கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாடற்றவர் கதை

Page 1


Page 2

காடற்றவர் கதை

Page 3
The Betrayal of Indian Tamils in Srilanka.
- R. R. Sivalingam

நாடற்றவர் கதை
ஸி. வி. வேலுப்பிள்ளை
き O 226 કો 谷芬 NS
ANKA KS %燃ベ
ஐலண்ட் அறக்கட்டள்ை வெளியீடு

Page 4
Nadatravar Kathaí (The Story of the State less)
By C. V. Velupillai Copyright Reserved First Edition ; July 1987
Published by : Indo-Srisankan Development Trust, 'island Cottage, 14-56, Club Road, Kothagiri-643217, The Nilgris.
Printed at: Mithila Achchagam 5 kutchery Lane Mylapore Madras 4
Cover Printed at : Sudar sam Graphics Madras 17
Cover Photograph : K. L. Narayanan
Wrapper Design ; S. Anandamurugan
Price : 6.00
Copies available at :
The Repatriates' Rehabi fitation Research & Information Centre 132-A, Vanniar Street Choolaim R du . Madras 600 094.

முன்னுரை
அந்நிய அடிமைத்தளைகளை அறுத்து பூரண அரசியல்
சுதந்திரம் பெற இந்திய மக்கள் செய்த போராட்டமும், தியாகமும் உலக வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டது. எனினும் பெற்ற சுதந்திரத்தை மக்களனைவரும் பூரண மாக, அனுபவிக்கும் போராட்டமோ நாற்பது ஆண்டு களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலும் குறிப் பாக கடல் கடந்த இந்திய மக்களின் நிலைதான் இன்னும் இழிவகற்றப்படாததாக, இருள் சூழ்ந்ததாக இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு உயர்ந்த அளவுக்கு, உலக நாடுகளில் வாழுகின்ற இந்தியர் களின் நிலை உயரவில்லை. ‘காமன்வெல்த்’ என்ற அமைப் பிற்குள் கூட, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை உயரவேயில்லை. கடல் கடந்த இந்தியர்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்குவதில் பல நாடுகள் தயங்கின; சில நாடு
கள் முற்ருக மறுத்தன. சில நாடுகளில் அடிமையாட்சியி லும் கேவலமான ஓர் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார் «95 6IT
‘இந்தியாவின் தன்மானமும், உலக அந்தஸ்தும், கடல் கடந்த இந்தியர்களின் அரசியலோடு இணைந்துள்ளது. இத்திய சுதந்திரப் போராட்டமே, தென் ஆப்பிரிக்கா

Page 5
6
போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக இழைக்கப் பட்ட அநீதிகளினல் புத்துணர்ச்சி பெற்றது. சுதந்திர வேள்வியில் வார்த்த நெய்யாக கடல் கடந்த இந்தியர் களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆத்திரப் பிழம்புகளைப் பொங்கி எழச்செய்தன. "என்று என் இந்தியா சுதந்திர மடைகிறதோ அன்றே கடல் கடந்த இந்தியர்களின் சுதந்திரமும், கெளரவமும் பாதுகாக்கப்படும்' என்று எண்ணியே மகாத்மா காந்தி அவர்கள் தம்மை சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண் டார்கள். அவ்வாறே ஆகஸ்ட் 15, 1947இல் இந்தியா சுதந்திரமடைந்தபொழுது கடல் கடந்த இந்தியர்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தார்கள். ஆனல் விரைவில் அவர் களது மகிழ்ச்சி மங்கிவிட்டது. கடல் கடந்த இந்தியர் களின் நிலைமை பூதாகரமாக மாறியது. தென் ஆப்பிரிக்கா, டான்சானியா, உகண்டா போன்ற நாடுகளில் இந்தியர் களின் நிலைமை முன்னரிலும் மோசமடைந்தது. இலங்கை, பர்மா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தியர்களின் நிலைமை சீர்கேடடைந்தது. பியூஜித் தீவில் இன்று இந்தியர்களின் அரசியல் அவலத்தை நோக் கும் பொழுது இந்தியா சுதந்திரமடைந்த நாற்பதாண்டு களுக்குப் பின்னரும் வெளிநாடுகளில் குடியேறிய இந்திய மக்களின் கெளரவமும், அரசியல் சமத்துவமும் புறக்கணிக் கப்பட்டும், மறுதலிக்கப்பட்டும் இருப்பதையே காண்
கிருேம்.
இலங்கைத் தீவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் எவ்வகையிலேனும் சகித்துக்கொள்ள முடி யாதது. 1832ஆம் ஆண்டு முதல் பெருந்தொகையாகக் குடி யேறிய இந்தியர்கள் ஒப்பந்தக்கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பட்ட கொடுமைகள் சொல்லொனது. அந்த ஆரம்பகால அவலங்களுக்கு ஆதாரங்கள் கூட அதிகமாக இல்லை. வாய்மொழிக் கதை களையும், கவிதைகளையும் கொண்டே அவர்களது துன்பக்

7
காவியத்தை வரையலாம். இவ்வாறு அம்மக்களது துயரம். தோய்ந்த வாழ்வை எழுத்தில் வடித்த முதல் எழுத்தாளர் என்று கருதப்படக்கூடியவர் திரு. சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள். திரு வேலுப்பிள்ளை அவர்கள் ஒரு புதிய இலக் கிய பாரம்பரியத்தின் முன்னுேடி. இலங்கையில் குடியேறிய இந்திய மக்கள் கல்வியறிவற்ற தென்னிந்திய கிராமவாசி கள். அவர்கள் ஆங்கில ஆட்சியில் சென்னை மாநிலம் (Madras Presidency) எனப்பட்ட பகுதியில் இருந்தே வந் தார்கள். 1915இல் இலங்கை முழுவதையும் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் வளமான மலையகப் பகுதிகளில் அடர்ந்த காடுகளை அழித்து, அம்மண்ணில் ஏற்றுமதிப் பயிர்களை பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையில் உற்பத்தி செய்து லாபம்பெற ஆசைப்பட்டனர். அந்த ஆசை நிறை வேற வேண்டுமானுல் மண்ணைப் பொன்னுக்கும் உழைப் பாளர்கள் தேவைப்பட்டனர். இவர்கள் இலங்கையில் கிடைக்கவில்லை. தென்னகத்திலிருந்து இவர்களைத் திரட் டிச் சென்று குறைந்த கூலி கொடுத்து, கொடிய சட்டங் களால் சிறைப்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சுரண்டலைத்தான் ஏகாதிபத்திய பொருளாதாரம் மேற் கொண்டது.
இலண்டனில் வசிக்கும் பிரித்தானியப் பேரரசின் பெண் குலம் மாலை வேளைகளில், தேநீர் அருந்தி மகிழ எங்கள் தமிழ்ப் பெண்கள் இலங்கையின் தேயிலைக் காட்டில் ஏக்கப் பெருமூச்சுடன் கொழுந்து பறித்து நெஞ்சம் குமுற வேண்டும். அந்தத் தேநீருக்குச் சர்க்கரை சேர்க்க, பியூஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் எங்கள் தமிழ் மாதர் விம்மி, விம்மி அழவேண்டும். இதுதான் ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பு. சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்த ஏகாதிபத்திய பொருளாதார முறையை நாம் இன் னும் முறியடிக்க முடியவில்லை. அதனுல்தான் கடல் கடந்த இந்தியரின் இழிவு நீங்கவில்லை.

Page 6
8
இந்தக் கொடிய பொருளாதார அமைப்பின் கோரப்பிடி யில் சிக்குண்ட மானுடத்தின் குமுறல்கள் வேதனைப் பாடல்களாக வெளிவந்தன. தொழிற்சங்க மாநாடுகளில் இவர்கள் படும்பாடு பாடல்களாகவும், பாட்டுப் புத்தகங் களாகவும் வெளிவந்தன. பின்னர் இவை கவிதை வடிவம் பெற்றன. இதுதான் மலையக இலக்கியத்தின் நுழைவாயில். ஆசியாவிலேயே வங்கக்கவி தாகூர் இலக்கியத்திற்கு நோபெல் பரிசு பெற்ற பின்னர்தான், தாய் மொழி இலக் கியங்கள் ஏகாதிபத்திய இலக்கியத்தின் கட்டுப்பாட்டி லிருந்து மீறி சுதந்திர கீதமிசைத்தன. இவ்வாறு வங்கக் கவி தாகூரின் இலக்கிய வெற்றி தந்த விடுதலை முழக்கம் ஆசியாவெங்கணும் பரவியது. 1934இல் கவியரசர் தாகூர் இலங்கை வந்தார். ஹொரணையில் பூரீபாலி என்ற பண் பாட்டுப் பல்லியல் பள்ளி ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினர். சாந்திநிகேதனைப் போல ஒரு கலாசாரக் கல்லூரி இலங் கையில் நிறுவ வேண்டுமென்று திரு. வில்மட் பெரேரா அவர்கள் பேராவல் கொண்டிருந்தார்கள். அவர்களின் பெருமுயற்சியால் பூgபாலி உருவாக்கப்பட்டது. தாகூர் இலங்கையில் சுற்றுப்பிரயாணம் செய்து அருமையான சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். அவர்களால் புதிய இலக்கிய உத்வேகத்திற்குள் எண்ணற்ற இலங்கை எழுத் தாளர்களும் கவிஞர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். சிங்கள இலக்கியம் புத்துணர்ச்சி பெற்று வங்கச் சாயலில் வளர்ந்தது. இந்திய தேசிய கீதம் தாகூர் தந்தது. இலங்கைத் தேசிய கீதம் சாந்திநிகேதனில் பயின்ற ஆனந்த சமரக்கோனல் இயற்றப்பட்டது. இசையும் கருத்தும் ஏறக்குறைய ஒன்றேயாம். தாகூரின் இலக்கிய உத்வேகம் சுதந்திரக் கனலையே மூட்டியது.
தாகூர் இலங்கை வந்த பொழுது நமது வேலுப்பிள்ளை அவர்கள் மலைநாட்டிலும் கொழும்பிலும் கல்வி பயின்று ஆசிரியத் தொழிலில் அடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த சமயம். இருபது வயது நிரம்பிய இளைஞன் பத்மாஜணி

9
என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதி வைத்திருந்தார். அதுவும் தாகூரின் நடையில், தாகூரின் வழியில் விளைந்த எண்ணற்ற இலக்கிய ஆக்கங்களில் ஒன்ருகும். அந்த எழுத்தை தாகூரிடம் சமர்ப்பித்து ஆசிபெற்ருர். பின்னர் தொடர்ந்து எழுதினர். தாகூரின் இலக்கிய பரம்பரையைச் சார்ந்தவர்தான் என்ருலும் வேலுப்பிள்ளை ஆங்கிலத்தி லேயே மிக நன்ருக எழுதினர். அக்காலக் கல்விமுறை ஆங்கிலத்திற்கே மிக முக்கியத்துவம் கொடுத்தபடியால் ஆங்கிலமே பல எழுத்தாளர்களுக்கு சிருஷ்டி மொழியாய் இருந்தது. 1930களில் மலையகத்தில் பிறந்த ஒருவர் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிருர் என்ருல் அது வியக்கத் தக்க சாதனை. இலங்கையில் புதிய இலக்கியம் அரும்பிக் கொண்டிருந்த ஆரம்பகால கட்டத்திலேயே மலையக இலக் கியமும் மணம் வீசியது என்ருல் நமது கவிஞர் எத்தகைய சாதனை புரிந்துள்ளார் என்பதை நாம் உணரவேண்டும். அதற்குப் பின்னர் ஐம்பதாண்டுகளாக எழுத்துத்துறையி லேயே மிளிர்ந்திருக்கிருர், 'பத்மாஜனி முதல் ‘இனிப்பட மாட்டேன்’ வரை ஒரு ஐம்பதாண்டுகள் எழுத்தாளராய், கவிஞராய்ப் பொலிந்த மலையக மகன் வேலுப்பிள்ளையைத் தவிர வேறு எவருமில்லை. அவரது அரை நூற்ருண்டு இலக்கியப் பாரம்பரியத்தை மிஞ்ச வேண்டுவது இன்றைய இளம் எழுத்தாளர் பரம்பரைக்கு உள்ள மிகப்பெரிய dgF GolfT6).
சி. வியின் ஆரம்பகாலக் கவிதைகள் மலையக மக்களின் துயர வாழ்வைப் படம் பிடித்தன. மிக அமைதியான நடையில், துயரச் சாயல் படர பின்னப்பட்ட எழுத்துக் கோலங்கள் அவை. இலக்கிய இதயம் படைத்த சி. வேலுப்பிள்ளை அவர்கள் திரு. கே. ராஜலிங்கம் அவர் களின் தூண்டுதலால் தொழிற்சங்கத்திற்குள் நுழைந்தார். மலைநாட்டில் தொழிற்சங்கம் நடத்துவதென்பது சூருவளி யோடு மோதுவதற்கு ஒப்பாகும். சிங்கள இனவாதம், துரைமார்களின் ஆணவம், அரசாங்கத்தின் அலட்சியம்,

Page 7
1 O
மக்களின் ஆத்திரம், போட்டித் தொழிற்சங்கங்களின் பொருமை, சதி ஆகிய அனைத்து சக்திகளுக்கும் ஈடு கொடுத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவேண்டும். தீர்க்க முடியாவிட்டால் போராட்டம் தொடங்க வேண்டும். இந்த போராட்ட வாழ்வில் தம்மை வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டார். எனினும், அவர் எழுத்துக்களைப் போலவே அவரது தோற்றத்திலும் ஒரு சாந்தியே எப்பொழுதும் நிலவியது. புரட்சிக்குரலையோ, போர் முழக்கத்தையோ அவர் கவிதை களில் காணமுடியாது. 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது எழுத்துக்களில் மாற்றம் காணப்பட்டது. 1930களில் ஆழ்ந்த இரக்கம் தழுவிய கவிதைகள். 1950 களில் ஆத்திரம் கலந்த சோகக் கவிதைகள். எங்குமே பாரதியின் எரிமலைக் குமுறல்களைக் காணமுடியாது. ஆகவே மக்களின் அவலங்களைக் கண்டு வெந்து, நொந்து பாடிய கவிஞனுக இருந்தாரே ஒழிய, பொங்கிக் குமுறிய வங்கக் கடலின் குருவளியை எழுத்தில் புகுத்திய புரட்சிக் கவிஞனக அவரைக் காண முடியவில்லை.
ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது. அவரது வாழ்க்கை யிலும், அவரது பண்புகளிலும் இதற்கான காரணங்களைத் தேடலாம்.
மலையக இளைஞன் தனது சமுதாயத்தை உயர்த்துவதற்கு முற்படுவானேயானல் அவனுக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று ஆசிரியப் பணி, மற்றது தொழிற்சங்க
சேவை. ஆரம்பகால ஆசிரியர்கள் கிறிஸ்தவப் பாட சாலைகளிலேயே பணிபுரிய வேண்டியிருந்ததால், அங்கு புரட்சிக்கருத்துக்கு இடமிருக்கவில்லை. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் ஆசிரியர்கள் அரசிய லில் தீவிரப் பங்கேற்றர்கள் என்பதை இலங்கை வரலாறு காட்டுகிறது. சி.வி. அவர்கள் ஆரம்பத்திலேயே ஆசிரியப் பணியை விட்டுவிட்டு தொழிற்சங்க வாழ்வில் ஈடுபட்ட

11
வர்கள். 10, 12 வருடத் தொழிற்சங்க அனுபவத்திற்குப் பிறகு 1947இல் பாராளுமன்ற உறுப்பினரானர்கள்.
இக்கால கட்டத்தில் (1930-1947) இலங்கை சமசமாஜிக் கட்சி மிகப் புரட்சிகரமான தொழிற்சங்கப் போராட்டங் களில் ஈடுபட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பாக இயங்கிய இலங்கை இந்திய காங்கிரஸ், காந்தியம், சாத்வீகம் என்ற கோட்பாட்டுக்குள் இயங்கி வந்தது. இந்த அமைப்பிற் குள் தன்னை இணைத்துக்கொண்ட சி. வி. காந்தீய, சாத்வீக போக்கினையே எழுத்திலும், வாழ்விலும் கடைப்பிடித்தார். ராஜலிங்கமும், வெள்ளையனும் அவரது தொழிற்சங்கத் தோழர்கள் ஆவர். மூவரும் மிக மிக சாத்வீகப் போக்கைக் கடைப்பிடித்தவர்கள். இலங்கை இந்தியத் தொழிலாளர் கள் காங்கிரசில் சாதிவெறி அரசோச்சியது. காங்கிரசின் தலைமையை அதனைக் கைப்பற்றிய காலமுதல் விடாப்பிடி யாகத் தன் கைக்குள்ளேயே வைத்துள்ள தொண்டமானின் சாகசம் சாதித்துவேஷம், பணத்திமிர் ஆகிய இரண்டின் அடிப்படையிலேயே வேரூன்றி ஓங்கியது. இன்னும் கூட சாதி ஆதிக்கத்திற்குள்ளேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சிக்கியுள்ளது. பாமரத்தனமாக மலையகத் தொழிலாளர்கள் உயர்ந்த சாதிக்காரர்களை குடியானவர் கள் என்பார்கள். காங்கிரஸ் ஸ்தாபனம் குடியானவர் களின் கோட்டமாகவே இருந்தது. இந்தக் குடியானவர் களின் கொட்டத்தை மற்றவர்களால் அடக்கவே முடிய வில்லை. அவர்கள் அடங்கித்தான் போஞர்கள். காங்கிர சின் தலைமையைக் கைப்பற்ற முடியாமல் ஒதுங்கிப் போனர்கள். சோமசுந்தரம் இந்தியாவிற்குப் போய் விட்டார். தொழிற்சங்கத்திற்கே முழுக்குப் போட்டு விட்டார். அஸிஸ் பிரிந்து போனர். அவரோடு சி. வி. யும் போனர்கள்; போராடினர்கள். தொண்டமானின் ஆதிக்கத்தை அவர்களால் வெல்லமுடியவில்லை. வெள்ளைய னும் தனி வழியில் போனர். தொழிற்சங்க வாழ்க்கையில் மக்களைச் சுரண்டும் சக்திகளை இனங்கண்டும் அவற்றை

Page 8
12
வெல்ல முடியாமல் தாமாகவே ஒதுங்கிச்செல்ல வேண்டிய அனுபவத்தைப் பெற்ற கவிஞனின் கவிதைகளில் வேதனை யையும் விம்மலையும்தான் காணமுடியுமே தவிர எக்காளத் தையும், அறைகூவலையும் காண முடியாமல் போனதில் வியப்பில்லைதான்.
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, கவிஞனுக்கு உரிய கம்பீரத்துடனும், கற்றவனுக்குரிய அடக்கத்துடனும் இந்திய பாணியில் ஷெர்வாணி உடை யணிந்து மிகக்கவர்ச்சிகரமாக பிரதிநிதிகள் சபையில் வீற்றிருந்தார் வேலுப்பிள்ளை. அவர் அழகை ஆராதித்த வர். அவரது ஆங்கில எழுத்துக்கள் அவருக்குப் புகழ் ஈட்டித்தந்திருந்தன. பாராளுமன்ற உறுப்பினர் முத்திரை யுடன் அவரது எழுத்துக்கள் பல ஆங்கில ஏடுகளில் இந்தியாவிலும் இலங்கையிலும் வெளிவந்தன. இலங்கைஇந்திய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள் கிடைத்தன. ஜோர்ஜ் கெய்ட்ஸ், பீட்டர் கெனமன், ஜக்மோகன் ஆகி யோரின் நெருங்கிய உறவும் கிட்டியது. அதுமட்டுமல்லா மல் அவர் பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைத்த உடனேயே மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. 1948இல் குடியுரிமைச் சட்டம் மலையக மக்களின் குடி யுரிமையைப் பறித்த பின்னரும் 1952ஆம் ஆண்டுவரை குடியுரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாய் சி. வி. உட்பட மற்ற அறுவரும் வீற்றிருந்தார்கள். அவர் கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் சி. வி. பொறுப்பு வாய்ந்த பங்கேற்றிருந்தார். இந்த அரசியல் அநீதியை எதிர்த்து உலகையே ஈர்க்கும் அற்புதமான போராட்டத்தையே நடத்தியிருக்கலாம். மக்கள் கொதித் தார்கள்; குமுறிஞர்கள். பாராளுமன்றத்திற்கு முன்னுல் தீக்குளிக்கவும், சிரச்சேதம் செய்து கொள்ளவும் மக்கள் தயாராக இருந்தார்கள். இதுபற்றி திரு வெள்ளையன் அவர்கள் என்னிடம் கூறியிருக்கிருர்கள். ஆனல் அன்றைய

13
தலைமையின் கோழைத்தனத்தினுல் நமது உரிமைப் போருக்குக் கல்லறை கட்டப்பட்டது. இன்னும்தான் கல்லறை அருகில் காத்திருக்கிருேம்!
இக்கால கட்டத்தில் இந்த ஆத்திரத்திலும், இந்த அநீதி, இந்தக் கொடுமை, கவிதைகளில் தீப்பிழம்புகளாய், தக தகத்திருக்க வேண்டுமே! சி. வியின் கவிதைகளில் இந்த உணர்வுகள் பிரதிபலிக்கவில்லை. ஆனல் அவர் ஆத்திரம் ஆழ்ந்த சோகத்துடன் இணைந்து கனன்றது. அவர் முற் போக்கு அரசியல் கருத்துக்களை ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டார். பழைமைத் தலைமைகளைத் துணிவுடன் சாடினர். காங்கிரசை விட்டு விலகினர்.
1960களில் புதியதோர் ஆத்திரப்பரம்பரை தலை தூக்கியது.
எழுத்திலும், பேச்சிலும், கவிதையிலும், சீற்றம் மிகுந்த
இளந்தலைமுறையின் துடிப்பும், விழிப்பும் மலையகத்தை
இனங்காட்டியது. பழந்தலைவர்கள் அருவறுப்போடும்,
அலட்சியத்தோடும் இப்புதிய போக்கினை நோக்கினர்.
சி. வி. அவர்கள் இப்போக்கினை ஆதரித்தார்கள். இதன் வளர்ச்சியை விரும்பினர்கள். இக்கால இலக்கியக் கூட்டங்
களில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இளந்தலைமுறை
யினரை உற்சாகப்படுத்தினர்கள். முற்போக்கு இலக்கிய
வாதிகளோடு இணைந்து நின்றர்கள்.
எனினும் இலங்கையில் ஏற்பட்ட இனவாத அரசியல் பூகம் பங்கள் பலரையும் நிலைகுலையச்செய்தன. மலையக மக்களின் உரிமைகள் சிங்கள அரசு இட்ட பிச்சையாக மாறிவிட் டன. மலையக மக்கள் தோட்டங்களின் எல்லைக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டனர். மட்டக்களப்புக்கு சென்று குடி யேறினலும் அவர்கள் குடியேற்றங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்டனர். வவுனியா, முல்லைத்தீவு, திருக்கோணமலைப்பகுதிகளில் குடியேறிய மக்களில் சிலர் அங்கு நிலைபெற்றனர். பலர் விரட்டப்

Page 9
A
பட்டனர். மலையக மக்களை இந்தியாவுக்கு விரட்டுவதையே சிங்கள இனவாத அரசியல் இன்னும் தனது இலட்சிய மாகக் கொண்டுள்ளது. வட-கீழ் மாநிலங்களில் தமிழர் உரிமை போராட்டம் ஆயுதந்தாங்கிய போராக விரி வடைந்த வேளையிலே, 1975-1985 ஆண்டு காலங்களில் மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழர்களும் ஈனத்தனமாகவும், கோரத்தனமாகவும் சின்னுபின்னப் படுத்தப்பட்டபொழுது சி. வி. யின் அழகிய, இளகிய கவிதை உள்ளம் சிதறி உடைந்தது. அவர் சிந்தனையாளர். அவர் சாந்தசீலர். அன்பும், அழகும், இரக்கமும் ஊற்றெடுத்தோடும் உள்ளம் படைத்தவர். அவரது முதுமையில் இந்தக் கொடுமைகளின் கோரத்தாண்டவம் அவரது இனிய சுபாவத்தில் இடிவிழுந்தாற் போன்றது. கடைசியாக அவரது உள்ளத்துக் கீறல்களை ‘இனிப்பட மாட்டேன்’ நாவலில் தீட்டியுள்ளார். அதே சோகம், அதே ஏக்கம்! இனவாத இலங்கையிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு விட்டார் நிரந்தரமாக,
அவரது நினைவுக்கு அஞ்சலியாக, "நமது கதை' என்று தலைப்பிட்டு அவர் எழுதிவைத்திருந்த ஆக்கத்தை *நாடற்றவர் கதை' என்ற தலைப்பில் வெளியிடுகிருேம். *ஈழ நாடு’ 25வது ஆண்டு நிறைவு மலரில் அவர் எழுதிய ‘மலையகத் தமிழரின் இன்றைய பிரச்சினைகள்' என்ற கட்டுரையினையும் இந்த நூலுடன் இணைத்திருக்கிருேம்.
முன்னுேடிப் , பரம்பரையின் முதுமை எழுத்தாளர் மறைந்துவிட்டார். அவரது வாரிசாக இன்னுமொரு பரம்பரை இலங்கையில் மலையகத்தில் வளர்ந்து வருகிறது. ஏக்கப்பெருமூச்சு விடுவதற்காக அல்ல, வீரகாவியம் படைப்பதற்காக. எங்கள் அஞ்சலி அவர்களுக்கு வாழ்த் தொலியாகவும் அமையவேண்டுமென எதிர்பார்க்கிருேம்:
1 Q-787 இர. சிவலிங்கம்

1.
நாடற்றவர் கதை

Page 10

பிள்ளைகளுக்குக் கதை கேட்பதில் எத்தனே இன்பம்! கதை சொல்லுவதில் பாட்டிக்கு தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும், கேட்டதையும்-தன்னைப் பற்றியும், தன் குடும்பம், தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப் பற்றியும்-கதை கதை யாகச் சொல்லுவாள்.
பேரன் பாட்டியைக் கதை சொல்லும்படி கேட்டபோது அவள், நான் பிறந்த கதை சொல்லுவேனு, நான் பட்ட கதை சொல்லுவேன என்ற கேள்வியைச் சொல்லி கதையை ஆரம்பித்தாளாம்.
பல வருடங்களுக்குப் பின் மலை நாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதை சொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலேயே சொல்லு வாள். அது நாம் பிறந்த கதையாகவும் நாம் பட்ட கதையாகவும்தான் இருக்க முடியும்.
இந்த கதை நாடற்றவர், வீடற்றவர் கதை.
இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் தொன்றுதொட்டு பல இணைப்புகள், உறவுகள் இருந்தன.

Page 11
18
கதிர்காமம், சிவனடிபாதம் (சமர்ந்த கூடம்) திருக்கேதீஸ் வரம் போன்ற ஸ்தலங்கள் பாடல் பெற்ற ஸ்தலங்கள். தெய்வப் புலவர்கள் இந்த ஆலயங்களைப் பற்றிப் பா யிருக்கிருர்கள்.
நம் மூதாதையர் இலங்கையில் கோப்பி, தேயிலை இவை களை பயிர் செய்ய வருமுன் தமிழ் தொழிலாளர்கள் இங்கு இருந்ததாகத் தெரிகிறது. டச்சுக்காரர்கள் இந்தியாவை யும், இலங்கையையும் ஆட்சி செய்த காலத்தில் முதன் முதலாக அவர்கள்தான் 10,000 தமிழ் தொழில்ாளர்களை கருக மரத்தை (கருக பட்டை) பயிர் செய்து அதன் பட்டையை உரித்து பாடம் பண்ணுவதற்காகக் கொண்டு வந்தார்கள். இவர்கள் இலங்கையில் நிரந்தரமாய் தங்கியது பற்றியோ அல்லது திரும்பிப் போனது பற்றியோ தகவல் இல்லாவிட்டாலும், இதை உண்மை யாகக் கொள்ளலாம்.
இதற்குப் பின் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசின் அதிகார பீடம் சென்னையில்தான் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. அது 1796ஆம் வருட கால கட்டம்.
பிரிட்டிஷ் அதிகாரிகள் இலங்கையில் வரி வசூலிப்பதற்கு தங்கள் சில்லறை உத்தியோகஸ்தர்களோடு இங்கு வந்திருக்கின்றர்கள். அவர்களோடு 32,000 விவசாயிகள் வந்திருந்ததாக சொல்லப்படுகின்றது. இவர்கள் குளங் களைப் பழுது பார்க்கும் வேலையிலும், நீர்ப்பாசன வேலையி லும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்குத் திட்ட வட்டமான விபரங்களில்லை.
1802ஆம் வருடம் சென்னையிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியி லிருந்து இலங்கை பிரிக்கப்பட்டு காலனியாக மாற்றி யமைக்கப்பட்டது. 1815ஆம் வருடம் முழு இலங்கையும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள் வந்தது.

19
1803ஆம் வருடம் கவர்னர் பிரெட்ரிக் நோர்த் கூலிப் பட்டாளம் அமைத்து அதற்கு தமிழ் நாட்டிலிருந்து ஆட் களே இறக்குமதி செய்ததாகத் தெரிகிறது. இவர்களுடைய சேவைகள் பற்றிய தகவல்கள் கோப்பி, தேயிலை காலங் களில் தான் தெளிவடைகிறது. இவர்கள் கரத்தை ரோட்டு, கம்பி ரோட்டு, பாலம் கட்டும் வேலைகளில் ஈடு பட்டிருந்தார்கள்.
மலைநாட்டு மக்களது கதை, 1823ஆம் வருடம் கவர்னர் எட்வெட் பார்ன்ஸ் பேராதெனியாவிற்குப் பக்கத்தில் ஆரம்பித்த கன்னுெருவ என்ற கோப்பிதோட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
1823ஆம் வருடம் கவர்னர் எட்வெட் பார்ன்ஸ் பேரா தெனியாவுக்கு அருகாமையில் அமைந்த கன்னுெருவ தோட்டத்திலிருந்துதான் மலைநாட்டு மக்களது சரித்திரத் திற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
இவர்களது சரித்திரம் உலக அடிமை மக்களது சரித்திரத் தின் பிற்பகுதியாகும்.
இக்கால கட்டத்தில் கடல் கொள்ளையடிப்பதும் அந்நிய நாடுகளைப் பிடித்து அந்நாட்டு மக்களை அடிமைகளாக்கி சுரண்டுவதும் வீரச் செயல்களென்று பாராட்டப்பட்டது. இந்த நாகரிக பாதையில்தான் போர்த்துக்கேய, டச்சு, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் கீழ் நாடுகளை நோக்கி வந்தன. இந்த நாட்களில் செல்வத்தை சூறை யிட்டு சுரண்டிக்கொண்டு போனதின் காரணமாக பிரிட்டனில் மூலதனம் படைத்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. இவர்கள் பிரிட்டன் வஞ்சனேயாலும், பலாத் காரத்தினுலும் பிடித்த நாடுகளில் கரும்பு, கோப்பி போன்ற விலை பொருட்களை உற்பத்தி செய்ய, நீக்ரோக் களை ஆடுமாடுகளை வாங்குவது போல் அடிமை சந்தையில்

Page 12
20
விலை கொடுத்து வாங்கி, அவர்களின் பண்ணையில் அடிமை வேலை செய்ய அமர்த்தினர்கள்.
அடிமை முறை உலக சரித்திரத்தின் இருண்ட அத்தியாய 1ρπΘίο.
வேட்டையாடுகிறவர்கள் வலை போட்டு வாயில்லாப் பிராணிகளை பிடிப்பது போல வெள்ளையர்கள் நீக்ரோக் களை பிடித்தார்கள். அதோடு, அடிமை வியாபாரிகள் மனிதர்களை சந்தையில் வைத்து விற்ருர்கள். இப்படி விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள், கால் விலங்கு, கை விலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைத்துக் கட்டப் பட்டு பாதை, மணற்காடு இவைகள் வழியாய் துறை முகங்களுக்குக் கொண்டு வந்து ஏற்றுமதி செய்யப்
பட்டார்கள்.
இந்த குரூரமான பிரயாணத்தால் பெண்களும், சற்று வயதானவர்களும் பசியாலும், பலவீனத்தினலும், சவுக் கடியினலும் மயங்கி விழுந்து ஆயிரக்கணக்கில் மாண்டு மடிந்தார்கள். இவர்களது எலும்புக் கூடுகள் அடிமை களைக் கொண்டு செல்லும் பாதைக்கு கை காட்டியாக அமைந்தன. அமெரிக்கா அடிமைகளை லட்ச லட்சமாய் ஈவிரக்கமற்ற முறையில் வாங்கி தங்கள் பருத்தித் தோட்டங்களில் அமர்த்தி வேலை வாங்கியது.
இதே போல், பிரிட்டிஷார் தாம் கைப்பற்றிய காலனி களில் அதாவது, டிரினிடாட், மொரீசியஸ், பீஜி, காயான, மலேயா, பர்மா போன்ற நாடுகளில் கரும்பு, கோப்பி பயிர் செய்வதை அடிமைகளைக் கொண்டு நடத்தினர்கள்.
அடிமை முறைக்கு உறைவிடமான அமெரிக்காவிலே, பெரும் எதிர்ப்பும், கண்டனமும் ஏற்பட்டது. ஏனைய நாட்டு மனிதாபிமானிகளும், அறிஞர்களும், எழுத்தாளப்

21
பெருமக்களும் அடிமை முறையை ஒழித்துக் கட்ட தீவிர நடவடிக்கையெடுத்தார்கள். அடிமை முறையைக் கண் டித்து கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆயிரக்கணக் கில் வெளி வந்தன. உலகத்தின் மனச்சாட்சி இந்த மனிதத் தன்மையற்ற முறைக்கு சாவு மணியடித்தது. கடைசியாக அவர்கள் வெற்றி கண்டார்கள். அடிமை முறை ஒழித்துக்கட்டப்பட்டது. ஆனல் நீக்ரோ அடிமை களை விடுதலையின் பேரால் காலனிகளிலிருந்து வெளி யேற்றினர்கள். இவர்கள் காலி செய்த இடங்களுக்கு கூலிகள் சேர்க்கப்பட்டு பிரிட்டன் இந்தியாவில் கூலிச் சந்தையை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அடிமை வியாபாரம் செய்து அனுபவம் பெற்ற வர்கள் ஆள்கட்டல் கம்பெனிகளை இந்தியாவில் ஸ்தாபித் தார்கள்.
தென் இந்தியாவில் ஆள் கட்டிகள் வட இந்தியாவில் ஆள் கட்டிகள் என்று தரகர்களை ஏற்படுத்தி ஆள் கட்டினர்கள். அன்று இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் கவர் மெண்ட், இந்தியர்களை ஒப்பந்த கூலிகளாக மேற்கிந்திய தீவிற்கு ஏற்றுமதி செய்தது.
இன்று தேயிலை எப்படி பல நாடுகளில் பயிர் செய்யப்படு கின்றதோ, அதேபோல் அக்கால கட்டத்தில் கரும்பு, கோப்பி பயிர் செய்யப்பட்டது. அப்பொருட்களுக்கு உலக சந்தையில் பெரும் கிராக்கி. எனவே இலங்கையி லும் கோப்பி பயிர் செய்ய நாம் குறிப்பிட்ட கன்னுெருவா வில் கோப்பி தோட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. இது அரசின் தோட்டம்.
இலங்கையில் அந்தக் காலத்தில் நிலத்தை விற்பனை செய் வதற்குத் தடையிருந்தது. அலெக்சாண்டர் ஜோன்சன் இந்த சட்டத்தை நீக்கி இங்கு குடியேறிய வெள்ளையர்

Page 13
22
களுக்கு கிஸ்தியில்லாமல் 4,000 ஏக்கர் கொடுக்கலாமென் றும் முடிவு செய்தார். இந்த நில வேட்டையில் முதலாவ தாகக் கலந்து கொண்டவர்கள் அரசின் மேலதிகாரிகளே யாகும். ஏனெனில், இவர்களுக்கு தக்க சம்பளம் கொடுக்க அரசுக்கு வருமானம் இல்லை. இவர் வருமானத்தைப் பெருக்க கோப்பித் தோட்டம் அமைக்கத் தூண்ட வேண்டியதாயிற்று.
இதே சமயம், ஜோர்ஜ் போர்ட் என்ற வெள்ளையன் கம்பளைக்கு அருகாமையில் உள்ள சீனப்பட்டியில் 1824ஆம் வருடம் கோப்பி பயிர் செய்து வெற்றி கண்டார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் 5,000 ஏக்கர் பயிர் செய்ததாயும், 10,000 இந்திய கூலிகள் வேலை செய்ததாயும் தெரிகிறது.
கோப்பித் தோட்டங்களில் வெற்றிகரமாய் குறைந்த செலவில் பெரும் லாபம் சம்பாதிக்கலாமென்று தெரிந்த தும், 1837 கோப்பி சகாப்தமாயிற்று. எனவே 18371845க்கு இடைப்பட்ட காலத்தில் நிலம் ஒரு ஏக்கர் 5 சிலின் என்ற விதத்தில் 2,94,526 ஏக்கர் விற்கப்பட்டது. கண்டியில் அப்போது ஒரு புசல் அரிசி 5 சிலினுக்குத்தான் விற்கப்பட்டதாம். இந்த நாட்டின் நிலங்களை இப்படித் தான் பிரிட்டன் சூறையிட்டது.
இந்தியாவிலும் இதேபோல் நிலத்தைப் பறிப்பதற்கு கேவலமான முறைகளைக் கையாண்டார்களாம். சிற்றர சர்கள் கொலு கூடத்தில் வெள்ளை பெண்களை ஆடவிட்டு குடிவகைகளைக் கொடுத்து மயக்கினர்களாம். இதில் லயித்து மயங்கிய சிற்றரசர்கள், “அந்த கேளிக்கை விளை யாட்டை எங்களுக்கு நல்கிய உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்களாம். 'ஆட்டுத் தோலுக்கு இடம் கொடுத்தால் போதும்' என்ருளும் வெள்ளைக்கார துரை. சிற்றரசனும் ஆமாம் போட்டானம். சில தினங்களின்

23
பின் வெள்ளை துரை வண்டி வண்டியாய் ஆட்டுத் தோல் வார்களைக் கொண்டு வந்து நிலத்தை அளந்து அபகரித் தானும். இது கதை. அதில் உண்மையும் உண்டு.
சுதந்திர இயக்கம் இந்தியாவில் தோன்றி அதன் தாக்கம் பெருக்கெடுத்தபோது மக்கள் மனம் குமுறிப் பாடினர் கள். அந்தப் பாடல்களில் முதல் அடிகள் மாத்திரம் ஞாபகம்.
"சண்டாள வெள்ளையர்களுக்கு
ஆட்டுத்தோலுக்கு இடம் கொடுத்ததாலே வந்த மோசம் அதனலே வந்த தோஷம்.'
இலங்கையில் மக்கள் நிலத்தை அபகரித்து இந்தியர்களைக் கூலிகளாய் கொண்டு வந்து சுரண்டியதுதான் இன்று நமக்கு வந்த மோசம்,
தமிழ் நாட்டிலிருந்து நம் மக்களைக் கூலிகளாகக் கொண்டு வந்தது இப்பொழுது பல கோணங்களிலிருந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஒருசில ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இவைக ளெல்லாம் அந்தக் காலத்து உண்மைச் சரித்திரத்தையோ அல்லது அம்மக்களின் அனுபவங்களையோ ஈடு செய்யக் கூடிய முறையில் எழுதப்படவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். எனினும், தொன்றுதொட்டு வழக்கம் போல் தங்கள் அனுபவங்களையும், உணர்ச்சிகளையும் அவர்கள் பாடிய பாடல்களில் நமக்குத் தந்திருக்கிருர்கள். அந்தப் பாடல்கள் அவர்களது சரித்திரத்தை மண் மணத்தோடும், உயிர்த் துடிப்போடும் தருகின்றன. இவைகளைக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் எந்த சூழ் நிலையில் இந்தப் பாடல்,

Page 14
24
களைப் பாடினர்கள். அப்பொழுது தமிழ் நாட்டுக் கிராமங் களில் அவர்கள் சமுதாயம் எப்படியிருந்தது, கண்டிச் சீமைக்கு வந்து எப்படிப்பட்ட சமுதாயத்தை அமைத்தார் கள் என்பது தெளிவாகும்.
உதாரணமாக :
கண்டி கண்டி எங்காதீங்க கண்டி பேச்சு பேசாதீங்க சாதி கெட்ட கண்டியிலே சக்கிலியன் கங்காணி.
கோப்பிக் காலத்தில் ஆள் கட்டிகள் கிராமங்களுக்குச் சென்று பெண்களைக் கண்டிச் சீமைக்கு வரவேண்டுமென்று பேசியபோது, மேற்கண்ட பதில் கிடைத்திருக்கிறது. இந்த அபிப்பிராயத்தில் இருந்து ஒரு சாதாரண உண்மை வெளியாகின்றது. அதாவது கண்டிச் சீமைக் கோப்பித் தோட்டங்களுக்கு கூலிகளாக வந்தவர்கள் அநேகமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் ஒரு சாதியில்லாத சமுதாயமாக அமைக்கப்படக்கூடிய நிலை தெரிகிறது. அதே சமயத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் ஏன் இலங்கைக் கும் ஏனைய நாடுகளுக்கும் சென்ருர்கள் என்ற கேள்விக்கு நாம் பதில் காண வேண்டும்.
பிரிட்டிஷ் அரசு அக்காலத்தில் கொடூரமான நிலவரியை அமுல்படுத்தியது. இச்சட்டத்தின்படி பண்ணைக்காரர் கள் தங்கள் வயல்களில் அறுவடை செய்த தானியத்தில் நூற்றுக்கு ஐம்பது சதவீதத்தை அரசுக்குக் கொடுக்க வேண் டும். இதனுல் பண்ணகளில் வேலை செய்த ஆயிரக்கணக் கானவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினுலும்,

25
உணவுப் பற்ருக்குறையிலுைம் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். எனவே இவர்கள் வெளிநாடுகள் சென்று தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. காலணிகளுக்கு கூலிகளை அனுப்ப பிரிட்டிஷ் அரசு இதை ஒரு உபாயமாகக் கையாண்டது.
எனவே திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருநெல்வேலி போன்ற ஜில்லாக்களிலிருந்து மலேயா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு இவர் கள் அனுப்பப்பட்டார்கள். இவர்களைத் திரட்டி அனுப்பி யது அநேகமாக நீக்ரோ அடிமைகளை சந்தையில் விலை கொடுத்து வாங்கியதற்கு ஒப்பானதாகும். தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் அரசின் ஆதரவின் கீழ் ஆள் கட்டிகள் என்ற நபர்கள் தோன்றினுர்கள். இவர்கள் அநேகமாக மாட்டுத் தரகர்கள் போன்றவர்கள். இவர்கள் கிராமங்களில் நடக்கும் விசயங்களை அறிய தங்கள் ஒற்றர்களை வைத் திருந்தார்கள். கிராமத்திலேற்படும் சண்டை, சச்சரவு, பூசல், குடும்பப் பிணக்குகள், போலீஸ் கோர்ட்டு கேஸ் சம்பந்தமான வியாட்சியம், திருட்டு கேஸ் இவற்றில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி இந்த ஒற்றர்கள் ஆள் கட்டிகளுக்குத் தெரிவிப்பார்கள். இந்த தகராறுகளில் சம்பந்தப்பட்டவர்களை ஆள்கட்டி இரகசியமாகச் சந் தித்து கண்டிச் சீமையில் இவர்களுக்குப் புது வாழ்வு கொடுக்கப் போவதாக வாக்குக் கொடுத்து இவர்களைக் கலைப்பான், புருஷனுல் கண்டிக்கப்பட்ட மனைவியை இவன் குளக்கரையில் சந்தித்து-"நீ ஏன் இப்படி கஷ்டப் பட வேண்டும், கண்டிச் சீமைக்குப் போனல் பெரிய மனிதனேக் கல்யாணம் கட்டிக்கொண்டு சுகமாக வாழ லாம்’ என்று அவளுடன் கதைப்பான். அதே பிரகாரம், தகப்பனேடு கோபித்துக் கொண்டிருக்கும் மகனை சந்தித்து-"ஏனப்பா உனக்கு இந்த கரைச்சல்? கண்டிச் சீமைக்குப் போனுல் நல்லாய் வாழலாம்' என்று

Page 15
26
அவனுக்கு ஒதுவான். போலிஸ்காரர்களுக்குப் பயந்து கொண்டிருக்கும் நபர்களைக் கண்டு, 'நீ இங்கே இருந்தால் மறியலுக்குப் போக வேண்டி வரும். நீ தப்ப வேண்டு மானுல் என்ணுேடு வா, உன்னை கண்டிச் சீமைக்கு அனுப்பு வேன்’ என்று அழைப்பான். அன்று ஆள்கட்டிகள் க்ையாண்ட எத்தனையோ முறைகளில் இதுவும் ஒன்ருகும்.
ஆள்கட்டிகள் படோடாபமான பேர் வழிகள். நிரந்தர மாக இதே தொழிலைக் கொண்டவர்கள். தமிழ் நாட்டு ஜில்லாக்களில் கமிஷனுக்கு இந்த வேலைகளைச் செய்தார் கள். இவர்கள் பால்சாய வேஷ்டி கட்டி, கருப்பு கோட்டு போட்டு, சிவப்பு முண்டாசு கட்டியிருப்பார்கள். கடுக்கன், மோதிரம் அணிந்திருப்பார்கள். பார்ப்பதற்கு வெகு எடுப்பாகவும் இருப்பார்கள். இவர்கள் குளக்கரை, சந்தை, முற்சந்தி போன்ற இடங்களில் பெண்களைக் கண்டு கண்டிச் சீமையைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசுவார்கள், கண்டிச் சீமையில் கோப்பித் தூரில் தேங்கா யும் மாசியும் விளைகிறது. ஆற்று மண்ணில் தங்கம் விளை கிறது, காது நிறைய நகை போடலாம், இடுப்பு நிறைய சேலே கட்டலாம் என்று பெண்களிடம் பகட்டாய் கதைத்து அவர்கள் கணவன்மார்களே கண்டிச் சீமைக்கு போகத் தூண்டுவார்கள்.
கண்டிச் சீமைக்கு இப்படி பெண்களையும், இளைஞர்களை யும் கடத்திக் கொண்டு போனதன் காரணத்தால், கிராமங்களில் கலவரம் ஏற்பட்டது. எனவே கிராம வாசிகள் பெண்களையும், பிள்ளைகளையும் பெரிதும் கண் காணித்து வந்தார்கள். இதற்கான காவல் போடப்பட்ட தாகவும் தெரிகிறது. எனினும் கண்டிச் சீமையில் நல் வாழ்வு இருக்கிறது. அங்கு சென்றல் செல்வமாக வாழ லாம் என்ற செய்திகள் பரவின. கிராம மக்களின் தலைவர் கள், வாலிபர்கள் புது ஊருக்குப் போனுல் சம்பாதிக்கலாம் என்றும் நினைத்தார்கள். இந்த நோக்கம் வெளிப்படை

27
யாகத் தெரிந்ததும், ஆள்கட்டிகள் கிராமத்துக்குள் பிரவேசித்து, முக்கியஸ்தர்களைக் கண்டு கண்டிச் சீமையின் பெருமையைச் சொல்லுவான். ஆள்கட்டுவதற்கான பண உதவியும் செய்வான். கிராமத் தலைவர்கள் தங்களோடு கண்டிச் சீமைக்கு போகும் நபர்களுக்கு விருந்து போட்டு பிரயாணத்திற்கான செலவையும் கிராமத்திலுள்ள கடனைக் கட்ட பணமும் சொந்தக்காரர்களுக்கு சன்மான மும் கொடுத்து கடன் எழுதிக் கொள்வார்கள். இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வந்தவர்கள் கடன் ஆள் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் கடன் கொடுத்த நபரின் சொந்தப் பொருளாகவே கருதப் பட்டார்கள். இந்த நிலையை இலங்கை கோப்பித் தோட்ட சொந்தக்காரர்களும் அரசும் ஒரு சட்டமாகவே ஏற்றுக் கொண்டனர். இதற்கு துண்டு முறை என்ற பெயரும் உண்டு. இது ஒரு கூலியை பிற்காலத்தில் அவனது கங்காணியின் அடிமையாக சட்டத்தால் பிணைத்தது. இப்படி இலங்கைக்கு வந்த ஒரு கூலி வேறு கங்காணியிடம் போக வேண்டுமானுல் புது கங்காணியிடம் கடன் வாங்கி, பழைய கங்காணியிடம் கட்டிவிட்டு பின் புதிய கங்கா ணியிடம் கடனளியாக போக வேண்டும். யாராவது ஒரு கூலி கடனைக் கட்டாது ஓடி விட்டால், அவனை பிடித்து வந்து மறியலுக்கு அனுப்புவார்கள். இந்த நிபந்தனைகளை யெல்லாம் ஆள்கட்டியோ, கிராமத் தலைவனே இவர் களுக்குச் சொல்லுவதில்லை. *
இப்படி திரட்டப்பட்ட மக்கள் பாதசாரியாக பல மைல் கள் நடந்து பசி பட்டினியோடு தமிழ் நாட்டிலுள்ள துறைமுகங்களுக்கு கொண்டு வரப்பட்டார்கள். தேவிப் பட்டணம், ராமேஸ்வரம், மண்டபம் முகாம், தொண்டி, நாகப் பட்டணம், தட்டப் பாறை ஆகிய இடங்களுக்கு படகுகளில் ஏற்றப்பட்டு வட இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்கள். இப்படி வந்து சேர்ந்தவர்களில் கணவனைப் பிரிந்த மனைவி, தாயைப் பிரிந்த பிள்ளை,

Page 16
28
தந்தையைப் பிரிந்த மகன் ஆகியோர் இருந்தார்கள். பிரயாணத்தின் பின்பு தங்களை ஏமாற்றிக் கொண்டுவந் தார்கள் என்று மனம் கசிந்தார்கள். இவர்கள் வந்த படகுகளை ஒட்டி வந்தவர்கள் எல்லோரும் முஸ்லிம்களா கவே இருந்தார்கள். இந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒரு பழமொழியும் உண்டு. "எவன் பெண்டாட்டி எவனேடு போனுல் என்ன லெப்பைக்கு வேண்டியது மூன்று பணம்
தான்’.
O
மக்கள் பிரயாணம் செய்வதற்கு எத்தனையோ வசதிகள் இன்று உண்டு. விசா வாங்கிக்கொண்டு ஒரு நாட்டிலி ருந்து பிற நாட்டிற்கு வேலை தேடிப்போவோருக்கு எத்தனையோ பாதுகாப்புகள் உண்டு.
எனினும் ஏஜன்ஸி மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ருேர் அவல நிலை பற்றியும், அவர்கள் படும் துன்பங் களைப் பற்றியும் பத்திரிகைகளில் வாசிக்கின்ருேம். அகால மரணத்தால் இறந்தவர்கள் பிரேதம் விமானம் மூலம் இங்கு வருவதும், அடிமை நிலையில் சிக்கியவர் சுரணை இழந்து பைத்தியக் கோலத்தோடு வருவதையும் நாம் காண்கிருேம். இதிலிருந்து 168 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் மக்கள் இங்கு கூட்டி வரப்பட்டார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
துறைமுகங்களுக்கு கொண்டு வந்த கூலிகளை ஈவிரக்க மின்றி "பன்றி படகுகள்' என்ற தோணிகளில் போட்டி போட்டுக் கொண்டு பிடித்து ஏற்றினர்கள். இந்த போட்டியால் மகன் வேறு தோணியிலும், தாய் வேறு தோணியிலும், தந்தை ஒரு தோணியிலும், தனயன் ஒரு தோணியிலும் ஏற்றப்பட்டதால், குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் கதறி அழுதார்கள். அளவுக்கு மிஞ்சி ஆட்

29
களை ஏற்றியதன் காரணத்தால் படகுகள் கவிழ்ந்து நூற்றுக்கணக்கான ஜனங்கள் மாண்டார்கள்.
1836இல் மொரீசஸ் தீவுக்கு இரண்டாயிரம் தமிழ் நாட்டு கூலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில், கொழும்புத் துறை முகத்திற்குப் பக்கத்தில் தீ பற்றிக் கொண்டது. உயிர் பிழைக்க மக்கள் பட்ட துன்பம் அளவில்லை. நெருப்புக்கு பயந்து கடலில் வீழ்ந்து உயிர் நீத்ததையும் பழைய அதிகாரிகளின் அறிக்கைகள் சொல்லுகின்றன.
இலங்கைக்கு வர தோணி ஏறியவர்களில் நூற்றுக்கு பதினைந்து சதவீதம், படகுகள் கவிழ்ந்து இறந்தனர். புயல் காற்றுக்கு தப்பிய தோணிகளில் வந்தவர்கள், மன்னர், அரிப்பு, கொழும்பு, நீர்கொழும்பு கரையோரங்களில் இறக்கப்பட்டனர். மன்னர், தொண்ட மன்னர், அரிப்பு ஆகிய பகுதிகளில் இறங்கியவர்கள் பாதசாரிகளாய் காடு, மணல் வெளி, தனிபாதைகள் வழியாய் 212 மைல் இட்டுச் செல்லப்பட்டார்கள். அந்தக் காலத்தில் தலை மன்னரில் ஒரு மடம், குடி தண்ணீர் வசதி, சிறு மருத்துவமனை இருந்த தாகத் தெரிகிறது. சுகவீனர்கள், பிரயாணத்தால் களைத் தவர்கள் சிகிச்சை பெற்றர்கள். ஒலையடி பண்ணையி லிருந்து மான்குளம் வரும்வரை பெரும் காடு. பிரயாணத் தில் இது பெரும் சோதனையான கட்டம். சாவு இவர் களுக்கு இங்கு காத்திருந்தது. இங்கு வந்து சேரும்போது தாகத்திற்கு தண்ணிர், சாப்பிட ஆகாரம் கிடைப்பது அரி தாகி விட்டது. பசியால் மெலிந்து, நடையில் தேய்ந்து இவர்கள் நிலை மோசமாகி விட்டது. 1856இல் வடமாகாண கவர் மெண்ட் ஏஜண்ட் டைத் இவர்களின் அவல நிலையைத் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவர் களைக் கொண்டு வந்த கங்காணிகள் (ஆள்கட்டிகள்) கம்பெனிகாரர்களிடம் வாங்கிய பணத்தை பதுக்கி விட்டதுதான் காரணம்.

Page 17
30
கூலிகள் குறித்த காலத்தில் வர வேண்டும். உடன் பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், கங்காணிகள் செய்த வஞ்சனையால் நூற்றுக் கணக்கான வர்கள் பசியால் மாள்வார்கள்.
'கானகத்தில் வாழ்வு' என்ற நூலே எழுதிய “நைட்டன்' என்ற ஆசிரியர் இவர்கள் பட்ட அல்லல், துன்பங்களை எழுதியுள்ளார்.
நடக்க முடியாத தோழர்களை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்ல முடியும்? பத்து மைல், பதினைந்து மைல் தூக்கி, களைத்து முடியாத நிலையில் நடுக்காட்டில் மிருகங்களின் கடாட்சத்திற்கு இவர்களை போட்டார்கள். இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானவர்கள் கையை நீட்டி கதறி யழுவார்கள். ஒரு சிரட்டையில் தண்ணிரும், இலையில் கொஞ்ச ஆகாரமும் வைத்துவிட்டு உள்ளம் குமுறி அழுது கண்ணிருடன், சுற்றத்தினர் புறப்படுவார்கள். கானகத்தில் தனிமையில் விடப்பட்டவர் அவஸ்தையை சொல்ல முடியுமா?
கோப்பி பறிக்கும் காலத்தில் இந்த விதமான காட்சிகள் அவர்கள் நடந்து வந்த காட்டுப் பாதையில் சர்வ சாதாரணம்.
‘ஐந்தாம் வருடம் பிறந்தது பஞ்சவர்க்கு, கூடைதலை மேலே குடி வாழ்க்கை கானகத்தில், மன்னி வைத்த சிம்மாடு வனம் போன பஞ்சவர்கள், செத்தார் பிழைத்தாரோ சேதி தெரியவில்லை. மாண்டு மடிந்தாரோ வனம்போன பஞ்சவர்கள்.'
இது பாண்டவர் வனவாசம்.

31
1936 வரை இந்தப் பாடலை மலைநாட்டார் தங்கள் லயன் களில் ஒப்பாரி சொல்வதுபோல் வாசிப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு சாந்தி.
168 வருடங்களுக்குப் பின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் புதுவாழ்வு தேடிப் போகும்மக்கள் நிலை இதுவே,
நாம் பிறந்த கதை சொல்வோமா?
நாம் பட்ட கதை சொல்வோமா?
)
காட்டுப் பாதையில் வந்த நம் மூதாதையர்கள் அனுப வித்த இன்னல்கள், கஸ்டங்கள் அவர்கள் சரித்திரத்தில் முக்கிய பகுதியாகும். எனினும் மற்ற பகுதிகளை நாம் சற்று தெரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு ரோட்டு, தலைமன்னுர், மன்னுர் ஆகிய இடங்களி லிருந்து ஆரம்பித்த இவர்கள் பயணம் பேசாலை, செட்டி குளம், மதவாச்சி, தம்புள்ள, நாலந்த மார்க்கமாய் மாத் தளையில் முடிவுற்றது. மாத்தளையிலும் கண்டியிலும் முன் னுேடி தொழிலாளர்கள் தங்கி இளைப்பாறவும், சுகயின மானவர்கள் சிகிக்சை பெறவும் முகாம்களும், போகம் பறையில் பெரிய மருத்துவமனையும் அமைக்கப்பட்டி ருந்தன. போகம்பறை மருத்துவமனையில் சாதாரண வசதிகள் கூட இருந்ததில்லை. நூற்றுக்கணக்கில் மக்கள் இறந்து பட்டுப் போனர்கள். இதைக் கண்ணுற்ற அக்கால மத்திய மாகாண கவர் மெண்ட் ஏஜண்ட் இந்நிலையைக் கண்டித்துள்ளார். ஆனல் தோட்ட முதலாளிமார் இதற்கு செவிமடுக்கவில்லை. அதற்கு மாருக, அரசையும் கவர் மெண்ட் ஏஜண்டையும் கண்டித்து மறுப்பு தெரிவித் தார்கள்.

Page 18
32
மாத்தளை, கண்டி முகாம்களில் கூடிய தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், கம்பளை கினிகத்தேனை மார்க்கமாய் டிக் கோயா சிவனடிபாதம் பகுதிக்குப் போனர்கள். மற்ற பகுதியினர் கம்பளை, ரம்பொடை மார்க்கமாய் நுவ ரெலியா பகுதிக்கும் பதுளைப் பகுதிக்கும் போஞர்கள்.
கண்டி, கம்பளை, கினிகத்தேனை (ஒத்தக்கடை) சந்தியில் கருப்பாயி, மீனுட்சி, ராமாயி என்ற பேர் போன பெண் கள் சோற்றுக்கடை போட்டிருந்ததாகத் தெரிகிறது.
ஆள் கட்டும் கங்காணி இங்கு தங்கிப் போனதுபற்றி பாடல்களில் காண்கின்ருேம்.
**கண்டி கருப்பாயி
கம்பளத்து மீனுட்சி ஒத்தக்கடை ராமாயி - உன் உசிரிருந்தால் போதுமடி.'
உறவு மாத்திரம் போதுமாம். ஆட்களை கொண்டு வந்து வியாபாரத்தை பெருக்கியதற்கு அவன் கமிசன் வாங்கிய தில்லை.
தூத்துக்குடி தட்டப் பாறையிலிருந்து ஒரு கோஸ்டியினர் படகுகளில் வந்து கொழும்பு, நீர் கொழும்பு ஆகிய இடங் களில் இறங்கி மாரை, ராகம முகாம்களில் தங்கி காலி பகுதி, குருநாகல், கேகாலைப் பகுதிகளுக்குப் போயிருக் கிருர்கள்.
இப்படி வந்தவர்கள் எந்த தோட்டத்திற்குப் போகிருேம் என்பது திட்டமாய் தெரிந்திருந்தார்கள். ஒரு தோட்டத் திற்கு 250 கூலிகள் தேவைப்பட்டால் 300 ஆட்களுக்கு ஆர்டர் செய்தார்கள். வருகிற வழியில் 50 பேர் சாவதற்கு அங்கு கணக்கிடப்பட்டிருந்தது.

33
இது கோப்பிக் காலம். புலிகள் உறுமிய, நரிகள் ஊளை யிட்ட காடுகளை அழித்து அங்கு குடில்கள் கட்டினர்கள். காடுகளே அழிக்கும் வேலையில் சிங்களவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். கோப்பியை பயிர் செய்ய மலைச் சாரல் களில் கூனியடித்து, குழி வெட்டி நட்டார்கள். இந்த ஆரம்ப வேலைகளில் எத்தனையோ அபாயங்கள்! எத் தனையோ உயிர் பலிகள்!
‘கூனி அடித்த மலை கோப்பி கண்ணு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அங்கே தெரியுது பார்!'
*இந்தியக் கூலிகள்" என்ற மக்கள் கண்ணிரால் வளர்த்த கோப்பிச் செடி 32 வருடங்கள் வளர்ந்து, தழைத்து கோப்பிப் பழத்தை தங்கமாக்கியது. அடர்ந்த கானகமா யிருந்த இடங்களில் செல்வம் கொழித்தது. இங்கு கோப்பித் தொழிலுக்கு அனுசரணையான பல தொழில் களும் ஓங்கி நின்றன. பதமாக்கப்பட்ட கோப்பிக் கொட்டையை கொழும்பு கொண்டு சேர்க்க ரஸ்தாக்கள் அமைத்தார்கள். புதுப்புது இடங்களில் பட்டணங்கள் தோன்றின. கம்பெனிகள் தோன்றின. தோட்டங் களுக்கு பணம் கொடுப்பதற்கு வங்கிகள் வந்தன. கல் தச்சர், மரத் தச்சர் கூட்டங்களும் வந்தன. இன்னும் எத்தனையோ விதமான தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆணுல் கூலிகள் வாழ்வில் சுபீட்சமில்லை. கோப்பிப் பழம் எடுக்கும் காலத்திற்குப் பின் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர் களில் ஒரு பகுதியினரே திரும்புவார்களாம். மற்றவர்கள் இந்த நாட்டின் நீர்ப்பாசன வேலைகளில், அதாவது குளங் கள் வெட்டும் வேலைகளில், சம்பந்தப்பட்டதாய் தெரி கிறது. வந்தவர்களையும், திரும்பியவர்களையும், தங்கியவர் களையும் கணக்கிடும்போது காணமல் போனவர் தொகை ஆயிரக்கணக்கில் இருந்தது.

Page 19
34
1869ஆம் வருடம் மடுல்சீமை தோட்டத்தில் முதலாவதாக கோப்பிச் செடியில் ஒருவித நோய் ஆரம்பித்து பல தோட்டங்களுக்கும் பரவியது. 1889ஆம் வருடத்திற்கெல் லாம் கோப்பி இந்த வியாதியால் பட்டுவிட்டது.
இந்த பயங்கர வியாதியால் மூலதனம் தொலைந்தது. கம் பெனிக்காரர்கள் பங்களாக்கள் சிதைந்தன. சாதாரண மக்கள் வாழ்வு கரைந்தது. அநேகர் தோட்டங்களை மூடி விட்டு இங்கிலாந்து திரும்பினர்கள். இந்தியக் கூலிகள் ஆதரிப்பாரில்லாது தவித்தனர்.
இதோடு பட்டுப்போன செடிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தீக்கிரையாகின. வத்துமுல்ல, ஒப்பல்கெல, பெரிய நாகவத்தை போன்ற தோட்டங்கள் மிகவும் பாதிக் கப்பட்டனவாம்.
இந்த சகாப்தத்தில்தான் நமக்கு "கோப்பிக் காட்டான்' என்ற பட்டம் வந்தது.
口 口 口
1884ஆம் வருடம் கோப்பிக் காலம் முடிந்தது. "ஆடு கிடந்த இடத்தில் மயிர் கூட இல்லை" என்ற பழமொழிப்படி கோப்பி இருந்த இடத்தை மறுபடியும் காடு கவ்விக் கொண்டது. பல முதலாளிகள் தோட்டங்களை அரை விலைக்கும் குறை விலைக்கும் விற்றுவிட்டு வெளியேறினர்கள். ஆனல் ஒரு சில முன்னேடிகள் முயற்சியைக் கைவிடாது, பாழடைந்த தோட்டங்களுக்குப் புது உயிர் அளிக்க வாழ் நாளை அர்ப்பணித்தார்கள். இந்தக் கால கட்டத்தில் இந்தியத் தொழிலாளர்கள் நிலை வெகு பரிதாபமாக இருந்திருக்க வேண்டும். அது பற்றி சரித்திரம் ஏதும் சொல்லக் காணுேம். ஆனல் ஆயிரக்கணக்கில் இந்த மக்கள் அந்தக் கால கட்டத்தில் இறந்ததாய் புள்ளி விபரங்கள் சொல்லுகின்றன.

35
கோப்பி சாம்பலாய் போனதைப்பற்றிக் குறிப்பிட்டோம். அந்த சம்பவத்திலிருந்துதான் தேயிலையின் வித்து உற்பத்தி யானது. தேயிலைச் செடியை நம் மக்கள் கண்ணிரால் வளர்த்தனர். கோப்பி ஒரு பருவப் பயிர். எனவே மக்கள் நிரந்தரமாய் குடியேறி தொழில் செய்ய வேண்டிய அவசியமிருந்ததில்லை. ஆணுல் தேயிலை உற்பத்தியில் தொழிலாளர்கள் தினம் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சிங்களவர் கள் தங்கள் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்து இந்த வேலையை செய்ய மறுத்தார்கள். எனவே, இந்தியாவிலி ருந்து மறுபடியும் ஆள் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆள் கட்டிகளும் கங்காணிகளும் தங்கள் கைங்கரியத்தைச் செய்ய மறுபடியும் தலைதுாக்கினர்கள்.
கோப்பிக் காலத்தில் ஆட்களை இந்நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க என்ன கெடுபிடிகள் நடந்தனவோ , அவை கள் இப்போது உச்ச நிலையை அடைந்தன. ஆட்களை இக் கரைக்குக் கொண்டுவந்து சேர்க்க வெள்ளையர் ஒரு கப்பல் கம்பெனி திறந்தனர். அதோடு, தோணிக்காரர்களும் தங்கள் வியாபாரத்தை மும்முரமாய் நடத்தினர்கள்.
1882ஆம் வருடம் வரை வடக்கு ரோட்டு, அதாவது மன்னுரிலிருந்து மாத்தளை மார்க்கமாய் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள். எத்தனையோ பிள்ளைகள் வழியில் அமைக்கப்பட்டிருந்த அம்பலங்களில் பிறந்தன. நடையால் உடல் மெலிந்தவர் கள் இறந்தார்கள். கரடியும், சிறுத்தையும் உறுமிய அடர்ந்த காடுகளையும், நரி கூட்டங்களையும், பன்றிகள் நிறைந்த பள்ளத்தாக்குகளையும் கோடாரியும், கத்தியும் கொண்டு அழித்தனர்.
இந்தக் கால கட்டத்தில் ரயில் பாதையும், பொது ரஸ்தா வும் நிறுவப்பட்டன. இதை மேற்கொண்டு திறம்படச் செய்வதற்கு தமிழ் நாட்டிலிருந்து ஆட்கள் ஒப்பந்த முறை

Page 20
36
யில் கொண்டு வரப்பட்டார்கள். இவர்களை மில்டரி முறையில் பயணியர் பேர்ஸ் முன்னேடி பட்டாளம் என்று பெயரிட்டார்கள். இந்த முன்னேடி பட்டாளத்தைச் சேர்ந் தவர்கள் தொழிலாளர்கள் இருந்து வந்த கிராமங்களி லிருந்தே வந்தவர்கள். இவர்கள் ரயில் பாதை, பாலம் இவைகளை அமைத்தார்கள். இவர்கள் இருந்த வீடுகள் பதனீர் லயம், பயணியர் லயம் என்றும் காங்கிய லயம், கேங் லயம் என்றும் அழைக்கப்பட்டன.
சரித்திரப் பெருமைமிக்க இந்தப் பாட்டைகளை அமைத்த மக்களது பின்சந்ததிகளை 1939ஆம் வருடம் நாடு கடத்த சேர். ஜோன் கொத்தலாவல சட்டம் கொண்டு வந்தார்.
அந்தக் காலத்தில் ரஸ்தாவும், ரயில் பாதையும் தேயிலை யைக் கொழும்பு துறைமுகத்திற்கு இட்டுச் செல்லவும், தோட்டங்களுக்கு வேண்டிய தளபாடங்களை, அத்தியா வசியப் பொருட்களைக் கொண்டு வரவும் சாதகமாய் அமைந்தன. அதோடு, சாமான்கள் கொண்டு போவதற்கு கம்பெனிகள் அமைத்து மும்முரமாய் வேலை நடந்தன. இந்தக் கம்பெனிகளை காலி பகுதி சிங்கள தனவந்தர்கள் நடத்தினர்கள். கொழும்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, பத்தனே, ஹல்து முல்லை போன்ற பட்டணங்களில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் வட்டிக் கடைகளையும் திறந்து பெரும் வியாபாரம் செய்தார்கள்.
ஹல்துமுல்லையில் சென்னை வங்கி திறக்கப்பட்டிருந்தது. தேயிலை தொழில் வேறு எத்தனையோ தொழிலுக்கு தாய் தொழிலாக அமைந்தது. கல் தச்சு, மர தச்சு, குட்டிக் கடைகள், போஸ்ட் ஆபீசுகள், ரயில்வே, பி.டபில்யூ.டி. பொது சேவை இலாகா கச்சேரி, பொலிஸ், மருத்துவமனை
போன்ற எத்தனையோ ஸ்தாபனங்கள் தோன்றின. உள் நாட்டு மக்கள் எத்தனையோ வேலைகளில் அமர்ந்தார்கள். தேயிலை ஒரு புதிய நாகரிகத்தைக் கொண்டு வந்தது.

37
'ஜப்பான் சிலுக்கு வாங்கி மெட்டா நடை நடக்கலாச்சு’ என்று கூட பாட்டு பாடினர்கள். ஆனல் நம்மவர்கள் கந்தை கட்டிகளாகவே இருந்தார்கள்.
ஹேவாஹெட்ட பகுதியைச் சேர்ந்த எல்கந்துரா என்ற தோட்டத்தில்தான் தேயிலை முதன் முதலாய் பயிர் செய்யப்பட்டது. 1873ஆம் வருடம் 23 ருத்தல் தேயிலை கைபாடமாகச் செய்யப்பட்டது.
1879ஆம் வருடம் இதே தோட்டத்தில் தேயிலை அரைக்கும் ரோலர் இயந்திரம் பூட்டப்பட்டது. தேயிலை காய்ச்சும் அடுப்பு தொலஸ் பாகையைச் சேர்ந்த கலமுதுணை தோட்டத்தில் 1882ஆம் வருடம் பூட்டப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின் தேயிலை ஸ்டோர் கட்டப் பட்டதை நம் பெண்கள் பார்த்து பாட்டும் பாடினர்கள்.
'இஸ்டோரும் கட்டியாச்சு, இஞ்சி நீரும் பூட்டியாச்சி, இள வெட்ட பொண்டுகளே, எல பொருக்க வந்திடுங்க."
கம்பளையைச் சேர்ந்த மரியாவத்தை தோட்டத்தில் நூறு ஏக்கர் விஸ்தீரணத்திற்குள் 1180 முத்தல் தேயிலை பயிர் பாடம் செய்யப்பட்டது. v
1888ஆம் வருடம் 2,30, 00, 000 றத்தல் தேயிலை உற்பத்தி யானது. தேயிலை எவ்வளவு சீக்கிரம் விரிவடைந்தது என்பது இதிலிருந்து புலனுகிறது,
1890ஆம் வருடம் டிம்புள்ள, டிக்கோயா, மஸ்கெலியா, கலனிவெளி, தொலஸ்பாகை, பூசலா, மாத்தளை மாவட்டங்களில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. டயகம, மடகும்பர, தம்பதனை, ஸ்பிரிங்வெளி, கொணன்,

Page 21
38
அல்பியன், பல்லகல, தவசிமலை, கிரேட்வெஸ்டன் போன்ற பெருந் தோட்டங்கள் திறக்கப்பட்டன.
ロロロ
1825-1904 முதல் தென்னிந்திய தொழிலாளர்கள் கங் காணிகள் மூலமாகவும், ஆள்கட்டிகள் மூலமாகவும் இலங்கையில் தேயிலை, கோப்பி பயிர் செய்வதற்குக்
கொண்டு வரப்பட்டார்கள்.
1890ஆம் வருடம் பல டிவிசன்களைக் கொண்ட பெரும் தோட்டங்கள் ஊவா, மத்திய மாகாணத்தில் திறக்கப் பட்டதைத் தெரிந்துகொண்டோம். இக்கால கட்டத்தில் இந்தியத் தமிழர்கள் நிரந்தரமாய் வாழவேண்டிய அவசி யம் ஏற்பட்டதையும் சொன்னுேம். அதோடு, அவர்கள் தங் கள் கிராமங்களுக்குப் போய் திரும்பி வரவேண்டிய அவசிய மும் ஏற்பட்டிருந்தது. இப்படி போய் வருவதிலும் ஆள் கட்டிகளை நம்பி அட்வான்ஸ் (முன்பணம்) கொடுத்து ஆட் களைக கொண்டு வருவதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
'இந்தியாவுக்கு போனவர்கள் திரும்பி வருவது சாமிக்குத் தான் தெரியும்' என்பதுபோல், போனவர்களில் பலர் வர வில்லை. அட்வான்ஸ் பணம் பெற்ற கங்காணிகளும் கொள்ளையடித்தார்கள். இதனல் தொழிலாளர்கள் பெரி தும் கஷ்டப்பட்டார்கள். கண்டிச் சீமைக்கு வரத் தயங்
கினர்கள்.
எனவே, தோட்டத்துரைமார் சங்கம் தொழிலாளர்களை இங்கு கொண்டுவர ஒரு கட்டுப்பாடான முறையைக் கையாண்டது. இந்த முறைகளை வரையறுத்து அமுல் நடத்துவதற்கு 'கோஸ்ட் ஏஜண்சி' என்ற ஸ்தாபனத்தை 1904ஆம் வருடம் வெத்திலை மண்டபத்தில் அமைக்க முடிவு செய்தார்கள். தமிழ் நன்கு பேசத் தெரிந்த, தமிழ் மக்களது பழக்க வழக்கம் தெரிந்த ஒரு வெள்ளை துரையை

39
அதிகாரியாக நியமிக்க முடிவு. கம்பெனிகாரர்களும் தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு, அவர் களது செலவுக்கான பணத்தை கோஸ்ட் ஏஜண்சி அதிகாரி மூலம் அனுப்ப வேண்டும்.
ஏஜண்சி அதிகாரி அத்தாட்சிப் படுத்தாத எந்த கங்கா னியையும் தொழிலாளியையும் எந்த தோட்டமும் ஏற்றுக் கொள்ள முடியாது. காணுமல் போன ஆட்களுக்கு கங்காணி பதில் சொல்ல வேண்டும். அத்தாட்சிப் பத்திர மில்லாது வருகிறவர்களுக்கு சுங்க அதிகாரிகளும், போலிசும் பாஸ் வழங்க வேண்டும். இதனல் ஆட்களை ஏமாற்றிக் கொண்டுபோகும் திருட்டு தடுக்கப்படும்.
தோட்டங்களுக்கு வரும் ஆட்களை பொறுப்பேற்க அத் தோட்டகங்காணி மண்டபம் போகவேண்டும். தோட்டங் களுக்கு வேண்டிய தேவைகளை துரைமார் சங்கம் நிர்ண யிக்க வேண்டும். அதோடு, தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தையும் மாநில வாரியார் முடிவு செய்ய வேண்டும். இந்த விபரங்களை ஏஜண்சி இலங்கைக்கு வரும் தொழி லாளர்களுக்குச் சொல்ல வேண்டும்.
பாம்பனைக் கடந்துவரும் பல மக்கள் வியாதியால் பாதிக்கப்படுவதால் மருத்துவ வசதி கொடுக்க அரசு நடவடுக்கையெடுக்க வேண்டும். இதற்கு தற்காலிக கட்டிடங்கள் அமைக்க வேண்டும்.
இத்திட்டங்கள் அமுல் நடத்தும் நிலையிலிருக்கும்போது ரெயில் போக்குவரத்து ஆரம்ப நிலையில் இருந்தது. 1865ஆம் வருடம் கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை தான் ரெயில் ஓடியது. ஏஜண்சி மூலம் தொழிலாளர்கள் வந்தார்கள். இவர்கள் பழைய பாதைகள் வழியாகவே கூட்டிவரப்பட்டார்கள். எனினும் திட்டமான சில திருத் தங்கள் அமைந்தன. பாம்பனிலிருந்து மன்னருக்கு ஒரு நபருக்கு கூலி 1.00 ரூபாய். அதிலிருந்து வடக்கு ருேட்டு

Page 22
40
வழியாக தம்புல, மாத்தளை மார்க்கமாய் பிரயாணம் செய் தார்கள். இவர்கள் தங்கி இளைப்பாறுவதற்கு தங்குமடம், தண்ணிர்வசதி செய்யப்பட்டிருந்தது.
இரண்டாவது வழி தூத்துக்குடியிலிருந்து கொழும்புவரை கடல் பிரயாணத்திற்கு கட்டணம் தலைக்கு ரூ. 4 முதல் ரூ. 6 வரை. மூன்ருவது மார்க்கம் அம்மர பட்டணம் அல்லது தொண்டியிலிருந்து கொழும்பு வரை. இப்படி வருகிறவர்களை பரிசோதிக்க கெலனியில் டெப்போ அமைத்து இருந்தார்கள். காலரா, பிளேக் வியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை செய்யப்பட்டது. அதோடு, ராகமையிலும் தங்குவதற்கு கேம்ப் அமைக்கப் பட்டிருந்தது.
1898ஆம் வருடம் எப். ஆர். எலியஸ் கவர்மெண்ட் ஏஜண்ட் தகரத்துண்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்தார். இத்தகர வில்லையில் கம்பெனி இலக்கம், தோட்ட இலக்கம், தொழிலாளியின் இலக்கம் பொறிக்கப்பட்டி ருந்தன. ஆட்கள் தேவைப்பட்ட கம்பெனிகள் 100 வில்லை களுக்கு ரூ. 2.50 அரசுக்கு கட்டி வாங்கினர்கள். கங்காணி கள் பணத்திற்கு பதிலாய் இந்த வில்லைகளை ஆட்கள் கையிலும், கழுத்திலும் கட்டி குடியேற்ற அதிகாரி துரை யிடம் காட்ட அதற்கான பிரயாண வசதி, சாப்பாடு, கை செலவு ஆகியவற்றை கொடுத்தார்கள். இது அட்வான்ஸ் காசு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கோஸ்ட் ஏஜண்சி என்ற ஸ்தாபனத்திற்கு அக்கால அரசு பூரண ஆதரவளித்தது. இலங்கை கவர்னரே தோட்டத்துரைமார்களின் பிரதிநிதி யாக அதிகாரி நோர்மன் ரைவுசலை சென்னை கவர்னருக்கு அறிமுகம் செய்து கடிதம் எழுதினர்.
இக்கடிதத்தில் அப்போதுள்ள ஆள்கட்டும் முறையிலுள்ள கெடுபிடிகளையும், ஊழல்களையும் நிவர்த்தி செய்தல்

41
இலங்கை வரும் தொழிலாளர்களது நலன் காத்தல், இலங்கைக்கு வருபவர்களது பந்துக்களோடு தமிழ் நாட் டில் தொடர்பு வைத்தல், இந்தியாவிலுள்ள பந்துக்கள் சமூக நலன்களை கவனித்தல் என்ற சிபாரிசுகள் குறிப்பிடப் பட்டிருந்தன.
புரட்டாதி 1904இல் திருச்சிராப்பள்ளி ஏஜண்சி அதிகாரி யின் காரியாலயம் அமைக்கப்பட்டது. சென்னை, தஞ்சாவூர், ஈரோடு இவைகளுக்கு சந்தியாக திருச்சி டவுன் அமைந்து இருந்தது இதற்கு முக்கிய காரணி. அதோடு, ஆத்தூர், மாயவரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் கோஸ்ட் ஏஜண்சியின் வரவேற்பு
காரியாலயங்கள் திறக்கப்பட்டன.
இந்த காரியாலயங்கள் பழைய ஆள்கட்டி மூலம் கிராம வாரியாக பெரும் பிரச்சாரம் செய்தன. இந்திய அரசும் இதற்கு அனுசரணையாய் இருந்தது.
D D
தேயிலை உற்பத்தி செய்ய தொழிலாளர்களை நிரந்தரமாய் குடியேற்ற வேண்டிய அவசியம் பற்றிக் குறிப்பிட்டோம். லட்சக்கணக்கான கூலிகளை கம்பெனிகாரர்கள் அரசின் ஒத்துழைப்போடு இறக்குமதி செய்தார்கள். இவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும், தோட்ட வேலை தளராது நடப்பதற்கும், இவர்களைக் கட்டுக்கோப்பாய் நடாத்து வதற்கும் ஒரு தலைவன்-கண்காணிப்பவன் அத்தியாவசிய மானது.
எனவே, தோட்டங்களில் பெரிய கங்காணி முறை உருவா கியது. துரைமார்களிடம் அட்வான்ஸ் பணம் (முன் பணம்) பெற்று தமிழ் நாட்டிலிருந்து ஆட்களை, குடும்ப வாரியாய் சேர்த்துக் கொண்டு வந்து தோட்டங்களில் அமர்த்தினர்கள். இவர்களுக்குச் செய்ய வேண்டிய சகல

Page 23
42
வசதிகளையும் பெரிய கங்காணி செய்ய வேண்டும். ஒவ் வொரு குடும்பத்திற்கும் தங்குவதற்கு லயம் ஒதுக்க வேண்டும்; அவர்கள் செலவுக்கு கடன் கொடுக்க வேண்டும்; சுகமில்லாதபோது கவனிக்க வேண்டும்; மருந்து, மந்திரம் , தந்திரம், இவைகளைக் கையாள வேண்டும்; குடும்பச் சச்சரவுகளை தீர்க்க வேண்டும்; பொங்கல், தீபாவளி பண்டி கைகள் கொண்டாட வசதி, கோவில் வழிபாட்டுக்கான வசதி செய்துகொடுக்க வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக தொழிலாளர்கள் தினம் கோயிலுக்குப் போவதற்கு பெரிய கங்காணி பொறுப்பாளராக இருக்க வேண்டும்.
எனவே, தோட்டத் துரைக்கும், தொழிலாளிக்கும் எவ்வித தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து.
பெரிய கங்காணி தோட்டங்களில் ஒரு புதிய சமூகத்தை அமைக்க வேண்டிய நிலையேற்பட்டது. தோட்டத்திற்கு கோவில் கட்டி பண்டாரங்கள் ஏற்படுத்தி, தெய்வ வழி பாட்டிற்கு வசதி, பேய் பிடித்திருந்தால் அதை விரட்ட கோடாங்கி அல்லது பூசாரி, பிள்ளைப் பேறு, புஷ்பவதி யானுல் சடங்கு, கல்யாணம், சாவு இவைகளுக்கு சாஸ்திரம் பார்க்க ஜோசியர், திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்த வாத்தியார், சுகவிலா சங்களைக் கவனிக்க நாட்டு வைத்தியர், சலவை, சவரம் செய்வதற்கான தொழிலாளர் கள்; சிலம்பக்காரர்கள், பாடகர்கள், வாத்தியக்காரர்கள், தகராறு தீர்க்கப் பஞ்சாயம், இந்த வசதிகள் எல்லாம் செய்து கொடுப்பது பெரிய கங்காணியின் பொறுப்பு. இதை தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
ஒரு பெரிய கங்காணிக்குக் கீழ் குடும்ப வாரியாய் சில்லறைக் கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் தங்க ளுக்குக் கீழிருக்கும் ஆட்களின் சகல வசதிகளையும் கவனித்து பெரிய கங்காணிக்கு தெரிவிப்பதோடு, ஆட்களை வேலைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

43
இந்த பொறுப்புகளை ஏற்றுச் செய்ய ‘பேன்ஸ் காசு' என்று பெரிய கங்காணிகளுக்கும், சில்லறை கங்காணிகளுக்கு 'சில்லறை பேன்ஸ்" என்றும் தோட்டம் கொடுத்தது. தொழிலாளர்கள் வேலைக்குப் போகும் நாட்களுக்கு அதாவது தனது பிரட்டு ஆட்களுக்கு 4 சதம், சில்லறை பிரட்டு ஆட்களுக்கு 2 சதம் கொடுக்கப்பட்டது.
எனவே பெரிய கங்காணியும், சில்லறை கங்காணிகளும் ஆட்களை அட்டியில்லாது வேலைக்கு அனுப்பி 'பேன்ஸ்’ பெற்றனர்.
150 தொழிலாளர்கள் முதல் 1,500 தொழிலாளர்களைக் கொண்ட பெரிய கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். தோட்டங்களில் ஜமீன் அல்லது ரட்டமாத்தியா போல் சுகபோக வாழ்க்கை நடத்தினர் கள். பட்டிணங்களில் வட்டிக்கடை, தாய் நாட்டில்
நிலம், வீடு, சிறு தோட்டங்களை வாங்கினர்கள்.
2000 பெரிய கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் ஜமீன்தார் போல் தோட்டப் பெயரோடு சேர்த்து அழைக் கப்பட்டார்கள். அதாவது - தெமோதர ராமநாதன், மஸ்கெலியா செட்டியப்பன், பூச்சிக்கொடை கருப்பையா, பார் மஸ்டன் சண்முகம், திஸ்பன சுப்பையாபிள்ளை, தலவாக்கொல்லை பாண்டியன், ஊவாக்கொல்லை தைலாம் பிள்ளை, டன்பார் ரெங்கிசாமி, மடக்கும்பரை குமரன், தெல்தொட்டை சங்கரன், மெய்க்காகொலை முடியாண்டி, நாப்பனை போக்கு செல்லன் ஆகியோர் முக்கியஸ்தர்கள். இவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து ஆங்கிலம் படித்தார்கள். படிப்பை முடித்துக்கொண்ட பின் தங்கள் தகப்பன்மார்களுக்கு உதவியாய் தோட்டத் தில் கணக்கப்பிள்ளை, கண்டக்டர், டீமேக்கர், கிளார்க் வேலைகளைச் செய்தனர். M இப்படி தோட்டங்களில் ஒரு மேல்மட்ட புது 'சமூகம்’ ஏற்பட்டது.

Page 24
44.
| ! பெரிய கங்காணியின் ஆதிக்கம் தோட்டங்களில் ஆலமரம் போல் உயர்ந்து, படர்ந்து விழுது இறங்கியிருந்தது பற்றி யும், அவர்கள் மூலம் ஒரு புது மேல்மட்ட சமுதாயம் உண் டானது பற்றியும் குறிப்பிட்டோம்.
இவர்களுக்கு மத்தியிலுள்ள முரண்பாடுகளையும், வேறு பாடுகளையும் சற்று கவனிக்க வேண்டும்.
பெரிய கங்காணிகளின் மக்கள் பட்டிணக் கல்லூரிகளிலும், பெரும் பள்ளிக் கூடங்களிலும் படித்து, பின் தோட்டங் களில் கண்டக்டர், டீமேக்கர், கிளாக்கர்களாய் அமர்ந் தார்கள். இவர்களது படிப்பில் ஒரு அலட்சியமான ஆங்கில மோகம் கலந்திருந்தது. தாங்கள் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள், பெரிய கங்காணிகளின் பிள்ளைகள், தங்கள் பந்துக்கள் என்று தொழிலாளர்கள் உறவு கொண்டாடப்பட்டார்கள். இதனுல் ஒரு பிரிவினை ஏற்பட்டது. தோட்டங்களில் கிராம வாழ்க்கையை நடத்தக் கூடிய சாதனங்கள் இல்லை. வெறும் லயத்து வாழ்வு; தொழிலா ளர்கள் வாழும் வீடுகளுக்கு லயங்கள் என்று பெயர். பெரிய கங்காணி வசிக்கும் வீட்டுக்கு பெரிய வீடு அல்லது கங்காணி வீடு. சிப்பந்திகள் வசிக்கும் வீட்டுக்கு குவாட் டர்ஸ், துரைமார் வீட்டுக்கு பங்களா என்றும் பெயர்கள். பொதுவாக உத்தியோகஸ்தர்கள் குவாட்டர்ஸ், துரை பங்களா பக்கம் தொழிலாளர்கள் போக மாட்டார்கள். ஆயிரம் தொழிலாளர்களின் தலைமைக் கங்காணிக்கு சகல வசதிகளோடும் தனி வீடு கட்டிக் கொடுத்திருந்தாலும், அதை பெரிய கங்காணி பங்களா என்று சொல்லும் வழக் கம் இருந்ததில்லை.
தோட்ட சிப்பந்தி உத்தியோகஸ்தர்கள் படித்த பெரிய கங்காணிகள் குடும்பத்தோடு உறவு வைத்துக் கொள்வ தில்லை. மேல்மட்ட பெரிய கங்காணி தோட்டதுரைமார்

45
களைக் கூட லட்சியம் பண்ணுவதில்லை. துரைமாருடைய காரியாலயங்களுக்குப் போகாமல் மாலையிலும், மாலை ஆறு மணிக்குப் பின்பும் பங்களா பூந்தோட்டத்தில் வைத்து தோட்ட விசயங்களைப் பேசுவார்கள். இரண்டாயிரம் தோட்டங்களில் அநேகமாய் ஆயிரத்து எழுபது பெரிய கங்காணிகள் இருந்திருக்கலாம். இவர்களுள் மேல்மட்ட பெரிய கங்காணிகள் இருநூற்றைம்பது பேரைச் சொல்லலாம்.
இவர்கள் பட்டிணங்களில் கடைகள் போட்டதையும், சிறு தோட்டங்கள் வாங்கியது பற்றியும் குறிப்பிட்டோம் . கடைகள் ஸ்தாபித்த கங்காணிகள் பட்டறையில் உட் கார்ந்து வியாபாரம் செய்ய மாட்டார்கள். உதாரண மாக, பூச்சிக்கொடை கருப்பையா கங்காணி பல வட்டிக் கடைகள் வைத்திருந்தார். அவர் எந்தக் கடையிலாவது உட்கார்ந்து வியா பாரம் செய்ததாகத் தெரியவில்லை. இவர் தேயிலைத் தோட்டம் வாங்கியவர். முருகொலை மாரிக் கங்காணியும் சொந்த தோட்டம் வாங்கியவர்களில் முக்கியஸ்தர். முன்னுள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வைத்தியலிங்கத்தின் தந்தை சிதம்பரம்பிள்ளை கிரி முட்டித் தோட்டம் வாங்கினர். எம். டி. சி. சிவலிங்கம், தெல்தொட்டம் சங்கரன், இரும்பக்கொல்லை பொன்னம் பலம்பிள்ளை, அப்புத்தளை முருகன் போன்றவர்களும் தேயிலைத் தோட்டங்கள் வாங்கியவர்களே. இவர்களில் பலர் கதிர்காமம், சிவனடிபாதம், ராமகிருஷ்ண மடம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் போன்றவற்றிற்கு பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள்.
இவர்களில் பலரை மேல் மக்கள், திறமைசாலிகள், நிர்வாகஸ்தர்கள் என்று அஞ்சாமல் சொல்லலாம். முன்னுள் கண்டியிலிருந்த இந்திய அரசின் ஏஜண்ட் ரெங்கநாதன் பெரிய கங்காணிகளை திவான்களுக்கு ஒப் பிட்டார்.

Page 25
46
எல்லா பெரிய கங்காணிகளும் நல்லவர்கள் என்பதற்கில்லை. சுரண்டல், ஏமாற்று, பொய் கணக்கு! தொழிலாளர்களை மிருகத்திற்கு ஒப்பாய் நடத்தியவர்கள் பலர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் லயம் விட்டு போக முடியாது. அடுத்த தோட்ட உறவினர் வர முடியாது. வேலைக்குப் போகாது சும்மா லயத்தில் இருக்க முடியாது. கங்காணிகள் வரும் வழியில் எதிரே நடக்க தொழிலாளி
அஞ்சு வான். கொட்டியாகொலை ஒய்யப்பன், ராகலை கட்டைவெட்டி ரெட்டியார், தெமோதர ராமநாதன் போன்றவர்களை செப்படி வித்தைக்காரர்கள் பொம்மைக் கட்டி சபித்தார்கள்.
தொழிலாளர்கள் அப்போது கடன் ஆட்கள். தொழிலா ளர்களை தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்தபோது அவர் களுக்கு கொடுத்த பிரயாண செலவு, சாப்பாடு செலவு, வீட்டுச் செலவு, தோட்டம் வந்து வாழ்க்கை ஆரம்பிக்க
செலவு போன்ற எல்லா செலவுகளுக்கும் கங்காணிகள் பணம் கொடுத்தார்கள். இந்தக் கணக்குகளை துண்டில் எழுதி வைத்திருந்தபடியால் துண்டு முறை என்ற பெயர் வந்தது. இதைச் சட்டம் ஏற்றுக்கொண்டது. எனவே ஒரு தொழிலாளி தோட்டத்தை விட்டு விருந்தாடி போன லும் கங்காணியின் உத்தரவு பெற்றே போக வேண்டும். இல்லாவிட்டால், அந்தத் தொழிலாளியை வாரண்டு போட்டு பிடிக்க முடியும்.
தொழிலாளர்களை காலை 5-30 மணி முதல் 6-30 மணி வரை வேலை வாங்கினர்கள். சவுக்கடி சர்வ சாதாரணமான விசயம். கஷ்டம் பொறுக்காது ஓடிப் போகும் தொழிலா ளர்களைப் பிடித்துக்கொண்டு வந்து மரத்தில் க.டி வைத்து கங்காணிகள் அடிக்கவும் செய்வார்கள்.
இந்த அக்கிரமம் உலகம் தெரிந்த விசயம். பெரியார் பொன்னம்பலம் அருணுசலம் சட்டசபையில் இதை வன்மையாகக் கண்டித்தார். கடன் ஆள் அல்லது துண்டு

47
முறையை ஒழித்துக்கட்ட அவர் காரணமாயிருந்தார். இந்த சட்டம் 1921இல் பிரகடனப்படுத்தப்பட்டது. தொழிலாளர் பெரிய கங்காணியின் பிடியிலிருந்து சற்று விடுபட்டனர்.
பெரிய கங்காணி ஆட்சிக்கு இது முதல் தாக்குதலாகும்.
O O O
தோட்டக்காடு 1921க்கு முன்னும் பின்னும் சட்டத்தாலும், இந்நாட்டு சமூகத்தாலும் ஒதுக்கப்பட்ட இடமாகும். அங்கு நாகரிகம் போவதற்கு முட்டுக்கட்டைகள் பல இருந்தன. எல்லை தெய்வங்களாகிய முனியாண்டியும், செண்டாகட்டியும் தங்கள் தோட்டத்திற்குள் வேற்று காற்று அடிக்காதபடி எப்படி காவல் செய்தார்களோ, அதேபோல் தோட்ட அதிகாரமும், அரசும் கூலிக்காரர்களை வெளியார் தீண்டாதபடி வெகு ஜாக்கிரதையாகக் கண் காணித்தார்கள்.
அந்த அகன்ற சிறைக்குள் வாழ்க்கை நடத்திய தொழி லாளர்கள் மிலேச்சர்கள் அல்ல. அதற்கு காரணம் அவர் களது பழைமையான நாகரிகமேயாகும்.
*கோவிலில்லாத ஊரில் குடியிருக்காதே’ என்ற முது மொழியை மனதில் கொண்டு தோட்டங்களில் முக்கிய இடங்களில் தெய்வங்களையும், வனதேவதைகளையும் வைத்து கும்பிட்டு வரலாஞர்கள். தேயிலை ஸ்டோர்களில் ரோதை முனி என்றும் மலையில் கவ்வாத்து சாமி என்றும் தனியிடங் களில் வனத்து சின்னப்பா என்றும் வைத்து முக்கிய நாட் களில் கும்பிடுவார்கள். இவைகளைத் தவிர, சுப்பிரமணியர், கதிரேசன், சிவன், மாரியம்மன் ஆலயங்களை நிறுவி செவ்வாய், வெள்ளி தினங்களில் பூசை நடத்துவார்கள். கதிர்காம உற்சவ காலத்தில் பதுளை பகுதியில் ஆடிப் பூசையும், மத்திய மாகாணப் பகுதியில் சாமி கும்பிடு

Page 26
48
விழாவும் நடைபெறும். மலைநாட்டில் குயில்வத்தை புஜண்டகிரி பரமகுரு நாதன் கோவில், குஞ்சுப் பொரியல் ராமநாதர் கோவிலும் பிரசித்தி பெற்றவை. இங்கு வருடா வருடம் பெரும் உற்சவம் நடைபெறும். வட்டக்கொடை மாரியம்மன் கோவில் குளத்தில் தெப்பத் தேர் ஓட்டம், ஹட்டன் சுப்பிரமணியர் கோவிலில் சூரசம்மாரம் நடை பெறும். இதேபோல், மாத்தளை, மஸ்கெலியா, பண்டார வளையில் உள்ள பெரிய ஸ்தலங்களில் தேர் உற்சவங்களும் நடைபெறும். இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் கலந்து கொள்வார்கள்.
இவைகளைத் தவிர, குலதெய்வங்களை காய்கறி தோட்டத் திற்குள் வைத்து கும்பிடுவார்கள்.
கிருஸ்தவ உபதேசியார்களும் தோட்டங்களுக்கு வந்து பிரட்டுக்களத்திலும், மாலையில் பெரிய கங்காணி வீட்டு வாசலிலும் போதனை நடத்துவார்கள்.
லயங்களில் வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆரவல்லி, சூரவல்லி கதை, பாண்டவர்கள் வனசாசம், மதனகாமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை, ஆனந்த களிப்பு இவைகளை விராந்தையில் லந்தர் வெளிச்சத்தில் வாசிப்பார்கள். ஆண்களும், பெண்களும் கேட்பார்கள். பெரிய கங்காணி வீட்டில் நளச்சக்கரவர்த்தி கதை, திருவிளையாடல் புராணம் வாசிக்கப்படும். இதில் தொழிலாளர்கள் நிறைய கலந்து கொள்வார்கள். வாசிப்பு முடிந்து பட்டாபிஷேகம் நடைபெறும்.
இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் பிரயாண தடை யில்லாத அந்தக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கதிர்காமம், சிவனடி பாத யாத்திரையை மேற்கொண்டு கவிராயர்கள் பெரிய கங்காணி வீடுகளுக்கு வந்து பாடுவார்கள். தோட் டத்து வாலிபர்கள் இவைகளை களித்துக் கேட்டு தோட்டங் களில் பாட்டுக் கச்சேரிகள் நடத்துவார்கள். பாஸ்கரதாஸ்

49
கீர்த்தனங்கள், அண்ணுமலை ரெட்டியார் காவடி சிந்து பாடுவதுடன், பாரதியின் ‘கரும்புத் தோட்டத்திலே பாடலையும் தேயிலைத் தோட்டத்திலே என்றும் பாடு வார்கள்.
அந்தக் காலத்தில் டிராமா செட், முக்கியமாக வேல் நாயர் கோஷ்டி, சிக்கந்தர் சாய்பு கம்பெனியினர் பூண்டுலோயா, நாவலப்பிட்டி, லிண்டுல, பசறை, பண்டாரவளை போன்ற பட்டிணங்களில் லங்கா தகனம், ஹரிச்சந்திரா, குலேப ஹாவலி நாடகங்களை நடத்துவார்கள். தொழிலாளர்கள் கூட்டம் பல மைல் நடந்து போய் கண்டு களிப்பார்கள். பின் பொங்கல், தீபாவளி இரவுகளில் தோட்டங்களிலும் நாடகங்கள் மேடையேறும். சங்கரதாஸ் தவசிகளின் சத்தியவான் சாவித்திரி போன்ற பல நாடகங்களை நடிப்பார்கள். v
1921-1935 வரை பெரிய கங்காணி வீடுகளிலும், கடை களிலும் பாட்டுப் பெட்டிகள் பாடும். பெரிய கங்காணி களின் வீட்டு மேட்டில், பள்ளத்திலிருந்து தொழிலாளர்கள் கேட்டு ரசிப்பார்கள்.
இதற்குப் பின் டுரிங் டாக்கிஸ், பயஸ்கோப் கூடாரம் மலை நாட்டு பட்டிணங்களுக்கு வந்தன. சிந்தாமணி படம் மலை நாட்டை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. பாபநாசம் சிவம் இயற்றிய அந்த ரசமான பாடல்களைத் தோட்டத்துக் காளையர்கள் அங்குள்ள பெண்மணிகள் சொக்கும்படி பாடுவார்கள். இவைகள் எல்லாம் தோட்ட மக்கள் உள்ளத்திற்கு தண்ணீர் பாய்ச்சின. தோட்டங்களில் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் முக்கியமானவை. மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று சொல்வார்கள். இது தீர, பொங்கலுக்கு முந்திய முப்பது

Page 27
50
நாட்களிலும் வீட்டுக்கு முன் சவுக்கமாய் சாணமிட்டு மெழுகி, கோலம் எழுதி சவுக்கத்தின் நாலு மூலைகளிலும் கணபதி உருவத்தை வைத்து காலையில் பெண்கள் வணங்கு வார்கள். இளைஞர் கூட்டம் கோவிலில், இரவில் பஜனை பாடி பயிற்சி பெற்று பின் அதிகாலையில் நாலு மணிக்கு வெண் சங்கை ஊதி சேகண்டியை தட்டிக்கொண்டு வீடு வீடாய் போய், மாய அவதாரனைப் பற்றியும், முருகனைப் பற்றியும் கீர்த்தனங்கள், விருத்தங்கள் பாடுவார்கள்.
'ஏறி மயிலேறி விளையாடும் முகம் ஒன்று.'
என்றபோது, பத்து பேர் அரோகரா என்று மூன்று முறை குரல் கொடுப்பார்கள். அந்த அமைதி நிறைந்த வேளை யில் பஜனை சாந்தியின் சக்தி எங்கும் பரவும்.
இதைத் தவிர, தோட்டங்களுக்கு குடுகுடுப்பைக்காரர்கள், சித்திரபுத்திரனுர், அழகர், மாட்டுக்காரர், பொய்க்கால் குதிரைக்காரர், செப்படி வித்தைக்காரர், பாம்பாட்டிகள் வந்து தங்கள் கைச் சரக்குகளைக் காட்டி தொழிலாளர் களின் வாழ்வுக்கு இனிமையூட்டினர்கள்.
O
சிங்களம், புஷ்பகம் போன்ற தீவகங்களிலும் தூரத்தே யுள்ள சீனவிலும் தமிழர்கள் புலிக் கொடியையும் மீன் கொடியையும் நாட்டியதாகச் சொல்லப்படுகிறது. அன்று அவர்கள் கடல் கடந்து சென்று அமைத்த ராஜ்யங்களை புல்லும் கல்லும் கொண்டு போய்விட்டன. எனினும் கலைத் தூதுவர்களாக யாழ் பிடித்து ஈழம் வந்த பாணர்களின் சந்ததியில் தோன்றிய திரு. தாமோதரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற

51
பெரியார்கள் தமிழ் இலக்கியத்தைச் செழிப்புறச் செய்தனர். ஆனந்த குமாரசாமி, தனிநாயக அடிகள், தம்பிமுத்து ஆகியோர் புலிக் கொடியையும் மீன் கொடி யையும் உலக இலக்கிய அரங்கில் நாட்டிவிட்டார்கள். பாணர்களை அனுப்பிய தமிழ்நாடு 150 ஆண்டுகளுக்கு முன் பல்லாயிரக்கணக்கான மக்களைத் தொழில் அடிமைகளாக தென் ஆப்பிரிக்காவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் பீஜித் தீவுகளுக்கும் இலங்கைக்கும் அனுப்பியது.
"கூடை தலைமேலே
குடிவாழ்க்கை கானகத்தில்’
என்ற நிலையில் அவர்கள் பிறந்த பொன்னுடும் வளர்ந்த திருநாடும் வெறுத்து ஒதுக்க அடிமைகளாய் 150 வருட நீண்ட கொடிய ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, கண்ணிரால் எழுதப்பட்ட ஒரு பெருங்காப்பியம்.

Page 28

2 மலையகத் தமிழரின் இன்றைய பிரச்சினைகள்

Page 29

1828ஆம் ஆண்டளவிலேயே மலையக மக்களது வருகை ஆரம்பமாயிருக்க வேண்டும் என்பது பலரது கணிப்பு. கப்பல் மூலமாகவும் தோணிகள் மூலமாகவும் இலங்கைக் கரையை அடைந்த இவர்கள் கால் நடையாகவே மலை யகத்தை வந்தடைய வேண்டி இருந்தது. வழியில் நடக்க முடியாமல் சுகயினமுற்றேர் விட்டுச் செல்லப்பட்டனர். இவர்களின் எலும்புகள் தொடர்ந்து வந்தோருக்கு பாதை காட்டும் வழிகாட்டிகளாக இருந்தன.
வந்ததும் வராததுமாய் இவர்கள் காடுகளை அழிப்பதில் ஈடுபடுத்தப்பட்டனர். விவசாயிகளிடம் இருந்து பறிக்கப் பட்ட நிலங்களில்தான் குடியமர்த்தப்பட்டனர் என்று சிலர் கூறுவர். எவ்வளவோ நன்செய் நிலம் கேட்பார் கேள்வியின்றி கிடந்த அந்த நாளில் சிங்கள விவசாயி மலை உச்சிகளில் ஏறி என்ன செய்து கொண்டிருந்தான் என்பதுதான் எமக்குப் புரியவில்லை. ஆனல் மலையக வரலாறு குறித்தும் மலையகத்தை சிருஷ்டிப்பதில் மலையக மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் குறித்தும் ஒரள வேனும் இந்த விமர்சகர்கள் அறிந்திருப்பார்களேயானுல் சிங்கள விவசாயிகளை மலைமேல் ஏற்றும் தமது செய்கை குறித்து வெட்கம் அடைந்திருப்பார்கள்.

Page 30
56
காடுகளை வெடடி அழிக்கத் தொடங்கிய அந்த இந்திய தமிழனுக்கு ஒரு முடிவே இல்லாது போனது. கிட்டத்தட்ட பத்து மணி நேரம் கடும் உழைப்பு; மிகக் குறைந்த வருமானம்; மிகக் கூடிய இறப்பு விகிதம்; மிகக் கூடிய சிசு மரணம்; மேலும் சட்டங்கள் இயற்றப்பட்டு தோட்டங் களை விட்டு அகல முடியாத ஒரு நிலை!
1930 வரை இவ்வாழ்க்கை நீடித்தது. அதாவது மலையகத்தில் தொழிற்சங்கங்கள் ஊடுருவி உரிமைகள் குறித்து அவன் விழிப்பூட்டப்படும் வரை இந்நிலை நீடித்தது எனலாம்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தமது உரிமையை இம்மக்கள் நிலை நாட்டிக் கொள்வது எளிதான ஒரு காரியமாக இருக்கவில்லை. அக்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் வேலை நீக்கம் செய்யப் பட்டார்கள் அல்லது அச்சுறுத்தப்பட்டார்கள். ஆகவே தொழிற்சங்கத்தை முதல் முதலாய் ஸ்தாபித்த தோட்டத் தலைவர்களும் அங்கத்தவர்களும் தமது இயக்கம் குறித்து பரம ரகசியமாகவே நடந்துகொள்ள வேண்டி இருந்தது. அபாயங்களும் தியாகங்களும் நிறைந்த இப்பணியை அவர் கள் வெற்றிகரமாக செய்து முடித்து தமது உரிமைகளில் பலவற்றை பெற்றுக்கொண்டார்கள்.
காட்டை அழித்தது குறித்தும் தமது தொழிற்சங்க உரிமைகளை ஸ்தாபித்துக் கொண்டது குறித்தும் இங்கு குறிப்பிடுவது, இந்த மக்கள் எப்படி தம்மைத்தாமே நிலை நிறுத்திக் கொள்வதில் தமது போராட்டத்தைத் தொடர்ந் தார்கள் என்பதைக் காட்டுவதற்கும் இந்நாட்டில் இவர் களுக்கு இருக்கக்கூடிய உரிமை பாரம்பரியம் யாதென சுட்டிக் காட்டுவதற்குமேயாகும். இருந்தும் இங்கு குறிப் பிட்டவை இரண்டும் இவர்கள் ஆற்றிய மலை போன்ற கருமத்தின் வெறும் இரண்டு சிறு துளிகளேயாகும்.

57
தொடர்ந்தாற்போல் வந்த காலங்களில் இவர்களது போராட்டம் உக்கிரமடைந்து வந்ததையும் இதற்கு எதிராய் இவர்களை சுரண்டி வந்த சக்திகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதையும் அதற்கு சாதக மாய் இம்மக்களின் மத்தியிலிருந்தே புறப்பட்ட தலைமை கள் நடந்துகொண்டதையும் காண்கிருேம்.
பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது; வாக்குரிமை பறிக்கப் பட்டது; சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் நாடு கடத்தல் நடைபெற்றது; இறுதியாக இப்போது வன் செயல்கள் ஒர் பிரதான ஆயுதமாக கைக்கொள்ளப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இவற்றில் பலவற்றையும் விரிவாக ஆராய்வதற்கு இக் கட்டுரை இடம் தராது என்ற காரணத்தால் 1974இன் பின்னர் அதாவது பத்து வருட காலத்தைப் பற்றி மாத்திரம் ஒரு சில விசயங்களைக் கூறுதல் வரவேற்கப்படும் என்று நம்புகிருேம்.
தோட்டங்கள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட போது அது நாட்டை வளப்படுத்தும் என்றே எண்ணப் பட்டது. நாடு வளமானதோ என்னவோ ஆளுனல் மலையகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அரசாங்கமும், இந்த நாட்டின் முதலாளித்துவ சக்திகளும் பெருந்தோட்ட அமைப்பு முறையில் உள்ள நல்லவற்றை எல்லாம் பெரும் பான்மை மக்களே பெற்றுத் தீரவேண்டும் என்ற இன வாதப் போக்கைக் கடைப்பிடித்து வந்துள்ளன.
எனவே, பேரினவாத அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்த இம்மக்கள் இப்புதிய போக்கினுல் மேலும் ஒடுக்குதல்களுக் குள்ளானர்கள்.

Page 31
58
1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் இவர்களின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்கள் பின்வரும் முறை யில் அவர்களுக்கு உதவின.
1. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடைப்படையி லும் சுயமாகவும் மலையகத்தோரில் பலரை இந்தியா வுக்கு அனுப்பிவைக்க உதவியது. இது பெருந் தோட்ட அமைப்பு முறையில் தேவைக்கு அதிகமான தொழிலாளரை அப்புறப்படுத்தி பெருந்தோட்ட அமைப்பு முறை மேலும், மேலும் லாபம் பயப்பதாக உருவாகுவதற்கு உதவி செய்கின்றது.
2. மலையக சமூகத்தின் படித்த மத்தியதர வகுப்பினரின தும் வியாபாரிகளினதும் இடப்பெயர்வு. இது பேரினவாத சக்திகளுக்கு இரு வகையில் உதவின.
ஒன்று, வியாபாரிகளின் இடப்பெயர்வு பேரின வியாபாரிகளின் ஆக்கிரமிப்புக்கு இடம் சமைத்தது.
மற்றது, படித்த மத்தியதர வகுப்பினரதும் ஏனைய வகுப்பினரதும் இடப்பெயர்வு மலையகத்தின் சமூகச் சீர்குலைவில் முடிவுற்றது. இச்சமூகச் சீர்குலைவானது மலையகம் ஒர் வலுவான சமூகமாக உருவாகுதலையும் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒர் வலுவான தலைமையை-இயக்கத்தை கட்டியெழுப்புவதையும் தவிர்த்து சிதறடிப்பதான விளைவுகளை ஏற்படுத்தி யுள்ளது.
அதேவேளை மலையகம் இப்படியான பயங்கர ஒடுக்கு முறை களுக்கு எப்படித் தன்னைப் பலியிட்டுக் கொண்டது (Exposed) என்பது இன்னுமொரு குறிப்பிடத்தக்க கேள்வி.

59
இது உண்மையில் மலையகம் மலையகத்தை காட்டிக் கொடுத்ததால்தான் சாத்தியமானது என்பதுதான் சரி யான பதிலாயிருக்க முடியும்.
மலையகத்தின் ஒரு குறிப்பிட்ட மேல்தர வர்க்கம் தனது அற்ப சலுகைகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்திருப் பது தேவையானதொன்ருக இருந்தது.
ஆனல் இதற்குரிய காரணம் பின்வருமாறு கூறப்பட்டது. மலையகத்தை நோக்கிய இன ஒடுக்கல் பலம் வாய்ந்ததாக மாறிக்கொண்டு வருகையில் யாவரும் ஓரணியில் திரள்வது அவசியம் என்றும் அரசாங்கத்தைப் பகைத்துக் கொண் டால் நிலைமை மோசமாகிவிடும் என்ற காட்டிக்கொடுப்புத் தத்துவங்களும் முன்வைக்கப்பட்டன.
இக்காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளில் வலுவான ஓர் இயக்கம் மலையகத்தில் உருவாகவில்லை.
மற்றது மலையக மக்கள் தமது பாரம்பரிய போராட்ட உணர்வுகளை மறந்து கெஞ்சிக்கெஞ்சி பெறல் என்ற இந்த வஞ்சகத்திற்கு பலியாகிப் போனர்கள்.
வன்செயலின் பின்னுல் மலையக மக்களின் முன்பாக மூன்று தீர்வுகளே எஞ்சி நின்றன.
ஒன்று இந்தியாவுக்கு சென்று விடுவது. இரண்டு : வட கிழக்குக்கு குடியேறுதல். மூன்று : மலையகத்திலேயே இருப்பது.
இவற்றில் முதலாவதே கூடிய ஆதரவையும் மூன்ருவது, குறைந்த ஆதரவையும் பெற்றது.

Page 32
60
ஆனல் மக்களின் விருப்பு இவ்வாருக இருந்தாலும் யதார்த்தம் மூன்ருவதையே பெரும்பாலும் ஆதரித்தது. முதலாவது, வெறுமனே ஓர் விருப்பாகத்தான் இன்றுவரை இருக்கிறது. h
இத்தகைய சூழலில் மலையகம் சார்ந்த வடக்கு கிழக்கு சக்திகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இக் கட்டுரையில் ஒர் சம்பிரதாய அளவிலேனும் கதைக்காது போய்விட்டால் நாம் பெருங்குற்றம் புரிந்தோராவோம். ஏனெனில் வட கிழக்கு சக்திகள் அல்லது வட கிழக்கு பிரச்சினை அல்லது இந்நாட்டின் இனப்பிரச்சினை இந்நாட் டின் இனி வரப்போகும் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தாக இருக்கும் என்பது தெளிவு.
ஆகவே விரும்பியோ விரும்பாமலோ நாம் இதுகுறித்து கதைத்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது.
வட கிழக்கு தமது தனிநாட்டு கோரிக்கையை முன்னெடுத்த போது குறிப்பிடத்தக்க ஒர் அம்சம் யாதெனில் மலையகம் சார்பாக அவை கடைப்பிடித்த மெளனமே அல்லது மலை யகம் சார்பாக அவர்கள் கடைப்பிடித்த மயக்க ரீதியான பின்வரும் முடிவுகளே.
1. மலையக மக்கள் அனைவரும் வடகிழக்கில் குடியேறுவர்.
2. அல்லது தனி நாடு மலையகத்தையும் உள்ளடக்கித்
தான் இருக்கும்.
நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது ஒரு குடும்பம் யாழ்ப்பாணம் செல்வதே சந்தேகத்துக்கிடமானது என் னும் போது, கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் வட கிழக்கிற்கு குடியேறப்போவதென்பது மலைப்பாகத்தானிருக் கிறது.

61
போராட்டக் களங்களைக் காணுத எங்களுக்கு ஒரு சில கற்பனைகளை எண்ணிப் பார்ப்பது சுகமாகத்தான் இருக் கின்றது. ஆனல் யதார்த்தம் இங்கு ஒழுங்காக பிரதிபலிக் கப்படவில்லையென்றே தோன்றுகின்றது.
எது எப்படி இருப்பினும் இது ஒரு பிரச்சினைதான்; முகம் கொடுக்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை.
ஆனல் பல சக்திகள் மலையக மக்களின் ஒடுக்கப்பட்ட நிலை
மையை தயது பிரச்சாரத்திற்கு சாதகமாக பாவித்துக்
கொண்டதாக அறிகின்ருேமே தவிர இந்த பிரச்சினையை
உண்மையான யதார்த்த பூர்வமான பிரச்சினையை - எத்தனை பேர் மனிதாபிமானத்தோடு மக்களின் மேலுள்ள
உண்மையான அன்போடு பிரதிபலித்தார்கள், முன் வைத்
தார்கள் என்பது கேள்விக்குறியே.
மலையக மக்களின் ஒரு சிறு பகுதியினரை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரையாவது இந்தியாவிற்கு அனுப்பு தல், அனுப்பக்கோரி பிரசாரம் செய்தல் இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளி இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இந்தியாவை ஓர் தீவிர நடவடிக்கையில் ஈடு படச் செய்யும் என்பது சிலரின் கணிப்பு.
நல்லதுதான். ஆனல், இதையே வேறு வார்த்தையில் கூறு வதாஞல் மலையகம் மீண்டும் ஒரு பகடைக் காயாக உருட் டப்படப் போகின்றதோ என்ற கேள்வி உருவாகின்றது.
இவை யாவற்றையும் தொகுத்து ஆய்ந்து பார்க்கும் போது மலையகம் அதன் பூரண அர்த்தத்தில் மலையகத்தால் பிரதிநிதித்துவப் படவேண்டியது அவசியம் என்பதையும் இதுவே இன்று அதிமுக்கியமான தேவையாகவும் பிரச்சினை யாகவும் இருக்கின்றது என்பதும் கண்கூடு.

Page 33
62
காலமும், சுயநலத்தை மீறிய எங்கெங்கும் காணும் மனித னின் நல்ல உள்ளங்களும் இதற்கு எப்படி விடை பகர் கின்றன என்பதையும் இனித்தான் பார்க்க வேண்டி உள்ளது. - - - -


Page 34


Page 35
: