அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொருவரும் 19 இடங்களுக்கு தனித்தனியாக பொறுப்பு வகிக்கிறார்கள். என்னை அழைப்பதைவிட அவர்களை அழைத்து பேட்டி கண்டால் நல்லது நான் ஒருவள் மட்டுமே டில்லிDCPயாக போக்குவரத்துத் துறையில் இருக்கிறேன். கூடுதலாக ஒரு DCP இருந்தால் நான் வருவதற்கு நேரமிருக்கும்” என்று கூறிவிட்டார்.
188

சைபீர்முகம்மது O
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவுற்றதும் உடனடி யாக கோவாவுக்கு மாற்றல் கடிதம் வந்தது. இதைப் பார்த்ததும் உண்மையில் கிரண்பேடி அந்த நேரத்தில் திகைத்து நின்றார். அவரது ஏழு வயது 'மகள் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார். கணவரோ அமிர்தசரஸில் சொந்தத் தொழில் நடத்திக் கொண்டிருந்தார். தனது செல்வ மகளின் முழுப் பொறுப்பையும் தாயிடம் ஒப்படைக்க வேண்டி இருந்தது. போலிஸ் வேலையில் இடமாற்றங்கள் எப்பொழுதும் நடப்பதுதான் என்றாலும் அதை இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டியஅவசரம் என்ன? இன்னுமொரு ஒன்பது மாதங்கள் கழித்து இந்த மாற்றத்தைச் செய்திருக்கலாமென்பதுதான் அவரின் வாதம்.
டில்லி போக்குவரத்து போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் இவருக்கு நண்பர்களே இல்லாமல்போய்விட்டார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இவர் நினைத்த காரணத்தால் பிரதமரின் காரைக்கூட சம்மன் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. யாரிடமெல்லாம் இவர் இந்த நேரத்தில் உதவிகள் கேட்கலாமென்று நினைத்தாரோ அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இவ்ரிடம் ‘சம்மன்’ பெற்றவர்களாக இருந்தார்கள். கடைசியாக கிரண்பேடி கோவா ՛ւյlpւնւIւ- :
ஆயத்தமானார். ... - ۰ن
'நான் கோவா புறப்படும் பொழுது எனது இதயத்தையும் உடலையும் டில்லியில் என் மகளிடம் விட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்றார் அவர். ஓராண்டு காலமாக நோயின் கொடுமையில் தத்தளித்த அவரின் மகள் கடைசியாக ஹோமியோபதி டாக்டர் பி. எஸ். கோக்கார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கோவாவில் மூன்று ஆண்டுகள் கிரண் பேடி பணியாற்ற வேண்டிய துழிநிலை. ஒரு புறம் கடமை! மறுபுறம் மகள்!!
கோவாவில் இவரின் பல செயற்பாடுகள் பத்திரிகைகளின் முன் பக்கங்களை அலங்கரித்தன. ஒரு முறை கோவாவில் முதலமைச்சருடன் நேரிடையாக மோதும் நிலை இவருக்கு ஏற்பட்டது.
189

Page 97
O மண்ணும் மனிதர்களும்
ஆண்டுக்கு ஒரு முறை புனித சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல் இங்கே தேவாலயத்தில் காட்சிக்கு வைப்பது வழக்கம். கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு புனித சேவியரின் உடலை கிடத்தியிருந்தார்கள் (இந்த புனித சேவியர் தான் நமது மலாக்காவில் உள்ள கோட்டையில் புதைக்கப்
பட்டிருந்தார் என்று ஒரு வரலாறு உண்டு). காட்சிக்கு
வைக்கப்படும் நாட்களில் இலட்சக்கணக்கில் மக்கள் இங்கே கூடுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன் புனித சேவியரின் உடலை காட்சிக்கு வைப்பதை நிறுத்திவிட்டார்கள். காட்சிக்கு வைக்கும் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது மிகவும் சிரமம். கிரண்பேடி மிகவும் சிரமம் எடுத்து இவற்றைச் சரி செய்தார்.
வி. ஐ.பி. கார்கள் தேவாலயத்தின் வாயிற்படி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது பொதுமக்களுக்கு பெரிய இடைஞ்சலை ஏற்படுத்தியது. கிரண்பேடி வந்த பிறகு நிலைமை மாறியது. பிரமுகர்களின் கார்களை நிறுத்தி வைப்பதற்கு ஒரு பரந்த இடத்தை தேவாலயத்தின் வெகு தூரத்தில் ஏற்பாடு செய்தார் பேடி யாருடைய காரையும தேவாலயத்தின் வாசல் வரை அனுமதிக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு போட்டார். இந்த நேரத்தில் கோவாவின் மூத்த அமைச்சர் ஒருவர் அங்கே காரில் வந்தபொழுது அவரின் காரை கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தச் சொல்லிவிட்டு தேவாலாயத்துக்கு நடந்து போகச் சொன்னார்கள். இதுவரையில் கோவா அமைச்சரவையில் யாருமே இப்படி நடந்து போய் தரிசனம் செய்தது கிடையாது. மறு நாள் கிரண்பேடி முதலமைச்சர் அலுவலகத்துக்கு அழைக்கப் Lu'L LITfŤ.
“நீங்கள் செய்தது சரியல்ல. உடனே அந்த அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” - இப்படி முதலமைச்சர் பிரதாப் சிங் ராணா கூறினார்.
இதைக் கேட்ட கிரண் பேடி, “அந்த அமைச்சர் உடல் நலமில்லாமல் இருந்தாரா?” என்று கேட்டார்.
“அமைச்சர்கள் தேவாலயத்தின் வாசல் வரை செல்வதற்கு நீங்கள் உங்கள் போக்குவரத்துத் திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்’
19 O

சைபீர்முகம்மது O
“இப்போதைய ஏற்பாடு மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. மக்கள் இந்த ஏற்பாட்டை வரவேற்றுள்ளார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்!”
“அதுபற்றி கவலையில்லை. ஒரு அமைச்சரை வாசல் வரை செல்ல நிச்சயம் மக்கள் அனுமதி வழங்கியே ஆக வேண்டும்!”
“இதனால் போக்குவரத்து ஒழுங்கு இல்லாமல் போய்விடும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் உணர வேண்டும்!” *
“யார் இந்த ஏற்பாட்டைச் செய்தது?” “நான்தான், ஸார்!’ “இதை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனுமதித்தாரா?”
“அவரின் அனுமதி பெற்றே இந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டன!”
“நான் அவரிடமே பேசிக் கொள்கிறேன்.”
ஆனால் முதலமைச்சர் இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் பேசவே இல்லை. மக்கள் அந்த புதிய ஏற்பாட்டை வரவேற்றார்கள்.
டில்லியிலிருந்து கோவா சென்ற பொழுது ஜூவாரி நதியை படகில் இவர் கடந்து சென்றார். அப்பொழுது ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் போக்குவரத்துக்குத் திறந்து விடப் படாமலேயே இருந்தது. மக்களின் பணத்தில் கட்டப்பட்ட அந்த பாலம் ஒரு டில்லி அமைச்சர் திறந்து வைப்பதற்காக காத்திருந்தது அவருக்கோ இதை திறந்து வைப்தை விட வேறு வேலைகள் அதிகம் இருந்தன. மக்கள் ஃபெர்ரியில் பயணம் செய்து ஒரு நீண்ட சுற்று சுற்றி அந்த இடத்தைக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு நாள் அவ்வழியாகச் சென்ற கிரண்பேடி ஃபெர்ரி தளத்தில் பெருங் கூட்டம் நிற்பதைக் கண்டார். பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் போடப்பட்டு அமைச்சரின் திறப்புவிழாவுக்காக காத்திருந்தது. அந்தப் பாலம். கிரண் பேடி தனது டிரைவரின் உதவியுடன் எல்லா தடுப்புகளையும் அப்புறப்படுத்திவிட்டு தனது காரை இக் கரையிலிருந்து அக்கரைக்கு ஒட்டிச் சென்றார். இக்கரையில் நின்ற
191

Page 98
O மண்ணும் மனிதர்களும்
மக்களையும் வாகனங்களையும் பாலத்தின் வழியாகத் திருப்பி விட்டார். மக்களின் வாழ்த்தொலியோடு அதிகாரப் பற்றற்ற அந்த திறப்பு விழா' சிறப்பாக நிறைவேற்றி வைக்கப்பட்டது. மக்களுக்காக கட்டப்பட்ட பாலம் மக்களுக்குப் பயன்படாமல் ஒரு அமைச்சரின் வருகைக்காக எவ்வளவு நாள் காத்திருப்பது? கடமையில் ஈடுபட்டிருந்த கிரண் பேடியால் அன்று மக்களுக்குத் திறக்கப்பட்ட பாலம் அதன் பிறகு எந்த அமைச்சராலும் திறந்து வைக்கப்படவே இல்லை! மீண்டும் டி.வி.க்காரர்கள் சத்திரிகை புகைப்படக்காரர்கள் புடை தழ அமைச்சர் இரண்டாவது முறை திறந்து வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது என்று அலுர்கள் நினைத்திருக்கலாம்! اخته ؤ
டில்லியில் மகள் மிக மோசமான நிலையில் நோய் வாய்ப்பட்டிருப்பதாக தாயாரிடம் இருந்து டெலிபோன் வந்ததும் உடனே தனது விடுமுறைக்கு விண்ணப்பித்தார், இவரின் விடுமுறை விண்ணப்பத்தை கோவா போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் உடனடியாக அனுமதித்தார். ஆனால் அரசாங்க செயல கத்தில் இருந்து பதிலே வரவில்லை. இனி காத்திருந்து பயனில்லை என்று உணர்ந்து கிரண் பேடி தனது மகளைப் பார்க்க உடனடியாக டில்லி புறப்பட்டார்.
பல ஆண்டுகளாக கிரண்பேடி விடுமுறையே எடுக்க வில்லை. அவரின் கணக்கில் நிறைய விடுமுறைகள் எடுக்கப்படாமலேயே இருந்தன. நாடு - மக்கள் - கடமை என்று கருதிய அவருக்கு விடுமுறை எடுக்கவே நினைவில்லாமல் இருந்திருக்கலாம். இந்த நிலையில்தான் அவரின் விடுமுறையை கோவா அரசாங்கம் ரத்து செய்து உடனடியாக வந்து வேலையில் சேருமாறு கட்டளையிட்டது. தன் மகளின் மருத்துவ அறிக்கைகளை அனுப்பியும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது மேலதிகாரி அனுமதித்த விடுமுறையை இவர்கள் இப்படி ரத்துச் செய்தது மிகவும் வேதனையை கிரண் பேடிக்கு உண்டு பண்ணியது! அவர் தொடர்ந்து விடுமுறையில் இருந்து தனது மகளைக் காப்பாற்றினார்.
192

சைபீர்முகம்மது O மனித நேயம் கொண்ட மாதரசி!
போலீஸ் துறையில் ஒருவர் சிறையதிகாரியாக அனுப்பப்படுவது அவரை குப்பைத் தொட்டியில் வீசுவது போல்தான். கிரண்பேடி அரசியல்வாதிகளுக்கு ஒரு தலைவலியாக இருந்த காரணத்தால் இவரை டில்லி திகார் சிறைக்கு அதிகாரியாக அனுப்பினார்கள்.
இவர் அங்கே சென்ற பொழுது அது சிறைச்சாலையாக இல்லாமல் ஒரு பெரிய பைத்தியக்கார விடுதி போல இருந்தது. மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் அங்கே இல்லை. உண்மையில் சிறை என்பது கைதிகளைத் திருத்தி, நல்வழிப் படுத்தும் ஒரு கூடம்.அவர்கள் வெளியே வரும் பொழுது தங்களது குற்றங்களை உணர்ந்து மீண்டும் மனிதர்களாக வாழ வழிவகுக்கும் இடம். ஆனால் திகார் சிறையில் கிரண்பேடி உள்ளே நுழையும் வரைக்கும் அது பெரிய கள்ள மார்க்கெட்டாகவும், போதை மாத்திரைகள் தாராளமாக விற்பனையாகும் சந்தையாகவும் இருந்தது.
இந்த நிலையில்தான் பர்மிய வம்சாவளியில் வந்த ஒரு இந்தியர் S.N. Goenka என்பவர், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளை விஞ்ஞானபூர்வமாக அளித்து வருவதை அறிந்து, அவரை சிறையில் உள்ள கைதிகள் விரும்பினால் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடியதாக ஒரு ஒப்பந்தம் செய்தார்கள்.
மனதை ஒருநிலைப்படுத்தும் இப்பயிற்சி 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தரால் தோற்றுவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. என்றாலும், இது எந்த மதச் சார்பும் அற்றது. மனிதன் தன்னை உணர்வதற்கும், தன் நிலைமையை உயர்த்திக் கொள்வதற்குமான இப்பயிற்சிக்கு ‘விபாஸனா (VTPASSANA) என்று பெயர்.
உள்ளம் புனிதமடைவதற்கும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கும். அமைதி கொள்வதற்கும் இந்தப் பயிற்சி மிகுந்த உற்சாகமளிப்பதாக இருந்ததாக இதில் பயிற்சி பெற்ற பல கைதிகள் சொல்லியுள்ளார்கள்.
முதலில் 70 கைதிகள் மட்டுமே இதில் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள். பத்து நாட்களில் மெளனம் மேற்கொண்டு,
193

Page 99
O மண்ணும் மனிதர்களும்
யாரிடமும் பேசாமல் இந்தப் பயிற்சியில் பங்கு பெற்ற இவர்கள் புதிய மனிதர்களாக மாறினார்கள்.முதல் மூன்று நாட்களில் உடலில் ஏற்படும் அரிப்புகள் மற்றும் சில உபாதைகளை மனம் ஒதுக்கத் தொடங்கி, பின் ஏழு நாட்களில் மனம் முழுதும் தியானத்தில் நிலைத்து. தன்னை முழுவதுமாகப் புனிதப்படுத்திக் கொள்கிறது. இந்த பத்து நாள் பயிற்சியை முடித்தவர்கள் புதிய மனிதர்களாக வெளியே வந்தார்கள்.
நாள் செல்லச் செல்ல, சிறையில் 'விபாஸனா’தியான முறை பரவலாகப் பேசப்பட்டது. சிறைக் கைதிகள் மட்டுமல்லாது, சிறை வார்டர்களும் அதிகாரிகளும் இப்பயிற்சியில் தாங்களே முன்வந்து கலந்து கொண்டார்கள். இதன் பயன் எப்படி இருந்தது என்று கிரண் பேடியிடம் கேட்ட பொழுது,
“இப்பயிற்சியில் கலந்து கொண்ட 100 பேரை நாங்கள் அணுக்கமாகக் கவனித்தோம். அவர்களில் மோசமான கைதிகள். சிறையதிகாரிகள், பெண் கைதிகள் என்று பலரும் இருந்தார்கள். அவர்களிடம் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களை நான் கண்டேன். 95 சதவிகிதம் இந்தப் பயிற்சி அவர்களை மாற்றிவிட்டிருந்தது. மது அருந்துவதை, புகை பிடிப்பதை பலர் நிறுத்தி விட்டனர். இதில் மிக முக்கியமானது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம்தான்! பலர் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொண்டு இனி அப்படி வாழப் போவதில்லை என்று மாறிவிட்டிருந்தார்கள். தங்களின் தவறுகளுக்கு அவர்கள் அதிகம் வருந்தியதாகப்பட்டது. வெளியே சென்ற பிறகு தங்களின் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் பரிகாரமாக ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று மனதார விரும்பினார்கள்’ என்றார்.
கிரண் பேடியின் இந்த புதிய ஏற்பாடு, சிறைச்சாலைக் குற்றவாளிகளை மனிதர்களாக மாற்றிக் கொண்டிருந்தது.
TP. Singh என்ற ஒரு கொலைக் குற்றவாளி தனது சொந்த மைத்துனரைக் கொலை செய்துவிட்டு, ஒன்பதரை ஆண்டுகளாக ஆயுள் கைதியாக சிறையில் இருந்தார். தனது சொந்த மைத்துனரைக் கொன்ற அவரை, அவரின் பெற்றோர்களே சாட்சியாக இருந்து தண்டனை பெற்றுக் கொடுத்தனர். இதனால்
194

சைபீர்முகம்மது O
தனது பெற்றோர்களிடம் பெரிய கருத்து வேறுபாடு கொண்ட இவர் வெளியே வந்ததும் அவர்களைப் பழிவாங்கும் எண்ணத்துட னேயே இருந்து வந்தார். இரவில் இவருக்குத் தூக்கமே வருவதில்லை. தனது அறைக்குள் அடிபட்ட வேங்கையைப் போல இரவு முழுதும் தூங்காமல் பழியுணர்ச்சியுடன் நடமாடிக் கொண்ருப்பார். இந்தப் பயிற்சிக்குப் போய் வந்த பிறகு அவர் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார். ஒன்பதரை ஆண்டு காலமாகத் தன்னை ஒரு முறைகூட வந்து பார்க்காத தனது பெற்றோர்களுக்கு மன்னிப்பை வேண்டியது மட்டுமல்லாது. ஒரு முறையாவது அவர்களின் கால்களில் விழுந்து பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இப்படி ஒரு கொலை காரனையே மனந்திருந்தி அழ வைத்த அப்பயிற்சி சிறையில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது!
சிறைச்சாலை நூலகம் பாழடைந்து போய்க் கிடந்தது. இப்பயிற்சிக்குப் பிறகு பலரும் நூல்களைப் படிக்க ஆரம்பித்தார் கள். படிக்கத் தெரியாதவர்களுக்குப் படித்துக் காட்டினர்கள்.
மனித வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்கள், துயரங்கள் அனைத்தும் வெளியில் இருந்து வருவதைவிட, அது ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருந்தே உற்பத்தியாகிறது. கோபம், பொறாமை, துன்பம், பழியுணர்ச்சி அனைத்துமே மனிதனின் ஆழ் மனதிலிருந்து வெளிப்பட்டு அவனை அலைக்கழிக்கின்றன. இவற்றை உணர்வதற்கு முதலில் மனம் 'திறந்த நிலை வேண்டும். இந்த மனந்திறந்த நிலைதான் அவனுள் இருக்கும் அனைத்துத் திய குணங்களையும் சுட்டெரித்து அவனை முழுமைப்படுத்துகிறது. முதலில் நம்மை உணர்ந்து கொண்டால், யாராலும், எந்த சக்தியாலும் நம்மை ஆட்படுத்த முடியாது.
'உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்!’ என்ற பாடல் வரிகள் இதையே உணர்த்துகின்றன. முதலில் நம்மை நாம் உணர வேண்டும். நம்மை உணர ஆரம்பிக்கும் பொழுது, தீயவற்றை எதிர்க்கும் சக்தி தானே வந்து விடும். உண்மையில் இது ஒரு "மனச்சலவை தான்!
195

Page 100
) மண்ணும் மனிதர்களும்
இந்த "மனச்சலவையை வாசகர்களும் மிக எளிய முறையில் பரீட்சித்துப் பார்க்கலாம். நான் பெரிய மகானமல்ல, உங்களுக்குக் குருவுமல்ல! எனது மனப் பயிற்சிகளை உங்களுக்கு எளிமையாகச் சொல்கிறேன். முயற்சித்துப் பாருங்கள். இதற்கு மன ஓர்மை மிக அவசியம்! உங்களை அறிந்து கொள்ள, உங்கள் மனம் தெளிவு பெற, உண்மைகளை வென்றிட இந்தப் பயிற்சிகள் நிச்சயமாக உதவி தரும். இது எனது அனுபவம்! மனம் தூய்மை பெறப் பெற நீங்கள் இளமையாக ஆவதை நீங்களே உணர்வீர்கள்.
இதோ பயிற்சி :-
இப்பொழுது நீங்கள் சுவாசிக்கிறீர்கள். உங்களின் சுவாசத்தை சுவாசிப்பதில் மட்டுமே நிலைநிறுத்துங்கள். உங்களின் மேல் உதடு படும் படியாக காற்று நாசியின் வழியாக உள்ளே செல்கிறது. அதை உணருங்கள். மேலும் உணர்ந்து. சுவாசியுங்கள். இப்பொழுது வெளியே இருக்கும் உயிர் மூச்சை நாசியின் வழியாக உள்ளே இழுக்கிறீர்கள். சுவாசம் வெளியே வருகிறது. அதை உணருங்கள். சுவாசிப்பதில் மனதை ஒரு நிலைப்படுத்துங்கள். நீங்கள் எப்பொழுதும் உங்களை அறியாமல் சுவாசிக்கிறீர்கள். இப்பொழுது அதை உணர்ந்து - மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். உங்கள் கவனம் முழுதும் சுவாசிப்பதிலேயே இருக்கட்டும். இப்பொழுது சுவாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள். அது உடல் முழுதும் பரவுகிறது. உங்களின் தோலை அது உராய்கிறது. மேலும் உராய்கிறது. அதை உணர முடிகிறதா? உங்களுக்கு சற்று உடல் எரிச்சல்கள் உண்டாகின்றன. சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். அது மேலும் தொடரட்டும். சிரமமாக இருக்கிறதா? உள் மூச்சை வாங்கி, கொஞ்ச நேரம் அப்படியே சுவாசத்தை நிறுத்துங்கள். மெதுவாக நாசித் துவாரத்தின் வழி மூச்சை விடுங்கள். கவனம்! உங்கள் நோக்கம் முழுதும் சுவாசத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மீண்டும் மூச்சை உள் வாங்கி, நிறுத்தி, பிறகு மெதுவாக வெளியே விடுங்கள். மீண்டும் பழைய நிலைக்கு வாருங்கள். மூச்சை விடுங்கள். அது உள்ளே போவதையும், வெளியேறுவதையும் மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள். இது முதல் நாள்.

சைபீர்முகம்மது )
தொடர்ந்து யாரிடமும் பேசாமல், இரண்டு வாரம் அல்லது பத்து நாட்கள் இப்படி தனிமையில் செய்தால் உங்களால் சுவாசத்தை நிறுத்தி மீண்டும் சுவாசிக்க முடிந்தது போல், உடலின் மற்ற பாகங்களையும் உங்களால் சன்னம் சன்னமாக உங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். முதலில் மனம் ஒருமைப்படும். பிறகு உங்களின் பயிற்சியையும் முயற்சியையும் கொண்டு, எப்படியும் உங்களின் உடலைக் கட்டுப்படுத்த இயலும். இதுவரை உங்களை அறியாமலேயே சுவாசித்தீர்கள். இப்பொழுது சுவாசத்தை அறிந்து கொண்டீர்கள். சிறிது சிறிதாக உங்கள் ஆழ்மனதை அறிந்து கொள்வீர்கள்.
இது எந்த மதக் கருத்துமல்ல. மனிதன் தன்னை உணர்வதற்கு ஏற்ற எளிமையான பயிற்சி!
மனிதர்கள் உடலில் இருக்கும் சில நோய்க் கட்டிகளை அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கிறார்கள். மேற்கண்ட பயிற்சியும் ஒரு வகை அறுவைச் சிகிச்சைதான்! உங்கள் மனதில் இருக்கும் துன்பங்கள், பொறாமைகள், பழி வாங்கும் உணர்ச்சி களையும், மற்ற எல்லா திய குணங்களையும் இந்த அறுவைச் சிகிச்சை மூலம் வெளியாக்கிவிடலாம்! மனிதன் மனித நேயம் மிகுந்தவனாக வாழ இந்த எளிய பயிற்சி உலகில் பரவ வேண்டும். அதன் பிறகு போர், பொறாமை சாதி, மதச் சண்டைகள் நிச்சியமாகக் குறையும்.
முதல் பயணத்தின் முடிவு திகார் சிறையில் 'விபாஸனா பயிற்சியின் வழி பலர் மீண்டும் மனிதர்களாக மாறினார்கள்.
திகார் சிறைக்கு சிரண்பேடியை கடைசி இடமாகக் கருதித்தான் அனுப்பினார்கள். ஆனால் உலகமே அவர் பக்கம் திரும்பிப் பார்த்தது.
197

Page 101
) மண்ணும் மனிதர்களும்
ஒரு திறமையாளனை என்னதான் அமுக்கி வைக்கப் பார்த் தாலும் ஒரு ரப்பர் பந்தை தண்ணிருக்குள் அமுக்கிய நிலைதான் உருவாகும் என்பதற்கு கிரண்பேடி மிகப் பெரிய எடுத்துக்காட்டு.
இந்தியப் பத்திரிகைளில் கிரண்பேடியின் பெயர் தலைப்புச் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. 'சார்லஸ் சோப்ராஜ்’ என்ற கடத்தல் கைதிக்கு இவர் சலுகைகள் செய்தாரென்று அரசியல் வட்டாரத்தில் ‘ஓங்கிய குரல் கேட்க ஆரம்பித்தது.
சோப்ராஜ் பல கடத்தல், கொலை குற்றங்களுக்காக அங்கே தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வந்தார். 1986 ஆம் ஆண்டில் மிகப் பாதுகாப்பான திகார் சிறையில் இருந்து ஒரு முறை தப்பிய கைதி இவர். சோப்ராஜ் தனது வாழ்க்கையை எழுதுவதற்கு உதவியாக ஒரு டைப்ரைட்டரை உபயோகிக்க வசதி செய்து கொடுத்தார் கிரண்பேடி இது மிகப் பெரிய புயலைக் கிளப்பரியது.
கைதிகள் அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலை மாறி அவர்களும் மனிதர்கள் எனும் போக்கு சிறைச் சாலையில் உருவாகியது. எல்லா கைதிகளையும் ஒருசேரப் பார்க்காமல் ஒவ்வொருவரின் குற்றத்தின் அடிப்படையில் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு அதற்கேற்ற கவனம் செலுத்தப்பட்டது.
சிறையில் அதிகாரிகள் மட்டுமே பார்க்க இருந்த டி.வி. பெட்டிகள் கைதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. ரேடியோ கேட்கவும் வசதி செய்து தரப்பட்டது. கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே முதியோர் கல்வி வழங்கப்பட்டது. சிறையில் இருந்த மரத்தடிகளில் கைதிகள் புத்தகங்கள் படிப்பது அன்றாடக் காட்சியாகியது.
பல கைதிகளுக்குக் கைவினைப் பொருட்கள் செய்யும் கலையும் தையல் கலையும் கற்றுத் தரப்பட்டு வெளியே வருமானம் ஈட்டுவதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டன. கைதிகளும் சிறையதி காரிகளும் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன. இதனால் அன்பும் சகோதர வாஞ்சையும் பெருகியது.
198

சைபீர்முகம்மது O
சிறைக்கூடத்தில் மூன்றாவது கட்டிடம் மிகவும் பழமை யானதாகவும் அழுக்கும் அசிங்கமுமான நிலையில் இருந்தது. அதனைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய பொழுது அத்தனை கைதிகளும் தாங்களே அந்த வேலையை மனமுவந்து ஏற்று ஒரே வாரத்தில் புதிய கலைக் கூடமாக மாற்றினார்கள். வெள்ளையடிக்கப்பட்டு மிக நேர்த்தியாகக் காட்சியளித்தது. முதலில் பொதுப் பணித்துறை ஊழியர்களே இந்த வேலையைச் செய்வதாக இருந்தது. ஆனால் கைதிகள் தாங்களே செய்வதாகச் சொல்லி அந்த வேலையைச் சிறப்பாக செய்து முடித்தார்கள். பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு உண்மையில் தாங்கள் ஒரு வாரத்தில் இவ்வளவு சிறப்பாக இதனைச் செய்து முடித்திருக்க முடியாது என்று ஒப்புக் கொண்டார்கள்.
அதட்டி உருட்டி மனிதனை வசப்படுத்துவதை விட அன்பினால் வெல்ல முடியும் என்பதற்கு இந்த ஒரு செயலே தக்க சான்று
எந்த சிறைச்சாலையை ஒரு 'குப்பைத் தொட்டி’ என்று
நினைத்து இவரை மாற்றினார்களோ, கிரண்பேடி அங்கிருந்து
சாம்பலிலிருந்து உயிர்பெறும் “பீனிக்ஸ்’ பறவை போல உயிர்பெற்று எழுந்தார்.
1994 ஆம் ஆண்டு இவருக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று சொல்லப்படகின்ற ‘மக்சேசே விருது’ - மணிலாவில் வழங்கப்பட்டது.
இந்தியர்கள் பலர் இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள் என்றாலும், ஒரு பெண்மணி - அதுவும் போலீஸ் துறையைச் சேர்ந்தவர் - இப்பரிசைப் பெறுவது அதுவே முதல் முறை. “மக்சேசே விருது’ வழங்கப்படும்பொழுது இவர் மிகச் சுருக்கமாக ஓர் ஏற்புரையை ஆற்றினார். அதன் கடைசி வரிகளை மட்டுமே இங்கே தருகிறேன். இதன் மூலம் திகார் சிறையில் உள்ள கைதிகள் எந்த அளவு இவரை நேசித்தார்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
199

Page 102
O மண்ணும் மனிதர்களும்
கைதிகள் எப்பொழுதுமே அதிகாரிகளை விரும்புவது கிடையாது. விரும்பும் அல்லது அன்பு செலுத்தும் நிலையும் உருவாவது மிக அரிது. ஆனால் கிரண்பேடி மனித மனங்களை வென்றார். கொலைகாரர்களிடமும், பயங்கர குற்றவாளிகளிடமும் மனித நேயத்தை வளர்த்தார். அவரின் பேச்சு போலீஸ் துறை பற்றி, கூட்டு முறையில் செயல்படுவது பற்றியெல்லாம் சிறப்பாக இருந்தது. அதன் இறுதிப் பகுதி இப்படி அமைந்தது.
"நான் இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதற்கு முன் டெல்லி திகார் சிறையிலிருந்து எனது டி.ஐ.ஜி திருவாளர் சாராங்கி போனில் அழத்துப் பேசினார். இப்போழுது நான் இந்த மக்சேசே விருது’ பெறும் வேளையில் திகார் சிறைக்குள் இருக்கும் 9100 கைதிகளும் சிறப்பு விழாவாக இதனைக் கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள்! அனைவருக்கும் நன்றி”
இந்த வரிகள் என் கண்களில் நீரை வரவழைத்தன. 9100 கைதிகள் தங்களின் அதிகாரி விருது பெறுவதை நினைத்து அதனை ஒரு விழாவாகக் கொண்டாடுவது உலகத்தில் திகார் சிறையில் மட்டுமே நடந்திருக்க முடியும்!
இதன் பிறகு இவருக்குப் பல்வேறு நாடுகளில் கருத்தரங்கு களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நார்வே நாடு சிறப்பு விருது கொடுத்தது. அமெரிக்காவின் அதிபர் பில் கிளின்டன் அமெரிக்க தேசிய வழிபாட்டுத் தினத்தன்று இவரை தன் குடும்பத்தாருடன் காலைச் சிற்றுண்டி அருந்த அழைத்தார். பிரிட்டனின் சிறைகளைப் பார்வையிட பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை அழைத்தது. ஹாங்காங், சினா போன்ற நாடுகளில் நடந்த கருத்தரங்குகளில் கலந்து கொள்ள இவர் அழைக்கப்பட்டார்.
உலகின் பல பாகங்களிலும் இவரின் புகழ் பரவியது. சிறைச் சாலை, கைதிகளைத் தண்டிக்கும் இடம்தான். ஆனால் அது ஒரு தொடர் தண்டனை வழங்கும் கூடமாக மாறிவிடக் கூடாது. கைதிகள் தங்கள் தவறுகளை உணரவும், தங்களைத் திருத்திக் கொள்ளவும் உள்ள கடைசி இடம் அது! எனவே
200

சைபீர்முகம்மது O
சிறைச்சாலைகள் அதற்கேற்ற நிலையில் உயர்த்தப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் சிறைச்சாலையின் உள்ளே ஒரு தனி 'கொள்ளைக் கூட்டமே இருப்பது போல்தான் நமக்குப் படுகிறது. எந்த ஒழுக்கமற்ற செயலுக்காக அவர்கள் தண்டனை பெறுகிறார்களோ அதே செயலை நான்கு சுவர்களுக்குள் சுதந்திரமாக செயல்படுத்துகிறார்கள். போதைப்பொருள் கடத்தல், லஞ்சம், அடிதடி என்பதெல்லாம் சிறையில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
அரசியல் செல்வாக்கின் காரணமாக கிரண்பேடி திகார் சிறையில் இருந்து மாற்றப்பட்டார். அவரின் உண்மையான உழைப்பு இப்பொழுது பாழாகிவிட்டது என்றே சொல்லவேண்டும். பழைய நிலைமை மீண்டும் அங்கே தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது.
பல பொது நிறுவனங்கள் திகார் சிறையில் கைதிகளின் மன நிலை மாற்றத்திற்கு ஏற்பாடுகள் செய்கின்றன. ஆனால் போதுமான வரவேற்பு உள்ளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொது அமைப்புகளின் ஊழியர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள். கைதிகளை முன்பு போல் சுதந்திரமாக அணுக முடிவதில்லை. இதனால் கிரண்பேடி தோற்றுவித்த பல மனிதாபிமான நிகழ்வுகள் இப்பொழுதெல்லாம். நடைபெறுவ நில்லை.
முன்பு சிறைக்குள் ஒரு கட்டு பீடி பெறுவதற்கு 150 ரூபாய் செலுத்தி மறைத்துக் குடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்பொழுது அது 50 ரூபாய்க்குத் தாராளமாகக் கிடைக்கிறது. யாரும் எங்கும் பீடி புகைக்க முடிகிறது.
மிக மோசமான நோயாளிகளுக்கு வெளியே மருத்துவமனை களில் சிகிச்சையளிப்பது வழக்கம் ஆனால் திகார் சிறையில் பணம் உள்ள கைதிதான் இப்பொழுதெல்லாம் அந்த வெளிச் சிகிச்சைகளைப் பெற முடிகிறது. ஒரு இனிப்பு நீர் வியாதி உள்ள கைதியின் சர்க்கரையின் அளவு 385 என்று வெளியே காட்டுகிறது. ஆனால் பணமில்லாத ஏழை என்பதால் சிறைச்சாலை மருத்துவ மனை 125 என்றே சொல்கிறது. உள்ளே இருக்கும் காவலாளிகள்,
2O

Page 103
O மண்ணும் மனிதர்களும்
டாக்டர்கள். அத்தனை பேரையும் ‘சரிக் கட்டினால்தான் இவனின் சர்க்கரையின் அளவும் சரியான நிலைக்கு வரும்!
1995 மே 5 ஆம் தேதி கிரண்பேடி உடனடி மாற்றல் உத்தரவைப் பெற்றார். அதன் பிறகு சிறை பழைய சிறையாக மாறியது. இவர் மாற்றல் பெற்ற இரண்டாவது மாதம் அதாவது 1995 ஜுலை 7 ஆம் நாள் பிரபல பிஸ்கட் கோடீஸ்வரர் ராஜன் பிள்ளை திகார் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். சிங்கப்பூரில் பிரபலமான கோடீஸ்வரர் அவர் பங்குச்சந்தையில் நடந்த சில தில்லுமுல்லுகள்’ காரணமாக இவர் டில்லியில் கைது செய்யப்பட்டார். ரத்தக் கொதிப்பு அதிகமாகி இவர் இறந்ததாக விசாரணையில் தெரிவித்தார்கள். நெஞ்சுவலி எடுத்த அவரை ஏன் வெளி மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சையளிக்க வில்லை என்பதே கிரண்பேடியின் கேள்வி. ராஜன் பிள்ளையின் மரணம் உலகப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வந்து பரபரப்பு ASTÜLğltuğl.
ஜனநாயகம் என்ற பழைய கிழிந்த சட்டையை மாட்டிக் கொண்டு அங்கே தடியெடுத்தவனெல்லாம் தண்டலாகச் செயல்படும் நிலைதான் இருக்கிறது. அந்த மண்ணில் மனிதர் களுக்கு நிகழும் அவலம் - அதுவும் போலீசின் பிடியில் நடக்கும் அட்டூழியங்கள் - கணக்கில் அடங்காது.
தான் அதிகாரியாக அங்கிருந்த வேளையில் இப்படியொரு அவலம் அங்கே நடந்ததே இல்லை என்று கிரண்பேடி கூறினார். !9WI உண்மைதான்ے
எனது டில்லிப் பயணத்தின் அனுபவங்கள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்று, பழைய அரச மாளிகைகள், நினைவுச் சின்னங்கள், கற்பனையும் மனக்கிளர்ச்சியுமூட்டும் விசித்திரங் களும், தங்கம், முத்துக் குவியலுக்கிடையில் நடமாடிய அரச குமாரிகள், மன்னர்கள், வில், அம்பு, வாள் ஏந்திப் போரை மட்டுமே தொழிலாகக் கொண்ட சக்கரவர்த்திகள். இவர்களின் வீரதீர பிரதாபங்களும் என்று சுற்றி வந்தது! இவை எல்லாம் லைலா மஜ்னு கதைப் பின்னலில் வரும் பாலைவனத்து ஒட்டகங்கள். அதில் ஒரு சிறிய சோலையாக கிரண்பேடியின் வாழ்க்கையையும் சொல்ல முடிந்தது.
2O2

சைபீர்முகம்மது O
டில்லியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோதுமைப் பயிர்கள், கரும்புக் கொல்லைகள், கிழிந்த புடவையோடு வாழ்க்கையின் ஏக்கங்களைச் சுமந்த கிராமத்துப் பெண்கள், புல்கட்டைத் தலையிலும் தனது குழந்தையை இடுப்பிலும் மற்றொன்றை வயிற்றிலும் சுமந்தவாறு ஒரு ஒற்றையடிப் பாதையில் தனது மாடுகளை விரட்டியவாறு நடக்கும் பெண்கள், கிராமத்து வட்டிக் கடை முதலாளி தனது வில் வண்டியில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஜோராகப் பிரயர்ணம் செய்யும் காட்சிகள், விடிகாலையில் பால் கறக்கும் சர்சர்ரென்ற ஒலிகள், அரிசியையோ வேறு எதையோ உரலில் போட்டு குற்றும் ஒலிகள், பண்ணையார் - சாகுபடி - நிலவரி - நிலுவை கடன் - அடமானம் - விவசாயம் என்ற அமுங்கிய வாழ்க்கை முறைகளை அன்றாடம் காணும் குடியானவர்கள். இவர்கள் எல்லாரையும், எல்லாவற்றையும் என்னால் படம் பிடித்துக் காட்ட முடியவில்லை. பலவீனங்களும் நிர்ப்பந்தங்களுமாய் இந்த மனிதர்கள் இன்னமும் சுதந்திரம் என்ற முடிவு வராமலேயே - அந்த வெளிச்சம் படாமலேயே - வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் இதயமே கிராமங்கள்தான் என்று இன்னமும் இவர்கள் சொல்லிக் கெண்டிருக்கிறார்கள். *
இவர்களைப் பற்றி நிச்சயம் எனது இரண்டாம் பாகமான தென்னாட்டில் குறிப்பிடுவேன்.
2O3

Page 104

இரண்டாம் பாகம்

Page 105

Tெண்பதுகளில் நான் முதன் முறையாக தமிழகப் பயணம் மேற்கொண்டேன். அப்போது தமிழகத்திலிருந்து படங்களைத் தருவித்து இங்கே திரையிட்டுக் கொண்டிருந்த நேரம் திடீரென்று ஏகப்பட்ட திரைப்படக் கலைஞர்கள் மலேசியா வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எழுத்தாள நண்பர் ப. சந்திரகாந்தம் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை வரவழைத்து மலேசியா முழுதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தார். என்னையும் எனது காரையும் உதவிக்கு அழைத்தார். நானும் அவர்களோடு சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது. நானும் ஏன் ஒரு நிகழ்ச்சியை ஏற்று நடத்தக் கூடாது என்ற ஆசை ஏற்பட்டது. உடனே தமிழகம் புறப்பட்டேன். ஒரு ஆவேசத்தில் கிளம்பிவிட்டேனேயன்றி, எனக்கு தமிழகத்தில் யாரும் உதவுவார்களா என்று கூட நினைக்கவில்லை.
பாஸ்கர் என்ற நண்பர் தமிழகத்தில் இருந்து இங்கே வந்த பொழுது கொஞ்சம் அறிமுகம் அவ்வளவுதான்!மற்றபடி பொது வாழ்க்கையில் இருந்த காரணத்தால் குமரி அனந்தன், நாவலர்
2O7

Page 106
O மண்ணும் மனிதர்களும்
நெடுஞ்செழியன், டாக்டர் மு.வ. எழுத்தாளர் நா.பா. என்று ஒரு பட்டியல் எனது டைரியில் இருந்தது. எனது "சினிமா'த் தொழிலுக்கு இந்தப் பெயர்கள் நிச்சயம் சரிப்பட்டு வராது என்பதை இங்கேயே தீர்மானித்த பிறகே விமானம் ஏறினேன்.
உண்மையில் என் மேல் எனக்கிருந்த தன்னம்பிக்கை மட்டுமே விமான டிக்கெட் வாங்க எனக்கு உந்துதல் தந்தது.
இவர்கள் இல்லாமல், நான் ஏற்கனவே சில படங்கள் வாங்கிய வகையில் இராமதாஸ் என்பவர் எனக்குப் பழக்கம். அவரை நிச்சயம் நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியாது என்பதையும் முதலிலேயே தீர்மானம் செய்து கொண்டேன். படங்கள் வாங்கிய வகையில் எனக்கு இருபதாயிரம் வெள்ளியை அப்பொழுதே ‘மக்கு வைத்தவர் அவர்.
‘வைக்கம் தேவராஜன் என்ற மிருதங்க வித்வான் சினிமாவில் பின்னணி இசைக்கு மிருதங்கம் வாசிப்பவர். அவர் மலேசியா வருவதற்கும், அவருடைய மனைவி மற்றும் மைத்துணி யின் கச்சேரிகள் நடைபெறுவதற்கும் இங்கே ஏற்பாடுகள் செய்து கொடுத்திருந்தேன். அந்த வகையில் அவர் கொஞ்சம் பழக்கம்.
சென்னை விமான நிலையத்தில் நான் இறங்கியதும் இராம தாஸ், பாஸ்கரன், 'வைக்கம் தேவராஜன் மூவரும் வரவேற்கக் காத்திருந்தார்கள். நான் ஏறிய சிங்கை விமானத்தில் திடீரென்று ப. சந்திரகாந்தத்தையும் சந்தித்தேன். எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவர் சங்கர் கணேஷ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வந்திருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் சங்கர் - கணேவுை மனதில் நினைத்து அவர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யவே தமிழகம் புறப்பட்டேன். எனது முதல் எண்ணத்திலேயே "இடி விழுந்தது.
சென்னையில் பாஸ்கர், “மெட்ராஸ் இண்டர்நேஷனல் ஒட்டலில் பி.ஆர்.ஒ. ஆக இருந்ததால் என்னை நேரே அங்கேயே தங்க வைத்தார். சந்திரகாந்தமும் எனது அறையிலேயே தங்கிக்
o GastGööllnit.
இரண்டு மூன்று நாள் ஆலோசனை செய்தபிறகு பாஸ்கரின் ஏற்பாட்டில் இளையராஜவைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
208

சைபீர்முகம்மது O
இளையராஜாவின் இசையில் அப்பொழுதுதான், அன்னக்கிளி’யும் 'பத்ரகாளி’யும் வெளிவந்திருந்தன. பத்ரகாளியின் ‘ஒத்த ரூபா உனக்குத் தாரேன்’ பாட்டு சென்னை தெருக்களின் மூலை முடுக்கெல்லாம் அப்பொழுது ஒலித்துக் கொண்டிருந்தது!
சரி, சங்கர் கணேஷ்தான் கைநழுவி விட்டது. நாம் இளைய ராஜாவை அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்துப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தோம் சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் அவரை முதன் முறையாகச் சந்தித்தேன். அவரையும் அவர் உருவத்தையும் பார்த்து இந்தச் சின்னப் பையன் என்ன பண்ண முடியுமென்றே நினைத்தேன். அவரோடு அவரின் அண்ணன் பாஸ்கர், தம்பி கங்கைஅமரன், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இருந்தார்கள். ع
“நான் மலேசியா வருவதில் ஆட்சேபமில்லை. ஆனால் நீங்கள் எங்கள் குழுவில் டி.எம்.எஸ். சைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். எனக்கும் அந்த ஆலோசனை ஏற்றதாக இருந்ததால் டி.எம். செளந்தரராஜனை அணுகினேன். முதலில் தயங்கினார். பிறகு இரண்டு நாள் கழித்து பதில் சொல்வதாகக் கூறி என்னை அனுப்பி விட்டார். நிகழ்ச்சிக்கு இவ்வளவு தொகை வேண்டுமென்று பெரிய தொகை சொன்னார். எனக்கு வேறு வழி இல்லாமல் அந்தத் தொகைக்கு ஒப்புக் கொண்டேன். பிறகு இளையராஜாவும் அதே தொகையைக் கேட்டார். எனக்குத் தலை சுற்றியது.
பிறகு ஒவ்வொரு நாள் இரவிலும் எனது ஒட்டல் அறையில் இளையராஜா என்னை வந்து சந்திக்க ஆரம்பித்தார். என்னைப் புரிந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் மனம்விட்டுப் பேசினோம்.
இந்த நேரத்தில் இளையராஜாவுக்கு ஏகப்பட்ட படங்கள் ‘புக்’ஆகிக் கொண்டிருந்தன. அவரின் உழைப்பை நேரிலேயே நான் பார்த்தேன். காலை 5.00 மணிக்கு எழுந்து சங்கிதம் படிக்கக் கிளம்பிவிடுவார். தனது விரல் நுனியில் அந்த பண்ணைபுரத்துக் கிராமத்து இளைஞர் உலகின் அனைத்து இசையையும் எப்படித்தான் ஒளித்து வைத்திருந்தாரோ?
209

Page 107
0 மண்ணும் மனிதர்களும்
'காயத்ரி’ என்ற பஞ்சு அருணசாலத்தின் படத்திற்கு அவர் இசையமைக்கும் பொழுது அருகில் இருந்து பார்க்கும் நேரங்களில், இவர் எங்கேயோ போகப் போகிறார் என்பதை உணர்ந்தேன். காலை 5.00 மணியிலிருந்து 7.30 வரை சங்கிதப் பயிற்சி. அதன் பிறகு நேராக எனது ஒட்டல் ரூமுக்கு வந்து 8.30 மணிவிரையில் காலைச் சிற்றுண்டி, கேலிப்பேச்சுகள், கிண்டல்கள் என்று இருந்து விட்டு, சரியாக 8.30 மணிக்குக் கிளம்பரி ஸ்டூடியோ அல்லது ஏதாவது ஒரு படக் கம்பெனி என்று கிளம்பி விடுவார். அதன் பிறகு இரவு 8.30 மணி வரையில் அவருக்கு ஒய்வே இருக்காது.
'பாவலர் பிரதர்ஸ்’ என்ற பெயரில் தனது சகோதரர்களுடன் மேடைக் கச்சேரி செய்து கொண்டு சினிமாவில் ஜிகே, வெங்கடேஷ் இசைக்குப் பின்னணி வாசித்துக் கொண்டிருந்த காலத்திலும் அவர் தனது “இலட்சியக் கனவை நோக்கி கடுமையாக உழைத்தார்.
‘பண்ணைபுரத்திலிருந்து ஓர் ஆர்மோனியப் பெட்டியை மட்டுமே அவர் தூக்கிக் கொண்டு வரவில்லை. எதிர்காலம் என்ற பெரிய கனவுகளையும் சுமந்து கொண்டு வந்தார். எவனொருவன் தனது இலட்சியத்தை நோக்கிக் கடுமையாக உழைக்கிறானோ, நிச்சயம் அவன் அந்த இலக்கை அடைய முடியும் என்பதற்கு இளையராஜா பெரிய எடுத்துக்காட்டு. அவரிடம் நான் கண்ட மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால் வெற்றி மங்கை அவரை அணைத்துக் கொண்டிருந்த நேரங்களில்கூட தனது பயிற்சியையும் முயற்சியையும் நிறுத்தாமல் இருந்ததுதான்! காலை 500க்கு எழுந்து சங்கீத வித்வான்களிடம் அவர் மேலும் மேலும் பயிற்சிகள் மேற்கொண்டதை என்னால் மறக்க முடியாது.
அவரின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பெரிய இசையமைப்பாளர் ஒருவர். "என்னப்பா இசை? டங்கு டக்குரி, டங்கு டக்குரி என்று இரண்டு தட்டு தட்டுவதெல்லாம் இசையா?” என்று என்னிடமே கேட்டார்.
ஆனால் அப்படி கேள்வி கேட்டவர்களையும் கேலி செய்தவர்களையும் ஒரு ஓரத்தில் உட்கார வைத்தது இளையராஜா வின் உழைப்புத்தான் என்றால் அது மிகையில்லை!
210

சைபீர்முகம்மது O
இன்று அவர் இங்கிலாந்து அரங்கில் "மாஸ்ட்ரோ’ என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுகூட அவரின் உழைப்பின் உச்சம் தான் என்பேன். இது ஒரு தமிழ் மகனுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட உழைப்பின் வெற்றி என்ற்ே நான் நினைக்கிறேன்.
மலேசியாவிற்கு முதன் முதலில் அவரை அழைத்து வந்த பொழுது, அவருக்கு அப்படியொன்றும் இங்கே பெரிய பெயர் இல்லை. அந்த நிகழ்ச்சியில் எனக்கு அப்பொழுதே எழுபத்தை யாயிரம் வெள்ளி நஷ்ட்ம் ஏற்பட்டது. எனது குடும்பத்தாரின் நகைகளை அடமானம் வைத்தே நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு அந்த நேரத்தில்-இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய நில்ையில் - சென்னையிலிருந்து துஞ்சு அருணாசலம் நாளுக்கு மூன்று போன்கள்ல்கள் போட ஆரம்பித்து விட்டார். “காயத்ரி’ பட ரிலீஸ் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. இறுதி பின்னணி இசையை இளையராஜாவந்து முடிக்க வேண்டு மென்று அவர் வற்புறுத்தினார். •
உண்மையில் இளையராஜாவை நான் 'புக் செய்த நேரத்தில், வேறு சிலரும் என்னிடம் வந்து தங்களை அழைத்துச் செல்லுமாறு வேண்டினார்கள். வியாபார ரீதியில் அவர்களின் வேண்டுகோள் எனக்கு லாபமானதுதான். ஆனால் ஒருகிராம்த்திலிருந்து வந்து தனது உழைப்பால் உயரத்துடிக்கும் இன்ளஞனின் முன்ன்ேற்றமே எனக்கு அந்த நேரத்தில் பெரித்ாகப்ப்ட்டது. புலதந்தர்ப்பங்களில் நமது உயர்ந்த எண்ணங்கள் மலினப்பட்டு விடுவதை என்னால் அந்த நேரத்தில் உணர முடிந்தது.
இளையராஜா இங்கிருந்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப் பதைவிட, அவரை திரும்ப அனுப்பி வைப்பதில் சில சக்திகள் முயன்றபொழுது, என்னால் மனதுக்குள் அழமுடிந்ததே தவிர எதுவும் செய்ய முடியவில்லை.
'உங்க்ளின் எதிர்காலமே தமிழ் நாட்டில்தான் இருக்கிறது. இங்கே இரண்டு நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் தங்குவதால் என்ன பயன்?' என்று அவர்கள் இளையராஜாவிடம் பேசியதை என் நண்பர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்.
211

Page 108
O மண்ணும் மனிதர்களும்
என்னால் அவரின் எதிர்காலம் பாழாக வேண்டாமென்று உடனே மாற்று டிக்கெட் வாங்கி அவரை மட்டும் விமானத்தில் அனுப்பி வைத்தேன். மற்றவர்கள் சிங்கப்பூரைப் பார்க்க விரும்பிய தால் அவர்களை என் செலவிலேயே சிங்கப்பூர் அனுப்பி வைத் தேன்.
நஷ்டங்களும், மனக்கவுடங்களும் என்னை வாட்டிய நேரத்தில் ஒரு நல்ல கலைஞனை வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்திய திருப்தி மட்டுமே மிஞ்சியது.
அவர்கள் கொண்டு வந்த அனைத்து வாத்தியக் கருவி களையும் இங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். பிறகு சென்னையிலிரு ந்து எனக்கு டெலிபோன் செய்து அவற்றை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யச் சொன்னார்கள்.
இளையராஜா குழுவில் வந்த பல வாத்தியக் கலைஞர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள். அதிலும் 'பாபு’ என்ற டிரம் வாசிக்கும் கலைஞரின் நிலை மிகப் பரிதாபம். அவருக்குச் சொந்த டிரம் கிடையாது. வாடகைக்கு எடுத்து வாசிக்க வேண்டும். கிடைக்கும் வருமானத்தில் முக்கால்வாசிப் பணம் வாடகைக்கே போய்விடும். தனக்கு ஒரு “டிரம் வாங்கிக் கொடுத்தால் அதை வைத்துப் பிழைத்துக் கொள்வேன் என்று கெஞ்சினார். என் நிலையோ மிகவும் பரிதாபகரமான நிலையாகி விட்டது. ஆனால் இந்த பாழாய்ப்போன ஈரமனம் அதையெல்லாம் எங்கே பார்க்கிறது? எப்படியோ கடன்பட்டு, இன்று இசையமைப் பாளராக இருக்கும் நம் நாட்டு தபேலா வித்வான் வாசவன் அவர்களின் அண்ணன் தனது டிரம்"மை விலைக்குக் கொடுத் தார். அதையும் மற்ற கருவிகளையும் 'ஏகப்பட்ட பணம் கட்டி சென்னைக்குக் கொண்டு சேர்த்தேன்.
நான் சென்னையை அடைந்த பொழுது 16 வயதினிலே! வெளியாகி, பெரிய வெற்றியோடு ஓடிக் கொண்டிருந்தது. படம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை. நான் அந்தப்படத்தைப் பார்க்க வேண்டு மென்று இளையராஜா, கங்கை அமரன் இருவரும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். சென்னை வந்த ஐந்தாம் நாள் அவர்களுக்கென்று தனியாக தியேட்டரில் ஒதுக்கப்படும்
212

சைபீர்முகம்மது O7
தனி இருக்கையில் அமர்ந்து நான், இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன் நால்வரும் படத்தைப் பார்த்தோம்.
மேடையில் எப்படி அதிகமாகப் பேசுவாரோ, அதேபோல் எனது பக்கத்தில் அமர்ந்தும் கங்கை அமரன், “படம் எப்படி? பாட்டு எப்படி? இசை எப்படி?” என்று என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்து கொண்டிருந்தார்.
படம் முடிந்து வெளியே வந்து நான் சொன்னேன்: "இனி உங்களைப் பிடிக்க முடியாது. நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள்!”
மலேசியா வந்து போன பிறகு வெளியான அந்தப் படம் இளைய ராஜாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.
மறுநாள் மதியம் அவர் வீட்டில் எனக்கு விருந்து ஏற்பாடாகி யிருந்தது. இதுவெல்லாம் வேண்டாமே என்று நான் மறுத்தேன்.
“இது நாங்கள் ஏற்பாடு செய்த விருந்தல்ல. அம்மாதான் உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்’ என்றார்கள்.
எனக்கு இந்த 'அம்மா’ என்ற வார்த்தை மிகவும் பிடித்த ஒன்று. வாழ்க்கையில் இளமையிலேயே அம்மாவை இழந்தவன் நான். வாய் நிறைய எனது தாயை ‘அம்மா. அம்மா’ என்று அழைக்க முடியாமல் 6 வயதிலேயே தாயற்ற பிள்ளையாக வளர்ந்தவன். உடனே விருந்துக்கு சம்மதித்தேன். -
மறுநாள் ஆடி கடைசி ஞாயிறு என்று சொன்னார்கள். எனக்கு வேறு வேலைகள் இருந்த காரணத்தால், ஒரு மணி நேரம் தாமதமாக சாந்தோமில் இருந்த இளையராஜா இல்லம் சென்றேன். அனைவரும் சாப்பிடாமல் எனக்காகக் காத்துக் கொண்டிருந் தார்கள்.
வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சைவச் சாப்பாடு. இளையராஜாவின் தாயார் தாயம்மா என்பக்கத்தில் அமர்ந்து எனக்குப் பிஞ்சு கத்தரிக்காய்களைப் பரிமாறியது இன்றும் கண்முன் நிற்கிறது.
“தம்பி, எப்பொழுதுமே கடல் தாண்டிப் போயிட்டு வந்தா நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும்னு சொல்லுவாங்க. ராஜா
213

Page 109
O மண்ணும் மனிதர்களும் கடல் தாண்டிப் போன பொழுது எங்களுக்கும் பயமாத்தான் இருந்துச்சு. ஆனா உன் நல்ல மனசுப்பா. அவன் இங்கே வந்ததும் உட்கார நேரமில்லாமல் நிறைய படங்கள் கிடைச்சிருக்கு” என்று கூறி எனக்கு காய்கறிகளை அள்ளி அள்ளி வைத்தார்.
விருந்து முடிந்து கிளம்பும் பொழுது புதிதாக வாங்கிய இரண்டு காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை என் மனைவிக்காக வாயார வாழ்த்திக் கொடுத்தார்.
அந்தத் தாயின் அன்பில் எனது எழுபத்தையாயிரம் வெள்ளி இழப்பு தூசாகப் போய் விட்டது.
அந்த மண்ணில் எத்தனையோ மனிதர்களை நான் சந்தித்துள்ளேன். பழகியுள்ளேன். ஆனால் இளையராஜாவின் தாயாரை என்னால் மறக்க முடியாது. தூய்மையான அன்புக்கு அவர்கள் பெரிய எடுத்துக் காட்டு!
நட்சத்திரங்களுக்கிடையில் சில நிலவுகள்!
சென்னை சினிமா உலகம் கொஞ்சம் வித்தியாசமானது. அங்கே திறமைக்கு இருக்கும் மதிப்பைவிட எவனுக்கு மார்க்கெட் இருக்கிறதோ அவனுக்கே மதிப்பு. அங்கே ஒருவர் உங்களைத் தோளில் தழுவி வரவேற்பதை எப்பொழுதுமே பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பெரும்பாலும் சினிமாவில் நடிப்பது போலவே உண்மை வாழ்க்கையிலும் நடிப்பார்கள். எனக்குக் கோடம்பாக் கத்தில் இந்த நடிப்பைக் கண்டு மிகவும் வெறுத்து விட்டது. எந்த நடிகரைக் கண்டாலும் அவர்களிடம் முகம் கொடுத்துப் பேசாத மெளன விரதம் மேற்கொண்டேன். இதனால் கோடம்பாக்கம் ஏரியாவில் இவன் பெரிய “கர்வம் பிடித்தவன் என்ற பட்டப் பெயரே வழக்கில் இருந்தது.
இளையராஜாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களில் மிக முக்கியமானவர் பேசும் படம் பத்திரிகையின் ஆசிரியர் ரமணி. சென்னைக்கு நான் சென்ற நாள் முதலாய் ஒரு சகோதரர் போல் என்னிடம் பழகியவர். பழகுவதற்கு இனிய நண்பர். எதற்கெடுத் தாலும் நாமே செலவு செய்ய வேண்டிய கோடம்பாக்கத்தில் எனக்காக பல ஆயிரங்களை செலவு செய்தவர். பிறப்பில் ஒரு
214

சைபீர்முகம்மது O
பிராமணராக இருந்தாலும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் பழகியவர். இரண்டாம் முறை நான் சென்னை சென்ற பொழுது அவரின் நட்பு மிக நெருக்கமாக ஆகியது. சென்னை ரஞ்சித் ஓட்டலில் எனக்கு ரூம் ஏற்பாடு செய்து அங்கேயே தங்க வைத்தார். நான் ரூமில் இல்லாத சமயங்களில் என்னைத் தேடி வரும் அவர், நான் வரும் வரையில் எனது படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பார்!
இளையராஜா மலேசியா வருவதற்கு முன்பு கே. பாலசந்தர். கமல்ஹாசன், ஜெமினி கணேசன், ஜெய சித்ரா, ஜெய் கணேஷ், சி.ஐ.டி. சகுந்தலா என்று பெரிய கலைஞர்கள் குழு மலேசியா வந்தது. இதனை சிங்கப்பூரில் இருந்த ஒருவர் ஏற்பாடு செய்திருந் தார். இந்த குழுவை சென்னையில் ஏற்பாடு செய்து கொடுத்தவர் 'பேசும்படமீரமணி. அவரும் அந்தக் குழுவில் இங்கே வந்திருந்தார்.
மலேசிய நிகழ்ச்சிகள் முடிந்து சிங்கப்பூர் நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள், அங்கே ஒட்டலுக்குப் பணம் கட்டாததால் பெரிய பிரச்னைக்கு ஆளாகி விட்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முக்கிய கலைஞர்களை பெரிய ஒட்டலில் தங்க வைத்து விட்டு. சிறிய கலைஞர்களுக்கு ஓட்டல் பில்லை கட்டாமல் விட்டு விட்டார். எனக்கு ரமணி உடனே போன் செய்தார். நான் சிங்கை சென்ற பொழுது ரமணி பரிதாபகரமாக “டேய் எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்துடா” என்றார். பில்லை கட்டி அனைவரையும் கே. பாலசந்தர், கமல்ஹாசன் மற்றும் பெரிய கலைஞர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கொண்டு போய் சேர்த்தேன். அப்பொழுது அங்கிருந்த ஜெமினி கணேசன் சற்று வேறுபட்ட மனிதராக யாரும் நெருங்க முடியாதவர் போல் காட்சியளித்தார். நான் ஏற்கனவே பழகிய நண்பர் ஜெய் கணேசின் அறையில் இருந்தேன். நாங்கள் உணவுக்காக வெளியே கிளம்பிய பொழுது வாசலில் ஜெமினி கணேசன் வந்து நின்றார்.
“இந்த இக்கட்டான நிலையிலிருந்து எங்கள் கலைஞர்களைக் காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி” என்றார்.
“நான் கலைஞர்களைக் காப்பாற்ற வரவில்லை. சார் என்
நண்பர் ரமணியைத்தான் மீட்க வந்தேன்” என்றேன்.
215

Page 110
O மண்ணும் மனிதர்களும்
“நானும் உங்களோடு வெளியே வருகிறேனே’ என்று அவர் கூறிய பொழுது எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. பெரிய காதல் மன்னன், தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த கதாநாயகன் நம்மோடு வருவதாவது அவரின் முகத்தில் இருந்த நட்பின்’ அடையாளம் ஒன்றும் பேசாமல் இருக்கச் செய்து விட்டது. ஒருவிரல் கிருஷ்ணாராவ் அப்பொழுது ஓடிவந்து என் கையைப் பிடித்துக் கொண்டார். “நல்ல வேளையாக நீங்கள் வந்தீர்கள். நாங்கள் மானத்தோடு ஊர் திரும்ப உதவி செய்தீர்கள். மானமே போயிருக்கும்” என்றபடி சி.ஐ.டி. சகுந்தலா மற்றும் அவர் அண்ணன் அனைவரும் உணவுக்காக சிங்கப்பூர் ‘புக்கிட் ஸ்ட்ரீட்” இரவு உணவு விடுதிக்குச் சென்றோம்.
உணவு சாப்பிட்டுக்கொண்டே ஜெமினி கணேசன் “என்னைப் பார்த்தால் பெரிய “கர்வி’ என்று சொல்லுவார்கள். ஆனால் என்னிடம் பழகிவிட்டால், பிறகு என்னை விட்டுப்பிரிய மாட்டார்கள்’ என்றார். முதலில் அதை நான் சாதாரணமாகத் தான் எடுத்துக் கொண்டேன். ஆனால் சென்னைக்கு மூன்றாவது முறை சென்ற பொழுது அது எவ்வளவு உண்மையென்று புலப்பட்டது.
ரஞ்சித் ஒட்டல் ஜெமினி கணேசன் . வீட்டுக்கு அடுத்த கட்டடத்தில் இருந்தது. காலையில் தனது தேர்ட்டத்தில் வாக்கிங் முடிந்து அன்றாடம் என் ரூமுக்கு வந்து விடுவார். என்னைப் படுக்கையைவிட்டு எழுப்புவதே அவர்தான் என்றாகிவிட்டது.
“வீட்டுக்கு வாருங்கள்!” என்று அவர் அழைக்காத நேரம் கிடையாது. எனக்கோ சாப்பிடவோ படுக்கவோ நேரம் இருப்ப தில்லை. மூன்றாவது பயணத்தில் நான் ஏ.எம். ராஜா, ஜிக்கி, எஸ். சி. கிருஷ்ணன் போன்றவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன். இளையராஜாவில் இழந்ததை எப்படியும் இந்த இரண்டாவது நிகழ்ச்சியில் ஈடு கட்டி விடலாமென்பது எனது எண்ணம் இரவும் பகலும் ஒரே அலைச்சல்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ரமணியின் காரில் ஏ.எம்.ராஜாவைச் சந்தித்து விட்டு ஹோட்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த பொழுது,காரை நேராக ஜெமினி கணேசன் வீட்டுக்குக் கொண்டு
216

சைபீர்முகம்மது O
போய் விட்டார் ரமணி. எனக்கோ ஏகப்பட்ட வேலைகள் டாக்கி இருந்தன.
‘வேண்டாம்பா. வேறு ஒரு நாளைக்குப் போகலாமென்று கூறியும் ரமணி விடவில்லை. பிறகுதான் தெரிந்தது. இவர்கள் பேசி வைத்துக் கொண்டே இந்த ‘கடத்தல்' வேலை செய்திருக் கிறார்கள் என்று.
அவரின் பெரிய வீட்டின் கீழ் தளத்தில் ஒரு ஆபீஸ் ரூம் இருக்கிறது. அதில் சென்று அமர்ந்ததும் கதவைப் பூட்டி சாவியை ஜெமினி கணேசனின் மானேஜர் ஜெமினி மகாலிங்கத்திடம் வெளியே தூக்கி எறிந்து விட்டார். V−
காலை 10.30 மணிக்கு உள்ளே சென்றோம். இரவு 700 மணிக்கே வெளியே விட்டார்.
சைவம் மட்டுமே சாப்பிடும் அந்த ஐயர் ஜெமினி கணேசன் குடும்பத்தில் இவர் மட்டுமே விதி விலக்கு ஜெமினி மகாலிங்கம் ஏகப்பட்ட குஷியோடு சென்னை பிலால், சங்கம், புளு மவுண்டன் என்று ஒரு ஹோட்டல் விடாமல் வகைக்கு ஒரு கறியாக கொண்டு வந்து குவித்து விட்டார். லண்டன் பில்சனர் பியரும், மெக்டோனல்ட் விஸ்கியும் வெள்ளமாக ஓடியது. காதல் மன்னன் ஒரு குழந்தையைப் போல என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன். பழகுவதற்கு அவரைப் போல் ஒரு உண்மையான நண்பர் சினிமா உலகில் கிடைப்பது மிகவும் அரிது. அவரைப் பற்றிக் கூறும்பொழுது அவர் ஏகப்பட்ட திருமணம் செய்தவர் என்றும், பெண்கள் விஷயத்தில் அவர் தடுமாறுவார் என்றும் கூறுவார்கள். ஆனால் ஜெமினி கணேசனைப் பொறுத்த மட்டில் அவராக எந்தப் பெண்ணையும் அடைய விரும்பியதை விட பெண்களே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள் என்பது தான் உண்மை.
ஒரு மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று எனது வீட்டில் என்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். அப்பொழுது மலேசியாவிற்கு திருச்சி சுவாமிகளுடன் வந்திருந்த ஜெமினி என் இல்லத்துக்கு வந்து அந்த விருந்தில் கலந்து கொண்டார்.
217

Page 111
O மண்ணும் மனிதர்களும்
தனது அந்தரங்கங்களை நெருங்கிய நண்பர்களிடம் மறைக்கத் தெரியாதவர்.
அன்று அவர் வீட்டில் நடந்த விருந்தின் பொழுது நேராக மாடிக்கு அழைத்துச் சென்று அவரின் தாயாரை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்த அவரின் மனைவி பாப்ஜியை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, “நான் தொட்டுத் தாலிகட்டிய ஒரே மனைவி. கடைசிவரை இவர்தான் என் மனைவி' என்றார். அந்த அம்மா நாணிச் சிரித்த விதம் இவரின் அனைத்து “பெண் குறும்பு' களையும் அவர் சாதாரண மாகவே ஏற்றுக் கொண்டதுபோல் இருந்தது. பிறகு சாவித்திரிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் பாப்ஜி தான் தாயாக இருந்து வளர்த்தார். புஷ்பவல்லிக்குப் பிறந்த ரேகா கூட அடிக்கடி போன் செய்கிறார். ஆனால் அவர் எந்த வேறுபாடும் இல்லாமல் அந்தத் தாயன்போடு அவரிடம் பழகுகிறார். எனக்கு அந்தத் தாயின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது.
மாடியின் வரவேற்பு அறையிலேயே பெரிய பூஜை மாட்ம் இருந்தது. மிகவும் ஆச்சாரமாக இருந்த ஜெமினியின் தாயாரைப் பார்த்த பொழுது எனக்கு உள்ளே போகவே தயக்கமாக இருந்தது. எப்பொழுதுமே மற்றவர்களின் ஆச்சாரத்தை மதிப்பவன் ørsörligstrøio. lonriflg lå Freil Fl G). தண்ணி போட்டுவிட்டு அங்கே நிற்பது கூச்சமாக இருந்தது. ஆனால் ஜெமினி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் அறிமுகம் செய்தார். அவரின் மகள்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள். ‘நினைவெல்லாம் நித்தியா’வில் நடித்த விஜியும் இருந்தார்.
“எனக்கு மதம், சாதி எல்லாம் கிடையாது! மனுசன்தான் முக்கியம்” என்று அவர் கூறியது இன்றும் எனது செவிகளில் ஒலுத்துக் கொண்டே இருக்கிறது.
சினிமாவிலும் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார் கள் என்ற முடிவுக்கு ஜெமினியின் நட்பு வழி கோலியது.
சினிமாவில் பெயர் பெற்றவர்கள் பழைய கலைஞர்களை மதிக்க மாட்டார்கள் என்ற நினைப்பும் தவறாகிப் போனது. அன்று ஜெமினியின் இல்லத்து விருந்து முடிந்து பிலிம்பேர் பத்திரிகை
218

சைபீர்முகம்மது O
யின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்தார் நண்பர் ரமணி. எனக்கு மூன்றாவது வரிசையில் விஜபி சிட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். தமிழ் நாட்டின் அத்தனை நட்சத்திரங்களும் அங்கே கூடி இருந்தார்கள். அத்தனை நடிகர்களுக்கிடையில் ஓர் அமாவாசை இரவு போல நானும் இருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, காமராஜர் போல கதர் சட்டை கதர் வேட்டி அணிந்து கொண்டு அமர்ந்திருந்தார். பரவாயில்லை. நாம் மட்டும் அமாவாசை இல்லை. நமக்குப் பக்கத்தில் ஒரு விவசாய அமாவாசை இருக்கிறது என்ற திருப்தியில் இருந்தேன். எனக்கு மறு பக்கத்தில் ரமணி இருந்தார்.
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இளையராஜாவின் இன்னிசை மழைக்குப் பிறகு ஒவ்வொரு சிறந்த நடிக நடிகைகளுக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தார்கள். பரிசு பெற்ற நடிகர்கள் பரிசு கொடுத்த நடிகர்களுக்குப் ‘பாவனையாக கை கொடுத்துவிட்டு ரசிகர்களை நோக்கிக் கையசைத்து கை தட்டலையும் விசில் சத்தத்தையும் எதிர்பார்த்து கிழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும், விசிலும் காதைப் பிளந்தன.
பெரிய நடிகர்களுக்குப் பரிசு வழங்கியது போய் துணை நடிகர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த துணை நடிகராக அந்த ஆண்டு தேர்வு பெற்ற மேஜர் சுந்தரராஜனுக்கு எஸ். வி. சுப்பையா பரிசளிப்பார்கள் என்றபொழுது, எனக்குப் பக்கத்தில் இருந்த அந்த விவசாயி எழுந்து துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு மேடைக்குப் போனார். அப்பொழுது தான் எஸ். வி. சுப்பையா என்ற மாபெரும் கலைஞர் மிகச் சாதாரணமாக ஒரு விவசாயியைப் போல அங்கே இருந்தது எனக்குப் பட்டது. எவ்வளவு பெரிய கலைஞர் கப்பலோட்டிய தமிழனில் பாரதியாராக வந்து கோர்ட்டில் “நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்று கூறி தனது கையில் உள்ள தடியை விசாரணைக் கூண்டில் பிடித்துக் கொண்டு நின்ற அந்தக் காட்சியும், ஆதி பராசக்தியில்
219

Page 112
O மண்ணும் மனிதர்களும்
அபிராம பட்டராக வந்து அமாவாசை இரவில் நிலவு வரும் என்று மன்னரிடம் கூறி, நெருப்புக் குண்டத்தின் மேல் அமர்ந்து ‘வாராயோ நிலவென வாராயோ, அருள் மழை தாராயோ' என்று பாடும் கம்பீரமும் இவை எல்லாம் என் கண் முன்னே காட்சியாக ஓடின! இந்த நேரத்தில் என்னை மெய்சிலிர்க்க வைத்த மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது.
பரிசைக் கையில் எடுத்து எஸ்.வி. சுப்பையா அவர்கள் மேஜர் சுந்தரராஜனிடம் வழங்கும் பொழுது, அதை வாங்காமல் அப்படியே சாஷடாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கினார் மேஜர்! ஒரு சாதாரண விவசாயி உடையில் எஸ்.வி.சுப்பையா! கோர்ட் சூட்டுப் போட்ட மேஜர் சுந்தரராஜன்! இரண்டையும் ஒப்பிட்டதில் இன்னும் சினிமா உலகம் கொஞ்சம் பண்பாட்டையும் உயர்ந்த கலைஞர்களை மதிக்கும் தன்மையையும் தன் வசம் வைத்திருக்கிறது என்பதையே அது காட்டியது. மேஜரை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டார் சுப்பையா. பரிசு பெற்றவரும் பரிசு கொடுத்தவரும் நாற்காலியில் வந்து அமரும் வரை மரியாதையான கை தட்டல் கேட்டுக் கொண்டே இருந்நதது. விசில் சத்தமெல்லாம் இல்லை. அது அந்த மாபெரும் கலைஞனுக்குக் கொடுத்த மரியாதை என்பதை உணர்ந்தேன். என் பக்கத்தில் வந்தமர்ந்த அவரின் கையைப் பிடித்து, “உங்களைப் பார்க்க வேண்டுமே. நான் மலேசியாவில் இருந்து வந்தவன். உங்களிடம் பேச வேண்டும்” என்றேன்.
“பார்க்கலாமே, Red Hills இல் எனது பண்ணை இருக்கிறது. அங்கே தான் வீடு. யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள்’ என்றார். பிறகு வணக்கம் கூறி விடை பெற்றார்.
நான், ஏ.ஏம். ராஜா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண் டிருந்த பொழுது புறப்படும் தேதியில் சிறிது சிக்கல் ஏற்பட்டு விட்டது. அந்த தேதியில் ஏ.எம். ராஜா Red Hills இல் ஒரு கோயில் கச்சேரிக்கு ஒப்புக் கொண்டிருந்தார். அதை மாற்றுவதற்காக நான். ஏ.எம்.ராஜாவுடன் Red Hils சென்றேன். வழியில் எஸ். வி. சுப்பை யாவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்குமென்பதால் நான் மகிழ்ச்சியோடு புறப்பட்டேன். எங்கள் வேலை முடிந்து சுப்பை யாவின் பண்ணைக்குச் சென்ற பொழுது அவர் உண்மையிலேயே
220

சைபீர்முகம்மது O
அங்கே ஒரு விவசாயியாக இருந்தார். தனது நிலத்தில் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு சிறிய வசதிகளுடன் ஒரு நடிகனுக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தார். இதில் மற்றொரு அதிசயம் என்னவென்றால் விவசாய டிராக்டரை அவரே ஓட்டியது தான்!
அவரை ஒரு ஞானக் கிறுக்கு என்று தான் சொல்ல வேண்டும். அபிராமிப் பட்டர் எப்படி படத்தில் இருந்தாரோ அதேபோல்தான் நிஜ வாழ்க்கையிலும் இருந்தார்.
எனக்கும் மற்றவர்களுக்கும் இளநீர் வெட்டிக் கொடுத்தார். அதிகம் பேசுவதை அவர் விரும்பவில்லை என்பது புரிந்தது. அவர் போக்கே அப்படி. சினிமாவில் சான்ஸ் தேடுவது, சிபார்சு கேட்டு அலைவது என்பதெல்லாம் அவரிடம் கிடையாது. தனக்குப் பொருத்தமான பாத்திரங்கள் இருந்தால், அவர்களே வந்து அழைத்தால் மட்டுமே சென்று நடித்துக் கொடுத்துக் கொண்டிருந் தார். சினிமா வட்டாரத்தில் அவருக்கென்று பெரிய மரியாதை இருந்தது. ‘பாகப் பிரிவினை’ படத்தில் டி.எஸ்.பாலையாவுக்குத் தம்பியாக நடிப்பார். அண்ணனிடம் ஒரு கிராமத்துத் தம்பி காட்டும் அளவுக்கதிகமான மரியாதை, குழைவு அப்பப்பா! என்ன கலைஞன்! தமிழன் கொடுத்து வைத்தவன்! சினிமா என்ற பெரிய வெளிச்சத்துக்கிடையில் இப்படியும் ஒருவரால் ஒதுங்கி வாழ முடியுமா? உண்மையில் கலர் கலராக “கிசு கிசு’ பேச்சிலும், ஏகப்பட்ட விளம்பரங்கள் தேடும் அந்த உலகிலும், பணம், விஸ்கி, பெண்கள் என்று மட்டுமே நான் அறிந்த அந்த உலகில் இந்த எஸ்.வி. சுப்பையா வித்தியாசமானவராக இருந்தார். எல்லா மனிதர்களையும் புரிந்து கொள்ள சற்று முயற்சி இருந்தால் முடியும். ஆனால் இந்த ஞானக் கிறுக்குகளைப் புரிந்து கொள்ளவே முடியாது.
ஏ.எம். ராஜா நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக இங்கே நடத்திய பொழுதும் எனக்கு நஷ்டங்கள் ஏற்பட்டன. இனி கோடம்பாக்கம் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை என்ற முடிவுக்கு நான் வந்த பிறகு தமிழ் நாட்டுக்குப் போக வேண்டிய சில கடமைகள் இருந்தன. அதற்காக மீண்டும் தமிழகம் சென்ற பொழுது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தரும் செய்தி அங்கே காத்திருந்து.
221

Page 113
O மண்ணும் மனிதர்களும்
பேசும் படம் பத்திரிகையின் அதிபர் இராமநாதனின் ஒரே மகனும் எனது ஆத்ம நண்பனுமான ரமணி திடீரென்று காலமாகி விட்ட செய்திதான் அது. அந்தப் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நட்பில் கூட இலாப்ம் தேட நின்ைக்கும் சென்னைமாநகரில், இப்படி வஞ்சமில்லாத நண்பனைப் பெறுவது. அப்படி ஒரு மனிதனை நேசிக்கும் மனிதனைப் பெறுவது மிகவும் சிரமம். இப்பொழுது சென்னைக்குச் சென்றாலும், விமர்ன நிலையத்தில் எத்தனை மணியானாலும் எனக்காக சிரித்த முகத்துடன் காத்திருக்கும் ரமணிதான் என் கண் முன் நிற்பார். பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை. ஆனால் 'அவரிடம் எப்பொழும் எளிமைதான் நிற்ைந்திருக்கும். அவரின் மூலமாக எனக்குப் பெரிய பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்தது. குறிப்பாக TV.S. நிறுவனத்தின் அதிபரின் பேரன் சீனு என்ற சினிவாசன் நட்பெல்லாம் மறக்க முடியாதது.
ஏழிசை மன்னர் எம். கே. தியப்ாகராஜ பாகவதர்
திமிழகத்தில் நான் இருந்தபொழுது ஒரு முறை என் தகப்பனார் பிறந்த ஊரான தேவகோட்டைக்குச் சென்று வர நினைத்தேன். சுபாங் விமான நிலையத்தில் காலடி வைத்தது முதல் எப்படி யாவது தேவகோட்டைக்குச் சென்று வரும்படி என் தந்தை வாய்ப் பாடாய் சொல்லிக் கொண்டிருந்தார். எனது பெரிய தந்தையார் தனது மனைவி பிள்ளைகளை மானாமதுரைக்கு பக்கத்தில் உள்ள இராஜகம்பீரத்தில் தங்க வைத்திருந்தார். அங்கே போய் அவர்களையும் பார்த்து வரும்படி அவர் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே இருந்தார்.
இளம் பருவத்தில் எனக்கு மருது சகோதரர்கள் பற்றியும் அவர்களின் வீரம், போராட்டம் பற்றியும் எனது பெரிய தந்தையார் கதை கதையாகச் சொல்லியிருந்தார். சிவகங்கை, காளையார் கோயில், சருகணி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, பிரான்மலை, சோழவந்தான், பொன்னமராவதி, அரண்மனை, சிறுவயல்
222

சைபீர்முகம்மது O
போன்ற பெயர்கள் எனக்கு இளம் வயதில் கேட்டுக் கேட்டு அந்த ஊர்களைக் காண வேண்டுமென்ற ஆர்வம் ஒரு புறம் கிளர்ந்து நின்றது.
சின்ன மருது என் மனதில் ஒரு 'சூப்பர் ஸ்டா'ராகக் குடிகொண்டிருந்த கர்ரணத்தால் அவர் நடமாடிய இடங்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம்மனதில் அதிகமாகியது. பெரிய மருதும் சின்ன மருதும் தூக்கிலிட்ப்பட்ட இடம் இன்னும் அங்கே இருப்பது என் ஆவலை மேலும் தூண்டியது. ஒரு சனிக்கிழமை சந்தடி செய்யாமல் இரர்மேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்து காரைக்குடி நோக்கிப்பயணமானேன்.
ரயில் போய்க்கொண்டிருக்கும் பொழுது எனது கண்கள் வெளியே மேய்ந்தன. வயல்கள், மனிதர்கள். தூரத்தில் குடிசைகள், வயல்களுக்கிடையில் காற்றில் தலையசைத்து ‘வா, வா’ என்றழைக் கும் பனை மரங்கள். இந்த காட்சிகளைக் கண்டு கண்டு.எனக்கு சலிக்கவில்லை. ரயில் செங்கல்கட்டைத் தாண்டியதும் சுவரில் பெரிய பெரிய போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். அந்தப் போஸ்டர்களைப் படித்ததும் எனக்கு நெஞ்சில் ஊசி தைப்பதுபோல் இருந்தது.'எம்.ஜி.ஆர் நடித்த் அசோக்குமார் என்று பெரிய எழுத்துக்களில் அந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த பட்ம் அது. குமுதினி என்ற அப்போதைய புது முகத்தைப் பாகவதருக்கு ஜோடியாக வைத்துத் தயாரிக்கப்பட்ட புகழ் பெற்ற படம்! புகழ் பெற்ற படம்! புகழ் பெற்ற டைரக்டர் ராஜா சந்திரசேகர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் மகேந்திரன் என்ற சிறிய பாத்திரத்தில் மட்டுமே எம். ஜி. ஆர். நடித்திருந்தார்.
பாகவதர் எப்பேர்ப்பட்ட நடிகர்? தனது இசையால் தமிழகத்தை மட்டுமல்லாது இந்த உலகத்தையே அடிமையாக்கி யவர். இருண்டு கிடந்த தமிழிசைக்கு உயிர் கொடுத்தவர். கர்நாடக இசை என்றால் அதைத் தெலுங்கில்தான் பாட வேண்டும் என்ற ஒரு போலி பந்தா நின்றந்திருந்த வேளையில், தமிழில் கர்நாடக இசையை வாரி வாரி அவர் வழங்கினார். இன்றைக்கும் எப்போதாவது இரவு நேரங்களில் தப்பித் தவறி அவரின் பாடல் ரேடியோவில் ஒலிக்கும் பொழுது ஒரு கணம் மெய் மறந்து
-223

Page 114
0 மண்ணும் மனிதர்களும்
ரசிப்பேன். அத்தகைய சொக்க வைக்கும் மாயக் குரல் அவருடையது. அப்படிப்பட்ட ஒரு பெரிய கலைஞர் கதாநாயகனாக நடித்த "அசோக்குமார்’ படத்தை அவரின் பெயரை இருட்டடிப்பு செய்து, எம். ஜி. ஆர். நடித்த படம் என்று விளம்பரம் செய்திருந்தது எனது மனதைப் பெரிதும் வாட்டியது.
எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ படங்கள் புகழ் சேர்த்திருந்தன. தமிழக முதல்வராகவும் இருந்தவர். படங்கள் அவரின் பெயருக்காக ஒடுகின்றன என்பதற்காக இப்படி விளம்பரத்தில் பாகதவர் மறைக்கப்பட்டது சிறிதும் நியாயமில்லை அல்லவா? “பொன்மனச் செம்மல்’ என்ற பெயர் பெற்ற அவரும் இதை அனுமதித்திருக்க மாட்டார் என்றே நான் அனுமானித்தேன். இதுவெல்லாம் அவருக்குத் தெரியாமல் நடக்கும் வியாபாரம். தமிழக மக்களும் அவ்வளவு சிக்கிரத்தில் பாகவதரை மறந்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்று எத்தனையோ நவீன இசைகள் வந்த பிறகும் எங்கோ ஏதோ ஒரு கிராமத்திலாவது அவர் குரல் பழைய கிராமபோன் பெட்டியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ரயில் தனது பாதையில் ‘தட தட வென்று G3 untuiu iš கொண்டிருந்தது. எனது நினைவுகள் பழைய காலத்தை நினைத்து அசை போட்டன.
அப்பொழுது எனக்கு ஐந்து வயது. இன்றும் ஞாபகம் இருக்கிறது. இன்று ஜாலான் துவாங்கு அப்துல் ரஹற்மான் என்றழைக்கப்படும் பழைய பத்து ரோட்டின் 13 ஆவது எண் கொண்ட கடையின் மூன்றாவது மாடியில் எங்கள் வீடு. நான் அங்கேதான் பிறந்தேன். அந்தக் கடைக்கு முன் வரிசையில் முகம்மது தையூப் என்ற இசைத் தட்டு விற்கும் கடை இருந்தது. giri/Gas dismaogunfai) disgol - 5pig5g/Lib "His Masters Voice' & punt LD போன் பெட்டியில் பாகவதரின் பாடல்களைப் போடுவார்கள். கடை அடைக்கும் வரையிலும் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். நான் மாடியில் இருந்தவாறு சன்னலை விட்டு நகராமல் அங்கேயே நின்று அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பேன்.
224

சைபீர்முகம்மது O
“அரே கிருஷ்ணா முகுந்தா முராரே! ஜெயகிருஷ்ணா முகுந்தா முராரே”, “தீன கருணாகரனே நடராஜா நீல கண்டனே” என்ற பாடல்களுக்கு எனக்கு அப்பொழுது அர்த்தமே தெரியாது. ஆனால் அந்த இசை - தேவகானம் - ஒவ்வொரு நாள் காலையிலும் என்னையறியாமல் சன்னல் பக்கம் நிற்க வைத்து afGth
பாகவதர் சாருகேசி ராகத்தில் பாடிய 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?’ என்ற பாடல் என்னை எங்கோ கனவு உலகத்துக்கு இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் மாடியை விட்டு இறங்க எனக்கு அனுமதியே கிடையாது. எட்டு வயதுவரை நான் மலைகளையோ கடலையோ பார்த்ததே இல்லை. எனக்குத் தெரிந்த இடமெல்லாம் எனது மாடி வீட்டு அறையும், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவும்தான். என் தாயாருக்குத் தெரியாமல் ஒரு மத்தியான நேரத்தில் எப்படியோ சாலையைக் கடந்து “மன்மத லீலையை வென்றார் உண்டோ?” கேட்க முகம்மது தாயூப்கடை வாசலில் போய் நின்று கொண்டேன். நான் என்னை மறந்தேன். எங்கு இருக்கிறேன் என்பதை மறந்தேன். பசி, தாகம் எல்லாம் மறந்து கடைசியில் வீட்டையே மறந்து இரவு கடை அடைக்கும் வரையில் பாகவதரின் பாடல்களில் மயங்கி நின்றிருந்தேன்.
வீட்டில் என்னைத் தேடி, கடைசியில் கடைக்காரர் ஆள் அனுப்பி வீட்டுக்குச் சொல்லி, என் தகப்பனார் முதுகில் நாலு வாங்கு வாங்கி அழைத்துப் போகும் பொழுது அடி பொறுக்க மாட்டாமல் நான் ஓடினேன். அப்பொழுது படிக்கட்டில் கால் தடுக்கி என் பெருவிரல் நகம் பெயர்ந்துகொண்டு ரத்தம் ஓடியது.
‘இந்த வயசில் உனக்கென்னடாபாட்டு, அதுவும் மன்மத லீலையை வென்றார் உண்டோ?பாட்டு என்று கேட்டுக்கொண்டே மேலும் முதுகில் நான்கு வைத்தார். தாயார் என்னைக் கண்டதும் அள்ளி அணைத்துக் கொண்டு தந்தை மேலும் அடிக்க வந்ததைத் தடுத்தார். காலில் மஞ்சள் பத்துப் போட்டுக் கட்டினார்கள். இரவு அப்படியே அம்மாவின் அணைப்பில் தூங்கினேன்.
காலையில் முகம்மது தையூபின் கடையில் மீண்டும் மன்மத லீலை ஒலித்தது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. சன்னல் அருகில் அமர்ந்து தலையாட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தேன்.
225

Page 115
O மண்ணும் மனிதர்களும் முதல் நாள் வாங்கிய அடியையெல்லாம் அந்த சாருகேசிப்பாடல் அடியோடு மறக்க வைத்துவிட்டது. ‘என் மதிமயங்கினேன் மூன்று உலகிலும் என்ற வரிகள் பாடலில் வரும். நானும் அந்த நிலையில் தான் இருந்தேன்.
என் தகப்பனாரும் பெரிய தந்தையாரும் கக யடாக வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார்கள். சிங்கப்பூர், சிரம்பான் போன்ற ஊர்களுக்கு மொத்த வியாபாரம் இவர்களுக்கு. நான் சாலையைக் கடந்து பாட்டுக் கேட்கப்போன கதையை என் தந்தை பெரியவரிடம் சொல்லியிருப்பாரென்று நினைக்கிறேன். பெரிய தந்தையார் என் மேல் பாசமும் அன்பும் கொண்டவர். அன்று மாலையே எங்கள் வீட்டுக்குப் புதிய HisMasters Voice கிராமபோன் பெட்டியும், ஒரு பெரிய கட்டு இசைத் தட்டுகளும் வந்திறங்கின. “இனி ரோட்டைத் தாண்டிப் போகக் கூடாது. இங்கேயே பாட்டக் கேளு” என்ற கட்டளையுடன் பெரிய தந்தையார் பெட்டியை இயக்கும் விதத்தை இரண்டு மணி நேரம் சொல்லிக் கொடுத்தார்.
எனது வாழ்நாளில் கிடைக்க முடியாத ஒரு பொருள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நான் இருந்தேன். சன்னல் பக்கம் போவது முற்றிலும் மறந்து, காலையில் எழுந்ததும் கிராமபோன் பெட்டிப் பக்கமே கண் விழித்தேன். கிராமபோன் பெட்டியில் ஒரு நாய் தலை சாய்த்து இசையை ரசித்து கேட்பது போல் படம் போட்டி ருக்கும். இப்பொழுது நினைத்தால் கூட அந்தப் படமே ஒரு கவிதை போல் எனக்குத் தோன்றுகிறது. தனது எஜமானரின் குரலை தலை சாய்த்துக் கேட்கும் பாவனையில் அந்தப் படத்தை எவன் போட்டானோ? அவன் கைக்கு வைரங்களை இழைத்துப் பூட்ட வேண்டும்! எனது நிலையும் அந்த நாயின் நிலைதான்!
ஒரு நாள் காலையில் நகம் பெயர்ந்த இடத்தில் ரத்தம் வீடு முழுக்கப் பரவி நிற்க, நான் என்னை மறந்து 'மன்மத லீலை கேட்டுக் கொண்டிருந்தது இன்று நினைத்தாலும் அதிசயமாகத் தான் இருக்கிறது.
அதன்பிறகு நிறைய இசைத் தட்டுகள் வீட்டுக்கு வர ஆரம்பித்தன. கரகரப்பிரியா ராகத்தில், பியூ சின்னப்பா Luntglau நடையலங்காரம் கண்டேன்’ என்ற பாடலை என் தந்தையார் திரும்பத் திரும்பப் போடுவார். நானோ பொருள் விளங்கா
226

சைபீர்முகம்மது O
விட்டாலும்,கிருஷ்ணா முகுந்தா’ ‘மன்மதலீலை'தின கருணா கரனே’ என்பதிலேயே பிடிவாதமாக இருந்தேன். அந்த ஐந்து வயதில் பிடித்த பைத்தியம் என்னை இன்று கூட விட்டபாடில்லை.
‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டப் பெயர் பெற்ற எம் .கே. தியாகராஜபாகவதரின் பாடல்களுக்கு தமிழ் நாடே அடிமையாக இருந்தது. 1944 ஆம் ஆண்டு பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ் 1000 நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடியது. இன்று 100 நாட்கள் என்றும், 25 வாரங்கள் ஓடியதும் வெள்ளி விழா என்றும் தொண்டாடு கிறார்கள். ஆனால், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரு படம், அதற்கு முன்னாலும் ஓடியது இல்லை. பின்னாலும் ஒடுமா என்பதும் சந்தேகம். அப்படி ஒரு இமாலயச் சாதனையைப் படைத்தவர் அவர்.
இன்று கூட தனது மனைவி கோபித்துக் கொண்டால் ‘ர்ாதே உனக்குக் கோபம் ஆகாதடி' என்று ஒரு கணவர் படு குஷியாகப் பாடி அவளைச் சிரிக்க வைப்பதை நாம் காண முடியும். பக்திக்கு எத்தனையோ பாடல்கள் வந்துள்ளன. ஆனால் பாகவதர் பாடிய 'மனமே ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் என்ற பாடலில் உள்ள அமைதி, கம்பீரம் எதில் இருக்கிறது?’சொப்பனவாழ்வில் மகிழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்’ என்ற பாடலில் மயங்காதவர் யார்? 'யானைத் தந்தம் போலே பிறை நிலா" ‘நாட்டியக் கலையே’ போன்ற பாடல்களை இன்றும் இனி என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
அந்தக் காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய நடிகர். இப்பொழுது ஒரு கோடிக்குச் சமம்.
மதுரையில் இவர் நடித்த ‘சிந்தாமணி’ என்ற படத்தின் வருமானத்தைக் கொண்டு ‘சிந்தாமணி’ என்ற பெயரிலேயே ஒரு தியேட்டர் கட்டினார்கள். அது இன்றும் உள்ளது.
பாகவதர் எத்தனையோ பேரைக் கைதுக்கி விட்டவர். ஆனால் விளம்பரங்கள் இல்லாமலேயே அவற்றைச் செய்தார்.
பாகவதர் மிகுந்த கொள்கைப் பற்று உள்ளவர். கடைசிக் காலத்தில் வறுமையில் வாடிய நேரத்தில் கூட தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர்.
227

Page 116
O மண்ணும் மனிதர்களும்
திருச்சிக்கு வரும் பொழுதெல்லாம் அறிஞர் அண்ணா பாகவதரைச் சந்திக்காமல் போக மாட்டார். பாகவதரின் பாட்டில் அண்ணாவும் மயங்கிக் கிடந்த நாட்கள் அவை. அண்ணாவுக்காக பாகவதர் தனியாகப் பாடுவார். ஒருமுறை ‘சிவபெருமான் கிருபை வேண்டும்! வேறென்ன வேண்டும்?” என்ற பாடலில் வரும் சிவபெருமான் என்ற சொல்லை சற்றே அழுத்தம் கொடுத்துப் பாடினார்.
உடனே அண்ணா ‘யர்ருக்கு சிவபெருமான் கிருபை வேண்டும்?’ என்று கேட்டார்.
'உங்களுக்குத்தான்’ என்றார் பாகவதர்.
'எனக்கு அவருடைய கிருபை வேண்டாம். அது உங்களுக்கே இருந்தால் சரி’ என்றார் அண்ணா. பாகவதர் ஆஸ்திகர். அண்ணாவோ நாஸ்திகர். ஆனால் அவர்களின் நட்பை இந்த இரு எல்லைகளாலும் பிரிக்க முடியவில்லை. அண்ணாவின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக வேறு ஒரு பாடலை பாகவதர் பாடினார்.
‘மெய்ஞ்ஞான தங்கமிது, மேலான தங்கமிது. அஞ்ஞானத் தங்கமெல்லாம், என் தங்கமே அநித்திய தங்கமடி, ஞானத் தங்கமே!’
அண்ணாவும் மெய் மறந்து ரசித்தார்.
பாகவதரின் நட்பும் குழந்தை மனமும் அண்ணாவை மிகவும் கவர்ந்தன. அதோடுபட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த அவருக்கு
ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர் மனதில் தோன்றியது. உடனே இரவுபகலாக உட்கார்ந்து தனது பாணியில் ஒரு திரைப்பட கதை வசனத்தை அண்ணா உருவாக்கினார்.
“இந்தப் படத்தில் நீங்கள்தான் கதாநாயகன்” என்று கூறி கதையை அவரிடம் நீட்டினார். அதை வாங்கிப் படித்த பாகவதர் உடனே அண்ணாவை நோக்கி “இந்தப் படத்தில் நான் நடிக்க முடியாது!’ என்று கூறி விட்டார்.
“ஏன் மறுக்கிறீர்கள்? இந்தக் கதையை உங்களுக்காகவே நான் எழுதினேன்” என்று அண்ணா கூறினார்.
228

சைபீர்முகம்மது O
“தெரிந்தோ தெரியாமலோ வாழ்க்கையிலும் சினிமாவிலும் நான் தெய்வ பக்தி உள்ளவனாகவே வாழ்ந்து விட்டேன். பணத்திற்காக எனது கொள்கையை விட்டு விட முடியாது. உங்கள் கதையின் கதாநாயகன் தெய்வ மறுப்பு உள்ளவனாக வருகிறான். என்னால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியாது’ என்று சொல்லி விட்டார்.
“உங்கள் கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அதை மாற்ற நினைப்பதும் தவறு! உங்கள் கொள்கைப் பிடிப்பை நான் மதிக்கிறேன்” என்று கூறி அவரின் மறுப்பை அண்ணா ஏற்றுக் கொண்டார்.
“கொள்கை எதுவாயிருந்தாலும் மற்றவர்களின் விருப்பத் திற்கு மாறாக அவற்றை வற்புறுத்தாமல் இருக்கும் உங்களின் மனம் என்னைக் கவர்கிறது” என்றார் பாகவதர்,
“நீங்கள் மட்டும் சளைத்தவரா! எனக்குப் பக்திப் பாடல்கள்” பிடிக்காது என்பதையுணர்ந்து வேதாந்தப் பாடல்கள் பாடினிர்களே” என்று அண்ணா கூறினார்.
அவருக்காக எழுதப்பட்ட அந்தக் கதைதான் பின்னர் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி நடித்து வெளிவந்த "சொர்க்க வாசல் என்ற படமாகும்.
கொள்கையில் இரு துருவங்களாக இருந்தாலும், நட்பில் நெருக்கமாக இருக்க முடியும் என்பதற்கு அண்ணாவும், பாகவதருமே நல்ல உதாரணம். உயர்ந்த பண்பும், நாகரீகமும் கொண்டவர்களின் நட்புக்கிடையில் கொள்கைகள் எப்பொழுதுமே இரண்டாம் பட்சம் தான். ஒருவரை மற்றவர் புரிந்து கொண்டால் பேதங்கள் ஏது? இது நடந்தது ஐம்பதுகளில், அப்பொழுது பாகவதர் அவ்வளவு சிரமத்தில் இல்லை. ஆனால் பிற்காலத்தில் பொருளா தார சிரமங்கள் அவரை அழுத்த சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்யும் நிலை வந்த நாட்களில் எப்படி இருந்தார் என்பதை அறிந்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும்.
ஏ.பி. நாகராஜன் தயாரித்த "சரஸ்வதி சபதம்’ படத்தில் நாரதராக நடிக்க வைக்க நினைத்தார்கள். அப்பொழுது பாகவதர் மிகுந்த சிரமத்தில் இருந்தார். படத்திலும் நடித்தது போல் இருக்கும்,
229.

Page 117
O மண்ணும் மனிதர்களும்
மறைமுகமாக அவருக்கு உதவியது போலும் இருக்குமென்று எண்ணி அவரை அணுகினார்கள். ۰۰۰ - ۰ - ۰ - - - تسبی-سسسسسس "- "-" - "
'பாகவதர் கிராப்பு என்பது இன்று வரை நடைமுறையில் இருக்கும் சொல் வழக்காகிவிட்டது. அவரின் முடியலங்காரத்துக்கு அப்படியொரு மவுசு அப்பொழுதும் இருந்தது இப்பொழுதும் இருக்கிறது. “சராசரங்கள் வரும் சுழன்றே என்று பாடியது போலவே, பாகவதரின் இந்த கிராப்பும் சில காலம் மறையும், பிறகு சிறிது காலத்தில் மீண்டும் நாகரிகம் என்று வந்து விடும்.
‘சரஸ்வதி சபதம்’ படத்தைப் பற்றிக் கூறி, அவரை நாரதராக நடிக்கக் கேட்டார்கள். ‘நான் பின்சிவிய முடியை முன் சிவ மாட்டேன்’ என்று ஒரே வார்த்தையில் மறுத்து விட்டார்.
நாரதர் வேடம் போடுபவர்கள் முடியை முன்னுக்கு இழுத்துச் சிவி முன் குடுமி போடுவார்கள். பாகவதரோ தனது முடியைப் பின்பக்கமாக சிவுபவர். பணத்துக்காக தனது முடியைக்கூட முன் பக்கமாக சிவ மறுத்த கொள்கைப் பிடிப்புள்ளவர் அவர். அவரது முடிக்கே ஒரு "இமேஜ்' இருந்தது. அதை தனது வறுமையிலும் மாற்றிக் கொள்ள விரும்பாதவராக இருந்தார்.
“உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ” என்று அசோக் குமாரில் கண்ணாம்பாள் நடனமாடப் பாடுவார். உண்மையில் அந்தக் காலத்தில் இந்தப் பாடல் அவரே அவருக் காகப் பாடிக்கொண்டது போல்தான் அமைந்தது. தமிழ் நாட்டில் அவரின் அழகிலும், பாட்டிலும் மயங்காதவர்கள் யார்? தங்க மேனி என்றால் அது அவருக்கே பொருந்தும்.
ஒரு முறை இவரின் மேல் பைத்தியமாகிப் போன ஒரு பெண்ணை ரயில்வே ஸ்டேசனில் கொண்டு வந்து காட்டினார்கள். இவரை நேரில் பார்த்தபிறகே அந்தப் பெண்ணுக்குப்பைத்தியமே தெளிந்தது. இன்றைய இளைய தலைமுறைக்கு அவரின் வரலாறு தெரியாமல் இருக்கலாம். அடுத்து வரும் அத்தியாயங்களில் அவரின் இளமை தொட்டு எழுதுகிறேன். அந்த மண்ணில் இப்படியொரு மனிதனும் இருந்தார் என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே!
230

சைபீர்முகம்மது O
சராசரங்கள் வரும் சுழன்றே!
இ ரயில் வேகமாக காரைக்குடி நோக்கிப் போய்க் கொண்டிருந்த பொழுது திருச்சி ஜங்ஷனில் ஒரு அரை மணிநேரம் மூச்சு வாங்கி நின்று ஒய்வெடுத்தது.
திருச்சியில்தான் எம்.கே. தியாகராஜபாகவதர் முன்பு வாழ்ந் தார். அவர் பிறந்தது 13.1910 ல், தஞ்சையில் தாயார் மாணிக்கத் தம்மாளின் வீட்டில் பிறந்தாலும், கல்வி கற்றது வளர்ந்தது எல்லாமே தந்தை கிருஷ்ணமூர்த்தியின் ஊரான திருச்சியில்தான். இவரின் இளமைக் கால படிப்பு ஒன்றும் பிரமாதமானதாக அமையவில்லை. பள்ளிக்கு அனுப்பினால் இவர் திருச்சியில் உள்ள உய்யகொண்டான் பாலத்துக்குப் போய் ஆற்றில் நீந்திவிட்டு வருவார். இவரின் இளமைக் காலத்துப் பெரும் பகுதி ஆற்றில் நீந்தி விளையாடுவதிலேயே கழிந்தது.
திருச்சி பாலக்கரையில் உள்ள “பழைய கோயில்’ என்று வழக்கத்தில் இருக்கும்'ஜபமாலை மாதாகோயில் பள்ளிக்கூடத்தில் தான் பாகவதர் கல்வி கற்றார். அப்பாத்துரை என்னும் ஆசிரியர் இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். அப்போதிருந்த ஆசிரியர்கள், பணம் சேர்ப்பதைவிட பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதை பெரிய தொண்டாகக் கொண்டிருந்ததால் பிற் காலத்தில் அவர்களிடம் கற்றவர்கள் பெரிய அறிஞர்களாகவும், கலைஞர்களாகவும், ஞானிகளாகவும் வர முடிந்தது. அப்பாத் துரையாரின் போதனைகள் சிறுவன் தியாகராஜனுக்கு மண்டை யில் ஏறவில்லை. திருப்புகழும் தேவாரமும் இவன் வசம் வரவே இல்லை.
நகைகள் செய்யும் பத்தர் வேலை கிருஷ்ணமூர்த்திக்கு. விஷ்வகர்மா குலத் தொழில் என்றால்தான் சரியாக இருக்கும். சரி,பையனுக்குப் படிப்புத்தான் வரவில்லை. கைத்தொழிலாவது கற்றுக்கொள்ளட்டும் என்று தந்தை நினைத்தார். கையில் சுத்தியல் பிடித்து தியாகராஜன் தங்கத்தைத் தட்டும் பொழுது அவனை யறியாமல் அது தாளத்தோடு ஒசையெழுப்பும். அந்த ஒசைக்கு ஏற்ப இவன் பாட ஆரம்பித்து விடுவான். தெருவில் கூட்டம்
231

Page 118
O மண்ணும் மனிதர்களும் கூடிவிடும். கூட்டத்தைப் பார்த்து தந்தை ஓடி வந்து “என்னடா இப்படி கூட்டத்தைக் கூட்டி விட்டாயே?” என்று கேட்பார்.
"நான் கூட்டத்தைக் கூட்டவில்லையப்பா. நான் என் வேலையைச் செய்தபடி பாடிக் கொண்டிருந்தேன். இவர்களே இங்கே வந்து கூடி விட்டார்கள்” என்பான்.
தியாகராஜனின் தந்தை ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். பாகவதரின் பாட்டனார் முத்துவேல் ஆச்சாரி திருச்சி பாலக்கரையில் விட்டுப் போயிருந்த ஒட்டு வில்லை வீடு ஒன்றுதான் சொத்து. அதன் பேரிலும் கிருஷ்ண மூர்த்தி கடன் வாங்கியிருந்தார்.
நகை செய்வதற்கு 2 ரூபாய் கூலி. அதை மறுநாள் வந்து உரியவர் வாங்காவிட்டால் இவர் பாடு திண்டாட்டம்தான்.குடும்பம் வறுமையில் வாடியது.
ஒரு நாள் எண்ணெய் வாங்க தியாகராஜனை தாய் மாணிக்கத்தம்மாள் கடைக்கு அனுப்பினார். வழியில் ஒருவன் முறுக்கு விற்பதைக் கண்ட தியாகராஜனுக்கு வாயில் எச்சில் ஊறியது. கையில் இருந்த பணத்தில் முறுக்கு வாங்கிச் சாப்பிட்டு விட்டான். அன்று வீட்டில் விளக்கு எரியவில்லை. ஆனால் மாணிக்கத்தம்மாள் மிகவும் வேதனைப்பட்டார். தன் பிள்ளைகள் விரும்பும் சாதாரண முறுக்கைக் கூட செய்து தரும் நிலையில் தங்கள் குடும்பம் இல்லையே என்று வருந்தினார்.
ஊரில் ஒரு முறை சர்க்கஸ் கூடாரம் போட்டிருந்தார்கள். அதில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. பையன்களோடு சேர்ந்து கொண்டு அந்தக் குரங்கிடம் விளையாட நினைத்து ஒரு குச்சியை எடுத்து குரங்கைக் குத்தினார்கள். பொறுமையாக இருந்த குரங்கு திடீரென்று எப்படியோ கூண்டுக்கு வெளியே வந்து இவர்களைத் துரத்த ஆரம்பித்தது. பையன்கள் நான்கு திசையிலும் சிதறி ஓடினார்கள். தியாகராஜன் பயந்து திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடினான். வழியில் இருந்த முள்வேலியில் விழுந்து நெற்றியில் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. குரங்கும் இவனைத் துரத்துவதை விட்டு விட்டு மற்றவர்கள் பக்கம் போய் விட்டது.
232

சைபீர்முகம்மது o
“என்னடா நெற்றியில் காயம்?” என்று அம்மா கேட்டார்.
“கடவுள் எனக்கு ஞானக்கண் கொடுத்துள்ளார்’ என்று சிரித்துக் கொண்டே இவன் பதில் சொன்னான்.
பிற்காலத்தில் பாகவதர் புகழின் உச்சியில் இருந்தபொழுது அந்த நெற்றி வடுவே அவருக்கு ஓர் அழகைக் கொடுத்தது. அவரைப் பற்றிப் பேசியவர்களெல்லாம் அந்த வடுவைப் பற்றியும் பேசினார்கள்.
அந்த வடுவைப் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் அக்காலத்தில் உலாவின. அதில் ஒன்று தந்தை கிருஷ்ணமூர்த்தி ஊதுழலால் அடித்ததால் ஏற்பட்ட வடு என்ற கதையும் பரவலாகப் பேசப் பட்டது.
தந்தைக்குத் தெரியாமல் இரவில் படுக்கையில் தலை யணையை வைத்து அதில் போர்வையைப் போர்த்தி விட்டு சினிமாவுக்கு தம்பி கோவிந்த ராஜூவுடன் கிளம்பி விடுவான் தியாகராஜன்.
பிற்காலத்தில் இந்த கோவிந்தராஜூவும் பெரிய பாகவதராகி, நம் நாட்டிற்குக்கூட வந்து கச்சேரியெல்லாம் செய்துள்ளார்.
பையன் இப்படி சினிமா, நாடகம், கச்சேரி என்று திரிவதில் தந்தைக்கு சிறிதும் விருப்பமில்லை. இத்தனைக்கும் அவரும் ஒரு நாடக நடிகர். அமெச்சூர் நாடகங்களுக்குப்பின்பாட்டுப்பாடுவார். ஆனால் அந்த நாட்களில் 'கூத்தாடி’ என்ற கேவலப் பெயர்தான் இவர்களுக்கு மிஞ்சியதேயன்றி சமூகத்தில் மரியாதை இருந்த தில்லை. கலையை நம்பி வயிறு வளர்க்க முடியாது. பாதி நாள் பட்டினி கதைதான் எப்பொழுதும். இதனாலேயே கிருஷ்ணமூர்த்தி தனது மகன் இந்தக் கலையார்வம் எல்லாவற்றையும் விட்டு விட்டு தொழிலைக் கவனிக்க வேண்டுமென்று விரும்பினார்.
ஏதோ தொண்டு எனக் கருதியும் இந்தக் கலையை மேற் கொள்ள முடியவில்லை. இருப்பவன் செய்தால் அதற்குத் தொண்டு என்ற பெயர் வந்து விடுகிறது. இல்லாதவன் செய்யும் பொழுது அதற்குப் பெயரே வேறாகி விடுகிறது அல்லவா?
233

Page 119
O மண்ணும் மனிதர்களும்
தன் மகனை மட்டுமல்லாது தானும் இந்த கலைத் தொண்டைச் செய்ய விரும்பாமல் தியாகராஜனுக்குக் கட்டுப் பாடுகள் விதித்தார். ஒரு நாள் பையன் தியாகராஜன் விட்டில் சொல்லிக் கொள்ளாமல் கடப்பை என்ற ஊருக்கு ஓடி விட்டான். அவன் அங்கிருப்பதை அறிந்த தந்தை மிகவும் வேதனைப்பட்டார். அந்த ஊரில் தெரிந்தவர்கள் யாருமில்லை. இவன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான் என்று தந்தை மனம் வாடியது. ஆனால் அந்த ஊருக்குச் சென்ற பொழுது அவருக்குப் பெரிய ஆச்சரியங் * கள் காத்திருந்தன.
“இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். என்ன குரல் ஐயா அவனுக்கு தேவகானம் பொழிகிறான். உங்கள் வீட்டில் பிறக்க வேண்டிய பிள்ளை இல்லையய்யா இவன்!” என்று பலரும் கிருஷ்ணமூர்த்தியை சூழ்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார்கள்.
திரும்பவும் தியாகராஜனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது தந்தை ஒரு முடிவெடுத்தார். இனி இவன் போக்கில் விடுவதுதான் சரியாக இருக்கும்.
வரும் வழியில் ஏழுமலையானைத் தரிசிக்க எண்ணி பையனுடன் திருப்பதிக்குச் சென்றார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் அங்கே போவதற்கும் தர்மதரிசனம் முடிவதற்கும் சரியாக இருந்தது. இனி வெங்கடாஜலபதியைத் தரிசிக்க பணம் கட்டினால் தான் முடியும் இவர்களோ வறுமையின் பிடியில் இருந்தார்கள். பணம் கொடுத்து தரிசிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. யாராவது பணக்காரர் வந்து பூசைகள் செய்ய மாட்டார்களா? அந்தத் திரை கொஞ்சம் விலகினாலும் போதுமே என்ற போராட்டத்தில் தந்தையும் மகனும் நின்று கொண்டிருந்தார்கள். .
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு புண்ணியவான் ஏழுமலை யானை தரிசிக்க வந்தார். அவரின் தயவால் திரை கொஞ்சம் தாராளமாகவே விலகியது. அந்த நேரத்தில் தியாகராஜன் தன்னை மறந்து பாட ஆரம்பித்துவிட்டான். பாட்டுக்குமேல்பாட்டு!பக்தர் கள் கூட்டம் தியாகராஜனைச் சூழ்ந்து கொண்டு ‘பாடு பாடு என்று தூண்டிக் கொண்டிருந்தது.
234

சைபீர்முகம்மது O
‘நான் 'பாடாதே பாடாதே’ என்று இவனுக்குத் தடைகள் போட்டேன். ஆனால், இந்த மக்கள் இவனை 'பாடு பாடு’ என்று வற்புறுத்துகிறார்களே' என நினைத்து கண்களில் நீர் மல்க நின்றார் கிருஷ்ணமூர்த்தி.
இதன் பிறகு திருச்சியில் கலந்து கொள்ளாத பஜனைக் கூட்டமே இல்லை என சொல்லுமளவுக்கு தியாகராஜன் பஜனைக் கூட்டங்களில் கலந்து கொண்டான். சுண்டலும் வடையும் இல்லாமலேயே இவனின் பட்டுக்காக கூட்டம் கூடியது.
பாகவதர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது.
ஒரு முறை கலைவாணர் மனம் விட்டு இப்படிச் சொன்னார்: “மக்கள் பாகவதரைத் தேடிக்கொண்டு வருகிறார்கள்! நானோ அவர்களைத் தேடிக் கொண்டு போகிறேன்’. பிற்காலத்திலும் அதுதான் உண்மையாக இருந்தது.
திருச்சி நகரம் முழுதும் பாகவதரின் பெயர் பரவியது. ரயில் வேயில் வேலை பார்த்துக் கொண்டே 'ரசிக ரஞ்சனி சபா' என்ற பெயரில் அமெச்துர்நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார் எப்.ஜி. நடேசய்யர். பாகவதரின் புகழ் கேட்டு அவர் வீடு தேடி வந்து தனது நாடகங்களில் அவர் நடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தந்தை கிருஷ்ணமூர்த்தியும் இதற்கு சம்மதம் கொடுத்தார்.
'அரிச்சந்திரா" - தியாகராஜன் நடித்த முதல் நாடகம். கால கண்டருக்காக சந்திரமதி தர்ப்பைப் புல் அறுக்கும் காட்சியில், தாயின் முந்தானையைப் பிடித்தவாறு லோகிதாசனான தியாகராஜன். “அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்று பாடிக் கொண்டு வருவான். அந்தப் பாடல் பாடப்பட்ட விதமும் உண்மை யில் பசித்தவனின் குழைவும் குரலில் படர. மக்கள் நாடகம் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்து மேடையில் ஏறி விட்டார்கள். “இந்தக் குழந்தையை இப்படிப்பசிக் கொடுமைக்கு ஆளாக்கிய் அந்த மாபாவி யார்? அவனை உடனே கொண்டு வாருங்கள்” என்று கூச்சலும் குழப்பமுமாகிவிட்டது. காலகண்டராக நடித்தவர் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓடுவதற்கு இடம் தேட
235

Page 120
O மண்ணும் மனிதர்களும்
ஆரம்பித்து விட்டார். பிறகு திரையை இறக்கி இது நாடகம் என்பதை விளக்கிய பின்பே அது தொடர்ந்து நடை பெற்றது.
நாடகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிந்த பொழுது பொன்னுவய்யங்கார் என்பவர் வழியில் இவர்களைச் சந்தித்துப் GuéraoTTsir.
பொன்னுவய்யங்கார் திருச்சியில் பிரபல பிடில் வித்துவான். தான் விரும்பிய மாணவர்களுக்கு மட்டும் பாட்டும் சொல்லிக் கொடுப்பார்.
“கிருஷ்ணமூர்த்தி, இவன் இனி உன் பிள்ளை இல்லை, என் வீட்டுப் பிள்ளை. சங்கீத ஞானம் இவனுக்கு இயற்கையாகவே வாய்த்திருக்கிறது. கேள்வி ஞானத்திலேயே இவன் இன்று நாடகத் தில் இவ்வளவு அருமையாகப் பாடியதைக் கேட்டேன். இவனுக்கு சரியான பயிற்சி கொடுத்தால் தமிழ்நாட்டையே அடிமைப்படுத்தி விடுவான். எதற்கும் தயங்காமல் நாளை காலையில் என் வீட்டுக்கு இவனை அனுப்பி விடு” என்றார்.
"சிட்சை என்றால் சும்மா முடியுமா. சன்மானம் தர வேண்டுமே.” என்று இழுத்தார். கிருஷ்ணமூர்த்தி
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இவனுக்கு சங்கிதம் சொல்லிக் கொடுப்பதே பெரிய சன்மானம்” என்றார் பொன்னு வய்யங்கார்.
இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடைபெற முடியுமா? எவ்வளவு திறமை இருந்தாலும் தாம்பாளத்தில் காசை வைத்து வணங்கிய பிறகே வாத்தியார் கட்டையைத் தட்டுவார். பணமே பிரதானமாகப் போய் விட்டதால் நல்ல கலைஞர்கள் உருவாக முடியவில்லை. வெறும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு பாய்ஸ் கம்பெனிகளில் கட்டொழுங்கோடு பயிற்சி பெற்றதால்தான் ஒரு சிவாஜி கணேசன், ஒரு எம்.ஜி. ஆர். ஒரு தங்கவேலு, மற்றும் டி.கே. சண்முகம், வி.கே. ராமசாமி, மனோரமா போன்ற தலைசிறந்த நடிகர்கள் உருவாக முடிந்தது.
இந்தக் காலத்தில் நாடகமே மூழ்கிவிட்டது. பாய்ஸ் கம்பெனி யாவது, கலைஞராவது? இன்றைய கலை உலகம் பண உலகமாக
236

சைபீர்முகம்மது O
மாறி விட்டது. இனி அத்தகைய மகோன்னதமான கலைஞர்கள் உருவாக வழியே இல்லை! இப்பொழுதெல்லாம் அடுத்தவன் குரலில் பேசிவிட்டும், பாடி விட்டும் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வாங்கிக் கொண்டு போய்விடுகிறார்கள், ஜிலு ஜிலு ஜிகினா துணியில் வந்து தொப்புள் காட்டி இரண்டு அசைப்பு அசைத்தால் அந்தப் படம் நூறு நாள் ஒடும் என்றாகி விட்டது.
பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ படம் 1000 நாட்கள் ஓடியது! மூன்று ஆண்டுகள்! இதே தமிழ் நாட்டு ரசிகர்கள்தான் ரசித்தார்கள். அது ஒட்டப்படவில்லை, ஓடியது என்பது தான் உண்மை. ஏன் 1000 நாட்கள் ஓடியது? அதில் திறமை இருந்தது. எல்லோரும் உழைத்து படத்தை உருவாக்கினார்கள். தொழில் பக்தி இருந்தது. உலகத்தின் சிறந்த நடிகராகி விட்ட சிவாஜி கணேசன் இன்றும் காலை 8.30 மணிக்குச் சரியாக படப்பிடிப்புக்கு வந்து விடுகிறாரே! இன்று எத்தனை பேர் இப்படி தொழிலைத் தெய்வமாக நினைக்கிறார்கள்?
பொன்னுவய்யங்காரிடம் பாடல் பயிற்சி பெற்ற காலத்தில், காலையில் உய்யகொண்டான் ஆற்றில் இறங்கி தொண்டை வரை நீரில் மூழ்கி நின்று கொண்டு தியாகராஜன் பாட ஆரம்பிப்பார். பாடும் பொழுது தனது முகத்தை பலவித கோணங்களாக்காமல் ஒரே நிலையில் வைத்துக் கொண்டு பயிற்சிகள் மேற்கொள்வார். ஒவ்வொரு நாளும் கிட்டப்பாவின் பாடலை கிராமபோன் பெட்டியில் போட்டு திரும்பத் திரும்பக் கேட்பார். கிட்டப்பாவின் “அன்றொரு நாள் குட்டி அருஞ்சிறையில் இட்டேன் நான்’ என்ற பாடலை திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்வார்.
பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு சங்கீதப் பயிற்சிகள் மேற்கொள்வார்.
“என்னடா பானைக்குள் தலையைவிட்டு என்ன தேடுகிறாய்” என்று மாணிக்கத்தம்மாள் கேட்பார்.
"பானைக்குள் ஒன்றுமில்லையம்மா! அதற்குள் தலையை விட்டுக்கொண்டு பாடினால் தொனி நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால்தான் இந்தப் பயிற்சி” என்பார்.
237

Page 121
O மண்ணும் மனிதர்களும்
தியாகராஜனின் அரங்கேற்றம்தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் பணம்தான். இந்நிலையில்தான் தியாகராஜனின் சிற்றப்பா கோவிந்தாச்சாரி அரங்கேற்றம் செய்யும் செலவை ஏற்க முன்வந்தார். இவர் கொஞ்சம் வசதி படைத்தவர். தியாகராஜனின் கச்சேரிகளைக் கேட்ட கோவிந்தாச் சாரி தனது அண்ணன் மகனின் கச்சேரியை சிறப்பாக அரங் கேற்ற விரும்பினார். ஆனால் இதில் பல சிக்கல்கள் உருவாகி விட்டன.
தங்களின் அந்தஸ்து கருதி பலரும் இந்தச் சிறிய பையனுக்கு பக்க வாத்தியம் வாசிக்க மறுத்து விட்டார்கள்.
இந்த நிலையில் தியாகராஜனின் முதல் குருவான பொன்னு வய்யங்காரே பிடில் வாசிக்க முன் வந்தார். புதுக்கோட்டையைச் சேர்ந்த அபிநவநந்திகேசுவரர் என்றழைக்கப்படும் பிரபல மிருதங்க வித்வான் தட்சிணாமூர்த்திபரிள்ளை அவர்களின் சிடர்களில் ஒருவரான தட்சிணாமூர்த்தி ஆச்சாரி முதலில்
மறுத்தாலும், பிறகு தனது குருவான தட்சிணாமூர்த்தி பிள்ளை
அவர்களே தியாகராஜனின் கச்சேரிக்கு கஞ்சிரா வாசிக்க முன் வந்ததைக் கண்டு உடனே வாசிக்க ஒப்புக் கொண்டார்.
பதினாறு வயதே நிரம்பிய தியாகராஜனின் பாட்டும் பாவமும் மக்களை மயங்க வைத்தது. ஆகா. அற்புதம். அபாரம். என்ற வார்த்தைகள் அவர்களை அறியாமலேயே வெளிவந்தன.
தட்சிணாமூர்த்தி பிள்ளை மனந்திறந்து பாராட்டினார்."இது நாள் வரையில் எத்தனையோ இளம் வித்வான்கள் பாடுவதைக் கேட்டுள்ளேன். ஆனால் இந்தப் பையன் இவ்வளவு தைரியமாக பரிசிறு தட்டாமல் பாடியதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் மேலும் தமது இறுதிப் பேச்சில், “கர்நாடக சங்கித உலகத்துக்கு தியாகராஜன் ஒரு வரப்பிரசாதம். இவனால் தமிழிசை வளரும், வாழும். அவற்றுடன் இவனும் வாழ்வான். இவன் வாழும் பொழுது தன் பெட்டியைக் கூடத் தங்கச் சாவி கொண்டு திறப்பான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்று குறிப்பிட்டார். V
238

சைபீர்முகம்மது o
பிற்காலத்தில் அவர் தனது பெட்டியை தங்கச் சாவிகொண்டு திறந்தாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலிடாக்கிஸ் என்ற தியேட்டரை தங்கச் சாவி கொண்டு திறந்து வைத்தார்.
கச்சேரிகள் குவிந்தன. ஆனால் அவரின் வறுமையை நீக்கும் அளவுக்குப்பணம் வரவில்லை. கலை, கலைக்காகவே என்ற சேவை நிலைதான் நீடித்தது. தனது சங்கித ஞானத்தை நாடக வழியாக அவர் மேலும் பரப்ப நினைத்தார்.
ஞான குமாரி நளின சிங்காரி
கிச்சேரிகள் மட்டுமே தனக்கு சோறு போடாது என்பதை அறிந்த பாகவதர், நாடகத்திலும் சேர்ந்து கொள்ள எண்ணினார். பயிற்சி யும் முயற்சியும் இன்றியே பலர் தங்களை நாடக ‘சாம்ராட்களாகக் காட்டிக் கொள்ளும் இக்காலத்தில், பாகவதர் முதலில் ஒரு நல்ல நாடக வாத்தியாரிடம் பயிற்சி பெற விரும்பினார்.
அந்த நேரத்தில் நாடக வாத்தியார்களில் பிரபலமாக இருந்தவர் நடராஜா வாத்தியார் என்பவர். இவர் குடியரசு, திராவிடன், தமிழரசு போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராகவும் இருந்தவர். அக்காலத்தில் பி.ஏ. படித்தவர்கள் மிகக் குறைவு. நடராஜா வாத்தியார் பி.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர் மட்டு மல்ல, தமிழ் நாடகக் கலையிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். பிற்காலத்தில் பாகவதர் ‘சாரங்கதாரா' என்ற படத்தில்பாடிய "ஞானகுமாரி நளின சிங்காரி' என்ற பிரபலமா பாடலை இயற்றியவரும் இவர்தான்.
தியாகராஜ பாகவதர் அவரை அடைந்ததும்."நானே உன்னை வந்து பார்க்க எண்ணம் கொண்டிருந்தேன். இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழும் உன்னிடம் அபூர்வமாகக் குடிகொண் டுள்ளது. இன்றிலிருந்து நீ வெறும் எம். கே. தியாகராஜன் இல்லை. தியாகராஜபாகவதர்” என்று இன்முகத்துடன் வரவேற்றார்.
239

Page 122
O மண்ணும் மனிதர்களும்
இந்த உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு பட்டங்கள் தரப் படுகின்றன. பெரிய மேடையமைத்து கூட்டம் கூட்டி பொன்னாடை போர்த்தி பட்டத்தை பொற்பதக்கத்தில் எழுதி அணிவிக்கிறார்கள். சிலர் தங்கள் செலவிலேயே பட்டங்களை துட்டிக் கொள்கிறார்கள். இப்படி பட்டம் கிடைப்பதைப் பார்த்து பொறாமையால் வெந்து சாகிறவர்களையும் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். தமிழனுக்கு இயற்கையிலேயே பொறாமைக் குணம் கொஞ்சம் அதிகம் நூறு வள்ளுவன் வந்து 'அழுக்காறு' பற்றி எழுதினாலும் திருத்தவே முடியாது.
ஆனால் நடராஜா வாத்தியார் மனந்திறந்து, எந்தக் கூட்டத்தையும் கூட்டாமல் தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே 'பாகவதர்’ என்று பாராட்டி வழங்கிய பட்டம்தான் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவர் இறப்பதற்கு முன்னும் பாகவதர்கள் இருந்தார்கள், இறந்த பின்னும் பாகவதர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றும் 'பாகவதர்’ என்று சொன்னால் அது அவரை மட்டுமே குறிப்பதாக தமிழுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நாடக உலகில் பாகவதர் கொடிகட்டிப் பறந்தார். பலர் அவரை தேடி வந்தார்கள். யாரிடமும் நேரிடையாக வியாபாரம் பேசுவதை அவர் தவிர்த்தார். பணம் மனிதனை மாற்றிவிடுமென்ற அசையாத கொள்கை அவருடையது. எனவே நாடக சம்பந்தமாக வியாபார ரீதியான பேச்சுக்களை நடராஜா வாத்தியாரே மேற் கொண்டார். இதனால் பாகவதரின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்குக் கூட மனவருத்தம்தான்.
“என் மகனுடைய நாடகத்தைப் பற்றி பேரம் பேச எனக்குத் தகுதியில்லையா..? அந்த நடராஜா வாத்தியார் யார்?’ என்று தனது மனைவி மாணிக்கத்தம்மாளிடம் சண்டைக்கு நின்றார். மகனிடம் பேச அவருக்கு தைரியம் இல்லை.
வீட்டில் நிலவிய வறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி விட்டு செட்டி நாட்டுக்கு ஒருமுறை நாடகம் நடத்த பாகவதர் சென்றார். அப்பொழுது அவரை ‘மானகிரி லேனா என்ற செட்டியார் வந்து சந்தித்து தனக்கு ஐம்பது நாடகங்கள் தொடர்ந்து நடத்தித் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். நாள் ஒன்றுக்கு ஐம்பது
240

சைபீர்முகம்மது O
ரூபாய் பாகவதருக்கு மட்டும் தருவதாகவும், மற்றவர்களுக்குத் தகுதி போல் தருவதாகவும் கூறினார். பாகவதரும் சம்மதித்தார். அந்த நாளில் ஐம்பது ரூபாய்-என்பது ஒரு மாத வருமானம்!
இந்த மானகிரி லேனா செட்டியார் பெரிய கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர். பிற்காலத்தில் ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பேனரில் ‘மதுரை வீரன்’, ‘தேசிங்கு ராஜன்’ போன்ற படங்களைத் தயாரித்த அதே இலட்சமணன் செட்டியார்தான் இவர்,1
நாடகம் தொடர்ந்து ஐம்பது நாட்கள் நடைபெற்றது. செட்டி நாடு என்று சொல்லப்படும் தென்பாண்டி நாடு முழுதும் பாகவதரின் நாடகத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
ஐம்பதாவது நாடகம் நடந்த நாளில் லேனா செட்டியார் பாகவதருக்கு ஒரு ‘போர்ட்டூரர் கார்’ பரிசளித்தார். பேசிய பணத்தையும் கொடுத்து அதற்கு மேல் ஒரு காரையும் பரிசளிக்கும் மனிதர்களை இந்நாளில் பார்க்க முடியுமா?
இதன் பிறகு பாகவதரின் நாடகச் சம்பளம் நூறு, இருநூறு. முந்நூறு என்று உயர்ந்து கொண்டே போனது. அந்த நாளில் அவ்வளவு பணம் கொடுத்து அவரது நடிப்பையும் பாட்டையும் கேட்க ரசிகர்கள் வரிசை பிடித்து நின்றார்கள்.
ஆண்டுதோறும் நடக்கும் தியாகய்யரின் உற்சவத்தில் பாட பேர் பெற்ற பல வித்துவான்கள் முன் நிற்பார்கள். தானும் ஒரு முறையாவது அந்தப் பெரிய உற்சவத்தில் பாட வேண்டுமென்ற ஆசை பாகவதருக்கு அடி நாள் தொட்டே இருந்து வந்தது. பலமுறை முயன்றும் நிர்வாகிகள் இவரைப் பாட அனுமதிக்கவில்லை. ஒரு முறை இரண்டு நாட்கள் தவமிருந்து பதினைந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதி கிடைத்தது. அதுவும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு நிமிடம்கூட அவர் பாடக்கூடாது என்ற கடுமையான உத்தரவுடன் அவர் பாட ஆரம்பித்தார். இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் மத்தியானம் 12 மணிக்கு சரியான உச்சி வெய்யில் சமயத்தில், மக்கள் பசியோடு இருக்கும் நேரத்தில் பாட வைத்தார்கள்.
241

Page 123
o மண்ணும் மனிதர்களும்
சாந்திக்கான ஆராதனை என்ற கொள்கையோடு பாகவதர் பாட ஆரம்பித்து சரியாக பதினைந்து நிமிடத்தில் நிறுத்திக் கொண்டார். அதற்கு முன்பாகவே நிறுத்து’ என்ற நிர்வாகிகளின் குரல் பின்புறமிருந்து கேட்டது. “நிறுத்தாதீர்கள்! மேலே பாடுங்கள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் கேட்க ஆரம்பித்தது. பாகவதர் பரிதாபமாக நிர்வாகிகளை நோக்கினார். “இதற் காகத்தான் உம்மைப் பாட அனுமதிக்கவில்லை” என்றார்கள். பிறகு மக்களின் சக்திக்கு யார் மறுப்புச் சொல்லமுடியும் பாகவதர் தொடர்ந்து மூன்று மணி நேரம் கச்சேரி செய்தார்.
உச்சி வெய்யிலின் கொடுமை மறந்து, பசி மறந்து தொடர்ந்து மக்கள் அந்த தேவகானத்தில் கலந்து விட்டார்கள்.
பாகவதர் மேலும் நிர்வாகிகளின் கோபத்துக்கு ஆளாக விரும்பாமல் கச்சேரியை நிறுத்தினார்.
“நாளையும் நீங்கள் வந்து இங்கே பாட வேண்டும்” என்று மக்கள் ஏகக்குரல் எழுப்பினார்கள்.
“நாளை இங்கே பாட எனக்கு அனுமதி கிடைக்காது என்றே நினைக்கிறேன்” என்றவாறு பாகவதர் தயங்கி நின்றார்.
அப்பொழுது அங்கே வந்த ராஜமாணிக்கம் என்பவர் “இங்கே பாட முடியாவிட்டால் வேறு இடத்தில் பாட இடமா கிடைக்காது? நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறி, மறுநாள் தஞ்சை இராமலிங்க சுவாமிகள் மடத்தில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார்.
திருவையாற்றில் தியாகய்யரின் உற்சவத்திற்கு வந்த கூட்டம் முழுதும் தஞ்சை இராமலிங்க சுவாமிகள் மடத்தில் கூடி விட்டது. பாகவதரின் பெருந்தன்மை இங்கேதான் வெளிப்பட்டது. தன்னைப் புண்படுத்திய பாகவதர்களின் கச்சேரிக்கு மக்கள் செல்லாமல் தனது கச்சேரிக்கு வந்ததை எந்த ஒரு கலைஞனும் பெருமையாகத்தான் கருதுவான். அதை ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாகவும் எடுத்துக் கொள்வான். ஆனால் பாகவதர் அப்படிச் செய்யவில்லை. அந்த ஒருநாள் கச்சேரியுடன் திருச்சிக்குப் புறப்பட்டு விட்டார். அந்த ஒரு நாள் நடவடிக்கைக்காக அவர்
242

சைபீர்முகம்மது O
மற்ற வித்வான்களிடமும் மானசிகமாக தியாகய்யரிடமும் மனப்பூர்வமான மன்னிப்பை வேண்டினார்.
பாகவதர் தனது நாடக வாழ்க்கையில் பலரை கைதுக்கி விட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் கோல்டன் கம்பெனி கோவிந்த சாமி பிரபலமான நாடக கண்ட்ராக்டர். ஒரு முறை அவர் பாகவதரை வந்து சந்தித்தார்.
டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகத்தை ஒரு வருட ஒப்பந்தத் தில் பொன்னமராவதி என்ற ஊருக்கு அவர் அழைத்து வந்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். டி.கே.எஸ். சகோதரர் களின் நாடகமும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானதுதான். ஆனால் வதுல் ஆகாமல் கோல்டன் கோவிந்தசாமி தடுமாறி விட்டார். தனக்காக ஒரு ஸ்பெஷல் நாடகம் போட வேண்டுமென்று கெஞ்சினார்.
டி.கே.எஸ்.க்கு விரோதமாக நான் நாடகம் நடத்த முடியாது என்று பாகவதர் மறுத்து விட்டார்.
டி.கே.எஸ். சம்மதத்துடன்தான் அங்கே வந்ததையும், தான் நஷ்டப்படுவதை டி.கே.சண்முகம் விரும்பவில்லையென்றும் கூறினார். பிறகு பாகவதர் சம்மதம் கொடுத்து ‘வள்ளித் திருமணம் நாடகத்தைப் போடுவதாக முடிவாகியது. பாகவதர் பொன்னமராவதி வந்து சேர்ந்தார். அங்கேதான் சங்கரதாஸ் சுவாமிகளிடம் பயிற்சி பெற்ற மாபெரும் கலைஞர் டி.கே. சண்முகமும் பாகவதரும் முதன் முதலாக சந்தித்தார்கள்.
“நாடக உலகத்துக்கு நான் புதியவன். ஒன்றும் தெரியாதவன். தாங்களோ பாய்ஸ் கம்பெனி வழியாக வந்தவர்கள். நன்றாக பயிற்சி பெற்று பேசவும் நடிக்கவும் தெரிந்தவர்கள். நான் நாடகத்தில் ஏதாவது தவறு செய்தால் தாங்கள்தான் பெரிய மனதுடன் என்னைத் திருத்த வேண்டும்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் பாகவதர் பேசியதைக் கேட்ட டி.கே. சண்முகம் வியப்பு மேலிட்டு என்ன பேசுவது என்று கூடத் தெரியாமல் மெய்சிலிர்த்து நின்றார்.
இன்று இப்படிப் பார்க்க முடியுமா? இரண்டு டி.வி நாடகங்களில் தலை காட்டி விட்டாலே பலரின் சட்டைக் காலர்கள்
243

Page 124
O மண்ணும் மனிதர்களும் மேலே ஏறிக் கொள்கிறது. உண்மையான கலைஞன் தன்னைப் பற்றி எப்பொழுதுமே பெருமையாக நினைப்பது இல்லை. அவனை இந்த சமூகம்தான் பெருமையாக நினைக்க வேண்டும்.
“இன்று வள்ளித் திருமணம் நாடகத்தில் நீங்களும் நாரதராக எங்களோடு நடிக்க வேண்டும்” என்று பாகவதர் சண்முகத்தைக் கேட்டுக் கொண்டார். அதை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் டி.கே.சண்முகம்.
அன்று பொன்னமராவதியில் தேவகானம் பொழிந்தது. அந்த நாளில் பாகவதரின் மேடை நாடகங்களில் “ஞான குமாரி நளின சிங்காரி' என்ற நடராஜ வாத்தியாரின் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
சக்தியிடமிருந்து முருகப் பெருமான் வேல் பெறுகின்ற காட்சியில் தேவகாந்தாரி ராகத்தில் “ஞான குமாரி நளின சிங்காரி' தேனாக ஓடியது. அன்று அந்த மேடையில் ஒலித்த அந்தப்பாடல் பல ஆண்டுகள் தென்பாண்டி நாடெங்கும், ஏன் தமிழகமெங்கும் மிகப் பிரபலமாகியது. அதன் பிறகு பாகவதர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சாரங்கதாரா' படத்தில் அந்தப் பாடல் புகுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
பாகவதரின் கிராப்பு பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இந்த கிராப்பு எப்படி அவருக்கு வந்தது? அதிலும் ஒரு கதை இருக்கிறது.
தனது பதினெட்டாவது வயதில் பாகவதர் ஒரளவு நாடக உலகிலும் கச்சேரிகளிலும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். அவருடைய பாட்டனார் விட்டுச் சென்ற வீடு தகப்பனார் காலத்தில் கடனில் மூழ்கியிருந்தது. அதை கடனிலிருந்து மீட்டு வீட்டை இடித்து விட்டு பெரிய இரண்டு மாடி வீடாகக் கட்டினார். இரண்டு ரூபாய் நகை செய்து சம்பாதித்து அதில் அரிசி, பருப்பு வாங்கி நடந்து கொண்டிருந்த குடும்பம் எழுந்து நின்றது. இந்த நேரத்தில் தான் ஊரெல்லாம் பெரியம்மை போட்டு பாகவதரையும் அது பாதித்தது. படுத்த படுக்கையாகக் கிடந்தார். ஒரு கலைஞ னுக்கு முகம்தான் மூலதனம். பாகவதர் இப்படி அம்மை போட்டு படுத்திருந்த நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால்
244

சைபீர்முகம்மது O
இப்பொழுது கூட நமக்குக் கவலையாகத்தான் இருக்கும். மற்றவர் கள் அனைவருக்கும் பாகவதரின் முகத்தின் மேல் கவலை. ஆனால் பெற்றதாயான மாணிக்கத்தம்மாளுக்கோ தன் பிள்ளை பிழைத்து எழுந்தால் போதுமென்ற நினைப்பே மேலோங்கியது. பிள்ளை நல்லபடியாக பிழைத்தால் பாகவதரின் முடியை அம்மனுக்குக் காணிக்கை கொடுத்து விடுவதாக வேண்டிக் கொண்டார்.
அக்காலத்தில் பாகவதர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். நாடகங்களில் நடிக்கும்பொழுது ‘விக்’வைத்துக்கொண்டு நடித்து வந்தார். v
அம்மை நோயிலிருந்து அவர் குணமாகியதும் முகம் பாதிப்படையவில்லை. சொன்னபடி தஞ்சை மாரியம்மன் கோயி லுக்கு அழைத்துச் சென்று பாகவதருக்கு மொட்டை போட்டார்கள். அதன் பிறகு பாகவதரின் முடி அவருடைய பிரசித்தி பெற்ற கிராப்பு அளவுதான் வளர்ந்து அப்படியே வளர்ச்சி நின்று விட்டது. இது பற்றி அவரின் தம்பி எம். கே. கோவிந்தராஜூ பாகவதர் கூறும் பொழுது. "அண்ணன் சலூனுக்குச் சென்றெல்லாம் முடியை வெட்டுவதில்லை. தஞ்சை மாரியம்மன் கோயிலில் முடி எடுத்த பிறகு அவரின் கிராப்பு அளவே முடி வளர்ந்து நின்று விட்டது. அதன் பிறகு முடி மீது அவர் கவனம் செலுத்தவே இல்லை. முகச் சவரம் கூட சொந்தமாகவே செய்து கொள்வார்?. இது தான் பாகவதர் கிராப்பின் பரம ரகசியம் அதன் பிறகு நாடக உலகிலும், கச்சேரிகளிலும் இந்த “கிராப்பு' தவறாமல் இடம் பிடித்தது.
பிற்காலத்தில் 'பீட்டில்ஸ்’ பாடகர்கள் நீண்ட முடியுடன் பாட ஆரமபரித்தார்கள். இன்று மேல்நாட்டு பாடகர்கள் 90 சதவிகிதம் பாகவதர் கிராப்பை கொஞ்சம் ‘உல்டா செய்து கொண்டு நீண்ட முடியுடன் காட்சியளிக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த பாகவதர் கிராப்பு பாடகர்களுடன் ஒட்டிக் கொண்டே வந்து விட்டது.
ஒரு முறை விடிய விடிய ஸ்பெஷல் நாடகம் நடத்திவிட்டு பாகவதர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் அவரைக் காண வந்து காத்திருந்தார். பாகவதரோடு
245

Page 125
t) மண்ணும் மனிதர்களும்
அப்பொழுது பிரபலமாகப் பேசப்பட்ட நாடக நடிகை திருமதி எஸ்.டி. சுப்புலட்சுமி அந்த அன்பரைப் பார்த்து, “என்ன வேண்டும்” என்று கேட்டார்.
“நான்கும்பகோணத்திலிருந்து பாகவதரை காண வந்திருக் கிறேன்” என்று அவர் கூறினார்.
பேச்சு அரவம் கேட்டு பாகவதர் எழுந்து வந்தார். உடனே அந்த அன்பர் எழுந்து தனது பையிலிருந்து ஒரு சிப்பை எடுத்துக் கொடுத்து “தயவு செய்து இந்த சிப்பால் உங்கள் முடியை ஒரு முறை சிவிக் கொடுங்கள்” என்றார்.
பாகவதருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆள் பைத்தியமோ என்று கூட நினைத்தார். என்றாலும் அப்போதைக்கு அவரை வழியனுப்பி வைத்தால்தான் கொஞ்ச நேரம் தூங்கலாமென்ற நினைப்பில் கையில் சிப்பை வாங்கி தலையைச் சிவி விட்டு மீண்டும் சிப்பை அவரிடம் ஒப்படைத்தார். வந்தவரோ பயபக்தியோடு சிப்பை வாங்கி தம் பைக்குள் வைத்துக் கொண்டு வேறொரு சிப்பை வெளியே எடுத்தார். அந்தச் சிப்போ பல்லெல்லாம் கழன்று நின்றது.
“போன வருசம் நீங்கள் சிவிக்கொடுத்த சிப்பு இது. பாவிக்க முடியவில்லை. அதனால் புதிய சிப்பை வாங்கி வந்தேன்” என்று கூறி அந்தப் பழைய சிப்பை பத்திரமாக பையில் வைத்துக் கொண்டார். இப்படி பாகவதரின் கிராப்பில் பைத்தியம் பிடித்து அலைந்தவர்கள் அந்தக் காலத்தில் ஒருவரல்ல. இருவரல்ல. அதுவும் அப்பொழுது அவர் படங்களில் கூட நடிக்காத காலம்.
விளாத்திகுளம் சுவாமிகள் மிகச்சிறந்த பாடக்ர். பாகவதர் அடிக்கடி அவரைச் சந்தித்து அவரோடு இணைந்து பாடும் பயிற்சிகள் மேற்கொள்வார்.
ஒரு முறை சென்னையில் உணவுக்குப் பிறகு இருவரும் அமர்ந்து பாடினார்கள். பாகவதர் புன்னாகவராளி ராகத்தில் மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு பாம்பு அவர் முன் படமெடுத்து ஆடத் தொடங்கியது.
246

சைபீர்முகம்மது O இந்த புன்னாகவராளி ராகத்திற்கு பாம்புகள் மயங்கி மயங்கி ஆடும். மகுடிக்கு பாம்புகள் மயங்குவது உண்டு! மனிதனின் குரலுக்கு மயங்குமா? ஆம் பாகவதரின் குரலுக்கு பாம்பு மயங்கி ஆடியது! அதைக்கண்ட வேலைக்காரன் ஒரு கம்பால் ஒரே அடியில் அதை அடித்துக் கொன்று விட்டான். பாகதவர் மனம் மிகவும் வேதனைப்பட்டு தனது கையாலேயே அதைப் புதைத்து பாலும் ஊற்றினார்.
அது பாம்பாக இருக்கலாம். ஆனால் மிகச் சிறந்த ரசிகனாக அல்லவா அங்கே வந்தது! பால் ஊற்றி விட்டு நிமிர்ந்த பாகவதர் திடுக்கிட்டார். விளாத்திகுளம் சுவாமிகள் அழுத கண்களோடு நின்று கொண்டிருந்தார். பாகவதர் பதறிப் போய் “என்ன. ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
"மனசு சங்கடமாக இருக்கிறது! எனது ஊர் பாம்புகள் நிறைந்த
ஊர். எத்தனையோ முறை இந்தப் புன்னாகவராளியைப் பாடி இருக்கிறேன். ஒரு முறைகூட பாம்பு வந்ததில்லை. பாம்புகள் அபூர்வமாக இருக்கும் இந்தப் பட்டணத்தில் உம்முடைய தெய்வீக இசையைக் கேட்க பாம்பு வந்திருக்கிறதே! சுருதி சுத்தமான உம்முடைய இசைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? இறைவன் உமக்களித்திருக்கும் இந்த வரத்தை நினைத்தேன். என் கண்களில் நீர் வந்து விட்டது” என்றார்.
“எல்லாம் நீங்கள் கொடுத்த வித்தை” என்றார் பாகவதர். மேன் மக்கள் மேன்மக்களே!
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
கிச்சேரிகளிலும் நாடக மேடையிலும் கொடி கட்டிப்பறந்த பாகவதரின் பவளக்கொடி நாடகம் மிகவும் பிரசித்தமாக நடைபெற்ற நேரமது. பவளக்கொடி நாடகத்தை அப்படியே சினிமாவாக எடுக்க முன் வந்தார்கள். பாகவதர் இதில் அர்ச்சுனனாக நடித்தார். ஐம்பத்து ஆறு பாடல்கள் கொண்ட பெரிய சங்கிதப் படம் இது. படம் மாபெரும் வெற்றி பெற்றது.
247

Page 126
O மண்ணும் மனிதர்களும்
இதன் பிறகு வந்த சாரங்கதாரா, ஆம்பிகாபதி, சத்திய சிலன் போன்ற படங்களை விட சிந்தாமணிYதமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கியது எனலாம்.
அப்பொழுது பாகவதர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவருக்கென்று பேனர் கட்ட ‘கட் அவுட் வைக்க, மாலை போட ரசிக மன்றங்கள் இல்லை. என்றாலும் சிந்தாமணி மாபெரும் வெற்றி பெற்றது. அதில் ஒலித்த பாடல்களை மக்கள் வீதி, வீடு, மேடை, வயல் என்று பாராது பாடி வந்தார்கள்.
Y
“பேசும் தரமோ காதல் பரவசமானால்'ட “மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை” “பஜனை செய்வோம் கண்ணன் நாமம்’ “ராதே உனக்குக் கோபம் ஆகாதடி” “ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே’ இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்தன. இத்தனைக்கும் கர்நாடக இசை சேர்ந்த பாடல்கள். இவை. இன்று போல் 'ராப்' என்றோ ‘போப்' என்றோ பெயர் வாங்காத அந்தக்காலத்தில் வந்து, இன்றும் காது கொடுத்து அமைதியாகக் கேட்க முடிந்த பாடல்கள். இன்று வரும் இசை ஏனோ வந்த வேகத்திலேயே மறைந்து விடுகிறது. ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது. ஆனால் பாகவதர் 50 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்களை இன்றும் கேட்க முடிகிறது. இன்று எதிலுமே உயிர் வாழும் பிரச்னையை விட பணம் பண்ணும் பிரச்னையே முன் நிற்கிறது.
பாகவதர் நடித்த அம்பிகாபதி, திருநீலகண்டர் போன்ற படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதினார். சினிமா உலகத்தில் அவருக்கென்று ஒரு மதிப்பும் மரியாதையும் இருத்தது. புகழ் பெற்ற ‘கண்ணகி’ படத்திற்கு வசனம் எழுதி அக் காலத்திலேயே பெரும் புரட்சி செய்தவர் இவர். இன்று சினிமா உலகில் எழுத்தாளர்களுக்குமதிப்பு இருப்பதில்லை. கைகட்டிவாய் பொத்தி சேவகம் செய்யும் நிலைதான் அங்கே அதிகம். சினிமாவில் கிடைக்கும் பணத்திற்காக எழுத்தாளர்கள் தங்களது தன்மானத்தை அடகுவைத்துவிட்டு ‘கதைவசனம்'இன்னார் என்று வருவதற்காக
248

சைபீர்முகம்மது O
அங்கே ஸ்டூடியோ வட்டாரங்களில் கிடக்கும் தவம் இருக்கிறதே அதை எழுத்தில் வடித்தால் இன்னொரு ‘போர்’ என் மூலம் மூளலாம். ஏதாவது பாடல், வசனம் எழுத வேண்டுமென்றால் ‘கூட்டி வா அவரை’ என்று தான் இருக்கிறதேயன்றி, இவர்களே மரியாதையாகப் போய்ப்பார்த்து கேட்டு வாங்கி படமெடுப்ப தெல்லாம் நடக்காத விஷயமாகி விட்டது.
அக்காலத்தில் இளங்கோவனை எம்.கே.டி மிகவும் மதித்தார். எந்த டைரக்டரோ, படத் தயாரிப்பாளரோ அவர் முன்-புகைபிடிப்பது, மது அருந்துவது கூட கிடையாது. அப்படியொரு மரியாதை அவருக்கு.
அம்பிகாபதி படக்கதையையும், அதன் காட்சிகளையும் ஷேக்ஸ் பியரின் ரோமியோ ஜூலியட்டுக்கு நிகரான உயர் நாடகத் தரத்தில் இளங்கோவன் உருவாக்கி இருந்தார்.
திருநீலகண்டர் படத்தில் ஒரு காட்சியில் செருகளத்துரர் சாமா அவர்கள் நீலகண்டராக நடிக்கும் பாகவதரை உதைக்க வேண்டும்.
ஆனால் பாகவதரை அக்காட்சியில் தான் உதைக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டார் செருளத்தூர் சாமா.
கண்டிப்புக்குப் பெயர் போன இயக்குனர் ராஜா சாண்டோ "உதைக்கத்தான் வேண்டும்” என்று பிடிவாதமாக இருந்தார். படத்துக்கு அக்காட்சி மிகவும் முக்கியம் வாய்ந்தது. இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் படத்தயாரிப்பாளரும் பாகவதர் தான். புகழ் பெற்ற நடிகர், பாடகர், அதோடு முதலாளி. எப்படி உதைப்பது என்ற பெரிய சங்கடம் சாமாவுக்கு. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. காட்சி படமாக்கப்படவில்லை.
"நான் முதலாளி, நீங்கள் இப்படத்தில் சம்பளம் வாங்கும் தொழிலாளி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். நீங்களோ வயதில் மூத்தவர். நான் இளையவன். பிறப்பால் பார்த்தாலும் நீங்கள் பிராமணர், நானோ விஷ்விகர்மா குலத்தவன். எனவே அதை நினைத்து என்னை உதைத்து விடுங்கள்” என்று பாகவதர் சாமாவை வேண்டினார்.
249

Page 127
O மண்ணும் மனிதர்களும்
“உங்களை விட வயதில் மூத்தவன் என்பதை ஒப்புக் கொள் கிறேன். ஆனால் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது அவரின் குலத்தை வைத்து வருவதில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. சிறப்பு என்று பார்த்தால் இன்று தமிழ் நாடே உங்கள் பாட்டில் மயங்கிக் கிடக்கிறது. இதில் எனக்கு எங்கே சிறப்பு இருக்கிறது?’சாமா படபடவென்று பொரிந்து தள்ளினார்.
இந்த இடத்தில் இருவரின் பெருந்தன்மையும் வெளிப்பட்டது.
எப்படியோ ஒரு வழியாக ஒப்புக் கொண்டு அந்தக் காட்சி சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டது. w
பாகவதரின் ஏழாவது படமாக அசோக்குமார் வெளிவந்தது. இதில் தான் எம்.ஜி.ஆர். மகேந்திரன் என்ற சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் அண்மைக்கால போஸ்டரைப் பார்த்த பிறகே நான் பாகவதரைப் பற்றி இவ்வளவு எழுதும்படி ஆகிவிட்டது.
உண்மையில் இந்த அசோக்குமார் கதை ஓரளவு அசோக சக்கரவர்த்தியின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்தது. கொஞ்சம் சரித்திரம், மீதி கற்பனை அடிப்படையில் அசோக்குமார் படக்கதை அமைந்திருந்தது. அப்படக்கதையையும் அசோகனின் வாழ்க்கையையும் கொஞ்சம் பார்த்தால் அசோகனைபற்றி நான் எழுதுவதற்கு இது வாய்ப்பாக அமையுமென்று நினைக்கிறேன்.
மெளரிய வம்சத்தைச் சேர்ந்த அசோகன் தனது தந்தை பிந்துசாரருக்குப் பின்னர் கி.மு. 273 ஆம் ஆண்டில் அரியனை ஏறினார். மெளரிய வம்சத்தில் மட்டுமல்லாது உலக சக்கரவர்த்தி கள் பட்டியலில் அசோகனுக்குத் தனி இடம் எப்பொழுதும் உண்டு. இந்திய வரலாற்றில் இன்று அசோகச் சக்கரம் அந்நாட்டின் நாணயத்திலும் தேசியக் கொடியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருடைய உண்மையான வரலாறு பல நூற்றாண்டுகளாக அறியப் படாமலேயே இருந்தது. அவரைப்
250

சைபீர்முகம்மது O
பற்றிய அதிகமான நாடோடிக் கதைகள் பேசப்படுகின்றன. இவை வாய்வழியாக மக்களிடம் பரவிய கதைகள். பிற்காலத்தில் இலங்கை, சினா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பெளத்த சமயத்தவரால் அவரின் வரலாறு ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளது. பெளத்த சமயம் இந்தியாவில் அருகிவிட்ட காரணத்தால் இவரின் வரலாறும் மரபு வழியாக மறைந்திருக்கலாம்.
அசோகன் வெளியிட்ட கட்டளைகள் பாறைகளிலும் இரும்புத் தூண்களிலும் பிரமி எழுத்துக்களில் பரவலாக இந்தியத் துணைக் கண்டத்தில் காணக் கிடக்கின்றன. பிரமி எழுத்து வழக்கொழிந்து போய் விட்டதால் இவற்றைப்படித்து புரிந்து கொள்ளும் நிலை மிக அரிதாகவே இருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டில் டில்லியை ஆண்ட ஃபிரோஸ் ஷா துக்ளக் என்ற சுல்தான் டெல்லிக்கருகில் அசோகனின் தூண் ஒன்றைக் கண்டெடுத்தார். ஆனால் அதில் இருந்த எழுத்துக்களைப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு அவரே அத்துணை எடுத்துக் கொண்டு வந்து டில்லியில் பாதுகாப்பாக வைத்தார். பைத்தியக்கார பரம்பரை என்று கேலி செய்யப்படும் துக்ளக் அன்று கொண்டு வந்து வைத்த தூண்தான் இன்றும் டில்லியில் பாதுகாப்பாக இருக்கிறது.
அசோகனுக்குப் பல ஆண் மக்கள். திவாரா. குணாளன் என்ற இருவரின் பெயர்கள் மட்டுமே சில கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. தட்சசிலத்தில் இடிபாடுகளுக்கிடையில் பீர்மேடு என்னும் இடத்தில் கிடைத்த தூண்களில் ஒன்றின் பெயர் குணாளன் தூபியாகும். தட்ச சிலத்துக்கு குணாளன் கவர்னராக பணியாற்றியுள்ளார். அசோகனின் மூன்றாவது மனைவியின் பெயர் திஷ்யரக்ஷதா. சிற்றன்னை குணாளன் மேல் மோகம் கொண்டாள். இதை விரும்பாத குணாளன் சிற்றன்னையைக் கண்டித்தான். தன் இச்சைக்கு உடன்படாத குணாளன் மேல் அசோகனிடம் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாள். அசோகனும் விசாரிக்காமல் உடனே தன் மகன் குணாளனைக் கொன்று விடும்படி கூறுகிறார். அசோகனின் திர்ப்பு சரியானதல்லவென்று அறிந்த அமைச்சர்கள் அவரைக் கொல்லாது கண்களை மட்டும் பிடுங்கி விட்டுவிடுகின்றனர். குணாளன் மனைவி ஈசானாதேவியுடன் பல ஊர்களிலும் அலைந்து திரிந்து
251

Page 128
O மண்ணும் மனிதர்களும்
இறுதியில் பாடலிபுரத்தை அடைகிறான். அங்கு வந்த அசோகன் தன் மகனின் குரலை அறிந்த பின் உண்மைகளை அறிகிறார். பின் தனது மனைவி திஷ்யரக்ஷதையை கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்கிறார். இது ஒரு கதை போல இருந்தாலும் வரலாற்றில் இப்படித்தான் சொல்லப்படுகிறது. அசோகன் என்றால் ‘சோகமற்றவன்’ என்று பொருள்படும். பெளத்த தர்மங்களைக் `கடைப்பிடித்து உலகத் துன்பங்களை ஒழிக்க முயன்ற பெரிய மன்னன் அசோகன். திபேத்திய வரலாறு அசோகன் கி.மு.232 ஆம் ஆண்டு தட்சசிலத்தில் இறந்ததாகக் கூறுகிறது.
மேற்கண்ட அசோகனின் கதைதான் பாகதவர் நடித்த அசோக்குமார் படத்தின் கதை. இந்தப்படத்தில் பாகவதர் பாடிய ‘பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் ஓர்’ என்ற பாடல் மிகப் பிரபலமானது. பாகவதரின் திருச்சி மாளிகை மிகப் பெரியது. 2 ஆவது உலகப்போரின் பொழுது ஆங்கிலேயர்கள் அந்த மாளிகையை பாகவதரிடமிருந்து கேட்டு தங்களது அலுவலகமாகப் பாவித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாட்டு மேசையில் கூட தங்களது காலணிகளைக் கழற்றாமல் இருக்கும் வெள்ளையர்கள் பாகவதரின் மாளிகையின் முன் இப்படி எழுதி வைத்திருந்தார்கள். தயவு செய்து உங்கள் காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே வரவும், அவ்வளவு தூய்மையாக அந்த இடத்தை அவர் வைத்திருந்ததால்தான் வெள்ளைக்காரர்களே அந்த மரியாதை செலுத்தினார்கள்.
பாகவதரின் வாழ்க்கையில் மிகவும் புயலைக் கிளப்பிய ஒரு வழக்கு நடந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்ந்த இடமெல்லாம் அது பேசப்பட்டது. 'லட்சுமிகாந்தன்கொலை வழக்கு என்ற பெயரில் நடந்த அந்த வழக்கில் பாகவதரும் கலைவாணரும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் “மஞ்சள் பத்திரிகைகள்’ நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கையை விரிவாக எழுதி வந்தன. இதில் சி.என். லட்சுமிகாந்தன் என்பவர் பாகவதரின் அந்தரங்க வாழ்க்கையை தனது பத்திரிகையில் விரிவாக எழுதிக் கொண்டிருந்தார். இவர் 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் பாகவதர் கைது செய்யப்
252

சைபீர்முகம்மது O
பட்டார். பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்றாலும், ஜாமீன் ரத்துச் செய்யப்பட்டு 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி மீண்டும் கைதானார். தமிழ் நாட்டில் மிகவும் பரபரப்பாக நடந்த வழக்கு இது. வழக்கின் இறுதியில் 1945 ஆம் ஆண்டுமே மாதம் 3ந் தேதி பாகவதருக்குஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எதிர்பாராதிவிதமாக நடைபெற்ற இந்த வழக்கு கரரணமாக தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதில் மிகவும் பா திக்கப்பட்டவர்கள் பட அதிபர்கள். பாதியில் நின்ற படம், முன் பணம் கொடுத்த படம், செட்டிங் போட்டு நின்ற பட மென்று அவதி க்கு மேல் அவதி. தன்னால் யாரும் நஷ்டமடையக் கூடாது என்ற நோக்கில் தனது சொத்துக் களை விற்று முன் பணம் கொடுத்தவர்களின் பணத்தை திரும்பத்தரச் சொல்லி பாகவதர் தனது குடும்பத்தாரிடம் கேட்டுக் கொண்டார்.
பணத்தைத் திருப்பிக் கொடுத்த பொழுது நான் முந்தி நீ முந்தி என்ற வகையில் கிடைத்ததை சுருட்டியவாறு பல பட அதிபர்கள் கிளம்பிய பொழுது ஒரே ஒருவர் மட்டுமே பணத்தைத் திரும்பி வாங்க மறுத்து விட்டார். “எனக்க இந்தப் பணம் முக்கியமல்ல, மேற்கொண்டு, பாகவதருக்கு உதவ என்னிடம் இப்பொழுது பணமில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு பாகவதரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” என்று கூறிய அவர்தான் ‘மானகிரிலேனா என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணா பரிக்சர்ஸ் அதிபர் இலட்சுமணன் செட்டியார்.
நமக்கு இக்கட்டான நிலை வரும்போதுதான் நமது நண்பர்களை நாம் அடையாளம் காண முடியும். கூடி கும்மாளம் அடிப்பார்கள். துன்பம் வரும்பொழுது இவர்களைக் காணவே (pigtling51.
எப்படியோ துன்பங்களையும் துயரங்களையும் களைந்த 25447 ஆம் ஆண்டு இரண்டு வருடம் இரண்டு மாதம், பதின்மூன்று நாள் சிறைவாசத்ததுக்குப் பிறகு அவர் வெளியே வந்தார்.
சிறை மீண்ட பாகவதர் வெளியார் படங்களில் நடிப்பதைக் தவிர்த்து தனது சொந்தத் தயாரிப்பாக ராஜமுக்தி என்ற படத்தை
253

Page 129
'O மண்ணும் மனிதர்களும்
எடுத்து வெளியிட்டார். இப்படத்திற்கு சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் கதைவசனம் எழுதினார். பி. பானுமதி பாகவதர் ஜோடியாக நடித்தார். படம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு கவிஞர் சுரதா கதைவசனம் எழுதிய அமரகவி என்ற படம் ஓரளவு வெற்றி யடைந்தாலும் பழைய ‘ஓகோ இல்லை.
அவர் பாதியில் நடித்து விட்டுப்போன படம் சிவகாமி.
பாகவதரைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருந்து கொண்டே இருந்தது. இதை எம்.ஜி.ஆர். ஒருமுறை தானே இப்படிக் கூறினார்.
'டி.ஆர். ராஜகுமாரியின் புதுமனை புகுவிழா நடந்து கொண்டிருந்தது. பெரிய பந்தல் போட்டு பிரமுகர்கள் அமர்ந்திருந் தார்கள் . சி.எஸ். ஜெயராமன் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கூட்டத்தில் கசா முசா வென்று பேச்சு கேட்டது. சி.எஸ். ஜெயராமன் பாட்டை நிறுத்தி விட்டார். பாகவதர் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தார். அதைப் பார்த்த கூட்டத்தினர் அவர் பக்கமாகத் திரும்பி பாகவதர் பாகவதர் என்று முணு முணுத்தார்கள். பிறகு சிறிது நேரத்தில் அவர் எழுந்து போய்விட்டார். ஏனோ அந்தப் பந்தல் முழுதும் இருள் கப்பியது போல் ஆகி விட்டது. உண்மையில் பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அவர் போன பிறகு அந்த ஒளியும் அவரோடு போய்விட்டது போல் எனக்குப் பட்டது”
பாகவதர் தனது காலத்தில் தனக்காக ரயிலையே நிறுத்திய மக்களையும் கண்டார். பிற்காலத்தில் கண்பார்வை இழந்து நின்ற அவரை கண்டும் காணாதது போல் சென்ற மக்களையும் உணர்ந்தார்.
மனதில் விரக்தியும் வேதாந்தமும் பிறந்தன. பாகவதர் இறதியில் ஒரு சித்தர் நிலைக்கு வந்து விட்டார். கடைசியாக தஞ்சை மாரியம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்தார். அவரின் நிலை கண்டு மனம் வேதனையுற்ற இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் “உங்களுக்கு நான் கனகாபிஷேகம்” செய்கிறேன் என்றார். ஆனால் பாகவதர் அதை மறுத்து தனது இறுதிக் காலத்தை பொன்னும் மணியும் கொண்டதாக ஆக்க விரும்பவில்லை என்று
கூறி விட்டார்.
254

சைபீர்முகம்மது O
தனது வாழ்க்கையில் எல்லாவற்றையுமே பார்த்து அலுத்துப் போய்விட்டது அவருக்கு. பன்னீரில் குளித்தும் விட்டார். படுமோசமான நிலையிலும் வாழ்ந்து பார்த்து விட்டார்.
பாகவதர் மறைந்து விட்டாலும் அவரின் இறவா இசை இன்னும் நம்மிடம் ஒலிக்கின்றது. இளைய தலைமுறையைக் கை கூப்பி வேண்டுகிறேன். பாகவதரைக் கேலியும் கிண்டலுமாகப் பார்க்காதிர்கள். பாய்விரித்து தலையணையில் படுப்பதற்கு தமிழிசை ஒன்றும் ‘உஜாலா’ பொருளல்ல! தனது மனம், மெய் உருக்கி பாடிய பாடல்கள் அவை.
இப்பொழுது புதிய தலைமுறை விரும்பும் 'டாப் டிங்கிரி தாளங்கள் அதில் இல்லைதான். அதற்காக கோயிலைக் கொண்டு வந்து கக்கூஸ் கூடாரங்களுடன் ஒப்பிடாதீர்கள். பாகவதரின் இந்த வாழ்க்கைத் தொடரை பழைய தலைமுறையினர் நிச்சயம் படித்திருப்பார்கள். அவர்களின் மனம் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். பாகவதரின் படங்களும் பாடல்களும் பிளாஸ்திரி போடுவதற்குரிய கேலிச் சித்திரங்கள் அல்ல என்பதை உணர்ந்தால் தமிழும் தமிழிசையும் பிழைக்கும். பாகவதரை ஒரு நடிகனாக, ஒரு பாடகனாகப் பெற்றதற்கு தமிழும் தமிழர்களும் பெருமைப்பட வேண்டும்.
காளையார் கோயில்
LTண்டி நாட்டில், தென் பாண்டிச் சிமையில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கு அதில் ‘திருக்கானப் பேர்’ என்று அழைக்கப்படும் காளையார் கோயில் பழைய வரலாறுகளையும் புதிய தோற்றத்தையும் பெற்ற மிகச் சிறந்த தலம் சிவகங்கைச் சிமையின் வரலாற்றில் காளையார் கோயிலுக்குத் தனியிடம் உண்டு.
சிவகங்கையில் அச்சகம் வைத்து நடத்தும் கவிஞர் மீரா அவர்கள் தான் எனது 'வெண் மணல்’ சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பை அன்னம் பதிப்பகம் சார்பாக வெளியிட்டார்
255

Page 130
O மண்ணும் மனிதர்களும் கள். அவரைக் காணவும். மேலும் ‘அன்னம் ஷ்ெளியிட்ட அண்மைக்கால நூல்களை வாங்கவும் சிவகங்கை புறப்பட்டேன். போகும் வழியில் நான் காளையார் கோயிலைக் காண மிகுந்த ஆர்வர் காட்டினேன். என்னோடு வந்த சொந்தக்காரர்கள்."நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இந்தக் கோயிலைக் காண ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். இது சாதாரணமாக எல்லாருக்கும் எழும் கேள்விதான்.
'திருக்கானப் பேர்’ என்று சேக்கிழார் பெருமானால் சிறப் பித்துப் பாடப்பெற்ற இந்த காளையார் கோயில் பல பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு சேதுபதிகள் காலம் மாறி முத்துவடுகநாதர், அவரின் மனைவி ராணிவேலு நாச்சியார் என்று மாறி, பின் மருது சகோதரர்களின் காலத்தில் இக்கோயில் சிரும் சிறப்பும் பெற்று செயல்பட்டது.
மருது பாண்டியர்களின் காலடிபட்ட அந்த LDGöör68bador Li பார்த்துவிட வேண்டும் என்ற எனது துடிப்பே காளையார் கோயிலை நோக்கி அவசரப்பட வைத்தது. அது மட்டுமல்லாது, கி.பி. 1216 முதல் கி.பி. 1236 முடிய பாண்டிய நாட்டை ஆண்ட முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. அவற்றைக் காண வேண்டும் என்ற ஆர்வமும் என்னை பஸ்ஸை விட்டு இறங்கி கோயிலை நோக்கி ஒட ഞഖഴ്ചl.
ஆலயங்களின் மூலஸ்தானத்தில் அமைக்கப்படும்மூர்த்திகள் லிங்கவடிவில் இருக்க வேண்டும் என்று ஆகமவிதி கூறுகிறது. லிங்க வடிவத்தை சதாசிவ மூர்த்தம் என்றே சொல்லுவார்கள். அருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி, உருவத் திருமேனி என்று பிரிக்கப்பட்டுள்ள வகையில் இது அருவுருவத் திருமேனியாகும்.
காளையார் கோயிலில் சோமேசர், காளீசர்,சுந்தரேசர் என்று மூன்று மூர்த்திகளாக லிங்க வடிவில் வழிபடப்படுகிறார்கள். மூன்று லிங்கங்கள் ஒரே இடத்தில் வழிபாடு செய்யப்படும் இடம் காளையார் கோயில் மட்டுமே. தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் இந்த சிறப்பு இல்லை எனலாம்.
256 7.

சைபீர்முகம்மது Ο
மூன்று லிங்கங்கள் இந்தக் கோயிலில் எப்படி ஒரே இடத்தில் வர முடிந்தது? அதற்கும் இந்தக் கோயிலின் தல புராணத்தைப் புரட்டிப் பார்த்தால் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. சோமேசரை சந்திரன் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தா னென்றும், காளீசர் உமையாம்பிகையின் பொருட்டு தானே சுய்ம்புவாக்த் தோன்றி அருள் பாலித்தார் என்றும், சுந்தரேசர் வரகுண பாண்டிய மன்னன் துயர் தீர்க்கக் காட்சியளித்து அருள் பாலித்தாரென்றும் கூறப்படுகிறது.
காளையார் கோயிலில் சிவரகசிய காண்ட விளக்கப்படி இறைவன் நின்று. இருந்து, நடந்து, கிடந்து அருள் பாலிக்கிறார். அது என்ன சிவரகசிய காண்டம்?மானிட லிங்கங்களில் இறைவன் உல்லாசமாக உலாவி அருள் பாலிக்கிறான். ஆர்ஸ் லிங்கங்களில் அவர் திருவடிகளில் நின்று அருளுகிறார். தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களில் வீற்றிருந்து அருளுகிறார். சுயம்பு லிங்கங்களில் சயனித்து அருள் பாலிக்கிறார். ஏனைய லிங்கங்களின் திருவுள்ளப்படி தனது திரு விளையாட்டால் அருளு கிறார். இதுவே சிவரகசிய காண்டம் லிங்கப் பேதப் படலத்தில் கூறப்படுகிறது.
சைவ சமய விளக்கப்படி சிவபெருமானுக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அத்தனை விளக்கங்களுக்கும் இங்கே காளையார் கோயிலில் இறை பல முறைகளில் நின்று சைவர்களுக்கு நிறை செய்கிறது.
இறைவன் உயிர்களின் மேல் கொண்ட கருணையால் அவர் களை நல்வழிப்படுத்த 64 உருவங்களில் அருள் பாலிப்பதாகவும், அவற்றுள் சிறப்பானவை 25 என்றும் சமயங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன. இறைவன் எடுத்த 64 உருவங்களை பாம்பன் சுவாமிகள் தனது ‘சுட்டாட்ட விக்கிரக லீலை’ என்ற பாடலில் வடித்துக் கொடுத்துள்ளார். இதை வாசகர்களின் பார்வைக்கு மட்டும் வைக்கிறேன். நீங்களே பாம்பன் சுவாமிகளின் பாடலைத் தேடிப் படித்துப் பாருங்கள்.
25 முக்கிய திருமூர்த்தங்களுள் ஆறு மூர்த்தங்கள் காளையார் கோயிலில் உள்ளன. நடராஜர், தட்சிணாமூர்த்தி, சோமஸ்கந்தர்,
257

Page 131
O மண்ணும் மனிதர்களும்
சந்திரசேகரர், வீரபத்திரர், லிங்கோத்பவர் என அறுவர் திருவுருவங்கள் உள்ளன. " - -
இதில் நடராஜ தத்துவம் பற்றி மட்டும் விளக்கிச்செல்கிறேன். சைவசித்தாந்தசாஸ்திர பெருநூல்களான பதினான்கில் "உண்மை விளக்கம்' என்ற நூலின் ஆசிரியர் உமாபதி சிவம் ‘நடராஜ தத்துவம் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார்.
நடராஜப் பெருமானாகிய கூத்தப் பிரானின் நடனத்திற்கு "பஞ்ச இருத்திய நடனம்’ என்று பெயர். சிருஷ்டி, ஸ்த்ததி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் என்று வட மொழியில் சொல்லப்படுகின்ற படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலின் தத்துவமே நடராஜ தத்துவம்.
நடராஜப் பெருமானின் தோற்றத்தை உங்கள் மனக்கண் முன் சற்று கொண்டு வாருங்கள். ஒரு பாதம் தூக்கி நடனமாடிக் கொண்டிருக்கிறார். நான்கு கரங்கள். ஒரு கரம் திருவடி நோக்கிச் சுட்டியவாறு சரிந்துள்ளது. மற்றொரு கரம் அபயமுத்திரை காட்டி நிற்கிறது. ஒரு கரத்திலே துடி (டமருகம்), மற்றொரு கரத்திலே அக்னி, நடனமிடும் நடராஜரைச் சுற்றி திருவாச்சி. ஊன்றிய மலர்ப்பாதத்தின் கீழ் முயல்கள். இதுவே கூத்தப்பிரானின் தோற்றம். ஆன்மா கன்மம், மாயை, ஆணவம் என்ற மூன்றால் பிணைக்கப்பட்டு பிறவிக் கடலில் ஆழ்த்தப்படுகிறது. இந்த மூன்றையும் தாண்டிகரை சேர முயல வேண்டும். அதற்கு நடராஜப் பெருமானின் திருவடியை அடிபணிவதே சிறந்தது என்று உமாபதி சிவம் கூறகிறார்.
துடி (டமருகம்) - தோற்றம்
அமைந்த கரத்தில் - நிலைத்தல்
ஊன்றிய மலர்ப்பாதம் - மறைத்தல்
தூக்கிய திருவடி - அருளல்
அக்னி - அழித்தல்
இவையே நடராஜப் பெருமானின் தத்துவம். இவற்றுக்கும் மேலாக இன்னும் விளக்க வேண்டுமென்றால், துடியின் ஒலியால் மாயைதனை அகற்றி நெருப்பால் வினையான கன்மர்வைச் சுட்டெரித்து ஆணவ மலத்தை (முயல்கள்) எழவிடாமல் திருவடியை
258

சைபீர்முகம்மது O
வான்றி மிதித்து ஆன்மாவை அலைக்கழிக்கும்பிறவிக்கடலிலிருந்து வெளியேறி இறைவனின் திருவடியில் நிலைப்பதைக் குறிப்பதே கூத்தனின் நடனம்.
எல்லாக் கோயில்களிலும் நடராஜப் பெருமானின் திருவுருவம் உள்ளது. ஆனால் காளையார் கோயிலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? காரணங்கள் பல இருந்தாலும் ஒன்றை மட்டும் விளக்கி பின் இதன் சரித்திரப் பின்னணிக்குச் செல்வோம்.
மாணிக்கவாசகப் பெருமான் பாண்டிய நாட்டின் அமைச்ச ராக இருந்தவர். சிவபெருமானின் 'பெருமை பற்றி பாட வந்த அவர்,
மீண்டும் வாரா வழியருள் புரியவன் பாண்டி நாடே பழம்பதியாகவும்'என்று கிர்த்தித் திருவகவலிலும்,
அன்பாண்டு மீளா அருள் புரிவான் நாடென்றும் தென் பாண்டி நாடே தெளி’ என்று திருச்சாங்கத்திலும் பாடியுள்ளார்.
ஆக, தென்பாண்டி நாடே இறைவனின் நாடு என்பது தெளிவு.
'பத்தி செய்யடியாரையுடை நாடே இறைவனின் நாடு என்று பாடியவர், 'பத்தி செய்யடியாரை பம்பரத் துய்ப்பவன் உத்தர கோசமங்கையூராகவும் என்று இறைவனின் ஊர் 'உத்தரகோச மங்கை’ என்றும் குறிப்பிடுகிறார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கனவில் தோன்றிய இறைவன். . கானப் பேர் யாம் இருப்பதெனக் கழற்றிக் கங்கை எனும் வாணப்பே ராலுலவும் மாமுடியார் தாமகல. என்று கூறியதாக சேக்கிழார் பெருமான் எழுதியுள்ளார்.
காளையார் கோயிலின் மற்றொரு பெயரே ‘கானப்பேர்’ என்று ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன்.
ஆக, இறைவன் தான் இருக்குமிடம் கானப்பேர் என்று கூறியதால் காளையார் கோயில் சிறப்புப் பெறுகிறது. பாண்டிய அமைச்சர் மாணிக்கவாசகர் கூற்றுப்படி இறைவன் பிறந்த ஊர்
259

Page 132
0 மண்ணும் மனிதர்களும்
"உத்திரகோச மங்கை’, சோழ நாட்டு அமைச்சர் சேக்கிழாரின் பாட்டின்படி அவர் வாழும் ஊர் காளையார் கோயில்!
காளையார் கோயிலில் பல திர்த்தங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இதில் இலக்குமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம், திக்குபாலகர் தீர்த்தம், உருத்திர தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம், ஆனைமடு என்று பல தீர்த்தங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் தனித் தனி வரலாறு உண்டு. இரண்டை மட்டும் விளக்குகிறேன்.
தேவதாச பாண்டியன் காசிக்குச் சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து காளிசரை நீராட்ட நினைத்தான். ஆனால் பாண்டியன் கனவில் தோன்றிய இறைவன், ‘கங்கை நீரை விட மாசற்ற புனித நீர் சிவகங்கை தீர்த்த நீர்’ என்று கூற, அந்நீரைக் கொண்டு நீராட்டினான் மன்னன். இதுவே இன்றும் சிவகங்கை திர்த்தம் போற்றப்பட காரணமாகிறது.
ஆணைமடு என்ற தீர்த்தம், தேவேந்திரனின் வெள்ளை யானை “ஐராவதம் தனது தந்தத்தால் முட்டி, தோண்டிய இடத்திலிருந்து வரும் நீரே ஆணைமடு தீர்த்தம் என்பது ஐதீகம் காளையார் கோயிலின் சிறந்த தீர்த்தமாக இன்றும் இது பேசப்படுகிறது. ராமபிரான் தனது பிரம்மஹத்திதோஷம் நீங்க இந்த தீர்த்தத்தில் நீராடினார் என்பது தல புராணம்.
சேதுபதிகள்
Tெணாதிராயர்கள் வலிமை குன்றிய பொழுது இராமேஸ்வரம் பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்த சேதுபதிகளின் ஆட்சி அதிகாரம் காளையார் கோயில் வரையில் பரவியது.
சேதுபதிகளுக்கு மிகப் பழமையான புராணகால வரலாறும், அதன் பிறகு 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிகச் சிறந்த பின்னணிகளும் உண்டு.
இராமன் இலங்கையை நோக்கி படையெடுத்துச் செல்லும் பொழுது சேது என்ற அணை கட்டப்பட்டதாக புராணம் கூறுகிறது.
260

சைபீர்முகம்மது O
இராவணனைக் கொன்று சிதையை மீட்டு வந்த இராமன் இந்த சேது அணை வழியாகவே திரும்பினார். பிராமணனாகிய இராமர் இராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க இராமலிங்க பிரதிட்டை செய்து தனது பிரம்மஹத்தி தோஷத்தீைக் கழித்தார். மீண்டும் அயோத்தி மீள வேண்டிய இராமர் இந்த இராமலிங்கக் கோயிலை பொறுப்புள்ளவர்களிடம் ஒப்படைக்க விரும்பினார். 6 நால்வரோடு ஐவரானோம் என்று இராமரால் அரவணைக்கப் பட்ட குகனை இக்கோயிலுக்கு பொறுப்பாளராக நியமித்தார். குகன் தன் வழித் தோன்றல்களாகிய சேதுபதிகளிடம் அப்பொறுப்பை பின் ஒப்படைத்தான். இவர்களே பின்னர் மிகச் சிறந்த மறக்குடியினராக கோயிலை மட்டுமல்லாது மக்களையும் காக்கும் மன்னர்களாக உயர்ந்தார்கள்.
சேதுபதிகளின் கடமை ஆரம்பத்தில் சேது அணையைப் பாதுகாப்பது, இராமேஸ்வரக் கோயிலைப் பாதுகாப்பது மற்றும் இராமேஸ்வரம் யாத்திரீகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்று இருந்தது. பின் காலப்போக்கில் மக்களின் செல்வாக்கு பெருகப் பெருக மண்ணை ஆளும் அதீத ஆசை இவர்களுக்கும் ஏற்பட்டது. இதன் காரணமாக தங்களது அதிகாரத்தை இராமேஸ்வரத்தி லிருந்து மைதுருக்குத் தெற்கே வட இலங்கை வரையில் விரிவு படுத்தினார்கள்.
மாவலி வாணாதிராயர் நாடிழந்து நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட பொழுது சேதுபதிகள் கானப்பேர் என்ற காளையார் கோயில் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தளவாய் சேதுபதி என்ற மன்னனுக்கு இரண்டாம் மனைவி இருந்தார். அவருக்குப் பிறந்தவரே தம்பித்தேவன். இவரை காளை யார் கோவிலுக்கு ஆளுநராக நியமித்தார். ஆனால் இராமநாத புரம் ஆட்சியை தனது தம்பி மகனுக்கு எழுதிவைத்தார். தந்தை தளவாய் சேதுபதிக்கு எதிராக தம்பித்தேவன் போர்க்கோலம் பூண்டார்.
பாண்டி நாட்டில் சரித்திரம் மீண்டும் ஒரு மறு பதிப்பு செய்தது. ஆம்! மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டாம் தாரத்து மகன். தனது தந்தையைக் கொன்று அரியணை ஏறினான். அதுவே மீண்டும் இராமநாதபுரத்தில் நடந்தது! சிறு மாற்றம்
261

Page 133
0 மண்ணும் மனிதர்களும்
தந்தையை இவன் சிறைபிடித்தான். அவன் கொன்றான். மற்றொரு ஒற்றுமையும் இருந்தது! சுந்தரபாண்டியனுக்கு மாலிக்கபூர் உதவினான். தம்பித்தேவனுக்கு மதுரை நாயக்கர்கள் படை ஆயுதம் கொடுத்துத் தூண்டி விட்டார்கள்! s
இந்தப் போரிலே தமிழுக்கு நல்ல இலக்கியம் கிடைத்தது. ஆம் ‘இராமப்பையன் அம்மானை' என்ற அற்புத அம்மானை இலக்கியம் தோன்றியது. தம்பித்தேவன் பக்கம் தளபதியாக இருந்த இராப்பையன் என்பவரின் வீ ரத்தையும் சாகசங்களையும் கூறும் இந்த அம்மானை, தமிழில் வந்த சிறந்த அம்மானைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் மற்றொரு சிறப்பு தளவாய் சேதுபதியின் தளபதி வன்னியத் தேவனின் வீரமும் இதில் போற்றப்படுகிறது. அதாவது சரித்திரம் உண்மை மட்டுமே பேசுகிறது. அம்மை நோய் கண்டு படுக்கையில் கிடந்த நேரத்திலும் தனது நாட்டைக் காக்க இறுதி வரை போரிட்ட வன்னியத் தேவனின் தியாகம் "இண்டர் நெட்டில் எழுதி வைக்க வேண்டியது.
நாயக்கர் படைபலத்தோடு முடி சூட்டிக் கொண்ட தம்பித் தேவன் சிறிது காலமே ஆட்சி புரிந்தான். சேது நாட்டு செங்கண் மறவர்கள் தம்பித்தேவனை ஆட்சி செய்யவிடவில்லை. சேதுபதிகளின் எதிர்ப்பைக் கண்டு நாயக்கர்களும் பின்வாங்கி விட்டார்கள். தளவாய் சேதுபதி மீண்டும் சிறை மீண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தம்பித்தேவன் பின் துழிச்சியால் தனது தந்தையைக் கொன்றான். இது மக்களை அவன் மேல் வெறுப்பு கொள்ளச் செய்தது. இதன் வழி தனது காளையார் கோயில் ஆளுநர் பொறுப்பையும் இழத்தான்.
தளவாய் சேதுபதிக்குப் பிறகு திருமலை சேதுபதி, இராமநாத புரம் அரியணை ஏறினார். இவர் காலத்தில் சேதுபதிகளின் புகழ் ஓங்கியது. நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார். மன்னார்குடி, அறந்தாங்கி, தேவகோட்டை போன்ற ஊர்கள் இவரின் ஆட்சியின் கீழ் வந்தன! திருமலை சேதுபதிக்குப் பிறகு இராஜதுர்ய சேதுபதி, மற்றும் ரகுநாத சேதுபதி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். சிம்மாசனம் மட்டுமே அலங்காரம் பெற்றது. இவர்கள் ஆட்சியில் சிறப்பாக எதுவும் நடைபெறவில்லை.
262

சைபீர்முகம்மது O
இதன் பிறகே சரித்திரத்தில் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் கிழவன் சேதுபதி ஆட்சிக்கு வந்தார். சேதுபதிகளின் வீரமும் ஆட்சித் திறனும் இவரின் காலத்தில்தான் வெளியுலகத்துக்குத் தெரிந்தன. இராமநாதபுரத்தில் பல அரண்மனைகள், கோட்டை களைக் கட்டினார் என்பது மட்டுமே இவரின் பெருமையில்லை. மதுரையை ஆட்சி செய்து வந்த சொக்கநாத நாயக்கர் ருஸ்தும்கான் என்ற முஸ்லீம் மன்னனின் துழச்சியில் வீழ்ந்து நாடிழக்கும் நிலை உருவானபோது கிழவன் சேதுபதியே மதுரையைக் காத்தார். அதன் பிறகு சிறிது காலத்தில் சொக்கநாத நாயக்கர் முரண்பட்டு நின்ற பொழுது அவரை அடக்கியதோடு மதுரையை இரண்டு ஆண்டு காலம் தனது நேரடி ஆட்சியில் கொண்டு வந்தார்.
தஞ்சையில் மராட்டியர்கள் ஆட்சி நடந்த நேரத்தில் அவர்கள் தென்பாண்டி நாட்டிலும் காலடி பதிக்க விரும்பி துடுக்குத் தனங்களில் இறங்கினார்கள். படைபலமும் பண பலமும் கொண்ட மராட்டியர்களை தமது வீரத்தால் அடக்கி புறமுது கிட்டு ஒட வைத்தார். '
வரலாற்றில் கிழவன் சேதுபதி செய்த சிறப்புகள் சில சொல்லப்பட்டுள்ளன. அவற்றில், தனது நாட்டின் எல்லைகளை இவர் விரிவுபடுத்தும் பொழுதுதான் நாலு கோட்டை பாளையம் என்ற பகுதியை உருவாக்கினார் என்பது ஒன்று. இந்தப்பாளையமே பிற்காலத்தில் சிவகங்கைச்சிமை என்ற தன்னிரசாக உருவாகியது. பிற்காலத்தில் சேதுபதிகள் ஆட்சியிழந்து நின்ற வேளையில் இந்த சிவகங்கைச்சிமைய்ே இவர்களின் ஆட்சி மீட்புக்கு வழிகோலியது. இன்றுள்ள புதுக்கோட்டையின் தோற்றத்துக்கும் கிழவன் சேதுபதியே காரணம் என்று கூறலாம். அக்காலத்தில் இன்றும் இருக்கும் திருமெய்யம் கோட்டை சேதுபதிகளின் பொறுப்பில் இருந்து வந்தது. திருமெய்யம் கோட்டை பகுதிகளில் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த பல்லவராயர்கிள் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களை வென்று ஆட்சின்ய.அவர்களிடமே ஒப்படைத்திருந்தார் கள் சேதுபதிகள். கிழவன் சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவரின் மேற்பார்வையில் இருந்தது. தஞ்சை மராட்டியர்கள் படையெடுப்பின் பொழுது சிவந்தெழுந்த பல்லவராயர் மராட்டியர் பக்கமாகச் சாய்ந்து
263

Page 134
O மண்ணும் மனிதர்களும்
சேதுபதிக்குத் துரோகம் இழைத்தார். சினமுற்ற கிழவன் சேதுபதி பல்லவராயரின் சிரத்தை வெட்டி எறிய ஆணையிட்டார். சிவந்தெழுந்த பல்லவராயரை சிரச்சேதம் செய்த பொழுது அவர் சிவபூசையில் இருந்தார் என்பதை அறிந்து கிழவன் சேதுபதி மனம் வருந்தினார். அதற்குக் கழுவாய் தேடும் வகையில் காளையார் கோயிலில் ஒரு மண்டலம் தங்கி வழிபட்டு பழிதீர்க்கப்பூசித்தார் என்பது வரலாறு.
கிழவன் சேதுபதி கரம்பக்குடி கள்ளர் குலத்தலைவரின் மகளைக் காதலித்து திருமணம் செய்திருந்தார். கதலி நாச்சியார் என்பது இவரின் பெயர். கிழவன் சேதுபதி மரணமுற்ற பொழுது அவரின் மனைவிமார்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினார்கள். அப்படி உடன்கட்டை ஏறியவர்களில் முதன் முதலாக தன்னை எரியூட்டிக் கொண்டவர் இந்த கதலி நாச்சியார்.
சேதுபதிகள் வரலாறு மிக நீண்டது என்பதால் சில முக்கியமானவற்றை மட்டும் கூறி முடிக்கலாம்.
சேதுபதிகள் மிக நேர்மையான ஆட்சியாளர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மட்டுமே போதுமானது. 1720களில் சேது நாடு என்றழைக்கப்பட்ட இராமநாதபுரத்தை திருவுடையார் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி ஆட்சி செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவரையும் மணந்து கொண்ட தனது மருமகனை இராமேஸ்வரத்தின் ஆளுநராக நியமித்தார். குகனின் காலத்தில் இருந்து இராமேஸ்வரத்தையும் இராமலிங்கேஸ்வரர் கோயிலையும் பாதுகாத்து வருவதும், யாத்ரீகர்களுக்கு உதவி செய்வதுமே இவர்களின் தலையாய பணியாக இருந்து வந்தது.
இராமமேஸ்வரம் கோயிலில் அன்று தொட்டு இன்று வரை சேது பதிகளுக்கு ஒரு சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் எந்தக் கோயிலிலும் இப்படியொரு சிறப்பு எந்த மன்னர் பரம்பரைக்கும் கிடையாது. ஆலயத்தின் கிரியா முறைகளில் இரவில் நடைபெறும் அர்த்தசாம பூசையிலும், காலையில் நடைபெறும் திருப்பள்ளி எழுச்சி பூசையிலும் ஆவாஹனம், விஸர் ஜனம் என்ற கிரியா பத்ததியில், முதன்மை மூர்த்திகளோடும் முப்பத்து முக்கோடி தேவர்களோடும் மந்திரப் பூர்வமாக
, 264

சைபீர்முகம்மது O
விளிக்கப்படுவது சேதுபதி மரபினருக்கே கிடைத்த சிறப்பாகும். அது இன்றும் நடைபெற்று வருகிறது!
விஜயரகுநாத சேதுபதியின் மருமகன் இராமேஸ்வரம் வந்த யாத்திரீகர்களிடம் வரிவதுலிக்க ஆரம்பித்தார். தனது இரண்டு மகள்களைக் கட்டிக் கொடுத்திருந்தும் தனது மருமகன் செய்த அடாத செயல்கண்டு சினந்த சேதுபதி அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரின் மனைவிகள் இருவரும் உடன்கட்டை ஏறினார்கள். விஜயரகுநாத சேதுபதி 1711 முதல் 1725 வரை ஆட்சி செய்தார். 1711ல் இவர் பாம்பனில் ஒரு கோட்டையைக் கட்டினார்.
கணவர் இறந்த பிறகு உயிர்துறந்த இரண்டு பெண்களின் நினைவாக அக்காள் மடம், தங்கச்சி மடம் என்று இரண்டு மிடங்களை பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த காட்டையத் தேவரும், சிவகுமார விஜயரகுநாத தேவரும் கட்டினார்கள். இன்று அந்த இரண்டு மடங்களைச் சுற்றி அக்காள் மடம், தங்கச்சி மடம் என்ற ஊர்களே உருவாகி விட்டன.
வரி வதுலித்தமைக்கு மரண தண்டனையா என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால் அக்கால ஆட்சி அப்படித்தான் இருந்திருக்கிறது. கோயில் விளக்கை லஞ்சத்தாலும் வஞ்சத்தாலும் ஏற்றி வைக்க நினைக்காத காரணத்தால் தான் குகன் காலத்தில் இருந்து இராமேஸ்வரக் கோயிலில் அவர்களின் பெயர்கள் தெய்வங்களின் பெயர்களோடு பூஜிக்கப்படுகின்றன.
கிழவன் சேதுபதி காலத்தில் வலிமையாக்கப்பட்ட நால் கோட்டைப்பாளையம் பிற்காலத்தில் சிவகங்கைச் சிமையாக மாறியதை முதலில் கண்டோம். நாலு கோட்டைப் பாளையத்தின் தலைவராக அப்பொழுது சசிவர்ணத் தேவர் இருந்தார். கிழவன் சேதுபதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த விஜயரகுநாத சேதுபதி சசிவர்ணத் தேவருக்கு தனது மகள் அகிலாண்டேஸ்வரியை மண முடித்து வைத்தார். பல கிராமங்களை தானமாகக் கொடுத்த தோடு தொண்டி துறைமுகத்தையும் சசிவர்ணத் தேவர் வசம் ஒப்படைத்தார்.
சசிவர்ணத் தேவர் இளைய வயதில் காளையர் கோயில் காடுகளில் வேட்டையாடுவது வழக்கம். அப்படி ஒரு நாள்
265

Page 135
O மண்ணும் மனிதர்களும்
வேட்டையாடும் பொழுது “சாத்தப்பையா' என்ற ஞானியைச்
சந்தித்தார். Y.
இந்த சாத்தப்பையா தாயுமானவரின் சிடர்களில் ஒருவர்.
சசிவர்ணத் தேவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வற்கு முன் கொஞ்சம் தாயுமானவர் பற்றி அறிவது அவசியம். அவரை ஒரு துறவி என்ற வகையில் மட்டுமே மக்கள் அறிந்திருப்பார்கள். கொஞ்சம் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இராமேஸ் வரத்தைக் காத்த பெரிய போர் வீராணகவும் அவர் வாழ்ந்தது கண்டு நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம்.
தாயுமானவர், விஜயரங்க சொக்கநாத நாயக்கர் திருச்சிgrt பள்ளியில் ஆட்சியில் இருந்தபொழுது அவரிடம் அமைச்சராக இருந்தார். இவரின் தந்தையார் கேடிலியப்ப பிள்ளையும் நாயக்கர்களின் ஆட்சியில் அமைச்சராகப் பணிபுரிந்தவர். மனதில் துறவறம் மேலோங்கி நின்ற வேளையில் தாயுமானவர் துவராடை அணிய நிாட்டம் கொண்டார். பிறகு ஆட்சிக்கு வந்த வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர் மிகவும் வற்புறுத்தவே மறுக்க முடியாமல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில் தென்சிமையில் அன்னியரின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்தது. வியாபாரம் செய்ய வந்த அவர்கள் மண்ணில் கால் பதிக்க நினைத்தார்கள். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை வேட்டைக்காடாக மாற்றினார்கள். பதினாறாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவ பாதிரிமார்களின் படையெடுப்பும் மத மாற்றங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. இதில் கிழவன் சேதுபதி காலத்தில் இருந்த பிரிட்டோ என்றழைக்கப்படும் அருளப்பர் இன்றும் சருகனி போன்ற ஊர்களில் பிரபலமாகப் பேசப்படுகிறார்.
மன்னர் 1732 ல் இறந்தபொழுது தாயுமானவருக்க 28 வயது. இளம்காளை, விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இறந்ததும் அவர் மனைவி மீனாட்சி ஆட்சிக்கு வந்தார். தாயுமானவரின் அழகில் அர்சி மயங்கினாள். தனது உடல், பொருள். அரசு அனைத்தையும் அவர் காலடியில் போட காத்திருந்தாள். தாயுமானவர் அரசிக்கு
266

சைபீர்முகம்மது O
புத்திமதி கூறி துறவு பூண்டு இராமநாதபுரம் சென்றடைந்தார். இவர் காலத்தில்தான் தமிழ் நாட்டில் சுப்பிரதிபக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான், பரஞ்சோதி முனிவர், இராசப்பக் கவிராயர், பல பட்டடைச் சொக்கநாதப் புலவர், உமறுப் புலவர், வீரமா முனிவர், கடிகைமுத்துப் புலவர் போன்றோர் வாழ்ந் துள்ளார்கள்.
தாயுமானவர் இராமநாதபுரத்தின் கிழக்கே இருந்த காட்டூரணி என்ற ஊரில் தங்கி தவமிருந்தார். இந்த நேரத்தில் இராமநாதபுரம் மிகுந்த சோதனைக்கு ஆளாகி நின்றது. போர்த்துக் கிசிய கப்பற்படை இராமேஸ்வரம் தீவை முற்றுகையிட்டிருந்தது. எந்தக் கோயிலை குகனால் காக்க இவர்களுக்குப் பணிக்கப் பட்டதோ அந்தக் கோயிலைக் காக்க முடியாமல் சேதுபதிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட தாயுமானவர் தமது துவராடையைத் துறந்து போர் உடை தரித்தார்! ஒரு துறவி, அதுவும் ஒரு அமைச்சராக மட்டுமே இருந்தவர் படைக்குத் தலைமையேற்று இராமேஸ்வரம் சென்றார்! சேதுபதிகளின் போர்ப்படை தாயுமானவரின் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்றது! அறவுடை, முடிந்தால் மறவுடையும் தரிக்கும் போலும்! م
இதன் பிறகு தாயுமானவர் இலட்சுபுரம் என்ற ஊரில் வந்து தங்கினார். காட்டூரணி என்ற ஊரில் இருந்த பொழுது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு புளிய மரத்தின் பொந்தில் இருந்து தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே இலட்சுபுரம் வந்தார். இங்கே இவரின் மேல் பக்தி கொண்ட ஒரு அம்மையார் ஒரு குடிசை அமைத்துக் கொடுத்து நந்தவனம் உண்டாக்கி குளமும் வெட்டிக் கொடுத்தார். இறுதிக் காலம் வரை தாயுமானவர் அங்கேயே இருந்தார். அவரின் உடலை அந்தக் குளக்கரையிலேயே அடக்கம் செய்தனர். சுமார் எழுபது ஆண்டு களுக்குப் பிறகு அங்கே ஒரு மேடை அமைக்கப்பட்டு தாயுமான வரின் கல்லுருவமும் நிறுவப்பட்டது.
சிறிது காலத்துக்கு முன் திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண தபோவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே திருப்பணிகள் செய்ததாக விபரங்கள் கூறுகின்றன.
267

Page 136
O மண்ணும் மனிதர்களும்
தாயுமானவரின் சிடர் தான் சாத்தப்பையா ஞானி என்று
கூற வந்தேன் அல்லவா? அவரை சசிவர்ணத்தேவர் காட்டில்
சந்தித்த பிறகு நாட்டில் பல குளறுபடிகள் நடக்க ஆரம்பித்தன.
தன்னாட்சி
கிழவன் சேதுபதியின் காலம் தமிழகத்தின், அதுவும் சேது நாட்டின், பொற்காலம் என்று ஏற்கனவே கூறினேன்.
இராமநாதபுரத்தை கண் வைத்து டச்சுக்காரர்கள் அடுத் தடுத்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலே யரின் காலடித் தடங்கள் படுவதற்கு முன்பே டச்சுக்காரர்கள் மத மாற்றங்கள்’ என்ற பெயரால் உள்ளே புகுந்து ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தார்கள்.
சேதுபதி சிமை இடைக் காலத்தில் நாயக்கர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இராமேஸ்வரத்தைக் கண்காணிக்கும் பொறுப்புகள் கூட கை நழுவி விட்டிருந்தன. கிழவன் சேதுபதி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் இரகுநாதத் தேவரின் காலத்தில் தான் (1674 - 1710) தமிழ் நாட்டின் கடைசி தன்னாட்சி முறை வந்தது.
இவர் காலத்தில் மூன்று பெரும் போர்கள் நிகழ்ந்துள்ளன.
கிழவன் சேதுபதி ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கர் (1601 - 1609) மக்களிடம் எதிர்ப்பு இருப்பதை அறிந்து தனது பிரதிநிதியாக சேதுபதிகளின் உறவினரான சடைக்கத் தேவர் என்பவரை இராமேஸ்வரத்தைக் கண்காணிக்க நியமித்திருந்தார். சேதுபதிகள் ஆட்சி செய்ய நாடில்லாமல் இருந்தாலும் தங்களிடம் சிறு சிறு படைகளை வைத்திருந்தனர். நாயக்க மன்னர்களை விஜய நகர, பீஜப்பூர், மைதுர் மற்றும் தஞ்சை மராட்டியர்கள் தாக்க படையெடுத்து வந்த பொழுதெல்லாம் தங்களின் வலிமையைக் காட்டிநாயக்கர்களைக் காப்பாற்றி வந்தார்கள். பிறகு சிறிது சிறிதாக வலிமை பெற்று
268

சைபீர்முகம்மது O
ஒரு ஒற்றுமையின் கீழ் சேதுபதிகள் திரண்டார்கள். இவர்களின் வலிமை பெருகிய நேரத்தில் நாயக்கர்களுக்கு விசு வாசமாக இருப்பதைக் குறைத்துக் கொண்டே வந்தார்கள்.
இரகுநாதத் தேவர் என்ற கிழவன் சேதுபதி துரியத் தேவர் என்பவரின் ஐந்தாவது மனைவி வயிற்றுப் பிள்ளையாவார்.
மறவர்களிடையே உட் பிரிவுகள் உண்டு. கொண்டையன் கோட்டை மறவன், செம்பி நாட்டு மறவன், சிறு தாலி கட்டி மறவன், வன்னிய மறவன், பண்டார மறவன், சுகத்த மறவன், உப்புக் கோட்டை மறவன், குறிஞ்சி கட்டி மறவன் என்ற பிரிவுகளில் இராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் செம்பி நாட்டு மறவர் பிரிவினர் ஆட்சி செலுத்தி வந்தார்கள்.
இரகுநாதத் தேவர் அதாவது கிழவன் சேதுபதி துரியத் தேவரின் ஐந்தாவது மனைவிக்குப் பிறந்தவர். மறவர் நாட்டு வழக்கப்படி மன்னரின் மூத்த மனைவியின் பிள்ளையே அரசாளும் உரிமை பெற்றவர். மன்னர் மறவர் பிரிவின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவரோ அதே பிரிவைச் சேர்ந்தவரே மூத்த மனைவியாக இருப்பதும் வழக்கமாகும். மற்ற மனைவிமார்கள் மறவர் பிரிவின் மற்றவற்றைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அது கலப்பு மணமாகவே கருதப்படும். இரகுநாதத் தேவரின் தாயார் செம்பி நாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் கெண்டயங் கோட்டை மறவர் பிரிவைச் சேர்ந்தவர். எனவே இரகுநாதத் தேவர் ஆட்சிக்கு வருவது பெருத்த இடையூறாக இருந்தது. என்றாலும் பிற்காலத்தில் தனது வலிமை ஆற்றலால் தடைகள் தகர்த்து அவர் சேது நாட்டின் மன்னர் ஆனார்.
கிழவன் சேதுபதி ஆட்சிப் பொறுப்பேற்ற 28 ஆண்டுகளில் தன்னை தன்னாட்சி கொண்ட மன்னராகப் பிரகடனப் படுத்தினார். அதுவரையில் எல்லா சேதுபதிகளும் மதுரை நாயக்கர்களுக்கு அடங்கியே ஆட்சி செய்ய வேண்டியிருந்தது.
தனது எல்லையை மூன்று பேர்களின் மூலம் விரிவு படுத்தினார் சேதுபதி. தெற்கே வைப்பாற்றில் தொடங்கி வடக்கே தஞ்சாவூர் வரையிலும், கிழக்கே ஆதாம் பாலத்திலிருந்து
269

Page 137
O மண்ணும் மனிதர்களும்
மதுரைக்கு ஆறுகல் வரையிலும், மேற்கே தேவகோட்டை மன்னார் கோயில், திருவாரூர் வரையிலும் தனது இரும்புக் கரங்களுக் கிடையில் கொண்டு வந்தார்.
1707ல் வைகையில் ஒரு அணையைக் கட்டினார் என்றும் வரலாறு கூறுகிறது. இவர் காலத்தில் சேது நாட்டுக்குத் தனி நாணயம் அச்சிட்டு வெளியிட்டார்.
கிழவன் சேதுபதி காலத்தில் 1709ல் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பஞ்ச நேரத்தில் தாக்கினால் சேது நாட்டைக் கவர்ந்து விடலாமென்ற ஆசையில் தஞ்சை மராட்டியர் பெரும்படை கொண்டு போர் தொடுத்தனர். அப்பொழுது சேதுபதிக்கு 79 வயது. மக்களின் ஆதரவும் கிழவன் சேதுபதியின் போர்த் தந்திரங்களும் எதிரிகளை ஒட வைத்தன! 79 வயதில் போர்க் களத்தில் சேதுபதி காட்டிய வீரம் இன்றும் சரித்திரத்தில் பேசப்படுகிறது. தன்னம்பிக்கையும் துணிவும் இருந்தால் எந்த வயதிலும் வெற்றி வரும்!
கிழவன் சேதுபதி 1710 ஆம் ஆண்டு இறந்தார். அப்பொழுது அவருக்கு 47 மனைவிகள் இருந்தார்கள். அவரோடு 47 மனைவிகளும் உடன் கட்டை ஏறினார்கள். உடன் கட்டை ஏறும் வழக்கம் பண்டைத் தமிழ் நாட்டில் இருந்ததா, இல்லை இடையில் வந்ததா? சங்க காலத்து கடையெழு வள்ளல்களில் ஒருவரான 'ஆஅய் அண்டிரன்’ என்பவரின் வாழ்க்கையைப் பார்த்தால் ஒரளவு உண்மை விளங்கும். தென்விதவசுரை ஆண்ட மன்னன் ஆஅய் அண்டிரன். இவரின் வள்ளல் தன்மை குறித்து பரவை கொற்றனாரும், பரணரும் பாடிய பாடல்கள் அகநானூற்றில் காணக் கிடக்கின்றன. ஆஅய் அண்டிரன் இறந்ததும் இவரின் பல மனைவியர் உடன் கட்டை ஏறியதாக கடைச் சங்க கால வரலாறு கூறுகிறது. கடைச் சங்கம் வள்ர்த்த மற்றொரு மன்னன் பூதப் பாண்டியன். இவன் மனைவி பெருங்கோப் பெண்டு. பூதப் பாண்டியன் இளம் வயதில் இறந்து விட்டார். உடன் கட்டை ஏற முயன்ற இவரை பலரும் தடுத்தார்கள். ஆனால் கைம்மை எய்திய பெண்ணின் கொடுமைகளை விட இத் தி ஒன்றும் கொடியது அல்ல என்று அவர் வாதிட்டு மாண்டார்.
270

சைபீர்முகம்மது O பெருங்கோப்பெண்டு தனது வாய் மொழியால் சொன்னதை அப்படியே தருகிறேன். இதிலிருந்து விதவைகளின் அக்கால அவலம்புரியும்.
"கற்கள் அடுக்கப்பட்ட தரையில் வெறும் பாய் கூட விரிக்காது மற்ற கைம்மைப் பெண்களைப் போல் நானும் படுக்க வேண்டும் என்கிறீர்களா? கைம்மை நோற்பவர்கள் நெய் உண்ணக் கூடாது. எள்ளும் புளியும் சேர்த்து வேளைக் கீரையைக் கலந்து கஞ்சியைத் தான் உண்ண வேண்டும். நான் அவ்வாறு உண்பவள் அல்ல!” இப்படியும் இன்னும் இது போன்ற வேறு பல கொடுமைகளையும் பொறுக்க மாட்டாமல் உடன் கட்டை ஏறும் வழக்கம் தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது. சாதாரண பெண்களுக்கே இந்தக் கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கும் பொழுது மன்னர் குலத்தில் பிறந்து அரண்மனையில் வாழ்பவர்களுக்குச் சொல்லவே வேண்டாம்!
கிழவன் சேதுபதி என்னும் இரகுநாதத் தேவர் காலத்தில் வாழ்ந்தவர் சிதக்காதி வள்ளல். பெரும் கொடை வள்ளலாகவும், சாதி சமயங்களுக்கு அப்பால் நின்று தமிழையும் தமிழர்களையும் அரவணைத்த பெரும் குணங்கொண்ட மனிதனாகவும் வாழ்ந் தவர் சிதக்காதி வள்ளல்.
கிழவன் சேதுபதியும் சிதக்காதியும் இணைபிரியா நண்பர் களாக வாழ்ந்துள்ளார்கள். வரலாற்றின் சில குறிப்புகள் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளன. இந்த வரலாறு சிலருக்குப் பிடிக்காமல் இருந்தாலும் வரலாற்றை மாற்றி எழுத நாம் யார்? இரகுநாதத் தேவர் ஆட்சிக்காலத்தில் இரு மத விவகாரங்கள் குறிக்கப் பெறுகின்றன. ஒன்று அவருக்கு மாட்சியைத் தருவ தாகவும், மற்றது அவரின் வரலாற்றில் கறைபடிந்த பகுதியென்றும் கூறப்படுகின்றது.
சிறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் சிதக்காதியின் நண்பர்ாக இருந்தவர். சிறாப்புராணம் எழுதும் பொழுது உமறுப்புலவருக்கு புரவலராக இருந்து உதவினார். அண்ணல்
271

Page 138
O மண்ணும் மனிதர்களும்
நபியின் வாழ்க்கை சிறாப்புராணத்தில் முழுமை பெறாத நிலை இருந்தபொழுது கிழக்கரையைச் சேர்ந்த பணியகமது மரைக்காயர் என்பவர் அப்பணியை முழுமை பெறச் செய்தார். இதுவே பிற்காலத்தில் “சின்னச் சிறா’ என்று பெயர் பெற்றது. உமறுப் புலவருக்கு சிதக்காதி வள்ளல் புரவலராக இருந்தது போலவே சிதக்காதி வழி வந்த வெப்பை நயினா மரைக்காயர் புரவலராக இருந்து சின்னச் சிறா முழுமை பெற உதவினார். அது மதக் காவியமாக இருந்தாலும் தமிழ்க் காவியமாக இன்றும் போற்றப் படுவதற்கு சிதக்காதியின் கொடையே காரணம் எனலாம்.
சிதக்காதியின் இயற் பெயர் செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்பதாகும். செய்யிது அப்துல்காதர் என்றும் வழங்கியதாக வரலாறு கூறுகிறது. எனினும் பிற்காலத்தில் தமிழ் வழக்கிற்கு ஒப்ப ‘சிதக்காதி’ என மருவி அதுவே சிறப்புப் பெயராக தமிழர்களால் இன்றளவும் அழைக்கப்படுகின்றது.
சென்னை கிழ்த்திசை சுவடி நூலக ஒலைச் சுவடியில் ‘செய்தக்காதி நொண்டி நாடகம்' என்றே குறிக்கப் பெற்றுள்ளது.
சிதக்காதியின் தந்தை பெயர் மெளலானா சாகிபு அவருக்கு பெரிய தம்பி மரைக்காயர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அன்னையின் பெயர் பாத்திமா ஆகும். தாயார் பிறந்த ஊர் தென் ésfTuGi).
சிதக்காதி அரிசி, மிளகு போன்ற தானிய வியாபாரம் செய்ததோடு, மரகதக்கல் வியாபாரமும் செய்து வந்தார். ஒரு முறை வங்கம் செல்ல கப்பலில் சென்ற பொழுது பெரும் புயல் வீசியது. ஒருபுறம் பாரமாக இருக்கவே கப்பல் கடலில் தத்தளித்தது. பாரத்தைச் சரி செய்ய மாலுமிகள் கடலில் மூழ்கி கற்களைப் பொறுக்கி கப்பலின் மறு புறத்தில் அடுக்கினார்கள். நிறைய கற்களை கோணிப் பைகளில் கட்டிக் கட்டி அடுக்கி வைத்தார்கள். ஊர் வந்து சேர்ந்த பிறகு கோணிப்பைகளைப் பிரித்த பொழுது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆமாம், அந்தக் கற்கள் அனைத்தும் மரகதக் கற்கள். சோமலெ தாம் எழுதிய இராமநாதபுர மாவட்டம் என்ற நூலில் இது குறித்து விளக்கமாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார். இன்றும் ஒருவித கல்லுக்கு ‘மரைக்காயர் கல்’ என்ற பெயரே வழக்கில் இருந்து வருகிறது.
272

சைபீர்முகம்மது O
1709 முதல் 1713 வரை இராமநாதபுரத்தில் கடும் மழை பெய்து பயிர்கள் எல்லாம் நாசமாயின. இக்காலத்தில் பஞ்சம் எங்கும் கூத்தாடியது. இக்கால கட்டத்தில் சிதக்காதி அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியில் ஒப்பந்தம் செய்து தனது மரக்கலங்களில் அரிசி, மிளகு முதலியவற்றை அனுப்பிக் கொண்டிருந்தார். மக்கள் படும் அவதியைப் பார்த்து அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து விட்டு பல ஊர்களிலிருந்து அரிசி முதலியவற்றை தனது மரக்கலத்தில் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகித்தார்.
கிழவன் சேதுபதி இராமேஸ்வரக் கோயிலின் பாதுகாவலர் என்ற முறையில் சிதக்காதியிடம் நன்கொடை கேட்டார். இராமேஸ் வரக் கோயிலுக்கு பதினாயிரம் ரூபாய் மான்யம் வழங்கினார் சிதக்காதி. இதன் காரணமாகவே 1885 வரை சிதக்காதியின் வழித் தோன்றல்கள் கோயிலின் அறங்காவலர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு வந்தார்கள். இன்று வரையில் சிதக்காதியின் வழித் தோன்றல்களுக்கு “கோயில் மரியாதை செய்யப்பட்டு வருவதாக அறிகிறோம்.
சிதக்காதி மிகச் சிறந்த முஸ்லீமாக வாழ்ந்தார். அதே நேரத்தில் தமிழ்ப்பற்றும், புலவரை ஆதரிக்கும் தன்மையும், சமயங்களைக் கடந்து யார் கேட்டாலும் வாரி வழங்கும் தன்மையும் அவரிடம் இருந்தன. இன்று முஸ்லீம்கள் மட்டுமே அவரைப் போற்றவில்லை. ஏனைய மதத்தவர்களும் “செத்தும் கொடை கொடுத்தார் சிதக்காதி’ என்று வாய் நிறைய வாழ்த்துகின்றனர்.
கிழவன் சேதுபதி காலத்தில் சிதக்காதியின் வரலாறு இப்படிச் செல்கிறது என்றால் மற்றொரு பிரிவில் அவருக்குச் சிறிது களங்கம் ஏற்படும் வண்ணம் அது அமைந்து விட்டது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ மதம் பரப்ப சேது சிமையில் காலடி வைத்தார்கள் என்று ஆரம்பத்தில் கூறினேன். பிரித்தோ என்றும் பிற்காலத்தில் தனது பெயரை தமிழில் ‘அருளானந்தர்’ என்றும் மாற்றி வைத்துக் கொண்ட போர்ச்சுகல் பாதிரியார் சிவகங்கைப் பகுதிகளில் பிரச்சாரங்கள் செய்து வந்தார். காளையார் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக சருகனி போன்ற ஊர்களில் இவரின் மதப் பிரச்சாரம் வேகமாக நடந்தது. கிழவன் சேதுபதியின் அமைச்சராக இருந்தவர்
273

Page 139
O மண்ணும் மனிதர்களும்
குமாரப்பிள்ளை. இவர் இந்த மத மாற்றங்களைத் தடுக்க எண்ணினார். பாதிரியார் அருளானந்தரிடம் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பவராக இல்லை. காளையார் கோயிலில் இவர் சிறை வைக்கப்பட்டு பின் போர்ச்சுகல் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்.
கிழவன் சேதுபதியின் ஆட்சியை சிறுவாழி பாளையக் காரர்கள் எதிர்த்தே வந்தார்கள்.
மதுரை நாயக்கர் குடியின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் வசதிக்காக தமிழ் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார்கள். இந்திய அரசியலில் முதல் பிரித்தாளும் கொள்கை அப்பொழுது தான் வேரூன்றப்பட்டது. ஆங்கிலேயர் பிரித்தாளும் காலத்துக்கு முன்பே அதாவது 1529 முதல் 1736 வரையில் நாயக்கர்கள் தமிழர்களை இப்படிப் பிரித்து வைத்தார்கள். மதுரையை ஆளும் தன்னாட்சி உரிமை கொண்ட முதல் நாயக்க மன்னரான விசுவநாத நாயக்கர் முதல் இறுதி மீனாட்சி காலம் வரை இரு நூற்றாண்டுகள் தமிழகத்தில் பெயர் சொல்லும்படியான எந்த பெரிய மன்னரும் ஆட்சியில் இல்லை. 72 சிறு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் வெட்டிக் குத்திக் கொண்டிருந் தார்கள். தமிழரின் வீரம், கலை, இலக்கியம் அனைத்தையும் வெட்டிப் புதைக்க இந்த 72 பாளையங்களே போதுமானது. சேர, சோழ,பாண்டியர்கள் என்ற பெரிய மன்னர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்! மன்னர்கள் என்ற நிலை மாறி வெறும் பாளையக்காரர்கள் என்ற நிலைக்கு நாயக்கர்கள் இவர்களைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள், கிடைத்தது போதும் என்று சாதி அடிப்படையில் நிலப் பிரபுத்துவ கொள்கைகள் மட்டுமே நிலை நாட்டப்பட்டதால் தமிழரின் பிற்காலச் சரிவுக்கு 15ஆம் நூற்றாண்டின் இந்த பாளையப்பட்டு முறையே காரணம் எனலாம். 18 ஆம் நூற்றாண்டில் வெகு சுலபமாக ஆங்கிலேயர்கள் தமிழர்களை அடிமைப்படுத்த அந்த முறைதான் கதவைப் பெரிதாகத் திறந்து வைத்திருந்தது. பாளையக்காரர்கள் பின் ஜமீன்தார்களாக சிறுத்து இன்று ஏதோ சில ஊர்களில் பண்ணையார்களாக இருந்து வருகிறார்கள். இதற்கு அடிப்படை தமிழரிடத்தில் ஒற்றுமை இல்லாமல் இருந்ததே! மற்ற இனத்தவரின்
274

சைபீர்முகம்மது O
ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருப்பதை பெருமையாகவும் பக்கத்து நாட்டு தமிழ் பாளையக்காரரோடு ஒற்றுமையாக இருப்பதைக் கேவலமாகவும் கருதியதால் வந்த வினைப்பயனை இன்றைய தலைமுறை அனுபவித்து வருகிறது.
சிறுவாழிப் பாளையக்காரர்கள் கிழவன் சேதுபதிக்கு எதிர்ப்பாக இருந்த காரணத்தால் அருளானந்தர் மீண்டும் தமிழகம் வந்து சிறுவாழி பாளையத்தில் அடைக்கலமடைந்தார். கிழவன் சேதுபதிக்கு ஆத்திரமூட்டும் வகையில் சிறுவாழிப் பாளையக்காரர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினார். இது தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கிழவன் சேதுபதி கருதினார்.
அருளானந்தர் கைது செய்யப்பட்டார். அவர் பல கொடுமை களை சந்திக்க நேர்ந்தது. தனது கையால் அவரை ஏதும் செய்ய கிழவன் சேதுபதி நினைக்கவில்லை. அவரை ஓரியூர் பாளையக் காரரிடம் ஒப்படைத்தார். ஓரியூர் பாளையக்காரர் உடையப்பத் தேவரின் மனைவி அருளானந்தரின் போதனையால் ஈசனைத் துறந்து ஏசுவை ஏற்றுக் கொண்டார். இது உடையப் பத்தேவரின் கோபத்தில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகி விட்டது. உருவிய வாளால் அருளானந்தரின் தலையைத் துண்டித்தார்.
உடையப்பத் தேவருக்குப் பிறகு ஆளுநராக வந்த வடுக நாதன் அருளானந்தர் கொலை செய்யப்பட்டதை சிறிதும் விரும்ப வில்லை. அருளானந்தருக்கு கிழவன் சேதுபதியும் உடையப்பத் தேவரும் செய்தது அநீதி என்று கருதிய அவர் பிரித்தோ என்ற அருளானந்தர் கொலையுண்ட இடத்தில் ஒரு தேவாலயம் எழுப்பி கிறிஸ்துவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
அருளானந்தர் இன்றும் தங்களின் குறைகளைக் கேட்டு அதை களைவதாக கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள். அந்த தேவாலயத் துக்கு மக்கள் வந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்.
கிழவன் சேதுபதியின் வரலாற்றின் இந்தப் பகுதி சிறிது சோகம் நிரம்பியதுதான். என்றாலும் இரகுநாதத் தேவரின் பக்கமும் சில நியாயங்கள் இருந்தன.
கிழவன் சேதுபதியின் தங்கை சுடலையின் கணவரான தடியாத் தேவர் பல திருமணங்கள் செய்தவர். அருளானந்தரின்
275

Page 140
O மண்ணும் மனிதர்களும்
பிரச்சாரத்தில் தடியாத் தேவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். இவர் கிறிஸ்துவரானதும் முதல் மனைவியை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு ஏனைய மனைவிகளை மணவிலக்குச் செய்தார். கிழவன் சேதுபதியின் தங்கை சுடலையும் இதில் பாதிக்கப்பட்டார். இது தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகக் கருதினார் சேதுபதி. எனவே தடியாத் தேவரின் செயலுக்கு அருளானந்தரே பொறுப்பு எனக் கருதி அவருக்கு மரண தண்டனை தர முற்பட்டார்.
இந்த மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளாத மக்கள் பெருமளவில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினர். சருகணி, ஓரியூர் போன்ற இடங்களில் இதன் பிறகு போர்ச்சுகல் நாட்டு பாதிரியார்கள் பெருமளவில் வந்து பல தேவாலயங்கள் தோன்றக் காரணமானார்கள்.
சசிவர்ணத் தேவர்
கிழவன் சேதுபதிக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர் களால் சேதுபதிகளின் செல்வாக்கு சரியத் தொடங்கியது எனலாம். கிழவன் சேதுபதிக்குப் பின் முத்து விஜயரகுநாத சேதுபதி ஆட்சிக்கு வந்தார். அதன் பின் சுந்தரேஸ்வர சேதுபதி ஆட்சி சிறிது காலம் நடை பெற்றது. முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு மராட்டிய மனைவி ஒருவர் இருந்தார். இவர் மூலம் பிறந்தவர்தான் பவானி சங்கரன் என்பவர். சுந்தரேஸ்வர சேதுபதிக்குப் பிறகு அரியணை ஏறிய பவானி சங்கரனால் சரியாக ஆட்சி செய்ய முடியவில்லை. ஏற்கனவே பல முறை தஞ்சாவூரை ஆண்டு வந்த மராட்டியர் களோடு மோதி பல போர்களைக் கண்டவர்கள் சேதுபதிகள். இதை சேது நாட்டு மக்கள் மறக்கவில்லை. அவர்கள் மறந்தாலும் அந்தப் போரில் அவர்கள் பட்ட விழுப்புண்கள் மறக்கவொட்டமல் செய்தன! இந்த நிலையில் ஒரு மராட்டியப் பெண்ணுக்குப் பிறந்தவர் தங்களை ஆட்சி செய்வதா என்ற எண்ணம் மக்களின் மனதில் எழுந்து நின்றது. அக்காலத்து மக்கள் இராமன் ஆண்டால்
276

சைபீர்முகம்மது Ο
என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மன நிலையில் இல்லை! கோன் பார்த்தே குடி நின்றது! மக்கள் மனதில் நிலைக்க முடியாத பவானி சங்கரனால் சேது நாடு குழப்பமான துழலில் மாட்டிக் கொண்டது.
இந்த வேளையில் மக்களின் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார். முன்பு ஆட்சி செய்து மறைந்த சுந்தரேஸ்வரரின் உறவுக்காரர் காத்தையாத் தேவர். அவர் சேது நாட்டில் இருப்பது தனக்கு ஆபத்து என்றுணர்ந்த பவானி சங்கரன் அவரை நாடு கடத்தினார். தக்க நேரம் வரும் வரை காத்திருப்பது என்று தீர்மானித்த காத்தையாத் தேவர் தஞ்ன்சயில் தஞ்சமடைந்தார்.
நாலு கோட்டை பாளையத்தைக் கண்காணித்து வந்த சசிவர்ணத் தேவர் இவ்வேளையில் செல்வாக்குப் பெறும் துழநிலை உருவாகியது. ஞானி சாத்தப்பையா அவர்கள் சசிவர்ணத் தேவரை ஆசிர்வதித்து, “விரைவில் நீ மன்னனாவாய். நாம் சந்தித்த இந்த நாவல் மரத்தடியில் பெருகி வரும் ஊற்றை விரிவுபடுத்தி தெப்பக்குளம் வெட்டு. அந்தக் குளத்தின் மேல் மூலையில் உன் கோட்டையைக் கட்டிக் கொள். இந்த புதிய ஊருக்கு 'சிவகங்கை’ என்று பெயரிடு”என்று ஆசி வழங்கியதாக வரலாறு கூறுகிறது.
சிவகங்கைச்சிமை என்ற பெயர் இப்படித்தான் உருவாகியது. இதன் பிறகு பவானி சங்கரன் பல தொல்லைகள் கொடுத்து வந்தார். என்றாலும் வெற்றிபெற முடியவில்லை. சேது சிமை ஐந்து பாகமாகப் பிரிக்கப்பட்டு அதில் இரண்டு பாகத்துக்கு சசிவர்ணத் தேவர் மன்னராக ஆட்சிக்கு வந்தார். 11.1.1730ல் இது நடந்தது. சசி வர்ணத் தேவரின் மறைவுக்குப் பின் அவரின் மைந்தர் முத்து வடுக நாதர் பட்டத்துக்கு வந்தார்.
சேது சிமையின் அரசராக இருந்த முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகள் அகிலாண்டேஸ்வரியை சசிவர்ணத் தேவர் மண முடித்திருந்தார். இதன் காரணமாக சிதனச் சொத்தாக பல கிராமங்கள் இவருக்கு வழங்கப்பட்டதோடு தொண்டித் துறைமுகமும் இவரின் ஆளுகைக்கு வந்தது.
277

Page 141
O மண்ணும் மனிதர்களும்
இன்று கூட பழைய பாட்டிகள் 'தென் பாண்டிச் சிமை தேசத்தையே சிதனமாகக் கொடுத்தார் எங்க ராசா’ என்று பிறந்த வீட்டுப் பெருமை பேசும் பொழுது சொல்வார்கள்.
இப்படி மனைவி வீட்டுச் சிதனம் பெற்றதால் சசி வர்ணத் தேவர் வாழ்க்கையில் பல அவமானங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மனைவி அகிலாண்டேஸ்வரி மன்னர் மகளாக இருந்ததால் சிறு சிறு பிரச்சினைக்கெல்லாம்“எடுபல்லக்கை, நட இராமநாதபுரத்துக்கு” என்று ஊழியர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பது வழக்கமாகி விட்டிருந்தது. ஒரு முறை கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றவர் திரும்பவே இல்லை. தந்தை முன் கண்ணைக் கசக்கிக்கொண்டு நின்றதால் முத்து இரகுநாத சேதுபதிக்கு மருமகன் மேல் கட்டுக் கடங்காத கோபம் ஏற்பட்டது. எப்பொழுதுமே பெண் வீட்டாரிடம் சிதனம் பெறும் மாப்பிள்ளைகள் பல அவமானங்களைச் சகித்துக் கொள்ள வேண்டியதுழிநிலை உருவாகிவிடும்.
நான் உண்மை வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு காட்சி இன்றும் என் நினைவை விட்டு மறையவே இல்லை. அப்பொழுது ராணுவத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனது மேலதிகாரி மிகவும் கெடுபிடிக்காரர். யாரைக் கண்டாலும் எரிந்து விழுவார். எப்பொழுதும் "சிடு சிடுதான். அவரைக் கண்டாலே அனைவருக்கும் ஒருவித பயம்! கதை கட்டுரை என்றும், பொதுவாழ்க்கை என்றும்பத்திரிகைகளில் என் பெயர் வந்து கொண்டிருந்ததால் ஒரு நாள் என்னை அழைத்து 'paು.೧ು தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் கொடுப்பா' என்று கேட்டார். அவர் யாழ்ப்பாணத் தமிழர், வெளியில் எதுவும் சாப்பிட மாட்டார். கையில் எப்பொழுதும் பிளாஸ்கில் தேநீர் கொண்டு வந்து விடுவார். அப்போதைய பிரிக்மீல்ட்ஸ் பகுதியின் உட்புறம் இருந்த ஆங் செங் சாலையில் குடியிருப்பது எனக்குத் தெரியும். ஆனால் வீடு தெரியாது. ஒரு திபாவளி தினத்தன்று நானும் நண்பர் பாதாசனும் முத்தமிழ்ப் படிப்பக கட்டட நிதிக்காக உண்டியல் ஏந்திக் கொண்டு வீதி வீதியாகச் சென்று விட்டு, ஆங் செங் ரோட்டில் இருந்த வீடுகளில் உண்டியல் ஏந்திக் கொண்டு GérairGprè.
278

சைபீர்முகம்மது O
அப்பொழுது ஒரு வீட்டில் நின்ற பொழுது ஒரு அம்மையார் கால்மேல் கால் போட்டுக்கொண்டு வந்த விருந்தினர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். பையனைக் கூப்பிட்டு எங்கள் உண்டியலில் காசு போடச் சொன்னார். அவரின் பேச்சு, நடவடிக்கை அனைத்திலும் ஒரு அலட்சியம் காணப்பட்டது. பெரிய இடமென்று நினைத்துக் கொண்டேன். திரும்பிப் போவதற்கு படிகளில் இறங்கிய பொழுது சமையலறை தென்பட்டது. என்னால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. என்னுடைய அதிகாரி அம்மியில் மிளகாய் அரைத்துக் கொண்டு நின்றார். தூக்கிக் கட்டிய லுங்கி, அரைக்கை பனியன். நான் மிகவும் தடுமாறி விட்டேன். வீட்டில் செலுத்த முடியாத அதிகாரத்தை அவர் எங்கள் அலுவலகத்தில் செலுத்த்கிறாரா? அவரும் என்னைப் பார்த்து விட்டார்.
பார்க்காதது போல் திரும்ப நினைத்த பொழுது அவரே என்னைப் பின்னுக்கு அழைத்தார். “என்ன ஆச்சரியமாக இருக் கிறதா? என்ன செய்வது? இந்த வீடு அவளுடையது. சீதனமாக வந்தது. பெரிய இடம் பணமும் நகையும் வீடும் காரும் தருகிறார்கள் என்றதும் என் பெற்றோர்கள் பிடிவாதமாக கட்டி வைத்தார்கள். இப்பொழுது மிளகாய் அரைக்கிறேன்!” என்றார்.
அவரின் சோகம் என்னை வருத்தியது. சிதனம் வாங்கிய ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் சோகம் தான்! பல குடும்பங் களில் இந்த சிதனம் முதலில் பெரிய கவர்ச்சியாக இருந்தாலும் பிற்காலத்தில் மனைவி 'போடு தோப்புக்கரணம்' என்றால் 'இந்தா எண்ணிக் கொள்’ என்றுதான் பல கணவன்மார்களின் வாழ்க்கை இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. வரதட்சணைக் கொடுமை யால் பல திருமணங்கள் நடக்காமல் பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள். கூடுதலாக வரதட்சணை வாங்கிய ஆண்கள், திருமணத்திற்குப் பின் முந்தானைக்குப் பின்னே நடப்பவர்களே! முத்து இரகுநாத சேதுபதியின் மகளைக் கட்டி பல ஊர்களைச் சிதனமாய்ப் பெற்ற சசிவர்ணத் தேவரின் வாழ்க்கையிலும் இந்த அவமானங்கள் அடிக்கடி குறுக்கிட்டன. மகள் அகிலாண்டேஸ்வரி கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றதும் மன்னருக்குப் பெருத்த கோபம் வந்தது. உடனே சசிவர்ணத் தேவரை பிடித்து
279

Page 142
O மண்ணும் மனிதர்களும் வர உத்தர விட்டார். அமைச்சர்கள் சமாதானப் படுத்தி மன்னரை அவசரப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். மகள் வீட்டில் வாழா வெட்டியாக இருப்பது மன்னருக்கு மனவருத்தத்தைத் தந்தது. பிறகு அமைச்சர்களின் ஆலோசனைப்படி சசிவர்ணத்தேவரைச் சந்திக்க சம்மதித்தார்.
சேதுபதியைச் சந்திக்க வந்த தேவர் கையில் ஒரு பொட்டலமும் கொண்டு வந்தார். அதைப் பிரித்து மன்னர் முன் வைத்தார். அது வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு ஜோடி செருப்பு!
“இதை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் மன்னரிடம் ஆலோசனை பெற இதைக் கொண்டு வந்தேன்’ என்றார்
“செருப்பைக் காலில் போட்டுக் கொள்வது தானே!" என்றார் சேதுபதி.
"தங்கத்தாலும் வைரத்தாலும் செய்யப்பட்டது. எப்படி காலில் போடுவது?”
“தங்கத்தாலும் வைரத்தாலும் செய்திருந்தால் செருப்பை கழுத்திலா தொங்கப் போட்டுக் கொள்வது? கழுதையை காலில் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும்” என்று பதிலுரைத்தார் சேதுபதி.
“சேதுபதி மகளேயானாலும் எனக்கு மனைவிதானே!”என்று தனது வாதத்தை எடுத்து வைத்தார் சசிவர்ணத் தேவர்.
தனது குடும்ப விவகாரம் அரச மண்டபம் வரையிலும் வந்ததை அறிந்து தனது தவறையும் உணர்ந்து தனது மகளை உடனே சிவகங்கைச்சிமைக்கு அனுப்பி வைத்தார் முத்து இரகுநாத சேதுபதி! As
சசிவர்ணத் தேவருக்குப் பிறகு அவரின் மகன் முத்து வடுகநாதர் ஆட்சிக்கு வந்தார். ராணி அகிலாண்டேஸ்வரிக்கு மகப்பேறு இல்லாமல் இருந்ததால் சசிவர்ணத் தேவர் வேறு ஒரு மணம் செய்து கொண்டதாக அண்மையக் காலத்தில் கிடைத்த வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
280

சைபீர்முகம்மது O
சிவகங்கைச் சிமை வாரிசு வழக்கு மதுரையிலும், பின் லண்டன் பிரிவி கவுன்சிலிலும் நடந்தது. மதுரை நீதிமன்ற 053/ 1833 வழக்கில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்கு மூலத்தின் வழியாகவே சசிவர்ணத் தேவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட உண்மை தெரியவந்துள்ளது. “சசிவர்ணத் தேவருக்குப் பின் அவர் மனைவி பூதக்கா நாச்சியார் ஆட்சிக்கு வந்தார்’ என்று அந்த வாக்கு மூலம் கூறுகிறது. அப்பொழுது பூதக்கா நாச்சியார் கர்ப்பவதியாக இருந்தாரென்றும் வாக்கு மூலம் கூறுகிறது. முத்து வடுகநாதர், பிறந்து மேஜர் ஆகும் வரையில் பூதக்கா நாச்சியார் அவர் சார்பில் ஆட்சிப் பொறுப்பை நடத்தி வந்துள்ளார்.
சசிவர்ணத் தேவர் எப்பொழுது மரணமடைந்தார் என்று சரியான விபரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவர் 1742 ஆம் ஆண்டு வாக்கில் இறந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அவர் காலத்து செப்பேடுகளும் 1742 வரையில் தான் கிடைத்துள்ளன. 1742 ஆம் ஆண்டிலேயே முத்து வடுக நாதரின் பெயரில் ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. அதில் திருப்புவனம் வெங்கடேசுவர அவதானிக்கு அம்பலத்தடி கிராமத்தைத் தானமாக வழங்கியதாகக் கூறுகிறது. எனவே மைனராக இருந்த முத்து வடுகநாதர் பெயரில் பூதக்கா நாச்சியார் ஆட்சி செய்துள்ளார் என்பதன்மூலம், 1742 முற்பகுதியில் சசிவர்ணத் தேவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
சிவகங்கைச் சிமை என்ற ஒரு தன்னாட்சி நாட்டை உருவாக்கிய பெருமை சசிவர்ணத் தேவரையே சாரும். முதலில் நாலு கோட்டை பாளையமாக இருந்த தனது சிதனச் சொத்தை பவானி சங்கரனிடம் இழந்ததைச் சொல்லியுள்ளேன். அதன் பிறகு காத்தையாத் தேவர் மற்றும் மக்களின் ஆதரவோடு போரில் சிவகங்கையை சசிவர்ணத் தேவர் வென்றார். இதில் தஞ்சை மன்னரின் படை பலமும் உதவியது. இதன் காரணமாகவே சிவகங்கை ஐந்து பாகமாகப் பிரிக்கப்பட்டு அதில் 2 பாகம் சசிவர்ணத் தேவருக்கும் மீதி 3 பாகம் காத்தத் தேவருக்கும் வழங்கப்பட்டது. பாம்பன் பகுதிக்கு மேல் இருந்த பாகத்தை தஞ்சை மன்னருக்கு படை கொடுத்து உதவியதால் வழங்கினார்கள்.
281

Page 143
O மண்ணும் மனிதர்களும்
முத்து ரகுநாத சேதுபதியின் மராட்டிய மனைவிக்குப்பிறந்த பவானி சங்கரனின் ஆட்சி நீடித்திருக்குமானால் சேது சிமை முழுதும் மராட்டிய மொழியே ஆட்சி மொழியாக ஆகிவிட் டிருக்கும். சிதனமாகப் பெற்ற நாலு கோட்டைப் பாளையத்தையும் பவானி சங்கரன் காலத்தில் பிடுங்கிக் கொண்டார்கள். இந்த நிலையில் காத்தத் தேவரே ஆட்சிக்கு வர வேண்டிய சரியான வாரிசாக இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் தஞ்சைக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில் தனது வீரத்தாலும் போர்த் திறத்தாலும் மீண்டும் சேது நாட்டை வென்றவர் சசிவர்ணத் தேவர். அதோடு உரிமை இழந்து நின்ற சேதுபதிகள் பரம்பரையைச் சேர்ந்த காத்தத் தேவருக்கு மீண்டும் ஆட்சி செய்ய நாடு பெற்றுக் கொடுத்தவர் சசிவர்ணத் தேவர். அந்த வகையில் இவரின் மேல் சிதனச் சொத்து பெற்று ஆட்சி செய்தவர் என்ற பழி விழுவதற்கு வகையே இல்லை. தனது “சாதனை” மூலமே மீண்டும் சேது நாட்டை உருவாக்கினார். அதிலும் சிவகங்கையை ‘பாளையம்' என்ற நிலையிலிருந்து மீட்டு தன்னாட்சி பெற்ற தன்ரி நாடாக உருவாக்கினார்.1111730ல் சுதந்திர சிவகங்கையின் மன்னராக அவர் முடிதுட்டப் பெற்றார். இவருக்கு மற்றொரு பெயரும் சில ஆவணங்களில் காணப்படுகிறது. சிவராமபெரிய உடையத் தேவர் என்ற பெயரே அது!
இவர் ஆட்சிக்கு வந்ததும் நாலு கோட்டையில் இருந்த நிர்வாகத்தை சிவகங்கைக்கு மாற்றினார். அது தலை நகரமாக உருவெடுத்ததுடன் சிறு சிறு ஊர்களாக இருந்தவை பெரிய அளவில் இவர் கள்லத்திலே தலையெடுக்க ஆரம்பித்தன. ஊர் நடுவே பெரிய குளம் வெட்டப்பட்டு அந்த மண் குவிக்கப்பட்ட இடத்தில் கோட்டை 18 அடி மதிற் சுவருடன் கட்டப்பட்டது. இது கற்கோட்டைய்ல்ல. மண்கோட்டைதான். கருப்புக்கட்டிச் சாறும் வரகு மாறும் கலந்து கட்டப்பட்ட கோட்டை அது. அக்காலத்தில் துப்பாக்கிக் குண்டுகள் கோட்டையை நோக்கிப்பாய்வது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சிதான். இந்த வகை கோட்டைகளில் துப்பாக்கிக் குண்டு உள்ளே பாய்ந்து சொருகிக் கொள்ளும், வெடித்துச் சிதறாது அக்காலத்தவர்களும் கொஞ்சம் முன் யோசனையுடன் தான் செயல் பட்டுள்ளார்கள்.
282

சைபீர்முகம்மது O
இன்று சிவகங்கைச் சிமை தனிமாவட்டமாக்கப் பெற்று 'சிவகெங்கை மாவட்டத் தலைநகரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 15.3.1983ல் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த வேளையில் பசும்பொன் மாவட்டத்தின் தலைநகராக சிவ கங்கையை மாற்றினார். 1730ல் சசி வர்ணத்தேவர் சிவகங்கையைத் தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தார்.
கவியரசு கண்ணதாசன் சிவகங்கைச்சிமை பற்றி ஒரு பாடல் இயற்றியுள்ளார்.
‘தென்பாண்டிநாட்டினிலே சேதுபதி பூமியிலே பொன் பூத்த சிமை இது! புகழ்பாடும் சிமை இது! தெக்கூரும் ஒக்கூரும் சிறுவயலும் பூங்குடியும் திருப்பத்தூர் நரிக்குடியும் திருமயமும் முக்குளமும் நாலு கோட்டை நாடும் நாட்டரசன் கோட்டையதும் சேர்ந்து பெருமை தரும் சிவகெங்கைச் சிமை இது!’
சசி வர்ணத் தேவருக்குப் பின் அவர் மகன் முத்து வடுகநாதர் ஆட்சிக்கு வந்தார்.
இவர் காலத்தில்தான் ஏகப்பட்ட போர்களும், வெள்ளை யருக்கு எதிரான சுதந்திரக் குரல் ஒலித்தலும் ஆரம்பித்தது.
சிவகங்சைச் சிமையின் வளமும் மண்ணும் மருதநாயகம், ஆர்க்காட்டு நவாபு, ஆங்கிலேயர் என்று வரிசையாக எதிரிகளை வரவழைத்தன!
திமிழ் நாட்டின், குறிப்பாக தென்பாண்டிச்சிமையில், முத்துவடுக நாதர், மருதிருவர், கமாண்டன் யூசுப்கான் என்ற மருதநாயகம், புலித்தேவன். கட்டபொம்மன் போன்றவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவர்கள் அல்லது ஆங்கிலேயருக்குப் பின்புலமாக இருந்தவர்கள் இந்த ஆற்காட்டு நவாபுகள் தான். சிவகங்கைச் சிமையின் எஞ்சிய வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன் இந்த நவாபுகள் பற்றி சற்றே விரிவாக அறிந்து கொண்டால்
283

Page 144
O மண்ணும் மனிதர்களும்
மேற்கொண்டு மற்றவர்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக அமையும்.
ஆற்காட்டு நவாபு என்பவர் ஒருவரே என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் யார், எங்கிருந்து வந்தவர்கள் என்பதையும், தமிழகத்தையே மொத்த விலைக்கு விற்கத்துணிந்தவர்கள் என்பதையும் முதலில் தெரிந்து GossTosirGBeunruò.
17 ஆம் நூற்றாண்டிலும் 18 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள கால கட்டத்திலும் இந்த நவாபுகள் தங்கள் பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பிரெஞ்சுக்காரர்கள், கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களோடு மாறி மாறி உறவுகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ஆங்கிலேயர்கள் நிலைப்பதற்கு இவர்களே காரணம் எனலாம். வரலாற்றின் மிக மோசமான பகுதி இவர்களுடையது.
மொகலாய சக்கரவர்த்தியும் அக்பரின் பேரனுமான ஒளரங்கசிப் (1656 - 1707) தனது ஆட்சியின் இறுதிப் பகுதியில் நாடு பிடிக்கும் ஆசையில் தனது பார்வையைத் தென்னாட்டுப் பக்கம் திருப்பினார். தனது தளபதி சுல்பிகர்கானை தென்னாடு நோக்கி 1685-88 ஆண்டுகளில் அனுப்பி வைத்தார். சுல்பிகர்கான் பீஜப்பூரையும், கோல் கொண்டாவையும் வெற்றி கொண்டு திரும்பினார். இதைக் கண்டு மனம் மகிழ்ந்த ஒளரங்கசிப் அவரை அந்த இரண்டு நாடுகளுக்கும் ஆளுநகராக நியமித்தார். அதன் பிறகு தனது பார்வையை மதுரை நோக்கிச் செலுத்தினார் சுல்பிகர்கான். அப்பொழுது மதுரையை ராணிமங்கம்மாள் ஆட்சி செய்து கொண்டிருந்தார். முத்தமிழ் முழங்கிய மதுரையில், தமிழ்ச் சங்கங்கள் தமிழ் வளர்த்த மதுரையில் அப்பொழுது ஆட்சி மொழியாக தெலுங்கு மொழி இருந்தது. பெரும்படையுடன் வந்த சுல்பிகர்கானை பகைக்காமல் பெரும் பணம் கொடுத்து சாந்தப்படுத்தி அனுப்பினார் ராணி மங்கம்மா! இதன் பிறகே 1694ல் சுல்பிகர்கானை கர்நாடக நவாபாக ஒளரங்கசிப் நியமித்தார். 1694 முதல் 1705 வரையில் இவர் கர்நாடக நவாபாக இருந்து வந்துள்ளார். கர்நாடகம் என்று அப்பொழுது அழைக்கப் பட்ட பிரதேசம் ஆந்திராவின் நெல்லூர் பகுதிகளும் ஏறக்குறைய
284

சைபீர்முகம்மது O
தமிழகம் முழுதும் அடங்கியதாக இருந்தது. கிருஷ்ணா நதி முதல் சோழ மண்டலம் முழுதும் இதில் அடக்கமாக இருந்தது.
இந்தப் பகுதியில் நிலையானதும் வலுவானதுமான ஒரு ஆட்சியை அமைக்க ஒளரங்கசிப் நினைத்த காரணத்தால் தக்காணத்திற்கு நிஜாமை நியமித்தார். ‘நிஜாம் உல் முல்கு' என்பதின் சுருக்கமே நிஜாம் என்பதாகும். நிஜாம் என்பது அந்தப் பதவியின் பெயர். தனது அதிகாரத்தின் கீழ் பணிந்து செயலாற்றவே கர்நாடக நவாபுவை நியமித்தார் தக்காணத்து நிஜாம். முதல் நிஜாமாக பதவியேற்றவரின் பெயர் சின் கில்ஜ்கான். பெயருக்குத் தான் நவாப் நிஜாமின் கிழ் பணியாற்றுவதாக இருந்ததே ஒழிய மற்றபடி சுல்பிகர் கான் கர்நாடகத்தைத் தானே ஆட்சி செய்து வந்தாரென்றுதான் சொல்ல வேண்டும். 1694 தொடங்கி 1874 வரையில் இந்த நவாபுகளின் கொட்டம் கொடிகட்டிப் பறந்தது.
சுல்பிகர்கான் தொடங்கிஏறக்குறைய கடைசி அஜிம் ஜாபகதூர் (1867-74) வரையில் இருபது நவாபுகள் ஆட்சி செய்துள்ளார்கள். (Political History of the Nawabs. By V. Lalitha, Diamond Jubilee Souvenir of the Tamil Nadu Archieves 1970 Page 144-145).
1707ல் ஒளரங்கசிப் மறைந்ததும் ஆங்காங்கே இருந்த ஆளுநர் கள் தன்னாட்சி பெற்றவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டு ‘சுதந்திரமாக'ஆளத் தொடங்கினார்கள். இந்த நேரத்தில் தானே ஆட்சி உரிமை பெற்ற நவாபு என்று சதாத்உல்லாக்கான் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவருக்குப் பின் நவாபாக வந்தவர் இவரின் மருமகன் தோஸ்த் அலிகான். இவரின் ஆட்சி வந்த பிறகே தென்னாட்டிற்குப் பெரும் தலைவலி உண்டாகியது. தனது மகன் சப்தர் அலி - மருமகன் சந்தா சாகிப் ஆகிய இருவர் தலைமையில் 12,000 படை வீரர்களை தெற்கு நோக்கி அனுப்பி வைத்தார்.
இந்த சந்தா சாகிப்பின் காலடிகள் பட்ட இடமெல்லாம் பிரச்சினைகள் உருவாகின எனலாம். தமிழ் நாட்டின் பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் சந்தா சாகிப் பற்றி சில பிரச்சினைக்குரிய பகுதிகளை ஒதுக்கியே எழுதி வைத்துள்ளனர். 17 ஆம் நூற்றாண் டின் ஆரம்ப கால கட்டத்தில் சந்தா சாகிப்பின் தென்னாட்டு
285

Page 145
O மண்ணும் மனிதர்களும்
வருகை ஒரு புறம் ஜீரணிக்க முடியாத சில பிரச்சினைகளை உள்ளடக்கியது என்றாலும், மதுரையைப் பொறுத்த மட்டில் நாயக்கர்கள் ஆட்சிக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தவர் இந்த சந்தா சாகிப் தான் என்று கூறலாம்.
எந்த நாயக்கர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாய்ப் பிரித்தார்களோ அவர்களின் ஆட்சி கடைசியில் பலவீனப்பட்டு ராணி மீனாட்சியின் ஆட்சியின் பொழுது முற்றிலுமாக அழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
பாளையங்கள் எப்பொழுது உருவாகின? 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய சமூக வாழ்க்கையில் நிலப் பிரபுத்துவ முறை அமலில் இருந்து வந்தது. தங்களின் வசதிக்கா கவும் நிர்வாக முறைகளுக்காகவும் ஐரோப்பாவில் பாளையங்களை அவர்கள் உருவாக்கி இருந்தார்கள். பாளையத் தலைவர் அல்லது ஆட்சியாளர் மைய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்த வேண்டும். போர்க் காலங்களில் மைய அரசுக்கு உதவ தனிப்படை வைத்திருக்க வேண்டும்.
இப்படித்தான் அடிமைச் சங்கிலி கொண்டு பாளையங்களை sgelyérítás6it és 19 606) 155C5555ítás "Short History of Pre Capitalist Society" என்ற தங்களின் நூலில் ரஷ்ய அறிஞர்கள் கூறி உள்ளார்கள். இதுவே பிற்காலத்தில் கிழ்த்திசை நாடுகளில் பரவியது. இந்தப் பாளையங்கள் பிரிக்கப்பட்டதால் தமிழர்கள் தங்களின் பேரரசுகளை இழந்தார்கள்.
இப்பாளையங்கள் உருவாவதற்கு முன்பே உட்பகையால் பாண்டிய நாடு சிதறுண்டது. சுந்தர பாண்டியன் காலத்தில் முதன் முதலாக மாலிக்கபூர் காலடிபட்ட பொழுதே தமிழ்நாட்டின் தமிழர்களின் ஆட்சி முறை மாறி விட்டது எனலாம்.
விஜயநகரப் பேரரசின் படையெடுப்பிற்குப் பின் அதாவது 1336க்குப் பின் தமிழரின் சரிவு தொடங்கியது. தெலுங்கர்களின் ஆட்சியில் தமிழ் மன்னர்கள் குறு நில மன்னர்களாக ஆக்கப்பட்டார்கள். மிகப் பெரிய ஆற்றல் பெற்ற விஜயநகரப் பேரரசின் முன் கன்னடர்களும் தமிழர்களும் மண்டியிட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதைக்கப்போது சுதந்திர
286

சைபீர்முகம்மது O
உணர்வு கொண்டு எழுந்த சில குறுநில தமிழ் மன்னர்களுக்கு மற்றவர்கள் எந்த வகையிலும் உதவாமல் இருந்தனர். இரண்டாம் விருப்பாட்சன் என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில் (1465-1485) கிடைத்த ஒரு செப்பேட்டில் 2 ஆம் அரியரனின் (1377 - 1404) மகனான இளவரசன் தொண்டை மண்டலம், சோழ மண்டலம் முழுதும் தாக்கி பெருஞ் செல்வத்தை கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறுகிறது. இந்த இளவரசர் கர்நாடகம், தொண்டை, பாண்டிய, சோழ மண்டலங்களை ஆட்சி புரியும் நாயக்கராய் இருந்தார். கங்கை வரை படையெடுத்து வென்று தங்கள் பராக்கிரமத்தைக் காட்டியவர்கள், கிழை தேசங்களில் சாவகம் வரையிலும் வந்து தங்களின் நாகரீகத்தைப் பரப்பியவர்கள். சேர, சோழ, பாண்டிய நாடு என்று மூன்று பெரிய தன்னுரிமை பெற்ற நாடுகளைக் கொண்டிருந்தவர்கள் என்று பெருமை பாராட்டும் இந்தத் தமிழர்களுக்கு இன்று பெயர் சொல்வதற்குக்கூட ஒரு தனி நாடு கிடையாது. இன்று ஐ.நா.சபையில் தமிழர்கள் நாடு என்று: சொல்லிக் கொள்வதற்கு ஒரு கையகல இடம் இல்லை! நமக்கென்று ஐ.நா.சபையில் ஒரு கொடி கூடப் பறக்கவில்லை. தமிழன், தலை நிமிர்வானா? அவனுக்கென்று இந்த நூற்றாண்டு முடிவதற்குள் ஒரு நாடு உருவாகி விடுமா? உலக நாடுகளில் இன்று மொழியாலும் இனத்தாலும் தமிழர்களாக இருப்பவர்கள் ஒரு நிமிஷம் நாம் இழந்து விட்டதை பெற்றே ஆக வேண்டும் என்று மனத்தளவில் நினைத்தாலே நமக்கென்று ஒரு பூமி கிடைத்து விடும்! மதத்தால் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்து வராகவோ இருந்தாலும் இனத்தாலும் மொழியாலும் நாம் தமிழர்கள் என்று நினைத்தாலே போதும்
வரலாற்றுத் தொடரின் இந்தப் பகுதியை எனது பேனாவால் நான் எழுதவில்லை. எனது இரத்தத்தால் எழுதுகிறேன். வரலாற்றில் நாம் பல தவறுகளைச் செய்திருக்கிறோம். அது நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டாமா? பிற்கால ஆங்கிலேயர் ஆட்சியில் ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை அடிமைகளாக ஏற்றுமதி செய்தார்கள். தென்னாட்டிலிருந்து தமிழர்களை கூலிகளாக ஏற்றுமதி செய்தார்கள். கூலிகளுக்கு சம்பளம் கிடைத்தது. அடிமைகளுக்கு சோறு மட்டுமே கிடைத்தது. ஆனால்
287

Page 146
0 மண்ணும் மனிதர்களும்
இன்று 'அடிமை' என்பவனுக்கு இருந்த சுதந்திர உணர்ச்சி, இன உணர்ச்சி அவனுக்கு ‘தென்னாப்பிரிக்கா’ என்ற பெரிய சுதந்திர நாட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளது. கறுப்பன் என்று இன ஒதுக்கலின் மூலம் மனிதகுலத்தில் மிகக் கேவலமாகக் கருதப்பட்ட மனிதன் இன்று 'அடிமை வாழ்விலிருந்து மீண்டு விட்டான். ‘கூலி’ என்று சொல்லப்பட்ட தமிழன் மீள வேண்டாமா? நமக்கு இன உணர்வு இல்லையா? சுயமரியாதை கிடையாதா? நமது இரத்தத்தில் எப்பொழுது தமிழன் என்ற உணர்வு வரும்?
குறுநில மன்னர்களாகப் பிரிக்கப்பட்டோம். பாளையக் காரர்களாக ஒடுக்கப்பட்டோம். பின் ஜமீன்தார்களாக ஆனோம்! பிறகு சாதியால் துண்டாடப்பட்டோம்! மதம் என்ற பெரிய மதிற்கவர்களை எழுப்பிக் கொண்டோம்! அனைத்தையும் உடைத்தெறியுங்கள். தமிழர் என்ற மிகப்பெரிய இன அடிப்படை யில் ஒன்றிணைவோம்!
நாம் மீண்டும் நாயக்கர் ஆட்சிக்கு வருவோம். மதுரையை திருமலை நாயக்கன் ஆண்டு வந்தார். 1645ல் மைதுரை ஆண்டு வந்த நரகரசன் என்ற மன்னன் விஜயநகர மன்னருக்கு எதிராக செயல்பட்டு வேலூரைக் கைப்பற்றினார். நரகரசன் கோல் கொண்டா முஸ்லீம் சுல்தானுடன் சேர்ந்துகொண்டு தென்னாட் டில் காலடி பதிக்க நினைத்தார். மதுரை திருமலை நாயக்கர் முஸ்லீம் சுல்தானுக்குப் பெரும் பணம் கொடுத்து போரை தடுத்துக் கொண்டார். சுல்தான் சென்றதும் நரகரசன் மதுரையைத் தாக்கினார். ج
நரகரசனின் மைதுர்ப் படை கொங்கு நாட்டுச் சத்தியமங் கலத்தைக் கைப்பற்றி வழியில் இருந்த ஊர்களையெல்லாம் கொள்ளையிட்டது. வீடுகளை எரித்துச் சாம்பலாக்கியது. கையில் கிடைத்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என்று பாராது பொது மக்களின் மூக்கையெல்லாம் அறுத்தது. மதுரையிலும் புகுந்து எதிர்ப்பட்டவர்களின் மூக்கையெல்லாம் அறுத்தது.
அந்த நேரத்தில் சுமார் எழுபத்தைந்து வயது கிழவராக இருந்த திருமலை நாயக்கர் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு 200 மனைவிகள். தன் முதல் மனைவியின் வழித்
288

சைபீர்முகம்மது O
தோன்றல் இரகுநாத சேதுபதிக்கு அதாவது கிழவன் சேதுபதிக்குக் கடிதம் எழுதி உதவி கோரினார். கிழவன் சேதுபதியும் 25,000 படை மறவர்களுடன் மதுரையை வந்தடைந்தார்.
திருமலை நாயக்கரின் படையில் 35,000 படை வீரர்கள் இருந்தனர். அனைவரும் ஒன்று திரண்டு மைதுர் படையை விரட்டியடித்தனர். பின்வாங்கிய மைதுர் படை தனது புதிய 12,000 படை வீரர்கள் வந்ததும் மீண்டும் தாக்கத் துவங்கியது. பிடிபட்ட மதுரை வீரர்களின் மூக்கையும் மைதுர் படை வெட்டி எடுத்தது. மைதுர் மன்னன் நரகரசனுக்கு ஏனோ எதிரியின் மூக்கை அறுப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!
இத்ற்கு மேல் பொறுப்பதில்லை என்று திருமலை நாயக்கன் தனது தம்பி குமாரமுத்து நாயக்கனை பெரும் படையுடன் மைதுருக்கு அனுப்பி வைத்தார். குமாரமுத்து மைதுரை அடைந்ததும் எதிர்ப்பட்டவர்களின் மூக்கையெல்லாம் அறுத்துத் தள்ளினார்! இப்படி மாறி மாறி மூக்கறுத்ததால் வரலாற்றில் இதற்கு 'மூக்கறுப்புப் போர்’ என்று பெயர் வழங்கலாயிற்று!
17ஆம் நூற்றாண்டில் இப்படி மாறி மாறி போர் மூண்டு மக்கள் பஞ்சத்தாலும் நோயாலும் வாடத் தொடங்கிய பொழுது ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன?” என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். மக்களின் ஒருமித்த ஆதரவு எந்த அரசுக்கும் கிடைக்கவில்லை. பதினான்காம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் இலக்கியத்தில் 400 ஆண்டுகள் மிகப் பெரிய இருண்ட கண்டமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். நாயக்கர்களின் ஆதரவால் சில பல நூல்கள் தோன்றின.
குமரகுருபரர், பிள்ளைப் பெருமாளையங்கார் போன்றவர் களும், கிழவன் சேதுபதி காலத்தில் சுப்பிரதீபக் கவிராயர், கடிகை முத்துப் புலவர், உமறுப் புலவர், தாயுமானவர். ராசப்பக் கவிராயர் போன்றவர்களும் இருந்து கவிபாடியுள்ளார்கள்.
ஆற்காட்டு நவாபு தென்னகம் முழுவதையும் தனது ஆட்சியின் கீழ்க்கொண்டு வருவதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் மேற் கொண்டிருந்தார்.
289

Page 147
O மண்ணும் மனிதர்களும்
சந்தா சாகிபு 1736ல் திருச்சியின் மேல் படையெடுத்தார். திருச்சியை பங்காரு திருமலை என்பவர் ஆட்சி செய்து கொண்டி ருந்தார். இந்த ஆட்சியையும் ஏற்கனவே 1734ல் பணம் வாங்கிக் கொண்டு ஆற்காட்டு நவாபு ஏற்படுத்திக் கொடுத்ததுதான்.
மூக்கறுப்புப் போர் புரிந்த குமாரமுத்து நாயக்கரின் வழி வந்தவர் பங்காரு திருமலை. பங்காருவின் மகன் விஜயகுமாரன். அப்பொழுது ஆட்சியில் இருந்த ராணி மீனாட்சி மகப்பேறு இல்லாத காரணத்தால் இந்த விஜயகுமாரனை சுவீகாரம் செய்து கொண்டார். மீனாட்சியின் ஆட்சியில் நாடு மிகுந்த குழப்பத்தில் இருந்தது. சுவீகாரம் எடுத்துக் கொள்ளப்பட்ட தனது மகன் விஜய் குமாரன் சார்பில் நாட்டை ஆட்சி செய்ய நடந்த சதி வேலைகளில் பங்காரு ஈடுபட்டார். இந்தக் குழப்பமான தழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சந்தா சாகிப்படையுடன் திருச்சி நோக்கி வந்தார். மதுரையை திருச்சி கோட்டையிலிருந்தே ஆட்சி செய்து வந்தார்கள் நாயக்கர்கள். ; :
நவாப்பின் மகனான சஃப்தர் அலியிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். முப்பது லட்சம் ரூபாய் தருவதாகவும் தன்னை மன்னராகப் பிரகடனப்படுத்தி விட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். திருச்சியைத் தாக்காமலேயே முப்பது இலட்சம் ரூபாய்க்குப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு தனது மைத்துனர் சந்தா சாகிப்பை திருச்சியிலே நிறுத்தி விட்டுச் சென்றார். அரசி மீனாட்சி சந்தா சாகிப்பிடம் புதிய ஒப்பந்தம் செய்தார். தன்னைப் பதவியை விட்டு இறக்காமல் இருந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறினார். இங்கே தான் சந்தா சாகிப் பெரிய திருவிளை யாடல் புரிந்தார். மதுரையையும் திருநெல்வேலியையும் பங்காரு ஆள்வதற்குப் பிரித்துக் கொடுத்து முப்பது லட்சத்தைப் பெற்றுக் கொண்டார். திருச்சியை மீனாட்சி ஆள்வதற்குப் பிரித்ததில் ஒரு கோடி கிடைத்தது! ஆக ஒன்றுமே இல்லாமல் வெறும் படை பலத்துடன் சென்று ஆட்சியை இரண்டு படுத்தி பணத்தையும் பெற்றுச் சென்றார் சந்தா சாகிப்.
இதன் பிறகு மற்றொரு பெரிய நாடகத்தை 1736ல் அவர் நடத்தியதுதான் இராஜ தந்திரத்தின் உச்சம்!
29 O

சைபீர்முகம்மது o
நவாப் சந்தா சாகிப்
தமிழ் நாட்டின் பதினெட்டாம் நூற்றாண்டில் நவாபுகள் பல விளைவுகளை உண்டு பண்ணினார்கள். தங்களின் படைபலம் கொண்டும் தமிழ்நாட்டின் கூலிப்படைகளைச் சேர்த்துக் கொண்டும் இவர்கள் ப்ோட்டி ஆட்டத்தால் அரசியல் சதுரங்கத்தில் காய்கள் மாறிமாறி நகர்த்தப்பட்டன.
இர்ாணி மீனாட்சியிடம் ஒரு கோடி பெற்றுச் சென்ற சந்தா: சாகிப் மீண்டும் திருச்சிக்கு பீங்கரருவை அரசன்ாக அறிவித்திார். ஆனால் ம்துரையில் பங்க்ாருவின் மகனான விஜய்குாேரை அரசனாக முடிசூட்டிவிட்டார்கள். இதை அறிந்து சந்த்ா சாகிப் மிக ஆத்திரமுற்றார்:
தனது அனுமதி இல்லாமல் விஜயகுமார்முடிதுட்டப்பட்டதால் பங்காரு அதாவது விஜயகுமாரின் தந்தையுடன் வத்தலகுண்டில் போரில் ஈடுபட்டார். சந்தா சாகிப்பின் படையுடன் தாக்குப் பிடிக்க முடியாத பங்காருவும் விஜயகுமாரும் சிவகங்கையில் அடைக்கல மடைந்தனர். மதுரையை வெற்றி கொண்ட சந்தா சாகிப் அதனை நியாயப்படி மீனாட்சியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் மதுரை மற்றும் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சியுள்ள பகுதிகள் அனைத்திற்கும் தானே அரசன் என்று அறிவித்து விட்டார்.
இந்த இடத்தில் சரித்திரம் மூன்று பகுதியாக சிக்கலோடு விரிகிறது. எதற்குப் பிரச்னை என்று முதல் பகுதியை மூடி மறைத்துவிட்டு இரண்டு பகுதிகளையும் மாற்றி மாற்றி எழுதி வைத்துள்ளார்கள் இதனைக் கிண்டிக் கிளறி எடுப்பதற்கே எனக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. நடந்த உண்மைகளை, அதுவும் சரித்திர உண்மைகளை, நமது சொந்த விருப்பு வெறுப்பு களுக்கு உள்ளடக்கி எழுதுவதை விட அதைப்பற்றிப் பேசாமல் இருந்துவிடலாம். ஆனால் என்னால் அப்படி உண்மைகளைப் புறந்தள்ளி விட்டுச் செல்ல முடியவில்லை.
மதுரையை வென்று அதை மீனாட்சியிடம் ஒப்படைப்பதாகக் கூறித்தான் சந்தா சாகிப் திருச்சிக் கோட்டையில் புகுந்தார். மீனாட்சியிடம் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். மீனாட்சி ஒரு இந்துவாக இருந்தாலும் முஸ்லீம்கள் புனிதமாகப் போற்றும் 291

Page 148
O மண்ணும் மனிதர்களும் ... ' திருக்குர்ானின் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். முஸ்லீம்கள் எதன் மேல் சத்தியம் செய்தாலும் தவறிநடக்க வழி உண்டு.ஆனால் திருக்குர்ர்ானின் மேல் செய்யும் சத்தியத்தை நிச்சயம் உயிருள்ள்வரை கடைப்பிடிப்பார்கள். இந்த நம்பிக்கையில்தான் சந்தா சாகிப்பிடம் திருக்குர்ரானின் மேல் சத்தியம் வாங்கிக் கொண்டு தனது திருச்சிக் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டார். ஆனால் சந்தா சாகிப் என்ற நரித்தந்திரம் கொண்டவர் ச்ெய்த காரியம் என்ன?
செங்கல்லில் சிவப்புத் துணி சுற்றி அதைத் திருக்குர்ரான் என்று நம்பவைத்து ராணி மீனாட்சியிடம் சத்தியம் செய்து கொடுத்து கோட்டையினுள் நுழைந்தார். மதுரையையும் மீட்டுத் தருவதாக வாக்குறுதியளித்தார். .
ஆனால் நடந்ததோ வேறு! சந்தரசாகிப் தன்னை ஏமாற்றியதை அறிந்து மீன்ாட்சி நஞ்சுகுடித்து மாண்டதாக ஒரு வரலாறும், அவர் நஞ்சு கொடுத்து கொல்லப்பட்ட்தாக மற்றொரு வரலாறும் கூறுகிறது. எது எப்படி இருந்தாலும் மீனர்ட்சினின் இறப்பிற்கு சந்தா சாகிப்பே முழு முதல் காரணம் என்று சரித்திரம்
சொல்கிறது! . . "
சிவகங்கை அடைந்த பங்காருவும் பின் உண்வில் நஞ்சு வைத்துக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்ப்ட்டதன் பின்னணி யிலும் சந்தர் சாகிப்பின் பின்புலம் இருந்துள்ளது (Dr.KRajayyan. History of Madurai). ". . . . .
அரச குடும்பத்தில் சதிகளும் சண்டைகளும் வாரிசு உரிமை களும் ஒரு புறம் நடைபெற்றது என்றால், மற்றொரு புறத்தில் மிகச்சுலபமாக நஞ்சு வைத்துக் கொல்லும் சதி, காலம் காலமாக நடந்தே வந்துள்ளது. பதவிகளை அடைவதற்கு மிகச் சுலபமான படிக்கட்டாக நஞ்சைப் பயன்படுத்தும் முறை ஒவ்வொரு அரச குடும்பத்திலும் நடந்து வந்துள்ளது. இதனாலேயே அரசர்கள் சமைத்த உணவை தான் சாப்பிடுவதற்கு முன் முதலில் மற்றவர் கள் சாப்பிட்டுவதற்குக் கொடுத்து பரீட்சித்துப் பார்த்தார்கள்.
தாயக்கர்களின் அரசவம்சத்தின் இரு தூண்களும் சாய்ந்த பிறகு 1732 முதல் 1736 வரை நவாப்புகளின் செல்வ்ம் செழித்து
292

சைபீர்முகம்மது O 6 ர்ந்தது. கண்டதையெல்லாம் இவர்கள் சுருட்டிக் கொண்டார்
இந்த மண்ணின் மேல் மனிதனுக்கு இருக்கும் ஆசை இருக்கிறதே அது சொந்தச் சகோதரனையே பகைவனாக்கிவிடும்! மதுரை நாயக்கர் ஆட்சியை ஒரு வழி பண்ணிய சந்தா சாகிப் தஞ்சை மேல் படையெடுத்தார். ஆனால் அவரின் மைத்துனர் சப்தர் அலி தஞ்சையை தனக்கென எடுத்துக் கொள்ள விரும்பினார். மற்றவர்களின் இழப்பில் இலாபம் சம்பாதித்த நவாப்புகள் இப்பொழுது தங்களுக்குள்ளேயே பதவிப்போராட்டம் நடத்தினார்கள். 1732ல் தஞ்சையைதக்கோசி என்ற குறுநில மன்னர் ஆண்டுவந்தார். சந்தா சாகிப்பின் பெரும் படையைக் கண்டு . அதிர்ந்து போன அவர் சர்கிப்பிற்கு பெருந்தொகை கொடுத்து , சமாதானம்செய்து கொண்டார். ராணி மீனாட்சியின் மறைவுக்குப் பின் தஞ்சை மராட்டியர்கள் வசம்சென்று விட்டது. இந்த தக்கோசி மராட்டிய மன்னர் ஆவார். . . . . . . . . . வீரமாமுனிவர் இக்காலத்தில் ஏசு சபைக்கு சில கடிதங்கள் வரைந்துள்ளார். அக்கடிதங்களில் இப்போர்பற்றியும் இதனால் . மக்கள் பட்ட் அவதிகள் குறித்தும் அவரின் கடிதம் குறிப்பிடுகிறது. "தஞ்சை மன்னர் பெருந்தொகை கொடுத்தாலும் அது அவருக்கு இழப்பு அல்ல, இந்தக் தொகை கொடுத்த சிறிது காலத்திற்குப் பிறகு மக்களை கச்க்கிப் பிழிந்து அவர் நவாப்புகளுக்குக் கொடுத்த தொகை முழுவதையும் வரியாக வசூலித்து விட்டார். துரதிருஷ்டவசமாக மக்கள் எதிரிகளால் முதலில் கொள்ளை யடிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களின் மன்னரும் அதையே செய்தார்.” மேற்கண்டவாறு வீரமாமுனிவர் தனது கடிதத்தில்எழுதியுள்ளார். மக்களின் நலன் என்பது எக்காலத்திலும் இரண்டாம் பட்சமாகவே இருந்து வந்துள்ளது.ஆட்சியில் அமரும் வரையிலும், மக்களின் பலத்திலும் பின் தங்களது ஆள். அம்பு, அதிகாரம் என்ற பலத்திலுமே எல்லா அரசும் ஆட்சி செய்து வந்துள்ளது.
293

Page 149
O மண்ணும் மனிதர்களும் வீரமா முனிவர் - சந்தா சாகிப் சந்திப்பு
சிந்தா சாகிப் மதுரையை ஆண்ட காலத்தில் வீரமர் முனிவுரை சந்தித்துள்ளார்.1732ல் பாண்டிநாட்டிலும் தஞ்சை மண்ணிலும் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் பணியில் மதுரையில் மிசன் அமைக்கப்பட்டிருந்தது. ஏசு சபையைச் சேர்ந்த வீரமாமுனிவர் மதுரை மிசன் வழியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆற்காட்டு நவாபின் உறவினரான சந்தா சாகிப்பை இக்கால கட்டத்தில் சந்தித்தார். பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட் வீரமா முனிவர் சந்தா சாகிப்பை சந்திப்பதற்கு முன் மூன்று மாத காலத்தில் பாரசீக மொழியைக் கற்றார். முனிவரும் சாகிப்பும் அன்புடன் தழுவி வரவேற்றுக் கொண்டு நட்புடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். வீரமாமுனிவரின் திறன் கண்டு வியந்த சந்தா சாகிப் அவருக்குப் பல பரிசுகள் வழங்கி சிறப்பித் துள்ளார். அதோடு அவருக்கு “இஸ்மத்தி’ என்ற பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தார். இந்த சந்திப்புக்குப் பின் சந்தா சாகிப்‘வீரமாமுனிவரின் நட்பு இறுக்கமாகியது. பல சந்தர்ப்பங்களில் சந்தா சாகிப்பிற்காக அரசியல் தூதுவராகவும் வீரமாமுனிவர் செயல்பட்டுள்ளார். -
நவாப்புகள் மராட்டியர்கள் போர்
பங்காளிகளுக்கிடையில் நடந்த அதிகாரப் போரில் தஞ்சை மன்னர் மிகவும் பாதிக்கப்பட்டார். இவர்களின் தொல்லை பொறுக்க மாட்டாமல் தஞ்சை மன்னர் மராட்டிய மன்னரிடம் புகார் செய்தார். மராட்டிய மன்னர் பெரும்படையுடன் கிளம்பரி வந்த பொழுது சித்தூரில் நவாப்பின் படை தடுத்து நிறுத்தியது. இந்தப் போரில் நவாப்பின் படை படு தோல்வியுற்றது. 1740ல் நடந்த இப்போரில் நவாப் தோஸ்த் அலியும் அவரின் தம்பி அசன் அலியும் கொல்லப்பட்டனர். சந்தா சாகிப் சிறைபிடிக்கப்பட்டார். மராட்டியத்தில் உள்ள சந்தாராவில் இவர் வைக்கப்பட்டார். மராட்டியர்கள் மீண்டும் ஒரு பெரிய தவறை செய்தர்ர்கள். ஒரு
294

சைபீர்முகம்மது O
கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு சப்தர் அலியை ஆற்காட்டு நவாபாக அறிவித்து விட்டுச் சென்று விட்டார்கள்.
தோஸ்த் அலியின் மருமகன்களில் ஒருவனான முர்தாசா வேலூரில் நவாப்பின் படையில் இருந்து வந்தான். மராட்டிய மன்னர் சப்தர் அலியை நவாபாக ஆக்கியதை இவன் விரும்ப வில்லை. சப்தர் அலியைக் கொன்று விட்டான். நவாபுகளின் காலத்தில் அவர்கள் மற்றவர்களை மட்டுமே கொல்லவில்லை, பதவி ஆசைக்காக சொந்த்ச் சகோதரர்களையே கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள்.
முர்தாசாவின் எண்ணம் ஈடேறவில்லை. படையினர் கலகம் செய்து அவனை வீழ்த்திவிட்டார்கள். இதன் பிறகு சப்தர் அலியின் மகன் நவாபாக பதவி ஏற்றார். இவர் சிறுவனாக இருந்த காரணத்தால் வாலாஜா அப்துல்கான் என்பவர் முதலில் காப்பாளராக இருந்து ஆட்சி செய்தார். இதன் பிறகு அன்வருடீன் என்பவர் காப்பாளர் ஆனார். அதிகாரம் அனைத்தும் அன்வருடீன் கையில் தான் என்றாலும் சிறுவன் விபரம் அறியும் காலம் வரும்பொழுது ஆட்சியை ஒப்படைக்க வேண்டுமே என்ற உறுத்தல் அன்வருடீன் மனதில் இருந்து வந்த காரணத்தால் சதாத் உல்லாகான் II என்ற பெயரில் ஆட்சியில் இருந்த சிறுவனை இரக்கமின்றி கொன்றான் அன்வருடீன்!
பதவி நாற்காலியைப் பிடிப்பதற்கு எதை வேண்டுமானாலும் நவாபுகள் செய்யக் காத்திருந்தார்கள். அதில் ஒன்றுதான் சிறுவன் உல்லாகான் கொல்லப்பட்டது. யார் ஆட்சியில் இருந்தால் என்ன? தனக்கு வர வேண்டியது வந்தால் சரி என்ற ரீதியில் கர்நாடக நிஜாம் இதற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
1744ம் ஆண்டு அன்வருடீன் தனது ஆட்சியை திருச்சியில் தொடங்கினார். அப்பொழுது இஸ்லாமிய சமயத்தவரால் பெரிதும் மதிக்கப் பெற்ற சமயத்தலைவர் “வறத்வத் நாதர் வாலி' என்பாராகும். அவர் நினைவாக திருச்சி நகரை ‘நாதர் நகர்’ என்று பெயர் மாற்றம் செய்தார் அன்வருடீன்!
295

Page 150
O மண்ணும் மனிதர்களும்
தனது மகன் முகமது அலியை மதுரைக்கு அனுப்பி அதையும் வெற்றி கொண்டு தனது நவாப்பு ஆட்சியின் கீழ் கொண் வந்தார். .s
இத்தனை இலட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் ஒரு பத்துப் பன்னிரண்டாயிரம் படைகளை வைத்துக்கொண்டு எப்படி இவர்களால் ஆட்சி செய்ய முடிந்தது? கோயில்கள் கொள்ளையிடப்பட்டபொழுது ஏன் இவர்கள் கைகட்டி நின்றார்கள்? கோயில் நிலங்களுக்கு வரிவிதிக்கப்பட்டது. கோயில் நிலங்களில் உழைப்பதற்கு உழவர்கள் இன்றி முறை வைத்து உழுததாக ஒரு கல்வெட்டு கூறுகிறது.
மாலிக்கபூர் படையெடுத்து வந்து காஞ்சி, சிதம்பரம், மதுரை. கோயில்களைக் கொள்ளையிட்ட பொழுது மக்கள் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இதுபற்றி சரித்திரத்தை ஆய்ந்த பொழுது பளிச்சென’ சில குறிப்புகள் கிடைத்தன. を
விஜயநகரப் பேரரசை நிறுவிய முதலாம் புக்கனின் (13441377) மகனான குமார கம்பண உடையாரின் மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் 'மதுரா விஜயம்’ என்ற பெயரில் ஒரு வரலாறு எழுதியுள்ளார்.
விஜயநகரப் படை கம்பனரின் தலைமையில் வந்து தமிழ் நாட்டை சுல்தான்கள் ஆட்சியிலிருந்து மீட்டபொழுது தமிழகத்தின் நிலை எப்படி இருந்தது என்று வரலாறு எழுதிவைத்துள்ளார்." இதுவே இந்திய வரலாற்றில் எழுந்த இரண்டாவது வரலாற்று நூலாகும். முதலாவது வரலாற்று நூல் கல்ஹணர் என்ற காஷ்மீர் புலவர் சமஸ்கிருதத்தில் எழுதிய இராஜதராங்கிணி என்பதாகும். கங்கா தேவி தமிழக வெற்றிக்குப் பின் தான் கண்ட காட்சிகளை இப்படி விவரிக்கிறார். -
“கோயிலின் கதவுகளைக் கறையான்கள் தின்றன. கருவறைக்குள்ளிருந்த வளைவுகளில் விரிசல் கண்டு அங்கு புல் முளைத் திருந்தது. மிருதங்கங்கள் ஒலித்த கோயில்களில் ஒநாய்களின் ஊளையொலி எதிரொலித்தது. மதுரையில் தோட்டங்கள் அனைத்தும் அழிந்து விட்டன. தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. அந்த இடத்தில்
296

சைபீர்முகம்மது o தலைகள் சொருகியிருந்த இரும்பு ஈட்டிகள் வரிசையாக நின்றன!” இவற்றுக்கு என்ன காரணம்?
ufTao qu மன்னர்கள் காலத்திலேயே மக்கள் இடங்கை வலங்கை என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் உட்பிரிவுகள் நிறைய ஏற்பட்டன. கோயிலுக்குள் சில பிரிவினர் வரக்கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே வேற்று மதத்தினர் வந்து கோயில்களை அழித்த பொழுது ஆலயப் பிரவேசம் செய்ய முடியாதவர்கள் கை கட்டி வாய்பொத்தி நின்றார்கள். ‘நமக்கேன் வம்பு’ என்று இவர்கள் இருக்க வேண்டிய கட்டாய தழ்நிலை இருந்த காரணத்தால் எதிரிகள் சுலபமாக கோயில்களைக் கொள்ளையிட்டார்கள். . . . .
மதுரையும் நவாபு ஆட்சியின் கீழ் வந்த நேர்த்தில் ஐதராபாத், நிஜாம், கர்நாடக நவாப், தஞ்சை அரசர் போன்ற பதவிகளுக்குப் போட்டி ஆரம்ப்சித்து விட்டது. அவர்களுக்குள் கெடுபிடிகள்.
கொலைகள் நடக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் ஆற்காடு நவாபு
பதவிக்கு பிரஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பை ஆதரித்தார்கள். ஆங்கிலேயர் முகம்மது அலியை ஆதரித்தார்கள். மராட்டிய சிறையில் இருந்த சந்தாசாகிப்பை எப்படியும் விடுதலை செய்து கொண்டு வர பிரஞ்சுக்காரர்கள் மிகவும் முயற்சித்தார்கள். பாண்டிச்சேரியில் ஆளுநராக இருந்த டியூப்ளே பல வழிகளிலும், முயற்சி செய்தார். ஆனால் எந்த வகையிலும் பணம் கொடுத்து அவரை மீட்க இவர்கள் முயற்சிக்கவில்லை. மராட்டியர் 71/2 இலட்சம் ரூபாய் பணத்தை ஈடாகக் கேட்டார்கள். சிறைபட்ட சந்தா சாகிப்பால் இந்தப்பணத்தைப் புரட்ட முடியவில்லை. அவர்
பிடிபட்ட நேரத்தில் அவர் மகனும் சிறைப் பிடிக்கப்பட்டார்.
ஆனால் அவரின் மனைவியும் இன்னொரு மகனும் புதுச்சேரியில்
பிரஞ்சுக்காரர்கள் வசம் இருந்து வந்தனர். சுமார் ஏழரை
ஆண்டுகள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் சந்தா சாகிப் சிறையில் இருந்தார். உண்மையில் மராட்டியர்கள் இவர் மூலம் பெரும்பணம் திரட்டவே நினைத்தார்கள். ஆனால் பணம் வரும் வழி குறுகி வரவே கடைசியில் 712 லட்சம் ரூபாய்க்கு
297

Page 151
O மண்ணும் மனிதர்களும்
விடுதலை செய்ய சம்மதித்தார்கள். உறவினர்களிடம் உள்ள நகைகளை விற்றும் வட்டிக்கு வாங்கியும் சந்தா சாகிப் விடுதலை செய்யப்பட்டார். வட்டிக்குப் பெரும்பணம் கொடுத்தவர்கள் கடைசி வரையில் அதை சந்தா சாகிப்பிடம்வதுலிக்கமுடியாமல் போனது. சதாராவிலிருந்து 1748 ஜூன் மாதத்தில் விடுதலை பெற்ற சந்தாசாகிப் பெரிய ஆசைகளுடன் தென்னாட்டில் காலடி எடுத்து வைத்தார். -
இவர் வெளியான சமயத்தில் ஐதராபாத் நிஜாம் இறக்கவும் அங்கே பதவிப் போட்டி ஆரம்பித்தது. நிஜாமின்மகன் நசிர் ஜங்கு ஆட்சிக்கு வந்ததை நிஜாமின் பேரர் முசஃபர் ஜங்கு எதிர்த்தார். சந்தா சாகிப்பின் பக்கம் அதிர்ஷ்ட்க் காற்று வீசத் துவங்கியது. மகனை எதிர்த்து பேரனுக்குப்பக்க பலமாக சந்தா சாகிப் நின்றார். பிரஞ்சுக்காரர்களும் இதற்கு பின்புல்மாக இருந்தார்கள். முசஃபர் ஜங்கு, சந்தா சாகிப், பிரஞ்சுப்படையின் தூய்ப்பிளே ஆகிய மூவரின் கூட்டுச் சதியில் மீண்டும் பல நாற்காலிகள் ஆட்டம் காண நேர்ந்தன. . .
முன்பு சிறுவன் நவாபைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்ட அன்வருடீன் ஆற்காடு நவாபு என்ற நிலையில் ஆட்சி செய்து வந்தார். சந்தா சாகிப் தானே ஆற்காட்டை ஆளவேண்டு மென்று விரும்பனார். 14000 குதிரைப்படை 15,000 காலாட் படையுடன் பிரஞ்சுக்காரர்களின் 2300 போர்ப்படையும் உதவிக்கு விர சந்தா சாகிப்பும் முசஃபர் ஜங்கும் ஆற்காட்டை நோக்கிப் போர் தொடுத்தார்கள்.வரலாற்றில் இது "ஆம்பூர்ச் சண்டை என்று கூறப்படுகிறது. ...
இப்போரில் அன்வருடீன் கொல்லப்பட்டார்.அவர் இறக்கும் பொழுது 102 வயது என்று சொல்லப்படுகிறது. ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனிஆவணங்களில் அவரின் வயது 90 என்று குறிக்கப்பட்டுள்ளது. நிஜாம் பதவியில் இருந்த முசாஃபர் ஜங்கு சந்தா சாகிப்பை, கர்நாடகத்தின் நவாபு என்று பிரகடனப் படுத்தினார்.
இதன் பிறகு பலவித ப்ோர்களைப் காணவேண்டிய தழ்நிலை சந்தா சாகிப்பிற்கு ஏற்பட்டது. பிரஞ்சுக்காரர்களின்
298

சைபீர்முகம்மது O
துணையுடன் இவர் பலரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார்.
இறுதியாக 1752 மே 3ம் தேதி திருவரங்கத்தில் பெரும் போர் நட்ந்தது. ஆங்கிலேயத் தளபதி காப்டன் டால்டன் என்பவர் இப்போரில் பிரஞ்சுப் படைத் தளபதி தெ அடுயில் என்பாரைக் கொன்றார். இதன் பிறகு பிரஞ்சுக்காரர்களின் வலிம்ையும் சந்தா சாகிப்பின் வலிமையும் குன்றியது. 1752 ஆகஸ்டில் இவர்கள் படையில் இருந்தவர்கள் பிரிந்து ஓடினார்கள். ஆங்கிலேயரின் ஆதிக்கம் வேகமாக தலைதூக்கியது. இந்த நேரத்தில் பிரஞ்சுக். காரர்களும் நெவாயத்துக்கள் என்று அழைக்கப்பட்ட நவாபு, வம்சாவளியினரும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக் தடுமாற வேண்டிய துழிநிலை உருவாகியது. சந்தா சாகிப் தங்கி இருந்த படைவீட்டை மராட்டிய படைதழ்ந்து கொண்டது. -
மராட்டியப் படைத் தலைவர் முர்ாரி ராவிடம் தன் உயிரை மட்டும் காப்பாற்றினால் பெரும் பணம் தருவதாக பேரம் பேசி னார். தன்னை பாண்டிச்சேரியில் பத்திரமாகக் கொண்டு சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டார். அப்பொழுது பிரஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியில் வலிமையாக இருந்தார்கள். தான் ஒரு பக்கிரி வேடம்பூண்டு வெளியேற உதவும் படி கேட்டுக் கொண்டார். எத்தன்ையோ உயிர்களைக் கொன்று குவித்தவர் இந்த சந்தா சாகிப். இரக்கமே இல்லாமல் பதவி பணம் மட்டுமே குறியாகக் கொண்டு செயல் பட்டார். தனது உயிர் ஊசலாடும் இந்த வேளையில் எதையும் தருவதற்குத் தயாராய் இருந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை.
மராட்டியரின் மற்றொரு படைத்தலைவர் மனோஜியுடன் சந்தாசாகிப் நேரில் பேசினார். பிரஞ்சுப் படையின் தளபதியாக அப்பொழுது இருந்த ஜேக்கூ லா என்பவர் சந்தா சாகிப்பின் உயிருக்கு ஆபத்து வராமல் சத்தியம் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். இந்த இடத்தில் சரித்திரம் மீண்டும் திரும்பியது. தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு சந்தா சாகிப்பின் வாழ்க்கையே தக்க சான்று. .
299

Page 152
9 மண்ணும் மனிதர்களும்
தளபதி மனோஜி தான் சத்தியம் செய்யாமல் தனது படையில் இருந்த மற்றொருவரான தாவூதுகான் என்பவர் ச்த்தியம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
அன்று இரவே மனோஜியும் ஆங்கிலத்தளபதி மேஜர் லாரன்சும் கூடிப்பேசி அவரின் விதியை முடிவு செய்து விட்டனர். சந்தா சாகிப் லோகர் தொழுகையின் பொழுது (நடுப்பகல் தொழுகை) தலைவேறு முண்டம் வேறாக வெட்டப்பட்டார். அன்வருடீனின் மகனும் சந்தா சாகிப்பின் பரம எதிரியுமான முகம்மது அலியிடம் உடலை ஒப்படைத்தார்கள்.
திருச்சிராப்பள்ளி தளவாய் மண்டபத்தில்தான் சந்தா சாகிப்பின் தலை வெட்டப்பட்டது. இதே மண்டபத்தில்தான் பதினாறு ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ரான் என்று சொல்லி செங்கல்லில் கள்ளச்சத்தியம் செய்து ராணி மீனாட்சியை ஏமாற்றினார். அதே மண்டபத்தில் மீண்டும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தாவூது கானால் திருக்குர்ரானின் அதே வகை கள்ளச்சத்தியம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். 1752 ஆண்டு ஜூலை 17ந் தேதி இது நடந்தது.
திருக்குர்ரானில் சத்தியம் செய்வது. அது உண்மையான திருக்குர்ரானா அல்லது செங்கல்லா என்பது இங்கே முக்கிய மில்லை. எதிர்தரப்பில் இருப்பவர் அது திருக்குர்ரான் என்றே நினைக்கிறார். அதன் விளைவுகளை சந்தா சாகிப் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய துழல் ஏற்பட்டு விட்டது.
சந்தா சாகிப்பின் உடல் திருச்சிராப்பள்ளியில் உள்ள நத்தர் அவுலியா தர்க்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியின் ஆளுநராக இருந்த தூய்ப்ளே இந்த மரணச் செய்திக்குப் பின் பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் மாதா கோயிலுக்குச் செல்லாமல் இருந்ததாக ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட் குறிப்பில் எழுதியுள்ளார். . . .
எது எப்படி இருந்தாலும் நவாப்புகளின் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கிய சந்தா சாகிப்பின் முடிவு பரிதாபகர
3OO

சைபீர்முகம்மது O மருது பாண்டியர் வருகை -
நாலு கோட்டை என்றழைக்கப்படுகின்ற பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம், திருப்புவனம் போன்ற ஊர்களில் பிரயாணம் செய்யும் பொழுது எனது மனம் மருதுபாண்டியர் களையும் முத்து வடுக நர்தரையும் அடிக்கடி நினைத்துக் கொண்டது. : , , , . . . . '',
இந்த மண்ணில் நடந்து போயிருப்பார்களே. இங்கே தானே போர் நடந்தது என்று நினைத்துகண்ணை மூடி கற்பனை செய்து பார்த்தேன். ஆனால் அந்த வீரமிகுந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுக்கும் அந்த வீரக் கதைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது. போல் என் முன்னே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக பல ப்ோர்க்கள்ங்களைக் கண்ட அந்தப் பூமியில் எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும்? இன்று செம்மண்ணாக இருக்கும் அந்த பூமியில் முன்பு ம்றவர்கள் கொட்டிய ரத்தம்தானே சிவந்து நிற்கிறது! " . . .
சிவகங்கைச் சிமையைச் சுற்றிய எனது பயணங்களில் ஒவ்வொரு ஊரிலும் மருது பாண்டியர்களுக்குத் தனி மரியாதை" இருப்பதைக் காண முடிந்தது. அந்தப் பக்கம் ஒடுகின்ற பஸ்களுக்குக் கூட ‘மருது பாண்டியர் போக்குவரத்து’ என்றே பெயரிட் டுள்ளார்கள். சினிமா போஸ்டர்கள் நிறைந்த சுவர்களைப் பார்த்த கண்களுக்கு இங்கே வேறுவகை ஓவியங்கள் நிச்சயம் அதிச்யப்பட !
வைக்கும். ஆமாம், சுவர்கள் தோறும் அழகிய வண்ணத்தில்:
மருதிருவரின் ஒவியங்களை வரைந்து வைத்துள்ளார்கள். நல்ல வேளையாக அந்த ஒவியங்களின் மேல் சினிமா போஸ்டர்கள் ஒட்டும் வேலை இன்னும் நடைபெறாதது நாம் செய்த பாக்கியம்! மருது பாண்டியர்கள் எப்படி மன்னர்களாக முடிதுட்டப் பெற்றார்கள் என்பதை அறிவதற்கு முன் முத்துவடுக நாதரின் ஆட்சி பற்றியும் அவர் மனைவி ராணி வேலு நாச்சியார்பற்றியும் சற்றே தெரிந்து கொண்டால்தான் மருது பாண்டியர்களின் மூலம் தெரியும்.
சசிவர்ண்த் தேவருக்குப்பின் அவர் மகன் முத்து வடுகநாதர் ܝ ஆட்சிக்கு வந்தார். இவர் சிறு பிள்ளையாக இருந்த காரணத்
1 30 سد

Page 153
O மண்ணும் மனிதர்களும் தினால் இவரின் தாயார் பூதக்கா நாச்சியார் இவர் சார்பில் ஆட்சி செய்து வந்தார். இவரின் தந்தை சசிவர்ணத் தேவர் காலத்தில் சிவகங்கைச் சிம்ை என்ற தன்னாட்சி உடைய நாடாக இருந்ததாக முன்பே கூறியுள்ளேன். இக்கால கட்டத்திலேயே தாண்டவராயப் பிள்ளை என்ற அமைச்சர் சசிவர்ண பெரிய உடையாத்தேவரிடம் பணி புரிந்து வந்தார். இவர் அரளிக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். சிறந்த அறிவாளி. சிவகங்கைச் சிமை சரித்திரத்தில் சிறப்பாக சொல்லப்பட வேண்டிய நல்ல மனிதர்! கணக்கெழுதும் பரம்பரையில் வந்தவர். சசிவர்ணத் தேவருக்குப் பூரின் ஆட்சிக்கு வந்த முத்து வடுகநாதர் காலத்திலும், அதன் பின் ராணி வேலு நாச்சியாரைக் காப்பாற்றி மீண்டும் ஆட்சியில் அமர வைத்த காலத்திலும், பின் மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலத்திலும் அமைச்சராக இருந்தவர். இவரைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே இவர் தனது மதியூகத்தால் போர்களைத் தடுத்து அந்த மண்ணைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் குறித்து பின் வரிசையாக வரும். அக்காலத்தில் வாழ்ந்த குழந்தைக் கவிராயர் என்ற புலவர் தாண்டவராயப்பிள்ளை அவர்களை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘மான்விடுதூது’ என்ற பிரபந்தத்தைப் பாடியுள்ளார். ஒரு சமயம் சிவகங்கைச் சீமையிலே பஞ்சம் வந்தது. 'அக்காலத்தில் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையவர்கள் பல புலவர்களுக்குத் தனது வீட்டில் உணவு படைத்து சிறப்பித்தார். அதைக் குழந்தைக் கவிராயர் இப்படிப் பாடுகிறார் :
"ஓர் தட்டிலே பொன்னும் . ஓர் தட்டிலே நெல்லு(ம்) ஒக்க விற்கும் கார் தட்டிய பஞ்ச காலத்திலே கவிவாணருக்கு யார் தட்டிலுந் தட்டு வராது காத்து அன்ன தானந்தந்து மார்தட்டின்ான் முல்லைத் தாண்டவராய வரோதயனே'
இவர் முத்து வடுக நாதரின் கிழ் அமைச்சராக இருந்த காலத்தில் தான் திருப்பத்தூர், திருக்கானப்பேர் (காளையார்
302

சைபீர்முகம்மது O கோயில்). திருப்புவனம், திருக்கோட்டியூர், கொடுங்குன்றம் (பிரான்மலை) குன்றக்குடி, நாட்டரன் கோட்டை போன்ற ஊர்களில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் நடை பெற்றன.
தாண்டவராயப்பிள்ளைக்கு வயதாகிக் கொண்டு வந்த
காரணத்தால் சிமையைக் காக்க தக்க பக்கபலமுள்ள ஆட்களை
சேர்க்க எண்ணினார். இக்காலத்தில் பதவி கிடைத்தால் அதை கடைசி மூச்சு வரை அல்லது விரட்டப்படும் வரையில் அதை விட்டு விலக மறுக்கும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால் தாண்டவராயப் பிள்ளை தனக்குப் பிறகு நாடு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக தக்க் மனிதர்களைத் தேடினார்.
இக்காலத்தில் தான் இராமநாதபுரம் என்றழைக்கப்படும் சேது சிமையில் செல்லமுத்து சேதுபதியிடம் (1749 - 1762) தளபதியாக பழனியப்பர் என்பவர் பணியாற்றிவந்தார். நயினார் கோயில் என வழங்கும் திருமருதூர் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவர் . இவர். இவரின் பிள்ளைகளே சின்ன மருது, பெரிய மருது என்ற மருதுபாண்டியர்கள். திருமருதூர் கோயில் இறைவனிடம் பக்தி கொண்டதால் தனது பிள்ளைகளுக்கு 'மருது’ என்று பெயரிட்டதாக கால்டுவெல் அடிகளார் தமது குறிப்பில் எழுதியுள்ளார். சேது நாட்டுத் தளவாயாக இருந்தவர் வெள்ளையன் சேர்வைக்காரர். இவர் அக்காலகட்டத்தில் மிகச் சிறந்த வீரராகவும் , சென்றவிட்மெல்லாம் வெற்றிகளைக் குவித்தவராகவும் திகழ்ந்தார்: அவர் நினைவாக வெள்ளையன் என்ற பெயரையும் தனது மூத்த மகனுக்குச் சூட்டினார். பிற்காலத்தில் இரண்டு பெயர்களும் இணைந்துவெள்ளை மருது என்ற பெயரே நிலைத்து விட்டது. முக்குளத்தில் பிறந்த மருது பாண்டியர்களின் பாரம்பரிய வீடு இன்றும் ‘முத்துக் கருப்பன் சேர்வை. வீடு' என்றே அழைக்கப்படுகிறது. இவ்வீடு முன்பு கூர்ை வீடாக இருந்து தற்பொழுது ஒடு போடப்பட்டுள்ளது:இவ்வீட்டை மக்கள் இன்றும் புனிதமாகப் போற்றிப் பர்துகாத்து வருகிறார்கள். மருதிருவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பென் உடன்கட்டை ஏறிய்தாலும், அவருடைய கணவரின் எஞ்சிய பொருட்கள் இங்கே பாதுக்ாப்பாக வைக்கப்பட்டிருப்பதாலும் இஷ்வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
303

Page 154
O மண்ணும் மனிதர்களும்
மருதிருவரின் தாயாரின் பெயர் பொன்னாத்தாள். சின்ன வயதிலேயே இருவருக்கும் வீரக்கதைகளைச் சொல்லி அவர்களை வீரர்களாக வளர்த்து வந்தார். இன்று தமிழர்கள் வீரமிழந்து நிற்பதற்கு நமது தாய்ம்ார்கள் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். ‘பூச்சாண்டி வருகிறான் தூங்கு’ என்றும், தாடிக்கா ரன் வருகிறான், சோறு சாப்பிடு’ என்றும் பயத்திலேயே அவர்களை வளர்ப்பதால் இளம் வயதிலேயே அவனுக்கு முதுகுத்தண்டு வளைந்து விடுகிறது.
வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதின்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க, என்று பாடினான் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம். இன்று இப்படிப்பட்ட பாடல்களுக்கு மக்கள் மத்தியில் எங்கே மதிப்பிருக் கிறது? அன்று தாய்ப்பால் ஊட்டும் பொழுதே வீரத்தையும் சேர்த்தே ஊட்டினார்கள். இன்று பவுடர் பால், புட்டிப்பால் ள்ன்று வந்து விட்டது. அப்புறம் வீரமாவது, வெங்காயமாவது? "
ஒரு தாய் நோயில் படுத்திருந்தாள். வேலை முடிந்து வந்த மகன் தாயைக் கவனிக்கவே இல்லை. பின்புறம் கட்டப்பட்ட காலொடிந்த மாட்டையே கவனிப்பதும்.அந்த மாட்டுக்கு மருந்திடுவ தாகவுமே இருந்தான்.பொறுமை இழந்த தாய் கேட்டாள்: “உன்னை புத்து மாதம் சுமந்து பெற்ற தாய் நோயால் வாடிக்கிடக்கிறேன். நீ மாட்டையே பார்த்துக் கொண்டிருக் கிறாயே? உனக்குத் தாய்ப்பாசமே இல்லையா?”
“அது என்னவோ அம்மா. இந்தப் பசுவின் பாலை ஊட்டி வளர்த்ததால் எனக்கு அதன்மேல் தான் பாசம் பிறக்கிறது! உன் மேல் பாசமே வரமாட்டேங்கிறது” என்று பதில் கூறினான்.
இன்று பல தாய்மார்கள் பிள்ளைகளின் பாசத்தை இழந்து நிற்பதற்கு இந்தப் "புட்டிப்பால் ஒரு காரணமாக இருக்கலாமோ?
304

சைபீர்முகம்மது O
பொன்னாத்தாளின் தாய்ப்பாலும் அதனோடு கூடிய வீரக்கதைகளும் மருதிருவரை வீரர்களாக வளர்ந்தன.
இராமநாதபுரத்தில் இன்று துரன் கோட்டை என்று அழைக்கப்படும் கிராமத்தில் அக்காலத்தில் 34 அடி உயரத்தில் மிகப்பெரிய கோட்டை இருந்துள்ளது. கிழவன் சேதுபதி கட்டிய இக்கோட்டை அக்காலத்தில் மிகச் சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சிக் களமாகவும் இருந்துள்ளது. ஆயுதங்கள் தயாரிக்கவும் படைகளுக்குப் பயிற்சியளிக்கவும் இக்கோட்டையை வலிமை யுள்ளதாக கிழவன் சேதுபதி கட்டி வைத்தார். இன்று அதன் சிதைந்த பகுதிகள் மட்டுமே உள்ளன. இப்பயிற்சிக் களத்தில் தான் மருதிருவரும் போர்ப் பயிற்சிகள் பெற்றார்கள்.
பழனியப்பரின் புதல்வர்கள் சிறந்த பயிற்சி பெற்றதைக் கண்ட சேதுபதி, அவர்களை அரண்மனையில் காவல் பணியில் நியமித்தார். சேது நாட்டில் பிறந்த இவர்கள் எப்படி சிவகங்கைக்கு
p6ö7 GOT fir ஆனார்கள்?
வேட்டைக்குச் சென்று திரும்பிய மன்னர் சேதுபதி ஒய்வுக்காக ஆறு முகக் கோட்டையில் தங்கினார். அப்பொழுது அங்கே வந்த சிவகங்கை மன்னர். முத்து வடுகநாதர் தனது சிமைக்கு திறமையான இரண்டு வீரர்கள் வேண்டும் என்று கேட்க மன்னர் சேதுபதியும் மருதிருவரை சிவகங்கைக்கு அனுப்பி வைத்தார்.
ஆரம்பத்திலேயே அவர்களை உயர் பதவிகளில் அமர வைத்தால் மற்றவர்கள் பிரச்னைகளைக் கிளப்புவார்கள் என்பதால் அவர்களை சாதாரண பதவிகளில் அமர்த்தினார்கள். ஆனால் அரசருக்கு அணுக்கமாக இருக்கும் பதவி என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய ‘வேலு நாச்சியாரும் மருது பாண்டியர்களும்’ என்ற நூலில், “முத்து வடுகநாதரும் வேலு நாச்சியாரும் அவ்விரு சகோதரர்களை அழைத்து வந்து தங்கள் நாட்டிற்கு அமைச்சர்கள் ஆக்கினார்கள்” என்று எழுதியுள்ளார்.
ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் தப்பும் தவறுமாக எழுதி வைத்துள்ளார்கள். வெற்றிலை மடித்துக்கொடுக்கும்
305

Page 155
1) மண்ணும் மனிதர்களும்
'அடைப்பக்காரராகவும் வேட்டைக்காரர்களாகவும் வேலைக்குச் சேர்ந்தனர், என்று அவர்களின் பணிகளைக் கேவலமாகக் கூறியுள்ளார்கள். வெற்றிலை மடித்துக் கொடுப்பதற்கும் வேட்டை நாய்களைப் பாதுகாப்பதற்கும் சிவகங்கைச் சிமையில் ஆள் இல்லாமலா இராமநாதபுரத்தில் போய் சேதுபதி வழியாக ஆள் பிடித்து வந்திருப்பார்கள்? சரித்திரம், இப்படித்தான் சில பொறுப்பற்றவர்களால் மேம்போக்காக எழுதப்பட்டு விடுகிறது. பிறகு அதையே மற்றவர்களும் பின்பற்றி எழுதி விடுகிறார்கள்.
முத்து வடுகநாதரின் அன்பைப் பெற்று மருது சகோதரர்கள் சிறிது சிறிதாக உயர் பதவிகளை அடைந்தார்கள். சின்ன மருது அமைச்சராகவும், பெரிய மருது தளபதியாகவும் உயர்வு பெற்றனர் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது.
இக்கால கட்டத்தில் தான் மதுரை, தஞ்சை பகுதிகளில் இருந்த தங்கள் கவனத்தை சிவகங்கைச் சிமை பகுதியில் நவாபுகள் செலுத்த ஆரம்பித்தார்கள்.
ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் நவாபுகளின் இரு குழுக்கள் மாறி மாறி சித்து விளையாட்டுகள் செய்த நேரத்தில் டச்சுக்காரர்கள் சிவகங்கைச் சிமையின் ஆதர வோடு அப்பகுதியில் காலூன்றினார்கள். இதுவும் ஆங்கிலேயர் களுக்கும் நவாபுக்கும் ஆத்திரத்தை ஊட்டியது. இராமநாதபுரம், சிவகங்கை அரசுகள் படைபலத்தைப் பெருக்கியதும் ஆயுதங்களைப் பெருக்கியதும் நவாபை பெரிதும் உறுத்தியது!
1772 மே மாதம் தளபதி ஸ்மித் முன் செல்ல நவாப் உம்தத் உல் உம்ராவும் உடன் சென்றார். இவர்களின் படையெடுப்பிற்கு மண்ணாசை பொன்னாசை காரணமாக இருந்தது என்றால் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு பொறாமை என்ற தமிழனுக்கே உரிய மற்றொரு பெருங்குணம் இந்தப் படையெடுப் பிற்கு காரணமாகி தனது குதிரைப் படைகளைக் கொடுத்து உதவச் செய்தது!
மே மாதம் 28ம் நாளன்று கும்பினிப்படை முதலில் இராமநாதபுரம் கோட்டையைதழ்ந்து கொண்டது. மறுநாள் காலை 5.00 மணிக்கு கோட்டை அவர்கள் வசம் எளிதாக வந்து விட்டது.
306.

சைபீர்முகம்மது o
ஒன்பதே வயதான சேதுபதி அவரின் தாய் தங்கை அனைவரையும் திருச்சி சிறையில் அடைத்து வைத்தார்கள். அதில் மிகவும் மன மகிழ்ந்து போனவர் புதுக்கோட்டை தொண்டைமான் தான்! வாழ்க தமிழர் தம் ஒற்றுமை!
அடுத்த படையெடுப்பு சிவகங்கைச் சீமை நோக்கித் தான் என்றாலும் நவாபு கொஞ்சம் தயங்கினார். கை கட்டி நின்று சேவகம் புரிந்த தொண்டைமானும் மயங்கினார். இராமநாதபுரத்து சேதுபதிக்கு ஒன்பது வயது என்பதால் சுலபமாகக் காரியத்தை முடித்துக் கொண்டார்கள். ஆனால் சிவகங்கையில் முத்து வடுகநாத பெரிய உடையாத்தேவரும் அவருக்குப் பக்கபலமாக மருதுபாண்டியர்களும் இருந்த காரணத்தால் அவ்வளவு சுலபமாக அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை.
1722 ஜூன் 21ம் நாள் ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையில் நவாபின் மகன் உம் தத் உல் உம்ரா உடன் வர ஒரு அணி சோழபுரம் நோக்கியும் மற்றொரு அணி கீரனூர் நோக்கியும் வந்தடைந்தது. கும்பினியரின் இந்த வஞ்சகத் திட்டங்கள் குறித்து அறிந்திராத முத்துவடுகநாதர் மான் வேட்டைக்காக காளையார் கோயிலுக்குச் சென்று விட்டார். போகும் பொழுது ராணி வேலு நாச்சியார் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவரை கொல்லங்குடியில் தங்க வைத்தார்கள். இளைய ராணியாருடன் முத்துவடுகநாதர் காளையார் கோயில் சென்ற பொழுது மருதிருவரும் கொல்லங்குடியில் தங்கி விட்டார்கள். அப்பொழுது தான் ஒற்றர்கள் மூலம் மருதுபாண்டியர்களுக்கு நவாபின் படையெடுப்பு தெரிய வந்தது. இருவரும் படையுடன் புறப்பட்டு மங்கலத்தில் நவாபின் படையுடன் போர் புரிந்தார்கள். சண்டையை நிறுத்த தந்திரமாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே மற்றொரு பிரிவுப்படையை காளையார் கோயில் நோக்கி அனுப்பி வைத்தார்கள் ஆங்கிலேயரும் நவாபும். காளையார் கோயிலிலேயே முத்து வடுக நாதரைத் தீர்த்துக் கட்டுவது அவர்களின் நோக்கம். அதோடு முதலில் அங்கே தங்களது கொடியை நாட்டிவிட தீர்மானமாக இருந்தார்கள்.
நள்ளிரவில் நவாப்பின் மகன் உடன் வர மற்றொரு தளபதி aHLLCTTTT CtLLL SSLLLLLLLLLS T0L TrmLLL LLLLL SSTLLTT SLTTLTTTS LaT
307- - ܝ -- -- ܚܫܝܚܫ

Page 156
O மண்ணும் மனிதர்களும்
நள்ளிரவில் வெளியில் இருந்தவாறு துப்பாக்கி வேட்டுகளைக் கிளப்பினார்கள். தூங்கிக் கொண்டருந்த முத்து வடுகநாதர் தன் இளைய மனைவியுடன் கோட்டையின் மேல் தளத்திற்கு வந்து எட்டிப்பார்த்த வேளையில் வஞ்சமாக அவர்களை சுட்டு வீழ்த்தினார்கள்! பகலில் நடந்தால் எங்கே மருதிருவரும் அங்கே வந்து விடுவார்களோ என்றஞ்சி இரவிலேயே தங்கள் காரியத்தை வஞ்சகமாக முடித்துக் கொண்டார்கள்.
உண்மையில் போரின் அழிவைத் தடுப்பதற்கும் சிவகங்கை மண்ணைக் காப்பதற்கும் தாண்டவராயப்பிள்ளை உடனடியாக சில முடிவுகள் எடுத்தார். நவாபுக்கு ஒற்றர் மூலம் செய்தி அனுப்பி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது போரை நிறுத்தவும் குறிப்பிட்ட தொகை கொடுக்கவும் சம்மதித்து ஆண்டு தோறும் வரிப்பணம் தருவதற்கும் அவர் ஏற்பாடுகள் செய்தார். நவாபு இக்கடிதத்தை பான்சோரிடம் சமர்ப்பித்தும் அது தனக்குக் கிடைக்கவில்லை என்று பொய் கூறியே முத்து வடுக நாதரைக் கொன்றான்.
சாமாதானம் செய்த பிறகும் வஞ்சகமாக மன்னரைக் கொன்றதாக "இலண்டன் பாக்கட் மற்றும் பிரிட்டிஷ் கிரானிக்கிள்' இதழ்களில் (251774ம், 3574ம்) இரண்டு செய்திகளை சர் ராபர்ட் ஃப்ளெச்சர் என்பவர் லண்டனில் வெளியிட்டார். லண்டன் விசாரணை நீதிமன்றத்தில் பான்சோர் மீதும் ஸ்மித் மீதும் வழக்கு ஒன்று நடந்துள்ளது. சமாதானம் ஏற்பட்ட பிறகும் இந்த இரு தளபதிகளும் மன்னர் குடும்பத்தை கொன்று விட்டார்கள் என்று சர் ராபர்ட் ஃப்ளெச்சர் வாதிட்டார்.
‘மங்கலத்திலிருந்து விரைந்து காளையார் கோயிலை அடைந்த மருதுபாண்டியர்கள் பெரும் போரில் ஈடுபட்டார்கள். ஒரு புறம் மன்னரை இழந்து நிற்கும் நிலை மற்றொரு புறத்தில் திடீர் படையெடுப்பு. ராணி வேலு நாச்சியாரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை வேறு. அதோடு முத்து வடுகநாதருக்கு ஆண் வாரிசு இல்லை. நாலு கோட்டை அரச பரம்பரையில் வந்த வெங்கண் உடையணன் என்ற சிறுவனை வளர்த்து வந்தார். அச்சிறுவனையும் காப்பாற்ற வேண்டும்.
308ー

சைபீர்முகம்மது O,
இவற்றை மனதில் கொண்டு அழிவைத் தடுக்க அன்று மாலையே போரை மருது பாண்டியர்கள் நிறுத்தி விட்டார்கள்.
உடனடியாக ராணி வேலு நாச்சியாரைக் காப்பாற்ற எண்ணி விருப்பாட்சி என்ற ஊருக்கு அவரை அனுப்பி வைத்தார்கள். விருப்பாட்சி ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனமாக இருந்த ஐதர் அலியின் ஆட்சியின் கீழ் திண்டுக்கல்லில் இருந்தது. மைதுரின் ஒரு மாநிலமாக திண்டுக்கல் 26 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, விருப்பாட்சி தலைமைப் பாளையமாக இருந்து வந்தது. ஐதர் அலியின் பார்வையில் இருந்த அந்தப் பாளையக் காரர்கள் நவாபுகளுக்கும் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் எதிர்ப்பாளர்களாக இருந்து வந்தார்கள். இதன் காரணமாகவே ராணி வேலு நாச்சியார் அங்கே பாதுகாப்பாக அனுப்பப்பட்டார்.
பான்சோர் அரச குடும்பத்தைக் கொன்றது மட்டுமல்லாது காளையார் கோயிலையும் கொள்ளையடித்தான். இலண்டனில் நடந்த விசாரணைக் கமிஷனில் ஸ்மித் வேலை நீக்கம் செய்யப்பட்டான். -
இராணி வேலு நாச்சியார் விருப்பாட்சி செல்ல நினைத்த தற்குக் காரணம் தனது கணவரின் உயிரை வஞ்சமாகப் பறித்தவர்களை பழி வாங்கவே! காலம் கனியும் வரை அங்கே காத்திருக்க எண்ணினார். அதோடு அவரைக் கொன்றுவிடவும் கும்பினிப்படை சதித்திட்டம் திட்டி வைத்திருந்தது. இதை அறிந்தே தனது மண்ணை மீண்டும் மீட்க வேண்டும் என்று விருப்பாட்சியில் தங்கினார். அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையும் வேலு நாச்சியாருடன் தங்கினார். வாழ்நாளெல்லாம் சிவகங்கைச் சிமையின் நன்மைக்கும் அதன் மேன்மைக்கும் உழைத்த தாண்டவராயப்பிள்ளை ஆறுமாதம் கழித்து உயிர் துறந்தார். மருது பாண்டியர்கள் எப்படியும் சிமையை மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்குக் கடைசி வரை இருந்தது. என்றாலும் சிமையின் விடுதலையைக் காணாமலேயே அவரின் உயிர் பிரிந்தது.
இக்கால கட்டத்தில்தான் மருது பாண்டியர்கள் விருப்பாட்சி யில் இருந்தவாறு நவாபுக்கு எதிராக கெரில்லா போர் முறைகளைக் கையாண்டு வந்தார்கள். நவாபுக்கு வரி கொடா
309

Page 157
O மண்ணும் மனிதர்களும் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்கள். ஆறு ஆண்டுகள் இதன் பின் நவாபின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஆனால் நவாபால் ஒற்றைக் காசு கூட வரியாக வதுல் செய்ய இயலவில்லை.
ஒருபுறம் நவாபின் ஆட்சியில் மருதுபாண்டியர்கள் வேதனை யடைந்து வந்தார்கள். மற்றொரு புறம் ஐதர் அலியின் அரவணைப் பில் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.
விருப்பாட்சி பாளையத்தில் ஆட்சி செய்து வந்த சுல்தான், மருதுபாண்டியர்களுக்குப் பக்கபலமாக இருந்தார். முதல் படையெடுப்பிற்கு படையும் பணமும் பீரங்கியும் கொடுத்து உதவினார். சிவகங்கை சரித்திர கும்மியில் -
(Gugufillsisving fillsisvinfluflair (ARTILLERY) பீரங்கி பனிரெண்டும் கொள்ளைக் குதிரையிலும் கொடுத்த வோராயிரமும் வெள்ள மெனத்திரட்டி.
என்று அந்த உதவி குறித்து சொல்லப்படுகிறது. தன்னுடைய கர்நாடகப் பிரிவு படையில் ஆயிரம் பேரையும், நிஜாம் பிரிவில் ஆயிரம் பேரையும், குதிரைகள் ஆயிரமும், பீரங்கிகள் பன்னிரண்டும் தந்துதவியதோடு பணமின்றி நின்ற அவர்களுக்கு எப்படி உதவினார் என்று சிவகங்கை சரித்தரக்கும்மி அழகாகச் சொல்கிறது. நவாபும் முஸ்லீம் தான். விருப்பாட்சிபாளையத்தின் ஆட்சியாளர் சுல்தானும் முஸ்லீம் தான். அதன் பிரதம ஆட்சியாளர் ஐதர் அலியும் முஸ்லீம் தான். இங்கே மதங்களை விட நியாயங்களே முன் நிற்பதைக் காண முடிகிறது!
சுல்தானின் இவ்வளவு பெரிய உதவியை மருது பாண்டியர்கள் எப்படிப் பெற்றார்கள்? சாதாரண நிலையில் சிவகங்கை அரசு பணியில் சேர்ந்து எப்படி ஆட்சிக்கு வந்தார்கள்? பெரிய மருது எப்படி ராணி வேலு நாச்சியாருக்கு கணவராக மாறினார்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்து வரும் அத்தியாங்களில் பதில் காண்போம்!
31 O

சைபீர்முகம்மது O
விருப்பாட்சி
விருப்பாட்சியில் படை உதவி கிடைத்ததும் மருது பாண்டியர்கள் உடனே போருக்குப் புறப்பட்டு விடவில்லை. தக்க தருணம் வேண்டிக் காத்து நின்றனர்.
ஆர்க்காட்டு நவாப் வாலாஜா முகம்மது அலி தனது மகன் உல் உம்ராவை சிவகங்கைச் சிமையில் தனது பிரதிநிதியாக நியமித்திருந்தார். உல் உம்ராவின் செல்லப் பெயர் குலாம் உசேன். எனவே சிவகங்கைச் சிமைக்கு உசேன் நகர் என்று பெயரிட்டார். உண்மையில் நவாப் முகம்மது அலி மிகுந்த ஆடம்பரச் செலவுகள் செய்து ஆங்கிலேய கும்பினியாரிடம் மிகவும் கடன் பட்டுவிட்டார். வெள்ளையர்கள் எதையும் இலவசமாகச் செய்யவில்லை. கர்நாடக நவாபாக ஆவதற்கு முன் பல போர்கள் நடந்தன. 1756 முதல் 83 வரை நடந்த போர்களில் கும்பினியர் செய்த உதவிக்காக ஐம்பது இலட்சம் ரூபாய் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். இந்தப் பணத்தை உடனே செலுத்தமுடியாத நவாப் ஆங்கிலத் தளபதி களிடம் கடனாகப் பெற்று கும்பினியரின் கடனை அடைத்தார். தளபதிகளும் இலவசமாகப் பணம் தந்துவிடவில்லை. சில மாவட்டங்களில் வரி வதுலை தாங்களே பெற்றுக் கொள்வதற்கு எழுதி வாங்கிக் கொண்டனர்.
குரங்கு தின்ற அப்பக்கதையைப் போல தமிழ் நாட்டின் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் மக்கள் கசக்கிப் பிழியப்பட்டார்கள். வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் குட்டி ஜமீன்தார்களாக உண்டு கொழுத்தார்கள். நவாப், தானும் வாழவில்லை, மக்களையும் வாழ விடவில்லை!
நவாப் ஒரு கடனை அடைக்க மறு கடன் வாங்கினார். இறுதி வரை இவர் கடனாளியாகத்தான் இருந்து இறந்தார். அவரால் எவ்வளவு முயன்றும் கடன் வாங்காமல் இருக்க முடியவில்லை. கடன் கொடுத்தே அவர் தங்களின் கைக்குள் இருப்பதை ஆங்கிலேயர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
311

Page 158
O மண்ணும் மனிதர்களும்
சிவகங்கைச் சிமையைப் பொறுத்த மட்டில் மக்கள் மறை முகமாக 'வரி கொடா இயக்கத்தை நடத்தி வந்தார்கள். வரிப் பணத்தை மறைமுகமாக ராணி வேலு நாச்சியாருக்கு அனுப்பி வைத்தார்கள். மருதுபாண்டியர்கள் அடிக்கடி திண்டுக்கல்லில் இருந்து இரகசியப் பயணங்கள் மேற்கொண்டு மக்களை தங்கள் பக்கம் இழுத்து வைத்திருந்தார்கள். என்னதான் பீரங்கி, துப்பாக்கி, ஆள், படை பலம் பொருந்திய ஆட்சியாக இருந்தாலும், மக்களின் ஆதரவு மட்டும் இல்லாமல் இருந்தால் அந்த அரசு நிம்மதியான ஆட்சியை நடத்த இயலாது! பல்வேறு நாடுகளில் பெரிய ராணுவத்தைக் கொண்டும் மக்களை அடக்கி ஆள முடியாமல் போனதை சரித்திரங்கள் நமக்குச் சுட்டுகின்றன. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, வங்கதேச விடுதலை என்று இதன் தொடர் மிக நீண்டது. மக்கள் எப்பொழுதுமே நியாயத்தின் பக்கமே இருப்பார்கள். இன்று பல ஆண்டுகளாக இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் மக்கள் படும் சிரமத்தை எழுத்தில் வடிக்க இயலாது. உணவுக்கு, உடைக்கு, மருந்துக்கு, ஏன், இருக்க இடமின்றிக்கூட மரத்தடிகளில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்றாலும் பல ஆண்டுகளாக இந்தச் சிரமங்களைச் சுமந்து கொண்டும் விடுதலைக்காக தங்களின் பங்கை செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மட்டும் இல்லை என்றால் அங்கே எப்பொழுதோ விடுதலைப் புலிகள் அடக்கப்பட்டிருப்பார்கள்.
சிவகங்கையில் நவாப்பின் ஆட்சியில் மக்கள் உண்மையில் இருக்கவில்லை. பெயருக்கு அவர் ஒரு ராஜா, மற்றபடி வெறும் கூஜாதான்! ஒரு செப்பால் அடித்த காசு கூட அவரால் வரிவதுல் செய்ய இயலவில்லை.
1780 ஜூலையில் மைதுர் போர் துவங்கியது. இந்த நேரத்தில் மைதுரின் சிங்கம் ஐதர் அலி ஆர்க்காட்டின் மேல் படையெடுத்தார். நவாப் முகம்மது அலியின் நிலை தர்மசங்கடத்துக்குள்ளானது. இதுவே தக்க தருணமென்று மருதிருவரும் திண்டுக்கல் கோட்டைத் தளபதி சையது சாகிபிடம் ஆலோசனை நடத்தினர். உடனே தான் கொடுத்த பீரங்கி, இரண்டாயிரம் படைபலத்துடனும் குதிரைப் படையுடனும் புறப்பட சையது சாகிப் விடை கொடுத்தார்.
312

சைபீர்முகம்மது O
மங்கை சிவிகை வர
மன்னர் பரியேறிவரப்
பொங்கும் படைகளதைப்
புறம் நாலு தான் பிரித்தார்
நாலு கையாக நல்ல
அணிவகுத்து
சாலை நடக்கையிலே
தாமும் தளமும் வர
திக்கொரு கையாகச்
சிலசேனை தான் வரவே
அக்கரையாய் வடக்கே
அடர்ந்து சிலசேனை வர. என்று சிவகங்கைச் சரித்திர அம்மானை இந்தப் படை நடத்துகளை அழகாகக் குறிக்கிறது. ஏற்கனவே சேது சிமையில் மருதிருவர் பெற்ற போர்ப் பயிற்சிகள் சாதாரணமானவை அல்ல. போர்ப் பயிற்சி என்பது வெறும் வாட்போர், மற்போர் மட்டுமல்ல, ஒரு படையை நடத்திச் செல்லும் பொழுது வியூகங்கள் அமைக்கவும் தந்திரமாக எதிரியை வெல்லவும் அறிவது மிகவும் முக்கியம்.
சிவிகையில் வேலுநாச்சியார் ஏறிவர மருது பாண்டியர்கள் குதிரைகளில் வர சுல்தானின் படைகள் நான்கு திசைகளில் கைபோல விரிந்து வர இந்தப் படை புறப்பட்டது.
திருப்புவனத்தில் நவாபின் செயலாளராக மல்லாரி ராவ் என்பவர் இருந்தார். நவாப்பின் கட்டளைப்படி படையை மேலேற விடாமல் தடுக்க மேலுரர், பிரான்மலை, வெள்ளலூர் போன்ற இடங்களில் இந்தப் படைகளையும் பீரங்கிகளையும் கொண்டு வந்து சோழவந்தானில் நிறுத்தினான். இந்த ஊர்களில் இருந்த கள்ளர் சமூகத்தினரையும் தனது உதவிக்கு அழைத்துக் கொண்டான் மல்லாரி ராவ்!
500 படை வீரர்களுடனும் 50 குதிரைப்படையுடனும் மல்லாரி ராவ் இருந்த வடகரைக்கால் அக்கானை மேட்டில் வைகை நதிக்கு அருகில் தனது படையை பெரிய மருதுநிறுத்தினார். எதிரே நின்ற
313

Page 159
O மண்ணும் மனிதர்களும்
படையில் மல்லாரி ராவ் யார் என்று விசாரித்து அறிந்து தனது கையில் இருந்த வளரியை வீசினார். 'Bomarang' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த ஆயுதம் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. எதிரியின் தலையைச் சிவி துண்டாக்கி விட்டு மீண்டும் ஏவியவரின் கைக்கே வந்து விடும் இந்த அற்புத ஆயுதம் தமிழகத்தில் தான் முதலில் தோன்றியது. இந்த வளரி வீசுவதில் மருதிருவரும் கை தேர்ந்தவர்கள். அதிலும் சின்ன மருது இதில் மிகச் சிறந்தவர் என்று தனது ராணுவ நினைவுக் குறிப்பில் கர்னல் வெல்ஸ் எழுதி வைத்துள்ளார். வேட்டைக்கு வெல்ஸ் சின்ன மருதுவுடன் செல்லும் பொழுது எந்த மிருகமும் சின்னமருதுவின் இந்த வளரிக்குத் தப்பாது என்றும் குறித்துள்ளார்.
பெரிய மருது வீசிய வளரி மல்லாரி ராவின் தலையைச் சிவி துண்டாக்கியது!
மருக் கொழுந்தைக்
கிள்ளினாற்போல்
மல்லாரி ராயர் துள்ளிவிழ
கூட்டி வந்த படைகளெல்லாம்
காட்டு வழி சென்று ஓடிடவே
(-சிவகெங்கை சரித்திரக்கும்மியும் அம்மானையும்)
மல்லாரிராவின் தலை கிழே சாய்ந்ததும் அவரின் படை காட்டுப்பக்கமாக ஓடி மறைந்தது. போர் நடக்காமலேயே முதல் சோழவந்தான் வெற்றி சுலமாக மருது பாண்டியருக்கு வந்தது! ஒரே ஒரு வளரி மட்டுமே வீசப்பட்டது. அதுவும் அவர்கள் கைக்கே திரும்பியும் விட்டது!
மல்லாரியின் தம்பி ரெங்கராவ் சினந்து மணலூரில் இருந்த ராணுவத்தை துணைக்கழைத்துக் கொண்டு திருப்புவனம் வந்தடைந்தான். விடிகாலை நேரம். வடகரையில் இருந்த சின்ன மருது யார் ரெங்கராவ் என்று விசாரித்து தனது வளரியை வீச அண்ணனுக்கு ஏற்பட்ட கதியே தம்பிக்கும் ஏற்பட்டது.
314

சைபீர்முகம்மது O
நவாபின் படைத்தலைமை ஏற்று காளையார் கோயிலில் கர்னல் மார்ட்டின் என்பவன் இருந்தான். அவன் உடனே தனது படை பலத்துடன் மானாமதுரையில் முகாமிட்டான்.
மருதுபாண்டியர் படை திருப்புவனத்தில் தங்காமல் முத்தனேந்தல் வந்தடைந்த பொழுது மக்கள் தாங்களே வந்து படையுடன் சேர்ந்து கொண்டனர். எட்டு ஆண்டுகளாக நவாபின் ஆட்சியில் கனன்று கொண்டிருந்த விடுதலை வேட்கை திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. திண்டுக்கல் சுல்தான் படையுடன் மக்கள் படையும் சேர மருதுபாண்டியர் பலம் பெருகியது!
மானாமதுரையில் கர்னல் மார்ட்டின் முகாமிட்டிருப்பதை அறிந்து அன்றிரவே படையின் ஒரு பிரிவை மானாமதுரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
மானாமதுரைப் போர்
வTணாதிராயர்கள் ஆட்சிபற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். வைகை ஆற்றுக் கரையில் உள்ள இந்த ஊர் வளமானது. இன்றும மானாமதுரை செங்கல்லுக்கும் ஒட்டுக்கும் அகில இந்தியாவிலும் பெரும் மதிப்பு இருந்து வருகிறது.
எருமைத் திடல் என்று அழைக்கப்படும் இடத்தில் தனது படையை இறக்கி வைத்த மருதிருவர்களும் போர் வியூகங்களை வகுத்தனர். மறுநாள் காலை நவாபின் பீரங்கி முழங்கியது. ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள். ஆனால் மக்களே படையாக மாறியதால் கர்னல் மார்ட்டின் நிலை தடுமாறினான். இந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த மருது பாண்டியரின் பீரங்கி முழங்கத் தொடங்கியது. நவாபு படையில் சேதம் 50 ஆக இருந்து முந்நூறாக ஏற்றம் கண்டது. நவாபின் படை பின்வாங்கி காளையார் கோயிலுக்கே சென்றடைந்தது. அன்றிரவே இடத்தைக் காலி செய்து விட்டு திருப்பத்தூர் சென்று தப்பித்தார்கள்.
இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. சரித்திரத்தில் இந்த இடம் மிகமிக முக்கியமானது. நமக்கென்ன
315

Page 160
O மண்ணும் மனிதர்களும் என்று சிறுசிறு பாளையக்காரர்களும் கிராமத் தலைவர்களும் ஊர்ப் பெரியவர்களும் அப்பொழுது நினைக்கவில்லை. ஒற்றுமையாக நின்று தங்களின் உதவியை வழங்கினார்கள். ஒற்றுமையால் தமிழர்களால் பெரிய வெற்றிகளைச் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த மானா மதுரை வெற்றி பெரிய சான்று.
பட்டமங்கலம் வைத்தியலிங்கத் தொண்டைமான், காளப்பூர் பாளையக்காரர். மல்லாக் கோட்டை ஆண்டியப்பன்,நாகாடி இராமச்சந்திரன், மானா மதுரை நாகலிங்கம், துரக்குடிப் பாளையக்காரர், துள்ளுக்குட்டி சேர்வை, அதப்படக்கி சங்கிலி, அருங்குளம் ஆறுமுகம், புதுக்கோட்டை பூபன், மருங்கூர்த்தலைவர். வரப்பூர்ப்பாளையக்காரர்கள் ஆகியோரும் இன்னும் பலரும் தங்களின் பங்கை ஒற்றுமையாக நின்று சாதித்தனர். இதில் குறிக்கப்படாத இன்னும் பலரும் இப்போரில் நேரிடையாகத் தங்களின் மக்களை ஈடுபடுத்தினர். ‘சிவகங்கை சரித்திரக்கும்மியும் அம்மானையும்’ என்ற நூலில் விரிவாக இது விவரிக்கப் பட்டுள்ளது. -
பிரான்மலைக் கோட்டையில் இருந்த நவாபின் படையினரில் பலரும் இந்தப் போரில் மருது பாண்டியர்கள் பக்கம் சேர்ந்தார்கள். புதுக்கோட்டையில் உள்ள காளாப்பூர், சேது நாட்டிலுள்ள பொன்னெலிக் கோட்டைப் பொது மக்களும் இந்தப் போரில் கலந்து கொண்டார்கள். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் கள்ளர், மறவர், அகமுடியர் என்ற சமூக அமைப்புகளில் இருந்தவர்கள் மட்டுமே இப்போரில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை. நாட்டில் இருந்த அனைத்து மக்களும் இந்தப் போரில் பங்கேற்றார்கள். சாதிகள் மறந்து சிமையை மீட்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே இவர்களிடத்தில் இருந்தது! ஆக இந்த வெற்றி வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு பாடம்! ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க இயலும் என்பதற்கு இந்த வெற்றி நல்ல சான்றல்லவா?
ஜூலை 1780ல் நடந்த இப்போரில் ராணி வேலு நாச்சியார் மீண்டும் அரியணை ஏறினார்.
316

சைபீர்முகம்மது O மன்னர் வெள்ளை மருது
சிரித்திரத்தில் பெரிய மருது மன்னரானதில் சில பல சிக்கல்கள் எழுந்துள்ளன. பல்வேறு சரித்திர ஆசிரியர்கள் எழுதிய நூல்களை ஆய்வு செய்ததில் சில உண்மைகள் தெரிய வந்தன.
முத்து வடுகநாதரின் மனைவியாக இருந்த ராணிவேலு நாச்சியார் கர்ப்பவதியாக இருக்கும் பொழுது மன்னர் காளையார் கோயிலில் ஆங்கிலப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். விருப்பாட்சியில் இருந்த பொழுது வெள்ளச்சி என்ற பெண் மகவைப் பெற்றார். இவர் ஆட்சிக்கு வந்த வேளையில் சிவகங்கைச் சிமையில் முத்து வடுகநாதரின் தாயாதிப்போர் ஆரம்பித்து விட்டது. வேலு நாச்சியாருக்குப் பின் சிமை தங்களுக்கே சொந்தம் என்று பலரும் போட்டி போட ஆரம்பித்தார்கள். நிச்சயமாக இவர்களுக்கு அந்த மண்ணின் மேல் இருந்த ஆசையளவு அதைக் காக்கும் திறன் இல்லை! அதோடு வாரிசு இல்லாத நாட்டை எடுத்துக் கொள்ளும் உரிமையை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாட்டின் எதிர்காலம் கருதி ராணி வேலு நாச்சியார் பெரிய மருதுவை மறுமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் காதல், காமம் வயப்பட்டதல்ல! நாட்டு நலம் கருதி ஏற்பட்ட திருமணமே! ராணி வேலு நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டதால் பெரிய மருது சிவகெங்கைச் சிமைக்கு மன்னராக ஆகிவிட்டார்.
பெரிய மருதுவுக்கு ஏற்கனவே ஐந்து மனைவிகள் உண்டு! ஆறாவதாக வேலு நாச்சியாரை மணக்க வேண்டிய கட்டாயம் நாட்டு நலம் கருதியே ஏற்பட்டது. முத்துவடுகநாதரை தந்தையைப் போலவே மக்கள் நினைத்தனர். வேலு நாச்சியாரை ‘எந்தாயே’ என்றே அழைத்தனர் என்று சிவகங்கை சரித்திரக் கும்மியும், அம்மானையும் எழுதிய மருதரசர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். தென்பாண்டிச் சிமையில் தாத்தாவின் பெயரையே பேரனுக்கு வைக்கும் வழக்கம் இன்றும் எல்லாச் சமூகத்திலும் இருந்து வருகிறது. இதை முஸ்லீம், கிறிஸ்துவ, இந்து மதம் என்ற வேறுபாடில்லாமல் எல்லோருமே பின்பற்றுகிறார்கள். என் பெயர்கூட என் தாத்தாவின் பெயரே! அந்த வகையில் சின்ன
317

Page 161
O மண்ணும் மனிதர்களும்
மருதுவுக்கு 1786ல் ஒரு மகன் பிறக்க, அவனுக்கு ‘முத்துவடுகு என்றே பெயரிட்டார்கள்.
பிற்காலத்தில் சிவப்பாக அழகாக இருந்ததால் துரை என்று அழைக்கப்பட்டு பின் துரைசாமி என்ற பெயர் இவருக்கு நிலைத்து விட்டது. பிற்காலத்தில் மருதிருவர் தூக்கிலிடப்பட்டதும்பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டவர் இந்த துரைசாமிதான்! அதை பிறகு பார்ப்போம்!
இன்று நரிக்குடி சத்திரவளாகத்தில் தனது ஐந்து மனைவி மார்களுக்கும் பெரியமருது சிலையெழுப்பி உள்ளார். ஆனால் ராணி வேலு நாச்சியாருக்கு ஆறாவதாக சிலை இல்லை! இதிலிருந்து அவரை அவர் மனைவியாக ஏற்கவில்லை என்பது தெரிகிறது. அது அரசியல் காரணங்களுக்காக ஏற்பட்ட திருமணம்.
மீண்டும் படையெடுப்பு
1783ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 4ம் நாள் ஃபுல்லட்டனின் தலைமையில் பெரும்படை சிவகங்கை நோக்கி வந்தது. வரிப்பணம் கட்ட மறுத்த காரணத்தால் நவாபும் ஆங்கிலேயரும் எடுத்த முடிவு இது.
எட்டு ஆண்டுகள் நவாபின் ஆட்சியிலிருந்து அப்பொழுது தான் அவர்கள் நாட்டை மீட்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. இந்த நிலையில் போர் தொடுத்தால் தோல்வி நிச்சயம். எனவே போரைத் தவிர்க்கவே மருதுபாண்டியர்கள் விரும்பினார்கள்.
90,000 ரூபாய் தந்தால் போரை நிறுத்த ஃபுல்லட்டன் ஒப்புக் கொண்டதால் பெரிய மருது தம் வசமிருந்த 40,000 ரூபாயை உடனடியாகக் கொடுத்தார்.
மீதி 50,000 ரூபாய்க்கு தவணை முறையில் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். போர் தவிர்க்கப்பட்டது. ஆனால் இதன் பிறகும் நவாபு வரிகேட்டு இரண்டு முறை படையெடுத்தார். இரண்டாவது படையெடுப்பின் பொழுது சிறிது காலம் மீண்டும் ‘வனவாசம் மேற்கொண்டு தலைமறைவாகி வாழ்ந்தனர்.
318

சைபீர்முகம்மது O
1786ல் நவாப் மீண்டும் கிஸ்தி கேட்டு தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார். ஆங்கிலேயரின் துணையுடன் படையெடுத்துச் சென்றால்தான் மருது பாண்டியர்களை வெல்ல முடியுமென்று நவாபு முடிவெடுத்து சென்னையில் ஆளுநராக இருந்த சர் ஆர்ச்சிபால்டு காம்ப்பெல் அவர்களை அணுகி தூபம் போட்டார். சரியாக காரணமில்லாமல் படையெடுக்க அவர் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில்தான் ஒரு போலி நாடகத்தை நவாப் நடத்தினார். ராணி வேலு நாச்சியாருக்கு பெரிய மருதுவுக்கும் புகைச்சல் முற்றி ராணியை சிவகங்கை அரண்மனையில் அடைத்து வைத்திருப் பதாக ஒரு புகார்க் கடிதம் தயாரிக்கப்பட்டது. வேலு நாச்சியாரைக் காக்க நவாப் படையெடுக்க உத்தரவு கேட்டார். அனுமதி வழங்கப் பட்டது.
பெரும்படை 1789ம் ஆண்டு ஏப்ரல் 29ம் நாள் சிவகங்கைச் சிமையிலுள்ள திருப்பத்தூரில் வந்து முகாமிட்டு நின்றது. சொந்த தேசத்தவனைக் காட்டிக் கொடுப்பதே நமது தமிழனின் பரம்பரைக் குணமல்லவா? அந்த அருங்குணத்தால் தானும் வாழாமல், மற்றவர்களையும் வாழ விடாமல் செய்வது நமக்குக் கை வந்த கலை! ஆங்கில, நவாப் படைகளுடன் தனது 3000 படையையும் சேர்த்துக் கொண்டார் மதிப்பிற்குரிய புதுக்கோட்டை தொண்டைமான்! அனைத்துப் படைகளும் ஒன்று சேர்ந்து கொல்லங்குடிக் கோட்டையை முற்றுகையிட்டன. மே மாதம 14ம் நாள் கொல்லங்குடிக் கோட்டைகும்பினியார் வசம் போய்விட்டது! இதன் பிறகு கடுமையான போருக்குப்பின் இரணமங்கலம் கோட்டை மற்றும் காளையார்கோயில் அனைத்தையும் கும்பினியர் பிடித்துக் கொண்டார்கள்.
மருதிருவரும் மீண்டும் திண்டுக்கல்லில் தஞ்சமடைந்தனர். திப்புசுல்தான் பெரும்படை கொடுத்து உதவ, மீண்டும் பெரும் போர் மேகங்கள் துழிந்தன.
திருப்பத்தூரில் போர் நடந்தது! கோட்டையில் இருந்த ராணுவ வீரர்களை போராளிகள் துரத்தியடித்தனர். காளையார் கோயிலில் தங்கியிருந்த ஆங்கிலேயேர்கள். மேலும் திப்பு சுல்தான் படையனுப்பி உதவக்கூடும் என்ற அச்சத்தில் அந்த இடத்தை விட்டகன்றனர். மருது பாண்டியர்கள் மீண்டும் சிவகங்கை சிம்மாசனத்தில் அமர்ந்தனர்.
2319

Page 162
*) மண்ணும் மனிதர்களும் நெப்போலியனுக்கு மருதுபாண்டியர் தூது
Dருது பாண்டியர்கள் ஆங்கில, நவாப் படைகளுடன் மட்டும் மோதவில்லை. சந்தர்ப்பவசத்தால் பக்கத்து சேது நாட்டு மன்னருடனும் மோத வேண்டிய துழிநிலை ஏற்பட்டது. நாலு கோட்டையைச் சேர்ந்த பலர் வாரிசு உரிமை கோரி பலவித தொல்லைகள் கொடுத்து வந்தனர். கெளரி வல்லவர் என்பவர் தானே சிவகங்கைக்கு வாரிசு என்று சில பல துழிச்சிகள் செய்து வந்தார். கெளரி வல்லவர் மிகக் கேவலமான காரியத்தில் இறங்கினார். இராமநாதபுரம் அரசு அதாவது சேதுபதியின் காதில் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளைச்சி நல்ல அழகி என்றும், வெள்ளைச்சியை அடைய சேதுபதி கொடுத்துவைத்திருக்க வேண்டுமென்றும் தூபம் போட்டார். சேதுபதி வெள்ளைச்சியை மணந்தால் சிமை சேதுபதியின் கைக்கு வந்து விடுமென்று நம்பினார். பின் தானே ஆட்சிப் பொறுப்பை ஏற்பது சுலபம் என்றும் நம்பினார். அவரின் திட்டப்படி சேதுபதிக்கு பெண்ணும் கெளரி வல்லவருக்கு மண்ணும் என்பதாகும். ஆனால் அவர்களின் திட்டம் அறிந்து வெள்ளைச்சி நாச்சியார் தனது உறவுக்காரரான வெங்கண் பெரிய உடையாத் தேவரை மணந்து கொண்டார். இது காரணமாக சிவகங்கை மீண்டும் போர் நடக்கும் இடமாக மாறியது.
சேதுபதி சிறுசிறு தொல்லைகள் கொடுத்தார். சிவகங்கை எல்லைகளை அடைந்தார். இதன் காரணமாக முதல் போர் ஆனந்தூரில் இருநாட்டுக்கும் நடைபெற்றது. ஆனந்தூர் போர் 17 நாட்கள் நடைபெற்றதாக ஆவணங்கள் கூறுகின்றன. 18வது நாள் வெற்றி மருதுபாண்டியர் பக்கம் திரும்பியது. சேதுபதியின் படை நான்கு புறமும் ஓடியது. சென்ற விடமெல்லாம் கொள்ளையிட்ட வண்ணம் சென்றார்கள் சேது படையினர். 150 கிராமங்களை கொள்ளையிட்டதாக வரலாறு கூறுகிறது. (History of Madurai : by Dr. K. Rajayyan).
சிதறுண்டு ஓடிய படைகளைத் துரத்தி வந்த சிவகங்கைப்
படையினர் பரமக்குடியில் மறைந்திருந்த எதிரிகளின் குண்டுகளுக்குப்பலியானார்கள். இதில் பெரிய மருதுவின் மகன்கள்
320

சைபீர்முகம்மது O
கவண்டன் கோட்டைத்துரையும், குழைக் காதுடையாரும் பலியானார்கள்.
இந்தப் போர் வீணே நடைபெற்ற போர்! சேதிபதிக்கு நண்பர் யார் பகைவர் யார் என்று பிரித்துப் பார்க்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. இந்தப் போருக்குப் பின் இருநாட்டிலும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. சேது நாட்டுப் படையில் 10,000 பேரும் சிமைப்படையில் 5,000 பேரும் உயிர் நீத்துள்ளார்கள்.
பிற்காலத்தில் நவாபின் தூண்டுதலால் மீண்டும் படையெடுப்பு நடந்த பொழுது மருதுபாண்டியர்கள் சிமைக்கா மட்டும் விடுதலை முழக்கமிடவில்லை. சேது நாட்டின் விடுதலைக் கும் சேர்த்தே போர் புரிந்தார்கள். இங்கு தான் மருதிருவரின் பெருந்தன்மை வெளிப்படுகிறது!
தமிழகத்தின் பல பாகங்களுக்கும் நான் பயணம் செய் துள்ளேன். ஆனால் மத இணக்கத்துக்கு தென்பாண்டிச்சிமையைப் போல ஒர் இடத்தை என்னால் காண முடியவில்லை. தேவ் கோட்டை எனது மூதாதையரின் சொந்த ஊர். பக்கத்தில் இருக்கும் எலுவங்கோட்டையில் எனது பாட்டனாரின் தகப்பனார் பிறந்த வீடு இன்னும் இருக்கிறது. மண் வீடாக இருந்த அதை ஒட்டு வீடாக பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டியுள்ளார்கள். அதைக்காண நான் எலுவங்கோட்டை சென்றேன். கிராமத்தில் அண்ணன், தம்பி என்றும் மாமா, மச்சான் என்றும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டார்கள். இங்கே யார் இந்து, யார் முஸ்லீம் என்று என்னால் வேறுபடுத்திப்பார்க்க முடியவில்லை. இங்கே விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிவகங்கை மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. 96.5 கிராமங்களுக்கு இதுவே பெரிய கோயில்! இங்கே ஆண்டு தோறும் தேரோட்டம் மிகச்சிறப்பாக கடைப்ெற்று வருகிறது. இதன் அம்பலக்காரர் மலேசியாவில் தான் இருக்கிறார். சண்முகம் என்ற பெயர் கொண்டஅம்பல்க்காரர் செந்தூல் பாசாவில் காலமானதும் அவரின் மூத்த மகன் ரமேஷ் இப்பொழுது அம்பலமாகி ஆண்டு தோறும் பெரும் பொருட் செலவில் இந்த தேரோட்டத்தை நடத்தி வருகிறார். எந்த மன்னரின் காலத்தில் கட்டப்பட்டது என்ற விபரம் எனக்குக் கிடைக்கவில்லை. அண்மையில் 1994ம் ஆண்டு புதிய தேர் செய்தார்கள். மத இணக்கத்துக்கு இந்தத் தேரோட்டம் ஒரு
321

Page 163
O மண்ணும் மனிதர்களும்
பெரிய எடுத்துக் காட்டு. 200 ஆண்டுகளுக்கு முன்பே இங்கே முஸ்லீம்களும் இந்து மத சகோதரர்களும் கலந்தே வாழ்ந்து வருகிறார்கள். தேரோட்டத்தன்று ஒரு வடம் முஸ்லீம் சமூகத்துக் கென்று இன்றும் தனியாக விடப்படுகிறது! 200 ஆண்டுகளுக்கு முன்பே பட்டயம் எழுதி வைத்துள்ளார்கள். முஸ்லீம் சகோதரர்கள் வடம் பிடித்த பிறகே தேர் நகர அனுமதிக்கப்படுகிறது. கோயம் புத்தூரில் குண்டுகள் வெடிக் கின்றன! ஆனால் தென்பாண்டிச் சிமையில் தேர்களைக் கூடி இழுக்கிறார்கள். கோவை நகரில் பல்வேறு இடங்களிலிருந்து பிழைக்கச் சென்றவர்கள் வாழ் கிறார்கள். இதனால் ஒட்டு உறவு கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எலுவங்கோட்டை போன்ற கிராமங்களில் பாரம்பரியமாக வாழ்வதால் இவர்களிடம் நெருக்கம் அதிகம். இங்கே இந்துவையும் முஸ்லீம்களையும் அரசியலால் பிரிக்க சில சக்திகள் முயன்ற பொழுது ஒன்றாகத் திரண்டு அவர்களை விரட்டிய சம்பவங்கள் அதிகம்!
முஸ்லீம்கள் பல ஊர்களுக்கும் சென்று விட்டதால் இங்கே ஒரு பள்ளி வாசல் கட்ட அவர்கள் முயற்சிக்கவில்லை! இலங்கை கொழும்பு நகரில் வியாபாரம் செய்து வந்த கொழும்புக்கார இராமசாமி அவர்கள் இலங்கையில் பணம் திரட்டி இங்கே ஒரு பள்ளி வாசலைக் கட்டியுள்ளார். சிறியதாக இருந்தாலும் அழகாக மிக நேர்த்தியாக இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது இராமசாமி அவர்கள் எலுவங்கோட்டையில் தாடின் இருந்து வருகிறார். உண்மையில் இந்த ஒற்றுமையை நேரில் பார்த்து நான் ஆனந்தக் கண்ணிர் வடித்தேன். ஏக இந்தியாவும் என் மூதாதை யரின் எலுவங்கோட்டை கிராமம் போல் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?
மருதுபாண்டியர்கள் வரலாறு எழுதும் பொழுது அவர் களின் போர்த்திறம் பற்றியும் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் என்பது பற்றியும் எழுதுவது, எப்படி அவர்களைச் சரியாக கணிக்க உதவும்?
மருது பாண்டியர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் நிம்மதியாக அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய முடியாத நிலையே இருந்து வந்தது. அடுத்தடுத்து போர்களைச் சந்திக்க
322

சைபீர்முகம்மது O
வேண்டியதழ்நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள். போருக்கும் அமைதிக்கும் இடையில் அவர்கள் மக்களுக்கும் மத ஒற்றுமைக்கும் சில பல நல்ல காரியங்களைச் செய்ததை நாம் மறந்து விட Cuptg-tist gil.
பல கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் உள்ளார்கள். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் கல்யாண மகர்ல் மற்றும் சேர்வைக்காரர் மண்டபமும் இவர்கள் கட்டியது தான். மீனாட்சியம்மன் திருவாட்சிக்கு ஆலியூர் கிராமத்தைத் தானமாகக் கொடுத்தார்கள். சிங்கம்புணரியில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் கோயில் தடாகமும் மடாலயமும் இவர்கள் ஏற்படுத்தியதே. 1801ஆம் ஆண்டில் கடைசியாக இவர்கள் அளித்த கொடை இது. உஞ்சனை பாடல் பெற்ற தலமாகும். தேவகோட்டை வட்டத்தில் உள்ள ஊர். இங்கே மாகாளியம்மன் கோயில் இவர்களால் கட்டப்பட்டது. காளையார் கோயிலில் பலவித சிர்திருத்தங்களையும் செய்துள்ளார்கள். பழனி, காஞ்சி, குன்றக்குடி போன்ற தலங்களுக்கு இவர்களின் உதவி பலவிதத்திலும் இருந்து வந்துள்ளது. ஏரியூர், நாச்சியாபுரம், கோவிலூர், ஒழுகுமங்கலம், திருக்கோட்டையூர், திருப்பத்தூர், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, வாணியங்குடி, கலியநகரி, பாசிப் பட்டணம்.திருப்புல்லாணி, தடுத்துப்புணங்கியனூர், நரிக்குடி வீரக்குடி, திருச்சுழியல், மானூர், திருமோகூர் போன்ற இடங்களில் உள்ள கோயில்களுக்கு நிலங்களும் கிராமங்களும் தானமாகக் கொடுத்துள்ளார்கள்.
மதச்சார்பின்மை இவர்களின் கொள்கையாக இருந்துள்ளது. மருது பாண்டியர்களின் சொந்தச் சாதியினர் முஸ்லீம் மதத்திற்கு மாறிய பொழுது கூட அவர்கள் அதற்குத் தடை விதிக்கவில்லை. மதங்களைப் பொறுத்த மட்டில் தாராள மனப்பான்மையுடனேயே நடந்து கொண்டுள்ளார்கள்.
நரிக்குடியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு காட்டு மறக்களம் என்ற கிராமத்தை மான்யமாக வழங்கியுள்ளார்கள். இந்தப் பள்ளி வாசலில் "ஜமால் அவுலியா என்பவர் அடக்கமாகியுள்ளார். இந்தப் பள்ளிவாசலையும் தர்காவையும் நிர்வகிக்கும் பொறுப்பை இன்று சென்னை பெரம்பூரில் உள்ள "ஜமால் முகம்மது டிரஸ்ட் ஏற்று
323

Page 164
O மண்ணும் மனிதர்களும்
நடத்துகிறது. திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிர்வகிப்பது இந்த அவுலியாவின் குடும்ப சம்பந்தப்பட்டவர்களே.
பாசிப்பட்டணம் நயினா முகம்மது ஒலியுல்லா தர்கா மிகவும் பிரபலமானது. மே மாதம் 10 நாட்கள் இங்கே பெரிய அளவில் கந்தூரி விழா நடைபெறும். மருது பாண்டியரின் காலந்தொட்டு சிவகங்கை மன்னரின் கொடியை ஏற்றிதான் இந்த விழா தொடங்குகிறது. மருது பாண்டியர்கள் இந்த தர்காவிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ள கலியநகரி என்ற ஊரில் ஒரு சத்திரம் கட்டியுள்ளார்கள். இந்த சத்திரத்தில் சிதம்பர சுப்பையா என்பவர் நான் சென்ற நேரத்தில் அதிகாரியாக இருந்தார். சிதம்பர சுப்பையா தேசிகர் பக்தர்கள் புடை சூழ சர்க்கரை, பூ மற்றும் பல்வேறு பொருட்களை தர்காவிற்கு எடுத்துச் சென்று கொடுத்த பிறகே கந்தூரி வேலைகளை ஆரம்பிக்கிறார்கள்.
ப்ெரிய கோட்டை பள்ளிவாசலில் நல்ல முகம்மது ஒலியுல்லா என்பவர் அடக்கமாகியுள்ளார். இந்த ஊர் வைரம் பட்டி என்ற ஊருக்குப் பக்கத்தில் உள்ளது. சிவகங்கையிலிருந்து திருப்பாச் சேத்தி செல்லும் பஸ்சில் பயணம் செய்துதான் இங்கே போக வேண்டும். இந்த பெரிய கோட்டை தர்காவிற்கு எறும்புக் குடி என்ற கிராமத்தை மருதுபாண்டியர்கள் தானமாக வழங்கி upsitotitirasoit.
கொல்லங்குடி - காளையார் கோயிலுக் கிடையில் அழகாபுரி என்ற பஸ் நிறுத்துமிடத்தில் இருந்து சற்றே நடந்தால் மேப்பல் என்ற ஊரை அடையலாம். இங்கே ‘மேப்பல் அல்லா கோயில் என்ற பெயரில் ஒரு தர்கா உள்ளது. இதில் இரதுல் சாயுபு என்பவர் அடக்கமாகியுள்ளார். இவர் மருதுபாண்டியர்களின் உற்றத் தோழராக இருந்தவர். இரதுல் சாயுபு பெரிய மத அறிஞர். இந்த தர்காவைப் பராமரிக்க எறும்புக்குடி கிராமத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார்கள். எத்தனை கோவைக் குண்டுகளை வெடித் தாலும் இந்த ‘அல்லா கோயிலில் அன்றாடம் சகல மதத்தினரும் மரியாதை செலுத்துவது குறையவில்லை. பொன்வைக்கும் இடத்தில் 'பூ' வைக்க இவர்கள் மறப்பதில்லை. பக்கத்தில் இருக்கும் ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் எவரும் இந்த தர்காவில் பூவோ சினியோ வைத்துவிட்டே போகிறார்கள். ஆண்டு தோறும் நடைபெறும்
324

சைபீர்முகம்மது O
கந்தூரி விழாவில் நகரத்தார் சமூகத்தினரும் இந்த தர்காவில் வந்து கலந்து சிறப்பிக்கிறார்கள். இநத தர்காவை பிற்காலத்தில் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் புதுப்பித்துக் கட்டினார்.
இதுவல்லாமல் மதுரையில் மின்னா நூர்தின் பள்ளி வாசலைக் கட்டிக் கொடுத்துள்ளார்கள். திருப்பத்துாரில் இரு தர்காக்கள் உள்ளன. இவற்றுக்கும் மான்யம் அளித்துள்ளார்கள். கானாமியா ஒலி என்பவர் அடங்கிய இடத்தில் உள்ள தர்காவும், மாலிக்கபூர் படையெடுப்பின் பொழுது அவரர்ல் அனுப்பப்பட்ட ‘சமாஸ்கான் சாகேப்’ என்பவரின் தர்காவும் தான் திருப்பத்தூரில் இருக்கின்றன.
வெள்ளையர்களை எதிர்த்தாலும் அவர்கள் சார்ந்த மதத்தை மருது பாண்டியர்கள் எதிர்க்கவில்லை. சருகனி மாதாகோயிலுக்கு தேரோட்டம் நடத்த ஒரு பெரிய தேரையே பரிசாக அளித்தார்கள் சருகணி மாதா கோயிலுக்கு வேறு பல மான்யங்களும் வழங்கிய தாக செப்பேடு கூறுகிறது. ஆனால் அந்த செப்பேட்டில் உள்ள சில தவறுகள் காரணமாக அதை சரியாகக் கணிக்க முடியவில்லை. இவைகள் மட்டுமல்லாது சாலைகளையும் பெரிதாக அமைத் துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஊருணி ஏற்படுத்தி யுள்ளார்கள். ஏராளமான மரங்களை நட்டு தோப்புகளை உருவாக்கியுள்ளார்கள். குன்றக்குடியில் மருதரசர் பூங்கா என்ற பெயரில் பெரிய பூங்கா அமைத்துள்ளார்கள். பல ஊர்களிலும சத்திரங்கள் அமைத்திருந்தார்கள். இன்று சிலஅழிந்துவிட்டன. பல சத்திரங்கள் இப்பொழுது பள்ளிக் கூடங்களாக செயல் படுகின்றன. குறிப்பாக மானாமதுரையில் உள்ள சத்திரம் இப்பொழுது பள்ளிக் கூடமாக செயல்படுகிறது. சில சத்திரங்கள் அரசு அலுவலகங்களாக மாறியுள்ளன.
ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக இருந்தவர் திரர் திப்பு சுல்தான். மைதுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இவரின் ஆட்சி தமிழகத்தில் திண்டுக்கல் வரையிலும் நீண்டு கிடந்தது. இன்றும் திப்பு சுல்தானின் கோட்டைக்ள். அரண் மனைகள், அவரின் பாளயக்காரர்கள் ஆண்ட மிச்ச சொச்சங்கள் திண்டுக்கல்லில் ஆங்காங்கே இருக்கின்றன. இந்திய வரலர்ற்றில்
325

Page 165
k) மண்ணும் மனிதர்களும்
தனது மண்ணுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் விடுதலைக்காகவும் பல்வேறு வழிகளில் உழைத்தவர். அக்காலகட்டத்திலேயே ஆங்கிலேயரை விரட்டுவதற்கு மற்ற நாடுகளின் உதவியை இவர் நாடினார்.
ஆங்கிலேயரிடம் இருந்த ஆயுத பலத்தை இந்திய மண்ணில் உள்ளவர்களால் சமாளிக்க முடியாது என்பதை அறிந்து ஒரு சர்வதேசப் பார்வைக்கு இந்திய விடுதலையை எடுத்துச் சென்றார். தனது தூதுவர்களை பல நாடுகளுக்கும் அனுப்பி உதவிகள் வேண்டினார். அவர் காலத்தில் ஐரோப்பாவின் மாவீரனாகக் கருதப்பட்ட நெப்போலியனுடன் தொடர்பு கொண்டு பெரும் படையுடன் ஆங்கில ஆதிக்கத்தை அடக்கும்படி கேட்டுக் கொண்டார். 1798ல் திப்பு நெப்போலியனுடன் தொடர்பு கொண்டார். இரண்டு வீரர்களின் நட்பும் நெருக்கமாகியது. ஒரு வீரனை மற்றொரு வீரன் விரும்புவது இயற்கை தானே? பிரெஞ்சு விடுதலை இயக்கமான OLOBINECLUBல் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். மைதுரில் அந்த நட்பின் அடையாளமாக பிரெஞ்சு தேசத்தின் கொடியை ஏற்றினார். 60,000 படைகளுடன் செங்கடல் கடந்து கெய்ரோ வந்தடைந்து அதன் பின் கைபர் கணவாய் வழியாக இந்திய மண்ணுக்கு வந்து உதவுவதாகத் திட்டமிட்டு நெப்போலியன் ஒரு கடிதம் எழுதினார். சவூதி அரேபியாவின் ஜித்தா நகர் சரீப் மூலம் அக்கடிதம் திப்புவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அக்கடிதம் எப்படியோ ஆங்கிலேயர் வசம் சென்று சேர்ந்து விட்டது. பிறகு ஏதோ ஒரு வழியில் அக்கடிதம் இந்தியா வந்ததாக வரலாறு கூறுகிறது.
திண்டுக்கல்லில் அடைக்கலமாகியிருந்த மருதுபாண்டி யருக்கும் திப்பு சுல்தானுக்கும் ஏற்கனவே நட்பு மலர்ந்திருந்தது. முதல் சிமை மீட்புப் போருக்கு முழுப் படையும் ஆயுதங்களும், பணமும் கொடுத்தவர் திப்புவின் பாளையக்காரர் என்றாலும், இதில் திப்புவின் அனுமதியும் ஆசியும் இருந்தது. பாண்டிநாடு முழுதும் விடுதலை அடைய வேண்டுமென்றால் அதற்குச் சரியான ஆட்கள் மருதுபாண்டியர்கள் தான் என்று திப்பு தீர்க்கமாக நம்பினார். நெப்போலியனைச் சந்திக்கச் செல்லும் தூதுக்குழுவில் சிவகங்கைப் பிரநிதிதியும் இருக்க வேண்டும் என்ற யோசனையின்
326

சைபீர்முகம்மது O
பேரில் சிமையின் தூதுவராக கருப்பையா சேர்வை சேர்த்துக் கொள்ளப்பட்டார். நெப்போலியனைக் கண்டு திரும்பிய கருப்பையா சேர்வை வரும் வழியில் திப்புவைச் சந்திக்கச் சென்ற இடத்தில் கடுமையான நோய் கண்டு மரணமுற்றார். திப்பு சுல்தானின் நடவடிக்கைகளை அறிந்த வெள்ளையர் மைதுர் மீது பெரும் போர் தொடுத்தனர். பிரெஞ்சு உதவிகள் வருவதற்கு முன்பே இந்தப் போரை 1799ல் அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் போரில் திப்பு மரணமுற்றார்!
மருதிருவரில் சின்ன மருது பரந்த அரசியல் ஞானமும் தீர்க்கமான முடிவுகள் எடுப்பதில் வல்லவராகவும் திகழ்ந்தார். ஆங்கிலேயர்களுக்கும் நவாபின் படைகளுக்கும் அடிக்கடி பணிந்து போவதைவிட ஒரு தீர்க்கமான எதிர்ப்பணியை அவர்கள் உருவாக்கினார். இதனாலேயே பாஞ்சாலங்குறிச்சியில் கட்ட பொம்மன், அவர் தம்பி ஊமைத்துரை போன்றவர்களுடன் நட்பு கொண்டு மறைமுகமாக ஒரு புரட்சித் தீயை அவர் வளர்த்துக் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே டச்சுக்காரர்களுடனும் நெப்போலியன் போன்ற பிரெஞ்சுக்காரர்களுடனும் அவரின் நட்பு விரிந்தது எனலாம். -
இப்படி மறைமுகமாக சின்ன மருது செய்து வரும் அரசியல் ஆயத்தங்கள் தங்களை இந்திய நாட்டை விட்டே விரட்டி விடும் என்பதை வெள்ளையர்கள் அறிய வெகுகாலம் பிடிக்கவில்லை.
தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்த தமிழனே தமிழனுக்குத் தூக்குக் கயிறாம். என்ற கவிஞர் கா. பெருமாள் பிற்காலத்தில் பாடியது தமிழனின் வரலாற்றில் எக்காலத்துக்கும் பொருந்தும். சின்ன மருது பல்வேறு பாளையக்காரர்களையும் திப்பு சுல்தான் போன்றவர்களையும இணைத்து ஒரு பெரிய நடவடிக்கைக் குழுவை அமைத்து செயல்பட்டார். புதுக்கோட்டைத் தொண்டைமான் போன்றவர் களுக்கு இது பொறுக்குமா? ஒரு தமிழன் புகழ்பெறவோ, தலைமையேற்று ஆட்சி செய்யவோ இன்னொரு தமிழனுக்கு எக்காலத்தில் மனம் பொறுத்திருந்தது? நமது பிறவிக் குணத்தைக் காட்டாவிட்டால் பிறகு நாம் தமிழர்கள் என்று எப்படி உலகத்துக்கு
327

Page 166
O மண்ணும் மனிதர்களும்
நிரூபிப்பது? தன்னை ஓர் ஆங்கிலேயனோ நவாபோ ஆட்சி செய்ய மனமுவந்து ஒப்புக்கொள்ளும் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு மருதுபாண்டியர்கள் தன்னாட்சி செய்வது எந்த வகையிலும் ஒப்பவில்லை.
இதன் காரணமாகவே நவாபோ ஆங்கிலேயர்களோ சிவகங்கைச் சிமை மீதும் பாஞ்சாலஞ்குறிச்சி மீதும் படையெடுத்த நேரத்தில் எல்லாம் தனது குதிரைப் படை காலாட்படைகளை ஆயிரக்கணக்கில் கொடுத்தனுப்பினார். மற்றவர்களை நத்தியும நக்கியும் வாழ்வது எவ்வளவு கேவலம் என்பது இந்த நூற்றாண்டு வரையிலும் கூட நமது சமுதாயத்துக்குத் தெரியாயாமல் இருப்பது தான் அதிசயம், ஆச்சரியம்!
நமது அருகில் கேட்கும் சில தமிழ் விடுதலைக்குரல்களைக்கூட நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற ஆதங்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது. சில காலத்திற்கு முன் தமிழனை மாற்றார்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இதனால் அவனுடைய இலக்கியம், கலை, பண்பாடு, ஏன் சமூக உணர்வே மூழ்கிவிட்டது. அதன் பிறகு தமிழர்களின் தாயாதிச் சண்டையில் அது மேலும் சிரழிந்தது 13ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு முடிய தமிழன் வந்தவர் களுக்கெல்லாம் விருந்து வைத்து சொந்த நாட்டானை சுரண்டினான். இன்று அனைத்தும் சுரண்டப்பட்ட நிலையிலேயே தமிழ்ச்சமூகம் இருந்து வருகிறது. இன்றைய நிலையில் கூட தன்னை ஒரு தமிழன் ஆள்வதை விட வேற்று மொழிக்காரன் ஆள்வதையே சுகமாகக் கருதுகிறான்! இந்தக் குணம் என்று மாறுகிறதோ அன்றே தமிழர் தம் வாழ்வு மிகச் சிறப்பாக அமையும். இன உணர்வும், மொழியுணர்வும் தலைதூக்கினாலே போதும் மற்றவர்களுக்கு அழுக்குத் துணி மூட்டை சுமக்கும் கழுதையாகக் கூட செயல்பட இவன் தயங்கியதே இல்லை! தனது சொந்த இனத்தின் கைக்குட்டைகூட இவனுக்கு எப்பொழுதும் கனமாகவே இருந்து வந்துள்ளது. எது எப்படியோ சின்ன மருதுவின் நடவடிக்கைகளை அப்போதைக்கப்போது வேவு பார்த்து கும்பினியாரிடம் பக்குவமாகச் சொல்லி வந்தார் பெருமதிப்பிற்குரிய புதுக்கோட்டை தொண்டைமான்!
328

சைபீர்முகம்மது O
கோள் சொல்வது, காட்டிக் கொடுப்பது, பெட்டிசன் போடுவது குறிப்பாக பின்னுக்குக்குத்துவது எல்லாம் நமக்குள் அன்றிே இருந்தது. இன்று சற்று அதிகமாகவே இருக்கிறது.
சிலர் நேரிடையாக மோத மாட்டார்கள். மற்றவர்களைத் தூண்டிவிட்டு வேலை பார்ப்பார்கள்.புதுக்கோட்டைத்தொண்டை மானும் இப்படித்தான் நேரிடையாக மருது பாண்டியர்களிடம் மோதாமல் பின்னுக்கு இருந்து நவாபு, கும்பினியரைத் தூண்டி விட்டார். பொதுவாகவே தென்பாண்டிச் சிமை பற்றி நான் பெருமையாகவே எழுதி வந்துள்ளேன். ஆனால் இதே தெண் பாண்டிச் சிமையில் தான் துரோகிகள் இருந்துள்ளார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒரு அருமையான வசனம் வரும். இன்றும் அதை என்னால் மறக்க முடியவில்லை. இந்த அத்தியா யத்தை எழுதும் பொழுது அது மிக மிகக் கை கொடுக்கிறது. 'அமுதும் விஷமும் ஒரே இடத்தில் தான் பிறக்கிறது என்று சிவாஜி கணேசன் சக்தி கிருஷ்ணசாமியின் வசனத்தைப் பேசுவார். அது எவ்வளவு உண்மை!
இந்த காட்டிக் கொடுத்த குணம் புதுக்கோட்டைத் தொண்டை மானுக்கு மட்டுமே இருந்ததாக நினைக்காதீர்கள். பிற்காலத்தில் பெரிய மருதுபாண்டியர் வாத நோயால் தாக்கப்பட்டு கை கால் வுராமல் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தார். அப்பொழுதும் வெள்ளையர்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் பெரிய மருதுவிற்கு கையுதவியாக இருந்தவர்தான். அதைபின் வரும் அத்தியாயங்களில் காண்போம்! a.
கட்டபொம்மன் மறைவு
கட்டபொம்மனதும் அவனோடுள்ளவர்களதும் உயிருக்கு உடனடியாக ஆபத்து என்று கருதிய சின்ன மருது, சிவகங்கைச் சிமைக்குள்ளே இருந்த காளாப்பூர் காட்டில் தலைமறைவாக இருக்கும்படி அனுப்பிவைத்தார். காளாப்பூர், புதுக்கோட்டை எல்லைப் பகுதியில் இருந்த திருக்களம்பூருக்கு மேற்கே உள்ளது.
329

Page 167
O மண்ணும் மனிதர்களும்
அப்படி புதுக்கோட்டை எல்லைக்கு அனுப்பியது கூட ஒருவகை ராஜதந்திரம்தான். புதுக்கோட்டை தொண்டமான் ஆங்கிலேயருக்குப் பரம விசுவாசி. எனவே அங்கே கட்டபொம்மன் இருப்பது பாதுகாப்பானது என்று சின்ன மருது நம்பினார். நம்பிக்கையில்தானே வாழ்க்கையே ஓடுகிறது.
ஆனால் புதுக்கோட்டை மன்னர் தனது படைகளை அனுப்பரி 10 நாட்கள் காடுகளில் தேடி, இறுதியில் கட்டபொம்மனையும் அவரது குழுவினரையும் பிடித்து வெள்ளையரிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட உடனேயே சிவசுப்பிரமணிய பிள்ளையையும் செளந்தர பாண்டியனையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டார்கள். அக்டோபர் 17 ஆம் நாள் கயத்தாற்றில் கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டார். ஊமைத்துரை, சிவத்தையா ஆகிய கட்டபொம்மனின் இரு தம்பிகளும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
1799 ஆம் ஆண்டு, மாபெரும் இரண்டு விடுதலை வீரர்களை இழந்தது. கன்னடப் போராளிகளுக்கும், ஏன் தென்னாட்டு போராளிகளுக்கும் பெரும், சக்தியாக விளங்கிய திப்பு சுல்தானுடைய வீழ்ச்சியும் கட்டபொம்மனின் மரணமும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அனைத்து எதிர்ப்பு இயக்கங்களும் சிவகங்கைச் சிமையின் தலைமையில் ஒன்று திரண்டன. 1800 ஆம் ஆண்டில் கேரளத்தில் போராளிகளுக்கு மாபெரும் உந்துசக்தியாக விளங்கிய கேரள வர்மன் இயற்கை எய்தினார். என்றாலும் போராளிகள் பின்னடைந்து விடவில்லை. 1800ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி விடுதலைப் படையின் தளபதிகள் அனைவரும் திண்டுக்கல் விருப்பாட்சி பாளையததில் கூடினார்கள்.
கோயமுத்தூரில் ஆங்கிலேயரின் பலம் வாய்ந்த கோட்டையாக ஒரு கோட்டையை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இந்தக் கோட்டையே இன்று கோவை மாவட்ட மத்திய சிறைச்சாலையாக மாறியுள்ளது. செக்கிழுத்த வ.உ. சிதம்பரனார் வாடிய சிறை இதுதான்!
எந்த நாட்டு விடுதலைக்காக தியாகிகள் செக்கிழுத்தார்களோ, எந்த நாடும் மக்களும் விடுதலை அடைய வேண்டுமென்று கண்ணிரும் செந்நீரும் விட்டு தியாகப்பயிர் வளர்த்தார்களோ,
330

சைபீர்முகம்மது O'
அந்தப் பூமியில்தான் இன்று மதக் கலவரங்களும், குண்டு வெடிப்புச் சம்பவங்களும் நடைபெறுகின்றன!
கோயமுத்துாரின் ஆங்கிலேயர் கோட்டையைத் தாக்குவது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அப்பொழுது வட கன்னட மண்டலத்தின் பிரிவுக்கு கணிஜகான் தலைவராக இருந்தார். 4000 குதிரைப் படைகளுடன் அவர் புறப்பட்டு வந்து தெற்கு மண்டலத் தலைவராக இருந்த மருது பாண்டியர்களுடன் இணைந்து கோட்டையை முற்றுகையிடுவதெனத் தீர்மானிக்கப் பட்டது. கோவைக்கு அருகில் உள்ள மலைகளில், ஷேக் உசேன் என்பவர் தலைமையில் கிராமங்களில் உள்ள படைகள் எல்லாம் திரட்டி வந்து வைக்கப்பட்டன. புரட்சியைத் தொடங்க ஜூன் மாதத்தைத் தீர்மானித்திருந்தனர். ஆனால் சரியான தகவல்கள் போராளிக் குழுக்களுக்கு இடையில் சென்று சேர்வதற்கான வழிகள் அடைபட்டிருந்தன. இதனால் கணிஜகானின் 4000 குதிரைப் படைகள் வருவதற்கு முன்பே ஒதுர் படே முகம்மது. தாராபுரம் நோக்கி ஆங்கிலேயருக்கு எதிர்ப்பாக படையை நடத்தத் துவங்கிய நேரத்தில், அரவாக்குறிச்சி கார்க்காகவுரும் தாக்கத் தொடங்கி னார். இந்த நேரத்தில் குதிரைப் படையின் வருகைக்காக மருது பாண்டியர்கள் காத்திருந்தார்கள். குதிரைப்படை சரியான நேரத்தில் வந்து சேர முடியாமல் இடையிலேயே ஆங்கிலேயர்கள் தடுத்து விட்டார்கள். இதனால் இந்த முதல் போராட்டம் பெரிய தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் விடுதலைப் படைகள் சற்று அமைதி கொண்டன என்றாலும், பாளையங்கோட்டைச் சிறையில் சிவத்தையா, ஊமைத்துரை ஆகியவர்களோடு, மேலும் 15 போராளிக் குழுத் தலைவர்களும் அடைபட்டிருந்தனர். இவர்களை விடுதலை செய்ய முதன் முறையாக மருது பாண்டியர்களால் அனுப்பி வைக்கப்பட்ட படை வீரர்கள் ஆங்கிலேயரிடம் சிறைப்பட்டு மரணதண்டனைக்குள்ளானார்கள்.
இரண்டாவது முறையாக, திருச்செந்துார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் சென்று வரும் வழியில் பழம், விறகு விற்பவர்கள் போல் வந்து போராளிகளை சிறையில் இருந்து
331

Page 168
O மண்ணும் மனிதர்களும்
மீட்டார்கள். சிவத்தையா, ஊமைத்துரை இருவரும் சிறையிலிருந்து தப்பினார்கள். ܫ
ஊமைத்துரை பிறவியிலேயே ஊமை என்றாலும், மிகவும் சாமர்த்தியசாலி என்று ஆங்கிலேயர்களே போற்றி எழுதி வைத்துள்ளார்கள். எந்தக் கூட்டத்திலும் தனது சைகை மூலமே மக்களைத் தன் பக்கம் இழுத்துவிடும் மாபெரும் ஆற்றல் இவருக்கு இருந்துள்ளது. ஊமைத்துரை என்று செல்லப் பெயர் கொண்ட இவரின் உண்மைப் பெயர் குமாரசாமி என்பதாகும்.
சிறையில் இருந்து மீண்ட இரு சகோதரர்களும் மூன்றே நாளில் பாஞ்சாலங்குறிச்சி திரும்பி மக்களை ஒன்று திரட்டினார் கள். சிவத்தையா மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இடிந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை உமியும் மண்ணும் கொண்டு 13 அடி உயரத்தில் எழுப்பி முடித்தார்கள். மக்கள் சக்தி ஒன்றுபட்டால் ஒரு நாட்டில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஓர் நல்ல எடுத்துக்காட்டு.
சிவத்தையா பதவி ஏற்றதும் பதட்ட நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எண்ணினார். ஆங்கிலேயரிடம் நட்பாக இருந்த பாளையக்காரர்களிடம் நட்பு வேண்டி தூதுவர்களை அனுப்பி னார். ஊத்துமலை ஜமீன்தார், புதுக்கோட்டை தொண்டைமான், தஞ்சை சரபோசி மன்னர் ஆகியவர்களைத் தவிர, மற்றவர்கள் பாஞ்சாலங்குறிச்சியின் நட்புக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.
மீண்டும் எழுந்து நின்ற சிவத்தையா, ஊமைத்துரை சகோதரர்களுக்கு உதவுவதற்கு, மருதுபாண்டியர்கள் 20 ஆயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்தனர். முகவைப் போராளிகள் 30 ஆயிரம் பேர் தோள் கொடுத்து நின்றனர். மீண்டும் தங்கள் நாட்டின் பகுதிகளை வென்று சுதந்திர பூமியாக மாற்றுவதற்கு ஊமைத்துரை இரவும் பகலுமாக உழைத்தார். பல இடங்களில் வெள்ளையர் படைக்கும் ஊமைத்துரை படைக்கும் போர் நடந்தது. இந்தப் போரில் பூரீவைகுண்டம், குளத்தூர், காடல்குடி, நாகலா புரம், கோலார்ப்பட்டி, ஏழாயிரம் பண்ணை ஆகிய பகுதிகள் போராளிகள் வசம் வந்து சேர்ந்தன. ராணுவ முக்கியத்துவம்
332

சைபீர்முகம்மது O
வாய்ந்த கமுதி கோட்டையையும் தளபதி மயிலப்பன் தலைமையில் நெல்லைப் படை பிடித்தது!
இனியும் விட்டுவைத்தால் சரிவராது என்று "கருதிய வெள்ளையர்கள் கடையநல்லூரில் பெரும் படையைக் குவித்தனர். . அன்று இரவே சிவகங்கை, முகவைப்பகுதி போராளிகள் வெள்ளையர்களை அவ்விடத்தை விட்டு ஓட ஓட விரட்டினார்கள்.
மீண்டும் கட்டபொம்மன் வாரிசுகளைத் தலையெடுக்க விடாமல் செய்யவேண்டுமென்றால் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்குவது தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்த வெள்ளை யர்கள். போராளிப்படைகள் வரும் வழிகள் எல்லாவற்றையும் மறித்தனர். இருந்தும் பாஞ்சைப் படையின் 30 ஆயிரம் பேரும். மருது பாண்டியரின் 20 ஆயிரம் வீரர்களும் பாஞ்சாலங் குறிச்சியைக் காத்து நின்றார்கள். வெள்ளையர்கள் மூர்க்கத்தன மாக பீரங்கிகளால் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார்கள். வெள்ளையர் படைக்கு அக்னியு தலைமையேற்று இருந்தான். 53 நாட்கள் கோட்டை முற்றுகை நடந்தது. கடைசியாக ஊமைத்துரை நேரில் போர்க்களத்தில் குதித்தார். 600 போராளிகள் மாண்டனர். கோட்டை வெள்ளையர்வசம் வீழ்ந்தது. பிடிபட்ட போராளிகளை யாதொரு விசாரணையும் இன்றி அக்னியு தூக்கில் போட்டான். பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த இப்போரில் மலாய் ரெஜிமெண்ட் படையைச் சேர்ந்த மலாயாப்படைப் பிரிவும் ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்டது.
போர்க்களத்தில் கடுமையான காயங்களுடன் இரத்தவெள் ளத்தில் கிடந்தார் ஊமைத்துரை. அச்சமயம் தன் மகனை இரவில் அங்கே தேடிவந்த ஒரு தாய், மகன் அடிபட்டுக்கிடப்பதைக் கண்டார். அவனோ தன்ன்னக் காப்பாற்றுவதை விட தலைவர் ஊமைத்துரையைக் காப்பாற்றும்படி தாயிடம் வேண்டினான்.
அந்தத் தாயும் ஊமைத்துரையை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று படுக்க வைக்கவும், வெள்ளையர்கள் வீடு வீடாக போராளிகளைத் தேடிக் கொண்டு அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. தனது மகனுக்கு அம்மை நோய் கண்டுள்ளது என்று அத்தாய் கூறியதைக் கேட்டு வெள்ளையர் வெளியேறினார்கள். ஊமைத்துரை காப்பாற்றப்பட்டார்! இனியும் அங்கே இருப்பது
333

Page 169
மண்ணும் மனிதர்களும்
ஆபத்து என்று உணர்ந்து, இரவோடு இரவாக சிவகங்கை நோக்கிப் பயணமானார் ஊமைத்துரை.
புதிதாகப் பதவியேற்ற கலெக்டர் லூஸிங் டன் மிகுந்த கெடுபிடிக்காரனாக இருந்தான். இந்த நேரத்தில் அடைக்கலம் என்று வந்த இரு சகோதரர்களையும் எப்படி வேறு இடத்திற்கு அனுப்பவது? சிவத்தையா, ஊமைத்துரை இருவருக்கும் சிவகங்கை யில் அடைக்கலம் தந்த காரணத்தாலேயே அங்கே மீண்டும் போர் மேகங்கள் தழ ஆரம்பித்தன என்று கூட சொல்லலாம். இதை ‘வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்’ இப்படி விவரிக்கிறது.
இப்படியாகவே அக்கினி மேசரும் துப்பு விசாரித்துக் கொண்டிருக்க செப்பமுடனந்த மருதுபாண்டியன் சிமையில் ஊமையனிருப்பதையும் அறிந்து அக்னி மேசர் துரையங்கே விரைந்து பட்டாளம்தான் சேர்த்து மருதுபாண்டியன் நாட்டினிலே வந்து வளைத்துக் கொண்டானே அக்கினிசு. (நா.வானமாமலை பதிப்பித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்’ - பக்கம் 40)
ஊமைத்துரையை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் சிவகங்கைச் சிமை மீது போர் தொடுப்போம் என்று அக்னியு பிடிவாதமாக நின்றான். அடைக்கலம் தந்ததால் சிவகங்கை படைகளம் காண நேர்ந்தது!
1801 ஜூன் 2ஆம் தேதி மேஜர் கிரே தலைமையிலான படை திருப்பூவணத்தில் அடி வைத்தது. குண்டுகள் வெடிக்க ஆரம்பித்தன. இதன் பிறகு பல்வேறு இடங்களில் போர் மூண்டது. சிங்கம்புணரி, திருப்பத்தூர், பிரான்மலை, மானா மதுரை, அரண்மனை, சிறுவயல் என்று அது தொடர்ந்தது.
மருதுபாண்டியர் நாட்டை விட்டு காட்டுக்குள் தஞ்சமடைய வேண்டிய துழநிலை உருவானது. ஆங்கிலேயர்கள் வேட்டை
334

சைபீர்முகம்மது O
நாயென அவர்களை மோப்பம் பிடித்துத் தேடினார்கள். மருதுபாண்டியர்கள் காட்டுக்குள் அரண் அமைத்து அடுத்த கட்டப் போருக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள், கருத்தான் என்ற தமிழ்மகன் காட்டிக்கொடுக்க, சின்னமருது சோழபுரத்தில் பிடிபட்டார். கருத்தான் சும்மா வெறுமனே பிடித்துக் கொடுக்க வில்லை. ஏதோ தவறுதலாக காட்டுமிருகத்தைச் சுடுவதுபோல் சின்னமருதுவை சுட்டுப் பிடித்தான்.
சின்னமருதுவிடம் நெருக்கமான நட்பு வைத்திருந்த வெல்ஷ் என்ற அதிகாரி பிற்காலத்தில் தனது ‘ராணுவ நினைவுகள்’ எனும் குறிப்பேட்டில் இவ்வாறு எழுதி வைத்துள்ளார்.
"நான் சின்னமருதுவை, போரின் முடிவினால், கொடும் விலங்கைத் துரத்திப் பிடிப்பதைப் போல் துரத்திடும் விசுவாசத்திற்கு ஆளானேன். படுகாயப்படுத்தப்பட்டு, ஊழியப்படை வீரர்களால் பிடிக்கப்பட்டு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்கத்திணறிக் கொண்டிருந்த நிலையில் சிறையில் அடைக்கப் பட்டிருக்கக் கண்டேன்.”
-(Col. J. Welsh 'Military Reminiscenes' Page 130)
பெரிய மருதுபாண்டியர் வாதநோயால் பாதிக்கப்பட்டு பசியாலும் தாகத்தாலும் காடுகளில் வாடி, மதகுபட்டி என்ற ஊரை அடுத்துள்ள ஒக்கூரில் மயங்கிய நிலையில் இருந்தபொழுது, சின்ன மருதுவைக் காட்டிக் தொடுத்த அதே கருத்தான் காட்டிக் கொடுக்க, 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் வெள்ளையர்கள் அவரைக் கைது செய்தார்கள்.
இதன் பிறகு நடந்த கொடுமைகள் சரித்திரத்தில் இன்றும் இரத்தத்துளிகளாகத் துடிக்கின்றன. மருதிருவரை திருப்பத்தூர் கோட்டையில் சிறை வைத்தான் அக்னியு. 1801 அக்டோபர் 24ஆம் நாள் உலகத்தில் எங்குமே நடந்திராத வகையில் சின்னமருதுவைத் தூக்கிலிட்டான் அந்தப் படுபாவி, ஆம்! சின்னமருது மிகவும் ஆபத்தான பேர்வழி என்று அவன் நினைத்த காரணத்தாலும்,
335

Page 170
O மண்ணும் மனிதர்களும் தூக்கிலிடும் பொழுதுகூட தப்பித்து விடுவார் என்று நினைத்த் தாலும் இரும்புக்கூடு செய்து அதில் வைத்துத் தூக்கிலிட்டான்!
பெரிய மருதுவும் அன்றைய தினத்திலேயே தூக்கிலிடப் பட்டார். அத்தோடும் அக்னியுவின் ஆத்திரம் அடங்கவில்லை. 500 போராளிகளை அன்றே வரிசையாகத் தூக்கிலிட்டு, அவர்களின் தலைகளை திருப்பத்தூர் வீதிகளில் வரிசையாக கம்பங்களில் செருகி வைத்தான். முண்டங்களை வண்டிகளில் ஏற்றி நகர்வலம் வர வைத்தான்!
மருது பாண்டியரின் வாரிசுகளான மகன் சிவத்ததம்பி, பேரன் முத்துசாமி ஆகியோரையும் ஒரே நாளில் தூக்கிலிட்டான். இதில் சிறுவனாக இருந்த சின்ன மருதுவின் 15 வயது மகன் துரைசாமியை மட்டும் பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தினான்!
1801 அக்டோபர் 24 ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட மருது பாண்டியர்கள் மூன்று நாட்கள் கழித்து அக்டோபர் 27ஆம் நாள் அன்றுதான் காளையார் கோயிலில் நல்லடக்கம் செய்யப்பட் L-п тенбiт.
இதே நாளில், மற்ற இடங்களில் பிடிபட்ட ஊமைத்துரை, பொம்மையா நாயக்கர் என்ற சிவத்தையாவும் தூக்கிலிடப் பட்டார்கள்.
தென் இந்தியாவில் விளையும் புளிக்கு அதிக மதிப்பு உண்டு. இந்த தென்பாண்டிச்சிமையில் வீரர்கள் எல்லாம் புளியமரக் கிளைகளில்தான் தூக்கிலிடப்பட்டார்கள். அன்றிலிருந்து இந்த கோரத்தைத் தாங்காமல்தான் புளியம் பழங்கள் அதிகமாக புளிக்கவாரம்பித்தனவோ என்னவோ?
தமது மரண சாசனமாக கீழ்க்கண்ட விருப்பத்தை தூக்கு மேடையில் இருந்த பொழுது பெரிய மருது பாண்டியர் வெளியிட்டார். மரணதண்டனை பெறுபவரின் இறுதி ஆசை என்ன என்று கேட்கும் வழக்கம் அன்றும் இருந்துள்ளது. *
‘நான் சுரோத்தியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ, எந்தப் பொருளை வழங்கினேனோ, அவை யெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்ய
336

சைபீர்முகம்மது Ο வேண்டும். இதுதான் எனது பிரார்த்தனை, வேறு ஒன்றும் இல்லை.
(டாக்டர் உவே. சாமிநாதய்யரின் 'மருது பாண்டியர்-நான் கண்டதும் கேட்டதும் பக்கம் 78)
இன்று இந்திய மக்கள் அடைந்திருக்கும் விடுதலைக்கு அன்று தூக்கில் தொங்கிய இப்பேர்ப்பட்ட தியாகிகளே காரணம்.
‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பிற்காலத்தில் - காந்தி காலத்தில் - பாடுவதற்கு கடந்த காலத்தில் கத்தி தூக்கி, இரத்தம் சிந்திய இந்தத் தியாகிகளின் உழைப்பே மூலம் என்று சொல்லவேண்டும்.
தனக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை எந்த மண்ணும் மறந்து விட முடியாது. அப்படி மறந்தால் அந்த மக்கள் மற்றவர்களால் மறக்கப்பட்டு விடுவார்கள். இங்கே சரித்திரத்தை நாம் திரும்பிப் பார்ப்பது ஏன் என்றால், ஒரு வலிமையான இன மக்களாக இந்தத் தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. பின்னே திரும்பிப் பார்த்து தனது தூரங்களை ஒரு கணம் மனதில் நிறுத்தினால் முன்னே செல்வதற்கு மிகப் பெரிய ஆற்றலையும் அனுபவங் களையும் அது தரக்கூடும்!
பினாங்கு தீவில் - மருதுபாண்டியர் வாரிசு
துTக்கிலிடும் சடங்குகள் முடிந்த பிறகு நாடு படுபயங்கர அமைதியில் இருந்தது. 500 பேரை ஒரே நேரத்தில் தூக்கிலிட்டதும், அவர்களின் தலைகளை திருப்பத்துார் சாலைகளில் நட்டு வைத்து, உடல்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றதும் மக்கள் மனதில் ஒருவித பீதியை ஏற்படுத்தவே எனப் புலனாகிறது.
“வெல்ஷ் சின்ன மருதுவின் உற்ற நண்பனாக இருந்தவர். இருவரும் வேட்டையாட பல முறை சென்றது குறித்தும், வளரி எறிவதில் அவர் கை தேர்ந்தவர் என்பது குறித்தும் வெல்ஷ் தமது ராணுவக் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
337

Page 171
O மண்ணும் மனிதர்களும்
மருதுவின் அரண்மனைக்கு அடிக்கடி செல்வதும் விருந் துண்பதும் வெல்ஷின் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சந்தர்ப் பங்களில் சின்ன மருதுவின் இளைய மகன்துரைசாமி வெல்ஷ"க்கு அணுக்கமான இளவயது நண்பனாக ஆகிவிட்டான்.
தூத்துக்குடியில் கடைசியாக கப்பலில் தீவாந்திரம் அனுப்பும் பணியில் இருந்தது பற்றி வெல்ஷ் தனது நினைவுக் குறிப்பில் எழுதியிருக்கும் வரிகள் நெஞ்சை நெருடுகின்றன.
த்துக்குடிக்கு அனுப்பப்பட்ட எதிராளிகளின் காவலுக் குத் தலைமையேற்று நடத்தும்படி பணித்து, எனது படையிலிருந்து என்னை விடுவித்து உத்தரவிட்டனர். அங்கு நிரந்தரமாய் கப்பலேற்றம்’ எனும் தீவாந்திர தண்டனைக் குள்ளாகியிருக்கும் எனது பழைய பரிதாபத்துக்குரிய நண்பனின், உயிரோடுள்ள ஒரே இளைய மகன் 15 வயதே நிரம்பிய இளைஞன்துரைசாமியின் கட்டுகளைத் தளர்த்தும் சோக நிறைவு கிடைக்கப் பெற்றேன்' அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்ட 70 கைதிகள் ஏறக்குறைய நான்கு மாதங்கள் கப்பல் வருகைக்காக அங்கே காத்திருந்தார்கள். சிறையாக ஒரு பண்டகசாலை பயன்படுத்தப்பட்டது.
இந்த சிறைவாச காலத்தில்துரைசாமியின் காவலுக்கு முழுப் பொறுப்பு வகித்தவர் கர்னல் வெல்ஷாகும். ஒரு பக்கம் கடமை யுணர்வு, மறுபக்கம் நண்பனின் மகன் என்ற நிலையில் வெல்ஷ் தனது மன நிலையை தானே தனது நூலில் எழுதியதைப் படிக்கும் பொழுது மனது மிகவும் பதறுகிறது.
இந்த இனிய இயல்புடைய இளைஞன் சாந்தமும் பெருந்தன்மையும் கொண்ட பொறுமையுடன் தனது கொடூர விதிவசத்தை நொந்து கொள்ளாமல் சகித்துக் கொண்டான். ஆனால் அவனது அழகிய முகத்தோற்றத்திலிருந்து சோகபாவம் கண்டு அவனைப் பார்க்காமலோ அவன் பேரில் இரக்கம் காட்டாமல் இருக்கவோ முடியவில்லை. அவன் சொந்தப் பொறுப்பில் விடப்பட்டதால், அவன் தப்பிப்பதற்கு
338

சைபீர்முகம்மது O
நானே உடந்தையாய் இருக்க முடியாது. ஆனால் அரண் செய்யப்பட்ட அந்தப் பெரிய பண்டக சாலையில் நானும் அவனும் ஒரே கட்டடத்தில் இருந்ததால் அவனை இந்த அவமானகரமான கட்டுக்களில் இருந்து விடுவித்துக் கொள்ள உதவவும் முன்பு (இளவரசனாக இருந்த போது) அவனுக்குக் கீழிருந்த சாதாரணமானவர்களின் கூட்டத்தி லிருந்து பிரித்துத் தனியாக வைத்திருக்கச் செய்யவும் என்னால் முடிந்தது. விலங்குகளை நீக்கி தனித்து இருக்க வைத்தது போலவே உடலுக்கு நலன் பயக்கும் உணவு கொடுக்கச் செய்ததுடன், அவனது சொந்தச் சாதியைச் சேர்ந்த கெளரவமான ஒருவரை நியமித்து அவனுக்கு ஆடை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தாராள இடவசதி யுள்ள அறையில் சிறையதிகாரி மற்றும் அச்சிறைய திகாரியின் குடும்பத்துடன் சேர்ந்து தங்கிக் கொள்ளவும் அவனுக்கு வசதி அளிக்கப்பட்டதால் அவனது உடல்நலமும் மன நலமும் பாதிப்பின்றி பத்திரமாகவே இருந்தது' -Col. J.Welsh. “Military Reminiscenes' (Page 133, 134). 70 தண்டனைக் கைதிகளுடன் பினாங்குத் தீவிற்கு துரைசாமி "இளவரசன்’ என்ற நிலையில் கப்பலில் ஏற்றப்பட்ட அந்த தழ்நிலையை மிக வேதனையுடன் விவரிக்கிறார்.
ஆறாவது படைத் தொகுதியைச் சேர்ந்த ‘லெப்டினன்ட் ராக் ஹெட் என்பவர் அந்த கைதிகளைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். ராக் ஹெட்டிடம் துரைசாமியை தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைத்து அவரின் நலனைக் கவனித்துக் கொள்ளும் படி வெல்ஷ் கேட்டுக் கொண்டார். இறுதிப் பகுதியை வெல்ஷ் இப்படி எழுதுகிறார்.
“11-2-1802ல் கப்பல் துறையில் என்னுடைய பொறுப்பை லெப்டினன்ட் ராக் ஹெட்டிடம் ஒப்படைத்த அந்த நாளை நான் என்றும் மறக்க முடியாது. துரைசாமியைப் படகில் நான் கைப்படப்பிடித்து ஏற்றிய போது எனது அந்த இளைய நண்பனின் எழில் வதனத்தில் இன்னமும் நான் பாசத்தையும்
339

Page 172
Q மண்ணும் மனிதர்களும்
விரக்தியையும் ஒரு சேரக்கான முடிந்தது. என்றென்றைக்
கும் அருமைத் தாய்த் திருநாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதால் அருமைத் தோழர்கள் பெருந்துயரத்தினால் மெளனமான சோகத்தோடு காணப்பட்டார்கள்.
தனது நாட்டை அதிகம் நேசிப்பவன் அந்த மண்ணில் மடிவதையே பெரிதும் விரும்புவான். அதுதான் அவனது இலட்சியமாக இருக்கும். தேச விடுதலைப் போராளிகளை நாடு கடத்துவதில் பெரிய தண்டனை என்ன தெரியுமா?
அவர்கள் நேசித்த நாட்டை விட்டு வெளியேற்றி அதையே
நினைத்துநினைத்து மடிய வைப்பதுதான்! ஆங்கிலேயர்கள் இதைத் தான் உலகம் முழுவதும் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் நேதாஜியை பர்மாவில் சிறை வைத்தார்கள். நெல்சன் மண்டேலாவை அவர் நேசித்த இடத்தை விட்டு வெகுதூரத்துச் சிறையில் - ராயின் தீவில் - வைத்தார்கள். இது அவர்கள் தங்கள் மண்ணை நினைத்து நினைத்து ஏங்கித் தவிக்க வேண்டும் என்பதற்காகவே!”
அப்பொழுது ‘பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ என்றழைக்கப்பட்ட
பினாங்குத் தீவுக்கு 70 கைதிகளோடு துரைசாமி, வாராப்பூர் பொம்மை நாயக்கர், தளவாய் பிள்ளை உட்பட 72 பேர்களுடன் அல்லாமல் தனியாக நாடு கடத்தப்பட்ட வெங்கண் பெரிய உடையாத் தேவரையும் சேர்த்து 73 போராளிகளை அந்தக் கப்பலில் ஏற்றி அனுப்பிய பட்டியல் கிடைத்துள்ளது.
ஆங்கிலேயரின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தந்த பெயர்
பட்டியல்படி பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப் பட்டவர்கள்.
340
1. சிவகங்கை வெங்கம் உடையத்தேவர். 2. மருதுபாண்டியர் மகன் துரைசாமி. 3. வெறப்பூர் பொம்மை நாயக்கர். 4. ஜகந்நாத ஐயர் (இராமநாதபுரம் புரட்சி அமில்தார்) 5. ஆண்டியப்பத்தேவர்.
6. சடமயன்.

. சைபீர்முகம்மது O
7. கோளியாமி தேவர். 8. பாஞ்சாலங்குறிச்சி தளவாய் குமாரசாமி நாயக்கர். 9. மேலுர் குமாரத்தேவர். 10. பாண்டியம்புத்துர் பாண்டியன். 11. அருங்குளம் முத்து வீரர். , • 12. மனக்காடு சாமி.
13. இராமசாமி. . 14. நான்கு நேரி இருளப்பத்தேவர். 15.கொம்பாடிப்ாண்டியன் நாயக்கர். 16. மவுடா தேவன்.
17. மலையில் மாடன்.
18. சின்னப்பிச்சைத் தேவன். 19. வீரபாண்டியத் தேவன்.
, 20, ഖ്ரபெருமாள் தேவன்.
21 கருப்புத் தேவன்.
22. சுளுவ மணியன்.
23. நந்தசாமி.
24. பெருமாள். «
25. சின்னப்பிச்சைத் தேவன் மகன் உடையத் தேவன்.
26. சின்னப்பிச்சைத் தேவன் மகன் தேவி நாயக்கர். 27 முத்து ராமத்தேவன்.
28. மண்டைத்தேவன்.
29. பாயென்.
30. அழகு நம்பி.
31. வைகுண்ட தேவன்.
32. பூரீயணத்தேவன்.
33. Gasrtesmfulu Goor GOOTIT!b.
34. முள்ளுவேதாவு.
35. சந்தானம்.
36. வீரபத்திரன்
341

Page 173
O மண்ணும் மனிதர்களும்,
342
37. Fou fóLuð.
38. Lufttusif.
39. இராமசாமி.
40. இருளப்பன்.
41. குமாரசாமி.
42. வீரபாண்டியன்.
43. வெங்கட்ராயன்.
44 р-60pц штfї.
45. முத்துராக்கு.
46. ஆண்குளம் முத்துராக்கு. 47. திருக்கரங்குடி சொக்குத் தளவான். 48. இருளப்பத் தேவன். 49. ஏலம்பட்டி மல்லை நாயக்கன். 50. கட்டநாயக்கன்பட்டி சுப்பிரமணிய நாயக்கர். 51. தொம்மச்சி நாயக்கர். 52. அடினுார் சுளுவமணிய நாயக்கர்.
53. குளத்துர் பாளையக்காரர் பேரன் இராமசாமி. 54. எருவுபோப்புரம் பிச்சாண்டி நாயக்கர். 55. கள்ளுமடம் தளவாய். 56. சுவந்தனை சின்னமாடன். 57. கண்டீஸ்வரம் வைதும் மூர்த்தி. 58. தளவாய்ப் பிள்ளை (தேவர் காவல் மணியக்காரர்) 59. அவரது மகன் சுளுவமணியன். 60. பெத்தன நாயக்கர் (துத்துக்குடிப் புரட்சித்தலைவர்) 61. அவரது மகன் கிருஷ்ணம நாயக்கர். 62. குளத்துர் வாலான். 63. அரசச்சேடி மயிலாளன். 64. கங்கராயக் குறிச்சி வேலமுத்து. 65. சுவாமி இராமன். 66. நாஞ்சிநாடு துரங்குடி பாலையா நாயக்கர்.

சைபீர்முகம்மது O
67. குமரன் 68. வெள்ளைக் கொண்டான் வெள்ளையன்.
69. ராமன். 70. அழகு சொக்கு 71. ஷேக் ஹ"சைன் 72. அப்பா நாயக்கர். 73. குப்பண்ண பிள்ளை
Dr. K. Rajayyan - "South Indian Rebellion' (P.272 - 274)
இதில் வெங்கணப் பெரிய உடையாத் தேவரை மட்டும் பிரிட்டிஷ் போர்னியோ கரையோர நகரான பெங் கோலன் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். உண்மையில்துரைசாமியையும் அதே இடத்தில் உள்ள ‘மால்பரோ கோட்டை (Fort Malborough) சிறைக்கே முதலில் அனுப்ப நினைத்தனர். ஆனால் அவன் ஆபத்தானவன் இல்லை என்ற காரணத்தால் பினாங்குத் தீவிற்கு பெருமனதுடன் அனுப்பினார்கள் போலும்!
‘‘அட்மிரல் நெல்சன்’ என்ற பெயர் கொண்ட கப்பலில் தான் இளவரசன் துரைசாமி, மற்றொரு இளவரசன் பெயர் கொண்ட (பிரின்ஸ் ஆப் வேல்ஸ்) தீவிற்கு அனுப்பப்பட்டான். இந்தப் பயணத்தில் 73 கைதிகளில் 70 பேர் தான் பினாங்குத் தீவைத் தொட்டனர். கப்பலில் 76 நாட்கள் பயணத்தில் மூவர் மடிந்தனர். கரையில் இறங்கிய ஐந்து மாதங்களிலேயே கொடிய நோயால் 21 கைதிகள் இறந்து விட்டார்கள்.
பகலில் சாலை அமைப்பது. காடு அழிப்பது போன்ற வேலைகள் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டன. இரவில் கொட்டடிகளில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள். இன்றுள்ள வளமான பினாங்குத் தீவு சஞ்சிக் கூலிகளால் மட்டுமல்லாது அதற்கு முன்பே தமிழ் நாட்டு விடுதலைப் போராளிகளாலும் செப்பனிடப்பட்டுள்ளது.
துரைசாமி, உன் காலடி பட்ட இடம் எது சொல்! அதை என் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அப்போதாவது எங்களுக்கு அடிமை உணர்விலிருந்துவிடுதலை கிடைக்கலாமல்லவா? இந்த
343

Page 174
() மண்ணும் மனிதர்க்ஞ்
ஏனோ தானோ சமுதாயத்தை உன் காலடிபட்ட மண்ணாவது காப்பாற்றுமென்று நம்புகிறேன்!
துரைசாமி 17 ஆண்டுகள் பினாங்குத் தீவில் திவாந்திரக் கைதியாகக் கழித்து விட்டார். இந்த நிலையில் சினா, காண்டன் போன்ற பகுதி ஆணிை புரிந்து விட்டு ஓய்வுக்காக அப்பொழுது சுற்றுப்பயணி: ார்க்கம் ஒன்றாகிவிட்டபினாங்குத்திவுக்கு ஒய்வு பெற கர்.ை ' )ஷ வந்தார்.
விதி மீண்டும துரைசாழியையும் வெல்ஷையும் சந்திக்க வைத்ததுதான் பெரிய வ.த A
இவ்வளவு காலத்துக்குப்*சிறகு வல்ஷ் தனது பழைய நண்பனைச் சந்தித்ததை மிக உருக்கமாக தனது ராணுவக் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். அதை அப்படியே தருவதுதான் இங்கே பொருத்தமாக இருக்கும்.
'தூத்துக்குடியிலேயே எல்லோருக்கும் தெரிய எங்கள் நட்பு முற்றுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் விதி எனக்காகவே இன்னுமொரு கடும் வேதனையைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்தது! அதனால் தான் என்னுடைய உடல்நலம் கருதி கடலோர வாசத்திற்காக 1818ம் ஆண்டல் விதி என்னை பினாங்கிற்கு கொண்டு போய்ச் சேர்த்தது போலும் அங்கு நான் போய்ச் சேர்ந்தபோது ஆளையோ முகத்தையோ தீர்க்கமாக நினைவுபடுத்திப் பார்த்தாலன்றி அடையாளங் காணமுடியாத, முதுமையினால் தளர்ந்த ஒரு வயோதிகள் என் முன்வந்துநின்றான். நான் அவனது பெயரையும் வந்த நோக்கத்தையும் கேட்டேன். கொஞ்ச நேரம் என்முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்து முடிந்ததும் சுருக்கம் விழுந்த அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணிர் உருண்டோடியது. இறுதியில் என் கேள்விக்குரிய பதிலாக அவனிடமிருந்து அந்த வார்த்தை வெளிப்பட்டது. தொ.ர.சா.மி’ என்று அந்த வார்த்தை ஈட்டி போல் என் இதயத்தில் பாய்ந்தது. ஆம்! தண்டனை எனக்கு உடனடியாகக் கிடைத்து விட்டது. எனது அன்பிற்குரிய
344

... : : சைபீர்முகம்மது O
பரிதாபகரமான கைதி (துரைசாமி) மாறுபட்ட நிலையில் ஆனால் அதே மனத்திட்பத்துடன், அந்த நாள் ஞாபகங்களை சிந்தையில் தேக்கி, பழைய நட்பினை மனதில் அசை போட்டவாறு என் முன் வந்து நிற்கிறான். இங்கே என் பெயரை தற்செயலாகக் கேட்டதும், பழைய: பாசம் அவனிடம் துளிர்த்திருக்க வேண்டும் என்னுடைய பதவியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அவனுடைய துயரத்தைக் குறைக்க உதவக் கூடும் எனும் தவறான நம்பிக்கையை அவனுக்கு ஊட்டியிருக்க வேண்டும் என்று. பெரிதும் நான் அஞ்சுகிறேன். தன் ஊரில் பிழைத்திருக்கக் கூடிய அவனுடைய குடும்பத்தினருக்குக் கடிதங்களை என் மூலம் அனுப்பக் கருதினான். ஆனால் அப்படிச் செய்வது, அவன் அரசியல் கைதி ஆதலினால், நடப்பு அரசு ஆனைகளுக்கு முரணானது என்று நான் தெரிந்து கொண்டேன். முன்னர் நான் இந்தியாவில் பணியாற்றிய பொழுது எனக்கு ராணுவ அதிகாரியாக விளங்கிய கர்னல் பாணர்மேன் தான். பினாங்கில், தற்போது ஆளுநராக இருந்தார். அவர் கருணையும் பரிவும் நிரம்பியவர். அவரைச் சென்று (நான் துரைசாமி தன் குடும்பத்திற்கு கடிதம் அனுப்புவது குறித்து) கண்டு கொண்ட போதிலும் அது. அவரோடு முடிகிற நடவடிக்கையாகத் தெரியவில்லை. எனவே மறுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். இருந்தாலும் இறுதியில் நான் ஒரு
நம்பிக்கையைத் தெரிவிக்கிறேன். நான் இதுநாள் வரை சேவை புரிந்து வரும் மாண்புமிகு கும்பினியின் கருணை
நெஞ்சம் கொண்ட இயக்குநர் யாராவது ஒருவ்ர் கைக்கு
இந்தக் கடிதம் போய்ச் சேரலாம். அதன் மூலம் இந்த குற்றமற்ற மனிதனின் துன்பங்கள் முற்றிலுமாக நீக்கப்படா விட்டாலும் அவை கூடிய மட்டிலும் குறைக்கப்படலாம். இது மாதிரியான கருனை மிகு நடவடிக்கையினால் அரசின் கொள்கையைப் பொறுத்து தீய விளைவுகள் ஏற்பட
345

Page 175
O மண்ணும் மனிதர்களும்
வாய்ப்புகள் குறைவே! ஏனெனில் இந்தியா முழுதும்
இப்பொழுது ஆங்கிலேயர் வசம் நிலைபெற்றுவிட்டது"
வெல்ஷின் இந்த சுய வெளிப்பாடு அவரின் மனவேதனையை நமக்குத் தெரிவிக்கின்றது. என்னதான் நாடு பிடிக்கும் ஆசையில் வந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை வெல்ஷின் குறிப்புகள் காட்டுகின்றன.
உண்மையில் 15 வயதே நிரம்பரிய பாலகனான துரைசாமியை நாடு கடத்த வேண்டிய அவசியம் என்ன?
மருதுபாண்டியர்களின் பிள்ளைகள் யாருமே போர்க்களம் காணாதவர்கள் கிடையாது. பதினைந்து வயது பாலகன் துரைசாமியும் ஒருமுறைகளத்தில் இறங்கினான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? சிக்கல் செருக்களத்தில் போராளிப்படையை வழி நடத்திச் சென்றவர் இந்த துரைசாமி தான்! இந்தப் படை கும்பினிப்படையில் நான்கில் ஒரு பகுதியைக் கொன்றொழித்தது. இதை சிவகங்கை சரித்திர கும்மி இப்படிக் கூறுகிறது:
நாலுபட்டாளமுடன்
நல்லிராமநாதபுரம்
மேலே நடப்பதென்
விளம்பியே முந்து வந்தார்
வந்தார்கள் சிக்கல்
வழியே வரும்பொழுது
அந்தவிதமறிந்து அழகு
துரைச்சாமியவன்
கொக்குத் திரளில்
குதித்தரா சாளியெனச்
சிக்கல் வழிமறித்துச்
சினந்து பொருதளவில்
நாலிலொன்று பட்டாளம்
நமன்பா லடைந்தார்கள்.
346

சைபீர்முகம்மது :ெ கும்பினிப்படையில் பாதியை அழிக்கக் காரணமாக இருந்த துரைசாமி சிறுவனாக இருந்தும் அவன் மேல் திராத வன்மம் கொண்டான் அக்கினியு. அதன் காரணமாகவே திவாந்திரம் அனுப்பி வைத்தான்.
நெல்லைச்சிமை சரித்திரம் எழுதிய எஸ். குருகதாசப் பிள்ளை கீழ்க்கண்ட குறிப்பை கடைசியாக துரைசாமி குறித்து எழுதி வைததுளளாா. به ،
இதற்குச் சிறிது காலத்துக்கப்பால் கவர்மெண்டாரால் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவை ஆதாரமாகக் கொண்டு பினாங்கிலுள்ள கவர்மெண்டார் சின்ன மருதுவின் குமார ரான துரைசாமி என்பாரை விடுதலை செய்தனரென்றும் அவர் திரும்பவும் சிவகங்கைச் சீமைக்கு அங்கிருந்து வந்து கொண்டிருக்கும் காலையில், ஏதோ சில காரணங்களால்
திடீரென்று இறந்து விட்டாரென்றும் சொல்லிக் கொள்ளப்
படுவதில் உண்மை எவ்வளவு என்பதைக் கண்டு கொள்ளக் கூடாததாலும் அக்காரணங்களைப் பற்றி நமக்குத் திட்ட மாகத் தெரியாததாலும் அவைகளை இது சமயம் நிறுத்திக் கொண்டோம்”
என்று பட்டும் படாமலும் எழுதி வைத்துள்ளார்.
ஒரு மாபெரும் விடுதலை வீரனின் மகன் இப்படி அநாதையாக இறந்திருக்க முடியுமா? அப்படியே இறந்திருந்தால் அவரோடு வந்தவர்கள் கைதிகளேயானாலும் ஒரு அடையாளத்தை யாவது அவரது கல்லறையில் பினாங்குத்திவில் ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவர் பினாங்கில் இறந்தார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
பேராசிரியர் சி. ராக்கப்பன் அவர்கள் 1980ல் ஒரு அறிக்கை
afudfrtill rigoirenstrf. (Prof. C. Rakkappan, Report of the Marudhu Pandian Brothers Descendants Claemants Advisory Committee / 1980)
இந்த அறிக்கையின்படி துரைசாமியின் இறுதி முடிவு கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது. “1821ல் துரைசாமி திரும்ப
347

Page 176
O மண்ணும் மனிதர்களும்
இந்தியாவிற்கு வந்து, மதுரையில் தங்கிய சிறிது காலத்திலேயே இறந்து விடுகிறார்.
. இக்குறுகிய காலத்தில் அவருக்குத் திருமணமானதாகத் தகவல் இல்லை” என்று அந்த அறிக்கை வழி தெரிந்து கொள்ள முடிகிறது. 1963ம் ஆண்டில் நான் ‘சின்ன மருதுவின் மகன்’ 6t று ஒரு சிறுகதை எழுதினேன். அது தமிழ் முரசில் வெளிவந்தது. பின்ாங்கில் 'துரைசாமி இருந்ததாகவே அக்கதை முடிகிறது. அண்மையில் நண்பர் ப. சந்திரகாந்தம் தமது ‘மாறுபட்ட கோணங்க்ள்’ என்ற தலைப்பில் எழுதி வந்த கதைகளில் ஒன்று கூட துரைசாமியின் முடிவு பினாங்கில் தான் என்பது போல் முடித்திருந்தார். சரித்திரத்தைக் கொஞ்சம் கிண்டிக்கிளறிப் பார்த்த பிறகே துரைசாமியின் முடிவில் இறுதி வடிவம் கிடைத்தது.
மருதநாய்கம்
“வாழ்க்கையில் வருகின்ற் சில கணங்கள் எல்லைக் கற்களாக நின்று. கடந்த் காலத்தை முடிவுறச் செய்கின்றன. அதே நேரத்தில் ஒரு புதிய திக்கில் வலுவாக நமக்கு வழியையும் காட்டுகின்றன’ என்று கார்ல் மார்க்ஸ் 1837ம் ஆண்டு நவம்பர் 10ம்நாள் ஜெர்மனியிலிருந்து தனது தந்தை ஹென்றிக் மார்க்சிற்கு தனது மாணவப் பருவத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
எப்பொழுதுமே வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தல்ைமுறையின் வாதமாக இருந்துவந்துள்ளது. ஆனால் முன்னேற்றப்பாதையில் இருந்து பின் நலிந்து விட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறுகள் படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஏதோ தேவையற்று பின் நோக்கிச் சென்று நமது சிந்தனைகளை நிலைகுத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும், உங்களையும் உங்கள் வரலாற்றையும் புரிந்து கொள்ளவும் அறிவுபூர்வமாக ஊடுருவிச் சிந்திக்கவும் சற்றே பின்
348
 

சைபீர்முகம்மது O
நோக்கிச் சென்றால் தான் முன்னே வைக்கும் அடியை சரியாக வைக்க முடியுமென்று நான் நம்புகிறேன்.
வரலாறு என்பது இனிய தேவதைக் கதைகள் அல்ல! உலக அரங்கில் ஒவ்வொரு நாட்டிலும் அது விசித்திரமான புதிய மாறு வேடங்கள் போட்டு புதுப்புது உருவங்களில் காட்சியளித்தாலும் அதன் அடிப்படை ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. மனித குலத்தின் மேல் வரலாற்றுக்கு இருக்கும் பாதிப்பை அது உரத்த குரலில் பேசியே வந்துள்ளது. வரலாறு என்பது வெறும் புள்ளி விபரங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு காலகட்டத்திலும், முதற்கடமையே உயிர் பிழைத்து வாழ்வதுதான்' என்பதை அது எக்காலத்திலும் எல்லா வடிவங்களிலும் சுட்டுகிறது. ".
எனது பயணத்தொடரில் நான் வரலாற்றை இணைத்துக் கொண்டேன்.வெறுமனே சென்றேன், கண்டேன். திரும்பினேன் என்று எழுதுவதில் யாருக்கு என்ன நன்மை? ஓரளவு வரலாற்றையும் இணைத்தே இந்தத் தொடரை எழுதி வருகிறேன்.
வரலாறு என்பதே ஆபத்தான விஷம் கலந்த மருந்துத்ான்! சிலரில் உடலுக்கு விஷம் கலந்த மருந்து தேவைப்படும்! சிலருக்கு அது ஆபத்தை விளைவிக்கும்! வரலாறு மனங்களை சில சமயங்களில் ஆத்திரமடைய வைக்கிறது. பழைய புண்களை மீண்டும் கிளறச் செய்கிறது. தங்கள் இனத்துக்கு நிகர் வேறு இனம் இல்லை என்ற தலைக்கணத்தைத் தருகிறது. சில இனங்கள், மதங்கள், நாடுகள் மேல் கசப்பும் ஏற்பட வைக்கிறது. என்றாலும் வர்லாறு எழுதப்படாமல் இருக்க முடியாது. -- .” .״ه . د مي .
இந்தத் தொடரை ஆரம்பித்த பொழுது எனக்கு பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தன. இந்திய வரலாற்றில் ஒரு 200 ஆண்டு கால வரலாறே சரியாக இல்லை என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லித்தான் ஆகவேண்டும். கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் போன்றவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் வாழ்ந்துள்ளார்கள். ஆனால் இந்த வரலாற்றின் சில முக்கியக் குறிப்புகளை அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தில் எழுதி வைத்துள்ளதுதான் பெரிய பரிதாபம்!
349

Page 177
O மண்ணும் ம்னிதர்களும்
‘யூசுப் கான்' என்ற மருதநாயகத்தின் வரலாறு கூட சரியாக
இல்லை. அவரை விடுதலை வீரர் என்றும் அந்நியரை எதிர்த்தவர் என்றும் பல்வேறாக எழுதி வைத்துள்ளார்கள். மருதநாயகம் திரைப்படம் கூட அவரை ஒரு விடுதலை வீரராகவே காட்ட முற்படுவதாக செய்திகள் கூறுகின்றன. இதில் மருதநாயகம் இந்துவா பிறவியிலேயே முஸ்லீமா என்ற சர்ச்சை வேறு இன்னும் ஒயவில்லை. எனது மதுரைப் பயணத்தில் பல்வேறு சரித்திர சான்றுள்ள இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாண்டியர்கள் ஆட்சியில் மதுரை மீன் கொடி பறக்க முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தளம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் நீண்ட வரலாறு படைத்த பெரிய ஆலயம். நக்கீரனின் திரம் விளைந்த பூமி பரமன் முக்கண் திறந்து அவனை எரித்ததாக புராணங்கள் சொல்லியமண்! அது மட்டுமல்ல பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்டு, நரிதனைப் பரிகளாக்கிய பழைய கதைகள் நடந்த இடம்!
இவற்றுக்கும் மேலாக தெலுங்கு மன்னர்கள் அந்த தமிழ் மண்ணை பல நூறு ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளார்கள். அதற்கு அடையாளமாக திருமலை நாயக்கர் மகால், ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் தெலுங்கு ராணி மங்கம்மா சத்திரம் என்று அன்றும், பாங்சாலங்குறிச்சியை ஆண்ட தெலுங்கு பேசும் பாளையக்காரர் கட்டபொம்மனின சிலையை இன்றும் ÍTGOJOT GOTLĎ.
நான் மதுரை சென்ற பொழுது ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு பக்தர்கள் பல ஆயிரம் பேர் பஸ்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தார்கள். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் கூட்டம் நெருக்கியபடி நின்றது. நான் ஒரு வழி காட்டியை ஏற்பாடு செய்து கொண்டேன். அவர் பெயர் சாம்பசிவம்! நன்றாக தமிழ் கற்றவர், ஆசிரியராக இருந்து பதவி ஓய்வு பெற்றவர். எனக்கு ஒவ்வொரு பகுதியையும் காட்டி விளக்கத்தோடு பல சரித்திரக் குறிப்புகளையும் கூறினார். நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்பதை அறிந்த பிறகு எங்களின் நெருக்கம் அதிகமாகியது. அவர் அப்பொழுது கூறிய ஒரு வார்த்தை என்னை மிகவும் கலக்கமடைய வைத்தது.
350

சைபீர்முகம்மது O “உங்கள் மனைவி பிள்ளைகளின் நகைகளைக் கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஐயப்ப பக்தர் கூட்டத்தில் நிறைய ஜேப்படித் திருடர்களும் அதே பக்தர் உடையில் கலந்து இருக்கிறார்கள். நேற்று இரவு மூன்று நான்கு பெண்களின் கழுத்துச் சங்கிலிகளை அறுத்தெடுத்துவிட்டார்கள்
‘சாமியோ ஐயப்பா என்ற குரல் ஓங்கி ஓங்கி கோயில் முழுதும்ஒலித்தது!
‘சங்கிலியை அறுப்பது இங்கே தப்பப்பா!' என்று எப்படி, யாரிடம் போய் சொல்வது.
மீனாட்சியம்மன் ஆலயத்தின் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு சரித்திரம் கதையாக நிற்கிறது. சாம்பசிவம் எனக்கு, விடாமல் எல்லா தூண்களிலும் உள்ள குறிப்புகளைக் கூறினார். பொற்றாமரைக் குளத்தில் முன் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டேன்.நக்கீரன் சிவனின் துடு தாங்காமல் இந்தக் குளத்தில் தானே விழுந்ததாக கதை சொல்கிறது. வள்ளுவரின் திருக்குறள் இந்தக் குளத்தில் தானே சங்கப் பலகையில் அரங்கேறியதாக வரலாறு எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். இப்பொழுது அங்கே சங்கப்பலகையும் இல்லை, நக்கீரனும் இல்லை! அதோடு குளத்தில் நீரும் இல்லை! நமது தற்கால இலக்கிய வளம் போல அந்தக் குளமும் வற்றிக் கிடந்தது!
மதுரை புராணத்தில் - வரலாற்றிலும் தமிழர்களின் வாழ்வில் ஒன்றிப்போன பெருநகரம். ஆனால் 1754 ஆம் ஆண்டு மதுரையைச் சுற்றி தென்பாண்டி நாடெங்கும் இருந்த பாளையங்களிள் பாளையக்காரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒரு விண்ணப்பத்தை முன் வைத்தார்கள். அடிமைச் சிறு மதியையும் நம்பிக்கையின்மையையும் அந்தக் கடிதத்தில் காணும் பொழுது நம்மை நாமே எப்படி விலை பேசியுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மறவர் தலைவர்கள் பட்டாணியரான மியானாவின் ஆட்சியை நீடிக்கச் செய்தார்கள். இது தென் பாண்டிப் பாளையக்காரர்களுக்கு விருப்பமில்லாத செயலாக அமைந்தது. ஆங்கிலேயரின் உதவியுடன் மதுரையில் ஒருமன்னரை ஆட்சியில்
351

Page 178
o மண்ணும் மனிதர்களும்
அமர்த்த எண்ணினார்கள். 1754 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் நாள் அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் தாமஸ் சாண்டர்சிற்கு ஒரு கடிதம் எழுதினார்கள். .
‘இந்நாட்டை ஆள்வதற்கு எங்களுக்கு இருபதாண்டுகளாக எந்த மன்னரும் இல்லாதிருப்பது மிகவும் வருந்தத் தக்கது. பாளையக்காரர்களாகிய நாங்கள் ஐம்பது அல்லது அறுபது பேர் இருக்கிறோம். எங்களுக்கு ஆணை பிறப்பிக்க எந்த மன்னரும் இல்லாது நாங்கள் மோசமான துழநிலையில் இருக்கிறோம். மேன்மை தங்கிய தாங்கள் இந்நாட்டை அமைதியுறச் செய்து எங்களுக்கு அரசரை அமர்த்தி உதவுவீர்களாயின் அது உங்களுக்கு *நல்ல பெயரையும், புகழையும் கொடுக்கும்.
பிறந்தவுடன் காளைக் கன்று துள்ளிக் குதிக்கும். அதை கயிற்றில் கட்டுவது அவ்வளவு சுலபமல்ல. நாள் செல்லச் செல்ல கயிற்றைக் கையில் எடுத்தவுடன் காளை தானே முன் வந்து கழுத்தை நீட்டும்! அடிமைத்தனம் அதற்குப் பழகி விட்டதால் கழுத்தில் கயிறுடன் இருப்பதையே அது விரும்புகிறது.
தென்பாண்டி பாளையக்காரர்களும் இப்படித்தான் அடிமைச்
'சுகம் கண்டுகொண்டிருந்தனர்.தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து ஆட்சி செய்யும் மனப்பக்குவம்கூட அவர்களிடம் இல்லை என்பதை மேற்கண்ட கடிதம் நமக்கு காட்டுகிறது.
அழிந்து போன நாயக்கர் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவும், ஆங்கில நவாபு ஆட்சியின் கீழ் அடிமைகளாக வாழவுமே இவர்கள் ஆசைப்பட்டார்கள்.
இதே கால கட்டத்தில் நவாபுகளின் ஆட்சியையும் ஆங்கிலேயர் ஆட்சியையும் எதிர்த்து தன்னாட்சி அமைக்க முயன்ற ஐதர் அலியும், திப்பு சுல்தானும் வரலாற்றில் இன்றும் போற்றப்படுவதற்கு இதுவே காரணம். -
மதுரையில் 1757ல் நாயக்கர் ஆட்சியை நிறுவும் முயற்சியில் பாளையக்காரர்கள் தோல்வியடைந்தார்கள். இதற்குக் காரணம் வீரமும் விவேகமும் கொண்ட யூசுப்கான் என்ற மருதநாயகத்தின் எழுச்சிதான்! : i.
352

சைபீர்முகம்மது O யார் மருதநாயகம்?
கிம்மந்தான் (Commandan) கான் சாகிபு என்று வரலாற்றில் கூறப்படும் இவரின் மற்றொரு பெயர் யூசுப்கான் என்பதாகும். யூசுப்கான் 1744ஆம் ஆண்டு ‘ஜேக்குவா’ என்ற பிரெஞ்சுத் தலைவரிடம் படைப்பயிற்சி பெற்றார். வாள் வீசுவதில் மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தார். துப்பாக்கி சுடுதல், பீரங்கியை இயக்குதல், குதிரையேற்றம் முதலியவற்றோடு படை நடத்தும் திறனையும் இவர் பெற்றார். பிரெஞ்சுக்காரர்களிடம் இருக்கும் பொழுதே ஆங்கிலம், பிரெஞ்சு, போத்துகிசிய மொழிகளையும் இவர் கற்றுத் தேர்ந்தார்.
எஸ்.சி.ஹில் என்பவர் யூசுப்கானின் வரலாற்றைத் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார். சென்னை கன்னிமாரா நூலகத்தில் ஒரே ஒரு நூல் மட்டுமே இருந்தது. குறிப்புகள் எடுக்க அதை எடுத்துப் படித்தேன். பிறகு அண்மையில் மீண்டும் சென்று பார்த்த பொழுது அந்த 'மருதநாயகம் காணாமற்போய்விட்டார். யூசுப்கான் மருதநாயகம் என்ற பெயரில் பனையூரில் இந்துவாகப் பிறந்து பிறகு முஸ்லீமாக மதம் மாறியதாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஆனால் ஹில்ஸ் எழுதிய நூலில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. ஆலிம் என்ற முஸ்லீமுக்குப் பிறந்தவர் தான் யூசுப்கான் என்று கூறப்படுவதில் உண்மை உள்ளது. ஆலிம் அவர்கள் புதுச்சேரியில் தையல் தொழில் நடத்தி வந்துள்ளார். யூசுப்கானும் தந்தையிடமே தனது இளமைக்காலத்தில் தையல் தொழிலைக் கற்று வந்தார். இவரின் திடகாத்திரமான உடல் அமைப்பும் எதற்கும் அஞ்சாத நெஞ்சமும் தான் பிரெஞ்சுத் தலைவரைக் கவர்ந்தது. ஜேக்குவாவிடம் இவர் பெற்ற பயிற்சிகளின் மூலமாக சிறந்த படைத் தளபதியாக இவர் பெயர் பெற்றார்.
யூசப்கானின் வீரத்தை தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங்கன் (1739-1763) அறிந்து அவரை தனது படையில் சேர்த்துக் கொண்டார். பிற்காலத்தில் ஆங்கிலேயரை யூசுப்கான் எதிர்த்த பொழுது மன்னர் பிரதாப சிங்கன் இவருக்குப் பல வழிகளிலும் உதவியுள்ளார்.
353

Page 179
O மண்ணும் மனிதர்களும்
மன்னர் பிரதாப சிங்கனின் படைகளுக்கு இக்கால கட்டத்தில் வேலைகள் அதிகம் இருக்கவில்லை. இந்த நேரத்தில் நெல்லூரில் முகம்மது கமால் என்பவர் ‘கிளைவ்’ என்ற ஆங்கிலேயருக்கு படை திரட்டிக் கொண்டிருந்தார். யூசுப்கான் கிளைவின் ஆங்கிலப் படையில் போய் சேர்ந்து கொண்டார். அதன் பின் இவர் ஆர்க்காட்டு நவாபுமுதமதலியின் படையில் சேர்ந்தார்.முகம்மதலி ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமான நண்பர்.
1752ஆம் ஆண்டு காவேரிப்பாக்கத்தில் மிகப் பெரிய போர் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடைபெற்றது. இந்தச் சண்டையின் பின்னணியில் நவாபுகள் இருபிரிவுகளாகப் பிரிந்து போர் புரிந்தார்கள். முன்பே நவாபுகளின் சரிதை எழுதும் பொழுது சந்தாசாகிப் பற்றி விரிவாகக் கூறியுள்ளேன். முகம தலியை ஆங்கிலேயர்கள் ஆதரித்த வேளையில் சந்தா சாகிப்பின் மூலமாக தங்களின் காலை இந்திய மண்ணில் பதிக்க பிரெஞ்சக் காரர்கள் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
தூய்ப்பிளே - பிரெஞ்சுத்தளபதி - பேராசைகள் கொண்ட வர். இவரைப்பற்றி தனி வரலாறே எழுதலாம். அதே போல ‘கிளைவ்’ என்ற ஆங்கிலத் தளபதிக்கும் இந்திய சரித்திரத்தில் பெரிய இடம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் நடந்த 'ஆதிக்கப் போராட்டம் தான் காவேரிப்பாக்கப்போர், காஞ்சிபுரத்துக்கும் ஆர்க்காட்டிற்கும் இடையில் உள்ள ஊர் தான் காவேரிப்பாக்கம். வடஆர்க்காட்டு மாவட்டத்தில் வாலாசா வட்டத்துக்குள் இது அடங்கும்.
இந்த காவேரிப்பாக்கப் போருக்கு முன்னே ஆர்க்காட்டில் சந்தா சாகிப்பின் மகன் இராஜா சாகிப்பிற்கு உதவுவதற்காகத் தூய்ப்பிளே புதுச்சேரியிலிருந்து 2000 குதிரைப்படைகளையும்.2500 காலாட்படையினரையும், 300 பிரெஞ்சுப் படையினரையும் அனுப்பி வைத்தார். ஆனால் கிளைவ் மராட்டிய படைத் தலைவர் முராரிராவுடனும் யூசுப் கானுடனும் சென்று இரவோடு இரவாக இந்தப்படையைத் தடுத்து நிறுத்தினார். இங்கே தான் யூசுப்கானின் தனிப்பட்டி போர்த்திறன் கண்டு கிளைவ் அவரைப் பாராட்டி னார். பிரெஞ்சுப் படைதப்பித்தோம்பிழைத்தோமென்று மீண்டும் புதுச்சேரி போயடைந்தது. மேலும் பிரெஞ்சுக்காரர்களிடம்
354

சைபீர்முகம்மது O படைப்பயிற்சிப் பெற்றிருந்த 600 வீரர்கள் இவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.
பிரெஞ்சுப் படையினர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அதையும் இப்படை விடுவித்தது. இக்காலத்தில் இவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே இல்லை. கோயிலையும் தங்கள் வசம் எடுத்துக் கொண்டது தான் மிகப் பெரிய ஆச்சரியம்!
யூசுப்கானின் உதவியுடன் கிளைவ் வெற்றி பெற்றாலும் திருச்சிக் கோட்டை பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்குப் பெற்ற சந்தா சாகிப்பின் வசமே இருந்தது. தனது தோல்விகளுக்கெல்லாம் பழிவாங்கும் எண்ணத்தோடு தூய்ப்பிளே திருச்சிக் கோட்டையில் காத்திருந்தார்.
இதில் நவாப் முகமதலி திருச்சிக் கோட்டைக்குள் மாட்டிக் கொண்டு விட்டார். அவரை விடுவித்தாலன்றி கிழக்கிந்தியக் கம்பெனி வலுவாக இந்திய மண்ணில் காலுான்ற முடியாது என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். இதற்கிடையில் தூய்ப்பிளே மற்றொரு துழிச்சியிலும் இறங்கினார். கிளைவை திருச்சிக்கு வரவிடாமல் செய்வதற்காக சென்னை பூந்தமல்லி, சாந்தோம் பகுதிகளில் கொள்ளையிட்டு அட்டூழியங்கள் செய்யும்படி தனது படையினருக்கும் சந்தா சாகிப்பின் மகன் இராஜாசாகிப்பிற்கும் கட்டளையிட்டார். 5000 பேரடங்கிய வீரர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுப்பட்டார்கள். ஆங்கில வணிகர்களின் வீடுகளும் இதில் கொள்ளையிடப்பட்டு தியிட்டுக் கொளுத்தப் பட்டன. தனது 80 ஐரோப்பிய படைகளுடனும் 1300 நாட்டுப் படைகளுடனும் கிளைவ் போரில் இறங்கினார். யூசுப்கானின் தீரமும் சேர்ந்து 5000 படைகளை ஓட ஓட விரட்ட வைத்தது! இராஜா சாகிப் தனது படைகளுடன் ஓடி காவேரிப்பாக்கம் வந்தடைந்தார்.
1752 பிப்ரவரி 28ம் நாள் இங்கே போர் மூண்டது. ஏகப்பட்ட உயிர்ச்சேதத்துடன் பிரெஞ்சுப்படையும் இராஜா சாகிப்பின் படையும் தோற்றது. இந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர் பிற்காலத்தில் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கான் தான்! இந்த வெற்றிக்காக ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு
355

Page 180
O மண்ணும் மனிதர்களும்
1755ஆம் ஆண்டு மார்ச் 27ம் நாள் யூசுப் கானுக்கு மூன்று பவுன் தங்கப்பதக்கத்தை ஆங்கிலேயர் துட்டி பாராட்டினார்கள்.
இதன் பிறகு யூசுப்கானின் புகழ் தென்னாடெங்கும் கிலியை உண்டு பண்ணியது எனலாம்.
திருச்சிக் கோட்டையும் கிளைவ்வசம் வர யூசுப்கான் காரணமாக இருந்தார். :
திருச்சி, காவேரிப்பாக்த வெற்றிக்குப் பிறகு ஆர்க்காட்டுப் படை மதுரையை நோக்கி தன்து காலடிடைய்:எடுத்து வைத்தது. திருச்சியிலிருந்து 45 கிலேர் மீட்டர் தூரத்தில் இருந்த மணப் பாறையைத் தாக்க பாளையக்காரர்கள் ள்ல்லாம் இலட்சுமி நாயக்கன் என்பவரின் தலைமையில் ஒன்று திரண்டு கப்பம் கட்ட மறுத்தார்கள். நவாபின் பண்டயில் ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித் என்பவர் இருந்தார், ந்வாபின் படைக்கு தலைமையேற்று யூசுப்கான் போர் புரிந்தார். இந்த எதிர்ப்புப் போரில் இலட்சுமி நாயக்கருடைய பாளையம் உட்பட மேலும் இரண்டு шпт60ә6тшқызы біт வீழ்ச்சியுற்றன. இச்சண்டையில் நடந்த படுகொலைகளைக் கேட்டு மற்றப்பாளையக்காரர்களும் சண்டையில்லாமலேயே கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார்கள். இந்த்ச் சண்டையில் நடந்த கோரமான படுகொலைகளைக் காண சகிக்காமல் நவாப் முகமதலி உடனே திருச்சிராப்பள்ளிக்குத் திரும்பி விட்டார் என்றால் இதன் கொடுமை எத்தகையானது என்று நீங்கனே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
இதன் பின் மதுரை நோக்கிப் படை நகர்ந்தது. முன்னே சென்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி காப்டன் ரூம்லி பிரான்மலைக் கள்ளர் நாட்டிற்கும் ஆனையூருக்கும் இடையில் இருந்த காட்டில் குதிரைகள் செல்வதற்கு ஒரு சாலையை ஏற்படுத்திக் கொண்டு போனார். போகும் போது எதிர்ப்பட்ட மக்களையெல்லாம் கொன்று குவித்து ஒருவித கிலியை ஏற்படுத்தினார். கள்ளர் சமூகத்தாரின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வீதியில் நின்ற மக்கள் 3000 பேரை ஒரே நாளில் கொன்று குவித்தார் காப்டன் ரூம்லி. இதை வரலாற்றாசிரியர் ஒர்மி (1723 - 1801) தனது வரலாற்று நூலில் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.
356

O மண்ணும் மனிதர்களும்
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத சமுதாயமாக - தங்கள் செம்மை மறந்த சமுதாயமாக
இவர்கள் இருந்து விட்டார்கள், இன்றும் இருக்கிறார்கள்!
மதுரையை வென்றதும், ஏற்கனவே காவிரி பாயும் திருச்சியை வென்றதும் நவாபுக்கு குமரிவரை தனது ஆட்சியை விரிவுபடுத்தும் ஆசையை வளர்த்துவிட்டது. திருநெல்வேலியில் தனது பார்வையைத் திருப்பினார் நவாபு உண்மையில் நவாபு ஒரு கருவிதான். நவாபை பின்னணியில்:இயக்கியவர்கள் ஆங்கிலேயர் கள். முதலில் நவாபின் வழியாக நாடுகளைப் பிடிப்பது, பிறகு நவாபை பிடிப்பதுதான் அவர்களின் திட்டம். இதனாலேயே நவாப் பணம் கேட்ட பொழுதெல்லாம்;அவருக்குப் பணம் கொடுத்து அவரை எப்பொழுதுமே கடன்கர்ராக வைத்திருந்தார்கள். ' ஆங்கிலத் தளபதி கர்னல் ஹெரானும் நவாபின் தளபதி மகஃபூஸ் கானும் படை நடத்தி இநல்லைச் சிமைக்குள் புகுந்து கொடூரமான கொலைகள் புரிந்து பாளையக்காரர்களை அடிபணிய வைத்தார்கள். நாட்டுக்கோட்டைப் பாளையம் சென்று அங்கிருந்த கோட்டைகளைக் கைப்ங்ற்றியதுடன் பொதுமக்களையும் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டார்கள்! உயிர்ப்பலிகளைக் குறைக்க எண்ணி எல்லா பாளையக்காரர்களும் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டு கையில் இருந்த பணத்தைக் கட்டி விட்டு மீதித் தொகைக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்கள். கடன் வாங்காமலேயே பத்திரம் எழுதிக் கொடுத்த கொடுமை அங்கே நிகழ்ந்தது!
இந்த நேரத்தில்தான்பூலித்தேவனும், கட்டபொம்மனும் கப்பம் கட்ட மறுத்ததோடு இவர்களுக்கு அடிபணியவும் மறுத்தார்கள். கர்னல் ஹெரான் மகஃபூஸ்கானை அனுப்பி பாஞ்சாலங் குறிச்சியைத் தாக்கச் சொன்னார்.1755 ஏப்ரல் 30ம் நாள் முற்றுகை தொடங்கியது. இந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாது என்பதை கட்டபொம்மன் உணர்ந்து கொண்டார்.
வரலாற்றில் ஒருவனை அதிக பட்சமாக தலையில் தூக்கி வைத்து ஆடும் வழக்கம்'நமது தமிழ் வரலாற்றாசிரியர்களுக்கு வந்து விடுகின்றது. சிலர் வரலாற்றை சரியாக ஆராயாமல் எழுதியும் வைத்து விடுகிறார்கள். கயத்தாற்றில் கட்டபொம்மன்’
357 ۔۔۔۔۔

Page 181
சைபீர்முகம்மது () மதுரை நாயகமா; மருதநாயகமா?
Dருதநாயகம் என்ற யூசுப் கான் தலையெடுத்த இவ்வேளையில் மதுரையில் பட்டாணியர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மியானா என்ற பட்டாணி அரசு குடியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார்கள். இக்கால கட்டத்தில் பாளையக் காரர்களாலும், இந்த பட்டாணி ஆட்சியாளர்களாலும் மக்கள் “வரி வரி' என்று கரும்பு போல் பிழியப் பட்டார்கள். இதே வேளையில்தான் நான் முன்பு கூறியபடி பாளையக்காரர்கள் கும்பினிக்குக் கடிதம் எழுதி தங்களை ஆட்சி செய்ய ஒரு மன்னரை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
சென்ற அத்தியாயத்தில் மதுரையை நோக்கி வந்தததாகக் கூறினேன் அல்லவா? அந்தப்படை வரும் வழியில் நத்தம், தெரும்பூர், தேர்வாடி என்ற மூன்று இடங்களில் இருந்த கோட்டைகளைக் கைப்பற்றியது. பாரதிதாசன் பாடியது போல் இப்படை குகை விட்டுக் கிளம்பும் புலியென, உறைவிட்டுக் கிளம்பும் வாளென வெளிக்கிளம்பி புயல் போல் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுரை இனி தப்பாது என்பதை பட்டாணிப் படையினர் உணர்ந்து இரவோடு இரவாக இடத்தைக் காலி செய்து விட்டனர். மதுரைக்குக் கிழக்கே உள்ள கோயில் குடியில் மியானா தஞ்சமடைந்தார். இவரின் இடது கரமாகவும் வலது கரமாகவும் விளங்கிய முதமய்யாவும், நபிகான் கட்டாவும் திருநெல்வேலிக்கு தப்பி ஓடி அங்கு நெற்கட்டுஞ் செவ்வல் பாளையக்காரரான பூலித்தேவரிடம் தஞ்சமன்ட்ந்த்ார்கள். . . . . . . . .
நவாபின் படை மிக எளிதாக மதுரையில் வந்து புகுந்து விட்டது. மதுரை நவாபின் ஆட்சிக்குள் வந்தது.
எந்த மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோமோ, வீரத்திற்கு ஒரு விளைநிலமென்று பாண்டிய நாட்டைப் பாடி வைத்தார்களோ அந்தப் பாண்டியத் தலைநகர் 13ம் நூற்றாண்டுக் குப் பிறகு அதாவது சுந்தர பாண்டியன் மாலிக் கபூருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற பிறகு தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டலாக மாறிவிட்டார்கள்.

சைபீர்முகம்மது O
என்ற மதிப்புமிகு திரு.ம.பொ.சி. அவர்கள் எழுதிய நூலில் கூட இப்படித்தான் சிலவற்றை விட்டுவிட்டு எழுதப்பட்டுள்ளது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தைப் பார்த்து விட்டு நமது இளைய சமுதாயமும், வரலாறு தெரியாதவர்களும் அந்தப் படம் தான் உண்மை வரலாறு என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். அது தமிழ்ச் சினிமா! அவ்வளவுதான்! தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்’ என்று எழுதியதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. நெற்கழஞ்சியத்தை கொள்ளையிட்டதாக தனது அமைச்சர் பிள்ளையவர்களை குற்றம் கூறுவதெல்லாம் சினிமாவிற்காக அமைக்கப்பட்ட காட்சிகள்தான்! உண்மையில் அப்படிப்பட்ட கொள்ளைகளில் கட்டபொம்மனுக்கும் பங்குண்டு என்பதுதான் உண்மை! வானம் பொழிகிறது. பூமி விளைகிறது, உனக்கேன் கிஷ்தி?’ என்று வசனம் பேச நன்றாகவே இருக்கிறது. ஆனால் கர்னல் ஹெரானுக்கு கப்பம் கட்டுவதாக கட்டபொம்மன் எழுதிக் கொடுத்த பத்திரம் எப்படி மறையும்? அந்த முற்றுகையில் கட்டபொம்மன் பத்திரம் எழுதிக்கொடுத்தார். கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார் என்பதுதான் உண்மை. பிற்காலத்தில் சிவகங்கை மருதுபாண்டியர்கள் ‘விடுதலைப்படை அமைத்தபொழுதுதான் கட்டபொம்மன் அந்த அமைப்பில் வந்து சேர்ந்து கொண்டார்.
இதன் பிறகு மகஃபூஸ் கான் எட்டயபுரத்துக்குச் சொந்தமான கோயில்பட்டியைத் தாக்கினார். எட்டயபுரமும் அடிபணிந்து கப்பம் கட்ட ஒப்புக் கொண்டது.
ஹெரான் பிடிபட்ட எல்லா பாளையக்காரர்களையும் மொத்தமாக 450,000 ரூபாய் கட்டச் சொன்னார். ஆனால் அவர்களால் ரொக்கமாக 1,10,000 ரூபாய் தான் தர முடிந்தது. மீதிப் பணத்துக்கு அனைவரும்பத்திரம் எழுதிக் கொடுத்தார்கள்.
பூலித்தேவருடன் மோதல்
இந்தப் பாளையக்காரர்களிலேயே கடைசிவரை மன உறுதியுடன் கப்பமும் கட்டாமல் பத்திரமும் எழுதிக் கொடுக்காமல் இருந்தவர்
− 359

Page 182
O மண்ணும் மனிதர்களும்
பூலித்தேவர் மட்டுமே! வாசுதேவநல்லூரில் தனது கோட்டையைக்
கட்டி வைத்திருந்தார் இவர். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவ நல்லூர் இயற்கை வளமிகுந்த இடமாகும்.
1,10,000 ரூபாயுடன் திருச்சிக்குத் திரும்பும் வழியில் வாசுதேவநல்லூரைத் தாக்க ஹெரானும் மகஃபூஸ் கானும் எண்ணினார்கள். எதற்கும் அஞ்சாத சிங்கம் படுத்திருக்கும் கோட்டை அது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அது வெறும் மண்கோட்டை தானே. சுலபத்தில் அடிபணிய வைத்து விடலா மென்று எண்ணி 20,000 ரூபாய் கப்பம் கேட்டார்கள். பூலித்தேவர் 4000 படைவீரர்களை கோட்டை மதிற்கவரில் நிற்க வைத்தார் - பதில் பேசவில்லை அவர். அவமானம் தாங்காமல் ஹெரான் கோட்டையைத் தாக்கத் துவங்கினார். அவரிடம் பெரிய பீரங்கிகள் அந்த நேரத்தில் இல்லாததால் கோட்டையை அசைக்கவே முடியவில்லை. முற்றுகையை கை விட்டு அவமானத்தோடு அவர்கள் பின் வாங்கினார்கள். இந்தப்படையில் யூசுப்கானும் இருந்தார் என்கிறது வரலாறு. பூலித்தேவரை ஒரு நாள் வென்று காட்டுவேன் என்ற சபதம் யூசுப் கானின் மனதில் கனலென எரிந்து கொண்டிருந்தது.
மதுரையை முகமதலி பிடித்த பிறகு அதற்கு ஆளுநராக தனது அண்ணனும் படைத் தளபதியாகவும் இருந்த மகஃபூஸ் கானை நியமித்தார். இவரால் தென்பாண்டி நாட்டில் வரி வதுலக்க முடியவில்லை. யூசுப்கான் கம்பெனி படையை வழி நடத்திச் சென்று நெல்லைச் சிமை முழுதும் உள்ள பாளையக் காரர்களிடம் வரிவதுல் செய்து வந்தார். தன்னால் முடியாததை யூசுப் கான் செய்ததால் மகஃபூஸ்கான் அவர்மேல் பொறாமைப்பட ஆரம்பித்தார்.
இதற்கிடையில் மற்றொரு கூத்தும் நடந்தது. நெல்லைச் சிமையில் பெருஞ் செல்வந்தரான தித்தாரப்ப முதலியார் என்பவர் தான் வரிவதுலிக்கும் பொறுப்பை நெல்லையில் ஏற்றுக் கொள்வதாகவும் மூன்று ஆண்டுகளில் 36 இலட்சம் ரூபாய் வரிப்பணமாக கம்பெனிக்கு தந்து விடுவதாகவும் சென்னையில் இருந்த ஆங்கிலேய ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார். 1756ம்
360

சைபீர்முகம்மது O ஆண்டு ஜுலை முதல் நாள் தித்தாரப்ப, முதலியாருக்கு அந்த உரிமையைக் கம்பெனி வழங்கியது. தித்தாரப்ப முதலியாருக்கு உதவியாக யூசுப்கான் நியமிக்கப்பட்டார்.
தீத்தாரப்ப முதலியாரின் புதிய ஏற்பாட்டை பாளையக் காரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மேலும் புதிய வரிகள் போட்டு மக்களை அவர்கள் பிழிந்தார்கள். தித்தாரப்ப முதலியாரும், கம்பெனியும், பாளையக்காரர்களும் கொழுத்தார்கள். மக்கள் வாடி வதங்கினார்கள். " :ش . "
தீத்தாரப்ப முதலியாருக்கு உதவியாக அனுப்பப்பட்ட யூசுப்க்ான் தர்னே கம்பெனிக்காக வரிவதுவிக்கவும் ஆரம்பித்து விட்டார். இதனால் ஆத்திரமுற்ற தீத்தாரப்பர் கம்பெனிப் படைகளுக்குச் சம்பளம் தர மறுத்துவிட்டார். ‘அதிகாரம் துப்பாக்கி முனையில் பிறக்கிறது’ என்று மா செ துங் சொன்னது எவ்வளவு உண்மை படைபலம் யூசுப் கானிடம் இருந்தது. தித்தாரப்பாவின் சொத்துக்களை ஏலம் போட்டு அனைத்தையும் கம்பெனி கணக்கில் சேர்த்து விட்டு முதலியாரை அவர் வீட்டில் திருநெல்வேலியில் சிறை வைத்துவிட்டார்! அதன் பிறகு இவர் வைத்தது தான் சட்டமாகியது!
இந்த நேரத்தில் அதாவது 1756ல் வாசுதேவ நல்லூரில் பூலித்தேவரால் தனக்கேற்பட்ட அவமானத்தைத் துடைக்க எண்ணினார். பூரீவில்லிபுத்தூர். 1751ம் ஆண்டு பூலித்தேவரின் கைவசம் வந்துவிட்டது. லெப்டினட் இன்னசுடன் நடந்த சண்டையில் பூரீ வில்லிபுத்தூர் கோட்டையும் ஊரும் அவரின் ஆளுகைக்கு வந்தது. அதை மீண்டும் போரிட்டுக் கைப்பற்ற எண்ணி 1756ல் அதை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அவர் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துக் கொண்டார்.
1757ல் நெல்லைச் சிமை முழுதும் பாளையக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஜனவரி மாதம் இக்கிளர்ச்சி வெடித்தது. இதன் மூலகர்த்தா தீத்தாரப்ப முதலியார் தான். கண்ட இடங்களிலெல்லாம் கொள்ளையிடுவதுதான் இவர்களின் கிளர்ச்சியே தவிர ஒரு கொள்கை கோட்பாடு கிடையாது. முதலியாரின் படைகளும், கட்டபொம்மனின் 4000 படையினரும்
361

Page 183
0 மண்ணும் மனிதர்களும் சேர்ந்து கொண்டார்கள். எரிகிற வீட்டில் எதை எடுத்தாலும் இலாபம் தானே? ... r . . .
யூசுப்கான் பூரீவில்லிபுத்தூரிலிருந்து இந்தப் படைகளைத் தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. இந்தக் கிளர்ச்சியில் கடையநல்லூர், தங்கச்சி மடம், சங்கரன்கோயிலின் ஒரு பகுதி போன்றவைகளை யூசுப்கான் கைப்பற்றினார்.
திருநெல்வேலிக்கோட்டை யூசுப்கான் கையில் இருந்தது. அவர் உக்கிரமாக களத்தில் இறங்கினார். சிவகிரி, சாத்துர் பாளையக் காரர்களின் உதவியும் அவருக்குக் கிடைத்தது. ஆழ்வார் குறிச்சியில் கிளர்ச்சிக்காரர்களைத் தாக்கி விரட்டினார். காலை ஏழு மணிக்கு தொடங்கி பொழுது சாயும் வரை நடந்த போரில் 300 கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். பூலித்தேவரின் இரண்டு தளபதிகள் மடிந்தனர். வடகரைப் பாளையக்காரர் சின்னத்தேவர் தனது ஒரு காலை இழந்தார். கிளர்ச்சிக்காரர்களின் ஒரு பாளையமான சிங்கம்பட்டி யூசுப்கான் வசம் வந்தது.
இந்தக் கிளர்ச்சியில் தாக்குப்பிடிக்க முடியாமல் மதுரைக் கோட்டையை விட்டு விட்டு மகஃபூஸ் கான் வெளியேறி விட்டார். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக ஐதர்அலி மதுரை மீது படையெடுத்தார். சோழ வந்தானைக் கைப்பற்றிய பிறகு மதுரைக் கோட்டையைத் தாக்கினார். யூசுப்கான் தன்னை நோக்கி வருகிறார் என்பதை அறிந்து ஐதர் அலி நத்தத்தில் தனது படையை நிறுத்திக் கொண்டார். யூசுப்கான் நத்தத்தில் மைதுர் படையைத் தாக்கி திண்டுக்கல்லுக்கு ஒட வைத்தார். ஐதர் அலி இத்தோல்வியினால் யூசுப்கான் மேல் கடும் சினம் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும் 4.
யூசுப்கானின் வீரமும் திரமும் கண்டு அவரைத் தங்கள் பக்கம் வைத்துக் கொண்டால்தான் கம்பெனிக்கு நல்லது என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். இதனால் மதுரை ஆளுநராக அவரை நியமித்தார்கள். இது நவாப் முகமதலிக்கு அவ்வளவாக பிடித்தமில்லாத செயலாக அமைந்து விட்டது. யூசுப்கான்
362

சைபீர்முக்ம்மது Ο ஆளுநராக வந்ததும் வரிப்பணமும் முறையாக ஆங்கிலேயருக்குப் போய்ச் சேர்ந்தது. . . .
முகமதலியின் அண்ணன் மகஃபூஸ்கான் தனது கையாளாக பரக்கத்துல்லா என்பவனை நியமித்து பலகீழிருப்பு வேலைகள் செய்து வந்தான். அதில் யூசுப்கானுக்கு கெட்ட பெயர் ஏற்படவேண்டும் என்பதற்காகவும். இந்து - முஸ்லீம்களிடையே கிளர்ச்சிகள் ஏற்படுத்தவும் சில ஏற்பாடுகள் செய்தான் பரக்கத்துல்லா.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மாசுபடுத்தினார்கள். கோயில் சிலைகளை வெளிப்படுத்தி வைத்தனர். அதோடு கோயிலின் முன் வாசலில் ஒரு குடையை நட்டு வைத்து அங்கே ஒரு முஸ்லீம் வழிபாட்டு மையத்தை அமைக்க மெளலவி ஒருவரையும் அங்கே உட்கார வைத்தார்கள். அ ரசியல்வாதிகளால் எப்படியெல்லாம் மதக் கலவரங்கள் சரித்திர காலத்திலேயே தொடங்கிவிட்டன என்பதைப் பார்த்திர்களா?'தி’ என்று வாயில் சொன்னதுமே பற்றிக் கொள்வது மதம் ஒன்று தான்! அதனால் தான் எந்த ஏவுகணையையும்விட இந்த 'மதம் என்ற ஆயுதம் வேகமாக வேலை செய்கிறது. அது அன்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது.இதற்குமேல் இதுபற்றிச் சொன்னால் என் மேல் மேலும்
குண்டுகள் பாயலாம்! நமக்கேன் வம்பு?
யூசுப்கானின் பொறுப்பில் மதுரை வந்ததும் முதல் காரியமாக அந்த முஸ்லீம் வழிபாட்டுத் தலத்தை அங்கிருந்து அகற்றினார். கோயில் மூர்த்திகளை மீண்டும் உள்ளே இடம் பெறச் செய்து கொள்ளையிடப்பட்ட நகைகளை மீண்டும் பெற்றுக் கொடுத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். அவர் காலத்தில் ஒரு கும்பாபிஷேகம் நடந்ததாக ஒரு வரலாற்றுக் குறிப்புச் சொல்கிறது. அது உண்மையாகவும் இருக்கலாம். மூர்த்திகள் அதனுடைய இடங் களில் வைக்கும் பொழுது குடழுழுக்கு செய்வதுதானே வழக்கம்! இந்தச் சம்பவத்துக்குப் பிறகே யூசுப்கான் என்றழைக்கப்பட்ட இவர் மக்களால் ‘மதுரை நாயகம்' என்று அழைக்கப்பட்டதாக ஒரு வரலாறு கூறுகிறது. அதுவே கால ஓட்டத்தில் 'மருதநாயகம் என்று மருவிவிட்டது!
363 سب

Page 184
O மண்ணும் மனிதர்களும்
இல்லை, அவர் மருதநாயகம் என்ற பெயரில் தான் பனையூரில் பிறந்தார். பிற்காலத்தில் முஸ்லீமாக மாறிவிட்டாரென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேரா சிரியர் ஒருவர் அவரைப்பற்றி முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அவர் தந்த விளக்கப்படி யூசுப்கான் தான் மருதநாயகம்.
என்னைப் பொறுத்த மட்டில் ஒரு இறை இல்லத்தை இடித்ததின் மூலம் அல்ல, அதை வழி பட வைத்ததின் மூலமே அவர் சரித்திரத்தில் பேசப்படும் அளவில் இருக்கிறார்!
1759ல் நெல்லைச் சிமையின் பாளையக்காரர்கள் இரு அணியாகப் பிரிந்துநின்று ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். இதில் தெலுங்கு அணி, தமிழ் அணி என்று பிரிந்து நின்றார்கள். எதிரியை எதிர்பபதில் இப்படி இரு அணியாக இருந்தால் வெற்றி பெற முடியுமா? தெலுங்கு அணியில் எட்டயபுரம், பாஞ்சாலங் குறிச்சி, குளத்தூர், மயிலமந்தை, மணியாச்சி, கடல்குடி, நாகலா புரம், ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், கோலார்பட்டி என்றும் தமிழணியில் வடகரை, சிவகிரி, நெற்கட்டுஞ்செவ்வல், சிங்கம்பட்டி, ஊற்றுமலை, சுரண்டை என்றும் இக்கால கட்டத்தில் பிரிந்து நின்று எதிர்த்தார்கள்.
மதுரை ஆளுநர் பதவி ஒர் ஆண்டுக்குத்தான் யூசுப்கானுக்கு வழங்கப்பட்டது. அவரின் திறன், நேர்மை, நாணயம், கடமை தவறாமை, மேலும் மக்களிடம் செல்வாக்குப் பெருகியமை கருதி அப்பதவியை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்துக் கொடுத்தார்கள். இது நவாப் முகமதலிக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்ததோடு வரிப்பணத்தை தன்னிடமே நேரிடையாகத் தர வேண்டுமென்று கம்பெனியிடம் முறையிட்டார். முதல் ஆண்டில் ஐந்து லட்சமும், இரண்டாம் ஆண்டில் ஒன்பது லட்சமும், வரும் ஆண்டுகளில் பத்து லட்சமும் தருவதற்கு கம்பெனி யூசுப்கானிடம் ஒப்பந்தம் செய்திருந்தது.
மக்களிடம் யூசுப் கானுக்குப் பெருகிவரும் செல்வாக்கு நவாப் முகமதலிக்கு கலக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
364

சைபீர்முகம்மது \)
1760 டிசம்பர் மாதம் தொடங்கி யூசுப்கான் மேற்கத்திய பாளையக்காரர்கள் மேல் தாக்குதலைத் தொடங்கினார். யூசுப் கானின் நோக்கமெல்லாம் யாருக்கும் அடிபணியாத பூலித்தேவரை வென்று விட வேண்டும் என்பது தான். டிசம்பர் 19ம் நாள் நெற்கட்டுஞ் செவ்வலில் போர் மூண்டது. அடுத்தடுத்து நடந்த சண்டையில் பூலித்தேவரின் படையில் நூறு வீரர்கள் கொல்லப்பட்டார்கள். முற்றுகை நான்கு மாதம் நீடித்தது. யூசப்கானின் தாக்குதலை எதிர்க்க முடியாமல் பூலித்தேவர் 1761 மே மாதம் 16ந்தேதி அவரிடம் சரணடைந்தார்.
யூசுப்கான் மாபெரும் வீரன் என்பதை இந்த இடத்தில்தான் நிரூபித்தார். ஒரு வீரனை இன்னொரு வீரன் தான் மதிக்க முடியும். சிறுமதி கொண்டவர்களுக்கு எதிரியின் தோல்வி கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி பிறக்கும். ஆனால் ஒரு வீரன் அப்படி நகைக்கவே மாட்டான். வெற்றி கொண்ட யூசுப் கான் பூலித்தேவரை விடுவித்து இராமநாதபுரம் காட்டுக்கு தப்பிச் செல்லுமாறு அனுப்பி வைத்தார். யூசுப்கான் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு என்னவென்றால் பூலித்தேவரை நண்பராக்கிக் கொண் டிருந்திருக்க வேண்டும். அது பிற்கால அவரின் எதிரிகளை எதிர்க்க மிக்க பலமாக அமைந்திருக்கும். அவர்கள் எதிரிகளாகவே பொருதினார்கள் எதிரிகளாவே பிரிந்தார்கள். இதன் பிறகு ஆர்க்காட்டு நவாபின் படையெடுப்பு ஐந்து மாதங்கள் நீடித்து அதில் இறுதிவரை சொற்ப படையுடன் போர் புரிந்து தோல்வியுற்றாலும் பூலித்தேவரின் மன உறுதியை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்! தமிழர்களில் இறுதிவரை ஒரே கொள்கையில் நின்று போராடுபவர்களைக் காண்பது அரிது! பதவி கண்டால் ஒடுவதும், பணத்தைக் கண்டால் மாலை மாற்றிக் கொள்வதும் தானே நமது வழக்கமும் பழக்கமும்.
யூசுப்கான் மாசா என்ற டச்சுப் பெண்ணைத்தான் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குப் பிள்ளை பிறந்த நேரத்தில் யூசுப்கான் சிவகங்கைச்சிமை மீது படையெடுக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இந்தப் போரை தடுக்க எண்ணினார், அப்போதைய சிவகங்கைச்சிமையின் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை, யூகப்கானின் பிள்ளைக்கு சிவகங்கையின் அன்பளிப்பாக
365

Page 185
O மண்ணும் மனிதர்களும் தங்கத் தொட்டில் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்தார். இதில் மனம் குளிர்ந்த யூசுப்கான் போரை மறந்து தாண்டவராயப் பிள்ளைக்கு ‘சாக்குடி’ என்ற அழகிய கிராமத்தை தானமாக் கொடுத்தான். பிள்ளையோ மனம் மகிழ்ந்து அந்தக் கிராமத்தை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தானமாக வழங்கினார்! இப்பொழுதெல்லாம் மனிதனுக்குக் கிடைத்ததெல்லாம் இலாபம்! அப்பொழுது கொடுப்பதே இலாபம்! ۔۔۔۔۔
நவாப் முகமதலியின் தூண்டுதலால் ஆங்கிலேயர் இனி வரியை நவாப்பிடமே வழங்கும்படி கூறினார்கள். ‘இனி இரண்டு பேருக்குமே வழங்க மாட்டேன். இனி மதுரைக்கு நானே மன்ன ன் என்று பிரகடனப்படுத்தினான் யூசுப்கான். ஏற்கனவே நவாப்பிடம் இருந்த கசப்புணர்ச்சி மேலும் அதிகரித்தது! இதனால் நவாப்பின் படைக்கும் யூசுப்கானின் படைக்கும் பல நாள் மதுரைக் கோட்டையில் போர் நடந்தது. ஆங்கிலேயர் படை கோட்டையைச் சுற்றி வளைத்துக் கொண்டது. கோட்டைக்குள் உணவு வரும் வழிகள் அடைபட்டதால் வீரர்களுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. யூசுப்கானின் அமைச்சராக இருந்தவர் சீனிவாசராவ். வஞ்சகமாக யூசுப்கானை பிடித்து நவாப் முகமதலியிடம் ஒப்படைத்தவர் இவர் தான்! அரசியலில் காட்டிக் கொடுப்பவர்கள் எப்பொழுதுமே பக்கத்தில் இருப்பவர்கள் தான். 1764ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள் தமிழ் நாட்டின் புளியமரம் மீண்டுமொரு வீரனை காவு கொண்டது. முகமதலி மிகக் கொடூரமானவன் என்பதற்கு யூசுப்கானின் சடலத்தை பலதுண்டுகளாக வெட்டி எல்லா ஊர்களிலும் புதைத்ததுதான்.
செஞ்சிக் கோட்டை
தே சிங்குராஜன் பற்றியும் அவனுடைய குதிரை பற்றியும் பலவிதமான வாய்மொழிக் கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. இன்று கூட சில இரவு நேரங்களில் செஞ்சிக் கோட்டையைச் சுற்றி தேசிங்கு ராஜன் குதிரையில் வலம் வந்ததைக் கண்டதாக பலர் ‘ஆவிக் கதைகள் சொல்வதைக் கேட்கலாம். ஒவ்வொரு அமாவாசை
366

சைபீர்முகம்மது O
அன்றும் செஞ்சிக் கோட்டையில் தேசிங்குராஜனின் குதிரை கனைத்துக் கொண்டு ஒடும் சத்தம் கேட்பதாக சொல்லிய பிறகு எனக்கும் அந்த "ஆவி'யைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்படி எனது இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு செஞ்சிக் கோட்டையில் காத்திருந்தேன். சிகரெட்டும் மினரல் வாட்டர் பாட்டில்களும் காலியானது தான் மிச்சம். குதிரை வரவே இல்லை! அந்த அமாவாசையில் ‘விடுமுறை எடுத்துக் கொண்டதோ என்னவோ? நானும் எனது 12வது வயதில் இருந்து நிறைய ‘பேய்க் கதைகள் கேட்டுள்ளேன். ஒருமுறையாவது அதன் ‘சேமநலன்களை’ விசாரித்து அறிந்து கொள்ளலாமென்று நினைத்தால் என் பக்கம் அது வருவதே இல்லை.
நான் 13 வயதில் ஸ்தாபாக் சுடுநீர் ஊற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் இடுகாட்டுப் பக்கமாக வசிக்கும் பேறு பெற்றிருந்தேன். எனக்கு அங்கே நிறைய சின நண்பர்கள். இரவில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவோம். இரு பிரிவாகப் பிரிந்து ஒளிந்து விளையாடுகையில் குழுத் தலைவரைப் பிடித்து விட்டால் மொத்தக் குழுவும் தோற்றதாக அர்த்தம். பெரும்பாலும் என்னைத்தான் ஒரு பிரிவின் தலைவராக நியமிப்பார்கள். கடைசிவரை என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. பெரும்பாலும் இடுகாட்டின் பெரிய கல்லறைகளில் இரவு 9.00 மணிக்குப் போய் படுத்து விடுவேன். விடிகாலை 2.00 மணிவரை எதிரிகள் தோற்று விட்டதாக சமிக்கை ஒலிகள் கேட்ட பிறகே எழுந்து வருவேன். இடுகாட்டில் என்னைத் தேடுவதற்கு யாருக்கும் கடைசிவரை தைரியம் வந்ததே இல்லை. நான் வீட்டில் போய் தூங்கி விட்டதாக நினைத்து பலமுறை வீட்டில் தேடுவார்கள். இந்த இடுகாட்டு ரகசியத்தை எனது குழுவில் இருப்பவர்களிடமும் நான் சொல்வது இல்லை. அங்கு இரவில் இருக்கும் பொழுது நான் ஏறாத தென்னை இல்லை, மாமரம் இல்லை. இப்பொழுது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நடுநிசியில் கூட பேய்கள் ஏன் அங்கே வரவில்லை. என்னுடன் நட்பு கொள்ள அவைகளுக்கு அப்படி என்ன பயம்?
தேசிங்கு ராஜனின் வரலாறு பலருக்குப் பலவிதமாகத் தெரிந்திருக்கலாம். உண்மையில் தேசிங்குராஜன் யார்?
367

Page 186
O மண்ணும் மனிதர்களும் செஞ்சிக்கோட்டைக்கும் அவருக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது ஒரு நீண்ட வரலாறு.
வட நாட்டில் யமுனை நதியும் கைமூர் மலைத் தொடரும் ஒடும் மீர்சாபூர் என்ற மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தை யமுனை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடுகிறது. ஆற்றின் மறுபுறத்து நரி புத்தேல் கண்டு என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. இங்கே வாழும் மக்கள் புராண காலந்தொட்டு வரலாறு உள்ளவர்கள். இவர்களை ‘புத்தேவர்’ என்று பிற்காலத்தில் சொல்லப்பட்டது. புத்தேவர் ஒருவகையில் ராஜபுத்திர வம்சத்தவர்தான். புத்தேல் கண்டு பல சிறு சிறு சிற்றரசுகளைக் கொண்டு ஆட்சிபுரியப்பட்டு வந்தாலும் மொகலாயர்களின் வருகைக்குப்பின் இவர்கள் பெரும்பாலும் அவர்களின் படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்றினார்கள்.
மராட்டியர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நடந்த போரில் சிவாஜியின் மகன் இராஜாராம் தோல்வியுற்று பலவழிகளில் தப்பி இறுதியாக செஞ்சிக்கோட்டை போய்ச் சேர்ந்தான். இது எப்பொழுது கட்டப்பட்டது என்று சரியான வரலாறு இல்லாவிட்டாலும் கி.பி. 1200ம் ஆண்டில் ஆனந்த கோன் என்பவர் இதைக் கட்டியதாக வாய்மொழி வரலாறு உள்ளது. செஞ்சிக் கோட்டை பல மன்னர்களின் தாக்குதலுக்கும் ஆட்சிக்கும் இடம் கொடுத்த ஒரு பழைய கோட்டை.
சிவாஜியின் மகன், இராஜாராம் செஞ்சிக் கோட்டையில் இருப்பதை அறிந்து கொண்ட மொகலாய மன்னர் ஒளரங்கசிப் தனது படைத்தளபதி சுல்ஃபிகர் கானை பெரும் படையுடன் அங்கே அனுப்பி வைத்தார். செஞ்சிக் கோட்டை ஒளரங்கசீப் நினைத்தது போல் அவ்வளவு சுலபத்தில் வீழ்ச்சியடையவில்லை. எட்டாண்டுகள் முற்றுகையிட்ட பின் 1698ம் ஆண்டு தான் செஞ்சி ஒளரங்கசீப் வசம் வந்தது.
இராஜாராமை தப்பிக்க வைத்தால் மட்டுமே கோட்டையை ஒப்படைப்பதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதால் சுல்ஃபிகர் கான் அவரை தப்பிக்க அனுமதி வழங்கினார்.
368

சைபீர்முகம்மது O
செஞ்சிக் கோட்டை வீழ்ந்த பின் 1700ம் ஆண்டு புத்தேவர் குடித்தலைவராக இருந்த சரூப்சிங் என்பவரை கோட்டைக்காவல் தலைவராக ஒளரங்கசீப் நியமித்தார். சரூப்சிங்கின் பின்னணி மொகலாயர்களோடு மிகவும் நெருக்கமானது.
மொகலாயர்களுக்கு ராஜபுத்திரர்கள் ஜென்மப் பகையாக இருந்தது போலவே அவர்களின் ஆட்சி நிலைக்க பலவழிகளிலும் இவர்கள் உதவியுள்ளார்கள். சரூப் சிங்கின் தந்தையின் பெயர் நரசிங்க தேவ். இவர்தான் ஜஹாங்கிர் காலத்தில் மிக முக்கியமான ஒரு படுகொலையைச் செய்தவர். எனது முதல் பாகத்தில் அக்பரின் வரலாற்றை எழுதும்பொழுது மாமன்னர் அக்பரின் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவரும் அவரின் நெருங்கிய நண்பருமான் அபுல்ஃபசல் என்பவரை ஒழித்துக் கட்ட ஜஹாங்கிர் முற்பட்ட பொழுது அவரைக் கொலை செய்து தலையை பரிசாக ஜஹாங்கிருக்கு அனுப்பி வைத்தவர் தான் நரசிங்க தேவ்!
கோட்டைத் தலைவராக இருந்த சரூப் சிங் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1707 ல் ஒளரங்கசீப் இறந்த பிறகு அங்கங்கே ஆளுநராக இருந்தவர்களும். கோட்டைத் தலைவர்களும் தாங்களே தங்களை அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அந்த வகையில் சரூப்சிங் கர்நாடகத்தில் ஒளரங்கசிப்பின் பிரதிநிதியாக இருந்த நவாபுக்குக்கும் கப்பம் கட்டாமல் செஞ்சியை தானே ஆளத் தொடங்கினார். 1714ல் இவர் இறக்கவே இவரின் மகன் தேஜ்சிங் செஞ்சிக் கோட்டைத் தலைவரானார். தேஜ் சிங்கின் தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர் தான் தேசிங்கு ராஜன்! இவருக்கு ரூப்சிங் என்ற மற்றொரு பெயரும் வரலாற்றில் உண்டு.
தேசிங்கு ராஜன் ஆட்சிக்கு வந்ததும் கோட்டைக் காவலை வலுப்படுத்தினார். யாருக்கும் அடிபணிய மறுத்து நின்றார். நவாப்பிடமிருந்து கப்பம் கேட்டு வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பியதுடன் மராட்டியர்களுடன் சேர்ந்துகொண்டு ஆர்க் காட்டு நவாபை எதிர்த்தார்.
ஆர்க்காட்டு நவாபு சாதத்துல்லா தான் நேரிடைப் போரில் இறங்கத் தீர்மானித்தார். லாலா தகினிராய் என்பவரின்
369

Page 187
9 மண்ணும் மனிதர்களும்
தலைமையில் செஞ்சிக்கு ஒரு படையை அனுப்பினார். செஞ்சிக் கோட்டையை எதிர்பாராமல் தாக்க வேண்டு மென்பது நவாபின் எண்ணம், படை ஆரணியில் முகாமிட்டது. செய்தி கேள்விப்பட்டு தேசிங்கு ராஜன் சேத்துப்பட்டில் எதிரியை எதிர்க்கத் துணிந்தார்.
1714ம் ஆண்டு அக்டோபர் 3ம் நாள் செஞ்சிக்கருகில் உள்ள தேவனூரில் போர் மூண்டது! தேசிங்கு ராஜன் வீரத்துடன் போர் புரிந்தார். அவரின் குதிரை போர்க் களத்தின் எல்லாதிசைகளிலும் பாய்ந்து சென்றது! தேசிங்கின் வாள் எதிரிகளை சிவிக் கொண்டு மின்னல் வீச்சுக் காட்டியது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் போர்க்களத்தில் படுகாயமடைந்தார். தனது குதிரையிலிருந்து வீழ்ந்து இறந்தார். தேசிங்குராஜனின் மனைவியும் போர்க்களத்தில் உயர்நீத்த பிற வீரர்களின் மனைவி மார்களும் கோட்டையில் உடன்கட்டை ஏறினார்கள்.
சாதத்துல்லா கான் உண்மையில் தேசிங்கு ராஜனின் வீரத்தைப் போற்றினார். தேசிங்கின் மனைவி உடன் கட்டை ஏறி உயிர் விட்டு தியாகம் புரிந்தது அவரின் மனதை பெரிதும் வாட்டியது. அவர் நினைவாக ஆர்க்காட்டில் ஒரு தனி ஊரையே ஏற்படுத்தினார். அதுதான் இன்றும் அவர் பெயர் சொல்லும் ‘ராணிப் பேட்டை’ என்ற ஊராகும்!
செஞ்சி தென்னார்க்காட்டு மாவட்டத்தில் உள்ள ஊராகும். திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இருக்கிறது இது. முக்கோணவடிவில் அமைந்த மூன்று மலைகளைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளது. 800 அடி உயரமுள்ள இராசகிரி மலை எதிரிகள் உள்ளே வருவதைத் தடுக்கும் அரண்போல் உள்ளது. வடக்கில் கிருஷ்ணகிரி மலையும், தெற்கில் சந்திரகிரி மலையும் அமைந்து செஞ்சிக்கோட்டையை இயற்கையாகவே காத்து நின்றுள்ளன. கோட்டையின் சுற்றளவு சுமார் 8 கிலோ மீட்டர்.
விஜய நகரப் பேரரசின் காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த நாயக்க மன்னர்கள் செஞ்சியிலும் சில ஆண்டுகள் தங்கள் ஆட்சியை நடத்தியுள்ளார்கள்.
விஜயநகர வீழ்ச்சிக்குப்பின் பீஜப்பூர் சுல்தான்கள் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திய பொழுது செஞ்சியை பிடித்துக் கொண்
370

சைபீர்முகம்மது O
டார்கள். 1649ம் ஆண்டு இந்த பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியாக இல்லே தார் என்பவர் கோட்டைத் தலைவராக இருந்துள்ளார்.
கிருஷ்ணதேவராயர் காலத்தவரான (1509-29) துப்பாக்கிக் கிருஷ்ணப்ப நாயக்கர் என்றழைக்கப்பட்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் 1521 வரை செஞ்சியை ஆண்டுள்ளார். இவர் தன் காலத்தில் கோட்டையை வலுப்படுத்தியதுடன் பல சீர்திருத்தங் களையும் செய்தார். ராசகிரிமலை மேல் உள்ள கொத்தளங்களும், அதன் கீழ் உள்ள களஞ்சியங்களும் இவரால் கட்டப்பட்டன. கல்யாண மஹாலும் இவரால் கட்டப்பட்டது தான். மூன்று மலைகளையும் இணைத்து எழுப்பபட்டுள்ள சுவர்களும் இவர் காலத்தில் உண்டாக்கப்பட்டவையே!
சிவாஜியும் செஞ்சிக் கோட்டையும்
LDராட்டியத்தின் மாவீரன் சிவாஜி (1627-1680) பீஜப்பூர் சுல்தான்களை எதிர்த்த பொழுது செஞ்சிக் கோட்டையை அவர்களிடமிருந்து கைப்பற்றினார். 1680ம் ஆண்டு சிவாஜி இறந்த பிறகு மராட்டியர்களிடையே பிளவு ஏற்பட்டது. ஒரு அகண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்க அவர் மேற்கொண்ட பணிகள் பிற்காலத்தவரால் சுயநலத்துக்குப் பயன்படுத்தப் பட்டதால் அவரின் கனவு நினைவாகவில்லை. இந்த நேரத்தில் தான் அவரின் மகன் மொகலாயரின் படையெடுப்பிலிருந்து தப்பி செஞ்சியில் வந்து தஞ்சமடைந்தார். 1698 வரை சுல்ஃபிகார் கான் கோட்டையைப் பிடிக்கும் வரை செஞ்சியைத் தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்து வந்தார்.
தேசிங்கு ராஜனிடமிருந்து ஆர்க்காட்டு நவாபு சாதத்துல்லா கான் செஞ்சியைக் கைப்பற்றிய பிறகு அதன் மகத்துவம் சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்தது எனலாம். .
1760 களில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் ஏற்பட்ட ஆதிக்க வெறியில் இந்த செஞ்சியும் சேர்ந்து கொண்டது. இந்திய நாட்டில் தங்களது அகன்ற பேரரசை நியமிக்க இருவரும்
371

Page 188
O மண்ணும் மனிதர்களும்
மாறி மாறி நவாபுகளின் துணை கொண்டு போர்புரிந்து வந்தார்கள். இக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக் காரர்களும் ஒடி ஒளிந்து விளையாடும் திடலாக தமிழ்நாடு இருந்தது. 1760 முதல் 1761 வரை செஞ்சி பிரெஞ்சுக்காரர்கள் வசம் ஓராண்டு இருந்தது. 1761ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றினார்கள். . . . .
போர்த்திறனும் நவீன ஆயுதங்களும் கொண்டு தமிழகத்தின்
பல பகுதிகளைத் தங்களின் அதிகாரத்திற்குள் கொண்டு
வந்துவிட்ட ஆங்கிலேயர்களின் சிம்மசொப்பனமாக ஐதர் அலி தோன்றினார்.
ஐதர் அலி ஃபத்தா முகம்மது என்டவருக்கு 1722ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ஆர்க்காட்டு நவாபின் படையில் பணிபுரிந்து வந்தார். ஐதரலியின் அண்ணன் பெயர் ஷாபாஷ் என்பதாகும். இவர்கள் கோலாரில் குடியிருந்த பொழுது இவரின் தந்தை ஒரு போரில் கொல்லப்பட்டார். அப்பொழுது ஐதருக்கு வயது ஏழு தான். தந்தை இறந்ததும் தனது இரு பிள்ளைகளுடன் பெங்களூரில் இருந்த தனது சகோதரர் இபுராகிம் சாகிபு வீட்டில் குடியேறினார் ஐதரின் தாய். அவரின் சக்ோத்ர்ரும் பெங்களூர் கோட்டைக் காவல்படையில் பணிபுரிந்து வந்தார். பர்ம்பரையில் ஒரு விவசாய குடும்பமாக இருந்தாலும் பிற்க்ால்த்தில் ஐதரின் குடும்பம் போர்ப்படைகளில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது. 1749 ம் ஆண்டு மைதுர் படை தேவனள்ளியை முற்றுகையிட்டது. ஐதரலியின் அண்ணன் ஷாபாஷ் மைசூர் படையில் சாதாரண வீரனாகப் போரிட்டார். இப்போரில் ஐதரலி ஒரு குதிரைப் படை வீரனாகக் கலந்து கொண்டார். இப்போரில் இவர் காட்டிய வீரமும் அந்த 27 வயதில் துணிந்து எதிரிகளை அவர் வீழ்த்திய விதமும் மைதுர் படையின் தளபதி காரச்துரி நஞ்ச ராசய்யாவின் தனிக் கவனத்தைப் பெற்றன. உண்மையில் தனது உண்மையான உழைப்பை ஐதர் ஈந்தார். எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தனது கடமைகளைச் செய்தார். ஐதர் பள்ளிக் கூடமே செல்லவில்லை. அவருக்கு எழுதப் படிக்கக்கூடத் தெரியாது. ஆனால் வரலாற்றா சிரியர்கள் ‘இந்திய அரசியல் வானில் அவரை புதிய வால் நட்சத்திரம்' என்று எழுதி வைத்துள்ளார்கள்.
372

சைபீர்முகம்மது O
ஐதரலியின் வீரத்தைப் பாராட்டி அவரை 50 குதிரைப் படைகளுக்கும் 200 காலாட்படைகளுக்கும் தலைவராக நியமித்ததோடு தேவனஸ்ளிக் கோட்டையின் ஒரு வாயிலைக் காக்கும் தலைமைப் பொறுப்பையும் மன்னர் வழங்கினார். இதன் பிறகே இவரின் எழுச்சி ஈடு இணையற்றதாக அமைந்தது.
ஐதரலி தனது வலிமையால் திறமையாகக் காய்களை நகர்த்தினார். அரசியல் அரங்கில் எதிர்கால இந்தியாவை உருவாக்க அவர் எடுத்த முயற்சிகளை நினைக்கும் பொழுது இவர் கல்வி கற்காதவர் என்பதை யாராலும் நம்ப முடியாது. ஐதரலி மட்டுமல்ல, பிற்காலத்தில் அவரின் மகன் திப்புசுல்தானின் வீரமும் வரலாற்றில் மறுக்கவோ மறக்கவோ முடியாதது!
ஐதரலி மைசூரில் ஆட்சி செய்த காலத்தில் பல சிர்திருத் தங்களைச் செய்துள்ளார். குறிப்பாக, அவரின் திர்க்கதரிச்னமான சில நடவடிக்கைகளில் ஒன்றாக ஏக இந்தியாவையும் ஒரு தேசிய சமூகமாக உருவாக்க நினைத்ததைக் குறிப்பிட வேண்டும். அக்காலத்தில் மன்னர்களுக்கும் சுல்தான்களும் நாடு பிடிக்கவும், வரிவதுலிக்கவும், பல திருமணங்கள் செய்து கொள்ளவும், ஒய்வு நேரத்தில் வேட்டையாடவுமே நேரம் சரியாக இருந்துள்ளது. அறவியல் சிர்திருத்தம், சமூக சிர்திருத்தம் என்பதெல்லாம் அவர்களின் அன்றாடப் பணிகளில் இடம் பெற வில்லை. ஆட்சி என்பது அரசியல் பற்றி மேல் தட்டு மக்கள் பேசுவது மட்டுமே என்று நினைத்துப் பார்த்த காலம் அது. அதிலும் 'நாயர்’ சமூகத்தைக் கண்டர்ல் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் தலைகுணிந்து வணங்க வேண்டும் என்ற வழக்கமும் அக் காலத்தில் இருந்தது. ஐதரலி ஆட்சிக்கு வந்ததும் முதலில் இந்த வழக்கத்தை மாற்றினார். சமூகம் சிர்பெற்றால் தான் அரசியல் சிர்பெற்று ஆங்கிலேயரை எதிர்க்க முடியுமென்று அவர் நம்பினார். இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்று திரட்டினால்தான் நாட்டின் பொது எதிரியாகிய ஆங்கிலேயரை விரட்ட முடியுமென்று அவர் முடிவெடுத்தார்.
இதனாலேயே ஆங்கிலேயர் பலவீனப்பட்டு நின்ற இடங்களி ளெல்லாம் அவரின் தாக்குதல் நடந்தது என்று சொல்லலாம். 1780ம் ஆண்டு ஐதர் செஞ்சியைத் தாக்கி அதை ஆங்கிலேயரிட
373

Page 189
O மண்ணும் மனிதர்களும் மிருந்து மீட்டார். திண்டுக்கல்லிலும் பலமாகத் தனது காலை ஊன்றிக் கொண்டார்.ஐரோப்பியர்கள் செஞ்சி உடல்நலத்திற்குக் கேடான இடமாகக் கருதினார்கள்.1760களில் செஞ்சியைப் பிடித்த பிரெஞ்சுக்காரர்கள் அங்கே வசிக்கும் பொழுது தங்கள் ஐரோப்பரிய படை அணியில் 1200 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வரலாற்றாசிரியர் ராபட் ஓர்மி (1728 - 1801) தனது ‘இந்துஸ்தான் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஐதர்அலி, திப்பு சுல்தான் வரலாற்றை தனி நூலாக எழுதும் திட்டம் உள்ளதால் அதை விரிவாக்கவில்லை. எனது இந்தியப் பயணம் இத்தோடு முடிந்துவிடவில்லை என்று மட்டும் கூறி இந்நூலை நிறைவு செய்கிறேன்.
374

சைபீர்முகம்மது O
விடைபெறுமுன். ܫ
சரித்திரம் வெறும் வெற்று வெளியிலிருந்து தோன்றுவதில்லை. நமது வரலாற்றில் சொன்னவைகளைவிட சொல்லப்படாதவையே அதிகம். வரலாறு என்பது ஓர் இனத்தின் காலக் கண்ணாடி! காலத்தையும், அப்போது உயிர் வாழ்வதற்காக அவர்கள் நடத்திய போராட்டங்களையும் கூறுவதுதான் வரலாறு கசப்பும், இனிப்பும் - ஏன் சிலசமயங்களில் புளிப்பும் கலந்தது அது.
வீரர்களையும், அவர்தம் வெற்றிகளையும். அவர்கள் நிகழ்த் திய அற்புதங்களையும் மட்டுமே எந்த இனமும் இன்று மீண்டும் நினைவு கூரத்,துடிக்கிறது. ஆனால் அவர்களும் மனிதர்களே! வெற்றி தோல்விகள் கலந்து தான் வாழ்க்கையில் போராட்டங் களை நடத்தியுள்ளார்கள். ‘மண்ணும் மனிதர்களும் எழுதும் பொழுது சரித்திரக் குறிப்புகளில் நான் மிகமிகக் கவனமாக செயல்படவேண்டியிருந்தது. எந்த இடத்திலும் எந்த மன்னனுக்கும் அதிக பட்ச ‘தேவதைத் தன்மை வந்துவிடக் கூடாது என்பதில் சற்றே அக்கறை செலுத்தினேன். பல சரித்திர ஆசிரியர்கள்: குறிப்பாக, தமிழில் வரலாற்றை எழுதியவர்கள். தாங்கள் நினைத்ததை எல்லாம் எழுதி வைத்துள்ளார்கள். சில “பிரச்சனை’க்குரிய பகுதிகளை எழுதும் பொழுது நான் பல நூல்களைப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையில் இந்தத் தொடரை எழுதும் பொழுது மொகலாய மன்னர்களும், மருதுபாண்டியர்களும், சிக்கிய மத குருமார்களும் மீண்டும் எனக்குப்பாடம் நடத்தியுள்ளார்கள். இவ்வளவுநூல்களைப் படிக்க வைத்தமைக்காக இந்த வேளையில் அவர்களுக்குத் தான் நான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும்.
முதல் பகுதி 24 வாரங்கள் வந்தபொழுது நான் "வனவாசம்' போக வேண்டிய துழிநிலைகூட உருவாகிவிட்டது. என்னையறி
375

Page 190
O மண்ணும் மனிதர்களும்
யாமலேயே 52 வாரங்கள் இது விசுவாசிகளின் 'மனவாசத்திற்குள்’ குடியேறிவிட்டது. முதலில் நான் இதை எழுத ஆரம்பித்தேன், பிறகு அதையே அது எழுதிக் கொண்டது எல்லாத் தடைகளையும் மீறி என்னையும் இத்தொடர் வென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதில் வெற்றி வாசகர்களுக்குத் தான்!
ஒரு பிரபல பத்திரிகையாளர் என் நண்பரிடம் “பீர்முகம்மது. இப்பொழுது நிறைய எழுதுகிறாரே, ஏன் அவர் தொழில் படுத்து விட்டதா?’ என்று கேள்வி கேட்டாராம். உண்மையில் நான் இப்பொழுது தான் ஒய்வே இல்லாமல் உழைக்கிறேன். இயந்திரம் போல் இயங்கிய எனக்கு ஒரு சிந்தனை வடிகால் தேவைப்பட்டது. என் ஆத்மாவின் அடிநாதமே எழுத்தும், இலக்கியமும், இந்தச் சமுதாயமும் தான். நிறைய உழைத்தாகிவிட்டது. வாழ்க்கையில் இப்பொழுதும் நிறைவாகவே இருக்கிறேன். என் சொந்தத் தேவைகளைக் குறைத்துக் கொண்டதால் எனக்கு இனிமேலும் 'ஓடி ஆடி தொழில் செய்ய வேண்டிய அவசரம் இல்லை. ஆனால் எழுத்து’ என்ற தாகம் மட்டும் தீரமாட்டேன் என்கிறது. காயசண்டிகைக் கதையாகிவிட்டது. பசி. பசி. திராத பசி! இத் தொடரை எழுதும் பொழுது நான் எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த செய்தி வேலை நடக்கும் இடங்களில் காரில் அமர்ந்து எழுதியதுண்டு வெளிநாடு போகும் பொழுது விமானத்திலேயே எழுதியதுண்டு. வியாபார சம்பந்தமான மீட்டீங்குகள் நடந்து முடிந்த பின் வெளியூரில் விருந்துகள் நடக்கும் , அதற்கு மேல் விடிய விடிய வேறாட்டல் அறைகளில் உட்கார்ந்து எழுதி மறுநாள் பேக்ஸ் மூலம் எத்தனையோ முறை பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரை தாமதமாகச் சென்றால் இரண்டு நாட்கள் மக்கள் ஓசை ஆசிரியர் குருசாமி முகம் கொடுத்துப் பேசமாட்டார். உண்மையில் என்னை விரட்டி விரட்டி வாசகர்களை நிறைவு செய்தவர் ஆசிரியர் குருசாமி அவர்கள் தான். அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றி. அடுத்து ‘வனவாசம்’ போன என்னை மீண்டும் எழுதத் தூண்டியது மலேசிய நண்பன் ஆசிரியர் திரு. ஆதிகுமணன். தனது ஞானபீடத்தில் நான் மீண்டும் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதற்கு மேல் நண்பர் புண்ணியவான் வீ. செல்வராஜ்
376

சைபீர்முகம்மது O
போன்றவர்கள் கடிதம் எழுதினார்கள். வாசகர்கள் நான் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். இத் தொடரைத் தொடர்ந்து படித்து அவ்வப்போது நேரில் கருத்துக்கள் கூறிய சில 'Silent Readers களையும் மறக்க முடியாது. டான்பூரீ ஜி.வடிவேலு. டத்தோ இக்பால், டாக்டர் சபாபதி போன்றவர்களையும் ‘மண்ணும் மனிதர்களும் கவர்ந்தது என்ற பொழுது நான் மிகக் கவனமாக எழுத வேண்டியதழ்நிலை ஏற்பட்டது!
இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கும்பொழுது ஆசிரியர் குருசாமியிடம் நான் சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. “இத் தொடர், புதிய வாசகர்களை மக்கள் ஒசைக்கு உருவாக்க வேண்டும் அது தான் எனது நெஞ்சார்ந்த ஆசை என்று கூறினேன். அது ஒரளவு வெற்றி பெற்றிருக்குமென்று நம்புகிறேன். நான் சென்ற கூட்டங்கள், உணவகங்கள். பெட்ரோல் நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் இத்தொடர்பற்றி பேசாதவர்களே இல்லை. குறிப்பாக எனது நீண்ட ஆயுளுக்கு வேண்டிக் கொண்ட தெலுக்கிந்தான் வாசகர் சிவநேசன் அவர் களுக்கும், மலாக்காப் பெரியவர் திரு. தங்கசாமி அவர்களுக்கும், வாரம் தவறினாலும் வ.பே. பகுதிக்கு கடிதமெழுத மறக்காத இலக்கியக்குரிசில மா. இராமையா அவர்களின் அண்ணன் மா. கதிரேசன் அவர்களுக்கும். நேரில் மெய்சிலிர்த்த இராம. நடராசனுக்கும், என்னைத் தூண்டித் தூண்டி எழுத வைத்த அனைவருக்கும், வாசகப் பெருமக்களுக்கும் இந்த வேளையில் நன்றி மலர் குவிக்கிறேன்.
தமிழர் வரலாறு என்பது ஏக்கப் பெருமூச்சுகளோடும் திமிறல்களோடும் அதே வேளையில் உணர்ச்சிகரமானதாகவும் சில சமயங்களில் நெஞ்சில் அவலத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அது மிக விரிந்து பரந்தது. தனியொருவனால் மொத்த வரலாற்றையும் எழுதுவது என்பது அசுர சாதனை என்றே நினைக்கிறேன். ஓர் அமைப்பு, பல்கலைக்கழகங்கள் இதனை விரிவாகச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாகவேபடுகிறது. ஒரு ஒழுங்கு முறை தேவைப்படுகிறது.
தமிழ் இலக்கிய வரலாறு முதலில் 1859ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. சைமன் காசிக் செட்டி (SIMONCASECHETTY)
377

Page 191
O மண்ணும் மனிதர்களும்
என்பவர் ஈழத்து மண்ணில் ஆங்கிலத்தில் இதனை எழுதி வெளியிட்டுள்ளார். அகரவரிசையில் 196 சங்ககாலப் புலவர்களின் வரலாறு கூறும் நூல் இது. இக்கால கட்டத்தில் சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படவில்லை. சங்கப்பாடல்கள்பற்றியோ, புலவர்கள் வரலாறுபற்றியோ சரியான குறிப்புகள் கூட இல்லை. நூலில் அந்தச் சிரமத்தை நாம் உணர முடியும். புராணங்களையும் வாய் வழிச் செய்திகளையும் கொண்டே நூல் இயற்றப்பட்டுள்ளது. என்றாலும் இந்த முயற்சி தான் முதலானது, பாராட்டுக் குரியது. 1880 களில் ஈழத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்றவர்கள் சங்க இலக்கியத்தைத் ‘தூசுதட்டி வெளிக் கொணர்ந்த பிறகுதான் தமிழ் இலக்கிய வரலாறு மக்களுக்குப் புரிந்தது. இலக்கிய வரலாற்றுக்குகே இத்தனை காலம் ஆகி இருக்கிறது, பிறகு மற்ற வரலாறுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். . . . . .
‘மண்ணும் மனிதர்களும் உண்மையில் வரலாற்றுத்தொடர் அல்ல. அது ஒரு பயணக் கட்டுரை தான். போகும் வழியில் வரலாற்றுச் செய்திகளைக் கூட்டியும் எனது பயணச் செய்திகளைக் குறைத்தும் கொண்டேன். அவ்வளவுதான்! வரலாறை இப்படியும் சொல்ல முடியுமென்று நம்புகிறேன்.
இந்நூல் பற்றி மேலும் அதிகம் பேச நான் விரும்பவில்லை. அதுவே அதைப் பற்றிப் பேசிக் கொள்ளுமென்று நம்புகிறேன். நூலின் வெற்றி தோல்விகளை காலத்தின் கையில் ஒப்படைக் கிறேன். இறைவன் நாடினால், வேறு இடத்தில் வேறு களங்களில் சந்திப்போம்! · '; ' - நூல் விரும்புவோர்.இந்த முகவரிக்கே Money Order / Cheque epsulb usewasses inspicuusyub :
S. PEERMOHAMED . C/o. MUHL ENTERPRISES, 38-Jalan Selaseh - 19, Taman Selaseh - 68100 Batu Caves, Selangor.
378

சைபீர்முகம்மது O
ஆதார நூல்கள்
1.
17.
18.
19.
20.
21.
India Since 1526 - By V.D. Mahagan - S. Chand & Co Ltd. New Delhi ". . Akbar the great Mughul - By V.A. Smith Mewar and the Mughal Empire - Sharma History of the Sikh - H.R. Gupta Studies of the Later Mughal History of the Punjab
Guru Gabind Singh - Kartar Singh
Rise of Sikh Power - N.K. Sinha
History of Jahangir - Benir Prasad - London - 1922. Cambridge History of India - Burn Richard - Vol IV Babar - S.Lane Poole
Religious Policy of the Mughals - Shama Sri Ram
Rise and Fall of the Mughul Empire - R.P. Tirupathi Religious inovation of Akbar - H.H. Wilson Early Records of British India (1878) India at 50 1947 - 1997 - Express Ruplication Ltd.
India Travel Survival Kit - Lonely Planet Publication U.S.A.
மானங்காத்த மருது பாண்டியர்கள் - டாக்டர் ந. சஞ்சிவி மருதுபாண்டிய மன்னர்கள் - மீ.மனோகரன். அன்னம் வெளியீடு விடுதலைப் போரில் தமிழகம் - ம.பொ.சிவஞானம், பூங்கொடிப் பதிப்பகம் ஆற்றங்கரையினிலே - டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை. பழனியப்பா பிரதர்ஸ் மாமன்னர் மருது பாண்டியர் வரலாற்றுக் கும்மி - ம்ணிமன்ற அழகன் Y
379

Page 192
O மண்ணும் மனிதர்களும்
22.
23. 24. 25.
26.
27.
28.
29.
30.
380
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - டாக்டர் க. வேங்கடேசன்
History of Freedom Struggle in India - Dr. K. Rajayam Out Line of South Indian History - Venkata Ramanappa
History of Madurai - Dr. K. Rajayoan வந்தார்கள் வென்றார்கள் - மதன், ஆனந்தவிகடன் இராமநாதபுரம் மாவட்டம் - ‘சோமலெ’ பூரீ தாயுமானவர் வாழ்வும் வாக்கும் - அ.லெ. நடராஜன் இந்திய சரித்திரக் களஞ்சியம் - தொகுதி 1 முதல் 6 வரை ப. சிவனடி தென்னாட்டுப் புரட்சி - பொன்முத்துராம லிங்கம்

O மண்ணும் மனிதர்களும்
அனுபந்தம்
இனிய சகோதரர் சைபீர்முகம்மது மக்கள் ஓசை' (20-7-97) இதழில் ‘மண்ணும் மனிதர்களும் தொடரில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். அஃது அஜ்மீர் காஜா முயீனுத்தின் ஹஸன் அல் சிவத்தி (ரஹற்) அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தொடர் என்று கருதுகின்றேன்.
பொதுவாக இறை நேசர்களைப் பற்றி எழுதும்போது அவர்களின் பிறப்பு. கல்வி,இளமை, வாழ்க்கை மரபு, இறை நேசர் தகுதியை எய்த அவர்கள் மேற் கொண்ட கடின உழைப்பு, அவர்களின் வாழ்நாள் பணி முதலிய விவரங்களை
அறிந்து கொண்டு எழுதத் தொடங்குவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். இல்லையென்றால் குளிக்கப்போய். கதையாக முடிந்துவிடும்.
உங்கள் கட்டுரையில் யாருக்கோ அமைதி கூற முயல்கின்றீர்கள்.அதற்கு சான்றாக மெளலானா ஜலாலுத்தின் ரூபி (ரஹற்)யையும் ஞானி குணங் குடியாரையும் கொண்டு வருகின்றீர்கள். இவர்கள் மூவரையும் முஸ்லிம்கள் அல்லர், அல்லது இஸ்லாத்திற்குள் கட்டுப்படாமல் அதற்கு அப்பால் சென்றவர்கள் என்று நிறுவுவதில் உங்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம்?
'அஜ்மீர் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு முஸ்லிம் சூஃபியின் வரலாறாகக் காணாமல் ஓர் இறைசித்தர் என்ற வகையில் காணும் படியாக இவ்வேளையில் நான் கேட்டுக் கொள்கிறேன். அது தான் உண்மை’ என்று எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்?
காரா நாயகம் யார்? அவர் ஒரு முஸ்லிம் அவர் தகுதி என்ன? முஸ்லிம் சூஃபி அவர் பணி என்ன? இஸ்லாத்தைப் பிரச்சாரத்தின் வழி பரப்ப இந்தியா விற்கு வந்தார். இவை, காஜா நாயகம் பற்றிய அடிப்படையான உண்மைகள். இவற்றை ஒதுக்கிவிட்டு காஜா நாயகத்தின் வரலாற்றைக் காண்பது எப்படி?
‘சூஃபிகளும் சித்தர்களும் மதங்களையும் சடங்குகளையும் கடந்தவர்கள்' என்றும் கூறுகின்றீர்கள்.
சித்தர்கள் பற்றி நான் ஏதும் கூறுவதற்கில்லை. ஆனால் சூஃபி எனப்படும். முஸ்லிம் ஞானிகள் மதம் கடந்தவர்களா? அப்படியானால் மதம் என்பது என்ன? “இறையொருமைக் கோட்பாடும் அதன் அடிப்படையிலான அக - புற ஒழுக்கங்களும்தான் மதம் என்றால் அது இஸ்லாம் மதம்தான்.” இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை.இந்த இஸ்லாத்தைப் பரப்புவதற்காகக்தான் காஜா நாயகம் இந்தியாவிற்கு வந்தார். தம் வாழ்நாளில் 95 இலட்சம் இந்தியர்களை இஸ்லாமிய நேர்வழியில் இணைத்தார் என்பது வரலாறு.
சூஃபிகளையும் சித்தர்களையும் ஒருங்கிணைத்துக் குறிப்பிடுகின்றீர்கள். அது சரியான மதிப்பீடு அல்ல. அட்டாங்க யோகநெறியைப் பின்பற்றிப் பிராணாயாமம் செய்து எட்டு வகை சித்திகள் கைவரப் பெற்றவர்கள் சித்தர்கள். இச்சித்தர்கள் இறைவனைத் தங்கள் விளையாட்டுப் பொருளாகவும் கருதுவர். பாம்பாட்டிச் சித்தரின் ‘சித்தர் சம்வாதம் இதை விளக்கும்.
அல்லாஹற்வை இறைவனாக ஒத்துக்கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) எந்த வணக்க வழிபாடுகளை கற்றுக் தந்தார்களோ, அவற்றை அப்படியே
381

Page 193
சைபீர்முகம்மது Ο
பின்பற்றி ஒழுகுகின்றவர்கள்தாம் சூஃபிகள். இதில் அணுவளவு மாறுபாடு நேர்ந்தாலும் தூக்கி எறியப்பட்டு விடுவார்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அப்படியானால் முஸ்லிம்கள் அனைவரும் சூஃபிகளா என வினவத் தோன்றலாம். நடரிகள் நாயகத்தின் வாழ்வியல் மரபாகிய ஷரீகத்தில் குறைந்த பட்ச வேலைத் திட்டமும் உண்டு. நிரப்பமான வேலைத் திட்டமும் உண்டு. குறைந்தபட்ச வேலைத் திட்டத்தைப் பின்பற்றினாலே ஒரு முஸ்லிம் ஈடேற்றம் பெற்றுவிட முடியும் நிரம்பமான வேலைத் திட்டத்தைப் பின்பற்றுவோர் ஈடேற்றம் பெறுவதோடு அல்லாஹற்வின் நேரத்தையும் பெற்றுக்கொள்வர். முன்னவர் முஸ்லிம் எனப்படுவதோடு, வலியுல்லாஹற் - அல்லாஹ்வின் காரியக்காரர், அல்லாஹற்வின் நேசர்’ என்னும் தகுதியையும் பெற்றுக் கொள்வார். இந்த வலியுல்லாஹற்க்களே சூஃபி எனவும் குறிக்கப்படுவர்.
இந்த வகையான வர்தாம் அஜ்மீர் காஜா நாயகம். மெளலானா ஜலாலுத்தின் ரூமியும் குணங்குடி மஸ்தானும் இவ்வகையினரே. இத்தகைய சூஃபிகள் எந்நிலையிலும் இஸ்லாத்தைக் கடக்க மாட்டார்கள். இஸ்லாமியத் தொழுகை, நோன்பு முதலிய கடமைகளைக் கைவிட்டு - கடந்து - அப்பால் செல்ல மாட்டார்கள். ஏனெனில் இவர்களின் முன்மாதிரி, நபிகள் நாயகம் (ஸல்)தாம். வாழ்வின் இறுதி நேரம் வரை அவர்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தங்களுக்கு மனதில் படும் சிடர்களை மட்டுமே அழைத்து உபதேசிப் பார்கள்' என்பதும் சரியல்ல. இஸ்லாமிய நேர்வழியை எல்லா மக்களுக்கும் போதிப்பதே சூஃபிகளின் கடமை. எனவே 'பல்வேறு மதங்களின் பெயர்களில் (உள்ள) பல்வேறு சித்தர்களையும் நாகூர் ஆண்டகை. அஜ்மீர் காஜா நாயகம், பகுதாதின் அப்துல் காதர் ஜீலானி போன்ற முஸ்லிம் சூஃபிகளோடு ஒப்பிடுவது கண்டனத்திற்கு உரியது.
மெளலானா ஜலாலுத்தின் ரூமியின் கஜல் பாடல்களில் இருந்து நான்கு வரிகளையும், குணங்குடியார் பாடலில் இருந்து ஒரு வரியையும் எடுத்துப் போட்டுக் குழம்புகிறீர்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? சூஃபி நிலை அடைந்தவர் முஸ்லிம் அல்லர்; யூதர் அல்லர், ஃபார்ஸி அல்லர்; கிறிஸ்தவர் அல்லர் எனக் கருதுகின்றீர்களா?
சூஃபி என்றாலே அவர் 'முஸ்லிம' என்பதுதான் பொருள்.இதற்கு மாறாகக் 'குறுக்குச்சால் ஒட்ட முயல வேண்டாம். அப்படியானால் ரூமியின் பாட்டு என்ன? சுருக்கமான விளக்கம் இதுதான்.
சூஃபித்துவப் பாதையில் அல்லாஹற்வின் நேசத்தை முன் வைத்துப் பயணம் செய்வது இரும்பை நெருப்பரில் இட்டுக் காய்ச்சுவதைப் போன்ற முயற்சி. ஒருநிலையில் பழுக்கக் காய்ந்த இரும்பு நெருப்பைப் போலவே ஆகிவிடும். அந்நிலையில் நெருப்பின் தன்மை இரும்பிற்கு வந்து விடும். அப்போது இருமபும் நெருப்புப் போலவே மதிக்கப்படும். நெருப்பிலிருந்து எடுத்து விட்டால் இரும்பு பழையபடி இரும்பின் நிலைக்குத் திரும்பிவிடும். இதே போல் அல்லாஹற்வின் நேசத்தை முன்வைத்த முயற்சியில் மூழ்கி விடும் சாதகன், ஒரு கட்டத்தில் தன்னிலை இழந்து விடுவான். இது 'ஃபனா பில்லாஹற் அல்லாஹற்வில் இழந்து போதல்’ எனப்படும்.இந்நிலை சாதகனின் முதிர்ச்சிக்கு ஏற்ப உடனடியாகவோ
382

O மண்ணும் மனிதர்களும்
சற்றுச் சுணங்கியோ நீங்கிவிடும். நபரிமார்களைத் தவிர வேறு யாருக்கும் நீடித்திருக்க மாட்டாது. இந்த ஃபனா பில்லாஹற் நிலையில் வெளிப்படும் சொற்களே மெளலானா ரூமியின் பாடல் வரி போன்றவை. இது சாதகனின் தளும்பல் பேச்சே அன்றித் தன்னிலை விளக்கம் அல்ல. அந்நிலை நீங்கினால் அதே சாதகன் முன்னர் தான் கூறியதை மறுத்து விடுவான்.
இஸ்லாமிய சூஃபித்துவம் கடல் போன்றது. ஆயுள் முழுவதும் ஆய்வு செய்த ஏ.ஜே. நிக்கல்ஸன் போன்றவர்களால்தான் அதன் நுட்பத்தை உணர (փւգ-պահ,
எனவே நீங்கள் கருதுவதுபோல் அஜ்மீர் காஜா முயீனுத்தின் ஹஸன் அல் சிஷ்தி (ரஹற்)யின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதுங்கள். சூப்பித்தும் பற்றி எழுதுவதென்றால் முழுமையாக ஆய்வு செய்து தெளிந்த பின் எழுதுங்கள்.
புலவர் ப.மு. அன்வர் கோலாலம்பூர் 3-8-97
அகராதிகளில் காணப்படும் அன்பரில் நம்பிக்கையற்ற கிரேக்கோ எழுதுவது, தஃபிகளோடு சித்தர்களை ஒப்பிடுவதா என்ற வரிகளை கண்டவுடன், சூஃபிகளின் உள்மன பயணம் பற்றி எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். ஒப்பிட இயலாத்தருணங்களை - கணங்களை - காலமற்ற நிலைகளைப் பற்றிச் சொல்வீர்கள் என எண்ணினேன்.
தாங்களும் சொற்களின் விளையாட்டில் (Game Of Words) கலந்து கொண்டு விட்டீர்கள்! மனித இன வளர்ச்சியில் மொழி இடையில் ஏற்பட்டதே. அது இன்று வளர்ந்துள்ள அளவு, அன்பு வளரவில்லை. லேபிள்கள் கூடி விட்டன.
காஜா நாயகம் இஸ்லாத்தைப் பரப்புவதற்காகத்தான் இந்தியாவுக்கு வந்தார். தம் வாழ்நாளில் 95 இலட்சம் இந்தியர்களை இஸ்லாமிய நேர் வழியில் இணைத்தார் என எழுதியுள்ளிர். அன்று முதல் இன்று வரை மதங்கள் மாறுபவர்கள் அனைவரும் வேறு எந்த நோக்கமும் இன்றி சமயம் கருதியே மாறினார்கள் - மாறுவார்கள் என உமது மனசாட்சி சொல்லுமா?
சூஃபிகளில் இமாம் கஜாலி, மனப்பதனாக்கம் பற்றி ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சியாளர் பாவ்லாவிற்கு (1.P PAVLOV 1849 - 1936) முன்னரே சொல்லியிருக்கிறார். எனினும் மனச் சுதந்திரத்தோடு அதை தெளிவாக விளக்கினால், அவரை நாத்திகராக ஒரு சிலர் கருதலாம் எனத் தயங்கி இருக்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவத்தைக் கூறலாம். கி. பி 1106ல் தேவதூதரான இப்ராஹீமின் பிறப்பிடமான கலீலாவுக்குச் சென்றபோது, அவர் கிழ்க்கண்ட மூன்று சபதங்கள் எடுத்துக் கொண்டார்.
1. எந்த மன்னனின் அரசவைக்கும் செல்ல மாட்டேன். 2. எந்த அரசன் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொள்ள மாட்டேன். 3. யாருடனும் விவாதம் செய்யமாட்டேன். (பிறகு அவர் சபதத்தை உதறியது இங்கு தேவையற்றது). பேச்சுரிமை அப்போதும் முழுமையாக இல்லை என்பதை வாசகர் நினைவில் கொள்ளவே இதைக் குறிப்பிட்டேன். சூஃபி தத்துவங்கள் மற்ற இடங்களிலும் இருந்திருக்க முடியும் ஒருகால் இஸ்லாம் வருகைக்கு முன்னரும் அது இருந்திருக்கலாம்.
383

Page 194
சைபீர்முகம்மது O
அழகு - உண்மை - அமைதி - அன்பு - மகிழ்ச்சி போன்ற நிலைகளுக்கு வரையறை தர இயலாது. இதற்கு
முன்னாலோ, பின்னாலோ எந்த சமயத்தையும் இணைக்க முடியாது. சூஃபி அறிவென்பது மனிதன் தன்னை உணரவும், நிலைத்தன்மை பெறச் செய்வதுமாகும்!
நபிகள் நாயகம் (Prophet Muhammad) குடும்பத்தின் தொடர்ச்சியாக விளங்கும் இட்ரிஷ் ஷாவால் மேற்கண்ட வரியிட்ட செய்தி கூறப்பட்டது. ஆதாரம் : (The Way Of The Sufi - Idries Shah, Lutasub 312, Penguin Books).
இட்ரிஷ் ஷாவின் மற்றொரு தேன் துளி -
அடையாளம் என்பதென்ன ?
யாரோ கதவைத் தட்டினார். பெயாஜிட் வெளிவந்தார். "யாரைத் தேடுகிறாய்?"
தட்டியவர் மறுமொழி கூறினார் - “பெயாஜிட்டை”
பெயாஜிட் பதிலளித்தார் - "நானும் 30 வருடமாய் அவரைத் தேடுகிறேன். இன்னும் அவரை காணவில்லை!"
al sulfahuir py Ludasu,
இனி சித்தரின் மற்றொரு பக்கத்தை பார்ப்போம். கடவுளுக்கு உருவமில்லை. அருவமானவர். வெட்ட வெளியே கடவுள் என்ற உண்மையை அறிந்தவர்களுக்கு ஆடம்பரமான பட்டயங்கள். விருதுகள் எல்லாம் எதற்காக என்று கேட்கிறார். மதவாதிகளின் ஆடம்பரத்தை வெறுக்கும் பாடல் இது.
வெட்ட வெளிதன்னை மெய்யென்றுஇருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கழ!- குதம்பாய்!
பட்டயம் ஏதுக்கடி! - குதம்பைச் சித்தர்
அறிவைத் தேடி 'சின் சீனாவுக்கும் செல்லலாம் என்பதை ஏட்டில் படித்திருப்பீர்கள். அவ்வளவு விரிந்த மனம் படைத்தவர் நபிகள் நாயகம். அறிவுக்கு சமய லேபிள் போட்டு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வருவது. மனித நேயத்திற்கு எதிரானது.
கரும்பலகையில் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்றால் முன்னர் எழுதியதை அழித்துவிட வேண்டும்! அப்போதுதான் புதிதாக தெளிவாக எழுத லாம். பெட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய ஐன்ஸ்டீனின் "சார்பு நிலை நூலுக்கான முன்னுரையில் புதிய "திங்கிங் கேப் அணிய வேண்டுமென்றது இதைத்தான். சூஃபியின் நிதர்சன உண்மைகளை அறிந்தவர்கள் - உள்வழி பயணத்தை உணர்ந்தவர்கள் - எழுதினால் - பேசினால் - என்ன இலாபம் கிடைக்கும் என கணக்கிடமாட்டார்கள்.
'சுன்னத்' செய்து கொண்டு சூஃபிகளோடு வாழ்ந்தவர் ஓஷோ. அவரால் சூஃபி தத்துவங்கள் பல இன்று நூல் வடிவம் பெற்றுள்ளன. எல்லா சமயங்களையும் வெளிப்படையாக விமர்சனம் செய்தார் அவர். சமயங்களுக்கும் சமயத்திற்கும் (Religiousness - Not Religion) உள்ள வேறுபாட்டை விளக்கியவர் ஓஷோ. அவரால் மன அமைதி அடைந்தவர்கள் - கால வெளியிலிருந்து
384.

O மண்ணும் மனிதர்களும்
விடுபட்டவர்கள் - ஏன், செக்ஸ்லிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை உமக்குத் தெரியாது. அவர் ஒரு சூஃபி - லேபிளை கைகழுவியவர்,
‘சூஃபியிசம்' எவ்வளவு காலமாக இருந்து வருகிறது என்ற வினாவிற்கு எப்போதும் இருந்திருக்கிறது என்கிறார் இட்ரிஷ் ஷா, சூஃபி என்றாலே அவர் முஸ்லிம் என்பதுதான் பொருள் என்றால் குறிப்பிட்ட சமயம் உண்டான பின்னரே சூஃபிக்கள் தோன்றினர் என அவர் சொல்லியிருக்க வேண்டும்.
கிரீஸ் நாட்டில் ஏதன்ஸ் நகரத்தில் சிறப்பாக புதிய இயக்கம் முன்பு தோன் றியது. அந்த இயக்கம் தனி நிலையையும் (Individualism) சுதந்திரபான்மையையும் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதைப் பரவச் செய்தவர்கள் Sophists' என்பவர்கள். இது "வெளிப்படையான உண்மை' என்பது அவர்களது கருத்து. இது ஒருகால் 'சூஃபி என்ற சொல் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்திருக்க கூடும்.
சூஃபிசியம் குறிப்பிட்ட ஒரு மொழிக்கும் - குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் குறிப்பிட்ட வரலாற்று காலத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, எந்த மனிதர்களுக்கும் என்றே அவர் சொல்கிறார்.
“ஓ! அதுவா - மற்றவர்கள் என்னுடன் மோதாமல் இருக்க."
'நீங்களாக களிப்படையுங்கள்! இல்லையென்றால் கற்றுக் கொள்ளுங்கள். யாரையாவது வருத்தமடையச் செய்வீர்! அவ்வாறு செய்யாவிட்டாலும் எவராவது வருத்தமடையக் காரணமாவீர். இப்படி நான் எழுதல்; முல்லா நசுருதின் எழுதச்
கிரெக்கோ 10-8-97 இந்தியாவின் தண்ணீர் பற்றி.!
இந்தியாவின் மன்னர் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டி விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது. தாமும் தம் குழுவினரும் உபயோகித்துக் கொள்வதற் காக இந்தியாவிலிருந்து இந்திய நீரை கொண்டு சென்றார் என்று மொட்டையாகச் சொல்லிவிடக்கூடாது. காரணம் அவர் கொண்டு சென்றது புனித கங்கை šGMT !
ஐதிகம் என்னவென்றால். ஒரு மன்னன் தன் சேதத்தை விட்டு வெற்று தேசம் போவது கூடாது என்பதாம்! அப்படிச் செல்வானாகில் தன் தேசத்து தண்ணீரையே புழங்க வேண்டும் என்பதும் மரபாம்!
இப்படித்தான் செவிவழிச் செய்தியாக அடியேன் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். மேற்படி சொன்னதற்கு ஒப்ப அம்மன்னன் தன் தேசத்து தண்ணி ரான புனித கங்கை நீரைத் தனது இங்கிலாந்து பயணத்தின்போது கொண்டு சென்றது உண்மைதான். (வெள்ளியிலான பெரிய அண்டாக்களில்). இதில் இந்திய நீர், இங்கிலாந்து நீர். என்று கேலியாக கேள்வி கேட்க என்ன உள்ளது?
ஏ. ஆர். கப்பிரமணியம், பத்துகேவ்ஸ் 24-8-97 இனிய நண்பர் கிரேக்கோ.
“சேணியனுக்கு ஏன் கோந்தி லெல்லா" என்னும் நாட்டுப்புறப் பழ
மொழியே நினைவிற்கு வருகின்றது. நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் (மக்கள் ஓசை 108.1997).
385

Page 195
சைபீர்முகம்மது O
சகோதரர் சை. பீர்முகம்மது சூஃபிகள் பற்றிப் பிறழ உணர்ந்து எழுதியிருந்ததை மறுத்து எழுதியிருந்தேன். இடையில் நீங்கள் நுழைந்து மூக்கை நீட்டுவதேன்? சொல் விளையாட்டு நடத்துவதற்கும், லேபிள் ஒட்டுவதற்கும் நேரம் இல்லாதவன் நான்.
காஜா நாயகம் 95 இலட்சம் பேர்களை இஸ்லாமிய நேர்வழியில் இணைத்தார் என்பதைப் படித்துவிட்டு ஏன் இவ்வளவு எரிச்சல் அடைகிறீர்கள்? அவர்கள் ஏன் சேர்ந்தார்கள் என்பதைக் கேட்டு அறியும் வாய்ப்பு இன்று இல்லை. ஏனெனில் அவர்களில் யாரும் இன்று உயிரோடு இல்லை. ஆயினும் முன்னாள் சோஷியலிஸ்ட் "ரோஜர் காராடியும், இயற்கை விஞ்ஞானி "மோரீஸ் புகை'லும் பிரான்சில் வாழ்கின்றனர். முன்னாள் பாப் பாடகர் கேட் ஸ்டீவன், 'யூசுஃப் இஸ்லாம்" என்னும் புதிய பெயருடன் இங்கிலாந்தில் வாழ்கின்றார். இவர்களைக் கேட்டால் விளக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் உள்நாட்டுக்காரரில் பலருடைய முகவரிகளைத் தர முடியும். அன்றி நீங்கள் ஏன் இஸ்லாத்தில் இணைந்தீர்கள் என்று வினவும் கடப்பாடு எனக்கு இல்லை. ஏன்? இப்படிக் கேட்கும் மேலாண்மையை யாருக்கும் நல்கவில்லை இஸ்லாம்.
முஸ்லிம் சூஃபியாகிய இமாம் கஸ்ஸாலி இஸ்லாமிய நெறிவிளக்க நூல்களே எழுதினார். திருக்குர் ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரபையும் அடிப்படையாகக் கொண்டே எழுதினார். நீங்கள் திருக்குர்ஆனைப் படித்திருந்தால், அவர் விளக்கும் மனப்பதனாக்க நெறி. திருக்குர்ஆனில் உள்ளதன் விரிவுரை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எதையெதை எந்த அளவிற்கு விளக்க வேண்டுமோ அந்த அளவிற்கு விளக்கியே இருக்கின்றார். "மனச்சுதந்திரத்தோடு நாத்திகராகக் கருதப்படுவோம்' என்ற அச்சம் அவருக்கு இருந்திருக்கக் காரணமே இல்லை. வெறும் ஊகத்தின் அடிப்படையில், உலகப் பேரறிஞர் இமாம் கஸ்ஸாலியின் மனச் சுதந்திரத்திற்குக் களங்கம் கற்பக்க முயலாதிர்கள். நீங்கள் மேற்கோள் காட்டும் நிகழ்ச்சி எந்த வகையிலும் உங்கள் ஊகத்தை நிலை நாட்ட உதவாது.
இஸ்லாத்தின் வரலாறு ‘முதல் மனிதன்' பூமிக்கு வந்ததில் இருந்து தொடங்குகின்றது. ஆதலால், இஸ்லாம் வருகைக்கு முன்னரும் அது (சுஃபித் தத்துவம்) இருந்திருக்கலாம் என்னும் கருத்து நகைப்பிற்கு உரியது. சூஃபித் தத்துவத்தின் அடிப்படையும் செயற்பாடும் இதுதான். 1. அல்லாஹ்வை மட்டுமே நம்புவது - இஃது 'ஈமான்’ எனப்படும் 2. அல்லாஹற்வின் மீது அன்பு கொள்வது - இது 'முஹப்பத்' எனப்படும். 3. அல்லாஹற்வின் மீது காதல் கொள்வது - இஃது ‘இஷ்க் எனப்படும் 4. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரே முன்மாதிரியாகக் கொண்டு, அவர்கள் செயற்பாடுகளை அப்படியே கைக்கொண்டு அல்லாஹற்வின் நினைவில் அமிழ்வது - இஃது ‘இபாதத்' என்றும் 'திக்ர்" என்றும் கூறப்படும்.
இதற்கு முரணாக எவர் செயற்பட்டாலும் அது 'வழிகேடு" என்றே சொல்லப்படும். அவர் முஸ்லிம் ஆகவும் மாட்டார். சூஃபி ஆகவும் மாட்டார். ஒரு சூஃபியின் இலட்சியம் அல்லாஹற்தான். அல்லாஹற்வின் அன்பைப் பெறுவதுதான்.
386

O மண்ணும் மனிதர்களும்
அல்லாஹற்வின் அணுக்கத்தைப் பெறுவதுதான். சூஃபிகளின் மொழியில் இஃது 'அல்லாஹற்வைப் பெற்றுக்கொள்ளல் எனப்படும். பெண்பால் சூஃபி ராபியா, “யா அல்லாஹ்! நான் உனக்காக உன்னை வணங்கினால், எனக்கு உன்னைக் கொடு உன் அன்பைக் கொடு” என இறைஞ்சியது இதைத்தான்.
சூஃபிகளின் முதலும் முடிவுமான இலட்சியம் 'அல்லாஹற்'தான். இதற்கு மாற்றாக 'இறைவன் - இலாஹி" என்னும் சொல்லைக்கூட ஏற்க மாட்டார்கள். இந்நிலையில் ‘வெட்டவெளி’ பற்றியோ, ‘வேறுவெளி பற்றியோ பேசினால் ‘ஸிந்திக் (பிறழ்ந்தவர்)" எனப் புறக்கணித்துச் சென்றுவிடுவர்.
‘ஓஷோ" என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர். என் கருத்து சரி என்றால், அவர், "செக்ஸ் சாமியார்’ என்று பத்திரிகைகள் பிரபலப்படுத்திய ரஜனிஷ், (சரிதானே) சூஃபி தத்துவம், நூல் வடிவம் பெறுவதற்கு இந்த மனிதரின் தயவை நாடி நின்றதாக நம்புவது சிறுபிள்ளைத்தனம்.அவர் 'சுன்னத் - கத்னா’ செய்து கொண்டதும், சூஃபிகளோடு வாழ்ந்ததும் அவர் சூஃபி என்பதற்கு ஆதாரமாகமாட்டா. யூதாகளும் அரபியரில் முஸ்லிம் அல்லாதாரும் கூட சுன்னத் செய்து கொள்பவர்களே. ஓரளவு உருவ ஒற்றுமை இருப்பதனாலும் சில காலம் மான்களோடு சேர்ந்திருந்ததனாலும் ஆடு மானாகிவிடுமா? அவர் காலத்தை விட்டாரோ, இல்லையோ- அவரைக் காலம் விடவில்லை என்பதற்கு paiCE60 litti கல்லறையே சாட்சி
பாவம் இதுரிஸ் ஷாஹற்! இந்த அளவு சின்னப்பட நேரும் என்பது தெரிந்திருந்தால் தூவலை முறித்துப் போட்டிருப்பார்! நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கவே மாட்டார். எதையும் பார்க்க மாட்டோம் என்று கண்களையும், எதையும் படிக்க மாட்டோம் என்று வாயையும், எதையும் கேட்க மாட்டோம் என்று செவிகளையும் பொத்திக் கொண்டிருப்பவர்களின் கைகளில் தம்முடைய நூல்கள் சிக்கக்கூடும் என்பதைக் கண்டாரா. என்ன? நீங்கள் டாக்டராக இருக்கலாம். ஆனால் அந்தத் தகுதியோடு கே. எல். டவருக்கு 'வரைபடம் தயாரிக்க முன்வராதீர்கள்!
சூஃபித் தத்துவ அடிப்படை எல்லாக் காலங்களிலும் இருந்தது. ஏனெனில் இஸ்லாம் எல்லாக் காலங்களிலும் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாம் நிரப்பம் Perfection ஆனது. சூஃபித் தத்துவமும் இன்றைய வடிவம் பெற்றது. (இது நீண்ட வரலாறு. அஃது இங்கு வேண்டா என விடுகிறேன்).
சூஃபி என்னும் சொல்லுக்கு கிரேக்க மூலம் தேட முயல்கின்றீர்கள். இஸ்லாத்திற்கும் சூஃபித் தத்துவத்திற்கும் இடையில் 'அடிப்படை உறவு இல்லை என்று நிறுவவா?
அரபியில் 'ஸிஃபத்' என்றால் குணச்சித்திரம் - Character - என்பது பொருள், சூஃபித் தத்துவம் குணச்சித்திரச் செம்மையை நிலைநாட்ட முயல்வது.
"ஸ"ஃப்ஃபா' என்றால் திண்ணை என்பது பொருள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் (அஸ்ஹாப்) திண்ணைத் தோழர் அஸ்ஹாபுஸ் ஷ"ஃப்ஃபா என்றொரு குழுவினர் இருந்தனர். இக்குழுவினரை அடியொற்றியோரே சூஃபி எனப்பட்டனர்.
387

Page 196
சைபீர்முகம்மது O
'ஹுஃப்' என்றால் செம்மறியாட்டின் நீண்ட உரோமம் என்பது பொருள். உரோமத்தால் தயாரிக்கப்பட்ட நீண்ட முரட்டு அங்கியே தஃபிகளின் ஆடை
மேற்கண்ட மூன்று அடிப்படைகளில் ஏதேனும் ஒன்று. துருஃபி என்னும் சொல் வழங்கக் காரணமாய் அமைந்திருததல் கூடும் என்பது ஆய்வாளர் கருத்து. ஏனெனில் சூஃபித் தத்துவம் என அறிவிக்கப்பட்ட ஒன்றைப் பின்பற்றி சூஃபிகள் உருவாகவில்லை. எளிய மக்கள் இட்டு வழங்கிய பெயரே தஃபரி என்பது. கால ஓட்டத்தில் அதுவே நிலைத்தது. அதாவது வழக்கமாக முஸ்லிம்களைவிட சற்று வேறுபட்டு உலவிய முஸ்லிம்களை, அவர்களின் உடை, கடின உழைப்பு. உலகில் ஒட்டாதிருக்கும் தன்மை, குணச்சிறப்பு முதலியவற்றை கண்டு 'சூஃபி என அழைத்தனர். அப்பெயரே நிலைத்தது. நீங்கள் ஊகிக்கும் Sophist என்னும் கிரேக்கச் சொல்லின் திரிபு அல்ல.
அறிவைத் தேடி ‘சின்’ சினாவுக்குச் செல்ல வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லை. ஏனெனில், “உங்களைப் பகல் போன்ற வெளிச்சமான பாதையில் விட்டுச் செல்கிறேன். என் சமுதாயத்திற்குத் தேவையான எதையும் விளக்கம் செய்யாமல் நான் விட்டுவைக்க வில்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.
ஒரு முறை உமர் இப்னு கத்தாப் (ரலி) ஒரு சுவடியைப் படித்துக் கொண்டிருந்தார். அது என்ன என வினவினார் நபிகள் நாயகம் (ஸல்). யூதர்களின் தெளராத்தின் (THORA) ஒரு பகுதி என மறுமொழி கூறினார். இதைக் கேட்ட நபிகளாரின் முகம் சிவந்தது. "எவன் கையில் என் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணை. சகோதரர் மூஸா (மோஸஸ்) இன்று உயிரோடு இருந்தால், என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை” என்றார்கள். உடனடியாக அந்தச் சுவடியை எரித்துவிட்டு நபிகளாரிடம் மன்னிப்புக் கோரினார் உமர் (presij?).
எனவே நபிகளாரையும் இஸ்லாத்தையும் உங்கள் தேவைக்கேற்பச் சித்தரிக்க முயல வேண்டா. கற்பனைப் படைப்பான முல்லா நஸ்ருத்தினை எல்லாம் கடைக்கால்களாக்க முயல வேண்டா.
- பகுதாதில் முஹற்யரித்தின் அப்துல்காதிர் ஜீலானி (ரஹற்) ஆன்மிக அரசு நடத்திக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு நாளும் அவர்கள் புகழ் பலபட பேசப்பட்டது. அனைத்தையும் கேட்டு வியந்த அறிஞர் ஒருவர் பகுதாதிக்கு வந்தார். முஹற்யித்தின் (ரஹற்) இடம் தங்களுடன் சில காலம் தங்க வேண்டும் என்றார். இசைவு தெரிவிக்கப்பட்டது. சில காலம் தங்கினார். அப்பால் தம் ஊருக்குத் திரும்ப அனுமதி கோரினார். “இங்கு என்ன கண்டீர்” என வினவப்பட்டது. "நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை மரபுக்கு மாற்றமாகவோ முரணாகவோ அணுவளவும் காணவில்லை” என்றார்.
இதுதான் சூஃபித் தத்துவத்தின் எதார்த்த நிலை. சூஃபசித் தத்துவம் என்பது இஸ்லாம் என்னும் மரத்தின் கனிகளில் ஒன்று. அதை வேறு மரங்களில் கட்டித் தொங்கவிட முயலவேண்டா.
- பமு. அன்வர் 24-8-97
388

O மண்ணும் மனிதர்களும்
‘மண்ணும் மனிதர்களும் தொடரில் சை. பீர்முகம்மது நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும், தொடர்ந்து எழுத வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் வரலாறுகளை நமக்குத் தெளிவாகச் சொல்கிறார்.
இதயன், ஜித்ரா, 7-9-97
ஐயா பீர்முகம்மது அவர்களே! தங்களுக்கு உலகத்திலுள்ள அனைத்து நீரும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஆறறிவு மனிதனால் தாயிடமும் தாரத்திடமும் எப்படி ஒரு வரையறையோடு பழக முடியுமோ. அதைப்
போலத்தான் கங்கை நீரும் கழிவு நீரும் வேறுவேறே!
குவாங்குமார்'7-9-97
‘மண்ணும் மனிதர்களும் தொடரில் பல்வேறு மதங்கள். இனங்கள் பற்றி சை. பீர்முகம்மது எழுதி வருவதைப் படிக்க மிகவும் சுவையாக இருக்கின்றது. குறிப்பாக இந்து மதம் பற்றி அவர் அதிகம் அறிந்து வைத்திருப்பதை ஆச்சரியத்துடன் படித்து வருகின்றேன். "சிக்கியர்களின் எழுச்சி’ தலைப்பில் அவர் எழுதியிருந்ததை ஒவ்வொரு இந்துவும் படித்துப் பயன்பெற வேண்டும்! ஒரு சிக்கியரை இன்னொரு சிக்கியர் கண்டு விட்டால் ‘சாஸ்கிரிகால்' சொல்வதாகவும், ஆனால் தமிழினம் அறிந்தவர்களைக் கண்டாலே முகம் திருப்பிக் கொள்வதாகவும் எழுதியிருப்பது எவ்வளவு பெரிய உண்மை! முஸ்லிம்களிடையேகூட "அஸ்ஸலாமு அலைக்கும்' கூறுவதைக் கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கின்றது.
இனிமேலாவது தமிழினம் திருந்த வேண்டும். ஒரு தமிழரைக் கண்டால் இன்னொரு தமிழர் “வணக்கம்' கூறும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எத்தனையோ திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் உறவினர்கள். நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தும் முகம் திருப்பிக் கொள்வதைக் கண்டு வருத்தப்பட்டதுண்டு. அந்தக் காலத்தில் இவர்களெல்லாம் ஒரு வேளை சோற்றுக்கு ஏங்கினவர்கள். இக்காலத்தில் ஏற்றம் கண்டிருப்பதால் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேனென்கிறார்கள். இறைவன் ஏட்டை திருப்பிப் போட்டால் இவர்களது ஆட்டம் அடங்கிவிடும்! பொது இயக்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை இயக்கங்களோடு வைத்துக் கொண்டு, தனிப்பட்ட முறையில் நண்பர்களாக. உறவினர்களாகப் பழக வேண்டும். இந்த பண்பு மலேசியத் தமிழர்களிடம் இருப்பதில்லை! இயக்கங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் எதிரிகளாக உருவாக்கி விடுகின்றன! சை. பீரின் ‘மண்ணும் மனிதர்களும் தொடர் கட்டுரை தமிழினத்தை மனிதர்களாக்க உதவும் என்று நம்புகின்றேன். ஆம்! தமிழர்கள் இன்னும் மனிதர்களாக உயரவில்லை. இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்!
ஏ.எஸ். ரவிப்பெருமாள், பொந்தியான், 2-9-97 ‘மண்ணும் மனிதர்களும் படிக்கும் போது, சாதாரண மனிதர்கள் முதல் பெரிய கல்விமான்களும் சரி. ராஜபுத்திரர்களும் சரி. காட்டுமிராண்டிபோல்
வாழ்ந்திருக்கிறார்கன் என்பதை எண்ணும் போது இன்றைய மனிதர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.
ஆர்.கே. தெலுக் இந்தான், 28-9-97
389

Page 197
சைபீர்முகம்மது O
“மண்ணும் மனிதர்களும்" வரையும் எழுத்தாள சை. பீர்முகம்மது மண்னோடு மனித மனங்களையும் அலசி வருகிறார் என்பது நீரோடையாக எனக்கும் புரிகிறது. ஆயினும் சிலர் வா. பே. பகுதியில் தொடுக்கும் வினாக்களுக்கு ஆவன செய்யனுமே. கொஞ்சம் அவர்களுக்கும் புரிய வைப்பது சரியல்லவா!
சி வென்னிலா லாபீஸ், 28-9-97
சை. பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும் தொடர் கட்டுரையைப் படிக்கும்போது ஆட்சி நீடிக்க எவ்வளவு கொடூரங்கள் நிகழ்ந்திருக்கின்றன
என்பதை உணர முடிகிறது!
மா. கதிரேசன், தங்கா, 19-10-97
எழுத்தாளர் சை. பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும் தொடரில் உண்மையான வரலாறுகளை படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடிமை கட்டிய கோபுரமா? வியப்பாக இருக்கிறது! பயணக் கட்டுரை என்றால் இப்படி பல வரலாறுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். எத்தனையோ பயணக் கட்டுரைகளைப் படித்துள்ளேன். ஆனால் பீர் முகம்மதுவின் கட்டுரை சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.
க. கண்ணன், தலைநகர் 30-11-97
நாடறிந்த நல்ல எழுத்தாளர் சை. பீர் முகம்மது. உண்மையில் அவரின் எழுத்தில் ஒருவித சுவை அளவுக்கு மீறியே உள்ளது. எம் பாராட்டுக்கள் அவருக்கு! ஆனாலும் அவரின் ‘மண்ணும் மனிதர்களும் தொடரில் எழுதத் தெரியும் என்பதற்காக தன்மூப்பான கருத்துக்களை சொல்லலாம் என்ற அவரது உணர்வும் தவறானாது.
ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளரான இவர் தன் தொடரில் இந்து மன்னர்களை மேலோட்டமாகவும், முஸ்லிம் ஆட்சியாளர்களை ஆழமாகவும் விமர்சிப்பதிலிருந்தே அவரின் ஒரு தலைப்பட்சமான எண்ணத்தை புரிந்து கொள்ளலாம். ஆரியர்கள், இந்தியாவில் நுழைந்து இந்திய மண்ணோடு ஒன்றிப் போனவர்கள். அவர்கள் எம்மவர்கள். ஆனால் இந்திய முஸ்லிம்கள் இன்று வரை தங்களை அன்னியராகவே கருதிக் கொள்கிறார்கள். உதாரணம் பாகிஸ்தானும், காஷ்மீரும்.
ン - ...ー மகான்களும், ரிஷிகளும், தத்துவ ஞானிகளும் மனிதன் என்றும் புனிதமாக வாழ வேண்டும் என்று கூறும் இதிகாசங்கள் தோன்றிய மாபெரும் புண்ணிய பூமியை, அன்னியர்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடக்கி ஆண்டதை, அடித்த கொள்ளையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மண்ணில் புரிந்த கொடுமைகளை
“The Muslim Rule in India' star p grasa) antheugas sasar garfurt விவரித்திருக்கிறார். ஆகவே, சை. பீர் முகம்மது அவர்களே எழுதுங்கள். ஆனால் சரித்திரத்தை திசை மாற்றாமல் எழுதுங்கள்!
பிஷால் பெட்டாலிங் ஜெயா, 30-17-97
390

O மண்ணும் மனிதர்களும்
பெட்டாலிங் ஜெயா பிஷால். அவர்கள் சில கருத்துக்களை 'வாசகர்கள் பேசுகிறார்கள்’ பகுதிக்கு எழுதியிருந்தார். அவற்றுக்கு விளக்கம் தருவது எனது கடமை என்றே நினைக்கிறேன்.
முதலில் நான் 'சை. பீர்முகம்மது' என்று முஸ்லிமாக, இருந்து எழுதுவதால் இந்த ‘மண்ணும் மனிதர்களும் தொடரின் சில பகுதிகள் சிலரை உறுத்துகின்றன. பிச்சைமுத்து என்ற பெயரில் எழுதினால் பிரச்சனை இல்லை. என்னை நன்கு அறிந்தவர்கள். எனது உணர்வுகளைப் புரிந்தவர்கள் நிச்சயமாக நான் எழுதுவதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்வார்கள்.
சித்தர்களும் சூஃபிகளும் ஒரு தட்டில் பார்க்கவேண்டியவர்கள் என்று எனது கட்டுரையில் கூறிய பொழுது சில முஸ்லிம் நண்பர்கள் என்னை திட்டினார்கள்.
'கற்சிலைக்கு வெறுமனே பால் கொடுக்கிறார்கள்’ என்பதை நான் எழுதியதை குறிப்பிட்டுள்ளீர்கள். சிலை வணக்கத்தின் பொழுது பாலாபிஷேகம் செய்வதைப் பற்றி இங்கே நான் சொல்லவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'பிள்ளையார் சிலை பால் அருந்துகிறது' என்ற வாதத்தைத் தான் நான் முன் வைத்தேன். அதுவும் சந்திரசுவாமிகள் என்ற அரசியல் சுவாமி 'எனது வேண்டுகோளை ஏற்றே பிள்ளையார் உலக முழுதும் பால் அருந்துகிறார்” என்று கூறினாரே, அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அப்படியானால் இந்தியாவில் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இடங்களில் இவர் உடனே மழை பொழிய வைக்கலாமே! மக்கள் குடிநீர்கூட இல்லாமல் குடமேந்தி போராட்டம் நடத்தும் பொழுது இந்த ‘சுவாமிகள்’ எங்கே இருந்தார்? தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் எப்படி ஆண்டவனுக்கே கட்டளை இட முடியுமி
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்து இந்திய மண்ணோடு ஒன்றிப் ப்ோனவர்கள். அவர்கள் எம்மவர்கள் என்று நீங்கள் எழுதியதிலிருந்தே நீங்கள் யார் என்பதைக் காட்டி விட்டீர்கள். மகான்களும், ரிஷிகளும், தத்துவஞானிகளும் மனிதன் என்றும் புனிதனாக வாழ வேண்டும் என்று கூறும் இதிகாசங்களும் தோன்றிய மாபெரும் புண்ணிய பூமி என்று நீங்கள் கூறுவதிலிருந்தே இரண்டாம் கட்டமாக உங்களின் அடையாளம் தெரிகிறது.
‘வேத பாராயணம் செய்வதை காதால் கேட்டால் சூத்திரனுடைய காதுகளில் உருக்கிய ஈயம் அல்லது அரக்கு ஊற்றப்பட வேண்டும்; வேதவாக்கியங்களை உச்சரித்தால் சூத்திரனின் நாவுகள் துண்டிக்கப்பட வேண்டும்; வேத வாக்கியங்களை மனதில் வைத்திருந்தால் அவனது உடல் இரண்டு துண்டுகளாக்கப்படும். இவ்வாறு கெளதமதர்ம சூத்ர (அத்தியாயம் x x 4 - 5) கூறுகிறது.
பிறப்பில் உயர் சாதிக்காரனுக்குச் சமமாக சூத்திரன் உட்கார்ந்தால் அவனுடைய ஆசன அவயத்திலும் இடுப்பிலும் சூடு போட்டு ஊரைவிட்டே வெளியேற்ற வேண்டும்.
"உயர் சாதிக்காரனின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவனுடைய கடமைகள் பற்றி தத்திரன் போதித்தால் அவனுடைய வாய், காதுகளில் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும். இவ்வாறு நாரதஸ்மிருதி என்ற வேதம் கூறுகிறது.
391

Page 198
சைபீர்முகம்மது O
"உயர் சாதிக்காரன் பெயரையோ, அவனுடைய உயர் சாதி பற்றியோ இழிவாகப் பேசினால் பத்து அங்குலம் நீளமுள்ள ஊசியைக் காய வைத்து சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்.’ இவ்வாறு விஷ்ணு ஸ்மிருதி (அத்தியாயம் xi - 127 - 131) கூறுகிறது
'சூத்திரனின் பொருள்களை மன அமைதியுடன் உயர் சாதிக்காரன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் தத்திரனுக்கு எந்தப் பொருளும் சொந்தமில்லை. சூத்திரனின் ஆஸ்திகளை அவனுடைய எஜமான் எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. எவ்வாறு மனுஸ்மிருதி (அத்தியாயம் Vi - 417) கூறுகிறது.
“தத்திரனுக்குச் சட்டம் போதிப்பவன், மத அனுஷ்டானங்களைச் செய்யச் சொல்பவன் அத்தகையவன் பிராமணனாயினும் "அஸப் விரிதா' என்னும் நகரத்தில் சூத்திரனோடு உழல நேரிடும் இவ்வாறு மனுஸ்மிருதி (அத்தியாயம் wi - 78 - 81) கூறுகிறது.
பிறப்பில் உயர் சாதியினருக்கு எதிராக உள்ளவர்களை அக்காலத்து பழைய வேத நூலான ரிக்வேதம் 'தாஸ்யூக்கள்’ என்றே அழைக்கிறது. அக்காலத்து சிந்து நதி திரத்தில் ஆரியர்கள் குடியேறிய பொழுது அவர்களின் விரத முறை, கிரியைகள், கேள்வி முறை, யாக முறை, பலியிடுதல் போன்றவற்றை இந்த 'தாஸ்யூக்கள்’ என்று வர்ணிக்கப்படுகின்ற ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் - அதுவும் திராவிட நாகரிகம் கொண்டவர்கள் - ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய பழங்குடி மக்களை தாஸ்யூக்கள்’ எனும் பெயரால் ஆரியர்கள் எதிர்த்ததை, போரிட்டுக் கொன்று குவித்ததை ரிக்வேதம் (X-22-8ம் X-22-10ம்) கூறுகின்றன.
"சூத்திரனுக்குக் கடவுள் விதித்துள்ள ஒரே தொழில் பிறப்பில் உயர் சாதிக்காரர்களுக்கு அடிமையாக இருந்து தொண்டு செய்து வருவதே யாகும்” எனவும் "சண்டாளன். சாதியிலிருந்து ஒதுக்கப்பட்டவன். பிரேதம், பிரேதத்தைத் தொட்ட ஒருவன் இவர்களைத் தொட்டால் திட்டாகி விடுகிறது. உடனே குளித்து பரிசுத்தமாக வேண்டும்’ என்றும் மனு தர்ம சாஸ்திரம் விரிவாக திண்டாமை பற்றிக் கூறுகிறது.
"உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது' என அர்த்த சாஸ்திரம் (3.8) கூறுகிறது.
நீங்கள் நம்மவர்கள்’ என்று பெருமையாகச் சொன்னவர்கள் எழுதி வைத்த வேதவாக்கியங்கள்தான் இவை. என் தமிழினம் இன்று தாழ்ந்து கிடப்பதற்கு யார் காரணம்? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். கஜினி முகம்மது போன்றவர்கள் கொள்ளையடித்தார்கள். கொலை செய்தார்கள், கோயில்களை உடைத்தார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் 'சாதி" அடிப்படையில் இந்திய மக்கள் பிளவு பட்டு நிற்க அவர்கள் தான் காரணமா? அண்மையில் ஆர். எஸ். எஸ். போன்ற சாதிய அமைப்புகள் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை போட்டார்களே. அதற்கு யார் காரணம்? இந்த ‘நம்மவர்கள் தானே காரணம்
392

O மண்ணும் மனிதர்களும்
தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் ஆண் - பெண் குழந்தைகள் என்று பாராது தீயிட்டுக் கொளுத்திக் கொன்றவர்கள் யார்?
உத்திரப்பிரதேசம், மணிப்பூர் மாவட்டத்தில் தியோலியிலும், சாத்பூர் கிராமங்களிலும் குடும்பம் குடும்பமாகச் சுட்டு படுகொலை செய்தவர்கள் unrữ?
அண்மையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்களுக்கு um arrueirib?
நான் மனிதனை மட்டுமே முதலில் நேசிக்கிறேன். எனக்கு மதம், சாதி இவைகள் முக்கியமே அல்ல மனிதனே முக்கியம் ஏற்றத் தாழ்வு பார்ப்பவன் முஸ்லிமாகவே இருந்தாலும் அவனை நான் புழுவிலும் கேவலமாகவே நினைப்பவன். நான் வளர்ந்து வந்த பாசறை அப்படிப்பட்டது. எனது பெரிய தந்தையார்தான் என்னை வளர்த்து ஆளாக்கியவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை கடைபிடித்தவர் அவர். எனக்கும் அதையே போதித்தவர். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நமது தமிழினம் இன்னமும் சாதி. மதம் என்று குறுகிய தெரு வழியாகவே நடக்க நினைக்கிறது. உலகம் பரந்து விரிந்து மனித நேயம் என்ற நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்ய வேண்டாமா?
பெரியாரின் சிந்தனைகள் ஆங்காங்கே எனது கட்டுரையில் வெளிப்பட்டிருக்கலாமேயொழிய அவை நான் சார்ந்த மதக் கருத்துகள் அல்ல என்பதை நண்பர் பிஷால் உணர வேண்டும்.
பிள்ளையார் சிலைக்கு பால் ஊட்டிய பொழுது இந்தியாவில் எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் குழந்தைகள் பாலின்றித் தவித்தார்கள் என்றே எனது சிந்தனை போனது. வாடிய பயிரைக் கண்ட பொழுது வாடிய மனம் வள்ளலார் மனம். ஆனால் பசித்து வாடிய குழந்தைகளைக் கண்டு நமக்கு மனம் வாடவில்லையே? நாம் ஏன் மனிதனாக இருக்க வேண்டும்? உலகம் முழுதும், ஏன் நமது மலேசியாவில் கூட பிள்ளையாருக்குப் பால் கொடுத்தார்கள். இதில் ஏதாவது மாற்றம் வந்ததா? கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தியுங்கள். அந்தப் பாலையெல்லாம் பவுடராக்கி சோமாலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் பசித்த மக்களுக்கு அனுப்பி இருந்தால் எத்தனை உயிர்களின் பசிப்பிணி நீங்கியிருக்கும்? போகும் பொழுது 'புண்ணியம்’ என்று சொல்கிறார்களே அதுவாவது கிடைத்திருக்கும்.
சை. பீர்முகம்மது 7-12-97
சை. பீ. முகம்மதுவின் மண்ணும் மனிதர்களும் தொடர் குறித்து ‘பிஷால் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையாளர் தவறாக எழுதியிருந்தார் என்றால் அந்த தவறை அவருக்கு உணர்த்த வேண்டிய வகையில் உணர்த்த வேண்டும். அதை விடுத்து ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றையும் விசுவாசத்தையும் கேலி செய்யும் வகையில் எழுதிருப்பது கண்டனத்திற்குரியது. உதாரணமாக பாகிஸ்தான், காஷ்மீரை எழுதியிருப்பதில் இருந்து அவரின் அறிவின் மீது எனக்கு சந்தேகம் எழுகிறது. மலேசியா வரும் முஸ்லிம் அல்லாத சினிமா நடிகர்கள் தங்கள் தாய்நாட்டைப் பற்றி கேவலமாக பேசிவிட்டு போவதை நான் கேட்டும் படித்தும் கொண்டும்தான் இருக்கிறேன்.அவர்களின் தேசப்பற்று என்ன ஆனது? ஆரியர்களை ‘பிஷால் "எம்மவர்கள்" என்று அழைக்கலாம்.
393

Page 199
சைபீர்முகம்மது O
ஆனால் ஆரியர்கள் இவரை அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று கூற மாட்டார்கள். காரணம் சூத்திரன்' என்று பட்டம் கொடுத்து ஒதுக்கி வைத்திருப்பது தெரியாதா? ஒரு சிலருக்காக ஒட்டு மொத்தமாக இந்திய முஸ்லிம்களையும் குற்றம் சாட்ட வேண்டாம்,
மாஹிர் தலைநகர் 7-72-97
பழம் பெறும் எழுத்தாளர் சை. பீர்முகம்மது சார்ந்துள்ள சமயத்தின் பற்றை அவரின் மண்ணும் மனிதர்களுமீ கட்டுரை பறை சாற்றுகிறது - மகிழ்ச்சி இந்திய மண்ணில் இஸ்லாமின் சாதனைகளை மிக நேர்த்தியாகவும் சாமர்த்தியாகவும் அவருக்கே உரிய பாணியில் படைத்து வருவது அதிசய வியப்புத்தான். எதையும் ஆதாரங்களுடன் விளக்கும் அவர், தலைப்பு விசயத்தில் மட்டும் சற்று கோட்டை விட்டதாகவே தோன்றுகிறது. ‘மண்ணும் மனிதர்களும் என்பதற்கு பதில் 'இஸ்லாமும் இந்தியாவும் என்றிருந்தால் இன்னும் கன பொருத்தமாக இருக்கும் என்பதே என் சிறிய மனு.
எல். நடராஜா, தாமான் அங்காசா, 77-72-97
மிகவும் சிரத்தை எடுத்து இந்து வேதங்கள். சாஸ்திரங்களை கசடற (?) படித்து அழகாகவும் ஆழமாகவும் பதிலளித்த நயம் இருக்கிறதே. சாட்சாத் சைபீர் முகம்மது அவர்களுக்கே உரிய கைவண்ணம் ஐயா, தெரியாதய்யா நீங்கள் இவ்வளவு சமர்த்தரென்று அபேதவாதியாய் நான் மனிதனை மட்டுமே முதலில் நேசிக்கிறேன். எனக்கு மதம், சாதி இவைகள் முக்கியமே அல்ல. மனிதனே முக்கியம், ஏற்றத்தாழ்வு பார்ப்பவன் முஸ்லிமாகவே இருந்தாலும் அவனை நான் புழுவிலும் கேவலமாகவே நினைப்பவன் என்று கூறும் தங்களின் துணிச்சலான வாதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தாங்கள் எடுத்து வைத்துள்ள ஆதாரப்பூர்வமான உண்மைகளுக்கு இந்து சமயத்தைக் கரைத்துக் குடித்தவர்களிடமிருந்து (?) செம பதிலை எதிர்பார்க்கிறேன். * :
பாலகோபலன் நம்பியார் போர்ட் கிள்ளார் 14-12-97
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அன்னியர்கள் இந்தியாவை பெரும் படை பலத்தோடு கொள்ளை அடித்து அடக்கி ஆண்டார்கள் என்று நான் எழுதியது வெள்ளையர்களையும் சேர்த்துத்தான். இது நடந்த உண்மை. இதனால் கட்டாய மத மாற்றம் பல. உயிருக்கு பயந்து தாங்களாகவே மதம் மாறியவர் usuf.
என் சமயத்தைப் போற்றும் நான், பிறர் சமயங்களை சிறுமைப்படுத்துவதும் இல்லை. அதன் குறைகளை விமர்சிப்பதும் இல்லை. எல்லா மதங்களிலும் பகவான் வாசம் செய்கிறார்.
சை. பீர் முகம்மது அவர்களே. ஆரியனுக்குச் சமமாக சூத்திரன் இருக்கக் கூடாது என்று வேதங்களில் குறிப்பு உள்ளது என்று மிக மிகத் தாராளமாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியென்றால் அதிபர் கே. ஆர். நாராயணன் உட்பட சூத்திரர்கள் காணாமல் அல்லவா போயிருப்பார்கள்! ஆரியர் அமர்ந்த அதே இருக்கையில் தானே இந்த சூத்திரர்களும் அமர்ந்து உத்தியோகம் பார்க்கிறார்கள். வெறும் குப்பைகளை காட்டி 'இதுதான் இந்து மதம்' என்று கூறாதீர்கள்.
394

O மண்ணும் மனிதர்களும்
பிள்ளையார் என்ன குடம், குடமாகவா பால் அருந்தினார்? அதனால், பால் தட்டுப்பாடு ஏற்பட்டு எத்தனை லட்சம் குழந்தைகள் இறந்தார்கள்? அது ஒரு தெய்வீகமான விஞ்ஞான அதிசயம்!
ஆரியர். சூத்திரர் குல வெறுப்புகளுக்கு ஆரியனோ, சூத்திரனோ காரணமாக இருந்தாலும், பிற சமயத்தினரின் சதி வேலைகள் அங்கே இல்லாமலா இருக்கிறது? இந்துக்களின் வாழ்வு முறைகளை விமர்சிக்க பிற சமயத்தினருக்கு எந்தவித தகுதியும் இல்லை. உரிமையும் இல்லை. பெரியாரின் சிந்தனைகள் என்ற பெயரில் நிறைய பேர்கள் தரம் இழந்து இந்து சமயத்தை இழிவாக விமர்சிக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அதில் என்ன லாபமோ? ஆனாலும் என்ன, இந்து சமயம் என்றுமே அழகிய வானத்தில் மாபெரும் ஜோதிதான்!
- பெட்டாலிங் ஜெயா, பிஷால் 14-12-97
சை. பீர்முகம்மது ‘நான் முதலில் மனிதன்' என்று எழுதியுள்ள பதில்லில், ஆதிமக்களை அவமானப்படுத்த வேண்டுமென்று இந்து வேதங்களில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அலசியிருக்கிறார். இந்தக் கொடுமைகளுக்காகத்தான் முன்பு தந்தை பெரியார். பிரும, சத்ரிய, வைசிய, சூத்திரர்களை மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று பிரித்து. தமிழர்களை கோவல் குளங்களில் திண்டாமை என்றும் ஒதுக்கி வைக்கும் இந்து மதத்திலிருந்து கிரிஸ்ட்டியனுக்கோ இஸ்லாமிற்கோ ஒட்டு மொத்தமாக மதம் மாறப் போகிறோ மென்று போராட்டம் துவங்கினார். சட்ட மேதை அம்பேத்காரும் இதற்கு ஆதரவு கொடுத்தார். இந்து மடாதிபதிகள் பதறினார்கள். மகாத்மா காந்தி இந்து மதம் அழியப் போகிறது. இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் எல்லா மக்களுக்கும் சுயமரியாதை தர வேண்டும். இல்லை என்றால் நான் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருப்பேனென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். திண்டாமைவாதிகள் நாங்கள் இனி திண்டாமை பார்ப்பதில்லை. கோவிலைத் திறந்து விடுகிறோம். சமபந்தி சாப்பாடு போடுகிறோம், யாருக்கும் கொடுமை செய்ய மாட்டோமென்று மதவாதிகள் உடன் சேர்ந்து கண் துடைப்பு செய்தார்கள்.தேச விடுதலைக்குப் போராடும் உத்தமர் காந்தியின் உயிருக்கு எதுவும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த பெரியார் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.காந்தியும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டு பெரியாருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். காலங்கள் ஓடினாலும் கருத்துக் குருடர்கள் இன்னும் மாறவேயில்லை.
- காட்பார்துர்க்காதாசன், குவாந்தன், 14-12-97
சை. பீர் முகம்மது தமிழ் மற்றும் தமிழர் மீது வைத்துள்ள பற்றினை ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னமேயே அறிந்தவன் நான். இன்றைய நம்மினத்தவர் தாழ்ந்து கிடப்பதற்கு ஆரியர்களின் சதகளும் சூழ்ச்சிகளும்தான் காரணம் என்று ஆதாரத்தோடு எழுதியிருக்கிறார். உண்மை. என்னுடைய பழைய பகுத்தறிவு பாசறைத் தோழர்களும் அன்றிலிருந்து இன்று வரை கிறல் விழுந்த இசைத்தட்டைப் போல் இதையேதான் பேசி வருகிறார்கள். அன்று ஆரியர்கள் செய்த சூழ்ச்சியினால் சாதி பேதம் பார்த்து பிரிந்து இருந்தோம். ஆனால் இன்று வரை அதனைப் பின்பற்றுகிறோமே? நம்மவர்களுக்கு சமயச்
395

Page 200
சைபீர்முகம்மது O
சடங்குகள் சம்பந்தமாக சிர்தூக்கி பார்க்கும் ஆற்றல் இல்லை என்பதனை வெட்கப் படாமல் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து இன்னும் ஆரியனையே புரட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அம்பேத்கர் சிலைக்கு யார் செருப்பு மாலை போட்டது என்று எனக்கு தெரியாது. ஆனால் கீழ் வெண்மணி கிராமத்தில் எரித்தவனும் தமிழன்தான். ஆரியன் அல்ல
கடந்து போன காலங்களில் ஆரியன் செய்த தவறுகளை இன்னும் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவன் விட்டுப் போன கைங்கரியங்களை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பேர்வழிகளை உங்களைப் போன்ற பெரியாரின் கொள்கையில் பற்றுள்ளவர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் கண்டும் காணாதிருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது!
த ஷா ஆலம், பூறிமுடா, 14-12-97
சபாஷ் சை. பீர்! தங்களின் அருமையான விளக்கம் மொட்டைத் தலையில் சுத்தியல் கொண்டு ஆணி அடித்தது போன்றிருந்தது. இதையே நாங்கள் சொல்லும்போது எங்களை நாத்திகர்கள், சமூக எதிரிகள் என்பர். உடலிருக்கும் வரை நோய் இருக்கும் என்பதைப் போல இங்கேயும் சாதி சாகிறவரைக்கும் இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. முதலில் மனிதர், இரண்டாவது நாம் தமிழர் என்று எப்போது நாம் நினைக்கிறோமோ அப்போதுதான் இந்தத் தமிழினமே உருப்படும்.
- அப்பச்சி மையன், கேமரன் மலை, 14-72-97
மிருகமாய் இருந்தவனை மனிதனாக்க மதங்கள் பிறந்தன. அந்த மதத்தின் பெயரால், மனிதன், மீண்டும் மிருகமாவது தவறுதானே? சை. பீர்முகம்மதின் சில கருத்துகள் நெஞ்சை நெருடினாலும், பல ஒத்துக்கொள்ளும்படி இருந்ததே உண்மை. இன , மொழி, நாடு போன்ற பாகுபாடுகள் கடந்தது தானே மனித நேயம்?
அப்பாவி சோழன், காப்பார் 14-12-97
29 வாரங்களாக சைபீர்முகம்மது எழுதி வந்த ‘மண்ணும் மனிதர்களும் கட்டுரை முதல் பாகம் முடிந்து. இப்போது இரண்டாம் பாகம் வந்து கொண்டிருக்கிறது.
முதல் பாகத்தில் பிரயாணக் கட்டுரை என்று ஆரம்பித்த அவர், மொகலாய மன்னர்களாகிய அக்பர், பாபர், ஒளரங்கசீப் ஆகியோர்களின் கீர்த்தி வல்லமைகளைப் பற்றி பல வாரங்கள் நமக்கு சலிப்பேற்படும் அளவிற்கு அதிகமாகவே எழுதித் தள்ளினார். இந்த முகலாய மன்னர்களால் இந்திய உபகண்டத்தில் சமயம் பரவ வழி கோலியதே தவிர, வேறு எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்த முகலாய மன்னர்கள் மட்டும்தான் அந்த மண்ணில் மனிதர்களாக அவருக்குப் புலப்பட்டார்களோ? இவர்களைத் தவிர முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் போராடிய மாவீரன் சிவாஜி, அசோக மன்னன் போன்றவர்கள் எல்லாம் அவருக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா?
396

O மண்ணும் மனிதர்களும்
சரி, போகட்டும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் (நேதாஜி) போன்றவர்கள் எல்லாம் அவருக்குத் தெரியாமற் போனது எப்படி? அக்பர். பாபர், ஹராமாயூன் கபீர், ஒளரங்கசீப், துக்ளக் போன்ற முகலாய முன்னர்களைத் தெரிந்த அளவிற்கு, மற்ற நாடுகள் போற்றும் மனிதர்களைப் பற்றி எழுதாமல் விட்டது ஏன்?
இத்தனை மாமனிதர்களை எல்லாம் விட்டு, திடீரென்று பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை மனித நேயம் உள்ளவர் என்று விரிவாகவும், வர்ணித்தும் இரண்டு வாரங்கள் எழுதி இருக்கிறார்கள். "மாக் சேசே விருது பெற்ற கிரண் பேடியைப் பற்றி எழுதியவருக்கு, நோபல் பரிசும் இன்னும் எத்தனையோ விருதுகளும் பெற்ற அன்னை திரேசாவை கிறித்துவ சமயத்தவர் என்று ஒதுக்கி விட்டு விட்டாரோ என்னவோ?
எது எப்படி இருப்பினும் பீர்முகம்மதுவின் தமிழ் நடை சரளமாக தட்டுத் தடங்கலின்றி ஓடுகிறது. அதற்காக மட்டும் அவரைப் பாராட்டுவோம். அவருடைய சிறுகதை மற்றும் நாவல்கள் கற்பனை வளம் சிறந்த எழுத்துக்கள் என் பாராட்டுக்கள்!
அவருடைய இரண்டாம் பாகம் எப்படி என்று பார்ப்போம். வரவேற்போம்! லோ. அன்புராயன், பெட்டாலிங் ஜெயா, 8-2-98
சில வாரங்களுக்கு முன் யாரோ ஒரு வாசகர் கேட்டிருந்த கேள்விக்கு பீர்முகம்மது கொடுத்திருந்த பதிலைக் கண்டேன். பீர்முகம்மது என்னதான் ஆயிரம் காரணம் சொன்னாலும் அடுத்தவர் மதத்தைப் பற்றிப் பேசும் உரிமையோ, சுதந்திரமோ அவருக்கு யாரும் கொடுக்க வில்லை! போதாக்குறைக்கு அவர் ஒரு பெரியார் பக்தர் என்று வேறு சொல்லியிருக்கிறார். கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. காலத்தை கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம். பெரியார் காலத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் வாழ்ந்து வந்தார். இந்து சமயத்தில் இருக்கும் சிர்கேடுகளை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார் பெரியார். ஆனால் அம்பேக்கரோ அப்படிச் செய்யவில்லை. அவர் பெளத்தமதத்தில் சேர்ந்து பெரியாரையும் சேரும்படி அழைத்தார். ஆனால் பெரியார், “இல்லை. நான் என் மதத்தில் இருந்து கொண்டே அதில் உள்ள குறைகளை எதிர்க்கிறேன்” என்று சொல்லிவிட்டார்! மற்றொரு சமயம் வேற்று மதத்துக்காரர் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி தரக் குறைவாகப் பேசியபோது, "இதோ பார். எங்கள் மதத்தில் இருக்கும் குறைகளைப் பற்றி பேச உனக்கு உரிமை இல்லை. நீ போய் உன் மதத்தை சரி செய்து கொள்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்னவர் பெரியார்! அப்படிப்பட்ட பெரியாரின் அபிமானி என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர் மதத்தைப் பற்றி பீர்முகம்மது எழுதுவது என்ன நியாயம்? வெங்காயம்! வேதத்தைப் பற்றி அவர் ஏதோ ஒரளவு தெரிந்து வைத்திருக்கலாம். அதற்காக வேதத்தையே கரைத்துக் குடித்தவர் போல அதைக் குறை சொல்வது அநாகரிகம். அது இந்த நூற்றாண்டு மனிதர்களின் செயலல்ல!
பீர் முகம்மது கருத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வரும் என்று எதிர்
பார்த்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இதற்கு இருட்டடிப்புதான் காரணம் என்று நான் சந்தேகிக்கிறேன்.
397

Page 201
சைபீர்முகம்மது O
பீர்முகம்மது அவர்களே, அடுத்தமுறை பேனாவை எடுக்கும்போது, அது அடுத்தவர் நெஞ்சத்தை பிளக்கும் வாளாக இருக்கக் கூடாது என்ற 'எண்ணத்துடன் எடுங்கள். அடுத்தவர் மனதைக் காயப்படுத்தாதீர்கள்!
கவிஞன், பினாங்கு, 8-2-98
இவ்வளவு சிக்கிரம் ‘மண்ணும் மனிதர்களும் உயிர்த்தெழும் என்பது தெரியாததால், ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். இளையராஜா என்ற மனிதரைப் பற்றிப் பேசியிருக்கிறார். சிலருக்கு இது மாதிரி விஷயங்களாவது 'அலுப்புத் தட்டாமல் இருக்க,எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிவாராக
அப்பாவி சோழன், காப்பார் 8-2-98
பினாங்கு கவிஞரே! முடிந்து போன பிரச்சினையை ஏன் இப்போது போட்டு சொதப்பிக் கொண்டிருக்கிறீர்? சை. பீரின் ‘மண்ணும் மனிதர்களும் எனும் சினிமாத் தொடர் பிரமாதம் சினிமா சம்பந்தப்பட்டவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நன்கு விலாவாரியாக நமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். முன்பு சரித்திரத் தொடரை எழுதியவர் தற்போது சினிமாத் தொடரை எழுதிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து அவர் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்றால், தமக்கு சரித்திரம் மட்டுமல்ல, சினிமா பற்றியும் தெரியும் என சொல்லாமல் சொல்கிறார். ஆனால், இந்த ‘மண்ணும் மனிதர்களும்' எனும் தலைப்புத்தான் கொஞ்சம் உதைக்கிறது! ஐயோ. தலைப்பைத் தொட்டுப் பேசினால், மனுசன் என்னவென்றால், அவர் பெற்ற பிள்ளைக்கு அவர்தான் தகப்பன்' என சண்டைக்கு வந்து விடுவாரே! வேண்டாம் விட்டு விடுவோம்!
சின்னப்பொண்ணு, செந்தூல் 15-2-98
பினாங்கு கவிஞர் அப்படியென்ன தப்பாக எழுதிவிட்டார்? 'மண்ணும் மனிதர்களும் தலைப்பு பொருத்தமில்லையென்றதற்கு, ‘நான் பெற்ற பிள்ளைக்கு நான்தான் தகப்பன்' என்று தன் கட்டுரையை விட்டுக் கொடுக்காதவர் இருக்கும்போது
இருப்பினும் சை. பீரின் இனிய தமிழ் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து அவர் சினிமாவைப் பற்றி எழுதி வருவது படிக்க சுவையோ சுவை! யாரய்யா அது மருதுபாண்டியன்.? அவருடைய எழுத்து படிப்பதற்கு ஒரு இந்தியனைப் போல் இல்லையே?
புரட்சி நாயகன், பட்டர்வொர்த் 22-2-98
இளையராஜாவில் தொடங்கி எம். கே. தியாகராஜ பாகவதர் பக்கமாய்ப் போயிருக்கிறாரே சை. பீர்முகம்மது சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுதினால்தான் வாசகர்கள் மத்தியில் பெயர் பதிக்க முடியும் என்பதால் இந்தப் புதிய பிரவேசமோ?
ஏடம், கம்போங் சுங்கை காயுஆரா, 22-2-98
சை. பீர்முகம்மது 'மக்கள் ஓசை'யில் எழுதிவரும் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். இளம் வயதில் எப்படி எல்லாம் இருந்தீர்கள் என்பதைத் தெளிவாக எழுதி வருகிறீர்கள்.ஆனால் தாங்கள் ஒரு முஸ்லிம் என்பதை
398

O மண்ணும் மனிதர்களும்
மறந்துவிட்டீர்கள். குடித்து கும்மாளம் அடித்ததை சிறிதும் வருத்தமின்றி எழுதி இருக்கிறீர்கள்.இது வருத்தப்படக்கூடிய விஷயம்
மு. சிராஜுதீன், கோலாலம்பூர் 22-2-98
"மாறுபட்ட கோணங்க'ளில் "வலை" சிறப்புப் பெறுகிறது! எம். கே. தியாகராஜ பாகவதரைப் பற்றி மறந்து போய்க் கொண்டிருக்கும் வேளையில் நினைவு படுத்தியிருப்பது மகிழ்ச்சி
ராணிராஜன், சிரம்பான் 22-2-98
சை. பீர்முகம்மதுவின் கட்டுரையை ஒட்டி பினாங்கு வாசகர் ஒருவர் எழுதியிருந்த கருத்தை ஒரு நடுநிலைவாதியாக இருந்து நான் ஆதரிக்கிறேன். சை. பீர் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு. சமூகத்தில் இருக்கக்கூடிய மக்கள் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணிக் காக்க வேண்டிய கட்டுப்பாடு உண்டு. இலக்கியங்கள் சமுதாயத்தில் ஆக்ககரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக சமுதாயத்தில் அழிவை ஏற்படுத்த பயன்படுத்தக் கூடாது. சை. பீர் எழுதிய பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். மிகச் சிறந்த எழுத்தாளர். இனிமேலாவது அவர் தமது தமிழ் அறிவை பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவிற்கு எழுதப் பயன்படுத்த மாட்டார் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
பூரீசசிதரன், மூவார். 22-2-98
சை. பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும் தொடரில் சருகனி, ஓரியூர் போன்ற இடங்களில் கிறிஸ்துவர்கள் உருவானதற்கான காரணத்தைப் படித்த பொழுது எனது நீண்ட நாள் சந்தேகங்கள் ஒரு நிறைவுக்கு வந்தன. இந்த வாரத் தொடரை ‘தன்னாட்சி முறை'. 'சேதுபதிக் கிழவனும் சிதக்காதியும் மற்றும் ‘போர்ச்சுகல் பாதிரியார்’ என்று மூன்று பிரிவாகக் காட்டியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து. சரித்திரங்களை இதயத்துள் புகுத்துவதற்கு இந்தமாதிரியான சாகசங்கள் கை கொடுக்கும் என்பது உறுதி. சை. பீர் கவனிப்பாராக!
ufaneFusilsiavur Lumtufo, asma úum tř 10-5-98
‘மண்ணும் மனிதர்களும் பல அற்புதமான சரித்திர நிகழ்வுகளை உள்ளடக்கி, இடையிடையே தன்னுடைய கருத்துக்களையும் எழுதி.நம் முன்னோர்கள் செய்த தவறுகளை நினைத்து தமிழன் என்ற உணர்வில் தார்மீகக் கோபம் கொள்ள வைத்து. அடடே. எத்தனை அழகாய், அற்புதமாய், விறு விறுப்பாய் தொடர் செல்கிறது. சை. பீர் தன்னை தமிழனாக மட்டுமே நினைத்து இத்தொடரை எழுதுவதால் அவர் பேனாவில் மட்டும் கொஞ்சம் தண்ணீர். கொஞ்சம் நெருப்பு. கொஞ்சம் தென்றல்.கொஞ்சம் கோபம்.நிறையவே தமிழ்ப்பற்று தெரிகிறது.
இராம நடராஜன், ஆலம் மேகா, 24-5-98
சை. பீர்முகம்மதுவின் ‘மண்ணும் மனிதர்களும் தொடரில் பினாங்குத் தீவில் மருதுபாண்டியர் வாரிசு பற்றி நன்கு விளக்கியுள்ளார். இது ஒரு
399

Page 202
சைபீர்முகம்மது O
வரலாற்றுத் தொடர் என்பது தொடர்ந்து படித்து வருபவர்களுக்கே தெரியும். பல சான்றுகளுடன் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளருக்கு என் Linrfrnt Gássir.
asasairaurai, sapagsasat ng-7-98
என்னய்யா இது, தலைமுடியைப் பிச்சுக்கலாமுன்னு தோணுது பின்னே என்னவாம். பினாங்குத் தீவில் மருது பாண்டியர் வாரிசு என்று சொல்ல, துரை சாமி பினாங்கில் செத்தார் என்கிறீர்கள். திடீரென்று ஒரே பல்டி! சிவகெங்கையில்தான் besar) ou " GB Lunt nr rừ என்றதோடு விட்டிருக்கக்கூடாதா? சரித்திரத்தை. கிண்டிக் கிளறிப் பார்த்த பிறகே துரைசாமியின் இறுதி வடிவம் கிடைத்தது என்று முடித்து விட்டாரே சை. பீர்! துரைசாமியின் முடிவைத் தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வைத்து விட்டாரே! வேணாம்ணே இந்த விளையாட்டு
யாப் ஆ லோய் (ஆப்பே), பூச்சோங், 19-7-98
‘மண்ணும் மனிதர்களும் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். குறிப்பாக சிவகங்கைச் சிமை வரலாறு தொடங்கியதிலிருந்து மிகுந்த ஆர்வமாய் படித்து வருகிறேன். மருது பாண்டியர்கள் கதை சொல்லும் எங்கள் வார் பொக்கை வாய்க் கிழவிகள் மருது பாண்டியர்களின் குடும்பத்தில் எஞ்சிய துரைசாமி மலாயா தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டதாகவும் அங்கேயே மடிந்து போனதாகவும் சிவ கங்கைச் சிமையைத் திரும்ப வந்து திண்டவில்லை என்றும் கண்ணிர் மல்க கதை சொன்னார்களே. ஆனால் இவர் இல்லை என்கிறாரே? சான்றுகளைப் பார்க்கும்போது உண்மை என்றுதான் நம்பத் தோன்றுகிறது. கூடவே வியப்பும் பிரமிப்பும் தொத்திக் கொண்டு புருவங்கள் விரிகின்றன.
தமிழக எழுத்தாளர் 'சிவலப்பேரி பாண்டி தொடரை எழுதி முடிக்கும் போதுதான் சிவலப்பேரி பாண்டி இருந்த விவரம் நெல்லை மக்களுக்குத் தெரிய வந்ததாம். அதுவரை பாண்டி தலைமறைவாக இருப்பதாகவே நெல்லை மக்கள் எண்ணினார்களாம். அதுபோல் மருது பாண்டியர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் தெய்வமாகவும் வணங்கும் சிவகங்கைச்சிமை மக்களுக்கு அவர்கள் வாரிசு துரைசாமி மதுரையில்தான் இறந்தார் என்ற செய்தி புதுமையாகத்தான் இருக்கும். அது ஆறுதலாகவும், இனிமையாகவும இருக்கிறது.சரித்திரத்தில் எழுதாக பக்கங்களையும் எட்டிப் பார்த்து சரித்திரத்தைத் திருத்தி சரியாகச் சொன்ன சை. பீர் அவர்களை வாழ்த்துகிறேன். -
இராம. நடராசன், ஆலம் மேகா, 19-7-98
குறிப்பு கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு சுருக்கமாகவே பிரசுரமா கின்றன. கடிதச் சுருக்கத்தில் கருத்துச் சிதையாத அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. (ஆர்)


Page 203
부부" 또
| ||
潭,、
gara gai Al இலக்கியத்திலே மலேசியத் தமிழுக் ஆசனம் சம்பாதிகத் துடிக்கும் வழி ஆதர்வும் சிறுகதை நாவல் கட்டுரைகள் எனப் பல் து:
 

ܒ . XXXXXXXXX - || 1 ||
W. Er
W
E. წეზე, ე.
* Α.%
წწ. ეწo", "
A. SWA W 臀
'
YūH